எண்ணிமத் தமிழியல் கருத்தாடற்களம்

Submitted by tamiladmin on

எண்ணிமத் தமிழியல் கருத்தாடற் களமானது எண்ணிமத் தமிழியல், புலமை, நூலகங்கள், ஆவணகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய துறைகள் சார் பகிர்தலையும் கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதனை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திறந்த, பொது மன்றமாகும். ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகத்தை மையமாகக் கொண்ட எண்ணிமத் தமிழியல் திட்டக் குழுமத்தினரால் இம்மன்றம் மட்டுறுத்தப்படும். இக்குழுமமானது ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ சக பணியாளர்களையும் தமிழ்ச் சமூகத்து பங்காளர்களையும் உள்ளடக்கியது. 

நிறுவன வரையறைகளைத் தாண்டிய ஒரு துறைசார் சமூகத்தை வளர்ப்பதை இம்மன்றம் முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது. அனைவருக்கும் நல்வரவு!

பதிவுகள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அமையலாம். உரையாடல் தலைப்புகளாக பின்வருவன அமையலாம்: 

  • பன்மொழிப் பட்டியலாக்கம்
  • சேகரிப்புகள் வளர்ச்சி 
  • எண்ணிமப் பாதுகாப்பு
  • தமிழ் மொழி சார் வளங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான மென்பொருட்களும் கருவிகளும்
  • எண்ணிம நூலக/ ஆவணக/ சேமக மென்பொருட்கள் (ஐலண்டோரா, அற்ரம், டீஸ்பேஸ், கோஹா போன்றன)
  • தமிழ் ஆய்வுக்கான எண்ணிமப் புலமை வழிமுறைகள் 
  • தமிழ் மொழித் திட்டங்களும் ஆர்வக் குழுமங்களும் 
  • தமிழ் மொழி மூல வளங்கள், பண்பாட்டினை பாதுகாப்பதை நோக்காக் கொண்டு செயற்படும் சமூகங்களுக்கான அறிவிப்புகள்.