இரா. கனகரத்தினம் & பவளராணி சேகரம்
Displaying 41 - 50 of 2076
Pagination
அடையாளம்காட்டி
61220/utsc91928
இல் உறுப்பினர்
வள வகை
விபரிப்பு
திரு. இரா. கனகரத்தினம் மற்றும் திருமதி. பவளராணி கனகரத்தினத்தின் அவர்கள் தொகுத்த உலகத் தமிழர் ஆவணக் காப்பக ஆவணங்களின் நுண்சுருள்தகடுகளின் (microfilms) எண்ணிமப்படுத்தப்பட்ட ஆவணங்களை இந்தச் சேகரம் கொண்டுள்ளது. இந்தச் சேகரம் ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை பாதுகாக்க இருவரினதும் ஆறுபதாண்டுக்கு மேலான அர்ப்பணிப்பின் சான்றாகும். நவீன தமிழ் ஆவண வரலாற்றில் இந்தப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள் துண்டுகள், இதழ்கள், பத்திரிகைகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை கவனமாகச் சேகரித்தனர். பிஜி தீவுகள் முதல் தென்னாப்பிரிக்கா வரை உள்ள பகுதிகளில் தமிழர்களின் வரலாற்றியல் மீது கவனம் செலுத்தினர். இந்த மதிப்புமிக்க ஆவணங்களைத் இலங்கைக்கு வெளியே நுண்சுருள்தகடுகளில் பதிவுசெய்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து 21ம் நூற்றாண்டு தொடக்கம் வரைக்குமான ஆவணங்களை உள்ளடக்கிய இந்த தொகுப்பில், 275 க்கும் மேற்பட்ட தனித்துவமான நுண்சுருள்தகடுகள் (16 மிமீ மற்றும் 35 மிமீ) மற்றும் 1.26 மீட்டர் எழுதாவணங்கள் உள்ளன. திரு. மற்றும் திருமதி. கனகரத்தினத்தின் சேகரங்கள் 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 வது சர்வதேச தமிழ் மாநாட்டில் மற்றும் பின்னர் கனடா (1996) மற்றும் நோர்வே (1997) ஆகிய நாடுகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டது. அவர்களின் ஆவண முயற்சிகளைத் தவிர, சிங்கப்பூர், மலேசியா, பர்மா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் பல பிரசுரங்களையும் வெளியிட்டனர். 2008 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த திரு. மற்றும் திருமதி. கனகரத்தினம் அவர்கள் வன்னியில் நடந்த சோக நிகழ்வுகளை தொலைவிலிருந்து கண்டனர். இந்த எண்ணிமத் தொகுப்பு சுமார் 230,000 பக்கங்களைத் தற்போது கொண்டுள்ளது. இது இந்தச் சேகரத்தின் சுமார் 65% விழுக்காட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முழு தொகுப்பையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அளவு
1 item
Schema Type
Collection