தொல்காப்பிய உரைத்தொகை - 13 பொருளதிகாரம் இளம்பூரணம் -3 வ.உ. சிதம்பரனார் (பதிப்பு - 1921,1933,1935) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 13 பொருளதிகாரம் - இளம்பூரணம்-3 முதற்பதிப்பு(1921,1933,1935) வ.உ. சிதம்பரனார் பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+408 = 432 விலை : 675/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. .: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 432  கட்டமைப்பு: இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் அறிமுகவுரை வ.உ. சிதம்பரனார் வள்ளி நாயக - உலகநாத - சிதம்பரனார், `வ.உ.சி.’ என மூன்றெழுத்தில் முத்தமிழ்ப் புகழும் கொண்டவர் அவர்! “நாடும் மொழியும் நம்மிரு கண்கள் என்று கொண்ட பெருமக்களை விரல் விட்டு மடக்கக எண்ணின் - அவற்றுக்கே தம்மை ஈகம் செய்தவரை எண்ணின் - அடுத்த விரலைல மடக்க - ஆழமாக எண்ணித் தானே ஆக வேண்டும்! ஓட்டப்பிடாரத்தில், உலகநாதர் - பரமாயியர் மகனாராக 05.09.1892 இல் பிறந்தவர் வ.உ.சி. தந்தையார் வழக்கறிஞர்: தாம்பிறந்த ஊரி இருந்த `வீரப் பெருமாள் அண்ணாவி’ என்பாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்கரளைக் கற்றார். தூத்துக்குடி கிறித்தவ உயர்பள்ளி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி உயர்பள்ளி ஆயவற்றில் கற்றார். தந்தையார் கால்டுவெல் கல்லூரியில் சேர்த்துப் பயிலச் செய்தும், கல்வி நாட்டம் இல்லாராய் ஊர்க்கு வந்து வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்தார். அதுவும் ஏற்காமல் சட்டம் படிக்கத் திருச்சிராப்பள்ளி வந்து சட்டக் கல்லூரியில் பயின்று கி.பி. 1895இல் வழக்கறிஞரானார். படிக்கும் போதே 1894இல் திருமணமும் ஆயது. மணமகனார் வள்ளியம்மை. வறியவர்க்கு வாதாடலும், காவலரைத் திணறவைக்க வினாவலும் கொண்ட வ.உ.சி.யின்மேல், அரசின்பகை மளையிடத் தொடங்கிவிட்டது. தந்தையார் தூத்துக்குடிக்குச் செல்ல வைத்தார். வள்ளியம்மை 1900இல் இயற்கை எய்த, அவர் உறவினராய மீனாட்சியம்மையை மணக்கவும் நேர்ந்தது. சிதம்பரனார் தூத்துக்குடிக்குச் சென்றால் என்ன? அவர் ஈகமும் துணிவும் அவருடன் தானே இருக்கும்! தூத்துக்குடி பெருநகர்! தொண்டுக்கும் வாய்ப்பு! எகிப்து கொலை வழக்கு! விடுவிடுப்பு முடிபு! ஏழைமையர் தோழமை யரானார்! தமிழில் தொய்வும், சைவ சமய ஈடுபாடும் பெருகப் பெருவாய்ப்பு ஏற்பட `விவேகபானு’ என்னும் இதழ் நடத்தினார். இது மாதிகை இதழ். சென்னைக்குச் சென்று திரும்பும் ஒரு சூழல் ஏற்பட்டது. அப்பொழுது சிதம்பர்க்கு ஓர் எழுச்சி உண்டாயது; வணிகத்தால் நேர்ந்த அயலாராட்சியை ஒழிக்க, அவ்வணிகமே வழி என்று திட்டம் தோன்றிக் கப்பல் இயக்குதலில் முனைந்தாதர். மும்பை சென்று கப்பல் வாங்கி, தூத்துக்குடிக்கும் கெழும்புக்கும் இடையே செலுத்தினார். `சுதேசிக் கப்பல்’ ஆங்கிலரைக் கொதிக்க வைக்காதா? சுதேசி பண்டசாலை, நெய்தல் சாலை, என்பவற்றை நிறுவினார். ஆலைப் போராட்டங்களில் முன்னின்றார். திலகரைத் தலைவராகக் கொண்டார். சூரத்தில் நிகழ்ந்த மாநாட்டில் பங்குகொண்டு (1907) மீண்டு மேடைகளில் அரசியல் முழக்கமிட்டார். சுப்பிரமணியே சிவா உடனானார்! மாவட்ட ஆட்சியர் விஞ்சு என்பார் சிதம்பரனார், சிவா இருவர் மீதும் குற்றங்கள் பல சாற்றி, நாடுகடத்தவும் திட்டமிட்டார். முறைமன்றம் 20 ஆண்டு, கடுங்காவல் தண்டம் விதிக்க, அதனை `இறைவன் அருள்’ என்றா. மேல் முறையீடுகளால், ஆறாண்டுகள் ஆகிக் கணல்பொறி இயக்கி, செக்கிழுத்து 1912இல் விடுதலை பெற்றார். சிறையில் சேம்சு ஆலன் நூல்களை மொழி பெயர்த்தார். விடுதலைக்குப்பின் தமிழ்த் தொண்டில் ஆழமாக இறங்கினார். தொல்காப்பிய இளம்பூரணர் உரையை 1936இல் பதிப்பித்தார். திருக்குறள் அறத்துப்பால் விரிவுரை 1935இல் வெளியிடப்பட்டது. அவர்தம் ஆய்வும் துணிவும் திருக்குறள் உரையில் வெளிப்பட்டது. அவர் எண்ணியவாறு முழுதுரை கண்டும் முழுதுற வெளிப்படவில்லை! சிறையில் அவர் எழுதிய `சுயசரிதை’யின் அருமை படிப்பார் நெஞ்சை உருக்கும்! அச்சரிதை 1946இல் பாரி நிலையத்தினரால் வெளியிடப்பட்டுப் பல பதிப்புகள் கண்டது. திருக்குறள் அறத்துப்பால் உரை, சிங்கப்பூர் தமிழ்த்திரு. கோவலங் கண்ணனாரால் வெளியிடப்பட்டு குறள் கூறிய ஒவ்வொருவருக்கும் இலவயமாக வழங்கியது. வ.உ.சி. யின் வண்மைக் கதிரெihளி எனத் தோன்றியது. 14ஆம் மாடியில் வெளியிட்டு அவ்வுரை நயம் எளியேன் கூற, அவ்வுரைப் பெருமை அவையைத் திளைக்கச் செய்தது! கப்பரேலாட்டிய தமிழர் - தமிழ்க் கப்பலும் ஓட்டிய தோன்றல் - தம் நிலைகுறித்து ஒருவெண்பாவில் தாமே ஓடுகிறார்; ஓட்டப்பிடாரத்தார் அல்லரோ! “வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று- சந்தமிழ் வெண் பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான் நாச் சொல்லும் தோலும் நலிந்து” “ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றது மெய்தானே! இரா. இளங்குமரன். தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் 1. உவமவியல் .... 3 2. செய்யுளியல் .... 44 3. மரபியல் .... 221 பின்னிணைப்புகள் .... 275 - நூற்பாநிரல் .... 371 - செய்யுள் நிரல் .... 382 பொருளதிகாரம் - இளம்பூரணம்-3 உவமவியல் - செய்யுளியல் - மரபியல் வ.உ.சிதம்பரம்பிள்ளை (1921, 1933, 1935) வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், வாவிள்ள பிரஸ், சென்னை. (1933) இல் பதிப்பிக்கப்பட்ட நூலை மூலமாகக் கொண்டு இப்பதிப்பு மீள்பதிப்பாக வெளிவருகிறது உவமவியல் உவமம் என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக, அப்பொருளினுடைய வண்ணம் வடிவு தொழில் முதலிய இயல்புகளை நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியாகும். காட்டகத்தே திரியும் ‘ஆமா’ என்ற விலங்கினைக் கண்டறியாதா னொருவன், அதனைப்பற்றி யறிந்து கொள்ள விரும்பினானாயின, ‘ஆவினைப் போன்றது ஆமா’ என அவனுக்குத் தெரிந்த பசுவை ஒப்புமையாகக் காட்டி உணர்த்துதல் மரபு. அவ்வொப்புமையைக் கேட்டறிந்த அவன், பின்னொரு நாளிற் காட்டகத்தே சென்று ஆமாவை நேரிற் கண்டானாயின் ‘ஆமா இதுவே’ என உணர்ந்து கொள்வான். இவ்வாறு பிறிதொன்றை ஒப்புமையாக எடுத்துக்காட்டித் தான் சொல்லக் கருதிய பொருளின் இயல்பினை விளக்குவதே உவமையெனப்படும். இவ்வுவமையினைக் கருவியாகக் கொண்டே இரு திணைப் பொருள்களும் வழக்கினுள் நன்கறியப்படுவன. ஆதலால் இருவகை வழக்கினும் நிலைபெற்று வழங்கும் உவமையின் இலக்கணத்தினை ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியலில் விரித்துக் கூறுகின்றார். அதனால் இஃது உவமவியல் என்னும் பெயர்த்தாயிற்று. ‘மேல், குறிப்புப்பற்றிவரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்புந்தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது’ என இளம்பூரணரும், ‘உவமத்தாலும் பொருள் புலப்பாடே யுணர்த்துகின்றாராதலின், மேல் பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபு உடைத்தாயிற்று’ எனப் பேராசிரியரும், இவ்வியலின் வைப்பு முறைக்கு இயைபு காட்டினர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை முப்பத்தெட்டாக இளம்பூரணரும் முப்பத்தேழாகப் பேராசிரியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். மேல், அகத்திணையியலுள் உள்ளுறையுவமம், ஏனையுவமம் என உவமத்தினை இரண்டாக்கி ஓதிய ஆசிரியர், அவ்விரண்டனுள் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பெருக வழங்கும் ஏனையுவமத்தின் இயல்பினை இவ்வியலின் முதற்கண்ணும், செய்யுளுக்கேயுரிய உள்ளுறை யுவமத்தின் இலக்கணத்தினைச் செய்யுளியலுடன் இயையும்படி இவ்வியலின் இறுதிக்கண்ணும் வைத்து விளக்குகின்றார் இதன்கண் 1 முதல் 22 வரையுள்ள சூத்திரங்களால் ஏனையுவமத்தின் இலக்கணமும். 23 முதல் 31 வரையுள்ள சூத்திரங்களால் உள்ளுறையுவமத்தின் இலக்கணமும், 32 முதல் 37 முடியவுள்ள சூத்திரங்களால் உள்ளுறை யுவமம் போன்று மனத்தாற் கருதியுணர்தற்குரிய ஏனையுவமத்தின் வேறுபாடுகளும் பிறவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பொருள் என்றும், அதனது இயல்பினை விளக்க வேண்டி ஒப்புமையாக எடுத்துக் காட்டப்படும் பிறபொருளை உவமையென்றும் கூறுவர் தொல்காப்பியர். இவ்விரண்டினையும் முறையே உபமேயம் என்றும் உபமானம் என்றும் வழங்குவர் வடநூலார். உவமையும் பொருளும் ஆகிய இவ்விரு பொருளின்கண்ணும் ஒத்தமைந்த வண்ணம் வடிவு, தொழில், பயன் என்பன பற்றியமைந்தத ஒப்புமைத்தன்மை பொதுத்தன்மை யெனப்படும். அத்தன்மை யினை விளக்குதற் பொருட்டு அன்ன, ஆங்கு, போல, புரைய என்பன முதலாக அவற்றைச் சார்ந்துவரும் இடைச் சொற்கள் உவமவுருபெனப்படும். இங்ஙனம் உவமையும் பொருளும் அவற்றிடையே அமைந்த பொதுத்துன்மையும் ஆகிய இவை இன்னவென வெளிப்படையாக உணர்தற்கேற்ற சொல் நடையினை உடையது ஏனையுவமம் எனப்படும். ஒருபொருட்கு ஒருபொருளை உவமையாகக் கூறுமிடத்து, அவ்விரண்டற்கும் பொதுவாகியதோர் தொழில்காரணமாகவும், அத்தொழிலாற்பெறும் பயன் காரணமாகவும், மெய்யாகிய வடிவு காரணமாகவும், மெய்யின்கண் நிலைபெற்றுத் தோன்றும் உருவாகிய வண்ணங் காரணமாகவும் ஒப்பித்துரைக்கப்படுமா தலின், உவமத்தாற் பொருள் தோன்றும் தோற்றம் வினை, பயன், மெய், உரு என நால்வகைப்படும் என்பர் ஆசிரியர். வினையாற் கிடைப்பது பயனாதலின் வினையின் பின்னர்ப் பயனும், மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுவது நிறமாதலின் மெய்யின் பின்னர் உருவும் முறையே வைக்கப்பட்டன. வடிவும் வண்ணமும் பண்பென ஒன்றாக அடங்குமாயினும் கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் எனத் தம்முள் வேறாதல் நோக்கி மெய்யினையும் உருவினையும் வேறு பிரித்துரைத்தார். மெய்யாகிய வடிவினை இருட்பொழுதிலும் கையினால் தொட்டறிதல் கூடும். வண்ணமாயின் அவ்வாறு தொட்டறிந்து கொள்ளுதல் இயலாது. ‘புலியன்ன மறவன்’ என்பது, புலி பாயுமாறு போலப் பாய்வன் எனத் தொழில்பற்றி வந்தமையின், வினை உவமம் எனப்படும். ‘மாரியன்ன வண்கை’ என்பது, மாரியால் விளைக்கப்படும் பொருளும் வண்கையாற் பெறும் பொருளும் ஒக்கும் என்பதுபட வந்தமையின் பயனுவமம் எனப்படும். ‘துடியிடை’ என்பது, மேலுங்கீழும் அகன்ற பரப்புடையதாய் அமைந்து நடுவே சுருங்கி வடிவொத்தமையின், மெய்யுவமம் எனப்படும். ‘பொன்மேனி’ என்பது, பொன்னின்கண்ணும் மேனியின்கண்ணும் உள்ள நிறம் ஒத்தலால் உருவுவமம் எனப்படும். வினை, பயன், மெய், உரு என்னும் இந்நான்கனுள் அளவும் சுவையும் தண்மையும் வெம்மையும் முதலாகவுள்ள யாவும் அடங்குமாதலின், உவமப்பகுதி இந்நான்கே என வரையறுத்தார் ஆசிரியர். ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமை சொல்லுங்கால் வினை முதலிய இந்நான்கனுள் ஒரோ வொன்றே யன்றி இரண்டும் மூன்றும் பொருந்தி ஒத்துவருதலும் உவமையின் இலக்கணம் என்பர் அறிஞர். ‘செவ்வான் அன்ன மேனி’ என்பது நிறம் ஒன்றே பற்றி வந்த உவமை. ‘அவ்வான்-இலங்கு பிறை அன்னவிலங்கு வால் வையெயிற்று’ என்புழி வண்ணமும் வடிவும் ஆகிய இரண்டும் ஒத்து வந்தன. ‘காந்தள் அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி, கையாடு வட்டிற்றொன்றும்’ என்புழி, ஆடுதற்றொழில் பற்றியும் வடிவு பற்றியும் வண்ணம் பற்றியும வண்டிற்கு வட்டுக்காய் உவமையாய் வந்தமை காணலாம். உள்ளத்தாற் கருதியுணருமிடத்து, உவமிக்கப்படும் பொரு ளாகிய உபமேயத்தைவிட அதனியல்பினைப் புலப்படுத்தற் பொருட்டு எடுத்துக் கூறப்பெறும் உவமை, உயர்ந்த பொருளாக அமைதல் வேண்டும் என்பர் ஆசிரியர். இங்கு உயர்ச்சியென்றது வினை பயன் மெய் உரு எனச் சொல்லப்பட்ட பொதுத்தன்மை களால் உபமேயத்தினும் உபமானம் உயர்வுடையதாதலை இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளுக்கும் இழிந்த தொன்றினை உவமையாகக் கூறுதல் கூடாதென்பதும், உவமானத்துடன் உபமேயப் பொருள் முழுவதும் ஒத்திருத்தல் வேண்டுமென்ற நியதியின்றி, அதனோடு ஒரு பகுதியொத்தலாகிய பொதுத் தன்மை அதன்கண் அமைந்திருத்தல் வேண்டுமென்பதும், உலக வழக்கில் இழிந்ததெனக் கருதப்படும் பொருளை உவமையாக எடுத்தாளவேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த வழியும் அதன்கண் அமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக் கொண்டு உயர்ந்த குறிப்புப்பட உவமஞ் செய்தல் வேண்டுமென்பதும் ஆகிய விதிமுறைகள் குறிப்பாற் புலப்படுதல் காணலாம். மேற்கூறியவாறு ஒரு பொருட்கு அதனின் உயர்ந்த பொருளையே உவமையாகக் கூறினும் அவ்வுவமையானது, சிறப்பு நலன், காதல், வலி என்ற இந்நான்கனுள் ஒன்றை நிலைக்களமாகக்கொண்டு தோற்றுதல் வேண்டும் என்பர் அறிஞர். அவற்றுள் சிறப்பு என்பது, உலகத்துள் இயல்பு வகையாலன்றிச் செயற்கை வகையாற் பெறுவது. நலன் என்பது ஒருபொருட்கண் இயல்பாய்த் தோன்றிய நன்மை. காதல் என்பது நலனும் வலியும் இல்லாத நிலையிலும் காதல் மிகுதியால் அவையுள்ளனவாகக் கொண்டு கூறுவது. வலி என்பது ஒரு பொருளுக்குத் தன் தன்மையால் உளதாகிய ஆற்றல். “முரசு முழங்குதானை மூவருங் கூடி அரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை யெழாஅற் கோடியர் தலைவ” (பொருந-54-7) என்புழி, பெருமைமிக்க தமிழ் வேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் தம்மிற் பகைமை நீங்கி ஒன்றுகூடி அரசவை யில் வீற்றிருந்த தோற்றம்போல நிருத்த கீதவாத்தியம் என்னும் இம்மூன்றும் பிரிவின்றி ஒத்து நிகழும் வண்ணம் கூத்தர் தலைவன் தங்கியிருந்த செய்தி பேசப்படுதலால் இவ்வுவமைச் சிறப்பினை நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். “ஓவத்தன இடனுடை வரைப்பின்” (புறம்-251) என்புழி, சித்திரம் போலும் வனப்பமைந்த இடத்தினையுடைய நகரம் என அதன் நலம்தோன்ற உவமை கூறினமையின் இவ் வுவமை நலன் என்பதனை நிலைக்களமாகக்கொண்டு பிறந்ததாகும். “பாவையன்ன பலராய் மாண்கவின்” (அகம்-98) என்பது ‘பாவையினை யொத்த பலரும் ஆராயத்தக்க மாண்பு அமைந்த என்மகளது வனப்பு’ எனத் தாய் தன் மகளிடத்தே கொண்ட பேரன்பு காரணமாகக் கூறியதாகலின் இவ்வுவமையின் நிலக்களம் காதல் என்பது நன்கு புலனாம். “அரிமா வன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன்” (பட்டினப்-298, 299) என்பது, திருமாவளவனாகிய வேந்தனிடத்தே அமைந்துள்ள வலிமை காரணமாக அவனுக்குச் சிங்க ஏற்றை உவமை கூறிய தாகலின் இவ்வுமைக்கு நிலைக்களம் வலி என்பது இனிது விளங்கும். சிறப்பு, நலன், காதல், வலி என்னும் இந்நான்கையும் உவமையின் நிலைக்களம் எனக் கூறவே, இவற்றை ஆதாரமாகக் கொண்டன்றி எத்தகைய உவமும் பிறவாதென்பது கருத்தாயிற்று. ஒரு பொருளின் இழிபு கூறுவார், உவமத்தால் அதனது இயல்பு தோன்றக் கூறுதல் இயல்பாதலின், கிழக்கிடு பொருள் எனப்படும் அவ்விழிபும் உவமத்தின் நிலைக்களங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். கிழக்கிடு பொருள்-கீழ்ப்படுக்கப்படும் பொருள். “அரவு நுங்கு மதியின் நுதலொளி கரப்ப” (அகம்-313) என்புழி, பிரிவிடை வேறுபட்டு வருந்தும் தலைமகளது நுதல் ஒளியிழந்த நிலையினைக் கூறுவார், இராகு வென்னும் பாம்பினால் விழுங்கப்பட்டு ஒளியிழந்த திங்களை அதற்கு உவமை கூறின மையின், இது கிழக்கிடுபொருள் நிலைக்களமாகப் பிறந்த உவமையாகும். சிறப்பு, நலன், காதல், வலி என் முற்கூறிய நான்கினோடு கிழக்கிடு பொருளாகிய இதனையும் சேர்த்து, உமவத்தின் நிலைக்களம் ஐந்தெனக் கொள்ளுதலும் பொருந்தும் என்பர் ஆசிரியர். முதலும் சினையும் எனக்கூறப்படும் இருவகைப் பொருள் களுக்கும் கருதிய மரபினால் அவற்றிற்கு ஏற்றவை உவமையாய் வருவதற்கு உரியன. எனவே, “வரை புரையும் மழகளிற்றின் மிசை” (புறம்-38) என முதற் பொருளோடு முதற்பொருளும், “தாமரை புரையுங்காமர் சேவடி” (குறுந்-கடவுள்) எனச் சினைப்பொருளோடு சினைப்பொருளும், “அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடை நிழற் றோன்றுநின் செம்மல்” (கலித்-84) என முதற்பொருளோடு சினைப்பொருளும், “நெருப்பி னன்ன சிறுகட்பன்றி” (அகம்-84) எனச் சினைப்பொருளோடு முதற்பொருளும் வேண்டியவாறு உவமஞ் செய்தற்குரியன எனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும் கருத்துரைப்பர் பேராசிரியர். ‘பவளம்போற் செந்துவர்வாய்’ என்பது உவமையும் பொருளும் ஆகிய அவ்விரண்டிற்கும் பொதுவாயமைந்த செம்மைக் குணத்தினைச் சுட்டிக்கூறி உவமஞ் செய்தமையால் சுட்டிக்கூறிய உவமம் எனப்படும். இங்ஙனம் உவமையுடன் பொருளுக்கு அமைந்த ஒப்புமைக் குணத்தினைச் சுட்டிக்கூறாது ‘பவளவாய்’ என்றாற் போன்று வரும் உவமம் எனப்படும். இங்ஙனம் சுட்டிக் கூறாவுவமம் வருமாயின், அதன்கண் அமைந்த உவமத்தினையும் பொருளினையும் இணைத்து நோக்கி அவ்விரண்டிற்கும் பொதுவாய்ப் பொருந்தியதோர் ஒப்புமைக் குணம் பற்றி வினை பயன் மெய் உரு என்னும் நான்கினுள் இஃது இன்ன உவமையென்று துணியப்படும் என்பர் ஆசிரியர். ‘பவளவாய்’ என உவமை கூறிய நிலையில், ‘வல்லென்ற பவளத்திற்கும் மெல்லென்ற உதட்டிற்கும் உள்ள வன்மை மென்மை பற்றி இங்கு உவமை கொள்ளுதல் பொருந்தாது, அவ்விரண்டினும் அமைந்த செம்மை நிறம் பற்றியே இங்கு உவமஞ் செய்தது’ என இவ்வாறு ஒப்பு நோக்கியறிந்து கொள்ளுதல் வேண்டும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் இவண் நினைக்கத் தகுவதாகும். உவமானமும் பொருளும் தம்மின் ஒத்துள்ளன என உலகத் தார் ஏற்று மகிழும் வகையில் உவமை யமைதல் வேண்டு மென்றும், இனி, உபமேயமாகிய பொருளினை உவமையாக்கி உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுமிடத்தும் அஃது உவமம்போல உயர்ந்ததாக்கி வைக்கப்படு மென்றும், பெருமையும் சிறுமையும் பற்றி உவமங் கூறுங்கால் உலக வழக்கினைக் கடந்து இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் நீங்காது கேட்டோர் மனங்கொள்ளும்படி செய்தல் வேண்டு மென்றும் இவ்வியல் 8முதல் 10வரையுள்ள சூத்திரங்களில் உணர்த்தப்பட்டன. உவமத்தினையும் பொருளினையும் ஒப்புமை காட்டி இயைத்துரைக்குங்கால் அவற்றின் இடையே வருஞ் சொல்லாகிய உவம உருபுகள் அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய எனவரும் முப்பத் தாறும் அவை போல்வன பிறவுமாகிய பல்வேறு குறிப்பினவாய் வரும் என்பது இவ்வியல் 11-ஆம் சூத்திரத்தாற் கூறப்பட்டது. இதன்கண், ‘அன்னபிறவும்’ என்றதனால், இங்குச் சொல்லப் படாத நோக்க, நேர, அனைய, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ப, மலைய, அமர முதலிய பிறவுருபுகளும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் எனவென்னெச்சங்கள் பற்றி வருவனவும் ஆகிய உவமவுருபுக ளெல்லாம் தழுவிக்கொள்ளப்பட்டன. ‘புலி போன்ற சாத்தன்’ எனப் பெயரெச்சமாகவும், ‘புலி போலப் பாய்ந்தான்’ என வினையெச்சமாகவும், ‘சாத்தன் புலி போலும்’ என வினைமுற்றாகவும், அன்ன, இன்ன என இடைச் சொல்லாகவும் இங்ஙனம், பல்வேறு வடிவங்களில் உவமவுருபுகள் பயின்று வருதல் பற்றிக் ‘கூறுங் காலைப் பல்குறிப்பின’ என அவ்வுருபுகள் குறிக்கப்பட்டன. அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க என்னும் எட்டும் வினையுவமத்திற்குரிய உருபுகளாகும். இவற்றுள் அன்ன என்பது ஏனைய உவமைகளுக்கும் உரியதாய் வருதல் உண்டு. எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ என்னும் எட்டுருபுகளும் பயனிலை யுவமைக்குச் சிறந்தனவாகும். கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்ற எட்டும் மெய்யுவமத்திற்குரிய உருபுகளாகும். போல, மறுப்ப, ஒப்ப, காய்ந்த, நேர, வியப்ப, நளிய, நந்த என்னும் எட்டுருபுகளும் உருவுவமத்திற்குச் சிறந்துரியனவாகும். இவ்வாறு நால்வகை உவமைகளுள் இன்னவுவமைக்கு இன்னின்ன வுருபுகள் சிறப்புரிமை யுடையன எனத் தொல்காப் பியனார் வரையறுத்துக் கூறுதலால் இக்காலத்துப்போல அவர் காலத்தில் எல்லாவுருபுகளும் எல்லாவுவமைகட்கும் வழங்கவில்லை யென்பதும், ஆசிரியர் மேற்குறித்தவாறு நியமித்துரைத்தற்கு அவர் காலத்தில் மேற்குறித்த உருபுகள் தத்தம் வரலாற்று நெறியால் வினை முதலிய பொருகள்மேற் பயின்று வழங்கினமையே காரணமென்பதும் நன்கு புலனாம். மேற்குறித்த வண்ணம் இவ்வுருபுகள் வினையுவமம் முதலாகத் தத்தமக்குரிய பொருள்கள் மேற்பயின்று வழங்குந்திறத்தைத் தொன்று தொட்டுவரும் சொற்பொருள் மரபு பற்றி யுணர்தல் வேண்டுமென்பது ‘தத்த மரபிற்றோன்றுமன் பொருளே’ எனவரும் சூத்திரத்தால் நன்கறியப்படும். மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலேயன்றி எட்டாக வரும் பகுதியும் உண்டு என்பர் ஆசிரியர். வினையுவமம் வினையும் குறிப்பும் எனஇருவகையாகவும், பயனுவமம் நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாகவும், மெய்யுவமம் வடிவும் அளவும் என இருவகையாகவும், உருவுவமம் நிறமும் குணமும் என இருவகையாகவும் வருதலால் எட்டாயின என்பர் இளம்பூரணர். இனி, மேற்கூறிய நால்வகையுவமமும் உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமாக வருதலால் எட்டாதலுடைய எனவும், முன்னர் வினை முதலிய நான்குவமை களுக்கும் எவ்வெட்டுருபுகளாகத் தொகுத்துரைக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதியும் இரண்டு கூறாகி நாலிரண்டும் எட்டுப் பகுதிகளாக வரும் எனக் கருத்துரைத்தலும் பொருந்துமெனவும் கொள்வர் பேராசிரியர். பெருமை பற்றியும் சிறுமை பற்றியும் ஒப்புமை கொள்ளப் படும் உவமைகள், மேல் நகை முதல் உவகையீறாகச் சொல்லப் பட்ட எண்வகை மெய்ப்பாடுகளின் வழியே புலப்படத் தோன்று மென்று கூறுவர் அறிஞர் எனவே எண்வகை மெய்ப்பாடும் பற்றி உவமை எட்டெனப்படு மென்பதாயிற்று. உவமை யெனப்பட்ட பொருளால் உபமேயமாகிய பொருளுக்கு ஒத்தனவெல்லாம் அறிந்து துணியும் பொருட் பகுதியும் உள்ளன; பலவாகி வரும் அப்பொருட் பகுதிகளின் இலக்கண வகையைக் கருவியாகக்கொண்டு அவை நன்கு துணியப்படும். இவ்வாறு உவமையாகிய பொருளைக்கொண்டு உவமேயமாகிய பொருளுக்குப் பொருந்தியன இவையென ஆராய்ந்துணருமிடத்து நெடுங்காலமாக அடிப்பட்டு வழங்கிய உலக வழக்கினையொட்டியே அவை அறியப்படுவனவாம். அடையும் அடையடுத்த பொருளும் என இரண்டாய் ஒன்றிய உவமேயப் பொருள், அடையும் அடையடுத்த பொருளும் என இவ்வாறு இரண்டாய் நிறுத்தப்படும் உவமையின் வழியே உவமித்துரைக்கப்படும் என்பர் ஆசிரியர். “பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்” (பெரும்பாண்-220-1) என்புழிச் சண்பங்கோரையின் பூந்துகள் படிந்த செஞ்சுவட்டினை யும் அச்சுவட்டினைப் பொருந்திய உழவர் சிறாரது கரிய மார்பினையும் இணைத்து ஒன்றாக உவமிக்கக் கருதிய புலவர், அவ்விரண்டினையும் முறையே பொன்னின் உரையோடும் அதனைப்பொருந்திய உரைகல்லோடும் இணைத்து உவமை கூறினமையின், இரட்டைக் கிளவியாகிய உவமேயம் இரட்டைக் கிளவியாகிய உவமானத்தின் பின் வந்தமை காண்க. புலவன் தான் வெளிப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியுடன், அதனை உவமையாகக் கொண்டு உய்த்துணரப் படும் உவமேயப் பொருள் இதுவென வேறு நிறுத்திக் கூறாமல், உவம நிலங்களுட் பிறந்த பிறவிகளோடு சார்த்தி நோக்கிக் கருத்தினால் இதற்கு இது உவமையென்று கொள்ளவைத்த முறையினால், இன்ன பொருட்கு இஃது உவமமாயிற்றென்ற நல்லுணர்வுடை யோர் துணிந்து கொள்ள வருவது மேற்கூறிய உள்ளுறை யுவமமாகும் என்பர் ஆசிரியர். எனவே இது நல்லுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்குப் புலனாகா தென்பதும், உணர்வுடையோர் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இஃது அமைதல் வேண்டுமென்பதும், இதனால் இவ்வுவமை செய்யுளுட் பயின்று வருமென்பதும் கூறினாராயிற்று. உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாக ஒருங்கு வைத்துக் கூறப்படாத நிலையிலும் உள்ளுறையாகிய இஃது உவமம்போன்று பொருள்கொள்ளப்படுதலின் இதனை உவமையென்றார். உவமை என்பது ஒப்பினாலாய பெயர். உவமம் போலப் பொருள் கொள்ளப்படுதலின் இதனை உவமப் போலியென வழங்குவர் ஆசிரியர். உவமைப் போலியாகிய இவ்வுள்ளுறை ஐந்துவகைப்படு மென்பர். அவையாவன வினை, பயன், மெய், உரு பிறப்பு என்னும் இவ்வைந்தும் பற்றி வருவனவாம். “பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊர எந்நலந் தொலைவ தாயினும் துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே” (ஐங்குறு-63) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறுவதாக அமைந்ததாகும். இதன்கண், பொய்கை யாகிய தூய இடத்திற் பிறந்த நீர் நாயானது, தான் முதல்நாள் தின்ற வாளைமீனின் புலால் நாற்றத்தோடும் பின்னை நாளிலும் அதனையே விரும்பிப்பெறும் ஊரனே’ எனத் தலைவனை அழைக்கு முகமாக, அத்தலைவன் நல்ல குலத்திற் பிறந்தும் இழிகுலத்தாராகிய பரத்தையரைத் தோய்ந்து பின்னும் அவரையே நாடிச் சேர்தலைக் கருதியுணர வைத்தமையின், இது பிறப்புப்பற்றி வந்த உள்ளுறையுவமமாகும். இவையெல்லாம் கருதிக் கூறின் செய்யுட்குச் சிறப்பாதலும், இக்கருத்தின்றி ‘நீர் நாய் வாளை பெறூ உம் ஊரன்’ என வறிதே கூறின் ஒருபயனும் இல்லையாதலும் உணர்ந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் இவ்வுள்ளுறை யுவமத்தால் திணையுணரு முறையினைச் சிறப்பாக வற்புறுத்துவாராயினர். வினை, பயன், மெய், உரு என்பனபற்றி வரும் உள்ளுறைகளும் இவ்வாறே கருதியுணரப்படும். தலைமகள் உள்ளுறை யுவமங் கூறின் அவளறிந்த பொருள் பற்றிக் கூறப்படும் எனவும், தோழி கூறுவாளாயின் தான்பயின்ற நிலத்துள்ளன அன்றிப் பிறநிலத்துள்ளன உவமை கூறப்பெறாள் எனவும் கூறுவர் ஆசிரியர். எனவே, தலைவி தான் வாழும் நிலத் துள்ளன எல்லாம் அறியுமளவுக்குப் பயிற்சியில்லாதவள் எனவும், அவளுடைய தோழி முதலிய ஆயத்தாராயின் தம் நிலத்துள்ளன எல்லாம் அறிந்திருத்தலால் எத்தகைய தவறுமில்லை யெனவும் கூறியவாறு. தலைமகன் உள்ளுறை யுவமை கூறுங்கால் தனது உரனுடைமை தோன்றச் சொல்லப்படும். பாங்கன், பாணன் முதலிய ஏனையோர் கூறுங்கால் இடம் வரையப்படாது தாம் தாம் அறிந்த சொல்லாலும் நிலம் பெயர்ந்துரையாத பொருளாலும் அந்நிலத்துள்ள பொருளாலும் உள்ளுறையுவமை சொல்லுதற் குரியர். மகிழ்ச்சி விளைக்குஞ் சொல்லும் புலவியாகிய துன்பத் தினைப் புலப்படுத்துஞ் சொல்லும் இவ்வுள்ளுறையுவமையிடத்தே தோன்றுமென்றும், மேற்கூறிய மகிழ்ச்சி, புலவி என்னும் இரண்டிடத்தும் தலைமகள் உள்ளுறை கூறுதற்கு உரியள் என்றும் கூறுவர் ஆசிரியர். எனவே இவ்விரண்டுமல்லாத ஏனைய இடங்களில் தலைமகள் உள்ளுறை கூறப்பெறாள் என்றவாறு. இத்தகைய இடவரையறை யெதுவும் தலைமகனுக்கு இல்லை. ஆகவே அவன் கூறும் உள்ளுறை எப்பொருட்கண்ணும் வரும் என்பது கருத்து. தோழியும் செவிலியும் உள்ளுறையுவமம் கூறுங்கால், காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாறு நோக்கிக் கேட்டோர் எளிதில் உய்த்துணர்ந்து கொள்ளுதற்குரிய நெறியால் கூறுதற்குரியராவர். இவ்வாறு அகத்திணை யொழுகலாற்றில் உள்ளுறையுவமம் கூறுதற்குரியார் இன்னின்னார் என விதந்து கூறவே, இவர்களல்லாத தலைமகளது நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தமையன்மாரும் உள்ளுறையுவமை கூறப்பெறார் என்பதும், இங்ஙனம் உள்ளுறை கொள்ளுதல் அகத்திணை யொழுகலாற்றிற் போலப் புறத்திணை யொழுக லாற்றில் அத்துணை இன்றியமையாத தன்றாதலின் இவ்வுள்ளுறையுவமத்தினை அகத்திணைக்கே சிறப்புரிமை யுடையதாக ஆசிரியர் எடுத்தோதினாரென்பதும் நன்கு பெறப்படும். எடுத்தோதப்பட்ட இலக்கணங்களில் வேறுபாடு தோன்ற வந்த உவமப் பகுதிகளை அங்ஙனம் வேறுபட வந்தனவாயினும் மேற்கூறிய பகுதியால் ஒப்புநோக்கி அமைத்துக்கொள்ளும் இடமறிந்து பொருத்துக என்பர் ஆசிரியர். உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமை கூறாது பெயர் முதலியன கூறும் அளவால் மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறுதலும், ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோர் உவமை நாட்டுதலும், உவமை யும் பொருளும் முற்கூறி நிறுத்திப் பின்னர் மற்றைய ஒவ்வா வென்றலும், உவமைக்கு இருகுணங் கொடுத்து வறிதே கூறு மிடத்து உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை மொழி ஒன்றற்குக் கூறாது கூறுதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், ஒவ்வாக் கருத்தினால் ஒப்புமை கொள்ளுதலும், உவமத்திற்கன்றி உவமத் திற்கேதுவாகிய பொருள்களுக்குச் சில அடைகூறி அவ் அடை மொழியானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும், உவமானத்தினை உவமேயமாக்கியும் அது விலக்கியும் கூறுதலும், இரண்டு பொருளாலே வேறுவேறு கூறிய வழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ள வைத்துலும் ஆகிய இவைபோல்வன வெல்லாம் வேறுபட வந்த உவமப் பகுதிகள் என்றும், இவற்றைவினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் பற்றி ஏனையுவமத்தின்பாலும், உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்கவாராது குறிப்பினாற்கொள்ள வருதல் பற்றி உள்ளுறை யுவமத்தின் பாலும்படுத்து உணரப்படுமென்றும் கூறுவர் பேராசிரியர். உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறுதலும் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கும் மரபாகும் என்றும், உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்ற வருதலேயன்றி உவமையது தன்மை கூறுதலும் உவமையாதற்கு உரியதென்றும் உவமையும் பொருளும் வேறு வேறு நிறுத்தி இதுபோலும் இதுவென்று கூறாது அவ்விரண்டினையும் ஐயுறச் சொல்லுதலும் உவமையைப் பொருளாக்கிப் பொருளை உவமையாக்கிச் சொல்லுதலும் என இங்ஙனம் தடுமாறி வரும் உவமம் தவறென்று விலக்கப்படாதென்றும், ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறுத்தி அப்பொருளோடு பிறிதொரு பொருளை உவமித்தலும் உவமையெனப்படுமாயினும் அதனாற் பொருள் விளங்காமையின் அடுக்கிவரலுவமையாகிய அது கொள்ளப்படாதென்றும், சுண்ணமாகிய துகள்போலச் செய்யுளிற் பலவிடங்களிலும் சிதர்ந்து கிடக்கும் பொருள்கோள் வகையாகிய சுண்ணம், அடிமறி, மொழிமாற்றும் என்னும் மூன்றுமல்லாத நிலையில் உவமையையும் நிரலே நிறுத்திப் பொருளையும் நிரலே நிறுத்தி ஒப்புமை கூறின் அது நிரல் நிறையுவமம் என ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் இவ்வியலின் இறுதிக்கண் உவமை பற்றிய சில மரபுகள் தொகுத்துரைக்கப் பட்டன. அசிரியர் தொல்காப்பியனார், பொருள் புலப்பாட்டினைச் செய்யும் கருவியென்ற முறையிலேயே உவமையின் பகுதிகளை இவ்வியலில் விரித்துக் கூறியுள்ளார். பிற்காலத்தில் வந்த தண்டியாசிரியர் முதலியோர் உவமையாகிய இதனைச் செய்யுட்கு அலங்காரமாகக் கொண்டு தாம் இயற்றிய அணியிலக்கண நூலில் இதனையும் ஓரலங்காரமாக்கி இலக்கணங் கூறியுள்ளார்கள் ‘தாமரை போலும் முகம்’ எனவரும் உவமத்தொடர் ‘முகம் போலுந் தாமரை’ என மாறி இடைநின்ற உவமவுருபு தொக்கு ‘முகத்தாமரை’ எனவரின் அஃது உருவகம் எனவேறோர் அணியாய் விடும் என்பது அன்னோர் துணிபாகும். இவ்வாறே தன்மை, வேற்றுமை, வேற்றுப்பொருள் வைப்பு, ஒட்டு முதலிய அலங்காரங்கள் பலவும் தொல்காப்பியனார் கூறிய உவமப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பெற்றன என்பது நுண்ணுணர்வினாற் கூர்ந்து நோக்கும் வழி இனிது புலனாகும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டியாசிரியர் வடமொழியில் இயற்றிய காவியா தரிசம் என்னும் அலங்கார நூலிலும் அதன் தமிழ்மொழி பெயர்ப்பாகிய தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலிய பிற்கால நூல்களிலும் வகுத்துரைக் கப்படும் அணிவிகற்பங்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் வெவ்வேறணிகளாக வழங்கின அல்ல என்பதும், தொல்காப்பியனார் கூறும் உவமப் பகுதிகளைச் செய்யுளிற் பிரிப்பின்றி ஒன்றாகிய பொருளுறுப்பெனக் கொள்வதன்றிச் செய்யுளுக்கு வேறாகி நின்று அதற்கு அழகு செய்யும் வேறோர் அலங்காரமாகக் கூறுதல் பொருந்தாதென்பதும் தொல்காப்பிய வுரையாசிரியராகிய பேராசிரியர் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் துணிபாகும். “இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளுங் கூறுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுடகண்ணே அணியாம் என இக்காலத்தாசிரியர் நூல் செய்தாருமுளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணம் கூறப்படா; என்னை? தாம் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியும் வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன் றாகியும் வரும். அல்லதூஉம் பொருளதிகாரத்துட் பொருட்பகுதிகளெல்லாஞ் செய்யுட்கு அணியாகலான்... அவையெல்லாந் தொகுத்து அணியெனக் கூறாது வேறுசிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றாம்.... அவற்றைப் பொருளுறுப்பு என்பதல்லது அணியென்பவாயின், சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல, அவ்வணியுஞ் செய்யுட்கு வேறாதல் வேண்டும். செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறியொழியின் அது குன்றக்கூறலாம்.” எனவரும் பேராசிரியர் உரைப்பகுதி, ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய உவமப் பகுதிகளின் நுட்பத்தையும் அந்நுட்பம் இனிது விளங்காத பிற்காலத்தில் வேறு காரணமுணரப்பெறாது இடர்ப்பட்டுச் செய்தனவாகிய அணியிலக்கணங்களின் அமைதியையும் நன்கு புலப்படுத்தல் காணலாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை -10, பக். 308-332 ஏழாவது உவமவியல் 272. வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே வகைபெற வந்த வுவமத் தோற்றம். என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உவமவியல் என்னும் பெயர்த்து. ஒருபுடை ஒப்புமைபற்றி யுவமை உணர்த்தினமையாற் பெற்ற பெயர்; மெய்ப்பாடு பற்றித் தோன்றி வழங்குவது. இதனாற் பயன் என்னை மதிப்பதோவெனின், புலன் அல்லாதன புலனாதலும், அலங்காரமாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும். ஆப்போலும் ஆமா என வுணர்த்தியவழி, அதனைக் காட்டகத்துக் கண்டான் முன் கேட்ட ஒப்புமைபற்றி இஃது ஆமாவென்று அறியும். “தாமரை போல் வாள்முகத்துத் தையலீர்” என்றவழி, அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயக்கும். அஃதாவது மேற்சொல்லப்பட்ட எழு திணையினும் யாதனுள் அடங்கும் எனின், அவையெல் லாவற்றிற்கும் பொதுவாகிப் பெரும்பான்மையும் அகப்பொருள் பற்றி வரும். மேற்குறிப்புப் பற்றி வரும் மெய்ப்பாடு கூறினார்; இது பண்பும் தொழிலும் பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது. இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உவமத்தினை யொருவாற்றாற் பாகுபடுத்து உணர்த்துதல் நுதலிற்று. வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் என்பது - தொழிலும் பயனும் வடிவும் நிறனும் என்று சொல்லப்பட்ட நான்குமே அப்பாகுபட வந்த உவமைக்கண் புலனாம் என்றவாறு. எனவே கட்புலமல்லாதனவு முள என்றவாறாம். அவை செவியி னானும் நாவினானும் மூக்கினானும் மெய்யினானும் மனத்தினானும் அறியப்படுவன. இவ்விருவகையும் பாகுபட வந்த உவமையாம். அவற்றுள், கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல் முடக்கல் விரித்தல் குவித்தல் முதலாயின. பயனாவது நன்மையாகவும் தீமையாகவும் பயப்பன. வடிவாவது வட்டம் சதுரம் கோணம் முதலாயின. நிறமாவன வெண்மை பொன்மை முதலாயின. இனிச் செவிப்புலனாவது ஓசை. நாவினான் அறியப்படுவது கைப்பு கார்ப்பு முதலிய சுவை. மெய்யினான் அறியப்படுவன வெம்மை தண்மை முதலாயின. மூக்கான் அறியப்படுவன நன்னாற்றம் தீநாற்றம். மனத்தான் அறியப்படுவன இன்ப துன்ப முதலியன. உதாரணம்: “புலிபோலப் பாய்ந்தான்” என்பது வினை. “மாரி யன்ன வண்கை” (புறம். 133) என்பது பயன். “துடி போலும் இடை” என்பது வடிவு. “தளிர் போலும் மேனி” என்பது நிறம். “குயில் போன்ற மொழி” செவியானறியப்பட்டது. “வேம்புபோலக் கைக்கும்” நாவினானறியப்பட்டது. “தீப்போலச் சுடும்” மெய்யினானறியப்பட்டது. “ஆம்ப னாறுந் துவர்வாய்” (குறுந்.300) மூக்கானறியப்பட்டது. “தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு.” (குறள். 1107) மனத்தானறியப்பட்டது. பிறவு மன்ன. (1) 273. விரவியும் வரூஉம் மரபின வென்ப. என்-னின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட உவமைகள் ஒரோவொரு பொருளான் வருதலன்றி, இரண்டும் பலவும் விரவியும் வரும் மரபினையுடைய என்றவாறு. உம்மை இறந்தது தழீஇயிற்று. “இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று” €(அகம். கடவுள் வாழ்த்து) என்றவழி வடிவும் நிறனும் விரவிவந்தன. பிறவும் அன்ன. இன்னும் “விரவியும் வரூஉம் மரபின” என்றதனாற் பலபொருள் விரவி வந்தது, “அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ.” (கலித். 84) என்றவழித் தாமரையிலையும் பூவும் குடைக்கும் புதல்வற்கும் உவமையாயினும் தோற்றத்திற் கிரண்டும் ஒருங்கு வந்தமையான் வேறோதப்பட்டது. இன்னும் “விரவியும் வரூஉம் மரபின” என்றதனான் “தேமொழி” எனத் தேனின்கண் உளதாகிய நாவிற்கினிமையும் மொழிக்கண் உளதாகிய செவிக்கினிமையும் உவமிக்க வருதலுங் கொள்க. பிறவும் இந்நிகரனவெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. (2) 274. உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை என் - னின், மேலதற்கோர் சிறப்பு விதியுணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட உவமை ஆராயுங்காலத்து உயர்ந்ததன் மேலன என்றவாறு. ஈண்டு உயர்ச்சியாவது - வினைமுதலாகச் சொல்லப் பட்டன உயர்தல். “அரிமா னன்ன வணவங்குடைத் துப்பின்” (பட்டினப். 298) என்றவழித் துப்புடையன பலவற்றினும் அரிமா உயர்ந்த தாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது. “தாமரை புரையுங் காமர் சேவடி” (குறுந். கடவுள் வாழ்த்து) என்றவழிச் சிறப்புடையன பலவற்றினும் தாமரை யுயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது. அஃதேல், “கொங்கிய ரீன்ற மைந்தரின் மைந்துடை யுழுவை திரிதருங் காடே” என இழிந்ததன்மேல் உவமை வந்ததால் எனின், ஆண்டுக் கொங்கியரீன்ற மைந்தரின் என விசேடித்த தன்மையான் அவர் பிறநிலத்து மக்களோடு ஒரு நிகரன்மையின் அவரும் உயர்ந் தோராகக் கொள்க. “சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசினன் கையது போழ்துன் றூசியின் விரைந்தன்று மாதோ 1வூர்தர வந்த பொருநனோ டார்புனை தெரிய னெடுந்தகை போரே.” (புறம். 28) என்பது இழிந்ததன்மேல் வந்ததாவெனின் 2ஆணியூசியினது விரைவு மற்றுள்ள விரைவின் உயர்ந்ததாகலின் அதுவும் உயர்ந்ததாம். (3) 275. சிறப்பே நலனே காதல் வலியோ டந்நாற் பண்பு நிலைக்கள மென்ப. என்-னின், இதுவுமது. மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்த வற்றோடு உவமிக்கப்பட்டனவேனும், சிறப்பாதல் நலனாதல் காதலாதல் வலியாதல் நிலைக்களனாக வரும் என்றவாறு. இவை யிற்றைப் பற்றித் தோன்றுமென்பது கருத்து. “முரசுமுழங்கு தானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை யெழாஅல்” (பொருந. 54.6) எனச் சிறப்புப்பற்றி வந்தது. ‘ஓவத் தன்ன வியனுடை வரைப்பின்” (புறம். 251) என்பது நலம் பற்றி வந்தது. “கண்போல்வா னொருவ னுளன்.” என்பது காதல்பற்றி வந்தது. “அரிமா னன்ன வணங்குடைத் துப்பின்” (பட்டினப். 298) என்பது வலிபற்றி வந்தது. பிறவு மிவ்வாறே படுத்துநோக்கிக் கண்டுகொள்க. (4) 276. கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும். என்-னின், எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட சிறப்பு முதலிய நான்கும் ஒழியத் தாழ்ந்த பொருளோடும் உவமை பொருந்துமிடத்து உவமிக்கப் படும்; அதனோடுங்கூட ஐந்தாம் என்றவாறு. என்றது பொருள் உவமமாயும் உவமம் பொருளாயும் நிற்குமிட மும் உள என்றவாறு. “ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயித ழூசி போகிய சூழ்செயன் மாலையன்.” (அகம். 48) என்றாற் போல்வன. மேற்சொல்லப்பட்ட நான்கும் உயர்வின் பகுதியாதலின் இதனொடுங் கூட ஐந்தென்றான். (5) 277. முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு நுதலிய மரபி னுரியவை யுரிய. என்-னின், இஃது உவமைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. ஐயம் அறுத்ததூஉமாம். முதலுஞ் சினையுமென்று சொல்லப்பட்ட இரு வகைப் பொருட்குங் கருதிய மரபினான் அவற்றிற் கேற்பவை உரியவாம் என்றவாறு. சொல்லதிகாரத்துட், “செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே.” (சொல். 16) என்றான். அவ்வாறன்றி யுவமைக்கு நியமமில்லை என்றவாறாயிற்று. “ஒருகுழை யவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்” (கலித். 26) என்பது முதற்கு முதல் உவமமாயிற்று. “அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ.” (கலித். 84) என்பது முதற்குச் சினை உவமமாயிற்று. “தாமரை புரையுங் காமர் சேவடி” (குறுந். கடவுள் வாழ்த்து) என்பது சினைக்குச் சினை யுவமமாயிற்று. “நெருப்பி னன்ன சிறுகட் பன்றி” (அகம். 84) என்பது சினைக்கு முதல் உவமமாயிற்று. (6) 278. சுட்டிக் கூறா வுவம மாயிற் பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே. என்-னின், இதுவுமோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. சுட்டிக் கூறா வுவமை என்பது - உவமிக்கப்படும் பொருட்கு உவமை இதுவெனச் சுட்டிக் கூறாமை. அவ்வாறு வருமாயின் உவமச் சொல்லொடு பொருந்த உவமிக்கப்படும் பொருளொடு புணர்த்து உவம வாய்பாடு கொள்க என்றவாறு. இதனாற் சொல்லியது, உவம வாய்பாடு தோன்றா 3உவமம் பொருட்குப் புணராக்கண்ணும் உவமை உள என்றவாறாம். “மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.” (குறள். 90) இதன்கண் ‘அதுபோல’ எனச் சுட்டிக் கூறா வுவமை யாயினவாறு கண்டுகொள்க. (7) 279. உவமமும் பொருளு மொத்தல் வேண்டும் என்-னின், இஃது உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இரட்டைக் கிளவியாயினும், நிரனிறுத்தமைத்த நிர னிறைச் சுண்ணமாய் வரினும், மிக்குங் குறைந்தும் வருதலன்றி யுவமை யடையடுத்துவரினும், தொழிற்பட்டு வரினும், ஒன்றும் பலவுமாகி வரினும், வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டும் என்றவாறு. அவ்வழி வாராது மிக்குங் குறைந்தும் வருவது குற்றம் என்ற வாறாம். (8) 280. பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு மருளறு சிறப்பினஃ துவம மாகும். என்-னின், இஃது உவமைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உவமிக்கும் பொருடன்னை யுவமமாக்கிக் கூறினும் மயக்கமற்ற சிறப்பு நிலைமையான் எய்தும் உவமையாகும் என்றவாறு. ஒருசாராசிரியர் ரூபகம் சொல்லப்பட்டது என்ப; உவமை பற்றி வருதலின் இஃது உவமையின் பாகுபாடு என்பது இவ்வாசிரியன் கருத்து. “இரும்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் பெருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் பமைந்த குருதிப் பல்லிய முரசுமுழக் காக வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுதைத்த கனைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவயிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை 4சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் பேஎ யெற்றிய பிணம்பிறங்கு பல்போர்க் கானநரி யொடு கழுகுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொருகளந் தழீஇப் பாடுநர்க் கீந்த பீடுடை யாளன்.” (புறம். 369) என வரும். “பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின் றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை யரச வன்ன மாங்கினி திருப்பக் கரைநின் றாடு மோர்மயி றனக்குக் கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்.” (மணிமே. 4:8:13) என்பதும் அது. இவ்வாறு வருவனவெல்லாம் இச் சூத்திரத்தாற் கொள்க. (9) 281. பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக் குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய. என்-னின், இஃது உவமைக் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. உவமையும் பொருளும் ஒத்தன கூறலேயன்றிப் பெருகக் கூறலுஞ் சிறுகக் கூறலும் மேற்சொல்லப்பட்ட சிறப்பென்னும் நிலைக் களத்து நீங்காச் சிறப்பின் வரூஉம் வழக்கப்பாட்டினை யுடைய என்றவாறு. எனவே, வழக்கின்கட் பயின்று வாராத இறப்ப வுயர்தலும் இறப்ப விழிதலும் ஆகா என்றவாறு. “அவாப்போ லகன்றத னல்குன்மேற் சான்றோ ருசாஅப்போல வுண்டே மருங்குல்” என்றவழி அல்குல் பெரிதென்பான் ஆசையோ டுவமித்தலின் இது தக்கதாயிற்று; மருங்குல் நுண்ணிதென்பான் சான்றோ ருசாவோடு உவமித்தலின் அதுவும் தக்கதாயிற்று. அவை சிறப்புப் பற்றி வந்தன. இனி நெறிப்பாடின்றி வருவன இறப்ப உயர்தலும் இறப்ப இழிதலும் என இருவகைப்படும். “இந்திரனே போலு மிளஞ்சாத்தன்... நாறுமிணர்.” (யாப்.வி.ஒழி.) இஃது இறப்பவுயர்ந்தது. வழக்கிறந்து வருதலின் இவ்வாறு வரும் உவமை கூறப்படாது. “வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளி யிரிவதுபோ லெங்கெங்கும் - வள்ளற்கு மாலார் கடல்போல மண்பரந்த வாட்டானை மேலாரு மேலார் விரைந்து.” (யாப். வி. ஒழி.) இஃது இறப்ப இழிதலின் இதுவு மாகாது. அஃதேல் ‘நாயனையார் கேண்மை தழீஇக் கொளல் வேண்டும்” (நாலடி. 213) என வருமால் எனின், அது நாயின்கட் கிடந்ததோர் நற்குணம்பற்றி வருதலின் இறப்ப இழிதல் ஆகாது. (10) 282. அவைதாம். அன்ன வேய்ப்ப வுறழ வொப்ப வென்ன மான வென்றவை யெனாஅ வொன்ற வொடுங்க வொட்ட வாங்க வென்ற வியப்ப வென்றவை யெனாஅ வெள்ள விழைய விறப்ப நிகர்ப்பக் கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅக் காய்ப்ப மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅப் புல்லப் பொருவப் பொற்பப் போல வெல்ல வீழ வாங்கவை யெனாஅ நாட நளிய நடுங்க நந்த வோடப் புரைய வென்றவை யெனாஅ வாறா றுவமையு மன்னவை பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப் பினவே. என்-னின், இஃது உவமை யுணர்த்துஞ் சொற்களை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட உவமைகள்தாம் அன்ன என்பது முதலாகப் புரைய என்பதீறாக வந்தனவும் அன்னவை பிறவுமாகிச் சொல்லுங் காலத்துப் பல குறிப்பினையுடைய என்றவாறு. சொல்லுங்காலத்து என்றமையிற் சொல்லென்பது கொள்க. அன்னபிறவாற் கொள்ளப்படுவன: நோக்க, நேர, அனை, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர என்றித் தொடக்கத்தன கொள்க. ‘பல்குறிப்பின’ என்றதனான் இச்சொற்கள் பெயரெச்ச நீர்மையவாய் வருவனவும் வினையெச்ச நீர்மையவாய் வருவனவும் முற்று நீர்மையவாய் வருவனவும் இடைச்சொல் நீர்மையவாய் வருவனவும் எனக் கொள்க. ‘புலிபோன்ற சாத்தன்’ ‘புலிபோலுஞ் சாத்தன்’ என்பன பெயரெச்சம். புலிபோன்று வந்தான்’ ‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பன வினையெச்சம். ‘புலி போலும்’ ‘புலி போன்றனன்’ என்பன முற்று. அன்ன, இன்ன: இடைச்சொல். இன்னும் ‘பல்குறிப்பின’ என்றதனான் விரிந்தும் தொக்கும் வருவனவுங் கொள்க. ‘தேன் போல இனிய மொழி’ இது விரிந்தது. ‘தேன் போலும் மொழி.’ இஃது உவமை விரிந்து ஒப்புமை குறித்துத் தொக்கு நின்றது. ‘தேமொழி’ என்பது எல்லாந் தொக்கது. பிறவு மன்ன. ஈண்டு எடுத்தோதப்பட்ட முப்பத்தாறனுள் ஒன்று, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க என்பன வொழித்து நின்ற முப்பதும் அன்ன பிறவாற் கொள்ளப்பட்டவற்றுள் நோக்க என்பதும் நேர என்பதுஞ் சிறப்பு விதியுடையவாதலின் அவற்றிற்கு உதாரணம்: ஆண்டுக் காட்டுதும். ஏனைய ஈண்டுக் காட்டுதும். “வேலொன்று கண்” “கயலென்ற கண்” “மணிநிற மாற்றிய மாமேனி” “மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்” “வேயொடு நாடிய தோள்” “படங்கெழு நாகம் நடுங்கு மல்குல்” “குன்றி னனையாருங் குன்றுவர்” (குறள். 965) “இறந்தாரை யெண்ணிக்கொண் டற்று” (குறள். 22) “மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி” (கலித். 15) “துணைமல ரெழினீலத் தேந்தெழின் மலருண்கண்” (கலித்.14) “முத்தேர் முறுவலாய்” (கலித். 93) “எச்சிற் கிமையாது பார்த்திருக்கு மச்சீர்” (நாலடி. 345) “யாழ்கெழு மணிமிடற் றந்தணன்” (அகம். கடவுள் வாழ்த்து) “கிளைசெத்து மொய்த்த தும்பி” (நற். 35) என வரும். பிறவுமன்ன. (11) 283. அன்ன வாங்கு மான விறப்ப வென்ன வுறழத் தகைய நோக்கொடு கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம். என்-னின், மேற்சொல்லப்பட்டவற்றுள் சிறப்பு விதியுடையன உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். அவற்றுள் வினையுவமத்திற்குரிய சொல் வரையறை யுணர்த்துதல் நுதலிற்று. அன்ன முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் வினை யுவமத்திற் குரிய சொல்லாம் என்றவாறு. “கொன்றன்ன வின்னா செயினும்” (குறள். 106) “பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு” (முருகு. 2) “புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்” (பெரும்பாணாற். 269, 270) “புலியிறப்ப வொலிதோற்றலின்” “புலியென்னக் கலிசிறந் துராஅய்” “செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை” (முருகு. 5) “பொருகளிற் றெருத்தின் புலிதகையப் பாய்ந்து” “மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார்” என வரும். (12) 284. அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும். என்-னின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்டவற்றுள் அன்ன என்னுஞ் சொல் ஒழிந்த பொருளொடுஞ் செல்லும் என்றவாறு. “மாரி யன்ன வண்கை” (புறம். 133) இது பயன். “பரியரைக் கமுகின் பாளையம் பசுங்காய் கருவிருந் தன்ன கண்கூடு சிறுதுளை” (பெரும்பாணாற். 7,8) இது மெய். “செவ்வா னன்ன மேனி” (அகம் கடவுள் வாழ்த்து) “பாலன்ன மென்மொழி” இவை உரு. பிறவுமன்ன. (13) 285. எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழ வென்றாங் கெட்டே பயனிலை யுவமம். என்-னின், பயனிலை யுவமைக்குரிய சொல் வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. எள்ள என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலையுவமைக்குச் சொல்லாம் என்றவாறு. “5எழிலி வான மெள்ளினன் றரூஉங் கவிகை வண்கைக் கடுமான் றோன்றல்” “மழைவிழை தடக்கை 6வாய்வா ளெவ்வி” “புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல” “விண்பொருபுகழ் விறல்வஞ்சி” (புறம். 11) “கார்கள்ள 7வுற்ற பேரிசை யுதவி” “இருநிதி மதிக்கும் பெருவள் ளீகை” “வீங்குசுரை நல்லான் வென்ற வீகை” “விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் வரையாது 8சுரக்கும் உரைசால் தோன்றல்.” என வரும். (14) 286. கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய வொட்ட வொடுங்க வோட்ட நிகர்ப்பவென் றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். என்-னின், மெய்யுவமத்திற் குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று. கடுப்ப என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்யுவமத்திற்குரிய சொல்லாம் என்றவாறு. “விண்ணதி ரிமிழிசை கடுப்ப” (மலைபடு. 2) “அகலிரு விசும்பிற் குறைவில் ஏய்ப்ப” “வேய்மருள் பணைத்தோள் நெகிழ” (அகம். 1) “வேய்புரை மென்றோள்” (கலித். 29) “முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை, வியப்பன தழீஇ” “பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்” “செந்தீ யோட்டிய வஞ்சுடர்ப் பருதி” “கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை” என வரும். (15) 287. போல மறுப்ப வொப்பக் காய்த்த நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி யுருவி னுவமம். என்-னின், உருஉவமத்திற்குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று. போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் உருவுவமத்திற் குரியசொல்லாம் என்றவாறு. “தன்சொ லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யும் ஊர்கிழ வோனே.” (ஐங்குறு. 41) “மணிநிற மறுத்த மலர்ப்பூங் காயா” “ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம்” “கணைக்கால் நெய்தல் காய்த்திய கண்ணியம்” “கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்” (அகம். கடவுள் வாழ்த்து) “தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி” என வரும். நளிய நந்த என்பன வந்தவழிக் கண்டுகொள்க. (16) 288. தத்த மரபிற் றோன்றுமன் பொருளே. என்-னின், மேலனவற்றிற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. 9மேற்பாகுபடுத்துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற் றானன்றித் தத்தமரபின் தோன்றும் பொருளும் உளவா மென்றவாறு. மன் ஆக்கங் குறித்து வந்தது. ஈண்டு மரபென்றது பயிற்சியை. இதனானே, நூல் செய்கின்ற காலத்து வினை முதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற்றென்று கொள்ளப்படும். “முழவுறழ் தடக்கையி னியல வேந்தி” (முருகு. 215) “மாவென்ற மடநோக்கின்” (கலித். 57) “வேய்வென்ற தோள்” (கலித். 138) “மாரிவீ ழிருங்கூந்தல்” (கலித். 14) “பொன்னுரை கடுக்குந் திதலையர்” (முருகு. 145) “குறுந்தொடி ஏய்க்கு மெலிந்துவீங்கு திவவின்” (பெரும்பாண்.13) “செயலையந் தளிரேய்க்கும் எழினலம்” (கலித். 15) “10பாஅன்மருண் மருப்பி னுரல்புரை பாவடி” (கலித். 21) “வலம்புரி புரையும் வால்நரை முடியினர்” (முருகு. 127) “ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல” (அகம். 22) “தாமரைபோல் வாள்முகம்” (திணைமாலை. 1) “கள்வர்போ னோக்கினு நோக்கும்” (கலித். 61) “ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ” (அகம். 30) என வரும். பிறவுமன்ன. (17) 289. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. என்-னின், எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலே யன்றி எட்டாம் பக்கமும் உண்டு என்றவாறு. அவையாவன: வினையும் வினைக்குறிப்புமென இருவகை யாம். பயன் என்பது, நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாம். மெய்யென்பது வடிவும் அளவும் என இருவகை யாம். உருவென்பது, நிறமுங் குணமுமென இருவகையாம். இவ்வகையினா னெட்டாயின. “பொன்னன்ன செல்வத்தன்” - இது வினைக்குறிப்பு. “ஞாயி றனையைநின் பகைவர்க்கு” (புறம். 59) இது தீப்பயன். “நெடுவரை மிசையிற் பாம்பென விழிதருங் கடுவரற் கலுழி” என்பது அளவு. “பாலன்ன மொழி” இது குணம். ஏனைய மேற்காட்டப்பட்டன. (18) 290. பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன் வழிமருங் கறியத் தோன்று மென்ப. என்-னின், இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. பெருக்கவுஞ் சிறுக்கவுங் கூறுதல் மெய்ப்பாட்டின் வழிப்பக்கம் புலப்படத் தோன்றும் என்றவாறு. எனவே, மெய்ப்பாடு தோற்றாதவழி இப்புணர்ப்பினாற் பயனின்றாம். “அவாப்போ லகன்றத னல்குன்மேற் சான்றோ ருசாஅப்போல வுண்டே மருங்குல்.” என்பது பெருமையுஞ் சிறுமையும் பற்றி உவகை நிகழ்ந்தது. “கலங்கவிழ்த்த நாய்கன்போற் களைதுணைப் பிறிதின்றி” €(யா.வி.ப. 318) என்பது துன்பப்பெருக்கம் சொல்லி யவலம் வந்தது. “பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு.” (முத்தொள். 88) இது பெருக்கம் பற்றி இளிவரல் வந்தது. பிறவுமன்ன. (19) 291. உவமப் பொருளி னுற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்திய லான. என்-னின், இஃது உவமைக்குரிய வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. உவமப் பொருளானே சொல்லுவான் குறிக்கப்பட்ட பொருளையுணருந் தெளியும் பக்கமும் உள, கூறுபாட்டியலான் என்றவாறு. தெளிமருங்காவது துணிவு பக்கம். எனவே துணியாமை உவமத் தின்கண்ணே வந்தது, அவ்வாறு வரினும் இதுவேயெனத் துணிதலின் துணி பக்கமாவது. “ஐதேய்ந் தன்று பிறையு மன்று 11மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று 12பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலும் மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று.” (கலித். 55) என்றவழித் துணியாது நின்றன நுதலும் முகனும் தோளுங் கண்ணும் சாயலும் மொழியு மெனத் துணிந்தவாறு கண்டு கொள்க. இன்னும் இதனானே, “கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர்” (சிலப். கானல். 11) என்றவழிக் கண் புருவங் கூந்தலை யுவமப் பெயரான் வழங்குதலுங் கொள்க. (20) 292. உவமப் பொருளை யுணருங் காலை மருவிய மரபின் வழக்கொடு வருமே. என்-னின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. உவமப் பொருளை உவமிக்கப்படும் பொருளாக உண ருங்காலை மருவிய மரபினானாய வழக்கொடு வரும் என்றவாறு. எனவே மருவாதன அவ்வாறு கயல் சிலை என்றாற்போலக் கூறப்படாவென்றவாறு. (21) 293. இரட்டைக் கிளவியு மிரட்டை வழித்தே. என்-னின், இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. இரட்டைக் கிளவியாவது உவமை யிரண்டு சொல்லோடு அடுத்துவருவதனோடு உவமிக்கப்படும் பொருளும் இரண்டு பொரு ளாகி வருதல்வேண்டும் என்றவாறு. அவ்வழி இரண்டுசொல்லும் ஒருசொன் னீர்மைப்பட்டு வருதல் வேண்டுமென்று கொள்க. “விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூற் கற்றாரோ டேனை யவர்.” (குறள். 410) இதன் வேறுபாடு அறிக. (22) 294. பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்ன மரபிற் கூறுங் காலைத் துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே. என்-னின், இஃது ஓருவமை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உவமைப்பொருள் தானன்மையான் உவமைப் பொருளொடு படாது பொருள் தோற்றிய இடத்தொடு நோக்கி முன்ன மரபினாற் சொல்லுங் காலத்துத் துணிவுடையோர் கொளின் அவர் துணிந்த துணிவின்கண்ணே வரும், உவமை என்றவாறு. முன்னமாவது. “இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியவென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம்.” (தொல். செய். 199) என்பதாகலின், இடத்தொடு பார்த்து ஏற்கும் பொருட்கட் கூறுவது. மேலைச் சூத்திரத்தளவும் பிறிது பொருளொடு உவமை கூறிப் போந்தார். இனிப் பொருள் தன்னோடே யுவமை கூறுகின்றார் என்று கொள்க. “நிலவுக்காண் பதுபோல அணிமதி யேர்தர.” (கலித். 119) என்றவழிக் காணப் பிறிதாகிய பொருளொடு உவமை கூறாமையிற் பிறிதொடு படாதாயிற்று. மதியினது எழுச்சியை நோக்குதலிற் பிறப்பொடு நோக்கிற்று. அவ்விடத்திற் கேற்பக் கூறுதலின் முன்னமாயிற்று. அம்மதியினது தோற்றம் இத்தன்மைத்தெனத் துணிதலின் அதன்கண் உவமைச்சொல் வந்தது. “வள்ளிதழ் கூம்பிய மணிமரு ளிருங்கழிப் பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப” (கலித். 121) என்பதும் அது. (23) 295. உவமப் போலி யைந்தென மொழிப. என்-னின், இதுவுமோர் உவமை விகற்பங் கூறுதல் நுதலிற்று. உவமையைப் போன்று வருவன ஐந்தென்று சொல்லுவர் என்றவாறு. அவையாவன: இதற்குவமையில்லை எனவும், இதற்கிது தானே யுவமை எனவும், பல பொருளினு முளதாகிய வுறுப்புக்களைத் தெரிந் தெடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்குவமையாம் எனவும், பலபொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்து வரின் இதற்குவமையாம் எனவும், கூடாப்பொருளோடு உவமித்து வருவனவும். உதாரணம்: “நின்னோ ரன்னோர் பிறரிவ ரின்மையின் மின்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும.” (புறம். 373) என்றும், “மன்னுயிர் முதல்வனை யாதலி னின்னோ ரனையைநின் புகழொடு பொலிந்தே.” (பரிபா. 1) என்றும், “நல்லார்க ணல்ல வுறுப்பாயின தாங்க ணாங்க ளெல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற் சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால் பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்த மானாள்.” என்றும், “நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல் வந்தோர்ங்கு புணர்ந்த விளக்கத் தனையை.” (பதிற்றுப். 14) என்றும், “வாரா தமைவானோ வாரா தமைவானோ வாரா தமைகுவ னல்லன் மலைநாட னீரத்து ளின்னவை தோன்றி னிழற்கயத்து நீருட் குவளை வெந்தற்று.” (கலித். 41) என்றும் வரும். (24) 296. தவலறுஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினு முறுப்பினு முருவினும் பிறப்பினும் வரூஉந் திறத்த வென்ப. என்-னின், மேலதற்கோர் புறனடை. மேற்சொல்லப்பட்ட ஐந்தும் உரைத்த வாய்பாட்டாற் கூறும்வழிச் சொல்லப்பட்ட ஐந்தினும் ஏதுவாகச் சொல்லிப் பின்னர்க் கூறல் வேண்டும் என்றவாறு. நினக்குவமையில்லை என்னும்வழிச் செயலானாதல், பயனானாதல், உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பாரில்லை யெனல் வேண்டும் என்பது கருத்து. பிறவுமன்ன. (25) 297. கிழவி சொல்லி னவளறி கிளவி. என்-னின், மேற்சொல்லப்பட்ட உவமை கூறுவார் பலருள்ளுந் தலைமகட்குரியதோர் பொருள் வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. உவமைப் பொருளைத் தலைமகள் கூறின் அவளறிந்த பொருட்கண்ணே உவமை கூறப்படும் என்றவாறு. எனவே, தானறியாத பொருட்கண் கூறினாளாகச் செய்யுட் செய்தல் பெறாது என்றவாறு. உதாரணம்: தலைமகள் கூற்றுட் கண்டுகொள்க. (26) 298. தோழிக் காயி னிலம்பெயர்ந் துரையாது. என்-னின், இது தோழியுவமை கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. தோழி உவமைசொல்லின் அந்நிலத்தினுள்ளன வன்றிப் பிறநிலத்துள்ளன கூறப் பெறாள் என்றவாறு. உரையாது ‘உவமம்’ என ஒருசொல் வருவிக்க. உதாரணம்: தோழி கூற்றுட் காண்க. (27) 299. கிழவோற் காயி னரனொடு கிளக்கும். என்-னின், இது தலைமகன் உவமை கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. தலைவன் உவமை கூறுவானாயின், அறிவொடு கிளக்கப்படும் என்றவாறு. அன்றியும், உரனொடு கிளக்கு முவமையெனப் பெயரெச்ச மாக்கிப் பெயர் வருவித்தலுமாம். உதாரணம்: தலைவன் கூற்றுட் காணப்படும். (28) 300. ஏனோர்க் கெல்லா மிடம்வரை வின்றே. மேற்சொல்லப்பட்ட மூவருமல்லாத நற்றாய் செவிலி முதலாயினார்க்கு உவமை கூறுமிடம் வரையறுக்கப்படா தென்றவாறு. (29) 301. இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு முவம மருங்கிற் றோன்று மென்ப. என்-னின், இது தலைவற்குந் தலைவிக்குந் தோழிக்கு முரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. மகிழ்ச்சி பயக்குங் கூற்றும் புலவி பயக்கும் கூற்றும் உவமப்பக்கத்தான் தோன்றும் என்றவாறு. “மாரி யாம்ப லன்ன கொக்கின் 13பார்வ லஞ்சிய பருவர 14லீர்ஞெண்டு 15கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர் கயிறரி யெருத்திற் கதழ்பூந் துறைவ” (குறுந். 117) என்றது தலைமகள் உவமை கூறியவழி, நின்ற பெண்டிர் தடுப்பக் கயிறரி யெருது போலப் போந்தனை யெனத் துனியுறு கிளவி வந்தது. “................ ................. ............ வானத் தணங்கருங் கடவு ளன்னோணின் மகன்றா யாதல் புரைவதா லெனவே.” (அகம். 16) என மகிழ்ச்சி பற்றி வந்தது. பிறவும் அன்ன. (30) 302. கிழவோட் குவமை யீரிடத் துரித்தே. என்-னின், தலைமகள் உவமை கூறுமிடன் உணர்த்துதல் நுதலிற்று. தலைமகள் உவமை கூறுங்கால் மேற்சொல்லப்பட்ட இரண்டிடத்தும் உரித்து என்றவாறு. எனவே, இரண்டும் அல்வழி உவமை கூறப்பெறாள் என்றவாறாம். (31) 303. கிழவோற் காயி னிடம்வரை வின்றே. என்-னின், தலைமகற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தலைமகன் உவமை கூறுதல் எப்பொருட் கண்ணுமாம் என்றவாறு. (32) 304. தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான. தோழியுஞ் செவிலியும் உவமை கூறுங்காற் பொருந்து மிடம் பார்த்துக் கூறுதற்குரியர், கேட்டோர் கொள்ளுநெறியான் என்றவாறு. “பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில்.” (மணிமே. ) என வரும். பிறவுமன்ன. மேற்காட்டினவற்றுள் கண்டுகொள்க. (33) 305. வேறுபட வந்த வுவமைத் தோற்றங் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல். என்-னின், மேலனவற்றிற் கெல்லாம் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. ஈண்டு எடுத்தோதப்பட்ட இலக்கணத்தின் வேறுபட்டு வந்த உவமைத் தோற்றம் எடுத்தோதிய நெறியிற் கொள்ளும்வழிக் கொளுவுக என்றவாறு. “பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக் கிருள்வளை வுண்ட மருள்படு பூம்பொழில்.” என வரும். பிறவுமன்ன. (34) 306. ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. என்-னின், இதுவு முவமைக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறலும் மருவிய இயல்பு என்றவாறு. “16கடந்தடு தானைச் சேர லாதனை யாங்ஙன மொத்தியோ வீங்குசெலல் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி யகலிரு விசும்பி 17னானும் பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே.” (புறம். 8) என வரும். “அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்.” (குறள். 1120) என்பது மது. (35) 307. உவமைத் தன்மையு முரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. என்-னின், இதுவு மது. உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்ற வருதலேயன்றி, யுவமையது தன்மை கூறலு முவமையாதற் குரித்து, பயனிலை பொருந்திய வழக்கின்கண் என்றவாறு. எனவே, இவ்வாறு வருவது பயனிலை யுவமைக்கண் என்று கொள்க. “பாரி பாரி யென்றுபல வேத்தி 18ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.” (புறம். 107) இது மாரி போலும் பாரியது கொடை என்னாது இவ்வாறு கூறும் பொருண்மையும் உவமமாம் என்றவாறு. (36) 308. தடுமாறு வரலுங் கடிவரை வின்றே. என்-னின், இதுவும் உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. உவமைக்கண் தடுமாறு வருதல் நீக்கப்படாது என்றவாறு. தடுமாறுதலாவது - ஐயமுறுதல். எனவே ஐயநிலை யுவமமுங் கண்டு கொள்க. “கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர னோக்கமிம் மூன்று முடைத்து.” (குறள். 1085) என்றும், “ஈங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் றைஇய பாவைகொ னல்லா ருறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங் கொல்.” (கலித். 56) என்றும் வரும். பிறவுமன்ன. (37) 309. அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே நிரனிறுத் தமைத்த னிரனிறை சுண்ணம் வரன்முறை வந்த மூன்றலங் கடையே. என்-னின், உவமை பல வந்தவழி வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. அடுக்கிய தோற்றமாவது - உவமை பல அடுக்கித் தோற்றுதல். நிரனிறுத்தமைத்தலாவது - ஒரு பொருளொடு தோற்று தொடரை யுடைத்தாகப் பலவுவமை வருதல். நிரனிறையாவது - உவமை பலவற்றையுஞ் சேர நிறுத்தி யுவமிக்கப்படும் பொருளையுஞ் சேர நிறுத்தல். சுண்ண மென்பது - உவமையையும் பொருளையுந் துணித்து ஒட்டுதல். வரன்முறை வந்த மூன்றலங் கடையே என்பது - அடுக்கியலுவமை கடியப்படும், ஆமென்று வரையப்பட்ட நிரனிறுத்தன் முதலிய மூன்றும் அல்லாதவழி என்றவாறு. அவற்றுள், கடியப்பட்டது உவமைக்குவமையாக அடுக்கி வருவது. “வெண்திங்கள் போன்றுளது வெண்சங்கம் வெண்சங்கின் வண்டிலங்கு தாழை வளர்கோடு.” என்றவழி, அவ்வாறு உவமைக்குவமையாகக் கூறியவதனாற் போதுவ தோர் பயன் இன்மையின் ஆகாதென்று கொள்க. நிரனிறுத்தமைத்தல் வருமாறு:- “நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் னளப்பரி யையே.” (பதிற்று. 14) “மதிபோலுந் தாமரை போலும்” என வரும். நிரனிறை வருமாறு:- “கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள்.” (யாப். வி. மேற்.) என வரும். சுண்ணமாவது:- “19களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றும் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே.” (அகத்.11. நச்.) என்றவழி, நிரனிறையன்றிக் களிறுபோலுங் கலன் எனத் துணிக்க வேண்டியவாறு கண்டுகொள்க. (38) ஏழாவது உவமவியல் முற்றிற்று. உவமவியல் அடிக்குறிப்புகள் 1. வூணர்தர வந்த பொருளினரொட் 2. ஆணிமூசியினது. 3. உவமப் பொருட்குப் புணரக்கண்ணும். 4. சாய்த்த. 5. எழில. 6. வாய்வாள் வெள்வி. 7. வுழற. 8. காக்கு. 9. மெய். 10. பாஅன் மருண்மருப் புரல்புரை. 11. மெய்தீர்ந் 12. வருவான்றன்று. 13. மார்ன. 14. வீர்ஞெண்டு. 15. லேரளைச். 16. கடந்ததோளைச் சொல்லாத்தானை. 17. னனும். 18. ஒருவர்ப். 19. கூம்பு. 20. இச்செய்யுளை மயக்கநிரனிறைக்கு உதாரணமாக இவ்வுரையாசிரியரே காட்டினர். (தொல். சொல். 399, இளம்.) செய்யுளியல் மேலுணர்த்தப்பட்ட அகமும் புறமுமாகிய பொருண்மை யெல்லாவற்றிற்கும் இடமாய் விளங்கும் செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையின் இது செய்யுளியலென்னும் பெயர்த்தாயிற்று எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் உலக வழக்கிற்குஞ் செய்யுள் வழக்கிற்கும் வேண்டும் விதிகளை விரவிக்கூறிப் பொருளதிகாரத்தில் இதுகாறும் பெரும்பாலும் உலக வழக்கிற்கு வேண்டிய விதிகளையே கூறிவந்த ஆசிரியர், அப்பொருள் பற்றிச் செய்யுள் இயலுமாறு கூறக்கருதி, இவ்வதிகாரத்துட் குறிக்கக் தகுந்த செய்யுளிலக்கணமெல்லாம் இவ்வியலில் தொகுத் துணர்த்துகின்றார். எனவே பொருளதிகாரத்தின் முன்னுள்ள ஏழியல்களும் உலக வழக்குஞ் செய்யுள் வழக்குமாகிய அவ்விரண்டற்கும் பொது வென்பதும், செய்யுளியலாகிய இது, செய்யுட்கே யுரித்தென்பதும் பெறப்படும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 235-ஆக இளம்பூர்ணரும், 243-ஆகப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இனி, செய்யுளியலாகிய இதனை யாப்பதிகாரம் என வேறோர் அதிகாரமாக்கிக் கூறுவாருமுளர்.1 அங்ஙனங் கூறின் வழக்கதிகாரம் எனவும் வேறொன்று கூறுதல் வேண்டுமாதலானும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் மூன்றதிகார மாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது இயல்களாக ஆசிரியர் நூல்செய்த முறையோடு மாறுகொள்ளுமாதலானும் அது பொருந்தாதென மறுப்பர் பேராசிரியர். மாத்திரை, எழுத்தியல், அசைவகை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடைவகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் எனவரும் யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறும். அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து இயைபு, புலன், இழைபு எனவரும் வனப்பு எட்டுமாக இங்குக் கூறப்பட்ட முப்பத்து நான்கும் நல்லிசைப் புலவர் கூறும் செய்யுளுக்கு உறுப்பாம் என இவ்வியல் முதற்சூத்தரம் கூறும். இதன் கண் மாத்திரை முதல் வண்ணம் ஈறாக முற்கூறப்பட்ட இருபத்தாறும் தனிநிலைச் செய்யுட்கு இன்றியமையாதனவாய் வரும் உறுப்புக்கள் எனவும், பிற்கூறப்பட்ட அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும் தனிநிலைச் செய்யுள் பல தொடர்ந்தமைந்த தொடர்நிலைக்கே பெரும்பான்மையும் உறுப்பாயும் தனி நிலைக்கண் ஒரோவென்றாயும் வருவன எனவும் பேராசிரியர் நச்சினர்க்கினியர் உரைப் பகுதிகளால் நன்குணரலாம். செய்யுளுக்குரிய உறுப்புக்கள் எல்லாவற்றையுந்தொகுத்துக் கூறுவதாகிய இச்சூத்திரத்தல் தளையென்பது தனியுறுப்பாகக் குறிக்கப்படவில்லை. தளையாவது, நின்றசீரின் ஈற்றசையுடன் வருஞ்சீரின் முதலசை ஒன்றியும் ஒன்றாமலும் வர இருசீர்கள் தம்முள் தளைத்து (கட்டப்படடு) நிற்றல். சீரது தொழிலாகிய இத்தளையைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகச் கொள்ளாது, சீராலாகிய அடியின் அமைப்பாகவேகொண்டு இலக்கணங் கூறுவர் தொல்காப்பியர். இவ்வாறன்றிச் சிறுகாக்கை பாடினியார் முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். தளையென்ப தனைத் தனியுறுப்பாகவே கொண்டனர். இருசீர் இணைந்தது குறளடியாம் என்பது தொல்காப்பியனார்க்கும் பிற்காலத்தில் வாழ்ந்த யாப்பிலக்கண நூலாசிரியர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். இனி, சீரிரண்டு தளைத்து நிற்றல் தளையென்னுந் தனி யுறுப்பா மெனக் கொள்ளின் இவ்விருசீர் இணைப்பைக் குறளடியென வேறோர் உறுப்பாகக் கூறுதல் பொருந்தாது. அன்றியும் தளை பல அடுத்து நடப்பதே அடியெனக் கொள்வார்க்கு அத்தளையால் அடி வகுப்பதன்றிச் சீரால் அடிவகுத்தல் குற்றமாய் முடியும் ஆதலால் சீரது தொழிலாகிய தளையென்பதனைத் தனி வேறு உறுப்பாகக் கொள்ளுதல் கூடாதென்பது பேராசிரியர் முதலி யோர் துணிபாகும். “இவ்வாசிரியர் (தொல்காப்பியனார்) தளையை உறுப்பாகக் கொள்ளாதது என்னையெனின், - தளையாவது சீரினது தொழிலாய்ப் பாக்களின் ஓசையைத் தட்டு (தளைத்து) இருசீர் இணைந்ததாகும். அவ்வாறு இணைந்த இருசீரினையும் அசிரியரெல்லம் ‘இருசீர்க் குறளடி’ என அடியாகவே வகுத்துக் கொண்டாராதலின் தளையென வேறோர் உறுப்பின்றாம்; அன்றியும் தளையான் அடிவகுப்பாரும் உளராயினன்றே அதனை உறுப்பென்று கொள்ள வேண்டுவது? அங்ஙனம் வகுத்துக் கொள்ளாமையின் உறுப்பென்னாது சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்பதொன்றென்றே கொண்டார். அதனை உறுப்பென்பார்க்குச் சீரான் அடிவகுத்தல் குற்றமாம்” எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இதனை வலியுறுத்தல் காண்க. - க. வெள்ளைவாரணனார், நூல்வரிசை- 10, பக். 322-324 எட்டாவது செய்யுளியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், செய்யுளிய லென்னும் பெயர்த்து. செய்யுளிலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். மேலுணர்த்தப்பட்ட பொருண்மை யெல்லா வற்றிற்கும் இஃதிடமாதலின் அவற்றின்பிற் கூறப்பட்டது. 310. மத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ யாத்த சீரே யடியாப் பெனாஅ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ நோக்கே பாவே யளவிய லெனாஅ திணையே கைகோள் பொருள்வகை யெனாஅ கேட்போர் களனே காலவகை யெனாஅ பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ முன்னம் பொருளே துறைவகை யெனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையி னாறு தலையிட்ட வைந்நா லைந்து மம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியைபே புலனே யிழைபெனப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. என்பது சூத்திரம். இதன் றலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், செய்யுளுறுப் பெல்லாந் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. மாத்திரை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்து நான்குஞ் செய்யுட்கு உறுப்பென்றவாறு. பிற்கூறிய எட்டும் மேற்கூறிய இருபத்தாறனொடும் ஒருநிகரன வன்மையின், வேறுதொகை கொடுக்கப்பட்டது. அவையாமாறு தத்தஞ் சூத்திரத்துட் காட்டுதும். (1) 311. அவற்றுள், மாத்திரை வகையு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தனவே யென்மனார் புலவர். என்-னின், மேற்சொல்லப்பட்டவற்றுள் மாத்திரை வகையு மெழுத்தியல் வகையு மேல் எழுத்ததிகாரத்துச் சொல்லப்பட்டன வென்று சொல்லுவர் புலவரென்றவாறு. ஈண்டு வேறுபாடில்லை யென்றவாறு. அவையாவன: குற்றெழுத்தோர் மாத்திரை; நெட்டெழுத்து இரண்டு மாத்திரை; உயிரள பெடை மூன்று மாத்திரை; குற்றிய லிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமு மெய்யும் ஒரோவொன்று அரை மாத்திரை; ஒற்றளபெடை ஒரு மாத்திரை; ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை; மகரக் குறுக்கங் கால்மாத்திரை; ஏறிய உயிரினளவே உயிர்மெய்க்களவு. எழுத்தியலாவது - உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்தென மூவகைப்படும். உயிரெழுத்து குற்றெழுத்து, நெட்டெழுத்து, அளபெடையென மூவகைப்படும். மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம் இடையினம் என மூவகைப்படும். சார்பெழுத்து குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தமென மூவகைப்படும். மெய்யினுட் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப்பெறும். குற்றெழுத்து அ, இ, உ, எ, ஒ. நெட்டெழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. அளபெடை ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ. வல்லினம் க ச ட த ப ற. மெல்லினம் ங ஞ ண ந ம ன. இடையினம் ய ர ல வ ழ ள. குற்றியலுகரமாவது நெட்டெழுத்தின் பின்னரும் மூன்றெழுத்து முன்னான மொழியினும் வல்லெழுத்தை ஊர்ந்து வந்த உகரம். நாகு - நாக்கு; காசு - காச்சு; காடு - காட்டு; காது - காத்து; காபு - காப்பு; காறு - காற்று என இந்நிகரன. குற்றியலிகரமாவது இவ்வுகரந் திரிந்தும் மகர மூர்ந்தும் யகரமோடியைந்து வரும். நாகியாவது - உகரந் திரிந்தது; கேண்மியா - மகர மூர்ந்தது. பிறவு மன்ன. ஆய்தமாவது குற்றெழுத்திற்கும் வல்லெழுத்திற்கும் இடைவரும். அஃதாவது எஃகு என வரும். ஒற்றளபெடையாவது மெல்லினமும் வ ய ல ள வும் ஆய்தமும் அளபெடுக்கும். அவை மங்ங்கலம், மஞ்ஞ்சு என வரும். இனி உயிருமெய்யுங் கூடி உயிர்மெய்யெழுத்தாம். அவை ககர முதல் னகரவீறாகிய இருநூற்றொருபத்தாறும். இன்னும் ஐகாரக் குறுக்கம் மகரக் குறுக்கம் என்பவுமுள. ஐகாரக் குறுக்கம் அளபெடையுந் தனியு மல்லாதவழிக் குறுகும். மகரக் குறுக்கம் ணகர னகர ஒற்றின்பின் வரும். புணர்மொழிக்கண் வகரத்தின் மேனின்ற மகரமுங் குறுகும். இவையெல்லாம் எழுத்ததிகாரத்துட் காண்க. (2) 312. குறிலே நெடிலே குறிலிணை குறினெடி லொற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரு நிரையு மென்றிசிற் பெயரே. என்பது நிறுத்தமுறையானே அசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. குறிலும் நெடிலுங் குறிலிணையுங் குறினெடிலுந் தனியே வரினும் ஒற்றொடுவரினும், ஆராயுங்காலத்து நேரசையும் நிரையசையுமா மென்றவாறு. இதுவு மோர் நிரனிறை. முந்துற்ற நான்கு மோர் பொருளாய்ப் பின்னிரண்டாகி வரினும், முற்பட்டவையும் இரண்டாகப் பகுத்தலான், கோழி வேந்தன், என நான்கு நேரசையும், வெறி சுறா நிறம் குரால், என நான்கு நிரையசையும். (3) 313. இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பு நிரைபு மாகு மென்ப குறிலிணை யுகர மல்வழி யான. இதுவுமது. மேற்சொல்லப்பட்ட இரண்டசையுங் குற்றியலுகரமு மல்லாத முற்றியலுகரமும் பொருந்தி வரின், நேர்பசையு நிரைபசையு மெனப் பெயராகும்; அவ்வழிக் குற்றெழுத்தொடு பொருந்தின உகரமல்லாத விடத்தென்றவாறு. காது, காற்று, கன்று; காவு, சார்பு, கல்லு என்பன நேர்பசை. வரகு, அரக்கு, மலாடு பனாட்டு, கதவு, புணர்வு, உருமு, வினாவு என்பன நிரைபசை. தொகுத்து நோக்குழி நேர், நிரை, நேர்பு, நிரைபு என்பன தாமே யுதாரணமாம். அஃதேல் நேர்பசை நிரைபசையெனக் காக்கைபாடினியார் முதலாகிய ஒருசாரா சிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை யிரண்டசை யாக்கி யுரைத்தாராயினும், அதனை முடிய நிறுத்தாது, வெண்பா வீற்றின்கண் வந்த குற்றுகர நேரீற்றியற்சீரைத் தேமா புளிமா என்னும் உதாரணத்தான் ஓசை யூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகர வீற்றா னுதாரணங் காட்டினமையானும், சீருந் தளையுங் கெடுவழிக் குற்றியலுகரம் அலகு பெறா தென்றமையானும், வெண்பா வீற்றினு முற்றுகர முஞ் சிறுபான்மை வருமென உடன்பட்டமையானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத் தென்று கொள்க. அவை செய்யுளீற்றின்கண் வருமாறு: “பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்.” (குறள். 10) “வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில.” (குறள். 4) “இருள்சேர் ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.” (குறள். 5) “தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது.” (குறள். 7) என வரும். பிறவு மன்ன. அலகிடுங்கால் நேரசை ஓரலகு; நிரையசை யிரண்டலகு; நேர்பசை மூன்றலகு; நிரைபசை நான்கலகு பெறும். (4) 314. இயலசை முதலிரண் டேனவை யுரியசை. என்-னின், மேற்சொல்லப்பட்ட அசைக்குப் பிறிதோர் குறியிடுதல் நுதலிற்று. முற்பட்ட நேரசையும் நிரையசையும் இயலசை யெனக் குறிபெறும். நேர்பசையும் நிரைபசையும் உரியசையெனக் குறிபெறும் என்றவாறு. (5) 315. தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது. என்-னின், இதுவும் அசைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. தொடர்மொழிக்கண் மொழி சிதைத்துத் தனிக்குறில் நேரசை யாகா தென்றவாறு. மொழிசிதைத்தலாவது - ஒற்றுமைப்பட்டிருக்கின்றதனைப் பிரித்தல். அஃதாவது புளிமா என்றவழி, நிரைநேராக அலகிடாது முதனின்றதனை நேரசையாக்கியிடை நின்றதூஉ மிறுதிநின்றதூஉம் நிரையசையாக்குதல். அவ்வழிப் புளியென்னுஞ் சொல்லைப் பிரிக்க வேண்டுதலின் நிரையசையாகவே கோடல் வேண்டு மென்றவாறு. இனி, மொழி சிதையாக்கால் நேரசையாம். அது விட்டிசைத்து நிற்றல். “அஉ அறியா... னாட்டைநீ” (யாப். வி. மேற்.) எனவும், “அஆ இழந்தானென் றெண்ணப்படும்” (நாலடி. 9) எனவும் வருவன முதலெழுத்து நேரசை யாம். (6) 316. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். என்-னின், இதுவுமது. குற்றியலிகரம் ஒற்றெழுத்து இயல்பிற்று என்றவாறு. அடியின திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேரசை என்று... எனவே அலகு பெறா தென்றவாறாம். “பேதை யென்ப தியாதென வினவின் னோதிய விவற்றை யுணராது மயங்கி யியற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கண்டது தெளிதல்.” இதன்கட் குற்றியலிகரம் அலகு பெறாதவாறு காண்க. (7) 317. முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும். என்-னின், முற்றியலுகரத்திற்குரிய வேறுபா டுணர்த்துதல் நுதலிற்று. முற்றியலுகரமு மொழிசிதைத்து நேர்பசை நிரைபசை யென்றுரைக்கப்படாது; 1அஃது ஈற்றடி மருங்கிற் றனியசையாகி நிற்றலும் இன்றென்றவாறு. எனவே, அடியின திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேர்பசை நிரைபசையெனக் காட்டப்படாது. அஃது ஈற்றடி மருங்கிற் றனியசையாகி நில்லாது என்பதூஉம், ஒற்றுமைப்படாத சொல்லின்கண் தனியசையாமென்பதூஉம், ஈற்றடிக்கண் எவ்வழியானுந் தனியசையாகா தென்பதூஉம் உணர்த்தியவாறாம். “அங்கண் மதிய ரவுவாய்ப்பட்டென” என்றவழி அரவென்பது மொழி சிதையாமையின் 2நிரைபசை யாயிற்று. “பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்” (நாலடி. 200) என்றவழி ‘பெரு’ முன்னர்க் குறித்த சீராக்க வேண்டுமாயின் ஈண்டு மொழி சிதைத்தலின் நிரைபசை யாகாதாயிற்று. “இனமலர்க் கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன் புணைமலர்த் தாரகலம் புல்லு.” (யாப். வி. மேற்.) “மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும் அஞ்சொன் மடவாட் கருளு.” (யாப். வி. மேற்.) என்பதனாற் கொள்ளற்க. இவை புல்லு அருளு என வருமாலெனின், “நிற்றலின்றே யீற்றடி மருங்கினும்” என்பதனான் ஈற்றடியிறுதியினு மிடையடியிறுதியினு முற்றியலுகரம் நில்லாதெனவும் பொருளாம்; இதனானே அவ்வாறு வருதலுங் கொள்க. முற்றியலுகரமு மென்ற வும்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. (8) 318. குற்றிய லுகரமும் முற்றிய லுகரமு மொற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. என்-னின், எய்தியது விலக்கல் நுதலிற்று. இருவகை யுகரமும் ஒற்றொடு தோன்றித் தனியசையாகி நிற்கவும் பெறுமென்றவாறு. உம்மை யிறந்தது தழீஇயிற்று. உதாரணம்: “படுகிளி பாயும் பசுங்குர லேனல் கடிதின் மறப்பித்தா யாயி னினிநீ நெடிதுள்ள லோம்புதல் வேண்டும்.” (கலித். 50) இதன்கட் குற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையாயிற்று. “கண்ணும் படுமோ வென்றிசின் யானே.” (நற். 61) இதன்கண் முற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையாயிற்று. (9) 319. 3அசையுஞ் சீருர் மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தல் வல்லோர் ஆறே. என்-னின், வகையுளி யுணர்த்துதல் நுதலிற்று. அசையையுஞ் சீரையும் ஓசையொடு சேர்த்திப் பாகுபாடுணர்த்தல் வல்லோர்கள் நெறி யென்றவாறு. அஃதாவது பொருளொடு சொல்லை யறுத்தவழித் தளையுஞ் சீருஞ் சிதையின், அவ்வழி ஓசையை நோக்கி அதன்வழிச் சேர்த்துக என்றவாறு. அது வருமாறு: “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்.” (குறள். 3) என்றவழி, வாழ்வாரெனப் பொருணோக்கிச் சீராமாயின் ஓசைகெடும். அதன்கண் ‘வாழ்’ என்பதனை முதனின்ற சீரோடொட்டக் கெடாதாம். பிறவுமன்ன. இத்துணையுங் கூறப்பட்டது அசைவகை. (10) 320. ஈரசை கொண்டு மூவசை புணர்த்துஞ் சீரியைந் திற்றது சீரெனப் படுமே. என்-னின், நிறுத்த முறையானே சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று. 4இரண்டசை கொண்டு புணர்த்தும், மூன்றசை கொண்டு புணர்த்தும், ஓசை பொருந்தி யிற்றது சீரெனப்படும் என்றவாறு. “தாமரை புரையுங் காமர் சேவடி” (குறுந். கடவுள் வாழ்த்து) என்றவழி நான்குசொல்லாகி ஓசை 5யற்றுநின்றவாறு கண்டுகொள்க. “எந்நன்றி கொன்றார் க்குமுய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.” (குறள். 110) என்றவழி மூன்றசையினாற் சீராகியவாறும் அவ்வளவினான் 6ஓசையற்று நின்றவாறுங் கண்டுகொள்க. (11) 321. இயலசை மயக்க மியற்சீ ரேனை யுரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர். என்-னின், ஈரசைச்சீர் 7பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீர் எனப்படும்; உரியசை மயங்கி வந்தன ஆசிரிய வுரிச்சீ ரெனப்படும் என்றவாறு. மயங்குதலாவது - ஒருங்குவருதல். நேர் நிரை நேர்பு நிரைபு: என்னும் நான்கனையுந் தம்மினுறழப் பதினாறு அசைச்சீராம். அவற்றுள் இயலசையாகிய நேரும் நிரையுந் தம்மின் உறழ நான்கு சீராம். அவை இயற்சீர் எனப்படும். உதாரணம்: “தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்.” என வரும். இனி உரியசையாகிய நேர்பு நிரைபு மென்றவற்றைத் தம்மினுறழ நான்கு சீராம். அவை ஆசிரிய உரிச்சீர் எனப்படும். உதாரணம்: “ஆற்றுநோக்கு, ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு” என வரும். (12) 322. முன்நிரை யிறினு மன்ன வாகும். என்-னின், இதுவும் ஆசிரியவுரிச்சீ ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. நேர்பசை நிரைபசைப் பின், நிரை யிறுதியும் ஆசிரிய வுரிச்சீரா மென்றவாறு. உதாரணம்: “யாற்றுமடை, குளத்துமடை.” என வரும். (13) 323. நேரவ ணிற்பி னியற்சீர்ப் பால. என்-னின், இஃது இயற்சீர்க் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உரியசைப் பின்னர் நேரசை வரின், அஃது இயற்சீ ரென வருமென்றவாறு. உதாரணம்: “ஆற்றுக்கால், குளத்துக்கால்.” என வரும். (14) 324. இயலசை யிற்றுமு னுரியசை வரினே நிரையசை யியல வாகு மென்ப. இயலசைப் பின்னர் உரியசைவரின், நிரையசை வந்தாற்போலக் கொள்க வென்றவாறு. எனவே, இவையும் இயற்சீ ரென்றவாறாம். உதாரணம்: “மாங்காடு, களங்காடு, பாய்குரங்கு, கடிகுரங்கு” என வரும். இத்துணையுங் கூறப்பட்டது ஈரசைச் சீர் பதினாறனுள் இயற்சீர் பத்தும் ஆசிரிய வுரிச்சீர் ஆறுமா மென்றவாறு. (15) 325. அளபெடை யசைநிலை யாகலும் முரித்தே. என்-னின், சீர்க்கண் உயிரளபெடைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும் என்றவாறு. உம்மை எதிர்மறையாகலான் ஆகாமை பெரும்பான்மை. உதாரணம்: “கடாஅ உருவொடு.... வல்லதே ஒற்று.” (குறள். 585) இது அளபெடை யலகுபெற்றது. “இடைநுடங்க வீர்ங்கோதை பின்றாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையி னுப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு.” இதன்கண் அளபெடை யசைநிலையாகி யலகுபெறா தாயிற்று. (16) 326. ஒற்றள பெடுப்பினு மற்றென மொழிப. என்-னின், ஒற்றளபெடைக் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. ஒற்று அளபெடுத்து வரினும் அசைநிலையாகலும் உரித்து என்றவாறு. 8மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை. உதாரணம்: “கண்ண் டண்ணெனக் கண்டுங் கேட்டும்” (மலைபடு. 352) என வரும். (17) 327. இயற்சீ ரிறுதிமுன் னேரவ ணிற்பி னுரிச்சீர் வெண்பா வாகு மென்ப. என்-னின், வெண்பாவுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறொடு நான் கசையுங் கூட்டி யுறழ, அறுபத்து நான்கு மூவசைச் சீராம். அவற்றுள் இயற்சீர் நான்கன்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீராம் என்றவாறு. உதாரணம்: மாவாழ்கான், மாவருகான், புலிவாழ்கான், புலிவருகான்.” என்பன. (18) 328. வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை 9யென்ப. என்-னின், வஞ்சியுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. வஞ்சியுரிச்சீரெனப் பாகுபட்டன மேற்சொல்லப் பட்ட மூவசைச்சீர் அறுபத்து நான்கு சீரினும் வெண்சீரல்லாத அறுபது மென்றவாறு. உதாரணம்: மா வாழ் நெறி மா வாழ் காடு மா வாழ் பொருப்பு மா வரு நெறி மா வரு காடு மா வரு பொருப்பு மா போகு கான் மா போகு நெறி மா போகு காடு மா போகு பொருப்பு மா வழங்கு கான் மா வழங்கு நெறி மா வழங்கு காடு மா வழங்கு பொருப்பு (2) புலி வாழ் நெறி புலி வாழ் காடு புலி வாழ் பொருப்பு புலி வரு நெறி புலி வரு காடு புலி வரு பொருப்பு புலி போகு கான் புலி போகு நெறி புலி போகு காடு புலி போகு பொருப்பு புலி வழங்கு கான் புலி வழங்கு நெறி புலி வழங்கு காடு புலி வழங்கு பொருப்பு (3) பாம்பு வாழ் கான் பாம்பு வாழ் நெறி பாம்பு வாழ் காடு பாம்பு வாழ் பொருப்பு பாம்பு வரு கான் பாம்பு வரு நெறி பாம்பு வரு காடு பாம்பு வரு பொருப்பு பாம்பு போகு கான் பாம்பு போகு நெறி பாம்பு போகு காடு பாம்பு போகு பொருப்பு பாம்பு வழங்கு கான் பாம்பு வழங்கு நெறி பாம்பு வழங்கு காடு பாம்பு வழங்கு பொருப்பு (4) களிறு வாழ் கான் களிறு வாழ் நெறி களிறு வாழ் காடு களிறு வாழ் பொருப்பு களிறு வரு கான் களிறு வரு நெறி களிறு வரு காடு களிறு வரு பொருப்பு களிறு போகு கான் களிறு போகு நெறி களிறு போகு காடு களிறு போகு பொருப்பு களிறு வழங்கு கான் களிறு வழங்கு நெறி களிறு வழங்கு காடு களிறு வழங்கு பொருப்பு. ஆக அறுபதும். (19) 329. தன்பா வல்வழித் தானடை யின்றே. என்-னின், வஞ்சியுரிச்சீர்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சியுரிச்சீர் வஞ்சிப்பாவினு ளல்லது நடைபெறாது என்றவாறு. (20) 330. வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய. என்-னின், இது வஞ்சிப்பாவிற்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சிப் பாவினுள் ஒழிந்த சீர்கள் வரப்பெறும் என்றவாறு. (21) 331. வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக் கோர்ங்குநிலை யிலவே. என்-னின், வெண்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவுரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் வெண்பாவினது நேரடிக்கண் ஒருங்கு நிற்றலில்லை என்றவாறு. (22) 332. கலித்தளை மருங்கிற் கடியவும் 10பெறாஅ என்-னின், கலிப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. கலித்தளை வரும்வழி மேற் சொல்லப்பட்ட இருவகைச் சீருமோர்ங்கு நிற்கவும் பெறும் என்றவாறு. (23) 333. கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே. என்-னின், இதுவுமது. கலிப்பாவிற்குரிய கலித்தளைக்கண் நேரீற்றியற் சீர் நிற்றற்குரித் தன்று ஆராய்வார்க் கென்றவாறு. (24) 334. வஞ்சி மருங்கினு மிறுதி 11நில்லாது என்-னின், வஞ்சிக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சிப்பாவினும் அடியினீற்றின்கண் நில்லாது நேரீற்றியற்சீர் என்றவாறு. எனவே, அடிமுதற்கண் நிற்கப்பெறும் என்றவாறாம். (25) 335. இசைநிலை நிறைய 12நிற்குவ தாயி னசைநிலை வரையார் சீர்நிலை பெறவே. என்-னின், ஓரசைச்சீ ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. இசை நிற்கின்ற நிலை நிரம்பாநிற்குமாயின் அசையும் சீராந் தன்மை போல வரையார் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: ‘நாள், மலர், காசு, பிறப்பு’ என வரும். (26) 336. இயற்சீர் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான. என்-னின், அவ்வோரசைச் சீர் தளை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஓரசைச்சீரைத் தளைவகை சிதையாத் தன்மை வேண்டு மிடத்து 13இயற்சீர் என்றவாறு போலக் கொள்க என்றவாறு. (27) 337. வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே. என்-னின், இதுவுந் தளை வழங்குந் திறன் உணர்த்துதல் நுதலிற்று. வெண்சீ ரீற்றசை தளை வழங்குமிடத்து இயற்சீரசை நிரையீறு போலும் என்றவாறு. இயற்சீரென்பது அதிகாரத்தான் வந்தது. (28) 338. இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையா ராசிரிய வடிக்கே. என்-னின், ஆசிரியப்பாவிற்கு உரியசீர் உணர்த்துதல் நுதலிற்று. இனிய ஓசை பொருந்தி வருகுவதாயின், ஆசிரியவடிக்கு வெண்பாவுரிச்சீர் வரையார் 14ஆசிரியர் என்றவாறு. (29) 339. அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீ ரொன்றுத லுடைய வொரோவொரு வழியே. என்-னின், இதுவுமது. இன்சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரியஅடிக்கண் வரும் என்றவாறு. “ஈரசை கொண்டும்” (செய்யு. 11) என்பது முதலாக இத்துணையுஞ் சொல்லப்பட்டது ஓரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு, மூவசைச்சீர் அறுபத்து நான்கு, ஆகச்சீர் எண்பத்து நான்ககில் ஓர் அசைச்சீர் நான்கெனவும், அது தளை வழங்கும்வழி இயற்சீரொக்கு மெனவும், ஈரசைச்சீர் பதினாறனுள் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பிலியற்சீர் ஆறும் எனப் பத்தாம் எனவும், ஆசிரியவுரிச்சீர் ஆறு எனவும், மூவசைச்சீர் அறுபத்து நான்கில் வெண்பாவுரிச்சீர் நான்கெனவும், ஏனைய வஞ்சியுரிச்சீர் எனவும் 15கூறியவாறு. (30) 340. நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே. என்-னின், நிறுத்த முறையானே அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நான்குசீர் ஒருங்கு தொடுத்து வருவதனை அடியென்று சொல்லப்படுமென்றவாறு. இதன் வேறுபாடு முன்னர்க் கூறப்படும். (31) 341. அடியுள் ளனவே தளையொடு தொடையே. என்-னின், தளைக்குந் தொடைக்கும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. தளையுந் தொடையும் அடியின்கண்ண என்றவாறு. (32) 342. அடியிறந்து வருத லில்லென மொழிப. என்-னின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. தளையுந் தொடையும் நான்கு சீரடியின் வருதலன்றி யடியி னீங்கி வருதலில்லை யென்றவாறு. அடிவரையறையில்லாதனவற்றிற் கொள்ளப்படா என்ற வாறாம். (33) 343. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. என்-னின், இதுவும் அடிக்குரியதோர் சிறப்புணர்த்துதல் நுதலிற்று. அடியின் சிறப்பினானே பாட்டென்று சொல்லப்படு மென்றவாறு. எனவே, பாட்டென்னுஞ் செய்யுட்கு அடியின்றியமையா தென்று கொள்க. பாட்டாவன:- வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்பன. இனி அவ்வடியினை எழுத்தளவினாற் குறியிடுகின்றான். (34) 344. நாலெழுத் தாதி யாக வாறெழுத் தேறிய நிலத்தே குறளடி யென்ப. என்-னின், குறளடி வரையறை உணர்த்துதல் நுதலிற்று. நாலெழுத்து முதலாக ஆறெழுத் தீறாக ஏறிய மூன்று நிலத்தையுடைத்து குறளடியென்று சொல்லுவ ரென்றவாறு. எனவே, குறளடிக்கு நிலம் நாலெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்துமாம். இதற்குரிய எழுத்து முன்னர்க் 16காட்டுதும். (35) 345. ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே யீரெழுத் தேற்ற மல்வழி யான. என்-னின், சிந்தடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு, ஒன்பதெழுத்து ஏற்றம் அல்லாத விடத்தென்றவாறு. எனவே, ஏழும் எட்டும் ஒன்பதுமாகிய எழுத்தினாற் சிந்தடியாம் என்றவாறாம். (36) 346. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே யொத்த நாலெழுத் தேற்றலங் கடையே. என்-னின், அளவடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அளவடி யெனினும் நேரடியெனினும் ஒக்கும். பத்தெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் அளவடியாம் என்றவாறு. எனவே, பத்தும் பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினாலுமென ஐந்து நிலம் பெறும். (37) 347. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே யீரெழுத்து 17மிகுதலு மியல்பென மொழிப. என்-னின், நெடிலடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழெழுத்தளவு நெடிலடியாம் என்றவாறு. எனவே பதினைந்தும் பதினாறும் பதினேழும் என மூன்று நிலம் பெறும் என்றவாறாம். (38) 348. மூவா றெழுத்தே கழிநெடிற் களவே ஈயீரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப. என்-னின், கழிநெடிலடி யுணர்த்துதல் நுதலிற்று. பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தளவுங் கழிநெடிலடியாம் என்றவாறு. எனவே பதினெட்டும் பத்தொன்பதும் இருபதும் என மூன்று நிலம் பெறும். (39) 349. சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது நேர்நிரை வஞ்சிக் காறு மாகும். என்-னின், சீர்க்கு எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று. சீர்நிலை ஐந்தெழுத்தின் மிகாது நேர் இறுதியாங் காலத்து, நிரையீறாகிய வஞ்சியுரிச்சீர்க்கு ஆறெழுத்தும் ஆகும் என்றவாறு. எனவே, இருபதெழுத்தின் மிக்க நாற்சீரடியில்லை யென்றவாறாம். வஞ்சிச்சீர் முச்சீரடியின்கண் வருதலின். (40) 350. எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப. இதுவுஞ் சீர்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. ஈண்டோதப்பட்ட அடிகள் பல தொடுக்கும்வழி ஓரடிக் கோரடி எழுத்தளவு குறைந்து வரினுஞ் சீர்நிலை நான்கின் இழிதலும் மிகுதலு மில்லை என்றவாறு. (41) 351. உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ வுயிர்த்திற மியக்க மின்மை யான. என்-னின், மேற் சொல்லப்பட்ட அடிக்குரிய எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று. உயிரில்லாத எழுத்தும் எண்ணப்படா, உயிர்போல இயக்கமின்மையான் என்றவாறு. உம்மை எச்சவும்மை யாதலாற் குறுகிய வுயிர்த்தாகிய குற்றியலிகரமும் குற்றியலுகரமும் எண்ணப்படா வென்று கொள்க. எனவே எண்ணப்படுவன உயிரும் உயிர்மெய்யுமாகி ஒரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும். (42) 352. வஞ்சி யடியே யிருசீர்த் தாகும். என்-னின், வெண்பா ஆசிரியங் கலிக்குரித்தாகிய அடியிலக்கணம் கூறினார். இனி வஞ்சிப்பாவிற்குரிய அடிவரை யறை உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சிப்பாவிற்குரிய அடி இரண்டு சீரையுடைத்து என்றவாறு. (43) 353. தன்சீ ரெழுத்தின் சிறுமை மூன்றே. என்-னின், வஞ்சியுரிச்சீர் குறைந்த நிலை உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சியுரிச்சீரின் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப் படும். எனவே, மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத் தும் வஞ்சியுரிச்சீரெழுத் தென்றவாறாம். (44) 354. முச்சீ ரானும் வருமிட னுடைத்தே. என்-னின், இதுவும் வஞ்சியடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சியடி மூன்று சீரானும் வரும் இடனுடைத்து என்றவாறு. எனவே வஞ்சியடி இருசீரடியானும் முச்சீரடியானும் வரும் என்றவாறாம். உதாரணம்: “தூங்குகையா னோங்குநடைய வுறழ்மணியா னுயர்மருப்பின.” (புறம். 22) இதனுள் மூன்றெழுத்து முதலாக ஆறெழுத்துக்காறுஞ் சீர் வந்தவாறும், இருசீரடி யாயினவாறுங் காண்க. “தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல்.” (யாப். வி.பக். 108) எனவும் வரும். (45) 355. அசைகூ னாகு மவ்வயி னான. என்-னின், மேற்சொல்லப்பட்ட வஞ்சியடிக்குரிய தோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட இருவகையடியினும் அசை கூனாகி வரும் என்றவாறு. (46) 356. சீர்கூ னாதல் நேரடிக் குரித்தே. என்-னின், இதுவுங் கூனாகுமிடன் உணர்த்துதல் நுதலிற்று. சீர்முழுதுங் கூனாகி வருதல் அளவடிக்குரித்து என்றவாறு. ‘நேரடி’ என்றதனான், 18வெண்பாவினும் ஆசிரியத்தினுங் கலியினுங் கொள்ளப்படும். அவரே, “கேடில் விழுப்பொரு 19டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே.” (குறுந். 216) இஃது ஆசிரியத்திற் கூன். “உதுக்காண், சுரந்தானா வண்மைச் 20சுவர்ணமாப் பூதன் பரந்தானாப் பல்புகழ் பாடி - யிரந்தான்மாட் டின்மை யகல்வது போல விருணீங்க மன்னும் மளிதேர் மழை.” (யாப். வி.பக்.356) இது வெண்பாவிற் கூன். “நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் 21வரீஇய வம்பு தெரிதியே.” (கலித். 7) இது கலிப்பாவிற் கூன். (47) 357. ஐவகை யடியும் விரிக்குங் காலை மெய்வகை யமைந்த பதினேழ் 22நிலத்தும் எழுபது வகையின் வழுவில வாகி யறுநூற் றிருபத் தைந்தா கும்மே. என்-னின், மேற்சொல்லப்பட்ட அடிக்கெல்லாம் விரி யுணர்த்துதல் நுதலிற்று. ஐவகை அடியும் விரிக்குங்காலை என்பது - நாற்சீரடியை எழுத்தளவு பற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய 23ஐந்தடி யினையும் விரித்துணர்த்துங் காலத்து என்றவாறு. மெய் என்பது - உடம்பு. அஃதாவது அசையுஞ் சீரும் தோற்றுதற் கிடமாகிய எழுத்து. மெய்வகையமைந்த பதினேழ் நிலத்தும் என்பது - எழுத்து அமைந்த நாலெழுத்து முதலாக இருபதெழுத்தீறாகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தும் என்றவாறு. எழுபது வகையின் வழுவில வாகி என்பது - எழுபது வகைப்பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி என்றவாறு. எழுபது வகையாவது - இரண்டுசீர் தம்முட் புணரும் புணர்ச்சி எழுபது வகையாம் என்றவாறு. மேற் சொல்லப்பட்ட எண்பத்துநான்கு சீரினும் (தொல். பொருள். செய்யுளியல். 30. உரை.) இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும், ஆசிரியவுரிச்சீரான் வருவதனை ஆசிரியவுரிச்சீரடி எனவும், இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான் வருவதனை 24வெண்சீரடி எனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடி எனவும், உரியசையீற்றான் வருவதனை உரியசையீற்று வஞ்சியடி எனவும் ஓரசைச்சீரான் வருவதனை அசைச்சீரடி எனவும் வழங்கப்படும். அவற்றுள், இயற்சீரடி நேரீற் றியற்சீரடி எனவும் நிரையீற் றியற் சீரடி எனவும் இருவகைப்படும். நேரீற் றியற்சீரடியாவது 25நேரீறு நேர் முதலாகிய இயற்சீர் வருதலும் 26நேர்புமுத லாசிரிய வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வெண்பா வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வஞ்சியுரிச்சீர் வருதலும் நேர்முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்து வகைப்படும். நிரையீற்றியற்சீரும் இவ்வாறே நிரைமுதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். ஆசிரிய வுரிச்சீரடியும் இருவகைப்படும், நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என. அவற்றுள், நேர்பீற்றுச் சீரை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். நிரையீற்றுச் சீரும் அவ்வாறே நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடியும் நேரீறும் நிரையீறும் என இருவகைப்படும். அவற்றுள், நேரீறு, நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். நிரையீறும் அவ்வாறே நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும் நிரைமுதலோடு உறழ்தலு மென இருவகைப்படும். அவற்றுள், நேர்பும் நேரும் முதலாகிய சீர்களொடு உறழ்தல் ஐந்துவகைப்படும். நிரைபும் நிரை முதலாகிய சீர்களொடு உறழ்தலும் ஐந்து வகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோ டொன்றுவனவும் ஒன்றாதனவும் என இருவகைப்படும். அவற்றுள், ஒன்றி வருவது நிரைபு நிரை முதலாகிய சீரொடு உறழ ஐந்து வகைப்படும். ஒன்றாதது நேர்பும் நேரும் முதலிய சீரொடு உறழ ஐவகைப்படும். உரியசையீற்று வஞ்சியடியும் அவ்வாறே உறழப் பத்து வகைப்படும். அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழப் பத்து வகைப்படும். 27இவ்வகையால் தளை ஏழு பாகுபட்டன; இவை நேரொன் றாசிரியத்தளை, நிரையொன் றாசிரியத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என ஏழு வகையாம். அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர்ப் பாற்படும். ஆசிரியவுரிச்சீருமதுவேயாம். மூவசைச் சீருள் 28வெண்பாவுரிச்சீ ரொழிந்தனவெல்லம் வஞ்சியுரிச்சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையொடு நேராய் ஒன்றுவது நேரொன் றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன் றாசிரியத் தளையாம்; மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டளையாம்; வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம்; நிரையா யொன்றிற் கலித்தளையாம்; 29வஞ்சியுரிச்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித் தளையாம்; ஒன்றாதது ஒன்றா வஞ்சித் தளையாம். இவ்வகையால் தளை ஏழாயின, இவ்வாறாகி வருதல் வருகின்ற சூத்திரங்களா னுணர்க. இனி அடி அறுநூற்றிருபத்தைந்தாமாறு: அசைச்சீர் இயற்சீர் ஆசிரியவுரிச்சீர் வெண்சீர் வஞ்சியுரிச்சீர் என்னும் ஐந்தனையும் நிறுத்தி 30இவ்வைந்துசீரும் வருஞ்சீராக வுறழும்வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ் விருபத்தைந்தன் கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்ப மாகும். அந் நூற்றிருபத்தைந்தன் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறுநூற்றிரு பத்தைந்தாம் 31என்றவாறு. (48) 358. 32ஆங்கனம் விரிப்பி னளவிறந் தனவே பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை. என்-னின், அடி விரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஈண்டுறழ்ந்த முறையானே ஐந்தடி முதலாக மேன் மேலும் உறழ வரம்பிலவாம் என்றவாறு. அஃதாவது அறுநூற்றிருபத்தைந்தனோடும் ஐந்தாவது வரும் ஐஞ்சீரையும் உறழ மூவாயிரத்தோர்நூற்றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஆறாவது இவ்வகை யைந்து சீரையும் உறழப் பதினையாயிரத்து அறுநூற்றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஏழாவது வரும் சீரைந்தனையும் உறழ எழுபத்தெண் ணாயிரத் தோர் நூற்றிருபத்தைந்து விகற்பமாம். இவ்வகை யினானுறழ வரம்பிலவாய் விரியும். 33அன்றியும், இச்சொல்லப் பட்ட 34அடியினை அசையானும் விரிக்க 35வரம்பிலவாம். (49) 359. ஐவகை யடியு மாசிரியக் குரிய. என்-னின், ஆசிரியப்பா நாற்சீரான் வரும் என்பதூஉம் அதன்கண் விரிக்கப்பட்ட ஐவகையடியும் உரிய என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. நாற்சீரடிக்கண் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற் குரிய என்றவாறு. ஐவகை யடியு முரியவென, அவற்றிற்கு முதலாகிய நாற்சீரடியும் உரித்தாயிற்று. உதாரணம்: “தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து 36நேர்ந்து வாமனை நினையிற் 37சேர்ந்த வல்வினை 38தேய்ந்தக லும்மே.” இதன்கண் முதலடி நாலெழுத்தான் வந்தவாறு காண்க. “குன்று கொண்டு நின்ற மாடு பொன்ற வந்த மாரி சென்று காத்த திறலடி தொழுமே.” இதன்கண் முதலடி ஐந்தெழுத்தான் வந்தது. “ஆறு சூடி நீறு பூசி யேறு மேறு 39மிறைவனைக் கூறு நெஞ்சே குறையிலை 40நினக்கே.” இதன்கண் முதலடி ஆறெழுத்தான் வந்தது. “போது சாந்தம் பொற்ப வேந்தி யாதி நாதற் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே.” (யாப். வி. 49) என்பது முதலடி ஏழெழுத்தான் வந்தது. “தன்றோ ணான்கி னொன்று கைம்மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியலென் நெஞ்சே.” இது முதலடி யெட்டெழுத்தான் வந்தது. “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி” (குறுந். 2) என்பது ஒன்பதெழுத்தான் வந்தது. “காமம் செப்பாது கண்டது மொழிமோ.” (குறுந். 2) என்பது பத்தெழுத்தான் வந்தது. “தாமரை புரையுங் காமர் சேவடி” (குறுந். கடவுள் வாழ்த்து) என்பது பதினோரெழுத்தான் வந்தது. “நாயுடை முதுநீர்க் கலித்த தாமரை” (அகம். 61) என்பது பன்னிரண்டெழுத்தான் வந்தது. “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி” (பெரும்பாண். 1) என்பது பதின்மூன்றெழுத்தான் வந்தது. “யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை” (அகம். 16) என்பது பதினாலெழுத்தான் வந்தது. “ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை” (புறம். 56) என்பது பதினைந்தெழுத்தான் வந்தது. “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்” (குறுந். 101) என்பது பதினாறெழுத்தான் வந்தது. “41தேன்றூங்கி யுயர்சிமைய மலைநா றிய வியன்ஞாலம்” (மதுரைக். 3) என்பது பதினேழெழுத்தான் வந்தது. “கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்” (புறம். 55) என்பது பதினெட்டெழுத்தான் வந்தது. “நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும்” (புறம். 55) என்பது பத்தொன்பதெழுத்தான் வந்தது. “அமர்காணி னமர்கடந்தவர் படைவிலங்கி யெதிர்நிற்றலின்” (புறம். 167) என்பது இருபதெழுத்தான் வந்தது. (50) 360. விராஅய் வரினு மொரூஉநிலை யிலவே. என்-னின், மேற்சொல்லப்பட்ட அடி விரவி வருமாறு வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. மேற் சொல்லப்பட்ட ஐந்தடியுந் தனித்தனி ஆசிரியப் பாவிற் குரித்தாகி வருதலேயன்றி விரவி வரினும் நீக்கப்படாது என்றவாறு. ‘ஒரூஉநிலை’ என்றதனால், தனித்தனி வரினும் விரவி வரினும் 42ஒக்கும் என்று கொள்க. உதாரணம்: “செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.” (குறுந். 1) இதனுட் பலவடியும் வந்தவாறு காண்க. (51) 361. தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினு மின்சீர் வகையின் 43னைந்தடிக்கு முரிய தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா. என்-னின், இத்துணையும் அடியும் அடிக்குரிய எழுத்துக்களும் ஓதினார்; இனி அவ்வடிக்கண் 44ஓசை வேறுபாடுந் தளையிலக்கணமு முணர்த்துவான் அத் தளைக்கண் வருவதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தத்தஞ் சீர்நிலை வகையானுந் தளைநிலை வகையானும் இனிய ஓசை வேறுபாட்டினையுடைய ஐந்தடிக்கு முரிய தன் சீருள்வழித் 45தளை வேறுபாடு கோடல் வேண்டா என்றவாறு. எனவே சீர்தானே ஓசையைத் தரும் என்றவாறாம். உரிய தன்சீர் என்றது ஐந்தடியினும் ஏற்றவழி நிலைபெறுந் தன் சீரென்று கொள்க. அஃதாவது குறளடியாகிய ஐந்தெழுத்தினும் ஆறெழுத்தினும் ஓரசைச் சீரும் ஈரசைச் சீரும் வருதலன்றி மூவசைச் சீர் வாராமை. பிறவாசிரியர் கொண்ட நேரொன் றாசிரியத்தளை. நிரையொன் றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றா வஞ்சித்தளை என எழுவகையினும், வஞ்சித்தளை நிலைமொழி வஞ்சியுரிச்சீராக வருஞ் சீர்க்கு முதலசையோடு ஒன்றியது ஒன்றிய வஞ்சித்தளை எனவும் ஒன்றாதது ஒன்றா வஞ்சித்தளை எனவும் வழங்குபவாதலின், அவ்விருவாற்றானும் தளையாற் பயனின்றி நிலைமொழியாகிய வஞ்சியுரிச்சீர் தானே ஓசையுணர்த்துதலின் வஞ்சித்தளை கோடல் வேண்டாராயினார். இனி வெண்சீர் வெண்டளையும், 46வெண்சீர் நிற்ப வருஞ்சீர் வெள்ளையுள் வெண்சீராதல் இயற்சீராதல் வந்து வெண்டளையாக வேண்டுதலின் நிலைமொழியாகிய வெண்சீரை “வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே” (செய்யு. 28) என ஓதுதலின், அதனை நிரையீற்றியற்சீர் ஆக்கினால் வருஞ்சீர் நேர்முதலியற்சீராயின் அதுவும் இயற்சீர் வெண்டளையாம். அவ்வாறன்றி வருமொழியும் (நேர்முதல்) வெண்சீராயின் ‘தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா’ என்பதனான் அடங்கும். அதனான் இருவாற்றானும் வெண்சீர் வெண்டளை கொள்ளா ராயினார். இனி ஒழிந்த நான்கு தளையுங் கூறுகின்றாராயின் ஆசிரியத் தளையுங் கூறல் வேண்டா, அதுவும் இயற்சீரான் வருதலின் எனின், அதன்கண்ணே இயற்சீர் வெண்டளை கூற வேண்டுதலின் ஆசிரியத்தளையுங் கூறவேண்டு மென்க. (52) 362. 47சீரியன் மருங்கி னோரசை யொப்பி னாசிரியத் தளையென் 48றறியல் வேண்டும். என்-னின், ஆசிரியத் தளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சீர்கள் தம்முட் பொருந்தும்வழி, நிலைமொழி யாகிய இயற்சீரினீறும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றின் நிரையொன்றாசிரியத் தளையாம் என்றவாறு. இரண்டசையும் ஆசிரியத்தளை என வேண்டுதலின் 49பொதுப்படக் கூறினார். அவ்வழி வருஞ்சீர் இயற்சீராயிற் சிறப்பின் றெனவுங் கொள்க. (53) 363. குறளடி முதலா வளவடி காறு முறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப. என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. குறளடிமுதலாக அளவடியளவும் வஞ்சியுரிச்சீர் வந்து உறழுநிலையில், இவ்வடிகள் இயற்சீரும் ஆசிரியவுரிச் சீருமாம் என்றவாறு. எனவே பதினைந்தெழுத்து முதலாக நெடிலடியினுங் கழிநெடிலடியினுமே மெய்யுறழப் 50பெறுவ தென்றவாறாம். எடுத்தோத்துப் பெரும்பான்மை. அளவடிக்கண் வஞ்சியுரிச்சீர் மயங்குபவுள51வேன் மேற்கொள்க. (54) 364. அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான. என்-னின், வெண்பாவிற்குரிய அடியுந் தளையும் வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்குரிய தளைவகை ஒன்றாத் தன்மைக்கண் என்றவாறு. எனவே ஒன்றுந் தன்மைக்கண் நெடிலடியும் சில வரும் என்று கொள்க. இச்சூத்திரத்தான் வெண்பாவிற்குரியதோர் தளை உணர்த்தினாராம். சிந்தடியாவது ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத் தீறாகிய அடி. அளவடியாவது பத்தெழுத்து முதலாகப் பதினான் கெழுத்தீறாகிய அடி. தளைவகை ஒன்றாமையாவது நிலை மொழியும் வருமொழியும் ஆகிய இயற்சீர் நேராயொன்றுவதும் நிரையாயொன்றுவதுமன்றி மாறுபட வருவது. அவ்வழி நிரையீற்றியற்சீர் நிற்ப நேர்வரினும் நேரீற் றியற்சீர் நிற்ப நிரைவரினும் இயற்சீர் வெண்டளையாம். இனி ஒன்றுந் தன்மை யாவது வெண்சீர் நிற்க வருஞ்சீர் முதலசையோ டொன்றுவது வெண்டளையாம். இவ்விரண்டும் வெண்பாவிற்குத் தளையா மென்று கொள்க. உதாரணம்: “மட்டுத்தா னுண்டு மணஞ்சேர்ந்து விட்டுக் களியானை கொண்டுவா வென்றா - னளியார்முன் யாரோ வெதிர்நிற் பவர்.” (யாப். வி. மேற்.) இஃது ஏழெழுத்தான் வந்த அடி. “இன்றுகொ லென்றுகொ லென்றுகொ லென்னாது” (நாலடி. 36) இஃது எட்டெழுத்தான் வந்த அடி. “சென்று முகந்து நுதல்சுட்டி மாறோர்த்து வென்று வியர்த்தானென் கோ.” (யாப். வி. பக். 464) இஃது ஒன்பதெழுத்தான் வந்த அடி. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு” (குறள். 12) இது பத்தெழுத்தான் வந்த அடி. “ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்” (குறள். 14) இது பதினோரெழுத்தான் வந்த அடி. “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்” (குறள். 3) இது பன்னிரண்டெழுத்தான் வந்த அடி. “இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்” (குறள். 5) இது பதின்மூன்றெழுத்தான் வந்த அடி. “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்” (குறள். 2) இது பதினான்கெழுத்தான் வந்த அடி. “முகமறியார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம் அகமறைந்தான் வாழுமென் றார - மகமறையா மன்னைநீ வார்குழை வையெயிற்றா யென்றோமற் றென்னையும் வாழு மெனின்.” (யாப். வி. மேற்.) இது பதினைந்தெழுத்தான் வந்த அடி. “படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்” (குறள். 606) இது பதினாறெழுத்தான் வந்த அடி. இவையிரண்டும் நெடிலடி. (55) 365. அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி யிருநெடி லடியுங் கலியிற் குரிய. என்-னின், இது கலிப்பாவிற்கு அடியாமாறு உணர்த்தல் நுதலிற்று. அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக நெடிலடியுங் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின்காறும் வரும் அடி கலிப்பாவிற்கு அடியாம் என்றவாறு. இவ்விலக்கணங் கலித்தளை வருமிடத்தே கொள்க. 52கலியடி யென்னாது கலித்தளையடி என்றதூஉம் இவ்வேறுபாடு குறித்தென்க. “மரல்சாய 53மலைவெம்ப மந்தி யுயங்க” (கலித். 13) இது பதின்மூன்றெழுத்தான் வந்தது. “வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் 54வயற்கொண்ட” (கலித். 46) இது பதினான்கெழுத்தான் வந்த அடி. “அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற்” (கலித். 11) இது பதினைந்தெழுத்தான் வந்த அடி. “அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்” (கலித். 11) இது பதினாறெழுத்தான் வந்த அடி. “முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையென” (கலித். 56) இது பதினேழெழுத்தான் வந்த அடி. “55அறனின்ற விதையொழியா னவலங்கொண் டதுநினையான்” (யாப்.வி.பக்.498) இது பதினெட்டெழுத்தான் வந்த அடி. “உகுபனிகண் ணுறைப்பவுநீ யொழிபொல்லாய் செலவலித்தல்.” (யாப். வி. பக்.498) இது பத்தொன்பதெழுத்தான் வந்த அடி. “நிலங்கிளையா நெடிதுயிரா நிறைதளரா நிரைதொடியாள்” (யாப். வி. பக். 468) இஃது இருபதெழுத்தான் வந்த அடி. (56) 366. நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்டல் வரைநிலை யின்றே 56யவ்வடிக் கென்ப. என்-னின் கலித்தளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட அடி கலித்தளை தட்டவழியே கொள்ளப்படுவது என உணர்த்தியவாறாம். வெண்பா வுரிச்சீர் நிற்ப நிரைமுதல் வெண்சீர்வந்து அதன்கண் நிரையாய்த் தளைத்தல் கலியடிக்கு வரைநிலையில்லை என்றவாறு. ‘நிரைதட்டல்’ என்றதனான் பிறிதாகி வருஞ்சீர் முதலாகிய நிரை யோடு தளைப்பினுங் கலித்தளையாம் என்று கொள்க. நிரைமுதல் வெண்சீர் என்பது உய்த்துணர்ந்து கொள்ளப் பட்டது. உதாரணம்: மேற்காட்டிய அடிகளுட் காண்க. (57) 367. 57விராஅய தளையு மொரூஉநிலை யிலவே. என்-னின், இதுவுங் கலியடிக் குரியதோர் தளை உணர்த்துதல் நுதலிற்று. 58பிறவாகி விரவிய தளையும் நீக்குதலில்லை என்றவாறு. அஃதாவது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவுதல். “இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தண னுமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக வையிரு தலையி னரக்கர் கோமான்.” (கலித். 38) 59இதன்கண் முந்துற்ற இரண்டு சீரும் வெண்சீர் வெண்டளை; இரண்டாஞ் சீரோடு மூன்றாஞ் சீர் இயற்சீர் வெண்டளை. நாலாஞ் சீரோடு; மற்றையடி முதற்சீர் நிரையொன் றாசிரியத்தளை; அரக்கர் கோமான் 60நேரொன்றாசிரியத்தளை. அஃதேல், நேரீற்றியற்சீர் கலிக்கண் வரப்பெறா தென்றதென்னை? ஈண்டுக் ‘கோமான்’ வந்ததால் எனின், 61அவ்விலக்கணங் கலித்தளையான் வரும் அடிக்கென்க. சிறுபான்மை வஞ்சித்தளை வருதலும் கொள்க. (58) 368. இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கி னிலைக்குரி மரபி 62னிற்பவு முளவே. என்-னின், இஃது ஆசிரியப்பாவின்கண் வெண்பாவடி மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இயற்சீர் வெண்டளையானாகிய வெண்பாவடி ஆசிரியப் பாவின்கண் நிற்றற்குரிய மரபினான் நிற்பனவுமுள என்றவாறு. ‘உள’ என்றதனாற் பலவடியும் வரப்பெறும் என்று கொள்க. வெண்டளை என்னாது ‘அடி’ என்றதனான், தளை விரவுதல் பெரும்பான்மை; அடி விரவுதல் சிறுபான்மை என்றுகொள்க. உதாரணம்: “நெடுங்கயிறு வலந்த” என்னும் பாட்டினுள், “கடல்பா 63டொழிய வினமீன் முகந்து” (அகம். 30) என்றது இயற்சீர் வெண்டளையடி. பிறவு மன்ன. (59) 369. வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு மைஞ்சீ ரடியு முளவென மொழிப. என்-னின், இதுவும் ஆசிரியப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இயற்சீர் வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவன உள என்றவாறு. ‘உண்டு’ என்னாது ‘உள’ என்றதனான் ஒருபாட்டிற் பல வருதலும் கொள்க. ஆசிரியமென்பது அதிகாரத்தான் வந்தது. உதாரணம்: முன்னர்க் காட்டுதும். (60) 370. அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே. என்-னின், இதுவுமது. அறுசீரடி யாசிரியத் தளையொடு பொருந்தி நடைபெற்று வரூஉம், நேரடிக்கு முன்னாக ஆசிரியப்பாவின்கண் என்றவாறு. ஆசிரியப்பா என்பததிகாரத்தான் வந்தது. “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே” (புறம். 235) என்பதன்கண் முதலடி நாற்சீரான் வந்தது; இரண்டாமடி ஆசிரியத் தளையொடு பொருந்தி யறுசீரடியாகி வந்தது. ‘பொருந்தி’ என்றதனான் அத்தளை சில வருதல் கொள்க. ஏனையவை புணருஞ் சீரான் வந்தன. (61) 371. எழுசீ ரடியே முடுகிய னடக்கும். என்-னின், எழுசீரடிக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. எழுசீரான் வரும் முடுகியலடி என்றவாறு. உதாரணம்: முன்னர்க் காட்டுதும். (62) 372. முடுகியல் வரையார் 64முதலிரண் டடிக்கும். என்-னின், எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட ஐஞ்சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் நீக்கப்படாதென்றவாறு. உதாரணம்: முன்னர்க் காட்டுதும். (63) 373. ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினு மூவகை யடியு முன்னுத லிலவே. என்-னின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. 65முடுகியலாகி வரு மூவகை யடியும் ஆசிரியப்பாவினும் வெண்பாவிலும் நிற்றல் இல என்றவாறு. எனவே 66கலிப்பாவினுள் நிற்கப்பெறும் என்றவாறாயிற்று. உதாரணம்: முன்னர்க் காட்டுதும். ‘நாற்சீர் கொண்டதடி’ என வோதிப் பின்னும் இருசீரடி வஞ்சிக்கண் உரித்தென ஓதி, ஐஞ்சீரடியும் அறுசீரடியும் எழுசீரடியும் உள என ஓதினமையான், 67அடியாவது இரண்டுசீர் முதலாக வருமெனவும் அவற்றுள் இருசீரடி குறளடி எனவும் முச்சீரடி சிந்தடி எனவும் நாற்சீரடி அளவடி எனவும் ஐஞ்சீரடி நெடிலடி எனவும் 68அறுசீர் முதலாக வரும் அடியெல்லாங் கழிநெடிலடியா மெனவும் பிற நூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு உடம்பாடென்று கொள்க. 69அறுசீர் முதலான 70அடிகளின் 71எழுசீர் எண்சீர் சிறப்புடை யன எனவும், எண்சீரின் மிக்கன சிறப்பில்லன எனவும் அவ்வாசிரிய ருரைப்ப. இவ்வாசிரியரும் அடிக்குச் சீர் வரையறையின்மை ‘ஆங்கனம் விரிப்பின் 72அளவிறந் தனவே, பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை’ (செய்யுளியல் 49) என்றதனான் உணர்த்தினார் என்று கொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவுங் கலிப்பாவும் அவ்வடியினான் வருதலின் என்று கொள்க. (64) 374. ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப. என்-னின், 73இதுவும் ஆசிரியப்பாவிற் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. ஆசிரியப்பாவின் ஈற்றயலடி தோன்றுமிடத்து முச்சீர்த்தாகவும் பெறும் என்றவாறு. உதாரணம்: “முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே.” இதனுள் ஈற்றயலடி முச்சீரான் 75வந்தது. (65) 375. இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே. என்-னின், இதுவுமது. மேற்சொல்லப்பட்ட முச்சீரடி ஆசிரியப்76பாவினுள் இடையும் வரப்பெறும் என்றவாறு. “நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் 77லாவே.” இதனுள் மூன்றாமடியும் நான்காமடியும் முச்சீரான் வந்தவாறு கண்டுகொள்க. (66) 376. முச்சீர் முரற்கையு ணிறையவு நிற்கும். என்-னின், கலிப்பாவிற்கு ஈற்று வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. ஈற்றயலடி முச்சீரென வோதப்பட்டது கலிப்பாவின்கண் நாற்சீர் ஆகியும் 78வரும் என்றவாறு. இச்சூத்திரம் 78எதிரது நோக்கிக் கூறப்பட்டது, ‘எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே’ (செய்யுளியல். 72) என ஓதுகின்றானாதலின். உதாரணம்: “அரிமான் இடித்தன்ன” என்னும் 80பாலைக் கலியுள், (சுரிதகம்) “முளைநிரை 81முறுவல ராயத்து ளெடுத்தாய்ந்த விளமையுந் தருவதோ விறந்த பின்னே.” (கலித். 15) என ஈற்றயலடி நாற்சீரான் 82வந்தது. (67) 377. வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே. என்-னின், வஞ்சிப்பாவிற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இயல்பிற்று என்றவாறு. தூக்கெனினும் இறுதியெனினும் ஒக்கும். செந்தூக் கெனினும் ஆசிரிய வீறு எனினும் ஒக்கும். ‘செந்தூக் கியற்று’ என்றமையான் ஈற்றயலடி முச்சீரான் வருதலும் நாற்சீரான் வருதலுங் கொள்க. உதாரணம்: “தொடியுடைய தோள்மணந்தனன்” என்னும் பாட்டுள், “இடுக வொன்றோ சுடுக 83வொன்றோ படுகுழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.” (புறம். 239) இதனுள் ஈற்றயலடி நாற்சீரான் வந்தது. “பூந்தாமரைப் போதலமர” என்னும் பாட்டுள், “மகிழு மகிழ்தூங் கூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே.” (யாப். வி. பக். 74) இதனுள் ஈற்றலயலடி முச்சீரான் வந்தது. (68) 378. வெண்பா வீற்றடி முச்சீர்த் தாகும் 84அசைச்சீர்த் தாகு மவ்வழி யான. என்-னின், வெண்பாவிற்கு இறுதி யடியும் இறுதிச் சீரும் உணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவி னீற்றடி மூன்று சீரை யுடைத்தாகும்; அதன்கண் இறுதிச்சீர் அசைச்சீரான் வரும் என்றவாறு. 85உதாரணம்: முன்னர்க் காட்டுதும். (69) 379. நேரீற் றியற்சீர் நிரையு நிரைபுஞ் சீரேற் றிறூஉ மியற்கைய வென்ப. என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவி னிறுதிச் சீரின் அயற்சீர் நேரீற் றியற்சீராயின், நிரையசையும் நிரைபு அசையுஞ் சீராந்தன்மையைப் 86பெற்று முடியும் இயற்கையை யுடைய என்றவாறு. “கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் றாளை வணங்காத் தலை.” (குறள். 9) “தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது.” (குறள். 7) என வரும். (70) 380. நிரையவ ணிற்பி னேரு நேர்பும் வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர். என்-னின், இதுவுமது. வெண்பாவி னீற்றயற்சீர் நிரையீற் றியற்சீராயின் நேரசையும் நேர்பசையும் முடிபாம் என்றவாறு. உதாரணம்: “பாலொடு தேன்கலந் தற்றே 87பணிமொழி வாலெயி றூறிய நீர்.” (குறள். 1021) “நன்றி மறப்பது நன்றன்று 88நன்றல்ல தன்றே மறப்பது நன்று.” (குறள். 108) என வரும். “வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே.” (செய்யுளியல் 28) என்பதனான் ஈற்றயற்சீர் முதலசையான் வரினும் நேரும் நேர்பும் முடிபாகக் 89கொள்ளப்படும். உதாரணம்: “பிறவிப் பெருங்கடல் னீந்துவர் நீந்தா ரிறைவனடி சேரா தார்.” (குறள். 10) “இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.” (குறள். 5) என வரும். (71) 381. 90எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே. என்-னின், கலிப்பாவிற்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று. 91கலிப்பாவிற்கு ஈற்றயலடி முச்சீரான் வரும் ஆசிரிய முடிபாகும் என்றவாறு. உதாரணம்: “தொடங்கற்கட் டோன்றிய” என்னுங் கலியுள், சுரிதகம் “தொல்கவின் றொலைத லஞ்சியென் சொல்வரைத் தங்கினர் காத லோரே.” (கலித். 2) என வந்தது. ஈற்றயலடி நாற்சீரான் வருமென்பது மேற்கூறப் பட்டது. (72) 382. வெண்பா வியலினும் பண்புற முடியும். கலிப்பா வெண்பாச் சுரிதக92மாகவும் முடியும் என்றவாறு. உதாரணம்: “அறனின்றி யயறூ ற்றும்” என்னும் கலியுள், சுரிதகம் “யாநிற் கூறவு மெமகொள்ளா யாயினை யானா திவள்போ லருள்வந் தவைகாட்டி மேனின்று மெய்கூறுங் கேளிர்போ னீசெல்லுங் கானந் தகைப்ப செலவு.” (கலித். 3) என வெண்பாவினியலான் இற்றவாறு காண்க. இத்துணையும் அடியிலக்கணம். (73) 383. எழுத்து முதலா வீண்டிய அடியிற் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிப யாப்பறி புலவர். என்-னின், யாப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. எழுத்து முதலாக அசைசீர் அடி என 93ஈண்டோதப் பட்ட அடியினாற் றான் குறித்த பொருளை யிறுதியடி யளவு முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. இது சொல்ல வேண்டிய தென்னை? செய்யுட் பாடுவார்க்கு இயல்பன்றோ எனின், ஈண்டுச் 94செய்யுளுறுப்புள் ஓதுகின்றா ராதலின் யாதானு மோர்பொருட்கட் பலசொற் 95றொடுத்து வழங்குங்கால் குறித்த பொருளை முடித்தல் வேண்டுஞ் 96சொல்லே சேர்த்துக் கூறல் வேண்டும் எனவும், அது மிகாமற் குறையாமற் கூறல் வேண்டும் எனவும், இலக்கணங் கூறல் வேண்டும் என்க. அதன் வகை முன்னர்க் காட்டுதும். (74) 384. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே யங்கத முதுசொ லவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி னாற்பே ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் 97வழிய 98தென்மனார் புலவர். என்-னின், 99இதுவும் அதன் பகுதி உணர்த்துதல் நுதலிற்று. பாட்டு முதலாக முதுசொல் லீறாகச் சொல்லப் பட்ட எழுநிலத்தினும், வளவிய புகழையுடைய சேரன் பாண்டியன் சோழன் என்னும் மூவரது தமிழ்நாட்டகத்தவர் வழங்கும் 100தொடர்மொழிக்கண் வரும் மொழி யாப்பாவது என்றவாறு. எனவே யாப்பாவது:- பாட்டியாப்பு, உரையாப்பு, நூலியாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, பழமொழியாப்பு என எழுவகைப்படும். மேலைச் சூத்திரத்துள், ‘குறித்த பொருளை முடிய நாட்டல்’ என்றமையானும், இச் சூத்திரத்துள், ‘நாற்பேரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் 101வழியது’ என்று ஓதினமையானும், குறித்த பொருள் முடியுமாறு சொற்றொடுத்தல் என்று கொள்ளப்படும். உதாரணம்: தாமரை புரையுங் காமர் சேவடிப் பவளத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றி னெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப வேம வைக லெய்தின்றா லுலகே. (குறுந். கடவுள் வாழ்த்து) இதனுட் குறித்த பொருள், முருகவேள் காப்ப உலகங் 102காவற்பட்டது என்னும் பொருள். இதனை முடித்தற்பொருட்டு எழுத்து முதலாகி வந்து ஈண்டிய 103அடிகளெல்லாவற்றானும் நாட்டியவாறு கண்டு கொள்க. (75) 385. மரபே தானும் நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று. என்-னின், மரபு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. மரபாவதுதான் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் 104என்னும் நாற்சொல்லின் இயற்கை யானே யாப்பின் வழிப்பட்டது என்றவாறு. குறித்த 105ஒருபொருளை முடியச் சொற் றொடுக்குங்கால் இயற்சொல்லாகிய பெயர் வினையிடை யுரியானும், ஏனைத் திரிசொல் திசைச்சொல் வடசொல்லானும், 106எழுவகை வழுவும் படாமல் புணர்ப்பது என்றவாறாம். அவற்றுள், இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தொடு பொருந்துதல். திரிசொல் மரபாவது தமிழ்நாட்டகத்தும் பலவகை நாட்டினும் தத்தமக்குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொன் மரபாவது செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு. வடசொன் மரபாவது 107திரிந்த வகையாகிய சொல்மரபு. யாதானும் ஒரு செய்யுட் செய்யுங் காலத்துப் பொருளுணர்த்துஞ் சொற்கள் இவையாதலின், இவை ஒரு பொருட்குரித்தாகிய ஆண் பெயரும் பெண்பெயரும் குழவிப் பெயரும் முதலாயின பிற பொருட்கண் வாராமையான் அவற்றை அவ்வம் மரபினாற் கூறுதலும் ஒருமை பன்மை மயங்காமையும் பெயரும் வினையும் முடிவுபெறக் 108கூறுதலும் வேண்டுதலின், 109இவ்விலக்கணமுங் கூறல் வேண்டிற்று. (76) 386. அகவ லென்ப தாசிரி யம்மே. என்-னின், 110இது தூக்காமாறு உணர்த்துவான் அவற்றுள் ஆசிரியத்திற்குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. அகவல் என்னும் ஓசை ஆசிரியத்திற் கென்றவாறு. தூக்கெனினும் ஓசையெனினு மொக்கும். அகவல் என்பது ஆசிரியன் இட்டதோர் குறி. அது வருமாறு: செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானை கழறொடிச் சேய குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. (குறுந். 1) இதனுள் எழுத்தளவு மிகாமற் குறையாமல் 111உச்சரிக்க அவ்வழி 112நின்ற ஓசையான் ஆசிரியம் வந்தவாறு 113காண்க. (77) 387. 114அஃதன் றென்ப வெண்பா யாப்பே. என்-னின், வெண்பாவிற் குரிய ஓசை யுணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவாக யாக்கப்பட்டது அகவலோசை யன்று என்றவாறு. எனவே, அகவுதலில்லாத ஓசையாம். இதனைப் பிற நூலாசிரியர் செப்பலோசை என்ப. அகவுதல் என்பது ஒரு தொழில். அத்தொழில் இதன்கண் இல்லாமையின் ‘அஃதன்று’ என்றார். உதாரணம்: பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ மனனொடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும். இது மேற்சொல்லப்பட்டது போல இசைகுறித்து வருதலின்றிச் செப்புதலாகிய 115வாக்கியம் போன்ற ஓசைத்தாகி வந்தவாறு 116காண்க. (78) 388. துள்ள லோசை கலியென மொழிப. என்-னின், கலிப்பாவிற்கு ஓசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. துள்ளலோசை கலிப்பாவிற்காம் என்றவாறு. துள்ளுதலாவது ஒழுகு நடைத்தன்றி இடையிடை யுயர்ந்து வருதல்; கன்று துள்ளிற் றென்றாற் போலக் கொள்க. உதாரணம்: அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி (கலித். 11) என்றவழி ‘அரிதாயவறன்’ என நின்றவழிச் செப்பலோசைத்தாகிய வெண்சீர்ப் பின்னும் வெண்டளைக் கேற்ற சொல்லொடு புணராது ஆண்டெழுந்த ஓசை 117துள்ளி வந்தமையான் துள்ளலோசையாயிற்று. (79) 389. தூங்க லோசை வஞ்சி யாகும். என்-னின், வஞ்சிப்பாவிற்குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. தூங்கலாவது 118அறுதியுற்ற ஓசைத்தாகி வரும் வஞ்சி என்றவாறு. சுறமறிவன துறையெல்லா மிறவீன்பன வில்லெல்லா மீன்திரிவன கிடங்கெல்லாந் தேன்றாழ்வன பொழிலெல்லாம், எனத் தண்பணை தழீஇய விருக்கை மண்கெழு நெடுமதின் மன்ன னூரே. (யாப். வி. பக். 63) இதனுட் சீர்தோறும் ஓசை 119யற்றவாறு கண்டுகொள்க. (80) 390. மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் 120தன்மை யின்றே. என்-னின், மருட்பாவிற்கு ஓசை இதுவென உணர்த்துதல் நுதலிற்று. மருட்பாவிற்கு ஓசை இதுவென்னுந் தன்மை இல்லை; அதற்கு வெண்பாவும் ஆசிரியப்பாவும் உறுப்பாக, அவ்விரண்டன் ஓசையே அதற்கு ஓசை என்றவாறு. திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடு மிருநிலனுஞ் சேவடி யெய்து - மரிபரந்த போகித ழுண்க ணிமைக்கு மாகு மற்றிவ ளகலிடத் தணங்கே” (பு.வெ.கைக்கிளை. 3) 121என்பதனுட் கண்டுகொள்க. (81) 391. அவ்வியல் பல்லது 122பாட்டாங்குக் கிளவார். என்-னின், பாக்கள் எல்லாவற்றிற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. மேற் சொல்லப்பட்ட ஓசை வகையானல்லது 123பாட்டாங்குக் கூறார் என்றவாறு. 124பாட்டாங்குக் கூறுதலாவது, ஓசை ஒழித்துச் சீருந் தளையும் அடியும் படக் கூறுதல். அவ்வாறு 125படக் கூறுதலான் பாட்டாங்கு ஆகா தென்பதூஉம், அடியுந் தொடையும் 126பெற வந்ததாயினும் நூலின்பாற் படுதல் உரையின்பாற் படுதல் என்பதூஉம் கூறியவாறாம். அது வருமாறு: ஐவகை யடியும் விரிக்குங் காலை மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்து மெழுபது வகையின் வழுவில வாகி யறுநூற் றிருபத் தைந்தா கும்மே (செய்யுளியல் 48) என்பது ஆசிரியப்பாவிற் குரிய இலக்கண முடைத்தாயினும் ஓசை யின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப்படும் என்று கொள்க. (82) 392. தூக்கியல் வகையே யாங்கென மொழிப. என்-னின், ஐயமறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. மேல் 127அதிகாரப்பட்ட தூக்கியலும் 128வகை சொல்லப் பட்ட நாலுமே என்றவாறு. எனவே, இன்னும் உளவோ எனக் கருதற்க வென ஐயந் தீர்த்தவாறு. இங்கு ஓதப்பட்ட தூக்குச் செவிப்புலனாதலின் அதனானே ஓர்ந்துணர்ந்து பாகுபாடறிக. (83) 393. மோனை யெதுகை முரணே யியைபென நானெறி மரபின தொடைவகை என்ப. என்-னின், 129தொடைப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. மோனை எனவும் எதுகை யெனவும் முரணெனவும் இயைபெனவும் நான்கு நெறிப்பட்ட மரபினையுடைய, தொடையினது பாகுபாடு என்றவாறு. உதாரணந் தத்தஞ் சிறப்புச் சூத்திரங்களுட் காட்டுதும். (84) 394. அளபெடை தலைப்பெய வைந்து மாகும். என்-னின், இதுவுமது. அளபெடைத் தொடையோடே கூட ஐந்தென்று சொல்லவும் பெறும் என்றவாறு. (85) 395. பொழிப்பு மொரூஉஞ் செந்தொடை மரபு 130மமைந்தவை தெரியி னவையுமா ருளவே. என்-னின், இதுவுமது. பொழிப்பெனவும் ஒரூஉ வெனவும் செந்தொடையாம் எனவும் 131அமைந்தன வாராயின் அவையுந் 132தொடைப் பாகுபாடாம் என்றவாறு. (86) 396. நிரனிறுத் தமைத்தலு மிரட்டை யாப்பு மொழிந்தவற் றியலான் முற்று மென்ப. என்-னின், இதுவுமது. நிரலே நிறுத்தி யமைத்துக் கோடலும் இரட்டைத் தொடையும் மேற்சொன்னவாற்றான் 133முடியவும் பெறும் என்றவாறு. நிரனிறைத் தொடையாவது பொருளைச் சேர நிறுத்திப் பயனையுஞ் சேர நிறுத்துதல். இரட்டைத் தொடையாவது ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வருதல். இத்துணையுங் கூறப்பட்டது அடிதொறும் வருவன ஐந் தொடை எனவும் அடிக்கண் வருவன ஐந்தொடை எனவும் அவ்வைந்தும் மூன்றாகி அடங்குமெனவும் கூறியவாறாம். (87) 397. அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை. என்-னின், மோனை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடிதோறும் தலையெழுத்து ஒப்பது 134மோனைத் தொடையாம் என்றவாறு. அஃதேல் ‘அடியுள் ளனவே தளையொடு தொடையே’ (செய்யுளியல் 32) எனவோதி, ஈண்டு 135மவற்றை யடியினும் வருமென்றல் பொருந்தாதெனின், ஆண்டு மற்றையடியில் வாராதென்றாரல்லர்; அடியல்லாத உரை முதலாயினவற்றில் தளையொடு தொடையில்லை என்பார் ‘அடியுள்ளனவே தளையொடு தொடையே’ என்றார். மாவும் புள்ளும் 136வதிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடையும் மாயோய் நின்வயிற் புறத்திறுத் தற்றே. (யாப்.வி.ப. 130) என வரும். (88) 398. அஃதொழித் தொன்றி னெதுகை யாகும். என்-னின், எதுகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடிதொறும் முதலெழுத் தொன்றாமல் இரண்டா மெழுத்து ஒன்றின் எதுகை யாகும் என்றவாறு. அஃதேல், முதலெழுத்தும் ஒன்றி இரண்டாமெழுத்தும் ஒன்றின் யாதாகு மெனின், முந்துற்ற மோனையாற் பெயரிட்டு வழங்கப் 137படும் என்க. உதாரணம்: அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே 138காடென்றார் கனங்குழா யக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே. (கலித். 11) என வரும். (89) 399. ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. என்-னின், எய்தியதன்மேற் சிறப்புவிதி 139உணர்த்துதல் நுதலிற்று. மோனைத்தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த வெழுத்தே வருதலன்றி வருக்க வெழுத்தும் உரிய என்றவாறு. பகலே பல்பூங் கானற் கிள்ளை யோப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇய பின்னுப்பிணி யவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படக் கருதி (யாப். வி. மேற்) என்பது வருக்க மோனை. ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேள்இனி. (கலித். கடவுள்வாழ்த்து) என்பது வருக்கவெதுகை. பிறவு மன்ன. (90) 400. மொழியினும் பொருளினு முரணுதன் முரணே. என்-னின், முரணாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடிதொறும் வந்த சொல்லினானாதல் பொருளி னானாதல் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் தொடையாம் என்றவாறு. சொல்முரணாவது சொல்லானன்றிப் பொருளான் மாறுபடாமை. பொருள்முரணாவது மாறுபாடுடைய பொருளைச் சொல்வது. இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை பொன்னி னன்ன நுண்தா துறைக்கும்.” (யாப்.வி. ப. 146) என்பது, இரும்பும் பொன்னும் மாறுபாடுடைய வாதலிற் பொருள்முரண் ஆயிற்று. சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணு முடையவா லணங்கே. (யாப்.வி.பக். 146) என்றவழிக் குடியுங் கண்ணுமாகாது சிறுமை பெருமை என்னும் சொல்லே மாறுகோடலிற் சொன்முரணாயிற்று. (91) 401. இறுவா யொப்பினஃ தியைபென மொழிப. என்-னின், இயைபுத்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடிதோறும் ஈற்றெழுத்து 140ஒன்றிவரின் அஃது இயைபுத்தொடை என்று சொல்வர் என்றவாறு. இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே யாடமைத் தோளி கூடலு மணங்கே யரிமதர் மழைக்கணு மணங்கே திருநுதற் பொறித்த திலதமும் அணங்கே.” (யாப்.வி.ப. 153) என வரும். அசை சீரென வரையாது கூறினமையான், ஓரெழுத்து இறுதிக்கண் ஒப்பினும் இயைபாம் என்று கொள்க. (92) 402. அளபெழி னவையே யளபெடைத் தொடையே. என்-னின், அளபெடைத் தொடையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடிதொறும் அளபெழத் தொடுப்பின் அஃது அளபெடைத் தொடையாம் என்றவாறு. ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் டாஅ 141மிதற்பட் டது. (குறள். 1176) என வரும். (93) 403. ஒருசீ ரிடையிட் டெதுகை யாயிற் பொழிப்பென மொழிதல் புலவ ராறே என்-னின், பொழிப்புத் தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒரு சீரிடையிட்டு எதுகையாயிற் பொழிப்புத் தொடை யாம் என்றவாறு. எதுகையென ஓதினார் ஆயினும், ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ என்பதனான் மோனை இயைபு முரண் அளபெடை என்பனவும் பொழிப்புத் தொடையாம் 142என்று கொள்ளப்படும். உதாரணம்: “அரிக்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி.” (யாப்.வி.ப. 130) இது பொழிப்பு மோனை. “பன்னருங் கோங்கின் நன்னலங் கவற்றி” (யாப்.வி.ப. 134) என்பது பொழிப்பெதுகை. “சுருங்கிய நுசுப்பிற் 143பெருகுவடந் தாங்கி” (யாப். வி.ப. 147) என்பது பொழிப்பு முரண். “கடலே, கானலங் கழியே கைதையந் துறையே” என்பது பொழிப்பியைபு. “பூஉங் குவளைப் போஒ தருந்தி” (யாப்.வி.ப.158) என்பது பொழிப்பளபெடை. (94) 404. இருசீ ரிடையிடி னொரூஉவென மொழிப. என்-னின், ஒரூஉத்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இரண்டு சீர் இடையிட்டு மோனை முதலாயின வரத் தொடுப்பது ஒரூஉத் தொடையாம் என்றவாறு. “அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி” (யாப்.வி.ப. 150) என்பது ஒரூஉமோனை. “மின்னிவ ரொளிவடந் தாங்கி மன்னிய” (யாப்.வி.ப. 114) என்பது ஒரூஉ வெதுகை. “குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து” (யாப்.வி.ப. 147) என்பது ஒரூஉ முரண். “நிழலே யினியத னயலது கடலே” (யாப்.வி.ப. 153) என்பது ஒரூஉ வியைபு. “காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்” (யாப்.வி.ப. 158) என்பது ஒரூஉ அளபெடை. (95) 405. சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற் சொல்லியற் புலவரது செந்தொடை யென்ப. என்-னின், செந்தொடை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடையாம் என்றவாறு. “பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலின மகவு நாட னன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.” (யாப்.வி.ப. 179) என வரும். இனி நிரனிறுத் தியற்றலும் இரட்டை யாப்பும் மொழிந்தவற் றியலான் (செய்யுளியல் 87) 145வருமாறு: “அடல்வே லமர்நோக்கி நின்முகங் கண்டே யுடலு மிரிந்தோடு மூழலரும் பார்க்குங் கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந் தடமதி யாமென்று தாம்.” (யாப். வி.ப. 183) இது பொருளான் வேறுபட்ட துணையல்லது எழுத்தான் வேறுபடாமையின் எதுகைத் தொடையாயிற்று. இனி, இரட்டைத் தொடை வருமாறு: “ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும் விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும் குளக்கொட்டிப் பூவி னிறம்.” (யாப்.வி.ப. 183) இதுவுஞ் சொல்லிய தொடைப்பாற் பட்டவாறு 146காண்க. இணை மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை முதலாயினவும் அந்தாதித் தொடையுங் கூறாத தென்னையெனின், ‘தெரிந்தனர் விரிப்பின் வரம்பில வாகும்’ என வருகின்ற 147சூத்திரங் கூறுகின்றாராதலின், 148அச்சூத்திரத்தின்காறும் பாட்டிற் கின்றியமையாத தொடை யுணர்த்தினா ரென்று கொள்க. (96) 406. மெய்பெறு மரபிற் றொடைவகை 149தாமே யையீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற் 150றொன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே. என்-னின், மேற்சொல்லப்பட்ட தொடை யெல்லாம் விரிவகையான் உணர்த்துதல் நுதலிற்று. வடிவு பெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது என்றவாறு. அவையாமாறு: மொழிமுதலாகிய எழுத்து உயிர் பன்னிரண்டு. இதன் கிளையெழுத்து ஒரோவொன்றிற்குப் பதினொன்றுளவாகலின் அவற்றை உறழ, நூற்று முப்பத் திரண்டாம். ‘கதநபம’ என்பவற்றை உயிர் பன்னிரண்டோ டுறழ அறுபதாம்; அவ்வறுபதையும் முதற்றொடை 151யாக்கிக் கிளையெழுத்தோ டுறழ அறுநூற்றறுபதாம். சகரத்தின் முதலா கெழுத்து ஒன்பது; அவற்றைக் கிளையெழுத்தோ டுறழ எழுபத்தி ரண்டாம். வகரத்தின் முதலாகெழுத்து எட்டு; அவற்றைக் கிளை யெழுத்தோ டுறழ ஐம்பத்தாறாம். யகரத்தின் முதலாகெழுத்து ஒன்று; கிளையெழுத்தில்லை. ஞகரத்தின் முதலா கெழுத்து மூன்று; அவற்றைக் கிளையெழுத்தோ டுறழ ஆறாம். இவ் வகையினான் முதலெழுத்துத் தொண்ணூற்று மூன்றுங் கிளை யெழுத்துத் தொளாயிரத்திருபத்தாறும் ஆக மோனைத்தொடை ஆயிரத்தோர்பத் தொன்பதாம். எதுகை யாமாறு: உயிரெழுத்து மொழியிடையில் வாராது. உயிர் மெய்யெழுத்து இருநூற்றொருபத்தாறில் ஙவ்வருக்கம் ஒழிந்த எழுத்து இருநூற்றுநாலினையும் முதலெழுத்தினொடும் கிளையெழுத்தினொடும் உறழ இரண்டாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டாம். இதனோடு ஒற்றுப் பத்தொன் பதுங் குற்றுகரம் ஆறுங் கூட்ட எதுகைத் தொடை இரண்டாயிரத்து நானூற்று எழுபத்து மூன்று பாகுபாடாம். முரண்தொடை சொன்முரண் பொருண்முரண் என இரண்டாம். இயைபுத்தொடையாமாறு: உயிரெழுத்து மொழியீற்றின் கண் உயிர் மெய்யாகி வருதலின் அவையாகா. உயிர்மெய் இருநூற்றொ ருபத்தாறில் இறுதிக்கண் வாராத ஙகரவுயிர்மெய் பன்னிரண்டும் அகரம் பதினேழும் இகரம் பதினாலும் உகரம் இரண்டும் 152எகரம் ஒன்றும் ஒகரம் ஒன்றும் இவை ஒழிந்து நின்ற எழுத்து நூற்றறுபத்தைந்தும் ஞண நமனயரலவழள என்னும் புள்ளியிறுதி பதினொன்றும் குற்றுகர வீறு ஆறும் ஆக இயைபுத்தொடை நூற்றெண்பத்திரண்டு பாகுபாடாம். அளபெடைத் தொடை யாமாறு: மொழிமுதலாகு முயிரள பெடை ஏழாம். கதநபம என்னும் உயிர்மெய்யளபெடை முப்பத்தைந்து. சகர அளபெடை ஐந்து. வகர அளபெடை ஐந்து, யகர அளபெடை இரண்டு. இவை ஐம்பத்து நான்கில் உயிரள பெடை தனிநிலையாம். ஏனைய வற்றை முதனிலை இடைநிலை இறுதிநிலை என வுறழ நூற்று நாற்பத் தொன்றாம். ஒற்றுக்களுள் வல்லெழுத்தாறும் மகரமும் ழகரமும் ஒழித்து ஏனைய பதினொன்றும் அளபெடுக்க ஒற்றளபெடை பதினொன்றாம். இவ்வகையினான் அளபெடைத் தொடை நூற்றைம்பத் தொன்பது வகையாம். இவ்வகையினோ டித்தொடை மூவாயிரத்தெண்ணூற்று முப்பத்தைந்து வகையாம். பொழிப்புத் தொடையிற் கிளையெழுத்து வாராது. மோனைப் பொழிப்புத் தொண்ணூற்று மூன்று, எதுகைப் பொழிப்பு இருநூற்றிருபத்தொன்பது, முரண் பொழிப்பு இரண்டு, இயைபுப் பொழிப்பு நூற்றெண்பத்திரண்டு, அளபெடையுள் ஒற்றளபெடை பொழிப்பாகி வாராமையின் உயிரளபெடைப் பொழிப்பு நூற்று நாற்பத்தெட்டு. இவையெல்லாங் கூட்டப் பொழிப்புத் தொடை அறு நூற்றைம்பத்துநாலு வகையாம். ஒரூஉத் தொடையும் இவ்வகையினால் அறுநூற்றைம்பத்து நாலாம். இனிச் செந்தொடையாமாறு: மொழிமுதலாகும் எழுத்துத் தொண்ணூற்று மூன்று. மற்றையடியினு மொத்து வருங்கால் அவை மோனையுள் அடங்குதலின், அவற்றை ஒழித்து ஏனை யெழுத்துத் தொண்ணூற்றிரண்டோடும் உறழ எண்ணா யிரத்தைந் நூற்றைம்பத்தாறு வகையாம். இவ்வகையினால் தொடைவிகற்பம் பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதாம். (97) 407. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில வாகும். என்-னின், எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட தொடையினை ஆராய்ந்து விரிப்பின் வரம்பிலவாகி விரியும் என்றவாறு. அவையாவன: மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவற்றின்கண் இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க்கது வாய், 153கடை, கடையிணை, கடைக்கூழை, இடைப்புணரென வேறுபடுத்துறழ்ந்தும், எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி அடியந்தாதி எனவும், உயிர்மோனை உயிரெதுகை நெடில்மோனை நெடிலெதுகை வருக்கமோனை வருக்க எதுகை இனமோனை இனவெதுகை ஆசெதுகை எனவும், மூன்றாமெழுத்தொன்றெதுகை இடையிட் டெதுகை எனவும், இவ்வாறு வருவனவற்றை மேற்கூறிய வகையினான் எழுத்து வேறுபாட்டினா னுறழவும், நிரனிறையாகிய பொருள்கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலாகிய சித்திரப் பாக்களானும் உறழவும், வரம்பிலவாகி விரியும். அவற்றுட் சில வருமாறு: இணையாவது முதலிருசீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. கூழையாவது முந்துற்ற மூன்று சீரினும் வந்து இறுதிச்சீரின் வாராதது. “அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி” (யாப். வி.ப. 130) இஃது இணைமோனை. “பொன்னி னன்ன பொறிசுணங் கேந்தி” (யாப்.வி.ப. 134) இஃது இணையெதுகை. “சீறடிப் பேரக லல்கு லொல்குபு” (யாப்.வி.ப. 147) இஃது இணை முரண். “மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே” (யாப்.வி.ப. 153) இஃது இணையியைபு. “தாஅட் டாஅ மரைமல ருழக்கி” (யாப்.வி.ப. 158) இஃது இணையளபெடை என வரும். இனிக் கூழை வருமாறு: “அகன்ற வல்கு லந்நுண் மருங்குல்” (யாப்.வி.ப. 130) இது கூழை மோனை. “நன்னிற மென்முலை மின்னிடை 154வருத்த” (யாப்.வி.ப.134) இது கூழையெதுகை. “சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்” (யாப்.வி.ப. 147) இது கூழைமுரண். “மாதர் நகிலே வல்லே யியலே” (யாப்.வி.ப. 153) இது கூழையியைபு. “மாஅத் தாஅண் மோஒட் டெருமை” (யாப்.வி.ப. 158) இது கூழையளபெடை என வரும். முற்றாவது நான்கு சீரும் ஒத்து வருவது. “அயில்வே லனுக்கி யம்பலைத் தமர்த்த” (யாப்.வி.ப.130) இது முற்றுமோனை. பிறவுமன்ன. இனி மேற்கதுவா யாவது நான்கு சீரினும் இரண்டாம் சீரொழிய ஏனைய வருவது. “அரும்பிய கொங்கை யவ்வளை யமைத்தோள்” (யாப்.வி.ப. 131) இது மேற்கதுவாய் மோனை பிறவுமன்ன. கீழ்க்கதுவாயாவது மூன்றாஞ் சீரொழிய ஏனைய வருவது. “அவிர்மதி யனைய திருநுத லரிவை” (யாப்.வி.ப. 131) இது கீழ்க்கதுவாய் மோனை பிறவுமன்ன. அந்தாதித்தொடைக்குதாரணம்: “உலகுடன் விளங்கு மொளிதிக ழவிர்மதி மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழல் பொற்புடை யாசனம் ஆசனத் திருந்த திருந்தொளி யறிவ னாசனத் திருந்த திருந்தொளி யறிவனை யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து 155துன்னிய மாந்த ரஃதென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே.” (யாப்.வி.ப. 185) என வரும். இவ்வகையினான் ஒருபாட்டிறுதி மற்றைப்பாட்டி னாதிச்சீராகி வருதல் கொள்க. இத்துணையுங் கூறப்பட்டன சிறப்புடையவென ஒரு நிகராகக் கூறுப. இனி, “156மீன்றேர்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு” (யாப்.வி.ப. 148) இது கடையிணைமுரண். பின் முரணாவது நாலாஞ் சீரும் இண்டாஞ் சீரு மொன்றத் தொடுப்பது; அது “கொய்ம்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து” (யாப்.வி.ப. 148) என வரும். கடைக்கூழை முரணாவது முதற்சீரொழித்து மூன்றுசீரும் ஒத்து வருவது. உதாரணம்: வந்தவழிக் காண்க. இடைப்புணர் முரணாவது இடையிரு சீரும் ஒன்றத் தொடுப்பது; அது “157போதுவிடு குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையிற் றாழ்ந்த வோங்குவெள் ளருவிக் காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு விரைஇப் பெருமலைச் சீறூ ரிழிதரு நலங்கவர்ந் தின்னா வாயின வினியோர் மாட்டே.” (யாப்.வி.ப. 148) என வரும். மோனை எதுகை இயைபு அளபெடையினும் இவ்வாற்றான் வருவன வந்தவழிக் காண்க. இனி, உயிர்மோனை யாவது முதலெழுத்தாகி வந்த உயிரெழுத்து மற்றை யடியினும் வருவது; அது “கயலேர் உண்கண் கலிழ நாளுஞ் 158சுடர்புரை திருநுதல் பசலை பாய” (யாப்.வி.ப. 136) என வரும். எதுகைக்கும் இதுதானேயாம். நெடின் மோனையாவது நெட்டெழுத் தொத்து வருவது: “தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.” (குறள். 399) என வரும். நெடிலெதுகையாவது: “ஆவா வென்றே அஞ்சின 159ராழ்ந்தா ரொருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டா ரொருசாரார்.” (யாப்.வி.ப. 136) என வரும். இனவெதுகை மூன்று வகை. “தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும்.” (குறள். 106) இது வல்லினவெதுகை. “அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னு நாடாச் சிறப்பு.” (குறள். 74) இது மெல்லினவெதுகை. “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.” (குறள். 299) இஃது இடையின வெதுகை. மோனையும் இவ்வாறு வருவன பாகுபடுத்துக் கொள்க. ஆசெதுகையாவது இடையினவொற்று இடைவரத் தொடுப்பது. “காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்து மேமாங் கதமென் றிசையாற்றிசை போய துண்டே. (சீவக.31) என வரும். இதன்கண் யகரம் ஆசாகி வந்தது. பிறவுமன்ன. இனி இரண்டடியெதுகை யாவது முதலிரண்டடியு மோரடி யாய்ப் பின்னிரண்டும் ஓரெதுகையாகி வருவது. “உலக மூன்று மோர்ங்குட னேத்துமாண் டிலக மாய திறலறி வன்னடி வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந் தொழுவ றொல்வினை நீங்குக வென்றியான்” (யாப்.வி.ப. 139) என வரும். இடையிட் டெதுகையாவது ஓரடி யிடையிட்டுத் தொடுப்பது. “தோடா ரெல்வளை நெகிழ நாளும் நெய்த லுண்கண் பைத லுழப்ப 160வாடா வவ்வரி புதைஇப் பசலையும் வைக றோறும் பைபயப் பெருகி நீடா 161ரவரென நீமனங் கொண்டார் கேளார் கொல்லோ காதலர் தோழீஇ வாடாப் பவ்வ மறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ யோடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே.” (யாப்.வி.ப. 143) என வரும். இவ்வகையினான் மோனை வருவனவுங் கொள்க. பிற தொடையும் இவ்வகையினான் வருவனவும் கொள்க. மூன்றா மெழுத்தொன் றெதுகையாவது இரண்டா மெழுத்து ஒன்றாது மூன்றாம் எழுத்து ஒன்றுவது. 162இதுவும் அவ்வாறே உதாரணம்: வந்தவழிக் காண்க. இவையெல்லாம் மேலெடுத் தோதப்பட்ட தொடைக்கட் படும். நாற்சீரடியொழிந்த அடிக்கண்ணும் இப்பாகுபாடெல்லாம் விரிப்பின் வரம்பிலவாகும். (98) 408. தொடைநிலை வகையே யாங்கென மொழிப. என்-னின், இதுவுந் தொடைக் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. தொடைநிலைவகை மேற்சொல்லப்பட்ட பாகுபாட்டின என்றவாறு. 163எனவே, வகுத்துணர்த்துவார்க் கெல்லாம் இடனுடைத்து என்றவாறாம். அஃதாவது எழுத்தான் வேறுபடுதலும் சொல்லான் வேறுபடுதலும் பொருளான் வேறுபடுதலுமாம். இத்துணையுந் தொடை கூறப்பட்டது. (99) 409. மாத்திரை முதலா வடிநிலை காறு நோக்குதற் காரண நோக்கெனப் படுமே. என்-னின், இது நோக்கென்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று. மாத்திரை முதலாக அடிநிலையளவும் நோக்குத லாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும் என்றவாறு. காரணமெனினுங் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற் காரண மென்பதனை உண்டற்றொழில் என்றாற் போலக் கொள்க. அஃதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய 164பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கு நிலை. ‘அடிநிலைகாறும்’ என்றதனான், ஓரடிக்கண்ணும் பலவடிக் கண்ணும் நோக்குதல் கொள்க. அஃது ஒருநோக்காக ஓடுதலும், 165பலநோக்காக ஓடுதலும், இடையிட்டு நோக்குதலும், என மூன்று வகைப்படும். “அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற்பின் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று.” (நாலடி. 1) இஃது ஒரு நோக்காக ஓடிற்று. “அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மைஎஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.” (நாலடி. 172) இது பல நோக்காகி வந்தது. “உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன்” (முருகு. 1-6) என்றவழி ‘ஒளி’ என்பது அதனயற் 166கிடந்த தாளை நோக்காது கணவனை நோக்குதலின் இடையிட்டு நோக்கிற்று. பிறவுமன்ன. (100) 410. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப 167பாவகை விரியே. என்-னின், நிறுத்தமுறையானே பாவாமாறு உணர்த்து வான் எடுத்துக்கொண்டான். அவை யினைத்தென வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. ஆசிரியமெனவும் வஞ்சியெனவும் வெண்பா வெனவும் கலியெனவும் நான்கியல்பினையுடைத்து என்று சொல்வர், பாவினது வகையை விரிக்குங் காலத்து என்றவாறு. அஃதேல் ஒருசாராசிரியர் வெண்பா ஆசிரியங் கலி வஞ்சி என ஓதினார்; யாதெனின், அவரும் ஒரு பயனோக்கி யோதினார். இவனும் ஒருபயன் நோக்கி ஓதினான் என்க. என்னை? வெண்பாவாவது பிற தளையொடு மயங்காமை யானும் மிக்குங் குறைந்தும் 168வாராத அடியான் வருதலானும் அந்தணர் நீர்மைத்தென முற்கூறினார். அதன்பின், அந்நிகர்த் தாகிப் பிறதளையும் வந்து இனிய ஓசையை யுடைத்தாய்ப் பரந்து வருதலின், அரசத் தன்மையது என்பதனான் ஆசிரியப்பாக் கூறினார். அதன்பின், அந்நிகர்த்தாகிச் சிறுபான்மை வேற்றுத்தளை விரவலின் வணிகர் நீர்மைத்தெனக் கலிப்பாக் கூறினார். அதன்பின் வஞ்சிப்பா அளவடியான் வருதலின்றிக் குறளடியுஞ் சிந்தடியுமாய் வந்து பல தளையும் விரவுதலின் வேளாண் மாந்தரியல்பிற்றென வஞ்சிப்பாக் கூறினார். இவ்வாசிரியனும் பதினேழ் நிலத்தினும் வருதலானும், இனிய ஓசைத்தாகலானும், அடிப்பரப்பி னானும், ஆசிரியப்பா முற்கூறினான்; அதன்பின், ஆசிரிய நடைத்தாகி இறுதி யாசிரியத்தான் இறுதலின் வஞ்சிப்பாக் கூறினான்; இந்நிகர்த்தன்றி வேறுபட்ட ஓசைத்தாகலான் வெண்பா அதன்பின் கூறினான்; அதன்பின் வெண்சீர் பயின்றுவருதலானும், வெண்பாவுறுப்பாகி வருதலானும், கலிப்பாக் கூறினானெனவறிக. (101) 411. அந்நிலை மருங்கி னறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப. என்-னின், மேற்கூறப்பட்ட பாக்கள் பொருட்குரிய வாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அப்பாக்கள் நான்கும் பொதுப்பட நின்றவழி அறம் பொருளின்ப மென்னும் மூன்று முதற்பொருட்கும் உரிய என்றவாறு. முதற்பொருள் என்றது, 169பாகுபாடல்லாத பொதுமை குறித்த பொருள். சில பொருள்களை எடுத்து விளக்குகின்றா னாதலின், இவ்வாறு கூறப்பட்டது. அப்பொருட்கண் உரிய வாகியவாறு சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க. (102) 412. பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பி னாசிரி யப்பா வெண்பா வென்றாங் காயிரு பாவினு ளடங்கு மென்ப. என்-னின், மேற்சொல்லப்பட்ட பாக்களைத் தொகை வகையான் உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட நான்கு பாவும் ஆசிரியப்பா வெண்பா என இரண்டாய் அடங்கும் என்றவாறு. அவை யடங்குமாறு மேலே வருகின்ற சூத்திரத்தான் உரைக்கும். (103) 413. ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. என்-னின், மேல் அடங்குமெனக் கூறப்பட்ட பாக்கள் அடங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஆசிரியம் போன்ற நடையை உடைத்து வஞ்சி; வெண்பாப் போன்ற நடையை உடைத்து கலி என்றுரைப்ப என்றவாறு. நடையென்றது அப்பாக்கள் இயலுந் திறம். (104) 414. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே. என்-னின், வாழ்த்தியற் குரிய பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வாழ்த்தியலின் வகை நான்கு பாவிற்குமுரித்து என்றவாறு. வகையென்றது, தேவரை வாழ்த்தலும் முனிவரை வாழ்த்தலும் ஏனையோரை வாழ்த்தலும். செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. (105) 415. வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. என்-னின், இது புறநிலை வாழ்த்திற்குரிய பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்பக் குற்றந் தீர்ந்த செல்வத்தொடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்துக் கலிப்பாவகையினும் 170வஞ்சிப்பா வகையினும் வரப்பெறாது என்றவாறு. எனவே வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவை யிரண்டும் புணர்ந்த மருட்பாவினும் வரப்பெறும் என்றவாறாம். (106) 416. வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே செவியறி 171வுறூஉவென வவையு மன்ன. என்-னின், ஒருசார் பொருட்குரிய மரபுணர்த்துதல் நுதலிற்று. வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறி வுறுத்தற் பொருளுங் கலியினும் வஞ்சியினும் வரப்பெறா என்றவாறு. எனவே, முன்னையவொப்ப ஏனையிரண்டினும் மருட்பா வினும் வரப்பெறும் என்றவாறாம். (107) 417. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் 172போல வெஞ்சொற் றாங்குத லின்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. என்-னின், வாயுறை வாழ்த்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. வாயுறை வாழ்த்தை விளங்க ஆராயின், வேம்பினையுங் கடுவினையும் போல, வெஞ்சொலடக்காது பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாவற் கிளவியானே மெய்யறிவித்தல் என்றவாறு. உதாரணம்: “இருங்கடற் றானையொடு பெருநிலங் கவைஇ யுடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு னாங்க ணுப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையு மின்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே.” (புறம். 363) என்னும் பாட்டு. (108) 418. அவையடக் கியலே யரிறபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே. என்-னின், அவையடக்கியல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. அவையடக்கியலைக் குற்றமற ஆராயின், அறியாதன சொல்லினும் பாகுபடுத்துக் கோடல்வேண்டும் என 173எல்லா மாந்தர்க்குந் தாழ்ந்து கூறல் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் கண்டுகொள்க. (109) 419. செவியுறை தானே, பொங்குத லின்றிப் புரையோர் நாப்ப ணவிதல் கடனெனச் செவியுறுத் 174தன்றே. என்-னின், செவியறிவுறூஉ வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. செவியுறையாவது பெரியோர் நடுவு வெகுடலின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்துதல் என்றவாறு. “அறிமி னறநெறி... பெரியார் வாய்ச்சொல்” (நாலடி. 172) என வரும். இத்துணையும் பாக்கட் குரிய பொருளுணர்த்தியது. (110) 420. ஒத்தா ழிசையு மண்டில யாப்புங் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப. என்-னின், சில செய்யுள்களின் அடி வரையறுத்தலை நுதலிற்று. ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகிய ஒத்தாழிசையும், ஆசிரியப்பாவின்கண் நிலைமண்டிலம் அடிமறிமண்டிலம் என்பனவும், ஒத்தாழிசைக்கும் கொச்சகத்திற்கும் பொதுவாகிய குட்டமும் நாற்சீரடிக்குப் பொருந்தின என்றவாறு. மேல் ஆசிரியப்பாவின் ஈற்றயலினும், இடையினும், முச்சீரும் இரு சீரும் ஐஞ்சீரும் அறுசீரும் வரும் என்றதனானே, எல்லாவடியும் ஒத்து வருவனவு முளவென மண்டிலம் கூறவேண்டிற்று. கலிப்பாவிற்குச் சுரிதகம் ஈற்றடி முச்சீரானும் ஈற்றயலடி முச்சீரானும் வரும் என்றமையான், தாழிசையுந் தரவும் நாற்சீரா னல்லது பிறவாற்றான் வாராவெனக் கூறல் வேண்டிற்று. குட்டமெனினும் தரவெனினும் ஒக்கும். இனிக் கலிக்குறுப்பாகிய சின்னங்கள் இருசீரானும் முச்சீரானும் வருதலானும், தனிச்சொல் ஒருசீரானும் வருதலானும் வேறு ஓத வேண்டிற்று. உதாரணம்: முன்னர்க் காட்டுதும். (111) 421. குட்ட மெருத்தடி யுடைத்தும் ஆகும். என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. தரவு ஈற்றயலடி முச்சீரான் வரவும் பெறும் என்றவாறு. எருத்தடியுடைத் தென்றதனானே ஈற்றயலடி முச்சீர் எனப் பொருள் படுமோ எனின், ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரான் வருதல் பெருவழக்காதலானும், இனி வருகின்ற சூத்திரம் தூக்கிய லென ஓதுகையானும், இவ்வாறு பொருள்படுமென்று கொள்க. உதாரணம்: முன்னர்க் காட்டுதும். இன்னும் குட்டம் என்பதனைத் தரவு கொச்சகமாகிய கொச்சக வொருபோகிற்குப் பெயராக வழங்கினும் 176அமையும். அவ்வழி, ஒத்தாழிசை என்பதனை 177ஒத்தாழிசைக்கலி என்க. தரவெனத் தரவையுங் கூட்டிப் பொருளுரைக்கப்படும். (112) 422. மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டுஞ் செந்தூக் கியல வென்மனார் புலவர். என்-னின், மேற் சொல்லப்பட்டவற்றுள் மண்டிலம் குட்டம் என்பவற்றிற் குரியதோர் ஓசை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. மண்டிலமாகக் கூறப்படும் பாவும் குட்டமெனக் கூறப்படும் பாவும் அகவலோசை இயல என்றவாறு. உதாரணம்: முன்னர்க் காட்டுதும். இனி 178நான்குபாவினும் வெண்பாவுங் கலிப்பாவும் முன்னெடுத் தோதுகின்றானாதலானும், ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் இத்துணையும் ஓதிய இலக்கணத்தான் முடித்தலானும், அவையிற்றிற்கு உதாரணம்: ஈண்டே காட்டுதும். ஆசிரியப்பாவாவது பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரிய வுரிச்சீரானும் ஆசிரியத் தளையானும் அகவலோசையானும் நாற்சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வருவது. அவ்வாறாதல் மேற்கூறப்பட்ட சூத்திரங்களான் உணர்க. இப்பாவிற்கு ஈற்றெழுத்து வரையறுத்துணர்த்தாமையின் எல்லா வீறுமாம். எற்றுக்கு? “அகவ லிசையன வகவல் மற்றவை ஏஓ ஈஆ என் ஐ என் றிறுமே.” (யாப்.வி.ப. 99) என்று வரைந்தோதினார் உளரால் எனின், “கோண்மா கொட்குமென் றஞ்சுவ லொன்றார்க் கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் 179வழுதி கூட லன்ன குறுந்தொடி யரிவை யாடமை 180மென்றோ ணசைஇ நாடொறும் வடியமை யெஃகம் வலவயி னேந்திக் கைபோற் காந்தட் கடிமலர் கமழு மைதோய் 181வெற்பன் வைகிருள் வருமிடம்.” (யாப்.வி.ப. 262) எனப் பிறவாற்றானும் வருதலின், ஈறு வரையறுக்கப்படா தென்று கொள்க. இனி இவ்வாசிரியப்பாவினை அடிநிலையாற் பெயரிட்டு வழங்கப்படும். அஃதாமாறு: ஈற்றயலடி முச்சீரான் வருவதனை நேரிசையாசிரியம் என்ப. உதாரணம்: “முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே.” (யாப்.வி.ப. 122) என வரும். இடையிடை முச்சீர் வரின் இணைக்குறளாசிரியம் என்ப. உதாரணம்: “நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீரும் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாவே.” (யாப்.வி.ப. 257) என வரும். எல்லா அடியும் ஒத்துவருவதனை நிலைமண்டில ஆசிரியம் என்ப. இதற்கு இலக்கணம் முன்னர்க் காட்டுதும். “வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.” (குறுந். 18) என வரும். இனி எல்லா அடியும் ஒத்து வரும் பாட்டினையே அடிமறிமண் டில ஆசிரியம் என்றும் வழங்குப. இதற்கிலக்கணஞ் சொல்லதிகாரத்துள் ‘நிரனிறை சுண்ணம்’ (எச்சவியல் 8) என்னும் சூத்திரத்தாற் கொள்க. “சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வார லெனினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே.” (யாப்.வி.மேற்.) என வரும். இதனுள் யாதானும் ஓரடியை முதலு முடிவுமாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது வருதலின் அடிமறி யாயிற்று. இனி முச்சீரடி முதலாக அறுசீரடியீறாக மயங்கிய ஆசிரியத்தினை அடிமயங்காசிரிய மெனவும், வெண்பாவடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடி மயங்காசிரியமெனவும், வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை 182வஞ்சியஅடி மயங்காசிரிய மெனவும் வழங்கப்படும். இதற்கு இலக்கணம்: “வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியு மைஞ்சீ ரடியு முளவென மொழிப.” (தொல். செய். 60) “அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே.” (தொல். செய். 61) “இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கி னிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே.” (தொல். செய். 59) எனவும், “ஆசிரிய நடைத்தே வஞ்சி.” (தொல். செய். 104) என ஒற்றுமைப்படுத்துதலானுங் கொள்க. உதாரணம்: “183சிறியகட் பெறினே யெமக் ... தவப்பலவே.” (புறம். 235) இப்பதினேழடியாசிரியத்துள் ஏழாமடியும் பன்னிரண்டா மடியும் முச்சீரான் வந்தன. மூன்றாமடி முதலாக ஆறாமடி யீறாக நான்கடியும் பதினாலாமடியும் ஐஞ்சீரான் வந்தன. இரண்டா மடியும் பதினொன்றாமடியும் அறுசீரான் வந்தன. ஏனைய நாற்சீரான் வந்தன. இவ்வாறு வருதலின் அடிமயங்காசிரியம் ஆயிற்றாம். “எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல் லன்ன பாறை யேறிக் கொடுவில் லெயினர் பகழி மாய்க்குங் கவலைத் தென்பவவர் தேர்சென்ற வாறே யதுமற் றவலங் கொள்ளாது நொதுமலர்க் கலிழுமிவ் வழுங்க லூரே.” (குறுந். 12) இதனுள், முதலடி இயற்சீர் வெள்ளடியாதலின் வெள்ளடி விரவிய ஆசிரியமெனப்படும். “இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநில முடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவல ரிடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்த நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற வுயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே கள்ளி லேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்கண் ணுப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையு மின்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே” (புறம். 363) இதனுள், “உப்பிலாஅ அவிப்புழுக்கல்” என்பது முதலாக மூன்றடியும் வஞ்சியடி. இனி வஞ்சிப்பா ஆவது வஞ்சியுரிச்சீரானும் ஏனைச் சீரானும் இரு சீரடியானும் முச்சீரடியானுந் தூங்கலோசை யானும் வந்து தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் இறுவது. இதற்கு இலக்கணம்: “வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை யென்ப.” (தொல். செய். 19) “தன்பா வல்வழித் தானடை வின்றே.” (தொல். செய். 20) “வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய.” (தொல். செய். 21) “வஞ்சி யடியே இருசீர்த் தாகும்.” (தொல். செய். 43) “முச்சீ ரானும் வருமிடன் உடைத்தே.” (தொல். செய். 45) “வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே.” (தொல். செய். 68) என்பனவற்றாற் கொள்க. இப்பா இருசீரடி வஞ்சிப்பா, முச்சீரடி வஞ்சிப்பா என இருவகைப்படும். “பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதரும் வளவயலிடைக் களவயின் மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசமும் வயற்கம்பலைக் கயலார்ப்பவும், வயற்கம்பலைக் நாளும் மகிழின் மகிழின் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே.” (யாப். வி.பக். 336) இது குறளடியான் வந்து தனிச்சொற்பெற்று ஈற்றயலடி முச்சீரான் வந்து, ஆசிரியச் சுரிதகத்தானிற்ற இருசீரடி வஞ்சிப்பா. தனிச்சொற் பெறுதல் எடுத்தோதிற்றிலராயினும் ‘உரையிற் கோடல்’ என்பதனாற் கொள்க. “கொடிவாலன 184கருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தி னிணையரிமா னணையேறித் துணையில்லாத் 185துறவுநெறிக் கிறைவனாகி யெயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை 186பத்தியலாற் செப்பியோன், புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதே.” (யாப்.வி.பக். 337) இது முச்சீரடி வஞ்சிப்பா. இனி, “வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய (தொல். செய். 21) என்றோதியவதனால் ஆசிரியவடியோடும் வெண்பா வடியோடுங் கலியடியோடும் மயங்கி வருவன கொள்க. பட்டினப்பாலையுள், “நேரிழை மகளி ருணங்குணாக் கவரும்” (அடி 22) என்பதுஆசிரியவடி. “கோழி யெறிந்த கொடுங்காற் கணங்குழை” (அடி 23) என்பது வெண்பாவடி. “வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மலைந்து.” (145) என்பது கலியடி. இனி வெண்பாவாமாறும் கலிப்பாவாமாறும் முன்னர்க் காட்டுதும். (113) 423. நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோ டொத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின. என்-னின், வெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நெடுவெண்பாட்டு முதலாக அங்கதச் செய்யுள் ஈறாகச் சொல்லப்பட்டவையும் அளவொத்தவையும் எல்லாம் வெண்பா யாப்பினையுடைய என்றவாறு. வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண்டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீ ரீற்றடியானும் வருவது. இவற்றிற்கு இலக்கணம் மேலோதப்பட்டது. ஈண்டு ஓதப்பட்டன வெல்லாம் இவ்வாறு வரும் என்றவாறு. இவையெல்லாம் ஓசையான் ஒக்குமாயினும் அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார் என்று கொள்க. நெடுவெண்பாட்டாவது 187அளவடியி னெடிய பாட்டு. குறுவெண்பாட்டாவது 188அளவடியிற் குறிய பாட்டு. கைக்கிளை யென்பதூஉம் அங்கத மென்பதூஉம் பொருளானாகிய பெயர். பரிபாட்டாவது 189பரிந்த பாட்டாம். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் 190பலவுறுப்புக்களொடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது. ‘ஒத்தவை’ என்பது அளவானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத சமநிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியான் வருவன, இவ்வாசிரியன் நான்கினை அளவென்றும் ஏறினவற்றை நெடிலென்றும் குறைந்தவற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவனாகலின். 191இவை வேற்றுப் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் சமநிலை வெண்பாட்டும் என மூவகையானும் வரும். குறுவெண் பாட்டாவது இரண்டடியானும் மூன்றடி யானும் வரும். உதாரணம்: “அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை.” (குறள். 37) இஃது இரண்டடியும் ஒரு தொடையான் வருதலின் குறள்வெண்பா என்ப. “உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து.” (குறள். 667) இது விகற்பத்தொடையான் வருதலின் விகற்பக் குறள்வெண்பா என்ப. மூன்றடியான் வருவதனைச் சிந்தியல் வெண்பா என வழங் கப்படும். உதாரணம்: “நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப் பிறர்நாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டி ரடி.” (யாப்.வி.ப. 226) இஃது ஒரு தொடையான் வருதலின், இன்னிசைச் சிந்தியல் வெண் பாவாம். “நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண்டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான் பாலைநல் வாயில் மகள்.” (யாப்.வி.ப. 226) எனவும், “சுரையாழ வம்மி மிதப்ப- வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை.” (யாப்.வி.ப. 229) எனவும் இவை வேறுபட்ட தொடையான் வருதலின் நேரிசைச் சிந்தியல் வெண்பாவாம். இனி நான்கடியான் வருவன சமநிலை வெண்பா வெனப்படும். அவற்றுள் இரண்டாமடியின் இறுதிக்கண் ஒரூஉத் தொடை பெற்று வருவனவற்றை நேரிசை வெண்பா எனவும், ஒரூஉத்தொடை பெறாது வருவனவற்றை இன்னிசை வெண்பா எனவும் வழங்கப்படும். ஒரூஉத்தொடை வருக்கவெதுகையாகியும் வரும். இவை யெல்லாம் ‘உரையிற்கோடல்’ என்பதனாற் கொள்க. “அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று.” (நாலடி. 1) இது நேரிசை வெண்பா. “கல்வரை யேறிக் கடுவன் கனிவாழை யெல்லுறு போழ்தி 192னினிய பழங் கைக்கொண் 193டொல்லொலை யோடு மலைநாடன் றன்கேண்மை சொல்லச் சொரியும் வளை.” (கைந்நிலை. 7) இஃது இன்னிசை வெண்பா. “வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை யளந்தன போக மவரவ ராற்றான் விளங்காய் திரட்டினா ரில்லை - களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்.” (நாலடி. 103) நான்கடியாயும் மூன்றாமடிக்கண் தனிச்சொற் பெற்று வருதலின் நேரிசைப்பாற்படும். பிறவுமன்ன. ஐந்தடி முதற் பன்னிரண்டடிகாறும் வருவன பஃறொடை வெண்பா எனப்படும். இதனுள்ளும் ஒரூஉத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசைப் பஃறொடை எனவும், ஒரூஉத் தொடையின்றி வருவனவற்றை இன்னிசைப் பஃறொடை எனவும் வழங்கப்படும். “சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேந்தன்வேற் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல் தோற்றந் தொழில்வடிவு தம்முட் டடுமாற்றம் வேற்றுமை யின்றியே யொத்தன மாவேட ராற்றுக்கா லாட்டியர் கண்.” (யாப்.வி.ப. 236) இஃது இன்னிசைப் பஃறொடை. “பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவி லென்னொடு நின்றா ரிருவ ரவருள்ளும் பொன்னோடை நன்றென்றா ணல்லளே - பொன்னோடைக் கியானைநன் றென்றாளு மந்நிலையள் - யானை யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன் றிருத்தார்நன் றென்றேன் றியேன்.” (யாப்.வி.ப. 237) இஃது ஆறடியான் வந்து ஒரூஉத்தொடை பெறுதலின் நேரிசைப் பஃறொடை வெண்பா. “சிற்றாறு 194பாய்ந்துகளுஞ் சேயரிக் கண்ணினாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட வேரியும் 195பற்றார்ப் பிணிக்கு மதிலும் படுகிடங்கு மொப்ப வுடைத்தா யொலியோவா நீர்ப்புட்க டத்தி 196யிரைதேருந் தையலாய் நின்னூர்ப்பே ரொத்துணரும் வண்ண முரைத்தி யெனக்கூறக் கட்டலர் தாமரையு ளேழுங் கலிமான்றேர்க் கத்திருவ ரைவருங் காயா 197மரமொன்றும் பெற்றவழி தேர்ந்துண்ணும் பேயி னிருந்தலையும் வித்தாகா நெல்லி னிறுதியும் பெற்றக்கா லொத்தியைந்த தெம்மூர்ப்பேர் போலென்றாள் வானவன்கை விற்பொலிந்த வெம்புருவத் தாள்.” (யாப்.வி.ப.237) இது பன்னிரண்டடியான் வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா. ஏனையவும் வந்தவழிக் கண்டு கொள்க. இவற்றுள், “ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற் றிரிபின்றி 198நடப்பது கலிவெண் பாட்டே.” (தொல். செய். 147) என ஓதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதானும் ஒருபொருளைக் குறித்துத் 199திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பா வினைக் கலிவெண்பா எனவும், குறள்வெண்பா முதலாகிய எல்லா வெண்பாக்களுங் கொச்சகக் கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரிற் பரிபாட லெனவுங் கொள்ளப்படும். கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை. மேற்சொல்லப்பட்ட வெண்பாக்கள் இப்பொருள்மேல் வரிற் கைக்கிளை வெண்பா எனப்படும். “பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ மனனோடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும்.” (யாப்.வி.ப. 62) கைக்கிளை வெண்பா யாப்பினான் வரும் எனவே, ஆசிரியப் பாவினான் வரப்பெறாதென்பதும், வந்ததேயாயினும் பாடாண்பாட்டுக் கைக்கிளையாகுமென்பதும் கொள்ளப்படும். பரிபாட்டும் அங்கதமும் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் 200சொல்லுதும். (114) 424. கைக்கிளை தானே வெண்பா வாகி யாசிரிய வியலான் முடியவும் பெறுமே. என்-னின், எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. கைக்கிளைப் பொருண்மை வெண்பாவினால் வருதலன்றி முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடை யிரண்டடியும் ஆசிரியமாகிய இருபாவினாலும் வரும் என்றவாறு. இவ்வாறு வருவதனை மருட்பா என்ப. இக்கருத்தினானே மேல், “மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தன்மை யின்றே.” (தொல். செய். 81) என ஓதினார் என்று கொள்க. அது, “உரவொலி முந்நீ ருலாய்நிமிர்ந் தன்ன கரவரு காமங் கனல - விரவெதிர முள்ளெயி றிலங்கு முகிணகை வெள்வளை நல்காள் வீடுமென் னுயிரே.” (பு.வெ.கைக்கிளை.9) என வரும். (115) 425. பரிபா டல்லே தொகைநிலை வகையி னிதுபா வென்னு மியனெறி யின்றிப் பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப. என்-னின், பரிபாடலாமாறு உணர்த்தல் நுதலிற்று. பரிபாடலாவது, தொகைநிலை வகையாற் பா இஃது என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி, எல்லாப் பாவிற்கும் பொதுவாய் நிற்றற்கு முரித்தென்று சொல்லுவர் என்றவாறு. உம்மை எச்சவும்மையாகலான் இலக்கணங் கூறவும்படும். அது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். பொதுவாய் நிற்றலாவது, “ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி யென” (செய். 101) என்றோதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடைத்தாதல். (116) 426. கொச்சக மராகஞ் சுரிதக மெருத்தொடு செப்பிய நான்குந் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். என்-னின், இதுவுமது. மேற்சொல்லப்பட்ட 201பரிபாடற் பாட்டுப் பொதுவாய் நிற்றலேயன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் 202எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்குந் தனக்குறுப்பாகக் காமங் கண்ணிய நிலைமையை உடைத்து என்றவாறு. எனவே, அறத்தினும் பொருளினும் வாராதாம். “வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே” (தொல். செய். 105) எனச் சிறப்புவிதி யோதினமையால், நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலிற் கடவுள்வாழ்த்தாகியும் வரப்பெறும். கொச்சகமென்பது ஐஞ்சீரடுக்கியும், ஆசிரியவடி, வெண்பா வடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகியும், வெண்பா வியலாற் புலப்படத் தோன்றுவது. இதனுட், “சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும்.” (செய். 118) என வேறு ஓதுதலின், ஏனை நான்குங் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும். “தரவும் போக்கு மிடையிடை மிடைந்து மைஞ்சீ ரடுக்கியு மாறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே.” (செய். 148) என்றாராகலின், இவ்விலக்கணத்தானே பரிபாடலுட் கொச்சகம் வரும்வழித் தரவுஞ் சுரிதகமும் இடையிடை 204வருதலுங் கொள்க. ‘வெண்பா வியலான்’ என்றதனான், தன்தளையானும் பிறதளையானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருவன வெல்லாங் கொள்க. அராகமென்பது ஈரடியானும் பலவடியானுங் குற்றெழுத்து நெருங்கிவரத் தொடுப்பது. பெருமைக்கெல்லை ஆறடி; என்னை? “205அராகந் தாமே நான்கா யொரோவொன்று வீதலு முடைய மூவிரண் டடியே.” “ஈரடி யாகு மிழிபிற் கெல்லை.” என அகத்தியனார் ஓதுதலின். சுரிதகம் என்பது ஆசிரியவியலானாதல் வெண்பா வியலானாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது. எருத்தென்பது இரண்டடியிழிபாகப் பத்தடிப் பெருமை யாக வருவதோருறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானுங் கால் சுரிதக மாதலானும் இடைநிலைப் பாட்டாகத் தாழிசையுங் கொச்சகமு மராகமுங் கொள்ளக் கிடத்தலின், எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க, “தரவே யெருத்த மராகங் கொச்சக மடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே.” என்பது அகத்தியமாதலின். தரவென்பதோருறுப்புங் கோடல் வேண்டுமெனின், இவ்வாசிரியர் ‘கொச்சகம்’ என ஓதியவதனானே தரவும் அவ்விலக்கணத்திற் படுமென்பது ஒன்று. எருத்து என்பது இவ்வாசிரியன் கருத்தினான் தரவென்பது போலும். பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும், “அதுதான், மலையே யாறே 206யூரென் றிவற்றி னிலைபெறு மரபி னீங்கா தாகும்.” என்றாராகலின். இனிச் சுரிதகமின்றியும் பரிபாடல் முற்றுப்பெறும், “கொச்சக வகையி னெண்ணொடு விராஅ 207யடக்கிய லின்றி யடங்கவும் பெறுமே.” என அகத்தியனார் ஓதுதலின். (117) 427. சொற்சீ ரடியு முடுகிய லடியு மப்பா நிலைமைக் குரிய வாகும். என்-னின், இதுவுமது. சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரியவாகும் என்றவாறு. சொற்சீரடியாவது வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானுங் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது. (118) 428. கட்டுரை வகையா னென்ணொடு புணர்ந்து முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியு 208மொழியசை யாகியும் வழியசை புணர்ந்துஞ் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே. என்-னின், 209சொற்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று. கட்டுரையாவது - பாட்டின்றித் தொடுக்கப்பட்டு வருவது. எண்ணென்பது - ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற் பலவாகியும் வருதல். பல வருதலின் எண்ணென்றார். முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் என்பது - நாற்சீரடியின்றி முச்சீரடியானும் இருசீரடியானும் வருதல். 210ஒழியசையாகியும் என்றது - ஒழிந்த அசையினை யுடைத்தாகியும் என்றவாறு. எனவே, இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறையப்பெறும் என்றவாறாம். வழியசை புணர்த்தலாவது - ஒரு சீரின்கண்ணே பிறிதோர்சீர் வரத் தொடாது ஓரசை வரத் தொடுப்பது. சொற்சீர்த்திறுதல் என்பது - சொற்றானே சீராந்தன்மையைப் பெற்று நிற்றல். சொற்சீர்க் கியல்பே என்றது - இப்பெற்றியை யுடைத்துச் சொற்சீரின தியல்பு என்றவாறு. இவ்விலக்கணம் பரிபாடற் செய்யுட்கண் வருமாறு: “ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலைத் தீயுமிழ் திறலொடு முடிமிசை யணவர மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனி சேயுயர் பனைமிசை யெழில்மேழி யேந்திய வாய்வாங்கு வளைநாஞ்சி லொருகுழை யொருவனை; இது தரவு. 212எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற் றெரிமணி விளங்கும் பூணினை மால்வரை யெரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து 213மேவ லுழந்தமை கூறு நாவ லந்தண ரருமறைப் பொருளே; இஃது எருத்து 214இணை பிரியணி துணிபணி யெரி புரைய விடரிடு சுடர்படர் பொலம்புனை வினைமலர் நெரிகிட ரெரிபுரை தனமிகு தன முரண்மிகு கடறரு மணியொடு முததியா கத்தொன்றி நெறிசெறி வெறியுறு முரல்விறல் வணங்கணங்குவிற் றாரணி துணிமணிவிய லெறுமெழில் புகழலர்மார்பி னெரிவயிர நுதியெறி படையெருத்து மலையிவர் நவையினில் றுணிபட விலமணி வெயிலுற ழெழினக் கிமையிரு ளகலமுறு கிறுபுரி யொருபுரி நாண்மலர் மலரிலகினவளர் பருதியி னொளிமணி மார்பணி மணமிநாறுரு வினவிரை வளிமிகு கடுவிசை யுடுவுறு தலைநிரை யிதழணி வயிறிரிய வமரரைப் பொரெழுந்துடன் றிரைத் துரைஇய தானவர் சீரழிப் புனல்மொழி பிழந்துர முதிர்பதிரப்பல புலவந் தொடவமர் வென்றகணை; இவை நான்கும் அராகம். பொருவ மென்ற மறந்தபக் கடந்து செருவிடம் படுத்தது செயிர்தீ ரண்ண லிருவர் தாதை யிலங்குமுண் மாஅன் றெருள நின்வர வறிதன் மருளறு தேர்ச்சி முனைவர்க்கு மரிது; இஃது ஆசிரியம். அன்ன மரபி னனையோய் நின்னை யின்னனென் றுரைத்த லெமக்கெவ னெளிது; இது பேரெண். அருமைநற் கறியினு மாய நிற்பயில் பெருமையின் வல்லா யாமிவண் மொழிபவை மெல்லிய வெனாஅது வெறாஅ தல்லியந் திருமார்ப நீயருளல் வேண்டும்; இதுவும் ஆசிரியம். விறன்மிகு விழுச்சீ ரந்தணர் காக்கு மறனு மார்வலர்க் கருளு நீ; திறனிலோர்த் திருத்திய தீதுதீர் கொள்கை மறனு மாற்றலர்க் கணங்கு நீ; அங்கண் வானத் தணிநிலாத் திகழ்தருந் திங்களுந் தெறுகதிர்க் கனலியுநீ; ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல் மைந்துடை யொருவனு மடங்கலும் நீ; நலமுழு தளைஇய புகரறு காட்சிப் புலம்பு வின்னா ணூற்றமு நீ; வலனுய ரெழிலியு மாக விசும்பு நிலனு நீடிய விமயமு நீ; இவை யாறும் பேரெண்; அதனால்; தனிச்சொல். இன்னோ ரனையை யினையை யாலென வன்னோர் யாமிவட் காணா மையிற் பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய மன்னிய முதல்வனை யாகலி நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே; இது சுரிதகம். அன்றெனின், நின்னொக்கும் புகழ் நிழலவை பொன்னொக்கு முடையவை; புள்ளின் கொடியவை புரிவளை யினவை எள்ளுநர்க் கடந்திட்ட விகனேமியவை; மண்ணுற்ற மணிபா யுருவினவை; எண்ணிறந்த புகழவை யெழின்மார் பினவை; இவை சிற்றெண்ணும், இடையெண்ணும், அளவெண்ணும். ஆங்கு; தனிச்சொல். காமரு சுற்றமொ டோருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென வேமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் றாள்நிழல் றொழுதே.” இது சுரிதகம். இது கடவுள் வாழ்த்து. ஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் மிக்குங் குறைந்தும் வருதல் இப்பாவிற் கியல்பென்று கொள்க. பிறவும் பரிபாடலகத்துக் கண்டுகொள்க. “மாநிலந் தோன்றாமை மலிபெய னிலைஇ யேமநீ ரெழில்வான மிகுத்தரும் பொழுதினா னாகநீண் மணிவரை நறுமலர் பலவிரைஇக் காமரு வையை கடுகின்றே கூடல்; நீரணி 215கொண்டன்று வையை யெனவிரும்பித் தாரணி கொண்ட வுவகை தலைக்கூடி 216யூரணி கோல மோர்வ ரொருவரிற் சேரணி கொண்டு நிறமொன்று வெவ்வேறு நீரணி கொண்ட நிறையணி யங்காடி யேரணி கொண்டா ரிகல்; கைபுனை தாரினர் கண்ணிய ரையெனு 217மாவிய ராடையர் நெய்யணி கூந்தலர் பித்தையர் 218மெய்யணி யானை மிசைக்கொண் டொய்யெனத் தங்காச் சிறப்பிற் றளிரியலார் செல்லப் பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர் வையமுந் தேரு 219மமைவோரு 220மெவ்வாயும் 221பொய்யாம்போ யென்னாப் புடை படைகூட்டிப் போவார் மெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக் கூடுவா ரூட லொழிப்பா ருணர்குவார் ராடுவார் பாடுவா ரார்ப்பார் நகுவார்நக் கோடுவா ரோடித் தளர்வார்போ யுற்றவரைத் தேடுவா ரூர்க்குத் திரிவா ரிலராகிக் கற்றாருங் கல்லா தவருங் கயவரும் பெற்றாரும் பெற்றார்ப் பிழையாத பெண்டிரும் பொற்றேரான் றானும் பொலம்புரிசைக் கூடலும் முற்றின்று வையைத் துறை; துறையாடுங் காதலர் தோள்புணை யாக 222மறையாடு வாரை யறியார் மயங்கிப் பிறையேர் நுதலிய ரெல்லாருந் தம்மு னிகழு நிகழ்ச்சி யெம்பாலென் றாங்கே 223யிகலுவ செல்வ நினைத்தவட் கண்டிப்பால் 224லகலல்கும் வையைத் துறை; காதலான் மார்பிற் கமழ்தார் புனல்வாங்கி யேதிலாள் கூந்த 225லிடக்கண்டு மற்றது தாதாவென் றாட்குத் தானே புறன்தந்து வேய்தந்த தென்னை விளைந்தமை மற்றது நோதலே 226செய்யே னுணங்கிழையா யச்செவ்வி போதலுண் டாங்கொ லறிந்து புனல்புணர்த்த தோஒ பெரிதும் வியப்பு; 227கயத்தகப் பூப்பெய்த காமக் கிழமை நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடு முயக்குக்குச் 228செல்வல் முலையு முயக்கத்து நீரு மவட்குத் துணைக்கண்ணி னீர்விட்டோய் நீயு மவட்குத் துணை; பணிவி லுயர்சிறப்பிற் பஞ்சவன் கூடன் மணியெழின் மாமேனி முத்த முறுவ வணிபவளச் செவ்வா யறங்காவற் பெண்டிர் மணியணி தம்முரிமை மைந்தரோ 229டாடத் தணிவின்று வையைப் புனல்; 230புனலூடு போவதோர் பூமாலை கொண்டை யெனலூழ் வகையெய்திற் றென்றேற்றுக் கொண்டை புனலூடு நாடறியப் பூமாலை யப்பி 231நினைவாரை நெஞ்சிடுக்கண் செய்யுங் கனல்புடன் கூடாமுன் னூடல் கொடியதிறங் கூடினா 232லாடாளோ வூர்க்கலர் வந்து; எனவாங்கு, ஈப்பா யடுநறாக் கொண்டதிவ் வியாறெனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு; மைந்தர் மகளிர் மணவிரை 233பூசிற்றென் றந்தணர் 234தோயல ராறு; வையைத் 235தேமொழி வழுவழுப் புற்றன ஐயர்வாய் பூசுறார் ஆறு; 236விரையுரி விரைதுறை கரையழி பிழிபூர ஊர்தரும் புனல் கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர்தருநுரை நுரையுடன் மதகுதொ றிழிதரு புனல்கரை புரளிய செலமறிகடல் புகுமள வளவிய லிசைசிறை தணிவின்று வெள்ளமிகை; வரைபல புரையுயர் கயிறணி பயிறொழில் மணியணி யானைமிசை மைந்தரும் மடவாரும் நிரைநிரை குழீஇயினர் உடன்சென்று குருமணி யானை இயறேர்ப் பொருநன் திருமருத முன்றுறை முற்றங் குறுகித் தெரிமருதம் பாடும் பிணிகொள்யாழ்ப் பாணர் பாடிப் பாடிப் பாய்புனல் ஆடி யாடி யருளியவர் ஊடி யூடி யுணர்த்தப் புகன்று கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபுசிதைபூச் சூடிச் சூடிக்கை தொழுது தொழுது மிழுதொடு நின்ற புனல் வையை விழுதகை நல்லாரு மைந்தரு மாடி இமிழ்வது போன்றதிந் நீர்குணக்குச் சான்றீர் முழுவது மிச்சிலா வுண்டு; சாந்தும் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமுங் கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற் சிறிதானு நீர்நிறந்தா வாறொன்றோ திவ்வையை யாறு; மழைநீர்க் குளத்து வாய்பூசி யாடுங் கழுநீர மஞ்சனக் குங்குமக் கலக்கல் வழிநீர வீழுநீ அன்று வையை வெருவரு கொல்லியானை வீங்குதோள் மாறன் னுருகெழு கூட லவரொடும் வையை வருபுன லாடிய தன்மை பொருவுங்கால் லிருமுந்நீர் வையம் படித்தென்னை யானூர்க் கோர்நிலையு மாற்ற இயையா வருமரபின் லந்தர வான்யாற் றாயிரங் கண்ணினா னிந்திரன் ஆடுந் தகைத்து.” இது காமப் பொருளாகி வரும் வெண்பா மிக்குவந்த பாட்டு. 119 429. அங்கதந் தானே யரிறபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. என்-னின், அங்கதச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-.ள்) அங்கதமாவது குற்றமற ஆராயிற் செம்பொருளெ னவும், கரந்ததெனவும் இருவகைப்படும் என்றவாறு. அவை முன்னர்க் காட்டுதும். (120) 430. செம்பொரு ளாயின் வசையெனப் படுமே. என்-னின், செம்பொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று. செம்பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும் என்றவாறு. (121) 431. மொழிகரந்து மொழியினது பழிகரப் பாகும். என்-னின், மறைபொருளாகிய அங்கதம் உணர்த்துதல் நுதலிற்று. தான்மொழியும் மொழியை மறைத்து மொழியின் அது பழிகரப்பெனப் பெயர்பெறும் என்றவாறு. (122) 432. செய்யுட் டாமே யிரண்டென மொழிப. என்-னின், மேற் சொல்லப்பட்டன தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. ஈண்டு, தம்மாற் சொல்லப்பட்ட செய்யுள் இரண்டு வகை என்று சொல்லுவர் என்றவாறு. அவை முன்னர்க் காட்டுதும். (123) 433. புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் செவியுறைச் செய்யு ளென்மனார் புலவர். என்-னின், செய்யுளைப் பாகுபடுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. புகழொடும், பொருளொடும் புணர வரிற் செவியுறைச் செய்யுள் என்று சொல்லுவர் என்றவாறு. (124) 434. வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயி னங்கதச் செய்யு ளென்மனார் புலவர். என்-னின், இதுவுமது. வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப் பெயர் பெறும் என்றவாறு. எனவே, இருவாற்றானும் செய்யுட் செய்யப்பெறும் என்றவாறு. (125) 435. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே. என்-னின், இனிக் கலிப்பாப் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒத்தாழிசைக் கலியும் கலிவெண்பாட்டும் கொச்சகமும் உறழ்கலியும் என நான்கு வகைப்படுங் கலிப்பா என்றவாறு. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். “இருவயி னொத்து மொவ்வா லியலினுந் தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங் கலப்பே யாயினும் புலப்பே யாயினு மைந்திணை மரபி னறிவுவரத் தோன்றிப் பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது கலியெனப் படூஉங் காட்சித் தாகும்.” என்று அகத்தியனார் ஓதுதலின் கலிப்பா அகப்பொருளென வழங்கும். (126) 436. அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி யிருவகைத் தாகும். என்-னின், ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒத்தாழிசைக்கலி இரண்டு வகைப்படும் என்றவாறு. அவை முன்னர்க் காட்டுதும். (127) 437. இடைநிலைப் பாட்டே தரவுபோக் 237கடையென 238நடைநவின் றொழுகு மொன்றென மொழிப. என்-னின், ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. தாழிசையுந் தரவுஞ் சுரிதகமும் 239அடைநிலைக் கிளவியும் என நான்கு உறுப்பினை யுடைத்து ஒத்தாழிசைக் கலி என்றவாறு. 240தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனக் கிடக்கை முறையாற் கூறாது தாழிசை முற்கூறிய வகையான் இப்பாவிற்கு ஒத்தாழிசை சிறந்ததாகலின் முற்கூறினான். முற்கூறுகின்ற வழியும், ‘இடைநிலைப் பாட்டே’ எனக் கூறுதலின் 241முந்துற்றது தரவு என்றவாறாம். இடைநிலைப் பாட்டெனினும் தாழிசையெனினும் ஒக்கும். போக்கெனி னும் சுரிதகம் எனினும் வாரம் எனினும் அடக்கியல் எனினு மொக்கும். அடை எனினும் தனிச்சொல் எனினும் ஒக்கும். தனிச் சொல்லைப் பின் எண்ணியவதனான் தாழிசைதோறுந் தனிச்சொல் வரவும் பெறும் என்று கொள்க. (128) 438. தரவே தானு 242நாலடி யிழிபா யாறிரண் டுயர்வும் பிறவும் பெறுமே. என்-னின், தரவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. தரவு நாலடி யிழிபாகப் பன்னிரண்டடி யுயர்பாக, இடை வரும் அடியெல்லாவற்றானும் வரப்பெறும் என்று கொள்க. (129) 439. இடைநிலைப் பாட்டே தரவகப் பட்ட மரபின வென்ப. என்-னின், தாழிசைக்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. தாழிசைகள் தரவிற் சுருங்கி வரும் என்றவாறு. ‘தரவகப்பட்ட மரபின’ என்றதனான், தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாதென்பதூஉம், மூன்றடியானும் இரண்டடி யானும் வரப்பெறும் என்பதூஉங் கொள்க. வருகின்ற சூத்திரத்துள் “ஒத்து மூன்றாகு மொத்தா ழிசையே” (செய்யு. 137) எனக் கூறுதலானும் இப் பாவினை ஒத்தாழிசைக்கலி யெனக் கூறுதலானுந் தாழிசை ஒருபொருண் மேல் மூன்றடுக்கி வருமென்று கொள்க. (130) 440. 243அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகு மாங்கென மொழிப. என்-னின், தனிச்சொல் லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல் தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகும் எனச் சொல்லுவர் என்றவாறு. ஆங்கு அசை. தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகு மெனவே, தாழிசைக்கு முன்னர் வருதலும் சிறுபான்மை உளதென்று கொள்க. (131) 441. போக்கியல் வகையே வைப்பெனப் படுமே தரவிய லொத்து மதனகப் படுமே புரைதீ ரிறுதி நிலையுரைத் தன்றே. என்-னின், சுரிதகமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சுரிதகம் என்பது வைப்பெனவும் படும். அது தரவோடொத்த அளவிற்றாகியும் அதனிற் குறைந்த அளவிற் றாகியும் குற்றந் தீர்ந்த பாட்டி னிறுதி நிலையை உரைத்த தென்றவாறு. தரவிய லொத்தலாவது சிறுமை நான்கடி யாகியும் பெருமை பன்னிரண்டடி யாகியும் வருதல். அதனகப்படுதலாவது சிறுமை மூன்றடியானும் இரண்டடியானும் வருதல். இச்சூத்திரங்கள் ஓதின முறையானே பாட்டு வருமென்று கொள்க. மேல் துள்ளலோசைத் தாகியும், நிரை முதலாகிய வெண்பா வுரிச்சீர் மிக்கும், சுரிதகம் ஆசிரியத்தானாதல் வெண்பா வானாதல் வருமெனவுங் கூறிய இலக்கணங்களும் அறிந்து கொள்க. உதாரணம்: “பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு 244வனப்போடி வணங்கிறை வளையூர வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கா னினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான்; இது தரவு. தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார் துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக் கன்மிசை 245யுருப்பறக் கனைதுளி சிதறென வின்னிசை யெழிலியை யிரக்கவு மியைவதோ; புனையிழா யீங்குநாம் 246புலம்புறப் பொருள்வெஃகின் முனையென்னார் காதலர் முன்னிய 247வாரிடைச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ; ஒளியிழா யீங்குநாந் துயர்கூரப் பொருள்வயி னளியொரீஇக் காதல ரகன்றேகு மாரிடை முளியரின் மூழ்கிய வெம்மைதீர்ந் தொழிகென வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ; இவை தாழிசை. எனவாங்கு, தனிச்சொல். செய்பொரும் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன தெய்வத்துத் திறனோக்கித் தெருமர றேமொழி வறனோடின் வையத்து வான்றருங் கற்பினா ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென வறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே” (கலி. 16) இது சுரிதகம். இது நான்கடித் தரவும் நான்கடியான் மூன்று தாழிசையுந் தனிச்சொல்லும் ஐந்தடிச் சுரிதகமும் வந்த ஒத்தாழிசைக் கலிப்பா. இதனை நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா என்ப. “வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தா னல்லாற்றி னுயிர்காத்து நடுக்கறத் தான்செய்த தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போற் பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர வானாது 248கலுழ்கொண்ட வுலகத்து மற்றவ னேனையா னளிப்பான்போல் லிகலிருண் மதிசீப்பக் குடைநிழ லாண்டார்க்கு மாளிய வருவாற்கு மிடைநின்ற காலம்போ லிறுத்தந்த மருண்மாலை; இது தரவு. மாலைநீ, தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த போதுபோற் குவிந்தவென் னெழினல மெள்ளுவாய் ஆய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போற் றளைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்; மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய் செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும் பொய்தீர்ந்த புணர்ச்சியுட் புதுநலம் கடிகல்லாய்; மாலைநீ, தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப் புரிமிக்க நெஞ்சத்தேம் புன்மைபா ராட்டுவாய் தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய்; இவை தாழிசை. ஆங்க, தனிச்சொல். மாலையு மலரு நோனா தெம்வயி னெஞ்சமு மஞ்சுமற் றில்ல வெஞ்சி யுள்ளா தமைந்தோ ருள்ள முள்ளி னுள்ள முள்ளு ளுவந்தே.” (கலி. 118) இது சுரிதகம். இது தாழிசைதோறுந் தனிச்சொற் பெற்று வந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. ‘வயக்குறு மண்டிலம்’ என்னும் (கலி. 25) கலிப்பாவில் தரவு பன்னிரண்டடியான் வந்தது. ‘இலங்கொளி மருப்பிற் கைம்மா’ என்னுங் (கலி. 23) கலிப்பாவி னுள் இரண்டடியால் தாழிசை வந்தன. ‘உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனும்’ என்னுங் (கலி. 22) கலிப்பாவில் தாழிசை மூன்றடியான் வந்தன. ‘ஆறறி யந்தணர்’ என்னும் கடவுட்பாட்டினுள் மூன்றடிச் சுரிதகம் வந்தது. இனி, ஏனையடிகளால் வரும் தரவுந் தாழிசையும் சுரிதகமும் கலித்தொகையுட் கண்டுகொள்க. (132) 442. ஏனை யொன்றே, தேவர்ப் 249பராஅய முன்னிலைக் கண்ணே. என்-னின், சொல்லாதொழிந்த ஒத்தாழிசைக்கலிப்பா உணர்த்துதல் நுதலிற்று. ஒத்தாழிசைக் கலிப்பா முன்னிலை யிடத்துத் தேவரைப் பராவும் பொருண்மைத்து என்றவாறு. (133) 443. அதுவே, வண்ணக மோர்போ கெனவிரு வகைத்தே. என்-னின், மேற்சொல்லப்பட்ட முன்னிலைப் பரவலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. தேவரிடத்து முன்னிலைப் பரவலாகிய அதுதான் வண்ணகமெனவும் ஒருபோகு எனவும் இருவகைப்படும் என்றவாறு. (134) 444. வண்ணகந் தானே, தரவே தாழிசை யெண்ணே வாரமென் றந்நால் வகையிற் றோன்று மென்ப. என்-னின், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. வண்ணக ஒத்தாழிசையாவது தரவும் தாழிசையும் எண்ணும் சுரிதகமும் என்று சொல்லப்பட்ட நான்கு உறுப்பினையும் உடைத்து என்றவாறு. (135) 445. தரவே தானும், நான்கு மாறு மெட்டு மென்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும். என்-னின், தரவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குத் தரவு நான்கும் ஆறும் எட்டுமாகிய அளவடியினாலே வரும் என்றவாறு. ஈண்டு நேரடி என்றது கொச்சகத் தரவு போல வாராமைக்கு என்று கொள்க. சொல்லப்பட்ட ஒன்பதடியினும் மூன்றடியே இதற்கு வருவதென்றவாறாயிற்று. (136) 446. ஒத்துமூன் றாகு மொத்தா ழிசையே தரவிற் சுருங்கித் தோன்று மென்ப. என்-னின், தாழிசைக்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. இச் சூத்திரம் இறந்தது காத்தது என்று கொள்க. தாழிசையுந் தம்முள் அளவும் ஒத்து மூன்றாகி வரும். அவை தரவிற் சுருங்கித் தோன்றும் என்றவாறு. (137) 447. அடக்கியல் வாரந் தரவோ டொக்கும். என்-னின், சுரிதகம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடக்கியலாகிய சுரிதகம் தரவோடொத்த இலக்கணத்த தென்றவாறு. (138) 448. முதற்றொடை பெருகிச் சுருங்கும னெண்ணே. என்-னின், எண்ணாமாறு உணர்த்துதல் நுதலிற்று. முதற்றொடுத்த உறுப்புப் பெருகிப் பின்றொடுக்கும் உறுப்புச் சுருங்கி வரும் என்றவாறு. அதனை இரண்டடியான் வருவன இரண்டும், ஓரடியான் வருவன நான்கும், சிந்தடியான் வருவன எட்டும், குறளடியான் வருவன பதினாறும் எனப் பிற நூலாசிரியர் உரைப்பர். இவ்வாசிரியற்கு வரையறை யிலவாம். (139) 449. எண்ணிடை யொழித லேத மின்றே சின்ன மல்லாக் காலை யான. என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட எண் ஒரோவொன்று இடை யொழிந்து வருதல் குற்றமாகாது, தனிச்சொல் இல்லாதவழி யென்றவாறு. எனவே, சொல்லப்பட்ட உறுப்புக்கள் தனிச்சொல் வருவழி இடையொழியாமல் வருதல் வேண்டுமென்றவாறு. தனிச்சொல் உளப்பட ஐந்துறுப்புடைத்தாயிற்று. இனித் தனிச்சொல்லின்றி எண்ணிடை யிட்டவழி ஒருபோகெனப் பெயர்பெறும். உதாரணம்: “கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய வழல்வளை சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புன லிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்; இது தரவு. முரசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரள்திண்டோட் போர்மலைந்த மறமன்னர் அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ; கலியொலி வியனுலகங் கலந்துடன் நனிநடுங்க வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்பொடு மறம்பிதிர எதிர்கலங்கிச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ; படுமணி யினநிரை பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரிநொடு மருப்படர வீழ்ந்துதிறம் வேறாக வெருமலி பெருந்தொழுவி லிறுத்ததுநின் னிகலாமோ; இவை மூன்றுந் தாழிசை. இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கையோய் மானு நின்னிறம்; விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொன்னும் பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை; இவை பேரெண். கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை; தண்சுடர் உறுபகை தணித்த ஆழியை; யொலியிய லுவண மோங்கிய கொடியினை; வலிமிகு சகட மாற்றிய வடியினை; இவை அளவெண். போரவுணர்க் கடந்தோய் நீஇ புணர்மருதம் பிளந்தோய் நீஇ நீரகலம் அளந்தோய் நீஇ நிழறிகழும் படையோய் நீஇ இவை இடையெண். ஊழி நீஇ, உலகு நீஇ, உருவு நீஇ, அருவு நீஇ, ஆழி நீஇ, அருளும் நீஇ, அறமும் நீஇ, மறமும் நீஇ; இவை சிற்றெண். எனவாங்கு, இது தனிச்சொல். “அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைச் செவ்வே லச்சுதன் றொன்றிய லுலக முழுவது மொன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே.” இஃது ஆறடிச் சுரிதகம். இவ்வாறு வருவதனை ஒருசாராசிரியர் அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவெனக் கூறுப. (140) 450. ஒருபோ கியற்கையு மிருவகைத் தாகும். என்-னின், ஒருபோகு பாகுபடுமாறுணர்த்துதல் நுதலிற்று. ஒரு போகென்னும் கலி இரண்டு வகைப்படும் என்றவாறு. (141) 451. கொச்சக வொருபோ கம்போ தரங்கமென் றொப்ப நாடி யுணர்தல் வேண்டும். என்-னின், இதுவுமது. ஒருபோகென்னும் கலி கொச்சகவொருபோகு எனவும் அம்போதரங்கமெனவும் பொருந்த நாடியறிதல் வேண்டும் என்றவாறு. (142) 452. தரவின் றாகித் தாழிசை பெற்றுந் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியு மெண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியு மடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக வொருபோ காகு மென்ப. என்-னின், நிறுத்த முறையானே கொச்சகவொருபோகு உணர்த்துதல் நுதலிற்று. தரவின்றாகித் தாழிசை பெற்றும் என்பது - தரவு முதலாயின வுறுப்புக்களுள், தரவின்றித் தாழிசை முதலிய வுறுப்புக்கள் பெற்றும் என்றவாறு. 250‘தாழிசை பெற்றும்’ என்றதனான், தரவு தானே வரினும் கொச்சகவொருபோகு ஆகுமென்று கொள்க. தாழிசையின்றித் தரவுடைத்தாகியும் என்பது - தாழிசையின்றித் தரவு முதலியன உடைத்தாகியும் என்றவாறு. ‘தரவுடைத்தாகியும்’ என்றதனான் 251தாழிசை தாமே வரினும் என்று கொள்க. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது - எண்ணாகிய உறுப்புக்களை யிடையிட்டுத் தனிச்சொல் வாராதொழியினும் என்றவாறு. ‘சின்னம்’ என்றதனால் எண்ணின்கண் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் என்றுமாம். அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியும் என்பது - சுரிதகமின்றித் தரவு தானே நிமிர்ந்தொழுகி முடியினும் என்றவாறு. யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பது - ஒத்தாழிசையின் யாக்கப்பட்ட யாப்பினும் அதற்குரித்தாக ஓதப்பட்ட கடவுள்வாழ்த்துப் பொருண்மை யின்றிக் காமப் பொருளாக வரினும் என்றவாறு. கொச்சகவொருபோகாகும் என்ப என்பது - இவ்வகை யினாற் சொல்லப்பட்டன கொச்சக வொருபோகெனக் குறி பெறும் என்றவாறு. எனவே, ஒத்தாழிசைக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக வொருபோகெனப் பெயர் பெறும் என்று கொள்க. அவற்றுள் தரவின்றாகித் தாழிசை பெற்று வந்ததற்குச் செய்யுள்:- “நிரைதிமில் களிறாகத் திரையொலி பறையாகக் கரைசேர் புள்ளினத் தஞ்சிறை படையாக 252வரைசுகால் கிளர்ந்தன்ன வுரவுநீர்ச் சேர்ப்பகேள் இது நான்கடியாகி வாராமையின் தாழிசை யாயிற்று. கற்பித்தா னெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கட் டப்பித்தான் பொருளேபோற் றமியவே தேயுமா லொற்கத்து ளுதவியார்க் குதவாதான் மற்றவ னெச்சத்து ளாயினுமஃ தெறியாது விடாதேகாண்; கேளிர்கள் ணெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்க டாளிலான் குடியேபோற் றமியவே தேயுமாற் சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன் வாள்வாய்நன் றாயினுமஃ தெறியாது விடாதேகாண்: இவை யிரண்டும் தாழிசை. ஆங்கு, தனிச்சொல். “அனைத்தினிப் பெரும அதனிலை நினைத்துக்காண் சினைஇய வேந்தன் எயிற்புறத் திறுத்த 254வினைவரு பருவரல் போலத் துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.” (கலி. 149) இது சுரிதகம். எனவரும். தாழிசை தாமேயும் வரும். தாழிசையின்றித் தரவு முதலாயின வந்ததற்குச் செய்யுள்: “செவ்விய திவ்விய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைஇய வகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்ல மன்ற வினி; இது தரவு. செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி யன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை யென்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமை யாண்டோ ரவலம் படுதலும் உண்டு. (கலி. 19) இது சுரிதகம். தாழிசையுந் தனிச்சொல்லு மில்லை. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியவதற்குச் செய்யுள்: “மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் 255கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் 256புள்ளல்குந் துறைவகேள்; இது தரவு. ஆற்றுத 257லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுத லன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வெளவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்; இவை எண். ஆங்கறிந் தொழுகினை யாயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத னின்றலை 258வருந்தியா டுயரஞ் சென்றனை களைமோ 259பூண்கநின் றேரே.” (கலி. 133) இது சுரிதகம். அடக்கிய லின்றி யடிநிமிர்ந்தொழுகல் வருமாறு: “பால்மருண் மருப்பி னுரல்புரை பாவடி யிர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்த லாறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென்னு மருளில் சொல்லு நீசொல் லினையே நன்னர் நறுநுத னயந்தனை நீவி நின்னிற் பிரியலெ னஞ்சலோம் பென்னு நன்னர் மொழியு நீமொழிந் தனையே அவற்றுள், யாவோ 260வாயின மாஅன் மகனே கிழவ ரின்னோ ரென்னாது பொருடான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையு மன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாள் மடவோ ளமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே.” (கலி. 21) என வரும். (143) 453. ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பே. என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட கொச்சகவொருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும் என்றவாறு. (144) 454. அம்போத ரங்க மறுபதிற் றடித்தே செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை. என்-னின், அம்போதரங்க வொருபோகுக்கு அடிவரை யறை யுணர்த்துதல் நுதலிற்று. அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக் கெல்லையாம்; நடுவாகிய நிலை சிறுமைக் கெல்லையாம் என்றவாறு. செம்பால் வாரம் என்பது செம்பாதி எனவுமாம்; முப்பதடிச் சிறுமை என்றவாறு. (145) 455. எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெ ணடக்கியல் வாரமொ டந்நிலைக் குரித்தே. என்-னின், அம்போதரங்கத்திற்கு உறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஈண்டு எருத்து என்பது தரவு. கொச்சகமும் அராகமும் மேற்சொல்லப்பட்டன. எண்ணினுட் பேரெண்ணிற் சிற்றெண் வரப்பெறுமாயினும் இனிச் சொல்லப்பட்ட உறுப்பு முறையான் வருதலும் 261மயங்கி வருதலுங் கொள்க. பரிபாடற்கும் இவை தாமே உறுப்பாயின் அதனோ டிதனிடை வேறுபாடு என்னையெனின், அறுபதிற்றடியிற் குறைந்து வரின் முறை பிறழ்ந்து வருமெனவும் உறுப்பு ஒத்துவரின் அறுபதின் மிக்கு வருமெனவுங் கொள்ளப்படும். உதாரணம்: “கண்ணக னிருவிசும்பிற் கதழ்பெயல் கலந்தேற்ற தண்ணுறும் பிடவமுந் தவழ்கொடித் தளவமும் வண்ணவண் டோன்றியும் வயங்கிணர்க் கொன்றையும் அன்னவை பிறவும் பன்மலர் துதையத் தழையுங் கோதையு மிழையு மென்றிவை தைஇனர் மகிழ்ந்து திளைஇ விளையாடு மடமொழி யாயத் தவருள் ளிவள்யா ருடம்போ, டென்னுயிர் புக்கவ ளின்று; இது தரவு. ஓஒ இவள், பொருபுகர் நல்லேறு கொள்பவ ரல்லாற் றிருமாமெய் தீண்டல ரென்று கருமமா வெல்லாருங் கேட்ப வறைந்தறைந் தெப்பொழுதுஞ் சொல்லாற் றரப்பட் டவள்; சொல்லுக, பாணியே மென்றா ரறைகென்றார் பாரித்தார் மாணிழை யாறாகச் சாறு; சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வா யெல்லாம் மிடைபெறி னேராத் தகைத்து; இவை கொச்சகம். தகைவகை மிசைமிசைப் பாய்மா ரார்த்துட னெதிரெதிர் சென்றார் பலர்; கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ்சிறந் துருத்தெழுந் தோடின்று மேல்; இவை அராகம். எழுந்தது துகள் 262ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர்; இவை சிற்றெண். அவருள், மலர்மலி புகலெழ 263வலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் றோன்றி வருத்தினான் மன்றவவ் வேறு; இது முடுகியலடி வந்த கொச்சகம். ஏறெவ்வங் காணா வெழுந்தா ரெவன்கொலோ வேறுடை நல்லார் பகை; மடவரே நல்லாயர் மக்க ணெருநை யடலேற் றெருத்திறுத்தார்க் கண்டுமற் றின்று முடலேறு கோட்சாற்று வார்; இவையுங் கொச்சகம். ஆங்கினி, தனிச் சொல். தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக பண்ணமை யின்சீர்க் குரவையுட் டெண்கண்ணித் திண்டோட் டிறலொளி மாயப்போர் மாமேனி யந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த முறுவலாண் மென்றோள்பா ராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்த துரை.” (கலி. 102) இது சுரிதகம். பிறவும் இந்நிகரன கொள்க. யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகவொரு போகை அதன்பி னோதினமையான் இதற்குங் காமப்பொருளே பெறப்பட்டது. (146) 456. ஒருபொரு னுதலிய வெள்ளடி யியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண் பாட்டே. என்-னின், கலிவெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஈற்றடி யளவும் ஒரு பொருளைக் குறித்து வெள்ளடி யியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண்பாட்டாம் என்றவாறு. கலிவெண்பாட்டெனினும் வெண்கலிப்பாட்டெனினும் ஒக்கும். வெள்ளடியியலா னென்றமையான் வெண்டளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவும் பிறதளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவுங் கொள்க. உதாரணம்: “மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியாதீர் போல விவைகூற னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு.” (கலி. 6) என வரும். இது வெண்டளையான் வந்த வெண்கலிப்பா. அஃதேல் இது நெடுவெண்பாட்டிற்கு ஓதிய விலக்கணத் தான் வருதலிற் பஃறொடை வெண்பாவாம், வெண்கலிப்பா வென்ற தென்னை யெனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவுங் கைக்கிளை பெருந்திணை யெனவுஞ் சொல்லப் பட்ட பொருளேழனுள்ளும் யாதானு மோர்பொருளைக் குறித்து, ஏனைக் கலிப்பாக்கள் போலத் தரவுந் தாழிசையுந் தனித்தனிப் பொருளாக்கிச் சுரிதகத்தாற் றொகுத்து வரு நிலைமைத்தன்றித் திரிபின்றி முடிவதனைக் கலிவெண்பா வெனவும், புறப்பொருட்கண் வரும் வெண்பாக்களைப் பஃறொடை வெண்பா வெனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களைப் பரிபாடலெனவும், கொச்சகக் கலிப்பாவிற் குறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களை கொச்சகக் கலிப்பாவெனவும் 264கூறுதல் இவ்வாசிரியன் கருத்தென்று கொள்க. அன்னதாதல் ‘நெடுவெண்பாட்டே குறுவெண் பாட்டே’ (செய்யுளியல் 114) என யாப்பினானே வேறுபடுத்தானாகிக் ‘கைக்கிளை பரிபாட்டங்கதச் செய்யுள்’ எனப் பொருளானும் இனத்தானும் வேறுபடுத் தோதினமை யானுங் கொள்க. “தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மோர்ங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிய தாதுசூழ் கூந்த றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லா நீ யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றே 265னாயிழா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்.” (கலி. 111) என்னும் முல்லைக்கலி 266அயற்றளையான் வந்த கலிவெண்பா. (147) 457. தரவும் போக்கு மிடையிடை மிடைந்து மைஞ்சீ ரடுக்கியு மாறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனநவில் புலவர் நுவன்றறைந் தனரே. என்-னின், கொச்சகக் கலியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் என்பது - தரவாகிய உறுப்புஞ் சுரிதகமாகிய உறுப்பும் முதலு முடிவும் வருதலின்றி இடையிடை வந்து தோன்றியு மென்றவாறு. உம்மையால், இயற்கை வழாமற் றோன்றியு மென்று கொள்ளப் படும். ஐஞ்சீரடுக்கியும் என்பது - ஐஞ்சீரடி பல வந்தும் என்றவாறு. உம்மையான் வாராது மென்று கொள்க. ஆறுமெய் பெற்றும் என்பது - தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகஞ் சொற்சீரடி முடுகியலடி யென்னும் ஆறுறுப்பினையும் பெற்றும் என்றவாறு. உம்மையாற் பெறாது மென்று கொள்க. வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகை என்பது - மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்களை யுடைத் தாகியும் இலதாகியும் வெண்பாவி னியல்பினாற் புலப்படத் தோன்றும் பாநிலை வகை யென்றவாறு. புலப்படத் தோன்றுதலாவது ஏனை யுறுப்புக்களில் வெண்பா மிகுதல். இன்னும் அதனானே பிற பாவடிகளும் வந்து வெண்பாவியலான் முடிதலுங் கொள்க. கொச்சகக்.... அறைந்தனரே என்பது - கொச்சகக் கலிப்பா வென்று இலக்கணமறிந்த புலவர் கூறினா ரென்றவாறு. ஆறுமெய் பெற்றும் என்பதற்கு அராகமென்னும் உறுப்பைக் கூட்டி முடுகியலென்னும் உறுப்பைக் கழித்து உரைப்பதும் ஒன்று. உதாரணம்: குறிஞ்சிக் கலியுள், “காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா டாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா னீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போதந்தா னகனகலம் வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி யருமழை 267தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே; இது தரவு: இதனுள் இரண்டாமடி ஐஞ்சீரான் வந்தது. அவனுந்தான், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக னாடன் மகன்; இதனுள் முதற்கணின்றது கூன். சிறுகுடி யீரே சிறுகுடி யீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா கொல்லை குரல்வாங்கி யீனா மலைவாழ்ந ரல்ல புரிந்தொழுக லான்; இதன் முதல் அடி ஆசிரியவடி. காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலாற் றம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்; இவை மூன்றுங் கொச்சகம். எனவாங்கு, தனிச் சொல். அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; இது வெள்ளைச் சுரிதகமாகி இடை வந்தது. அவருந், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தோர்பக லெல்லா முருத்தெழுந் தாறி யிருவர்கட் குற்றமு மில்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை; தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வ முவப்ப உவந்து குரவை தழீஇயா மாடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்; இவை யிரண்டுங் கொச்சகம். நல்லாய், தனிச் சொல். நன்னாட் டலைவரு மெல்லை நமர்மலைத் தந்நாண்டாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்; இது பேரெண். புனவேங்கைத் 268தாதுறைக்கும் பொன்னறை முன்றி னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலும் மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் மன்றோ; விண்டோய்கன் னாடனும் நீயும் வதுவையுட் பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ; பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ; இவை யிரண்டுந் தாழிசை. மைதவழ் வெற்பன் மணவணி காணாமற் கையாற் புதைபெறூஉங் கண்கணுங்கண் ணாகுமோ; இது பேரெண். என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான் நெய்த லிதழுண்கண், நின்கண்ணா கென்கண்மன்; இதுவுங் கொச்சகம். எனவாங்கு, தனிச் சொல். நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலு மாயப் புணர்ச்சியு மெல்லா முடனீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் 269பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே.” (கலித். 39) இது சுரிதகம். இதனுள் முதலடி அறுசீர் முடுகியல்; இரண்டாவது ஐஞ்சீர் முடுகியல். இவ்வாறு வருவன கொச்சகக் கலிப்பா வெனப்படும். ஒத்தாழிசைக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்கு வந்தாற் போலக் கொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க. இனி ஈண்டோதப்பட்ட உறுப்புக்கள் குறைந்தும் மயங்கியும் மிக்கும் வரப்பெறும். அவை கலித்தொகையுட் கண்டுகொள்க. (148) 458. கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்து போக்கின் றாக லுறழ்கலிக் கியல்பே. இது உறழ்கலி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உறழ்கலிப்பாவிற்கு இலக்கணங் கூற்று மாற்றமும் விரவி வந்து சுரிதகமின்றி முடித லென்றவாறு. இதனைக் கொச்சகக்கலியின்பின் வைத்தமையான் அக்கொச்சக வுறுப்பி னொப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும். உதாரணம்: “யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரனி வந்தாங்கே மாறு; இது தலைமகள் கூற்று. என்னிவை, ஓருயிர்ப் புள்ளி னிருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென் னாருயிர் நிற்குமா றியாது; இது தலைவன் கூற்று. தெளிந்தேம்யாங் காயாதி எல்லாம்வல் லேடா பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு வருந்தல்நின் வஞ்ச முரைத்து; இது தலைமகள் கூற்று. மருந்தின்று, மன்னவன் சீறில் தவறுண்டோ நீநயந்த வின்னகை தீதோ விலேன்; இது தலைமகன் கூற்று. மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே - யுறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கிற் றப்பினே னென்றடி சேர்தலு முண்டு.” (கலி. 89) இப்பாட்டுச் சுரிதகமின்றி வந்தவாறு கண்டுகொள்க. எற்றிற்கு? இறுதியின்கண் வந்தது சுரிதக மாகாதோ வெனின், சுரிதகமாகாது. சுரிதகமாவது ஆதிப் பாட்டினும் இடைநிலைப் பாட்டினுமுள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது. 270இஃது அன்ன தன்றென்க. (149) 459. ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை யாயிர மாகு மிழிபுமூன் 271றடியே. என்-னின், ஆசிரியப்பாவிற்கு எல்லை கூறுதல் நுதலிற்று. ஆசிரியப்பாவின் அளவிற்கு எல்லையாவது: சுருங்கினது மூன்றடி, பெருமை ஆயிரமடியாக இடைப்பட்டன எல்லா வடியானும் வரப்பெறும் என்றவாறு. சுருங்கின பாட்டிற்கு உதாரண மேற் காட்டப்பட்டன. பெரிய பாட்டு பத்துப்பாட்டினுள்ளும் சிலப்பதிகாரத்துள்ளும், மணிமேகலையுள்ளுங் கண்டுகொள்க. ‘ஆசிரிய நடைத்தே வஞ்சி’ (செய்யுளியல் 104) என்றதனான், வஞ்சிப்பாவிற்கும் ஆயிரமடிப் பெருமையாகக் கொள்ளப்படும். (150) 460. நெடுவெண் பாட்டே 273முந்நான் கடித்தே குறுவெண் பாட்டிற் 274களவேழ் சீரே. என்-னின், வெண்பாவிற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. நெடுவெண்பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறு வெண்பாட்டிற்கு அடி அளவடியுஞ் சிந்தடியுமாகிய இரண்டடியும் என்றவாறு. எனவே இடையுள்ள அடிகளெல்லாம் உரிய. உதாரணம்: மேற் காட்டப்பட்டது. (151) 461. அங்கதப் பாட்டள வவற்றோ டொக்கும். என்-னின், அங்கதப் பாட்டிற்கு அளவுணர்த்துதல் நுதலிற்று. அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி என்றவாறு. உதாரணம்: (சில காட்டப்பட்டன; ஏனைய) வந்தவழிக் கண்டு கொள்க. (152) 462. கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் 276செவியறி வாயுறை புறநிலை யென்றிவை தொகைநிலை மரபி னடியில வென்ப. என்-னின், அடியளவு வரையறையில்லாத செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. கலிவெண் பாட்டும், 277கைக்கிளைப் பொருளைப் பற்றிய பாவும், செவியுறை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், புறநிலை வாழ்த்தும் என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரை யறுக்கப்படா; பொருள் முடியுங்காறும் வேண்டிய அடிவரப் பெறும் என்றவாறு. (153) 463. புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதிற் றெரியின் வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின வென்ப. என்-னின், மேலனவற்றுட் சில பொருட்குரிய வேறுபா டுணர்த்துதல் நுதலிற்று. புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூவும் மருட்பாவினான் வரப்பெறும் என்றவாறு. எனவே மருட்பா நான்கு பொருளினல்லது வரப்பெறா தாயிற்று. உதாரணம்: வந்தவழிக் காண்க. (154) 464. பரிபா டல்லே நாலீ ரைம்ப துயர்படி யாக வையைந் தாகு மிழிபடிக் கெல்லை. என்-னின், பரிபாடற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. பரிபாடற் செய்யுள் நானூறடியுயர்பாக, இருபத்தைந்தடி இழிபாக வரும் என்றவாறு. எனவே, இடையெல்லா அடியானும் வரப்பெறும் என்றவாறு. கலிப்பாவினுள் ஒத்தாழிசைக்கு அளவு மேற்கூறப்பட்டது. கலிவெண்பாட்டுக்கு வரையறை 279யில்லை யெனப்பட்டது. 280கொச்சகக்கலிக்கு வரையறை கூறாமையாற் பொருண் முடியுங்காறும் வரப்பெறும் என்று கொள்க. அவ்வழிப் பலவுறுப்பாகி வருதலின் அதற்குறுப்பாகிய செய்யுளளவிற்றாதல் வேண்டும். உறழ்கலியுங்கொச்சகக் கலிப்பாற் படும். (155) 465. அளவியல் வகையே யனைவகைப் படுமே. என்-னின், மேற்சொல்லப்பட்டவை தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. இவ்வதிகாரத்துள் ஈண்டு அதிகரிக்கப்பட்ட அளவியல் ஈண்டுச் சொன்ன 281வகை பெறும் என்றவாறு. (156) 466. எழுநிலத் தெழுந்த செய்யுட் டெரியி னடிவரை யில்லன வாறென மொழிப. என்-னின், அடிவரையறை யில்லாதன வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. அவற்றுட் பாட்டொழிந்த ஆறும் அடிவரையில வென்றவாறு. (157) 467. அவைதாம் நூலி னான வுரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான ஏது நுதலிய 282முதுமொழி யான 283மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. என்-னின், மேற் சொல்லப்பட்ட அறுவகையு மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வாய்மொழி யெனினும் மந்திர மெனினும் ஒக்கும். அங்கதமாவது ‘செம்பொருள் கரந்ததென விருவகைத்தே’ (செய்யுளியல் 120) என்றதனாற் கரந்த வங்கதமெனினுஞ் சொற்குறிப்பெனினு மொக்கும். 284அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (158) 468. அவற்றுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலு முடிவு மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி யுண்ணின் றகன்ற வுரையொடு 285புணர்ந்து நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே. என்-னின், நூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதிய பொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி யதனகத்து நின்றும் 286விரிந்த வுரையொடு பொருத்த முடைத்தாகி 287நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு. அகன்ற வுரையொடு பொருந்துதலாவது சொல்லாத பொருண்மையெல்லாம் விரிக்கவேண்டியவழி அதற்கெல்லாம் இடனுண்டாதல். (159) 469. அதுவே தானும் 288மோர்நால் வகைத்தே. என்-னின், நூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேற் சொல்லப்பட்ட நூல் நான்கு வகையை யுடைத்து என்றவாறு. அவையாமாறு முன்னர்க் 289கூறப்படும். (160) 470. ஒருபொரு ணுதலிய சூத்திரத் தானு மினமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானு மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென் றாங்கனை மரபி னியலு மென்ப. என்-னின், மேல் தொகை கொடுக்கப்பட்ட 290நான்கு மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும் என்பது - ஆசிரியன் யாதானு மோர்பொருளைக் குறித்துக் கூறுஞ் சூத்திரத்தானும் என்றவாறு. இனமொழி கிளந்த ஓத்தினானும் என்பது - இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஓத்தினானும் என்றவாறு. பொதுமொழி கிளந்த படலத்தானும் என்பது - மேற்சொல்லப் பட்ட இனங்கள் பலவற்றையுங் கூறப்படும் படலத்தானும் என்றவாறு. மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் என்பது - இம்மூன் றனையும் உறுப்பாக அடக்கிய பிண்டத்தானும் என்றவாறு. ஆங்கனை மரபின் இயலு மென்ப என்பது - அம்மரபினான் இயலும் நூலென்ப என்றவாறு. அவற்றிற்கு இலக்கண முன்னர்க் கூறப்படும். (161) 471. அவற்றுள், சூத்திரம் தானே யாடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி 291விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே. என்-னின், சூத்திரத்திற்கு இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. சூத்திரமாவது கண்ணாடியி னிழற்போல விளங்கத் தோன்றி ஆராயாமற் பொருள் நனி விளங்குமாறு யாப்பின் கண்ணே தோன்ற யாப்ப தென்றவாறு. ஆடிநிழலினறியத் தோன்றுவதாவது - சூத்திரம் படித்த வளவிலே அதனாற் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கு தோற்றல். நாடுதலின்றிப் பொருணனி விளங்க யாத்தலாவது - அதன்கண் யாக்கப்பட்ட சொற்குப் பொருள் ஆராயாமற் புலப்படத் தோன்றுமாறு யாத்தல். உதாரணம்: “வேற்றுமை தாமே யேழென மொழிப விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே.” (தொல். வேற்றுமையியல் 1) என்றவழி, யாப்பின்கண்ணே பொருடோன்ற யாத்த வாறுங் கண்ணாடி நிழற்போலக் கருதிய பொருள் தோற்றிய வாறுங் கண்டுகொள்க. (162) 472. நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். என்-னின், ஓத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. ஒத்த வினத்ததாகிய மணியை 292ஒருங்கே கோவைப்பட வைத்தாற் போல 293ஓரோரினமாக வரும் பொருளை ஓரிடத்தே சேர வைத்தல் ஓத்தென்று பெயராம் என்றவாறு. எனவே அவ்வினமாகிச் சேர்ந்த நிலைக்கு ஓத்தென்று பெயராயிற்று. அது ‘வேற்றுமையோத்து’ என்பதனானறிக. (163) 473. ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரினது படல மாகும். என்-னின், படலத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. ஓரினமாகிய நெறியின்றிப் பலநெறியான் வருவன பொருளானே பொதுமொழியாற் றொடர்வுபடின் அது படலமெனப் பெயராம் என்றவாறு. அது கிளவியாக்க முதலாக எச்சவியல் ஈறாகக் கிடந்த ஒன்ப தோத்தும் வேறுபாடுடையவாயினும், சொல்லிலக்கணம் உணர்த்தினமை யாற் சொல்லதிகாரம் எனப் பெயர் பெறுதல். அதிகாரம் எனினும் படலமெனினு மொக்கும். (164) 474. மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயிற் றோன்றுமொழிப் புலவரது பிண்ட மென்ப. என்-னின், பிண்டமென்பது உணர்த்துதல் நுதலிற்று. மூன்றுறுப்பினையும் அடக்கின தன்மைத்தாயின் அதனைப் பிண்டமென்று சொல்லுவர் என்றவாறு. மூன்றுறுப் படக்குதலாவது, சூத்திரம் 294பலவுண்டாகி ஓத்தும் படலமுமின்றாகிவரினும், ஓத்துப் பலவுண்டாகிப் படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும், அதற்குப் பிண்டமென்று பெயராம் என்றவாறு. அவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம். அதிகாரத்தாற் பிண்டமாயிற்று இந்நூலென்று கொள்க. இவற்றைச் சிறுநூல் இடைநூல் பெருநூல் என்ப. (165) 475. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென் றுரைவகை நடையே நான்கென மொழிப. என்-னின், உரை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. பலசொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஓசை தழீஇயவற்றைப் பாட்டென்றார். ஓசையின்றிச் செய்யுட் டன்மைத்தாய் வருவது நூலெனப்பட்டது. அவ்வகையுமன்றி வரும் உரைத்திறன் ஈண்டு உரையெனப் பட்டது. பாட்டிடை வைத்த குறிப்பாவது - 295பாட்டினிடை வைக்கப்பட்ட பொருட் குறிப்பினானும் உரையாம் என்றவாறு. அவையாமாறு: ‘ஊர்க்கா னிவந்த பொதும்பருள்’ என்னுங் குறிஞ்சிக் கலியுள், “இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து” (கலித். 56) என்றது உரைக் குறிப்பு. ‘ஒரூஉ, கொடியிய னல்லார்’ என்னும் மருதக் கலியுள், “கடியர் தமக் கியார்சொலத் தக்கார் மாற்று” (கலித்ட். 88) என்றதுமது. சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையுள், “கயலெழுதிய விமயநெற்றியி னயலெழுதிய புலியும் வில்லும் நாவலந்தண் பொழின்மன்னரோ டேவல்கேட்பப் வர சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலுட் காலைமுர சியம்பு மாதலின் நெய்ம்முறை நமக்கின்றாகுமென வையைதன் மகளைக் கூய்க் கடைகயிறு மத்துங்கொண் டிடைமுதுமகள் வந்துதோன்றுமன்...” என்றது மது. பாவின்றெழுந்த கிளவியானும் என்பது - பாக்களை யொழியத் தோற்றிய சொல்வகையானும் உரையாம் என்றவாறு. அஃதாவது, வழக்கின்கண் ஒரு பொருளைக் குறித்து வினவுவாருஞ் செப்புவாருங் கூறுங் கூற்று. அதுவும் இலக்கணம் பிழையாமற் கூறவேண்டுதலானும் ஒரு பொருளைக் குறித்துச் செய்யப்படுதலானுஞ் செய்யுளாம். இதனைக் குறித்தன்றே ‘செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்’ (தொல். கிளவியாக்கம். 13) என்பது முதலாகக் கூறப்பட்ட இலக்கணமெல்லாம் என்று கொள்க. பொருண்மரபில்லாப் பொய்ம்மொழியானும் என்பது - பொருளியல்பில்லாப் பொய்மொழியானும் உரைவரும் என்றவாறு. பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது - பொருளைப் பொருந்திய நகைவழி மொழியாய் வருகின்றது என்றவாறு. நகைமொழியாவது - மேற்சொல்லப்பட்ட உரை பொருந்தா தென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருளுணர்த்தும் உரை பிறக்குமாதலின் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் உரை வருமென்றார். என்று உரைவகை நடையே நான்கென மொழிப என்பது - இவ்வகையினான வுரை நான்கு வகைப்படும் என்றவாறு. (166) 476. அதுவே தானு மிருவகைத் தாகும். மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் என்றவாறு. 296அது மைந்தர்க்கு உரைப்பனவும், மகளிர்க்கு உரைப்பனவு மாம். (167) 477. ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே. என்-னின், மேல் இருவகைப்படும் என்ற உரையை யுரைத்தற் குரியாரை உணர்த்துதல் நுதலிற்று. மகளிர்க்கு உரைக்கு முரை செவிலிக்குரித்து. மைந்தர்க்கு உரைக்கு முரை யெல்லார்க்கு முரித்தென்றவாறு. செவிலி இலக்கணத்தின் உரைக்கின்றவுரையும், பாட்டி லுரைக்கின்ற வுரையும் 297கூறுவளோவெனின், அவ்விடங்களில் வரும் உரை பொருள்பற்றி வருதலின் அப்பொருள் 298கூறுவளென்க. அன்றியும், ‘அதுவே தானும்’ என்பது பொருளொடு புணர்ந்த நகைமொழியைச் சுட்டிற்றாக்கி, அம் மொழி 299யிரண்டு கூறுபடுமெனப் பொருளுரைப்பினு மமையும். (168) 478. ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந் தொன்றுவது கிளந்த துணிவி னானு மென்றிரு வகைத்தே பிசிநிலை வகையே. என்-னின், 300பிசியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒப்போடே புணர்ந்த உவமை நிலையானும் பிசியாம்; தோன்றுவதனைச் சொன்ன துணிவினானும் பிசியாம் என்றவாறு. ‘அச்சுப்போலே பூப்பூக்கும்; 301அமலே யென்னக் காய் காய்க்கும்’ என்பது பிசி. இது உவமைபற்றி வந்தது. (169) 479. நுண்மையுஞ் சுருக்கமு மொளியு முடைமையு மென்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉ மேது நுதலிய முதுமொழி யென்ப. என்-னின், முதுமொழி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நுண்மை விளங்கவுஞ் சுருக்கம் விளங்கவும் ஒளி யுடைமை விளங்கவும் மென்மை விளங்கவுமென்று இன்னோ ரன்ன விளங்கவும் தோன்றிக் கருதின பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி யென்று சொல்லுவர் என்றவாறு. (170) 480. நிறைமொழி மாந்த ராணையிற் 302கிளக்கு மறைமொழி தானே மந்திர மென்ப. என்-னின், மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாவ தென்றவாறு. அது வல்லார்வாய்க் கேட்டுணர்க. (171) 481. எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே. என்-னின், குறிப்புமொழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிச் சொல்லினா னுணரப்படும் பொருளின் புறத்ததுவே குறிப்புமொழி என்றவாறு. மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி யென்றத னான் இச்சொல் வசை குறித்து வருமென்று கொள்க. புகழ் குறித்து வந்தாற் குற்றமென்னை யெனின், அதனை வெளிப்படக் கூறக் கேட்டார்க்குந் தனக்கும் இன்பம் பயத்தலிற் குறிப்பினாற் கூறல் வேண்டுவது வசையென்று கொள்ளப்படும். (172) 482. பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல பண்ணத் திய்யே. என்-னின், பண்ணத்தி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேல் இத்துணையும் பாவும் பாவின்றி வழங்கு வனவும் எடுத்தோதினான். இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறின இசைநூலின் பாவின மாமாறு உணர்த்துதலின் இது... பாட்டிடைக் கலந்த பொருளவாகி என்பது - பாட்டின்கட் கலந்த பொருளை யுடைத்தாகி யென்றவாறு. எனவே, அவ்வடி 303பாவிற்குரிய பொருள் கொள்ளப்படும். பாட்டினியல பண்ணத்திய்யே என்பது - பாட்டுக்களின் இயல்பையுடையவாம், பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுள்கள் என்றவாறு. பண்ணைத் 304தோற்றுவித்தலாற் பண்ணத்தி யென்றார். அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஓதப்படுவன. அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் 305கூறுப. (173) 483. அதுவே தானும் பிசியொடு மானும். என்-னின், மேற்சொல்லப்பட்டதனுள் ஒரு உதாரணம்: உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடொத்த அளவிற்று என்றவாறு. பிசியென்பது இரண்டடி அளவின்கண்ணே 306வருவ தாயின் இதுவும் இரண்டடியான் வருமென்று கொள்ளப்படும். உதாரணம்: “கொன்றை வேய்ந்த செல்வ னடியை என்று மேத்தித் தொழுவோம் நாமே.” இது பிசியோடு ஒத்த வளவிற்றாகிப் பாலையாழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி 307வந்தமையிற் பண்ணத்தி யாயிற்று. பிறவுமன்ன. (174) 484. அடிநிமிர் கிளவி யீரா றாகு மடியிகந்து வரினுங் கடிவரை யின்றே. என்-னின், இதுவும் பண்ணத்தி 308பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. பண்ணத்தி யெனினும் பாவினமெனினு மொக்கும். ‘நாற்சீர் கொண்ட தடியெனப்படுமே’ (செய்யுளியல் 31) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க. 309நாற்சீரடியின் மிக்கு வரும் பாட்டுப் 310பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் என்றவாறு. இதனாற் சொல்லியது இருசீரடி 311முதலிய எல்லாவடி களானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம். பன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசை துறை விருத்தமென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம். அவற்றுள் தாழிசை யாவது:- ஆசிரியத் தாழிசை, வஞ்சித் தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது:- ஆசிரியத் துறை, வஞ்சித் துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது: ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம், வெளி விருத்தம், கலி விருத்தம் என நான்காம். அவற்றுள் ஆசிரியத் தாழிசையாவது மூன்றடி யொத்து வருவது. “நீடற்க 312வினையென்று நெஞ்சி னுள்ளி நிறைமலர்சாந் தொடுபுகையு நீரு மேந்தி வீடற்குந் 313தன்மையின் விரைந்து சென்று விண்ணோடு314 மண்ணிடை நண்ணும் பெற்றி பாடற்கும் 315பணிதற்குந் தக்க தொல்சீர்ப் பகவன்ற316 னடியிரண்டும் 317பணிதும் நாமே” (யாப்.வி.ப. 294) என வரும். அவ்வழி ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைத் தென ஒரு சாரார் உதாரணங் காட்டுமாறு:- “கன்று குணிலாக் 318கனியுதிர்த்த மாயவ னின்றுநம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையந் தீங்குழற் கேளாமோ 319தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவ னீங்குநம் மானுள் வருமே லவன்வாயி லாம்பலந் தீங்குழல் கேளாமோ 320தோழீ கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 322னெல்லைநம் மானுள் வருமே லவன்வாயின் முல்லையந் தீங்குழல் கேளாமோ 323தோழீ.” இவை மூன்றடியான் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை யென்றவாறு. 324இவை அளவடியான் வருதலானும் ஒத்து மூன்றாகி வருதலானும் இவ்வாசிரியன் மதத்தான் தரவின்றாகித் தாழிசை பெற்ற கொச்சகவொரு போகெனப்படும். மேற்காட்டியதே ஆசிரியத் தாழிசை. இனி, வஞ்சித் தாழிசையாவது குறளடி நான்கினான் ஒரு- பொருண் மேன் மூன்றடுக்கி வரும். “மடப்பிடியை மதவேழந் தடக்கையால் வெயின் மறைக்கும் இடைச்சுர மிறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்; இரும்பிடியை யிகல்வேழம் பெருங்கையால் வெயில்மறைக்கும் அருஞ்சுர மிறந்தார்க்கே விரும்புமென் மனனேகாண்; பேடையை யிரும்போத்துத் தோகையால் வெயின்மறைக்கும் காடக மிறந்தார்க்கே யோடுமென் மனனேகாண்.” (யாப்.வி.ப. 34) என வரும். அஃதேல் இவை மூன்றடுக்கி வருதலிற் கொச்சக வொரு போகாதல் வேண்டுமெனின், அளவடியான் வாராமையான் ஆகாதென்க. இனி, வெண்டாழிசையாவது மூன்றடியான் வந்து வெண்பாப் போல இறும். அது “நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்.” (யாப்.வி.ப. 244) என வரும். சிந்தியல் வெண்பா ஒருபொருண்மேன் மூன்றடுக்கி வருவதனை வெள்ளொத் தாழிசை யென்ப. அது, “அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி யொன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து துன்னான் 325துறந்து விடல்; ஏடி அறங்கொ னலங்கிளர் சேட்சென்னி கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து நீடான் றுறந்து விடல்; பாவா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி மேவா ருடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் றுறந்து விடல்.” (யாப்.வி.ப. 244) என வரும். கலித்தாழிசையாவது அடிவரையின்றி ஒத்து வந்து ஈற்றடி சில சீர் மிக்குங் குறைந்தும் வருவது. அது “வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தி னெழால் வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தி னெழாதாய்க் குறாஅலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்.” (யாப்.வி.ப. 330) என வரும். இத் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரினுங் கொச்சக வொருபோ கெனப்படா; கலித்தாழிசை யெனப்படும், ஈற்றடி மிக்கு வருதலான். இனி ஆசிரியத் துறையாவது நான்கடியாய் 326இடையிடை சீர் குறைந்து வரும். அது, “கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயி னரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக 327நரையுருமே றுங்கை வேலஞ்சு நும்மை வரையர மங்கையர் வெளவுத லஞ்சுதும் வார லையோ.” (யாப்.வி.ப. 265) என வரும். வஞ்சித் துறையாவது குறளடி நான்கினான் 328தனித்து வரும். அது, “முல்லைவாய் முறுவலித்தன கொல்லைவாய்க் 329குருந்தீன்றன மல்லல்வான் மழைமுழங்கின செல்வர்தேர் 330வரவுகாண்குமே” (யாப்.வி.ப. 341) என வரும். இனி வெண்டுறையாவது மூன்றடிச் சிறுமையாக ஏழடிப் பெருமையாக வந்து இறுதியடிகளில் சில சீர் குறைந்து வரும். “குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய வழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி 331கலுழ்வனபோ னெஞ்சயர்ந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாட னிப்பனோ வல்லன்.” (யாப்.வி.ப. 246) என வரும். 332பிறவும் வந்தவழிக் காண்க. கலித்துறையாவது 333நெடிலடி நான்கினான் வருவது. அஃதாவது, ஐஞ்சீரான் வருவதும், பதினாறும் பதினேழும் எழுத்துப் பெற்று நான்கடியான் வருவனவுமாம். “யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே” (யாப்.வி.ப. 332) நல்லார் பழிப்பி லெழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுர மூன்றெரித்த வில்லா னளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டா ளிருக்க மலர்த்திருவே. (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை - 20) இது நேரசை முதலாகிப் பதினாறெழுத்தான் வந்தது. “334கனிய நினைவொடு நாடொறுங் காதல் 335செயுமடியார்க் கினிய னவனொரு வின்னாங் கிலமெவ ரும்வணங்கப் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.” (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 6) இது நிரையசை முதலாகிப் பதினேழெழுத்தான் வந்தது. இனி, ஆசிரிய விருத்தமாவது 336அறுசீரடி முதலாகிய மிக்க அடியினான் நான்கடியு மொத்துவரும். அது, “இரைக்கு மஞ்சிறைப் பறவைக 337ளெனப்பெய 338ரினவண்டு புடைசூழ நுரைக்க ளென்னுமக் குழம்புக டெகுண்டெழ நுடங்கிய 339விலயத்தான் திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத் தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு 340பொருதல தவியாதே.” (சூளாமணி கல்யாண. 51) என வரும். பிறவும் வந்தவழிக் காண்க. இனி வஞ்சிவிருத்தமாவது முச்சீரடி நான்காகி வரும். அது “இருது வேற்றுமை யின்மையான் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேல்தடங் கையினாய்” (சூளாமணி. சீயவதை. 170) என வரும். இனி, வெளிவிருத்தமாவது நான்கடியானாயினும் மூன்றடியானாயினும் அடிதொறுந் தனிச்சொற் பெற்று வரும். அது “ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தார் - 341ரொருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ரொருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் - 342ராருசாரார் ஏகீர் நாய்கீ ரென்செய்தும் என்றார் - ரொருசாரார்” என வரும். இது நான்கடியான் வந்தது. மூன்றடியான் வருவது வந்தவழிக் காண்க. இனி, கலிவிருத்தமாவது நாற்சீரடி நான்கினால் வரும். “தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் 343தளித்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமுந் தாம்பழுத் துளசில தவள மாடமே” (சூளாமணி. நகர. 14) என வரும். இவையெல்லாம் உரையிற்கோட லென்பதனானும், பிற நூன் முடிந்தது தானுடம்படுத லென்பதனானுங் கொள்க. (175) 485. கிளரியல் வகையிற் கிளந்தன தெரியி னளவியல் வகையே யனைவகைப் படுமே. என்-னின், மேற்சொல்லப்பட்டன தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. ஈண்டுச் சொன்ன வகையினாற் சொல்லப்பட்டன வற்றை யாராயுங் காலத்து அவ்வியல்வகை யத்துணைப் பாகுபடும் என்றவாறு. இதனாற் சொல்லியது: செய்யுளாவது அடிவரையுள்ளனவும் அடிவரையில்லனவுமென இருவகைப் படுமென்பதூஉம், அடிவரை யுள்ளன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி எனவும், தாழிசை, துறை, விருத்தமெனவும், வகைப்படும் என்பதூஉம் அடிவரையில்லன, நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம் குறிப்பு மொழி என அறுவகைப் படுமென்பதூஉ முணர்த்தியவாறு. அஃதேல் மேல் ‘அளவியல் வகையே யனைவகைப்படுமே’ என்ற சூத்திர மிகையாதல் வேண்டுமெனின், அது பாவிற்கு அடி, வரையறுத்துக் கூறப்பட்டது; இது செய்யுள் இனைத்தென வரையறுத் துணர்த்திற்று. (176) 486. கைக்கிளை முதலா 344வேழ்பெருந் திணையு முற்கிளந் தனவே 345முறையி னான. என்-னின், நிறுத்தமுறையானே திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. எழுதிணையாவன கைக்கிளை முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் பெருந்திணை யென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு. முறைமையினாற் சொல்லுதலாவது, பாடாண் பாட்டினைக் கைக்கிளைப்புறமெனவும், வஞ்சியை முல்லைப்புறமெனவும், வெட்சியைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புற மெனவும், உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற் புறமெனவும், காஞ்சியைப் பெருந்திணைப்புறமெனவும் ஓதிய நெறி கொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதினான்கு திணையும் ஏழாகி யடங்குமாயின. (177) 487. காமப் புணர்ச்சியு மிடந்தலைப் 346படலும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென் றாங்கநால் வகையினு 347மடைந்த சார்வொடு மறையென மொழிதல் மறையோ ராறே. என்-னின், கைகோள் வகையிற் களவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இயற்கைப் புணர்ச்சியும் 348இடந்தலைப்படலும் பாங்கற் கூட்டமும் தோழியிற் கூட்டமுமென்று சொல்லப்பட்ட நான்கு வகையானும், அவற்றைச் சார்ந்து வருகின்ற கிளவியானும், வருவன களவென்று கூறுதல் வேதமறிவோர் நெறி என்றவாறு. இதனுள் களவென்னாது ‘மறை’ யென்றதனான் இது தீமை பயக்குங் களவன்மை கொள்க. இன் : ஆன் பொருள்பட வந்தது. ஒடு : எண். (178) 488. மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலு மிவைமுத லாகிய வியனெறி திரியாது 349மலிவும் புலவியு மூடலு முணர்வும் பிரிவொடு 350புணர்ந்தது கற்பெனப் படுமே. என்-னின், கைகோள் வகையிற் கற்பாகிய கைகோள் உணர்த்துதல் நுதலிற்று. களவொழுக்கம் வெளிப்படுதலுங் களவொழுக்க மின்றித் தமரானே பெறுதலு மென்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியிற் றப்பாது மகிழ்தலும், புலத்தலும், ஊடலும், ஊடல், தீர்தலும், பிரிதலுமென்று சொல்லப்பட்ட இவற்றொடு கூடிவருவது கற்பென்று சொல்லப்படுவது என்றவாறு. ‘இயனெறி’ என்றதனாற் கரணத்தின் அமைதல் இன்றியமையா தென்று கொள்க. (179) 489. மெய்பெறு மவையே கைகோள் வகையே. என்-னின், மேற்சொல்லப்பட்டவற்றைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. பொருள்பெற வந்த மேற்சொல்லப்பட்ட களவு கற்பென்னும் இருவகையே கைகோள் வகையாவன என்றவாறு. ஏகாரந் தேற்றம். (180) 490. பார்ப்பான் பாங்கன் றோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோ டளவியன் மரபி னறுவகை யோருங் 351களவிற் கிளவிக் குரிய ரென்ப. என்-னின், 352இனிக் கூறப்படுவாரை உணர்த்துவான் களவின்கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பான் முதலாகச் சொல்லப்பட்ட கலந்தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற் குரியரென்றவாறு. ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற்குடம்படுவாரென்று கொள்க. பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன். பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன். (181) 491. பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற வறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் 353பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த வறுவரொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். என்-னின், கற்பின்கட் கூறத் தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று. பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற் சொல்லப்பட்ட பார்ப்பான் முதலிய அறுவருங்கூடப் பன்னிரு வருங் கற்பின்கட் கூறுதற்குரியர் என்றவாறு. ‘தொன்னெறி மரபிற் கற்பு’ என்றதனான் அவர் குலந் தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க. (182) 492. ஊரு மயலுஞ் சேரி யோரு நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையுங் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவ ணின்மை யாப்புறத் தோன்றும். என்-னின், மேற்சொல்லப்பட்ட இருவகைக் கை கோளிற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. ஊரினுள்ளாருஞ் சேரியினுள்ளாரும் அயன்மனை யுள்ளாரும் நோய்ப்பக்கங் குறிப்பினானறிவாருந் தந்தையுந் தமையனும் இருவகைக் கைகோளினும் பட்டதனையுட்கொண்டு பிறிதொன்றை யெடுத்து மொழியினல்லது, பட்டாங்குக் கூறுதலின்மை வலியுறுத்தத் தோன்றும் என்றவாறு. எனவே, வலியில்வழிச் சிறுபான்மை நிகழவும் பெறும். “எந்தையும், நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப வெவனில குறுமக ளியங்குதி யென்னும்.” (அகம். 12) இது தந்தையை யுட்கொண்டு கூறியது. பிறவுமன்ன. (183) 493. கிழவன் றன்னொடுங் கிழத்தி தன்னொடு நற்றாய் கூறன் முற்றத் தோன்றாது. என்-னின், நற்றாய்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. தலைவனொடுந் தலைவியொடும் நற்றாய்கூற்று நிரம்பத்தோன்றாது என்றவாறு. எனவே, ஏனையோர்க் கேட்பக் கூறிற்றில்லை என்றவாறாம். உதாரணம்: வந்துழிக் காண்க. (184) 494. ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. என்-னின், கண்டோர்க்குரிய தோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. ஒண்டொடி மாதராவார் நற்றாயுந் தோழியுஞ் செவிலியும். இவரொடுந் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர் கூறுதல் காணப்பட்டது என்றவாறு. எனவே ஏனையோர் கேட்பக் கூறிற்றில்லை என்றவாறாம். (185) 495. இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன். என்-னின், இது தலைவற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தலைவியை யுடன்கொண்டுபோம் இடைச்சுரத்தின் கண் தலைவியைத் தலைவன் வழக்குநெறி யாணையானே கூறுதற் குரியன் என்றவாறு. உம்மை எதிர்மறை. ஆணையென்பது 354ஆக்கினை; வடமொழித் திரிபு. மெல்லிய காம நிகழுமிடத்து ஆக்கினை கூறப் பெறானாயினும் அவ்விடத்து வேண்டுமென்பது எடுத்தோதப் பட்டது. உதாரணம்: “நீவிளை யாடுக சிறிதே யானே 355மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கி 356னிரும்புறம் பொருந்தி யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவெ னுமர்வரின் 357மறைகுவென் மாஅ யோளே.” (நற். 362) என்பதனுட் கண்டுகொள்க. மெல்லிய மகளிர்முன் வன்மை கூறலாகாமையின் இது வழுவமைத்தவாறு. (186) 496. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முன்னத்தின் னெடுத்தே. என்-னின், இது தலைவனுந் தலைவியும் அல்லாதார்க் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தலைவனையுந் தலைவியையும் ஒழிந்த பதின்மரும் அத்தலைவனொடுந் தலைவியொடுஞ் சொல்லிப்போந்த மரபினாற் சொல்லப்பெறுவர், இடமுங் காலமுங் குறித்து என்றவாறு. ‘மொழிந்தாங்கு’ என்பதனை வழக்கியலாணை யெனினு மமையும். முன்னமாவது:- “இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரித்தென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது.” (தொல். செய்யுளியல் - 199) எடுத்தென்பது அறம்பொருளின்பங்கட்குத் தகாத சொற்களை யெடுத்துக் கூறுதல். அஃதாவது தலைவனைப் பார்ப்பானும் பாங்கனும் கழறலும், தோழி இயற்பழித்தலும், தலைவியைச் செவிலி யலைத்தலும், பாணர் கூத்தர் பாசறையிற் சென்று கூறுதலும், தோழி 359தலைமகனை வற்புறுத்த லும் முதலாயின. (187) 497. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு நினையுங் காலைக் கேட்குந ரவரே. என்-னின், இதுவுமது. தலைவியுந் தலைவனுங் கூறக் கேட்போர் மேற் சொல்லப்பட்ட பதின்மரும் என்றவாறு. இது முதலாகக்கேட்போரைக் கூறுகின்றது. (188) 498. பார்ப்பா 360ரறிவ ரென்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. என்-னின், பார்ப்பாரும் அறிவருங் கூறுங் கூற்றுக் கேட்போரை உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பார் அறிவரென்று சொல்லப்பட்ட இருவர் கூற்றும் எல்லாருங் கேட்கப்பெறுவ ரென்றவாறு. (189) 499. பரத்தை வாயி லெனவிரு 361வீற்றுங் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே. என்-னின், இதுவு மோர்சார் கூற்றிற்குரியா ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. பரத்தையென்று சொல்லப்படும் வேறுபாட்டினும் வாயிலென்று சொல்லப்படும் வேறுபாட்டினுந், தலைமகளைச் சுட்டாத கூற்றுப் பயனில்லை என்றவாறு. (190) 500. வாயி லுசாவே 362தம்மு ளுரிய. என்-னின், வாயில்கட்குரிய தோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. வாயில்கள் 363உசாவுமிடத்துக் கிழத்தியைச் சுட்டாது தம்முள் உசாவுதலுரித்து என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் கண்டுகொள்க. (191) 501. ஞாயிறு திங்க ளறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே யவையல பிறவு நுதலிய 364நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ் சொல்லியாங் கமையு மென்மனார் புலவர். என்-னின், இதுவுங் 365கேட்டற் பொருண்மைக்கண் வருவதோர் மரபுவழு வமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று. ஞாயிறு முதலாக நெஞ்சு ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் அத்தன்மைய பிறவுமாகிய மக்களல்லாத 367பொருள்கள் தாங் கருதிய நெறியினானே சொல்லுவன போலவுங் கேட்குந போலவுஞ் சொல்லியமையப்பெறும் என்றவாறு. ஆங்கு - அசை. “368பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவென் வந்தேனென் னெஞ்ச மழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை மொழிய விடாதீமோ என்று.” (கலித். 143) “மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி.” (குறள். 1118) “உறுதி தூக்கத் தூங்கிய வறிவே சிறிதுநனி விரைய லென்னும் மாயிடை.” (நற். 284) “369நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டே ரூர்ந்த வழிசிதைய வூர்கின்ற வோதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடு மன்னமே யீர்ந்தண் டுறையே யிதுதகா தென்னீரே.” (சிலப். கானல்) இதனுட் கடலுங் கானலும் புள்ளு மரனுங் கூறப்பட்டன. “மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்.” (கலித். 118) “வருந்தினை வாழிய நெஞ்சே.” (அகம். 79) பிறவு மென்றதனான், “மன்றப் பனைமேல் மலைமாந் தளிரேநீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ மென்றோண் ஞெகிழ்த்தான் றகையல்லால் யான்காணேன் நன்றுதீ தென்று பிற.” (கலித். 142) எனவும் இந்நிகரன கொள்க. இத்துணையுங் கூறப்பட்டது கேட்போ ரியல்பு. (192) 502. ஒருநெறிப் பட்டாங் கோரியன் 370முடியுங் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப. என்-னின், நிறுத்த முறையானே இடமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒருவழிப்பட்டு ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சி இடமென்று சொல்லுவர் என்றவாறு. நிகழ்ச்சி, நிகழ்ந்த விடம். ஒருநெறிப் படுதலாவது - அகமாயினும் புறமாயினும் ஒரு பொருண்மேல் வருதல். ஓரியல் முடிதலாவது - அகத்தின்கட் களவென்றானும் கற்பென் றானும் அவற்றின் விரிவகையின் ஒன்றானும் பற்றி வருதல். புறத்தின்கண் நிரைகோடலானு மீட்டலானு மேற்செலவானும் எயில்வளைத்தலானும் யாதானு மோரியல்பு பற்றி வருதல். கருமம் நிகழ்தலாவது - அப்பொருளைப் பற்றி யாதானு மோர் வினை நிகழுமிடம். இன்னுங் கருமநிகழ்ச்சி என்றதனான், தன்மை முன்னிலை படர்க்கை யென்பனவுங் கொள்ளப்படும். “செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.” (குறள். 1151) என்றவழிப் பிரிவுப் பொருண்மை நிகழு மிடமாயிற்று. முன்னின் றானைக் கூறுதலின் முன்னிலை யென்னும் இடமாயிற்று. யாதானுமோர் கருமம் நிகழ்வுழி அதற்காகும் இடத் தொடுங் கூட நிகழ்தல் வேண்டுமென்று 371இப்பொருள் கூறப்பட்டது. ஒருநெறிப்படாதும் ஓரியன் முடியாதும் வருமிடம் வழுவாம், அஃதாவது, தலைமகளொடு புணர்தல் வேண்டித் தோழியை யிரந்து குறையுறுவான் அவ்விடத்திற்குத் தக்க வுரை கூறாது தன்னாற்றலும் 372பிறவுங் கூறுதல். “மெல்லிய னல்லாருண் மென்மை யதுவிறந் தொன்னார்கட் கூற்றுட்கு முட்குடைமை யெல்லாஞ் சலவருட் சாலச் சலமே நலவரு ணன்மை வரம்பாய் விடல்.” (நாலடி. 188) இதனானு மறிக. அன்றியும், “நெடும்புனலுள் வெல்லு முதலை வடும்புனலு ணீங்கி னதனைப் பிற.” (குறள். 495) இதுவு மிடனறிதல். “உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா லெண்ணப் படவேண்டா தார்.” (குறள். 922) இது தன்மையானையும் முன்னின்றானையும் ஒழித்துப் படர்க்கையானைத் தொழிற்373படுத்துதல். உண்ணற்க வென்னும் படர்க்கைச் சொல் படர்க்கைப் 374பெயரொடு முடிந்தது. பிறவுமன்ன. (193) 503. இறப்பே நிகழ்வே யெதிர தென்னுந் திறத்தியன் மருங்கிற் றெரிந்தன ருணரப் பொருணிகழ் வுரைப்பது கால மாகும். என்-னின், நிறுத்த முறையானே காலமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலமெனக் கூறப்பட்டியலும் பக்கத்தின் 375ஆராய்ந்து நோக்குமாறு பொருணிகழ்ச்சியைக் கூறுவது காலமாகும் என்றவாறு. “முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே.” இஃது 376இறந்தகாலத்தின்கட் புணர்ச்சியுண்மை தோன்ற வந்தது. இனி, “அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்த னரையொடு முடிப்பினு நீத்த லோம்புமதி பூக்கேழ் ஊர.” (நற். 10) என்றவழி நிகழ்காலம் இளமைப் பருவமென்பது தோன்ற வந்தது. இதனுள், ‘நீத்தலோம்புமதி’ யென்பது எதிர்காலங் 377குறித்து நின்றது. இவ்வகையினாற் காலமு மிடமும் எல்லாச் செய்யுளின்கண்ணும் வருமென்று கொள்க. (194) 504. இதுநனி பயக்கு மிதன்மா றென்னுந் தொகுநிலைக் கிளவி பயனெனப் படுமே. என்-னின், நிறுத்த முறையானே பயனாமாறு உணர்த்துதல் நுதலிற்று. யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி, 378இதன் பின்பு மிதனைப் பயக்குமென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினானே தொகுத்துக் கூறுதல் பயனெனப்படும் என்றவாறு. “சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே 379வாரல் வரினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே.” இதனாற் பயன் வரைந்துகோடல் வேண்டும் என்பது. “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.” (குறள். 323) இதனாற் பயன் நன்மை வேண்டுவார் இவ்வாறு செய்தல் வேண்டுமென்றல். இவ் வகையினான் யாதானு மோர் செய்யுளாயினும் பயன்படக் கூறல் வேண்டுமென்பது கருதிப் பயனென ஒரு பொருள் கூறினார். (195) 505. உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். என்-னின், நிறுத்த முறையானே மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. யாதானுமொன்றைக் கூறியவழி யதன்கட் பொருண் மையை விசாரித்துணர்தலின்றி அவ்விடத்து வரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பா டென்னும் உறுப்பாம் என்றவாறு. “ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே 382அணைத்தனென் கொளினே யகன்மார்பெடுக்க வல்லே னென்போற் பெருவிதுப் புறுக 383நின்னை யின்னா துற்ற வறனில் 384கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர நடத்திசிற் சிறிதே.” (புறம். 255) இதனுள் அழுகையாகிய மெய்ப்பாடு புலப்பட வந்தவாறு கண்டு கொள்க. செய்யுட் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டு மென்பது கருத்து. (196) 506. எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே என்-னின், மெய்ப்பாடாவது உணர்த்துதல் நுதலிற்று. அது நகை 385முதலாகிய எட்டு மெய்ப்பாட்டு நெறியையும் பிழையாதாகி மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தை யுடைத்து என்றவாறு. அஃதாமாறு மெய்ப்பாட்டியலுட் காண்க. (197) 507. சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்ச மாகும். என்-னின், நிறுத்த முறையானே எச்சவகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. பிறிதோர் சொல்லொடும் பிறிதோர் குறிப்பொடும் முடிவு கொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்சமாகும் என்றவாறு. எனவே, சொல்லெச்சம் குறிப்பெச்சமென இருவகை யாயின. அஃது எச்சவியலுட் ‘பிரிநிலை வினை’ யென்னுஞ் சூத்திரத்துள் (தொல். சொல். எச்ச. 34) பிரிநிலையென்பது முதலாகச் சொல்லப்பட்ட எண்வகை யானும் வருவன சொல்லெச்சமாம். குறிப்பென்று ஓதப்பட்டது குறிப் பெச்சமாம். (198) 508. இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியவென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம். என்-னின், நிறுத்த முறையானே முன்னமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இவ்விடத்து இம்மொழியை இவர்க்குச் சொல்லத் தகுமெனக் குறித்து அவ்விடத்து அவர்க்கு அம்மொழியை யுரைப்பது முன்னமாம் என்றவாறு. எனவே, இடமுங் காலமு முணர்ந்து கேட்போர்க்குட் தக்கவாறு மொழிதலுஞ் செய்யுளுறுப்பாம் என்றவாறு. வந்தது கொண்டு வாராதது முடித்த லென்பதனாற் காலமுங் கொள்க. (199) 509. இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவு மொழுக்கமு மென்றிவை யிழுக்குநெறி யின்றி யிதுவா கித்திணைக் 386குரிப்பொரு ளென்னாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப. என்-னின், நிறுத்த முறையானே பொருள்வகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இன்பமுந் துன்பமும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமு மென்று சொல்லப்பட்டவை வழுவுநெறி யின்றி, இத்திணைக் குரிய பொருள் இப்பொரு ளென்னாது, எல்லாப் பொருட்கும் பொது வாகி நிற்கும் பொருளே பொருள்வகையாம் என்றவாறு. (200) 510. அவ்வவ 387மாக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினுந் 388திறவதி னாடித் தத்த மியலான் மரபொடு முடியி னத்திறந் தானே துறையெனப் படுமே. என்-னின், நிறுத்த முறையானே துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அகப்பொருளாகிய ஏழு பெருந்திணைக்கும் புறப் பொருளாகிய ஏழு பெருந்திணைக்குமுரிய மாந்தரும் பரந்துபட்ட மாவும் புள்ளும், உம்மையான் மர முதலாயினவும், ‘பிற வவண் வரினு’ மென்றதனான் நிலம் நீர் தீ வளி முதலாயினவும் செய்யுட் கண் வருமிடத்துத் திறப்பாடுடைத்தாக ஆராய்ந்து தத்தமக்கேற்ற பண்பொடும் பொருந்திய மரபொடும் முடியின், அவ்வாறு திறப்பாடுடைத்தாய் வருவது துறையென்று கூறப்படும் என்றவாறு. (201) 511. அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு மியன்றுபொருள் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் 389?வழக்கின். என்-னின், நிறுத்த முறையானே மாட்டேறு உணர்த்துதல் நுதலிற்று. (202) 512. மாட்டு மெச்சமு நாட்ட லின்றி 390யுடனிலை மொழியினுந் தொடைநிலை பெறுமே. இவையிரண்டுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (203) 513. வண்ணந் தாமே நாலைந் தென்ப, என்-னின், இனி நிறுத்த முறையானே வண்ணம்ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. வண்ணமாவன 391இருபதாம் என்றவாறு. 392அவற்றின் பெயர் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (204) 514. அவைதாம் பாஅ வண்ணந் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ண மியைபு வண்ண மளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ் சித்திர வண்ண நலிபு வண்ண மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் மொரூஉ வண்ண மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந் தூங்கல் வண்ண மேந்தல் வண்ண முருட்டு வண்ண முடுகு வண்ணமென் றாங்கென மொழிப வறிந்திசி னோரே. என்-னின், 393வண்ணத்திற்குப் பெயர் கூறுதல் நுதலிற்று. இதுவுஞ் சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (205) 515. அவற்றுட் பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் என்-னின், பா வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. பாஅ வண்ணமாவது 394சொற்சீரடியாகி நூலின்கட் பயின்றுவரும் என்றவாறு. ‘அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு.’ (தொல். எழுத். நூன்மரபு. 31) ‘கொல்லே ஐயம் எல்லே இலக்கம்.’ (தொல். சொல். இடை. 20) என வரும். (206) 516. தாஅ வண்ண மிடையிட்டு வந்த வெதுகைத் தாகும். என்-னின், தாவண்ண மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. தாஅ வண்ணமாவது இடையிட்டெதுகையான் வரும் என்றவாறு. உதாரணம்: “தோடா ரெல்வளை நெகிழ நாளு நெய்த லுண்கண் பைதல கலுழ வாடா வவ்வரி புதைஇப் பசலையும் வைக றோறும் பைபையப் பெருகின நீடா ரிவணென நீமனங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழீ வாடாப் பௌவம் வார்முகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ யோடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே.” (யாப்.வி.ப. 381) என்னும் பாட்டு. (207) 517. வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. என்-னின், வல்லிசை வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வல்லெழுத்து மிக்கு வருவது வல்லிசை வண்ணமாம் என்றவாறு. “பட்டொட்டி யன்ன தொடர்புமுடப் புன்னைக்கீழ்க் கட்டொட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழைப்பூத் தொட்டிட்டுக் கொள்ளுந் துறைச்சேர்ப்பன் னின்னொடு விட்டொட்டி யுள்ளம் விடாது நினையுமேன் விட்டொட்டி 395நீங்காதே வொட்டு.” (யாப்.வி.ப. 382) (208) 518. மெல்லிசை வண்ண மெல்லெழுத்து மிகுமே. என்-னின், மெல்லிசை வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. மெல்லெழுத்து மிக்கது மெல்லிசை வண்ணமாம் என்றவாறு. “பொன்னி னன்ன புன்னை நுண்டாது மணியி னன்ன நெய்தலங் கான மனவென வுதிரு மாநீர்ச் சேர்ப்பன் மாண்வினை நெடுந்தேர் பூண்மணி யொழிய மம்மர் மாலை வரனி நன்மா மேனி நயந்தனை யெனினே.” (யாப்.வி.ப.382) என வரும். (209) 519. இயைபு வண்ண மிடையெழுத்து மிகுமே. என்-னின், இயைபு வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இடையெழுத்து மிக்கு வருவது இயைபு வண்ணமாம் என்றவாறு. “396வால்வெள் ளருவி வரைமிசை யிழியவுங் கோள்வல் லுழுவை விடரிடை யியம்பவும் வாளுகி ருளியம் வரையக மிசைப்பவும் வேலொளி விளக்கினர் வரினே யாரோ தோழி வாழ்கிற் போரே.” (யாப்.வி.ப. 383) என வரும். (210) 520. அளபெடை வண்ண மளபெடை 397பயிலும். என்-னின், அளபெடை வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அளபெடைபயின்று வருவது அளபெடை வண்ணமாம் என்றவாறு. “தாஅட் டாஅ மரைமல ருழக்கி பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் மாஅத் தாஅண் மோஒட் டெருமை.” (யாப்.வி.மேற்.) என வரும். (211) 521. நெடுஞ்சீர் வண்ண நெட்டெழுத்துப் பயிலும். என்-னின், நெடுஞ்சீர் வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நெட்டெழுத்துப் 398பயின்றுவருவது நெடுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு. “நீரூர் பானா யாறே காடே 399நீலூர் காயாப் பூவீ யாதே கானூர் பானா மாவே யானே யாரோ தாமே வாழா மோரே. யூரூர் பாகா தேரே பீரூர் தோளாள் சீறூ ரோனே.” (யாப்.வி.மேற்.) என வரும். (212) 522. குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். என்-னின், குறுஞ்சீர் வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு. “உறுபெய லெழிலி 400தொகுபெயல் பொழியச் சிறுகொடி யவரை நெறிதளை யவிழக் குறிவரு பருவ மிதுவென மறுகுபு செறிதொடி நறுநுத லழிய லறியலை யரிவையவர் கருதிய பொருளே.” (யாப்.வி.மேற்.) என வரும். (213) 523. சித்திர வண்ண 401நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வருமே. என்-னின், சித்திரவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சித்திர வண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் சார்ந்துவரும் என்றவாறு. “ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் சேரி வரினும் 402மார முயங்கார்.” (குறுந். 231) என வரும். (214) 524. நலிபு வண்ண மாய்தம் பயிலும். என்-னின், நலிபுவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஆய்தம் பயின்று வருவது நலிபுவண்ணமாம் என்றவாறு. “அஃகாமை செல்வத்துக் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.” (குறள். 178) என வரும். (215) 525. அகப்பாட்டு வண்ண முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. என்-னின், அகப்பாட்டு வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அகப்பாட்டு வண்ணமாவது முடியாத் தன்மை யான் முடிந்ததன்மேல தென்றவாறு. “பன்மீ னுணங்கற் படுபுள் ளோப்பியும் புன்னை நுண்டாது நம்மொடு தொடுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியும் தோளி னீங்காமை சூளில் தேற்றி மணந்ததற் சேர்வான் றணந்து புறமாறி யினைய னாகி யீங்குத் துறந்தோன் பொய்த லாயத்துப் பொலங்கொடி மகளிர் கோடுயர் வென்மண லேறி யோடுகல மெண்ணுந் துறைவன் றோழி.” (யாப்.விப. 385) என வரும். (216) 526. புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியா தாகும். என்-னின், புறப்பாட்டு வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. புறப்பாட்டு வண்ணமாவது முடிந்தது போன்று முடியாதாகி வரும் என்றவாறு. உதாரணம்: “நிலவுமண லகன்துறை வலவ னேவலி 403னெரிமணிப் புள்ளின மொய்ப்ப நெருநலும் வந்தன்று கொண்கன் றேரே யின்றும் வருகுவ 404தாயி னொன்றுபு சென்று ததைந்த புன்னைத் தாதுகு தண்பொழின் மெல்ல மேவர மென்முலை ஞெருமுங்கப் புல்லி னெவனோ மெல்லியை நீயே நல்காது விடுவை யாயின் வைகலும் படர்மலி யுள்ளமொடு மடன்மா வேறி யுறுதுயர் ருலகுட னறியச் சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே.” (யாப்.வி.ப. 385) என வரும். (217) 527. ஒழுகு வண்ண மோசையி னொழுகும் என்-னின், ஒழுகு வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஓசையான் ஒழுகிக் கிடப்பது ஒழுகுவண்ணமாம் என்றவாறு. உதாரணம்: “அம்ம வாழி தோழி காதல ரின்முன் பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலையு மின்று நலிய வய்யல ளிவளென றுணரச் சொல்லிச் சொல்லுநர்ப் பெறினே சேய வல்ல 405வின்னளி யிறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே.” (யாப்.வி.ப. 386) என வரும். (218) 528. ஒரூஉ வண்ண 406மொரூஉத்தொடை தொடுக்கும். என்-னின், ஒரூஉ வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. ஒரூஉ வண்ணமாவது நீங்கின 407தொடையாகித் தொடுப்பது என்றவாறு. அது செந்தொடையாம். உதாரணம்: “தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் மாண்பின் றெவனோ சொல்லாய் வாழி தோழி வரைய முள்ளாற் பொதுளிய விலங்குகுலை நெடுவெதிர் பொங்குவா லிளமழை துவைப்ப மணிநிலா விரியுங் குன்றுகிழ வோற்கே.” (யாப்.வி.ப.386) என வரும். (219) 529. எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும். என்-னின், எண்ணுவண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. எண்ணுப் பயின்று வருவது எண்ணுவண்ணமாம் என்றவாறு. உதாரணம்: “நிலம்நீர் வளிவிசும் பென்ற நான்கி னளப்பரியையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழ லைந்தோர்ங்கு புணர்ந்த விளக்கத் தனையை” (பதிற்றுப். 14) என வரும். (220) 530. அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும். என்-னின், அகைப்பு வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. 408அறுத்தறுத்தியலுவது அகைப்பு வண்ணமாம் என்றவாறு. உதாரணம்: “தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தையிடை யசைத்த வாரமலைப் பட்டூ ரண்ணலென்பா னியன்ற சேனைமுர சிரங்குந் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலி னவனே.” (யாப்.வி.மேற்.) என வரும். (221) 531. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். என்-னின், தூங்கல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. தூங்கல் வண்ணமாவது வஞ்சியுரிச்சீர் பயின்று வரும் என்றவாறு. உதாரணம்: “வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும்” (பட்டினப். 1) என வரும். (222) 532. ஏந்தல் வண்ணஞ் 409சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். என்-னின், ஏந்தல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. ஏந்தல் வண்ணமாவது 410சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்கவரும் என்றவாறு. உதாரணம்: “கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா கூடலுட் கூடலே கூடலுங் - கூட லரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே 411பிரிவு.” (யாப்.வி.ப. 388) என வரும். (223) 533. உருட்டு வண்ண மராகந் தொடுக்கும். என்-னின், உருட்டு வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்கும் என்றவாறு. உதாரணம்: “தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்.” (யாப்.வி.ப. 299) என வரும். (224) 534. 412முடுகு வண்ண முடிவறி யாம லடியிறந் தொழுகி யதனோ ரற்றே என்-னின், முடுகு வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. முடுகு வண்ணமாவது நாற்சீரடியின் 413மிக்கோடி அராகத்தோடு ஒக்கும் என்றவாறு. உதாரணம்: “நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ.”(கலித். 39) (225) 535. வண்ணந் தாமே 414யவையென மொழிப. என்-னின், மேற்கூறப்பட்ட வண்ணமெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. வண்ணங்களாவன மேற்சொல்லப்பட்டன என்றவாறு. இதனாற் பெற்றது என்னை? இப்பொருண்மை மேலே பெறப்பட்டதால் எனின், ஒரு பயன் கருதிக் கூறினார் என்க. வண்ணம் பாகுபடுகின்றது தொடையினான் அன்றே? இன்னும் வேறொரு வாற்றாற் பாகுபடுப்பப் பலவாம் என்பது அறிவித்தல். அது குறில் நெடில் வல்லினம் மெல்லினம் இடையினம் என நிறுத்து அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை 415என்ற நான்கனொடும் உறழ இருபதாம். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்றோடுறழ நூறாம். அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம், நெடிலகவற் றூங்கிசை வண்ணம் முதலாக ஒரு சாராசிரியர் பெயரிட்டு வழங்குப. (226) 536. 416சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பி னம்மை தானே யடிநிமிர் வின்றே. என்-னின், நிறுத்த முறையானே 417அம்மையாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொடுக்கப் பட்ட அடி நிமிர்வில்லாத செய்யுள் அம்மையாம் என்றவாறு. உதாரணம்: “அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை.” (குறள். 315) என வரும். (227) 537. செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பி னவ்வகை தானே யழகெனப் படுமே. என்-னின், நிறுத்த முறையானே அழகென்னும் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. செய்யுட்குரிய சொல்லினாற் 418சீரைப் புணர்த்துத் தொடுப்பின் அவ்வகைப்பட்ட செய்யுள் அழகு எனப்படும் என்றவாறு. உதாரணம்: “துணியிரும் பரப்பகங் குறைய வாங்கி மணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி காலொடு மயங்கிய கனையிரு னடுநாள் யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப நெடுவரை மருங்கிற் பாம்பென விழிதருங் கடுவரற் கலுழி நீந்தி வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே.” (யாப்.வி.ப. 377) என வரும். (228) 538. தொன்மை தானே சொல்லுங் காலை யுரையொடு புணர்ந்த பழைமை மேற்றே. என்-னின், நிறுத்த முறையானே தொன்மைச் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்தப் பழைமைத்தாகிய பொருண்மேல் வருவன. அவை இராமசரிதமும், பாண்டவ சரிதமும் முதலாகியவற்றின்மேல் வருஞ்செய்யுள். (229) 539. இழுமென் மொழியால் 419விழுமியது நுவலினும் பரந்த மொழியா லடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப 420தொன்னெறிப் புலவர். என்-னின், நிறுத்த முறையானே தோலாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. 421இழுமென் மொழியான் விழுமிய 422பொருளைக் கூறினும் பரந்த மொழியினான் அடி நிமிர்ந்து ஒழுகினும் தோல் என்னுஞ் செய்யுளாம் என்றவாறு. உதாரணம்: “பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பி னாயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத் துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கு மொளியோன் காஞ்சி யெளிதெனக் கூறி னிம்மை யில்லை மறுமை யில்லை நன்மை யில்லை தீமை யில்லை செய்வோ ரில்லை செய்பொரு ளில்லை யறிவோர் யாரஃ திறுவழி யிறுகென.” (மார்க்கண்டேயனார் காஞ்சி) என்றது இழுமென் மொழியால் விழுமியது நுவல வந்தது. “திருமழை தலைஇய இருள்நிற விசும்பு” (மலைபடுகடாம் 1) என்னுங் கூத்தராற்றுப்படை பரந்த மொழியான் அடி நிமிர்ந்து வந்தது. (230) 540. 423விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே. என்-னின், நிறுத்த முறையானே விருந்தென்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறி போய்ப் 424புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்றவாறு. புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன 425நிழல்வழி யின்றித் தானே தோற்றுவித்தல். அது வந்தவழிக் காண்க. இது பெரும்பான்மையும் ஆசிரியப்பாவைக் குறித்தது. (231) 541. ஞகார முதலா னகார வீற்றுப் புள்ளி யிறுதி 426யியைபெனப் படுமே. என்-னின், நிறுத்த முறையானே இயைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வருஞ் செய்யுள் இயைபென்னுஞ் செய்யுளாம் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. (232) 542. தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. என்-னின், நிறுத்த முறையானே புலன் என்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் 427பொருள் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம் என்றவாறு. உதாரணம்: “பாற்கடல் முகந்த பருவக் கொண்மூ வார்ச்செறி முரசின் முழங்கி யொன்னார் மலைமுற் றின்றே வயங்குதுளி சிதறிச் சென்றவ டிருமுகங் காணக் கடுந்தேர் ரின்றுபுகக் கடவுமதி பாக வுதுக்காண் மாவொடு புணர்ந்த மாஅல் போல விரும்பிடி யுடைய தாகப் பெருங்காடு மடுத்த காமர் களிறே.” (யாப்.வி.மேற்.) என வரும். (233) 543. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது குறளடி முதலா வைந்தடி யொப்பித் தோங்கிய மொழியா னாங்கவண் மொழியி னிழைபி னிலக்கண மியைந்த தாகும். என்-னின், நிறுத்த முறையானே இழைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது ஆசிரியப் பாவிற் கோதப்பட்ட நாலெழுத் தாதியாக இருபதெழுத்தின் காறும் 428உயர்ந்த பதினேழு நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத் தொடுப்பது இழைபு என்னும் செய்யுளாம் என்றவாறு. உதாரணம்: “பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு நீங்கி நீர்வாய்க் கொண்ட நீல மூர்வா யூதை வீச வூர வாய மதியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர வமையேர் வளைத்தோ ளம்பரி நெடுங்க னிணையீ ரோதி யேந்திள வனமுலை யிரும்பன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வருஞ் செறிந்தேந் தல்கு லணிநகை நசைஇய வரியமர் சிலம்பின் மணிமருள் வார்குழல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய வணிநிலவு மணிநக ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடையலள் கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தோர்நீ மறைப்ப வொழிகுவ தன்றே.” (யாப்.வி.ப. 380) என வரும். (234) 544. செய்யுண் மருங்கின் மெய்பெற நாடி யிழைத்த விலக்கணம் பிழைத்தன போல வருவன உளவெனும் வந்தவற் றியலாற் றிரிபின்றி முடித்த றெள்ளியோர் கடனே. என்-னின், யாப்பிற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (235) எட்டாவது செய்யுளியல் முற்றிற்று. செய்யுளியல் அடிக்குறிப்புகள் 1. வந்தீற்றடி. 2. நிரையசை 3. ஸேதுஸம்ஸ்தான மகாவித்வான். ஸ்ரீ. ரா. ராகவையங்காரவர்கள் உதவிய ஏட்டுப்பிரதியில் இச்சூத்திரந் தொடங்கி உரையுள்ளது. 4. ஈரசைகொண்டு. 5. யற்றுநின் வழிச்; பெற்று நின்றவாறு. 6. ஓசைபெற்று. 7. பாகுபாடாமாறு. 8. மாட்டென்னும். 9. யான. 10. படாஅ. 11. நில்லா. 12. நிற்குபவாயி. 13. இயற்சீரி னீறுபோவலக். 14. சிலர். 15. தொகை கூறியவாறு. 16. காட்டுப. 17. மிகுத லிவட்பெறு மேன்றே. 18. வெண்பா வாசிரியங் கலியினுங். 19. டகு மார். 20. சுரவரன்மாப். 21. வம்பு தெரிதீயையே. 22. நிலத்த: நிலத்தின். 23. ஐந்தடி யினமும் விரித்துரைக்குங். 24. வெண்சீர் வெள்ளடி. 25. நேரியற்சீர் முதலாகிய. 26. நேர்முத 27. இவற்றால். 28. வெண்பாவுரிச்சீரு மதுவேயாம். மூவசைச்சீருள் வெண்பா வுரிச்சீரொழிந்தன வெல்லாம் வஞ்சியுரிச்சீராம். 29. வஞ்சியுரிச்சீரீற்றசை. 30. இவ்வைந்தினையும் வஞ்சியுரிச்சீராக 31. என்றவாறு... சீரடிவேறுபாடென்று கொள்க. 32. ஆங்ஙனம். 33. அன்றி. 34. அடிவகையானும் எழுத்தானும் 35. வரம்பிலவாகும் எனவுமாம். 36. நேர்ந்து நேர்ந்து வாமனை நினையிற். 37. சேர்தரு. 38. சேர்ந்தக. 39. மீசனைக். 40. நமக்கே. 41. தேன்றூங்கிய வுயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம். 42. ஒழிக்கும். 43. னைந்தடிக்குரிய. 44. ஓசைசேவறுபா டுணர்த்துச். 45. தளைகள் வேறுபாடு. 46. வெண்சீரினிறுதவருஞ் சீரும் வெண்சீராதலின் இயற்சீராதல் வெண்டளையாக வேண்டுதலின். 47. சீரியை. 48. றறையல். 49. பொதுப்பெறக் 50. பெறா. 51. வெனக்கொள்க. 52. கலித்தளை 53. மரம்வெம்ப. 54. வயிற்கொண்ட. 55. அன்றின்றி யீகை யொனியான வலங்கொண்டது நினையாய். 56. யளவடிக் 57. விராய்நிலை. 58. பிறவாகிய 59. என்பதின் 60. நேரொன்றாசிரியத்தளை வந்தவாறு காண்.க 61. அவ்விலக்கணங்களத்தன்மையான். 62. னிற்கவும் பெறுமே. 63. டழிய. 64. முதலீரடிக்கும். 65. முடுகிபலாகிய 66. கலிப்பாவினறியப் பெறுமாயிற்று. 67. அடியாவதற்கு முடுகியல் நீக்கப்படா தென்றவாறு. எனவே கலிப்பாவிற்கு அடியாவது இரண்டசை. 68. அறுசீரடி. 69. அறுசீரடி. 70. அடிகளின். 71. எண்சீரிறுதி சிறப்புடைத் தெனவும். 72. உரைப்பினளவிறந். 73. இதுவுமது. 74. முச்சீர்த்தாகும் என்றவாறு. 75. வந்தவாறு கண்டுகொள்க. 76. பாவினிடையடியும். 77. லாதே. 78. வரப்பெறும். 79. எதிர் நோக்கிக். 80. கொச்சகக் கலியினுள். 81. முறுவலராயத்து. 82. வந்தவாறு கண்டு கொள்க. 83. வொன்றே. 84. அசைச்சீராகு மவ்வயினான. 85. இதன்முன்னர் ஒரு பிரதியிற் பின்வருமாறு காணப்படுகிறது. பாசடை வெண்பாட் டவரே வடியானிசிற் சமநிலை வெண்பாட் டெனப்பெயர் பெறுமே. என்பாரும் உளராலே தென்பவாறு வந்தவழிக்காண்க. 86. பெறுமுடிபாகும். 87. பணிமொழி. 88. நன்றல்லா. 89. கொள்ளப்படுமென்றவாறு. 90. முச்சீ. 91. கலிப்பாவின். 92. மாகி முடியவும் பெறும். 93. ஈட்டப்பட்ட. 94. செய்யுளுறுப் போத்துள். 95. றொடுப்பது. 96. சொல்லொடு சேர்த்திக். 97. ஏன்ற. 98. வென்மனார். 99. மேற் சொல்லப்பட்ட யாப்புப்பாகுபடுமாறும் அதன் இயல்பும் உணர்த்துதல் நுதலிற்று. 100. தொடர்வழிக்கண். 101. மொழியது. 102. காக்கப்பட்டது. 103. அடிகள் பலவாற்றானும். 104. என்றனைத்தே செய்யுள் என்றமையின். 105. பொருண்மேற்றுச். 106. எழுவகையானும் எழுவகை வழுப்படாமற். 107. தீர்ந்தவகையாகிய. 108. கூறல். 109. அவ்வியல்பு. 110. இனித்தூக்காமாறு உணர்த்துவாராய். 111. உச்சரிக்கப்பட்டது. 112. நின்றதோர். 113. கண்டுகொள்க. 114. அஃதான். 115. வாச்சியம் போன்றறி வோசைத்தாக்கி. 116. கண்டுகொள்க. 117. துள்ளித்துள்ளி. 118. இறுதியற்ற. 119. யறாதவாறு. 120. தனிநிலை. 121. என்றது. 122. பட்டாங்கு. 123. பட்டாங்குக். 124. பட்டாங்குக். 125. சொல்லுதலால். 126. பெற்றுவந்த. 127. அதிகரிக்கப்பட்ட. 128. அவ்வகை சொல்லப்பட்ட நால்வகையும் என்றவாறு. 129. தொடைகள் பாகுபடுமாறு. 130. மமைத்தன. 131. அமைத்து ஆராயின். 132. தொடைக்குப் பாகுபாடு. 133. ஏற்பவும். 134. ஒன்றிவரத்தொடுப்பது. 135. மற்றை. 136. பதிவயிற். 137. பெறுமென்றவாறு. 138. கனங்குழாய் காடென்றாரக்காட்டுக. 139. வகுத்தலை. 140. ஒத்துவரின். 141. மிடர்ப்பட்டன.1 142. என்றவாறு. 143. பெருவடந். 144. கடனே. 145. முற்றுமென்ப என்பதற்கு உதாரணம். 146. கண்டுகொள்க. 147. சூத்திரத்துக் 148. இச்சூத்திரந்தானே கூறும். 149. தானே. 150. பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது என்ற தொகை பெறுதற்கு `றொன்று மென்ப வுணர்ந்திசி னோரே’ எனப் படங்கொண் டதாகக் கருதுவர்பேராசிரியர் முதலியோர். ஆயினும் கிடைத்த ஏட்டுப்பிரதிகள் இரண்டிலும் உள்ளபடியே இங்குப் பதிப்பிக்க லாயிற்று. யாப்பருங்கல விருத்தியிற் (பக். 174) காட்டப்பெறும் சங்க யாப்புடையார் சூத்திரம் இத்தொகை வரலாற்று முறையில் வந்துள்ளதே யென வற்புறுத்துகின்றது. 151. யாகிய. 152. ஏகாரம் பதினேழு. ஒகாரம் பதினாறு, உகரம் இரண்டு, ஊகாரம் இரண்டு, ஏகாரம் ஒன்று, ஓகாரம் ஒன்று இவை யொழித்து. 153. கடையிடை, கடையிணை பின்கடைக்கூழை இடைப்புண ரென என்ற பாடபேதம் நச்சினார்க் கினியருரைப் பதிப்பிற் கீழ்க்குறிப்பாகக் காணப்படுகின்றது. 154. வருத்தி. 155. துன்னுபுமாந்தரென்ப 156. மீன்றேர்ந்து வருந்திய. 157. தேம்படுகுறுஞ்சுனை. 158. சுடர்புனை 159. ராழா வொருசாரார். 160. வாடாப்புலரி. 161. ரலரென்னீர்மனங். 162. ஏனையவும் இவ்வாறு. 163. வேறு வந்துணர்த்துவார்க் கெல்லாம் 164. பாருண்முடியுங்காறும். 165. பலநோக்காகி வருதலும். 166. கிடந்ததனை. 167. பாவிரிகையே. 168. வாராமை யளவடியான். 169. பாகுபடநில்லாது. 170. வஞ்சிப்பாவினும். 171. வுறூஉவென்றவையுமன்ன. 172. போல்வன. 173. எல்லாமறிந்தார்க்குத் 174. தற்றே. 175. பெரியோரான் நகுதலின்றித் 176. ஆம். 177. ஒத்தாழிசைக் கலியென்க வெனத் 178. நான்குபாவின். 179. வானவன். 180. மென்றோளசைஇ. 181. வெற்ப நல்கிருள். 182. வஞ்சியடி. 183. இவ்வுரையாசிரியர் கூறுமாறு இச்செய்யுளை அடிவரையறை செய்தற்கு இயலவில்லை. இவர் கொண்டுள்ள பாடத்தில் வேறுபாடு இருத்தல் கூடும். 184. குருநிறத்தன. 185. தூறவுநெறி யிறைவனாகி. 186. பத்தியினாற் 187. அளவி. 188. அளவிற். 189. பரிந்தபாட்டுப் பரிபாட்டென வரும் 190. பல வெண்பாவாகிப் பலவுறுப்புக்களோடு. 191. வேற்றுப் 192. னினிய பழங்கொண்டே. 193. யெல்லையே. 194. பாய்ந்தொழுகும். 195. முற்றாப் 196. யிரைமேயுந் 197. மரம்பொன்றும். 198. முடிவது. 199. திறனின்றி. 200. காட்டுதும். 201. பரிபாட்டு. 202. எருத்தமும். 203. கலிமருட்பாவென் றோதப்பட்ட எல்லாப் பாவின் உறுப்புடைத்தாதல். 204. மிடைதலுங் 205. ஆரடியராகந் 206. யூரேயவற்றி 207. யடக்கியல் வகையிடைக்கவும். 208. மொழியிசை யாகியும் வழியிசை புணர்த்துஞ் 209. சொற்சீரடியாமாறு. 210. ஒழியிசையாகியும் என்றது ஒழிந்த விசையினை யுடைத்தாகியும். 211. பிறிதுமோர்சீர்வரத் தொடர்வதோ ரசைவரத் 212. அரிமலர். 213. மேவலுட் பணிந்தமை. 214. இவ்வுறுப்பினை அடிவரையறை செய்து நான்கு அராகங்களாகக் காட்டுதற்கு இயலவில்லை. பரிபாடற் பதிப்பில் ஸ்ரீராகவையங் காரவர்களது ஏட்டிற்கண்ட பாடங் கொடுக்கப்பட்டுள்ளது பிறிதோர் ஏட்டுப்பிரதியின் பாடம் இங்கு தரப்படுகின்றது. 215. கொண்டன்றுவகை தலைக்கூட்டிய. 216. வாரணி. 217. மாடைய. 218. நெய்யணியானை மிசையரா பொய்யெனத் 219. மமைப்போரு. 220. மெய்வாயு. 221. பேயெண்ணாப் புணைபடக் கூட்டிப் போவுநர் 222. மரைபாடு. 223. யிகல்பலசெல்ப சிவளைத்தவவட் 224. லகலும் பையைத்தது. 225. லிடைக்கண்டு. 226. செய்தே. 227. கயத்தக்க. 228. செவ்வி 229. டாடித் 230. புனலோடு போய்துராய்ப். 231. நினைப்பாரை நெஞ்சிடுக்கண் செய்யுங்கா லன்புடன் 232. ளூடாளோ வூர்த்தலர் வந்தூர்ந்து. 233. தூவிற்றென் 234. தூவல்லா. 235. தேமெய்; தேமேவ 236. விரைபிரை. 237. கிடையென. 238. நடைபயின் 239. இடைநிலைக் கிளவியு. 240. இவை முறையினால் தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனக் கிடைக்கை முறையானே கூறாது தாழிசையை முற்கூறியவதனால் இப்பாவிற்கும் ஒத்தாழிசை சிறந்ததாக முற்கூறினார். 241. முந்துறத். 242. நாலிரண்டிழிபா வாறிரண்டுயர வேறவும் பெறுமே. 243. இடைநிலைக் 244. வனப்பொரீஇ. 245. யுருப்பேறக் கனையெரி. 246. புறப் பொருள் வெஃகின்முன் 247. வாற்றிடைச் 248. கலிகொண்ட. 249. பராஅ. 250. இத்தொடர் ஒருபிரதியில் இல்லை. (பிரதி) 251. தாழிசை தரவுதானே வரினும். 252. வுரவுக்கால் 253. நினைத்துச். 254. நினைவரு. 255. றகைத்த. 256. புன்வருந். 257. லென்பதுகந்தவர்க். 258. வருந்தின. 259. பூண்கதன். 260. வாயன. 261. மிக்கு. 262. ஏற்றது. 263. வலர்மலிதரு. 264. கூறுதலினது. 265. ன்மாதரா. 266. வெண்பாவினுட் பிறதளை வருதலிற் பிறதளையானும் வந்த. 267. தான்வேண்டிற். 268. தாதுகுக்கும். 269. போதெழி. 270. அது. 271. றடித்தே. 272. அளவணர்த்துதல். 273. முந்நாலடித்தே. 274. களவெழு. 275. மேற்காட்டுதும். 276. புறுநிலை வாயுறை செவியறி வென்றிவை தொகுநிலை யளவி னடியில வென்ப. 277. கைக்கிளைப் பொருட் செய்யுளும். 278. மருட்பாவினாலும். 279. மேற்கூறப்பட்டது. 280. கொச்சகக்கலிப்பாவுக்கு 281. வகைப்படும். 282. மொழியினான. 283. மறையொடு. 284. அவைவருமாறு. 285. பொருந்தி. 286. பிரித்த. 287. நுண்ணிதாகிய பொருள் விளக்கலாவது நூற்கியல்பாம். 288. மீரிரு. 289. காட்டுதும். 290. தான. 291. விளக்கி. 292. ஒருங்குசேரவைத்தாற்போல. 293. ஓரோவோரினமாகி. 294. பலவுடைத்தாகி. 295. பாட்டினிடையிடை. 296. இரண்டுவகையாவது. 297. கூறுவரோவெனின். 298. கூறலென்க. 299. யிரண்டுங் கூறப்படுமெனப். 300. பிசிநிலைவகையாமாறு. 301. மமமென்னும். 302. கிளந்த. 303. அப்பாவிற். 304. சீறிசை. 305. காட்டுதும். 306. வருவதொன்றாதலின். 307. வருதலிற். 308. பகுதி படுமாறு. 309. நாற்சீரின். 310. பன்னிரண்டு வகைப்படும். 311. முதலாகிய. 312. வினைவென்ற 313. தன்மையின்விரிந்து. 314. மண்ணிடையே. 315. மகளிர்க்கு... தசொற்சீர். 316. னடியிணையே. 317. பணிந்து. 318. கனியெறிந்த மாமாயன். 319. தோழீஇ. 320. தோழீஇ. 321. மாமாய. 322. னெல்லிநம். 323. தோழீஇ. 324. ஒருபிரதியில் இவ்வாக்கியங்கள் காணப்பெறவில்லை. 325. றுடர்ந்து. 326. யிடையடி சிலசீர். 327. நரையுருமோ நுங்கை வேலஞ்சுக. 328. தனிவருவது. 329. குருகீன்றன. 330. வரக்காணேன். 331. கழல்வனபோ னெஞ்சகைந்து. 332. மேலும் வந்தவழிக் கண்டுகொள்க. 333. நெடிலடியாகிய ஐஞ்சிரடி நான்கினான்வருவது. ஓரடி பதினைந்தும் பதினாறும் பதினேழும் எழுத்துப்பெற்று வருவன. 334. கனியுந். 335. படுமடியுளர்க். 336. அறுசீர்முதலாக மிக்க அடி நான்கடியும் ஒத்துவருவது. 337. ளெனப்பொரு. 338. தினவண்டு 339. வலத்பதாற். 340. பொருதலைத் 341. யாழாவொருசாரார். 342. வொருசாரார். 343. தளைந்தன. 344. வெழுபெருந் 345. முறைமையி 346. பாடும். 347. மறைந்த சால்பொடு. 348. இடந்தலைப்பாடும். 349. மலிதலும். 350. புணர்ந்தவுங். 351. களவினிற் 352. களவிற் கிளவிக்குரியராமாறு உணர்த்துதல் நுதலிற்று. 353. பார்ப்பார். 354. ஆச்சினை. 355. மதகளி. 356. மருங்கி னிற்புறம். 357. மர்ரிவனஞ்சுவன். 358. சொல்லுப் பொறுவர். 359. தலைமகளை. 360. ரறிவோ. 361. கூற்றுங். 362. தம்முளுமுரிய. 363. உசாவிடத்துக் கிழத்தியைவிடாது தத்தம்முள் உசாவுதலுமுரித்து. 364. பொருளாற். 365. கழிபடர்ப். 366. வருதலை. 367. பொருண்மை யெய்திய நெறியினாற் 368. பழுதறு. 369. நேர்ந்த தங்காதலா னேமி. 370. மொழியுங் 371. இப்பொருண்மை. 372. ஆற்றமையும் பிறவுங். 373. படுத்துதலின். 374. பொருளொடு முடிந்துநின்றது. 375. ஆராய்ந்துரைக்கும் புலனாமாறு. 376. காலத்திலக்கணப் புணர்ச்சி யுண்மைதோன்ற. 377. குறித்துவந்தது. 378. அதன்பின்பும் இதுபயக்குமென. 379. வாரலெனினே. 380. வருமாறு 381. விசாரித்துணரக் கூறுதலின்றி. 382. யுய்ந்தனன் கொல்லெ மார்பெடுக்கல்லே. 383. வென்னை 384. சூரே. 385. முதலாக எட்டுக்கறியையும். 386. குரியாபாரு 387. மக்களும். 388. துறவத. 389. வழக்கே. 390. யுடைநிலை மொழியினுந் தொடர்நிலை. 391. வண்ணமாய்வருவது. 392. அவற்றின் பாகுபாடு முன்னின்ற. 393. வண்ணவறுப்பாமாறு உணர்த்துதல். 394. சொற்சீர்த்தாகி. 395. நீங்காதே யொட்டு. 396. வாள்வெள் 397. யியலும். 398. பயின்றுவருங் சீரினை யுடைய வண்ணம். 399. நீரூர். 400. தொகுதிபெயல் 401. நெடிலுங் குறிலும். 402. மார்வ. 403. னெரி(யி)ணர்ப். 404. தாயிற் சென்று வம்புத். 405. வின்னினி. 406. மொரீஇத் தொடுக்கும். 407. தொடையாகிக் கிடப்பது. 408. அகைப்பு வண்ணமாவது அறுத்தறுத்தியலும் என்றவாறு. 409. சொல்லியது. 410. சொல்லியது சொல்லினிற் சொல்லப்பட்டது சிறக்கும். 411. முடுகுவண்ண, மடியிறந்தோடி யதனோரற்றே. 413. மிக்கோரடி யராகந் தொடுக்கும். 414. யிவையென. 415. என்பனவற்றோடுறழ. 416. வனப்பியறானே வகுக்குங்காலைச் சின்மென் மொழியாற் சீர்புனைந்தியாப்பினம்மைதானே யடிநிமிர்வின்றே. 417. வனப்புப் பாகுபடுக்கமாறு அம்மையாகிய. 418. சீர்புனைந்து. 419. விழுமிது. 420. தொன்மொழிப். 421. முழங்கின. 422. பொருளாகக் 423. விருந்து தானே. 424. புதிதாகப் புனைந்த 425. மொழியினிழல்வழி 426. யியைபென மொழிப. 427. பொருள் விளங்குவது. 428. பரந்த. மரபியல் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் நெடுங்காலமாக வழங்கிவரும் சொற்பொருள் மரபு உணர்த்தினமையின் இது மரபியல் என்னும் பெயர்த்தாயிற்று. ‘இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட பொருட்கு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து’ என்பர் இளம்பூரணர். “கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும் செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமின்றி, இருதிணைப் பொருட் குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும்; அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும்; அவை பற்றிவரும் உலகியல் மரபும் நூன் மரபும் என இவை யெல்லாம் மரபெனப்படும்” எனவும், “முன்னர் வழக்கிலக்கணங் கூறி யதன்பின் செய்யுளிலக்கணம் செய்யளியலுட் கூறினான், அவ் விரண்டிற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயையுடைத்தாயிற்று” எனவும், “வழக்குஞ் செய்யுளுமென்று இரண்டு மல்லாத நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது” எனவும் கூறுவர் பேராசிரியர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 112-ஆக இளம்பூரணரும், 110-ஆகப் பேராசிரியரும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி எனவரும் இவ்வொன்பதும் இளமைப் பண்பு பற்றிய மரபுப் பெயர்களாகும். ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் ஆண்பால் பற்றிய மரபுப் பெயர்களாகும். பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பன பெண்மை பற்றிய மரபுப் பெயர்களாம் - என இம்மூவகைப் பெயர்களையும் இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆசிரியர் தொகுத்துக் கூறியுள்ளார். இளமைப் பெயர் - இளமைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்ன வற்றுக்கு உரியன என்பன இவ்வியலில் 4-முதல் 26-வரையுள்ள நூற்பாக்களால் விரித்து விளக்கப் பெற்றுள்ளன. பார்ப்பு, பிள்ளை என்னும் இரண்டும் பறப்பவற்றின் இளமைப் பெயர்களாம். இவை ஊர்வனவற்றிற்கும் உரியனவாம். மூங்கா, வெருகு, எலி, அணில் என்னும் இவை நான்கும் ‘குட்டி’ என்ற பெயர்க்குரியன இவற்றைப் ‘பறழ்’ என்ற பெயரால் வழங்கினும் குற்றமில்லை, நாய், பன்றி, புலி, முயல், நரி என்பவற்றின் இளமைப் பெயர் ‘குருளை’ என்பதாகும். இவ்வைந்தினையும் ‘குட்டி’ ‘பறழ்’ என்ற பெயர்களால் வழங்குதலும் பொருந்தும். மேற்கூறிய ஐந்தனுள் நாயல்லாத ஏனை நான்கிற்கும் ‘பிள்ளை’ என்ற பெயரும் உரியதாகும். யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் எனச் சொல்லப் பட்ட ஐந்தும் ‘மறி’ என்னும் இளமைப் பெயர் பெறுவன. மரக்கிளையினையே வாழுமிடமாகக் கொண்ட குரங்கும் ‘குட்டி’ என்று கூறப்படும். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்ற இந்நான்கு பெயர்களும் ‘குட்டி’ என்பது போல அக் குரங்கின் பகுதிக்கு உரியவாகும். ‘கன்று’ என்னும் பெயர்க்குரியன; யானை, குதிரை, கழுதை, கடமை, மான், எருமை, மரை, கவரி, கராகம் ஒட்டகம் என்பனவாம். ‘குழவி’ என்ற பெயர்க்குரியவை: யானை, ஆ, எருமை கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் என்பனவாம். மேற்குறித்தவற்றுள் குழவி, மக, என்ற இரு பெயர்களைத் தவிர ஏனைய பெயர்கள் மக்களுக்கு உரியனவாக வழங்கப்பெறா. பிள்ளை, குழவி, கன்று, போத்து என்னும் இந்நான்கும் ஓரறிவுயிர்கட் குரியனவாய் வழங்கும் இளமைப் பெயர்களாம். இப்பெயர்களால் நெல்லும் புல்லும் குறிக்கப்பெறுதல் இல்லை. பயின்று வழங்கும் இளமைப் பெயர்களைக் கூறுமிடத்து மேற்கூறியவை யன்றி வேறில்லை என்பர் தொல்காப்பியர். அறுவகை உயிர்ப்பாகுபாடு:- மேல் இளமைப் பெயர் பற்றிய மரபு கூறும் வழி, ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடு அதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் அறுவகையாக இவ்வியல் 27-முதல் 34-வரை யுள்ள சூத்திரங்களால் வகைப்படுத்திக் கூறியுள்ளார். உற்றால் அறிவதாகிய உடம்புணர்ச்சி யொன்றேயுடையது ஓரறிவுயிர். பரிசவுணர்ச்சியாகிய அதனோடு சுவையறிதலாகிய நாவுணர்வும் உடையது ஈறறிவுயிர். இவ்விரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலாகிய நாற்ற வுணர்ச்சியும் உடையது மூவறிவுயிர். இம்மூவகையுணர்வுடன் கண்களாற் கண்டறிதலாகிய ஒளி யுணர்ச்சியும் பெற்றது நாலறிவுயிர். இந்நால்வகை யுணர்வுடன் ஓசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப் பெற்றது ஐயறி வுயிராகும். மேற்கூறிய ஐம்பொறி யுணர்வோடு உய்த்துணர் வாகிய மனவுணர்வும் பெற்று விளங்குவது ஆறறிவுயிரெனப்படும். புல்லும் மரனும் ஓரறிஉடையன. அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம். நந்தும் முரளும் ஈரறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. சிதலும் எறும்பும் மூவறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. நண்டும் தும்பியும் நான்கறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. மாவும் புள்ளும் ஐயறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. மக்கள் தாம் ஆறறிவுடைய உயிர்களாவர்; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம் என்பர் ஆசிரியர். உலகிலுள்ள உயிர்த்தொகுதிகளின் உடம்புகளையும் அவ் வுடம்புகளில் வையிய உயிர்கள், மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளும் மனமும் ஆகிய அறுவகை வாயில்களையும் படிப்படியாகப் பெற்று அறிவினாற் சிறந்து விளங்கும் இயல்பினையும் நன்கு கண்டு. அவற்றை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறவகையாகப் பகுத்துரைக்கும் இம்முறை, தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே நுண்ணறிவுடைய புலவர்களால் ஆராய்ந்து வகுக்கப்பெற்று வழங்கிவரும் தொன்மை வாய்ந்ததென்பதனை ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’ (தொல்-மரபு-27) என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படையாய் விளங்குவது மன வுணர்வாயினும், மனமாகிய கருவியினை வாயிலாகக்கொண்டு நன்றுந்தீதும் பகுத்துணரும் ஆற்றல் மக்களாகிய ஒருசார் உயிர்த் தொகுதிக்கே வெளிப்படப் புலனாதலின் ‘மக்கள் தாமே ஆறறி வுயிரே’ என்றார் ஆசிரியர். ஒரு பொருளைக் குறித்து மனம் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பொருள் கண்ணெதிர்ப்பட்டால் அதனைக் கண்ணென்னும் பொறியுணர்வு கொள்ள அவ்வுணர்வின் வழியே மனம் திரிந்து அக்காட்சியில் அறிவித்தது பொறியுணர்வாதலால் மனவுணர்வும் பொறி யுணர்வும் தம்முள் வேற்றுமையுடையன என்பது புலனாம். அன்றியும் தேனாகிய சுவைப்பொருளை நாவென்னும் பொறி யுணர்ந்தவழி இன்புறுதலும் அதனையே கண்ணுள் வார்த்து மெய்யுணர்ந்த வழித் துன்புறுதலும், கத்தூரியாகிய மணப் பொருளை மூக்கு உணர்ந்தவழி இன்புறுதலும் அதனையே கண்ணுணர்ந்த வழி இன்பங் கொள்ளாமையும் உடைமையால் அவை அவ்வப் பொறியுணர் வெனப்படும். மனமானது, கனவு நிலையிற்போன்று நனவு நிலையிலும் ஐம்பொறிகளின் உதவி வேண்டாது பொருள்களின் நலந்தீங்குகளைப் பகுத்துணரும் ஆற்றலுடையதென்பர் அறிஞர். அங்ஙனம் ஐம்பொறிகளின் உதவியின்றி மனம்தானே உய்த்துணரும் உணர்வு மனவுணர் வெனப்படும். இவற்றுள் ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படையாய் முற்பிறந்தது மனவுணர்வாமாகவே, பொறியுணர் வென்பது, இதனை நுகர்கின்றோம் என்று எண்ணும் உய்த்துணர்வுக்கு இடமின்றியே அவ்வப் பொறிகளுக்கு அமைந்த பழக்க மெனக் கருதும்படி தன்னியல்பில் நிகழ்வதாகும் எனப் பேராசிரியர் விளக்கிய திறம் இங்கு நினைக்கத் தகுவதாகும். ஆண்பாற் பெயர்:-இவ்வியல் 35 முதல் 51 வரையுள்ள சூத்திரங்களால் ஆண்மைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்னவற்றுக்கு உரியன என்பது விரித்துரைக் கப்படுகின்றது. ‘களிறு’ என்ற ஆண்பாற் பெயரால் விதந்து பேசப்படுதல் யானைக்கு உரியதாகும். பன்றியும் களிறு என்ற பெயரால் வழங்குதல் விலக்கத் தக்கதன்றாம். ‘ஒருத்தல்’ என்னும் பெயர் பெறுவன: புல்வாய், புலி, உழை, மறை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்பனவாம். ‘ஏறு’ என வழங்கப்படுவன: பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, சுறவு என்பனவாம். ‘போத்து’ என்ற பெயர் பெறுவன: பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்சாதி, மயில், எழால் என்பனவாம். ‘இரலை’, ‘கலை’ என்ற பெயர்கள் இரண்டும் புல்வாய் என்னும் இனத்துள் ஆண்பாற்கு உரியன. இவற்றுள் ‘கலை’ என்னும் பெயர் உழை, முசு என்பவற்றிற்கும் உரியதாகும். மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற பெயர்கள் ஆடுகளில் ஆண்பாற் குரியனவாய் வழங்கும். சேவல் என்ற பெயர், தோகையையுடைய மயிலல்லாத ஏனைப் பறவையினத்துள் ஆண்பாற்கொல்லாம் ஒப்பவுரியதாகும். ‘ஏற்றை’ என்ற பெயர், ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் பொதுவாக வழங்குதற்குரியதாம். ‘ஆண்’என்றுசொல் இருதிணை ஆண்பாற்கும், ‘பெண்’ என்றசொல் இருதிணைப் பெண்பாற்கும் வழங்குதல் உலக வழக்கிற் காணப்படும். பெண்பாற் பெயர்:- பெண்மைப்பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்னவற்றுக்குரியன என்பதனை இவ்வியல் 52-முதல் 68-முடியவுள்ள சூத்திரங்களாலும் இம் மரபுபற்றிய அதிகாரப் புறனடையினை 69, 70-ஆம் சூத்திரங்களாலும் எடுத்துரைப்பர் ஆசிரியர். ‘பிடி’ என்னும் பெண்பாற் பெயர், யானையினத்துக்கு உரியதாகும். ‘பெட்டை’ என்ற பெண்பாற் பெயர் பெறுதற்குரியவை. ஒட்டகம், குதிரை, கழுதை, மரை என்பனவும் பறவைகளும் ஆகும். ‘பேடை,’ ‘பெடை’ என்ற பெண்மைப் பெயர்கள் பறவை யினத்துக்குப் பொருந்துவன. ‘அளகு’ என்னும் பெண்மைப் பெயர், கோழி, கூகை என்ற இவ்விரண்டிற்கல்லது ஏனையவற்றுக்கு ஏலாததொன்றாம். இப் பெயர் ஒரோவழி மயிலுக்குரியதாய் வருதலும் உண்டு. ‘பிணை’ என்னும் பெண்மைப் பெயர்க்குரியன: புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் நான்குமாம். ‘பிணவு,’ ‘பிணவல்’ என்னும் பெண்மைப் பெயர்கள் பன்றி புல்வாய், நாய் என்பவற்றுக்கு உரியன. ‘ஆ’ என்னும் பெண்மைப்பெயர், பெற்றம், எருமை, மரை என்ற மூன்றிற்கும் உரியதாகும். ‘பெண்,’ ‘பிணவு’ என்ற பெயர்கள், மக்களிற் பெண் பாலுக்கு உரியனவாம். ‘நாகு’ என்னும் பெண்பாற்பெயர், எருமை மரை, பெற்றம், நீர்வாழுயிராகிய நந்து என்பவற்றுக்கு உரியதாகும். ‘மூடு,’ ‘கடமை’ என்ற பெண்மைப் பெயர்கள் ஆட்டினத் துக்கே உரியனவாம். ‘மந்தி’ என்னும் பெண்மைப் பெயர், குரங்கு, முசு, ஊகம் என்ற மூன்றற்கும் உரியதாகும். ஆண் குரங்கினைக் ‘கடுவன்’ என்றும், மரப் பொந்தினுள் வாழும் கூகையைக் ‘கோட்டான்’ என்றும், கிளியைத் ‘தத்தை’ என்றும், வெருகினைப் ‘பூசை’ என்றும், ஆண் குதிரையைச் ‘சேவல்’ என்றும், பன்றியை ‘ஏனம்’ என்றும், ஆண் எருமையினைக் ‘கண்டி’ என்றும் இவ்வாறு வழங்கும் பெயர்கள் வழக்கினுள் நிலைபெற்று விட்டமையால் இவை கற்றறிந்தோரால் விலக்கப்படா எனவும், ‘பெண்’ ‘ஆண்’ ‘பிள்ளை’ என்ற பெயர்களும் மேற் கூறியவாறு வழக்கினுள் நிலைபெற்றன எனவும் கூறுவர் ஆசிரியர். இவ்வியலில் 71 முதல் 85 முடியவுள்ள சூத்திரங்கள் பதினைந்தும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபு உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூல், கரகம், முக்கோல், மணை என்பன அந்தணர்க்கு உரியனவாம். படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி முதலாகப் பொருந்துவன பிறவும் அரசர்க்கு உரியனவாம். அந்தணாளர்க்கு உரியனவாக ஓதப்பட்டவற்றுள் அரசர்க்குப் பொருந்துவனவும் சில உள. பரிசில் கடாநிலையும் பரிசில் விடையும் போல்வனவும் பாடாண்திணைக்குரிய துறைப்பொருள் பற்றிவரும் கிழமைப் பெயர்களும் நெடுந்தொகை, செம்மல் என்பன முதலாகவரும் பிறவும் சாதிவகையாற் பொருந்தச் சொல்லப் பெறுதல் அந்தணர்க்கு உரியதன்றாம். ஊரும், இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஆகிய பெயர்களும் தத்தமது தொழிலுக்கேற்ற கருவியும் ஆகிய அவை அவரவர்களைச் சார்த்திச் சொல்லப்பெறும். தலைமைக்குணமுடையாராகக் கூறுஞ்சொல்லும் அவரவர் நிலைமைக்குப் பொருந்துமாறு கூறப்படும். இடையிருவகையோராகிய அரசரும் வணிகரும் அல்லது ஏனையோர் படைப்பகுதி பெறார். வைசிகன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறு வான். எட்டுவகைக் கூலங்களாகிய கூலங்களைப் பெருக்குதலும் வணிகரது கடமையாகும். கண்ணியும் தாரும் அவர்க்குச் சொல்லப்பெறும். வேளாண் மாந்தர்க்கு உழுதுண்டு வாழ்தல் அல்லது வேறு தொழில் இல்லை யென்பர். வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினால் படையும் கண்ணியும் அவர்க்கு உளவாம் என்று கூறுவர். அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் நீக்கத் தக்கதன்று. வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் எனச் சொல்லப்பட்டன வெல்லாம் மன்னனால் ஏவப்படும் மரபுடைய ஏனோர்க்கும் உரியவாகும். அன்னராயினும் இழிந்தோர்க்கு இவை கூறப்படுதல் இல்லை. உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபுகளைக் கூறுவன வாக 71 முதல் 85 முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும் பிற்காலத்தாரால் இவ்வியலிற் புகுத்தப்பட்ட இடைச்செருகல் என்பது முன்னர் விளக்கப்பட்டது. மக்களை நிலைவகையாற் பகுத்துரைப்பதன்றி நிறவகை யாகிய வருணத்தாற் பகுத்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களது ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் முன்னைய இயல்களில் யாண்டும் குறிப்பிடவேயில்லை. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாகத் தம் காலத்திற் பயின்று வழங்கிய மரபுப் பெயர்களைத் தொகுத் துணர்த்தும் முறையிலேயே அசிரியர் இம்மரபியலை அமைத்துள்ளார். இதன் கண் 1-முதல் 70-வரையுள்ள சூத்திரங்களும், 86-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களும் இம்மரபினையே தொடர்ந்து விரித்துரைப்பனவாக அமைந் துள்ளன. இயல்பாக அமைந்த இத்தொடர்பு இடையுறவு பட்டுச் சிதையும் நிலையில் உயர்திணை நான்கு சாதிகளையும் பற்றிய பதினைந்து சூத்திரங்கள் 71-முதல் 85-வரையுள்ள எண்ணுடை யனவாக இதன்கண் இடையே புகுத்தப்பட்டுள்ளன. முன், அகத்திணை யொழுகலாற்றுக்குரிய மக்களை வகைப் படுத்துக்கூறிய நிலையிலும் புறத்திணை யொழுகலாற்றில் வாகைத் திணைப்பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை அவர்கள் வாழும் நிலத்தாலும் அவரவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்ததன்றி அவர்களை வேளாண் மாந்தரென்றோ வைசியரென்றோ இவ்வாறு வருணம் பற்றி ஆசிரியர் யாண்டும் குறிப்பிடவேயில்லை. வைசிகன் என்ற சொல், சங்கச் செய்யுட்களில் யாண்டும் வழங்கப்பெற்றிலது. வருணம் நான்கு என்ற தொகையினை ஆசிரியர் முன் தெளிவாகச்சொல்லாத நிலையில் அரசர் வணிகர் என்ற இருதிறத்தாரையும் ‘இடையிரு வகையோர்’ என இங்குக் குறிப்பிட்டார் எனல் பொருந்தாது. அன்றியும் இவ்விருதிறத்தோரல்லாத பிறாக்குப் படைப்பகுதி கூறுதல் இல்லையெனக்கூறும் இவ்வியல் 77-ஆம் சூத்திர விதி, பின்னுள்ள 82-ஆம் சூத்திர விதிக்கும் சங்க நூல்களிற் காணப்படும் பழந்தமிழ் வழக்குக்கும் முற்றிலும் முரண்பட்டதாகும். வேளாண் மாந்தர் என்றதொரு குலப்பிரிவு தொல்காப்பியனாரால் முன்னர்க் குறிக்கப்பெறவில்லை. உரிப்பொருளாகிய ஒழுகலாறு பற்றிய இச்செய்திகள் முதல், கரு, உரி என்னும் பொருட் பகுதிகளை விளக்க அகத்திணையியல். புறத்திணையியல் முதலாக முன்னுள்ள இயல்களிற் கூறத்தக்கனவேயன்றி, மரபுச் சொற்களின் வழக்குப் பயிற்சியைக் கூறுதற்கமைந்த இம் மரபியலில் இடம் பெறத்தக்கன அல்ல. ஆகவே, 71-முதல் 85-வரையுள்ள இச்சூத்திரங்கள் பதினைந்தும் நால்வகை வருணப் பாகுபாடு இத்தமிழ் நாட்டில் உலக வழக்கில் வேரூன்றத் தொடங்கிய மிகப் பிற்காலத்திலே தான் இம்மரபியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும், பிற்றைநாளில் களப்பிரர், பல்லவர் முதலிய அயல் மன்னரது ஆட்சியுட்பட்டுத் தமிழ்நாடு அல்லற்பட்ட நிலையிலே தமிழரது உரிமை யுணர்வினைச் சிதைத்தற்குரிய இத்தகைய அடிமைக் கருத்துக்கள் சில தமிழ்முதல்நூலாகிய தொல்காப்பியத்திலும் அயலாரால் மெல்லமெல்ல நுழைக்கப்பட்டமை வியப்பிற்குரிய தன்றென்பதும், மனு முதலிய வடமொழி நூல்களால் வளர்க்கப்பட்ட நால்வகை வருணத்தைப் பற்றிய நம்பிக்கை தமிழ் மக்கள் உள்ளத்தில் வேரூன்றி நிலைபெற்றுவிட்ட பிற்காலத்திலே வாழ்ந்தவர்கள் இளம்பூரணர், பேராசிரியர் முதலிய பெருமக்களாதலின் அன்னோர் தொல்காப்பியத்திற்கு உரைகாணும் நிலையில் தம் காலச் சூழ்நிலையில் அகப்பட்டு இடைச் செருகலாகிய இச்சூத்திரங்களைத் தொல்காப்பியனார் வாக்கெனவே உண்மையாக நம்பி உரையெழுத நேர்ந்ததென்பதும் ஆழ்ந்துணரத் தக்கனவாகும். இவ்வியல் 86-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களால் ஓரறி வுயிர்களுக்குரிய சொல்மரபுகள் உணர்த்தப்படுகின்றன. உள்ளே வயிரமின்றிப் புறத்தே வயிரமுடையவற்றைப் ‘புல்’ எனவும், உள்ளே வயிரமுடையனவற்றை ‘மரன்’ எனவும் வழங்குவர். தோடு, மடல், ஒலை, எடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை எனக் கூறப்பட்ட உறுப்பின் பெயர்களும் இவற்றையொத்த பிறவும் ‘புல்’ என்ற வகையைச் சார்ந்துவரும். இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை முதலாகச் சொல்லப்பட்டனவும் அனையவை பிறவும் ‘மரன்’ என்ற வகையைச் சார்ந்து வரும் உறுப்பின் பெயர்களாகும். காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல், மரம் என்னும் அவ்விருவகைக்கும் உரியனவாகும். நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் இவ்வுலகம் ஆதலால் இருதிணையும் ஐம்பாலும் வழுவாமல் திரிபின்றிப் பொருந்திய சொற்களால் உலகத்துப் பொருள்களை வழங்குதல் வேண்டும். உலக வழக்காவது வரலாற்று முறைமை பிறழாது வருதலே தக்கதாதலின் அவ்வழக்கினை அடியொற்றியமைந்த செய்யுட்களும் மேற்குறித்த மரபு நிலையில் திரியாது அமைதல் வேண்டும். மரபுநிலை திரிந்து வேறுபடுமானால் உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து வேறுபட்டுச் சிதைவனவாம். உலக நிகழ்ச்சி யெல்லாம் உயர்ந்தோரையே சார்பாகக்கொண்டு நிகழ்தலால் செய்யுட்கு அடிப்படையாகிய வழக்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, உயர்ந்தோர் வழங்கிய வழக்கேயாகும் என இவ்வியல் 91 முதல் 94 வரையுள்ள சூத்திரங்களால் மரபு பற்றிய இலக்கணத்தை ஆசிரியர் நிறைவு செய்துள்ளார். உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் நெடுங்காலமாகப் பயின்று வழங்கும் மரபுச் சொற்கள், இருதிணையும் ஐம்பாலும் ஆகிய பொருளகளின் இளமைத் தன்மை, ஆண்மை, பெண்மை முதலிய இயல்புகளைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தன எனவும் இருதிணைப்பொருள்களின் இயல்புகளை நுண்ணிதின் விளக்குவனவாகிய இம்மரபுச் சொற்களின் பொருள்நிலை மாறுபடாதபடி உலக வழக்கினையும் செய்யுள் வழக்கினையும் போற்றிக்காத்தல் வேண்டுமெனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியலில் விளக்கிய திறம் அறிந்து போற்றத் தக்கதாகும். இவ்வியலின் இறுதியில் 95 முதல் 112 வரையுள்ள சூத்திரங்கள் நூலினது இலக்கணம் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூலுக்கு இன்றியமையாத மரபிற் பிறழாதனவாகி உரைக் கப்படும் நூல்கள் முதனூல், வழிநூல் என இருவகைப்படும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய முதல்வனாற் செய்யப் பெற்றது முதனூலாகும். முதல்வன் செய்த நூலின் வழியே இயற்றப் பெறுவது வழிநூல் எனப்படும். விரிந்து பரந்த பொருள்களைத் தொகுத்துக் கூறுவதும், தொகுத்துச் சொல்லப்பட்டவற்வை விரித்து விளக்குவதும், தொகையும் விரியும் ஆகிய அவ்விருதிறமும் ஒருங்கு அமைந்ததும், பிறமொழி நூல்களை அடியொற்றி மொழி பெயர்க்கப் பெறுவதும் என வழி நூல் நான்கு வகைப்படும். சூத்திரத்தின் பொருளை விரித்துரைகும் நிலையில் அமைந்த காண்டிகையுரையும் அதனையும் விளங்கக்கூறும் உரை விகற்பமும் உடையதாகிப் பத்துவகைக் குற்றமுமின்றி நுண் பொருளினவாகிய முப்பத்திரண்டு உத்திகளோடும் பொருந்தி வருவது நூல் என சிறப்பித்துரைக்கப்படுவதாம். சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்குமிடத்தும் சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகையுரையினை இயைத் துரைக்குமிடத்தும் இப்பொருளை இவ்வாறு கூறல் வேண்டுமென விதித்தலும், இப்பொருளை இவ்வாறு கூறலாகாது என விலக்குதலும் ஆகிய இருவகையோடு அவ்விடத்துப் பொருந்துவன கூட்டியுரைக்கப்படும். மேல், தொகுத்தல் முதலாக நால்வகையாற் சொல்லப்பட்ட பொருளோடு சிலவெழுத்தினால் இயன்ற யாப்பினதாய், விரித்துரைத்தற்கேற்ற பொருளனைத்தையும் தன்னகத்து அடக்கி நுட்பமும் விளக்கமும் உடையதாகிப் பல்லாற்றானும் பொருளை ஆராய்தற்குக் கருவியாய் விளங்குவது சூத்திரத்தின் இயல்பாகும். சூத்திரத்தில் அமைந்த சொற்பொருள்களை விட்டு நீங்காத விரிவுடன் பொருந்தி அதன் பொருளை முடித்தற்கேற்ற ஏதுவும் எடுத்துக்காட்டும் வாய்ந்த உரை காண்டிகையெனப்படும். சூத்திரத்தினது உட்பொருளேயன்றி அதற்கு இன்றியமை யாது பொருந்துவனவெல்லாம் அதனொடுகூட்டிச் சொல்லுதல் உரையெனச் சிறப்பித்துரைக்கப்படும். மாறுபட்ட கொள்கையை இடையே கொணர்ந்துரைத்து வினாவுதலும், அதற்கு மறு மாற்றமாகிய விடைகூறுதலும் உடையதாய்த் தனக்கு முதனூலாகிய சூத்திரத்தானும் அதன் பொருள் முடிபினை யுணர்த்தும் பிற நூலானும் தெளிய ஒருபொருளை ஒற்றுமைப்படுத்து இதுவே பொருளாகும் எனத் துணிதல் உரையினது இயல்பாகும். மேற்கூறிய இலக்கணமெல்லாம் சிதையாது மாட்சிமைப் படினும் முதனூலொடு பொருள் மாறுகொள்ளின் அந்நூல் சிதைவுடைய தெனவேபடும். முதல்வன் செய்த நூலின் கண்ணே இத்தகைய சிதைவுகள் உளவாகா. முதனூலையே அடியொற்றி ஒருவன் நூல் செய்யினும், வல்லவனாற் புணர்க்கப்படாதவார இசைபோன்று அவ்வழி நூலமைப்பில் குற்றம் நேர்தல் இயல்பேயாம். குற்றங்களாவன: கூறியது கூறல், மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைப்படக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னாயாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கங்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல். என்ன வகையினும் மனங்கோளின்மை என்னும் இப்பத்தும் இவை போல்வன பிறவுமாகும். மேற்கூறிய குற்றங்களின்றி அவற்றுக்கு மாறுபட்ட குணங்களையடையதாதல் நூலிற்கு அழகென்பர். சூத்திரத்தில் அமைந்த பொருளமைப்பினைப் புலப்படுத்து தற்குக் கருவியாகிய நூற்புணர்ப்பு உத்தியெனப்படும். நுதலிய தறிதல் முதல் உய்த்துக் கொண்டுணர்தல் ஈறாக உத்தி முப்பத்திரண்டாகும். “சொல்லிய அல்ல பிற அவண் வரினும் சொல்லிய வகையாற் சுருங்கநாடி மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே” என இவ்வியல் நிறைவு பெறுகின்றது. செய்யுளியலுள் நூலைப் பற்றியும் அதன் பகுதிகளாகிய சூத்திரம், ஓத்து, படலம் என்பவற்றைப் பற்றியும் உரைவகை நடையைப் பற்றியும் விளக்கிய ஆகிரியர், மீண்டும் அவற்றின் இயல்பினை ஈண்டுக் கூறுதல் கூறியது கூறலாமாதலானும், இப்பொருள் பற்றிச் செய்யுளியலில் அமைந்த சூத்திரங்களையும் இவ்வியலில் உள்ள சூத்திரங்களையும் ஒப்பவைத்து நோக்குங்கால் இவ் விருவகைச் சூத்திரங்களும் சொல் நடையாலும் பொருளமைப்பாலும் தம்முள் வேறுபாடுடையவாதல் நன்கு புலனாமாதலானும், நூன்மரபு பற்றிய இச் சூத்திரங்கள், தொல்காப்பியனார் காலத்திற்குப் பின்பு இயற்றப்பெற்று வழங்கியவை, பிற்காலத்தவரால் எல்லாநூற்கும் உரிய பொதுப் பாயிர மரபாக இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டுமெனவும், அதனால் பின்வந்த உரையாசிரியர்கள் இச்சூத்திரங்களையும் தொல்காப்பியனார் வாய்மொழியெனவே கொண்டு உரையெழுத நேர்ந்த தெனவும் எண்ணுதற்கும் இடமுளது. நூலின் இலக்கண முணர்த்துவனவாக அமைந்த இச் சூத்திரங்களின் சொற் பொருளமைதியினைக் கூர்ந்து நோக்குங் கால் இவை காலத்தாற் பிற்பட்டன அல்ல என்பதும் தொல் காப்பிய நூலுடன் அடுத்து வைத்து எண்ணத்தக்க பழமை யுடையன என்பதும் நன்கு விளங்கும். - க. வெள்ளைவாரணனார், நூல்வரிசை -10, பக். 403-418 ஒன்பதாவது மரபியல் 545. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற் பார்ப்பும் பறழுங் குட்டியுங் குருளையுங் கன்றும் பிள்ளையு மகவு 1மறியுமென் றொன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே. 2இவ்வோத்து இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட பொருட்கு மரபு உணர்த்தினமையான், மரபியல் என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள் இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், இளமைப்பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. குழவியொடு இவ்வொன்பதும் இளமைப்பெயராம் என்றவாறு. இதன் பொருள் மேல் விரிக்கின்றான். (1) 546. 3எருது மேற்றையு மோர்த்தலுங் களிறுஞ் சேவுஞ் சேவலு மிரலையுங் கலையு மோத்தையுந் தகரு முதளு மப்பரும் போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும் யாத்த வாண்பாற் பெயரென மொழிப. 4என்-னின், ஆண்பாற்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. ஆண்பாற்பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் பிறவுமாம் என்றவாறு. ‘பிறவும்’ என்றதனான் ஆண் என்றும் விடை என்றும் வருவன போல்வன கொள்க. (2) 547. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணு மூடும் நாகுங் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவு மந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே. 5என்-னின், பெண்பாற்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. இக்கூறப்பட்ட பதின்மூன்றும் பெண்பாற்பெயராம் என்றவாறு. (3) 548. அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை. என்-னின், மேல் அதிகரிக்கப்பட்ட மூவகைப் பெயர்க்குஞ் சிறப்பு விதியுடையன இச்சூத்திர முதலாக வருகின்ற சூத்திரங் களாற் கூறப்படுகின்றன. மேற்சொல்லப்பட்டவற்றுட் பார்ப்பு பிள்ளை 6யென்னும் இரண்டும் பறவையி னிளமைப்பெயர் என்றவாறு. 7இவ்வோத்திற் சூத்திரத்தாற் பொருள் விளங்குவன வற்றிற்கு உரை யெழுதுகின்றிலம். (4) 549. தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன. என்றது, ஊர்வனவற்றிற்கு மேற்சொல்லப்பட்ட இருவகை இளமைப்பெயரும் 8ஆம் என்றவாறு. (5) 550. மூங்கா வெருகெலி மூவரி யணிலோ டாங்கவை நான்குங் குட்டிக் குரிய. என்றது, இவை நான்குங் குட்டி என்று சொல்லப்படும் என்றவாறு. மூங்கா என்பது கீரி. (6) 551. பறழெனப் படினு முறழாண் டில்லை. என்றது, மேற்சொல்லப்பட்ட நால்வகை யுயிர்க்கும் இளமைப்பெயர் பறழ் எனினும் உறழ்ச்சியில்லை என்றவாறு. எனவே, இரண்டுமாம் என்றவாறாம். (7) 552. நாயே பன்றி புலிமுய னான்கு மாயுங் காலைக் குருளை யென்ப. என்றது, நாய்முதலாகச் சொல்லப்பட்ட 9நான்கன் இளமைப் பெயர் குருளை யென்று 10வழங்கும் என்றவாறு. (8) 553. நரியு மற்றே நாடினர் 11கொளினே. என்றது, நரியின் இளமைப் பெயரும் 12ஆராயுங் காலத்துக் குருளை எனப்படும் என்றவாறு. இது மேலனவற்றோடு ஒருநிகராக 13ஓதாமையிற் சிறுபான்மை வருமென்று கொள்க. (9) 554. குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார். என்-னின், எய்தாத தெய்துவித்தல் நுதலிற்று. மேற் சொல்லப்பட்ட ஐவகையுயிர்க்குங் குட்டி பறழ் என்பனவும் ஆம் 14என்றவாறு. (10) 555. பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே. என்-னின், இதுவுமது. 15மேற்கூறியவற்றுள் நாயன்றி ஒழிந்தவை பிள்ளை என்னும் இளமைப்பெயர்க்கும் உரிய என்றவாறு. பன்றிக்குருளை பன்றிக்குட்டி பன்றிப்பறழ் பன்றிப்பிள்ளை எனவுமாம். ஏனையவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. (11) 556. ஆடுங் குதிரையும் நவ்வியு முழையு மோடும் புல்வா யுளப்பட மறியே. என்றது, யாடு முதலாகச் சொல்லப்பட்ட ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு. 16நவ்வி - புள்ளிமான்; 17முழை - முழா. (12) 557. கோடுவாழ் 18குரங்கு குட்டியுங் கூறுப. 19கோடு வாழ் குரங்கென்பது ஊகமு முசுவுங் கொள்ளப் படும். உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. (13) 558. மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு மவையு மன்ன வப்பா லான. என்-னின், இதுவுங் குரங்குக் குரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. மகவு முதலாகிய நான்குங் 20குரங்குச் சாதி இளமைப் பெயராம் என்றவாறு. 21குரங்குக் குட்டி, குரங்கு மகவு, குரங்குப் பிள்ளை, குரங்குப் பறழ், குரங்குப் பார்ப்பு. (14) 559. யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு மானோ டைந்துங் கன்றெனற் குரிய. என்றது, யானை முதலாக மானீறாகச் சொல்லப் பட்ட 22ஐந்தனது இளமைப்பெயர் கன்று என்று வரும் என்றவாறு. (15) 560. எருமையு மரையும் வரையா ராண்டே என்றது, கன்றெனக் கூறும் இளமைப்பெயர் எருமைக்கும் மரைக்கும் உரித்து என்றவாறு. (16) 561. கவரியும் 23கராகமு நிகரவற் றுள்ளே. என்றது, 24கவரி என்று சொல்லப்படுவதும் கராக மென்று சொல்லப்படுவதும் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு. 25கராகமென்பது கரடி. (17) 562. ஒட்டக 26மவற்றோ டொருவழி நிலையும். என்றது, ஒட்டக27மென்று சொல்லப்படுவதுங் கன்றென்னும் பெயர் பெறும் என்றவாறு. (18) 563. குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. என்றது, குழவி யென்னும் இளமைப்பெயர் யானை பெறும் என்றவாறு. (19) 564. ஆவு மெருமையு 28மதுசொலப் படுமே. என்றது, ஆவும் எருமையும் குழவிப்பெயர் பெறும் என்றவாறு. (20) 565. கடமையு மரையு முதனிலை யொன்றும். என்றது, 29கடமாவும் மரையுங் குழவி எனப் பொருந்தும் என்றவாறு. (21) 566. குரங்கு முசுவு மூகமு மூன்றும் நிரம்பநாடி னப்பெயர்க் குரிய. என்றது, குரங்கு முதலிய 30மூன்றும் ஆராயுங் காலத்துக் குழவிப்பெயர்க் குரிய என்றவாறு. (22) 567. குழவியு மகவு மாயிரண் டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே. என்றது, குழவி மகவென்று சொல்லப்பட்ட 31இரண்டு இளமைப்பெயரு மல்லாத ஏனையவை மக்கட்குரிய வல்ல என்றவாறு. (23) 568. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே. என்றது, ஓரறிவுயிராகிய புல்லும் 32மரனும், இளமைப் பெயர் பிள்ளை முதலாகச் சொல்லப்பட்ட நான்குங் கொள்ளவும் அமையும் என்றவாறு. உம்மை எதிர்மறையாகலான், கன்றென்றதே பெரும் பான்மை. (24) 569. நெல்லும் புல்லும் நேரா ராண்டே. என்-னின், எய்தியது விலக்கல் நுதலிற்று. 33மேற்கூறப்பட்ட நான்கன் இளமைப்பெயரும் கொள்ளார், நெல்லும் புல்லுமென வரும் ஓரறிவுயிர்க்கு என்றவாறு. உம்மை எதிர்மறையாதலின் மேற்சொல்லப்பட்ட இளமைப் பெயர் கூறப்பெறார் என்றவாறு. (25) 570. சொல்லிய மரபி னிளமை தானே சொல்லுங் காலை யவையல திலவே. என்-னின், இளமைப் பெயரை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. சொல்லிப் போந்த மரபுடையனவன்றிச் சொல்ல வேண்டு மரபுடையனவற்றிற்குஞ் சொல்லுமிடத்து 35இவைதாமே இளமைப்பெயர் என்றவாறு. என்பது என் சொன்னவாறோ வெனின், 36பரந்துபட்ட வுயிர்த்தன்மை யெல்லாம் ஈண்டு ஓதப்பட்டனவல்ல, எடுத்தோ தாதனவற்றிற்கு ஈண்டு ஓதப்பட்ட இளமைப்பெயரல்லது பிற பெயரின்மையின், இவற்றுள் ஏற்பனவற்றொடு கூட்டியுரைக்க என்றவாறாம். இத்துணையும் கூறப்பட்ட சூத்திரத்திற்கு, உதாரணம்: “பறவைதம் பார்ப்புள்ள” (கலித். 119) “வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே.” “யாமைப் பார்ப்பி னன்ன” (குறுந். 152) “தன்பார்ப்புத் தின்னும் பன்பின் முதலை.” (ஐங்குறு. 41) பார்ப்பு, பிள்ளை பிறவும் பறப்பன ஊர்வனவெல்லாம் இவ்வகையினாற் கூறுப. நடப்பனவற்றுள், மூங்காக் குட்டி, மூங்காப் பறழ்; வெருகுக் குட்டி, வெருகுப் பறழ், எலிக் குட்டி, எலிப் பறழ்; அணிற் குட்டி, அணிற் பறழ்; நாய்க் குட்டி, நாய்க் குருளை; நரிக் குட்டி நரிக் குருளை; நரிப் பறழ், நரிப் பிள்ளை; பன்றிக் குட்டி, பன்றிக் குருளை பன்றிப் பறழ், பன்றிப் பிள்ளை; புலிக் குட்டி, புலிக் குருளை, புலிப் பறழ், புலிப் பிள்ளை; குரக்குக் குட்டி, குரக்கு மக, குரக்குப் பிள்ளை, குரக்குப் பார்ப்பு, குரக்குப் பறழ், குரக்குக் குழவி; ஊக முசு வென்பனவும் இவ்வாறே கொள்க; யாட்டுமறி; குதிரைமறி, குதிரைக்கன்று; நவ்விமறி; உழைமறி; புல்வாய்மறி; யானைக்கன்று, யானைக்குழவி; கழுதைக்கன்று; கடமைக்கன்று, கடமைக் குழவி; ஆன் கன்று, ஆன் குழவி; எருமைக் கன்று, எருமைக் குழவி; மரைக் கன்று, மரைக் குழவி; கவரிக் கன்று; கராகக் கன்று; ஒட்டகக் கன்று; மக்கட் குழவி, மக்கண் மக; தெங்கம் பிள்ளை; கமுகங் கன்று; கருப்பம் போத்து. ஓரறிவுயிர்க்கட் குழவியென்பது வந்தவழிக் கண்டுகொள்க. இனி அவையல்லது பிறவில்லை யென்றமையின், ஒன்றற் குரியவற்றை ஒன்றற்குரித்தாக்கி வழங்குவனவுஞ் சிறுபான்மை கொள்ளப்படும். கழுதை மறியெனவும் ‘பிள்ளை வெருகிற் கல்கிரையாகி’ (குறுந். 17) என்றாற் போலவும் சான்றோர் செய்யு ளகத்து வருவன கடியப்படா வென்றவாறு. எடுத்தோதாதன பெரும்பான்மை. இனி எடுத்தோதாதன: சிங்கம் புலிப்பாற்படும்; உடும்பு, ஓந்தி, பல்லி அணிற் பாற்படும்; நாவியென்பது மூங்காவின்பாற்படும். பிறவும் இவ்வகை யின் ஏற்பன கொள்க.(26) 571. ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே யிரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே யாறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. என்-னின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று. ஓரறிவுயிராவது உடம்பினானறிவது; ஈரறிவுயி ராவது உடம்பினானும் வாயினானும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பி னானும் வாயினானும் மூக்கினானும் அறிவது; நாலறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் அறிவது; ஆறறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் மனத்தினானும் அறிவது. இவ்வகையினான் உயிர் ஆறு வகையின ஆயின. இவ்வாறு அறிதலாவது: உடம்பினான் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும். நாவினாற் கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, மதுரம் என்பன அறியும். மூக்கினான் நன்னாற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினான் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை, குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும். செவியினான் ஓசை வேறுபாடும், சொற்படும் பொருளும் அறியும். மனத்தினானறியப்படுவது இது போல்வன வேண்டு மெனவும், இது செயல் வேண்டுமெனவும், இஃது எத்தன்மை யெனவும் அனுமானித்தல், அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும், அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வகையினான் உலகினுள்ள வெல்லாம் மக்கட்கு அறித லாயின. இனி அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங் களாற் கூறும். (27) 572. புல்லும் மரனு மோரறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. ஓரறிவுயிராமாறு புல்லும் மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினானறியும்; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிற ஆவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன. புல்லென்பன புறவயிர்ப்பு உடையன; மரமென்பன அகவயிர்ப் புடையன. அவை யாமாறு முன்னர்க் கூறப்படும். (28) 573. நந்து முரளு மீரறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. என்-னின், ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று. ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு. நந்து என்றதனான் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனான் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க. (29) 574. சிதலு மெறும்பு மூவறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. என்-னின், மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. சிதலும், எறும்பும், மூவறிவின; அக்கிளைப் பிறப்பு பிறவு முள என்றவாறு. பிற ஆவன அட்டை முதலாயின. (30) 575. நண்டுந் தும்பியு நான்கறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. என்-னின், நாலறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. நண்டும், தும்பியுமென்பன நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவு முள என்றவாறு. பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க. (31) 576. மாவும் 37புள்ளு மையறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. என்-னின், ஐயறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும், நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும். (32) 577. மக்க டாமே யாறறி வுயிரே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. என்-னின், ஆறறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று. மக்கள் ஆறறிவுயிரெனப்படுவர்; அக்கிளைப் பிறப்பு பிறவு முள என்றவாறு. பிறவாவன தேவர், அசுரர், இயக்கர் முதலாயினோர். (33) 578. ஒருசார் விலங்கு முளவென மொழிப. என்-னின், இதுவுமது. விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிரா மென்றவாறு. அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. மேல் ஓரறிவுயிர் முதலாகத் தோற்றுவித்தார்; அதனானே இச்சூத்திரங்கள் ஈண்டுக் கூறப்பட்டன. (34) 579. வேழக் குரித்தே விதந்துகளி றென்றல். என்-னின், நிறுத்த முறையானே ஆண்பாற்குரிய பெயர் கூறுதல் நுதலிற்று, இச்சூத்திர முதலாயின வற்றான். களிறென்று விதந்து கூறுதல் யானைக்குரித்து என்றவாறு. (35) 580. கேழற் கண்ணுங் கடிவரை யின்றே. பன்றியின்கண்ணும் ஆண்பாலைக் களிறென்றல் கடியப்படா தென்றவாறு. (36) 581. புல்வாய் புலியுழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்த லொன்றும். புல்வாய் முதலாயின அறுவகை யுயிரும் ஒருத்தலென்ன ஆண்பெயர் ஒன்றும் என்றவாறு. (37) 582. வார்கோட் டியானையும் பன்றியு மன்ன. யானையும் பன்றியும் ஒருத்தலெனப்படு மென்றவாறு. (38) 583. ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும். எருமையினும் ஆணினை ஒருத்தலென்று கூறப்படும் என்றவாறு. (39) 584. பன்றி புல்வா யுழையே கவரி யென்றிவை நான்கு மேறெனற் குரிய. பன்றி முதலாகிய நான்கன் ஆணினை ஏறென்று கூறலா மென்றவாறு. (40) 585. எருமையும் மரையும் பெற்றமு மன்ன. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (41) 586. கடல்வாழ் சுறவு மேறெனப் படுமே. கடல் வாழ் சுறாவின் ஆணினையும் ஏறெனலாகு மென்றவாறு. (42) 587. பெற்ற மெருமை புலிமரை புல்வாய் மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே. பெற்ற முதலாகிய ஐந்தனுள் ஆணினையும் போத்தெனலாகு மென்றவாறு. (43) 588. நீர்வாழ் சாதியு மதுபெறற் குரிய. நீருள் வாழும் முதலை முதலாயினவற்றுள் ஆண்பால் போத்தெனக் கூறுதற்குரிய என்றவாறு. (44) 589. மயிலு மெழா அலும்பயிலத் தோன்றும். மயிலுள்ளும் ஆணினைப் போத்தென்றல் பெரும் பான்மை என்றவாறு. (45) 590. இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய. இரலை என்னும் பெயரும் கலை என்னும் பெயரும் புல்வாயின் ஆண்பாற்குரிய என்றவாறு. (46) 591. கலையென் காட்சி யுழைக்கு முரித்தே நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும். கலை என்னும் பெயர் உழைக்கும் முசுவிற்கும் உரித்தென்றவாறு. (47) 592. மோத்தையுந் தகரு முதளு மப்பரும் யாத்த வென்ப யாட்டின் கண்ணே. மோத்தை முதலாகச் சொல்லப்பட்டன யாட்டின் ஆணிற்குரிய வென்றவாறு. (48) 593. சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணு மாயிருந் தூவி மயிலலங் கடையே. மயிலல்லாத புள்ளின்கண் ஆண்பெயர் சேவலென்று கூறப்படு மென்றவாறு. சிறகு என்றது ஆகுபெயர். (49) 594. ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற் கெல்லாம் ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப. ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் ஏற்றை யென்னும் பெயர் உரித்தென்றவாறு. ஏற்புழிக்கோடல் என்பதனான், அஃறிணைக்கண்ணும் கொள்ளப் படும். (50) 595. ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்பவை யவையவை யப்பா லான. ஆண்பா லுயிரெல்லாம் ஆண் என்னும் பெயர் பெறும்; பெண்பாலுயிரெல்லாம் பெண் என்னும் பெயர் பெறும்; அவ்விரு வகைக்கும் அறிகுறி காண்டலான் என்றவாறு. வேழக்குரித் தென்னும் சூத்திர (35) முதலாக இத்துணையும் ஆண்பெயர் கூறினார். இனிப் பெண்பெயர் கூறுகின்றாராகலின், அதிகாரப் பட்ட பொருள், சே, கடுவன், கண்டி என்பன சிறப்புச் சூத்திரத்த ஆகலின் அவற்றிற்குரியவெனக் கூறிற்றிலராலெனின், அவற்றுள் கடுவனும் கண்டியும் முன்னரெடுத்தோதப்படும். சே என்பது ஆவினுள் ஆணையே குறித்து வழங்கலின் ஓதாராயினார். ஈண்டு ஓதப்பட்டன பல பொருள் ஒரு சொல்லும் ஒரு பொருட் பல சொல்லும் என்று கொள்க. இத்துணையுங் கூறப்பட்டது: வேழத்துள் ஆண், களிறு, ஒருத்தல், ஏற்றை எனப்படும்; பன்றியுள் ஆண் ஒருத்தல் ஏற்றை எனப்படும்; புல்வாயுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை, போத்து, இரலை, கலை எனப்படும்; புலியுள் ஆண், ஒருத்தல், போத்து, ஏற்றை எனப்படும்; உழையுள் ஆண், ஒருத்தல், ஏறு, கலை, ஏற்றை எனப்படும்; மரையுள் ஆண், ஒருத்தல், ஏறு, போத்து, ஏற்றை எனப்படும்; கவரியுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; கராத்துள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; எருமையுள் ஆண் ஒருத்தல், போத்து, ஏற்றை, கண்டி எனப்படும்; சுறவில் ஆண் என்பன ஏற்றை எனப்படும்; பெற்றத்துள் ஆண், போத்து, ஏறு, ஏற்றை எனப்படும்; ‘எருது காலுறா திளையர் கொன்ற’ (புறம். 327) என வருதலின் எருதும் ஆம்; அதிகாரப் புறனடையாற் கொள்க. நீர்வாழ் சாதியுள் ஆண், வராற்போத்து வாளைப் போத்து என வரும். முசுவில் ஆண், கலை எனப்படும்; குரங்கும், ஊகமும் இவ்வாறே கொள்ளப்படும்; கடுவன் எனவும் வரும். ஆட்டினுள் ஆண், மோத்தை, தகர், உதள், அப்பர் என வரும்; புள்ளினுள் மயிலாண், எழால், சேவல், போத்து, ஏற்றை எனப்படும்; புள்ளினுள் ஆணெல்லாவற்றினும் வரும் மயிலல்லாதன வெல்லாம் சேவல், ஏற்றை எனப்படும். ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப்பனை ஆண்பனை என வரும். (51) 596. பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. இனிப் பெண்பெயர் உணர்த்துகின்றார் இச்சூத்திர முதலாக. பிடி என்னும் பெண்பெயர் யானையின் மேலது என்றவாறு. (52) 597. ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய. பெட்டை என்னும் பெயர் ஒட்டக முதலாகச் சொல்லப் பட்ட நான்கனது பெண்பாற்குப் பெயராம் என்றவாறு. (53) 598. புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப. பெட்டை என்னும் பெயர்க்குப் புள்ளிற் பெண்பாலு முரிய என்றவாறு. (54) 599. பேடையும் பெடையும் நாடி னொன்றும். பேடை என்னும் சொல்லும் பெடை என்னும் சொல்லும், ஆராயுமிடத்துப் பெட்டை என்பதனோடு ஒன்றும் என்றவாறு. இது புள்ளில் வைத்தமையாற் புள்ளின்பின் வருதல் பெரும். பான்மை. (55) 600. கோழி கூகை யாயிரண் டல்லவை சூழுங் காலை யளகென லமையா. 38கோழியுங் கூகையும் அளகெனப்படும். (56) 601. பெண்பா லான அப்பெயர்க் 39கிழமை மயிற்கு முரித்தே. அளகென்னும் பெண்பாற் பெயர் மயிலினது பெண்பாற்கும் உரித்து என்றவாறு. (57) 602. புல்வாய் நவ்வி யுழையே கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே. புல்வாய் முதலாகிய நான்கற்கும் பிணை என்னும் பெண்மைப்பெயர் வழங்குதற்குரித்து என்றவாறு. (58) 603. பன்றி புல்வாய் நாயென மூன்று மொன்றிய வென்ப 40பிணவென் பெயர்க்கொடை. பன்றி முதலாகிய மூன்றற்கும் பெண்பாற்குப் பிணவு என்னும் பெயர் பொருந்திற்று என்றவாறு. (59) 604. பிணவ லெனினு மவற்றின் மேற்றே. பிணவல் என்று சொல்லினும், மேற்சொல்லப் பட்டவற்றின் மேல என்றவாறு. (60) 605. பெற்றமு மெருமையும் மரையு மாவே. ஆ என்னும் பெண்பெயர் பெற்றம் முதலாகிய மூன்றற்கு முரித்து என்றவாறு. (61) 606. பெண்ணும் பிணவு மக்கட் குரிய. பெண்ணென்னும் பெயரும், பிணவு என்னும் பெயரும், மக்களிற் பெண்பாற் குரிய என்றவாறு. (62) 607. எருமையும் மரையும் பெற்றமு நாகே. எருமை முதலாகச் சொல்லப்பட்ட மூன்றற்கும் நாகு என்னும் பெண்பெயர் உரித்து என்றவாறு. (63) 608. நீர்வாழ் சாதியு ணந்தும் நாகே. நீர்வாழ்வனவற்றுள் நந்தென்பதூஉம் நாகு என்னும் பெண்பெயர் பெறும் என்றவாறு. (64) 609. மூடுங் கடமையும் யாடல பெறாஅ. மூடும் கடமையும் யாட்டின் பெண்பால வென்றவாறு. (65) 610. பாட்டி யென்ப பன்றியு நாயும் பாட்டி என்னும் பெயர் பன்றியினதூஉம் நாயினதூஉம் பெண்பெயர்க்குரிய என்றவாறு. (66) 611. நரியு மற்றே நாடினர் கொளினே. நரியும் பெண்பாற்குப் பாட்டி என்னும் பெயர் பெறும் என்றவாறு. (67) 612. குரங்கு முசுவு மூகமு மந்தி. குரங்கு முதலாயின மூன்றன் பெண்பால் மந்தி என்னும் பெயர்பெறும் என்றவாறு. இத்துணையுங் கூறப்பட்டன பெண்பாற் பெயராவன: யானையுட் பெண் பிடி; ஒட்டகம் - பெட்டை; குதிரை - பெட்டை; கழுதை - பெட்டை; மரை - பெட்டை; ஆ- நாகு ; புள்ளு - பெட்டை, பேடை, பெடை; கோழி - அளகு, கூகை; மயில் - அளகு; புல்வாய் - பிணை, பிணா, பிணவு, பிணவல்; நவ்வி - பிணை; உழை, கவரி-பிணை; பன்றி-பிணவு, பிணவல், பாட்டி; நாய் - பிணவு, பிணவல், பாட்டி; பெற்றம் - ஆ, நாகு; எருமை-ஆ, நாகு; மக்கள் - பெண், பிணவு; நந்து - நாகு; யாடு - மூடு, கடமை; நரி - பாட்டி; குரங்கு - முசு, ஊகம், மந்தி என வரும். இதனுள் எடுத்தோதாதன சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க. வழக்கினுள்ளும் வந்தவாறு கண்டுகொள்க. (68) 613. குரங்கினு ளேற்றைக் கடுவ னென்றலும் மரம்பயில் கூகையைக் கோட்டா னென்றலும் செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை யென்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் குதிரையு ளாணினைச் சேவ லென்றலும் இருணிறப் பன்றியை யேன மென்றலும் எருமையுள் ஆணினைக் கண்டி யென்றலும் முடிய வந்த வழக்கி னுண்மையிற் கடிய லாகா கடனறிந் தோர்க்கே. இது அதிகாரப் புறனடை. குரங்கு முதலாகச் சொல்லப்பட்டவற்றை இப் பெயரான் உலகத்தார் வழங்குதலின், ஈண்டோதிய இலக்கணத்தின் மாறுபட்டு வருவன வழக்கினுஞ் செய்யுளினும் அடிப்பட்டு வரின் வழுவென்று கடியப்படா வென்றவாறு. (69) 614. பெண்ணு மாணும் பிள்ளையு மவையே. பெண்ணும், ஆணும், பிள்ளையும் பற்றி வருஞ் சொல் மேலெடுத்தோதினவை என்றவாறு. இனிச் சிறப்புவிதியுடைய அந்தணர் முதலியோர்க்குரியன கூறப்படுகின்றன. (70) 615. நூலே கரக முக்கோல் மணையே ஆயுங் காலை யந்தணர்க் குரிய. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங்காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு. (71) 616. படையுங் கொடியுங் குடையு முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரு முடியு நேர்வன பிறவுந் தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய. படை - கருவி. படை முதலான ஒன்பதும் செங்கோலும் ‘பிறவு’ மென்றதனான் ஆரமுங் கழலு மெல்லாம் அரசர்க்குரிய என்றவாறு. (72) 617. அந்த ணாளர்க் குரியவு மரசர்க்கு கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே. அவை நான்கு தொழில்: ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதல். (73) 618. பரிசில் பாடாண் டிணைத்துறைக் கிழப்பெயர் நெடுந்தகை செம்ம லென்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுத லவர்க்குரித் தன்றே. இப்பொருண்மையும் அரசர்க்கு முரித்து அந்தணர்க்கு முரித்து என்றவாறு. (74) 619. ஊரும் பெயரு முடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி யவையவை பெறுமே. நகரும் தமது இயற்பெயரும் சிறப்புப் பெயரும் தத்தந் தொழிற்கேற்ற கருவியும் எல்லாரையுஞ் சார்த்தி அவையவை வருதல் பெறும் என்றவாறு. (75) 620. தலைமைக் 41குணச்சொலுந் தத்தமக் குரியதோர் நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்ப. தலைமைக் குணமுடையராகக் கூறுதலும் தத்தமக் கேற்ற நிலைமைக்குப் பொருந்துமாறு நிகழ்த்துப என்றவாறு. எனவே, இறப்பவுயர்தல் இறப்பவிழிதல் ஆகாவென்ற வாறாம். (76) 621. இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறாஅ ரென்மனார் புலவர். அரசரும் வணிகரும் அல்லாதோர்க்குப் படைக்கல வகை கூறப்பெறார் என்றவாறு. (77) 622. வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை. வைசியன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு. (78) 623. மெய்தெரி வகையி னெண்வகை யுணவின் செய்தியும் வரையா ரப்பா லான. எண்வகை உணவாவன: நெல்லு, 42காணம், வரகு, இறுங்கு, தினை, 43சாமை, புல்லு, கோதும்பை. இவையிற்றை உண்டாக்குகின்ற உழவுத்தொழிலும் 44வாணிகர்க்கு வரையா ரென்றவாறு. (79) 624. கண்ணியுந் தாரு மெண்ணின ராண்டே. வைசியர்க்கும் கண்ணியுந் தாரும் சொல்லப்பெறு மென்றவாறு. (80) 625. 45வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. என்றது, வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே என்றவாறு. (81) 626. வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் 46வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே. எய்தியதன்மேற் சிறப்புவிதி. வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினானே படையுங் கண்ணியும் வேளாண்மாந்தர்க்கும் உளவாகு மென்றவாறு. (82) 627. அந்த ணாளர்க் கரசுவரை வின்றே. 47அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவின்று என்றவாறு. அஃதாவது மந்திரி புரோகிதனாகியவழிக் கொடியும் குடையும் கவரியும் தாரு முதலாயின அரசராற் பெற்று அவரோடு ஒரு தன்மையராகி யிருத்தல். (83) 628. வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரு மாரமுந் தேரு மாவும் மன்பெறு மரபி னேனோர்க் குரிய. வில்லு முதலாகச் சொல்லப்பட்டன வெல்லாம் மன்னனாற் பெற்ற மரபினால் வைசியர்க்கும் வேளாளர்க்கு முரிய என்றவாறு. (84) 629. அன்ன ராயினு மிழிந்தோர்க் கில்லை. அன்னர் தாமிழிந்தோராயின், மேற்சொல்லப்பட்ட மன்னனான் வில்லு முதலாயின பெற்ற மரபினராய நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்க்கு அவை உளவாகக் கூறப்படா வென்றவாறு. எனவே, அவரவர்க் குரியவாற்றாற் கூறப்பெறு மென்றவாறு. (85) 630. புறக்கா ழனவே புல்லெனப் படுமே. ஓரறிவுடையன 48புறவயிர்ப்பு உடையனவற்றைப் புல் என்று சொல்லுவர் என்றவாறு. அவையாவன: தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலாயின. (86) 631. அகக்கா ழனவே மரமெனப் படுமே. 49உள்வயிர்ப்பு உடையனவற்றை மரமெனப்படு மென்றவாறு. (87) 632. தோடே மடலே யோலை யென்றா ஏடே யிதழே பாளை யென்றா ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர். தோடு முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெய ரெல்லாம் புல்லாகிய உறுப்பின்கண்ணே வருமென்றவாறு. இதனானே, புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பு மில்லாதனவற்றுள் ஒருசாரன இவ்வகைப்பட்ட உறுப்புப் 50பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும் என்றவாறு. அவையாவன: 51வாழை ஈந்து தாமரை கழுநீர் என்றித் தொடக்கத்தன. (88) 633. இலையே முறியே தளிரே தோடே சினையே குழையே பூவே யரும்பே நனையே யுள்ளுறுத் தனையவை யெல்லாம் மரனொடு வரூஉங் கிளவி யென்ப. இலை முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புப் பெயர் மரத்துக்கு அங்கமாம் என்றவாறு. இதனானே, புறவயிர்ப்பும் உள்வயிர்ப்பும் இல்லாதன வற்றுள் ஒருசாரன இவ்வுறுப்புப் பெயர் உடையன மரமெனப்படு மென்று கொள்க. அவையாவன: முருக்கு தணக்கு முதலாயின. (89) 634. காயே பழமே தோலே 52செதிளே வீழோ டென்றாங் கவையு மன்ன. இச்சூத்திரம் அவ்விருவகைக்கும் பிற்கூறலின் காய் முதலாகச் சொல்லப்பட்ட அவ்வுறுப்புப் பெயர் அவ்விரு வகைக்கும் பொதுவெனப்படுமென்றவாறு. தாழை பூவுடைத் தாகலானும் கோடுடைத் தாகலானும் மரமெனப் படுமாயினும் புறவயிர்ப்பு இன்மையான் புல் என்றல் பெரும்பான்மை. (90) 635. நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்க முலக மாதலின் இருதிணை யைம்பா லியனெறி 53வழாமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். என்-னின், இதுவுமோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. உலகு நிலமுதலாகிய ஐம்பெரும்பூதங் கலந்த மயக்க மாதலான், மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழாமல் திரிபுபடாத சொல்லோடே தழுவுதல் வேண்டும் என்றவாறு. கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றாதல் போறல். உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது, முத்தும் மணியுங் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி யொன்றானாற் போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ் விரண்டனையும் உலகம் உடைத்தாகலிற் கலந்த மயக்கமென்றார். இப்பொருள் எல்லா வுலகத்தையும் விட்டு நீங்காமையின் இவற்றை ஒருமுகத்தான் நோக்க வேறுபாடிலவா மாதலான், மேற்கூறிப்போந்த முறையினான் வேறுபடுத்து இருதிணை யாகவும் ஐம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிபுபடாத சொல்லோடே புணர்க்க என்றவாறாம். உதாரணம்: சாத்தன் சோற்றை உண்டான் என்பது. இது உண்டற் குரியானெனக் கூறுதலின் மரபாயிற்று. அஃதேல் வழாமை தழால் வேண்டுமெனக் கருதிய பொருள் முடியும் ‘திரிவில்சொல்’ என்றது மிகையெனின், ஒக்கும். குழவி என்பது உயர்திணைக்கண் வரின் அதற்குரிய பாலாற் கூறாது அஃறிணைக்குரிய பாலாற் கூறப்படுதலின், அவ்வகையான் வருவது வழுவாயினும் திரிவில் சொல் என்றதனான் அதுவும் அடக்கிக் கூறினான். (91) 636. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப்பட்ட சொல்லி னான. என்-னின், செய்யுட் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. ஈண்டுச் சொல்லப்பட்ட மரபுநிலையிற் றிரிதல் செய்யுட் கில்லை, மரபு வழிப்பட்ட சொல்லினாற் செய்ய வேண்டுதலின் என்றவாறு. எனவே யாதானும் ஒரு செய்யுளும் ஈண்டோதிய மரபினாற் செய்ய வேண்டும் என்றவாறாம். ‘செய்யுட்கில்லை’ எனவே வழக்கினுட் சில திரியவும் பெறும். அவை வழக்கினுள் ஆணினைப் போத்தென்றல் போல்வன. (92) 637. மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும். மரபுநிலை திரிந்துவரிற் பொருள் வேறுவேறாகு மென்றவாறு. எனவே வழுவென்றவாறாம். (93) 638. வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான. என்-னின், ஐயமறுத்தலை நுதலிற்று. வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் மேலது, நூலின் நிகழ்ச்சி அவர்மாட்டாதலான் என்றவாறு. மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை யெனவும் அதனானே வழக்கிற் சிறுபான்மை வருமெனவும் செய்யுள் மரபு ஒழியவரின் அது வழுவாமெனவும் கூறினானாயின் பாயிரத்துள் ‘வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலினெழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ என்றதனொடு மாறுகொள்ளுமோவென ஐயுற்றார்க்கு, ஆண்டு வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் வழக்கினை எனவும் இழிந்தோர் வழக்கு வழக் கெனப்படா தெனவும் கூறியவாறு. (94) 639. மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூறா மிருவகை நிலைய முதலும் வழியுமென நுதலிய நெறியின. என்-னின், மேற்செய்யுளியலுள் தோற்றுவாய் செய்த நூலை இலக்கண வகையான் உணர்த்துதல் நுதலிற்று. மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ் வியல்பு திரியாத மரபுடையவாகி உரைக்கப்படும் நூல்தாம் இரு வகைய, முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. உரைக்கவென்பது விகாரத்தான் தொக்கது அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. சார்புநூல் என்பதும் ஒன்றுண்டாலெனின், அஃது இருவர் ஆசிரியர் கூறியவதற்கு உடம்பட்டு வருதலின் அதுவும் வழி நூலென அடங்கும்; எதிர்நூல் என்பதும் ஒன்றுண்டு. அதுவும் ஒரு முனைவனாற் செய்யப் படின் முதனூலாம்; பிறர் செய்யின் வழங்காது. (95) 640. வினையின் 54நீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். என்-னின், நிறுத்த முறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (96) 641. வழியெனப் படுவ ததன்வழித் தாகும். என்-னின், வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல் வழியே செய்வது என்றவாறு. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (97) 642. வழியி னெறியே நால்வகைத் தாகும். என்-னின், வழிநூல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது நான்கு வகைப்படும் என்றவாறு. அது முன்னர்க் கூறுதும். (98) 643. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே. என்-னின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகை யினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு. இது வழிநூலா னாய பயன். (99) 644. ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர். என்-னின், நூற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இனி, ஒத்த சூத்திரத்தானும் காண்டிகையானும் பொருண்மேற் கூறிய வகையுடைத்தாகிப் பத்துக் குற்றமும் இன்றி நுண்ணிதாகிய முப்பத்திரண்டு வகைப்பட்ட தந்திர வுத்தியொடு புணருமாயின் நூலெனச் சொல்லுவர் புலவர் என்றவாறு. உரைப்பின் என்பதனை முன்னே கூட்டி நூலுரைப்பின் எனப் பொருளுரைக்க. அவையாமாறு முன்னர்க் காட்டுதும். (100) 645. உரையெடுத் 55ததன்முன் யாப்பினுஞ் சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும் 56விதித்தலும் விலக்கலு மெனவிரு வகையொடு 57யுணர்ந்தவை நாடிப் புணர்க்கவும் பெறுமே. இதுவுமது. சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத்துஞ் சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகை புணர்க்கு மிடத்தும், ஆசிரியன் இப்பொருள் இவ்வாறு கூறல் வேண்டுமென விதித்தலும் இப்பொருள் இவ்வாறு கூறப் பெறானென விலக்கலுமாகிய இருவகையோடே கூடப் பொருந்தின அவை ஆராய்ந்து புணர்க்கவும் ஆம் என்றவாறு. இதனாற் சொல்லியது ஆசிரியன் சொன்ன சூத்திரத்தினைக் குறைபடக் கூறினானென்றல் அமையாமையானும் அவன் கூறுகின்ற பொருளினை நிலைபெறுத்தற்குப் பிறிதொன்றை விரித்தோதிய நெறியை விலக்கியும் பொருள் உரைத்துக் கொள்ளப்படு மென்றவாறு. செய்யுளியலுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலும் முடிவும் மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி யுண்ணின் றகன்ற வுரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே. (செய்யுளியல் 159) என்று கூறுதலின் இதுவும் இலக்கணமாகக் கொள்க. (101) 646. மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை யுரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித் துளக்க லாகாத் துணைமை யெய்தி அளக்க லாகா அரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்றெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர். என்-னின், நூற்கு அங்கமாகிய சூத்திரத்திலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. மேல் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என நால்வகையினும் சொல்லப் பட்ட பொருளொடு, சிலவெழுத்தினான் இயன்ற செய்யுட்டாகி, உரைக்குங் காலத்து அவ்வுரையிற் பொருளெல்லாம் தன்னகத் தடக்கி, நுண்ணிய பொருண்மையொடு பொருந்திய விளக்க முடைத்தாகி, கெடுக்கலாகாத துணைச் சூத்திரங்களை யுடைத் தாகி வரையறுக்கப்படாத அரிய பொருளையுடைத்தாகிப் பலவாற்றானும் பயனையாராய்தல் உடையது சூத்திரம் எனக் கூறினார் புலவர் என்றவாறு. 58அளக்கலாகா அரும்பொருளாவது பலமுகத்தானும் பொருள் கொள்ளக் கிடத்தல். செய்யுளியலுள், சூத்திரந் தானே ஆடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்கி யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே. (செய். 162) என்பதூஉம் இதற் கிலக்கணம். (102) 647. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும். என்-னின், காண்டிகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. குற்றமில்லாத சூத்திரஞ் சொன்ன இயல்பினான் மறைவின்றி விளக்குவது காண்டிகையா மென்றவாறு. (103) 648. விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா ஏது நடையினு மெடுத்துக் காட்டினு மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே. இதுவுமது. சூத்திரத்திற் படுஞ் சொற்பொருளை விட்டு நீங்குத லின்றி விரிவோடே பொருந்திக் குறித்த சூத்திர முடித்தற்காக ஏது நெறியானும் எடுத்துக் காட்டினானும் பொருந்தி, ஆங்கமையும் பொருணெறியை யுடைத்துக் காண்டிகை யென்றவாறு. ‘விட்டகல்வின்றி விரிவொடு பொருந்த’லாவது மிக அகலாமை. இம்மனை நெருப்புடைத்தென்றது சூத்திரப் பொருள்; புகையுடைத் தாதலானென்பது ஏது; அடுக்களை போலவென்பது எடுத்துக்காட்டு. இவ்வகையினாற் சூத்திரப் பொருளுரைக்க வென்றவாறு. (104) 649. சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற விறி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே. உரையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. சூத்திரத்துட் பொருளொழியவும் அந்நூலகத்தில் யாப்பிற்கும் பொருந்த இன்றியமையாதனவெல்லாங் கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகு மென்றவாறு. (105) 650. மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்தநூ லானும் ஐயமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கித் தெற்றென வொருபொரு ளொற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்ற லென்மனார் புலவர். இதுவுமது. உரையாவது, ‘மறுதலைக்’கடாஅ மாற்றமு முடைத்தாக’, ஐயப்பட்டு நிற்றலும் மருண்டு நிற்றலும் நீக்கி, தன்னூலானாதல் அப்பொருண் முடிவுறக் கூறின நூலானாதல் தெளியவொரு பொருளை யொற்றுமைப்படுத்துதல், இதுவே பொருளெனத் துணிதல் உரையிற் கியல்பென்றவாறு. மாற்றமுமுடைத்தாகி யென்ற வும்மையான் விடையு முடைத்தாகி யென்க. (106) 651. சொல்லப் பட்டன வெல்லா மாண்பும் மறுதலை யாயின் மற்றது சிதைவே. 59மேலவற்றிற் கோதலான நூற்குரியதோர் மரபு முதனூலாயிற் சிதைவில்லை யென்றவாறு. என்னை? ஆவன கூறியது, விரியகலாதன சிதைவது வழிநூ லென்றவாறாம். (107) 652. 60சிதைவில வென்ப முதல்வன் கண்ணே. (108) 653. முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும் வல்லோன் புனையா வாரம் போன்றே. வழிநூற் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. முதனூலின் வழிச்செய்யினும் அந்நூல் யாப்பினுட் சிதையும், வல்லவன் புனையாத வாரம் போல வென்றவாறு. கோவை வாசியா னென்றவாறாம். (109) 654. சிதைவெனப் 61படுபவை வசையற நாடிற் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கக் கூறல் தன்னா னொருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கோ ளின்மை அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும். மேலதிகாரப்பட்ட ஈரைங் குற்றமும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. கூறியது கூறலாவது, ஒருகாற் கூறியதனைப் பின்னுங் கூறல். மாறுகொளக் கூறலாவது, ஒருகாற் கூறிய பொருளொடு மாறுகொள்ளுமாறு பின்கூறல். அஃதாவது ‘தவம் நன்று’ என்றவன்றான் ‘தவந்தீதெ’ன்று கூறல். குன்றக் கூறலாவது, தானதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல். மிகைபடக் கூறலாவது, அதிகாரப் 62பொருளன்றிப் பிற பொருளுங் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவா னெடுத்துக் கொண் டான் வடமொழியிலக்கணமும் கூறல். பொருளில கூறலாவது, முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக் கொப்பின்றிப் பயனில்லாதன கூறல். மயங்கக் கூறலாவது, கேட்டார்க்குப் பொருள் விளங்குமா றின்றிக் கூறல். கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதலென்பது, பொருள் யாக்கப் பட்ட சூத்திரஞ் சந்தவின்பமின்றி யிருத்தல். பழித்தமொழியான் இழுக்கக் கூறலாவது தானொரு பொருளை யொரு வாய்பாட்டாற் றெரித்துப் பிறிதோர் வாய்பாட்டாற் கூறுதல். அக்குறிப்பு உலகவழக்கின்மையாற் பிறர்க்குப் புலப்படாதாம்; அதனான் அதுவுங் குற்றமாயிற்று. என்ன வகையினும் மனங்கோள் இன்மையாவது, எழுத்தினானுஞ் சொல்லினானும் பொருளினானு மனங் கொள்ளுமாறு கூறாமை. (110) 655. எதிர்மறுத் துணரினத் திறத்தவு 63மவையே. இதுவுமது. நூற்குற்றம் உணர்த்துதல் நுதலிற்று. எதிர்மறுத்து உணர்வராயின், அத்திறத்தவும் குற்றமா மென்றவாறு. உதாரணம்: பாவஞ் செய்தான் நிரையம் புகு மெனக் கருதிக் கூறுவான் தவஞ் செய்வான் சுவர்க்கம் புகுமென்றல். இவ்வாறு கூறிச் சுவர்க்கம் பெறு மென்னும் பொருட்கண் நிரையம் புகுமென்ற பொருள் 64தோன்றாமையிற் குற்றமாயிற்று. (111) 656. ஒத்த காட்சி உயுத்திவகை விரிப்பின் நுதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் மொழியா ததனை முட்டின்றி முடித்தல் வாரா ததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல் பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவா மென்றல் கூறிற் றென்றல் தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை முடிந்தது காட்டல் ஆணை கூறல் பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடை யிடுதல் எதிர்பொரு ளுணர்த்தல் சொல்லி னெச்சம் சொல்லியாங் குணர்த்தல் தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய வல்ல பிறவவண் வரினும் சொல்லிய வகையாற் சுருங்க நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே. தந்திரவுத்தி யாமா றுணர்த்துதல் நுதலிற்று. இதன் பொழிப்பு: நுதலிய தறிதல் முதலாகச் சொல்லப் பட்டனவும் அத்தன்மைய பிறவுந் தந்திர உத்தியாம் என்றவாறு. தந்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். உத்தியென்பது வட மொழிச் சிதைவு. அது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது. ஒத்த காட்சி உத்திவகை விரிப்பினென்பது நூற்குப் பொருந்திய காட்சியினா னுரைக்கும் உத்திவகையை விரிக்குங் காலத் தென்றவாறு. நுதலிய தறிதலாவது - சூத்திரத்திற் சொற்ற பொருளுணர்த்தலன்றி, இதன் கருத்திதுவென உணர்த்தல். அஃதாவது ‘எழுத்தெனப்படுப’ (நூன்மரபு 1) என்னுஞ் சூத்திரத்துள் ‘எழுத்து இனைத்தென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று’ என்றல். அதிகார முறையாவது - முன்னம் பலபொருளை யதிகரித்த வழிப் பின்னும் அம்முறையினானே விரித்துணர்த்துதல். அஃதாவது உயர்திணை யஃறிணையென அதிகரித்து ‘ஆடூஉ வறிசொல்’ (கிளவியாக்கம் 2) என்னுஞ் சூத்திரத்தான் நிறுத்தமுறை பிறழாமல் உயர்திணை கூறல். இன்னும் இதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துள் ஓதாது அதன் காரியமாயின கூறியவழி அதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந் துரைத்தல். அஃதாவது, ‘அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்’ (உயிர்மயங்கியல் 1) என்னுஞ் சூத்திரத்திற் ‘கசதபத் தோன்றி’ னென வோதி வினையெஞ்சு கிளவியு’ (உயிர் மயங்கியல் 2) மென்னுஞ் சூத்திரத்துள் ஓதிற்றில ராயினும் அதிகார முறைமையினான் வல்லெழுத்து வருவழி யென வுரைத்தல். தொகுத்துக் கூறலாவது - வகைபெறக் கூறல் வேண்டு மாயினும் அதனைத் தொகுத்துக் கூறல். ‘எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப’ (நூன்மரபு 1) என்றாற்போல்வன. இன்னும் பல சூத்திரத்தாற் கூறிய பொருளை இத்துணையுங் கூறப்பட்ட திதுவெனக் கூறலுமாம். ‘தூக்கியல் வகையே யாங்கென மொழிப.’ (செய்யுளியல். 83) என்பதனாற் கொள்க. வகுத்து மெய்ந் நிறுத்தலாவது - தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறல். அஃது ‘அ, இ, உ, எ, ஒ’ (நூன்மரபு 3) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. இன்னுமதனானே, தொகைபடச் சூத்திரஞ் செய்தவழி, அவற்றுள் ஒரோவொன்று பொதுவிலக்கணத்தான் முடியாத வழிப் பெரும்பான்மை சிறுபான்மைகொண்டு வகுத்துப் பொருளுரைத்தலுமாம். இன்னுமதனானே தொகைபடக் கூறியவதனை வகுத்துப் பொருளுரைத்தலுமாம். மொழிந்த பொருளோ டொன்ற வைத்தலாவது - சூத்திரத்துட் பொருள் பலபடத் தோன்றுமாயின் முற்பட்ட சூத்திரத்திற் கொக்கும் பொருளுரைத்தல். அன்றியும் முற்பட்ட சூத்திரத்தினான் ஒரு பொருளோதிய வழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோ டொன்ற வைத்தலுமாம். மொழியாததனை முட்டின்றி முடித்தலாவது - எடுத் தோதாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல். இதனை ‘உரையிற்கோடல்’ என்ப. இக்கருத்தினானே சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே. (மரபியல். 105) என ஓதுவானாயிற்றென்க. வாராததனான் வந்தது முடித்தலாவது - ஒருங்கெண்ணப்பட்ட பொருளொன்றனைப் பகுத்துக் கூறியவழி ஆண்டு வாராததற் கோதிய விலக்கணத்தை இதன் கண்ணும் வருவித்துணர்த்துதல். வந்தது கொண்டு வாராதது முடித்தலாவது - ஒருங் கெண்ணப்பட்ட வற்றுளொன்றைப் பகுத்து இலக்கணங் கூறியவழி வாராததன்கண்ணும் இவ்விலக்கணத்தைக் கூட்டி முடித்தல். முந்துமொழிந்ததன் தலைதடுமாற்றாவது - முற்பட அதிகரித்த பொருளை யவ்வகையினாற் கூறாது முறைபிறழக் கூறுதல். இவ்வாறு கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும். அது புள்ளி மயங்கியலுட் கண்டுகொள்க. ஒப்பக்கூற லென்பது - ஒரு பொருளெடுத்து இலக்கணங் கூறிய வழி அது போல்வனவற்றையும் அவ்விலக்கணத்தான் முடித்தல். ஒருதலை மொழியாவது - ஏகாக்கர மென்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது, சூத்திரத்திற்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனு ளொன்றனைத் துணிந்து கூறல். தன்கோட் கூறலாவது - பிறநூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டான் கூறுதல். அது வேற்றுமை எட்டென்றல். உடம்பொடு புணர்த்தலாவது - இலக்கண வகையான் ஓதுதலன்றி யாசிரியன் ஒரு சூத்திரத்தின்கண்ணே யொரு சொல்லை வைப்பனாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் கோடல். ஒற்றீற்றுச் சொல்லை யுகரங்கொடுத்துக் கூறுகவென விலக்கணங் கூறிற்றிலராயினும் ‘ஆரும் அருவும் ஈரொடு சிவணும்’ (விளிமரபு 21) என ஓதுதலின், ‘அர்’ என்பது ‘அரு’ என உகரம் பெற்றது. இதனைப் பிறாண்டுங் கோடல். பிறனுடம் பட்டது தானுடம்படுதலாவது - பிற நூலாசிரியன் உடம்பட்ட பொருட்குத் தானுடம்படுதல். அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படு பொருட்கண் வருமெனப் பாணினியார் ஓதினார்; அஃது இவர்க்கும் உடம்பாடு. இறந்தது காத்தலாவது - மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருகின்ற சூத்திரத்தா னமைத்தல். எதிரது போற்றலாவது - முன் கூறப்பட்ட சூத்திரத்தானே வருகின்ற சூத்திரத்திற் பொருளினையும் பாதுகாக்குமாறு வைத்தல். மொழிவாமென்றலாவது - சில பொருளைக் கூறி அவற்று ளொன்றனையின்ன விடத்துக் கூறுவாமென வுரைத்தல். ‘புணரிய னிலையிடைக் குறுகலும்’ (மொழிமரபு 2) என்பதனாற் கொள்க. கூறிற்றென்றலாவது - பல பொருளா யதிகரித்தவற்றுட் சில பொருளை மேற்சொல்லப்பட்டன வென்றல். ‘மாத்திரை வகையும் எழுத்தியல் வகையு மேற்கிளந்தன்ன’ (செய்யுளியல் 2) என்றதனாற் கொள்க. தான் குறியிடுதலாவது - உலகின்கண் வழக்கின்றி யொரு பொருட்கு ஆசிரியன்றான் குறியிடல். அஃது உயர்திணை யஃறிணையென்பன. ஒருதலையன்மை முடிந்தது காட்டலாவது - ஒரு பொருளை யோதியவழிச் சொல்லுவதற்கே யுரித்தன்றிப் பிறபொருட்கும் பொதுவாக முடித்தமை காட்டல். ஆணை கூறலாவது - ஒரு பொருளைக் கூறும்வழி ஏதுவினாற் கூறலன்றித் தன்னாணையாற் கூறல். வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறினமையின் அவர் விளியை முதல்வேற்றுமையி லடக்கினார். அதற்குத் திரிபு கூறாது அதனை எட்டாம் வேற்றுமையென்றல் ஆண்டுக் கடாவப்படாது. பல்பொருட் கேற்பின் நல்லது கோடலாவது - ஒரு சூத்திரம் பல பொருட் கேற்குமாயின் அவற்றுள் நல்லதனைப் பொருளாகக் கோடல். தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடலாவது - தொகுத்துக் கூறிய சொல்தன்னானே பிறிதுமோர்பொருள் வகுத்துக்காட்டல். ‘அது குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின்’(மொழி மரபு 9) என்னுஞ் சூத்திரத்தான் மொழிமுதற் குற்றுகரமுங் கோடல். சொல்லின் முடிபின் அப்பொருண் முடித்தலென்பதும் அது. மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தலாவது - பிற நூலாசிரியன் கூறின பொருண்மையைக் கெடுத்துத் தன்றுணிவு கூறுதல். அஃதாவது நெட்டெழுத்தேழ் அளபெடை யென்பன குற்றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்து வேறோரெழுத்தாக வோதுதல். பிறன்கோட் கூறலாவது - பிற நூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல். அஃது ‘வேற்றுமை தாமே யேழென மொழிப’ (வேற்றுமை. 1) என்றல். அறியா துடம்படலாவது - தானறியாத பொருளைப் பிறர் கூறியவாற்றா னுடம்படுதல். அஃது ஏழாம்நரகம் இத்தன்மைத்தென வொருவன் கூறியவழி, அது புலனாகாதாதலின், அவன் சொன்னதற் குடம்படுதல். இது வழி நூலாசிரியர்க் குரித்து. பொருளிடை யிடுதலாவது - ஒருபொருளை யோதியவழி, யதற்கினமாகிய பொருளைச் சேரக் கூறாது இடையீடுபடக் கூறுதல். ‘அஃது பெண்மை சுட்டிய’ (கிளவி. 4) வென்னுஞ் சூத்திர மோதி அதன் பகுதியாகிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி (கிளவி. 12) யென்பதனை இடையிட்டு வைத்தல் போல்வன. எதிர்பொரு 65ளுணர்த்தலாவது - இனிக் கூறவேண்டுவதிது வெனவுணர்த்தல். சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தலென்பது - பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு ஆங்குச் சொல்லிய வாற்றாற் பொருள்கோடல். தந்துபுணர்ந்துரைத்தலாவது - முன்னாயினும் பின்னாயினும் நின்ற சூத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தினுங் கொணர்ந்து புணர்த்துரைத்தல். ஞாபகங் கூறலாவது - இரட்டுற மொழிந்து இரண்டு சொற்கும் பொருள்கோடல். உய்த்துக்கொண்டுணர்தலாவது - ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஓதியவழி, அதற்குப் பொருந்தாமை யுளதாகத் தோன்றின், அதற்குப் பொருந்துமாறு விசாரித்துணர்தல். பனியென்னுஞ் சொல்லுக்கு அத்தும் இன்னுஞ் சாரியையா மென்றாராயினும் (உயிர்மயங்கியல் 39), அவற்றுள் ஏற்பதொன் றாதலின் இன்ன ஈற்றதாயவாறு வருவன வுய்த்துணர்தலாம். இவை முப்பத்திரண்டுந் தந்திரவுத்தியாவன. மெய்ப்பட...நூலென்பது - மேற்சொல்லப்பட்டவற்றொடு கூடப் பொருள்பட ஆராய்ந்து சொல்லிய வல்லாதனவாகிய பிற அவண் வரினுஞ் சொல்லிய நெறியினாற் சுருங்க வாராய்ந்து மனத்தினானோர்ந்து குற்றமறத் தெரிந்து சொல்லிய வினத்தொடு பாகுபடுத் துரைத்தல் வேண்டுமது நுண்மை தகப் புலவர் கூறிய நூலினை யென்றவாறு. பிறவாறு கொளப்படுவன மாட்டெறிதல், சொற்பொருள் விரித்தல், ஒன்றென முடித்தல், தன்னின முடித்தலென்பன. இவற்றுள் மாட்டெறிதலாவது முன்னொரு பொருள் கூறிப் பின்வருவதும் அதுபோலுமென்றல். அஃதாவது ‘உகர விறுதி அகர வியற்றே’ (உயிர் மயங்கியல் 52) என வரும். சொற்பொருள் விரித்தலாவது - பதந்தோறும் பொருள் விரித்துக் கடாவும் விடையுங் கூறுதல். ஒன்றென முடித்தல் தன்னின முடித்தலென்பது சொல்லப் பட்ட வாற்றான் வருமுத்தரமேயாகத் தொகைப்பட முடியும். எனவுஞ், சில வாசிரியர் மதம் பலவுத்திக்கும் ஏற்கும் ஒருசூத்திரம்; இந்நூலகத்துள்... பொருள் கொண்டாமாயினும் ஈண்டுரைத்த பாகுபாடெல்லாவற்றிற்கும் இந்நூலகத் துதாரணமே கண்டு கொள்க. இன்னுஞ் ‘சொல்லியவல்ல பிற’ வென்றதனான், யாற்றொழுக்கு அரிமாநோக்கு தவளைப்பாய்த்துள் பருந்து விழுக்காடென்னுஞ் சூத்திரக் கிடக்கையும், ஆதிவிளக்கு மத்திம தீபம் இறுதிவிளக்கு என்னும் பொருள் கோணிலையுங், கொள்ளப்படும். யாற்றொழுக்காவது கருதிய பொருளை வழுவாமற் சூத்திரம் ஒருங்குபடக் கிளத்தல். அரிமாநோக்காவது முன்னும் பின்னுங் கூறுகின்ற விரண்டு சூத்திரத்தினையு மிடைநின்ற சூத்திரம் நோக்குதல். தவளைப் பாய்த்துளாவது இடையறுத்தோடுதல். பருந்து விழுக்காடாவது அவ்வதிகாரத் துட் பொருத்தமில்லாத பொருள் யாதானு மோர் காரணத்தான் இடை வருதல். ஆதி விளக்காவது சூத்திரத்தினான் ஆதியின் அமைத்த பொருள் அந்தத்தளவு மோடுதல். மத்திம தீபமாவது இடைநின்ற பொருள் முன்னும் பின்னும் நோக்குதல். இறுதி விளக்காவது இறுதி நின்ற பொருள் இடையும் முதலும் நோக்குதல். (112) 66இச்சூத்திரம்.... ஒன்பதாவது மரபியல் முற்றிற்று. பொருளதிகாரம் மூலமும் இளம்பூரணர் உரையும் முற்றிற்று. மரபியல் அடிக்குறிப்புகள் 1. மறியுமொன்பதுங். 2. என்பது சூத்திரம் இவ்வோத்து என்னபெயர்த் தோவெனின், மரபியலென்னும் பெயர்த்து. உலகத்து வழங்கும்பொருளை யிவ்வாறு சொல... ற்பெற்றபெயர். மேற் செய்யுளிலக்கண முணர்த்தி வழக்கிலக்கணம் உணர்த்து கின்றாராகலின் பிற்கூறப்பட்டது. இ(த்தலைச் சூத்திரம் என்னுதலிற்)றோ வெனின், இருதிணைப் பொருளும்பற்றிவரும் இளமைப்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பி ...டைய மரபியலைக் கூறுங்காலத் தென்றவாறு. விலக்குத லருமையாவது பார்ப்பென்பதனை வழங்கியன் மரபி... றுங்காற் கூறலாகாமை. பார்ப்பு முதலாகக் குழவியீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் இளமைப்பெய ரென்றவாறு... குழவி யோடொன்பதுமென மொழிமாற்றுக. அவையாமாறு தத்தஞ் சூத்திரத்துக் காட்டதும். 3. ஏறு. 4. ஏறுமுதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் ஆண்பாற் பெயரென்றவாறு. பிறவுமென்றதனாற் கொள்ளப்படு...ல் மக்கட்குரிய ஆண்பெயர் கூறாத தென்னையெனின், அவை பாலறியவ(ந்த) வுயர்திணைப் பெயரெனச் சொல்லதிகாரத்துள் பெயரியல் (அ) எடுத்... தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் காட்டதும். 5. பேடை முதலாகச் b(சால்லப்பட்டன பெ)ண்பாற் பெயரென்றவாறு. அந்தஞ் சான்றவென்பது வழக்கின்கண் முடியவமைந்த தென்றவாறு. 6. யென்பன. 7. இதனுட். 8. உரிய. 9. நான்கும். 10. வழங்கப்படும். 11. கொளலே. 12. ஆராயுமிடத்துக். 13. கூறாமையிற் 14. என்றவாறு. நாய்க்குருளை. நாய்க்குட்டி, நாய்ப்பறழ் எனவரும். 15. பிள்ளை யென்னுங் இளமைப்பெயர் நாயொழிந்த நான்க உயிர்க்கண்ணும் கூறுங் காலைக் குற்றமில வென்றவாறு. 16. நவ்வியென்பது. 17. முழையென்பது. 18. குரங்குங் குட்டி கூறும். 19. இவ்வுரைப் பகுதியில் சிலசொற்கள் எழுதுவோரால் விடுபட்டுப் போயினவெபனத் தோன்றுகிறது. 20. குரங்குச் சாதிக்கு. 21. குரக்குக்குட்டி. 22. ஐந்தும் 23. கராம். 24. கவரியென்றுங் கராமென்றுஞ் சொல்லப்படுவது. உம். 25. கராம். 26. அவற்றினோ. 27. மென்பதூஉங். 28. மவைசொலப். 29. கடமையும். 30. மூன்றுயிரும். 31. விரண்டின். 32. மரனுமாகிய. 33. நெல்லும் புல்லு மெனவரும் ஓரறிவுயிர்கள் மேற்சொல்லப்பட்ட விளமைப்பெயர் கூறப்பெறா ரென்றவாறு. 34. மரபுடையனவற்றிற்குச் 35. அவைதானே. 36. இதுமுதல் `குரங்குமுசுவு மூகமுமந்தி’ என்னுஞ் சூத்திரம் வரையுள்ள பகுதியைக் கொண்ட இதழ்கள் இளம்பூரணருரை முழுதுமடங்கிய ஏட்டுப்பிரதியில் தவறி விட்டன. ஸ்ரீ.ரா. ராகவையங்காரவர்கள் அன்புகூர்ந் தனுப்பிய மரபியல் ஏட்டுப்பிரதியே விடுபட்ட பகுதியை நிரப்புதற்கு உபகாரமாயிற்று. 37. மாக்களு. 38. `கோழியுங்.... பெண்பாலான’ என்பது சூத்திரத்தின் பகுதியாக வுள்ளது. 39. கிளவி. 40. பிணையென். 41. குணஞ்சொலுந் 42. கம்பு. 43. புல்லு முதிரை. 44. வாணிகர்க்கு ... யகையா மென்றவாறு. 45. இச்சூத்திரம் ஸ்ரீ ராகவையங்காரவர்களது பிரதியிற் காணப்படவில்லை. 46. ஆய்ந்தன; ஆர்ந்த தென்ப. 47. `அமாத்தியர் நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற’ என்பது இச்சூத்திரத்தின் முதலடியாக வுள்ளது. 48. புறவயிர முடையனவற்றைப் 49. உள்வயிரமுடையனவற்றை. 50. ருடையனவாயின் அவையும். 51. தாழையுந் தாமரையுங் கமுகு... 52. செகிழே. 53. வழாமற் றிரிவில். 54. னீங்கிய. 55. தனமுன். 56. விடுத்தலும் விலக்கலுமுடையோர். 57. புரைதப. 58. அளக்கலாத. 59. இங்கு உரை வாக்கியங்கள் சூத்திரத்திற் கேற்ப அமையாது பிறழ்ந்துள்ளன வென்று தோன்றுகிறது. 60. இச்சூத்திரம் பிரதியிற் காணப்பெறவில்லை. 61. படுவது. 62. பொருளின்றிப் 63. மதுவே. 64. தோன்றினமையிற். 65. ளுரைத்தலாவது. 66. இது மரபியலுரை யேட்டுப் பிரதியின் இறுதிவரியாகும் எழுத்துக்கள் மிகவுஞ் சிதைந்துள்ளனவாதலால், வாக்கியம் இன்னதென்பது புலப்படவில்லை. பின்னிணைப்புகள் 1. உவம விளக்கம் உவமமென்பது ஒருபொருளோடு ஒருபொருளினை ஒப்புமை கூறுதல். தருக்கநூலோர் உவமத்தை ஓர் அளவையாகக் கொள்வர். அலங்கார நூலோர்அதனை ஓர் அலங்காரமாகக் கொள்வர். தமிழிலக்கணநூலோர் அதனைப் பொருள் புலப்படுக்குங் கருவி யாதல் பற்றிப் பொருளுறுப்பாகக் கொண்டனர். தருக்கநூலோரும், பண்டைத்தமிழிலக்கண நூலோரும், உவமையைப் பெரும்பாலும் பொருளின் புலப்பாட்டிற்குக் கரணமாகக் கொள்ளுதலினால் அவ்விருவரும் கருத்துவகையால் வேறுபாடுற்றிலர். அலங்காரநூலோர் அன்னரல்லர். அன்றியும், பண்டையிலக்கண நூலில், பொருளுறுப்பாகக் கூறிய உவமவகையுட்சிலவற்றையும் வேறு சிலவற்றையுந்திரட்டிப் பிற்காலத்து வடமொழியாளர் அவை செய்யுட்கு அலங்காரமென நூல்செய்தாரேயன்றித் தொல்லாசிரியர் அங்ஙனஞ் செய்திலர். வடமொழிமதம் பற்றி நூல்கள் எழுந்த பிற்காலத்தில், தமிழிலும் வடமொழியலங்காரம் போன்று அணிநூல்களியற்றப்பட்டன. அவ்வணியையும் இலக்கணத்தின் பகுதியாகக் கொள்ளுதலே தமிழ் மரபாயிருக்கின்றது. அணியென நூலியற்றுதல் பொருத்தமுடைத்தன்றென்பது சில தமிழ் நூலுரையாசிரியர்களின் கருத்து. அதற்கு அவர் கூறுங் காரணங்களுட் சில:- 1. அணியென நூலியற்றினோர் கூறிய இலக்கணத்திற் பிழையாது செய்யுட் செய்தவழியும் வல்லோர் செய்யின் அணியுடைத்தாகியும் அல்லோர்செய்யின் அணியுடைத்தன்றாகியும் இருத்தலின் அவையெல்லாம் செய்யுட் கணியென ஒருதலையாகக் கூறலமையா; 2. செய்யுட்கு அணிசெய்யும் பொருட்டிறனெல்லாம் விளங்கக்கூறாது சிலவற்றையே வரைந்து அணியெனக் கூறுதல் குன்றக்கூறலாய் முடியும்; 3. அணியெனப்படின் மெய்யின் அணிபோல் அவை செய்யுட்கு வேறாகி நிற்றல் வேண்டும்; என்பன. இதனை "நிரனிறுத்தமைத்தல்" என்னும் உவமவியலிறுதிச் சூத்திரத்துப் பேராசிரியருரையிற் பரக்கக் காணலாம். அகனும் புறனுமாய பொருட்கூறுகளை அவ்வவற்றி னியல்பு கூறியுள்ளவாறு புலப்படுத்தல் வேண்டும். இயல்பு கூறுதல் மாத்திரையானே பொருள் புலப்படாவிடத்தும், அவற்றிற்குப் பெருமை சிறுமை கூறவேண்டியவிடத்தும் ஒப்புமை யுள்ள பிற பொருள்களோடு உவமித்து விளக்க வேண்டும். அணிநூலாரும் தொடக்கத்திற் றன்மையணியும் அடுத்து உவமை அணியுங் கூறிப்போந்தனர். இவ்வாற்றால் உவமம் பொருட்குப் பெரியதோருபகாரமுடைத்தாதல் பெறப்படுகின்றது. "வட நூலாருள்ளே சித்திரமீமாஞ்சை யென்னும் அலங்காரகாரர் உவமையணியொன்றே வேறுபடுத்திக் கூறுந்திறத்தாற் பலவித அலங்காரங்களாகு மென்பர்" எனக்கூறி உதாரணங்களுங் காட்டினர் சுன்னாகம், அ.குமாரசுவாமிப் பிள்ளையவர்கள். (தண்டியலங்காரம், பக்கம் 40-41) உவமவுறுப்புக்கள் உவமிக்கும் உவமையும், உவமிக்கப்படும் பொருளும், அவ்விரண்டன்கண்ணுமுள்ள பொதுத்தன்மையும், அவற்றை விளக்கவரும் உருபிடைச்சொல்லுமென நான்காம். உவமந்தான் வெளிப்படையுவமம், உள்ளுறையுவமம் என இருவகைப்படும். அவற்றுள் வெளிப்படை உவமத்தை முதற்கண் விளக்குதும். உவமையும் பொருளும் வெளிப்பட்டே நிற்பது வெளிப்படையாகும். உவமந்தோன்றுதற்குரிய நிலைக்களம், சிறப்பு நலன் வலி காதல் இழிபு என்னும் ஐந்துமாகும். ஒருபொருள் அதன்கட் செயற்கையாலுளதாகிய சிறப்புப்பற்றியாவது, இயல்பிலுள்ள அழகுபற்றியாவது, வலிபற்றியாவது, அவையில்வழியும் உளவாகக் கொண்டுரைக்குங் காதல் பற்றியாவது, இழிபு பற்றியாவது அதனோடு ஒப்புமையுள்ள வேறு பொருளோடு உவமிக்கப்படுமன்றி யாதும் இயைபின்றியே வாளா உவமிக்கப் படுமாறில்லை. உவமைக்கும் பொருட்குமுள்ள பொதுத்தன்மை வினை, பயன், மெய், உரு என்ற நான்குமாம். அவற்றானுவமிக்கு மிடத்துப் பொருளினும் உவமை உயர்ந்ததாகல் வேண்டும். உவமையும் பொருளும் பொருந்தியனவென்று பிறர் மகிழும் படியும் உவமிக்க வேண்டும். கருமைப்பண்புபற்றி மயிற்றோகை போலுங்கூந்தலென்னாது காக்கைச்சிறகு போலுங்கருமயி ரென்று கூறுதலும், தவறாமற்பாய்தல் பற்றிப் புலிபோலப் பாய்ந்தானென்னாது பூனை போலப்பாய்ந்தானென்று கூறுதலும் பொருந்தாவாம். புலி யன்ன வீரன் வினையுவமம். மழை போலுங்கை பயனுவமம். உடுக்கை போலும் இடை மெய்யுவமம். பவளம் போலும் வாய் உருஉவமம். புலியன்னவீரன் என்பது அது பாயுமாறே பாய்வன் எனத் தொழில் பற்றியொப்பித்தமையின் வினையுவமமாயிற்று. ஏனையவு மிவ்வாறே காண்க. அளவு, சுவை, தண்மை, வெம்மை, நன்மை, தீமை, சிறுமை, பெருமை முதலாயின வெல்லாம் வினை முதலிய நான்கன் பகுதியாயடங்கும். பவளவாயென உவமைக்கும் பொருட்கும் பொதுவாய ஒப்புமைக்குணத்தை விதந்து சொல்லாவிடில் அது ‘சுட்டி க்கூறாவுவமம்' எனப்படும். "பவளம்போற் செந்துவர்வாய்" எனப் பொதுத்தன்மையை விதந்து சொல்லின், சுட்டிக் கூறியவுவம மாகும். இவற்றை முறையே தொகையுவமையென்றும், விரியுவமையென்றும் தண்டியலங்காரங் கூறுகின்றது. உவமவுருபு தொக்கு நிற்றலை உவமத்தொகை என்றும், விரிந்து நிற்றலை உவமவிரியென்றும் பேராசிரியர் கூறினர். தண்டியலங்காரத்திற் கூறப்பட்டுள்ள ஐயவுவமை, விபரீத உவமைகள் தொல்காப்பியர் கூறிய ‘தடுமாறுவமம்' என்பதி லடங்கும். தடுமாறுவமத்தில் உவமையைப் பொருளாகவும், பொருளை உவமையாகவும் உரைத்தவழியும் பொருளினும் உவமை உயர்ந்ததாகல் வேண்டுமென்னும் விதிப்படி அங்கு உவமையாகப் போந்த பொருளை உயர்ந்ததாக்கியேயுரைக்கல் வேண்டும். உவமையும் பொருளும் பலவாக வேறு வேறு வரிசையாக நிறுத்திக் கொண்டு கூட்டியுவமித்தலும் உண்டு; அது 'நிரனிரையுவமம்' எனப்படும். அலங்கார நூல்களிற் கூறப்படுகின்ற உவமவிகற்பங்களிற் பலவற்றையும், வேற்றுமை, தற்குறிப்பேற்றம், திருட்டாந்தம், விலக்கு முதலிய அலங்காரங்கள் பலவற்றையும், ஆசிரியர் தொல்காப்பியனார் ‘வேறுபடவந்தவுவமத்தோற்றம்' என அடக்கினர். இனி, சிறப்பு முதலிய ஐவகை நிலைக்களத்தும் வினை முதலிய பொதுத்தன்மை நான்கானும் உவமம் நிகழுமெனவே, அவை தம்மினுறழ உவமம் இருபஃதாகும், அவையும், சுட்டிக் கூறாவுவமம் முதலியனவாக விகற்பித்து வழக்கிற்குஞ் செய்யுட்கு முரியவாய் நகைமுதலிய எண்வகை மெய்ப்பாடுந்தோற்றுவித்து நிகழுமாகலின் அவற்றானெல்லாமுறழ உவமவிகற்பம் இறப்பப் பலவாம். சுருங்கச் சொல்லுமிடத்து உவமமெல்லாம் உவமிக்கப்படும் பொருட்குப் பெருமை சிறுமை கூறுதலும், அவ்வாறன்றி அவற்றினியல்பைப் பட்டாங்கு கூறுதல் உடையனவாம். பொருளினியல்பை உவமத்தால் விகாரமுறுத்தாது பட்டாங்கு கூறும் வழக்கைப் பத்துப்பாட்டு முதலிய நல்லிசைப்புலவர் செய்யுளிடத்துப் பெரிதுங்காணலாம். உதாரணமாகப் பின்வருவன காண்க: "நீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம்பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு"1 "ஓங்குநிலை யொட்டகந் துயின்மடிந் தன்ன வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகின்"2 "....................வேழத்துப் பாம்பு தைப்பன்ன பரூஉக்கை துமிய"3 "பொய்பொருகயமுனிமுயங்குகைகடுப்பக் கொய்பத முற்றன குவவுக்குர லேனல்"4 "விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக்கிருவிதொறுங் குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை"5 "மேதி யன்ன கல்பிறங் கியவின் வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி"6 "வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்"7 "அம்பணத் தன்ன யாமை யேறிச் செம்பி னன்ன பார்ப்புப் பலதுஞ்சும்"8 இன்னோரன்ன கருத்துக்களாற் பண்டைத் தமிழ்ப் புலவராயினாரது உலகியற்பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சித் திறன் அறிந்து வியக்கத் தக்கதாகின்றது. இனி, உவமையும் பொருளும் ஒரு நிகரனவாயிராமல் மிகப்பெரியவும் மிகச்சிறியவு மாயிருப்பின் வழக்குவழிப்பட்டுச் சிறப்பிற்றீராதனவாயிருத்தல் வேண்டும். "மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பகுவெண் டிங்கள் தோன்றியாங்குக்-கதுப்பயல்விளங்குஞ்சிறுநுதல்"என்று கூந்தலுக்கும் நெற்றிக்கும் மிகப்பெரியவாகிய கடலையும் பிறையையும் உவமை கூறினும் அவ்வாறு வழக்குடைமையிற் சிறப்பிற்றீராவாயின. இவ்வாறன்றி "மேருமால்வரை காம் பொத்து விண்முகடு குடையொத்து விண்மீன் கணம் முத்துப் போன்றன". என்று உலகவரம் பிறந்து பொருளைப் புகழ்தற் பொருட்டு உவமங்கூறுதல் தமிழ் வழக்கன்றாம். உவமைக்கண் முதல் சினை திணை பால் மயங்கிவரினும் மரபுநிலை திரியாதன கொள்ளப்படும். சந்திரன் போன்ற முகம் போலும் தாமரையென உவமம் அடுக்கிக்கூறுதல் குற்றமாம். அன்ன, ஆங்க முதலிய உவமஉருபுகளெல்லாவற்றையும் எல்லாவுவமத்திற்குங் கொள்ளாது பொருள் நோக்கியும் மரபுநோக்கியும் வினையுவமை முதலிய வற்றிற்கு உரியன விதந்து கொள்ளல் வேண்டும். ஒரு பொருட்கு ஒரு பொருளையுவமங்கூறுங்கால் வினைபயன் முதலியவற்றுள் ஒன்றேயன்றி இரண்டு முதலியனபற்றிக் கூறவும்படும். இனி உள்ளுறையுவமமாவது உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாகிய இரண்டனுள், பொருளினைக் கிளந்து கூறாது இது இன்ன பொருட்குவமமாயிற்று என அறிவுடையோர் ஊகித்துணர்ந்து துணியுமாறு உவமமாத்திரமே கூறுதலாகும். உவமேயமாகிய பொருளினைக் கிளந்து கூறாது உவமங் கொள்ளுதல் செவ்விதன்றாயினும் ஏனையுவமம் போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதுவும் ஒப்பினாகிய பெயராய் உவமமெனப்படுவதாயிற்று. அதுபற்றியே ஆசிரியர் தொல் காப்பியனாரும் உள்ளுறையுவமமென்றும், உவமப்போலி யென்றும் பெயர் கூறுவாராயினர். புலப்படக் கூறாமைபற்றி உவமப்போலியென்றாரேனும் அது நல்லுணர்வுடையோர்க்கே அரிதிற்கூறவும் உணரவும்படுவதாய நுட்பமுடைத்தாய் அகப் பொருட்குச் சிறந்ததாய் விளங்குதலின் ஏனையுவமத்தினும் தவலருஞ் சிறப்பினதாதல் பெறப்படும். இது நல்லுணர்வுடை யோர்க்கே புலனாவதெனவே ஏனையுவமம் போல் வழக்கிற்கு முரியதாகாது செய்யுட்கேயுரியதாதல் பெறப்பட்டது. செய்யுளுள்ளும் புறத்திற்கன்றி அகத்திற்கேயுரியதாம். அகத்துள்ளும் குறிஞ்சி, மருதம், நெய்தலென்னுமூன்றற்கும், அவற்றுள்ளும் மருதத்திற்கும் சிறந்ததாம், பரத்தையிற் பிரிந்த தலைவன் பின் தலைவியைக் கூடுதற்பொருட்டு வாயில் விடுக்க வாயிலாய் வந்தார்பால், தலைவிக்கும் தோழிக்கும் கூற்றுநிகழும் பொழுது பரத்தையரிழிபும், தலைவன் கொடுமையு முதலாயின உணர்த்துதல் காரணத்தான் உள்ளுறை கூறப்பெறுவர் பெரும்பான்மையும். சிறுபான்மை யேனையிடத்தும் உள்ளுறை நிகழும். நற்றாய், தந்தை, தன்னையர், ஆயத்தாரென்போர் உள்ளுறையுவமை கூறப்பெறாதவராவர். அவரொழிந்த தலைவன் தலைவி, தோழி, செவிலி, பாங்கன், பாணன், காமக்கிழத்தி முதலாயினா ரெல்லாரும் கூறுதற்குரியர். அவருள்ளும், தலைவியும் தோழியுமே கூறுதற்குச் சிறந்தோராவர். தலைவி உள்ளுறையுவமங்கூறுங்கால் மருதம் நெய்தல் என்னுமிரண்டிடத்தும் தானறிந்த பொருளானே கூறப்பெறுவள். சிறுபான்மை குறிஞ்சியிலறிந்த பொருளாற் கூறலுமுண்டு. தோழியும் செவிலியும் அந்நிலத்துள்ளனவெல்லாம் அறிந்து உள்ளுறை கூறுவர்; பிறநிலத்துள்ளன கூறார். ஏனோரெல்லாம் இடம்வரைவின்றித் தாந்தாமறிந்த பொருளானெல்லாங் கூறப் பெறுவர். ஐந்திணைக்குமுரிய தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, தொழில், யாழ் முதலிய கருப்பொருள்களிற் றெய்வ மொழிந்தனவெல்லாம் உள்ளுறைதோன்றுநிலனாம். இவையெல்லாம் உய்த்துணருங்கால் இது, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்காய்த் தமிழ் முதனூலாசிரியனாற் படைக்கப்பட்டதாய்த் தோன்றுதலின், தம் நுண்ணுணர்வின் மிகுதியால் உள்ளுறை கூறும் வழக்குத் தமிழ் மக்கட்கேயுரித்தெனல் தேற்றமாம். சங்கமருவிய தொகைநூல்களில் அகம்பற்றிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை அகநானூறு என்பவற்றினெல்லாம் உள்ளுறை கூறும் வழக்கைப் பரக்கக் காணலாம். "கரைசேர் வேழங் கரும்பிற் பூக்கும் துறைகே ழூரன் கொடுமை நன்று மாற்றுக தில்ல யாமே தோற்க தில்லவென் றடமென் றோளே"1 என்னும் ஐங்குறுநூற்றுச்செய்யுளில், தலைமகன் பரத்தையர்க்குச் சிறப்புச் செய்கின்றானென்பதுணர்ந்த தலைமகள் வாயிலாய் வந்தார்க்கு அதனை வெளிப்படக்கூறாது கரைமருங்கு நிற்கும் வேழம் வயலகத்து விளைக்குந் தீங்கரும்பு போலப் பொலியுமூரன் என்று கூறி, அதனாற் பொதுமகளிர்க்குக் குலமகளிரைப் போற் சிறப்புச் செய்கிற்பான் தலைவனென்ப துணரவைத்தாள்; இஃதுள்ளுறையுவமமாதல் காண்க. இனி, இவ்வுள்ளுறையுவமமும் ஏனையுவமம் போன்று சிறப்பு, நலன், வலி, காதல், இழிபென்னுமைந்தனையும் நிலைக் களனாக்கொள்ளும். ஏனையுவமத்திற்குப் பொதுவியல்பு, வினை, பயன், மெய், உரு என்ற நான்குமாக, உள்ளுறைக்கு அவற்றோடு சாதியுஞ்சேர்ந்து ஐந்தாகும். இங்ஙனம் ஐந்துநிலைக்களத்தும் ஐந்துதன்மையானுந்தோன்றும் உள்ளுறையுவமந்தான் எண்வகை மெய்ப்பாடுந்தோற்றுவித்துத் தனித்தனியும் விரவியும் வரும் விகற்பமெல்லாம் இறப்பப்பலவாம். அவற்றுக்கெல்லாம் உதாரணங்காட்டி விளக்கப்புகின் வரம்பின்றிப் பெருகுமென்க. இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் உள்ளுறையை உடனுறை உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படுத் துரைத்தார். அவற்றுளொன்றாகிய உவமமே உள்ளுறையுவமமென இதுகாறும் விளக்கப்பட்டது. ஏனையநான்கனுளொன்றாகிய உடனுறையென்பதனையும் ஈண்டு இன்றியமையாமைபற்றிச் சிறிதுவிளக்கிமுடிப்பாம். உடனுறையென்பதற்கு "நான்கு நிலத்துமுளவாய் அந்நிலத்து உடனுறையுங் கருப்பொருளாற் பிறி தொன்றுபயப்ப மறைத்துக் கூறும் இறைச்சியும்" எனப் பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். இதனால் உடனுறை யென்பது நிலத்துடனுறையுங்காரணத்தாற் கருப்பொருட் காயிற்று என்பது பெறப்படுகின்றது. கருப்பொரு ளெனினும் இறைச்சி எனினும் ஒக்கும். தொல்காப்பியத்துப் பலவிடத்தும் இறைச்சியெனும் சொல்லுக்குக் கருப்பொரு ளென்றே எல்லா வுரைகாரரும் பொருள் கூறினர். இங்கு இறைச்சியெனப்படும் கருப்பொருளாற் பிறப்பதனை யிறைச்சியென்றார். "இறைச்சிதானே பொருட்புறத்ததுவே" "இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே - திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே" என்னுஞ்சூத்திரங்கள் இறைச்சிக்கு இலக்கணங் கூறவந்தவாம். இவ்விருசூத்திரத்தானும் இறைச்சியை இருவகைப் படுத்துரைத்து உதாரணங்காட்டினர் ஆசிரியர் நச்சினார்க் கினியர். இன்னோரன்ன பொருட்டிறங்களில் அவருரையின்றி யாமறியற் பாலதொன்றின்மையின் அவ்வுரைக்கருத்தையே இங்குக் கூறுகின்றேன். முதற் சூத்திரக்கருத்து, கூறவேண்டிய பொருளைத் தலைமையாக வெளிப்படக்கூறாது வேறு பொருளினடக்கிக் கூறுதலாம். "இலங்குமருவித்திலங்குமருவித்து - வானினிலங்கு மருவித்தே தானுற்ற - சூள்பேணான் பொய்த்தான்மலை" என்னுமிதில், சூள்பொய்த்தானென்பதே கூறவேண்டும் பொருள். அதனைத் தலைமையாகக் கூறாது, மலை விளங்கும் அருவியையுடையதென்னும் பிறிதுபொருளாகிய கருப்பொருள் கூறுமுகத்தான் மறைத்துக் கூறினமையின் இறைச்சியாயிற்று. சூள்பொய்த்தானென்பது ஒருவாற்றான் மறைக்கப்பட்டமையின் உள்ளுறையிலடக்கினார். இரண்டாஞ் சூத்திரக்கருத்து, உள்ளுறையுவமம் போன்றே கருப்பொருளை நிலனாக்கொண்டு தோன்றும் பொரு ளென்பதாம். ஆயின், உள்ளுறையுவமத்திற்கும் இதற்கும் வேறுபாடென்னையெனின், உள்ளுறையுவமம், கூறவேண்டிய பொருளைச் சிறிதும் புலப்படக்கூறாது முழுதும் உவமையாற்பெறவைத்தல். இறைச்சி, கூறவேண்டிய பொருளைப் புலப்படக்கூறி அதன்புறத்தே கூறும் கருப்பொருளால் வேறு பொருளுந்தோன்றச் செய்தல். கன்று பாலுண்ணுமாறு பிடி தினையையுண்ணும்நாடனே! நீ இரந்து துயருற்றகாலத்து நான் இவளை நின்னொடு சேர்த்த நன்றியை மறவாது இன்று நீ இவளை வரைந்து கொள்ளல் வேண்டும்; என்னுங்கருத்துள்ள செய்யுள் இறைச்சிக்குதாரணமாகும். இதில் நாடனேயென்பதில் நீ நின்கருமஞ்சிதையாமற் பார்த்து எமக்குயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மை இறந்துபடுவித்தல் ஆகாது என்று உள்ளுறையுவமமெய்திற்றேனும் கூறவேண்டிய பொருளைப் பின்னர் வெளிப்படக்கூறி யிருத்தலின் இது இறைச்சியாயிற்று. "ஏற்றவளை வரிசிலை யோனியம் பாமுனிகலரக்கி சேற்றவளை தன்கண வனருகிருப் பச்சினந் திருகிச் சூற்றவளை நீருழக்குந் துறை கெழு நீர்வள நாடா மாற்றவளைக் கண்டக் காலழலா தோமன மென்றாள்"1 என்னும் இராமாயணச் செய்யுள் இறைச்சி போற்றோன்றினும் இறைச்சிக்கு நச்சினார்க்கினியர் கூறிய இலக்கணத்தில் ஒன்றேனும் முற்றுமமையப் பெறாமையானும், அகனைந்திணைக் கேலாமையானும் இறைச்சியாகாதென்க. இறைச்சி பெரும்பாலும் தலைவன் கொடுமை கூறும் வழிப் பிறக்கும். கருப்பொருள்களில் உள்ளுறையுவமத்திற்கு விலக்கிய ‘தெய்வம்' இறைச்சிக்கண் வருதலுண்டு, மற்றும் இதனியல்பெல்லாம் புலனெறிவழக்குப் பற்றியுணர்ந்து கொள்ளற்பாலன. இதுகாறுங்கூறியவாற்றால், பிறர் அலங்கார முதலிய பெயர்களால் விரித்துக்கூறிய பரந்து பட்ட பொருளை யெல்லாம் அவரினும் முன்னரறிந்து உவம விலக்கணத்தாற் சுருங்க விளங்கவுரைத்தருளிய ஆசிரியர் தொல்காப்பியனாரது பேரருட் புலமையே புலமையாகக் கண்டாமென்க. வாழியதமிழ்சேர்நாடுமன்னவர்மக்களெல்லாம் வாழியதமிழ்சேர்சங்கம்தலைவர்கள்மதிவல்லோர்கள் வாழியதமிழென்றேத்தவயங்கிடுமெமதுதாயே வாழிய இராமநாதன்மன்னுயிர்க்கருளுமாறே.2 அடிக்குறிப்புகள் * இது மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் பதின்மூன்றாவது வருஷக்கூட்டத்திற் (ஆண்டு விழாவில்) படிக்கப்பெற்றது. 1. பெரும்பாணாற்றுப்படை - அடிகள் 83 - 85 2. சிறுபாணாற்றுப்படை - அடிகள் 154 - 155 3. முல்லைப்பாட்டு - அடிகள் 69, 70 4. மலைபடுகடாம் - அடிகள் 107, 108 5. மேலது - அடிகள் 109, 110 6. மேலது - அடிகள் 111, 112 7. ஐங்குறுநூறு பா - 30 8. ஐங்குறுநூறு பா - 43 1. ஐங்குறுநூறு பா - 12 1. கம்பராமாயணம் - ஆரணிய காண்டம் - சூர்ப்பநகைப்படலம் பா - 122 2. ந.மு.வே. பாட்டு - நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 16 பக். 3-10 2. திணைமயக்கம் "திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே"1 "உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே"2 "எந்நிலை மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்"3 என்னும் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்கள் திணைமயக்கம் உணர்த்த எழுந்தன. "முத்திறப் பொருளுந் தத்தந் திணையொடு மரபின் வாராது மயங்கலு முரிய"4 என்னும் அகப்பொருள் விளக்கச் சூத்திரமும் அது. இவை ஒரு நிலத்தில் வேறு திணைக்குரிய உரிப்பொருளாகிய ஒழுக்கமும் கருப்பொருள்களும் மயங்கிவருதலையே பெரும்பான்மை உணர்த்துவன என்பது இவற்றின் உரையால் அறியலாகும். அங்ஙனம் மயங்கி வருதற்குச் சங்கத்துச் சான்றோர் செய்யுட்களி லிருந்து உரையாளர்கள் பல உதாரணங் காட்டியுள்ளார்கள். கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டினுள் வேறு திணைக்குரிய பூக்கள் மயங்கி வந்தவாறுங் காண்க. இப்பொழுது திணைமயக்கமென்று பலரால் அறியப் படுவது அகப்பொருள் கூறும் இத்திணைமயக்கமன்று: ஒருநிலம் மற்றொரு நிலத்துடன் நெருங்கியிருத்தலால் ஒன்றற்குரிய கருப் பொருள்கள் முதலியன மற்றொன்றிற் சென்று பொருந்துதல் என்பதே. சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கற்கால்கொண்டு நீர்ப்படை செய்து மீளுமுன் அவன் மனைவி வஞ்சி நகரத்தின் அரண்மனையில் பள்ளிக்கட்டிலின் மீது துயிலின்றியிருத்தலை வருணிக்கும் இளங்கோவடிகள், "குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்"1 "தொடுப்பே ருழவ ரோதைப் பாணியும்"2 "கோவல ரூதுங் குழலின் பாணியும்"3 "வெண்டிரை பொருத வேலைவா லுகத்து"4 "அஞ்சொற் கிளவிய ரந்தீம் பாணியும்"5 "ஓர்த்துட னிருந்த கோப்பெருந் தேவி"6 என்று கூறி, நால்வகை நிலமும் வஞ்சிக்கு அணிமையில் இருத்தலை விளக்கினார். அரும்பதவுரைகாரரும் ஓர்த்து உறங்காத தேவி யென்றது நாலுநில அணிமையுங் கூறிற்று என்றார். இங்ஙனம் ஒரு நாட்டின்கண் நிலங்கள் ஒன்றோடொன்று நெருங்கி அவற்றின் கருப்பொருள் முதலியன மயங்கியிருத்தலை அந்நாட்டிற்கு ஓர் சிறப்பாகக் கொண்டு புலவர்கள் அழகுறப் புனைந்து கூறி வந்திருக்கின்றனர். சங்கச் செய்யுளாகிய பொருநராற்றுப் படையில் கஅய-முதல் உஉரு முடியவுள்ள அடிகளில் இத்திணை மயக்கம் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஒருபகுதி பின்வருவது: "தேனெய்யொடு கிழங்குமாறியோர் மீனெய்யொடு நறவுமறுகவும் தீங்கரும்போ டவல்வகுத்தோர் மான்குறையொடு மதுமறுகவும், குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் சூடக், கானவர் மருதம் பாட, அகவர் நீனிற முல்லைப் பஃறிணை நுவலக் கானக்கோழி கதிர் குத்த, மனைக்கோழி தினைக்கவர, வரைமந்தி கழிமூழ்கக், கழிநாரை வரையிறுப்பத், தண்வைப்பின் நானாடுகுழீஇ"7 குறிஞ்சி நிலத்துக் குறவர் தேனையும் கிழங்கையும் நெய்தனிலத் திலேவிற்று அங்குள்ள மீனின் நெய்யும் மதுவும் வாங்குதலும், மருதநிலத்துக் களமர் கரும்பையும் அவலையும் குறிஞ்சி நிலத்தில் விற்று அங்குள்ள மான்றசையும் தேனும் கொள்ளுதலும், நெய்தனிலத்துப் பரதவர் குறிஞ்சிப் பண்பாடுதலும், குறிஞ்சி நிலத்துக் குறவர் நெய்தற்பூச் சூடுதலும், முல்லைநிலத்து ஆயர் மருதப் பண்ணும் மருத நிலத்தாராகிய அகவர் முல்லைப் பண்ணும் பாடுதலும், முல்லையிலுள்ள கோழி மருதத்தில் நெற்கதிரையும், மருதத்திலுள்ள மனைக்கோழி குறிஞ்சி சார்ந்த முல்லையிலுள்ள தினையையும் கவர்ந்துண்டலும், குறிஞ்சி யிலுள்ள மந்தி நெய்தலின் கழியில் மூழ்குதலும், நெய்தலின் கழியிலுள்ள நாரை குறிஞ்சியிடத்து மலையிற் சென்று தங்குதலும் இயற்கை நெறி பிறழாமல் இதிற் கூறியிருப்பது கற்பார்க்குப் பெரியதோர் இன்பம் பயப்பதாகும். "கொடிச்சியர் புனத்தயற் குறிஞ்சி நெய்பகர் இடைச்சியர் கதுப்பயற் கமழும்; ஏழையங் கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த் தொடுத்தலர் பிணையலார் குழலுட்டோன்றுமே"1 "கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப் புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே குலவுகாற் கோவலர் கொன்றைத் தீங்குழல் உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே"2 இவ்விரண்டும் சூளாமணிச் செய்யுட்கள் (33, 34). முல்லை நிலத்து ஆய்ச்சியர் குறிஞ்சிப்பூவையும் நெய்தனிலத்து நுளைச்சியர் மருதத்துப் பூவையும் சூடிக்கொள்வர் என்றும், நெய்தனிலத்து நுளையர் பறையோசையால் மருத நிலத்து உழவர் குரவை விளக்கமுறும் என்றும், முல்லைநிலத்துக் கோவலர் குழலிசையால் குறிஞ்சி நிலத்து அசுணமா உறங்கும் என்றும் இவற்றிற் கூறப்பட்டமை காண்க. இனி, தெய்வமணக்குஞ் செய்யுளியற்றவல்ல சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தே தொண்டை நாட்டின் வளமுரைக்குமிடத்து ஆறு செய்யுட்களில் திணைமயக்கங் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்று பின்வருவது: "கவரு மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச் சிவலுஞ் சேவலு மாறியுஞ் சிறுகழிச் சியர்கள் அவரை யேனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும் உவரி நெய்தலும் கானமுங் கலந்துள வொழுக்கம்"1 நெய்தனிலமாக்கள் மீனினங்களைப் பாலைமாக்களுக்கு விற்று அவரிடமிருந்து சிவலும் சேவலும் வாங்குவர் என்றும், பாலைநில மகளிர் அவரை தினைகளை நெய்தல் மகளிர்க்கு விற்று அவரிட மிருந்து பவளமும் முத்தும் வாங்குவர் என்றும் இதிற் கூறப் பட்டுளது. இப்பாட்டில் அமைந்துள்ள சில நுண்பொருள்கள் அறியற்பாலன. ஈண்டுக் கானவரென்பார் பாலைமாக்கள். பாலையாவது முல்லையும் குறிஞ்சியும் கலந்து திரிந்ததென்பது. "முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலையென்பதோர் படிவங் கொள்ளும்"2 என்னும் சிலப்பதிகார அடிகளால் அறியலாகும். சேக்கிழார் குரிசிலோ "கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள் நீல வாட்படை நீலிகோட் டங்களு நிரந்து கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப் பாலை யுஞ்சொல லாவன வுளபரன் முரம்பு"3 என்று கூறி வைத்துள்ளார். இங்ஙனம் முல்லையும் குறிஞ்சியும் பாலையாயினமையின் அவ்விரு திணைக்குமுரிய கருப்பொருள்கள் பாலைக்குரியவாதல் சாலும். இக்கருத்தானே முல்லைக்குரிய சிவலும் அவரையும், குறிஞ்சிக்குரிய குயிற்சேவலும் தினையும் இதிற் பாலைக்குரியவாகக் கூறப்பட்டனவென்க. இச் செய்யுளிலுள்ள மற்றொரு நயம் திணை மயக்கமுணர்த்தும். இதனில், சொற்களையும் மயங்கவைத்திருப்பதாகும். எயிற்றியர் அவரையேனலுக்குச் சிறுகழிச்சியர்கள் பவளமுத்தளந்தும் எனநிற்கற்பாலவாகிய சொற்கள் மாறி மயங்கி நிற்றல் காண்க. இனி, பரஞ்சோதிமுனிவர், சிவஞானமுனிவர், கச்சியப்ப முனிவர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் முதலானோர் பாடிய திணை மயக்கங்களுக்கு அளவில்லை. அவற்றையெல்லாம் இங்கு எடுத்துக் காட்டப்புகின் இவ்வுரை மிகவிரியுமாகலின், அணிமைக் காலத்திருந்த அறிஞர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியத்திலுள்ள திணைமயக்கப் பகுதியொன்றைமாத்திரம் காட்டி இதனை முடிக்குதும். வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்கும் தேயமொன் றுளது: அதன் அந்தமில் பெருவளம் அறிவார் யாரோ மருதமும் நெய்தலும் மயங்கி அங்கெங்கும் புரையறு செல்வம் நிலைபெற வளரும்; மழலை வண்டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் டாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக்கு அலக்கண் விளைக்கும்; கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கு அலர்த்தாதே: வால்வளை சூல்உ ளைந்து ஈன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென்று உன்னுபு காலாற் பருந்தினம் கவர்ந்து சென்று அடம்பிடைப் புதைக்கும்; கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகம் தாக்குழி அலமரும் ஆமை நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை ஒளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில் உப்பார் பஃறி யொருநிறை பிணிப்பர்; இப்பெருந் தேயத்து எங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா; கொண்மூ வென்னும் கொள்கலம் கொண்ட அமிழ்தினை அவ்வயின் கவிழ்த்தபின் செல்வுழி வடியும் நீரே நம்மிடிதீர் சாரல்; நன்னீர்ப் பெருக்கு முந்நீர் நீத்தமும் எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடும் ஒருபால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை ஒருகால்1 அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - நூற்பா - 14 2. மேலது நூ - 15 3. மேலது நூ - 21 4. நம்பியகப்பொருள் - ஒழிபியல் - நூற்பா - 42 1. சிலப்பதிகாரம் - நீர்ப்படைக்காதை - அடி - 224 2. மேலது அடி - 230 3. மேலது அடி - 241 4. மேலது அடி - 242 5. மேலது அடி - 250 6. மேலது அடி - 251 7. பொருநராற்றுப்படை - அடிகள் 214 - 226 1. சூளாமணிச் செய்யுள் - 33 2. சூளாமணிச் செய்யுள் - 34 1. பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் - பா - 44 2. சிலப்பதிகாரம் - காடுகாண் காதை - அடிகள் 64 - 66 3. பெரியபுராணம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் - பா - 15 1. மனோன்மணீயம் - அங்கம் - 2- களம் - 1 - அடிகள் 75 - 109 - நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 16 பக். 72-76 3. தொல்காப்பியரின் புறத்திணை வகை முறை ஒழுக்கமொன்றே கருதற்குரிய விழுப்பொருளாகக் கொண்டவர் பழைய தமிழர். மக்களின் வாழ்க்கைச் செயலெல்லாம் திணையா (ஒழுக்கமா) யடங்கும். எல்லாச் சொற்களுக்கும் அவற்றின் பொருள் பற்றியே திணையும் பாலும் வகுக்கும் தமிழ் மரபு இதற்குச் சான்று பகரும். “உயிரினும் ஓம்பப்படும்-ஒழுக்கம்” பேணி; அதனை ஓம்பற்குரிய மக்கட்டன்மை சுட்டுவனமாட்டே உயர்திணை யெனவும், ஒழுக்கமே கருதொணாப் பிற எதனையும் குறிக்கும் சொற்களனைத்தும் அல்திணை-(திணையல்லாதன) எனவும், தொல்காப்பியர் போன்ற பண்டைத் தமிழ்ப் புலவர் வகுத்தமுறை இப்பழைய தமிழ் மரபு பற்றி யெழுந்ததாகும். “தீதொரீஇ நன்றின்பா” லுய்க்கும் அறிவுநெறி கடைப்பிடித்தொழுகாது, உருவத்தால் மக்களே போல்பவராயினும் மேவன செய்து திரியுங் கயவரையும் விரும்பியாங்கொழுகும் நரகரொடு தேவரையும், அறிவற்ற பிற அனைத்தையும் ஒருங்கே அல்திணையாகக் கொண்டாண்ட பழந்தமிழ் மரபு உயர்வுள்ளும் தமிழர் ஒழுக்க நிலையையும், விழுப்ப நோக்கையும் வலியுறுத்தும். மக்கள் வாழ்வில் தூய கற்புறு காதல் கண்ணிய மனையற வொழுக்கம் பற்றிய அனைத்தும் அகமெனப்பட்டது; பிறர் தொடர்பின்றி அமையா இன்புற வாழ்வோடு இயைபுடைய வெல்லாம் புற மெனப்பட்டன. தனிச் சிறப்புடைய இத்தமிழ் மரபு பேணித் தொல்காப்பியர் தம் நூற் பொருட் பகுதியில், காதல் கண்ணிய அகத்திணையாமவற்றின் பொது வியல்புகளைத் தொகுத்து அகத்திணையியல் என்னும் பேரால் முதலிற் கூறினார். அவ்வக வொழுக்கின் சிறப்பியல்புகளைக் ‘களவு’, ‘கற்பு’ எனுங் கைகோள் இரண்டின் கீழ் வகுத்து விரிக்குமுன் பொருளை அகம் புறம் என நிறுத்த முறையானே, பொருளிடையீடாய், ஒருவாறாகத் திணைகளுக்குத் தொடர்புடைய மற்றைப் புறவொழுக்க வியல்களையுஞ் சுட்ட வேண்டி அவற்றை இவ்வியலில் விளக்குகிறார்; ஆதலின், இது புறத்திணையியல் என்னும் பெயர் கொண்டது காதலற வொழுக்கங்களைத் தொகுத்து ஏழு திணையாய்க் கொண்டதற்கேற்ப மக்களின் புறவொழுக்கங்களையும்; மறனுடை மரபின், ஏழேயாகக் கொள்ளும் பழைய தமிழ் முறையைத் தழுவி வெட்சி முதலாப் பாடாண் ஈறாப் புறத்திணை ஏழும் அவற்றின் இயல்துறை வகையும் இப்புறத்திணையியலிற் கூறப்படுகின்றன. பழங்காலத்தில் ஆடவர்க்குரிய சிறந்த சால்புகளான ‘பெருமையும் உடனும்’ பெரிதும் மறத்தின் வீறாய் அமைதலின் புறவொழுக்க மெல்லாம் ‘அமர்கொள் மரபின்’ திணைகளாயின. அவற்றை நிரலே முதலில் அகத்திணை ஒவ்வொன்றற்கும் ஏற்புடைப் புறனா யமையும் திணை வகையும் அதன் பெயருங் குறித்தல், அதையடுத் துடனே அப்புறத்திணையியல் விளக்கல், பிறகு அதன் துறைவகை தொகுத்தல், என முத்திறம்பட முறை பிறழாமல் விளக்குவர் தொல்காப்பியர். அவ்வத்திணை-துறைகளின் தொகையெண், முதலில் திணைப் பெயரோடேனும், ஈற்றில் துறை வகையோ டேனும் கூறப்பெறுகின்றது. எனவே, ஒவ்வொரு புறத்திணைக்கும் குறைந்த அளவு மூன்றும், திணை துறைகளின் சிறப்பியல்புகள் பெருகுமிடத்து மூன்றின் மிக்கும் சூத்திரங்கள் கூறப்படுகின்றன. புறத்திணை ஏழும் முறையே, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். இவை நிரலே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைகளுக்கு இயலியைபுடைமை கருதி அவற்றிற்குப் புறமாயமைவனவாய்க் கொள்ளப்பட்டுள. அவ்வமைதி அவ்வத்திணைச் சூத்திரத்தின்கீழ் விளக்கப்படும். அகத்திற்போலப், புறத்தும், திணைகளை ஏற்ப அவ்வவ்வொழுக் கத்திற் சூடும் மாலை அல்லது அடையாளப் பூவாற் பெயரிட் டழைப்பது அடிப்பட்ட தமிழ்நூன் மரபாகும். இம்முறையே இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆகோள் ஆகும் வெட்சித்திணை வகையும், நான்கு, ஐந்தாம் சூத்திரங்களில் ஆகோளைப் போலவே குறிஞ்சிப் புறனாய்ப் போர் துவக்கும் வெட்சி யொழுக்கமாகும் துடிநிலை- கொற்றவை நிலை-என்பனவும் பிறவெட்சித் துறைகளும் கூறப்படுகின்றன. வெட்சி, போர் துவங்குமுன் பகைவர் நாட்டு ஆனிரைகளைக் களவிற் கொள்ளும் ஒழுக்கமாகும். போர் துவங்கிய பின் ஆகோள் கொண்டியாவ தன்றி, வெட்சியாகாது. அடையலர்க்கு அமர்க்குறிப்பு அறிவித்துப் படை தொடச் செய்து அவர்மேற் செல்வதே பேரறமாதலின், பண்டைக் காலத்தில் பண்டைத் தமிழரும் பிறரும் அமரறிவிப்பான் பகைப்புலத்து ஆகோடலைப் போர் தொடங்கும் மரபாகக் கொண்டனர். களவில் ஆகொள வரும் முனைஞரைத் தடுத்து நிரை காவலர் மீட்க முயல்வதும், அவரொடு நிரைகொள்வார் பொருவதும் வேறு திணையாகாமல், ஆகோளின் இடைநிகழ்ச்சி களாயடங்கும் இயல் கருதி அவற்றைத் “திணைக்குரி மரபிற் கரந்தை” என வெட்சித் துறைகளில் அடக்குவர் தொல்காப்பியர். அதுபோலவே, போர்த் தொடக்கமாம் துடிநிலை, கொற்றவை நிலை போல்வனவற்றையும் பிறபல துறைகளையும் வெட்சி யிலடக்கிக் கூறினர். அவ்வாறு போர் துவக்கும் ஒழுக்க வகைகள் அனைத்தும் வெட்சியெனப் பட்டு மறனுடைய மரபின் அமரறத் தொகுப்பாம் புறத்திணை வகையுள் முதற்கண் கூறப்படுகின்றன. பிறகு, பகையடப் படையொடு மேற்செல்லும் வஞ்சித் திணையை அவன் வகை துறைகளொடு ஆறு முதல் எட்டு வரை யுள்ள சூத்திரங்கள் விளக்குகின்றன. அதையடுத்து, வேற்றுப் புலத்துப் படைகொடு செல்வோர் மாற்றலர் இருக்கையை யெய்தி மலையுமுன் தம் ஆற்றிடை அக நாட்டுப் படையரண்களை அழித்தல் அல்லது அகப்படுத்தல் அமர் வென்று தமர் மீள இன்றியமையாதாகலானும், அடையலரின் இடையரண்களை முற்றி எறிதலும் கோடலும் அவர்கட்கு வேண்டப்படுமாகலானும், அவ்வொழுக்கமாய உழிஞைத்திணையும் அதன் வகைத் துறைகளும் இவ்வியலில், ஒன்பது முதல் பதின்மூன்று வரையுள்ள சூத்திரங்களால் தெளிக்கப்படுகின்றன. முற்றுவோர் முயற்சியை அரண்காவலர் எதிர்ப்பைக் கடந்தடக்கியன்று அரண் எறிதல் கூடாமையும் இயல்பாகும். முற்றுவாரின்றி மதில் காவற்போர் நிகழுமாறில்லை யாகலானும், முற்றியெறிவாரின்றி வாளா அரணகங் காத்திருத்தல் நொச்சியெனக் கருதப்படாதாக லானும், அரண் எறி முறையின் ஒரு திறனாயடங்கும் முற்றெதிர்ப் பைப் பிற்காலத்தவர்போல வேறு பிரித்து நொச்சியெனத் தனித் திணையாக்காமல், செந்தமிழியற்கை சிவணிய நிலத்துப் பழைய முறை பேணி முற்றுகை பற்றிய உழிஞைத்திணையிலடக்குவர் தொல்காப்பியர். அவற்றின்பின், பகைமேற் சென்றாரைத் தகைத்து நின்றார் எதிரூன்றித் தானையிரண்டும் தம்முள் தலைமயங்கமலைதலாகும் தும்பைத் திணையையும், அதன் வகை துறைகளையும் பதினான்கு முதல் பதினேழு வரையுள்ள சூத்திரங்கள் தெரிவிக்கின்றன. படை யெழுச்சியை மட்டும் வஞ்சியெனத் தனியொருதிணையாய்ப் பிரிப்பதும் எதிர்த்து இருபடையும் அதர்ப்பட மலைதலைத் தும்பையெனத் திணையாகக் கூறுவதும் பிற்கால வழக்கு. சென்றாரை நின்றார் எதிர்ப்பது போராய்த் தும்பையில் அடங்குதலானும், பொருதலற்ற எதிர்ப்பெதுவும் கருதல் கூடாமையானும், பண்டைத் தமிழ் நூலோர், சென்றபகை யெதிர்நின்று தகையும் எதிர்ப்பும், இருதிறப்படையும் ஒலிதலை மலையும் போரும் உடனமையத் ‘தும்பை’ யென வொருதிணையே கொண்டார். தொல்காப்பியரும் அப்பழமரபே பேணிக் கூறுவர். போர்க் கூறாகும் தும்பைத் திணைக்குப்பின், பொருது வென்றோர் வீறு கூறும் வாகைத்திணையும், அதன் துறைகளும் பதினெட்டு முதல் இருபத்தொன்று வரையுள்ள சூத்திரங்களில் தெளிக்கப்படுகின்றன. அமர் வென்றியுடன், அதற்கியைபுடைய தாய்ப் பிற துறைகளில் இகலிவென்றோர் வீறும் கூட்டி ஒப்புக்கூறல், ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் எனு முறையில், பாராட்டுக் குரியவெற்றி யனைத்தும் இவ்வாகைத் திணை வகையில் அடக்கிக் கூறப்படுகின்றன. அதையடுத்து, ‘அமர்கொள் மரபின்’ தும்பையும் வாகையுமான போரும் வெற்றியு மொழிய, மற்றைய விழுப்பமும் விழுமமும் விளைக்கும், ‘பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும், நில்லாவுலகம் புல்லிய நெறித்தே’ எனும் வகையான் உலக நிலையாமையும் வகுத்துப் பல்வேறு துறைகளை அமைப்பர் தொல்காப்பியர். இறுதியில் பாடாண்திணை அமைத்துக் கடவுள் வாழ்த்து வகை முதல் கைக்கிளை இறுதியாகக் கூறி ஞாலத்து வரூஉம் நடக்கையைக் கூறிப் புறத்திணை வகையை நன்கு முடிப்பர் தொல்காப்பியர். - நாவலர் பாரதியார், நற்றமிழ் ஆய்வுகள், தொகுதி - 4, பக். 168-171 4. கந்தழி இப்பெயர், பழைய தமிழ்ச் செய்யுட்கள் ஒன்றிலும் கேட்கப் படாதது. வெளிவந்துள்ள தொல்காப்பியப் புறத்திணை யியலில் பாடாண் திணைத்துறையொன்றன் பெயராகக் காணப் படுகிறது. பிற்காலத்தில் ஐயனாரிதனார் தாமியற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில் ஈரிடத்தில் இப்பெயருடைய துறை கூறு கிறார்; ஒன்று உழிஞைத்துறை, மற்றது பாடாண்திணை என்கிறார். எனில், அவ்விரண்டும் தம்முள் சிறிதும் வேறுபாடில்லாத ஒன்றையே குறிப்பதாக விளக்குகிறார். திருமால் “சோ” என்னும் அரணை யழித்த திறமே கந்தழி என்பது அவர் கொள்கை. தொல்காப்பியரோ கந்தழியின் இலக்கணம் யாதென யாண்டும் சுட்டிலர். கடவுள் வாழ்த்தொடு கண்ணிய பாடாண் வகைகளைத் தொகுக்குமிடத்தில், கந்தழி என்பதொன்று பெயரளவில் வருகிறது. அதன் இயல் ஆண்டும் அவர் நூலில் பிற இடங்களிலும் பேசப்படவில்லை. இந்நிலையில் அப்புறத்திணையியலுக்குப் பொருள் கண்டார் இருவர் தம்முள் ஒவ்வாத இருவேறு பொருள் இதற்குக் கூறுகின்றார். இவ்விரண்டும் இவ்வொரு சொல்லுக்குத் தொல்காப்பியர் கருதக் கூடாமை ஒருதலை. இரண்டி லொன்றேனுமவர் கருதியதாமா? எனும் வினாவுக்கும் விடை பெறுமாறில்லை. பண்டைச் சான்றோர் பழைய புறத்திணைச் செய்யுள்களில் யாண்டும் கந்தழிப் பெயரே காணப்பெறாததும், தொல்காப்பியர் நிறுத்த சொல்லாற் குறித்து, வரம்பறுத்த தமது சிறந்த நூலில் இதனை யெங்கும் சுட்டி விளக்காமையும், இப்பெயருடைய புறத்துறை ஒன்றுண்டோ எனும் ஐயத்தை விளையாதிரா. இத்துறையுண்மையை ஐயுறாது உடன்பட்ட உரைகாரரிருவரும், இதுபற்றித் தம்முள் மாறுபடக் கூறும் தத்தம் கருத்துக்கு ஆதரவு பண்டைச் சான்றோர் பாட்டுக்களி லிருந்து காட்டினாருமிலர். இளம்பூரணர் பிற்காலத்து வெண்பா மாலைப் பாட்டை மேற்கோள் காட்டி அப்பொருளையே தமதுரையாகக் கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் அவ்வளவும் தங் கூற்றுக்குப் பிறர் செய்யுட்களில் மேற்கோள் தேடும் வீண் முயற்சி மேற்கொள்ள விரும்பிலர். “கந்தழி ஒரு பற்றுக் கோடின்றி யருவாகித்தானே நிற்கும் தத்துவங்கடந்த பொருள்” என்று தொல்காப்பியர் புறத்திணையியற் பாடாண் பகுதியில் உரை கூறினார். அதற்குச் சார்பாக ஆக்கியோர் பெயர் நூற்பெயரொன்றுங் குறியாமல் ஒரு வெண்பாவைக் காட்டி யுள்ளார். அது ஆன்றோர் பழைய பாட்டாயினும் கூட ஒருவகைத் தெய்வக்கொள்கை கூறுவதன்றிப் பாடாண் புறத்திணைத் துறை விளக்குங் குறிப்பு அதிலெதுவுமில்லை. மேலும், அருவாகித் தத்துவங் கடந்த கடவுளைச் சுட்டுவது கந்தழியாமேல் அது பாடாண் துறையாமாறில்லை. அருவான கடவுளே பொருளென்பது, வீட்டு நூல் விளக்கமாகலாம்; மக்கள் புறவொழுக்க விழுப்பத்திலது. அஃது ஒருவர் புகழ்மீக்கூற்றாகும்; பாடாணாதற்கு அமையாதே. கடவுளே கந்தழி என்பதன்றோ நச்சினார்க்கினியனார் கூற்றும் அவர் தரும் மேற்கோள் பாட்டுக் கூறுவதுமாகும்! கடவுளின் அருவ நிலை ஒரு சமயக் கொள்கை. அவ்வளவில் அது பாடாண் திணையா மாறில்லை. இன்னும், கந்தழி என்பது பாடாண் துறையே அன்று என்பதைத் தெளிவாக்கும் நற்சான்று அதைச் சுட்டுவதாகக் கூறப்படும் புறத் திணையியல் நூற்பாவே தருகின்றது. அந்நூற்பா வருமாறு:- “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” இதில் பாடாண் வகையாக முடியும் புறத்திணைத் துறைகளும், கடவுள் வாழ்த்தொடு கூடி வருவன மூன்றெனத் தொகுத்துக் கூறப் படுகிறது. பிற புறத்திணைகளைப் போலத் தனக்கென வகுத்த தோர் தனி நிலையும் இலக்கணமும் பாடாணுக்கில்லை. மற்ற வெட்சி முதல் காஞ்சி யீறாக முன்னே கூறிய போர்த் தொழி லுடையார் “மறனுடை மரபு” பற்றி முடியும் ஆறு புறத்திணைகளின் துறைகளும், அகத்தில் இழிந்த குற்றமுடைய பெருந்திணையொழிந்த பிற புரைதீர்ந்த தூய காம அகத்திணை வகைகளும், அவ்வத் திணையியலோடமையாமல் அவ்வத்திணை (ஒழுக்க)த் தலைவரின் புகழையும் மீக்கூறுவதாய் முடிவது பாடாணாகும். அது தொல்காப்பியர் நூலாலும், வெட்சிப் பாடாண், வஞ்சிப் பாடாண், உழிஞைப் பாடாண், தும்பைப் பாடாண், வாகைப் பாடாண், காஞ்சிப் பாடாண், புரைதீர் காமப் பாடாண் என்று தனக் கெனத் தனி நிலையின்றி வேறு திணையைக் கூறுகிற மற்றப் பண்டைச் சான்றோர் செய்யுட்களாலும் தெளியப்பட்ட உண்மையாகும். பாடாண் திணைக்குரிய துறைவகைகளே இதற்குப் பின்னே புறத்திணையியல் இறுதியில் தொல்காப்பியர் தொகுத்துக் கூறுகிறார். ஆகவே, இந்நூற்பாவில் சுட்டப்பட்ட மூன்றும் பாடாண் துறைகளல்ல; பாடாணாதற்குரிய பிற புறத்திணை வகைகள் என்பது தேற்றமாகும். இது சுட்டும் கொடிநிலை முதலிய மூன்றும் பாடாணுக்கு முதலாம் பிற திணைவகை என்பதை விளக்கவே, அவற்றை “முதலன மூன்றும்” எனச் சுட்டுகிறார். அஃதன்றி வேறு பொருளில் “முதலன மூன்றும்” எனும் தொடர் இதிலமையாது. இதிற் கூறப்படுவன மூன்றே ஆதலால் “இவை முதலாகப் பிற” எனுங் குறிப்பில்லாத நிலையில் இவற்றை “முதலன” எனச் சுட்டுதல் பொருந்தாது. “கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட” எனும் இளம்பூரணர் கூற்றுப் பொருந்தாது. மூன்றையும் பிறிதோர் நூற்பாவில் கூறி, இதில் “கொடிநிலை முதலிய” எனச் சுட்டின அவர் கூற்றுக்குப் பொருளும் பொருத்தமும் காணலாம். ஒவ்வொன்றையும் முறையே சுட்டி அவற்றை “முதலன மூன்றும்” என்று குறிப்பதனால் அம்மூன்றுமே தனித்தனி அதனதன் அடியாகப் பிறக்கும் பாடாணுக்கு முதலாவன என்பதே கருதிய பொருளாதல் தேற்றமாகும். இனி, “முதலன மூன்றும்” என்பதற்கு “மேற்கூறிய மூன்று தெய்வமும்” என்றுரை கூறுவர் நச்சினார்க்கினியர். “கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்” என்பது இடையறவற்ற ஒரு தொடர் மூன்றையுமே விதந்து கூறியபின், “என்ற மூன்றும்” என்னாமல் “முதலன” என்பானேன்? “முதலன” என்பதை “முற்கூறப்பட்ட” என்று இங்குக் கொள்வது சொல் லாலும் பொருளாலும் அமைவதன்று. அன்றியும், இதிலும் புறத் திணையியலில், இதற்கு முன்னும் பின்னும் எதிலுமே பாடாணுக் குரிய மூன்று தெய்வம் கூறப்படாமையாலும் “முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்” இங்கு “முதலன மூன்றும்” எனச் சுட்டப் பட்டனவாகக் கொள்ளுதற்கிடமில்லை. இனி, இம்மூன்றில், கொடிநிலை, வள்ளியெனு மிரண்டும் கடவுள்களாகாமல், கடவுட் பராவுதலோடு வரும் வெட்சிப்புறத் திணை வகைகளா மென்பது, புறத்திணையியலின் துவக்கத்தில், “மறங்கடைக் கூட்டிய”, “வெறியறி சிறப்பின்” என வருமிரு நூற்பாக்களில் அவற்றை வெட்சி வகைகளாற் கூறுதலால் தெளி வாகும். இதையடுத்துடனே “கொற்றவள்ளை” எனும் வஞ்சித் துறை, பாடாணாங்கால் ஒரோவிடத்துக் கடவுள் வாழ்த்துக் கண்ணியதாய் வருமெனக் கூறப்படுகிறது. அதனால், இங்குக் கடவுள் வாழ்த்தோடு கூடிவரும் பாடாணாதற்குரிய பிற புறத்திணை வகைகளைத் தொகுத்துக் கூறுவதே தொல்காப்பியர் கருத்தென்பது தெளிவாகும். மற்ற மூன்றொடு கொற்றவள்ளையைச் சேர்த்துக் கூறாமல் அதை வேறு பிரித்துத் தனியொரு சூத்திரமாக்கிய கருத்தும் வெளிப்படை. இதில் குறித்த மூன்றும் வெட்சியாகிய ஒரு திணையின் துறை களாயும் கொற்றவள்ளை வேறு வஞ்சித்திணைத் துறையாயும் வருதலொன்று; அதன் மேலும் இம்மூன்றும் பாடாணாமிடத் தெல்லாம் எப்போதும் கடவுள் வாழ்த்தின்றியும் பாடாணாகும். ஒரோவழி அவ்வாழ்த்தோடு வரும், எனவே, பாடாணாதற்கு முதலாகும் பிற புறத்திணைத் துறைகள் நான்கில் எப்போதும் கடவுள் வாழ்த்தொடு கூடியே பாடாணாவன இதிற் கூறிய மூன்றேயாதலின், முற்றும்மை தந்து இம் மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கூடியே வரும் என்பது விளக்கப்பட்டது. இவை போலாது கொற்றவள்ளைத் துறை ஒரே விடத்துக் கடவுள் வாழ்த்துத் தழுவியும், பிறவிடத்து அவ்வாழ்த்தின்றியும் பாடாணாய் முடிதற்கு முதலாகும் புறத்திணைத் துறையாதலின் அது வேறு பிரித்துக் கூறப்பட்டது. இந்நான் கல்லாப் பிற திணைத் துறைகளுள் ஏற்புழிப் பாடாணாதற்கு முதலாய் அமைவன வற்றிற்குக் கடவுள் வாழ்த்து வேண்டப் படாமையின் அவை சுட்டப் பெறாமையும் வெளிப்படை. இவ்வாராய்ச்சியால் பெறுவதிது:- இந்நூற்பாவில் சுட்டிய மூன்றும் பாடாணாதற்கு முதலாயமைவதற்குரிய பிறிதோர் புறத்திணைத் துறைகள்; இம்மூன்றும் பாடாணாகில் கடவுள் வாழ்த்தொடு கூடியே வரும். இனி, இவற்றுள் கொடி நிலையும், வள்ளியும், போரைத் துவக்கும் வெட்சித்திணைவகை யென்பது முன் வெட்சிப் பகுதியில் விளக்கப்பட்டது. ஆகவே, இங்கு இவற்றோடு சேர்த்து ஒருபரிசாய் எண்ணப்படும் மற்ற மூன்றா வதும், இவை போலவே போர்த் தொடக்கத் திணையான வெட்சி யின் துறையாய்க் கடவுள் வாழ்த்தொடு பாடாணாய் முடிதற்குரிய முதலாயமைதல் வேண்டும். அத்தகைய வெட்சித்துறை இதிற் குறித்த கொடி நிலையும், வள்ளியும் தவிரக் காந்தளொன்றே தொல்காப்பியரால் சுட்டப்பட்டுள்ளது. ‘கந்தழி’ என்பது கடவுள் வாழ்த்தொடு போரைத் துவக்குந் துறையாக உரைகாரரிருவருமே கூறிலர். அப் பெயருடைய பிற புறத்திணைத் துறை எதுவுமே சுட்டப்படவுமில்லை. ஏற்புடைய பிறதிணைத் துறைகளே பாடா ணுக்கு முதலாமாதலானும் ‘கந்தழி’ பிறிதோர் திணைத்துறையாக யாண்டுஞ் சுட்டப் பெறாததால் அது பாடாணாதற்குரியதன்றாத லானும் அதனையிதில் அத்தகைய மற்றிரு போர்த் துவக்கத் துறைகளோ டொருபரிசாய்க் கொள்ளுதலமையாது. ஆதலால் “கந்தழிப்” பாடம் பிழையாகும்; அதனிடத்தில் காந்தளை வைத் தெண்ணுவதே நேரான பாடமாகும். இன்னும், இதில் கந்தழிப் பாடமே நேரெனக் கொள்ளின், தொல்காப்பியருக்குக் குன்றக் கூறற் குற்றஞ் சுமத்தாமல் தீராது. கடவுள் வாழ்த்தொடு போர்த் துவக்கமாம் புறத்துறைகள், பாடா ணுக்கு முதலாவனவனைத்தும் இதில் தொகுத்துக் கூறப்படு கின்றன. மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் என முற்றும்மை கொடுத்துக் கூறியதால் கடவுள் வாழ்த்தொடு போர்த் துவக்கப் புறத்துறையாய் வருவது மூன்றொழியப் பிறிதில்லை என்பது துணிபாகும். முருகக்கடவுள் வாழ்த்தொடு, அமர் தொடங்கும் வெட்சித் திணையின் துறை வகையாகக் “காந்தளை”த் தொல்காப்பியர், வெட்சிச் சிறப்பு வகைத்துறைத் தொகை விளக்கும் “வெறியறி சிறப்பின்” எனும் சரித்திரத்தில் கூறியுள்ளார். அக்காந்தட்டுறையை இதிற் சேர்த்துக் கூறாவிடின் அது குன்றக் கூறலாவதோர்தலை. அன்றியும், அதுவேபோலத் தாம் யாண்டும் விளக்காமலும், பிற திணைகளின் துறைகளுள் இதுவும் ஒன்றெனப் பேரளவிற்கூடக் குறியாமலும், இங்குத் தொல்காப்பியர் கந்தழி யென்றொன்றைக் கூறி யாவரையும் மயங்க வைத்தாரெனில், அதுவும் மயங்கக் கூறல் எனும் மற்றொரு குற்றத்திற்கவரை யாளாக்குவதாய் முடியும். இதிற் “கந்தழி” நேரெனில் காந்தள் விடப்பட்டதாகும். காந்தளைக் கொள்ளின் முற்றும்மையால் கந்தழிக்கு இடனில்லை காந்தளைக் கடவுள் வாழ்த்தொடு வரும் வெட்சியின் சிறப்பு வகையாக விதந்து முன் கூறிய பிறகு, தக்க நியாயமின்றி அதை மட்டும் இங்கு விடுவதற்கு வேறெங்கும் சுட்டாததும், இதிலும் விளக்காததுமான கந்தழியை வீணே சேர்த்தற்கும் எனைத்தளவும் கருத்துண்மை எவ்வகையிலு மிதிற் குறிக்கப்படவுமில்லை. அதனால், இந்நூற்பாவில், கந்தழிப் பாடம் பிழைபட்டதென்பதும் அதனிடத்து, காந்தளே கொள்ளற்குரிய தென்பதும் தெளிவாகும். மேலும் “காந்தட் பாடாண்” பழைய ஆன்றோர் செய்யுட்களில் பயின்று வருவதும் ‘கந்தழி’ பெயரளவிற்கூட யாண்டும் அவ்வாறு சுட்டப்பெறாததும் இம் முடிபை வலியுறுத்தும். நிற்க. இவ்விடத்தில் இதன் தொடர்பாய் ஆராய்தற்குரியதெனத் தோன்றுவது பிறிதொன்றைச் சுட்டுவதற்கு விடைமேற் கொள்வேன். இந்நூற்பாவில், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய ளபாடாணாகும் போர்த் துவக்க வெட்சியின் சிறப்பு வகைகளாகச் சுட்டப்படு மூன்றில், முதலது “கொடிநிலை”. போரைத் தொடங்குதற்குக் கடவுளை வாழ்த்திக் கொடியை நிறுத்துவதே முதன் முதலில் நிகழுவதாகும். ஆகவே, அது கொற்றவைநிலை போல வெட்சியின் சிறப்பு வகையாதல் இயலடையாம். புறத்திணையியலில் தொல் காப்பியர் ஆகோள் வெட்சியின் துறைகள் “படையியங்கரவம்” எனும் சூத்திரத்திற் கூறி, அதன்பின் “மறங்கடைக் கூட்டிய” என்பதில் ஆகோளல்லாமல் போர் தொடங்கும் வெட்சியின் சிறப்புவகை இரண்டைச் சுட்டி, அதன்பிறகு சிறப்புவகை வெட்சித்துறைகளை “வெறியறி சிறப்பின்” என்ற நூற்பாவால் தொகுத்து விளக்குகிறார். வெட்சியின் சிறப்பு வகையிரண்டில் ஒன்று கொற்றவைநிலை; அது போரின் துவக்கத்தில் நிகழ்வதால், வெட்சி வகையாவது முறை. மற்றைய வெட்சி சிறப்பு வகையும் போரைத் தொடங்குவதாதல் வேண்டுமென்பது வெளிப்படை. கொற்றவை நிலையைக் கூறும் “மறங்கடைக் கூட்டிய” எனும் நூற்பாவில், மற்றதைக் “குடிநிலை”யென இளம்பூரணரும், “துடிநிலை” யென நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டுள்ளார்கள் குடிநிலை யாதெனத் தொல்காப்பியர் கூறாததாலும், அது போர் துவங்குதற்கு இன்றியமையாத நிகழ்ச்சி யன்றாதலாலும், அது நேரான பாடமாகாதெனக் கண்ட நச்சினார்க்கினியர் அதைத் துடிநிலையென மாற்றிக் கூறினார் போலும். துடிநிலை, மற்றக் கொற்றவை நிலை, கொடிநிலைபோல் போர் துவங்கு முதல் நிகழ்ச்சி யாகாததோடு, தொல்காப்பியரும் பிற தொன்னூல்களும் அதனை அத்தகைய வெட்சியின் சிறப்பு வகையாகச் சுட்டாமையால் அதுவும் நச்சினார்க்கினியர் கொண்டதன்றித் தொல்காப்பியர் கருத்தாகத் தோன்றவில்லை. மேலும், கடவுள் வாழ்த்தொடு, பாடாணாதற்குரிய வெட்சி வகையாய் இந்நூற்பாவில் சுட்டிய கொடிநிலை முன் வெட்சிவகை விளக்கத்தில் இல்லையெனில், ஒன்று அது முன் குன்றக் கூறியதாகும்; அன்றேல், பின் மிகைபடக் கூறியதாகும். அதனால், இங்குப் பாடாணாகும் வெட்சிவகை மூன்றி லொன்றாய்ச் சுட்டிய கொடிநிலையே முன்னும் கொற்றவை நிலையோடு கூறப்பட்டதாதல் வேண்டுமெனத் தோன்றுகிறது. அன்றேல், அதனையிதில் மீட்டும் அதையொத்துக் கடவுள் வாழ்த் தொடு பாடாணா மற்றிரண்டொடு சேர்த்துக் கூறியது பொருத்த மாகும். கொடிநிலையே முதற்பாடமாய் அது நாளடைவில் குடிநிலையெனச் சிதைந்து மருவி வழங்கியிருத்தல் வேண்டும். அது பொருத்தமின்மையால் அதைத் துடிநிலை யெனப் பிந்திய நச்சினார்க்கினியர் மாற்றியிருத்தலும் கூடும். இதனைப் புலவர் ஆராய்ந்து சீர்தூக்கித் துணிதல் முறையெனத் தோன்றியதால் இங்கு அதைச் சுட்டலானேன். - நாவலர் பாரதியார், நற்றமிழ் ஆய்வுகள், தொகுதி - 4, பக். 172-178 5. செய்யுளியல்-காரிகை தொல்காப்பியரின் செய்யுளியலையும், அமிதசாகரனாரின் யாப்பருங்கலக் காரிகையையும் ஒப்பிடுங்காலை, நாம் கொள்ள வேண்டிய சிலவுணர்வுகளும், கருத வேண்டிய சில முறைகளும் உள. இரு நூல்களும் தத்தம் காலச் சூழ்நிலைக்கு ஏற்பப் பிறந்து தங் காலத்தேவையை ஈடு செய்தன என்ற நல்லுணர்வு நமக்குத் தோன்ற வேண்டும். வேற்றுமைகளையும், வேற்றுமைக்குரிய காலச் சூழல்களையும் அறிந்து கொள்வதே ஒப்பீட்டின் பயன். ஏற்றத் தாழ்வு கூறுதல் ஒப்பீடு ஆகாது. செய்யுளியலுக்கு இளம்பூரணம், பேராசிரியம், நச்சினார்க்கினியம் என்ற மூன்றுரைகள் உள. இளம்பூரணம் பட்டாங்கு கூறிச் செல்வது. பேராசிரியம் அகலமாகவும், ஆழமாகவும் உறழ்ந்து விரித்துச் செல்வது. நச்சினிhர்க்கினியம், பேராசிரியத்தைப் பெரிதும் தழுவிக் கற்பவருக்குச் செய்யுளியலை எளிமை படுத்தித் தருவது. காரிகை குணசாகரர் எழுதிய ஓர் உரையே உடையது. நூற்பாக்களில் உள்ள யாப்பிலக்கணங் களைக் காட்டிலும் பல யாப்புக் குறிப்புக்கள் உரைகளிற்றான் மலிந்து கிடக்கின்றன. யாப்பருங்கலம் ஒரு பெருஞ்சான்று. எழுத்து முதலான ஏனையதிகாரங்கள் அவ்வளவு உரைகளை நம்பிக் கிடக்கவில்லை. செய்யுளியலும் காரிகையும் மெய்யான தெளிவுக்கு உரைகளினின்று பிரிக்க முடியாதவை. எனவே ஒப்பு என்பது உரை தழுவிய ஒப்பு எனக் கொள்ள வேண்டும். இருவகை நூல்களின் அமைப்பும், நோக்கமும் - ஒப்பீடு தொல்காப்பியத்துச் செய்யுள் என்ற சொல் மொழியால் செறிவாகச் செய்யப்பட்ட எழுத்திலக்கியத்தையும், வாய்மொழி இலக்கியத்தையும் குறிக்கும். ‘தெரிந்து மொழிச் செய்தி’ என ஆறாம் வேற்றுமை நூற்பாவிற் கூறுவர் தொல்காப்பியர். அதன்படி பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என எழுநிலச் செய்யுட்கள் இவ்வியலில் இடம் பெற்றுள்னன. இவற்றை, அடிவரையறையுடையது பாட்டு எனவும், ஏனை யாறும் அடிவரையறையில்லன எனவும் தொல்காப்பியம் இருபாற் படுக்கும். காரிகை பாட்டு ஒன்றினையே செய்யுள் என மேற்கொண்டதாதலின் செய்யுளியல் என இரண்டாவது இயலுக்குப் பெயரிட்டது அதற்குச் சான்றாம் ஆதலின், அடிவரையறையற்ற ஆறினையும் பற்றி அமுதசாகரர் கூறாதது இயல்பே. செய்யுளியல் பொருளதிகாரத்தின் ஒரு பகுதி. ஆதலின் ஏனை எட்டியல்களோடும் இவ்வியலுக்கு ஓராற்றான் தொடர்புண்டு. ‘மேலுணர்த்தப்பட்ட பொருண்மை எல்லா வற்றிற்கும் இஃது இடமாதலின் அவற்றின் பிறகூறப்பட்டது’ என்று இளம்பூரணம் எடுத்துக் காட்டும். எனவே பிறவியல்களிற் கூறிய அகப்பொருள் புறப்பொருள்களையும் சுட்டிக்காட்டி இன்ன பொருள் இன்ன பாவில் வருமென இயைத்துக் கூறும் கடப்பாடு தொல்காப்பியர்க்கு உரியதாகும். ‘பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு மருங்கினும் உரியது’ என அகத்திணையியலிலும் ‘செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே’ எனப் புறத்திணையியலிலும் பொருளோடு செய்யுளை மறவாது தொடுத்துச் சொல்லும் முறையிலிருந்து செய்யுளியலின் இணைநோக்கம் பெறப்படும். இந்நோக்கத்தால் அன்றோ, இவ்வியாப்பால் இப் பொருளை இன்னவாறு செய்க எனவும், இப்பொருள் இவ்வியாப்புக்கு உரித்து எனவும், உரித்தன்று எனவும் கூறும் நூற்பாக்கள் செய்யுளியலில் பரந்தோடிக் கிடக்கின்றன. காரிகையாரின் நோக்கு பொருள் நோக்காச் செய்யுள் நோக்கு என்ற வேறுபாட்டை நாம் உணரவேண்டும். அவர் காலத்து ஒவ்வோர் இலக்கணத்துக்கும் தனி நூல் விரித்தமையின் யாப்பளவில் கொண்ட நோக்கம் கால நோக்கமேயாகும். தொல்காப்பியப் பொருளதிகாரம் பெரும்பகுதி அகப் பொருள் மேற்று. ஆதலின், செய்யுளியலின் முதல் நூற்பாவில் எண்ணப்பட்ட திணை கைகோள் கூற்று கேட்போர் களம் காலம் பயன் மெய்ப்பாடு முதலானவை காரிகையின் உறுப்பியலில் இடம் பெறுதற்கில்லை. தொல்காப்பியர் காலத்து கட்டளையடி என்பது கால வழக்காக இருந்தது. அதனால் தொடைநயங்களும் விரிந்து கிடந்தன. தொல்காப்பியஞ் செய்த காலத்து தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் கட்டளையடியால் மிகச் செய்யுள் செய்தார் என்பது பேராசிரியரின் விளக்கம் கடைச்சங்க காலத்திற் கட்டளையடி அரிதாகிச் சீர்வகையடி பயில வந்தது எனப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உடன்படுவர். ஆதலின் காரிகையாசியிhர் பழையன கழிந்த கட்டளையடிப் படையை அறவே விட்டுவிட்டுப் பெருகிப் பயின்ற சீரடிப்படைக்கு இலக்கணங்கூறியதும் கால வழக்கேயாகும். எனினும் கட்டளையடிக்கு இடைக்காலத்தும் நன்மதிப்பு இருந்தது என்பதற்குக் காரிகையாசிரியரே நூற்பாவை மேற்கொள்ளாது புதிய கட்டளைக் கலித்துறையை மேற்கொண்டது ஒரு பெருங் கரி என்க. தொல்காப்பியர் காலத்து எண்ணிறந்த செய்யுள் வகைகள் இருந்திருந்தபோதும் அவற்றையெல்லாம் பா என்ற ஒரு வகைக்குள் அடக்கினர். பாவினம் என்ற ஒரு தனிப்பிரிவு கொள்ளவில்லையேயொழிய இன்று இனமாகக் கருதப்படும் பல்வகைச் செய்யுட்கள் அன்றும் இருந்தன. கொச்சக ஒருபோகின் பல பிரிவுகளில் அவை அடக்கிச் சொல்லப்பட்டன என்ற கருத்து உரைகளால் தெளிவாகும். எனினும் பாவினம் என்ற பிற்காலப் பிரிவு, வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதில் ஐயமில்லை. பிற்கால யாப்பியலார் இனங்கட்குக் கூறும் இலக்கணங்கள் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் எதிர்மொழிந்தபடி மிகையும் குறையும் உடையவை; செப்பத்திற்கு இடமானவை. ஆயினும் பிற்கால யாப்புக் கல்விக்கு யாப்பருங்கலக் காரிகைபோல் வேறொரு நூல் துணையானதில்லை. முறை யானும், அடக்கத்தானும், சுருக்கத்தானும் காரிகைப்புகழ் நிலையானது. மாணவர்க்கு யாப்பு கற்பிக்கும் ஒரு நோக்கத்தோடு இயற்றப்பட்ட பாடநூல் இது. அதனாலன்றோ இலக்கணக் காரிகைகளோடு இலக்கிய முதனிணைப்புக் காரிகைகளும் சேர்ந்துள. செய்யுளியலையும், காரிகையையும் சீர்தூக்கிப் பார்ப்பின் முன்னது செய்யுட் கடல்; பின்னது யாப்பு வாய்க்கால். முன்னது இலக்கியம் படைக்கும் புலவரை நோக்கியது. பின்னது படைத்த இலக்கியத்தைக் கற்கப் புகும் மாணவரை நோக்கியது. முதற்கண் செய்யுளியலைப் படிக்கப் புகுவார் குன்று முட்டிய குருவி போல்வர். முதற்கண் காரிகையைப் படிக்கப் புகுவார் கன்று முட்டிய காராப்போல்வர். தொல்காப்பியச் செய்யுளியல் - யாப்பருங்கலக் காரிகை ஒப்பீட்டு விளக்கம் தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ளவை, காரிகையில் இல்லாதவை என்ற பகுதியை அட்டவணை 3,5இலும், காரிகையில் உள்ளவை செய்யுளியலில் இல்லாதவை என்ற பகுதியை அட்டவணை 4,6-இலும் காணலாம். இருநூல்களுள் ஒன்றில் மட்டும் காணப்படும் விதிகள் ஒப்பீட்டாய்வுக்கு உரியனவல்ல. இரு நூலிலும் இருப்பவை தாம் அத்தகு ஆய்வுக்கு உரியவை. ஆதலின் இனி செய்யுளியலிலும், காரிகையிலும் காணப்படுவனவற்றுள் குறிப்பிடத்தக்க ஒற்றுமை வேற்றுமைகளை மட்டும் இங்கு விளக்குவாம். உறுப்புக்கள் :- 1. குறில் 8. மெய் 2. நெடில் 9. வல்லினம் 3. உயிர் 10. மெல்லினம் 4. குற்றியலிகரம் 11. இடையினம் 5. குற்றியலுகரம் 12. உயிர்மெய் 6. ஐகாரக் குறுக்கம் 13. அளபெடை 7. ஆய்தம் என்று 13 எழுத்துக்களைக் காரிகை கூறும். அளபெடையில் உயிரளபெடையும், ஒற்றளபெடையும் அடங்கும். ஆதலின் காரிகை கூறும் எழுத்துக்கள் 14 எனலாம். தொல்காப்பியர் எழுத்ததிகாரம் இயற்றியவராதலின் இத்துணையெனச் செய்யுளியலில் வரையறுத்துக் கூறாது ‘எழுத்தியல் வகையும் மேற்கிளந்தன்ன’என்று சுட்டியமைவர் இளம்பூரணர், எழுத்ததிகாரத்திற் கூறப்பட்ட உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்து, மூவினம், பல்வகைக் குறுக்கங்கள், உயிர் மெய்யெழுத்து எல்லாவற்றையும் திரும்பக் கூறுவர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் எழுத்ததிகாரத்திற் சொல்லிய முப்பத்து மூன்றினை 15 என்று வகைப்படுத்திக் காட்டுவர். இவற்றை ஒப்பிடுங்கால் ஒளகாரக் குறுக்கம் ஒன்று மட்டும் காரிகையில் இல்லை. எனினும் இவ்வாசிரியர் இயற்றிய மற்றொரு நூலான யாப்பருங்கலத்தில் ஒளகாரக் குறுக்கமும், மகரக் குறுக்கமும் இடம்பெற்றுள, ‘மகரக் குறுக்கத்தினையும் கூட்டிப் பதினாறு எழுத்து என்பாருமுளர்’ என்ற பேராசிரியர் குறிப்பு யாப்பருங்கலத்தைக் குறிக்கும் போலும். 2. அசைகள் தொல்காப்பியம் நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்கு அசைகள் கூறும். முதலிரண்டும் இயலசை எனவும், பின்னிரண்டும் உரியசை எனவும் பெயர் பெறும். காரிகையோ நேர் நிரை என இரண்டசையே கூறும். இது மிகப்பெரிய அடிப்படை வேறுபாடு. தொல். படி காரிகையின்படி 1. வண்டு, நாடு, மின்னு, நாணு. நேர்பு நேர் நேர் 2. வரகு, குரங்கு, இரவு, புணர்வு நிரைபு நிரை நேர் 3. சேற்றுக்கால் நேர்புநேர் நேர் நேர் நேர் 4. களிற்றுத்தாள் நிரைபுநேர் நிரை நேர் நேர் 5. மாபோகுசுரம் நேர்நேர்பு நேர்நேர் நிரை நிரைநேர் இதனால் தொல்காப்பியத்தின்படி ஓரசை, ஈரசை, மூவசையாவன காரிகையின்படி முறையே ஈரசை, மூவசை, நாலசையாதல் காணலாம். நேர்பு நிரைபு என்ற அசை வகைகளைக் கொள்ளாமையினால் காரிகையார் பொதுவொரு நாலசை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தொல் காப்பியர் மூவசைக்கு மேல் கொண்டிலர் என்பது நினையத் தகும். களிறுவழங்குசுரம் என்பது நிரைபு நிரைபு நிரை என மூவசைச் சீராம். இதுவே களி றுவ ழங் குசு ரம் என அலகு பெற்றுக் காரிகையின்படி ஐயசையாகின்றமை காண்க. நேர்பு, நிரைபு என்ற உரியசைகள் வேண்டுமா, என்பதுபற்றிய ஆய்வினைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் நிகழ்த்தாமல் இல்லை. பொதுவாகப் பின்வந்த யாப்பு மாற்றங்களைத் தழுவிச் செல்லும் போக்குடைய இளம்பூரணர் கூறுகின்றார்: “அஃதேல் நேர்பசை நிரைபசையெனக் காக்கை பாடினியார் முதலாகிய ஒரு சாராசிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை இரண்டசை யாக்கிய யுரைத்தாராயினும் அதனை முடிய நிறுத்தாது, வெண்பா ஈற்றின்கண் வந்த குற்றுகர நேரீற்றியற் சீரைத் தேமா புளிமா என்னும் உதாரணத்தான் ஓசையூட்டிற் செப்பலோசை குன்றும் என்றஞ்சி காசு பிறப்பு என உகரவீற்றான் உதாரணங் காட்டினமையானும், சீருந் தளையும் கெடுவழிக் குற்றியலுகரம் அலகு பெறாது என்றமையானும், வெண்பா வீற்றினும் முற்றுகரம் சிறுபான்மை வருமென உடன்பட்டமையானும் நேர்பசை நிரைபசையென்று வருதல் வலியுடைத் தென்று கொள்க” (செய்யுளியல் 4). பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் இளம்பூரணர் கருத்தின் வழியே இன்னும் சில ஏதுக்கள் தந்து தொல்காப்பிய இலக்கணத்தை வலியுறுத்துவர். தொல்காப்பியம் நேர்பு நிரைபு அசைகள் கொண்டதற்கு ஒரு பெருங்காரணம் சொற்களைப் பொருள் சிதைக்காது அலகு கூறல் வேண்டும் என்பதாம். ‘தனிக்குறில் முதலசை மொழி சிதைத்தாகாது’ (7) எனவும், ‘முற்றிய அகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ’ (9) எனவும் கூறும் முறையால் அறியலாம். தமிழில் உகரவீற்றுச் சொற்கள் மிகுதியுண்டு என்பது குற்றியலுகரப் புணரியல் எனத் தனியியல் இருப்பதே சான்றாகும். வண்டு, வரகு, சேற்றுக்கால் களிறுவழங்குசுரம் என்ற காட்டுக்களைத் தொல்காப்பிய நெறியாலும் காரிகை நேறியாலும் அலகு செய்யின், முன்னது பொருளறாச் சொல்லுணர்ச்சியுடையது எனவும், பின்னது சொல்லறுத்த ஓசையுடையது எனவும் விளங்காமற் போகாது. நேர்பு நிரைபு என்பன இன்று வழக்கற்றுப் போயினும், அந்த ஈரசைகளையும் தொல்காப்பியர் கொண்டதற்குரிய காரணம் இன்றும் வலுவுடையது என்று கருத வேண்டும். எனினும் முற்றிய லுகரத்தைக் குற்றியலுகரத்திற்கு ஒப்பாகக் கொண்டு மின்னு அரவு என்பனவற்றை நேர்பு நிரைபு அசைகளாகக் கொள்வதும், ஞாயிறு என்ற குற்றியலுகரத்தை நேர் நிரை எனக் கொள்வதும், அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை எனற் எதிர் கூற்றும் நினையத்தக்கவை. உரையாசிரியர்கள் இவற்றுக்கு அமைதி கூறியிருப்பினும் மனநிறைவளிப்பனவாக இல்லை. 3. சீர்கள் நேர்பு நிரைபு என்ற உரியசை கொண்ட தொல் காப்பியத்துக்கும் அவ்வசை கொள்ளாத காரிகைக்கும் சீர்களிலும் வேறுபாடு இருத்தல் இயல்பேயாகும். காரிகை ஓரசைக்சீர் 2 ஈரசைச்சீர் 4 மூவசைக்சீர் (காய்) 4 மூவசைச்சீர் (கனி) 4 நாலசைச்சீர் 16 ----- சீர்கள் 30 ------ நாவசைச்சீருள் நேரீற்று எட்டும் காய்ச்சீர் போலவும், நிரையீற்று எட்டும் கனிச்சீர் போலவும் தளைக்குச் கொள்ளப்படும். புதிதாகக் கொண்ட இப்பொதுச்சீர் செய்யுளகத்துக்கும் அருகியே வரும் என்பது ‘நாலசைச்சீவர் வந்தருகும்’ என்ற காரிகைத் தொடராற் பெறப்படும். தொல்காப்பியம் ஓரசைச்சீர் 4 ஈரசைச்சீர் 10 (இயற்சீர்) ஈரசைச்சீர் 6 (ஆசிரியவுரிச்சீர்) மூவசைச்சீர் 4 (காய்ச்சீர்) மூவசைச்சீர் 60 (கனிச்சீர்) ---- சீர்கள் 84 ---- இச்சீர்கள் பெரும்பாலும் வருகின்ற பாவிற்கு ஏற்ப அகவற்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர் எனப் பெயர் பெறுதல் உண்டு. சீர்களுக்கு இருநூல்களிலும் வாய்பாடுகள் வேறு வேறாகக் கூறப்படும். தொல்காப்பியம் வாய்பாடு ஏதும் கூறவில்லை. உரைசாயிரியர்களே அவற்றை உரைக்கிடைக் காட்டுவர். காரிகையோ எனின், தேமா புளிமா கருவிளங் கூவிளம் சீரகவற்கு ஆமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியாம் வாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரணம் நாண்மலரே. தண்ணிழல் தண்பூ நறும்பு நறுநிழல் தந்துறழ்ந்தால் எண்ணிரு நாலசைச் சீர்வந் தருகும். என நூலின் ஒரு பகுதியாகவே வாய்பாடு கூறும் அமைப்புடையது. அளபெடையை அசைநிலையாக்கிச் சீர் சொல்லும் முறையில் ஒரு வேறுபாடு உண்டு. அளபெடையில் வரும் குற்றெழுத்தின் ஓசையை முன்னும் பின்னும் கூட்டாது தனியாக நேர் எனக் கொள்ள வேண்டும் என்பார் காரிகையார் (காரிகை 39). ஏஎர் என்பது நேர்நேர் ஆகும். எழா அ நின் என்பது நிரைநேர் நேர் ஆகும். இதனை, எழா அநின் எனக் குறிலிணையாக அலகிட்டு நிரைநிரை என்றல் கூடாது என்பது காரிகையின் கொள்கை. தொல்காப்பிய உரையாசிரியர்களோ ஆஅழி என்பதனை நேர் நிரை எனவும், படாஅகை என்பதனை நிரை நிரை எனவும் அளபெடையை வருமெழுத்தோடு இணைத்து அலகு காரியம் செய்வர். 4. அடிகள் அடியென்பது பாவிற்கு அடிப்படையான வரம்பு, பொதுவாக அடியென்பது நாற்சீர் கொண்ட அளவடியைக் குறிக்கும். தொடைகளும் தளைகளும் இவ்வடிக்கே உரியவை. ஆதலினன்றே தொல்காப்பியர், நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே (31) அடியுள் ளனவே தளையொடு தொடையே (32) அடியிறந்து வருதல் இல்லென மொழிப (33) அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே (34) என்று பல்வகையாலும் பாக்கட்டிடத்தின் அடித்தளத்தை அறுதியிட்டுரைப்பர். எனவே நாற்சீர் குறைந்தனவும், மிகுந்தனவும் கட்டளையடியெனப்படா எனவும், கட்டளை யடியல்லாதவை சீரடி எனப் பெயர்பெறும் எனவும் வேற்றுமை தெளிய வேண்டும். தொல்காப்பியம் கட்டளையடி, சீரடி என இருவகையடியும் கூறும். கட்டளை என்பது எழுத் தெண்ணிக்கைய அடிப்படையாகக் கொண்டது பிற்காலத்து எழுந்த கட்டளைக் கலிப்பாவும், கட்டளைக் கலித்துறையும் எழுத்தளவாற் பெற்ற பெயர்கள் என்பதை அறிவோம். சீரடி என்பது ஒரு பாட்டின்கண் எழுத்தளவு பாராது சீர்வரவை நோக்கிக் கூறும் தன்மையது. காரிகை சீரடி அமைப்பே கொண்டது. கட்டளையடிகளின் நிலங்கள் குறுளடி 4-6 எழுத்துக்கள் சிந்தடி 7-9 ” நேரடி 10-14 ” நெடிலடி 15-17 ” கழிநெடிலடி 18-20 ” தொல்காப்யித்தின் இக்குறியீடுகளை மயக்கமின்றி உணர வேண்டும். அடி என்றதனாலேயே நாற்சீர் உண்டு என்பது தானேபோதரும். அதன்மேற் குறள் என்பது என்னை? பிற்காலத்தார் வழங்கியது போல இவ்விடத்து இரண்டு என்பது பொருளன்று. உள்ளவற்றுள் மிகச் சிறியது என்பது கருத்து. சிந்து என்றால் ஈண்டு மூன்று என்பது பொருளில்லை. மிகச் சிறிய குறளினும் ஓரளவு கூடுதல் என்பது கருத்து. இவ்வாறே நேர் என்பது நான்கினையோ, நெடில் என்பது ஐந்திணையோ, கழிநெடில் என்பது ஐந்தினுக்கு மேற்பட்டவற்றையோ குறிக்கவில்லை. ஒன்றின் ஒன்று கூடுதலான எழுத்தின் எண்ணிக்கையைக் குறிப்பன. ஒருபாட்டு குறளடியுடையது என்றால் நாற்சீர் கொண்ட அக்கட்டளையடியில் 4-6 வரை எழுத்துக்கள் உள என்பது இலக்கணம். இதன்கண் உயிரும் உயிர்மெய்யுமே எண்ணப் பெறும். மெய்யெழுத்து, குற்றியலுகரம் முதலானவை எண்ணாது தள்ளப்படும். பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து --குறளடி 4 எழுத்து மதியேர் நுண்டோ டொல்கி மாலை --சிந்தடி 9 எழுத்து நன்மணங் கமழும் பன்னல் லூர -நேரடி 10 எழுத்து மணிமருள் வார்குழல் வளரிளம் பிறைநுதல் --நெடிலடி 15 எழுத்து கலனளவு கலனளவு நலனளவு நலனளவு -கழிநெடிலடி 20 எழுத்து எனவே குறளடி முதலியன நாற்சீர்க்கண்ணவாகும் என்பதனையும், அவை மேற்கூறிய எழுத்து வரம்பைக் குறிப்பன என்பதனையும் மறத்தல் கூடா. மக்களுள் தீரக் குறியானைக் குறளன் என்றும், அவனிற் சிறிது நெடியானைச் சிந்தன் என்றும், ஒப்பவமைந்தானை அளவிற் பட்டான் என்றும், அவனிற் சிறிது நெடியானை நெடியான் என்றும், அவனின் மிக நெடியானைக் கழிய நெடியான் என்றும் கூறும் வழக்காற்றினைப் பேராசிரியர் இங்கு ஒப்பிட்டு காட்டுவர். குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்ற இக்குறியீடுகளே இருசீர், முச்சீர், நாற்சீர், ஐஞ்சீர், அறுசீரின் மிக்க சீர் கொண்ட அடிகளையும் குறிப்பான் பிற்காலத்தாரால் ஆளப்படும். காரிகையில் இவ்வாட்சியைக் காணலாம். குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர் அறைதரு காலை யளவொடு நேரடி யையொரு சீர் நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோட் கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே மலைத்தலைய கடற்காவிரி - குறளடி பகவன் முதற்றே யுலகு - சிந்தடி மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் - அளவடி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார் - நெடிலடி கற்றவர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்கலாமோ - கழிநெடிலடி எனவே கட்டளையடிக்கும், சீர்வகையடிக்கும் அதே ஐந்து குறியீடுகள் ஆட்சிப்படுவதை மயக்கமின்றி உணரல் வேண்டும். தொல்காப்பியர் கட்டளையடிக்கே பெரிதும் இலக்கணம் மொழிபவராதலின், அந்த அடிக்கண் வருஞ் சீர்கள் இன்னபாவில் இத்தனை எழுத்துடையனவாக இருத்தல் வேண்டும் எனச் சீரில்வரும் எழுத்துக்கும் சிற்றெல்லை பேரெல்லை கூறுவர். சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது நேர்நிரை வஞ்சிக் காறும் ஆகும் (40) தன்சீர் எழுத்தின் சிறுமை மூன்றே (44) என்ற நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற அடிப்படை கட்டளையடிக்கு உரியவாகும். ஐவகைப்பட்ட இக்கட்டளையடி 625 என்ப. காரிகையில் கட்டளையடி யின்மையின் இவ்வெண்ணிக்கைக்கு இடமில்லை. 5. தளை ‘பந்தம் அடிதொடை பாவினம் கூறுவன்’ என்று காரிகையாசிரியர் தளையைச் செய்யுளின் உறுப்பாகக் கொள்வர். தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புக்களை யெல்லாம் எண்ணிய முதற்நூற்பாவில் தளை கூறப்படவில்லை. எனினும் தளை என்ற செய்யுட் செய்கையைத் தொல்காப்பியர் நன்கு அறிந்தவரே. ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை எனத் தளை என்ற பெயர்ச் சொல்லோடு ‘வந்துநிரை தட்டல்’ என வினைச் சொல்லையும் ஆளுவர். தொல்காப்பியம் கூறும் தளை கட்டளையடிக்கே என்பதனை உரையாசிரியர்கள் தெளிவு படுத்துவர். ‘தளையென்று ஓதுவனவெல்லாம் கட்டளையடியே நோக்கும் என்பது பெற்றாம்’ என்பர் பேராசிரியர். ஐவகை அடிகளை விரித்துரைத்தபின் தொல்காப்பியம் தளைவகைகளைக் கூறுவதால் தளை என்பது கட்டளையடிக்கே என்ற கொள்கை வலியுறும். ‘இத்துணையும் அடியும் அடிக்குரிய எழுத்துக்களும் ஓதினார். இனி அவ்வடிக்கண் ஓசை வேறுபாடும் தளையிலக்க™மும் உணர்த்துவார். அத்தளைக்கண் வருவதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று (52) என்ற இளம்பூரணர் உரையால் அடிக்கு முன் தளையை வைக்கும் காரிகைபோலன்றி, அடிக்குப் பின் தளையை மொழியும் தொல்காப்பியர் வைப்புமுறை புலப்படும். தொல்காப்பிய நூற்பாவில் ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை இவையே bளிப்படக் கூறப்பட்டுள. “தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா” (52) என்பதனால் ஏனைத்தளைகள் குறிப்பால் சுட்டப்படுகின்றன எனக் கொள்ளலாம். ‘தண்சீர் தனதொன்றின் தன்தளையாம்’ எனக் காரிகையும் இவ்வாறு கூறுதலை ஒப்புநோக்குக. தளை கட்டளைக்கு உரியதாதலின் இத்துணை எழுத்துக்கள் கொண்ட அடிகள்தாம் இன்னின்ன பாவில் வரும் என்று தொல்காப்பியம் பல நூற்பாக்களில் விழிப்பாக விரித்துக் கூறுகின்றது. சீருக்கே தளை கொண்டமையின் இவ்விழிப்புக்குக் காரிகையில் இடமில்லை. தொல்காப்பியம் தளையை ஓர் உறுப்பாகக் கொள்ளாமையை அறிந்த உரையாசிரியர்கள் அதற்கேற்ற காரணம் காட்ட முல்ப. (1) தளை என்பது சீரது தொழிலேயன்றி வேறு பொருளன்று. (2) எழுத்து அசை சீர் அடிபோல் வெளிப்பட்ட உறுப்பன்று (3) இருசீர் இணையும்போது தளை கொள்ளுகின்றோம். அவ்விருசீர் குறளடி எனப் பெயர்பெறும் (4) குறுளடி என்று சொல்லியபின் தளை என்று சொல்ல வேண்டுவதில்லை. (5) இருசீர் கூடியதைத் தளை என்ற ஓர் உறுப்பாகக் கொள்ளின், நாற்சீரடி என்று கூறுவது பிழையாகும். (6) தளையால் அடி வகுப்பதில்லை, (7) சீருக்குப்பின் தளையை ஓர் உறுப்பாகக் கொண்டால் சீரால் அடி வகுப்பது குற்றமாகி விடும். இனைய காரணங்களால் கேவலம் தொழிலான தளையை உறுப்பாக எண்ண வேண்டா என்பது தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்து. தளையை ஓர் உறுப்பாகக் கோடலால் தெளிவுண்டு என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியர் செய்யுளுறுப்பென முதனூற் பாவில் எண்ணுவன வெல்லாமே உருவ உறுப்புக்கள் அல்ல. யாப்பு, தூக்கு நோக்கு என்றினைய வெல்லாம் தொழிற் றன்மையனவே. எழுத்தளவில் வரும் குறளடி என்பதனைப் பின்னையோர் கைவிட்டனராதலின், தளையை ஓர் உறுப்பாகக் கொண்டனர். தொல்காப்பியர் அங்ஙனம் கொள்ளாமைக்கு அமைதி காணலாமேயன்றிப் பின்னையோர் கோள் குற்றப் பாட்டிற்கு உரியதன்று. தளையின் பயன் ஓரடியில் அல்லது ஒரு பாடலில் வரும் சீர்களையும் அவற்றின் தொடர்ச்சியையும் ஓசைக்கேற்பக் கட்டுப்படுத்துவது ஆதலின் அதன் மதிப்புப் பெறப்படும். 6. தொடை தொடை 43 எனக் காரிகை முடித்துக் காட்டும். தொல்காப்பியம் 13699 தொடை கூறுமென இளம்பூரணர் உரையால் அறியலாம். ‘தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும்’ என்று நூற்பாவால் தொடையின் அடங்காப் பெருக்கம் பெறப்படும். தொடையின் பல்லாயிரத்தைத் தொல்காப்பியர் ஒரு நூற்பாவால் சுட்டினாரேயன்றி அக் கணக்கு எவ்வாறு வரும் என அடிக்குக் கூறியதுபோலக் கூறிற்றிலர். ஆதலின் தொடையின் விளக்கத்துக்கு உரைகளையே நாம் சார்ந்து நிற்கின்றோம். மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என அடிதோறும் வரும் தொடை ஐந்தும், பொழிப்பு ஒரூஉ என அடிக்கண் வரும் தொடை இரண்டும், செந்தொடை நிரனிறை இரட்டையாப்பு என்ற மூன்றும் ஆக 10 தொடைகள் தொல்காப்பிய நூற்பாவில் வெளிப்படையாக வுள. இவற்றுள் நிரனிறை காரிகையில் இல்லை. காரிகை கூறும் இணை, கூழை, மேற்கதுவாய், முற்று, அந்தாதி என்பனவும் முரண்தொடையில் வரும் கடை, கடையிணை முதலாயினவும் தொல்காப்பியத்தில் இல்லை. எனினும் இளம்பூரணர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் மூவரும் தம் உரையில் பல்வேறு தொடை விகற்பங்களை--காரிகையில் இல்லாத பலவற்றை--எடுத்துக்காட்டுக்களோடு பரந்து விளக்கியுள்ளனர். மெய்பெறு மரவின் தொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே என்ற ஒரு நூற்பாவில் தொல்காப்பியர் தொடை யெண்ணிக்கை மட்டும் கூறி விரிவஞ்சி விடுத்தார் போலும், அதனால் அவர் காலத்து இவ்விரிவெல்லாம் நுவலும் தொடை நூல் வேறாக இருந்திருக்கும் எனக் கருத இடனுண்டு. பாவகை ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே என நூற்பா கொள்வர் தொல்காப்பியர். இவற்றுள் வஞ்சி ஆசிரிய நடையை ஒக்கும் எனவும், கலி வெண்பாநடையாகும் எனவும் நாற்பாவை இருபாவினுள் அடக்குவர். நாற்பாக்களும் அறமுதலாகிய மும்முதுற் பொருளிலும் வாழ்த்தியல் வகையிலும் வரும். புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல் மூன்றும் கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் வாரா; வெண்பாவிலும்; ஆசிரியப்பாவிலும் மருட்பாவிலும் வரும். காரிகையோ இவை மருட்பாவொன்றிலே வரும் எனக் கூறும். (அ) ஆசிரியப்பா ஆசிரியப்பா மண்டில யாப்பும் குட்டமும் பெறும். மண்டில யாப்பாவது எல்லாவடிக்கண்ணும் நான்குசீர் உடைமை. இதனைக் காரிகை நிலைமண்டில ஆசிரியப்பா எனவும், அடிமறி மண்டில ஆசிரியப்பா எனவும் இருவகைப்படுத்தும். குட்டம் என்பது இடையில் சீர்கள் குறைந்து வருதல், ஈற்றயலடி முச்சீரால் வருவதை நேரிசை யாசிரியப்பா என்றும், இடையடிகள் பலசீர் குறைந்து வருவதை இணைக்குறளாசிரியப்பா என்றும் காரிகை வகைப்படுத்தும். ஆசிரியப்பாவின் வகைகள் காரிகையில் தெளிவாகவுள. (ஆ) வெண்பா வெண்பாவின் இலக்கணம் தொல்காப்பியம் கூறிற்றிலது. பஃறொடை வெண்பாவை நெடுவெண்பாட்டு எனவும் குறள்வெண்பா, சிந்தியல் வெண்பாக்களைக் குறு வெண்பாட்டு எனவும் கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள் எல்லாம் வெண்பாயாப்பில் வரும் எனவும் வெண்பாவும் ஆசிரியமும் இணைந்த மருட்பாவால் கைக்கிளை பாடப்பெறும் எனவும் இத் தொன்னூல் மொழியும், வெண்பாவின் வகைகள் காரிகையில் முறையாக எண்ணப்பட்டுள. (இ) பரிபாடல் பரிபாடல் வெண்பாவின் ஒரு பகுதி என்று காணப்படினும் அதன் உறுப்புக்களைத் தொல்காப்பியம் விரிவாக மொழியும். இது பா என்று சொல்ல முடியாத பொது நிலையுடையது எனவும் கொச்சகம், அராகம்,, சுரிதகம் என்ற உறுப்புக்கள் கொண்டது எனவும் காமப் பொருளாக வரும் எனவும் சொற்சீரடியும் முடுகியலடியும் பெறும் எனவும் பரிபாடலின் தனித்தன்மையை அறிகின்றோம். இத் துணைச் சிறப்புடைய இப்பாவைக் காரிகை அறவே நீக்கி விட்டது பொருந்துமா? எட்டுத் தொகையுள் பரிபாடல் என ஓர் இலக்கியம் இருக்கும்போது, அதுபற்றி யாதுங் கூறாது விடுத்தற்குக் காரணம் வழக்கு வீழ்ந்த பா என்ற கருத்தாக இருக்கலாம். (ஈ) கலிப்பா கலிப்பா செய்யுளியலிலும் காரிகையிலும் விரிவாகக் கூறப்பட்டுள. தொல்காப்பியம், ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தோ என்று கலிப்பாவகை நான்கெனக் கூறும். இவற்றுள் ஒத்தாழிசைக்கலி சில உட்பகுதிகள் உடையது. இப்பகுதிகளையும் எண்ணின் தொல்காப்பியம் மொழியும் கலிவகைகள் புலனாம். தொல்காப்பியம் கூறும் கலி வகைகள் 1. அகநிலைவொத்தாழிசைக் கலி இது ஒத்தாழிசைக்கலி எனவும் பெயர் பெறும்; தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம் என்ற நான்குறுப்புப் பெறும் 2. வண்ணகவொத்தாழிசை முன்னிலையில் தேவரைப் பராவி வரும்; தேவபாணி எனப் பெயர் பெறும்; தரவு, தாழிசை, எண், தனிச்சொல், சுரிதகம் என்ற ஐந்துறுப்புப் பெறும் 3. கொச்சகவொருபோகு முன்சொன்ன இருவகைக் கலிப்பாவுறுப்புக்கள் குறைந்தும் வேறுபாடுற்றும் பொருள் வேற்றுமை பெற்றும் வரும். இது ஐவகைப் படும். பிற்காலத்தார் சொல்லும் பாவினங்கள் இவ்வொரு போகில் அடங்கும் என்பர் உரையாசிரியர்கள். 4. அம்போதரங்கவொருபோகு தரவு, கொச்சகம், அராகம், சிற்றெண், சுரிதகம் என்ற ஐந்து உறுப்பு உடையது. கொச்சகம் என்பது சிறியனவாகவும் பெரியனவாகவும் விரவி அடுக்கும் தாழிசை மடிப்புக்கள். அராகம் என்பது குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகோசை. சிற்றெண் என்பது ஈரசைச் சீர்கள். இதற்கு 60 அடி மேலெல்லை; 30 அடி சிற்றெல்லை. இது காமப் பொருளாக வரும் என்பர் இளம்பூரணர். இந்நான்கும் ஒத்தாழிசைக்கலியின் பகுதிகளாக வருவன. 5. கலிவெண்பா ஒரு பொருள் நுதலி வரும்; வெண்டளை பெறும்; பன்னிரண்டடியில் வரும். இது கட்டளையில் வரும் கலிவெண்பா எனப்படும். ஒரு பொருள் நுதலாது சீரும் தளையும் சிதைந்தும் அடி குறைந்தும் இகந்தும் திரிவு பட வருவனவெல்லாம் கலிவெண்பாவின்பாற் படும். இது சீர்நிலையில் வந்த கலிவெண்பாவாகும். 6. கொச்சகக் கலி தரவும் சுரிதகமும் தனிச்சொல்லும் இடையிடையே வரும். ஐஞ்சீர் அறுசீர் பெற்று வரும். வெண்பாவின் இயல்புபெறும். இது யாப்பாலும் பொருளாலும் வேறுபடும். ஒத்தாழிசைக் கலிக்குத் தாழிசையுறுப்பு மிக்கு வருதல் போல இக்கலியில் வெண்பாவுறுப்பு மிக்கு வரும் என்பர் இளம்பூரணர். பின்னையோர் கூறும் பாவினங்களிற் சில இதன்பாற் படும். 7. உறழ்கலி கொச்சகக் கலியின் யாப்பியல்புகளைப் பெரும்பாலும் பெறும். சுரிதகம் என்பது இராது. வினாவும் விடையும் என்ற முறையில் உரையாடலாக இருக்கும் இது நாடகவமைப்புடையது. எனவே தொல்காப்பியம் எழுவகைக் கலி கூறுவது எனவும், ஒத்தாழிசைக்கலி இயல்பான நான்குறுப்புக்களை முறையாக உடையது எனவும், எண் என்ற ஓர் உறுப்புக் கூடும் போது வண்ணக ஒத்தாழிசையாம் எனவும், அராகம் என்ற உறுப்புக் கூடும்போது அம்போதரங்கவொருபோகு ஆகும் எனவும், ஒரு பொருள் நுதலிய நெடியவெண்பா கலிவெண்பா ஆம் எனவும், கூற்று-மாற்றம் என்ற நடை காரணத்தால் உறழ்கலியாம் எனவும், கலிக்குரிய சில வுறுப்புக்கள் குறையுங்கால் கொச்சகவொருபோகு ஆகும் எனவும், இவ்வுறுப்புக்கள் மாறியும் சீர் கூடியும் வரும் போது கொச்சகக் கலியாம் எனவும், இவ்விலக்கணங்களை ஓரளவு உணரலாம். அடியெல்லை களாலும், பொருளாலும், யாப்பாலும் வரும் நுண்ணிய வேற்றுமைகளை உரைகள் எடுத்துக் காட்டுகின்றன. இடைக்காலத்தார் மொழிந்த பாவினங்கள் கொச்சக வொருபோகிலும் கொச்சகக் கலியிலும் அடங்கும் என்பது உரைப்பெருமக்கள் கருத்து. யாப்பருங்கலக் காரிகை கூறும் கலி வகைகள் ஒத்தாடிழசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி என்று கலிப்பா மூவகைப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் சில உட்பகுதிகள் உண்டு. அவற்றையும் ஒன்று கூட்டினால் காரிகை மொழியும் கலிப்பாக்கள் பின்வருமாறு: 1. நேரிசை ஒத்தாழிசைக் கலி இது தொல்காப்பியர் கூறும் அகநிலை ஒத்தாழிசைக் கலியை ஒக்கும் 2. அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி இது தொல்காப்பியம் கூறும் வண்ணக ஒத்தாழிசையை ஒக்கும் 3. வண்ணக ஒத்தாழிசைக்கலி இது தொல்காப்பியத்து வரும் அம்போதரங்கவொரு போகினைப் பெரும்பாலும் ஒப்பது. இவை மூன்றும் ஒத்தாழிசைக் கலியின் உட்பிரிவுகள். தொல்காப்பியம் எண் உறுப்புப் பெற்றதனை வண்ணகம் எனவும், அராகவுறுப்புப் பெற்றதனை அம்போதரங்கம் எனவும் கூறும். காரிகையில் இப்பெயர்கள் மாறியுள்ளன. கொச்சகம் என்ற உறுப்பு இப்பாக்களில் காரிகையில் இடம் பெறவில்லை. 5. கலிவெண்பா இது தொல்காப்பியம் கூறும் கலிவெண்பாவை முற்றும் ஒக்கும். 5. வெண்கலிப்பா அயற்றளை விரவி வரும் வெண்பா ஆகும். ‘ஒரு பொருள் நுதலிய’ என்று தொடங்கும் தொல் காப்பியத்தில் வெண்கலிப்பா கொள்வதற்கும் குறிப்பில் இடம் உண்டு என்பர் உரையாசிரியர்கள். 6. கொச்சகக்கலி இது தரவு கொச்சகம், தரவிiண்க் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், பஃறாழிசைக் கொச்சகம், மயங்கிசைச் கொச்சகம் என ஐவகைப்படும். இவை தொல்காப்பியம் கூறும் கொச்சகவொரு போகிலும் கொச்சகக்கலியிலும் பெரும்பாலும் அடங்கும். தொல்காப்பியத் சொல்லிய உறழ்கலி, யாப்பில் பிறவற்றோடு வேறுபாடின்மையின் காரிகை அதனைக் கூறவில்லை. கொச்சகவொருபோகினைக் காரிகை சொச்சகக் கலியுள் அடக்கிற்று. வண்ணகம், அம்போதரங்கம் என்ற கலிப்பாக்கள் உறுப்பளவிலன்றிப் பெயரளவில் மாறிக் கிடக்கின்றன. (உ) வஞ்சிப்பா நிரையீற்றில் வரும் வஞ்சியுரிச்சீர் 60. வஞ்சிப்பாவில் ஏனைய சீர்களும் வரப்பெறும். நேரீற்றியற்சீர்கள் (தேமா புளிமா என்பன) இப்பாவின் அடியிறுதியில் வாரா. வஞ்சித்தளையுண்டு. கட்டளை வஞ்சியுரிச்சீர் மூன்றெழுத்திற் குறையாது ஆறெழுத்து வரை வரும். வஞ்சியடி இரு சீராலும் முச்சீராலும் வரப்பெறும். இரு சீரான் வருவது சமநிலை வஞ்சியெனவும், முச்சீரான் வருவது வியநிலை வஞ்சியெனவும் பெயர் பெறும். இவை அசையைக் கூனாகப் பெறும். வஞ்சி ஆசிரியமாகிய செந்தூக்கினை ஒக்கும் என்றமையால், வஞ்சியடியிறுதி நாற்சீர் பெறும் என்பதும், ஈற்றயல் முச்சீரும் நாற்சீரும் பெறும் என்பதும் போதரும். வஞ்சிப்பாவுக்கு நாற்சீர் கொண்ட அளவடியின்மையின், அளவடிக்குக் கூறப்படும் பல யாப்பியல்புகள் அதற்கு இல்லை. வஞ்சி அறமுதலாகிய பொருளிலும், வாழ்த்தியல் வகையிலும் ஏனைப்பாக்கள் போலப் பாடப்படும். காரிகையில் வஞ்சிப்பா பற்றி இவ்வளவு விரிவான குறிப்பில்லை. குறளடி வஞ்சிப்பாவும், சிந்தடி வஞ்சிப்பாவும் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இறும் என்று இலக்கணம் கூறப்படுகின்றது. தொல்காப்பியமே வஞ்சிக்குச் சுரிதகம் சொல்லவில்லை. மேலே இரு நூலிலும் காட்டப்பட்ட ஒப்பீடுகள் நூற்பாக் களோடு உரைகளையும் ஒருவாறு தழுவிச் செய்யப்பட்டன. ஒவ்வொரு பாவிற்கும் உரிய இலக்கணங்களைத் தொல்காப்பியமும் காரிகையும் நூற்பாக்களில் கூறவில்லை எனவும் உரைகளே அவற்றிற்குரிய அசையும் சீரும், தளையும், அடியும் பற்றி விரிவாகத் தொகுத்துக் கூறுகின்றன எனவும், ஆதலின் உரைகளும் ஒப்பீட்டுக்குரியவை எனவும் அறிய வேண்டும். காரிகையைப் பொறுத்தவரை வரையென்றே தொல்காப்பியச் செய்யுளியலுக்கோ, இளம்பூரணம், பேராசிரியம், நச்சினார்க்கினியம் என உரைகள் உள. ஆதலின் ஒப்பீட் டாளர்க்கு மூன்றுரைகளையும் முதற்கண் ஒப்பிட்டுக் காணும் கடப்பாடு உண்டு. எனினும் இக்கட்டுரை விளக்கத்தில் பெரும்பாலும் இளம்பூரணமே தழுவப்பட்டுள்ளது. அட்டவணை—1 தொல்காப்பியச் செய்யுளியல் --சுருக்கம் நூற்பா செய்யுள் உறுப்புக்கள் 34. அவை மாத்திரை முதலாக யாப்பு ஈறாக 26. இவை தனிநிலைச் செய்யுட்கு உறுப்பாம். அம்மை முதலாக இழைபு ஈறாக 8. இவை தொடர்நிலைச் செய்யுட்கு உறுப்பாம். மாத்திரையும் எழுத்தும் எழுத்ததிகாரத்திற் கூறப்பட்டவையே. 1-9 அசைகள். நேர், நிரை, நேர்பு, நிரைபு என அசைவகை நான்கு இவற்றுள் நேரும் நிரையும் இயலசை எனவும், நேர்பும் நிரைபும் உரியசை எனவும் படும். 10. அசையும் சீரும் இசையொடு சேர்த்துப் பார்க்க வேண்டும் 11-30 சீர்கள். ஈரசைச் சீர் மூவகைச்சீர் பற்றியன. இயற்சீர் 10. ஆசிரியவுரிச் சீர் 6. வெண்பாபுரிச்சீர் 4. வஞ்சியுரிச் சீர் 60. ஓரசைச்சீர் 4. இவை இன்னின்ன பாக்களில் வரும் என்ற விதிகள் கூறப்பட்டுள. நேர் நிரை நேர்பு திரைபு என்ற ஓரசைகளும் சீராகும் இடனுண்டு. அங்ஙனம் வருங்கால் இயற்சீர் போலத் தளைபெறும். 31-51 அடிகளும் அடிக்குரிய எழுத்துக்களும். அடியென்பது பாட்டுக்கு இன்றியமையா அடிப்படையுறுப்பு. குறுளடி, சித்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து அடிகள் எழுத்தெண்ணி வகுக்கப்படும். இவ்வெழுத்துக்கள் 4-20 வரையிருக்கும். உயிரும் உயிர் மெய்யுமே இவ்வெழுத்துக்களிற் கணக்கிடப் படும். ஒற்றும், குற்றுகரமும், குற்றியலிகரமும் ஆய்தமும் கணக்கிடப்படா. ஒரு சீர் 5 அல்லது 6 எழுத்துக்குமேல் இராது. அசைச்சீர், இயற்சீர், ஆசிரியவுரிச்சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர் என்ற ஐந்தினையும் (5ஓ5ஓ5ஓ5) நான் மடங்கு தம்மில் உறழ அடிகள் 625 ஆகும் என்ப. எழுத்தடிகள் நான்கு பாவிலும் வரும் நிலைகள் கூறப்பட்டுள. 52-73. ஓசையும் தளையும் அடிகளும். தன் சீரே வரும் போது தளைவகை கூற வேண்டுவதில்லை. இயற்சீர் ஒப்பு ஆசிரியத்தளையாகும். அளவடியும் சிந்தடியும் வெண்பாவுக்கு வரும். அது இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பெறும். கலிப்பா நெடிலடியும், கழிநெடிலடியும் பெறும். வெண்பா வுரிச்சீர்முன் நிரைச் சீர் வரின் கலித்தளையாம். இயற்சீர் வெண்டளை ஆசிரியப்பாவிலும் வரும். ஆசிரியப்பாவில் ஐஞ்சீரடி, ஆறுசீரடி, எழு சீரடிகளும் வரப்பெறும். இவை முடுகியல் ஓசை பெறும். நான்கு பாவினுள் இறுதியிலும் ஈற்றயலிலும் இடையிலும் வரும் அடிமுறைகள் கூறப் பெற்றுள. 74-75 யாப்பு என்பது எழுத்து, அசை, சீர், அடி என்ற நிலையில் குறித்த பொருள் முடியுமாறு வேண்டும் சொற்பெய்தல், இவ்வியாப்பு பாட்டு முதலாக முதுசொல் ஈறாக எழுவகைப் படும். 76. மரபு என்பது இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற நாற்சொல்லால் யாப்பு வழிச் செல்வது. 77-83. தூக்கு என்பது நாற்பாவிற்கும் அகவல், செப்பல், துள்ளல், தூங்கல் ஓசைகளாம். 84-99. தொடை என்பது மோனை முதலான தொடை வகைகளும் தொடைவிரியும் (13699) ஆம். 100. நோக்கு என்பது ஒரு பொருளை முடிக்குந் துணையும் பிறிது நோக்காது எல்லாம் அது தன்னையே நோக்கிச் செல்லும் நிலை. 101-156. பாவகைகளும் அளவியலும். ஆசிரியம் வெண்பா, வஞ்சி, கலி, பரிபாட்டு முதலான பாவகைகளும் அவை பாடும் பொருள்களும் அடியெல்லைகளும் விரிவாக இடம் பெற்றுள. 126-149 வரை நூற்பாக்கள் கலிப்பாவிற்கு உரியன. இதுகாறும் கூறியவை அடிவரையறையுடைய பாட்டிற்கேயாம். 157-172. அடிவரையறையில்லாத நூல், உரை, நொடி, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்ற செய்யுள் வகைகள். 173-176. பண்ணத்தியும் அளவியல் தொகையும். 177. அகத்திணை ஏழு. 178-180. களவுக்கைகோளும் கற்புக்கைகோளும். 181-191. களவிலும் கற்பிலும் கூற்றிற்குரியார்; அல்லாதார். 192. கேட்டற் பொருண்மை. 193-203. இடம், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம்,, முன்னம், பொருள்வகை, துறை, மாட்டேறு. 204-226. பாவண்ணம் முதலாக முடுகு வண்ணம் ஈறாக 20 வண்ணங்கள். 227-234. அம்மை முதல் இழைபு வரை 8 வனப்புக்கள். 235. செய்யுட்புறநடை. அட்டவணை-2 யாப்பருங்கலக் காரிகை - சுருக்கம் உறுப்பியல் நூற்பா 1-3 தற்சிறப்புப் பாயிரம் 4. எழுத்துக்கள் 13. 5. நேரசை நிரையசை 2. 6-8. சீர்களும் வாய்பாடுகளும். ஈரசைச்சீர், நேரீற்று மூவசைச்சீர், நிரையீற்று மூவசைச்சீர், ஓரசைச் சீர், நாலசைச்சீர்; இவற்றுக்குரிய வாய்பாடுகள். 9. உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகை-சீர்கட்கு உரியவை. 10. தளைகள் ஏழு. 11. உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகை--தளைகட்கு உரியவை. 12. ஐவகையடிகள், சீரடிப்படையில்; எழுத்தளவில் அல்ல. 13. உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகை--அடிகட்கு உரியவை. 14. நால்வகைப் பாக்கட்கும் உரிய அடியின் சிறுமை பெருமைகள். 15. உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகை-அடியெல்லைக்கு உரியவை. 16-17. தொடைகள்: அடி, மோனை, இயைபு, ஏதுகை, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை. 18. உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகை--தொடைகட்கு உரியவை. 19. இணைமோனை முதலான 35 தொடைவிகற்பங்கள். 20. உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகை--தொடை விகற்பங்கட்கு உரியவை. 21. உறுப்பியற் காரிகைகளின் முதனினைப்புக் காரிகை -- சூத்திரத் தொகுப்பு. செய்யுளியல் 22. நான்கு பாவிற்கும் உரிய அடியும் ஓசையும். 23. உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகை -- அடிக்கும் ஓசைக்கும் உரியவை. 24-28. வெண்பா இலக்கணம், அதன் வகை, அதனினம், 29-30 ஆசிரியப்பாவின் இலக்கணம், அதன் வகை, அதனினம். 31-34 கலிப்பாவின் இலக்கணம், அதன் வகை, அதனினம். 35. வஞ்சிப்பாவின் இலக்கணம், அதன்வகை, அதனினம். 36. மருட்பாவும் பாடு பொருளும். 37. செய்யுளியற் காரிகையின் முதனினைப்புக் காரிகை. ஒழிபியல் 38. ஒருசார் எழுத்திற்குப் புறனடை. 39. ஒருசார் அசைகட்குப் புறனடை. 40. சீரும் தளையும் பற்றிய முறைமை. 41. அடிமயக்கம். 42. ஒருசார் அடிக்கும் தொடைக்கும் இலக்கணம் 43. ஒருசார் எதுகைக்கும் மோனைக்கும் இலக்கணம் 44. தரவு தாழிசைகட்கு அடிவரையறை. 45. எல்லாப் பாக்கட்கும் பொதுவிலக்கணம். கூன், விகாரம், வகையுளி, வாழ்த்து, வசை, வனப்பு, பொருள், பொருள் கோள், குறிப்பிசை, செய்யுள் ஒப்புமை. 46. இந்நூலுள் வகுத்த பொருள் எல்லாம் தொகுப்பு. 47. ஒழிபியல் காரிகைகளின் முதனினைப்புக் காரிகை. அட்டவணை-3 தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ளவை; காரிகையில் இல்லாதவை. (அ) யாப்பு, மரபு, நோக்கு என்ற உறுப்புக்கள் காரிகையில் இல. இவை நேரடியாகச் செய்யுளின் புற வடிவுக்குத் தொடர்புடையனவல்ல. (ஆ) தொல்காப்பியர் அகத்திணைக்கு முதன்மை கொடுப்பவராதலின், திணை, கைகோள், பொருள் வகை, கேட்போர், களன், காலம் பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை என்றிவற்றைச் செய்யுள் உறுப்பாக மொழிந்தனர். இந்நோக்கம் காரிகையாசிரியர்க்கு இன்மையின் இவை இடம் பெறாமை இயல்பே. (இ) மாட்டேறு பொருள்நிலை நோக்கிய தொடரியல் ஆதலின் காரிகையில் இல்லை. (ஈ) எழுத்தெண்ணி அடிவகுக்கும் கட்டளை முறையில்லை. (உ) தொல்காப்பியம் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என எழுவகை யாப்புக் கூறும். பாட்டு என்பது அடிவரையறையுடையது; ஏனைய ஆறும் அடிவரையறையில்லாதவை. இவ்வாறும் காரிகையில் இல. (ஊ) உறழ்கலி, பரிபாடல், பண்ணத்தி யில. (எ) அவையடக்கியல், அங்கதம் என்றிவை யில. (ஏ) புறநிலை வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ என்பன மருட்பாவில் வரும் எனப் பொதுப்படக் காரிகை கூறுவதன்றித் தொல் காப்பியம் போல ஒவ்வொன்றையும் இலக்கணஞ் சுட்டிக் கூறவில்லை. (ஐ) வனப்பு எட்டு, வண்ணங்கள் நூறு எனக் காரிகை பொதுப்படக் கூறுவதன்றித் தொல்காப்பியம் போல ஒவ்வொன்றிற்கும் தனி நூற்பா கூறவில்லை. அட்டவணை-4 காரிகையில் உள்ளவை: தொல்காப்பியச் செய்யுளியலில் இல்லாதவை. 1. காரிகை தனி நூலாதலின் தற்சிறப்புப் பாயிரம் உண்டு. 2. நாலசைச்சீர் என்ற பொதுச்சீர் உண்டு. 3. எழுவகைத்தளைகள் செய்யுள் உறுப்பாகக் கூறப்படும். ‘எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடைபாவினங் கூறுவன்’ என்பது காரிகை.. 4. நாற்பாவோடு பாவினம் என்ற பிரிவும் உண்டு. ஒவ்வொரு பாவும் தாழிசை, துறை, விருத்தம் என்ற இனம் பெறும். 5. முரண் தொடைக்குக் கடை முதலாக ஐந்து தொடைகளும் இன்னும் சில தொடைவிகற்பங்களும் காரிகையில் உண்டு. 6. ‘மருள்தீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசை வனப்புப் பொருள்கோள் குறிப்பிசை யொப்பு’ எனச் சிலவற்றைப் பொதுப்படச் சொல்லிச் செல்லும் காரிகை. அட்டவணை-5 தொல்காப்பியச் செய்யுளியலும் யாப்பருங்கலக் காரிகையும் ஒற்றுமை வேற்றுமை - ஒரு பார்வை தொல்காப்பியச் செய்யுளியல் காரிகை 1. மாத்திரை எழுத்ததி 1. எழுத்து வகை 13 2. எழுத்தியல் காரத்திற் 2. இலக்கண நூல் சொல்லப் சொல்லும் அளவு பட்டவை 3. அசை 4. நேர் நரை. 3. அசை 2. நேர்பு நேர்பு நிரைபு நிரைபு என்ற அசைகள் இல 4. சீர் 84. 4. சீர் 37. நாலசைச்சீர் உண்டு 5. அடி 625 கட்டளை 5. கட்டளையடிகள் யடியும் சீரடியும் உண்டு இல. சீரடி வகையே உண்டு. 6. யாப்பு 6. யாப்பு 7. மரபு 7. இல்லை 8. தூக்கு 8. ஓசையென்ற பெயரால் உண்டு 9. தொடை 13699 9. தொடை 43 10. நோக்கு 10. இல்லை 11. பா 11. உறுப்பாக எண்ணப் படவில்லை. அடிவரை யறையுடை பாட்டு என்ற ஒரு வகையே உண்டு 12. அளவியல் 12. இல்லை 13. திணை 13. இல்லை. 14. கைகோள் 14. இல்லை 15. பொருள்வகை 15. இல்லை 16. கேட்போர் 16. இல்லை 17. களன் 17. இல்லை 18. காலம் 18. இல்லை 19. பயன் 19. இல்லை 20. மெய்ப்பாடு 20. இல்லை 21. எச்சம் 21. இல்லை 22. முன்னம் 22. இல்லை 23. பொருள் 23. இல்லை 24. துறை 24. இல்லை 25. மாட்டு 25. இல்லை 26. வண்ணம் 20 26. வண்ணம் 100 மிகச் சுருக்கமாக உண்டு. 27. அம்மை 27. 28. அழகு 28. 29. தொன்மை 29. 30. தோல் 30. 31. விருந்து 31. 32. இயைபு 32. 33. புலன் 33. 34 இழைபு 34. அட்டவணை-6 ஒப்பீடு யாப்பருங்கலக் காரிகை தொல்காப்பியச் செய்யுளியல் 1. நாலசைச்சீர் 1. இல்லை 2. தளை எழுவகை; தளை ஓர் உறுப்பாகும் 2. ஓர் உறுப்பாக எண்ணப் படவில்லை 3. வெண்பாவினம் தாழிசை, துறை, விருத்தம் 3. இல்லை 4. ஆசிரியப்பாவினம் தாழிசை, துறை, விருத்தம் 4. இல்லை 5. கலிப்பாவினம் தாழிசை, துறை, விருத்தம் 5. இல்லை 6. வஞ்சிப்பாவனிம் தாழிசை, துறை, விருத்தம் 6. இல்லை 7. கடை முரண்கள் 7. இளம்பூரணர் உரையில் முதலானவை உண்டு 8. வருக்கமோனை, நெடில் 8. ஓரளவு உண்டு. மோனை, இனமோனை முதலானவை. 9. அறுவகை விகாரம் 9. சொல்லதிகாரத்தில் உண்டு 10. வகையுளி 10. ஒருவகையால் உண்டு 11. வாழ்த்து 11. ஒரு வகையால் உண்டு 12. வசை 12. ஒருவகையால் உண்டு 13. பொருளும் பொருள் 13. சொல்லதிகாரத்திலும் கோளும் பொருளதிகாரத்திலும் உண்டு 14. குறிப்பிசை 14. எழுத்ததிகாரத்தில் உண்டு 15. ஒப்பு 15. உண்டு. ஒப்பு என்ற குறியீடு இல்லை. - மாணிக்க விழுமியங்கள் - 4 பக். 211-240 6. பாடாண் எட்டு தொல்காப்பியப் புறத்திணையில் பாடாண்டிணை பற்றி வரும் பல நூற்பாக்கள் பொருள் விளக்கம் பெறாமல் உள்ளன. இடைக்காலச் சில இலக்கிய மரபுகள் இவற்றின் பொருளாக எழுதப்பட்டுள்ளன. இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கூறும் உரைகள் வரலாற்று மொழி நூலறிவுக்கும் சங்க காலப் பண்பியலுக்கும் பொருத்தமாக இல. அமரர் என்ற சொல்லை வடசொல்லாகக் கொண்டு தேவர் என்று அன்னோர் பொருள் காண்பது வழக்கு முரணாகும். இச்சொல்லுக்குப் போர் மறவர் என்ற இயல்பான பொருளைக் கண்டார் நாவலர் பாரதியார். இதுவே தக்க பொருளாகும். பேராசிரியர் வெள்ளை வாரணர் கொண்ட உரைப்பொருள்களும் கூடுதலான பொருத்தம் உடையன. டாக்டர் துரையரங்கனார் பாடாண் நூற்பாக்களுக்குச் சமய மெய்ப்பொருளுரை எழுதியிருப்பது சுருங்கச் சொல்லின் திரிபுரையாகும். ‘அமரர்கண்’ என்பது தொடங்கி ‘கொடிநிலை கந்தழி’ என்பது வரை உள்ள எட்டு நூற்பாக்களும் ஒருங்கிணைந்த புதிய ஆய்வுக்கு உரியவை எனினும் இக்கட்டுரைக்கண் ‘அமரர்கண்’ என்ற நூற்பாவை மட்டும் ஆராய்வோம். பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே (புறத். 25) அமரர்கண் முடியும் அறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப (புறத். 26) முதல் நூற்பா பாடாண் எட்டுப் பகுதிப்படும் என்று கூறுகின்றது. அந்த எட்டு எவை என்று அடுத்த நூற்பா விரிப்பதாகவே கருதல் வேண்டும். கருதும் வண்ணந்தான் ‘அமரர்கண் முடியும் அறுவகை’ என எண்ணுப்பெயர் முதலடியிலேயே அமைகின்றது. ‘ஈரேழ் துறைத்தே’ என்று வெட்சித்திணையிலும் ‘இருநால் வகைத்தே’ என்று உழிஞைத் திணையிலும் கூறிய தொகைநிலைகளைப் பின்னொரு நூற்பாவில் தொல்காப்பியர் விரித்துக் காட்டுவர். அம்முறையை இப்பாடாண்டிணையிலும் காணலாம். இதுகாறும் உரை வரைந்தோர் ‘ஒன்றன் பகுதி ஒன்றும்’ என்றவிடத்து, ‘ஒன்றும்’ என்பதனைச் செய்யும் என்றும் முற்றாகக் கொண்டு, பொருந்தும் எனவும் ஒருங்கு வரும் எனவும் அமையும் எனவும் பொருள் கண்டனர். அதனை உடன்படின் இந்நூற்பா அறுவகை, புல்லியவகை என ஏழு பகுதிகளை மட்டும் விரிப்பதாகக் கொள்ள வேண்டும். ‘நாலிரண்டு உடைத்தே’ என்பதற்கு ஏற்ப எட்டுப்பகுதி இது என்று சொல்லாத நூற்குற்றம் தொல்காப்பியர்க்கு ஏற்படும். ஆதலின் இந்நூற்பா தன்னிலே எட்டும் உண்டு என்று காண்பதே முறையாகும். ஒன்றும் என்பது செய்யும்என்னும் முற்றன்று; ஒன்று என்பது எண்ணுப்பெயர். உம் எண்ணும்மையாகும். அறுவகையும் புல்லியவகையும் ஒன்றன் பகுதி ஒன்றும் ஆக எட்டு என்ப என்று உரை செய்ய வேண்டும். இதுவே நூற்பாவின் தொடர் முறையும் நூற்பாவின் நடைமுறையும் ஆகும். இனி இந்நூற்பா நுதலும் எண்பகுதி யாவை என்று காண்போம். ‘அமரர்கண் முடியும் அறுவகை’ என்பதற்குப் போர் மறவர்களொடு தொடர்புடைய வெட்சி முதல் காஞ்சி யீறான புறத்தினை ஆறு என நாவலர் பாரதியார் கொண்ட புதிய நல்லுரையும் அதனை உடன்பட்ட பேராசிரியர் வெளைவாரணர் எழுத்தும் முற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே. புரைதீர் காமம் புல்லிய வகை என்ற தொடருக்குக் குற்றமற்ற அகத்திணைக் காதல் வகை என்று பொருள் கோடல் பாடாண்டிணைக்கும் இலக்கியச் சான்றுக்கும் பொருந்தவில்லை என்பது என் கருத்து. ஐந்திணை ஒத்த இருபாற் காதல் ஆதலின் கைக்கிளைக்குப் புறம் எனப்படும் பாடாண்டிணையில் சொல்லுதற்கு உரியதன்று. மேலும் இன்பம் பற்றிய புகழ்ச்சித் துறைகள் அகத்திணையியல்களில் இடம் பெற்றுள்ளன. எனவே இந்நூற்பாவிற் கூறப்படும் காமவகை அகத்திணை சாராததாகல் வேண்டும் என்பது தெளிவு. ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ (புறத். 28) என வரும் நூற்பாவிற்குக் கடவுள் மாட்டுக்கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் என்று எல்லோருமே ஒத்து உரையெழுதியுள்ளனர். வெண்பாமாலை ஆசிரியரும் இக்கருத்துடையவரே. இவ்வுரைப்பொருள் பொருந்தும். இது தூய காதலாயினும் புரைதீர் காமமாயினும் ‘மக்கள் நுதலிய’ என்று இனம் வரையறுக்கப்பட்ட ஐந்திணைக்குப்புறம் ஆதலின் பாடாண்டினையின் ஒருவகையாயிற்று எனக் கொள்ள வேண்டும். புரைதீர் காமம் புல்லிய வகை என்ற இரண்டாவது அடி இக் கடவுளினக் காதலையே குறிக்கின்றது. இக்காதலின்கண் தலைவன் தலைவி இருவருமே கடவுளர் ஆதலின் ‘பிறப்பே குடிமை’ என்றபடி இனவொற்றுமை அடிப்படை இருப்பதைத் தெளியலாம். ஐந்திணைக்கண் தலைவனும் தலைவியும் மக்கட் பிறப்பு என்ற ஓரினப் பிறப்பு என்பதனை ஒப்பு நோக்குக. ‘ஒன்றன்பகுதி ஒன்றும்’ என்ற எட்டாம் வகை அறிவு முட்டுத்தருவது, இருளும் ஒளியும் விராயது; எனினும் இதன் பொருளைக் காண முயலலாம். இத் தொடரில் முதலில் வரும் ஒன்று என்பது என்ன? அதன் பகுதி ஒன்று என்பது என்ன? திணைகளுள் ஒவ்வொரு கூறு எனவும் தேவர்க்குரிய பகுதி எனவும் செந்துறை வண்ணப்பகுதி எனவும் உரைத்த பொருள்கள் வலுவில. காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் (புறத். 28) முதலடியின் பொருள் கடவுளர் தம்முட் காதல் எனவும் புரைதீர் காமம்புல்லிய வகைப் பாடாண் எனவும் முன்னர்க் காட்டினேன். ‘ஏனோர் பாங்கினும்’ என்ற தொடருக்குக் கடவுளிடத்து மானிடப் பெண்டிர் நயந்த காதல் எனவும் கடவுள் மானிடப் பெண்டிரை நயந்த காதல் எனவும் எல்லோரும் ஒரு முகமாக எழுதிய உரையும் ஏற்கத்தகும். ‘ஒன்றன் பகுதி ஒன்று’ என்னும் தொல்காப்பிய நூற்பா இக்காதல் வகையையே எட்டாவதாகச் சுட்டுகின்றது. இக்காதல்வகை ஐந்திணைபோல மக்களிடைக் காதலுமன்று: ஏழாவதாகச் சொல்லப்பட்ட புரைதீர் காமவகை போலக் கடவுளிடைக் காதலுமன்று; கலப்பினக் காதலாதலின் தனிவகையாக எண்ணப்பட்டது. ‘ஒன்றன் பகுதி ஒன்று’ என்ற தொடரில் ஒன்று என்பது முழுதும் கடவுளினக் காதல் வகையைக் குறிக்கும் எனவும் பகுதியொன்று என்பது அதனுள் ஒரு பாகமான கலப்பினக் காதல் வகையைக் குறிக்கும் எனவும் பொருள் காண வேண்டும். எனவே போர் மறவரைச் சார்ந்த மக்கட் பாடாண் ஆறு எனவும் காதல்வகையைச் சார்ந்த தெய்வப் பாடாண் இரண்டு எனவும் ஆகப் பாடாண் வகை நாடுங் காலை நாலிரண்டு உடைத்து என உரைகாணல் தகும். பிறரெல்லாம் கொண்டாங்கு ‘ஒன்றும்’ என்பதனைச் செய்யுமென் முற்றாகக் கொள்ளாமல் எண்ணும்மையாகக் கொண்டமையாற்றான் இப்புதிய உரைப்பொருள் காண முடிந்தது எனக் கருதுவோமாக. - மாணிக்க விழுமியங்கள் - 4 பக். 185-188 7. பொருளே உவமம் தொல்காப்பியம் தமிழ் மொழிக்கும் தமிழ் நாகரிகத்துக்கும் அடிப்படை நூல்; என்று;ம வாழும் இலக்கண நூல். அதற்கு எழுந்த உரைகள் சிறப்புடையனவாயினும் பல நூற்பாக்களின் பொருள்கள் இன்னும் தெளிவு வேண்டியனவாகவுள. பழைய நூலான தொல்காப்பியத்தின் உரைகளில் இடைக்காலக் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. இளம்பூரணம் முதலான உரைகள் தத்தம் காலத்திற்கேற்ப விளக்கங்காட்டி எழுதப்பெற்ற காலவுரைகள் என்று கொள்ளலாமேயன்றித் தொல்காப்பியர் காலச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்ட செவ்வுரை எனக் கொள்ளுதற்கில்லை. ஆதலின் தொல்காப்பியக் கற்பிகட்கு உரைத்திறனாய்வும் கூடவே வேண்டும். உவமவியலில் வரும் ஒரு நூற்பாவின் உரைகளை ஆய்ந்து பொருள் மதிப்பிடுதல் இக்கட்டுரையின் நோக்கமாகும். இளம்பூரணம் பொருளே உவமஞ் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பினஃ துவம மாகும் (தொல். 1229) என்ற நூற்பாவிற்கு உருவகம் என்றும், இது உவமையின் பாகுபாடு என்றும் இளம்பூரணர் உரைகாண்பர். ‘இரும்பு முகஞ் செறிந்த’ என்ற புறநானனூற்றுப் பாடலில் (369) யானை மேகமாக, வாள் மின்னாக, முரசு இடிமுழக்காக, விசைப் புரவி வளியாக, அம்புகள் மழைத்துளியாக, குருதி தோய்ந்த போர்க்களம் ஈரமுடைய வயலாக, தேர்கள் ஏர்களாக இவ்வாறு உருவகம் வருவதனை இளம்பூரணர் இந்நூற்பாவிற்கு எடுத்துக் காட்டுவர். புறநானூற்றுத் துறை யாசிரியரும் இப்பாடலை ஏர்க்கள உருவகமுமாம் என்று கூறியிருப்பக் காண்கின்றோம். இந்நூற்பாவிற்கு உருவகப் பொருள் கூறுவது பேராசிரியர்க்கு உடன்பாடில்லை என்பது ‘இவற்றை வேறு உருவகம் என்றும் பிறர் மயங்குப’ என்ற தொடராற் பெறப்படும். நச்சினார்க் கினியரும் உடன்பட்டிலர் என்பதனைச் சிறுபாணாற்றுப் படையில் அவர்தம் உரையால் அறியலாம். முகமதி என்ற உருவகம் முகமாகிய மதி என விரியும். இவ்வுருவகத்தில் முகம் என்ற பாடுபொருள் பொருளாக உள்ளதேயன்றி உவமையாக மாறி விடவில்லை. யானை மேகமாக, வாள் மின்னாக என்று சொல்லும் போதெல்லாம் யானையும் வாளும் பொருளாகவே நிற்கின்றன ஆதலின் ஏனையுரை யாசிரியர்கள் இளம்பூரணத்தை உடன்படாமை பொருத்தமே. பேராசிரியம் தொல்காப்பிய உவமவியலுக்கு இளம்பூரணம், பேராசிரியம் என்ற ஈருரைகளே உண்டு. பேராசிரியர் உரையும் எடுத்துக்காட்டும் வருமாறு: ‘உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை என்புழி, உவமம் உயர்ந்துவரல் வேண்டும் என்றான். இனிப் பொருளினை உவமமாக்கி உவமையை உவமிக்கப்படம் பொருளாக்கி மயங்கக் கூறுங்காலும் அஃது உவமம் போல உயர்ந்தததாக்கி வைக்கப்படும். வன்முலை யன்ன வண்முகை யுடைந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை என்றவழி வருமுலையும், திருமுகமும் ஈண்டு உவமையாகி முகையும், பூவும் பொருளாயின. ஆண்டு முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமமாயின’. முலையும், முகமும் ஆன பொருள்கள் (உவமேயங்கள்) உவமையாகவும், முகையும், தாமரையும் என்ற உவமைகள் பொருள்கள் ஆகவும் மயங்கக் கூறப்பட்டுள்ளன என்று இவ்வுரை கூறும் கருத்து ஆய்ந்து மறுப்பதற்குரியது. உலகில் இவைதாம் பொருளாகி வருபவை, இவைதாம் உவமையாகக் கூற வேண்டியவை என்ற வரையறுத்த பாகுபாடில்லை. ‘முருகனன்ன சீற்றம்’ என மானுடனுக்குத் தெய்வவுவமையும், ‘ஞாயிறு கடற் கண்டாங்கு’ எனத் தெய்வத்துக்கு அஃறிணை யுவமையும், ‘பாம்பணந் தன்ன ஓங்கிரு மருப்பு’ என யாழின் மருப்புக்கு விலங்குவமையும், ‘சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி’ என நிழலுக்கு நீதியுவமையும் வந்துள. இவ்வாறே பொருள்களும் இதற்கிதுவென்பதன்றி எதற்கு எதுவும் வரலாம் என அறிகின்றோம். முதலும் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே (தொல். 572) என்று முதலும், சினையும் சொல்லுவான் அப்பொழுதைக் குறிப்பை நோக்கியது என்று வரம்பின்மை காட்டினாற் போல இதுபொருள் இதுவுவமை என்பதும் பாடுவான் அப்பொழுதை இலக்கிய நிலையை நோக்கியது எனக் கொள்ள வேண்டும். ஆதலின் உயர்திணையெல்லாம் பொருளாக வரும்; அஃறிணையெல்லாம் அவற்றிற்கு உவமைகளாக வரும் எனப் பேராசிரியர் இருபாற்படுத்திய கோட்பாடும், அதனால் முலை முகம் என்பனவற்றைப் பொருளாகக் கொண்டு ஈண்டு உவமையாக மயங்கி வந்துள என்ற காட்டும் பொருத்தமில. தண்டி தண்டியலங்காரமும் இன்னபிழையைச் செய்துள்ளது. விபரீத வுவமை என்பது மேற்றொட்டு உவமையாய் வருவதனைப் பொருளாக்கிப் பொருளாய் வருவதனை உவமையாக்கி உரைப்பது என்று இலக்கணங் கூறி, திருமுகம் போல்மலரும் செய்ய கமலம் கருநெடுங்கண் போலும் கயல்கள் என எடுத்துக்காட்டுத் தரும்; திருமுகம் என்றும் பொருளாகவே வருவது, கமலம் என்றும் உவமையாகவே வரல் வேண்டும் எனவும், மாறி வருவது விபரீதம் எனவும் மொழியும். இவ்வலங் காரக் கொள்கை உலக வழக்கிற்கும் செய்யுள் வழக்கிற்கும் முரணாகும். எனவே உலகப் பொருள்களை உவமேயம் இவை, உவமை இவை என்று அணிக்கிடப்புப் போல எண்ணிய பேராசிரியமும், தண்டி யலங்காரமும் மேற்சொல்லிய தொல்காப்பிய நூற்பாவின் மெய்ப்பொருளைக் காட்டவில்லை என்று கருதுகின்றேன். மருளறு சிறப்புவமம் பொருள் என்பது புலவன் பாடற் பொருளாகச் சொல்ல நினைக்கும் கருத்து. உவமை என்பது அப்பாடற் செய்தியை விளக்க மேற்கொள்ளும் கருத்து. சொல்ல நினைக்கும் முதன்மைப் பொருள் உவமை வாய்பாடாகவும் விளக்குவான் மேற்கொள்ளும் கருத்து உவமேய வாய்பாடாகவும் வாய்பாடுகள் மாறி வருதலுண்டு. இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉங் காதற் றுயிர் (குறள். 940) என்று திருக்குறள் பொருட்பாவில் சூது என்னும் அதிகாரத்து வரும் குறள், சூதாடி, கைப்பொருளை இழக்க இழக்கச் சூதின்மேல் ஆசை கொள்ளுவது போன்று உயிர் துன்பத்தில் உழல உழல உடல்மேல் மேலும் பற்றுக் கொள்ளும் என்பது குறளின் கருத்து. அதிகாரப் பொருளான சூதினையே திருவள்ளுவர் இக்குறளில் உவமையாகச் செய்துள்ளனர். அதிகாரத்திற்கு ஏற்ப இதனைப் பொருள் என்று கொள்வதா? சூதே போல என்ற வாய்பாட்டிற்குத் தக உவமை என்று கோடுவதா? பொருளே உவமஞ் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பினஃ துவமம் ஆகும் என்ற நூற்பாவின்படி வாய்பாடு உவமமாக இருத்தலால் மருளறு சிறப்புவமம் எனக் கொள்ள வேண்டும் என்பது தொல்காப்பியக் கோளாகும். சுட்டிக் கூறாவுவமம், தடுமாறு உவமம்போல, பொருளுவமத்தை மருளறு சிறப்புவமம் எனக் குறியீடு செய்யக் காண்கின்றோம். ‘உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதினது அறியாமை கூறுதல் கருத்தாகலின் அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார்’ என்ற பரிமேலழகர் விளக்கம் என் புத்துரைக்குத் துணையாகும். மருளறு சிறப்பு எனத் தொல்லாசிரியர் மொழிந்த உவமையை மருளுடையது போல விபரீதவுவமை எனத் தண்டியாசிரியர் குறியிடுவது எவ்வளவு முரண்! இழிவறிந் துன்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் (குறள். 946) என மருந்து என்ற அதிகாரத்து வரும் உவமையும், உள்ளம் போல உற்றுழி உதவும் புள்ளியற் கலிமா உடைமை யான (தொல். 1139) எனத் தொல்காப்பியக் கற்பியலில்தலைவன் கூற்றாக வரும் ‘உள்ளம் போல’ என்ற உவமையும் மருளறு சிறப்பின் உவமைகளாகக் கொள்ளற்குரியவை. - மாணிக்க விழுமியங்கள் - 4 பக். 199-203 8. தொல்காப்பிய மரபியல் தொல்காப்பிய மரபியலில் சூத்திரங்களின் இடைச் செறுகல்களையும், சில சூத்திரங்களில் இடம்பெறும் சொற்களில் தெளிவின்மையும் விளக்குவனவாக அமைந்துள்ளது இக்கட்டுரை. தமிழ் மக்களது பழநிதியாகக் கிடைத்துள்ள நூல்கள் பலவற்றுள்ளும், தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் காலத்தால் முற்பட்டதாகும். இந்நூல், யாவரால் எக்காலத்து ஆக்கப்பட்டது என்பது, இதுவரை கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு திண்ணமாகக் கூறவியலாததாகும். இந்நூலின் காலத்தைத் திண்ணமாக வரையறுத்துக் கூறாவிடினும், புலவர் பலரும் இந்நூல் காலத்தால் முற்பட்டதென்பதை ஒப்புக் கொள்ளாதிரார். இப்பெருநூலின் இறுதிப்பகுதியாக மரபியலை, ஒரு முறை மேற்பார்வையாகப் பார்ப்போர்க்கும், இப்பழ நூலில் இப்பகுதியின் சில சூத்திரங்கள் பிற்காலத்துப் பெரியோர்களாற் சேர்க்கப்பட்டுள்ளனவோ; அன்றி, மக்களது உள்ளங்கடந்த காலத்தின்பாற் படுதலின், அச்சூத்திரங்களின் சொற்கள் இவ்வாறு மயங்கச் செய்கின்றனவோ என்னும் தடுமாற்றங்கள் உண்டாகாமற் போவதில்லை. இவ்வாறு ஐயுறச்செய்யும் சில கருத்துக்களைப் பேரறிஞர்கள்பாற் றெரிவித்து ஐயந்தெளிதற் கென வெழுந்ததே இச்சிற்றுரையாகும். மரபியற் சூத்திரங்களிற் காணப்படும் சில சொற்கள், பிற் காலத்துச் சொற்களென ஐயுறத்தக்கனவாயிருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒட்டகம் என்னும் சொல் “ஒட்ட மவற்றோ டொருவழி நிலயும்’ என்னும் 18ஆம் சூத்திரத்தும். “ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக்குரிய” என்னும் 52ஆம் சூத்திரத்தும் காணப்படுகின்றது. மரபியலுட் கூறப்பெறும் மாண்புடையதாய விச்சொல் தொல்காப்பியத்துக்குப் பின்றோன்றிய, இதுவரை வெளிப்பட்டுள்ள, சங்கவிலக்கியங்கள் பலவற்றுள்ளும் காணப்படுவதாகத் தெரியவில்லை. பின்னும் இப்பெயரால் நாம் அறியக்கிடக்கும் விலங்கு இயற்கையாகப் பிறந்து வளர்ந்து வாழ்வதற்கு ஏற்ற இடவமைத்து நாம் காணும் தமிழகத் தேயதாகக் கூறவுமியலாது. மேலும் நான்கு ஐந்தாம் நூற்றாண்டுகளுக்குமுன் இவ்விலங்கு தமிழ்நாட்டுட் புகுந்த தாகவும் கூறுதற்கேற்ற சான்றுகளும் கிடைத்தில. இவ்வாறிருப்ப, இந்த “ஒட்டகம்” என்னும் சொல் பிற்காலத்துச் சேர்க்கப்பட்ட தாகக் கருதுவதாற்போந்த இழுக்கென்னை? எனவொரு ஐயம் நிகழ்தலும் இயல்பேயாம். மரபியல் இறுதிச் சூத்திரத்துள் “ஞாபகங் கூறல்” என்னுமிடத்துக் காணப்பெறும் “ஞாபகம்” என்னும் சொல்லும் பிற்காலச் சொல்லாகவே தெரிகின்றது. இச்சொல்லும் பழவிலக்கியங்களுள் காணற்கரிதாகின்றது. இவ்விரு சொற்களும் உரையாசிரியர்கள் காலத்தே வழக்கிலிருந்துள்ளன வென்பதும் கொண்டு யாம் இவற்றைப் பழஞ் சொற்களாகக் கருதுவதற்கில்லை. தமிழ்ப் பழநூல்கள் பலவற்றுள்ளும், பாடபேதங்களும் இடைச் செருகல்களும் நிகழ்ந்துள்ளனவென்பதும் யாவரு முணர்ந்ததே. இப்பொழுது காணப்பெறும் நூல்கள் சிலவற்றள், முன்னோரால் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களின் தொகை, மிக்கும், குறைந்தும் காணப்பெறுவதே, இவ்விடைச் செருகல்கள் நிகழ்ந்துள்ளமையை வலியுறுத்தும். இத்தகைய மாறுதல்கள், முழு முதற்செந்தமிழ் நூலாம் நம் தெய்வத் தொல்காப்பியத் துள்ளும் நிகழ்ந்துள்ளனவென்பதை எண்ணவும் நம் உள்ளம் இடர்ப்படுகின்றது. உண்மையைக்காண முயலுமிடத்து, நமது கொள்கையையும், விருப்பத்தையுஞ் சிறிது ஒதுக்கி வைக்க வேண்டியதும் இன்றியமையாததாகின்றது. தொல்காப்பியத்துள், உரையாசிரியர்கள் காலத்திலேயே சில பாடபேதங்களிருந்தன வென்பது, “இனி, இக்காலத்துள்ள ஆசிரியரில் ஒரு சாரார் தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழு நூற்றொன்றுமெனப் பாடந்திரிப்பாரு இன்னொரு சாரார் எழுநூற்றொன்றுமெனப் பாடந்திரிப்பாரும் உளர். ஒரு பகுதியார் ஒன்றுமென்பன முற்றுவினையென்ப, மெய்பெறுமரபிற் றொடைவகை பத்துக் குறை யெழுநூறென்னும் எண்ணினொடு ஒன்றுமெனக் கூட்டுப. பதின்மூவாயிரத்தறுநூற்றுத்தொண்ணூற் றொன்பது என்பது அவர் கருத்து. ஒன்றுமென்பதனை எண்ணுப்பெயர் முற்றுமைப்படுத்ததென்பாரும் அதுவே கூறுப: அவரறியார். அவ்வாறு சூத்திரஞ் செய்வது ஆசிரியர் கருத்தன்று. அல்லதூஉம் ஒன்பதென்ப வுணர்ந்திசினோரே என்பது பழம்பாடமாகலானும் அஃதமையாதென்பது.” என்பது செய்யுளியலின் உரையால் நன்கு தெரியலாகும். இவ்வாறு பாடந்திரிக்கும் ஆசிரியர்கள் கைப்பட்ட நம் நூலில், காணப்பெறும் பழஞ்சொல்லல்லாதனவென நாம் கொள்ளும் சில சொற்களைக் கொண்டு மரபியலுட் சில சூத்திரங்கள் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டனவோ வெனவும் ஐயுறுதற்கிடகின்றது. தக்க பிற சான்றுகளின்றி, மரபியலின் சூத்திரங்களும் சில இடைப்பெய்தனவென வொரு முடிவுசெய்தல் பேரிழுக்காமென்பதும் நாம் நன்குணரத்தக்கதே யாகும். வேறொருவகையாக நோக்குவோமாயின் இக்காலத்து மக்களால் எண்ணி அறியமுடியாத ஒரு பழங்காலத்தெழுந்த நமது தொல்காப்பியம், தான் தோன்றிய காலத்திலேயே தொன்மையதெனக் கொள்ளத்தக்க பலபொருள்கள் பொறித் துள்ளதோர் அழியாப் பட்டயமாகலின், அதன்கட்காணப்படும் சொற்களையும், பொருள்களையும் இக்காலத்தில் நூல்களாற் பெற்றதோர் நமது அறிவினால் ஆராய்தல் இழுக்காகும். தொல்காப்பியத்திற் காணப்பெறும் சில வழக்குகளும் சொற்களும் உரையாசிரியர்கள் காலத்திலேயே தோன்றா தொழிவனவாயின. உரையாசிரியர் `குதிரையைச் சேவலென்றல் இக்காலத்தரிதாயிற்று’ எனவும் “இது முதலூழியில் வேளாளர்க்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. எனவே முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அது இரண்டாம் ஊழிதொடங்கு வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பதூஉந் தலைச்சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉங் கூறியவாறாயிற்று. உதாரணம் இக்காலத்தின்று” எனவும் “இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவுநிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்துவாறுங் கூறினார்” எனவுங் கூறுமாற்றால் பழந்தமிழ் நூல்கள் பலவும் நிலைபெற்றிருந்த உரையாசிரியர்கள் காலத்திலேயே, சில தொல்காப்பிய வழக்குக்களும், சொற்களும் காணப்படாவாயினவென்பது நன்கு தெரிகின்றது. எனவே, `ஒட்டகம்’ ‘ஞாபகம்’ என்னுஞ் சொற்கள் பிற்காலத்துப் பழநூல் களுள் காணப் பெறாமை கொண்டு, அவை இடைப்பெய்யப் பட்டனவென கொள்ளுதல் எவ்வாறாமையும்? எனவும் வினாவலாம். நாம் காணும் தமிழகமாகிய வேங்கடத்தின் தென்பால் முப்புறமும் கடல் சூழ்ந்துள்ளதோர் சிறு நிலப்பரப்பில் ஒட்டகம் வாழ்தற்கேற்ற இடவமைதி காணாதது கொண்டு ஒட்டகம் தமிழ்நாட்டு விலங்குகளுள் ஒன்று அன்றெனக் கூறவுமியலாது. இந்துமாகடல் என்னும் பெருநீர்ப்பரப்பு, பெருநிலப்பரப்பாய்ப்த் தமிழகத்தின் ஒரு பகுதியாய் நிலை பெற்றிரநத பழங்கால மொன்றுளதென நாம் அறிகின்றமையாலும், அக்காலத்துத் தமிழகத்தின் ஐம்பெரும்பிரிவுகளுள் ஒன்றாய்ப்பாலையை வைத்தெண்ணப் பட்டமையாலும்; பாலை, ஒட்டகம் வாழ்தற்கேற்ற அமைதிகளுடைய தாதலாலும் ஒட்டகம் தமிழகப் பழவிலங்குகளுள் ஒன்றெனக்கோடலில் இழுக்கொன்றுமின்று. தமிழகப் பெரும்பகுதியைக் கடல் கொண்ட பின்னர் அவை இங்குக் காணப்பெறாது வேற்றுநாட்டுவழிப் பிற்காலத்து மீண்டும் தமிழகத்தே புகுந்திருத்தல் கூறுடும். ஏனைய சொற்களையும், இவ்வாறே, பழங்காலத்து வழங்கிப் பின்னர் மறைந்து மறுமுறை வேறுவழியாகத் தமிழ் மொழியிற் புகுந்தனவாகவுங் கொள்ளலாம். ஆகவே, இச்சிலசொற்களைக் கொண்டு மரபிற் சூத்திரங்களை ஐயுறவேண்டாவென்பது பிறிதோர் தோற்றமாகும். இவ்வாறு, ஒருவழி நோக்கின் ஒரு தோற்றமும், வேறொரு வழி நோக்கின் முன்னையதின் மாறுபட்டதோர் தோற்றமும் காணப்பெறுதல், பழந்தமிழ்நூல் பலவற்றிற்கும் பொதுவாகவே கொள்ளலாம். மரபியற் சூத்திரங்கள் சில இடைப்பெய்தனவோ? அன்றா? எனவெழுந்த ஐயத்திற்கு யான் ஒருவகை முடிவும் செய்ததாகவாவது, செய்ய முயன்றதாகவாவது கருதல் கூடாது. பரந்த நூற்பயிற்சியும், சிறந்த கேள்வியுமில்லாத சிற்றறி வுடையேனால், இஃது இயலாததென்பதை நன்குணர்வேன். எனது ஐயத்தையும், அதனாலெழுந்த தோற்றத்தையும் பெரும்புலவர்கள் பாற் றெரிவித்து, அப்பெரியோரது சிறந்த ஆராய்ச்சியின் பயனாகக் கிடைக்கக்கூடிய முடிவால், தெளிவடையலாமென்று பேருவகையொன்றே கொண்டுள்ளேன். இத்தகைய எளிய பொருள்களைப்பற்றி ஆராய்தற்குப் பெரியோர்கள் கருதாராயினும், அறியார்க்கு அறிவுறுத்தல் என்னும் பேரருள் பூண்டவர்களாகலின், இச்சிறு பொருள், குறித்தும் தமிழ்ப்பொழில்வழி, கட்டுரை வரைவார்களெனுந் திண்ணமான எண்ணத்துடன், எதிர்பார்க்கின்றேன். - வீ. அரசு தொல்காப்பியக் கையேடு, (ஆய்வு-பதிப்பு-மொழிபெயர்ப்பு) 9. தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் தொல்காப்பியம் என்கிற பிரதியை மேலை நாட்டு ஆய்வறிஞர்கள் எதிர்கொண்ட முறைமையினையும், பொருளதி காரம் அம்மேலை நாட்டு அறிஞர்களிடம் செல்வாக்கு பெறாமையின் காரணங்களையும், தற்கால கவிதைக் கோட்பாட்டுக்கும் தொல்காப்பியத்திற்கும் அமைந்த தொடர்பினையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் உலக அரங்கில் அவற்றிற்கு உரிய ஏற்றத்தை ஓரளவேனும் பெற்றுள்ளன. மேலைநாட்டு மொழி நூல் வல்லார் இவற்றின் சிறப்பைக் கண்டு தெளிந்து மொழி ஆய்விற்கான புதுமைத் துணைக்கருவிகள் எவையுமற்ற காலத்தே தமிழ்மொழியின் எழுத்து, சொல் இலக்கணங்களை ஆழமாக, நுட்பமாக, விரிவாக, வெவ்வேறு கோணங்களினின்றும் தொல்காப்பியர் ஆய்ந்துள்ளமை பாராட்டிற்குரியது என்பதையேற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், பொருளதிகாரம் மற்றைய இரண்டு அதிகாரங்களைப் போன்றே நுண்ணிய பார்வை, தெள்ளிய சிந்தனை ஆகியவற்றின் விளைவேயாயினும் அதற்குரிய பெரும் பெயரை மேலைநாட்டு இலக்கியத் திறனாய்வாளர்களிடையே பெறவில்லை. புளும்பீல்டு, சாம்ஃச்கி போன்றோரின் கவனத்தை எழுத்தும் சொல்லும் ஓரளவு கவர்ந்தன. பொருளோ உலகப் பேரியலக்கியங்களின் கவிதையியல்களை யெல்லாம் துருவித்துருவி ஆய்ந்துவரும் ரெனிவெலக்கு போன்ற எந்தத் திறனாய்வாளரின் எண்ணத்தையும் பற்றியீர்க்கவில்லையே என்பது வியப்பையும் கவலையும் தருகின்றது. ஆயினும், பொருளதிகாரம் பற்றி நம்மவர் எழுதியுள்ள நூல்களும் கட்டுரைகளும் பற்பலவாகும். இவைகட்கெல்லாம் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் எழுதிய உரைவிளக்கங்களே அடிப்படையாக அமைந்தன. சோமசுந்தரபாரதியும் புலவர் குழந்தையும் பழந்தமிழரின் பண்பாட்டுச் சிறப்பை விளக்கவும் அது ஆரிய நாகரிகக் கலப்பற்றது என்பதை நிலைநாட்டவும் தமது புத்துரைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். மு. இராகவையங்காரின் தொல்காப்பியப் “பொருளதிகார ஆராய்ச்சி” நச்சினார்க்கினியரின் அடியொற்றிச் செல்லும் பொருளதிகாரப் பொழிப்புரையாகும். இவர் சில நுற்பாக்களை மட்டும் விரிவான விளக்கத்திற் கெடுத்துக்கொண்டு அங்கெல்லாம் வடவரின் நான்மறைக் கருத்துக்களும் பண்பாடும் தமிழரால் போற்றிப் பாதுகாக்கப்பட்டன வென்றும் இஃதே இவரின் சிறப்பென்றும் தோன்றுமாறு போல் வாதிடுகின்றார். தொல்காப்பியர் சுக்கிரனது வழிவந்த பிருகு முனிவரின் மரபைச் சார்ந்த அந்தணர்; வடநூலார் கூறும் இராக்கதம் முதலிய மணமுறை தமிழரிடையேயும் உண்டு; தொல்காப்பியர், கைக்கிளை “காமஞ்சாலா இளமையோள் வயின்” நிகழ்வது என்று கூறுவதால் தமிழ்நாட்டில் குழந்கைள் மணமுறை இருந்தது; “அடியோர்பாங்கினும் வினைவலர்பாங்கினும்” என்ற அடி தமிழகத்தே அடிமை மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்று; “ஐயர்யாத்தனர் கரணம்” என்பது ஆரிய முனிவர் விதித்த மணச்சடங்குகளைத் தமிழாக்கு ஐயர் அறிவுறுத்தினமையைத் தெளிவுபடுத்துகிறது; நால்வகை வருணத்தாரே உயர்ந்தோர்; ஐந்திணை நிலமக்கள் தாழ்ந்தோர் என்பதே காப்பியர் முடிவு என்பன போன்ற கருத்துக்களைக் கூறிப் பொருளதிகார ஆய்வைத் தறவான பாதையில் இழுத்துச் சென்றது இந்நூல்! இம்முடிவுகளுக்கெல்லாம் ஐயத்திற்கிடமற்ற இலக்கிய ஒரு தெளிவு பிறந்திருப்பதோடு அவற்றின் ஆழமும் அகலமும் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. அவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்குமுன் ஓட்டத்தை மிக விரைவாகத் தொடங்கிய நாம் இன்று மிகவும் பின்தங்கி விட்டோம். எனினும், தொல்காப்பியம் கூறும் கவிதை நெறிகளை மேலைத் திறனாய்வாளர்களில் பெருஞ் சிறப்புடையார் கூறுவனவற்றோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது அவற்றின் உயர்வும் அவரது நெடுநோக்கும் தெளிவாகப் புலப்படும். இருபதாம் நூற்றாண்டில் உயர்ந்த கவிதைக் கோட்பாடுகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வற்றுள் பல பொருள் அதிகாரத்தில் புதைந்து கிடக்கக் காணலாம். மேலைநாட்டுக் கவிதை வரலாற்றை ஆய்ந்து பார்க்கும்பொழுது அங்கு இரு வேறுட்ட நெறிகள் மாறிமாறி ஏற்றம் பெற்று வந்திருப்பது கண்கூடு. செவ்வியல் நெறி, புனையியல் நெறி ஆகிய இரண்டிற்கும் நடைமுறையில் அதிக வேறுபாடுகள் இல்லை என்று இப்பொழுது சில திற னாய்வாளர்கள் கருதினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டவையேயென்று மிடில்டன் மரி எலியட் போன்றோர் தெளிவாகச் சுட்டுவர். செவ்வியல் நெறியின் சிறப்பைப் பேசும் எலியட் இவையிரண்டிற்கும் உள்ள வேறுபாடு முழுமைக்கும் அரைகுறைக்கும், முதிர்ச்சிக்கும் வெண்மைக்கும் ஒழுங்குக்கும் குழப்பத்திற்கும உள்ள வேறுபாடுகளும் போன்றதே என்று நிறுவ முயல்வார்.1 (1) செவ்வியல்நெறி, மரபைப் போற்றுவது; புனைவியல்நெறி மரபைப் புறக்கணிப்பது. செவ்வியல்நெறி ஐரோப்பிய இலக்கிய மேதைகளின் நூல்களில் காணப்படும் கோட்பாடு பின்பற்றப்பட வேண்டியது என்பதை முதற் கொள்கையாகக் கொண்டது. கவிஞனின் உள்மனம் () ஒன்றனுக்கே மதிப்பளித்து ஏனைய கட்டுப்பாடுகளையெல்லாம் தூக்கியெறிய முனைவது புனைவியல் நெறி. (2) புதுப்புதுக் கருக்கள், புதிய கவிதைப் பொருள்கள், பாவகைகள், புதிய சந்தங்கள், புதிய நடைகள் ஆகியவற்றில் நாட்டங் கொண்டு புரட்சிக் கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற பேரவாவனைப் புனைவியல், கவிஞர்கள் வெளிப்படுத்தினர். செவ்வியல் நெறியோ கட்டுப்பாடு, ஒழுங்கு, கண்ணியம், சீரமைப்பு, சமநிலை, எளிமை, ஆய்ந்தறிதல் ஆகியவற்றை வலியுறுத்துவது, புனைவியல் நெறியோ கட்டுப்பாடற்ற கற்பனை, பெருமிதம், புதிர்நிலை, மகிழ்ச்சிப்பெருக்கு ஆகியவற்றைக் கொண்டாடும் தன்மையது. (3) பெரும்பாலான செவ்வியல்நெறிக் கவிஞர்கள் சமுதாயத்தின் மேல்மட்டத்தில் உள்ளோரைப் பற்றியே கவிதைகள் யாப்பர். புனைவியலார் கீழ்நிலையிலுள் ளோரையும் கவிதைப் பொருளாக்கிச் சனநாயகம், சமத்துவம், உரிமை, ஆகியவை பற்றிப் பெருங்குரல் எழுப்பத் தயங்கார். (4) செவ்வியலார் கவிதை யாக்கத்தில் அறிவின் பங்கையும் புனைவியலார் கற்பனையின் பங்கையும் மிகைப்படுத்துவர். (5) இயற்கையைப் பார்க்கும் புதிய பார்வையிலும் பழமை மேலுள்ள காதலிலும் அறிய முடியாதது மறைக்கப்பட்டது புதியது ஆகியவற்றிலுள்ள ஈடுபாட்டிலும், அவலம், தன்னிரக்கம், என்னும் உணர்வுகளைப் போற்றுவதிலும் புனைவியலார் மற்றையோரிலும் வேறுபட்டவராவர். டிரைடன், போப், சான்சன் ஆகியோரின் கவிதைகளில் செவ்வியல் நெறியும் கோலரிட்சு, வேர்ட்சு வொர்த், கீட்சு, செல்லி, பைரன் ஆகியோரின் கவிதைகளில் புனைவியல் நெறியும் பொலிவுறக் காணலாம். சான்றுகளையோ கல்வெட்டுச் செய்தி போன்ற வரலாற்றுச் சான்றுகளையோ இராகவையங்கார் தரவில்லை. மேலும் இத்தகைய ஆய்வு பொருளதிகாரம் தரும் கவிதைக் கருத்துக் களுக்குரிய சிறப்பைத்தரவில்லை என்பது நோக்கற் பாலது. இதற்கு நேர்மாறான, ஆனால் இஃதேபோல் பயனற்ற பணியைப் புலவர் குழந்தை செய்துள்ளார். பொருளதிகாரத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் `தூய்மைத்தன்மை’யை வலியுறுத்தற்குப் பயன்படுத்த முயல்கிறார். கா. சுப்பிரமணியபிள்ளையின் `பழந்தமிழர் நாகரிகம்’ தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்துக்களின் தொகுப்பாகும். இது பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட் டையும் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகப் பொருளதி காரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. வ.சுப. மாணிக்கம் எழுதிய ‘கூhந கூயஅடை ஊடிnஉநயீவ டிக டுடிஎந’ (தமிழரின் காதற் கோட்பாடு) என்ற ஆங்கில நூல் சங்க இலக்கியத்தில் காதல் எனும் பொருள் பற்றிய தாயினும் அகத்திணை பற்றித் தொல்காப்பியரும் உரை யாசிரியரும் கூறும் கருத்துக்களை ஆங்காங்கே எடுத்தாள்கிறது2 நூலின் பெரும்பகுதி அகத்திணை விளக்கமாகவும் அகத்திணைப் பாடல்களின் ஆய்வாகவும் அமைகிறது. கைலாசபதியின் ‘கூயஅடை ழநசடிiஉ ஞடிநவசல’ (தமிழ் வீரயுகக் கவிதை) சான்றோர் செய்யுட்களைக் கிரேக்க வீரயுகப்பாடல் களோடு ஒப்பிட்டுக்காட்டி அவையும் வீரயுகத்தைச் சார்ந்தவையே என்று நிலைநாட் டமுயல்கறிது. இம்முயற்சிக்குத் தொல்காப்பியத்தையும் ஒரு மூல நூலாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியர் அது சங்க இலக்கியங் களுக்குப் பின்தோன்றிய தென்பதை ஐயத்திற்கு இடமற்ற ஒரு கருத்தாகக் கொண்டு தமது முடிவுகளை அடுக்கிச் செல்வது குறிப்பிடத் தக்கது. கைலாசபதியின் நிலையற்ற சான்றுகளையும் தமது முடிவுகளுக்கேற்ப வளைத்துக்கொள்ளும் ஆர்வத்தையும் இந்நூலில் காணலாம். வீரயுகக் கவிதைகளைப் பற்றிக் கூறுகின்ற ஓர் இரண்டாந்தர இலக்கண நூலாகவே தொல்காப்பியத்தை இவர் கருதுவது தமிழ் அறிஞர்கட்கு அதிர்ச்சியைத் தருவதற்கே போலும்! தமிழண்ணலின் (சங்க இலக்கியத்தில் மரபும் ஆற்றலும்) கூசயனவைiடிn யனே ‘கூயடநவே in ஊயமேயஅ ஞடிநவசல’ என்ற நூல் சங்க இலக்கிய ஆய்வை மேற்கொள்வதன் முன் தொல்காப்பியத்தின் மூலநூல்கள், தொல்காப்பியக் கவிதை மரபுகள், தொல்காப்பியம் கூறும் திணைக்கோட்பாடுகள் ஆகிய மூன்று பொருள்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.4. தொல்காப்பியப் பொருளதிகாரம் பற்றிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது, தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் கூhந கூhநடிசல டிக ‘ஞடிநவசல in கூடிடமயயீயீலையஅ’ (தொல்காப்பியத்தில் கவிதைக் கோட்பாடு)5 என்ற சிறிய பொருள் பொதிந்த கட்டுரையேயாம். இக்கட்டுரை மேலைநாட்டு இலக்கியத் திறனாய்வாளர்களின் முறையைப் பின்பற்றித் தொல்காப்பியர் கவிதைபற்றிக் கொண்டே கருத்துக்களை மயக்கமோ உயர்வு நவிற்சியோ இன்றிச் சில ஆங்கிலக்கோட்காடுகளோடு ஒப்பிட்டு விளக்குகிறது. தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குச் சில நூற்றாண்டு களேனும் முன் தோன்றியிருக்க வேண்டுமென்றும் அது கூறும் மரபுகள் பல சங்க இலக்கியம் தோன்றிய பொழுதே வலுவிழந்துவிட்டனவென்றும் இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. மேலை நாடுகளில் கவிதை பற்றிய கொள்கைகள் தலைமுறைக்குத் தலைமுறை மாறிவரக் காண்கிறோம். இதனால் அவர்கள் தங்கள் இலக்கியங்களையும் மாறுபட்ட அளவு கோல்கள் கொண்டு அடிக்கடி மறுமதிப்பீடுகள் செய்கின்றனர். இதனால் அவ்விலக்கியங்களின் நிறைகளும் குறைகளும் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராயப்படுகின்றன. அக்கவிதைக் கோட்பாடுகளில், இவ்வேறுபாடுகளை மனத்திற்கொண்டு தொல்காப்பியரின் கவிதை இயலை நோக்கின், அது செவ்வியல் நெறியின் பாற்பட்டது என்பது தேற்றம். அதுமரபைப் போற்றுவது; தமக்கு முன்பிருந்த பேரிலக்கியங்களின் பண்புகளையோ அவர் கோட்பாடுகளாகத் தருகிறார் என்பதை ஆங்காங்கே “என்ப”, “என்மனார் புலவர்” என்று அவர் கவனமாகச் சேர்க்கும் சொற்களால் அறியலாம். செய்யுள்பற்றி அவர் சொல்வது எல்லாம் அவராகத் தருகின்ற விதிகளல்ல. அவர் காலத்துக்கு முன்பிருந்த புலவர்களாலும், இலக்கணிகளாலும் வரையறுக்கப் பட்டவை. அவர்களை “நல்லிசைப் புலவர்” “யாப்பறி புலவர்”, “தொன்மொழிப்புலவர்” “புலன் உணர்ந்தோ:ஞ என்றெல்லாம் குறிக்கிறார். (செய்யுளியல் 1, 74, 230, 233) வழிவழிவந்த இலக்கியக் கொள்கைகளைக் குறிக்க ‘புலனெறி வழக்கம்” என்ற தொடரையே, “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” என்ற நூற்பாவில் (அகத்திணை; 56) குறிப்பிடுகிறார். இன்னின்ன பொருள்கள் பற்றி, இவ்விம் முறைகளில் இவ்வாறு பாட வேண்டும் என்று தெளிவாகச் சொல்கிறார். அகத்திணையியல் கூறும் எழுதிணைப் பாகுபாடு, முதல், கரு, உரியமைப்பு; புறத்திணை இயல் கூறும் எழுதிணைகள், அவற்றிற்குரிய துறைகள்; களவியல், கற்பியல், பொருளியல் காட்டும் தலைமகன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர், கூத்தர், இளையோர் அவரது கூற்றுக்கள் பற்றிய விளக்கங்கள் இவையெல்லாம் ஒரு கவிஞன் தெரிந்தெடுக்கத்தக்க பொருள்கள், அவற்றைக் கூற அவன் பயன்படுத்த வேண்டிய பாத்திரங்கள், அவர்களின் கூற்று நிகழக்கூடிய நிலம், பொழுது ஆகிய பின்புலம் ஆகிய யாவற்றையும் பட்டியலாக்கித் தருகின்றன. இப்பட்டியல் களிலிருந்து தனக்குத் தேவையானவற்றைத் துருவி ஆய்ந்து எடுத்துக் கொள்வதே கவிஞனின் வேலையாகும். செய்யுளியலில் ஏழுவகையான இலக்கிய வகைகளையும் அவைகளுக்குரிய முப்பத்து நான்கு கூறுகளையும் பகுத்துக் கூறுகிறார். கவிதையின் சொற் கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல் வேண்டுமாதலின் அதற்குரிய மெய்ப்பாடுகளைத் தொகுத்து எட்டு வகை என்றும், விரித்து முப்பத்து இரண்டும் என்றும் மெய்ப்பாட்டியியலில் விளக்குகிறார். உவமையியலில் உவமையின் தன்மையும் அதன் வகைகளும் உவமைச் சொற்கள் வருமிடங்களும் உவமைக்குரிய மரபும் வேறுபாடுகளும் கூறப்படுகின்றன. மரபியல், கவிஞன் எவ்வாறு மரபு கெடாது சொற்களை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இளமை, ஆண்பால், பெண்பாற் பெயர்கள் இவையெனக் குறிப்பிட்டு நூலின் இலக்கணத்தோடு முற்றுப் பெறுகிறது. “மரபு நிலை திரியின் பிறிது பிறதாகும்’ (மரபியல் 92) “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாகலான” என்னும் நூற்பாக்கள் குறிப்பிடத்தக்கன. இத்தகைய வரையறைகள் தொல்காப்பியர் கூறும் கவிதையாக்கத்தில் உணர்ந்த உழைப்பு என்று குறிக்கப்படும் அறிவுப்பணியே இன்றியமையாத தென்பதைத் தெளிவுப்படுத்துகின்றன. இங்கு கற்பனையின் பங்கு, உள்மனம் என்றெல்லாம் புனைவியலார் போற்றும் புரிந்து கொள்ள முடியாத உந்து சக்திக்கு அதிக இடமில்லை. பழம் கிரேக்கர்களும் உரோமானியர்களும் கவிதையாக்கம் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களிலிருந்து இது மிகவும் மாறுபட்டது. ஆனால் எலியட் போன்ற இருபதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களின் கோட்பாட்டிற்கு மிக நெருக்கமானது. கவிதையாற்றல் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்றும் கவிஞன் என்பவன் ஓர் வியத்தகு ஆற்றலால் வயப்படுத்தபட்டவன். அதனால் உந்தப்பட்டுத் தன்வயமிழந்து கவிதை மழையை எந்திரம்போல் பொழிபவன் (ய யீடிளளநளளநன உசநயவரசந, யn iளேயீசைநன ளயஎயபந, யn யரவடிஅயவiடிn டிக பநnரைள) என்றும் கிரேக்கர்கள் கருதினர். ஆனால் இப்பொழுது மேலைநாட்டுக் கவிஞர்களும் திறனாய்வாளர்ககும் கவிதையாக்கத்தில் கவிஞனின் கூர்த்த அறிவும், தெளிந்த சிந்தனையும் ஆழ்ந்த பட்டறிவுமே பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்வர்.7 கவிதையின் நோக்கம் பற்றியும் வேறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஓரசு என்ற அறிஞட்h இன்பம், பயன் என்ற இரு நோக்கங்களையும் வலியுறுத்தினார். பதினெட்டாம் நூற்றாண்டில் டிரைடன், போப்பு, சான்சன் முதலியோர் கவிதை வாழ்க்கையை உள்ளவாறும், மகிழ்வளிக்கும் முறையிலும் படம்பிடித்துக் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கோலரிட்சு கவிதையின் முதல் நோக்கம் இன்பம், இரண்டாம் நோக்கம் உண்மை என்றார். வேர்ட்ஃச்வொர்த் தமது ஒவ்வொரு கவிதையும் ஓர் அறங்கூறும் தன்மையது என்று அறிவித்தார். செல்லி கவிதை இதயத்தைத்தாக்கியும் கற்பனையைத் தூண்டியும் நாம் எல்லா உயிர்களின் பாலும் அன்பும் இரக்கமும் கொள்ள வழிசெய்யும் பயனுள்ள கருவியேயாகும் என்று வாதிட்டார். ஆனால், இவர்களுக்குப் பின்னால் வந்த கௌடியர், போதலேர், ரெனன்பேடர், ஆஃச்கார் ஒயில்டு, சுவின் பர்ன் போன்றோர் கவிதை கவிதைக்காகவே என முழங்கினர். அது வாழ்க்கைப் பயனையோ அறமுணர்த்து வதையோ குறிக்கோளாகக் கொள்ளக்கூடாதென்றும், வாழ்க்கையோடு தொடர்பு கொள்வதே அதற்குக் கேடு விளைவிக்கும் என்று கருதினர். கவிஞன் கவிதைக்காகவே வாழவேண்டும் என்றும் மக்களை நன்னெறிப்படுத்துவது அவனது கடமையன்றென்றும் கூறினர். ஆனால் மாத்யூ ஆர்னால்டு, டால்ஃச்டாய் போன்றோர் வாழ்க்கையை நெறிப்படுத்த முன்வராத கவிதை தேவையற்றது என்று தெளிவுபடுத்தினர்.8 இன்றைய மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் மகிழ்விப்பது, அறமுணர்த்துவது என்ற இரண்டும் ஒன்றுக்கொண்டு முரண் பட்ட கொள்கைகள் அல்லவென்றும் இரண்டும் இயைந்து செயல்படுதல் கூடுமென்றும் கருதுவர். பொரு ளதிகாரத்தி லிருந்து கவிதையின் நோக்கம் பற்றிய தொல்காப்பியரது கருத்தை அறிவது அரிதன்று. அகப்பாடல்கள் பற்றிய அவரது கருத்துக்கள் மனிதன் அகவாழ்வைப் பல்வேறு கோணங்களிலிருந்து காண்பதால் ஏற்படும் இன்பத்திற்கே முதலிடம் தருகின்றன. தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய் போன்றோர் மனிதவுணர்களிலெல்லாம் தலையாய காதலுணர்வின் தன்மைகளைப் பலவாறு புலப்படுத்திப் படிப்போர்க்குக் கழிபேருவகையை ஊட்டுகின்றனர். இவர்கள் இயங்குகின்ற காட்சிகளில் இயற்கை, பொருத்தமும் அழகும் கொண்ட பின்னணியாக அமைந்து மகிழ்வை மிகைப்படுத்துகின்றது. தொல்காப்பியர் கூறும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட அகப்பாடல்களில் ஒருமித்த மனமுடைய தலைவனும் தலைவியும் ஒன்று பட்டு இல்லற வாழ்வு மேற்கொண்டு இன்பம் துய்ப்பதே முறையென்னும் பொது நெறி தவிர வேறு அறங்களைச் சொல்லி மனிதனைத் திருத்தமுயலும் நோக்கம் கிடையாது. தலைவன், தலைவி கொண்ட காதல் பற்றிய எந்த உணர்வினை யார் எந்தச் சூழலில் எவ்வாறு சொல்லவேண்டும் என்பதனையே தொல்காப்பியர் வரையறுத்துச் சொல்கிறார். இங்கு நுண்ணிய மன உணர்வுகளை உள்ளவாறு படம்பிடித்துக் காட்டுவதால் ஏற்படும் மகிழ்வே முதல் நோக்கமன்றி வாழ்வின் நன்மை தீமைகளைப் பகுததாய்வதோ அறநெறியுணர்த்துவதோ அல்ல என்பது தெளிவு. தலைவன், தலைவி, செவிலி, தோழி முதலியோரின் புறவாழ்க்கை வேறுபாடுகள் காட்டப்படுவ தில்லை என்பது நோக்கற்பாலது. ஒரு தலைவனிலிருந்து மற்றொரு தலைவன், ஒரு தலைவியிலிருந்து மற்றொரு தலைவி புறகூறுக்களால் பெரும்பாலும் வேறுபடுத்திக் காட்டப்படுவ தில்லை. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் திணை வேறுபாடுகளும் உள்ளுணர்வுக்கேற்ற இயற்கைப் பின்புலன் படைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வேறுபாடுகளே யன்றி அவ்வந்நில வாழ்க்கை வேறுபாடுகளை எடுத்துக்காட்ட அமைந்தவையல்ல. புணர்தல், ஊடல், இரங்கல், இருத்தல், பிரிதல் போன்ற நிலைகளை எடுத்துக்காட்ட ஏற்ற நிலம், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகியவை சுட்டப்பட்டனவே யன்றி, குறிஞ்சி நிலத்துக் குறவனும், முல்லை நிலத்து வேட்டுவனும், பாலைநிலத்து எயினனும், மருத நிலது உழவனும், நெய்தல் நிலத்து நுளையனும் எவ்வாறு மாறுபட்ட வாழ்க்கை முறைகளை மேற்கொண்டனர் என்பதைப்படம் பிடித்துக் காட்டுவதைக் கவிதையின் நோக்கமாகத் தொல்காப்பியம் கூறவில்லை. வழிவழிவந்த புலவர்களும் இலக்கணங்களும் முறை செய்த இத்திணைப் பாகுபாடுகளால் கவிஞர்கள் அடைந்த நன்மைகள் பல. காதல் வயப்பட்ட தலைவன் அல்லது தலைவியின் மன நிலையையும், பட்டறிவையும் கவிதை வடிவில் தருதுல் எளிதன்று. இதற்குத் தேவையான பின்னணி, உருக்காட்சிகள், குறியீடுகள் ஆகியவற்றை ஒவ்வொரு முறையும் புலவன் தேடி அலைவானேயாயின் தகுந்த சொற்களைத் தெரிந்தெடுப்பதில் அவன் முழுக்கவனம் செலுத்தவியலாமல் போகும். தலை சிறந்த கிரேக்க நாடக ஆசிரியர்களான ஈஃச்கிலசு, சாபகிளிசு, யூரிபிடிசு ஆகியோர் முன்னர் வழக்கிலிருந்த, சிறந்த கருக்களையுடைய கதைகளையே நாடகமாக்கியபொழுது இத்தகைய நன்மையைப் பெற்றனர். தங்களது முழு ஆற்றல்களையும் பொருட்செறிவுடைய உரையாடலை அமைப்பதில் செலவிட்டனர். கவிஞனுக்கும் கவிதையைப் படிப்போனுக்கும் பொதுவான, அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்ட முதல், உரி, கருப்பொருள்கள் இருப்பின் விரும்பிய உணர்வைக் கவிஞன் படைத்தலும், படிப்போன் அதையெளிதில் தனதாக்கித் துய்த்தலும் எளிதாகின்றன. கவிஞன் எழுப்பவிரும்பும் உணர்வைச் சூழல் வழியும் படிப்போன் புரிந்துகொள்கிறான். தகுந்த சூழலும் பின்னணியும் இல்லாத பொழுது தான் எடுத்துக் கொண்ட உணர்வைப் புலப்படுத்தும் முயற்சியில் புலவன் தோல்வியுறுகின்றான். இதையே சேக்ஃச்பியரின் நாடகமான ஆம்லெட்டின் தோல்விக்குக் காரணமாக எலியட் கூறுவர். அவர் குறிப்பிடும் டீதெநஉவiஎந ஊடிசசநடயவiஎந என்ற கோட்பாடு இங்கு எண்ணுதற்குரியது.9 குறிப்பிட்ட சிலபொருள்கள், ஒரு சூழ்நிலை அல்லது ஒரு சில நிகழ்சசிகள் கவிஞனால் ஒரு குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்தச் சூத்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளப் படுதலையே இத் தொடரால் எலியட் குறிப்பிடுகின்றார். திணை, துறை பாகுபாடுகளும், அவற்றிற்குரிய முதல், உரி, கருப்பொருள் களும் இத்தகைய டீதெநஉவiஎந ஊடிசசநடயவiஎநள ஆகப் புலவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பட்டவையே. முன்னரே வரம்பு செய்யப்பட்டுத் தயாராகவுள்ள இவற்றில் தனக்குத தேவையான வற்றை எடுத்துக்கொண்டு புலவன் தான் கவிதையாக்க விரும்பும் உணர்வுக்குச் சொல் வடிவம் கொடுப்பதில் மட்டுமே நாட்டம் செத்துதல் போதும படிப்போனும் இம்மரபுகள் அறிந்தோனாத லால் அவ்வுணர்வை எளிதில் தெரிந்துகொண்டு கவிதையை அனுபவிப்பது எளிதாகின்றது. தவறான டீதெநஉவiஎந ஊடிசசநஉடயவiஎந காரணமாகக் கவிதை தோல்வியடைந்தது என்ற நிலை ஏற்பட இங்கு வழி இல்லை. நிலம், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகியவற்றைக் கூறுவதன் மூலம் இயற்கை வண்ணனைக்கும் வழிவகுக்கப் பட்டது. உள்ளுறை உவமம், ஏனை உவமம் ஏனை உவமம் ஆகியவற்றில் அந்நிலத்தின் கருப்பொருள்களே பயன் படுத்தப்படுவதன் சிறப்பு நோக்கற்பாலது. ஒரு கவிதையில் வரும் ஒவ்வொரு சொல்லும் கவிதையின் முழுப்பொருளுக்குத் துணை செய்வதாய் அமையவேண்டுமெனக் கூறும் `நோக்கு’ எனும் தொல்காப்பியரின் கோட்பாடும் இதனோடு சேர்த்து ஆராய்தற் குரியது. இவ்விரண்டு அடிப்படைகளும் ஒவ்வொரு கவிதையையும் ஓர் உயிரோட்டமுள்ள முழுப் பொருளாகத் தொல்காப்யிர் கருதினார் என்பதை ஐயமறத் தெளிவாக்குகின்றன. மேலை நாட்டில் கோலரிட்சும் அவரைப் பின்பற்றி இருபதாம் நூற்றாண்டின் புதுத்திறனாய்வாளர்களும் ஒரு கவிதையின் பொருள், நடை, சொற்கள், அணிகள் ஆகியவை ஒன்றோ டொன்று உயிர்த் தொடர்புடையனவாய், கவிதையின் முழுத் தாக்கத்திற்குத் துணை செய்வனவாய் அமையவேண்டும் என்று கூறுவர்10. ஒருகவிதையின் பல கூறுகள் ஒரு மாலையில் அருகருகு வைத்துத் தொடுக்கப்பட்டுள்ள பூக்களைப் போல் அல்லாது ஒரு வளரும் செடியில் உள்ள பூக்கள், தண்டு, இலை, வேர்களோடு உயிர்த் தொடர்பு கொண்டிருப்பதைப்போன்று ஒன்றை யொன்று சார்ந்தவையாய் அமைதல் வேண்டும் கோலரிட்சு. “ஒரு முழுக்கவிதை அளிக்கும் இன்பம் அதன் பல கூறுகள் அளிக்கும் இன்பத்தோடு பொருந்தியதாய் இருத்தல் வேண்டும்”11 என்றும், “படிப்போன் கவிதையின் முடிவுதரும் இன்பத்தை நோக்கிச் செல்லும் வழியிலும் அதற்கேற்ற இன்பம் துய்க்கும் பாங்கில் கவிதை அமைய வேண்டும”12 என்றும் கூறும் கூற்றுகள் தொல்காப்பியரின் நோக்கு எனும் கோட்பாட்டோடு ஒப்பிடற்பாலன. தொல்காப்பியர் அகப் பாடல்களுக்கு இயற்கையைப் பின்னணியாக்கும் சிறப்பு குறிப்பிடத்தக்கது. இயற்கையழகைத் துய்க்கும் ஆற்ற்ல, முதிர்ந்த பண்பாட்டின் சின்னமாகுமென்று வரலாற்றுப் பேரறிஞர்கள் கூறுவர். ஆர்னால்டு டாயின்பீ குறிப்பிடும் இருபத்தாறு நாகரிகங்களில் மூன்று நாகரிகங்களே பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே இயற்கையழகில் ஈடுபடும் முதிர்ச்சிபெற்றிருந்தன. மேலைப் பண்பாடும் சீனப்பண்பாடும் இந்தியப் பண்பாடுமே இப்பீடு எய்தியவை.13 குழந்தைகளும், நாகரிகமற்ற பழங்குடியினரும் இயற்கையழகால் கவரப்படார். மேலை நாகரிகம் இயற்கையைப் பாராட்டத் தொடங்கியது பதினேழாம் நூற்றாண்டின் இடையில்தான். சீனர்கள் அதன் சிறப்பை 1800 ஆண்டுகளுக்கு முன்னே உணர்ந்தனர். தமிழ் நாகரிகம் தொல்காப்பியர் காலத்திற்கும் முன்னமேயே இயற்கையைப் பாராட்டவும் அதனைக் கவிதையில் சீரிய முறையில் இணைக்கவும் கற்றிருந்தது. அகப்பாடல்களில் முருகியல் உணர்வுக்கு முதலிடம் தந்த தொல்காப்பியர் அறமுணர்த்தலுக்குப் புறப்பாடல்களில் ஒரு பகுதி ஒதுக்கப் பட்டிருத்தலைச் சுட்டுகிறார். ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி எனும் நால் வகைப்படும பாக்களும் அறம், பொருள், இனம் என்ற மூன்று முதற் பொருட்கும் உரியனவாகவரும் என்றும், மேற்கூறிய நான்கு பாவும் வாழ்த்தியற்பொருளிலும் வரும் என்றும், இவ்வாழ்த்து புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து என்று இரு வகைப்படுமென்றும் கூறி அவையடக்கியல், செவியறிவுறூஉ என்பன பற்றியும் பேசுகிறார்.14 “பொங்கு தலின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே” என்பது செவியறிவுறூஉ பற்றிய நூற்பாவாகும். “ஒருவருக்குக் கேள்வியறிவுபடுத்து அவரை வாழ்த்துதல் “செவியறிவுறூஉ என்பர் நச்சர். “பெரியோர் நடுவில் வெள்கு தலின்றித் தாழ்ந்து ஒழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்தல் செவியுறை அல்லது செவியறிவுறூஉ ஆகும்” என்று விளக்குவர் இளம்பூரனர். அடிவரையில்லாதனவென்று தொல்காப்பியர் குறிப்பிடும் ஆறனுள் முதுமொழி, மந்திரம், குறிப்பு அல்லது அங்கதம் ஆகிய மூன்றும் அறமுணர்த்தும் தன்மையவாம். அகப்பாடல்கள் அனைத்தும் போர்க்களம் பற்றிய பல புறப்பாடல்களும் கவிதையின்பத்தையே முதல் குறிக்கோளாகக் கொண்டவை என்பதும், நிலையாமைப் பற்றிய பாடல்களும், செவியறிவுறூஉ, முதுமொழி, மந்திரம், குறிப்பு போன்றனவும் அறமுணர்த்தும் நோக்குடையன வென்பதும் இவை பற்றிய தொல்காப்பியரது விளக்கங்களால் தெளிவாகும். கவிதையின் அளவுபற்றிய தொல்காப்பியரது கருத்துக்கள் மேலைநாட்டுக் கவிஞர்களின் கருத்துக்களோடு ஒப்பிடத் தக்கவை. ஆங்கிலத்தில் நீண்ட காப்பியங்கள் எழுதப்பட்ட போதிலும் குறைந்த அடிகளையுடைய கவிதைகளே முற்றும் கவிதைத் தன்மையுடையனவாய் இருக்கமுடியும் என்ற கருத்தை மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். “எந்த அளவுடைய கவிதையும் முழுவதும் கவிதையாக இருக்கமுடியாது; இருக்கவேண்டிய இன்றியமையாமையும் இல்லை” என்கிறார் கோலரிட்சு. “நீண்ட கவிதையென்ற தொடரே முரண்பாடு உடையதாகும்” என்கிறார் போ. கவிதையெழுதத் தொடங்கும் முன்னமேயே உந்து சக்தியானது தளர்வுறத் தொடங்குகின்றது என்கிறார் செல்லி.17 தொல்காப்பியர் நீண்ட காப்பியங்கள் பற்றிப் பேசவில்லையென்பது நோக்கற்பாலது. ஆசிரியப்பாவிற்கு சிற்றெல்லை 3 அடி; பேரெல்லை 1000 அடி வஞ்சியும் ஆசிரிய நடைத்தே. வெண்பாவில் குறுவெண்பாட்டு 7 சீர்கொண்ட 2 அடிகளை உடையது. நெடுவெண்பாட்டிற்குப் பேர் எல்லை 12 அடி. கலிப்பாவில் அம்போதரங்க ஒரு போகுக்குச் சிறுமை 30 அடி; பெருமை 60 அடி. பரிபாடலுக்குச் சிறுமை 25 அடி பெருமை 400 அடி. இதிலிருந்து தொல்காப்பியர்ஆயிரம் அடிகளுக்குக் குறைவான பாடல்களைப்பற்றியே பேசுகிறார் என்பது தேற்றம். நீண்ட கவிதையெழுதுவோன் இடையிடையே கவிதைத் தன்மையற்ற உரைநடை வரிகளைப் பொருத்தமாகச் சேர்த்தல் தவிர்க்க முடியாததென்று கோலரிட்சு கூறுகிறார். தொல்காப்பியர் உரை என்ற நிலம் பற்றிப் பேசும்பொழுது “பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின்று எழுந்த கிளவி” ஆகிய இரண்டையும் குறிக்கின்றார். உரையாசிரியர்களும் தகடூர் யாத்திரையைச் சான்றாகக் காட்டுகிறார். ஒரு கவிதையில் கவிஞனின் ஆளுமை எந்த அளவு நிலைக்கிறது. நிலைக்கவேண்டும் என்பது பற்றியும் மேலை நாட்டார் பல கருத்துக்களைத் தந்துள்ளனர். கவிஞனின் ஆளுமைக்கே முதலிடம் என்று புனைவியலார் கூறுவர். ஆனால் செவ்வியலார் இதனை ஏற்பதில்லை. கவிஞனின் ஆளுமை அடியோடு மறைக்கப்பட்ட கவிதையே உயர்ந்த கவிதை என்பது எலியட்டின் கருத்தாகும். கவிஞன் தனது பட்டறிவை அடிப்படை யாகக் கொண்ட கவிதை எழுத வேண்டியிருப்பினும் அப்பட்டறிவின் நிலையற்ற - சாரமற்ற இன்றியமையாமை யில்லாத கூறுகளை அறவே நீக்கவேண்டுவது அவன் கடமையாகும். இதன்மூலம் அவன் தற்சார்பற்ற தன்மையை கவிதைக்கு அளிக்கமுடிந்ததால் அது நெடுங்காலம் உயிருள்ள கவிதையாக வாழ வாய்ப்புண்டு. தொல்காப்பியர் அகப்புறப்பாடல்கள் பற்றிப் பேசும்பொழுது கவிஞனின் ஆளுமைக்கு இடமே வைக்கவில்லை என்பது நோக்கற்பாலது. அகமானாலும் எவ்வெந்நிகழ்ச்சிகள் பாடலுக்குரியவையென்று அவரே திணை, துறை பாகுபாடுகளின் மூலம் பட்டியலிட்டுத் தந்துவிடுகிறார். பெரும்பாலும் தொல்காப்பிய நெறிபற்றியெழுந்த சங்கப்பாடல்களில் ஒருசில தவிர ஏனைவற்றிலெல்லாம் தற்சார்பற்ற தன்மை எளிதில் கைவரப் பெற்றிருத்தலைக் காணலாம். தனிமனிதர் என்ற முறையில் இப்புலவர்களின் பண்புகள் எவையென்று இக்கவிதைகளின் மூலம் நாம் அறிவதற்கு வழியேயில்லை. பல புலவர்கள் தம் இயற்பெயர்கூடத் தெரியாதவாறு தம்மை மறைத்துக் கொண்டுவிட்டார்கள் என்பது வியப்பிற்குரியது. அவர்கள் செம்புலப் பெய்ந்நீராகவும் தேய்புரிப் பழங்கயிற்றினராகவும் தொடித்தலை விழுத்தண்டின ராகவும் விளங்கி வருதல் காலம் அவர்கள் கவிதையின் தற்சார்பற்ற தன்மையால் பெற்ற வெற்றிக்கு அளித்த பரிசேயாகும். ஒளவையின் பாடல்களில் ஒளவைக்கும் அதியமானுக்கும் காதல் இருந்ததாகக் காண்பது தொல்காப்பிய மரபிற்குப் புறம்பானதாகும். தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாடல்களைப் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாடகத் தனிப்பேச்சு, நாடக இசைப்பாடல்கள் என்னும் நாடக முன்னிலைப் பாடல்களோடு ஒப்பிட்டுப் பலர் பேசியுள்ளனர். அவர் ஒவ்வொரு கவிதையையும் நாடகமாகவே காண்கின்றார். அதற்குரிய இடம், காலம், பாத்திரங்கள், நிகழ்ச்சிகள், கரு ஆகியவற்றையும் திட்டவட்டமாக வரையறுத்துத் தந்துள்ளார். கருத்துக்களைக் கருத்துக்களாகவே தராமல் நாடக உத்திகளைக் கையாண்டு ஒரு முக்கிய பாத்திரத்தின் பேச்சாகத் தரும் பொழுது அதன் தாக்கம் பல மடங்கு வலுப்பெறுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராபர்ட் பிரௌனிங்கும் இருபதாம் நூற்றாண்டில் பவுண்டு எலியட் போன்றோரும் இத்தகைய கவிதைகள் பலவற்றைப் பாடியுள்ளனர். இது 20ஆம் நூற்றாண்டின் மிக இன்றியமையாத பாவகையாகக் கருதப்படுகிறது. எலியட்டின் நாடக முன்னிலைப்பாக்களைத் திறனாய்வு செய்த கென்னர் என்பார் எலியட்டின் கவிதைகளில் எப்.எச். பிராட்லியின் தாக்கத்தைப் பற்றிப்பேசுகிறார்.19 இத்தத்துவ வல்லுநர் தமது “தோற்றமும் உண்மையும்” என்ற நூலில் உடனடிப் பட்டறிவு என்ற கோட்பாட்டைக் குறிக்கின்றார். இக்கோட்பாட்டின் தாக்கமே எலியட்டின் கவிதைகளைப் பிரௌனிங்கின் கவிதைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. பிராட்லியின் கோட்பாடு கவிஞனும் வாசிப்போனும் ஒன்றுபடும்பொழுது கவிதையில் யார், எந்தச் சூழலில் பேசுகிறார் என்பன போன்ற விளக்கங்கள் தேவையே இல்லை என்பதையும், பேசுவோனின் ஊரும் பேரும் தெரியாத வழியும் படிப்போன் கவிஞனின் குரலோடு தன்னை இணைத்துக் கொள்ளுதல் எளிதென்பதையும் எலியட்டுக்குத் தெளிவாக்கிற்று. பிரௌனிங்கின் ‘ஹனேசய னநட ளயசவடி’ என்ற கவிதையையெடுத்துக் கொண்டோமானால் அது ஆண்டிரியா என்பவன் பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த ஓர் ஓவியன். இரவுக் காவலர்களால் கைப்பற்றப்பட்ட பொழுது அவன் சொல்லிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. இக்கதாபாத்திரம் பற்றிய சில உண்மைகளும அவன் பேசிய சூழலும் நமக்குக் கவிதையின் மூலம் தெரியவருகின்றன. ஆனால் எலியட் எழுதிய ‘ஆல்பிரட் புரூப்ராக்கின் காதல் கவிதை’ பாடலிலிருந்துபுருப்ராக் என்பவன் யாவன், எக்காலத்தில் எந்நாட்டில் வாழ்ந்தவன், அவனது பழக்க வழக்கங்கள் எத்தகையவை என்பன பற்றி நமக்கு ஏதும் சொல்லப்படவில்லை. இருப்பினும் நாம் புரூப்ராக்கோடு ஒன்றித்துப்போகமுடிகிறது. தொல்காப்பியர் காட்டும் அகத்திணை மரபில் இத்தகைய கவிதைகளே குறிக்கப்படுகின்றன என்பது நோக்கற்பாலது. தலைவன், தலைவி, தோழி ஆகிய எந்தப் பாத்திரத்தின் பெயரும் கூடச் சுட்டப்படுவதில்லை. உரிப் பொருளோடு தொடர்புடைய நிலமும், பொழுதும், கருப்பொருள்களும் மரபுப்படி கவிதையின் மூலம் பெறப்படுகின்றனவேயன்றிப் பேசும் பாத்திரத்தின் ஊர், வயது நிறம், பழக்கவழக்கங்கள் ஆகிய வேண்டாத விளக்கங் களெல்லாம் ஒதுக்கப்படுகின்றன. இவையெல்லாம் ஒரு கவிதைக் குரலோடு நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ளத் தேவையற்றவை யென்பதே பிராட்லி கண்டு எலியட்டால் பயன்படுத்தப்பட்ட உத்தியாகும். தொல்காப்பியர் கூறும் மரபுப்படி எழுதப்பட்டுள்ள அகத்திணைப் பாடலில் முதல் அடியிலேயே பாத்திரத்தின் பேச்சு துவங்குகிறது. பாத்திரம் பற்றிய எந்தவிதமான அறிமுகமும் இருப்பதில்லை. வழிவழியாகத் தமிழ்க்கவிஞர்கள் கையாண்ட மரபுகளும் கவிதையில் உவமைகளாகக் கையாளப்பட்டுள்ள பொருள்களும் பிற உத்திகளும் எந்த நிலத்தைச் சேர்ந்த பாத்திரம் எந்தச் சூழலில் பேசுகிறது என்ன கருத்தை வலியுறுத்துகிறது என்பதை நமக்குத் தெளிவாக்குகின்றன. காதல் வயப்பட்ட இப்பாத்திரங்களின் நுண்ணிய மனவுணர்வுகள் மட்டுமே நம் கவனத்தை ஈர்ப்பவை. அவர்களின் புற வேறுபாடுகளைக் கவிஞனும் காட்டுவதில்லை; நாமும் கவிதையையனுபவிக்க அவற்றைத் தேடுவதில்லை. தலைவர்கள் யாவரும் வீரர்கள்; தலைவியர் யாவரும் அழகியர் என்பன தவிர ஒரு குறிஞ்சிநிலத் தலைவன் மற்றொரு குறிஞ்சிநிலத் தலைவனிடமிருந்து புறக் கூறுகளில் எவ்வாறு வேறுபட்டான் என்பதில் கவிஞர்களுக்கு ஈடுபாடில்லை; நம் கவனமும் அவற்றிற்குத் திரும்புவதில்லை. உவமைகளாகவோ, உருவகங்களாகவோ அல்லது காட்சி உருக்களாகவோ பயன்படுத்தப்படுபவையெல்லாம் நாம் அன்றாட வாழ்க்கையில் காணுகின்ற பொருள்களாக சிறப்பென்றும், இல்பொருள் உவமைகள் அவ்வளவு பீடு உடையன அல்ல வென்றும், எந்தக் கருத்தையும் கருத்தாகவே கூறிவிடாது காட்சி உருவின் மூலம் மனக் கண்ணிற்கு ஓவியமாக்கித் தருதலே கவிஞனின் கடமையென்றும் மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் கருதுவர். சேக்ஃச்பியர் தமது நாடகங்களிலும் கவிதைகளிலும் இத்தகைய உவமைகளையே கையாண்டாரென்பதையும் அவரது காலத்திருந்த பல்கலைக்கழக மேதைகளான நாடகாசிரியர்கள் சிலர் இந்நுணுக்கமறியாமல் உவமைகளிலும் தமது புத்தக அறிவையே காட்ட முனைந்து சொல்லோவியங்களைத் தீட்டவியலாது தோல்வியுற்றனர் என்பதையும் சுட்டிக் காட்டுவர். சான்றாக, கரடியைத் துன்புறுத்தி மகிழ்தல் என்னும் விளையாட்டு அக்கவிஞர்களது காலத்தே மிகவும் விளம்பரமுடைய மிகவும் விரும்பப்பட்ட விளை யாட்டாக இருந்தது. இதனை சேக்ஃச்பியர் ஒருவரே காட்சியுருவாக அழகிய முறையில் தமது நாடகங்களில் பயன்படுத்திக் கொள்கிறார். மற்றையோர்க்கு இதன் அருமை புலப்படவில்லை. மில்டனும் ஓசைக்கே சிறப்பிடம் அளித்து, காட்சியுருக்களைப் படைப்பதில் கவனம் செலுத்தாததால் அவரது கவிதையும் குறையுடையதே என்று எலியட் சாடுகிறார்.20 நுண்பொருளைப் பருப்பொருள்மூலம் விளக்கும் திறனற்றவரென்று செல்லியைப்பற்றி லீவிசு குறை கூறுகின்றார்.21 மனக்கண்ணிற்கு எளிதில்புலப்படாத நடமாடும் மலையைக் காட்சியுருவமாக ஆர்னல்டு தமது கவிதையொன்றில் தரமுயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறார் லீவிசு. ஆனால், சங்கப்புலவர்கள் காட்சியுருக்களுக்கு அளித்த சிறப்பும் மக்கள் அன்றாட வாழ்வில் காணுகின்ற எளிய பொருள்களையே அவர்கள் உவமையாக்குகின்ற சிறப்பும் நாம் அறிந்தனவே. இதற்குத் தொல்காப்பிய மரபே காரணமாகும். உள்ளுறை உவமம், ஏனை உவமம் ஆகியவைகட் கெல்லாம் அவ்வந்நிலத்துக் கருப்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளலே பழந்தமிழ் மரபாகும். இல்பொருள் உவமைகள் திருத்தக்கதேவர், கம்பர் காலத்தில்தான் பல்கிப்பெருகின. காட்சியின் மூலம் ஓவியம் படைத்தலே தொல்காப்பிய - சங்க மரபிற்கு உகந்ததாக இருந்தது. தேவர், கம்பர் நூல்களில்தான் ஓசையின் மூலம் ஓவியம் படைத்தல் (யயீயீநயட வடி யரனவைடிசல iஅயபiயேவiடிn) அதிகமாகக் கையாளப்பட்டது. பக்கம்பக்கமாக ஓசைநயமுடைய சொற்களைக் கவிதை களாக எழுதிக் குவிப்பதைக் காட்டிலும் நயமும் பொருள் ஆழமும் உடைய ஒரு காட்சியுருவைப் படைப்பதே சிறப்பு என்று எஃச்ராபவுண்டு குறிப்பிடுவார்.22 தொல்காப்பியர் கூறும் இறைச்சியும் உள்ளுறை உவமும் இதனை அவர் உணர்ந் திருந்தமைக்குச் சான்றுகளாகும். இன்னின்னார்தாம் உள்ளுறை உவமம் கூறுதற்கு உரியார் என்று அங்ஙனம் கூறும்போது யார் யார் எவ்வெப்பொருள்களை அமைத்துக் கூறவேண்டுமென்றும் வரையறுத்துள்ளமை பெருஞ்சிறப்பாகும். “கிழவி சொல்லின் அவளறி கிளவி தோழிக் காயின்நிலம் பெயர்ந்துரையாது” (27) “தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான’ (33) “கிழவோற் காயின் உரனொடு கிளக்கும்” (28) “கிழவோற் காயின் இடம்வரை வின்றே’ (32) “ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே” (29) எனும் நூற்பாக்கள் எல்லாம் கவிஞன் தனக்குத் தெரிந்த பொருள்களையெல்லாம் உவமையாக்கல் கூட தவறென்பதையும் கவிதையில் பேசும்பாத்திரத்திற்குப் பொருத்தமான உவமையைக் கையாளவேண்டு மென்பதையும் சுட்டுகின்றன. உவமையின் பயன்பற்றிப் பேசும்பொழுது “புலன் அல்லாதன புலன் ஆதலும் அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும்” என்று கூறுவார் இளம்பூரணர். இதன் மொழிபெயர்ப்பே போன்று டாக்டர் சான்சன் தெளிவாக்குதல் (ஐடடரளவசயவiடிn), அழகு செய்தல் (டிசயேஅநவேயவiடிn) எனும் இரண்டு தொழில்களையும் உவமை செய்ய வேண்டுமென்பார். பல்வேறு வகையான உவமைகள், உருவகங்கள், உருக்கள், படிமங்கள் ஆகிவற்றை ஆராய்ந்த மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் அவை ஐம்பொறிகளில் ஒன்றையோ பலவற்றையோ தாக்குவனவாக அமையின் சிறப்பென்பார். இவையேற்படுத்தும் உள்ளக் கிளர்ச்சிகள் கவிதைத் துய்ப்பின் இன்றியமையாக் கூறாகும். உருக்களை ஐம்புலன்களோடு தொடர்பு படுத்தியே மேலைத் திறனாய்வாளர்கள் பேசுகின்றனர். ஆனால், உள்ளக் கிளர்ச்சிகளை உவமைகள், உருக்கள் இன்றியும் கவிதை தோற்றுவித்தல் கூடுமாதலின் அவற்றைத் தனியே தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் விரிவாகப் பேசுகிறார். “மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றலின் வெளிப்படுதல்” என்பர் பேராசிரியர். பொருட்புலப்பாடு சிறப்பாக அமையும்போது ஏற்படும் உள்ள நெகிழ்வுகளையே மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களும் புதுத்திறனாய் வாளர்களும் ஒரு கவிதை, நுண்மையும் ஆழமும் வெண்மையற்ற வளப்பமும் (ளுரவெடநவல, னநயீவா யனே உடிஅயீடநஒவைல) உடையதாக இருக்க வேண்டும் என்பர். இச்சிறப்புக்களைப் பெறாத எட்வர்டு, சார்சு காலத்துக்கவிதைகளைக் (நுனறயசனயைn யனே ழுநடிசபயைn டிநவசல) குறைகூறிப் புறக்கணித்தனர். சொல்லவந்த பொருளை நேரிடையாக வெளிப்படையாகச் சொல்லாமல் ஆழ்ந்து நோக்கப் பல பொருள்களைத் (டுயலநச டிக அநயniபே) தரவல்லதையே உயரிய கவிதையென மதிப்பிட்டனர். இதனை யீடிநவசல டிக iனேசைநஉவiடிn என்பர். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல், அடிக்கு அடி, அலங்கரிக்கப்பட்ட நுண்ணிய வேலைப் பாடமைந்த சிற்பம் போன்றதாகவொரு கவிதை அமைய வேண்டுமென எதிர் பார்த்தனர். ஒவ்வொரு சங்க நூற்கவிதையும் “வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்” (போன்றமைந்திருத்தல் கண்கூடு. தொழில் நுணுக்கம் அமையப்பெற்ற கலனோடு (கூhந றநடட-றசடிரபாவ ரசn) கவிதையை ஒப்பிடுவார் கிலியான்த் புரூச்சு. தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் சிலவற்றை ஆழ்ந்து பார்க்கும்பொழுது அவரும் கவிதையைப் பற்றி இத்தகைய எண்ணங்களே கொண்டிருந்தார் என்பது புலப்படும. நோக்கு என்ற உறுப்பு ஒவ்வொரு மாத்திரையும் சொல்லும் அடியும் பொருளுடையதாய், கவிதையின் முழுப்பொருளுக்குத் துணை செய்வதாய் அமையவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. `பயன்’ என்ற உறுப்பைப் பற்றி அவர், “இதுநனி பயக்கும் இதன்மா றென்னும் தொகுநிலைக் கிளவி பயனெனப்படுமே” என்பார். யாதானும் ஒரு பொருளைக் கூறும்பொழுது, `இதனைப் பயக்கும்’ என விரித்துக் கூறாது, முற்கூறிய சொல்லினாலேயே தொகுத்துக் கூறும் உறுப்பு `பயன்’ எனப்படும. இது சொல்லவந்த கருத்தை மறைமுகமாக நயட்மபடக் கூறுவதையே குறிக்கின்றது. `எச்சம்’ என்ற உறுப்பும் குறிப்பால் பொருள் உணர்த்துவதன் சிறப்பையே உணர்த்துகிறது. “சொல்லொடுங் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை புல்லிய கிளவி எச்சம் ஆகும்” என்பது நூற்பா. ஒரு தொடரில் ஒரு சொல்லானது முன்னோ, பின்னோ எஞ்சி நின்று பொருள் தருவது சொல்லெச்சம் எனலாம். தங்குறிப்பிற்பற்றி எச்சத்தானே முடிவு கூறப்படுவது குறிப்பெச்சம் எனலாம். சொல்லெச்சம் குறிப்பெச்சங்களுக்குத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் பல்வேறு வகையான உரைகள் கூறி விளக்கினும் மறைமுகக் கவிதையையே இவை சுட்டுகின்றன என்பதில் ஐயமின்று. செய்யுளில் எத்தகைய மொழி கையாளப்பட வேண்டும் என்பதும் கவிதைக்கோட்பாடுகளில் முக்கியமானதொன்றாகும். பதினெட்டாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் காப்பியம், துன்பியல் நாடகம் போன்ற உயர் இலக்கிய வகைகளில் குறிப்பிட்ட ஒரு மொழியையே கையாள வேண்டுமென்றும் பேச்சுவழக்கிலுள்ள பொது மொழியைப் பயன்படுத்துதல் ஆகாதென்றும் கருதினர். அவர்கள் உயர் கவிதைக்கென்று ஒதுக்கிய மொழி கவிதை மொழி (யீடிநவiஉ னiஉவiடிn) என்று குறிக்கப்பட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேர்ட்ஃச்வொர்த் போன்ற கலைஞர்கள் இக்கருத்தை மறுத்து, கவிதையில் எச்சொல்லையும் பொருத்தமுறக் கையாளுதலில் தவறில்லை என்றும் உரிய முறையில் உரிய இடத்தில் பெய்யப்பட்ட எச்சொல்லும் உயிர்பெறும் என்றும் விளக்கினர். இதனையே இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களும் திறனாய்வாளர்களும் ஏற்றுக் கொண்டனர். பேச்சு வழக்குச் சொற்களுக்கும் கவிதையில் இடமுண்டு எனக்காட்டினர். ஐ.ஏ.ரிச்சர்ட்சு என்பார் நல்ல கவிதையில் ஏற்றமுறையில் அமைந்த சொற்கள் ஒன்றுக்கொன்று உயிர் ஈந்துகவதையில் ஏற்றமுறையில் அமைந்த சொற்கள் ஒன்றுக்கொன்று உயிர் ஈந்துகவித்துவம் பெறுவதைப் பேசுகிறா. தொல்காப்பியர் செய்யுளுக்குரிய சொற்கள் இவையென்று பிரிக்கவில்லை. சொல்லதிகார எச்சவியலில். “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” என்று கூறுகிறார். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற அனைத்தும் செய்யுளைக் கூட்டுதற்குரிய சொற்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். திரிசொற்களும் திசைச் சொற்களும் தமிழில் கலந்த வடசொற்களும்கூடக் கவிதையில் உரிய இடத்தில் பயன்டுத்தப்படலாம் என்ற தொல்காப்பியரது கூற்று தனிச்சொல் எதற்கும் உயிரோ கவித்துவமோ சிறப்பாற்றலோ இல்லை; அது தொடரிலே பொருத்தமுற அமைக்கப்படும்பொழுதே இவற்றைப் பெறுகிறதென்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைப் புலப்படுத்துகிறது. புலன் என்னும் வனப்புப் பற்றிப் பேசும்பொழுதும்., “தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” எனக் கூறுகிறார். தெரிந்த மொழியென்பது வழக்குச் சொல்லைக் குறிக்கும். பேராசிரியர் இதனைச் சேரிமொழியென்றே கூறுவார். இப்பொழுது எழுதப்படும் ஆங்கிலக் கவிதைகள் சேரிமொழியைப் பயன்படுத்தத் தயங்குவதில்லையென்பது யாவரும் அறிந்ததே. பல்வேறுபட்ட கவிதைக் கோட்பாடுகளுள் சிறந்தவை யென்று காலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையும் பெருமை யுடையவையென்று இருபதாம் நூற்றாண்டு மேலைநாட்டுத் திறனாய்வாளர்களால் போற்றப்படுபவையும் தொல்காப்பியர் கூறும் கவிதை நெறிகளோடு பெரும்பாலும் ஒத்திருக்கின்றன என்று சொல்லுவதில் உயர்வு நவிற்சியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நெறிகளில் பலவற்றைப் பின்பற்றி எழுதப்பட்ட சங்கச் சான்றோர்களின் கவிதைகள் இன்றும் உயிரோட்ட முடையனவாய் அழியாத் தன்மையும் புதுமையும் பெற்று இலங்குவது அழியாப் பெருஞ்சான்றுகளாகும். அடிக்குறிப்புகள் 1. இராகவையங்கார், மு. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, மதுரைத் தமிழ்ச் சங்கம். 2. Manicakm, V.Sp The Tamil Concept of Love, Tirunelveli; The South India Savia Siddhanta Works Publishing Society, 1962. 3. Kailasapathy, K, Tamil Heroic Poetry Oxford, 1968 4. Periakaruppan, Rm. Tradition and Talent in Cankam Poetry, Madurai: Madurai Publishing House, 1976. 5. Meenakshisundaram, T.P., “The Theory of Poetry in Tolkappiyam” in Prof. T.P. Meenakshisundaram SIxtry - First Birthday Commemoration Volume. Annamalainagar; Annamalai University, January, 1961. 6. Eliot, T.S., “The Function of Criticism in selected Essays, London; faber and Fber Limited, 1923. 7. nfhyÇ£{ jkJ “Shakespeare’s Judgement Equal to His Genius” v‹w f£LiuÆš ca®ªj fÉPÅ‹ jFâfis ï«KiwÆš ÉtǤjiy¡ fhzyh«. ï¡f£Liu Critical Theory Since Plato, ed. Hazard Adamsï New York: Harcourt Brace Jovanovich Inc. v‹w bjhFâÆš ïl« bg‰W cŸsJ. 8. fiyÆ‹ ga‹g‰¿a Éthj¢ RU¡f¤ij Wimsett Jr., Celanth Brooks vGâa Literary Criticism: A Short History v‹w üÈš Art for Art’s Sake v‹w m¤âaha¤âš fhzyh«. 9. Eliot, T.S. “Hamlet and His Problems in Critical Theory Since Plato, ed. Hazard Adams, New York, Harcourt Brace Jovanovich, Inc.l, 1971. 10. Coleridge, S.Tg., “Biographia Literaraia” in Critical Theory SInce Plato, P. 417. 11. Coleridge, S.T., “Biographia Literaria” In Critical Theory Since Plato. P. 471. 12. Coleridge, S.T., “Biographia Literaraia” In Critical Theory SInce Plato P. 471. 13. Frodsham. J.D. “Landscape Poetry in China and Europe Comparative Literature Vol. XIX, Number 3, Summer 1967, . 193. 14. bjhšfh¥ãa«, bghUsâfhu«, brŒíËaš, ü‰gh¡fŸ 108, 109, 110. 15. Coleridge S.T. “Biographia Leteraria” in Critical theory Since Plato, P. 471. 16. Poe, Edgar Allan. The poetic principle in Critical Theory Since Plato p. 584. 17. Shelly, P.B. “A Defence of poetry in Critical Theory Since Plato” p. 511. but when composition begins, Inspiration is already on the decline’ v‹gJ bõšÈÆ‹ T‰W. 18. Eliot, T.S., “Tradition and the Indi: Vidual Talent” Critical Theory since Plato, P. 785. 19. Kenner, Hugh, “Bradley” in T.S. Eliot A Collectgion of Critical Essays, Englewood, Clifts, N.J: Prentic - Hall, Inc., 1962. 20. மில்டன் பற்றிய எலியட்டின் மதிப்பீட்டை அவரது On poetry and poets என்ற கட்டுரைத் தொகுப்பில்‘Milton I’, ‘Milton II என்ற இரண்டு கட்டுரைகளிலும் காணலாம். 21. காட்சிஉருக்களின் முக்கியத்துவம்பற்றியலீவிஸின் கருத்துக்களை அவரது “Keats Literery Criticism and philosophy”போன்ற கட்டுரைகளில் காணலாம். 22. பவுண்டின் கவிதைபற்றிய கருத்துக்களை Faber and Faber வெளியிட்டுள்ள Litgerary Essays of Ezra Pound என்ற நூலின் கட்டுரைகளில் காணலாம். - வீ. அரசு தொல்காப்பியக் கையேடு, (ஆய்வு-பதிப்பு-மொழிபெயர்ப்பு) நூற்பா நிரல் (நூற்பா எண்) அஃதன் றென்ப 387 அஃதொழித் தொன்றின் 398 அகக்கா ழனவே 631 அகத்திணை மருங்கின் 59 அகப்பாட்டு வண்ணம் 525 அகவ லென்பது 386 அகன்று பொருள் 511 அகைப்பு வண்ணம் 530 அங்கதந் தானே 429 அங்கதப் பாட்டளவு 461 அச்சமும் நாணும் 96 அசைகூன் ஆகும் 355 அசையுஞ் சீரும் 319 அடக்கியல் வாரம் 447 அடிஇறந்து வருதல் 342 அடிதொறுந் தலையெழுத்து 397 அடிநிமிர் கிளவி 484 அடியின் சிறப்பே 343 அடியுள் ளனவே 341 அடியோர் பாங்கினும் 25 அடுக்கிய தோற்றம் 309 அடைநிலைக் கிளவி 440 அணங்கே விலங்கே 252 அதுவே, வண்ணகம் 443 அதுவே... இருநால் 67 அதுவே... இருவகை 476 அதுவே... ஒருநால் 469 அதுவே... பிசியொடு 483 அந்த ணாளர்க் கரசு 627 அந்த ணாளர்க் குரியவும் 617 அந்தமில் சிறப்பின் 239 அந்நிலை.. அறமுத 411 அந்நிலை...வஞ்சி 339 அம்பலும் அலருங் 137 அம்போ தரங்கம் 454 அமரர்கண் முடியும் 79 அயலோர் ஆயினும் 41 அருண்முந் துறுத்த 159 அல்குல் தைவரல் 259 அலரின் தோன்றுங் 161 அல்லகுறிப் படுதலும் 131 அவ்வவ மாக்களும் 510 அவ்வியல் பல்லது 391 அவற்றுட், பாஅ 515 அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி 436 அவற்றுள், ஓதலுந் தூதும் 28 அவற்றுள், சூத்திரம் 471 அவற்றுள், நடுவண் ஐந்திணை 2 அவற்றுள், நூலெனப்படுவது 468 அவற்றுள், பார்ப்பும் 548 அவற்றுள், மாத்திரை 311 அவன்குறிப் பறிதல் 157 அவன்சோர்வு காத்தல் 172 அவன்வரம் பிறத்தல் 118 அவனறி வாற்ற 145 அவைதாம், அன்ன 282 அவைதாம், நூலி னான 467 அவைதாம், பாஅ 514 அவையடக் கியலே 418 அவையும் உளவே 265 அளபெடை அசைநிலை 325 அளபெடை தலைப்பெய 394 அளபெடை வண்ணம் 520 அளபெழின் அவையே 402 அளவடி மிகுதி 365 அளவியல் வகையே 465 அளவுஞ் சிந்தும் 364 அறக்கழி வுடையன 214 அறத்தொடு நிற்குங் 203 அறுசீர் அடியே 370 அறுவகைப் பட்ட 74 அன்புதலைப் பிரிந்த 177 அன்புறு தகுவன 227 அன்ன பிறவும் 263 அன்ன ராயினும் 629 அன்ன வகையான் 126 அன்ன வாங்கு 283 அன்னஎன் கிளவி 284 அன்னை என்னை 242 ஆங்கவை, ஒருபால் 256 ஆங்கனம் விரிப்பின் 358 ஆங்காங் கொழுகும் 132 ஆசிரிய நடைத்தே 413 ஆசிரிய மருங்கினும் 373 ஆசிரியப் பாட்டின் 459 ஆசிரியம் வஞ்சி 410 ஆண்பால் எல்லாம் 595 ஆய்பெருஞ் சிறப்பின் 122 ஆயர் வேட்டுவர் 23 ஆயிரு தொடைக்கும் 399 ஆவும் எருமையும் 564 ஆற்றது பண்பும் 168 ஆற்றலொடு புணர்ந்த 594 ஆறின தருமையும் 134 இசைதிரிந் திசைப்பினும் 193 இசைநிலை நிறைய 335 இடித்துவரை நிறுத்தலும் 153 இடைச்சுர மருங்கிற் 495 இடைநிலை... தரவகப் 439 இடைநிலை... தரவு 437 இடையிரு வகையோர் 621 இடையும் வரையார் 375 இதுநனி பயக்கும் 504 இமையோர் தேஎத்தும் 244 இயங்குபடை அரவம் 65 இயலசை ஈற்றுமுன் 324 இயலசை மயக்கம் 321 இயலசை முதலிரண்டு 314 இயற்சீர் இறுதிமுன் 327 இயற்சீர் பாற்படுத்து 336 இயற்சீர் வெள்ளடி 368 இயைபு வண்ணம் 519 இரட்டைக் கிளவியும் 293 இரந்து குறையுற்ற 233 இரலையுங் கலையும் 590 இரவுக் குறியே 129 இருசீர் இடையிடின் 404 இருவகை உகரமோடு 313 இருவகைக் குறிபிழைப்பு 105 இருவகைப் பிரிவும் 13 இலையே முறியே 633 இவ்விடத் திம்மொழி 508 இழிவே இழவே 249 இழுமென் மொழியான் 539 இறப்பே நிகழ்வே 503 இறுவாய் ஒப்பினஃது 401 இறைச்சி தானே 225 இறைச்சியிற் பிறக்கும் 226 இன்சீ ரியைய 338 இன்பத்தை வெறுத்தல் 266 இன்பமும் இடும்பையும் 509 இன்பமும் பொருளும் 89 இனிதுறு கிளவியும் 301 ஈரசை கொண்டும் 320 ஈற்றயல் அடியே 374 உடம்பும் உயிரும் 300 உடனுறை உவமம் 238 உண்டற் குரிய 210 உணர்ப்புவரை இறப்பினும் 154 உய்த்துணர் வின்றிட் 505 உயர்ந்ததன் மேற்றே 274 உயர்ந்தோர் கிளவி 213 உயர்ந்தோர் பொருள்வயின் 36 உயர்ந்தோர்க் குரிய 33 உயர்மொழிக் கிளவி 234 உயர்மொழிக் கிளவியும் 236 உயிரில் லெழுத்தும் 351 உயிரினும் சிறந்தன்று 111 உயிரும் நாணும் 198 உரிப்பொருள் அல்லன 15 உருட்டு வண்ணம் 533 உரையெடுத் தன்முன் 445 உவமப் பொருளின் 291 உவமப் பொருளை 292 உவமப் போலி 295 உவமமும் பொருளும் 279 உவமைத் தன்மையும் 307 உழிஞை தானே 66 உழைக்குறுந் தொழிலும் 169 உள்ளுறுத்து இதனோடு 51 உள்ளுறை உவமம் 49 உள்ளுறை தெய்வம் 50 உற்றுழி யல்லது 205 உறுகண் ஓம்பல் 235 உறுப்பறை குடிகோள் 254 ஊரும் அயலுஞ் 492 ஊரும் பெயரும் 619 ஊரொடு தோற்றமும் 83 எஞ்சி யோர்க்கு 45 எண்ணரும் பாசறைப் 173 எண்ணிடை ஒழிதல் 449 எண்ணு வண்ணம் 529 எண்வகை இயனெறி 506 எத்திணை மருங்கினும் 38 எதிர்மறுத் துணரின் 655 எந்நில மருங்கின் 21 எருத்தே கொச்சகம் 455 எருதும் ஏற்றையும் 546 எருமையும்...நாகே 607 எல்லா உயிர்க்கும் 219 எல்லா வாயிலும் 176 எழுசீ ரடியே 371 எழுசீர் இறுதி 381 எழுத்தள வெஞ்சினுஞ் 350 எழுத்து முதலா 383 எழுத்தொடுஞ்சொல்லொடும் 481 எழுநிலத் தெழுந்த 466 எள்ள விழையப் 285 எள்ளல் இளமை 248 எளித்தல் ஏத்தல் 204 எற்பாடு. நெய்தல் 10 ஏந்தல் வண்ணம் 532 ஏமப் பேரூர்ச் 40 ஏவல் மரபின் 26 ஏழெழுத் தென்ப 345 ஏற்புடைத் தென்ப 583 ஏறிய மடல்திறம் 54 ஏனை உவமம் 52 ஏனை யொன்றே 442 ஏனைப் பிரிவும் 188 ஏனோர் மருங்கினும் 24 ஏனோர்க் கெல்லாம் 300 ஐவகை...ஆசிரியக் 359 ஐவகை...விரிக்குங் 357 ஒட்டகங் குதிரை 597 ஒட்டகம் அவற்றோடு 562 ஒண்தொடி மாதர் 494 ஒத்த காட்சி 656 ஒத்த சூத்திரம் 644 ஒத்தா ழிசைக்கலி 435 ஒத்தா ழிசையும் 420 ஒத்துமூன் றாகும் 446 ஒப்பும் உருவும் 243 ஒப்பொடு புணர்ந்த 478 ஒரீஇக் கூறலும் 306 ஒருசார் விலங்கும் 578 ஒருசிறை நெஞ்சோடு 201 ஒருசீ ரிடையிட்டு 403 ஒருதலை உரிமை 221 ஒருநெறி இன்றி 473 ஒருநெறிப் பட்டாங்கு 502 ஒருபாற் கிளவி 218 ஒருபான் சிறுமை 453 ஒருபோ கியற்கையும் 450 ஒரூஉ வண்ணம் 528 ஒழிந்தோர் கிளவி 496 ஒழுகு வண்ணம் 527 ஒற்றள பெடுப்பினும் 326 ஒற்றெழுத் தியற்றே 316 ஒற்றொடு புணர்ந்த 543 ஒன்றறி வதுவே 571 ஒன்றாத் தமரினும் 44 ஒன்றே மற்றுஞ் 477 ஒன்றே வேறே 90 ஓதல் பகையே 27 கட்டுரை வகையான் 428 கடமையும் மரையும் 565 கடல்வாழ் சுறவும் 586 கடுப்ப ஏய்ப்ப 286 கண்ணியுந் தாரும் 624 கண்ணினுஞ் செவியினுந் 271 கணையும் வேலும் 71 கரணத்தின் அமைந்து 144 கலந்த பொழுதும் 18 கல்வி தறுகண் 253 கலித்தளை மருங்கிற் 332 கலித்தளை யடிவயின் 333 கலிவெண் பாட்டே 462 கலையென் காட்சி 591 கவரியும் கராகமும் 561 கழிவினும் நிகழ்வினும் 151 களவல ராயினுங் 113 களவுங் கற்பும் 160 கற்புங் காமமும் 150 கற்புவழிப் பட்டவள் 229 கற்பெனப் படுவது 140 கனவும் உரித்தால் 195 காஞ்சி தானே 76 காமக் கடப்பினுள் 158 காமக் கூட்டம் 117 காமஞ் சாலா 53 காமஞ் சான்ற 190 காமஞ் சொல்லா 107 காமத் திணையிற் 106 காமநிலை யுரைத்தலும் 175 காமப் பகுதி 81 காமப் புணர்ச்சியும் 487 காயே பழமே 634 காரும் மாலையும் 6 கிழக்கிடும் பொருளோடு 576 கிழவன் தன்னொடும் 493 கிழவி சொல்லின் 297 கிழவி நிலையே 184 கிழவி முன்னர்த் 179 கிழவோட் குவமை 302 கிழவோள் பிறள்குணம் 230 கிழவோற்... இடம் 303 கிழவோற்... உரனொடு 299 கிழவோன் அறியா 115 கிழவோன் விளையாட் 162 கிளரியல் வகையின் 485 குஞ்சரம் பெறுமே 563 குட்டம் எருத்தடி 421 குட்டியும் பறழுங் 554 குடையும் வாளும் 69 குரங்கினுள் ஏற்றைக் 613 குரங்கு... ஊகமும் 612 குரங்கும்... மூன்றும் 566 குழவி மருங்கினும் 82 குழவியும் மகவும் 567 குறளடி முதலா 363 குற்றிய லுகரமும் 318 குறிஞ்சி கூதிர் 7 குறித்தெதிர் மொழிதல் 181 குறிப்பே குறித்தது 94 குறியெனப் படுவது 128 குறிலே நெடிலே 312 குறுஞ்சீர் வண்ணங் 522 குறையுற உணர்தல் 125 கூதிர் வேனில் 75 கூழை விரித்தல் 258 கூற்றும் மாற்றமும் 458 கேழற் கண்ணும் 580 கைக்கிளை தானே 424 கைக்கிளை முதலாப் 1 கைக்கிளை... ஏழ்பெருந் 486 கொச்சக ஒருபோகு 451 கொச்சகம் அராகஞ் 426 கொடிநிலை கந்தழி 85 கொடுப்போர் இன்றியுங் 141 கொடுப்போர் ஏத்திக் 87 கொண்டுதலைக் கழிதலும் 17 கொள்ளார் தேஎம் 68 கொற்ற வள்ளை 86 கோடுவாழ் குரங்கு 557 கோழி கூகை 600 சித்திர வண்ணம் 523 சிதலும் எறும்பும் 574 சிதைவில என்ப 652 சிதைவெனப் படுபவை 654 சிறந்துழி ஐயம் 91 சிறப்பே நலனே 275 சின்மென் மொழியான் 536 சினனே பேதைமை 241 சீர்கூன் ஆதல் 356 சீர்நிலை தானே 349 சீரியல் மருங்கின் 362 சுட்டிக் கூறா உவம 278 சுரமென மொழிதலும் 212 சூத்திரத் துட்பொருள் 649 சூழ்தலும் உசாத்துணை 124 செம்பொரு ளாயின் 430 செய்பொரு ளச்சமும் 228 செய்யுட் டாமே 432 செய்யுண் மருங்கின் 544 செய்யுண் மொழியாற் 537 செல்வம் புலனே 255 செலவிடை அழுங்கல் 183 செவியுறை தானே 419 செறிவும் நிறைவும் 206 சேவற் பெயர்க்கொடை 593 சொல்லப் பட்டன 651 சொல்லிய கிளவி 152 சொல்லிய தொடையொடு 405 சொல்லிய மரபின் 570 சொல்லெதிர் மொழிதல் 108 சொல்லொடுங் குறிப்பொடும் 507 சொற்சீ ரடியும் 427 ஞகார முதலா 541 ஞாயிறு திங்கள் 501 தடுமாறு வரலும் 308 தத்த மரபின் 288 தந்தையுந் தன்னையும் 135 தம்முறு விழுமம் 231 தரவின் றாகி 452 தரவும் போக்கும் 457 தரவே தானும் நாலடி 438 தரவே தானும் நான்கும் 445 தலைமைக் குணச்சொலுந் 620 தலைவரும் விழும 42 தவலருஞ் சிறப்பி 296 தவழ்பவை தாமும் 549 தற்புகழ் கிளவி 178 தன்சீர் எழுத்தின் 353 தன்சீர் வகையினுந் 361 தன்பா அல்வழி 329 தன்வயிற் கரத்தலும் 202 தன்னும் அவனும் 39 தன்னுறு வேட்கை 116 தனிக்குறில் முதலசை 315 தாஅ வண்ணம் 516 தாய் அறிவுறுதல் 136 தாய்க்கும் உரித்தால் 196 தாய்க்கும் வரையார் 114 தாயத்தின் அடையா 217 தாய்போற் கழறி 171 தாவில் நல்லிசை 88 தானே சேறலுந் 29 தானை யானை 72 திணைமயக் குறுதலும் 14 தும்பை தானே 70 துள்ளல் ஓசை 388 துன்புறு பொழுதினும் 182 தூக்கியல் வகையே 392 தூங்கல் ஓசை 389 தூங்கல் வண்ணம் 531 தெய்வம் அஞ்சல் 268 தெய்வம் உணாவே 20 தெரிந்த மொழியான் 542 தெரிந்தனர் விரிப்பின் 407 தெரிந்துடம் படுதல் 261 தேரும் யானையுங் 209 தொகுத்தல் விரித்தல் 643 தொடைநிலை வகையே 408 தொல்லவை உரைத்தலுங் 166 தொன்மை தானே 538 தோடே மடலே 632 தோழி தாயே 191 தோழி தானே 123 தோழிக் காயின் 298 தோழியின் முடியும் 119 தோழியும் செவிலியும் 304 தோழியுள் ளுறுத்த 147 நகையே அழுகை 247 நடுவுநிலைத் திணையே 11 நண்டுந் தும்பியும் 575 நந்தும் முரளும் 573 நரியும் அற்றே 553, 611 நலிபு வண்ணம் 524 நாடக வழக்கினும் 56 நாட்டம் இரண்டும் 93 நாயே பன்றி 552 நாலிரண் டாகும் 246 நாலிரண்டாகும் பாலுமா 289 நாலெழுத் தாதி 344 நாற்சீர் கொண்டது 340 நாற்றமும் தோற்றமும் 112 நிகழ்தகை மருங்கின் 224 நிகழ்ந்தது கூறி 47 நிகழ்ந்தது நினைத்தற்கு 46 நிம்பிரி கொடுமை 270 நிரனிறுத் தமைத்தலும் 396 நிரைமுதல் வெண்சீர் 366 நிரையவண் நிற்பின் 380 நிலம்தீ நீர்வளி 635 நிலம்பெயர்ந் துரைத்தல் 167 நிறைமொழி மாந்தர் 480 நீர்வாழ் சாதியும் 588 நீர்வாழ் சாதியுள் 608 நுண்மையுஞ் சுருக்கமும் 479 நூலே கரகம் 615 நெடுஞ்சீர் வண்ணம் 521 நெடுவெண்... குறுவெண் 423 நெடுவெண்... முந்நான் 460 நெல்லும் புல்லும் 569 நேரவண் நிற்பின் 323 நேரின மணியை 472 நேரீற் றியற்சீர் 379 நோயும் இன்பமும் 194 பகற்புணர் களனே 130 படையியங்கு அரவம் 61 படையுங் கொடியுங் 616 பண்ணைத் தோன்றிய 245 பண்பிற் பெயர்ப்பினும் 100 பட்தெழுத் தென்ப 346 பரத்தை மறுத்தல் 156 பரத்தை... எனவிரு 499 பரத்தை... நால்வர்க்கும் 220 பரிசில் பாடாண் 618 பரிபா...தொகைநிலை 425 பரிபா...நாலீரைம்பது 464 பழிப்பில் சூத்திரம் 647 பறழெனப் படினும் 551 பன்றி...உழையே 584 பன்றி...நாயென 603 பன்னூறு வகையினும் 121 பனிஎதிர் பருவமும் 8 பாங்கர் நிமித்தம் 01 பாட்டி என்ப 610 பாட்டிடை வைத்த 475 பாட்டிடைக் கலந்த 482 பாட்டுரை நூலே 384 பாடாண் பகுதி 78 பாணன் கூத்தன் 491 பார்ப்பார் அறிவர் 498 பார்ப்பான் பாங்கன் 490 பாராட் டெடுத்தல் 260 பால்கெழு கிளவி 197 பாவிரி மருங்கினைப் 412 பிடியென் பெண்பெயர் 596 பிணவல் எனினும் 604 பிள்ளை குழவி 568 பிள்ளைப் பெயரும் 555 பிறப்பே குடிமை 269 பிறிதொடு படாது 294 பின்பனி தானும் 12 பின்முறை ஆகிய 170 பின்னர் நான்கும் 103 புகழொடும் பொருளொடும் 433 புகுமுகம் புரிதல் 257 புணர்தல் பிரிதல் 16 புணர்ந்துடன் போகிய 146 புதுமை பெருமை 251 புல்லுதல் மயக்கும் 149 புல்லும் மரனும் 572 புல்வாய் நவ்வி 602 புல்வாய் புலிஉழை 581 புலத்தலும் ஊடலும் 155 புள்ளும் உரிய 598 புறக்கா ழனவே 630 புறஞ்செயச் சிதைதல் 262 புறத்திணை மருங்கின் 58 புறத்தோ ராங்கண் 174 புறநிலை வாயுறை 463 புறப்பாட்டு வண்ணம் 526 பூப்பின் புறப்பா 185 பெண்ணும் ஆணும் 614 பெண்ணும் பிணவு 606 பெண்பா லான 601 பெயரும் வினையுமென்று 22 பெருமையுஞ்...சிறப்பின் 281 பெருமையுஞ்...மெய்ப்பாடு 290 பெருமையும் உரனும் 95 பெறற்கரும் பெரும்பொருள் 148 பெற்றம் எருமை 587 பெற்றமும் எருமையும் 605 பொய்யும் வழுவும் 143 பொருள்...ஒருபொருள்...வெள்ளடி 456 பொருள்வயின் பிரிதலும் 35 பொருளென மொழிதலும் 211 பொருளே யுவமஞ் 280 பொழிப்பும் ஒரூஉம் 395 பொழுது தலைவைத்த 232 பொழுது மாறும் 43 பொழுதும் ஆறுங் 207 போக்கியல் வகையே 441 பேடையும்...பெட்டையும் 547 போல மறுப்ப 287 மக்கட்டாமே 577 மக்கள் நுதலிய 57 மகவும் பிள்ளையும் 558 மங்கல மொழியும் 240 மண்டிலங் குட்டம் 422 மயிலும் எழாஅலும் 589 மரபுநிலை திரிதல் 636 மரபுநிலை திரியின் 637 மரபுநிலை...உரைபடு 639 மரபுநிலை...விரவும் 48 மரபே தானும் 385 மருட்பா ஏனை 390 மறங்கடைக் கூட்டிய 62 மறுதலைக் கடாஅ 650 மறைந்த ஒழுக்கட் 133 மறைந்தவற் காண்டல் 109 மறைவெளிப் படுதலும் 488 மன்னர் பாங்கின் 32 மனையோள் கிளவியுங் 497 மனைவி உயர்வுங் 223 மனைவி தலைத்தாள் 163 மனைவி முன்னர்க் 164 மாட்டும் எச்சமும் 512 மாத்திரை முதலா 409 மாத்திரை யெழுத்தியல் 310 மாயோன் மேய 5 மாவும் புள்ளும் 576 மாற்றருங் கூற்றம் 77 மாற்றருஞ் சிறப்பின் 545 மிக்க பொருளினுள் 215 முச்சீ ரானும் 354 முச்சீர் முரற்கையுள் 376 முட்டுவயிற் கழறல் 267 முடுகியல் வரையார் 372 முடுகு வண்ணம் 534 முதல் எனப் படுவது 4 முதல்எனப் படுவ 19 முதல்கரு உரிப்பொருள் 3 முதல்வழி யாயினும் 653 முதலுஞ் சினையுமென்று 277 முதலொடு புணர்ந்த 104 முதற்றொடை பெருகிச் 448 முந்நா ளல்லது 120 முந்நீர் வழக்கம் 37 முயற்சிக் காலத்து 127 முற்றிய லுகரமும் 317 முன்நிரை இறினும் 322 முன்னிலை யாக்கல் 98 முன்னிலைப் புறமொழி 165 முன்னைய நான்கும் 55 முன்னைய மூன்றும் 102 மூங்கா வெருகெலி 550 மூடுங் கடமையும் 609 மூப்பே பிணியே 250 மூவா றெழுத்தே 348 மூவைந் தெழுத்தே 347 மூன்றுறுப் படக்கிய 474 மெய்தெரி வகையின் 623 மெய்தொட்டுப் பயிறல் 99 மெய்ப்பெயர் மருங்கின் 84 மெய்பெறு மரபின் 406 மெய்பெறும் அவையே 489 மெல்லிசை வண்ணம் 518 மேலோர் முறைமை 31 மேலோர் மூவர்க்கும் 142 மேவிய சிறப்பின் 30 மேற்கிளந் தெடுத்த 646 மொழிஎதிர் மொழிதல் 180 மொழிகரந்து மொழியின் 431 மொழியினும் பொருளினும் 400 மோத்தையுந் தகரும் 592 மோனை எதுகை 393 யாடுங் குதிரையும் 556 யாறுங் குளனுங் 559 யானையுங் குதிரையுங் 559 வசையொடும் நசையொடும் 434 வஞ்சி அடியே 352 வஞ்சி தானே 64 வஞ்சி மருங்கின் 330 வஞ்சி மருங்கினும் 334 வஞ்சிச் சீரென 328 வஞ்சித் தூக்கே 377 வண்டே இழையே 92 வண்ணகம் தானே 444 வண்ணந் திரிந்து 199 வண்ணந்...அவையென 535 வண்ணந்...நாலைந்து 513 வருத்த மிகுதி 222 வரைவிடை வைத்த 110 வல்லிசை வண்ணம் 517 வழக்கியல் மருங்கின் 80 வழக்கெனப் படுவது 638 வழிபடு தெய்வம் 415 வழியின் நெறியே 642 வழியெனப் படுவது 641 வாகை தானே 73 வாயில் உசாவே 500 வாயிற் கிளவி 237 வாயுறை...அவையடக்கு 416 வாயுறை...வயங்க 417 வார்கோட்டி யானையும் 582 வாழ்த்தியல் வகையே 414 விட்டகல் வின்றி 648 விரவியும் வரூஉம் 273 விராஅய தளையு 367 விராஅய் வரினும் 360 விருந்தே தானும் 540 வில்லும் வேலுங் 628 வினைபயன் மெய்உரு 272 வினையின் நீங்கி 640 வினையுயிர் மெலிவிடத்து 264 வினைவயின் பிரிந்தோன் 192 வெண்சீர் ஈற்றசை 337 வெண்டளை விரவியும் 369 வெண்பா இயலினும் 382 வெண்பா ஈற்றடி 378 வெண்பா உரிச்சீர் 331 வெளிப்பட வரைதல் 138 வெளிப்படை தானே 139 வெறியறி சிறப்பின் 63 வேட்கை ஒருதலை 97 வேட்கை மறுத்துக் 208 வேண்டிய கல்வி 186 வேந்துவிடு தொழிலின் 626 வேந்துவிடு முனைஞர் 60 வேந்துவினை இயற்கை 34 வேந்துறு தொழிலே 187 வேழக் குரித்தே 579 வேளாண் மாந்தர்க்கு 625 வேறுபட வந்த 305 வைகறை விடியல் 9 வைசியன் பெறுமே 622 செய்யுள் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஃகாமை செல்வத்துக் (குறள். 178) 524 அகத்தன வாழ்கழல் (வெண்பா. நொச்சி. 7) 69 அகலிரு விசும்பிற் (பெரும்பாண். 1) 286, 359 அகவல் இசையன (யாப். வி.ப. 69) 422 அகழ்வாரைத் தாங்கும் (குறள். 151) 75 அகனகர் கொள்ளா (கலித். 19) 241 அகன்ற அல்குல் (யாப். வி.ப. 130) 407 அங்கண் மதியம் 24 அங்கையுள் நெல்லி (வெண்பா. கரந்தை. 13) 63 அசைஇயற்கு உண்டாண்டோர் (குறள். 1098) 94 அசைஇயற்கு உண்டாண்டோர் (குறள். 1098) 238 அஞ்சுவல் வாழி 45 அடக்கமில் போழ்தின்கண் (கலித். 82) 104, 149 அடல்வேல் அமர்நோக்கி (யாப். வி.ப. 182) 405 அடிசிற் கினியாளை 151 அடிதாங்கும் அளவின்றி (கலித். 11) 227, 365, 398 அடுக்கி வரினு (குறள். 625) 256 அடுதிறல் ஒருவநிற் (யாப். வி.ப. 83) 85 அடுநை ஆயினும் (புறம். 36) 68 அடும்பம லங்கொடி (ஐங்குறு. தனி. 6) 109 அடும்பவிழ் அணிமலர் 145 அடும்புகழ் பாடி (வெண்பா. பொது. 13) 63 அடைமரை யாயிதழ்ப் (கலித். 84) 273, 277 அணங்குகொல் ஆய்மயில் (குறள். 1081) 256 அணங்குடைப் பனித்துறைத் (ஐங்குறு. 174) 100 அண்ணாந் தேந்திய (நற். 10) 503 அணிகடல் தண்சேர்ப் (ஐந்திணையைம். 50) 109 அணிநிறக் கெண்டை 148 அணிமலர் அசோகின் (யாப். வி.ப. 130) 407 அணியாய செம்பழு 87 அணிற்பல் அன்ன (குறுந். 49) 145 அணைமருன் இன்றுயில் (கலித். 14) 224 அதிரிசை யருவிய 144 அதுகொல் தோழி (குறுந். 5) 109 அதுதான் மலையே 426 அந்தணர் ஆவொடு (முத்தொள். 82) 88 அந்தணர் சான்றோர் (வெண்பா. பாடாண். 33) 87 அம்பொற் கொடிஞ்சி (யாப். வி.ப. 130) 404 அம்ம வாழியோ 112 அம்ம...நம்மொடு (ஐங்குறு. 230) 112 அம்ம...நல க (ஐங்குறு. 120) 109 அம்ம...நலனே (ஐங்குறு. 117) 109 அம்ம...காதலர (ஐங்குறு. 221) 527 அம்ம...காதல221) 109 அம்ம... மாண் (ஐங்குறு. 115) 109 அம்ம...மலர (ஐங்குறு. 244) 112 அமர்காணின் அமர் (புறம். 167) 359 அயிரை பரந்த (குறுந். 256) 148 அயில்வேல் அனுக்கி (யாப். வி.ப. 130) 407 அரம்போழ் அவ்வளை (அகம். 125) 30 அரவின் பொறியும் (கலித். 50) 112 அராகந் தாமே (அகத்தியம்) 426 அரிக்குரற் கிண்கிணி (யாப். வி.ப. 130) 403 அரிகொண்ட கண்சிவப்ப (வெண்பா பாடாண். 49) 81 அரிதரோ தேற்ற (குறள். 1153) 45 அரிதாய அறன்எய்தி (கலித். 11) 256, 365, 388 அரிதாற்றி அல்லல் (குறள். 1110) 148 அரிமான் டித்தன்ன 376 428 அரிமான் அன்ன (பட்டினப். 298) 274, 275 அரிற்பவர்ப் பிரம்பின் (குறுந். 91) 149 அருங்கடி அன்னை (நற். 365) 109 அரும்பிய கொங்கை (யாப். வி.ப. 131) 407 அரும்பிற்கு முண்டோ (வெண்பா. இருபாற் பெருந். 19) 54 அரும்பெறற் காதல் 44 அருவி ஆர்க்கும் (நற். 213) 99 அருளும் அன்பும் அல்கன்மழை பொழிந்த (ஐங்குறு. 220) 112 அலந்தாரை யல்லல் (குறள். 1303) 45 அவர்நெஞ் சவர்க்காதல் (குறள். 1291) 194 அவரும் தெரிகணை (கலித். 39) 136 அவருள் மலர்மலி 455 அவரே கேடில் 356 அவரை பொருந்திய (ஐந்திணை யெழு. 1) 88 அவ்வியானை வனப்புடை (கலித். 97) 202 அவன்மறை தேஎம் (அகம். 48) 234 அவாப்போ லகன்றதன் 281, 290 அவிர்மதி அனைய (யாப். வி.ப. 131) 407 அழியல் ஆயிழை (குறுந். 143) 112 அழிவில முயலும் (நற். 9) 44 அழிவின் அவைநீக்கி (குறள். 787) 75 அழிவின்று அறைபோகா (குறள். 764) 75 அழுக்கா றெனவொரு (குறள். 168) 256 அழுங்கல்நீர் வையகத்து (வெண்பா. கரந்தை. 1) 63 அழுந்துபட வீழ்ந்த (நற். 2) 43 அளந்த திறையார் (வெண்பா. பாடாண். 9) 88 அளிதோ தானே (குறுந். 1049) 111 அளிதோ தானே (புறம். 109) 67 அளிநிலை பொறாஅது (அகம். 5) 144 அறங்கூறான் அல்ல (குறள். 181) 75 அறஞ்சா லியரோ (ஐங்குறு. 312) 45 அறஞ்சாரா நல்குரவு (குறள். 1047) 250 அறத்திற்கே அன்பு (குறள். 76) 89 அறத்தினூஉங் காக்கமு (குறள். 32) 44 அறட்தொடு நின்றேனை (கலித். 39) 136 அறம்புரி அருமறை (ஐங்குறு. 387) 43 அறவினை யாதெனிற் (குறள். 321) 75 அறன்இன்றி அயல் (கலித். 3) 148 அறனின்ற விதையொழியா (யாப். வி.பக். 468) 365 அறனு மீகையு 44 அறிகிலா ரெல்லாரும் (குறள். 1139) 99 அறிமி னறநெறி (நாலடி. 172) 409 அறியாமையின் (நற். 50) 110 அறியாய் வாழி (அகம். 59) 24 அறிவினான் ஆகுவ (குறள். 315) 536 அறுசுவை உண்டி (நாலடி. செல்வம். 1) 409, 423 அன்பீனும் ஆர்வம் (குறள். 74) 407 அன்றெறிந் தானும் (வெண்பா. உழிஞை. 7) 85 அன்ன மரபி 428 அன்னாய் அறங்கொல் (யாப். வி.ப. 244) 484 அன்னாய் இவனோர் (ஐங்குறு. 33) 242 அன்னாய் இவனோர் (ஐங்குறு. 33) 145 அன்னாய் நின்மகள் (அகம். 48) 112 அன்னாய் வாழிவேண்டு (அகம். 48) 205 அன்னாய் வாழிவேண்டு (ஐங்குறு. 201) 112 அன்னாய்....தோ (ஐங்குறு. 215) 112 அன்னை அறியினும் (அகம். 110) 112 அன்னை கடுஞ்சொல் (கலித். 90) 104 அன்னை...முழபகு (ஐங்குறு. 105) 112 அன்னை..n.9னை (ஐங்குறு. 110) 109 அன்னையும் அறிந்தனள் (ஐங்குறு. 238) 112 அன்னையோ மன்றத்துக் (கலித். 110) 109 அனைத்தினிப் பெரும (கலித். 149) 452 ஆ ஆங்கதை அறிந்தனிர் (கலித். 133) 452 ஆசாகு எந்தை (புறம். 307) 72 ஆடியல் அழற்கு (புறம். 229) 88 ஆடியல் விழவின் (நற். 90) 145 ஆடுநனி மறந்த (புறம். 164) 88 ஆண்டலைக் கீன்ற (கலித். மருதம். 29) 55 ஆம்பல் நாறுந் (குறுந். 300) 272 ஆமா சிலைக்கும் (கைந்நிலை. 18) 148 ஆயிரம் விரித்த 428 ஆயும் அடுதிறலாற் (வெண்பா. காஞ்சி. 19) 77 ஆயும் அறிவினர் (குறள். 918) 256 ஆர்களிறு மிதித்த (குறுந். 52) 105 ஆவா என்றே (யாப். வி.ப. 136) 407, 484 ஆவும் ஆனியற் (புறம். 9) 65, 87 ஆளமர் வெள்ளம் (வெண்பா. கரந்தை. 11) 63 ஆள்வழக் கற்ற (அகம். 51) 144 ஆளி மணிக்கொடிப் (வெண்பா. வெட்சி. 80) 62 ஆற்றவுங் கற்றார் (பழமொழி. 116) 74 ஆறறி அந்தணர்க் (கலித். 1. வாழ்த்து) 399, 441 ஆற்றுத லென்பதொன் 452 ஆறுசூடி நீறுபூசி 359 ஆறுசெல் வருத்தஞ் 44 ஆன்ற கேள்வி (புறம். 26) 74 ஆனா ஈகை (புறம். 42) 68 இ இகல்வேந்தன் சேனை (கலித். 108) 109 இகலே துணையா (வெண்பா. வெட்சி. 8) 61 இடம்படு ஞால (வெண்பா. சிறப்பிற் பொது. 5) 75 இடிக்குங் கேளிர் (குறுந். 58) 99 இடுக ஒன்றோ (புறம். 239) 377 இடுமணல் எக்கர் (ஐந்திணையெழு. 57) 112 இடைநுடங்க வீர்ங்கோதை 325 இணர்ததை ஞாழல் (பதிற்று. 30) 65 இணை பிரியணி 428 இதன்பயம் 249 இதுஎன் பாவைக் (ஐங்குறு. 375) 40 இதுமற் றெவனோ (குறுந். 181) 148 இந்திரன் . (முத்தொள்.) 63 இந்திரனே போலும் (யாப். வி. ஒழி) 281 இம்மை உலக (அகம். 66) 170 இம்மை பயக்குமால் (நாலடி. கல்வி. 2) 74 இம்மைப் பிறப்பில் (குறள். 1315) 144 இமையவில் வாங்கிய (கலித்.38) 367 இரண்டறி கள்வி (குறுந். 312) 105 இரந்து குறையுறாது (இறையனாரகப். 6) 112 இரவலர் புரவலை (புறம். 162) 24 இரவார் இரப்பார்க் (குறள். 1035) 74 இரவி னானும் (ஐங்குறு. 173) 99 இருக்கை எழலும் (நாலடி. குடிப்பிறப்பு. 4) 74 இருங்கடல் உடுத்த (புறம். 363) 77, 417, 422 இருங்கடல் உடுத்தஇப் (புறம். 363) 77 இருங்கண் யானையொடு (பதிற்றுப் பத்து) 65 இருங்கழி முதலை (அகம்.) 144 இருது வேற்றுமை (சூளாமணி.கீய.170) 484 இருந்த வேந்தன் (அகம். 384) 192, 251 இருநிதி மதிக்கும் 285 இரும்பிடித் தொழுதியொடு (புறம். 44) 66 இரும்பிழி மாரி (அகம். 122) 109 இரும்பின் அன்ன (யாப். வி.ப. 146) 400 இரும்புமுகஞ் செறித்த (புறம். 369) 280 இரும்புலிக் கிரிந்த 44 இருமுந்நீர்க் குட்டமும் (புறம். 20) 74 இருவகை நிலத்தின் 245 இருவயின் ஒத்தும் (அகத்தியம்) 435 இருள் திணிந் தன்ன (குறுந். ) 112 இருள்சேர் இருவினை (குறள். 5) 313, 364, 380 இருளிடை மிதிப்புழி (அகம். 128) 194 இலங்குபிறை யன்ன (அகம். கடவுள் வாழ்த்து) 273 இலங்கொளி மரகதம் 449 இலங்கொளி மருப்பின் 441 இல்லிருந்து மகிழ்வோர்க் (கலித். 2) 179 இல்லுடைக் கிழமை 99 இல்லென இரந்தோர்க்கு (கலித். 2) 144, 179 இல்லொடு மிடைந்த 24 இல்லோன் இன்பங் (குறுந். 920) 105 இலனென்னும் எவ்வம் (குறள். 223) 74 இலைசூழ்செங் காந்தள் 112 இலைபடர் தண்குளவி (ஐந்திணை யெழு. 3) 109 இவ்வே, பீலி (புறம். 95) 75 இவளே நின்னல 198 இவளே, கானல் (நற். 45) 112 இவளே, நின்சொற் (குறுந். 81) 112 இவளைச் சொல்லாடிக் (கலித். 56) 475 இழைத்தது இகவாமைச் (குறள். 776) 75 இளமா எயிற்றி (சிலப். வேட்டுவவரி) 61 இளிகொண்ட தீஞ்சொல் (வெண்பா. வெட்சி. 15) 61 இறந்தாரை யெண்ணிக்கொண் (குறள். 22) 282 இற்பிறந்தார் கண்ணேயும் (குறள். 1044) 250 இறவுப்புறத் தன்ன (நற். 19) 112 இறாஅ அருந்திய (அகம். 286) 5 இறைக்கும் அஞ்சிறைப் (சூளாமணி. கல். 51) 484 இன்கடுங் கள்ளின் (புறம். 80) 74 இன்கண் உடைத்தவர் (குறள். 1152) 145 இன்பத்தின் இகந்தொரீஇ 42 இன்பம் இடைதெரிந் (நாலடி. 54) 194 இன்பம் விழையான் (குறள். 615) 144 இன்பம்கடல்மற்றுக் (குறள். 1166) 266 இனமலர்க் கோதாய் 317 இனமீ னிருங்கழி (திணைமொழி. 44) 112 இன்றுகொல் அன்று (நாலடி. 36) 364 இன்றே சென்று (குறுந். 189) 105 இன்ன ளாயினள் (குறுந். 98) 109 இன்னகை இனைய (அகம். 39) 195 இன்னகைத் துவர்வாய்க் (யாப்.வி. ப. 113) 401 இன்னோர் அனையை 428 ஈ ஈங்கே வருவாள் (கலித். 56) 308 ஈரடி யாகு (அகத்தியம்) 426 ஈன்பருந் துயவும் (நற். 3) 49 ஈன்றுபுறந் தந்த (அகம். 35) 39 உ உக்கத்து மேலும் (கலித். மருதம். 29) 54 உகுபனிகண் (யாப். வி.பக். 468) 365 உடனிவை தோன்றும் (செயிற்றியம்) 248 உடுத்துந் தொடுத்துந் (குறுந். 295) 241 உடையிவ ளுயிர்வாழாள் (கலித். 3) 175 உண்கடன் வழிமொழிந் (கலித். 22) 441 உண்டார்கண் அல்லது (குறள். 1090) 92, 106 உண்டால் அம்மஇவ் (புறம். 182) 75 உண்ணற்க கள்ளை (குறள். 922) 502 உண்ணா மையின் (அகம். 123) 144 உண்துறைப் பொய்கை (ஐந்திணை யெழு. 52) 148 உதுக்காண், சுரந்தானா (யாப். வி. பக். 356) 356 உப்பமைந் தற்றால் (குறள். 1302) 148 உய்ந்தொழிவார் ஈங்கில்லை (வெண்பா. வெட்சி. 7) 61 உய்ப்போ ரிதனை 245 உய்ப்போன் செய்தது (செயிற்றியம்) 247 உயர்கரைக் கானியாற் (ஐங்குறு. 361) 24 உரவரும் மடவரும் (பதிற்று. 71) 65 உரவொலி முந்நீர் (பு. வெ. கைக்கிளை. 9) 424 உரும்உரறு கருவிய (அகம். 158) 112 உருவுகண் டெள்ளாமை (குறள். 667) 423 உரைத்திசிற் றோழியது (சிற்றெட்டகம்) 52 உரைப்பின் அதுவியப்போ (வெண்பா. கரந்தை. 6) 63 உலக முவப்ப (திருமுருகாற். 16) 409 உலக மூன்றும் (யாப். வி.ப. 139) 407 உலகுகிளர்ந் தன்ன (அகம். 255) 37 உலகுடன் விளங்கும் (யாப். வி. ப. 185) 407 உழுதுபயன் கொண்டு (வெண்பா. வாகை. 10) 74 உழுந்து தலைப்பெய்த (அகம். 86) 144 உள்ளிக் கண்பென் (குறுந். 286) 97, 105 உள்ளினென் அல்லனோ (குறுந். 99) 144 உள்ளுதொறு நகுவன் (நற். 100) 218 உளைத்தவர் கூறும் (வெண். இருபாற் பெருந். 14) 54 உறாஅதோ ஊரறிந்த (குறள். 1143) 105 உறுகழி மருங்கின் (அகம். 230) 95 உறுசுடர் வாளோ (புறம். வெ. 7 : 8) 253 உறுதி தூக்க (நற். 284) 501 உறுதுப் பஞ்சா (புறம். 72) 254 உறுபெய லெழிலி (யாப். வி. ப. 176) 521 உறுபொருளும் உல்கு (குறள். 756) 75 உறுவளி தூக்கும் (கலித். 84) 145 உன்னங் கொள்கையொடு (அகம். 65) 42 ஊ ஊடலில் தோன்றுஞ் (குறள். 1322) 144 ஊடலின் உண்டாங்கோர் (குறள். 1307) 144 ஊடுக மன்னோ (குறள். 1329) 144 ஊர்க்கால் நிவந்த (கலித். குறிஞ்சி. 20) 475 ஊர்க்கும் அணித்தே (குறுந் 113) 112 ஊர்க்குறு மாக்கள் (புறம். 94) 87 ஊரவர் கௌவை (குறள். 1167) 161 ஊழிநீஇ உலகுநீஇ 449 ஊறொரால் உற்றபின் (குறள். 662) 193 எ எங்கண் மலர (வெண்பா. உழிஞை. 28) 69 எச்சிற் கிமையாது (நாலடி. 345) 282 எண்பொருள ஆக (குறள். 424) 72 எந்தைதன் உண்ணம் 242 எந்தையும், நிலனுற (அகம். 12) 492 எந்நன்றி கொன்றார்க்கு (குறள். 110) 320 எமக்குநயந் தருளினை (ஐங்குறு. 175) 100 எம்மணங் கினவே (குறுந். 53) 99, 148 எம்மூர் அல்லது (சிற்றெட்டகம்) 42 எரி அகைந் தன்ன (அகம். 16) 149 எரிகவர்ந் துண்ட (ஐங்குறு. 360) 144 எரிமருள் வேங்கை (ஐங்குறு. 294) 148 எருது கால்உறாஅது (புறம். 327) 75 எல்லா தமக்கினி (கலித். 62) 216 எல்லா விளக்கும் (குறள். 299) 407 எல்லா, இஃதொத்த (கலித். 61) 216 எல்வளை எம்மொடு (கலித். 13) 144 எலுவ சிறாஅர் (குறுந். 129) 99 எவ்வி இழந்த (குறுந். 19) 154 எவன் கொலோ (கலித். 112) 108 எழிலிவானம் 285 எழின்மருப் பெழில்வேழ (கலித். நெய். 21) 57 எழுந்தது துகள் 455 எழுவணி சீறூர் (வெண்பா. வெட்சி. 4) 61 எறித்தரு கதிர்தாங்கி (கலித். பாலை. 8) 40 எறிந்தெமர் தாமுழுத (ஐந்திணையைம். 18) 112 எறியென் றெதிர்நிற்பாள் (நாலடி. 363) 151 எறும்பி அளையிற் (குறுந். 12) 422 என்ஐமுன் நில்லம்மின் (குறள். 771) 242 என்கைக் கொண்டு (நற். 28) 145 எனவாங்கு, இனைநலம் (கலித். பாலை. 11) 42 என்றும் இனிய 99 என்னும் உள்ளினள் (ஐங்குறு. 372) 39 என்னை, புற்கை யுண்டும் (புறம். 84) 242 என்னைகொல் தோழி (ஐந்திணையெழு. 56) 110 என்னோடு புலந்தனர் 45 எனைத்துணைய ராயினும் (குறள். 144) 214 எனைத்துணைய ராயினும் (குறள். 144) 25 ஏ ஏஏ இஃதொத்தன் (கலித். குறிஞ். 26) 26 ஏந்துவாள் தானை (வெண்பா. வாகை. 26) 74 ஏரினுழா அர் (குறள். 14) 364 ஏற்றுவலன் உயரிய (புறம். 56) 359 ஏற்றூர்தி. (முத்தொள்.) 63 ஏறிரங் கிருளிடை (கலித். 46) 109 ஏறுடைப் பெருநிரை (புறம். 256) 63 ஏறெவ்வங் காணா 455 ஏனல் காவல் 112 ஐ ஐதேய்ந் தன்று (கலித். 55) 291 ஐயுணர்வு எய்தியக் (குறள். 354) 75 ஐயோ எனின்யான் (புறம். 255) 249, 505 ஒ ஒக்குமே ஒக்குமே (யாப். வி. பக். 180) 405 ஒடுங்கீ ரோதி (குறுந். 70) 99 ஒண்செங் கழுநீர்க் (அகம். 48) 276 ஒண்செங் காந்த 287 ஒண்ணுதல் நீவுவர் (கலித். 14) 266 ஒண்தொடி அரிவை (ஐங்குறு. 172) 97 ஒத்தகாமத் தோர்வனும் (செயிற்றியம்) 255 ஒரீஇ ஒழுகு (குறுந். 203) 242 ஒருகுழை ஒருவன்போல் (கலித். 26) 277 ஒருத்தி, புலவியாற் (கலித். 62) 144 ஒருநாள் வாரலன் (குறுந். 176) 112 ஒருமையுள் ஆமை (குறள். 126) 256 ஒருவனை ஒருவன் (புறம். 76) 72 ஒரூஉக், கொடியியல் (கலித். மருதம். 23) 223, 475 ஒரூஉநீ எங்கூந்தல் (கலித். 87) 256 ஒல்லுவது ஒல்லும் (புறம். 196) 87 ஒலிபுனல் ஊரனை 145 ஒலிவெள் ளருவி (குறுந். 88) 112 ஒழித்தது பழித்த (அகம். 39) 144 ஒழுக்கம் விழுப்பம் (குறள். 131) 75 ஒழுக்காறாக் கொள்க (குறள். 161) 75 ஒழுகை நோன்பகடு (அகம். 35) 288 ஒள்வாள் மலைந்தார்க்கும் (வெண்பா. வெட்சி. 14) 61 ஒள்ளிழை மகளிரோ (நற். 155) 98 ஒளித்தியங்கு மரபின் (அகம். 22) 288 ஒன்றாக நல்லது (குறள். 323) 504 ஒன்றேன் அல்லென் (குறுந். 208) 226 ஓ ஓஒ இனிதே (குறள். 1176) 402, 200 ஓஒ உவமை (களவழி. 36) 75 ஓஒஇவள் பொருபுகல் 455 ஓங்கல் இருவரைமேற் (திணைமொழி. 3) 109 ஓங்கெழிற்கொம்பர் 194 ஓம்புமதி வாழியோ (குறுந். 235) 100, 105 ஓருவி ராக (வெண்பா. சிறப்பிற் பொது. 9) 77 ஓரை ஆயம் 24 ஓவத் தன்ன (புறம். 251) 275 க கங்குலும் பகலுங் 24 கட்கினியாள் காதலன் (நாலடி. 384) 151 கடந்தடு தானைச் (புறம். 8) 306 கடல்கண் டன்ன (அகம். 176) 145 கடல்பா டொழிய (அகம். 30) 368 கடல்புக் குயிர்கொன்று (சிலப். கானல். 17) 99 கடலன்ன காமம் (குறள். 1137) 107 கடலே, கானலங் 403 கடவுட் கற்சுனை (நற். 34) 112 கடாஅ உருவொடு (குறள். 585) 325 கடிமலர்ப் புன்னை (கலித். 135) 112 கடுங்கட் காளையொடு (ஐங்குறு. 385) 45 கடுங்கண்ண கொல்களிற்றால் (புறம். 14) 74 கடுஞ்சினத்த கொல்களிறும் (புறம். 55) 359 கடும்புலால் புன்னை (திணைமாலை. 44) 112 கண்கவர் கதிர்முடி 449 கணங்கொள் இடுமணற் (கலித். 131) 109 கண்டது மன்னும் (குறள். 1146) 160 கண்டிகும் அல்லமோ (ஐங்குறு. 122) 230 கண்டிசின் பாண (குறுந். 359) 150 கண்டுகேட் டுண்டுயிர்த்தும் (குறள். 1101) 99 கண்ண் டண்ண் (மலைபடு. 352) 326 கண்ணகல் ஞாலம் (திரிகடுகம். கடவுள் வாழ்த்து) 80 கண்ணுங் கொளச்சேறி (குறள். 1244) 210 கண்ணுஞ் சேயரி (சிற்றெட்டகம்.)112 கண்ணும் படுமோ (நற். 61) 318 கண்ணுள்ளார் காத (குறள். 1127) 266 கண்ணுள்ளிற் போகார் (குறள். 1126) 266 கண்ணொடு கண்ணிணை (குறள். 1100) 107 கண்ணொடு நிகர்க்குங் 286 கண்திரள் முத்தம் (ஐந்திணையெழு. 56) 109 கண்நிறைந்த காரிகைக் (குறள். 1272) 113 கண்படை பெறேன் (அகம். 55) 196 கண்போல்வான் ஒருவ 275 கணைக்கால் நெய்தல் 287 கதிர்கை யாக (அகம். 164) 24 கதுமெனத் தாநோக்கி (குறள். 1173) 200 கயலெழுதி வில்லெழுதி (சிலப். கானல். 11) 291 கயலெழுதிய இமய (சிலப். ஆய்ச்சி) 475 கயலேர் உண்கண் (யாப். வி. ப. 136) 407 கரந்தை விரைஇய 24 கருங்கண் தாக்கலை (குறுந். 69) 112 கருங்கோற் குறிஞ்சி (குறுந். 3) 5 கருமஞ் செயஒருவன் (குறள். 1021) 74 கருமணற் கிடந்த (அகம். 165) 197 கரும்புநடு பாத்தி (ஐங்குறு. 65) 145 கரைபொரு கான்யாற்றங் (யாப். வி. ப. 225) 484 கலங்கவிழ்த்த நய்கன்(யா.வி.ப.318) 290 கலந்தநோய் கைம்மிக (கலித். 46) 155 கல்வரை ஏறிக்கடுவன் (கைந்நிலை. 7) 423 கவர்பரி நெடுந்தேர் (நற். 307) 101 கவலை கூர்ந்த (செயிற்றியம்) 249 கவலை மறுகின் (வெண்பா. வாகை. 15) 75 கவவுக்கை நெகிழ்ந்தமை (அகம். 26) 202 கவிழ்மயி ரெருத்திற் (ஐங்குறு. 397) 45 கழகத் தியலுங் (வெண்பா. பெருந்திணை. 19) 74 கழைபாடு இரங்க (நற். 95) 99 களம்புகல் ஓம்புமின் (புறம். 87) 75 களரி பரந்து (புறம். 356) 77 களவென்னுங் காரறி (குறள். 287) 75 களித்தறியேன் என்பது (குறள். 128) 75 களித்தொறுங் கள்ளுண்டல் (குறள். 1045) 105 களிற்றுக்கோட் டன்ன (புறம். 371) 75 களிறுகவர் கம்பலை (அகம். 66) 268 களிறும் கந்தும் (அகத். 11. நச்) 309 கறங்குவெள் அருவி (புறம். 252) 74 கற்பித்தாள் நெஞ்சழுங்க 452 கற்றதனா லாய (குறள். 2) 364 கற்றுக்கண் அஞ்சான் (குறள். 986) 75 கறிவளர் சிலம்பிற் (ஐங்குறு. 243) 112 கன்மிசை வேய்வாட 42 கன்றமர் கறவை (புறம். 275) 256 கன்று குணிலாக் (சிலப். ஆய்ச்சி) 484 கன்றும் உண்ணாது (குறுந். 27) 109 கனிய நினைவொடு (மூத்திருவிரட் ம. மாலை 6) 484 கனைபெயல் நடுநாள் (கலித். 46) 110 காஅய்ச் செந்நெற் (யாப். வி. ப. 158) 404 காடு கனற்றக் (வெண்பா. பொது. 10) 63 காண்மதி பாணநீ (ஐங்குறு. 140) 45 காணிற் குவளை (குறள். 1114) 100 காணுங்கால் காணேன் (குறள். 1286) 145 காமங் கடப்ப (ஐங்குறு. 237) 112 காமங்காமம் (குறுந். 136) 180 காமம் செப்பாது (குறுந். 2) 359 காமம் விடுவொன்றோ (குறள். 1247) 97 காமம் வெகுளி (குறள். 360) 75 காமர் கடும்புனல் (கலித். 39) 457 காமரு சுற்றமொ 428 காய்ந்து கடுங்களிறு (வெண்பா. தும்பை. 12) 72 காய்நெல் அறுத்து (புறம். 184) 87 காய்மாண்ட தெங்கின் (சீவகசிந். 31) 407 கார்கள்ள உற்ற 285 கார்விரி கொன்றைப் (அகம். கடவுள் ழ்த்து.) 193, 287 காலனுங் காலம் 88 காலே பரிதப்பின (குறுந். 44) 40 காலை எழுந்து (குறுந். 45) 256 காலை முரசம் (வெண்பா. உழிஞை. 23) 69 கான யானை (குறுந். 79) 146 கானக் கோழிக் (குறுந். 242) 150 கான்யாறு தழீஇய (முல்லைப். 24-28) 64 கானலம் பெருந்துறைக் (ஐங்குறு. 199) 112 கானலுங் கழறாது (அகம். 170) 194 கானன் மாலைக் (அகம். 40) 24 கிண்கிணி களைந்தகால் (புறம். 77) 68 கிழவர் இன்னோர் (கலித். 21) 235 கிளிபுரை கிளவியாய் (கலித். பாலை. 12) 44 கிளைசெத்து (நற். 35) 282 குக்கூ என்றது (குறுந். 157) 145 குடிப்பிறப் புடுத்துப் (ஆசிரிய மாலை) 75 குடையலர் காந்தட்டன் (வெண்பா. பொது. 1) 63 குணனிலனாய்க் குற்றம் (குறள். 868) 256 குருதி வேட்கை (நற். 162) 100, 105 குவிந்துசுணங் கரும்பிய (யாப். வி. ப. 147) 404 குழலிசைய வண்டினங்கள் (யாப். வி. ப. 246) 484 குழவி இறப்பினும் (புறம். 74) 77 குளிரும் பருவத்தே (ஐந்திணையைம். 30) 268 குறிக்கொண்டு நோக்காமை (குறள். 1015) 256 குறியா வின்பம் (நெடுந்தொகை)112குறுபகை இரும்புலி (ஐங்குறு. 216) 112 குறுந்தொடி எய்க்கு (பெரும்பாண். 13) 288 குறுநிலைக் குரவின் (நற். 56) 194 குன்றக்...தோத (ஐங்குறு. 260) 112 குன்றக்...அ (ஐங். 258) 112 குன்றக்...படுபடு (ஐங்குறு. 256) 100 குன்றி னனையாரும் (குறள். 965) 282 குன்று கொண்டு 359 குனிகா யெருக்கின் குணநாற்பது.) 44 கூடுவார் கூடல்கள் (யாப். வி. ப. 88) 532 கூந்தல் ஆம்பல் (குறுந். 80) 149 கூர்முள் முண்டகக் (குறுந். 51) 112 கூற்றமோ கண்ணோ (குறள். 1085) 308 கூற்றினத்து அன்னார் (வெண்பா. வெட்சி. 5) 61 கூறுவம் கொல்லோ (அகம். 198) 88 கெடலரு மாமுனிவர் 449 கெடுத்துப்படு நன்கலம் 256 கௌவைநீர் வேலிக் (வெண்பா.காஞ்சி. 23) 77 கேட்டிசின் வாழி (குறுந். 30) 195 கேட்டிசின் வாழியோ (ஐங்குறு. 59) 148 கேடில் விழுப்பொருள் (குறுந். 216) 356 கேள்கேடு ஊன்றவும் (அகம். 93) 44, 452 கைக்கிளை செந்திறம் 55, 72 கைகவியாச் சென்று (அகம். 9) 194 கையால் புருவங்கண் (வெண்பா. பெருந்திணை. 17) 74 கைவேல் களிற்றொடு (குறள். 774) 72 கொ கொங்கியர் ஈன்ற 274 கொங்குதேர் வாழ்க்கை (குறுந். 2) 359 கொச்சக வகையின் 426 கொடிகுவளை கொட்டை (யாப். வி. பக். 359) 309 கொடிச்சி யின்குரல் (ஐங்குறு. 289) 208 கொடியியல் நல்லார் (கலித். 88) 241 கொடிவாலன கருநிறத்தன (யாப். வி. பக். 337) 422 கொடுங்குழாய் துறக்குநர் (கலித். 13) 256 கொடுந்தாள் அலவ (ஐந்திணையைம். 42) 109 கொடுமுள் மடல்தாழைக் (ஐந்திணையைம். 49) 112 கொடுவரி கூடிக் (வெண்பா. வெட்சி. 9) 61 கொண்டல் மாமழை (நற். 140) 88, 99 கொய்ம்மலர் குவிந்து (யாப்.வி.ப. 148) 407 கொல்களிறு ஊர்வர் (வெண்பா. பொது. 9) 63 கொல்யானை வெண்மருப்பும் (திணைமாலை. 22) 99 கொல்லைப் புனத்த (ஐந்திணையெழு. 2) 109 கொல்வினைப் பொலிந்த (அகம். 9) 44 கொலையானாக் கூற்றேம் (வெண்பா. காஞ்சி. 13) 77 கொளற்கரிதாய்க் (குறள். 745) 75 கொன்றன்ன வின்னா (குறள். 109) 283 கொன்றை வேய்ந்த 483 கோட்டக மலர்ந்த 24 கோட்டங் கண்ணியும் (புறம். 275) 72 கோட்டுப்பூச் சூடினுங் (குறள். 1313)144 கோடல் எதிர்முகைப் (குறுந். 62) 144 கோடீர் இலங்குவளை (குறுந். 11) 201 கோடீர் எவ்வளைக் (ஐங்குறு. 199) 112 கோடுயர் வேற்பில் (வெண்பா. உழிஞை. 20) 69 கோடுவாய் கூடாப் (கலித். 142) 266 கோழி எரிந்த 422 கோள்மா கொட்குமென் (யாப். வி. ப. 262) 422 கோளில் பொறியிற் (குறள். 9) 379 ச சத்துவம் என்பது 246 சமன்செய்து சீர்தூக்கும் (குறள். 118) 256 சார்புணர்ந்து சார்புகெட (குறள். 351) 75 சாரற் பலவின் (ஐங்குறு. 214) 112 சாரற் புனத்த (ஐங்குறு. 282) 112 சாறுதலைக் கொண்டெனப் (புறம். 82) 274 சிலம்புகமழ் காந்தள் (ஐங்குறு. 293) 105 சிலரும் பலருங் (நற். 149) 221 சிலையுலாய் நிமிர்ந்த (புறம். 394) 88 சிலைவிற் பகழி (ஐங்குறு. 363) 24 சிறப்புடை மரபின் (புறம். 31) 65 சிற்றாறு பாய்ந்துகளுஞ் (யாப். வி. ப. 237) 423 சிறிய பெரிய (யாப். வி. ப. 147) 407 சிறியகட் பெறினே (புறம். 235) 370 சிறுகுடிப் பரதவர் (யாப். வி. ப. 146) 400 சிறுதினை மேய்ந்த (ஐங்குறு. 262) 109 சீறடிப் பேரகல் (யாப். வி. ப. 147) 407 சுடுமண் நெடுமதில் (வெண்பா. உழிஞை. 19) 69 சுருங்கிய நுசுப்பிற் (யாப். வி. ப. 147) 403 சுரையாழ அம்மிமிதப்ப (யாப்.வி.ப. 229) 423 சுழன்றும் ஏர்ப்பின்னது (குறள். 1031) 74 சுள்ளி சுனைநீலஞ் (திணைமாலைநூற். 2) 112 சுறமறிவன துறையெல்லாம் (யாப். வி. ப. 63) 389 சுறவுப்பிறழ் இருங்கழி 24 சூரல் பம்பிய (யாப். வி. ப. 259) 422, 504 சூழ்ந்த நிரைபெயரச் (வெண்பா. வெட்சி. 10) 61 சூழ்வார்கண் ணாக (குறள். 445) 256 செங்களம் படக்கொன்று (குறுந்.1) 386, 360 செந்தீ யோட்டிய 286 செய்பொருட் சிறப்பெண்ணிச் (கலித். 16) 441 செயலையந் தளிரேய்க்கும் (கலித். 15) 288 செய்வன சிறப்பிற் (கலித். 83) 266 செய்வினை பொலிந்த (ஐங்குறு. 389) 40 செருப்பிடைச் சிறுபரல் (புறம். 257) 61 செல்லாமை உண்டேல் (குறள். 1151) 222, 502, 345 செல்லினிச் சென்றுநீ (கலித். 19) 452 செவ்வா னன்ன கடவுள் வாழ்த்து.) 284 செவ்விய தீவிய (கலித். பாலை. 18) 241, 440, 452 செற்றன் றாயினுஞ் (புறம். 226) 77 செற்றார்பின் செல்லா (குறள். 1255) 250 செறுநர்த் தேய்த்த (திருமுருகாற். 5) 283 சென்ற இடத்தால் (குறள். 422) 95 சென்றதுகொல்போந்தது (முத்தொள். 61) 194 சென்று முகந்து (யாப். வி. ப. 464) 364 சேட்புல முன்னிய (ஐங்குறு. 384) 45 சேணோன் மாட்டிய (குறுந். 150) 109 சேர்ந்தனிர் செல்குவி (அகம். 200) 112 சேரல் மடவன்னம் (சிலப். கானல். 23) 98 சேற்றுக்கால் நீலம் (யாப். வி. ப. 236) 423 சேற்றுநிலை முனைஇய (அகம். 46) 24 சொல்லிற் சொல்லெதிர் (நற். 39) 98 ஞ ஞாயி றனையைநின் (புறம். 59) 289 த தாமரைபோய வாள்முகம் (திணைமாலை. 1) 289 தக்கார்தகவிலர் (குறள். 114) 407 தகைவகை மிசைமிசைப் 455 தங்கிய ஒள்ளொளி (பாண்டிக் கோவை) 184 தடமருப் பெருமை (நற். 120) 144 தடவுநிலைப் பலவின் (புறம். 140) 87 தண்ணந் துறைவன் (குறள். 1277) 199 தண்ணுமைப் பாணி (கலித். 102) 455 தண்துறை ஊரன் (அகம். 56) 248 தணந்தமை சால (குறள். 1033) 199 தணியாநோய் உழந்து (கலித். 30) 167 தம்மி லிருந்து (குறள். 1107) 255, 272 தம்மை இகழ்ந்தமை (நாலடி. துறவு. 8) 75 தரேவே எருத்த (அகத்தியம்) 327 தலைப்புணைக் கொளினே (குறுந். 222) 99 தலைமகனில் தீர்ந்து (அறநெறிச். 94) 151 தழையணி அல்குல் (குறுந். 259) 109 தள்ளா விளையுளும் (குறள். 731) 75 தற்காத்துத் தற்கொண் (குறள். 56) 151 தற்கொள் பெருவிறல் 72 தன்எவ்வங் கூரினும் (கலித். 44) 112 தனக்குவமை இல்லாதான் (குறள். 7) 313, 379 தன்குறையீ தென்னான் (திணைமாலை. 31) 112 தன்சொ லுணர்ந்தோர் (ஐங்குறு. 41) 287 தன்தோள் நான்கின் 359 தன்பார்ப்புத் தின்னும் (ஐங்குறு. 41) 370 தன்னை யுணர்த்தினுங் (குறள். 1319) 144 தன்னையுந் தான்நாணுஞ் 112 தாஅட் டாஅ (யாப். வி. ப. 138) 407, 520 தாதுறு முறிசெறி (யாப். வி. ப. 299) 533 தாமரை புரையுங் (குறுந். கடவுள்277, 320, 359,384 தாமரைக் கண்ணியை (கலித். 52) 112 தாமின் புறுவ (குறள். 399) 407 தாழாத் தளரா (நாலடி. 14) 250 தாழிருள் துமிய (குறுந். 270) 144 தாழை குருகீனுந் (கைந்நிலை. 59) 110 தான் தாயாக் கோஙகம் (திணைமாலை நூற். 65) 197 திங்களைப் போற்றுதும்(சிலப். மங்கல.1) 88 திண்தேர் நள்ளி (குறுந். 210) 148 திண்பிணி முரசம் (புறம். 93) 65 திருநகர் விளங்கு 24 திருநுதல் வேரரும்புந் (பு. வெ. கைக். 3) 390 திருமழை தலைஇய (கூத்தாரற் மலைபடு. 1) 88 தீங்கனி இரவமொடு (புறம். 281) 77 தீண்டலும் இயைவது (குறுந். 272) 99 தீம்பால் கறந்த (கலித். 111)96 ரதத ர பூவொடு (வெண்பா. உழிஞை. 27) 69 தீவினையார் அஞ்சார் (குறள். 201) 75 துடியடித் தோற்செவி (முத்தொள். 50) 87 துடியெறியும் புலைய (புறம். 267) 65 துணியிரும் பரப்பகல் (யாப். வி. ப. 377) 537 துணைமல ரெழினீல (கலித். 14) 282 துப்பார்க்குத் துப்பாய (குறள். 12) 364 துப்பின் எவனாவர் (குறள். 1165) 266 தும்முச் செறுப்ப (குறள். 1318) 144 துயிலின்றி யாநீந்தத் (கலித். 30) 189 துறந்ததற் கொண்டு (ஐங்குறு. 393) 45 துறைமீன் வழங்கும் (அகம். 316) 153 துறைவன் துறந்தென 109 துன்னருந் தானை (வெண்பா. பொது. 4) 63 தூங்குகையான் (புறம். 22) 351 தெய்வந் தொழாஅள் (குறள். 55) 151 தென்பரதவர் மிடல் (புறம். 378) 88 தென்றல் இடை (யா. விருட். கோள்.) 87 தேம்பழுத் தினியநீர் (சூளா. நகர. 13) 484 தேர்ந்து தேர்ந்து 359 தேர்மயங்கிவந்த (கலித். 88) 145 தேரான் பிறனை (குறள். 508) 254 தேரோன் தெறுகதிர் 99 தேன் தூங்கும் உயர் (மதுரைக். 3) 359 தேனொடு நீடு 256 தொடங்கற்கட் டோன்றி 381 தொடர்ப்படு ஞமலியின் (புறம். 74) 250 தொடலைக் குறுந்தொடி (குறள். 1135) 100 தொடிநிரை முன்கையாள் (கலித். 24) 256 தொடிநெகிழ்ந் தனவே (யாப். வி. ப. 386) 528 தொடிநோக்கி (குறள். 1279) 238 தொடியணிதோள் ஆடவர் (வெண்பா. பொது. 2) 63 தொடியுடைய 377 தொடுத்த வேம்பின் (யாப். வி. ப. 387) 530 தொல்ஊழி தடுமாறி (கலித். நெய். 12) 14 தொல்கவின் தொலைதல் (கலித். 2) 381 தொன்னலத்தின் (யாப். வி. பக். 108) 354 தோடார் எல்வளை (யாப். வி. ப. 381) 407, 516 தோழியர் சூழ (ஐந்திணை. ஐம். 37) 39 தோளுங் கூந்தலும் (ஐங்குறு. 178) 99 தோளுந் தொடியும் 45 ந நகுகம் வாராய் (நற். 250) 44 நகுதக் கனரே (புறம். 72) 77 நகையமர் ஆயம் (வெண்பா. காஞ்சி. 15) 77 நகையா கின்றே (அகம். 56) 248 நகையெனப் படுதல் 248 நசைஇயார் நல்கார் (குறள். 1199) 266 நஞ்சுடை வாலெயிற்று (புறம். 37) 68 நடுங்கி நறுநுதலான் (வெண்பா. இருபாற் பெருந். 1) 54 நடுங்குதுயர் களைந்த (அகம். 86) 268 நடுநாள் வரூஉம் (நற். 149) 268 நடுவிகந் தொரீஇ (கலித். 8) 175 நண்பி தென்று (யாப். வி. ப. 244) 484 நம்முறு துயரம் (ஐங்குறு. 241) 109 நயந்தலைமாறுவார் (கலித். 80, 297) 149 நயனின்மையிற் (நற். 75) 100 நரந்தநா றிருங்கூந்தல் (கலித். 54) 109 நல்கினும் நாமிசையாள் (வெண்பா. பாடாண். 48) 81 நல்யாழ் ஆகுளி (புறம். 64) 88 நல்லது செய்தல் (புறம். 195) 88 நல்லார் பழிப்பில் (மூத்த நாயனார் திருவிரட்டை மணி மாலை. 20) 484 நல்லார்கள் நல்ல 295 நல்லுரை இகந்து (குறுந். 29) 105 நல்வாய், பொய்யெல்லாம் (கலித். 95) 145 நள்ளென் றன்றே (குறுந். 6) 109 நளிகடல் இருங் (புறம். 26) 75 நற்கொற்ற வாயில் (யாப் வி. ப. 226) 423 நறவுக்கமழ் அலரி 88 நறவுந் தொடுமின் (புறம். 262) 61 நறுந்தண் தகரம் (திணைமாலை. 24) 112 நறுநீல நெய்தலும் (யாப். வி. ப. 226) 423 நறுவிரை துறந்த (புறம். 276) 72 நறை பரந்த சாந்தம் (திணைமாலை. 1) 24, 99 நன்மரங் குழீஇய (அகம். 166) 149 நன்மையும் தீமையும் (குறள். 511) 256 நனவினாற் கண்டதூஉ (குறள். 1215) 256 நன்றாய்ந்த நீள்நிமிர் 74 நன்றி மறப்பது (குறள். 107) 380 நன்னலந் தொலைய 145 நன்னிற மென்முலை (யாப். வி. ப. 134) 407 நாணால் உயிரை (குறள். 1017) 256 நாணொடு நல்லாண்மை 99 நாயுடை முதுநீர்க் (அகம். 16) 145, 359 நாவாயும் தோணியும் (வெண்பா. உழிஞை. 17) 69 நாவேர் திருந்தெயி 145 நாள் வேங்கை பொன் (திணைமாலை. 2) 112 நாள்கோள் திங்கள் (பதிற்றுப். 14) 295 நாளு நாளு (சிற்றெட்டகம்) 24, 48 நாற்றம் பெற்று 72, 113 நிரைதிமில் களிறாக 452 நிலங்கிளையா (யாப். வி. பக். 468) 365 நிலத்தினும் பெரிதே (குறுந். 3) 225 நிலம்பிறக் கிடுவது (புறம். 303) 72 நிலவுக்காண் பதுபோல (கலித். 119) 309 நிலவுமண லகன்துறை (யாப். வி. ப. 385) 526 நிலைதிரிபு எரியட் (புறம். 25) 75 நிலையில் திரியா (குறள். 124) 256 நிலையும் நிரையும் (வெண்பா. வெட்சி. 6) 61 நிழலே இனியதன் (யாப். வி. ப. 159) 404 நிறை அரியர்மன் (குறள். 1138) 112 நின்மார் படைதலின் (அகம். 58) 99 நின்மொழி கொண்டியானோ (கலித். 113) 194 நின்ற சுவையே 245 நின்ற சொல்லர் (நற். 1) 145 நின்ற புகழொழிய (வெண்பா. உழிஞை. 12) 68 நின்னணங் கன்மை (நற். 34) 113 நின்னணங் குற்றவர் (கலித். 77) 231 நின்னொக் கும்புகழ் 428 நின்னொர் அன்னோர் (புறம். 373) 295 நினக்கியாம் பாணரும் (ஐங்குறு. 480) 45 நினக்கே அன்றஃ (ஐங்குறு. 49) 145 நினைப்பவர் போன்று (குறள். 1203) 256 நீகண் டனையோ (குறுந். 75) 145 நீங்கின் தெறூஉங் (குறள். 1104) 99 நீடற்க வினையென்று (யாப் வி. ப. 264) 484 நீடினம் என்று (ஐங்குறு. 478) 48 நீடுநீர்க் கானல் 112 நீயுறும் பொய்ச்சூள் (கலித். 88) 268 நீயுறும் பொய்ச்சூள் (கலித். 88) 178 நீயே, வினைமாண் (கலித். 7) 356 நீர்நீ டாடிற் (குறுந். 354) 145 நீர்பலகால் (வெண்பா. வாகை. 14) 74 நீரறவு அறியா (புறம். 271) 69 நீரார் செறுவில் (கலித். 75) 145 நீரின் தண்மையுந் (யாப். வி. ப. 257) 375, 422 நீரூர் பானா (யாப். வி. ப. 383) 521 நீலக் கச்சைப் (புறம், 274) 72 நீலமுண்ட துகில் 210 நீவிளை யாடுக (நற். 362) 495 நீன்நயந்து உறைநர்க்கும் (புறம். 163) 88 நுண்எழில் மாமைச் (கலித். 4) 239 நுண்ஞாண் வலையிற் (ஐந்திணையெழு. 64) 148 நுதிவேல் கொண்டு (புறம். 349) 77, 109 நெஞ்சத்தார்க் காத (குறள். 1128) 266 நெஞ்சமொடு மொழி (ஐங்குறு. 6) 148 நெஞ்சு நடுக்குறக் (கலித். பாலை. 23) 228 நெஞ்சு நடுக்குறக் (கலித். பாலை. 23) 45 நெடிபடு கானத்து (வெண்பா. வெட்சி. 3) 61 நெடுங்கழை முளிய (ஐங்குறு. 322) 48 நெடுங்கொடி நுடங்கும் (அகம். 70) 106 நெடுங்கொடிய (புறம். 55) 359 நெடுந்தேர் கடாஅய்த் 209 நெடுநல் யானையுந் (புறம். 72) 256 நெடுநா ஒண்மணி (நற். 40) 148 நெடும்புனலுள் வெல்லு (குறள். 495) 502 நெடுவரை மிசையது (ஐங்குறு. 287) 289 நெடுவரை மிசையிற் 289 நெடுவேள் மார்பின் 112 நெய்தல் கூம்ப (நற். 187) 112 நெய்தல் நறுமலர் (ஐங்குறு. 182) 112 நெய்தற் பரப்பிற் (குறுந். 224) 112 நெய்தற் புறவின் (திணைமொழி. 41) 109 நெய்யணிக செவ்வேல் (வெண்பா. உழிஞை. 2) 69 நெய்யால் எரிநுதுப்பேம் (குறள். 1148) 112 நெய்யுங் குய்யும் (நற். 380) 145 நெய்யொடு மயக்கிய (ஐங்குறு. 211) 112 நெருநலும் முன்னா 112 நெருப்பவிர் கனலி (ஐங்குறு. 388) 43 நெருப்பின் அன்ன (அகம். 84) 277 நெல்லொடு, நாழி (முல்லைப். 8-10) 5 நெறியறி செறிகுறி (கலித். 39) 534 நேர்ந்தநங் காதலர் (சிலப். கானல்) 501 நேரிழை மகளிர் 422 நொக்கினாள் நோக்கி (குறள். 1063) 94 நோக்குங்கால் நோக்கிட் (கலித். 63) 109 நோதக்காய் என நின்னை (கலித். 73) 145 நோமே நெஞ்சே (குறுந். 4) 109 நோயிலராக 240 நோயும் வடுவுங் (கலித். 67) 104 ப பகடு புறந்தருநர் (புறம். 35) 74 பகலில் தோன்றும் (ஐங்குறு. 57) 148 பகலே பல்பூங் (யாப். வி. ப. 135) 398 பகலே பலருங் (நற். 365) 201 பகைமெலியப் பாசறையு (நெடுநல். இறுதி வெண்பா.) 256 பசந்தாள் இவளென்ப (குறள். 1188) 266 பசலையால் உணப்பட்டுப் (கலித். 15) 210 படங்கெழுநாகம் 282 படாஅ தோழி 24 படியுடையார் பற்றமைந்தக் (குறள். 606) 364 படுபயன் வெஃகிப் (குறள். 172) 75 படைகுடி கூழ்அமைச்சு (குறள். 381) 75 படைப்புப் பலபடைத்துப் (புறம். 188) 75 பணைத்தோட் குறுமகள் (குறுந். 276) 99 பணைநீங்கிப் பைந்தொடி (குறள். 1234) 266 பணையாய் அறைமுழங்கும் (வெண். பெருந்திணை. 6) 54 பரஅல் அஞ்செவிப் (கலித். பாலை. 4) 42 பரியரைக் கமுகின் (பெரும்பாண். 7-8) 284 பருக்காழும் செம்பொன் (வெண்பா. பாடாண். 14) 87 பருதியஞ் செல்வன் 304, 305 பருவ மென்தினை 24 பல்சான்...செயகென (புறம். 246) 77 பல்சான்றீரே (புறம். 165) 77 பல்பூங் கானல் (அகம். 20) 109 பலர்புகழ் ஞாயிறு (திருமுருகாற். 2) 283 பல்லோர் துஞ்சு (குறுந். 244) 112 பலவின் பழம் (திணைமொழி. 10) 109 பழிமலைந் தெய்திய (குறள். 657) 214 பளங்கனி அன்ன (புறம். 127) 87 பறைபடப் பணிலம் (குறுந். 15) 113, 141 பன்மாடக் கூடல் (யாப். வி. ப. 237) 423 பன்மீன் உணங்கற் (யாப் வி. ப. 285) 525 பன்னருங் கோங்கின் (யாப். வி. ப. 134) 403 பனிபடு சோலைப் (நாலடி. இளமை. 7) 76 பனிமலர் நெடுங்கண் 48 பாஅன்மருண் மருப்பி (கலித். 21) 288 பாசடை நிவந்த (குறுந். 9) 5 பாசடைப் பரப்பிற் (மணிமே. 4-8-13) 280 பாடின்றிப் பசந்தகண் 441 பாணர் தாமரை (புறம். 12) 65 பாணர் முல்லை (ஐங்குறு. 408) 150 பாணன் சூடிய (புறம். 141) 88 பாம்புரு வொடுங்க 286 பாய்திரை பாடோவாப் (கலித். 129) 57, 194 பாயல்கொண் டென்தோட் (கலித். 24) 256 பாயிரும் பரப்பகம் (மார்க்கண்.காஞ்சி) 539 பாயினார் மாயும் (வெண்பா. நொச்சி. 2) 69 பார்ப்பார்க்கு அல்லது (பதிற்றுப். 63) 87, 284, 289 பாரி பாரி (புறம். 107) 307 பால்மருள் மருப்பின் (கலித். பாலை. 20) 42 பாலும் உண்ணாள் (அகம். 48) 266 பாலொடு தேன்கலந் (குறள். 1021) 380 பாவடி உரல (குறுந். 89) 113 பாற்கடல் முகந்த (யாப். வி. ப. 379) 542 பானலந் தண்கழிப் (திணைமாலை. 32) 93 பானாட், பள்ளி யானையி (குறுந். 142) 256 பிணிநிறந் தீர்ந்து (திணைமொழி. 9) 109 பிரசம் கலந்த (நற். 110) 150 பிள்ளை கடுப்பப் (வெண்பா. கரந்தை. 7) 63 பிறப்பொக்கும் எல்லா (குறள். 972) 90 பிறர்நாணத் தக்கது (குறள். 1018) 215 பிறர்பழியுந் தம்பழியும் (குறள். 1015) 256 பிறர்வேல் போலா (புறம். 332) 88 பிறவிப் பெருங்கடல் (குறள். 10) 313, 380 பிறன்மனை நோக்காத (குறள். 148) 75 புணர்துணையோ டாடும் (சிலப். கானல். 31) 112 புத்தே ளுலகிற் 285 புதுப்புள் வரினும் (புறம். 20) 88 புரிவின்றி யாக்கை (வெண்பா. வாகை 20) 74 புரிவுண்ட புணர்ச்சியுள் (கலித். நெய். 23) 54 புல்லார் புகழொடு (வெண்பா. உழிஞை. 10) 268புறத்துறுப்பெல்லாம்(குறஒ.79)256 புல்லார் புகழொடு (வெண்பா. உழிஞை. 10) 68 புல்வீழ் இற்றிக் (குறுந். 106) 109 புலவுநுனைப் (பெரும்பாண். 271) 383 புலிக்கணமுஞ் சீயமும் (வெண்பா. கரந்தை. 4) 63 புலிநிறக் கவசம் (புறம். 13) 256 புலியிறப்ப 383 புலியென்ன 383 புலைமகன் ஆதலிற் 148 புள்இமிழ் அகல்வயல் (கலித். 79) 149 புன்கண்ணைவாழி (குறள்.1222) 266 பூஉங்குவளைப் (யாப்.விரு.ப. 158)403 புன்தலை மந்தி (நற். 379) 112 புனவன் துடவைப் (குறுந். 105) 110 புனைபூந் தழைஅல்குல் (ஐந்திணையைம். 14) 112 புனையிழாய் ஈங்குநாம் (கலித். பாலை. 15) 45 பூங்கட் புதல்வனை (கலித். 79) 145 பூங்கண் நெடுமுடி(வெண்பா.பாடாண். 9 )85 பூங்கொடி மருங்கின் 24 பூத்த வேங்கை (யாப்.வி. ப. 179) 405 பூந்தண்டார்ப் புலர் (கலித். குறிஞ்சி. 21) 80 பூந்தாமரைப்போதலமர(யா.வி. பக்.336 377,422 பூவை ரியும்(வெண்பா.பாடாப. 4) 63 பூவொடு நீர்தூவிப் (வெண்பா. பொது. 9) 63 பெயர்த்தனென் முயங்கயான் (குறுந். 84) 39 பெயர்ந்து போகுதி 43 பெயல்கண் மறைத்தலின் (குறுந். 355) 109 பெரியார்க், கடியரோ (கலித். 88) 158 பெரியார்க்,கடியரோ(கலித்.88) 220 பெருங்கை இருங்களிறு (ஐந்திணையெழு.12) 112 பெருஞ்செல்வர் இல்லத்து (முத்தொள். 88) 290 பெருந்தேர் யானும் (அகம். 284) 251 பெருநன் றான்றிற் (குறுந். 115) 112 பெரும, விருந்தொடு (கலித். 81) 145 பெரும்பணை மென்தோள் (வெண். இருபாற். பெருந். 6) 54 பெருமுத்தரையர் (நாலடி. 200) 317 பெறாஅமை அஞ்சும் (குறள். 1215) 266 பேணுப பேணார் (நற். 72) 109 பேதையென்ப 316 பேர்ந்து பேர்ந்து (யாப். வி. ப. 380) 543 பொங்கிரு முந்நீர் (கலித். 144) 266 பொங்குதிரை பொருத (நற். 35) 148 பொதுமொழி பிறர்க் (கலித். 68) 149 பொய்படு பறியாக் (ஐங்குறு. 250) 112 பொய்யெல்லாம் ஏற்றிட் 44 பொருகடல் வண்ணன் (கார்நாற். 1) 232 பொருகளிற் 283 பொருவ மென்ற 428 பொருள் தீர்ந்த (குறள். 199) 256 பொருள் பொருளார் (குறள். 914) 180 பொலம்பூ வேங்கை (சிலப்.பதிகம்.)251 பொள்ளெனவாங்கே(குறஒ.487) 256 பொழுதும் எல்லின்று (குறுந். 16) 109 பொன் அடர்ந் தன்ன (அகம். 280) 105 பொன்இணர் வேங்கை (ஐந்திணையைம். 11) 110 பொன்னார மார்பிற்(யாப்.வி.பக்.62) 256,387, 423 பொன்னின்அன்ன (யா.வி.ப. 134-382)407, 518 பொன்னும் மணியும் (நற். 166) 144 பொன்னுரைகடுக்குந்(திருமுரு.145) 288 போது சாந்தம் பொற்ப (யாப். வி. 49) 359 போதுவிடு குறிஞ்சி (யாப். வி. 149) 407 போழ்தூண் டூசியின் (புறம். 82) 256 ம மகிழ்செய் தேமொழி (கலித். 125) 156 மகிழ்நன் மார்பே (குறுந். 73) 112 மகிழு மகிழ்தூங் (யாப். வி. ப. 74) 377 மஞ்சுசூழ் சோலை (யாப். வி. பக். 219) 317 மட்டுத்தா னுண்டு (யாப். வி. பக். 463) 364 மடப்பிடியை மதவேழந் (யாப். வி. பக். 341) 484 மடவ மன்ற (குறுந். 66) 42 மடிமை குடிமைக்கண் (குறள். 608) 256 மணிநிற நெய்தல் (ஐந்திணையெழு. 60) 109 மணிநிற மறுத்த 287 மணிநிறம் மாற்றிய 282 மணியில் திகழ்தரு (குறள். 1273) 113 மதவலியானை (அகம். 354) 150 மதிபோலுந் தாமரை 309 மதியம் பொற்ப 282 மதியும் மடந்தை (குறள். 1116) 100, 245 மயல்வேழ(கு ஞ்சிப்.165-9) 252 மயில்கொல் மடவாள் (திணைமொழி. 49) 88 மயிற்கணத்து அன்னார் (வெண்பா.உழிஞை.11) 68 மரல்சாய மலைவெம் (கலித். 13) 365 மருந்தின் தீரா 88 மருப்பிற் றிரிந்து (கலித். 15) 282 மரையா உகளும் (கைந்நிலை, 6) 109 மரையா மரல்கவர (கலித். பாலை. 5) 42, 456 மலர்மிசை ஏகி (குறள். 3) 319, 364 மலைபடு சாந்தம் (வெண்பா. பாடாண். 47) 80 மழைவர லறியா (ஐங்குறு. 298) 105 மழைவிழை தடக்கை 285 மறத்தற் கரிதால் (நற். 42) 144 மறுவில் தூவிச் (ஐங்குறு. 39) 39 மன்ற மராஅத்த (குறுந். 87) 109 மன்றத் துறுகற் (ஐந்திணையெழு. 9) 109 மன்றப் பலவின் (ஐந்திணையெழு. 4) 109 மன்றப் பனைமேல் (கலித். 142) 501 மன்னா உலகத்து (புறம். 165) 75 மன்னுயிர் எல்லாந் (குறள். 1168) 268 மன்னுயிர் முதல்வனை (பரிபா. 1) 295 மனைத்தக்க மாண்பு (குறள். 51) 151 மனையுறு கோழிக் (குறுந்.139) 148 மாஅத் தாஅண் (யாப். வி. ப. 158) 407 மாக்கேழ் மடநல்லாய் (நாலடி. 41) 249 மாசறக் கழீஇய (குறுந். 13) 112 மாட்டிய பிள்ளை (வெண்பா. கரந்தை. 9) 63 மாடமலி மறுகிற் (திருமுருகு. 71-73) 85 மாண மறந்துள்ளா (கலித். 89) 268 மாண்இழை பேதை 98 மாண்டனை பலவே (பதிற்று. 32) 75 மாதர் நகிலே (யாப். வி. ப. 153) 407 மாதர் முகம்போல் (குறள். 1118) 100, 234, 501 மாந்தர் மயங்கிய 45 மாநிலந் தோன்றாமை 428 மாமலர் முண்டகந் (கலித். 133) 452 மாயவன் மாயம் (வெண்பா. பாடாண். 40) 80 மாயோன் அன்ன (நற். 32) 112 மாரியன்ன வண்கை (புறம். 133) 272, 284 மாரியாம்பல் (குறுந். 117) 301 மாரிவீ ழிருங் கூந்தல் (கலித். 14) 288 மாலை துயல (வெண்பா. பொது. 12) 63 மாலைநீ, தையெனக் (கலித். 108) 501 மாவும் புள்ளும் (யாப். வி. ப. 130) 397 மாவென மடலும் (குறுந். 17) 99 மாவென்ற மடநோக்கின் (கலித். 57) 288 மானோக்கி நீயழ (கலித். 87) 148 மிகுதியான் மிக்கவை (குறள். 158) 75, 256 மிகையணங்கு மெய்ந்நிறீஇ (வெண்பா. பொது. 8) 63 மிடையூர் பிழிய (அகம். 158) 113 மின்னிவர் ஒளிவடந் (யாப். வி. ப. 134) 404 மீன்உண் கொக்கின் (புறம். 277) 77 மீன்தேர்ந் தருந்திய (யாப். வி. ப. 148) 407 முள ரை முறுவல்(கலித்.15) 376 முடவுமுதிர் பலவின் (அகம். 352) 145 முத்துடை வான்கோ 286 முத்தேர் (கலித்.93) 282, முழங்குதானை(பொருந.54-6) முதிர்கோங்கின் (கலித். 56) 365 முதுக்குறைந் தனளே (யாப். வி. ப. 122) 24 முயலைவாசு முறுவலித்தன(யாந. வி.ப. 341) 484 முரசு 275 முருகயர்ந்து வந்த (குறுந். 362) 112 முல்லை வைந்நுனை (அகம். 4) 24 முல்லையும் குறிஞ்சியும் (சிலப். காடுகாண். 64-66) 20 முலையே முகிழ்முகிழ் (குறுந். 337) 99 முளவுமா வல்சி (ஐங்குறு. 364) 42 மொசுத்துட தவழு 407 மெய்யில் தீரா (அகம். 28) 112 மெல்லியல் விறலிநீ (புறம். 133) 88 மென்தினை மேய்ந்த (ஐங்குறு. 261) 109 மேலார் இறைஅமருள் (வெண்பா. பாடாண். 8) 87 மைபடு 145 மையற 145 ய யாகாவா ராயினும் (குறள். 127) 256 யாங்கா குவமோ (நற். 147) 109 யாங்குப் பெரிதாயினும் (புறம். 245) 77 யாதனின் யாதனின் (குறள். 341) 75 யாம்எம் காமந் (குறுந்.241) 109 யாயா கியளே (குறுந். 9) 148, 150 யாயும் யாயும் (கலித். 40) 144 யாரிவன் எங்கூந்தல் (கலித். 89) 145, 157, 220, 458 யாரிவன் என்னை (கலித். 112) 108 யாரினும் காதலம் (குறள். 1314) 268 யாரினும் காதலம் (குறள். 1314) 144 யாரு மில்லை (குறுந். 25) 109 யாரையோ எம்மில் (கலித். 98) 157 யாவருங் காணுநர் 266 யாவரும் விழையும் (அகம். 16) 359 யாழ்கெழு மணிமிடற் (அகம். கட. ழ்த்து.) 282 யானுந் தோழியும் (யாப். வி. ப. 332) 484 யானை உழலும் (திணைமொழி. 6) 112 யானை தாக்கினும் 62 வ வசையில் புகழ் (பட்டினப். 1) 531 வஞ்சமில் கோலானை (வெண்பா. வாகை. 8) 75 வட்டொட்டி யன்ன (யாப். வி. ப. 382) 517 வண்டுறையுங் கூந்தல் (வெண்பா. பெருந்திணை. 18) 74 வண்டூது சாந்தம் (கலித். மரு. 28) 44 வந்துவினை முடித்தனன் (அகம். 44) 44 வயங்குமணி பொருத (அகம். 167) 144 வயல்வெள் ஆம்பல் (நற். 290) 149, 171 வயலைக் கொடியின் (புறம். 305) 28, 256 வரிப்பந்து கொண் (வெண்பா. பாடாண். 50) 82 வருகதில் வல்லே (புறம். 284) 65 வருதார் தாங்கி (புறம். 62) 72 வருந்தினை வாழிய (அகம். 79) 501 வருவது கொல்லோ (ஐங்குறு. 295) 109 வலம்புரி புரையும் (திருமுருகாற். 127) 288 வல்லா ராயினும் (புறம். 57) 86 வல்லா வெண்மை (கலித். 88) 266 வல்வருவர் காணாய் (திணைமாலை நூற். 66) 42 வல்வே லிளையரொ (அகம். 120) 209 வளங்கெழு திருநகர்ப் (அகம். 17) 24 வளம்பட வேண்டாதார் (நாலடி. 103) 423 வளமலர் ததைந்த (ஐங்குறு. 369) 52 வள்ளிதழ் கூம்பிய (கலித். 121) 294 வள்ளெயிற்றுப் (யாப். வி. . 28 வள்ளைநீக்கி (மதுரைக். 255-7) 72 வளிதுரந்தக் கண்ணும் (வெண்பா. பாடாண். 12) 87 வளைஅணி முன்கை (ஐங்குறு. 198) 112 வளைவாய்ச் சிறுகிளி (குறுந். 141) 109 வன்கண் குடிகாத்தல் (குறள். 632) 75 வாட்புகா ஊட்டி 63 வாடாத சான்றோர் (திணைமாலை நூற். 15) 24, 112 வாய்மை னப்படுவது(குறள்.) 75 வாயிலோயே வாயிலோயே (புறம். 206) 87 வாரா தமைவானோ (கலித். 41) 295 வாராய் பாண (நற். 370) 144 வால்வெள் ளருவி (யாப். வி. ப. 383) 519 வாள் அமரின் (வெண்பா. உழிஞை. 7) 63 வாள்நடந் தன்ன (அகம். 72) 109 வாள்நாள் கொளலும் (வெண்பா. உழிஞை. 3) 69 வாள்வரி வேங்கை (யாப். வி. ப. 330) 484 வாளிலங் குண்கண் 148 வாளைவாளிற் (நற். 390) 149 வானத் தணங்கருங் (அகம். 16) 301 வானம் இறைவன் (வெண்பா. தும்பை. 26) 72 வான்மருப்பின் களிற்றி (பதிற்று. 80) 65 விட்டகன் றுறைந்த 256 விட்டென விடுக்குநாள் (குறுந். 236) 148 விடலைநீ நீத்தலின் (கலித். மரு. 30) 44 விடிந்த ஞாலம் 24 விண்ணதிர் இமிழிசை (மலைபடு. 2) 286 விண்பொருபுகழ் (புறம். 11) 285 விரிதிரைப் பெருங்கடல் (குறுந். 101) 359 விரிபுனற் பேரியாறு 285 விருந்தும் பெறுகுநள் (அகம். 324) 168 விரும்பிநீ, என்தோள் (கலித். 18) 217 விரைந்து தொழில் கேட்கும் (குறள். 648) 74 விலங்கொடு மக்கள் (குறள். 410) 42, 293 வில்லோன் காலன (குறுந். 7) 43 விழவுவீற் றிருந்த (பதிற்று. 56) 72 விளங்கிழாஅய் செல் 42 விளம்பழங் கமழும் (நற். 12) 42 விளியுமென் இன்னுயிர் (குறள். 1209) 266 விளையாடாயமொடு (நற். 172) 283 வினைமாட்சிய விரை (புறம். 16) 62 வினையமை பாவையின் (நற். 362) 44 வீங்குசுரை நல்லான் 285 வீங்குநீர் அவிழ் (கலித். 66) 365 வீடுணர்ந் தார்க்கும் (வெண்பா. வஞ்சி. 19) 65 வீதல் அறியா (கலித். 86) 145 வீழுநர் வீழப் (குறள். 1193) 145 வீழும் இருவர்க்கு (குறள். 1108) 99 வெண்குடை மதியம் (புறம். 294) 72 வெண்திங்கள் 309 வெய்ய நெடிதுயிரா (வெண்பா இருபாற் பெருந். 10) 63 வெய்யாரும் வீழ்வாரும் (கலித். 78) 268 வெல்புகழ் மன்னவன் (கலித். 118) 441 வெள்ளாங் குருகின் (குறுந். 152) 233, 530 வெள்ளி விழுட்தொடி (அகம். 286) 148 வெற்கமழ் வெற்பன் (ஐந்திணையைம். 20) 112 வெறிகொள் அறையருவி (வெண்பா. பாடாண். 42) 80 வெறிகொள் இனச்சுரும்பு (தண்டி. 53 உரை) 238 வெறிகொள் இனச்சுரும்பு (தண்டி. 53-உரை) 51 வெறுக்கைக்குச் சென்றார் (திணைமாலை. 67) 45 வென்றுகலந் தரீஇயர் (பதிற்று. 53) 69 வேங்கை மலர (திணைமொழி. 8) 112 வேங்கை நறுமலர் (ஐந்திணையைம். 15) 112 வேட்ட பொழுதின் (குறள். 1005) 99 வேட்டச் செந்நாய் (குறுந். 56) 44 வேட்டோர்க்கு (அகம். 332) 109 வேண்டுதல் வேண்டாமை (குறள். 4) 313 வேண்டுதியால் நீயும் (வெண்பா. பாடாண். 41) 80 வேதின வெரிநின் (குறுந். 140) 160 வேந்துடைத் தானை (புறம். 330) 65 வேம்பின் பைங்கா (குறுந். 196) 144, 148 வேய்புரை மென்றோள் (கலித். 39) 286 வேய்மருள் பணைத்தோள் (அகம். 1) 286 வேய்வென்ற தோள் (கலித். 138) 288 வேயெனத் திரண்டதோள் (கலித். 57) 95 வேயொடுநாடிய 282 வேர்பிணி வெதிரத்துக் (நற். 62) 46 வேரல் வேலி (குறுந். 18) 112, 422 வேலும் விளங்கின (அகம். 259) 42 வேலொன்றுகண் 282 வேளா (அகம். 24) 44 வேற்றுமை (புறம். 183) 74 வேறாக (திணை. நூற். 90) 39 வைகுபுலர் விடியல் (அகம். 41) 44 வைய மகளை (வெண்பா. பாடாண். 3) 80 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசையில் (பொருளதிகாரம்)