முன்னெடுப்புக்கள்
எண்ணிமத் தமிழியல் ஆய்வுகளையும் சேகரங்களையும் முன்னேற்றும் கூட்டுச் செயற்பாடுகளை ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகம் வரவேற்கிறது. திறந்த முறையில் தமிழ் ஆய்வுகளையும் வளங்களையும் முன்னேற்றும், பலகலைக்கழக நூலகத்துக்கு வெளியே இயங்கும் முன்னெடுப்புக்களை காட்சிப்படுத்தவும் விழைகிறோம். நூலகத்துடன் இணைந்து செயற்பட, அல்லது உங்கள் முன்னெடுப்பை அறிமுகப்படுத்த விரும்பினால், அது தொடர்பாக உரையாட பின்வரும் மின்னன்ஞ்சல் ஊடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்: dsu.utsc@utoronto.ca
![]() |
திறந்த தமிழ் மீதரவு அகராதி
|
![]() |
திறந்த தமிழ் தரவுப் பட்டியல்திற்ந்த தமிழ் தரவுப் பட்டியல் தமிழ் கணிமைக்கும் ஆய்வுக்கும் பயனுள்ள தரவுத் தொகுப்புக்களைப் பற்றிய மீதரவுகளை ஓர் இட்டத்தில் தொகுத்து தருகிறது. இது தமிழ் எழுத்துப் பகுப்பாய்வு, இயற்கை மொழிச் செயலாக்கம், செயற்கை அறிவாண்மை தொடர்பான மென்பொருள் விருத்தி மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பாக பயன்படக்கூடியது. இதனை பல்வேறு நிரலாளர்கள், ஆய்வாளர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலானவை திறந்த உரிமத்தில் இணையம் ஊடாக கிடைக்கின்றன. சிலவற்றைப் பயன்படுத்த நீங்கள் அந்தத் தரவுத் தொகுப்பினை உருவாக்கிய நிறுவனத்தினை தொடர்பு கொள்ள வேண்டும். |
![]() |
சோபியா கில்ரன் கதைசொல்லல் புலமைப்பரிசில்
|
![]() |
தமிழ் பொதுக் குரல்தமிழில் திறந்த குரல் தொழில்நுட்பங்களை (voice technologies) உருவாக்க வசனங்களை வாசித்தும், சரிபார்த்தும் பங்களிப்புச் செய்யுங்கள். |
![]() |
எண்ணிமத் தமிழியல் கருத்தாடற்களம்எண்ணிமத் தமிழியல் கருத்தாடற் களமானது எண்ணிமத் தமிழியல், புலமை, நூலகங்கள், ஆவணகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய துறைகள் சார் பகிர்தலையும் கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதனை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திறந்த, பொது மன்றமாகும். ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகத்தை மையமாகக் கொண்ட எண்ணிமத் தமிழியல் திட்டக் குழுமத்தினரால் இம்மன்றம் மட்டுறுத்தப்படும். |
![]() |
கிட்கப்பில் எண்ணிமத் தமிழியல்
|
![]() |
தமிழ் விக்கித்தரவு பங்களிப்புக்கள்விக்கித்தரவு மனிதர்களாலும் இயந்திரங்களாலும் வாசிக்கவும் தொகுக்கவும் கூடிய ஓர் இலவச, திறந்த அறிவுத் தளம் ஆகும். பிசிசி விக்கித்தரவு முன்னோடித் திட்டத்தின் (https://www.wikidata.org/wiki/Wikidata:WikiProject_PCC_Wikidata_Pilot) ஒரு பங்காளராக ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகம் செயற்பட்டு வருகிறது. விக்கித்தரவில் தமிழ் மொழிமூலச் சொற்களின் இருப்பினையும் வளங்களையும் மேம்படுத்தும் நோக்கில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகம் தமது எண்ணிம ஆவணகச் சேகரங்களில் இருந்து தரவுகளை பகிர்ந்துள்ளது. |