தேவநேயம் 9 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 9 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 312 = 320 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்று விப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப் படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடு வதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை நால் வரணப் பகுப்பு 1 நாலா 5 நாவலந்தீவின் முந்நிலைகள் 5 நாவாய் 5 நாழி 6 நாழிகை 6 நாளம் 7 நாளிகேரம் என்னும் சொல் வரலாறு 7 நாளும் வேளையும் பாராமை 10 நாற்பொருளும் முப்பாலும் 11 நான்கன் திறம் 12 நிகழ்கால வினை 18 நிச்சம் 33 நித்தம் 33 நித்தல் 33 நிமை 34 நிரயம் (நரகு) 35 நிலமும் ஊரும் 35 நிலவகை 35 நிலவரி 35 நிலாக் குப்பல் விளையாட்டு 35 நிலைத்திணை 36 நிலைத்திணைத் தொகுப்பு வகை 36 நிலைத் திணைப் பாகுபாடு 37 நிலையம் 37 நிற்றியம் 37 நிறை 37 நின்றால் பிடித்துக்கொள் விளையாட்டு 38 நீயிர் 38 நீர் 38 நீரம் 38 நீலம் 38 நுகம் 39 நுணல் 39 நுணா 40 நுந்து 40 நுல்1 என்னும் வேர்ச்சொல் 40 நுல் (துளைத்தற் கருத்துவேர்) 48 நுல் (ஒளிர்தற் கருத்துவேர்) 52 நுல் (நெகிழ்ச்சிக் கருத்துவேர்) 57 நுல் (நோதற் கருத்துச் சொற்கள்) 62 நுல் (நீட்சிக் கருத்துவேர்) 65 நுல் (பொருத்தற் கருத்துவேர்) 78 நூல் வகை 87 நெடுங்கணக்கு (அரிவரி) 87 நெயவுத் தொழில் 94 நெருஞ்சிப் பழம் 94 நெருப்புப் பற்றிய `சுள் அடிச் சொற்கள் 94 நெல்வகை 101 நேயம் 101 நேர்பாடு 101 நொச்சியார் 101 நொண்டி விளையாட்டு 102 நொறு நாட்டியம் 103 நோன்புவகை 103 பக்கம் 104 பகவன் (1) 104 பகு - பஜ் -(இ.வே.) 104 பகுத்தறிவின் பயன் 113 பகுத்தறிவு விளக்கம் 113 பச்சைக் குதிரை விளையாட்டு 114 பஞ்சாய்ப் பறத்தல் 115 பஞ்சி 115 பஞ்சு வெட்டுங் கம்படோ விளையாட்டு 115 பட்டணம் 116 பட்டடை 116 பட்டம் 116 பட்ட விளையாட்டு 116 பட்டி 117 பட்டிகை - வ. பட்டிகா 117 படகம் 117 படர்க்கை `இ விகுதி 118 படலம் 124 படாம் 125 படி 125 படிவம் 125 படு 126 படைஞன் இயல்பு 126 படையும் பாதுகாப்பும் 126 பண்டமாற்றுங் காசும் 138 பண்டாரம் 143 பண்டிதன் 143 பண்டைத் தமிழ் மணம் 144 பண்டைத் தமிழ்மணம்: இடைக் கால மாறுதல்கள் 162 பண்டைத் தமிழ நாகரிகம் 168 பண்டைத் தமிழப் பண்பாடு 278 பண்டைத் தமிழர் காலக் கணக்கு முறை 302 பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை 308 நால் வரணப் பகுப்பு தமிழ்ப் பொருளிலக்கணத்தில் அகப்பொருட்குச் சிறப்பாக வுரியவராகத் தலைமக்களே கொள்ளப்பட்டதனால், கல்வி காவல் வணிகம் உழவு கைத்தொழில் என்னும் மருதநிலத் தொழில்கள் ஐந்தனுள், கைத்தொழில் உழவிற்குப் பக்கத் துணையானதென்று நீக்கி, ஏனை நான்கிற்கும் உரிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாரையே காதலன் காதலியென்னுங் கிளவித்தலைவராகக் குறித்தனர். அந்தணர் என்பது துறவியரான ஐயரையே சிறப்பாகக் குறிக்கு மேனும், அகப்பொருட்டுறைக்கு அவர் ஏற்காமையின் இல்லறத் தாரான பார்ப்பாரே அந்தணர் என்னும் பெயராற் கொள்ளப் பெறுவர். அந்தணர் முதலிய நால்வகுப்பார் பெயரும் அவ்வவ் வகுப்பார் அனைவரையுங் குறிக்குமேனும், அவருள் தலைமை யானவரே, கிளவித்தலைவராகக் குறிக்கப் பெறுவர் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, வேளாளர் என்பவர் அவ்வகுப் பாரின் (உழுவித்துண்ணும்) தலைவரான வேளிர் என்னும் குறுநில மன்னரேயென்றும், வணிகர் என்பவர் மாசாத்துவன் போலும் நிலவணிகரும் மாநாய்கன்போலும், நீர்வணிகருமேயென்றும், அரசர் என்பவர் கோக்களும் வேந்தருமேயென்றும், அந்தண ரென்பார் தலைமைப் புலவரும் குருக்களும் அமைச்சருமே யென்றும், இது புலனெறிவழக்க மென்னும் இலக்கிய (செய்யுள்) வழக்கேயென்றும், அறிந்து கொள்க. துறவியர் அகப் பொருட்டலை வரல்லரேனும், தூதுசெல்லல் சந்துசெய்தல் முதலிய புறப்பொருட்குத் தலைவராவர். உலக வழக்கில், கல்வி காவல் (ஆட்சி), வணிகம் உழவு கைத் தொழில் என்னும் ஐவகைத் தொழில் செய்வோரும், முறையே, பார்ப்பார் அரசர் வணிகர் உழவர் (வேளாளர்) தொழிலாளர் எனப்படுவர். பிராமணர் இப்பாகுபாட்டைப் பயன்படுத்தி, பார்ப்பாரையும் அந்தணரையும் ஒருங்கே பிராமணர் என்றும், அரசரைச் சத்திரியர் என்றும், உழவர் சிறார் சிலர் மாடு மேய்ப்ப தாலும், உழுவித்துண்ணும் வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர் (வெள்ளாளர்) பலர் கடைக்காரரும் வணிகருமாயிருப்பதாலும், உழவும் வணிகமும் மாடுமேய்ப்பும் ஒருங்கே செய்பவரை வைசியர் என்றும், உழவுங் கைத்தொழிலுங் கூலிவேலை யுஞ் செய்யும் மூவகுப்பாரைச் சூத்திரரென்றும், மக்களை நால்வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும் சத்திரியனுக்குச் செந் நிறமும் வைசியனுக்குப் பொன்னிறமும் சூத்திரனுக்குக் கரு நிறமும் சார்த்திக் கூறி, நால் வரணப் பாகு பாட்டை ஏற்படுத்தி, பிராமணர் கல்வித்தொழிலையும் பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழில்களையும் வழிவழி செய்து வரவேண்டு மென்றும், சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவ ரென்றும், சூத்திரன் மேன் மூவர்க்கும் வைசியன் மேலிருவர்க்கும் சத்திரியன் பிராமணர்க்கும் தொண்டு செய்யவேண்டுமென்றும், இது இறைவன் ஏற்பாடென்றும், மேல்வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இருபிறப்பாளரென் றும், வேதத்தைச் சூத்திரன் காதாலுங் கேட்கக் கூடாதென்றும், பிராமணனைக் காணின் மற்ற மூவரும் தத்தம் தாழ்வுநிலைக்குத் தக்கவாறு ஒதுங்கி நிற்கவேண்டுமென்றும், இறைவன் கட்டளை யிட்டதுபோற் கற்பித்துவிட்டனர். இச் சட்டதிட்டம் வடநாட்டில் விரைந்து முழுவதும், தென் னாட்டிற் படிப்படியாகப் பேரளவும், ஆட்சிக்குக் கொண்டுவரப் பட்டது. இங்ஙனம், இயற்கையாகத் தொழில்பற்றியிருந்த குலப் பாகுபாடு நிறம் பற்றி மாற்றியமைக்கப்பட்டது. வரணம், நிறம். வள்ளுதல் = வளைத்தல், வளைத்தெழுதுதல். வள்-வளை. வளைத்தல் = வளைத்தெழுதுதல், வண்ணப்படம் வரைதல், வரைதல். உருவப் பல்பூ வொருகொடி வளைஇ (நெடுதல்.113.) வள்-வண். வளை-வணை. வண்-வண்ணம் = 1. எழுத்து. 2. எழுதிய படம். 3. படமெழுதுங் கலவை. பலகை வண்ண நுண்டுகிலிகை (சீவக. 1107). 4. எழுதுங் கலவை நிறம், நிறம். வான்சுதை வண்ணங் கொளல் (குறள். 714). வண்ண மாலை = நெடுங்கணக்கு. வ. வர்ண மாலா. வள்-வர்-வரி. வரிதல் = எழுதுதல். வரித்தல் = 1. எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக. 2532) 2. ஓவியம் வரைதல். வல்லோன் தைஇய வரிவனப்புற்ற வல்லிப் பாவை (புறப். 33). 3. கோலஞ் செய்தல். புன்னை யணிமலர் துறை தொறும் வரிக்கும் (ஐங்குறு. 117). வரி = 1. கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு (சீவக.1702). வரிமா = வரிப்புலி (வேங்கை). 2. தொய்யிற் கொடி வரை. மணிவரி தைஇயும் (கலித். 76). 3. கை வரி. 4. எழுத்து, எழுத்தின் வரிவடிவு. 5. ஓவியம். 6. நிறம். வரியணி சுடர் வான்பொய்கை (பட்டினப். 38). வர்-வரு-வருவு. வருவுதல் = வரைதல். வருவுமுள் = பொன்னத் தகட்டிற் கோடிழுக்கும் இருப்பூசி. வரு-வரை. வரைதல் = எழுதுதல். வரி + அணம் = வரணம் = 1. எழுத்து, ஓவியம். 2. நிறம். 3. நிறம் பற்றிய நால் வகுப்பு. வண்ணம் = வரணம். ஒ.நோ: திண்ணை = திரணை. வண்ணம்-வண்ணி. வண்ணித்தல் = ஓவியம் வரைந்து கோலஞ் செய்தல் போல், ஒரு பொருளைப்பற்றி அழகாகப் புனைந் துரைத்தல். வண்ணித்த லாவ தில்லா (சீவக.2458). வரணம் - வரணி. வரணித்தல் = அழகாகப் பலபடப் புனைந் துரைத்தல். வண்ணி - வண்ணனை. வரணி - வரணனை. வண்ணம் = நிறம், நிறத்தால் வேறுபடும் பொருள்வகை, வகை (பொது), இனவகை, ஓசைவகை, ஓசைவகையால் ஏற்படும் செய்யுள்வகை (இருபது தொல்காப்பிய வண்ணமும் நூறு அவிநய வண்ணமும் கணக்கற்ற திருப்புகழ் வண்ணமும்), பாட்டுவகை (கணக்கற்ற வண்ண மெட்டுகள்). வண்ணம் என்னும் சொல்லிற்குரிய பொருள்கள், பெரும்பாலும், வரி வரணம் என்னும் சொற்கட்கு முண்டு. அவ்வண்ணம் இவ்வண்ணம் என்பன, அப்படி இப்படி என்று பொருள்பட்டுப் பொதுவான வகையைக் குறிப்பன. இன்ன வண்ணம்-இன்னணம். வரணி - வ. வர்ண். வரணனை - வ. வர்ணனா. வண்ணம் வரணம் என்னும் இரு தென்சொற்களையும் வட சொல்லென மயங்கி, வரணம் என்பதை வருணம் என்றும், வரணி என்பதை வருணி என்றும், வரணனை என்பதை வருணனை என்றும், அகரத்தை உகரமாக மாற்றி எழுதுவதோடமையாது, வண்ணம் வண்ணி என்னும் சொற்களையும் வர்ண வர்ண் என்னும் வடசொல் வடிவுகளின் திரிபாகக் கொள்வாராயினர். நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே, பேருலக வடிவான விராட் என்னும் பரம்பொருளின் முகத்தினின்று பிராமண னும், தோளினின்று (புயத்தினின்று) சத்திரியனும், தொடையி னின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும், தோன்றினர் என்னும் புருட சூத்தம் (புருஷஸூக்த) இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்திற் செருகப்பட்டது. பேருலக வடிவான பரம் பொருட் கருத்தும், பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்பு கொண்டபின் தோன்றியதே. முகம் முதலிய நான்கனுள்ளும், முகமே உச்சியிலும் ஏனை மூன்றும் ஒன்றினொன்று தாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும் இரண்டையும் மூன்றையும் தாங்கியும், இருப்பது போல், நால்வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன் என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரினொருவர் தாழ்ந்த வரும் மேலுள்ள ஒருவனையும் இருவரையும் மூவரையும் தாங்க வேண்டி யவருமாவர் என்பதும்; நாலுறுப்பும் ஒரே ஆள் வடி வான பேருலக மகன் (விராட் புருஷ) கூறுகளாதலால், நால்வரண மும் இறைவன் படைப்பென்பதும்; கருத்தாம். இனி, கல்வித் தொழிலுக்கு வாயும் (நாவும்) மூளையும், போர்த் தொழிலுக்குத் தோளும், இருந்து துலை நிறுத்தற்குத் தொடை யும், நடந்து பாடுபடுதற்குப் பாதமும், வேண்டுமென்பது; உட் கருத்தாம். இனி, போருக்கு வேண்டும் தோள்வலிமை மறக் குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும் பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடியினர்க்கும், உழைப்பிற்கு வேண்டும் உடல்வலிமை பாட் டாளி மக்கட்கும், இருப்பதுபோல், கல்விக்கு வேண்டும் நாவன் மையும் மதிநுட்பமும் பிராமணனுக்கே யுண்டென்பதும், ஆதலால், நால்வரணத் தாரும் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழிலையே செய்துவர வேண்டுமென்பதும், நச்சுத்தன்மை யான சூழ்ச்சிக் கருத்தாம். பிராமணர் பொதுமக்களொடு தொடர்புகொள்ளாது நேரே வேந்தரையடுத்து, அவர் பழங்குடிப் பேதைமையையும் கொடை மடத்தையும் மதப் பித்தத்தையும், தம் வெண்ணிறத்தையும் வெடிப்பொலி மொழியையும். வரையிறந்து பயன்படுத்திக் கொண்டு, தாம் நிலத்தேவர் என்றும் தம்மொழி தேவமொழி யென்றும், தாம் குறித்த வேள்விகளைச் செய்யின் இம்மையில் மாபெரு வெற்றியும் மறுமையில் விண்ணுலக வேந்தப் பதவியும் பெறலாமென்றும், துணிந்து சொன்னபோது, அறிவியற் கல்வி யும் மொழியாராய்ச்சியும் இல்லாத அக்காலத்து அரசர் முற்றும் நம்பி அடிமையராயினர். மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி. ஆதலால், குடிகளும் ஆரியர்க் கடிமையராயினர். ஒன்றரை நூற்றாண்டு ஆங்கிலர் ஆட்சியும், இரு நூற்றாண்டு ஆங்கில அறிவியற் கல்வியும், கால் நூற்றாண்டு நயன்மைக் கட்சி முன்னேற்றமும், ஏற்பட்ட பின்னும், மேலையர் திங்களையும் செவ்வாயையும் அடையும்போதும், தமிழின் திரிபான சமற் கிருதத்தைத் தேவமொழியென்றும், சமற்கிருதச் சொல்லின் ஆற்றல் தமிழ்ச்சொற்கில்லையென்றும், உறழுரையாடுவாராயின், அதைச் செவிமடுத்துத் தமிழரும் ஊமையரும் உணர்ச்சி நரம் பற்றவருமா யிருப்பாராயின், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கள்ளங் கரவற்ற வெள்ளந்தி மக்கள் ஆரிய ஏமாற்றிற்கு இணங் கியது வியப்பாகாது. (த.வ.) நாலா நாலா - வ. நானா அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால் வகுப்பை யும் சேர்ந்த எல்லா மக்களும் வந்திருந்தனர் என்பதை, நாலா பேரும் வந்திருந்தனர் என்றும்; நாற்றிசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்பதை, நாலா திசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்றும்; கூறுவது மரபு. நாலா = நால்வகை, எல்லா, பலவகை. (வ.வ:187.) நாவலந்தீவின் முந்நிலைகள் (1) பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தோடு அல்லது பழம்பாண்டி நாட்டொடு கூடியது. (2) பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம்பாண்டி நாடும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி. என்று சிலப்பதிகாரம் (11:19-22) கூறுவதால், பழம் பாண்டிநாடு முழுமையும் இருந்த காலத்தில் பனிமலையும் இருந்தமை அறியப்படும். (3) பழம்பாண்டிநாடு இல்லாத இந்தியா. நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார் (மணி. 25.12) (வ.வ.) நாவாய் நாவாய்-நௌ, நாவ (இ.வே.) நளியிரு முந்நீர் நாவா யோட்டி (புறம். 66) நாவுதல் = கொழித்தல். நாவு-நாவாய் = கடல்நீரைக் கொழித்துச் செல்லும் பெருங்கலம். வானியைந்த விருமுந்நீர்ப் பேஎநிலைஇய விரும்பௌவத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை யிதையெடுத் தின்னிசைய முரசுமுழங்கப் பொன்மலிந்த விழுப்பண்ட மாடியற் பெருநாவாய் நாடார நன்கிழிதரு மழைமுற்றிய மலைபுரையத் துறை முற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற வுயர்நெல்லி னூர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக். 75-88) என்று, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது, அவன் முன்னோருள் ஒருவன் சாலி (சாவக)த் தீவைக் கைப் பற்றியமை ஏற்றிக் கூறப் பட்டிருத்தல் காண்க. வேத ஆரியர் கடலையும் கப்பலையும் கண்டறியாது நிலவழியாக இந்தியாவிற்கு வந்தவர். சிந்தாற்றில் இயங்கிய படகுகளைப் பற்றித் தான் அவர்க்குத் தெரியும். அதனால் வடநாட்டில் வழங்கிய நௌ என்னும் சொல்லாற் படகையே முதலிற் குறித்தனர். வடவர் காட்டும் வேடிக்கையான சொன்மூலம் வருமாறு:- (1) bes=th¢(c) - (நிருக்த, 1 : 11). வாச் = பேச்சு, மொழி, குரல், ஒலி. (2) நு4 = பராவு (praise). தெய்வத்தைப் பராவும் மன்றாட்சி (prayer) வானுலகிற்குச் செலுத்துகின்ற கலமாக இருக்கின்றது. “ 2 nau=vae, Nir. i, 11 (either because prayer is a vessel leading to heaven or fr. 4 nu, ‘to praise’)” - மா.வி.அ. பக். 571. (வ.வ : 187-188.) நாழி நாழி - வ. நாடி நுள் - நள் - நாள் - நாழி = உட்டுளைப் பொருள், மூங்கிற்படி, முகவைப்படி, நெசவுக்குழல், அம்பறாத்தூணி, கன்னல் (நாழிகை வட்டில்), நாழிகை. ம. நாழி, க. நாழி. நாழிக்கிணறு, நாழிச்செம்பு, நாழிமணி, நாழியோடு, நாழிவழி என்பன தொன்றுதொட்ட பெருவழக்குச் சொற்கள். (வ.வ:188.) நாழிகை நாழிகை - வ. நாடிகா நாழி - நாழிகை = 1. உட்டுளைப் பொருள். 2. நாழிகை வட்டில். 3. நாழிகை வட்டிலில் உள்ள நீர் அல்லது மணல் முழுதும் ஒருமுறை விழும் நேரம் = 24 நிமையம் (நிமிஷம்). 4. அறை. உண்ணாழிகை = உள்ளறை (கர்ப்பக்கிருகம்). உண்ணாழிகையா ருமையாளோடு (தேவா. 592 : 3) உண்ணாழிகை வாரியம் = கோயில் மேற்பார்வைக் குழு (I.M.P. Cg. 205). திருவுண்ணாழி-திருவுண்ணாழிகை (கர்ப்பக் கிருகம்). திருவுண்ணாழிகை யுடையார் வசமே நாள்தோறும் அளக்கக் கடவோம் (S.I.I.i, 148). ம. நாழிக, க. நாழிகே. நாழிகைக் கணக்கன், (சிலப். 5 : 46, உரை), நாழிகைக்கல் (mile-stone), நாழிகைத் தூம்பு (நீர்வீசுங் கருவி வகை, பெருங். உஞ்சைக். 38 : 106). நாழிகைப் பறை (சிலப். 3 : 27, உரை), நாழிகை வட்டம் (கால்வாயிலிருந்து தண்ணீர் பகிர்ந்துகொள்ளும் முறை), நாழிகை வட்டில் (சிலப். 5 : 49, உரை) நாழிகை வழி என்பன தொன்றுதொட்ட பெருவழக்குச் சொற்கள். (வ.வ : 189.) நாளம் நாளம்-நால நுள்-நள்-நாள்-நாளம் = உட்டுளையுள்ள தண்டு. (வ.வ : 187.) நாளிகேரம் என்னும் சொல் வரலாறு வடமொழியில் தென்னைக்கு நாலிகேர என்று பெயர். அதினின்று கேரளம் என்னும் சொல்லைத் திரிக்கவுஞ் செய்வர். நாலிகேர என்பது வடமொழியில் தன்னந் தனிச்சொல். அதற்கு அம்மொழி யில் மூலமில்லை. கேரளம் என்பது சேரலம் என்பதன் திரிபா யிருக்கவும், அத்திரிவைத் தலைகீழாகக் காட்டுவது வடமொழி யாளர் வழக்கம். தென்னை இயற்கையாகத் தோன்றிய நிலம் குமரிநாடு. குமரிக் கண்டத் தென்பாக நாற்பத்தொன்பது நாடுகளுள் ஒரு பகுதி ஏழ் தெங்கநாடு. தென்னை தென்கோடியில் தோன்றியதனாலேயே, தென்றிசை அதனாற் பெயர் பெற்றது. தென்னுதல் - கோணுதல், சாய்தல். இயல்பாகக் கோணுவ தனாலேயே முடத் தெங்கு என்னும் அடைமுதற்சொல் எழுந்தது. தென்- தென்னை. தென் - தென்கு- தெங்கு. தென் = தெற்கு. தென் + கு- தெற்கு. x.neh.: வடக்கு (வடம் + கு), கிழக்கு (கீழ் + கு), மேற்கு (மேல் + கு). தென்னைக்கு நெய்தல்நிலம் மிக ஏற்றதாதலால், நெய்தல் மிக்க சேரநாட்டில் தென்னை தொன்றுதொட்டுச் சிறப்பாகச் செழித் தோங்கி வளர்கின்றது. தீயர் (தீவார்) இலங்கையினின்று வந்தவ ரேனும், தென்னை குமரிநாட்டுத் தொடர்புடையது. அரிசி அல்லது நெல்லளக்கும் படி முதன்முதல் மூங்கிற் குழாயாலேயே அமைந்தது. நுள் - நள்- நாள் - நாளம் = உட்டுளை, உட்டுளைப் பொருள், தண்டு. நாளம் - நாளி = உட்டுளையுள்ள மூங்கில், புறக்காழது. நாளி - நாழி= மூங்கிற்படி, படி. புறக்கா ழனவே புல்லென மொழிப (மரபு.86) என்னும் தொல்காப்பிய மரபியல் நூற்பாவால் தென்னையும் மூங்கிலொடு சேர்ந்து நாளியினமாம். வேந்தன் குடிப் பெயரினின்று அவன் நாட்டுப் பெயர் திரிவதுண்டு. எ-டு: பாண்டியன் - பாண்டியம் = பாண்டிநாடு. இம் முறைப்படி, சேரலன் - சேரலம், சேரன் - சேரம் என்று திரியும். தென்மொழிச் சகரம் வடமொழியிற் ககரமாகத் திரிவதால், சேரலம் - கேரள(ம்), சேரம் - கேர(ம்) என்றாம். ஆகவே, நாலிகேர என்பது, சேரநாட்டில் சிறப்பாக வளரும் மூங்கிலொத்த புறக்காழ்த் தென்னை என்று பொருள்படலாம். (வடமொழியிற் சொன்முறை மாறும்). நாலிகேர என்பது, தமிழில் நாளிகேரம் என்னும் வடிவே கொள்ளும். வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை (தேவா. 106:5). முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத்த போக்கறு பனுவலாகிய தொல்காப்பியம், உரிவரு காலை நாழிக் கிளவி இறுதி யிகரம் மெய்யொடுங் கெடுமே டகரம் ஒற்றும் ஆவயி னான (240) திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான (432) என்று கூறுவதினின்று, மூங்கில் போன்றே தென்னையும் குமரி நாட்டுத் தொன்மை யுடைமை உய்த்துணரப்படும். நாளி - நாடி - நேடி = மூங்கில் (மலை.). தனிச்சொல், கூட்டுச்சொல் எனச் சொல் இரு திறப்படுவது போன்றே, தனிக்கருத்து, கூட்டுக்கருத்து எனக் கருத்தும் இரு திறப்படும். நுழைதல் என்னுஞ் சொல்லில் நுண்மை, புகவு என்னும் இரு கருத்துகள் கலந்துள்ளன. இடுக்கமான வாயில் அல்லது புழை அல்லது இடைவெளி வழியாக, உடம்பை ஒடுக்கியும் ஒடுக் காதும் உட்செல்வது நுழைதல் என்றும், உடம்பைச் சற்றும் ஒடுக் காது, நிமிர்ந்து தாராளமாக ஒரு பெருவாயில்வழி உட்செல்வது புகுதல் என்றும் சொல்லப்படும். இவ் வழக்கு, காட்சிப் பொருள் கருத்துப் பொருள் ஆகிய இருவகைக்கும் பொருந்தும். ஆதலால், புகவுச் சீட்டை நுழைவுச் சீட்டு என்றும், புகவுத் தேர்வை நுழைவுத் தேர்வு என்றும் வழங்குதல் தவறாம். நுழு - நுழுது. நுழுதுதல் = தலைமயிரைச் சுருட்டி நுழைத்து முடித்தல், மயிர்நுழுதி மருங்குயர்ந்த தேசுடைய சிகழிகையில் (பெரியபு. ஆனாய. 15). க. நுலிசு, தெ. நுலுமு. நுழுது- நுழுந்து. நுழுந்துதல் = (செ.குன்றாவி.) 1. நுழைத்தல், செருகல். 2. தலைமயிரை முடித்தல். திருக்குழலைக் குலைத்து நுழுந்த (ஈடு, 10:1:1). 3. நுழைத்து மறைவான இடத்தில் வைத்தல், மறைத்து வைத்தல். (செ.கு.வி.) 1. பதுங்குதல் (யாழ்ப்.) 2. நழுவுதல் (யாழ்ப்.). 3. நகர்தல் (யாழ்ப்.). நுழு - நுழை, நுழைதல் = 1. இடுக்கமான இடைவழி உட்செல்லு தல். திருடன் பலகணி வழியாய் வீட்டிற்குள் நுழைந்து விட்டான் (உ.வ.). மலர்ப்பொழி னுழைந்து (சிலப்.10: 35). 2. இடைச் செருகலாய் அமைதல். தொல்காப்பியத்துள்ளும் ஆரியக் கருத்து நுழைந்துவிட்டது (உ.வ.). 3. வலக்காரமாக அல்லது கமுக்கமாக ஒரு வேலையிற் சேர்தல். அவன் மெள்ள மெள்ள நடுவணரசு அலுவலகத்தில் நுழைந்து கொண்டான் (உ.வ.). 4. நுண்ணிதாக விளங்குதல். அது அவன் மதியில் நுழையவில்லை (உ.வ.). ம. நழுக, க. நொளெ. நுழை = 1. சிறுவழி. பிணங்கரி னுழைதொறும் (மலைபடு. 379). 2.பலகணி (பிங்.). நுழைகடவை. நுழைவழி, நுழைவாயில் முதலியன சிறு திறப்புகளை அல்லது வாயில்களை உணர்த்துதல் காண்க. நுழு - நுழல் - நுணல் = மணலிற்குள் நுண்ணிதாய் முழுகிக் கிடக்கும் தவளை வகை. மணலுண் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயாற் கெடும் (பழ. 184) நுணல் - நுணலை (பிங்.). நுணா = நுணல் போன்ற காய் காய்க்கும் மஞ்சணாறி மரம். நுணா - நுணவு (மலை.) = மஞ்சணாறி மரம். நுணவு - நுணவம் = மஞ்சணாறி மரம். நாகுமுதிர் நுணவம் (சிறுபாண். 51.) நாளும் வேளையும் பாராமை நாள் செய்வது நல்லார் செய்யார் என்பது நம் முன்னோரின் கொள்கையே யாயினும், அறிவியல் (விஞ்ஞானம்) வளர்ச்சி யடைந்துள்ள இக்காலத்திற்கு அது ஏற்காது. இடம் என்பது எங்ஙனம் எங்கும் பரந்து தன்னளவில் வேறு பாடற்றதோ, அங்ஙனமே காலம் என்பதும் என்றும் பரந்து தன்னளவில் வேறுபாடற்றதாம். பகலிரவும் அவற்றால் நாளும் வேளையும் ஏற்படுவதற்குக் காரணம், கதிரவன் தோற்றமறைவு அல்லது ஞாலத்தின் (பூமியின்) சுழற்சியே. ஆதலின் நாளும் கோளும் அவன் ஆணைக்கடங்கியே நடக்கும். அவனன்றி அணுவும் அசையாது. நாளுங் கோளுமே நல்லது செய்யும் என்று நம்புவார், கடவுளை நம்பாதவரும், அவரது எட்டுத் திசையும் பதினாறுகோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தெழு சோதித் தன்மையை அறியாதவருமே யாவர். ஒவ்வொரு நன் முயற்சிக்கும் மங்கல வினைக்கும், நாளுங் கிழமையும் ஓரையும் வேளையும் பார்த்துப் பார்த்து என்றும் அச்சத்தோடேயே வாழ்வதால், இந்தியர் சராசரி வாழ்நாள் குறைந்ததும்; அவற்றைப் பாராத மேனாட்டார் வாழ்நாள் கூடியும் உள்ளன. நாள் செய்வது நல்லார் செய்யார் என்பது உண்மையாயின், நல்ல நாளில் மணப்பவரெல்லாம் நீண்ட வாழ்வினராயும், தீய நாளில் மணப்பவரெல்லாம் குறுகிய வாழ்வினராயும் இருத்தல் வேண்டும். அங்ஙன மன்மை வெளிப்படை. மேலும் ஒரு பெருவினை நன்னாளிலும் நல்வேளையிலும் தொடங்கப் பெறினும், தீயநாளிலும் தீய வேளையிலும் தொடர்ந்து செய்யப்படுவதையுங் கவனிக்க. உடல் நலத்தையும் வினைவசதிகளையும் தாக்கும் கோடை மாரி போன்ற கால வேறுபாடும், பகல் இரவு போன்ற வேளை வேறு பாடும் அல்லது, வேறு வகையிற் காலப்பகுதிகளைக் கணித்து வீணாக இடர்ப்படுவதை விட்டுவிடல் வேண்டும். நகரங்களில் நடைபெறும் திருமணங்கட்கு வருவார் பலர் அலுவலாளரா யிருப்பதனால், அவர் வசதி நோக்கி, பொது விடுமுறையல்லாத நாட்களில் நடத்தும் திருமணங்களை யெல்லாம், காலை 8 மணிக்கு முன்னாவது மாலை 4 மணிக்குப் பின்னாவது வைத்துக் கொள்வது நலம். (த.தி. 51-55) நாற்பொருளும் முப்பாலும் மக்கள் வாழ்க்கைக் குறிக்கோள் அறம்பொருளின்பம் வீடென் னும் நான்கென முதன்முதற் கண்டவர் தமிழரேயென்பதும், வீட்டைக் கண்டு திரும்பியவர் இங்கொருவரு மின்மையின் அது அறவொழுக்கமாகிய வாயில்வகையாலும் அகப்பொருளின்ப மாகிய உவமை வகையாலுமன்றித் தனித்துக் கூறப்படாதென்ப தும், அதனால் நாற்பொருளும் என்றும் அறம்பொருளின்ப மென்னும் முப்பாலாகவே யமையும். அறம் முதலிய நான்கும் திருக்குறள்போல் ஒருங்கே யன்றித் தனித்தனியே கூறும் நூல்களும் உள. அறத்திற்குப் பழமொழி, நன்னெறி, நீதிநெறிவிளக்கம் முதலியனவும், இன்பத்திற்குக் கோவை நூல்களும் வீட்டிற்குத் திருமந்திரம், மெய்கண்டநூல் முதலியனவும் எடுத்துக்காட்டாம். பண்டைப் பொருள் நூல் களெல்லாம் அழிந்து போயின. இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் பாலநத்தம் வேள் பாண்டித் துரைத் தேவர் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பழைய தமிழ் ஏட்டுச் சுவடிகளும் நூல்களும், மதுரைத் தமிழ்க்கழகத்தில் தமிழ்ப்பகைவரால் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றுள் என்னென்ன நூல் இருந்தனவோ, இறைவன்தான் அறிவான். இன்று சமற்கிருதத்திலுள்ள பொருள் நூல்களெல்லாம், இறந்து பட்ட பழந்தமிழ் நூல்களின் வழிநூலும் மொழிபெயர்ப்புமே. மூல நூலில்லாக் காலத்தில் படிகளே மூலமாகக் காட்சியளிக் கின்றன. ஆரியர் தமிழைக் கெடுத்த அடிப்படை வகைகளுள் ஒன்று மூலநூலழிப்பாம் இற்றை வடமொழிப் பொருள் நூல் களுள் முதன்மையானவை பாருகற்பத்தியம், ஔசநசம், கௌடி லீயம் என்பன. இவற்றை இயற்றினோர் முறையே, வியாழன் பிருகற்பதி, வெள்ளி, சுக்கிரன், சாணக்கியர் என்போர். இவருள் தலைமையாக மதிக்கப்பட்டவர் சுக்கிரரே. இதை, சாணக்கியர் தம் நூற்றொடக்கத்தில் சுக்கிரற்கும் பிருகற்பதிக்கும் வணக்கம் என்றும், கம்பர் தம் இராமாயணத்தில் வெள்ளி யும் பொன்னும் என்போர் விதிமுறை என்றும் சுக்கிரரை முன்வைத்துக் கூறி யிருத்தலால் அறிக. சுக்கிரர் அசுர குருவென்றும் பிருகற்பதி சுரகுரு அல்லது தேவகுரு என்றும் சொல்லப்படுவர் ஆராய்ந்து நோக்கின், ஆரியத் தொல் கதைகளில் - புராணங்களில் - அசுரர் என்பாரெல்லாம் தமிழ அல்லது திரவிட அரசரென்றும், தேவர் என்பாரெல்லாம் பிராமணரென்றும், அறியப்படும். மாவலி என்னும் மாபெருஞ் சேரவேந்தன் மகாபலி என்னும் அசுரனாகக் கூறப்பட்டிருப்பதே இதற்குப் போதிய சான்றாம். ஆரியர் இந்தியாவிற்குட் புகு முன்னும், ஆரியம் என்னும் பேரே உலகில் தோன்றுமுன்னும், தமிழகத்தை மூவேந்தரும் கணிப்பில்காலம் ஆண்டுவந்தன ரென்பதும், அவருள் முன்னோன் பாண்டியன் என்பதும் வெள் ளிடைமலையாம். ஆகவே, அரசியல் நூலான பொருள் நூல் குமரிநாட்டுப் பாண்டியரிடையே முதன்முதல் தோன்றினதாகும். அதனால் தமிழரிடத்தினின்றே சுக்கிரர் என்னும் ஆரிய அமைச்சர் பொருணூலைக் கற்றிருத்தல் வேண்டும். அவர் நூலின் வழி நூலாகவே பாருகற்பத்தியமும் அவ்விரண்டின் சார்பு நூலாகவே கௌடிலீயமும் தோன்றியிருத்தல் வேண்டும். நான்கன் திறம் 501ஆம் குறள் விளக்கம் அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் றிறந்தெரிந்து தேறப் படும். (குறள். 501) இதன் புணர்ச்சி பிரிப்பு அறம்பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும். இதன் உரைகள் மணக்குடவர் : அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து பின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான் என்றவாறு. முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டும் என்றார்: பின்பு தேறப்படும் என்றார். பரிப்பெருமாள் : அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கினையும் கூறுபடுத்து ஆராய்ந்து, பின்பு தேறப் படும் என்றவாறு. மேற்கூறிய குற்றமும் குணமும் ஆராய்தலேயன்றி அறத்தை வேண்டியாதல், பொருளை வேண்டியாதல், இன்பத்தை வேண்டி யாதல், அச்சம் உளதாம் என்றாதல் அரசன் மாட்டுத் தீமையை நினையாமையை ஆராய்ந்து, பின்பு அவரைத் தேறப்படும் என்று கூறப்பட்டது. பரிதியார் : தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நாலு காரியமும் விசாரித்து யாதொரு காரியமும் செய்வான் என்றவாறு. காலிங்கர் : மறைமுதலாகிய நூல் யாவற்றிலும் சொன்ன அறம் பொருள் இன்பம் வீடு என வகுத்த நால்வகையாகலின் அவற்றுள் அறமானது, பாவம் அனைத்தையும் பற்று அறுப்பது என்றும், இருமை இன்பம் எய்துவிப்பது என்றும்: அவற்றுள் பொரு ளானது, பலவகைத் தொழிலினும் பொருள் வருமேனும் தமக்கு அடுத்த தொழிலினாகிய பொருளே குற்றமற்ற நற்பொருள் என் றும், மற்று இனி இன்பமாவது, கற்பின் திருந்திய பொற்புடை யாட்டி இல்லறத்துணையும் இயல்புடை மக்களும் இருதலை யானும் இயைந்த இன்பம் என்றும்: மற்றும் இவற்றுள் உயர்ந்த வீடாவது, பேதைமையுற்ற பிறப்பு இறப்பு என்னும் வஞ்சப் பெருவலைப்பட்டு மயங்காது நிலைபெற நிற்கும் வீடு இஃது என்றும் - இங்ஙனம் இவை நான்கின் திறம் தெரிந்து, பின் தமக்கு அடுத்தது ஒன்றினைத் தலைத்தேறித் தெளிய அடுக்கும் அரசர்க்கு என்றவாறு. உயிரெச்சம் என்பது முத்தி என்றது. பரிமேலழகர்: அரசனால் தெளியப்படுவான் ஒருவன். அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப்பொருட்டான் வரும் அச்சமும் என்னும் உபதை நான்கின் திறத்தான், மன இயல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும் என்றவாறு. அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு, அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. Ë fU¤J v‹id? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதை யாவது, சேனைத்தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரால் இவ்வரசன் இவறன்மாலைய னாகலின் இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந் தது. Ë fU¤J v‹id? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்றுதொட்டு உரிமையொடு பயின் றாள் ஒரு தவமுதுமகளை விட்டு, அவளால் உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள். அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமேயன்றிப் பெரும் பொருளும் கைகூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது. ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார், என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து நமக்கினிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது. Ë fU¤J v‹id? எனச் சூளுற வோடு சொல்லுவித்தல், இந் நான்கினும் திரிபிலனாயவழி எதிர் காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார். இனி இதற்குத் தமிழ்மரபுரை வருமாறு: அரசனால் ஆட்சித் துணையதிகாரியாக அமர்த்தப்படுபவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்க் கேட்டிற்கு அஞ்சும் அச்சமும் பற்றிய நால்வகைத் தேர்திறத்தால், மனப்பான்மை ஆராய்ந்து தெளியப்படுவான். அரசனுக்கு ஆட்சித் துணைவனாக அமரும் அமைச்சன், குடி களிடத்து அன்பாகவும் அரசனிடத்து நம்பகமாகவும் நடந்து கொள்ள வேண்டியிருப்பதால், அறவோனாகவும் பொருளாசை யில்லாதவனாகவும் கற்பொழுக்க முடையவனாக வும் சாவிற் கஞ்சாதவனாகவும் இருத்தல் வேண்டும் என்பது கருத்து. அன்றிக் கன்னெஞ்சனாயிருப்பின். குடிகட்கு நன்மை செய்ய முடியாது; பொருள் வெறியனாயிருப்பின், பொதுப் பொருளையும் அரசன் பொருளையும் கையாட நேரும்: பெண்ணின்பப் பித்தனாயிருப் பின், குடிகளின் பெண்டிரைக் கற்பழிக்கவும் அரசனின் உரிமை மகளிரொடு தொடுப்புக் கொள்ளவுங் கூடும்: சாவிற்கஞ்சியா யிருப்பின், அரசனைக் கைவிடவுங் காட்டிக் கொடுக்கவும் மனந்திரியும். உரிமை மகளிர் என்பார் தேவியரும் தோழியரும் என இரு சாரார். தேவியர் பெரும்பாலும் அரண்மனையை விட்டு நீங்கார். அவருட் பட்டத்துத் தேவியென்னும் கோப்பெருந்தேவி மட்டும், ஓலக்க விருக்கையிலும் உலாவருகையிலும் இயற்கை வளங் காணலிலும் உடனிருப்பதுண்டு, வானிலை நன்றாயிருக்கும் நாள்தோறும் சாயுங்காலம் பூஞ்சோலையிலும் பொறிப்படைக் குளத்திலும் அரசனுடன் விளையாடும் இளமங்கையரே தோழி மார் எனப்படுவார். அவர் உயர்நிலைப் பணிப் பெண்களாவார்: பொறிப்படைக் குளம் இலவந்திகை யெனப்படும். தேரிற் றுகளைத் திருந்திழையார் பூங்குழலின் வேரிப் புனனனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப் புக்கிருந்தா லன்ன பொழில் (நள. 22) நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம் ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநற் பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து (நள. 25) என்னும் பாட்டுகளை நோக்குக. இனி, அரசனது காமநுகர்ச்சிக்கென்றே, அவன் பெற்றோரால் இளமையிலேயே ஒதுக்கப்பெற்ற மகளிரும் பண்டிருந்தனர். இதை, குரவர்கள் இவனறியாமையே இவனுரிமை இதுவெனவும், இவன் யானையுங் குதிரையும் இவையெனவும், மற்றுமெல்லாம் இவற்கென்று வகுத்து வைத்துத் தாம் வழங்கித் துய்ப்பவென்பது. அவ்வகையே குரவர்களான் இவனுரிமையென்றே வளர்க்கப் பட்டாராகலான் தலைமகளை எய்துவதன் முன் உளரென்பது என்னும் இறையனாரகப் பொருளுரையால் (40ஆம் நூற்பா வுரை) அறிந்துகொள்க. அமைச்சனின் நால்வகைத் தகுதிகளும் பின்வருமாறு ஆய்ந்து தெளியப்படும். 1. அறத்தேர்வு ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரோடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே (புறம். 164) என்றோ, ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம். (தனிப்பாடல்) என்றோ, களைகணற்ற ஓர் இளஞ்சூலி, அயலூரினின்று இங்கு வந்து இவ்வூர்க் கோடியிற் கருவுயிர்க்க ஈன் வலி கொண்டு தன்னந் தனியாய் நிற்கின்றாள் என்றோ, வெள்ளத்தால் வீடிழந்த ஓர் ஏழைக் குடும்பம் தெருவில் திண்டாடி நிற்கின்றது என்றோ, பிறவாறோ, ஒருவனைக் கொண்டு சொல்வித்துத் தேரப்படுவானின் மனநிலையை அறிதல். 2. பொருள் தேர்வு அமைச்சப் பதவிக்குத் தேரப்படுவானை, ஒரு திருநாளில் ஏழை மாந்தர்க்கெல்லாம் உணவளிக்குமாறோ, படைத் துறைக்கு வேண்டிய யானை குதிரைகளை வாங்கிவருமாறோ, பெருந் தொகைப் பணத்தை ஒப்படைத்து, அல்லது ஒரு பெருவருவாய்க் கோவிலை மேற்பார்க்கும் முதுகேள்வியாக அமர்த்தி, அல்லது பெரும்பொருள் செலவாகும் ஒரு வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபடுத்தி, பின்னர்க் கணக்குக் கேட்டுப் பொருட்டுறை வாய்மை யறிதல். 3. இன்பத் தேர்வு அரசனின் தேவியரல்லாத உரிமை மகளிருள் ஒருத்தியோ, மாதவி போலும் ஆடல் பாடல்வல்ல அழகியான ஒரு கணிகையோ, காதல் திருமுகம் வரைவதுபோற் பொய்யான ஓர் ஓலைவிடுத்து, ஆய்விற்குரியவனை நள்ளிரவில் ஓர் இடத்திற்குத் தன்னந் தனியாக வருவித்து, அல்லது ஓர் அழகிய பணிப்பெண்ணை ஏதேனு மொரு வகையில் அவனொடு தனியாகப் பழகுவித்து, அவனது ஒழுக்கத்தை யறிதல். 4. உயிரச்சத் தேர்வு பகைவேந்தன் பெரும்படையொடு போருக்கு வந்து நகர்ப் புறத்துத் தங்கியிருப்பதால், உடனே அவன் ஆட்சியை ஒப்புக் கொள்ள வேண்டும், அல்லது ஊரைவிட்டு ஓடிப்போதல் வேண்டும் என்றோ, பகைவேந்தன் பாளையத்திற்குட் சென்று வேய்வு பார்த்து வரவேண்டுமென்றோ, சாவிற்கச்சம் உண்மை யின்மையை அறிதல். அமைச்சன் தூதுரைத்தற்கும் உரியனாதலாலும். இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் தூது குறள்.690 என்று திருவள்ளுவர் கூறியிருத்தலாலும், உயிரச்சத் தேர்வும் அமைச்சனை யமர்த்துதற்கு வேண்டுவதேயாம். அமைச்சன் அரசனுங் குடிகளுமாகிய இருசாரார் நலத்தையும் பேணவேண்டியிருப்பதால், பரிமேலழகர் அரசன் நலத்தையே நோக்கிக் கூறும் நால்வகைத் தேர்திறங்களும், குறைவுள்ளனவும் இயற்கைக்கு மாறானவுமாம். அறத்தேர்வு, அரசனை மட்டும் நோக்கியதாயின், மூத்தோனாகிய செங்குட்டுவனிருக்கவும் இளை யோனாகிய இளங்கோவின் முகத்தில் ஆளும் பொறியுள்ளதாக உடற்குறி நூலான் கூறியதைச் சொல்லிக் கருத்தறிதலும்: அரசனையுங் குடிகளையும் நோக்கியதாயின், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆராயாது கோவலனைக் கொல் வித்ததைக் கூறிக் கருத்தறிதலும்: ஆகும். பரிமேலழகர்க்கு முந்திய மணக்குடவரும் பரிப்பெருமாளும் உயிரச்சம் என்ற பாடமே கொண்டிருப்பதால், பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார் என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. பரிதியாரும் காலிங்கருமே உயிரெச்சம் என்று பாடமோதி, அதற்கு வீடு (மோட்சம்) என்று பொருள் கொண்ட னர். பிறப்பிறப்பின்றி நிலையாக உயிர் எஞ்சி நிற்பது உயிரெச்சம் என்று, பொருட்கரணியங் கொண்டதாகத் தெரிகின்றது. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து (குறள். 112) தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும் (குறள். 114) மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை (குறள். 456) முதலிய குறள்கள் உயிரெச்சம் என்னும் பாடத்திற்கு ஓரளவு துணை செய்யுமேனும், உயிரச்சம் என்னும் பாடமே பல்லாற் றானுஞ் சிறந்ததும் உத்திக்கு ஒத்ததும் தமிழிற்கு ஏற்றதுமாகும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ளுமுன்பே பாண்டியர்குடி நிலைபெற்றிருந்ததனாலும், 955ஆம் குறளிற் பழங்குடி என்பதற்குத் தொன்றுதொட்டு வருகின்ற குடி என்று பொருள்கூறி. தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல், என்று பரிமேலழகரே எடுத்துக்காட்டி யிருத்த லாலும், கி.மு. 4ஆம் நூற்றாண்டினரான சாணக்கியர், பண்டைத் தமிழ்நூல் களினின்றே அமைச்சரைத் தேரும் நால்வகைத் தேர்வுகளை யறிந்து, அவற்றிற்கு உபதா என்று பெயரிட்டிருத்தல் வேண்டும். உபதா என்னுஞ் சொற்கு மேலிடுதல், சுமத்துதல், கள்ளம், திருக்கு, நடிப்பு, ஆய்வு என்றே பொருள். நாற்பொருளையும் முப்பாலிற் கூறும் அறநூல்களே யன்றி, அரசியலைத் தனிப்படக் கூறும் பொருள் நூல்களும் பண்டைத் தமிழிலக்கியத்திலிருந்தமை. ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள என்னும் தனிப்பாடலால் அறியப்படும். பொருள்நூலையே அர்த்தசாத்திரம் என மொழிபெயர்த்துக் கொண்டனர் வட மொழியாளர். வேதகாலத்திலேயே வடநாட்டாரியர் தென்னாட்டுத் தமிழ ரொடு தொடர்பு கொண்டிருந்தமையை. P.T. சீநிவாசையங்கார் எழுதிய தமிழர் வரலாறு (History of the Tamils) என்னும் ஆங்கில நூலிற் கண்டு தெளிக. (பக்.17-35). இதுகாறுங் கூறியவற்றால், இக் குறள் முற்றுந் தமிழ்க் கருத்தே கொண்டுள்ள தென்றும், இவ் வடநூற் பொருண்மையை உட் கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம்.... தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார். என்று பரிமேலழகர் கூறியுள்ளது துணிச்சலான ஆரியக் குறும்புத்தனம் என்றும் அறிந்துகொள்க. (செந்தமிழ்ச் செல்வி மே 1970.) நிகழ்கால வினை தொல்காப்பியர், நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய செய்யும் செய்த என்னுஞ் சொல்லே (719) என்னும் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவில், செய்கின்ற (செய்கிற) என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டைக் கூறாமையானும்; வினையெச்ச வாய்பாட்டு நூற்பாவில் அவர் முக்கால வினையெச்சங்களையும் கூறியிருப்பினும், நிகழ்கால வினையெச்சத்தில் நிகழ்கால இடைநிலை (கின்று-கிறு) இயல்பாய் அமை யாமையானும்: முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் (725) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு, மலைநிற்கும், ஞாயிறியங்கும் என்பன போன்றும், மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே (727) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு. தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என்பன போன்றும், எதிர்காலத்திற்குரிய `செய்யும் என்னும் முற்றையே உரையாசிரியன்மார் எடுத்துக்காட்டி வந்திருப்பதானும், `செய்கின்றான் என்னும் வாய்பாட்டுச் சொல் உருத்தெரியாதவாறு திரிந்தன்றித் தொல்காப்பியத்தில் ஓரிடத் தும் வாராமை யானும்: `செய்கின்ற என்னும் வாய்பாட்டுச் சொல்லோ அங்ஙனந் திரிந்தேனும் அதன்கண் வாராமையானும்: இடையியலில் முக்கால இடைநிலைகளைக் குறிப்பிடு மிடத்து. வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் (735) என்று தொல்காப்பியர் பொதுப்படவே தொகுத்துக் கூறியிருத்த லானும்; கின்று என்னும் இடைநிலை பெற்ற நிகழ்காலவினை தொல்காப்பியர் காலத்து உண்டோ என்று சிலர் மருளவும், இல்லை என்று சிலர் பிறழவும் இடமாகின்றது. தொல்காப்பியர் காலத்தில் முக்கால வினைகளும் இருந்தன என்பதும், நிகழ்காலத்திற்குத் தனிவினை இருந்திருத்தல் வேண்டும் என்பதும், காலந் தாமே மூன்றென மொழிப (தொல்.684) இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (தொல்.685) முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் (தொல்.725) வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர் (தொல்.726) மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே (தொல்.727) வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை (தொல்.730) இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி (தொல். 732) ஏனைக் காலமும் மயங்குதல் வரையார் (தொல். 733) என்னுந் தொல்காப்பிய நூற்பாக்களானேயே பெறப்படும். இனி, சேனாவரையரும். உண்கின்றனம், உண்கின்றாம். உண்கின்றனெம், உண்கின்றேம், உண் கின்றனேம்: உண்கின்றன, உண்கின்ற: நடக்கின்றது, உண் கின்றது என்னும் கின்றிடைநிலை வினைமுற்றுகளை நிகழ்கால வினைமுற்றுகளாகத் தம் உரையில் எடுத்துக் காட்டியுள்ளார் (தொல்.வினை. 15,19,20 உரை). பண்டைச் சேரநாடாகிய கேரள அல்லது மலையாள நாட்டில், இறந்தகால நிகழ்கால வினைமுற்றுகள் இன்று பாலீறு நீங்கிப் பகுதியும் இடைநிலையும் மட்டும் அமைந்த அளவில் வழங்கு கின்றன. எ-டு: இறந்தகாலம் தமிழ் முற்று தமிழ் எச்சம் மலையாள முற்று செய்தான் செய்து செய்து அடித்தாள் அடித்து அடிச்சு அறிந்தார் அறிந்து அறிஞ்ஞு ஆயிற்று ஆய் ஆயி வந்தன வந்து வந்நு வாழ்ந்தேன் வாழ்ந்து வாணு பாடினோம் பாடி பாடி புறப்பட்டாய் புறப்பட்டு புறப்பெட்டு வாங்கினீர் வாங்கி வாங்ஙி நிகழ்காலம் தமிழ் முற்று ஈறு நீங்கிய மலையாள முற்று தமிழ் வடிவம் செய்கின்றான் செய்கின்று செய்யுந்நு அடிக்கின்றான் அடிக்கின்று அடிக்குந்நு அறிகின்றார் அறிகின்று அறியுந்நு ஆகின்றது ஆகின்று ஆகுந்நு வருகின்றன வருகின்று வருந்நு வாழ்கின்றேன் வாழ்கின்று வாழுந்நு பாடுகின்றோம் பாடுகின்று பாடுந்நு புறப்படுகின்றாய் புறப்படுகின்று புறப்பெடுந்நு வாங்குகின்றீர் வாங்குகின்று வாங்ஙுந்நு இதனால், கின்று என்னும் நிகழ்கால இடைநிலை மலையாளத் தில் குந்நு அல்லது உந்நு என்று திரிந்திருப்பதைக் காணலாம். செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்று. பால் காட்டும் ஈறில்லாததாயும், பலபாற்குப் பொதுவான ஈறுள்ள தாயும், பலுக்குவதற்கு எளிதாயும், இடைநிலையின்றிச் சுருங்கிய தாயும், இருத்தலின்; அதுவே மலையாளத்தில் (மூவிட) எதிர்கால வினைமுற்றாக வழங்கி வருகின்றது. பண்டைச் சேரநாட்டுத் தமிழிற் போன்றே, முதற்கால மலை யாளத்திலும் வினைமுற்றுகள் பாலீறுகொண்டு வழங்கியமை, பழைய மலையாளச் செய்யுளாலும், யூதருக்கும் சிரியக் கிறித்த வர்க்கும் அளிக்கப்பட்ட பட்டயத்தாலும், பழமொழிகளாலும் அறியக் கிடக்கின்றது. பாலீறுகொண்ட வினைமுற்றுகள் இன்றும் மலையாளச் செய்யுளில் ஆளப்பெறும். வினைமுற்றை அடிப்படையாகக் கொண்ட வினையாலணையும் பெயர்கள், மலையாள உலக வழக்கில் இயல்பாக வழங்குகின்றன. ஆதலால், 12ஆம் நூற்றாண்டிற்குமேல் சோழபாண்டித் தமிழரொடு உறவுவிட்டுப் போனபின், சொற்களைக் குறுக்கி வழங்குவதற் கேதுவான வாய்ச்சோம்பலாலும். புலவரின் இலக்கணக் கட்டுப்பாடு அற்றுப் போனமையாலும் குடுதுறு - கும்டும் தும்றும் விகுதி பெற்ற தன்மை வினைமுற்றுகளின் தொடர்ப் பாட்டினாலும், மலையாள நாட்டு மக்கள் வினைமுற்றுகளைப் பாலீறு நீக்கி வழங்கத் தலைப்பட்டு விட்டனர். அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும் உம்மொடு வரூஉங் கடதற என்னும் அந்நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல்.வினை.5) கடதற என்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொடு என்ஏன் அல்என வரூஉம் ஏழும் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல்.வினை.6) என்று தொல் காப்பியத்தி லேயே கூறப்பட்டிருப்பதாலும், குடுதுறு - கும்டும் தும்றும் ஈற்றுத் தன்மை வினை முற்றுகள் நெடுகலும் செய்யுளில் ஆளப் பெற்று வந்திருப்பதாலும், முற்காலத்தில் பாலீறில்லா முடிவி லேயே தமிழ் வினைமுற்று வழங்கி வந்திருப்பதாகத் தெரிகின்றது. இதுவே மொழிநூற்கும் பொருந்தும் முடிபாகும். ஆயினும், மலையாள நாட்டில் பாலீற்று வினைமுற்றே அவ்வீறு நீங்கிப் பழைய வடிவில் வழங்கி வருகின்றது. நிகழ்கால வினையாலணையும் பெயர்களும் தொழிற் பெயர் களும் பெயரெச்சங்களும் உள்ள, சில மலையாளப் பழமொழி களும் சொற்றொடர்களும் வருமாறு: கடிக்குந்நது கரிம்பு. பிடிக்குந்நது இரிம்பு. அலக்குந்நோன்1றெ கழுத போல. பாபம் போக்குந்நோந் ஆர்? ‘ghu« RkªE« el¡Fª nehnu! (மத். 11 : 23) அஞ்சு எரும கறக்குந்நது அயல் அறியும். கஞ்சி வார்த்துண்ணுந்நது நெஞ்சு அறியும். அந்நந்நு வெட்டுந்ந வாளிந்நு நெய்யிடுக. உறங்ஙுந்ந பூச்ச எலிபுடிக்க இல்ல. கரயுந்ந குட்டிக்கெ பால் உள்ளு. குரெக்குந்ந நாயி கடிக்க யில்ல. மண்ணு திந்நுந்த மண்டெலியே போல். இம் மலையாளப் பழமொழிகளிலும் சொற்றொடர்களிலும் வந்துள்ள நிகழ்காலச் சொற்கட்கு நேர் தமிழ்ச்சொற்கள் வருமாறு: மலையாளம் தமிழ் கடிக்குந்நது கடிக்கின்றது (வி.மு.) பிடிக்குந்நது பிடிக்கின்றது (வி.மு.) அலக்குந்நோந் அலக்குகின்றோன் (வி.மு.) போக்குந்நோந் போக்குகின்றோன் (வி.மு.) நடக்குந்நோர் நடக்கின்றோர் (வி.மு.) கறக்குந்நது கறக்கின்றது (தொ.பெ.) உண்ணுந்நது உண்கின்றது (தொ.பெ.) வெட்டுந்ந வெட்டுகின்ற (பெ.எ.) உறங்ஙுந்ந உறங்குகின்ற (பெ.எ.) கரயுந்ந கரைகின்ற (பெ.எ.) குரெக்குந்ந குரைக்கின்ற (பெ.எ.) திந்நுந்ந தின்கின்ற (பெ.எ.) இவ் எடுத்துக்காட்டுகளால், செய்கின்றான் என்பது செய்யுந் நாந் என்றும், செய்கின்றது என்பது செய்யுந்நது என்றும், செய் கின்ற என்பது செய்யுந்ந என்றும், மலையாளத்தில் திரிவது தெளிவு. வினையாலணையும் பெயர்களுள், அஃறிணைப் பெயர் களாயின் அவற்றின் அகரமுதல் ஈறுகள் (அ, அவ) திரியாதும், உயர்திணைப் பெயர்களாயின் அவற்றின் ஆகார முதல் ஈறுகள் (ஆன், ஆள், ஆர்) ஓகாரமுதலாகத் திரிந்தும்1, வழங்குகின்றன. எ-டு: தமிழ் மலையாளம் செய்கின்றது செய்யுந்நது செய்கின்றான் செய்யுந்நோந் கின்று என்னும் நிகழ்கால இடைநிலையைக் குந்நு அல்லது உந்நு என்று திரிந்து வழங்கும் வழக்கம், சேரநாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றது. அந்நாடு மழை மிகுதியாகப் பெய்யும் மலை நாடாதலின், அங்கத்துத் தமிழ்மக்கள் பேச்சில் மூக்கொலிகளான மெல்லின வெழுத்துகள் பேராட்சி பெற்றுவந்திருக்கின்றன. எ-டு : தமிழ் மலையாளம் நான் ஞான் நாங்கள் ஞங்கள் தந்து தந்நு துடங்கி துடங்ஙி வீழ்ந்து வீணு நான் என்னுஞ் சொல்லின் முதலெழுத்து மெல்லினமேயாயினும், அது மேலும் ஒருபெரு மெல்லொலியான ஞகரமாகத் திரிந் திருப்பது. மலையாள மக்கள் பேச்சின் மெல்லோசை மிகுதியைத் தெளிவாக எடுத்துக் காட்டும். இங்ஙனம் மூக்கொலிகள், சேர நாட்டுத் தமிழிற் பேராட்சிபெற்று வந்திருப்பினும், நூன்மொழி அல்லது இலக்கிய மொழி செந்தமிழாகவேயிருத்தல் வேண்டு மென்னும் இலக்கண மரபுபற்றி, சேரநாட்டு இலக்கியமும் செந்தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. கொங்குநாட்டைச் சேர்ந்த வடார்க்காட்டுப் பாங்கரில் இன்று கொச்சைத் தமிழே வழங்கிவரினும், அங்கும் இலக்கியத் தமிழ் செந்தமிழாகவே யிருந்துவருதல் காண்க. வடார்க்காட்டுத் தமிழுக்கு எடுத்துக்காட்டு வருமாறு: இசுத்து இசுத்து ஒச்சான். (இழுத்து இழுத்து உதைத்தான்.) கொயந்த வாயப்பயத்துக்கு அய்வுது. (குழந்தை வாழைப் பழத்திற்கு அழுகிறது) பசங்க உள்ளே துண்ராங்க. (பையன்கள் உள்ளே தின்கிறார்கள்). கண்ணாலம் மூய்க்கணும். (கல்யாணம் முடிக்கவேண்டும்). வந்துகினு போயிகினேக் கீரான். (வந்துகொண்டு போய்க்கொண்டே யிருக்கிறான்.) சேரநாட்டுச் சொற்கள் பல செந்தமிழுக் கொவ்வாவிடினும், திசைச்சொல் வகையில் அவற்றுள் ஒன்றிரண்டு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்.880) செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். 883) என்று திசைச்சொல்லும் செய்யுளுக்குரியதென்றும், அது கொடுந் தமிழ்நாட்டு வழக்கென்றும், தொல்காப்பியத்திற் கூறப்பட் டிருத்தல் காண்க. நிகழ்கால வினையாலணையும் பெயர்கள் சேரநாட்டியல்புப்படி, முதலாவது பின்வருமாறு திரிந்திருத்தல் வேண்டும். செந்தமிழ் சேரநாட்டுக் கொடுந்தமிழ் செய்கின்றான் செய்குந்நான் - செய்குநன் செய்கின்றது செய்குந்நது - செய்குநது செய்கின்ற செய்குந்ந - செய்குந ண ந ன என்னும் மூவெழுத்துள்ளும் முதல் முதல் தோன்றியது நவ்வே. ரகரத்தின் வன்னிலையாகிய றகரம் தோன்றிய பின்பே, அதற்கினமான னகரம் தோன்றிற்று. இதனாலேயே, றனக்கள் நெடுங்கணக்கில் பமக்களின் பின் வைக்கப்பெறாது, இடையினத் தின்பின் இறுதியில் வைக்கப்பெற்றுள. முதற்காலத்தில் தந்நகரமே றன்னகரத்திற்குப் பதிலாக வழங்கி வந்ததென்பதற்கு, பொருந், வெரிந், பொருநை முதலிய சொற்களே போதிய சான்றாகும். செய்குந்நான் என்னும் வடிவம், சற்றுப் பிற்காலத்தில் குகரம் நீங்கி, செய்யுந்நான் - செய்யுநன்-செய்நன் என முறையே திரிந்திருக் கின்றது. இங்ஙனமே, செய்குந்ந என்னும் பெயரெச்சமும், செய்யுந்ந - செய்யுந - செயுந என முறையே திரிந்திருக்கிறது. செய்நன் என்ற வாய்பாட்டு வடிவிலேயே, கீழ்க்காணும் பெயர்கள் அமைந்துள்ளன. கொள்நன் - கொழுநன் = கணவன்1 பொருநன் - போர் செய்கின்றவன் மகிழ்நன் - மகிணன் = இன்புறும் மருதநிலத் தலைவன் வாழ்நன் - வாணன் = வசிக்கின்றவன். வருநர், பாடுநர், இகழுநர், வாழ்நர், அறைநர், அடுநை (முன்னிலை யொருமை). விடுநை (மு.ஒ.) தகுந, வல்லுநர், களையுநர், பருகுநர், கூறுநர், பொருநர், மலர்க்குநர், உடலுநர், நுவலுநர், முயலுநர், வருந, தப்புந, பேணுநர், மேம்படுந! (ÉË), bfhŒíe®, X«òe‹, m¿íe®,