எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் பெப்ரவரி 10, 2024

Submitted by tamiladmin on

இங்கு பதிவு செய்க!

எண்ணிமத் தமிழியல் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்காகப் பல்துறை சார்ந்த ஆய்வாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய பரந்துபட்ட திறந்தவெளி எண்ணிம அறிவுசார் துறையாகும்.

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் உள்ள எண்ணிம தமிழியல் சமூகம் பெப்ரவரி 10ஆம் தேதி முற்பகல் 8:30 முதல் நண்பகல் 11:30 வரை (கிழக்கு நேர வலயம்); 7:00 PM-10:00 PM (சென்னை, இலங்கை நேரம்) எண்ணிமத் தமிழியல் கருத்தரங்கை நடத்துகிறது.   

இந்த இணையவழிக் கருத்தரங்கம் எங்கள் ஆய்வுகள் மற்றும் சேகரிப்புச் சமூகங்களை ஒன்றிணைத்து, ஆய்வுத் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், தமிழ் மொழி சேகரிப்புகள் மற்றும் எண்ணிமத் தமிழியல் ஆய்வின் பரிமாணங்கள் பற்றி உரையாடும் நோக்குடனும் நடைபெறுகிறது.இந்த இணையவழிக் கருத்தரங்கத்திற்கான பங்கேற்பு இலவசம். இக்கருத்தரங்கம் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் சூம் தளத்தின் வழியாக நடைபெறும்.

இந்த நிகழ்வு Tamil Worlds Initiative வின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

நிகழ்வுகளின் அட்டவணை

குறிப்பு: எல்லா நேரங்களும் கிழக்கு நேர வலயத்தில் குறிப்பிடப் பட்டுள்ள. நிகழ்வு விளக்கங்கள் கீழே உள்ளன.

TimeProgramming
8:30 - 9:00 amஎண்ணிமத் தமிழியல் குழுவின் வரவேற்புரை மற்றும் நிகழ்வின் தொழில்நுட்பங்கள் குறித்த குறிப்புகள் (பவானி ராமன் & கிர்ஸ்டா ஸ்டேபெல்ஃபெல்ட்) மொழி: ஆங்கிலம்
9:00 - 9:20 amஎண்ணிமத் தமிழியல் மையத்தை (Digital Tamil Studies Hub) அறிமுகப்படுத்துதல் (நற்கீரன் இலட்சுமிகாந்தன்) மொழி: தமிழ்
9:20 - 9:40 amசோவியத் இலக்கிய வாசிப்பு, சோவியத்துக்கு பிந்தைய காலத்தில்(Shibi Laxman Kumarapeerumal) மொழி: தமிழ்
9:40 - 10:00 amஎண்ணிமப்படுத்தல் ஊடாக பழைய தமிழ் சிற்றிதழ்களுக்கு புத்துயிர்ப்பு தருதல் (த. சீனிவாசன்) மொழி: தமிழ்
10:00 - 10:20 amDrawing The Language of the Sea (பவானி ராமன்மொழி: ஆங்கிலம்
10:20 - 10:40 amஇலங்கை முஸ்லிம்களின் குறுங்கால ஆவணங்கள்: பண்பாட்டின் தருணங்களை காப்பகப்படுத்தல் (எம்.ஐ. முகமது சாகிர்)  மொழி: தமிழ்
10:40 - 11:00 amதமிழ் எண்ணிம கல்வியியல்: எண்ணிம மனிதவியல் மற்றும் கியூ.ஜிஸ் கற்க, கற்பிக்க பயன்படக் கூடிய புதிய வளங்கள் (சண்முகப்ரியா) மொழி: தமிழ்
11:00 - 11:20 amகுறுங்கால ஆவணங்களை ஆவணப்படுத்தல் (தமிழினி யோதிலிங்கம்) - மொழி: ஆங்கிலம்