தமிழ் பொதுக் குரல்

Tamil

தமிழில் திறந்த குரல் தொழில்நுட்பங்களை (voice technologies) உருவாக்க வசனங்களை வாசித்தும், சரிபார்த்தும் பங்களிப்புச் செய்யுங்கள்.
 

தமிழ் பொதுக் குரல் திட்டம் ஊடாக, அனைவரும் பயன்படுத்தக் கூடிய தரவுகளை திரட்டி வெளியிடும் பணியினை முன்னெடுக்கிறோம்.  தற்போது 25 மணிநேரத்திற்கும் குறைவான சரிபார்க்கப்பட்ட குரல் தரவுகளே தமிழ் மொழிக்கு உண்டு.  ஆகக்குறைந்தது 300 மணிநேர தமிழ் மொழியிலான வாசிப்பு தேவையானது.  இதனை அடைய எம்மாலான சிறு பங்களிப்பை வழங்குவோம்.

இதன் மூலம் நாம் தமிழ் பேச்சுணரி (பேச்சில் இருந்து எழுத்து), தமிழ் பேச்சொலியாக்கம் (எழுத்தில் இருந்து பேச்சு) உட்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க உதவிடிவோம்!

வசனங்களை வாசிக்க, சரிபார்க்க தமிழ் பொதுக் குரல் தளத்துக்கு தயந்து செல்லவும்.

வழிகாட்டிகள்

உதவி பெற

சான்றிதழ் பெற

உங்கள் பங்களிப்புக்கக்கான சான்றிதழ் பெற விரும்பினால், தயந்து இங்கு பதிவு செய்க.

கூட்டுச் செயற்பாடு

மொசிலா தமிழ்நாடு, கணியம் அறக்கட்டளை, தமிழ் விக்கி, ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகம், அண்ணாமலை கனடா வளாகம், நூலக நிறுவனம் உட்பட்டவர்களின் கூட்டுச் செயற்பாடு ஆகும்.

பங்களிக்கும் போது கவனிக்க வேண்டியவை

  • வாசிக்கும் பொழுது, வெளி ஒலிகளை இயன்றவரை தவிர்க்க.
  • தரப்பட்ட வசனத்தை மாற்றாமல் வாசிக்க.
  • தரப்பட்ட வசனத்தில் தவறுகள் இருப்பின், “அறிக்கையிடுக” என்ற பொத்தானை சொடுக்கி அறியத் தருக.
  • உங்களிற்று வசனம் வாசிப்பதற்கு கடினமாக தென்படின் கீழுள்ள “தவிர்க்க” என்ற பொத்தானை சொடுக்கி அடுத்த வசனத்தை பெறுக.

செயற்திட்ட புள்ளிவிபரங்கள்

நீங்கள் வேறு என்ன செய்கிறீர்கள்?

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகத்தின் எண்ணிமத் தமிழியல் திட்டத்தின் கீழ், அதன் ஒரு பகுதியாக நாம் இதில் பங்களிக்கிறோம். எண்ணிமத் தமிழியல் திட்டமானது, தமிழியல் சார் புலமையை ஊக்குவிப்பதனை இலக்காகக் கொண்ட எண்ணிம உள்ளடக்க நடுவமொன்றை உருவாக்கி வருகிறது. திறந்த தரவுகள் தொடர்பான எமது பணிகளைத் தொடர எமது விபர நிரலைப் பார்க்கவும். பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு பரந்த வலையமைப்பு, திறந்த பனுவல்களை அடையாளம் காணவும், பொருத்தமான சொற்றொடர்களைப் பிரித்தெடுக்கவும், மீளாய்வு செய்யவும், உறுதிப்படுத்தவும் மொசில்லா பொதுக் குரல் திட்டத்தில் இணைக்கவும் மிகக் கடின உழைப்பினை வழங்கியுள்ளது. இது ஒரு கூட்டுத் திட்டமாகும். இக்குழுவினரால் உருவாக்கப்பட்ட திறந்த தரவுகளை இங்கே பார்க்கலாம்.