கொங்கு நாட்டுச் சேகரம்

Submitted by tamiladmin on
Identifier
61220/utsc35340
Description
1964 இல் இருந்து 1966 காலப்பகுதியில், தமிழ்நாட்டில் ஓலப்பாளையம் என்ற ஊரில் களப் பணிகளை மேற்கொண்ட சமூக மானிடவியலாளர் பேரா. பிரெண்டா பெக் அவர்கள், ஆய்வு உதவியாளர் க. சுந்தரம் அவர்களின் உதவியோடு பல அருமையான மூல வளங்களை சேகரித்தார். கொங்கு நாட்டுச் சேகரம் அந்தக் களப் பணித் தரவுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட புகைப்படங்கள், ஒலிப் பதிவுகள், ஆவணங்களின் எண்ணிம வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்தச் சேகரத்தை தொகுக்கும் பணி ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தைச் சார்ந்த முதுமுனை பட்ட ஆய்வாளர் சண்முகப்பிரியா அவர்களூடான ஒரு கூட்டுச் செயற்பாடு ஆகும். இந்தச் சேகரம் கொங்கு நாடு தொடர்பான நாட்டுப்புறப் பாடல்கள் (துதிப் பாட்டு, ஊர்த்தொகைப்பாடல், ஒப்பாரி பாடல், வீர பாடல் and பக்தி பாடல் ), நாட்டுப்புறக் கதைகள் (குலமரபுக் கதை, சாதியக் கதை, நீதி விளக்கக் கதை, நீதி விளக்கக் கதை, பழங்கதை) பழக்க வழக்கங்கள், வாழ்வோட்டச் சடங்குகள் தொடர்பான பல்வேறு மூல வளங்களைக் கொண்டிருக்கிறது. 1960 களில் தமிழ்நாட்டின் ஒரு சிற்றூர் பற்றிய ஒர் அரிய பல்லூடக ஆவணப் பதிவாக இந்தச் சேகரம் அமைகிறது.
Extent
1 item
Rights
ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலக எண்ணிமச் சேகரங்களில் உள்ள எண்ணிமக் கோப்புக்கள் காப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு தனிப்பட்ட ஆய்வுக்கும் கல்விக்குமாகப் பகிரப்படுகின்றன. கோப்புக்களுக்கான அணுக்கமும், தரவிறக்கம், படியாக்கம் ஆகியவற்றுகான நுட்ப வசதிகளும் அவற்றை மீள் பயன்படுத்துவதற்கான அனுமதி என்று உணர்த்தவில்லை. மீள் வெளியீட்டுக்கு அல்லது இதர பயன்பாடுகளுக்கு காப்புரிமையாரிடம் இருந்து எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு நூலகத்தினை தொடர்பு கொள்ளவும்.