ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலக ஆவணகத்திலுள்ள சா. ஜே.வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம்: மெய்நிகர் வெளியீட்டு விழா

Submitted by tamiladmin on

சா. ஜே. வே. செல்வநாயகம் ஆவணகச் சேகர வெளியீட்டினைக் கொண்டாடும் நோக்குடன் இடம்பெறும் இவ் இலவச, பொது இணையவழிக் கருத்தரங்கில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இக்கருத்தரங்கு உலகளாவிய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஒன்றிணைப்பதூடு, செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம், காலனிய மற்றும் பின்காலனிய வரலாறு, நீதி மற்றும் சட்டம், வரலாற்று நினைவு, நவீன உலகில் எண்ணிம ஆவணகங்களின் முக்கியத்துவம் தொடர்பான உரையாடல்களைக் கொண்டதாக அமையும். இவ் இணையவழிக் கருத்தரங்கு செல்வநாயகம் ஆவணகச் சேகரத்திற்கான அறிமுகத்தை வழங்குவதுடன், எதிர்கால சமூக, ஆய்வு இணைவாக்கங்கள், கதைக்கலையாக்கம், நினைவுப் பகிர்வுகளுக்கான ஓர் அழைப்பிதழாக அமையும் முன்னுணர்வுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

காலம்: வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2021, 9 மு.ப. - 12 பி.ப. (கிழக்கு நேர வலயம் / ரொறன்ரோ நேரம்) 

உரையாளர்கள்:

  • புரூஸ் மத்தியூஸ், ஆர்கேடியா பல்கலைக்கழகம் (ஓய்வு பெற்ற), “சா. ஜே. வே. செல்வநாயகம்”
  • தமிழினி யோதிலிங்கம், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ, “சொற்களிடம் மீளுதல்: மீதரவு, மீவரலாறு மற்றும் எண்ணிம நினைவகம்”
  • சுஜித் சேவியர், வின்சர் பல்கலைக்கழகம், “அவர்கள் நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறார்கள்: செல்வநாயகம் ஆவணகச் சேகரத்தின் ஒலிதணிந்த குரல்களை ஆழ்ந்து கேட்டல்"
  • வாசுகி நேசையா, நியூ யோர்க் பல்கலைக்கழகம், “ஒரு பேரகன்ற விடுதலையை நோக்கி"
  • ரி. சனாதனன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், “ஓர் ஆவணத்தின் மொழிபெயர்ப்புகள்"

பின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களின் ஆவணகச் சேகர வெளியீட்டு விழாவாக இந்நிகழ்வு அமைகிறது. ஓர் அரசியற் தலைவராக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய செல்வநாயகத்தின் வாழ்வு 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியமாக விளங்குகிறது. செல்வநாயகத்தின் ஆவணங்கள் பெருமளவிலான கடிதத் தொடர்புகளையும் சிறுவெளியீடுகள் மற்றும் ஏனைய ஆவணங்களையும் கொண்டுள்ளன. இவை செல்வநாயகத்தின் மகளான சுசிலி செல்வநாயகம் வில்சனால் மிகச் சீரிய முறையில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ் ஆவணகச் சேகரம் சுசிலி செல்வநாயகம் வில்சன் மற்றும் செல்வநாயகத்தின் பேத்தியான மல்லிகா வில்சன் ஆகியோரால் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.  

இவ் இணையவழிக் கருத்தரங்கு ஓர் இலவச, அனைவரும் பங்குபற்றக்கூடிய சூம் (zoom) வழி நடைபெறும் நிகழ்வாகும். இவ் இணையவழிக் கருத்தரங்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெறுவதோடு, இருமொழிகளிலுமான நேரடி மொழிபெயர்ப்பும் வழங்கப்படும். 
 
சூம் (zoom) இணைப்புக்கு பதிவு செய்க: https://zoom.us/webinar/register/WN_eWITmA6uT66hV3jcvb9LOw

வழங்குவோர்

  • ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகம்
  • Tamil Worlds Initiative 
  • Centre for South Asian Studies, Asian Institute, Munk School of Global Affairs and Public Policy