திறந்த தமிழ் மீதரவு அகராதி

Submitted by tamiladmin on


தமிழ் மீதரவு அகராதி தமிழ் மொழியில் பட்டியலாக்கம் மேற்கொள்ள உதவக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட சொற் தொகுதிகளை (controlled vocabularies) பொது அணுக்கத்தில் வெளியிடும் நோக்கு கொண்ட ஒர் முன்னெடுப்பு ஆகும்.  மொட்சு (MODS) மீதரவு சீர்தரங்களுக்கு ஏற்ப வளங்களை விபரிக்க உதவும் வழிகாட்டல்களையும் இது கொண்டுள்ளது.  இத்தகைய விபரிப்பு மார்க் 21 (MARC21) மற்றும் ராட் (RAD) சீர்தரங்களுக்கு ஏற்றதாகவும் அமையும்.

இந்த வழிகாட்டல்கள் இணைப்புத் தரவு அடிப்படையிலான மீதரவு உருவாக்கத்துக்கு உதவும்.  இவ்வாறு உருவாக்கப்படும் மீதரவுகள் கணினி ஊடாக, OAI-PMH மற்றும் SPARQL நெறிமுறைகளைப் பயன்படுத்தி அனைவரும் பயன்படுத்தக் கூடிய வண்ணம் அமையும்.  மேலும், இந்த சொற்தொகுதிகள் மையப்படுத்தப்பட்ட அமைப்புக்களிலும் சேர்க்கப்படும்.  இவ்வாறு இவற்றின் பயன்பாடு தமிழ் பேசும் சமூகங்களுக்கு விரிவாக சென்றடையும் வாய்ப்பினைப் பெறுகிறது.

இந்த ஆவணம் மீதரவு உருவாக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளிப்படையாகப் பகிர்கிறது.  இதனூடாக தமிழ் மீதரவு உருவாக்கம் தொடர்பாக ஒரு துறைசார் சமூகத்தை ஊக்குவிக்க விழைகிறது.

இந்த வழிகாட்டி  Fraser Valley's South Asian Studies Institute உடனான ஒரு கூட்டுச் செயற்பாடு ஆகும்.  இது eCampus Ontario வினது Pressbooks தளம் ஊடாக வெளியிடப்படும்.