தேவநேயம் – 10 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 10 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 10 + 310 = 320 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப்படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடு வதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை பண்டை விளையாட்டு விழாக்கள் 1 பண்ணாங்குழி விளையாட்டு 2 பண்ணியம் 7 பண்ணை 7 பண்பட்ட மொழி 8 பண்பாடு என்னும் சொல் விளக்கம் 8 பணிமொழி 9 பணையம் 9 பத்தி 9 பத்துப் பொருத்தங்கள் 10 பதக்கம் 10 பதம் - பத(இ.வே.) 10 பதர் வகை 10 பதவி -பதå10 பதி 10 பதிகம் 21 பந்தி 22 பந்து விளையாட்டு 23 பப்படம் 25 பம்பர விளையாட்டு 25 பயிர்ச் செறிவு வகை 29 பயிர் வகை 29 பரம் 29 பரமன் 29 பரிசம் வாங்காமை 30 பரிதி 30 பருப்புச் சட்டி விளையாட்டு 31 பருவம் 31 பல்லக்கு 32 பல்லவர் ஆட்சி (சோழ நாடு) 32 பல்லி 32 பலகை 32 பலம் 33 பலா 33 பவளம் 33 பழத்தோல் வகை 33 பழு 33 பள்ளி 34 பள்ளிக்கூட விளையாட்டுக்கள் 38 பளிங்கு 39 பற்று 39 பற்றுக்கோடு 40 பன்னிரு பொருத்தம் 40 பன்னீர்க்குளத்தில் முழுகுதல் விளையாட்டு 40 பனுவல் 41 பாக்கியம் 42 `பாக்கு வெட்டியைக் காணோமே - விளையாட்டு 42 பாகம் 43 பாடிவாசல் 44 பாண்டி நாட்டுத் தமிழ்ச் சிறப்பு 44 பாண்டியன் 45 பாண்டியன் உரோம நாட்டுத் தொடர்பு 46 பாண்டி விளையாட்டு 48 பாணர் 56 பாதம் 67 பாதிரி 71 பாயிரம் 72 பாயிரப் பெயர்கள் 72 பார்க்கும் வகை 77 பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள் 77 பார்ப்பனர் தமிழரை வென்ற வகை 89 பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள் 90 பார்ப்பார் 96 பாரதக் காலம் 103 பாரி 107 பாரிகோடு விளையாட்டு 107 பால் 108 பாலியல் தெரிப்பு 108 பாவி 108 பாவினம் 108 பாவை என்னுஞ் சொல் வரலாறு 117 பிங்கலை 119 பிஞ்சுவகை 119 பிடகம் 119 பிடகை 119 பிண்டநூல் 119 பிண்டம் 120 பிண்ணாக்கு 121 பித்தம் 121 பித்தர் 121 பிராமணம் 121 பிராமணன் நிலத்தேவனா? 123 பிராமணனுக்கு உரியது எவ்வறம்? 126 பிழா 127 பிள்ளையார் வணக்கம் 127 பிறப்பு 128 புகழ்வகை 128 புகா (உணா) 128 புகையிலைக் கட்டை யுருட்டல் விளையாட்டு 133 புட்டம் 134 புடம் 135 புணை 135 புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும் 135 புர 137 புரட்சி 138 புரட்சிப் பாவேந்தன் கனவு 138 புரம் 139 புராணம் 139 புரி (1) 140 புரி (2) வளை 140 புரு 145 புருவம் 145 புரை - புர 145 புல்1 (பொருந்தற் கருத்துவேர்) 145 புல்2 (பருத்தற் கருத்துவேர்) 154 புல்3 (திரட்டற் கருத்துவேர்) 162 புல்4 (விரும்பற் கருத்துவேர்) 166 புல்5 (வளைதற் கருத்துவேர்) 172 புல்6 (துளைத்தற் கருத்துவேர்) 177 புலவர் பெருமிதம் 230 புலிப்பற்றாலி 230 புலியும் ஆடும் விளையாட்டு 230 புள்ளி குத்தல் 231 புறங்கூற்று வகை 231 புறங்கூறுதல் 231 புறமணம் 232 புறநாணூறும் மொழியும் 232 பூ (1) 259 பூ (2) 260 பூக்காம்பு வகை 260 பூக் குதிரை விளையாட்டு 260 பூச்சி விளையாட்டு 261 பூசு 261 பூசை 261 பூதம் 262 பூதி 263 பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு 263 பூ மடல் வகை 264 பூவின் நிலைகள் 264 பூனைப் பெயர்கள் 264 பெட்டகம் (1) 270 பெட்டகம் (2) 270 பெட்டி 270 பெயர் 271 பெயர் வினை 271 பெரிய புராணம் 271 பெரியோரைச் சுட்டாமை 271 பெரு 272 பெருந்திணை 272 பெருந் தேவ மதம் 272 பெற்றி 288 பெற்றியர் ஆகார் (சித்தர் ஆகார்) 288 பெற்றோர் 288 பே 288 பேசு (1) 289 பேசு (2) 289 பேடி 292 பேடியர் வகை 293 பேடு 293 பேதை 293 பேம் 293 பேய் வகை 293 பேரன் 294 பொத்தகம் 294 பொருட் பாகுபாடு 295 பொருட் பெயர்கள் 301 பொருநன் 301 பொருள் திரிசொற்கள் ஐந்நிலை 301 பண்டை விளையாட்டு விழாக்கள் (1) புனல் விளையாட்டு பண்டைக் காலத்தில், ஆற்றருகேயிருந்த நகரமாந்தரெல்லாரும், ஆண்டுதோறும் ஆற்றிற் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று, ஒரு பகலிற் பெரும்பகுதி அவ்வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா, புனல் விளையாட்டு அல்லது புனலாட்டு என்று பெயர் பெற்றது. அது நீர்விழா, நீராட்டு, நீராட்டணி முதலிய பெயர் கொண்டும் வழங்கிற்று. நீராடுவாரெல்லாம், ஆற்றிலிடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன் முதலிய காணிக்கைக் கருவிகளையும், புணை தெப்பம் பரிசல் முதலிய மிதவைக் கருவிகளையும், காதலர் மீது வாச நெய்யையும் வண்ண நீரையும் தெளித்தற்குத் துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும், நீராடியபின் வேண்டும் ஊண் உடை அகில் முதலியவற்றையும், தத்தமக்கு இயன்றவாறு, யானை குதிரை தேர் முதலியவற்றில் ஊர்ந்தும் கால்நடையாய் நடந்தும், கொண்டு செல்வர். குடிவாரியாக ஆங்காங்கு அமைக்கப் பெற்ற குற்றில்களும் புதுக் கடைகளும், சேர்ந்து, ஒரு விழவூர் போலக் காட்சியளிக்கும். நீந்தவல்லார் சற்று ஆழத்திலும் அல்லாதார் கரையையடுத்தும் நீராடுவதும், பூசுஞ் சுண்ணம் சாந்து குழம்பு முதலியனவற்றின் ஏற்றத்தாழ்வு பற்றிப் பெண்டிர் இகலாடுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரொடு கூடிப் புனலாடினாரென்று மனைக் கிழத்தி யர் ஊடுவதும், பூசுசாந்தம் புனைந்தமாலை உழக்கும் நீராட்டு முதலியவற்றாற் கலங்கல் வெள்ளம் புதுமணம் பெறுவதும், புனலாட்டு நிகழ்ச்சிகளாம். நீராடியவர் மாலைக்காலத்தில் மகிழ்ந்தும் அயர்ந்தும் மனை திரும்புவர். நீராட்டு விழா உஞ்சை நகரத்தில் 21 நாள் நிகழ்ந்த தெனப் பெருங்கதை கூறும். இக்காலத்துக் கொண்டாடப்பெறும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு, பண்டைப் புனலாட்டை ஒரு புடையொக்கும். (2) பொழில் விளையாட்டு நகரவாணர், இளவேனிற் காலத்தில், ஊருக்குச் சற்றுத் தொலைவி லுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித் தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. இஃது இக்காலத்தில் உறவினரும் நண்பருமாக ஒரு சிலர் சென்றுண்ணும் காட்டுணாப் போன்ற jகும்.nrhiyia, அடைந்தபின், அடிசில் தொழிலில் ஈடுபட்டவ ரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினைபற்றி வெவ்வே றிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாட வும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல் விளையாடு தல் முதலிய வினை நிகழ்த்தவும், பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர; இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும், ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டு செல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். புதிதாய் மணந்த காதலர், தாமே சென்று ஆடும் பொழிலாட்டும், மேற்கூறியவாறு பொது நகர மாந்தர் கொண்டாடும் பொழிலாட்டும், வெவ்வேறாம். பண்ணாங்குழி விளையாட்டு I பொதுவகை ஆட்டின் பெயர் : நெற்குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழிதோண்டி, அதிற் கற்களையிட்டு ஆடும் ஆட்டு பண்ணாங்குழி எனப்படும். பண்ணையென்பது பள்ளம். பண்ணை பறித்தல் குழிதோண்டுதல். பண்ணாங்குழி என்னும் பெயர், அவ்வவ் விடத்தைப் பொறுத்துப் பன்னாங்குழி, பல்லாங்குழி, பள்ளாங்குழி என வெவ்வேறு வடிவில் வழங்கும். பெரும்பாலும் பதினான்கு குழி வைத்து இவ்விளையாட்டு ஆடப் பெறுவதால், பதினான்கு குழி என்பது முறையே பதினாங்குழி பன்னாங்குழி எனத் திரிந்ததாகச் சிலர் கொள்வர். ஆயின், பதினாங்குழி என எங்கேனும் வழங் காமை யானும், பன்னான்கு என்பது இலக்கிய வழக்காதலானும், பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்னும் வடிவங்களே பெரு வழக்காய் வழங்குதலானும், பதினான்கிற்குக் குறைந்தும் கூடியும் குழிகள் வைத்துக் கொள்ளப்படுதலானும், பள்ளாங் குழி என்பதற்குப் பள்ளமான குழி என்றே பொதுமக்களாற் பொருள் கொள்ளப்படுதலானும், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாம். ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர். ஆடு கருவி: நிலத்திற் சமமான இருபடுக்கை வரிசையாகக் கில்லப்பட்ட 10 அல்லது 14 அல்லது 16 குழிகளும், அவற்றுள் அவ்வைந்தாய் இடுவதற்கு வேண்டிய கழற்சிக்காய் (கச்சக்காய்) அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்களும், இதற்கு வேண்டுங் கருவிகளாம். சிலர், என்றும் எங்கும் வசதியாய் ஆடுதற் பொருட்டு, வேண்டிய அளவு பள்ளஞ் செதுக்கப் பெற்ற மரக்கட்டைகளை வைத்திருப்பர். ஆடிடம்: இது வீட்டுள்ளும் வீட்டு அல்லது மர நிழலிலும் ஆடப் பெறும். இது ஏனை வகைகட்கும் ஒக்கும். ஆடுமுறை: குழி வரிசைக்கொருவராக இருவர் வரிசையடுத்து எதிரெதிர் உட்கார்ந்து, குழிக்கைந்தாக எல்லாக் குழிகளிலும் கற்களைப் போடுவர். முந்தியாடுபவர், தம் வரிசையில் ஏதேனு மொரு குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, வலப்புறமாகச் சுற்றிக் குழிக்கொன்றாகப் போட்டுக் கொண்டே போதல் வேண்டும். கற்களைப் போட்டு முடிந்தபின், கடைசிக்கல் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, அதற்கப்பாலுள்ள குழியில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டு போதல் வேண்டும். இங்ஙனம் போடும்போது, தம் வரிசையில் இடவலமாகவும், எதிரி வரிசையில் வல இடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி, வெறுமையாக இருந்தால் அதற்கடுத்த குழியிலுள்ள கற்களனைத் தையும் எடுத்துத் தம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின், எதிரியார் தம் வரிசையிலுள்ள ஒரு குழியிலிருந்து தொடங்கி, முன் சொன்னவாறே ஆடுவர். கடைசியாகப்போட்ட குழிக்கு அடுத்த இரு குழியிலும் கல் இல்லாவிடின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுவிட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வரிசையிலுள்ள குழியொன்றில் 4 கற்கள் சேர்ந்துவிடின், அவற்றைப் பசு என்று சொல்லி எடுத்துக் கொள்வர். சிலவிடங் களில், 8கல் சேர்ந்து விடின் அவற்றைப் பழம் என்று சொல்லி எடுத்துக் கொள்வர். இங்ஙனம் இருவரும் மாறி மாறி ஆடிவரும்போது, எடுத்துக் கொள்ளப்படாது எஞ்சியுள்ள கற்களெல்லாம் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்துவிடின், ஆட்டம் நின்றுவிடும். இருவரும் தாந்தாம் எடுத்துவைத்திருக்கும் கற்களை எண்ணுவர். கடைசி யில் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்த கற்களெல்லாம், அவ்வரிசை யாரைச் சேரும், மிகுதியான கற்களை எடுத்தவர் வென்றவராவர். சிலவிடங்களில், ஒரே ஆட்டையில் வெற்றியைத் தீர்மானியாமல், ஐந்தாட்டையின் பின் அல்லது பத்தாட்டையின் பின் தீர்மா னிப்பர். அம்முறைப்படி ஆடும்போது, முன் ஆட்டைகளில் தோற்றவர் வென்றவரிடம் தமக்கு வேண்டிய கற்களைக் கடன் வாங்கிக் கொள்வர். வென்றவர் கடன் கொடாவிடின், இருக்கின்ற கற்களை அவ்வைந்தாகக் குழிகளில் போட்டுவிட்டு, கல் இல்லாத அல்லது ஐந்து கல் இல்லாத குழிகளை வெறுமையாக விட்டுவிட வேண்டும். அவ்வெறும் குழிகட்குப் பவ்வீக்குழிகள் என்று பெயர். அவற்றில் ஒவ்வொரு குச்சு இடப்படும். ஒருவரும் அவற்றில் ஆடல் கூடாது. தோற்றவர்க்கு ஒரு குழியும் நிரம்பாதபோது (அதாவது ஐந்து கற்கும் குறைவாக இருக்கும்போது) இருக்கின்ற கற்களை ஒவ் வொன்றாகக் குழிகளில் போட்டுவிட்டு, கல் இல்லாத குழிகளைப் பவ்வீக் குழிகளாக விட்டுவிடல் வேண்டும். அன்று எதிரியாரும் தம் வரிசையிலுள்ள எல்லாக் குழிகட்கும் ஒவ்வொரு கல்லே போடவேண்டும். இங்ஙனம் ஒவ்வொரு கல்லே போட்டு ஆடும் முறைக்குக் கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர். அவ்வைந்து கல் போட்டு ஆடித் தோற்றவர், கஞ்சிகாய்ச்சி ஆடும்போது வெல்ல இடமுண்டு. ஒருமுறை வென்றவர் மறுமுறை முந்தியாடல் வேண்டும். ஓர் ஆட்டை முடிந்தபின், வெற்றியும் தோல்வியுமின்றி இருவரும் சமமாகக் கற்கள் வைத்திருப்பின், அடுத்த ஆட்டையில் சரிபாண்டி ஆடல் வேண்டும். முதலாவது அவ்வைந்தாகவும் பின்பு பப்பத்தாகவும் கற்களையெடுத்து, அத்தனையே போட்டு ஆடுவது, சரிபாண்டியாடலாகும். இதில் விரைந்து விளைவு காணலாம். II கட்டுக் கட்டல் ஆட்டின் பெயர் : நான்கு மூலைக்குங் கட்டுக்கட்டி ஆடும் பண்ணாங்குழி விளையாட்டுவகை, கட்டுக்கட்டல் எனப்படும். ஆடுவார் தொகை: இருவர் இதை ஆடுவர். ஆடு கருவி : இரு சமவரிசையாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதற்குரிய கருவிகளாம். ஆடுமுறை: ஆடகர் ஒவ்வொருவரும் தத்தம் வரிசையின் இடக்கோடி (அதாவது இடப்புறக் கடைசி)க் குழியினின்று தொடங்கி ஆடல் வேண்டும். எடுத்த கற்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டபின், கடைசியாகப் போட்ட குழியினின்றே கற்களையெடுத்து ஆடல் வேண்டும். கடைசியாகப் போட்ட குழியில் ஏற்கெனவே ஒரு கல்லேனும் இருந்தால்தான், அதினின்று எடுக்க முடியும்; இல்லாவிட்டால் (அதாவது போட்ட பின் ஒரு கல்லேயிருந்தால்) எடுக்க முடியாது. வெறுங் குழியைத் துடைத்து அடுத்த குழியிலிருந்தேனும், பிற வகையி லேனும், கற்களை எடுத்து வைத்துக் கொள்ளுதல் இவ்விளை யாட்டில் இல்லை. ஒரு மூலைக்குழியில் ஏற்கெனவே மூன்று கல்லிருப்பின், நாலாவது கல்லைப் போடும்போது, அதைக் குழிக்குள் போடாமல் குழிக்குப் பக்கமாக வைத்துவிட வேண்டும். இதுவே கட்டுக்கட்டல் எனப்படுவது. கட்டுக் கட்டிய குழியில், கட்டினவரே மேற்கொண்டு கல்போட முடியும்; அடுத்தவர் போடமுடியாது. இங்ஙனம் ஒருவரேயோ இருவருமாகவோ நான்கு மூலைக்கும் கட்டுக் கட்டிக் கொள்ளலாம். கட்டிய குழியில் கல் போடலாமேயன்றி எடுக்க முடியாது. ஆதலால், கட்டுக்கட்டிய குழிகளில் மேலும் மேலும் கல் சேர்ந்து கொண்டேயிருக்கும். எல்லாக் கற்களும் நான்கு மூலைக்கும் போய்ச் சேர்ந்தபின் அவரவர் கட்டிய குழிக்கற்களை யெடுத்து எண்ணல் வேண்டும். மிகுதியான கற்களையுடையவர் வென்றவ ராவர். III அரசனும் மந்திரியும் சேவகனும் ஆட்டின் பெயர்: அரசனும் மந்திரியும் சேவகனும் என மூவர் ஆடும் பண்ணாங் குழியாட்டுவகை, அவர் புனைபதவிப் பெயரையே பெயராகக் கொண்டது. ஆடுகருவி : கட்டுக்கட்டற்குப் போன்றே, இரு சமவரிசை யாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதை ஆடுகருவியாம். ஆடுமுறை : இரு வரிசைக் குழிகளுள்ளும், நடு இரு மூன்று அரசனுடையன வென்றும், இடப்புற ஈரிரண்டு மந்திரியுடையன வென்றும், வலப்புற ஈரிரண்டு சேவகனுடையனவென்றும் கொண்டு, அரசன் மந்திரி சேவகன் என்ற வரிசையொழுங்கில், ஆடகர் மூவரும் ஆடல் வேண்டும். ஒவ்வொருவரும், தாந்தாம் ஆடும் ஒவ்வொரு தடவையும், தத்தம் குழியிலிருந்தே தொடங்கி ஆடல்வேண்டும். ஆயின், எல்லார் குழிகளிலும் வரிசைப்படி கற்களைப் போடலாம். ஒவ்வொன் றாகக் கற்களைப் போட்டு முடிந்த பின், கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களையெடுத்து முன்போல் ஆடவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி வெறுமையாக இருப்பின் அதைத் துடைத்து அதற்கடுத்த குழியி லுள்ள கற்களையெல்லாம் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின் அடுத்தவர் ஆடல்வேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழிகளும் வெறுமையாக இருப்பின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுகொள்ள வேண்டும். வெறுங்குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களை எடுக்கும்போது, யாரும் யார் காயையும் எடுக்கலாம். அவரவர் குழிகளிலுள்ள பசுவை அவரவர் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாக் காயும் எடுத்துக்கொள்ளப்பட்ட பின், அரசன் ஏனையிருவர்க்கும் ஒவ்வொன்று கொடுத்துவிடவேண்டும். அதன்பின், அவனுக்கு 6 குழி நிரம்பினால் (அதாவது 30 காய் இருந்தால்), அவனுக்கு வெற்றியாம். அன்றி, யார் மிகுந்த காய் எடுக்கின்றனரோ அவருக்கே வெற்றியாம். வென்றவர் தமக்கடுத்த மேற்பதவியும் தோற்றவர் தமக்கடுத்த கீழ்ப்பதவியும் அடைதல் வேண்டும். அரசன் வெல்லின் தன் பதவியைக் காத்துக் கொள் வான். ஆயின், அரசனும் மந்திரியும் மூன்றுமுறை தொடர்ந்து பழமாயின், கீழ்ப்பதவி யடைதல் வேண்டும். உலக வாழ்க்கையிலுள்ள ஏற்றிறக்கம் இவ்விளையாட்டால் உணர்த்தப் படுவது, கவனிக்கத்தக்கது. IV அசோகவனத் தாட்டம் ஆட்டின் பெயர் : ஒருவர் தமித்திருக்கும்போது தாமாய் ஆடிக் கொள்ளும் பண்ணாங்குழியாட்டுவகை, அசோக வனத்தில் தனித்திருந்ததாகச் சொல்லப்படும் சீதையொடு தொடர்புபடுத்தி, அசோகவனத் தாட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆடு கருவி : கட்டுக் கட்டற்குரியவையே இதற்கும். ஆடுமுறை : இருகுழி வரிசையுள்ளும், மேல்வரிசையில், முறையே ஒன்றும் இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் ஆறும் ஏழுமாக மேன்மே லேற்ற முறையிலும், கீழ்வரிசையில், முறையே ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாக மேன்மே லிறக்க முறையிலும், இடவலமாகக் காய்களைப் போட்டுக் கொள்ள வேண்டும். இங்ஙனமன்றி, மேல் வரிசையில் மேன்மே லிறக்க முறையிலும் கீழ்வரிசையில் மேன்மேலேற்ற முறையிலும் போட்டுக் கொள்ளலாம். எங்ஙனமாயினும், இருவரிசையிலும் ஏற்றிறக்க முறை மாறி யிருத்தல் வேண்டுமென்பதே விதியாம். தொடங்கும்போது கீழ் வரிசையிலுள்ள பெருந்தொகைக் குழியி னின்று (அதாவது 7 காய்கள் உள்ள குழியினின்று) தொடங்கல் வேண்டும். காய்களைக் குழிக்கொன்றாகப் போட்டுச் செல்லும் போது, பிறவகை யாட்டுக்களிற் போன்றே கீழ்வரிசையில் இட வலமாகவும் மேல் வரிசையில் வலஇடமாகவும் போட்டுச் செல்ல வேண்டும். காய்களைப் போட்டு முடிந்தபின், கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த பெருந்தொகைக் குழியினின்று காய் களை எடுத்தாடவேண்டும். அது கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்தேயிருக்கும். வெறுங்குழி அமைவதும், அதைத் துடைத்து அடுத்த குழியி லுள்ள காய்களை எடுத்துக்கொள்வதும், இவ்விளை யாட்டில் இல்லை. மேற்சொன்னவாறு (அதாவது என்றும் ஒரு வரிசையிலுள்ள பெருந் தொகைக் குழியினின்றே காயெடுத்து) ஒன்பது முறை தொடர்ந்து ஆடின். ஆட்டந் தொடங்கு முன் போட்டிருந்த வாறே, அவ்வக் குழிகளிற் காய்கள் அமைந்துவிடும். அங்ஙனம் இராவிடின் ஆடினது தவறென்று அறிந்து கொள்ளலாம். ஒருவர் தமித்தாடுதற்கேற்ற விருப்பத்தை இவ்விளையாட்டு உண்டுபண்ண வல்லது. குறிப்பு :- பண்ணாங்குழி பெண்பிள்ளைகட்கே ஏற்ற தாயினும், பையன் களாலும் ஆடப்படுவது உண்டு. பண்ணியம் பண் - பண்ணியம் = பண்ணப்பட்ட பல்வேறு பொருள். கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ (மணி : 7 : 124). வடவர், மெச்சத்தக்கது, வாங்கவும் விற்றற்கும் உரியது என்றும் செயற்கை முறையில் வெவ்வேறு மூலப்பொருள் கூறுவர். (வ.வ : 199). பண்ணை உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் ஆட்டு பண்ணை... (த.வி.முக.கூ.) பண்பட்ட மொழி இயற்கைமொழி அல்லது முழைத்தல் மொழி முழுவளர்ச்சி யடைந்தபின் பண்பட்ட மொழி (Culticulate Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) தோன்றிற்று. முறையே சேய்மை அண்மை முன்மையுணர்த்தும் M.ஈ.C என்னும் முச்சுட்டுக்களினின்றே இழைத்தல் மொழி பெரும்பாலும் உருவாயிற்று. அம் மூன்றனுள்ளும் முன்மைச் சுட்டாகிய ஊகாரமே தமிழ்ச் சொற்களுள் முக்காற் பங்கிற்கு மேற்பட்ட பகுதியைப் பிறப்பித்துள்ளது. (த.இ.வ.முன்னுரை.) பண்பாடு என்னும் சொல் விளக்கம் பண்படுவது பண்பாடு. பண்படுதல் சீர்ப்படுதல், அல்லது திருந்து தல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் (தனிப்பாடல்) என்றும், திருந்திய வுள்ளத்தைப் பண்பட்டவுள்ள மென்றும், சொல்வது வழக்கம். பண் என்னும் பெயர்ச் சொற்கு மூலமான பண்ணுதல் என்னும் வினைச் சொல்லும், சிறப்பாக ஆளப்பெறும்போது, பல்வேறு வினைகளைத் திருந்தச் செய்தலையும் பல்வேறு பொருள்களைச் செவ்வையாய் அமைத்தலையும், குறிக்கும். பண்ணுதல் = 1. நிலத்தைத் திருத்துதல். (பண்ணப்பட்ட மருதநிலம் பண்ணை). 2. ஊர்தியைத் தகுதிப் படுத்துதல். பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் (புறம்.12) 3. சுவடித்தல் (அலங்கரித்தல்) பட்டமொ டிலங்கல் பண்ணி (சூளா. கல்யா. 14) 4. இசையல கமைத்தல். பண்ணல் பரிவட்டணை யாராய்தல் (சீவக. 657, உரை) 5. பண் அமைத்தல். மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் (மலைபடு. 534). 6. சமைத்தல். பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர் (மலைபடு. 417). செய் என்னும் வினைச் சொல்லினின்று, திருந்த அல்லது அழகாய்ச் செய்யப்பெற்றது என்னும் பொருளில், செய் என்னும் நிலப்பெயரும் செய்யுள் என்னும் இயற்றமிழ்ப்பாட்டின் பெயரும் தோன்றியிருப்பது போன்றே; பண் என்னும் வினைச் சொல்லினின்றும், திருந்த அல்லது இனிதாய்ச் செய்யப்பெற்றது என்னும் பொருளில், பண்ணை என்னும் நிலப் பெயரும் பண் என்னும் இசைத் தமிழ் அமைப்பின் பெயரும்; தோன்றியுள்ளன. பண்பாடு பல பொருட்கு உரியதேனும், நிலமும் மக்கள் உள்ள மும் பற்றியே பெருவழக்காகப் பேசப்பெறும். ஆங்கிலத்தில் Culture என்னும் பெயர்ச் சொல் சிறப்பாக நிலப் பண்பாட்டையும் உளப் பண்பாட்டையும் குறிப்பது கவனிக்கத் தக்கது. cultivate என்னும் வினைச்சொல்லும் அங்ஙனமே. இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும், மக்களைத் தழுவிய உளப்பண்பாடே சிறப்பாகக் கொள்ளவும் சொல்லவும் பெறும். சேலங் கல்லூரிமேனாள் முதல்வர் பேரா. இராமசாமிக் கவுண்டர் குடும்பம் பண்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கும், தாய்மொழியாகிய தமிழைத் தலைமையாகப் போற்றும் செட்டிகுளம் பண்பட்டவூருக்கும், தலை சிறந்த எடுத்துக் காட்டாம். உள்ளம் பண்படுவது பெரும்பாலும் கல்வியாலாதலால், பண்பாடு கல்வி மிகுதியையுங் குறிக்கும். தமிழில் தன்மையைக் குறிக்கும் சொற்களுள், இயல்பு என்பது இயற்கையான தன்மையையும், பண்பு என்பது பண்படுத்தப் பெற்ற நல்ல தன்மையையும், குறிக்கும். பணிமொழி எத்துணைக் கடுஞ்சினத்தையும் எளிதில் தணிக்கும் இனிமையும் தாழ்மையும் கலந்த வசியச் சொற்கள். (தி.ம. 1258) பணையம் பந்தயப் பொருள். வட்டினி என்றும் பெயர் பெறும். (தி.ம.933). பத்தி பத்தி - பக்தி (bh) பகு - பஜ் (bh). பத்தன் - பக்த (bh). இங்ஙனம் பகு, பத்தன், பத்தி என்னும் தென்சொற்களும், பஜ், பக்த, பக்தி என்னும் வடசொற்களும், ஒரே மூலத்தினின்று தோன்றியிருப்பதால், வடசொற்கட்குக் காட்டிய மொழிப்பொருட் காரணமே தென்சொற்கும் ஒக்கும் என அறிக. (வ.வ). பக்த = பகுக்கப்பெற்றது, பகுதியானது, பாற்பட்டது, பாற்பட்டவன், பற்றுள்ளவன், போற்றுபவன், வணங்குபவன், வழிபடுபவன், அடியான் (மா.வி.அ.). பக்தி = பகுக்கப் பெற்றமை, பகுதியானமை, பாற்பட்டமை, போற்றுகை, வணங்குகை, வழிபடுகை, தேவடிமை (மா.வி.அ.). பத்தி என்னும் சொல்லின் வடிவ வரலாற்றையும், அதன் பொதுப்பொருளை யும், பகு என்னும் சொல்லின் கீழ்க் காண்க. பற்று என்பது இருதிணைப் பொருள்கள் மீதுமுள்ள அழுந்திய ஆசையையே குறிக்கும்; பத்தி என்பது இறைவனிடத்தும் தலைவனிடத்துங் கொண்ட அச்சத்தொடு கூடிய உண்மையான பணி வன்பையே குறிக்கும். (வ.வ) பத்துப் பொருத்தங்கள் 1. நாள் (நட்சத்திரம்), 2. கணம், 3. எண்ணிக்கை (மகேந்திரம்), 4. பெண் நீட்சி (திரி தீர்க்கம்), 5. பிறவி (யோனி), 6. ஓரை (இராசி), 7. கோள் (இராசியதிபதி), 8. வசியம், 9. இணக்கம் (வேதை), 10. சரடு (இரச்சு). (த.தி. 20) பதக்கம் பதக்கம் - பதக பட - பத - பதக்கம் = பரந்த அணி. ஒ.நோ: படாகை - பதாகை. (வ.வ : 199). பதம் - பத (இ.வே) பதி - பதம் = நிலத்திற் பதியும் காலடி. பதம் - பாதம் - பாதை = பாதம் பட்டு உண்டாகும் வழி. பாதை என்னும் சொல் வடமொழியில் இல்லை. ஆயின், தியூத்தானியத்தில் உண்டு. OE paeth, E. path. பாதம் - பாத (இ.வே.) (வ.வ :199) (தி.ம. : 747) பதர் வகை பதர் நன்றாய் விளையாதது; பொக்கு உள்ளீடற்றது. (சொல் : 70). பதவி - பதவீ பதி - பதம் = பதிந்திருக்கும் நிலை அல்லது நிலைமை, பதவி. பிரிவில் தொல்பதந் துறந்து (கம்பரா. திருவடி சூட்டு. 101). பதம் - பதவு - பதவி. (வ.வ : 199). பதி (1) சொல் :- பதி. (2) சொல்வகை :- (part of speech or word-class) - வினை. செயப்படுபொருள் குன்றாவினையும் (v.t.) செயப்படுபொருள் குன்றியவினையும். (v.i.). (3) புடைபெயர்ச்சி (conjugation): 8ஆவது வகை. பதிகிறேன் (நி. கா.) gâªnj‹ (ï.fh.), பதிவேன், (எ.கா.). (4) பொருளும் ஆட்சிமேற்கோளும் : (meanings and illustrative quotations). செயற்பெயர் வடிவு : (gerunidial form) பதி - தல் = (செ.குன்றா.வி). 1. பதிவேட்டில் எழுதுதல், to register, enter in writing. 2. பெயர்ப் பட்டியிற் சேர்த்தல், to take on the roll. (செ. குன்றிய.வி.) 1. ஆழ்தல், to sink in, as the foot or a wheel in mud; to enter, penetrate, as into a soft body. வண்டிச் சக்கரம் சேற்றிற் பதிகிறது. (உலக வழக்கு). 2. தாழ்ந்திருத்தல், (to be low-lying. as land; to be depressed, sunk, hollow, worn away. நிலம் பதிந்திருக்கிறது. (உ.வ.). 3. தங்குதல், to settle, abid; to perch, roost, as a bird, பதிசென்று பதிந்தனன் (தணிகைப்பு பிரமன். 2.) 4. நிலையாதல், to be permanent, as a post. எனக்கு அரண்மனையிற் பதிந்த வேலை யில்லை. (நாஞ்.உ.வ.) 5. ஊன்றுதல், to be absorbed, engrossed, involved, as the mind in any object. மனம் பாடத்திற் பதிகிறாதா? (உ.வ.). 6. முத்திரை, எழுத்தச்சு முதலியன அழுந்துதல், to be imprinted, impressed, marked, stamped, engraven, indented. 7. அதிகாரம் பெறுதல், to be invested with power, authority. (W.). 8. இறங்குதல், to be decline after meridinal transits; to be near setting, as a heavenly body; to descend, alight, as a bird. 9. விலை தணிதல், to be low, as price. விலையைப் பதியக் கேட்டான். (உ.வ.) 10. அமைதியாதல், to be mild, gentle or tractalle; to become submissive, modest or humble. பையன் பள்ளிக்கூடத்திற் பதிந்திருக்கிறான். (உ.வ.) 11. அஞ்சி யிணங்குதல் அல்லது பின்வாங்குதல், to quail, flinch. பெயரெச்சம் : (adjectival participle) இ. கா. பெ. பதிந்த நிலம் low land. செயற்பெயரும் தொழிற்பெயரும் : (gerund and verbal noun.) பதிதல், பதிகை, பதிவது, the act of registering, sinking etc. பதிவு, registration, sinking etc. தொழிற்பெயரும், தொழிலாகுபெயரும் : (Verbal noun and metonymical verbal noun.) பதி = 1. பதிகை, penetration, transfixion, thrust. நுண்ணிலைவேல் பதிகொண்டு, (சீவக. 1186). 2. பதியம், cluster of saplings planted temporarily. 3. நாற்று, sapling for transplantation. 4. பதிவிளக்கு, lamp fixed on a pot while exercising devils (W.). 5. ciwÉl«, abode, residence (âth.), பதியிற் கலங்கிய மீன் (குறள். 1116), 6. வீடு, home, house (திவா.). 7. கோயில், temple (சங். அக.) 8. குறி சொல்லும் இடம். an oracular shrine, பதியிருந்த பதியெல்லாம் பதிவாகச் சென்றேன் (நாஞ்.மருமக்.மா.) 9. ஊர், town, city, village. பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1 : 15) 10. ஞாலம் (பூமி), the earth. (தைலவ. தைவ.). 11. குதிரை, horse. (அக. நி). பதிவு = 1. அழுந்துகை, impression, indentation. 2. பள்ளம், lowness of a surface; depression. நிலம் பதிவாயிருக்கிறது. (உ.வ.) 3. பதியம். cluster of saplings planted temporarily. 4. விண்மீன்களின் சாய்வு declination of a heavenly body. (W.) 5. எழுவதற்கு முன்னுள்ள திங்கள் (சந்திரன்) நிலை, situation of the moon before its rise. (W.) 6. பதுக்கம், stooping, crouching, lurking as a thief or a beast ready to spring on its prey; ambush. 7. மனம் ஊன்றுகை. engrossment, absorption in an object or pursuit. 8. கணக்குப் பதிகை, registering, entering, as in account. 9. பதிவு செய்யப்பட்டது. that which is registered. 10. பதியப் பட்டது. registry, entry. 11. தீர்மானிக்கப்பட்ட செலவு, allotment, as in a budget. இந்தக் கோவிலில் சங்கு ஊதுவதற்குப் பதிவு ஏற்படவில்லை (நாஞ்.உ.வ.) 12. நிலைப்பு (நிலைவரம்), permanence. இந்தவூரில் அவன் பதிவாயிருக்கிறான் (உ.வ.). 13. வழக்கம், custom, habit. 14. அமைதி, submission, obedience, humility. பதிவாய் நடந்துகொள் (உ.வ.) 15. விலைத்தணிவு. lowness of price. (W.). பதியம் = 1. நாற்று முடியை இரண்டொரு நாட்குச் சேற்றில் பதித்து வைக்கை, temorary planting of a cluster of saplings in mud. 2. ஊன்றி நடுஞ் செடி கொடி கிளை முதலியன, slip, shoot, graft. 3. இலைப்பாசி, a species of duckweed. செறியணிப் பதியத்திடை வளரிளஞ் சேல்கள் (இரகு. நாட்டுப். 7). பதியம் - பதிகம் = பதிகம் பரிக்குங் குழல் (மறைசை. 17). திரிசொற்கள் : (derivatives) பதிவுகாரன் = பெ. வாடிக்கைக்காரன், customer. பதி - பதம். பெ. 1. ஆழ வேரூன்றும் அறுகம்புல், bermuda grass (திவா.) 2. பதிவாக (பதுங்கி) இருந்து காக்குங் காவல், watch. (யாழ்.அக.). 3. பதிவாக நகரில் திரிந்து ஆயும் மாறுகோலம், disguise (யாழ்.அக.). 4. மீன் வரும்வரை பதிவாக நிற்கும் கொக்கு, crane, (யாழ். அக.) 5. சூடு தணிந்த நிலை, coolness. 6. ஈரம், dampness, moisture. (திவா.) மாவெலாம் பதம் புலர்ந்த (கம்பரா. உயுத். மூலபல. 79). 7. தண்ணீர் water (திவா). 8. குளிர்ச்சியான கள், toddy, மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி (பொருந. 111). 9. (மதுவின்) இனிமை; sweetness, gentleness. வெங்குரு வரசர் பதம்பெற வெழுதி (திருவாலவா 38 : 40) 10. இன்பம். joy, delight (சூடா.) 11. t‹ik, NL KjÈad jªJ c©gj‰F« Ef®j‰F« V‰w Ãiy (g¡Ft«, t.); proper consistency, required degree of hardness or softness, proper quality or fitness. சில்பத வுணவின் (பெரும்பாண். 64). 12. (வெந்து உண்பதற்கேற்ற) சோறு (திவா.). 13. அவிழ். a grain of boiled rice (சூடா.). 14. உணவு cooked food (திவா.). பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி (சிலப். 28 : 189). 15. பொருள், thing, substance, wealth. ஒ.நோ : கூழ் = உணவு, பொருள், (யாழ்.அக.) 16. (பதமான) மென்மை, softness. 17. இளம்புல், tender grass (பிங்) 18. ஏற்ற சமையம். fit occasion, opportunity, எண்பதத்தா லெய்தல் (குறள். 991). 19. பொழுது, time (பிங்.) 20. நாழிகை. Indian hour of 24 minutes (திவா.). 21. தகுதி, (suitability). 22. அழகு, beauty, (W) 23. (தகுந்த) அளவை, measure (சங். அக.) 24. (தகுந்த) முயற்சி, effort (யாழ். அக.). 25. (கத்தியின் தகுந்த நிலையான) கூர்மை, sharpness, as of the edge of a knife; கத்தி பதமாயிருக்கிறது. (உ.வ.). 26. (தகுந்த நிலையைக் காட்டும்) அடையாளம், sign, symptom, indication (சங். அக.). பதஞ்செய்தல் = (செ.குன்றாவி). 1. பயன்படும்படி செய்தல், to make a thing fit for use. 2. பதப்படுத்துதல், to temper. 3. மெதுவாக்குதல், to soften, குளிர்ந்து நின்றுபதஞ் செயுநீர் (சி.சி. 2 : 66). பதந்தவறுதல் = (செ.குன்றிய வி.) 1. நிலையினின்று நழுவுதல், to slip down, as form one’s position, 2. இரவில் வெள்ளி விழுதல், to fall, as a meteor by night (W.). பதநிறம் = பெ. ஊன்சிலை (மாமிசச்சிலை), a kind of black stone (யாழ். அக.). பதநீர் (பாண்டி நாட்டு வழக்கு), பெ. bjËî (nrhH bfh§F eh£L t.), gdŠrhW (br‹id t.), அக்கார நீர் (நாஞ்சில் நாட்டு வ.) = புளிப்பேறாத படி சுண்ணாம்பு பூசப்பட்ட முட்டியிலிறக்கிய இனிப்புக்கள்; sweet toddy drawn in a pot lined with lime to prevent fermentation. பதப்படுதல் = (செ. குன்றிய. வி.). 1. பருவமடைதல் (பக்குவப் படுதல்), to be seasoned. 2. பழுத்தல், to ripen, 3. ஈரமாதல், to damen, to moisten. பதப்படுத்துதல் : (செ.குன்றா.வி). 1. பயன்படும்படி செய்தல்; to make a thing fit for use. 2. ஈரமாக்குதல், to dampen, to moisten. 3. இணக்குதல், to reconcile. பதப்பாடு = பெ. 1. பருவமாகை (பக்குவமாகை) being seasoned, tempered, fitted, adapted or trained (W.) 2. பழுக்கை, ripening (W.) 3. மதிலுறுப்பு, component parts of a fortification including ornamental figures (பிங்.) பதம் - பதன் = பெ. being fit for use. பதனழிதல், (செ.குன்றிய வி.) பருவநிலை கடத்தல்; to become over-ripe, as fruits. பதனழிவு = பெ. பதக்கேடு; over - ripeness; overboiled, decayed or rotten condition; debility (W.) பதனிடுதல் = (செ. குன்றா வி.) தோல் முதலியவற்றைச் சீர்ப்படுத்துதல்; to tan; to temper, season, mollify (W.) பதன் - பதனம். பதனம்1 = பெ. 1. இறக்கம், descending, falling down (யாழ். அக). 2. தாழ்மை, humility (சங். அக.) 3. அமைதி, mildness, gentleness. பதனமானவன் (உ.வ.) 4. கோள்களின் குறுக்கு வரை; latitude of planets. 5. பிறப்போரைக்கு (சென்ம ராசிக்கு, வ.) Mwh« v£lh« g‹Åu©lh« ïl§fŸ (r§.mf.); sixth, eighth and twelfth houses form the ascendent. பதனம்2 = பெ. 1. காப்புக் கவனம் (பத்திரம் வ.) care, caution, attention circumspection; பட்டணம் பதனம் (இராமநா. உயுத்.23) 2. பாதுகாப்பு. safety, security, protection; பதன கவசத்துடன் (ஞானவா. சுக்தி, 19.). பதனம் - பதணம் = பெ. 1. மதிலுண்மேடை, mound or raised terrace of a fort, rampart (தி.வா.) நெடுமதி னிரைப் பதணத்து (பதிற்றுப். 22 : 25). 2. மதில், walls of a fort, fortification (W.). பதம்2 = பெ. 1. நிலத்திற் பதியும் உறுப்பாகிய பாதம், foot எறிபதத் தானிடங்காட்ட (புறநா. 4). 2. செய்யுளடி. line of a stanza. 3. நாலிலொன்று, quarter (பிங்.). 4. (பாதம் படுவதால் ஏற்படும்) வழி, way, road, path (திவா.). 5. (பதிந்து தங்கும்) இடம். place, site, location. பதங்க ளேழும் (தக்கயாகப். 147). 6. பதிந்து தங்கும் வீடு போன்ற கட்டங்கள்; (astrol.) compartments drawn on a chart for determining the site for building a house (W.). 7. பதிவாயிருந்து செய்யும் அலுவற் பதவி அல்லது வாழும் பதவி post, position, station, rank. பிரிவில் தொல்பதந் துறந்து (கம்பரா. அயோத். திருவடிசூட்டு. 101). 8. பேரின்பப் பதவி; state of future bliss. சிவபத மளித்த செல்வமே (திருவாச. 37 : 3). 9. தரம், status, capacity. பெண்டிருந் தம்பதம் கொடுக்கும் (புறநா. 151). 10. வரிசை. (தரங்காட்டும்) வரிசை, row, order, series (பிங்.) 11. பொன்னின் தரமான ஒளி, brilliance, brightness பொற்பதப் பொது (கோயிற்பு. காப்பு). பதம் - பதவு - பதவம் = பெ. ஆழ்ந்து வேரூன்றும் அறுகு bermuda grass. பெரும்பதவப் புல்மாந்தி (கலித். 109.). பதம் - பதவு - பதவி. பதவி1 = பெ. 1. நிலை, station, situation, position, rank. 2. வழி, way, path, road. (திவ். இயற். 2 : 89, அரும்.). 3. விண்ணுலகம், worlds of the gods, lower states of bliss பதவியை யெவர்க்கும் நல்கும் பண்ணவன் (கம்பரா. கிட்கிந்தா வாலிவ. 136). 4. வீட்டுலகம், final states of bliss (பிங்). பதவி2 = பெ. பணிந்த நீர்மையுள்ளவன், person of real humility; பதவியாய்ப் பாணியானீ ரேற்று (திவ். இயற். 2 : 89). பதவு - பதவிது - பதவிசு = பெ. அமைதி, mildness, humbleness. ஒ. நோ : நறுவிது - நறுவிசு. பதவியது = பெ. 1. மெல்லியது, that which is soft or smooth (W.) 2. அமைதியானது, that which is mild of gentle (W.). பதவியன் = பெ. அமைதியானவன், man of mild, amiable disposition (W.). 2. அமைதியானது, that which is mild of gentle (W.). பதவு = பெ. 1. அறுகு, bermuda grass பதவு மேய லருந்து மதவுநடை நல்லான் (அகநா. 14). 2. புல், grass. பதவு காலங்களின் மேய்த்தும் (பெரியபுசண்டே. 26). 3. புற்கட்டு, bundle of grass (யாழ்ப்). 4. புன்மை (புல்லின் நிலைமை) insignificancy, smallness, triviality, பதவிய மனிதரேனும் (கம்பரா. சுந்தர நிந்தனை. 71). 5. அமைதி, mildness, gentleness (யாழ்ப்). பதவி - பதவை = பெ. tÊ (âth.); (way, path) கணை நுழைந்தவப்பதவை (இரகு. திக்குவி. 205). பதம் - பாதம் = பெ. 1. நிலத்திற் பதியும் காலின் அடிப் பகுதி; foot, as a person or animal. பாதக் காப்பினள் பைந்தொடி (சிலப். 14 : 23). 2. விளக்குத் தண்டின் அகன்று வட்டமான அடிப்பகுதி, broad base of lamp - stand. 3. அடி சுவடு, foot-print. 4. காலடியளவு, foot-measure. 5. பெரியோர் முன்னிலை presence of a great person. சதாசிவ தேவ மகாராயர் பாதத்திலே விண்ணப்பமும் செய்து (S.I,I.i, 70). ஆரிய இலக்கியத் தொடர்பால், பாதம் என்னுஞ் சொற்குக் கால் என்றும் அடி என்றும் தவறான பொருள்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு வருமாறு. பாதம் = பெ. 1. வினைப்பொறிகள் (கருமேந்திரியம்) ஐந்துனுள் ஒன்றாகிய கால். 2. பீடம் முதலியவற்றின் தாங்குகால்; leg, support, as of an article furniture. (W.). 3. செய்யுளடி, (Pros.) unit of metrical measure; line of stanza வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி (கம்பரா. பால. நாட்டுப். 1.) 4. மலை மரம் முதலியவற்றின் அடியிடம்; base, as of a mountain, a tree (W.). 5. காற்பங்கு quarter (சூடா). முன்னைப் பீடத்தின் பாதங் குறைந்து (மேருமந். 1172). 6. வட்டத்தின் காற்பங்கு; quadrant of a circle. 7. வெள்ளிக் கால் (நட்சத்திர பாதம்); a fourth part of a duration of a naksatra. 8. தொண்டு, வழிபாடு, ஓகம், ஓதி என்னும் நான்கு சிவசமய நெறி (சரியாபாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என்ற நான்கு சைவ சமய மார்க்கம்) - செ. ப. க. க. த. அ. (Madras University Tamil lexicon). பாதக் காப்பு = பெ. 1. செருப்பு, slippers, sandals, clogs (W.). 2. திருவடிப் பாதுகாவல்; protection at the feet of a great person. பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின் (சிலப். 14 : 23). பாதக் குறடு = பெ. குமிழ்கொண்ட கட்டை மிதியடி; knobbed wooden sandals. பாத கடகம் (பாதக் கடகம்) = பெ. பாடகம், anklet (சூடா.). பாத காணிக்கை (பாதக் காணிக்கை) = பெ. 1. குருக் கொடை; present to a spritual teacher laid at his feet. 2. சில வூர்களில் புன்செய் நிலங்களுக்காகக் குடிகளால் குறுநில மன்னருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி; a money payment made in certain villages by ryots of drylands to their landlords. பாதச் சாயை = பெ. அடிநிழல்; human shadow. பாத சக்கரம் (பாதச்சக்கரம்) = பெ. பாதத்தில் வரும் ஒருவகைப் புண்; a kind of festering sore in the foot. பாத சாலகம் (பாதச்சாலகம்) = பெ. காலணி வகை; a foot ornament. பரந்த மேகலையுங் கோத்த பாதசாலகமும் (கம்பரா, அயோத். கோலங். 12). பாதசாலகம் - பாதசாலம் (பாதச்சாலம்) = பெ. காலணி வகை பாத சாலத்த மென்கால் (இரகு. நாட்டுப். 48). பாத தாமரை (பாதத் தாமரை) = பெ. திருவடித் தாமரை; lotus - like feet. பாத பூசை (பாதப்பூசை) = பெ. குரு முதலியோரின் திருவடிகளைக் கழுவி மலரிட்டு வழிபடுகை; worshipping the feet of a religious preceptor or revered person by washing and adorning them with flowers. பாததூளி (பாதத்தூளி) பெ. பெரியோர் அடிப்பொடி dust of the feet of great persons ஏத்துவார்களுழக்கிய பாததூளி படுதலால் (திவ். பெரியாழ். 4 : 4-6). பாத மயக்கு = பெ. 1. அடி மயக்கு; அடி முறை மாற்றக்கூடிய செய்யுள்; stanza whose lines are capable of transposition. 2. வேறு புலவர் பாடிய மூவடிகளோடு தான் ஓரடி பாடி முடிக்கும் மிறைப்பா வகை; a kind of artificial stanza of four lines the first three of which are taken from works of other poets while the last is composed by the author. (யாப். வி. 96. பக். 504). பாத முத்திரை = பெ. ஆசிரியன் திருவடிச் சுவடு; imprint of a guru’s feet (W.). பாத மூலம் = பெ. 1. குதிகால் heel, (யாழ். அக.) 2. வீடு பேற்றிற்குக் கரணிய மானதும் (காரணமானதும்) அடைக்கலமாகக் கருதப்படுவதுமான திருவடி; feet of a deity or saint considered as the source of the bliss and a refuge. நினையுமின் பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம் (சீவக. 511). பாத வெடிப்பு = பெ. பித்த வெடிப்பு; fissure-foot. பாதம் - பாதை = பெ. 1. ஒற்றையடி வழி; foot-path. beaten track. 2. வழி, way, path, road (பிங்.). 3. முறை way, method, mode, manner. பதி - வதி, செ. குன்றிய வி. வதிகிறேன் (நி.கா). வதிந்தேன் (இ.கா.) வதிவேன் (எ.கா.) வதி - தல் = (செ. குன்றிய வி.) 1. தங்குதல், குடியிருத்தல், to stay, to dwell, abide; to sojourn. வதிமண் வம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா. 10 : 20). 2. துயிலுதல், to sleep. ஆற்றா ணினையுநள் வதிந்தக்கால் (கலித். 126). வதி = பெ. 1. விலங்கு பறவை முதலியன தங்குமிடம்; lair, nest. மாவதி சேர (கலித். 119). 2. கால் பதியுஞ் சேறு, mire. செங்கயல் வதிக்குதி கொளும் புனலது (தேவா. 413 : 7), (பிங்.) கூட்டுச் சொல் (compound words) பதிபடை = பெ. மறைந்து நிற்குஞ் சேனை. army lying in ambush (W.). பதிபடை - பதிப்படை. பெரிய திருவடியைப் பதிப்படையாக வைத்து வந்து (திவ். திருநெடுந். 23, வியா. பக். 213). பதி மினுக்கி = பெ. (இடத்தைத் துலக்கும்) துடைப்பம்; broom, as cleaning a place. (தைலவ. தைல. பதியஞ் சருக்கரை = பெ. ஒட்டும் பதத்திலுள்ள சருக்கரை; molasses in a viscous condition (நாஞ்). பதியரி = பெ. நாற்று. saplings for transplanting. (அக.நி). பதியெழு - தல் = (செ. குன்றிய. வி.) வலசை போதல்; to flee from home or town from fear of the kind or a hostile army. பதியெழவு, பதியெழுவு = பெ. வலசை போகை; flight from home or town from fear of the king or a hostile army. பதியெழ வறியாப் பழங்குடி (மலைபடு. 479). பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1 : 15). பதிவாளர், பெ. 1. ஆவணம், ஒப்பந்தம், சட்டதிட்டம் முதலியவற்றைப் பதிவு செய்யும் அரசியல் அலுவலர். Registrar of title-deeds, contracts, rules and regulations of corporations etc. (இக்கால வழக்கு). 2. பல்கலைக்கழக அலுவலகத் தலைவர்; Registrar of a University (இ.வ.). பதிவிடம் = பெ. ஒளித்திருக்குமிடம்; hiding place, ambush. பதிவிளக்கு = பெ. பேயோட்டுதற்காகச் குடத்தின் மேற் பதியவைத்த விளக்கு; lamp fixed on a pot while exorcizing devils (W.). பதிவுச் சாப்பாடு = பெ. உண்டிச்சாலையில் மாதக் கணக்காக ஏற்பாடு செய்து உண்ணும் உணவு; regular boarding at a hotel or mess on monthly account. பதிவேடு = பெ. கணக்குப் பதியும் பொத்தகம்; register, account-book, ledger. மரபு வழக்கு (Idioms) பதிபோடு1 - தல் = (செ. குன்றா வி.) 1. நாற்று நடுதல், to transplant. 2. பதியம் போடுதல்; to plant, as slips; to insert, as grafts. பதிபோடு2 - தல் = (செ. குன்றா வி.) பதுங்குதல், to crouch. புலி பதி போடுகிறது. (உ. வ.). பதிவிரு-த்தல் = (செ. குன்றா வி.) ஒளித்திருத்தல்; to lie in a wait, as a thief or an enemy; to lurk, as a beast ready to spring. பதிவுவை - த்தல் = (செ. குன்றா வி.) 1. கணக்கிற் பதிதல்; to enter in a an account. 2. வாடிக்கை வைத்தல்; to become in customer of a shop. பதிவை-த்தல் = (செ. குன்றா வி.) பதிபோடு2 என்பதைப் பார்க்க. பிற வினை (Causal Verb) - 15 ஆம் புடைபெயர்ச்சி. gâ¡»nw‹ (Ã.fh.), gâ¤nj‹ (ï.fh.), பதிப்பேன் (எ.கா.). பதி-த்தல் = (செ. குன்றா வி.) 1. அழுத்துதல், to imprint, impress, stamp, engrave, as in mind; to plunge. பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி (திருவாச. 11 : 12). 2. மணி முதலியன இழைத்தல்; to infix, insert, ingrant, inlay, as gems; to enchase. 3. கற்பாவுதல்; to pave, as floor with bricks or stones. 4. தாழ்த்துதல், to lower height, price, etc; to set lower, insert deeper. 5. பதியம் போடுதல்; to plant a custer of saplings temporarily in mud; to plact a shoot, runner or creeper. 6. அச்சிடுதல், to print, reprint, edit. 7. எழுதுதல் to inter in a register. 8. அதிகாரங் கொடுத்தல்; to invest with power, authority or prerogative (W.). தொழிற் பெயர் (Verbal noun). பதித்தல், பதிக்கை, பதிப்பு. தொழிலாகு பெயர் (metorymical verbal noun) பதிப்பு = பெ. edition. கூட்டுச் சொல் (compound words) பதி சித்திரம் = பெ. கோபுரப் படிமை; images adorning a temple tower. (கோயிலொ. 122). பதிப்பகம் = பெ. 1. அச்சகம், printing press. 2. வெளியீட்டகம், publishing house. பதிப்பாசிரியர் = பெ. editor. பதிப்பாளர் = பதிப்பாசிரியர். மரபுவழக்கு (Idiom) பதித்தெழுது-தல் = செ. குன்றா வி. 1. அழுத்தி baG¤jš; to write forming a deep impression. 2. மேலே இடம் விட்டுக் கீழே யெழுதுதல்; to write in the lower half of a page leaving space at the top. மூலமும் திரிவும் (origin and derivation) பள் - படு - படி - பதி. பள் - பள்ளம். படுதல் = தாழ விழுதல், விழுதல், தொடுதல், பதிதல். படுத்தல் = பள்ளமாதல், தாழ்தல், விழுதல், படுக்கையாய்க் கிடத்தல், பதிதல், பதிவு செய்தல். படிதல் = தாழ்த்தல், கீழ்ப்படுதல், பணிதல், பதிதல். பதிதல் = ஆழ இறங்குதல், பொறித்தல், பதிவு ய்தல். இனச் சொல் (cognates and allied words) 1. திரவிடம் மலையாளம் - பதி, பதிவு. பதிக்க, to impress. பதியுக, to be impressed, be pressed down. பதி, being fixed in, pressed down. பதிவு, settlement, custom. பதம், softness, elasticity, yielding temer. பதம, பதும. pliancy. பதர்ம்ம, rottenness of rice through damp, softness of mind. பதுக்க, to be soft, tender, pliable. பதுப்பு, softness. பதுப்பிக்க, to soften. பதம், the right degree of ripeness, temperature, etc. தெலுங்கு - பதனு, பதுனு, moisture, dampness, wetness; ripeness maturity temper. கன்னடம் - பத, proper or good state or condition, proper degree or temperature, the seasoning of any food, the right degree of a ripeness, keeness of edge or sharpness ஹத, proper condition. துளுவம் - பதனுனி, பதணுனி, to become soft. குடகம் - பத soft. கோத்தம் - பத்ம், temper of iron. மாலத்தம் - பெத்கெ, to be soft. பதோ, sharp. குவீ - பெதெ. soft and damp. பிராகுவீ - புதேன், cold, cool. புதீ, coldness, frost. 2. ஆரியம் பதனம் - வ. (Skt.) பதன. பதவி - வ. (Skt.) பதவீ. பதம் - பாதம் - வ. (Skt.) பத, பாத. Gk. pod. L. ped, pedis, OE, OS fot, OHG. fuoz, ON. fotr. Goth, fotus, E. foot. பாதை - OE. poeth. OLG. pad, OHG. pfad, E.path. சமற்கிருதத்திற் பாதை என்னும் சொல் இல்லாதது கவனிக்கத்தக்கது. பத என்னும் சொல்லே அதிற் பாதையைக் குறிக்கும். ped என்னும் இலத்தீன் சொல்லினின்றே, pedal, pedate, pedestal, peduncle என்னும் சொற்கள் திரிந்துள்ளன. வதி - வசி - வ. (Skt.) வ. இவ் வடசொல்லே ஆங்கிலத்தில் was என்னும் இறந்த காலத் துணைவினைச் சொல்லாகத் திரிந்து வழங்குகின்றது. “was. - The OE. weson, to be, is eognate with Goth, wisan; ON. vera. to be, abide; Skt. vas. to dwell.” (P.266) “were = OE. woreon, where is for original S.” (P. 267). என்று இரிச்சார்டு மாரிசு (Richard Morris) தம் ஆங்கிலச் சொற்றிரிபு வரலாற்றுச் சட்டகம் (Historiacal Outlines of English Accidence) என்னும் நூலில் வரைந்திருத்தல் காண்க. இவ் விறந்த காலச் துணைவினைச் சொல் மட்டுமின்றி, is, are என்னும் நிகழ்காலத் துணைவினைச் சொற்களும் இரு என்னும் தமிழ்ச்சொல் திரிபே. தமிழ்த் தகரம் வடமொழியில் ஸகரமாகத் திரிவதை மாஸ என்னும் சொல்லாலும் உணர்க. மதி - மாதம் - மாஸ(வ.) - மா(இ). சிறப்புக் குறிப்பு பத, பாத என்னும் சொற்கள் வடமொழியில் வழங்குவதால், தமிழ்ப் புலவர் பலர் அவற்றை வடசொல்லென்றே மயங்கி அடி என்னும் சொல்லைப் பாதம் என்னும் பொருளில் ஆண்டுவருகின்றனர். அடி வேறு; பாதம் வேறு. அடி என்பது ஒரு பொருளின் அடிப்பகுதியையும் ஓர் உயிரியின் காலையும் பாதத்தையும் குறிக்கும் பொதுச் சொல். எ-டு: அடித்தட்டு, மயிலடி, திருவடி, அடிப் பகுதி யென்பது கீழ் இடத்தையும் கீழ்ப் பொருளையுங் குறிக்கும். எ-டு : பந்தலடி, தேரடி, சிறிய திருவடி பெரிய திருவடி. மரவடி என்பது கால்போன்ற அடிமரம். பாதம் என்பதோ நிலத்திற் பதியும் பரந்த அடியுறுப்பையே அல்லது பகுதியையே குறிக்கும் சிறப்புச் சொல். எ-டு : பாதத் தாமரை, பாதம் வைத்த விளக்கு. ஆகவே, பதிதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட பதம், பாதம் என்னும் இரு சொற்களும் தூய தென் சொல்லேயென்றும், அவையே முறையே பத, பாத என வடமொழியில் திரியும் என்றும் அறிக. இனி, பாதம் படுவதால் ஏற்படும் வழியைக் குறிக்கும் பாதை யென்னும் சொல், ஆங்கிலத்தில் (path என) இருப்பதையும் வடமொழியில் இன்மையையும், நோக்குக. வ (வசி), என்னும் சமற்கிருத வினைச் சொற்கும். அதன் திரிவான ‘was’ என்னும் ஆங்கில இறந்த கால வினைச்சொற்கும், வதி என்னும் தமிழ்ச்சொல் மூலமாயிருப்பதினின்று, தமிழின் தொன்மையையும் முன்மையையும் அறிக. திருத்தம் பதம், பாதம், பதவி, பதனம் என்னும் தென்சொற்களின் திரிவான பத, பாத, பதவீ, பதன என்னும் வட சொற்களை, அவற்றின் மூலமான தென்சொற்கட்கே மூலமெனச் சென்னை யகர முதலியிற் குறித்திருப்பது, மூல வழு என அறிக. பதிகம் பதிகம் - ப்ரதீக பல் - பது - பத்து. பது - பதிகம் = 1. ஒரு பொருள்பற்றி வரும் ஒரே வகைப் பத்துச் செய்யுள். 2. பத்து அல்லது பதினொரு குறிப்பைக் கூறும் சிறப்புப் பாயிரம். ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோ டாய்எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. (நன். 47) காலங் களனே காரணம் என்றிம் மூவகை யேற்றி மொழிநரும் உளரே. ( 48). (வ.வ : 199). தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றின் சிறப்புப்பாயிரம், பெரும்பாலும் இம்முறையைத் தழுவி அமைந்தவையே. மா.வி.அ. ப்ரதி - அக என்பதன் திரிபென்று ப்ரதீக என்னுஞ் சொல்லைக் காட்டி, நோக்கியது. நோக்கு, தோற்றம், முகம், முற்பகுதி, செய்யுளின் முற்பகுதி முதற்சொல் என்று பல்வேறு மேற்கொள்களை இடர்ப்பட்டுப் பொருத்தி, வேறுபட்ட கருத்துக்களைத் தொடர்புபடுத்தியிருப்பது, அதன் செயற்கைத் தன்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. (வ.வ : 199 -200). பந்தி பந்தி - பங்க்தி (அ.வே.) பக்கம், பாகம் என்னும் இரண்டும் பகு என்னும் ஒரே முதனிலை யினின்று தோன்றியிருக்கவும், வடவர் அவற்றுள் முன்னதை ஆரிய இயல்பு வல்லொலிப் பகரத்திலும் (p), பின்னதைக் கனைப்பொலிப் பகரத்திலும் (bh), தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்ப, பக்கம் என்பதற்குப் பக்ஷ் என்பதையும், பகவன், பங்கு, பாகம் என்பவற்றிற்குப் பஜ் (bhaj) என்பதையும், மூலமாகக் கொண்டிருக்கின்றனர். இங்ஙனம் ஒருமூலச் சொற்களையே வெவ்வேறு மூலத்தினவாகக் காட்டுவது வடவர் வழக்கம். பக்ஷ் என்பது பக்கு என்பதன் திரிபு. தாதுபாட என்னும் நூல் அதற்குப் பற்று, கொள், எடு என்றே பொருள் கூறும். ஆயின், வில்சன் அகரமுதலி பக்கம் (பக்ஷ) என்னும் சொற்கேற்பப் பக்கஞ் சார்தல் என்று பொருளுரைக்கும். (வ.வ.) பக்கம் என்னும் சொற்குத் தமிழிலும், பகுதி, கூறு, நூற்பகுதி, நூல், புறம் (side), ஏட்டுப் புறம் (page), அருகு, அண்மை, இடம், வீடு, நாடு, விலாப்புறம், சிறகு. இறகு, அம்பிறகு, கை, கையணி, நட்பு, அன்பு, சுற்றம், மரபு (வமிசம்), சேனைப்பகுதி, சேனை, பதினைந்து பிறைநாட்காலம், பிறைநாள், மேற்கோள் (Proposition), துணிபொருட் கூற்று, தன்மை எனப் பலபொருள்களுண்டு. கை, சிறகு என்னும் சொற்கள் பக்கத்தைக் குறிப்பதுபோன்றே பக்கம் என்னும் சொல்லும் கையையும் சிறகையும் குறிக்கும். வடவர் சிறகுப் பொருளினின்று பறவைப் பொருளை விரித்திருக் கின்றனர் எனக் கருதலாம். பக்கம் - பக்ஷ - பக்ஷி = சிறகையுடையது. இனி, சதுரக்கள்ளியில் தங்கும் ஒருவகைப் பறவை பக்கி எனப்படுகின்றது. பக்கி யுவணங் கழுகு (திருப்பு.319) என அருணகிரி நாதரும் பாடியுள்ளார். வ.வ. பக (bhaga) என்னும் இருக்குவேதச் சொற்கு, “dispenser”, gracious lord, patron (applied to gods, esp. to Savitri), R.V.” என்று மா. வி. அ. பொருள் வகுக்கின்றது. ஆகவே, பகவன் என்னும் சொற்கு, பகுத்தளிப்பவன், படியளப்பவன் என்பதே மூலப்பொருளாம். ஆண்டவன் படியளப்பான். என்று அடிக்கடி மக்கள் கூறுவதை நோக்குக. நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர் (தனிப்பாடல்). பகவன் என்பது பல தெய்வங்கட்கும் பொதுப்பெயராய் வழங்கிய தினாலேயே, முழுமுதல் தெய்வமாகிய கடவுளைக் குறிக்க ஆதி பகவன் என்று அடைகொடுத்துக் கூறினார் வள்ளுவர். ஆதிபகவன் = ஆதிப்பகவன். வலி இடைமிகாதே பல கூட்டுச் சொற்கள் அக்காலத்து வழங்கி வந்தன. வ.வ. எ-டு : மாரிகாலம், கார் காலம். பந்தி என்பது பத்தி என்பதன் மெலித்தல் திரிபே. ஆயின், வடவர் பஞ்சன் (c) என்பதனொடு தொடர்புபடுத்திப் பச் (c) என்பதை மூலமாகக் காட்டுவர். அதன் விளக்கம் வருமாறு:- பச் அல்லது பஞ்ச் = விரி, கைவிரி. பஞ்ச் - பஞ்சன் = விரித்த கையிலுள்ள ஐந்துவிரல், ஐந்து. பஞ்சன் - பங்க்தி = ஐம்பொருள் தொகுதி அல்லது வரிசை, தொகுதி, வரிசை, கூட்டம். வடவர் ஏமாற்றுக்கலையைக் காட்ட இஃதொன்றே அமையும். (வ.வ : 194 - 195). பந்து விளையாட்டு துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ஆட்டு, பந்து எனப்படும் (பந்து = உருண்டையானது). I. பேய்ப்பந்து ஆட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, பேய்ப்பந்து எனப் பெயர் பெற்றிருக்கலாம். ஆடுவார் தொகை : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ்விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப்பெருக இவ் ஆட்டுச் சிறக்கும். ஆடு கருவி : ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம். ஆடிடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடு மிடமாம். ஆடு முறை : பலர் இடையிட்டு நின்று கொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக் கொண்டு, பந்தே பந்து என்று உரக்கக்கத்துவான். பிறர் என்ன பந்து என்று கேட்பர். அவன் பேய்ப் பந்து என்பான். யார் மேலே என்று ஒருவன் கேட்க, அவன் உன்மேலே என்று சொல்லிக்கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போம். பந்து யார் கைப்பட்டதோ அவன் அதை ஓங்கி யார் மேலும் எறிவான். இங்ஙனம் விருப்ப முள்ளவரை மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம். ஆட்டுத்தோற்றம் : குரங்கெறி விளங்காயினின்றோ, பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்சி தோன்றியிருக்கலாம். விளா மாத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம். ஆட்டின் பயன் : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள்மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய வினைகட்கு இப்பயிற்சி ஏற்றதாம். II. பிள்ளையார் பந்து ஆட்டின் பெயர் : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின்மேற் பந்தை எறிந்தாடும் ஆட்டு பிள்ளையார் பந்து. இது திருச்சி வட்டாரத்திற் பிள்ளையார் விளையாட்டு என வழங்கும். ஆடுவார் தொகை : பொதுவாக, எண்மர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர். ஆடு கருவி : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும், ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம். ஆடிடம் : சுவரடியும் அதையடுத்த வெளி நிலமும் இதை ஆடுமிடமாம். ஆடுமுறை : ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப் பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிசையாக நின்றுகொண்டு, எறியப் பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடை யாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும், பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கட்சியார் ஆள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருந்தீர்ந்தபின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப் படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஒடிப் போய்ச் சற்றுத் தொலைவில் இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாரனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக் கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர். எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்பவளை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்து விடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆட்டுத் தோற்றம் : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் கொள்ளை யடித்தற் பொருட்டும், இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ் விளையாட்டுத் தோற்றத்திற்குத்க் காரணமாயிருந்திருக்கலாம். கசினி மகமது, மாலிக்காபூர், திருமங்கையாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத் தக்கன. பப்படம் பப்படம் - பர்ப்பட (!) அப்பளித்தல் = சமனாகத் தேய்த்தல். கவரை அப்பளித்துப் பூசுகிறான் என்னும் வழக்கை நோக்குக. அப்பளி - அப்பளம் = சமனாகத் தேய்த்தமைக்கும் உழுத்தமா வட்டம். மேவுகபந் தீர்க்குங்காண் ஓதுமுழுந் தப்பளம் (பதார்த்த. 1426). தெ. அப்பளமு - அப்பபமு - க. அப்பள - பப்பள. ம. பப்படம். வ.வ : 200 பம்பர விளையாட்டு I. ஒயாக்கட்டை சிறுவர், தம் பம்பரங்களை வட்டத்துளாயினும், வரம்பிலா நிலத்திலாயினும் ஒருங்கே ஆடவிட்டு, யாரது நீண்ட நேரம் ஆடுகின்றதென்று பார்க்கும் ஆட்டு ஓயாக்கட்டையாம். இது மீண்டும் மீண்டும் ஒரே வகையாய் ஆடப்பெறும். II. உடைத்த கட்டை ஆட்டின் பெயர் : ஆட்டத்தில் தோற்றவனது பம்பரத்தை உடைக்கும் ஆட்டு உடைத்த கட்டை எனப்படும். ஆடுமுறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் ஒரு மாங்கொட்டையை வைத்து, ஒவ்வொருவனாகப் பம்பரத்தை அதன்மேலேற்றி, அதை வெளியேற்றுவர். அது வெளியேறியவுடன், எல்லாரும் ஒருங்கே விரைவாகத் தன் தன் பம்பரத்தை ஆட்டிக் கைமேல் ஏற்றுவர். மிகப் பிந்தி ஏற்றியவன் தன் பம்பரத்தை வட்டத்தின் நடுவில் வைத்தல் வேண்டும். பம்பரத்தை யாட்டிக் கைமேலேற்றும்போது, அபிட்கோசு அல்லது சிங்கோசு என்று சொல்லிக்கொள்வதால், அங்ஙனம் ஏற்றுவதற்கு, அபிட்கோசெடுத்தல் அல்லது சிங் கோ செடுத்தல் என்று பெயர். வட்டத்தின் நடுவிலுள்ள பம்பரத்தை ஏனையோரெல்லாரும், முன்பு மாங்கொட்டையை வெளியேற்றியது போல் வெளியேற்றி, ஏறத்தாழ இருபது கசத் தொலைவிலுள்ள எல்லைக் கோட் டிற்குக் கொண்டு போவர். ஒவ்வொருவனாக அவனவன் தன்தன் பம்பரத்தை அதன்மேலேற்றித் தள்ளியே, அதைக்கொண்டு போதல் வேண்டும். அங்ஙனம் கொண்டு போம்போது, யாரேனும் மட்டை வீழ்த்தினும் சாட்டை போக்கினும், கீழேயிருக்கும் பம்பரத்திற்குப் பதிலாகத் தன் பம்பரத்தை வைத்துவிடல் வேண்டும். கீழேயிருந்த பம்பரக்காரன் அதை எடுத்துப் பிறர்போல் ஆட்டுவான். பம்பரம் தலைகீழாய் விழுதற்கு மட்டை என்றும், பக்கமாக உருண்டுபோதற்குச் சாட்டை என்றும் பெயர். யார் பம்பரம் எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போகப் பட்டதோ, அது உடனே பிறரால் உடைக்கப்படும். III. பம்பரக் குத்து ஆட்டின் பெயர் : தோற்றவனது பம்பரத்தைக் குத்தி யாடும் ஆட்டு பம்பரக்குத்து எனப்படும். ஆடு முறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி, அபிட்கோசெடுத்து, அதில் மிகப் பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்த பின், ஏனையோரெல்லாம் ஒவ்வொரு வனாகத் தன் தன் பம்பரத்தாற் குத்தி அதை வெளியேற்றுவர். அது வெளியேற்றப்படின் உடனே மீண்டும் முன்போல் அபிட் கோசெடுத்து, அதிற் பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்தல் வேண்டும். ஏனையரெல்லாம் முன்போற்குத்தி அதை வெளியேற்றுவர். மட்டை வீழ்த்தியவன் பம்பரமும், சாட்டை போக்கியவன் பம்பரமும் வட்டத்துள் ஏற்கெனவே வைத்திருப்பதுடன் சேர்த்து வைக்கப்படும். வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் ஒன்று வெளியேறியாடும் போது, அதை வட்டத்துள் வைத்திருக்கும் பம்பரக்காரன் சாட்டையால் தன் கையிலேற்றி ஆட்டின், அதுவும் வட்டத்துள் வைக்கப்படல் வேண்டும். வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் எதையேனும், வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரக்காரன், தன் கையாலழுத்திப் பதித்துவிடின், அதை எடுத்தல் கூடாது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பம்பரம் மேலும் மேலும் குத்தப் பட்டுச் சேதமாகாதபடி, அதன் சொந்தக்காரன் ஆட்டிக்கொண் டிருக்கும் பம்பரக்காரருள் ஒருவனிடம், நீ இன்று என் பம்பரத்தை வெளியேற்றின், உன் பம்பரம் உள்ளிருக்கும்போது நான் வெளியேற்றுவேன், என்று ஒப்பந்தஞ் செய்துகொள்வ துண்டு. பல பம்பரங்கள் உள்ளே வைக்கப்பட்டுக் கிடப்பின், அவை யனைத்தும் வெளியேற்றப்பட்ட பின்புதான் அபிட்கோசு எடுக்கப்படும். இங்ஙனம் மீண்டும் மீண்டும் வேண்டும் அளவு தொடர்ந்து ஆடப்பெறும். வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரங்களுள் நண்பனதை வெளியேற்ற வேண்டுமென்றும், பிறனதை வெளியேற்றக் கூடாதென்றும், இருவேறு நோக்குக் கொண்டு அதற்கேற்பப் பம்பரத்தை ஆட்டுவது வழக்கம். IV. இருவட்டக் குத்து வட்டத்துள் வட்டமாக இருவட்டம் கீறி அவ்விரண்டுள்ளும் பம்பரத்தைக் குத்துவது, இருவட்டக்குத்து. இது பெரும்பாலும் பம்பரக் குத்துப் போன்றதே. இதன் உள்வட்டத்தில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி அபிட் கோசெடுத்துப் பிந்தியவன் பம்பரத்தை அதனுள் வைத்தபின், அதைக் குத்தி வெளியேற்றுவர். மட்டையும் சாட்டையும் உள்வைக்கப்படும். உள் வட்டத்தில் ஆடும் பம்பரம் வெளிவட்டத்துள்ளும் வந்து ஆடலாம். ஆடும் பம்பரத்தை அழுத்துவது உள்வட்டத்தில்தான் நிகழும்; ஆயின், அதைக் குத்துவது இருவட்டத்திலும் உண்டு. வெளிவட்டத்துள் ஆடும் பம்பரம் தானாய் நகர்ந்து வெளியேறி விடின், அதை உடையவன் எடுத்து ஆட்டலாம்; அன்றி உள்ளேயே ஓய்ந்துவிடின் அதை எடுத்தல் கூடாது. அதுவும் மட்டைபோற் பாவிக்கப்படும். V. தலையாரி ஆடுவார் தொகை : மூவர்க்குக் குறையாத சிறுவர் பலர் இதை ஆடுவர். ஆடு கருவி : ஆளுக்கொரு பம்பரமும், ஏறத்தாழ இருபது கசம் இடையிட்ட இரு சம அளவான வட்டங்களும், ஒரு போகாக (அதாவது சமதூரமாக) இருபுறமும் நீட்டப்பட்ட அவற்றின் விட்டங்களும், இவ்விளையட்டிற் குரிய கருவிகளாம். ஆடு முறை : முதலாவது ஒரு வட்டத்தின் நடுவிலுள்ள மாங் கொட்டையைப் பம்பரத்தின் மூலமாய் வெளியேற்றி, அபிட்கோ செடுத்து அதிற் பிந்தியவன் பம்பரத்தை உள் வைத்து, அதை ஏனையோ ரெல்லாம் ஒவ்வொரு வனாய்ப் பம்பரமேற்றி வெளி யேற்றுவர். அங்ஙனம் வெளியேற்றும்போது வட்டத்திற்கு வலப்புறமாய் வெளியேற்றல் வேண்டும்; இல்லா விடின் மீண்டும் அபிட்கோ செடுத்துப் பிந்தியவன் பம்பரத்தை உள்ளே வைக்க வேண்டியிருக்கும். வெளியேற்றப்பட்ட பம்பரத்தை நேரே எதிருள்ள வட்டத்திற்குப் பம்பரத்தின் மூலமாய் அடித்துக் கொண்டு போவர். ஒருவன் இடையில் மட்டை வீழ்த்தினும் சாட்டை போக்கினும், கீழிருக்கும் பம்பரத்திற்குப் பதிலாகத் தனதை வைத்துவிடல் வேண்டும். முன்பு கீழிருந்த பம்பரக்காரன் பின்பு பிறரொடு சேர்ந்து ஆடுவான். அடித்துக்கொண்டு போகப்படும் பம்பரம் எதிர்வட்டத்துள் சேர்ந்த வுடன், பிற பம்பரக்காரரெல்லாம் தம் சாட்டைகளைக் கழுத்திற் சுற்றிக் கொண்டு, அதைப் பம்பர ஆணியால் ஒவ்வொரு தடவை குத்துவர். குத்தும்போது சாட்டை தளர்ந்து நிலத்தைத் தொடின், குத்தப்படும் பம்பரக்காரன் தன் சாட்டையால் வன்மையாய் அடித்து விடுவான். பின்பு, இரண்டாம் வட்டத்திலிருந்து முதல் வட்டத்திற்கு, முன்போன்றே அப் பம்பரம் அடித்துக்கொண்டு போகப்படும். அங்கு அதை இவ்விரு தடவை குத்துவர். அதன்பின், அது இரண்டாம் வட்டத்திற்கு மீண்டுங் கொண்டு போகப்பட்டு, மும்மூன்று தடவை குத்தப்படும். இங்ஙனம் இங்குமங்கு மாக இயக்கப்பட்டு, ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு தடவை கூடுதலாகக் குத்தப்படும். இவ்வகையில் இது விரும்பிய அளவு தொடர்ந்து ஆடப்பெறும். (த.நா.வி.) பயிர்ச் செறிவு வகை புதர் குத்துச் செடிகளின் செறிவு; பொதை பெருஞ்செடி கொடி களின் செறிவு; பொதும்பர் மரங்களின் செறி. (சொல் : 72). பயிர் வகை பூசனம் அல்லது பூஞ்சணம் (பூச்சாளம்) நொந்த சோற்றிலும் ஈரமரத்திலும் தோன்றும் நுண்பாசி; பாசம் நீர் மேலும் ஈரமுள்ள இடத்திலும் தோன்றும் பசுமையான நுண்பயிர்; பாசி நீரில் அடிவரை படர்ந்துள்ள பாசம்; காளான் ஈரமுள்ள இடத்தில் குடைபோல் தோன்றும் பயிர் வகை; புல் அறுகு குசை போன்றவை; பூண்டு வெங்காயம் வெள்ளைப் பூண்டு போன்றவை; செடி மிளகாய்ச் செடி கத்திரிச் செடி போன்றவை; கொடி அவரைக் கொடி பாகற்கொடி போன்றவை; புதர் அடர்ந்த குத்துச் செடி; பயிர் நெல் கம்பு கேழ்வரகு போன்றவை; மரம் மா புளி போன்றவை. சொல் : 70 பரம் பரம் - பர பரமன் - பரம புரம் = மேல், மேன்மாடம், உயர்ந்த கோபுரம், கோபுரமுள்ள நகர். புரை = உயர்வு. புரையுயர் வாகும் (தொல். 785). புரம் - பரம் = 1. மேல், மேலிடம். அகிற்புகை .... பரங்கொடு போகி (இரகு. நகர. 4). 2. மேலுலகம். இகபரமாகி யிருந்தவனே (திருவாச.) 3. மேலானது. விரதமே பரமாக (திருவாச. 4 : 50). 4. வீடு (மோட்சம்) (பிங்). 5. மேலோன், கடவுள். காணலாம் பரமே (திருவாச. 5 : 44). பரம் - பரமன் = கடவுள். மாநட மாடும் பரமனார் (தேவா. 600:1). வ.வ பரமன் பரமன் - பிரஹ்மா (B) வடவர் பர என்னுஞ் சொற்கு உயர்ச்சிக் கருத்தோடு, தொலைவு, அயன்மை, பிறிதாகை, பின்மை முதலிய கருத்துக்களையும் சேர்ப்பர். அதோடு பரம என்னும் வடிவைப் பர என்பதன் உச்சத்தரமாகக் கொள்வர். ஆரியர் முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கையைப் படைத்தமைத்தபின், படைப்புத் தெய்வத்தைக் குறிக்கப்பரமன் என்னும் சொல்லினின்று பிரஹ்ம என்னும் வடிவைத் திரித்துக் கொண்டனர். (வ.வ : 200 - 201). பரிசம் வாங்காமை பெண்ணிற்குப் பரிசம் கேட்பது ஓரளவு விலை கூறுவது போன்றிருத்தலால், செல்வப் பெற்றோர். அதனைக் கேளாதிருத்தல் சிறப்பாம். ஏழைப்பெற்றோராயின், மணச் செலவு நோக்கி ஒரு தொகை கேட்பது குற்றமாகாது. இனி பெண்ணிற்குக் கேட்பதற்குப் பதிலாக மணவாளப் பிள்ளைக்குக் கேட்பது, இயற்கைக்கு மாறானதாயும், எக் காரணத்தாலும் சரிமைப்படுத்த முடியாததாயும் இருக்கின்றது. இவ்வுலகத்தில் ஒருவன் பெறக்கூடிய பேரின்பப் பேறு பெண்ணே அகத்தழகும் புறத்தழகும் ஒருங்கே யமைந்த அருமைப் பெண்ணிருக்கவும் அவளை விட்டுவிட்டு, காசிற்காசைப்பட்டு அழகிலியை மணப்பது, இல்லற இன்பத்தையும் வாழ்க்கை வசதியையும் பணத்திற்கு விற்பது போன்றதே. த.தி. 50 - 51. பரிதி பரிதி - பரிதி (dh) புரிதல் = வளைதல். புரி - பரி - பரிதி = 1. வட்ட வடிவு. (திவா.). பரிதி ஞாலத்து (புறம். 174). 2. கதிரவனை அல்லது திங்களைச் சுற்றிய கோட்டை. வளைந்து கொள்ளும் பரிதியை (இரகு. இந்து. 7). 3. கதிரவன். பரிதியஞ் செல்வன் (மணி. 4 : 1) 4. தேருருளை. அத்தேர்ப் பரிதி (களவழி. 4). 5. சக்கரப்படை. பரிதியிற் றோட்டிய வேலை (கல்லா. 82 : 23). 6. சக்கரவாகப் புள். பரிதியங் குடிங்கு கூடுமே (இரகு. நாட்டுப். 40). பரிதி - பருதி. (வ.வ : 201). பருப்புச் சட்டி விளையாட்டு பல பிள்ளைகள் விறகு விறகு என்று சொல்லிக் கொண்டு, வட்டமாய்ச் சுற்றி வரவேண்டும். ஒரு பெரிய பிள்ளை அவர்களை அப்படியே உட்காரச் சொல்லி, வட்டத்துள் நின்று உங்கள் வீட்டில் என்ன குழம்பு? என்று வரிசைப்படி ஒவ்வொருவரையுங் கேட்கும். ஒவ்வொருவரும் பருப்பல்லாத ஒவ்வொரு குழம்பைச் சொல்வர். பின்பு, இறுதியில் எல்லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்து, அப்பெரிய பிள்ளையை அவ்வாறே கேட்பர். அப் பிள்ளை பருப்புக்குழம்பு என்னும். உடனே எல்லாரும் எழுந்திருந்து, அப்பிள்ளையைப் பருப்புச்சட்டி என அழைத்து நகையாடி மகிழ்வர். நாள்தோறும் பருப்புக் குழம்பையே விரும்பியுண்ணும் ஒருவரைப் பழிப்பதுபோல் உள்ளது, இவ்விளையாட்டு. (த.நா.வி.) பருவம் பருவம் : பரு - பருமம் - பருவம் பருத்தநிலை, பயன்படுநிலை, தக்க காலம். இனி, பழு - பழுவம் - பருவம் என்றுமாம். பருவம் - பர்வன் (வ.). (தி.ம : 747). பருவம் - பர்வன் (இ.வே.). பரு - பருவு - பருவம் = காய்கனி முதலியன பருத்துள்ள நிலை, தக்கநிலை, தக்க காலம், ஒவ்வொன்றிற்குத் தக்க வெவ்வேறு காலப்பகுதி, பெரும்பொழுது. வளர்ச்சியடைந்த மக்களையும் பூப்படைந்த மகளிரையும் பருவம் வந்தோர் என்றும், பருத்து உடையும் நிலையிலிருக்கும் சிலந்தியைப் பருவச் சிலந்தி யென்றும், கூறும் வழக்கை நோக்குக. (வ.வ.) (தி.ம : 747). வடவர் காட்டும் மூலமும் பொருள் வரிசையும் வருமாறு:- ப்ரீ = நிரப்பு, நிறைவாக்கு. Ãu«g¡ bfhL (ï.nt.); நிறைவேற்று, முற்றுஞ் செலவிடு, முற்றும்வளை, மூடு (அ.வே.). பரு = கைகால், உறுப்பு; மலை; கடல்; வானம், விண்ணுலகு. பரு = கணு, முடிச்சு; உறுப்பு. பகுதி (இ.வே.) மா.வி.அ. “a joint a knot (esp. of a cane or reed, orig. ‘fullness’, i.e. the full or thick part of the stalk” என்று குறித்திருப்பதைக் கூர்ந்து நோக்குக. பர்வன் = கணு. Ko¢R, cW¥ò (ï.nt.); பிளவு. ïilpL, ãÇî, gFâ (r.ã.); xU T£o‹ cW¥ò (ãuhâ., ÃU.); ஒரு குறித்த காலப்பகுதி (இ.வே.) இது மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடு வதாயிருத்தலைக் காண்க. (வ.வ) பல்லக்கு பல்லக்கு - பர்யங்க்க ம. பல்லக்கு, க.பல்லக்கி. பிரா. பல்லங்க்க. பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி (தொண்டை. சத. 87). பரி - அஞ்ச் = சுற்றித் திரும்புவது, சுழல்வது என்று வடவர் மூலங் காட்டுவது பொருந்தாது. (வ.வ : 201). பல்லவர் ஆட்சி (சோழநாடு) (கி.பி. 4-ஆம் நூற் - 6-ஆம் நூற்.) பல்லவர் காடவரும் காடுவெட்டிகளுமான தமிழரே. பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) - 590 - 920. சோழர் ஆட்சி (சோழநாடு) - 850 - 1279. (சோழபாண்டியநாடுகள்) - 920 - 1190. பாண்டியர் ஆட்சி (பாண்டிய நாடு) - 1190 - 1310. மாலிக்கு காபூர் தமிழ்நாட்டுக் கொள்ளையடிப்பு - 1310. மதுரைச் சுலுத்தானியம் - 1329 - 1377. செஞ்சி- (1) நாயக்கர் ஆட்சி - 1476 - 1639. (2) முசல்மானர் ஆட்சி - 1639 - 1459. (3) பீசபூர் - மராத்தியர் ஆட்சி - 1677 - 1690. (4) முசல்மானர் ஆட்சி - 1690 - 1698. (5) பிரெஞ்சியர் ஆட்சி - 1750 - 1761. (6) ஆங்கிலர் ஆட்சி - 1761 - 1947. மதுரை- (1) நாயக்கர் ஆட்சி - 1529 - 1736. (2) முகமதியர் ஆட்சி - 1736 - 1772. (3) ஆங்கிலர் - 1772 - 1947. தஞ்சை - (1) நாயக்கர் ஆட்சி - 1532 - 1675. (2) மராட்டியர் ஆட்சி - 1675 - 1855. (3) ஆங்கிலர் ஆட்சி - 1855 - 1947. பல்லி பல்லி - பல்லீ புல்லுதல் = பொருந்துதல், ஒட்டுதல். (புல்லி) - பல்லி = சுவரில் ஒட்டிக்கொண்டிருப்பது. (வ.வ : 201). பலகை பலகை - பலக (ph) பலகை = 1. பரந்திருக்கும் தட்டு. பொற்பலகை யேறி (திருவாச. 16 : 1). 2. கேடகம். பலகை யல்லது களத்தொழியாதே (புறம். 282). (வ.வ : 201). பலம் பலம் - பல பலம் = ஒரு நிறை (4 கஃசு). (வ. வ: 202). பலா பலா - பல (ph) பல் - பரு. பல் - பலா = பெரும் பழம். சிறுகோட்டுப் பெரும் பழம் (குறுந். 18). என்றதை நோக்குக. பலப்பழத் தீயினொப்பாய் (திருவாச. 6 : 16). பலா - பலவு. தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே (புறம். 109.) பலாப்பழம் தமிழகக் குறிஞ்சி நிலத்திற்குச் சிறப்பா யுரியதை அறிந்திருந்தும், வடநாட்டுப் பிராமணர் மட்டுமன்றிச் சென்னைப் ப. க. க. த. அ. தொகுத்தவரும், பலா என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் காட்டியிருப்பது வியக்கத்தக்க நெஞ்சழுத்தமே. (வ.வ : 202). பவளம் பவளம் - ப்ரவால பவர் = கொடி. பவளம் = கொடிபோற் கடலுட் படர்வது. பவளத் தன்ன மேனி (குறுந். 1). ப்ரவால (வ.) = இளந்துளிர். இது மூலமெனல் பொருந்தாது. (வ.வ : 202). பழத்தோல் வகை தொலி மிக மெல்லியது; தோல் திண்ணமானது; தோடு வன்மையானது; ஓடுமிக வன்மையானது; குடுக்கை சுரையின் ஓடு; மட்டை தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி நெல், கம்பு முதலிய வற்றின் மூடி; கொம்மை வரகு கேழ்வரகு முதலியவற்றின் உமி. (சொல். 69). பழு பழு - பல், பழம் - பல (ph) - இ.வே. பள் - பண்டு = பழம், பழமை. தெ. பண்டு = பழம். பள் - பழு - பழம் - பழன், பழம் - பயம். பழன் - பயன். வடவரும் பல என்னும் சொல்லைப் பயன் என்னும் பொருளில் ஆள்வர். (வ. வ : 202). பள்ளி புல்லுதல் = துளைத்தல். புல் = உட்டுளை, துளை, உட்டுளையுள்ள நிலைத்திணை வகை. புல் - புள் - புழு. புழுத்தல் = புழுத்துளைத்தல். புல் - பொல். பொல்லுதல் = துளைத்தல். பொல்லம் பொத்துதல் = நார்ப் பெட்டியின் ஓட்டையடைத்தல். பொல்லாமணி = துளையில்லாமணி. பொல்லாப் பிள்ளையார் = உளியிடாப் பிள்ளையார் படிமை. பொல் - பொள். பொள்ளுதல் = துளைத்தல். பொள்ளல் = துளை, ஓட்டை. சீதநீர் பொள்ளற் சிறகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு (நன்னெறி, 12). புள் - பள் - பள்கு. பள்குதல் = பதுங்குதல், பள்ளமான இடத்தில் மறைதல். பள்கு - பழ்கு. பள் - பள்ளம் = 1. தாழ்விடம், 2. தாழ்நிலம், 3. தாழ்மட்டம், தாழ்வு. குழிவு. 5. கன்னத்தில் விழுங்குழிவு. 6. ஆழம். 7. கிடங்கு. 8. குழி. துளைத்தல் தோண்டுதல். தோண்டும் நிலம் முதலிற் பள்ளமாகும்; பின்பு கிடங்காகும்; அதன்பின் குழியாகும்; குழி ஒன்றை ஊடுருவின் துளையாகும். தோண்டத் தோண்ட ஆழம் மிகும். பள் - பள்ளி. பள்ளிக் கிருத்தல் = விதைகள் சேற்றிற் பதிந்து கிடத்தல். நாஞ்சில் நாட்டு வழக்கு). பள் - பள்ளை = குள்ளம். பள்ளையன் = குள்ளன், குறுகிப் பருத்தவன். பள்ளையாடு = குள்ளமான ஆட்டுவகை. குள்ளம் பள்ளம்போல் தாழ்மட்டமாயிருத்தலால், பள்ளை யெனப்பட்டது. பள்ளை - பள்ளையம் = தாழ் மட்டமான (தட்டையான) உண்கலம். ம. பள்ளையம். பள்ளையம் போடுதல் = சிறு தெய்வத்திற்குக் கீழே படைத்தல். பள்ளி = 1. தாழ்வு. 2. தாழ்வான இடம், தாழ் மட்டம். 3. தாழ்வான வீடு அல்லது குடிசை. 4. தாழ்வான வீடுகள் சேர்ந்த சிற்றூர். 5. தாழ்வான இடைச்சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451). ஒ. நோ: படு - பாடு - பாடி = இடைச்சேரி படுத்தல் = தாழ்வாயிருத்தல். 6. நெடிதாய் எழுந்து நிற்கும் நிலையும் குறிதாய் அமர்ந்திருக்கும் நிலையும் இன்றித் தாழ்வாய் நில அல்லது அடித்தள மட்டமாய் நீளக்கிடக்கும் நிலை. 7. அங்ஙனங் கிடத்தல், படுத்தல். 8. படுக்கும் இடம், விலங்கு துயிலிடம். 9. படுக்கும் பாயல், பரப்பல், விரிப்பு, மெத்தை. 10. படுத்துத் தூங்குதல், தூக்கம். 11. படுக்கும் அறை. 12. படுத்துத் தங்கும் வீடு. (மடைப்பள்ளி = சமையல் செய்யும தனி வீடு). 13. அரசன் வீடாகிய அரண்மனை. 14. தெய்வ வீடாகிய திருக்கோவில். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள். 840); சமணக் கோயில், புத்தக்கோயில். 15. துறவியர் தங்கும் மடம். 16. முனிவ ரிருக்கை. 17. அறச்சாலை. 18. தங்கும் இடம். 19. இடம். சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். எழுத். 100). 20. கோவிலில் அல்லது மடத்தில் நடைபெறும் துவக்கக் கல்விச்சாலை. 21. பணிமனை. தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15). 22. பல வீடுகள் சேர்ந்த பேரூர், பல காரை வீடுகள் சேர்ந்த நகர் அல்லது நகரம். 23. ஊர்ப் பெயரீறு. எ-டு: குராப்பள்ளி, திருக்காட்டுப் பள்ளி. தெ. gšÈ (b.), மதனபல்லி, பங்கனப்பல்லி, பள்ளி, ஹள்ளி, மாரண்டஹள்ளி, பழங்கன்னடத்தில் பள்ளியென்று வழங்கிய ஊர்ப்பெயர் ஈறுகளெல்லாம், புதுக் (ஹொச) கன்னடத்தில் ஹள்ளி என்று மாறிவிட்டன. பள்ளி - வ. பல்லீ, பல்லி (கதாசரித்சாகர) = சிறு வீடு, சிற்றூர். பல்லி என்னும் வடசொல் வேதத்தில் வழங்காது பிற்காலச் சமற்கிருத்திலேயே வழங்குதலும் பகரமுதல் எடுப்பொலி பெறாமையும், வேர்ச்சொல் இன்மையும், வேறு பொருள் கொள்ளாமையும், அது தமிழ்த் திரிசொல் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும். பள்ளிக் குறிப்பு, பள்ளி கொண்டான், பள்ளி கொள்ளுதல், பள்ளி மண்டபம், பள்ளி மாடம், பள்ளியந்துலா,பள்ளியம்பலம், பள்ளியயர்தல், பள்ளியறை, பள்ளியெழுச்சி என்பன படுக்கை அல்லது தூக்கம் பற்றிய வழக்குச் சொற்கள். பள்ளி படுத்தல், பள்ளிபடை என்பன அரசரையும் முனிவரையும் அடக்கஞ் செய்தல் பற்றிய வழக்குச் சொற்கள், அடக்கஞ் செய்தல் நிலையாகப் படுக்கைப் படுத்துதல் போன்றது. பள்ளி கம்பு வைத்தல் என்பது, வரி செலுத்தாதவன் வீட்டின் முன் கம்பு நட்டு மறியல் செய்யும் நாஞ்சில் நாட்டு வழக்குப் பற்றிய சொல். பள்ளியோடம் சிறு வீடு போன்ற அமைப்புள்ள மரக்கலம். பள்ளிக்கட்டில், பள்ளிக்கட்டு, பள்ளித்தேவாரம், பள்ளிப்பீடம், பள்ளிவேட்டை என்பன, அரண்மனை அல்லது அரசன் தொடர்பான வழக்குச் சொற்கள். பள்ளிச்சந்தம் என்பது சமண புத்தககோவில் மானியமும் பள்ளிவாசல் என்பது மகமதியர் கோவிலும் பற்றிய வழக்குச் சொற்கள். பள்ளிக் கணக்கன், பள்ளிக் கணக்கு, பள்ளிக்கு வைத்தல், பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தான், பள்ளித்தோழமை, பள்ளிப்பிள்ளை, அரைப்பள்ளி, உச்சிப்பள்ளி என்பன, திண்ணைப் பள்ளிக் கூடம் அல்லது துவக்கக் கல்விச்சாலை பற்றிய வழக்குச் சொற்கள். இனி, வேறு சில வழக்குச் சொற்களும் உள. இத்தகைய வழக்கச் சொற்கள் வடமொழியில் இல்லை. பள் - படு - படுக்கை, படை. ஒ. நோ : Goth. badi, OE. bed, OS. bedi(d) E.bed. படு - பாடு - பாடி, பாடை. படு - படி. படிதல். ஒ. நோ : OE, OS. bidan, Goth, beidan, E. bide. பள் - பாள் - பாளம் = 1. பரந்து தட்டையான கட்டி. 2. கனத்த தகடு. பள்ளி - (பாளி) - பாழி = 1. மக்கள் துயிலிடம். பெரும்பாழி சூழ்ந்த விடத்தரவை (திவ். இயற். 1 : 80). 2. விலங்கு துயிலிடம். (பிங்.). 3. குகை. (திவா.) 4. கோயில். ஐயன் பாழியில் ஆளைபோர்க் குரித்தாம் அன்று (ஈடு, 1 : 1 : 3). 5. பாசறை. (பிங்). 6. முனிவரிருக்கை. பூதந்தம்பாற் பாட்டிக் கொண்டுண்பவர் பாழிதொறும் (தேவா. 186 : 5). 7. வதியும் இடம், இடம். வானவர்கோன் பாழி (திவ். இயற். 2 : 13). 8. மருதநிலத்தூர். (சூடா.) 9. நகரம். (பிங்.) 10. சிறுகுளம். (தொல். சொல். 400, உரை). 11. இறங்கு துறை. இவர் தம்மைத் தானுணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதார மிறே (திவ். இயற். திருவிருத். 61). 12. எலிவளை. எலிப்பாழி. இனி, பாள் - பாளி - பாழி என்றுமாம். பாள் - பாளை - பாளையம் = 1. பாசறை. 2. போர்க்குச் செல்லும் படை வழியில் தங்கியிருக்கும் இடம். 3. படை நிலையாக இருக்கும் ஊர். பாழி = Gk. polis, city. E. acropolis (f. Gk. akropolis, akros, topmost, outer-most, polis, city.) citadel or elevated part of a Greek city, esp of Athens. E. decapolis (f. Gk. deka, ten, polis, city), confederacy of ten cities in the 1st century B.C. in a region in the NE part of ancient Palestine. E. necropolis (f. Gk. nekros, corpse, dead body, polis, city), cemetery. E. cosmopolis (f. Gk. kosmos, universe, polis, city), a cosmopolitan city. E. cosmopolitan, a. Belonging to all parts of the world; n, person free from national limitations. E. cosmopolite, n. Citizen of the world; a free from national prejudices; Gk. kosmopolites, kosmos, universe, polites, citizen. E cosmopolitical, a. Belonging to universal polity. E. metropolis, n. Chief city of a country, capital, metropolitan bishop’s see, centre of activity. [LL. f. Gk. metropolis, meter, mother, polis, city.] E. metropolitan, a & n. Of a or the metropolis; belonging to, forming part of, mother country as dist. from its colonies; of an ecclesiastical metropolis; metropolitan bishop; bishop having authority over bishops of a province, in the west equivalent to archbishop, in Greek church ranking above archbishop and below patriarch, whence metropolitanate; inhabitant of a metropolis. [LL. metropolitanus f. Gk. metropolites f. metropolis.] E. Metropolitan magistrate paid London magistrate. E. Police. n. Civil administration, department of government concerned with public order, civil force responsible for enforcing law and maintaining public order. [F. f. med. L. politia, policy]. E. policlinic, n. Clinic in private houses; f. G. polik linik f. Gk. polis, city + clinic. E. policy, n. Statecraft, course of action adopted by government, party. etc; political sagacity, prudent conduct. [ME f. OF. policie f. L. f. Gk. politeia, citizenship, polity, polites, citizen f polis, city. E. politarch, n Governor of some Oriental cities. e.g. Thessalonica under Romans. [f. Gk. politarkhes, polites, citizen, arkhes, ruler.] E. politic, a & n. (Of persons) sagacious, prudent, (of actions etc.) judicious, expedient, Scheming; n. (pl.) Science and art of government, political offairs or life, political principles. [ME. L. Of. politique f. L. f. Gk. politikos, f. politea f. polites f. polis, city]. E. political, a & n Of the State or its government, of public affairs, of politics; f. politic. E. politician, n. One skilled in politics, statesman, one interested or engaged in politics, esp. as profession, one who makes a trade of politics; f. politic. E. politicize, ise, v.i. & t. Act the politician; engage in, talk, polities; give political character to; f. politic + ize (sef.) E. politico -, in comb. as politico - economical, politico - geographical, politico - social, politico - religious etc; f. politic. E. polity, n. Condition of civil order; form, process, of civil government; orgranized society, state. [f. obs. F. politic or L. politia, policy.] ஊர் காவல், பாடி காவல் என்பன போன்றே, police என்னும் காவல் துறைப் பெயரும் நகரப் பெயரினின்று தோன்றியிருத்தலை நோக்குக. பள்ளிக்கூட விளையாட்டுக்கள் கோழிக்குஞ்சு - 1 பல பிள்ளைகள், ஒருவர்பின் ஒருவராக ஒருவர் இடுப்பை இன் னொருவர் சேர்ந்து கட்டிக்கொண்டு அல்லது பற்றிக்கொண்டு, வரிசையாக நிற்பர். தலைமையான பிள்ளை முதலில் நிற்கும். அப்பிள்ளைக்கு எதிரே மற்றொரு பிள்ளை நிற்கும். தலைமையான பிள்ளை கோழியையும், பின்னால் நிற்கும் பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், எதிரே நிற்கும் பிள்ளை கழுகையும், நிகர்ப்பர். கழுகு கடைசிக் குஞ்சைப் பிடிக்க வரும். வரிசை வளைந்து குஞ்சுகள் தப்பும். கழுகு கோழியை நோக்கி எனக்கொரு குஞ்சு தா; இன்றேல் பறந்து வந்து பிடித்துக்கொண்டு போய் விடுவேன் என்னும். கோழி மறுத்து, கழுகு குஞ்சைப் பிடிக்காதபடி மறிக்கும். கழுகு சுற்றிச் சுற்றி வந்து கடைசிக் குஞ்சைப் பிடித்துக் கொண்டு போகும். இங்ஙனமே, பின்பு ஏனைக் குஞ்சுகளையும் ஒவ்வொன் றாய்ப் பிடித்துக்கொண்டு போய்விடும். கோழி மிக மிக வருந்தும். கோழிக்குஞ்சு -2 எட்டுப் பிள்ளைகள் சேர்ந்துகொள்வர். அவருள் ஒரு பிள்ளை கோழியையும், ஐந்து பிள்ளைகள் அதன் குஞ்சுகளையும், மற்றொரு பிள்ளை கழுகையும், மற்றுமொரு பிள்ளை நரியையும், நிகர்ப்பர். கோழி தன் குஞ்சுகளைக் கூண்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, இரைதேட வெளியே சென்றுவிடும். குஞ்சுகள் தாய் பேச்சைத் தட்டிக் கூண்டிற்கு வெளியே வரும். கழுகு ஒரு குஞ்சை எடுத்துக் கொண்டுபோகும். ஏனைக்குஞ்சுகளெல்லாம் கூண்டிற்குள் ஓடிவிடும். பின்பு சற்றுநேரம் பொறுத்து மீண்டும் வெளியே வரும். கழுகு மீண்டும் ஒரு குஞ்சை எடுத்துக்கொண்டு போகும். இங்ஙனம் நாலு குஞ்சு போனபின் தாய் திரும்பிவரும். எஞ்சியுள்ள குஞ்சு நடந்ததைச் சொல்லும். கோழி கழுகிடம் சென்று, என் குஞ்சுகளையெல்லாங் கொடுத்துவிடு. அவற்றிற்குப் பதிலாக நான் உனக்கு நாளைக்குக் கறிதருவேன் என்று வாக்களித்து, குஞ்சுகளை மீட்டுக்கொண்டு போகும். மறுநாள், கழுகிற்குக் கறி எங்ஙனம் கொடுப்பதென்று கோழி கவன்று கொண்டிருக்கும்போது, நரி அதனிடம் வந்து, நீ கவலைப்படாதே. கழுகிற்குக் கறிகொடுக்க வேண்டியதில்லை. அதனின்று தப்புவதற்கு உனக்கொரு வலக்கரம் (தந்திரம்) சொல்லிக்கொடுப்பேன், என்று சொல்லும். கோழி அதை நம்பிக்கொண்டு சும்மா இருந்துவிடும். பின்பு நரி கழுகிடம் சென்று, கோழி உனக்கு வாக்களித்தபடி கறி கொடுக்காதாம். நீ போய் அதன் குஞ்சுகளைப் பிடித்துக்கொண்டு வந்தால்தான் உனக்குக் கறி கிடைக்கும் என்று மூட்டிவிடும். கழுகு உடனே போய், எல்லாக் குஞ்சு களையும் ஒவ்வொன்றாகப் பிடித்துக் கொண்டு வந்துவிடும். நரிக்கு ஒரு குஞ்சு பங்கு கிடைக்கும். கோழி நரியை நம்பிக் கெட்டுப்போனதை நினைத்து மிகத் துயருறும். குறிப்பு :- மேற்கூறிய விளையாட்டிரண்டும் பேதைப் பருவப் பெண்களுக் குரியவை. ஐயாட்டைப் பருவத்தாராயின் ஆண்பிள்ளைகளும் சேர்ந்து கொள்ளலாம். (த.நா.வி.) பளிங்கு (t´) பளிங்கு - படிக (ph, t´) பள் - பள, பளபள - பளபளப்பு. பளிச்சு. பளீர் என்பன மின்னற் குறிப்புக்கள். பள் - பளிங்கு = 1. பளிங்குக்கல். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள். 706). 2. கண்ணாடி. 3. கற்பூரம். பள - பளிதம் = கற்பூரம். பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து (மணி. 28 : 243). (வ.வ. 203) (தி.ம. 748). பளிங்கு (2) பள் - பளி - பளிங்கு = பளிங்குக்கல். கண்ணாடி, கற்பூரம். பளி - பளிதம் = கற்பூரம். பள் - பட்டு = பளபளப்பான நூல் அல்லது துணி பட்டுப் பட்டென்று நிலா அடிக்கிறது என்னும் வழக்கை நோக்குக. பளிங்கு = படிக. (வ.). (தி.ம. : 748) பற்று நான் என்று தன்னைப் பற்றிய அகப்பற்றும் எனது என்று தன் உடைமை களைப் பற்றிய புறப்பற்றும் என இருவகைப்படும். (தி.ம : 48) பற்றுக் கோடு பற்றுக் கோடு என்பது முதலாவது கொடிகள் பற்றிப்படரும் கொள் கொம் பிற்கும், இரண்டாவது கொள் கொம்பு போன்ற தாங்கலுக்கும் பெயர். பற்று - பிடிப்பு. கோடு - கொம்பு. (சொல். 14). பன்னிரு பொருத்தம் 1. காதற் பொருத்தம். 2. உடல் நலப் பெருத்தம், 3. ஒழுக்கப் பொருத்தம். 4. கருத்துப் பொருத்தம். 5. உண்டிப் பொருத்தம். 6. அகவைப் பொருத்தம். 7. உருவப் பொருத்தம். 8. கல்விப் பொருத்தம். 9. முறைப் பொருத்தம். 10. வினைத் திறப்பொருத்தம். 11. தொழிற் பொருத்தம். 12. குடும்ப நிலைப் பொருத்தம். த.தி : 43 - 49. பன்னீர்க்குளத்தில் முழுகுதல் விளையாட்டு பதினொரு பெண்பிள்ளைகள் கூடித் தெருவில் ஓரிடத்தில் வட்டமாய் உட்கார்ந்தபின், அவருள் தலைமையானவள் ஒவ்வொருத்தியின் முட்டிக் கால்களையும் ஒவ்வொன்றாக வரிசைப்படி சுற்றிச் சுற்றிச் தொட்டுக்கொண்டு. 1 2 3 4 ஒருப்புட்டம் திருப்புட்டம் ஒடிவா மங்களம் 5 6 7 8 செக்கைத் திருப்பிச் செவ்வெண்ணெய் வார்த்து 9 10 11 12 மாடுங் கன்றும் வருகிற வேளை 13 14 15 16 மஞ்சள் தண்ணீர் தெளிக்கிற வேளை 17 18 19 காலை மடக்கடி காமாட்சி என்னும் மரபுத் தொடரை, தொடுகைக்கொன்றாகப் பத் தொன்பது சீர்படச் சொல்வாள். காமாட்சி என்று முடிகிற பெண் உடனே ஒரு காலை மடக்கி உட்கார வேண்டும் (அதாவது மண்டியிட்டுக்கொள்ள வேண்டும்). இங்ஙனமே மீண்டும் மீண்டும் அம்மரபுத் தொடர் சொல்லப்பட்டு, ஒவ்வொரு தடவை யும் காமாட்சி என்ற முடிகிற பெண் தன் காலை மடக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாந் தடவையாகக் காமாட்சி என்று முடியும் பெண், தன் மறு காலையும் மடக்கின வுடன் எழுந்து போய்விட வேண்டும். இங்ஙனம் ஏனைப் பதின் மரும் எழுந்து போய் ஓரிடத்திற் கூட்டமாயிருப்பர். பின்பு, தலைமையானவள் ஓரிடத்தில் தனிமையாக இருந்து கொண்டு, முதலில் போன காமாட்சி ஓடிவா என்பாள். அவள் வந்தவுடன் உன் குழந்தையை என்ன செய்தாய்? என்று கேட்பாள். அவள், என் குழந்தையைக் கிணற்றில் முறித்துப் போட்டுவிட்டுக் குளத்தில் முழுகிவிட்டு வந்தேன் என்று சொல்வாள். நீ எந்தக் குளத்தில் முழுகினாய்? என்று தலைமை யானவள் கேட்பாள். அதற்கு அவள், தயிர்க்குளத்தில் முழுகி னேன் என்று பதிலுரைப்பாள். உடனே, தலைமையானவன் போ போ போ, என் வீடெல்லாம் வெள்ளையாய்ப் போய் விட்டது என்று சொல்லி, அவளைத் துரத்திவிடுவாள். பின்பு, இரண்டாவது போன காமாட்சி ஓடிவா மூன்றவாது போன காமாட்சி ஓடிவா என்று இங்ஙனம் எஞ்சியோருள் ஒவ்வொருத்தியையும் முறையே அழைத்து முன்போற் கேட்பாள், ஒவ்வொரு தடவையும் முன் சொன்னவாறே நிகழும். குளத்தில் முழுகினதைப் பற்றிச் சொல்லும்போது, இரண்டாவது போன காமாட்சி பருப்புக் குளத்தில் முழுகினேன் என்பாள். அன்று, தலைமையானவள் போ போ போ, என் வீடெல்லாம் மஞ்சளாய்ப் போய்விட்டது என்று சொல்லித் துரத்தி விடுவாள். மூன்றாவது போன காமாட்சி நெய்க் குளத்தில் முழுகினேன் என்பாள். உடனே, தலைமையானவள் போ போ போ, என் வீடெல்லாம் எண்ணெயாய்ப் போய் விட்டது என்று, சொல்லித் துரத்திவிடுவாள். நாலாவது போன காமாட்சி பவ்வீக் குளத்தில் முழுகினேன் என்பாள். உடனே, தலைமையானவள் போ போ போ, என் வீடெல்லாம் பவ்வீயாய்ப் போய்விட்டது என்று சொல்லித் துரத்திவிடுவாள். இங்ஙனம் ஒன்பது பெண்கள் ஏற்காத ஒவ்வொன்றைச் சொல்லித் துரத்தப்பட்டபின், பத்தாவது பெண் மட்டும் நான் பன்னீர்க் குளத்தில் முழுகினேன் என்பாள். உடனே தலைமையானவள் வா வா வா என்று சொல்லி அவைளச் சேர்த்து அணைத்துக் கொள்வாள். அதோடு ஆட்டம் முடியும். தலைமையானவளிடம் ஒவ்வொருத்தியும் ஓடி வரும் போது, ஓர் இடக்கரான மரபுரை கூறிக் கொண்டு வருவது வழக்கம். (த.நா.வி.) பனுவல் பருத்தி நூலுக்கும் அறிவு நூலுக்கும் பனுவல் என்பது பொதுப் பெயர். பஞ்சிதன் சொல்லாய் பனுவல் இழையாகச் செஞ்சொல் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு என்றும், உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும் நூல்; அஃதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு என்றும் உன்னித்துக் கூறினார் பவணந்தியார் (நன். 24,25) பா என்பது நெயவுப் பாவிற்கும் செய்யுட்பாவிற்கும் பொதுப் பெயர். (ஆங்கிலத்திலும் நூற்பொருளைக் குறித்தற்கு நெசவுத் தொழிலினின்று Text, yawn என்னும் இருசொற்கள் எடுத்தாளப் பெறுகின்றன (E. Text from L. Texre weave) நூல் மடியைக் குறிக்கும் yawn என்னும் சொல் ஓசுநர் (Sailors) கூறும் கதைக்குப் பொதுப் பெயராகும். அதை Sailor’s yawn என்பர். பாக்கியம் பகு - பாகு - பாக்கு = பகுதி, நற்பகுதி, நற்பேறு பாக்கு + இயம் (ஈறு) = பாக்கியம். பாக்கு வெட்டியைக் காணோமே . . . விளையாட்டு ஆட்டின் பெயர் : பாக்குவெட்டியைக் காணோமே என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு, அச்சொல்லையே பெயராகக் கொண்டது: இது வடகொங்கு நாட்டில் பருப்புச் சட்டி எனப்படும். ஆடுவார் தொகை : பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர். ஆடிடம்: ஊர்ப்பொட்டல் இதை ஆடுமிடமாம். ஆடு முறை: தலைமையான இரு பெதும்பையார்1 அண்ணாவியர் போல் எதிரெதிர் நின்று கொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால், ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக் கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி, அவ்வரிசைக்கு எதிர் நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச் சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும்போது இடமும், இடஞ் செல்லும் போது வலமுமாக, வரிசையாய் நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிட வேண்டும். இங்ஙனம் (அண்ணாவியொழிந்த) எல்லாப் பெண்களும் தொடப்படும்வரை, ஆட்டுத் தொடரலாம். ஓர் ஆட்டை முடிந்தபின் மறுமுறையும் முன் போன்றே ஆடப் பெறும். ஆட்டு நிகழும்போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின் வருமாறு பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப் படும். பாண்டிநாட்டுப் பாட்டு 1. த: பாக்குவெட்டியைக் காணோமே. வ: தேடி ஓடிப் பிடித்துக்கொள். 2. த: வெற்றிலைப் பெட்டியைக் காணோமே. வ: தேடி ஓடிப் பிடித்துக்கொள். 3. த: ஆடுகிடக்கிற கிடையைப் பார். வ: ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். 4. த: குட்டி கிடக்கிற கிடையைப் பார். வ: குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். 5. த: பல்லே வலிக்குதே வ: நெல்லைக் கொறித்துக் கொள். கொங்குநாட்டுப்பாட்டு 1. த: பருப்புச் சட்டி வ: திருப்பி நக்கு. 2. த: வாழை யிலை. வ: வழித்து நக்கு. 2 3. த: ஊசியாலே குத்துவேன். வ: வீட்டுமேலே ஏறுவேன் 4. த: கிணற்றிலே குதிப்பேன். வ: கல்லெடுத்துப் போடுவேன். 5. த: தலையே நோகுதே. வ: தலையணை போட்டுக்கொள். ஆட்டுத் தோற்றம் :- இந்த ஆட்டு நரி, ஆட்டுக்குட்டிகளையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப் பதினின்று தோன்றிய தாகத் தெரிகின்றது. பாகம் பாகம்: பகு- பாகு- பாகம்- பாக (வ. bhaga). பாடிவாசல் சல்லிக்கட்டு மாட்டுத் தொழுவை இன்றும் பாடி அல்லது பாடிவாசல் என்றழைப்பது, இவ்வழக்கம் பண்டைக் காலத்தில் ஆயர்பாடியில் நிகழ்ந்தது என்பதை உணர்த்தும். (த.தி. 5). பாண்டி நாட்டுத் தமிழ்ச் சிறப்பு கடைக் கழகம் கலைந்து பல நூற்றாண்டு கடந்த பின்பும், பாண்டியவரசின் தலைமைபோய்ப் பன்னூற்றாண்டு சென்ற பின்பும், பாண்டியனைத் தமிழ் நாடனென்று திவாகரம் சிறப்பித்தற்கும். நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ் (வு) இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப் பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ். என்னும் பழஞ் செய்யுட்கும் ஏற்ப, பாண்டி நாட்டுத் தமிழ் இன்னும் கீழ்க்காணும் பலவகையிலுஞ் சிறந்துள்ளது. (1) பாண்டி நாட்டுப் பழங்குடி மக்கள், சிறப்பாக நாட்டுப்புறத்தி லுள்ளவர், தமிழ் வல்லின மெய்யொலிகளைத் திரவிட ஆரிய மொழிகளிற்போல் மிக வலித்தும் எடுத்தும் ஒலிக்காது, பழைய முறைப்படியே பலுக்கி (உச்சரித்து) வருகின்றனர். வட சொற்களிலுள்ள வல்லொலிகளும் பொலிவொலிகளும் அவர் வாயில் நுழைவதில்லை. எ-டு : சாக்ஷி - சாக்கி, ஜாதி - சாதி (2) சொற்றூய்மை பாண்டி நாட்டுத் தமிழ்ச் சிறப்புக்களுள் ஒன்றாகும். எ-டு: சிகிச்சை (வ.) - பண்டுவம் (த.) சுத்தம் (வ.) - துப்புரவு (த.) பாண்டி நாட்டார் சைக்கிள் (Cycle) என்பதை மிதிவண்டி என்றும், நாஞ்சில் நாட்டார் புனல் (Funnel) என்பதை வைத்தூற்றி என்றும், தூய தமிழ்ச் சொல்லால் வழங்குகின்றனர். (3) நீ, நீர் என்னும் முன்னிலைப் பெயர்களின் முந்திய வடிவான நீன், நீம் என்பவை, தென்பாண்டி நாட்டிலேயே வழங்குகின்றன. நாமம் என்னும் திருமாலிய (வைணவ)க் குறிப் பெயரின் மூலமான இராமம் என்பதும், அங்குத்தான் வழங்குகின்றது. திருமண் காப்பு இராமவணக்கம் பற்றி இராமம் என்றும், கோபால வணக்கம் பற்றிக் கோபாலம் என்றும் பெயர் பெற்றுள்ளது. கோபாலம் என்பது கோப்பாளம் எனச் சிதைந்து வழங்குகின்றது. இதுவும் தென்பாண்டி வழக்கே. (4) தொல்காப்பியத்திற் குறிப்பிட்டுள்ளபடி, படியை நாழி என்பதும், அரைப்படியை உரி என்பதும், காளையையும் ஆவையும் விரவுப் பெயரால் சாத்தன் சாத்தியென்றழைப்பதும், இன்றும் தென்பாண்டி வழக்காம. (5) பாண்டி நாட்டுலகவழக்கில், வேறெங்கும் வழங்காத தூய தென்சொற்களும், மரபுகளும் (Idioms) வழக்காறுகளும் (Usages), இணைமொழிகளும் (words inpairs) தொடர் மொழிகளும் (Phrases), பழமொழிகளும் (Proverbs) ஏராளமாய் வழங்குகின்றன. காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய தவசங்களும் கரம்பைப் பயறு, கற்பயறு முதலிய பயறு வகைகளும், அங்குத் தான் விளைக்கப் பெறுகின்றன. இளத்தல், உணத்துதல், இளவட்டம், ஏத்தாப்பு, கரட்டை, காணம், காயல், காம்புதல் கிண்ணுதல் கிளியஞ்சிட்டி, குடிமகன், குண்டடியன், குணட்டுதல், குதாவடை, குந்தக்கம், கெந்தளிப்பு, சவங்கல், சவுத்தல், சில்லான், சிலையோடுதல், சீயான், சேடா, தக்கனை, தடையம், தவ்வல், தவத்துதல், தாயமட்டம், திகைதல், துப்புரவு, தேரி, நலவு சொல்லுதல், நோங்குதல், பண்ணையார், பத்தநடை, பதவல், பரிதல் (ஓடுதல்), பரும்பு, பறம்புதல், பாடு படுதல் (பயிரிடுதல்), புதுநிறம், புல்லை, பூட்டன், பொண்டான், மயிலை, மானை, மெத்துதல், வடலி, வதியழிதல், வள்ளிதாய் (முழுதும்), வாழ்க்கைப்படுதல், வாழ்வரசி என்பன போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் நெல்லை வழக்கிற்குச் சிறப்பாகும், ஆதலால், வழக்கை ஆராய்தல் வேண்டும், இற்றைத் நாட்டுலக வழக்கை ஆராய்தல் வேண்டும், இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் சென்னைத் தமிழையும் சோழகொங்கு நாட்டுத் தமிழையுமே அறிந்ததினால், செந்தமிழைப் பிறழவுணர்ந் துள்ளனர். பாண்டியன் பாண்டியன் - பாண்ட்ய பள்-பண்டு-பண்டி- பாண்டி= எருது. காளை (பரிபா. 20 17, குறிப்பு). பாண்டி = பாண்டில் = எருது மன்னிய பாண்டில் பண்ணி (சீவக 2054). பாண்டி - பாண்டியன்= காளையன் வயவன் (வீரன்). பாண்டியர் குடி கும ரிக்கண்டத்தில் கி.மு. 10,000 ஆண்டு கட்கு முன் தோன்றியது. (வ.வ. 203). பாண்டியன் உரோம நாட்டுத் தொடர்பு பாண்டியன் அகத்தசு (Augustus- கி.மு.44- கி.பி.14) என்னும் உரோம நாட்டுப் பேரரசனுக்குத் தூது விடுத்ததாகவும், அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சொல்லப்படுகின்றது. ஏற்கனவே இருநாடுகட்கும் இடையே இருந்த வாணிகத் தொடர் போடு தூதாண்மைத் தொடர்பும் ஏற்பட்டதன் விளைவாக, ஒரு சிறு உரோமக் குடியேற்றம் மதுரையில் அமைந்ததாகவும், பாண்டியன் மெய் காவற் படை உரோமப் பொருநரைக் கொண் டிருந்ததாகவும், தெரிகின்றது. மதுரை மாநகர்க்கோட்டை வாயிலையும், கோவலன் காலத்தில் உரோமப் படைஞர் காத்து நின்றதை, கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு (சிலப். கச: சாசா-எ) என்பதனால் அறியலாம். இந்நிலைமை கி.பி.ச- ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. அதனால், அக்காலத்து உரோமக் காசுகள், பாண்டி நாட்டில் மட்டுமன்றித் தமிழகத்தின் பலவிடங்களிலும் கிடைத்துள்ளன. யவனர் நன் கலந் தந்த தண்கமழ் தேறல் (புறம். ருசா: கஅ) என்பது, யவனர் பாண்டியர் வாணிகத் தொடர்பைக் காட்டும். மேலை யாரியக் கலத்துறைச் சொற்கள் உலகில் முதன்முதல் ஆழ்கடலிற் பெருங்கலஞ் செலுத்தினவரும், சுற்றுக்கடலோடிகளா (circumnavigators) யிருந்தவரும் தமிழரே, அதனாற் கடலும் கலத்துறையும் பற்றிய பல தமிழ்ச் சொற்கள், மேலையாரிய மொழிகளிற் கலந்துள்ளன. வாரி- L. mare. வாரணம் - L. marinus. E. marinaï marineï mariner படகு - LL. barca, It. Sp., Pr. barca, F.barque, E. bark, barque. L. barga, OF. barge, E.barge. ட-ர, போலித் திரிபு. ஒ.நோ: கொடுக்கு - ME. croc. E. crook. குடகு, தூத்துக்குடி, கள்ளிமேடு, தரங்கம்பாடி, முதலிய இடப் பெயர்கள் ஆங்கிலத்திற் கொண்டுள்ள வடிவுகளையும் நோக்குக. கலம் - Gk. galaia, L. galea, OF. galie, ME. galie, E. galley, கப்பல் - OE. scip, OFris, skip, schip, Nfris, skapp, skep, WFris, skip, OS. ship, MLG, schip, schep, LG. schipp, MDu. sc(h(ip, sc(h)eep, Du. schip, WFlem, scheep, OHG, seif, skef, MHG, schif, schef, G.schiff, ON, skip, Sw. skepp, Da. skib, Goth, skip, F. esquif, It. schifo. இது தியூத்தானியப் பொதுச் சொல் (Com. Teut) என்றும், இதன் அடிமூலம் திட்டமாய்த் தெரியவில்லை யென்றும் (“the ultimte etymology is uncertain”) என்றும், எருதந்துறை ஆங்கிலப் பேரகர முதலியிற் (O.E.D.) குறிக்கப்பட்டுள்ளது. கொம்பு- கொப்பு- கப்பு- கப்பல் = பல கிளைகளைக் கொண்ட பாய்மரமுள்ள கலம். நாவி, நாவாய் - L. navis, navia, OF. navie, ME. navie, E. navy. GK. naus. நங்கூரம் - Gk. agkuraï L.ancoraï OE ancor, E. anchor, Pers. langar. ஆங்கில அகர முதலியில், இச்சொற்கு agk = (=hook) என்னும் கிரேக்கச் சொல் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அச்சொல்லும் அங்கு என்னும் தென்சொல்லின் திரிபே. அங்குதல் வளைதல். அங்கு- அங்கணம்= வாட்டமான சாய்கடை. முதன் முதல் தமிழகத்தினின்றே மேனாடுகட்குச் சரக்குகள் ஏற்றுமதியாயின என்பதற்கு, அரிசி இஞ்சி என்னும் இரு சொற்களே போதிய சான்றாம். அரு-அரி=க. சிறுமை. அரி நெல்லி (சிறு நெல்லி). உ.நுண்மை அரியே ஐம்மை (தொல். அங) 3. அரிசி. அரிசியும் வரியும் அரியென லாகும். (பிங்.). அரி- அரிசி = க. சிறியது. அரிசிப்பல் (சிறுபல்). உ. நெல் புல் (கம்பு) முதலிய கூலங்களின் உள்ளீடு. அவரை துவரை முதலிய பயற்றம் பருப்புக்களை நோக்க, நெல் புல் முதலிய தவசங்களின் அரிசி சிறியதாயிருத்தல் காண்க. அரிசி - E. rice, ME. rys, Frsi. rys, Du. rijst, rijs, rys, MLG. riis, ris, MHG, ris, G. reis, MSw. riis, Sw. and Da. ris, OF. ris, F. riz, It. riso, L. oriza, orywa, GK. oruza, oruzon, Sp. and Pg, arroz, Arab, aruz, uruz. Bot. n. L. Oryza sativa. நெல் தொன்றுதொட்டுத் தமிழகத்து விளைபொருள் என்பதும், அரிசி முதன்முதல் தமிழகத்தினின்றே மேனாடுகட்கு ஏற்றுமதியான தென்பதும், வெளிப்படை, அங்ஙனமிருந்தும், எருதந் துறை ஆங்கிலப் பேரகர KjÈÆš(O.E.D.), அரிசி தமிழ்ச் சொல்லென்று குறிக்கப்படாது, “Probably of Oriental origin” என்றும், எருதந்துறைச் சிற்றகர முதலியிற்(C.O.D.), of Oriental orig” என்றும் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. இஞ்சிவேர் - Gk. ziggiberis, L. zingiber, gingiber, OE. gingifer, gingiber, E. ginger. OF. gingibre, gingimbre, mod. F. gingembre, Pr. gingibre, gingebre, Sp. gengibre, agengibre, Pg. gengivre, It. zenzevero, zenzero, gengero, gengiovo. Arab. zanjabil, MDu, gengber, D.gember, MHG, ingewer, Ger, ingwer, MLG. engewer, Da. ingefeer, Sw. ingefara. கோழிக்கோட்டிலிருந்து (Calicut) ஏற்றுமதியான பருத்தித் துணி ஆங்கிலத்திற் கலிக்கோ (calico) என்று பெயர் பெற்றுள்ளது. பாண்டி விளையாட்டு (1) பாண்டி நாட்டு முறை ஆட்டின் பெயர்: பல கட்டங்களுள்ளதாய் நிலத்திற்கீறப்பட்ட அரங்கினுள் வட்டெறிந்து, அதை நொண்டியடித்துக் காலால் தள்ளியாடும் ஆட்டு, பாண்டி எனப்படும். இவ்விளையாட்டு, ஏனையிரு தமிழநாடுகளிலும், வட்டு என்றும் சில்லி என்றும் சில்லாக்கு என்றும் எறிகருவியாற் பெயர் பெற்றிருப்பதால், ஒருகால் பாண்டி என்பதும் எறி கருவிப் பெயராய் இருக்கலாம். பாண்டில் என்னுஞ் சொல் வட்டம் என்று பொருள்படுவதால், அதன் கடைக்குறையான பாண்டி என்பதும் அப்பொருள் படலாம். வட்டு சில்லி (சில்லாக்கு) என்னும் பெயர்கள், வட்டம் என்னும் பொருளையே மொழிப் பொருட் காரணமாகக் கொண்டிருப்பதுபோல், பாண்டி என்பதும் கொண்டிருக்கலாம். பாண்டி விளையாட்டிற்கு வட்டு அல்லது வட்டாட்டு என்பது பழம் பெயர். இன்றும் பழஞ்சேர நாடாகிய மலையாளத்தில் அப்பெயரே வழங்குகின்றது. ஆடுவார் தொகை: இதை இருவர் ஆடுவர். இது ஏனை வகை கட்கும் ஒக்கும். ஆடு கருவி: வரிசைக்கு மூன்று ஆக இருநட்டு வரிசையாக ஆறு கட்டங்கொண்ட ஒரு நீள்சதுர அரங்கும், ஆடகர் ஒவ்வொரு வர்க்கும் அரையங்குலக் கனமும் ஈரங்குல விட்டமுமுள்ள ஒரு வட்டமான கல் அல்லது ஓட்டாஞ்சல்லியும், இதை ஆடு கருவியாம். அரங்கு, பொதுவாக, ஆறடி நீளமும் நாலடி அகலமும் உள்ள தாயும், மேற்குறும்பக்கத்தில், சமுத்திரம் என்னும் ஓர் அரைவட்டங் கொண்டதாயும், இருக்கும். அவ்வரை வட்டத்தின் உச்சியில் சிறுபான்மை அமைக்கப்படும் ஒரு சிறு வளைவு, கும்பக்குடம் எனப்படும். கட்டங்கட்குத் தட்டுக்கள் என்று பெயர். கல்லிற்கு அல்லது ஒட்டாஞ்சல்லிக்கு வட்டு என்று பெயர். ஆடிடம்: அகன்ற தெருவும் பெரு முற்றமும் பொட்டலும் இதை ஆடிடமாம். இது ஏனை வகைகட்கும் ஒக்கும். ஆடுமுறை: உடன்பாட்டின்படியோ திருவுளச் சீட்டின்படியே யார் முந்தி யாடுவதென்று துணிந்து கொண்டு இருவருள் ஒருவர் ஆடத் தொடங்குவர். திருவுளச்சீட்டுத் தீர்ப்பு காசு சுண்டி அல்லது வட்டெறிந்து அறியப்பெறும். ஆடுபவர், அரங்கிற்கு முன் நின்று, இடவரிசை முதற்கட்டத்தில் தம் வட்டையெறிந்து, நொண்டியடித்து ஒரேயெட்டில் அவ்வட்டை மிதித்து, அதைக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் நொண்டியடித்து ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும். எறியப்பட்ட வட்டு கட்டத்திற்கப்பால் விழினும் கட்டத்திற்குள் விழாது கோட்டின்மேல் விழினும், நொண்டியடித்துக் கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரேயெட்டில் வட்டை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும் தூக்கிய காலை ஆடும் போது கீழே ஊன்றினும், காலால் வெளியே தள்ளப்பட்ட வட்டு முதற்கட்டத்தினின்று ஒரே யெட்டில் மிதிக்க இயலாதவாறு தொலைவிற் சென்றுவிடினும், ஆடுபவர் தவறியவராவர். அதன் பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும் ஆடவேண்டும். இங்ஙனம் மாறி மாறிக் கடைபோக ஆடுவர். முதற்கட்ட ஆட்டுத் தவறாது முடியின், அடுத்த இரு கட்டங்களிலும், பின்பு சமுத்திரத்திலும், அதன்பின் வலப்புற முக்கட்டங்களிலும், முறையே முன்போல் ஆட வேண்டும். 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் கட்டங்களில் ஆடும்போது, கட்டந் தொறும் மிதித்து நொண்டியடிப்பதும், ஒரு கட்டம் இடையிட்டு நொண்டியடிப்பதுமாக, இருவேறு முறையுண்டு. இவற்றுள் பின்னதே பெரும்பான்மை. வட்டைக் காலால் தள்ளுவதிலும், மிதிக்கக் கூடிய கட்டங்கட்டமாய்த் தள்ளுவதும், ஒரேயடியாய் வெளியே தள்ளுவதும், என இருமுறையுண்டு. என்றும் இடவரிசைக் கட்டங்களின் வழியாகவே அரங்கிற்குட் புகவேண்டியிருத்தலின், இடவரிசைக் கட்டங்களும் சமுத்திரமும் முறையே கீழிருந்து மேலாகவும், வலவரிசைக் கட்டங்கள் முறையே மேலிருந்து கீழாகவும், ஆடப்பெறும் என்பதை அறிதல் வேண்டும். இருவரிசைக் கட்டங்களும் ஆடப்பட்டபின், அரங்கின் முன் நின்று, ஆயின் அரங்குப் பக்கம் புறங்காட்டித் தலைக்குமேலாக, சமுத்திரத்தில் விழுமாறு வட்டையெறிந்து, முன்போல் நொண்டி யடித்துச் சென்று மிதித்துக் காலால் முன்புறமாக வெளியே தள்ளி, மீண்டும் மிதித்தல் வேண்டும். இங்ஙனம் இடையில் ஒன்றும், இறுதியில் ஒன்றுமாக, இருதடவை சமுத்திரத்தில் வட்டெறிந்து ஆடப்படும். முதல் தடவை எதிர்நோக்கியும், இரண்டாம் தடவை புறங்காட்டியும், வட்டெறிவதே வேறுபாடாம். யாரேனும் ஒருவர் இரண்டாந்தடவை சமுத்திரத்தில் தவறாது ஆடியபின், ஆட்டை முடியும், வெற்றி பெற்றவர், அரங்கிற்கு வெளியே முன்புற மூலையொன்றை யடுத்து, குதிங்காலை நடுவாக வூன்றிப் பெருவிரல் அல்லது பாதத்தால் ஒரு வட்டம் வரைவர். அதற்கு உப்பு என்று பெயர். அதை வரைதல் உப்பு வைத்தல் எனப்படும். ஒவ்வொரு வெற்றிக்கும் ஒவ்வோர் உப்பு முன்னேர் வரிசையாக வைக்கப்பெறும். முந்தி வென்றவர் அரங்கின் இடப்புற மூலையடுத்தும். பிந்தி வென்றவர் அதன் வலப்புற மூலையடுத்தும் உப்புவைத்தல் மரபு. அரங்கிற்கு முன்னால் தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மதிக்க முடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தோனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ்வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும். ஆட்டுத் தோற்றம் : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம். ஆட்டின் பயன்: ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் ஒரு பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல், பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம். (2) சோழ கொங்கு நாட்டுமுறை 1. ஒற்றைச் சில்லி ஆட்டின் பெயர் : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் விளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் சில்லி என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்டை அரங்கு கீறி ஆடப்படும் சில்லி ஒற்றைச் சில்லி எனப்படும். சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும். ஆடுவார் தொகை: இருவர் இதை ஆடுவர். ஆடுகருவி: நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு சில்லி (சில்லாக்கு) எனப்படும் வட்டும், இதற்குரிய கருவிகளாம். அரங்கின் மேற்பகுதியான அரைவட்டத் திற்குச் சோழ நாட்டில் மலை என்றும் கொங்கு நாட்டில் கரகம் என்றும் பெயர். சேலம் வட்டாரத்திற் கரகங் கீறாமலும் ஆடப் பெறும். ஆடுமுறை: முதலாவது முதற் கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டங்களை ஒவ்வோர் எட்டில் மிதித்துச் சென்று கரகத்தில் அல்லது கடைசிக் கட்டத்திற்கு வெளியே காலூன்றி, மீண்டும் முன்போல் நொண்டியடித்துக் கீழ் வந்து சில்லியை மிதித்து வெளியே தள்ளி, அதை ஓர் எட்டில் மிதித்தல் வேண்டும். இங்ஙனம் பிற கட்டங்களிலும், தொடர்ந்து சில்லியெறிந்து ஆடல் வேண்டும். மேற் கட்டங்களில் எறிந்த சில்லியை ஒவ்வொரு கட்டமாய்க் கீழே தள்ளிக் கொண்டு வந்து, அடிக் கட்டத்திலிருந்து வெளியே தள்ளி ஒரே யெட்டில் மிதித்தல் வேண்டும். கட்டங்களினூடு செல்லும்போதும் மீளும் போதும், நொண்டி யடிக்க வேண்டியபோதெல்லாம், நொண்டியடித்தே சென்று மீளவேண்டும். எறியப்பட்ட சில்லி கட்டத்திற்கப்பால் வீழினும், கட்டத்திற்குள் வீழாது கோட்டின்மேல் வீழினும் நொண்டியடித்துக் கட்டத்திற் குள்ளும் வெளியும் ஒரே யெட்டில் சில்லியை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும், நொண்டியடிக்கும்போது தூக்கிய காலைக் கட்டத்திற்குள் ஊன்றினும், காலால் வெளியே தள்ளப் பட்ட சில்லி முதற் கட்டத்தினின்று ஒரே யெட்டில் மிதிக்க முடியாதவாறு நெடுந்தொலைவிற்குச் செல்லினும் ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும் ஆடல் வேண்டும். இங்ஙனம், ஆட்டை முடியும்வரை இருவரும் மாறிமாறி யாடுவர். நாலு கட்டத்திலும் சில்லியெறிந்தாடியபின், அகங்கையில் ஒரு முறையும் புறங்கையில் ஒருமுறையும் குத்துக்கைமேல் ஒரு முறையும் சில்லியை வைத்துக் கொண்டு, கரகம்வரை நொண்டி யடித்துச் சென்று மீளவேண்டும். கரகத்தில் காலூன்றிக் கொள்ளலாம். அதன்பின், தலைமேல் ஒருமுறையும் வலப்பாதத்தின் மேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வோர் எட்டில் மிதித்துக் கரகம் வரை நடந்து சென்று நடந்து மீளவேண்டும். பின்பு, அரங்கிற்கு முன் நின்று, கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று அதை மிதித்தல் வேண்டும். பின்பு அங்கு நின்று அரங்கிற்கு முன்பாகச் சில்லியெறிந்து, அங்கிருந்து நொண்டியடித்து வந்து அதை மிதித்தல் வேண்டும். பின்னர், மீண்டும் ஒருமுறை கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, கண்ணை மூடிக் கொண்டாவது மேனோக்கிக் கொண்டாவது ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் ஒவ்வோர் எட்டுவைத்து நடந்துசென்று, சில்லியை மிதித்தல் வேண்டும். ஒவ்வோர் எட்டுவைக்கும் போதும் அமரேசா என்று சொல்லவேண்டும். கால் கோட்டில் படாது எட்டு சரியா யிருப்பின், எதிரியார் உடன் உடன் ரேசு (அமரேசு) என்று வழி மொழிவர்; சரியாயில்லாவிடின் இல்லை என்பர். அதன்பின் எதிரியார் ஆடல் வேண்டும். அமரேசாப் பகுதி தவறாது முடியின்; எதிரி யாரை யானையா, பூனையா? என்று வினவி, யானை என்று சொல்லின் நிமிர்ந்து நின்று தலைக்கு மேலாகவும், பூனை என்று சொல்லின் குனிந்து இருகாற் கவட்டூடும் சில்லியை ஒரு கட்டத்திற்குள் எறிய வேண்டும். அது எக்கட்டத்திற்குள் விழுகிறதோ அக்கட்டத்தில், மூலைக்குறுக்குக் கோடுகள் கீறல்வேண்டும். அது பழம் எனப் படும். பழம் போட்ட கட்டத்திற்கு எதிரியார் கால் வைத்தல் கூடாது; என்றும் அதைத் தாண்டியே செல்ல வேண்டும். ஆயின், எதிரியாரின் வசதிக்காக, அக் கட்டத்திற்கு வெளியே வலப் புறத்தில் அல்லது இடப்புறத்தில், கட்டத்தை யொட்டி ஓர் அரை வட்டம் அமைத்துக் கொடுக்கப்படும். அதற்கு `யானைக்கால் என்று பெயர். இங்ஙனம் ஒவ்வோர் ஆடகரும், தத்தம் பழக் கட்டத்தின் பக்கமாக எதிரியார்க்கு யானைக் கால் அமைத்துக் கொடுப்பர். ஒருமுறை பழம் போட்டவர் மறுமுறை முந்தியாடுவர். மறுமுறை பழத்திற்குச் சில்லியெறியும்போது, அது பழக் கட்டத்தில் விழுந்து விடின் தவறாம். ஒருவரேயோ இருவருமோ எல்லாக் கட்டத்திலும் பழம் போட்டபின், அரங்கு கலைக்கப்பட்டு மீண்டும் கீறப்படும். II. இரட்டைச் சில்லி முதலாம் வகை ஆட்டின் பெயர் : இரட்டைக் கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி இரட்டைச் சில்லியாம். ஆடுவார் தொகை: இருவர் இதை ஆடுவர். ஆடு கருவி: வரிசைக்கு நான்காக இருவரிசைக்கு எட்டுச் சதுரக் கட்டங்களும் அவற்றோடு மலையுங்கொண்ட, ஓர் அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும்; இதை ஆடுகருவியாம். ஆடுமுறை: இது பெரும்பாலும் பாண்டி நாட்டு முறைப்படி ஆடப்பெறும். இரண்டாம் வகை ஆடு முறை: இது ஏறத்தாழ ஒற்றைச் சில்லி போன்றே ஆடப் பெறும். ஒற்றைச் சில்லியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில்லி யெறிந்தபின், கரகம் அல்லது மேற்புற வெளிவரை நொண்டி யத்துச் சென்று மீள வேண்டும். இதிலோ, வலப்புறக் கட்டங் களின் வழியாகச் சென்று இடப்புறக் கட்டங்களிலுள்ள சில்லியை மிதித்துத் தள்ள வேண்டும். வலப்புற உச்சிக் கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம். இதைக் குறித்தற்கு அதில் மூலைக் குறுக்குக்கோடுகள் கீறப்பட்டிருக்கும். நடந்து செல்ல வேண்டிய பகுதிகளில், ஒரே சமயத்தில் இரு காலையும் இருபுறக் கட்டத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் வகை ஆட்டின் பெயர்: இது சரிகைப் பாண்டி, எனப்படும். ஆடு முறை : இதுவும் ஒற்றைச் சில்லி போன்றதே. ஆயின் இருவரிசைக் கட்டங்களிலும் ஆடப்பெறும். இடவரிசையில் சில்லி யெறியும்போது வலவரிசை வழியாகவும், வலவரிசையிற் சில்லி யெறியும்போது இடவரிசை வழியாகவும் செல்ல வேண்டும். இடவரிசை யுச்சிக்கட்டத்தில் காலூன்றிக் கொள்ளலாம். நடந்து செல்ல வேண்டிய பகுதிகள் மேற்கூறிய இரண்டாம் வகையைப் போல் ஆடப்பெறும். III. வானூர்திச் சில்லி ஆட்டின் பெயர்: வானூர்திபோல் அரங்கு கீறி ஆடப்படும் சில்லி வானூர்திச் சில்லியாம். இவை ஏரோப்பிளேன் (Aeroplane) சில்லி என ஆங்கிலச் சொற்கொண்டே அழைப்பர். மேனாட்டு வானூர்தி தமிழ்நாட்டிற்கு வருமுன்னரே இந்த ஆட்டு ஆடப்பட்டிருப்பின், அன்று இதற்கு வேறொரு தமிழ்ப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். ஆடுவார் தொகை: இருவர் இதை ஆடுவர். ஆடுகருவி: மேலே காட்டப்பட்டபடி ஓர் அரங்கும், ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாகும். ஆடுமுறை: முதலாவது, முதற்கட்டத்தில் சில்லியெறிந்து நொண்டி யடித்து அக்கட்டத்தைத் தாண்டி, மேற்கட்டங்களுள் ஒற்றைக் கட்டங்களிலெல்லாம் ஒவ்வோர் எட்டுவைத்து நொண்டி யடித்தும், இரட்டைக் கட்டங்களில் கட்டத்திற் கொன்றாக ஒரே சமயத்தில் இருகாலும் ஊன்றியும், மேலிரட்டைக் கட்டம் வரை சென்று, பின்பு அங்கிருந்து இங்ஙனமே மீண்டுவந்து முதற் கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாக வெளியே தள்ளி, அதை ஒரே எட்டில் நொண்டியடித்து மிதித்தல் வேண்டும். ஆனால், கட்டத்தினின்று குதித்து மேலிரட்டைக் கட்டத்திற்குக் காலூன்றும்போது, மலைநோக்கி ஊன்றாமல், அதற்குப் புறங்காட்டிக் குதித்து முன்புறம் நோக்கி ஊன்ற வேண்டும். இங்ஙனம் எட்டாங் கட்டம்வரை ஆடல் வேண்டும். சில்லி யிருக்கிற கட்டம் எதுவாயினும், மேலே செல்லும் போது அதை மிதித்தல் கூடாது; கீழே வரும்போதுதான் அதை மிதித்தல் வேண்டும். ஆகவே கீழிரட்டையிலாயினும் மேலிரட்டையிலா யினும் சில்லி இருக்கும்போது, அதிற் பிறசமயம்போல் இரு காலும் ஊன்ற முடியாது. சில்லியுள்ள கட்டத்தை விட்டு விட்டுச் சில்லியில்லாத கட்டத்தைத் தான் ஒற்றைக் கட்டம்போல் நொண்டியடித்து மிதித்துச் சென்று மீள வேண்டும். மேற்செல்லும் போதும் கீழ்வரும்போதும், கட்டங்களின் எண்முறைப்படியே சென்று வரவேண்டும். கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாகத் தள்ளும்போது, கட்டங்கட்டமாகவும் தள்ளலாம்; ஒரேயடியாகவுந் தள்ளலாம். எட்டுக் கட்டங்களும் இங்ஙனம் ஆடப்பட்டபின், ஒற்றைச் சில்லியிற்போல், வெள்ளைக்கையும் கருப்புக்கையும் குத்துக்கை யும் தலையும் காலும், முறையே ஆடப்பெறும். தலையுங்காலும் ஆடும்போது, இரட்டைக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இரு காலும் வைத்தல் வேண்டும். அதன்பின், மலைக்குச் சில்லியெறிந்து நொண்டியடித்துச் சென்று மிதித்து, பின்பு அங்கிருந்து முன்புறமாகத் தள்ளி அவ்வாறே வந்து மிதித்தல் வேண்டும். இப்பகுதி நொண்டி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இதிலும், இரட்டைக் கட்டத்தில் இருகாலும் ஊன்ற வேண்டும். பின்பு, மலைக்கு மீண்டும் சில்லி யெறிந்து அமரேசர் ஆடிச் சென்று மிதித்தல் வேண்டும். இரட்டைக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இருகால் வைத்தல் வேண்டும். அமரேசா முடிந்தபின், மலையில் நின்று கொண்டு எதிரியாரை யானையா, பூனையா? என்று கேட்டு, பதிலுக்கேற்பச் சில்லி யெறிந்து, நொண்டியடித்துவந்து அதை மிதித்து, சில்லி விழுந்த கட்டத்தில் ஒரு காலால் நின்று கொண்டு, பழம் போட்டு விட்டுச் செல்ல வேண்டுமா? வந்து பழம் போட வேண்டுமா? என்று எதிரியாரை வினவி, முன்னது குறிப்பின் போட்டு விட்டு நொண்டியடித்து முன்வரவேண்டும்; பின்னது குறிப்பின் நொண்டியடித்து அரங்கிற்கு முன்புறமாக வந்தபின் சென்று போட வேண்டும்; போட்டபின் ஆட்டை முடியும். நொண்டியிலும் அமரேசாவிலும் தவிர, பிற பகுதிகளில் மலைக்குச் செல்வதில்லை. ஆட்டத்தில் தவறும் வகையும், அதன்பின் நிகழும் செயலும், பிற சில்லிகட்குக் கூறியவையே. ஓர் ஆட்டையில் வென்றவர் அடுத்த ஆட்டையில் முந்தியாடுவர். IV வட்டச் சில்லி ஆட்டின் பெயர்: வட்டமான அரங்கு கீறி ஆடும் சில்லி வட்டச் சில்லியாம். ஆடு கருவி: சக்கரவடிமான ஓர் அரங்கும் ஆளுக்கொரு சில்லியும் இதை ஆடு கருவியாம். சக்கரத்தின் குறட்டில் ஒரு குறிப்பிட்ட வட்டத் தொகையும், அதன் ஆரைகட்கிடையில் முறையே அத்தொகைக்கு வரிசை யொழுங்காகக் கீழ்ப்பட்ட சிறுதொகைகளும், குறிக்கப்படும். ஆடு முறை : முதலாவது கீழ்த்தொகையுள்ள கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அதை ஒரேயெட்டில் மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் ஒரேயெட்டில் அதை மிதித்தல் வேண்டும், இங்ஙனம் தொடர்ந்து மேன்மேலுயர்ந்த தொகை யுள்ள சுற்றுக் கட்டங்களிலெல்லாம் ஆடியபின், நடுக்கட்டத்தில் ஆடல் வேண்டும். நடுக்கட்டத்துள் எறிந்த சில்லியை, அது அங்கிருக்கும்போதும் அதை வெளியே தள்ளிய பின்பும், நேரே ஒரேயெட்டில் மிதித்தல் வேண்டுமேயன்றிச் சுற்றுக் கட்டத்தின் வழியாய்ச் சென்று மிதித்தல் கூடாது. ஒருவர் தவறியபின் அடுத்தவர் ஆடல் வேண்டும். குறித்த வட்டத் தொகையை முந்தி யெடுத்தவர் (அதாவது எல்லாக் கட்டங்களையும் தவறாது முந்தியாடியவர்), கெலித்தவராவர், கெலிப்பதற்குப் பழம் என்று பெயர். ஒவ்வொரு பழத்திற்கும் காலால் ஒவ்வோர் உப்பு வைக்கப்படும், உப்புக்கள், வட்டையினின்று தொடங்கி ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு வரிசையாக இருக்கும். வெளியே தள்ளப்பட்ட சில்லி ஒரேயெட்டில் மிதிக்க முடியாதவாறு தொலைவிலிருப்பின், ஆடுபவர் தாம் வைத்த உப்பு வரிசைமேல் நடந்து சென்று அதை மிதிக்கலாம். V. காலிப்பட்டச் சில்லி ஆட்டின் பெயர் : காலிப்பட்டம் போல் அரங்கு கீறி ஆடும் சில்லி காலிப்பட்டச் சில்லியாம். காற்றிற் பறக்கவிடும். பட்டத்தைக் காலிப்பட்டம் என்பர் வடார்க்காட்டு மாவட்டத்தார். ஆடு கருவி: மூலைக்குறுக்குக் கோடிட்ட ஒரு சதுரமும், அதை யொட்டி படுக்கையான ஒரு சிறு நீள் சதுரமும் கொண்ட ஒரு பெருநீள்சதுர அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும்; இதை ஆடு கருவியாம். மூலைக்குறுக்குக் கோடிட்ட சதுரம் நான்கு கட்டமாக அமையும் மேலுள்ள நீளசதுரம் ஐந்தாங் கட்டமாகும். ஆடுமுறை : முதலாவது முதற்கட்டத்திற் சில்லியெறிந்து, அதை ஒரேயெட்டில் நொண்டியடித்து மிதித்து வெளியே தள்ளி, மீண்டும் அதை முன்போல் மிதித்தல் வேண்டும். பின்பு மேற் கட்டங்களிலும் சில்லி யெறிந்து, எண் முறைப்படி கட்டங் கட்டமாய் நொண்டியடித்துச் சென்று மிதித்து, நேரடியாகவோ கட்டங்கட்டமாகவோ வெளியே தள்ளி, முன்போன்றே நொண்டி யடித்து வந்து மிதித்தல் வேண்டும். மலை வேண்டுவாருள் சிலர், ஐந்தாங் கட்டத்தை மலையாகக் கொள்வர். அங்ஙனங் கொள்ளாதார், அதன் மேற்புற வெளியை அங்ஙனம் பயன்படுத்துவர். மலைக்குச் சில்லி யெறியும் போது எதிர் நோக்கியும், மலையிலிருந்து சில்லி யெறியும்போது புறங் காட்டித் தலைக்கு மேலாகவும், எறிவது வழக்கம். பழமானவர் உப்பு வைப்பர். இங்ஙனம் எளியமுறையில் இதை ஆடுவது வடார்க்காட்டு வழக்கமாம். சேலம் வட்டாரத்தில், மேற்கூறிய பகுதிகளோடு வெள்ளைக்கை கருப்புக்கை குத்துக்கை தலை கால் அமரேசா என்பவற்றையும், சேர்த்துக் கொள்வர். இனி, உத்தியில் நின்று சில்லியெறிந்து, 4-ஆம் அல்லது 5ஆம் கட்டத்தில் விழின் உடனே பழமாவதும், பிறகட்டங்களில் விழின் நொண்டியடித்துச் சென்று மிதித்து, உத்திவரை நொண்டி யடித்துத் தள்ளிக் கொண்டு போய்ப் பழமாவதும்; சேலம் வட்டாரத்தில் மற்றொரு வகையாய் இதை ஆடும் முறையாம். VI. கைச்சில்லி தனியாயிருக்கும் சிறுவன் அல்லது சிறுமி, கீழே உட்கார்ந்து ஒற்றைச் சில்லியரங்கு சிறியதாய் வரைந்து, ஆட்காட்டி விரலைக் கால்போற் பாவித்துக் கட்டங் கட்டமாய் வைத்துச் சென்று, ஆடிக் கொள்ளும் ஆட்டு கைச்சில்லியாம். இது சேலம் வட்டாரத்தில் ஆடப் பெறும். பாணர் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அல்லது திராவிடக் குலங்களுள் பாணர் குலமும் ஒன்று. இது மிகப் பழைமையான தென்பது தொல்காப்பியத்தாலறியப்படும். பாணர் பாணைத் தொழிலாகக் கொண்டவர். பாண் என்பது பாட்டு, பண், பாண், பாட்டு, பா என்பவை ஓரினச் சொற்கள். சீவக சிந்தாமணியில் பாணியாழ் (1500). பாண்வலை(2040). பாணுவண்டு (2447) என்னும் தொடர் மொழிகளில் பாண் என்னும் சொல் பாட்டு என்னும் பொருளில் வந்துள்ளது. சிலப்பதிகாரத்தும் (ப.349) பாண்-பாட்டு என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். பாணருளும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராம் என்று (தொல். புறம். 36. உரை) நச்சினார்க்கினியர் கூறுவர். இசைக் கருவிகள்: தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி. கஞ்சக்கருவி. மிடற்றுக் கருவி என ஐவகையாய்க் கூறப்படும். இவற்றுள். மிடறு(தொண்டை) என்பது இயல்பான வாய்ப்பாட்டாதலின் இதனை நீக்கி ஏனைய நான்கையுமே கருவியெனக் கூறுவர் சிலர். இந் நான்கனுள் கஞ்சம் (வெண்கலம்) தாளக்கருவி. இது முதலிற் கருவிபற்றி வெண்கலத்தாற் செய்யப்பட்டதையும். பின்பு இனவிலக்கணத் தாற் பிறவற்றினால் செய்யப்பட்டவற்றையும் குறிக்கும். தாளக் கருவியின்றியும் தாளம் காக்கப்படுமாதலானும். ஒரு தாளக் கருவியும் தனித்து இன்பம் தாராமையானும் அது முக்கியமான தன்று. மேற்கூறிய பிரிவாருள் இசைப்பாணர் வாய்ப்பாடகரும், யாழ்ப்பாணர் நரப்புக்கருவியினரும், மண்டைப் பாணர் தோற் கருவியினருமாவர். துளைக்கருவி இயக்கும் குழற்பாணர் மண்டைப் பாணருள் அடங்குவர். மண்டை-பறை. குழலொடு கூடிப் பறையடிப்பதே பெருவழக்கு. இனி, நச்சினார்க்கினியர் பாணரை மூவகையர் என்னாது பலர் என்றதால், அதனுட் குழற்பாணரை அடக்கினும் அமையும். சிலப்பதிகாரத்தில். குழலினும் யாழினுங் குரல்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும் (இந்திரவிழா 35-8) என்று இளங்கோவடிகளும். பெரும் பாண்- குழலர் முதலோர் (ப.139) என அரும்பதவுரை காரரும் கூறியிருப்பதால் குழற்பாணருமிருந்தனரென அறிக. குழலைப் பறையின்றித் தனித்து வாசிப்பதின்மையின், குழற் பாணர் பிரித்துக் கூறப்பட்டிலர். ஆகவே, இசைத் தொழில் முழுமையுங் கொண்டு இக்காலத்து மேளக்காரர்போல இருந்தவர் பாணர் என்பது பெறப்படும். பாண்சேரிப் பற்கிளக்குமாறு என்னும் பண்டைப் பழமொழி யும் இதனை வற்புறுத்தும். திருவிளையாடற் புராணத்திற் பாண்டியன் இசைப்புலவராகக் கூறப்படும் பாணபத்திரரும். திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்கட்கு யாழ் வாசித்த திருநீண்ட யாழ்ப்பாணரும். பன்னீராழ்வாருள் ஒருவரும் யாழறிஞருமான திருப்பாணாழ் வாரும் பாணர் குலத்தவரே, பாணருள், ஆடவன் (புருஷன்) பாணன் என்றும், பெண்டு பாடினி, பாணிச்சி, பாட்டி, விறலி என்றுங் கூறப்படுவர். வேளாளர் குலம் வேளாண் என்றும், சமணர் நெறி சமண் என்றும் கூறப்படுதல் போல, பாணர் குலமும் பாண் என்று கூறப்படுவதுண்டு. புறப்பொருள் வெண்பா மாலையில். கிளை யாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும் (சூ.144) அங்கட் கிணையன் துடியன் விறலிபாண் (சூ. 16) பாண்பாட்டு (சூ.137) பாண்கட னிறுக்கும் (புறம். 203) என வந்திருத்தல் காண்க. பாணருக்குச் சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இசைகாரர், பண்ணவர், பண்டவர்(பண்டர்), ஓவர், அம்பணவர் முதலிய பிற பெயர்களுமுண்டு, இவற்றுள் பண்டர், ஓவர் என்பன பாணருட் கீழ் மக்களைக் குறிக்குமென்று பிங்கல நிகண்டு கூறும், மதங்கன், அம்பணவன் என்னும் ஆண்பாற் பெயர்கட்கு மதங்கி, அம்பணத்தி என்பன முறையே பெண்பாற் பெயர்களாகும், அம்பணம் யாழ். அம்பணவன் யாழ் வாசிப்போன். அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும் என்று சிலப்பதிகாரத்தும், பெரும்பாணிருக்கையும் என்று மதுரைக் காஞ்சியினும் (942). அருட்பெரும் பாணனாரை என்று திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தும்(3). சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை எனப்பத்துப் பாட்டினும் வந்திருப்பது கொண்டு. சிறுபாணர் பெரும்பாணர் எனப்பாணர் இருபெரும் பிரிவினரோ என்று ஐயுறவும் இடமுண்டு. பத்துப்பாட்டு முகவுரையில், “nkiy¥gh£L« (சிறு பாணாற்றுப் படையும்) இதுவும் (பெரும்பாணாற்றுப்படையும்) பாணராற்றுப்படையாயிருப்பினும், அடிவரையறையிற் சிறிதும் பெரிதுமாயிருத்தல் பற்றி அது சிறுபாணாற்றுப்படை யெனவும் இது பெரும்பாணாற்றுப்படை யெனவும் பெயர் பெற்றன. என டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், எழுதியிருப்பது தெளிவானதேயாயினும், பெரும்பாண், பெரும்பாணர் என்று நூல்களில் வழங்குவதானும், சிறுபாணாற்றுப் படையில், பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் இன்சூரற் சீறியாழ் இடவயின் தழீஇ எனச் சுருக்கமாகவும் சீறியாழ் (சிறு + யாழ்) என்னும் பெயருடனும், பெரும்பாணாற்றுப்படையில் பச்சை, துளை, போர்வை, வாய், கவைக்கடை, திவவு, மருப்பு, நரம்பு முதலிய உறுப்புகளையுடையதாக விரிவாகப் பதினாறடிகளினும் யாழ் கூறப்படுதலானும், சிறுபாண் பெரும்பாண் என்பவை கருவி பற்றிய குலப்பிரிவோ என்னும் ஐயம் முற்றும் அகன்றபாடில்லை. சென்னைப் பல்கலைக்கழக அகராதியினும் பெரும்பாணர் பாணருள் ஒரு பிரிவினர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. பாணர் வாய்ப்பாட்டும் கருவியுமாகிய இருவகை இசையினும் வல்லவரா யிருந்தனர். சிலப்பதிகாரத்திலுள்ள பாடற் பாணர் (அந்தி. 186). குரல்வாய்ப் பாணர் (200) என்னுந் தொடர்கள் வாய்ப் பாடகரைக் குறிக்கும். கருவிகளில் தோற்கருவிகளெல்லாம் பறை என்னும் பொதுப் பெயராற் குறிக்கப்படும். தொல்காப்பியத்தில், தெய்வம் உணாவே மாமரம் புட் பறை (தொல்.) என்னும் கருப்பொருட் சூத்திரத்துள்ளும். அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள். 1115) என்னும் திருக்குறளினும் பறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயராயுள்ளமை காண்க. மணப்பறை, பிணப்பறை, பறைசாற்றினான் முதலிய வழக்குகளில் பறை என்பது பல்வேறு தோற்கருவிகளைக் குறித்தது. பறைகளை அடிப்பவர் பறையர் எனப்பட்டனர். இப் பெயர் இக்காலத்துப் பிணப்பறை யறை பவரை மட்டுங் குறிக்கின்றது. பண்டைக் காலத்தில் மண்டை என்னும் பெயர் பறைக்கு வழங்கிவந்த மறுபெயராகும். பறைகளடிக்கும் பாணர் மண்டைப் பாணர் எனப்பட்டனர். மண்டையோடு போன்று மண், மரம், பித்தளை முதலியவற்றை செய்து தோற்கட்டிய பறைகளை மண்டை யென்றது. ஒருவகை உவமையாகு பெயர். மண்டை யென்பது இக்காலத்தில் மொந்தை யென்று திரிந்து அவ் வடிவா யுள்ள மட்கலயத்தைக் குறிக்கின்றது. தவலை என்பதன் மறுவடி வாகிய தபேலா என்னும் இந்துத்தானிச் சொல் ஒரு நீர்ப்பாத்திரத் தையும் ஒரு பறையையும் குறித்தல் காண்க. கோவில் மேளத்தைக் குறிக்கும் தவல்(தவுல்) என்னும் பெயரும் இதன் திரிபுபோலும். பல்வகைப் பறைகளையும் அடித்துக் கொண்டு ஒரே குலமாயிருந்த மண்டைப்பாணர் பிற்காலத்துத் தொழில். கருவி, ஒழுக்கம் முதலியவற்றின் வேறுபாட்டால் பல்வேறு பிரிவாய்ப் பிரிந்து போயினர். துடியன் பாணன் பறையன் கடம்பன் என் றிந்தான் கல்லது குடியுமில்லை (புறம். 335) என, மாங்குடிகிழார் தொழிற் குடிமக்களை நால்வகைப்படுத்துக் கூறி யுள்ளனர். துடி உடுக்கு. பாட்டிற்குக் கூத்து துணைத் தொழிலாதலின், பாணர் கூத்தும் ஆடிவந்தனர். வயிரியர், செயிரியர், மதங்கர் என்னும் பெயர்களும், விறலி என்னும் பெண்பாற்பெயரும் கூத்துப் பற்றியவே. கூத்தரைக் குறிக்கும் கண்ணுளர். கண்ணுளாளர் என்னும் பெயர்களும் பாணர்க்குரியன. கண்ணுள் என்பது கண்ணை உள்ளே வைத்தாற் போல் நுணுகி நோக்கும் நுண்வினைக்கூத்து. சிலப்பதிகாரத்தில் (ப.169) கண்ணுளாளர் - மதங்கர், ஆவார் பெரும்பாணர் என்று அடியார்க்குநல்லார் கூறியிருப்பதை நோக்குக. விறலி என்பவள் விறல்பட ஆடுபவள். விறலாவது மனத்தின் இயல்பு புறத்தே தோன்றச் செய்யும் திறம். இது வடமொழியிற் சத்துவம் எனப் படும். கணவன் பாணனும் மனைவி விறலியுமாயிருந்து இருவரும் இசைந்து அரசரிடம் சென்று பாடியாடுவது பெரு வழக்கு. பாணர்க்குச் சிறுபான்மை தையல் தொழிலுமுண்டு. சிலப்பதி காரத்தில் (இந்திர விழா. 32) துன்னகாரர் என்னும் பெயர்க்குப் பாணர் என்று பொருள் கூறியுள்ளார் அரும்பதவுரைகாரர். துன்னம்-தையல். பாணர்க்குச் சொல்லுவதும்......ij..... என்றுகாளமேகரு«பாடியுள்ளார். பாணர்க்குரியது பெரும்பாலும்இசை¤தொழிலாதலின்,பšவகைப்பறைகட்Fம்(அல்yதுமேளங்கட்கு«)தேhற்கட்டுjல்அtர்வினைnயஎன்gதுசொல்லாnமவிளங்கு«. இசைத் தொழில் பாணரெல்லார்க்கும் எக்காலத்தும் இசை யாமையின், அவருள் ஒரு சாரார் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர். பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல் கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண்கொளீஇக் கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப் பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை (283-7) என்று பெரும்பாணாற்றுப்படையிலும். மீன்சீவும் பாண்சேரி என்று மதுரைக்காஞ்சியிலும் கூறியிருத்தல் காண்க. பணரென்பார் குலமுறைப்படி (இன்று ஆதிதிராவிடர் என்று அழைக்கப் படுவாருள் ஒரு சராராகிய) பறையரேயாவர். இஃது அவருடைய பறையடிக்குந் தொழிலாலும். தலைவி தான் தன் தலைவன் மேற் சினந்திருக்கும்போது அது தணிக்கவந்த யாழ்ப் பாணனை நோக்கிப் புலை ஆத்தின்னி போந்ததுவே (திருக்கோ. 386) என்று வெகுண்டுரைப்பதில் பாணர் ஆவின் (பசுவின்) இறைச்சியை உண்பதாகக் குறித்திருத்தலாலும். அதற்குப் பாணன் புலந்துரைப்பதில் (387). வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே என்று தன்னை மிகவும் தாழ்த்திருப்பதாலும் அறியப்படும். காலஞ்சென்ற எம்.சீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது ஆராய்ச்சி நூலில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிப்பிட்டுள்ளனர். பாணர் இங்ஙனம் தாழ்ந்த வகுப்பினராயிருந்தும், முத்தமிழுள் இசை, நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பவர் அவராத லாலும், இசையில் (சங்கீதத்தில்) தமிழர்க்கும் தமிழரசர்க் கும் இருந்த பேரார்வத்தினாலும், ஆரிய வொழுக்கம் ஆழ வேரூன் றாத பண்டைக்காலத்தில் குலப் பிரிவினைப் பிற் காலத்திற்போல் அவ்வளவு முறுகாமையானும் அவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பும் அரசர் அவைக்களங்களிலும் அரசியர் அந்தப்புரங்களி லும் தடையில்லா நுழைவும் இருந்தன. அறிவாற் சிறப்பேயன்றிப் பிறப்பாற் சிறப்பு அக்காலத்தில் இருந்திலது. அரசரைப் பாணர் ஓக்கல் என்று திருக்கோவை (400) கூறும்; ஓக்கல் இனம். குரல்வாய்ப் பாணரொடு திரிதருமரபின் கோவலன் போல பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து என்று. பெருஞ்செல்வனும் பெருங்குடி வணிகனுமான கோவலன் பாணரொடு கூடித்திரிந்தமை சிலப்பதிகாரங் கூறும். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பாடிய புறப்பாட்டில், பாண்சுற்றம் சூழ்வதாக நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் Xy¡f«”(Durbar) (29. உரை) என்று கூறியுள்ளார். பாணர் அரசரிடம் சென்று பாடி யாழ் வாசித்து அவர்க்கு இன்ப மூட்டுவதும், அவர் மீது அரசியர்க்குள்ள ஊடலை (கோபத்தை)த் தணிப்பதும், அரசருடன் போர்க்களத்திற்குச் சென்று வெற்றி நேர்ந்தவிடத்து வெற்றிக் கூத்தாடுவதும் இறந்துபட்ட அரசர்க்கும் வீரர்க்கும் இரங்கிப் பாடுவதும், அவரை நினைவு கூர்தற்கும் வழிபடுதற்கும் நாட்டிய நடுகற்களை வணங்கிச் செல்வதும் வழக்கம். அரசரும் விடிந்தெழுந்தபின் பாணரை வருவித்து, அவர்க்குச் சிறந்த பரிசிலளிப்பதும். அவரை இனத்தாருடன் உண்பிப்பதும் போர்க்களத்து வருவாய் களை உரிமையாக்குவதும் வழக்கம். வரையா வாயிற் செறா அ திருந்து பாணர் வருக பாட்டியர் வருக .............................. வயிரியர் வருகென இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம் கொடிஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி (அ.748-52) என்று மதுரைக்காஞ்சியில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியற்காலத்துப் பாணரை வருவித்துப் பரிசளித்தமை கூறப்பட்டது. பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்பப் பொய்கைப் பூமுகை மலரப் பாணர் கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க இரவுப் புறம்பெற்ற ஏம வைகறை ................................ வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் (புறம். 398) என்று புறப்பாட்டில் சேரமான் வஞ்சன் அரண்மனையில் வைகறை (விடியல்) தோறும் பாணர் யாழ்வாசித்தல் கூறப்பட்டது. வாரணம் = கோழி. பாணன் கூத்தன் விறலி..... ................................. தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர் (செய். 182) என்று தொல்காப்பியத்தில் பாணர் அரசியரிடம் அவர்க்கு அவர்தம் கணவர் மீதுள்ள ஊடலை அல்லது புலவியைப் போக்குதல் கூறப்பட்டது. ஊடல் முதிர்ந்தது புலவி. புறப்பொருள் வெண்பாமாலையில், 144ஆம் சூத்திரத்தில், பாணர் போர்க்களத்தில் வீரருடன் தேரின் பின் நின்று ஆடுவதும், 207ஆம் சூத்திரத்தில் அவர் போர்க்களத்திற் பெற்ற பரிசிலைப் புகழ்ந்து கூறுவதும், 137ஆம் சூத்திரத்தில் அவர் போரில் இறந்த வீரர்க்கு இரங்கி விளரிப்பண் பாடுவதும், 252ஆம் சூத்திரத்தில், அவர் இறந்த வீரர்க்கு எடுத்த நடுகல்லைத் தொழுவதும் கூறப் பட்டன. அரசர் பாணர்க்குப் புலவுச் சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப்பூ, களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்ததாகப் புறநானூற்றிற் பல பாடல்களுள இவற்றுள், பொன்னரி மாலையை விறலி என்னும் பாணிச்சிக்கும் பொற்றாமரைப் பூவைப் பாணனுக்கும் சூட்டுவது வழக்கம். முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும் எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப (சிலப். ப. 121) என்பதால், மாதவி பெற்றதுபோலப் பாணரும் தம் திறமைக்கு 1008 கழஞ்சு பொன் பெறும் வழக்கமிருந்ததாகத் தெரிகின்றது. 11ஆம் புறப்பாட்டில், பாடினிக்குச் சிறந்த பொன்னணி கலத்தை யும் பாணனுக்கு வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப் பூவையும் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ அளித்த தாகக் கூறப்பட்டுள்ளது. 126ஆம் புறப்பாட்டில், மலையமான் திருமுடிக்காரி பகைவ ருடைய யானையினது நெற்றிப் பட்டத்திற் பொன்னைக் கொண்டு செய்த வாடாத பொற்றாமரைப் பூவைப் பாணரது தலைபொலியச் சூட்டியதும், 203ஆம் புறப்பாட்டில், சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி பாணர்க்குப் பகைவர் அரண்களைப் போர் செய்து அழிக்கு முன்பே கொடுத்ததும் கூறப்பட்டன. பாணர் இங்ஙனம் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனரேனும், பொதுவாக வறுமையால் வருந்தினரென்றும், வள்ளல்களைத் தேடி மலையுங் காடும் அலைந்து திந்தனரென்றும் கி.மு. 1000 ஆண்டிற்குக் குறையாத தொல்காப்பியமே கூறுகின்றது. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் (புறத்.36) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் பாணர் வறுமையும், அவருள் ஒருவர் தாம் பரிசு பெற்ற வள்ளலிடம் அது பெறாத பிறரை ஏவி ஆற்றுப்படுப்பதும் கூறப்பட்டன. சங்க நூல்களிலும் தனிப்பாடல்களிலும் பாணராற்றுப் படைக்கு உதாரணங்கள் நிரம்பவுள. இங்ஙனம் பண்டைக்காலத்தே பாணர்க்கு வறுமை தோன்றிய தற்கும். அது பின்பு முற்றிப் பிணப்பறை தவிரப் பிற வழிகளிற் பாண்டொழில் நடத்தவிடாது கெடுத்தமைக்கும் காரணம் ஆரியவர்ணாசிரமத்தால் பாணர் தாழ்த்தப்பட்டதும் ஆரியர் தமிழ் இசையைப் பயின்றதுமே. பாணர் தீண்டாதார் அல்லது தாழ்ந்தோராகவே அரசரிடத்தும் பெரு மக்களிடத்தும் அண்டமுடியாது போயிற்று. இவ்விழிவு திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற அடியார்களைக் கூட அடுத்தமை அவர்கள் சரித்திரங்களிற் காணலாம். பாணர் வாய்ப்பாட்டையும் யாழையும் ஊக்கு வாரின்றிக் கைவிட்டனர். அதனால் இச்த்தமிழ் அழிந்ததுடன் எஞ்சியுள்ள ஒருசில இசைத்தமிழ்ச் சூத்திரங்கட்கும் குறியீடு கட்கும் உண்மைப் பொருள் காண்டல் அரிதாய்விட்டது. இப்போது பாணரெனப்படுவார். மாடு தின்னாமையும் பிணப் பறை யடியாமையும் பற்றிப் பறையரினும் சற்று உயர்வாயிருப் பினும், தம் பண்டைத் தொழிலையும் பெருமையையும் இழந்தவ ராயே உள்ளனர். பண்டைக் காலத்தில் பட்டத்தியானைமேல் ஏறி அரசருடைய விளம்பரங்களைப் பறையறைந்து நகரத்தார்க்கு அறிவித்த வள்ளுவரும் பாணர் அல்லது பறையரே. சாதாரணப் பறையர் பொது மக்கட்கும், வள்ளுவர் அரசர்க்கும் பறையறைகிறவ ராயிருந்தனர். இதுவே வள்ளுவரின் ஏற்றத்திற்குக் காரணம். இன்றும் தென்னாட்டிற் சில சிற்றூர்களில் பறையர் கோயில் மேளம் என்னும் மணப்பறை பயில்வதையும் அதை மேல் வகுப்பாரில்லங்களில் இருவகை வினைகட்கும் வாசிப்பதையும் காணலாம். இசைத்தொழில் நடத்த முடியாத பாணரெல்லாம் குடைமுடைதல், மீன்பிடித்தல் முதலிய பிற தொழில்களை மேற் கொண்டுள்ளனர். ஆரியர் (பிராமணர்) முதன் முதலாய் வாய்ப்பாட்டும் நரப்புக் கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் பயில்கின்றனர். ஆயினும் நாகசரம் என்னும் துளைக்கருவியையும், தவல் போன்ற தோற்கருவிகளையும் பயில்வதில்லை. அவை தாழ்ந்தவை என்று எண்ணப்படுதலான். 11ஆம் நூற்றாண்டு வரை பாணரே தமிழ்நாட்டில் இசைத் தலைமை வகித்தமை. நம்பியாண்டார் நம்பியாலும் முதலாம் இராசராச சோழனாலும் தில்லையம் பலத்திற் கண்டெடுக்கப் பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு. திருநீல கண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் நியமிக்கப் பட்டமையால் விளங்கும். ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று ஆதியில் ஓர் விலக்கு இருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில் பிராமணர் பாட்டுப் பாடுவது. கூத்தாடுவது............ இப்படிக்கொத்த சாத்திரவிருத்தமான கர்மத் தினால் பொருளைத் தேடிக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக்கத்தினின் றும் தவறியதால் சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி, சிலப்பதி காரத்தில், வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதி (புறஞ்சேரி. 38- 9) என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது. ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னமே தமிழர்க்கு இசைத்தமிழ் இருந்தது. இசையை மொழிப் பகுதியாக்கினது தமிழிலன்றி வேறு எம்மொழியினுமில்லை. ஆரிய வேதங்களில் ஒன்றான சாமவேதம் இசையோடு கூடியதேனும், அவ்விசை பிறநாடுகளிற்போல் மந்திரத்திற்குரிய அளவு சாமானியமானதேயன்றித் தமிழிசை போல விரிவாய் ஆலாபித்துப் பாடப்படுவதன்று தென்னாட்டுத் தமிழிசையைப் பின்பற்றியே சமற்கிருதத்தில் இசைநூல்கள் பிற்காலத் தெழுதப்பட்டன. கி.பி.5ஆம் நூற்றாண்டிலேயே முதன் முதலாய் வடமொழியில் இசைநூ லெழுந்ததென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமது கருணாமிர்த சாகரத்திற் கூறியுள் ளார். ஆகவே ஆரிய வேதத்தினின்றும் இந்திய இசை எழுந்த தென்பது அறியாதார் கூற்றே. வேத வொழுக்கத்திற்கு மாறான மேனாட்டு அறுவைமுறை மருத்துவத்தை எங்ஙனம் ஆரியர் பிற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனரோ, அங்ஙனமே தமிழர் இசையையும் முற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனர். வடநூல் களிற் கூறப்படாத பல தோற்கருவிகள் தமிழ் நாட்டிலிருந்தன. பல உயிர்களின் தோலையும் சவ்வையும் ஊற வைத்துக் கிழித்துப் பல்வகைப் பறைகட்குக் கட்டுவது பாணர்க்கே ஏற்கும். இசை வல்ல ஓர் வகுப்பார் இசைக்கருவிகள் செய்பவராயு மிருத்தல் வேண்டும். இசை நூற்கு இன்றியமையாத குறியீடுக ளெல்லாம் இன்றும் தமிழிலுள்ளன. இனி இக்காலப் பாணரைப் பற்றி தர்டன் (Thurston) என்பார் தமது தென்னாட்டுக் குலமரபுகள் (Castes and Tribes of Southern India) என்னும் நூலில் தொகுத்திருப்பதைச் சுருக்கிக் கூறுவாம்: தமிழப் பாணர் மேதிரியெனவும் படுவர். இவர் திருநெல்வேலி, மதுரைக் கோட்டங்களில் தையற்காரராயுள்ளனர். இவர் வேளாளரையும் பார்ப்பாரையும் புரோகிதராகக் கொள்வர். இவர் வீட்டில் அம்பட்டரும் வண்ணாரும் உண்ணார், ஆயினும். கோயில் நுழையும் உரிமை இவர்க்குண்டு. மலையாளப் பாணர் மந்திரவாதிகளும் பேயாடிகளுமாயிருக் கின்றனர். இவர் மந்திர வினைகள் பல்வேறு வகைப்பட்டவை. இவருள் ஆடவர் தாழங்குடை முடைவர்: பெண்டிர் மருத்துவம் பார்ப்பர். சிலவிடத்து மலையன் என்னும் பட்டம் இவர்க்குண்டு. அறுப்புக்காலத்தில் பாணச் சிறுவர் சிறுமியர் வீடுதோறும் சென்று குடையுடன் ஆடி இரப்பர். பயிர்பச்சை மீது அதிகார முள்ள பேய்கள் இவர் வயப்பட்டன என்று கருதப்படுகிறது. சில சடங்குகளில் பாணர் துடியியக்குவர். பறைக்குத் தோல் கட்டுவதும் இவர் தொழிலாம். பாணனான குருப்பு என்னும் மேல்வகுப்பம்பட்டன், தீயருக்கும், இறந்தோர் ஆவியை அவர் இறந்த அறையினின்றும் ஒரு சடங்கால் வெளிப்படுத்துவான். இவன் செறுமர்க்கு மேற்பட்ட தீண்டாதான்: தாழங்குடைக்கு மூங்கில் வேலை மட்டும் செய்வான். தாழை வேய்வது இவன் மனைவி தன் மனைவியில்லா விட்டால் அயல்வீட்டுப் பெண்டிரிடம் தாழை வேயக் கொடுப்பான். தீயர் பிணஞ் சுடும்போது பாணர் 5 நாள் இரவு பறையறைந்து தீயாவிகளை விரட்டுவர். பாணர்க்கு மக்கள் தாயமே. பெண்டிர் பல சகோதரரை மணப்ப துண்டு. தென் மலபாரில், பாணர்க்குள் திருரெங்கன், கொட கெட்டி (குடைகட்டி), மீன்பிடி, புள்ளுவள் என நாற் பிரிவுண்டு, இவருள் புள்ளுவள் ஏனையரிலும் தாழ்ந்தவன், பாணர் கலப்பு மணமுள்ள பல இல்லங்கள் அல்லது கிரியங் களாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றனர். காளி, பரகுட்டி, கரிங் குட்டி, குளிகன், குட்டிச்சாத்தான் என்பன இவர் தெய்வங்கள், இவர் உச்சவேலி என்னும் வகுப்புப் பேய்களை ஓட்டுவர். ஒரு பாணன் தன் ஆடையில் ஓர் இழையெடுத்துத் தன் மைத்துன னிடம் கொடுத்து உன் பரிசம் முடிந்தது என்று கூறினால் தன் மனைவியை முற்றும் தள்ளியதாகும். மலையாளப் பாணருள், அஞ்ஞூற்றான், முந்நூற்றான் என இரு உட்பிரிவுகளுண்டு, திருவாங்கூர்ப் பாணர்க்குப் பணிக்கப்பட்ட முண்டு, இவர் தமிழப் பாணரினுந் தாழ்ந்தவர். இவர் மேற் குலத் தார்க்கு 36 அடித்தூரம் விலகுவர்; மன்னாரையும் வேடரையும் 8 அடித் தூரத்தும் புலையரையும் பறையரையும் 32 அடித் தூரத்தும் தம்மினின்றும் விலக்குவர். இவர் மயிர் வினையும் சலவையும் தாமே செய்து கொள்வர்; கம்மாளரிடத் துண்பர்; இளமை மணஞ் செய்வர்; இறந்தோரைப் புதைப்பர், இவர்க்குச் சாவுத்தீட்டு 16 நாள் இயல்பாய் இறந்தவர்க்கு ஆடி மாதத்திலும், கொலையுண்டு அல்லது துன்பநேர்ச்சியில் இறந்தவர்க்கு ஆவணி மாதத்திலும் ஊனுங்கள்ளும் படைப்பர். இது வெள்ளங்குளி யெனப்படும். இறந்தவரை நினைவு கூரப் பந்தல் மடம் முதலியன அமைப்பதுண்டு. ஈழவர் தமது கொண்டாட்டங்களில், பாணர்க்கு ஈராள் உண்டி யளித்துத் தம் முன்னோர்க்கு அவர் முன்னோர் செய்த ஓர் நன்றியை நினைவு கூர்வர். பாலக்காட்டில் பாணர் தலைவனுக்குச் சுப்ரதன் என்று பெயர். அவன் இறந்தால் அரசனுக்கு அறிவிக்கப்படும். அரசன் வாள், கேடகம், ஈட்டி, துப்பாக்கி, வெடிமருந்து, வெள்ளிக் காப்பு, அட்டிகை என்னுமிவற்றை அவன் மகனுக்காவது இழவு கொண்டாடுபவனுக்காவது அனுப்புவன். மகன் அணிகளையும், வேறு சிலர் ஆயுதங்களையும் அணிந்து கொள்வர், பிணத்தை எடுக்கும்போது ஒன்றும், கிடத்தும்போது ஒன்றும், எரித்தபின் ஒன்றுமாக 3 வெடி சுடுவர், மறுநாள் மகன் தன் கையாற் செய்த ஓர் தாழங்குடையை அரசனுக்களிப்பன். அரசன் அவனுக்குச் சுப்ரதன் என்னும் பட்டமளிப்பன். சங்கிலிக்கருப்பன், பேச்சி, ஊதர கருப்பன், காளி, சோதல கருப்பன், சோதல பத்ரகாளி, யட்சி, கந்தர்வன, அனுமான் என்று ஆவிகளைப் பாணர் வயப்படுத்துவர். பாணர் மதம் பேய் வணக்கம், மூக்கன், சாத்தன், கப்பிரி, மலங் கொறத்தி (குறத்தி) என்னுந் தெய்வங்களையும் இவர் வணங்குவர், இத் தெய்வங்களுக்கு மரத்தடியில் கல் நட்டு, முழுக்காட்டி, ஆடு கோழியறுத்துக் காய்கறி சோறு படைப்பர். இறந்தோரையும் வணங்குவர்; அமாவாசையன்றாவது முழு நிலாவின் பின் 11ஆம் நாளாவது நோன்பிருப்பர். பாணர் எல்லாரும் பார்ப்பார், நாயர், கம்மாளர், ஈழவரிடம் உண்பர், பாணரும் கணியரும் தொட்டுக் கொண்டால் ஒருவரை யொருவர் தீட்டுப்படுத்தியவராவர்; பின்பு குளித்துத் தீட்டைப் போக்குவர், பாணர் ஈழவர் அருகில் குடியிருக்கலாம். ஆனால், நாயர் தரையில் குடியிருக்க முடியாது. கம்மாளர் கிணற்றில் தண்ணீரெடுக்கவும், பார்ப்பனர் கோயிலின் புறமதிலையண்ட வும், பாலக்காட்டில் பார்ப்பனர் தெருவழிச் செல்லவும் இவர்க்கு உரிமையில்லை. 1891ஆம் ஆண்டுக் குடிமதிப்பில் பாணர் பறையருள் ஒரு பிரிவார் என்று குறிக்கப்பட்டுள்ளது. (செந்தமிழ் செல்வி மேழம் 1939) பாதம் பள்- படு, படுதல்= தாழ்தல், விழுதல், பொருகளத்தில் விழுந்திறத்தல், இறத்தல், பட்டவன் குறி= நடுகல். பட்டவன் காணி= களத்திறந்தவனுக்கு விடப் பட்ட மானியம், படு= குளம், மடு. படு-படி, படிதல்= தாழ்தல், பணிதல், பணிவிடை செய்தல். படி-பதி. பதிதல்= தாழ்தல், இறங்குதல், ஊன்றுதல், அகழ்தல், அழுந்துதல், உரமாகப் பதிதல், மணி பதித்தல், கற்பாவுதல், எழுதுதல், பதி= பதிகை, பதிக்கும் நாற்று, பதிந்திருக்கும் உறைவிடம், வீடு, கோயில், நகர், பதி- பதிவு. பதி- பதியம். பதி-பதம்= நிலத்திற் பதியும் பாதம், கால், (எறிபதத்தானிடங் காட்ட புறநா. 4), உடம்பில் முழங்காலளவு போன்ற காற்பகுதி, பதிந்திருக்கும் இடம், பதவி, பாதச் சுவட்டால் ஏற்படும் பாதை வழி. பதம்- பாதம்= நிலத்திற் பதியுங் காலடி, பாதத்தைக் கொண்ட கால், (பாதக் காப்பினள் பைந்தொடி சிலப். 14: 23), விளக்குத் தண்டின் பரந்த அடிப்பகுதி, இருக்கை தாங்குங்கால், காற்பங்கு, செய்யுளடி. வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான்மீகி (கம்பரா. நாட்டுப்.1) பாதக்காப்பு, பாதக்குறடு, பாதகடகம், பாதகாணிக்கை, பாதச்சாயை, பாதசக்கரம், பாதசரம், பாதசாயலம், பாத தாமரை, பாததூளி, பாதப்படி, பாதபூசை முதலியன பாதத் தொடர்பான கூட்டுச் சொற்கள், இவை புணர்ச்சியில் வலி மிக்கும் மிகாதும் வழங்கும், பாதம் - பாதை = பாதம் படுவதனால் ஏற்படும் வழி. வடசொற்கள் (வேதமொழியும் சமற்கிருதமும்) pat, to fall down, fall or sink. patha, way, path, road, course, Daksina patha, Southern Way, Deccan, pathaka, knowing the way, a guide pathika, knowing the way, going on a road, a traveller, wayfarer, a guide pathikaya, to act as a traveller. pathila, a travellar pathya, belonging to the way, suitable, fit, proper, wholesome, salutary, eap, said of diet in a medical sense pad1, to fall, RV pad3, foot pada, foot, step, pace, stride, trace, vestige, mark, RV, padaji, foot- solidier, padatika, a foot man padika, going on foot, pedestrian, pad, a strong base of pad2 pada, foot, RV. 1. padaka, a small foot, RV. padapa, drinking at foot, tree, 2. padaka, a foot stool or cushion for the feet. ‘ padaya, to stretch out at the feet. padavika, a traveller. padat, a foot soldier, padata, infantry padika, lasting for a quarter of the time padin, footed, having feet, having shoes, shoed padu, a shoe or slipper, padya, relating to or belonging to the feet. ஆங்கில இலத்தீன் கிரேக்கச் சொற்கள் E. antiodes, n. pl. places diametrically opposite to each other. esp. region opposite to our own, f. LL. f. Gk. antipodes. having the feet opposite, anti, against, podos, foot., ஞாலவுருட்சியினால், நாமும் அமெரிக்கரும், ஒரு வகுப்பாரை நோக்கி ஒரு வகுப்பார் கால் நீட்டிக் கொண்டிருத்தல்போல் தோன்றுவதை, நோக்குக. E. biped, two-footed animal, f.L. bipedis, bi, two pedis, foot E. cephalopod, mollusc with distinet tentacled head, f. L. cephalo f. GK. kephalikos f. kephale, head, podos, foot, E. cirriped, marine animal in valved shall attached to other bodies, with legs like curl of hair, f, F. cirri f. L. cirrus, curl pedis, foot. E. decaped, ten-footed crustacean, f. F. decapode, f. Gk. deca, ten, podos, foot E. foot, termination of leg beginning at ankle, f. ‘OE., OS.’ fot, OHG, fuoz, ON, fotr, Goth, fotus. பாதை என்னும் சொல் ஆங்கிலத்தில் path என்று பகர முதற் சொல்லாகவே யிருத்தலால், பாதையை யுண்டு பண்ணும் பாதத்தின் பெயரும், கிரேக்கத்திலும் இலத்தீனிலும்போல் முதற் கண் பகரமுதற் சொல்லாகவே யிருந்து, பின்னர் வல்வகர (f.) முதற் சொல்லாக வலித்துத் திரிந்திருத்தல் வேண்டும். E. millepede, millipede, kinds of myriapode, with sumerous legs usu. on each segment in double pairs., f. L. willepeda, mille, thousand, pedis, foot. ஆயிரங் காற்பூச்சி E. myriapod, animal with many legs, of the class comprising centipedis and millepedes, f. GK. murias, f. murial 10,000 podos, foot. E. pad1, v.t.&i. to tramp along road on foot, travel in foot, f. LG. padden, pidden, to tread. E. pad2, road, f. Du., LG. pad, path. E. pedal, each of the wooden keys played upon by the feet, foot lever for drawing out stops in organ, foot lever in servious machines, esp, bicycle, f.F. pedale, f. It. pedale, f. pedalis, f. pedis, foot. E.pedate, a. footed, f. L. pedalus. E. pedestal, base supporting column or pillar, base of statue etc., f. F. piedestal, f. It. piedestallo (pie, foot, f. L. pedes, pedis + di, of + stallo, stall). E. pedestrain, going on foot, one who walks. f. F. pedestre, or L. pedester. E. pedicel, pedicle, small stalk-like structure in plant or animal, f. mod. L. pedicellus dim. of L. pedienlus dim of pedis, foot, cule, culus, dim. suf. E. pedicure, n, chiropody; v. t, to cure or treat feet by removing corns etc., f. F. pedicure f. L. pedis, foot + cura, care. E. pedigree, geneological table., f. AF. = OF. pic de grue, crane’s foot, mark denoting succession in pedigrees. E. pedometer, instrument for estimating distance travelled on foot by recording number of steps taken., f. F. pedometre, L. pedis, foot + O + meter. E. pedrail, device for facilitating progress of heavy vehicles over rough ground by attachment of broad foot-like supporting surfaces to wheel-rims, f. L. pedis, foot + rail. E. peduncle, stalk of flower, fruit or cluster, stalklike process in animal body, f. mod. L. pedunculus, f. L. pedis, foot + uncle. E. podagra, gout, esp. in feet, f. L. f. Gk. podos, foot, agra, catching. E. podium, continuous projecting base or pedestal, raised platform around arena of amphu theatre, continuous bench round room., f. L. f. Gk. podion (podos, foot). E. podophyllin, yellow bitter resin of cathartic properties got from root of wild mandrake, f. L. podophyllum, f. Gk. podos, foot, phyllon, leaf. Sk. podos - pous, foot; L. pedis - pes, foot., AF., OF. pie, foot. E. path, foot way, esp. one merely beaten by feet, not specially constructed; track laid for foot or cycle racing; line along which person or thing moves. OE. paeth, OLG. pad, OHG. pfad, WG. patha. இச் சொல் பாதை என்னும் தமிழ்ச் சொல்லை வடிவிலும் பொருளிலும் பொருட்காரணத்திலும் ஒத்திருப்பதும், வட மொழியிலின்மையும், கவனிக்கத் தக்கன. E. quadruped, four - footed animal., f. F. quadrapede f. L. quadrupedis, quadri, four, pedis, foot. E. tripod, stool, table, utensil, resting on three feet of legs. L. and Gk. tri, three, Gk. podos, foot. E. tripos, n. (Camp. univ.) (List of successful candidates in) honours examination. (as tripod with ref, ie. stool on which B.A. sat to deliver satirical speech at commencement., f. Gk. tri, three, podos, foot. கடைக் கழகச் செய்யுட்களில், பாதம் என்னும சொல் வர வேண்டிய இடத்தில் அடி (அல்லது தாள்) என்னுஞ் சொல்லே வந்திருத்தலால், சிலர் பாதம் என்னுஞ் சொல் வடசொல்லோ என ஐயுறக் கூடும். தொல்காப்பியமும் பதினெண்மேற்கணக்கும் திருக்குறளும் நூலும் பனுவலும் தனிப்பாடற்றிரட்டுமேயன்றி, அகர முதலிகளல்ல. ஆரியர் வருகைக்கு முற்பட்ட எழு நிலச் செய்யுள் இலக்கியமனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. சில பொருள்கட்கு, உலக வழக்குச் சொல்லும் இலக்கிய வழக்குச் சொல்லும் தொன்றுதொட்டு வேறுபட்டே வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, காடை என்னும் உலக வழக்குச் சொல் லிற்குத் தலைமாறாகக் குறும்பூழ் என்னுஞ் சொல்லே கழகச் செய்யுட்களில் வழங்கியிருத்தல் காண்க. பாதம் என்பது, நிலத்திற் பதிதற் கேற்றவாறு அகன்று தட்டையா யிருத்தல் வேண்டும். பாதம் வைத்த விளக்கு என்னும வழக்கை நோக்குக. அடி என்பது, அடிப்பகுதி, அடியுறுப்பு, அடிப்பக்கம் என்னும் மூவகைப் பொருளை, எல்லாப் பொருளொடும் பொருந்தப் பொதுப்படக் குறிப்பதால், பாதம் என்னுஞ் சொல்லை ஒத்ததன்று. பெட்டிக்கு அடியில் என்பதைப் பெட்டியின் அல்லது பெட்டிக்குப் பாதத்தில் என்று சொல்லும் வழக்கின்மை காண்க. பாதம் என்னும் சொல்லிற்கு மூலமான பதி என்னும் வேர்ச் சொல்லையும் அதன் தோற்ற வரலாற்றையும் வேறெம் மொழி யிலும் காணமுடியாது. மக்கள் குமரி நாட்டினின்று வடக்கும் கிழக்கும் மேற்கும் சென்றவராதலால், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமையை உணர்தல் வேண்டும். (த.த.த.சொ.) பாதிரி பாதிரி - பாடலி (t´)) பாதிரியாற் பெயர்பெற்றது திருப்பாதிரிப்புலியூர். அது வடமொழியிற் பாடலிபுர அல்லது பாடலிபுத்ர எனப்பட்டது. இப்பெயரே மகத நாட்டுத் தலைநகர்க்கு இடப்பெற்றது. அது இன்று பாட்னா என்று வழங்குகின்றது. தெ. பாதிரி, க. பாதிரி. (வ.வ : 203 - 204). பாயிரம் முதற்கண் போர்மறவர் போர்க்களத்தில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைக் குறித்துப் பின்பு நூன் முகவுரையைக் குறித்தது. (தி.ம. 30) பயிர்தல் - ஊரிவிலங்கு, பறவைகள் ஒன்றை ஒன்று அழைத்தல். பயிர் - பயிரம் - பாயிரம் - அழைப்பு = போருக்கு அழைக்கும் முகவுரை, முகவுரை. (தி.ம. 31) பாயிரப் பெயர்கள் பாயிரம் என்பது முகவுரை. அது ஒரு நூற்கு இன்றியமையாத தென்பது. எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை? ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே (நன். 54). என்றாராதலின் பாயிரமென்றது புறவுரையை. நூல் கேட்கின் றான் புறவுரை கேட்கின் கொழுச் சென்ற வழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல அந்நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை? பருப் பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்! என்றாராகலின் அப் பாயிரந்தான் தலையமைந்த யானைக்கு வினை யமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றி யமையாச் சிறப்பிற்றாயிருந்தலின்; அது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவும் குறிச்சி புக்க மான் போலவும், மாணாக்கன் இடர்ப்படும் என்க என்னும் நச்சினார்க்கினியர் உரையான் உணரப்படும். பவணந்தியார். மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற வணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது. (நன். 55) எனச் சில உவமை வாயிலாகவும் பாயிரத்தின் தேவையை வற்புறுத்தினார். அப் பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து என்றார் நச்சினார்க்கினியர் அதையே. பாயிரம் பொது சிறப்பெனவிரு பாற்றே (நன். 2) என நூற்பா யாத்தார் பவணந்தியார். அவற்றுட் பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து. ஈவோன் தன்மை ஈத லியற்கை கொள்வோன் தன்மை கோடன் மரபென ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே என்னும் இதனான் அறிக என்பது நச்சினார்க்கினியம். நன்னூலார் இவற்றோடு நூலையுங் கூட்டி நூலே, நுவல்வோன், நுவலுந் திறனே, கொள்வோன், கோடற் கூற்றாம் ஐந்தும் எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம் (நன். 3) என நூற்பா இயற்றினார். இதனால், கற்பிக்கப்படும் நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தின் இயல்பையும் விளங்குவது பொதுப்பாயிரம் என்றாயிற்று. இதன் ஐங்கூறும் எல்லா நூற்கும் பொதுவா யிருத்தலின் இனிச் சிறப்புப் பாயிரமாவது தன்னால் உரைக்கப் படும் நூற்கு இன்றியமையாதது. அது பதினொரு வகையாம். ஆக்கியோன் பெயரே, வழியே, எல்லை, நூற்பெயர், யாப்பே, நுதலிய பொருளே, கேட்பார், பயனோ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. (நன். 47). காலம், களனே, காரணம் என்றிம் மூவகை யேற்றி மொழிநரும் உளரே. (நன். 48). இப் பதினொன்றும் இப் பாயிரத்துள்ளே (பனம்பாரனார் தொல் காப்பியத்திற்குக் கூறிய சிறப்புப் பாயிரத்துள்ளே) பெறப்பட்டன. நூல் செய்தான் (சிறப்புப்) பாயிரஞ் செய்தானாயின் தன்னைப் புகழ்ந்தானாம். தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான் தற் புகழ்தல் தகுதி யன்றே (நன். 52). என்ப வாகலின் (சிறப்புப்) பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியரும் தன்னொடு ஒருங்கு கற்ற ஒரு சாலை மாணாக்கரும் தன் மாணாக்கரும் என இவர் என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிர நச்சினார்க்கினியர் உரைப்பகுதி. சிறப்புப் பாயிரம் என்பது. ஒரே நூற்குச் சிறப்பாயிருந்து, அதன் ஆசிரியன் பெயர், அந்நூல் வந்தவழி, அது வழங்கும் எல்லை, அந் நூற்பெயர் முதலிய பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குன்ற வேனுங் கூறி, அந் நூலைச் சிறப்பிப்பது. (foreword, opinion, editor’s preface etc). மதிப்புரையெல்லாம் சிறப்புப் பாயிரமே. ஒரு நூலாசிரியன் தானே தன் நூலைப் புகழ்தல் தக்கதன் றாதலின், சிறப்புப் பாயிரஞ் செய்வார் பிறரா யிருத்தல் வேண்டுமென்பது தொன்று தொட்ட மரபு. அதனைச் செய்யத்தக்கார் மூவரென்று குறிப்பிட்டார் நச்சினார்க்கினியர். அவரோடு உரையாசிரியனையுஞ் சேர்த்து. தன்னா சிரியன் தன்னொடு கற்றோன், தன்மா ணாக்கன், தகுமுரை காரனென் றின்னோர் பாயிரம் இயம்புதல் கடனே (நன். 51) என்றார் பவணந்தியார், ஆயினும் கடவுள் வணக்கம், அவை யடக்கம், நூற்பொருள், நூல் வந்தவழி, நூற்பெயர் முதலியன நூலாசிரியன் கூறுவதே பொருத்த மாதலானும். அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந்தராமையானும், அவற்றை நூலாசிரியன் கூறுவது தக்கதென்று கொள்ளப்பட்டுத் தற் சிறப்புப் பாயிரம் எனப் பெயர்பெறும். வணக்கம் அதிகாரம் என்றிரண்டுஞ் சொல்லச் சிறப்பென்னும் பாயிர மாம். தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்த வுரைப்பது தற்சிறப் பாகும். என்பன காரிகையுரை மேற்கோள். சேக்கிழார் தம் திருத் தொண்டர் புராணத்திற்குச் செய்த பாயிரமும், கம்பர் தம் இராமாவதாரத்திற்குச் செய்த பாயிரமும், தற்சிறப்புப் பாயிரத்திற் கெடுத்துக்காட்டாம். இளங்கோவடிகள் மங்கல வாழ்த்துப் பாடலும் அது. மேற்கூறிய இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாகவும் சிறப்பாகவும் பல பெயர்கள் உள. அவை. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் (நன்னூல். 1) என்னும் எட்டாம். இவற்றின் பொருள்விளக்கம் வருமாறு. 1. முகவுரை இது நூல் முகத்து உரைக்கப்படுவது; இற்றை வழக்கில் உரைநடை யாயிருப்பது; பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது. 2. பதிகம் இது நூலாசிரியன் பெயர், நூல்வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது. ஒரு பொருள் பற்றிய பத்து அல்லது பதினோரு பா அல்லது பாவினத் தொகுதி பதிகம் என்று பெயர் பெற்றிருத்தல் காண்க. எடுத்துக்காட்டு : தேவாரப் பதிகம். பதிகம் என்னும் பெயருக்கு ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது என்று பொருள் கூறி. அடிக்குறிப்பாக, பதிகக் கிளவி பலவகைப் பொருளைத் தொகுதியாகச் சொல்லுதல் தானே என மேற்கோளுங் காட்டினர் நன்னூலுரையாசிரியர் சடகோப இராமானுசாச்சாரியர். ஐம்பொருள் பொதுப்பாயிரத்திற்கும். பதினொரு பொருள் சிறப்புப் பாயிரத்திற்கும் உரியன. பதிகம் என்னும் பெயர் பத்து (பது) என்னும் சொல்லினின்று தோன்றி யிருத்தலின்; ஆக்கியோன் பெயரே என்னும் நூற்பாவிற் குறிக்கப் பட்ட எண் பொருளும், காலங் களனே என்னும் நூற்பாவிற் குறிக்கப்பட்ட முப்பொருளும் ஆகிய பதினொரு பொருளைத் தருவதென்று உரை யுரைப்பதே பொருத்தமானதாம். ஒன்று பத்தை நோக்கச் சிறிதாதலின் பதினொன்றும் பத்தாகவே கொள்ளப்பெறும் (ஆங்கிலத்தில் பதின் மூன்று - baker’s dozen எனப்படுதல் போல) இங்ஙனம் பதிகம் என்னும் சொல் சொல்லாலும் பொருளாலும் தூய தமிழாயிருக்கவும். அது ப்ரதீக என்னும் வடசொல்லின் திரிபாக வட மொழியாளர் கூறுவதும். அதைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி பின்பற்றி யிருப்பதும், குறும்புத்தனமும் பொறுப்பற்ற செயலுமாகும். உண்மையில், பதிகம் என்னும் தென்சொல்லே ப்ரதீக என்னும் வடசொல்லாகத் திரிந்துள்ளது. பதின் செய்யுட் டொகுதியை குறிக்கும் பதிகம் என்னும் தென் சொல்லைப் பத்யம் (செய்யுள்) என்னும் வடசொல்லோ டிணைக்க விரும்புவார் வேறு என்தான் சொல்லார். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் உள்ள சிறப்புப் பாயிரங்கள் பதிகம் எனப் பெயர்பெற்றுள்ளன. 3. அணிந்துரை இது மறைமலையடிகள் மதிப்புரையும் முன்னுரையும்போல் ஒரு நூலுக்கு அணி (அழகு) செய்து நிற்பது. 4. நூன்முகம் இது நூலுக்கு முகம் போல்வது; உரைநடை, செய்யுள் ஆகிய இரு வடிவிற்கும் பொதுவானது. 5. புறவுரை இது நூலுக்குப் புறமாக உரைக்கப்படுவது. புறம் = பின்பு. இறுதி. தொல்காப்பிய இறுதியில் உரைக்கப்பட்டுள்ள நூலுரை மரபு புறவுரையாகும். சிலர் நூலுரை மரபு செய்யுளியலிலேயே கூறப் பட்டுவிட்டதனால் (1421 - 1430) மரபியலில் உள்ளது பிற்செருகல் என்பர் (1590-1610) அகத்திணையியலிற் கூறிய உவமை யிலக்கணச் சுருக்கத்தையே 1992 - 995). பின்னர் உவமவியலில் தொல்காப்பியர் விரித்துரைப்பதால் (1222 - 1258) மரபியலின் இறுதியில் விரித் துரைக்கப்பெறும் நூலுரை மரபு பிற்செருகலெனக் கொள்ளப் படா தென்க. (புறவுரை என்பது, மேலை நாடக நூற்களிற் கூறப்படும் epilogue என்பதை ஒருபுடை யொத்ததாகும்). பதிற்றுப்பத்தின் உரைபெறு கட்டுரைகள் இட வகையால் புறவுரையாக அமைந்துள்ளன. 6. தந்துரை இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர் முன்னுரை (introduction). பெரும்பாலும் தந்துரையாக விருக்கும். 7. புனைந்துரை இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது, திருக்குறட் சிறப்பைப் போப்பையர் முன்னுரை (introduction) எடுத்துக்காட்டுவது போல. புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல். 8. பாயிரம் இது முதன் முதல், பொரு களத்துப் போர் முகவுரையாகப் பகை வரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும். நெடுமொழியைக் குறித்தது; பின்பு நூன் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது. நெடுமொழி போர் மறவனின் தன் மேம்பாட்டுரை. பாயிரம் என்பது முதற்கண் நெடுமொழியைக் குறித்தமையை. மறு மனத்தா னல்லாத மாநலத்த வேந்தன் உறு மனத்தானாகி யொழுகின் - செறுமனத்தார் பாயிரங் கூறிப் படைதொக்கால் என் செய்ப ஆயிரங் காக்கைக் கோர் கல். (பழ. 165). என்னும் பழமொழிச் செய்யுளான் உணர்க. பாயிரம் என்பதற்கு வீரத்துக்கு வேண்டும் முகவுரைகள். என்று பழையவுரை உரைத்தலையும் நோக்குக. பயிர்தல் - அழைத்தல், போருக்கழைத்தல், பயிர் - (பயிரம்) - பாயிரம். சென்னைப் பல்கலைக்கழக அகராதி, பாசுரம் என்பது பாயிரம் என்று திரிந்திருக்கலாம் என்று தன் அறியாமையைக் காட்டுகின்றது. இற்றை நூல் வழக்கை நோக்கின் பாயிரப் பெயர்களுள் புறவுரை. பாயிரம் என்னும் இரண்டும் பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாம்; ஏனைய சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாம். சிறப்புப் பாயிரத்திற்குரிய வற்றுள் முகவுரை. நூன்முகம், பாயிரம் என்னும் மூன்றும் தற்சிறப்புப் பாயிரத்திற்கும் உரியன. இவற்றுள் நூன்முகம் என்பது தற்சிறப்புப் பாயிரத்திற்குச் சிறப்பென்று கொள்ள இடமுண்டு. தந்துரை என்பது, வழக்கிலில்லாவிடினும், பொதுப் பாயிரத்திற்கும் ஏற்கும். உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக் காலத்தெழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தை யும், பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ் விரண்டையும் சாரும், சாத்துப்பா என்பது செய்யுள். ஏனைய உரைநடை. இதுகாறுங் கூறிய பாயிரப்பெயர்களெல் லாம் தூய தென் சொற்களென்று அறிக. முகம் என்பது தென் சொல்லே. மேற்காட்டியவாறு, முகவுரையைக் குறிக்கப் பல தூய தென் சொற்களிருப்பவும், இடைக்காலப் புலவர், சிறப்பாக யாழ்ப் பாணத்தார், உபக்கிர மணிகை, உபோத்காதம் என்னும் வட சொற்களை வேண்டாது வழங்கிச் சிறுமையிற் பெருமை கொண்டனர். இத்தகைய வடசொல்லாட்சி தமிழரின் மடமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்ந்ததேயன்றி, தலைமைசால் தமிழ்ப் புவலர் தாமாக விரும்பிச் தழுவி யதன்று. ஆதலால், தமிழின் தூய்மையைக் குலைத்ததுமன்றி அதன் தொண்டையையும் நெரித்துக் கொல்லப்பார்க்கும் ஐந்தாம்படைச் சொற்களை யெல்லாம், அறவே அகற்றிவிடுவது தமிழன் முதற் கடமையாம். தமிழன் விடுதலை, தமிழின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டது. தமிழுயரத் தமிழன் உயர்வான். (தென்றல்.) பார்க்கும் வகை விழித்தல் கண்ணைத் திறந்து பார்த்தல்; பார்த்தல் இயல்பாகக் குறிக்கோளின்றிப் பார்த்தல்; நோக்குதல் குறிக்கோளொடு கூர்ந்து பார்த்தல்; காணுதல் தேடிப் பார்த்தல் அல்லது போய்ப்பார்த்தல்; நோடுதல் சோதித்துப் பார்த்தல் (நோட்டம் - சோதனை); கவனித்தல் நுட்பமாய்ப் பார்த்தல்; நாடுதல் ஆராய்ந்து பார்த்தல். சொல். 56. பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள் (1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட்டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர். கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து. குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந் தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளர விட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்திலுள்ளதைக் குறிக்கும். அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாட னூர்ந்த மாவே (ஐங். 202) என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே. மீசை : மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர். (2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர். நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, நூலெனிலோ கோல்சாயும் என்னுஞ் செய்யுளும், ஊர்கெட நூலைவிடு என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும். தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும். ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமை யேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லா தவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத்தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர் களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றி யமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட்டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர். ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணியாளரைப் (Archbishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராமணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப்படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம். கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றின வேறன்று. தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர். தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது. நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராதலின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க. (3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம். (4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தை யும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்தத னாலேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம் மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங் களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்றவரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொதுவியல்பாகும். வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியின ரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியைமட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண் டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று. பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழி யாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர். மணிமேகலையில், வடமொழியாளர் (5 : 40) என்று பார்ப்ப னர்க்கும், வடமொழி யாட்டி (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத்தல் காண்க. வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு வடமொழி யென்றுபெயர். வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக வடவர் ஆரியர் என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன. ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று. ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா. வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும். பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிக ளாகாமை இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல்களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங் களாவன: (1) ஆரிய மனப்பான்மை ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மை யுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (Grammar), மரபு (Idiom) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது. பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டு களாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழ்க் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை. பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையும் தங்கள் முன்னோரின் மொழியாக வும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழரோ எப் போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண் டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரையும் எவ்வளவோ பிரித்துக்காட்டும். நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை (Science)iaí§ குறித்ததாகும். இப்போது, அது புத்தகத் திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது. புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும். இது பல பார்ப்பனருக்கு விளங்குவ தில்லை. நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபுவழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது. (2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்கு பொதுமக்கட்கும், நூல்வழக்கு புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத் தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல்வழக்கு அதற்கு உடம்புமாகும். பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக்கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமை யால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர். (3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும் வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்கள் மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப் பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்பனருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம். ஸ்ரீய: பதியான ஸர்வேவரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு, `யூநிவர்சிட்டி (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப் பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியாதல் காண்க. (4) வடமொழியைத் தென்மொழிக்கு அளவையாகக் கொள்ளல் தமிழ்நூல்களுக்கு வடநூல்களை மேல்வரிச் சட்டமாக வைத்துக் கொண்டு, அவற்றைத் தழுவியே பொருளுரைத்து வருகின்றனர் பார்ப்பனர். தமிழ் முதனூல்கள் வடமொழி முதனூல்களி னின்றும் கருத்தில் வேறுபட்டதுமன்றி, அவற்றுக்கு மிக முந்தியவுமாகும் என்பதை அவர் அறிந்திலர். பரிமேலழகர், தென்புலத்தாரைப் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி என்றார். தென்புலத்தார் (பிதிர்க்கள்) தத்தம் காலத்தில் உலகில் வாழ்ந்து இறந்துபோனவரா யிருக்க, அவரைப் படைப்புக் காலத்துப் படைக்கப்பட்டவர் என்று கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்? வடநூலைப் பின்பற்றிச் சேனாவரையர், சிவஞானமுனிவர், சங்கர நமச்சிய வாயப் புலவர், சுவாமிநாத தேசிகர் முதலிய தனித்தமிழருங்கூடப் பல இலக்கணங்களில் தவறிவிட்டனர். திருவையாற்றுக் கீழைக் கலைக்கல்லூரித் தலைவராகிய, பண்டாரகர் சுப்பிரமணிய சாத்திரியார், சில ஆண்டுகளாகத் தமிழுக்கு மாறான சில நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டு வருகின்றார். அவற்றுள், தமிழ்மொழி நூல் என்பது ஒன்று. அதில், ஆராய் என்னுஞ் சொல்லில் ர் செருகல் (intrusion) என்று கூறியுள்ளார். ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive). ஆர (நிரம்ப) + ஆய் = ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க. இன்னும், தொல்காப்பிய நூன்மரபில், லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும் (24) ணனஃகான் முன்னர்க் க-ச-ஞ-ப ம-ய-வவ் வேழு முரிய (26) ஞ-ந-ம-வ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே (27) மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் (28) என்னும் நூற்பாக்களைப் பிறழவுணர்ந்து பண்டைத் தமிழ்ச் சொற்களினிடையில், ல்ய, ல்வ, ள்ய, ள்வ, ண்ய, ண்வ, ன்ய, ன்வ, ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, ம்வ, என்னும் இணைமெய்கள் பயின்றதாகக் கூறியுள்ளார். இவர் இங்ஙனம் துணிவதற்குக் காரணமென்ன வெனின், நச்சினார்க்கினியர், மேற்கூறிய நூற்பாக்களுள், முதலதற்கு, எ-டு : கொல்யானை, வெள்யாறு. இவற்றுள் கொல்யானை என வினைத்தொகையும், வெள்யாறு எனப் பண்புத்தொகையும், நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின், `மருவின் பாத்திய என்று கூறுவாராதலின், இவ் வாசிரியர் இவற்றை ஒருமொழியாகக் கொள்வரென்று உணர்க. இக் கருத்தானே மேலும், வினைத் தொகையும் பண்புத் தொகையும் ஒருமொழியாகக்கொண்டு, உதாரணங் காட்டுதும் என்று கூறினவர், பின்பு, அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து, வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணு மன்றி, ஒருமொழிக் கண்ணே மயங்குவனவு முளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தனவென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற்போதலே நன்றென்று கூறலுமொன்று என்றும்; மூன்றாவதற்கு, இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன. இனி உரையாசிரியர் உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒருமொழியாமாறு ஈண்டுக்கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங் கூறி, அதன்கண், `மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும் (எழு. 107) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் `உகரமொடு புணரும் புள்ளி யிறுதி (எழு. 163) என்றும், பிறாண்டும், ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர் ஆதலின், ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறலென்னும் குற்றமாம். அதனால், அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க என்றும்; நாலாவதற்கு, இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின், `வகாரமிசையு மகாரங் குறுகும் (எழு. 330) என்ற விதி வேண்டாவாம் என்றும் கூறினதேயாம். இக் கூற்றுக்குக் காரணம் நச்சினார்க்கினியர் தொகைச் சொல்லை (compound word) ஒரு சொல்லாகக் கொள்ளாமையும், கூறியது கூறலுக்கும் வழிமொழிதலுக்கும் வேறுபாடறியாமையுமே யாகும். எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய (எச்ச.24) என்றார் தொல்காப்பியர். தண்ணீர், புன்செய், மண்கொண்டான், பிழைபொறுத்தான் முதலிய தொகைப்பெயர்கள் எல்லாம் ஒருசொல் நடையவாதல் காண்க. நெபீல்டு (Nesfield) என்பவர், தம் ஆங்கில இலக்கணப் புத்தகத்தில், ஒருசொல் தன்மையடையும்படி இருசொல் புணர்ந்தது தொகைச்சொல் என்றுகூறி ink-pot (மைக்கூடு), door-step (படிக்கட்டு), horse-shoe (குதிரைக் குளம்பாணி), drinking-water (குடிநீர்) என்று உதாரணங் காட்டினர்.27 இனி, நச்சினார்க்கினியர் கொள்கைப்படி கொள்ளின்; கூறியது கூறுலாகத் தொல்காப்பியத்தில் எத்தனையோ நூற்பாக்களிருக் கின்றன. புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் என்று நூன்மரபிற் கூறியதை, யகரம் வரும்வழி இகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது எனக் குற்றியலுகரப் புணரியலுள்ளும், மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் என்று நூன்மரபிற் கூறியதை, மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் என்று புணரியலுள்ளும், உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் கட்டே என்று புணரியலிற் கூறியதை, உயர்திணை யென்மனார் மக்கட் கட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே என்று கிளவியாக்கத்துள்ளும், இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான என்று மொழிமரபிற் கூறியதை, வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே என்று குற்றியலுகரப் புணரியலுள்ளும் கூறியிருப்பதைக் காண்க. நச்சினார்க்கினியர் எவ்வளவோ தமிழ்ப்பற்றும் தமிழறிவும் உடைய வராயிருந்தும், இங்குத் தவறிவிட்டது தமிழியல்பை அறியாததினாலேயே. இனி, சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு என்றும், தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்பு என்றும் இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றுள், சொல்லதிகாரக் குறிப்பு மன்னார்குடிச் சோமசுந்தரம்பிள்ளை யவர்களால் சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டது. ஆயினும், அதைப் பல்கலைக்கழகத்தாரேனும் பண்டிதர்களேனும் சிறிதும் கவனித் தாரில்லை. இதை நினைக்கும்போது குட்டுதற்கோ என்ற செய்யுளே நினைவிற்கு வருகின்றது. இனி, எழுத்ததிகாரக் குறிப்பில், தொல்காப்பியர் வடமொழிப் பிராதிசாக்கியங்களைப் பின்பற்றித் தொல்காப்பியத்திற் பிறப்பியலை வரைந்தாகக் கூறி யுள்ளார். எல்லா மொழிகட்கும் பல எழுத்துகள் பொதுவாயிருக் கின்றன. அவ்வெழுத்துகளெல்லாம் யார் ஒலித்தாலும், அததற் குரிய ஒரேயிடத்தில்தான் பிறக்கும். ஆங்கில இலக்கணிகள், இந்திய இலக்கணிகளைப்போல நூற்பா வடிவாக எழுதாவிடினும், உரைநடையில், எழுத்துகளின் வகைகளையும் அவற்றின் பிறப்பியல்புகளையும் நுட்பமாகவும், விரிவாகவும் எழுதித்தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தொண்டையின (Gutturals), அண்ணத்தின (Palatla), பல்லின (dentals), உதட்டின (Labials) என்றவற்றையே, தமிழ் இலக்கணிகள் பின்பற்றிப் பிறப்பியல் வகுத்தார்கள் என்பது எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே வடமொழி வழிகாட்டுவதும் பொருந்துவதாகும். தமிழிலக்கணம் மிகப் பழங்காலத்தில் இயற்றப்பட்டதினால், மிக விரிவாக வரையப்படவில்லை. அக்காலத்து மாணாக்கர் நுண்ணறிவுடையவரா யிருந்தததினாலும், எழுத்தாணியால் ஒலையிலெழுதுவது வருத்தமானதினாலும், விரிவாயெழுதின புத்தகம் சுமக்க முடியாத அளவு பெருத்துவிடு மாதலாலும், சுருங்கிய அளவில் மாணவர் மனப்பாடஞ்செய்ய எளிதாயிருக்கு மாதலாலும், அக்காலத்து ஆராய்ச்சிக் குறைவாலும், இக் காலத்திற் கேற்றபடி மிக விரிவாக இலக்கணம் எழுதப்பட வில்லை. வடமொழியிலக்கணம் தமிழுக்குப் பிந்தினதாதலின் சற்று விரிவாயுள்ளது. ஆங்கில விலக்கணம் வடமொழிக்கும் பிந்தினதாதலின், அதினும் விரிவாகவுள்ளது. தொல்காப்பியத்தில், பதவியல் இலக்கணம் பலவியல்களில் பரவிக் கிடக்கின்றது. நன்னூலார் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனியியலாக்கினார், அவர் இலக்கணத்துள்ளும், தொழிற் பெயர் விகுதிகளும், தன்வினை பிறவினையாகும் வகைகள் எல்லாமுங் கூறப்படவில்லை. இதையறியாத சிலர், வடமொழி யிலக்கணவறிவு தமிழிலக்கணவறிவிற்கு இன்றியமையாததென்று கூறுகின்றனர். ஆங்கில இலக்கணம் ஆறாயிர மைலுக்கப்பால் இயற்றப்பட்டதா யிருப்பினும், தமிழிலக்கண அறிவிற்கு எவ்வளவோ உதவுவதாகும். உதாரணமாக, அசையழுத்தம், காலப்பிரிவு, எழுவாய் வடிவுகள் முதலியவற்றைக் கூறலாம். (1) அசையழுத்தம் (Accent) அசையழுத்தம் தமிழுக்கில்லையென்று சிலர் கூறுகின்றனர். எடுப்பு (Acute), படுப்பு (Grave), நலிபு (Circumflex) என்னும் மூன்றொலிப்பு வேறுபாடுகளும் தமிழுக்குள்ளன வென்று நன்னூலார் கூறியிருக்கின்றனர். எந்த மொழியிலும், ஒரு சொல்லில் ஏதேனுமோர் அசையில் அழுத்தம் இருந்துதான் ஆக வேண்டும். அழுத்தமுள்ள அசை எடுப்பசை; அஃதில்லாதது படுப்பசை; இவ் விரண்டிற்கும் இடைப்பட்டது நலிபசை. தமிழில் பொதுவாய் அசையழுத்தம் சொன் முதலிலிருக்கும். தண்ணீர், வந்தான் என்ற சொற்களை ஒலித்துக் காண்க. செம்பொன்பதின்பலம் என்னுந் தொடர், செம்பைக் குறிக்கும் போது, செம் என்னும் முதலசையும், பொன்னைக் குறிக்கும் போது, பதின் என்னும் இடையசை யும் அழுத்தம் பெறும். வந்தான், வந்தாள் போன்ற சொற்கள், கூறுவார் குறிப்பின்படி பாலைச் சிறப்பாய்க் குறிக்கும்போது, தான், தாள், என்னும் ஈற்றசைகள் அழுத்தம்பெறும். சில சொற்களின் ஈறுகள், அழுத்தம்பெற்றுப் பொருளை வேறுபடுத்தும். உப்ப கார மொன்றென மொழிப இருவயின் நிலையும் பொருட்டா கும்மே (மொழி. 43). என்றார் தொல்காப்பியர். இதன் உரையில், தபு என்னுஞ்சொல், படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம்; எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம் என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க. ஆங்கிலத்தில், முன்காலத்தில் அளபுக் குறிகள் இருந்தன; இப் போது மறைந்துவிட்டன. அதனால், அதிலுள்ள அசையழுத்தம் அழுத்தம், நெடிலோசை என இரண்டையுங் குறிப்பதாகும். சில வினைப் பகுதிகள் முதலெழுத்து நீண்டு தொழிற்பெயராவதுண்டு. எ-டு : படு-பாடு, உண்-ஊண். இங்ஙனமே conduct’ என்னும் ஆங்கில வினையும், con’duct என முதல் நீண்டு தொழிற்பெயராகும். ஆனால், நெடிலைக் குறிக்க ஆங்கிலத்தில் இப்போது குறியின்மையால், அசையழுத்தமே அதைக் குறிக்கின்றது. இங்ஙனமே convoy என்பது con’voy என நீண்டு தொழிற்பெயராதலுங் காண்க. தமிழிலும், செய்யுளில் ஒசை குறைந்தவிடத்து, ஆங்கிலத்திற் போல அசையழுத்தம் குறிலை நீட்டுவதாகும். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்ற செய்யுளில், கெடும் என்னும் சொல்லின் முதலெழுத்து நீண்டு, அசைச்சீருக்கு இயற்சீர்த்தன்மை யூட்டினமை காண்க. இதை, ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் பையச் சென்றால் வையந் தாங்கும் என்னும் இசை நிரம்பின செய்யுள்களோடும் ஒப்பிட்டறிக. (2) காலப்பிரிவு ஆங்கிலத்தில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்களுள், ஒவ்வொன்றையும் நந்நான்காகப் பகுப்பர். தமிழுக்கும் இது ஏற்றதாதல் காண்க. நிகழ்காலம் (Present Tense) 1. அவன் வருகிறான் - செந்நிலை (Indefinite). 2. அவன் வந்துகொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous). 3. அவன் வந்திருக்கிறான் - நிறைவு (Perfect). 4. அவன் வந்துகொண்டிருந்திருக்கிறான் - நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous). இங்ஙனங் கரடிவஙககதரங ( Compound Tense) களை ஒரு வினையாகக் கொள்ளா விடின், குறைவு நேர்தல் காண்க. (3) நிகழ்கால வினையெச்சம் (Infinitive Mood) நிகழ்கால வினையெச்சமும் பெயர்நேரி (noun - equivalent) யாய் எழுவாயாதல் கூடும். எ-டு : எனக்குப் பாடத்தெரியும். இதில், பாட என்பது, பாடுதல் அல்லது பாட்டு என்று பொருள்பட்டு எழுவாயாதல் காண்க. இவ் வுண்மை ஆங்கில இலக்கணத்தினாலேயே அறியப்பட்டது. எல்லா மொழிகட்கும் பல நெறிமுறைகள் ஒத்திருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும், அவற்றுள் ஒவ்வொன்றை, அல்லது சிற்சிலவற்றைக் கண்டு பிடித்திருக்கின்றனர்; இன்னும் கண்டு பிடியாதனவும் உள. ஒரு மொழியிற் கண்டுபிடித்திருப்பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும். இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக. தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமு மாவரெனக் கொள்க. பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந் நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும். பார்ப்பனர் தமிழரை வென்ற வகை பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டு களாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்டொகையில் நூற்றுக்கு மூவராகவேயுள்ளனர். முதன்முதல் தமிழ்நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரே யாவர். போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரித்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினாலேயே. அவ்வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ் நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறுகூட்டம், ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப்பற்றலாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப் போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத் திலேயே இல்லை. தமிழர் வேறெவ்வெவ்வகையில் மடம் படினும், போரில் மடம் படுபவரல்லர். கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் அயலரசுகள் வந்து நிலைத்ததேயில்லை. அதன் பின்பும், தமிழர்க்குள் ஒற்றுமையின்மையாலேயே, அயலார் தமிழ் நாட்டைக் கைப்பற்ற நேர்ந்தது. பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள் (1) அரசரையடுத்தல் பார்ப்பனர் தமிழ்நாட்டில் முதலாவது அரசரை வயப்படுத் தினால், பின்பு பொதுமக்கள் தாமே வயப்படுவர் என்று கருதி, அரசரிடத்தில் பாங்கராயமர்ந்தனர். (2) தவத்தோற்றம் பார்ப்பனர் வைகறை யெழுந்து ஆற்றிற் குளித்து, அதன் கரையிலமர்ந்து ஆரிய மந்திரங்களை நெடுநேரம் ஒதிக் கொண்டிருப்பதைத் தமிழர் கண்டு அவர்களை முனிவராகக் கொண்டனர். (3) தமிழ் கற்றல் பார்ப்பனர் தமிழைக் கற்றுத் தமிழாசிரியராகித் தமிழில் நூல்களை இயற்றினதினால், தமிழரால் மிக மதிக்கப்பட்டனர். (4) வடமொழியில் நூலெழுதலும் தமிழ்நூல்களை மொழிபெயர்த்தலும் பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ்நாட்டுக் கதைகளையும் செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வடமொழி யில் மொழிபெயர்த்தும் வைத்துக்கொண்டு, அவ் வடநூல்களை முதனூல் களாகவும் தென்னூல்களை வழிநூல்களாகவும் காட்டினர். வடமொழியில் நூலெழுதலுக்கு ஹாலாய மான்மியத்தையும், மொழி பெயர்த்தலுக்குச் சங்கீத ரத்னாகரம் போன்ற இசை நூல்களையும் காட்டாகக் கூறலாம். (5) தற்புகழ்ச்சி பார்ப்பனர் தங்களைத் தேவர் என்றும், பூசுரர் என்றும் தங்கள் மொழியைத் தேவமொழியென்றும், தாங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்களென்றும், தங்களுக்கொப்பானவர் உலகத்திலேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களிலும் வரைந்து கொண்டனர். அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழியொலிகளும் அதற்குத் துணையாயிருந்தன. (6) மதத் தலைவராதல் பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங் களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களை யிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைகளையும் புனைந்துகொண்டு, தமிழ் மதாசிரியர்களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினை களையும் நடாத்தி வரலாயினர். (7) தமிழைத் தளர்த்தல் பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்களையும் ஆவணங்களையும்21 வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும். பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வடசொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்து விட்டனர். (8) பிரித்தாட்சி பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மை யாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வரணத்தாரையும் முறையே, தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர். கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்), உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற்கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர். பிராமணர் முதலிய நால்வரணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ்வேறாகவே மனு தருமங் கூறுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள பல குலங்களும் தொழில்பற்றித் தொன்று தொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடியுறவாடாத படி செய்தது ஆரிய முறையாகும், இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே (கற்பியல். 3) என்னும் தொல்காப்பிய நூற்பாவாலறியலாம். இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும் உயர்ந்த வேளாளர் என்பாரை. அந்தணர் என்பார் துறவிகளாதலின், அவர்க்குக் கரணமில்லை. தாழ்த்தப்பட்டோர் இன்றும் தாங்களே மண வினை நடத்திவருகின்றனர். அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமை யாகவும் பிறவூர்களில் அவ்வளவு கொடுமையில் லாமலும் நடத்தப்பட்டு வருவதை நோக்குக. பிறப்பால் சிறப்பு : பிரமாவே குலங்களைப் படைத்தார்; ஒவ்வொரு குலுத்தாரும் தத்தம் தொழிலையே செய்தல் வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப் பிறப்பில் மாற்ற முடியாது; குலங்கள் ஒன்றுக்கொன்று மேற்பட்டவை; எல்லாவற்றிலும் உயர்ந்தது பார்ப்பனக்குலம் என்பனபோன்ற கருத்துகளால், மேலோரான தமிழர் பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆரிய வரணவொழுக்கம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டது. கடைக்கழகக் காலத்தில் வேரூன்றத் தொடங்கிய குலப்பிரிவினை வரவர வளர்ந்து 16ஆம் நூற்றாண்டில் முதிர்ந்து விட்டது. பார்ப்பனர்க்கும் பிறகுலத்தார்க்கும் உள்ள தொடர்பு தீண்டாமை (Untouchability), அண்டாமை (Upapproachability), காணாமை (Un-seeability), என முத்திறப்பட்டு விட்டது. இப்போது தீண்டாமை என்று சொல்லப்படுவது, அக்காலத்துக் காணாமையாயிருந்ததே. இடங்கிடைத்த அளவு தம்மை உயர்த்திக்கொள்வது ஆரிய வழக்கம். இதை, பார்ப்பன வுண்டிச்சாலைகளுள், சிலவற்றில் பார்ப்பனருக்குத் தனியிடம் வகுத்தலும், சிலவற்றில் இடமே தராது உண்டி மட்டும் விற்றலும், சிலவற்றில் தீட்டென்று உண்டியும் விற்காமையும் நோக்கியுணர்க. முற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து களவு மணமுறையாலும், இந்தியா முழுதும் வழங்கிய தன்மணப்பு (சுயம்வர) முறை யினாலும், அர்ச்சுனன் பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாணர்க்குத் தமிழரசரிடமிருந்த மதிப்பினாலும், அந்தணரான அப்பூதியடிகள் திருநாவுக்கரசிற்குத் தம் இனத்தாருடன் செய்த சிறந்த விருந்தினாலும். பள்ளர் பள்ளியர் என்னும் வகுப்பார், மள்ளர், மழவர், உழவர், கடையர், காரளர், கருங்களமர் என்னும் பெயர்களுடன், பண்டை நூல்களில் இழிவின்றிக் குறிக்கப்படுவ தினாலும், மக்களின் குலப்பெயர் இயற்பெயருடன் கூடிவழங்கு வது மிக அருகியிருந்ததினாலும், சிற்றூர்களில் இன்றும் பார்ப்பன ரல்லாத பல குலத்தார் முறை செப்பிக் கொள்வதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் குலப்பிரிவினை இருந்ததில்லை யென்று அறியலாம். பார்ப்பனருக்கு உயர்வு, கல்வி, அலுவலர், அதிகாரம், இலவச ஏவல், செல்வம், குலப்பெருக்கம் முதலியன வரண வொழுக்கத் தால் விளைந்த நன்மைகளாகும். கொலைத்தண்டமின்மை, போர் செய்யாமை, போர்க்களத் தினின்றும் விலக்கப்படல் முதலியவற்றால் குலப்பெருக்கமும், கோயிற்றொழில், கொடைபெறல், புரோகிதம், வேள்வி, பட்ட விருத்தி முதலியவற்றால் செல்வப் பெருக்கும் பார்ப்பனருக்கு உண்டாயினவாம். பார்ப்பானில் ஏழையுமில்லை பறையனில் பணக்காரனுமில்லை என்பது பழமொழி. குலத்திற் போன்றே மதத்திலும் பிரிவினை தோன்றிற்று, கடைக்கழகத்தில் சைவர், திருமாலியர், பௌத்தர், சமணர் என்னும் பல மதத்தாரிருந்ததினாலும், வேந்தன் (இந்திரன்) விழாவில் எல்லாத் தெய்வங்கட்கும் படைப்பு நடந்ததினாலும், சேரன் செங்குட்டுவன் சைவனாயும் அவன் தம்பி இளங்கோ வடிகள் சமணராயுமிருந்ததினாலும், அரசர் பல மதக்கோயில் கட்கும் இறையிலி விட்டதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் மதப்பகையுமிருந்த தில்லையென்றறியலாம். (9) வடநாட்டாரை உயர்த்தல் (10) வடநாட்டுக் கதைகளைத் தமிழ்நூல்களிற் புகுத்தல் கற்பிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, கண்ணகி, திலகவதி, புனிதவதி முதலிய பல தமிழ்ப் பெண்மணிகள் கதைகளிருப்பவும், அவற்றை விட்டுவிட்டு, நளாயினி, சாவித்திரி முதலிய வடநாட்டுப் பெண்களின் கதைகளையே புத்தகங்களில் வரைவர். இங்ஙனமே, வில்லுக்குச் சிறந்த ஓரியும், கொடைக்குச் சிறந்த குமணனும், நட்பிற்குச் சிறந்த பிசிராந்தையும், உடம்பிறப்பன் பிற்குச் சிறந்த இளங்கோவடிகளும் தமிழப் பொதுமக்கட்கு மறைக்கப்பட்டுளர். பார்ப்பனர் தமிழரொடு மணவுறவு கொள்ளாமை பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழரொடு மணவுறவு கொண்டதில்லை. முதன் முதலாகத் தமிழ்நாட்டிற்கு வந்த சில ஆரியர் அரக்க மாதரையோ தமிழ மாதரையோ மணந்து பின்பு கைவிட்டதாகத் தெரிகின்றது. காசியபர் மாயையை மணந் ததைக் கந்த புராணத்திலும், விசிரவசு கேகசியை மணந்ததை இராமாயணத்திலும் காண்க. இராமனுஜர் சில தமிழரைப் பார்ப்பனராக்கினரென்று சொல்லப்படுகின்றது. அஃது உண்மையாயிருப்பினும் சிறுபான்மைக் கலப்பையே குறிக்கும். சில இந்தியர் மேனாட்டு மாதரை மணந்திருக்கின்றனர். இதனால் மேனாட்டாரும் கீழ்நாட்டாரும் கலந்துவிட்டனர் எனக் கூற முடியாது. மலையாள நாட்டில் பார்ப்பனர் திராவிடரான நாய மாதருடன் சம்பந்தம் என்னும் தொடர்பு லைத்துக் கொள்கின்ற னர். ஆயினும், அம் மாதரையோ, அவருக்குப் பிறக்கும் பிள்ளை களையோ, அக்கிராகத்திற் சேர்த்துக்கொள்வதில்லை. அவரும் தம் இனத்தார் அல்லது குலத்தாருடனேயே இருந்து வருகின்ற னர். திருவள்ளூவரின் தந்தையாகச் சொல்லப்படும் பகவன் என்னும் பார்ப்பான், ஆதி என்னும் பறைச்சியோடு கூடி இல்லறம் நடத்தினதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. அதிலும், பகவன் ஆதியைக் கைவிட்டோடியதும், பின்பு பலநாட் கழித்து, ஆதி பகவனைக் கண்டு, அவன் என்செயினும் விடாது தொடர்ந்து, தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதும், அதன்பின், அவன் தப்ப வழியின்றித் தனக்கவளிடம் பிறக்கும் பிள்ளைகளை உடனுடன் நீக்கிவிடவேண்டுமென்னும் நிபந்தனையின்மேல், அதற்கு வெறுப்புடன் இசைந்ததும் அறியப்படும். பார்ப்பனர் இதுவரை தங்களை எல்லா வகையிலும் பிரித்தே வந்திருக்கின்றனர். இன்றும் அங்ஙனமே. ஆயினும், தற்கால அரசியல் முறைபற்றி, ஆரியர் - திராவிடர் என்பது மித்தை யென்றும் இருவரும் ஒருவர் என்றும் கூறிக்கொள் கின்றனர். இது சொல்லளவேயன்றிச் செயலளவிலன்று. பார்ப்பனர் மதிநுட்பமுடையவர் எனல் பார்ப்பனர் இதுபோது மதிநுட்பமுடையவரெனல் உண்மையே ஆனால், அது எதனால் வந்தது? ஐயாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருந்து வருதலால் பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்ப வாய்ந்துள்ளது. குலவித்தை கல்லாமற் பாகம் படும் என்றார் முன்றுறையரைய னார். மகனறிவு, தந்தையறிவு என்றபடி ஒரு தலைமுறையி லேயே குலக் கல்வித்திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙன மாயின், 5000 ஆண்டுகட்கு அத் திறமை எவ்வளவு பெருகியிருக்க வேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டுகளாக ஆரிய வரண வொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்த வர்கள். ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண்டொரு நூற்றாண்டு களாக உயர்தரக் கல்வி கற்று வருகின்றனர். அதற்குள் எவ்வளவோ முன்னேற்ற மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம் முன்னோரின் நுண்ணறிவைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக் கல்வியால் அறிவிற் சிறந்ததாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று. தமிழர் உயர்தரக் கல்வியிழந்ததைப் பின்வரும் குறிப்பால் அறிக. 1610 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் நாள் ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili) எழுதிய கடிதம் நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது. `மதுரையில், 10,000 மாணவர்க்குமேல் இருக்கின்றனர். அவர்கள் பல வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 300 வரையுளது. அவர்களெல்லாரும் பிராமணர்களே; ஏனென்றால், உயர்தரக் கலைகளைக் கற்க அவர்களுக்குத்தான் உரிமையுண்டு. ..... மாணவரே தங்கள் ஊணுடைகளைத் தேடிக்கொள்வதாயிருந்தால். அவர்கள் படிப்புக் கெடுமென்று பிசுநகரும் பெரிய நாயக்கரும் சிறந்த மானியங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றின் வருவாய் ஆசிரியன்மார் சம்பளத்திற்கும், மாணாக்கர் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமானது இங்ஙனம், தமிழ்நாட்டில், ஆரியக்கலை செழிக்கவும் தமிழ்க் கலை .......... சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம் இடமிருந்தே குற்றேவல் செய்தோ மில்லை என்னசென்மம் எடுத்துலகில் இருக்கின் றோமே என்று புலவர் வருந்துமாறு வறண்டது. இங்ஙனம் பார்ப்பனர் உயர்தரக் கல்வியைத் தங்களுக்கே வரையறுப்பது, தங்களைப் பிறப்பிலேயே உயர்ந்தவராகவும், பிரமாவே தங்களைக் கல்விக்குரியவராகப் படைத்ததாகவும், கல்லாத் தமிழரிடம் காட்டி அவர்களை என்றும் அடிமைப் படுத்தற்கே. பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறந்திலர். றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில ‘t’ போல, வன்மையாய் ஒன்றியொலிக்குமே யன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (Vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது ஆங்கிலத்திலுள்ள ‘nd’ என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று `ற்ற, ன்ற என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்து விட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரி களாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ் வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழக் கிறிதவர்களுங்கூட, ஆங்கில வழியாய்க் கற்றதினால் அத் தவறான முறையையே பின்பற்றுகின்றனர். (பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல்லின மெய்களைக்கூடச் சரியா யறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெழுத்துகளோடும் ஒப்பிட்டுக் கூறுவதால் அறியலாம். தமிழிலுள்ள வல்லின மெய்கள் தமிழுக்கு வல்லினமாயினும், வடமொழி வல்லினத்துடன் ஒப்புநோக்க, சற்று மெல்லியவேயாகும். வடமொழிக் க ச ட த ப க்கள் தமிழ்க் க ச ட த ப க்களின் இரட்டிப் பாதலை ஒலித்துக் காண்க. பார்ப்பார் பார்ப்பார், அல்லது பார்ப்பனர் என்னும் பெயருக்கு மறை நூல் களைப் பார்ப்பவர் என்பது பொருள். ஆரியர் வருமுன்பே, தமிழருக்கு மறைநூல்கள் இருந்தன. அது பின்னர்க் கூறப்படும். தமிழ் மறைநூல்களைப் பார்ப்பதும் வழிபாடு, திருமணம் முதலிய வற்றை நடத்துவதுமே தொழிலாகக் கொண்டு, பார்ப்பனர் என்னும் பெயருடன் ஒரு குலத்தார் முன்னமே யிருந்து, பின்பு ஆரியப் பிராமணர் வந்தபின் தம் தொழிலை யிழந்து விட்டனர். ஆரியப் பிராமணர் தமிழ்ப் பார்ப்பாரின் தொழிலை மேற் கொண்டபின், தாமும் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின், வடமொழிப் பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப் பெயர் வழங்கிவரக் காரணமில்லை. தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்று முன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பறையர். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடு தின்பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக்கழகக் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறி யிருப்பதால் அறியப்படும். பாணருக்குத் தையல் தொழிலு முண்டு. பாணருக்குச் சொல்லுவதும்... தை... என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொது வாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்டபின், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி என்னும் தெலுங்கப் பெயரும் இன்று வழங்கி வருகின்றன. இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்க. ஐரோப்பாவிலிருந்து கிரேக்கரும் ரோமரும் தமிழ்நாட்டிற்கு வந்து, குலமுறையாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யாமை யால், யவனர் என்னும் கிரேக்கப் பெயராலேயே அழைக்கப் பட்டனர். தமிழ்நாட்டில் இதுபோது, பார்ப்பனருக்குத் தொழிலால் நெருங்கியுள்ளவர் புலவர், பண்டாரம், குருக்கள், பூசாரி, போற்றி, உவச்சன், நம்பி என்று கூறப்படும் தமிழக் குலத்தாராவர். இவருடைய முன்னோரே, ஒருகால் தமிழப் பார்ப்பனராயிருந் திருக்கலாமோ என்று, இவர் பெயராலும் தொழிலாலும் ஐயுறக்கிடக்கின்றது. ஐயர், அந்தணர் ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு ஐ என்பது பகுதி. ஐ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஓர் ஒலிக்குறிப்பு இடைச்சொல். இன்னும், வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து, ஐ என்பது தமிழர்க்கு, சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு. ஐவியப் பாகும் (தொல். உரி. 89) என்பது தொல்காப்பியர். ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத்தக்க பெரியோன். வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவேயிருக்கும். ஒருவனுக்குப் பெரியோராயிருப்பவர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன், மூத்தோன் எனனும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன் என்னும் பெயர் குறிப்பதாகும். தந்தை, ஆசிரியன், மூத்தோன் என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில், sire என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஐயன் என்பதை ஒப்பிடலாம். ஐயன் என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாகக் கடவுளை யும், ஆர் விகுதிபெற்றுச் சாத்தனாரையும், பெண் பாலீறு பெற்றுக் காளியை அல்லது உமையையும்; நூல் வழக்கில் பெரியோன் என்னுங் கருத்துப்பற்றி அரசனையும், தெய்வத் தன்மையுள்ளவன் என்ற கருத்துப்பற்றி முனிவனையும், பின்பு அவனைப் போல அறிவு புகட்டும் ஆசிரியனையும்; உலக வழக்கில், பறையர் என்னும் குலத்தார்க்குத் தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில் ஒன்றைப்பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரியோன் என்னு மிவரையுங் குறிப்பதாகும். அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் பெரியோர், ஐயன் என்னும் பெயர் ஐங்குரவர்க்கும் பொதுவாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும் பொரு ளையே அடிப்படையாகக் கொண்டதாகும். ஆசிரியன், அல்லது குரு என்னும் பொருளில், கிறிதவப் பாதிரிமாரும் ஐயர் என்றழைக்கப்படுகின்றனர். பார்ப்பனருக்கு ஐயர் என்னும் பெயர் முனிவச் என்னும் கருத்துப்பற்றி வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த காசியபன் போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒருபுடையொத்தமை பற்றி ஐயர் எனப்பட்டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்றவர்க்கும், தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனருக்குமாக வழங்கி வருகின்றது. ஆங்கிலேயர் வருமுன் தமிழ்நாட்டிலாண்ட பல தெலுங்கச் சிற்றரசர்க்குத் துரைகள் என்று பெயர். பாஞ்சாலங்குறிச்சித் துரை என்ற வழக்கு இன்னுமுள்ளது. ஆங்கிலேயர் முதலாவது கீழிந்தியக் கும்பனி (East India Company) அதிகாரிகளாய்த் தமிழ் நாட்டில் ஆட்சியை மேற்கொண்டபோது துரைகள் எனப்பட்டனர். பின்பு அப் பெயர் மேனாட்டார் எல்லார்க்கும் பொதுப் பெயராகி விட்டது. ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடைவில் அக் குலத்தார்க்கே பொதுப் பெயராதல் இயல்பு. நாட்டாண்மையும் ஊராண்மை யும்பற்றி யேற்பட்ட நாடன் (நாடான், நாடார்), அம்பலகாரன், குடும்பன் என்னும் தலைவர் பெயர்கள் நாளடை வில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே பொதுப்பெயர்களாகிவிட்டன. வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர் முன்னோருள் ஒருவன் ஒர் அரசனிடம் அமைச்சனா யிருந்தமைபற்றி, மந்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஐயர் என்னும் பெயரும் பார்ப்பனருக்கு வழங்குவதாகும். ஐயன் என்னும் தனித் தமிழ்ப்பெயரை ஆரியன் என்னும் ஆரியப் பெயரின் சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ஆரியன் என்னும் பெயருக்கு வணங்கப் படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்பதினாலும், தமிழ்நாட்டிற் பிற்காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதினாலும், ஆரியன் என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர்போல, பெரியோன் என்னுங் கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று. ஆரியற் காக வேகி என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக யார்கொல் அளியர் தாமே யாரியர் என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும், முறையே, வணங்கப்படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும் பெயரை வழங்கியிருப்பது, வடநூற் கருத்துப்பற்றிய அருகிய நூல்வழக்கே யன்றி, ஐயன் என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ் நாட்டுலகவழக்கன்று. ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதைவாயின் இவ்வொரே பெயரைத் தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும் பார்ப்பார்க்கு மிகச் சேயவருமான பறையர் அங்ஙனமாகாமையின், ஐயன் என்னும் சொல் ஆரியன் என்னும் சொல்லின் சிதைவன்று. ‘Ar’ (to plough) என்பதை ஆரியன் என்னும் பெயருக்கு வேராகக் கொள்வர் மாக்சுமுல்லர். அந்தணன் என்னும் பெயரும் ஐயன் என்னும் பெயர் போன்றே பார்ப்பனருக்கு அமைந்ததாகும். ஆனால், இன்னும் நூல் வழக்காகவேயுள்ளது. அந்தணன் என்பதை அந்தம்+அணன் என்று பிரித்து, மறை முடிபு (வேதாந்தம்)களைப் பொருந்துகின்றவர் என்று பொரு ளுரைப்பர் வடமொழிவழியர்; அம் + தண்மை + அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்று பொரு ளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள் கொள்ளினுங் கூட.அணவு என்னும் சொல் அண் என்னும் வேரிற்பிறந்த தனித்தமிழ்ச் சொல்லாதலின், அந்தணன் என்பது இருபிறப்பி (Hybrid) யாகும். அந்தணன் என்னும் பெயர் அந்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவிலும் வழங்கும். அந்த ணாளர்க் குரியவும் அரசர்க் கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே (தொல். மர. 68) அந்த ணாளர்க் கரசுவரை வின்றே (தொல். மர. 80) என்று கூறியிருப்பதால், பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாட்டில் அரசுவினையிருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அந்தணர் என்னும் பெயர், முதலாவது, தனித்தமிழ் முனிவரைக் குறித்தது. அந்தணர் என்னுஞ் சொல்லின் (அழகிய குளிர்ந்த அருளை யுடையவர் என்னும்) பொருளுக்கேற்ப, அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்று அந்தணர்க் கிலக்கணங் கூறினதுமன்றி, அதைத் துறவிகளைப்பற்றிக் கூறும் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப (செய். 1711) என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே, நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள். 28) அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும். அதனால்தான், அருளுடைமை, புலான்மறுத்தல், கொல்லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்திற் கூறாது துறவறத்திற் கூறினர். பிராமணருக்கு அருளில்லையென்பது, மனுதரும நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப்படும். உணவுக்கு வழியற்ற வரையும், ஒழுக்கங் குன்றியவரையுங்கூடக் கூசாமல் முனிவ ரென்று கூறுவது ஆரிய வழக்கம். அஜீகர்ததரென்னும் முனி பசியினால் வருந்தி, சுநச்சேபன் என்னும் தம் மகனை, வேள்வியிற் பலியிடும்படி நூறு ஆவிற்குத் தாமே விற்றார். பசிக்கு மாற்றஞ்செய்தபடியால், அதனால் அவருக்குப் பாவம் நேரிடவில்லை என்று மனுதரும நூல் (10:105) கூறுகின்றது. பிராமணருக்குக் கலியாணத்திற்கு முந்திய நிலை பிரமசரிய மென்று பிரிக்கப்படுவதனாலும், துறவறத்தின் முற்பகுதியான வானப் பிரத்தத்தில் குடும்ப வாழ்க்கை கூறப்படுவதனாலும், பிராமணர் ஊருக்குப் புறம்பாகவிருப்பின், எந்த நிலையிலும் தம்மைத் துறவிகளாகக் கூறிக்கொள்ள இடமுண்டு. தமிழ முனிவரான அந்தணர், சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றலுள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர் களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் திருக்குறட் பொருட் பாலில், பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர்கள் போர், வேட்டை முதலியனபற்றிச் சென்றபோது. அவர்கட்குத் துணையாயிருந்த அந்தணரே அரசு செய்யக்கூடும். இதையே அந்தணாளர்க் கரசு வரை வின்றே என்னும் நூற்பா குறிப்பதாகும்.9 வரைவின்றே என்பது விலக்கப்படவில்லை என்று பொருள்படுமேயன்றி, என்றுமுரியது என்று பொருள் படாது. இரண்டாம் குலோத் துங்கச் சோழனுக்கு ஒட்டக்கூத்தர் அமைச்சராயிருந்து, அவன் மணஞ்செய்த புதிதில் சிறிது காலம் அவனுக்குப் பதிலாய் ஆண்டார். இதனால், அரசுரிமை புலவர்க்கெல்லா முண்டென்று கொள்ளுதல் கூடாது. ஆனால், அதே சமையத்தில், அது அவர்க்கு விலக்கப்படவில்லை என்றும் அறியலாம். தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த ஒருசில ஆரியப் பிராமணர், தமிழ அந்தணர் போலத் துறவிகளாகத் தோன்றியமையால் அந்தணரோடு சேர்த் தெண்ணப்பட்டார். இதை, நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல். 160) என்பதால் அறியலாம்.10 இந் நூற்பாவிற் குறிக்கப்பட்ட நூல் முதலிய நான்கும் ஆரியர்க்கேயுரியன. தமிழ முனிவர் உயர்ந்த நிலையினராதலின் இத்தகைய பொருள்களைத் தாங்கார். மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை (குறள். 245) ஆரியருள், முனிவர் போன்றவர் அந்தணர் என்றும், பிறரெல்லாம் பார்ப்பாரென்றுங் கூறப்பட்டனர். ஆரிய முனிவரை, வீரமா முனிவர் (Beschi), தத்துவபோதக சுவாமி (Robert de Nobili) என்னும் மேனாட்டாருடன் ஒப்பிடுக. தொல்காப்பியத்தில், பார்ப்பார் அந்தணரினின்றும் வேறாகவே கூறப்படுகின்றனர். அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் எங்கும் கூறப்படவில்லை. இதனால், ஆரியருட் பெரும்பாலார் அந்தணராகக் கொள்ளப்பட வில்லை யென்பதையறியலாம். பிறப்பால் மட்டும் பிராமணனாயுள்ளவன் பார்ப்பான் என்றும், தொழிலாலும் பிராமணனாயுள்ளவன் அந்தணன் என்றும் குறிக்கப்பட்டதாகச் சிலர் கொள்கின்றனர். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்று தொல்காப்பியத்திலும், வேளாப் பார்ப்பான் என்று அகநானூற்றிலும் குறிக்கப்படுவதால், அது தவறாதல் காண்க. மேலும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் நூற்பாவில், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் என்று சித்தரும், நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் என்று தவத்தோரும் பார்ப்பாரினின்றும் வேறாகக் குறிக்கப் படுதல் காண்க. இதனாலும், பார்ப்பனர் இல்லறத்தார்க் கொப்பவே எண்ணப்பட்டதை அறியலாம். பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டன ரேயன்றி, அவர் தமிழரே என்னுங் கருத்துப்பற்றி யன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக் குறிப்பின், ஐரோப்பியரும், சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ? அங்ஙனமே தொல்காப்பியர் காலப் பார்ப்பனருமென்க. மேலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல் காப்பிய மரபியலிற் கூறியவை, மருத நகரில் உழவர் குலத்தினின் றும் முதன்முதல் தோன்றிய நாற்பெரும் பிரிவுகளேயன்றிப் பிற் காலத்துத் தோன்றிய பல சிறுசிறு குலங்களல்ல. தொல்காப்பியர் காலத்தில், மருத நகரில் பல குலங்களிருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. இப் பிரிவு களுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார், அயலாராகவும் தமிழர் குல முறைக்குப் பொருந்தாமலுமிருத்தலின். பார்ப்பார் (முனிவரான) அந்தணரு மல்லர், அரசருமல்லர், வணிகருமல்லர், வேளாளரு மல்லர். அந்தணர் முதலிய நாற்பாலும் மரபியலிற் கூறப்பட்டது தமிழ் முறைபற்றியே என்பதை, வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல தில்லென மொழிப பிறவகை நிகழச்சி (தொல். மரபு. 76) வேந்துவிடு மொழிலிற் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே (தொல். மரபு. 77) என்னும் நூற்பாக்களான் உணர்க. வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை (மேற்படி. 73) என்னும் நூற்பாலில், வைசியன் என்னும் வடசொல் வந்திருப்பது, அது ஆரியமுறை என்பதற்குச் சான்றாகாது. நூலைச் சூத்திர மென்றும், நினைவை ஞாபகம் என்றும், சிலவிடத்து மொழி பெயர்த்து ஆரியச்சொல்லாற் கூறுவது தொல்காப்பியர் வழக்கம். பழமலை (அல்லது முதுகுன்றம்) என்னும் பெயரை விருத்தாசலம் என்றும், வட்டு (வட்டமான கருப்புக்கட்டி) என்னும் பெயரைச் சக்கரை (சக்கரம்) யென்றும் மொழிபெயர்த்ததினால், விருத்தா சலம் ஆரிய நகரமென்றும், வட்டுக் காய்ச்சுந்தொழில் ஆரியருடைய தென்றும் ஆகாதது போல, வைசியன் என்னும் வடமொழிப் பெயரினாலும், தமிழ வணிகக்குலம் ஆரிய வைசியக்குலமாகி விடாது. முனிவரைக் கடவுளரென்றும், பகவரைன்றும், கடவுளோ டொப்பக் கூறுவது பண்டைத் தமிழர் வழக்கம். பார்ப்பனர் தங்களை அந்தணராகக் காட்டிக் கொண்டபின், தமிழர் தங்களைச் சாமி என்று கடவுட்பெயரால் அழைக்குமாறு செய்து விட்டனர். அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. பாரதக் காலம் (தோரா. கி.மு. 1100 - 1000) பீடுமன் பரசுராமனிடம் விற்கலை பயின்றவன் என்று சொல்லப் படுவதால், பாரதக் காலம் இராமாயணக் காலத்திற்கு இரு தலைமுறையே பிற்பட்டதாகும். பாண்டவரும் கௌரவரும் திங்கள் மரபைச் சேர்ந்தவர். வடநாட்டுத் திங்கள் மரபு, பாண்டியன் கங்கைக்கண் நிறுவிய படிநிகராளி வழியினதே. பாண்டவரின் முன்னோர் புதன் (அறிவன்), புரூரவன், ஆயு, நகுடன், யயாதி, பூரு, துடியந்தன், பரதன், அத்தி, குரு, சந்தனு, பீடுமன், விசித்திரவீரியன், திருதராட் டிரன், பாண்டு என்போர். பீடுமன் கௌரவ பாண்டவரின் பாட்டனும், திருதராட்டிர பாண்டுவர் அவரின் தந்தைமாரு மாவர். பாரதக் காலத்திற் பெயர்பெற்றவனும் பாரதப் போரை இயக்கியவனும் கண்ணன் ஆவன். அவன் தென்னாட்டு ஆயர் மரபுப்படி, கோசல நாட்டரசன் மகள் சத்தியை என்னும் நப்பின்னையை ஏழ் ஏறுதழுவி மணந்தான். அவன் மதுராவில் ஆண்டுகொண்டிருந்த போது, காலயவனன் என்பவன் பெரு மிலேச்சப் படையுடன் வந்து அந்நகரை முற்றுகை யிட்டான். அதை முன்னரே அறிந்த கண்ணன், குசராத்தின் மேற்கில் அரபிக்கடலிலுள்ள ஒரு தீவில் துவாரகை (துவரை) என்னும் நகரையமைத்து, அதற்குத் தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். யவனம் என்பது கிரேக்க நாட்டிற்கொரு பெயர். யவனன் கிரேக்கன். சின்ன ஆசியாவில் கிரேக்க நாடுகளிருந்தமையால், அவற்றையடுத்து வாழ்ந்த அரபியர்க்கும் அவரையொத்த மூர் வகுப்பாரான வடஆப்பிரிக்கர்க்கும், அப்பெயர் வழங்கிற்று. அதனால், உண்மையான கிரேக்கரை வெள்ளை யவனர் என்றும், அரபியரும் மூராருமான சோனகரைக் காலயவனர் என்றும், நிறம் பற்றி வேறுபடுத்திக் கூறியதாகத் தெரிகின்றது. காலம் கருப்பு. சுன்னத்து என்னும் வழக்கம்பற்றிச் சோனகர் எனப் பெயர் பெற்றனர் போலும்! மிலேச்சர் பெலுச்சியர். பெலுச்சியர் நாடே பின்னர்ப் பெலுச்சித்தானம் (Baluchistan) எனப்பட்டது. மாவலி என்னும் சேரவேந்தன் மகனான வாணன், வேம்பாய்க்கு (Bombay) வடக்கே மேல்கரையடுத்த சோணிதபுரம் என்னும் நகரி லிருந்தாண்டு வந்தான். அவன் மகள் உழை கண்ணன் பேரனான அநிருத்தனொடு களவொழுக்கம் பூண்டு வந்தாள். அதுகண்ட வாணன் அநிருத்தனைச் சிறையிட்டான். அதனால் கண்ணன் படையொடு வந்து பொருது வாணனைத் தோற்கடித் தான். உடனே வாணன் அநிருத்தனையும் தன் மகளையும் கண்ண னிடம் ஒப்புவித்து மன்னிப்புப் பெற்றான். அன்று அநிருத்தன் தந்தையான காமன் (பிரத்தியும்நன்) ஆடிய வாகைக் கூத்து, பேடி என்னும் புறநட வகையாகும். சுரியற் றாடி மருள்படு பூங்குழற் பவளச் செவ்வாய்த் தவள வாணகை யொள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற் காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை யகன்ற வல்கு லந்நுண் மருங்கு லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணில மளந்தோன் மகன்முன் னாடிய பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும் (மணி. 3 : 125) என்று பாடினார் சீத்தலைச்சாத்தனார். பேடிக் கூத்து முன்னரே தமிழகத்தில் ஆடப்பட்டு வந்தது. முதற்கடல்கோட்குப்பின் குமரி நாட்டினின்று வடக்கிற் சென்ற ஆயர் வழியினனே கண்ணனாத லால், அவன் மகன் அந்நடத்தை முன்னோர் வாயிலாக அறிந்திருந்து ஆடினான். வாணன் நகர் குசராத்து என்னும் குச்சர நாட்டிலிருந்ததனால், அற்றைச் சேரநாடு அதுவரை பரவியிருந்தமை அறியப்படும். இதனால், முழுகிப்போன குமரிநாடு முழுதும் பாண்டிநாடா யிருந்தகாலத்து, இந்திய நிலமுழுதும் குமரியாற்றிலிருந்து பனிமலைவரை, கிழக்கிற் சோழநாடும் மேற்கிற் சேரநாடுமாக இருந்ததென்னும் உண்மையும் புலனாகும். குமரிநாடு முழுகிய பின்பும், இந்தியா முழுதும் மூவேந்தராட்சிக்குட்பட்டு முந்நாடா யிருந்த நிலைமையையே, நாரதன் மூவுலகுலாவி (திரிலோக சஞ்சாரி) என்னும் வழக்குணர்த்தும். மூவுலகென்றது மூவேந்தர் நாடுகளையே. திரிபுவன தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி, மூவுலகாளி, என்று சோழர் விருதுப் பெயர்கள் கொண் டிருந்தமை காண்க. அகத்தியர் இராமன் காலத்திலேயே தமிழகம் வந்து பொதிய மலையில் தங்கி விட்டதனால், அவர் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்ம ரயும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டுபோந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கினார் என்று, நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய எழுத்ததிகார உரை முகத்திற் கூறியிருப்பது பொருந்தாது. இதிலிருந்து அறியக் கூடியதெல்லாம், கண்ணன் காலத்தில் மராட குச்சரநாடுகளில் தமிழ வேளிர் குடியிருந்தனர் என்பதே. இனி, அகத்தியர் இராவணனைத் தம் இசைவலிமை யால் அடக்கித் தமிழகம் புகாமற் செய்தனர் என்பதும், இராமாயணக் கதையொடு முரண்படுவதாகும். அருச்சுனன் (மருதன்) தென்னாட்டுத் திருநீராட்டு வருகை அருச்சுனன் குமரிநீராடத் தென்னாடு வந்தபோது பாண்டியன் (சித்திராங்கதன்) மணவூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டிருந்தான். அங்குப் பாண்டியனின் விருந்தினனாயிருந்த அருச்சுனனுக்கும் பாண்டியன் மகள் சித்திராங்கதைக்கும் இடையே காதல் நேர்ந்ததனால், இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்திராங்கதன், சித்திராங்கதையென்பன, பாரத ஆசிரியர் வேண்டுமென்றே இட்ட வடசொற் கட்டுப்பெயர்கள். மணவூர் நிலையான தலைநகரன்மையின், அங்குத் தமிழ்க் கழகம் ஏற்படவில்லை. வடமொழியாளர் மணவூரை மணலூர் என்று திரித்து, சிக்காதாபுரி என்று மொழிபெயர்த் திருப்பதாகத் தெரிகின்றது. பாரதப்போரில் முத்தமிழ் வேந்தருங் கலந்து கொண்டனர். சோழபாண்டியர் பாண்டவருக்குத் துணை நின்று பொருதனர். சேரன் உதியஞ் சேரலாதன் நடுநிலையாயிருப்பதுபோல் ஒரு பக்கமும் சேராதிருந்து, இரு பக்கப் படைகட்கும் போர் நிகழ்ந்த பதினெண் நாளும் சோறு வழங்கி, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்னும் பெறற்கரும் பெரும்பெயர் பெற்றான். யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந வான வரம்பின் நீயோ பெரும அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறம். 2) என்று முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியிருத்தல் காண்க. பாரதப்போர் முடிந்தபின், வியாசர் மகாபாரதம் என்னும் வட மொழிப் பாவியத்தை இயற்றினார். அது பின்னர் மேன்மேலும் விரிவாக்கப்பட்டது. வியாசர் பதினெண் புராணங்களையும் இயற்றியதாகச் சொல்லப்படுகின்றது. பாரதப்போருக்குப் பின்னரே அதர்வ (அதர்வண) வேதம் தோன்றி, வேதம் நான்கென வியாசரால் வகுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அதனாலேயே அவர் வேத வியாசர் என்று பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. முந்தின வேதங்களிற் சொல்லப்படாத பல்வேறு உலக வாழ்க்கைச் செய்திகளும், ஆரிய ஒழுக்க முறை களும், ஆக்க வழிப்பு மந்திரங்களும், சாவேள்வியும், சில இருக்கு வேத மந்திரங்களுடன் சேர்த்து அதர்வ வேதத்திற் கூறப்பட் டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. பேய் மந்திரங்களிலும் செய் வினையிலும் பற்றும் நம்பிக்கையுங் கொண்ட கல்லா மாந்தரைக் கவர்தற்கு, அதர்வ வேதம் தொகுக்கப்பட்டது போலும்! பகவற் கீதை கண்ணபிரானாற் சொல்லப்பட்டதன்று; பத்துத் தோற்றரவு வகுப்பும் அத்துவைதம் என்னும் இரண்டன்மைக் கொள்கையும் தோன்றிய பின்னரே, ஒருவரால் இயற்றப்பட்டு மேன்மேலும் விரிவாக்கப்பட்டு வந்திருத்தல் வேண்டும். சாலோமோன் (கிமு. 1034-980) என்னும் யூதவரசன், பாரதக் காலத்தில் தென்னாட்டினின்று மயில் குரங்கு தங்கம் முதலிய பொருள்களைக் கலங்களில் தருவித்தான். மயில் தமிழகக் குறிஞ்சி நிலப் பறவை. தோகை என்பது அதன் சினையாகுபெயர். அதற்கு அழகுதருவது அதன் தோகையே. தோகை - Arab. தாவூ, தவ, Gk. தவோ, L. பவோ, E. பீ (Pea), peacock (மயிற்சேவல்). கப்பு மரக்கிளை. குரங்கு மரக்கிளையில் வாழ்வது. கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப. (தொல். 1512). கப்பு - கப்பி (குரங்கு) - Skt. கபி, Gk. கேப்போ, Heb. கோப் (kof), E. (ape). பொன் கொங்குநாட்டில் மிகுதியாக விளைந்தது. பொன்படு கொண்கான நன்னன் நன்னாட் டேழிற் குன்றம் பெறினும் (நற்.391) உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் .............................................................................................................. இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற் பொன்படு மால்வரைக் கிழவ (புறம். 201). என்பன, சாலோமோன் கப்பல்கள் பொன் ஏற்றிச் சென்ற உப்பரா (Ophir) என்னும் மேல்கரைத் துறைமுகத்திற்கு, அடுத் துள்ள கொண்கானத்திலும் கொங்கிலும் பொன் விளைந்தமை கூறுதல் காண்க. பாரதக் காலத்தில் ஆரியப் பூசாரிகள் வடஇந்தியா முழுதும் பரவியிருத்தல் வேண்டும். அதன்பின் அந்நிலப்பகுதிக்கு ஆரியா வர்த்தம் என்னும் பெயருண்டாயிற்று. வங்க நாட்டையடைந்து காளிக் கோட்டத்தைக் கண்டபின், காளிவணக்கத்தை மேற் கொண்டு, காளி கோயிற் பூசாரியரு மாயினர். பாரி பாரி: பர - பார் - பாரி. பாரித்தல் = பரப்புதல், விரித்தல். பாரி - பரி (வ. sphar). பாரி கோடு விளையாட்டு I. நாலாளம் பாரி ஆடுகருவி : ஏறத்தாழ நாற்கசச் சதுரமான ஒர் அரங்கு கீறப்படும். ஆடுவார் தொகை : இதை ஆட எண்மர் வேண்டும். ஆடிடம் : இது பொட்டலிலும் அகன்ற முற்றத்திலும் ஆடப் பெறும். ஆடுமுறை : நந்நான்கு பேருள்ள இருகட்சி அமைக்கப்படும். உடன்பாட்டின்படியோ, திருவுளச்சீட்டின் படியோ, பிறவகைத் தேர்தற்படியோ, ஒரு கட்சியார் அரங்கிற்குள் நிற்க, இன்னொரு கட்சியார் பக்கத்திற்கொருவராகக் கோட்டின்மேல் நின்றுகொள் வர். உள்நிற்பார் கோட்டின்மேல் நிற்பாரால் தொடப்படாமல் வெளியேற வேண்டும். அங்ஙனம் ஒருவன் வெளியேறிவிடினும், உள் நிற்பார்க்கு வெற்றியாய் ஆட்டை முடிந்துவிடும். முதலில் வெளியேறுபவன் கோட்டின்மேல் நிற்பாருள் ஒருவனால் தொடப்பட்டுலிடின், மறிப்பார்க்கு (அதாவது கோட்டின் மேல் நிற்பார்க்கு) வெற்றியாய் ஆட்டை முடியும். அதன்பின், மறிப்பார் உள்நிற்பாராகவும் உள்நிற்பார் மறிப்பாராகவும் மாறவேண்டும். II. எட்டாளம் பாரி இது எண் கசச் சதுரங் கீறிப் பதினாறுவரால் ஆடப்படும். எண்மர் உள்நிற்க, எண்மர் பக்கத்திற் கிருவராகக் கோட்டின்மேல் நின்று மறிப்பர். நாலாளம் பாரியும் எட்டாளம் பாரியும் ஆடுமுறை யொன்றே. பாரிக்கோடு (அல்லது பாரிகோடு) என்னும் விளையாட்டு, பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த தைக் குறிக்கலாம். பால் பகு - பகல் - பால் = பகுதி. நூற்பெரும் பகுதி. (தி.ம. 59). பாலியல் தெரிப்பு மறஞ் சிறந்த ஆடவரையே பெண்டிர் மணக்கும் ஏற்பாட்டை, பாலியல் தெரிப்பு (sexual selection) என்பர் டார்வின் பேரறிஞர். (த.தி. 5). பாவி பாவம் (வ) செய்தவன் பாவி (வ) கரிசு(பாவம்), தரிசன்(பாவி) - ஆண்பால் கரிசி(பாவி) - பெண்பால் என்பன தென்சொற்கள். (தி.ம. 1042). பாவினம் வடமொழிக்கும் தென்மொழிக்குமுள்ள இயைபுபற்றிய திரிபுணர்ச்சிகளுள், பிற்காலத் தமிழ்நூல்களிற் பெருவழக்கான பாவினங்கள் வடமொழி யாப்பு வழிப்பட்டன வென்பது மொன்றாம். அஃது எத்துணை உண்மை? துறை தாழிசை விருத்தமென்னும் மூவகைப் பாவினங்களுள் விருத்த மொன்றே வடமொழிப் பெயரால் வழங்குவதாகும். அஃதூஉம் பெயரான் மட்டும் வடமொழியே யன்றி யாப்பா னன்று. மூவகைப் பாவினங்களுள் துறை தாழிசை யென்னு மிரண்டுந் தமிழாயிருக்க, ஏனையொன்று மட்டும் வடமொழியா யிருத்தல் எங்ஙனம்? ஏனை மொழிகட்கெல்லாமில்லாத பரந்த யாப்பிலக்கணம் தமிழிலிருக்கவும், வடமொழியாப்பை வேண்டிற்றென்றல் விந்தையிலும் விந்தையே, வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும் என்றார் சிவஞான முனிவரரும். ஆங்கில யாப்புப் பலவகைப் பாக் கூறுமேனும் தமிழ்போல அத்துணைப் பரந்துபட்டதன்று. ஒரு மொழியானது காலஞ் செல்லச் செல்ல, அவ்வக் காலத்து மக்கள் இயல்பிற்கும் அறிவிற்கு மேற்றவாறு இலக்கியத்தினும் இலக்கணத்தினும் திரிதல் இயல்பே. அங்ஙனம் தமிழ் யாப்பும் சங்க காலத்திற் பாவாயிருந்து பிற்காலத்தில் பாவினமாகத் திரிந்தது. எல்லாப் பாவினங்களும் கலிப்பாவினின்றே தோன்றியதாகும். வெண்பா, ஆசிரியப்பா என்னு மிரண்டும் பெரும்பாலும் வரம் பிறவாதன. வஞ்சிப்பாவும் மருட்பாவும் கலப்புப் பாக்களேனும், அவையும் அவற்றுக் கோதியவாறு ஒருவகை வரம்புபட்டனவே. ஆனால், கலிப்பாவோ ஒரு கட்டின்றி எல்லாவடியானும் எல்லா வோசையானும் பற்பல வுறுப்புப் பெற்று வரம்பிகந்து வருவ தாகும். அதனுள்ளும் கொச்சகக் கலியோ ஏனைக் கலிகட்குரிய சீரும் எல்லையும் இகந்து, தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது ஆயும், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்று (தொல்.சொல்.148) வதாயும் பற்பலவாற்றான் மிக்குங் குறைந்துந் திரிந்தும் வருவ தாகும். கொச்சகக்கலியுள் ஒருவகையே பரிபாடலென்க. இற்றைத் தமிழ்நூல்கட்கெல்லாம் முன்னூலாகிய தொல் காப்பி யத்தில் பாவினம் கூறப்படாவிடினும், அவற்றின் தோற்றத்திற்குக் காரணமான இயல்களை ஆங்காங்குக் காணலாம். துறை : துறையென்பது தொல்காப்பியத்துள், வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே என ஒருவகைப் பாடாண் செய்யுட்குப் பெயராக வந்துள்ளது. அது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும். அது கடவுள் வாழ்த்துப்பற்றி வரும் ஒருவகைக் கலிப்பா. வண்ண மென்பதே கலிப்பாவையுங் கடவுள் வாழ்த்தையு முணர்த்தும். மூவா முதலா என்னும் சீவகசிந்தாமணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை, முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதி யென்றனர் நச்சினார்க்கினியர். பாடாண்டிணை தெய்வம் பராவல், மக்களேத்தல் என்னும் இரு பாற்பட்டு வரும். தெய்வம் பராவல் பெரும்பாலும் கலிப்பா வாலேயே வரும். தெய்வத்தின் பல குணங்களையும் திருவிளை யாடல்களையும் வடிவுகளையும் வண்ணித்துப் புகழ்தற்குக் கலியுறுப்புகள் போலப் பிற பாக்கள் சிறவாமை காண்க. ஒத்தாழிசைக்கலி இருவகையென்று கூறி அவற்றுள் ஒன்று, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே (தொல்.சொல்.133). என்றார் தொல்காப்பியர். சிந்தாமணியினுஞ் சிலப்பதிகாரத்தும் தெய்வம் பராவுஞ் செய்யுள் களெல்லாம் ஒருபோகும் கொச்சகமுமாகக் கலிப்பாக்களாகவே வந்தன. இவ்வழக்குப் பற்றியே தெய்வம் பராவும் சொச்சகங்கள் தேவபாணி, பெருந் தேவபாணி யெனப்படுவன. கலம்பகத்திற் கடவுள் வாழ்த்துக் கொச்சக ஒருபோகாற் கூறப்படுவதுங் காண்க. அராகம், அம்போதரங்கம் முதலிய கலியுறுப்புகள் கடவுள் வாழ்த்திற்கே சிறப்பாயுரியன. இனி, துறையென்பது புறத்திணையியலில் திணைப் பிரிவாகவுங் கூறப்பட்டுள்ளது. அதனுரையில், மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்க மாதலிற் றுறையென்றார், எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல் போற்றினார் என்பவாகலின். எனவே, திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறை யுட்பகுதிகளெல்லாம் விரித்துக் கூறிப் பின்னும் பன்முறை யாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப் படுத்துக் கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப் பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்து விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பல பொருட்பகுதியும் உடையவென்றும் உணர்த்துவதற்குத் துறை யெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும், ஒரு செய்யுட் பல பொருள் விராஅய் வரினும் ஒரு துறையாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப் பொருட் பகுதியும் ஒரு துறையாதலும் ஒரு செய்யுளுட் பல துறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப் படுதலுங் கொள்க அவ்வம் மாக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினும் திறவதின் நாடித் தத்தம் இயலான் மரபொடு முடியின் அத்திறம் தானே துறையெனப் படுமே (தொல்.செய். 200) என்பது செய்யுளியல். இதனால் துறையென்பது பொதுவாய்த் திணைப் பிரிவும் சிறப்பாய் அகத்திணைப்பிரிவு மென்பது பெற்றோம். அகத்திணைக்குச் சிறந்த கோவை நூல்களுள் அகப்பொருட் டுறைகளெல்லாம் கலிப்பாவாலேயே கூறப்படுவன. இதனாற் கலித்துறையெனப் பெயர் பெற்றது. கலியென்பது செய்யுளையும் துறையென்பது அகப்பொருட் பிரிவையு முணர்த்தும். கலிப்பா வாற் கூறப்படும் அகப்பொருட்டுறையென்பது விரிந்த பொருள். கலிப்பாவால் அகப்பொருள் கூறப்படுதலை. யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது என்பதற்குத் தேவபாணியும் காமமுமேயன்றி வீடும் பொருளா மென்பது ஆசிரியர் கருத்தாயிற்று என்று நச்சினார்க்கினியர் கூறுவதானும். கலித்தொகையானும், கலியின் திரிபாகிய பரிபாடல். கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும் எனப்படுதலானும், தலைவனுந் தலைவியும் உறழ்ந்து கூறும் உறழ்கலியானும் அறிந்து கொள்க. ஆகவே, துறையென்பதற்குரிய செந்துறைப் பாடாண் பகுதி, அகப்பொருட்டுறை என்னும் இருபொருளினும் பெரும் பான்மை வழங்குஞ் செய்யுள் கலியேயென்றும், அகப்பொருளில் வரும் கோவைச் செய்யுள் அளவொத்த நெடிலடி நான்கென்றும் அறிந்துகொள்க. நச்சினார்க்கினியர் செந்துறைப் பாடாண் பகுதியாகக் கூறிய சிந்தாமணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் நெடிலடி நான்காகவே நிகழ்வது காண்க. தாழிசை இனித் தாழிசை யென்பது கலிப்பாவுறுப்பென்பது வெள்ளிடை. அது தாழம்பட்ட ஓசையாய் வருதலாற் றாழிசையெனப்பட்டது. அது தரவகப்பட்ட மரபினதாய் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வரும். கொச்சகக் கலியாயின் தனித்தும், பலவாயும், பிறவுறுப் பின்றியும் வரும். மூன்று தாழிசை ஒத்துவரின் ஒத்தாழிசைக் கலியாம். ஒத்தாழிசையை ஒ+தாழிசை யென்று பிரித்து ஒத் தாழிசையெனக் கூறாது. ஒத்து + ஆழிசை என்று பிரித்து ஒத்து ஆழ்ந்த ஓசையென்றார் நச்சினார்க்கினியர். ஒரு தொடர்புபட்ட பொருளைக் கூறுமிடத்து, ஒத்த நியாயங் களையும் நிகழ்ச்சிகளையுங் கூறுதற்குத் தாழிசை போலச் சிறந்த உறுப்புப் பிறிதிலது. விருத்தம் இனி விருத்த மென்பது யாதோவெனின் அது ஒருவகை யாப்பாம். அது தமிழில் மண்டில மெனப்படும். ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப என்னுஞ் சூத்திரவுரையில், நாற்சீரடி முரற்கைபடத் துள்ளி வருதலே யன்றித் தாழம்பட்ட வோசை பெற்றும் வருமென்றார். இனி நாற்சீரடியாய் வருமாசிரி யமும் வெண்பாவும் ஈற்றயலடியும் ஈற்றடியும் முச்சீராய் வருமென முன்விதித்தவை ஒருகால் நாற்சீராயும வருமென்றற்கு மண்டில யாப்பென்றார். அது மண்டில வாசிரியப்பாவும் மண்டில வெண்பாவுமாம். வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியா ங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே (குறுந். 18) எனவும், அறையருவி யாடாள் தினைப்புனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யா ளுறைகவுள் வேழமொன் றுண்டென்றா வன்னை மறையறநீர் வாழிய மையிருங் குன்று எனவும் மண்டலித்து வந்தன என்றார் நச்சினார்க்கினியர். மண்டலித்தில் வட்டமாதல், அது மண்டலம் என்னும் தொகைச் சொல்லிற் பிறந்த வினை. மண்டலம் மண்டிலமென மருவியும் வரும். மண்டலிப்பாம்பு, சுரமண்டிலம், திங்கண்மண்டிலம், மண்டிலச் செலவு (குதிரைச்சாரி) முதலியன வட்டமென்னும் வடிவுப் பொருளில் வந்தன. மண்டலம், வட்டமென்னும் சொற்கள் circle என்னும் ஆங்கிலச் சொற்போல இடப்பகுதிகளையுங் குறிக்கும். ஜயங்கொண்ட சோழமண்டலம் இந்த வட்டத்திற்குள் அவற்கெதிரில்லை வட்டமென்பது வட்டகை வட்டார மென்றும் திரியும். மருத்துவ முறையில் நாற்பத்தெண்ணாட் பகுதி ஒரு மண்டல மெனப்படும். காலமுமிடத்தோ டொக்கும். இனி மண்டலம், வட்டமென்னும் சொற்கள் முழுமைப் பொரு ளினும் வழங்கும். திங்கள் வட்டமாயிருக்குங்கால் பதினாறு கலைகளும் நிரம்பியிருத்தல் காண்க. ஆங்கிலத்தும் round என்னும் சொல் Whole, complete எனப் பொருள்படும். உலக வழக்கில் முழுமைப் பொருளில் வள்ளிது என்றார் சொல் வழங்கி வருகின்றது. அது வட்டம் என்னும் சொல்போல வள் என்னும் பகுதியினின்று பிறந்ததாகும். வள்ளிதாய்ச் செல வாயிற்று என்றால் முழுதும் செலவாயிற்றென்பது பொருள். வள்ளிசாய் என்பது கொச்சைப் போலி. மண்டலம் என்னுந் தொகைச்சொல், மண் + தல் என விரியும். பண்டைத் தமிழர் கடற்செலவில் தேர்ந்திருந்தாராதலின். உலகெங்கும் கலத்திற் சென்று நிலம் வட்டமாயிருத்தலை நன்கறிந்திருந்தனர். பண்டையுலகத்தை ஏழ் தீவாகப் பகுத்துக் கூறினதும் இதை வற்புறுத்தும். தீவு - கண்டம். வடவைக் கனலை (Auora Borealis) அறிந்திருந்ததும் மற்றோராதாரம். இலத்தீன் (Latin), ஆங்கிலம் முதலிய மொழிகளிற் கடற்றுறை பற்றிய சொற்கள் பல செந்தமிழாயிருப்பதும் இதற்குச் சிறந்ததோர் சான்றாம். நாவாய் - L.navis, E. navy = கடற்படை கலம் - E. gallecon வாரணம் - L. marina. Skt. வருணா கரை - E. shore. sh = க படகு - E. bark, r = d. c.f. Coorg = குடகு கட்டுமரம - catamaran சோழி - shell நங்கூரம் - anchor கப்பல் - ship இது நிற்க. இனி நாற்சீரால் நிரம்பிவரும் அளவடியை மண்டில யாப்பென்றார். நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (தொல். பொருள். 344). என்பது சூத்திரம். இதனால் இயற்சீரால் துள்ளலிசைபற்றி அளவடி நான்காய்த் தனித்து வருங் கொச்சகக் கலியுறுப்புக் கலி மண்டிலமாயிற்று. மண்டிலம் பிற்காலத்தில் விருத்த மென்னும் வடமொழிப் பரியாயப் பெயரால் வழங்கலாயிற்று. ஆகவே துறை, தாழிசை, விருத்த மென்னும் மூவகைப் பாவினமும் கலிப்பாவானமை பெறப்பட்டது. இவற்றைப் பிற்காலத்தார் பொதுவாகக் கொண்டு, வரம்பு கடந்து வரூஉம் கொச்சகக் கலிகளையெல்லாம் ஒருபுடை யொப்புமைபற்றி ஒவ்வோர் பாவிற்கும் மும்மூன் றினமாகப் பகுத்துரைத்தார். கலிப்பாப் பலவகை யடிகளாலும் உறுப்புக் குறைந்தும் மிக்கும் வருமென்பது முன்னரே கூறப்பட்டது. அதினுங் கொச்சகக் கலியோ கலிப்பாவிற் கின்றியமையாத துள்ளலிசையுங் கெட்டு வருவதாகும். கலித்தல் துள்ளல். இரண்டடி அளவொத்துச் செந்துறைப் பாடாண் பாட்டாய் வருவதை அடித்தொகைபற்றிக் குறட்கினமாக்கி வெண் செந் துறை யென்றனர். எ-டு: ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே. 3 அடிமுதல் 7 அடிவரை முன்நீண்டு பின்குறுகிவரும் செந்துறைப் பாடாண் பாட்டை ஈறு குறைதல்பற்றி வெண்பாவிற் கினமாக்கி வெண்டுறை என்றனர். 4 அடியாய் எருத்தடி நைந்தும், குட்டம் பட்டும், இடை மடக்கியும் ஆசிரிய வியலான் வரும் செந்துறைப் பாடாண் பாட்டை ஆசிரியத் துறையென்றனர். இடைமடக்கல் அம்மானைக் கியல்பென்க. கோவையில் வரும் கலித்துறைச் செய்யுளை எழுத்தெண்ணிக் கட்டளைக் கலித்துறை யென்றனர். குறளடி நான்காய் வரும் செந்துறைப் பாடாண்பாட்டை அடிவகை பற்றி வஞ்சித்துறை யென்றனர். கலிப்பாவில் அம்போதரங்க வுறுப்புச் சிந்தடி குறளடிகளும் பெற்றுவரும். இனித் தாழிசைக்குச் சிறப்பிலக்கணம், தாழம்பட்ட ஓசையாய் அளவொத்து மூன்று அடுக்கி வருதல். இரண்டடியாய் இறுதியடி குறைந்து வருவதைக் குறட்டாழிசை யென்றும். மூன்றடியாய் ஈற்றடி சிந்தடியாய் வருவதை வெண்டாழிசை யென்றும், மூன்று நேரடியாய் அளவொத்து மண்டில வாசிரியம்போல் வருவதை ஆசிரியத்தாழிசை யென்றும், குறளடி நான்காய் வருவதை வஞ்சித்தாழிசை யென்றுங் கூறினர். இவையெல்லாம் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கியும் தனித்தும் வருவனவாம். இனி, விருத்தத்திற்குச் சிறப்பிலக்கணம் அளவொத்த நாலடியாய் மண்டலித்து வருதல் : அதாவது நிரம்பி வருதல். 3 அடியாயும் 4 அடியாயும் மண்டலித்து வெண்பாவியலிற் றனிச் சொற்பெற்று வருவதை வெளிவிருத்த மென்றும், கலிவிருத்தமும், கலித்துறையும் அளவடியாயும் நெடிலடியாயும் வருதலின் அவற்றுக்கு மேல் கழிநெடிலடியாய் ஆசிரியத் தளைதட்டு வருவதை ஆசிரிய விருத்த மென்றும், வஞ்சிப்பாவிற்கு நிரம்பின அடி சிந்தடி யாதலின் சிந்தடியாய் வருவதை வஞ்சிவிருத்த மென்றுங் கூறினர். கலிப்பாவில் அராக வுறுப்புக் கழிநெடிலடியானும் வரப்பெறும். அறுசீ ரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே எழுசீ ரடியே முடுகியல் நடக்கும் என்பவை சூத்திரம். ஆசிரிய விருத்தம் பிற்காலத்தில் பிறதளையும் தட்டு வந்தது. விருத்தங்கட்கெல்லாம் நாலடி யளவொத்திருத்தல் பொதுவிலக் கணமாம். அடிகள் பலவகைப்படுமேனும் நாற்சீரடி அளவாயி னாற்போல, பாக்கள் பற்பல அடித்தொகை பெறுமேனும் நாலடிச் செய்யுள் அளவாயிற்று. மோனை எதுகை முதலிய தொடைகட்கும் இசைநிறைவிற்கும் அடியுள் நாற்சீரடி சிறத்தல் போலச் செய்யுளில் நாலடிச் செய்யுள் சிறப்பதாகும். இதனானே வெண்பா பலவடியாய் வருமேனும் நாலடி வெண்பா பெருவழக் காயிற்று. பிற்காலத்துச் செய்யுள்களெல்லாம் பெரும்பாலும் நாடியாலேயே நடப்பவையாயின. நாற்சீரால் அடிநிரம்பி மண்டிலமாயினாற்போல, நாலடியாலும் செய்யுள் நிரம்பி ஒருவகை மண்டிலமாயிற்றென்க. விருத்தங்களில், 26 வரை எழுத்துப்பெற்று வருபவற்றை விருத்த மென்றும், அதற்குமேல் தாண்டி வருபவற்றைத் தாண்டகமென் றும். இவை சந்தமாகவரின் சந்தவிருத்தம், சந்தத் தாண்டகமென் றுங் கூறினர். இங்ஙன மெல்லாம் ஒரு பாவிற்குரிய பலவுறுப்புகளைப் பிற பாக்கட் கினமாக்கியதால், ஓரினம் பிறவினமாயும், ஒரு செய்யுள் பல பாவிற்கினமாயும் வருதற்கேற்று, இன்ன செய்யுளென் றொன்றைத் துணியாது மயங்குதற் கிடனாயிற்று. மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி யோவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவனவன் சேவடி சேர்து மன்றே (சீவக. 1) என்னும் சிந்தாமணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளுரையில், நச்சினார்க்கினியர். இச் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமுமாலானும்... அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும். அந்நூலிற் கூறிய விலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க. இச்செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம். இனி, இத் தொடர்நிலைச் செய்யுளை இனமென்ப. அந் நூல்கள் இனமென்று காட்டிய வுதாரணங்கடாம் அவர் சேர்த்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது. ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும். துறையை விருத்தமாகவும். தாழிசையை விருத்தமு மாகவும், ஓதுதற்கு அவையேற்றமையானும், மூவா முதலா என்னுங் கவி முதலியன தாழம்பட்ட ஓசையான் விருத்த மாகவும். சீர் வரையறையானும் மிகத் துள்ளிய வோசையானும் துறை யாயுங் கிடத்தலின், இதனை விருத்தக் கலித்துறை யென்னல் வேண்டும். அது கூறவே துறையும் விருத்தமெனப் பகுத்தோதிய இலக்கணம் நிரம்பாதாமாகலானும் இனமென்றல் பொருத்த மின்று. இச் செய்யுள்களின் ஓசை வேற்றுமையும் மிக்குங் குறைந்தும் வருவனவும் கலிக்கே யேற்றலிற் கொச்சக மென் றடங்கின எனக் கூறியுள்ளார். இங்ஙனமே கலிவிருத்தம் துள்ளலிசையாற் கலியினமாயும். சீர்வகை யானும் அடிவகையானும், நிலைமண்டல வாசிரிய மாயும், நாலசைச் சீர்கொள்ளின், குறளடி வஞ்சிப்பாவாயும் கூறுதற் கேற்றுவருதலும், கட்டளைக் கலிப்பாத் துள்ளலிசையாற் கலிப்பாவாயும் சீர்வகையானும் அடிவகையானும் ஆசிரிய விருத்தமாயுங் கூறுதற் கேற்றுவருதலும் கண்டுகொள்க. இதுகாறுங் கூறியவற்றால், பாவின மூன்றுந் தமிழ் யாப்பே யென்றும், அவை கொச்சகக்கலியின் திரிபென்றும், பின்னூலார் அவற்றைப் பன்னிரு பாவினமாகப் பகுத்துக் காட்டினரென்றும், சாலை, பண்ணை முதலிய தமிழ்ச் சொற்கள் மறைந்து ரோடு (இங்கிலீஷ்), ஜமீன்தார் (இந்துதானி) முதலிய அயற்சொற்கள் வழங்கினாற்போல, மண்டிலமென்னும் தென்சொல் மறைந்து விருத்தமென்னும் வடசொல் வழங்கிற்றென்றும், இலக்கணம் நிரம்பிய பாவியற்றும் அருமை நோக்கிச் சங்ககாலத்திற்குப் பின்னோர் எளிய யாப்பான இனங்களை யியற்றினரென்றும், அவற்றுட் சிறப்புப்பற்றி மண்டிலயாப்புப் பெருவழக்காயிற் றென்றும் தெள்ளிதின் அறிந்துகொள்க. வடமொழி விருத்தம் குறளடியானும் வருமேனும், விருத்த மல்லது வேறியாப்பு ஆண்டின்மையானும், அவை பெரும் பாலும் தமிழோடொப்புமை யுடைமையானும், பிற்றைத் தமிழ் யாப்பில் விருத்தமே பெருவழக் கானமையானும், தமிழியற் கெல்லாம் தகாது வடநூல்வழி கற்பிக்குமாறு அத்துணை இயைபு அவ் விருமொழிக்கும் ஆனபின்னர் மண்டில மென்னும் பெயர் மறைந்து விருத்தமென்னும் பெயர் வேரூன்றியதென்க. (செந்தமிழ்ச் செல்வி மடங்கல் 1933.) பாவை என்னுஞ் சொல் வரலாறு தமிழிலுள்ள இளமைப்பெயர்களுள் பார்ப்பு என்பது ஒன்றாகும். மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று) ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே. (1) அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை, (4) தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன, (5) என்பன தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள். பறவைக் குஞ்சும் சில ஊருயிரிகளின் (reptiles) இளமையும் பார்ப்பெனப்படும் என்பது இவற்றால் தெரியவரும். சில விலங்குகளின் குட்டியும் பார்ப்பெனப்படும் என்று பிங்கல உரிச்சொற்றொகுதி கூறும். இது அத்துணைச் சிறப்புடைத்தன்று. தாயினால் மிகக் கவனித்துப் பார்க்கப்படுவதினால், பறவைக் குஞ்சு பார்ப்பு எனப்பட்டது. பார்த்தல் = பேணுதல், பேணி வளர்த்தல். பார்ப்பு என்னுஞ் சொல் பொருட்கரணியம் பற்றி, nurs(e)ling என்று ஆங்கிலச் சொல்லை ஒத்ததாகும். சில ஊருயிரிகளின் இளமைக்கும் பார்ப்பு என்னும் சொல்லைத் தொல்காப்பியர் மாட்டெறிந்தாரேனும், அது சிறப்பாகப் பறவையின் இளமைக்கே உரியதென்பதை, சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்னும் உத்திபற்றி அதை முதற்கண் தனிப்படக் கூறியதாற் பெறவைத்தார். பார்ப்பு என்னும் சொல் பொருள் விரிபு முறையில் மக்கட் குழவியையும் குழவி போன்ற பொம்மையையும் குறித்தபோது ரகரங் கெட்டுப் பாப்பு, பாப்பா எனத் திரிந்தது. ஒ.நோ : கோர் - கோ. கோர்வை - கோவை. பாப்பா = 1. பறவைக் குஞ்சு 2. ஊருயிரி யிளமை சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை (சிறுபஞ்சமூலம். 9) E. pupa = chrysalis. 3. மக்கட் குழவி. E. baeb, baby. 4. சிறுமி L. pup = Girl, pupa = girl. 5. விலங்கின் குட்டி. E. pup, puppy = young dog. 6. பொம்மை. L.pupa = doll. of poupee = doll, playtning, toy; F. poupette = doll, dim of pupa (girl). E. puppet = small figure representing human being E.poppet = small person. இட்டு என்பது, தமிழில் ஒரு சிறுமைப் பொருள் முன்னொட்டு. இட்டிடை = சிற்றிடை. இட்டேறி = சிறு வண்டிப்பாதை. இட்டு - OF. ette, E. et. பாப்பா என்னுஞ் சொல் நாளடைவிற் பாவை என்று திரிந்தது. தெ. பாப்ப, க. பாப்பெ. ம. பாவ. பாவை = 1. படிமை, பொம்மை மரப்பாவை நாணா லுயிர் மருட்டி யற்று குறள்.1020) பொலம்பா லிகைகளும் பாவை விளக்கும் (மணி 1:45) 2. அழகிய உருவம். சித்திரப் பாவையின் அத்தக வடங்கி (நன்.40) 3. கருவிழியிற் பாவைபோல் தெரியும் உருவம். கருமணியிற் பாவாய் நீ போதாய் (குறள்.1125) 4. கருவிழி L. pupillus, OF. pupille, E. pupil, dim, of L. pupa. 5. பாவை போற் பூக்குங் குரவம்பூ. குரவம் பயந்த தெய்யாப் பாவை (ஐங்குறு. 344) 6. பாவை போன்ற இஞ்சிக் கிழங்கு. செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றி (மலைபடு. 125) பாவை யிஞ்சியுங் கடவைச் சுண்ணமும் (பெருங்.உஞ்சைக்.53: 21) 7. பாவை போல் அழகிய பெண். பாடக மெல்லடிப் பாவை (தேவா. 538 : 1) 8. சிறுமி. 9. பாவை நடம். திருவின் செய்யோ ளாடிய பாவையும் (சிலப். 6 : 61) 10. பாவை நோன்பு. நம் பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் திங். திருப்பா. 2 11. திருவெம்பாவை. 12. திருப்பாவை. தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய் (திங். திருப்பா. தனி) 13. தோற்பாவை பாவை என்னும் நூல் உலக வழக்கிற் பாவாய் என்றுந் திரிந்து பெண்ணியற் பெயராகும். இதுகாறும் கூறியவற்றால் பாவை என்னுஞ் சொல்லின் சிறப்பை யும், அது மேலையாரிய மொழிகளிலுஞ் சென்று வழங்கும் பரப்பையும் கண்டுகொள்க. - தமிழ்ப்பாவை எழுத்தாளர் மன்றம், 8ஆம் ஆண்டு சிறப்பு மலர் (1996 - 67). பிங்கலை பிங்கலை - பிங்கலா பிங்கலை = மூச்சுவிடும் முந்நாடிகளுள் வலத்ததாகச் சொல்லப் பெறுவது. (வ.வ : 204). பிஞ்சுவகை பூம்பிஞ்சு பூவோடு கூடிய இளம் பிஞ்சு; பிஞ்சு இளங்காய்; வடு மாம்பிஞ்சு; மூசு பலாப்பிஞ்சு; கவ்வை எட்பிஞ்சு; குரும்பை தென்னை, பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு; முட்டுக் குரும்பை - சிறு குரும்பை; இளநீர் முற்றாத தேங்காய்; நுழாய் இளம் பாக்கு; கருக்கல் இளநெல்; கச்சல் - வாழைப்பிஞ்சு. (சொல் : 67). பிடகம் பிடகம் - பிடக (t´)) பிடகு - பிடகை = பூத்தட்டு. பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் (மதுரைக். 397). வ.வ : 207 பிடகை பிடகை - பிடகா (t´)) பிள் - பெள் - பெட்டி = 1. வாயகன்ற வட்டமான நார்ப்பின்னற் கலம். 2. வாயகன்ற சதுர அல்லது நீள்சதுர மரக்கலம். (வ.வ : 209). பிண்ட நூல் யாப்பணியைத் தன்னுள் அடக்கிய பொருளிலக்கணம் கொண்ட தொல்காப்பியம் போன்ற பிண்ட நூலை, வேறெம் மொழியிலும் காண்முடியாது. (த.இ.வ. 140). பிண்டம் பிண்டம் - பிண்ட (இ.வே.) பொள் - பொழி, பொழிதல் = நிறைதல். பொழிமணித் தண்டூண் (பெருங். உஞ்சைக். 47 : 110). பொழித்தல் = திரட்டுதல். பொழிப்புரை = திரட்டுரை பொழி = கணு. பொழியமை மணித்தூண் (பெருங். உஞ்சைக் 48 : 87). bghÊ - bghÊš = bgUik (ã§.), சோலை, நாடு, ஞாலம். பொள் - பிள் - பிண்டு - பிண்டி - பிண்டம். பிண்டு = பிண்டம். பிண்டாலம் வித்தின் (திருமந். 3025). பிண்டித்தல் = 1. தொகுத்தல். 2. திரட்டுதல். பிண்டித்து வைத்தவுண்டியை (தொல். பொ. 63, உரை) பிண்டி = 1. கூட்டம், 2. வடிவம் (சிலப். 3 : 26, உரை). பிண்டம் = 1. சோற்றுத்திரள். பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் (தொல். பொ. 65). 2. உருண்டை (பிங்). 3. தென்புலத்தார்க்கிடும் சோற்று ருண்டை. 4. சதைத்திரள். வ.வ. உறுப்பில் பிண்டமும் (புறம். 28). 5. உடல். உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புறம். 18). 6. தொகுதி. பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் (புறம். 184). 7. தொகுத்துக் கூறும் நூற்பா. பிண்டந் தொகைவகை (நன்.20). 8. பொழிப்புரை. 9. மூவதிகாரமும் திரண்ட முழு இயற்றமிழ் நூல். பிண்டி - பிடி. பிடித்தல் = 1. திரட்டுதல். ஒ. நோ : தண்டி - தடி. பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது. (பழமொழி). பொரிவிளங்காய் பிடித்தல், கொழுக்கட்டை பிடித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. வ.வ. 2. கை நிறையத் திரட்டியதுபோல் இறுகப் பற்றுதல், பற்றுதல், குறைத்தல், அகப்படுத்துதல், சேர்த்தல், தாங்குதல், விலக்குக் கொள்ளுதல், மேற்கொள்ளுதல், விருப்பமாதல். பிடி - பிடிப்பு, பிடிமானம், பிடித்தம். பிடி = கைப்பிடி, குடைக்காம்பு. பிடிகல், பிடிகாசு, பிடிகாரன், பிடித்தராவி, பிடித்தாட்டிக்கழி, பிடிகொடு, பிடித்தபிடி, பிடிசீலை, பிடிதண்டம், பிடிநெல், பிடிபடு, பிடியரிசி, பிடிமண், பிடியாள், பிடிவிடு முதலிய எத்துணையோ கூட்டுச் சொற்கள் தொன்றுதொட்டு வழங்கி வரும் உலகவழக்காம். பிடித்து=1.கைப்பிடியளவு.பிடித்தெருவும்வேண்டாது (குறள். 1087). 2. தொடங்கி (வி.எ) இவையெல்லாம் பிண்டி என்னும் சொல்லின் தொகுத்தல் வடிவான பிடி என்பதன் திரிபே. பிண்டோதகம், சபிண்டீகரணம் முதலிய வடமொழிக் கூட்டுச் சொற்களை நோக்கி மயங்கற்க. வடவர் காட்டும் பிண்ட் என்னும் மூலம் பிண்டி என்பதன் ஈறு கேடே. (வ.வ : 204 - 205). பிண்ணாக்கு பிண்ணாக்கு - பிண்யாக பிள் + நாக்கு = ஆட்டிய எட்பிண்டத்தின் நாக்குப் போன்ற பிளவு. வ.வ : 205. பித்தம் பித்தம் - பித்த பித்து - பித்தம். பிதற்று - பேத்து - பித்து = பிதற்றுநிலை, அந்நிலை நாடி, அறிவுமயக்கம், மயக்கிற்குக் காரணமான கைப்புநீர், அந்நீர் சுரக்கும் உறுப்பு. மா.வி.அ. “etym unknown” என்று கூறுதல் காண்க. பித்த என்னுஞ் சொல்லினின்று பைத்ய என்னுஞ் சொல்லைத் திரித்துள்ளனர் வடவர். வ.வ : 205 பித்தர் பித்தர் : பிதற்று - பேத்து - பித்து = பிதற்றுநிலை, அறிவுமயக்கம் மயக்கம், மயக்கஞ் செய்யும் நீர், அந்நீர்ப்பை, மயங்கிய கோட்டித்தனம், கோட்டி போன்ற பெருங்காதல், பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல் பித்து - பித்தம் = மயக்க நீர், கோட்டித்தனம். பெருங்காதல் மதிகேடு. பித்தம் - பித்தன். பித்து - பிச்சு பித்தி (பெ. பா.) - பிச்சி, பித்தம் - பித்த (வ.) தி.ம : 748 பிராமணம் வேதத்தின்பின், வேதப் பொருளை விளக்கும் பிராமணம் என்னும் உரைநடை நூல்கள் எழுந்தன. பிராமணனுக்குரியது பிராமணம். பிரமனை யறிந்தவன் பிராமணன். பிரமன் (ப்ரஹ்மன்) என்னும் சொல் பரமன் என்னும் தென்சொல்லின் திரிபு. மா. வி. அ. இதைப் ப்ருஹ். (b) என்னும் மூலத்தினின்று திரிக்கும். ப்ருஹ் என்பது பெருகு என்னும் தென்சொற் றிரிபு. ஆரணியகமும் உபநிடதமும் பிராமணத்தின்பின் ஆரணியகம் (ஆரண்யக) என்னும் உபநிடதத் தோற்றுவாய் நூல்கள் தோன்றின. ஆரணியத்திலிருந்து ஆராய்ந்தது ஆரணியகம். ஆரணியம் காடு. ஆரணியம் என்னும் சொல் அரணம் என்னும் தென்சொற் றிரிபு. வ.வ. அக்காலத்தில் நாடு சிறிதாகவும் காடு பெரிதாகவும் இருந்ததி னால், ஊரையடுத்தே காடு அல்லது சோலையிருந்தது. தமிழ திரவிட முனிவர் காட்டிலுறைவதைக் கண்ட வேதப் பிராமணர், தாமும் அவர்போல் நடித்தே, ஊரையடுத்த அல்லது தடிவழி (Trunk Road) மேலுள்ள சோலைகளிலும் மக்கள் வழங்கும் மலையடிவாரங்களிலும், குடும்பத்துடன் வதிந்தனர். சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி யந்தண ரருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே. என்னும் புறப்பாட்டுப் பகுதியை (2) நோக்குக. வ.வ. தமிழ் முனிவர் முற்றத் துறந்தவர்; ஆணவம் அற்றவர்; பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம் நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத் தாய்போற் கருதித் தமர்போ லெவருக்குந் தாழ்மைசொலிச் சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெரிந்தவரே. காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி ஒடே யெடுத்தென்ன உள்ளன் பிலாதவ ரோங்குவிண்ணோர் நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பின மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. என்னும் பட்டினத்தடிகள் பாட்டிற் கிலக்கானவர். வேதப் பிராமண முனிவரோ, தம்மைப் பிறப்பிலுயர்ந்தவ ரென்றும் வீடுபேறும் அதற்கு வாயிலான துறவும் பிராமணர்க்கே உரியனவென்றும் கருதி, ஆணவம் என்னும் குன்றேறி நின்று, காம விருப்பம் நீங்கும்வரை மனைவியொடு கூடி வாழ்ந்தவர். ஆதலால், அவர் உண்மையான துறவியருமல்லர்; துறவு முதிர்ச்சியால் மெய்ப்பொருள் கண்டவருமல்லர். ஆரணியகத்திற்குப்பின் எழுந்த உபநிடதம் (உபநிஷத்) என்னும் மெய்ப்பொருள் நூல் களெல்லாம், ஓத்துக்கள் என்னும் தமிழ் நூல்களின் மொழி பெயர்ப்பே. (வ.வ.) உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான. என்பது தொல்காப்பியம் (977). உபநிஷக் என்னும் வடசொல் உப+நி+ஸத் என்று பிரியும். உப = உடன், அருகு. நி = கீழ். ஸத் = குந்து. ஆகவே, உபநிஷத் என்னும் சொற்கு அருகடியமர்தல் என்பது திரண்ட பொருள்; ஆசிரியன் கீழிருந்து மெய்ப்பொருள் கற்றல் என்பது விரிந்த பொருள். ஆயின், பரமவோதியால் அறியாமையை அடக்குதல் என்பது ஆரியர் கூறும் விளக்கப் பொருள் (“Setting at the rest ignorance by revealing the knowledge of the Supreme Spirit”). வேத முனிவர் காட்டில் வதிந்ததனால், கடவுளைப்பற்றிய வுண்மைகளைத் தாமே கண்டறிந்ததுபோற் காட்டிக் கொண்டனர். அவர் முனிந்ததெல்லாம் தமிழையும் தமிழனையும் தமிழ்ப் பண்பாட்டையுமே. முனிதல் வெறுத்தல். முனிந்தவன் முனிவன். உபநிடதங்கள் 108 என்பர். (வ.வ.) பிராமணன் நிலத் தேவனா? கதை நீல நரி, தான் நீலத் தொட்டிக்குள் விழுந்து நீல நிறம் பெற்ற தனாலேயே, அரிமாவும் வரிமாவும் கரிமாவும் போன்ற வன்மா விலங்குகளையும் ஏமாற்றி அடக்கி யாண்டது போன்றே, வேதப் பிராமணனும் குளிர் நாட்டு வாழ்க்கையாற் பெற்ற தன் வெண்ணிறத்தைத் துணைக்கொண்டு, தான் நிலத்தேவன் என்று தமிழரையும் திராவிடரையும் ஏமாற்றி அடக்கியாண்டான். அந் நீல நரியின் ஊளையால் அதன் இனம் அறியப்பட்டது போன்றே, பிராமணனும் ஆரிய மாந்தன் என்பது, மேலையாரியத்திற்கு இனமான அவன் மொழியினால் அறியப்பட்டுள்ளது. உலக வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியுமில்லாத பண்டைக் காலத்தில், பழங்குடிப் பேதைமையும் மதப் பித்தமும் கொடை மடமுங் கொண்ட மூவேந்தரையும் பல்வகையில் வயப்படுத்தி, அவர் வாயிலாகப் பொது மக்களிடைப் பிராமணியத்தைப் புகுத்தினர் ஆரியர். அந்நிலைமைகள் இன்றின்மையால், அக்காலத்து மூட நம்பிக்கைகட்கும் இன்றிடமில்லை. கடந்த மூவராயிரம் ஆண்டாக, பிராமணர் கல்வியைத் தம் குலத் தொழிலாகக் கொண்டிருந்தனால், கல்விக் கேற்ற மனப்பான்மை யும் நினைவாற்றலும் அவர்க்கு மிக வளர்ந்து வந்திருக்கின்றன. ஆயினும், இவ் வளர்ச்சி குலவாரி யளவிலேயே யன்றித் தனிப் பட்டவர் அளவில் இல்லை. ஏனெனில், இறைவன் கல்வியை எல்லாக் குலத்தார்க்கும் பொது வுரிமையாக்கி வைத்திருப்ப தொடு, வெவ்வேறு குலத் தனி மக்கட்கே சிறந்த கல்வித் திறமையை அளித்திருக்கின்றான். ஒரே குலத்தார் கல்வியைத் தம் முற்றிறைமையாகக் கொள்வது, இயற்கைக்கும் இறைவன் ஏற்பாட்டிற்கும் மாறானதே. திருவள்ளுவர் போன்ற அற நூலாசிரியரோ, கம்பரினுஞ் சிறந்த பாவலரோ, பிராமணர்க்குள் இருந்ததில்லை. இக்காலத்தும், வயவர் (Sir) சந்திர சேகர வெங்கட்டராமன் போன்றே, கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கரும் (G.D. Naidu) புதுப்புனை வாற்றலர். முன்னவர் அறிஞர்க்குப் பயன்படும் கருத் தியல் ஆராய்ச்சி மட்டும் செய்தவர்; பின்னவரோ, அனைவர்க்கும் பயன்படும் காட்சியியற் கருவிகளையும் இறும்பூதுகளையும் செய்தவர். ஆயினும், அவரைப் போற்றவில்லை. குடந்தை இராமானுசம் போன்றே, செங்கோட்டைப்பர், (Dr) சிவ சங்கர நாராயணப் பிள்ளையும், மேனாட்டார் போற்று மளவு கணிதத் திறவோர். ஆயினும், பிராமணர்க்குள்ள இனவுணர்ச்சி தமிழருக் கின்மையால், அவருக்கு விளம்பரம் இல்லாமலே போயிற்று. முகவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், இரு கண்ணும் தெரியாதவர், எத்தனைப் பேரெண்களையும் உள்ளத்திற் கொண்டு நால்வகைக் கணக்குஞ் செய்யவும், எத்துணைப் பேரெண்ணிற்கும் நான்மடி வேர் காணவும், வல்லவராயிருந்தார். பல்கலைக் கழக ஆள்வினைத் திறமையிலும் ஆங்கிலப் பேச் சாற்றலிலும், பர். (Dr.) வயவர் (Sir) ஆ. இலக்குமணசாமி முதலியாரினும் மிக்கவர், பிராமணர்க்குள் இருக்கவே முடியாது. இங்ஙனம் ஏனைத் துறைகளிலும் எத்தனையோ பேர் உள்ளனர். தமிழரின் தன்னலமும் பொறாமையும் இன வெறுப்பும், பலர் தலை யெடுக்க வாய்ப்பில்லாமற் செய்து விடுகின்றன. பிராமணர் கல்வித் திறமையிற் சிறத்தற்கு இன்னொரு கரணியமும் உண்டு. அது மறைவான இனக் கலப்பு. மக்களுள் நால் வேறு வரணம் போன்றே நால்வகைக் கலப்புக் குலமும் உள்ளனவென்று, மனுவின் குலவொழுக்க நூல் கூறு கின்றது. மேல் வரண ஆடவனுக்கும் கீழ் வரணப் பெண்டிற்கும் பிறந்தவன் அனு லோமன். கீழ் வரண ஆடவனுக்கும் மேல் வரணப் பெண்டிற்கும் பிறந்தவன் பிரதிலோமன். அனுலோம ஆடவனுக்கும் பிரதி லோமப் பெண்டிற்கும் பிறந்தவன் அந்தராளன். பிரதி லோம ஆடவனுக்கும் அனு லோமப் பெண்டிற்கும் பிறந்தவன் விராத்தியன். மேல் மூவரணத்தாரும் தத் தமக்குக் கீழ்ப்பட்ட வரணங்களிலும் அல்லது வரணத்திலும் பெண் கொள்ளலாமென்று, மனு நூல் கூறுகின்றது. ஆயின், கீழ் மூவரணத்தாரும் தத்தமக்கு மேற்பட்ட வரணத்திற் பெண் கொள்ளலா மென்று நெறியீட்டு முறையாய்க் கூறவில்லை. ஆயினும், அவ் வழக்கம் தொன்று தொட்டு இருந்தே வந்தது. இதை மனுநூலுந் கூறுகின்றது. பிராமணனுக்கு க்ஷத்திரிய வைசியதிரீகளிடத்திற் பிறந்தவர் கள், எப்படி உபநயந முதலியவற்றிற் குரியவர்களாயிருப்பதால் உயர்ந் திருக்கிறார்களோ, அப்படியே வைசியனுக்கு க்ஷத்திரிய திரீயிடத்திலும் க்ஷத்திரியனுக்குப் பிராமண திரீயிடத்திலும் பிறந்த புத்திரர்கள், சூத்திரனுக்கு வைசிய க்ஷத்திரிய பிராமண ஜாதி திரீ யிடத்திற் பிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்த வர்கள். (kE.(bkhÊ பெயர்ப்பு) 10:28) மூவேந்தரும் பிராமணர்க்கு முழு அடிமையராய்ப் போனதற்கு, பிராமணப் பெண் நுகர்ச்சியும் கரணியமா யிருந்திருக்கலாம். பண்டை முறைப்படி தமிழிலேயே திருக் கோவில் வழிபாடு செய்து வந்த குருக்கள் என்னும் தமிழ வகுப்பார், ஆரிய மந்திரங் களைக் கற்றுக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு நடத்தி இந் நூற்றாண்டிற் பிராமணராக மாறி விட்டதாகவும் சொல்லப் படுகின்றது. பிராமணர் என்றும் தம் மேம்பாட்டை நிலை நிறுத்தி இன்புற்று வாழ விரும்பியதால், தம் மின வுயர்த்தத்தைப் பேணுவதிற் கண்ணுங் கருத்து மாயிருந்து வந்திருக்கின்றனர். இறையடியா ரென்று சிறப்பித்துச் சொல்லப் படுபவர், செயற் கரிய செயல் செய்த தெய்வப் பற்றாளரே. வாளான் மகவரித் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன சூளா லிளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து நாளாறிற் கண்ணிடந் தப்பவல் லேனல்லன் நானினிச்சென் றளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பனுக்கே. (திருத்தில்லை, 3). என்று பட்டினத்தார் மனம் வருந்திப் பாடியுள்ளார். திருத் தொண்டத் தொகை பாடிய சுந்தர மூர்த்தி நாயனார், தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கி யிருக்கவே வேண்டிய தில்லை. தில்லை வாழந்தணர் பிராமணரே யன்றித் தமிழ் முறைப்படி அந்தணரு மில்லர்; அவருள் ஒருவரேனும் செயற் கரிய பத்திச் செயல் செய்தது மில்லை. மூவேந்தரும், சிறப்பாகச் சோழ வேந்தர், விட்ட மானி யங்களையும் இட்ட காணிக்கைகளையுங் கொண்டு, ஒரே கோயிலில் மூவாயிரவர் இருந்து உண்டு கொழுத்துச் சோம்பேறித் தனமாய் வாழ்ந்து வந்தவர். பொன்னம்பலப் பூசகரைப் போற்றுவ தெனின், வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலிய ஏனை யம்பலப் பூசகரையும் போற்றுதல் வேண்டும். அது பொருந்தாக்கால், பொன்னம்பலப் பூசகரைப் போற்றுதலும் பொருந்தாது. கோவில் வழிபாடு அதற்குத் தகுதியுடைய எல்லாக் குலத்தாரும் செய்யலாம், செய்விக்கலாம், தமிழ்நாட்டில் தமிழரே தமிழில் மட்டும் செய்வித்தல் வேண்டும். இங்ஙனமே ஆரியர் வருமுன் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக இருந்து வந்த ஆரிய அடிமைத் தனத்தினால், அடிமைத் தனத்திலேயே பிறந்து அடிமைத்தனத்திலேயே வளர்ந்து, அடிமைத் தனமே எலும்புங்குருதியுமாக ஊறிப்போன தமிழரே பலர் தமிழ் வழிபாட்டை எதிர்க்கின்றனர். இதனால், தமிழ் வழிபாட்டையும் தமிழர் பூசக ராவதையும் பிராமணர் வன்மையாக எதிர்க்கின்றனர். சிவகோசரியாரின் சமற்கிருத வழி பாட்டினும், கண்ணப்பனாரின் தமிழ் வழிபாடே சிவபெரு மானுக்குச் சிறந்ததும் உகந்ததுமாயிருந்ததையறிந்தும், இரு சாராரும் உணர்கின்றிலர். ஏனை நாடுகளின் நடப்பையும் இக்கால உரிமை வேட்கையையும் நோக்குகின்றிலர். ஆரிய முறைப்படி நோக்கினும், பிராமணர் இன்று ஊர்காவல் துறையிலும் படைத் துறையிலும் ஆள்வினைத் துறையிலும் சேர்ந்து சத்திரியராயும், உழவுத் தொழில் செய்தும் உண்டிச் சாலை வைத்தும் வாணிகம் மேற்கொண்டும் வைசியராயும் கைத் தொழிலும் ஏவலும் செய்து சூத்திரராயும், மாறியுள்ளனர். முடிபுரை எது எங்ஙனமாயினும், பிராமணன் நிலத் தேவனல்லன் என்பதும்; உலகியலிலும் மதவியலிலும் இல்லறத்திலும் துறவறத்திலும், தமிழனுக்கில்லாத ஏற்றம் அவனுக்கு இம்மியும் இல்லை யென்பதும், இதை உணராதவன் எத்துணைக் கற்றவனேனும் உருவத்தால் மாந்தனும் உள்ளத்தால் அஃறிணையுமாவனென் பதும்; தெரிதரு தேற்றமாம். ஆரியர் வெண்ணிறம் இன்று பொன்னிறமும் செந்நிறமும் புகர்நிறமும் கருநிறமுமாக மாறியுள்ளது. தமிழர் மொழியாராய்ச்சி யும் வரலாற்றாராய்ச்சியும் செய்து உண்மை யறிந்து கண் விழித்துக் கொண்டனர். பிராமணனுக்கு உரியது எவ்வறம்? அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி யறிதல், நடுவு நிலைமை, அடக்க முடைமை, ஒழுக்க முடைமை, பிறனில் விழையாமை, பொறை யுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங் கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை யச்சம், ஒப்புர வறிதல், ஈகை என்பன இல்வாழ்க்கை யறங்களாகத் திருக்குறள் மறையிற் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முதன்மை யானது விருந்தோம்பல். இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள். 81). விருந்தோம்பும் இயல்பும் ஈகையும் பிராமணனுக்கின்மையால், இல்லறம் அவனுக்குரிய தன்று. பிராமணன் தொழிலாகச் சொல்லப்படும் ஆறனுள், ஈதல் என்பது ஓதுவித்தலில் அடங்குதலால், உண்மையில் அவன் தொழில் ஐந்தே. அருளுடைமை, புலான் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, துறவு, மெய்யுணர்தல், அவா வறுத்தல் என்பன துறவு நெறியறங்களாகத் திருக்குறள் மறையிற் சொல்லப் பட்டுள்ளன. கொலை வேள்வி செய்தலாலும், துறவு நிலையிலும் அகம் பிரமம் என்றும் சிவோகம் என்றும் அகங்கரிப்பதாலும், தமிழ மதத்தை ஆரிய மத மென்றும் தன்னை நிலத் தேவன் என்றும் தன் இலக்கிய மொழியைத் தேவ மொழி யென்றும் சொல்லி இந்தியப் பழங்குடி மக்களை ஏமாற்றுவதாலும், பிராமண னுக்குத் துறவறமும் உரியதாகாது. ஆகவே, பிராமணனுக்கு நாடும் பேச்சு மொழியும் போன்றே அற வாழ்க்கையும் இல்லையாம். பிழா பிழா - பிட (t´)) பிழா - பிழவு - பிடவு - பிடகு - பிடக்கு = பூத்தட்டுப் போன்ற புத்த மறைநூல். பிடக்கே யுரை செய்வார் (தேவா. 245 : 10.) பிடகு - பிடகம் = 1. தட்டுக்கூடை. 2. புத்தமறை (திரிபிடகம்). பெரியோன் பிடக நெறி (மணி. 26 : 66) (வ.வ : 209) பீழி, பீழை. பிள்ளுதல் = பிடுங்குதல். துன்பஞ் செய்தல், தொல்லை கொடுத்தல். பிய்த்துப் பிடுங்குதல் என்னும் வழக்கை நோக்குக. பிள் - பீள் - பீழ் - பீழி - பீழித்தல் = வருத்துதல், துன்பஞ் செய்தல். பீழி - பீடி - பீட் (வ.) பீழி - பீழை - பீடை - பீடா (வ.) பீடித்தல் - துன்பஞ் செய்தல். பீடை துன்பம். (தி.ம : 748.) பிள்ளையார் வணக்கம் பிள்ளையார் வணக்கம் கடைச் சங்க காலத்திற்குப் பின்னர் தான் தமிழகத் திற் புகுந்தது. இறைவன் ஓங்கார வடிவினன் என்று சொல்லப்பட்டதினாலும், ஓங்காரத்தின் வரிவடிவம் யானை வடிவை ஒத்திருப்பதாலும், யானை வடிவில் ஒரு தெய்வம் ஆரியப் பூசாரியால புதிதாகப் படைக்கப்பட்டு, சிவநெறியை முன்னினும் மிகுதியாய் ஆரியப்படுத்தவும் சேயோன் என்னும் முருகனுக்குச் செய்யும் வழிபாட்டையும் அவனுக்குத் தந்தையாகச் சொல்லப் பட்ட சிவனுக்குச் செய்யும் வழிபாட்டையும் குறைக்கவும், தமிழருக்குள் மற்றுமொரு மதப் பிரிவையுண்டு பண்ணவும், புகுத்தப்பட்டதாக அறிஞர் கருதுகின்றனர். சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் எல்லாம் வல்ல இறைவன் ஆகிய முழு முதற் கடவுளே வணங்கப்படுதலின், அவனை வணங்கு வார்க்கு, அவனுக்கு மகன் அல்லது மருகன் முறைப்பட்ட வேறொரு சிறுதெய்வம் வேண்டியதேயில்லை. மேலும், இறைவன் படைப்பில் தலைசிறந்த மாந்தன் வடிவில் இறைவனை வணங்கு வதே பகுத்தறிவுள்ள மக்கட்கு இழுக்காயிருக்க, ஓர் அஃறிணை யுயிரியின் வடிவில் எத்தெய்வத்தையும் வணங்குவது, இவ் இருபதாம் நூற்றாண்டு உயர்திணையாளனுக்கு எள்ளளவும் பொருந்தாதென்பது சொல்லாமலே பெறப்படும். (த.தி. 7677). பிறப்பு பிறப்பு இறப்பு என்னும் சொற்கள் முறையே பகரமெய்ச் சேர்க்கையும் அதன் நீக்கமும் பெற்றிருத்தலால் உயிர் உடம்பொடு கூடுதலையும் அதைவிட்டு நீங்குதலையும் குறிக்குமென்று கூறுவர். பிறப்பு என்பது பிள் என்னும் வேரினின்றும் இறப்பு என்பது இறு என்னும் வேரினின்றும் பிறந்திருப்பதாலும் பிணங்கு இணங்கு எனப் பிற எதிர்ச் சொற்களும் பிறப்பு இறப்பு என்பவை போன்றே அமைந்திருப்பதாலும் அதுபோலிக் கூற்றென்க. (சொல். 33,34). புகழ்வகை ஒளி - தன்மதிப்பு பெயர் அல்லது பேர் - நல்ல வழியிலும் தீயவழியிலும் பரவும் பேர். இசை - புலவர் பாடுவதால் உண்டாகும் புகழ். புகழ் - இறந்த பின்னும் வழங்கும் உயர்த்துரை. சீர்த்தி அல்லது கீர்த்தி - மிகு புகழ். (சொல். 42). புகா (உணா) உண்ணுதல் என்பது உட்கொள்ளுதல்; அதாவது, ஒன்று இன்னொன்றைத் தன்னுள் இழுத்தல் அல்லது சேர்த்தல். வாய்வழி வயிற்றிற்குள் ஒன்றை இடுதலும், நிலம் நீரை உறிஞ்சுதலும், பாதம் செம்பஞ்சுக் குழம்பு நிறத்தைப் பெறுதலும், உண்ணுதலே. இவற்றுள் முதலதே மக்கள் பேச்சிற் பெரு வழக்கானது. இறுதி யது, சேர்தலின் அல்லது சேர்த்தலின் வகைகளுள் ஒன்றாகும். உண்ணுதல் (பெருவழக்கு) = I (முதற்பொருள்) : உணவை உட்கொள்ளுதல். II (வழிப்பொருள்) : 1. நுகர்தல் (அனுபவித்தல்). தண்கடற் சேர்ப்ப நீ யுண்டவென் னலனே (குறுந். 236). 2. கவர்தல். அவுணனா ருயிரையுண்ட கூற்றினை (திவ். திருக் குறுந். 2). 3. இசைவாதல். ஓசை யூட்டினு முண்ணாத வாறும் (யாப். வி.பக். 97). 4. ஒரு வினையின் பயனையடைதல். கோவலன் பொற் கொல்லனாற் கொலையுண்டான் (கொல்லுண்டான்). உண்ணுதல் என்பது அடிப்படைப் பொருளில் உட்கொள்ளுத லாதலின், பெரும்பாலும் உள்ளிடத்தை அல்லது உட்புகுத்தலைக் குறிக்குஞ் சொற்களினின்றே உண்ணுதல் வினைச்சொற்கள் தோன்றியுள்ளன. எ-டு : உள் - உண் - உணா - உண - உணவு. புகுத்தல் = 1. உட்செல்ல விடுதல். வாயில் புகுப்பினும் (தொல். பொ. 149). 2. உட்செலுத்துதல். 3. உண்ணுதல். இப்பொருளில் இச் சொல் வழக்கற்றது. புகு - புகவு = 1. உட்செல்கை. கழுது புகவயர (ஐங்குறு. 314). 2. உணவு. பழஞ்சோற்றுப் புகவருத்தி (புறநா. 395). புகு - புகா = உணவு. புகாஅக் காலை (தொல். பொ. 107). புகா - புவா - புவ்வா = சோறு, உணவு (நாட்டுப்புற வழக்கு). புக + அட்டு (ஒட்டு) = புகட்டு. புகட்டுதல் = 1. உட்செலுத்துதல். 2. ஊட்டுதல். தாய் குழவிக்குப் பாலூட்டினாள். 3. அறிவுறுத்துதல். அல்லம தேவன் சரிதத் தீம்பால் ..... புகட்டினானால் (பிரபுலிங்.துதி. 11), செவிதிறந்து புகட்ட (திருவிளை. விடையிலச். 4). ஒட்டு என்னும் துணை வினையை, தூங்கவொட்டார், வரவொட்டார் என்னும் எதிர்மறை வினைகளிற் காண்க. ஒட்டுதல் = பொருந்துதல், இசைதல். ஒட்டு - அட்டு. எ - டு : வரட்டு (வர + அட்டு), போகட்டு (போக அட்டு). இவை ஒருமை யேவல். வரட்டும், போகட்டும் என்பன பன்மை யேவல். புகட்டு - போட்டு (உ. வ.). குழந்தைக்கு மருந்து போட்டு. புக + விடு = புகடு. ஒ. நோ : போக விடு - போகடு - போடு. புகடுதல் = வீசியெறிதல். இதற்கு ஊட்டுதற் பொருளில்லை. புகு - Gk. பகு (phag) phagin, to eat, devour; phagema, food; phagas, phagon, glutton. phage (phag), combining form meaning ‘eater’ as in xylophage. phagedena, gangrene, L. phagedaena fr. Gk. phagedaina, cancer, lit. ‘voracity’ fr. phagein, to eat. phago, combining form meaning ‘eating’ as in phagocyte. phagous, combining form meaning ‘eating, feeding on’ as in creophagous. xylophagous Gk. phagos, ‘eater of’. phagus, combining form meaning ‘eating’, as in sarco-phagas, L. fr. Gk. sarkophagos, orig. flesh-consuming (stone). phagy, combining form meaning ‘eating of ’ (something specified), as in anthropophagy, geophagy. phagia, same as ‘phagy’. உகரமுதல் அகரமுதலாகத் திரிவது பெரும்பான்மை. தமிழில் மூச்சொலி (aspirate) இல்லை. தமிழ் மெய்கள் பிற மொழிகளில் மூச்சொலி மெய்யாகத் திரிவதுண்டு. எ-டு : கல் - khal (பிராகுவீ). இங்ஙனம் தமிழ்ச்சொல் தமிழுக்கு அகப்புறமான திரவிடத்தி லேயே மூச்சொலி பெறும்போது. அதற்குப் புறமான ஆரியத்தில் அதைப் பெறுவது இயற்கைக்கு மாறானதன்று. ph என்னும் இணைவரி அல்லது கூட்டெழுத்து, ஆங்கிலத்தில் ‘f’ என்றொலிப்பினும், கிரேக்கத்தில் மூச்சொலி கூடிய பகரமே (ப்ஹ) என்பதை அறிதல் வேண்டும். புகு என்னும் தமிழ்ச்சொல், கிரேக்கத்தில் பகு அல்லது பக என்று திரிந்தபின், அதற்கினமான இந்திய ஆரிய முன்னை மொழியில் (Pre - Indian East Aryan) புஜ் (bhuj) என்று திரிந்துள்ளது. ஒ. நோ : பகு - வ. பஜ். (bhaj). சமற்கிருதத்திற்கு முந்தின வேத மொழியிலேயே இத் திரிபு காணப்படுவதால், இது வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். மிடற்றொலி அண்ண வொலியாகத் திரியும்போது, எடுப்பிலா வொலி (voiceless sound) எடுப்பிலா வொலியாகவும் எடுப்பொலி (voice sound) எடுப்பொலியாகவும் திரிவதே பொதுவியல்பு. எ - டு : க - ச : குடிகை - குடிசை. g-j : L. ago - Skt. aj (to drive). இம் முறைப்படி, புகு என்பதன் திரிபான பகு (phag) என்னும் மேலையாரியக் கிரேக்கச் சொல் கீழையாரியத்தில் புஜ் (bhuj) என்று திரிந்துள்ளது. எடுப்பிலாவொலி எடுப்பொலியாகத் திரிவதும் இயல்பே. எ - டு : E. acre - L. ager, Gk. agros. E. triple - E. treble. bhuj, to eat, eat and drink, enjoy a meal, consume, enjoy, use, possess, make use of, utilize, exploit, suffer, experience, undergo, RV., AV., Up., MBh., KaÍv. bhukta, enjoyed, eaten, made use of, possessed etc. bhukti, eating, enjoyment, consuming, frution, possession, usufruct. bhuktvaÍ having enjoyed or eaten or possessed. bhuji, the granting of enjoyment, favour, RV. bhujishya, granting food, useful, AV. bhoktru, one who enjoys or eats, Maitr Up. bhoÍga, enjoyment, eating, feeding on, RV. bhoÍgin, enjoying, eating, having, wealthy; a king, a concubine. bhoÍgya, to be enjoyed, to be used. bhoÍja, bestowing enjoyment, bountiful, liberal, RV leading a life of enjoyment, BhP., a king. bhoÍjaka, cating, being about to eat; giving to eat, nourishing. bhoÍjana, feeding, giving to eat; the act of enjoying, using, RV., the act of eating; a meal, food. bhoÍjaniya, to be eaten, eatable; to be fed, to be made to eat, Mn.; one to whom enjoyment is to be afforded or service to be done, Nir.; food (esp. what is not masticated, as opp. to khaÍdaniya) MBh. bhoÍjin, enjoing, eating. bhoÍjya, to be enjoyed or eaten, what is enjoyed or eaten, anything to be enjoyed or eaten, a festive dinner. bhoÍktavya, to be enjoyed or eaten, to be used or employed; to be possessed or governed or ruled, to be utilized or exploited, to be fed. சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியைத் தொகுத்தவர்கள், புகு (உண்) என்னும் தென்சொற்கும் புஜ் (bhuj) என்னும் வட சொற்கும் உள்ள தொடர்பை அறிந்தே, புகவு, புகா என்னும் இரு சொற்களையும் புஜ் என்னும் வடசொல்லொடு ஒப்பு நோக்கக் குறித்திருக்கின்றனர். ஆயின் தென்சொல்லே வடசொல்லின் மூலம் என்று காட்டுவது அவர் கருத்தன்று. வடமொழி தேவ மொழி என்னும் அடாவடித்தன ஏமாற்றை அடிப்படையாகக் கொண்டு, வடமொழியிலுள்ள தென்சொல் லெல்லாம் வட சொல்லென்று சொல்லாமற் சொல்வதே, அவ் வொப்புநோக்கக் குறிப்பின் நோக்கம். தமிழை வடமொழித் திரிபாக அல்லது கிளையாகக் காட்டவேண்டுமென்பதே சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலித் தொகுப்பாளரின் அடிப்படைக்கொள்கை யாதலால், வடமொழிக்கு அடிப்படையான தென்சொற்களை யெல்லாம் வடசொல் லென்று காட்டுவதொடு, உண்மையில் தொடர்பின்றி ஒரு மருங்கு ஒலியொத்த போலியொப்புமைச் சொற்களையும் வடசொற்களினின்று திரிப்பதிலும் அவற்றொடு ஒப்புநோக்கு வதிலும், கண்ணுங் கருத்துமாயிருந்திருக்கின்றனர். எ - டு : ஆரியன் - ஐயன், ச்யாமா - சாமை. வேந்தன் - ஒ.நோ : தேவேந்திரன், மருந்து - ஒ.நோ : அம்ருத. இதனால், தென்மொழி வடமொழிக்கு மூலமாயிருக்கலாம் என்னும் ஓர் அச்சம் அவர் உள்ளத்திற் குடிகொண்டிருந்ததென உய்த்துணரக் கிடக்கின்றது. புகு என்னும் தென்சொல் புஜ் (bhuj) என்னும் வடசொற்கு மூலமாயிருப்பதொடு, தோற்றமும் வழிமுறைத் திரிபுங் கூறும் தெளிவான தன்வரலாறுங் கொண்டுள்ளது. இவ்வியல்பு அதன் திரிவான ஆரியச்சொற்கட்கில்லை. உல் - உள் - உளு = மரத்தைத் துளைக்கும் புழு. உளுத்தல் = மரத்தைப் புழு அரித்துத் துளைத்தல். உல் - புல் = உட்டுளை, உட்டுளையுள்ள நிலைத்திணை, தாளில் உட்டுளையுள்ள பயிர்வகை, மூங்கில், புறக்காழுள்ள தென்னை பனை முதலியன. புல் - புள் - (புளு) - புழு = காய்கறிகனிகளைத் துளைக்கும் உளு. புழுத்தல் = புழு உட்புகுதல் அல்லது அரித்துத் துளைத்தல். புழு - புகு. ஒ. நோ : தொழு - தொகு, மழ - மக, குழை - குகை. புகுதல் = உட்செல்லுதல். எலி வளைக்குட் செல்லுதலும் மக்கள் வீட்டிற்குட் புகுதலும் வினைவகையில் ஒன்றே. புகுத்தல் = உட்செலுத்துதல், உணவை வாய்வழி வயிற்றிற்குட் செலுத்துதல், உண்ணுதல். புகு (உண்) என்னும் சொல்லின் ககரம், கிரேக்கத்தில் ‘g’ என எடுப்பொலியாய் மாறினும், மிடற்றொலியாகவே இருத்தலை யும், ஏனையாரிய மொழிகளில் ‘j’ (ஜ) என்னும் அண்ணவொலி யாகத் திரிதலையும், நோக்குதல் வேண்டும். இதனால், கிரேக்கச் சொல்லின் முன்மையும் வேதச்சொல்லின் பின்மையும் அறியப்படும். பொதுவாக, மேலையாரியத்திலுள்ள எடுப்பொலிக் ககரம் (g) கீழையாரியத் தில் ஐகரமாகத் திரிகின்றது. எ - டு : தமிழ் மேலையாரியம் வேதமொழி கிழம் Gk. geron ஜரா தெ. கணு L. gonos ஜந் காண் ON. kna, E. know, ஜ்ஞா L. gno; Gk. gno உகை - அகை L. ago அஜ் அகரம் L. ager, Gk. agros அஜ்ர முழுகு L. mergo மஜ்ஜ் புகு - வ. புஜ்3 (bh) - இ. வே. புகுதல் = உட்செல்லுதல், வாய்க்குட் செல்லுதல். புகு - புகா = வாய்க்குட்செல்லும் உணவு. ஒ. நோ : உள் - உண். புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழி (தொல். 1053). புகா - புகவு = உணவு. பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறம். 395). புகா - புவா - புவ்வா (கொச்சை). புகு - புஜ். ஒ. நோ : பகு - பஜ். புஜ் என்னும் அடியினின்றே, புக்தி, போக்த்ரு, போக, போகி, போக்ய, போஜ, போஜன முதலிய சொற்கள் பிறந்துள்ளன. (வ.வ. 205). புகையிலைக் கட்டை யுருட்டல் விளையாட்டு (1) இது ஒருவாறு கண்ணாம்பொத்தி போன்றதே. ஆயின் இதற்கு ஒரு வட்டம் போடப்படும்; அதோடு முந்தித் தொடுவது யார் என்று தீர்மானித்தற்கு, எல்லாரையும் வரிசையாய்க் குனிய வைத்து, அவர்கள் நிழலில் புகையிலைக் கட்டையை ஒருவர் உருட்டுவர். அது யார் நிழலிற்போய் நிற்கின்றதோ, அவர் ஏனையோரைத் தொடுதல் வேண்டும். பிறரெல்லாம் ஒடி ஒளிந்துகொள்ளுதற்கு இரண்டொரு நிமையங் கொடுக்கப்படும். தொடும் பிள்ளை தொடவரும்போது, எல்லாரும் ஓடிப்போய் வட்டத்திற்குள் நின்றுகொள்வர். வட்டத்திற்குட் சென்றபின் தொடுதல் கூடாது. வட்டத்திற்குட் செல்லுமுன் தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை தொடுதல் வேண்டும். ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு தொடமுயன்ற பிள்ளையே மீண்டும் தொடுதல் வேண்டும். ஒருவர் தொடர்ந்து மூவாட்டை ஒருவரையுங் தொடாவிடின், அவர்மீது ஏனையோர் சிறிது சிறிது குதிரையேறுவதுண்டு. அதன்பின், மீண்டும் புகையிலைக் கட்டை உருட்டப்படும். புகையிலைக் கட்டையெடுத்தல் விளையாட்டு (2) இதுவும் ஒளிந்து விளையாடும் விளையாட்டே. ஆடுவாரெல்லாம் உத்திகட்டி இருகட்சியாகப் பிரிந்து கொண்டபின், ஒரு கட்சியார் ஒடி ஒளிந்துகொள்வர். இன்னொரு கட்சியார். கடைகட்குச் சென்று புகையிலைக் கட்டை (அல்லது வெற்றிலைக்காம்பு) எடுத்துவந்து, ஒளிந்தவரைத் தேடிப்பிடிப்பர். யாரையேனும் கண்டுபிடித்தபோது, கடைக்குச் சென்று வந்தமைக்கு அடையாளமாகப் புகையிலைக் கட்டையைக் காட்டல்வேண்டும். கண்டு பிடிக்கப்பட்டவர் முன்பு எல்லாரும் நின்ற இடத்திற்கு வந்துவிடுவர். எல்லாருங் கண்டுபிடிக்கப் பட்டபின் வினைமாறி விளையாடுவர். ஒளிந்திருந்தவரைக் கண்டுபிடிக்கும்போது புகையிலைக் கட்டையைக் காட்டாவிடினும், யாரையேனுங் கண்டுபிடிக்க முடியாவிடினும், முன்பு கண்டுபிடித்தவரே மீண்டுங் கண்டு பிடித்தல் வேண்டும். இது பாண்டிநாட்டு விளையாட்டு. இதன் சோழநாட்டு வகை வருமாறு: ஆடுவாரெல்லாரும் கைபோட்டு ஒவ்வொருவராகப் பிரித்து, இறுதியிலகப் பட்டுக் கொண்டவர் ஏனையாரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கவேண்டியவர் சற்றுக் தொலைவிலுள்ள ஒரு குறிப்பிட்ட தழையைக் கொண்டுவந்த பின்புதான் பிடித்தல் வேண்டும். அதற்குள் ஏனையரெல்லாம் மறைவான இடங்களில் ஒளிந்துகொள்வர். கண்டுபிடிப்பவர் ஒளிந்திருப்பவரைக் கையினாற் பிடித்துக்கொள்ளலாம், அல்லது அவர் பெயரை மட்டும் பிறர்க்குக் கேட்குமாறு உரக்கச் சொல்லலாம். இவ்விரண்டில் எது செய்வதென்று முன்னரே தீர்மானிக்கப் பட்டிருக்கும். கண்டுபிடிக்கப்பட்டவர் தழையைக் காட்டச் சொல்லும்போது, கண்டுபிடித்தவர் காட்டல் வேண்டும்; இல்லாவிடின், மறு முறையும் அவரே கண்டுபிடித்தல் வேண்டும். தழை காட்டப்படின், கண்டுபிடிக்கப்பட்டவர் மறுமுறை கண்டு பிடித்தல் வேண்டும். இவ்விளையாட்டு குலீம்தார் என்னும் உருதுப் பெயரால் வழங்குகின்றது. இதைத் தனித்தமிழில் தழைபறித்தல் எனலாம். (த.நா.வி.) புட்டம் புட்டம் - வ. ப்ருஷ்ட (t´) - இ. வே. புள் - புட்டி = உட்டுளையுள்ளது, ஒருவகைக் கலம், சிறுபடி, குடுவை, குப்பி, தெ., க. புட்டி (னன). புட்டி - புட்டில் = அம்பறாத் தூணி. தெ. புட்டிக. புட்டி = குடுவைபோன்ற பறவையுடம்பின் பிற்பகுதி. புட்டி - பிட்டி. கொழுத்த கோழிப்புட்டியை நெய்க்குடம் என்று கூறும் வழக்கை நோக்குக. புட்டி - புட்டம் = குடுவை போற் புடைத்த மாந்தன் உடம்பின் பின்பக்கம் ஒ. நோ : குண்டு - குண்டி. புட்டம் - பிட்டம். (மா. வி. அ, ப்ர-த (“Standing forth prominently” = எடுப்பாய் முன்நிற்பது) என்பது மூலமாயிருக்கலாம் என்று கருதுகின்றது. (வ. வ : 206). புடம் புடம் - வ. புட (t´) புள் - புழு. புழுத்தல் = புழுத்துளைத்தல். புழு - புழல் = உட்டுளை. புழு - புழை = துளை, குகை. புழை - புடை = குகை. புழு - (புழம்) - புடம் = பொன்னுருக்குங் குகை. ம. புடம். ஒ.நோ : குழை - குகை - குவை. குழை - குடை - குடைவு. புடம் - புடம்பு = குகை. மலைப்புடம்புந் தேடி யொளிவார் (பஞ்ச. திருமுக. 1895). (வ. வ : 206). புடலை புடலை - படோல (t´) புள் - புழு - புழல் - புடல் = உட்டுளையுள்ளகாய். புடல் - புடலை. ஒ. நோ : குழல் - குடல். க. படல, ம. படோலம், தெ. பொட்ல. (வ.வ : 206). புணை மிதவையும் கட்டுமரமும் பரிசலும் தெப்பமும் போன்ற கடத்தக் கருவிகள். (தி.ம. 1134). புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும். ஒரு மொழியின் வளத்தைக் காட்டுவன அதன் சொற்களேயன்றி ஒலிகளல்ல. மொழி தோன்றியது சொற்களாகவேயன்றி எழுத் தொலிகளாக வல்ல. இலக்கணம் ஏற்பட்டபோதே. சொற்கள் எழுத்தொலிகளாகப் பகுக்கப்பட்டன. எ-டு : காகா - காக்கா - காக்கை, காகா - (காக) - காகம். க் + ஆ + க் + ஆ என்று தோன்றவில்லை. சொற்களே பொருளுணர்த்தும்; எழுத்தொலிகளல்ல. ஓரெழுத்துச் சொல்லே யாயினும், பொருளளவிற் சொல்லேயன்றி எழுத்தொலி யன்று. பலவெழுத்துச் சொல்லைத் தனித்தனி எழுத்துகளாகப் பகுத்துவிடின், பொருள் தராது. தமிழில் அயலொலி கலத்தல் கூடாதென்பதை யுணர்த்தவே. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (எச்ச. 5) என்று தொல்காப்பியரும், இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும் அல்லா வச்சை வருக்க முதலீ(று) யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம் பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும் (நன்.பத. 19). என்று பவணந்தியாரும், கூறிப் போந்தனர். ஆகவே, சொற்றூய்மை போன்றே ஒலித்தூய்மையும் தமிழுக்கு இன்றியமையாத பண்பாம். வெளிநாடுகளினின்று வந்த பொருள்களெல்லாம் செந்தமிழ்ப் பெயர் பெற்றன. உருளைக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, கரும்பு, சாத்துக்குடி, செந்தாழை (அன்னாசி), புகையிலை, மிளகாய் முதலிய நிலைத்திணைப் பொருள்களும், ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, கழுதை, கோவேறு கழுதை (அத்திரி), குதிரை, வரிக் குதிரை, நீர்யானை முதலிய விலங்குகளும்; தீக்கோழி, வான்கோழி முதலிய பறவைகளும்; மிதிவண்டி, புகைவண்டி, சூழ்ச்சிய வண்டி முதலிய ஊர்திகளும்; குண்டுக்குழாய், வைத்தூற்றி, மண் ணெண்ணெய் முதலிய பல்வகைப் பொருள் களும், வெளி நாடுகளினின்று வந்தவையே. குதிரை ஒன்றே பன்னிரு வகையாக வகுக்கப்பட்டு வெவ்வேறு பெயர் பெற்றுள்ளது. குச்சுக்கிழங்கு இடந்தொறும் பெயர் வேறுபட்டுப் பன்னிரு சொற்களாற் குறிக்கப்படுகின்றன. ஆதலால், வெளிநாட்டுப் பொருள்கட்கெல்லாம் வெளிநாட்டுப் பெயர்களே யிருத்தல் கூடுமென்பது பொருளற்ற உறழாட்டே. பிறமொழிகளெல்லாம், தமிழ்போல் சொல்வளமும் சொல்லாக்க வாய்ப்பும் தூய்மை மரபும் உடையனவல்ல. ஆங்கிலர் கடந்த முந்நூற்றாண்டுகளாகப் புதுப் புனைவுகளால் தம் அறிவைப் பெருக்கிக் கொண்டனர். தம் புத்தறிவுக் கருத்துகளைக் குறிக்கத் தம் மொழியிற் சொல்லின்மையால், இலத்தீன் கிரேக்க மொழிகளினின்று ஏராளமாய்க் கடன்கொண்டு தம் கருத்திற் கேற்பத் திரித்துக்கொண்டனர். எ-டு: புதுக்கருத்து கடன்சொல் திரிப்பு சூழச்சியப்பொறி L. ingenium engine (சூழ்ச்சி) மின் Gk. electron electricity (அம்பர்) இங்ஙனம் ஆங்கிலர் தம் கருத்தையுணர்த்தப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தியது, பங்கீட்டுக் காலத்தில் மிகுதியாய் அரிசி கிடைக்குமிடத்திற் பையையும், உழவன் தான் விளைத்த கூலத்தைச் சந்தைக்குக் கொண்டுபோக வண்டியையும், இரவல் பெற்றதொக்கும். ஆங்கிலத்தில் மட்டுமன்றி இலத்தீன் கிரேக்க மொழிகளிலும் பல அடிப்படைச் சொற்கள் தமிழாயிருப்பதால், இற்றை ஆங்கில அறிவியற் கம்மியக் கலைக் குறியீடுகளிற் பல தமிழ்ச் சொற்களையே அடிப்படையாகக் கொண்டும் உள்ளன. மேலும், ஆங்கிலக் கலைக்குறியீடுகளெல்லாம் பல்வேறு வகையில் மிக எளிய முறையில் அமைந்துள்ளன. அம்முறைகளைக் கையாளின், எல்லாக் கலைக்குறியீடுகளையும் தமிழிற் செவ்வையாக மொழி பெயர்த்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டரசு சட்டத்துறை தவிர வேறெதிலும் குறியீடுகளை மொழிபெயர்க்க இதுவரை எத்தகை முயற்சியும் செய்யவில்லை. காலஞ் சென்ற இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை போன்ற தனிப் பட்ட தமிழ்ப் புலவரும், கிண்டி, கோவை, காரைக்குடி அண்ணா மலை நகர் முதலிய இடங்களிலுள்ள கல்லூரி மாணவருமே, தம் அளவிறந்த தமிழ்ப் பற்றினால், ஆட்சிச் சொற்களையும் பல்வேறு அறிவியற் குறியீடுகளையும் தொகுத்தும் மொழிபெயர்த்தும் உள்ளனர். அரசு அவற்றையெல்லாம் தொகுத்து அளவைப் படுத்தி, ஆட்சிச் சொற்களைப் போன்றே பிறவற்றையும் ஆட்சிக்குக் கொண்டுவருதல் வேண்டும். இதற்காகத் தக்காரைக் கொண்ட ஒரு நிலையான குழுவையும் அரசு அமர்த்துதல் வேண்டும். தமிழ் மும்மொழிக் கலவையாயின், எந்நிலை யடையுமோ, இறைவனுக்குத் தான் வெளிச்சம். ஒப்புயர்வற்ற தன்னந்தனித் தூய தமிழை, மறைமலையடிகள் போன்ற நிறை புலவர்க்கும் மாற்றவும் சிதைக்கவும் அதிகார மில்லை. அங்ஙனமிருக்க, தமிழ்ப் புலமையும் தமிழாராய்ச்சியும் தமிழ்ப் பற்றுமில்லாத ஒருசிலர் தமிழை உருத்தெரியாது மாற்ற உரிமையுடையரோ? ஆட்பெயர், இடப்பெயர் முதலிய மொழிபெயர்க்கக் கூடாத சிறப்புச் சொற்களையும், தமிழெழுத்திலேயே எழுதுதல் வேண்டும். எ-டு : சேக்கசுப்பியர், ஆப்பிரிக்கா, பிற சொற்களை யெல்லாம் மொழிபெயர்த்தேயாதல் வேண்டும். புர புரத்தல் = காத்தல். புர - புரம் = காப்பு. புர - புரவு = காப்பு. புரவலன் = காவலன். புரந்தா - புறந்தா, புறந்தருதல் = பாதுகாப்பளித்தல், காத்தல். புரந்தர - புரந்தரன் = காவலன், அரசன். புரந்தரன் - புரந்தர (வ.) = இந்திரன், விண்ணோர் காவலன். (தி.ம. 749). புரட்சி தமிழ் சமற்கிருதப் பிணிப்பினின்றும், தமிழன் ஆரிய அடிமைத் தனத்தினின்றும் விடுதலை பெறும்வரை, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழன் முன்னேற்றத்திற்கும் இடமின்மையால், தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சாய் வருதல் வேண்டும். என்று பாடினார் புரட்சிப் பாவேந்தர். ஆயின், அது போதாது, தமிழாய்ந்த தறுகண்மைத் தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். பேதைக்கில்லை ஊதியம்; பேடிக்கில்லை படைக்கலம்; அடிமைக்கில்லை விடுதலை; அஞ்சிக்கில்லை அடைக்கலம். உலகவரலாறு (World History), குமுகவியல் பண்பாட்டியல் மாந்தனூல் (Social and Cultural Anthropology), ஒப்பியன் மொழி நூல் (Comparative Philology) என்னும் மூவறிவியல் தமிழ் விடு தலையைச் சார்ந்திருப்பதால், தமிழியக்கத்தை மொழி வெறியென்றோ இனவெறியென்றோ எவருஞ் சொல்லமுடியாது. புரட்சிப் பாவேந்தன் கனவு தமிழை மூலமாகக் கொண்ட மேலையாரிய வகையான கிரேக்கத் திற்கு நெருக்கமாயிருந்து, இந்தியாவிற்கு வந்தவுடன் வழக்கற்றுப் போய் வடதிரவிட மாகிய பிராகிருதத்துடன் இரண்டறக் கலந்து வேதமொழியாகி, பின்னர்த் தமிழை யண்டி அதனாற் பெரிதும் வளம்படுத்தப்பட்டு அரைச் செயற்கை இலக்கிய நடைமொழி யான சமற்கிருதத்தை, உலக அளவில் தலைமையாக்குதற் பொருட்டு, ஒரு புதிய சமற்கிருத ஆங்கிலப் பேரகர முதலி உருவாக்குதற்கு, இந்திய நடுவணரசும், மராட்டிர அரசும், பல்கலைக் கழக நல்கைக் குழுவும், பூனாப் பல்கலைக் கழகமும், ஒன்றிய நாட்டினங்களின் அமைப்பும் (U.N.O.), இரு கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளன. தமிழ் நாட்டிலோ, உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழியான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கவோ, சமற் கிருதக் கிளையென்றும் பன்மொழிக் கலவையென்றும் பிராமணப் புலவர் காட்டியுள்ள நச்சுத் தன்மை நிறைந்த சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்தவோ, இற்றையரசு ஒரு சிறு தொகையும் ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டைத் தமிழ்நாடென்று அரசியலேட்டிற் குறித்தத னாலும், அரசினர் சாலைக் கடத்தப் பேரியங்கிகளில் (Govt. Road Transports Buses) ஒவ்வொரு திருக்குறட் பலகையை ஆணி யறைந்து வைத்ததனாலும், தமிழ் வடமொழியினின்றும் இந்தியி னின்றும் விடுதலை பெற்று வளர்ந்து விடாது. தமிழன் உண்மையான இயல்பை யறிந்து அதை அஞ்சாது போற்றிக் காப்பவன் தமிழ்நாட்டு ஆட்சித் தலைவனாகும் போதே, தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டின் முதலமைச் சாய் வருதல் வேண்டும். என்னும் பாரதிதாசன் கனவு நிறை வேறியதாகும். புரம் புரம் - வ. புர (இ. வே.). புரம் = உயர்ச்சி, உயர்ந்த கட்டிடம், மேன்மாடம், கோபுரம், கோபுர நகர். (பிங்.). மதுரையந்தண் புரத்தின்கண் (திருவாலவா. 39 : 1). கோபுரமுள்ளகோயில், கோயில், மூவர்க்கோதிய புரமும் (கல்லா. 24 : 23). (வ.வ : 206 - 207). புராணம் புராணம் என்பது பழைமை. ஆதலால் பழஞ்செய்திகளைப் பற்றிக் கூறும் நூல் பொதுவாகப் புராணம் எனப்படும். மாபுராணம், பூதபுராணம் என்பன தென்னாடு வந்து தங்கிய ஆரியர் இயற்றிய பழந்தமிழ் இலக்கண நூல்கள். பிற்காலத்தில், (1) உலகப் படைப்பு, (2) உலக அழிவும் மறு தோற்றமும், (3) தெய்வங்களின் வழிமரபு, (4) மநுக்கள் ஆட்சி, (5) கதிரவ திங்கட்குல அரசர் வரலாறு ஆகிய ஐந்தையுங் கூறுவது புராணம் என இலக்கணம் வகுக்கப்பட்டது. தரும சாதிரங்கள் தமிழரை அடிமைப்படுத்தினவெனின், புராணங்கள் அவரை மடமைப்படுத்தின. வடமொழிப் புராணங்கள் முன்னெழுந்தவை 18; பின்னெழுந் தவை 18. பின்னெழுந்தவை உபபுராணம் எனப்படும். பதினெண் புராணம் பிரமம், பதுமம், விஷ்ணு, சிவம், பாகவதம், நாரதீயம், மார்க் கண்டேயம், ஆக்நேயம், பவிஷ்யம், பிரமவைவர்த்தம், லிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மச்சம், கருடம், பிரமாண்டம். உப புராணம் சனற்குமாரம், நரசிங்கம், நந்தி, துருவாசம், சிவதருமம், நாரதீயம், கபிலம், மானவம், ஔசனசம், வசிட்டலிங்கம், வருணம், காளிகம், சாம்பேசம், அங்கிரம், சௌரம், பராசரம், மாரீசம், பார்க்கவம். புராணங்களின் காலம் கி.மு. 11-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுவரைப்பட்டதாகும். இதிகாசம் (இதி - ஹ - ஆஸ = இப்படி உண்மையில் இருந்தது) இராமாயணம், மகாபாரதம் என இதிகாசம் இரண்டு. மகாபாரதக் காலம் கி.மு. தோரா. 1000. மகாபாரதத்தொடு தொடர்புடையது பகவத்கீதை. நால்வகை வரணத்தையும் அவற்றின் ஏற்றத் தாழ்வுடன் இறைவனே படைத்த தாக, கண்ணன் கூற்றில் வைத்து வலியுறுத்தப் பகவத்கீதை பயன்படுத்தப்பட்டுள்ளது. வியக்கத்தக்க அரசர் வரலாறு இதிகாசம். (வ.வ.) புரி (1) புரி - வ. ப்ரீ (இ. வே.) = விருப்பப்படுத்து, மகிழ்வி, விரும்பு. புரிதல் = விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261). (வ.வ: 207). புரி (2) (வளை) உல் - உல. உலத்தல் = வளைதல், உருள்தல், திரள்தல். உல - உலம் = உருட்சி, திரட்சி. உலக்கை = உருண்டு திரண்டு நீண்ட குத்துக்கருவி அல்லது ஆட்டுக்கருவி. உல - உலவு. உலவுதல் = வளைதல், திரிதல், சுற்றுதல். உலவு - உலாவு. உல - உலா - உலாத்து. உலவு - உலகு = சுற்றும் கோள். உலகு - உலகம் = பேருலகு. அம் பெருமைப் பொருட்பின்னொட்டு. உலகம் - வ. லோக - இந். லோக். உலவு - உரவு. உரவுதல் = உலாவுதல். உலாவு - உராவு. உல் - உர் - உருள் - உருளி, உருளை, உருண்டை - உண்டை. உருளை - உருடை - ரோடை - ரோதை - L. rota. உல் - புல் - புரி - புரள் - புரளி, புரண்டை - பிரண்டை. புரள் - புரட்டு - புரட்டல், புரட்டி, புரள் - பிறழ். புர் - புரி. புரு - புருள் - புருளை - புருடை - பிருடை. புர் - புரு - புருவு - புருவம் = கண்மீ வளைவு. வ. ப்ருவ (bhruva), ON. brun, OE. bruÍ, E. brow. புரிதல் = வளைதல், சூழ்தல், திரும்புதல், முறுகுதல். புரி = முறுக்கு, முறுக்கிய இழை, முறுக்கிய கயிறு, சுருள், சுரி, உள் திருகிய சங்கு, நகரைச் சூழ்ந்த மதில், மதில் சூழ்ந்த கோட்டை, கோட்டையுள்ள அல்லது மதில் சூழ்ந்த நகர் அல்லது நகரம். எ-டு : மதுராபுரி, மயிலாபுரி. இடம்புரி = வலமிருந்து இடமாக உள்வளைந்த சங்கு. கொடும் புரி = அறும் நிலையிலுள்ள கம்பியின் அல்லது முடிச்சுப்படும் நிலையிலுள்ள கயிற்றின் கொடு முறுக்கு. முப்புரி = மூன்று முறுக்கிழை. வலம்புரி = இடமிருந்து வலமாக உள்வளைவுள்ள சங்கு. வைக்கோற்புரி = முறுக்கிய வைக்கோற் பழுதை. புரிகுழல் (புரிக்குழல்) = கடை குழன்று சுருண்ட கூந்தல். புரிக்கூடு = வைக்கோற் புரியாற் கட்டிய நெற்கூடு. புரிகட்டியிழுத்தல் = தண்டனையாகக் காலில் வைக்கோற்புரி கட்டித் தெருத் தெருவாயிழுத்தல். புரிசடை = திரண்ட சுருண்ட சடை. புரி திரித்தல் = புரி முறுக்குதல். புரி தெறித்தல் = கயிறு அறுகை. புரிநூல் = மார்பிலணியும் முப்புரி நூல். புரி பாய்ச்சுதல் = சிறு கயிற்றை முறுக்க ஒழுங்குபடுத்துதல். புரியணை = மண்பாண்டம் வைக்கும் வைக்கோற் புரியணை. புரிமுகம் = நகர் முகப்பிலுள்ள கோபுரம். புரிமுகம் = சங்கு (வலம்புரி அல்லது இடம்புரி). புரிமுறுக்கு = இழை முறுக்கு, மலராப் பேரரும்பு நிலை. புரி வலித்தல் = கட்டுதல். புரிவளை = முறுக்கு வளையல். புரிவிடுதல் = கயிறு திரிக்கப் புரியை முறுக்குதல். புரி - புரிசை = நகரைச் சூழ்ந்த மதில். புரி - பரி. பரிதல் = முறிதல், அறுதல், பிரிதல், அழிதல், இரங்குதல். பரித்தல் = சூழ்தல். குருதி பரிப்ப (அகநா. 31). புரி - பரி - பரிசு = வட்டக் கூடையோடம் (coracle) பரிசு - பரிசல் = கூடையோடம். பரி - பரிசை = வட்டக் கேடகம். பரி - பரிதி = 1. வட்ட வடிவம். 2. கதிரவனை அல்லது நிலாவைச் சூழ்ந்திருக்கும் கோட்டை (பரிவேடம்). 3. தேருருளை. 4. சக்கரப் படை. 5. சக்கரவாகப்புள். 6. வட்டமான கதிரவன். 7. கதிரொளி. 8. ஒளி. பரிதி - பருதி. ஆரிய வேள்வித் தீயைச் சுற்றிவைக்கப்படும் தருப்பைப் புல்லும், வடிவம் பற்றிப் பிற்காலத்திற் பரிதியெனப்பட்டது. பரிபுரம் = பெண்டிர் கணுக்காலைச் சுற்றியுள்ள சிலம்பணி. பரியாள் - பரியாளம் = அரசனைச் சூழ்ந்து வரும் பரிவாரம். பரியாள மடைந்ததே (சீவக. 949). பரியாளன் = பரிவாரத்தைச் சேர்ந்தவன். பரிவட்டம் = 1. நிலாக்கோட்டை (ஊர்கோள்). 2. தொழவரும் பெருமக்கட்குக் கோயில் மதிப்புறவாக (மரியாதையாக)த் தலையைச் சுற்றிக் கட்டும் தெய்வ ஆடை. 3. அதிகாரப் பதவிக்கு அடையாளமாக அரசன் அளிக்கும் நிலைக்குப்பாயம். பரிவட்டணை = யாழிசை யெழூஉம் எண்வகையுள் ஒன்று. பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் ................................................................................................................. எண்வகையால் இசையெழீஇ (சிலப். 7 : 5 -8.). வடமொழியில் வழங்கும் தமிழ்த் திரிசொற்கள் புரி - pur, wall, rampart, fortress, city, town, RV. புரி - puri, a town. தமிழிற் புரம் என்பது கோபுரமுள்ள நகரையும், புரி என்பது கோட்டையுள்ள நகரையும், குறிக்கும். ஆயின், வடமொழியில் இவ் வேறுபாடின்மையால், புர, புரய என்னும் சொற்களும் கோட்டை அல்லத நகர் என்னும் பொதுப்பொருளே தரும். புரி என்பதன் திரிபான பரி என்னும் சொல், தமிழிற்போன்றே வடமொழியில் வட்டம் என்னும் அடிப்பொருளையும் முழுமை மிகுதி முதலிய வழிப் பொருள்களையும் உணர்த்தி, நூற்றுக்கணக் கான சொற்களின் முன்னொட்டாக வழங்கி வருகின்றது. எ-டு : பரி, பரீ - pari, pari, ind. round, around, about. round about, fully, abundantly, richly. parinÊsa (பரிம்ச), the best part of, RV. parikaÍsana, frequent coughing. paritkup, to be very angry. paricar, to move or walk about, go round. paricaÍra, paricaÍraka, an assistant, attendant, or servant. parijana, surrounding company of people, entourage. pariniÍ, to lead about or round, RV., to lead a bride and bridegroom around a sacrificial fire, to marry. parin´aya, marriage. paridaÍ, to give, grant, bestow, surrender, RV. paridaÍna, giving oneself up to the favour or protection of another. paripri (gÇ¥U), to fill (v.t.), to become completely full (v.i.). paripuÍrana, the act of filling, perfecting, rendering complete. paribhaÍs, to speak to, address. paribhaÍsaÍ, speech, discourse. ParibhaÍsaÍ, speech, discourse. paripac, to bring to maturity; Pass, to be cooked. paripakva, completely cooked or dressed. parinirvaÍ, to be completely extinguished or emancipated, parinirvaÍn´a, complete extinction of individuality, entire cessation of rebirths. parimaÍ, to measure round or about, RV. parimaÍn´a, measure of any kind. parvrit (பரிவ்ருத்), to turn round, revolve, move in a circle or to and ro, roll for wheel or wander about, circumambiate, RV. parivarta, revolving, revolution. parivartana, causing to turn round. parisudh, to bewailed off, become cleane or purified perfectly. parisuddha, cleaned, purified perfectly. parisad, to sit round, RV., surrounding, an assembly, meeting, group, circle. வட்டக் கருத்தினின்று தொறும் கருத்துத் தோன்றுவதற்கு, ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு ..... பலிசை என்னும் கல்வெட்டுக் கூற்று எடுத்துக்காட்டாம். வ்ருக்ஷம் பரிஸிஞ்சதி (parisincati) (= மரந்தொறும் நீர் ஊற்றுகின்றான்) என்னும் வடமொழிச் சொற்றொடர் இதையொத்திருத்தல் காண்க. பரிபுரம் என்னும் சொல்லில் சூழ்தற் பொருளும், பரி புலம்பினர் (சிலப். 10 : 226) என்னுந் தொடரில் மிகுதிப் பொருளும், பரிமாறுதல் என்னும் சொல்லில் திருப்பல் அல்லது மாற்றுதல் பொருளும் வரிசைப் பொருளும், தோன்றுதல் காண்க. வட்டறவு என்னுஞ் சொல் அறுதி முடிவைக் குறிக்கும். மேலையாரியச் சொற்கள் கிரேக்கமும் ஆங்கிலமும் Gk. pref. peri, round about. perianth, floral envelope. pericardium, membranous sac enclosing the heart. pericarp, seed-vessel, wall of ripened ovary of plant. perichondrium, membrane enveloping cartilages (except at joints). periclinal (geol.), sloping in all directions from central point. perigynous (of stamen), situated around pistil or ovary. periosteum, membrane enveloping the bones, peripteral (of temple), surrounded by single row of pillars. perisperm, mass of albumen outside embryo-sac in some seeds. peristome (bot.), fringe of small teeth around mouth of capsule in mosses, (zool). parts around mouth in various invertebrates. perity phlitis, inflammation of some part around the caceum, e.g. appendicitis. pericranium, membrane enveloping skull. periapt, thing worn about the person as charm, amulet. perigee, that point in planet’s (esp. moon’s) orbit at which it is nearest to earth. perihelion, that point in planet’s orbit at which it is nearest to sun. perimeter, circumference, onthire of closed figure. period, round of time marked by recurrence of astronomical coincidences. Gk. peri, round. hodos, way. periodical, magazine published at regular intervals, e.g. monthly. peripatetic, a. & n. Aristotelian, so called from Aristotle’s custom of walking about in Lyecum while teaching. periphery, bounding line, esp. of round surface, external boundary or surface. Gk. periphercia, circumference, peri round, phero, bear. periphrasis, roundabout way of speaking, roundabout phrase, circumlocution. periscope, kinds of tube and mirror apparatus by which one in a trench or in a submarine can see things above the parapet or water respectively. periscopic, enabling one to see distinctly for some distance round axis of vision. perispomenon (Gk. gram). word with circumflex accent on last syllable. peristaltic (pysiol). applied to the automatic muscular movement consisting of wave-like contractions in successive circles, by which contents of alimentary canal etc. are propelled along it. peristyle, row of columns surrounding temple, court, cloister etc, space so surrounded. peritoneum (anat.), double serous membrane lining cavity of abdomen. திருந்திய வழக்கிலும் கொச்சை வழக்கிலும் அகர முதல் எகர முதலாகத் திரிவது இயல்பே. எ-டு : பரு - பெரு, அரங்கன் - ரங்கன் - ரெங்கன். இம் முறையில் பரி என்னும் தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் பெரி என்று திரிந்தது. பரி என்னும் முன்னொட்டுப் பெற்ற சில சொற்களும் தமிழ்த் திரி சொற்களாயிருப்பது கவனிக்கத்தக்கது. எ - டு : period = peri + hodos (பாதை). Periphery = peri + phero (பொறு.) பொறுத்தல், சுமத்தல். புரி என்னும் தூய தமிழ்ச்சொல்லின் தென்மையும் தொன்மையும் முன்மையும், உர(வு), குர(வு), சுரி, திரி, நெரி, முரி என்னும் பிற முதனிலையெழுத்துக்களைக் கொண்ட ஒருபோகடிகளாலும் உணரப்படும். புரு புரு - வ. ப்ருண (bh) - இ. வே. L. embryo. புரு = குழந்தை. புரு - பிரு - பிருக்கு = இளம்பிஞ்சு. ஒ. நோ : உரு - அரு - அரும்பு. குரு - கரு = சூல், பீள், முட்டைக்கரு, முட்டை, குழந்தை, குட்டி. நுரு = தளிர். நுரு - நொரு = இளம்பிஞ்சு. முரு - முருகு = இளமை. (வ.வ : 207). புருவம் புருவம் - வ. ப்ரு (bh) - இ. வே. புரிதல் = வளைதல். புரி - புரிவு - (புரிவம்) - புருவம். கொடும் புருவங் கோடா மறைப்பின் (குறள். 1086). சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி வடசொல்லை bhruva என்ற வடிவிலேயே குறிக்கின்றது. (வ. வ : 207). (தி.ம. 748.) புரை - புர புரை = 1. துளை. 2. அறை. ஆக்குப்புரை = சமையற் பந்தல் மறைப்பு அல்லது கொட்டகை. 3. வீடு. புரைபுரை யாலிவை செய்யவல்ல (திவ். பெரியாழ். 2 : 9 : 1). 4. கோயில். புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி (பதிற்றுப். 15 : 37). (வ. வ : 207) (தி.ம. 749) புல்1 (பொருந்தற் கருத்துவேர்) புல்லுதல் = 1. பொருந்துதல். அல்லா வாயினும் புல்லுவ வுளவே (தொல். பொருளியல். 27). 2. புணர்தல். புலந்தாரைப் புல்லா விடல் (குறள். 1303).3. தழுவுதல். என்னாகம் .... புல்லி (பு.வெ. 9 : 49). 4. வரவேற்றல். புல்லா வகம்புகுமின் (நாலடி. 303). 5. ஒத்தல். புத்தே ளுலதிற் பொன்மரம் புல்ல (தொல். பொருள். 289, உரை). 6. ஒட்டுதல் (W.). 7. நட்புச் செய்தல். ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் (தொல். புறத். 21, உரை). புல் = புணர்ச்சி (பிங்.). புல் = புலி (திவா.). புல் - புல்லி - புலி = முன்னங் கால்களால் தழுவிப் பற்றும் வேங்கை அல்லது சிறுத்தை. k., f., bj., புலி, து பில்லி. புல் - புல்கு. புல்குதல் = 1. அணைதல். அணைத்தல். அன்னந் தன்னிளம் பெடையொடும் புல்கி (தேவா. 584 : 9). 2. புணர்தல். (சது.). 3. நண்பராய் மருவுதல் (யாழ்ப்). புல் - புலம் = 1. ஐம்பொறிகள் பொருள்களொடு பொருந்தி அறியும் அறிவு. நுண்மா னுழைபுலம் (குறள். 407). 2. பொறி யுணர்வு. அடல்வேண்டு மைந்தன் புலத்தை (குறள். 343) 3. அறியும் பொறி. புலம் பல கலங்க (ஞானா. 27 : 6). 4. இலக்கணம். புலந்தொகுத் தோனே (தொல். பாயிரம்). 5. நூல். 6. மறைநூல். புலம்புரி யந்தணர் (பரிபா. 6 : 45). 7. கூர்மதி (W.). 8. துப்பு (C.G.). 9. பொருந்தியிருக்கும் நிலம். புலங்கெட விறுக்கும் வரம்பி றானை (புறம். 16). 10. நிலம். 11. விளைநிலம். விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (குறள். 85). புலம் - புலன் = 1. பொறியறிவு. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள். 1101). 2. பொறி, புலனொடு புணரான் (ஞானா. 48 : 9). 3. அறிவுடைமை. செல்வம் புலனே புணர்வு (தொல். மெய்ப். 11). 4. கண்கூடு. பெரும்புணர்ப் பெங்கும் புலனே (திவ். திருவாய். 2 : 8 : 3). 5. தெளிவு. 6. தெளிவான வனப்பு என்னும் பனுவல் வகை. சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிப புலனுணர்ந் தோரே (தொல். செய். 239). 7. துப்பு. புலனறிதல் (உ.வ.). 8. பொறி போன்ற உறுப்பு. ஒன்பது வாய்ப்புலனும் (நாலடி. 47). 9. வயல். புலனந்த (பரிபா. 7 : 9). புலம் - புலம்பு = நிலம். மெல்லம் புலம்பு = நுண்மணலால் மெல்லிய நெய்தல்நிலம். (திருக்கோவை, 379, உரை). மெல்லம் புலம்பன் = நெய்தல்நிலத் தலைவன். மெல்லம் புலம்பன் பிரிந்தென (குறுந். 5). புலம்பு - புலம்பன் = அறிவுடைய ஆதன் (ஆன்மா), புலம்பனுக் கொன்றும் புணர்ந்திலை போலும் (திருமந். 2934). புலம் - புலமை = நிலம், வயல், க. பொல. புலம் - புலவன் = 1. அறிஞன். 2. அறிவுள்ள பாவலன். 3. தேவன். 4. அறிவன் (புதன்). புலவன் (ஆ.பா.) - புலத்தி (பெ. பா.). ஒ. நோ : கிழவன் - கிழத்தி. புலத்தி - புலச்சி = அறிவுள்ளவள். சிவனிற் புலச்சி தனக்கு (திருப்பு. 123). ஒ. நோ : வேட்டுவத்தி - வேட்டுவச்சி. புல்ல = 1. பொருந்த. 2. போல (உவமவுருபு). புல்லப் பொருவப் பொற்பப் போல (தொல். உவம. 11). புலம் - புலர். புலர்தல் = தெளிதல், தெளிவாதல். நல்லா ணெஞ்சமும் புலர்ந்த தன்றே (சீவக. 1937). 2. விடிதல். புலர் விடியல் (பு. வெ. 2 : 47). ம. புலருக. புலர்ச்சி = விடிகை. இருளின் புலர்ச்சி யென்றென்று (வெங்கைக் கோவை, 380). புலர்பு = விடியல். பனிப்புலர் பாடி (பரிபா. 11 : 83). புலர் - புலரி = 1. விடியல். புலரி புலருதென்று (திருமந். 210). 2. கதிரவன். தாமரைப் பூநனி முகிழ்த்தன புலரி போனபின் (கம்பரா. சித்திர. 42). புல் - புர் - புரை. புரைதல் = 1. பொருந்துதல், புறத்தோ ராங்கட் புரைவ தென்ப (தொல். கற்பு. 35). 2. தைத்தல். தம்முடைய வதிரத்தைப் புரையா நின்றாராய் (ஈடு, 4 : 10 : 7). 3. ஒத்தல். வேய்புரை பெழிலிய... பணைத்தோள் (பதிற். 65 : 8). 4. நேர்தல். புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவது (பரிபா. 6 : 55). க. புருள். புரை = ஒப்பு (பிங்.). தெ. புருது. புரைய = 1. பொருந்த. 2. போல (உவமவுருபு), கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய (தொல். உவம. 15). புல் - புள் - புண் - புணர்தல் = 1. பொருந்துதல் (திவா.). 2. நட்பாடல். ஊதிய மில்லார்ப் புணர்தல் (நாலடி. 233). 3. ஏற்புடையதாதல். குரல் புணர்சீர் (புறம். 11). 4. மேற் கொள்ளுதல். பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் (பெருங். வத்தவ. 6 : 6.5). 5. உடலிற் படுதல். மென்முலைமேற் பனிமாருதம் புணர (கம்பரா. சூர்ப்பண. 77). 6. கலவி செய்தல். மன்னிய வளைப் புணரப் புக்கு (திவ். பெருமாள். 6 : 9). 7. சொற்கூடுதல். மொழிபுண ரியல்பே (தொல். எழுத்து. புணரியல், 6). 8. கூடியதாதல். புணரின் வெகுளாமை நன்று (குறள். 308). ம. புணருக, க. பொணர். புணர்ச்சி = 1. சேர்க்கை (பிங்.). 2. ஓரிடத்தாரா யிருக்கை. புணர்ச்சி பழகுதல் வேண்டா (குறள். 785). 3. கலவி. தகைமிக்க புணர்ச்சியார் (கலித். 118). 4. சொற்கூட்டு எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி (தொல் எழுத்து. புணரியல், 39). புணர்ப்பு = 1. பனுவல் (பிரபந்தம்). நாயகன்பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலே காணும் (ஈடு, 5 : 9 : 3). 2. இணைப்பு. 3. கலவி செய்விப்பு. 4. சொற்கூட்டு 5. சூழ்ச்சி. முதியவன் புணர்ப்பினால் (கலித். 25). 6. உடம்பு (சூடா.). 7. மாயம். புணர்ப்போ கனவோ (திருக்கோ. 17). புணர்வு = 1. சேர்க்கை 2. கலவி. புணர்வின் னினிய புலவிப் பொழுதும் (சீவக. 1378). 3. இணைப்பு (சூடா.). 4. உடம்பு (பிங்.). புணர் - புணரி = கலந்தெழும் பேரலை. வரைமருள் புணரி வான்பிசி ருடைய (பதிற். 11). புண் - புணி. புணித்தல் = சேர்த்துக் கட்டுதல். புணி - பிணி. பிணித்தல் = 1. சேர்த்துக் கட்டுதல். பெருவெளிற் பிணிமார் (மலைபடு. 326). 2. வயப்படுத்துதல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் (குறள். 643). 3. கட்டித் துன்புறுத்துதல். பிணி = 1. கட்டுகை. பிணியுறு முரசம் (புறம். 25). 2. கட்டு. பிணிநெகிழ்பு (பரிபா. 3 : 55). 3. நெசவுத் தறியின் நூற்படை (யாழ்ப்.). 4. பற்று. பொருட்பிணிச் சென்று (அகம். 27). 5. (கட்டு நெகிழா) மொட்டு. பிணிநிவந்த பாசடைத் தாமரை (கலித். 59). 6. பின்னல். பிணிகொள் வார்குழல் (தேவா. 469 : 3). 7. (கட்டி நெருக்குவது போன்ற) நோய். பிணிக்கு மருந்து பிறமன் (குறள். 1102). 8. துன்பம். பிணியகம் = காவலிடம். பிறர்பிணியகத் திருந்து (பட்டினப். 222). பிணி - பிணிகை = கச்சு (பெண்டிர் மாரொட்டிச் சட்டை). புண் - புணை. புணைத்தல் = கட்டுதல். புணை = 1. கட்டு, விலங்கு (சூடா.). 2. தெப்பம் (கட்டுமரம்). நல்லாண்மை யென்னும் புணை (குறள். 1134). 3. உதவி. அறம்புணையாகலு முண்டு (கலித். 144). 4. ஒப்பு. புணையில்லா வெவ்வ நோய் (கலித். 124). 5. ஈடு. 6. ஆட்பிணை. இவனுக்குப் புணை (S.I.I.V. 173). புணை - புணையல் = மாட்டுப் பிணைப்பு. புணைய லடித்தல் = பிணைத்த கடாவிட்டுக் கதிரை யுழக்குதல். புணையல் - புணைசல். புணை - பிணை. பிணைதல் = 1. சேர்தல், இணைதல். கழுநீர் பிணைந்தன்ன வாகி (சீவக. 491). 2. செறிதல். பிணையூப மெழுந்தாட (மதுரைக். 27). 3. புணர்தல். மங்கையர் தம்மொடும் பிணைந்து (திருவாச. 41 : 6). பிணை = 1. பொருத்து. இதையுங் கயிறும் பிணையு மிரிய (பரிபா. 10 : 54). 2. கட்டு. 3. இணைக்கப்படுகை. பிணையார மார்பம் (பு.வெ. 12 : 6). 4. பூமாலை. வெறிகொண்ட முல்லைப் பிணைமீது (பெரியபு. கண்ணப்ப. 57). 5. பொறுப்பாண்மை. பிணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே (திவ். பெரியாழ். 4 : 5 : 2). 6. உடன்பாடு (யாழ். அக.). 7. களைகண், பேணுகை. பெட்டாங் கொழுகும் பிணையிலி (நான்மணி. 91). பிணை - பிணைச்சு = புணர்ச்சி (பிங்.). புணையல் - பிணையல் = 1. ஒன்றுசேர்க்கை. தாமரை யலரிணைப் பிணையல் (பரிபா. 2 : 53). 2. நடன இணைக்கை. பிண்டியும் பிணையலும் (சிலப். 3 : 18). 3. மாலைவகை. பித்திகைப் பிணையன் மாலை (சீவக. 2177). 4. பூமாலை. தாதுகு பிணையல் வீசி (சீவக. 463). 5. கதிருழக்குங் கடாப் பிணைப்பு. 6. புணர்ச்சி. 7. கதவுப் பொருத்து. புண் - பூண். பூணுதல் = 1. நுகத்திற் கட்டப்படுதல். பூண்டன புரவியோ (கம்பரா. இராவணன்வ. 38). 2. மணஞ் செய்தல். பூண்டான் கழித்தற் கருமையால் (நாலடி. 56). 3. நெருங்கி யிறுக்க மாதல். அவனுக்குப் பல் பூண்டுவிட்டது (உ.வ.). 4. விலங்கு மாட்டப்படுதல். புனைபூணும் (குறள். 836). 5. நுகம் மாட்டிக் கொள்ளுதல். படுநுகம் பூணாய் பகடே (சிலப். 27 : 228). 6. அணிதல். பூண்பதுவும் பொங்கரவம் (திருவாச. 12 : 1). 7. மேற்கொள்ளுதல். அன்பு பூண்டனை (கம்பரா. விபீடணனடை. 2). போர்த்தொழில் வேட்கை பூண்டு (கம்பரா. படைத்தலை. 1). க. பூண், தெ. பூணு. பூண் = 1. உலக்கை தடி முதலியவற்றின் முனையிற் செறித்த தொடி அல்லது வளையம். பூண்செறிந்த தலையை யுடைய பரிய தண்டுக்கோலை (புறம். 243, உரை). 2. யானைக் கோட்டின் கிம்புரி (பிங்). 3. அணி. நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி (மதுரைக். 569). 4. கவசம். பூணணிமார்ப போற்றி (சீவக. 264). k., பூண், தெ. பொன்னு. பூண் - பூணி = 1. நுகம் பூணும் எருது. பூணி பூண்டுழப் புட்சிலம்பும் தேவா. 647 : 3). கடம்பூருக்கு வழியெதுவெனின் இடம்பூணி யென்னாவின் கன்று எனல் (நேமி. சொல். 5, உரை). 2. கன்றுகாலி. பூணி மேய்க்கு மிளங்கோவலர் (திவ். பெரியாழ். 3 : 16 : 7). 3. விடையோரை (இடபராசி). 4. ஒருவகைப் பறவை. பெரும் பூட் பூணியும் பேழ்வாய்க் கொக்கும் (பெருங். உஞ்சைக். 51 : 69). பூணித்தல் = 1. பொருத்துவித்தல். 2. தோற்றுவித்தல். விசும்பிற் புத்தப் புதுமதியம் பூணித்தான் (மாறனலங். 224). 3. மேற்கோள் பூணுதல். என்னோடே பூணித்து (ஈடு, 10 : 8 : 5). 4. பொருத்திக் குறித்தல். (to allude to, to refer to). பூண் - பூட்கை = 1. மேற்கோள் (பிரதிக்ஞை). பூட்கையில்லோன் யாக்கை போல (புறம். 69). 2. கொள்கை. 3. மேற்கோளொடு கூடிய வலிமை. ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி (திருமுருகு. 247). பூண் - பூண்டு = பற்போன்ற பருப்புகள் அல்லது களைகள் நெருங்கிப் பொருந்திய பூடுவகை. எ-டு : 1. வெங்காயப் பூண்டு, வெள்ளைப் பூண்டு. 2. சிற்றெச்சம் (vestige, trace). ஆண்பூண்டு கண்டாலும் பேசாமற் கட்டிட்டாள். (விறலிவிடு. 822). பூண்டு - பூடு = 1. வெங்காயம் அல்லது வெள்ளுள்ளி. 2. நிலத்தொடு படர்ந்த சிறுசெடி. புல்லாகிப் பூடாய் (திருவாச. 1 : 26). ஒ.நோ : கூண்டு - கூடு. பூண் - பூட்சி = 1. பொருந்துகை, பூணுகை (சது.). 2. அணி (கல்லா. 91 : 9, உரை). 3. புணர்ப்பு. பூதப் பூட்சி யுள்ளெழும் போதமும் (பிரபோத. 31 : 36). 4. உயிரொடு பூண்ட வுடல் (பிங்.). புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் (தேவா. 1160 : 6). 5. கொள்கை. 6. மனவுறுதி. உறுபொரு ளுணரும் பூட்சியோய் (கம்பரா. உயுத். மந்திர. 66). 7. உரிமை (அக.நி.). 8. வரிவகை. எ-டு : ஈழம் பூட்சி. பூண் - பூட்டு (பி.வி.). பூட்டுதல் = 1. பொருத்துதல். 2. காளை முதலியவற்றை நுகத்திற் பிணைத்தல். களிறுபல பூட்டி (பதிற். 44 : 16). 3. பொருத்தி அணிதல். பைந்தார் பூட்டி (பதிற். 42 : 10). 4. மாட்டுதல். பொருசிலைமேற் சரம் பூட்டான் (ஏரெழு. 17). 5. தொழுவிலடித்தல் (W.). 6. விலங்கு மாட்டுதல் (W.). 7. நாணேற்றுதல். பூட்டுசிலை (சீவக. 1788). 8. பூட்டுப் பூட்டுதல். 9. இறுகக் கட்டுதல். பூட்டிய கையன் (கம்பரா. குகப். 34). 10. மனத்தை யிணைத்தல். என்பாற் பூட்டு நண்பு பூண்டான் (பாரத. வாரணா. 37). 11. ஒப்படைத்துப் பொறுப்பேற்றுதல். தாதை பூட்டிய செல்வம் (கம்பரா. வாலிவ. 81). 12 பொருத்திக் கூறுதல் (W.). 13. வழக்குத் தொடுத்தல். கொடுமைசால் வழக்குப் பூட்டி (திருவிளை. மாமனா. 14). ம. பூட்டுக, க. பூடு. பூட்டு - பூட்டகம் = 1. போலி. எ - டு : பூட்டக வேலை. 2. வீண் பெருமை. என்ன பூட்டகமோ (பெருந்தொ. 1275). 3. வஞ்சகம். பூட்டக மோவிது (இராமநா. அயோத். 21). 4. மருமம் (இரகசியம்). அந்தச் செய்தி பூட்டகமா யிருக்கிறது. (உ.வ.). க. பூட்டக, தெ. பூட்டகமு. புல் - பொல் - பொரு. பொருதல் = 1. பொருந்துதல். பொய்பொரு முடங்குகை (சிலப். 15 : 50). 2. தொடுதல், முட்டுதல். விண்பொரு புகழ் (புறம். 11). விண்பொரு வியன்குடை (புறம். 35). 3. ஒப்பாதல். மலை யெத்தனை யத்தனை... பொருகிற்பன (கம்பரா. அதிகா. 150). 4. தடவுதல். வீணை பொருதொழிலும் (சீவக. 1795). 5. தாக்குதல். பொருபுனல் தரூஉம் (சிறுபாண். 118). 6. கடைதல். ஒற்றைக்கிரி மத்தைப் பொருது (திருப்பு. 1). 7. வன்மையாய் வீசுதல். குரூஉப்புகை பிசிரக் கால்பொர (பதிற். 15 : 6). 8. போர் செய்தல். ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறம். 2). 9. சூதாடுதல். போது போகுமா றிருந்து பொருதும் (பாரத. சூது. 169). 10. மாறுபடுதல். கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை (புறம். 35). பொரு = 1. ஒப்பு. பொருவாகப் புக்கிருப்பர் (தேவா. 780 : 11). 2. உவமை (பிங்.). 3. எதிர்த்தடை. ஆறு சமயங்கட் கெல்லாம் பொருவாகி நின்றானவன் (திவ். திருவாய். 9 : 4 : 8). பொருமுக வெழினி = பொருந்தி வரும் இரட்டைத் திரை. பொருங்கதவு = இரட்டைக் கதவு. பொரு - பொருவு. பொருவுதல் = 1. பொருந்துதல். 2. ஒத்தல். உன்னைப் பொருவு முனிவோர் (கந்தபு. திருக்கல். 55). 3. நேர்தல். போன்றன வினைய தன்மை பொருவியது (கம்பரா. இரணிய. 152). 4. உராய்தல். விற்கொணாண் பொருவுதோள் (கம்பரா. நிந்தனை. 52). பொருவு = ஒப்பு. பொருவற்றா ளென்மகள் (திவ். திருநெடுந். 19). ஒப்புப்பொருவு, உறழ்பொருவு எனப் பொருவு இருவகை. பொருவ = ஓர் உவமவுருபு. புல்லப் பொருவ (தொல். உவம. 11). பொரு - பொருந். பொருநுதல் = 1. பொருந்துதல். உண் பொருந் (நன். 137). 2. உடன்படுதல் (W.). பொருந் - பொருந்து. பொருந்துதல் = 1. நெருங்குதல். பொருந்தவந் துற்ற போரில் (கம்பரா. கும்பகருண. 13). 2. அடைதல். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறம். 10). 3. அளவளாவுதல் (பிங்.). 4. புணர்தல். மணிமேகலை... பொருந்தின ளென்னும் பான்மைக் கட்டுரை (மணிமே. 23 : 46). 5. இலக்கண நெறிப்படுதல். பண்பொருந்த இசைபாடும் (தேவா. 268 : 5). 6. இயலுதல். பூத மைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான் (கம்பரா. இரணிய. 18). 7. நிகழ்தல். புண்ணியம் பொருந்திற்று (கம்பரா. கும்பகருண. 131). 8. நிறைவேறுதல் (W.). 9. தகுதியாதல். 10. அமைதல். அறநெறி பொருந்த (கம்பரா. விபீடண. 43). 11. மனம் இசைதல். கொணர்குவாயெனப் பொருந்தினன் (கம்பரா. மருந்து. 85). க. பொருது. பொருந்து - பொருத்து = 1. இணைப்பு (W.). 2. மூட்டு. 3. உடலெலும்பு மூட்டு. பொருத்தெலாங் கட்டுவிட்டு (பணவிடு. 298). 4. ஒன்றுசேர்ப்பு. பொருத்துறு பொருளுண் டாமோ (கம்பரா. கும்பகருண. 157). 5. நெற்றிமூலை மண்டையோட்டுப் பொட்டு. பொருத்து - பொருத்தம் = 1. பொருந்துகை. 2. தகுதி. பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்று (திருக்கோ. 356). 3. இணக்கம். அவனுக்கும் எனக்கும் பொருத்தமில்லை (உ.வ.). 4. மணமக்களின் பிறப்பிய (ஜாதக) இணக்கம். பொருத்து - பொருத்தனை = 1. பொருத்தம். 2. நேர்த்திக்கடன். (துன்ப நிலையில் தெய்வத்தொடு இட்ட சூளை நிறைவேற்றுதல்). இதைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி பிரார்த்தனை என்னும் வடசொல்லின் திரிபாகக் குறித்துள்ளது. பொருத்து - பொத்து. பொத்துதல் = 1. பொருத்துதல். 2. கலத்தல். நெஞ்சம் பொத்தி (பு.வெ. 11, ஆண்பால் 4). 3. தீ மூட்டுதல். கனையெரி பொத்தி (மணிமே. 2 : 42). 4. தைத்து மூட்டுதல். 5. தைத்தல். இலையைப் பொத்து (உ.வ.). 6. மாலை கட்டுதல். மறுகண்ணியும் பொத்தி (ஈடு, 1 : 3 : 1). 7. கற்பனை செய்தல். இல்லாத் தெய்வம் பொத்தி (தேவா. 658 : 7). 8. திறப்பின் அல்லது கிழிவின் இருபுறத்தையும் பொருத்தி மூடுதல். பொல்லம் பொத்துதல் (உ.வ.). 9. வாய் கண் காது முதலியவற்றை மூடுதல். தன்செவித் தொளையிரு கைகளாற் பொத்தி (கம்பரா. இரணிய. 22). 10. விரல் மடக்கி உள்ளங்கையை மூடுதல். (உ.வ.). 11. மறைத்தல். செம்பால்... கிளர்படி பொத்தின (கம்பரா. கரன்வதை. 100). 12. புதைத்தல். மண்ணிடைக் கடிது பொத்துதல் (கம்பரா. விராதன்வதை. 43). (செ. குன்றிய வி.). = நிறைதல். வான்மேற் பொத்தின குழு (கம்பரா. கரன்வதை. 100). f., ம. பொத்து. பொத்து - பொத்தகம் = 1. சுவடி. நிறைநூற் பொத்தகம் நெடுமணை யேற்றி (பெருங். உஞ்சைக் 34 : 26). 2. நிலக்கணக்கு. பொத்தகப்படி குழி (S.I.I. III. 80). பொத்தகம் - வ. புதக, இ. புதக். பூர்ஜம் பட்டையினின்று செய்யப்பட்டது என்று வடவர் கூறும் பொருட்கரணியம் பொருந்தாது. புதக என்னும் வடசொல் வடிவையே புத்தகம் என்று திரித்து வழங்கி வருகின்றனர். ஒ.நோ : மனம் - வ. மன - மனது. மதி - மாதம் - வ. மாஸ - மாசம். பொத்தகம் = ஏடுகளின் சேர்க்கை. ஏட்டுச் சுவடி, சுவடி சேர்த்தல் என்னும் வழக்குகளை நோக்குக. பொத்து - பொட்டு = நெற்றிமூலை மண்டையோட்டுப் பொருத்து. பொட்டுதல் = பொருத்துதல், சேர்த்துக் கட்டுதல். பொட்டு - பொட்டணம். பொரு - பொருநன் = 1. உவமிக்கப்படுவோன். போர்மிகு பொருந (திருமுருகு. 276). 2. ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனும் சென்று உவமித்துப் பாடும் பாணன் (பாடகன்). 3. உவமித்துப் பாடியாடும் கூத்தன். பண்ணிமை யடைத்த பலகட் பொருநர் (கம்பரா. ஊர். 162). பொருந் = பொருநை = பாறையொடு பொருது (மோதி) இறங்கியோடும் (தாமிரபரணி) ஆறு. குமரி பொன்னி வைகை பொருநைநன்னதிகள் (குமர. பிர. மீனா. பிள். 11). ஒ.நோ : கல்பொரு திரங்கும் மல்லற் பேரியாறு (புறம். 132). பொருநை - பொருநல். பொருநல் வடகரை (திவ். திருவாய். 6 : 5 : 8). பொருந் - (பொருத்து) - பொருந்தம் = பொருநை (பிங்.). பொரு - பொருள் = 1. பொருந்திய உடமை. 2. பண்டம். 3. பொன் (சூடா.). 4. செல்வம். பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் (நாலடி. 6). 5. சொத்து. 6. மதிக்கப்படுவது. 7. உருப்படி. 8. சொற்பொருள். 9. புலனம் (விஷயம்). 10. உவமியம் (உபமேயம்). பொருள் - பொருட்டு = 1. (பெ.). கரணியம் (காரணம்) (பிங்.). 2. மதியப்பிற்குரியது. அதையொரு பொருட்டாகக் கொள்ள வில்லை (உ.வ.). (கு.வி.எ.). 3. பயனோக்கி (நிமித்தம்). வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 81). ம. பொருள், க. பொருளு, து. பொர்லு. பொரு - போர் = 1. பொருந்துகை. திண்போர்க் கதவம் (மதுரைக். 354). 2. சண்டை. குன்றேறி யானைப் போர்கண்டற்றால் (குறள். 758). 3. இகல் (போட்டி). வீணைவாட் போர்க்கலாம் (சீவக. 620). போர்த்தல் = 1. மூடுதல். பெற்றம் புலியின்றோல் போர்த்து மேய்ந் தற்று (குறள். 273). 2. மூட அணிதல். ஆரம்போர் திருமார்பை (கம்பரா. இராவணன் வதை. 240). 3. சூழ்தல். விண்ணோ ரெங்கோன் புடையிற் போர்த்தார் (கந்தபு. சிங்கமு. 457). போர்க்கதவு = 1. பல பலகைகளை இணைத்த கதவு. புலிப்பொறிப் போர்க்கதவின் (பட்டினப். 40). 2. இரட்டைக் கதவு (சிலப்.). பொல் - போல். போலுதல் = ஒத்தல். போல = உவமவுருபு. பொற்பப் போல (தொல். உவம. 11). போல் - போலி = 1. ஒத்தது. 2. எழுத்துப்போலி. 3. வினைத்திறத்தில் மட்டமானது. எ-டு: போலிவேலை. 4. மட்டமான பொருள் எ-டு : போலிக்கல். போலும் - ஒப்பில் போலி. போன்றான் - போஞ்சான் = மட்டமான வேலைப்பாடுள்ளது. புல்2 (பருத்தற் கருத்துவேர்) பொருந்தற் கருத்தினின்று பருத்தற் கருத்துப் பிறக்கும். பல பொருள்கள் ஒன்றுசேர்வதால் பருமை உண்டாகும். சேரே திரட்சி (தொல். உரி. 65). புல் - பல் = பல. பலகாற் பறவை = வண்டு. பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும் (பெரும்பாண். 183). பல்கால் = பல சமையம், அடிக்கடி, பல்காலுந் தோன்றி (நாலடி. 27). பல் - பன்மை = 1. ஒன்றிற்கு மேற்பட்ட தொகைப் பருமை. தானறி பொருள்வயிற் பன்மை கூறல் (தொல். கிளவி. 23). 2. தொகுதி. உயிர்ப்பன்மை (புறம். 19). 3. ஒரு தன்மைப்பட் டிராமை. பன்மையே பேசும் படிறன் றன்னை (தேவா. 674 : 5). 4. குறிப்பின்மை. பன்மையாகவே பேசினான் (உ.வ.). (W.). பல் - பல்லம் = ஒரு பேரெண் (திவா.). பல் = மிகுந்த. பல்வலிப் பறவை = சரபம். பல்வலிப் பறவை பற்றுபு (பெருங். இலாவாண. 11 : 54). பல்லம் - பல்லவம் = பலமுறை பாடப்படும் கீர்த்தனை யுறுப்பு (W.). பல்லவம் - பல்லவி = திரும்பத் திரும்பப் பலமுறை பாடப்படும் கீர்த்தனை முதலுறுப்பு. க. பல்லவி. பல் - பல்லக்கு = சிவிகையினும் பெரிய (தூக்கிச் செல்லும்) ஊர்தி. தந்தப் பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி (தொண்டை. சத. 87). சிவிகை (சிறுத்தது) x பல்லக்கு. சிவிந்த பழம் என்னும் வழக்கை நோக்குக. ம. பல்லக்கு, க. பல்லக்கி, பிரா. பல்லங்க்க, ச. பர்யங்க்க. சென்னைப் ப.க.த. அகரமுதலியில், இச் சொல் சமற்கிருதத்தி னின்று பிராகிருத வழியாகத் தமிழுக்கு வந்ததென்று தலைகீழாகக் குறிக்கப்பட்டுள்ளது. பல்லக்கைக் குறிக்கும் பர்யங்க்க என்னும் வடசொல், பல்யங்க்க என்னும் வடிவும் கொள்ளும். அது தென்சொல் வடிவிற்கு நெருக்கமான தென்பது தெளிவு. பர்யங்க்க என்னும் வடசொற்கு மூல விளக்கம், மானியர் வில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலியிற் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. ‘paryanc to turn about or round, revolve, R.V. X, 119, 5. pary-anka a bed, couch, sofa, litter, palanquin, Kaush Up...” புரிதல் = வளைதல். எ- டு : வலம்புரி, இடம்புரி, புரி - பரி. பரிதி = வட்டமான கதிரவன். பரிசல் = வட்டமான நீர்கடத்துக் கூடை. பரிசை = வட்டமான கேடகம். அங்குதல் = வளைதல், சாய்தல், கோணுதல், வாட்டஞ் சாட்டமாதல். வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. வங்கு - வங்கி = நெளிவளையல், வளைந்த கத்தி (பிச்சுவா). அங்கு - அங்கணம் = வாட்டஞ் சாட்டமான சாய்கடை. அங்கணத்து ளுக்க வமிழ்தற்றால் (குறள். 720) ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் (நாலடி. 175). பரி - வ. பரி, round, around, about, round about. அங்கு - வ. அஞ்ச், to blend, curve, incline, curl. ஒ.நோ : பொங்கு - பொஞ்சு. பர்யங்க்க என்னும் வடசொற்குக் கூறப்படும் பொருட் கரணியம், ஒருமருங்கு தமிழுக்கும் பொருந்தும். பல்லங்கு - பல்லக்கு - பல்லாக்கு. பல்லங்கு = பலவளைவு. பல்லக்கின்மேல் மூங்கில் மூவளை வினதா யிருத்தல் காண்க. வருத்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம் (நீதிவெண்பா, 7). பல்லக்கு - பல்லாக்கு. பல் - பல்கு. பல்குதல் = 1. பலவாதல். ஞாயிறு பல்கிய மாயமொடு (பதிற். 62 : 6). 2. மிகுதல். பல்கிய விருப்பினான் (பிரமோத். பஞ்சா. 21). பல் - பல = 1. ஒன்றுக்கு மேற்பட்டவை. பலவற் றிறுதி யுருபிய னிலையும் (தொல். எழுத்து. உயிர்மயங். 18). பலகாரம் = பல சுவையுள்ள தின்பண்டம். 2. பழங்களெல்லாவற்றுள்ளும் பெரிய பலா. பலங்கனி (திவ். பெரியதி. 3 : 1 : 5). சி. பல (phala). பல - பலவு = பலா. பலவுந் தெங்கும் வாழைகளும். (திவ். திருவாய். 5 : 9 : 4). பல - பலா. பலாப்பழத் தீயி னொப்பாய் (திருவாச. 6 : 46). பல் - பர் - பரு. ஒ. நோ : சில் - (சிர்) சிறு. பருத்தல் = பெருத்தல். பருத்த தோளும் முடியும் பொடிபட (தேவா. 498 : 11). பரு - பருக்கன் = பரும்படியானது. பருக்கை = 1. பருமனாகை. 2. சோற்றவிழ். பருக்கையிலாக் கூழுக்குப் போடவுப்பில்லை யென்பார்க்கும் (தனிப்பா.). பருப்பொருள் = 1. நுண்பொருளல்லாத பரும்படிப் பொருள். பருப்பொருட்டாகிய பாயிரம் (இறை. கள. 1, உரை). 2. சுவையற்ற செய்தி. பதர்ச்சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கி (பெருங். இலாவாண. 4 : 51). 3. மேலெழுந்த வாரியான பொருள். பருப்பொருள் கடிந்து பொருட்டொடர்ப் படுத்து (பத்துப். உரைச்சிறப்.). பருப்பு = 1. பருமை. பருப்புடைப் பவளம் போல (சீவக. 2273). 2. சிறிதான அரிசியினும் பெரிய பயற்றுள்ளீடு. அரிசி x பருப்பு. அரி - அரிசி. bj., க. பப்பு. பருமம் = 1. பருமை. 2. பதினெண் கோவை அரைப்பட்டிகை. பருமந் தாங்கிய (திருமுருகு. 146). 3. புடைத்திருக்கும் புட்டம் (யாழ். அக.). பருமம் - பருமன் = 1. பருமை. 2. பருத்த - வன் - வள் - து (W). பருமை = 1. பருத்திருக்கை. 2. பரும்படியான தன்மை. 3. முதன்மை. 4. பெருமை. பருமை - பருமி. ஒ. நோ : ஒருமை - ஒருமி. பருமித்தல் = 1. பருத்தல். 2. பெருமை யடைதல். 3. எக்களிப்புடனிருத்தல் (W). பரு - பெரு - பெருமை. பெருத்தல் = 1. பருத்தல். 2. மிகுதல். கரடியாதி பெருத்த (விநாயகபு.). இனம் பெருத்துவிட்டது (உ.வ.). 3. உயர்வாதல். பெருமை = 1. பருமை. 2. மாட்சிமை. பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு (குறள். 974). 3. மிகுதி, பெரும்பான்மை, 4. வல்லமை. 5. கீர்த்தி. 6. செருக்கு. பதவியுயர்ந்தவுடன் அவனுக்குப் பெருமை வந்துவிட்டது. (உ.வ.). 7. எக்களிப்பு. நான் தமிழன் என்று சொல்லிக் கொள்வதிற் பெருமைப்படுகிறேன். பெரு - பெருகு. பெருகுதல் = 1. மிகுதல். பெருகுமத வேழம் (திவ். இயற். 2 : 75). 2.வளர்தல். தளிபெருகுந்தண்சினைய (பரிபா. 8 : 91). 3. வளர்ச்சியடைதல். பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றலினிது (குறள். 811). 4. நிறைதல். 5. முதிர்தல். பெருகுசூலிளம்பிடிக்கு (கம்பரா. சித்திர. 10). 6. ஆக்கந்தருதல். பெருகு - க. பெர்சு. பெருகு = புளித்துப் பெருகும் தயிர் (பிங்.). புரை - பிரை - பெருகு = பிரை குத்தியதால் தயிரான பால், தெ. பெருகு, ம. பெருகு பெருங்ஙு. பெருகு - பெருக்கு. பெருக்குதல் = 1. மிகுத்தல். 2. விரிவடையச் செய்தல். வாரி பெருக்கி (குறள். 512). 3. குப்பை கூட்டுதல். 4. ஓர் எண்ணை மற்றோர் எண்ணாற் குறித்த மடங்கு அதிகப் படுத்துதல். ம. பெருக்குக, தெ. பெருகு (g), க. பெர்சிசு. பெருக்கல் = 1. ஆக்கமடையச் செய்தல். பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனென் (பெருங், உஞ்சைக். 37 : 200). 2. குப்பை கூட்டுதல். 3. ஓர் எண்ணை மற்றோர் எண்ணாற் குறித்த மடங்கு அதிகப்படுத்துதல். பெருக்கம் = 1. மிகுதி. உண்மைப் பெருக்கமாந் திறமை (திருவாச. 42 : 7). 2. வளர்ச்சி. 3. ஆக்கம். பெருமித நீர்த்து (குறள். 431). 4. நீர்ப்பெருக்கமான வெள்ளம். புதுப்பெருக்கம் போல (நாலடி. 354). 5. நீடிப்பு. தாலிப் பெருக்கம் (உ.வ.). பருக்கன் = பெருக்கன் = பரும்படியானது. பெருக்கன் - பெருக்கான் = பெருச்சாளி (கோவை வழக்கு). பெருத்த எலி - பெருச்சாளி (மரூஉ). பெரு + சாளி (பெரும் பணப்பை) என்று காளமேகப் புலவர் பகுத்தது பொருந்தாது. பரு - பரிய - பெரிய = 1. பருத்த. எ-டு : பெரிய காய். 2. பருத்தகன்ற எ- டு : பெரிய வீடு. 3. அகன்ற. எ-டு : பெருநிலம். 4. மூத்த. எ - டு : பெரியண்ணன், 5. தலைமையான. எ-டு : பெரிய ஆசிரியர். 6. உயர்வான. எ-டு : பெரிய திருவடி. 7. சிறப்பான. எ - டு : பெரிய கொடை. 8. திருச் சிறப்பான. எ - டு : பெரிய வெள்ளிக்கிழமை. 9. வலிய. எ - டு : பெரிய காற்று. 10. மிகுந்த. எ - டு : பெரிய செல்வம். 11. உயரமான. எ - டு : பெரிய மரம். 12. நீண்டுயர்ந்த. எ - டு : பெரிய மலை. பருமி - பருமிதம் - பெருமிதம் = 1. மேன்மை. பெருக்கம் பெருமித நீர்த்து (குறள். 431). 2. உள்ளக் கிளர்ச்சி, உள்ளக் களிப்பு (திவா.). 3. மேம்பாட்டுணர்ச்சி. கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமித நான்கே (தொல். மெய்ப். 9) 4. செருக்கு. பெருமை பெருமித மின்மை (குறள். 979). புல் - புது. ஒ. நோ : மெல் - மெது. புது - புதல் = 1. செறிந்த தூறு. புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள். 274). 2. புல்லினம் (திவா.). 3. மருந்துப்பூடு (திவா.). புதல் - புதர் = தூறு. bj., க. பொதரு. புது - புதா = 1. பெருநாரை. புள்ளும் புதாவும் (சிலப். 10 : 117). 2. மரக்கால் நாரை (சிலப். 10 : 117, அரும்.). புதா - புதை = அம்புக்கட்டு. புதையம்பிற் பட்டு (குறள். 597). 2. மரச்செறிவு, செடியடர்த்தி. 3. ஆயிரம் என்னும் தொகை. புது - பூது - பூதம் = 1. பருத்தது, பெரியது. 2. பெரும் பேய். பூதங் காப்பப் பொலிகளந் தழீஇ (புறம். 369 : 17). 3. கூந்தற்பனை (சங். அக.). நிலம் நீர் முதலிய ஐம்பூதங்களுள் ஒன்றைக் குறிக்கும் பூதம் என்னும் சொல்பூ (வ. bhuÌ) என்னும் முதனிலையினின்று திரிந்தது. பூத்தல் - தோன்றுதல். இவ் விருவேறு சொற்களையும் ஒன்றாகக் காட்டியதோடு, வடசொல்லாகவுங் குறித்தது, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகரமுதலித் தொகுப்பு. பூதம் - பூதவம் = மிகப் பெரியதாய்ப் படரும் அல்லது பூதம் குடியிருக்கும் ஆலமரம் (திவா.). பூதம் - பூதன் = 1. மகன் (யாழ். அக.). 2. ஒரு பண்டை யியற் பெயர். பொய்கை பூதன் பேயார் (அஷ்டப். நூற்றெட். காப்பு.). பூதம் - வ. பூத (bhuta). பூதன் - பூதல் - பூதலி. பூதலித்தல் = உடல் பருத்தல். புதை - புடை. புடைத்தல் = 1. பருத்தல். மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி (திருப்பு. 1176). 2. வீங்குதல். உடல்புடைப்ப வடித்து (திருவாலவா. 34 : 4). க. பொடெ. புடை = 1. பருத்த பாகம் (W.). 2. பகுதி. மற்றப் புடையெல்லாம் ஒவ்வாது (இறை. கள. 1, ப. 23). 3. பக்கம். ஒருபுடை பாம்பு கொளினும் (நாலடி. 148). 4. சார்பு. 5. இடம் (பிங்.). 6. முறை. நிர்வகிப்பதும் சிலபுடைகளுண்டு (ஈடு, 10 : 10 : 11). புடை - புடைவி - புடவி = 1. பருத்த ஞாலம் (திவா.). 2. உலகம். அதிர்வன புடவிக ளடையவே (தக்கயாகப். 723). க. பொடவி, தெ. புடமி, பிரா. புடவீ - வ. ப்ருத்வீ. புடை - புடைவை = 1. சுற்றிக் கட்டும் ஆடை. வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபு. திருநாவுக். 61). 2. மகளிர்சேலை. புடைவை - புடவை = 1. துணி. (S.I.I. IV, 31). 2. சேலை. புடை - புடம் - புட்டம் = 1. புடைத்த பின்புறம் (குண்டி). 2. புடைவை (பிங்.). தெ. புட்டமு. புட்டம் - வ. ப்ருஷ்ட. ஒ. நோ : LG but, Du. bot, Sw. but - buttock. புட்டம் - புட்டகம் = புடைவை. புட்டகம் பொருந்துவ புனைகுவோரும். (பரிபா. 12 : 17). புட்டம் - புட்டா = வீங்கின விதை (அண்டம்). தெ. புட்ட (dd), க. புட்டெ (dd). புட்டா - புட்டை = பெருத்த விதை (அண்டம் elephantoid scrotum). புட்டம் - புட்டி = பருமை. புட்டிபடத் தசநாடியும் பூரித்து (திருமந். 574). புடை - புணை - பணை. பணைத்தல் = 1. பருத்தல். பணைத்த வெம்முலை (கம்பரா. எழுச்சி. 33). 2. செழித்தல் (நாலடி. 251). பணை = 1. பெருமை. பணையே பிழைத்தல் பெருப்புமாகும் (தொல். உரி. 41). 2. பருத்த மூங்கில். பெரும் பணைத்தோள் (பு.வெ. 11, ஆண்பாற். 1). 3. பெரிய முரசு. வியன்பணை யுருமென வதிர்பட்டு (பதிற்றுப். 39 : 5). புது - பொது = 1. பலர் கூடிய கூட்டம், மன்று, அம்பலம், மக்கட்டொகுதி. 2. மன்று கூடும் இடம். 3. பலர்க்கும் அல்லது எல்லார்க்கும் உரிய நிலைமை. பொது நோக்கான் வேந்தன் வரிசையாநோக்கின் (குறள். 528). 4. சிறப்பின்மை. பொதுக் கொண்ட... வதுவை (கலித். 66). 5. இயல்பு அல்லது வழக்கம். உரை பொதுவே (கம்பரா. முதற். 172). 6. எல்லார்க்கும் ஒத்த நடுவுநிலை. ம. பொது, தெ. பொது (பொத்து). பொது - பொருள். பொதுளுதல் = 1. நெருங்குதல். சிகையனல் பொதுளியதால் (கம்பரா. இந்திரசித். 20). 2. நிறைதல். ஞானங் குணங்கல்வி நூல் பொதுளி (அரி சமய. பரகால். 7). 3. தழைத்தல். இருள்படப் பொதுளிய (திருமுருகு. 10). பொது - பொதும்பு = 1. சோலை. காந்தளம் பொதும்பில் (அகம். 18). 2. குறுங்காடு. முல்லையம் பொதும்பின் (சீவக. 3042). பொதும்பு - பொதும்பர் = 1. மரச்செறிவு. பொழிலின் வியன் பொதும்பரின் (திருக்கோ. 39). 2. இளமரக்கா. வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் (பெரும்பாண். 374). 3. சோலை. பொது - பொதி = 1. தொகுதி. பெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் (கம்பரா. நாகபா. 114). 2. கொத்து. அம்பொதித் தோரை (மலைபடு. 121). 3. உடல். பொதியே சுமந்துழல்வீர் (தேவா. 1154 : 9). 4. பருமன். ஆள் பொதியாயிருக்கிறான். (உ.வ.). 5. அம்பலம். மன்றம் பொதியினு மாமயில் சேர்தஞ்சை வாணன் (தஞ்சைவா. 34). 6. பொதியமலை. பொதிமாமுனிவ (சிவதரு. பாவ. 23). பொதி - பொதிகை = பொதியமலை. பொதி - பொதியம் = பொதியில். பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே (புறம். 2). பொதி + இல் - பொதியமலை = 1. அம்பலம். தமனியப் பொதியிலும் (மணிமே. 28 : 66). 2. பொதியமலை. ஆஅய் மழைதவழ் பொதியில் (குறுந். 84). பொதி - பொதிர். பொதிர்தல் = 1. வீங்குதல். புனைதார் பொர நொந்து பொதிர்ந்தவென் (சீவக. 1380). 2. மிகுதல். பொதிர்த்தல் = பருத்தல். பொதிர்ந்த முலையிடை (பரிபா. 21 : 25). பொது - பொத்து - பொத்தை = பருமையானது. பொத்தைக்கால் = யானைக்கால். பொத்தை மிளகாய் = தடித்த மிளகாய். பொத்தையன் = தடித்தவன் (யாழ். அக.). பொத்து - பொத்தி = 1. மடல்விரியா வாழைப்பூ (யாழ்ப்.). 2. சோளக்கதிர் (W.). 3. விதை (அண்டம்). 4. வரால்மீன். மத்தியுஞ் சிறு பொத்தியும் (குருகூர்ப் பள்ளு). பொத்துப் பொத்தெனல் = தடித்திருத்தற் குறிப்பு. குழந்தை பொத்துப் பொத்தென்றிருக்கிறது (உ.வ.). பொத்து - பொந்து. பொந்து பொந்தெனல் = தடித்திருத்தற் குறிப்பு. பொந்தன் = தடித்தவன். பொந்தந்தடி = பெருந்தடி (நெல்லை). பொந்தத்தடி = பெருந்தடி (நாஞ்சில்). பொந்தான் பொதுக்கெனல் = தடித்தும் சதை தளர்ந்தும் இருத்தற் குறிப்பு. பொந்தான் - போந்தான் = பெருங்கோழி. பொந்து - பொந்தி = பருமை (சங். அக.). பொந்தி - போந்தி = வீக்கம் (யாழ். அக.). தெ. போத். போந்திக்கால் = யானைக்கால். தெ. போதக்காலு. பொது - பொதை = செடியடர்த்தி. பொது - போது - போதா = பெருநாரை (சிலப். 10 : 117, உரை). பொதி - போதி = மலை (பிங்.). புல் - பொல் - பொலி. பொலிதல் = 1. பெருகுதல் (W.). 2. மிகுதல். கழுநீர் பொலிச்த கண்ணகன் பொய்கை (மதுரைக். 171). 3. சிறத்தல். பொலிந்த வருந்தவத் தோற்கே (புறம். 1). 4. செழித்தல். பொலியுமால்வரை (தேவா. 236 : 8). 5. நீடுவாழ்தல். வழிவழி சிறந்து பொலிமின் (தொல். செய். 109). பொலி - பொலிசை = 1. ஊதியம். பொன்பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார் (சீவக. 2546). 2. வட்டி. பொலிசைக்குக் கொண்டவூரும் (S.I.I. ii, 82). ம. பொலிச. பொலியூட்டு = பொலிசையூட்டு. (S.I.I. III, 84 : 88). பொலிசை - பலிசை = 1. ஊதியம். பலிசையாற் பண்டம் பகர்வான். (பு.வெ. 12, வென்றிப். 2). 2. வட்டி. இப் பொன் பதினெண் கழஞ்சே மூன்று மஞ்சாடி குன்றிக்கும் பலிசையாற் சந்திராதித்தவல் ...... அட்டுவோமானோம். (S.I.I.(i), 116). ம. பலிச. பொலி - (பொளி) - பொழி. பொழிதல் = (செ. குன்றாவி.) 1. திரண்டு பெய்தல். கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் (புறம். 203). 2. மிகச் செலுத்துதல். இளங்கோளரி பொழிந்தான் (கம்பரா. நிகும்பலை. 118). 3. மிகுதியாய்க் கொடுத்தல் (சூடா.). 4. தட்டுத் தடங்கலின்று விரைந்து பேசுதல். (செ. கு. வி.). 1. நிறைதல். பொழிமணித் தண்டூண் (பெருங். உஞ்சைக். 47 : 110). 2. நிறைந்தொழுகுதல் புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்து (மணிமே. 14 : 49). பொழித்தல் = திரட்டுதல். பொழிப்பு = திரட்டு. பொழிப்புரை = திரட்டுரை. பொல் - பொல்கு - பொலுகு. பொலுகுதல் = அதிகப்படுதல். தெ. பொலசு (Z). பொழி - பொழில் = 1. பெருமை (பிங்). 2. சோலை (பிங்.). காவதப் பொழிற்கப்புறம் (கம்பரா. வனம்புகு 52). 3. பூந்தோட்டம் (திவா.). அணிமலர்ப் பூம்பொழி லகவயின் (மணிமே. பதி. 38). 4. ஞாலம். பொழில் காவலன் (பு. வெ. 6 : 6). 5. உலகம். நல்கித்தான் காத் தளிக்கும் பொழிலேழும் (திவ். திருவாய். 1 : 4 : 5). 6. நாடு (சூடா.). 7. நாட்டின் கூறு. நாவலந் தண்பொழில் (பெரும்பாண். 465). குறிப்பு : 1.பருத்தல் என்பது ஒன்றற்கும் பலவின் ஈட்டத்திற்கும் பொதுவாம். 2.பருத்தல், மிகுதல், தொகுதல், செறிதல், நிறைதல் என்பன ஓரினக் கருத்துகள். புல்3 (திரட்டற் கருத்துவேர்) பருத்தற் கருத்தினின்று திரட்டற் கருத்துப் பிறக்கும். பொழித்தல் = திரட்டுதல். பொழிப்பு = திரட்டு, பிண்டம். பொளி = திரண்ட வரப்பு. பொளியை வெட்டி இரண்டு தளையும் ஒன்றாக்கினான் (W.). வரம்பு கட்டுதல், வரம்பு திரட்டுதல் என்னும் வழக்குகளை நோக்குக. பொளி - பொழி = 1. கணு. பொற்குடம் பொருந்திய பொழியமை மணித்தூண் (பெருங். உஞ்சைக். 48 : 87). 2. வயல்வரம்பு, வரப்பு. புல் - புள் - பிள் - பிழம்பு = 1. திரட்சி. கடுந்தழற் பிழம்பன்ன (திருவாச. 29 : 7). 2. வடிவு. உண்மை யுணர்த்திப் பிழம்புணர்த்தப் படாதன (இறை. கள. ப. 15). 3. உடல். பிழம்புநனி யுலர்த்தல் (தொல். புறத். 20, உரை. பிள் - பிண்டு = 1. திரட்சி. 2. உடம்பு. பிண்டாலம் வித்தின் (திருமந் 3025). ஒ.நோ : கள் - கண்டு, நள் - நண்டு, சுள் - சுண்டு, வள் - வண்டு. பிண்டு - பிண்டம் = 1. திரளை. 2. சோற்றுத்திரளை. பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் (தொல். புறத். 8). 3. உண்டை (பிங்.). 4. தென்புலத் தார்க்குப் படைக்கும் சோற்றுண்டை. 5. சதைத்திரள். உறுப்பில் பிண்டமும் (புறம். 28). 6. உடம்பு. உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புறம். 18). 7. தொகுதி. பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் (புறம். 184). 8. நூற்பிரிவுப் பொருளைப் பொதுப்படத் தொகுத்துக் கூறும் நூற்பா. பிண்டந் தொகைவகை குறியே செய்கை (நன். 20). 9. மூவுறுப்படங்கிய நூல். மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும் (தொல். செய். 170). ஒ.நோ : கண்டு - கண்டம், துண்டு - துண்டம். தெ. பிண்டலி, வ. பிண்ட, க. பெண்ட்டெ, ஹெண்ட்டெ, ஹெண்டெ. பிண்டக்கரு = உறுப்பற்ற சதைத்திரளான கரு (embryo, foetus). பிண்டக் காப்பு = சோறு. பிண்டக் காப்புக்குத் தாளம் போடுகிறான் (உ.வ.). பிண்டக் கருமம் = தென்புலத்தார்க்குப் பிண்டம் படைக்கும் சடங்கு. பிண்டகன் = பிண்டம் படைப்போன். பிண்ட நூற்பா = அதிகாரப் பொருளை அல்லது நூற்பிரிவுப் பொருளைத் தொகுத்துக் கூறும் நூற்பா. பிண்டதானம் = பிண்டப் படைப்பு. பிண்டப் பொருள் = கருத்து (W.). பிண்டப் பொழிப்பு = பிண்டவுரை (சி.போ. பா. 1, ப. 26, சுவாமிநா). பிண்டபாகம் = ஐயம் (பிச்சை) (அக. நி.). பிண்டம் பிடித்தல் = (செ. குன்றாவி.). 1. உண்டை திரட்டுதல். 2. உருச்சிதைத்து உருண்டை யாக்குதல். (செ. கு. வி.). கரு உண்டாதல் (உ.வ.). பிண்டம் விழுதல் = காய் விழுதல் (abortion). பிண்டவுரை = பொழிப்புரை (W.). பிண்டு - பிண்டி. ஒ.நோ : கண்டு - கண்டி, துண்டு - துண்டி. பிண்டி = 1. வடிவம் (சிலப். 3 : 26, உரை). 2. கூட்டம் (W.). 3. ஏழாம் நாள் (புனர்பூசம்) (சூடா.). 4. இணையா வினைக்கை வகை (சிலப். 3 : 18, உரை). பிண்டித்தல் = (செ. குன்றாவி.). திரளை யாக்குதல். பிண்டித்து வைத்த வுண்டியை (தொல். புறத். 8, உரை). 2. தொகுத்தல். (செ. கு. வி.). திரளுதல். பிண்டித்துப் பெருகிற் றென்பார் (சீவக. 1276). பிண்டி - பிடி. ஒ. நோ : கண்டி - கடி, தண்டி - தடி. பிடித்தல் = (செ. குன்றாவி). 1.கையால் இறுக்கித் திரட்டுதல் அல்லது திரளையாக்குதல். பொரிவிளங்காய் பிடிக்க வேண்டும். (உ.வ.). 2. கையால் இறுக்கித் திரட்டிப் படிமையமைத்தல். பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது (பழ.). 3. கையால் இறுக்கித் திரட்டுதல் போல் ஒன்றை இறுகப் பற்றுதல். குடை பிடித்தான் (உ.வ.). 4. ஒன்று இன்னொன்றைப் பற்றுதல். பூனை எலியைப் பிடிக்கும், இன்றைக்குக் குளத்தில் மீன் பிடிக்கிறார்கள். ஓடுகிற மாட்டைப் பிடித்துக்கொண்டு வந்தான். ஊர்காவலர் குற்றவாளியைப் பிடித்துக்கொண்டார்கள். இந்தப் பிள்ளையைக் கொஞ்சநேரம் பிடி (உ.வ.). 5. கோணியைப் பிடித்து வாங்குதல். திருநெல்வேலிக்கு அரிசி பிடிக்கப் போயிருக்கிறார்கள். (உ.வ.). 6. கயிற்றைப் பிடித்து வாங்குதல். காங்கேயத்திலிருந்து ஓரு சோடி மாடு பிடித்து வந்திருக்கிறான் (உ.வ.). 7. கலத்தில் நீர் கொள்ளுதல். குழாயில் நீர் பிடித்துவா (உ.வ.). 8. கழங்கு விளையாடுதல். தட்டாங் கல் பிடித்து விளையாடுகிறார்கள். ஒற்றையா இரட்டையா பிடிக்கலாமா? (உ.வ.). 9. பொருத்துதல். நாற்காலிக் காலுக்கு வாங்கு பிடிக்க வேண்டும் (உ.வ.). 10. அழுத்தித் தடவுதல். உடம்பு பிடிக்கிறவன் இங்கே இருக்கிறானா? 11. சுளுக்குதல். காலில் நரம்பு பிடித்துக்கொண்டிருக்கிறது (உ.வ.). 12. இறுக்கமாயிருத்தல். சட்டை முதுகிற் பிடிக்கிறது (உ.வ.). 13. உள்ளடக்குதல். அந்தப் பெட்டி எல்லார் உடுப்பையும் பிடிக்கும் (உ.வ.). 14. ஒட்டிக்கொள் ளுதல். பேன் பிடித்த தலை (உ.வ.). 15. தாங்குதல். முட்டுக்கட்டை சுவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது (உ.வ.). 16. ஒளிப்படம் எடுத்தல். படம் பிடிக்கும் இடம் (உ.வ.). 17. பற்றிக் கொள்ளுதல். யார் சேலையிலிருந்தோ சாயம் பிடித்துவிட்டது (உ.வ). 18. பற்றி யெரிதல். குடிசையில் தீப்பிடித்துவிட்டது. 19. அடித்தல். விதை பிடித்த காளை. 20. குறைத்தல். சம்பளத்திற் பத்து ரூபா பிடித்துக் கொண்டார்கள் (உ.வ.). 21. நிறுத்தி யடக்குதல். சல்லிக்கட்டில் மாடு பிடிப்பார்கள் (உ.வ.). 22. அடைதல். பெருகிய செல்வநீ பிடி (கம்பரா. கிளைகாண். 23). 23. அடைந் தேறுதல். மதுரை போய் வண்டியைப் பிடித்தான். 24. சொல்லைப் பயன்படுத்தல். அவன் சொன்ன சொல்லைப் பிடித்துக்கொண்டான். 25. அகப்படுத்து தல். அவன் பிடிகொடுக்க மாட்டான் (உ.வ.). 26. வசப்படுத்துதல். அவனைப் பிடித்தால் இது எளிதாய் முடியும் (உ.வ.). 27. பற்றுக் கோடாகக் கொள்ளுதல். அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை (திருவாச. 5 : 27). 28. புகலடைதல். உன்னை நான் பிடித்தேன் கொள் (திவ். திருவாய். 2 : 6 : 1). 29. மேற் கொள்ளுதல். விசுவ ரூபம் பிடித்தானே (இராமநா. சுந்தர. 19). 30. உணர்ந்து கொள்ளுதல். ஆசிரியன் கற்பித்ததை மாணவர் பிடித்துக் கொள்ள வேண்டும் (உ.வ.). 31. குறிக்கொள்ளுதல். பிடித்தது முடிக்கவல்ல விச்சையர் (பிரபோத. 24 : 52). 32. கடைப்பிடித்தல். பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும். 143). 33. ஒட்டாரம் பண்ணுதல். ஒரே பிடியாய்ப் பிடிக்கிறான் (உ.வ.). (செ. குன்றிய வி.) 1. ஒட்டிக்கொள்ளுதல். அழுக்குப் பிடித்த துண்டு. 2. தோன்றுதல். மழையிற் பாசம் பிடிக்கும் (உ.வ.). 3. விருப்பமாதல். எனக்கும் அவனுக்கும் பிடிக்காது (உ.வ.). 4. ஏற்றதாதல். அந்தவூர்த் தண்ணீர் எனக்குப் பிடிக்கவில்லை (உ.வ.). 5. செலவாதல். திருமணத்திற்கு ஆயிரம் உருபா பிடிக்கும் (உ.வ.). 6. நிகழ்தல். மலைநகரில் மாலைதொறும் மழை பிடிக்கும் (உ.வ.). k., க. பிடி. பிடித்தம் = 1. குறைப்பு. சம்பளப் பிடித்தம். 2. சிக்கனம். பிடித்தமாய்ச் செலவு செய்ய வேண்டும். 3. மனப்பொருத்தம். தகப்பனுக்கும் மகனுக்கும் பிடித்தமில்லை. 4. விருப்பம். மேனாட்டுப் பொருள்களில் எனக்குப் பிடித்தம் அதிகம். க. ஹிடித்த. பிடித்த = (பெ.) ஒரு கைப்பிடிப் பொருள். பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும் (குறள். 1037). 2. தொடங்கி. என் பிறப்பே பிடித்து (ஈடு, 2 : 1 : 1). பிடிப்பு = 1. பற்றுகை. 2. ஒட்டுக. 3. ஊதைப்பற்று (rheumatism). 4. பிடித்தம். 5. கருத்து. பிறர் செல்வமும் நம்பேறெனப் பிடிப்புள்ள வெம்மிடத்து (பிரபோத. 27 : 62). 6. உறுதி. 7. கட்டு. 8. கைப்பிடி. 9. சார்பு, தோது. ஒருவனுக்குப் பிடிப்பாய்ப் பேசு (W.). 10. நிலைக்களம். k., க. பிடிப்பு. பிடிமானம் = 1. பிடித்தம். 2. பிடிப்பு. 3. கைப்பிடி. 4. உறுதி. பிடி = 1. பற்றுகை. 2. கைமுட்டி. 3. மற்பிடி. 4. படைக்கலப்பிடி. தோல்கழியொடு பிடிசெறிப்பவும் (புறம். 98). 5. உள்ளங்கைப் பிடியளவு. தன்கேளைப் பிடிகடொறும் வேறாஞ் சுவைபெற வூட்டி (வெங்கைக்கோ. 377). 6. நால்விரல் கொண்ட அளவு. 7. பணியார வகை. பிடிசுட்டுப் படைத்தல். (W.). 8. பேய். பெண்டிர் பிடிபோல (திருவுந்தி. 35). 9. உறுதி. 10. உதவி. 11. குதிரையின் வாய்க்கருவியிற் கோக்குங் குசை. மாத்தாட் பிடியொடு (நெடுநல். 178). 12. மனத்திற் பதிகை. 13. நம்பிக்கை. 14. மதக் கொள்கை. 15. நளிநயம் (அபிநயம்) முதலியவற்றின் எடுப்பு. k., bj., க. பிடி. பிடிக்கொம்பன் (சிறு கொம்புள்ள விலங்கு). பிடிக்கொழுக் கட்டை, பிடிகயிறு, பிடிகல், பிடிகாசு, பிடிகாரன், பிடிகிழங்கு, பிடித்தராவி, பிடித்த வேர்ப்பங்கு, பிடித்தாட்டிக்கழி, பிடிச்சிற்றுளி, பிடிச்சீலை, பிடிசாம்பல், பிடிசுட்டுப் படைத்தல், பிடிசுவர், பிடிசுற்றுதல், பிடிசெம்பு, பிடிசோறு, பிடித்தபிடி, பிடித்தாடி (பலகறை), பிடிதண்டம், பிடிதம் (ஐயம்), பிடிநாள் (நன்னாள்), பிடிநெல், பிடிப்பிட்டு, பிடிபாடு, பிடிமண், பிடிமீசை, பிடியரிசி, பிடியல் (சிறுதுகில்), பிடியனம் (குறித்த அளவு கொள்ளும் பானை), பிடியாள், பிடியெழுத்தாணி முதலிய சொற்கள் தொன்றுதொட்டு வழங்கி வருவன. கைபிடித்தல் (கைக்கொள்ளுதல்). கைப்பிடி (கையிற் பெற்றுக் கொண்ட பொருள்), கைபிடிசுவர் முதலிய கூட்டுச் சொற்களும், அரிவாட்பிடி, அறுவாட்பிடி, உளிப்பிடி, கத்திப்பிடி, குடைப் பிடி, கொட்டுப்பிடி முதலிய பிடிவகைப் பெயர்களும்; உடும்புப் பிடி, கடைப்பிடி, குரங்குப்பிடி, குருட்டுப்பிடி, விடாப்பிடி முதலிய பிடிப்புப் பெயர்களும் தொன்றுதொட்டனவே. பிண்டம் என்னும் தென்சொல், வடமொழி மரபின்படி ஈறுகெட்டுப் பிண்ட என இருக்கு வேதத்தில் நின்று, திரளை, உண்டை என்னும் பொருள்களைக் குறிக்கின்றது. அதனின்று, பிண்டத்வ, பிண்டக், பிண்டன முதலிய தனிச் சொற்களையும்; பிண்டகந்த, பிண்டகரண, பிண்டதர்க்கக முதலிய கூட்டுச் சொற்களையும், ஏறத்தாழ எழுபதுவரை திரித்துள்ளனர். அங்ஙனமே, பிண்டி என்னும் தென்சொல் வடிவினின்று, பிண்டித, பிண்டின், பிண்டீ, முதலிய தனிச்சொற்களையும்; பிண்டிதமூல்ய, பிண்டிதார்த்த, பிண்டீகரண, ஸபிண்டீகரண, பிண்டீபாவ (bh) முதலிய கூட்டுச் சொற்களையும்; ஏறத்தாழ முப்பது வரை திரிந்துள்ளனர். ஆரியத்திற்குத் தமிழொடு அல்லது திரவிடத்தொடு தொடர் பில்லையென்றும், சமற்கிருதம் ஏறத்தாழ ஐந்நூறு சொற்களை மட்டும் திரவிடத்தினின்று கடன் கொண்டுள்ள தென்றும், கூறும் பரோ என்னும் சமற்கிருதப் பேராசிரியர் கூட, பிண்டம் என்னும் சொல் தென்சொல்லே யென்று தம் சமற்கிருத மொழி (Sanskrit Language) என்னும் நூலிற் பின்வருமாறு குறித்திருத்தல் காண்க. “Pinda lump, clod’: Ka, petta, pette, pente, hente, hende, clod, lump of earth’, Te, pedda, pella ‘id’, pendali ‘a lump or mass’, Ka., Te, pindu to squeeze together”. ஒ. நோ : பிழி. பிழிதல் = உள்ளிருக்கும் நீர்ப்பொருள் வடியுமாறு, ஒன்றை இறுக்கிப் பிடித்தல். பிண்டம் அல்லது பிண்டி என்பது வடசொல்லாயின், பிடி என்னும் வினைச்சொல்லும், அதன் நூற்றுக்கணக்கான திரி சொற்களும் கூட்டுச்சொற்களும் வடசொல்லாம். பிடி என்பது, குமரி நாட்டில் தோன்றிய அடிப்படைத் தமிழ்ச்சொற்களுள் ஒன்றாதலாலும், இருக்குவேதம் மிகப் பிற்காலத்ததாதலாலும், பிண்டம் அல்லது பிண்டி என்பது தென்சொல்லே யென்பது தெரிதரு தேற்றமாம். புல்4 (விரும்பற் கருத்துவேர்) பொருந்தற் கருத்தினின்று மனம் பொருந்துதலாகிய விரும்பற் கருத்துத் தோன்றும். புல்லுதல் = நட்புச் செய்தல். புல் - புல்கு. புல்குதல் = நண்பராய் மருவுதல். புல் - புர் - புரி. புரிதல் = விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். மெய்ப். 13). புரித்தல் (பி.வி.) = விரும்பச் செய்தல். புரித்த தெங்கிள நீரும் (சீவக. 2402). புரி - வ. ப்ரீ - ப்ரிய, ப்ரீதி, ப்ரேம (முதலியன). புரி - பரி. பரிதல் = 1. பற்றுவைத்தல். பண்டம் பகர்வான் பரியான் (பு.வெ. 12, ஒழிபு. 2). 2. சார்பாகப் பேசுதல். அவனுக்காகப் பரிய வேண்டா (உ.வ.). 3. காதல் கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 4. இரங்குதல். பாழாய்ப் பரிய விளிவது கொல் (பு. வெ. 3 : 8). 5. வருந்துதல். பழவினைப் பயனீ பரியல் (மணிமே. 12 : 50). 6. வருந்திக் காத்தல். பரியினு மாகாவாம் பாலல்ல (குறள். 376). 7. அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள். 502). பரி = 1. அன்பு (W.). 2. வருத்தம் (சூடா). புல் - புள் - (புளு) - புகு - புகல், புகலுதல் = 1. விரும்புதல். செருப்புகன் றெடுத்த திருமுருகு. 67). 2. மகிழ்தல். முகம்புகல் முறைமையின் (தொல். கற்பு. 11). புகல் - 1. விருப்பம். வானுரை புகறந்து (பரிபா. 19: 1). 2. கொண்டாடுகை. புகலகல் நின்மார்பின் (கலித். 79). புகல் = புகல்வு = விருப்பம். முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொடு (பதிற். 84 : 17). புள் - பிள் - பிண் - பிணி - பிடி = பெண்யானை. பிடியென் பெண்பெயர் யானை மேற்றே (தொல். மரபு. 52). பிணி = பற்று. பொருட்பிணிச் சென்று (அகம். 27). பிடித்தல் = 1. பற்றுதல். 2. விரும்புதல். பிண் - பிணா = 1. பெண். 2. பெண்டு. பெண்ணும் பிணாவும் மக்கட் குரிய (தொல். மரபு. 62). பிணா - பிணவு = பன்றி, புல்வாய், நாய், கரடி என்பவற்றின் பெண். பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை (தொல் மரபு. 59). எண்குதன் பிணவோ டிருந்தது போல (மணிமே. 16 : 68). பிணவு - பிணவல் = மேற்குறித்த மூன்றன் பெண். பிணவல் எனினும் அவற்றின் மேற்றே (தொல். மரபு. 60). பிணா - பிண - பிணை = 1. விருப்பம். பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல். உரி. 40). 2. விலங்கின் பெண் (பிங்.). புல்வாய் நவ்வி உழையே கவரி சொல்வாய் நாடின் பிணையெனப் படுமே (தொல். மரபு. 58). 3. பெண்மான். பிணையேர் மடநோக்கும் (குறள். 1089). பிள் - பெள். பெள் + தல் - பெட்டல். பெட்டல் = 1. விரும்புதல். பிரித்தலும் பெட்டலும் (தொல். கற்பு. 6.). 2. செய்ய விரும்புதல். பெட்டவை செய்யார் (இனி. நாற். 23). 3. காதலித்தல். பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள். 141). பெட்பு = 1. விருப்பம். குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் (தொல். களவு. 11). பெட்புறும்..... தீப நிகர்த்தவால் (கம்பரா. மூலபல. 135). 2. பேணுகை. பெட்பின் றீதல் யாம்வேண் டலமே (புறம். 205). பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் (தொல். களவு. 11). 3. அன்பு (சூடா). 4. பாதுகாப்பு. பெட்டார் = 1. நண்பர் (சூடா). 2. விரும்பியவர். பேணாது பெட்டார் (குறள். 1178). பெள் - பெட்டை = 1. பெண். 2. சில விலங்கு புட்களின் பெண்பால். ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய (தொல். மரபு. 53). புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப (தொல். மரபு. 54). k., தெ. பெட்ட. பெட்டையன் = 1. ஆண்மையற்றவன். 2. பேடி. பெட்டைச்சி என்பது இரட்டைப் பெண்பாலான உலக வழக்கு. பெட்டை மருட்டு = பெண்டிரை அல்லது பேதையரை அச்சுறுத்தி ஏமாற்றுகை. பெட்டைச் சிறுக்கி என்னும் வயவுச்சொல் இழிவழக்கு. சிறுமியரைப் பெட்டைப் பசன்கள் என்பது கொச்சை வழக்கு (வ.ஆ.). பையன் - பயன் - பசன். பெட்டை. பெடை = பறவைகளின் பெண்பால். பேடையும் பெடையும் நாடின் ஒன்றும் (தொல். மரபு. 55). செந்தலை யன்றில் இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு (குறுந். 160). ம. பெட, க. ஹேட்டே, பெடை - பேடை = பெண்பறவை. மாத ரிருங்குயின் மணிநிறப் பேடை (பெருங். 1 : 33 : 29). ம. பேட, க. ஹேட்டே. பேடை - பேடு = 1. பெண்பால். பேடலி யாணர் போலும் (தேவா. 249 : 1). 2. பெண் பறவை. பேடுஞ் சேவலும் (மலைபடு. 141, உரை). 3. சில விலங்குகளின் பெண். தெய்வமாக வைத்த எருமையாகிய பேட்டின் கொம்போடே (கலித். 114, உரை). 4. பேடனுக்கும் பேடிக்கும் பொதுப்பெயர். 5. பேடி. 6. கூத்துப் பதினொன்றனுள் ஒன்றான பேடிக் கூத்து. பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும் (மணிமே. 3 : 125).7. நடுவிரல் சுட்டும் பேடும் (சிலப். 3 : 18, உரை). 8. உள்ளீடில்லாக் காய். இந்தத் தேங்காய் பேடு (உ.வ.). பேடு - பேடன் = ஆண்டன்மை கொண்ட பெண். பேடன் - பேடி = 1. பெண்டன்மை கொண்ட ஆண். பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் (தொல். கிளவி. 4). பெண்ணவா யாணிழந்த பேடி (நாலடி. 251). 2. புணர்ச்சியாற்ற லின்மை. 3. நடுவிரல். சுட்டுப் பேடி (சிலப். 3 : 18, உரை மேற்கொள்). 4. அச்சம். k., bj., க. பேடி, து. பேடி (b). பேடித்தல் = அஞ்சுதல். இச் சொல்லைப் பீஷ் என்னும் வடசொற் றிரிபாகக் காட்டியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி. அவ் வடசொல்லே பே (பேம்) என்னும் தென்சொற் றிரிபாகும். ஆய்த வெழுத்தைப் பேடி யெழுத்தென்று உவின்சிலோ அகரமுதலி குறித்திருப்பது பொருந்தாது. அதை அலியெழுத் தென்பதே பொருத்தமாம். உயிரும் மெய்யுமல்லாத ஆய்தம், ஆணும் பெண்ணுமல்லாத அலிபோன்றிருத்தலின், அலியெழுத் தென்னப்பட்டது. பேடிக்கு ஆண் தோற்றமும் பெண்டன்மையு முண்டு. எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம் பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும். என்று வெண்பாப் பாட்டியல் நூற்பாவோதினும் (முதன்மொழி. 6), ஒற்றெழுத்தும் ஆய்தவெழுத்தும் அலியெழுத்தாம் என்றே அதன் உரை கூறுதல் காண்க. பேடு என்பது பேடனுக்கும் பேடிக்கும் பொதுப்பெயர். ஒரு பாலுந் தழுவாததே அலியாம். பெள் - பெட்டு. பெட்டுதல் = விரும்புதல். ஒன்றியான் பெட்டாவளவை (புறம். 399). ஒன்றியான் பெட்டா வளவையின் (பொருந. 73). பெட்டாவளவை = விரும்பிக் கேட்பதற்கு முன்னே. பெள் - பெண் = 1. இருதிணைப் பெண்பால். 2. உயர்திணைப் பெண்பால். பெண்ணும் பிணாவும் மக்கட் குரிய (தொல். மரபு. 92). பெண்ணே பெருமை யுடைத்து (குறள். 907). 3. சிறுமி. 4. மகள். இந்திரன் பெண்ணை (கந்தபு. திருப்ப. 35). 5. மணமகள். பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி (அகம். 112). 6. மனைவி. பெண்ணீற் றுற்றென (புறம். 82). 7. பெண்டன்மை. ம. bg©., க. பெண், ஹெண்ணு. பெண்ணடி = பெண் பிறங்கடை (வாரிசு). ஒரு பெண்ணடிதன் காணிக்குத் தேடக் கருத்தாகி (விறலிவிடு. 152). பெண்ணலி = பெண்டன்மை மிக்க அலி. (தொல். மரபு. 106, உரை). பெண்ணன் = ஆண்மையற்றவன். பெண்ணான் = கணவன் மனைவியர் (தம்பதிகள்) (நாமதீப. 176). பெண்ணாறு = கிழக்கு நோக்கி யோடி வங்கக் கடலிற் கலக்கும் ஆறு. ஆணாறு பெண்ணாறு ஒன்றின்றிக்கே (ஈடு, 4 : 4 : பிர.). பெண்ணெழுத்து = நெட்டுயிரெழுத்து (வெண்பாப். முதன் மொழி. 6). பெண்ணையன் = 1. பெண்டன்மையுள்ளவன். 2. மனைவிக் கடங்கியவன். பெண்ணைவாயன் = பெண்டிரைப்போற் பேசுவோன். பெண்பிள்ளை = 1. பெண்குழந்தை. 2. பெண்டு. நாயகப் பெண்பிள்ளாய் (திவ். திருப்பா. 7). 3. மனைவி. பெண்பிள்ளைப் பிள்ளை = பெண் பிள்ளை. (மிகைபடக்கூறும் உலக வழக்கு). பொம்பிளைப் பிள்ளை என்பது இதன் கொச்சை வடிவு. பெண்பெண்டாட்டி = பெண்டு. ஒரு பெண்டாட்டி ஆணுடை யுடுத்து (ஈடு, 6 : 2 : பிர.). இச் சொல், இன்று வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில், பொம்மநாட்டி என்னும் கொச்சை வடிவில் வழங்குகின்றது. பெண்மகள் = 1. பெண்டு (W.). 2. சிறுமி. பேதைப் பருவத்துப் பெண்மகளை (தொல். சொல். 164, சேனா). பெண்மகன் = சிறுமி. பெண்மை யடுத்த மகனென் கிளவியும் (தொல். பெயரியல், 10). இதற்கு, புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை, மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்குப என்பது சேனாவரையர் உரை. பெண்மகன் என்னும் மாறோக்கத்தார் வழக்கு, பெட்டைப் பசன் என்னும் ஆம்பூர் வட்டத்தார் வழக்குப் போன்றது. மாறோக்கம் (மாறோகம்) கொற்கை சூழ்ந்த நாடு. பெண் வாயன் = பெண்டிர்போற் சளசளவென்று பேசுவன். பெண்பாலரையும் மனைவியையும் பெண்சாதி என்பது இரு பிறப்பி (hybrid) என்னும் இழிவழக்கு. இதில், நிலைச்சொல் தமிழ்; வருஞ்சொல் வடமொழி. பெண்சாதி = 1. பெண்பாலார். உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்ற மான்பிணைபோலும் நோக்கினையுடைய மகளிர் (மதுரைக். 555, உரை). 2. மனைவி. உன்தன் வீட்டுப் பெண்சாதிக்காக (இராமநா. அயோத். 8). பெண் - பெண்டு = 1. பெண்பாலள். ஒரு பெண்டாலிதய முருகினையாயின் (வெங்கைக்கோ. 47). 2. வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே (ஐங். 57). ம. பெண்டி, க. பெண்ட, ஹெண்ட, தெ. பெண்ட்டி. பெண்டு - பெண்டன் = பேடி (திவா.). க. ஹெண்ணுக. பெண்டாளன் = பெண்டை மனைவியாகக் கொண்டவன் அல்லது நுகர்பவன். பெண்டாட்டி = 1. பெண். ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து (இறை. கள. 1, உரை). 2. மனைவி. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி (திரிகடு. 96). 3. வேலைக்காரி (S.I.I.II, 483). க. ஹெண்டத்தி. பெள் - பேள் - பேட்பு = விருப்பு. பேள் - பேண். பேணுதல் = 1. விரும்புதல். பேணான் வெகுளி (குறள். 526). 2. போற்றுதல். தந்தைதாய்ப் பேண் (ஆத்தி. 20). 3. பாதுகாத்தல். பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் (புறம். 9). 4. மதித்தல். தெய்வம் பேணித் திசைதொழு தனிர் சென்மின் (பரிபா. 15 : 48). 5. மதிப்புரவாக நடத்துதல். பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் (திரிகடு. 6). 6. வழிபடுதல். அமரர்ப் பேணியும் (பட்டினப். 200). 7. பொருட்படுத்துதல். துவலைத் தண்டுளி பேணார் (நெடுநல். 34). 8. பிழை நேராமற் காத்தல். பாணியுந் தூக்கு நடையும் பெயராமை பேணி (பு.வெ. 12, ஒழிபு, 19). 9. சுவடித்தல். பேணி நிறுத்தா ரணி (கலித். 104). 10. கருதுதல் (திவா.). 11. குறித்தல் (சூடா.). 12. உட்கொள்ளுதல். விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி (சிறுபாண். 244). 13. அறிதல். பேணா தொருத்தி பேதுற (பரிபா. 7 : 67). 14. ஒத்தல். பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் கண் (பரிபா. 7 : 63). 15. மகிழ்தல். பிறனாக்கம் பேணாதழுக்கறுப்பான் (குறள். 163). பேண் = 1. விருப்பம். பிணையும் பேணும் பெட்பின் பொருள் (தொல். உரி. 40). 2. பேண் மரம் (W.). பேண் - பேணம் = 1. மதிப்பு. 2. பதனம். 3. ஊட்டந்தருகை. பேண் - பேணரவு = பேணல். பேண் - பேணி = ஒருவகைப் பணியாரம். பேண் - பேணகம் = ஒருவகைப் பலகாரம். வ. பேணிக (phenika). பேணுநர் = பாதுகாப்போர். பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ (மணிமே. 14 : 47). பேணார் = பகைவர். பேணா ரகநாட்டு (பு.வெ. 3 : 4). ஒ.நோ : பெட்டு = விருப்பம் E. pet. “pet, n., & v.t. (-tt-). 1. Animal tamed & kept as favourite, or treated with fondness; darling, favourite, (often attrib); one’s ... aversion, what one specially dislikes; ... cock, small stop-cock for draining, letting out steam, etc; - name, one expressing fondness or familiarity. 2. v.t. Treat as a ..., fondle; ... ting party (colloq.), social gathering of young people at which hugging, kissing, etc., are indulged in. (16th C.Sc. & north., orig. unkn.)” (The Concise Oxford Dictionary.) புல்5 (வளைதற் கருத்துவேர்) புல் - புர் - பிரள். புரளுதல் = 1. உருளுதல். அடித்துப் புரண்டு விழுந்தான். கழுதை புரண்ட களமாய்ப் போய்விட்டது (உ.வ.). 2. சுற்றுதல் (W.). 3. அலைமறிதல். புரணெடுந் திரைகளம் (கம்பரா. விபீடண. 27). 4. கரை கடந்தோடுதல். ஆறு கரைபுரண்டோடு கிறது (உ.வ.). 5. மாறி மாறி வருதல். வெயில்களும் நிலாக்களும் புரள (கம்பரா. பிரமா. 99). 6. மாறுபாடடைதல். 7. சொற்பிறழ்தல். 8. சாதல். கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப் புரண்டான் (குருபரம். 165. ஆறா.). 9. பணம் விரைந்து தொகுதல் அல்லது கைமாறுதல். ம. புரளுக, க. பொரள், தெ. பெரலு. புரள் - புரளி = 1. பொய். 2. வஞ்சினை. 3. குறும்பு (W.). 4. கலகம் (W.). புரள் - புரண்டை - பிரண்டை = திருகலான கொடிவகை. ம. பிரண்ட. புரள் - புரட்டு. புரட்டுதல் = 1. உருட்டுதல். முடையுடைக் கருந்தலை புரட்டு முன்றா ளுகிருடை யடிய (பட்டினப். 230). 2. கீழ்மேலாகத் திருப்புதல். 3. கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல். கறியைப் புரட்டு, கத்திரிக்காயைப் புரட்டியிருந்தது (உ.வ.) 4. உண்டபின் வயிற்றிற் கோளாறு நேர்தல். வயிற்றைப் புரட்டுகிறது (உ.வ.). 5. சொற்பொருள் திரித்தல். 6. வஞ்சித்தல் (W.). 7. நிலத்திற் படிவித்து அழுக்காக்குதல். புதுச் சேலையைக் கீழும் மேலுமாகப் புரட்டுகிறாள் (உ.வ.). ம. புரட்டுக, க. பொரள்சு. புரட்டு - புரட்டல் = குழம்புங் கூட்டுமின்றிக் கட்டியாகச் சமைத்த கறிவகை. புரட்டு = 1. கீழ்மேலாகத் திருப்புகை. 2. சொற்பொருள் திரிப்பு. புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா. 38 : 14). 3. வஞ்சகம். 4. குமட்டல். 5. வயிற்றுவலி. 6. கறிச் சமையல் வகை. புரட்டன் = 1. சொற்பொருள் திரிப்போன். 2. மாறாட்டக்காரன். புரட்டு - பிரட்டி = 1. தோசை திருப்பி. 2. புரட்டன். புரள் - புரட்சி = 1. பெருங்கலகம். 2. அரசியல்வகை மாற்றம். எ- டு : இரசியப் புரட்சி. 3. மக்கள் வாழ்க்கை முறை (தொழில், மதம், மொழி, கல்வி, ஊண், உடை முதலியவற்றின்) மாற்றம். 4. பிறழ்வு. புரள் - பிறழ். பிறழ்தல் = 1. மாறுதல். சிறுகா பெருகாமுறை பிறழ்ந்து வாரா (நாலடி. 110). 2. முறை கெடுதல். களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் (சீவக. 804). 3. மாறுபட்டுக் கிடத்தல். மயிலெருத்துற ழணிமணி நிலத்துப் பிறழ (கலித். 103). 4. பெயர்தல் (அக. நி.). 5. புடைபெயர்தல். மாணெழி லுண்கண் பிறழுங் கயலாக (கலித். 98). 6. நெளிதல். வயலாரல் பிறழ்நவும் (பதிற். 13 : 1). 7. வெட்டி வெட்டி விளங்குதல். ஒளி பிறழு நெடுஞ்சடை (கல்லா. 54 : 11). 8. முரிதல். திரைபிறழிய விரும்பௌவத்து (பொருந. 178). 9. திகைத்தல். பிறங்க லிடையிடைப் புக்குப் பிறழ்ந்து (பரிபா. 19 : 59). 10. நடுங்குதல் (சூடா). 11. சொன்மாறுதல். 12. இறந்துபடுதல். பிணிபுநீ விடல்சூழற் பிறழ்தரு மிவளென (கலித். 3). புரள் - பிரள் - பிரளி (பிறளி) = குழந்தை நோய்வகை. புர் - புரி. புரிதல் = 1. வளைதல். 2. திரும்புதல். மற்றை யருகே புரியில் (திவ். இயற். திருவிருத். 42. வியா. ப. 247). 3. முறுக்குக் கொள்ளுதல். சுகிர்புரி நரம்பின் (மலைபடு. 23). 4. அசைதல். தார்புரிந்தன்ன (பதிற். 66 : 13). புரி = 1. முறுக்கு. புரியடங்கு நரம்பு (சிறுபாண். 34). 2. சுருள். புரிக்குழன் மடந்தை (சீவக. 2688). 3. சுரி (spiral screw) 4. யாழ். நரம்பு. புரிவளர் குழலொடு (சீவக. 124). 5. கயிறு, மரற்புரி நரம்பின் (பெரும்பாண். 181). 6. சங்கு. புரியொருகை பற்றி (திவ். இயற். 1 : 31). 7. மாலை. புரிமணி சுமந்த பொற்பூண் (சீவக. 619). 8. கட்டு (சூடா). 9. வளைந்த மதில். 10. மதில் சூழந்த நகரம் (பிங்.). k., f., து. புரி. புரிக்கூடு = வைக்கோற் புரி. நெற்கூடு. புரிக்கூட்டில் நின்ற .... பல வருக்கத்து நெல்லு (சிலப். 10 : 123, உரை). புரிகுழல் = கடை குழன்று சுருண்ட கூந்தல். புரிகுழன் மாதர் (சிலப். 14 : 37). புரிசடை = சுருண்ட சடை (W.). புரிநூல் = முறுக்கிய பூணூல். திருமார்பினிற் புரிநூலும் (தேவா. 385 : 3). புரிமணை = வைக்கோற்புரி வளையம். புரிமுகம் = 1. சங்கு. 2. நத்தை. சங்குக் கூடும் நத்தைக் கூடும் உள் வளைவுள்ளன. புரிமுறுக்கு = முறுக்கு வளையல். இடம்புரி = இடப்புறமாக வளைந்த சங்கு. கொடும்புரி = மிக ஏறிய முறுக்கு. முப்புரி = முறுக்கிய முந்நூல் (பூணூல்). வலம்புரி = வலப்புறமாக வளைந்த சங்கு. வைக்கோற்புரி = முறுக்கிய வைக்கோற் கயிறு. புரி - புரிவு = 1. தப்பி நீங்குகை. புரிவின்றி.... போற்றுவ போற்றி (பு.வெ. 8 : 20). 2. தவறு. புரிவிலா மொழிவிதுரன் பாரத. சூது. 43). 3. வேறுபடுகை (அக. நி.). புரி - புரிசை = நகரைச் சூழ்ந்த மதில். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறம். 17). புரி - பரி. பரிதல் = 1. (வளைந்து) முறிதல், வெண்குடை கால்பரிந்துலறவும் புறம். 229). 2. அறுதல். பரிந்த மாலை (சீவக. 1349). 3. அழிதல். பழவினை பரியுமன்றே (சீவக. 1429). 4. பிரிதல் (W.). பரித்தல் = சூழ்தல். குருதி பரிப்ப (அகம். 31). 2. அறுத்தல். (அக. நி.). க. பரி. பரி - வ. பரி. “Pari, ind. round, around, about, round about; fully, abundantly, richly (esp.) ibc. (where also pari) to express fullness (or high degree), R.V. & c. & c. as a prep. (with acc.) about (in space and time), R.V. , A.V., against opposite to, in the direction of, towards, to, ib. (of. Pam. i, 4, 90; also at the beginning of a comp. mfn. cf. ib. ii, 2, 18, Vartt. 4 Fat. and Pary adhyayana), beyond, more than, A.V., to the share of (with as or bhu, to fall to a person’s lot.). Pam i, 4, 90, successively, severally (e.g. vriksham pari sincati, he waters tree after tree), ib; (with abl.) from, away from, out of, R.V.; A.V.; SBr. (cf. Pam, I, 4.93); outside of, except, Pam, 1,4,88, Kat. (often repeated, ib. viii, 1,5; also at the beginning of or the end of am ind. Comp., ib. II, 1, 12); after the lapse of Mu. III, 119; MBh. XIII, 4672 (some read parisamvatsarat); in consequence or on account or for the sake of, R.V; A.V.; according to (esp. dharmanas pari, according to ordinance or in conformity with law or right), R.V.; (cf. Zd. pairi, Gk. pari)”. - A Sanskrit English Dictionary by Sir Monier Monier Williams, p. 591. “peri, pref. = Gk. peri round, about, as : perianth, floral envelope;- carditis n., inflammation of - cardium; - cardium, membranous sac enclosing the heart, so - cardiac, - cardial, aa.; pericarp, seed-vessel, wall of ripened ovary of plant........” - The Concise Oxford Dictionary பரிகலம் = 1. வட்டில், வட்டமான உண்கலம். மலரயன் கொடுத்த பரிகல மிசையவே (குற்றா. குற. 13). 2. தெய்வமும் உயர்ந்தோரும் உண்டெஞ்சிய மிச்சில். வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி (பதினொ. கோயினான். 40). பரிகை = 1. மதிலைச் சூழ்ந்த அகழி (திவா.). 2. மதிலுண் மேடை (பிங்.). தோன்றுமிப் பரிகை (மேருமந். 1054). பரிகை - வ. பரிகா. பரிகம் = 1. மதில் (சூடா). 2. அகழி. 3. மதிலுண் மேடை. பரிசு = வட்டமான கூடையோடம் (coracle). பரிசு - பரிசல் (coracle). பரி - பரிசை = 1. வட்டமான கேடகம் (புறம். 16, உரை). 2. வட்டமான விருது (W.). 3. கூடையோடம். பரி - பரிதி = 1. வட்டவடிவு (திவா.). பரிதி ஞாலத்து (புறம். 174). 2. கதிரவன். பரிதியஞ் செல்வன் (மனிமே. 4 : 1). 3. கதிரவனை அல்லது திங்களைச் சூழ்ந்த கோட்டை (பரிவேடம்) (பிங்.). வளைந்து கொள்ளும் பரிதியை (இரகு. இந்து. 7). 4. தேருருளை. அத்தேர்ப் பரிதி (களவழி. 4). 5. சக்கரப் படைக்கலம். பரிதியிற் றோட்டிய வேலைக் குண்டகழ் (கல்லா. 80 : 23). 6. சகோடப்புள். தண்கோட்டகம் பரிதியங் குடிங்கு கூடுமே (இரகு. நாட்டுப். 40). 7. கோளின் தொலைக் கோண வளவு (epicycle). பரிதி காந்தம் = ஒருவகைக் கண்மணி (jasper), பரிதி காந்த மென்றுரைத்திடு பன்னொரு சிகரத்து (உபதேசகா. கைலை. 24). பரிதிபாகை = வானநூலளவை வகை (W.). பரிதி வட்டம் = கதிரவன் மண்டலம். வெங்கதிர்ப் பரிதி வட்டத்தூடுபோய் விளங்கு வாரே (திவ். பெரியதி. 4 : 5 : 10). புர் - புரு - புருவு - புருவம் = 1. கண்களின் மேலுள்ள மயிர் வளைவு. கொடும்புருவங் கோடா மறைப்பின் (குறள். 1086). 2. புண் விளிம்பு (W.). 3. செய்வரப்பு (W.). புருவம் - வ. ப்ருவ (bhruva). cf. E. brow - arch of hair over eye, OE. bru, ON. brur, eyebrow. புரு - புருள் - புருளை - புருடை = முறுக்காணி. ஒ. நோ : உருள் - உருளை - உருடை - ரோதை - L. rota, wheel. புருடை - பிருடை = 1. முறுக்காணி (W.). 2. புட்டியடைக்குந் தக்கை. 3. சுழலாணி (சங். அக.). தெ. பிரட (b), க. பிரடெ (d). பிருடை - பிரடை = 1. முறுக்காணி (W.). 2. முறுக்காணி வில்லை. தெ. பிரட, க. பிரடெ. புல் - புள் - பள் - பண்டு - பண்டி = 1. சக்கரம். 2. வண்டி செந்நெற் பகரும் பண்டியும் (சீவக. 61). 3. சகட நாண்மீன் (சூடா.). bj., க. பண்டி. பண்டி - பாண்டி = 1. கூடாரப் பண்டி (சிலப். 14 : 168, அரும்.). 2. மாட்டுவண்டி. அகவரும் பாண்டியும் (பரிபா. 10 : 16). 3. வட்டமான வட்டு அல்லது சில். 4. நிலத்திற் கீறிய கட்டங்களில் வட்டெறிந்து நொண்டி விளையாடும் (பாண்டியநாட்டு) விளையாட்டு. 5. காளை அல்லது எருது (பரிபா. 20 : 17, குறிப்பு). பாண்டி - பாண்டில் = 1. வட்டம் (திவா.). பொலம்பசும் பாண்டிற் காசு (ஐங். 310). 2. தேர்வட்டை (சிலப். 14 : 168, உரை). 3. இரு சக்கர வண்டி, வையமும் பாண்டிலும் (சிலப். 14 : 168). 4. குதிரை பூட்டிய தேர் (திவா.). பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை (நற்.141). 5. வட்டக் கட்டில். பேரளவெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் (நெடுநல். 123). 6. வட்டத்தோல். புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில் (பதிற். 74). 7. வட்டக் கண்ணாடி. ஒளிரும்.... பாண்டில் நிரைதோல் (பு. வெ. 6 : 12). 8. வெண்கலத் தாளம். இடிக்குரல் முரச மிழுமென் பாண்டில் (சிலப். 26 : 194). 9. கிண்ணி, கழற்பாண்டிற் கணைபொருத துளைத்தோ லன்னே (புறம். 97). 10. விளக்குத் தகழி (பிங்.). 11. குதிரைச் சேணம். பாண்டி லாய் மயிர்க் கவரிப் பாய்மா (பதிற். 90 : 35). 12. குண்டை (காளை). மன்னிய பாண்டில் பண்ணி (சீவக. 2054). 13. விடையோரை (இடபராசி) (திவா). 14. வட்டப் பாதமுள்ள விளக்குத் தண்டு. நற்பல பாண்டில் விளக்கு (நெடுநல். 175). 15. வட்டாரம், மண்டலம், நாடு (W.). பாண்டி - பாண்டியம் = 1. எருது. செஞ்சுவற் பாண்டியம் (பெருங். உஞ்சைக். 38 : 32). 2. எருது கொண்டுழும் உழவு அல்லது பயிர்த்தொழில். பாண்டியஞ் செய்வான் பொருளினும் (கலித். 136). பாண்டி - பாண்டியன் = காளை யொத்த மறவன். மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து (குறள். 624). அச்சொடு தாக்கிய பாருற் றியங்கிய பண்டைச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ (புறம். 90). நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி (சீவக. 2784). உழைப்பது காளை. காளை = 1. இளவெருது. 2. கட்டிளமைப் பருவத்தினன் (திவா.). 3. ஆண்மகன் (திவா.). 4. பாலைநிலத் தலைவன் (திவா.). 5. மறவன். உரவுவேற் காளையும் (புறம். 334). முதற் பாண்டியன் அவன் காலத்திற் பண்டையனாயிருந்திருக்க முடியாதாதலால், பண்டு என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் வேந்தன் குடிப்பெயரைத் திரித்து, பழைமையானவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. பாண்டியன் நாடு என்பது பிற்காலத்திற் பாண்டிநாடென மருவிற்று. குறிப்பு : 1. வளைதற் கருத்து, சாய்தல், கோணல், மடங்கல், நெளிதல், வட்டமாதல், உருண்டையாதல், உருள்தல், சுற்றுதல், சுழலுதல் முதலிய இனக் கருத்துக ளெல்லாவற்றையுந் தழுவும். 2. வட்டக் கருத்தினின்று முழுமைக் கருத்துப் பிறக்கும். எ-டு : கடனை வள்ளிதாய்க் கொடுத்துத் தீர்த்துவிட்டான். வள்ளிது = வட்டமானது, முழுமையானது. E. roundly = in thorough - going manner. இம் முறையில், பரி என்னும் தென்சொல்லும் வடமொழியில் முன்னொட்டாகி (prefix), அல்லது முழுநிறைவு முழுமைக் கருத்தைத் தோற்றுவிக்கும். எ-டு : பூரணம் - பரிபூரணம். புல்6 (துளைத்தற் கருத்துவேர்) புல்லுதல் = துளைத்தல். இவ் வினைச்சொல் வழக்கிறந்தது. புல் = 1. உட்டுளையுள்ள நிலைத்திணைவகை. புறக்காழனவே புல்லென மொழிப (தொல். மரபு. 86). 2. ஊனுண்ணா விலங்குணவான தாளுள்ள நிலைத்திணைவகை. பசும்புற் றலைகாண் பரிது (குறள். 16). 3. உட்டுளையுள்ள பனை. அன்றில் புற்சேக்கை புக்கு (கல்லா. 38:10). 4. பனை வடிவான நாள் (அனுடம்) (பிங்.). 5. உட்டுளையுள்ள தென்னை (தைலவ. தைல.). 6. உட்டுளையுள்ள மூங்கில். புல்லாங்குழல் (உ.வ.) 7. புற்போன்ற கம்பம் பயிர் (பிங்.). புல், கம்பம்புல் (உ.வ.). 8. புல்லரிசி. 9. சிறுமை. புல்லுளை (கம்பரா. வரைக்காட்சி. 70). புன்மை = சிறுமை, சிறுதன்மை. 10. இழிவு. புன்கோட்டி (நாலடி.255). புல்லன் = இழிந்தோன். கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளென (கம்பரா. தாடகை. 72). ம. புல், க. புல், தெ. புலு. புல் - பொல். பொல்லுதல் = 1. துளைத்தல். 2. உளியாற் கொத்துதல். பொல் = உட்டுளையுள்ள பதர். தெ. பொல்லு, க. பொள்ளு. பொல்லம் = துளை, ஓட்டை, இழிவு. பொல்லம் பொத்துதல் = 1. நார்ப்பெட்டியின் ஓட்டையடைத்தல். துணிக் கிழிசலை இணைத்துத் தைத்தல். பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை (பொருந. 8). பொல்லாப் பிள்ளையார் = உளியாற் கொத்தப்படாத தான்றோன்றிப் பிள்ளையார். பொல்லாமணி = துளையிடப்படாத மணி, மாசிலாமணி. புல் - புர் - புரை = 1. உட்டுளை. புரைப்புரை கனியப் புகுந்து (திருவாச. 22 : 3). 2. உட்டுளைப் பொருள் (பிங்.). 3. குரல்வளை. புரையேறுதல் (உ.வ.). 4. விளக்குமாடம். 5. உள்ளோடும் அல்லது உட்டுளைப்புண். 6. பை மடிப்பு அல்லது அறை (W.) 7. கூறுபாடு. புரைவிடுத் துரைமோ (சீவக. 1732). 8. (உள்ளீடற்ற அல்லது உண்மையில்லாப்) பொய். வடிவிற் பிறந்த புகரிலும் புரையின்றிக்கே (ஈடு. 4:3:9). 9. நொய்ம்மை (கனமின்மை). புரையாய்க் கனமாய் (தேவா. 174:7) 10. குற்றம். புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் (குறள். 292). 11. இழிவு. 12. (உட்டுளையுள்ள) வீடு. புரைபுரை யாலிவை செய்ய வல்ல (திவ். பெரியாழ். 2:9:1). 13. தவச்சாலை. புரையுட் புக்கனர் (கம்பரா. திருவவ. 42). 14. கோவில். புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி (பதிற். 15:37). 15. வீட்டறை, கொட்டகையறை. ஆக்குப்புரை (உ.வ.). 16. பெட்டியறை. 17. மாட்டுத் தொழுவம். 18. இடம். ம. புர, வ. புர. ஒ.நோ : Gk. poros, passage, L., OF., ME., E. pore, minute opening. புரை = துளை, சிறுதுளை. புரை - புரைசல் = 1. துளை. 2. குற்றம். 3. மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று. 4. வலியின்மை. பிறனுடைய புரைசல்களை எப்படி யறியலாம் (பஞ்சதந். 64). 5. மருமம் (இரகசியம்). 6. குழப்பம். புரையன் = 1. வீடு. 2. இலைக்குடில். புரையுள் = வீடு (பிங்.). புரைப்பு = 1. குற்றம். புரைப்பிலாத பரம்பரனே (திவ். திருவாய். 4:3:9). 2. ஐயறவு. புரைப்பறத் தெளிதல் காட்சி (மேருமந். 107). புரையோர் = கீழோர், இழிந்தோர். புரைத்தல் = இன்னாமுரல் (அபசுர) வகை. (திருவாலவா. 57:14, அரும்.). புரைப்படுதல் = மரம் பொந்துபடுதல். மரம் புரைப்பட்டது (தொல். உரி. 92, உரை). பொல் - பொள். பொள்ளுதல் = (செ. குன்றாவி). 1. துளைத்தல். 2. பொளிதல். (செ. கு. வி.) 1. கிழிதல் (W.). 2. கொப்புளம் உண்டாதல். எண்ணெய்ச் சுடர் விழுந்து கை பொள்ளிவிட்டது. (உ.வ.). பொள்ளல் = 1. துளைக்கை. 2. பொளிகை. 3. துளை. சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு (நன். 12). 4. மரப்பொந்து (பிங்.). 5. அப்ப வகை. 6. கொப்புளம். 7. அம்மை வடு. 8. குற்றம். பொள்ளாமணி = துளையா மணி. பொள் - பொண்டான் = எலி தன்னைப் பிடிப்பவர் தன் வளையைத் தோண்டும்போது, தப்பியோட அமைத்திருக்கும் மறைவான பக்க வளை. பொல் (பொள்) - பொ. பொத்தல் = (செ.குன்றா.வி.). துளைத்தல். பொத்தநூற் கல்லும் (நாலடி. 376). (செ.கு.வி.) தீத்துளைத்துக் கொப்புளித்தல். தீப்பட்டுக் கை பொத்துப் போய்விட்டது (உ.வ.). பொத்தல் = 1. துளை. 2. கடன். 3. குற்றம். ம. பொத்து, க. பொட்டார, து. பொட்ரெ. பொத்தல் - பொத்தர். பொத்து = 1. துளைப்பு, துளை. 2. பொந்து, முதுமரப் பொத்தில் (புறம். 364). 3. வயிறு. பொத்தடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர் (தேவா. 188:6). 4. பொய், புல்லறிவு கொண்டு பல பொத்துமொழி புத்தா (திருவாத. பு. புத்தரை. 77). 5. குற்றம். பொத்தி னண்பிற் பொத்தியொடு (புறம். 212). 6. தீயொழுக்கம் (W.). பொத்து - பொத்தை = பொத்தல். பொத்தை யூன்சுவர் (திருவாச. 26:7) பொத்து - பொந்து = 1. மரப்பொந்து. ஆனந்தத் தேனிருந்த பொந்தை (திருவாச. 13 : 2). 2. எலி நண்டு பாம்பு முதலியவற்றின் வளை. தெ. பொந்த (b). பொள் - பொள்ளை = 1. துளை. பொள்ளைக் கரத்த போத கத்தின் (திவ். பெரியதி. 5:1:2). பொள் - பொளி. பொளிதல் = (செ.குன்றாவி). 1. துளைத்தல், துளைசெய்தல் (W.). 2. உளியாற் கொத்துதல் கல்பொளிந் தன்ன (மதுரைக். 482). 3. பிளத்தல் பொளிந்து திண்சிலை (விநாயகபு. 22:43). 4. இடித்தல். கற்றரையைப் பொளிந்து பண்ணின கிடங்கினையுடைய (மதுரைக். 730, உரை). (செ.கு.வி.) 1. ஓட்டையாதல். கண்டவிட மெங்கும் பொளிந்து (ஈடு. 4:1:1). 2. பள்ளமாதல். பொளித்தல் = 1. துளை செய்தல். மாடத்தாங்கட் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி (மணிமே. 4:52). 2. கிழித்தல். களிறு... ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப் பொளித்து (தொல். பொருளியல், 37, உரை). பொளி = 1. உளியாலிட்ட துளை, 2. மண்வெட்டியின் வெட்டு. 3. பாய் பின்ன வகிர்ந்து வைக்கும் ஓலை. சிறு பொளிப் பாய் (நாஞ்சில் நாட்டு வழக்கு) 4. மண்வெட்டியாற் புல்லொடு சேர்த்து வெட்டிய வரப்பு மண். பொள் - பொளு. பொளுபொளுவெனல் = துளையிலிருந்து நீர்ப்பொருள் ஒழுகற் குறிப்பு. புல் - புல் - புழு = துளைத்தரிக்கும் சிற்றுயிரி. புழுத்தல் = 1. புழுவைத்தல். புழுத்த கத்தரிக்காய். புழுப்புழுத்துச் செத்தான் (உ.வ.). 2. புழுவரித்தல். புழு - புகு. ஒ.நோ: தொழுதி - தொகுதி. தொழு - தொகு. புகுதல் = 1. துளைத்தல்போல் உட்செல்லுதல். å£L¡fhu® å£L¡F£ òFªjh®., பகைப்படை நாட்டிற்குட் புகுந்தது. வாள் உறைக்குட் புகுந்தது. (c.t.), வானோர்க் குயர்ந்த வுலகம் புகும் (குறள். 346). 2. உட்படுதல். சிறைதளை சங்கிலி புகிலும் (S.I.I. III, 28). 3. அகப்படுதல். சூறை புகுவன பாறையே (தக்கயாகப். 64). 4. காலத்துட் செல்லுதல். பிராய நூறு மனிதர்தாம் புகுவ ரேனும் (திவ். திருமாலை, 3). 5. செல்லுதல். 6. தொடங்குதல். கடனீ ராடுவான்... புகும் (திவ். இயற். 3:69). 7. நிகழ்தல். புகு - புகா = (உட்புகும்) உணவு. புகாஅக் காலை (தொல். களவு. 16). புகா - புகவு = 1. புகுகை. கழுது புகவயர (ஐங். 314). 2. உணவு. பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறம். 395). புகு - வ. புஜ் (bhuj). ஒ.நோ : பகு - bhaj. புகு - புகல் = 1. புகுகை. முனைபுகல் புகல்வின் (பதிற். 84:17) 2. இருப்பிடம். புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை (ஐங். 295). 3. உயிருக்கு இருப்பிடமான உடம்பு (பிங்.). 4. கூலம் இடுங் குதிர் (திவா.) 5. அடைக்கலம் புகலது கூறுகின்றான் (கம்பரா. விபீடண. 109). 6. துணை (பிங். 7. பற்றுக்கோடு. மையணற் காளை பொய்புக லாக (நற். 179). 8. ஆம்புடை (உபாயம்). புகலொன் றில்லா அடியேன் (திவ். திருவாய். 6:10:10). 9. போக்கு. அடிக்கடி புகல் சொல்கிறான் (உ.வ.). புகலி = 1. புகலடைந்த - வன் - வள். 2. ஒரு பெரு வெள்ளக் காலத்திற் புகலிடமாயிருந்த சீகாழி. புகு - புகார் = ஆறு கடலொடு கலக்குமிடம். புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் (புறம். 30). 2. காவிரி கடலொடு கலந்த இடத்துக் காவிரிப்பூம்பட்டினம். பெரும்பெயர்ப் புகாரென் பதியே (சிலப். 20: 56). புகு - புகுது. புகுதுதல் = 1. உட்செல்லுதல். பொய்யிலங்கெனைப் புகுதவிட்டு (திருவாச. 5 : 92). 2. நிகழ்தல். வேறொன்றும் புகுதா விட்ட (பெரியபு. எறிபத்த. 38). புகுது - புகுதி = 1. மனைவாயில் (பிங்.). 2. நிகழ்ச்சி. புகுதியின்ன தால் (கந்தபு. சிங்கமு. 20). 3. நுண்மதி. புகுதி கூர்ந்துள்ளார் வேதம் (கம்பரா. முதற் போர்.222) 4. வழி (அரு.நி.) 5. வருவாய் (அரு.நி.) புகுது - புகுரு. புகுருதல் = புகுதல். புகுரு - புகுர் - பூர். பூர்தல் = புகுதல். பூர் - பூரான் = மண்ணிற்குள் விரைந்து புகும் நச்சுப் பூச்சி. புகவொட்டு - புகட்டு, புகட்டுதல் = 1. நீர்ப்பொருளைக் கலத்தில் ஊட்டுதல். குழந்தைக்குச் சங்கில் பால் புகட்டு (உ.வ.). 2. அறிவுறுத்துதல். செவிதிறந்து புகட்ட (திருவிளை. விடையிலச். 4). புகட்டு - போட்டு. போட்டுதல் = புகட்டுதல். போட்டுப் பால், குழந்தைக்கு மருந்து போட்டு (உ.வ.). புகவிடு - புகடு. புகடுதல் = வீசியெறிதல். மரனொடு வெற்பினம் புகட வுற்ற பொறுத்தன (கம்பரா. நாகபாச. 146). புகு - போ. போதல் = 1. புகுதல். ஊசியின் காதில் இந்த நூல் போகுமா? (உ.வ.). 2. எண்ணில் அடங்குதல். பத்தில் ஐந்து இரண்டு தரம் போகும் (உ.வ.). 3.செல்லுதல். மாமலர் கொய்ய... யானும் போவல் (மணிமே. 3:83). 4. நெடியதாதல், நீளுதல்,நேராதல். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். உரி. 19) 5. விரிதல். போது = விரியும் பேரரும்பு. 6. பரத்தல். எதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி (கலித். 144:40). 7. கூடியதாதல். மூச்சுவிடப் போகவில்லை (உ.வ.). 8. நீங்குதல். குடிபோன வீடு (உ.வ.). 9. ஒழிதல்.பல்போனாலும் சொல் போகுமா? (பழ) 10. கழித்தல். போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன் (பழ.). போன ஆண்டு மழை பெய்யவேயில்லை (உ.வ.). 11. மறைதல். பொழுது போயிற்று (உ.வ.). 12. முடிவாதல். இன்ப மாவதே போந்தநெறி யென்றிருந்தேன் (தாயு. சின்மயானந்த. 5). 13. புணர்தல். அவளோடு போனான் (உ.வ.). 14. சாதல்... தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் (தேவா. 692:2). போ - போக்கு = 1. செல்கை. வழிப்போக்கு. 2. மனச்சாய்வு. அவன் போகிற போக்கு எனக்குப் பிடிக்கவில்லை (உ.வ.). 3. வகை. அது ஒரு போக்கு. 4. களைகண். போக்கற்றவன் (உ.வ.). 5. புகல். இலங்கை போக்கறவும் (கம்பரா. மாயாசனக. 83). 6. நிலவாசி. ஆற்றுப் போக்கான இடம். 7. சாட்டு. ஒரு போக்குக் காட்டுவதற்குக் கடன்காரனை அவனிடம் அனுப்பினேன் (உ.வ.). 8. சாக்கு. போக்குச் சொல்லாதே குற்றத்தை ஒத்துக்கொள் (உ.வ.). 9. குற்றம், போக்கறுபனுவல். (தொல். சிறப்புப் பாயிரம்). 10. சாவு. போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே (திருவாச. 1:11) போகவிடு - போக்கு - போடு. போடுதல் = வலிதாய்க் கீழிடுதல். போகடுதல் = (செ.குன்றாவி.). 1. போகவிடுதல். போகெனப் போகடாய் (சீவக. 1365). 2. விட்டுவிடுதல். போகட்ட உடம்பையும் (சீவக. 951, உரை). (செ.கு.வி.) நீங்குதல், பொல்லாதது போகடும் (தேவா. 376 :4) போ - போகு. போகுதல் = 1. போதல். 2. நீளுதல். போ - போது. போதுதல் = 1. செல்லுதல். 2. விரிதல். 3. போதியதாதல். சொன்னால் மட்டும் போதுமா? எழுதிக் கொடுக்க வேண்டாவா? (உ.வ.). புழு - புழல் = 1. உட்டுளை. பூழி பூத்த புழற்கா ளாம்பி (சிறுபாண். 134). 2. சாய்கடை (சலதாரை) (பிங்.). 3. பண்ணியாரம். தீப்புழல் வல்சி (மதுரைக். 395). 4. மீன்வகை (பிங்.). புழல் - போல் = 1. உள்ளீடல்லாதது. போல் கம்பி x கெட்டிக் கம்பி. 2. (உட்டுளையுள்ள) மூங்கில் (மலை.). 3. புகல் (W.). 4. பொய். தெ. போலு. புழல் - புகல் = புரையுள்ளது (நெல்லை). புகல்வேலை = அணிகலங்களில் உட்டுளையமையச் செய்த வேலை. புழல் - புடல். ஒ.நோ: குழல் - குடல். புடல் = உட்டுளையுள்ள புடலங்காய். புடல் - புடலை = புடலங்காய். புடலை - தெ. பொட்ல, க. படல. புடலங்காய் - வ. பட்டோலிக்கா. பட்டோலிக்கா என்னும் வடசொல் தமிழிற் புடல் என்று திரிந்துள்ளதாக, சென்னைப் ப.க.க. தமிழ் அகரமுதலி துணிச்சலுடன் குறிக்கின்றது. பகுத்தறிவுள்ளவர் உண்மை கண்டு கொள்க. புள் - புளு - புடு - புடி. புடித்தல் = பொய் சொல்லுதல். பொய் புடிக்கிறான் (சேலம் வழக்கு). இது பொய் புளுகுகிறான் என்பது போன்ற மிகைபடக் கூறல். புடி- பிடி- பிசி. ஒ.நோ : ஒடி - ஒசி. பிசி = 1. பொய். 2. உவமக் கூற்று வாயிலாக உண்மை நிகழ்ச்சியை அறிவித்தல். 3. விடுகதை. பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு (மணிமே. 22: 62) ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும் தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே (தொல். செய். 174) புடி - புசி. க. புசி. புளு - புளுகு. புளுகுதல் = பொய் சொல்லுதல். புளுகு = பொய். புளுகுணி = வழக்கமாய்ப் பொய் சொல்பவன். புளுகு - வ. பல்கு (phalgu). புல் - புற்று. ஒ.நோ : சுல் (சுலவு) - சுற்று. புற்று = 1. உட்டுளையுள்ள கறையான் மண்கூடு. புற்றிடை வெகுளி நாகம் (சீவக. 1285). கறையான் புற்றிற் பாம்பு குடிகொண்டதுபோல (உ.வ.). 2. எறும்பு வளை. 3. புரைவைத்த புண். புழுச்செறி... புற்றுறு நோய் (கடம்பபு. இலீலா. 116). தெ. ò£l, k., க. புத்து. புற்று -புற்றம். நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர (ஐங். 497). புற்றளை = புற்றுவளை. நாகம் கிடந்த.... புற்றளை (மணிமே. 20 : 99). புற்றுத்தேன் = மதிலிடுக்கில் ஈக்களால் வைக்கப்பட்ட தேன். புற்றுவெடிப்பு = பாதத்தில் தோன்றும் பித்த வெடிப்பு. புழு - புழை = 1. துளை. தம்பத்தின்மேற் புழையே ழுளவாக்கி (திருநூற். 23). 2. குழாய் (W.). 3. வாயில். திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி (மணிமே. 6 : 22). 4. சிறுவாயில். வாயிலொடு புழையமைத்து (பட்டினப். 287). 5. பலகணி. சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் (மதுரைக். 358). 6. ஏவறை. கவையுங் கழுவும் புதையும் புழையும் (சிலப். 15: 212). 7. நரகம். போகும் புழையுட் புகுந்து (ஏலாதி, 11). 8. காட்டுவழி. கவை முள்ளிற் புழையமைப்பவும் (புறம். 98). 9. ஒடுக்கவழி. புழைதொறு மாட்டிய (மலைபடு. 194). 10. ஆறு. சேர நாட்டு வழக்கு. புழைத்தல் = துளையிடுதல். அனங்கன் வாளி புழைத்த தம் புணர்மென் கொங்கை (கம்பரா. கைகேசி. 85). புழைக்கை = 1. தும்பிக்கை. 2. யானை (திவா.). புழைக்கை -பூழ்க்கை - பூட்கை = யானை. பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கைதேர் (கம்பரா. முதற்போர். 58). பூழ்க்கை முகன் மனுவை நனியென்னின் (விநாயகபு. 14: 9). புழை - புடை = 1. துளை. எலிவளை (W.). 3. குகை. 4. குகை போன்ற கிணற்றடிப் புழை. புடை - புடம். ஒ.நோ : நடை - நடம். நடமாடுதல் = நடந்து திரிதல். நடமாட்டம் = நடந்து திரிகை, உலாவுகை. ஆள் நடமாட்டம் = ஆள்கள் உலாவி வழங்குகை. புடம் = பொன்னைக் காய்ச்சித் தூய்மைப்படுத்தும் சிறு கலம் (ஞானா. 15: 26). 2. தொன்னை (இலைக்கலம்) (யாழ். அக.). புடம் - ப. புட (puta) புழை - பூழ் = துளை (இலக். அக.). புழை - பூழை = 1. துளை. புகையும் புகற்கரிய பூழை நுழைந்து (நாலடி. 282). 2. சிறுவாயில். பூழைத்தலை நுழைந்து (தேவா. 845: 1). புள் - பூள் - பூறு. ஒ.நோ : கீள் - கீறு. பூறுதல் = துளைத்தல், கிழித்தல், கீறுதல். பூறு - பீறு. ஒ.நோ : நூறு - நீறு. பீறுதல் = (செ. குன்றாவி.). 1. கிழித்தல். அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி (கம்பரா. ஊர்தே. 189). 2. கீறுதல். பன்றிக்குமுன் முத்தைப் போட்டால் அவற்றைப் பீறிப் போடும் (விவிலியம், தமிழ் மொழி பெயர்ப்பு). 3. துளைத்தல். மூக்குப்பூறுதல். 4. பிளத்தல். பீறு - பீறல் = 1. கிழித்தல். 2. கந்தை. பீறற்சீலை யிதாருக்கென்று (அரிச். பு. சூழ்வினை. 91). 3. கிழிசல். சோறது கொண்டு பீற லடைத்தே (தனிப்பாடல்). பீறு - பீற்றல் = 1. கிழிதல். 2. கந்தை. மூக்குப் பூறி = மூன்றாம் பிள்ளையாகப் பிறந்து மூக்குக் குத்தப் பெற்ற ஆண்பிள்ளை. மூக்குப் பூறி - மூக்குப் பீறி. பூறு = மலவாய். (போடு - தெ. பெட்டு. x.neh.: E put, OE. potian, L. posit, pono, E.pose). புள் - பிள். பிள்ளுதல் = (செ.கு.வி.) இரண்டாகவோ பலவாகவோ பிளந்து விடுதல். 2. துண்டுபடுதல். அப்பளம் பிண்டு போயிற்று. (உ.வ.). 3. மனம் வேறுபடுதல். நட்புப் பிரிதல். இருவர்க்கும் பிட்டுக் கொண்டது (உ.வ.) (செ. குன்றாவி.). 1. பிடுதல். அன்னையவரும் தரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக். 1). 2. தகர்த்தல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883: 8). க.பிளிகு (g) பிள் - பிள. பிளத்தல் = (செ.கு.வி.) 1.வெடித்தல், வேய்பிளந்துக்கவெண்டரளம் (கம்பரா. தாடகை. 8). 2. திறத்தல். வாய்பிளந் துக்க (கம்பரா. தாடகை. 8. ) (செ.குன்றாவி.). 1. இரண்டாக வுடைத்தல். மலைகீழ்ந்து பிளந்த சிங்கம் (திவ். திருவாய். 7:4:6). 2. வெடிக்கச் செய்தல். 3. ஊடுருவுதல். ஒண்டழல் விண்பிளந் தோங்கி (திருவாச. 18:8). 4. பாகுபடுத்துதல், பகுத்தல். யாதும் பிளந்தறியும் பேராற்றலான் (சிறுபஞ்.58). 5. வெல்லுதல். அவனைப் பேச்சிலே பிளந்து விட்டான் (உ.வ.). பிள - பிளவு = 1. வெடிப்பு. 2. விரிந்துண்டாகுஞ் சந்து. 3. பிரிவு. 4. பிரிந்திசைப்பு. இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவு படாது ஒற்றுமைப்பட (தொல். சொல். 412. சேனா.). பிள- பிளவை = 1. பிளக்கப்பட்ட துண்டு. பைந்நிணப் பிளவை (மலைபடு. 176). 2. வெடிக்கும் சிலந்திவகை. பிள - பிளாச்சு = கிழித்த மூங்கிற் பட்டி. பிளாச்சு - பிளாச்சி. பிளாச்சு - பிளிச்சு = மூங்கிற் பட்டி (சீவக. 634, உரை). ஒ.நோ : MDu. splitten, G.spleissen, E.split. பிள - பிளா = வாய் விரிந்த இறைகூடை (யாழ்ப்.). பிளா - பிழா = 1. வாய் விரிந்த ஓலைத்தட்டுக் குட்டான். மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி (பெரும்பாண். 276.). 2. இறைகூடை. ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10:111). பிழா - பிழார் = இறைகூடை (சூடா). பிழா - பிடா - பிடவு - பிடகு - பிடகம் - 1. வாய் விரிந்த பூந்தட்டு. 2. பூக்கூடை. 3. பூந்தட்டுப் போன்ற புத்தமறைப் பகுதி முப் (திரி) பிடகத்துள் ஒன்று. பெரியோன் பிடக நெறி (மணிமே. 26: 66). 4. நூல் (திவா.). 5. தட்டில் இடும் ஐயம் (பிச்சை) (சது.). 6. வெடிக்கும் கொப்புளம். வெம்பிடகப் பிணியால் மேனி வெடிப்புண்டு (திருக்காளத். பு. 17:31). வ. பிடக (t). பிடகம் - பிடகன் = திரிபிடக ஆசிரியனான புத்தன் (பிங்.). பிடகு - பிடக்கு = புத்தர் பிடக நூல். பிடக்கே யுரை செய்வார் (தேவா. 245 : 10). பிடகு - பிடகை = பூந்தட்டு. பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் (மதுரைக். 397). வ. பிடகா (t). பிள் - பெள் - பெட்டி = 1. அகன்ற வாயுள்ள பனைநார்க் கூடை. 2. அகன்ற வாயுள்ள மர அல்லது மாழைக் கலம். 3. வண்டி யோட்டுபவன் இருக்கைக்குக் கீழுள்ள பெட்டி போன்ற இடம். 4. வண்டியோட்டுபவன் இருக்கை. 5. பெட்டி போன்ற தொடர் வண்டிக் கூண்டின் அறை. 6. வழக்காளர் கூண்டு. 7. சுண்ணாம்பு அளக்கும் முகத்தலளவை. பெட்டி - வ. பேட்டி. பெட்டி - பெட்டகம் = 1. மரப்பெட்டி. ஆங்கிலங்கும் அளப்பரும் பெட்டகம் (திருவாலவா. 27 :22). 2. மணப் பெண்ணிற்கு வரிசை கொண்டு செல்லும் கட்டுப் பெட்டி (W.). பெட்டகப் பெட்டி = மரம் இரும்பு முதலியவற்றாலாகிய பெரும் பேழை. பெட்டகம் - வ. பேட்டக. பெள் - பேள் - பேழ் = 1. அகலம். 2. பெருமை (பிங்.). பேழ்வாய் = பெரிய வாய். பிறழ்பற் பேழ்வாய்... பேய்மகள் (திருமுருகு. 47). பேழ் - பேழை = 1. பெருமை. பேழைவார் சடை (தேவா. 853:6). 2. பெட்டி. 3. கூடை. 4. சிறுபடகு. பிள் - பிடு. பிடுதல் = இரண்டாக அல்லது துண்டு துண்டாகப் பிளத்தல். பிடு - பிடுகு = வானம் வெடிப்பது போன்ற இடி, பெரும் பிடுகு (S.I.I.II.341). bj., க. பிடுகு (g). பிடுகு - பிடுங்கு. பிடுங்குதல் = (செ.கு.வி.). 1. உடைதல். வெள்ளத்தால் குளக்கரை நடுவிற் பிடுங்கிவிட்டது (உ.வ.). 2. அடைப்பு விலகுதல், தண்ணீர்த் தொட்டியில் அடைப்புப் பிடுங்கி விட்டது (உ.வ.). 3. வெடித்தல். குழியில் அல்லது குழாயில் வெடிமருந்து பிடுங்கி விட்டது (உ.வ.). 4. வெளிப்படுதல். வெளிக்குப்போகாது நீண்ட நேரம் அடக்கி வைத்ததனால் பிடுங்கிவிட்டது (உ.வ.). (செ.குன்றாவி.). 1. பறித்தல். கீரை பிடுங்குதல் (உ.வ.). 2. வலிந்து கவர்தல். அவன் கையிலிருந்த பணப்பையைப் பிடுங்கிக் கொண்டான் (உ.வ.). 3. பெயர்த்தல். ஆறு அணையைப் பிடுங்கிக் கொண்டு போகிறது. யானை மரத்தை வேரோடு பிடுங்கிவிட்டது (உ.வ.). பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி (தனிப்பா.). 4. கொத்தித் தின்னுதல். பிணம் பிடுங்கிக் கழுகு (உ.வ.). 5. கடித்தல். அந்தக் குளத்திற் குளித்தால் மீன் பிடுங்கிவிடும். 6. இழுத்தல் அல்லது பிய்த்தல். உடும்புக் கறி தின்றவன் வாயாலெடுத்தால் உட்சதையைப் பிடுங்கிக் கொண்டு வரும் (உ.வ.). 7. பசி வாட்டுதல். பசி வந்து பிய்த்துப் பிடுங்குகிறது (உ.வ.). 8. தொந்தரவு செய்தல். வீட்டிற்குப் போனால் மனைவி மக்கள் பிடுங்கல் வெளியே வந்தாற் கடன்காரன் பிடுங்கல் (உ.வ.). ம. பிடுங்க. பிடு- பிடுகு- பிடுங்கு= ஒ.நோ: OE. brecan, OS. brekan, OHG. brethan, Goth. brikan, E.break, L. frag. frang, fract. பிடுங்கு - பிடாங்கு = குழாய் வெடி (வேட்டு பிடு - பிது - பிதிர். பிதிர்தல் = 1. சிறுசிறு துணிக்கையாகப் பிரிதல். 2. பழந்துணி சிதைந்து கிழிதல். 3. நொறுங்கல். பிதிர்ந்து போயின பிறங்கல்க ளேழும் (கந்தபு. யுத்தகாண். முதனாட். 50). 4. சிதறுதல். பிதிர்ந்தெழுந் தார்த்த பொடிக்குழீஇ (கம்பரா. பிரமாத். 100). 5. பரத்தல். பிதிரொளித் தவிசின் (தணிகைப்பு. வீராட் 78). 6. மனமயங்குதல். பிதிரு மனமிலேன் (திங். இயற். நான்மு. 84). பிதிர் = 1. பூஞ்சுண்ணம் (பிங்.). 2. பொடி (பிங்.). 3. திவலை (பிங்.). 4. துண்டம். மதிப்பிதிர்க் கண்ணியீர் (தேவா. 599 :4). 5. தீப்பொறி, கொல்ல னெறிபொற் பிதிரின் (நற். 13). 6. சேறு. மருப்பிற் பிதிர்பட வுழக்கி (கல்லா. 62 :10) 7.கால நுட்பம் (பிங்.). 8. கைந் நொடி (W.). 9.விடுகதை. கதைகளும் பிதிர்களு மொழிவார் (கம்பரா. ஊர்தேடு. 139). 10. வியப்புச் செயல். பின்னால் தான் செய்யும் பிதிர் (திவ். இயற். நான்மு. 83). பிதிர் - புதிர் = விடுகதை. பிது - பிது- பிதுங்கு. பிதுங்குதல் = 1. உள்ளீடு வெளிப்படுதல். கதிர் முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி (தேவா. 56:10). 2. சுவரிற் செங்கல் வெளி நீண்டிருத்தல். 2. கண் பிதுங்குதல். வேலைக் கடுமையாற் கண்பிதுங்கினாற் போல் வருத்தமிகுதல். பிதுங்கு - பிதுக்கு. பிதுக்குதல் = 1. உள்ளீட்டை வெளிப்படுத்துதல். பீட்பிதுக்கி (நாலடி. 20). 2. ஊறின மொச்சைப் பயற்றை விரலால் அமுக்கி அதன் பருப்பை வெளிப்படுத்துதல். பிதுக்குப் பருப்பு (உ.வ.). க. ஹுதுக்கு. பிது - பிசு - பிசிர். பிசிர்தல் = துளியாச் சிதறுதல். அவ்வில் பிசிர (பதிற். 50 : 8). 2. பிசுக்குக் கேட்டல். பிசிர் = 1. நீர்த்துளி. வான்பிசிர்க் கருவியின் (ஐங். 461). 2. ஊற்று நீர். மலிரும் பிசிர்போல (பரிபா. 6: 83). 3. குருத்து. பிசிரொடு சுடுகிழங்கு நுகர (புறம். 225). 4. ஆடையிலெழுஞ் சிம்பு. பிசு - பிசுகு. பிசுகுதல் = 1. கடையிற் பண்டம் வாங்கிய பின் மேலும் ஒரு சிறிது விலையின்றிக் கேட்டல், 2. கஞ்சத்தனம் பண்ணுதல். அவன் கால் துட்டுக்குப் பிசுகுகிறான் (உ.வ.). பிசுகு - பிசுக்கு = 1. சிறு துணிக்கை, சிற்றளவுப் பொருள். 2. பண்டம் விலைக்கு வாங்கிய பின் மேலும் விலையின்றிக் கேட்கும் சிற்றளவுப் பொருள். ஒரு பிசுக்குப் போடு (உ.வ.). பிசுக்கு - பிசுக்கன் = புல்லன், சிறுமகன். பிசுக்கர் = புல்லர். பேதவாதப் பிசுக்கரை (திருவிசைப் திருமாளி. 4: 5). பிசுக்கு - பிசுக்கி = புல்லன், சிறியோன், போடா பிசுக்கி (உ.வ.). பிசுக்கு - விசுக்கு = சிறு துணிக்கை. விசுக்கு - விசுக்காணி = மிகச் சிறியது. விசுக்காணிப் பயல் = மிகச் சிறுவன், குட்டிப் பையன். பிள் - பிர் - பிரி. பிரிதல் = 1. கட்டவிழ்தல். மூட்டை பிரிந்து விட்டது (உ.வ.). 2. முறுக்கு நெகிழ்தல். 3. தொகுப்பு நீங்குதல். மாலை பிரிந்து கிடக்கிறது. 4. பகுக்கப்படுதல். பிரிப்பப் பிரியா (தொல். சொல்.410). 5. விலகுதல். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து போனார்கள் (உ.வ.). 6. வேறுபடுதல். உயர்திணை மருங்கிற்பால்பிரிந் திசைக்கும் (தொல். சொல்.4). 7. பொருத்து விடுதல். 8. வகைப்படுதல். 9. தண்டப்படுதல். இந்த ஊரிற் பணம் பிரியாது (உ.வ.). ம. பிரி (யுக), க. பிரி. பிரி - பிரிவு = 1. விலகல். 2. பாகம். 3. வகுப்பு. 4. வகை. 5. பகுதி. 6. கிளை. பிரி - பிரியல் - பிரிசல் = 1. பாகப்பிரிவு. 2. கூரை பிரிப்பு. 3. கட்டவிழ்வு. 4. பணந்தண்டல். பிள் - பிட்டு = 1. பிண்டு உதிரியான சிற்றுண்டி வகை. மதுரையிற் பிட்டமுது செய்தருளி (திருவாச. 13 : 16). 2. தினைமா (W.). ஒ.நோ: உதிரி = பிட்டு. k., f., தெ. பிட்டு. பிட்டு - வ. பிஷ்ட. பிள் - பிண்டி = 1. நுண்பொடி. 2. மா. செந்தினையின் வெண்பிண்டி (பதினொ. திருவீங். 44). 3. பிளந்த நாக்குப் போன்ற பிண்ணாக்கு (பிள் + நாக்கு). பாரிற் பிண்ணாக்கு முண்டாம் (காளமேகம்). தெ. ã©o., து. புண்டி. பிண்ணாக்கு - வ. பிண்யாக்க. எள், இலுப்பை, வேம்பு முதலியவற்றின் விதைகளை எண்ணெயாட்டியபின் எஞ்சிய சக்கை, பிளவுபட்ட நாக்குப் போலிருப்பதால் பிண்ணாக்கு எனப்பட்டது. பிள் - பிண் - பிணம் = கட்டுவிட்ட (decomposed) சவம் (சா - சாவு - சாவம் - சவம்). செத்த சவம், நாற்றப்பிணம் அல்லது பிண நாற்றம் என்னும் வழக்குகளை நோக்குக. பிண் - பிணகு - பிணங்கு. பிணங்குதல் = 1. மாறுபடுதல். பிணங்கோ மெவரொடும் (திருநூற். 66). 2. ஊடுதல். இணங்கு என்னும் சொல்லிற்கு எதிராக, அதன் எதுகையாக அமைந்த சொல் பிணங்கு என்பது. பிணங்கு - பிணக்கு = மாறுபாடு. பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் (திருவாச. 30 : 1). பிணக்கு - பிணக்கம் = மாறுபாடு. பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து (தேவா. 29 : 2). 2. ஊடல். புள் - புய். புய்தல் = 1. பறிக்கப்படுதல். புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை (களவழி. 39). 2. மறைதல். கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40). புய்த்தல் = பறித்தல். புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறம்.28) உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை ............................................................................................ கோடுபுய்க் கல்லா துழக்கு நாட (கலித். 38) கோட்டினிற் குத்திக் குடற்புய்த் துறுத்து (மணிமே. 13 : 47) புய் - பிய். பிய்தல் = 1. பிள்ளுதல். 2. பிரிதல். 3. கிழிதல். பிய்த்தல் = 1. பிடுதல். 2. கிழித்தல். 3. பிரித்தல். 4. இலை, படம் முதலியவற்றைச் சிதைத்தல். 5. பறித்தல். 6. பிடுங்குதல். பேயு நாயு மவருடலம் பிய்த்துத் தின்ன (உத்தரரா. திருவோல. 24). 7. வருத்துதல். 8. பிறன்கோள் மறுத்தல். அவனைப் பிய்த்தெறிந்து விட்டான். (உ.வ.). பிய் = பியர். பியர்தல் = பெயர்தல். (S.I.I. III, 151 : 4). ம. பியர். பியர் - பெயர். பெயர்தல் = 1. இடம்விட்டு நீங்குதல். 2. பிரிதல். நிலம்பெயர்ந்துறைதல். (தொல்.பொருள்.169). 3. கிளர்தல். ஓதநீரிற் பெயர்பு பொங்க (புறம். 22). 4. உரசித்தேய்தல். 5. சலித்தல். 6. அசைபோடுதல். விளையா விளங்க ணாற மெல்குபு பெயரா (சிறுபாண். 45). 7. பிறழ்தல். நிலம்பெயரினும் நின்சொற் பெயரல் (புறம். 3). 8. மாறுதல். ஆணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து (திருவாச. 3:134). 9. தளர்தல். 10. கட்டுவிடுதல். 11. தேய்தல், சிதைத்தல். 12. அடியிடுதல். 13. போதல். 14. கூத்தாடுதல். 15. மீளுதல். சூழ்ந்த நிரைபெயர (பு.வெ. 1 : 10). 16. பணப் புழக்கமாதல். அந்தவூரில் எந்த நாளும் பணம் பெயரும் (உ.வ.). 17. பணத் தண்டலாதல். ஆயிரம் உருபா பெயர்ந்தது. (உ.வ.). பெயர்த்தல் = பெயரச் செய்தல். பெயர் - பேர். பேர்தல் = பெயர்தல். பேர்த்தல் = பெயர்த்தல். பொள் - பள் - பள்ளம் = 1. குழி. பள்ள மீனிரை தேர்ந்துழலும் (தேவா. 93 : 5). 2. கன்னத்தில் விழும் குழிவு. 3. ஆழம். பள்ள வேலை பருகுபு (இரகு. ஆற்று.1). 4. தாழ்வு. பள்ளமதாய படர்சடை மேற்... கங்கை (தேவா. 427 : 1). 5. தாழ்நிலம். பள்ளம் - பள்ளன் - பள்ளமான மருதநிலத்தில் வாழும் உழவர் வகுப்பான். பள்ளன் - பள் = 1. பள்ளர் வகுப்பு. 2. ஒருசார் பள்ளர் வாழ்க்கை பற்றிய ஒருவகை நாடகப் பனுவல் (அரு.நி.). 3. காளிக்குக் காவு கொடுக்குங் காலத்துப் பாடப்படும் பண்வகை. பள்ளன் - மள்ளன் = மருதநிலத்தில் வாழும் உழவன். மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட. 18). பள்ளன் - பள்ளி = 1. பள்ளர்குலப் பெண். 2. பள்ளன் மனைவி. 3. வன்னியர்குலம். 4. வன்னியர் குலச் சிற்றரசன். ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலே (திவ். இயற். திருவிருத். 40, வியா. 235). பள்ளன் - பள்ளத்தி = பள்ளர்குலப் பெண். பள்ளத்தி - பள்ளச்சி = பள்ளர்குலப் பெண். பள்ளி - பள்ளிச்சி = வன்னியர்குலப் பெண். பள் - பள்ளு = பள்ளர் வாழ்க்கைபற்றிய நாடகப் பனுவல். குறிப்பு : துளைத்தல் என்பது, குழித்தல், குடைதல், தோண்டுதல், துளையிடுதல், துருவுதல் என்றும்; குத்துதல், வெட்டுதல், கிள்ளுதல், கீறுதல், சீவுதல், சிதைத்தல், அறுத்தல், கிழித்தல், பிளத்தல், உடைத்தல், பகுத்தல் (பிரித்தல்), துண்டித்தல், (துண்டுபண்ணுதல்), பொடித்தல் என்றும்; குலைத்தல், கலைத்தல் என்றும்; வினைக்கும் கருவிக்கும் ஏற்றவாறு பலதிறப்படும். மாழையும் (metal) கல்லும் மரமும் போன்ற வன்பொருள்கள் கருவிகளாலும், கனிகளும் உண்டி வகைகளும் களிமண்ணும் போன்ற மென்பொருள்கள் கருவியாலும் கையாலும் துளைக்கப் படும். சில பொருள்கள், தக்க நிலைமை வரின், நிலம் வெடிப்பதும் கனிபிளப்பதும் போல, தாமாகவே துளையுண்ணும். குழித்தல் குடைதல் போன்றன ஆழவாட்டில் துளைத்தல்; வெட்டிடுதல், அறுத்தல் போன்றன நீளவாட்டில் துளைத்தல். குழித்தலுங் கீறுதலுங் குடைதலும் போன்றன குறையத் துளைத்தல்; துருவுதலும் வெட்டுதலும் பிளத்தலும் போன்றன நிறைய அல்லது முற்றத் துளைத்தல். முற்றத் துளைத்தலால் பகுத்தல், பிரித்தல், துணித்தல், பொடித்தல் முதலியன ஏற்படுகின்றன. (பிரி - பிரிவு. ஒ.நோ : L. pars, partis, portionem) பள் - பள்ளி = 1. படுக்கை. பள்ளிகொண்டான், பள்ளியெழுச்சி முரசம். 2. தூக்கம். பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப (கலித். 121). 3. விலங்கு துயிலிடம் (பிங்.) 4. படுக்கையறை. 5. படுக்கையறையுள்ள வீடு. 6. வீடு. 7. வீடு போன்ற இடம், இடம். சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். எழுத்து. பிறப். 18), சொல்லிய பள்ளி எழுதரு வளியின் (மேற்படி. 20). 8. தச்சன் பணி செய்யும் இடம், பட்டறை, தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15). 9. அரசன் வீடாகிய அரண்மனை. பள்ளிக்கட்டில் = அரியணை, நின்பள்ளிக் கட்டிற் கீழே (திவ். திருப்பா. 22). பள்ளிக்கட்டு = இளவரசியின் திருமணம். (நாஞ்.). பள்ளித் தேவாரம் = அரண்மனைத் தெய்வ வழிபாடு (நாஞ்). 10. தெய்வ வீடாகிய கோவில். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள். 840). 11. சமண புத்தர் கோவில். புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2 : 1 : 5). 12. முகமதியர் கோவில், பள்ளிவாசல். 13. இறந்த அரசரின் நினைவுக் குறியாகக் கட்டப்பட்ட கல்லறை. (S.I.I. III, 24). பள்ளிபடைப் படலம் (கம்பரா.). 14. முனிவர் தவநிலையம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் (மணிமே. 18 : 8). 15. அறச்சாலை , அயலாரையும் இரப்போரையும் உண்பிக்கும் ஊர் மடம். 16. மடத்திலும் கோவிலிலும் நடத்தப்பெற்ற கல்விக்கூடம். பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் (திவ். பெரியதி. 2 : 3 : 8). 17. அரண்மனை அல்லது கோவில் உள்ள நகரம் (பிங்.) 18. தாழ்வான கூரை வீடுகளுள்ள இடைச்சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451). 19. இடைச்சேரி போன்ற சிற்றூர் (பிங்.). பள்ளம் என்பது நிலமட்டத்தினும் தாழ்வான இடம். நிற்கும் நிலையினும் படுக்கும் நிலை தாழ்வாயிருப்பதால், படுக்கை அல்லது படுக்குமிடம் பள்ளியென்றும், படுத்துத் தூங்குதல் பள்ளி கொள்ளுதல் என்றும் சொல்லப்பட்டன. பள்ளிமாடம் = அரசர் துயிலும் மாடம். பள்ளிமாட மண்டபம் (சீவக. 146). பள்ளியந்துலா = துயிலும் பல்லக்கு. பள்ளியந்துலா வேறுவர் (மதுரைப் பதிற். 19). பள்ளியோடம் = படுக்கையமைந்த படகு. பகலெல்லாம் அங்குமிங்கும் அலைந்து திரிந்து உணவு தேடிய முதற்கால அநாகரிக மாந்தனுக்குப் போன்றே, இக்கால நாகரிக மாந்தனுக்கும், பாதுகாப்பாக இராத் தங்கி இனிதாக உறங்குதற்கு வீடு இன்றியமையாததாயிருத்தல் காண்க. பள்ளி கொள்ள உதவாத அமைப்பு உண்மையான வீடாகாது. பல வீடுகள் சேர்ந்ததே ஊராதலின், வீட்டுப் பெயர் சினையாகு பெயராக ஊரையுங் குறிக்கும். எடுத்துக்காட்டு: குடி = வீடு, ஊர் (காரைக்குடி, மன்னார்குடி). இல் = வீடு, ஊர் (அழும்பில், கிடங்கில்). பள்ளி = வீடு, ஊர் (திருக்காட்டுப்பள்ளி, திருச்சிராப்பள்ளி). நகர் = வெண்சுதை தீற்றிய காரை வீடு அல்லது மாளிகை, அத்தகைய வீடுள்ள ஊர். ம. பள்ளி, தெ. பல்லிய, பல்லெ, க. ஹள்ளி, வ. பல்லி. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியில் (Lexicon), பள்ளி என்னும் தூய பழந்தென்சொல் பல்லி என்னும் வடசொல்லின் திரிபாகக் காட்டப்பட்டிருப்பது மருட்கைக்குரிய செய்தியாகும். பள்ளி - பாளி - பாழி = 1. மக்கள் துயிலிடம். பெரும்பாழி சூழ்ந்த விடத்தரவை (திவ். இயற். 1 : 20). 2. விலங்கு துயிலிடம் (பிங்.). 3. கோயில். ஐயன் பாழியில் ஆனை போர்க்குரித்தாம் அன்று (ஈடு, 1 : 1 : 5). 4. முனிவர் உறைவிடம் (பிங்.). 5. இடம். வானவர் கோன் பாழி (திவ். இயற். 2 : 13). 6. மருதநிலத்தூர் (சூடா.). 7. நகரம் (பிங்.). ஒ.நோ : Gk. polis, city. 8. சிறுகுளம். பூமி நாட்டார்.... சிறுகுளத்தைப் பாழி என்றும்.... வழங்குப (தொல். சொல். 400, நச்.உரை). x.neh : OE., MLG. pol, E. pool. 9. எலிவளை, எலிப்பாழி (உ.வ.). 10. குகை (திவா.). பள் - பள்ளை = 1. குள்ளம். 2. குள்ளமான பள்ளையாடு. ப.க. பட்டெ (dd). பள்ளை - பள்ளையன் = குள்ளன், குறுகிப் பருத்தவன். (யாழ். அக.). பள்ளையன் - பள்ளச்சி = குள்ளி. பள்ளையம் = 1. பள்ளமான உண்கலம் (W.). 2. சிறுதெய்வப் படையல். உயரத்தை நோக்கக் குள்ளம் பள்ளமாயிருத்தல் காண்க. பள்ளம் - தாழ்மட்டம். பள் - பள்கு, பள்குதல் = பதுங்குதல். பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான் (சூளா. சுயம். 31). பள் - பண் = 1. நீர்நிலை. பண்குலவத் தாலமிசை நடித்து (குற்றா. தல. திருநதிச். 12). 2. நீர்நிலை போன்ற வயல், வயலிற் செய்யும் வேலை, தொழில். பண் - பண்ணை1 = விலங்கு துயிலிடம் (பிங்.) பண்ணை2 = 1. மருதநிலம். வளநீர்ப் பண்ணையும் வாவியும் (சிலப். 11 : 13). 2. வயல் (பிங்.) பண்ணைசூழ்ந் திலகுந் திருமுனைப் பழைய நாடு (பாரத. பாயி. 6). வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீ ரேரியும் (சிலப். 13 : 192). 3. நீர்நிலை (பிங்.). 4. மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்சுமாறு சுற்றிவரத் தோண்டி வைக்கும் பள்ளம். மரத்திற்குப் பண்ணை பிடிக்க வேண்டும் (உ.வ.). 5. நிலக்கிழாரே செய்யும் பயிர்த்தொழில் (C.G.). 6. வாரக்குடி. 7. நெற்குத்துமாறு நடுவிற் பள்ளஞ்செய்து நிலத்திற் பதிக்கப்பட்ட வட்டக்கல். 8. பல்லாங்குழி விளையாட்டிற்கு நிலத்தில் தோண்டப்படும் குழி. க. பண்ணெய. பண்ணையார் = பெருநிலக்கிழார். பண்ணையாள் = வாரக் குடியாள். பண்ணையாளி - பண்ணையாடி - பண்ணாடி = வாரக்குடி வைத்து பயிர் செய்யும் பெருநிலக்கிழார். பண்ணை - பணை1 = 1. விலங்கு துயிலிடம் (பிங்.). 2. யானை குதிரைகள் தங்குமிடம். பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டென (புறம். 23), பணையமை பாய்மான் (கலித். 57). பணை2 = 1. மருதநிலம். பெருந் தண்பணை பாழாக (புறம். 16). 2. வயல். இரும்பணை திரங்க (பதிற். 43.12). 3. நீர்நிலை (பிங்.). பண் - பணி. பணிதல் = 1. தாழ்தல். பணியிய ரத்தைநின் குடையே (புறம். 6), 2. செருக்கின்றியடங்குதல். எல்லார்க்கு நன்றாம் பணிதல் (குறள். 125). 3. இறங்குதல் (W.). 4. தாழ்வாதல். 5. குறைதல். 6. எளிமையாதல். 7. வணங்குதல். உடையான் கழல் பணிந்திலை (திருவா. 4 : 35). பணிந்தவன் = குள்ளன் (W.). ம. பணியுக. பணித்தல் = 1. தாழ்த்துதல். வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப (பு.வெ.4 : 9, கொளு). 2. குறைத்தல் (W.). 3. மிதித்தல், நந்து மாமையும் பணித்து (சீவக. 2109). பணிவிடை = தொண்டு, குற்றேவல். திருப்பணி = தெய்வத் தொண்டு. பணி - படி. படிதல் = 1. அடியில் தங்குதல். வண்டல் படிந்திருக்கிறது (உ.வ.). 2. தங்குதல். பறவை படிவன வீழ (நெடுநல். 10). 3. வயமாதல். அடியாத மாடு படியாது (பழ.). 4. கீழ்ப்படிதல். பெரியோர்க்குப் படிந்து நடத்தல் வேண்டும் (உ.வ.). 5. குளித்தல். தடங்கடலிற் படிவாம் (திருவாச. 38 : 9). 6. அமுங்குதல். எண்ணெய் தேய்த்துச் சீவினால் மயிர் படியும் (உ.வ.). 7. தணிதல், வெள்ளம் படிந்தது (உ.வ.). 8. கீழே விழுந்து வணங்குதல். சிரந்தலத்துறப் படிந்து (உபதேசகா. சிவத்து. 344). பணி செய்வோன் = 1. வேலைக்காரன். 2. விழாக்காலத்தில் தாரையும், இழவுநாளில் சங்கும் ஊதுபவன். கீழ்ப்படிதல் = சொன்னபடி செய்து பணிவாய் நடத்தல். பணி - பாணி, பாணித்தல் = 1. காலத் தாழ்த்தல். பாணிநீ நின்சூள் (பரிபா. 8 : 56). 2. காத்திருத்தல். பாணியே மென்றார் (கலித். 102). 3. பின்வாங்குதல். சமரிற் பாணியான் (கந்தபு. மூவாயிரர். 59). பாணி = பள்ளமான இடத்தில் தங்கும் அல்லது பள்ளம் நோக்கி ஓடும் நீர். விண்ணியல் பாணியன் (பதினொ. பொன்வன். 30). க. பணி, மரா. பாணி, இ பாணீ. நீரைக் குறிக்கும் பாணி என்னுஞ்சொல் வடமொழியில் இல்லை. நீரம் என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் நீர என்று கடைக் குறைந்து வழங்கும்போது, பாணி (நீர்) என்னும் சொல் இந்தியில் பாணீ என்று திரிந்து வழங்குவது இயற்கைக்கு மாறன்று. பண் - பண்ணல் = 1. வயலைத் திருத்துதல். 2. பயிர் செய்தல். பண்ணிய பயிரில் புண்ணியந் தெரியும் (பழ.). 3. வேலை செய்தல். 4. செவ்வையா யமைத்தல். 5. அழகுபடுத்துதல். 6. அணிய மாக்குதல் (ஆயத்தஞ் செய்தல்). 7. இசையெழுவும் எண்வகையுள் ஒன்று. பண்ணல்.... எண்வகையா லிசையெழீஇ (சிலப். 7 : 5-8). பண் - பண்ணு. பண்ணுதல் = 1. பயிர் செய்தல். 2. வேலை செய்தல். 3. செய்தல் உம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப்படும் (நாலடி. 37). 4. செவ்வைப்படுத்துதல். 5. அழகுபடுத்துதல். பட்டமொ டிலங்கப் பண்ணி (சூளா. கல்யா. 14). 6. அணியமாக்குதல். பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் (புறம். 12). 7. யாழ் நரம்பில் அலகு (சுருதி) அமைத்தல். 8. பண்ணிற்கேற்ப யாழ் நரம்பமைத்தல். மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் (மலைபடு. 534). 9. சமைத்தல். பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர் (மலைபடு. 417). 10. உண்டாக்குதல். பானை சட்டி பண்ணுகிறவன் குயவன். (உ.வ.). மாந்தன் முதன்முதற் கற்றுக்கொண்ட கைத்தொழில உணவு விளைக்கும் பயிர்த்தொழிலாதலால் பண்ணுதல் என்னும் பண்ணை வினையைக் குறித்த சொல்லே பொதுவினையைக் குறிக்குஞ் சொல்லாயிற்று. ஒ. நோ : கை = கைத்தொழில், பயிர்த்தொழில். இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (குறள். 1035) பண் - பணி = 1. கைத்தொழில். பணிக்களரி = தொழிற்சாலை, பட்டறை, கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டிலிடத் தனவாயின (புறம். 95, உரை). 2. அழகு பண்ணும் அணிகலம் (பிங்.). பணியெலாம் பணிய தாகி (கந்தபு. ததீசியுத். 106). 3. வேலைப்பாடு. பணிபழுத் தமைந்த பூண் (கம்பரா. இலங்கை கே. 12). 4. பிழைப்புத் தொழில். ம. பணி. பணித்தட்டார் = பொற்கொல்லர். பணித்தட்டார் பணிபண்ணு மிடங்களில் (சிலப். 6 : 135, உரை). பணி - பணிக்கு = வினைத்திறமை. பணிக்குச் செலுத்துதல் = வேலையாள்களின் வேலையை மேற்பார்ப்பவன் (W.). பணிக்குச் சொல்லுதல் = வேலை செய்யும் முறையைக் காட்டுதல் (W.). 2. பிறர் வேலையிற் குற்றங்கூறுதல். கட்டத் தெரியா விட்டாலும் கட்டின வீட்டிற்குப் பணிக்குச் சொல்வான். (உ.வ.). பணிக்கு - பணிக்கம் = வினைத்திருத்தம், தொழிற்றிறமை (W.). பணிக்கம் - பணிக்கன் = 1. வினைத்திறவோன். 2. ஆசிரியன் (பிங்.). 3. படைக்கலம் பயிற்றுவோன். பண்புடையானொரு பணிக்கன் தோன்றி (திருவாலவா. 35 : 1). 4. கூத்துப் பயிற்றுவோன், ஆடலாசிரியன். 5. தலைமைக் கொற்றன் (W.). 6. யானைப் பாகன் (W.). 7. நஞ்சு மருத்துவன். கையைக் குறிக்கும் பாணி என்னுஞ் சொல் வடமொழியிற் சிறப்பாக வழங்கினும், அதற்கு மூலமாகக் காட்டப்படும் பண் என்னுஞ் சொல்லிற்கு, பண்டமாற்றுதல், பணையம் வைத்தல், பேரம் பேசுதல் என்னும் பொருள்களே உள. அவை பொருந்து வனவல்ல. எந்தப் பொருளையும் தொழிலையுஞ் செய்தற்குக் கை இன்றியமையாத உறுப்பாதலால், செய்தலைக் குறிக்கும் சொல்லினின்று கைப்பெயர் அமைவதே இயற்கைக்குப் பொருத்தமாம். பண் (பண்ணு) - பாண் - பாணி = (பண்ணி). தண்டபாணி = தண்டம் (தண்டு + அம்) ஏந்திய கையன், முருகன். தண்டம் என்னும் சொல்லும் தவறாக வடசொல்லெனக் கருதப்படுகின்றது. ஒ.நோ : செய் - தெ. சேயி (c), க. கெய். கெய்யி, த. கை. செய் - கெய் - கை. கை யென்னும் பெயர், செய் என்னும் வடிவில் குமரிநாட்டில் வழங்கியிருத்தல் வேண்டும். கரு - வ. க்ரு - கர = கை. கருத்தல் செய்தல். இவ்வினைச்சொல் கடைக்கழகக் காலத்திற்கு முன்பே வழக்கற்றுப் போயிற்று. கருமம், கருவி, கரணம் முதலிய சொற்களை நோக்குக. பண்ணுதல் என்னுஞ் சொல், அலகு, பண் என்னும் இரு வகையில் இசையமைத்தலைக் குறிக்க ஆளப்பட்டதனால், பண் என்னுஞ் சொல் இசை வகையையுங் குறித்தது. பண்ணலாவது: வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல் விலக்கின் றிளிவழி கேட்டும் இணைவழி யாராம் திணைகொள முடிப்பது விளைப்பரு மரபிற் பண்ண லாகும் (சிலப். 7 : க, பழங்குறிப்புரை). பண்ணல் - பாட நினைந்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல் (சீவக. 657, நச். உரை). ஒ. நோ : செய் - செய்யுள். வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நன்.268). செய்யுள் இசைப்பாவிற்கு இனமானதே. பாட்டு, பாணி, தேவபாணி, பெருந்தேவபாணி என்னுஞ் சொற்கள், செய்யுட்கும் இசைப்பாவிற்கும் பொதுவாக வழங்குதல் காண்க. பண் = 1. இசைவகை. பண்ணென்னாம் பாடற் கியை பின்றேல் (குறள். 573). 2. எழுமுரல் (சுர). இசைவகை. பண்ணுந் திறனும் (பெருங். வத்தவ. 3 : 56). நிறைந்த நரம்பு நிகழும் பண்ணெனல் (பிங். 6 : 324). 3. இசைப்பாட்டு (பிங்.). 4. நரப்புக் கருவிகளான யாழ்வகைகள். பண்கெழு மெல்விரலால் (சீவக. 220). பண் - பாண் = பாட்டு. பூணினான்றன் பாண்வலைச் சென்று பட்டாள் (சீவக. 2040). பாண் - பாணன் = இசையும் இசைத்தமிழும் வளர்த்த பண்டைத் தமிழ வகுப்பான். கூத்தரும் பாணரும் (தொல். புறத். 36). பாணன் - பாணான் = இசைத் தொழிலிழந்து தையல் வேலை செய்யும் தமிழ வகுப்பான். பாணன் - பாண் = பாணர் குலம். பாண் - பாண் = பாணர் குலம். பாண் - பாணு = பாட்டு. பாணுவண் டரற்றுங் கோலச் சிகழிகை (சீவக. 2447). பாணன் - பாணி = பாணன் மனைவி, பாணர்குலப் பெண். என்கொணர்ந்தாய் பாணாநீ யென்றாள் பாணி (தனிப்பாடல்) பாண் - பாடு. பாடுதல் = 1. பண்ணிசைத்தல். மறம்பாடிய பாடினி யும்மே (புறம். 11). 2. வண்டு இமிழ்தல். வண்டு பல விசைபாட (திவ். பெரியதி. 3 : 9 : 3). 3. செய்யுள் செய்தல். பாடினார் பல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8 : 1). 4. செய்யுளாற் புகழ்தல். பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் (புறம். 32). 5. சண்டையில் வைதல். அவளை நன்றாய்ப் பாடிவிட்டாள். (உ.வ.). ஆடினாள் பாடினாள் (தனிப்பாடல்). பாடு - பாட்டு = 1. பாடுகை. 2. இசைப்பாடல். 3. இன்னிசை. கூத்தும் பாட்டும் (மணிமே. 2 : 19). 4. செய்யுள் பாட்டுரை நூலே (தொல். செய். 78). 5. வசைமொழி. என்னிடம் பாட்டுக் கேட்க வேண்டுமா? (உ.வ.). பாடு - பாடகன் = பாடுவோன். பாடகர் பாணர் புகழக்கண்டு (திருவாலவா. 55 : 3). பாடகன் - பாடகி = பாடுபவள் (நாம. 183). பாடகன் - பாடினி = பாணர்குல மகள். மறம்பாடிய பாடினி யும்மே (புறம். 11). பாடு - பாடி = 1. பாடுபவன். எ-டு : வலவன்பாடி. பாடுபவள். எ-டு : கூழுக்குப் பாடி. பாடுவது. எ-டு : வானம்பாடி. 2. பாடி யிரப்பெடுப்பவன் - வள். பாடி பரதேசி (W.). பாண் - பாணி = 1. இசைப்பாட்டு (திவா.). புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8 : 44). 2. இன்னிசை (சங்கீதம்). பாணி யாழ (சீவக. 1500). 3. இசையொலி. கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் (சிலப். 13 : 148). 4. இசையுறுப்பாகிய தாளம். தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக (கலித். 102). Poem என்னும் கிரேக்க ஆங்கிலச் சொல்லும், பண் செய்யுள் என்னும் இரு சொற்களை வேர்ச்சொற் பொருளில் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. Gk. poema = poiema f. poieo, to make. பொள் - பொய். பொய்தல் = (செ. கு. வி). 1. துளைக்கப்படுதல். பொய்தக டொன்று பொருந்தி (கம்பரா. பஞ்ச. 49). 2. பிடுங்கப் படுதல். பொய்த குத்தின .... புண் (கம்பரா. கிங்கர. 50). (செ.குன்றாவி.) வீழ்த்துதல். அவை பார்சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33). வீழ்த்துதலாவது பள்ளமான அல்லது கீழ்மட்டமான இடத்தை அடையச் செய்தல். பொய் - பொய்கை = 1. ஏரி அல்லது குளம். பொய்கை வாயிற் புனல்பொரு புதவின் (பதிற். 27). 2. இயற்கையான ஏரி. வாவியும் பொய்கையுங் கண்டீர் (சீவக. 337). பொய் = 1. உட்டுளை. பொய்பொரு முடங்குகை (சிலப். 15 :20). 2. மரப்பொந்து (பிங்.). 3. உள்ளீடில்லாதது. 4. உண்மையல்லாதது. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள். 938). 5. போலியானது (W.). 6. நிலையாமை. புற்புதமே யன்ன பொய்க் குடி வாழ்க்கையை (திருநூற். 3). 7. மாயை (W.) ம. பொய். பொய்த்தல் = (செ.குன்றாவி). 1. உண்மையல்லாததைச் சொல்லு தல். தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள். 293). 2. ஏமாற்றுதல், வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி. 111). (செ.கு.வி.). 1. செயல் தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள். 13). 2. கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம் (குறள். 753). பொய் - பொய்தல் = 1. மணற் சிற்றில். பொய்தலணி வண்டிமிர் மணற்கோடு (பரிபா. 20 : 23). 2. மகளிர் விளையாட்டு. பொய்த லாயமொடு (சிலப். 6 : 151). பொய் – பொய்ச்சு = பழத்தின் குற்றம் (W.), சொத்தைப் பகுதி. பொய்ச்சு - பொய்ச்சா. பொய்ச்சாத்தல் = மறத்தல். (W.). பொய்ச்சா - பொச்சா. பொச்சாத்தல் = 1. மறத்தல் - புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள். 719). 2. இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67). பொச்சாப்பு = 1. மறதி. பொச்சாப்புக் கொல்லும் புகழை (குறள். 532). 2. மனவுறுதியின்மை. வன்சொல் பொச்சாப்பு (தொல். பொருள். 274). 3. குற்றம் (பிங்.). 4. பொல்லாங்கு (W.). ஒன்றை மறந்த மனம் ஓரளவு உள்ளீடற்ற கூடு போலிருத்தலால், மறதி பொய்ச்சாப் பெனப்பட்டது. பொய் - (பய்) - பை. ஒ.நோ : வள் = கூர்மை. வள் - (வய்) - வை = கூர்மை. பை = துணி, தோல் முதலியவற்றாலான உள்ளீடற்ற உறை. தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால் (நாலடி. 36). பய் - பயம்பு = 1. பள்ளம் (திவா.). 2. குழி. கரந்து பாம்பொடுங்கும் பயம்பு (மலைபடு. 199). 3. யானைபடு குழி. பயம்பில்வீழ் யானை (சிலப். 25 : 31). 4. நீர்நிலை (பிங்.). பய் - பயல் = பள்ளம் (பிங்.). பொள் - பொளு. பொளுபொளுவெனல் = ஓட்டைவழி ஒழுகுதற் குறிப்பு. பொளு - பொழு - போழ். போழ்தல் = (செ.கு.வி.) 1. பிளவுபடுதல். புலம்புங் கனகுரற் போழ்வாய வன்றிலும் (திவ். இயற். திருவிருத். 87). 2. பிரிவுபடுதல் (W.). (செ.குன்றாவி.) 1. பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப (பதிற். 19 : 2). 2. ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர் கலவர் (நான்மணி. 18). 3. அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118). க. போழ். போழ் = 1. பிளவு. போழ்படக் கிடந்த (கல்லா. முருகக். 26). 2. துண்டம். பசுங்காய்ப் போழொடு (பெரும்பாண். 307). 3. பிளந்தறுத்த தோல்வார். போழ்தூண்டூசி (புறம். 82 : 4). 4. தகடு. வெள்ளிப்போழ் விலங்கவைத் தனைய (சீவக. 70). போழ்முகம் = பிளந்தாற் போன்ற முகத்தை அல்லது வாயையுடைய பன்றி (பிங்.). போழ்வாய் = 1. பிளந்த வாய். போழ்வாய வன்றிலும். 2. பொக்கை வாய் (யாழ்ப்). போழ்வாய்ச்சி கட்டுடம்பு பூரித்தாள் (விறலிவிடு. 195). க. பொடுவாய் (b). போழ் - போழம் = பொய், வஞ்சனை, மாறுபடுஞ் சொல். போழம் பலபேசி (தேவா. 1080 : 11). போழப் பெட்டி = 1. அகன்ற வாயுள்ள வண்ணப் பனை யோலைக் கூடை. 2. மணமகள் வீட்டிற்கு வரிசை கொண்டு போகும் சாயவட்டி. பொழு - பொழுது = இருளைத் துணிக்கும் கதிரவன். ஒ. நோ : தாழிருள் துமிய மின்னி (குறுந். 270). பொழுது புறப்பட, பொழுது சாய, பொழுது வணங்கி (சூரிய காந்தி) முதலிய வழக்குகளால், பொழுது என்னும் சொல் முதலாவது கதிரவனைக் குறித்ததென்பது பெறப்படும். பொழுது = 1. கதிரவன். பொழுதுபோய்ப் பட்ட பின்றை (சீவக. 1747). 2. காலம். முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (தொல். அகத். 4). 3. நாள். விருந்தும் மருந்தும் மூன்று பொழுது (பழ.). 4. வாழ்நாள். பொழுதளந் தறியும் பொய்யா... காண்கையர் (முல்லைப். 55). 5. சிறுபொழுது. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது (குறள். 1231). 6. பெரும்பொழுது. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் (தொல். அகத். 19). 7. நேரம். நிற்பரவு பூசையினும் பொழுது போக்கெனக் கருள் புரிவாய் (சிலப். பிரபந். சோண. 29). 8. வேளை. கலந்த பொழுதுங் காட்சியும் அன்ன (தொல். அகத். 16). 9. அமையம். நான் நிலையத்தை அடைந்தபொழுது வண்டி வரவில்லை (உ.வ.). 10. நொடி. ஒருபொழுதும் வாழ்வ தறியார் (குறள். 337). 11. தடவை, முப்பொழுது மருந்து (உ.வ.). 12. தக்க சமையம் அல்லது காலம். இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள். 481). பொழுதொடு புணர்தல் (பிங்.). 13. பகல் அல்லது இரவு. ஒரு பொழுது வேலை, ஒருபொழுது உறக்கம். ம. பொழுது, ப.க. போழ்து, து. பொர்து, தெ. ப்ரொத்து (dd). பொழுது - போழ்து = 1. வேளை. அழல்மண்டு போழ்தின் (நாலடி. 202). 2. முழுத்தம் (ழுகூர்த்தம்). இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய (கலித். 93). போழ்து - போது = 1. கதிரவன். போதுஞ் சென்றது குடபால் (கம்பரா. வனம்புகு. 19). 2. வேளை அல்லது அமையம், ஆட்கொண்ட போதே கொண்டிலையோ (திருவாச. 33 : 7). போழ்து - போழ்தம் = வேளை. பொள் - பொய். பொய்தல் = வீழ்த்துதல். அவை பார்சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33). வீழ்தல் என்னும் தன்வினைச்சொல், மழை பெய்தலையுங் குறிக்கும். எ-டு: விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள். 16) வீழ்க தண்பெயல் (தேவா.) பொய் - பெய். பெய்தல் = 1. துளைவழி நீர் ஒழுகுதல் போல முகிலினின்று மழை விழுதல். பெய்யெனப் பெய்யும் மழை (குறள். 55). ஒ.நோ : வானின் றமையா தொழுக்கு (குறள். 20). 2. சிறுநீர் ஒழுகவிடுதல். மோத்திரம் பெய்தான் (உ.வ.). 3. வார்த்தல். பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறம். 115). நெய் பெய்த சோறு (உ.வ.). 4. கலத்தில் இடுதல். உலைப்பெய் தடுவது போலுந்துயர் (நாலடி. 114). 5. கீழிடுதல், பார்த்துழிப் பெய்யிலென் (நாலடி.26). 6. இடைச் செருகுதல். இடையிடையே சில சொற்களைப் பெய்து (உ.வ.). 7. ஈதல். உயிர்க்கு ... வீடுபே றாக்கம் பெய்தானை (தேவா. 975 : 7). 8. அமைத்தல். பிரான் பெய்த காவு கண்டீர்... மூவுலகே (திவ். திருவாய். 6 : 3 : 5). 9. இட்டுப் பரப்புதல். தருமணல் தாழப் பெய்து (கலித். 114). 10. நீர்க்குள் இடுதல். கருந்தலை யடுக்கலி னணைகள்... பெருங் கடலிடைப் பெய்து (கம்பரா. கும்ப. 248). 11. அணிதல். மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் (பரிபா. 20 : 21). 12. செறித்தல். பெய்ம்மணி யேய தேர் (கம்பரா. நாகபாச. 128). 13. கட்டுதல். புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218). 14. கையாளுந் திறம். பெய்திறனெல்லாம் பெய்து பேசினேன் (கம்பரா. கும்ப. 169). ம. பெய்யுக. பெய் - பெயர் = 1. இடுங்குறிச் சொல். பெயரிடுதல் என்னும் வழக்கை நோக்குக. மறவர் பெயரும் பீடும் எழுதி (அகம். 67). 2. புகழ். பெரும்பெயர் மீளி (கலித். 17). 3. ஆள். எத்தனை பெயர் இங்கு வேலை செய்கிறார்கள்? (உ.வ.). 4. தலைக்கீடு (வியாஜம்). திருவிழா வென்பதோர் பெயரால் (காஞ்சிப்பு. நகர. 70). பெயருக்கு = ஒப்பிற்கு. கடமை யுணர்ச்சியின்றிப் பெயருக்கு வேலை செய்கிறான். (உ.வ.). ம. பெயர், தெ. பேரு, க. பெசர், து. புதேரு. பெயர் - பெயரன் = (முதற் காலத்திற் பாட்டன் பெயரைப் பெற்று வந்த) மகன் மகன். பெயரன் - பெயர்த்தி (பெ. பா.). பெயர் - பேர் = 1. பெயர்க் குறியீடு. பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் (நாலடி. 175). 2. ஆள். அயற்பேரைக் காய்தி (கம்பரா. சரபங். 30). 3. உயிரி (பிராணி). விசும்பிற் செல்வதோர் பேர் செலாது (கம்பரா. நாகபா. 156). 4. புகழ். பேர்பரந்த பிரமாபுரம் மேவிய (தேவா. 62 : 3). 5. தலைக்கீடு. ரக்ஷிக்கைக்கு ஒரு பேர் காணும் வேண்டுவது (ஈடு, 9 : 3 : 1). 6. ஒப்பு. பேருக்கு வேலை செய்கிறான் (உ.வ.). ம. பேர். தெ. பேரு. பேராண்டி = பேரன். பேராளன் = 1. பெருமையுடையவன். உம்பராளும் பேராளன் (திவ். பெரியதி. 7 : 4 : 4). 2. பல பெயர் தாங்கியவன். பேராளன் பேரோதும் பெரியோரை (திவ். திருநெடுந். 20). 3. மான்றலை (மிருகசீரிடம்) (பிங்.). 4. சகடம் (ரோகிணி) (சூடா.). பேராளி = 1. இன்னொருவர் பெயரைக் கொண்ட - வன் - வள். 2. கீர்த்தி பெற்ற - வன் - வள் (யாழ்ப்.). பெயரன் - பேரன். பெயர்த்தி - பேர்த்தி. பெய் - பேய். பேய்தல் = மழை பெய்தல் (உ.வ.). பேய்ந்துங் கெட்டது, ஓய்ந்துங் கெட்டது (பழ.). பேய் - பேயு - பேசு. ஒ.நோ : தேய் - தேயு - தேசு - வ. தேஜ, இ. தேஜ். பேசுதல் = மழை பெய்வது போலச் சொற்களைச் சொரிதல். ஒ. நோ : பொழிதல் = மழை பொழிவது போல விரைந்தும் விடாதும் பேசுதல். பேசு - வ. பாஷ் (bh). - பாஷா (- பாஷை - பாடை, பாசை, பாழை). பொழு - பொகு. பொகுத்தல் = துளைத்தல் (யாழ். அக.). பொகு - பொக்கு = 1. மரப்பொந்து (பிங்.). 2. உள்ளீடு முற்றாத கூலம் (தானியம்). 3. பொய் (உ.வ.). 4. குற்றம். தெ. பொக்கி. தெ. பொக்கு. பொக்கு - பொக்கம் = 1. பொய். பொக்கம் பலபேசி (தேவா. 326 : 7). 2. வஞ்சகம். பொய்யும் பொக்கமும் போக்கி (தேவா. 1210 : 4). 3. குற்றம். பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே (தேவா. 1071 : 1). ம. பொக்கம், தெ. பொக்க (b). பொக்கு - பொக்கல் = பொக்கை. பொக்கு - பொக்கை = 1. துளை. (W.). 2. பல்லின்மை. 3. குற்றம். நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து (தேவா. 942 : 10). தெ. பொக்க (b), க. பொக்கெ. பொக்கை வாய் = பற்போன வாய். பொக்கைவா யாக்கினார் சூரியனை (தனிப்பா. II, 25 : 56). பொக்கு - பொக்கணம் = 1. சோழியப்பை. சுத்திய பொக்கணத்து... கோலத்தினீர் (திருக்கோ. 242). 2. பெருமருந்து என்னும் மூலிகை (மலை.). ம. பொக்கணம், தெ. பொக்கணமு (b), க. பொக்கண (b). பொக்கு - பொக்கணி = 1. நெற்குத்தும் உரல். 2. விரிந்த தொப்புள். 3. குடிநீர்க்கல வகை (யாழ். அக.). பொக்கணி - மொக்கணி = குதிரைக்குக் கொள் கோதுமை முதலிய உணவு கட்டும் பை. க. பக்கண (b). பொக்கு - பொக்கணை = 1. கல் மரம் முதலியவற்றிலுள்ள பொந்து. 2. நெற்குத்தும் உரல். பொகு - பகு. கால்டுவெலார் தம் திரவிட ஒப்பியல் இலக்கணத்தின் இறுதிப் பகுதியில், சொல்லியல் உறவுகள் (Glossarial Affinities) என்னும் தலைப்பின் கீழ், “bhaj, to share. bhajga, a portion. I am doubtful whether to regard these words as derived from the Tamil pag-u, to divide, to share, or to suppose both the Sanskrit and the Tamil to be derived from a common and earlier source. Probably the former supposition is in this case the more correct. At all events the Tamil - Malayalam pag-u is a pase, underived Drividian root. A noun former from it, signifying a share, is pang-u (ng for g, as is after the case); and a collateral root is pag-ir, meaning also to share. The Sanskrit word pangu means lame, and is altogether unconnected with the Tamil one. Other derived nouns are pagal, a division daylight; pal (=pagal), a portion; and padi (pagudi). half” - (Dravidian Comparative Grammar, p. 573). என்று கூறியிருத்தல் காண்க. பகுதல் = (செ.கு.வி.) 1. பிளவுபடுதல். சக்கரவாளச் சிலைபக (திருப்பு. 841). 2. பிரிவுபடுதல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள். 187). (செ. குன்றாவி.). பாகம் பிரித்தல் பகுந்துனக்கு வைத்தகோ லறைக்கு (திருவாலவா. 30 : 50). ம. பகுக, தெ. பகுலு (g). பகுத்தல் = 1. பங்கிடுதல். பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் (குறள். 322). 2. வகைப்படுத்துதல் (W.). 3. வகுத்துத் தெளிவாய்க் கூறுதல் (W.). 4. வகுத்துக் கொடுத்தல் (பிங்.). 5. வெட்டுதல் (பிங்.). 6. பிடுங்குதல் பாதவ மொன்று பகுத்தான் (கம்பரா. இலங்கையெரி. 55). 7. பகுத்து நீக்குதல். பண்ணுறு சுளைகள் கையாற் பகுத்துணக் கொடுத்த தன்றே (சீவக. 2724). பகு - வகு. வகுதல் = பிளத்தல். மரல் வகுந்து கொடுத்த செம்பூங் கண்ணியொடு (புறம். 264). வகுத்தல் = 1. கூறுபடுத்துதல். 2. இனம்பற்றிப் பிரித்தல். 3. பகிர்ந்து கொடுத்தல். 4. வெவ்வேறு துறைகட்கு ஒதுக்குதல். காத்த வகுத்தலும் வல்ல தரசு (குறள். 385). 5. பெருந்தொகையைச் சிறுதொகையாற் பகுத்தல். 6. உயிர்கட்கு இன்பதுன்பக் கூறுகளை இறைவன் பிறப்பில் அமைத்தல். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள். 377). 7. ஒன்றை வகைப்படுத்திச் சொல்லுதல். அவன் கதை வகுப்பாய் (பாகவத. 1, ஸ்ரீநாரதர். 5). 8. படைத்தல். என்னை வகுத்திலையேல் இடும்பைக் கிடம்யாது சொல்லே (தேவா. 643 : 2). 9. கட்டியமைத்தல். பெரும்பெயர் மன்னர்க் கொப்பமனை வகுத்து (நெடுநல். 78). 10. வழியமைத்தல். வகு - வகுந்து = வழி. வகுந்துசெல் வருத்தத்து (சிலப். 11 : 167). வகு - வகம் = வழி (யாழ். அக.). வகு - வக்கு = வழி (யாழ். அக.). வகு - வக்கு = வழி. அவனுக்குக் கடன் தீர்க்க வக்கில்லை. வகு - வகை = 1. கூறுபாடு. அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி (தொல். சொல். 146). வலம்புரி, இடம்புரி, சலஞ்சலம், பணிலம் எனச் சங்கு நால்வகைப்படும். 2. பொருட்பிரிவு. இது எவ் வகையைச் சேர்ந்தது? (உ.வ.). 3. குலப்பிரிவு. 4. முறை. கணக்குத் தப்பானாலும் வகைக்கு மதிப்பெண் கிடைக்கும் (உ.வ.). 4. ஆம்புடை (உபாயம்). இந்தத் தொல்லையினின்று தப்ப ஒரு வகை சொல் (உ.வ.). 5. மனையின் பகுப்பு. வகைமா ணல்லில் (புறம். 398). 6. உடலுறுப்பு. வகைநல முடைய காளை (சீவக. 695). 7. இடப்பிரிவு மூதூ ரிடவகை யெல்லை யெல்லாம் (சீவக. 462). 8. விளத்தம் (விவரம்). 9. தன்மை விளமங்கையர் வகையுரைத்தன்று (பு.வெ. 9 : 50, கொளு). 10. வலக்காரம் (தந்திரம்). வகையால் மதியாது மண்கொண்டாய் (திவ். இயற். நான்முகன்.25). 11. வலிமை. வகைகொண்டு வந்தேன் (கம்பரா. பாசப். 36). 12. வாழ்க்கைப் பொருள்கள் (W.). ம. வக, தெ. tf (g), f., து. வகெ (g). வகைதல் = (செ.கு.வி.). பிரிவு படுதல். (செ. குன்றாவி.) 1. வகைப்படுத்துதல். மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரை. 60). 2. வகிர்தல். வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇ (நற். 120). 3. ஆராய்தல். வகையாது தொடர்ந்து (கம்பரா. பிராட்டி. 16). தெ. வகத்சு (g). பகு - பக்கு = 1. பிளப்பு (W.). 2. கவர் படுகை. தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து (தேவா. 17 : 3). 3. பை. பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும் (கலித். 65 : 14). 4. மரப்பட்டை (W.). 5. புண்ணின் அசறு (W.). 6. பல்லின் பற்று (W.). காய்ந்து போன மூக்குச் சளி (W.). சோற்றுப் பொருக்கு (W.). பக்கு (அசறு) - தெ. பக்கு. பக்கு (பை) - ஒ. நோ : ME. bagge, E. bag, ON. baggi, OF. bague, Pr. bagua (baggage), med. L. baga (sack). பக்கெனல் = வெடித்தற் குறிப்பு. பக்கிடுதல் = வெடித்தல். பக்கிசைத்தல் = 1. விட்டிசைத்தல். 2. வேறுபடுத்திக் கூறுதல். அதுவும் இதுவும் எனப் பக்கிசைத் தோதப்பட்ட (சி. போ. சிற். 12 : 4 உரை). பக்குவிடுதல் = 1. பிளத்தல். கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும் (குறள். 1068). 2. தோலறுதல் (W.). பக்கு - பக்கறை = 1. பை. 2. துணியுறை. ஏந்து வெள்ளைப் பக்கறை (விறலிவிடு.). 3. குழப்பம் (யாழ். அக.). பகு - பக்கம் = 1. மருங்கு (side) பக்க நோக்கி நிற்கும் (திவ். திருவாய். 5 : 5 : 5). 2. அருகு (சூடா.). 3. இடம். ஊழையும் உப்பக்கங் காண்பர் (குறள். 620). 4. விலாப்புறம். 5. சிறகு. இசைபடு பக்க மிருபாலுங் கோலி (பரிபா. 21 : 31). 6. அம்பிறகு. 7. பொத்தகத்தின் ஒருபுறம். 8. பொத்தகம், நூல். வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு (தொல். அகத். 41). 9. பிறைக்கூறு. 10. பிறைநாள் (திதி). 11. வளர்பிறை அல்லது தேய்பிறைக்காலம். பகலிராப் பக்கமே திங்கள் (காஞ்சிப்பு. காயாரோகண. 2). 12. நட்பு. 13. அன்பு. 14. சுற்றம் பக்கஞ் சூழ வடமீன் காட்டி (கல்லா. 18). 15. சரவடி, வழிமரபு. 16. சேனை. தாவரும் பக்க மெண்ணிரு கோடியின் தலைவன் (கம்பரா. இலங்கைக் கேள்வி. 40). 17. தொழிற்றொகுதி. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். புறத். 20). 18. கோட்பாடு. 19. தன்மை. வாலிதாம் பக்க மிருந்தைக் கிருந்தன்று (நாலடி. 258). 20. ஏரண மேற்கோள். பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல் (மணிமே. 29 : 59). 21. துணி பொரு ளுள்ளவிடம். பக்கந் துணி பொருளுக் கிடமாம் (சி.சி. அளவை. 9). 22. மறுதலை யுய்த்துணர்வு (அருத்தாபத்தி). 23. நாடு. பக்கம் - வ. பக்ஷ. ஒ. நோ : L. pagus, country, district. பக்கம் - பக்கல் = 1. பக்கம். என்பக்க லுண்டாகில் (பெரியபு. இயற்பகை. 7.). 2. இனம். (W.). 3. மாதநாள் (தேதி). பக்கு - பங்கு = 1. பாகம். பங்குலவு கோதையுந் தானும் (திருவாச. 16 : 9). 2. பாதி (சூடா.). 3. கூறு. 4. பக்கம். என் பங்கில் தெய்வம் இருக்கிறது (உ.வ.). 5. இரண்டு அல்லது இரண்டரைச் செறு (ஏக்கர்) நன்செயும், பதினாறு செறு (ஏக்கர்) புன்செயுங் கொண்ட நிலம் (C.G. 288). ம. பங்கு. பங்கு - பங்கிடு. பங்கிடுதல் = 1. பகுத்துக் கொடுத்தல். 2. பாகம் பிரித்தல். பங்கு - பங்கன் = தன் பாகமாகக் கொண்டவன். மங்கை பங்கனை மாசிலா மணியை (தேவா. 549 : 5). பங்கு - பங்காளி = 1. தொழிற் கூட்டாளி. 2. தாயத்தான். பங்குக்காரன் = பங்கிற் குரியவன். பங்கு - பங்கம் = 1. பங்கு. பங்கஞ் செய்த மடவாளொடு (தேவா. 855 : 5). 2. பிரிவு. பங்கப் படவிரண்டு கால்பரப்பி (தனிப்பாடல்). 3. துண்டு. 4. கேடு. அற்பங்க முறவரு மருணன் செம்மலை (கம்பரா. சடாயு. 8). பங்கு - பங்கி = 1. பாகமாகப் பெற்றுக்கொள்பவன். நஞ்சினைப் பங்கியுண்டதோர் தெய்வ முண்டோ (தேவா. 392 : 6). 2. ஆறாண்டிற் கொருமுறை சீட்டுப் போட்டுச் சிற்றூர் நிலத்தைச் சிற்றூரார்க்குக் கொடுக்கும் பற்றடைப்பு முறை (W.G.). முப்பங்கி (திரிபங்கி), பதின்பங்கி (தசபங்கி), நூற்றுப் பங்கி அல்லது பதிற்றுப்பதின்பங்கி (சதபங்கி) என்பன, ஒரே பா அல்லது பாவினம் முறையே மூவேறு பான்வேறு பதிற்றுப்பான் வேறு பா அல்லது பாவினமாகப் பிரிந்து, வெவ்வேறு பொருள் படுமாறு பாடப்படும் சொல்லணிச் செய்யுள் வகைகள். திரிபங்கி (முப்பங்கி) என்பது. மூவளைவாக உடம்பை வளைத்து நிற்கும் நிலையையுங் குறிக்கும். வெள்கிய திரிபங்கியுடன் (அழகர்கலம். 1). பகு - பகுப்பு = பிரிப்பு. பகுப்பாற் பயனற்று (நன். 131). பகு - வகு - வகுப்பு = 1. கூறுபடுத்துகை. 2. இனம்பற்றிப் பிரிக்கை. வகுப்பமைந்த ..... அப்பங்கள் (மதுரைக். 626, உரை). 3. உச்சிவகிடு. சீவி வகுப்பெடுத்துச் சேர்த்துக் குழன்முடித்து (கூளப்ப. 131). 4. பிரிவு. 5. தடுக்கப்பட்ட அறை. 6. குலம். 7. தரம். 8. பொலிவு. 9. அழகு. 10. செய்யுளிசை யொழுக்கு. மங்கல வள்ளை வகுப்பொடு (வச்சணந். செய்யு. 32). பகு - பகுதி = 1. பகுப்பு. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் (திருவாச. 3 : 1). 2. கூறு. 3. நூற்பிரிவு அல்லது இதழ்ப் பிரிவு. 4. வேறுபாடு. மயங்கிய தகுதி அல்லது பகுதியின் றெனின் (ஞானா. 35 : 5). 5. திறை. இது பகுதி கொள்கெனா (அரிச். பு. நகர்நீ. 111). 6. வருவாய் (சூடா.). 7. வரி. 8. பாதி. பகுதி (திறை) - தெ. பகிதி (g), க. பகுதி (g). பகுதி - பாதி = 1. சரிசமமாகப் பகுக்கப்பட்ட பொருட் பகுதியிரண்டுள் ஒன்று. பாதிப் பெண்ணொரு பாகத்தன் (தேவா. 479 : 3). 2. அரைப் பகுதியளவான நடு. பாதி வழியின் மிண்டி (காஞ்சிப்பு. சிவாத். 28). வகு - வகுதி = வகுப்பு. வகுதியின் வசத்தன (கம்பரா. இரணியன். 69). பகு - பகம் = பிளவு. பகு - பகவு = 1. பிளவு. 2. வெடிப்பு (யாழ். அக.). 3. பங்கு (யாழ். அக.). 4. துண்டு, துணிக்கை. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் (குறள். 889). 5. பகுப்பு. பகவு - பகவன் = எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிக்கும் இறைவன். 2. சிவன் (திவா.). 3. திருமால் (பிங்.). 4. தெய்வமாக வணங்கப்படும் கதிரவன் (பிங்.). 5. ஆரியத் தெய்வமாகிய பிரமன் (பிங்.). 6. சமணர்க்குத் தேவன் போன்ற அருகன் (திவா.). 7. புத்த நெறியார்க்குத் தேவன் போன்ற புத்தன் (திவா.). 8. இறைவனிடத் திற்கு வழிகாட்டும் மதக்குரு (பிங்.). 9. இறைவனடியாரும் முற்றத் துறந்த முழு முனிவரும். பத்தர்களும் பகவர்களும் (திவ். பெரியாழ். 4 : 9 : 6). திருக்கோவில்களிலும் மடங்களிலும் பண்ணையாரிடத்தும் வேலை செய்வார்க்கெல்லாம், சம்பளமாக நெல்லை அளந்து கொடுப்பதே பண்டை நாள் வழக்கம். அது படியளத்தல் என்று சொல்லப்படும். அதனால், வேலையிலமர்த்தி வாழ்க்கைக்கு வேண்டும் சம்பளம் கொடுப்பார்க் கெல்லாம், படியளப்பார் என்னும் பெயர் உண்டாயிற்று. எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப்பவன் என்னுங் கருத்தில் இறைவனும் படியளப்பான் எனப்பட்டான். நமக்குப் படியளப்பார் நாரியோர் பாகர் (தனிப்பா. 1, 121 : 5). எல்லாம்வல்ல ஒரு தனி இறைவனுக்குரிய பகவன் என்னும் பெயர், சிறுதெய்வங்கட்கும் சிறந்த மக்கட்கும் நாளடைவில் வழங்கத் தலைப்பட்டுவிட்டதனால், திருவள்ளுவர் தம் திருக்குறட் கடவுள் வாழ்த்தில், முழுமுதற்கடவுளைக் குறிக்க ஆதிபகவன் என்று அடை கொடுத்துக் கூற வேண்டியதாயிற்று. ஆதி என்பது முதல் என்று பொருள்படும் வடநாட்டுச் சொல். அது முந்து திரவிடமாகிய பிராகிருதச் சொல்லாயிருக்கலாம். ஆதிபகவன் என்றது, ஆதியென்னும் புலைச்சியை மணந்த ஒரு பிராமணனை எனின், ஆதி சங்கராச்சாரியார் என்பதும் ஆதியென்னும் புலைச்சியை மணந்த சங்கராச்சாரி யாரை என்ற கூறல் வேண்டும். அது பொருளன்மை அறிக. கார்காலம், முரசுகட்டில், கோவூர்கிழார் என்பன போல, ஆதிபகவன் என்பதும் வலிமிகாது வழங்கிய ஒருசில புணர்ச் சொற்களுள் ஒன்றாகும். அதனால், ஆதி யென்பது வடசொல் (சமற்கிருதச் சொல்) என்று கொள்ள வேண்டுவதில்லை. மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலும் ஆதி என்னுஞ் சொல்லின்மையின், அது வடசொல்லாகாது. பகவன் - வ. பகவான் (bhagavan). பகு - பகல் = 1. பகுக்கை (பிங்.). நெருநைப் பகலிடங் கண்ணி (புறம். 249). 2. (ஒரு பொருள் இரு சமப்பாகமாகப் பகும்) நடு (திவா.). 3. நடுவுநிலைமை. அகல்வையத்துப் பகலாற்றி (பதிற். 90 : 9). 4. நடு நுகத்தாணி. நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப். 206). 5. இருநாழிகை கொண்ட முழுத்தம் (முகூர்த்தம்). ஒரு பகல்காறு நின்றான் (சீவக. 2200). 6. நண்பகல், உச்சிவேளை. 7. நள்ளிருள். யாமத்தும் பகலுந் துஞ்சார் (சிலப். 81). 8. காலை முதல் மாலை வரையுள்ள காலம். பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறம். 8). 9. அறுபது நாழிகை கொண்ட நாள். ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் (நாலடி. 169). 10. கதிரவன். பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல் (மணிமே. 4 : 92). 11. ஒளி விளக்கம் (திவா.). பகல் - பகர். பகர்தல் = ஒளிவிடுதல். பக்கங் கருஞ்சிறுப் பாறை மீதே யருவிகள் பகர்ந்தனைய (திவ். பெரியாழ். 1 : 7 : 8). பகர் = ஒளி. சிந்தாமணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங்கடத் தானே (திவ். திருவாய். 6 : 10 : 9). பகல் - பால். 1. பிரித்துக் கொடுக்கை. பாலுங் கொளாலும் வல்லோய் (பதிற். 16 : 19). 2. பகுதி அறையென வரூஉம் பால்வரை கிளவிக்கு (தொல். தொகை. 23). 3. பாதி. பானா ளிரவில் (கலித். 90). 4. பக்கம். ஒருபாற் கோடாமை (குறள். 118). 5. தொழில் வகுப்பு. வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் (புறம். 183). 6. இடையர் குறும்பர் குல உட்பிரிவு (E.T.V. 450). 7. திசை (பிங்.). 8. இடம் (யாழ். அக.). 9. குணம் (பிங்.). 10. இயல்பு (பிங்.). 11. உயிர் கட்கு அவற்றின் வினைக்கேற்ற இன்ப துன்பம் வகுக்கும் ஊழ். 12. ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் இலக்கண ஐம்பாற் பிரிவு. இருதிணை மருங்கின் ஐம்பால் (தொல். கிளவி. 10). க. பால், தெ. பாலு. பால் - பான்மை = 1. பகுதி. தேவர் பான்மை யிற்றென்று (சீவக. 553). 2. குணம். சொல்லரிய பான்மை யாகி (தாயு. பொருள்வ. 12). 3. தகுதி. நற்றவம்.... பயின்ற பான்மையான் (கம்பரா. தாடகை. 23). 4. முறைமை. பரசிரா மேச்சரத்தின் பான்மை சொல்வாம் (காஞ்சிப்பு. பரசிரா. 1). 6. நல்வினைப் பயன். புருவத்தாட்கு வந்தடை பான்மை (சீவக. 539). பகு - பகிர். பகிர்தல் = (செ. குன்றாவி). 1. பிளத்தல். 2. பங்கிடுதல். பொற்பு மிக்க மாயன் பகிரு மமிர்தந்தனை (கந்தபு. மகாசாத். 20). (செ.கு.வி). பிரிதல் பரதனு மிளவலு மொருநொடி பகிராது (கம்பரா. திருவவ. 131). பகிர் = 1. பங்கு கௌசலை கரத்தி னோர்பகிர் தாமுற வளித்தனன் (கம்பரா. திருவவ. 89). 2. துண்டம். திங்களின் பகிர்புரை... எயிறு (திருவிளை. நாகமெய்த. 15). 3. வெடியுப்பு (யாழ். அக.). பகிர் - வகிர் = 1. பிளவு. 2. கீறு (W.). 3. பிளந்த துண்டு. மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் (திருவாச. 9 : 2). 4. உச்சியெடுப்பு. வார்ந்த நெடுங்கூந்தல் வகிரினாள் (வெங்கையு. 304). 5. தோல்வார் (யாழ். அக.). 6. வார்க்கச்சு (W.). 7. நரம்பு (யாழ். அக.). 8. வழி (பிங்.). வகிர்தல் = 1. வகிரெடுத்தல். 2. கீறுதல். பகிர்ந்தான் சில வகிர்ந்தான் (கம்பரா. அதிகாய. 160). 3. கோதுதல் (சது.). 4. பிளத்தல் (சது.). 5. துண்டாக அறுத்தல் (சது.). 6. பங்கு செய்தல் (சது.). வகிர் - வகிடு = உச்சியெடுப்பு. பகு - பகை. பகைத்தல் = 1. வெறுத்தல். 2. அழிக்கக் கருதுதல். பகை = 1. வெறுப்பு. 2. எதிர்ப்பு பகையென்னும் பண்பிலதனை (குறள். 871). 3. பகைவன். உறுபகை யூக்க மழிப்ப தரண் (குறள். 744). 4. மாறு, மாறுபாடு. நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார் (ஐங். 187). 5. தீங்கு. எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை (குறள். 1225). 6. இசைமுரண், யாழில் நின்ற நரம்பிற்கு மூன்றாவ தாயும் ஆறாவதாயுமுள்ள பகை நரம்பு. வெம்பகை நரம்பினென்கைச் செலுத்தியது (மணிமே. 4 : 70). 7. கொல்லும் உயிரி. பாம்பிற்குக் கீரி பகை (உ.வ.). 8. நோய் மருந்து. பித்தத்திற்குப் பகை இஞ்சி (உ.வ.). 9. காமம், சினம் முதலிய ஆறு அகப்பகைக் குணம். ம. gf, bj., க. பக (g). பகு - பாகு = 1. பகுதி (W.). 2. பாகம். 3. பக்கம். 4. இரப்போர்க்கிடும் பகுதியாகிய ஐயம் (பிச்சை). பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி (தேவா. 54 : 4). 5. சிவன்பாகமாகிய சிவை (அக. நி.). 6. குளக்கரை (அக. நி.). 7. அழகு. பாகா ரிஞ்சிப் பொன்மதில் (கம்பரா. ஊர்தே. 82). 8., தோள். பாகு - வாகு = 1. பக்கம். 2. தோள் (பிங்.). வாகுப் பிறங்கல் (இரகு. கடிம. 64). 3. ஒழுங்கு. வாகா நியாய வட்டி வாங்காமல் (பணவிடு.238). 4. அழகு (சூடா.). வாகாரிபமினாள் (திருப்பு. 238). 5. ஒளி. இந்து வாகை (திருப்பு. 399). 6. திறமை. வாகுபெறு தேர் வலவனை (கந்தபு. மூன்றாம். யுத். 70). 7. தொட்டால் வாடி (அரு. அக.). ம. வாகு, தெ. பாகு (bhagu), து. வாக (g). வாகுபுரி = தோள்வளை. வாகுபுரி வயங்க (காதை). வாகுவளையம் - வ. பாகுவலய (b). பாகு - பாகம் = 1. பகுக்கை (சூடா.). 2. பக்கம். பாகம் பெண்ணோ டாயின பரிசும் (திருவாச. 2 : 78). 3. கூறு. தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப் பன்று (திருவாச. 5 : 37). 4. பாதி (சூடா). 5. பாகை. 6. ஐயம் (பிச்சை). 7. பங்கம். பாகத்தைப் படாத நெஞ்சின் (சீவக. 2278, உரை). 8. பறைவகை (சிலப். 3 : 27, உரை). பாகம் - வ. பாக (bhaga). பாகு - பாகி. பாகித்தல் = பங்கிடுதல். திரிபாகி (முப்பாகி) = மூவெழுத்துகள் கொண்ட ஒரு சொல், அதன் முதலெழுத்தையும் இறுதி யெழுத்தையுஞ் சேர்க்க மற்றொரு சொல்லாகியும், இடையெழுத்தையும் கடை யெழுத்தையும் சேர்க்க மற்றுமொரு சொல்லாகியும் வந்து, வெவ்வேறு பொருள் தருமாறு பாடப்படும் சொல்லணி (தண்டி). இது முப்பாகியென்றிருத்தல் வேண்டும். திரி என்னும் வடமொழி எண்ணுப் பெயர், முப்புரியாகத் திரிக்கப்படும் நூல் அல்லது கயிறு என்னுங் கருத்தினின்றும் தோன்றியிருக்கலாம். ஏக என்னும் வடமொழி முதலெண்ணுப் பெயர், ஒக்க என்னும் தெலுங்குச் சொல்லினின்று தோன்றியிருத்தல் காண்க. ஒக்க - எக்க - ஏக. வடமொழியில் எகரக் குறிலின்மையால், எக்க என்பது ஏக (ஏக்க) என நீண்டது. பாகு - பாகன் = 1. பக்கத்திலிருந்து பேணுபவன். 2. யானைப்பாகன். யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் (நாலடி. 213). 3. வாதுவன் (குதிரைப் பாகன்). 4. தேரோட்டி. தேரிற் பாகனா யூர்ந்த தேவதேவன் (திவ். பெரியதி. 7 : 5 : 2). 5. அறிவன் (புதன்) (சூடா). ம. ghth‹., மரா. பாகா (g). பாகன் - பாகு = 1. யானைப்பாகன். பாகு கழிந்தி யாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை (சிலப். 15 : 46). 2. நடாத்துந் திறன். போர்ப் பாகுதான் செய்து (திவ். திருவாய். 4 : 6 : 3). பாகம் - பாகன் = ஒருபாகமாகக் கொண்டவன். நாரிபாகன் (தேவா. 1172 : 9). பாகு = பாக்கு = 1. பகுதி அல்லது பக்கம். 2. எதிர்கால வினையெச்ச ஈறு. உண்பாக்கு வந்தான் (இ.வ.). வான்பான் பாக்கின வினையெச்சம் (நன். 243). 3. தொழிற்பெயரீறு. அஞ்சுதும் வேபாக் கறிந்து (குறள். 1128). பாக்கு - வாக்கு = 1. பக்கம். இரண்டு கைவாக்கு மியங்கலிப்ப (திருவிளை. தடாதகை. 26). 2. இயங்கும் திசை. காயப்போட்ட துணி காற்றுவாக்கிற் பறந்துவிட்டது (உ.வ.). 3. ஒரு வினையெச்ச ஈறு. கொள்வாக்கு வந்தான் (தொல். சொல். 231, உரை). பாக்கு - பாக்கம் = 1. நெய்தல் நகரப்பகுதி. எ-டு : பட்டினப் பாக்கம், மருவூர்ப்பாக்கம் (காவிரிப்பூம்பட்டினப் பகுதிகள்). 2. நெய்தல் நிலத்தூர். கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27). 3. ஊர். கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137), காவேரிப் பாக்கம். 4. அரசனிருப்பு (பதிற். 13 : 12, உரை). பாக்கு - பாக்கை = 1. நெய்தல் நிலத்தூர். நென்னலிப் பாக்கை வந்து (பதினொ. திருவே. திருவந். 74). 2. ஊர். எ-டு : கொள்ளிப்பாக்கை. பாக்கம் - வாக்கம் = 1. நெய்தல் நிலத்தூர். எ-டு : கத்திவாக்கம். 2. ஊர். எ-டு. வில்லிவாக்கம். பாக்கு - பாங்கு = 1. பக்கம். காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட்.2). 2. உரிய இடம். பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் (மணிமே. 1 : 61). 3. இன்கண் (பட்சம்). வேந்தனொரு வற்குப் பாங்கு படினும் (யாப். வி. 96). 4. இணக்கம் (W.). 5. துணையான - வன் - வள். வேல்விடலை பாங்கா (திணைமாலை. 87). 6. தோழமை. நீயும் பாங்கல்லை (திவ். திருவாய். 5 : 4: 2). 7. ஒப்பு. பாங்கருஞ் சிறப்பின் (தொல். புறத். 23). 8. நன்மை. பாங்கலா நெறி (வாயுசங். இருடி. பிரம. 11). 9. அழகு. பாங்குறக் கூடும் பதி. (பு.வெ. 9 : 51, கொளு). 10. தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். உரி. 100). 11. இயல்பு (W.). 12. ஒழுக்கம். பாங்குடையீர் (திருவாச. 7 : 3). ஒ. நோ : போக்கு - போங்கு. பாங்கு - பாங்கன் = 1. தோழன். பாங்கன் நிமித்தம் பன்னி ரண்டென்ப (தொல். களவு. 13). 2. கணவன். பொருள்வயிற் பாங்கனார் சென்ற நெறி (நாலடி. 400). 3. உழையன். ம. பாங்ஙன். x.neh : ME., OF; It. paggis, E. page. பாங்கன் - பாங்கி = தலைவியின் தோழி. பாங்கியிற் கூட்டம் (நம்பியகப். அகத். 27). பாகு - பாகை = 1. பகுதி (சூடா.). 2. (கணக்கு) வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பகுத்து வந்த பகுதி (யாழ். அக.). 3. கால அளவு வகை (W.). 4. வெப்பமானியின் அல்லது கண்ணாடிக் குப்பியின் அளவு வரை (degree). பகு - பா. பாதல் = 1. பிளவுபடுதல். 2. பிரிவுபடுதல். பாத்தல் = பகுத்தல். தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் (குறள். 1107). பா - பாத்து. பாத்துதல் = பகுத்தல். படுதிரை வையம் பாத்திய பண்பே (தொல். அகத். 2). பாத்து = 1. பகுக்கை (சூடா.). 2. பங்கு (நாமதீப. 741). 3. பாதி (W.). 4. இணை. பாத்தில் புடைவை யுடையின்னா (இன். நாற். 3). 5. நீக்கம். பாத்தில்சீர்ப் பதுமுகன் (சீவக. 1845). 6. நான்கு என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக் குறி (W.). நானிலம், நால்வகுப்பு, நாற்பா. நாற்பொருள், நால்வகையுண்டி, நால்வகை யிசைக்கருவி முதலிய பல்வேறு பொருட் பாகுபாடும்; நாலா பேரும், நானா வகை என்னும் வழக்கும்; பகுத்தலைக் குறிக்கும் சொல்லை நான்கு என்று பொருள்படும் குழூஉக்குறி யாக்கின. பாத்துப்புலு = நாற்பது என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி (W.). பாத்து - பாத்தி = 1. பகுதி. மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே (தொல். தொகை. 30). 2. பங்கு (W.). 3. இறைவைப் புன்செய்ப் பகுதி, சிறு செய். பாத்தியுள் நீர்சொரிந் தற்று (குறள். 718). 4. சிறுவீடு (பிங்.). k., க. பாத்தி. பாத்திப் படுத்துதல் = நிலைபெறச் செய்தல். பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. (குறள். 465). பாத்தி - பத்தி = 1. பாத்தி (W.). 2. செய்தித்தாள், பொத்தகம் முதலியவற்றின் நீளவாட்டுப் பகுதி. செய்தித்தாள் பல பத்தி கொண்டது (உ.வ.). 3. வகுப்பு (W.). வரிசை பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல் (சிலப். 16 : 118). 4. முறைமை (சூடா). 5. அழகு வேலைப்பாடு. பத்திப் பல்வினை (பொருங். இலாவாண. 6 : 55). 6. கடவுள்பாற் பட்ட பற்று. பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன் (திருவாச. 2 : 119). 7. கடவுள் வழிபாடு (சூடா). 8. அரசன், ஆசிரியன், தந்தை, கணவன், முனிவன் முதலிய பெரியோ ரிடத்து வைக்கும் பற்று அல்லது செய்யும் பணிவிடை. பத்தி (வரிசை) - வ. பங்க்தி (pankti). பத்தி (பெரியோர் மாட்டுப் பற்று) - வ. பக்தி (bhakti). இங்ஙனம் இருவேறு வகையில் வடமொழியில் எழுதப் படுவதால், பத்தி என்பது இருவேறு சொல்லோ என்று ஐயுறற்க. பக்தி என்னும் சொல்லிற்கும் பாகம் என்னும் சொல்லிற்கும் வடமொழியாளர் பஜ் (bhaj) என்னும் ஒரே மூலங்காட்டுவதையும், பகு என்னும் முதனிலையினின்றே திரிந்துள்ள பக்கம் என்னும் சொல்லை அவர் பக்ஷ என்று திரிப்பதையும், நோக்குக. இங்ஙனம், ஒரே முதனிலையினின்று திரிந்துள்ள பல்வேறு திரி சொற்களை, எழுத்துமாற்றி வெவ்வேறு மூலத்தினின்று திரிந்த சொற்களாகக் காட்டுவது, வடமொழியாளர் வழக்கம். முத்தம் என்னும் தென்சொல்லை முக்த என்றும் திரித்தது போன்றே, பத்தி என்ற தென்சொல்லையும் பக்தி என்று திரித்துள்ளனர் வடமொழியாளர். பத்தி - பந்தி = மக்கள் உண்டற்கு அமரும் வரிசை அல்லது வரிசைத் தொகுதி. பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து (பழ.). 2. விலங்குகளை நிறுத்தும் ஒழுங்கு. பண்ணமை வயப்பரிகள் பந்தியி னிரைத்தார் (கம்பரா. வரைக்காட்சி. 13). 3. குதிரைச் சாலை. இவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத் தகுமென (திருவாலவா. 27 : 16). ஒ. நோ : கொத்து - கொந்து. பந்தி - பிரா. பந்த்தி - வ. பங்க்தி. வடமொழியாளர் பங்க்தி என்னும் சொற்குக் காட்டும் வரலாறு வருமாறு: பஞ்சன் (பஞ்சம்) = ஐந்து, ஐந்து விரல் போன்ற அல்லது ஐந்து பொருள் கொண்ட வரிசை. பாத்து - பாது = பங்கு. யார்க்கும் பாதிடு முரவோர்போல் (கோயிற்பு. பதஞ். 82). பாது - பாதிடு. பாதிடுதல் = 1. பங்கிடுதல். 2. வெட்சி மறவர் பகைவர் நாட்டிலிருந்து கவர்ந்த ஆநிரையைத் தமக்குள் பங்கிட்டுக் காத்தல். 3. பாதுகாத்தல் (W.). பாதிடு - பாதீடு = 1. பங்கிடுகை (யாழ். அக.). 2. வெட்சி மறவர் பகைவர் நாட்டினின்று கவர்ந்த ஆநிரையைத் தம்முட் பகிர்ந்து காத்தலைக் கூறும் புறத்துறை. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும் (தொல். புறத். 2). ஊர்கொலை ஆகோள் பூசல் மாற்றே நோயின் றுய்த்தல் நுவலுழித் தோற்றம் தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென (தொல். புறத். 3). பாதுகாத்தல் = 1. வெட்சி. மறவர் தம் ஆநிரைப் பங்கைக் காத்தல். 2. ஆநிரையைப் போல் அரவணைத்துக் காத்தல் (W.). 3. வாராமல் தடுத்தல். அதனைப் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு (குறள். 11. முகவுரை). பாதுகாவல் = பாதுகாப்பு. பாது = காவல் (யாழ். அக.). பாதுகாத்தல் என்பது நிலைச்சொல்லின் பொருள் மறைந்து நன்கு காவல் காத்தல் என்று பொருள்பட்டதனால், பாது என்னுஞ் சொற்குக் காவல் என்னும் பொருள் கூறப்பட்டது. (பள் - பண் - பணி - படி). கீழ்ப்படிதல் = அடங்கி நடத்தல், பணிவாயிருத்தல். படி = 1. நீர்நிலை (யாழ்.அக.). 2. தாழ்வாரம் (யாழ்.அக.). 3. இருதிணைப் பொருள்களும் படியும் அல்லது தங்கும் இடமாகிய ஞாலம். ஞாலத்தைக் குறிக்கும் படி யென்னும் சொல், ப்ருத்வீ என்னும் வட சொல்லின் திரிபாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலியிற் காட்டப்பட்டுள்ளது. புடவி என்னும் தென் சொல்லே, ப்ருத்வீ என வட மொழியில் திரிக்கப்பட்டுள்ளது. படிகாலி = தட்டையாய்ப் படிந்திருக்கும் பாதமுடையவ - ன் - ள் (நாஞ்.). படி - பதி. பதிதல் = 1. நாள்கோள் முதலியன இறங்குதல் (W.). 2. பள்ளமாயிருத்தல் பதிந்த நிலம் (உ.வ.). 3. முத்திரை உருவம் முதலியன அழுந்துதல். 4. ஆழ்தல். வண்டிச் சக்கரம் சேற்றிற் பதிந்து விட்டது (உ.வ.). 5. குழித்தெழுதுதல். 6. எழுதுதல். 7. ஊன்றுதல். மனம் பாடத்திற் பதிந்ததா? (உ.வ.). 8. விலை தணிதல். விலையைப் பதியக் கேட்டான் (உ.வ.). 9. தங்குதல். பதிசென்று பதிந்தனன் (தணிகைப்பு. பிரமன். 2). 10. நிலையாயிருத்தல். எனக்கு இன்னும் எங்கும் பதிந்த வேலையில்லை. (உ.வ.). 11. அமைதியாதல். பையன் பள்ளிக்கூடத்திற் பதிந்திருக்கிறான் (உ.வ.). பதி - வ. பத். பதித்தல் = 1. தாழ்த்துதல். 2. அழுத்துதல். பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி (திருவாச. 11 : 12). 3. பதியம் போடுதல். 4. மணி முதலியன இழைத்தல். 5. குழித்தல். 6. குழித்தெழுதுதல். 7. எழுதுதல். பதிவு = 1. வான்மீன்களின் இறக்கம். 2. பள்ளம். நிலம் பதிவாயிருக்கிறது (உ.வ.). 3. திங்கள் எழு முன்னை நிலை. 4. அழுந்துகை. 5. பதுக்கம். 6. பதியம். 7. நிலைவரம். அவன் அந்தவூரில் பதிவாயிருக்கிறான் (உ.வ.). 8. மனம் ஊன்றுகை. 9. அமைதி. 10. பதிவேட்டில் எழுதப்படுகை. 11. விலை தணிவு. பதிவு சாப்பாடு = உண்டிச் சாலையில் மாதக் கணக்கில் நிலையாகச் சாப்பிடுதல். பதி = 1. அழுந்துகை. நுண்ணிலைவேல் பதிகொண்டு (சீவக. 1186). 2. பதியம். 3. நாற்று. 4. பதிவிளக்கு (W.). 5. உறைவிடம். பதியிற் கலங்கிய மீன் (குறள். 1116). 6. வீடு (திவா.). 7. கோயில் (சங். அக.). 8. நகர். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1 : 15). 9. ஞாலம். பதி - பதம் = 1. நிலத்திற் பதியும் உறுப்பாகிய கால். மதுநுக ரறுபத முரல (தேவா. 568 : 5). 2. காலின் அடிப் பகுதியாகிய பாதம். 3. செய்யுளடி (W.). 4. நாலிலொன்று (பிங்.). 5. நிலை. 6. இடம். பதங்க ளேழும் (தக்கயாகப். 147). 7. பதவி. பிரிவில் தொல்பதந் துறந்து (கம்பரா. திருவடி சூட்டு. 101). சிவபத மளித்த செல்வமே (திருவாச. 37 : 3). பதம் - வ. பத, L. pedia. பதம் = 1. (பள்ளத்தில் நிற்கும்) நீர் (திவா.). 2. ஈரம் (திவா.). மாவெலாம் பதம்புலர்ந்த (கம்பரா. மூலபல. 79). 3. நீரின் மென்மை. 4. மெல்லிய பதம். சில்பத வுணவின் (பெரும்பாண். 64). 5. (வெந்து மெல்லிய) அவிழ் (சூடா). 6. சோறு (திவா.). 7. உணவு. பதமிகுத்துத் துய்த்தல் வேண்டி (சிலப். 28 : 189). 8. நீர்ப்பதமான கள், மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி (பொருந. 111). 9. பதநீர். 10. பதநீரின் இனிமை. 11. இன்பம் (சூடா.). 12. ஏற்ற சமையம். பதம் பார்த்தல் = 1. வேகும் உணவின் நிலைமையை அறிதல். 2. மக்களின் நிலைமையை ஆராய்ந்தறிதல். பதி - பதனம் = 1. இறக்கம் (யாழ். அக.). 2. தாழ்மை (சங். அக.). 3. அமைதி. 4. பாதுகாப்பு. கண்ணாடியைப் பதனமாகக் கொண்டுவா (உவ.). பதனம் - வ. பதன. பதம் - பாதம் = 1. காலின் அடிப்பகுதி. பாதக் காப்பினள் பைந்தொடி (சிலப். 14 : 23). 2. விளக்குத் தண்டின் அடிப்பகுதி. பாதம் வைத்த விளக்கு (உ.வ.). 3. அடிச்சுவடு. 4. செய்யுளடி. வாங்கரும் பாத நான்கும் வகுத்த வான்மீகி (கம்பரா. நாட்டுப். 1). 5. காற்பங்கு. முன்னைப் பீடத்தின் பாதங் குறைந்து (மேருமந். 1172). 6. பணி (சரியை), பத்தி (கிரியை), ஓகம் (யோகம்), ஓதி (ஞானம்) என்னும் நால்வகைச் சிவநெறி யொழுக்க நிலை. பாதம் - வ. பாத, Gk. podos, OS., OE. fot, OHG. fuoz, ON. fotr, Goth. fotus, E. foot. பாதம் - பாதை = நடப்பவர் பாதம் படுவதால் அமையும் வழி. ஒ.நோ : தடம் = அடிச்சுவடு, வழி. OE., E. path, OLG. pad, OHG. pfad. பாதம் என்னும் சொல் வடமொழியிற் பெருவழக்காய் வழங்கு வதனால் அது வடசொல்லென்றே கருதிக்கொண்டிருக்கின்றனர். அடி என்பது, ஒன்றன் கீழ்ப்பகுதியையுங் கீழிடத்தையுமேயன்றி, பாதம் என்னும் சினைப் பகுதியைக் குறிப்பதாகாது. பாதை யென்னும் சொல் வடமொழியிலின்மையும் இதை வலியுறுத்துஞ் சான்றாகும். படு - பது - பதுங்கு. பதுங்குதல் = 1. பதிவிருத்தல். பதுங்கிலும் பாய்புலி (திருமந். 2914). 2. ஒளிதல். அரண்புக்குப் பதுங்கி னானை (கம்பரா. அங்கத. 31). 3. மறைதல். பருதியை முகின் மறைப்பப் பாயொளி பதுங்கினாற்போல் (சி.சி. 2 : 83). 4. பின்னிற்றல். பதுங்கு = பதிக்கும் குத்துக்கல் வரிசை. பதுங்கு பிடித்தல் = மேற்றளத்திற்குச் செங்கற் பாவுதல். பதுங்கூன்றுதல் = பதுங்கு பிடித்தல். பதுங்கு - பதுங்கி = 1. பின்னிற்பவன். 2. கூச்சமுள்ளவன். பதுங்கல் - பதுங்கலன் = பதுங்கி. பதுங்கு - பதுக்கு - பதுக்கம் = 1. ஒளிகை. 2. கரவு. பதுக்கமாய் நடக்கிறான். (W.). 3. எய்தல் பாய்தல் முதலியவற்றிற்குப் பதுங்குகை. 3. பின்னிற்கை (W.). 5. வணிகப் பொருள்களை அல்லது திருட்டுப் பொருள்களை மறைத்து வைக்கை. பதுக்குதல் = ஒளித்தல். பதுக்கு - பதுக்கை = போரிற்பட்ட மறவரை அல்லது காட்டு விலங்காற் கொல்லப்பட்டவரை மறைக்குங் கற்குவியல். பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலை (ஐங். 362). 2. மணற் குன்று. பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி (புறம். 264). 3. இலைக்குவியல். பதுக்கை நிரைத்த கடுநவை யாராற்று (கலித். 12 : 2). 4. சிறுதூறு (திவா.). உவலைப் பதுக்கை முரம்பு (தஞ்சைவா. 363). 5. பாறை (பிங்.). பாடலம் புனைந்தகற் பதுக்கை யிவ்விடனே (கல்லா. 6). பதுக்கைக் கடவுள் = மணற்குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வம். வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் (அகம். 35). பள் - படு. படுதல் = 1. விழுதல். 2. தொங்குதல். படுமணி யிரட்டும்(திருமுருகு. 80). 3. சாய்தல். படாஅ முலைமேற்றுகில் (குறள். 1087). 4. கிடத்தல் 5. கதிரவன் அடைதல், படுஞாயிறு. சுடர் நோக்கி மலர்ந்தாங்கே படிற்சாம்பு மலர் (கலித். 78). 6. சாதல். காதலிநீ பட்டதூஉம் (சிலப். 29, அடித்தோழி யரற்று). 7. அழிதல். படாஅச் செலீயர்நின் பகைவர் மீனே (புறம். 24). 8. துன்பப்படுதல். படுவேன் படுவ தெல்லாம் (திருவாச. 50 : 4). 9. வாடுதல். 10. நிலைத்திணை சாதல். மரம் பட்டுவிட்டது. (உ.வ.). 11. புண் ஆறுதல். புண்பட்டுப் போயிற்று (உ.வ.). 12. புகுதல். நாடுபடு செலவினர் (புறம். 240). 13. அகப்படுதல். எலி பொறியிற் பட்டுவிட்டது (உ.வ.). 14. புதைக்கப்படுதல். படுபொருள் வவ்விய பார்ப்பான் (சிலப். 23 : 102). 15. பெய்தல். படுமழை யாடும் வரையகம் (கலித். 103 : 20). படுத்தல் = 1. விழச் செய்தல். எறிந்தகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர் (புறம். 19). 2. எழுத்தொலியைத் தாழ்த்தி யொலித்தல். படுத்துக் கூற (தொல். எழுத்து. 76, உரை). 3. மட்டமாக்குதல். 4. தளவரிசை செய்தல். எண்டிசையு மேற்பப் படுத்து (சீவக. 592). 5. கிடத்தல். அரியுந்தன் ஆழிபடான் (குலோத். கோ. 165). 6. அழித்தல். எதிர்ந்தோர் தம்மைப் படுத்தலும் (கம்பரா. மூலபல. 56). 7. ஒழித்தல். காப்படுப்பின் (சிறுபஞ். 40). 8. துன்பப் படுத்துதல். அந்த வீட்டில் மருமகளை மிகவும் படுத்துகிறார்கள். (உ.வ.). பட்டவன் குறி = போரில் இறந்தவர்க்கு அடையாளமாக நட்டகல் (G. Tp. D. I. 90). பட்டபாடு = அடைந்த துன்பம், உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்டபாடே (பாரத. கிருட்டிண. 16). படு - படுக்கை = 1. படுத்துக்கிடக்கை. 2. படுக்கும் பாய் அல்லது மெத்தை. 3. சரக்கு மூட்டைமேல் நீர் படாதிருக்குமாறு தோணியின் அடியிற் பரப்பும் புல் அல்லது ஓலை (W.). 4. பொருள்கள் வைத்தற்கு ஏற்றவாறு அடியிற் பரப்பிய ஓலை அல்லது வைக்கோல். 5. தெய்வங்கட்குப் படைக்கும் படையல் (நாஞ்). 6. சிற்றூர்த் தெய்வங்கட்குச் செய்யும் ஒருநாள் விழா. படுக்கையறை = பள்ளியறை. படுக்கையிற் போடுதல் = நெட்டுக்குத்தாக நிற்பதைப் படுகிடையில் அல்லது நீளவாட்டில் வைத்தல். படுக்கைப் பற்று = 1. சீர் வரிசை (சீதனம்). தன் ராஜ்யத்தை அவர்களுக்குப் படுக்கைப் பற்றாக்கி (ஈடு, 4 : 1 : 5). 2. உவளகம் (அந்தப்புரம்). நாங்கள் படுக்கைப் பற்றில் உள்ளோம் (ஈடு, 4 : 8 : 1). படுக்கை மரம் = தோணியிற் பண்டங்களை வைக்குமாறு அமைக்கும் பலகை (W.). படுகட்டை = 1. உலர்ந்த மரத்துண்டு (W.). 2. பயனற்ற கிழவன் அல்லது கிழவி. படுகண் = படுகண்ணி. படுகண்ணும் கொக்குவாயும் உட்பட நிறை (S.I.I. II, 157). படுகண் - படுகண்ணி = அணிகலத்திற் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு. கொக்குவாயும் படுகண்ணியும் போலே (திவ். பெரியதி. 5 : 4 : 7. வியா.). படு - படுகர் = 1. பள்ளம் (திவா.). தான்விழும் படுகர் வீழ்த்தான் (குற்றா. தல. புட்பகந்த. 16). 2. நீர்நிலை (பிங்.). தத்துநீர்ப் படுகர் (திருவிசைப். கருவூர். 8 : 9). 3. வயல் (W.). 5. மருதநிலம், பூம்படுகர்ப் பகட்டினங்கள் (காஞ்சிப்பு. திருநாட்டி. 131). 6. ஏற்றிறக்கமான வழி. ஆரிப் படுகர்ச் சிலம்பு (மலைபடு. 161). படுகல் = நீர்நிலை. பூம்படுகல் லிளவாளை பாயும் (தேவா. 82 : 2). படுகளம் = 1. மரங்கள் ஒருசேர விழுந்த காடு (திவ். திருப்பா. 6 : 95, வியா.). 2. சுடுகாடு. படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர் (தேவா. 879 : 6). படுகாடு கிடத்தல் = ஒருசேர விழுந்த மரங்கள் போலச் செயலற்றுக் கிடத்தல். பறவையின் கணங்கள்.... படுகாடு கிடப்ப (திவ். பெரியாழ். 3 : 6 : 8). படுகிடை = 1. நோய் மிகுதியால் எழமுடியாமற் படுக்கையிற் கிடத்தல். 2. தன் எண்ணம் நிறைவேற ஒட்டாரமாய்ப் படுத்துக் கிடக்கை. படுகுடி = கெடுகுடி (யாழ். அக.). படு - படுகை = 1. ஆற்றோரத்துத் தாழ்ந்த நிலம். 2. நீர்நிலை. பழைய பாகீரதிப் படுகைமேல் (திருப்பு. 493). படு - படை. படைத்தல் = மக்கட்கு முன் அல்லது தெய்வப் படிமைக்கு முன் உணவு இடுதல். இடுதலென்பது கீழ்வைத்தல். படை - படையல் = உணவு தெய்வப் படிமைக்கு முன் இடுதல். படு - பாடு = 1. விழுகை. காடுகழி யிந்தனம் பாடுபார்த்தெடுத்து (தனிப்பாடல்), நொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு (கலித். 46). 2. கதிரவன் விழுந்து மறைதல். செங்கதிர்ச் செல்வன் எழுச்சியும் பாடும் (பெருங். வத்தவ. 2 : 87). 3. கீழோரை (நீசராசி). பார்க்கவனார் பாடுச்சி சேருங்கால் (சினேந். 207). 4. படுக்கை நிலை. பன்னா ளாயினும் பாடு கிடப்பேன் (மணிமே. 18 : 158). 5. தூக்கம் பாடின்றிப் பசந்தகண் (கலித். 16). 6. சாவு. அபிமன்னுவின் பாடு (பாரதவெண். 813, குறிப்பு). 7. கேடு. ஆடுறு குழிசி பாடின்று தூக்கி (புறம். 371). 8. குறைவு. அளவுபாடு (உ.வ.). 9. வருத்தம். தம்பா டுரைப்பரோ தம்முடையார் (நாலடி. 292). க. பாடு. 10. உழைப்பு. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்து (நல்வழி, 22). 11. கருமம் (காரியம்). அவனவன் தன்தன் பாட்டைக் கவனிக்க வேண்டும் (உ.வ.). 12. தாழ்மட்டம். தெ. பாடு, க. பாடு, ஹாடு. பாடு காட்டுதல் = பக்கஞ் சரிந்து கிடத்தல். 2. நீட்டமாகக் குப்புற விழுதல். பாடு காட்டி விழுதல் = சாய்ந்து விழுதல் (W.). பாடு கிடத்தல் = தெய்வத்திற்குமுன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வரங்கிடத்தல். பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந் தாளுக்கு (சிலப். 9 : 15). பாடுபடுதல் = 1. வருந்தி யுழைத்தல். பாடில்லாமற் பயனில்லை (பழ.). 2. துன்பப்படுதல். கொடுங்கோல் மன்னர் ஆட்சியில் குடிகள் மிகப் பாடுபடுவர் (உ.வ.). 3. வாரத்திற்குப் பயிரிடுதல். நீ யார் நிலத்திற் பாடுபடுகிறாய்? (நெல்லை வட்டார வழக்கு). பாடு பார்த்தல் = ஒருவரது கருமத்தைக் கவனித்தல். பாடு பிடித்தல் = நீரில்லாமையாற் பயிர் பட்டுப் போதல். பாடாற்றுதல் = துன்பம் பொறுத்துக் கொள்ளுதல். சிலநா ளாற்றாமையோடே பாடாற்றிக் கிடந்தார் (ஈடு, 5 : 3 : 1). பாடு - பாடி = மிகத் தாழ்மட்டமான கூரை வீடுகள் சேர்ந்த முல்லைநிலத்தூர் (திவா.). 2. இடையர் குடியிருப்பு. ஆயர்பாடி (திவ். நாய்ச். 14 : 2). 3. சிற்றூர். 4. பாசறை. பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் (பு.வெ. 3 : 10). 5. சேனை. 6. ஊர். 7. நகரம். பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 8. உள்படும் உளவாளி. k., க. பாடி, தெ. பாடு. பாடிகாவல் = 1. ஊர்காவல். (கல்வெட்டு). 2. தலையாரி. 3. ஊர்காவற்கு வாங்கும் வரி. (S. I. I. I, 89). 4. வழக்குத் தீர்த்து இடும் தண்டனை. பாடி காவலிற் பட்டுக் கழிதிரே (தேவா. 232 : 2). 5. பாதுகாவல். பாடி காவலிடுமின் (திவ். பெரியாழ். 3, 7, 5.) பாடிப்பேச்சு = ஊர்ப்பேச்சு, வீண்பேச்சு (நாஞ்.). பாடி மாற்றம் = உலக வழக்குச் சொற்கள் (தொல். செய். 240, உரை). பாடி வீடு = பாசறை. பாடி வீட்டினை வலஞ்செய்கென்றான் (கம்பரா. விபீடண. 151). பாடி - வாடி = 1. முல்லை நிலத்தூர். 2. இடையர் குடியிருப்பு. 3. சிற்றூர் பட்டி. 4. ஊர். 5. பாசறை. 6. இடையர் மாட்டுத் தொழுவம். 7. காணிக்காரரின் புல்வேய்ந்த மூங்கிற் குடிசை (G. Tn. D. 1 : 7). 8. சாவடி. 9. அடைப்பிடம். 10. மரமண்டி. எ-டு : மரவாடி, விறகுவாடி. பாடி வாசல் - வாடி வாசல் = 1. முல்லைநில மாட்டுத் தொழுவ வாசல். 2. இடையர் குடியிருப்பு வாசல். 3. சல்லிகட்டுக் காளைகளை அடைத்து வைத்திருக்கும் தொழுவ வாசல்.4. பாசறை வாசல். 5. அரண்மனை வாசல். பாடி வீடு - வாடி வீடு = 1. பாசறை. 2. அரசன் தங்கல் மனை. 3. சாவடி. பாடு - பாடை = காலில்லாத மிகத் தாழ்வான பிணக்கட்டில். உயர் பாடைமேற் காவுநாள் (தேவா. 927 :3). தெ. பாட. பாடைச்சுழி - மாட்டின் நடு முதுகந்தண்டிற்கு வலப்புறமுள்ள தீச்சுழி வகை (அபி. சிந். 788). பாடையவரை = பாடவரை (நாஞ்.). பாடோடிக் கிடத்தல் = 1. பாடு கிடத்தல். 2. துயரத்தினாற் படுகிடையாய்க் கிடத்தல். நான் பாடோடிக் கிடந்தேன் (ஈடு, 6 : 8 : 4). பது - பாது - பாந்து. பாந்துதல் = பதுங்குதல் (சூடா.). ஆந்தை பாந்தி யிருப்ப (கலிங். 127, புதுப்.). பாந்து - பாந்தல் = பதுங்குகை (சூடா.). பாந்தல் - பாந்தள் = 1. (புல்லுள்ளும் செடிகளுள்ளும் பதுங்கியிருக்கும்) பாம்பு. பாந்தளஞ் சடில முக்கட் பாவலன் (திருவாலவா. 16 : 32). 2. மலைப்பாம்பு. கானிடைப் பாந்தள் கண்படுப்பன (சீவக. 1900). பாந்து என்னும் சொல்லிற்குப் பொந்து என்னும் பொருளு முண்டு. மலைப்பாம்பு பொந்திற்குள் இராமையின், பதுங்குதற் பொருளே பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது. புல் - புள் - பொள் - பள் - பள்ளம். இக்காலத்தை நோக்க முற்காலம் பள்ளம் போன்றிருத்தலால், பள்ளக் கருத்தினின்று பழமைக் கருத்துத் தோன்றிற்று. ஒ. நோ : கில்லுதல் = தோண்டுதல். கில் - கீள் - கீழ் = 1. பள்ளம் (சூடா.). 2. கீழிடம். நள்ளுதல் கீழுளு மேலுளும் யாவுளும் (திருவாச. 5 : 46). 3. முற்காலம். கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு (திருவாச. 40 : 9). கீழ் - கிழம் = முதுமை, முதியது. தொல்லுதல் = துளைத்தல், தோண்டுதல். தொல் - தொள். தொள்ளுதல் - தொளைத்தல், தோண்டுதல். தொல் = பழைய. தொல் - தொல்லை = பழமை. தொல் - தொன்று = பழமை. தொன்றுதொட்டு = பழைய காலந்தொடங்கி. தொல் - தொன்மை = பழமை, பழைமை. தொள் - தொண்டு = பழமை (திவா.). தொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும் (விநாயகபு. 82 : 55). பள் - பண்டு = 1. பழமை. பண்டாய நான்மறையும் (திருவாச. 48 : 1). 2. முன்பு. பண்டறியேன் கூற்றென் பதனை (குறள். 1083). k., தெ. பண்டு. பண்டு - பண்டை = (பெ.). 1. பழமை. பண்டைப் பிறவிய ராகுவர் (மணிமே. 11 : 33). 2. முற்காலம். தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே (புறம். 10). (கு.பெ.எ.). = பண்டைக் காலம். பள் - பழம் - பழமை = 1. தொன்மை. 2. தொன்மையானது. பரமர் பழமை யெனலாம்....... மயிலாடுதுறை (தேவா. 496 : 5). 3. வழங்கா தொழிந்தது (W.). 4. சாரமின்மை. 5. முதுமொழி (சூடா.). 6. பலநாட் பழக்கம். 7. நாட்பட்டதால் ஏற்படுஞ் சிதைவு. 8. பழங்கதை. 9. மரபு (W.). 10. வழக்கம். பழநடை = வழக்கம். பழநடைசெய் மந்திர விதியிற் பூசனை (திவ். பெரியதி. 2 : 3 : 4). பழங்கணக்கு = 1. பழைய கணக்கு. 2. கடந்து போன செய்தி. பழங்கதை = 1. பழைய கதை. 2. தெரிந்த செய்தி. பழங்காசு = பண்டை நாளில் வழங்கிய காசுவகை. பழங்கிடையன் = கட்டுக்கிடைப் பண்டம். பழஞ்சொல் = பழமொழி. பழம் - பழன் - பழனம் = பண்டை நாளிலேயே பண்படுத்தப்பட்ட வயல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறம். 13). 2. மருதநிலம். பன்மலர்ப் பழனத்த (கலித். 78). 3. பொய்கை. பழன வாளைப் பரூஉக்கட் டுணியல் (புறம். 61). பழமை - பழைமை = தொன்மையானதாய் அல்லது நாட்பட்ட தாய் இருத்தல். க. பழவே. பழை = பழங்கள் (பிங்.,) கள் பழையன் = 1. முன்னோன். 2. கிழவன். 3. மோகூர்த் தலைவன் பெயர். 4. போரூர்த் தலைவன் பெயர். பழையர் = 1. முன்னோர். 2. கள் விற்போர். பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் (மலைபடு. 459). பழையது = 1. நீரூற்றி வைத்த பழஞ்சோறு. 2. பழம்பொருள். ஒ.நோ : Gk. palaios, old, ancient palaeocrystic, palaeography, palaeolithic, palaeonotology, palaeothere, palaeozioc என்னுங் கூட்டுச் சொற்கள், palaios (பழைய) என்னுஞ் சொல்லை முதலுறுப்பாகக் கொண்டுள்ளன. பழமை - வழமை = வழக்கம். நாட்டு வழமை (உ.வ.). வழ - வழப்பு - வழப்பம் = வழக்கம் (யாழ். அக.). பள் - பய் - பயில். ஒ. நோ : அள் = கூர்மை. அள் - அய் - அயில் = கூர்மை. பயில்தல் (பயிறல்) = பழகுதல். பயிறொறும் பண்புடையாளர் தொடர்பு. (குறள். 783). 2. கற்றல். படைக்கலம் யாவும்..... மாதவன் வயிற் பயில் வரதன் (பாரத. வாரணா. 29). 3. தேர்ச்சியடைதல். 4. உலாவித் திரிதல். நந்தி நந்தினி பயிலுகின்ற பேரொலி (தணிகைப்பு. அகத். 103). 5. தங்குதல். புலவர் பயிலுந் திருப்பனையூர் (தேவா. 635 : 6). 6. பொருந்துதல். 7. நெருங்குதல். பயிலிதழ் மலர் (கலித். 103). பயில் - பயில்வு = இருப்பு, வாழ்வு. அடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே (தேவா. 1063 : 6). பயில் - பயிற்சி = 1. தொழில் பழகுதல். 2. ஆட்பழக்கம். பயில் - பயிற்றி = பழக்கம். பழமையும் பயிற்றியும்...... உடையார் (இறை. 2). பழையது - பழைது = 1. பழஞ்சோறு. 2. பழையது. பழைது - பழைசு - பழசு = நாட்பட்டது. தேன் அல்பமுமாய்ப் பழசுமாயிருக்கும் (திவ். திருநெடுந். 26, வியா. 226). பழஞ்சரக்கு = 1. கட்டுக்கிடைப் பண்டம். 2. இன்று நுகரும் பழவினைப் பயன். வறிதே தீயப் பழஞ்சரக்கும் (மதுரைக். 49). பழையான் = 1. பழைமையானவன். வானத்துயர் வானைப் பழையானை (தேவா. 1064 : 9). 2. நெடுநாள் நண்பன். பழையார்கட் பண்பிற் றலைப்பிரியாதார் (குறள். 810). பழையோள் = பழைமையான பாலைநிலத் தெய்வமாகிய காளி. இழையணி சிறப்பிற் பழையோள் குழவி (திருமுருகு. 269). பழம் - பழவு - பழகு. பழகுதல் = 1. நெடுங்காலமாக வழங்கி வருதல். பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் (தனிப்பா.). 2. பலநாட் பார்த்தல். பழகின முகம் (உ.வ.). 3. உறவாடுதல். நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே (நறுந். 33). ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. (மேற்படி. 34) 4.விலங்கு பறவைகள் புதிய இடத்தில் அல்லது புதிய ஆள்க ளொடு பயின்று இணங்கிப்போதல். நாய் நன்றாய்ப் பழகி விட்டது. எருமை ஏருக்குப் பழகிவிட்டது. (உ.வ.). 5. ஓர் உணவுப் பொருளைப் பலநாள் உண்டு பயிலுதல். பழகப் பழகப் பாலும் புளிக்கும் (பழ.). 6. ஒரு வினையைப் பலநாட்செய்து தேர்ச்சி பெறுதல். ஐந்தாண்டு வீணை பழகி வருகின்றான். ஆங்கிலம் பேசிப் பழகிக் கொண்டான் (உ.வ.). 7. ஒரு வினையை வழக்கமாகச் செய்தல். கல்லூரிக்குச் சென்றபின் சுருட்டுக் குடிக்கப் பழகி விட்டான் (உ.வ.). 8. ஒத்துப்போதல். குற்றாலஞ் சென்றபின் குளிர்ந்த நீர்க்குளிப்பிற்கு என் உடம்பு பழகிவிட்டது (உ.வ.). பழகு - பழக்கம் = 1. பயிற்சி. சித்திரமுங் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்த தொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் (தனிப்பா.). 2. வழக்கம். பழக்கங் கொடியது, பாறையினுங் கோழி கீறும் (பழ. 3). அறிமுகம். அவர் எனக்கு நல்ல பழக்கம் (உ.வ.). 4. ஒழுக்க வினை. அவனிடத்திற் சில கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன (உ.வ.). 5. வினைத் தேர்ச்சி, திறமை, சமர்த்து (W.). 6. அடங்கிப் போகை. 7. வயக்குதல், பயிற்றல். விலங்குகள் போருக்கும் வட்டக் காட்சிக்கும் (circus) பல்லாண்டு பழக்கம் பெறல் வேண்டும். (உ.வ.). பழகாளி - பழகாடி = பட்டறிவுள்ளவன் (யாழ்ப்). பழகு - பழக்கு. பழக்குதல் = பழகச் செய்தல், பயிற்றுதல், வயக்குதல். க. பழகிசு. பழகு - பழங்கு. பழங்குதல் = 1. பழகுதல். 2. உறவாடுதல். 3. கையாளுதல். வீட்டிற் பழங்குவதற்கு வேண்டிய கலங்கள் இல்லை (உ.வ.). பழங்கு - புழங்கு. புழங்குதல் = 1. பழகுதல். 2. கையாளுதல். விதர்ப்ப தேயத்திற் புழங்கலுறும் பொருண் முழுதும் பொலிந்து (விநாயகபு. 55 : 4). புழங்கலுக்குரிய கலம் ஒன்றும் மருமகள் கொண்டு வரவில்லை (உ.வ.). பழக்கம் - புழக்கம் = 1. பழக்கம். 2. அறிமுகம். புழங்கு - புழக்கம் = 1. கையாட்சி, புழக்கத்திற்குக் கலங்களில்லை. 2. பண நடமாட்டம். இவ் வாண்டு பணப்புழக்கம் மிகக் குறைந்து விட்டது (உ.வ.). பழங்கு - வழங்கு. வழங்குதல் = (செ. கு. வி). 1. தொன்றுதொட்டு நடைபெற்று வருதல். வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் (தொல். குற்றி. 78). 2. பயிற்சி பெறுதல் (W.). 3. நிலை பெறுதல். வானின் றுலகம் வழங்கி வருதலான் (குறள். 11). 4. இயங்குதல். வளிவழங்கும் மல்லன்மா ஞாலம் கரி (குறள். 245). முந்நீர் வழங்கும் நாவாய் (புறம். 13). 5. உலாவுதல். சிலம்பில் வழங்க லானாப் புலி (கலித். 52). 6. நடமாடுதல். பேய் மகள் வழங்கும் பெரும்பாழாகும் (பதிற். 22 : 37). வழங்காப் பொழுது நீ கன்றுமேய்ப் பாய்போல் (கலித். 112). 7. அசைந்தாடுதல். மழகளிறு கந்து சேர்பு.... வழங்க (புறம். 22). 8. ஏற்றதாதல். வாய்க்கு வழங்காத கறி (W.). (செ. குன்றாவி.). 1. கையாளுதல். தமிழ்ப் புலவர் தனித்தமிழ்ச் சொற்களையே வழங்குதல் வேண்டும் (உ.வ.). 2. சொல்லுதல், யானோ தேறேன் அவர் பொய்வழங் கலரே (குறுந். 21). 3. கொடுத்தல். வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி (பெரும் பாண். 26). 4. விடுத்தல் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்க வும் (புறம். 14). 5. பகிர்ந்தளித்தல். க. பழகு (g). வழங்கு - வழக்கு (பி.வி.). வழக்குதல் = போக்குதல். வழக்குமாறு கொண்டு (கலித். 101). வழங்கு - வழக்கு (பெ.) = 1. இயங்குகை. வையை யன்ன வழக்குடை வாயில் (மதுரைக். 159). வழக்கொழியா வாயில் (பு. வெ. 10, முல்லைப். 4). 2. உலக வழக்கு செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிடம். வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே (தொல். மரபு. 93). 2. உலக வழக்கு. வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் (தொல். பனம். சி. பா.). 3. இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்னும் இருவகைச் சொல் வழக்குகள். இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் றாகும் மூவகை யியல்பும் இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் (நன். 207). 4. பழக்கவொழுக்கம். வாய்மையுடையார் வழக்கு (திரிகடு. 37). 5. நெறி. அன்புற் றமர்ந்த வழக்கென்ப (குறள். 75). 6. நயன்மை (நீதி). வழக்கன்று கண்டாய் (திவ். இயற். 2 : 19). 7. சச்சரவு, உரிமைப் பிணக்கு. 8. சச்சரவுபற்றிய முறையீடு. வழக்குரை காதை (சிலப். 20). 9. கொடை. உடையான் வழக்கினிது (இனி. நாற். 3). வழக்கு என்னும் சொற்கு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியிற் குறிக்கப்பட்டுள்ள 7 ஆம் பொருள். “Litigation; நீதி தலத்திற் செய்யும் வியாச்சியம். Mod” என்றுள்ளது. இஃது எங்ஙனம் இக்காலத்தது என்பது விளங்கவில்லை. வழங்கு - வழக்கம் = 1. பழக்கம். 2. நாள்தொறும் செய்வது. அவர் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்குவது வழக்கம் (உ.வ.). 3. ஈகை. திருக்கை வழக்கம் (கம்பன்). 4. படைக்கலத்தைக் கையாளுதல். க. பழகெ (b). வழக்கு - வழக்கர் = (அரு. நி.). 1. நீள்வழி. 2. வழக்கம். வழக்கு - வழக்கன் = 1. வழக்காளி (W.). 2. இலவசமாகப் பகிர்ந்தளித்தற்குரிய பொருள். வழக்கனாயிருக்கிற சந்தனத்தைக் கொடுத்தான். (ஈடு, 4 : 3 : 1). வழக்காறு = வழக்கு, வழக்கியல். வழக்காளி = 1. வழக்குத் தொடுத்தவன். 2. போராடுபவன். வழக்காடுதல் = வழக்கிற் போராடுதல். வழக்காட்டு = போராட்டு. வழக்காடி = போராடி. பழம் பொருள்கள் பொதுவாகப் பழுதுபடுமாதலால் பழமைக் கருத்தினின்று பழுது கருத்தும் தோன்றும். பழமனை = இடிந்து பாழான வீடு (யாழ். அக.). பழ - பாழ். பாழ்த்தல் = 1. அழிவடைதல். 2. பயனறுதல். பாழ்த்த பிறப்பு (திருவாச. 5 : 16). 3. சீர்குன்றுதல். பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலங்கிடந்தேற்கும் (கம்பரா. குகப். 70). 4. இனிமையின்மை. பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் (தனிப்பா.). பாழ் = 1. அழிவு. நரகக்குழி பலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5). 2. கெடுதி (W.). 3. வறட்பாழ், வெள்ளப் பாழ், குடிப்பாழ் என்னும் முப்பாழான இழப்பு. 4. இழிவு (W.). 5. அழகின்மை. நீறில்லா நெற்றி பாழ் (நல்வழி, 24). 6. வீண். 7. வெறுமை. வளமனை பாழாக வாரி (பு.வெ. 3 : 15). 8. இன்மை. 9. ஒன்றுமில்லா இடம். 10. விளையா நிலம். முதுபாழ்ப் பெயல்பெய்தன்ன (புறம். 381). 11. புறம்போக்கு நிலம். 12. குற்றம். முப்பாழ் கழிந்து (காசிக். வயிர. 25). 13. வானம். 14. மூலமுதனிலை (மூலப் பிரகிருதி). முடிவில்பெரும் பாழேயோ (திவ். திருவாய். 10 : 10 : 10). 15. ஆதன் (புருடன்). பாழெனக் காலெனப் பாகென வொன்றென (பரிபா. 3 : 77). நத்தப்பாழ் = பாழூர். முப்பாழ் = 1. மூவகை இழப்பு. 2. உடம்பிற்குள் வெறிதான மூவிடம். 3. முப்பொருளின்மை. முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய் பாழ்க்கோட்டம் = சுடுகாடு. பொடியடுத்த பாழ்க்கோட்டஞ் சேராமுன் (பதினொ. ஐயடி. க்ஷேத். 2). பாழ்கிடை = விடாமற் பற்றிக்கிடக்கை. கடன்காரன் பாழ்கிடை யாய்க் கிடக்கிறான் (உ.வ.). பாழ்ங்கிணறு = தூர்ந்து அல்லது இடிந்து பயனற்ற கிணறு. பாழ்ங்குடி = சீர் கெட்ட குடும்பம். பாழ்மூலை = எளிதிற் செல்ல முடியாத தொலைவான இடம். அவன் எங்கேயோ பாழ்மூலையில் இருக்கிறான் (உ.வ.). பாழ்வாய் கூறுதல் = நன்றி மறந்து முணுமுணுத்தல். பாழ்வாயன் = நன்றி மறந்து குறைகூறி. பாழ் - பாழி = 1. வெறுமை. 2. வானம் (ஆகாயம்) (யாழ். அக.). பாழி - பாழிமை = வெறுமை. பாழிமையான கனவில் (திவ். பெரியதி. 11 : 2 : 6). பாழூர் = குடிநீங்கிய ஊர். பாழூர்க் கிணற்றில் றூர்கவென் செவியே (புறம். 132). பாழுக்கிறைத்தல் = 1. பாழ்நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுதல். இரவுபகல் பாழுக் கிறைப்ப (குமர. பிர. நீதி. நெறி.90). 2. வீணான வினை செய்தல். பாழ்க்கிறைத்துக் கழித்தீர் (அருட்பா. VI, உறுதி கூறல், 2). பாழ் - பழுது = 1. சிதைவு. இவை பழுதிலை (தேவா. 543 : 2). 2. பதனழிந்தது. 3. பிணமாயிருக்குந் தன்மை (சிலப். 19 : 66, அரும்.). 4. தீங்கு. பழுதெண்ணும் மந்திரியின் (குறள். 639). 5. குற்றம். பழுதிறொல் புகழாள் பங்க (திருவாச. 28 : 10). 6. பயனின்மை. பழுது பயமின்றே (தொல். உரி. 26). 7. பொய். பழுதுரை யாதவன் உரைப்பான் (திருவாலவா. 19 : 19). 8. வறுமை. பழுதின்று (பொருந. 150). 9. உடம்பு. பழுதொழிந் தெழுந்திருந் தான் (சிலப். 19 : 66). 10. ஒழுக்கக்கேடு. 11. வெற்றிடம். பழுது - வழுது = பொய் (பிங்.). பழங்கண் = 1. துன்பம். பகைவ ராரப் பழங்கண் ணருளி (பதிற். 37 : 3). 2. மெலிவு (பிங்.). முதுமையில் துன்பமும் மெலிவும் நேர்வது இயல்பே. ஒருவரைப் பழிப்பது தாழ்வுபடுத்துதலாதலால், தாழ் மட்டத் தைக் குறிக்கும் பள்ளக் கருத்தினின்று பழிப்பு அல்லது இழிப்புக் கருத்துந் தோன்றும். பள் - பழி. பழித்தல் = 1. இகழ்ந்து அல்லது இழித்துக் கூறுதல். 2. கடிந்து கூறுதல். உலகம் பழித்த தொழித்து விடின் (குறள். 290). 3. புறங்கூறுதல். 4. நகையாடுதல். பழித்துக் காட்டுதல் = ஒருவரது உறுப்பை அல்லது செயலைப் போல் நடித்து நகையாடுதல். க. பழி. பழி = 1. இகழ்ச்சி. புகழிற் பழியி னென்றா (தொல். சொல். 73). 2. அலர். ஒன்றார் கூறும் உறுபழி நாணி (பு. வெ. 11, பெண்பாற். 4). 3. குறை (W.). 4. குற்றம். மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்து (பட்டினப். 216). 5. தீவினை (பாவம்). தசமாமுகன் பூவியலும் முடிபொன்றுவித்த பழிபோயற தேவா. 890 : 2). 6. தீவினைப் பயன். அவனைக் கொலைப்பழி விடாது (உ.வ.). 7. தீங்கிற்குத் தீங்கு செய்வு. 8. கொலை. வெட்டுப்பழி குத்துப்பழி (உ.வ.). 9. பகை. இருவகுப்பார்க்கும் பழிமூண்டுவிட்டது (உ.வ.). க. பழி. பழிகரப் பங்கதம் = வசையை வெளிப்படையாகக் கூறாது, குறிப்பாக அல்லது மறைத்துக் கூறும் செய்யுள். மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும் (தொல். செய். 125). பழிகாரன் = 1. பிறர்மேற் குறைகூறுபவன் (W.). 2. கொலைகாரன். பழிசுமத்தல் = 1. கரணியமின்றிக் குற்றவாளிப் பெயர் தாங்கல். தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா. 74). 2. தன் வினையால் அல்லது பிறர் வினையால் குற்றந் தாங்குதல். பழி சுமத்துதல் = குற்றஞ் செய்யாதவனைக் குற்றவாளி யெனல். பழிதீர்த்தல் = 1. கொலைக்குக் கொலை செய்தல். 2. தீவினையைப் போக்குதல். இந்திரன் பழிதீர்த்த படலம் (திருவிளை.). பழிமொழி = 1. இழித்துரை. 2. குற்றச்சாட்டு. 3. புறங்கூற்று. 4. வசையுரை. பழிவிழுதல் = 1. கொலை நேர்தல். 2. கொலைக் குற்றம் நேர்தல். பழிவாங்குதல் = கொலைக்குக் கொலை அல்லது உறுப்பறைக்கு உறுப்பறை நிகழ்த்துதல். பழி - பழிப்பு = 1. இழிப்பு. பெறுவது பழிப்பால் (கம்பரா. படைக்காட்சி. 50). 2. வசவு. 3. நகையாட்டு. 4. குறளை. 5. குற்றம். 6. குறை. பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர் (பு.வெ. சிறப்புப்.). க. பழிவு. பழி - பழிசை = இகழ்ச்சி (இலக். அக.). பள் - பண்டு = பழமொழி. தெ. பண்டு (b). பண்டு - பண்டை = 1. இடக்கர் மொழி. 2. வசைமொழி. பண்டை பண்டையாய்த் திட்டுகிறான். (உ.வ.). தெ. பண்ட (b). பண்டு - வண்டு = குற்றம் (பிங்.). பண்டை - வண்டை = கொச்சை மொழி. வண்டைப் பேச்சு. வண்டை வண்டையாய்ப் பேசுகிறான் (உ.வ.). வண்டு - வடு = 1. பழி வடுவன்று வேந்தன் றொழில் (குறள். 549). 2. குற்றம். வடுவில் வாய்வாள் (சிறுபாண். 121). இனி, பழமை முதிர்ச்சியாதலால், பழமைக் கருத்தினின்று முதிர்ச்சிக் கருத்துந் தோன்றும். ஒ. நோ : முதுமை = பழமை. முது - முதிர். முதிர்தல் = 1. முற்றுதல். 2. தக்க பருவமடைதல். பள் - பழு. பழுத்தல் = 1. காய் முதிர்ந்து பழமாதல். பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள். 216). 2. மனங்கனிதல். பழுத்த மனத்தடியர் (திருவாச. 24 : 4). 3. நுகர்ச்சிக்குத் தகுந்த பருவ மடைதல் (W.). 4. தேர்ச்சியடைதல். செந்நாச்சொற் பழுத்த வர்க்கும் (சீவக. 435). 5. வினைவெற்றியாய் முடிதல். எடுத்த கருமம் (காரியம்) பழுத்துவிட்டது (உ.வ.). 6. குழைதல். விற்பழுத்து (சீவக. 435). 7. செழித்தல். பல்கிய கிளைஞரும் பழுக்க வாழுநர் (பிரமோத். 6 : 47). 8. சிரங்கு சிலந்தி முதலியன முற்றி மென்மை யாதல். சிலந்தி பழுத்துவிட்டது. கட்டி பழுத்து உடைந்துவிட்டது (உ.வ.). 9. பழுப்புநிறமாதல். பழுக்கக் காய்ச்சிய இரும்பு (உ.வ.). 10. பருத்தல், பிள்ளை பெற்ற வயிறு காரவுணவு உண்ணாமையாற் பருத்துப் போதல். வயிறு பழுத்துவிட்டது (உ.வ.). 11. மிகுதல். தொளிபழுத்த தண்பணை (காசிக. துருவ. 11). 12. முதிர்தல். மற்பழுத் தகன்ற மார்பத்து (சீவக. 435). 13. மூப்படைதல். பழுத்த கிழம் (உ.வ.). பழு - பழம் = 1. கனி. காயே பழமே (தொல். மரபு. 89). 2. முதிர்ந்த காய், தென்னைநெற்று. நாய்பெற்ற தெங்கம்பழம் (பழ.). 3. முதிர்ந்த காய்போன்ற முள். மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (குறள். 1120). 4. அகவை முதிர்ந்தோ - ன் - ள். இன்று சுடுகாட் டிற்குப் போகிறது பழுத்த பழம் (உ.வ.). 5. வினையின் வெற்றி, போன கருமம் (காரியம்) காயா? பழமா? (உ.வ.). 6. சிறுவர் விளையாட்டு வெற்றி. இன்று நான் மூன்று பழம் எடுத்தேன் (உ.வ.). 7. முக்கால் (குழூஉக்குறி). 8. ஆறுதற்பழம், இணங்கற் பழம். பழம் - வ. பல (ph). பழு - பழுப்பு = 1. பொன்னிறம். 2. முதிர்ந்து மஞ்சள் நிறமடைந்த இலை. பழுப்பெல்லாம் நீக்கிவிடு (உ.வ.). 3. பூங்காவி நிறம். துவை வேட்டி பழுப்பேறிவிட்டது (உ.வ.). 4. உதட்டுச் சிவப்பு. அதரத்திற் பழுப்புத் தோற்ற (ஈடு, 5 : 3 : 3). 5. அரிதாரம். பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287). 6. சீழ். புண்ணிலுள்ள பழுப்பை யெடுத்துவிட வேண்டும் (உ.வ.). பழுக்க = முற்றவும், முழுதும். சாதிரார்த்தங்களையும் பகுக்க ஓதி (குருபரம். 186). பழு - பழுநு. பழுநுதல் = 1. கனி. 2. முதிர்தல். வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் பூவும் (மதுரைக். 475). 2. நிறைவுறுதல். வளம் பழுநி (மலைபடு. 578). பழுநு - பழுனு. பழுனுதல் = முதிர்தல். தீந்தொடை பழுனிய (பதிற். 8 : 21). பழுக்காவி = 1. மஞ்சள் கலந்த செந்நிறம். 2. மஞ்சணை. பழம் - பயம் = 1. பயன். பயங்கெழு மாநிலம் (புறம். 58). 2. வினைப்பயன். 3. இனிமை. சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவி (பரிபா. 11 : 69). 4. அரசிறை. பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் (சிலப். 2 : 2). 5. தன்மை. அங்கையு ணெல்லி யதன்பய மாதலால் (பு.வெ. 2 : 13). ஒ. நோ : த. பழம் - வ. பல - த. பலன். E. fruit = result. பயம் - பயன் = 1. விளைவு. வேள்விப் பயன் (குறள். 87). 2. பழம். பயனாகு நல்லாண் பனைக்கு (சிவப். பிரபந். நால்வர். 17). 3. சாறு. வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு (தேவா. 460 : 3). 4. சொற்பொருள். சொற்குப் பயன்றேர்ந்துவா (குமர. பிர. மதுரைக். 53). 5. செல்வம். பயன்றூக்கி (குறள். 912). பயம் - பய. பயத்தல் = (செ. கு. வி.). 1. விளைதல் பயவாக் களரனையர் கல்லா தவர் (குறள். 406). 2. உண்டாதல் (திவா.). 3. நிகழ்தல். நல்வினை பயந்த தென்னா (கம்பரா. கார்முக. 36). 4. கிடைத்தல் (சூடா). (செ. குன்றாவி.) 1. கொடுத்தல். இன்னருள் பயந்து (தேவா. 775 : 4). 2. படைத்தல். தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் (திருவாச. 5 : 30). 3. பெறுதல். பராவரும் புதல்வரைப் பயக்க (கம்பரா. மந்தரை. 47). 4. பூத்தல். தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரின் (புறம். 27). 5. இயற்றுதல். சிங்கடி தந்தை பயந்த ....... தமிழ் (தேவா. 201 : 12). பய - பயப்பு = 1. பயன். பயப்பே பயனாம். (தொல். உரி. 9). 2. அருள். (W.). பள் - பண்டு = பழம். bj., க. பண். பண்டு (பழம்) என்னும் சொல் இற்றைத் தமிழில் வழங்கா விடினும், குமரிநாட்டுத் தமிழில் வழங்கியிருத்தல் வேண்டும். பள் என்னும் மூலத்தினின்று பண்டு என்னும் சொல்லே முதலில் தோன்றியிருக்கும். ழகர வுயிர்மெய் ணகர வுயிர்மெய்யாகத் திரியினும் ழகரமெய் தனிக்குறிலடுத்து வழங்காமையின் பிறவெழுத்தாய்த் திரிவதில்லை. பழமை, பழி என்னும் சொற்கள் பண்டு என்னும் வடிவுங் கொண்டு வழங்குவது போன்றே, பழம் என்னும் சொல்லும் அவ் வடிவுகொண்டு வழங்கியிருத்தல் இயல்பே. புலவர் பெருமிதம் சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தானென்று காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி கொல்லப் புகுந்த விடத்து, கோவூர் கிழார் என்னும் புலவர், வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடிய வென்னாது சுரம்பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி ஓம்பா துண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட நண்ணார் நாண அண்ணாந் தேகி ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ் மண்ணாள் செல்வ மெய்திய நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே (புறம். 47) என்று பாடி, அப்புலவனை உய்யக் கொண்டார். மூன்றாங் குலோத்துங்கச் சோழன் முரண்பட்ட போது, மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந் தோதமிழை யோதினேன் - என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு. என்று கம்பர் பாடிப் பிரிந்தார். எல்லா நாட்டிலும் புலவர் இப் படித்தானிருப்பர். அது மண்டைக் கனம் அன்று. புலவர் வறுமையைப் பயன்படுத்தி அவரை யடக்கியாளத் துணிவது தான் செல்வனின் அல்லது அமைச்சனின் மண்டைக் கனம். சில வணிகப் புலவர் வணங்கிப் பணிவது போல் எல்லாரும் பணியார். புலிப்பற்றாலி புலிப்பற்றாலியென்பது குறிஞ்சி நிலச் சிறார் கழுத்திலும் பெண்டிர் கழுத்திலும் அணியப்பெறும் புலிப்பல் மாலை. (த.தி.82). புலியும் ஆடும் விளையாட்டு பல பிள்ளைகள் வட்டமாய்க் கைகோத்து நிற்க, ஒரு பிள்ளை உள்ளும் மற்றொரு பிள்ளை வெளியும் நிற்பர். உள்நிற்கும் பிள்ளை ஆடாகவும், வெளி நிற்கும் பிள்ளை புலியாகவும், பாவிக்கப்பெறுவர். புலிக்கும் வட்டமாய் நிற்கும் பிள்ளைகட்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும்: புலி : சங்கிலி புங்கிலி கதவைத் திற. பிள்ளைகள் : நான் மாட்டேன் வேங்கைப்புலி. புலி : வரலாமா? வரக்கூடாதா? பிள்ளைகள் : வரக்கூடாது. பிள்ளைகள் வழிமறுத்தபின், புலி யாரேனும் இரு பிள்ளை கட்கிடையில் நுழையப் பார்க்கும். பிள்ளைகள் இடம் விடுவதில்லை. பலமுறை அங்குமிங்கும் சுற்றிப் பார்த்த பின், புலி திடுமென்று ஓரிடத்தில் வலிந்து புகும். உடனே ஆடு வெளியே விடப்பெறும். புலி ஆட்டைப் பிடிக்க வெளியேறும். ஆடு மீண்டும் உள்ளே விடப்பெறும். இங்ஙனம் மாறிமாறி இரண்டொருமுறை நிகழ்ந்தபின், இறுதியில் புலி ஆட்டைப் பிடித்துக்கொள்ளும். இவ் விளையாட்டின் தோற்றம் வெளிப்படை. வட்டமாய் நிற்கும் பிள்ளைகள் ஆட்டுத் தொழுவத்தை நிகர்ப்பர். புள்ளிகுத்தல் புள்ளிக்காரன், முகத்தில் கரியைப் பூசுதல் கரிக்கோடிடுதல் முதலிய வழக்குகள், ஊர்க்கு மாறான குற்றவாளிகளை ஊரார் செம்புள்ளி கரும்புள்ளி குத்தியும், முகத்தில் கரியைப் பூசியும் கரிக்கோடிட்டும் அவமானப்படுத்தியதை நினைவுறுத்தும். (சொல். 25). புறங்கூற்று வகை புறணி - முகத்தில் புகழ்ந்தும் புறத்தில் பழித்தும் பேசுதல்; குண்டுணி - பலர் கூடி ஒருவரைப் பழித்து நகையாடுதல்; குறளை - ஒருவர்க்கு மாறாக இன்னொருவரிடம் புறங்கூறிக் கலக மூட்டுதல்; கோள் - மேலதிகாரியிடம் ஒருவரைப் பற்றித் தீதாகச் சொல்லுதல்; ஓமல் - ஒருவரைப் பழித்து ஊரார் கூடிப் பேசும் பேச்சு; உவலை - ஒருவரின் ஆக்கம் பொறாது பிறர் கூறும் கூற்று; ஓமல் - உவலை இரண்டும் படர்க்கையிலன்றி முன்னிலையிலும் நிகழும்; ஆயினும், புறங்கூற்றின் பாற்படும். (சொல். 60). புறங்கூறுதல் புறம், முதுகு அல்லது பின்பக்கம். ஒருவர் இல்லாத இடம் அவருக்குத் தெரியாத முதுகுப்பக்கம் போன்றிருத்தலால் புறம் எனப்பட்டது. புறத்திற் கூறுவது புறங் கூறுதல். அது புறம் எனவும் படும். (தி.ம. 118). புறமணம் ஒரு குலப் பிரிவார் தம் பிரிவிற்குள் மணவாது வேறொரு பிரிவில் மணத்தல். (த.தி. 12). புறநானூறும் மொழியும் 1. முன்னுரை தமிழையும் அதன் இலக்கியத்தையும் செவ்வையாயறிய வேண்டின், தமிழின் வரலாற்றறிவு இன்றியமையாது வேண்டப் படும். இம் முறை ஏனை மொழிகட்கும் ஏற்கும். பழைய ஆங்கில இலக்கண நூல்களில்லாம் முன்னுரையாக ஆங்கிலச் சரித்திரம் கூறப்படுதலை நோக்குக. 2. தமிழின் காலப் பகுதி தமிழின் காலம் கீழ்க்காணுமாறு முப்பெரும் பகுதியினதாகும். (1) முதற்காலம் கி.மு. சுமார் 10,000 - 3,000. (2) இடைக்காலம் அல்லது கழகக்காலம் - கி.மு. சுமார் 3,000 - கி.பி. 200. (3) தற்காலம் - கி.பி. 200 முதல். இவற்றுள் ஒவ்வொன்றும் பல சிறு பகுதிகளாகப் பாகு பட்டுள்ளது. கழகக் காலம் (1) தலைக் கழகக்காலம், (2) இடைக் கழகக்காலம்; (3) கடைக் கழகக்காலம் என முப்பகுதிப்படும். இவற்றுக்கு இடையிடை இடையீடு மிருந்தது. இறையனா ரகப்பொருளுரைப்படி, முக்கழகமும் நிலைத்திருந்த காலம் முறையே நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டும் மூவாயிரத்தெழுநூற்றி யாண்டும் ஆயிரத் தெண்ணூற்றைம் பதிற்று யாண்டுமாக மொத்தம் ஒன்பதினாயிரத்துத் தொளா யிரத்துத் தொண்ணூறி யாண்டாகும். குமரிநாட்டின் தொன்முது பழைமையை நோக்குவார்க்குக் கழகக்கால நெடுமையைப் பற்றிய ஐயுறவும் மயக்கமும் அறவே அறுமென்பது திண்ணம். புறநானூற்றில் ஒரு சில (2, 358, 362, 366) செய்யுள்களைத் தவிர, பிறவற்றையெல்லாம் பாடினாரும் அவராற் பாடப்பட்டாரும் கடைக்கழகக் காலத்தினராதலின், புறநானூற்றின் காலம் கடைக்கழகக் காலமாகும் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு). 3. நூல்வகை தலைக் கழகத்தாரும் இடைக் கழகத்தாரும் இயற்றின நூற்றுக் கணக்கான பல துறைத் தனித்தமிழ் நூல்களெல்லாம் இறந்து பட்டன. இதுபோது கழக நூல்களென்று குறிக்கப் படுபவை கடைக்கழக நூல்களே. அவற்றுள்ளும், இலக்கண நூல்கள் கதை நூல்கள் கலை நூல்கள் முதலியன சேர்க்கப்படவில்லை. பதினென் மேற்கணக்கென்றும் பதினெண் கீழ்க்கணக்கென்றும் இருபாற் பட்டுக் கடைக்கழக நூல்களென்று வழங்கும் முப்பத்தாறும், பெரும்பாலும், காதல் வாழ்க்கை, மறம், போர், அரச வாழ்த்து, நல்லொழுக்கம். வரலாற்றுத் துணுக்கு ஆகிய ஆறுபொருள் பற்றியவே. மேற்கணக்கில், எட்டு நூல்களே தொகை நூல்களெனப் பிரித்துக் கூறப்படினும், உண்மையில் எல்லாம் தொகை நூலே. எட்டுத்தொகை போன்றே பத்துப் பாட்டும் பல புலவராற் பாடப்பட்டதாகும். பத்துப்பாட்டிலுள்ள பாட்டுகளெல்லாம் மிக நீண்டிருத்தலாலேயே வேறாகத் தொகுக்கப்பட்டன. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே என்று தொல்காப்பியங் கூறுவதால், நூற்றுக்கணக்கான அடிகள் கொண்டு மிக நீண்டிருந்த தனிச் செய்யுளை (பெரும்பாலும் அகவலை)ப் பாட்டென்று சிறப்பாக முன்னோர் வழங்கியதாகத் தெரிகின்றது. பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும், நாலடியார் தொகைநூலாம்; ஏனையவை தனி நூல்கள். கடைக் கழகத்தார் பாடிய பாட்டுகளி லும் நூல்களிலும் பலவற்றைத் தொகுத்தபோது, பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகிய பதினெட்டுக் கொப்பாகக் கீழ்க் கணக்கையும் பதினெட்டாகத் தொகுத் திருக்கின்றனர். இத் தொகை இருபுறவொப்புப் (Symmetry) பற்றியது. அஃதெங்ஙன மிருப்பினும், புறநானூறு ஒரு தொகைநூல் அல்லது தனிப்பாடற்றிரட்டே. புறப்பொருளைப் பற்றிய நானூறு செய்யுள்களைக் கொண்டது புறநானூறு. இன்னா நாற்பது இனியவை நாற்பது முதலிய நாற்பது பாக்களைக் கொண்ட பனுவல்களையும், நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, நாலடி நானூறு, பழமொழி நானூறு முதலிய நானூறு பாக்களைக் கொண்ட பனுவல்களையும், நாலாயிரக்கோவை நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் (தெய்வப்பனுவல்) முதலிய நாலாயிரம் பாக்களைக் கொண்ட பனுவல்களையும் நோக்குமிடத்து, நாலென்னும் எண் ஏதோவொரு காரணம்பற்றி நூற்செய்யுட் டொகைக்குச் சிறந்ததாகக் கொள்ளப்பட்ட தென்பது தெரிகின்றது. அது நால்வகைப் பாவோ நால்வகைக் குலமோ பற்றி யிருக்கலாம். 4. நடை பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் தனித்தமிழ் என்னும் பொதுக் கொள்கைக்கேற்ப, புறநானூறும் தனித் தமிழே. ஆங்காங்கு இரண்டொரு வடசொற்கள் அருகி வந்திருப்பதினால், புற நானூற்றின் தனித்தமிழ்த் தன்மை குன்றிவிடாது. இந் நூலில் வந்திருக்கும் வடசொற்களெல்லாம் இருபது அல்லது இருபத் தைந்தே. இவற்றுள்ளும் ஒரு சில தென்சொல்லோ வட சொல்லோ என ஐயுறற்குரியன. இரண்டொரு வடசொற்கள் இங்குமங்குமாக அருகி வந்திருப்பது கொண்டு. புறநானூறு முழுமையுங் கலப்புத் தமிழென்பாராயின், பிறமொழிச் சொல் கலவாத மொழியே உலகத்திலில்லை யென்றும், ஆரியத்திலும் சுட்டும் வினாவும் மூவிடப் பெயரும் போன்ற அடிப்படைச் சொற்களெல்லாம் வேர்நிலையில் தமிழாயிருத்தலின், தமிழ் தனித்து வழங்கினும் ஆரியம் தனித்து வழங்கல் கூடாமையென்றும் கூறி விடுக்க. புறநானூற்றுச் செய்யுள்களிற் சில சிதைந்துங் குறைந்து மிருப்பதால், இந் நூற் செய்யுள்களின் அடிச்சிறுமை பெருமை யும் சொற்றொகையும் அறிவதற்கில்லை. ஆயினும், இது போதுள்ளபடி அடியுஞ் சொல்லும் எண்ணிப் பார்ப்பின், ஒரு செய்யுளின் சராசரி அடித்தொகை பதினெட்டென்பதும், ஓர் அடியின் சராசரிச் சொற்றொகை ஆறென்பதும் தெரிய வரும். ஆகவே, ஒரு செய்யுளின் சராசரிச் சொற்றொகை ஏறத்தாழ நூறென்பது பெறப்படும். 5. புறநானூற்றால் விளக்கப்படும் சொல்லியல் (Etymological) நெறிமுறைகளும் உண்மைகளும் 1. சுட்டடிச் சொற்கள் முதற்காலத்தில் உயிர் முதல. எ-டு : ஏம் - ஏமம் - சேமம் = காவல், பாதுகாவல் (1, 3). சேமவச்சு (102, சேமம் - க்ஷேம (வ.). ஒ.நோ : ஏண் - சேண். 2. சுட்டுவினாச் சொற்கள் முதற்காலத்தில் நெடின் முதல. எ-டு : ஆங்கு = அசை (2), அப்படி (24) : அதுபோல (35, 106). ஈங்கனம் = இவ்வாறு (208), ஈது (208). ஊங்கு = முன் (79, 88, 141). ஏனோர் = யாவர் (343), யாங்கனம் = எவ்வாறு (8, 49). யாங்கு = எப்படி (191, 245). 3. சுட்டெழுத்துகள் முதற்காலத்தில் பெயர்ச் சொல்லாயு மிருந்தன. எ-டு : அத்தக = அதற்குத்தக (10). 4. ஒலிக்குறிப்பல்லாச் சொற்களெல்லாம் முதற்காலத்தில் ஓரசைய. எ-டு : ஆர் = உண் (24), ஆரக்கால் (283), ஆத்தி (338), ஆல் = ஆடு (116). உண் (160), உள் = ஊக்கம் (396), ஊம் = ஊமை (28) ஊர் (83). 5. முதற்காலத்தில் ஒரு வடிவே பல சொல்வகைக்குப் பொதுவாயிருந்தது. எ-டு : செய் = செய்கை (199), பரி = செலவு (14, 146), அறிவாரா = அறியவாரா (92), நகுதக்கனர் = சிரிக்கத்தக்கார் (72), இனைகூஉ = வருந்திக் கூப்பிடும் கூப்பீடு (44), இனை யும் கூவு என்க. வணங்கிறை = வளைந்த முன்கை (32). 6. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல்.). எ-டு : சுள் - சுடு - சுடர், கள் - கண், எய்யில் - எயில், கண் - கண்ணி, ஒல் - ஒன் - ஒன்னார், மறு - மறை. குள் - குட - குடை. வள் - வரி - வரிசை, அண் - அடு - அடர் - அடவி, இரு - எரு - எருமை, அ - அன் - அனை, மாறு - மாறே. இரு - இனு - எனு - ஏனை - யானை, புல் - புள் - புணர், வே - வேகு - வேகம், வேகு - வெகுள் - வெகுளி, இறு - இறை - இறைஞ்சு, நல் - நல்கு, ஒள் - ஒளி - ஒளிர் - ஒளிறு. மரு - மார் - மார்பு, கள் - களி - களிறு, இரு - இரா - இரவு. கொள் - கொடு - கொடி, கொள் - கொண்பு - கொம்பு. குடி - குடிம்பு - குடும்பி - குடுமி, புல் - பொள் - போழ் - போழ்து - பொழுது - பொழுதம், புல் - பொல் - பொரு - பொருந் - பொருந்து. பொரு - பொருள், வை - வசை, கள் - கரு - கரும் - கரும்பு, கில் - கிள் - கேள் - கேண் - கேணி. கேள் - கேழல், பண் - பாண் - பாணன், கிள் - கேள், இ - இன் - இனி, புரி - புரிசை, வள் - வாள் - வாளை, தீ - தீமை, புல் - புன்மை, வள் - வட்கு - வட்கார். அசைநிலைகள் : அத்தை = அதை, இத்தை = இதை, மாதோ = பெண்ணே, மன்னோ = அரசே, மதி = அறிவாகும், அளவாகும், போதும், ஓர் = உணர். ஓரும் - உணரும், ஆயும். குரைத்து = பெருமையுடையது. அம்ம = அம்மையே. தில் = உள்ளம் (?) கொல் = ஓ (?) ஓ - வோ - கோ - கோல் - கொல். 7. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல்.) இ-ள் : சொற்களின் வேர்ப்பொருள் பார்த்த அல்லது கேட்ட மட்டில் தோன்றா எ-து. இந் நூற்பாவிற்குப் பல்கலைக்கழக அகராதிப் பதிப் பாளர், Tolkappiyar says that the origin of words beyond ascertainment” என்ற விளக்கங் கூறியிருப்பது மிகமிக இரங்கத்தக்கது. 8. குமரி நாட்டுச் சொற்கள் பல இறந்துபட்டன. அதனால் வேர் மறைந்த சொற்கள் வேர்ப்பொருள் தாங்கி நில்லா. 9. ஒரு பொருட்குப் பலகாரணம்பற்றிப் பல சொல் தோன்றும். எ-டு : கடல் = வளைந்தது, பெரியது; முந்நீர் = மூன்று நீரை யுடையது; யானை = கரியது. கைம்மான் = கையை யுடைய விலங்கு. வேழம் = கரும்பையும் மூங்கிலையும் தின்பது. (கழை = மூங்கில் (158), கழைக்கரும்பு (137), கழைதின் யானையார் - ஒரு புலவர் (204)). 10. ஒரே காரணம்பற்றிப் பல பொருட்கு அல்லது கருத்துக்குப் பல்வேறு சொல் தோன்றும். எ-டு : இறு - இறங்குதல் = வளைதல் (98), இறைஞ்சுக = வணங்குக (6). அம் - அம்பு = வாணம் (வளைவது), ஆம்பி = காளான். குள் - குடை = வளைந்த கவிகை, கொடுமை = வளைவு (39). திரி = திரியாச் சுற்றம் (2), திருகி = குறுகி (27), திருகி - திகிரி (32), புரி - புரி = முறுக்கு (135), புரிசை = மதில் (17), வள் - வளை. வணர் - வளைவு (455). வணங்கு = வளைந்த (32), முள் - முடம் (307). 11. ஒரு கருத்தினின்று வேறு கருத்துத் தோன்றும். எ-டு : கமழ - பரக்க (50), வீசிய - சிதறிய (23). குறும்பு = சிற்றரண், குறும்பரசர், குறும்பரசர் செய்யும் தீமை. செம்மை = சிவப்பு, நேர்மை. 12. பருப்பொருட் கருத்தினின்று நுண்பொருட் கருத்தும், நுண்பொருட் கருத்தினின்று பருப்பொருட் கருத்துந் தோன்றும். எ-டு : அதன் தலை = அதற்கு மேலே (19), கவலை = கவர்த்த வழி (3), மனக்கவலை. முள் - முய் - முயல் - மயல் - மால் - மாலை, துல் - துலாம் = ஒப்பு, தராசு (39). 13. ஒருபொருட் சொற்களினின்று ஒத்த கருத்துத் தோன்றலாம். எ-டு : பொரு = பொருந்து. போர் செய்; சமம் - ஒப்பு. போர் (14) உறு = பொருந்து. உறுவர் = எதிர்ந்தவர் (11), உறழ்தல் = மாறுபடுதல் (22). உடல் = உடனிருப்பது. உடலுதல் = பகைத்தல் (25). உடலுநர் = மாறுபடுவோர். அகல் = விரி, நீங்கு; படர் = விரி, செல். அசை = இயங்கு. வருந்து; சலி = அசை, வருந்து, களை. 14. பொருள் வேறுபடச் சொல் வேறுபடும். எ-டு : மண் - மணல். தலையன் - தலைவன், வழிபடு - வழிப்படு. படிய - படிக்க. தேய்ந்தான் - தேய்த்தான். ஈ - வீ - வீழ் - விழை - விழா - விழவு. வீழ் - விழு - விழும் - விழுப்பம். விழுமிய = சிறந்த. வீழ் - விழு. வீழ் - வீழ்து - விழுது. விழு - விழல். வீ - விழுந்த மலர். கான வூகின் கழன்றுகு முதுவீ (307). வீ கமழ் வீழும்பூ நாறுகின்ற (36, உரை). விழு - விகு - விகுதி - விக்ருதி (வ.). ஒ. நோ, தொழு - தொகு. வீதல் = விழுதல், முடிதல், இறத்தல். விகு + தம் = விகுதம் - விகிதம் = விழுக்காடு. விகுதம் = வீதம். வீழ் - வீள் - விள் - விரும் - விரும்பு. விரும் - விருந்து = விரும்பியிடும் உணவு. விரும்பி யூட்டப்படும் புத்தாள், புதுமை. விள் - வெள் - வெம்மை - வெய்யோன். வேள் - வேண் - வேண்டு - வேண்டும் - வேண்டாம் - வேண்டா. வேள் - வேட்டம் - வேட்டை - வேட்டுவன் - வேடுவன் - வேடன் - வேடு. வேள் - வேட்கை. வேள் - வேள்வி, வேளாண்மை, வேளாளண், வேளான், வேள், வேளம். வெள் - பெள் - பெண் - பேண் - பேடு, பேடன், பேடி. பெள் - பெட்டை - பெடை - பேடை. பெண் - பெண்டு - பெண்டாட்டி. விள் - பிள் - பிண் - பிணா - பிணவு - பிணவல். பிணா - பிணை. 15. பல்வேறு சொல்திரிந்து ஒருவடிவு கொள்ளலாம். வாள் = ஒளி (196). வாள் = வாட்படை (4). வில் - விள் - வாள் = ஒளி. வாள் = வெண்மை (6) தூய்மை (1). பால் = வெள்ளமுதம். பல் = வெண்முறுவல். வள் - வாள் = வளைந்த கத்தி. 16. பொருட்குத் தக ஒலி திரியலாம். கறித்தல் = மெல்லக் கடித்தல். கடித்தல் = வலுவாய்க் கடித்தல் மடப்பிணை... வேளை வெண்பூக் கறிக்கும் (23). 17. தமிழ் எழுத்துகளுள் ற ன பிந்தியவை. ஒளிர் - ஒளிறு. முரி - முறி. வாழும் - வாழுமர் - வாழுநர் - வாழ்நர் (9). பொருநன் (58) பொருந (2, 17). அடுநை (36), ற ன அரிவரி மெய்வரிசையில் வல்லினத்தோடு சேர்க்கப்படாமல் இறுதியில் வைக்கப்பட்டிருத்தலை நோக்குக. 18. தொழிற்பெயர் பகுதியாதலுமுண்டு. எ-டு : நச்சு + ஐ - நசை, நசை வேட்கை = நச்சிய விருப்பம் (3). 19. கடைக் கழகக் காலத்திலேயே நுண்பொருட் சொற்களைப் பருப்பொருளில் வழங்கத் தொடங்கிவிட்டனர். எ-டு : சிறு துனி (366). பெரும வுரைத்திசின் (167). 20. சில சொற்களும் சொல் வடிவங்களும் செய்யுளில் அல்லது சில பனுவல்களில் இடம் பெறா. எ-டு : வண்டி, தூங்கு - சொல். செய்தால், ஆனால் - சொல் வடிவம். 21. ஒருபொருட் பல சொற்கள் நுண்பொருள் வேறுபாட்டின. எ-டு : கண்ணி = கண் கண்ணாய்ப் பூவைத் தொடுத்துத் தலையிற் சூடும் தொடை (1). தார் = மார்பிலணியும் கட்டி மாலை (1) கோதை = பூமாலைப் பொதுப் பெயர் (48). தொடலை = தழைமாலை (271). ஆரம் = முத்துமாலை (19). மாலை - மாலைப் பொதுப்பெயர் (95). 22. ஒரு பொருட்குத் தகுந்த சொல்லை வழங்க வேண்டும். எ-டு : ஞாயிறு.... குடகடற் குளிக்கும் (2). அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும் (2). 23. தமிழ் பெருஞ் சொல்வளத்தது. கல், அறை, குன்று, குன்றம், பொறை, மலை - மலைப் பெயர்கள். சாரல், கவான், சிமை, குவடு - கோடு, அடுக்கம் - மலைப்பகுதிப் பெயர்கள். 24. சொற்பொருள் வழக்கும் பற்றியது. எ-டு : நாற்றம் = நறுமணம் (70). சில்வளை விறலி (103), சின்னீர் (154). 25. வழக்கற்ற சொல்லே அருஞ்சொல்லாகும். எ-டு : யாழ் (த), - வீணை. திங்கள் (க) = மாதம், நகு. நவ்வு (தெ.) = சிரி. 26. இனப்பொருள்கள் பொதுப்பெயருங் கொள்ளும். எ-டு : தாழை - தெங்கு (17). 27. அயற்சொல் வழங்குதல் கூடாது : வழங்க நேரின் தமிழுக் கேற்பத் திரித்தல் வேண்டும். எ-டு : விஜய (வ) - விசய (த). 28. சொற்களின் முந்து வடிவம் பார்த்துப் பொருள் கொள்ளல் வேண்டும். எ-டு : பஞிலம் - பைஞ்ஞிலம் - பைந்நிலம் = படைத்தொகுதி (62). ஓ.நோ. பைந்நிணம் = பைஞ்ஞிணம் (177). விழவு - விழா - விழை = விரும்பு 6. புறநானூற்றால் விளக்கப்படும் மொழிநூல் (Philological) நெறிமுறைகளும் உண்மைகளும் (1) தமிழ் தோன்றியது குமரிநாடே. முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, (9). (2) தமிழ் வடமொழிக்கு முந்தியது. மன்பதை - மக்கட் கூட்டம் (210) மன் - man (Lit.) the thinking animal. A.S. mann- root man to think, cognate with Ger. and Goth, man, Ice. madhr. (for mannar) Ch. E.D. - மநு(வ.). காண் - A.S. cunnan, to know, E. cunning, knowing, con, to study, carefully, A.S. cnawan, Ice. kna- E. know L. gnosco. Skt. jna. காட்சி (ஞானம்). ÉÊ - L video (visum), to see, E vide, Skt.- வித், வேதம் : வைத்யம் (3) தமிழுக்கு வடமொழித் துணை வேண்டுவதின்று. வடமொழி தமிழ் வடமொழி தமிழ் எ-டு : சாபம் வில் ஊசி(உதீசி) வடக்கு நேமி திகிரி பாசி(பிராசி) கிழக்கு வேதம் மறை சாதம் சோறு எவ்வகையினும் திராவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப் பெற்ற தமிழ், வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன், தனித்து வழங்குதல் மட்டுமன்று. அதன் உதவியின்றித் தழைத்தோங்குதலும் இயலும் (திராவிட ஒப்பியல் இலக்கணம் : முன்னுரை. ப. 50) (4) வடமொழியில் ஒரு பகுதி தமிழே. உலகம், கலை, காலம், சாயை, மாயை, மீனம், வளையம், படிமை முதலிய எண்ணிறந்த தமிழ்ச் சொற்கள் வடமொழி யிற் சென்று வழங்குகின்றன. (5) வடமொழியும் தென்மொழியுமாகிய இருமொழிப் பொதுச் சொற்கட்குத் தமிழிலேயே வேர் காண முடியும். எ-டு : உல (=வளை) - உலகு - உலகம் - லோக (வ). fš - fiy- fyh (t.), rhŒ - rhia - rhah (t.), khŒ - khia - khah (t.), Ä‹ - Û‹ - Ûd(t.), go - goik- ¥uâkh (t.), வள் - வளை - வளையம் - வலயம் (வலய) (வ.) வகி - வகிர் - பகிர் - பகர். வ - ப, போலி. ஒ.நோ : வள் - வண்டி - பண்டி வகி - வகு - வகுந்து = வழி. வகிர் - வகிடு. வகு - பகு. வகு - வகை வகு - வகம். வகு - வகுப்பு, வகு - வகுதி. பகு - பகல் - பகலோன். பகல் - பகர். பகல் - பால். பகு - பகுதி - பாதி. பகு - பகை - பகைவன். பகு - பகவு. பகு - பகம், பகு - பங்கு - பங்கம் - bhanga (வ). பகு - பக்கம் - பக்ஷ (வ). பகு - பகுப்பு. பகு - பா - பாத்தி. பா- பாத்து - பாது - பாதிடு - பாதீடு. பகுதி - ப்ரகிருதி (வ). பங்கு - பங்காளி. பங்கு - பங்கிடு - பங்கீடு. gF - ghf« - bhaga (t.)., பங்கு - பங்கி. பங்கு - பங்கறை. பகு - பக்கு - பக்கறை. பக்கு + இசை = பக்கிசை. பகு - பாங்கு - பாங்கன். பாகு - பாகன் - பாகா (மராட்டி), பாகு - பாகி, பாங்கு - பாங்கர். பாகு - பாகை. பக்கம் - பாக்கம். (6) வடநாடுகளில் இன்றும் தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன. (எ-டு): தமிழ் மராட்டி தமிழ் இந்தி தமிழ் இந்தி தாய் ஆயி ஆம் ஹாம் மேல் மே மாமன் மாம மாமன் மாமா மாறே மாரே அலை ஹலாவ் இத்தனை இத்னா முட்டி முட்டி குண்டு குண்ட உம்பர் உப்பர் வெண்டைபிண்டீ வில்லங்கம் விலக கிழான் கிஸான் உழுந்து உடத் பேட்டை பேட் பூ பூல் நரம்பு நரம் சிவண் சிவண் முத்து மோத்தி சவை சபா (7) ஒத்த காரணத்தால் பல மொழியில் சொற்கள் தோன்றலாம். எ-டு : பரி - குதிரை (வேகமாய் ஓடுவது), E. courser, a runner L. curro. to run. பழம் - பழன் - பயன். E. fruit = effect, result. குமரிப்படை, கன்னிப்போர். E. maiden = new, first, virgin, underfiled, fresh, unpolluted, தொள் - தோணி (= தோண்டப்பட்டது). E.dug out a boat made by hollowing out the trunk of a tree. செய் - செய்யுள். E. poem. Lit. anything made L. poema. GK. poiema - poieo, to do or make. ஒலித்தல் = தழைத்தல் (50). E. tonic, “a medicine which gives tone or vigour to the system.” (8) தமிழிலுள்ள சிறப்புப் பொருட் சொற்கள் பிறமொழிகளில் பொதுப் பொருளில் வழங்கும். (எ-டு): ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைய (தொல்.927) அவற்றுள், ஈஎன் கிளவி இழிந்தோன் கூற்றே (தொல். 928) தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே (தொல். 929) கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே (தொல். 930) ஈ-இச்சு (தெ.) தா- L. do, to give; donum, a gift, தான(வ.). (9) தமிழ் இயற்கை மொழி. ஆரியமொழிகளும் தமிழல்லாத திராவிட மொழிகளும் தமிழுக்கு மிகமிகப் பிற்பட்டவையாயிருந்தும், பெரிதும் வடிவு திரிந்தும் வேர்ப் பொருளிழந்தும் பன்னிலையடைந்தும் முன்னிலைக்குப் பின்னிலை வேறுபட்டுமுள்ளன. தமிழோ தலைக்கழகக் காலத்திலிருந்து இதுவரை பெரும்பாலுந் திரி யாமல், கி.மு. 2000 போல் இயற்றப்பட்ட தொல் காப்பியத்திலும் கி.பி. 2ஆம் நூற்றாண்டினதான புறநானூற்றிலும் இற்றைத் தூய இலக்கிய நடையிலும் சொல்லமைதியும் சொற்றொட ரமைப்பும் பெரும்பாலும் ஒத்ததாய், சிறிது கற்றார்க்கும் ஓரளவு விளங்குவதாய் வேர்ப் பொருள் தாங்கிக் கொண்டுள்ளது. (10) கடைக்கழகத் தமிழ் தனித்தமிழே. புறநானூற்றிற் சில செய்யுள்களில் இரண்டொரு வடசொற் களே காணப்படுகின்றன. பல செய்யுள்களில் வடசொல்லே யில்லை. எ-டு: யாது மூரே. (192) ஆகையால், நூலின் மொத்தச் சொற்களில் நூற்றுக் கொன்று கூட வடசொல்லில்லையென்பது தெளிவு. (11) கடைக் கழகக் காலத்திலேயே வடசொற் களைகள் முளைத்துத் தமிழ்ச் சொற் பயிர்களைக் கெடுக்கத் தொடங்கி விட்டன. அஞ்சனம் (மை), ஆயுள் (வாழ்நாள்), ஆவுதி (அவி), இந்திரர் (வேந்தர்), இமயம் (பனிமலை), உதீசி - ஊசி (வடக்கு), எந்திரம் (பொறி, மணை, சூழ்ச்சியம்), கலவம் (பீலி, தோகை) கவுரி (மாயோள், மலைமகள்), சாபம் (வில்), தருமம் (அறம்), தூமம் (நறும்புகை, வால் வெள்ளி, விண்வீழ்கொள்ளி), நிச்சம் (நாளும், என்றும்), நிரயம் (அளறு), நேமி (ஆழி, திகிரி), பங்குனி (உத்தரம்), பஞ்சவர் (ஐவர், பாண்டவர்), பிராசி - பாசி (கிழக்கு), யூபம் (கந்து, வேள்வித்தூண்), விசயம் (கொற்றம், வெற்றி) வேதம் (மறை), இவையே புறநானூற்றில் வந்துள்ள தெளிவான வடசொற்கள். இவை தமிழுக்கு இன்றியமையாதனவோ சிறப்புச் செய்வன வோ அல்ல. இவை, ஆரியர் வடமொழி தேவமொழி யென்றும் சமயமொழி என்றும் ஏமாற்றிய பின், சமையம் வாய்க்கும் போதெல்லாம், தமிழர்க்குத் தெரியாதவாறு, தமிழ்ச் சொற்களை வழக்கு வீழ்த்தும்பொருட்டு ஒவ்வொன்றாய்த் தமிழிற் புகுத்தியவை. இவற்றால் தமிழுக்குப் பலவகையிலும் தீமையேயன்றி நன்மையில்லை. அத் தீமைகளாவன : (1) தென்சொல் மறைவு தமிழ்ச் சொற்கட்குப் பதிலாக வடசொற்களை வழங்கவே, முன்னவை முதலாவது வழக்கிறந்தன; பின்னர், பண்டைக் காலத்தில் விரிவான அகராதிகள் தொகுக்கப்படாமையாலும், தொல்காப்பியம் ஒழிந்த தொன்னூல்களெல்லாம் இறந்து பட்டமையாலும், தமிழகத்தின் பெரும் பகுதியான குமரி நாட்டைக் கடல் கொண்டமையாலும், நாளடைவில் மீட்பற மறைந்தொழிந்தன. (2) தென்சொல் வழக்கழிவு வடசொல் வழக்காலும், அதனால் தமிழர் தமிழுணர்ச்சி யற்றமையாலும். அடர் (கம்பியாகச் செய்), அடுக்கம் (பக்கமலை), அணங்கு (தெய்வப்பெண், மோகினி), அணல் (தாடி), அல்குபதம் (இட்டு வைத்துண்ணும் உணவு), அழுவம் (மேற்பரப்பு), அளிது (பாவம்), அறத்துறையம்பி, ஆண்டகை (பஹதூர்), இயம் (வாத்தியம்), இயவர் (வாத்தியக்காரர்), இளையன் (ஜவான்), உரறு (கர்ச்சி), ஓவம் (சித்திரம்), உவகைக்கலுழ்ச்சி (ஆனந்தக் கண்ணீர்), எருவை (தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து), ஐயவி (வெண்சிறு கடுகு), ஐம்படை (பஞ்சாயுதம்), கண்ணுறை (மேலீடு), கண்ணோட்டம் (தாட்சிணியம்), கதழ்வு (விரைவு), கணியன் (ஜோதிடன்), கழுவாய் (பிராயச்சித்தம்), கிழார் (பெரும்பண்ணையார்), குணில் (குறுந்தடி, லத்தி), குருசில் (பிரபு), கோய் (கள்முகக்கும் கலம்), சுவல் (தோள்), சூள் (ஆணை), செம்மல் (நேர்மையானவன்), செவ்வி (தக்க சமையம்), தோன்றல் (அரச மகன்), நவில் (பன்முறை சொல்லிப் பழகு), நுவல் (நுட்பமாய்ச் சொல்), நெடுமொழி (தற்புகழ்ச்சி மறவுரை), பஞிலம் (Regiment), படைவீடு (Cantonment), பறந்தலை (போர்க்களம்), பூட்கை (tenent, morale), பொருநன் (சிப்பாய்), மன்பதை (Humanity), மதவலி (Sando), பனுவல் (பிரபந்தம்), மறுகு (வீதி), மழவர் (வீரர்), மள்ளர் (வீரர்), மாதிரம் (திசை), யாணர் (புதுவருவாய்), வஞ்சினம் (சபதம்), வயவர் (வீரர்), வல்வில் (வில்வலன்), வம்பலன் (நிலையில்லாதவன், இடமாறி), வேள் (சமீன்தார்), வேளாண்மை (உபசாரம்), முதலிய எண்ணிறந்த தமிழ்ச் சொற்கள் வழக் கொழிந்தன. (3) தென்சொற் பொருளிழப்பு தமிழ்ச் சொற்குப் பதிலாக வடசொற்களை வழங்கியதால் சில தமிழ்ச் சொற்கள் பொருளிழந்து முள்ளன. எ-டு : உயிர்மெய். பொருள்களெல்லாம் உயிர், மெய், உயிர்மெய்யென மூன்றாயடங்கும். இவற்றையொத்த எழுத்துகளும், உயிர், மெய், உயிர்மெய் எனப் (உவமையாகுபெயர்) பெற்றன. பிராணி என்னும் வடசொல் வழங்கவே உயிர்மெய் என்னுஞ் சொல் தன் பொருளை யிழந்தது. பிராணனை யுடையது பிராணி. உயிரையுடைய மெய் உயிர்மெய். (4) ஐயறவு வடசொற் கலப்பால், ஏனாதி, கவசம், சகடு, தானை, தேயம், பாரம், புதல்வர், வதுவை, வாத்தியம் (வாழ்த்தியம்) முதலிய பல சொற்கள் வடசொல்லோ தென்சொல்லோ என மொழி யாராய்ச்சியாளரும் மயங்கற்கிடனாயுள்ளன. வடசொற் கலந்திராவிடின், தமிழிலுள்ள சொல்லெல்லாம் தமிழ்ச் சொல்லேயென்று கொள்ளப்படுமன்றோ! (5) வடசொற் போன்மை வடசொற் கலப்பினால், பல தூய தென்சொற்கள், ஆரிய மொழிகளில் சென்று வழங்குவது காரணமாக, அல்லது ஆரியச் சொல்லோடொலியொத்தமை காரணமாக, ஆரிய அல்லது வடசொற்களாக ஆராய்ச்சியில்லார்க்குத் தோன்று கின்றன. இம் மயக்கத்தைத் தீர்க்குமுகமாக, முதலாவது, மேலையாரியத்தில் வழங்கும் புறநானூற்றுத் தமிழ்ச் சொற்களையெடுத்துக் காட்டுகின்றேன். 7. மேலையாரியத் தமிழ்ச் சொற்கள் அமர் - L.amo, to love. E. amateur, amiable, amicable; அளம் - E. alum, a mineral salt, L. alumen. இட்டு - E. and Fr. et. ette, a dim. suffix; உரறு - E. roar, AS. rurian, Ger. rohren ; உருள் - E. roll, role, L.rota, a wheel; உள்ளு - E. will, AS. willa, Goth, vilija, Ger. wille, L.vola, to will Gk. boule, will (உள்ளம்); எல் - Gk. helios, the sun; எல்லா - E. all, A.S. eal, Ger, all, Gael, uile, W. oll; கடை - E. gate, AS. geat, a way, a gate; கரப்பு - Gk. kryptos, concealed, கரை - E. cry, L. queri, to wail; கல்லென (கவி)- E.call; AS. cellian, Ice. Kalla; கவை இ - கவ - E. have, L. capio to contain; கறங்கு - E. ring A.S. hringan, Ice, hringi; காண் - con, AS. cunnan, to know; கால் - L. column, கிழி - E. cleave, AS. cleofan, Gk. Kliben; கிளர் - L. hiloris, cheerful; கிளை (கேள்) - E. kin, AS. cyn, Ice, kyn; குப்பை - E. heap, AS. heap. Ice. hopr. Ger. haufe; குரல் (தொண்டை) E. craw, crop, the throat of a bird, Dut, crep; Dan, kroe., Ger. kragen, Scot, craiy, the neck; குரல் (கதிர்) - E. crop. AS. crop; குரவை - E. chorus, L. Chorus; Gk. choros, orig. a dance in a ring; குருஉ (கனம், திரட்சி) - E. grave, L.gravis, heavy, allied to E.great, AS. and Dut. groot, Ger. gross; குலவு - E. curve, L. curvus, crooked; குழவி - E- cle,- cule, L. culus, It. celli, cello. dim sfx. கூ - E.coo; குழு - E. clew, clue; குழுமு - L.glomus, E. glomerate, குறுக்கு - E.cross, Fr. crois - L. curx. கொடுக்கு - E. crook, W. crowg, a hook, Ice, krokr, Dut - kroke, a fold as wrinkle; கொல் - E. kill, quell, A.S. qwellan, to kill; சமம் - E. same, AS. and Goth samana, L.similis, Gk. homos, Skt, samas; சிதை - coede, to kill; சுறவு - E. shark; சுருங்கு - E. shrink, சேர் - L.sero, to join சூள் - E. swear, AS. swerian, Dut. zweren, Ger. schworen; தா - L.do; தீர்மானம் - L. terminus, a boundary; திண் - E. dense. L. densus, thick; துமி, Gk, temno, to cut; துர - E. drive; AS. drifan, Ger. treiben; தூம்பு - E.tube, Fr. and L. tubus. நரம்பு - E. nerve, Fr. and L. nervus, Gk. neuron; நாகு - E.nag, a small house, நாவாய் - L.navis, Gk. naus, skt. nau, a ship. AS. naca, Ger. naechen, a boat, பரிசு - E. prize, Fr. prise; பரிதி - பரி- Gk. peri, round, பல் - Gk. polus; பன், Gk. pan, all; பலகை - E.plank, L. planc; புள் : E. fowl, AS. fugel. Gk. vogel, Ice. fugl; புர - AS. beorgen, Ger. bergen, to protect; புரி - E. spire, L.spira, Gk. speria, anything wound. புரிசை - L. murus; புரை - E. pore, L. porus, Gk. poros; புரையோர் - E. peer, an equal, a nobleman, L. par, equal, பார் - E.peer, to appear; பேய் - E.fay, Fr. fee; பொத்து - E.patch, M.E. botch; பொறு - E. bear. AS. beran, Goth, bairen, L. fero. Gk. phero, Skt, bhri; போர் - E.war, AS. werre, O.F. werre, Fr. grerre, O.Ger. werra, quarrel; போழ் - பொள். E.bore., AS. borian, Ger. boheren, L.foro, to bore. மட்டு - kJ; E.mead, AS. medo. Ger, meth, W. medd, Gk. methu, Skt. madhu; மண் - E. mud, Low Ger. mudde, Dut. modder; மருள் - E. morvel, L. miror, to wonder; மலை - L. milito, to fight, E. military; மார்பு > மருமம் - L.mamma, the breast; மன் - E.many. AS. manig; மிகு - E. much, A.S. mic, Ice. mjok, Goth, mikils, மிசை - E. mess. O. Fr. mes; முதிர் - E.mature, L. maturus, ripe; முழு - E. full, AS. full, Goth fulls, Ice. fullr, Ger. voll, L. plenus, Gk. pleos. மெல் - E. mellow, soft, L. mollis, Dut. mollig, AS. mearu, Gk. molakos; வரிசை - L. versus, a line in writing. E. verse, a line of Gk. molakos; வரிசை - L. versus, a line in writing. E.verse, a line of poetry. வலம் - E. valour Low. L. valour; வலி - L. valeo, to be strong. வழி - L. via, a way; விடு - L. mitto, to send; வீங்கு - E.wax; AS. weaxen, Ice. vaxa, Ger. wachesen, Goth wahsjan, Skt, vakhs, Zend, ukhs; வீழ் - E. fall AS. fellan, Ger. fallen; வெரு - E. fear AS. foer; வேறு - E. vary, L. various, various. இனி, பிறகு (back), புகை (Smoke), பையுள் (Pain); பொறி (Gk. pur. fire), வட்டி (vat) வெளு (pale) முதலிய ஐயுறவான சொற் போலிகளும், வாடு (fade), வேண்டு (want) முதலிய போலி யொப்புமைச் சொற்களும் எத்துணையோ உளவென்றறிக. ஆங்கிலம் பண்டைக்காலத்தே தமிழொடு கலந்திருக்கு மாயின், மேற்காட்டிய சொற்களெல்லாம் ஆங்கிலத்தினின்று தமிழுக்கு வந்தவையாகக் கருதப்படுமன்றோ? அத்தோடு, boy, nation முதலிய சொற்கள்கூட, பையன் நாடு முதலிய சொற்களாகத் திரிந்ததாகக் கொள்ளப்படுமன்றோ! இங்ஙனமே வடசொற்போல் தோன்றும் தென் சொற்களு மென்க. 8. வடசொற் போலிகள் அந்தணன் : அம் + தண் + அன் = அந்தணன். அழகிய குளிர்ந்த அருளையுடையவன் என்பது பொருள். ஆகவே துறவி அல்லது முனிவன் பெயராம். அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள்) என்றார் திருவள்ளுவர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பது பழந்தமிழ்ப் பகுப்பு. இனி, வேதங்களின் அந்தத்தை அணவுவோன் என்று பொருள் கூறினும், அந்தணன் என்பது தமிழ்ச்சொல்லே. அணவு = பொருந்து. அண்- அண- அணவு. அந்தி: அல் - அந்து - அந்தம் - அந்தரம் = முடிவு. அல் - அல்கு = முடி, அழி. அல் - அறு. அந்து - அந்தி= பகற் காலத்தின் முடிவு. நெடிற்சுரங்களை அந்தரக்கோல் என்பது இசைத்தமிழ் வழக்கு. அமரன் : அ + மரன் = அமரன். மடி- மரி - மரன். அல் - அ. எதிர்மறை முன்னொட்டு. முடி - மடி. இனி, அமரினால் தேவருலகை யடைந்தவன் எனினும் பொருந்தும். அமயம் : சமை + அம் = சமையம் = ஒன்றற்குச் சமைந்த வேளை, வேளை, சமையம் - சமயம் = ஆன்மா வீட்டையடைதற்குச் சமையும் நெறி. சமை - அமை. அமை +அம் = அமையம் - அமயம். சமைதல் = பக்குவமாதல். சமைத்தல் = சோற்றைப் பக்குவமாக்கல். அமை - அமைவு, அமைப்பு, அமைதி. அமிழ்து : அவி - அவிழ் - அவிழ்து - அவிழ்தம் = சோறு. சோற்றுப் பால், பால், மருந்து (அன்னப்பால், இருமருந்து என்னும் வழக்குகளை நோக்குக) அவிழ்து - அமிழ்து - அமுது. அவிழ்தம் - அமிழ்தம் - அமுதம். அமுது = சோறு. அமுதம் = சோறு, பால், நீர். அரசர் : அ-அரி- அரம்- அரசு. அரம் - அரன் = அழிப்பவன், தேவன், சிவன், அரமகளிர் = தேவ மகளிர், அரசு + அன் = அரசன் = தேவனைப் போன்றவன், தலைவன், அரசன் - அரைசன் - அரையன் - அரையம். அரசு - அரைசு. அரையன் - ராயன் - E.roy, அரசு - E. arch; அரசன் - Gk. archon. அரசு = அரசு போன்ற மரம் ; பூவரசு = பூவையுடைய அரசு, ஆற்றரசு = ஆற்றங்கரையரசு. அவலம் : அ+வலம் = அவலம் அ. எதிர்மறை முன்னொட்டு, வல்-வலம் = வலிமை. அவலம் = துன்புறற்கேதுவான வலிமையற்ற நிலை, துன்பம். அவி : அவி = அவிக்கப்பட்ட வுணவு, உணவு. அவை : அவி - அவிர் = விளங்கு. அவி - அவை = கற்றடங்கியோர். அல்லது அறிவால் விளங்குவோர் குழு, ஒ.நோ: E.galaxy = the Milky - Way, any splendid assemblage. அவை +அம் = அவையம். ஆயுதம் : ஆய் = களை, ஒடி, வெட்டு. ஆய் + தம் = ஆய்தம் - ஆயுதம் = வெட்டும் கருவி. கருவி. படை. இலக்கம் (குறி) : எல்-இலகு- இலக்கு. இலக்கம் = விளக்கம், விளங்கும் இடம், இடம், குறி, விளக்கத்திற் கெடுத்துக் காட்டு. எல்லே யிலக்கம் என்பது தொல்காப்பியம். இலக்கு + இயம் = இலக்கியம் = எடுத்துக் காட்டு, குறி cf. E. illustrate - L. illustratum, to light up. நூற்றொகுதியைக் குறிக்கும் இலக்கியம் என்னுஞ் சொல் வேறு. அஃது இலக்கு (= எழுது) என்பதனடியாய்ப் பிறந்தது. உரகம் : உர = பொருந்து, தழுவு, உரம் = மார்பு. ஒ.நோ: மரு - மருமம் - மார் - மார்பு, மருவு = கல, தழுவு, உரம்- உரகம் = மார்பினால் ஊர்வது, பாம்பு. உரு : உரு = (வி). தோன்று. (பெ) தோற்றம், வடிவம், வடிவத்தையு டைய ஒரு பொருள், உடம்பு, ஒரு வடிவத்திற்குள் எழுதப்படும் மந்திரம், மந்திரம் போன்ற பாட்டு, உரு - உருவு - உருவம், உருவு - உருபு = வேற்றுமை வடிவம். உருப்படி = ஒரு தனிப் பொருள். உருப்படு உருக்குலை முதலிய நூற்றுக்கணக்கான கூட்டுச் சொற்கள் தொன்று தொட்டு உலக வழக்கில் வழங்கு தலையும். உருபு என்பது ஓர் இலக்கணக் குறியீடாய் இருத்தலையும் நோக்குக. உலகம் : சுள் - சுல் - சுலம் - சுலவு- உலவு= வளை, சுற்று, சுலம் - உலம் - உலகு - உலகம் = வட்டமா யிருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது. உலம் வருவோர் (புறம், 51) = சுழல்வோர். cyh = efiu tykhf¢ R‰¿ tUjš, x.neh.: கொள் - கோள் = Planet. கொள் = வளை. சுற்று. கொட்பு = சுற்றுகை. கொள் - கொடு- கோடு- கோணு. ஏமம் : ஏ-ஏம்-ஏமம் = பாதுகாப்பு, இன்பம். ஏ= உயர்ச்சி. ஏ பெற்றாகும், என்பது தொல்காப்பியம், விலங்குகளாலும் பகைவராலும் வெள்ளத்தாலும் துன்பம் நேரும்போது, உயர்ந்த இடம் பாதுகாப்பிற்கேதுவானது. பாதுகாப்பால் இன்பமுண்டாகும். ஏமம் - சேமம், ஒ.நோ: ஏண்- சேண். சேமவச்சு (102). ஏனாதி : ஏனை (யானை) + அரி = ஏனாரி - ஏனாதி = யானையைக் கொன்றவன். ஒ.நோ: கோடு + அரி = கோடரி. பருக்கை - பதுக்கை. கடும்பு : குடம் - குடி - குடும்பு - கடும்பு. குடும்பு - குடும்பம். குடி = உடனுள்ளது. உடம்பு போன்ற வீடு, வீட்டு வாழ்க்கை, வீட்டிலுள்ள மனைவி, மனைவி மக்களாகிய குடும்பம், குடும்ப மரபு, குலம், ஒரு குலம் வாழிடம், ஊர், கடும்பு = குடும்பம், சுற்றம். கணன் : கல - கள- களம் - கணம் - கணன் = கூட்டம். கந்தன் : கல் - கந்து - கந்தம் - கந்தன் = ஆன்மாக்கட்குக் கற்றூண் போற் பற்றுக்கோடானவன், முருகன், கந்தழி = பற்றுக் கோடற்ற கடவுள். கந்தபுராணத்திற் கூறப்பட்டுள்ளளபடி, கந்தன் இமயமலைச் சரவணப் பொய்கையிற் பிறந்தவனல்லன், இமயமலை தோன்றியதற்கு முன்பே குமரி நாட்டில் குறிஞ்சித் தெய்வமாக வணங்கப்பட்டவன். முதற்காலத்தில் முருகனுஞ் சிவனும் ஒருவனே. திணைமயக்க மேற்பட்டபின், முருகன் முழுமுதற் கடவுகளாகவும் வணங்கப்பட்டான். கம்மியன் : கடு-கரு, கடு-கடி- கரி. கடுத்தல் = மிகுதல். கருத்தல் = தோன்றுதல், கரித்தல் = மிகுதல். மிகுதற் கருத்தினின்றும் தோன்றற் கருத்தினின்றும் செய்தற் கருத்துத் தோன்றியதாகத் தெரிகின்றது. x.neh.: E.make, from L.magnus, great. அலம் + கரி = அலங்கரி = அழகு செய். கரு கரி என்னுஞ் சொற்கள் செய்தற் பொருளில் வழங்கிய நூல்கள் இறந்துபட்டன. பண்டைக் காலத்தில் விரிவான அகராதிகள் எழுதப்படாமையால், குமரிநாட்டுச் சொற்களில் பலவற்றைக் காட்டுவதற்கு ஒரு வழியுமில்லை. கரி + அணம் = கரணம் = செய்கை, செய்யும் சடங்கு, மணச்சடங்கு, செய்யுங்கருவி, ஒ.நோ: வரி+ அணம் = வரணம். கரு + வி = கருவி. கரு + மம் = கருமம். x.neh.: பரு + மம் = பருமம். கரணம் - காரணம். கரி + இயம் = கரியம் - காரியம். ஒ.நோ: கண்டம் - காண்டம். கரு - க்ரு (வ.). ஒ.நோ: துர- த்ரு (வ.). கருமம் = செய்கை, தொழில், வினைப்பயன், செயப்படுபொருள். கருமம் என்பது முதலாவது உழவுத் தொழிலையும், பின்பு கைத் தொழிலையுங் குறித்தது. கருமம் - கம்மம் - கம். கம்மவார் - தெலுங்குழவர். கமக்காரன் - உழவன். கம்மி = தொழிலாளி. கம்மாளன் = ஐவகைக் கொல்லருள் ஒருவன். கம்மியம் = கைத்தொழில், கம்மாளத் தொழில், கம்மியநூல் = சிற்பநூல், கம்மியன் = தொழிலாளி, கம்மாளன், நெய்பவன். கருமகன் - கருமான் - கருமன் = கொல்லன், கருமகன் என்னும் பெயரில் கரு என்பது தொழிலையாவது இரும்பையாவது குறிக்கும். மாரியல்லது காரியமில்லை யாதலால், கருத்த மேகம் கருவி எனப்பட்டது என்று கொள்வது ஒன்று. கரகம் : குடம் - குடகம் - குரகம் - கரகம் = வளைந்த அல்லது குவிந்த நீர்க் கலம், ஒ.நோ: முயங்கு - மயங்கு, முயல் - மயல், குடம் - கடம், குடும்பு - கடும்பு, முடி - மடி. கரு : கரு - கருப்பு - கருப்பம் - garbha. மேகம் சூல் கொண்டபோது கருத்திருத்தலால், சூல் கருவெனப்பட்டது. கவரி : இஃதொரு விலங்குப் பெயராதலானும், வேறு பெயர் தமிழிலிதற்கின்மையானும், இது தமிழ்ச் சொல்லென்றே தெரிகின்றது. கவரி - சவரி - சவரம் - சமரம் - சாமரம். காதல் : கா + தல் = காதல். கா என்னும் சொல் விருப்பு என்னும் பொருளில் குமரி நாட்டில் வழங்கியதாகத் தெரிகின்றது. கவர் - கா. கவர்வு விருப்பாகும் (தொல். சொல். உரி. 64) காமர் : கா + மம் = காமம் - காம். காமம் - காமர். காம் + மரு = காமரு - காமர் என்றுமாம். காயம் : கள் - களம் - கயம் = கருப்பு. கயம் - காயம் = கரிய வான். கரிய இருளை இருட்டுக்கயம் அல்லது இருட்டுக் கசம் என்பது உலகவழக்கு. தொல்காப்பியத்தில், காயம் என்னும் வடிவே ஆகாயத்தைக் குறிக்க வந்துள்ளது. கருப்பென்னும் பொருளிலேயே கயம் என்னும் சொல் இருள், குளம், யானை என்பனவற்றைக் குறிக்கும். காலம் : கால் = சிந்து, நீள் (வி): நேரம் (பெ.). வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள (தொல். சொல். 800) என்பதனோடு ஒப்பு நோக்குக. நீண்டு செல்லும் பொருள்களெல்லாம் தமிழிற் காலெனப் படும். கால் + அம் = காலம் - காலன். கால் + ஐ = காலை. செய்தக்கால் - கால வினையெச்ச விகுதி. காளாம்பி : காளம் + ஆம்பி = காளாம்பி. கள் - களம் - காளம் = கருப்பு. கள் -களவு = கருப்பு, மறைவு. களம் - களங்கு - களங்கம் = கருப்பு. கறை, குற்றம், கள் - கள்ளம் = கருப்பு, கரவு, திருட்டு. கள்ளம் - கள்ளன். காளம் - காளி = கருப்பி. மாயோள். கள் - கரு - கார். குடி : மேற் கூறப்பட்டது. குடம் : சுள் - குள் - குள - குழ - குட - குடம் = வளைந்த அல்லது குவிந்த கலம். குடம் - குடவன் - குசவன் - குயவன். குடம் - குசம் - குயம் = வளைவு. குடம் - கடம் (வ.). குணக்கு : குடம் - குணம் - குணக்கு = வளைவு. கதிரவன் முதலிய வளையுங் கிழக்கு. இனி, கொள் - கொண்டல் - குணக்கு - குணம் எனினுமாம். குமரி : கும் - கொம் - கொம்மை = திரட்சி. கும் - குமம் - குமர் - குமரி (இ. பெண்பால் விகுதி) = திரண்டவள், இளம்பெண், கன்னி, கன்னியாகக் கருதப்படும் காளி. cf. E. Virgin from Gk. orgao to swell. குமர் + அன் = குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன். குமரி வணக்கம் ஆரியர் வருமுன்பே தமிழ் நாட்டில் இருந்தது. குரூஉ : குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். 301). என்பது தொல்காப்பியம். குருதி, குருதிக் காந்தள் (செங்காந்தள்), குருதிவாரம் (செவ்வாய்க்கிழமை) முதலிய சொல்லையும் வழக்கையும் நோக்குமிடத்து, குரு என்பது செந்நிறம் என அறியப்படும். சிவபெருமான் நிறம் செம்மை யென்றும் அவன் ஆசிரியர் வடிவில் ஆன்மாக்களை ஆட் கொள்வானென்றும் நூல்கள் கூறுவதாலும், ஆசிரியனுக்குக் குரு குரவன் என்னும் பெயர்களுண்மை யாலும், குரு என்னும் நிறங்குறித்த சொல்லே குரவன் என்று திரிந்து ஆசிரியன், பெரியோன் என்று பொருள்பட்டதெனத் தோன்றுகிறது. குரு என்னும் சொல்லும் ஆசிரியனைக் குறித்தலால், அது பண்புப் பெயராகும்போது பெருமை என்று பொருள்படும். பெருமை என்பது பருப்பொருளும் நுண் பொருளுமாகிய வடிவுநிலை யிரண்டற்கும் பொதுவாதலின், கனம் என்னுஞ் சொல் மதிப்பையும் நிறையையுங் குறித்தாற்போலக் குரு என்னுஞ் சொல்லும் பெருமையையும் நிறையையுங் குறிக்குமென்க. குரு - Skt. guru. L. gravis E. grave, weighty, குரூஉ அளபெடை. கூடகாரம் : கூடு - கூடம். ஆர் = ஆரம் - வட்டம். கூடவாரம் - கூடகாரம், கூடாரம். ஒ.நோ : கொட்டாரம். கோன் : கோ = பசு. கோ + அன் = கோவன் - கோன் - கோனான். கோவன் = இடையன். ஆக்களை இடையன் காப்பது போல் மக்களைக் காக்கும் அரசன், உயிர்களாகிய ஆக்களைக் காக்கும் கடவுள் (சிவன்). இவை ஆரியக் கருத்துகளல்ல. இவற்றைத் தமிழரிடத்தினின்றே ஆரியர் கண்டறிந்தனர். பண்டைத் தமிழர் செல்வத்தை மாடென் றமையாலும், இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயர் முறைப்பெயர் என்னும் நால்வகையில் மக்கள் பெயரையே மாடுகட் கிட்டு வழங்கியதாலும், அவர்கள் மாடுகளை மக்களைப் போற் பேணியமை விளங்கும். கோன் - கோ = அரசன். கோடி : கோடு - கோடி = கடைசி, கடைசி யெண். சடை : சடசடவென்றிருப்பது சடை. சடசடவென்பது ஒரு விறப்புக் குறிப்பு. சடையன் சடைமுனி என்பன தொன்று தொட்டு வழங்கும் தமிழ்ப் பெயர்கள். சமர் : சமம் - சமர் - சமரம், சமர் - அமர். சமம் = ஒப்பு. கலப்பு, போர். ஒ. நோ : பொரு - போர். சாடி : சால் - சாடி. சுரம் : சுள் - சுர் -சுரம் = சூடு, காய்ச்சல், பாலைநிலம். சூர் : சுர் - சுரம். சூரம் - சூரன் - சூர், சுர் - சூர் = நெருப்பா லுண்டாகும் அச்சம். ஞமன் : சமன் - (யமன்) - நமன் - ஞமன் = நடுநிலையுள்ள கூற்றுவன். யமன் - எமன். ஞாயிறு : நய - நாயன் - நாயிறு - ஞாயிறு = கோள்களுக்குத் தலைவன். நாயன் = விரும்பப்படத்தக்க தலைவன். ஒ.நோ: நம்பு - நம்பன். நம்பு மேவு நசையா கும்மே. என்பது தொல்காப்பியம். தவம் : தபு + அம் = தபம் - தவம் = கெடுத்தல், நீக்குதல், பற்றறுத்தல், நீத்தார், துறவு என்னுஞ் சொற்களின் பொருளை நோக்குக, தவிர், தவத்தல் (நீங்குதல்) என்பன தவம் என்பதோடு தொடர்புடைய சொற்கள். திசை : திக்கு - திகை - திசை = திகைப்பிற்கிடமான எல்லை. திக்குத்திக்கென்றிருக்கிறது. திக்குமுக்காடல் முதலிய வழக்குகளை நோக்குக. திசைத்தல் = திகைத்தல். திசைச்சொல் என்பது ஓர் இலக்கணக் குறியீடு. திரு : திருவென்னுஞ் சொல் தென்சொல்லே. திருமகள், திருமனை, திருமால் திருவில் திருவரங்கம் முதலிய பழைமையான சொற்களை நோக்குக. திரு - ஸ்ரீ = சீ. தீ : தேய் - தே - தீ = உரசுதலாலுண்டாகும் நெருப்பு. துலாம் : துல் - துன் = பொருந்து, பொருத்தித் தை, துல் - துலை = பொருத்தம், ஒப்பு, இரு புறமும் ஒத்த தராசு, துல் - துலா - துலாம் - துலான் = தராசு, ஓர் எடை, துலா + கோல் = துலாக்கோல், துலா = துலாக்கோல், போன்ற ஏற்றம், கைத்துலா, ஆளேறுந் துலா என்பன தொன்று தொட்ட வழக்கு. துன் - துறு = பொருந்து, நெருங்கு. தூண்: துண் - தூண் = துணிக்கப்பட்ட கல். தூண் + அம் = தூணம் - தூண (வ). தூது: ஊ - தூ - தூது. தெய்வம் : தேய் - தேய்வு - தெய்வு - தெய்வம், தேய்வு - தேவு- தேவன், தேவு - தே, தெய்வம் = தீ வடிவான கடவுள். நகர் : நகர்தல் = மெல்ல இடம் பெயர்தல், விரிவடைதல், நகர் = குடிபெருகப் பெருக மெல்ல மெல்ல விரியும் மனை அல்லது ஊர். நாகம் : நகர் - நாகம் - நாகர். ஒ.நோ: snake, AS. snican, to creep. நாவாய் : நால்வாய் - நாவாய் = யானை போல் அசையும் கப்பல். நாவாய் - களிறுகள் போற்றூங்குங் கடற்சேர்ப்ப என்பது பழமொழி. வெளிவிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை என்பது பட்டினப்பாலை. நுகம் : உகத்தல் = பொருந்துதல், ஏற்றல், உகம் - (யுகம்) - நுகம் = காளைகளை வண்டியிற் பொருத்தும் அல்லது பூட்டுங்கோல். உக- உவ. உவ + மை = உவமை. உ + தி = உத்தி - பொருத்தம், உ - ஒ- ஓ. ஓ + இயம் = ஓவியம் நேயம் : நெய் - நேயம் படிவம் : பள் - படு - படி - படிவு - படிவம். படிவு - வடிவு, படிவம் - வடிவம். படிதல் = விழுதல், பதிதல், படி - படிவு = ஒன்றின் மேலொன்று பதிதல், படிவம் = பதிந்த உருவம், உருவம். பதம் : பதி + அம் = பதம் - பாதம் = நிலத்திற் பதியும் உறுப்பு, காலடி. பதி : படி - பதி = பதிவாயிருக்கும் நகர், பதி - வதி - வசி (வ), வதிதல் = தங்குதல். பாணி : பண் - பாணி = ஒரு வினையைப் பண்ணுங் கை, கையாற் போடும் தாளம், தாளத்தையுடைய பாட்டு, பாட்டின் ஓசை, ஒ.நோ : செய் - (சை) - கை. பிண்டம் : பிடி - பிண்டி - பிண்டம் = பிடித்த அல்லது திரட்டின உணவு, திரட்சி, உறுப்புகள் சேர்ந்த உடம்பு, முழுப்பகுதி, பிண்டி - E. bind, AS. bindan Ger, binden, Skt. bandh. பூதம் : பொந்து - பொது - பூதம் = பெரியது, பெரும் பேய், பொந்தன் = தடியன், பொந்தன் - மொந்தன் = தடி வாழைக்காய். மண்டிலம் : மண் + தலம் = மண்டலம் - மண்டிலம் = ஞாலம் போல் வட்டமாயிருப்பது, வட்டம் தலை- தலம் = இடம். மண்டலம் = 40 அல்லது 48 நாள் கொண்ட ஒரு கால வட்டம், ஒரு நாட்டு வட்டம். இனி. மண்டு - மண்டல் - மண்டலம் - மண்டிலம் என்றுமாம். மண்டு - வளை. மண்டிலம் என்பது யாப்பிலக்கணத்தில் ஒரு குறியீடு. மணி: மண் - மண்ணி - மணி = கழுவப்பட்டது போல் ஒளியுள்ள முத்து. மண்ணுதல் = கழுவுதல், அலங்கரித்தல், மண்ணுறு மணியின் மாசற மண்ணி (புறம். 147) என்பதை நோக்குக. மதி : மத - மதர் - மதி = மயக்கஞ் செய்வதாய்க் கருதப்பட்ட நிலா. ஒ.நோ : E. lunacy, from L. luna, moon. மதி + அம் = மதியம் = முழுநிலா. மது : மதர் - மது = மயக்கந் தருவது. மருந்து : மரு - மருந்து = நோயை நீக்கும் வாசனைத் தழை. மருந்துச் சரக்கு. மாடம் : மே - மேடு - (மேடி) - மாடி - மாடம் = உயர்ந்த கட்டடம். மேனிலை. மாத்திரை : மதி -மா. மா + திரை = மாத்திரை = அளவு. மா + திரம் = மாத்திரம் = மட்டு, அளவு. மா + அனம் = மானம் = மதிப்பு, அளவு, படி. மா என்பது ஓர் அளவு. மாயம் : மாய் + அம் = மாயம், மாய் + ஐ = மாயை = விரைந்து மாய்ந்து மயக்குவது. மயக்கம், மாலை : முள் - முள - முய- முயல் - மயல் - மால் - மாலை = பூக்கள் மயங்கிய தொடை, பகலும் இரவுங் கலக்கும் வேளை. ஒ.நோ : முயங்கு - மயங்கு. மீன் : மின் - மீன் - மீனம். முகம் : ஊ-மூ - முகம் = முன்னாலிருப்பது, தலையின் முன்பக்கம், முன்பக்கம். துறைமுகம், போர்முகம், நுதிமுகம் என்பன ஒவ்வொரு முன்னிடத்தைக் குறிக்கும். முகப்பு = முன்புறம். முகம் - முகன் - முகனை- மோனை. முகம் - முகமன், முகம் - முகர்- முகரை. புகர் முகம், செம்முகம், களிற்றுமுகம் முதலிய புறநானூற்றுத் தொடர்களில் முகமே குறிக்கப்பட்டது, கரு முகமந்தி, ஆறுமுகம், திருமுகப் பொலிவு, முகங் கோணுதல், முகஞ் சுளித்தல் முதலிய பல தொடர்களிலும் அஃதே. நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம் என்றார் திருவள்ளுவர். நூன்முகம். முகவுரை முதலியவை நூலின் முற்பகுதியாகும். முகம் என்னுஞ் சொல் தமிழில் ஒருபோதும் வடமொழியிற் போல் வாயைக் குறிக்காது. முகம் = முன்னிடம், இடம், முகத்தல் = தன்னிடத்துக் கொள்ளுதல், உள்ளிட்டளத்தல். முத்தம் : முட்டு – முத்து – முத்தம் – முத்த (வ)., ஆமணக்கு குருக்கு முதலியவற்றின் விதைகள் முட்டி வெடிப்பதால் முதலாவது முத்தெனப்பட்டன. அவ் விதைகள்போற் சிப்பிக்குள்ளிருக் கும் மணியும் முத்தெனப்பட்டது. பண்டைக் காலத்தில் முத்திற்குச் சிறந்தது செந்தமிழ்ப் பாண்டிநாடே. முரசு : முரண் - முரடு - முரசு - முரஜ (வ.) = உருட்டுக் கட்டையிற் கடைந்து செய்த மத்தளம். முரடு - முருடு. வட்டம் : வள் + தம் = வட்டம், இனி, வட்டு + அம் = வட்டம் என்றுமாம். வள் என்னும் வழிவேர் தமிழிற் பல்வேறு வடிவங் கொண்டு நூற்றுக்கணக்கான சொற்களைப் பிறப்பிக்கும். வ்ருத்த என்னும் வடசொல் தமிழில் வ்ட்டம் என்று திரியவில்லை. வட்டம் என்னும் சொல்லே வருத்த என்று திரிந்தது. வளை, வள்ளம், வட்டு, வட்டி, வண்டு, வணர், வணங்கு, வளர், வளார், வள்ளி, வரி, வரை, பரி, முதலிய பல சொற்கட்கும் வள் என்பதே வேர். இச் சொற்கட் கொல்லாம் இனமானவை வடமொழியிலில்லை. வட்ட - வ்ருத்த (வ.) L.verto, to turn. வண்ணம் : வரி + அணம் = வரணம் - வண்ணம். வரி = வரைவு, நிறம், எழுத்து, பாட்டு, வரணனை. வரணம் = வரைவு, எழுத்து, பாட்டு, நிறம், குலம், வண்ணம் = நிறம், வகை, பாட்டு, சந்தம். வணிகன் : வாணி - வாணிகம் - வணிகன் = விலை கூறிப் பொருள் விற்பவன், வாணி = சொல், வாணிகன் - வாணியன். இனி, வள் - வணிகம் - வாணிகம் என்றுமாம், வளைவு பொருள் வளர்ச்சியைக் குறிக்கும். தனித்தமிழ்ப் பகுப்பான நால்வகை மக்கட்பிரிவில், விற்பனையாளர் வணிகர் அல்லது வாணிகர் என்னுஞ் சொல்லாலேயே தொன்று தொட்டுக் குறிக்கப் படுகின்றனர். வள்ளி : வள் - வள்ளி - வல்லி = வளைந்த கொடி. ஒ.நோ: கொடு - கொடி வேகம் : வேகு + அம் = வேகம் = கொதிப்பு, கடுமை, கடுஞ்செலவு. சுறுசுறுப்பு, சூட்டிக்கை என்பனவும் நெருப்புக் குறித்த சொல்லின்றும் பிறந்தவையே. தீப்பற்றிய பொருள்கள் விரைவாய் வெந்து விடுவதால் விரைவு வேகம் எனப்பட்டது. அன்னம் (பறவை), சகடம், தாமரை, தாரம் (பண்டம்) முதலிய சில சொற்கட்கு இதுபோது வேர்ப்பொருள் தெளியாவிடினும், இவை தென்சொற்களே என்பது தேற்றம், இச்சொற்கள் தோன்றிப் பல்லாயிரமாண்டுகளானமை யாலும், இவற்றின் வேர்ப் பொருளைக் காட்டக்கூடிய பிற சொற்கள் இறந் தொழிந்தமையாலும், பண்டைக் காலத்துச் சொல்லியலகரரதி யொன்றும் நமக்கின்மையாலும், இவற்றின் வேர்ப் பொருளை அறிய இடமில்லை. (6) சொல் வடிவு மாற்றம். எ-டு : உயர்த்தி - உசத்தி - ஒசத்தி - ஒதி, வேட்டி - வேஷ்டி. (7) தூய்மையிழப்பு. எ-டு : வேண்டாத பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்க வழங்க, அதன் தூய்மை கெடுவது ஒருதலை. (8) மொழி வழக்கழிவு. எ-டு : தமிழ்ச் சொற்களெல்லாம் ஒவ்வொன்றாய் வழக்கு வீழ்ந்து கொண்டே செல்லின், இறுதியில் தமிழென ஒரு மொழியே யிராதுபோம் என்பது உறுதி. பின்பு, இதுவரை அதைப் புகழ்ந்து வந்ததிற்கு மாறாக. ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதைந்தாயுள் சீரழிவுத் திறம் நினைந்து செயலற்று வருந்துதுமே. என்று இரங்கவே நேரும். களிப்பு, மகிழ்ச்சி, உவகை என மூன்று தமிழ்ச் சொற்களிருப் பவும், அவற்றுள் ஒன்றேனும் வழங்காமல், ஆனந்தம், சந்தோஷம் என்ற வடசொற்களே வழங்கி வருவதை ஒரு காட்டாகக் கண்டு தெளிக. 9. அருவடிவச் சொற்கள் அணிந்தன்று : அணிந்து + அன்று = அணிந்தன்று = அணிந்தது. அன் + அது = அன்னது = அத்தகையது, அது. அன் +து (அது)= அன்று = அது அறிதீ : அறியும் - அறியுந் + ஈ = அறியுநீ - அறியுதீ - அறிதீ - அறிதி- 1. முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று 2. முன்னிலை யொருமை எதிர்கால வினைமுற்று 3. ஏவல் ஒருமை வினைமுற்று. இனி, அறியும் + நீ = அறியுநீ - அறியுதீ என்றுமாம். ந - த, போலி, ஒ.நோ : நுனி - நுதி - துதி. தி முன்னிலை யொருமை விகுதியாகக் கருதப்பட்ட பின் ஒத்தி போன்ற வினைகள் தோன்றின. ஒரு காலத்தில் செய்யும் என்னும் முற்று, தன்மை முன்னிலையிலும் வழங்கிற்று. அடுநை : அடும் - அடுந் + ஐ = அடுநை ஈ-ஏ-ஐ. முன்னிலை யொருமை விகுதி. அறஞ் செய் தீமோ : அறஞ்செய்து + ஈயும் + ஓ = அறஞ்செய் தீயுமோ - அறஞ்செய்தீமோ. ஈயும் = அருளும், இடும் (துணைவினை): ஓ. ஆர்வக் குறிப்பிடைச் சொல். அறிந்தீயார் : அறிந்து + ஈயார் = அறிந்தீயார் = அறிந்திடார் (அறியார்) : ஈ = இடு (துணைவினை). அறியுமோன் : அறியும் + அவன் = அறியுமவன் - அறியுமான் - அறியுமோன். ஆஓ வாகுஞ் செய்யு ளுள்ளே. அறுமார் : அறுவார் - அறுமார் = அறுதற்கு. உண்ணுவார் - உண்ணுமார் - உண்மார் = உண்ண. கொள்வார் - கொள்மார் - கொண்மார் = கொள்ள, பண்டைக்காலத்தில் ஒவ்வோர் எதிர்கால வினைமுற்றும் செய்வான் என்னும் வினையெச்ச மாக வழங்கி வந்தது. பிற்காலத்தில். ஆண்பாற் படர்க்கை யொழிந்த மற்றெல்லாம் வழக்கு வீழ, அவ் வாண்பாற் படர்க்கையே எல்லாவற்றுக்கும் பொதுவாக வழங்கி வருகின்றது. இதுவே வான், பான் ஈற்று வினையெச்சம். அன்று : (அன்றி) : அல்லாது - அல்லது - அன்று (அல்+து). இல்லாது - இல்லது - இன்று. சொல்லாது போனான், நன்று சொன்னாய் என்னும் வழக்குகளை நோக்குக. ஆகியர் : ஆகு + ஈயர் = ஆகீயர் - ஆகியர் = ஆகுக. ஈயல் - ஈயர் - இயர். ஈயல் = ஈக. இடுக (துணைவினை). ஒ.நோ : செயல் = செய்க. இருடீர வெண்ணிச் செயல். ஆகிலியர் : ஆகு + இல் + இயர் = ஆகிலியர். ஆகின்று: ஆகு + இன் + து (அது) = ஆகின்று = ஆகினது. ஆகுப : (ஆவன. 7). ஆப (ஆவர் 218). ஆவ. ஆகுவ என்பன பண்டைக் காலத்தில் இருதிணைப் பொதுவாயிருந்தன. பின்பு வ-ப எனத்திரிந்த பின், ப உயர்திணைக்கும் வ. அஃறிணைக்கும் வரையறுக்கப்பட்டன. இரீஇ : இரி = இருந்து, இரீ = இரித்தி : இரீஇ (இருத்தி) அளபெடை, உடீஇ, கொளீஇ என்பனவும் இங்ஙனமே. ஈற்றுயிர் நீளுதலும் பிறவினையாகும் வகை போலும்! ஒ.நோ: உறு - உறூ = உறுத்து, உறூஉ, அளபெடை, இனி, இரி - இரீஇ என அளபெடையே பிறவினையாகும் வகை என்றுமாம். இறீயர் : (இறுக): ஈயல் - ஈயர். இறு + ஈயர் = இறீயர். செலீயர் நிலீயர் என்பனவும் இங்ஙனமே. ஈங்கனம் : ஈங்கு + அனம் = ஈங்கனம் - இங்கனம் - இங்ஙனம்- இங்ஙன், இங்ஙனம் - இன்னணம். ஆங்கனம் யாங்கனம் என்பனவும் இங்ஙனமே. ஈன்மர் : ஈனுவார் - ஈனுவர் - ஈனுமர் - ஈன்மர். உண்கு : செய்வு - செய்கு = செய்வேன் (ஒருமை), செய்கு +ம் = செய்கும் = செய்வேம் (பன்மை) உண்கு = உண்பேன். உண்கும் = உண்பேம். என்கு + ஓ = என்கோ = என்பேனா? (வினா) உணா: உண் +ஆ = உணா. ஆவும் ஒரு தொழிற் பெயர் விகுதியாகும். இறா, நிலா, பிணா முதலியவை முதற்காலத் தொழிலாகு பெயர்கள். ஆல் விகுதியே ஆவாகக் குறைந்த தெனினுமாம். உண்மென: உண்ணும் + என = உண்ணுமென - உண்மென. உணர்த்திய : உணர்த்து + ஈய = உணர்த்தீய - உணர்த்திய = உணர்த்த. உந்து : (பெயரெச்ச விகுதி): உம் உந்தாகும் இடனுமா ருண்டே (தொல். 777) உய்ந்திசினோர் : (உய்ந்தோர்) உய்ந்து + ஈயினோர் = உய்ந்தீயினோர் - உய்ந்தீசினோர் - உய்ந்திசினோர். ஈ, துணை வினை. ஒ.நோ : ஆயினோர், போயினோர். உயரி : உயரி = உயர்த்தி. உயரிய : உயரிய = உயர்த்திய உரைத்திசின் (உரைப்பாய்) : உரைத்து + ஈயேன் - உரைத்தீயேன் - உரைத்தீயின் - உரைத்தீசின் - உரைத்திசின். ஈயேன் ஏன் ஆர்வப் பொருள் படுவதொரு விகுதி. ஒ.நோ: வாவேன் = வரமாட்டாயா, சொல்லுங்களேன் = சொல்லமாட்டீர்களா. உறாற்க : உறு + அல் + க = உறற்க - க விகுதி படிக்க, விடுக்க என்னும் வியங்கோள்களினின்று தோன்றியது. ஏத்துகம் : ஏத்துவம் - ஏத்துகம். வ-க. போலி. ஏனோர் : ஏ- ஏன்- ஏனோர் = யார்? ஏ-யா. கண்டிகும் : கண்டு + ? ஒருவேளை கண்டு + யாம் = கண்டியாம் - கண்டியம்- கண்டிகம் - கண்டிகும். கண்டிசின் : (கண்டேன்) : கண்டு + ஈயேன் = கண்டீயேன் - கண்டீயின் - கண்டீசின் - கண்டிசின். ஈயேன் = ஈந்தேன், இட்டேன் (துணைவினை). ஒ.நோ: போயேன் = போனேன். கழிப்பி (கழித்து) : கழிப்பு என்னும் தொழிற் பெயரே மீண்டும் பகுதியாயிற்றுப் போலும். ஒ.நோ: நகு - நகை- நகைத்து, இனி கழி+பு = கழிப்பு, பிறவினை என்றுமாம். களைமே (களைவாய்): களையும் + ஏ= களையுமே - களைமே. களையும் பால்வழுவமைதி, செய்யுமே - செய்ம்மே ஏ ஆர்வப் பொருள் விகுதி, ஏன் விகுதி ஏ எனக் குறைந்த தெனினுமாம். மொழிமோ என்பதில் ஓ இப்பொருள்பட வந்தது. காண்குவந்திசின் : காண்கு = காண்பேன் (முற்றெச்சம்) காணூஉ (கண்டு) : காணூ - காணூஉ அளபெடை. செய்யூ வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். குரீஇ : குரி (குருவி) என்பது பண்டை வடிவம் போலும். குரீஇ, அளபெடை. கேளலம் : கேள் + அல் + அம் = கேளலம். சாயின்று : சாய் + இன் + து (அது) = சாயின்று. சாயினது - சாயின்று, ஆயினது போயினது என்பவற்றோடு ஒப்பு நோக்குக. இன்னது - இனது - இன்று. தொலைச்சி: (தொலைத்து) தொலைச்சு - தொலைச்சி. தொலை + சு = தொலைச்சு. பிறவினை. நிலியரோ : நில் + இயர் + ஓ = நிலியரோ = நிற்க. ஈயல் - ஈயர் - இயர். ஓ. அசைநிலை : ஆர்வப் பொருட்டுமாம். பழுனி : பழுத்து - பழுன்னு - பழுன்னி - பழுனி. மரீஇ : மரி = மருவி, மரீஇ, அளபெடை வைகுதும் : வைகு + உது+ம் = வைகுதும் = வைகுவோம். உது, தன்மையொருமை எதிர்கால வினைமுற்று விகுதி: ம் (உம்) தன்மைப் பன்மை விகுதி. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள் 1944) பூ (1) பூ - வ. பூ (bh) - இ. வே. புல் - புள் - புழு - புகு. புகுதல் = தோன்றுதல். புகு - பூ. பூத்தல் = 1. தோன்றுதல். பூத்திழி மதமலை (கம்பரா. கும்பகர். 315). 2. படைத்தல். ஞாலமெல்லாம் பூத்தோனே (பாரத கிருட்டிண. 12). 3. பெற்றெடுத்தல். ஒரு திருவைப் பூத்தனள் (பிரமோத். 8 : 15). 4. இருத்தல். பூத்தலிற் பூவாமை நன்று (நீதி.6). புகு - பொகு - பொகில் = அரும்பு. பொகில்பிடித் தலருஞ் சந்தப் பொதும்பர் (இரகு. குசனயோ. 63). பொகில் - போகில் = அரும்பு (பிங்.). பொகு - போ - போத்து = வளார், சிறு புதுக்கிளை. போத்து வெடித்தல் என்பது மரபு. மலரைக் குறிக்கும் பூ என்னும் சொல் வேறு. அது பொல் என்னும் அடியினின்று பிறந்தது. பொல் - பொலி - பொலிவு. பொல் - பூல் - பூ. பூல் என்னும் வடிவம் இன்று இந்தியில் வழங்குகின்றது. (வ.வ : 207 - 208). பூ (2) பூ : பூதம் = பெருவெளியில் தோன்றிய நால்வகை அல்லது ஐவகைப் பொருள்களுள் ஒன்று. வளியென வரூஉம் பூதக் கிளவியும் (தொல். 242). பால்வரை தெய்வம் வினையே பூதம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன. (தொல். 541). பூ : பூ, (வ. bhu), இச்சொல்லினின்றே புவந, பூமி, பவிஷ்ய, பாவந. முதலிய முன்னொட்டுப் பெறாச் சொற்களும், அநுபவ, அநுபூதி, உத்பவ, ஸ்வயம்பூ முதலிய முன்னொட்டுப் பெற்ற சொற்களுமாக நூற்றுக்கணக்கான வடசொற்கள் தோன்றுமென அறிக. (தி.ம : 749). பூக்காம்பு வகை காம்பு சிறியது; தாள் அல்லது தண்டு, பருமையும், மென்மையுமுள்ளது. நாளம், உருட்டுளையுள்ளது. (சொல். 67). பூக் குதிரை விளையாட்டு ஆட்டின் பெயர் : ஒரு பூப் பெயரைச் சொல்லி, ஒருவன்மே லொருவன் குதிரையேறி விளையாடுவது பூக்குதிரை. ஆடுவார் தொகை : பொதுவாக, ஐவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர். ஆடிடம் : முற்றத்திலும் தெருவிலும் பிற வெளியிடங்களிலும் இதை ஆடலாம். ஆடு முறை : ஏதேனுமொரு தேர்ந்தெடுப்பு வகையில், தவறி விட்ட ஒருவன், அண்ணாவிபோல் நிற்கும் ஒருவனிடம் மறைவாக ஒரு பூப்பெயரைச் சொல்லிவிட்டுக், குனிந்து நிற்க வேண்டும். பிறர் ஒவ்வொருவனாய் அவன் மேற் குதிரையேறுமுன், ஒவ்வொரு பூப்பெயரை அண்ணாவியிடம் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டும். யாரேனும் ஒருவன் சொன்ன பூ குனிந்தவன் சொன்னதா யிருப்பின் பின்பு அவன் அண்ணாவியிடம் ஒரு பூப் பெயரை மறைவாகச் சொல்லிவிட்டுத் தான் குனிய வேண்டும். முன்பு குனிந்து நின்றவன், பின்பு பிறரொடு சேர்ந்து முன் சொன்னவாறு விளையாடுவான். குனிந்தவன் சொல்லாத வேறு பூப் பெயர் சொல்லிக் குதிரையேறினவன், ஒரு நிமையத்திற்கு இறங்கிவிடல் வேண்டும். குனிந்தவன் சொன்ன பூ வரும்வரையும், ஒவ்வொருவ னாகவும் மாறி மாறியும் ஏறி யிறங்கிக் கொண்டே யிருப்பர். (த.நா.வி.) பூச்சி விளையாட்டு பூச்சி என்பது ஆள்நிழல். நிலவொளியிற் பூச்சி தெரியும்போது ஒருவரைத் தொடும் விளையாட்டு, பூச்சி அல்லது பூச்சி விளை யாட்டு. ஆடுவாருள் ஏதேனுமொரு வகையில் அகப்பட்டுக் கொண்ட ஒருவர், நிலவொளியிடத்தில் நிற்க, ஏனையரெல்லாம் அருகேயுள்ள ஓர் இருண்ட இடத்தில் நின்றுகொள்வர். இருண்ட இடத்தில் நிற்பவர் ஒளியிடத்திற்கு வரின், அவரைத் தொடலாம்; இல்லாவிடின் தொடல் கூடாது. ஒளியிடத்தில் தொடப்பட்டவர் பின்பு பிறரைத் தொடுதல் வேண்டும். (த.நா.வி.) பூசு பூசு - வ. பூஜ், பூசை - வ. பூஜா பூசுதல் = கழுவுதல். நீருண்டார் நீரான்வாய் பூசுப (நான் மணிக்.35). முகம்பூசுதல் என்பது தென்பாண்டி வழக்கு. பூசு - பூசை = தெய்வப் படிமையை நீராட்டுச் செய்யும் வழிபாடு. பூசு - பூசுனை. சிறப்பொடு பூசுனை செல்லாது (குறள். 18). பூசை - பூசையாரி - பூசாரி. தலையாரி என்னுஞ் சொல்லிற்போல் ஆரி என்பது ஓர் ஈறு. பூசை பூசுதல் = கழுவுதல். தெய்வப் படிமையை நீரால் துப்புரவாக்குதல். பூசு - பூசி. பூசித்தல் = பூச்சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல். உழவு என்பது பயிர்த் தொழிலின் பின் வினைகளையும் குறித்தல் போல் பூசித்தல் என்பதும் வழிபாட்டின் பின்வினைகளையும் குறித்தது. பூசி - பூசை. ஒ.நோ : ஆசு (பற்று) - ஆசி (அளவு) - ஆசை (அவா). பூசி - பூசனை, பூசனம். ஐ, அனை, அனம் என்பன தமிழ் ஈறுகளே. பூசை - பூசாரி. ஆரி - தலையாரி என்பதில் போல் ஓர் ஈறு. பூசாச்சாரி (பூசை + ஆச்சாரி) என்னும் வழக்கு வடமொழியிலும் இல்லை. பூ செய் என்பது பூசை என்றாயிற்றென்பது பொருந்தாது. பூசி - பூஜ் (வ.). பூ - பூஜா (வ). பூசனம் - பூஜன (வ.). பூசனை - பூஜனா (வ.). வேத ஆரியர்க்கு வேள்ளி வேட்டலேயன்றிப் படிமப்பூசையும் கோவில் வழிபாடும் இல்லை. பூஜ் என்னும் சொல்லும் வேதத்தில் இல்லை. பாரதம் முதலிய பிற்கால வடபனுவல்களிலேயே அது வழங்குகின்றது. (தி.ம. 47). பூதம் பூதம் : பூத்தல் = தோன்றுதல். அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் செல்லும் - நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று. (நீதிநெறி. 5). இப்பாவிலுள்ள பூத்தற் சொல் வேறு; மலர்தலைக் குறிக்கும் பூத்தற் சொல் வேறு. மலர்தலைக் குறிப்பது பொலிவை யுணர்த்தும் பொல் என்னும் அடியினின்று திரிந்ததாகும். (தி.ம. 749). பூதம்1 - வ. பூத (bh) - இ.வே. பூத்தல் = தோன்றுதல். பூ - பூது - பூதம் = தோன்றியது, ஐம்பூதங்களுள் ஒன்று. வளியென வரூஉம் பூதக் கிளவியும் (தொல். 242). பூதம்2 - வ. பூத (bh) ஊதாங்குழலால் நெருப்பூதுவதைப் பூத்துப் பூத்தென ஊதுகிறான் என்பது வழக்கு. காற்றூதுவதால் துருத்தியும் ஊத்தாம்பையும் புடைக்கும். ஊதுதல் = வீங்குதல், பருத்தல். ஊது - பூது - பூதல் - பூதலி. பூதலித்தல் = பருத்தல், தடித்தல். பூது - பூதம் = பருத்தது, பருத்த பேய். பூதக்கால் = யானைக்கால். பூதக்கண்ணாடி = பெருக்கிக்காட்டும். கண்ணாடி. (வ.வ.) இனி, பொத்து - பொது - புது - பூது - பூதம் என்றுமாம். புதா = பெருநாரை. பொத்து - பொத்தை = பருமிளகாய். புதல் - புதர் = அடர் செடி. புதை = அடர்காடு, அம்புக்கட்டு. புதை - பூதை = அம்புக் கட்டு. பூதி = பொது. பொது - பொதும்பு - பொதும்பர். மா. வி. அ. வும் செ. ப. க. க. த. அ. வும் இருவேறு பூதச் சொல்லையும் ஒன்றாகக் கூறியிருப்பது தவறாம். (வ.வ : 208 - 209). பூதி பூதி - வ. பூதி (bh) புழுதி - பூதி = 1. புழுதி (சூடா). 2. சாம்பல். 3. திருநீறு (பிங்.). பூதியணி பொன்னிறத்தர் (தேவா. 592 : 2). ஒ.நோ : கொழுது - கோது, பொழுது - போது. (வ.வ : 209). பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு பொதுவாகப் பதின்மருக்குக் குறையாத பல பிள்ளைகள் உத்திகட்டிச் சமமான இருகட்சியாகப் பிரிந்து, ஒர் அகன்ற தெருவிலேனும் ஊர்ப்பொட்ட லிலேனும் இரு கட்சிக்கும் பொதுவாக ஒரு நடுக்கோடு கீறி, அதற்கு இப்பாலும் அப்பாலும் நின்றுகொள்வர். பின்பு இருகட்சியாரும் கட்சிவாரியாகக் கைகோத்து முன்பின்னாகப் பின்வருமாறு பாடிக்கொண்டு, மாறிமாறி நடுக்கோடு வரை சென்று மீள்வர். முதற் கட்சியார் : பூப்பறிக்க வருகிறோம். பூப்பறிக்க வருகிறோம், இந்த நாளிலே. இரண்டாங் கட்சியார் : யாரனுப்பப் போகிறீர்? யாரனுப்பப் போகிறீர்? இந்த நாளிலே. மு : கமலா அனுப்பப் போகிறோம், கமலா அனுப்பப் போகிறோம், இந்நாளிலே. இ : எந்தப்பூ வேண்டும்? எந்தப்பூ வேண்டும்? இந்த நாளிலே. மு : மல்லிகைப்பூ வேண்டும், மல்லிகைப்பூ வேண்டும், இந்த நாளிலே. இன்னபூ வேண்டுமென்று சொல்லி முதற்கட்சியார் பாடி முடிந் ததும், இருகட்சியினின்றும் ஒவ்வொரு பிள்ளை முன்சென்று நடுக்கோட்டை யடுத்தவுடன், இருவரும் ஒருத்தியை யொருத்தி பிடித்திழுப்பர். கோட்டிற்கப்பால் இழுத்துக் கொள்ளப்பட்ட பிள்ளை எதிர்க்கட்சியைச் சேரும். பின்பு முன்போற் பாடி, வேறிருவர் இழுப்பர். இங்ஙனம் இவ்விருவராய் எல்லாரும் இழுக்கப்பட்டபின், மிகுதியாகப் பிள்ளைகள் சேர்ந்திருக்கிற கட்சியார் வென்றவராவர். பூமடல் வகை பூ : வாழை மடல்; மடல் : தாழை, வாழை முதலியவற்றின் மடல்; பாளை : தென்னை, பனை முதலியவற்றின் மடல். (சொல். 66). பூவின் நிலைகள் அரும்பு : பூவின் தோற்றநிலை; போது : பூ விரியத் தொடங்கும் நிலை; மலர் (அலர்) : பூவின் மலர்ந்த நிலை; வீ : மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை; செம்மல் : பூ வாடின நிலை. (சொல். 67). பூனைப்பெயர்கள் (1) பூசை பூனை என்பது பூசை என்னும் சொல்லின் திரிபே. பூசுதல் = கழுவுதல், சிலைகழுவுதல். நெல்லை மாவட்டத்தின் ஒருபகுதியில், முகம் பூசுதல் என்பது இன்றும் உலக வழக்காயிருக்கின்றது. பூசிக்கொளினும் இரும்பின்கண் மாசொட்டும் (நான்மணி. 94). பூனை அடிக்கடி தன் எச்சிலை முன்னங்காலால் தொட்டு முகத்தைப் பூசிக்கொள்வதால், அது பூசையெனப் பெயர் பெற்றது. வெவ்வாய் வெகுகினைப் பூசையென்றலும் (தொல். மர. 69). வடமொழியிலுள்ள மார்ஜால என்னும் பூனைப் பெயரும் இக்காரணம் பற்றியதே. மெழுகு - வ. ம்ருஜ் (mrj) = பூசு, கழுவு. ம்ருஜ் - மார்ஜ் - மார்ஜார - மார்ஜால. பூனையைப் பூசுபூசு என்றழைப்பது பெண்டிர் வழக்கம். பூசை - பூச்சை (நாஞ்சில்நாட்டு வழக்கு) பூச்சை - ம. பூச்ச. பூசை - பூனை. ச - ஞ, போலித்திரிபு. ஒ.நோ : பிசை - பினை. பூனைக்கண் = பூனைக்கண் போன்ற நிறமுள்ள ஒளிக்கல் (வைடூரியம்). ஆங்கிலத்திலும் இது cat’s eye என்று பெயர் பெற்றிருத்தலை நோக்குக. வைடூரியம் என்னும் வடசொல்லும் இக் காரணம் பற்றியதே. பூனை - பூஞை ஒ. நோ : அன்னை - அஞ்ஞை. இனி, பூசை - பூஞை என்றலுமாம். ஒ. நோ : குடிசை - குடிஞை. சிலம்பி சிச்சிலி பூஞை கிருமி (தத்துவப். 19). ஆங்கிலச் சொல் (The Oxford English Dictionary and Klein’s Comp. Ety. Dy. of the E. Language). E. puss, pus, pusse. (A word common to several Teutonic languages, usually as a call-name for the cat). Du. poes, LG. puus, puuskatte, puus-man, Sw. dial. pus, katte-pus, Norw. puse, puus, Lith. puz, puiz, lr. and Gael. f. us. Alb piso, Ruman pisicaÍ. ‘Puss in the corner’, a game of children; Pussy - wants - a - corner, an American name of the game. E. pussy, a pet name for a cat. Y dim suffix. Pussy - cat, a nursery word for a cat. Pussyfoot, to tread stealthily like a cat. Pussy - willow, the American glaucous willow, in reference to its silky catkins. Puss - Etymology unknown என்பது O.E.D.; Imitative of the spitting of a cat என்பது K. C. E. D. E. L. 2. பிள்ளை (பூனைப்பிள்ளை) பிள்ளையில்லாதவர்கள், சில உயிரினங்களிற் சிலவற்றைப் பிள்ளைபோல் வீட்டில் வைத்து வளர்ப்பது பண்டை வழக்கம். அதனால், இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று. என்று ஒரு பழமொழி யொழுந்தது. ஓடும்பிள்ளை மூன்றனுள், அணிற்பிள்ளை கீரிப்பிள்ளை என்பன இரண்டு. மூன்றாம் பிள்ளை பூனைப்பிள்ளை யாயிருக் கலாம். பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே. (தொல். மர. 24). நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலைக் குருளை யென்ப. (தொல். மர. 8). நரியும் அற்றே நாடினர் கொளினே. (தொல். மர. 9). பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே. (தொல். மர. 11) கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப. (தொல். மர. 13). முகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான. (தொல். மர. 14). பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை. (தொல். மர. 4). என்று தொல்காப்பியங் கூறுவதால், பல்வேறு உயிரினங்களிலும் சிற்சில உயிரிகள் பிள்ளை யென்றும் இளமைப் பெயர் பெற்றிருந்தமை அறியப்படும். வீட்டுப் பூனைக்குட்டி பாலூட்டி வளர்க்கப்படுவது பெரும் பான்மை. ஆதலால், பூனைப்பிள்ளையென்பது, பெருவழக்குப் பற்றி, பிள்ளையென்னும் பொதுப் பெயராலேயே குறிக்கப்பட் டிருப்பது இயல்பு. பிள்ளைபோல் வளர்க்கப் படுவது, பெரிதான பின்பும் அப்பெயர் பெறும். அணிற்பிள்ளை கீரிப்பிள்ளை முதலிய பெயர்களை நோக்குக. (குட்டி என்பது ஆட்டுக் குட்டியையும், கன்றுக்குட்டி என்பது மாட்டுக் கன்றையும், சிறப்பாகக் குறித்தலையும் நோக்குக). பிள்ளை யென்னுஞ்சொல் தெலுங்கிற் பில்லியென்று திரியும். ஒ.நோ : தள்ளை (தாய்) - தல்லி. பில்லி - இந். பில்லீ (billi). பில்லி யென்பது இலத்தீனில் felis அல்லது feles என்று வழங்கும். உயர்திணையில் இருபாற்கும் பொதுவான பிள்ளை யென்னும் இளமைப்பெயர், இலத்தீனில் filius என்று மகனையும், filia என்று மகளையும் குறித்து வழங்குதல் காண்க. பிள்ளை என்பது, வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் ஆண்பிள்ளையையும், பாண்டிநாட்டுப் பகுதியிற் பெண்பிள்ளையையும், சிறப்பாகக் குறிப்பது, வழக்கு வேறுபாடு பற்றியதே. பூசை அல்லது பூனை யென்பது வீட்டுப் பூனையையே. காட்டுப் பூனை வெருகு எனப்படும். வெருவத்தக்க தோற்றமும் வலிமையும் உடையது வெருகு. வெருவுதல் - அஞசுதல். வெருகு வீட்டில் வளர்க்கப்பட்ட பின் பூசையெனப் பெயர் பெற்றது. வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. வீட்டுப்பூனை இலத்தீனில் felis domes tiea எனப்படும். Feline (adj) = catlike. Felid = one of the Felidoe or cat-tribe. (3) விடரகன் விடுதல் = பிளத்தல், விடு - விடர் = பிளவு, பிளப்பு, விடரவன் = (பகலிற் கண்பிளவுள்ள) பூனை (யாழ். அக.). விடரவன் - விடரகன் - விடரகம் - விடருகம் - விடரூகம் = பூனை(நாமதீப. 203) விடரகம் - விடாரகம் - வ. விடாரக = பூனை. விடாரகம் - விடாலகம் = பூனை. விடாலகம் - விடாலம் = பூனை (சங். அக.). விடாலம் - வ. விடால - வைடால = பூனை. விடாரகம் - விடாரம் - வ. விடார - வைடூர்ய = பூனைக்கண் போன்ற ஒளிக்கல். வைடூர்ய - த. வைடூர்யம். தமிழிற் பூனைக்கண் என்றும் ஆங்கிலத்தில் cat’s eye என்றும் உறுப்பைத் தெளிவாகக் குறிப்பிட்ட உவமையாகுபெயர் தோன்றியுள்ளது. சமற்கிருதச் சொல்லோ பூனைப்பெயரினின்றே திரிந்த திரிசொல்லாகவுள்ளது. வ. விடாரக - பிடாரக (b), வ. விடால - பிடால (b). வகரமுதல் வடமொழியிற் பகரமுதலாகத் திரிதல் இயல்பே. ஒ. நோ : வலம் - வ. பல (bala). (4) க. கொத்தி = பூனை. ம. கொற்றி, குறிஞ்ஞி, (குறுஞ்ஞி) = பெண்பூனை. தமிழில் இச்சொல் இறந்துபட்டது. பழஞ்சேர நாட்டுத் தமிழின் (வடசொற் செறிந்த) திரிபே மலையாளமாதலால், கொற்றியென் பதைத் தமிழாகக் கொள்ளலாம். குறு, குறுகுறு, கொறுகொறு (ம. குறுட்டுக - குருட்டுக, குறும்முக; க. கொர், கொர, கொரகொர) முதலிய ஒலிக்குறிப்புக்களை யொத்த பூனையடித்தொண்டை யொலிக் (purr) குறிப்பினின்று குறுஞ்ஞி (- குறிஞ்ஞி) என்னும் பூனைப்பெயர் தோன்றியிருக்க லாம். இதற்கு கொற்றி யென்னுஞ் சொல்லொடு தொடர்பில்லை. தமிழிற் குருடனைக் குறிக்கக் கொத்தை என்றொரு சொல் உளது. கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்து (தேவா. 1040 : 2), இன்னான் என்பது, கண்ணாற் கொத்தை, காலான் மூடவன் என்பன. (தொல். வேற். 11, இளம். உரை). கொத்தியென்னுங் கன்னடச்சொல் கொத்தையென்னும் தமிழ்ச்சொல்லைப் பெரிதும் ஒத்துளது. பூனை பகலில் முழுக்கண்ணும் தெரியாமல் அரைக் குருடாயிருப்பதனால், அதற்குக் கொத்தையென்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அப்பெயர் ஒரு திரவிட மொழியிற் கொத்தியென்று திரிந்திருப்பதும், உத்திக்கும் இயற்கைக்கும் பொருத்தமானதே. கொற்றியென்பது கொத்தியென்பதன் திரிபாயிருக்கலாம். பூனைக்கு மேலே மொழிகளெல்லாவற்றிலும்பெருவழக்காய் வழங்கும் பெயர், பல்வேறு வகைகளில் திரிந்திருப்பினும் கொத்தி என்னும் சொல்லையே ஒத்துள்ளது. Gk. katta, kattos; mod. Gk. gata; L. catta, catus, caÍtus, cattus, Late Latin. cattus, catta. It. gatto; Sp., Pg. gato; Cat. gak; Pr. Cat; ONF. cat; F. chat (fem. gatta, gata, cata, cate, chate, chatte); E. cat; OE., ME. cat, catt, catte., ON. Kott-r, kattus; keta, fem; Sw. katt, katta; Da kat; MLG. katte; MDu. katte, kat; D. kat; OHG. kazza, chazza, chataro; MHG., Mod. G. katza; MHG. katero, kater; mod. G. and Du. kater = he cat. OIr. cat (masc); Gael. cat com. W. kath; Welsh and Cornish. cath; Breton kaz; Vannes kac’h m. OCo. kat. Nubian kadis; Arab qitt, tomcat, qitta, cat. Slavonic kot; OSlav. kot’ka; Bulg. kotka; Slovenish kot m; Russ. kot m. kotchka, koshka; Pol. kot (koczur m.); Boh. kot m. kotta f.; Sorabian kotka; Lith. kate; Finnish katti. Derivatives. Chatoyant, of a changeable colour, shining like the eyes of a cat. caterpillar fr. LL. catta pilose = hairy cat. caterwaul fr. LG. caterwanlen = to cry like cats. meerkat fr. MDu. meer catte = sea cat. catteny = place where cats are bred. kitten, catkin, cattish, catishly, catishness, catling, catty, cattily, catliness etc. ஐரோப்பாவில் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை பூனையிருந்த தில்லையென்றும், அது எகிபது நாட்டிலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்டதென்றும், cat என்னும் அதன் பெயர் எகிபதியச் சொல்லென்றும், மாக்கசு முல்லர் கூறுகின்றார். பூனை நீண்ட காலமாக எகிபது நாட்டில் வளர்க்கப்பட்டு வந்ததனாலும், ஓர் எகிபதியப் பெண் தெய்வம் பூனைத்தலை கொண்டிருந்தத னாலும், ஐரோப்பாவிற்கு எகிபது அண்மையிலிருப்பதனாலும், அவர் கூற்றுப் பொருத்தமாகவே தோன்றுகின்றது. ஆயின், குமரி நாடே மாந்தன் பிறந்தகமாதலாலும், தமிழகத்திற்கு எகிபதி னோடு நீண்ட காலமாக நீர் வாணிகமும் நிலவாணிகமும் இருந்து வந்ததனாலும், வெருகு தமிழகக் குறிஞ்சிநிலக் கருப் பொருளாத லாலும், பூனை தமிழகத்தினின்றே எகிபதுவிற்குச் சென்றிருத்தல் வேண்டும். அதனால் அதன் பெயரும் தமிழ்ச் சொல்லாயே யிருத்தல் வேண்டும். மாக்கசு முல்லர் பூனைப் பெயரையும் பூனைக் கண்ணையும் பற்றிக் கூறியிருப்பதின் (On the Name of the Cat and the Cat’s eye) சில பகுதிகள் வருமாறு:- “Our domestic cat came to us from Egypt, where it had been tamed by a long process of kindness, or, it may be, of worship. If no classical writer, Greek or Roman, do we find the cat as a domestic animal before the third century A.D. It is first mentioned by Caesarius, the physician, brother of Gregory, the theologian of Nazianzus, who died 369 A.D. He speaks of ‘Kattai endrumo’, About the same time Palladius ............ writes “contra ... ponunt” .... it is clear that when Palladius wrote (fourth century A.D.) tame mustelae were still more common than cats, whether called cati or catti. “Evagrius scholasticus (Hist. Eccl. 17, 23), about 600 A.D., speaks of katta as the common name of ‘ailouros’, here meant therefore, for cat.... “And Isidorus, his contemporary, expresses himself in the same sense when saying (12, 2, 38). ‘hune ............ catum ............ vocant. “If we admit, in the absence of evidence to the contrary effect, that the tame cat came from Eqypt to Greece and Italy in the fourth century A.D., and that the shrewd little animal was called by the Romans catus, everything else becomes intelligible. “In the ruins of Pompeii, where the bones of horses, dogs and goats have been found, no bones of cats have hitherto been discovered..... “In the language of Romania no traces exist of the word catus, probably because at the time when that Romanic dialect became settled in Dacia, catus did not yet exist as a Latin name for cat. The Romans did not transfer the name of Mustela to the cat, but by a kind of popular etymology, changed cattus into catus, and these two names, katta and catus, found their way afterwards into nearly all the languages of Europe”. “We now come to the question, whether cat was known at an early time in India. The two principal words in Sanskrit for cat are ‘maÍrjaÍra’ and ‘vidaÍla’. “MaÍrjaÍra means the cleaner, the cat being well known for its cleanliness. “The second name for cat in Sanskrit is vidaÍla or bidaÍla....” “It is difficult to analyse this word. I thought at first that it might be connected with vidaÍla (bidaÍla, in the At, AÍr. III. 1, 2, 6) which means cut in half, split in the middle, which would be a very appropriate term for a caÍt’s eye. But this would leave the lingual of unaccounted for. In the UnaÍdi-Sutras (I. 117) it is derived from vid, to shout with the suffix aÍla. This suffix shows a certain analogy with aliga in marjaliya, another name for cat....” “VaiduÍrya and VaiduÍrya, the very form that would best correspond to the Greek ailouros means in Sanskrit the cat’s eye. The cat is called man´i vaidurya lokana, ie. having eyes like the Vaid´uÍrya jewel. It is true that so ancient a grammarian as PaÍn´ini (IV. 3, 84) derives Vaid´uÍrya from viduÍra, ‘very distant,’ and that accordingly it is often spelt with a dental d. But this seems an after-thought. The transition of Vaid´aÍrya into Vaid´uÍrya is not impossible, even in Sanskrit, if we remember such parallel forms as dura and daviyas, sthuÍla, stahviÍyas, & c.....” “It was objected by KaÍtyayana that PaÍn´ini rule (PaÍn. IV. 3, 84), according to which Vaid´uÍrya is formed from ViduÍra, must be wrong, because the Vaid´uÍrya jewel does not come from ViduÍra, but from BaÍlavaÍya, and is only cut or polished at ViduÍra....” (What Can India Teach Us? - pp. 261 - 268.) இதினின்று வைடூர்ய என்பது விதூர (மிகத் தொலைவான) என்னும் சொல்லினின்று வடமொழியில் பாணினியால் திரிக்கப்பட்டுள்ளது தவறு என்பது, தெளிவாகும். வடமொழிச் சென்ற தென்சொற்களையெல்லாம், பொருந்தப் பொய்த்தலாக வேறு மூலங்காட்டி மறைப்பது, வடமொழியாளர் வழக்கமே. விடாரக என்பது பிடாரக (b) என்றும் விடால என்பது பிடால (b) என்றும், பகர முதற் சொல்லாகத் திரிக்கப்பட்டிருப்பதே வடசொல்லின் பின்மையைக் காட்டும். பிடால (bid´aÍla) என்னும் சொல்லின்கீழ், “also written vid´aÍla, of doubtful origin” என்று மானியர் வில்லியம்சு தம் சமற்கிருத ஆங்கில அகரமுதலியிற் குறித்திருப்பது கவனிக்கத்தக்கது. (த.த.நா.சொ.) பெட்டகம் (1) பெட்டகம் - பேட்டக பிள்ளுதல் = பிளத்தல், விரிதல், அகலுதல். பிள் - பிழா = 1. வாயகன்ற ஓலைக்குட்டான். (நெல்லை வழக்கு). மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி (பெரும்பாண்.276). 2. இறைகூடை. ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10 : 111). (வ.வ : 209). பெட்டகம்(2) பெட்டகம் - பேட்டக பெள் - பேழ் = அகன்ற. பேழ்வாய் = அகன்றவாய். பேழ்வாய்...... பேய்மகள் (திருமுக. 47). பேழ் - பேழை = 1. பெட்டி. அருங்கலப் பேழை (சீவக. 557). 2. கூடை. 3. மரக்கலம் (Arc). (வ.வ : 210). பெட்டி பெட்டி - பேட்ட் வடமொழியில் எகரமின்மையாற் பெட்டி பேட்டி என்றாயிற்று. பெட்டி - பெட்டகம் = 1. பெட்டி. ஆங்கிலங்கு மளப்பரும் பெட்டகம் (திருவாலவா. 27 : 22). 2. கட்டுப்பெட்டி. (வ.வ : 209). பெயர் பெயர் என்னும் சொல் முதலாவது ஓர் ஆனை விளித்தற்கோ ஒரு பொருளைச் சுட்டுவதற்கோ இடப்பட்ட சொல்லைப் பொதுப்படக் குறிப்பதாகும். அது பின்னர் ஆகுபெயராய் ஒரு பெயரால் விளிக்கப்படும், ஆளையும் குறிக்கும். இருவர் மூவர் முதலிய எண்ணடி உயர்திணைப் பெயர்களை இரண்டு பேர் மூன்று பேர் என்று சொல்வது உலகவழக்கு. பேர் என்பது பெயர் என்பதன் மரூஉ. (சொல். 35). பெயர் வினை பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்களுள் முதலிரண்டே தலைமையானவை. பெயர் என்பது ஆளையும் வினை என்பது ஆளின் செயலையும் குறிப்பன. (சொல். 34). பெரிய புராணம் பிறப்பாற் சிறப்பில்லை : எல்லாவகுப்பாரும் வீடுபேற்றிற்குரியர்; இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்னும் தமிழ்க் கொள்கை களையும் கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழாஅர் எனின் என்னும் திருக்குறட்கருத்தையும்; அறிவு, அன்பு, தொண்டு ஈகம் (தியாகம்) என்பனவே வீடுபேற்று நால்வாயில் என்பதையும் நடைமுறைச் செய்தியால் விளக்கிக் காட்டுவதும் நாட்டுவதும் பெரியபுராணம் ஒன்றே. (த. இ. வ. 81). பெரியோரைச் சுட்டாமை பெரியோரைக் கையினாற் சுட்டுவது அவமதிப்பென்று கருதி அங்ஙனம் செய்வதில்லை. சுட்ட நேர்ந்த விடத்துக் கையாற் சுட்டாது சொல்லாற் சுட்டுவது வழக்கம். அங்ஙனம் சொல்லாற் சுட்டும் போது அவர்கள் இவர்கள் என்னும் படர்க்கைச் சொல்லாலன்றி, நீர் நீங்கள் என்னும் முன்னிலைச் சொல்லாற் சுட்டக் கூடாதென்று கொண்டு, தாங்கள் என்னும் படர்க்கைச் சொல்லாற் சுட்டுவர். அதுவும் நாளடைவில் முன்னிலைத் தன்மையடைந்து விட்டதென்றும், மிகப் பெரியோர்க்கு அச்சொல் போதாதென்றும் கருதி, மடத்தம்பிரானாரை அங்குத்தையென்னும் படர்க்கைச் சொல்லால் முன்னிலைப் படுத்திக் கூறுவது சிவமட மரபு. அங்குத்தை (அங்குற்றை) யென்பது அவ்விடம் என்று பொருள்படும் சொல். தம்பிரானொடு உரையாடுபவர் நீங்கள் என்னும் பொருளில் இச்சொல்லை வழங்குவர். (சொல். 113). பெரு பெரு (கு) - வ. ப்ரஹ் (b) - இ. வே. பல் - பரு - பெரு - பெருகு. பெருங்கதை - ப்ருஹத் கதா. பெருவுடையார் = ப்ருஹத் ஈஸ்வர (வ.வ : 210). பெருந்திணை ஆடவன் பெண்டு ஆகிய இருவருக்கும் காதல் இல்லாதிருப்பது அல்லது ஒருவரையொருவர் வலிந்து கொள்வது. ....... பொருந்தாக் காமம் என்னும் சொல்லப் பெறும். பெருந்திணை பெரும்பகுதி. மக்கள் மண முறைகளுட் பெரும் பாலானவற்றைத் தன்னுள் அடக்கி நிற்பதால், பொருந்தாக் காமம் பெருந்திணையெனப்பட்டது. கவர்வு மணங்களும், இயற் கைக்கு மாறான எல்லாப் புணர்ச்சி வகைகளும் பெருந்திணையே. காதலொடு பெருந்தாமையும் நெறியொடு பொருந்தாமையும் பற்றி, பொருந்திணை பொருந்தாக்காமம் எனப்பட்டது. (த.தி.16). பெருந் தேவ மதம் ஐந்திணைத் தெய்வ வணக்கங்களுள், இரண்டே மதமாக வளர்ச்சி யடைந்தன. சேயோன் வணக்கத்தினின்று சிவ மதமும், மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும், தோன்றின. விண்ணுலக வேந்தன் கொள்கையின்பின் எங்கும் நிறைந்த இறைவன் கொள்கை ஏற்பட்டபோது, தீயின் கூறாகச் சிவன் என்றும் நீரின் கூறாக மால் (மாயோன்) என்றும், பெயரிட்டு இறைவனை வழிபட்டனர். (1) சிவமதம் இறைவன் பெயர் சேயோன், சிவன் என்னும் இரு சொற்களும், ஒரே மூலத்தினின்று தோன்றிச் சிவந்தவன் என்னும் பொருளைக் கொண்டன. சுல் - சுள். சுல் - சுல்லி = அடுப்பு, அடுக்களை. சுள் - சுள்ளை = கலமுஞ் செங்கலும் சுடும் அடுப்புப் போன்ற காளவாய். சுல் - செல் - சேல் = செந்நிறக் கெண்டை மீன். சேல்விழி = சேல் மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண். நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்பின் பெயர் செந்நிறத்தைக் குறித்தது. ஒ. நோ : எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = 1. சிவந்த முருக்க மலர். எரிமலர்ப் பவளச் செவ்வாய் (சீவக. 602). 2. செந்தாமரை. செல்வ னெரிமலர்ச் சேவடியை (சீவக. 2741). செல் - செள் - செட்டு - செட்டி = 1. சிவந்த அடியையுடைய வெட்சிச் செடி. செங்கால் வெட்சி (திருமுரு. 21). 2. முருகன். செள் - செய் - செய்யவன் = 1. சிவந்தவன். 2. கதிரவன். 3. செவ்வாய். செய்யன் = முருகன். செய்யாள் (செய்யவள்) = செங்கோலத் திருமகள். செய்யான் = சிவந்தவன், செம்பூரான். செய் - சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன். சேய் - சேயது - சேய்து = சிவந்தது. சேய்து - சேது. சேது + ஆ = சேதா. சேது + ஆம்பல் = சேதாம்பல். சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான். சேயவன் = செவ்வாய், முருகன். சேயோன் = முருகன், சிவன். சேய் - சே. சேத்தல் = சிவத்தல். சே = சிவப்பு, சேங்கோட்டை. சே - சேத்து = சிவப்பு. சேத்து - சேந்து = சிவப்பு, தீ, அசோகு. சேந்து - சேந்தன் = சிவந்தவனான முருகன். சேந்தன் - சேந்து. ஒ.நோ : வேந்தன் - வேந்து, முருகன் - முருகு. சேந்து + இல் = சேந்தில் - செந்தில். சேந்து + ஊர் = சேந்தூர் - செந்தூர் (திருச்செந்தூர்). செய் - செய்ம்மை - செம்மை - செவ்வை. செம் - செவ் - செவ - செவப்பு. செவ - சிவ - சிவப்பு - சிகப்பு. சிவ - சிவல் - சிவலை. சிவ - சிவம் - சிவன் = சிவந்தவன், நெருப்பின் கூறாக நின்று உலகத்தை இயக்கும் இறைவன். தீவண்ணன், அந்திவண்ணன், அழல்வண்ணன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக. சிவன் மாலை குறிஞ்சி நிலத்திற்குரிய கொன்றை மாலை. கொன்றை வேய்ந்தோன் - கொன்றை வேந்தன். சிவனூர்தி குறிஞ்சி நிலத்திற்குரிய (வெண்) காளை. அதன் வெண்ணிறம் தூய்மை குறித்தது. சிவன் படைக்கலம் முக் கவர்ச் சூலம். அதனாற் சிவனுக்குச் சூலி என்று ஒரு பெயர். கணிச்சியும் (மழுவும்) சிவன் படை. அதனால் அவனுக்குக் கணிச்சியான் (மழுவாளி) என்றும் பெயர். சிவனிருக்கை வீட்டுலகமும் வெள்ளிமலையும் திருக்கோவில்களும் தொண்டருள்ளமும். சிவன் குணம் தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே கட்டுக்களின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை என்னும் எட்டு. சிவன் தொழில் படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று. சிவன் வடிவம் ஐ வகை. (1) கொன்றை மாலை யணிந்து சூல மேந்திக் காளை யூர்ந்து செல்லும் செம்மேனியன். (2) அம்மையப்பன் எல்லா வுயிர்கட்கும் தாய்தந்தை போன்றவன். வலப்புறம் தந்தைக்கூறும் இடப்புறம் தாய்க்கூறும் கொண்டதனால், மங்கை பங்கன் அல்லது மாதொரு பாகன் என்று சொல்லப்படுபவன். தந்தைக்கூற்றுப் பெயர் தாய்க்கூற்றுப் பெயர் சிவன் சிவை இறைவன் இறைவி தேவன் தேவி பரன் பரை அப்பன் அம்மை ஐயன் ஐயை மலைமகன் மலைமகள் சூலி சூலினி மலைமகன் மலைமகள் என்னும் இருபெயரும், மலைவாழ் தெய்வம் என்றே பொருள்படுவன. அம்மையப்பன் வடிவம், இலங்கம் (லிங்கம்) என்னும் உரு வடிவிலும், ஓம் என்னும் ஒலி வடிவிலும், பிள்ளையார் சுழியென்னும் உகர வரி வடிவிலும், குறிக்கப் பெறும். இலக்கு = குறி. இலக்கு - இலக்கம் - இலங்கம். அம்மையப்பன் வடிவு, இறைவனின் உண்மை வடிவைக் காண முடியாத இல்லறவாணரான பொது மக்கட்கே. உயர்ந்த அறிவுபடைத்த சித்தரும் முனிவரும், இறைவனின் ஆற்றலையே பெண் கூறாக உருவகிப்பர். இலங்க வடிவு நிலையில், இறைவனாற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள் என்றும், மேல் நிற்கும் இலங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும், பெயர். ஆவுடையாள் என்பது ஆவுடையம்மை, ஆவுடையாச்சி என்றும் வழங்கும். (3) குரவன் தகுதியுள்ளவர்க்கு, அந்தண (அருள் முனிவன்) வடிவில் வந்து உயரறி வுறுத்தும் பரம ஆசிரியன். முனிவன் கோலத்திற் சடையுடைமையால், சிவன் சடையன், சடையப்பன் என்றும் பெயர் பெற்றான். புரம் = உயர்நிலைக் கட்டிடம், அஃதுள்ளவூர். புரம் - பரம் = மேலுலகம், வீட்டுலகம். பரம் - பரமன் = மேலோன், இறைவன். பரம் - வரம் - வரன் (குறள். 24). (4) எண் வடிவன் (அட்டமூர்த்தி) நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் (ஆன்மா) என்னும் எண் பொருள் வடிவினன். எங்கும் நிறைந்திருப்பது பற்றி எண்டிசையும் சிவனுக்கு எண் கையாகச் சொல்லப்படும். அதனால் எண்டோளன் (பிங்.) என்று பெயர். கதிரவன் திங்கள் தீ என்னும் முச் சுடரும் சிவனுக்கு முக்கண்ணாகக் கூறப்படும். அதனால் அவனுக்கு முக்கண்ணன் என்று ஒரு பெயர். (5) நடவரசன் உயிரானது நினைவு சொல்வு செயல் என்னும் முத்தொழிற் படுமாறு, உடம்பின் நடுவுள் தொங்கி நின்று இயங்கும் நெஞ்சத் துடிப்பை நடமாக வுருவகித்து, அது போன்று எல்லா உயிரினங்களும் (படைப்பு காப்பு அழிப்பு என்னும்) தோன்றல் வாழ்தல் மறைதல் ஆகிய முத்தொழிற்படுமாறு, பேருலகப் பரவெளியுடம்பின் நடுவில் நின்று இறைவன் நெஞ்சம் இயங்குவதாகக் கோடித்து (பாவித்து), அவன் முத் தொழிலையும் இன்ப நடமாக வுருவகித்து, அவனை நடருள் தலைவனாக்கி, நடவரசன் (நடநாயகன், ஆடவல்லான்) என்று குறித்தனர். இவ்வுருவகம், அண்டத்திற் கொத்தது பிண்டத்திற்கும். என்னும் உண்மையை, பிண்டத்திற் கொத்து அண்டத்திற்கும் எனக் காட்டிய வாறாம். குமரிநாடிருந்த பண்டைக் காலத்தில், குமரிமலைக்கும் பனி மலைக்கும் நடுவிடத்திலிருந்த தில்லை நகரைப் பாண்டியன் பாருக்கு நெஞ்சத் தாவாகக் கொண்டு, அங்கு நடவரசன் திருப் படிமை நிற்க அம்பலம் அமைத்தான். நடவரசப் படிமைகள் நிற்கும் கோவில்களெல்லாம், அம்பல மென்று பெயர் பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. அம்பலம் ஆடரங்கு. அம்பலக் கூத்தன், மன்றாடி என்பன தில்லைச் சிவன் பெயர்கள். பேரம் பலம் ஏற்பட்டபின், ஆடம்பலம் சிற்றம்பலம் எனப்பட்டது. அப்பெயரே இன்று சிதம்பரம் எனத் திரிந்து வழங்குகின்றது. சிற்றம்பலம் பொன்னால் வேயப்பட்டபின், பொன்னம்பலம் எனப்பட்டது. அதன் பின்னரே மணியம்பலம் வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலியவை தோன்றின. கட்புலனாகக் காணும் நடவரசன் படிமை, அகக் கரண வளர்ச்சி யடையாத பொது மக்கட் குரியதே. சிறந்த அறிவரான அடியார், திறந்த வெளியையே அம்பலமாகக் கருதுவர். அப்பர வெளியம்பலமே திரை நீக்கிக் காட்டப்படும். அதுவே சிற்றம்பல மருமம் (சிதம்பர ரகஸியம்) என வழங்குவது. நளி - நடி - நடம், நடனம். நடம் - நட்டம் - நட்டுவன். நட்டம் - வ. ந்ருத்த, நாட்ய, உம்முதல் = கூடுதல். உம் - அம் - அமை. அமைதல் = 1. நெருங்குதல், அடர்தல். வழையமை சாரல் (மலைபடு. 161). 2. கூடுதல். அமை - அவை = கூட்டம், குழாம். 3. பொருந்துதல். பாங்கமை பதலை (கந்தபு. திருப்பர. 9). 4. நிறைதல். உறுப் பமைந்து (குறள். 791). அம் - அம்பு - அம்பல் = 1. கூடுதல், கூட்டம். ஒ. நோ : உம் - கும் - கும்பு - கும்பல். அம்பல் - அம்பலம் = கூட்டம், அவை, கூடுமிடம், மன்றம். 2. குவிதல், குவிந்த அரும்பு அல்லது மொட்டு. அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல். (இறை. 22, உரை). ஒ. நோ : கும் - கும்பு - கூம்பு. கும் - குமி - குவி. 3. அரும்பு போன்ற சில ருரை பழி. அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் (தொல். கள. 46). அம்பலும் அலரும் களவு. (இறை. 22). ம. அம்பலம், அம்பல, து. அம்பில, வ. அம்பர. வடசொல்லில் லகரம் ரகரமாகத் திரிந்திருத்தல் காண்க. அத் திரிசொல்லையே அம்பலம் என்னும் இயற் சொல்லிற்கு மூலமாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியிற் காட்டி யிருப்பது, இற்றைத் தமிழரின் இழிவான அடிமைத் தனத்தையே காட்டும். சிவ வழிபாட்டு வடிவம் சிவனுடைய ஐ வகை வடிவுகளுள்ளும், பொது மக்கள் வழிபாட்டிற் கேற்றது அம்மையப்ப வடிவமே. சிவ வழிபாட்டு முறை காலையிற் குளித்து, உண்ணுமுன், தீய நினைவின்றி அமைந்த வுள்ளத்துடன் அக்க மாலை யணிந்து திருநீறுபூசிச் சிவப் படிமை முன் நின்று, இயலும் போதெல்லாம் தேங்காயுடைத்து வாழைப் பழத்துடன் படைத்து, நறும்புகை காட்டிப் பூச்சாத்திக் கை குவித்து, (ஓம் என்னும் முளை மந்திரத்தை முன்னிட்ட) சிவ போற்றி என்னுந் திருவைந் தெழுத்தை ஓதி, பல்வேறு போற்றித் தொடர்களால் வழுத்தி, நெடுஞ்சாண்கிடை வணக்கஞ் செய்து எழுந்திருப்பதே சிறந்த முறைப்பட்ட சிவ வழிபாடாகக் கொள்ளப்பட்டது. உழவரும் உழைப்பாளிகளும் தொழிலாளரும் காலையில் சிவ வணக்கம் மட்டும் செய்ய முடியும். திருநாட்களிலும் திருவிழாக் காலத்திலும் எல்லாரும் கோவில் வழிபாடு செய்வர். சிவனை யடைந்தவரின் மும் மாசும் எரிந்து சாம்பலாய் விடுகின்றன என்பதை உணர்த்தற்கே, திருநீறு பூசப்பட்டது. அது பூதி (பிங்.). என்றும் சொல்லப்படும். புழுதி - பூதி = தூள், நீறு, திருநீறு. தேங்கா யுடைத்து அதன் நீரைச் சிந்தி முறியைப் படைப்பது, வழிபடுவோன் தன் தீவினை நினைந்து மனமுடைந்து கண்ணீர் சிந்தித் தூய்மைப்பட வேண்டுமென்பதையும்; வாழைப் பழத்தைப் படைப்பது, அதன் சதைபோல உள்ளம் கனிந்து மென்மையும் இனிமையும் பெற வேண்டுமென்பதையும், குறிப்பாக வுணர்த்தும். சிவன் கோவிற் பூசகர், குருக்கள், பண்டாரம், ஓதுவார், புலவர், போற்றி எனப் பல பெயர் பெற்றனர். மூவேந்தரும் முதற்கண் சிவனடியாராயிருந்து, பின்னர் ஆரியர் (பிராமணர்) வந்து முத்திருமேனிக் கொள்கை புகுத்திய பின், இடையிடை ஒரோவொருவர் மாலியத்தையும் (வைணவத்தை யும்) தழுவினர். தம்மைப் போன்றே தாம் வழிபடு தெய்வமும் ஏற்றமாக இருந்து இன்புற வேண்டுமென்று, தமக்குரிய சிறப்பை யெல்லாம் தம் தெய்வத்திற்கும் செய்தனர். அச்சிறப்புக்கள் தெய்வத்தின் ஒப்பிலா வுயர்வு நோக்கிப் பன்மடியுயர்வாகச் செய்யப்பட்டன. வானளாவும் எழுநிலைக் கூட கோபுரமும் மாட மண்டபங்களும் சுற்று மதிலுங் கொண்ட திருவுண்ணாழிகைத் திருக்கோவில், ஊர்வலத்திற்குச் சிறந்த யானை குதிரையொட்டக வெண் காளைகள், குடை கொடி முதலிய சின்னங்கள், கருவூல களஞ்சிய பண்டசாலைகள், பல்வகை அணிகங்கள் (வாகனங்கள்), சப்பரங்கள், விலை யுயர்வும் ஓவிய வேலைப்பாட்டுச் சிறப்புமுள்ள பொன்னாடை பொன்மணி யணிகள், திருக்குளம், பூங்கா, திருப்பள்ளியெழுச்சி யின்னியம், திருமுழுக்காட்டு, திருவின்னமுது படைப்பு, திருநாள் ஆரவார ஊர்வல உலாக்கள், ஆண்டு தோறும் (முத் தட்டு முதல் எழு தட்டு வரை கொண்ட) தேரோட்ட தெப்பத் தேர்த் திருவிழாக்கள், நில மானிபங்கள், இயவர், காவலர் ஏவலர் மேற்பார்வலராகிய பணிமக்கள், முதலிய பல் வகைச் சிறப்பும் வேந்தராலும் மன்னராலும் பெருஞ் செல்வராலும் செய்யப்பட்டன. இசையாலும் நடத்தாலும் இறை வனை இன்புறுத்த நால்வகைப்பட்ட எல்லாக் கருவியிசையும் ஆட்டும் பாட்டும் கோவில்களிலும் திருவுலாக்களிலும் நிகழ்ந்தன. இதற்கென்றே பாடகரும் கணிகையரும் நட்டுவரும் முட்டுவரும் அமர்த்தப்பட்டனர். கொண் முடிபு (சித்தாந்தம்) தலைவன் தளையன் தளை என்னும் மூன்றும் தொடக்கமிலா முப்பொருள்கள். காமம் (காமியம்) வெகுளி (ஆணவம்) மயக்கம் (மாயை) எனத் தளை மூவகைத்து. தெரிந்தும் தெரியாமலும் செய்யும் இருவகைத் தீவினையும் நீக்கி இறைவனை வழிபடின், இல்லறத்தாலும் துறவறத்தாலும் இருபாலாரும் வீடு பெறலாம். வீட்டுலகம் சிவனுலகம் (சிவ வுலகம்) எனப்படும். வீடு பெறும் வரை ஆதன் பிறவிக் கடலுள் அழுந்தும். நிலைத்திணை, நீர்வாழி, ஊரி, பறவை, விலங்கு, மாந்தன், தேவன் எனப் பிறவி எழு வகை. இதுவே சிவக் கொண் முடிபு. அன்னீறும் ஆனீறும் ஒன்றன் பாலையும் உணர்த்தும். எ - டு : தனியன் (தனிப்பாடல்), தடியன் (பூசணிக்காய்), அலவன், மடையான், குண்டடியன், கடுவன். காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். (குறள். 370). என்பதில், மும் மாசு குறிக்கப்பட்டிருத்தல் காண்க. காமங் கெடுதல் என்பது, இல்லறத்திற்குப் பிறனில் விழையா மையும் பிறன் பொருள் வெஃகாமையும்; துறவறத்திற்கு ஆசை அடியோடொழிதல். தெரியாது மிதிப்பினும் தீச்சுடுதல் போல, தெரியாது செய்யும் தீவினையும் தீங்கு விளைக்கும் என்பது கொள்கை. நல்வினை யாற் கேடில்லை. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (குறள். 320). இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள். 5). என்பதில், இருவினையென்றது தெரிந்தும் தெரியாதும் செய்யும் தீவினைகளையே. தசரதன் வேட்டையாடிய போது தெரியாது கொன்ற சிறுவனின் குருடரான பெற்றோர் இட்ட வைவே (சாபமே), பின்னர் இராமனைக் காட்டிற் கேகச் செய்தது என்பது, நடுநிலையறிஞர் கருத்து. அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (குறள். 46). என்பதனால், இல்லறத்தாலும் வீடுபேறுண்டென்பதே தமிழர் கொள்கையாம். ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து. (குறள். 48) ஆதலால், துறவறத்தான் பொறையினும் இல்லறத்தான் பொறையே பெரிதாம். பேரின்ப வீட்டைப் பெற்றதாகப் பெரிய புராணங் கூறும் சிவனடியாருட் பெரும்பாலார், இல்லறத்தில் நின்றவரே. இருவகை யற வாழ்க்கையையும் இறைவன் ஏற்கின்றான் என்பதை யுணர்த்தற்கே, அவனுக்கு அம்மையப்ப வடிவும் அந்தண வடிவும் குறிக்கப்பட்டுள்ளன. மெய்ப் பொருளியல் சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. (குறள். 28). என்றார் திருவள்ளுவர். ஆகவே, நிலம் நீர் தீ வளி வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றின் சிறப்பியல்புகளான நாற்றம் சுவை ஒளி ஊறு ஓசை என்னும் ஐந்தும், அவற்றை யறியும் கருவிகளான மூக்கு நாவு கண் மெய் செவி என்னும் அறிவுப் பொறிகள் ஐந்தும், பல்வேறு வினை செய்யும் கை கால் வாய் எருவாய் கருவாய் என்னும் கருமப் பொறி கள் ஐந்தும், மதி உள்ளம் (சித்தம்) மனம் நானுணர்வு என்னும் அகக் கரணங்கள் நான்கும், அவற்றைக் கொண்டு பொருள்களை ஆய்ந்தறியும் ஆதனும், அதன் வினைகட் கெல்லாம் இடம் போன்ற நிலைக்களமாகிய காலமும் தூண்டுகோலான ஊழும் ஆகிய இரண்டும், எல்லாவற்றையும் இயக்கும் இறைவனும், ஆக மொத்தம் மெய்ப் பொருள்கள் (தத்துவங்கள்) இருபத் தெட்டாம். சிவமத விரிவளர்ச்சி சிவ மதம், நாளடைவிற் பல்வேறு வணக்கங்களையும், இறுதியில் திருமாலியத்தையும் தன்னுட் கொண்டது. நாக வணக்கத்தார் நாக வுருவைத் தம் தலையுச்சியில் அணிந்திருந்தனர். அவரைச் சிவனியராக்கற்கு, சிவன் முடிமீதும் நாக வுருவிருப்பதாகப் படிமை யமைத்து விட்டனர். அதோடு, சிவன் பாம்புகளையே பல்வேறு அணிகளாக அணிந் திருப்பதாகவும் காட்டி விட்டனர். அதனால், நாகப்பன், பாம்பணியன் முதலிய பெயர்களும் தோன்றின. பாம்பலங் காரப் பரன் (திருக்கோ. 11). தமிழகம் முழுவதும் வேந்தராலும் தொழப்பட்ட காளி, சிவன் தேவியாக்கப்பட்டாள். அது திருவாலங்காட்டுத் திருநடப் போரில் அவள் தோல்வியுற்றதன் விளைவாகக் காட்டப்பட்டது. ஆண்பாற் கேற்ற ஊர்த்த நடனம் பெண்பாற் கேற்காமையால், காளியடியாரும் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய தாயிற்று. உவர் - இவர். உவர் - ஊர். ஊர்தல் - ஏறி நடத்துதல் அல்லது செல்லுதல், உயர்தல். ஊர் - ஊர்த்தம் - வ. ஊர்த்தவம் (uÍrdhva). சிவையுங் காளியும் ஒன்றானதினால், சிவை நீலி (கருப்பி) யெனவும், காளி இறைவி (இறைவன் தேவி) யெனவும், பெயர் பெற்றனர். அம்மை ஐயை என்பன இருவருக்கும் பொதுப் பெயர்கள். அம்மை - அம்மா - வ. அம்பா. காளி சிவன் தேவியான பின், காளியப்பன், பேய்ச்சியப்பன் முதலிய பெயர்கள் சிவனுக்குத் தோன்றின. விண்ணக வாழ்வு நிலையற்றதாய் எழு பிறவியுள் அடங்கினதினாலும், விண்ணக வேந்தனுக்கு மழை பெய்விக்கும் அதிகாரமே யிருந்ததனாலும், நிலையான வீட்டுலகத் தலைவனும் எல்லாம் வல்லவனுமான சிவனை வழிபடும் வழிபாட்டுள், வேந்தன் வணக்கம் மறைந் தொழிந்தது. இறுதியில், திருமாலும் பெண்ணாக மாறிச் சிவ பெருமானின் இடப்பாகத் தமர்ந்தான் என்னும் கதை யெழுந்தது. அரி என்னும் திருமால் பெயர் இதனால் தோன்றியிருக்கலாம். அரம் = சிவப்பு. அரன் = சிவன். அரன் - அரி (பெண் பால்.). பச்சையன் என்னும் பொருள் பிற்காலத்தது. திருமால் மதமும் ஒரு தனி மதமாகத் தொன்றுதொட்டு இருந்து வந்திருப்பினும், சிவனுக்கே இறைவன் என்னும் பெயருண்மை யும், பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் என்னும் சிலப்பதிகாரக் கூற்றும் (5 : 179), சிவ மதத்தின் தலைமையை யுணர்த்தும். உலக மெல்லாம் உடையவர் என்பது பற்றி, சிவனுக்குப் பெருவுடையார் என்றும் பெயர். ஏழுடையான் பொழில் (திருக்கோ. 6). (2) திருமால் மதம் திருமால் நிறமும் பெயரும் எல்லாம் வல்ல இறைவனையே, முல்லை நிலத் தெய்வ அடிப்படையில் நீரின் கூறாகக் கொண்டு, நீரைப் பொழியும் முகில் நிறம் பற்றி மாயோன் (மாயன், மாயவன்) என்றும், மாலோன் (மால், மாலன், மாலவன்) என்றும், கார் வண்ணன் (கரியன், கரியவன்) என்றும், முகில் கூடும் வானிறம் பற்றி நீல வண்ணன் (மணி வண்ணன், கடல் வண்ணன்) என்றும், பெயரிட்டு வழிபட்டு வந்துள்ளனர் ஒருசார் தமிழர். மால் என்னும் பெயர் அடையடுத்துத் திருமால், பெருமால் என வழங்கும். பெருமால் - பெருமாள். முகிலுக்கும் அது நிற்கும் வானிற்கும் விண் என்னும் பெயருண்மையால், அப்பெயரை அடியாகக் கொண்ட விண்டு என்னும் பெயரும் திருமாலுக்கு ஏற்பட்டது. விள்ளுதல் = விரிதல், திறத்தல், வெளியாதல். விள் - விண் = வெளி, வானம், முகில், மேலுலகம். விண் - விண்டு = வெளி, வானம், முகில், திருமால், மேலுலகம். பச்சை நிறம் நீலநிறத்திற்கு இனமாதலால், பச்சையன், பச்சையப்பன் என்னும் பெயர்களும் திருமாலிற்குத் தோன்றின. திருமா லிருக்கை விண்டு + நகர் = விண்ணகர் = 1. திருமால் கோவில், திருமால் வீட்டுலகம். விண்ணகர் - விண்ணகரம். பரம பதம் = பரமன் பதிந்திருக்கும் இடம், வீட்டுலகம், திருமாலுலகம். திருமால் மலரணி முல்லை நிலத்திற்குரிய துழாய் மாலை. திருமால் ஊர்தி முல்லை நிலத்திற்குரிய கலுழன். கலுழ்தல் = கலத்தல். கலுழ் - கலுழன் = வெண்டலையும் செவ்வுடம்புமாக இருநிறங் கலந்த பறவை. கலுழன் - வ. கருட (garud´a). திருமால் படை சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து. ஐம்படை யுருவாகச் செய்த ஐம்படைத் தாலியென்னும் அணியை, மத வேறுபாடின்றிச் சிறு பிள்ளைகட்குத் தொன்று தொட்டுக் காப்பாக அணிந்து வந்திருக்கின்றனர். தாலி களைந்தன்று மிலனே (புறம். 77). பொன்னுடைத் தாலி யென்மகன் (அகம். 54). அமளித் துஞ்சு மைம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர் (மணி. 7 : 56-7) அழகிய வைம்படையு மாரமுங் கொண்டு (பெரியாழ். திரு. 1. 4 : 5) ஐம்படை சதங்கை சாத்தி (பெரிய பு. தடுத்தாட். 4). தன்படைக ளான திரு வைம்படை தரித்தே (கலிங். அவ. 9) தாலி யைம்படை தழுவு மார்பிடை (கம்ப. நாடு. 58). ஐம்படை மார்பிற் காணேன் (திருவிளை. 39 : 25). திருமால் நிலைகள் வானிற் கலுழனூர்தலும், நிலத்தில் நிற்றலிருத்தல் கிடத்தலும். கிடத்தற்குச் சிறந்த இடம் திருவரங்கம். திருவரங்கம் - வ. ஸ்ரீரங்க. திருமால் தொழில் படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே (கம்ப. சிறப்புப் பா. 1). திருமால் வழிபாடு அக்க மாலைக்குத் தலை மாறாகத் துளசிமணி மாலை யணிந்து, திருநீற்றிற்குத் தலைமாறாகத் திருமண் காப்புச் சாத்தி, சிவ போற்றி என்பதற்குத் தலைமாறாக மால் போற்றி அல்லது மாய போற்றி என்று ஓதி, பிறவகை களில்லாம் சிவனியர் போன்றே செய்து வழிபடல். சிவனிய அரசர் சிவன் கோவில்கட்குச் செய்தது போன்று, மாலிய அரசரும் திருமால் கோவில்கட்குச் சிறப்புச் செய்து மானியம் விட்டனர். இரு சாராருள்ளும் ஒரு சிலர், சமயப் பொது நோக்கராயிருந்து இரு மதக் கோவில்கட்கும் இயன்றது செய்தனர். திருமால் கோவிற் பூசகர் திருவடி பிடிப்பான், நம்பி எனப் பெயர் பெற்றனர். கொண் முடிபு பெரும்பாலும் சிவனியத்தை யொத்ததே. இறைவன் பெயரும் வீட்டுலகப் பெயரும் சில சொற்களும் மட்டும் வேற்றுமை. மெய்ப் பொருளியல் சிவனியத்தை யொத்ததே. சிவனியமும் மாலியமும், எல்லாம் வல்ல இறைவனான ஒரே தெய்வத்தை வெவ்வேறு பெயரால் வணங்கும் மதங்களாதலால், சிவனுந் திருமாலும் வெவ்வேறு தெய்வமென்றோ, அவரிடை ஏற்றத் தாழ்வுண்டென்றோ, குமரி நாட்டார் கொள்ள வில்லை. அரியுஞ் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு. என்பது பழமொழி. அரனதிக னுலகளந்த வரியதிக னென்றுரைக்கு மறிவிலோர்க்குப் பரகதிசென் றடைவரிய பரிசேபோற் புகலரிய பண்பிற்றாமால் (கம்ப. நாடவிட். 24). என்றார் கம்பர். இரு மதத்தார் பிள்ளைகட்கும் ஐம்படைத்தாலி அணியப்பட்டு வந்ததும், இதை வலியுறுத்தும். முற்காலத்தில், ஆடவரும் பெண்டிர் போன்றே தலைமுடியை நீள வளர்த்துக் கொண்டை முடித்தனர். நோயில்லா நிலையில் முடி வெட்டுவது, அவமானத் தோல்விக்கும் துயரத்திற்கும் அடை யாளமாகக் கருதப்பட்டது. இறைவன் முன் தம்மைத் தாழ்த்து வதற்கே, தெய்வப் பற்றாளர் திருக்கோவில்கட்குச் சென்று தம் தலையை மழித்துக் கொண்டனர். அவ்வழக்கம் இன்றும் ஓரளவு இருந்து வருகின்றது. இனி, அடிமைகட்குக் காதில் துளையிடுவது அக்காலத்து வழக்கம். தெய்வப்பற்று மிக்க செல்வரும், தம்மை இறையடிமை யராகக் கொண்டு, தம் காதில் துளையிட்டனர். அது தூர்ந்து போகாமைப் பொருட்டே, கடுக்கன் குண்டலம் முதலிய காதணி களை அணிந்து வந்தனர். மந்திர வெழுத்தும் சக்கரமும் பொறித்த தகட்டை உட்கொண்ட, குளிசம் போன்ற தெய்வக் காப்பான முன்கையணியே, இன்று காப்பு என வழங்கி வருகின்றது. நாகமும் நாகப்படமும் போன்ற உருவமைந்த எல்லா அணிகளும், தொடக்கத்தில் நாக வணக்கத்தைக் காட்டியவையே. பண்டை ஐம்படைத்தாலியும் சங்குத்தாலியும் ஆமைத்தாலியும் போன்று, இன்று குறுக்கை (சிலுவை)த் தாலியும் மூவிலைத் தாலியும் கிறித்தவப் பெண்டிரால் அணியப்படுகின்றன. இங்ஙனம் தெய்வப் பற்றால் அணியப்படும் உருக்களெல்லாம், பொன்னாலும் மணியாலும் இயன்று, அழகிற்காக அணியும் அணிகலங்களாகவே மாறிவிடுகின்றன. என்றும் இயற்கை வடிவிலேயே அணியப்பட வேண்டிய அக்க மணியும், ஒரோ ஒருவரிடைப் பொற் பூச்சுப் பெற்றுவிடுகின்றது. (3) கடவுட் சமயம் ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முதலிய வரையறை யின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லா வற்றிற்கும் பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறா திருக்கும் பரம் பொருளை உள்ளத்தில் அகக் கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம். பேர் என்றது, இயற் பெயரும் பண்பு பற்றிய சிறப்புப் பெயரும் போன்றவற்றை. கடவுட் சமயம், இல்லறம் துறவறம் என்னும் இருவகை அற வாழ்க்கைக்கும் பொதுவாம். அதனாற் பெறும் பேரின்பமும், இம்மை மறுமை யிரண்டிற்கும் பொதுவாம். இம்மையிற் பெறுவது உடலிருந்த வீடு என்றும், மறுமையிற் பெறுவது உடலிறந்த வீடு என்றும் பெயர் பெறும். எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். எல்லா வுலகங்களை யும் ஆள்வதால் ஆண்டவன் என்றும், எங்குந் தங்கியிருப்பதால் இறைவன் என்றும், எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப்ப தால் பகவன் என்றும், பெயர் பெறுவன். ஆண்டவன் முதலிய பிற பெயர்கள் பெருந் தேவ மதங்களிலும் வழங்குவதால், கடவுட் சமயத்திற்குத் தனிச் சிறப்பாகவுரிய தெய்வப் பெயர் கடவுள் என்பதே. தெய்வம் என்னும் பெயர், இடத்திற்கேற்ப மூவகைத் தெய்வத்தை யுங் குறிக்கும். தெய்வம் உணாவே (தொல். 964). என்பதிற் சிறு தெய்வத்தையும், நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம் (இராமலிங்க அடிகள் பாடல்) என்பதிற் பெருந் தேவனையும், தெய்வம் நின்று கொல்லும் என்னும் பழமொழி யிற் கடவுளையும், குறித்தல் காண்க. வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும் (குறள். 50) என்பதில், சிறு தெய்வத்தின் பாற்பட்ட தேவருலக வாழியைக் குறித்தது. தன்வயத்த னாதல், எங்கும் நிறைதல், எல்லாம் வல்லனாதல், எல்லாம் அறிதல், என்று முண்மை, இயல் மாறாமை, முழுத் தூய்மை, ஒப்புயர் வின்மை, பேரருளுடைமை, வரம்பிலின்ப முடைமை என்பன கடவுளின் இயல்களாகச் சொல்லப்பெறும். எல்லாம் வல்ல இறை வணக்கத்தையே கொண்ட சிவனியம், மாலியம், யூதம், கிறித்துவம், இசலாம் முதலிய எல்லா மதங் கட்கும், கடவுட் சமயம் பொதுவாம். இசுமவேல இசுரவேலரின் முன்னோனான ஆபிரகாமிற்கு முன்பே, நோவா காலத்துப் பெரு வெள்ளத்திற்கும் முன்னரே, கடவுளை உலகில் முதன் முதலாகக் கண்டவர் குமரி நாட்டுத் தமிழரே. கடவுள் என்னுஞ் சொல் தொல்காப்பியத்தில் ஆளப் பட்டிருப்பதே, அதற்குச் சான்றாம். காமப் பகுதி கடவுளும் வரையார். (தொல். புறத். 27). கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல். புறத். 33) கடவுள் என்னுஞ் சொல், எல்லாவற்றையுங் கடந்து எண்ணிற்கும் எட்டாத பரம் பொருளையே குறிக்கும். சிறு தெய்வவணக்க ஆரியர் (பிராமணர்), பிற்காலத்தில் அதைப் பிழைபட ஆண்டு விட்டனர். கடவுட்கு உருவமின்மையால், உருவ வணக்கமு மில்லை. எவரும் எங்கும் என்றும் தமித்தும் பிறரொடு கூடியும், கடவுளைத் தொழலாம். திருவள்ளுவர் கடவுட் சமயத்தார். அதனால், முதற் பகவன், வாலறிவன், மலர்மிசை யேகி, விருப்பு வெறுப்பில்லான், இறைவன், ஐம்புலம் வென்றான், உவமையிலி, அறவாழி யந்தணன், எண் குணத்தான், பிறவி நீக்கி எனக் கடவுட்குரிய பல் சமயப் பொதுப் பெயர்களையே தம் கடவுள் வாழ்த்தில் ஆண்டார். அங்கிங் கெனாதபடி யெங்கும்பிர காசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம் தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய் என்றைக்கு முள்ளதெதுமேற் கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன வுருவெளிய தாகவும் கருதியஞ் சலிசெய்குவோம். (தாயு. பரசிவ. 1). பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே பாவித்தி றைஞ்சவாங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்கமனமும் நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின் நாணுமென் னுளநிற்றிநீ நான்கும்பி டும்போ தரைக்கும்பி டாதலால் நான்பூசை செய்யல்முறையோ விண்ணே விணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே யவித்தின் முளையே கண்ணே கருத்தே என் எண்ணே யெழுத்தே கதிக்கான மோனவடிவே கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு கருணாகரக் கடவுளே. (தாயு. கருணா. 6). எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே. (பட்டினத். பொது. 30). உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகி லேனுயர் பொன்னெனவே ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே. (பட்டினத். பொது. 61). முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய் அப்பாழும் பாழா யன்புசெய்வ தெக்காலம். (பத்திர. 113). வெட்ட வெளிக்குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக் கிட்ட வரத்தேடிக் கிருபைசெய்வ தெக்காலம். (பத்திர. 199). நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலு புட்பஞ் சாத்தியே சுற்றி வந்து முணமு ணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசு மோநம் நாத னுள்ளி ருக்கையில் சுட்ட சட்டி சட்டு வம்க றிச்சு வைய றியுமோ. (சிவ. வாக். 518). கொண் முடிபு சிவ மதத்திற்குக் கூறிய கொண்முடிபே கடவுட் சமயத்திற்கும். தலைவன் தளையன் தளை என்னும் முப்பொருளை; கடவுள் கட்டுணி கட்டு என்று சொன் மாற்றியுங் கூறலாம். இல்லற வாயிலாகவும் இறைவன் திருவடி யடையலா மாதலால், நல் வினையாற் கேடில்லை. செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐயம் அறாஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கின் எய்த லுண்டெனின் தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே. (புறம். 214). பிறவாராயினும் என்பதில் உம்மை எதிர்மறை. அசை நிலை என்று பழைய வுரை கூறுவது பொருந்தாது. இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்பதே குமரி நாட்டுத் தமிழர் கொள்கை. சுந்தர மூர்த்தி நாயனார் சங்கிலி பரவை யாராகிய தேவ கணிகையரொடு இன்பம் நுகர்ந்தது, இறைவனுக் குடம்பாடென்று சொல்லப்படும் போது, இறைவன் வகுத்த முறைப்படி கரணத்தொடு மணந்த கற்புடை மனைவியொடு இல்லறம் நடத்துவது, எங்ஙன் இறைவனுக்கு ஏற்கா திருக்கும்? மெய்ப் பொருளியல் சிவ மதத்திற்குக் கூறியதே கடவுட் சமயத்திற்கும். கடவுட் சமயம் துறவியர்க்கே உரிய தென்றும், இல்லறத்தார்க்கு உருவ வணக்கம் இன்றியமையாததென்றும், தன்னலப் பிராமணப் பூசாரியரால், ஒரு தவறான கருத்து இற்றைத் தமிழ ருள்ளத்திற் புகுத்தப்பட்டுள்ளது. கிறித்தவரும் முகமதியரும் உருவத் துணை யின்றியே இறைவனை வழிபட்டு வருகின்றனர். கற்றாருங் கல்லாருமான தமிழரும், வீட்டிலும் காட்டிலும் வழிப் போக்கி லும் துன்பம் நேர்ந்த விடத்து, அண்ணாந்து வானை நோக்கி ஆண்டவனே! அல்லது கடவுளே என்று விளித்து வேண்டுதல் செய்வது; அல்லது ஒருவர் அறமுறை தவறி அட்டூழியஞ் செய்யும்போது, வானை நோக்கி, அதோ போகிறானே, அவன் கேட்பான். என்று முறையிடுவது, இன்றும் வழக்கமாயிருக் கின்றது. ஆதலால், கல்லார்க்கோ, பொது மக்கட்கோ, இல்லறத் தார்க்கோ, கடவுள் வணக்கமும் வழிபாடும் ஏற்கா தென்பது பொருந்தாது. உருவ வணக்கப் பழைய ஏற்பாடு (Old Testament) நீங்கி, உருவிலா வணக்கப் புதிய ஏற்பாடு (New Testament) குமரி நாட்டிலேயே அறிஞரிடைத் தொடங்கி விட்டதென்றும், அது ஈரறத்தார்க்கும் ஏற்கு மென்றும், உண்மை யறிக. பெருமைப்பெண் அம்மான் மகளும் அத்தை மகளும்போல முறைகாரப் பெண் ணாயின் உரிமைப் பெண் என்றும், வேறு செல்வர் வீட்டுப் பெண்ணாயின் பெருமைப்பெண் என்றும் அழைப்பது வழக்கம். (த. தி. 19). பெற்றி இறும்பூது ஆற்றற் பேற்றைச் சித்தி என்றும், அதை அடைந்தவரைச் சித்தர் என்றும் வடமொழியாளர் சொல்வர். சித்தி என்னும் சொல்லிற்குக் கைகூடல் அல்லது முயற்சி வெற்றி என்பதே பொருள். ஆதலால் சித்தியைப் பெற்றி என்னும் சித்தரைப் பெற்றியர் என்றும் தமிழிற் கூறலாம். பெறு - பெற்றி - பெற்றது, பெற்ற தன்மை, பேறு; பெற்றியார் = சிறந்த பேறு பெற்றவர். பேறு என்னும் பொதுச் சொற்கும் சிறந்த பேறு என்னும் பொருள் இருத்தலால். சித்தரைப் பெற்றியர் என்று சொல்வது பொருத்தமே. (த. இ. வ. 95). பெற்றியர் ஆகார் (சித்தர் ஆகார்) பிறப்பால் ஏற்றத் தாழ்வு வகுத்துப் பிறரை இகழ்வோர், உள்ளத் தூய்மையும் இல்லார்; உலகத் துறவும் கொள்ளார். ஒருவகைப் பெற்றியும் (சித்தியும்) ஒல்லார். (த. இ. வ. 95). பெற்றோர் பெற்றோர் மரம் போல்வர். பிள்ளைகள் கிளைகளும் கொழுந்தும் போல்வர். அதனால் மகனைக் கொம்பன் என்றும் மகளைக் கொம்பு என்றும் இருவரையும் பொதுப்படக் குலக் கொழுந்து என்றும் கூறுவது வழக்கம். ஒரு மரத்தின் அடியில் முளைக்கும் முளையைப் போன்று மகன் இருத்தலின் அவனுக்குக் கான்முளை என்றும் பெயர். (சொல். 3). பே பே - வ. பீ (bh) பேபே என்பது அச்சக் குறிப்பு. பே = அச்சம். பேஎமுதிர் கடவுள் (குறுந். 87). பே - பேம் = அச்சம். பேம்நாம் உரும்என வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள. (தொல். 848). பே - பேய் = அச்சம், அஞ்சப்படும் ஆவி. பே - பீ - பய = அச்சம். (வ. வ : 210). பேசு(1) பேசு - வ. பாஷ் (bh) பே - பேசு. பேசுதல் = உதடசைத்துச் சொல்லுதல், மொழிதல், உரையாடுதல். பகரம் இதழ்ப் பிறப்பினது. பேசு - பேச்சு = சொல், உரை, சொற்பொழிவு, மொழி. (வ. வ : 210 - 211). பேசு(2) பொள்ளுதல் = துளைத்தல். பொள்ளல் = துளை. பொள் = துளை, உட்டுளை (பிங்.). பொள் - பொய். ஒ. நோ : தொள் - தொய். பொய் = 1. துளை, உட்டுளை. பொய்பொரு முடங்குகை (சிலப். 15 : 50) 2. மரப்பொந்து (பிங்.). 3. உள்ளீடற்றது. 4. விளைச்ச லில்லாதது. பொய்ப்பிஞ்சு, பொய்ச்சீப்பு, (உ.வ.). 5. உண்மை யில்லாதது. பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள். 938). பொய்க்கதை. 6. மாயை. பொய்ந்நீர், (W.). 7. நிலையாமை. புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3). 8. போலியானது. 9. செயற்கையானது. பொய்க்கால். 10. ஏமாற்றுவது, பொய்ம்மான், பொய்க்குழி. பொய்தல் = (செ. கு. வி.). 1 துளைபடுதல். 2. துளைக்கப்படுதல். பொய்தக டொன்று பொருந்தி (கம்பரா. பஞ்ச. 49). 3. துளையினின்று ஒழுகுதல் - (செ. குன்றாவி.). 1. சொரிதல்.. இகலின் பொய்த (கம்பரா. கிங்கரர். 50). 2. வீழ்த்துதல். அவை பார்சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33). பொய் - பெய். பெய்தல் = (செ. கு. வி). மேனின்று ஒழுகுதல். பெய்யெனப் பெய்யும் மழை (குறள். 53) - (செ. குன்றாவி.). 1. வார்த்தல். பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (புறநா. 115). 2. கல முதலியவற்றில் இடுதல். உலைப்பெய் தடுவது போலுந் துயர் (நாலடி. 114). 3. சிறுநீர் கழித்தல். 4. தூவுதல். பெய் - பேய். பேய்தல் = பெய்தல் (உ.வ.). பேய்ந்துங் கெட்டது, ஓய்ந்துங் கெட்டது (பழ.). இப் பழமொழியிற் பேய்ந்தும் என்னும் சொல் ஓய்ந்தும் என்பதனொடு எதுகை நோக்கித் திரிந்ததை, பாட்டுரை நூலே என்னும் தொல்காப்பிய நூற்பா (செய். 78) நீட்டும் வழி நீட்டல் என்னும் செய்யுள் திரிபாக அமைக்க இடந்தருமேனும், கொச்சையென்று கருதப்படும் இரண்டோர் உலக வழக்குச் சொல் வடிவினின்றும் இலக்கியச் சொற்கள் அமைந்திருப்பதால் பேய்தல் என்னும் சொல்லைத் திரிபின் பாற்பட்டதாகக் கொள்வதே தக்கதாம். எ - டு : கொண்டுவா - கொண்டா - கொணா - கொணர். இச்சொல் வடிவுகளுள், கொண்டா என்பது வழுநிலையாகவும், அதன் வழிப்பட்ட கொணா, கொணர் என்பன வழாநிலை யாகவும், இருத்தலை நோக்குக. பேய் - பேயு - பேசு. ஒ. நோ : தேய் - தேயு - தேசு. பேசுதல் = வான் நீரை ஒழுக விடுவது போன்று வாய் சொல்லை ஒழுக விடுதல். ஒழுகுதல் ஓட்டையினின்று விழுதல் அல்லது சிந்துதல், கலத்தினின்று நீர் வார்த்தல் என்பது, அதன் வாயாகிய ஓட்டை வழி ஒழுக விடுதல். வான் மழை பெய்வது கலத்தினின்று நீர் வார்த்தல் போன்றிருத்தலால், வானின் றமையா தொழுக்கு (குறள். 20) என்றார் திருவள்ளுவர். மழை தூறலுங் கொட்டுதலுமின்றி நடுத்திறமாகப் பெய்யின் பெய்தலென்றும், கொட்டுதலும் ஊற்றுதலும் போலக் கனத்துப் பெய்யின் பொழிதல் என்றும், சொல்லப்படும். பொழிதல் - திரளுதல். பொழித்தல் - திரட்டுதல். பொழிப்புரை - திரட்டுரை. பொழில் - திரண்ட சோலை. ஒருவர் இயல்பாகச் சொல்லாடல் மழை பெய்தல் போன் றிருத்தலாற் பேசுதல் என்றும், விரைவாகச் சொல்லாடல் மழை பொழிதல் போன்றிருத்தலாற் பொழிதல் என்றும், சொல்லப்படு தல் தொன்று தொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது. ஒரு மணி நேரம் பொழிந்து தள்ளி விட்டார் என்னுங் கூற்று, கல்லா மக்கள் வாயினின்று வருவதையுங் காணலாம். இவ் வழக்கி னின்றே, சொற்பொழிவு, சொற்பொழிவாளர் என்னுங் கூட்டுச் சொற்கள் இக்காலத்தில் தோன்றியுள்ளன. இதனால், பொழிதல் என்னும் சொற் போன்றே பேசுதல் என்னும் சொல்லும் மழை வினையொப்புமை பற்றித் தோன்றியதென உணரலாம். சமற்கிருதச் சொற்கள் பேசு என்னுந் தென்சொல்லினின்றே, பாஷ் (bhaÍsh, என்னும் வடசொல்லும் திரிந்துள்ளது. இதை யுணர்ந்தே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியைத் (Tamil Lexicon) தொகுத்த வடமொழி வெறியரும், பேசு என்னும் தலைச்சொல்லையடுத்து “cf. bhaÍs´” என்று குறித்திருக்கின்றனர். bhas, to speak, talk, say, tell. bhashaka, speaking, talking about, KaÍv. bhashana, the act of speaking, talking, speech, talk, Nir; Mn; MBh. bhasha, Speech, language (esp. common or vernacular Speech as opp. to Vedic or in later time to Sanskrit) Nir; PaÍn; Mn; MBh; any PraÍkit dialect or a particular group of 5 of them. (Maharashtri, SØauraseniÍ, MaÍgadhiÍ, PraÍcya and Avanti, also called PanÃca VidhaÍ bhaÍshaÍ. bhashika, belonging to the common or vernacular speech, Nir. bhashita, spoken, uttered, said, spoken to, addressed, Mn; MBh. bhashitarya, to be spoken to or addressed, R. bhashitri, a speaker, talker, SBr; MBh; KaÍv. bhashin, saying, speaking, loquacious, MBk; KaÍv. bhashya, speaking, talking, Susr; any work in the common or vernacular speech, VPraÍt. GrS; Hariv; an explanatory work, exposition, explanation, commentary esp. on technical sutras, Name of PatanÃjali’s commentary on the sutras of PaÍn´ini, mahaÍ bhaÍshya. sam-bhash, to speak together, converse with, speak to, join in a conversation. sam-bhashana, conversation, discourse with. subhashana, Name of a person. subhashita, spoken well or eloquently. subhashitam, good or eloquent speech, witty saying. Gk. phasis, speech, utterance, expression. aphasia, loss of speech, or of understanding of language, owing to brain damage; f. mod. L. f. Gk. aphatos, speechless (a, not, pha, to speak). A அல்லது a என்ற (கிரேக்க) எழுத்திற்குக் கிரேக்கத்தில் அ, ஆ என்ற ஒலிகளே உள. ஆதலால், பேசு என்ற சொல்லே, இந்திய ஆரியரின் முன்னோர் கிரேக்க நாட்டிற்குப் பக்கத்தில் வாழ்ந்து வந்தபோது, அவர் மொழியில் பாஷ் (bhaÍsh) என்றும், கிரேக்க மொழியிற் பா (phaÍ) என்றும், திரிந்திருத்தல் வேண்டும். கிளேன் (Klein) ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிச் சொற்கள் “aphasis, n., loss of the faculty of speech (med.) - Medical L., fr. priv. pref. a - and phasis, speech, from the base of phanai, to speak, which is rel. to phame, voice, report, rumour, and cog. with L. fama, talk, report, rumour” (p. 42). “aphemia, n, a kind of aphasis (med.) - Medical L. coined by the French surgeon and anthropologist Paul Broca (1824 - 80) in 1860 fr. priv-pref. a - and Gk. pheme, voice, which is rel. to phanai, to say, speak”. (p. 42). “fama, n., the personification of rumour in Roman mythology.” (p. 273). “fame, n. F. fame, fr. L. fame, talk, report, rumor, tradition, reputation, lit, ‘saying’, from the stem of for, faÍri, pp. fatus, to speak, rel. to fateÍri, to confess, fabula, narrative, account, tale, story, fas, divine law (lit. utterance, fr. I. E. base, bhaÍ, to speak, tell, say, whence also OI bhanati, speaks, Arm. bay, gen. bayi, word, term, bey, he said, ban, gen. bani, word, speech, judgement, Gk. phemi, I say; pheme, Dor. phaÍmaÍ, voice, report, rumour, phatis, saying, speech, report, OSlav bajo, bajati, to talk, tell, basni, fable, tale, charm, OE. boian, to boast, ON. boÍn, OE. beÍn, prayer, request. Cp. phone, speech sound, Cp. also abandon, affable, aphasla, aphemia, apophasis, ban, to prohibit, ban, ediet. bandit, banish, bifarious, blame, blaspheme, boon, confabulate, confess, defamation, defame, euphemism, fabulous, famous, fascinate, fate, infamous, infamy, infant, infantry; multifarious, nefarious, - phasia, - phemia. Poly-phemns, preface, prefatory, profess, prophet, trifarious”. (p. 273). இங்ஙனம், பேசு என்னும் சொல் பே - phe - fe என்றும், பாசு (bhaÍsh) - பா (bhaÍ) - bhaÍ - phaÍ - faÍ என்றும், பிறவானும், திரிந்து பல்வேறு சொற்களை மேலையாரியத்தில் தோற்றுவித்துள்ளது. ஆயின், ban, ben, bon முதலிய சொற்கள் பன் என்னும் தென்சொல்லினின்று திரிந்திருத்தல் வேண்டும். மேலையறிஞர் தம் மொழியின் தமிழ் மூலத்தையும் தமிழின் தொன்மையையும் இன்னும் அறியாமையால், இத்தகைய பற்பல தவறுகள் நேர்ந்துள்ளன. பன்னுதல் = 1. சொல்லுதல், பேசுதல், பன்னியிரக்கும் (கம்பரா. கைகேயி, 41). 2. ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அல்லது எழுதுதல். 3. நின்று நின்று பேசுதல் அல்லது படித்தல். 4. வாசித்தல் அல்லது படித்தல் ஓலை..... வாங்கிப் பன்னுவனோ (பிரமோத். 13 : 50). 5. புகழ்தல். என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாச, 5 : 99). 6. பாடுதல். பல்கீதமும் பன்னினார் (தேவா. 408 : 3). ச - ன(ந), ன - ம, ப- ph, ph - f, ph - bh முதலிய திரிபுகள் இயல்பே யாதலால், பேசு என்னும் சொல்லிலுள்ள பகரமும் சகரமும் மேலையாரிய மொழிகளில் மேற்காட்டியுள்ளவாறு பல்வேறு எழுத்துக்களாகத் திரிந்துள்ளன. பேடி பெள் - பெண் - பேண் - பேடு - பேடன், பேடி. ஆண்தன்மையை விரும்பும் பெண் பேடன். பெண் தன்மையை விரும்பும் ஆண் பேடி. (குறள். 614). பேடியர் வகை இயற்கைப் பேடியரும் செயற்கைப் பேடியரும் எனப் பேடியர் இருவகையர். செயற்கைப் பேடியர் உவளகக் காவற்கும் பேடிமைக்கும் பேடியராக்கப்பட்டவர் ஆவர். பேடி - கோழையன். (குறள். 727). பேடு ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி. பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன். இவ்விருவர்க்கும் பொதுப் பெயர் பேடு; (த. தி. 42, 43). பேதை (t@) பேதை : பிது - பெது - பெதும்பை. பெது - பேது - பேதை = மடமை மிக்கவன், மடமை மிக்க பெண் பேதை. (தி.ம : 750). பேதை (2) : நல்லதை விட்டுத் தீயதைத் தெரிந்து கொள்பவனும் அறிவித்தாலும் அறியாதவனும் ஆகிய அறிவிலி. பேதைக் குரைத்தாலும் தோன்றாதுணர்வு (பழ. 63) (குறள். அதி. 84). பேம் பேம் - வ. பேன (ph) பே = நுரை (பிங்.). பே - பேம் = நுரை. பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை (இறை. 7, உரை). அச்சத்தினாற் பேய்கோட்பட்டவன் வாயில் நுரை தள்ளுவது இயல்பாதலால், அச்சக் கருத்தினின்று நுரைதள்ளற் கருத்துத் தோன்றியிருக்கலாம். பேம் = அச்சம். OHG feim, OE fam, E foam. (வ. வ : 210). பேய் வகை இருள் அல்லது கருப்பு - இருண்டு தோன்றும் பேய். பேய் - அஞ்சத்ததக்க ஆவி. அலகை - துன்புறுத்தும் பேய். சூர் அல்லது சூரரமகள் அல்லது அணங்கு - அஞ்சத்தக்க பெண் பேய். தாக்கணங்கு - புடைத்துக் கொல்லும் பெண் பேய். நோக்கணங்கு - பார்வையால் கொல்லும் பெண் பேய். மோகினி - ஆடவர்க்கு மோகத்தை உண்டாக்கிக் கொல்லும் பெண் பேய். இடாகினி - இடுபிணம் தின்னும் பெண் பேய். குறளி - குட்டிப் பேய். பூதம் - பெரும் பேய். கூளி - குறும்பூதம். முனி - சடைப் பேய். பூலி - ஆலமரப் பூதம். பேரன் ஒருவனுக்கு மகனின் மகன் பேரன் எனப்படுவான். பெயரன் என்பது பேரன் என மருவிற்று. பாட்டன் பெயரைப் பேரனுக் கிடுவது பண்டை வழக்கம். ஆதலால் பேரனுக்கு அப்பெய ராயிற்று. சிலர் பாட்டனையும் பேரன் அல்லது பேரனார் என்பர். அரசகேசரி, பரகேசரி என்ற பட்டங்கள், பிற்காலச் சோழர்க்கு ஒன்றுவிட்டு வழங்கியதும் இம்முறை பற்றியே. (சொல். 28). பொத்தகம் பொத்தகம் - புதக புல்லுதல் = பொருந்துதல். புல் - பொல் - பொரு - பொருந்து - பொருத்து - பொத்து - பொட்டு. பொத்துதல் = பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல். பொத்து - பொத்தகம் = பொத்திய (சேர்த்த) ஏட்டுக் கற்றை, எழுதிய எட்டுத் தொகுதி. சுவடி. சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சும்மை = தொகுதி. சும் - சுவ் - (சுவள்) - (சுவண்) - சிவன். சிவணுதல் = பொருந்துதல், ஒத்தல். சுவண் - சுவடு = பாதம் நிலத்திற் பொருந்திய தடம். சுவடு - சோடு = இணை, இரட்டை, இணையுள் ஒன்று, ஒப்பு, செருப்பிரட்டை. சுவடு - சுவடி = இணை, கற்றை, கட்டு, பொத்தகம். கணவனும் மனைவியும் சுவடியாய்ப் போகிறார்கள் என்னும் வழக்கை நோக்குக. சுவடி - சோடி = இணை. சுவடித்தல் = பொருத்தி அழகுபடுத்துதல். சுவடி - சோடி - சோடணை = அழகுபடுத்தல் (அலங்கரிப்பு). (வ. வ.) பொட்டு = மண்டையோட்டுப் பொருத்து. பொட்டுதல் = பொருத்துதல், கட்டுதல். பொட்டு - பொட்டணம். பொத்தகம் = 1. நூற் புத்தகம். நிறைநூற் பொத்தகம் நெடுமணை யேற்றி (பெருங். உஞ்சைக். 34:26) 2. கணக்குப் புத்தகம். பொத்தகப்படி குழி (S.I.I. iii, 80). பொத்தகம் - புத்தகம். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி. 318). வடவர் காட்டும் மூலம் புத் என்பது. அதற்கு மா. வி. அ. மதி அல்லது அவமதி (?) என்றும், தாது பாடம் (DhaÍtupaÍt´ha) கட்டு என்றும், பொருள் கூறியுள்ளன. பிந்திய பொருளில் அது பொத்து என்பதன் திரிபே. ஆரியர்க்கு முதல்நூல் வேதம் என்றும், அது நீண்ட நாள் எழுதப்படாதிருந்து எழுதாக் கிளவி என்றும் கேள்வி என்றும் பெயர் பெற்றதென்றும், அறிக. (வ. வ : 211). பொருட் பாகுபாடு பொருள்களைச் சினை, குணம், தொழில் முதலியனபற்றிப் பல வகையாக வகுத்துக் கூறல் பொருட் பாகுபாடாகும். இதுவே எந்தக் கலையறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் தொடக்கமாம். ஒரு பொருளைப்பற்றிச் சிறப்பாயாராயுமுன், அது எந்த இனத்தைச் சேர்ந்ததென்று அறிந்துகொள்வது இன்றியமையாததாகும். தற்காலத்தில், பொருள்களைப்பற்றிய ஆராய்ச்சியில் மேனாட் டார் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முற்காலத்திலோ இந் நிலையைக் கீழ் நாட்டார், சிறப்பாகத் தமிழர், அடைந்திருந்தனர். பண்டைத் தமிழர், பொருள்களெல்லாவற்றையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அவற்றை வகுத்துக் கூறல், ஓரினப்படுத்தல், வேறினப்படுத்தல் என்னும் மூவகையிலும் வகையீடு செய்தது மிகப் போற்றத்தக்கதாகும். 1. வகுத்துக் கூறல் (1) இருவகைப் பொருள் - இயங்குதிணை, நிலைத்திணை. எல்லாப் பொருள்களையும் இடம் பெயர்வதும் பெயராமையும் பற்றி இயங்குதிணை நிலைத்திணை என இரண்டாய் வகுத்துக் கூறினர். இவற்றை முறையே சரம் அசரம் என்றும் சங்கமம் தாவரம் என்றும் கூறுவர் வடநூலார். இயங்குதிணை உயிருள்ளது மட்டும். நிலைத்திணையில் உயிருள்ளதும் இல்லதும் அடங்கும். (2) மூவகைப்பொருள் - உயிர், மெய், உயிர்மெய். எல்லாப் பொருள்களும் தனியுயிர், தனியுடம்பு, உயிருள்ள உடம்பு என மூவகைப்படும். இவற்றை முறையே உயிர், மெய், உயிர்மெய் என்றனர் பழந்தமிழர். கடவுளும் பேயும் உடலைப் பிரிந்த ஆவியும் தனியுயிர்; பிணமும் உயிரற்ற அஃறிணை யுடம்பும் உயிரற்ற பொருளும் தனிமெய்; உடம்பொடு கூடி வாழும் மக்கள், விலங்கு, பறவை முதலியன உயிர்மெய். உயிர்மெய் என்னும் சொல் இன்று வழக்கற்று, அதற்குப் பதிலாகப் பிராணி என்னும் வடசொல் வழங்கி வருகின்றது. பிராணனையுடையது பிராணி, உயிரையுடைய மெய் உயிர்மெய். உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகைப் பொருட் பெயர்களையே, மூவகை யெழுத்துக்களுக்கும் அவற்றோடொப்புமை கருதியிட்டனர் இலக்கணிகள் என்க. மூவகைப் பொருள்களிலும் உயிரும் உயிர்மெய்யும் இயங்கு திணையும் மெய் நிலைத்திணையுமாகும். உயிர்மெய்யைச் சுருக்கம்பற்றி உயிரி என்று கூறலாம். பிற்காலத்தில் மத நூலார் பொருள்களெல்லாவற்றையும் கடவுள் ஆன்மா கட்டு என மூவகையாகப் பகுத்தனர். (3) அறுவகை யுயிர் எல்லா வுயிரிகளையும், ஐம்புலனும் பகுத்தறிவுமாகிய ஆறறிவு பற்றி, ஓரறியுயிர் முதல் ஆறறிவுயிர் வரை ஆறாகப் பகுத்திருந்தார்கள். ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே (572) புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (573) நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (574) நந்து = நத்தை, முரள் = சங்கு. சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (575) சிதல் = கறையான் நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (576) மாவு மாக்களும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (577) மக்கள் தாமே ஆறறி யுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (578) இவை தொல்காப்பிய நூற்பாக்(சூத்திரம்)கள். தொல் காப்பியத் தின் காலம் கி.மு.2000 ஆதலாலும், அது ஒரு வழிநூலாதலாலும், நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று கூறியிருப்ப தாலும், மேற்கூறிய செய்திகள் தொன்று தொட்டு நெடுங்கால மாக வழங்கி அடிப்பட்ட வழக்குகளைக் கூறும் மரபியலிற் கூறப்பட்டிருப்பதாலும், தமிழரின் ஆறுயிர்ப் பாகுபாடு எண்ணுக்கு மெட்டாத தொன்மைத் தென்றறியலாம். இனி, ஒரறிவுயிரையும் மனிதரையும் இவ்விருவகையாகப் பகுத்தது மிக வியக்கத்தக்கதாகும். புல்லு மரனும் ஒரறி வினவே என்னும்போதே ஓரறிவுயிர் இரண்டாகப் பகுக்கப்பட்டுவிட்டது. இதனால், புல்லுக்கும் மரத்துக்கும் இடையில் உள்ள பூண்டு, புதர், செடி, கொடி முதலியவும் புல்லின் வகையாயடங்கும் என்பது புலனாகும். ஆனால், மூங்கிலானது உறுப்பால் புல்லாயும் உயரத்தால் மரமாயுமிருப்பதால், அது எவ்வகையுள் அடங்கும் என்னும் ஐயத்தை நீக்குவதற்கு புறக்கா ழனவே புல்லென மொழிப (தொல். 626) அகக்கா ழனவே மரமென மொழிப (தொல். 627) என்றனர். இவற்றுள், மொழிப என்று கூறியிருப்பதால் இவை முன்னோர் கூற்றென்றறிதல் வேண்டும். புறக்காழ் வெளிவயிரமுள்ளது. அகக்காழ் உள்வயிரமுள்ளது. ஆகவே, மூங்கில் புல்லின் வகையென்பது பெறப்படும். ஓரறிவுயிர் போன்றே மாந்தரையும் மக்கள் மாக்கள் என இரு வகையாகப் பிரித்தனர். மனித வடிவுகொண்ட மாத்திரத்திலேயே ஒருவன் மனிதனாகமாட்டானென்றும் பிறவுயிர்களினின்று அவனைப் பிரித்துக் காட்டக்கூடிய அறிவும் ஒழுக்கமும் அடைந்தபோதே அவன் மனிதனாவனென்றும் தமிழ் முன்னோர் கண்டுங்கொண்டு மிருந்தனர். அதனால், அறிவொழுக்க முள்ளவரை மக்களென்றும் அவையில்லாதவரை மாக்கள் (விலங்குகள்) என்றும் கூறினர். இதை. மாவு மாக்களும் ஐயறி வினவே (தொல். 1531) மக்கள் தாமே ஆறறி வுயிரே (தொல். 1532) என்னும் தொல்காப்பிய நூற்பாக்களாலும், செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் (குறள். 420) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் (குறள். 1071) விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (குறள். 410). என்னும் குறட்பாக்களாலும் அறியலாகும். மக்களுக்கு நூலறி வில்லா விட்டாலும் ஒழுக்கத்திற்குக் காரணமான பகுத்தறி விருந்தாற் போதுமென்பது முன்னோர் கருத்து. ஆகவே, மக்களுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது. மக்கள் என்னும் பெயருக்கு மகன் என்பதும் மாக்கள் என்னும் பெயருக்கு மா என்பதும் ஒருமை யாகும். மகன் மகள் என்னும் ஒருமைப் பெயரும் மக்கள் என்னும் பன்மைப் பெயரும், மனிதப் பொருளும் முறைமைப் பொருளும் ஒருங்கு கொண்டிருத்தலின், அவற்றால் மயக்கமுண்டாகாமைப் பொருட்டு, மனிதப் பொருளையே தருதற்கு மாந்தன் என்னும் பெயர் பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. மாந்தனுக்குப் பலர்பால் மாந்தர்; பெண்பால் மாந்தையாகத் தோன்றுகிறது. மாந்தர் மக்கள் என்னும் பெயரும்... அப்பதினைந்தும் அவற்றோரன்ன (தொல். 647) என்று மாந்தர் என்னும் பெயரை உயர்திணையாகத் தொல் காப்பியத்திற் கூறியிருத்தல் காண்க. (4) இருதிணை - உயர்திணை, அஃறிணை. தமிழிலக்கணத்தில், பொருள்களெல்லாம் உயர்திணை அஃறிணை என இருதிணையாக வகுக்கப்பட்டுள்ளன. இது தமிழரின் சிறந்த அறிவையும் நாகரிகத்தையும் காட்டுவதாகும். திணை = குலம். பகுத்தறிவுள்ள அல்லது ஒழுக்கமுள்ள மேன்மக்கள் உயர்திணை யாகவும், அவரல்லாத கீழ்மக்களும் உயிருள்ளனவும் உயிரில்லன வுமாகிய பிறபொருள்களும் அஃறிணையாகவும் கூறப்பட்டனர். ஒருவனுக்குப் பகுத்தறிவிருந்தும் ஒழுக்கமில்லா விடின் அவன் உயர்திணையாகான். ஆகையால், பகுத்தறி வென்பது எப்போதும் ஒழுக்கத்தையும் தன்னுடன் உளப்படுத்தும். அல் + திணை = அஃறிணை, உயர்வல்லாத திணை அஃறிணை யெனப்பட்டது. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே (தொல். சொல். 1) என்பது தொல்காப்பியம். இதில் மக்கள் என்னும் வகுப்பாரையே உயர்திணையாகக் கூறியுள்ளது. ஆனால், பிற்காலத்தில் 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பவணந்தியார், மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை என, உயர்திணையுடன் தேவர் நரகரையும் சேர்த்ததுமன்றி, தொல்காப்பியர் விலக்கிய கீழ்மக்களையும் உயர்திணையாகக் கூறிவிட்டார். உலகில் தோன்றிய மக்கள், இம்மையிற் செய்த நல்வினை மிகுதி யால் மறுமையில் தேவராய்ப் பிறப்பரென்பதும், தேவருலகில் வீடுபேற்று முயற்சியேயில்லையென்பதும், கொள்கைகளாதலின் தேவப்பிறப்பு மக்கட் பிறப்பினுஞ் சிறந்ததன்றென்பதும், தேவரும் மக்களாயடங்குவர் என்பதும் பெறப்படும். ஆனால், நரகரோ வெனின் முற்பிறப்பில் மிகுதியும் தீமை செய்து அதனால் தண்டனையடையும் கீழ்மக்களாதலின், அவரையும் உயர்திணை யாகக் கூறியது தமிழிலக்கணத்திற்கே முற்றும் மாறானதாகும். இனி, மக்கள் தேவர், என்னும் நன்னூல் நூற்பாவில், நரகர் என்பதை நாகர் என்று மாற்றிக்கொண்டு, மக்கள், தேவர் நாகர் என்பவர் முறையே தமிழரும், ஆரியரும், நாகருமாவர் எனக்கூறிய தான்தோன்றித் தமிழ்ப் பகைவருமுளர். (5) அறுவகைப் பொருள் தமிழிலக்கணத்தில், பெயரியலில், மற்றொருவகையில் பொருள் களெல்லாம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என அறுவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பொரு ளென்றது இடம்பெயரக்கூடிய கட்புலப் பொருளை. சினை உறுப்பு. இனி, நூற்பொருள்களை, அகம் புறம் என்றிரண்டாகவும் முதல், கரு, உரி என மூன்றாகவும் வகுப்பது பொருளிலக்கண மரபும், அறம் பொருள் இன்பம் வீடென நான்காக வகுப்பது நீதிநூன் மரபும், பொருள் குணம் கருமம் பொது சிறப்பு ஒற்றுமை இன்மை என ஏழாக வகுப்பது தருக்க நூன்மரபுமாகும். இவற்றுள், அகம் என்பது காதல்; புறம் என்பது அஃதல்லாத பிற பொருள்கள்; முதல் என்பது காலமும் இடமும்; கரு என்பது ஓரிடத்தில் தோன்றும் பொருள்களும் காதலல்லாத வினைகளும்; உரி என்பது காதல் அல்லது காதற்பகுதி. 6. ஓரினப்படுத்தல் ஓரினப்படுத்தலாவது வெவ்வேறினத்தைச் சேர்ந்த பல பொருள்களை ஓர் ஒப்புமைபற்றி ஒரினமாகக் கூறல். யானைக்கும் பன்றிக்கும் களிறு கேழல் என்பன பொதுப் பெயர்கள். இவ்விரு விலங்கும் ஓரினம் என்பது அவற்றின் வடிவாலும் நிறத்தாலும் விளங்கும். களிறு என்பது யானையால் பன்றிக்கும் கேழல் என்பது பன்றியால் யானைக்கும் ஏற்பட்ட பெயர். களிப்பது களிறு. களித்தல் மதங்கொள்ளுதல். மதங் கொள்வது ஆண்யானை. யானையோடொப்புமைபற்றிப் பன்றி யின் ஆணும் களிறெனப்பட்டது. கிளைப்பது, கீழ்வது கேழல், கிளைத்தல் நிலத்தை முண்டிப்போடுதல். பன்றியோடொப்புமை பற்றி யானையும் கேழல் எனப்பட்டது. யானைக்கும் ஒரு வகை வண்டிற்கும் தும்பி எனப்பெயர். தும்பை யுடையது தும்பி. தும்பு என்பது தூம்பு. தூம்பாவது உட்டுளை யுள்ளது அல்லது குழாய். குழாய்போன்ற ஒரு முன்னூட்டி (proboscis) யானைக்கும் தும்பியென்னும் வண்டுக்கு மிருத்தல் காண்க. யானைக்குத் துதிக்கையும் வண்டுக்குத் தேனுறிஞ்சும் நெடு மூக்கும் முன்னூட்டியாகும். யானையின் துதிக்கை தும்பிக்கை யெனப்படுகிறது. இது முதலாவது தும்பியின் கை எனப் பொருள்படும். இன்று பொருள் மறைந்து. அக்கைக்கே சிறப்புப் பெயராய் அல்லது தனிப்பெயராய் வழங்குகின்றது. அரசு ஆற்றரசு பூவரசு என்னும் மரங்கள் ஒரே பெயரைப் பெற்றிருக்கின்றன. இம் மும் மரங்களும் நெஞ்சாங்குலை வடிவான (cordate) இலையுடையனவாகும். அரசமரம் வெளிப் படையாகப் பூக்காதது. இதனால் அது பூவில்லாததென்றே கருதப்பட்டது. பூவாது காய்க்கும் மரமுள என்றார் ஔவையார். பூப்பதாய் அரசு போன்ற இலையுடையது பூவரசு. அரசு போன்ற இலையுடையதாய் ஆற்றோரத்தில் வளர்வது ஆற்றரசு. 7. வேறினப்படுத்தல் வேறினப்படுத்தலாவது ஒரேயினத்தைச் சேர்ந்த பொருள்களை நுட்ப வேறுபாடுபற்றி வேறுபடுத்திக் கூறுல். வண்டுந் தேனு ஞிமிறுஞ் சுரும்பு முமிழ்நற வருந்தி யுறங்கு செஞ்சடையோன் (55) என்பது கல்லாடம். வண்டு தேன் ஞிமிறு சுரும்பு வண்டின் வகைகள் என்றார். அதன் உரையாசிரியர். முதலையும் இடங்கரும் கராமும் (குறிஞ்சிப்பாட்டு. 267) என முதலை மூவகையாகச் சொல்லப்படுகின்றது. மூங்கிலில், உட்டுளையுள்ளது வேய் என்றும் உட்டுளையில்லாதது அமை என்றும் முள்ளுள்ளது கழை என்றும் முள்ளில்லாதது பணை என்றும் பிற பிறவாறும் கூறப்படுகின்றது. இவற்றுள், வேயும் அமையும் சிறு மூங்கிலும், கழையும் பணையும் பெரு மூங்கிலு மாகும். இப்போது வேய் துளைமூங்கிலென்றும் அமை கல்மூங்கிலென்றும் வழங்குகின்றது. இலைகள் வடிவும் கனமும்பற்றி, இலை தாள் தோகை ஓலை என நால்வகையாகக் கூறப்படுகின்றன. இங்ஙனமே பிறவும். இதுகாறும் கூறியவற்றால், தமிழ் முன்னோர் மிக நுண்ணறிவுடையவராயிருந்தனர் என்பதும் பொருள்களை நன்றாயாராய்ந்து அவற்றைப் பலவகையிற் பாகுபடுத்தினர் என்ப தும், ஒரு பொருட் பல பெயர்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நுட்ப வேறுபாட்டைக் காட்டுமென்பதும் அறியப்படும். (The Putturian Vol VIII Feb. 1942) பொருட் பெயர்கள் பல பொருட்பெயர்கள் உவமை அடிப்படையாக அப்பொருட் களின் பண்பு குறித்துப் பெயரெச்சமாக வழங்கி வருகின்றன. சிறுமை - அரிசிப்பல், குருவித்தலை, கிளிவாயகல், நரிக்கெளிறு, எரியா மணக்கு. நுண்சிறுமை - ஊசி மிளகாய், ஊசிவெடி. கூர்மை - ஊசிக் காது. பருமை - ஆனை நெருஞ்சில், கடா நாரத்தை. இடைமை - (சிறுபருமை) குதிரை வெடி. நெடுமை - ஒட்டகச் சிவிங்கி. நீண்மை - பாம்புக் கெண்டை, நாகப் பூச்சி. தாழ்வு - நாய்க்கடுகு, நாய் வேம்பு. இழிவு - கழுதைப் பொன்வண்டு, கழுதைக் கூத்து. தீமை - பேய்க்கரும்பு, பேய் வெள்ளரி. வன்மை - கல்விருசு, கல்வாழை. கருமை - காக்கைப் பிசின், காக்கைப் பொன். நீல்மை - மயில் துத்தம். மஞ்சண்மை - தங்கமேனி, பொன்வண்டு. (சொல். 15-16). பொருநன் போர் மறவன் அல்லது படைத்தலைவன். (தி.ம. 6). பொருள் திரி சொற்கள் ஐந்நிலை 1) உயர்வு, 2) இழிபு, 3) பொது, 4) வரையறுப்பு, 5) விரிப்பு. 1. உயர்வு (Elevation). அரசனே தெய்வமாக வணங்கப்பட்ட முற்காலத்தில், இறைவன் என்பது அரசனையும் கோவில் (அல்லது கோயில்) என்பது கடவுளுணர்ச்சி யேற்பட்டபின் அவை இரண்டும் முறையே கடவுளையும் அவரிருக்கையாகக் கருதப்படும் வீட்டையும் குறித்தன. தொண்டன் அடியான் என்ற பெயர்களும், முதலாவது மக்கட்குத் தொண்டும் அடித்தொழிலும் செய்தவர்களைக் குறித்து, பின்னர், கடவுள் தொண்டரையும், கடவுளடியாரையும் குறித்தன. தொண்டன் என்னும் பெயர், இன்று பொதுநல ஊழியனையும் குறிக்கும். களிப்பு என்னும் சொல், முதலாவது, கள்ளுண்டலையே குறித்து, பின்பு கள்ளுண்டு மகிழ்தலையும், அதன்பின் இன்பத்தால் மகிழ்தலையும், குறித்தது. மேற்காட்டிய ஐஞ்சொற்களும், முதலாவது தாழ்ந்த பொருள் களைக் குறித்து, பின்னர் உயர்ந்த பொருள்களைக் கொண்டமை காண்க. இங்ஙனம் சொற்பொருள் உயர்வதே உயர்வு எனப்படும். 2. இழிபு (Degradation) உயர்வுக்கு நேர் எதிர் இழிபு எனப்படும். கடவுள் என்னும் பெயர், மனமொழி மெய்களையும் எல்லாவற்றை யுங் கடந்த முழுமுதற் கடவுளையே குறிக்க எழுந்த சொல்லென் பது, அதன் பகுதியாலேயே விளங்கும், கடவுட்டன்மையடைந்த முனிவர்களை இல்லறப் பொதுமக்கள் கடவுள் என்றழைத்தபின், கடவுள் என்னும் சொற்பொருள் இழிந்துவிட்டது. பகவன் என்னும் சொல்லும் இங்ஙனமே கடவுளை மட்டும் குறித்த நிலையில் உயர்ந்ததாயிருந்தது. பின்னர் முனிவனை அல்லது முனிவற் போலியைக் குறிக்க ஆளப்பட்டபின், இழிவடைந்து விட்டது. இதனாலேயே, முழுமுதற் கடவுளை ஆதி என்னும் அடைகொடுத்து ஆதிபகவன் என்றழைத்தார் திருவள்ளுவர். தம்பிரான் என்னும் கடவுட்பெயர், துறவை மேற்கொண்ட மடத்தலைவரைக் குறிப்பதும் மேற்கூறிய முறையே. அந்தணர் என்பது அழகிய குளிர்ந்த அருளையுடைய முனிவர் பெயர். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். என்றார் திருவள்ளுவரும். இச்சொல் அந்தணர் போல்வாரையும், அடியாரையும், பூசாரிகளையும் படிப்படியாய்க் குறித்து, இன்று ஒரு குலத்தாரையுங் குறிக்கின்றது. பண்டாரம் என்பது பல பொருள்கள் நிறைந்த சரக்கறைப் பெயர். அதுமுறையே, பல அறிவுப் பொருள்களை உள்ளத்தில் தொகுத்து வைத்த பேரறிஞனையும், அப்பேரறிவு காரணமாக உலகப்பற்றைத் துறந்த துறவியையும், அத்துறவிபோலக் கோலம் பூண்டவனையும், அக்கோலம் பூண்ட இரப்போனையும் குறித்தது. எங்கள் பாண்டிப்பிரான் தன் அடியார்க்கு மூலப் பண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே என்னும் திருவாசகத் தொடரி லும் (36, 5) பண்டாரங் காமன் படையுவள்கண் காண்மின் என்னும் பரிபாடல் தொடரினும் (11, 123) பண்டாரம் என்னும் சொல் பொக்கிசத்தையும் பொக்கிச சாலையையும் குறித்தமை காண்க. களஞ்சியத்தைப் பண்டாரம் என்பதும், நூல்நிலையத்தைக் கலைமகள் பண்டாரம் என்பதும் உலகவழக்கு. சைவமடத் தலைவரைப் பண்டாரம் என்பது, அவர் பேரறிவு வாய்ந்த துறவி என்னும் காரணம் பற்றியே. பண்டாரம் பரதேசி என்னும் இணைமொழி வழக்கில் பண்டாரம் என்பது துறவுக் கோலம் பூண்ட இரப்போனைக் குறித்தல் காண்க. ஆள்வான், ஆளுடையான், ஆட்கொண்டான், ஆளவந்தான், ஆண்டவன், ஆண்டான், ஆண்டி, ஆண்டை என்பன ஒரே பெயரின் பல்வேறு வடிவங்களாகும். ஆண்டி என்னும் சொல், முதலாவது கடவுளையும், பின்பு அவனருள் பெற்ற துறவியையும், அதன்பின் போலித் துறவியான இரப்போனயும், அதற்கும் பின் ஏழையையும் குறித்தது. பழனியாண்டி, மடத்தாண்டி, கோவணாண்டி, ஓட்டாண்டி முதலிய வழக்குகளை நோக்குக. பரதேசி பரதேசி என்பது சுதேசி (சுவதேசி) என்பதற்கு எதிர். அது முதலாவது அயல் நாட்டானைக் குறித்தது. பின்பு அயல்நாட்டு அல்லது அயலூர் ஏழையைக் குறித்தது. இன்று இரப்போனைக் குறிக்கின்றது. பண்டாரம் பரதேசி அரதேசி பரதேசி முதலிய வழக்குகளை நோக்குக. பத்தினி பத்தினி என்பது பத்தன் என்பதன் பெண்பால் வடிவம். பத்தன் என்னும் ஆண்பால் வடிவம் போன்றே, பத்தினி என்பதும் முதலாவது தேவபத்தினியைக் குறித்தது. பின்னர், குலமகட்குக் கொழுநனே தெய்வம் என்னும் புரைபட்டகருத்து மக்கள் உள்ளத்திற் புகுந்தபின், மாந்தனான கணவன்மாட் டன்புடை யாளைக் குறித்து வருகின்றது. ஆண்டிலும் அறிவிலும் தாழ்ந்த சிறுவன் சிறுமியைப் பயலும் சிறுக்கியும் என்பது உலக வழக்கு. பயல் என்பது பையல் (பையன்) என்பதன் மறுவடிவம். சிறுக்கி என்பது, சிறுக்கன் (சிறுவன்) என்பதன் பெண்பால். இவ்விரு பெயர்களும், முதலாவது இளமையென்றே குறித்தனவாயினும், இன்று இளமையோடு இழிவும் சேர்த்துக் குறிப்பனவாகும். பட்டப்பெயர் பட்டப்பெயர் என்பது, முதலாவது, அருண்மொழித் தேவன் உத்தம சோழப் பல்லவன் தருமசேனன் முதலிய பட்டங்குறித்த உயர்வுப் பெயர்களையே குறித்தது. ஆயின், இன்றோ, அது நகையாளரும் பகையாளரும் பழிப்பதற்கிடும் இழிவுப் பெயர்களையும் குறிக்கின்றது. திருவாளன் திருவாளன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. அது பின்பு செல்வமுள்ளவனையும் மதிப்புள்ளவனையுங் குறித்தது. இன்றோ அது Mr. என்னும் ஆங்கில மதிப்படைபோல ஒவ்வொருவன் பெயர்க்கு முன்னரும் சேர்க்கப்படுகிறது. எல்லா எல்லா என்னும் விளி இருபாற் பொதுவாகவே வழங்கி வந்ததெனினும், அதன் திரிபு நிலையில் எலுவன் என்னும் ஆண்பால் வடிவமும், எலுவி என்னும் பெண்பால் வடிவமும் தோன்றின. எல்லா என்னும் சொல், இன்று தென்னாட்டில் ஏல ஏலா ஏலே என்னும் வடிவுகளில் ஆண்பால் விளியாகவும், ஏழா என்னும் வடிவில் பெண்பால் விளியாகவும், வழங்கி வருகின்றது. ஏழு - ஏடன் - தோழன், ஏடி - தோழி; ஏடன் என்னும் வடிவம், ஏட ஏடா ஏடே அட அடா அடே என்று திரிந்து ஆண்பால் விளியாகவும்; ஏடி. ஏடீ அடி அடீ எனத் திரிந்து பெண்பால் விளியாகவும்; தமிழ் நாடெங்கும் வழங்கி வருகின்றது. அடடா அடட என்பன அடுக்கு. அட என்பது அரா ரா என்றும், அடே என்பது அரே ரே என்றும், தெலுங்கில் வழங்கி வருகின்றது. இவற்றுள் ரா ரே எனனும் சிதைவுகள் இந்தியிலும் உருதுவிலும் வழங்கி வருகின்றன. இங்ஙனம் தமிழின் தாய்மையை யுணர்த்தும் எல்லா என்னும் சொல், முதலில் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் மதிப்பாய் விளிக்கும் விளியாயிருந்தது, இன்று அடிமையரையும் கீழ்மக்களையும் விளிக்கும் இழிவுச் சொல்லாய் வந்துளது. சேரி சேரி என்பது பல வீடுகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்பு. முதற் காலத்தில் முல்லை நிலத்தூர்கள் சேரி என்னும் பொதுப்பெயர் பெற்றன. முல்லை நில மக்கள் இடையராதலின், மருதநில நகர்ப்புறத்துள்ள இடையர் குடியிருப்பு புறஞ்சேரி எனப்பட்டது. மருத நிலத்தூர்கள் பேரூரும் நகருமாகி, திணை மயக்கமும் தொழில்பற்றிய குலப்பாகுபாடும் உண்டான பின், ஒவ்வொரு பேரூரிலும் ஒவ்வொரு குலத்தாருடைய தனிக் குடியிருப்பும் சேரி என்ப்பட்டது. இங்ஙனம் இடைச்சேரி பறைச்சேரி பார்ப்பனச் சேரி என்னும் வழக்கு எழுந்தது. 3. பொது சில சொற்களின் பொருள்கள், உயர்படையாமலும் இழிபடை யாமலும் பொதுமுறையாகத் திரிந்துள்ளன. பள்ளி என்பது முதலாவது, படுக்கையை யுணர்த்தும் சொல். பள்ளி கொள்ளுதல், பள்ளி கொண்டான், பள்ளியெழுச்சி முதலிய வழக்குகளை நோக்குக. பள்ளி என்பது, கீழிடத்தை அல்லது தாழிடத்தை யுணர்த்தும் பள் என்னும் வேரினின்று பிறந்ததாகும். பள் + அம் = பள்ளம். பள் - படு, படுத்தல் - கீழே கிடத்தல். படுக்கையையுடைய நிலமும் அறையும் வீடும் தானியாகு பெயர் என்னும் இடனாகுபெயராய்ப் பள்ளி எனப்படும். படுக்கும் அறையைப் பள்ளி அறை என்பர். இரப்போரும் துறவிகளும் வழிப்போக்கரும் திக்கிலிகளும் பள்ளி, கொள்வதற்கென்று, அஃதாவது படுப்பதற்கென்று, ஏற்பட்ட மடமும் பள்ளி எனப்படும். கல்விச்சாலைகள் பெரும்பாலும் மடங்களிலிருந்து வந்தமை யால், பள்ளி என்னும் சொல் கல்விச்சாலையையுங் குறித்தது. பள்ளிக்கூடம் பள்ளிப் பிள்ளை பள்ளிக்கு வைத்தல் முதலியன உலக வழக்கு. எழுத்துப் பள்ளி என்பது மலையாள (சேர) நாட்டு வழக்கு. மடங்கள் பெரும்பாலும் கோவில்களைக் சேர்ந்திருந்தமை யாலும், அங்ஙனம் சேராத மடங்களுள்ளும் கோவில் இருந்தமை யாலும், கோவில் கடவுள் வீடாதலாலும், பள்ளி என்னும் சொல் கோவிலையுங் குறிக்கும். சமண புத்தமதக் கோவில்கள் மடத்தோடு சோந்திருந்தமை யாலேயே, பொதுவாய்ப் பள்ளியெனப்பட்டன. மசூதிகளும் மடம் போன்றவை என்னுங் காரணத்தால் பள்ளிவாசல் எனப்படும். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் என்னும் குறட்கு, (840) சான்றோர் அவையின்கண் பேதையா யினான் புகுதல், தூயவல்ல மிதித்தகாலை இன்பந்தரும் அமளிக் கண்ணே வைத்தாற்போலும். கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு; அதனால் அவ்வமளியும் இழிக்கப்படு மாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப் படும் என்பதாம் என்று உரை கூறினார் பரிமேலழகர். சான்றோர் அவை திருமுன்னிலைபோலத் தெய்வத்தன்மை யுடையதாய்க் கருதப்படுவதால், பள்ளி என்பதற்குப் படுக்கை என்று பொருள் கொள்ளாமல் கோவில் என்று பொருள் கொள்வதே பொருத்தமாம். படுக்கும் வீடே ஒருவனுக்கு நிலையான இடமாதலால் பள்ளி என்பது நிலையான இடத்தைக் குறித்துப் பின்பு அக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இடத்திற்கே பொதுப்பெயராயிற்று. எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க; (பிறப்பியல், 20). துரை என்பது, துர என்னும் பகுதியடியாகப் பிறந்து, தலைவன் அல்லது சிறறரசன் என்று பொருள்படும் கொடுந் தமிழ்ச் சொல். துரத்தல் செலுத்துதல் அல்லது நடத்துதல். மேனாடுகளிலிருந்து இங்கு முதன் முதலில் வந்தவர்கள் தலைவராகவும் அரசியலை மேற்கொண்டவராகவுமிருந்ததினால், அவர்கட்குத் துரை என்பது பொதுப்பெயராக வழங்கத் தலைப்பட்டது. பெண்ணை அல்லது பெண்டிரைக் குறிக்கும் மாதர் என்னும் சொல், காதற் பொருளைத் தருவதற்குக் காரணம் பெண்டிரின் காதலிக்கப்படும் தன்மையாகும். மாதர் காதல் என்பது தொல்காப்பியம் (உரியியல் 30). சேவகன் (வ) என்னும் பெயர், ஊழியன் ஏவலன் மறவன் முதலிய பொருள்களைத் தரும். ஊழியனும் ஏவலனும் மறவராயிருந்தால் தான் உண்மையாகவும் சிறப்பாகவும் ஊழியஞ் செய்ய முடியும். பண்டைக் காலத்தில் ஏவலர் இளையர் எனப் பட்டதும், அவர் இளமையோடு கூடிய மறமும் வலியும் உடைய ராயிருந்தமை பற்றியே. வண்ணம் வண்ணம் என்பது நிறம். அது நிறம்போன்ற வகையையும், செய்யுளின் ஓசை வகையையும், ஓசையிற் சிறந்த செய்யுள் அல்லது பாட்டையும் குறித்தது. அவ்வண்ணம் இவ்வண்ணம் என்பன வகையையும், நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் என்பன ஓசை வகையையும், வண்ணக வொத்தாழிசைக் கலி நாட்டை வண்ணம் என்பன செய்யுள் அல்லது பாட்டையும் குறித்தல் காண்க. வண்ணத்தை வர்ணம் என்பர் வடமொழியார். வெள்ளை நிறமானது தெளிவாகவும் களங்கமற்றுமிருப்பதால் வெள்ளை என்னும் சொல் தெளிவையும் களங்கமின்மையையும் குறிக்கும். எளிய நடையை வெள்ளை நடை என்பர். சூதுவாதற்றவனை வெள்ளை என்றும் வெள்ளந்தி, என்றும் அழைப்பர். வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை, என்றார் ஔவையாகும். குற்றமற்ற பாவகை வெள்ளை எனப்பட்டது. வெள்ளையான பா வெண்பா. பக்குவம் செய்யப்படாத மூலிகை பச்சையாயிருப்பதால் பச்சை என்னும் சொல், பக்குவம் செய்யப்படாத அஃதாவது அடக்கிச் சொல்லப்படாத இடக்கரைக் குறிக்கும். பச்சைப் பேச்சு, பச்சை பச்சையாய்ப் பேசுதல் என்பன உலக வழக்கு. எளியாரிடத்தும் வலியாரிடத்தும் ஒப்ப நின்று ஒறுக்கும் தன்மைபற்றித் தெய்வச் சான்றாகக் கொள்ளப்படுவது நெருப்பு. அதன் நிறம் செம்மை. அதனால் செம்மை என்னும் சொல் நேர்மையை உணர்த்தும். திணை திணை என்பது, திரட்சியைக் குறிக்கும் திண்ணை என்னுஞ் சொல்லின் தொகுத்தல் திரிபு (விகாரம்). அது முறையே, திரண்ட குழுவையும், பெருங்குழுவான குலத்தையும், குலத்திற்குச் சிறந்த ஒழுக்கத்தையும், குலம்போன்ற பாகுபாட்டையும், ஐவகை மரபினர் வசித்த நில வகையையும் அவற்றின் செய்திகளையும் குறிப்பதாயிற்று. பழங்காலத்தில், ஒருவர் இன்னொருவருக்குக் கொடுக்குங் கொடையை உறுதிப்படுத்துவதற்கு, கொடுப்பார் கொள்வார் கையில் நீரை வார்ப்பது வழக்கம். இதற்குத் தாரைவார்த்தல் என்று பெயர். இத்தொடர் இன்று அதைக் கொடுத்துவிடுவது போலிருத்தலால் அதுவுங் கொடைச் சொல்லாற் குறிக்கப்பட்ட தென்க. 4. வரையறுப்பு (Restriction): பல பொருட்குப் பொதுவான சொல்லை அவற்றுள்ள ஒரே பொருளில் வழங்குதல் வரையறுப்பாகும். பிள்ளை: என்னும் பொதுப் பெயரை வேளாளர்க்கு மட்டும் குலப்பட்டமாக வழங்குவதும், ஆண்பிள்ளையை அல்லது பெண்பிள்ளையை மட்டும் குறிக்க ஆள்வதும் கறி (இது Meat என்னும் ஆங்கிலச் சொல்லை யொத்தது) என்னும் பொதுச் சொல்லால் ஊன் கறியை மட்டும் உணர்த்துவதும்; குட்டி என்னும் இளமைப் பெயரை ஆடும் மக்களுமாகிய ஈரினத்திற்கு மட்டும் சிறப்பாய்ப் பயன்படுத்துவதும்; வரையறுப்பிற் கெடுத்துக் காட்டாம். இழைத்தல் என்னும் வினை, பொதுவாய்த் தீமை செய்தலையே குறிக்கும். 5. விரிப்பு (Extension) : ஒரு பொருட்டுச் சிறப்பான சொல்லை, அதற்கினமான பிறபொருட்கும் வழங்குவது விரிப்பாம். கைம்பெண்: கைம்மை நோன்பு நோற்றவளை மட்டும் குறிக்க வேண்டிய கைம்பெண் (கைம்பெண்டு, கைம்பெண்டாட்டி) என்னும் பெயர், இன்று கணவனையிழந்த பெண்டிர் எல்லார்க் கும் பொதுப்பெயராய் வழங்குகின்றது. பொன் : பொன் என்பது பலவகைத் தாதுக்களையும் பொது வாகச் சுட்டுவதும், செம்பு என்பது பலவகைத் தாதுக்களாலும் செய்யப்படும் ஒரு வகைக் கலத்தைக் குறிப்பதும், தோடு என்பது ஓலையாற் செய்யப்பட்ட காதணியை மட்டும் குறிக்காது பிற கருவிகளாற் செய்யப்பட்டவற்றையும் குறிப்பதும், புள் என்பது பறவை நிமித்தத்தை மட்டுமின்றிப் பல்வேறு நிமித்தங்களையும் பொதுவாகக் குறிப்பதும் விரிப்பின் வகையாம். இரும்பிற்குக் கரும்பொன் என்றும், வெள்ளிக்கு வெண்பொன் என்றும் பெயர். தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று (குறள். 931) என்னும் குறள் தொடரில், பொன் என்பது இரும்பைக் குறித்தது.. வாய்ச் சொல்லாற் குறிக்கப்படும் குறியை வாய்ப்புள் என்பர். (சொல். 92-102). பொருள் வகை பொருள் - காட்சி கருத்து ஆகிய இரண்டிற்கும் பொதுவான பொருள். பண்டம் - கட்புலனானதும் கனவடிவுள்ளதுமான உயிரற்ற பொருள். சரக்கு - காய்ந்த பொருள். தாரம் - இயற்கை விளைபொருள். ஆக்கம் - செயற்கை விளைபொருள். செய்பொருள் - கையாற் செய்யப்படும் பொருள். உரு - கனவடிவப் பொருள். உருவம் - பெருங் கனவடிவப் பொருள். உருப்படி - தனிப்பட்டதும் உயிரற்றதும் ஒன்றன்படியு மான கனவடிவப் பொருள் (Article). உடைமை - உடம்பிலுள்ள ஆடையணிப்பொருள். மதி - அளவிடப்பட்டு வரிவிதிக்கப்படும் கடல் வாணிகப் பொருள் (எ-டு : ஏற்றுமதி, இறக்குமதி). சொம் - சொந்தப் பொருள். சொத்து - சொந்தப் பொருட் டொகுதி (Property). செல்வம் - விலை மதிப்புள்ள பொருட்டொகுதி. (செல்வோம் என்று சொல்வது செல்வம் என்றும் கையை விட்டுச் செல்வது செல்வம் என்றும் சிலர் பொருட் காரணம் கூறுவது பொருந்தாது. செல்லும் மதிப்புள்ளதே செல்வம். இக்காசு செல்லுமா செல்லாதா? என்னும் வழக்கை நோக்குக) வெறுக்கை - செறிந்த செல்வம் காசு - தனி நாணயம் (coin) பணம் - காசுத் தொகுதி (Money). (சொல். 38, 39).