தமிழ் விக்கித்தரவு பங்களிப்புக்கள்

Submitted by tamiladmin on

விக்கித்தரவு மனிதர்களாலும் இயந்திரங்களாலும் வாசிக்கவும் தொகுக்கவும் கூடிய ஓர் இலவச, திறந்த அறிவுத் தளம் ஆகும். பிசிசி விக்கித்தரவு முன்னோடித் திட்டத்தின் (https://www.wikidata.org/wiki/Wikidata:WikiProject_PCC_Wikidata_Pilot) ஒரு பங்காளராக ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகம் செயற்பட்டு வருகிறது. விக்கித்தரவில் தமிழ் மொழிமூலச் சொற்களின் இருப்பினையும் வளங்களையும் மேம்படுத்தும் நோக்கில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகம் தமது எண்ணிம ஆவணகச் சேகரங்களில் இருந்து தரவுகளை பகிர்ந்துள்ளது. இப்பங்களிப்பின் தொகுப்பினை இந்த விக்கித்தரவுப் பக்கத்தில் பார்வையிடலாம்: https://www.wikidata.org/wiki/Special:Contributions/UTSC_Library_DSU