தேவநேயம் – 5 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 5 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 312 = 320 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப்படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர்களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை குமரிக்கண்டம் 1 குமரிநாடே நாகரிக மாந்தன்பிறந்தகம் சான்றுகள் 13 குமுதம் 15 குயில் 15 குரங்கெறி விளங்காய் 15 குரலே சட்சம் 15 குரவன் 20 குரு 20 குருகு 21 குருந்தம் 21 குருள் 21 குரை 21 குல் (கூடற் கருத்துவேர்) 21 குல்1 (தோன்றற் கருத்துவேர்) 22 குல2 (வளைதற் கருத்துவேர்) 40 குல்3 (குத்தல் கருத்துவேர்) 55 குல்4(எரிதற் கருத்துவேர்) 61 குல்5 (துறைத்ற் கருத்துவேர்) 68 குலங்கள் தோன்றிய வகைகள் 78 குலத்தலைவர் 83 குலப்பட்ட வரலாறு 83 குலவெறி கொள்ளாமை 89 குலைகுலையாய் முந்திரிக்காய் விளையாட்டு 90 குலை வகைகள் 90 குவளை 90 குழவி 91 குழ விளர்ப்பொலி 91 குளம் 92 குளவகை 92 குளிகை 93 குளிர் 93 குற்றமுந் தண்டனையும் 93 குற்றவகை 94 குற்றியலுகரம் உயிரீறே 95 குறங்கறுத்தல் 105 குறள் 105 குறிக்கோள் வகை 105 குறிஞ்சி (குஞ்சி) விளையாட்டு 106 குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும் 106 குறியெதிர்ப்பை 107 குறியொலி 107 குறில் நெடில் 108 கூ 108 கூகை 108 கூந்தல் 108 கூழ் 108 கூழை 108 கெடவரல் 109 கேட்டல் 109 கேடுதருவன 109 கைக்கிளை 109 கைக்கிளை மணம் 109 கைதை 109 கொக்கு 110 கொங்கணம் 110 கொங்கணவன் 110 கொங்குநாட்டு அரசுகள் 110 கொஞ்சம் 111 கொடி 111 கொடிகட்டிப் பறத்தல் 111 கொடியர் 111 கொடி வகை 111 கொடுந்தமிழ்நாடு 112 கொடும்பாவி 115 கொடை மணம் 115 கொடை வகை 116 கொண்டாடுதல் 116 கொத்தமல்லி 117 கொப்பரை 117 கொழுந்துவகை 117 கொள்நன் 117 கோ 117 கோசம் 118 கோசர் 118 கோட்டம் 134 கோட்டி 142 கோட்டை 143 கோடகம்-கோட்டக 143 கோடரி 143 கோடி 143 கோணம் 144 கோதுமை வகை 144 கோபநிலைகள் 144 கோபுரம் 145 கோயில் 145 கோலம் 145 கோலகம் 145 கோலி விளையாட்டு 146 கோவன் - கோன் 157 கோவன் 158 ஙம்முதல் 158 சக்கரம் 161 சகடி 161 சகோரம் 161 சங்கம் 162 சங்கீதம் 162 சச்சரி 164 சடம் - ஜட 164 சடுகுடு விளையாட்டு 164 சடை 165 சண்டம் 165 சண்டன் 165 சண்டை வகை 168 சண்ணம் 168 சண்பகம் 168 சணல் 168 சதங்கை 168 சதரம் 168 சந்து 171 சப்பட்டை 171 சப்பாணி 171 சம்பளம் 171 சமம் 172 சமயம் 172 சமயமும் கொள்கையும் 175 சமர்த்து 177 சமரம் 177 சமற்கிருத ஆக்கம் 177 சமன் 216 சரம் 216 சருக்கம் 217 சருக்கரை 217 சருவு 217 சல்லகம் 219 சல்லரி 219 சல்லிக்கட்டு 219 சலசம் 219 சலவை 219 சலி 219 சவ்வு 219 சவம் 220 சவலை 220 சவை 220 சளப்பு 220 சன்னம் 220 சாகாடு 221 சாணம் 221 சாணை 221 சாத்தன் 221 சாத்து 221 சாந்து 222 சாமை 222 சாய் 222 சாயுங்காலம் 222 சாயை 223 சாலை 223 சாவி 223 சாறு 223 சான்றுவகை 224 சிச்சிலி 224 சித்தம் 224 சித்திரம் 225 சித்து 226 சிதம்பரம் 226 சிதை 226 சிந்தாமணியின் செவ்விய வனப்பியல் 226 சிந்து 238 சிந்தூரம் 240 சில்லாங் குச்சு விளையாட்டு 241 சில்லி 246 சிலந்தி 247 சிலம்பு கழி நோன்பு 247 சிலை 247 சிவன் 251 சிவிவகை (1) 251 சிவிகை வகை 252 சிற்பம் 252 சிறந்த விருந்து 252 சிறுகூலங்கள் 252 சிறுதெய்வ வணக்கம் 252 சீகாழி 262 சீமையராட்சி வகைகள் 263 சீர்த்தி 264 சீர்தூக்கல் 264 சீரகம் 264 சீரை 265 சுக்கு 266 சுட்கம் - சுஷ்க 266 சுட்டுக் கருத்து வளர்ச்சி 266 சுட்டுச் சொற்கள் 270 சுட்டொலித் திரிபு 271 சுண்ணகம் 277 சுண்ணம் 277 சுண்ணாம்பு 277 சுதை 277 சுர 278 சுரங்கம் 278 சுரப்பி 278 சுரம் 279 சுரிகை 279 சுருங்கை 280 சுல்1 (குத்தற் கருத்துவேர்) 280 சுல்2 (சுடுதற் கருத்துவேர்) 284 சுல்3 (சிவத்தற் கருத்துவேர்) 290 சுல்4 (வளைதற் கருத்துவேர்) 297 அகத்தியத் தருக்க சூத்திரம் 1. பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப. 2. மண்புனல் அனல்கால் வெளிபொழு தாசை ஆன்மா மனதோ டொன்பதும் பொருளே. 3. வடிவம் சுவையிரு நாற்றம் ஊறெண் அளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி சிக்கெனல் ஓசை உணர்ச்சி யின்பம் துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி அறமறம் வாதனையொடு குணம்அறு நான்கே. 4. எழும்பல் விழுதல் வளைதல் நிமிர்தல் நடத்த லுடனே கருமம்ஐ வகைத்தே. 5. பொதுமை மேல்கீழ் எனஇரு வகையே. 6. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின் வேற்றுமை தெரிப்பன பலவாம் சிறப்பே. 7. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க. 8. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை ஒன்றினொன் றின்மையென் றின்மை நான்கே. 9. மண்நீர் அனல்கால் முறையே நாற்றம் தட்பம் வெப்பம் ஊற்றம் ஆகி மெய்ப்பொருள் அழிபொருள் மேவும் என்க. 10. அணுக்கள் மெய்ப்பொருள் காரியம் அழிபொருள் பிருதிவி நித்திய அநித்திய வணம்பெறும் நிலையணுப் பொருள்நிலை யில்லது காரியம். 11. அதுவே உடல்பொறி விடயம் மூவகைப் படுமே நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு நாற்றங் கவர்வது நாசியின் நுனியே மண்கல் முதலிய விடயம் ஆகும். 12. நீரிறை வரைப்பிற் கட்டுநீ ருடம்பு சுவைத் திறம் கவர்வது நாவின் நுனியே கடல்யா றாதி விடயம் ஆகும். 13. கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பே உருவம் கவர்வது கருமணி விழியே மண்விண் வயிறா கரம்நால் விடயம். 14. வளியிறை வரைப்பிற் கட்டுகா லுடம்பே ஊற்றம் கவர்வது மீந்தோல் என்க விடயம் மரமுதல் அசைதற் கேதுவே பிராணன் உடலகத் தியங்கும் காற்றே. 15. விசும்பே காலம் திசையோ டான்மா மனம்இவை யைந்தும் நித்தியப் பொருளே. 16. ஓசைப் பண்பிற் றாகா யம்மே. 17. இறப்புமுதல் வழக்கிற் கேதுக் காலம். 18. கிழக்குமுதல் வழக்கிற் கேதுத் திசையே. 19. அறிவுப் பண்பிற் றான்மா என்க இறையே ஈசன்முற் றறிவன்ஓர் முதலே உயிர்தான் உடல்தொறும் வெவ்வே றாகும். 20. மனம்அணு வடிவாய் வரும்இன் பாதி அறிதற் கின்றி யமையாக் கருவி யாகிப் பலவாய் அழிவின் றுறுமே. இவை தமிழ்ப் பண்டிதர் கோ. வடிவேலுச் செட்டியாரின் தருக்கபரிபாஷை பதிப்பிற் கண்டவை. ஏரணம் என்பது தருக்க நூலைக் குறிக்கும் தூய தென்சொல். இச்சொல் சமற்கிருதத்தில் இன்மை கவனிக்கத் தக்கது. ஏரணங்காண் என்பர் எண்ணர் என்னும் திருச்சிற்றம்பலக் கோவைச் சாத்துப்பாத் தொடரும், ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதஞ்சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பம்நீர் நிலம்உ லோகம் மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்டதந்தோ வழிவழிப் பெயரும் மாள. என்னும் தனிப்பாடலும், பண்டைத் தமிழிலக்கியத்தில் தருக்க நூல் இருந்தமையையும், அதன் பெயர் ஏரணம் என்பதனையும், தெளிவாகக் காட்டும். தமிழிலுள்ள ஏரணநூல் ஒரேவகையே. வட மொழியிலுள்ள தருக்க நூல் வைசேடிகம், நையாயிகம் என இருவகைப்படும். அவற்றை முறையே சிறப்பிகம், முறையிகம் எனலாம். தமிழ் ஏரணம் சிறப்பிக முறைப்பட்டதாகும். உறழும் அல்லது தருக்கம் வகை பொதுவாயினும், அடிப்படைப் பொருட்பாகுபாட்டை நோக்கின், சிறப்பிக முறையே சிறந்ததும் முந்தியதுமாகும். எல்லாப்பொருள்களையும், முறையிக முறைப்படி பதினாறு வகையாகப் பகுப்பதினும், சிறப்பிக முறைப்படி எழுவகையாகப் பகுப்பதே, முழுநிறைவாயும் இடைவெளியில்லதாயும் ஒன்றை யொன்று தழுவாததாயுமிருத்தல் காண்க. ஏரணம் (Logic) என்னும் சொல் மட்டுமின்றி தருக்கம் (Debate) என்னுஞ் சொல்லும், தமிழாயிருப்பது கவனிக்கத்தக்கது. ஏர்தல் = எழுதல். ஏரணம் = சொற்போரில் ஒருவன்தன் பகைவன் மீது எழுச்சி கொள்வதற்கு ஏதுவான முறைகளைக் கற்பிக்கும் நூல். துள் - துளிர். துளிர்த்தல் = 1. கொழுந்துவிடுதல், 2. செழித்தல். துளிர் - தளிர். தளிர்த்தல் = 1. கொழுந்து விடுதல், 2. தழைத்தல், மாரியால் வற்றிநின்ற சந்தனந் தளிர்த்ததேபோல் (சீவக. 545). 3. செழித்தல் துள்-தள்-தள. தளதளத்தல் = பருமையாதல், கொழுகொழுத்தல். தள் - தழு - தழை. தழைத்தல் = 1. செழித்தல், 2. மிகுதல். மைத் தழையா நின்ற மாமிடற் றம்பலவன் (திருக்கோவை, 102). 3. வளர்த்ல். மெய்தழை கற்பை (திருவிளை. வளைய. 15). தழு - தழுக்கு. தழுக்குதல் = செழிப்புறுதல், தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர் (திருமந். 254) தழுக்கு - தருக்கு. தருக்குதல் = 1 மிகுத்தல். தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து (தொல். அகத். 50). 2. ஊக்கம் மிகுத்தல். வெம்போர்த் தருக்கினார் மைந்தர். (சீவக. 1679). 3. அகங்கரித்தல். தன்னை வியந்து தருக்கலும் திரிகடு. 38). தருக்கு - தருக்கம் = தன் கூற்றை மிகுக்கும் சொற்போர். தருக்கு - செருக்கு = அகங்காரம். தருக்கு - வ. தர்க். தருக்கம் - வ. தர்க்க. தருக்கு என்னும் சொற்கு வடமொழியில் மூலமின்மை கவனிக்கத்தக்கது. மேற்காட்டிய ஏரண நூற்பாக்கள் அகத்தியத் தருக்க நூற்பாக்க ளல்லா விடினும், தருக்க நூலை வளர்த்தற் கேற்ற அடிப்படை நிறைவா யமைந்திருத்தல் காண்க. அவை மிகப் பழையனவா யிருத்தல் பற்றியே அகத்தியர் பெயரில் வழங்குகின்றன. அவற்றில் வரும் வடசொற்கள் மிகச் சிலவாயிருப்பது கவனிக்கத் தக்கது. அவ்வட சொற்கட்கு நேர் தென் சொற்கள் வருமாறு :- வடசொல் - தென்சொல் ஆசை - மாதிரம், திகை ஆன்மா - ஆதன், உறவி, புலம்பன் வாதனை - வாடை காரியம் - கருமியம் பிருதிவி - புடவி நித்தியம் - நிற்றியம் அநித்தியம் - அநிற்றியம், நிலையாமை விடயம் - புலனம், இடையாட்டம் நாசி - மூக்கு, மூசி ஆதி - முதல, முதலியன ஆகரம் - கனி, சுரங்கம் பிராணன் - உயிரன் ஆகாயம் - காயம், வானம் ஈசன் - இறைவன், உடையான். குணம், மனம், அணு, உருவம், மணி, காலம், ஏது, என்பன தென்சொற்களே. இலக்கியத் திறனாய்வு (Literary Criticism) அங்கதந் தானே அரில்தபத் தெரியின் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. (தொல். செய். 123) செம்பொரு ளாயின் வசையெனப் படுமே. (தொல்.செய். 124) மொழிகரந்து சொலினது பழிகரப் பாகும். (தொல்.செய். 125) செய்யுள் தாமே இரண்டென மொழிப. (தொல்.செய். 126) புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் செவியுறைச் செய்யுள் அதுவென மொழிப. (தொல்.செய். 127) வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். (தொல்.செய். 127) இலக்கியத் திறனாய்வு நெறி திறம்பாததாயின் செவியுறை (Criticism) என்றும், நெறிதிறம்பிப் பழித்ததாயின் அங்கதம் (Satire) என்றும், பெயர் பெற்றது. அங்கதமும், செம்பொருளங்கதம் (Open lampoon) என்றும், பழி கரப் பங்கதம் (Disguised lampoon) என்றும் இருவகைப்பட்டிருந்தது. நக்கீரர் குயக்கோடனைச் சாவித்த செய்யுள், வெகுளிப் பாட்டே (Imprecatory poem) யன்றி அங்கதப்பாட்டாகாது. மறை நூல் நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல். செய். 176) மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் (தொல்.செய். எச். 53) என்பன, குமரிநாட்டு தமிழிலக்கியம் மறைநூலுங் கொண்டிருந் தமையைப் புலப்படுத்தும். தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் பாண்டி நாடே பழம்பதி யாகவும் தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்னும் திருவாசக அடிகள், முழுகிப்போன குமரிநாடே பழம் பாண்டி நாடென்பதையும், சிவநெறி தூய தமிழமத மென்பதை யும் , உணர்த்தும். ஆரிய இலக்கியத்தில் வேதம் முந்தித் தோன்றியதனால், வேதம் என்னுஞ் சொல் ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தருவ வேதம் என நூற் பொதுப் பெயராயிற்று. அங்ஙனமே, மறையென்னும் தென்சொல்லும், நரம்பின்மறை (இசை நூல்) என்றும் மறையென மொழிதல் மறையோர் (இலக்கண நூலார்) ஆறே என்றும் நூற் பொதுப்பெயரானதினால், தமிழிலும் மறைநூலே முதல்நூலோ என்று எண்ணக்கிடக்கின்றது. வினையின் நீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (மர. 95) அதனை ஒருவாறு வலியுறுத்தும். மெய்ப்பொருள் நூல் ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. (தொல். மர. 27) நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ... (தொல். மர. 90) என்னும் நூற்பாக்களும், உயிர், மெய், உயிர்மெய், என்னும் எழுத்துப் பெயர்களும், கடவுள் என்னும் தெய்வப் பெயரும், பிறவும், குமரிநாட்டுத் தமிழரின் மெய்ப்பொரு ளறிவைக் காட்டும். ஏனை நூல்கள் வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க (தொல். புறத். 5) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொல்.செய். 16) என்பவற்றால், வாள் வில் வேல் முதலிய படைக்கலப் பயிற்சி நூல் களும், தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் (தொல்.செய். 17) என்பதனால், யானைநூல் குதிரைநூல் என்பனவும், அக்காலத் திருந்தமை உய்த்துணரப்படும். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் (தொல்.செய். 10) வருபகை பேணார் ஆரெயில் உளப்பட (தொல்.செய். 12) என்பன மனைநூல் என்னும் கட்டட நூலிருந்தமையைத் தெரிவிக்கும். தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் (தொல்.செய். 21) என்பது தேர்த்தச்சையும், முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. (தொல்.செய். அகத். 34) என்பது கலத்தச்சையும், உணர்த்தும். இனி, வனைவும் நெசவும், கம்மியமும் போலப் பல கலைகள் எழுதப்பட்ட இலக்கியமின்றியே வழிவழி வழங்கி வந்திருத்தல் வேண்டும், என்பது சொல்லாமலே விளங்கும். தமிழர் பரவல் மக்கட் பெருக்கம், வாணிகம், புதுநாடு காணும் விருப்பம், போர் கொள்ளை பகை பஞ்சம் கடல்கோள் முதலிய பலகரணியங்கள் பற்றி, குமரிநாட்டுத் தமிழர் பல்வேறு நிலைகளிற் பல்வேறு திசையிற் பரவிச் சென்றனர். தமிழ் வளர்ச்சியடைந்தபின் அவர் பரவிச் சென்றது வடக்கு நோக்கியே. வங்கத் தலைநகர்க்கு இன்றும் காளிக்கோட்டம் என் னும் தூய தென்சொற் பெயர் வழங்குவதே, பண்டைக் காலத்தே தமிழர் பனிமலைவரை அல்லது கங்கைவரை பரவியிருந்தனர் என்பதற்குப் போதிய சான்றாம். தமிழ் இயன்மொழியாயும் ஒரே மொழியாயும் வழங்கியதனால், நீண்ட காலமாக அதற்குச் சிறப்புப் பெயர் ஏற்படவில்லை; மொழியென்னும் பொதுப்பெயரே வழங்கிற்று. வடக்கே செல்லச் செல்ல மொழி மெல்லமெல்லத் திரிந்தது. அதனால் வட நாட்டை மொழிபெயர் தேயம் என்றனர். பின்னர்த் தென்னாட்டு மொழிக்குத் தமிழ் என்னும் பெயர் தோன்றிற்று. தமிழ் திரிந்து தமிழர்க்கு விளங்காக் கிளைமொழியாய் மாறிய போது, தமிழம் என்னும் சொல்லும் திரவிடம் என்று திரிந்தது. (தமிழ் - தமிழம் - த்ரமிள - த்ரமிட - த்ரவிட - திரவிடம் - திராவிடம்.) அதனால், தமிழினின்று திரிந்த மொழி திராவிடம் எனப்பட்டது. அது முதற்கண் ஒன்றாயிருந்து பின்பு பலவாகக் கிளைத்தது. முதன்முதலாகத் திரிந்த திரவிடமொழி தெலுங்காத லால் அது வடகு (வடநாட்டு அல்லது வடக்கத்து மொழி) எனப்பட்டது. அது பின்னர் வடுகு எனத் திரிந்தது. வடுகு என்பது அம்மீறு பெற்று வடுகம் எனவும் வழங்கும். வடகு என்பது இன்று கன்னடத்திற் படகு என்று திரிந்துள்ளது. நீலமலையில் வாழும் கன்னடத் திரிமொழியாளர் படகர் எனப்படுதல் காண்க. அண்மையிற் பிரிந்த மலையாளம் நீங்கலாகத் திரவிட மொழிக ளெல்லாம் வடபாலே வழங்குவதும், வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் சிதைந்தும் சிறுத்தும் சிதறியும் இலக்கண விலக்கியம் குன்றியும் இன்றியும் போவதும், இந்தியாவிற்கு வெளியே வழங்காமையும், இன்று தமிழும் ஓரளவு திரிந்துள்ளமையும், குமரிநாட்டுத் தமிழே இற்றைத் தமிழுக்கும் எல்லாத் திரவிட மொழிகட்கும் தாயென்பதைத் தெரிவிக்கும். மொழிகளின் அல்லது சொற்களின் இயல்பும் திரிபும் நோக்காது, சிறிதும் பெரிதும் வடிவொப்புமை யொன்றையே நோக்கி, தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் வடமேலை நாட்டி னின்று வந்திருக்கலாமென்று, வரலாற்றாசிரியர் மட்டு மன்றி மொழிநூலறிஞரும் மயங்கி இடர்ப்படுகின்றனர். சொற்களின் வேரும் வரலாறும் அறியின் அங்ஙனம் இடர்ப் படார். எடுத்துக் காட்டாக, ஒரு தெலுங்குச் சொல்லையும் ஒரு பிராகுவீச் சொல்லையும் எடுத்து ஈண்டு விளக்குவாம். தெலுங்குச் சொல் : மாட்டாடு, மாட்லாடு. மாறு - மாற்றம் = மாறிச்சொல்லும் சொல், சொல். மாற்றம் - தெ. மாட்ட. மாட்ட + ஆடு = மாட்டாடு. ஒ. நோ : சொல்லாடு, உரையாடு, தெ. மாட்டலு (பன்மை) + ஆடு = மாட்டலாடு. த. கள் (பன்மையீறு) தெ. களு - கலு - லு. கள்ளுதல் = கலத்தல், கூடுதல். கள் - களம் = கூட்டம், அவை. கூடுதலைக் குறிக்கும் சொல், பல பொருட் கூட்டமாகிய பன்மையை யுணர்த்துங் குறியாயிற்று. தெ. மாட்டு - க. மாத்து, மாத்தனு. மாத்து + ஆடு = மாத்தாடு, மாத்தனு + ஆடு = மாத்தனாடு. க. மாத்து - கோ. மாந்து, மாந்த் = சொல், மொழி. க. = கன்னடம். கோ. = கோத்தம் (கோத்தர் மொழி) பிராகுவீச் சொல் : பாக் = வாய்கள். த. வாய் - பி. பா. த. கள் - பி. க் வடநாட்டுத் திரவிடருள் ஒரு சாராரே, வடமேற்கிற் சென்று சுமேரிய நாகரிகத்தைத் தோற்றுவித்தனர். கி.மு. 20-ஆம் நூற்றாண்டிலிருந்த ஆபிரகாமின் ஊர், ஊர் என்றே பெயர் பெற்றிருந்தது. ஊர் என்பது பாபிலோனிய மொழியில் நகரம் என்னும் பொருளது. பண்டைத்தமிழ் நாட்டில் ஊர் என்று பெயர் பெற்றிருந்தது மருதநில மக்கள் குடியிருப்பே. நகரம் தோன்றியதும் மருதநிலமே. ஊர் என்னும் நகரம் இருந்த இடத்தில் தோண்டியெடுக்கப் பட்ட உத்தரம், கி.மு. 3000 ஆண்டு கட்கு முற்பட்ட சேரநாட்டுத் தேக்கென்று சொல்லப்படுகின்றது. ஆபிரகாம் என்னும் பெயரின் முற்பகுதியாகிய ஆப் என்பது, அப்பன் என்னும் தமிழ்ச் சொல் திரிபே. ஆபிரகாமின் பேரனான யாக்கோபு தூங்கிக் காட்சி கண்ட இடம், பெத்தேல் எனப்பட்டது. பெத்தேல் என்பது தேவன் வீடு என்னும் பொருளது. த. வீடு - க. பீடு - பீட் - கா. பெத். த. எல் = ஒளி, கதிரவன், தெய்வம். பெத் + எல் = பெத்தெல். இங்ஙனம் கூட்டுச் சொல் முறைமாறி யமைவது சேமிய வழக்கு. கா. = கானானியம். ஆபிரகாம் காலத்தில் அரபியும் எபிரேயமும் தோன்றவில்லை. அவன் பேசினது அக்கேடியன். ஆதம் (ஆதாம்) என்னும் பெயர், செங்களி மண்ணில் உருவாக்கப் பட்டவன் என்று பொருள்படின் அத்தம் என்னும் தமிழ்ச் சொல் லோடும், மக்களினத் தந்தை என்று பொருள்படின் அத்தன் என்னும் தமிழ்ச் சொல்லோடும், (முதல்) மாந்தன் என்றுபொருள் படின் ஆதன் (ஆன்மா) என்னும் தமிழ்ச் சொல்லோடும், தொடர்புடையதாயிருக்கலாம். அத்தம் = சிவப்பு. அத்தி = சிவந்த பழமரம். ஏவா (ஏவாள்) என்னும் பெயர், மக்களினத்திற்கு உயிரைத் தந்தவள் என்று பொருள்படின் ஆவி என்னும் தமிழ்ச் சொல் லோடும், மக்களினத் தாய் என்று பொருள்படின் அவ்வை என்னும் தமிழ்ச் சொல்லோடும் தொடர்புடையதா யிருக்கலாம். சுமேரிய நாகரிகத்தை வளர்த்த மக்கள் வழியினருள் ஒரு சாரார் எகிபது வழியாகவும் மற்றொரு சாரார் சின்ன ஆசியா வழியாக வும், நண்ணிலக்கடல் புகுந்து ஐரோப்பாவை யடைந்து மேலை யாரியராக மாறியிருக்கின்றனர். பூனை எகிபது நாட்டில் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தபின் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்டதென்றும், அது கிரேக்கத்தில் கத்த என்றும் இலத்தீனில் கத்துஸ் என்றும் பெயர் பெற்றதென்றும், ஆரிய நாட்டினங்கள் பிரிந்து போகுமுன் அவற்றிடை அதற்குப் பொதுப் பெயர் இல்லையென்றும், சமற்கிருதத்தில் மார்கார (Margara) விடால என்னும் இரு பெயர் அதற்குண்டென்றும், மார்க்கசு முல்லர் கூறியிருக்கின்றார். பூனை தொன்று தொட்டுத் தமிழகக் காட்டில் இயற்கையாக வாழ்ந்து வருகின்றது. அந்நிலையில் அதற்கு வெருகு என்று பெயர். அது வீட்டிற் பழக்கப்பட்ட பின், அடிக்கடி முகம் பூசுவ தால் (கழுவுவதால்) பூசையென்றும், பிள்ளைபோல் வளர்க்கப் பட்டமையால் பிள்ளை யென்றும், பகற்காலத்தில் நன்றாய் கண் தெரியாமையால் கொத்தி யென்றும், பெயர் பெற்றது. பூசு - பூசை - பூனை - பூஞை. ம. பூச்ச. பிள்ளை - தெ. பில்லி. ஒ.நோ : தள்ளை - தெ. தல்லி. கொத்தை - குருடு, குருடன். கொத்தை - க. கொத்தி. இச்சொல் குமரிநாட்டுத் தமிழிலும் வழங்கியிருத்தல் வேண்டும். வீட்டுப் பூனையின் முப்பெயரும் மேலையாரிய மொழிகளிற் பரவி வழங்குகின்றன. பூசை - E puss, pus, pusse, Du. poes, L.G. puns, Sw. pus, Norw. puse, puus, Lith. puz, puiz, Ir and Gael. pus. E. pussy, pussie, pussey, Sc poussie, poosie வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் (தொல். மர. 19). பில்லி - L. feles. கொத்தி E. cat, GK. katta, kattos, L. catta, catus, It. gatto Sp., Pg, gato. Cat. gat, Pr. cat, ONF. cat, F. chat, OE. cat, catt, ON kott-r, Sw. katt, Da. kat, OE.catte WGer. katta, MLG. katte, MDu. katte, kat, Du. kat, Sw. katta, OHG. chazza, (MHG. mod. G. katze), fem. OIr. cat, Gael cat, Welsh and Cornish cath, Breton kaz, Vannes kac’h, Slav. kot, OSlave kot’ka, Bulg. kotka, Slovenish kot, Russ. kot. Pol kot, Boh. kot, Sorabian kotka, Lith. kate, Finnish katti. Pussy என்ற சொற்கு வேர் தெரியவில்லை யென்றும், cat என்ற சொற்கு வந்த வழி தெரியவில்லையென்றும், பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகின்றது. இனி, பூனையைக் குறிக்கும் இரு வடசொற்களும், தென் சொல்லினின்று பிறந்தவையேயாம். மார்கார அல்லது மார்ஜால என்னும் பெயர் கழுவுவது அல்லது துடைப்பது என்று பொருள்படுவதால், பூசையென்னும் தென் சொல்லின் மொழி பெயர்ப்பேயன்றி வேறன்று. வ. ம்ருஜ் கழுவு, துடை, துப்புரவாக்கு. இனி, விடால என்னும் சொல்லும் விடரவன் என்னும் தென் சொல்லின் திரிபேயென்பது, ஆய்ந்து பார்ப்பின் தெளிவாம். பூனையின் பகற்கண் நடுவில் தோன்றும் திறப்புக் கீற்று ஒரு விடர் போலிருப்பதால், பூனைக்கு விடரவன் என்றும் ஒரு பெயர் (யாழ். அக.) உண்டு. விடர் பிளப்பு. விடரவன் - விடரகன் - வ. விடாரக - விடாலக - விடால - பிடால. பூனைக்கண் நிறமுள்ள ஒரு மணிவகைக்குப் பூனைக்கண் (cat’s eye) என்பது உவமையாகு பெயர். இக்கரணியம் பற்றியே விடார என்னும் வடசொல்லினின்று வைடூர்ய என்னும் பெயர் திரிந் துள்ளது. விடாரக - விடார - வைடூர்ய. மாக்கசு முல்லர் இச் சொற்குக் கூறியுள்ள பொருட்கரணியமும் இதுவே. Puss என்பது பூனைக்கு விளிப்பெயரென்று, எருதந்துறை (Oxford) ஆங்கில அகரமுதலி கூறுகின்றது. நெல்லை மாவட்டத்தில் இன்றும் பூனையைப் பூசு பூசு என்றழைப்பது இயல்பு. காட்டுப்பூனைக்குக் கான்புலி, பாக்கன், மண்டலி என்றும் பெயருண்டு. மேற் கூறியவற்றால், பூனை தமிழகத்தினின்று மேனாடு சென்ற தென்பது வெள்ளிடை மலை. பழைய எகிபதிய மொழியில் வேறுசில தமிழ்ச் சொற்களும் உள. குமரிநாட்டுத் தமிழர் சுற்றுக்கடலோடிகளாய் (Circumnavigators) இருந்ததனால், கடற் பெயரும் சில கலப் பெயர்களும் மேலை யாரிய மொழிகளிற் சென்று வழங்குகின்றன. வள் - வர் - வார். வார்தல் = வளைதல், சூழ்தல். வார் - வாரி = நிலத்தைச் சூழ்ந்த கடல். வார் - வாரணம் = கடல். வாரணம் - வாரணன் = கடல் தெய்வம். வாரணன் - வ. வருண. வாரி - L. mare. E marina (f.It. and Sp.) = a promenade or esplanade by the sea. படகு : படம் = சீலை, திரைச்சீலை, பாய்ச்சீலை. படம் - படவு பட. படவு - படவர் - பரவர். செம்படவு - செம்படவர். E. bark barque, F. barque, Pr., Sp., It. barca, L. barca, OIr. barc. Romanica barca. E. barge, OF. barge, Pr. barga, L. barga, baris, G.K. bares Coptic bari, கலம் : E. galley, OF. galie, med. L. galea, galeie, GK. galaia, galia, Pr. galeya galee, galea, Sp. galea, Pg. gale, It. galea, galia. கப்பல் : E. Ship Com. Teut : OE. Scip, OFris. skip, schip N. Fris skapp, skep, WFris skip, OS. skip, MLG. schip, schep, LG. schipp, MDu. sc(h)ip sc(h)eep, Du. schip, WFlem. scheep, OHG. Seif, skef, MHG. schif, schef, G schiff, ON skip, Sw. skepp, Da. skib Goth skip, E. skiff, F. esquiff, Sp., Pg. esquife, It. schifo, OHG. scif. நாவாய் : L. navis = ship, OF. naive = fleet, E. navy = a fleet. நாவாய் (பெருங்கலம்) - வ. நௌ = படகு. நங்கூரம் : E. anchor, OE. ancor, L. ancora, GK. ankura, OHG. anchar LG., MHG. anker, ON. akkeri, Sw. ankare, Da. anker, OF. ancre. It. ancora. L. anchora. நாங்கூலம் = நாங்குளு (நாங்கூழ்), மண்ணைத் துளைப்பது போல் நிலத்தைத் துளைத்து உழும் கலப்பை. தெ. நாகேல. வ. லாங்கல, த. நாங்கூலம் - நாங்குல் - நாஞ்சில் = கலப்பை. நாங்கூலம் - நாங்கூரம் - நங்கூரம் - நங்குரம் = கப்பலை நிறுத்தும் கலப்பை வடிவான இருப்புக் கருவி. பார. லங்கர். வளைவைக் குறிக்கும் ank என்னும் வினை முதனிலையினின்று anchor என்னும் சொல் திரிந்துள்ளதாக. ஆங்கில அகரமுதலிகள் கூறும். அஃதுண்மை யாயின், அதுவுந் தமிழ் வழியே. வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கணம் = வாட்டஞ்சாட்டமான சாலகம் (சாய்கடை). இனி, வடபார் முனையில் அவ்வப்போது தோன்றும் ஒருவகை மின்னொளியையுங் கண்டு, அதற்கு வடவை அல்லது வடந்தை எனப் பெயரிட்டனர் குமரிநாட்டுக் கடலோடிகள். ஊழியிறுதி யுலகழிவு நெருப்பினால் நேருமென்று சிவநெறியார் நம்பினதினால், அவ்வடவையே அந்நெருப்பின் மூலமாயிருக்கு மென்று ஒரு கருத்தெழுந்தது. அதனால் அதை உத்தரமடங்கல் என்றனர். உத்தரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன். உத்தர மடங்கல் என்பது உத்தரம் என்று சுருங்கியும் வழங்கும். வடக்கிலுள நெருப்பு என்னும் பொருளில், அது இலக்கியத்தில் வடவைக் கனல், வட அனல் என்றும் பெயர் பெறும். மேலையர் வடவையை Aurora borealis என்பர். அதற்கு வட விடியல் அல்லது வடவெளிச்சம் என்று பொருள். Borealis என்பதை வட திசையையும் வடகாற்றையும் குறிக்கும். வடந்தை என்னும் சொல் வடகாற்றையுங் குறிப்பதும், வடகாற்றின் பெயரான வாடை என்பது வடவைக்கும் பெயராக வழங்குவதும், ஒப்பு நோக்கத்தக்கன. ஆரியர் வடவை என்னும் தென்சொல்லை வடவா அல்லது படபா என்று திரித்து, முகம் என்னும் சொல்லையுஞ் சேர்த்து, பெட்டைக் குதிரையின் முகத்தில் தோன்றும் நெருப்பென்று பொருள் கூறுவது, பழங்கருநாடகப் பட்டிமருட்டாம். ஆரியர் திரும்பல் வடதிராவிடர் ஐரோப்பாவின் வடமேற்கிற் காண்டினேவியம் வரை சென்று ஆரியராக மாறியபின், அல்லது ஆரியத்தன்மை யடைந்த பின், அவருள் ஒரு சாரார் தென்கிழக்கு நோக்கித் திரும்பி இத்தாலியாவிலும் கிரேக்க நாட்டிலும் குடியேறினர். கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசின கூட்டத்தார், தென்கிழக்கு நோக்கியே தொடர்ந்து பாரசீக வழியாக வந்து இந்தியாவிற்குட் புகுந்தனர். வடஇந்தியாவிலிருந்த பிராகிருதப் பேரினத்தோடு கலந்து போனதினால், அவர் மொழியும் பிராகிருதத்தோடு இரண்டறக் கலந்து, எகர ஒகரக் குறில் களை யிழந்தது. அக்கலவை மொழியிலேயே வேதம் இயற்றப்பட்டது. ஆரிய மாந்தர் நூற்றிற்குத் தொண்ணூற் றொன்பதின்மர் பிராகிருதப் பழங்குடி மக்களொடு கலந்து போனாலும், ஆரியப் பூசாரியார் மட்டும் பிரிந்து நின்று, வேதவாயிலாகவும் வேள்வி கள் மூலமாகவும் ஆரியப் பழக்க வழக்கங்களை அவியாது காத்துவந்திருக்கின்றனர். ஆரியம் என்னும் மொழிப் பெயரும் ஆரியம் என்னும் இனப்பெயரும், இந்திய ஆரியரிடையே முதன்முதல் தோன்றி ஏனை நாடுகளிலும் மாக்கசு முல்லர் வாயிலாகப் பரவியுள்ளன. வேத ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிகராகவே யிருந் ததனால், அவர் பூசாரியரும் எழுத்தறியாதவராகவே யிருந்தனர். ஆயின், வேத மந்திரங்களை மனப்பாடமாக ஓதி வந்ததனால் நினைவாற்றலும், தம் மேம்பாட்டைக் காத்து வந்ததனால் சூழ்ச்சித் திறனும், அவர்க்கு மிகுதியாக இருந்தன. அதனால், வடநாட்டுப் பிராகிருதப் பழங்குடி மக்களைப் போன்றே தென் னாட்டுத் தமிழ்ப் பழங்குடி மக்களையும், தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும் தம் வேத மொழி தேவமொழி யென்றும் ஏமாற்றி அடிமைப்படுத்திவிட்டனர். இதற்கு அவர் வெண்ணிற மும் வேதமொழியின் எடுப்பொலியும் துணை நின்றன. இருசார் பழங்குடி மக்களும் ஏமாற்றப்படுவதற்கு, அவர் பழங்குடிப் பேதைமையும் மதப்பித்தமும் கொடை மடமும் ஏதுவாயிருந்தன. விரல்விட் டெண்ணக் கூடிய ஒரு சிலரான ஆரியப் பூசாரியரே, தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டு அவர் மொழியையும் இலக்கியத்தையுங் கற்று, தமிழெழுத்தினின்று கிரந்த எழுத்தை யமைத்து, ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற் களை வேத மொழியொடு கலந்து சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய மொழியைத் தோற்றுவித்து, தமிழ் நூல்களையெல்லாம் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்தபின் மூல நூல்களை யழித்து விட்டு மொழி பெயர்ப்பு நூல்களையே முதனூல்களாகக் காட்டி, இந்திய நாகரிகம் ஆரியர் கண்டதென மேலையரும் நம்புமாறு நாட்டி விட்டனர். தமிழிலக்கியம், குமரிநாட்டு மக்களான ஒரு பேரினத்தார், கற் காலம் முதல் இருப்புக்காலம் வரை பன்னெடுங்காலமாக வளர்த்து வந்த பல்துறை நாகரிகப் பண்பாட்டின் விளை வென்றும்; சமற் கிருத இலக்கியம், ஒரு சில வந்தேறிகள், ஐந்திலிரு பகுதி தமிழா யுள்ள சமற்கிருதமென்னும் இலக்கியக் கலவை மொழியில், தமிழிலக்கியத்தை மொழிபெயர்த்து விரிவு படுத்தியும் மாற்றியும் அமைத்ததென்றும்; வேறுபாடறிதல் வேண்டும். (த.இ.வ.) குமரிநாடே நாகரிக மாந்தன் பிறந்தகம் சான்றுகள் நிலத் தொன்மை ஞாலத்தில் மிகமிகப் பழமையான நிலப்பகுதியும், பரவை தோன்று முன்பே நீண்ட காலம் நிலைத்திருந்ததும், குமரிக் கண்டமே, எகிபதிய நாகரிகத்திற்கு முந்தியது குமரிநாகரிகம். 2. ஞால நடுமை ஞாலநடுவிடம் நண்ணிலக் கோட்டை (Equator) யடுத்த குமரிக் கண்டமேயன்றி, சமதட்பவெப்ப மண்டலத்ததைச் சார்ந்ததும் நண்ணிலக் கடல் என்று தவறாகப் பெயர் பெற்றுள்ளதுமான இடத்தைச் சேர்ந்ததன்று. ஆடையின்றி நீண்ட காலமாகக் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்திருந்த இயற்கை மாந்தனின் உடல் முழுதும் போர்த்திருந்த மயிர் கழிவதற்கு, வெப்ப நாடே ஏற்றது. 3. இயற்கை வளம் இயற்கை விளையுளையே பெரும்பாலும் உண்டு வந்த முதற்கால மாந்தனுக்கேற்ற காயுங் கனியும் கிழங்கும் வித்தும் விலங்கும், பறவையும், மீனும், ஏராளமாய்க் கிடைத்திருக்கக் கூடியது குமரிக் கண்டமே. ஆடும், மாடும், ஊனும் பாலுந் தோலும் ஒருங்கே உதவின. 4. உயிர்வாழ்வதற்கு ஏற்பு நான்காம் மண்டலக் காலத்தில் ஐரோப்பாவிற் படர்ந்த பனிக் கட்டிப் படலம் போன்ற இயற்கைப் பேரிடர்ப்பாடு, குமரிக் கண்டத்தில் நிகழ்ந்ததில்லை. 5. தமிழர் பழக்க வழக்கப் பழைமை பண்பட்ட தென்னாட்டுப் பழங்குடி மக்களான தமிழரிடை யிருந்து அருகிவரும் காது வளர்ப்பு, பச்சை குத்தல் முதலியன. முந்தியல் மாந்தர் பழக்க வழக்கங்களாகும். 6. முந்தியல் மாந்தர் வாழ்நில அண்மை விலங்காண்டியரும் அநாகரிகருமான முந்தியல் மாந்தர் வழியினர் வாழ்நிலங்களான ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும், குமரிக் கண்டமிருந்த இடத்தைச் சூழ்ந்தே யிருக்கின்றன. அநாகரிக நிலைக்கு அடுத்ததே நாகரிக நிலை. 7. உலக முதல் உயர்தனிச் செம்மொழி வழங்கிய இடம் உலக முதற்றாய் மொழியாகிய தமிழ் வழங்கிய இடம் பழம் பாண்டி நாடான குமரிநாடே. மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றது குமரிநாடே: சான்றுகள் - 1. புள்மாப் பெருக்கம் உழவுத் தொழிற்குரிய காளை யெருமை முதலியனவும், காவற் றொழிற்குரிய நாய் பூனை முதலியனவும், செய்தி விடுத்தற் குரிய கிளி புறா முதலியனவும், குமரிநாட்டில் ஏராளமாயிருந்தன. 2. கருவிப் பொருள்வளம் வீடு கட்டுவதற்குரிய மரமுங் கல்லும் சுண்ணாம்பும், கருவியும் கலமும் அணிகலமும் படைக்கலமும் செய்தற்குரிய பொன்னும் வெள்ளியும் செம்பும், இரும்பும், மரமும், ஆடை நெய்தற்குரிய பட்டையும் நாரும், பஞ்சும், மயிரும், கூரைவேய்தற்குரிய தட்டை யுந்தாளும் புல்லுங் கோரையும், தழையும், ஓலையும், கூடையும் பெட்டியும், சுளகும், முறமும் முடைதற்கேற்ற மூங்கிலும் பனைநாரும் பாயுங் கட்டிலும் பின்னற் குரிய கோரையும் நாரும், திருமுகமும் சுவடியும் வரைதற் கேற்ற மடலும் ஓலையும், இசைக் கருவிகள் செய்தற்குரிய மரமுந் தோலும் நரம்பும், தீக்கடை கோலுங் கட்டையும், இன்னோ ரன்ன பிறவும், குமரி நாட்டிற் போல் வேறெங்குங் கிடைத்திருக்க முடியாது. 3. நானில அண்மை குறிஞ்சி நாகரிகத்தினின்று முல்லை நாகரிகத்திற்கும் முல்லை நாகரிகத்தினின்று மருத நாகரிகத்திற்கும் கலஞ்செலுத்தி ஆறு கடத்தலினின்று கடல் கடத்தற்கும், அடுத்தடுத்துச் செல்லுமாறு நானிலமும் அணித்தணித்தாகத் தொடர்ந்தமைந்திருந்தது, குமரி நாட்டிலேயே. இந்நிலைமை இற்றைத் தமிழ் நாட்டிலுமுண்டு. பஃறுளியாறும் குமரிமலைத் தொடரும் கங்கையும், பனி மலையும் போன்றிருந்தனவே. குமுதம் குமுதம் - குமுத (அ.வே.) கும்முதல் = குவிதல். கும் - குமுதம் = கதிரவனைக் கண்டு குவிவதாகச் சொல்லப்படும் நீர்ப்பூ. கு + முத என்று பகுத்து, என்ன மகிழ்ச்சியுறுத்துவது (‘exciting what joy’) என்று வடவர் பொருட் காரணங் காட்டுவது எத்துணை வியப்பானது! கு என்பது குதஸ் (எங்கிருந்து), குத்ர (எங்கு), குவித், குஹ என்னும் வடமொழி வினாச் சொற்களின் அடியாகக் கொள்ளப் பட்டுள்ளது. முத் (வ.) = மகிழ்ச்சி. (வ.வ.) குயில் குயில் - கோகில கூ (கூவு) - (கூயில்) - குயில். ம. குயில், க. குகில், தெ. குக்கில், மரா. கோயீல, வ. கோகில. (வ.வ.) குரங்கெறி விளங்காய் ஒருவன் விளா மரத்திலுள்ள குரங்கைக் கல்லால் எறிந்தால் அது அவனைத் திருப்பி எறிதற்கு வேறொன்றும் இல்லாமையால் விளங்காயாலேயே எறியும். இது ஏறமுடியாத விளா மரத்தி லுள்ள காயை வலக்காரமாய்ப் பெறும் வழியாம். இங்ஙனம் குரங்கு எறியும் விளங்காயே குரங்கெறி விளங்காய். குரங்கு தானாக விளங்காய் எறியாவிட்டாலும், கல்லெறிந்தவனிடம் பழி வாங்குவதற்கு எறிவது போல ஆசிரியன் தானாக ஒன்றைச் சொல்லாவிட்டாலும் மாணவர் வலக்காரமாய் வினவும் வினா விற்கு விடையிறுக்கும்போது தன்னையறியாமலே அதைச் சொல்ல நேர்ந்து விடுவது இயல்பு. இதையறிந்த மாணவர் இம்முறையைக் கையாளுவர். இதனைக் குரங்கெறி விளங்காய் என்பது இலக்கண ஆசிரியர் விளக்கம். (சொல். 14. ) குரலே சட்சம் இயற்றமிழுணர்ச்சி போன்றே இசைச்தமிழுணர்ச்சியும் மிக்கு வரும் இக்காலத்தில், இசைத்தமிழைப் பலரும் பலவாற்றால் தத்தமக் கிசைந்தவாறு ஆராய்வது தக்கதே. ஆனால், ஒரு படத்தைத் தலைகீழ்த் திருப்பிப் பார்ப்பதுபோல், முதனூலை, வழிநூலாகவும், வழிநூலை முதனூலாகவும் பிறழக்கொண்டு ஆராய்ச்சி நடாத்துவது ஒரு சிறிதும் தக்கதன்று. முத்தமிழில் எத் தமிழை ஆராயினும் முன்னதாக இன்றிமையாது அறிய வேண்டிய உண்மைகள் மூன்றுள. அவை தமிழும் தமிழரும் தோன்றியது குமரிநாடென்பதும், ஆரியர் வருமுன்னரே தமிழர் பல துறையி லும் முழுநாகரிக மடைந்திருந்தன ரென்பதும், தமிழர் அல்லது திரவிடரிடத்தினின்றே ஆரியர் நாகரிகத்தை யடைந்தனரென் பதுமாம். ஆரியர் வருமுன்னரே தமிழ் முத்தமிழாய் வழங்கியதாத லின், ஒருவர் எத்துணைக் கலைபயில் தெளிவும் ஆராய்ச்சி வன்மையும் வாய்ந்தவ ரெனினும், ஆரிய வேதங்களை இசை முதனூலாகக் கொண்டு ஆராயின், விளக்கின்றிப் புத்திருள் வழி போவார் போல் இடர்ப்படுவாராவர். தமிழ்க் கலைகளையும் நூல்களையும் வடமொழியில் பெயர்க்கும் போது குறியீடு, பாகு பாடு, தொகையீடு முதலியவற்றை இயன்றவரை மாற்றி வழி நூலையே முதனூலாகக் காட்டுவது ஆரியர் வழக்கம். தமிழ்ப்பொழில் 17ஆம் துணர் 4ஆம் மலரிலிருந்து இசைத் தமிழைப்பற்றி விபுலானந்த அடிகள் எழுதிவந்த ஆராய்ச்சிப் பகுதிகளிற் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். அவற்றால், அவ் வாராய்ச்சி முதலிலேயே கோணியதாக என் சிற்றறிவிற் கெட் டிற்று. உடனே இசைத்தமிழ்த் தோற்றத்தை யானே ஆராயத் தொடங்கினேன். அதன் பலனாகக் குரலே சட்சம் எனத் தோன்று கின்றது. ஆயினும், இதை அறிஞர் ஆராய்ந்து உண்மை காணு மாறு வரையலானேன். குரலே சட்சம் என்பதற்குச் சான்றுகள் 1. தன்மத நிறுத்தல் (1) ஏழிசை வரிசையில் குரல் முதலிற் கூறப்படுதல். இதுகாறும், எத் தமிழ்நூலாயினும், குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்ற வரிசையிலேயே ஏழு சுரங்களும் கூறப்படுகின்றன. 2. மத்தளத்திற்கு வலக்கண் குரலென்றல் சிந்தாமணியில், 675ஆம் செய்யுளுரையில், இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய் நடப்பது தோலியற் கருவி யாகும் என்பது மேற்கோள். தண்ணுமை, முழவு, மத்தளம், மிருதங்கம் எனப்பலவாறு சொல்லப்படும் ஓரினத் தோற்கருவிகளில், தொன்றுதொட்டு வலக்கண்ணே சட்சமா யிருந்துவருகின்றது. 3.குரலை முதற்றான மென்றல் 11ஆம் புறப்பாட்டில், குரல் புணர்சீர் என்னுந் தொடருக்கு முதற்றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டை என்பது பழையவுரை. 4. கேள்விச் சுரம் (சுருதி) இயல்பாய்ச் சட்சமாயிருத்தல் எவர் பாடினும் இயல்பாய்ப் பாடும்போது மத்திமமன்றிச் சட்சமே சுருதியாயிருத்தலின், அதனையே முதற் சுரமாக நம் முன்னோருங் கொண்டிருக்க வேண்டும். 5. குரல் என்னுஞ் சொல் தொண்டையையும் அதிற் பிறக்கும் ஓசையையுங் குறித்தல் குல் > குர் > குரல். குலவு = வளை. L. curuvs, E. curve. குரவை = வட்டமாக நின்று ஆடுங் கூத்து. E.H.L. chorus, Gk. choros, orig. a dance in a ring. குரல் = வளைந்த துளை, துளையுள்ள தொண்டை, தொண்டையிற் பிறக்கும் ஓசை. ஒ.நோ : வளை = குழி. தொண்டை = தொளையுள்ளது. (தொள் + தை). Dan. kroc, E. craw, the throat of fowls, Dan. kroe, Ger. kragen, Scot. craig, the neck, E. crop, the craw of a bird, A.S. crop, Dut. crop, a bird’s crop. எல்லா ஓசையுங் குரலெனப்படுமேனும், இயல்பான கேள்வி யிசையே (சுருதி), குரலென்னுந் தொண்டைப் பெயராற் கூறப் படுதற்கேற்றல் காண்க. 6. குரலே சட்சமாக மாபெரும் புலவர் ஆபிரகாம் பண்டிதர் கொண்டமை. இசைத்தமிழ்க் கடலை (சாகரத்தை)த் தனிப்படக் கடைந்து கருணாமிர்தம் என்னும் அரிய அமுதையெடுத்து நாம் உண்ண வைத்த காலஞ் சென்ற இராவ்சாகிபு ஆபிரகாம் பண்டிதர் அவர் களின் இசையாராய்ச்சி நூலில், இரண்டொரு சிறு சருக்கல்க ளிருப்பதாகத் தெரியினும், குரலிசையைப் பற்றிய கொள்கை வலியுறுவதாகவே தோன்றுகின்றது. 2. பிறன்மத மறுத்தல் (விபுலானந்த அடிகள் குரல் மத்திமம் என்று கூறுவதை மறுப்பது.) 1. கூற்று ச ரி க ம ப த நி என்னும் ஏழு சுரங்களுக்கும் பொருந்திய சுருதிகள் 4, 3, 2, 4, 4, 3, 2 ஆகும் குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாங் குரையா உழைஇளி நான்கு - விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் என்றமையின், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழும் இளிக் கிரமத்திலே, 4, 4, 3, 2, 4, 3, 2 என அலகு பெற்று நின்றன. இவைதமையே இளி முதலாக இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென நிறுத்து மிடத்து அலகுகள் 4, 3, 2, 4, 4, 3, 2 என நிரல் பெறுதல் காண்க. மறுப்பு : முதலாவது, அலகுகளே இன்னும் இத்தனை யென்று திட்டமாக வில்லை. அலகு மொத்தம் 24 என்றும், 22 என்றும் இருவேறு கொள்கைகள் இருந்துவருகின்றன. இரண்டாவது, பண்ணுக்கேற்றபடி அலகுப் பகுப்பு வேறுபடுவதாகத் தெரிவ தால், ஒரு பண்ணுக்கு வகுத்த அலகு முறையைப் பொதுமைப் படுத்துவது பொருந்தாது. மூன்றாவது, இசைத்தமிழ் முதனூல்கள் அழிந்தபின், ஆரிய வழிநூல்களைத் தழுவியும் தமிழிசை நூலும் நூற்பாவும் தோன்றியிருக்கலாமாதலின், தமிழிலுள்ள நூலெல் லாம் தனித்தமிழ்க் கொள்கைகளைக் கூறுபவையே யென்று கொள்வதற்கும் இடனின்று. 2. கூற்று (வடநூல்) (தமிழ்நூல்) நாரத சங்கீத பிங்க திவாகரமும் சிட்சை ரத்தினாகரம் லந்தை சூடாமணியும் ச - மயில் மயில் குரல் ம வண்டு வண்டு ரி - பசு சாதகம் துத்தம் ப கிளி கிளி க - ஆடு ஆடு கைக்கிளைத குதிரை குதிரை ம - கொக்கு கிரெஞ்சம் உழைநி யானை யானை ப - குயில் குயில் இளி ச குயில் தவளை த - குதிரை குதிரை விளரி ரி பசு பசு நி - யானை யானை தாரம் க ஆடு ஆடு இருஷபம் (விளரி), பசு, காந்தாரம் (தாரம்), ஆடு, தைவதம் (கைக்கிளை), குதிரை, நிஷாதம் (உழை), யானை என்பன இருமொழி மரபுக்கும் ஒத்துநின்றன. மறுப்பு : முதன்முதல் யாழிற் பல நரம்புகளைக் கட்டி மீட்டிய போது, கீழ்க் குரலோடொத்த மேற்குரலையும் அவற்றுக் கிடையி லுள்ள பிற சுரங்களையுங் கண்டு ஏழிசைகளை யறிந்தார்களே யொழிய, மேற்கூறியவாறு மயில் பசு முதலிய பறவை விலங்கு களின் ஓசைகளை ஒருங்கேயோ தனித் தனியோ கேட்டறிய வில்லை. ஏழிசைகளைப் புள்ளொடும் விலங்கொடும் இசைத்துக் கூறுவது, புள்நூலையும் குறிநூலையும் ஒட்டிய கற்பனைக் கொள்கையாகவும் இருக்கலாம். இவ்வாறே, பிற்காலத்தாரும், எழுதீவு, எழுமுனிவர், எழுமரபு, ஏழாறு, எழுதேவதை, எழுநிறம் முதலியவாக ஏழென்னுந் தொகைபெற்ற பொருள்களோ டெல் லாம் தத்தம் விருப்பிற்கும் உன்னத்திற்கும் ஏற்றவாறு ஏழிசையை இசைத்துக் கூறுவாராயினர். இக்கூற் றெல்லாம் இசைநூலோடு எள்ளளவும் தொடர்புற்றவல்ல. குரலை மத்திமமாகக் கொண்டு, இருமொழி நூல்களிலும் கூறப் பட்டுள்ள புள் விலங்குகளை ஒப்புநோக்குமிடத்தும் ரி க த நி என்னும் நாற்சுரங்கட் குரியவையே ஒத்திருக்கின்றன; ஏனை முச்சுரங்கட்கும் ஒவ்வவில்லை. குரலைச் சட்சமாகக் கொண்டு நோக்குமிடத்தும், இருமொழியிலும் பஞ்சமத்திற்குக் கூறிய பறவை (குயில்) ஒத்திருக்கின்றது. இனி, சங்கு குயில்மயில் யானை புரவி செங்கா லன்னம் காடையிவற் றோசை என்னுங் கல்லாட மேற்கோளில், வடநூல்களிற் கூறப்படாத மூன் றும் தமிழ் நூல்களிற் கூறப்படாத நான்குங் கூறப்பட்டுள்ளன. இதனால், புள் விலங்குக் குறிப்பைக்கொண்டு ஒரு கொள்கையை நிறுவ முடியாதென்பது போதரும். 3. கூற்று குரலது மிடற்றிற் றுத்த நாவினிற் கைக்கிளை யண்ணத்திற் சிரத்தி னுழையே இளிநெற் றியினில் விளரி நெஞ்சினில் தார நாசியிவை தம்பிறப் பென்ப எனக் கூறியிருப்பதை வடமொழி நூல்கள் கூறும் பிறப்பிடங் களோடு ஒப்பவைத்து நோக்குமிடத்து, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழும் ம ப த நி ச ரி க வாம் என்பது தெளிவாகின்றது. மறுப்பு : மேற்கூறிய நூற்பாவில், குரலுக்குக் கூறிய இடந்தவிரப் பிறவெல்லாம் உடல்நூற்கும் ஒலிநூற்கும் ஒவ்வாவென்பது, கண்ட அல்லது கேட்ட மட்டிலேயே தெள்ளத்தெளிவாம். இனி, முற்கால யாழெல்லாம் ஒருதொகை நரம்பினவும் ஒரு திறத்தவுமல்ல. சிலவும் பலவுமான நரம்புகளைக் கொண்ட பல யாழ்களில், சில குரலிலும் சில உழையிலும் சில இளியிலும் சில தாரத்திலும் தொடங்கின. உழையில் (மத்திமத்தில்) தொடங்கிய கோவையைச் சில பண்ணுக்குக் குரன் முதலதாகக் கொண்டு வாசித்தனர். இதனால், ஒரே கோவை (மேளம்) இசை வகையால், ஒன்றும் இடவகையால் ஒன்றுமாக இருவேறுபட்டு, குரலுக்குக் கூறியதை மத்திமத்திற்கும் மத்திமத்திற்குக் கூறியதைக் குரலுக்கு மாக மயங்கக் கொண்டனர். பண்ணுக்கேற்றபடி எந்தச் சுரத்தையுங் குரலாகக் கொண்டு வாசித்ததை, குரல் குரலாயது, துத்தங் குரலாயது, கைக்கிளை குரலாயது முதலிய தொடர்களாலுணர்க. 4. கூற்று இளி நரம்பிற்குப் `பட்டடை என ஒரு பெயருண்டு, வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு (அரங்கேற்று காதை, 63) என்பதற்கு அடியார்க்குநல்லார் கூறும் உரையினை நோக்குக. `எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின் இளி இப் பெயர் பெற்றது. `ஷட்ஜம் என்னுஞ் சொல்லும் ஏனை ஆறு சுவரமும் பிறத்தற்கு இடமாகியது என்னும் பொருளினைத் தரும். மறுப்பு : ச - ப என்னும் சுரப்பிடிப்பே பண்களுக்கெல்லாம் அடிப்படையாதலின், பஞ்சம் (இளி) பட்டடை யென்றும். வண்ணப்பட்டடை யென்றுங் கூறப்படு வதாயிற்று. பல பண்ணுச் சக்கரங்கள் ச - ப முறையில் இயங்குவதை அடியார்க்கு நல்லா ருரையிலும் கருணாமிர்த சாகரத்திலுங் கண்டுகொள்க. தாரத்துட் டோன்றும் உழைஉழை யுட்டோன்றும் ஓருங் குரல்குரலி லுட்டோன்றிச்... சேரும் இளி... என்றதும் இம் முறைபற்றியே. இனி, இதன் விரிவை, ஆபிரகாம் பண்டிதனார் மகனார் வரகுண பாண்டியனார் எழுதியுள்ள இசைத்தமிழ் விளக்கத்திற் கண்டு தெளிக. (செ.செ. கடகம். 1943) குரவன் குரவன் - குரவஹ் (g) குரு - குரை = பெருமை. பருமையும் கனமுமே வேதத்திற் கொள்ளப்பட்ட பொருள்கள், பிற வெல்லாம் பிந்தினவே. (வ.வ: 128 - 129) குரு குரு1 குருத் (dh) - இ. வே. உருத்தல் = பெருஞ்சினங் கொள்ளுதல். உரு - குரு. குருத்தல் = சினத்தல். குரு = வெப்பக் கொப்புளம். குரு2 - க்ரு (gh) = எரி, ஒளிர். குரு = ஒளி. குருமணித்தாலி (தொல். 303, உரை). குருவுங் கெழுவும் நிறனாகும்மே (தொல்.செய். ) குரு3 - குரு (g) குரு = 1. பருமன், 2. பெருமை. குருமை யெய்திய குணநிலை (சீவக. 2748). 3. கனம் பசுமட் குரூஉத்திரள் போல (புறம். 32). 4. தந்தை, 5. ஆசிரியன், 6. குரவன், அரசன். குருக்கள் = பிராமணரல்லாத மரவூண் வேளாளக் குரவர். குரு = குருசில் = தலைவன். போர்மிகு குருசில் (பதிற்றுப். 31: 36). குருசில் - குரிசல் = தலைவன். (திருமுரு. 276). குரு - குரவன். இருமுது குரவர் = பெற்றோர். ஐங்குரவர் = தந்தை, தாய், தமையன், ஆசிரியன், அரசன் ஆகியோர். (வ.வ: 128) குருகு குருகு என்பது நாரை கொக்கு முதலிய நீர்ப்பறவைப் பொதுப் பெயர். கொல்லன் உலைத்துருத்தி, கொக்கும் நாரையும் போன்ற வடிவாய் இருப்பதால் அதனையும் குருகு என்பது செய்யுள் வழக்கு. ஊதுலைக் குருகின் உயிர்த்தனள் (சிலப். 22 : 152) (சொல். 13.) என்றார் இளங்கோவடிகள். குருந்தம் குருந்தம் - குருவிந்த = மாணிக்க வகை. குரு = சிந்துரம். குருவெறும்பு = செவ்வெறும்பு. குரு - குருதி = அரத்தம், சிவப்பு, செவ்வாய். குருதிக் காந்தள் = செங்காந்தள் (சீவக. 1651). குரு - குருந்து = மாணிக்கவகை. குருந்து - குருந்தம். (வ.வ: 129) குருள் குருள் - குருல = மயிர்ச்சுருள். குள் - குர் - குரு - குருள். குருளுதல் = சுருளுதல். குருண்ட வார் குழல் (திருவிசை. திருவாலி. 1 : 3). குருள் = மயிர்ச்சுருள், பெண்டிர் தலைமயிர். (வ.வ: 129) குரை குரை - குர் = ஒலி. குரைத்தல் = ஒலித்தல். ஆரவாரித்தல். (வ.வ: 129) குல்1 (கூடற் கருத்துவேர்) அடிக்கருத்து (கூடல்) குல் - குலம் = 1. கூட்டம். பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்காள் நள. 37), மாளிகைக் குலந்துகைத்து (தணிகைப்பு. சீபரி. 373). 2. பெற்றோரும் பிள்ளைகளும் கூடிய குடும்பம். 3. மரபுவழிக் குடும்பம். குலந்தாங்கு சாதிகணாலினும் (திவ். திருவாய். 3:7:9), மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தி (ஐங், 259). 4. உயர்மரபு வழிக் குடும்பம். குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் (குறள். 959), 5. உறவினர் தொகுதி. குலத்தைக் கெடுக்குங் கோடரிக் காம்பு. 6. நாடு மொழி தொழில் மதம் பற்றிய வகுப்பு (Community) அல்லது குடும்பம். 7. ஆரியர் வகுத்த பிறவி வகுப்பு (சாதி). குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே. 8. பால் (வருணம்). குலம் நான்காகப் பகுத்த வகையால் தெரிந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளரெனச் சொல்லப்பட்டாரிருக்கும் நான்காய் வேறு பட்ட தெருக்களும் (சிலப். 14 : 212, அடியார்க்கு நல்லாருரை). 9. இனம் (Species). ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந். 2104). 10. கொங்கு வேளாளர் குலப்பிரிவு. தூரன்குலம். 11. குடும்பம் குடியிருக்கும் வீடு (பிங்.). 12. அரசன் வீடாகிய அரண்மனை (திவா.). 13. இறைவன் வீடு போன்ற கோயில். தேவகுலமுந் தெற்றியும் பள்ளியும் (மணி. 26 : 72). குலம் - குலன். குலம் - வ. குல, Gael. clann, E. clan. குல் - குலை = 1. காய்த்திரள். வாழைக்குலை. 2. பூங்கொத்து. நீடுகுலைக் காந்தள் (பெரும்பாண். 371), 3. ஈரற்குலை, வீரர் குலைக ளற்றிட (அரிச். 4 வேட்டஞ். 48). குலை - ம. குல, தெ. கொல (படிடய), க. கொலெ (படிடந). குல்-குல-குலவு. குலவுதல் = 1. கூடுதல். 2. கூடி மகிழ்தல். பாரிடங் குலவிச் செல்ல (கந்தபு. தாரக. 18). 3. நெருங்கியுறவாடுதல். குலவு - குலாவு. குலாவுதல் = 1. மகிழ்தல். மறையோர் குலாவி யேத்துங் குடவாவில் (தேவா. 763 : 2). 2. கொண்டாடுதல் (பிங்.). 3. நட்பாடுதல். 4. நிலைபெறுதல். குலாய கொள்கைத்தே (சீவக. 1007). ம. குலாவு. குல் - கல் - கல. கலத்தல் - கூடுதல். கூட்டுறவாதல், பொருந்துதல். கூடிப்பேசுதல், கூடியறிதல். கல - து. கல, தெ. கலயு, க. கலசு, ம. கலருக. fy - fy¥ò = TLif, fy¡if, e£ghif, bj., க. கலப்பு. கலப்பு - கலப்படம் - தெ. கலப்படமு. கலங்காவரிச்சு - கலவாமல் இடைவிட்டுக் கட்டிய வரிச்சுக் கட்டு. கல - கலவை = 1. பல்பொருட் கலப்பு. 2. விரை (மண) நீர் கலந்த சந்தனக் குழம்பு. தழுவிய நிலவெனக் கலவை (கம்பரா. கடி மணப். 51). 3. கலந்தவுணவு. கலவைக ளுண்டு கழிப்பர் (நாலடி. 268). 4. மணல் கலந்த சுண்ணாம்பு. கல - கலவு. கலவுதல் = கலத்தல். கனியின் றிரளுங்கலவி (சூளா. சீய. 230). கலவு - கலவல் = கலக்கை (பிங்.). கலவன் = கலப்பானது. கலவங்கீரை = கலவைக்கீரை. கலவினார் = உற்றாருறவினர். கலவினார் பழிகரக்கு மேதை (தணிகைப்பு. திருநாட்டு. 142). கலவு - கலாவு. கலாவுதல் = கலத்தல். வானத்து வீசுவளி கலாவலின் (குறிஞ்சிப். 48). கல - கலம்பு - கதம்பு - கதம்பம் = 1. கூட்டம். 2. கலப்புணவு. 3. மணப்பொடிக் கலவை. 4. பன்மலர் மாலை. ஒ.நோ : சலங்கை - சதங்கை. கலம்பு - கலம்பகம் = 1. பூக்கலவை. கலம்பகம் புனைந்த வலங்கலந் தொடையல் (திவ். திருப்பள்ளி. 5). 2. பல்வகைச் செய்யுளும் பதினெண் தலைப்புங் கலந்த பனுவல்வகை (இலக்.வி. 812.) கல் - கலுழ். கலுழ்தல் = பொருந்துதல். கண் முத்தமாலை கலுழ்ந்தனவே (திருக்கோவை. 397). கலுழ் - கலுழன் = வெண்ணிறமுஞ் செந்நிறமுங் கலந்த பறவையினம். கலுழன்மேல் வந்து தோன்றினான் (கம்பரா. திருவவ. 13). கலுழன் - வ. கருட (garuda). குல்-குள்-கள். கள்ளுதல் = 1. கூடுதல், பொருந்துதல், ஒத்தல். கள்ள ஓர் உவமையுருபு. கள்ளக் கடுப்ப (தொல். பொ. உவம. 11). கள் - களம் = 1. கூட்டம். 2. கூடுமிடம். 3. நெற்களம். காவ லுழவர் களத்தகத்துப் போரேறி (முத்தொள். 65). 4. போர்க்களம். ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2 : 15). 5. அவை. 6. இடம் (திவா.). களம் - களமர் = 1. மருதநில மாக்கள். கருங்கை வினைஞருங் களமருங் கூடி (சிலப். 10 : 125). 2. போர் மறவர். கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமும் (மதுரைக். 393). களமன் - வ. கலம. களம் - களமம் = (மருத நிலத்து) நெல். களமம் - வ. கலம. களம் - களன் = அவை. களனஞ்சி (குறள். 730). களம் - களர் = கூட்டம் (சூடா.). களர் - களரி = 1. அவை. அரங்கேற்றுங் களரியிலே (திருக்கை). 2 . போர்க்களம். பூசற் களரியிலே (பு.வெ. 2 : 6. கொளு. உரை). 3. நாடகம் கல்வி மல் முதலியன பயிலும் அரங்கு. 4. வழக்கு மன்றம் (கோயிலொழுகு. 64). 5. தொழிற்சாலை. களம் - களன் - கழனி = 1. மருதநிலம் (பிங்.). 2. வயல். கழனி யுழவர் (புறநா. 13 : 11) 3. சேறு. கள - (களகு) = களகம் = 1. நெற்கதிர். வண்களக நிலவெறிக்கும் (திவ். பெரியதி. 6 : 9 : 10). 2. சுண்ணாம்புச் சாந்து. களகப் புரிசைக் கவினார்..... காழி (தேவா. 112 : 3). களகம் - களபம் = 1. கலவை (சூடா.). 2. சுண்ணச்சாந்து. நுண்களபத் தெளிபாய (திருக்கோவை. 15). 3. கலவை மணச் சாந்து. புலிவிரா யெறிந்திடக் களபம் போக்குவார் (இரகு. இரகுவுற். 26). ஒ.நோ : மண்டகம் - மண்டபம், வாணிகம் - வாணிபம். களகு - கழகு = கழகம். கழகு - கழகம் = 1. பேரவை. கழகமேறேல் நம்பீ (திவ். திருவாய். 6 : 2 : 6). 2. புலவரவை (திவா.). 3. கல்வி பயிலும் இடம். கந்தனை யனையவர் கலை தெரி கழகம் (கம்பரா. நாட்டுப். 48). 4. படைக்கலம் மற்போர் முதலியன பயிலும் இடம். (திவா.) 5. கவறாடும் இடம். கழகத்துக் காலை புகின் (குறள். 937). ம. கழகம். கழகம் என்னுஞ் சொல், இயல்பாக ஓர் அவையை அல்லது அவைக்களத்தைக் குறிக்குமேயன்றி, கவறாடும் அரங்கைக் குறிக்காது. கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோடமர்ந்து (திருவிளை. திருநாட். 56), நாட்டாண்மைக் கழகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதலிய வழக்குகளை நோக்குக. திருக்குறளிற் சூது என்னும் அதிகாரத்திலேயே, கழகம் என்னும் சொல் சூதாடரங்கைக் குறிக்கலாயிற்று. கல - கள களகு - கழகு - கழகம். கள் - கட்சி = 1. போர்க்களம். கட்சியுங் கரந்தையும் பாழ்பட (சிலப். 12. உரைப். 25). 2. ஒரு கொள்கை பற்றிய கூட்டம். 3. மர மடர்ந்த காடு. கலவ மஞ்ஞை கட்சியிற்றளரினும் (மலைபடு. 235). கள் - கண். கண்ணுதல் = பொருந்துதல், புடைகண்ணிய வொளி ராழியின் (இரகு. யாக. 17). கண் - கண, கணத்தல் = கூடுதல். கண - கணம் = 1. கூட்டம் கணங் கொண்டு சுற்றத்தார் கல்லென் றலற (நாலடி. 25), மான்கணம் மறலா (சிலப். 13 : 6). 2. படைப்பகுதி. கணம் - வ. கண (gana). கணவர் = கூட்டத்தார். பூத கணவர் (கந்தபு. திருக்கயி. 8). ஆளுங் கணத்தார் = ஊராட்சியவையார். கணம் - கணன் = தொகுதி. கணனடங்கக் கற்றானுமில் (சிறுபஞ். 31). கணம் - கணகம் = 27 தேர்களும் 27 யானைகளும் 81 குதிரைகளும் 135 காலாட்களுங் கொண்ட படைப்பிரிவு (பிங்.). கணம் - கணந்துள் = கூட்டமாக வாழும் பறவையினம். இருந்தோட் டருஞ்சிறை நெடுங்காற் கணந்துள் (குறுந். 350). கள் - கட்டு. கட்டுதல் = சேர்த்தல், பொருத்துதல், புனைதல், பிணித்தல், பூட்டுதல், உடுத்தல், தொடுத்தல், அமைத்தல், திரள்தல், நென்மூட்டை கட்டி அரசிறையாகச் செலுத்துதல். தாலி பூட்டி மணத்தல், செலவொடு வரவு பொருந்துதல், ஒத்தல், பொய்யாகப் புனைதல், மூடுதல், தடுத்தல், அடக்குதல். k., bj., f., து. கட்டு. கட்டு = 1. பிணிப்பு. கட்டவிழ்தார் வாட்கலியன் (அஷ்டப். நூற்றெட். காப்பு). 2. மலப்பிணிப்பு. கட்டறுத் தெனையாண்டு (திருவாச. 5 : 49). 3. மூட்டை. 4. கட்டடம் (பிங்.). 5. கட்டுப்பாடு. 6. கட்டளை. கட்டுடைக் காவலிற்காமர் கன்னியே (சீவக. 98). 7. காவல். மதுவனத்தைக் கட்டழித்திட்டது (கம்பரா. திருவடி. 18). 8. அரண். கட்டவை மூன்று மெரித்த பிரான் (தேவா. 386:7). 9. மதிப்பு. கட்டோடு போனாற் கனத்தோடு வரலாம் 10. நெல்லைக் கட்டிக் கூறங் குறி. கட்டினுங் கழங்கினும் (தொல். பொ. 115). 11. பொய்யுரை. கருமங் கட்டளையென்றல் கட்டதோ (கம்பரா. கிட். அரசி. 16). கட்டு - கட்டம் = 1. கவறாட்டத்திற்கு வரையும் அறைகள். (பெருங். மகத. 14 : 56). 2. காடு (திவா.). 3. மோவாய்க் கட்டை (பிங்.). தெ. கட்டமு (gaddamu). கட்டு - கட்டகம் = காந்தக்கல். நலமலி கட்டகம் (ஞானா. 55:13). கட்டு - கட்டடம் = வீடு கட்டுதல். பொத்தகங் கட்டுதல், பொன் னணியிற் கற்பதித்தல். கட்டடம் = தெ. கட்டடமு. கட்டு - கட்டணம் = 1. பாடை, 2. செலுத்தும் பணம். கட்டணம் க. கட்டண. கட்டு - கட்டளை = 1. செங்கல் முதலியவற்றின் அச்சு. கட்டளை கோடித் திரியின் (அறநெறி. 56). 2. உருவங்கள் வார்க்குங் கருவி. 3. ஒன்றுபோல் அமைத்த உருவம். காட்டி வைத்ததோர் கட்டளை போல (பெருங். உஞ்சைக். 33 : 113). 4. உவமை (பிங்.). 5. உரைகல், சால்பிற்குக் கட்டளை யாதெனின் (குறள். 986). 6. ஒழுங்கு. 7. கட்டுப்பாடு. 8. சமய நெறிமுறைகளை யுணர்த்தும் நூல். 9. கோயிலிற் சிறப்பாக ஓர் அறஞ்செய்தற்குச் செய்யப்படும் ஏற்பாடு. 10. (தெ. கட்டட, க. கட்டளே) அதிகாரியின் உத்தரவு அல்லது ஏவல். கட்டு - கட்டாடி = குறிசொல்வோன். கட்டு - கட்டாப்பு = 1. வேலியடைத்த நிலம். 2. தடவை. கட்டு - கட்டாயம் = தப்பாமற் செய்ய வேண்டிய நிலைமை. தெ. கட்டாயமு (kaddayamu), க. கட்டாய (kaddaya). குள் - (குய்) - குயில். குயிலுதல் = செறிதல் (திவா.). குல் - (குர்) - குரல் = 1. சேர்க்கை. குரலமை யொரு காழ் (கலித். 54:7). 2. கொத்து. கமழ்குரற் றுழாய் (பதிற்றுப். 31: 8). 3. கதிர். வரகினிருங் குரல் (மதுரைக். 272). 4. பெண்டிர் கூந்தல். நல்லார் குரனாற்றம் (கலித். 88). 5. மகளிர் குழல் முடிக்கும் வகைகளுள் ஒன்று. (பு.வெ. 9: 35. உரை). குர் - குரு - (கரு) - கருவி = தொகுதி. கருவி தொகுதி (தொல். சொல். உரி. 56). It. gruppo, F. groupe, E. group. குர் - குறி = அவை. குறிகூட்டி (சோழவமி. 55). பெருங்குறி = ஊர்ப்பேரவை. (S.I.I. iii, 175 : 22). குள் - குழு = 1. T£l« (âth., பிங்.). 2. தொகுதி. இந்தனக் குழுவை (ஞானா. 63 : 11). குழு - குழூஉ. ம. குழு. குழு - குழுவு. குழுவுதல் = கூடுதல். மள்ளர் குழீஇய விழவி னானும் (குறுந். 31), குமரரு மங்கைமாருங் குழுவலால் (கம்பரா. வரைக. 28). குழு - குழுவல் = கூட்டம். குழு - குழும்பு = திரள். களிற்றுக் குழும்பின் (மதுரைக். 24). குழும்பு - குடும்பு = 1. காய் கனிக்குலை (பிங்.). 2. பண்டை ஊரவைத் தேர்தலுக்கு வகுத்த ஊர்ப்பகுதி (ward). குடும்பு - குடும்பம் = பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்த கூட்டம். குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு (குறள். 1029). குடும்பம் வ. குட்டும்ப. குழுவு - குழுமு. குழுமுதல் = கூடுதல். மாத ரெண்ணிலார் குழுமி (காஞ்சிப்பு. பன்னிரு. 134). 2. கலத்தல். கொன்றையுந் துளவமுங் குழுமத் தொடுத்த (சிலப். 12, து. ப. மடை. 10). குழுமு - குழுமல் = கூட்டம் (பிங்.) குழுமு - குழுமம் - குழாம் = 1. கூட்டம். மயிற்குழாத் தொடும் போகுமன்னம் (கந்தபு. திருநகரப். 31), 2. அவை. சான்றோர் குழா அத்துப் பேதைபுகல் (குறள். 840). குழு - குழம்பு. குழம்புதல் = பலவகைப் பொருள் கூடுதல். குழுமு - கழுமு. கழுமுதல் = 1. சேர்தல். பெண்டிர்...... செந்தீக் கழுமி னார். (பு.வெ. 7 : 28). 2. பொருந்துதல். கழுமிய காதல் (பு.வெ. 10, முல்லைப். 5, கொளு). 3. திரளுதல். மென்புகை கமழு சேக்கை (சீவக. 1350). 4. கலத்தல். கழுமிய ஞாட்பு (தொல். சொல். 351, உரை.) குழு - கெழு. கெழுதகை = நட்புரிமை. கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டி (மணி. 25 : 14). கெழுதகைமை = நட்புரிமை. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை (குறள். 802). கெழு - கெழி = நட்பு. ஒருவன் கெழியின்மை கேட்டாலறிக (நான்மணி. 63). க. கெளெ. கெழு - கெழுவு. கெழுவுதல் = 1. பொருந்துதல். மங்கையைக் கெழு வின யோகினர் (தேவா. 951 : 5). 2. நிறைதல். கெழுவிய காதலை யென்று (தணிகைப்பு. களவு. 530). 3. பற்றுக்கொள்ளுதல் (சூடா.). கெழுவு - நட்பு. கேளிர் மணலின் கெழுவு மிதுவோ(பரிபா. 8: 63). கெழுவு - கெழுமு. கெழுமுதல் = 1. கிட்டுதல். ஒன்னாதார் படைபுகழுமி (பு. வெ. 3: 12, கொளு). 2. பொருந்துதல் தேரோ டத் துகள் கெழுமி (பட்டினப். 47). 3. நிறைதல். கெழுமி யெங் கணுமாய்க் கிளரொளிச் சடையனை (வள்ள. சத்தியஞான. பதியியல், 9). குள் - கூள். கூளுதல் = திரளுதல். கூண்டன கரிகள் (இரகு.மீட்சி. 42). கூளம் = பலவகைத் தாளும் வைக்கோலுங் கலந்த மாட்டுணவு. கூளப்படை = பலவகையினர் கலந்த கூட்டுப்படை, (ஈடு. 6 : 6 : 1 அருக). கூள் - கூளி = 1. கூட்டம் (பிங்.). 2. குடும்பம் (பிங்.). கூளியன் = கூட்டாளி, நண்பன் (சூடா.) கூள் = கூடு. கூடுதல் = ஒன்று சேர்தல், திரளுதல், பொருந்துதல், நட்புறுதல், மிகுதல். k., bj., f., து. - கூடு. கூட = உடன். k., bj., f., து. - கூட. கூடு - கூட்டம் = கூடுகை, திரள், அவை, இனத்தார், நட்பினர். k., T£l« bj., T£lK, f., து. - கூட்ட. கூட்டம் - குட்டம் = 1. திரள். அழற்குட்டம் போல் (சீவக. 10: 79). 2. அவை. படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப் பெறார் (T. A. S. i, 9.). கூடல் = 1. கூடுதல். 2. பொருந்துகை. 3. ஆறு கடலொடு கூடுமிடம். மலியோதத் தொலிகூடல் (பட்டினப். 98). கூடலூர் (Cuddalore). முக்கூடல் = மூவாறுகள் கூடுமிடம். 4. தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வருங் குறியறிய மணலில் இழைக்கும் கூடற்சுழி நீடலந் துறையிற் கூடலிழைத்தது (திருக்கோவை. 186). 5. புலவர் கழகம். 6. கழகமிருந்த மதுரை. கூட னெடுங்கொடி யெழவே (கலித். 31). 7 தோப்பு. செயலைக் கூடலே (இரகு. தேனுவந். 70). கூட்டு = திரள், இனம், நட்பு, உறவு, துணை, கலப்பு, கலவை, சேர்ப்பு, ஒப்பு, கூட்டுத்தொழில், கூட்டுக்கறி. ம. கூட்டு. கூட்டர் = தோழர், இனத்தார், ம. கூட்டர். கூட்டரவு = கூடிப் பழகுதல். போத மிக்கவர் கூட்டரவு (ஞானவா. முமுட்.25). கூட்டர் = தோழர், இனத்தார், ம. கூட்டாளன். கூட்டாளி = நண்பன், பங்காளி, ஒத்தவன், ம. கூட்டாளி. கூட்டுறவு = கூடியுறவாடல், கூடித் தொழில் செய்தல். கூட்டுறவுக் கழகம் = (Co-operative Society). கூட்டுச் சொல் = ஒரு சொற்றன்மைப்பட்ட இணைச் சொல் (Compound word). கூட்டெழுத்து = 1. விரைவாகக் கூட்டி யெழுதுங் கையெழுத்து (run-ning hand). 2. பலமெய் இணைந்த வடவெழுத்து (Conjunct consonant). குள்-கொள். கொள்ளுதல் =பொருந்துதல். கொள்ளாத கொள்ளா துலகு (குறள். 470). கொள் - கொள்ளை = 1. கூட்டம். கொள்ளையிற் பலர் கூறலும் ( கந்தபு. விண்குடி. 14). 2. மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ. 1 : 15 : 14). கொள்ள = நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது. கொள் - கோள் = குலை. செழுங்கோள் வாழை (புறநா. 168 : 13). கோட் டெங்கிற் குலைவாழை (பட்டினப். 16). கோள் - கோட்டி = 1. கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக. 1035.) 2. கூட்டம் (பிங்.). 3. அவை. தோமறு கோட்டியும் (மணி. 1 : 43). கோள் - கோடு - கோடகம் = பல தெருக் கூடுமிடம் (பிங்.). கோடு - கோடி. கோடித்தல் = கட்டுதல். அமைத்தல். கடிமண்டப முன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4.). கிளைக் கருத்துக்கள் 1. ஒப்புமை கள்ள, கடுப்ப என்பவை தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள உவமை யுருபுகள். கணத்தல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல். குரங்கு கணக்க ஓடுகிறான் என்பது நெல்லை வட்டார உலகவழக்கு. கூட்டு = ஒப்புமை. மடங்கல் கூட்டற வெழுந்தெரி வெகுளியான் (கம்பரா. அதிகாய. 1). கெழுவ என்பது ஓர் உவமையுருபு (தொல். பொ. 286, உரை) குழு - கெழு - கேழ் = ஒப்பு. கேழேவரையு மில்லோன் (திருக்கோவை. 269). கொள்ளுதல் = ஒத்தல் வண்டினம் யாழ் கொண்ட கொளை (பரிபா. 11 : 125) இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே என்னும் முறைமை பற்றிக் கூடுதற் கருத்தில் ஒப்புமைக் கருத்துப் பிறந்தது. 2. பன்மை பன்மை பல்பொருட் கூட்டமாதலால், கூடுதலைக் குறிக்கும் கள்ளுதல் என்னும் வினைச் சொல்லினின்று கள என்னும் பன்மையுருபு அமைக்கப்பட்டது. எ-டு : மக்கள் (மக + கள்), மரங்கள், விலங்குகள்; யாங்கள், நீங்கள், அவர்கள். 3. நிறைவு பன்மையால் நிறைவுண்டாகும். கழுமுதல் = நிறைதல். கெழுவுதல் = நிறைதல். 4. மிகுதி அளவிற்கு மிஞ்சின பன்மையே மிகுதி. கூடுதல் = மிகுதல். கழுமுதல் = மிகுதல். ஒ.நோ : நிரம்ப = நிறைய, மிக. 5. கோது ஒரு நீர்ப் பொருட் கலத்தில் கசண்டு அடியில் தங்கிச் செறிவத னாலும், கழிபொருளான குப்பையிற் பலவகைப் பொருள் கலப்பதாலும், செறிதல் அல்லது கலத்தற் கருத்தினின்று கழி பொருட் கருத்துத் தோன்றிற்று. கூளம் = திப்பி, மண்டி (dreg = sediment) ஒ.நோ : மண்டு - மண்டி, மண்டுதல் = செறிதல். கூளன் = பயனற்றவன். உழை பேணாக் கூளன் (திருப்புகழ், 109) கூளி = குற்றம் (சூடா.) குப்பை கூளம் என்னும் வழக்கை நோக்குக. 6. கணக்கு கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்னும் நால்வகைக் கணக்குள், முதலாவது தோன்றியது கூட்டற் கணக்கே. கூடு - கூட்டல். கணத்தல் = கூடுதல். கண - கணக்கு = கூட்டு, கூட்டுத்தொகை, மொத்த அளவு, அளவு, வரம்பு, கூட்டற் கணக்கு, கணக்கு. கணக்கு - கணக்கன், கணக்கப்பிள்ளை. 7. புணர்ச்சி காதலன் காதலியர் மெய்யுறக் கூடல் புணர்ச்சி. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் (குறள். 1276). கலவியான் மகிழ்ந்தாள் போல் (சிலப். 7: 24, கட்டுரை). கூடலிற் காணப்படும் (குறள். 1327). காமக் கூட்டங் காணுங்காலை (தொல். பொ. கள. 1.). கணவன் = கூடுவோன். கடுவன் = ஆண்குரங்கு. 8. பொருத்து கூளி = பொலி காளை. உறுப்புக்கள் அல்லது அவற்றின் பகுதிகள் ஒன்றோடொன்று கூடுவது பொருத்தாகும். கலவு = உடலின் மூட்டுவாய். கலவுக்கழி கடுமுடை (அகநா. 3). கள் - களம் = உடல் முண்டத்தைத் தலையொடு பொருத்தும் உறுப்பாகிய 1. கழுத்து. 2. தொண்டை. பாடுகள மகளிரும் (சிலப். 6 : 157). கள் - (கண்டு) - கண்டம் = கழுத்து, தொண்டை. காராருங் கண்டனை (தேவா. 1071 : 1). களம் - வ. gala. L. collum. கண்டம் வ. கண்ட (kantha.) கண் - கணு. கட்டு - கட்டாணி = அணிகளின் கடைப்பூட்டாணி. குயில் - கயில் = பூண்கடைப்புணர்வு (திவா.). கயில் - கயிறு = கட்டுவது. ம. கயறு. 9. நெயவு நெடுக்கிழையுடன் ஊடையைப் பொருத்திப் பின்னுவது நெயவு. குயிலுதல் = 1. நெய்தல். ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் (தொல். சொல். 74, உரை). 2. பின்னுதல். குயில் - குயினர் = தையற் காரர் (பிங்). கோடி - கோடிகம் = ஆடை. கோடிகர் = ஆடை நெய்வோர் (பெருங். இலாவாண. 8 : 67). 10. போர் மாறுபட்ட இருவர் அல்லது இரு கூட்டத்தார் கலந்தே போர் செய்வர். கைகலத்தல் என்னும் வழக்கை நோக்குக. கல - கலகு = கலகம். கலகித்தில் = கலகஞ்செய்தல், கலகம் - கலாம். கலாய்த்தல் = சினத்தல், மாறுபடுதல். கலாவுதல் = சினத்தல் கலாவு - கலாவம் - கலாபம் = கலகம், ஐதர் கலாபம். கலாபித்தல் - கலகஞ்செய்தல். கலாபி - கலாபினை - தெ. கலாபன. கூட்டம் = போர் (திவா). 11. கலங்கல் நீரும் மண்ணுங் கலத்தல் கலங்கல். கல - கலகு - கலங்கு - கலங்கல். கல - கலுழ். கலுழ்தல் = கலங்கல். கலுழ் = நீர்க்கலக்கம். கலுழி = கலங்கனீர். கலுழ் - கலிழி = கலங்கனீர். கலுழி - கலிழி. கலுழ் - கலுழம் - கலுடம் - வ. கலுடி. 12. கலக்கம் ஒரு வழியோடு பிறவழிகள் கலக்கும்போதும், அமைதியான மனத்திற் துயர் கலக்கும்போதும், ஒரு செய்தி பற்றிப் பல கருத்துக்கள் எழும்போதும் மனங் கலங்கும். கலங்கு - கலக்கு கலக்கம். கலக்கு (பிறவினை) - ம. கலக்கு, க. கலக்கு, தெ. கலத்சு. கலக்கு (பெயர்) - க. கலக்கு, தெ. கலக்குவ. கலக்கம் (தொழிற் பெயர்) - ம. கலக்கம், தெ. கலக்க. கலுழ்தல் = மனங் கலங்குதல். கலவரித்தல் = கலங்குதல். கலதை, கலவரம், கலவரை என்பன கலக்கங் குறிப்பன. கலவரம் - தெ. கலவரமு, க. கலவள. கழுமுதல் = மயங்குதல். குழம்புதல் = கலங்குதல். ம. குழம்பு. குழம்பு - குழப்பு - குழப்பம் = தாறுமாறு, அமைதியின்மை. கோழம்பம் = குழப்பம். 13. திரட்சி பலபொருள்கள் ஒன்றாகச் சேரின் திரட்சியுண்டாகுமாதலால், கூடுதற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும். குள் - குளம்பு = விலங்குகளின் திரண்ட காலுகிர். குழு - குழை = திரண்ட காதணி. குழு - கழு - கழுகு = பெரும்பறவை. கழு முரகு = மிகப் பெரிது. குள் - குண்டு - கண்டு = கட்டி, நூற்றிரளை. கண்டு - கண்டம் = பெரிய துண்டு. கணைக்கால் = திரண்ட கெண்டைக்கால். கணை = திரண்ட பிடி. கணையம் = திரண்ட எழு. குறடு = திண்ணை. குண்டை (காளை), குண்டாந்தடி, குண்டடியன் (ஆண்சிவிங்கி), குண்டுக்கழுதை என்பனவும் திரட்சி பற்றியனவே. 14. பருமை திரட்சியாற் பருமையுண்டாம். குரு = பருமை. குரூஉக் களிற்றுக் குறும்புடைத்தலின் (புறநா. 97). கூளி = பெருங்கழுகு. கூளிப்பனை = தாளிப்பனை. 15. களம் திரட்சியாலும் பருமையாலும் கனமுண்டாம். குரு = கனம். பசுமட் குரூஉத் திரள் (புறநா. 32). (குல்) - கல் = கனமுள்ளது. f., k., கல். bj., J., கல்லு. 16. பெருமை பரு - பெரு. பருப்பொருட் கருத்தான பெருமை கனத்தினின்று, நுண்பொருட் கருத்தான பெருமை கனம் தோன்றும். குரு குருக்கள், குருசில் - குரிசில், குரவன், குருமகன், கனம் பொருந்திய, கனவான் முதலிய சொற்களையும் வழக்குகளையும் நோக்குக. கலந்தை = பெருமை. சிறுகிளைக் கருத்துக்கள் பொருத்தற் கருத்தினின்று, கட்டுதல், அமைத்தல், புனைதல், செலுத்துதல், அணிதல், மணத்தல் முதலிய பல கருத்துக்கள் தோன்றும். திரட்சிக் கருத்தி னின்று திண்மை, உறுதி, திறமை ஆகிய கருத்துக்களும் தோன்றும். திண்மை குழம்பு = திண்ணிய சாறு. குட்டி - கட்டி. கூளியர் = படைமறவர். உறுதி கட்டு = உறுதி. கட்டி - கெட்டி (கட்டளை = திமிசு) திறமை கெட்டி - கெட்டிக்காரன். கட்டாணி = திறவோன். தெ. கட்டாணி. குறிப்பு : - கும் - கும்மல் - குமியல் - குவியல், கும் - கும்பு - கும்பல், கும்பு - குப்பு - குப்பல், குப்பை, கும்பு - கும்பை முதலிய சொற்கள் குவிதற் கருத்தோடு கூடற் கருத்தையுங் கொண்டனவேனும், அவை உம் என்னும் உயிர்முதல் வேர்ச் சொல்லினின்று திரிந்தன வாதலின், இங்குக் கூறப்பட்டில. (வே.க.) குல்1 (தோன்றற் கருத்து வேர்ச்சொல்) தோன்றற் கருத்தினின்று, இளமை, மென்மை, சிறுமை, குறுமை முதலிய கருத்துக்கள் கிளைக்கும். குல் - குன் - குன்னி = சிறுபிள்ளை, சிற்றுயிரி, சிறுபொருள், நன்னியுங் குன்னியும் என்பது பாண்டி நாட்டு உலக வழக்கு. குல் - குள் - குளகு = 1. இளந்தழை. வாரணமுன் குளகருந்தி (கலித். 42). 2. விலங்குணா. மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி (நாலடி. 17). இலைநுகர் விலங்கு ணாவே குளகென வியம்ப லாகும். (சூடா. 6 : 32). 3. தழையுடை. குளகரைச் சுற்றிய குறமடந்தையர் (காசிகண். 44 : 16). 4. இலைக்கறி. (w). குளகு - குளகன் = இளைஞன். குளகன் வந்துழி (கந்தபு. குமார. 1.). குள - குழ = இளமையான. மழவுங் குழவும் இளமைப் பொருள (தொல். உரி. 14). குழ - வ. குட (guda). குட என்னும் வட சொல்லினின்று குழ என்னுந் தென்சொல் திரிந்துள்ளதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலி தலைகீழாகக் காட்டியுள்ளது. குழ - குழவு = இளமை. குழவு - குழவி = 1. இளஞ்சேய், கைக்குழந்தை. ஈன்ற குழவி முகங் கண் டிரங்கி (மணி. 11 : 114). 2. யானை, ஆவு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் முதலிய விலங்கின் இளமைப் பெயர். (தொல். மரபியல், 19 - 23). 3. ஓரறிவுயிரின் இளமைப் பெயர். வீழில் தாழைக் குழவி (தொல். மரபியல், 24, உரை). 4. ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு. குழவித் திங்கள் (தொல். மர. 24, உரை). ஒ.நோ : E, cule, F. cule, L. culus, cula, culum. - dim suf. E. cule cle, cel etc. குழ - குழந்து - குழந்தை = 1. கைப்பிள்ளை, குழந்தையை யுயிர்த்த மலடிக்கு (கம்பரா. உருக்கா. 65). 2. நடை பழகுஞ் சிறுபிள்ளை.3. இளம்பருவம். குழந்தை வெண்மதி (கம்பரா. ஊர்தேடு. 209). ஒ.நோ : OE. cild, E. child. c = k. குழவு - குழகு = 1. குழந்தை. குழகென வெடுத்துகந்தவுமை (திருப்பு. 106). 2. இளமைச் செல்வி. கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர் (சீவக. 2790). 3. அழகு. கொன்றை சூடிக் குழகாக.... விளையாடும் (தேவா. 468 : 7). குழகு - குழகன் = 1. இளைஞன். நின்மணக் குழகன் (திருவிளை. திருமண. 44). 2. அழகன். கொட்கப் பெயர்க்குங் குழகன் (திருவாச. 3 : 12). 3. முருகன். (பிங்.). 4. பிறர்க்கிணங்குபவன். குரவை கோத்த குழகனை (திவ். திருவாய். 3 : 6 : 3.). குழமகன் = 1. இளம் பருவத் தலைவன். குழமகனைக் கலி வெண்பாக் கொண்டு..... விளங்க வுரைத் தாங்கு (இலக். வி. 858). 2. பெண்டிர் குழமகனைப் புகழும் பனுவல். (தொன். 283). 3. மரப் பாவை. உத்தரியப் பட்டுங் குழமகன்றனக்கு நல்கி (பாரத. நிரைமீ. 136). குழ - குழை = தளிர். பொலங்குழை யுழிஞை (புறம். 50). க. கொழச்சி. குழ - குழலை - குதலை = 1. மழலைச் சொல். தம் மக்கள் மழலைச் சொற் கேளா தவர் (குறள். 66). 2. இனிய மொழி. குதலைச் செவ் வாய்க் குறுந்தொடி மகளிர் (சிலப். 30 : 114). 3. அறிவிலான், (திவா.). ஒ.நோ : மழ - மழலை - மதலை = குழந்தை, மகன், மழலை மொழி. குழ - குழந்து - கொழுந்து = 1. இளந்தளிர். ஏற்ப விரீஇய இலையுங் கொழுந்தும் (பெருங். இலாவாண. 2 : 143). 2. இளமையானது. பிறைக்கொழுந்து (நைடத. அன். தூது. 12). 3. மென்மை. வாழையுற்ற - கோதிலா மடலே போலக் கொழுந்துள செவிய தாகி (சூடா. 12 : 150). 4. மென்மையான மருக்கொழுந்து. கொழுந்து செவ்வந்தி (கந்தபு. இந்திரன்கயி. 42.). 5. படையின் முன்னணி. சேனையின் கொழுந்துபோய்க் கொடிமதின் மிதிலையி னெல்லை கூடிற்றே (கம்பரா. எழுச்சி. 24). 6. கவரிநுனி. கொழுந்துடைய சாமரை (கம்பரா. கோலங். 25). ம. கொழுந்நு. கொழுந்து - கொழுந்தாடை = கரும்பின் நுனித்தழை. குழ - குத கத - கதலி - கசளி = கெண்டைக் குஞ்சு. குல் - குர் - குரு. குருத்தல் = 1. தோன்றுதல். அதினின்று மொரு புருடன் குருத்தான் (விநாயகபு. 72 : 4). 2. வேர்க்குரு உண்டாதல். குரு - குருத்து = 1. இளந்தாள், இளந்தோகை, இளவோலை. 2. கரும்புநுனி. குருத்திற் கரும்புதின்றற்றே (நாலடி. 211). 3. காதுக் குருத்து. 4. இளமை. 5. வெண்மை. (பிங்.) 6. யானை மருப்பின் உட்பகுதி. ஆளி நன்மான்.... வேழத்து வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும் (அகம். 381). ம. குருத்து. குருத்து - குருந்து = (பிங்.). 1. குழந்தை. 2. வெண்குருத்து. குருந்து - கருந்து = மரக்கன்று. (உ.வ.). குரு - குருகு. 1. பனங்குருத்து. குருகு பறியா நீளிரும் பனைமிசை (பரிபா. 2 : 43). 2. இளமை (சூடா.). 3. விலங்கின் குட்டி, சிங்கக் குருகு (திவ். திருப்பா. 1, வியா.). 4. வெண்மை. (திவா.). வெண்மைக் கருத்து, பனங்குருத்தி னின்று தோன்றிற்று. k.bj., து. குரு. குருகுக்கிழங்கு = இளங்கிழங்கு. குரு - குரும்பை = 1. தென்னை பனைகளின் இளங்காய். இரும் பனையின் குரும்பைநீரும் (புறம். 24 : 2). 2. இளநீர். குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுலை (கல்லா. 52 : 8) ம. குரும்ப. க. குரும்பெ. குரு - குருள் - குருளை = 1. குழந்தை. அருட் குருவாங்குருளை (சி.சி. பரபக். பாயிரம். 4). 2. நாய், பன்றி, புலி, முயல், நரி முதலிய வற்றின் குட்டி. நாயே பன்றி புலிமுயல் நான்கும் ஆயுங் காலை குருளை யென்ப நரியும் அற்றே நாடினர் கொளினே (தொல். மரபியல், 8, 9.) 3. பாம்பின் குட்டி. சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (குறுந். 119). ஒ.நோ : குட்டி = சிறுபெண், E. girl, female child. M.E. gurle, girle, gerle, perh. cogn. with LG. gor. child. - C.O.D. குருமன் = ஒரு சார் விலங்கின் இளமைப் பெயர். குருமன் - குருமான். குட்டிகுருமான் என்பது உலக வழக்கு. குரு - கரு = 1. சூல். மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் (புறம். 34). 2. முட்டை. 3. முட்டைக்கரு. புறவுக்கரு வன்ன புன்புல வரகின் (புறம், 34). 4. பிறப்பு. கருவைத் துடைப்ப (பிரபுலிங். கொக்கி. 15). 5. உடம்பு. கருவுள் வீற்றிருந்து (திவ். திருவாய். 5: 10: 8). 6. குழந்தை. சோரர்தங் கருவைத் தங்கள் கருவெனத் தோளி லேந்தி (பாரத. நிரை. 116). 7. குட்டி. காசறைக் கருவும் (சிலப். 25: 52). 8. வினைமுதற் கரணியம் (நிமித்த காரணம்) கருவா யுலகி னுக்கு (திருவாச. 10 : 14). 9. அச்சுக்கரு. திருவுருவினைக் கருவினாற் கண்டு (திருவிளை. இரச. 9.). 10. நடு. உள்ளூர்க் கருவெலா முடல் (கம்பரா. கிங்கரர். 44). 11. உட்பொருள். 12. அடிப்படை. கருவோ டிவரடி..... காணாமையின் (இரகு. நகரப். 20). 13. நுண் ணணு. கருவளர் வானத்து (பரிபா. 2 : 5). 14. கருப்பொருள். தெய்வமுணாவே...... கருவென மொழிப (தொல். அகத். 18). ம. கரு. க. கரு. கரு = நடு. ஒ.நோ: ME, E. core. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலி, கரு என்னும் தூய தென்சொல்லைக் கருப்பம் (garbha) என்னும் வடசொல்லி னின்று திரித்துள்ளது. வடசொல்லே தென் சொல்லினின்று தோன்றியிருத்தல் வேண்டும். குள் - குட்டு - குட்டம் = குரங்குக்குட்டி. தங்குட்டங்களை.... மந்திகள் கண்வளர்த்தும் (திவ். பெரியாழ். 3 : 5 : 7), f., kuh¤., குட்ட (gudda). குட்டம் - குட்டன் = 1. சிறுபிள்ளை. என் சிறுக்குட்டன் (திவ் : பெரியாழ். 1 : 4 : 9). 2. இளமகள். குயிலெனப் பேசுமெங் குட்டனெங் குற்றது (திருக்கோ. 224). 3. ஆட்டுக்குட்டி. (திவா.) ம. குட்டன், க. குட்ட (gudda). குட்டு - குட்டி = 1. நாய், பன்றி, புலி, முயல், நரி ஆகியவற்றின் குட்டி. (தொல். மர. 10). 2. ஆட்டுக்குட்டி. 3. சிறுமி. (உ.வ.). 4. கடை சிப் பிள்ளையின் பொதுப் பெயர். கடைக்குட்டி (உ.வ.). ம. குட்டி. க. குட்டி (guddi). ME. kide, E. kid, kiddy. 5. கரு அல்லது சினை. எ-டு : குட்டிபடுதல் = சினைப்படுதல். ஓரறிவுயிர்ப் பெயரின் இளமைப்பொருள் முன்னொட்டு. எ-டு : குட்டிப் பிடவம், குட்டிவிளா (பிள்ளை விளாத்தி). 6. சிற்றப்பன் சிற்றன்னையர் பெயர் முன்னொட்டு. எ-டு : குட்டியப்பன், குட்டியாத்தாள். குள் - குய் - குய்ஞ்சு - குஞ்சு = 1. பறவையின் இளமைப் பெயர். எ-டு: கோழிக்குஞ்சு, புறாக்குஞ்சு. காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு (பழமொழி). 2. மீன், எலி, அணில் முதலியவற்றின் இளமைப் பெயர். 3. குழந்தை அல்லது சிறுவன் ஆண்குறி. 4. சிறியது. ம. குஞ்ஞு. க. கூசு (குழந்தை). குஞ்சு - குஞ்சான் = குழந்தை அல்லது சிறுவன் ஆண்குறி. குஞ்சு - குஞ்சி = 1. பறவையின் இளமைப்பெயர். கரிய குஞ்சியின் றாக மார்பசி (சி.சி. பர. மாயாவாதிமறு. 1.). 2. சிற்றப்பன் சிற்றன்னையர் பெயர் முன்னொட்டு. எ-டு : குஞ்சியப்பன், குஞ்சியாத்தை, குஞ்சியாச்சி, குஞ்சியாய் (யாழ்ப்.) 3. குழந்தை அல்லது சிறுவன் ஆண்குறி. 4. சிறியது. குஞ்சு - குச்சு - கொச்சு = சிறியது. கொச்சுப் பையன் = சிறுவன். ம. கொச்சு. கொச்சு - கொச்சன் = சிறுவன். குய் - குயம் = இளமை. (திவா.). குயம் - கயம் = 1. இளமை. (திவா.). 2. மென்மை (பிங்.). கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும் (தொல். உரி. 24) கயந்தலை = 1. குழந்தையின் மெல்லிய தலை. முக்காழ் கயந்தலைத் தாழ (கலித். 86 : 2) 2. யானைக்கன்று. துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே (கலித். 11) சிறுபிள்ளைகளைக் கன்று கயந்தலை யென்பது பாண்டி நாட்டு வழக்கு. சிறுமைக் கருத்தும் குறுமைக் கருத்தும்: குஞ்சுக் கடகம் = சிறிய ஓலைப்பெட்டி. குஞ்சுச் சிப்பி = சிறிய முத்துச் சிப்பி. குஞ்சுப் பெட்டி = சிறிய பெட்டி. (யாழ்ப்.). குஞ்சம் = 1. குறள். (திவா.). 2. குறளை. (திவா.). குப்ஜ என்னும் வடசொல்லை இதற்கு மூலமாகச் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் அகர முதலியிற் குறித்திருப்பது தவறு. வளைந்தது என்பதே வடசொற் பொருள். 3. குன்றிமணி. (திவா.). குஞ்சன் = குறளன் (பிங்.). குஞ்சி = குன்றிமணி. குஞ்சிப் பெட்டி = சிறுபெட்டி. குஞ்சிக் கூடை = சிறுகூடை (W.). குஞ்சு - கொஞ்சு - கொஞ்சம் = சிறிது. கொஞ்சந்தங் கின்பந் தந்து (திருப்பு. 609). ம. கொஞ்சம், தெ. கொஞ்செமு, க. கொஞ்ச, து. கொந்த்ர. கொஞ்சன் = புல்லன் (அற்பன்). வஞ்சன் கொஞ்சன் (திருப்பு. 609). கொச்சு = சிறிது, சிறிய. கொசு = மிகச் சிறிய ஈவகை. கொசு - கெரசுகு. கொசுகீ.... எய்திடம் (காசிகண். 40 : 17). கொசுகு - கொதுகு. கொதுகறாக் கண்ணி னோன்பிகள் (தேவா. 381: 9). ம. கொதுகு. குள் - குண் - குணில் = 1. குறுந்தடி. கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் (ஐங்குறு. 87). 2. பறையடிக்குங் குச்சு. குணில்பாய் முரசினிரங்கு மருவி (புறம். 143). குதலி - கதலி = சிறுகாய் வாழை. மொந்தன் வாழைக்கு எதிரானது. நெட்டிலைப் பைங்கதலி (திருக்காளத். பு. தாருகா. 15). குருவி = 1. சிறு பறவை வகை. குருவி சேர்வரை (சீவக. 2237). 2. குன்றிமணி. (மலை.). குருவிக்கண் = 1. சிறுகண். 2. சிறுதுளை. குருவித்தலை = சிறுதலை. குருவித் தேங்காய் = சிறு தேங்காய். குள் - குள்ளம் = 1. குட்டை. 2. குறள். குள்ளல் = குள்ளம். குள்ளை = குள்ளம். குள்ளன் = 1. குட்டையன். 2. குறளன். ம. குள்ளன். குள்ள - வ. குல்ல (kh) - குல்லக, குல்ல - க்ஷுல்ல க்ஷுல்லக. குள்ளை - கூழை = 1. குட்டை, குட்டையானது. நாய் கூழை வாலாற் குழைக்கின்றது போல (திவ். திருவாய். 9 : 4 : 3). 2. மதிக் குறைவு . கூழை மாந்தர்தஞ் செல்கதி (தேவா. 462 : 9). 3. கூழைத் தொடை. ஈறிலி கூழை (காரிகை. உறுப். 19). 4. குள்ளப் பாம்பு. தெ. கூள, க. கூழெ, மராத், கூள (kh). குள் - குள்கு - குட்கு - குக்கு. குக்குதல் = உடம்பைக் குறுக்கி வைத்தல். ஒ.நோ : வெள்கு - வெட்கு, சுள் - சுள்கு - சுட்கு சுக்கு. குக்கு - குக்கல் = சிறுநாய் வகை. குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி லடைத்து வைத்து (வி. சிந்.). தெ. குக்க, வ. குக்கர. குக்கல் - குக்கன் = சிறுநாய் வகை (திவா.). குக்கர் = நாய்போ லிழிந்தோர். குடிமையிற் கடைமைப் பட்ட குக்கரில் (திவ். திருமாலை. 39). குட்டம் = 1. குறுமை. 2. செய்யுளடிக் குறுமை. குட்டமும் நேரடிக் கொத்தன வென்ப (தொல். செய். 114). குட்டான் = 1. சிறு படப்பு. 2. சிறிய ஓலைப்பெட்டி. குட்டான் கட்டுதல் = பறவை கொத்தாதபடியும் அணில் கடியாத படியும் காய்களின்மீது மூடி கட்டுதல். குட்டான் - கொட்டான் = சிறுநார்ப் பெட்டி அல்லது ஓலைப் பெட்டி. கொட்டான் + காய் + சில் = கொட்டாங் காய்ச்சி, கொட்டாங் கச்சி. கொட்டான் பெட்டி போன்ற தேங்காய் ஓட்டுத் துண்டு. குட்டி = சிறியது. குட்டிக்கலகம், குட்டிக்கிழங்கு, குட்டிச் சாத்தன், குட்டிச்சுவர், குட்டித் திருவாசகம், குட்டித் தொல்காப்பியம், குட்டிப்பல், குட்டிமணியம், குட்டியாண்டவன், குட்டிவிரல், குட்டித் தெய்வம் (சாமி) என்பன சிறுமை குறித்தன. குட்டு - குட்டை = 1. குறுகிய உருவம். 2. குட்டேறு (சிறிய காளை). குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே (திவ். நாய்ச். 14 : 2). 3. சிறு துணி. எ-டு : தலைக்குட்டை, கைக்குட்டை. தெ. குட்ட (gudda). 4. சிறுகுளம். 5. குட்டை மரம் (தொழுமரம்). 6. குறுணி. (தொல். சொல். 400, உரை). குட்டை - கட்டை = 1. உயரக் குறைவு. எ-டு : ஆள் கட்டை, கட்டைமண். 2. அகலக் குறைவு. எ-டு : அகலக் கட்டை. 3. நீளக் குறைவு. எ-டு : கட்டைவிரல், கட்டைத் துடைப்பம், துடைப்பக் கட்டை. 4. மதிப்புக் குறைவு. எ-டு : விலைக்கட்டை, கட்டைப் பொன். மாற்றுக் கட்டை. 5. ஓசைக் குறைவு. எ-டு : கட்டைக் குரல் (சாரீரம்). 6. ஒருவகை இசைக் குற்றம். தனிபடு கட்டை யெட்டின் றகுதியிற் றிகழும் பொல்லா வினிமையில் சுரத்தைக் கண்டாங் கிருந்தவர் வியந்தா ரில்லை (திருவரல. 57 : 26) 7. திறக்குறைவு. எ-டு : கட்டைமதி (புத்தி). இதன் மூலத்தை அறியாது, மரக்கட்டை, விறகுக்கட்டை, செப்புக்க ட்டை முதலியவற்றின் தடிப்பத்தைக் குறிக்கும் கட்டை யென்னும் சொல்லோடு இணைத்துள்ளது, சென்னைப் பல்கலைக் கழக தமிழ்அகரமுதலி. குரு - குறு = 1. சிறு. 2. குறுகிய. ம. குறு. குறு - குற்றி = சிறு குச்சு. குற்றி - குச்சி - குச்சு. குறு + இல் = குற்றில் - குச்சில். ஒ.நோ: முறம் + இல் = முற்றில் - முச்சில். குச்சில் - குச்சு. குச்சுவீடு = சிறு கூரைவீடு. குறு - குற்று - குற்றம் = குறைவு, தவறு. குறு - குறை - குறைவு, குறைச்சல். குறுமகன் - குறுமான் = சிறுவன். குறுஞ்சிரிப்பு - குஞ்சிரிப்பு. குறு - குறள். 1. குறுமை. குண்டைக் குறட் பூதம் (தேவா. 944: 1). 2. குறட்பூதம். (பிங்.). 3. ஈரடி உயரமுள்ள குள்ளன். தேரை நடப் பனபோற் குறள் (சீவக. 631). 4. சிறுமை. வரகின் குறளவிழ்ச் சொன்றி (பெரும்பாண். 193). 5. இருசீர் கொண்ட குறளடி. 6. ஈரடி கொண்ட குறள்வெண்பா. 7. குறள் வெண்பாவாலான திருக் குறள். உலகங் கொள்ள மொழிந்தார் குறள் (திருவள்ளுவ. 33). ம. குறள். குறள் - குறளி = 1. குறியவள். ஒரு தொழில் செய்யுங் குறளி வந்து (சீவக. 1653, உரை). 2. சிறிய குறளிப் பேய். வாயிலிடிக்குது குற ளியம்மே (குற்றா. குற. 71). 3. குறளி வேடிக்கை. 4. கற்பழிந்தவள் (சூடா.). குறள் - குறளை = 1. குள்ளம். (w). 2. சிறுசொல், கோட்சொல். பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென (மணி. 30: 68). 3. வறுமை. குறளையுள் நட்பளவு தோன்றும் (திரிகடு. 37.). 4. பழிச்சொல். ம. குறள. குறு - குறில் = குற்றுயிரெழுத்து. குறுணி = பதக்கினும் குறைந்த முகத்தலளவு. குறும்பு = 1. சிறு துணுக்கு. எ-டு : புகையிலைக் குறும்பு. 2. சிறு மலை. 3. சிறுமலை யரண். குறும்பல் குறும்பிற்றதும்ப வைகி (புறம். 177). 4. மலையரணிலுள்ள குறுநில மன்னர். குறும்படைந்த வரண் (புறம். 97). 5. வேந்தருக்குப் பகைவரான குறும்பரசர். வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லது நாடு (திருக்குறள். 735). 6. குறும்பரசரின் வலிமை, வலிமை. அரவுக் குறும்பெறிந்த சிறுகட்டீர்வை 7. குறும்பரசர் போர். 8. குறும்பரசரின் குறும்புத் தனம், தீய விளையாட்டு. 9. குறும்பரசர் ஆண்ட பாலை நிலத் தூர். 10. பாலை நில மாந்தர். 11. குறும்பர் என்னும் வகுப்பார். எ-டு: காட்டுக் குறும்பு, நாட்டுக் குறும்பு. குறும்பாடு = குறும்பர் மேய்க்கும் ஆடு. குறும்பன் = குறும்புத்தன முள்ளவன். குறு - குறுகு. குறுகுதல் - குட்டையாதல். ம. குறுகு, தெ. குருச்ச. குறுகு - குறுக்கு = 1. குறுமை. நீண்ட நெடுமையும் அகலக் குறுக்குங் காட்டா (தாயு. சிதம்பர. 13). 2. நீளத்திற்கு எதிரான அகலம். 3. குறுக்களவு. நெடுமையுங் குறுக்கு நூற்றெட் டங்குலம் (காசிகண். சிவ. அக. 17). 4. முதுகின் குறுக்கு. குறுக்குப் பிடித்துக் கொண்டது; நிமிர முடியவில்லை (உ.வ.). 5. ஊடு, இடை. நான் பேசும்போது குறுக்கே ஒன்றும் சொல்லாதே. (உ.வ.). 6. மாறு, எதிர்ப்பு. அவன் எதற்குங் குறுக்காகப் பேசுவான் (உ.வ.). குறுக்கு - குறுக்கம் = 1. குறுமை. ஐ ஔக் குறுக்கம் (நன். 99). 2. 4 முதல் 7 செய் (ஏக்கர்) வரை வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வகையாக வழங்கும் நில அளவு. குறுவை - குறுகிய காலத்தில் விளையும் நெல். குறுமல் = பொடி (பிங்.). குல் - குன் - குன்று. குன்றுதல் = 1. குறைதல். 2. சுருங்குதல். 3. தளர்தல். 4. நிலைகெடுதல். குன்றி னனையாருங் குன்றுவர் (குறள். 965). குன்று = சிறுமலை. குன்று - குன்றம் = பெருங் குன்று. ம. குன்னு குன்னம். bj., க. கொண்ட. குன்றி = சிறிய குன்றிமணி. குன்றுவ குன்றி யனைய செயின் (குறள். 965). ம. குன்னி. குன் - குன்னு. குன்னுதல் = குக்குதல், உடம்பு சுருங்குதல். குன் - குன்னா. குன்னாத்தல் = உடம்பு குளிரால் ஒடுங்குதல். குன்னாக்க வென்பாரு முளர் (நெடுதல். 9, உரை). குன் - குன்னி = சிறியது, நுண்ணியது. (வே.க.) குல்2 (வளைதற் கருத்து வேர்) அடிக்கருத்து (வளைதல்) வளைதற் கருத்து, இயன்முறையில் வளைவு, சுருட்சி, வட்டம், வளையம், உருண்டை, உருளை முதலிய பண்புக் கருத்துக்களை யும்; செயன் முறையில் வளைதல், சுருள்தல், திரிதல், சூழ்தல், சுற்றுதல், சுழலுதல், உருளுதல் முதலிய வினைக் கருத்துக்களை யும் தழுவும். வளைவு என்னும் பண்பின் பெயரும், வளைதல் என்னும் வினையின் பெயரும், அப்பண்பையும் வினையையுங் கொண்ட பொருள்களை ஆகுபெயராகக் குறிக்கும். கோணல், சாய்தல் என்பன வளைதலின் முந்திய நிலைகளாத லின், அவையும் அதனுள் அடங்கும். குல் - குலவு. குலவுதல் = 1. வளைதல். குலவுச்சினைப் பூக் கொய்து (புறநா. 11 : 4). 2. உலாவுதல். எமதன்னையை நினைத்தே குலவினனோ (சிவரக. விசயை. 14). L. Curvus, E. Curve. குலாவுதல் = வளைதல். குலாவணங்கு வில் (யாப். வி. 22). குல் - குலுத்தம் = வளைந்த காயுள்ள கொள். வ, குலுத்த (guluttha). குலுக்கை = உருண்டு நீண்ட குதிர். குலுக்கை - குலுப்பை. குல் - குள் - குளம் = 1. வளைந்த நெற்றி. திருக்குளமுளைத்த கட்டாமரை (கல்லா. 31 : 9). 2. வெல்லவுருண்டை. (சூடா.). வ. குல (பரடய). குளம் - குளகம் = வெல்லவுருண்டை. குளியம் = 1. உருண்டை. (அக.நி.). 2. (மாத்திரை) மருந்து (பிங்.). குளிகை = மாத்திரை யுருண்டை. வ. குளிகா (gulika). குளியம் - குழியம் = 1. வளைதடி. 2. மணவுருண்டை. (சிலப். 14 : 171. அரும்.). திரட்சி. (திவா.) L. globus, glomus. E. globe. குழலுதல் = சுருளுதல். கடைகுழன்ற கருங்குழல்கள் (சீவக. 164). குழல் = மயிர்க்குழற்சி. குழலுடைச் சிகழிகை (சீவக. 1092). ம. குழல். குள் - (குய்) - குயம் = வளைந்த அரிவாள். கொடுவாய்க்குயத்து (சிலப். 10 : 30). குல் - (குர்) - குரங்கு. குரங்குதல் = வளைதல். இலைப்பொழில் குரங்கின (சீவக. 657). குரங்கு = வளைவு. குரங்கமையுடுத்த மரம்பயி லடுக்கத்து (சிலப். 10 : 157). 2. கொக்கி. OE. cranc, crinc, E. crank. குரவை = வட்டமாக நின்று பாடியாடுங் கூத்து. Gk. koros (orig. a dance in a ring). L. chorus, E. chorus, choir, quirs. குருளுதல் = சுருளுதல். குருண்ட வார்குழல் (திருவிசை. திருவாலி. 1: 3). குருள் = 1. மயிர்ச்சுருள். 2. பெண்டிர் தலைமயிர் (பிங்.). வ. குருல. LG. Du. O. Fris. krul, G. krol, crol, crul, E. curi. குருகு = 1. வளையல். கைகுவி பிடித்துக் குருகணி செறித்த (கல்லா. 44 : 22). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவைப்பொது. 3. நாரை. வான்பறைக் குருகின் நெடுவரிபொற்ப (பதிற்றுப். 83:2). 4. ஓதிமம் (அன்னம்). நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து (நாலடி. 135). குரகம் = நீர்வாழ் பறவைப் பொது. AF., OF., grue (crane) OHG., OS. krano, OE. cran, E.crane. குரங்கு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு. கறங்கல் = 1. வளைதடி (அக. நி.). 2. சுழற்சி (பிங்.). கறங்குதல் = 1. சூழ்தல். கறங்கிருள் மாலைக்கும் (திருவள். 34). 2. சுழலுதல். பம்பரத்து..... கறங்கிய படிய கந்தபு. திருநகரப். 28). ம. கறங்ஙு. கறங்கு = காற்றாடி. காண்முகமேற்ற..... கறங்கும் (கல்லா. கணபதி). கறங்கோலை = ஓலைக்காற்றாடி. கறங்கோலை கொள்ளி வட்டம் (திருமந். 2313). ON. hringr, OHG., OS., OE. hring, E. ring. குர் - குறு - குறள் - குறண்டு. குறண்டுதல் = 1. வளைதல். 2. சுருண்டு கொள்ளுதல். குறண்டல் = கூனல். குறடு = வளைந்த பற்றுக் கருவி, குறடுபோற் பற்றும் நண்டு. தெ. கொரடு. குறழ்தல் = குனிதல். அவனாங்கே பாராக் குறழா (கலித். 65 : 10). குறு - கிறு - கிறுக்கு = தலைச்சுற்று, கோட்டி (பைத்தியம்) கிறுக்கன் = பித்தன். தெ. கிருக்கு. கிறுகிறுத்தல் = சுற்றுதல். தலைச்சுற்றல் மயக்கமாதல். தெ. கிரகிர (giragira). கிறுகிறுவாணம் = காற்றாடி போற் சுற்றும் பொறி வாணம். Gk. guros, E. gyrate. குல் - குன் - குனி. குனிதல் = 1. வளைதல். குனிவளர் சிலை (சீவக. 486). 2. உடம்பு வளைதல். 3. வணங்குதல் (சூடா.). குனித்தல் = வளைத்தல். குனித்த புருவமும் (தேவா. 11 : 4). ம. குனி. க. கனி. குனுகுதல் = சிரிக்கும்போது முதுகு வளைதல். தெ. குங்கு. குள் - குண்டு = உருண்டை, உருண்டையான மணி, உருண்டை யான வெடிகருவி (shot, bullet). தெ. F©l, f., மரா. (மராட்டி) குண்ட (gunda), குண்டூசி. குண்டுச்சம்பா, குண்டு மல்லிகை என்பவற்றில் குண்டு என்னுஞ் சொல் உருட்சி பற்றியது. உருட்சிக் கருத்தும் திரட்சிக் கருத்தைத் தோற்றுவிக்குமாதலால், குண்டு, குண்டன், குண்டை, குண்டாந் தடி, குண்டடியன், குண்டுக்கழுதை என்பவற்றை வளைவுக் கருத்து வேரடிப் பிறந்தனவாகவும் கொள்ள இடமுண்டு. குண்டான் = உருண்டவடிவான கலம். குண்டான் சட்டி என்பது வழக்கு. குண்டான் - குண்டா. மரா. குண்டா (g). ஒருவன் சுருண்டு கிடக்கும் நிலை குண்டக்க மண்டக்கம் என் றும், ஒருவனைத் தலையுங்காலுஞ் சேர்த்துச் சுருட்டிக் கட்டும் வகை குண்டு ருட்டுக் கட்டு என்றும், சொல்லப்படும். குண்டு - குண்டலம் = 1. வட்டம். 2. சுன்னம். 3. வட்டமான காயம் (ஆகாயம்). 4. வளைந்த காதணி. வ. குண்டல. குண்டலி = 1. மூல நிலைக்கள (ஆதார) வட்டம். (ஔவை. குறள் நினைப்புறு. 2). 2. தூயவுலகைத் தோற்றுவிக்கும் மூலமாயை (சி.போ.பா. 2 : 2, பக். 133). குண்டலி (தூயமாயை) - வ. குண்டலினி. குண்டி = 1. உருண்டு திரண்ட புட்டம். 2. குண்டி போன்ற அடிப்பக்கம். ம. குண்டி, க. குண்டெ, தெ. குட்டெ. குண்டு - கண்டு = நூற்பந்து. கண்டு - கண்டகம் = வட்டமான மரக்கால். கண்டு - கண்டி = வட்டமான ஒருகலம், ஒரு முகத்தலளவு, ஒருநிறை. ம. f©o, bj., து. கண்டி (kh), மரா. கண்டில் (kh). கண்டி - கண்டிகை = 1. தோட்கடகம் (சூடா.). 2. ஒரு வகைப் பறை (பிங்.). கண்டிகை - கடிகை = 1. நாழிகை வட்டில். 2. நாழிகை (24 நிமைய நேரம்) (திவா.). 3. நேரம். 4. சடங்குகட்கு மங்கல நேரங் குறிப்பவன். கண்ணனாரொடு கடிகையும் வருகென (சீவக. 2362). 5. தோட்கடகம். கடிகைவாளார் மின்ன (சீவக. 2808). கடிகை வ. கட்டிகா (ghattika). இவ் வட சொற்கு நாழிகைப் பொருளேயன்றிக் கடகப் பொரு ளில்லை. கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம். ஒ.நோ : வட்டு - வட்டாரம், கொட்டு - கொட்டாரம். குளம் - குணம் - குணகு. குணகுதல் = வளைதல். குணக்கு = வளைவு. ‘ehŒthiy¡ Fz¡bfL¡fyhkh? என்பது உலக வழக்கு. குணக்குதல் = வளைத்தல். குணலை = நாணத்தால் உடல் வளைகை. கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய் (பணவிடு 310). குணகு - குணங்கு. குணங்குதல் = வளைதல். குணகு - குணுகு. குணுகுதல் = வளைதல். குணுக்குதல் = வளைத்தல். குணுக்கு = இளமகளிர் காதிலணியும் கனத்த ஈய அல்லது பித்தளை வளையம். குணம் - குடம் = 1. உருண்ட வடிவான நீர்க்கலம் (பிங்.). 2. குடக்கூத்து. நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப். 6 : 55). 3. குடஞ்சுட்டு என்னும் ஆவு (சூடா.). 4. கும்பவோரை (பன்னிருபா. 163). 5. உருண்டு திரண்ட வண்டிக் குடம் (hule). 6. குடதாடி என்னும் தூணுறுப்பு. 7. திரட்சி. ம. குடம், தெ. குடமு, க. குட, வ. குட்ட. குணங்கு - குடங்கு. குடங்குதல் = வளைதல். குடங்கு - குடங்கர் = 1. குடம். குடங்கர் கொணர்ந்திடா (கந்தபு. தேவகிரி. 24). 2. குடிசை. குடங்கருட்பாம்போடு டனுறைந் தற்று (குறள். 890). 3. கும்பவோரை (சூடா.). குடிசை என்னும் பொருளில், குடங்கர் என்னுஞ் சொல்லைக் குட்டங்கக (kutangaka) என்று திரிப்பர் வடமொழியாளர். ஆட்டுக் குடில் போன்ற அரையுருண்டை வடிவான குடிசைகளில் குழுவரும் பன்றியாடிகளும் போன்ற அநாகரிக மாந்தர் இன்றும் வதிந்து வருதல் காண்க. குடம் - குட = வளைந்த (திருமுரு. 229, உரை). குட - குடவு = வளைவு. குடவுதல் = வளைவாதல். குடவியிடுதல் = வளைத்து அகப்படுத்துதல். குடவியிடு மரிவை யர்கள் (திருப்பு. 514). குணக்கு - குடக்கு - குடக்கம் = வளைவு. குடக்கு - குடக்கி = வளைவானது. குணகு - குடகு - குடகம் - கடகம் = 1. வட்டம் (பிங்.). 2. வட்டமான கேடகம் (திவா.). 3. தோள்வளை. கடகஞ் செறித்த கையை (மணி. 6 : 114). 4. பெருவிரலும் சுட்டுவிரலும் வளைந்து வளையம் போல் ஒன்றோடொன்று உகிர்கவ்வ, மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்கும் இணையாவிணைக்கை. (சிலப். 3 : 18, உரை). 5. பனையகணியால் முடையப்பட்ட வட்டமான பெரும் பெட்டி. (புறநா. 33, உரை). இச்சொல் இன்றும் நெல்லை வட்டாரத்திற் பெருவழக்காகவுள்ளது. 6. ஒரு நகரைச் சூழ்ந்திருக்கும் மதில் (பிங்.). 7. மதில் சூழ்ந்திருந்த ஒரிசாத் தலைநகரம் (Cuttack). கடகம் (தோள்வளை) - வ. கட்டக. குடம் - குடந்தம் = 1. குடம் (பிங்.). 2. மெய்வளைத்துச் செய்யும் வழிபாடு. குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி (திருமுரு. 229). 3. நால்விரல் முடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை. (திருமுரு, பக். 47, அடிக்குறிப்பு). நால்விரன் முடக்கிப் பெருவிர னிறுத்தி நெஞ்சிடை வைப்பது குடந்த மாகும். குடந்தம் படுதல் = வணங்கி வழிபடுதல். குடந்தம் பட்டெதிர் நின்றிடும். (காஞ்சிப்பு. கழுவாய். 96). குடந்தை = வளைவு. குடந்தையஞ் செவிய கோட்டெலி(புறநா. 321). குடம்பை = 1. முட்டை (பிங்.). குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே (குறள். 338). 2. புழுக்கூடு. வரியுடல் சூழக் குடம்பை நூல் தெற்றி (கல்லா. கணபதி துதி. 26). 3. பறவைக் கூடு. குடம்பை முட்டையுங் கூடுமாகும். (பிங். 10 : 352.) குடம்பை - குதம்பை = 1. காதுச் சோணைத் துளையை விரிவாக்கு வதற்கு இடும் ஓலைச்சுருள் அல்லது சீலைச்சுருள். சீலைக் குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3 : 3 : 1). 2. ஓலைச் சுருள் போன்ற பொற் காதணி. திருக்குதம்பை யொன்று பொன் இருகழஞ்சே எட்டு மஞ்சாடி (S.I.I. ii, 143). குடம்பை - குரம்பை = 1. பறவைக் கூடு. 2. சிறுகுடில். இலைவேய் குரம்பை (மதுரைக், 110). 3. நெற்கூடு (Larn). நெற்குவை குரம்பையி னிரப்பு வித்தனர் (கந்தபு. நாட்டுப். 26). 4. கூடு போன்ற உடம்பு. பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா (தேவா. 488 : 1). ம. குரம்பு. குடலை = உருண்டு நீண்ட பூக்கூடை. குட - குடா = 1. வளைவு. எண்கின் குடாவடிக் குருளை (மலைபடு. 501). குடாவடி யுளியமும் (சிலப். 25 : 50). 2. வளைகுடா அல்லது விரிகுடா என்னும் வளைகடல். 3. மூலை. குடா - குடாப்பு = கோழி, ஆட்டுக்குட்டி பன்றி முதலியவற்றை அடைக்கும் அரையுருண்டை வடிவான கூடு. குடா - குடாரி = வளைந்த யானைத் தோட்டி (பிங்.). குட - குடி = 1. வளைந்த புருவம் (பிங்.). 2. குடம்பை போன்ற குடிசை அல்லது வட்டமான வீடு. சிறுகுடி கலக்கி (கந்தபு. ஆற்று. 12). குடிக்கூலி = வீட்டு வாடகை; முதற் காலத்தில் எல்லா நாட்டு வீடுகளும் வட்டவடிவாகவே இருந்தன. 3. ஒரு குலத்தார் தெரு அல்லது வீட்டுத்தொகுதி. எ-டு : செக்காரக்குடி அல்லது வாணியக்குடி. 4. ஊர். எ-டு : காரைக்குடி. குடிக்காவல் = ஊர்க் காவல். 5. வீட்டிலுள்ள மனைவி. எ-டு : அவனுக்கு இருகுடி. 6. குடும்பம் (வீட்டிலுள்ள கணவன் மனைவி மக்கள்). ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும் (புறநா. 183). 7. சரவடி. எ-டு : சேக்கிழார் குடி. 8. குலம் (பிங்.). 9. குடிகள். கோனோக்கி வாழுங் குடி (குறள். 542). 10. குடியிருப்போர். 11. வதிதல் அல்லது தங்குதல். என் சித்த மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே (தாயுமா. தேசோம யானந்தம்). குடியானவன் = நிலையாக ஓரிடத்தில் வதியும் உழவன் அல்லது வேளாளன். குடியிருத்தல் = வீட்டிலிருத்தல், நிலையாக வதிதல், குடிபுகுதல், குடிவருதல், குடிபோதல், குடியேறுதல், குடிகொள்ளுதல் முதலிய தூய தமிழ் வழக்குகளை நோக்குக. குடி (குடிசை, வீடு) - ம. குடி, வ. குட்டி (kutti). OE. cot. MDU., MLG., ON. kot, E. cot. OE. cote, MLG. kote; R. cotge. குடிகை (குடி + கை) = 1. சிறுவீடு (குடிசை). உண்டு கண் படுக்கு முறையுட் குடிகையும் (மணி. 6 : 63). 2. சிறுகோயில். குச்சரக் குடிகைக் குமரியை மரீஇ (மணி. 18 : 152). கை என்பது ஒரு சிறுமைப் பொருட் பின்னொட்டு (Dimunitive suffix). ஒ.நோ : கன்னி - கன்னிகை. குடிகை - வ. குட்டிகா. குடிகை - குடிசை = குடில். தெ. குடிசெ. (g). குடிசை - குடிஞை = குடில். தூசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12 : 43). குடில் (குடி + இல்) = 1. ஆட்டுக்குட்டிகளை அடைக்குங்கூடு. 2. குடிசை. என்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில். (பாரத. உத்தி. கிருட். 80). இல் என்பதும் ஒரு சிறுமைப் பொருட் பின்னொட் டாம். ஒ.நோ : தொட்டி - தொட்டில், புட்டி - புட்டில். குடில் - குடிலம் - வ. குட்டீர. குடி - குடில் = வட்டவடிவாகத் தோன்றும் காயம் (ஆகாயம்) திவா. குடில் - குடிலம் = 1. வளைவு. கூசும் நுதலும் புருவமுமே குடிலமாகி யிருப்பாரை (யாப். வி. மேற்கோள்). 2. காயம் ஆகாயம்) சூடா. குடில் - குடிலை = 1. மூல மந்திரமாகிய ஓங்காரம். குடிலையம் பொருட்கு (கந்தபு. கடவுள்வா. 14). 2. தூயமாயை. (சி.போ.பா.2:2) குண்டலி, குடிலை என்னும் மெய்ப்பொருளியற் சொற்கட்கு வடமொழியில் வேறு மூலமில்லை. ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்காரா தீதத் துயிர்மூன்று முற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே என்னும் திருமந்திரத்தை (2677) ஆழ்ந்தெண்ணி, பேருலகத் தோற்றுவாய்க்குக் குடிலை என்னும் பெயர்த் தோற்றக் கரணியத்தை உய்த்துணர்ந்து கொள்க. குடிலை - வ. குட்டிலா (Kutila). குன் - கூன் = 1. வளைவு. கூனிரும்பினிற் குறைத்து (நைடத. நாட்டுப். 10). 2. முதுகுக்கூனல் (திவா.). 3. கூனன் அல்லது கூனி. கூனுங் குறளு மூமுஞ் செவிடும் (புறநா. 28). 4. பக்கக் கூனலுள்ள பெருங்கலம். குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில் (கம்பரா. கிங்கர. 40). 5. கூன்போன்ற செய்யுளில் அளவிற்கு மிஞ்சி வரும் அசை அல்லது சீர். சீர் கூனாதல் நேரடிக் குரித்தே. (தொல். பொ. செய். 48). கூன் - கூனல் = 1. வளைவு. கூனலங்காய் = புளியங்காய். கூனலங் காய் தினையவரை (திருவிளை. நாட்டு. 42). 3. முதுகு வளைவு. கூனற்கிழவன் கொடுக்கும் பணய மதில் (விறலிவிடு.) கூன் - கூனி = 1. வளைந்த சிறிய இறால்வகை. கூனி கொத்தி..... கொக்கிருக்கும் (குற்றா. குற. 94) 2. வானவில். கூன் - கூனி = 1. நான் மூலையிலும் கூனுள்ள தோல் நீர்ச்சால். விழுந்த பேரைக் கூனைக்கொண் டமிழ்த்துவார் போல் (குற்றா. குற. 28). 2. நீர்ச்சால் போன்ற பெருமிடா. கரும்பேந்திரத் தொழுது சாறகன் கூனையின் (கம்பரா. ஆறு செல். 49). குள் - கூளை. (கூளுதல் = வளைதல்) கூளி = வளைந்த பச்சை வாழைப் பழவகை. கூழாங்கல் = தேய்ந் துருண்ட சிறுகல். கூள் - கூண்டு = 1. வளைந்த வண்டி முகடு. எ-டு : கூண்டு வண்டி. 2. வட்டமான பறவைக் கூண்டு. எ-டு : கிளிக் கூண்டு. 3. விலங்குகளை அடைத்து வைக்கும் கூண்டு போன்ற அமைப்பு. எ-டு : புலிக்கூண்டு. 4. நீண்டு உருண்டிருக்கும் எலிக்கூண்டு. 5. உருண்டையான புகைக்கூண்டு. கூண்டு - கூடு. ஒ.நோ : பூண்டு - பூடு. கூடு = 1. வட்டமான நெற்கூடு. கூடுவிளங்கு வியனகர் (புறநா. 148). 2. வட்டமான அல்லது உருண்ட அல்லது உருண்டு நீண்ட பறவைக் கூடு. 3. விலங்குக் கூடு. கூடார் புலியும் (சீவக. 2328). 4. ஆளை அடைத்து வைக்கும் சிறைக் கூண்டு அல்லது அறை. படிக்காச னென்னுமோர் பைங்கிளியைக் கூட்டிலடைத்து வைத்தாய் (படிக்காசுப் புலவர் தனிப் பாடல்). 5. சான்றியக்கூடு (Witness box). 6. முகக்கூடு - முக்காடு. 7. மைப்புட்டி, மைக்கூடு. (நெல்லை வழக்கு). 8. படைக்கல வுறை. 9. கருவிக்கூடு. எ-டு: கண்ணாடிக் கூடு. 10. உயிருக்குக் கூடுபோன்ற உடம்பு. கூட்டை விட்டுயிர்போவதன் முன்னமே (தேவா. 376 : 2). 11. உள்ளீடற்ற பதர். 12. பூச்சிக் கூடு. 13. சதைப்பற்றின்றி நோய்ந்த வுடம்பு. 14. எலும்புக் கூடு. ம. கூடு. bj., f., து. கூடு (gudu). கூடல் - கூடலி. கூடலித்தல் = வளைதல், கிளர்ந்து வளைதல். குறுவெயர்ப் புருவங் கூடலிப்ப (திவ். பெரியாழ். 3 : 6 : 8). கூடு - கூடாரம் = வண்டிக் கூண்டு. கூடாரவண்டி = கூண்டுவண்டி. கூடாரப் பண்டி (சிலப். 6 : 120. அரும்.). கூடு - கூடை = வட்டமான மூங்கில் முடைவு. கூள் - கூர். கூர்தல் = வளைதல். மெய்கூர்ந்த பணியொடு (கலித். 31 : 6). குள் - கொள் = வளைந்த காயுள்ள பயற்றுவகை. காயுங் கோணக்காய் சொல்லடா மைத்துனா கதையும் விடுவித்தேன் கொள்ளடா மைத்துனா என்பது சிறார் சொல்லும் விடுகதைப் பாட்டு. குல் - கொல் - கோல். கோலுதல் = 1. வளைத்தல். நெடுங்காழ்க் கண்டங் கோலி (முல்லைப். 44). 2. திரட்டி வைத்தல். கோலாப் பிரச மன்னாட்கு. (திருக்கோ. 110). கோல் = 1. உருட்சி. 2. திரட்சி. கோனிற வளையினார்க்கு (சீவக. 209). 3. உருண்டு திரண்ட குடைக் காம்பு. அருள் குடையாக வறங்கோலாக (பரிபா 3 : 74). 4. துலாக் கோல் (பிங்.). 5. செங்கோல். 6. அளவுகோல் கோலிடை யுலக மளத்தலின் (கம்பரா. நகரப். 11). 7. ஊன்றுகோல். 8. கம்பு. அலைக்கொரு கோறா (கலித். 82). 9. மரக்கொம்பு. (சூடா). 10. பிரம்பு. 11. யாழ்நரம்பு. கோல்பொரச் சிவந்த (சீவக. 459). ம. கோல், தெ. கோல, க. கோல், து. கோலு. கோல் - கோலி = உருண்ட விளையாட்டுக் கருவி. k., தெ. கோலி (g), து. கோளி (g), மரா. கோலீ (ப). கோல் - கோலை = மிளகு. (தைலவ. தைல. 135). கொட்பு = 1. வளைவு. 2. சுழற்சி. கொட்புறு கலினப் பாய்மா (கம்பரா. மிதிலை. 13). 3. மனச்சுழற்சி (சீவக. 540, உரை). 4. சுற்றி (திவா). 5. நிலையின்மை. கொட்பின்றி யொல்லும்வா யூன்று நிலை (குறள். 789). கொள் - கொட்டு = 1. வட்டமான நெற்கூடு. 2. பிரப்பங் கூடை. ஒ.நோ : வள் - வட்டு. கொட்டு - கொட்டம் = 1. வட்டமான மாட்டுத் தொழுவம். 2. நூற்குங் கொட்டை (சிறுபாண். 106, உரை). ஒ.நோ : வட்டு வட்டம். கொட்டம் (தொழுவம்) - வ. கோஷ்ட (g, th), தெ. கொட்டமு, கொட்டம் - கொட்டாரம் = வட்டமான களஞ்சியம். ஒ.நோ : வட்டம் - வட்டாரம். ம. கொட்டாரம், தெ. bfh£lhuK, f., து. கொட்டார. மரா. கோட்டார (th),, வ. கோஷ்டாகார (th, g). கொட்டம் - கொட்டகை = சாய்ப்புப் பந்தல். கொட்டகைத் தூண்போன்ற காலிலங்க (குற்றா. குற. 84 : 4). ஒ.நோ : வட்டம் - வட்டகை. க. கொட்டகெ (g), து. கொட்ய. வ. கோஷ்டக (g). ஒ.நோ : ME. E. Cottage. கொட்டுதல் = கலத்தைச் சாய்த்துக் கவிழ்ந்து உள்ளடக்கத்தைக் சிந்துதல் அல்லது சொரிதல். கொட்டு - கொட்டில் = 1. மாட்டுத் தொழு. ஏறு கட்டிய கொட்டி லரங்கமே (தனிப்பாடல்). 2. கொட்டகை, கொட்டில் விளங்குதேர் புக்கதன்றே (சீவக. 471). 3. விற்பயிற்றும் இடம். கல்லூரி நற்கொட்டிலா (சீவக. 995). 4. குடிசை. பன்னூறாயிரம் பாடிக் கொட்டிலும் (பெருங். உஞ்சைக். 43, 199). ம. கொட்டில். கொட்டு - கொட்டை = 1. உருண்ட வடிவம். 2. பஞ்சுச் சுருள். கொட்டைத் தலைப்பால் கொடுத்து (திவ். பெரியாழ். 3 : 5 : 1). 3. உருண்ட தலையணை. நெட்டணையருகாக் கொட்டைகள் பரப்பி 4. உருண்டு திரண்ட விதை. 5. அது போன்ற உறுப்பு. (testicle). 6. தாமரைக் கொட்டை. தாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல (பெருங். உஞ்சைக். 38 : 258). 7. ஆமணக்கு. 8. பூசணிப் பிஞ்சு. 9. பாதக் குறட்டின் குமிழ். பவழக் கொட்டைப் பொற் செருப் பேற்றி (பெருங். மகத. 22 : 202). 10. ஆடைத்தும்பு முடிச்சு. 11. கொட்டைக் கரைய பட்டுடை நல்கி (பொருந. 155). 12. காது வளர்க்குந் திரி. 13. நூற்குங் கதிர் அடி. ம. bfh£l, bj., f., து. கொட்டெ. கொள் - கொள்கு - கொட்கு. கொட்டுதல் = 1. சுழலுதல். வளிவலங் கொட்கு மாதிரம் (மணி. 12 : 91). 2. சூழவருதல். காலுண வாகச் சுடரொடு கொட்கும் (புறநா. 43 : 3). 3. திரிதல். கொடும்புலி கொட்கும் வழி (சிறுபஞ். 80). ஒ.நோ : வெள் - வெள்கு - வெட்கு. கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை வகை. பைங்காற் கொக்கின் (புறநா. 342). ஒ. நோ : சுள் - சுள்கு சுட்கு - சுக்கு. ம. bfh¡F, bj., கொக்கெர க. கொக்கரெ. து. கொர்ங்கு, பிரா. கொக்கை. பிரா. = பிராகிருதம். கொக்கு - கொக்கி = 1. வளைந்த கொளுவி. 2. இருப்புத் துறட்டி. ம. கொக்க. தெ. bfh¡», f., து. கொக்கெ. Du. hock, MLG. hok, OE. hoc, E. hook. கொக்கி - கொக்கில் = அணிகலக் கொக்கிவாய். கொக்கு கொக்கை = கொக்கி (யாழ்ப்.). கொக்கு - கொக்கரை = 1. வளைவு. 2. வைக்கோல் வாருங் கருவி (rake). 3. வில் (அக. நி). 4. வலம்புரிச் சங்கு (திவா.). 5. வட்டமான தாளக் கருவி. 6. வளைந்து சூழும் வலை. 7. வளைந்து வளைந்து செல்லும் பாம்பு. ம. கொக்கர, தெ. கொக்கெர, க. கொக்கெ. கொக்கு - கொக்கட்டி = குறுகி வளைந்த பனங்கிழங்கு (யாழ்ப்.). கொள் - கொண்டி = கொக்கி, கொளுவி. கொள் - (கொண்) கொடு - கொடுமை = 1. வளைவு (சிலப். 11 : 20). 2. மனக் கோட்டம். கொடுமையுஞ் செம்மையும் (பரிபா. 4 : 50). 3. தீமை. கூனுஞ் சிறிய கோத்தாயுங் கொடுமை யிழைப்ப (கம்பரா. மந்திரப். 1.). 4. முறைகேடு. கொடியோர் கொடுமை (தொல். பொ. 147). 5. தீவினை. 6. கொடும்பாடு. கொடுமை பல செய்தன (தேவா. 945 : 1). ம. கொடும. கொடுவாள் = வளைந்த வெட்டறுவாள். கொடுமரம் = வில். கொடுங்கை = 1. மடித்த கை. 2. கட்டிடத்தின் வெளிப்புறம் நீண்டு வளைந்துள்ள உறுப்பு. மரகதக் கொடுங்கை சுற்றமைய வைத்தனன் (தணிகைப்பு. வள். 12). கொடுக்காய்ப்புளி = பன்மடி வளைந்த காயுள்ள மரவகை. கொடுவரி = வளைந்த வரியுள்ள வேங்கை. கொடுவாயிரும்பு = தூண்டில் முள். கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி(அகநா. 36: 2). கொடு - கொடுக்கு = 1. தேள், நட்டுவாய்க்காலி முதலியவற்றின் வளைந்த கொட்டும் உறுப்பு. 2. ஆடையின் அழகுத் தொங்கல். கச்சை புனைந்ததிலே விட்டான் பெருங்கொடுக்கு (திருவாலவா. 30: 9). 3. கிழிந்த ஆடைத் தொங்கல். கோலுங் கொடுக்கும் என்பது உலகவழக்கு. ON. Krokr, F. Croc. ME. Croc. E. Crook ம. கொடுக்கு. கொடுக்கு - கொடுக்கன் = தேள்வகை. கொடுக்கன் - கொடுக்கான். கொடுக்கு - கொடுக்கி = 1. கதவையடைத்து இடும் இருப்புக் கொக்கிப்பட்டை. 2. கொடுக்குப் போன்ற முள்ளுள்ள தேட் கொடுக்கிச் செடி. கொடு - கொடுப்பு = குறடுபோன்ற அலகு. கொடு - கொடி = 1. வளைந்து படரும் நிலைத்திணை வகை. ஒ.நோ: வல் வல்லி = கொடி. வள் - வள்ளி = கொடி. 2. கொடி போன்ற மகளிர் கழுத்தணி. 3. ஆடவர் அரைஞாண். 4. கொடிபோலுங் கயிறு. 5. நீளம். பழன வெதிரின் கொடிப்பிணை யலளே (ஐங்குறு. 91). 6. ஒழுங்கு. கருங்கொடிப் புருவம் (சீவக. 658). 7. வாய்க்கால், கிளை வாய்க்கால். 8. வழிமரபு, கொடிவழி. 9. கிளையடுப்பு, கொடியடுப்பு. 10. துணிக்கொடி. 11. மூதேவியின் காக்கைக் கொடி, காக்கை. சேட்டைக் குலக்கொடியே (திருக்கோவை, 235). 12. கொடி மின்னல். 13. பாம்பு. பாம்பு கடித்தலைக் கொடித்தட்டல் என்பது நெல்லைநாட்டு மங்கல வழக்கு. 14. நீண்டு செல்லும் ஒடுங்கிய பாதை. கொடித்தடம் = ஒற்றையடிப்பாதை. கொடி - கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப் பெண், குறிஞ்சி நிலத் தலைவி. கொடிச்சி காக்கும் பெருங்குர லேனல் (ஐங்குறு. 296). கொடிபோல் விரைந்து வளர்வதால் பெண்ணைப் பெண்கொடி யென்னும் வழக்கையும், முருகன் தேவியின் பெயராகிய வள்ளி யென்னுஞ் சொல் கொடியென்று பொருள்படுவதையும், நோக்குக. k., bj., து. கொடி. கொடி - கொடிறு = 1. வளைந்த குறடு. கொடிறும் பேதையும் கொண்டது விடாது (திருவாச. 4 : 63). 2. குறடு போன்ற அலகு. கொடிறுடைக்குங் கூன்கையர் (குறள். 1077). கொள் - கொண் - (கொண்பு) - கொம்பு = 1. வளைந்த விலங்கின் தலையுறுப்பு. 2. ஊதுகொம்பு. குறிக்குங் கொம்பினன் (கம்பரா. அயோத்தி. குகப். 9). 3. கொம்புபோன்ற யானை மருப்பு. யானை யின் கொம்பினைப் பறித்து (திவ். பெரியதி. 4:2:4). 4. கொம்பு போன்ற அல்லது கொம்பினாற் செய்த நீர்வீசு கருவி. சிவிறியுங் கொம்புஞ் சிதறு விரை நீரும் (மணி. 28:10). 5. எழுத்தின் கொம்பு போன்ற வரிவடிவப் பகுதி. வரைந்திடுந் திறனடைந்த கொம்பு போல (திருவேங். கலம். 27). 6. கொம்பு போன்ற மரக்கிளை. வளி யெறி கொம்பின் வருந்தி (மணி. 24:86). 7. கிளை போன்ற கோல். 8. தலையுச்சிக் கொம்பு போன்றிருக்கும் ஏரிக்கரைக் கோடி. ம. கொம்பு, தெ. bfh«K, f., து. கொம்பு. கொம்பு - கொம்பர் = மரக்கிளை. நாறுமலர்க் கொம்பர்(சீவக. 2019). கொம்பு - கம்பு = கோல் (பாண்டி நாட்டு வழக்கு). கொம்பு - கொம்பன் = 1. கொம்புள்ள விலங்கு. ஒற்றைக் கொம்பன் = பிள்ளையார். 2. சமர்த்தன். உனக்கென்ன கொம்பு முளைத்திருக்கிறதா என்று வினவுவது உலகவழக்கு. இது தலைவேட்டமாடும் நாகர் வழக்கத்தினின்று தோன்றியதா யிருக்கலாம். பண்டை மூவேந்தர் முடியும் கொம்பு வடிவிற் குவிந்திருந்தது கவனிக்கத்தக்கது. 3. மகன், ஆண்பிள்ளை. உனக்கொரு கொம்பன் பிறப்பான் என்பது குடுகுடுப்பாண்டி குறிக்கூற்று. கணவனும் மனைவியும், வன்மை மென்மையாலும் வாழ்க்கைச் சார்பினாலும், கொழு கொம்பும் அதைப் பற்றி யேறும் இவர் கொடியும் போலிருத்தலை நோக்குக. கொள் கொம்பு - கொழு கொம்பு. 4. அம்மை அல்லது கழிச்சல் நோய் வகை. நீர்க்கொம்பன் = கக்கற் கழிச்சல் (வாந்திபேதி). கொம்பு - கொப்பு = 1. மரக்கிளை. 2. மகளிர் காதணி வகை. கொப்பிட்ட வுமைபாகர் (தண்டலை. சத. 12). கொள் - கோள் = 1. சுற்றிவரும் விண்மீன். கோணிலை திரிந்து கோடை நீடினும் (மணி. பதி. 24). 2. ஊர்கோள் வட்டம். மதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக. 1098). கோள் - கோளம் = 1. உருண்டை. குடவரைக் கோளம் (Western hemisphere). குணவரைக் கோளம் (Eastern hemisphere). 2. உடம்பில் நீர் சுரக்கும் சுரப்பி (gland). கோளக்கட்டி. கோளம் - கோளகம் = 1. மண்டல விரியன் (பிங்.). வ. கோலக (ப). 2. மிளகு. வ. கோலக. கோளம் - கோளகை = 1. வட்டவடிவம். அண்ட கோளகைப் புறத்ததாய் (கம்பரா. அகலிகைப். 60). 2. மண்டலிப் பாம்பு (சூடா.). 3. கிம்புரி என்னும் யானை மருப்புப் பூண் (பிங்.). கோள் - கோளா = 1. உருண்டைக்கறி. 2. கஞ்சாவுருண்டை. கோளாங்கல் = கூழாங்கல் (யாழ்ப்.). கோள் - கோண் = 1. வளைவு. கோணார் பிறை (திருவாச. 16 : 5). 2. கோணம். முக்கோ ணிவர்தரு வட்டம் (குற்றால. தல. பராசத். 3). 3. மாறுபாடு. 4. கொடுங்கோன்மை. கோணுதல் = 1. வளைதல். 2. கோணலாயிருத்தல். 3. நெறி பிறழ்தல். 4. முகங் கோணுதல். மாறுபடுதல். 5. மனங்கோணுதல், வெறுத்தல். கோணாதே குலவி நுழைந்தனையே (அருட்பா, 6, திருவடிப் புகழ்ச். 1 : 7). கோண் - கோணல் = 1. வளைதல் (பிங்.). 2. கூன் (திவா.). 3. மாறுபாடு (சூடா.). ம. கோணல். கோண்-கோணம் = 1. வளைவு. (பிங்.). 2. கூன்வாள் (பிங்.). 3. யானைக் துறட்டி. கோணந்தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592). 4. மூலை. கோணமொத்திலங்கோர் முழத்தினின் (திருவாலவா. 15:2). 5. கோணத்திசை. வடக்கொடு கோணந் தலைசெய்யார் (ஆசாரக். 31). 6. ஒதுக்குப்புறமான இடம். வ. கோண. Gk. gonia (angle). கோணம் - காணம் = 1. வளைந்த காயிலுள்ள கொட்பயறு. (திவா.). கொள்ளைக் காண மென்பதே பாண்டிநாட்டு வழக்கு. 2. காணப்பயறள வுள்ளநிறை. 3. காணமொத்த வடிவிலுள்ள பொற்காசு. ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்து (பதிற்றுப். 60, பதி.). 4. பொன் (திவா.). 5. பொருள். மேற்காண மின்மையால் (நாலடி. 372). 6. வரி. குசக்காணம். ம. காணம். காணம்2 = 1. வட்டமான செக்கு. 2. ஒரு செக்களவு கொண்ட முகத்தலளவை. க. காண (g). ஓ - ஆ. ஒ.நோ : ஓட்டம் - ஆட்டம் (உவம வுருபு). குரங்காட்டம் ஓடுகிறான் என்பது நெல்லைவழக்கு. ஓடுதல் = ஒத்தல். நோடு -நோட்டம் - நாட்டம் = பார்வை, கண், தேட்டம், விருப்பம், ஆராய்வு. நோடு - நாடு. நாடுதல் = பார்த்தல், கவனித்தல், ஆய்தல், தேடுதல், விரும்புதல். நோடுதல் என்னும் வினைச்சொல் ஆய்ந்து பார்த்தல் என்னும் சிறப்புப் பொருளிழந்து, பார்த்தல் என்னும் பொதுப் பொருளில் இன்று கன்னடத்தில் வழங்குகின்றது. கோண் - கோணை = 1. வளைவு. 2. கோணல். கோணையன் = இயற்கைக்கு மாறான குணமுடையவன். கோண் - கோடு. ஒ.நோ : பாண் - பாடு. கோடுதல் = 1. வளைதல். கொடும்புருவங் கோடா மறைப்பின் (குறள். 1086). கோல் கோடி (குறள். 554). 2. நெறிதவறுதல். கோடாருங் கோடி (நாலடி. 124). 3. நடுநிலை தவறுதல். கோடாமை சான்றோர்க்கணி (குறள். 118). கோடு = 1. வளைவு. 2. விலங்குக் கொம்பு. கோட்டு மண் கொண் டிடந்து (திவ். பெரியாழ். 3 : 3: 9). 3. யானை மருப்பு. களிறு...... நுதிமழுங்கிய வெண்கோட்டால் (புறநா. 4 : 11). 4. யாழ்த் தண்டு. யாழ்கோடு செவ்விது (குறள். 279). 5. பிறைமதி. கோடு மிலைந் தான் (திருக்கோவை, 149). 6. சங்கு. கோடுமுழங் கிமிழிசை யெடுப்பும் (பதிற்றுப். 50:25). 7. குளக்கரை. குளவளாக் கோடின்றி நீர் நிறைந் தற்று (குறள். 523). 8. எழுத்தின் வரிவடிவுக் கொம்பு. கோடு பெற்றும் புள்ளி பெற்றும் (தொல். எழுத். 17, நச் உரை). 9. நடுநிலையின்மை. கோடிறிக் கூற்றம் (நாலடி. 5.). 10. கால வட்டம். “fÈíf¡ nfh£L ehŸ” (T.A.S.H. O.P.S.) bj., க. கோடு. கோடு - கோட்டம் = 1. வளைவு. மரத்தின் கனக் கோட்டம் தீர்க்கு நூல் (நன். 25). 2. கோணல் உட் கோட்டமின்மை பெறின் (குறள். 119). 3. வட்டமான ஆன்கொட்டில். ஆனிரைக டுன்னுங் கோட்டம் (வாயுசங். பஞ்சாக். 58). 4. மதில் சூழ்ந்த கோயில். கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் (சிலப். 14:10). 5. மதில் சூழ்ந்த சிறைச்சாலை. ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம் (மணி. 19:43). 6. குளக்கரை. உயர்கோட்டத்து ...... வான் பொய்கை. (பட்டினப். 36). 7. மண்டலம், வட்டம், நாடு. (பிங்.). 8. வணக்கம். முன்னோன் கழற்கே கோட்டந்தருநங் குருமுடி வெற்பன் (திருக்கோவை 156). 9. நடுவுநிலையின்மை. கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (தேவா. 1182 : 2). கோட்டம் - கோட்டகம் = குளக்கரை. நெடுங்குளக் கோட்டகம் (சிலப். 11:71). கோடு - கோடி = 1. வளைவு. முளைத்திங்கட் கோடியென (திருவாரூ. 134). 2. முடிமாலை (பிங்.). கோடு - கோடல் = 1. வளைவு, 2. முறிக்கை. 3. வெண்காந்தன். கோடல் முகையோடு (பு.வெ. 8 : 16). கோடலம் = பிறைபோல் வளைந்த மாலைவகை. கோடு - கோடை = வளைந்த இதழுள்ள காந்தள். கோட்டம் - கோட்டை. ஒ.நோ : ஆட்டம் = ஆட்டை. கோட்டை = 1. வட்டமான நெற்கூடு. உலவாக் கோட்டை (திருவாலவா. 50 : 13). 2. நெற்கூடு கொள்ளும் 21 மரக்கால் கொண்ட முகத்தல் அளவு. 3. ஒரு நில அளவு. 4. வட்டமான மதிலரண். 5. ஊர்கோள். நிலாக் கோட்டை கட்டியிருக்கிறது (போட்டிருக்கிறது) என்பது இன்றும் உலக வழக்கு. k., bj., f., J., கோட்ட. வ. கோட்ட. கோடு - கோட்டு (பி.வி.). கோட்டுதல் = 1. வளைத்தல். நகை முகங்கோட்டி நின்றாள் (சீவக. 1568). 2. வளைத்து முறித்தல். (திவா.). 3. வளைத்து எழுதுதல். தன்னாமமேருவினுங் கோட்டி னானே (பாரத. சிறப்புப். 19). 4. வளைத்துக் கட்டுதல். ஒரு மண்டபங் கோட்டினேன் (பாரத. வாரணா. 123). கோடு - கோடகம் - கேடகம் = வட்டமான பரிசை. கேடகம் ஒளிவீச (கம்பரா. கடிமணப். 33). கேடகம் - வ. கேட்டக்க (khetaka). ஒ.நோ : புரி - பரி - பரிசை = வட்டமான கேடகம். புரிதல் = வளைதல். கேடகம் - கிடுகு = 1. கேடகம். வார்மயிர்க் கிடுகொடு (சீவக. 2218). 2. தேர்மரச்சுற்று. (ஞானா. 7 : 16). 3. வட்டவடிவான பறைவகை. கிடுகு கொட்டின (பாரத. அணி 15). வ. கிடுக (g-g). கோடு - கோடரம் = 1. மரக்கிளை (பிங்.) 1. குரங்கு. கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத் துருவு கொண்டு (கம்பரா. அட்சகுமா. 4). கோடுவாழ் குரங்கும் என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. (தொ. பொ. மர. 13). க. கோடக (g). கோடம் - கோரம் = வட்டில். அமுதுடைக் கோர நீக்கி (கம்பரா. அயோத்தி. மந்திரப். 25). கோடு - கோசு. கோசுவிழுதல் = துணிவெட்டும்போது கோணிப் போதல். கிளைக் கருத்துக்கள் 1. திரட்சி. கோல் = திரண்ட கம்பு. கோல் - கால் = மரத்தூண், கற்றூண். நாற்காற்பந்தல் என்பதில் மரத்தூணும், நூற்றுக் கால் மண்டபம் என்பதிற் கற்றூணும், குறிக்கப்படுதல் காண்க. உருட்சிக் கருத்தினின்றும் திரட்சிக் கருத்துத் தோன்றிற்று. பின்வருபவை வளைவு அல்லது திரிபு என்பதை அடிமணை யாகக் கொண்டவை. 2. தீமை. எ-டு : கொடுவினை = தீவினை. 3. நெறிதிறம்பல். எ-டு : கொடுங்கோல், கொடுந்தமிழ். 4. கடுமை. எ-டு : கொடும்பனி - கடும்பனி. கொடு - கடு - கடுமை. 5. நெரடு. கொடுமலையாளம், கடுநடை. 6. கொடுமை. கொடும்பாடு, கொடும்பாவி. கோடு = கொடுமை, கோடணை = கொடுமை. 7. மனக்கவலை. கோட்டரவு. 8. மூளைக்கேடு. கிறுக்கு - கிறுக்கன். கோடு (த.வி.) - கோட்டு (பி.வி.) - கோட்டி = கிறுக்கு, கிறுக்கன். (அறிவு திரிந்தவன்). கிறுக்கு என்பது சுற்றற் கருத்தையும், கோட்டி என்பது திரிதற் கருத்தையும் அடியாகக் கொண்டன. சிறுகிளைக் கருத்துக்கள் 1. கோல் = அரசு, ஆட்சி. செங்கோல் = நேர்மையாட்சி. கொடுங்கோல் = கொடிய ஆட்சி. 2. கால் = 1. தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு. 2. உடம்பிற் கால்போல் நாலிலொரு பகுதி. 3. கால்போல் ஒடுங்கி நீண்டு செல்லும் ஓடுநீர்நிலை (வாய்க்கால், கால்வாய்.) 4. நீண்டு இயங்கும் காற்று. கால் - காற்று. 5. என்றும் நீண்டு இயங்கிக் கொண்டேயிருக்கும் காலம். கால் - காலை, காலம். 6. கால் போன்ற உறுப்பு. (முக்காலி, நாற்காலி). 7. பிரிவு. 8. அடிநிலம் (கொடிக்கால், நாற்றங்கால்). 9. நீண்டு தொடரும் குடிமரபு. இவையும் இவை போன்ற பிறவும் உவமையடிப் படையில் தோன்றியனவாகும். 3. கொடி என்னும் சொற்கு மேற்குறித்த பதினாற் பொருளும், குறிக்கப் பெறாத பிறவும், சிறு கிளைக்கருத்துச் சொற்களே. குல் 3 (குத்தற் கருத்து வேர்) குல் குல் - குள். குள்ளுதல் = கிள்ளுதல் (நெல்லை நாட்டு வழக்கு). குள் - குளவி = கொட்டுந் தேனீ. ம. குளவி, க. கொளவி. குள் - கள் = முள். கள் - கள்ளி = முட்செடி. ஒ. நோ : முள் - முள்ளி. கள்ளியங் கடத்திடை (ஐங். 323). k., க. கள்ளி. கள் + மணி = கண்மணி = முட்போற் கூர்முனை யுள்ள உருத்திராக்கம். முட்போன்ற முனையுண்மையால் உருத்திராக்கம் முண்மணி யென்றும் பெயர் பெறும். முண்மணிகள் காய்க்குமரம் முப்பதுட னெட்டே என்று விருத் தாசலப் புராணம் (உருத்திராக்-4) கூறுதல் காண்க. பலாக்காயின் மேற் காணப்படும் முனைகளும் முள்ளென்று பெயர் பெற் றிருத்தலை நோக்குக. ஆரியர் தென்னாடு வருமுன்னரே சிவநெறி குமரிநாட்டில் தோன்றிய தென்மதமா தலால், அதை ஆரியப் படுத்திய வடவர் கண்மணி யென்னுங் கூட்டுச் சொல்லின் பொருளைப் பிறழவுணர்ந்து, அதற்கேற்ப, முள்ளுள்ள தென்றே பொருள்படும் அக்கம் (அக்கு - முள், முள்ளுள்ள உருத்திராக்கம். அக்கு - அக்கம்) என்னும் தென் சொல்லை அகடி என்று திரித்து, உருத்திரன் கண்ணீரில் தோன்றியதென்று முப்புரஎரிப்புக் கதையொன்றுங் கட்டி விட்டனர். கள் - கடு = 1. முள் (திவா.). 2. முள்ளி (மலை). ம. கடு. கடு - கடி = கூர்மை. கடியென் கிளவி காப்பே கூர்மை (நன். 457). கள் - கண்டு = முள்ளுள்ள கண்டங்கத்தரி. கண்டு - கண்டி = 1. முள்ளுள்ள உருத்திராக்கம், 2. உருத்திராக்க மாலை. கண்டியிற் பட்ட கழுத்துடையீர் (தேவா. 586 : 6) கண்டி - கண்டிகை = உருத்திராக்கமாலை (பிங்.). கண்டிகை கண்டிகா (வ). கண்டு - கண்டம் = 1. கள்ளி (மலை). 2. எழுத்தாணி (பிங்.). 3. கண்டங்கத்தரி. உருத்திராக்கமணி. கண்டங்கத்திரி - கண்டகாரி (வ). கண்டம் (முள்) - காண்டா (இந்தி). கண்டு - கண்டல் = 1. முள்ளி (சூடா). 2. நீர்முள்ளி (மலை). 3. முள்ளுள்ள தாழை. கண்டல் திரை யலைக்குங் கானல் (நாலடி. 194). கண்டல் - கண்டலம் = 1. முள்ளி, 2. நீர் முள்ளி (மூ.அ.). கண்டு - கண்டகம் = 1. முள். இளங்கண்டகம் விடநாகத்தின் நாவொக்கும் (இறை. 41 : 172). 2. நீர்முள்ளி. கண்டகங்காள் முண்டகங்காள் (தேவா. 268 : 2). 3. உடைவாள். (திவா.). 4. வாள் (சூடா). கண்டக சங்கம் = முட்சங்கு. கண்டகம் - கண்டக (வ). கண்டகம் - கண்டகி = 1. தாழை. வெம்மினது கண்ட வியன் கண்டகி யெனவும் (கந்தபு. தேவர்புல. 20). 2. இலந்தை. (இலக். அக.). 3. ஒருவகை மூங்கில் (இலக். அக.) 4. முதுகெலும்பு. குள் - கிள், கிள்ளுதல் = முள்ளுதல். கிள் - கிள்ளி - கிளி = கூரிய அலகினாற் கொத்தும் அல்லது கடிக்கும் பறவை வகை. கிள் - கிள்ளை = கிளி. கிள் - ம. கிள்ளு. தெ. கில்லு (ப). கிளி - ம. கிளி, தெ. சிலுக்க. குள் - கொள் - கொய். கொய்தல் = உகிராற் கிள்ளியெடுத்தல். ள்-ய். ஒ.நோ : தொள் - தொய், பொள் - பொய். குள் - குட்டு. ஒ.நோ : வள் - வட்டு. குட்டுதல் - கை முட்டியால் தலையிற் குத்துதல். ம. தெ. க. து. குட்டு. குட்டு - குத்து. ஒ.நோ : முட்டு - முத்து. குத்துதல் = 1. முட்டியாற் குத்துதல். குத்துமோதை (கம்பரா. கிட்கிந்தா. வாலிவதைப். 43). 2. கொம்பினால் முட்டுதல். 3. ஊசி, ஆணி முதலியவற்றால் துளையிடுதல். உன்னைக் காது குத்த (திவ். பெரியாழ். 2 : 3 : 1). 4. கத்தியாற் குத்துதல். 5. புள்ளி குத்துதல். 6. முத்திரையடித்தல். 7. உலக்கையால் இடித்தல். 8. குத்தித் தைத் தல். பூம்புனல் நுழையும் புரையக் குத்தி (பெருங். வத்தவ. 12:48). 9. குத்திப் பறித்தல். 10. குத்திக் களைதல். 11. பறவை கொத்துதல். 12. கொத்தித் தின்னுதல். கானக் கோழி கதிர் குத்த (பொருத. 222). 13. ஊன்றுதல் பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41). 14. செங்கலைச் செங்குத்தாக வைத்தல். கல்லைக் குத்திக் கட்டு (உ.வ.). 15. வெள்ளம் அல்லது பேரலை கரையில் மோதுதல். வையை கொதித்தகன் கரை குத்தி (திருவிளை. விடை. 10). 16. உடம்பு அல்லது உறுப்பு நோவெடுத்தல். தலைக்குத்துத் தீர்வுசாத்தற்கு (திருவள். வெ. மா.) குத்தலுங் குடைச்சலும் (உ.வ.). 17. மனம் புண்படச் சொல்லுதல். 18. காய்ச்சிய பாலில் உறை மோர் ஊற்றுதல். பிறை குத்த வேண்டும் (உ.வ.). 19. நிலத் திற் படிந்திருத்தல். 20. முட்டுத் தாங்குதல். 21. செங்குத்தாதல். 22. நேராதல். k., f., து. குத்து. தெ. குத்து (பரனனர). குத்த வைத்தல் = புட்டம் நிலத்திற் படியுமாறு உட்கார்தல் (நெல்லை வழக்கு). குண்டிகுத்துதல் = குத்தவைத்தல் (நாகூர் மரைக்காயர் வழக்கு). குத்துக்கல் = செங்குத்தாக நிற்குங் கல். குத்துவிளக்கு = நிலத்திற் படிந்து நிற்குமாறு பாதம் வைத்த தண்டு விளக்கு. குத்து = 1. கைப்பிடி (குத்தும் முட்டிக்கை) யளவு. ஒரு குத்துச் சோறு (உ.வ.) 2. கைப்பிடியளவான தொகுதி குத்துக்குத்தாய் நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா? (பழமொழி). குத்துச்செடி = அடர்ந்த சிறுசெடி. குத்து - குத்தி - குதி = நிலத்திற் குத்தும் குதிங்கால். குதிபந்தினிரம்பு பேரெழில் வாய்ந்திடில் (காசிகண். மகளிர். 10). தெ. க. குதி (gudi). குதித்தல் = 1. மேலெழும்பிக் குதிங்கால் அல்லது பாதம் நிலத்திற் குத்துமாறு ஊன்றி நிற்றல். 2. நீர்ப்பொருள் எழும்பி விழுதல். மலர்தேன் குதிக்க (தஞ்சை வா. 67). 3. கூத்தாடுதல். 4. செருக்குக் கொள்ளுதல். 5. பரபரப்படைதல். 6. குதித்துத் தாண்டுதல், தாண்டிக் கடத்தல், 7. கடந்து வெல்லுதல். கூற்றங் குதித்தலும் கைகூடும் (குறள். 269). குதியாளம் = குதித்து விளையாடுதல். ம. குதி. க. குதி (gudi). குதி - கூத்து. இனி, குத்து (குதி) - கூத்து, என்றுமாம். ம. க. கூத்து. குதி - கொதி. கொதித்தல் = 1. நீர் நெய் முதலியன பொங்கியெழுதல் குண்டிகையிருந்த நீருங்.... கொதித்த தன்றே. (கம்பரா. வருணனை. 61). 2. மிகச்சுடுதல். 3. சினம் பொங்குதல். குதி - குதிரை = குதித்துத் தாண்டும் விலங்கினம். ம. குதிர, தெ. Fâu, f., து. குதுரெ. குதி - குதிர். குதிர்தல் = படிதல், குடியமர்தல், ஒழுங்காதல். bj., க. குதுரு. குதிர் - கதிர் = 1. நேராகச் செல்லும் ஒளியிழை. விரி கதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி (சிலப். 11 : 43). 2. கதிர் வீசும் இருவிண்சுடர். கதிர் விலகிச் சூழும் (சேதுபு. முத்தீர் = 5). 3. குறட்டினின்று (குடத்தினின்று) கதிர்போற் செல்லும் ஆரக்கால். 4. ஒளிக்கதிரும் ஆரக்காலும் போல் நெடுகக் கிளைக்கும் பயிர்க்கதிர். 5. நேராக நூல் நூற்குங்கருவி. “fânu kâahf” (e‹ - 24) k., க. கதிர். தெ. கதுரு (நூற்கதிர்). கதிர்த்தல் = 1. விளங்குதல், ஒளிவீசுதல். கதிர்த்த நகை மன்னும் (திருக்கோ 369). 2. வெளிப்படுதல். வாய்மை கதிர்ப்பச் சென்ற (கம்பரந். 1) 3. மிகுதல். கதிர்த்த கற்பினார். குதி - குதை = குதிங்கால் போன்ற வில்லின் அடி. குதைவரிச் சிலைநுதல் (கம்பரா. பால. நகர. 49). k., குத. குதைத்தல் = விற்குதையில் நாண் பூணுதல். குதைக்கின்றன நிமிர் வெஞ்சிலை (கம்பரா. உயுத். இராவணன் வ. 46). குத்து - குத்தி - கத்தி = குத்தி வெட்டும் அல்லது அறுக்குங் கருவி. குத்து - கத்து = குத்திவெட்டு (இறந்து பட்ட வழக்கு). தத்து கத்தி. k., bj., f., J., கத்தி. ஒ.நோ : ME - cutte, kitte, kette, Sw. kata (kuta). E. cut. இந்தி, காட் (வெட்டு). குத்துக்கோடரி = குத்திவெட்டுங் கோடரி. கத்தி + அரி = கத்தரி. கத்தரித்தல் = 1. சிறிது சிறிதாய் (கொஞ்சங் கொஞ்சமாய்) வெட்டியறுத்தல். (திவா.) 2. அறுத்தல். தலை பத்துங் கத்தரிக்க வெய்தான் (கந்தரலங். 22), 3. வெட்டி விலக்குதல், நட்புப்பிரித்தல். 4. பிரித்து கவராதல். கத்தரி = கத்தரிக்கோல். கத்தரி - கத்திரிகை = கத்தரிக் கோல். மயிரரிதற்கொரு கத்தரிகை தருகென (பெருங். வத்தவ. 14 : 7). கத்தரி - கர்த்தரீ (வ.). குத்து - குத்தி - கத்தி - கதி. கதித்தல் = நேராதல். கதிக்க = நேராக. கிழக்கே கதிக்கப் போ (நெல்லை வழக்கு). செங்குத்து அல்லது நட்டுக்குத்துக் கருத்தினின்று நேராதற் கருத்துத் தோன்றிற்று. குத்து - குந்து. குந்துதல் = 1. புட்டம் நிலத்திற்குத்த உட்கார்தல். 2. குத்துதல். 3. படிதல். ம. க. குந்து. ஒ.நோ : ME, E squat. OF quatir. குந்து - குந்தம் = 1. குத்துக்கோல். பூந்தலைக் குந்தங்குத்தி (முல்லைப். 41). 2. வேல். குந்த மலியும் புரவியான் (பு.வெ. 4 : 7). 3. எறிகோல். வைவாளிருஞ்சிலை குந்தம் (சீவக. 1678). 4. குதிக்குங் குதிரை. வெற்றி சேர் குந்தம் (திருவிளை. நரிபரி. 106), 5. திரண்ட வைக்கோற் படப்பு. செங்குந்தர் = குந்தங்கொண்டு பொருத படைமறவர் வழியினர். குந்து - குந்தாலம் = குத்தித் தோண்டுங் கருவி. குந்தாலம் - கூந்தாலம். குந்தாலம் - வ. குத்தால (dd). குத்தாலம் - குந்தாலி = 1. குத்தித் தோண்டுங் கருவி. குந்தாலிக்கும் பாரை வலிது (திருமந். 2909). 2. கணிச்சி (பு.வெ. 9 : 38, உரை) குந்தாலி - கூந்தாலி. ம. குந்தாலி. குந்தி நடத்தல் = முன்னம் பாதத்தை மட்டும் ஊன்றி நடத்தல். குந்தாடுதல் = நொண்டி விளையாடுதல் (கோவை வழக்கு.) குந்தாங் குச்சி = நொண்டி விளையாட்டு (கோ.வ.). குந்தாளித்தல் = களித்துக் கூத்தாடுதல். குந்து - குந்தனம் = மணி பதிக்கும் இடம். குந்தனத்திலழுத்தின.... ரத்தினங்கள் (திவ். திருநெடுந். 21, வியா. பக். 175). தெ. குந்தனமு. குந்து + அணை = குந்தணை = எண்ணெய் காய்ச்சுங் கலம் சிதையுமாயின் எண்ணெய் வீணாகாவாறு அடியில் வைக்கப் படும் இருப்பணைக் குவளை. (தைலவ. பாயி. 19). குந்து - குந்தா = குண்டுக் குழாயின் (துப்பாக்கியின்) அடி. உ. குந்தா. குந்து - கிந்து. கிந்துதல் = ஒற்றைக்காலால் நடத்தல். கிந்தி நின்றாடும் அரிவையர் (திருவிசை. கருவூ. திருக்கீழ்க். 11) ம. கித்து. குந்து - கொந்து = நொண்டி விளையாட்டு வகை. கொந்துதல் = ஒற்றைக் காலாற் குதித்தல். குந்து - குந்தளம் = குழற் கொத்து (பிங்.), பெண்டிர் தலைமயிர். சந்தமலி குந்தளநன் மாதினொடு (தேவா. 107: 1). குந்தளம் வ. குந்தல. குந்தளம் - கூந்தளம் = ஒருவகைப் பூ. காந்தமணி கூந்தளம் பாவை நீண்டு (சீவக. 1671). கூந்தளம் - கூந்தலம் - கூந்தல் = 1. கொத்தான பெண்டிர் தலை மயிர். (பிங்.). 2. மயில் தோகை. கூந்தன் மென்மயில் (கம்பரா. சித்திரகூட. 31). 3. மயிர்க் கற்றை வாலுள்ள குதிரை. கூந்தலென் னும் பெயரொடு (பரிபா. 3 : 31). 4. கூந்தற்பனை. 5. கூந்தற் கமுகு. 6. குதிரைவாற் சாமை. (தைலவ. தைல. 17). ம. கூந்தல், க. கூதல். குந்தளம் - கொந்தளம் = பெண்டிர் தலைமயிர் (பிங்.) குத்து - கொத்து. கொத்துதல் = 1. மண்வெட்டியாற் குத்துதல். 2. அலகாற் குத்தியெடுத்தல். கழுகு கொத்திடக் கலத்திடைக் கவிழ்ந்தனர் (காசிகண். தக்கன் வேள்வியை 48). 3. வெட்டுதல். 4. சீவுதல். 5. செதுக்குதல். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து என்னுங் குறளில், குத்து என்னுஞ் சொல் கொத்து என்னும் பொருளில் ஆளப்பட்டிருத்தலை நோக்குக. k., க. கொத்து. வ. குட். கொத்து - கொத்தன் = கொத்துக் கரண்டியால் வேலை செய்யும் அல்லது செங்கலைக் கொத்தும் கட்டட வேலைக்காரன். கொத்துக் கணக்கு = கொத்தன் சம்பளக் கணக்கு. கொத்து - கொட்டு. கொத்து மண்வெட்டி - கொட்டு மண் வெட்டி. களைக்கொத்து - களைக்கொட்டு. கொத்து - கொந்து. கொந்துதல் = 1. குத்துதல். கொந்தியயி லலகம்பால் (பெரிய பு. கண்ணப். 145). 2. கொத்துதல். 3. மகளிர் கழற்காயாட்டத்தில், மேலெறிந்த காய் விழுவதற்கு முன் நிலத்தி லுள்ள காய்களைக் கொத்துவது போற் பொறுக்கி யெடுத்தல். 4. வெட்டுதல். கொந்தறுவாள் = முட்செடிகளை வெட்டியழிக்க உதவும் அறுவாள் வகை. குத்து (கைப்பிடியளவு, திரட்சி) - கொத்து = 1. கைப்பிடியளவு. ஒரு கொத்துச் சோறு கொடு (உ.வ.). 2. பிடி சோறு, சோறு. அரும்புக்கும் கொத்துக்கும் வந்தார். (தனிப்பா. காளமே). 3. சோற்றிற் கீடாகத் தவசமாகக் கொடுக்குங் கூலி. 4. திரட்சி. 5. பூ காய் முதலியவற்றின் குலை. கொத்துறுபோது மிலைந்து (திருவாச. 6 : 30). 6. குடும்பம். கொத்தடிமை ((உ.வ.). 7. மக்கள் திரள். அனைத்துக் கொத்துப் பரிஜனங்களும் (குருபரம்). கொத்து - கொந்து = 1. திரள். கொந்தினாற் பொலியும் வீதி (இரகு. இரகுவு. 53). 2. பூங்கொத்து. கொந்தாரிளவேனல் (சிலப். 8, வெண்பா. 1). 3. கொத்துமாலை. கொந்தார் தடந்தோள் (திருக்கோ. 391). குட்டு - கொட்டு. கொட்டுதல் = 1. குளவி தேள் முதலியன கொட்டு தல். கருங்குளவி கொட்டும் (அரிச். பு. நகர் நீங். 41). 2. கம்மியர் சம்மட்டியால் அடித்தல். கொட்டு வினைக் கொட்டிலும் (பெருங். மகத. 4 : 16). 3. நெற்குத்துதல். கொட்டி வீழுமி குத்தல் போல் (பிரபுலிங். சித்தரா. 9). 4. தோள் புடைத்தல். கொட்டி னான்றோள் (கம்பரா. சம்புமா. 18). 5. அடித்தல். 6. மேளம் அடித்தல். மத்தளங் கொட்ட (திங். நாய்ச். 6 : 6). கொட்டு = பறைப்பொது. கொட்டாட்டுப் பாட்டு - கொட்டும் ஆட்டும் பாட்டும். குத்து - குற்று. குற்றுதல் = நெல் முதலியன குத்துதல். வெதிர்நெற் குறுவாம் (கலித். 42). குள் - குறு. குறுதல் = 1. கிள்ளிப் பறித்தல். பூக்குற் றெய்திய புனலணியூரன் (ஐங்குறு. 23.). 2. ஒழித்தல். இச்சைமற் றாச்சிரயங் குற்றோன் (ஞான. 61 : 19). ஒ.நோ : வெள் - வெறு, வெள்ளிலை - வெற்றிலை. குறுகுறுத்தல் = மனச்சான்று குத்துதல். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். (பழமொழி). குறு (குறள்) - குறண்டு. குறண்டுதல் = 1. முட்போற் குத்துதல். 2. குத்தி வறண்டுதல். குறண்டு - குறண்டி = 1. முட்செடி வகை. 2. தூண்டில் முள். குறண்டு - கறண்டு. கறண்டுதல் = வறண்டுதல். (பாதாள) கறண்டி = (பாதாள) வறண்டி. குல்4 (எரிதற் கருத்துவேர்) எரிதற் கருத்தினின்று, சுடுதல், ஒளிர்தல், சிவத்தல், காந்தல், உறைத்தல், நோதல், சினத்தல், விரைதல் முதலிய கருத்துக்கள் பிறக்கும். குமரிநாட்டு உலகவழக்கும் இலக்கிய வழக்கும் பெரும்பாலும் இறந்துபட்டதனால், பல இணைப்புச் சொற்களை இங்குக் காட்ட முடியவில்லை. எனினும், நடுநிலையொடு நோக்கும் நுண்மதியர்க்கு, இங்குக் காட்டப்பெறும் சொற்களே போதியனவாம். குல் - குலா - குலவு. குலவுதல் = விளங்குதல். குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் (தேவா. 794 : 7). குலவு - குலாவு. குலாவுதல் = விளங்குதல். குலப்பம் = செம்புமணல். (w.). குல் - குர் - குரு. குருத்தல் = சினத்தல். (w.). குரு - வ. க்ருத் (dh.). குரு = 1. ஒளி. குருமணித் தாலி (தொல். சொல். 303, உரை). 2. சிந்துரம் (w.). வ. க்ரு (ghr). குருவெறும்பு = செவ்வெறும்பு, முசிடு. (w.). குரு - குருதி = 1. சிவப்பு. குருதித் துகிலின்னுறையை (சீவக. 926). 2. அரத்தம். (திவா.). 3. செவ்வாய். (திவா.). ம. குருதி. குருதிக் காந்தள் = செங்காந்தள். (சீவக. 1651, உரை). குருதிக்கிழமை (வாரம்) = செவ்வாய்க்கிழமை. குருதி வாரந் தனக்குக் கொஞ்ச நாளிற் கிழியும் (அறப் சத. 61). குரு - குருத்து = மாணிக்க வகையுள் ஒன்று. (w.). குருந்து - குருந்தம் = மாணிக்க வகை. (w.). குருந்தம் - குருவிந்தம் = 1. தாழ்ந்த மாணிக்க வகை. (சிலப். 14 : 186, உரை). 2. குன்றி மணி. 3. சாதிலிங்கம். குருவிந்தக்கல் = காவிக்கல். இரத்தின மறியாதானொருவன் குருவிந்தக் கல்லோடொக்கும் இதுவென்றால் (ஈடு, 3 : 1 : 2). குருவிந்தம் - வ. குருவிந்த. குல் - குது. ஒ. நோ : மெல் - மெது - மெத்து, பல் - பது - பத்து -பஃது. குது - குதம் = வெங்காயம். (மலை.) குதம் - குதம்பு. குதம்புதல் = 1. கொதித்தல். 2. சினத்தல். குதம் - கதம் = 1. சினம். கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் (புறம். 33). 2. பஞ்சம். கதம் பிறந்தது (உ.வ.) - (w.). கதகதப்பு = 1. வெம்மை. கதகதென் றெரியுதே காமாக்கினி (இராமநா. ஆரணி. 8). 2. இளவெம்மை. மழைக்காலத்தில் கூரைவீடு கதகதப்பாயிருக்கும். (உ.வ.) கதம் - கதவு. கதவுதல் = சினத்தல். கதவிக் கதஞ் சிறந்த கஞ்சன் (திவ். இயற். 2 : 89). கதவு=சினம். அவன் யானை மருப்பினுங் கதவவால் (கலித். 57:19). கத - கதழ் - கதழ்வு. கதழ்தல் = 1. சினத்தல். (திவா.). 2. விரைதல். கதழெரி சூழ்ந்தாங்கு (கலித். 25 : 4). 3. மிகுதல். கதழொளி (சீவக. 1749). கதழ்வு = 1. கடுமை. 2. விரைவு (திவா.). 3. மிகுதி. (திவா.). கதழ்வும் துனைவும் விரைவின் பொருள (தொல். உரி. 17). குல் - குன் - கன் - கனல் = நெருப்பு. உழிதரு காலுங் கனலும் (திருவாச. 5 : 8). கனலுதல் = 1. எரிதல். வேமிருந்தை யெனக் கனலும் (கம்பரா. சூர்ப்ப. 118). 2. சுடுதல். வயிற்றகங் கனலுஞ் சூலை (பெரியபு. திருநா. 62). 3. கொதித்தல். தீப்போற் கனலுமே (நாலடி. 291). 4. சிவத்தல். கண்கனன்று........ நோக்குதலும் (பு.வெ. 6 : 23). 5. சினத்தல். மாமுனிகனல மேனாள் (கம்பரா. நீர்விளை. 2). கனல்வு = சினம். இங்குநின் வர வென்னவெனக் கனல்வெய்த (கம்பரா. சூளா. 78). க. கனல், தெ. கனலு. கனல் - கனலி = 1. நெருப்பு. (திவா.) 2. கதிரவன். வெங்கதிர்க் கனலி (புறம். 41 : 6). கனல் - கனலோன் - கதிரவன். காடுகனலக் கனலோன் சினஞ்சொரிய (பு.வெ. பொதுவியற். 10). கனல் - கனற்று. கனற்றுதல் = 1. எரிவித்தல். கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய் (கலித். 148). 2. சுடுவித்தல். வெயில் பிள்ளையுடம்பைக் கனற்றிவிட்டது. (உ.வ.). 3. வெதுப்புதல், கனற்றக் கொண்ட நறவென்னாம் (புறம். 384). மிக விளங்குதல். காதல் கனற்ற நின்றானும் (தேவா. 696 : 7). கனனிறக்கல் = மாணிக்கம். (w.). குல் - குள் - கள் - காள் - காளம் = சுடுகை. காளவாய் (காளவாசல்) = சுண்ணாம்புக்கல். சுடும் சுள்ளை. ம. காளவாய். காளவனம் = சுடுகாடு. (சூடா.). L. calor = heat. E. caloric. L. calx, G. kalk, E. calc, OS. calc, E. chalk. LL. calcina = lime, E. calcine = to reduce to quicklime. காள் - காழ் = 1. ஒளி. (திவா.). 2. பளிங்கு. (பிங்.). 3. முத்து. பரூஉக் காழாரம் (சிலப். 4 : 41). 4. மணி. பருக்காழுஞ் செம்பொன்னும் (பு.வெ. 9 : 14). 5. மணிவடம். முப்பத்திருகாழ் (சிலப். 6 : 87). 6. பூமாலை. ஒருகாழ் விரன்முறை சுற்றி (கலித். 54 : 7). 7. நூற்சரடு. திருக்கோவை காழ்கொள (பரிபா. 6 : 15). காழ்த்தல் = உறைத்தல். (திவா.). காழ்ப்பு = உறைப்பு. (திவா.). காழ் - காசு = 1. மணி. நாண்வழிக் காசுபோலவும் (இறை. 2, உரை). 2. மணிமேகலை. பட்டுடை சூழ்ந்த காசு (சீவக. 468). 3. பொன். (ஆ. Ã.). 4. அச்சுத்தாலி, காசும் பிறப்புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7). 5. ஒரு பழைய பொற்காசு. 6. சிறு செப்புக்காசு. நெஞ்சே யுனையோர் காசா மதியேன் (தாயு. உடல் பொய். 72). 7. பணம். எப்பேர்ப்பட்ட பல காசாயங்களும் (S.I.I. i, 89.). ம. காசு. வ. காச். E. cash. காசு - காசம் = 1. பளிங்கு. 2. பொன். காள் - கார். கார்த்தல் = உறைத்தல். (பிங்.). கார் - கார்ப்பு = உறைப்பு. (சூடா.). காள் - காய். காய்தல் = (செ. குன்றிய வினை) : 1. வெயில் நிலா எறித்தல். நிலாக் காய்கிறது. (உ.வ.). 2. நீர் சூடாதல். வெந்நீர் காய்கிறது. (உ.வ.). 3. உடம்பு சுடுதல். உடம்பு காய்கிறது. (உ.வ.). 4. உணத்தல். புழுங்கல் காய்கிறது. (உ.வ.). 5. ஈரம் புலர்தல். வேட்டி காய்கிறது. (உ.வ.). 6. பயிர் வெயிலால் வாடுதல். 7. வயிறு பசியால் எரிதல். 8. புண் ஆறி வருதல். 9. வறுமையால் வருந்துதல். 10. இளைத்தல். காய்தலு முண்டக் கள்வெய் யோனே (புறம். 258). (செ. குன்றாவினை): 1. எரித்தல். மதவேள்தன் னுடலங் காய்ந் தார் (தேவா. 15. 6.) 2. அழித்தல். கஞ்சனைக் காய்ந்தானை (திவ். பெரியதி. 7 : 6 : 5). 3. விலக்குதல். கோப முதலிய குற்றங் காய்ந்தார் (பெரியபு. அப்பூதி. 2). 4. வெறுத்தல். காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கணாய்தல் (அறநெறி. 22). 5. கடிந்து கூறுதல். கறுத்தெழுந்து காய்வாரோடு (நாலடி. 315). 6. வருந்துதல். காய்கின்ற பழவினை போம் (குற்றா. தல. நூற்பய. 15). ம. காய், க. காய். தெ. காயு, து. காயி. காய் - காய்ச்சல் = 1. வெம்மை, 2. சுரநோய். 3. உலர்ச்சி. அரிசி நல்ல காய்ச்சல். (உ.வ.). 4. வறட்சி. 5. வறுமை. காய்ச்சுதல் = 1. குழம்பு சமைத்தல். 2. இரும்பை நெருப்பிற் பழுக்க வைத்தல். 3. ஈயத்தை உருக்குதல். காய்த்து - காச்சு. காய் - காயம் = 1. வெந்த கறித்துண்டு. நெய்கனி குறும்பூழ் காயமாக (குறுந். 389). 2. உறைப்பு. (பிங்.). 3. மிளகு. காயத்தின் குழம்பு தீற்றி (சீவக. 788). 4. கறிக் கூட்டுச்சரக்கு. காயங்களான் இனிய சுவைத்தாக்கி (குறள். 253, உரை). 5. ஈருள்ளி. காயமுங் கரும்பும் (சிலப். 25 : 45). 6. பெருங்காயம். ம. காயம், தெ. காயமு. ஐங்காயம் = கடுகு, வெங்காயம், பெருங்காயம், ஓமம், வெந்தயம். காய் - காய்ந்து - காந்து. காந்துதல் = 1. (செ. குன்றியவினை) வெம்மை கொள்ளுதல். 2. ஒளிவிடுதல். பரம்பிற்காந்து மினமணி (கம்பரா. நாட்டுப். 7). 3. எரிவெடுத்தல். கண்காந்துகிறது. (உ.வ.). 4. சமையு முணவு கருகுதல் சோறு காந்திப் போயிற்று. (உ.வ.). 5. மனங் கொதித்தல். புத்தி போய்க் காந்து கின்றது (கம்பரா. சடாயுகா. 37). 6. பொறாமை கொள்ளுதல். அவனைக் கண்டு காந்துகிறான். (உ.வ.). (செ. குன்றாவினை) = 1. சுடுதல். 2. வெகுள்தல். காந்தி மலைக்குத்து மால்யானை (திருவள். 11). ம. காந்து. காந்து - காந்தல் = 1. எரிகை. 2. எரிந்த கருகல். 3. காய்ந்த பயிர். (w.). 4. சினம். (w.). காந்தல் - காந்தள் = 1. செங்கோடல். கடிசுனைக் கவினிய காந்தள் (கலித். 45). 2. காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60). 2. முருகனுக்குரிய காந்தள் மலரைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6 : 9). ம. காந்தள். சிறப்புப்பொருள் மறைந்தபின் செங்காந்தள் எனப்பட்டது. ஒ.நோ : தாமரை (செம்முண்டகம், முண்டகம்.) செந்தாமரை. காந்து - காந்தி = 1. வெம்மை. (மூ.அ.). 2. கதிர் (w.). 3. ஒளி. (சூடா.). 4. அழகு. (பிங்.). 5. காவிக்கல். (w.). காந்தி - வ. (kanti) காந்தி. காந்து - காந்தாளம் = சினம். (w.). காந்தாளம் - காந்தாளிகம் = சின்னி. (மலை.). காந்து - காந்துகம் = காந்தள். L. cand, shine, be white. L. candela, cylinder of Spernaceti enclosing with, for giving light. O.E. candel, E. candle. L. candescere - E. candescent = glowing with white heat. L. candidus, white - E. candide - E. candid = frank. L. candor. - E. candour = open - mindedness. L. candidatus - E. candidate = Roman aspirant who was white-robed when canvassing votes. Skt. chand, shine, chandra - noon that which shines. காய் - காய்ங்கு - காங்கு - காங்கை = வெப்பம். க. காங்கெ, தெ. காக்க (kaka). காங்கு - கங்கு = அழல் துண்டு. குள்-குண்-குண்பு - கும்பு. ஒ.நோ: சண்பு - சம்பு, கொண்பு - கொம்பு. கும்புதல் = சமைக்கும் உணவு தீய்ந்து போதல். கும்பல் = கும்பல் நாற்றம். கும்பி வீசுகிறது என்னும் வழக்கை நோக்குக. கும்பு - கும்பி = 1. தழல். 2. சுடுசாம்பல். தெ. 3. எரி நரகம். கும்பி கும்முநரகர்கள் (திவ். திருவாய். 3 : 7 : 8). வடமொழியிலுள்ள கும்பீ என்னுஞ் சொல், கும்பத்தையன்றி நரகத்தைக் குறிக்காது. ஆதலால், கலத்திற் சமைத்தல் அல்லது கலத்தைச் சுடுதல் என்று பொருள்படும் கும்பீபாக என்னும் தொடர்ச்சொல்லை, கும்பி (நரகம்) என்னும் தென் சொற்கு மூலமாகச் சென்னைப் பல்கலைகழகத்தில் தமிழ் அகரமுதலி காட்டியிருப்பது. எத்துணைக் கயமையான தமிழ்ப் பகைமை என்பதை நோக்குக. தீயோர்க்குத் தீயுழி (நரகம்) கலஞ்சுடு சுள்ளையும் அடுகலமும் போன்றிருக்கின்றதாம்! கும்பியிடுசட்டி - கும்பிடுசட்டி = 1. கணப்புச் சட்டி. 2. தட்டார் நெருப்புச் சட்டி. தெ. கும்பட்டி, க. கும்பட்டெ. கும்பிநாற்றம் = கும்பல் நாற்றம். குண் - கண் - கண - கணம் = கணைநோய் (பிங்). கணகணத்தல் = 1. எரிதல். 2. சுடுதல். கணகணவென்று எரிகிறது என்பது உலக வழக்கு. கண - கணப்பு = குளிர் காயும் தீ. கணப்புச்சட்டி = குளிர் காயும் நெருப்புச் சட்டி. கண - கணை = உடம்புக்காங்கை நோய். கணைச் சூடு என்பது வழக்கு. கண் - கடு. கடுத்தல் = 1. உறைத்தல். 2. நோவெடுத்தல். 3. விரைதல். காலெனக் கடுக்குங்கவின்பெறு தேரும். (மதுரைக். 388). 4. மிகுதல். நெஞ்சங் கடுத்தது (குறள். 706). 5. சினத்தல். மங்கையைக் கடுத்து (அரிச். பு. நகர்நீ. 110). 6. வெறுத்தல். பொன்பெய ருடையோன் தன்பெயர் கடுப்ப (கல்லா. 5). ம. கடு. கடு - கடுப்பு = 1. தேட்கொட்டுப் போன்ற கூர் நோவு. கடுப் புடைப் பறவைச் சாதியன்ன (பெரும்பாண். 229). 2. வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4 : 49). 3. வேகம். மண்டு கடுப்பினிற் படரும் வாம்பரி (சேதுபு. கத்துரு. 15.) 3. கடும்புளிப்பு. தேட்கடுப் பன்ன நாட்படுதேறல் (புறம். 392). 4. உறைப்பு - காந்தல். கடுப்புக் கழிச்சல் = வயிற்றுளைச்சல் (சீதபேதி). கடு - கடுகு = காரமுள்ளது. ம. கடுகு. கடுகுதல் = 1. மிகுதல். பசி கடுகுதலும் 2. விரைதல். கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் (மணி. 14 : 80). கடுகு - கடுகம் = 1. கார்ப்பு. (திவா.). 2. சுக்கு மிளகு திப்பிலி என்னும் முக்கடுகங்களுள் ஒன்று. கடுகம் - வ. கடுக (katuka). கடு காடு = மிகுதி. எங்குப் பார்த்தாலும் வெள்ளக்காடு (உ.வ.). கடு - கட்டம் = 1. கடுமை. 2. மெய் வருத்தம். கட்டம் - வ. கஷ்ட. ஒ.நோ : நடு - நட்டம். கஷ்ட என்னும் வட சொற்குக் கஷ் என்னும் வினை முதனிலையை ஐயறவு மூலமாகக் குறித்துள்ளார் மானியர் வில்லியம்சு. கஷ் என்னும் வினைச் சொற்குத் தேய் என்பதே பொருள். கட்டம் - காட்டம் = 1. எரிநோவு. 2. உறைப்பு. 3. குணவேகம். சாறாயம் மிகக் காட்டமாயிருக்கிறது. (உ.வ.). தெ. காட்டு (g) கடு - கடி = 1. விளக்கம். அருங்கடிப் பெருங்காலை (புறம். 166.) 2. சிறப்பு. அருங்கடி மாமலை தழீஇ (மதுரைக். 301). 3. மிகுதி. கடிமுரசியம்பக் கொட்டி (சீவக. 440). 4. விரைவு. எம்மம்பு கடிவிடுதும் (புறம். 9). 5. உறைப்பு. கடிமிளகு தின்ற கல்லா மந்தி (தொல். சொல். 384, உரை). 6. அச்சம். அருங்கடி வேலன் (மதுரைக். 611). 7. பேய். கடிவழங் காரிடை (மணி. 9 : 49). கடி - கரி கரித்தல் = 1. மிகுதல். மிளகு நீர் உப்புக் கரிக்கிறது. (உ.வ.). 2. உறுத்துதல். எண்ணெய் பட்டுக் கண் கரிக்கிறது. 3. வெறுத்தல். கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை (திருமந். 2431). 4. பழித்தல். கரி - கரிப்பு = 1. காரம். ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே (தொல். சொல். 384). 2. உறுத்தம். 3. சுவைமிகை. 4. அச்சம். (திவா.). 5. வெறுப்பு. கரி - காரம் = உறைப்பு, மிகுதி. பலகாரம் = பல சுவை மிக்க சிற்றுண்டி. காரம் = 1. உறைப்பு. 2. காரவுப்பு. (w.) 3. சாம்பலுப்பு. 4. வண்ணான் காரம். 5. சாயக்காரம். 6. சீனிக்காரம். 7. வெண்காரம். 8. அக்கர காரம். (தைலவ தைல, 112). 9. கோளக நஞ்சு. (சங். அக.). 10. திருநீறு. காரமென்றுரைப்பர் (திருக்காளத். பு. 26 : 4). 11. சினம் அவன் என்மீது காரமாயிருக்கிறான். (உ.வ.). ம. காரம், தெ. காரமு, க, து. கார. காரச்சீலை, காரச்சேவு, காரத்துளி (பூந்தி), காரப்பசை, காரப் பொடி, காரமருந்து முதலியன வேகத்தையும் உறைப்பை யுமுடைய பொருட்பெயர்கள். காரம் = மிகுதி, கடுமை, வலிமை, உரிமை, பொறுப்புரிமை, வினையுரிமை, உறவுரிமை, உடைமை. காரம் - காரன் = வலியன், உரியன், உடையான். காரி (பெ.பா.) வீட்டுக்காரன் என்பது உரிமையும், பணக்காரன் என்பது உடைமையும், காவற்காரன் என்பது வினையுடைமையும் (குலப்பெயராயின் வினையுரிமையும்), அண்ணன்காரன் என்பது உறவுரிமையும், உணர்த்தும் பெயர்களாம். தோட்டக்காரன், வண்டிக்காரன், மாட்டுக்காரன் என்பன, உரியவனைக் குறிக்கா விடத்துப் பொறுப்புரிமைக்காரனைக் குறிக்கும். உரியவன் - சொந்தக்காரன். காரன் காரியீற்றுப் பெயர்கள் நூற்றுக்கணக்கின. காரன் - வ. கார. வட மொழியாளர் இவ்வீற்றை வடசொல்லாக்குவதற்கு, க்ரு (செய்) என்னும் முதனிலையினின்று திரித்துச் செய்பவன் என்று பொருள் கூறுவர். ஆட்டுக்காரன், கோழிக்காரன், சொந்தக் காரன், தண்ணீர்க்காரன், நாழிமணிக்காரன், புள்ளிக்காரன், முட்டைக்காரன், வெள்ளைக்காரன் முதலிய பெயர்கட்குச் செய்பவன் என்னும் பொருள் பொருந்தாமை காண்க. வேலைக் காரன், கூலிக்காரன் என்பனவும், வினையுடைமையே குறிக்கும். செய்வானைக் குறிக்கும் வடமொழி யீறுகள், கார, காரு, காரி, காரின் (செய்பவன்), காரிணீ (செய்பவள்) எனப் பல வடிவில் நிற்கும். அதிகரித்தல் = மிகுதல். அதிகரி - அதிகாரம் = மிகுதி. வலிமை, உரிமை, நூற்பெரும் பிரிவு. அதிகாரம் - அதிகாரி, அதிகாரன். அதிகரி என்னும் வினைச்சொல் வடமொழியில் இல்லை. அதித்தல் = மிகுதல். அதி - அதனம் = மிகுதி. இச் சொல்லும் வடமொழியில் இல்லை. அதிகரி என்பது ஒரு மீமிசைச் சொல். குல்5 (துளைத்தற் கருத்துவேர்) அடிக்கருத்துக்களும் கிளைக் கருத்துக்களும் குல் - குலை. குலைத்தல் = 1. கிளறிக் கலைத்தல். 2. கட்டுக் கோப்பைப் பிரித்தல். 3. பிரித்தல் அல்லது ஒற்றுமையைக் கெடுத்தல். 4. தாறு மாறாக்குதல். 5. அழித்தல். குலை - கலை. கலைதல் = பிரிதல். கலைத்தல் = 1. கட்டுக் கோப்பைப் பிரித்தல். 2. கூட்டத்தைப் பிரித்தல். 3. பகைவரைச் சிதைத்தல். பற்றலரைக் கலை... வேந்தர் (அஷ்டப். திருவரங் கத்தந். 25). 4. எண்ணத்தை அல்லது திட்டத்தைக் கெடுத்தல். இராவணனைக் கலைக்கின்றானே (இராமநா. உயுத். 31). 5. பலகையில் எழுதியதை அழித்தல். ம. கல. குல் - குர் - குரல். ஒ. நோ : உல் - உர் - உரல். குரல் = 1. தொண்டைக் குழி (குரல்வளை). 2. தொண்டை (மிடறு). மணிக்குர லறுத்து (குறுந். 263). 3. தொண்டையில் எழும் ஒலி. 4. சொல். யாவருந் தண்குரல் கேட்ப (கலித். 142 : 9) 5. பாடும் இசை. காமன் காமுறப் படுங்குரறருமிது (சீவக. 1218). 6. ஏழிசை யுள் முதலாவது. குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் (சிலப். 3 : 85). 7. அஃறிணைப் பேச்சொலி. சேவல் மயிற் பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல் கேட்டு (நளவெண். சுயம். 41). 8. பறையோசை. தாழ்குரற் றண்ணுமை (சிலப். 3 : 27). ம. குரல், க. கொரல், தெ. குர்ரு குல் - கல் - கலம் = தோண்டப்பட்ட அல்லது குழிந்த ஏனம். கல் - கன் = 1. குழிந்த துலைத்தட்டு. 2. கலம். 3. கலத்தொழில். மின்னும் பின்னும் பன்னும் கன்னும் (தொல். 345). கன் - கன்னான் = செப்புக்கலஞ் செய்பவன், செம்புகொட்டி (திவா). ம. கன்னான். ல்-ன். ஒ.நோ : ஒல் - ஒன் துல் - துன். கன்னுதல் = துளைத்தல், தோண்டுதல். கன் - வ. Khan, கன் - கன்னம் = 1. திருடன் சுவரைத் துளைக்குந் துளை. 2. அங்ஙனந் துளைக்குங் கருவி (பிங்.). 3. அங்ஙனந் துளைத்துச் செய்யும் திருட்டு. கன்னமே கொடுபோயின கண்டகர் (இரகு. யாகப். 42). 4. துலைத்தட்டு (திவா). 5. கன்னான் செய்த படிமை. கன்னந் தூக்கி (ஐங்குறு. 245). 6. துளையுள்ள காது. (திவா.) 7. காதையடுத்துள்ள அல்லது நடுவிற் குழிவிழும் கதுப்பு (Cheek). ஒ.நோ : செவி - செவிடு = கன்னம். கன்னம் (திருடர் செய்த சுவர்த்துளை) - ம. கன்னம், தெ. கன்னமு, க. கன்ன, வ. கன்ன (kh). கன்னக்கோல் - ம. கன்னக்கோல், தெ. கன்னகோல. கன்னக்காரன் - ம. கன்னக்காரன், க. கன்னகார (g), தெ. கன்ன காடு (g). கன்னப்பூ (காதணி வகை) - ம. கன்னப்பூவு. கன்னம் (காது) - ம. கன்னம், க. கன்ன, வ. கர்ண, வடமொழியில் கர்ண என்னுஞ் சொற்கு மூலமில்லை. மூலமாகக் காட்டப்படும் க்ருத், க்ரூ என்பவை மூலமாகா. க்ரூத் = செய்கை. க்ரூ = 1. கொட்டு, எறி, கலை. 2. சிதை, சேதப்படுத்து. 3. அறி, அறிவி. கன் - கன்னல் = 1. நீர்க்கலம். தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் (நெடுநல். 65). 2. நாழிகை வட்டில். கன்னலின் யாமங் கொள்பவர் (மணி. 7 : 65). 3. நாழிகை. காவத மோரொரு கன்னலினாக (கந்தபு. மார்க். 142). கன் - கனி = பொன், இரும்பு முதலிய மாழை (வ. உலோகம்) தோண்டியெடுக்குஞ் சுரங்கம். கனி - வ. கனி (kh). குல் - குள் - குளம் = நீரைத் துளைப்பது போல் முழுகிக் குளிக்கும் நீர்நிலை. ம. குளம், க. கொள, தெ. கொலனு, வ. கூல. குள் - குளி. குளித்தல் = 1. நீருள் முழுகுதல். 2. கடலுள் மூழ்கி முத்தெடுத்தல். பணிலம் பல குளிக்கோ (திருக்கோ. 63). நீராடுதல். களிப்பர் குளிப்பர் (பரிபா. 6:103). 4. முழுகுவது போல் உடம்பில், ஆழத் தைத்தல். கூர்ங்கணை குளிப்ப (பு. வெ. 10, சிறப்பிற். 10, கொளு). 5. அழுந்திப்பதிதல். மென்கொங்கை யென்னங்கத் திடைக் குளிப்ப (திருக்கோ. 351). 6. கூட்டத்திற்குட் புகுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறம். 6 : 12). 7. முழுகினாற் போல் மறைதல். யானறித லஞ்சிக் குளித்து (கலித். 98). 8. தோல்வியுற்று மறைதல், தோல்வியுறுதல். மீன் குளிக்குங் கற்பின் (சீவக. 2141). ம. குளி. குளி - குழி = 1. பள்ளம் (திவா). 2. பாத்தி. இன்சொற் குழியின் (நான்மணி. 16). 3. நீர்நிலை (பிங்.). 4. கிணறு (திவா.). 5. வயிறு. (அக.நி.). 6. கனவடி. 7. ஒரு நிலவளவு. குழி - ம. குழி. க. குழி, தெ. கொய்யி (g), மராத். குடி (kh). குழிதல் = உட்குழிவாதல். குழிந்தாழ்ந்த கண்ணவாய் (நாலடி. 49). குழித்தல் = 1. குழியாக்குதல். குழித்துழி நிற்பது நீர். (நான்மணி. 30) 2. செதுக்குதல். குழித்த மோதிரம் (கலித். 84, உரை). 3. குழித்தெழுதுதல். க. குழி. கும்பக் குழிய என்பது உலக வழக்கிணை மொழி. குழி - குழியல் = குழிந்த மாழைக்கலம். குழிதாழி = குழிந்த பெருந்தொட்டி. ம. குழித்தாழி. குழிசி = பெரும்பானை. சோறடு குழிசி (பெரும்பாண். 366). குழிமி = மதகு. குழிவு - குழிவல் - கூவல் = கிணறு. கூவலன்ன விடரகம் (மலைபடு. 366). கூவல் - வ. கூப. குழிப்பு - குழிப்பம் - கொப்பம் = யானை பிடிக்க வெட்டும் பெருங்குழி. கைம்மலை செல் கொப்பத்து வீழ (குமர. பிர. மீனாட். பிள்ளை. 11). குழி - குழிம்பு - குழும்பு = குழி. ஆழ்ந்த குழும்பிற் றிரு மணி கிளர (மதுரைக். 273). ம. கொப்பம். குழல் = 1. உட்டுளை. குழற்கா லரவிந்தங் கூம்ப (தமிழ்நா. 63). 2. உட்டுளைப் பொருள் (திவா.) 3. இசைக் குழல். (சூடா). ம. குழல், க. கொழல். குழல் - குடல் = குழல் போன்ற உட்டுளையுள்ள உறுப்பு. ம. குடல். குடல் - குடர். ம. குடர். குடருங் கொழுவும் (நாலடி. 46). ஒ.நோ: புழல் - புடல். குழி - குழை = 1. துளை. கோடிநுண் டுகிலுங் குழையும் (சீவக. 1369). 2. குழல். (பிங்.). 3. காது. மணித்தோடுங் குழையிலாட (அஷ்டப். சீரங்க நாயகி. ஊச. 3). குழை - குகை = 1. மலைக்குகை. (பிங்.) 2. மாழைகளை உருக்குங் கலம். கருமருவு குகையனைய காயத்தி னடுவுள் (தாயு. 32). ஒ.நோ: முழை - முகை = குகை. குகை - வ. குஹா (g). குகை - குவை = பொன்னுருக்குங் கலம். இருந்தைக் குவை யொத்தன (தணிகைப்பு. திருநாட்டுப். 63). குவை - ம. குவ, வ. குஹா (g). E. cave, L. cava. குழை - குழாய் = 1. துளை. 2. துளையுடைப்பொருள். (பிங்.). ஒ.நோ. கழை - கழாய். குழை - குடை. குடைதல் = 1. கிண்டுதல். குடைந்து வண்டுண்ணுங் துழாய் முடியானை (திவ். திருவாய். 1:7:11) 2. கடைதல். நெய் குடை தயிரின் (பரிபா. 16:3). 3. துளைத்தல். 4. நீரில் மூழ்குதல். குடைந்து நீராடு மாதர் (கம்பரா. பால. நீர்வி. 12). 5. துருவுதல். 6. நாடு துருவுதல். குடைந்துல கனைத்தையும் நாடும் (கம்பரா. சுந்தர. உருக். 23). 7. கடுமையாய் வினவி வருத்துதல். 8. குடைந்தாற் போல் நோவெடுத்தல். ஒ.நோ : புழை - புடை. கடை - கடலை = வறுத்துக் கடைந்த பயறு. குளி - குடி. குடித்தல் = நீரை உட்புகுத்துதல். ஒ.நோ : முழுகு -முழுங்கு - விழுங்கு. ள-ட. ஒ. நோ : களிறு - கடிறு, கெளிறு -கெடிறு. குள் - குண்டு = 1. பள்ளம். 2. கிடங்கு. 3. நீர்க்கிடங்கு. 4. சிறு நன்செய். 5. ஆழம். வண்டுண் மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி (மணி. 8 : 8) ம. குண்டு. குண்டுங்குழியும் என்னும் வழக்கை நோக்குக. குண்டு - குண்டில் = சிறுசெய். (திவ.). குண்டு - குண்டம் = 1. பள்ளம். 2. குழி. 3. பானை (பிங்.). 4. சிறுகுளம் (திவா.). 5. வேள்விப் பள்ளம் (ஓம குண்டம்). மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப (கல்லா. 94 : 12). ம. குண்டம். வ. குண்ட. குள் - குண் - குணம் = கடலாற் பள்ளமான கிழக்கு. குணம் -குணக்கு = கிழக்கு. குண்டு - குட்டு - குட்டம் = 1. மடு. நெடுநீர்க் குட்டத்துத் துடு மெனப் பாய்ந்து (புறம். 243 : 9). 2. ஆழம். இருமுந்நீர்க் குட்ட மும் (புறம். 20 : 1). 3. ஏரி. 4. குட்டநாடு. தென்பாண்டி குட்டம் (நன். 272, மயிலை). குட்டநாடு = சேரநாட்டைச் சேர்ந்ததும், கோட்டையம் கொல்லம் என்னும் நகரங்களைக் கொண்டதும் ஏரிகள் மிகுதியாக வுள்ளதுமான பழைய கொடுந்தமிழ் நாடு. குட்டநாட்டுத் திருப்புலியூர் (திவ். திருவாய். 8 : 9 : 1). குட்டு - குட்டை = சிறுகுளம். குல் - கில் கில்லுதல் = தோண்டுதல். கில் - கீல். கீலுதல் = கிழித்தல். (சூடா.) க. கீல், தெ. சீலு (c) கீன்றல் = கீறுகை. (திவா.). கில் - கெல். கெல்லுதல் = தோண்டுதல். கிணறுகெல்ல (தனிப்பா. 11, 140, 356). கில் - கிள் - கிளறு. கிளறுதல் = 1. கிண்டுதல் ஏனமோடன் னமாய்க் கிளறியும் பறந்தும் (தேவா. 101 : 9) 2. துழாவுதல். 3. துருவியாராய்தல். 4. பழையதை நினைப்பூட்டுதல். க. கௌர், தெ. கெலகு. கிள் - கிளை. கிளைத்தல் = 1. கிளறுதல். கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின் (புறம். 176 : 2). 2. அடிமரம் கிளறப் பட்டதுபோற் கப்பு விடுதல். ம. கிளு. கிளை = கவை, பிரிவு, சுற்றம், இனம், கிளைஞர் = உறவினர். கிள் கிண் - கிணம் = கிணறு. கிண் - கிண்ணம் = 1. சிறுவட்டில். மழக்கை யிலங்கு பொற் கிண்ண மென்றலால் (திருவாசக. 5: 92). 2. நாழிகை வட்டில். (பிங்.). கிண் - கிண்ணி = கிண்ணம். கிண் - கிணறு. உவரில் கிணற்றின்கட் சென்றுண்பர் (நாலடி. 263). ம. கிணறு. கிண் - (கெண்) - கேணி = 1. கிணறு (திவா). 2. சிறு குளம். (தொல். சொல். 400, உரை). 3. அகழி. (திவா). k., க. கேணி. து. கணி (அகழி). கிள் - கிண்டு. கிண்டுதல் = 1. கிளறுதல். (பிங்.). 2. தோண்டுதல். 3. ஆராய்தல். ம. கிண்டு. கிண்டு - கிண்டல் = 1. கிளறல். 2. தோண்டல். 3. தூண்டல். 4. பகடிபண்ணல். கிண்டு - கெண்டு. கெண்டுதல் = 1. கிண்டுதல். வண்டு கெண்டி மருவும் பொழில் (தேவா. 626 : 10). 2. தோண்டுதல். கவலை கெண்டிய கல்வாய் (குறுந். 233). 3. அறுத்துத் தின்னுதல். மன்றத்து மதவிடை கெண்டி (பெரும்பாண். 143). தெ. செண்டு (c). கிள் - கிழி. கிழித்தல் = 1. கீறுதல். 2. பீறுதல். நரியினங்கடம் மெயிற்றினாற் சிதையக் கிழித்த பேரிறால் (கந்தபு. ஆற்று 23). 3. பிளத்தல். நெடுங்கிரி கிழித்து (கம்பரா. நிகும். 88). 4. முறித்தல். 5. கண்டித்தல். சிலவசனங்கள் சொல்லிக் கிழிப்பதும் (கவிகுஞ். 2) 6. திறத்தல். வாயுழுவை கிழித்தது (திருக்கோ. 72) 7. தோற்கடித்தல். 8. கோடு கீறுதல். 9. அழித்தல். ம. கிழி. E. cleare, OE, cleof, OS, OHG. kliop, ON. kljuf. கிழி = 1. கிழித்த துணி. (திவா.). 2. துணியில் எழுதிய படம். கிழி பிடித்து (திருக்கோ. 74). 3. துணியில் முடிந்த பண முடிப்பு. (திவா.) கிழி - கிழியல் - கிழிசல் = கிழிந்தது. கிழி - கிழிதம் = பணமுடிப்பு. (திருக்கோ. 183, உரை). கிழிப்பு = 1. கிழிக்கை. 2. பிளப்பு. 3. குகை. வரைக் கிழிப் பன்ன (நற். 154). கிள் - கீள். கீளுதல் = 1. கிழித்தல். கீண்டிலென் வாயது கேட்டு நின்றயான் (கம்பரா. அயோத். பள்ளி. 71). 2. உடைதல். தெண் ணீர்ச் சிறுகுளங் கீழ்வது மாதோ (புறம். 118 : 3). தெ. சீழ் (உ). கீள் = 1. கூறு. கீளிரண்டாகக் குத்தி (சீவக. 2248). 2. துணியா லான அரைநாண். வெளுத்தமைந்த கீளொடு கோவணமுந் தற்று (தேவா. 811 : 2). கீளுடை (இலங்கோடு). கீளுடையான் (காளத். உலா, 500). கீள் -கீழ். கீழுதல் = 1. கிழித்தல். பழம் விழுந்து..... பஃறாமரை கீழும் (திருக்கோ. 249). 2. பிளத்தல், உறுகால் வரை கீழ்ந்தென (சீவக. 1157). 3. தோண்டுதல். வேரொடுங் கீழ்ந்து வௌவி (சீவக. 2727). 4. சிதைத்தல். கிழமையைக் கீழ்ந்திடா நட்பு (குறள். 801). 5. கோடு கிழித்தல். 6. பறியுண்ணுதல். மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென (சூளா. சீய. 144). கீழ் - கீழ்க்கு - கிழக்கு = 1. பள்ளம். (திவா). 2. கீழ், காணிற் கிழக்காந் தலை (குறள். 488). 3. கீழிடம். கிளை இய குரலே கிழக்குவீழ்ந் தனவே (குறுந். 337). 4. பள்ளமான கீழ்த்திசை. (திவா.) 5. இழிவு, கிழக்கிடு பொருளொடு (தொல். பொ. 280). ம. கிழக்கு. கிழக்கு - கிழங்கு = நிலத்தின்கீழ் விளைவது. கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க் கும்மே (புறம. 109; 6). ம. கிழங்ஙு. கிழங்கு - கிடங்கு = 1. பள்ளம். 2. குழி. 3. குளம். (சூடா). 4. அகழி. பூங்கிடங்கி னீள்கோவல் (திங். இயற். முதற். 77). கிடங்கு - கிடங்கர் = 1. அகழி. 2. கடல். திரைக் கிடங்கர் சூழ் குவலயப் பரப்பில் (உபதேசகா. விபூதி. 35). கீள் - கீறு. கீறுதல் = 1. கிழித்தல். (திவா.). 2. பறண்டுதல். 3. அறுத்தல், புண்கீறிய குருதிப்புனல் (கம்பரா. பால. பரசுராமப். 9). 4. வகிர்தல். 5. கோடுகிழித்தல். 6. கீறியெழுதுதல். (பிங்.). கீறு - கீறல் = 1. கிழிகை, 2. தற்குறி. கீறு - கீற்று = 1. சில். துண்டு. 2. கூரைவேயுங் கிடுகு. கிள் - கிறு - கிறாம்பு. கிறாம்புதல் - மெல்லச் செதுக்குதல். கீறு ம. கீறு, கீறு (கோடுகிழி) - க. கீறு (g), தெ. கீயு (g). கீறு (கிழி) க. கீறு, தெ. கீறு (g). குள் - கொள் - கொழுது. கொழுதுதல் = குடைதல். நறுந்தாது கொழுதும் பொழுதும் (குறுந். 192 : 5.) கொழுது - கோது. கோதுதல் = 1. இறகு பூந்தாது முதலியவற்றைக் குடைதல். மயில்கோது கயிலாயம் (தேவா. 1157 : 6). 2. மயிர்ச் சிக்கெடுத்தல். கோதிச் சிக்கின்றிமுடிக்கின்ற.....FHÈ”(பெருந்தொ. 1323). 3. சிதறுதல். கோதிக் குழம்பலைக் குங்கும்பத்தை (நாலடி. 47). 4. ஓலை வாருதல். குள் - குய் - குயில். குயிலுதல் = 1. துளைத்தல். குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில் (நெடுநல். 88). 2. மணி பதித்தல். சுடர்மணியின் பத்தி குயின்றிட்ட பழுப்பேணியில் (கந்தபு. வள்ளி. 50). குயில் = துளை (பிங்.). குள் - (குர்) - குரு - கோர். கோர்த்தல் = நூலை அல்லது நாணைத் துளைவழி துருவச் செய்தல். ம. கோர். கோர் - கோர்வை = கோர்க்கை, மாலை, தொடர். ம. கோர்வ. கோர் - கோ - கோவை. கோத்தல் = 1. மணியூடு நூலைத் துருவச் செய்தல். கோத்தணிந்த வெற்புமணி. (பெரியபு. மானக்கஞ். 22). 2. ஒழுங்காக அமைத்தல். பார்த்தவிட மெங்கணுங் கோத்த நிலை குலையாது (தாயு. கருணாகர. 4). 3. முறைப்படச் சொல்லுதல். பூமியாண் முறையுங் கோத்தார் (பாரத. சம்பவ. 113). 4. திரட்டிச் சொல்லுதல். கோமின் துழாய்முடி யாதி யஞ்சோதி குணங்களே (திவ். திருவாய். 4:1:7). 5. கதைபுனைதல். 6. கைபிணைத்தல். குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் (திவ். திருவாய். 6:4:1). 7. ஒன்று சேர்த்தல். அன்பரைக் கோத்தற விழுங்கிக் கொண்டு (தாயு பொருள்வ. 3) 8. மூக்குள் நீர் கொள்ளுதல். நீர் கோத்தல், நீர்க்கோவை (மூக்குச்சளி) என்பன உலக வழக்கு. k., க. கோ. கோவை = 1. கோக்கை. கோவையார் வடக்கொழுங்கவடு (கம்பரா. அயோத். வரைக். 1) 2. கோத்த மணிமாலை (பிங்.). 3. வினையேற்பாடு கோத்த கோவை நன்றாயினும் (பாரத. சூது.64). 4. அகப்பொருட் கோவை. சீரணங் காகிய சிற்றம்பலக் கோவை செப்பிடினே (தனிப்பாடல்). k., தெ. கோவ. குழி - குறி. குறித்தல் = 1. கோடு கீறுதல். புழுக் குறித்தது எழுத்தா னாற் போல (ஈடு, 2 : 4 : 3). 2. வரையறுத்தல். (பிங்.). 3. குழித்தெழுது தல். 4. ஒன்றை யெழுதி வைத்தல். 5. எழுதி வைத்தாற் போல் மனத்திற் கொள்ளுதல். 6. எழுதிய குறியால் ஒன்றைத் தெரிவித்தல் அல்லது சுட்டுதல். 7. ஒன்றைச் சொல்லுதல். 8. எழுதிய குறியை எய்தற்கு இலக்காகக் கொள்ளுதல். 9. எதையேனும் அடைதலை அல்லது பெறுதலை இலக்காகக் கொள்ளுதல். கிளைக் கருத்துகள் (கொள் என்னும் வினை) கொள் - ம., க. கொள், தெ. கொனு. முகத்தல் கொள்ளுதல் = முகத்தல். குணகடல் கொண்டு குடகடன் முற்றி (மதுரைக்: 238). கொள் - கோள் = முகில். கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந் தென (சீவக. 320). கோள் - கோய் = 1. கள் முகக்குங் கலம். ஓரிற் கோயிற் றேருமால் (புறம். 300), 2. சாந்துச் செப்பு, சாந்துக் கோய் புகிய செல்வ (சீவக. 764), குல் - கொல் - கோல். கோலுதல் = முகத்தல். தன்னுட் கொள்ளுதல் கொள்கலம் = பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள் கலங் கொல்லோ (குறள். 1029). சிதரரிக் கண் கொண்ட நீர் (நாலடி 394)) இடுதல் உட்கொள்ளுதல் = உண்ணல். உண்ணுதல் கொண்டி = உணவு. கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக்.137). பிடித்தல் கொண்ட வளொடும் (சீவக. 430) பற்றுதல் கொள் கொம்பு - கொழுகொம்பு = பற்றுக்கோடு. கொள்ளுதல் = தீப்பற்றுதல். கொள்ளி = தீ. கைக்கொள் கொள்ளியர் (நெடுநல். 8). கொள் - கொளுந்து, கொளுந்துதல் - தீப்பற்றுதல். தீக்கொளுந் தினவுந் தெரிகின்றிலர் (கம்பரா. சுந்தர. இலங்கை யெரி. 5). கொளுத்துதல் = எரித்தல். கைப்பற்றுதல் களங்கொளக் கழல் பறைந்தன (புறம். 4 : 3) கோலுதல் = கைப்பற்றுதல். இருநில முழுவதும் தனதெனக் கோலி (நன். சிறப்புப் பா.). பொருந்துதல் கொள் - கொளுவு. கொளுவுதல் = பொருந்துதல், மாட்டுதல் கொள் - கொளுத்து = பொருந்து. கொள் - கொண்டி = கொளுவி. கொள்ளுதல் = பொருந்துதல். கொள்ளாத கொள்ளா துலகு (குறள். 470). ஒத்தல் வண்டினம் யாழ் கொண்ட கொளை (பரிபா. 11 : 125) ஏற்றல் உய்ஞ்சன னிருத்தலு முலகங் கொள்ளுமோ (கம்பரா.சுந்தர.உருக்கா.17). மணத்தல் தாங்கொண்ட மனையாளை (நாலடி. 3). கொண்டான் = கணவன். கொண்கன் = கணவன். கொள்நன் - கொழுநன் = கணவன். கொள்வனை = பெண் கொள்ளுதல். விலைக்கு வாங்கல் கோதையினுங் கொள்வார் (நைடத. நகரம். 18). கொள்முதல். கொள்விலை. கொள்ளை = விலை. சில்பதவுணவின் கொள்ளை சாற்றி (பெரும்பாண். 64). கடன் வாங்கல் கொள்வனை. பெறுதல் நல்லா றெனினுங் கொள றீது (குறள். 222). கொள் - கோள் -கோளி = பெறுவோன். கவர்தல் மனையாளை மாற்றார் கொள (நாலடி. 3). நெஞ்சு நடுக் குறூஉக் கொண்டி மகளிர் (மதுரைக். 583). கொள்ளையடித்தல் வேற்றுமைப்புலத்தைக்.......bfhŸis கொண்ட தொழிலை(பு.வெ. 3:15, கொளு, உரை). கொண்டி =கொள்ளை. கொண்டி யும் பெரிதென (புறம். 78) ம. கொண்டி, ம. கொள்ள, க. கொள்ளெ, தெ. கொல்ல. மிகுதல் கொள்ளக் கிடைத்தது = நிரம்பக் கிடைத்தது. கொள்ளை = மிகுதி. கொள்ளை மாமதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ. 1:5:14). கொண்டி = மிகுதி. கொண்டியுண்டித் தொண்டையோர் (பெரும்பாண். 454). கொள்ளை நோய் = பெருவாரி நோய். திறை பெறுதல் கொண்டி = திறை. கொண்டி வேண்டுவனாயின் (புறம். 51 : 6). கொல்லுதல் கொள் - கோள் = கொலை. கோள்நினைக் குறித்து வந்தான் (சீவக. 264). கோளரி = கொல்லும் அரிமா. கொல் - கொலை. கோண்மா = கொள்ளும் விலங்கு. (கம்பரா. இரணிய. 125). கொல்லத்தொழில் செய்தல் கொல் - கொல்லன் = 1.மரத்தைக் bகால்வதுn பால்b வட்டும் மரத்தச்சன், “மரங்கொஃறச்சர் (சிலப்.5:29).2. மரக்கொல்லனுக்கு இனமான இருப்புக் bகால்லன்.கருதுதல் யார்க்குங் கொடுத்தியெனக் கொள்கின்றிலம் (இலக். வி. 650, உரை). உட்கொள்ளுதல் = உட்கருதுதல். முத்தி யென்றுட் கொள்வார் சிலர் (கந்தபு. பாயி. 28). மதித்தல் கொளப்பட்டே மென்றெண்ணி (குறள். 699). கொண்டாடுதல் தண்பதங் கொள்ளுந் தலைநாட்போல (சிலப். 6 : 160). மேற்கொள்ளுதல் குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாகக் கொண்டார் (நாலடி. 143). மதமாக நம்புதல் குலனருள் தெய்வங் கொள்கை (நன். பாயி. 26). கற்றல் கொள்ளுநர் கொள்ள (கல்லா. 11 : 21). கொள்ளுநர் = மாணவர். கோளாளன் = மாணவன். கொள் - கோள் கோளாளன். துணைவினைகள் தற்பொருட்டுத் துணைவினை எ-டு : முகம் வழித்துக் கொண்டான், rண்டையிட்டுக்bகாண்டனர்.vâ®Kiw யேவ லொருமைத் துணைவினை எ-டு : அஞ்சாதே கொள். அஞ்சாதே கொண்மின் என்று பன்மைக்கும் பயன்படுத்த இலக்கணம் இடந்தரும். இணைமொழித் துணைவினை செய வாய்பாட்டு வினையெச்சம் : எ-டு : வரக் கொள்ள, பேசக் கொள்ள நிகழ்கால வினையெச்சம் (உலக வழக்கு) : எ-டு : வந்துகொண்டு, பாடிக்கொண்டு. குத்தற் கருத்து வேர்ச்சொல் : குள் - கெள் - கெளிறு - கெடிறு - கெளிற்றி - கொளுத்தி. (வே.க.) குலங்கள் தோன்றிய வகைகள் ஆரியர் (பிராமணர்) வருமுன் தோன்றிய குலங்களெல்லாம் தொழில் பற்றியனவே யாம். (1) நானிலத் தொழில் மருதம் - உழவர், முல்லை - ஆயர், குறிஞ்சி - வேட்டுவர், நெய்தல் - மீன் பிடியர் (நுளையர்). முதன்முதல் தோன்றிய குலங்கள் இந் நால்வகைத் தொழில் வகுப்புக்களே. இந் நான்கும் உணவு பற்றியனவே. (2) ஐந்தாம் (நிலையில்லா) நிலத் தொழில் - கவர்வு முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் வற்றி வறண்டதனால், அங்குள்ள வேட்டுவர் ஆறலைப்போரும் சூறை கொள்வோருமாக மாறி, அம்பெய்வதால் எய்நர் (-எயினர்) என்றும், மறமிகையால் மறவர் என்றும், பெயர் பெற்றனர். (3) மருத நிலத்தொழில் நான்கு மருதநில மக்கள் தொகை பெருகிய பின், பண்டமாற்றிற்கு வணிகரும், வழக்குத் தீர்ப்பிற்கும் காவற்கும் ஊர்க் கிழவரும் (தலைவரும்), நோய் நீக்கவும் மழைபெய்விக்கவும் தெய்வத்தை வேண்ட உவச்சனும் (பூசாரியும்), உழவரினின்று பிரிந்தனர். ஊர்க் கிழவரே அரசர்குலத் தொடக்கம். ஆட்சிப் பரப்பு விரியவிரிய, வேளிரும் மன்னரும் கோக்களும் வேந்தரும் முறையே தோன்றினர். முதற்காலத்தில், நானிலத்திற்கும் பொதுவான பண்டமாற்று மருதநிலத் திலேயே நிகழ்ந்தது. பின்னர் நீர்வாணிகம் தோன்றிய பின் நெய்தல் நிலத்திலும் நிகழ்ந்தது. மருதநிலத்திற் போன்றே ஏனை நிலங்களிலும், குடியிருப்புத் தலைவரும் தேவராளரும் (பூசாரிகளும்) தோன்றினர். உவச்சர் வகுப்பினின்றே, நாளடைவில் புலவரும் ஆசிரியரும் துறவியரும் முனிவரும் முதன்முதலாகத் தோன்றினர். கல்வி, உலகியலும் மதவியலும் என இரண்டாகப் பிரிந்தது. (4) மருதநிலப் பேரூர்ப் பதினெண் கைத்தொழில்கள் மருத நிலப் பேரூர்களில், உழவிற்குப் பக்கத் துணையாகப் பதி னெண் கைத்தொழில்கள் படிப்படியாகத் தோன்றின. பிறநிலக் குடியிருப்புக்களிலும், அவ்வந்நிலத்திற்கேற்றவாறு சில கைத் தொழில்கள் தோன்றின. (5) பற்பல கைத்தொழில்கள் திணைமயக்கம் ஏற்பட்டபின், நானில மக்களும் மருத நில நகரங்களிலும் நெய்தல் நிலப் பட்டினங்களிலும் அமர்ந்து, பல்வேறு கருவிப் பொருள்களைக் கொண்டு நாகரிக வாழ்க்கைக் கேற்ற பற்பல தொழில்களைச் செய்து வந்தனர். (6) தொழிற் பிரிவுகள் நாகரிகமும் மக்கள்தொகையும் மிகுந்தபின், எல்லாத் தொழில் களும் அல்லது வகுப்புக்களும் இரண்டும் பலவுமாகப் பிரிந்தன. (7) பெயர் மாற்றங்கள் மக்கள் பெருநிலப் பரப்பிற் படர்ந்து பரவினபின், ஒரே வகுப் பார்க்கே இடவேறுபாட்டால் பெயர் வேறுபாடு ஏற்பட்டது. தொழில்கள் நிகழும் வகைகள் விளைப்பு, வளர்ப்பு, பிடிப்பு, தொகுப்பு, புணர்ப்பு, செய்வு, பிரித்தெடுப்பு, பண்டமாற்று, நிலைமாற்று, காப்பு (மாந்தன் காப்பு, தெய்வக் காப்பு), ஆள்வு, செப்பனீடு, விலக்கு, வாழ்விப்பு, இன்புறுத்தம், ஆய்வு, அறிவிப்பு, உய்ப்பு, உடலுழைப்பு, அழிப்பு முதலியன. குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள் (1) நிறம் - வெள்ளாளன் (வெண்களமன்), காராளன் (கருங்களமன்), இருளன். (2) இடம் - சோழிய வேளாளன், ஆர்க்காட்டு முதலி, மலையாளி, திசை - தென்றிசை வெள்ளாளர், மேல்நாட்டான். (3) குடியிருப்பு - கோட்டை வெள்ளாளன், தெருவான் (சேர நாட்டுச் சாலியன்). (4) ஊண் - சைவ (மரக்கறி) வெள்ளாளன், புலையன், தவளை தின்னி (பறையன்). (5) உடை - தண்டப்புலையன், குளிசீலையாண்டி (கோவணாண்டி). (6) அணி - பவளங்கட்டி (கொங்கு வெள்ளாளர்). (7) தாலி - சிறுதாலி மறவர், ஐந்தாலி (அஞ்சாலி) யிடையர். கொண்டைமுடிப்பு - கொண்டை கட்டி வேளாளர். (8) கோலம் - பச்சைகுத்தி (குறவர், வேளாளர்), நீறுபூசி (வெள் ளாளன்). (9) முதற்கருவி - பொற்கொல்லர், வெண்கலக்கன்னார். (10) கருவி - வில்லி, வலையன். (11) கருவியளவு - சிறுபாணர், பெரும்பாணர், சின்ன மேளம், பெரியமேளம் (மேளகாரர்). (12) பண்டமாற்றுப் பொருள் - கூல வாணிகன், இலை வாணியன், எண்ணெய் வாணியன். (13) தொழிற்பிரிவு - தீக்கொல்லன், இரும்புக் கொல்லன், கடைச்சற் கொல்லன். தொழில்நுட்பம் - கண்ணுளர், கணிகையர். தொழில் வேறுபாடு - கோலியன். தெய்வப்பற்று - தேவகணிகையர் (கோவிற் கணிகையர்). திருத்தொண்டுவகை - பூவாண்டிப் பண்டாரம், உப்பாண்டிப் பண்டாரம். பண்பு - மறவன் அலுவல் - கணக்கன். கல்வி - புலவன், பண்டாரம், ஓதுவான். முன்னோர் பதவி - முதலியார் (படைமுதலியார்). முன்னோர் பட்டம் - முதலி, முதலியார், பிள்ளை. முன்னோர் வெற்றி - களம் வென்றார். முன்னோர் இடம் - செம்பியன் நாட்டார். முன்னோர் தொழில் - செங்குந்தர். முன்னோர் செயல் - முதுகர் (முதுவர்). முன்னோர் பெயர் - திருவள்ளுவன் (வள்ளுவன்), வாணர். ஒழுக்கம் - பரத்தையர், திருமுடிக் கவுண்டர். சடங்கு - பன்னிரண்டுநாள் (பள்ளி). வழக்கம் - பந்தல் முட்டிப் பள்ளி, கைகாட்டி (கணக்கன்), துருவாளர். நிகழ்ச்சி - பன்னிரண்டாம் செட்டி. கதை - கார்காத்தார். பட்டம் - உடையான். பிரிவுப்பெயர் - இல்லத்துப்பிள்ளை. முறைப்பெயர் - அம்மாப்பள்ளர், ஆத்தாப்பள்ளர். இடமாற்றமும் முன்னோர் செயலும் - பழியர். இடமாற்றமும் பெயர் மாற்றமும் - தேன்வன்னியர் (தென்னார்க்காட்டு இருளர்). இடவேறுபாடும் பெயர் வேறுபாடும் - பரவர், பட்டணவர், செம்படவர். தொகை - ஆயிர வணிகர் (வைசியர்), ஐஞ்ஞூற்றான் (பாணன்). சின்னம் - ஆனை, ஆந்தை, காடை (கொங்கு வெள்ளாளர்). விலங்கு பேண்வு - பாகர், வாதுவர் (குதிரை). விலங்கு பிடிப்பு - நரிக்குறவன். விலங்குத்துணை - நாயாடி (வேட்டுவன்), எருதாண்டி. கலப்பு - மேளக்காரன் (இசைவேளாளன்), இளமகன். கிளை - சவளக்காரன், காவற்காரன். தொகுதி - முக்குலத்தார், அம்பல(க்)காரன். மதம் - சிவனியர் (சைவர்), திருமாலியர் (வைணவர்). மதமாற்றம் - சமணர், பவுத்தர், கிறித்தவர், முகமதியர் (துலுக்கர்). மதப்பிரிவு - பழஞ்சவையர் (Roman Catholic), சீர்திருத்தச் சவையர் (Protestant) தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு). செல்வம் - ஒற்றைச்செக்கான் (வாணியன்), இரட்டைச்செக்கான் (வாணியன்). கட்சி - வலங்கை, இடங்கை (பணிசெய்வோன்). இடமாற்றம் - குன்னுவர், முதுவர், பச்சைமலையாளியர். வரிசை - கடையர். அரசன் பெயர் - தொண்டைமான். இரப்பு - நோக்கன், பொன்னம்பலத்தார், முடவாண்டி. அக்குடிகளை வின்சிலோ (Winslow) அகரமுதலி பின்வருமாறு கூறும். வண்ணான் எண்ணெய் வாணிகன் ஓச்சன் நாவிதன் உப்புவாணிகன் வலையன் குயவன் இலைவாணிகன் பாணன் தட்டான் பள்ளி கன்னான் பூமாலைக் காரன் கற்றச்சன் பறையன் கொல்லன் கோவிற்குடியான் (சங்கூதுவோன்) தச்சன் இவற்றைப் பின்வருமாறுங் கூறலாம். வண்ணான் உமணன் மஞ்சிகன் தச்சன் மருத்துவன் (முடி திருத்தி) (மரக்கொல்லன்) பறம்பன் கல்தச்சன் கணியன் (தோலின் துன்னன்) உவச்சன் தட்டான் கிணையன் (பொற்கொல்லன்) (பறையன்) துடியன் கோலிகன் பணிசெய்வோன் பாணன் (நெசவாளன்) செக்கான் குயவன் கூத்தன் கன்னான் செம்புக் காலத்திலும் இருப்புக் கொல்லன் இரும்புக் காலத்திலுமே தோன்றியிருத்தல் கூடும். துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிந்நான் கல்லது குடியு மில்லை என்னும் புறநானூற்றுக் கூற்று (335) ஒரு குறிப்பிட்ட இடம் பற்றியதே யன்றிப் பொதுப்படக் கூறியதன்று. குடிமக்கள் என்னுஞ் சொல், நிலையான குடிகளாகிய உழவர்க்குப் பல தொழிலுஞ் செய்து மக்கள்போல் உதவுபவர் என்று பொருள் படுவது. குடிமக்கள் எல்லாருள்ளும் விதப்பாகக் குடிமகன் என்று இன்றுஞ் சொல்லப்படுவன் முடிதிருத்தாளனே. குடிமக்கள் பலரும் தம் தொழிற்கு அல்லது தொண்டிற்கு உரிய கூலியைக் களத்திலும் உழவர்மனையிலும் வாங்கி வந்தனர். வயலிலும் வாய்க்காலிலும் மீன் பிடிக்கப்படுமேனும், கடுங் கோடைக் காலத்தில் ஆறுங் குளமும் வற்றி விடுமாதலாலும், களர்நிலத்து உப்பினும் கடலுப்பே சிறந்ததாகையாலும், செம்படவரும் உமணரும் மருதத்தை யடுத்த நெய்தல் நிலத்தில் தங்கி, முறையே, மீன்பிடித்தும் உப்புவிளைத்தும் வருவாராயினர். அவர் குடியிருப்பிற்குக் குப்பம் என்றும் துறை யென்றும் பெயர். பழங் கற்காலத்திற் படவெழுத்தும் (Pictograph), புதுக்கற் காலத்திற் கருத்தெழுத்தும் (Ideograph), தோன்றியிருத்தல் வேண்டும். பட வெழுத்தாவது, ஒரு செய்கையைப் படமாகவே வரைந்து காட்டுவது. கருத்தெழுத்தாவது, ஒவ்வொரு கருத்தையும் படவெழுத்தடிப் படையில் ஒரு குறியாற் குறிப்பது. பொற்காலத்தில் அசையெழுத்துத் தோன்றியிருத்தல் வேண்டும். அசை யெழுத்தாவது (Syllabary), உயிர்மெய்யை உயிரும் மெய்யு மாகப் பிரிக்காமல் தனியெழுத்தாக எழுதுவது. பழங் கற்காலத்தில் பத்துவரையும், புதுக் கற்காலத்தில் நூறுவரை யும், பொற்காலத்தில் ஆயிரம்வரையும், குமரிமாந்தர் எண்ணத் தெரிந்திருக்கலாம். கூட்டூராட்சி நிலையில், மருதநிலைத் தலைவன் ஊரன், மகிழ்நன் (மகிணன்) என்றும், முல்லை நிலத் தலைவன் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் என்றும், குறிஞ்சி நிலத்தலைவன் வெற்பன், சிலம்பன், பொருப்பன் என்றும், நெய்தல் நிலத்தலைவன் துறைவன், சேர்ப்பன், கொண்கன், மெல்லம் புலம்பன் என்றும், பதவிப்பெயர் பெற்றிருந்தனர். மகிழ்நன் என்பது, மருதநிலத்து ஆடல்பாடலைக் கண்டுங் கேட்டும் பிற இன்பங்களை நுகர்ந் தும் மகிழ்வுற்றவன் என்பதை யுணர்த்தும். குறுநில வாட்சி நிலை யில். அரசர் அனைவரும் மன்னர் எனப்பட்டனர். குலத்தலைவர் குலத்தலைவராவார், நாட்டாண்மைக்காரன், நாட்டான், பெரிய தனக்காரன், அம்பலக்காரன், ஊர்க் கவுண்டன், ஊர்க்குடும்பன், பட்டக்காரன், ஊராளி, மூப்பன் என ஆங்காங்கு வெவ்வேறு பெயரால் அழைக்கப்பெறும் குலவியல் ஊராட்சியாளர். (த.தி.2.) குலப்பட்ட வரலாறு பட்டம் என்னும் சொல் வரலாறு பட்டுதல் = அடித்தல், தட்டுதல், பட்டடை = சுத்தியலால் அல்லது சமட்டியால் தட்டுவதற்கு அடையான கல் அல்லது இரும்பு. பட்டறை = கொல்லரும், தட்டாரும் தட்டி வேலை செய்யும் அறை. பட்டசாலை = அங்ஙனம் தட்டி வேலை செய்யும் கூடம். பட்டு - பட்டம் = தட்டையாகத் தட்டி அடிக்கப்பட்ட தகடு. பட்டு - பட்டை = தகடு. தட்டையான மரவுரி. அது போன்ற பூச்சு. பட்டம் - வ. பட்ட. பட்டை - பட்டையம் - பட்டயம் = ஆவணம் பொறிக்கும் தகடு. பட்டம் என்னும் சொற்பொருள்கள் பட்டம் = 1. பட்டையான துண்டு. 2. சட்டங்களை இணைக்க உதவும் தகடு. ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி (நெடுநல். 80. உரை). 3. பட்டை வடிவு. 4. ஆட்சித் தலை மைக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு. பட்டமுங் குழையு மின்ன (சீவக. 472). 5. பெண்டிர் நெற்றியணி. பட்டங் கட்டிப் பொற்றோடு பெய்து (திவ். பெரியாழ். 3:7:6). 6. மணி களில் தீரும் பட்டை. 7. துணி (அக.நி). 8. பெருங்கொடி(பிங்.). 9. காற்றாடி, பிள்ளைகள் பற்பல வுயர்பட்டம் விடல்போல் (திருப்போ. சந். பிள்ளைத். சப்பாணி. 8). 10. உரோமானியக் குருமார் உச்சந்தலையில் வட்டமாக மழித்துக் கொள்ளும் இடம். 11. ஆட்சிப்பதவி (பிங்.). 12. ஆட்சி. 13. பதவிப்பெயர் : பட்டமும் பசும்பொற்பூணும் பரந்து (சீவக. 112). 14. சிறப்புப்பெயர் எ-டு: தென்னவன் பிரமராயன், உத்தம சோழப் பல்லவராயன். 15.கல்விப் பெயர். எ-டு: புலவன், முதுகலை, பண்டித மணி. பெரும் பேராசிரியர். 16. குலப்பெயர். எ-டு : பிள்ளை, முதலியார். கழகக் (சங்க) காலத்தில், இக்கலத்திற் போற்பிற விக்குலப்பட்டப் பெயர் வழங்கவில்லை. கூலவாணிகன், அறுவை வாணிகன், மருத்துவன், வண்ணக்கன், கணியன், கிழார் என்பன போன்ற தொழில் வகுப்புப் பெயர்களே அடைமொழிகளாக வழங்கிவந்தன. எ-டு : கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். கிழார் என்பது உழவர் வகுப்புப் பெயராகத் தோன்றுகின்றது. ஆயின், அரிசில்கிழார், ஆலத்தூர்க்கிழார், ஆவூர்கிழார், இடைக் குன்றூர்கிழார், காரிகிழார், குறுங்கோழியூர்கிழார், குன்றூர் கிழார், கூடலூர்கிழார், கோவூர்கிழார், துறையூர் ஓடைகிழார், நொச்சி நியமங்கிழார், பெருங்குன்றூர்கிழார், மாங்குடிகிழார், வடமோதங்கிழார் எனப் பெரும்பாலும் இயற்பெயரின்றி ஊர்ப் பெயரடுத்த தொழிற்பெயராகவே வழங்கி வந்திருக்கின்றன. பிற்காலத்துச் சேவூர்க்கிழார் - சேக்கிழார் என்பதும் அங்ஙனமே. ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார் என்னுங் கழகக் காலப் பெயர்களில், மூலம் என்பது நாளைக் குறிப்பதாகக் கருதினார் பண்டாரகர் உ.வே. சாமிநாதையர். கிழார் என்பது கிழவர் என்பதன் மரூஉ. கிழவர் என்பது கிழவன் என்பதன் உயர்வுப்பன்மை. கிழவன் = நிலத்திற்குரியவன், உழவன். செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும் (குறள். 1039) என்னுங் குறளில், கிழவன் என்பது நிலக்கிழவனான உழவனைக் குறித்தல் காண்க. கிழான் என்னும் மரூஉ இன்று இந்தியில் கிசான் என்று திரிந்து வழங்கி வருகின்றது. கதப்பிள்ளை அல்லது கந்தப்பிள்ளை என்பது, புறநானூற்றுப் பாடலாசிரியருள் ஒருவர் பெயராகக் குறிக்கப்பட்டுள்ளது. அது இக்காலத்திற்போற் பிள்ளைப் பட்டத்தோடு கூடிய மாந்தன் பெயரன்று; முருகனைக் குறிக்கும் தெய்வப்பெயர் ஒரு புலவர்க்கு இடப்பட்டதே. விநாயகர் என்னும் ஆனைமுகத் தெய்வ வணக்கம். கி.பி. 7ஆம் நூற்றாண்டின் பின்னரே தமிழகத்திற் புகுத்தப்பட்டது. அதற்கு முன், முருகனுக்கே சிவன் மகன் என்னும் கருத்தினால் பிள்ளை அல்லது பிள்ளையார் என்னும் பெயர் வழங்கிற்று. பிற்காலத்தில் வடநாட்டினின்று இறக்கு மதியான ஆனைமுகவன், காலத்தால் இளைய பிள்ளையாயினும் ஆரியச் சார்பினாற் சிறப்புப் பெற்று மூத்த பிள்ளையாக் கப்பட்டான். ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழர் வகுப்புகளெல்லாம் தொழில் வேறுபாட்டால் ஏற்பட்டனவும், விருப்பப்படி மாறக்கூடி யனவும், கூட்டுறவிற்கு முட்டுக்கட்டை யாகாதனவுமா யிருந்தன. ஆரியர் வந்தபின், கழகக்காலத்தில், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருந் தமிழ் வகுப்புகள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரியப் பிறவிப் பெருங் குலங்களாக மாற்றப்பட்டன. அதன்பின், அந் நாற்பெருங் குலங்களும் நூற்றுக்கணக்கான சிறு குலங்களாகப் பிரிக்கப் பட்டும் பெருக்கப்பட்டும் போயின. தமிழரின் ஒற்றுமையையும் வலிமையையும் குறைப்பதற்குப் பிறவிக்குலப் பிரிவினையே தலைசிறந்த வழியாதலின் குலவொழுக்கக் கட்டுப்பாடுகளும் வேறுபாடுகளும் வரவரக் கண்டிப்பாக்கப்பட்டு வந்தன. பெயர், உடை, உணவு, அணி, குடியிருப்பு, தொழில், பழக்க வழக்கம், சடங்கு, தெய்வம், பேச்சு, இடுகாடு அல்லது சுடுகாடு முதலிய எல்லா வகைகளிலும் குலங்கள் வேறுபடுத்தப் பட்டன. பெயரளவில் வேறுபாட்டைத் தெளிவாக்குவதற்கு, குலங்குறித்த சொற்களும் ஈற்றிற் பட்டப் பெயராகச் சேர்க்கப்பட்டன. அவை பெரும்பாலும் குலத்தலைவன் அல்லது தொழிற்றலைவன் அல்லது ஊர்த்தலைவன் பட்டப் பெயராகவே இருந்து வருகின்றன. தேவன் என்பது குலத்தலைவன் பட்டம்; முதலியார் என்பது தொழிற்றலைவன் பட்டம் : நாடார் என்பது ஊர்த்தலைவன் பட்டம். நாடன் - நாடான் - நாடார். நாடன் - நாட்டான் - நாட்டார். ரகர மெய்யீற்றுச் சொற்கள் உயர்வுப் பன்மை குறிப்பன. படைமுதலியார் அல்லது சேனைமுதலியார் என்பதன் குறுக்கமே முதலியார் என்பது. அரியநாயக முதலியார் விசயநகரப் படைத் தலைவருள் ஒருவர். அவர் பதவிப் பெயர்க்குறுக்கம், முதற்கண் அவர் மக்கட்கும், பின்னர் உறவினர்க்கும், அதன்பின் அவர் குலத் தாராகக் கருதப்படும் அனைவர்க்கும் பட்டப் பெயராக வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஏனையவும். இவ் வழக்கம் மேனாடு களில், அரசர் மக்கட்கும் பெருமக்கள் மக்கட்டும் வழங்கிவரும் மதிப்புறவுப் பட்டம் (Courtesy Title) போன்றதே. ஆயின், அங்குத் தந்தை பட்டத்தினும் தாழ்ந்ததே. அடைமொழியாகவோ கடை மொழியாகவோ மக்கட்கு மட்டும் வழங்கி வரும். இங்கோ, தந்தையின் பட்டமே மக்கட்கு மட்டுமன்றி, உறவினர்க்கும், குலத்தாரென்று கருதப்படும் அனைவருக்கும் இறுதிச் சிறப்புப் பெயராக வழங்கிவருகின்றது. முதலியார் என்பது போன்றவே நாயர். நாயுடு என்பனவும். தண்டநாயன் = (கேரள நாட்டுப்) படைத்தலைவன். நாயன் என்பதன் உயர்வுப் பன்மை நாயர். தண்ட நாயர் - நாயர் (குறுக்கம்) நாயன் - நாயகன் - நாயக்கன் - நாய்க்கன். திருமலை நாயக்கன், போடி நாயக்கன், பெத்த நாயக்கன் என்பன தெலுங்கப் படைத்தலைவர் பெயர். தண்ட நாயக்கன் - நாயக்கன் (குறுக்கம்) நாயக்கர், நாய்க்கர் என்பன உயர்வுப் பன்மை. விசயநகரப் பேரரசின் படைத் தலைவராகவும் படிநிகராளி யராகவுமிருந்த சிலர். பிற்காலத்தில் தமிழ்நாட்டு அரசராயினர். நாயன் - நாயடு - நாயுடு (தெலுங்கு), நாயர், நாய்க்கன், நாயுடு என்னும் பட்டப்பெயர்கள். இடைக்காலப் படைத்தலைவர்க்கு வழங்கினது மட்டுமன்றி, அவர் வழியினர்க்கும் வழிவழி வழங்கி வருதல் காண்க. இங்ஙனமே, எட்டி என்னும் வணிகர் பட்டப்பெயரும், எட்டுதல் = உயர்தல், எட்டு - எட்டம் = உயரம், உயர்வு, எட்டி = உயர்ந்தவன், வணிகருட் சிறந்தோன். எட்டி என்பது, கழகக் காலத்தில் மூவேந்தரும் வணிகர் தலைவனுக்கு அளித்துவந்த சிறப்புப் பெயர். அது இக்காலத்து அரசர், நாண்மங்கல விழாவில், அறிவாற்றல் பொதுநலத் தொண்டு அருமறச் செயல், முதலியவற்றிற்கு அளித்துவரும் சிறப்புப் பெயர்கள் (Birthday Honours) போன்றது. எட்டி - செட்டி. ஒ.நோ : ஏண் - சேண். வடநாட்டுப் பிராகிருத மொழிகளில் எகரக் குறிலின்மையால், அவற்றிற் செட்டி என்பது சேட்டி என நீளும், அது இன்று சேட் எனக் கடை குறைந்து வழங்குகின்றது. செட்டி என்பது சிரேஷ்டி என்னும் வடசொல்லின் திரிபன்று. இப்பர் பரதர் வைசியர் கவிப்பர் எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர் ஒப்பில் நாயகர் வினைஞர் வணிகரென் றத்தகு சிலேட்டிகள் செட்டிகள் பெயரே என்பது திவாகர நிகண்டு. நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் தாமும் பிறவும். என்பது பிங்கல நிகண்டு நாய்கர் என்பது வணிகரைக் குறிப்பின், நாவிகர் என்பதன் மரூஉ. கடைக்கழகக் காலத்திலேயே, நிலவாணிகத் தலைவனுக்குச் சாத்தன். சாத்தவன், சாத்துவன், சாத்துவான் என்றும்; நீர் வாணிகத் தலைவனுக்கு நாவிகன், நாய்கன் என்றும் சிறப்புப் பெயர்கள் வழங்கின. அதனால், கோவலன் தந்தை மாசாத்துவான் என்றும், கண்ணகி தந்தை மாநாய்கன் என்றும், பெயர் பெற்றிருந்தனர். சார்த்து - சாத்து = காளை கோவேறு கழுதை, குதிரைகளின் மீது பொதியேற்றிச் செல்லும் நிலவணிகன் கூட்டம். நாவு - நாவாய் - கடல்நீரைக் கொழித்துச் செல்லும் கப்பல். நாவு - நாவி - நாவிகன் = கப்பற்காரன், கடல் வாணிகன். ஆதிரை கணவனான சாதுவனும், நீர்வாணிகம், செய்தவனேனும், பெற்றோரா லிடப்பட்ட நிலவாணிகள் பெயரைத் தாங்கினவனா யிருந்திருக்கலாம். சாத்துவன் - சாதுவன். கடைக்கழகக் காலத்தில், தமிழரின் இயற்பெயரோடு குலப் பட்டப் பெயர் இன்றுபோல் இணைந்து வழங்கியதில்லை. ஆரியச் சார்பான பிறவிக் குலப்பிரிவினை அக்காலத்தே நாற் பாலளவில் வேரூன்றியிருந்ததேனும், மூவேந்தராட்சியும் முடிந்த 16ஆம் நூற்றாண்டின் பின்னரே. சிறுகுலப் பட்டப் பெயர் களெல்லாம் சிறந்தெழுந்ததாகத் தோன்றுகின்றது. அப் பட்டப்பெயர்கள் எல்லாப் பிறவிக் குலத்தார்க்கும் நிலைத்து நின்றவையல்ல. அவரவர் அல்லது அவ்வக் குலத்தார் ஆற்றலுக் கும் முன்னேற்றத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு. மாறியும் வந்துள்ளன. இதைக் கள்ளன் மறவன் கனத்தா லகம்படியன், மெள்ள மெள்ள வந்துபின் வெள்ளாள னானானே என்னும் பழமொழியும் உணர்த்தும். முதலியார் என்னும் பட்டம், விசயநகரப் பேரரசின் படைத் தலைவரான அரியநாயகம் போன்ற வெள்ளாளரின் வழியினர்க்கு, முதற்கண் சிறப்பாக வழங்கிற்று. அதன்பின், சோழர் காலத்திற் செங்குந்தப் படை தாங்கிப் பொருத நிலைப்படை மறவரின் வழியினரான நெசவுத் தொழிலாளர்க்கு. ஒருபுடை யொப்புமை பற்றி அப் பட்டம் வழங்கிற்று. அதன் பின்னர் அகம்படியருள் ஒரு சாரார் அப் பட்டத்தைத் தாமாகத் தமக்கு இட்டுக் கொண் டனர். இன்றோ, முதலிப் பெண்ணை மணந்தவரும், நெசவுத் தொழில் செய்வாருள் ஒரு சாராரும், தமக்கு முதலியார்ப் பட்டம் சூட்டிக்கொள்கின்றனர். இனி, ஒருசிலர் தம் விருப்பம் ஒன்றே கரணியமாகத் தம் பெயருக்குப்பின் முதலியார்ப் பட்டத்தை இணைத்துக் கொள்கின்றனர். இங்ஙனம், வெள்ளாண் முதலியார், செங்குந்த முதலியார், அகம்படிய முதலியார், முதலிப்பெண் கொண்ட முதலியார், நெசவுத்தொழில் முதலியார், தான்றோன்றி முதலியார் என அறுவகை முதலியார் உளர். இத்தகைய வகையீடு ஏனைச் சில குலங்கட்கும் ஒக்கும். பிள்ளைப் பட்டமோ, இன்று பிராமணர் தவிரப் பிற குலத்தார்க் கெல்லாம் பொதுவாய்விட்டது. ஆயினும், அது அவ்வக் குலத்திற்கேற்ப வெவ்வேறு அளவு மதிப்புள்ளதாயுள்ளது. இனி, வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே (மரபு. 83) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப, சோழர்க்குப் போர்க் காலத்திற் பொருநராக வந்ததனாற் படையாட்சியென்று பட்டந் தாங்கும், ஒரு சார் உழுதூண் வேளாளரான தமிழருள் ஒருசிலர். தெலுங்கர்க்கேயுரிய இரெட்டியார் என்னும் பட்டப் பெயரைத் தமக்கு வழங்கி வருவது, ஒரு வேடிக்கையான செய்தியே. இங்ஙனம், உண்மைக்கும் பகுத்தறிவிற்கும் பொருந்தாத குலப் பட்டப் பெயர்களை, இந்தியரையெல்லாம் குலப்பிரிவற்ற ஒரே குமுகாயமாக்க வேண்டுமென்னுங் குறிக்கோள் கொண்டவரும் கூட. தமக்கு வழங்கி வருகின்றனர். இதனால், மூதிந்தியர்க்கு, சிறப்பாகத் தமிழர்க்கு மூவகைக் கேடுகள் நேர்கின்றன. 1. குமுகாயத் தாழ்வு ஆரியச் சார்பான பிறவிக் குலக் குமுகாய ஏணிப்படிகளுள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு குலத்திற்கு நிலையாக ஒதுக்கப்பட் டிருப்பதால், தமிழர் அல்லது திரவிடர் அல்லது பழங்குடி மக்கள் வாழ்நாள் முழுதும் எத்துணை முன்னேற்ற முயற்சி செய்யினும், அவ் வேணியின் உச்சப்படியை அல்லது தமக்கு மேற்பட்ட படியை அடைய முடியாது. ஒவ்வொரு பட்டமும் ஒவ்வொரு குலத்தின் முத்திரையாயிருப்பதால், அப் பட்டத்தைத் தாங்கிக் கொண்டே மேலெழுவது, ஒருவன் தன் பாதத்திற் பாறாங் கல்லைக் கட்டிக்கொண்டு உயரக் குதிப்பது போன்றதாகும். 2. ஒற்றுமைக் குலைவு ஒரு வகுப்பார் சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. ஒற்றுமை யின்றேல் உரங்குன்றிப் போவதால், இன முன்னேற்றத்திற்கு எட்டுணையும் இடமில்லை. ஆகவே, உலகுள்ள அளவும் அஃ றிணை போன்றே நின்ற நிலையில் நிற்றல் வேண்டும். 3. பகுத்தறிவு வளர்ச்சியின்மை ஒருவன் தன் இயற்பெயரோடு ஒரு பிறவிக்குலப் பட்டப் பெயரை இணைத்துக் கூறுவது தான் மேற்கொண்டுள்ள தொழிலுக்குச் சற்றும் பொருந்தாததும், வேறெந் நாட்டிலும் இல்லாததும், பகுத்தறிவிற்கு ஒவ்வாததும், முன்னோர் மரபிற்கு முற்றும் முரணானதும், எவ்வகை நற்பயனுமற்றதும், நுண்ணறிவு வளர்ச் சிக்குத் தடையானதுமாய் இருத்தலால், அதை அறவே விட்டு விடுவதே உயர்திணை யொழுக்கத்திற்கும் தமிழன் தலைமைக்கும் தக்கதாம். (தென்மொழி மேழம் 1976) குலவெறி கொள்ளாமை தமிழரைப் பிரித்துக் கெடுத்தற்கென்றே, பிறப்பொடு தொடர் புற்ற குலப்பிரிவினை அயலாராற் புகுத்தப்பட்ட தென்றும், அது நூலுத்தி பட்டறிவுகட்கு முற்றும் முரணான தென்றும் உலக முழுமையிலும் இந் நாவலந் தேயத்திலேயே அது உள்ளதென் றும், திருவள்ளுவர் திருமூலர் முதலிய பெரியோ ரெல்லாராலும் கண்டிக்கப்பட்டதென்றும், உணராத தமிழர், இன்னும் குல வுணர்ச்சியிலேயே திளைத்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு குலத்தாரும் தமக்குள்ளேயே மணந்து, தமிழினத்தில் பேரறிவுச் சுடர்கள் பெருவாரியாய்ப் பிறவாதபடி தடுத்து விடுகின்றனர். அதோடு தமிழர்க்குள் ஒற்றுமையும் இல்லாது போகின்றது. ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - இங்கு ஒற்றுமை யின்றேல் அனைவர்க்கும் தாழ்வு இதைத் தமிழ் மாகாண முன்னேற்றம் பற்றியாவது கவனித்தல் வேண்டும். நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் குலமுறையைத் திடுமென்று நீக்குவது இயலாதேனும், உயர்த்தப் பட்டோர்க்கும் தாழ்த்தப் பட்டோர்க்கும் இதுபோது துப்புரவு பற்றி ஏற்றத்தாழ்வு உள்ள தேனும், வேளாளரும் முதலியாரும் போல்வாரும், மறவரும் இடையரும் போல்வாரும் இரட்டியாரும் நாயுடுவும் போல் வாரும், தம்முள் மணந்து கொள்ளலாமே! தமிழரின் பல்வேறு பெருங்குலங்களன்றி, (நாடும் ஊருமாகிய) இடம், உண்பொருள், உடை, சிறுதெய்வம், கொள்கை, சடங்கு, செய்பொருள், சிறப்பு நிகழ்ச்சி, குணம், நிறம், குடுமி நிலை, வழக்கம், அணி, தாலிவகை, மொழி, அலுவல், பட்டம், குல வரிசை, சின்னம், மக்கள் தொகை, தொகுப்பு, கலப்பு, தோற்றக் கதை, திறமை, முறைப்பெயர் முதலிய பற்பல வகைபற்றிப் பிரிந்து கிடக்கும் நூற்றுக் கணக்கான பொருந்தாக் குலப் பிரிவுகளிற் பலவும், அகமண வகுப்புகளாகவே யிருந்து வருவது, தமிழன் முன்னேற்றத்திற்கு மாபெருந் தடையாதலின், கல்வி கற்ற தமிழ் இளைஞர் குருட்டுத் தனமும் குறுகிய நோக்குமுள்ள குலமுதியர் சொற் கொள்ளாது, அதை விரைந்து தகர்த்தெறியக் கடவர். (த.தி. 49, 50.) குலைகுலையாய் முந்திரிக்காய் விளையாட்டு பல பிள்ளைகள் வட்டமாய் உள்நோக்கி உட்கார்ந்திருக்க, ஒரு பிள்ளை திரிபோல் முறுக்கிய துணி யொன்றைக் கையில் வைத்துக் கொண்டு, குலைகுலையாய் முந்திரிக்காய் என்று விட்டு விட்டு உரக்கச் சொல்லி, வட்டத்திற்கு வெளியே பிள்ளைகட்கு அருகில் வலமாகச் சுற்றிச் சுற்றிவரும். அப் பிள்ளை குலை... காய் என்று சொல்லுந்தொறும், உட்கார்ந் திருக்கும், பிள்ளைகளெல்லாம் ஒருங்கே நரியே, நரியே, ஓடிவா என்று கத்திச் சொல்வர். இங்ஙனம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே, சுற்றி வரும் பிள்ளை திடுமென்று திரியை ஒரு பிள்ளையின் பின்னால் வைத்துவிடும்; திரிவைக்கப்பட்ட பிள்ளை உடனே கண்டு அதை எடுக்காவிடின், வைத்தபிள்ளை ஒரு சுற்றுச் சுற்றி வந்து, வைக்கப் பட்ட பிள்ளையின் முதுகில் அத் திரியால் ஓரடி ஓங்கிவைத்து எழுப்பி, அதை அப் பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, அப் பிள்ளை யின் இடத்தில் தான் உட்கார்ந்துகொள்ளும். திரி வைத்தவுடன் வைக்கப்பட்ட பிள்ளை கண்டு எடுத்துக்கொண்டு எழுந்துவிடின், வைத்த பிள்ளை விரைந்து ஒரு சுற்றுச் சுற்றி வந்து வெற்றிடத்தில் உட்கார்ந்து அடிக்குத் தப்பிக்கொள்ளும். திரியெடுத்த அல்லது திரிவாங்கின பிள்ளை, முன்போல் குலை....... காய், என்று முன்சொல்ல, மற்றப் பிள்ளைகளெல் லாம் நரியே...... வா என்று பின்சொல்வர். பின்பு திரிவைப்பதும் பிறவும் நிகழும், இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும். இவ் விளையாட்டிற்குத் திரித்திரி பந்தம் என்று பெயர். பாண்டிநாட்டில், பிள்ளைகள் வட்டமாய் உட்காராது வரிசையாய் உட்கார்ந்து, இவ் விளையாட்டு ஆடுவதுண்டு. அது யானைத்திரி என்று பெயர் பெறும். (த.நா.வி.) குலை வகைகள் கொத்து அவரை துவரை முதலியவற்றின் குலை; குலை கொடி முந்திரி போன்றதின் குலை; தாறு வாழைக்குலை; கதிர் கேழ்வரகு சோளம் முதலியவற்றின் கதிர்; அலகு அல்லது குரல் நெல் தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு வாழைத்தாற்றின் பகுதி. (சொல் : 68.) குவளை குவளை - குவல குவளை = 1. கருங்குவளை. குவளை.... கொடிச்சி கண்போல் மலர்தலும் (ஐங்குறு. 399). 2. செங்குவளை விளக்கிட் டன்ன கடிகமழ் குவளை (சீவக. 256). 3. ஒரு பேரெண் நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும் (பரிபா. 2: 13). (வ.வ: 129) குழவி குழவி : குழ - குழவு = இளமை. குழவு - குழவி. குழ - குழந்தை, குழ - கொழுந்து, குழ - குட (வ.). (தி.ம : 741) குழவி வளர்ப்பொலி குழவி வளர்ப்புக் காலத்தில் குழவி வாயிலும் தாய் வாயிலும் பிறக் கும் ஒலிகள், குழுவி வளர்ப்பொலிகளாம். அவற்றுள், குழவி யொலிகள், உள்ளிய (Voluntary) வொலி உள்ளா (involuntary) வொலி என இருதிறப்படும். பச்சிளங்குழவிகள் எண்ணாது இயல்பாய்க் கத்தும் ஒலிகள் உள்ளாவொலியும், பேச்சுக் கற்கும் பிள்ளைகள் தப்பொலிகளாகக் கூறும் திருந்தாச் சொற்கள் உள்ளிய வொலியும், ஆகும். மு.தா. 1. குழவியொலிகள் (1) உள்ளாவொலி : எ.டு. - இங்கா = பால். குழவிகள் இயல்பாக மிடற்றிற் பிறப்பிக்கும் இங்கு என்னும் பொருளற்ற வொலிக்கு, பால் என்னும் பொருளைச் செவிலியர் படைத்துக் கொண்டனர். அம்மா அப்பா என்னுஞ் சொற்கள் இவ்வகையிற் பிறந்தனவாக, மேலை மொழிநூல் வல்லார் கொள்வர். அது பொருந்தாது. (2) உள்ளியவொலி : மிய்யா (பூனை) ளொள் ளொள் (நாய்) பீப்பீ (ஊதுகுழல்) டும்டும் (மேளம்) இத்தகைய வொலிகள் பல. ஆப்பிரிக்க மொழிகளும் ஆத்தி ரேலிய மொழிகளும் போன்ற திருந்தா மொழிகளில், சொல்லாக வழங்குகின்றன. ஆங்கிலத்திலுள்ள mew, bow - vow, pipe, tom - tom என்னுஞ் சொற்கள் இத்தகையனவே. தமிழிலும், காக்கை (காக்கா), ஞள்ளை (ஞள்), துந்துமி தும்தும் -துப்துப் - துந்துபி. (t.), சடபுடா முதலிய சொற்கள் இம் முறையிலேயே அமைந்துள்ளன. இத்தகையவொலிகளெல்லாம் உண்மையில் ஒப்பொலிகளே யாயினும், குழவி வாயினின்று வருவன என்னும் சிறப்புப்பற்றி வேறு பிரித்துக் கூறப்பட்டன என்க. இவற்றின் தொகுதியைக் குழவிமொழி (child language) என்பர். (மு. தா.) தாயொலிகள் குழவியைத் தொட்டிலிலிட்டுத் தாய் லாலாவென்றொலித் தாட்டுதல் லாலாட்டு. ஆங்கிலரும் இதை lullaby என்பர். லாலா - ராரா - ராராட்டு. ராரா - ரோரோ ரோராட்டு. லகரம் தமிழிற் சொன்முதலெழுத்தன்மையின், லாலாட்டு என்பது தாலாட்டு எனப்படும். ல-த, போலி. ஒ.நோ. கலம்பகம் - கதம்பம், சலங்கை - சதங்கை. பிள்ளைத் தமிழ்ப் பனுவலில், தாலாட்டுப் பருவம் தாலப்பருவம் எனப்படும். தாலம் என்பது தால் எனக் கடைக் குறைந்தும் வரும். தாலப்பருவச் செய்யுட்களில் மகுடமாக வரும் தாலோ தாலே லோ என்னுந் தொடர், தாலாட்டுச் சொல்லாகும். தாலாட்டு - தாராட்டு. மக்கள் தொடக்கூடாததும் குழந்தைகள் தின்னக் கூடாததுமான இழிபொருளை, தாய்மார் குழந்தைகளிடம் சுக்கா என்னுஞ் சொல்லாற் குறிப்பர். உணர்வொலிகளும் குறியொலிகளும், சிறுபான்மையிலும் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்யா வகையிலும் ஓரன்ன தன்மைய. குழவியொலிகளினும் வாய்ச்செய்கை யொலிகளும், வாய்ச்செய்கையொலிகளினும் ஒப்பொலிகளும், இவ்விருவகை யிலும் சிறந்தனவாம். உணர்வொலி, குறியொலி, குழவிஒலி, வாய்ச்செய்கைஒலி, ஒப்பொலி இணைத்துக் காண்க. (மு.தா.) குளம் குளம் 1 - கூல = சிறுகுளம். (வ.வ - 9) குளம்2 - குல (g) = வெல்லம். குளம் = வெல்லவுருண்டை. (வ.வ: 129-130) குளவகை குளம் குளிக்கும் நீர்நிலை; தெப்பக்குளம் தெப்பத்தேர் ஓடும் குளம். ஊருணி ஊரால் உண்ணப்படும் அல்லது ஊர் நடுவி லுள்ள குளம்; ஏரி ஏர்த்தொழிற்கு நீர்ப்பாய்ச்சும் குளம்; கண்வாய் சிறுகால்வாயால் நீர் நிரப்பும் குளம்; தடம், தடாகம் அகன்ற அல்லது பெரிய குளம்; கயம் ஆழமான குளம்; குட்டம் குளத்தின் ஆழமான இடம். குட்டை சிறுகுளம்; குண்டு வற்றிய குளத்தின் நீர் நிறைந்த கிடங்கு; பொய்கை மலையடுத்த இயற்கையான குளம்; சுனை நீர்சுரக்கும் மலைக்குண்டு; கிணறு வெட்டப்பட்ட ஆழமான சிறு நீர் நிலை; கேணி மணற்கிணறு; கூவல் சிறு கிணறு; துரவு சுற்றுக் கட்டில்லாத பெருங்கிணறு; மடு அருவி விழும் கிடங்கு. (சொல். 49) குளிகை குளிகை - குலிகா (g) = உருண்டை, மாத்திரை. குளம் - குளிகை = உருண்டை மாத்திரை. குளியம்=உருண்டை, உருண்டை, உருண்டை மாத்திரை. (வ.வ : 130) குளிர் குளிர் - குளீர = நண்டு. குள்ளுதல் = கிள்ளுதல், கிண்டுதல், கீறுதல். குள் - குளிர் = கூரிய கவைக்காலாற் கடிக்கும் அல்லது கூரிய கால்களால் நிலத்தைக் கீறும் நண்டு. (வ.வ: 130) குற்றமுந் தண்டனையும் குற்ற வகை : குற்றங்கள், அறநூலுக்கு மாறானவும், அரசியலுக்கு மாறானவும், தெய்வத்திற்கு மாறானவும், என மூவகைப்படும். குடி பொய் களவு காமம் கொலை என்பன அறநூலுக்கு மாறானவை. இவை ஐம்பெருங் குற்றம் எனப்படும். பிறரிடம் வாங்கினதை மறுத்தலும், தன்னிடத்துள்ள பிறர்பொருளை ஒளித்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும், பொய்யுள் அடங்கும். இறையிறுக்காமை, உறுபொருள் கவர்தல், பகையொற்று, அறை போதல், அரசனது பொருள் கவர்தல், அரசனது இன்பப் பொருள் நுகர்தல், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகஞ் செய்தல், அரசற்கிரண்டகஞ் செய்தல், அரசாணை மீறல், கொள்ளையடித் தல், கலகஞ்செய்தல் என்பன, அரசியற்கு மாறான குற்றங்களாம். புதையலும் பிறங்கடையில்லாச் சொத்தும் உறு பொருளாகும். ஒப்பிப் பணிசெய்யாமை, கோயிற் பொருட்கவர்வு என்பன தெய்வத்திற்கு மாறான குற்றங்கள். கோயிலில் விளக்கெரிப்பதைத் தண்டனையாகப் பெற்றவனும், கோயிலில் விளக்கெரிக்கப் பொன் பெற்றவனும், அங்ஙனம் எரிக்காமையும்; கோயிற் பண் டாரத்திற் பெற்ற கடனுக்கு வட்டியிறுக்காமையும்; ஒப்பிப் பணிசெய்யாமையாகும். கோயிற் கலங்களையும் அணிகலங் களையும் களவாடலும், வழிபாட்டு விழாச் செலவைக் குறைத்த லும் அடியோடு நிறுத்தலும், கோயிற்பொருட் கவர்வாகும். மூவகைக் குற்றங்களுள்ளும், கடுமையானவை மேற்படு குற்றம் எனப்பட்டன. தண்டனை வகை : தண்டனையானது, தண்டம், மானக்கேடு, வேதனைப்பாடு, சிறைப்பு, வேலைநீக்கம், கொலை என அறுவகைப்பட்டிருந்தது. அவற்றுள், தண்டம் என்பது, தொகையிறுப்பு, தண்டத்தீர்வை, கோயில் விளக்கெரிப்பு என மூவகை. தொகை யிறுப்பாவது ஒரு குறித்த தொகையை மொத்தமாய்ச் செலுத்தல். மானக்கேடு என்பது, முகத்திற் செம்புள்ளி கரும்புள்ளி குத்திக் கழுதைமேலேற்றி ஆன்மயந் தோய்த்த அலகாலடித்து ஊர்வலம் வருவித்தலும், குலத்தினின்று விலக்கலும், ஆகும். வேதனைப்பாடு என்பது, தூணிற் கட்டிவைத்து 50 அடி முதல் 100 அடிவரை அடித்தல், கல்லேற்றல், வெயிலில் நிற்பித்தல், கிட்டி பூட்டல், நடைவிளக் கெரித்தல் எனப் பலவகைப்படும். கிட்டி என்பது கெண்டைக் காலை நெருக்கும் ஒருவகைக் கருவி. நடை விளக்கெரித்தல் என்பது, தலையில் அகல்விளக்கேற்றி ஊர்வலம் வருவித்தல். சிறைப்பு என்பது, தளையிட்டுச் சிறைக்கோட்டத்தில் வைத்தல். கொலை என்பது, வெட்டல், கழுவேற்றல், விலங்காற் கொல் வித்தல், சித்திரவதை செய்தல் என நால்வகை. யானையைவிட்டு மிதிப்பித்தலும் புலிக்கருத்துதலும் போல் வன விலங்காற் கொல்வித்தல். எருமைக் காலிற் கட்டியோட்டுதலும் வண்டிச் சக்கரத்திற் கட்டியோட்டுதலும் போல்வன சித்திரவதையாகும். குற்றத் தண்டனை : மூவகைக் குற்றவாளியர்க்கும் குடவோலை யிடப்பெறாமை பொதுத் தண்டனையாகும். கட்குடிக்கு இது தவிர வேறு தண்டனையில்லை. அறநூலுக்கு மாறான குற்றங்களுள் : பொய்க்குத் தண்டமும்; களவிற்குப் பொருள் மீட்பொடு மானக்கேடும், பொருள்மீட்கப் பெறாவிடத்துத் தண்டமும், தண்டம் இறுக்கப்படாவிடத்துச் சிறையும்; காமத்திற்கு மானக்கேடும்; கொலைக்குக் கொலையும்; தண்டனையாகும். கொலை செய்தவன் ஓடிப்போனவிடத்து, அவன் சொத்து முழுதும் பறிமுதலாகிக் கோயிற்குச் சேர்க்கப்பட்டது. ஓடிப் போன கொலைஞனைக் கொல்வதற்குப் பொதுமக்கட்கும் உரிமையிருந் தது. கொலைஞன் கொலையுண்டபின், அவனது பறிமுதலான சொத்தைப் பிறங்கடையான் வேண்டிப் பெற்றுக் கொள்ள முடியும். தற்செயலாய் நேர்ந்த கொலைக்குக் கோயில் விளக்கெரிப்பே தண்டனையாக விதிக்கப்பட்டது. கொலை யானது விரும்பிச் செய்யப்பட்டவிடத்தும், கொலைஞன் மகன் கொலையுண்டவ னின் நெருங்கிய வுறவினரொடு ஒப்பந்தஞ் செய்து கொள்ளின், தண்டனை நீங்க இடமிருந்தது. நரபலி, மற்போர், கொடும்பாவி கட்டியிழுத்தல் ஆகிய மூவிடத்தும் நிகழுங் கொலைக்குத் தண்டனையேயில்லை. தற்கொலையைத் தடுப்பதற்குச் சட்டமுறையான தடையும் அக்காலத்தில்லை. அரசியற்கு மாறான குற்றங்களுள், இறையிறுக்காமைக்குச் சொத்துப் பறிமுதலும், உறுபொருள் கவர்தலுக்குச் சிறையும், பிறவற்றிற்குக் கொலையும், பொதுவாக விதிக்கப்படும் தண்டனை யாகும். இறையிறாதார்க்கு ஈராண்டுத் தவணையும், அதன்மேற் குறிப்பிட்ட காலத்திற்குப் பிணைப்பேறும் தரப்பட்டன. அதன் பின்னும் இறாதான் சொத்து பறிமுதலாகிக் கோயிற்கு விற்கப் பட்டு, அரசிறைத்தொகை போக எஞ்சிய தெல்லாம் கோயி லொடு சேர்க்கப்பட்டது. கொள்ளையடித்தவர் கலகஞ் செய்தவர் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தெய்வத்திற்கு மாறான குற்றங்கட்குத் தண்டமும், குற்றவாளி கோயில் வினைஞனாயின் சிறுபான்மை வேலை நீக்கமும் தண்ட னையாயிருந்தன. கோயில் வினைஞருள், கீழோர் குற்றத்தை மேலோரும்; மேலோர் குற்றத்தை ஊரவையார், நாட்டதிகாரி, அரசனால் விதந்துவிடுக்கப்பட்ட அதிகாரி, அரசன் ஆகியவருள் ஒருவர் அல்லது பலரும்; கேட்டுத் தீர்ப்பது வழக்கம். ஒப்பிப் பணிசெய்யாதவர்க்குக் கடுந்தண்டவரியும், கோயிற்பொருள் கவர்ந்த பூசகன் அறைகாரன் (உக்கிராணத்தான்) முதலியோர்க்குத் தண்டமும் விதிக்கப்பட்டன. அணிகலமும் தட்டுமுட்டுங் களவாடி யவரால் இறுக்கப்பட்ட தண்டத் தொகையைக் கொண்டு, அப் பொருள்கள் வாங்கி வைக்கப்பட்டன. தண்டமிறுக்க இயலாத பூசகர் தம் கோயின் முறை நாட்களில் சில பல விட்டுக்கொடுத்தனர். பெரும்பாலும் குற்றங்கண்டே தண்டனை விதிக்கப்பட்டது. ஐயுறவான விடத்தில் மக்களை வதைத்துக் கேட்பதும் உண்டென் பது, பழியஞ்சிய திருவிளையாடலால் அறியக்கிடக்கின்றது. அக்காலத்தில் நடுவுநிலையாக முறை வழங்கப்பட்டதென்பது, மனுமுறைச் சோழன் பொற்றைப் பாண்டியன் நெடுமுடிக்கிள்ளி முதலியோர் செய்தியால் அறியலாம். ஆயினும், சிலவிடத்து ஆராயாமல் தண்டனை விதிக்கப்பட்டதென்பது, வார்த்திகன், கோவலன், பட்டினத்தார் முதலியோர் வரலாற்றால் அறியப்படும். பட்டினத்தார் தம் நிறைமொழி வன்மையாலேயே தண்டனையி னின்று தப்பினர். வலி குன்றிய அரசர் காலத்தில் அரசர்க்கடங்காது வாழ்ந்த மக்க ளும் உளர். அவர் கூடிவாழ்ந்த ஊர் அடங்காப்பற்று எனப் பட்டது. குற்ற வகை அரில் - பொருள்கள் ஒழுங்கின்றி மடங்கிக் கிடக்கும் குற்றம். அழுக்கு - உடம்பிலும் உடையிலும் படியும் தீநாற்ற மாசு. ஆசு - சக்கையும் மக்கும் வைத்து ஒட்டியது போன்ற குற்றம். இழுக்கு - ஒழுக்கக் கேடு ஏதம் - உறுப்பறை, உயிர்க்கேடு. கசடு - மண்டி போன்ற குற்றம் கரிசு - பாவம் (sin) கரில் - கொடுமை களங்கம் - கருத்தொளிப்பு கறை - வாழை நுங்கு முதலியவற்றின் சாற்றால் உண்டாகும் சாயம். குற்றம் - சட்டத்திற்கு மாறான செயல் (Fault, Guilt) குறை - தேவை அல்லது ஊனம் தப்பு (அ) - சரியில்லாது (Wrongness) தப்பிதம் தவறு - ஒரு கடமையைச் செய்யாக் குற்றம் (Failure) தீங்கு - இன்னல் (Harm) தீமை - நன்மையில்லாதது (Evil) துகள் - புழுதி போன்ற குற்றம் நவை - மக்கள் போன்ற குற்றம். பழுது - பழைமையால் வந்தகெடுதல். பிழை - ஒன்றிற்கு இன்னொன்றைச் சொல்லும் அல்லது கொள்ளும் குற்றம் (Mistake) புகர் - புள்ளி போன்ற குற்றம். புரை - துளை போன்ற குற்றம். போக்கு - சேதம் அல்லது கழிவு. மயல் - மயக்கத்திற்கிடமான குற்றம் மறு - மேனியில் உள்ள கரும்புள்ளி (Mole) போன்ற குற்றம். மாசு - பொருளின் மேல் படியும் சிறு தூசி மை - கருமை வழு - இலக்கண நெறியினின்று விலகும் குற்றம் (Error). வழுவாய் - பாவம் வடு - தழும்பு போன்ற குற்றம் வசை - பழிப்பாகிய குற்றம். (சொல். 45) குற்றியலுகரம் உயிரீறே எழுத்தெனப் படுப. அகரமுதல னகர இறுவாய் முப்பஃ தென்ப; சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே (தொல். 1) அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (தொல். 2) என்றார் தொல்காப்பியர். இரண்டாம் நூற்பாவில், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எனப் பிரித்துக் கூறாது குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்று `முப்பாற் புள்ளி என்பது மூவெழுத்தையும் பொதுப்படத் தழுவுமாறு உம்மைத்தொகையாய்ச் சேர்த்துக் கூறியிருத்தலின். குற்றியலிகர குற்றியலுகரங்களும் ஆய்தம் போலப் பண்டைக் காலத்திற் புள்ளி பெற்றன என்பதுணரப்படும். நூற்பாவில் முப்பாற்புள்ளி என்பது, புள்ளி பெற்ற மூவெழுத்து களையும் முப்புள்ளி வடிவான ஆய்தத்தையும் ஒருங்கே குறிப்பது ஆமாகோனவ் வணையவும் பெறுமே என்னும் நன்னூல் நூற்பாவின் ஆமா என்பது போன்ற இரட்டுறலாகும். தொல்காப்பிய மரபியல் நூற்பா 110-ல், வாரா ததனான் வந்தது முடித்தல் என்னும் உத்தியுரையில். குற்றியலிகரத்தைப் புள்ளியென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது, இனிப் புள்ளி யென மேல் ஆள வாராததனைப் புள்ளியென்று ஆள்வனவற் றோடு மயக்கங் கூறுதலென்பது. `அவைதாங் குற்றிய லிகரங் குற்றியலுகர - மாய்த மென்ற - முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன (தொல் - எழுத். நூன். 2) என்புழிக் குற்றியலிகரம். புள்ளி யென்று யாண்டும் ஆள வாராமையானும் அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்ஙனம் புள்ளி யென்று ஆள வருங் குற் றுகரத்தோடும் ஆய்தத்தோடும் உடன் கூறுதலாயிற்று. இங்ஙனம் உடன் கூறாக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் சூத்திரம் பெறுதல் வேண்டுவ தாவான் செல்லுமென்பது என்றுரைத்தார் பேராசிரியர். சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியில். ஒரு மொழியைச் சார்ந்துவரு மியல்பின்றித் தனித்தியங்கு மியல்பு தமக்கிலவென்றலின், அவை தம்மையே யெடுத்தோதிக் காட்ட லாகாமையின், வருஞ் சூத்திரத்தான் அவற்றிற்கு வேறுவேறு பெயரிட்டு அவைதாங் குற்றியலிகரங் குற்றியலுகர மாய்தம் என்றும், அம் மூன்றும் புள்ளி பெறுதல் பற்றிப் பொதுப் பெய ராக முப்பாற் புள்ளியும் என்றும், அவை தனித்தெழுதப்படா வாயினும் மொழியொடு சார்த்தியெழுதப்படுதலின் எழுத்தென் னுங் குறியீட்டிற் குரியவென்பார். `எழுத்தோ ரன்ன என்றும் ஓதினார் என்றார். நச்சினார்க்கினியரும், அவைதாம்... எழுத்தோ ரன்ன என்னும் சார்பெழுத்து நூற்பாவுரையின் இடையில். ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக்கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளி யுமென்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட் டெழுதுப. இதற்கு வடிவு கூறினார். ஏனை யொற்றுகள்போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாகலின், எழுத்தியல் தழா ஓசைகள் போலக் கொள்ளினுங் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயா மென்றார். இதனைப் புள்ளி வடிவிற்றெனவே ஏனை யெழுத்துகளெல்லாம் வரிவடிவின வாதல் பெற்றாம் என்று கூறினாரேனும், தொடக்கத்தில், அவைதாம் - மேற்சார்ந்து வருமெனப்பட்டவைதாம். குற்றிய லிகரங் குற்றியலுகரம் ஆய்தமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவுமாம் : எழுத்தோரன்ன - அவையும் முற்கூறிய முப்பதெழுத்தோடு ஒருதன்மையாய் வழங்கும் என்ற வாறு என்று மூவெழுத்தும் புள்ளிபெறுமென ஒருதன்மைப் படவே உரைத்தார். மயிலைநாதர், தொல்லை வடிவின என்னும் நன்னூல் நூற்பாவுரையில். ஆண்டு என்ற மிகையானே. தாது, ஏது என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு கொட்டு என்றற் றொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றியாது, நாடியாது எட்டியாண்டுளது என்றற்றொடக்கத்துப் புணர்மொழிப் பொருள் வேறுபாடு களும், அறிதற்பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற் புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க என்று உரைத்தனர். குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் புள்ளி பெற்று நிற்கும் : என்னை? குற்றிய லிகரமும் குற்றிய லுகரமு மற்றவை தாமே புள்ளி பெறுமே என்பது சங்க யாப்பாகலின் என்பது யாப்பருங்கல விருத்தி (ப.27). மேற்கூறியவற்றால், குற்றியலிகர குற்றியலுகரங்கள் பண்டைக் காலத்தில் புள்ளியிட் டெழுதப்பட்டனவென்றும் அங்ஙனம் எழுதினது அவற்றின் ஒலிக் குறுக்கத்தையும் நாடியாது, எட்டி யாண்டு முதலிய புணர்மொழிப் பொருள் வேறுபாட்டையும் காட்டற்கு என்றும் அறியப்படும். நாடியாது. எட்டியாண்டு என்பன, நாடி யாது, எட்டி யாண்டு என்றும் பொருள்படுமாதலின், அவை நாடு+யாது, எட்டு+யாண்டு என்னும் புணர்மொழிகள் என்று காட்டற்குக் குற்றியலிகரத்தின் மேற் புள்ளியிடப்பட்டதென்க. குற்றுகரத்தை மேற்சுன்னமிட்டுக் காட்டுவது இன்றும் மலையாள (சேர) நாட்டு வழக்கம். குற்றிகர குற்றுகரங்கள் புள்ளி பெறு மென்று நன்னூலிற் கூறப்படாமையால், 12ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இவ் வழக்கு. சோழ பாண்டிய நாடுகளில் ஒழிந்தது என்பதை அறியலாம். எகர ஏகாரங்கட்கும் ஒகர ஓகாரங்கட்கும் அவை சேர்ந்துள்ள உயிர்மெய்கட்கும் வரி வேறுபாடு தொல் காப்பியத்திலே கூறப்பட்டிருப்பினும் 17ஆம் நூற்றாண்டில் அவ் வெழுத்துகள் குறில் நெடில் வேறுபாடின்றி எழுதப் பட்டாற் போல, குற்றியலுகரமும் வேறுபாடின்றி யெழுதப்பட்ட தென்க. ஒரு பொருள் குறுகின் அப் பொருளேயன்றி வேறுபொரு ளாகாது : அதன் குறுக்கம் அளவு வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடன்று. அதுபோல், குற்றியலுகரமும், முற்றியலுகரம் போல உயிரேயன்றி மெய்யாகாது. இதனாலேயே, இகர உகரங் குறுகிநின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடு தலின், இவற்றை இங்ஙனங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங் கோலாகாது அது போல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும்பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார் நச்சினார்க்கினியரும், பொருள் வேற்றுமை யென்றது பண்டைக் காலத்தில் கட்டு கொட்டு முதலிய சொற்கள் ஏவல் வினையாம் போது முற்றுகர வீறாயும் முதனிலைத் தொழிற்பெயராம்போது குற்றுகர வீறாயும், ஒலிக் கப்பட்டவை நோக்கி, தருக்கு அணுக்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம். (தொல். 36. உரை). காது கட்டு கத்து முறுக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல (தொல். 68, உரை). என்று நச்சினார்க் கினியர் கூறுதல் காண்க. தொல்காப்பியர் தம் காலத்தில் குற்று கரமும் மெய்போலப் புள்ளி பெற்றதனாலேயே, புணரியலில். மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (தொல். 104) குற்றிய லுகரமும் அற்றென மொழிப (தொல். 105) என்று மாட்டேற்றிக் கூறினார். இம் மாட்டேற்றைக் கவனியாது, குற்றிய... மொழிப. என்னும் நூற்பாவிற்கு ஈற்றிற் குற்றிய லுகரமும் (புள்ளியீறு போல உயிரேற இடம் கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர் என்று இளம்பூரணரும், ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறு போல உயிரேற இடம் கொடுக்குமென்று கூறுவர் புலவர் என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவது பொருந்தாது. அற்றென மொழிப என்னும் மாட்டேறு. புள்ளியொடு நிலையல் என் பதையே தழுவுமாதலின் இவ் விருவரும் இங்ஙனம் உரைத்தற்கு இவர் காலத்திற்கு முன்பே குற்றியலுகரம் புள்ளி பெறும் வழக்கம் வீழ்ந்தமையே காரணமாகும். இவர் கூறிய உரை இங்குப் பொருத்துமாயின் தொல்காப்பியர் நூன்மரபில். மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல் (தொல். 15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே (தொல். 16) என்று கூறியவிடத்தும் பொருந்தல் வேண்டும். எகர ஒகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுத்த லின்மை யானும், எகர... அற்றே என்னும் நூற்பாவிற்கு. எகர ஒகரங் களது இயல்பும் அவ்வாறு புள்ளி பெறும் இயல்பிற்று என்று இளம்பூரணரும். எகர ஒகரங்களின் நிலையும் மெய் போலப் புள்ளி பெறும் இயல்பிற்று என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவதானும். குற்றிய... மொழிப என்னும் நூற்பாவிற்கும் குற்று கரமும் மெய்போலப் புள்ளிபெறும் என்பதே உரையாகக் கோடல் பொருத்தமாம். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கு மென்று உரைத்த விடத்தும், மாத்திரைக் குறுக்கத்தால் அங்ஙனம் இடங்கொடுக்கும் என்னும் கருத்தினரே அன்றி மெய்யீறாய் இருத்தலால் இடங்கொடுக்கும் என்னுங் கருத்தினரல்லர். குற்றுகரத்திற்கு முன்னர் வந்து உயிரேறி முடியாமையும் தம்முள் வேற்றுமை (தொல். 36, உரை) என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இனி, தொல்காப்பியர் கருத்தை நோக்கின், அவர் குற்றியலு கரத்தை மெய்யீறென்று கொண்டார் என்று கொள்ளுதற்கு எள்ளளவும் இடமில்லை. அவர், குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல். 67) எனக் குற்றியலுகரம் மொழிமுதல் வருமென்றும் கூறினார். நுந்தை என்னும் சொல்லின் முதலில் (தொல்காப்பியர் கருத்தின் படி) உள்ள குற்றியலுகரம் மெய்யீறாயின், அச் சொல் ந்ந்தை என்று எழுதப்படல் வேண்டும். அங்ஙன மெழுதப் படாமையும், குற்றியலுகரத்தைத் தொல்காப்பியர் மெய்யென்று கொண் டிருப்பராயின், அது, பன்னீ ருயிரும் மொழிமுத லாகும் (தொல். 59) உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா (தொல். 60) என்று அவர் கூறியவற்றோடு முரணுதலும் நோக்குக. மேலும், ஒரே யுகரம் ஓரிடத்துக் குற்றுகரமாகவும் ஓரிடத்து முற் றுகரமாகவும் ஒலிக்கப்படும். அங்ஙனம் ஒலிக்கப்படு பவற்றுள் சிலவற்றிற்குக் குற்றுகர முற்றுகரப் பொருள் வேறுபாடுண்டு. சிலவற்றிற்கில்லை. முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கின் நிலையிய லான (தொல். 68) என்னும் நூற்பாவையும், அதன் உரையில், காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தாயென்பதோ வெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டு தலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான் இடமும் பற்றுக் கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதையும் நோக்குக. இதனால், குற்றிய லுகரம் மெய்யீறாயின் முற்றியலுகரமும் மெய்யீற்றாய் உகரம் என்னும் உயிரே தமிழுக்கில்லை யென்று பெறப்படுதலும் அங்ஙன மின்மையும் அறிக. செய்யுளியலில், இருவகை யுகரமு மொன்றாகக் கொண்டே. இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபு மாகு மென்ப (தொல். செய். 4) என்றார் தொல்காப்பியர். இதன் உரையில், இருவகை யுகரமென்பன, குற்றுகர முற்று கரங்கள், அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒரு சொல் விழுக்காடு பட இயைந்துவரின் நிறுத்த முறையானே நேரசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும்; நிரைபசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடொன்றி வந்த முற்று கரமும் நிரை பசை எனப்படும் என்றவாறு... முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண் வகை யான் அசைகூறி அவற்றுப்பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப் பகுதியவாய்ச் சென்றதேனும், அவற்றுட் குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேர்பசை யாகா தென்பது குறி லிணை யுகர மல்வழி யான (தொல். செய். 4) என்புழிச் சொல்லு தும்: ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிரைபசை நான்கு மாயின. உதாரணம் : வண்டு. நாகு, காம்பு, வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு; இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்த வாறு என்று உரைத்தார் பேராசிரியர். இதனால், குற்றுகரமும் முற்றுகரமும் போல அலகு பெறுமென்றும் அசைக் குறுப்பா மென்றும் அறியப்படும். சொற்கள் இலக்கண முறையிலும் இலக்கிய முறையிலும் பல வகையாகத் திரிந்து, முன்பு முற்றுகர வீறாயிருந்தவை அல்லது உகரமல்லாத ஈறாயிருந்தவை பின்பு குற்றுகர வீறாகின்றன. அவ் வகைகளாவன : 1. தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழில் பெயர் : எ-டு: படு - பாடு, சுடு - சூடு. விகுதிபெற்ற தொழிற் பெயர் : எ-டு : படி + பு = படிப்பு. முடி + சு = முடிச்சு. 2. வேற்றுமைப் பெயர் : எ-டு : யான்+கு = எனக்கு. அவர் + கு = அவர்க்கு. 3. குறிப்பு வினைமுற்று : எ-டு : தாள் + து = தாட்டு. கண் + து = கட்டு. பால் + து = பாற்று. அன் + து = அற்று. 4. பிறவினை : எ-டு : படு + து = படுத்து. நட + து = நடத்து. வாழ் + து = வாழ்த்து. பாய் + சு = பாய்ச்சு. 5. போலி : எ-டு : அடைவு - அடவு - அடகு. 6. சொல் திரிபு : எ-டு : திரும் - திரும்பு. பொருந் - பொருந்து, உரிஞ் - உரிஞ்சு, உடன் (உடல்) - உடம் - உடம்பு. பண் - பாண் - பாடு. குள்- கொள் - கோள் - கோண் - கோடு. ஒளி - ஒளிர் - ஒளிறு. போ- போது. மேற்காட்டிய பாடு, படிப்பு, எனக்கு, தாட்டு, படுத்து முதலிய சொற்கள், குற்றுகர வீற்றை மெய்யீறாகக் கொள்ளின் பாட்ட் படிப்ப் எனக்க் தாட்ட் படுத்த் என்ற முதல் வடிவங்களினின்று தோன்றினவாக வன்றோ கொள்ளல் வேண்டும்! இஃது எத்துணைப் பேதமையாகும்! மேலும், ஆட்டு பாட்டு கலக்கு விலக்கு முதலிய பிறவினைகளும் தொழிற்பெயர்களும் முதனிலை யீற்று வலியிரட்டியும் முதனிலை யிடைமெலி வலித்தும் முறையே ஆடு பாடு கலங்கு விளங்கு என்னுஞ் சொற்களினின்று திரிந்திருக்கவும், அவற்றை ஆட்ட் பாட்ட் கலக்க் விளக்க் என்னும் வடிவங்களினின்று பிறந்தனவாகக் கொள்ளல் இளஞ் சிறாரும் எள்ளிநகையாடத் தக்க தொன்றன்றோ? ஒருசில ஒலியடிச் சொற்களொழிந்த எல்லாச் சொற்களும் ஓரசையான வேர்ச்சொற் களினின்றே பிறந்தவை யாதலின், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்வாரெல்லாம் சொற்பிறப்பியலை எட் டுணையும் தாமறியாதிருத்தலை முற்றுறக் காட்டு பவரேயாவர். குற்றுகரவீறு மெய்யீறாயின், அறுவகைக் குற்றியலுகரத் தொடர் களும் வல்லின மெய்யீற்றினவாதல் வேண்டும். ஞணநம னயரல வழள என்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி (தொல். 78) என்று தொல்காப்பியர் பிரிநிலை யேகாரங் கொடுத்துக் கூறின மையானும், குற்றுகரவீறு தமிழ்ச்சொல்லில் ஓரிடத்தும் மெய் யீறாக எழுதப்படாமையானும், அஃதுண்மையன்மை வெள் ளிடைமலை. கண் + யாது = கண்ணியாது என்பது போன்றே சுக்கு + யாது சுக்கியாது என்று குற்றுகரமும் புணர்வதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்ளலாமே யெனின், கதவு + யாது = கதவியாது என்று முற்றுகரமும் அங்ஙனம் புணர்வதால் அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு உகரவுயிரே தமிழுக்கில்லை யென்றாகும் என்று கூறி விடுக்க, தொல்காப்பியர் மொழி மரபியலில். உச்ச காரம் இருமொழிக் குரித்தே (தொல். 75) உப்ப காரம் ஒன்றென மொழிப (தொல். 76) என்று வரையறுத்தது உசு முசு தபு என்னும் மூன்று முற்றுகர வீற்றுச் சொற்களையே யன்றிக் குற்றுகரவீற்றுச் சொற்களை யன்று. சு, பு என்னும் இரு முற்றுகர ஈறுகளைக் கொண்ட சொற்கள் எத்தனை என்று வரையறுப்பதே மேற்கூறிய நூற்பாக்க ளின் நோக்கம், கு, டு, து, று என்னும் நான்கு முற்றுகரவீற்றுச் சொற்களும் அறுவகைக் குற்றுகர வீற்றுச் சொற்களும் அளவிறந் தனவாதலின், அவற்றை வரையறுத்திலர் தொல்காப்பியர். இகு, உகு, செகு, தகு, தொகு, நகு, நெகு, பகு புகு மிகு வகு விகு எனக் குகரவீறும், அடு இடு உடு எடு ஒடு கடு கெடு கொடு சுடு தடு தொடு நடு நெடு நொடு படு பிடு மடு வடு விடு என டுகரவீறும் கொண்ட முற்றுகரவீற்றுச் சொற்கள் பெருந்தொகை யினவாயும் எண் வரம்பு படாதனவாயு மிருத்தல் காண்க. பிற முற்றுகர வீற்றுச் சொற்களும் இங்ஙனமே, குற்றுகரவீற்றுச் சொற்களோ வெனின், அகராதிகளாலும் வரைய றுக்கப்படாத பல்லாயிரக் கணக்கின. மேற்கூறிய நூற்பாக்களின் உரையில், உகாரத்தோடு கூடிய சகாரம் இரண்டு மொழிக்கே ஈறாம் என்றவாறு எ-டு : உசு, இஃது உளுவின் பெயர். முசு, இது குரங்கினுள் ஒரு சாதி . பசு என்பதோவெனின். அஃது ஆரியச் சிதைவு. கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இரு மொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறாமாயிற்று. (தொல். 75, உரை) என்றும், உகரத்தோடு கூடிய பகரம் ஒரு மொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர் எ-டு: தபு என வரும்..... உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம், உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனையுயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பல பொருள் தருமென்றா ராயிற்று (தொல். 76, உரை) என்றும் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலை நோக்குக. இதுகாறுங் கூறியவாற்றால், குற்றியலுகரம் உயிரீறே யென்றும், தொல்காப்பியர் ஓரிடத்தும் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டில ரென்றும் இயற்கையும் எளிமையும் தனிமையும் தாய்மையும் சான்ற தமிழியல்பை யறியாத ஆரியவழி யியலாரே தம் மொழியைப் போன்றே தமிழும் ஆரிய வழித்தென்று மயங்கி, தமிழை வடமொழி வழித்தாகக் காட்டக் கருதி அதற்கு முதற் படியாகக் குற்றுகர வீற்றை மெய்யீறாகக் கூறியிடர்ப் பட்டுப் பின்பு அவ் விடர்ப்பாட்டினின்று நீங்கப் பண்டைத் தமிழ்ச் சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன வென்றும், வலியிரட்டல் என ஒரு திரிவு முறையும் அரவு என ஒரு தொழிற்பெயர் விகுதி இல்லையென்றும் சொல்லியல் நூலுக்கும் மொழிநூலுக்கும் முற்றும் மாறாகத் தத்தம் உளந்திரிந்தவாறே உரைப்பரென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க. (தொல்காப்பியம் எழுத்து நச்சினார்க்கினியர் உரை 1944) குறங்கறுத்தல் ஒரு கால்வாயினின்று கிளைக் கால்வாய் வெட்டுதலுக்குக் குறங்கறுத்தல் என்று பெயர். குறங்கு - தொடை. ஓர் ஆறும் அதனின்று பிரியும் கால்வாயும் இருதொடை போன்றன. குறள் மக்களுள் மிகக் குள்ளமானவனுக்குக் குறளன் என்றும் சிறிது குள்ளமானவனுக்குச் சிந்தன் என்றும், அளவாக வளர்ந்தவனுக்கு அளவன் என்றும், நெட்டடையானவனுக்கு நெடியன் என்றும், மிக நெட்டையானவனுக்குக் கழிநெடியன் என்றும் பெயர். இம் முறையை ஒட்டிச் செய்யுள் அடிகளுள் : இரு சீரடிக்குக் குறள் என்றும், முச்சீரடிக்குச் சிந்து என்றும், நாற்சீரடிக்கு அளவு அல்லது நேர் என்றும், ஐஞ்சீர் அடிக்கு நெடில் என்றும், அறு சீரும் மேலும் கொண்ட அடிக்குக் கழிநெடில் என்றும் பெய ரிடப்பட்டுள்ளன. (சொல். 10) குறிக்கோள் வகை கொள்கை மத நம்பிக்கை அல்லது சித்தாந்தம். (Doctrine) கோட்பாடு சிறு கொள்கை (Tenet) குறிக்கோள் குறித்துக் கொண்ட பொருள் (Object) ஏடல் சொந்தக் கருத்து (Idea) நெறிமுறை ஒருவன் தானே அமைத்துக் கொள்ளும் நியதி. (Principle) நோக்கம் ஒரு பொருளின் மேலுள்ள நாட்டம். (Aim) இலக்கு அடைய வேண்டிய எல்லை (Goal) இலக்கம் எய்யும் குறி (Target) விதி ஒழுக்கம் அல்லது மொழிவரம்பு (Rule) சட்டம் அரசியலார் அமைத்த விதி (Law) மேல்வரிச்சட்டம், ஒருவர் தாம் கையாளுவதற்குத் தாமே அமைத்துக் கொண்ட திட்ட வாக்கியம் (Motto) (சொல் : 61.) குறிஞ்சி (குஞ்சி) விளையாட்டு பொதுவாக ஐவர்க்குக் குறையாத பல பிள்ளைகள் வரிசையாக வோ வட்டமாகவோ கூட்டமாகவோ நின்று கொண்டு, அவருள் ஒருத்தி ஏனை ஒவ்வொருத்தியையும் வரிசைப்படி சுட்டி, ஒண்ணரி, டூவரி, டிக்கரி, ஆவன், சாவன், இங்கிலீஷ், மென், பிளௌன், போடிங், சிட், என்று சொல்லுவாள். சிட் என்று சொல்லப்பட்ட பிள்ளை நீங்கிவிட வேண்டும். பின்பு, மீண்டும் மீண்டும் பல தடவை இச் சொற்கள் சொல்லப்படும். ஒவ்வொரு தடவையும் சிட் என்று சொல்லப்பட்ட பிள்ளை நீங்கிவிட வேண் டும். இங்ஙனம் தொடர்ந்து செய்யின் இறுதியில் ஒரு பிள்ளை எஞ்சிநிற்கும். அவள் மற்றவரை ஓடித் தொட வேண்டும். ஆட்டந் தொடங்குமுன் காலால் ஒரு வட்டம் போடப்படும். தொட வேண்டியவள் பிறரெல்லாம் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளும்வரை, தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். எல்லாரும் ஒளிந்துகொண்டபின் வரலாமா? என்று கேட்டு, அவர் வரலாம் என்று சொன்னபின், தொட வேண்டியவள். அங்குமிங்கும் ஓடிப் போய்ப் பலவிடங்களிலும் தேடிப் பார்ப் பாள். ஒளிந்திருந்தவர் ஓடிவந்து வட்டத்திற்குள் நின்று விடின், அவரைத் தொடல் கூடாது. வட்டம் நோக்கி ஓடிவரும் போது, ஆடை அவிழ்ந்துவிட்டாலும் கீழே விழுந்து விட்டாலும், அன் றும் அவரைத் தொடல்கூடாது. சிலர், ஒளிந்திராமலே நீண்ட நேரம் ஆட்டம்காட்டி வட்டத்திற்குள் வந்து நின்று கொள்வர். வட்டத்திற்கு வெளியே தொடப்பட்டவள், அடுத்த முறை முன் சொன்னவாறு பிறரைத் தொடல் வேண்டும். வட்டத்திற்குப் பதிலாக ஓர் எல்லைப்பொருள் குறிக்கப் படுவது முண்டு. அவ் வெல்லைப் பொருளைத் தொட்டு விட்டாலும், அதன்பின் தொடுதல் கூடாது. குறிப்பொலிகளும் குறிப்புச் சொற்களும் Onomatopoetics and Frequentatives (1) ஒற்றைக்கிளவி எ.டு: சடார், வெள்ளென, சரட்டென்று, பொதுக்கென்று. (2) இரட்டைக் கிளவி. எ.டு: கலகல, சுருசுரு, மடமட. (3) எதுகைக் கிளவி. எ.டு: சட்டுப்புட்டு (சட்புட்), சடுசடு, ஆலே பூலே, காமா சோமர். (4) அடுக்குக் கிளவி. எ.டு: பட்டுப்பட்டு (பட்பட்), கதக்குக் கதக்கு, கணீர் கணீர். (5) இரட்டித்த கிளவி. எ.டு: செக்கச்செவேர், கன்னங் கரிய. குறிப்பு (1) இங்குக் கூறிய கிளவிகளெல்லாம் எனவென் னெச்சமும் என்றென் னெச்சமுமாகும். (2) வெள்ளென, சுருசுரு முதலிய சொற்கள் சுட்டடித் தோன்றி யவை; சடார் கலகல முதலியவை ஒலியடித் தோன்றியவை. (3) அடி அடியென்றடித்து, குறுகுறு நடந்து என்பவை இக்காலத் தில் அடுக்குத் தொடர்களாயிருப்பது போல, மினுமினு, கலகல என்பவும் முதற்காலத்தில் அடுக்குத் தொடர்களா யிருந்தன. (4) வெடி, குத்து முதலிய சொற்கள் சுட்டும் ஒலியுமாகிய ஈரடிப் பிறப்பின. (மு.தா.) குறியெதிர்ப்பை குறியெதிர்ப்பையாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். (தி.ம. 134) குறியொலி இசைவு வெறுப்பு முதலிய மனநிலைகளை யுணர்த்தற்கு, வாயாலும் மூக்காலும் இசைக்கும் அடையாள வொலிகள் குறியொலிகளாகும். எ-டு : 1. வாயொலி ச்சு என்பது போன்ற ஒலியை வாயாலிசைப்பது, பிறர் கூற்றை ஒப்புக்கொள்வதையும் ஒப்புக்கொள்ளாமல், இகழ்வதையுங் குறிக்கும். இது உச்சுக்கொட்டல் எனப்படும். மறுப்பொலி உடன்பாட்டொலியினும் வலியதாயும் முகக்குறிப்போடு கூடியதாயுமிருக்கும். கையால் வாயிலடித்துக் கொண்டு ஆ வென்று ஆரவாரித்தல் வெற்றிக்குறியாகும். இது ஆவலங் கொட்டல் எனப்படும். (வலம் = வெற்றி.) 2. மூக்கொலி வாய் மூடியிருக்கும் நிலையில், ஊம் என்பது போன்ற ஒலியை மூக்காலொலிப்பது, உடன்பாட்டைக் குறிக்கும். இது உம்மெனல் அல்லது ஊங்கொட்டல் எனப்படும். இது தனித்த நிலையில் உடன்பாட்டையும் இரட்டிய நிலையில் மறுப்பையுங் குறிக்கும். இனி, குரல் வேறுபாட்டாலும் மாத்திரை வேறுபாட்டாலும் அசையழுத்த வேறுபாட்டாலும், ஊங்கொட்டல் வியப்பு இழிப்பு வெறுப்பு வெகுளி முதலிய பல குறிப்புக்களையும் உணர்த்தும். அன்று அததற்குரிய முகக்குறிப்போடு கூடிவரும். இனி, விலங்குகளையும் பறவைகளையும் விளிக்கப் பயன் படுத்தும் ஒலிகளும் ஒருசார் குறியொலிகளே. ஆட்டை அழைக்கும் ஒலி - பாய்! மாட்டை அழைக்கும் ஒலி - பா! நாயை அழைக்கும் ஒலி - சூ சூ! தோ தோ! துவா துவா! கோழியை அழைக்கும் ஒலி - பே பே! இனி, சரியாய் ஒலித்துக்காட்ட முடியாதனவும் மொழிக்குப் பயன் படாதனவு மான, எத்துணையோ குறியொலிகள் உளவென அறிக. (மு.தா.) குறில் நெடில் உயிரெழுத்துக்களில் குறில் நெடில் என்பன குறுவாழ்க்கை உயிரையும் நெடு வாழ்க்கை உயிரையும் உணர்த்தும். (சொல். 34) கூ கூ - கு, கூ கூ - கூவு. கூகை - கூக (gh) (வ.வ: 130) கூகை கூகை : கூகூ - கூகை - கூக (வ) (தி.ம: 741) கூந்தல் கூந்தல் - குந்தல (nt) குத்து = கொத்து. குத்து - குத்து - கூந்து = மயிர்க்கொத்து. கூந்திளம் பிடி (சூளா. நாட்டு. 19). TªJ - Tªjš = bfh¤jhd bg©o® jiykÆ®, kƉnwhif, Fâiuthš (?), கூந்தற்பனை, கமுகம்பாளை, குதிரை வாலிக் கதிர். ஒ.நோ : கொத்து - கொந்து. ம கூந்தல். க. கூதல். (வ.வ : 130) கூழ் கூழ் : குழை - கூழ் = குழைந்த பொருள், இழைந்த வுணவு கூழ் - கூர (வ.) (தி.ம: 742) கூழை கூழை - கூல = படையின் பின்னணி. கூழை = 1. வால். புன் கூழையங் குறுநரி (கல்லா. 89 : 18). 2. வால்போன்ற பின்னணி. (வ.வ: 130) கெடவரல் ஓர் இளங்கன்னிக்குக் களிறு புலி முதலிய விளங்குகளாலும் ஆழ்நீராலும் நேரவிருந்த கேட்டை, தற்செயலாக அவ்வழி வந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய செய்தியைச் சிறார் நடித்தாடுவது கெடவரல்.... (த.வி.முக.) கேட்டல் சொல்லச் சொல்லுதலும் செவிகொடுத்தலும் ஆகிய இரு செயலும் பற்றியது. (குறள். 667) கேடுதருவன வறுமை, நோய், அறங்கடை (பாவம்), பழி, அறியாமை, பகை முதலியன. (குறள் : 832) கைக்கிளை கைக்கிளையாவது, ஆடவன் பெண்டு ஆகிய இருவருள்ளும் ஒருவருக்கே காதல் இருப்பது; ...... ஒரு தலைக் காமம் என்றும் சொல்லப் பெறும். கை என்பது பக்கம். கிளை என்பது நேயம். ஆகவே கைக்கிளை என்பது ஒரு தலைக் காதல். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும், நில மில்லாதபடி ஐவகை நிலங்களை யும், நடுநாயகமான அன்பின் ஐந்திணைக்கே உரிமை யாக்கி விட்டதனால், மக்கட்கு நலம் பயவாத ஏனையிருமண முறைகளும் இந்நிலவுலகத்தில்லாது நீங்கல் வேண்டும் என்பது, முன்னைத் தமிழிலக்கண நூலாரின் கருத்தாகும். (த.தி. 15, 16) கைக்கிளை மணம் மணமக்களின் இசைவைக் கேளாது பெற்றோரே முடித்து வைக்கும் திருமணங்களில், மணமகனுக்கு அல்லது மண மகளுக்கு மட்டும் காதல் இருப்பின், அது கைக்கிளை மணமாம். மணமக்கள் இருவருள் ஒருவருக்கு மட்டும் காதல் இருக்கும் போது, ஏனையவரும் எதிர்ப்பின்றி இசைந்திருந்தால்தான், அது கைக்கிளை மணமாகும். காதலின்றியும் இசைந்து வரும் பெண்ணை ஆடவனும் ஆட வனைப் பெண்ணும் மணப்பதேயன்றி, இசையாப் பெண்ணையும் ஆடவனையும் வலிதில் மணப்பதன்று. (த.தி. 16, 17.) கைதை கை : தை - கைதக கள் = முள். கள் - கய் - கை - (கைது) - கைதை = முள்ளுள்ள தாழை. கைதையம் படப்பை (அகம். 100 : 18). ம. கைதா. வடசொல் கேதக என்னும் வடிவுங் கொள்ளும். (வ.வ : 131) கொக்கு கொக்கு - கோக்க = ஓநாய். கொக்கு = செந்நாய் (பிங்.). (வ.வ: 131.) கொங்கணம் கொங்கணம் - கோங்காண கொங்கு - கொங்கணம். (வ.வ: 131) கொங்கணவன் யாரேனும் ஒருவர் பேதைத் தன்மையாகப் பேசினால் அவரைப் பிறர் கொங்கணவன் (கொங்கணையன்) என்பது வழக்கம். கொங்கணவன் என்னும் பெயரையுடைய முனிவர் தம் தவ வலிமையால் ஒரு கொக்கைக் கொன்று வீழ்த்தியபின் மக்களை யும், அங்ஙனமே சாவிக்கலாம் என்று கருதி, தமக்கு ஐயமிடக் காலந் தாழ்த்து வந்த வாசுகியம்மையாரை உறுத்து நோக்க, அவ்வம்மையார் கொக்கென்று நினைத்தையோ கொங்கணவா? என்று கடிந்தார். அதன்பின் அம்முனிவர் கற்புடை மங்கையரின் பெருமையை உணர்ந்து அவ்வம்மையாரிடம் மன்னிப்புக் கேட்டுச் சென்றார் என்பது வரலாறு. (சொல். 30.) கொங்குநாட்டு அரசுகள் அதிகர் (அதிகமானர்), கங்கர், கட்டியர் என்னும் மும்மரபின ரும், கடைக்கழகக் காலத்திலிருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை, பேரரசர்க்கு அடங்கியும் அடங்காதும், கொங்குநாட்டின் பகுதிகளை ஆண்டுவந்தனர். சோழர் ஆட்சி - 1004 - 1303. இடையிற் பாண்டியர் மீயாட்சி - 1365 - 1300. சோழராட்சிக்குப் பின், கேரளராட்சியும் ஒய்சளராட்சியும் விச யநகர நாயக்கராட்சியும் உடையாராட்சியும் ஐதரலி திப்பு சுலுத்தானாட்சியும், சிச்சிறிது காலம் நடைபெற்றன. ஆங்கிலராட்சி - 1799 - 1947. இந்திய விடுதலையும் ஒன்றியமும் (Union) - 1947. கேரளநாட்டுச் சிற்றரையங்களும் இந்திய ஒன்றியத்திற் கலந்தன. கொஞ்சம் கொஞ்சம் - கிஞ்சித் குஞ்சு = சிறியது, பறவைக் குஞ்சு. குஞ்சு - குஞ்சி = சிறியது, பறவைக் குஞ்சு. குஞ்சிப்பெட்டி = சிறுபெட்டி. குஞ்சியப்பன் = சிற்றப்பன். குஞ்சு - குஞ்சன் = சிறியவன், குறளன். குஞ்சு - கொஞ்சு - கொஞ்சம் - கிஞ்சம் = சிறிது. கிஞ்சம் - கிஞ்சித் (வ.) (வ.வ : 131) கொடி ஆடவன் பெண்டு ஆகிய இருபாலருள் பெண்டு மிக மெல்லியள் ஆதலின் கொடி எனப்படுவாள். இதனாலேயே குறிஞ்சி நிலப் பெண்டிற்குக் கொடிச்சி என்று பெயர். பெண்ணைக் கொடியென உவமை ஆகுபெயராற் குறிப்பது மட்டுமன்றி, பெண்கொடி என உருவக வாய்பாட்டாற் கூறுவ தும் உண்டு. (சொல். 2.) மெல்லியதும் விரைந்து வளர்வதும் ஒரு கொள்கொம்பைப் பற்றிப்படர்வதும் கொடியே. பெண்ணைக் கொடி என்று சொன்ன அளவிலேயே அவள் ஆடவனிலும் மெல்லியள் என்றும், அவனிலும் விரைந்து வளர்பவள் என்றும், ஒரு கொழு நனைத் துணைக் கொண்டே வாழ்பவள் என்றும் மூன்று பெண் பாற் குணங்கள் குறிப்பால் அறியக் கிடக்கின்றன. (சொல். 2) கொடிகட்டிப் பறத்தல் ஒருவர் தம் சொந்த முயற்சியால் பெரும் பொருள் ஈட்டியதைப் பாராட்டும் போது கோடியும் தேடிக் கொடிமரமும் நட்டி என்று கூறுவது தென்னாட்டு வழக்கம். இதனால் பழந்தமிழ் நாட்டில் கோடி தொகுத்தவரெல்லாம் கொடிகட்டிப் பறக்கவிட் டனர் என்பது தெரியவருகின்றது. (சொல். 25.) கொடியர் கொடியராவார், உணராது கொலை செய்வார், ஊரில் தீ வைப்பார், குடிநீர் நிலையில் நஞ்சிடுவார், வழிப்பறிப்பார், கொள்ளையிடுவார், கோயில் சொத்தைக் களவு செய்வார், வெளிப்படையாகப் பிறனில் விழைவார், அரசனுக்கும் அஞ்சாதார் முதலியோர். (தி.ம. 316) கொடி வகை இவர் கொடி ஏறிப்படர்வது (Climber) படர்கொடி - நிலத்தில் படர்வது (Creeper). இவர் கொடி வகை. வலந்திரி வலமாகச் சுற்றி ஏறுவது; இடந்திரி இடமாகச் சுற்றி ஏறுவது. (சொல். 70) கொடி - சிறியது. பதாகை அல்லது படாகை - பெரியது. (சொல். 41) கொடுந்தமிழ்நாடு கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டையும். தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண் என்னும் வெண்பாவிற் குறிக்கப்பட்டனவாகக் கூறுவர் பல உரையாசிரியர். இவையெல்லாம் முதற்காலத்தில் செந்தமிழ் நாட்டின் பகுதிகளாகக் கொள்ளப்பட்டமையின், இவ்வுரை பொருந்தாது. இந் நாடுகளுள் வேணாடு புனனாடு என்ற இரண்டற்குப் பதிலாக, பொங்கர்நாடு ஒளிநாடு என்பவற்றைக் குறிப்பர் இளம்பூரணர், சேனாவரையர் முதலியோர், பொங்கர் நாட்டைப் பொதுங்கர் நாடென்பர் இளம்பூரணர். தாயைத் தள்ளை என்ப குடநாட்டார். நாயை ஞமலி என்ப பூழிநாட்டார் என்று திசைச்சொற்குக் காட்டுக் கூறினர் இளம்பூரணர். இங்குக் குறிக்கப்பட்ட இருநாடுகளும் இப்போது மலையாள நாட்டின் பகுதிகளாக வுள்ளன. நச்சினார்க்கினியர் பின்வருமாறு திசைச்சொற்குக் காட்டுக் கூறினர் : தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பனவற்றைப் பெற்றம் என்றும்; குடநாட்டார் தாயைத் தள்ளை என்றும், நாயை ஞெள்ளை என்றும்; குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும்; கற்காநாட்டார் வஞ்சரைக் கையர் என்றும்; சீதநாட்டார் ஏடா வென்பதனை எலுவன் என்றும்; தோழியை இகுளை என்றும்; தம்மாமியென்பதனைத் தந்துவை என்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலி என்றும்; சிறுகுளத்தைப் பாழி என்றும்; அருவாநாட்டார் செய்யைச் செறு என்றும், சிறுகுளத்தைக் கேணி என்றும்; அருவா வடதலையார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப. இனிச் சிங்களம் அந்தோவென்பது; கருநடங் கரைய சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டி லென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க. இதனால் தெலுங்கு, கன்னடம் முதலியவை ஒருகாலத்தில் தமிழின் திசைவழக்குகளாகவே யிருந்தன வென்றும், பின்பு கிளை வழக்குகளாகி, இறுதியில் வடசொற் கலப்பால் வேறு மொழி களாய்ப் பிரிந்துவிட்டன வென்றும் அறியப்படும். தெய்வச்சிலையாரும் இக் கருத்தை யொட்டியே. செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளோர் தத்தங் குறிப்பினையுடைய திசைச் சொல்லாகிய சொல் என்றவாறு. பன்னிரு நிலமாவன : வையையாற்றின்... நாடு, ஒளிநாடு, தென் பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலாடு, அருவாநாடு, அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் (சேர்ந்த) நாடென் றமையால், பிறநாடாகல் வேண்டுமென்பார் எடுத்துக்காட்டு மாறு : கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம் கொல்லம் கூபகம் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிரு புறச்சையத்துடனுறைபு கூறுந் தமிழ்திரி நிலங்களும், முடியுடையவரிடு நிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப்பிரு வருவாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன என்றமையானும், தமிழ் கூறும் நல்லுலகத்து.... பொருளும் நாடி என நிறுத்துப் பின்னுஞ் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு என ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன : குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல்கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாக லான், அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க. அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா என்றவாறு. குடாவடியுளியம் என்றவழி, குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்ட பெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்ற வழி கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலுங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்த வழிக் கண்டுகொள்க என்று கூறியிருத்தல் காண்க. தெலுங்கு கன்னட முதலியவை பிற்காலத்தில் பிறமொழிகளாய்ப் பிரிந்துபோனபின்பு, அவற்றின் முன்னை நிலையையுணராது அவை வழங்கும் நாடுகளையும் அயன்மொழி நாடுகளையுஞ் சேர்த்துக் கொடுந்தமிழ்நாடாகக் கூறினர் பவணந்தியார், செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி என்று. தமிழொழிந்த பதினெண் நிலங்களை, சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கங் கங்க மகதங் கடாரங் கடவுங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே என்னுஞ் செய்யுளானறிக. தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழினின்றும் பிரிந்து போன பின்பே, பொங்கர்நாடு ஒளிநாடு முதலிய பழஞ்செந்தமிழ் நாட்டுப் பகுதிகள் கொடுந் தமிழ்நாடாகக் கூறப்பட்டன. இதனால், முன்பு கொடுந்தமிழ் நாடாயிருந்தவை பல பின்பு பிற மொழி நாடாய் மாறிவிட்டன என்பதும், செந்தமிழ் நாடு வரவரத் தெற்கு நோக்கி ஒடுங்கிக்கொண்டே வருகின்ற தென்பதும், இதற்குக் காரணம் ஆரியக் கலப்பும் செந்தமிழ்த் தொடர் பின்மையும் என்பதும் அறியப்படும். செப்பு என்பது, சொல்லுதல் என்னும் பொருளில் மட்டும் திசைச் சொல்லாகும். மற்றப்படி அது செந்தமிழ்ச் சொல்லே என்பது. செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் (கிளவி. 13) அஃதன் றென்ப வெண்பா யாப்பே (செய். 78) என்பவற்றால் அறியப்படும். செப்பு என்பது, தெலுங்கில் சொல்லுதலையும், தமிழில் விடை சொல்லு தலையுங் குறித்தல் காண்க. அதோடு தமிழிலக்கணந் தோன்றிய தொன்முது காலத்திலேயே. செப்பு என்பது ஓர் இலக்கணக் குறியீடாயமைந்ததையும் நோக்குக. (செப்பல் வெண்பா வோசை.) ஈ தா கொடு என்னும் மூன்று செந்தமிழ்ச் சொற்களில், ஈ என்பது எங்ஙனம் தன் நுண்பொருளையிழந்து தெலுங்கில் வழங்கு கின்றதோ, அங்ஙனமே செப்பு என்பதும் என்க. தொல்காப்பியர் காலத்தில், தமிழில் வழங்கிய அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே. அதனாலேயே அது தன் பெயரால் வட சொல் எனப்பட்டது. அதன்படி இப்போது தமிழில் வழங்கும் அயன்மொழிச் சொற்களையெல்லாம். ஆங்கிலச் சொல், இந்துஸ்தானிச் சொல் என அவ்வம் மொழிப்பெயராலேயே கூறல் வேண்டும். திராவிடமொழிச் சொற்கள் மட்டும் திசைச் சொல்லாகவே கூறப்படும். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கின வடசொற்களும், அருகிய வழக்கேயன்றிப் பெருகிய வழக்கன்று. அவ்வருகிய வழக்கும் வேண்டாமையாய்த் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டதாகும். வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்று தொல்காப்பியர் கூறியது, வடசொல் மேன்மேலுங் கலந்து தமிழ்த் தூய்மையைக் கெடுக்காதவாறு ஒருவாறு தடை செய்ததே யன்றி, இக்காலத்துச் சிலர் எண்ணுவது போல வடசொல்லையும் பிறசொல்லையும் தாராளமாய்ச் சேர்த்துக்கொள்ளுமாறு விடைதந்ததன்று. கொடும்பாவி நல்லவர் பொருட்டு மழை பொழிந்து நாடு செழிக்கிறதென்றும், தீயவரையிட்டு மழை பொய்த்துப் பஞ்ச முண்டாகிறதென்றும் பண்டையோர் கருதினர். மழை பொய்த்த காலத்தில் அதற்குக் காரணம் ஒரு கொடும்பாவி என்று கருதி ஊருக்குள் மிகத்தீயவன் என்று பேர் பெற்ற ஒருவனைக் கட்டி ஊருக்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் உயிரோடு எரித்து விடுவது முதுபண்டை வழக்கம். இதற்குக் கொடும்பாவி கட்டியிழுத்தல் என்று பெயர். நாகரிகம் மிக்க இக்காலத்தில் கொடும்பாவி கட்டி இழுப்ப தற்குப் பதிலாகச் சூந்து கட்டித் தெருத் தெருவாக இழுத்து ஊருக்கு வெளியே கொண்டு போய்க் கொளுத்தி விடுகின்றனர். (சொல். 26.) கொடை மணம் மணமகனேனும் அவன் பெற்றோரேனும் மணமகள் பெற் றோரை அடுத்துக் கேட்க, அவர் கொடுப்பது. அது (i) தானக் கொடை (ii) விலைக் கொடை (iii) நிலைப் பாட்டுக் கொடை என மூவகைத்து. தானக்கொடையாவது, ஒருவர் தம் மகளைத் தக்க ஏழை மணாளனுக்குத் தாமே எல்லாச் செலவும் ஏற்று மணஞ்செய்து வைப்பது; விலைக் கொடையாவது, ஒருவன் தன் மகளுக்கு ஈட்டாக ஒரு தொகையை ஒரு செல்வனிடம் பெற்றுக்கொண்டு அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுப்பது; நிலைப்பாட்டுக் கொடையாவது, ஒருவர் தம் மகளை ஒருவனுக்கு ஏதேனும் நிலைப்பாடு அல்லது அக்குத்துப் (Condition) பற்றி மனைவியாகக் கொடுப்பது அந்நிலைப்பாடு, இத்துணைப் பரிசந் தரல் வேண்டு மென்றும், இத்துணைக்காலம் பெண்ணின் பெற்றோர்க்கு உழைத்தல் வேண்டுமென்றும், இன்ன மறச் செயலைப் புரிதல் வேண்டுமென்றும், மணமகளை இன்ன கலையில் வெல்லுதல் வேண்டுமென்றும், மணத்தின்பின் பெண் வீட்டிலேயே வதிதல் வேண்டுமென்றும், பல்வேறு திறப்பட்டதாயிருக்கும். மறச் செயல்கள், கொல்லேறு கோடல் (ஏறு தழுவல்), திரிபன்றி யெய்தல், புலிப்பால் கறத்தல், கொடு விலங்கு கோறல், பகைவரை யழித்தல் வில் நாணேற்றல், பெருங்கல் தூக்கல் முதலியன. (த.தி. 3,4) கொடை வகை ஐயம் இரப்போர்க்கிடுவது; கைந்நீட்டம் வேலைக்காரர்க்கு விழா நாளில் கொடுப்பது; ஈவு இறைவன் பிறப்பில் ஒருவனுக் களித்தவரம்; பரிசு அல்லது பரிசில் திறமை கண்டளிப்பது; கொடை உயர்ந்தோர்க்கும் சிறு தெய்வங்களுக்கும் கொடுப்பது; நன்கொடை (மானிபம்) விளைவை உண்ணும்படி கொடுக்கும் நிலம்; கட்டளை கோயிற்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு விடும் நிபந்தம்; உறாவரை அல்லது முற்றூட்டு முழுவுரிமையாக அளிக்கும் நிலம்; இறையிலி அறத்திற்கு வரியில்லாது விடப்பட்ட நிலம்; தானம் அடியார்க்கும் பார்ப்பார்க்கும் அளிப்பது; பரிசம் மணப்பெண்ணுக்களிப்பது; வண்மை வரையாதளிப்பது; குருபூசை அடியார்க்குப் படைக்கும் விருந்து. (சொல். 46) கொண்டாடுதல் கொண்டாடுதல் என்பது, ஒரு பொருளைக் கையிற் பற்றி அல்லது தலைமேற் கொண்டு கூத்தாடுதல். தந்தை தன் குழந்தையையும், பத்தன் தான் வழிபடும் கடவுள் உரு வையும், கையில் ஏந்திக் கொண்டு அல்லது தலைமேற் கொண்டு மகிழ்ச்சியால் கூத்தாடுதலே கொண்டாடுதல். திருவிழாக் காலத்தில் தெய்வ உருவை அல்லது அதனொடு தொடர் புள்ள ஒரு பொருளைக் கையில் ஏந்தி அல்லது தலைமேற் கொண்டு கூத்தாடுதல் இன்றும் வழக்கமாய் இருந்தலால் விழாச் செய்தலுக்குக் கொண்டாடுதல் என்று பெயர். விழாவுக்கு மறுபெயர் கொண்டாட்டம். சில இடங்களில் மருளாளியை அல்லது தேவராளனைச் சாமி கொண்டாடி என்பர். தெய்வத்தையும் குழந்தையையும் கொண்டாடிச் சிறப்புச் செய்த லும் விரும்பியன கொடுத்தலும் போல, ஒருவரைப் பாராட்டிச் சிறப்பிப்பதும் கொண்டாடுதல் எனப்படும். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்னும் பழமொழியில் கொண்டாடும் என்னும் சொல், சொற்பொருளும் அணிப்பொருளும் ஆகிய இரண்டையும் தாங்கி நிற்றல் காண்க. (சொல். 11) கொத்தமல்லி கொத்தமல்லி - குஸ்தும்பரு கொத்துமல்லி - கொத்தமல்லி. (வ.வ: 131) கொப்பரை கொப்பரை - கர்ப்பர கொப்பரை - கப்பரை - கர்ப்பர (வ.) (வ.வ: 131) கொழுந்துவகை துளிர் அல்லது தளிர் நெல் புல் முதலியவற்றின் கொழுந்து; முறி அல்லது கொழுந்து புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து; குருத்துசோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து. கொழுந்தாடை கரும்பின் நுனிப் பகுதி. (சொல் : 66) கொள்நன் கொள்கொம்பு கொள்நன் என்ற இருபெயர்களும் கொள் என்னும் சொல்லையே முதனிலையாகக் கொண்டிருப்பதும், முறையே கொழு கொம்பு, கொழுநன் என மருவித் திரிவதும் கவனிக்கத்தக்கன. கொள் கொம்பு என்பதில் கொள்ளுதல் தொழில் கொடியினதாகவும் கொள்நன் என்பதில் கணவன தாகவும் கொள்ளப்படும். (சொல். 3) கோ கோ - கோ (g), கௌஸ் (g) - இ. வே. கோ = ஆ. கோவன் = 1; மாட்டிடையன், இடையன் (ஆயன்). கோவன் நிரை மீட்டினன் (சீவக. 455). 2. அரசன். கோவனு மக்களும் (சீவக. 1843). குடிகள் ஆடுகளும் அரசன் மேய்ப்பனும் போலக் கருதப்பெற்ற தினால், அரசன் கோவன் எனப் பெற்றான். அரசன் செங்கோல் ஆயன் கைக்கோலுக் கொப்பாம். (வ.வ:) கோசம் - கோச = உருண்டை. கோளம் - கோசம் = முட்டை (பிங்.) ள-ச, போலி. ஒ. நோ. உளு - உசு. இளி - இசி. (வ.வ: 132) கோசர் கடைக்கழகக் காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க்கும் படைத்தலைவராகவும், தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும் இருந்தமை, பழந்தமிழ் நூல்களா லும் செய்யுட்களாலும் அறியக்கிடக்கின்றது. இவ் வகுப்பாரைப் பற்றி அறிஞரிடை பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. காலஞ்சென்ற ரா. இராகவையங்கார், தம் கோசர் என்னும் ஆராய்ச்சிச் சுவடியில், கோசராவார் காசுமீர நாட்டினின்று வேளிரையடுத்துக் கோசாம்பியைத் தலைநகராகக்கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு வழியாய்த் தமிழ்நாடு போந்தவர் என்றும்; வத்தம் அல்லது வச்சம் (வத்ஸம்) என்னும் வடசொற்கு இளமைப் பொருளுண்மையாலும் அவர் கோசம் என்னும் ஓர் அரிய சூள் முறையைக் கையாண்டதினாலும், இளங்கோசர் என்னப் பட்டிருக்கலாமென்றும் கோசர் என்னும் பெயருக்குக் கோசம் என்னும் சூள்முறையன்றி, கோசம் (கோசாம்பி) என்னும் நகர்ப் பெயரும், குசர் என்னும் ஆட்டுப் பெயரும், கோசம் (திரவியம்) என்னும் செல்வப்பெயரும், காரணமாயிருக்கலா மென்றும் கோசர் முதற்கண் கொங்கில் வதிந்து பின்பு குடகிற் குடியேறிய வர் என்றும்; அகுதை, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலிய குறுநில மன்னர் கோசர் என்றும்: இது போதுள்ள கைக்கோளரும் செங்குந்தரும் கோசர் மரபினர் என்றும்; பிறவும்; தம் ஆராய்ச்சி முடிபாகக் கூறியுள்ளார். இவற்றுள் ஒன்றிரண்டேயன்றி எல்லாம் உண்மையல்ல. ஒருசார் அறிஞர், கோசரை வம்ப மோரியர் படைக்கு முன்னணி யாக வந்த வடுகராகவுங் கொள்வர். இதுவும் உண்மை அன்று. கோசர் காசுமீரத்தினின்றோ வத்த நாட்டினின்றோ வந்தவர் என்பதற்கு ஒருவகை வரலாற்றுச் சான்றுமில்லை. அவர் தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டிற் பல்வேறிடங்களில் வாழ்ந்தவ ரென்பதே, பண்டைத் தமிழ் இலக்கியத்தால் தெரியவருகின்றது. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மாறானதொன்றும் அவரைப்பற்றிய வண்ணனைகளிற் காணப்படவில்லை. பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் தலைவனாகக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயனெறி மரபில்நின் வாய்மொழி கேட்ப ... .... .... மகிழ்ந்தினி துறைமதி பெரும (மதுரைக். 771-79) என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடப்படுவதால், பாண்டி நாட்டிலும், ... ... ... ... ... செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர் நியம மாயினும் (அகம். 90) என்பதால் சோழநாட்டிலும், பல்லார்க்கும் ஈயும் பரிசிற் கொடைத்தடக்கை மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன் - மல்லலந்தார் செஞ்சொல் செருந்தைதன் தென்னுறந்தை யென்றாளும் வஞ்சிக் கொடிமருங்குல் வந்து (யாப்பருங்கல விருத்தி. ஒழிபியல்) என்னும் பழம் பாட்டால், உறையூரிலும், கொங்கிளங் கோசர் தங்கள்நாட் டகத்து (சிலப். உரைபெறுகட்டுரை) என்பதால், கொங்கு நாட்டிலும் கோசர் துளுநாட்டன்ன (அகம். 15) என்பதால், துளுநாட்டிலும், கோசர் வதிந்திருந்தமை புலனாம். கொங்குநாடு பிற்காலத்தில் மூவேந்தரிடையும் பிற சிற்றரசரிடை யும் அடிக்கடி கைமாறி வந்திருப்பினும், முற்காலத்தில் சேரர்க்கே உரியதாயிருந் திருத்தல் வேண்டும் என்பது. சேரர் கொங்குவை காவூர்ந னாடிதல் என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதாலும், தகடூராண்ட அதிகமான்குடி வரலாற்றாலும், பிறவற்றாலும், அறியப்படும். கடைக்கழகக் காலத்தில், முத்தமிழ்நாட்டிலும் ஆங்காங்கிருந்த குறுநில மன்னர் தத்தம் வலிமிக்க காலத்து, தத்தம் வேந்தர் தலைமையினின்று திறம்பியதொடு அவர் நாட்டையும் கைப்பற்றினர் என்பதற்கு. வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி (அகம். 205) தித்தன் உறந்தை (அகம். 122) என்பன சான்றாம். இம் முறையே, கொங்கும் துளுவும் கோசர் வயிற்பட்டிருத்தல் வேண்டும். இளங்கோவடிகள் குடகக் கொங்கர் என வரந்தரு காதையிற் குறித்தது. ஒருகால், குடகு நாட்டுக் கோசரை நோக்கியதாயிருக்கலாம். துளுவும், குடகும் ஒரு காலத்தில் குடகொங்குப் பகுதிகளாக விருந்தன. குடகக் கொங்கர் என்று இளங்கோவடிகளும் கூறுதல் காண்க. திருநெல்வேலி மாவட்டக் கல்லிடைக்குறிச்சித் திருமால் கோவிலுக்குக் கோசர்குடி பெருமாள் கோவில் என்று பெயர். அதே மாவட்டத்துக் கழுகுமலையில் ஒரு தெருவிற்குக் கோசர்க் குடித் தெரு என்று பெயர். கோசருட் பெருந்தமிழ்ப் பாவலரான நல்லிசைப் புலவரும் இருந்தனர் என்பதை. செல்லூர்க்கோசனார் (அகம். 66). கருவூர்க் கோசனார் (நற்றிணை. 214) என்னும் பெயர்கள் காட்டும். இவையெல்லாம், கோசர் தமிழ்நாட்டிற் கொங்கில் மட்டுமன்றி எங்கும் வதிந்தவர் என்றும், அவர் தமிழரே என்றும், தெரி விக்கும். வேத ஆசிரியர் இந்தியாவிற்குட் புகுமுன் நாவலந்தேய முழுவதும் தமிழரும் அவர் இனத்தாரான திரவிடருமே பரவியிருந்ததினால், அகத்தியர் (காசுமீரத்) துவராவதியினின்று பதினெண்குடி வேளிரைத் தென்னாடு கொண்டுவந்தன ரென்பதும், காசுமீர நாட்டு வரலாறு கூறும் இராசதரங்கணியில் அந் நாட்டார் கோசம் என்னும் ஒரு சூள்முறையைக் கையாண்டமை கூறப்பட்டிருப் பதும், கோசநாடு எனப் பெயரிய சுனைத்தடம் காசுமீர நாட்டி லுண்மையும், உதயணன் தாய் சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவரான ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் குலமாயிருந்ததும், கோசர் வடநாட்டினின்று வந்தவர் எனக் காட்டும் சான்றாகா. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, பகைப் படை, துணைப்படை, என இவ்விருபாலாகப் பகுக்கப்படும் அறுவகைப் படையுள்; நாட்டுப் படை என்பது படையாட்சி கைக்கோளர் செங்குந்தர் படைகளையும், காட்டுப்படை என்பது கள்ளர் மறவர் படைகளையும் குறிக்கும். படைத்தலைவர் இயல் பாகத் தத்தம் படைமறவர் பாங்காகவே வதிவராதலின், வேந்தரை அடுத்தும் அவர் தலைநகரிலும் என்றுமிருந்த படைத்தலைவர் நாட்டுப்படைத்தலைவரே, வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி (தொல் மரபியல். 80) வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே (தொல் மரபியல். 81) என்பவற்றால், நாட்டுவாணராகிய (உழுவித்துண்ணும்) வேளா ளர் வேந்தராற் படைத்தலைவராய் அமர்த்தப்பெறுவர் என்பது பெறப்படும். முடியொழிந்த, வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் வாளும் (தொல். மரபியல். 83) முதலிய பிற சின்னங்களையுடைய குறுநிலமன்னர், நாட்டு வாண ரும் காட்டுவாணருமாக இருவகையர். முடியுடை மூவேந்தர் என்றும் நாட்டு வாணரே. எத்தொழிலராயினும், பிறர்க்குக் கீழ்ப்பட்டு வாழும் மக்களெல் லாம், தம் தலைவர் பொருட்டு உற்றவிடத் துயிர் வழங்குவோரும் வழங்காதோரும் ஆக இருவகையர். ............ நட்புந் தயையும் கொடையும் பிறவிக் குணம் என்னும் ஔவையார் கூற்றும். அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு (குறள். 172) என்னும் வள்ளுவர் கூற்றும், அன்பு பிறவிக்குணம் என்பதையும், அஃதுடையார் தம்மால் அன்பு செய்யப்பெற்றோர்க்கு உயிரை யும் உதவுவர் என்பதையும், தெரிவிக்கும். இறைவனடியார் தம் திருவடிமைத் தொண்டில் தம் உயிரையும் விட அணியமாய் (தயாராய்) இருப்பதுபோன்றே அரசப்பற்று மிக்க பணியாளரும் தம் அரசன்பொருட்டு என்றும் உயிர்விட இருப்பர். இவ்வுலகத்து நீடுவாழ்ந்து இல்லறஇன்பந் துய்க்க விரும்பும் பொதுப்பணியாளர் மனநிலையே இஃதாயின், போர்க்களத்து மடிதலைப் பொன்னுலகம் புகுதலாகக் கொண்டு கூற்றுவனையும் அறைகூவும், கொற்றவைக்குத் தம்மைத்தாமே பலியிட்டுத் தம் தலையைத் தம் வலக்கையிலேந்திக் கூத்தாடவும் வல்ல தறுகண் மறவர் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! பன்னூற்றாண்டுகளாகத் தமிழரசின்மையாலும், கழி பல நூற்றாண்டாகப் பிறப்பொடு தொடர்புற்ற ஆரியமுறைக் குலப் பிரிவினையாலும், தமிழர் பெரும்பாலும் மறமிழந்திருக்கும் இற்றைநிலை நோக்கி, பண்டைத் தமிழர் மறம்பற்றியும் சிலர் ஐயுறுகின்றனர். அவர் தொல்காப்பியப் புறத்திணையியலிலும் படைபற்றிய திருக்குற ளதிகாரங்களையும், புறப்பொருள் வெண்பாமாலையையும் நம்பாவிடினும், சில புறநானூற்றுச் செய்யுட்களையும், கரிகால்வளவன், செங்குட்டுவன் முதலியோரின் வடநாட்டுப் படையெடுப்பையும், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் முதலியோரின் மெய்க்கீர்த்தியையும், கலிங்கத்துப் பரணியையும், நோக்கியேனும் தம் கருத்தைத் திருத்திக் கொள்வாராக. பண்டைத் தமிழ்ப்படை மறவருள், போரிற் புறங்கொடுக்கக் கூடாதென்றும் அரசனுக்காக உயிரைத் துறத்தல் வேண்டுமென் றும் சூளிட்டுக் கொண்ட ஒருசாரார் இருந்தனர். அவர் பூட்கை மறவர் என்னப்பட்டனர். பூட்கை, உறுதி பூணுதல், அவர் போன்றே, அரசனுக்கு அவ்வப்போது வேண்டும் பணிகளைத் தப்பாது செய்யவேண்டுமென்றும், தப்பின் உயிர் துறப்பதென் றும், சூளிட்டுக்கொண்ட ஒருசார் பணியாளர் இருந்தனர். அவர் வேளைக்காரர் என்னப்பட்டனர். வேளை தவறாது பணி செய்பவர் வேளைக்காரர். அவர் தலைவன் வேளைக்கார நாயகம் என்னப்பட்டான். ஓடாப் பூட்கை விடலை (புறம். 295) போரெனிற் புகலும் புனைகழன் மறவர் (புறம். 31) உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத் தணிபறை யறையு மணிகொள் தேர்வழி (புறம். 68) என்னும் பகுதிகள், பண்டைத் தமிழ் மறவரின் மேற்கோளையும் போர் விருப்பத்தையும் தெளிவாகப் புலப்படுத்தும். பூட்கை, மேற்கோள், கோள் என்பன ஒருபொருட்சொற்கள், ஒன்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதென மேற்கொள்வது மேற்கோள். அங்ஙனமே உள்ளத்தில் அல்லது செயன்முறையிற் கொள்வது கோள். மாட்சியின் மாசற்றார் கோள் (குறள். 646) என்று திருவள்ளுவரும் கூறுதல் காண்க. கொள்வதும் பூணுவதும் மேற்கொள்வதும் நன்றிற்கும் தீதிற்கும் பொதுவேனும், கோள் பூட்கை மேற்கோள் என்னும் முச் சொல் லும் வழக்காற்றில் நற்கொள்கையையே குறிக்கும். பூட்கை மறவரும் அவர் தலைவரும் உறுதியான கோளுடைமை பற்றிக் கோளர் என்னப்பட்டனர். கை என்பது படையுறுப்பாத லின், படையுறுப்பைச் சேர்ந்த கோளர் கைக்கோளர் என்னப் பட்டனர். ஏனெனில், படையுறுப்பைச் சேராது தற்சார்பான கோளருமிருந்தனர் (free lance) : ஒப்பன படையுறுப் பொழுக்கம் சிறுமை கரமும் பின்பிறந் தாளும் கையே என்பது பிங்கலம். பெரும்புலவர் ரா. இராகவையங்கார், இடங்கை வலங்கை என்பன படைவகுப்புகள் என்றும், அவற்றைச் சேர்ந்த கோளர் கைக்கோளர் என்னப்பட்டனர் என்றும் கூறுவர். இடங்கை வலங்கை என்பன படை வகுப்புகளேயன்றி, அரசன் அமர்ந் திருக்கும்போதும் செல்லும்போதும் இடத்திலும் வலத்திலும் இருக்குமாறும் செல்லுமாறும் குறிக்கப்பட்ட குலங்களையே குறித்தலானும், இடங்கையைச் சேர்ந்தவர் வலக்கையையும், வலங்கையைச் சேர்ந்தவர் இடங்கையையும் சேராமையானும், அது பொருந்தாதென்க. கை என்பது படைவகுப்பாதலின், உறுதியான ஒழுக்கத்தைக் கைகொண்டவர் கைக்கோளர் என்பதும் பொருந்தாது. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும் (குறள். 501) என்னும் முறைபற்றியோ, வேறுவகையிலோ, மறம் உண்மை பணிவு நன்றியறிவு, அன்பு, கடைப்பிடி, வலிமை முதலிய பண்பிற் சிறந்தவராக வேந்தரால் தெரிந்தெடுக்கப்பெற்ற கைக்கோளர், தெரிந்த கைக்கோளர் என்னப்பட்டனர். பராந்தகன் தெரிந்த கைக்கோளர், சுந்தரசோழர் தெரிஞ்சகைக்கோளர், பாண்டிய குலாசனி தெரிஞ்ச கைக்கோளர் எனக் கல்வெட்டில் வருதல் காண்க. அரசரின் முழு நம்பிக்கைக்குரியவராயிருந்த கைக்கோளர் அரண்மனையிலும் உவளகத்திலும் அகப் பரிவாரமாகவும் அமர்த்தப்பெற்றனர் என்பது. நம்பிராட்டியார் நேரியன் மாதேவி யகப்பரிவாரத்துக் கைக்கோளன் சோறுடையா னருக்கனான அன்பார பாணதி ராயன் (S.I.I.Vol.No.700) எனவரும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். கோளர் குடியிருந்த பல வூர்கள் அவர் குடியாற் பெயர் பெற் றிருந்தன. கொடுங்குன்றத்திற்கு அருகில் திருக்கோளக்குடி என்றொரு மலையடியூர் உளதென்றும் கோளர் இருக்குமூர் கோள்களவு கற்றவூர் என்றும் காளமேகப்புலவர் தனிப்பாட் டில் `கோளர் என்பது குடிப்பெயர் என்றும், பெரும்புலவர் ரா. இராகவையங்கார் கூறுவர். பாணன் என்னும் குடிப்பெயர் பாண் என்று குறுகுவதுபோல், கோளன் என்னும் குடிப்பெயரும் கோள் என்று குறுகும். இக் குறுக்கம் பெரும்பாலும் பாண்சேரி, கைக்கோட் படை எனப் புணர்மொழிப் பெயர்களிலேயே நிகழும். இப்படிச் சம்மதித்து விலைப்பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம். ஆதிசண்டேச்சுர தேவர்க்கு, திருநெல்வேலிக் கைக்கோட்சேனாபதிகளோம். (S.I.I. Vol. V. No. 118) எனவரும் கல்வெட்டுப் பகுதியைக் காண்க. சில சொற்களில் ளகரம் சகரமாகத் திரிகின்றது. இதற்கு உளி-உசி. தூளி-தூசி என்பன எடுத்துக்காட்டு. இம்முறையில் கோளன் என்பதும் கோசன் எனத் திரிந்ததாகத் தெரிகின்றது. பின்பு, தேசம் - தேயம் என்பதுபோல் கோசன் - கோயன் என்றாயிருத்தல் வேண்டும். பாண், கோள் என்னுங் குறுக்கங்கட்கேற்ப, கோயன் என்பது கோய் என்று குறுகுதலும் இயல்பே. கோயன் பள்ளி என்பது கருவூரையடுத்துள்ளது. இதனாற் கோசன் என்னும் பெயர் கோயம் என வழங்கப்பட்டதென்றும் உணரலாம். கோயன் புத்தூர் என்பதும் இப்படிப்பட்டதேயாம். இக் கோயர்குடி கோய் எனவும் வழங்கப்பட்டதென்பது இளங் கோய்க்குடி என்ற பெயரான் அறியலாம். முள்ளி நாட்டு இளங் கோய்க்குடி (அம்பாசமுத்திரத்தின் பெயர்) என்பது சாசனம் (Top. List. Tinnevelly Dist. No.s. 28, 29 பார்க்க). இளங்கோ படையரசன் முனையதரன் (S.I.I. VI. No. 538 of 1909) எனத் தஞ்சையைச் சேர்ந்த கோவலூர்ச் சாசனத்து வருதலான். இக் குடிவழக்குண்மை உணரப்படும். திருநெல் வேலியைச் சார்ந்த கடையம் உள்ள நாடு கோய்நாடு என வழங்கப்படும். எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார் எழுதியிருப்பது பொருத்தமே. (கோசர். பக். 54, 55) ஆயின், கோசர் என்னும் சொல்லே நாளடைவிற் கோளர் என மரீஇயினதென்று நினையலாம். (கோசர் பக். 57) என்று அவர் தலைகீழாகக் கூறியிருப்பது பொருந்தாது. ளகரம் சகர மாகத் திரிதலன்றிச் சகரம் ளகரமாகத் திரிதலில்லை. தூளி, தூசி என வருதலும் நினைக என அவர் எடுத்துக்காட்டியிருப்பதே அதற்குச் சான்றாம். ஆகவே, கோசர் என்று கடைக்கழகச் செய்யுட்களிலும், கோளர் என்று பிற்காலச் செய்யுளிலும், கைக்கோளர் என்று கல்வெட்டு களிலும், குறிக்கப் பெற்றவர் ஒரேவகுப்பினர் என்று துணியத்தகும். பண்டைச் செய்யுட்களில் கோசர் என்ற வடிவமே காணப்பெறு வதால், அதுவே முந்தினதாகும் என்று ஒருபாலர் கருதலாம். உலக வழக்கு செய்யுள் வழக்கினும் முந்தியதென்றும், செய்யுள் வழக்குச் சொல்லெல்லாம் மூலவடிவத்தைக் காட்டாவென்றும், தெரிந்து கொள்க. நீ என்னும் முன்னிலை யொருமைப்பெயரின் மூலவடிவம் நீன் என்பதே யாயினும், முன்னதே செய்யுள் வழக்காகவும் பின்னது உலக வழக்காகவும் இருத்தல் காண்க. நன்றல் காலையு நட்பிற் கோடார் சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியிற் ... ... ... ... ... ... கோசர் (அகம். 113) எனவும் ஒன்றுமொழிக் கோசர் (அகம். 196) எனவும் வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் (அகம். 205) எனவும் கோசர் நன்மொழி போல வாயாகின்றே (குறுந். 15) எனவும் வருவனவெல்லாம், கோசர் ஒரு பூட்கையை அல்லது கோட்பாட்டை யுடையவரென்றே புலப்படுத்தல் காண்க. இனி, இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர் (அகம். 90) எனவும் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் (அகம். 251) எனவும் வளங்கெழு கோசர் விளங்குபடை (அகம். 205) எனவும் ... ... ... ... ... ... ... வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற் பெருமரக் கம்பம் போல (புறம். 169) எனவும் வலம்புரி கோசர் அவைக்களத் தானும் (புறம். 283) எனவும் மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகம். 15) எனவும் கோசர் துளுநாட் டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின் (அகம். 15) எனவும் வருவனவெல்லாம், கோசர் தமிழர்க்கு மாறான ஓரியல்பும் உடையரல்லர் எனக் காட்டுதல் காண்க. இனி, செங்குட்டுவன் மோகூர்ப் பழையனை வென்று அவன் காவன் மரமாகிய வேம்பின் அடியை வெட்டிய செய்தியைக் கூறும். வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை யதிர மண்டி நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி மழைநாட் புனலின் அவற்பரந் தொழுக ... ... ... ... ... ... ... கருஞ்சினை விறல்வேம் பறுத்த குட்டுவன் (49) என்னும் பதிற்றுப்பத்துப் பகுதியுள் வரும் நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் என்னும் தொடர். இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர் (குறள். 779) என்னும் குறளொடு பொருந்திய, தமிழ்ப் பூட்கை மறவரின் பொது வியல்பைக் குறிப்பதன்றி, வேற்றுநாட்டு மறவரின் சிறப் பியல்பைக் குறிப்பதாகாது. ஆதலால், இழிசின னாகிய காசன் அரசனுடைய ஐய நடுக்கம் போக்க உதிரத்தால் நனைந்த தோலில் இன்று கோசமுறையில் ஆணையிட்டனன் எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார். மேற்கோள் காட்டும் காசுமீரநாட்டு வரலாறாகிய இராச தரங்கணிப் பகுதி, கோசர் தமிழரல்லர் என்னுங் கொள்கைக்குச் சான்றாகாமை காண்க. தமிழகத்தையடுத்து வடக்கிலுள்ள வடுகர், மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பில் அவர் படைக்கு முன்னணியாக வந்துதவினர் என்பது. முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு (281) என்னும் அகப் பகுதியால் அறியலாகும். மோகூர் மன்னனாகிய பழையன் மோரியர்க்குப் பணியாமல் எதிர்த்து நின்ற போரில், கோசர் தம் சொல் தவறாமல் மோகூரை யடுத்த ஆலம்பலத்துத் தோன்றி அவனுக்குதவின செய்தியை, மழையொழுக் கறாஅப் பிழையாவிளையுட் பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன (மதுரைக்காஞ்சி 507-9) பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பூ தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே... ... ... ... ... (குறுந்தொகை. 15) ... ... ... ... ... வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் (அகம். 251) என்னும் பகுதிகள் தெரிவிக்கும். கோசர் காசுமீரத்தினின்று வத்த நாட்டு வழியாய்த் தமிழ்நாடு வந்த வடவரெனின், தமிழரையடுத்த வடுகரே வடநாட்டராகிய மோரியர்க்கு உதவியிருக்கும்போது, அவரும் உதவாதிருந் திருப்பரோ? மேற்காட்டிய மதுரைக்காஞ்சிப் பகுதியுள் வந்துள்ள நான் மொழிக் கோசர் என்னும் தொடருக்கும், குறுந்தொகைச் செய்யுளுள் வந்துள்ள நாலூர்க் கோசர் என்னும் தொடருக்கும், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்மொழியும் வழங்கியதால் நான்மொழிநாடு எனப்பெயர்பெற்ற நாமக்கல் வட்டத்தில் வதிந்த கோசர் என்றும், வால்மீகி இராமாயணத்திற் சொல்லப்பட்ட குசர் என்பவரின் நாற்புதல்வர் அமைத்த கௌசாம்பி முதலிய நாலூரினின்று பரவிய கௌசர் வழியினர் என்றும், பெரும்புலவர் ரா. இராகவையங்கார் முறையே காரணங் காட்வர். இனி, அவரே, கழுகுமலைச் சாசனங்களில் நாலூர், நால்கூர் என்ற பெய ருடைய ஊர் பல்லிடத்தும் வருதல் காணலாம்.... கோசர் ஒரு திரளாகச் சபதஞ் செய்துகொள்பவரென்பது இவ்வூரையடுத் துள்ள குழுவாணை நல்லூர் என்ற பெயரான் ஊகிக்கப் படுவது இக் குழுவாணை நல்லூர்க் கோசர்தாம் குறுந்தொகையில் நல்லூர்க்கோசர் என வழங்கப்பட்டனரோ என ஐயுறுகின்றேன். அன்றி மேலே காட்டிய கழுகுமலைப்புறத்து நாலூர் பற்றி நாலூர்க்கோசர் எனப்பட்டனரெனினும் பொருந்தும். (பக். 51, 52) எனவும் கூறியுள்ளார். வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து என்று பனம்பாரனார் கூறிய தொல்காப்பியர் கால மொழி நிலையே கடைக்கழகக் காலத்தும் தமிழகத்திருந்ததினால், கி.பி. 8ஆம் நூற்றாண்டிற் புகுந்த தெலுங்கும். 10ஆம் நூற்றாண்டிற்குப் பின் திரிந்த கன்னடமும், 12 ஆம் நூற்றாண் டிற்குப்பின் திரிந்த மலையாளமும், 3ஆம் நூற்றாண்டில் நாமக்கல் வட்டத்தில் வழங்கின வென்பது காலமலைவு என்னும் குற்றமாம். ஆகவே நான்மொழிக் கோசர் என்னும் தொடருக்கு, ஒன்று மொழிதல், நண்பர்க்கு உற்றுழி யுதவல், எளியாரைக் காத்தல், பழிக்குப் பழி வாங்குதல் ஆகிய நால்வகைப் பூட்கை மொழிகளைக் கொண்ட கோசர் என்று பொருள் கொள்வதே உண்மைக்கும் உத்திக்கும் பொருத்தமாம். மொழி இங்கு உறுதிமொழி, நான்மொழிக் கோசர் தோன்றி யாங்கு என்னும் மதுரைக் காஞ்சித் தொட ருக்கு, நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியாலே விளங் கினாற் போன்று என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதை யும் நோக்குக. குறுந் தொகைச் செய்யுளில் வரும் நாலூர்க் கோசர் என்னும் தொடரும் நாலுரைக் கோசர் என்பதன் வழூஉ வடிவோ என ஐயுற இடந்தருகின்றது. கொங்கு மண்டிலத்துட் பல பாகங்களில், வத்தவன், வத்தராயன், வச்சராயன் என்னும் பெயர்கள் இக்காலத்து வழங்கப்படுவன என்று, பெரும்பேராசிரியர் பண்டாரகர் (Dr.) உ.வே. சாமிநாதையர் பெருங்கதை முகவுரையிற் கூறியிருப்பது. கொங்குவேள் அவ் வனப்பை அல்லது தொடர்நிலைச்செய்யுளை இயற்றியபின் நேர்ந்துள்ள நிலைமையையே குறிப்பதாகும். இக்காலத்தும் இரசியாவைப்பற்றிக் கேள்விப்பட்ட தமிழருள் ஒருசிலர் தம் புதல்வர்க்குத் தாலின் (Stalin), லெனின் (Lenin) எனப் பெயர் இடுவதையும், அதுபற்றி அவரை இரசியர் எனக்கொள்ள இட மின்மையும், நோக்குக. இனி, இளங்கோசர் என்னும் வழக்கில் உள்ள இள என்னும் அடைமொழிக் காரணம் பற்றி, பெரும்புலவர் ரா. இராகவை யங்கார். வேட்டொழிவ தல்லால் வினைஞர் விளைவயலுள் தோட்ட கடைஞர் சுடுநந்து - மோட்டாமை வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை இன்புறுத்த வல்லமோ யாம் ... ... ... இவ் வச்சத் தொள்ளாயிரப் பாட்டில் வச்சத்திளங் கோவை எனப் பாடியதனால், இந்நாட்டுக் குடியேறியவன் வச்சத் திளங்கோ வேந்தன் வழியினன் என்று தெளியலாகும். இவன் கோசத்தினின்று இங்கு வந்தவன் வழியினனாதலால் இவன்வழிக் கோசரெல்லாம் இளங்கோசர் என்று வழங்கப்பட்டனரென உய்த்துணரலாம் இனி இக் கோசாம்பியை ஆண்ட அரசரே இளன் என்னும் திங்கட்குலத்து வேந்தன் வழியின ரென்றும், அதுபற்றியே அவன் வழிவேந்தர் இளங்கோ எனப் பெயர் சிறப்பரென்றும் கருதுவாருண்டு இனி, இவர் வத்ஸ தேசத்துக் கோசம் என்ற தலைநகரினின்று வந்தவரா தலான். இளங்கோசர் என வழங்கப்பட்டனரெனின், அதுவும் நன்கு பொருந்தும், வத்ஸ மொழி ஆரியத்தில் இளமைக்குப் பெயராதலான் வத்ஸகோசர் - இளங்கோசர் என மொழியெர்த்துத் தமிழரால் வழங்கப்பட்டனரென்றுங் கொள் ளலாம். கோசரைக் கூறிய பலவிடத்தும் சான்றோ ரெல்லாம் பல்லிளங் கோசர், நல்லிளங்கோசர், கொங்கிளங் கோசர் என வழங்கிக் காட்டலான். இஃது உடலிளமைபற்றிய தாகாதென்பது ஒருதலையாகத் துணியலாம். வத்ஸ தேசத்தை இளநாடெனக் கொண்டு அந்நாட்டு வேந்தனை இளங்கோ வென்றும், அந் நாட்டுக் கோசரை இளங்கோசர் என்றும் வழங்கினரென்பது பொருத்தியதாம். எனப் பலவாறு கூறியுள்ளார் (பக். 7, 8). பின்னர், அவரே, முன்னுக்குப்பின் முரணாக, கோசர் எப்போதும் இளமையோடி யிருப்பரென்று துணிவது பொருந்தாதாம். ஊர்முதுகோசர் (அகம். 262) என வழங்கலான். இவர் எல்லா மக்களும் போன்று யாக்கை மூத்துக் கழிதலுண்டென்க. இதனால், இவரை இளங்கோசர் எனப் பல்லிடத்தும் வழங்குவது இவர் குடிபற்றியது அல்லது நாடுபற்றியதெனின், நன்கு பொருந்துமென்க. எனவுங் கூறியுள்ளார் (பக். 9). பாசிலை யமன்ற பயறா புக்கென வாய்மொழித் தந்தையைக் கண்களைந் தருளா தூர்முது கோசர் நவைத்த சிறுமையிற் கலத்து முண்ணாள் வாலிது முடாஅள் சினத்திற் கொண்ட படிவம் மாறாள் மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர். இன்னுயிர் செகுப்பக் கண்டுசின மாறிய அன்னி மிஞிலி போல (262) என்ற அகச்செய்யுளினின்று. வாய்மொழித் தந்தை என்றது ஊர்முது கோசரோடு ஒரே இனத்தவன் ஆன தந்தை என்பது புலப்படநின்றது. முதுகோசராயிருந்தும் இனமென்று நோக் காது. தண்டந் தகுதியன்றென்பதும் எண்ணாது, எல்லா வுறுப்பினுஞ் சிறந்த கண்ணை அருளாது களைந்தன ரென்றார்..... குறும்பியனுந் திதியனும் கோசரின மல்லராயின் இங்ஙனம் எளிதில் ஒன்றுமொழிக்கோசரைக் கொன்று முரண்போக்க லாகா தென்க. முரண்போகிய (அகம். 196) என்றதனால் ஓரினத் திற்குள் நேர்ந்த முரண்பாடு இஃதெனத் துணியலாம். ஊர்முது கோசர் பிழையாதலால், இவ்வழக்கில் வேளிர் இடையிற்புக்குக் கொன்று முரண்போக்கில் இயலா தென்க. கோசர் அந்நியராற் கொல்லப் படத்தக்க எளியரல்லர் என்பதும் நினைக, எனத் தம்மனம் போனவா றெல்லாம் உய்த்துரைப்பர் பெரும் புலவர் ரா. இராகவையங்கார். கோசர் மட்டுமன்றி உண்மை சொல்வோரெல்லாம் வாய் மொழி வாயர் எனப்படுவர். வாய்மொழிவாயர் நின்புகழேத்த என்று பதிற்றுப்பத்துள் வருதல் காண்க (37.2). கோசர் பலவிடத்துப் பிறரால் வெல்லப்பட்டமை பண்டை இலக்கியத்தினின் தெரிய வருதலால். அந்நியராற் கொல்லப்படத் தக்க எளியரல்லர் என்று கூறுவது பொருந்தாது. அவரெல்லாரும் அத்தகைய வலிய ரெனின், மூவேந்தர் அவர்முன் எங்ஙனம் நாடாண்டிருக்க முடியும்? இளையரே பொருதற்குச் சிறந்தவராதலாலும், இளையர், மழவர் முதலிய இளமை குறித்த பெயர்கள் போர்மறவர்க்குப் பழஞ்செய்யுட்களுள் வருவதாலும், இளைஞரான கோசரே, இளங்கோசர் என்னப்பட்டனரென்றும், அவருள் மூத்துப் போர்த் தொழிலினின்றும் நீங்கி இக்காலத்து ஓய்வுபெற்ற பொருநர் (ex-service men) போல் ஊர்க்குள் வதிந்தவரே ஊர்முது கோசர் என்னப்பட்டனர் என்றும், கொள்வதே மிகப் பொருத்த மாம். கோசர் தமிழரே என்பது இதுகாறும் கூறியவற்றால் தெரிதலால், பழையன், அதிகன், ஞிமிலி, அகுதை, திதியன், குறும்பியன், ஆத னெழினி, தழும்பன் முதலிய குறுநிலமன்னரும் படைத்தலை வரும் பொருநரும் தமிழரே என்று தெளிக. அவர் பெயரெல்லாம் தூய தமிழ்ச்சொல்லாயிருத்தலையும், அவர் என்றேனும் வேற்றுமொழி பேசியதாக எங்கேனும் சொல்லப் படாமையும், நோக்குக. எத்தொழிலையும் இருவகுப்பார் செய்துவரின், அவர்க்குள் இகலும் இசலிப்பும் ஏற்படுவது இயல்பே. கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு ஒத்திருந்தமையின், அவரிடைச் சிறிது பகைமை ஏற்பட்டிருக்கலாம். இதுபற்றிக் கோசரை வடநாட்டாரெனக் கொள்வது பொருந்தாது. ஆரிய வருகைக்குமுன் நாவலந்தேய முழுவதும் தமிழரும் அவர் வழியினரான திரவிடருமே குடியிருந்ததினால், வேளிரைப் போன்றே கோசரும் பனிமலை (இமயம்) வரை பரவியிருந் திருக்க லாம். ஆதலால், கோசம் என்னும் சூள்முறையை வடநாட்டார் கையாண்டமை, அதன் அயன்மையைக் காட்டாது. கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு பொது வாயிருந்த தேனும், அது கோசர்க்கே சிறந்திருந்தமை இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர் (அகம். 90) வளங்கெழு கோசர் விளங்குபடை (அகம். 205) ... ... ... ... வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற் பெருமரக் கம்பம் போல (புறம். 169) மெய்ம்மலி பெரும்பூட் கோசர் (அகம். 15) கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் (மதுரைக். 778) அமர்வீசு வண்மகிழ் அகுதைப் போற்றிக் காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர் (அகம். 113) ... ... ... ... வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் (அகம். 251) என வருபவற்றால் அறியப்படும். இதனால், கோசர் உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது (762) என்னுங் குறட்கு இலக்கான மூலப்படையைச் சேர்ந்த அல்லது தொல்வரவான பூட்கை மறவரும், படைத்தலைவருமாவர். வேளிர் உழுவித் துண்ணும் வேளாண் வகுப்பைச்சேர்ந்த குறுநில மன்னரும் பண்ணையார் (மிராசுதார்) என்னும் பெருநிலக் கிழாருமாவார். இனி, கோசர், அத்திகோசம் (யானையெறிகோசம்), வீரகோசம் (ஆளெறிகோசம்) என இருவகையராகவும் சொல்லப் பெறுவர். படைக்குச் சிறந்ததும் விலங்கிற் பெரியதும் யானையென்று கொண்டு, அதனையே போர்க்களத்தில் எறிந்துகொல்வோர் யானையெறிகோசத்தார். அஃது ஒரு விலங்கென்று இழித்து மறவரையே கொல்வோர் ஆளெறிகோசத்தார். கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது (குறள். 772) கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (குறள். 774) வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்றன் இலங்கிலை வேலே (புறம். 301) கறையடி யானைக் கல்ல துறைகழிப் பறியா வேலோன் ஊரே (புறம். 323) ஆனை யாயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி (இலக். வி. 839) என்பன யானையெறி கோசத்தானைப் பற்றியன. தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை யெறிதல் இளிவரவால் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்து வாழ்வேன் (தொல். புறத்திணை. 5 உரை) என்பது ஆளெறி கோசத்தானைப் பற்றியது. இச்செய்யுட்களெல்லாம் தமிழ் மறவருட் சிறந்தாரைக் குறிப்ப தல்லது. ஒரு வேற்றுநாட்டு வகுப்பாரை விதந்தோ கிளந்தோ குறியாமை காண்க. பிற்காலச் சோழ பாண்டிய கொங்கு நாடுகளில், பழந்தமிழ்க் கோசரின் வழியினரான கைக்கோளப் படைமறவருள்ளும் தலைவருள்ளும் போர்க்களத்திற் பட்டவரின் குடும்பத்தார்க்கு, இரத்தக்காணிக்கை யென்றும் உதிரப்பட்டியென்றும் வழங்கும் மாநிலம் அரசரால் விடப்பட்டமை ஆங்காங்குள்ள கல்வெட்டு கள் தெரிவிக்கும். இங்ஙனம் கூற்றுடன்று மேல்வரினும் ஆற்றலுடன் பொரும் தறு கணாண்மைப் படைமறவரான கைக்கோளர், 16ஆம் நூற்றாண் டிற்குப் பின் (சேர சோழ பாண்டியரான) முத்தமிழரச மரபும் அற்றுப்போனதினாலும், போர்த்தொழிற் கிடமின்மை யாலும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியமுறைக் குலப்பிரிவி னாலும் தொல்வரவுந் தோலும் கெட்டு மறம் என்னும் திறமும் அறவே இழந்துவிட்டனர். அவர் இன்று நெசவுத் தொழிலை மேற்கொண் டிருப்பினும், தமிழ்நாட்டின் தென்பாகத்தில் கைக்கோளர் என்றும் வடபாகத்தில் செங்குந்தர் என்றும் இன்றும் அவர்க்கு வழங்கிவரும் பெயர்கள். அவரின் முன்னோர் நிலைமையைத் தெற்றெனக் காட்டாநிற்கும். முன்னர்க் கைக்கோளர் படை என்பது மரபாக வழங்கியது போன்று, இன்று கைக்கோளர் தறி என்பது மரபாக வழங்குகின்றது. கைக்கோளர் பெயர் என்னுந் தலைப்பில் திவாகரம் கூறும். செங்குந்தப் படையர் சேனைத்தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர் என்னும் நூற்பா, கைக்கோளரின் பண்டை நிலைமையையும் இற்றை நிலைமையையும் ஒருங்கே உணர்த்தும், தந்துவாயார், காருகர் என்பன நெசவுபற்றி வந்த பெயர்கள், குந்தம் ஈட்டி, செங்குந்தம் குருதியாற் சிவந்த ஈட்டி. பண்டை வேளிருள்ளும் கோசருள்ளும் இருந்ததுபோன்றே, முறையே அவரின் மரபினரான வெள்ளாளருள்ளும் கைக்கோள ருள்ளும் படைத்தலைவர் இருந்தமையின், இன்றும் அவ்விரு வகுப்பாரின் வழியினரும் குலத்தாரும். முதலியார் என்னும் பட்டத்துடன் அழைக்கப்பெறுகின்றனர். முதலியார் என்பது சேனை முதலியார் அல்லது படை முதலியார் என்பதன் குறுக்கம். முதலியார் இங்குத் தலைவர், வடகொங்கில் வதியும் அகம்படியர் தமக்கு முதலியார் பட்டம் இட்டுக்கொண்டது பிற்கால வழக்கு. தஞ்சை மாவட்டத்தில் சமணர்க்கு வழங்கும் முதலியார் பட்டம் படைத் தொடர்பின்றிப் பொதுவாகத் தலைவர் அல்லது பெரியோர் என்று பொருள்படுவதே. கோசரும் கைக்கோளரும் ஒரு வகுப்பாரே என்று முதன்முதற் கூறியவர் பெரும்புலவர் ரா. இராகவையங்காரே. கோசர் தமிழரா வேற்று நாட்டரா என்பதுபற்றி மட்டும் கருத்துவேறுபாடுள்ளது. கழகக் காலத்துக் கோசரும் வேளிரும் வடநாட்டின் வெவ்வேறு பகுதியினின்று தென்னாட்டுப் புகுந்தவர் என்பது அவர் கொள்கை. தென்னாட்டுப் பழக்க வழக்கங்கள் வடநாட்டிற் கையாளப்பெற் றமையே. அவர், அங்ஙனம் தலைகீழான முடிபிற்கு வரக்காரணம். தென்னாட்டு மாந்தர் வடநாட்டாரி னும் முற்பட்டவர் என்பதை அறிந்திருப்பின், அவர் அங்ஙனம் கொண்டிரார். வடநாட்டிற் கண்ணபிரான் நப்பின்னையை ஏறுதழுவி மணந்ததும், காளிக் கோட்டத்தில் (Calcutta) காளிக்கு எருமைக் கடாவைக் காவு கொடுத்ததும், தென்னாட்டு (தமிழ்நாட்டு) வழக்கங்களே. அங் ஙனமே காசுமீரத்தார் கோச முறையில் சூளிட்டதும் தென் னாட்டு வழக்கமே. ஆதலால், அதுபற்றிக் கோசரை வடநாட்டி னின்று வந்தவர் என்று கொள்வது வரலாற்று மலைவாம். இதுகாறுங் கூறியவற்றால், கடைக்கழகக் காலத்தில் உலக வழக்கில் கோளர் என்றும், செய்யுள் அல்லது இலக்கிய வழக் கில் கோசர் என்றும், இடைக்காலத்திலும் இக்காலத்திலும் இருவகை வழக்கிலும் கைக்கோளர் என்றும், செங்குந்தர் என்றும், பெயர் வழங்கப்பெற்றவர் ஒரு வகுப்பாரேயென்றும், தென்னாட்டுத் தூய தமிழ்ப் பழங்குடி மக்களேயென்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க. பண்டைக்காலத்தில், கொல்லேறு தழுவி மணந்த இடையரும் கோளரிக்கும் அஞ்சாக் குறவரும் ஆகிய இரு வகுப்பாரின் வழி யினர் ஆரியத்தால் இன்று தம் முன்னோரின் தறுகணாண்மைத் தமிழ மறத்தை முற்றும் இழந்திருப்பது போன்றே, கூற்றுவனைச் சீறும் கோசரின் வழியினரான கைக்கோளர் செங்குந்தரும் இன்றுள்ளனர் என்க. பின் குறிப்புகள் : 1. கோயன்புத்தூர் என்பது கோவன்புத்தூர் என்பதன் திரி பாகவும் இருக்கலாம். கல்வெட்டுகளில் உள்ளது கோவன் புத்தூர் என்னும் வடிவமே. வகரம் யகரமாகத் திரிதல் இயல்பு. எ-டு : கோவில் - கோயில். இனி, யரகம் வகரமாகத் திரிதலுமுண்டு. எ-டு : சேயடி - சேவடி. இது. கோயன் - கோவன் என்னும் திரிபிற்குச் சார்பாகலாம். 2. முத்தமிழ் நாட்டிலும் கோசர் இருந்தனர். அவருட் சிலர் துளு நாட்டைக் கைப்பற்றினர். அதனால் கோசர்நாடு துளு நாடெனப் பட்டது. இது, சேரர், கொங்கு என்பது போன்றதே. 3. அன்னி மிஞிலியின் தந்தை கண்ணை கோசர் ஒருசிலர் பிடுங்கிய கொடுமை பற்றிக் கோசர் எல்லாரையும் அயலார் என்று கொள்ளமுடியாது. வாய்க்காலில் விழுந்த மாங் கனியைத் தின்ற சிறுமியைக் கொன்ற நன்னனும் தமிழனே. 4. செங்குந்தர் குடிப்பிறந்த ஒட்டக்கூத்தர் போன்ற கழகக்காலக் கோசருள்ளும் தமிழ்ப்புலவர் ஒருசிலர் இருந்தனர். 5. இற்றைக் கைக்கோளரும் செங்குந்தரும் கடுகளவேனும் அயன்மை யுடையவரல்லர்; அங்ஙனமே கழகக்காலக் கோசரும். 6. மோரியப் படையெடுப்பிற்கு முன்பே கோசர் தமிழகத்திருந் தனர். ஆதலால், அவர் மோரியரொடு வந்தவரல்லர். (தென் மொழி, பொங்கல் மலர் 1960.) கோட்டம் உல் - உலம் = உருட்சி. உலம்வருதல் - உலமருதல் = சுழலுதல். உல்- உல - உலவு - உலாவு. உலவுதல் = வளைதல், சூழ்தல், சுற்றுதல், திரிதல். உல் - குல் - குல - குலவு. குலவுதல் = 1. வளைதல் குலவுச் சினைப் பூக்கொய்து (புறம். 11:4). 2. உலாவுதல் எமதன்னையை நினைத்தே குலவினனோ (சிவரக. விசயை. 14). குலவு = வளைவு. குலவுக் கொடுஞ்சிலை (பு.வெ. 1: 10) குலவு - குலாவு. குலாவுதல் = வளைதல். வளைத்தல். குலாவுஞ் சிலையர் (பு.வெ. 4:3) குலு - குலுத்தம் = வளைந்த காயிலுள்ள பயற்று வகை. (திவா.) குல் - கொல் - கோல் = 1. (உருண்ட) திரட்சி, கோனிறவளை யினார்க்கு (சீவக. 209). கோற்றொடி மாதரொடு (சிலப். 26:121). 2. உருண்டு திரண்ட தடி. கோல் - கோலம் = பந்துபோற் சுருளும் முள்ளெலி. கோல் - கோலி = குண்டு வடிவான விளியாட்டுக் கருவி. ம. கோலி, தெ. கோலி (g), து. கோளி (g), மரா. கோலீ (g). குல் - குன் - குனி, குனிதல் = 1. வளைதல், குனிவளர் சிலை (சீவக. 486). 2. வணங்குதல். (சூடா). குன் - குனுகு = குனுகுதல் = சிரித்து உடல் வளைதல். குன் - கூன் = 1. வளைவு, கூனிரும்பினிற் குறைத்து (நைடத. நாட்டுப் 10.) 2. உடற்கூனல். (திவா). கூனுங் குறளும் (புறம். 28). 3. கூனன். (கூனி). சிறுகுறுங் கூனும் (சிலப். 27: 214). கூன் - கூனி = வளைந்த சிற்றிறால். கூனிகொத்தி....... கொக் கிருக்கும் பண்ணை (குற்றா. குற. 94). கூனுதல் = 1. வளைதல். 2. முதுகு வளைந்துபோதல். கூன் - கூனை - மூலையிற் கூனுள்ள நீர்ச்சால். குலவு - குரவு - குரவை = சிறப்பு நாட்களிற் குறிஞ்சி அல்லது முல்லை நில மகளிர் எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாக நின்று. பாடியாடிச் சுற்றிவருங் கூத்து... ஆய்ச்சியர் குரவை. குன்றக் குரவை. (சிலப்.) குரவு - ஒ.நோ: L. curvo, E. curve, to bend. குரவை - ஒ.நோ: Gk. choros, a dance in a ring. E. “chorus, n. (L. chorus, from Gk. koros, a dance in a ring, a chorus). 1. In the Greek drama, (a) originally a company of dancers dancing in a ring accompanied by their own singing or that of others; a band of singers and dancers.” E. “choir, n. (Written also quire, from O.Fr. choeur L. chorus, Gk. choros, a dance in a ring, a band) 1. a band of dancers. .... 2. a collection of singers, especially in divine service, in a church.....” (The Imperial Dictionary of the English Language.) குரவு - குரகு - குரங்கு, குரங்குதல் = வளைதல். பாடினாள் ... இலைப்பொழில் குரங்கின (சீவக. 657). குரங்கு - 1. வளைவு. குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து (சிலப். 10 : 157), 2. கொக்கி. குரங்கு - ஒ.நோ : E. crank. குலு - குரு - குருகு = 1. வளையல், கைகுவி பிடித்துக் குருகணி செறித்த (கல்லா. 42 : 22). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவை நாரை. வான்பறைக் குருகி னெடுவரி பொற்ப (பதிற்றுப். 83:2). 3. நாரை வடிவொத்த கொல்லுலைத் துருத்தி. ஊதுலைக் குருகி னுயிர்த்தனர் (சிலப். 4:59) 4. ஓதிமம் (அன்னம்). நீரொழியப் பாலுண் குருகிற்றெரிந்து (நாலடி. 135). 5. அன்றில், குருகு பெயர்க் குன்றம் (மணி. 5:13). குருகு - ஒ.நோ: E. crane, OE. cran, OS., OHG. krano F. grue. குரு - குருள் - குருளுதல் = சுருளுதல். குருண்ட வார்குழல் (திருவிசை. திருவாலி. 1:3) குருள் = 1. நெற்றி மயிர்ச்சுருள். (w). 2. பெண்டிர் தலை மயிர். (பிங்.). குருள் - ஒ.நோ: E.curl, MDu. krul, G. krol, LG., Du., E Fris, kurl. குரு - குறு - கிறு. கிறுகிறுத்தல் = 1. தலை சுற்றுதல். 2. மயக்கமடைதல். கிறுகிறுவானம் - சிறுவர் சுழற்றி விளையாடும் பொரிவாணம். குறு - குற - குறங்கு - கறங்கு. கறங்குதல் = 1. சுழலுதல். பம்பரத்து.... கறங்கிய படிய (கந்தபு. திருநகரப். 28). 2. சூழ்தல். கறங்கிருள் மாலைக்கும் (திருவள்ளுவமாலை, 34). கறங்கல் = 1. சுழற்சி. (பிங்.). 2. வளைதடி. (அக.நி.). கறங்கு = 1. சுழற்சி (திவா.). 2. காற்றாடி. கான்முக மேற்ற.... கறங்கும் (கல்லா. கணபதி). கறங்கு - ஒ.நோ: Gk. guros, ring, L. gyre, E. gyate, go in circle or spiral, revolve, whirl குறு - குறள் - குறண்டு. குறண்டுதல் = 1. வளைதல். 2. சுருண்டு கொள்ளுதல். குல் - குள் - குளம் = 1. வளைந்த நெற்றி, திருக்குள முளைத்த கட்டாமரை (கல்லா. 31:9). 2. வெல்ல வுருண்டை குளம் (வெல்லம்) - வ. gula. குளம் - குளம்பு = உருண்டு திரண்ட விலங்குப் பாதம். குள் - குளி - குளியம் = 1. உருண்டை. (அக.நி.). 2. உருண்டையான மருந்து மாத்திரை. (பிங்.). குளி - குளிகை = 1. உருண்டையான மருந்து மாத்திரை. 2. பொன்னாக்க மாத்திரை. குளிகையிட்டுப் பொன்னாக்குவன் (திருமந். 2709). குளிகை - வ. குளிகா (gulika). குள் - குளல் - குழல். குழலுதல் = சுருளுதல். கடை குழன்ற கருங்குழல்கள் (சீவக. 164). குழல் = 1. மயிர்க் குழற்சி. குழலுடைச் சிகழிகை (சீவக. 1092). 2. பெண்டிர் தலைமயிர் சுருட்டி முடிக்கப்படுகை. (திவா.). குளியம் - குழியம். குழியம் = 1. வளைதடி. (w.). 2. நறுமண வுண்டை. (சிலப். 14 : 171; அரும்.). 3. உருட்சி. (திவா.) குள் - குண்டு = 1. உருண்டிருப்பது அல்லது உருண்டு கனத் திருப்பது. 2. உருண்டையான நிறைகல். 3. உருண்டையான பொன் மணி. பொன்னின் பட்டைமேற் குண்டு வைத்து (S.I.I. ii. 182). 4. விலங்கின் விதை. 5. வெடிகுண்டு. 6. உருண்டை மாம்பழ வகை. 7. உருண்டை கல வகை. 8. உருண்டு திரண்ட ஆண் குதிரை அல்லது ஆண் கழுதை. தெ. குண்ட. மரா. குண்ட (g). குண்டன் = தடித்த குள்ளன். குண்டான் = உருண்ட சட்டி வகை. குண்டான் = குண்டா. மரா. குண்டா (g). குண்டி = உருண்டு திரண்ட புட்டம். குண்டை = உருண்டு திரண்ட பாளை. குண்டு - குண்டலம் = 1. வட்டம் 2. சுன்னம், 3. வானம். (பிங்.). 4. ஆடவர் காதணி வளையம். குண்டலம் - வ. குண்டல. குள் - குண் - குண - குணகு. குணகுதல் = வளைதல். குணகு - குணங்கு, குணங்குதல் = வளைதல். குணகு - குணக்கு = வளைவு. நாய் வாலைக் குணக் கெடுக்க லாமா? (பழ.). குணக்குதல் = வளைத்தல். குணகு - குணகு - குணுக்கு = 1. சிறுமியர் காது வளையம். 2. மீன்வலை ஈயகுண்டு. குணுக்குதல் = வளைத்தல். குணலை = நாணத்தால் உடல் வளைகை கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய் (பணவிடு. 310). குண - குணம் - குடம் = 1. உருண்ட திரட்சி. (W.). 2. வண்டிக் குடம். 3. நீர்க்குடம். 4. கும்ப ஓரை. (பன்னிருபா. 163). 5. குடதாடி 6. குடக்கூத்து. நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப். 6:55). குடம் - வ. கடம் (ghata). குடக்கம் = வளைவு. குடக்கி = வளைவானது. குட = வளைந்த (திருமுரு. 229, உரை). குடம் - குடங்கு. குடங்குதல் = வளைதல். குடங்கு - குடங்கர் = 1. குடம். குணங்கர் கொணர்ந்திடா.... நொண்டு கொண்டனர் (கந்தபு. தேவகிரி. 24). 2. கும்பவோரை (சூடா). குடம் - குடந்தம் = 1. மெய் வளைத்துச் செய்யும் வழிபாடு. குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி (திருமுரு. 229). 2. நால்விரல் முடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை. (திருமுரு. பக். 47, அடிக்குறிப்பு.). 3. குடம். (பிங்.). குடம் - குடா = 1. வளைவு : குடாவடி யுளியமும் (சிலப். 25:50), 2. குடாக்கடல், வளைகுடா, எ-டு : மன்னார்குடா. விரிகுடா, எ-டு : வங்காளக்குடா, 3. மூலை (w.). குடம் - குடி = வளைந்த புருவம். (பிங்.). குள் - கூள் - கூளி = வளைந்த பச்சை வாழைப்பழம். குள் - கொள் = வளைந்த பயற்றங்காய். அதிலுள்ள பயறு. கொள் - கொண்பு - கொம்பு = விலங்கின் தலைமேலுள்ள வளைந்த வுறுப்பு, மரக்கிளை, கோல், பிள்ளை, பெண்பிள்ளை, வளைந்த எழுத்து வரி. கொம்பு - கொப்பு = கொம்பு போன்ற மரக்கிளை, ஒரு காதணி கொம்பு - கம்பு = கோல், தடி (பாண்டி நாட்டு வழக்கு). கம்பு - கம்பம் = தூணாக நாட்டும் பெருமரத் தடி. கொம்பு - கொம்பன் = ஆண்பிள்ளை, சமர்த்தன். கொள் - கொடு - கொடுமை = வளைவு, நெறிதிறம்பல், அட்டூழியம். கொடுவாள், கொடுக்காய்ப்புளி முதலியவற்றிற் பருப்பொருட் கோணலையும் : கொடுங்கோல், கொடும்பாடு முதலியவற்றில் நுண்பொருட் கோணலையும்; கொடுமைச் சொல் குறித்தல் காண்க. கொடு - கொடுக்கு = 1. வளைந்த கொட்டும் உறுப்பு; 2. அழகிய ஆடைத்தொங்கல். கச்சை புனைந்ததிலே விட்டான் பெருங் கொடுக்கு (திருவாலவா. 30:9). 3. தொங்கும் கிழிசல். கொடுக்கன் = தேள், கொடுக்கி = தேட்கொடுக்கி என்னும் செடி. கொடுக்கு - ஒ.நோ: E.crook, ME, croc, ON. krokr, hook. கொடு - கொடுகு. கொடுகுதல் = கொடுமையாதல். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர். (தேவா. 918:1). கொடு - கொடும்பு = கொடுமை கொடு - கொடி = வளைந்து நீண்டு வளரும் தண்டு. கொடு - கொடிறு = வளைந்த பற்றுக் குறடு. பற்றுக் குறடு போன்ற வாயலகு (கதுப்பு). கொள் - கொள்கு - கொட்கு. கொட்குதல் = 1. சுழலுதல். வளிவ லங்கொட்கு மாதிரம் (மணி. 12:91). 2. சூழ வருதல். காலுணவா கச் சுடரொடு கொட்கும் (புறம். 43:3). 3. சுற்றித் திரிதல். கொடும் புலி கொட்கும் வழி (சிறுபஞ். 80). ஒ.நோ: வெள் வெள்கு - வெட்கு. கொள்ளுதல் = 1. வளைதல், 2. சுழலுதல், 3. திரிதல். கொள் - கொட்பு = 1. சுழற்சி. கொட்புறு கலினப் பாய்மா (கம்பரா. மிதிலை. 13). 3. சுற்றித்திரிகை. (திவா.). கொள் - கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. கொட்கு - கொட்கி - கொக்கி = வளைந்த கொளுவி. ஒ.நோ : கொக்கி - E. hook, OE. hoc, MLG. hok, Du, hock. கொள் - கொட்டை. ஒ.நோ : வள் - வட்டை கொட்டை = 1. உருண்டு திரண்ட விதை. 2. அவ் விதை போன்ற உறுப்பு. 3. உருண்ட தலையணை. பஞ்சின் நெட்டணையருகாக் கொட்டைகள் பரப்பி (பதினொ. திருவிடைம. மும். 19). 4. ஆடைத் தும்பின் மணி முடிச்சு. கொட்டைக் கரைய பட்டுடை நல்கி (பொருந. 155.). 5. பாதக் குறட்டின் குமிழ். பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றி (பெருங். மகத. 22 : 202). 6. பஞ்சுச் சுருள். `கொட்டைத் தலைப்பால் கொடுத்து (திவ். பெரியாழ். 3:5:1). 7. உருண்ட பருவடிவம். கொட்டையெழுத்து; (உ.வ.). கொள் - கோள் = 1. சுற்றிவரும் அல்லது உருண்டையான விண்சுடர் அல்லது வேறுலகம். எல்லாக் கோளும் நல்வழி நோக்க (பெருங் இலாவாண. 11:70). 2. திங்களைச் சூழும் கோட்டை. மதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக. 1098). கோள் - கோளம் = 1. உருண்டை. 2. உயிர்மெய்களில் (பிராணிகளில்) நீர் சுரக்கும் தசைப்பகுதி. கோளம் - வ. கோல (gola). கோளம் - கோளகம் = 1. உருண்ட மிளகு. 2. மண்டல விரியன். (பிங்.) கோளம் - வ. கோலக (மிளகு), கோலக(ப) (மண்டல விரியன்) கோளகம் - கோளகை = 1. வட்ட வடிவம். அண்ட கோளகைப் புறத்ததாய் (கம்பரா. அகலிகைப் 60). 2. கிம்புரிப் பூண் வளையம். 3. மண்டலிப் பாம்பு. (சூடா.). கோளகை - வ. கோலக (g). கோள் - கோளா = 1. நறுமணப் பண்டங் கலந்ததும் இறைச்சி யுள்ளிட்டதுமான உண்டையுணவு. 2. கஞ்சாவுருண்டை. கோள் - கோண் - கோணுதல் = 1. சாய்தல். 2. வளைதல். 3. நெறி தவறுதல். 4. மாறுபடுதல். 5. வெறுத்தல். கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது மேல். (பழ). கோண் = 1. வளைவு. கோணார்பிறை (திருவாச 16:5). 2. கொடுங் கோன்மை. (திவா.). 3. கோணம் முக்கோ ணிவர்தரு வட்டம் (குற்றா: தல. பராசத். 3). 4. கூன். கோணன் = கூனன் (பிங்.). கோண் - ஒ.நோ: Gk. gonia, angle. கோண் - கோணம் = 1. மூலை. கோண மொத்திலங்கோர் முழத்தி னின் (திருவாலவா. 15:2). 2. ஒதுக்குப்புறமான இடம். கோணம் - வ. கோண. கோணம் - காணம் = 1. வளைந்த கொள்ளுக்காய். 2. கொட்பயறு (பாண்டிவழக்கு). கோண் - கோணை = 1. வளைவு. 2. கோணல். 3. கொடுமை. (அக.நி.). 4. தொல்லை. கோணை பெரிதுடைத்தெம் பெருமானைக் கூறுதலே (திவ். திருவாய். 2:5:10). கோணை - கோணையன் = மாறுபட்ட குணஞ் செயல் கருத் துடையவன். கோண் - கோடு. ஒ.நோ: பாண் - பாடு. கோடுதல் = 1. கோணுதல், 2. வளைதல், கொடும் புருவங் கோடாமறைப்பின் (குறள். 1086) 2. நெறி அல்லது நடுநிலை தவறுதல். கோடாருங்கோடிக் கருவினைய ராகியார்ச் சார்ந்து (நாலடி. 124). கோடாமை சான்றோர்க் கணி (குறள். 118). 3. சூழ்தல். 4. வட்டமாதல். கோடு = 1. வளைவு. 2. வளைந்த சங்கு. கோடு முழங் கிமிழிசை யெடுப்பும் (பதிற்றுப். 50:25). 3. பிறைமதி. கோடுமிலைந்தான் (திருக்கோ. 149). 4. விலங்கின் கொம்பு. கோட்டிடையாடினை கூத்து (திவ். இயற். திருவிருத். 21). 5. யானை மருப்பு (தந்தம்). மத்த யானையின் கோடும் (தேவா. 39 : 1) 6. மரக்கிளை. (பிங்.). 7. யாழ்த் தண்டு. மகர யாழின் வான்கோடு தழீஇ (மணி 4:56). 8. எழுத்தின் கொம்புக் குறியீடு. விலங்கு பெற்றும் கோடு பெற்றும் புள்ளி பெற்றும் (தொல். எழுத். 17, உரை). 9. மயிர்ச் சுருள்முடி குரற் கூந்தற் கோடு (கலித். 72:20). 10. வளைந்த குளக்கரை. கோடின்றி நீர் நிறைந்தற்று (குறள். 523). 11. குளம். கோடெலா நிறையக் குவளை மலரும் (தேவா. 425:4). 12. ஆடைக்கரை, கொடுந் தானைக் கோட்டழகும் (நாலடி. 131). 13. வரம்பு. (பிங்.). 14. வரி. 15. வட்டாடும் கட்டம். கோடின்றி வட்டாடல் கொள்வ தொக்கும் (தாயு. நினை. 2). 16. காலவட்டம். கலியுகக் கோட்டுநாள் (T.A.S.H.P. 5). 17. நடுநிலை திறம்புகை. கோடி றீக் கூற்றம் (நாலடி. 5). 18. கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கையும் (பதிற். 37:11). 19. வரம்பு போன்ற பக்கம். கோடுய ரடுப்பு (புறம். 164). கோடு - கோட்டம் = 1. வளைவு. மரத்தின் கனக்கோட்டத் தீர்க்கு நூல் (நன்.25), மிதிவண்டிச் சக்கரம் கோட்டம்பட்டிருக்கிறது. (உலக வழக்கு). 2. வணக்கம் (உடல்வளைவு). முன்னோன் கழற்கே. கோட்டந் தருநங்குடிமுடி வெற்பன் (திருக்கோவை. 156. 3. வணருறுப்புள்ள அல்லது வளைந்த தண்டுள்ள யாழ். (பிங்.). 4. வளைந்த அல்லது சூழ்ந்த குளக்கரை அல்லது ஏரிக்கரை. உயர் கோட்டத்து..... வான் பொய்கை (பட்டினப். 36). 5. மனக் கோணல். உட்கோட்ட மின்மை பெறின் (குறள். 119(. 6. நடுநிலை திறம்புகை. கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது. (தேவா. 1182:2). 7. வேலி சூழ்ந்த தோட்டம். (பிங்.). 8. அரண்வேலி சூழ்ந்த பாசறை. (பிங்.). 9. மதில் சூழ்ந்த பள்ளிபடை அல்லது கல்லறை. சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் (மணி. 6:59). 10. மதில் சூழ்ந்த கோயில். கோழிச் சேவற் கொடியோன் கோட் டமும் (சிலப். 14:10). 11. மதில் சூழ்ந்த சிறைச்சாலை. கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்கு (சீவக. 262). 12. சாலை. அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து (மணி. 19:133), அறஞ் செய்கோட்டம் (மணி. பதிகம். 72). 13. மதில் சூழ்ந்த நகர். (பிங்.). 14. வட்டாரம் அல்லது மண்டலம் என்னும் நாடு. (பிங்.). 15. மதில் சூழ்ந்த இடம். 16. இடம். (பிங்.). இங்ஙனம், கோயிலைக் குறிக்கும் கோட்டம் என்னும் சொல், உல் என்னும் மூல வேரினின்றும் குல் என்னும் அடிவேரினின் றும் தோன்றிய தூய தென்சொல்லாயிருப்பினும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, அதை ஆரிய மரபுப்படி கோஷ்ட்ட (koshta) என்று திரித்து வட சொல்லாகக் காட்டி யுள்ளது. khÅa® cÉšÈa«R rk‰»Uj - M§»y mfuKjÈÆš, ‘nfhZ£l’ v‹DŠ brh‰F _ybkd Édh¡F¿íl‹ Iíwthf¡ fh£l¥gL« brhš, to tear asunder, to pinch, to force or draw out, extract, to knead, to test, examine (?), to shine (?), to gnaw, nibble, to weigh, balance என்று பொருள் குறிக்கப்பட்டுள்ள குஷ் என்பதே. குஷி (வயிறு), கோச (உறை) என்பன உறவுச் சொற்களா யிருக்கலாமென்றுங் குறிக்கப்பட்டுள்ளது. அறிஞர் இதன் புரைமையைக் கண்டு கொள்க. கோயில், கோட்டம், நகரம், குடிகை, நியமம் என்பன ஒரு பொருட் சொற்களாகச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையி லும் ஆளப்பட்டுள்ளன. இவற்றுள் நியமம் ஒன்றே வடசொல். ஆயினும் அதற்கு முன்னுள்ள முச்சொல்லும் வடசொல்லே யென்று துணிந்து ஏமாற்றுவர் ஆரியர். ஆரியம், சமற்கிருதம், கீர்வாணம், தேவபாடை, வடமொழி என்பன ஒரு பொருட் சொற்கள். கோட்டி கொளுத்து - கொளுத்தி = கொளுத்துகை. இ. தொழிற்பெயர் ஈறு ஒ.நோ: போற்று - போற்றி = போற்றுகை. கொளுத்தி - கோட்டி (மரூஉ). ஒ.நோ: புழைக்கை - பூட்கை. கோட்டி - அறிவுறுத்தல், சொற்பொழிவு, அவைப்பேச்சு. வறுங்கோட்டி (நாலடி. 155) பேச்சு - வீரக்கோட்டி பேசுவார் (கம்ப. உயுத். மாயா. 13) வடமொழியாளர் கோட்டி என்னுஞ் சொல்லைக் கோஷ்டி (gosth) என்று திரித்து கோஷமிடும் (ஆரவாரிக்கும்) கூட்டம் என்று பொருளும் பொருட்கரணியமும் கூறுவர். தமிழில் கோட்டி கொளல் என்பது அறிவு கொளுத்துதலை மேற் கொள்ளுதல் அல்லது அவைக்கண் உரையாற்றுதலைக் குறிக்கு மேயன்றி ஆரவாரிப்புக் கூட்டத்தைக் கொள்ளுதல் என்று பொருள் படாது. அங்ஙனம் வடவர் கூறும் பொருளையே கொள்ளினும், அது தென் சொல்லாகுமேயன்றி வடசொல் ஆகாது. கொள்ளுதல் = க. ஒத்தல். வண்டினம் யாழ் கொண்ட கொனள் (பரிபா. 11 : 125) 2. பொருந்துதல் கொள்ளாத கொள்ளா துலகு (குறள். 470) கொள் - கோள் = குலை. செழுங்கோள் வார (புறம். 168) கோள் - கோடு = குலை (பிங்.) கொடு - கோடகம் = பல தெருக் கூடுமிடம் (பிங்.). கோட்டி க. ஒருவரோடு கூடியிருக்கை. தன் துணைவி கோட்டி லினீங்கி.) (சீவக. 1025) 2. கூட்டம் (பிங்.). (தி.ம. 238) கோஷிப்பது என்னும் பொருளினும் கூடுவது என்னும் பொருளே கூட்டம் என்று பொருள்படும். சொற்கு ஏற்றதா யிருத்தல் காண்க. ஆரவாரிப்பது கல்லார் திரளும் கலகக் கூட்டமேயன்றி, ஆன்றவிந் தடங்கிய சான்றோ ரவையமாகாது. (தி.ம. 238) கோட்டை கோட்டை - கோட்ட கோடுதல் = விளைதல். கோடு - கோட்டை = 1. நிலாவைச் சூழ்ந்த வட்டக்கோடு. சந்திரனோர் கோட்டை. கட்டி (கொண்டல் விடு. 72). 2. வட்ட மான நெற்கூடு. உலவாக்கோட்டை (திருவாலவா. 50:13). 3. நெற்குதிர். 4. ஒரு முகத்தலளவை. இது முதலில் ஒரு நெற்குதிரளவாயிருந்து, இன்று 21 மரக்கால் கொண்ட அளவைக் குறிக்கின்றது. 5. அரண்மனையை அல்லது நகரைச் சூழ்ந்த மதிலரண். k., f., தெ. கோட்ட. மா.வி. அகரமுதலி கோட்ட என்னுஞ் சொற்கு, வளைவு, குடிசை, மதிலரண் என்று பொருள்கூறி, குட் (வளை) என்பதை மூலமாகக் காட்டும். கோடு என்னுஞ்சொல் வடமொழியிலின்மையால் இங்ஙனங் காட்ட நேர்ந்தது. குட் என்பது குட என்னும் தென்சொற்றிரிபு. (வ.வ: 133). கோடகம் - கோட்டக (gh) கோடுதல் = வளைதல், திரும்புதல். கோடு - கோடகம் = வட்டமாயோடுங் குதிரை. ஒ.நோ : மண்டிலம் = குதிரை (பிங்.). கோடகம் - கோடம் -கோணம் = குதிரை. பச்சைக் கோடகக் காற்றை (கல்லா. 17:48). கோடு - கோடரம் = குதிரை (பிங்.) கோடரம் - கோரம் = குதிரை, சோழன் குதிரை. கோரத்திற் கொப்போ கனவட்டம் (தனிப்பாடல்). வடவர் எதிர்ப்பு, காப்பு, திரும்பல் ஆகிய பொருள்களைக் குறிக் கும் குட் (gh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். (வ.வ:134) கோடரி கோடரி - குட்டார (th) கோடு = மரக்கிளை. அரிதல் = அறுத்தல், வெட்டுதல், கோடரி = மரக்கிளையை வெட்டும் அல்லது பிளக்குங் கருவி. கோடரி - கோடாரி - கோடாலி. க. கோடாலி, தெ. கொட்டலி (g), ம. கோடாலி (வ.வ: 133.) கோடி கோடி - கோடி (t) கோடி = எல்லை, கடைசி, நுனி, நிலமுனி, முடிமாலை, உச்சி யெண்ணாகிய நூறிலக்கம். அடுக்கிய கோடி பெறினும் (குறள். 954). தெ. கோடி, மரா. கோடீ, இ. குடோட், ஆ. க்ரோர் (crore) முதற்காலத்திற் கோடியே கடைசியெண்ணாக விருந்தது. பின்பு குவளை, தாமரை, குமுதம், வெள்ளம், ஆம்பல், நெய்தல் முதலிய அடுக்கிய கோடா கோடிப் பேரெண்கள் எழுந்தன. ஐஅம் பல்என வரூஉம் இறுதி அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும். (தொல். 393). கோடு = 1. வளைந்த கொம்பு. (வ.வ.) 2. விலங்கின் உச்சந்தலையிலுள்ள கொம்புபோன்ற மலையுச்சிக் குவடு. பொற்கோட் டிமயமும் (புறம். 2. 24). 3. கொம்புங் குவடும் போன்ற உச்சி மயிர்முடி. குரற்கூந்தற் கோடு (கலித். 72 : 20). கோடு - கோடரம் = தேரின் மொட்டு (பிங்.) கோடு - கோடகம் = முடி (மகுடம்). கோடு - கோடி = உச்ச எண். கோடி என்னும் சொற்கு எல்லைப்பொருள், கோடு என்னும் சொல்லின் நீர்க்கரைப் பொருளினின்று வந்திருத்தல் வேண்டும். கோணம் கோணம் - கோண கோண் - கோணம் = வளைவு, மூலை. (வ.வ: 135) கோதுமை வகை சம்பாக்கோதுமை வாற்கோதுமை குண்டுக்கோதுமை (சொல்: 74) கோபநிலைகள் கோபம் சிறிது பொழுது நிற்பது; சினம் நீடித்து நிற்கும் கோபம்; சீற்றம் சீறியெழுங் கோபம்; வெகுளி அல்லது காய்வு அல்லது உருத்திரம் நெருப்புத் தன்மையுள்ள கடுங்கோபம்; கொதிப்பு கண் போன்ற உறவினர்க்குச் செய்யப்பட்ட கொடுமைபற்றிப் பொங்கி யெழுங் கோபம்; எரிச்சல் மனத்தை உறுத்துங் கோபம்; கடுப்பு பொறாமையோடு கூடிய கோபம்; கறம் அல்லது வன்மம் பழிவாங்குங் கோபம்; கறுவு தணியாக் கோபம்; கறுப்பு கருப்பன் முகம் கறுத்துத் தோன்றும் கோபம்; சிகப்பு அல்லது செயிர்; சிவப்பின் முகம் சிவந்து தோன்றுங்கோபம்; விளம் நச்சுத் தன்மையான கோபம்; வெறி அறிவிழந்த கோபம்; முனிவு அல்லது முனைவு பெறுப்போடு கூடிய கோபம்; கதம் என்றும் இயல்பான கோபம்; கனிவு முகஞ்சுளிக்கும் கோபம்; செற்றம் அல்லது செறல் பகைவனை அழிக்கும் கோபம்; ஊடல் மனைவி கணவ னொடு கோபித்துக் கொண்டு உரையாடாத மென்கோபம்; புலவி ஊடலின் வளர்ந்த நிலை; துனி ஊடலின் முதிர்ந்த நிலை; சடைவு உறவினர் குறைகூறும் அமைதியான கோபம். (சொல்: 53) கோபுரம் கோபுரம் = கோபுர (g) புரையுயர் பாகும் (தொல். (785). புரம் = உயரமான கட்டிடம், மேன்மாடம். கோ = அரசன், தலைமை. கோபுரம் = அரசனிருக்கும் மேன்மாடம், தலைமையான காவற்கொத்தளம், அதுபோன்ற கோயிற் கோபுரம். மா.வி. அகரமுதலி, கோபுர என்னும் சொல்லை ஆவைக்குறிக்கும் கோ என்னும் சொல்லின்கீழ்க் குறிக்கின்றது. முதன்முதற் கோபுரம் கட்டப்பெற்றது தென்னாட்டிலேயே. (வ.வ: 135) கோயில் கோவில் அல்லது கோயில் என்பது முதலாவது அரசனது அரண் மனையையே குறித்தது. கோ - அரசன். இல் - வீடு. அரச வணக்கத் தின்பின் தெய்வ வணக்கம் தோன்றியதனால் அரசமனைப் பெயர் தெய்வமனைப் பெயராயிற்று. (சொல். 24) கோலம் கோலம் - கோல (g) = உருண்டை. கோள் - கோள் - கோளம் = உருண்டை, கோளக்கட்டி (gland) (வ.வ: 135) கோலகம் கோலகம் - கோலக (g) = உருண்டை. கோளகம் = உருண்ட மிளகு, மண்டல விரியன். கோளகை = 1. வட்ட வடிவம். அண்டகோளகைப் புறத்ததாய் (கம்பரா. அகலிகைப். 60). 2. யானைக்கிம்புரி. 3. மண்டலிப்பாம்பு. (வ.வ: 135) கோலி விளையாட்டு பாண்டிநாட்டு முறை ஆட்டின் பெயர் : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டை களைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி = உருண்டை). ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும் பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர். ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாலடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொரு வனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே. ஆடிடம் : அகன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம். ஆடுமுறை : ஆடகர், குழிவரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக்குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத்தொலை விற் கீறப்பட்ட கோட்டில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்த் தன்தன் கோலியை அக்குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒரு வரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும். முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தெறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும், அதன்பின் அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்குமுறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் வீழ்த்து நடுக்குழிக்குள் நிகழும். அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரி களாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல் வேண்டும். முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும், தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம் தவறுந்தொறும் ஆடகன் மாறுவான். ஒருவன் ஆடும்போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்தமுறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்குமாறும், அதன் அடியினின்று தப்புமாறும், அதனை அடித்துத் தொலைவிற் போக்கிவிடுவது வழக்கம். ஆட்டின் இடையிலாயினும் இறுதியி லாயினும் எதிரியின் கோலியை அடிக்கத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியின் கோலி தொலைவிலிருக்கும்போது அதை அடிக்கும் ஆற்றல் அல்லது உறுதியில்லாவிடின், தன் கோலியைச் சற்றே முன்தள்ளி அடுத்தமுறை எதிரியின் அடிக்குத் தப்புமாறு செய்வதுமுண்டு. ஒருவன் தவறி மற்றொருவன் ஆடும்போது, ஆட்டின் தொடக்கத் தில் ஆடிய முறைப்படியே ஆடல் வேண்டும். ஆடுவார் இருவராயினும் பலராயினும் தோற்பவன் ஒருவனே. பலராயின், இறுதியில் தோற்பவனொழிந்த ஏனையரெல்லாரும் கெலிக்கும்வரை ஆட்டுத் தொடரும். ஆட்டு முடிந்தபின், தோற்றவன் கெலித்தவரிடம் முட்டுவாங்கல் வேண்டும். தோற்றவன் தன் முட்டிக் கையை, இரு கணுவிற்கும் இடைப்பட்ட பகுதி கெலித்தவர்க்கு எதிராகத் தோன்றுமாறு, நிலத்தில் ஊன்றி வைத்துக்கொண்டிருக்க, கெலித்தவர் தம் கோலியால் அவன் முட்டியில் அடிப்பர். இது முட்டுப்போடுதல் எனப்படும். பொதுவாக மூன்று முட்டு அடிப்பது வழக்கம். முட்டுப் போடுவதுடன் ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விளை யாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும். ஆட்டுத் தோற்றம் : ஒருகால், அருகிலுள்ள பள்ளத்திலிருக்கும் காட்டுப்பறவையைக் கையில் வில்லில்லாவிடத்து விரல்கொண்டு கல்லால் தெறிக்கும் வேட்டை வினையினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம். ஆட்டின் பயன் : விரல் நரம்பு உரங்கொள்வதும், குறி தப்பாமல் தெறித்தடிக்கப் பயில்வதும், இவ் ஆட்டின் பயனாம். சோழ கொங்கு நாட்டு முறை சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டத்தைக் குண் டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், பேந்தா, அஞ்சல குஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம் முதலிய பல வகைப்படும். I. பேந்தா (i) சதுரப் பேந்தா ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு பேந்தா எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது கொங்கு நாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பது முண்டு. ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். ஆடு கருவி : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப் போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங்கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப் படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தி யெனப்படும். ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும். ஆடு முறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டில் மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்க் கோலியைப் பேந்தா நோக்கி உருட்டல் வேண்டும். பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெளியே அல்லது மிக வெளியே யார் கோலி நின்றதோ, அவன் தன் கோலியைப் பேந்தாவின் நடுக் கோட்டு நடுவில் வைத்தல் வேண்டும். ஆடும் வலியுடையவன் மீண்டும் உத்தியில் நின்று கொண்டு தன் கோலியைப் பேந்தா நோக்கி உருட்டல் வேண்டும். கோலி பேந்தாவிற்குள்ளேனும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள் ளேனும் போய் நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற் கிடைக் கப்பாற்போய் நிற்பின், பேந்தாவிற் குள்ளிருக்குங் கோலியை அடித்தல் வேண்டும். அவ்வாறு அடித்த பின், அடிக்கப்பட்ட கோலியன்றி அடித்த கோலி பேந்தாவிற்குள்ளும் பேந்தாவி னின்று நால்விரற் கிடைக்குள்ளும் நிற்றல் கூடாது; நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙன மன்றிப் பேந்தாவினின்று நால்விரற்கிடைக் கப்பாற் போய் நிற்பின், அடித்தவன் மீண்டும் உத்திக்குச் சென்று அதன்மேல் நின்றுகொண்டு, எதிரியின் கோலியை அடித்தல் வேண்டும். அங்ஙனம் அடிக்குமுன், எதிரியின் கோலி பேந்தாவிற்கு வெளி யில் நிற்பின், பேந்தா செத்து ஆறு மாசம் என்று கூறுதல் வேண் டும்; அல்லாக்கால் தவறாம். தவறிய போதெல்லாம் ஆடகன் மாறல் வேண்டும். அடிப்பவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலியை மூன்று தரம் தொடர்ந்து அடித்தல் வேண் டும். அதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்குத் தொலைவிற் போக்கப்படுவதுண்டு. மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலி பேந்தாவிற்குள் இல்லாக்கால், அடிக்குங் கோலி பேந்தா விற்குட் சென்று நிற்பினும் குற்றமில்லை. ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோலியை அடிக்கும்போது, பேந்தாமேற் கைபடும் என்று அடிப்பவன் முந்திச் சொல்லினும், பேந்தாமேற் கைபடக் கூடாது என்று அடிக்கப்படும் கோலிக்காரன் முந்திச் சொல்லி னும், அவ்வாறே நிறைவேற்றப்படல் வேண்டும். அடிக்கப்படும் கோலி ஒரு பள்ளத்திலிருப்பின், அடிப்பவன் நோ என்று சொல்வான். உடனே, அடிக்கப்படும் கோலியை எதிரி எடுத்து அடிப்பவனுக்கு எதிராகப் பள்ளநேருக்குச் சமநிலத் தில் வைத்தல் வேண்டும். அடிக்கப்படும் கோலி ஓர் இடுக்கிலிருப்பின் அடிப்பவன் சாண்சூடி சடாபுடா என்று சொல்வான். உடனே எதிரி அதை எடுத்து அடிப்பவனுக்குத் தெரியும் படி வைத்தல் வேண்டும். சாண்சூடி சடாபுடா இல்லை என்று எதிரி முந்திச் சொல்லி டின், அதை எடுத்து வைக்க வேண்டியதில்லை. ஒருவன் தன் கோலியால் அடிக்கும்போது, அதை வழிச் செல்வோர் யாரேனும் தடுத்துவிடின், அடிப்பவன் தடுத்தால் தூர் என்று சொல்வான். அதன்பின், அவ்வழிச் செல்வோர் தன் காலால் அதைத் தள்ளும்படி வேண்டப்படுவர். அடிக்கப்படும் கோலி உத்திக்குக் கிட்டே இருக்கும் போது அதற்குரியவன் அவ்விடத்தினின்று உத்திக்குத் தாண்டிவிடின், அடிப்பவன் தன் கோலியைத் தன் கண்ணில் வைத்தாவது உயர்த்திய கையில் வைத்தாவது எதிரியின் கோலியின் மேலிட் டடித்தல் வேண்டும். அவ் அடி தவறின், மீண்டும் நிலமட்டத்திற் கையால் தெறித்தடிக்கலாம். அவ் வடியும் தவறின் தோல்வியாம். மூன்றாம்முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியைத் தொடர்ந்து மூன்று தரம் அடித்து விடின் எதிரி தன் கோலியைத் தன் முட்டிக்கையால் ஒரு தடவை அல்லது பல தடவை தள்ளிப் பேந்தாவிற்குள் கொண்டு வந்து நிறுத்தல் வேண்டும். அங்ஙனம் நிறுத்திவிடின், அவனே கெலித்தவனாவன்; அல்லாக்கால் தோற்றவனாவன். முட்டிக்கையால் கோலியைத் தள்ளுவதை முட்டிதள்ளல் என்பர். (ii) வட்டப்பேந்தா ஆட்டின் பெயர் : பேந்தா எனப்படும் வட்டக்கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு வகை வட்டப்பேந்தாவாம். இது சதுரப் பேந்தாவுடன் ஒப்புநோக்கி வட்டப் பேந்தா எனப்பட் டது. ஆடுவார் தொகை : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின்மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம். ஆடுகருவி : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங் கோலி ஒவ்வொரு வனிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாக வாவது இருத்தல் வேண்டும். ஏறத்தாழ முக்கச விட்டமுள்ள ஒரு வட்டக்கோடு கீறப்படும். அதன் நடுவில் ஒரு குழி கில்லப்படும். வட்டத்தின் அடியில் கால் வட்டம் அமையுமாறு ஒரு குறுக்குக் கோடும் கீறப்படும். கால் வட்டமுள்ள பக்கத்தில், வட்டத்தினின்று ஏறத்தாழ முக்கசத் தொலைவில், உத்தி கீறப்படும். அதற்கு மேலும் இரு பக்கத்தும் கவியுமாறு ஒரு தலைகீழான பகரக் கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். ஆடிடம் : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம். ஆடுமுறை : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்று கொண்டு , ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதவாது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன் னொருவனதை அடித்துவிட்டால், எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும். ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்ட பின், முந்தியாடுகிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்து விடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லாவற்றையும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டு வான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; அடிப்பின், பச்சாவாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான். உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவா வது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன். அதனால் அடுத்தவன் ஆட நேரும். மூடி பொதுவாக முதலிற் போடப்படுவ தில்லை. பலமுறை சொல்லியுங்கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப்பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும். உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவை யில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம். முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்டத்தினின்று வெளியேறிவிடல் வேண்டும். அங்ஙனம் வெளியேறிவிடின் அது ஒரு வெற்றியாம். குழியிற் போட்டாலும் காயடித்தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய் கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்து விடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விருகாய் கொடுத்துவிடல் வேண்டும். முக்கால் வட்டத்துள் உள்ள காய் களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக் காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும் திரும்பியாடுவான். குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயை யும் அடிக்காமல் போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை. அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தைவிட்டு வெளியே போகாவிடின், பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டு விடல் வேண்டும். குழியிற் போட்டவிடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், இரட்டைப் பச்சாவாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்துவிட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். அவன் கெலித்துவிடின், அப் பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக்கிறவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள் பழங்காய் களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப் பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும் வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டேயிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும். ஒருவன் கெலித்தவிடத்து இன்னொருவனுக்குப் போடக் காயில்லா விட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான். எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதி யாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்டவெல்லாம் கெலிப்புக் காயாகும். ஆட்டின் பயன்: கோலியாட்டின் பொதுப்பயனாக முற்கூறப் பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலீயிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம். II. அஞ்சல குஞ்சம் ஆட்டின் பெயர் : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது அஞ்சல குஞ்சம் என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே பெயராகக் கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது ஒற்றைக் குழியாட்டம் எனவும்படும். ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். ஆடிடம் : பேந்தாவிற்குரியதே இதற்கும். ஆடுகருவி : பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குக் கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். ஆடுமுறை : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலைவிலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும். ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்து விட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்து விட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும். முதலிற் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குட் போடலாம். எதிரி யின் கோலியைத் தவறாது அடித்துவிடின் ஐந்தாம்; அங்ஙன மின்றிக் குழிக்குட் போட்டு விடின் நான்காம். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணி லிருந்து தொடங்கினும், பத்தாம் எண்வரை தொடர்தல் வேண் டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குழிக்கு அடித்தல். நான்காம் எண்ணி லிருந்து தொடங்கின், 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்; 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாக குழிக்குள் அடிப்பின், மீண்டும் நான்காம். குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலி யை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது, ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண் வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை, அஞ்சல குஞ்சம், அறுவக்க தாடி, எழுவக்க மைனா, எட்டக்க கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை) தொம்பனிப் பேட்டை, (தொம்பரப் பேட்டை, தொம்பலப் பாடி). தொசுக்கட்டுராசா, (தேசிங்குராசா, சம்பா விழுந்தது) என்பனவாம். பத்தாம் அடி தவறாது முந்தியடித்தவன் எதிரியின் கோலியை மூன்று தடவை அடித்துத் தள்ள வேண்டும். அடித்துத் தள்ளப் பட்ட கோலிக்காரன் முட்டி தள்ள வேண்டும்; அதாவது தன் கோலியைத் தன் முட்டிக் கையால் குறிப்பிட்ட தடவை தள்ளிக் கொண்டு வந்து குழிக்குள் வீழ்த்த வேண்டும். அங்ஙனம் வீழ்த்தி விடின் கெலிப்பாம்; இல்லாவிடின் தோற்பாம். பத்தாம் அடி தவறாது அடித்தவன் எதிரியின் கோலியை அடித்துத் தள்ளும்போது, எதிரி தன் கோலிநெடுந் தொலைவிற்குப் போய் விடாதவாறு தன் முட்டிக்கையால் அதைத் தடுக்கலாம்; காலால் தடுத்தல் கூடாது; காலால் தடுப்பின் 7 தடவை முட்டி தள்ளல் வேண்டும். முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், அடித்தவன் அதை மீண்டும் அடித்துப் போக்குவான். முட்டி தள்ளினவன் மீண்டும் முட்டி தள்ளுவான். இங்ஙனம் நான்கு முறை அடிப்பும் தள்ளும் நிகழலாம். ஒவ்வொரு முறைக்கும் அடிப்பிற்கும் தள்ளிற்கும் கணக்குண்டு. முதன்முறை 3 அடி 3 தள்ளு 2 ஆம் முறை 2 அடி 2 தள்ளு 3 ஆம் முறை 1 அடி 1 தள்ளு 4 ஆம் முறை 1 அடி 3 தள்ளு முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குட் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிற வன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிற வனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் போதுமா? என்று கேட்பான். அடிக்கிறவன் போதாது என்று சொல்லின், தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்துவைத்துப் போதுமா? என்று கேட்பான். அடிக்கிறவன் மீண்டும் போதாது என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் தெரியாமல், போதாது,; போதாது என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத், தள்ளுகிறவன் தன் இரு கைகளையும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, இறுதியில் கோலிக்கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, போதுமா? என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக் கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, போதும் என்பான்; உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்து விடுவான். இதற்கு மீன் பிடித்தல் என்று பெயர். தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும். III. இருகுழியாட்டம் (இஷ்டம்) ஆட்டின் பெயர் : சுவரடி அரங்கிற்குள் இரு குழி வைத்தாடும் கோலியாட்டு வகை இருகுழியாட்டம் எனப்படும். இதற்கு இட்டம் (இஷ்டம்) அல்லது கிசேபி என்றும் பெயர். இவ் ஆட்டு பெரும்பாலும் திருச்சி வட்டாரத்தில் ஆடப் பெறுவதாகும். ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் அல்லது ( இருவர்க்கு மேற்பட்ட) பலர் இதை ஆடுவர். ஓர் ஆட்டையில் இருவரே இதை ஆட முடியுமாதலால், பலர் ஆடுவதாயின் இவ்விருவராகவே ஆடக் கூடும். ஆடுகருவி : சுவரடி (அல்லது மேட்டடி) நிலத்தில், ஏறத்தாழ 3 அடி நீளமும் 2 அடி அகலமுமுள்ள ஒரு நீள் சதுர அரங்கமையு மாறு ஓர் அகன்ற பகரக் கோடு கீறிக் கொள்ளல் வேண்டும். அவ் வரங்கின் நெடும்பக்கங்களுள் ஒன்று சுவரடியாயிருக்கும் வண்ணம், பகரத்தின் இரு பக்கக் கோட்டு முனைகளும் சுவரைத் தொடுதல் வேண்டும். அவ்வரங்கிற்குள் இடவலமாக இரு குழிகள் கில்லல் வேண்டும். அரங்கிற்கு ஏறத்தாழ முக்கசத் தொலைவில் ஓரடி நீளம் உத்தி கீறப்படும். அதற்கு டாப்பு (Top) என்னும் மூடி இடப்படும். ஒருவன் ஆடும்போது இன்னொருவனுக்குக் கோலி தேவை யாயிராமையின், ஆடகர் எல்லார்க்கும் பொதுவாக முக்கோலி யிருந்தாற் போதும். அவற்றுள், இரண்டு உருட்டுவன; ஒன்று அவற்றை அடிப்பது. அடிக்குங்கோலி சற்றுப் பெரிதாக விருக்கும். அதற்குத் திருச்சிப் பாங்கரில் குட்டு அல்லது தெல் என்று பெயர். ஆடிடம்: சுவரடி நிலமும் மேட்டடி நிலமும் இதை ஆடுமிடமாம். ஆடுமுறை : தோற்றவன் கெலித்தவனுக்கு இவ்வளவு காசு கொடுத் தல் வேண்டுமென்று முன்னதாக முடிவு செய்துகொண்டு, உடன்பாட்டின்படியோ திருவுளச் சீட்டின்படியோ யாரேனும் ஒருவன் முந்தியாடுவன். ஆடுவார் எல்லார்க்கும் கோலி பொதுவா யின், கோலிக்குச் சொந்தக்காரன் முந்தியாடுவது வழக்கம். ஆடுகிறவன் உத்தியில் நின்றுகொண்டு, முதலாவது இரு சிறு கோலிகளையும் அரங்கிற்குள் உருட்டி, அவற்றுள் எதை அடிக்க வேண்டுமென்று எதிரியைக் கேட்பான். அவ் இரண்டினுள் ஆடுகிறவனுக்குக் கிட்ட இருப்பதை அடிக்க வேண்டுமென்று விரும்பின் கீழ் என்றும், சற்று எட்ட (அதாவது தொலைவில்) இருப்பதை அடிக்க வேண்டுமென்று விரும்பின் மேல் என்றும், எதிரி சொல்வான். கீழ் என்பதிற்குப் பதிலாக எதிர் என்றும் சொல்வதுண்டு. ஆடுகிறவன் எதிரி சொன்ன கோலியை அடித்து விட்டாற் கெலித்தவனாவன். அவனுக்குப் பேசினபடி எதிரி காசைக் கொடுத்துவிடல் வேண்டும். முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத் தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட் டிருப்பின், எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்ப மானதை அடிக்குங் காரணம் பற்றியோ, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர். இடையீடு இருவிரற்குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும் போது இரண்டிலும் பட்டுவிட்டால், பச்சர என்னுங் குற்றமாம். அதோடு, அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலி யாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், இரட்டைப்பச்சா என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம் தோல்வித்தானமே. முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள்வீழினும் வெளிவீழினும், மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடில் வேண்டும். முதலில் எறிந்த ஒரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக் கோட்டின் மேல் வைப்பான்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளி விடுவான். இவற்றுள் பின்னதற்கு மூட்டுதல் என்று பெயர். அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்து விடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது வெளிமட்டு என்னுங் குற்றமாதலின் ஆடினவன் தோற்ற வனாவன். மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், கோடு என்னுங் குற்றமாம். அதை லைன் (line) அல்லது லாக் (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும் போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாக வாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன். ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன். ஆட்டின் பயன் : குறி தப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ்வாட்டின் பயனாம். IV. முக்குழியாட்டம் (i) சேலம் வட்டார முறை. சுவர் குழிகள் அரங்கு டாப்பு உத்தி ஆட்டின் பெயர் : சுவரடியங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழி வைத்தாடும் கோலியாட்ட வகையே முக்குழியாட்டம். ஆடு முறை : மேற்கூறிய இரு குழியாட்டமும் இங்குக் குறித்த முக்குழியாட்டமும் ஒன்றே. ஆயின், இட வேறுபாடு காரண மாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமையுண்டு. திருச்சி சேலம் (1) கருவி : இருகுழி முக்குழி (2) முறை : மூட்டல் ஒரே தள் மூட்டல் 3 தள் வரை (3) பெயர் : இஷ்டம் அல்லது முக்குழியாட்டம் கிசேபி வெளிமட்டு லைன் வெளி டிப்பு அல்லது லாக்கு கீர் அல்லது கீறு (த.நா.வி.) கோவன் - கோன் = 1. இடையன். 2. அரசன். கோன் - கோனார் = இடையர். கோன் - கோ = அரசன். கோவன் என்பதைக் கோப என்று திரித்தும் பின்பு அதைக் கோ + ப என்று பிரித்தும், கோவைப் பாதுகாப்பவன் என்று வடவர் பொருள் கூறுவது பொருந்தாது. கோவன் என்பது ஆயன் (ஆ +அன்) என்பதை யொத்ததே. ஆங்கிலத்தில் (தியூத்தானியத்தில்) கோ (OS), கூ (OE) கௌ (E) என்று எடுப்பொலியின்றியே வழங்கி வருகின்றது. வேத ஆரியத் தில் தான் go என்று எடுத்தும் gous என்று திரிந்தும் ஒலித்திருக் கின்றது. (வ.வ: 131 - 132.) கோவன் ஆயன் ஆக்களைக் காப்பது போல அரசன் மக்களைக் காத்த லால், அரசனுக்குக் கோவன் என்று பெயர். கோவன் என்பது முறையே கோன், கோ எனத் திரியும். கோ - பசு. கோக்களை மேய்ப்பது பற்றி ஆயனுக்குக் கோன், கோனார் என்னும் ஒருமைப் பெயரும் உயர்வுப் பன்மைப் பெயரும் வழங்குதல் காண்க. ஆயனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் அரசனைக் குறிக்கும் கோன் என்னும் சொல்லும் ஒன்றே. அரசனுக்கும் குடிகளுக்கும் உள்ள தொடர்பு ஆயனுக்கும் ஆநிரைக்கும் உள்ள தொடர்பு போன்றது என்பதே, கோன் என்னும் சொல்லால் குறிக்கப்படும் கருத்தாம். அரசன் கையிலுள்ள கோலும் ஆயன் கைக்கோல் போன்றதே. கோல் என்னும் சொல் ஆகுபெயர்ப் பொருளில் அரசாட்சியைக் குறிக்கும். நேர்மையான ஆட்சி செங்கோல் என்றும் கொடுமை யான ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்படும். (கிறித்தவக் குருமாரை இக் கருத்துப் பற்றியே ஆங்கிலத்தில் Shepherd என்றும் Pastor என்றும் அழைப்பர். கிறித்தவ சபையார் ஆடுகளும், அச்சபைக் குருமார் மேய்ப்பரும் போல்வர். நானே நல்ல மேய்ப்பன் என்றார் ஏசு பெருமானார்.) இனி, சிவபெருமானும் உயிர்களை யெல்லாம் காப்பதில் ஆயனை அல்லது அரசனை ஒப்பவராதலின் கோவன் எனப்படுவர். உயிர்களை அல்லது ஆன்மாக்களைப் பொதுப்படப் பசு என்பதும், சிவபெருமானைப் பசுபதி என்பதும் வடமொழி வழக்கு. (சொல். 4-5.) ஙம்முதல் உலக வழக்கிலுள்ள ஒவ்வொரு மொழியிலும் சொற்களும் சொற்றொடர்களும் நாளடைவில் மாறுபடுகின்றன. அம் மாற்றம் தமிழில் மரூஉ, திரிபு, சிதைவு, போலி எனப் பல்பெயராற் கூறப்படும். மொழிகளின் வடிவு மாறவே அவற்றின் முதலிடை கடை யெழுத்துகளும் மாறுபடுகின்றன என்பது சொல்லாமே போதரும். பிறமொழிகளில் மொழிமுதலிடைகடை யெழுத்துகட்கு வரம் பில்லை. தமிழிலோ அவ் வரம்புண்டு. ஒரு தனிமொழியின் அல்லது தனித்து வழங்கக் கூடிய மொழியின் முதலெழுத்து மற்றோரெழுத் தாய்த் திரியின், அத்திரிபெழுத்தே முதலெழுத்தாய்க் கொள்ளப் படும். இலக்கணம் இடந்தரின். எ-டு: நண்டு - ஞண்டு. அரைஞாண் (அரைநாண்), பைஞ்ஞீலி (பைந்நீலி), சேய்ஞலூர் (சேய்நல்லூர்) முதலிய தொடர்மொழிகளிலுள்ள வருமொழிகள் ஞாண், ஞீலி, ஞல்லூர் எனத் தம் திரிந்த வடிவிலும் தனித்து வழங்குந் தகுதி சிறிதுடைமையின் அவற்றின் முதலிலுள்ள திரிபெழுத்துகளும் மொழிமுதலெழுத்துகளாகக் கொள்ளப் படல் கூடும். ஆனால், ஒரு தொடர்மொழியிலுள்ள வருமொழியின் முதலெழுத்து மொழி முதலல்லா எழுத்தாகத் திரியின், அவ் விதிமுதல் இயல்புமுதலாகக் கொள்ளப்படாது. ஈண்டு இயல்பு முதல் விதிமுதல் என்பவற்றை இயல்பீறு விதியீறு என்பவற்றை யெண்ணி யுணர்க. எ-டு: அல் + தாலம் = அற்றாலம். விண் + நாடு = விண்ணாடு. இவற்றில் றா, ணா என்னும் விதிமுதல்கள் மொழி முதலெழுத் தாகாமை யுணர்க. தொல்காப்பியர் சிறந்த ஆராய்ச்சியுடைய ராதலின், ஙகரம் வரு மொழியின் விதிமுதலாய் மட்டும் வருவது கண்டு அதை மொழி முதலெழுத்தாகக் கூறியிலர். நன்னூலாரோ அவ் வாராய்ச்சி யின்மையின், விதிமுதலாய் வந்த ஙகரத்தை இயல்பு முதலென மயங்கிக் கூறினர். ஙகரம் அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் எனக் சுட்டு வினாமுதற் றொடர்மொழிகளில் வருமொழி விதிமுதலா யிருக்குமேயன்றி, யாண்டும் தனிமொழியில் இயல்பு முதலாய் வருவதன்று. அங்ஙனம். இங்ஙனம் என்பன அவ்விதம் இவ்விதம் என்று பொருள் படுவனவாகும். அவ்வண்ணம். அவ் வகை, அவ்விதம், அப்படி என்னும் தொடர் மொழி களிலுள்ள வண்ணம். வகை, விதம், படி என்னும் சொற்கள் தனித்து வழங்கு வது போல, ஙனம் என்னும் சொல் தனித்து வழங்குவதன்று. அவன் செய்த விதம், அவன் செய்த ஙனம் என்னுந் தொடர் களைக் கூறிக் காண்க. அங்ஙனம், இங்ஙனம் முதலிய தொடர்மொழிகளில் மெல்லோசை சிறந்திருத்தலின், மெலித்தல் (Nasalization) ஓசை மிகுதியும் பயில் கின்ற மலையாள வழக்கில் ஒருகால் ஙனம் என்னும் சொல் தனித்து வழங்கலாமென்று கருதிப் பலவிடத்துமுள்ள மலையாளரைக் கேட்டதில் அவர்களும் ஙனம் என்னும்சொல் தமிழிற்போலவே மலையாளத்திலும் தொடர்மொழிப் பகுதியாய் வழங்குவதன்றித் தனித்து வழங்குவதன்று என ஒருபடித்தாய்ப் பகர்ந்துவிட்டனர். அங்ஙனம், இங்ஙனம் என்னும் சொற்றொடர்கள் பண்டைக் காலத்தில் அங்கனம், இங்கனம் என வழங்கியுள்ளமை சங்க நூல்களாலறியப்படும். இக்காலத்திலும் சிலர் அங்கனம், இங்கனம் என்றே கூறுவதை உலகவழக்கிற் காணலாம். சீவக சிந்தாமணி, விமலையாரிலம்பகம் 54 ஆம் செய்யுளில், ஈங்கனம் கனையிருளெல்லை நீந்தினாள் என்னும் ஈற்றடியிலும் புறநானூறு 208 ஆம் செய்யுளில். ஈங்கனஞ் செல்க தானென என்னை என்னும் அடியிலும், ஈங்கனம் என்ற வடிவம் வந்துள்ளது. இங்கனம் எனினும் ஈங்கனம் எனினும் ஒன்றே. சுட்டும் வினாவும் நீள்வது இருவகை வழக்கினும் பெரும்பான்மை. அல்லது சுட்டுவினாப் பொருண்மையில் ஒரு குறிலும் அதன் நெடிலும் ஓரெழுத்தே யெனக் கொள்ளினும் அமையும். இனி, அங்கனம், இங்கனம் என்பவற்றின் முதல் வடிவுதான் யாதோவெனிற் கூறுதும். கண் என்னும் இடப்பெயர் சுட்டு வினாவொடு புணர்ந்து. அக் கண், இக்கண், எக்கண் என நிற்கும். பின்பு மெலித்தன் முறையால் அங்கண், இங்கண், எங்கண் எனத் திரியும். எ-டு: கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் (புறம். 15) அங்கண் எனினும் ஆங்கண் எனினும் ஒன்றே. முன்னதன் நீட்சி பின்னதெனினும் ஒக்கும். இங்ஙனமே பிறவும். அங்கண், இங்கண் என்பன அங்கன், இங்கன் என மருவி மீண்டும் அங்ஙன், இங்ஙன் என மெலியும். எ-டு: தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் பேர்த்திங்ஙன் (சிலப்.) தமிழ்ச்சொற்கள் பல இன்னோசை பற்றி அம்மீறு பெறுதல் பெரும் பான்மை. (இவ் வியல்பை இலத்தீன் மொழியிலும் காணலாம்). எ-டு: தூண் - தூணம் குன்று - குன்றம். கால் - காலம் நெஞ்சு - நெஞ்சம் புறவு - புறவம் கண்டு - கண்டம். இங்ஙனமே அங்ஙன், இங்ஙன் முதலிய மரூஉச் சொற்றொடர் களும் அம்மீறு பெற்று அங்ஙனம், இங்ஙனம் என வழங்கும். ஓரிடம் மற்றோரிடத்திற்கு வழியாயிருத்தல்பற்றிப் பொதுவாய் இடப்பெயர்கள் ஒரு வினை செய்யும் வழியை அதாவது வகையைக் குறிப்பதுண்டு. எ-டு:ஆங்கு = அது போல, அப்படி அவ்வழி = அப்படி. இவ் வியைபினால் வகைப்பெயர்கள் தடுமாறி இடத்தைக் குறிப்பது முண்டு. எ-டு: இப்படிப் போ = இவ்வழியாய்ப் போ. அங்ஙனம், இங்ஙனம் முதலிய பெயர்களும் சொற்படி முதலில் இடத்தைக் குறித்தனவேனும், பின்பு இடம் - வழி - வகை என்னும் இயைபுபற்றி ஆகுபெயர்த் தன்மையில் வகை, விதம் என்னும் பொருள் தருவவாயின. இனி, அங்ஙனம், இங்ஙனம் முதலிய சொற்றொடர்த் திரிபுகள் அம்மட்டிலமை யாது அன்னணம். இன்னணம் முதலிய திரிபுங் கொள்ளும், நன்னூலாரே. இன்ன தின்னுழி யின்னண மியலும் (நன். 460) எனத் தம் உரியியற் புறனடையிற் கூறியுள்ளார். ஆதலின். சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வு முதலா கும்மே (நாள். 106) எனச் சூத்திரித்தவர். சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி னவ்வு முதலா கும்மே எனச் சூத்திரியாதொழிந்தது குன்றக் கூறலாமன்றோ? ஆதலான். தொல்காப்பியர்க்கு முற்காலத் தமிழிலன்றிப் பிற்காலத் தமிழில் ஙம்முதலேயில்லையென்று தெள்ளிதிற் றெளிக. - செந்தமிழ்ச் செல்வி கடகம் 1936 சக்கரம் சக்கரம் - சக்ர (c) - இ.வே. சுழிதல் = வளைதல், திருகுதல். சுழி - சழி. சழிதல் = ஒரு பக்கஞ் சரிதல். சழி - சரி - சருவு. சருவுதல் = சாய்தல். சரி = வளையல் வகை. சகடி சகடி - சகடீ (ல், வ@) சகடிகை - சகடிகா (ல், வ@) (வ.வ.137) சகோரம் சகோரம் - சகோர (c) வடவர் காட்டும் மூலம் சக் (c) என்பதாகும். இது குறிக்கும் பொருள் கள் பொந்திகை (திருப்தி), எதிர்ப்பு, ஒளிர்வு என்பனவே. (வ.வ.137) சங்கம் சங்கம் - சங்க (ளÝ, மா) - அ.வே. வடமொழியில் இச்சொற்கு மூலமுமில்லை; சங்கு என்னும் மூல வடிவுமில்லை. (வ.வ.137.) சங்கீதம் ஆசிரியர் வடநூல் காலம் சாரங்கதேவர் சங்கீத ரத்னாகரம் கி.பி. 1200 அகோபிலர் சங்கீத பாரிஜாதம் கி.பி. 1600 வேங்கடமகி சதுர்தண்டி பிரகாசிகா கி.பி. 1637 தலைக்கழக இடைக்கழகத் தமிழ் இசை நாடக நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. நாரதர் இயற்றிய பஞ்ச பாரதீயம், யாமளேந்திரர் இயற்றிய இந்திரகாளியம், சிகண்டியார் இயற்றிய இசை நுணுக்கம் ஆகிய தமிழ் இசை நூல்கள் பாரதக் காலத்தையடுத்து, அதற்கு முன்னும் பின்னும் இயற்றப் பெற்றவையாகும். கி.பி. 12 ஆம் நூற்றாண்டுவரை பாணருங் கூத்தருமே தமிழகத்தில் இன்னிசையும் நாடகமும் பயிற்றியும் வளர்த்தும் வந்தாரேனும், பிராமணர் கழகக் காலத்திலேயே முன்னோக்கொடு அவ்விரு கலைகளையும் பயின்றும் அவை பற்றிய நூல்களை வடமொழியிற் பெயர்த்தும் வைத்திருந்திருக்கின்றனர். ஆரியர் தமிழ் நூல்களை வடமொழியில் மொழிபெயர்க்கும் போது, பெயர்ப்புத் தோன்றாவாறு சில வழிகளைக் கையாண்டி ருக்கின்றனர். அவை, மறு பாகுபாடு (Re-classification), புதுப் பெயரீடு (Change of nomenclature), மாற்றம் (Alteration), சேர்க்கை (Addition) என்பன. இது இசைநூலிற் பிறங்கித் தோன்றுகின்றது. குமரிக் கண்டத் தமிழ்ப் பாணர், செங்கோட்டியாழ் என்னும் வீணை வாயிலாக இசை நுட்பங்களையெல்லாம் தம் எஃகுச் செவி யாலும் கூர்மதியாலுங் கண்டறிந்து; பண்ணும் பண்ணியலும் திறமும் திறத்திறமுமாக நால்வகைப் பண்கள் வகுத்து, நாற்பெரும் பண்களினின்று நூற்றுமூன்றும் பன்னீராயிரமுமாக (11991) நரப்படைவாற் பண்பெருக்கி; ஆயப்பாலை வட்டப்பாலை சதுரப்பாலை திரிகோணப்பாலை என்னும் பண்திரிவு முறை களால் பேரிசைகள் அரையுங் காலும் அரைக்காலுமானசிற்றிசை களாக நுணுகும் வகை நுணித்தறிந்து; பெண்ணிற்குப் பின் பண் என்னு மாறு எல்லையற்ற இன்பம் பயக்கும் முறையில் வளர்த் திருந்த இசைத்தமிழ் என்னும் தமிழிசையைக் கருநாடக சங்கீதம் எனப் பெயர் மாற்றி, பாணரைத் தீண்டாதவரென விலக்கி, பன்னீரிசைக் கோவையைப் பதினாறிசைக் கோவை யெனக் காட்டி, ஆகணவுழை (சுத்த மத்திமம்) அந்தரவுழை (பிரதிமத் திமம்) என்னும் இசை வேறுபட்டால் எழுபத்திரு தாய்ப் பண்ணென வகுத்து; ஆம்பல், குறிஞ்சி, சுருட்டி, செவ்வழி, தக்கம், நாட்டை, நேரிசை, புறநீர்மை, முல்லை, விளரி என்பன போன்ற தூய தமிழ்ப் பெயர்களை மாற்றிக் கரகரப் பிரியா, சங்கரா பரணம், தந்யாசி, நீலாம்பரி, பைரவி, மத்தியமாவதி, வனஜாட்சி என ஆரிய இடுகுறிப் பெயர் களையிட்டு, வட மொழியிலும் வடமொழி கலந்த திரவிடத்திலும் பாட்டுக்களை இயற்றிப்பாடி, ஆரியக் கலையாகக் காட்டியிருப்பது எத்துணை யிரண்டகச் செயல்! இங்ஙனமே தமிழ் முதனூல்களையொட்டிய கணிதம், மருத்துவம் முதலிய பல நூல்களும். காம சூத்திரம், கொக்கோகம் முதலியன வும் பிறவும், வெவ்வேறு காலத்து வடமொழியில் இயற்றப் பட்டன. வடமொழியாளர் கலைகளையெல்லாம் 64 ஆக எண்ணினர். நால்வேதம், ஆறுசாதிரம், பதினெண்புராணம், அறுபத்து நான்கு கலைஞானம் என்று சொல்வது மரபு. கலைகள் என்று எண்ணப்பட்டவற்றுட் சில, கலைகளல்ல. வடமொழி பேச்சுமொழி யன்றாயினும், பிராமணர் தம் கூட்டரவியல் மேம்பாட்டைப் போற்றிக் காக்க, இன்றும் அதில் நூலியற்றியும் கட்டுரை வரைந்தும் திருமுகம் விடுத்தும் வரவேற் பிதழ் படித்துக் கொடுத்தும் வருவது, அவரது ஒப்புயர்வற்ற மொழிவெறியை விளக்கிக் காட்டுகின்றது. வடநூல்கள் தோன்றத் தோன்றத் தென்னூல்கள் மறைந்து கொண்டே வந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தென் மொழித் தொன்னூலெல்லாம் இறந்துபட்டபின், வடமொழிப் பெயர்ப்பு நூலும் புதுநூலும், முதுநூலும் மூல நூலும்போற் காட்சியளிக் கின்றன. இது, கதிரவன் கரந்தபின் திங்கள் திகழ்வ தொத்ததே. வடமொழி தமிழகத்தில் தமிழாலேயே வளர்ந்ததென்பதை, வடமொழிச் சொற்களும் வியாகரணங்களும் இசைநட கணிய மருத்துவ நூல்களும், சிவ திருமால் நெறிகளும் மட்டுமன்றி, சிறந்த வட நூலாசிரியர் பலர் தமிழ் நாட்டாராயிருந்ததும், 14ஆம் நூற்றாண்டில் வேதங்கட்கு விளக்கவுரை வரைந்த சாயனாச் சாரியார் தென்னாட்டாராயிருந்ததும், இன்றும் தலைசிறந்த வடமொழிப் பண்டிதர் தமிழ் நாட்டாராயிருப்பதும், தெள்ளத் தெளியக் காட்டும். வடமொழிப் பட்டாங்கு நூல்களில், பெருந்தொடரியம் (மஹா வாக்ய) எனப் பறைசாற்றப்பெறும் தத் த்வம் அஸி என்னும் சொற்றொடரே, முற்றுந் தமிழ்த்திரிபாயிருந்து வடமொழி யாளரைத் தலைகவிழச் செய்கின்றது. தான் - தத், நூம் - நும் - தும் - த்வம், இரு - இ (தியூத்) - எ (இலத், கி.) - அ (வ.). தி (முன்னிலையொருமையீறு) - ஸி. தான் என்பது முதற்காலத்திற் படர்க்கையொருமைச் சுட்டுப் பெயராயிருந்து, பின்பு தற்சுட்டுப் பெயராயிற்று. சச்சரி சச்சரி - ஜர்ஜரா (jh) இது தென்னாட்டுப் பறைகளுள் ஒன்று. கொக்கரையின் சச்சரியின் பாணியானை (தேவா. 722:1) இப்பெயர் ஒலிக்குறிப்படிப்படையில் தோன்றியது. (வ.வ. 137.) சடம் - ஜட வடவர் குளிர்மை என்பதை மூலக்கருத்தாக வைத்து, குளிர், சில்லெனல், விறைப்பு, மரப்பு. அசைவின்மை, உணர்வின்மை, உணர்ச்சியின்மை, மயக்கம், திமிர், மடமை, மந்தம், உயிரின்மை, அறிவின்மை என்று முறையே பொருள் வளர்ப்பர். அறிஞர் இதன் பொருந்தாமையை அறிந்துகொள்க. குளிர்மைப் பொருளில் ஜட என்பது சளி என்னும் தென்சொல் திரிபாக இருக்கலாம். சடம் - சடலம் - உடம்பு. இது உலக வழக்கு. x.neh.: படம் - படலம். சடலம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. சடலம் - சதரம் = உடம்பு (நெல்லை வழக்கு). சதரம் - சதிரம் (கொச்சைத் திரிபு) (வ.வ. 140-141.) சடு குடு விளையாட்டு ஆட்டின் பெயர்: ஆடுவாருள் ஒவ்வொருவனும் எதிர்க்கட்சியின் எல்லைக்குட் சென்று, சடுகுடு என்று சொல்லியாடும் ஆட்டு, சடுகுடு எனப்பட்டது. இது, பாண்டி நாட்டில் குடட்டி என்றும், வடசோழ நாட்டில் பலிச்சப்பிளான் அல்லது பலீன் சடுகுடு என்றும் பெயர் பெறும். சடுகுடு என்பது தென்சோழநாட்டிலும் கொங்கு நாட்டிலும் இதற்கு வழங்கும் பெயராம். ஆடுவார் தொகை : நால்வர்க்குக் குறையாத இரட்டைப் படையான தொகையினர், இதை ஆடலாம். ஆடிடம் : வெளிநிலத்திலும், பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும். ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும், உத்திகட்டிச் சமத் தொகையான இரு கட்சியாகப் பிரிந்துகொள்வர். இரு கட்சியார் இடத்திற்கும் இடையில் ஒரு குறுக்குக் கோடு கீறப்பெறும், சோழ நாட்டார் இதை உப்புக்கோடு என்பர். முதலாவது, எந்தக் கட்சியார் பாடிவருவது என்று ஏதாவதொரு வகையில் தீர்மானிக்கப்பெறும். அங்ஙனம் தீர்மானிக்கப்பெற்ற கட்சியாருள் ஒருவன் உப்புக்கோட்டைத் தாண்டி எதிர்க்கட்சி யெல்லைக்குட் புகுந்து, சடுகுடு சடுகுடு என்றோ, சடுகுடு குடு குடு குடு என்றோ, பலீன் சடுகுடு குடுகுடு என்றோ, இடை விடாது பாடிக்கொண்டு எதிர்க்கட்சியாருள் ஒருவனையோ, பலரையோ தொட்டு விட்டு அவனிடமேனும் அவரிடமேனும் பிடிகொடாது தன் கட்சி எல்லைக்குள் வந்துவிட வேண்டும். அங் ஙனம் வரும்வரை பாடுவதை நிறுத்தக்கூடாது. அவனால் தொடப் பட்டவ ரெல்லாம் தொலைந்துவிடுவர். அவர் ஆட்டிற்கலவாது ஒரு புறமாய்ப் போயிருத்தல் வேண்டும். அதன் பின், தொடப் பட்ட கட்சியாருள் ஒருவன் இங்ஙனமே எதிர்க்கட்சி யெல்லைக் குட் புகுந்து ஆடிச் செல்ல வேண்டும். ஒருவன் எதிர்க்கட்சி எல்லைக்குள் ஆடும்போது பாடுவதைத் தானே நிறுத்திவிட்டாலும், எதிர்க்கட்சியாரிடம் பிடிபட்டு அதை நிறுத்திவிட்டாலும், அவன் தொலைந்தவனாவன். தொலை தலைப் பட்டுப் போதல் என்பர். ஒரு கட்சியார் தம் எல்லைக்குள் ஆடும் எதிரியைத் தொட்டுப் பிடிக்க முயன்று முடியாமற்போயின், அவனைத் தொட்டவரெல்லாம் தொடப்பட்டராகவே கருதப் பட்டுத் தொலைந்து விடுவர். ஒருவன் எதிர்க்கட்சியாருள் ஒரு வனையோ பலரையோ தொட்டுவிட்டு வரும்போது, தன் கட்சி யெல்லைக்குட் கால்வைக்குமுன் பாடுவதை நிறுத்திவிடின் அவனால் தொடப்பட்டவர் பட்டுப்போகார். தனிப்பட்டவர்க்கு வெற்றியோ தோல்வியோ இல்லாமல் இரு கட்சியாரும் சமமாகவுள்ளவரை, கட்சிக் கொருவனாக மாறி மாறிப் பாடிவரல் வேண்டும். ஒரு கட்சியார் ஒருவனை இழந்து விடின் (அஃதாவது அவருள் ஒருவன் பட்டுப்போனால்) அவரே அடுத்த முறையும் பாடிச் செல்ல வேண்டும். ஒருசில ஆடகர் சடுகுடு என்று சொல்லாமல் பாட்டுப் போல் மோனை யெதுகை அமைந்த நெடுமொழித் தொடர்களையும் சொல்வதுண்டு. (ஒருவன் தன் வெற்றி வீரம் வலிமை முதலிய வற்றை எதிரியிடம் மிகுத்துக் கூறுவது நெடுமொழியாம்). சடுகுடு முதலிய தொடர்களை மூச்சுவிடாமற் சொல்லவேண்டும் என்பது மரபு. ஆயினும் சிலர் மூச்சு விட்டுக் கொண்டே இடைவிடாது பாடிக்கொள்வர். எந்தக் கட்சியில் அனைவரும் முன்பு படுகின்றனரோ, அந்தக் கட்சி தோற்றதாகும். தோற்றவர்க்குத் தோல்வியால் உண்டாகும் சிற்றவமானமேயன்றி வேறொரு தண்டனையுமில்லை. ஆட்டுத்தோற்ற விளக்கம்: பண்டைத் தமிழரசர் செய்து வந்த போர்வகைகளுள் வெட்சி என்பது ஒன்று. அது நிரை கவர்தல் அல்லது நிரை மீட்டல். இவற்றுட் பின்னது கரந்தை யெனப்படும். குறும்பரசர் கொள்ளைத் தலைவர் செயலாகவாவது, வேந்தர் ஏவலாலாவது நிகழ்வது நிரை கவர்தல். நிரை கவரப்பட்ட நாட்டரசன் தன் படைகளைக் கொண்டு நிரை மீட்டல் கரந்தை. நிரை கவரும்போதும் நிரை மீட்கும்போதும் போர் நிகழும். அப் போரில் வெற்றி தருமாறு கொற்றவை என்னும் காளிக்குத் துடி கொட்டிப் பலியிடுதல் மரபு. இது கொற்றவை நிலை யெனப் படும். மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (புறத். 4) என்பது தொல்காப்பியம். சடுகுடு என்னும் விளையாட்டு, வெட்சிப் போரினின்று தோன்றிய தாகத் தெரிகின்றது. இரு கட்சியாரும் வெட்சி மறவரும் கரந்தை மறவரும் போல்வர். இடைக்கோடு, அவ்விருசாரார் நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைப்புறம் போன்றது. பலிசடுகுடு என்று பாடுவது, காளிக்குப் பலியிடுவதையும் துடி கொட்டுவதையும் குறிப்பது (துடிப்பறையிற் சிறியவகை சடுகுடுக்கை அல்லது குடுகு டுப்பை என்று பெயர் பெற்றிருத்தல் காண்க.) இருகட்சியாரும் தத்தம் எதிர்க் கட்சியாரைப் பிடித்து நிறுத்துவது, நிரை கவர் தலையும் நிரை மீட்டலையும் நிகர்ப்பது. பட்டுப்போதல் என்னும் வழக்கு வெட்சிப்போரில் வீழ்ந்திறத்தலைக் குறிப்பது. ஆட்டின் பயன் : இந்த ஆட்டினால், நீண்ட நேரம் மூச்சடக்கவும், திருடனைப் பிடிக்கவும், எதிரியினின்று தப்பிக் கொள்ளவும், பயிற்சி பெறலாம். கொங்குநாட்டு வேறுபாடு : பாண்டிநாட்டார் சடுகுடுவிற்கு இடைக்கோ டொன்றே கீறிக்கொள்வர். கொங்கு நாட்டாரோ, இருகட்சியார்க்கும் இரு வேறு சதுரக் கட்டங்களை அமைத்துக் கொள்வர். ஆடும்போது ஒவ்வொருவரும் தத்தம் கட்டத்திற் குள்ளேயே நிற்றல் வேண்டும். வெளியேறின் விலகிவிடல் வேண்டும். சடை சடை - ஜ்டா (t |) சள்ளுதல் = சிக்குதல். சழிதல் = நெருங்குதல், அடர்தல், நெருங்கிக் கிடத்தல். திங்கட் டொல்லரா சழிந்த சென்னி (தேவா. 980 : 6). சடாய்த்தல் = செழித்தல், அடர்ந்து வளர்தல். சடைத்தல் = அடர்ந்து கிளைத்தல். சடாய் - சடை = கற்றை, இயற்கையான மயிர்க்கற்றை, கற்றையான சடைப்பின்னல், சடை = சடாய். சடைச்சம்பா, சடைச்சாமை, சடைப்பயறு, சடைப்பருத்தி, சடையவரை என்பன, கற்றையான அல்லது கொத்தான பொருள் களை உணர்த்தும். சடைமுடி, சடை விழுதல், சடையாண்டி, சடையன் என்னும் சொற்களில், சடை என்பது இயற்கையாகவோ எண்ணெய் தேய்க்காமையாலோ ஏற்படும் மயிர்க்கற்றையைக் குறிக்கும். வடவர் ஜட் (j, jh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சிக்கற் பொருளை யுணர்த்துதலால் சடாய் என்பதன் திரிபே. சடாய் - ஜட் (வ.வ. 138.) சண்டம் சண்டம் - சண்ட (c) சள்ளெனல் = சினந்து விழுதல், சள் - தொந்தரவு. சள்ளை = தொந்தரவு. சள் - சண்டு - சண்டை = சச்சரவு. சளம் = கடுஞ்சினம். சண்டு - சண்டம் = 1. சினம். 2. கொடுமை. சண்ட மன்னனைத் தாடொழுது (சீவக. 430) சண்டன் = கடுஞ்சினத்தன், கூற்றுவன், கதிரவன், கொடியவன். சண்டி = கொடியவள், காளி, இடக்குப் பண்ணும் விலங்கு. சண்டாளன் = கொடியவன், சண்டாளி = கொடியவள். சண்டாளம் = கொடுந்தன்மை. ஆளன், ஆளி என்னும் தமிழ்ப் பாலீறுகளை நோக்குக. சண்டன் சண்டன் - சண்ட (c) சண்டாளன் - சண்டால (c) சண்டாளன் - சண்டால (c) சண்டாளி - சண்டாலீ (c) சண்டி + சண்டீ (c) வடவர் காட்டும் சண்ட் (c) என்னும் மூலத்தை “derived fr. can@d@a” என்று மா. வி. அ. கூறுதல் காண்க. (வ.வ.138). சண்டை வகை சண்டை இருவர் செய்யும் போர். மல் இருவர் தம் வலிமை காட்டச் செய்யும் போர்; கலாம் பலர் செய்யும் போர். (சொல் 59). சண்ணம் சண்ணம் - சிச்ன (sÝisÝna) - இ.வே. சுண் - சண். சண்ணுதல் = புணர்தல். சண் - சண்ணம். சண்ணக்கடா = பொலிகடா. துளைத்தற் பொருளுள்ள ச்னத் (sÝnath) என்னும் சொல்லை வடவர் மூலமாகக் காட்டுவர். (t.t.: 139) சண்பகம் சண்பகம் - சம்பக (c) மல்லிகை மௌவல் மணங்கழ் சண்பகம் (பரிபா. 12:77) சணல் சணல் - சண (ளÝ) - அ.வே. சள்ளுதல் = சிக்குதல். சடாய்த்தல் = அடர்ந்து வளர்தல். சடை = நார். சடைத்தேங்காய் = நார்த்தேங்காய். சடை - சடம் - சடம்பு = நாருள்ள சணற்செடி. சடம் - சணம் = சணல். சணம் - சணம்பு = சணல். சணம்பு - சணப்பு = சணல். சணப்பு - சணப்பை = சணல். சணப்பு - சணப்பன் = சணலிலிருந்து நாருரிக்கும் குலத்தான். சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண் டது என்பது மொழி. சணம் - சணல். சதங்கை சதங்கை - ச்ருங்கலா (ளÝ, மா) சல் - சல - சலங்கை - சதங்கை. x.neh.: கல் - கல - கலம்பு - (வ.வ.139) சதரம் சதரம் - சதுரச்ர (உ,ளÝ) சட்டுதல் = தட்டுதல். இவ்வினை இன்று வழக்கற்றது. ஆயினும் சட்டுச்சட்டென்று தட்டுதல் என்னும் வழக்குள்ளது. சட்டென்று = சட்டென்று தட்டுமளவில், சட்டென்னும் ஓசை கேட்குமளவில், விரைந்து. சட்டு - சட்டம் = தட்டையான பலகை. ஒரு பொருளைத் தட்டத் தட்ட மேன்மேலுந் தட்டையாதல் காண்க. இதனால் தட்டற் கருத்தினின்று தட்டைக் கருத்துத் தோன்றிற்று. x.neh.: தட்டு - தட்டம், தட்டை; பட்டு - பட்டம், பட்டை; மொட்டு - மட்டு - மட்டை. சட்டம் = 1. பலகை ஓலை முதலிய தட்டையான பொருள். 2. கொத்தன் சட்டப் பலகை, 3. சட்டப் பலகை போன்ற நேர்மை, 4. வரியிழுக்குஞ் சட்டம் (Flat ruler) 5. நேர்வரி, 6. நேர்வரி போன்ற ஒழுக்கநெறி, சட்ட திட்டம். 7. நாற்புறமுந் தைத்த சட்டம் (Frame), நாற்புறச் சட்டமான சதுரம்; 8. உயிருக்கு அல்லது ஆதனுக்கு (ஆன்மாவிற்கு)ச் சட்டம் போன்றிருக்கும் உடம்பு. (ஆங்கிலத்திலும் சட்டத்தைக் குறிக்கும் (கசயஅந) என்னுஞ் சொல் உடம்பைக் குறித்தல் காண்க.); 9. கட்டில் முதலியன பின்னுதற்கும் வீடு கட்டுதற்கும் படம் வரைதற்கும் அமைத்துக் கொள்ளும் சட்ட அமைப்பு, 10. முன்னேற்பாடான திட்டம் (Plan), 11. அணியம் (ஆயத்தம்); 12. கட்டுரை முதலியன வரைதற்குக் குறித்துக் கொள்ளும் குறிப்பு; 13. பார்த்தெழுதுதற்கு வைத்துக் கொள்ளும் மேல்வரியெழுத்து, 14. எதற்கும் அளவையான மேல்வரிச் சட்டம், 15. செப்பம் அல்லது சீர்மை. சட்டம் - சட்டகம் = 1. சட்டம் (Frame). சட்டகம் பொன்னிற் செய்து (சீவக. 2523) 2. கட்டில், படுக்கை (திவா.) 3. வடிவு (பிங்.). 4. உடல். உயிர்புகுஞ் சட்டகம் (கல்லா. 8:1). சட்டம், சட்டகம் என்னும் இரு சொற்களும் வடமொழியில் இல்லை. சட்டம் - சடம் = 1. உடம்பு. x.neh.: பட்டம் - படம் = துணி. சடங்கொள் சீவரப் போர்வையர் (தேவா. 805:10). 2. உடம்புபோல் அறிவில்லாப் பொருள் (பிங்). (வ.வ. 140.) சதரம் (2) - சரீர (இ.வே.). த-ர. போலி. x.neh.: விதை-விரை. வடவருள் ஒரு சாரார் ச்ரி என்னும் சொல்லைக் காட்டித் தாங்கு வது என்றும், மற்றொரு சாரார் ச்ரூ என்னுஞ் சொல்லைக்காட்டி எளிதாய் அழிக்கப்படுவது என்றும், பொருட் காரணங் கூறுவர். சதரம் - சதுரம் = நான் மூலைச் சட்டம்போன்ற நாற்கோணம். வட்டமுஞ் சதுரமும் (பெருங். உஞ்சைக் 42: 29). சதுரக்கல், சதுரக்கள்ளி, சதுரத் தூண், சதுரப் பலகை, சதுரப் பாலை, சதுர மாடம், சதுர முகம், சதுர வரம், சதுர வோடு என்பன தொன்று தொட்ட வழக்கு. வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல், ஆயின், வட நூல்களில் ஆளப்பெற்றிருப்பது பற்றி, சதுரம் என்பதைப் போன்றே வட்டம் என்பதையும் வடசொல்லென வலிப்பர் வடவர். வட்டம் (த.) - வட்ட (பிரா.) - வ்ருத்த (வ.) என்னும் உண்மையான முறையைத் தலைகீழாய்க் காட்டுவர் அவர். சதுரம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. (வ.வ. 141). சதுரம் - சதுர் அச்ர = நாற்கோணம். மேலையாரியத்தில் நான்கு என்னும் எண்ணுப்பெயர் முன்னொட்டுப் பெற்றே சதுரத்தைக் குறிக்கின்றது. L. quatuor = four; exquadra - OF esquarre - E square. வடமொழியில் அது பின்னொட்டுப் பெற்றுக் குறிக்கின்றது. சதுர் என்னும் பெயர் இயல்பாக நின்று நான்கு என்னும் எண்ணுப் பெயரையே உணர்த்துகின்றது. சதுரிகா, சதுஷ்க, சதுஷ்டய என்னும் வடிவங்களும் பிற்காலத்திலேயே சதுர வடிவையும் உணர்த்தினதாகத் தெரிகின்றது. அச்ர = கோணம், மூலை. சதுரம் என்னும் வடிவக் கருத்து நான்மூலைச் சட்டத்தொடு மட்டுமன்றி, கட்டுடம்பொடும் தொடர்புடையதாகத் தெரிகின்றது. கட்டுடம்பின் அமைப்பைச் சதுர்க்கட்டு என்பது உலக வழக்கு. ஆங்கிலத்திலும் square - built, a man of square frame என்று வழங்குதல் காண்க; சடலம், சதரம் என்னும் சொல் வடிவங்கள் குமரிக்கண்டத்தில் சட்டக் கருத்தும் உணர்த்தியிருத்தல் வேண்டும். சதுர என்னும் பெயரினின்று, தோன்றிய சதுரி என்னும் வினை வடமொழியிலில்லை. சதுரித்தல் = நாற்கோணமாக்குதல். குழித்தல் (வருக்கமாக்குதல்). சரியான சதுரத்தைக் குறிக்கும் சச்சது ரம் என்னும் இரட்டித்த வடிவம் வடமொழியிலில்லை. (வ.வ.142.) சந்து சந்து - ஸந்தி (இ.வே.) உம் - அம் - அந்து - சந்து = பொருத்து, கூட்டு. வடமொழியில் ஸம் + தா (dha#) என்று பிரித்து, உடன்வை, பொருத்து என்று பொருளுரைப்பர். ஸம் = கூட. தா = வை. இடு. (வ.வ. 142). சப்பட்டை சப்பட்டை - சர்ப்பட்ட (c) சப்பை - சப்பட்டை (வ.வ. 142) சப்பாணி சப்பாணி - சப்பேட்ட (c) சப்பு - சப்பாணி = விரித்த கைகளைச் சேர்த்துத் தட்டுதல். சப்பாணி கொட்டியருளே (மீனாட். பிள்ளைத். சப்பாணி, 1) தெ. சப்பட்லு. (வ.வ. 142). சம்பளம் பழங்காலத்தில் சம்பளம் கூலமும் உப்புமாகக் கொடுக்கப்பட் டது. கூலம் - தானியம். (கூலமாகக் கொடுக்கப்படுவது கூலி) கூலத்தில் சிறந்தது நெல்லாதலின், நெல் வகையில் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும் சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல் வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர். ஓங்கி வளர்ந்த சம்பா நெற்பயிருக்கும் சம்பங்கோரைக்கும் ஒத்த தோற்ற முடைமையாய் இருத்தல் காண்க. நெல்லைக் குறிக்கும் சம்பு என்னும் பெயர் இன்று சம்பா என வழங்குகின்றது. உகர ஈற்றுச் சொற்கள் ஆகார ஈறு பெறுவது இயல்பே. எ-டு: கும்பு - கும்பா, தூம்பு - தூம்பா, குண்டு - குண்டா. கும்புதல் திரளுதல். சம்பளம் அளம் என்பது உப்பு. உப்பு விளைப்போர் அளவர் எனப்படுதல் காண்க. அளம் என்னும் சொல் தன் பொருள் இழந்து ஈறாக மாறிய பின் உப்பைக் குறிக்க உப்பளம் என்றொரு சொல் வேண்டிய தாயிற்று. உப்பைச் சம்பளப் பகுதியாகக் கொடுக்கும் வழக்கம் நின்று விடவே உம்பளம் என்னும் சொல்லும் அப்பொருளில் வழக்கு வீழ்ந்து மானியமாகக் கொடுக்கும் நிலத்திற்குப் பெயராக ஆளப்பட்டது. உம்பு - உப்பு. உப்புக்கு உழைத்தல் உப்பைத் தின்னுதல் என்னும் வழக்கு களையும் உப்பிட்டவரை உள்ளவும் நினை என்றும் பழமொழி யையும் நோக்குக. (சொல். 22, 23.) (Salary (Soldier’s pay. which was given partly in Salt - wages English word book p.90)] (சொல். 22). சமம் சமம் - ஸம = ஒப்பு. உம் - அம் - சம் - சமம் = ஒப்பு. சமம் - சமன் = ஒப்பு, நடுநிலை. (வ.வ.142.) சமயம் மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயி னும், தம்முள் நுண் பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம். ஆகவே, மதத்தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம். உத்தல் = பொருந்துதல், உத்தி (உ+தி) = பொருத்தம், நூற்குப் பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல். உத்தம் = பொருத்தம். உத்தம் - வ. யுக்த. உத்தி - வ. யுக்தி. உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல், போலுதல். உ - உம். உம்முதல் = பொருந்துதல், கூடுதல். எண்ணும்மை யிடைச்சொல்லானது. இதுவே, உம் - அம் = பொருந்தும் நீர், நீரொடு நீரும் நிலத்தொடு நீரும் ஆகப் பொருந்துதல் இருவகைத்து. அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல். அம் - அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல், நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல். அமை - அவை = கூட்டம். அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை நிகழும் சிறுபொழுது. அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப் படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல். சமையல் = சோறு குழம்பாக்கும் வினை. சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும் (பழமொழி) சமை - சமையம் - பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத் தக்க வேளை. சமையம் - சமயம் - ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடை தற்கு அல்லது பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப்படுத் தும் முக்கரண வொழுக்கம். பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக. வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை ஸமய என்று திரித்தும், ஸம் + அய என்று பிரித்தும், உடன்வருதல் (to come together) அல்லது ஒன்று சேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய பின்பும், ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (குறள். 380) என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ்வடசொல் தென்சொற் றிரிபேயாதல் காண்க. ஸம் = உடன், கூட. அய = செல்கை, வருகை. அய என்னும் சொற்கு, அய் என்பதை அடியாகவும் இ என்பதை வேராகவும் காட்டுவர். இ - அய் - அயன = செலவு. தமிழில், கூடுதலைக் குறிக்கும் அடிச்சொற்களுள் கும் என்பது ஒன்று. கும்முதல் = கூடுதல், குவிதல். கும் - கும்மல். கும் - கும்பு - கும்பல். கும் - குமி - குமியல். குமி - குவி - குவியல். கும்மல் - L. cumulus = heap; cumulare = to heap up. E. cumulate, accumulate. கும் - கும்ம (நிகழ்கால வினையெச்சம் - Infinitive Mood) - கூட. கூடுதல் = ஒன்று சேர்தல், மிகுதல். கூட (to gather) என்னும் (நி.கா.) வினையெச்சம், உடன் (together, with) என்று பொருள்படும், மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சி யுருபாகவும், முன்னொட் டாகவும் (prefix) ஆளப்படும். எ-டு: தந்தைகூட வந்தான் = தந்தையுடன் வந்தான். கூடப்பிறந்தான் = உடன்பிறந்தான். கூடுதலைக் குறிக்கும் கும் என்னும் வினைச்சொல், உ-அ திரிபு முறைப்படி கம் என்று திரியவுஞ் செய்யும். கமம் நிறைத் தியலும் (தொல். உரி. 57) நிறைதல் - நிரம்புதல், மிகுதல், கூடுதல். Cum என்னும் இலத்தீன அடிச் சொல்லும், முன்னொட்டாகும் போது com என்று திரிந்து, வருஞ்சொன் முதலெழுத்திற்கேற்ப con, col, cor என்று ஈறுமாறும். சில எழுத்துக்கட்கு முன் co என்று ஈறு கெடவுஞ் செய்யும். இங்ஙனமே ஆங்கிலத்திலும். இங்ஙனம் இலத்தீனத்தில் கும்-கொம் என்றும், ஆங்கிலத்திற் கம் என்றும் திரியும் முன்னொட்டு, கிரேக்கத்தில் ஸும் (sum) என்றும் ஸிம் (sym) என்றும், சமற்கிருதத்தில் ஸம் (sam) என்றும், திரியும். கிரேக்க முன்னொட்டும், இலத்தீன முன்னொட்டுப் போற் பின்வரும் எழுத்திற்கேற்ப, சின் (syn), சில் (syl) என்றும், திரியும். சமற்கிருத முன்னொட்டு ஈறுகெட்டு ஸ (sa) என்றும் நிற்கும். இவற்றிற் கெல்லாம், கூட (உடன்) என்பதே பொருள். கூட என்பதற்கு நேரான கும்ம என்னும் தென்சொல்லே, முன்னொட்டாகிக் கும் என்று குறுகியும், கும் - கொம் - கம், கும் - ஸும், ஸும் - ஸம் என்று திரிந்தும், ஆரிய மொழிகளில் வழங்கும் என அறிக. அதன் முதன்மெய், ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் இயல்பாகவும், அதன் தென் கிழக்குப்பகுதியிலும் இந்தியாவிலும் ஸகரமாகத் திரிந்தும், வழங்குவதை ஊன்றி நோக்கி வரலாற்றுண்மை தெளிக. இனி, இந்திய ஆரியத்தில் (வேதமொழியிலும் சமற்கிருதத்திலும்) செல்லுதலைக் குறிக்கும் இ என்னும் வேரும் அய் என்னும் அடியுமாகிய வினைச்சொற்களும், உய் என்னும் தென்சொல்லி னின்று திரிந்தவையே. ஊ அல்லது உ, இதழ்குவிந்தொலித்து முன்னிடத்தை அல்லது முன்னிற்பதைச் சுட்டும் முன்மைச் சுட்டு. ஊ-ஊன் = நீ (முன்னிலை யொருமைப் பெயர்). ஊ - உ - உந்து. உந்துதல் = முன் தள்ளுதல். உ - உய். உய்தல் = முன் செல்லுதல், செல்லுதல். உய்த்தல் = முன்செலுத்துதல், செலுத்துதல். உய் - இய் - இயவு = க. செலவு. இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில் (சிலப். 11: 168) 2 வழி. இயவு - இயவுள் - எல்லா வுயிர்களையும் வழிநடத்தும் இறைவன். இய் - இ - இயல் - செலவு. புள்ளியற் கலிமா (தொல். பொ. 196). இயலுதல் - செல்லுதல், நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி (ஐங். 175) இய - இயங்கு - இயக்கு - இயக்கம். இயங்குதல் - செல்லுதல், நடத்தல், அசைதல். இய் - வ. அய். இனி, உய் என்பதும் அய் என்று திரிந்திருக்கலாம். தமிழ் ஆரியத்திற்கு முந்தியது என்னும் வரலாற்றுண்மையையும், மேற்காட்டிய சொல் வரலாறுகளையும், நடுநிலையாக நோக்கு வார்க்கு, மதம் சமயம் என்னும் இருசொல்லும் தென் சொல்லே யென்பது, தெற்றெனத் தெரியாமற் போகாது. (த.ம.) சமயமும் கொள்கையும் இம்மை மறுமை நலங்கட்கும் வீட்டின்பத்திற்கும் இறைவனருள் இன்றியமையாததென்னுங் கொள்கை பற்றி, பண்டைத் தமிழரசர் தமக்கும் தம்குடிகட்கும் நலம் வருவித்தற் பொருட்டுத், தமக்கிசைந்ததொரு சமயத்தைக் கடைப்பிடித்து இறைவனை வழிபட்டு வந்தனர். தமிழரசருங் குடிகளும் முதலாவது ஐந்திணைத் தெய்வங்களை வணங்கி வந்தனர். குறிஞ்சிக்குச் சேயோன் என்னும் முருகனும், முல்லைக்கு மாயோன் என்னுந் திருமாலும், மருதத்திற்கு வேந்தன் என்னும் இந்திரனும், நெய்தற்கு வருணன் (வாரணன்) என்னும் கடலோனும், பாலைக்கு மாயோள் என்னுங் காளி (கொற்றவை) யும், தெய்வமாயிருந்தனர். வருண வணக்கம் நாளடைவில் நின்றுவிட்டது. இந்திர வணக்கம் கடைச்சங்கத் திறுதிவரையிருந்தது. மற்ற முத்தெய்வ வணக்கமும் நெடுகலுந் தொடர்ந்தது. கடைச்சங்க காலத்தில், காவிரிப்பூம் பட்டினத்திலும் மதுரை யிலும் வஞ்சியிலும் பற்பல தெய்வங்கட்குக் கோயில் இருந்தன. புகாரிலிருந்த கோயில்கள், கற்பகக் கோயில், வெள்யானைக் கோயில், பலதேவர் கோயில், கதிரவன் கோயில், கயிலைக்கோயில், முருகன் கோயில், வச்சிரப் படைக்கோயில், சாத்தன் கோயில், அருகன்கோயில், நிலாக் கோயில், சிவன்கோயில், திருமால் கோயில் முதலியன. முருகன் சிவன் திருமால் பலதேவன் ஆகிய, நால்வர்க்கும் எல்லாத் தலைநகர்களிலும் கோயில் இருந்தன. தெய்வங்கள் பெருந்தெய்வம் என்றும் சிறு தெய்வம் என்றும் இருவகைப்படும். சமயத் தெய்வங்கள் பெருந் தெய்வமும் மற்றவை சிறுதெய்வமுமாகும். சைவம் வைணவம் ஆருகதம் பௌத்தம் பிரமம் உலகாயதம் என்னும் ஆறும், கடைச்சங்க காலத்து அறுசமயம் என்னலாம். அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நாலாறு சமயமாகப் பகுத்துக் கூறியது பிற்காலத்த தாகும். சிவவழிபாடும் மால்வழிபாடும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிற்குரிய வாதலின், அவ்விரண்டும் பற்றிய சைவமும் வைணவமுமே தமிழரசரால் பெரும்பாலும் கடைப்பிடிக்கப் பட்டன. அவ்விரண்டனுள்ளும் சிவநெறியே அரசரிடைச் சிறந்திருந்தது. இறைவன் என்றும் பிறவாயாக்கைப் பெரியோன் என்றும் சிவனுக்கு வழங்கிய பெயர்களே, சிவநெறித் தலைமையை உணர்த்திவிடும். சிறுதெய்வங்கள், காற்றும் நெருப்பும் முதலிய இயற்கைத் தெய்வமும், சூரரமகளும் பூதமும் முதலிய பேய்த் தெய்வமும், கதிரவனுந் திங்களும் முதலிய கோள் தெய்வமும், பட்டமறவ னாகிய நடுகல்தெய்வமும், இறந்த கற்பியாகிய பத்தினித் தெய்வமும், நால்வகை வருணத்திற்குரிய வருணத்தெய்வமும், ஆறும், மலையும் நகரும் முதலிய இடத்திற்குரிய இடத்தெய்வமும், கல்வியும் காதலும் போரும் முதலிய தொழிற்குரிய தொழிற் றெய்வமும், காப்புமட்டும் அளிப்பதாகக் கருதப்படும் காப்புத் தெய்வமும் எனப் பலவகையாம். கடைச்சங்கக் காலம்வரை, அரசரும் புலவரும் பொது மக்களு மாகிய முத்திறத்தாரிடையும், சமவியற் கொள்கையும் பிறர் மதப் பொறையும் இருந்துவந்தன. அதன்பின் சமயப் போர் தமிழ்நாட் டில் தலை தூக்கிற்று. முதலாவது, வைதிக சமயம் எனப்படும் சைவ வைணவங்கட்கும் அவைதிக சமயம் எனப்படும் சமண பௌத்தங்கட்கும் இடையே போர் எழுந்தது. பின்னர்ச் சமண பௌத்தங்கள் ஒடுக்கப்பட்டபின், சைவ வைணவங்கட் கிடையே போர் மூண்டது. சங்ககாலத்தரசரும் முதலாம் இராசராசன் இராசேந்திரன் முதலிய பிற்காலத்தரசரும், தாம் கடைப்பிடித்த சமயக் கோயில் கட்கு மட்டுமன்றிப் பிற மதக் கோயில் கட்கும் மானியம் விட்ட னர். ஆயின் 8 ஆம் நூற்றாண்டினனும் சமணனுமான மகேந்திர வர்மப் பல்லவன் சைவ சமய குரவருள் ஒருவரான திருநாவுக் கரசரைப் பலவகையில் வதைத்துக் கொல்ல முயன்றான். அதே நூற்றாண்டினனும் சிவனடியாருள் ஒருவனுமான நெடுமாறன் எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றினான். 12 ஆம் நூற்றாண்டி னனும் சைவனு மான 2 ஆம் குலோத்துங்கன், கூரத்தாழ்வான் பெரியநம்பி என்னும் இரு வைணவ குரவரை முறையே கண் பறித்துச் சாகடித்தான்; அதோடு தில்லை மன்றிலிருந்த திருமா லுருவத்தையும் பெயர்த்துக் கடலில் எறிந்துவிட்டான். இங்ஙனம் ஒரு சில அரசர் நெறி திறம்பி நடந்தனர். திருமங்கையாழ்வார் நாகையிலிருந்த பொற்புத்த வுருவைக் கொள்ளையடித்துத், திருவரங்கக் கோயிலைப் புதுப் பித்தாரென்று, ஒரு பரவை வழக்குச் செய்தி வழங்கி வருகின்றது. (த.ம.) சமர்த்து சமர்த்து - ஸமர்த்த (th) வடவர் ஸம் + அர்த்த என்று பகுத்து, ஒத்த அல்லது தகுந்த நோக் கங் கொள்ளுதல், தகுந்த நிலைமை பெறுதல், வலிமையடைதல் என்று பொருள் பொருத்துவர். ஸம் = ஸம. அர்த் = அடை, பெறு. (வ.வ.143). சமரம் சமரம் - ஸமர = போர் இருவர் அல்லது இரு படைகள் செய்யும் போது ஒன்று கலத்தலால், கலத்தல் அல்லது ஒன்றாதற் கருத்தினின்று போர்க் கருத்துப் பிறந்தது. எ-டு: கல - கலாம், கலகம். கைகலத்தல் = சண்டையிடுதல். பொரு தல் - ஒத்தல், போர் செய்தல். பொரு - போர் = பொருத்து, சமர். இங்ஙனமே ஒப்பைக் குறிக்கும் சமம் என்னும் சொல்லினின்றும் போரைக் குறிக்குஞ் சொற்கள் பிறந்துள்ளன. சமம் = போர். ஒளிறுவா ளருஞ்சம முருக்கி (புறம். 382). சமம் - சமர் = போர் (திவா.) ஒ.நோ: களம் - களர். சமர்த்தல் = பொருதல். சமர்க்க வல்லாயேல் (விநாயகபு. 74:249) போருக்கு வலிமை வேண்டுமாதலின், போரென்னும் சொல் வலிமை அல்லது திறமையையும் உணர்த்தும். போர் = வலிமை. சமர்த்து = திறமை. சமர் - சமரம் = போர். இலங்கையி லெழுந்த சமரமும் (சிலப். 26: 238). சமர் - அமர் = போர். ஆரமர் ஓட்டலும் (தொல். 1006). சமரம் - அமரம் = போர். தெ. அமரமு. அமர்த்தல் = மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள். 1084). வடமொழியில் சமர என்னும் வடிவே உள்ளது. சமம், சமர், அமர், அமரம் என்னும் வடிவுகள் இல்லை. வடவர் ஸமர என்னும் சொல்லை ஸம் + ரு என்று பிரித்து, ஒன்று கூடு, மாறுபடு, போர்செய் என்று பொருள் காட்டுவர். ஸம் = கூட. ரு = சேர். (வ.வ.142-143). சமற்கிருத ஆக்கம் வேத ஆரியர் என்று சொல்லப்படும் இந்திய ஆரியர் இந்தியாவிற் குட் புகுந்தவுடன் தம் (கிரேக்கத்தை யொத்த) மொழியை மறந்து விட்டனர். இதற்கு அவர் சிறுதொகையினரா யிருந்ததும் பழங்குடி மக்களுடன் கலந்து போனதுமே கரணியம். ஆரியப் பூசாரியரும் அவரைப் பின்பற்றிய விசுவாமித்திரன் போன்ற ஒருசில நாட்டுமக்களும், பாடிய மந்திரத் தொகுதி என்னும் பாடற்றிரட்டேஇருக்கு வேதமாம். அதன் மொழி, மறந்துபோன கீழையாரியமும் வடநாட்டுத் திரவிடமாகிய பிராகிருதமுங் கலந்த மொழியாம். அக்கலப்பினால், இந்திய ஆரிய மொழி எகர ஒகரக் குறில்களையும் இழந்தது. ஆரியப் பூசாரிகளான பிராமணர் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டபின், வேதமொழியுடன் ஏராளமான திரவிடச் சொற்களும் தமிழ்ச்சொற்களும் அவற்றினின்று திரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புதுச்சொற்களும் இடுகுறிச் சொற்களும் கலந்த, கலவை மொழியில் இதிகாச புராணங்களும் தரும சாத்திரங்களும் நாடகங்களும் பிறவும் இயற்றப்பட்ட பின்னரே, கி.மு. 6 ஆம் நூற்றாண்டுபோல் சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழி நிறைவாக உருவாயிற்று. பிராகிருதம் (பிராக்ருத) என்பது முந்திச் செய்யப்பட்டது என்றும், சமற்கிருதம் (ஸம்க்ருத) என்பது கலந்து செய்யப் பட்டது என்றும், பொருள்படுவன வாகும். இந்தைரோப்பியம், வேதியம், சமற்கிருதம் என்னும் மூவேறு நிலைகளில், ஆரியம் தமிழ்ச்சொற்களைக் கடன் கொண்டுள்ளது. வேதியம் கடன்கொண்டது வடநாட்டுப் பிராகிருத வாயிலாக வென்றறிக. வடமொழி என்னும் பெயர் வேதமொழிக்கும் சமற்கிருதத்திற்கும் பொதுவாகும். பைசாசி, சூரசேனி, மாகதி என்று வடநாட்டில் மூன்றும், திராவிடி என்று தென்னாட்டில் ஒன்றுமாக, பிராகிருதம் நான்கென வகுத்தனர். வேதமொழி போன்றே சமற்கிருதமும் நூன்மொழியாகும். அது பிறந்ததுமில்லை; இறந்ததுமில்லை. ஒரு மொழிக்கு உயிர் உலக வழக்கே. சில பல பண்டிதர் பல்லாண்டு வருந்திக்கற்றுச் சமற் கிருதத்திற் பேசுவதனால், அது உயிர்மொழியாகிவிடாது. அது உயிர்மெய்யுமன்று; சவமுமன்று; வல்லோன் புனைந்த பாவை போன்றதே. உலக வழக்கு மொழிகளாயிருந்து இறந்து போனவற்றை மட்டுமன்றி, சென்ற நூற்றாண்டு மேலை மொழியறிஞர் புனைந்த எசுப்பெராந்தோ (Esperanto), நோவியல் (Novial) முதலிய செயற்கை மொழிகளைக் கூடக் கற்றுப் பேசக்கூடியவர் உலகிலுள்ளனர். மறையியலாக மட்டுமுள்ள வேதமொழிக்கு இலக்கணம் வகுத்தது ஐந்திரம் என்றும், மறையியலும் (வைதீகமும்) உலகியலும் (லௌகீகமும்) கலந்த சமற்கிருத மொழிக்கு இலக்கணம் வகுத்தது பாணினீயம் என்றும், அறிதல் வேண்டும். பாணினீயம் சமற்கிருதத்தின் தலைசிறந்த இலக்கண நூலாகிய பாணினீயம் பாணினியால் கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இலக் கணநூலை வியாகரணம் என்பர் வடநூலார். அது கூறுபடுப்பு (Analysis) என்னும் பொருளது. நந் நான்கு இயல்கள் (பாதங்கள்) உள்ள எண்ணதிகாரங்கள் (அத்தியாயங்கள்) கொண்டது பாணினி வியாகரணம். அதனால் அது அட்டாத்தியாயீ (அஷ்டாத் யாயீ) எனப் பெயர் பெற்றது. அதன் நூற்பாக்கள் (சூத்திரங்கள்) ஏறத்தாழ 3980. அந்நூற்கு முன் எண்ணிலக்கண நூல்கள் இயற்றப் பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவற்றுள் முதலது வேத காலத்ததெனப்படும் ஐந்திரம். தொல்காப்பியம் பாணினீயத்திற்கு முந்நூற்றாண்டு முந்தியது. அதனாலேயே, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று மட்டுங் கூறினார் தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார். சமற்கிருத இலக்கண நூல்களெல்லாம் பவணந்தி நன்னூல்போல் எழுத்துஞ் சொல்லுமே கூறுவன வென்றும், தமிழிற்போல் ஒரு வழக்கு மொழியை விளக்காது வேதமும் இதி காச புராணங்களுமாகிய இலக்கியத்திலுள்ள அரைச் செயற்கை யான நடைமொழியையே (Semi-artificial literary dialect) விளக்குவன வென்றும், அறிதல் வேண்டும். தொல்காப்பியம் எழுத்துஞ் சொல்லும் பொருளுமாகிய மூவதிகாரங் கொண்டது; பொருளதிகாரத்தில், தமிழுக்கே சிறப் பான பொருளிலக்கணத்துடன் செய்யுளியலையும் அணியியலான உவமவியலையும் உட்கொண்டது. ஆதலால், பாணினீயத்தி னின்று தொல்காப்பியம் தோன்றியதாகச் சிலர் கூறுவது, பேரன் பாட்டனைப் பெற்ற கதையும் களாச்செடியிற் பலாப்பழம் பறித்த கதையுமே யாகும். ghÂÅ, “mïc©”, “UY¡”, “VX§.”, “I xs¢.”, “Aatu£.”, “y©.”, ஞமஙண நம். முதலிய 14 குறுங்கணக்கு நூற்பாக்களை, சிவபெருமானின் உடுக்கை யினின்று தோன்றின ஒலிகளாகக் கூறி, அவற்றிற்கு மகேசுவர சூத்திரங்கள் எனப்பெயரிட்டது, இந்தியப் பழங்குடி வாணரை ஏமாற்றத் துணிச்சலுடன் செய்த படுமோசச் சூழ்ச்சியாகும். புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர் என்னும் சிலப்பதிகார அடிகளை (11:98-9) நோக்கின், பாணினியின் ஏமாற்றை மக்கள் நம்பி அவரிலக்கணத்தையே போற்றிப் பயிலுமாறு, தமிழ்த் தொடர்பு காட்டும் ஐந்திர வியா கரணப் படிகளை யெல்லாம் தொகுத்து, அழகர் மலையடுத்ததும் மக்கள் வழங்காததும் ஆழம் மிக்கதுமான ஒரு பொய்கைக்குள் எறிந்து விட்டதாகக் கருத இடமுண்டாகிறது. தமிழகத்துத் தோன்றிய ஐந்திரம் தமிழகத்திலேயே அழியுண்டது போலும்! சமற்கிருதவாக்கம் - எழுத்து தமிழெழுத்து எழுத்து, ஒலியும் வரியும் என இருவடிவுடையது. இவற்றுள் உண்மையானது ஒலியே. ஒலியே எழுதப்படுதலின் எழுத்தெனப் பட்டது. உள்ளத்திலெழும் கருத்துகளை நேரடியாய் அறிவிக்கும் குறி ஒலி. செலிப்புலனான ஒலியைக் கட்புலனாக்கும் குறியே வரி. முழுகிப்போன குமரிக்கண்டத்தில், கி.மு. ஐம்பதினாயிரம் ஆண்டு கட்கு முன்பே தமிழ் தானே தோன்றி. 1. அசை நிலை + (monosyllabic stage) 2. கூட்டு நிலை + (compounding stage) 3. பகு சொன்னிலை - (Inflexional stage) 4. கொளுவு நிலை - (Agglutinative stage) என்னும் நால்வகை மொழி நிலையுங் கடந்து முழு வளர்ச்சி யடைந்து. கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுத்தும் இலக்கியமும் இலக்கணமும் நிரம்பப்பெற்று. முதன் முதலாகத் தென்மதுரைத் தலைக்கழகத்தில் ஆராயப் பெற்றது. தமிழொலிகள் பெரும்பாலும் இயற்கையானவை; எளியவை; எல்லா மொழிகட்கும் பொதுவானவை. பொதுவாக, எழுத் தொலிகள் தெற்கே செல்லச் செல்லத் தொகையிலும் வன்மை யிலும் குறைந்தும். வடக்கே செல்லச் செல்ல அவற்றில் மிகுந்தும் உள்ளன. தமிழ் வல்லின வொலிகள் வடமொழி வல்லின வொலி களை நோக்க மெல்லியவை. இவற்றுள், முன்னவை இரட்டித்தா லன்றிப் பின்னவற்றை வன்மையில் ஒவ்வா. இந்நிலைமையை இற்றைத் தென்பாண்டி நாட்டுப்புறப் பழங்குடி மக்களின் நாவில்தான் செவ்வையாகக் காணமுடியும். 1. படவெழுத்து (pictogram or Hieroglyph) 2. கருத்தெழுத்து (Ideogram) 3. அசையெழுத்து (Syllabary) 4. ஒலியெழுத்து (Phonemic character) என்னும் நால்வகை வரிநிலையும் முறையே அடைந்த தமிழ் நெடுங்கணக்கு. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இற்றை நிலை யிலேயே யிருந்த தென்பது. தொல்லை வடிவின எல்லா வெழுத்தும் ஆண் டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி (98) என்னும் நன்னூல் நூற்பாவாலும்; கி.மு. 6 ஆம் அல்லது 7 ஆம் நூற்றாண்டிலும், உயிரும் உயிர் மெய்யுமாகிய எகர ஒகரங்களும் குற்றியலிகர குற்றியலுகரங்களும் புள்ளி பெறுதலும், உட்புள்ளி பெற்ற பகர வடிவே மகர வடிவாதலும், தவிர, மற்றையவெல்லாம் இற்றையவே யென்பது தொல்காப்பியத்தாலும், அறியக்கிடக் கின்றன. எழுத்து எழுதப்படும் கருவிக்கேற்ப வேறுபட்டிருத்தல் வேண்டு மாதலால், எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதுதற்கு ஒரு வரைவெழுத்து முறையும். உளி கொண்டு செம்பிலும் கல்லிலும் செதுக்கற்கு ஒரு வெட்டெழுத்து முறையும், தொன்று தொட்டுக் கையாளப்பட்டு வந்ததாகத் தெரிகின்றது. தமிழின் தொன்மை யையும் தலைமையையும் ஆய்ந்தறியும் மதுகையும் நடு நிலைமை யும் இல்லா அயலார், வரைவெழுத்தும் வெட்டெ ழுத்தாகிய வட் டெழுத்தும் ஒன்றே யெனப் பிறழவுணர்ந்து விட்டனர். ஆரியவொலித்திரிபு தமிழொலிகள், முதலாவது, தென் திரவிடமாகிய தெலுங்கில் வன்மைபெற்று வட திரவிடத்தில் வளர்ச்சியடைந்து. வட மேலை யாரிய (ஐரோப்பிய) மொழிகளில் இயற்கையாரிய வடிவுற்று. இறுதியில் கீழையாரியமாகிய சமற்கிருதத்தில் பெரும்பாலும் செயற்கை வடிவு கொண்டுள்ளன. இதை, செந்திறத்த தமிழோசை வடசொல் லாகி என்னும் திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத் தொடர் இரட்டுறல் முறையிற் குறிப்பதாகக் கொள்ளலாம். என்றும் எங்கும் பிஞ்சு முற்றிக் காயாகுமேயன்றிக் காய் இளந்து பிஞ்சாகாது. அது போல், இயற்கையான மொழி வளர்ச்சியில், மெல்லொலி வலித்து வல்லொலியாகுமே யன்றி வல்லொலி மெலிந்து மெல்லொலியாகாது. குழந்தை வாயில் வல்லொலி பிறவாதது போல், முந்தியல் மாந்தன் வாயிலும் வல்லொலி பிறப்பதில்லை. பழந்தமிழன் சூடு என்று சொன்ன சொல்லை இற்றைத் தமிழன் கொச்சை வழக்கில் ஜூடு என்று சொல்வதை யும், triplus என்ற இலத்தீன் சொல்லினின்று treble என்னும் ஆங்கிலச்சொல் திரிந்திருப்பதையும் நோக்குக. kna என்ற தியூத்தானியச் சொல் gno என்று இலத்தீனில் திரிந்ததும் அதுவே. இற்றை நிலைப்படி, வல்லின எழுத்தொலிகளையெல்லாம். (1) கடுப்பொலி (voiceless unaspirate) (2) உரப்பொலி (voiceless aspirate) (3) எடுப்பொலி (voiced unaspirate) (4) கனைப்பொலி (voiced aspirate) என நால்வகையாக வகுக்கலாம். இவற்றுள், தமிழில் இருப்பவை யெல்லாம் மென்கடுப்பொலிகளும் மெல்லொலிகளுமே. இவற்றுள், பின்னவை மென்கடுப்பொலிகள் சொல்லிடை கடை தனித்தும் மெல்லினத்தின் பின்பும் வந்தாலன்றி நிகழா. இலத்தீனில், மூச்சொலி சேர்ந்த புணர்மெய்களே இல்லை; k - யும் s - உம் சேர்ந்த x(ks) என்னும் புணர்மெய்தான் உண்டு. கிரேக்கத்தில், th, ph, kh என்னும் மூச்சொலிப் புணர்மெய்கள் மூன்றும். ks, ps என்ற மூச்சொலியில்லாப் புணர்மெய்கள் இரண்டும். உள்ளன. இவ்விரு மொழிக்கும் பொதுவாக b,d,g,z என்னும் நாலெடுப்பொலிகள் உள. எழுத்துப் புணர்ச்சியால் ஏற்படும் ஜகர வொலியும் (J) கிரேக்கத்திற்குண்டு. சமற்கிருதத்திலோ வல்லின வொலிகள் ஐந்திற்கும், கடுப்பொலி எடுப்பொலியாகிய இருவடிவிலும், மூச்சொலியைச் சேர்த்தும், செயற்கை முறையில் இருபது மெய்களைப் பிறப்பித்திருக்கின்றனர். இவற்றுள், மூச்சொலி சேர்ந்த பத்தும் உண்மையில் புணர் மெய்களே (consonantal diphthongs) க்ஷ (க்+ஷ), ஜ்ஞ முதலிய புணர் மெய்களும் கூட்டு மெய்களும் ஏராளம். வேத ஆரியர்க் கெழுத்தின்மை வேத ஆரியர் இந்தியாவிற்குள் புகுந்தபோது, அவர்க்கு எழுத்து மில்லை; இலக்கியமுமில்லை. வேதத்தில் மேனாட்டுப் பொருள் களைப் பற்றிய குறிப்பிருப்பினும். அஃது எழுதப்பட்டது வட இந்தியாவிலேயே மேலையாரிய மொழிகளிலெல்லாம் எகர ஒகரக் குறிலும் நெடிலும் உள்ளன. கீழையாரியத்திலோ வட திரவிடத்திற் போன்றே எகர ஒகரக் குறிலில்லை. ஆரியவேதம் முதலில் ஒன்றாயிருந்து. பின்பு மூன்றாகி, இறுதியில் நான்கா யிற்று. சமற்கிருதம் தோன்றும் வரையும் கீழையாரியத்திற்கு எழுத்தில்லை. ஆரிய வேதம் நீண்டகாலமாக ஆசிரியனால் வாய்ப்பாட மாக ஓதப்பெற்று மாணவரால் செவி வாயிலாகவே கற்கப்பட்டு வந்ததனால், அதற்கு ஆரியத்தில் சுருதி யென்றும், தமிழில் எழுதாக்கிளவி என்றும் பெயர் எழுந்தன. ச்ரு = கேள், ச்ருதி = கேள்வி, ச்ரு என்பது செவியுறு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபேயென வறிக. இங்ஙனம் பல வட சொற்கள் தூய ஆரியமாயினும், தமிழ் வேர்களினின்றே திரிந்தவையே. தமிழ் முறையைப் பின்பற்றி யெழுந்த ஆரிய நெடுங்கணக்கு வேத ஆரியர் கி.மு. 1500 போல் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே சமற்கிருதம் தோன்றிற்று. அன்று ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களும் தென் சொற்களும் கடன் கொள்ளப்பட்டதுடன். தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி ஆரிய நெடுங்கணக்கும் அமைக்கப்பட்டது. சமற்கிருத நெடுங்கணக்கு தமிழ் முறையைப் பின்பற்றிய தென்பதற்குச் சான்றுகள் (1) முறை மேலையாரிய மொழிகளுள் ஒன்றிற்கேனும் நெடுங்கணக்கில் முறையில்லை. உயிரும் மெய்யும் வேறுபாடின்றிக் கலந்து கிடக்கின்றன. தமிழிலோ, உயிர் முன்னும் மெய் பின்னும், உயிருள் குறில் முன்னும் நெடில் பின்னும், குறிலுள் அகரம் முன்னும் இகரம் இடையும் உகரம் பின்னும், அதன்பின் எகரமும் இறுதியில் ஒகரமும், ஏகாரத்தையடுத்து ஐகாரமும் ஓகாரத்தையடுத்து ஔகாரமும்; மெய்யுள் இனவலியும் மெலியுமாக இவ்விரண்டாய் வல்லினம் முன்னும் மெல்லினம் பின்னும், இடையினம் அவற்றின் பின் னும், பிந்தியெழுந்த நாலெழுத்தும் இறுதியிலும்; வல்லினம் க ச ட த ப என்ற முறையிலும், இடையினம் ய ர ல வ என்ற முறை யிலும். ககரத்திற்கினமான நுண்ணொலி (ஆய்தம்) ககரத்தையடுத்து முன்னும், அடித்தொண்டை முதல் இதழ் வரைப்பட்ட எழுத்துப் பிறப்பியல் முறை பற்றி ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன. உலகில் முதன் முதல் இம் முறையில் எழுத்துகள் வைக்கப்பட்ட நெடுங் கணக்குடைய மொழி தமிழே, தமிழில் எழுத்திலக்கணம் பன்னி ரண்டனுள் முறை என்பதும் ஒன்று. 2. புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சியும் மேலையாரிய மொழிகட்கில்லை. இதனால், உயிர் மெய்யெழுத்துமில்லை. 3. ஒப்பு தமிழாய்தத்தை ஒருபுடை யொத்த வடமொழி விசர்க்கம், உயிருக்கும் மெய்க்கும் இடையில் வைக்கப்பட்டிருப்பது ஊன்றி நோக்கத்தக்கது. 4. தொன்மை தமிழ் நெடுங்கணக்கு கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரிக் கண்டத்தில் தோன்றியது, வேத ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலம் கி.மு. 2000-1500. 5. ஒலிநூற்புலமை தமிழ் நெடுங்கணக்கில் தனியெழுத் தொலிகளே இடம் பெற்றுள்ளன. சமற்கிருத நெடுங்கணக்கில். அசைகளும் புணர் மெய்களும் சேர்க்கப்பட்டுள்ளன; உயிர் மெய்கள் உயிர்களாகக் காட்டப்பட்டுள்ளன. ரு லு முதலிய எழுத்துகள் குற்றியலுகரம் சேர்ந்த ரகர லகர மெய்கள்; அம், அ : என்பவை அகரத்தொடு கூடிய மூக்கொலி விசர்க்கங்கள்; மூக்கொலி சேர்ந்த வல்லினம் புணர்மெய்கள். 6. வருடொலிகள் (Linguals or cerebrals) ட,ண என்னும் வருடொலிகள் ஆரியத்திற்குரியவையல்ல. தமிழுக் கும் திரவிடத்திற்கும் திரவிட அடிப்படையைக் கொண்ட வடநாட்டு மொழிகட்குமே யுரியவை. சமற்கிருத வரி வடிவு வகை சமற்கிருத வரி வடிவு. கிரந்தம், தேவநாகரி என இரு வகைப்படும். இவற்றுள் முந்தியது கிரந்தம், வேத ஆரியர் தமிழொடு தொடர்பு கொண்ட பின், தமிழ் வரிவடிவைப் பின்பற்றிச் சமற்கிருதத்திற்கு அமைத்துக் கொண்டதே கிரந்தம். கிரந்தம் ஏற்பட்ட பின்பும், வேதம் நீண்ட காலம் எழுதப்படாமலே யிருந்து வந்தது. இதை, ஆற்ற லழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று. என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் உணர்த்தும். தென்னாட்டுக் கிரந்தத்திற்குப்பின் வடநாட்டிலெழுந்த வட மொழி வரிவகை தேவநாகரி நகரத்தில் அல்லது நாகரிகமாகத் தோன்றியதென்பது பற்றியும், தேவ மொழிக்குரிய தென்பது பற்றி யும், தேவநாகரி எனப்பட்டது. அதைப்பற்றி மானியர் உல்லியம்சு என்பவர் தம் சமற்கிருத அகர முதலியின் முன்னுரையில் 28ஆம் பக்க அடிக் குறிப்பில் பின் வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. சமற்கிருதக் கல்வெட்டுகளுள் மிகப் பழமையானதாக அறியப் பட்டது கத்தியவாரில் சுனாகரில் ஒரு பாறை மேலுளது. அஃது உருத்திர தாமன் கல்வெட்டென்னும் பெயர் கொண்டது. அது கி.பி. 2 ஆம் நூற்றாண்டினது. அது நாகரியில் இல்லை; பழைய கல்வெட்டெழுத்துகளில் உள்ளது. ஏறத்தாழக் கி.பி. 400 ஆம் ஆண்டினதான பவர் கையெழுத்துப்படி நாகரி நோக்கிய பெரு முன்னேற்றத்தைக் காட்ட, கி.பி. சுமார் 750 ஆம் ஆண்டினதான தந்திதுருக்கன் கல்வெட்டு இற்றை வழக்கிலுள்ள நாகரியை மிகவும் ஒத்த ஒரு நிறைவான குறித்தொகுதியைக் காட்டுவதா யுள்ளது. எனினும், உண்மையான தற்கால நாகரியில் உள்ள முதற் கையெழுத்துப்படி, கி.பி. 11ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதன் றென்பது கவனிக்கத்தக்கது. தென்னாட்டுக் கிரந்தமும் வடநாட்டுத் தேவநாகரியும் முதற்கண் உலகியற் கலை நூல்கட்கே பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்று மறை நூல்களும் அவற்றில் எழுதப்பெறுகின்றன. ஆழ ஊன்றி நோக்கும் நடுநிலை ஆய்வாளர்க்கு, கிரந்தமும் தேவநாகரியும் தமிழெழுத்தினின்றே தோன்றினவென்னும் உண்மை, முறையே, வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தோன்றாமற் போகாது. சமற்கிருதவாக்கம் - சொற்கள் வேத ஆரியர் நாவலந்தேயம் அல்லது நாவலம்பொழில் என்னும் இந்தியாவிற்குட் புகுந்தபோது, இங்கிருந்த இலக்கியம் தமிழிலக் கியமே. அவர் இந்திய நாகரிகம் தமதெனக் காட்டித் தம்மைக் குமுகாய (சமுதாய) நிலையில் உச்ச நிலைக்கு உயர்த்துவான் வேண்டி, தமிழ்நூல்களை மொழி பெயர்த்து ஓர் இலக்கியத்தை அமைத்தற்குப் போதிய சொல்வளம் தம் முன்னோர் மொழிக் கின்மையால் ஆயிரக்கணக்கான சொற்களைத் தமிழினின்று கடன் கொள்ள வேண்டியதாயிற்று. இங்ஙனம் கடன் கொண்ட மைந்த இலக்கியச் செயற்கைக் கலவை மொழியே சமற்கிருதம். இதற்கு, ஏற்கெனவே இருவேறு நிலைகளில் நேரல்லா வழியிற் கடன் கொள்ளப்பட்டிருந்த தமிழ்ச்சொற்களும் துணை செய்தன. இதனால், கீழையாரியம் மூவேறு காலத்தில் தமிழ்ச் சொற்களைக் கடன் கொண்டமை அறியப்படும். அவற்றுள் : முதற்காலம் மேலையாரியக் காலமாகும். அக் காலத்திற் கடன் கொள்ளப்பட்டவை முதற் காலத் தமிழ்ச்சொற்கள் (Tamil of the First Period) எனத் தகும். இரண்டாங் காலம் வேத ஆரியக் காலமாகும். அக்காலத்தில் கடன் கொள்ளப்பட்டவை இரண்டாங் காலத் தமிழ்ச்சொற்கள் (Tamil of the Second Period) எனத் தகும். மூன்றாங் காலம் சமற்கிருதக் காலமாகும். அக்காலத்திற் கடன் கொள்ளப்பட்டவை மூன்றாங் காலத் தமிழ்ச்சொற்கள் (Tamil of the Third Period) எனத்தகும். 1. மேலையாரியத் தமிழ்ச்சொற்கள் எ-டு: தியூத்தானியம் அம்ம - amma. ஆன் (= அங்கு) yon. இரு are. இரும்(பு) - iron. ஈன் - yean, ean; உரறு - roar, கரை - cry, காண் - con, cun, can; குரங்கு (= வளை) - crank, குருள் - curl கொடுக்கு crook, சப்பு - sup, sip; துருவ through, நாகு - nag பட்டு (அடி) - beat, புல்லம் - bull, மெது - smooth, முன்னு - mun (think) வேண்டு - want. இலத்தீனம் அமர் - amo (love), amor; உருளை - உருண்ட - rota (wheel), உரை - or, கும்மல் - cumulus. சமம் - similis. சேர் - scr. தா - do. நாவாய் - navis. படகு - barca. புரை - par (equal), மன் - man (remain) முதிர் - maturus. மெல் - mellow (soft), வல் - val (strong), வரி (வளை) - vers (turn). கிரேக்கம் அரசன் - arthos, arkhon, குரு (நிறம்) - chroma, கோணம் - gona. சாயை (நிழல்) - skia. தச்சன் - tekton, திருப்பு - trepos, துரப்பணம் - trapanon, தொலை - telos. நரம்பு - neuron. நீரம் - neros (wet). பல - polus, பரி - pcri (round), பறழ் - proles, பாழி (நகரம்) - polis, புரை - poros, மத்திகை - mastix, mastigos, மால் - meals (black) விழை - philos. பொது பல தமிழ்ச்சொற்கள் மேலையாரியத்தில் பல மொழிகட்கு அல்லது மொழிக் குடும்பங்கட்குப் பொதுவாகவும் வழங்குகின்றன. எ-டு: அ. (சேய்மைச் சுட்டு) - E. a (that), Du. a (dat), Ger. a (das). இ. (அண்மைச் சுட்டு) - E.i (this) OE. (hit) Goth (hita), L. (hic). ஈ. (அண்மைச் சுட்டு) - E. (these). இதோள் (இவ்விடம்) - E. hither. OE. hider, L. citra. (இய்) - இயல் - L. i,e; Gk. i ei; Goth. i. Slav. i, Lith. ei. இயலுதல் = இயங்குதல், நடத்தல், செல்லுதல். உய்(இய்) - இய - இயங்கு. இய - இயவு = செலவு. வழி, இய - இயவுள் = வழி. உய்தல் = செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல். ஏர் (கலப்பை) நு நயச., டு. யச. ஒன் - ஒன்னு, ஒன்று E. one. Du. een, Ger. ein, L. unus, Gk. oinos. கொத்தி = பூனை (கன்னடச் சொல்). பகலிற் குருடு போலிருப்பது என்பது இதன் பொருள். L. catta; E.cat. சாலை - Ger. saal, It. sala, salone, F. salon, E. saloon, E. hall Du. and Dan. hal. பதி - பதம் - பாதம். நிலத்திற் பதிவது பதம் அல்லது பாதம். பாதம் - பாதை = வழி. பதம் = வழி. அடித்தடம் தொடர்ந்து பதிவதனால் ஒரு வழி அமையும். அடி என்பது ஒரு பொருளின் அடிப்பாகம் அது. கால், பாதம், கீழிடம் முதலிய பல பொருள் களை யுணர்த்தும். பாதம் என்பது நிலத்திற் பதியக்கூடிய பரந்த அடிப்பகுதி. பாதம் வைத்த விளக்கு என்னும் வழக்கை நோக்குக. அடிமரம் பருத்தது. மரத்தடியில் உட்கார்ந்தான். மேடைக் கடியிற் பார். அடிநாளிலிருந்து சொல்லிவருகின்றேன், என்னும் வழக்குகளின் பாதம் என்னும் சொல் பொருந்தாமை காண்க. பதம், பாதம் - Gk. podos. L. pedis. OE. fot (E. foot), Ger. fuss. பாதை - E. path, OE. paeth, Dut. pad, Ger. pfad. bghW - OE., OHG. ber., Goth. bair, E. bear, L. fer, Gk. pher. போடு - E.put, pot. pyt; Dan. putte. L. pon. போகவிடு - போக்கு - போடு. இங்குக் காட்டிய சொற்களுள், கீழையாரியத்தில் இல்லாதனவு முள. அவை மேலையாரியத்தினின்று பிரிந்து வரும்போது கீழையாரியத்தால் இழக்கப் பட்டனவாகும். சில தமிழ்ச்சொற்கள் மேலையாரியத்தினும் கீழையாரியத்தில் திரிந்திருப்பது. பின்னதன் பின்மையைக் காட்டும். எ-டு: அம்மா - O.G. amma - Skt. amba. காண் - OE. con - cna (metathesis) - E.know, OHG. cna, L. and Gk. gno - Skt. Jna (Ph.) முழுகு - L. merg, Skt. majj. இரும்(பு) - O.E. iren. O.G. Mod Ger. eise, Goth. eisarn. L. aer. aes; Skt. ayas. வல் - L. val Skt. bal. சில தமிழ்ச் சொற்கள் கீழையாரியத்தினும் மேலையாரியத்தில் திரிந்திருப்பது. வடதிரவிடம் வடமேற்காய்ச் சென்று படிப்படி யாய்த் திரிந்து ஐரோப்பாவில் முழுவாரியமாய் மாறியதையும். கீழையாரியம் இந்தியாவிற்குட் புகுந்தபின் வடஇந்திய வடிவத்தைச் சில சொற்களில் மேற்கொண்டதையும் உணர்த்தும். எ-டு: உம்பர் - வ.தி. ஊப்பர். Teut. upper, over; L. super, Gk. huper. Skt. upari. ஆயிரம். அயிர் - (அயிரம்) - அசிரம்). North Indian. hazar, Persian. hazar Gk. kesloi; kilioi; Skt. sahasra (sa+hasra). சில தமிழ்ச்சொற்கள் தியூத்தானியத்தினும் இலத்தீனில் திரிந்திருப்பது. வடமேற்கிற் சென்ற திரவிடம் ஐரோப்பாவின் வடமேல் மூலையை முட்டித் திரும்பியதையும், திரும்புகாலில் கிழக்கு நோக்கித் திரிந்ததையும் காட்டும். எ-டு: துருவ - Teut. through, L. trans. துள் - துரு - துருவு - துருவ (வி.எ.). துருத்து - Teut. thrust, L. trud (o) (intrude, protrude, obtrude etc). 2. வேதவாரியத் தமிழ்ச்சொற்கள் வேதவாரியர் வட இந்தியாவிற்குட் புகுந்தபோது (கி.மு.2000 - 1500), அங்கு வாழ்ந்தவருட் பெரும்பாலார் திரவிடரே. பெலுச் சித்தானத்திலும் வங்காளத்திலும் இன்றும் திரவிட மொழிகள் வழங்குவதையும், காளிக் கோட்டம் (Calcutta) என்னும் பெயர் தூய தமிழ்ச் சொல்லாயிருப்பதையும், ஊன்றி நோக்குக. ஆரிய வேதம் வடதிரவிடம் வழங்கும் நாட்டில் இயற்றப் பெற்றமையால், நூற்றுக்கணக்கான தென்சொற்கள் அதிற் புகுந்துவிட்டன. எ-டு: அகவு. அவை - சவை, இலக்கு, உத்தரம், உரு - உருவு - உருவம், உலகு, உவணம் - சுவணம், கடுகம், காலம், கருள் (கருமை), குமரன் - குமரி, தக்கணம், தண்டம், தூது. நடம், பக்கம், மண்டலம், மந்திரம், முத்து - முத்தம், வட்டம். விரிவஞ்சி இவற்றுட் சிலவற்றிற்கே இங்கு மூலம் விளக்கப்பெறும். அமலுதல் = நெருங்குதல். அமர்தல் = நெருங்குதல். அமைதல் = நெருங்குதல். நிறைதல். பொருந்துதல்,சேர்தல், கூடுதல், திரளுதல், அமை = திரண்ட கெட்டி மூங்கில். அமை - அவை = கூட்டம். ம.வ. போலி. ஒ.நோ. அம்மை - அவ்வை. குமி - குவி. அவை - சவை. உயிர் முதற் சொற்கள் சொல்லாக்கத்தில் மொழி முதல் மெய்கள் ஏறப்பெறும். அவற்றுள் ஒன்று சகரம். எ-டு: உருள் - சுருள், உவணம் - சுவணம், ஏண் - சேண், ஏமம் - சேமம், சபா (Sabha) என்னும் சொற்கு வடமொழியிற் பொருத்த மான வேரில்லை. உத்தரம் = உயரம். உயரமான வடதிசை. தக்கணம் = தாழ்வு. தாழ்வான தென்திசை. தொண்டை = தாழ்ந்த குரல். குடமலையால் உயர்ந்திருப்பது மேற்றிசையென்றும். குணகடலால் தாழ்ந்திருப்பது கீழ்த்திசை யென்றம் வழங்கி வருதல் காண்க. உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம். வடிவுடைப் பொருள். உரு - உருவு - உருபு = வேற்றுமை வடிவம். அதைக் காட்டும் இடைச்சொல். x.neh.: அளவு - அளபு. உருவு - உருவம். தமிழிலக்கணம் ஆரிய வருகைக்கு எண்ணாயிரமாண்டு முற்பட்டது. உலவுதல் = வளைதல், சுற்றுதல். உலா = நகரைச் சுற்றி வரும் பவனி. உலக்கை = உருண்ட பெரும்பிடி. உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல். உலவு - உலகு = உருண்டையாயிருப்பது அல்லது சுற்றி வருவது. x.neh.: கொட்குதல் = சுற்றி வருதல். கொள் - கோள். உலகு - உலகம். லோக் என்னம் வடசொல். பார்த்தது அல்லது பார்க்கப்படுவது என்னும் பொருளது. அது நோக்கு என்னும் தென்சொல்லின் திரிபாம். இனி, உலகம் வட்டமாயிருக்கும் ஞாலம் (பூமி) என்றுமாம். x.neh.: கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). உகரம் உயரத்தைக் குறிக்கும் வேர்ச்சொல். எ-டு: உக்கம் = தலை. உவ்வி = தலை. உத்தி = ஒருவகைத் தலையணி உச்சி, உம்பர், உவண், உயர். உவண் = மேலிடம். உவணை = தேவருலகம். உவணம் = உயர்ச்சி, பருந்து, கலுழன், கழுகு. பருந்து உயரப் பறக்கும் பறவைகளுள் ஒன்று. உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்பது பழமொழி. உவணம் - சுவணம் = பருந்து, கலுழன். கழுகு. உவணம் (சுவணம்) முல்லை நிலத்துப் பறவையாதலால், அந் நிலத்தெய்வமாகிய மாயோனுக்கு ஊர்தியாகக் குறிக்கப்பெற்றது. சுவணம் என்னும் சொல்லை வடமொழியாளர் சுபர்ண என்று திரித்துப் பின்பு சு + பர்ண என்று பிரித்து, நல்ல இலை, அழகிய இலையுள்ளது. அழகிய இலை போன்ற சிறகையுடையது. என்று பொருந்தாப் புளுகலாகக் கரணியங் காட்டுவர். கும்முதல் = திரளுதல். கும் - குமர் - குமரன் = திரண்டவன், இளைஞன் குமரி = திரண்டவள். இளைஞை. ஒ.நோ. L virginem, E. virgin from virgo to swell விடைத்தல் = பருத்தல். விலங்கினத் திலும் பறவையினத்திலும் திரண்டு இளைமையா யிருப்பவற்றை விடையென்பது மரபு. ஆடு, மாடு, குதிரை, மான், பூனை, கோழி, பாம்பு முதலியவற்றுள், திரண்டு இளமையாயிருப்பவற்றை விடையென்பது இருவகை வழக்கிலுமுண்மை கண்டுகொள்க. விடை - விடலை = இளங்காளை, மறவன் (வீரன்), இளைஞன், 16 முதல் 30 ஆண்டு வரைப்பட்டவன். திண்ணியோன். இளநீரை விடலையென்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உயிரினங்களிற் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடையென்பது இள வாணையே சிறப்பாகக் குறிக்கும். குமர் என்னும் சொல் உயர் திணையில் இருபாற் பொதுவாம். குமரி என்பது, இளமை பற்றிச் சில மரப்பெயர்க்கும், புதுமை (முதன்மை) குறித்துச் சில தொழிற் பெயர்க்கும், அழியாமை குறித்துச் சில இடப்பெயர் பொருட் பெயர்க்கும் அடைமொழியாம். குமரன், குமரி என்னும் தமிழ்ச்சொற்களை, வடவர் குமாரன் குமாரி என நீட்டி, முறையே தமிழ்ப் பொருளொடு மகன், மகள் என்னும் பொருளிலும் வழங்கிவருகின்றனர். முள் - முண்டு - முண்டை = முட்டை. முள் - முட்டு - முட்டை. முண்டு - மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை மடக்குதல். மண்டு - மண்டலம் = வட்டம். வட்டமான பொருள். மண்டலம் - மண்டிலம். மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் = வளைத்தல். மண்டலம் என்பது இருக்குவேதப் பெரும்பிரிவின் பெயர். தமிழ்ச் செய்யுளில் எல்லாவடிகளும் அளவொத்துவரும் யாப்பு மண்டிலம் எனப்படும். ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் குட்டமும் நேரடிக் கொட்டின என்ப (செய். 114) மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும் செந்தூக் கியல என்மனார் புலவர் (செய். 116) என்பன தொல்காப்பிய நூற்பாக்கள். என்ப, என்மனார் புலவர் என்னும் வழிநூன் மரபுரைகள். மண்டிலம் என்னுஞ் சொல் முதனூற் குறியீடென்பதைத் தெரிவிக்கும். மண்டலம், மண்டிலம் என்னும் இருசொல்லும் வட்டமான பொருள்களையும், தோற்றத்தையும் செலவையும் காலத்தையும் இடத்தையும் தொன்றுதொட்டு இருவகை வழக்கிலும் குறித்து வந்திருக்கின்றன. நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட் கொண் டது மருத்துவ நூல் கூறும் கால மண்டலம். தொண்டை மண்ட லம். கொங்கு மண்டலம் என்பன பழைமையான இட மண்ட லம். மண்டிலத் தருமையும் என்பது தொல்காப்பியம் (977). தள் - தாள் = மரஞ் செடி கொடி பயிர் புல்லின் தடித்த அடி; இலை பூவின் அடி தாளை ஒட்டிய பயிர் புல்லிலை; தாள் போன்ற கால், விளக்குத்தண்டு முதலியன. தள் - தண்டு = செடிகொடிகளின் திரண்ட அடி (எ-டு: கீரைத் தண்டு). தண்டு போன்ற பொருள் (எ-டு: விளக்குத்தண்டு). தண்டு - தண்டான் = தண்டுக்கோரை. தண்டுதல் = தண்டுபோல் திரட்டுதல். பணத்தைத் திரட்டுதல். தண்டு = தடி, படகு வலிக்குங் கோல், தண்டினால் தாங்கும் பல்லக்கு. தண்டுபோல் திரண்ட படை. x.neh.: = club = stick association. staff = stick, body of officers. தண்டு - தண்டன் = கோல். தள் - தட்டு, தட்டை = சோளப் பயிர் போன்றவற்றின் திரண்ட அடி. தண்டு - தண்டி = பருமன் மிகுதி. தடி, வீணைக்கோடு, தடித்த மூங்கில். தாங்கும் பல்லக்கு. தண்டி - தண்டியம் = தாங்கும் கட்டை. தண்டி - தண்டிகை = பல்லக்கு. தண்டி - தண்டியல் = தண்டிகை. தண்டித்தல் = பருத்தல், தடியால் அடித்து ஒறுத்தல், ஒறுத்தல். தண்டி - தடி, ஒ.நோ. பிண்டி - பிடி, கண்டி - கடி, மண்டி - மடி அண்டி அடி, இது தொகுத்தல் திரிபு. தடித்தல் = பருத்தல், தடியன் = பருத்தவன், பருத்த பூசணிக்காய். தடி - தடிப்பு - தடிப்பம். தடி - தடிம்பு - தடிம்பல். தண்டு - தண்டம் = தடி; படை தண்டத்தலைவன் = படைத் தலைவன். தண்டி + அம் = தண்டம் (ஒறுப்பு). தண்டி + அனம் = தண்டனம் (ஒறுப்பு), தண்டி + அனை = தண்டனை (ஒறுப்பு). தண்டா என்பது கல்வெட்டுக் குறிக்கும் மூவகைத் தண்டனைகளுள் ஒன்று. தள் என்னும் வேர்ச்சொற்கே பருத்தற் பொருளுளது. தள் - தளம் = கனம், திண்மை (சீவக. 719. உரை). தளம் - தடம் = பருமை. தடவும் கயவும் நளியும் பெருமை, (தொல். 803). தடா = பருமை. (கல்லாடம், 8:15), பெரும்பானை (திவா.). தடவுத்தாழி = பெருஞ்சாடி. தள் - தாள் - தாளி = கூந்தற்பனை. தாளி = தாழி = பெரும்பானை. தாள் - தாட்டி = பருமை, வலிமை. தழங்கு என்னும் சொல் முழங்கு என்பதுபோல் ஒலிப் பெருமையை உணர்த்தும். முன்னுதல் = கருதுதல், எண்ணுதல். முன்னம் = மனம் (திவா.). முன்னம் - முனம் - மனம். முன் - மன், மன் + திரம் = (மன்றிரம்) - மந்திரம். x.neh.: மன் - மன்று - மந்து - மந்தை. முன்று - முந்து, பின்று - பிந்து. மந்திரம் = இன்னது ஆகவென்று உறுதியாய் எண்ணுதல். அங்ஙனம் எண்ணிச் சொல்லும் உரை. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (1434) என்னுந் தொல்காப்பிய நூற்பாவையும். எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள் 666) என்னும் திருக்குறளையும், திருமூலர் திருமந்திரத்தையும் மந்திரம் சொல்லிச் சவித்துவிட்டான். மந்திரத்தினால் வாயைக் கட்டிவிட்டான் என்னும் வழக்குகளையும்; மந்திரி, மந்திரம் (சூழ்வினை) என்னும் அரசியற் சொற்களையும், கூர்ந்து நோக்குக. வாய்மொழி என்பது மந்திரத்தின் மறுபெயர், நாலாயிரத் தெய்வப் பனுவலில் நம்மாழ்வார் அருளிச்செய்த முதலாயிரம் திருவாய் மொழியெனப் பெயர் பெற்றிருத்தல் காண்க. ஆகவே, மந்திரம் என்னும் சொல் தமிழில் அரசியல், மதவியல், இலக்கணம் ஆகிய முத்துறைக்குரியதாகும். சேர, சோழ, பாண்டிய வரசுகள் வரலாற்றிற் கெட்டாத் தொன்மை வாய்ந்தவை. பண்டை நாளிற் கிழக்கத்திய நாடுகட்குத் தமிழ்நாட்டொடு அரசியல் தொடர்பும் வணிகத் தொடர்பும் இருந்ததினால். மந்திரி என்னும் சொல் மலேயா சீனம் முதலிய நாடுகளிலும் பரவியிருக் கின்றது. Mandarin என்னும் ஆங்கிலச் சொல் போர்த்துகீசிய வாயிலாய்ப் பிற்காலத்திற் புகுந்ததாகும். அதற்குமுன் மேலை யாரியத்தில் இச் சொல் இல்லை. சமற்கிருத இரு படைகள் 1. அடிப்படை - வேத ஆரியம் 2. மேற்படை 1. வட திரவிடம் (பிராகிருதம்) 2. தென் திரவிடம் (தமிழொழிந்த பஞ்ச திரவிடம்) 3. தமிழ். பிராகிருதம் என்பது. வேதக் காலத்தில் வட இந்தியாவில் வழங் கிய வட்டார மொழிகள். பிராகிருதம் = முந்திச் செய்யப்பட்டது. சமற்கிருதம் என்பது, வேதமொழி யிலக்கண வமைதியைப் பெரும்பாலும் தழுவி, அம் மொழியொடு பிராகிருதத்தையும் திரவிடத்தையும் (தென் திரவிடம்) தமிழையும் கலந்து செய்த அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழியாகும். சமற் கிருதம் = நன்றாய்ச் செய்யப்பட்டது. பிராகிருதம் என்னும் சொல் பாகதம் என்றும், சமற்கிருதம் என்னும் சொல் சங்கதம், சனுக்கிரகம் அல்லது சானுக்கிரகம் என்றும், திரியும். பிராகிருதம் சமற்கிருதத்திற்கு முந்தியதென்பது அதன் பெயராலும் மொழியாலும் தெளிவாய்த் தெரியினும். சமற்கிருதத்தினின்று பிராகிருதம் திரிந்ததாகப் பேதைமை மிக்க பழங்குடி மக்களையும் ஆராய்ச்சியில்லாத அயலாரையும் வடமொழியாளர் மயக்கி வரு கின்றனர். அதற்குக் கரணியம் (காரணம்). சமற்கிருதச் சொற்கள் திரிந்தும் திரியாமலும் பாகதத்தில் வழங்குவதே. எ-டு:திரியாதவை திரிந்தவை சஷ்டி (sashti) சட்டி (satihi) தர்ம (dharma) தம்ம (dhamma) திரிந்து வழங்குவன. தமிழில் வழங்கும் திட்டாந்தம் (த்ருஷ் டாந்த), சோத்தம் (தோத்ர) என்னும் வடசொற்கள் போன் றவையே. அவை யாவும் அடிப்படைச் சொற்களல்ல. பிராகிருதத் திற்கும் அடிப்படை தமிழே ஆயினும். அது விளங்கித் தோன்றாத வாறு அத்துணை வடசொற்கள் அதிற் கலந்துள்ளன. வடசொற் கலப்பு தமிழில் இருப்பதைவிடத் திரவிடத்தில் மிகுதியாகவும், திரவிடத்தில் இருப்பதைவிடப் பாகதத்தில் மிகுதியாகவும், இருக்கும். வடக்கே செல்லச் செல்ல வடசொற் கலப்பு மிகும் என அறிக. வேத ஆரிய மொழி வழக்கற்றுப் போனதனால், அது பழங் குடி மொழிகளிற் கலந்து புல்லுருவியும் உண்ணியும் பேனும் போல் மேலுண்ணியாய் (Parasite) இருந்து வருகின்றது. ஆரியச் சொல் வேரூன்றியவுடன் அதற்கு நேரான தென்சொல் வழக் கற்றுப் போம். வழக்கற்ற சொல் இலக்கியத்தில் இடம் பெறா விடின் மறைந்து மீளா நிலையடையும். பிராகிருதம் என்னும் வடதிரவிடத்திலுள்ள தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் ஈறு திரிந்தே வழங்கும். எ-டு: தமிழ் பிராகிருதம் தமிழ் பிராகிருதம் அச்சன் அஜ்ஜ கட்டை கட்ட அத்தை அத்தா கம்பம் கம்ப ஏழகம் ஏளக நேயம் நேயம் ஐயன் அய்ய வட்டம் வட்ட பிராகிருத வழிப்பட்ட மொழிகளுள் ஒன்றான இந்தியின் அடிப்படையும் தமிழே. எ-டு: தமிழ் இந்தி அம்மா மா ஆம் ஹாங் இதோள் (இங்கே) ஹிதர் உதோள் (உங்கே) உதர் உம்பர் ஊப்பர் தமிழ் இந்தி தமிழ் இந்தி கால் (கருமை) காலா நேரம் தேர் காள் நோக்கு தேக்(கு) கொச்சு குச்(சு) படி (கீழிரு) பைட் செல் rš(ch) படி(வாசி) பட் சிட்டு (சிறு) சோட்டா (ch) படு (பெரிய) படா தண் தண்டா பழம் பல் தத்தை தோத்தா புகல் nghš(b) தா தே வத்து(தெலுங்கு) மத் சமற்கிருதத் தமிழ்ச் சொற்கள் சமற்கிருதச் சொற்களெல்லாம், கீழ்ப்படையும் மேற்படையும் பற்றி, 1. பழஞ்சொல் 2. புதுச்சொல் என்றும்; மொழி வகை பற்றி. 1. ஆரியச் சொல் 2. தமிழ்ச் சொல் என்றும்; வேர்ப் பொருட் கரணியம் உண்மையும் இன்மையும் பற்றி. 1. கரணியக்குறி 2. இடுகுறி என்றும். இவ்விரு பாலாய்ப் பகுக்கப்படும். பழஞ்சொல் என்பன வேத ஆரியம். இடுகுறிகள் ஆனந்த பைரவி கலியாணி, சங்கராபரணம், தன்னியாசி, நாத நாமக் கிரியை, முதலிய பண்ணுப் பெயர்கள் போன்றவை. தமிழ்ச் சொற்கள் பின்வருமாறு மூவகையாய் வகுக்கப் பெறும். (1) முழுச்சொல் : எ-டு: : அகவு, தூது. (2) வேர்ச்சொல் : எ-டு: பண் - பாணி (கை), மன் - மநு. முன்னுதல் = கருதுதல். முன் - முன்னம் - முனம் - மனம். முன் - மன் (Man) = சிறப்பாகக் கருதும் உயிரினம். மன்பதை = மக்கட் கூட்டம். (3) புனைசொல்; எ-டு: அனுமானம், கும்பகாரன், ஆதா. அல்லுதல் = பொருந்துதல், பொருத்துதல், பின்னுதல், முடைதல். அல் - அன் - அனு = கூட. மன் - மான் - மானி - மானம் = அளவு. படி, மதிப்பு, கருத்து, பெருமை. மன்னுதல் = பொருந்துதல். மானுதல் = ஒத்தல். மானித்தல் = ஒப்பிட்டளத்தல் அல்லது பொருத்தியளத்தல். மான் - மா = ஓர் அளவு. கும் - கும்பு - கும்பம் = குவிந்த கலம். கடு - கடி - கரி - காரம் - காரன். காரம் = மிகுதி, வலிமை, உரிமை. காரன் = உரியவன். ஆ என்பது ஓர் எதிர்மறையிடைச்சொல். தா = கொடு. ஆதா = எடு. அவமானம். அனுமானம், உபமானம், சன்மானம், நிர்மாணம், பிரமாணம், பரிமாணம் முதலிய பல சொற்கள் மானம் என்னும் தமிழ்ச் சொல்லை வருமொழியாகயும் ஈறாகவுங் கொண்டவை. தமிழ்ச்சொல் திரிப்பு முறைகள் மூவகைத் திரிபு (1) தோன்றல் பல தமிழ்ச் சொற்கள். முதலயலில் ரகரமிடைச் செருகியும் வகரமிடைச் செருகியும் வடசொல்லாக்கப்பட்டுள. எ-டு : ர : தமிழ் - த்ரமிட - த்ரவிட. திடம் - த்ருட. தூணி - த்ரோண, தோணி - த்ரோண. படி - ப்ரதி, படிமை - ப்ரதிமா. பதிகம் - ப்ரதீக, பவளம் - ப்ரவாள. புட்டம் - ப்ருஷ்ட, புடவி - ப்ருத்வீ. மதங்கம் - ம்ருதங்கம், மெது - ம்ருது. வட்டம் - வ்ருத்த. வ : சுரம் - ஜ்வரம், சொம்(சொத்து) - வாம், சொலி - ஜ்வலி. சுள் - சுர் - சுரம். சுல் - சுள் - சுள்ளை - சூளை, சுல் - சுல்லி = அடுப்பு. சுல் - சொல் - சொலி. சொலித்தல் = எரிதல், ஒளிர்தல். சொல் = ஒளிரும் பொன் போன்ற நெல். 2. திரிதல் உயிர்த்திரிபு (சில) ஆ-ஐ : வடை - வடா, மாலை - மாலா, கலை - கலா. இ-ஈ : புரி - புரீ, குடில்- குட்டீர. உ-அ : குடம் - கடம், சும் - சம் (அமைதியாயிரு). எ-ஏ : பெட்டி - பேட்டீ. ஏ-ஈ : பே (அஞ்சு) - பீ (bhi) ஐ-அ : மலையம் - மலய. வளையம் - வலய. ஓ-ஏ : ஒக்க - ஏக்க (ஒன்று). மெய்த்திரிபு க : க-ஜ : பகு - பஜ் க-ஹ : பெருகு - ப்ருஹ் (bh) க்க-க்ஷ : பக்கம் - பக்ஷ ச : r-ch : சல் - சலி - chal. ச-ஷ : பேசு - பாஷ் (bh) ச-ஜ : முரசு - முரஜ. ச-க : சீர்த்தி - கீர்த்தி ச்ச-க்ஷ: அச்சு (axle) - அக்ஷ ட: ட-ஷ : மாடை - மாஷ மாடு = செல்வம், பொன். மாடு - மாடை = ஒரு பொற்காசு. ட-ர : மடி - மரி - ம்ரு ட-ண : படம் - பணம் ட-த : கடம்பு - கடம்பம் - கதம்ப ட்ட-த்த: நடம் - நட்டம் - ந்ருத்த ட்ட-ஷட்ட விட்டை = விஷ்ட, முட்டி - முஷ்டி. த: த-ச : திரு - ச்ரீ(ஸ்ரீ) த-ஜ : விதை - பீஜ த-ஸ : மாதம் - மாஸ த்த-க்த: முத்து - முத்தம் - முக்த த்த-த்ய: நித்தம் - நித்ய நில் - நிற்றல் = நிற்கை. நிலை. நிற்றலும் = நிலையாக. என்றும். குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி (சூடா. 7,76) நிற்றல் - நித்தல் = என்றும். நித்தல் பழி தூற்றப் பட்டிருந்து (இறை. கள. 1.14). நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே (சிலப். உரைபெறு கட்டுரை, 4). நித்தல் - நித்தலும் = என்றும். உமை நித்தலுங் கை தொழுவேன் (தேவா. 825. 1) நித்தல் - நிச்சல் = என்றும். நிச்சலேத்து நெல்வாயிலார் தொழ (தேவா. 21, 3) நிச்சல் - நிச்சலும் = என்றும். நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய (திவ். திருவாய் 1, 9, 11) நித்தல் - (நித்தன்) - நித்தம் = என்றும். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17,3). நித்தக்கட்டளை, நித்தக்காய்ச்சல் என்பன உலகவழக்கு. ண: ண - ஷ : உண்ணம் - உஷ்ண உள் - ஒள் - ஒளி. உள் - உண் - உண - உணங்கு - உணக்கு. உண் - உண்ணம் = வெப்பம். உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு (தேவா. 510, 6). ந : ந-ல. நோக்கு - லோக்(கு) ம : ம-ஸ மனம் - மன ன : ன-த திருமான் - ஸ்ரீமத் ன்ன-ர்ண கன்னம் - கர்ண கல் - கன் - கன்னம் = துளையுள்ள காது, குழிவிழும் அலகு ய : ய-ச காய் - காச் காய்தல் = எரிதல், சுடுதல், ஒளிர்தல் விளங்குதல். ய-த தயிர் - ததி (dh) வ : ல-த சீலம் - சீத ல-ர கலுழன் - கருட கல் - கலுழ் - கலுழன். கலுழ்தல் = கலத்தல். ல-ன நாலா - நானா. வ : வ-ப உவமை - உபமா வ-க சொலவம் - சுலோக ழ : ழ-ட நாழி - நாடி ழ-ஷ மேழம் - மேஷ, மேழகம் - மேஷக. முழுத்தல் = திரள்தல். முழு - முழா - மிழா - மேழம் - மேழகம் - ஏழகம் = செம்மறி யாட்டுக் கடா, ஆடு. ழ-ல பழம் - பலம் ள : ள-ஷ சுள் - சுஷ் ள-ல வளையம் - வலய சமற்கிருத வல்லின வொலிகளுள் ஒவ்வொன்றிற்கும், கடுத்தும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் நந்நான்கு வகையிருப்பதால், சில தமிழ் வல்லெழுத்துகள் வடமொழியில் பல் வேறெழுத்துகளாய்த் திரிகின்றன. எ-டு: சாய் : சாய் - சா - சாவு - சவம் - சவ; சாய் - சய் - சயனம்; சாயுங்காலம் - சாயங்(காலம்) - ஸாயம்; சாய் - சாயை - சாயா (ch) பகு பகு - பஜ் (bh), (பாகம் - பாக (bh); பக்கம் - பக்ஷ (p) (3) கெடுதல் பட்டம் - பட்ட அறுவகை வேறுபாடு வலித்தல் : அம்பு - அப்பு. அம் = நீர். அம் - ஆம் = நீர். அம் - அம்பு = நீர். மெலித்தல் : மத்து - மந்த (Mantha) நீட்டல் : குமரி - குமாரி குறுக்கல் : வாரணன் - வருண வார் - வாரணம் = கடல். வாரணன் = கடல் தெய்வம் விரித்தல் : மாணவன் - மாணவக தொகுத்தல் : அருந்து - அத். முக்குறை முதற்குறை : அரங்கம் - ரங்க இடைக்குறை: மந்திரம் - மந்த்ர கடைக்குறை: சலி - சல் மும்மிகை முதன்மிகை : தூண் - தூணம் - தூண இடைமிகை : அப்பம் - அபூப கடைமிகை : உம்பர் - உபரி, மயில் - மயூர. மூவொட்டுகள் முன்னொட்டு: ஆயிரம் - அர - ஸகர இடையொட்டு : - பின்னொட்டு : வடவை - வடவாமுக முறைமாற்று நீட்சி: அரசன் - ராஜன் : உருவம் - ரூப (p) மரூஉ : சாயுங்காலம் - சாயம் சிதைவு : புடலங்காய் - பட்டோலிக்கா : புழல் = உட்டுளை. புழல் - புடல் = புழலான : காய், புடல் - புடவை மொழிபெயர்ப்பு : புள் - சகுன, நிலை - தாய். : சகுன = பறவை, தா = நில். ஏமாற்று வகைகள் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களும் திரவிடச் சொற்களுமான தென்சொற்கள் வட மொழியிலிருக்கவும், அவற்றையெல்லாம் வட சொல்லெனக் காட்ட வேண்டிப் பல்வேறு ஏமாற்று முறை களைக் கையாண்டு வருகின்றனர் வட நூலார். அம் முறைகளாவன : (1) தவற்றுப் பிரிப்பு எ-டு: தமிழ் வடமொழி உவணம் = சுவணம் சு + பர்ண அகவு ஆ + ஹ்வே அலத்தகம் அ + லக்தக நிலை - நிலையம் நி + லய (2) தவற்றுப் பொருட் கரணியங் கூறல் எ-டு: சொல் உண்மைக் கரணியம் தவற்றுக் கரணியம் (தமிழ்) (வடமொழி) அரசன் அரணானவன் விளங்குபவன் பாதுகாப்பவன்(rang. ranj) (அரவு=அரசு) குமரன் திரண்ட இளைஞன் எளிதாய் இறப்பவன் (கும் - குமர் - குமரன்) (கு+மாரா); விரும்பப் படுபவன் (கம்). சிவன் செந்நிறத்தான் எல்லாவுயிர்க்களும் இறத் (சிவ - சிவம் - சிவன்) தற்கிடமானவன் (சீ). நன்மைசெய்வன் (ச்வி) பல்லி (சுவரிலும் மரத்திலும் சொல்லுவது (பல்) ஒட்டிக் கொண்டிருப்பது (புல் - புல்லி - பல்லி) பாண்டியன் பழையன் (பண்டு) பாண்டவன் (பாண்டு) மீன்-மீனம் மின்னுவது (மின்) இறப்பது திரிவது (மீ) வடவை வடமுனை நெருப்பு பெட்டைக்குதிரை முகத் (வடம்) தில் தோன்றுவது (வடவா முகம்). குறிப்பு : சிவம் என்னும் சொற்கு நன்மைப் பொருள் தமிழிலும் உண்டு. செம்மை = நன்மை. (3) தவறாக மூலங்காட்டல் எ-டு: சொல் உண்மையான மூலம் தவறான மூலம் கமலை-கவலை நீரிறைக்கும் ஆலை ஆவை (பசுவை)ப் பயிர்த்தொழில் ஆலை. பூட்டியிறைக்கும் (கம் + ஆலை) ஏற்றம் (கபிலை). அவிழ் = அவிந்த சோற்றுப் பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அமிர்து - அமுது = சோறு. மருவுதல் = தழுவுதல், மரு - மார் = நெஞ்சு, முலை. மார் - மார்வு - மார்பு = மார்பம். மரு - மருமம் - மம்மம் - அம்மம் = முலை. முலைப்பால். அம்மம் - அமுது - அமிழ்து - அமிழ்தம் = பால். அமிழ்து - அமிர்து - அமிர்தம் = பால். சோறு என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும். பால் என்று பொருள்படும் அமுது என்னும் தமிழ்ச் சொற்கும். அம்ருத என்னும் வட சொல்லை மூலமாகக் காட்டுவது முற்றுந் தவறாம். (4) தவறாகத் தொடர்புபடுத்தல் பல தமிழ்ச் சொற்கள், ஒருமருங்கு வடிவொப்புமை பற்றியும் பற்றாதும், வட சொற்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. எ-டு: தமிழ்ச்சொல் வடசொல் அச்சன் (அத்தன்) = தந்தை ஆர்ய = ஆரியவரணத்தான் ஆசிரியன் (ஆசு + இரியன்) ஆச்சார்ய (ஆ + சார) = = குற்றத்தைப் போக்குபவன் ஒழுக்கத்தைக் கற்பிப்பவன். ஐயன் (ஐ + அன்) = பெரியோன் ஆர்ய = ஆரிய வரணத்தான் கம்பம் (கம்பு + அம்) = உயரமான தம்ப (தம்ப்) = ஊன்றிய பெரிய கம்பு தூண். கேரளம் (சேர - சேரலம் - நாளிகேரம் (= தென்னை) கேரளம்) = சேர நாடு, மிகுந்திருக்கும் நாடு. மலையாள நாடு பார்ப்பான் = நூல்களைப் பிராமணன் = பிரமத்தை பார்ப்பவன் அல்லது பிராமணத்தை அறிந்தவன் குறிப்பு : பார்ப்பனன் என்னும் வடிவில் அனன் (அன் + அன்) என்பது ஈறு. வினையாலணையும் பெயர்க்கு மூலமான வினைமுற்று ஆன் ஈறு போன்றே அனன் ஈறு கொள்ளும். எ-டு: இ.கா. நி.கா. எ-டு: வந்தனன் வருகின்றனன் வருவனன் வந்தனள் வருகின்றனள் வருவனள் வந்தனர் வருகின்றனர் வருவனர் வந்தன்று - - வந்தன வருகின்றன வருவன வந்தன்று என்பது வந்தனது என்பதன் திரிபாம். (5) தலைகீழ்த் திரிப்பு தமிழ் > பிராகிருதம் > சமற்கிருதம் வட்டம் (வள்) வட்ட வ்ருத்த மேழகம் - ஏழகம் ஏளக ஏலக நேயம் (நெய்) நேயம் நேக (நிக்) மாதம் (மதி) - மாஸ இவற்றைத் தலைகீழாகத் திரிப்பது வடநூலார் இயல்பு. (6) வலித்துரைத்தல் இருமொழிகள் குறுகிய காலத்தில் அடுத்து வழங்கினும், ஒன்றி னின்று இன்னொன்று ஒரு சில சொற்களையேனும் கொள்ளா திராது. வடமொழி தென்மொழியொடு தொடர்பு கொண்டு மூவாயிரம் ஆண்டிற்கு மேலாயினும், அதிற் கலந்துள்ள ஆயிரக் கணக்கான தென் சொற்களும் ஒன்றையேனும் தென் சொல்லென ஒப்புக் கொள்ளாது வட சொல்லேயென வலிப்பது. இன்றும் வட மொழியாளர் இயல்பாயிருந்து வருகின்றது. வட மொழியி லுள்ள தென் சொற்கள் ஐந்திலிரண்டு பகுதியாகும். (7) தேவமொழியெனல் வேத ஆரியர், பழங்குடி மக்களான பண்டைத் தமிழரின் பேதைமையையும் மதப்பித்தையும் அளவிறந்து பயன்படுத்தி, தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தம் முன்னோர் மொழியான வேத ஆரியத்தையும் அதன் வழிப்பட்ட சமற்கிருதத்தையும் தேவ மொழியென்றும் சொல்லித் தமிழர் அதை முற்றும் நம்புமாறு செய்து விட்டதனால், தமிழில் அளவிறந்த வடசொற்கள் வேண் டாது கலக்கவும். அதனால் அது தன் வளங்குன்றித் தூய்மை யிழக்கவும், வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளப்படவும், இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தமிழர் தம்மைத் தாழ்த்திக் கொள்ள வும், நேர்ந்ததென அறிக. (தென்மொழி செப்பிடெம்பர் 1963.) சமற்கிருதச் சொற்கள் (1) சுட்டுச் சொற்கள் திரவிடத்திற் போன்றே ஆரியத்திலும், சுட்டுச் சொற்கள் அ, இ, உ என்னும் முத்தமிழ்ச் சுட்டெழுத்துக்களையே மூலமாகக் கொண்டன. தமிழ்ச் சுட்டெழுத்துக்கள் சமற்கிருதத்திற்கு முந்தியவையென்றும், ஆரியத்தின் மூல மொழியொடு தொடர்புடையனவென்றும், கால்டுவெலார் தேற்றமாகக் கூறியிருத்தலைக் காண்க. சமற்கிருதச் சொற்கள், திரிசொற்களாதலால், ஓரெழுத்துச் சொல்லா யிராது பல வெழுத்துச் சொல்லாகவே யிருக்கும். எ-டு: அத = அது, அப்படி, அங்கே. இஹ = இங்கே, இவ்விடத்தில், இவ்வுலகில். சில சுட்டுச் சொற்கள் இடமாறிச் சுட்டும். எ-டு: அத்ர - இங்கே, அதுனா = இப்பொழுது. சில சுட்டுச் சொற்கள் சேய்மை யண்மை யிரண்டையும் சுட்டும். எ-டு: அத்த (atas) = அதனால், இதனால். இகரச் சுட்டு ஏகார மாகவும் திரியும். எ-டு: ஏதத் (etad) = இது, இங்குள்ளது, இங்கு. ஏவம் = இப்படி. (2) பொதுச் சொற்கள் எ-டு: தமிழ் சமற்கிருதம் அக்கை அக்கா அடவி அடவீ ( t|) அம் - அம்பு, ஆம் அம்பு, அப் அம்பலம் அம்பர அம்மை அம்மா, அம்பா அரசன் ராஜன் ஆணி ஆணி ஆம் (yes) ஆம் இடைகழி தேஹலி உண்ணம் உஷ்ண உத்தரம் உத்தர (வடக்கு) உம்பர் உபரி உரு - உருவு - உருவம் ரூப உலகு - உலகம் லோக உவமை உபமா ஏமம் - யாமம் யாம கடுகு - கடுகம் கடுக ( t|) கரணம் கரண கரு - கரும் - கருமம் கர்மன் கலுழன் கருட (g) கன்னி கன்யா கன்னிகை கன்யகா கன்னிகை கன்யகா காக்கை காக்க காயம் ஆகாச கால்-காலம் கால காளம் (கருப்பு) கால காளி காலீ குடும்பு - குடும்பம் குடும்ப (t@) குண்டம் குண்ட கும்பம் கும்ப (bh) கோ (ஆ) கோ (g) கோபுரம் கோபுர (g) சகடம் சகட (t@) சங்கு - சங்கம் சங்க (kh) சமம் - சமர் - சமரம் சமர சவம் சவ (அமை-அவை-) சவை சபா (bh) சுட்கு - சுக்கு சுஷ்க (உவண் - உவணம்-) சுவணம் ஸுபர்ண தக்கு - தக்கணம் தக்ஷிண தண்டு-தண்டம் தண்ட தயிர் ததி (dh) தாமரை தாமரஸ தா-தானம் தான திடம் த்ருட (dh) திரு ச்ரீ, ஸ்ரீ துருவு த்ரு துலா துலா தூண் - தூணம் தூணா தூணி த்ரோண தூது - தூதன் தூத (துகள் - தூள் -) தூளி தூலி (dh) தோணி த்ரோணி நகர் - நகரம் நகர (g) (நடி-நடம்-) நட்டம் ந்ருத்த நாகம் நாக (g) (நளி-நடி-) நாடகம் நாடக (t@) நாடி (pulse) நாடி நாவி (நாவாய்) நௌ நாழி நாடி நாழிகை நாடிகா நிலை-நிலையம் நிலய நீர்-நீரம் நீர நீல்-நீலம் நீல பகு பஜ் (bh) பகு-பக்கம் பக்ஷ பகு-பக்கம் பாக (bh,g) படி-படிமை ப்ரதி-ப்ரதிமா பதி-பதம் பத (foot) பழு-பழம் பல (ph) பள் - பள்ளி பல்லி பதம்-பாதம் பாத பல்லி பல்லீ பலகை பலக (ph) (பிண்டி-பிடி) பிண்டம் பிண்ட புகு (உண்) புஜ் (bh) புடவி ப்ருத்வீ புருவம் ப்ருவ (bh) புழல்-புடல்- புடலை பட்டோலிகா பூ-பூதம் பூத (bh) (element) பூது-பூதம் பூத (bh) (demon) புழுதி-பூதி பூதி (bh) (சாம்பல்) பெட்டி பேட்டீ பெட்டகம் பேட்டக பெருகு ப்ருஹ் (dt) பொத்தகம் புதக மண்டு - மண்டபம் மண்டப மண்டு - மண்டலம் மண்டல மண்ணி - மணி மணி மத்தம் மத்த மத்தளம் மர்தல மத்து மந்த (th) மதி மதி (t) மயிர் ச்மச்ரு மயில் மயூர முன் - முன்னம் முனம் - மனம் மன மா (அள) மா மாத்திரம் மாத்ர மாத்திரை மாத்ரா மதி-மாதம் மாஸ முய-மய-மயல்-மால்-மாலை மாலா மா-மானம் மான மின்-மீன்-மீனம் மீன முகு-முகம் முக (kh) முத்து-முத்தம் முக்த மெது ம்ருது மேழம்-மேடம் மேஷ வள்-வட்டு-வட்டம் வ்ருத்த வடை வடா (பதி-) வதி வ வலம் பல (b) வள்-வளை-வளையம் வலய விள்-விட்டை விஷ்டா ( t|h) விடை வ்ருஷ, வ்ருஷப (bh) இச் சொற்கட் கெல்லாம் வேரும் மூலமும் தமிழிலேயே உள்ளன. தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை நாட்டற்குத் தா என்னும் சொல் ஒன்றே போதிய சான்றாம். தா-ச. தா, தத் (dad), இலத். தோ, கிரேக். திதோ. இச் சொல் தமிழில் தொன்று தொட்டுப் பெருவழக்காயிருந்து வருவதுடன், ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிட னுடைய. (தொல். எச். 48) அவற்றுள், ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே. (மேற்படி. 49) தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே. (மேற்படி. 50) கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே (மேற்படி. 51) தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. (மேற்படி. கிளவி. 29) என்னும் வரம்புகட் குட்பட்ட சிறப்புப் பொருளதாயும், தா என்னும் தந்தை பெயராயும், உள்ளது. கன்னடத்திலும் மலை யாளத்திலும் போன்றே ஆரியத்திலும் பொதுப் பொருளில் வழங்குவதால், அவ்வாரிய மொழிகள் தமிழினின்று இச் சொல்லைக் கடன் கொண்டுள்ளன என்பது, தெரிதரு தேற்றமாம். ஒரே தென்சொல் முதனிலையினின்று திரிந்த திரிசொற்கள், சமற்கிருதத்தில் வெவ்வேறு முதலெழுத்துப் பெற்று வெவ்வேறு மூலத்தின போல் தோன்று கின்றன. எ-டு: சாய் (முதனிலை). சாய்தல் = கோணுதல், வளைதல், விழுதல், படுத்தல், இறத்தல். சாயுங் காலம் = பொழுது சாயும் எற்பாடு. பொழுது சாய வந்தான் என்னும் வழக்கை நோக்குக. சாயுங் காலம் - சாயங் காலம் - சாய்ங் காலம் (கொச்சைத் திரிபு.) வடமொழியாளர் சாயங் காலம் என்பதைச் சாயம் + காலம் எனத் தவறாகப் பிரித்து, சாயம் என்பதை எற்பாட்டின் பெயராகக் கொண்டு, அதை வடமொழியில் ஸாயம் என்று குறித்துள்ளனர். சாய் - சாயை = சாயும் நிழல். நிழல் சாய்கிறது என்பது வழக்கு. சாயை - ச. சாய (cha#ya#). நிழல் வடிவத்தையும் நிறத்தையும் குறிக்கு மாதலால், சாயல், சாயம் முதலிய சொற்களும் தோன்றி யுள்ளன. சாய் - சாயி = படுத்தவன், பள்ளி கொண்டான். சேஷ சாயி = அரவணைத் துயின்றோன். தலை சாய்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சாய் - சயனம் = படுக்கை. சாய் - சா. விழுதலும் படுத்தலும் இறத்தலையுங் குறிக்கும். சா - சாவு - சவம். ஆள் சாய்ந்து விட்டான் என்னும் வழக்கை நோக்குக. சில தென்சொற்களினின்று, ஒத்த பொருட் கரணியமுள்ள வேறொரு சொல்லையும் படைத் திருக்கின்றனர் வடமொழியாளர். எ-டு: சுள் - சுர் - சுரம் = சுடும் பாலை நிலம். சுரம் - ஜ்வர = சுடும் காய்ச்சல் நோய். சில தென்சொல் முதனிலைகளினின்று, ஏராளமான புதுச் சொற் களைத் தோற்றுவித்துச் சமற்கிருதத்தை வளம்படுத்தி யுள்ளனர். எ-டு: பூ (முதனிலை). பூத்தல் = தோன்றுதல், உண்டாதல், இருத்தல். பூத்தலிற் பூவாமை நன்று (நீதிநெறி. 6) பூத்திழி மதமலை (கம்பரா. கும்பகர். 315) புகு - பொகு - பொகில் - அரும்பு. பொகில் - போகில் = அரும்பு. புகு - போ - போத்து = புதிதாய் வெடிக்கும் சிறு கிளை. பூ - பூது - பூதம் = தோன்றிய ஐம்பூதங்களுள் ஒன்று. (any of the five elements) பூ - bhu#. இதினின்று தான் புவனம், புவி, பூதி, பூமி, பவம், பவனம், பவித்ரம், பவிஷ்யம், பாவம், பாவகம், பாவி, பாவனை, பாவிகம், அபாவம், அனுபவம், அனுபவி, அனுபூதி, உத்பவம், சம்பு, தத்பவம், ப்ரபு, ப்ரபாவம், பரிபவம், ஸம்பவம், ஸம்பாவிதம், ஸம்பாவனை, சுயம்பூ முதலிய நூற்றுக் கணக்கான சொற்கள் பிறக்கும். தமிழர்க்கு எளிதாய் விளங்குமாறு இவை இங்கு தமிழெழுத்தில் எழுதப்பட்டுள்ளன. சில தென்சொற்கள், திரிந்தும் முன்னொட்டுப் பெற்றும் உருமாறி வடசொற்களாகி யுள்ளன. எ-டு: ஆயிரம் - அரம் - அர - ஸகர. சில தென்சொற்கள் மேலை யாரிய வழியாகத் திரிந்து, நம்ப முடியா அளவு சமற்கிருதத்தில் முற்றும் வடிவு மாறியுள்ளன. எ-டு: காண் - Teut. kun, ken, con, cun, can, know, L. gno, ழுமு. பnடி, ளுமவ. தn!யஜ. (ஜ்ஞா). காட்சி (அறிவு) - ஜ்ஞான. சில தென்சொற்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்து அமைத்துள்ளனர். எ-டு: விலங்கு - த்ரியச், அங்குற்றை - தத்ரபவத். சமற்கிருதம் இலக்கிய மொழியும் செயற்கை மொழியுமாதலால், பல பொருள்கட்கும் பொருட் பாகுபாடுகட்கும் விருப்பம் போல் இடுகுறிச் சொற்களைப் படைத்துள்ளனர். எ-டு: எழு முகில் (ஸப்த மேகம்) : சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலா வர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன. சங்கராபரணம், நாத நாமக் கிரியை முதலிய நூற்றுக் கணக்கான பண்ணுப் பெயர்களும் இடுகுறிச் சொற்களே. கல்லால மர நீழலிற் சிவபெருமானிடம் பாடங் கேட்ட ஆரிய முனிவர் பெயராகச் சொல்லப்படும் சனகர், சனந்தனர், சனாதரர், சனற் குமாரர் என்பனவும் இத்தகையனவே. இங்ஙனம், சமற்கிருதத்தில் ஐந்திலிரு பகுதி முழுத் தமிழ்ச் சொல்; ஐந்திலிரு பகுதி தமிழ் வேரினின்று திரிந்த திரி சொல்; ஐந்திலொரு பகுதி இடுகுறிச் சொல். பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதையர், தாம்வரைந்த குறுந்தொகை யுரையுள், நூலாராய்ச்சி என்னுந் தலைப்பின் கீழ், 44 சொற்களை வடசொல்லாகக் காட்டி, முதலியன என்னுஞ் சொல்லால் முடித்து, இவற்றிற் சிலவற்றைத் தமிழெனவே கொள்வாரும் உளர். என்று எழுதி யிருக்கின்றார். அவற்றுள், அகில், அமயம், அமிழ்தம், அரசன், அவை, ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், சேரி, தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், பக்கம், பணிலம், பருவம், பவழம், மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம் என்னும் முப்பத்தேழும் தென்சொல்லாம். அவி - அவிழ் = சோற்றுப் பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அமிழ்து - அமிது - அமுது = சோறு, உணவு. பருப் பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது என்பன உண்ணுங் கறிவகை களைக் குறிக்கும் கல்வெட்டுச் சொற்கள். அமுது செய்தல் = உண்ணுதல். அமுது படைத்தல் = உணவு பரிமாறுதல். திருவமுது = தெய்வப் படிமைக்குப் படைக்கப்படும் உணவு. அமிழ்து - அமிழ்தம். அமுது - அமுதம். கட்டிப் பொருளாயினும், நீர்ப் பொருளாயினும், உண்ணப் படுவதெல்லாம் அமுதமாம். உணவிற்குச் சுவையூட்டும் உப்பும் அமுதம் எனப்பட்டது. அமுது = 1. சோறு. 2. உணவு. வாடா மலரும் நல்லமுதும் (ஞானவா. பிரகலா. 8) 3. பால். (அக.நி.). 4. நீர். (பிங்.). அமுதம் = 1. சோறு (பிங்.) 2. பால். (பிங்.). 3. நீர். துலங்கிய வமுதம் (கல்லா. 5). உண்டவன் வாழ்வான்; உண்ணாதவன் சாவான். சோறும் நீரும் சாவைத் தவிர்ப்பதால் இரு மருந்தெனப்படும். தயிர் அமுதம் எனப்படுவதால் வெண்ணெயும் அமுதமாம். தேவர் மக்களினும் உயர்ந்தவ ராதலால், அவருணவு சிறந்ததாகக் கருதப்பட்டது. ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோ ரமுதம் புரையுமால் எமக்கென (தொல். கற். 5). அமுதம் என்னுஞ் சொல் வடமொழியில் அம்ருத என்று திரியும். அதை அ+ம்ருத் என்று பிரித்துச் சாவைத் தவிர்ப்பது என்று பொருள் கொண்டு, அதற் கேற்பத் தேவரும் அசுரரும் கூடித் திருப்பாற் கடல் கடைந்து வெண்ணெ யெடுத்ததாகக் கதை கட்டி விட்டனர். அக்கதையிற் பகுத்தறிவிற் கொவ்வாத பல செய்தி களிருத்தல் காண்க. மந்திரம் முதன் முதலாகத் தோன்றியது தமிழிலேயே. மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் (தொல். எச்ச. 53) முற்றத் துறந்த முழு முனிவர் தம் தூய வுள்ளத்தின் எண்ண வலிமை யால் ஆய்ந்து கூறும் மெய்ம் மொழி, நிறைமொழி மாந்தரின் நிறைவேறுங் கூற்று. மந்திரம் வாய்மை பற்றியும் வாய்ப்பது பற்றியும் வாய்மொழி யெனவும் படும். சிவனியச் சார்பான திருமந்திரமும் மாலியச் சார்பான திருவாய் மொழியும் தமிழில் உள்ளன. தத்துவ மசி ஓகநிலைக்குரிய தத்துவ மசி என்னும் சொற்றொடரை, பெருங் கூற்றியம் (மகா வாக்கியம்) என்று வடமொழியாளர் பறை யறைவர். அது முற்றும் தென் சொற்றிரி பென்பதை அவர் அறியார். தத் + த்வம் + அஸி = தத்த்வமஸி. தான், தாம் என்னும் பெயர்கள், முதற் காலத்தில் ஒருமையும் பன்மையுங் குறித்த படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக விருந்து, அகர வடி கொண்ட ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றிய பிற்காலத்தில், தற்சுட்டுப் பெயர்களாக (Reflexive Pronouns) மாறின. தான் (அவன், அவள், அது.) - ச. தத் = அவன், அவள், அது. x.neh.: திருமகன் - திருமான் - ச. ஸ்ரீமத். OE. thæt, E. that. வேதப் பெயர்கள் வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் நூற்றுக் கணக்கும் ஆயிரக் கணக்குமான தமிழ்ச் சொற்கள் இருப்பதுடன், வேதத்தின் பெயர்களும் தென்சொல் திரிபாகவே உள்ளன. விழித்தல் = கண் திறத்தல், பார்த்தல், அறிதல், விழி = அறிவு, ஓதி (ஞானம்). விழக் கண்டுந் தேறார் விழியிலா மாந்தர் (திருமந்.) விழி L. vide, OS. wit, Goth, wit, ON. vit, Skt. - வித் - வேத = அறிவு, அறிவு நூல், மறை. செவியுறுதல் = கேட்டல். செவியுறு - ச்ரு - ச்ருதி = கேள்வி, எழு தாக் கிளவியாய்க் கேட்டறியப் பட்ட ஆரிய மறை. வேதப் பிரிவின் பெயரான மண்டலம் என்பதும் தென்சொல்லே. மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி. மண்டி யிடுதல் = காலை வளைத்து நிற்றல் அல்லது இருத்தல். மண்டு - மண்டலம் - வட்டம், நாட்டு வட்டம், கால வட்டம், வட்டமான பொருள், நூற் பிரிவு. மண்டலம் - மண்டிலம். என் வடமொழி வரலாறு பார்க்க. மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும் (தொல். அகத். 41) தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்பன தொன்மை யான நாட்டுப் பெயர்கள். மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் = வட்டமிடுதல், பாட்டின் எல்லா அடிகளும் அளவொத் திருத்தல். மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும் (தொல். செய். 116) வட்டமிடும் அல்லது வட்டமாயிருக்கும், பாம்பு, நச்சுப் பூச்சி முதலிய உயிரிகளும், நரப்பிசைக் கருவிகளும், மண்டலம் அல்லது மண்டலி எனப் பெயர் பெற்றுள்ளன. ஊன், ஊம் என்னும் முன்னிலைப் பெயர்கள், நூன், நூம் என்று நகர மெய்ம் முதல் பெற்று, பின்னர் நீன், நீம் எனத் திரிந்தன. நூன், நூம் என்பன, வடதிரவிடத்துள் ஒரு வகையான சூரசேனிப் பிராகிருதத்தில் தூன், தூம் என்று திரிந்து, இன்ற அதன் வழிப்பட்ட இந்தியில் தூ, தும் என்ற வழங்குகின்றன. தூ (நீ) என்னும் இந்தி வடிவமே, இயல்பாகவும் குறுகியும் மேலை ஆரிய மொழிகளில் வழங்குகின்றது. OE. OS. thu#, OHG. du#, ON. thu, Goth. thu, L. tu, E. thou. ஏன், ஏம் என்பவற்றிற்கும் நான் நாம் என்பவற்றிற்கும் இடையே, யான் யாம் என்பவை இருப்பது போன்றே, ஊன் ஊம் என்பவற் றிற்கும் நூன் நூம் என்பவற்றிற்கும் இடையே, யூன் யூம் என்பன வும் இருந்தன. இவ் யகர அடியினின்றே ஆங்கில சாகசனீயம் யீ (ye) அல்லது யூ (you) என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரைத் தோற்றியுள்ளது. மதிப்புறவு பற்றித் தும் என்னும் பன்மைப் பெயரை இந்தியும், யூ என்னும் பன்மைப் பெயரை ஆங்கிலமும், ஒருமைக்கு வழங்கு வது போல், வேத ஆரியமும், தும் என்னும் பன்மைப் பெயரைத் த்வம் என்று திரித்து ஒருமைக்கும், யுவாம் யூயம் என்னும் யகர வடிப் பெயர்களை முறையே இருமை பன்மைக்கும், வழங் கிற்றுப் போலும். ஆகவே, நூம் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரின் திரிபே, இந்திய ஆரியத்திலுள்ள த்வம் என்னும் முன்னிலை யொருமைப் பெயர் என்று கொள்ளப்படும். அ சமற்கிருத முன்னிலை யொருமை நிகழ்கால வினையீறு ஸி. அ என்னும் வினை இதனொடு புணரும் போது ஈறு கெட்டு அஸீ என நிற்கும். ஆகவே, தத், த்வம், அஸி என்னும் முச்சொல் லும் சேர்ந்து, நீ அதுவாயிருக்கின்றாய் என்று பொருள் படும் தத்த்வமஸி என்னும் கூற்றியம் அமையும். தத் என்னும் சுட்டுப் பெயரினின்றே தத்வ (தத்துவம்) என்னும் சொல்லும் பிறக்கும். தத்வ = அதாயிருக்கும் தன்மை, உண்மையான தன்மை, உண்மை, மெய்ப் பொருள். வடசொல் என்பதற்கும் சமற்கிருதச் சொல் என்பதற்கும் ஒரு வேற்றுமை யுண்டு. தொன்று தொட்டு வடநாட்டில் தனிச் சிறப்பாக வழங்குஞ் சொல்லெல்லாம் வட சொல்லே. சமற்கிருதச் சொல் என்பது, வேத ஆரியர் வந்தபின் புதிதாக அமைக்கப்பட்ட ஆரியச் சொல். ஆரியர் வருமுன்பே, வட திரவிடர் (பிராகிருதர்) பல புதுச் சொற்களைப் புனைந்திருந்தனர். அவையும் வடசொல். ஆகவே, வடசொல் என்னும் பெயர், ஆரியமல்லாத வடநாட்டுச் சிறப்புச் சொற்கும், சமற்கிருதச் சொற்கும், பொதுவாம். எல்லாச் சமற்கிருதச் சொல்லும் வட சொல்லாகும்; ஆயின், எல்லா வடசொல்லும் சமற்கிருத மாகா. ஆதி என்னும் சொல் வடசொல்லே; சமற்கிருதமன்று. அது கழக இலக்கிய வழக்கில் இல்லை. ஆயினும், உண்டாதல் என்னும் பொருள் கொண்ட ஆதல் வினையினின்று அதைத் திரிப்பர் தமிழன்பர் சிலர். ஆக்குதல் = படைத்தல். அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் (திருவாச. 1: 42). இவ்வாட்சி அவர்க்குத் துணை செய்யலாம். சமற்கிருத இலக்கணம் தமிழிலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருதத்தில் முதன் முதலாகத் தோன்றிய இலக்கணம் ஐந்திரம். அதன் காலம் தோரா. கி.மு. 8-ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டாகும். அதன்பின், கி.மு.4 ஆம் நூற் றாண்டில் இயற்றப்பட்டது அஷ்டாத் யாயீ என்னும் பாணி னீயம். இரண்டும் எழுத்தும் சொல்லும் ஆகிய இரு கூறுகளையே கொண்டன. எழுத்தின் முறை, பிறப்பு, உயிர்மெய்த் தனி வடிவம், மாத்திரை, கிளவி (பதம்), புணர்ச்சி ஆகியவற்றில், சமற்கிருத இலக்கணம் தமிழையே தழுவியுள்ளது. எழுத்தின் வரி வடிவும், கிரந்தம் நாகரி என்னும் இரு வகையிலும் பெரும்பாலும் தமிழை ஒத்திருப்பது, கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும். பெயர் வினை இடை என்னும் தமிழ்ப் பாகுபாட்டையே, சமற்கிருதச் சொல்லி லக்கணமும் தழுவியுள்ளது. வேற்றுமைகள் இலத்தீனில் ஐந்து; கிரேக்கத்தில் ஆறு; சமற்கிருதத்தில் தமிழிற் போல் எட்டு. இதனால், வேற்றுமை யமைப்பில், சமற்கிருதம் தமிழைப் பின்பற்றிய தென்பது வெளிப்படை. சமற்கிருத இலக்கியம் பதினெண் தொன்மங்களும் (புராணங்களும்) இராமாயணம் பாரதம் ஆகிய மற வனப்புக்களும் (இதிகாசங்களும்) தவிர, இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பிற கலை யறிவியல் இலக்கிய மெல்லாம் தமிழ் முதனூல்களின் வழி நூல்களாம். சமற்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டபின், தமிழ் முதனூல்க ளெல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. சமற்கிருதத்திற்கு முந்திய இந்திய ஆரிய இலக்கியம் வேதம் ஒன்றே. வேதத்தைப் பெண்டிரும் சூத்திரரும் ஓதக் கூடாதென்பர். ஆயின், பெண்டிரும் சூத்திரரும் சிலர் வேத மந்திரங்களையே இயற்றி யிருக்கின்றனர். வேதம் இயற்றிய பெண்டிர் புலோமனை மகள் ஷசி காமை மகள் சிரத்தை சக்தி மகள் கோரவி அப் பிரீனா மகள் வாக்கு அகத்தியர் மனைவி லோபா முத்திரை வேதம் இயற்றிய பழங்குடி மக்கள் அரசர் (சத்திரியர்) மந்தாத்திரி, ஷிவி, வசுமனான், பிரதர்த்தனன், விவாமித்திரன், மது சந்தனன், ரிஷபன், ரேணு, அம்பரிஷன், பரதன், மேதாநிதி, நாபகன், இரகுகணன், வக்ஷப் பிரியன், புரூரவன், வேனன், சுதாசன், கிருத சமதன், தேவாபி, சந்தானு முதலியோர். தொழிலாளர் (சூத்திரர்) : கவஷன், ஐலுஷன் முதலியோர். கலப்புக் குலத்தார் : கக்ஷீவது (அங்க நாட்டு அரசனின் புழுக்கச்சி மகன்) போன்ற பலர். இப்பெயர்கள் வருண சிந்தாமணியில் உள்ளவாறே எழுதப் பட்டுள்ளன. ஆரியர் கருத்துப்படி, வட நாட்டு மக்களே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகைப் பாகுபாட்டினர்; தென் னாட்டுத் தமிழரும் திரவிடரும் ஆகிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அனைவரும் சூத்திரரே. ஆயின், ஆட்சி செய்யும் அரசரைச் சத்திரியர் என்றும், பொருள் கொடுக்கும் வணிகரை வைசியர் என்றும், புகழ்வர். இது அதிகாரமும் பொருளும் செய்யும் வேலை. வேள்வி செய்வித்த பண்டை மூவேந்தரையும், சத்திரியர் என்று புகழ்ந்தே வேள்வி செய்விக்கத் தூண்டினர். வேதத்தின் பின் வேள்வி முறைகளை விளக்கும் பிராமணங்களும், ஆரியர் தமிழரொடு தொடர்பு கொண்டபின் உபநிடதங்களும் குலவொழுக்க நூல்களாகிய தரும சாத்திரங்களும் தோன்றின. வேதம் செய்யுள் வடிவான மந்திரங்களைக் கொண்டது. முதன் முதல் தோன்றியது இருக்கு (ருக்) ஒன்றே. வேள்வி செய்தற் குரிய மந்திரங்களை அதினின்று பிரித்துத் தொகுத்தது எசுர் (யஜுர்). வேள்வியிற் பாடக் கூடிய மந்திரங்களைப் பிரித்துத் தொகுத்தது சாமம் (ஸாம). இங்ஙனம் ஒரு வேதம் மூவேதம் (வேதத்ரயீ) ஆயிற்று. அதன்பின் ஆறிலொரு பகுதி இருக்கு வேத மந்திரங் களைக் கொண்டதும், பெரும்பாலும் சாவிப்பு மந்திரங்களா லானதும், உரைநடை கலந்ததுமான, அதர்வனம் (அதர்வன்) தோன்றிற்று. அதன் பின்னரே நான் மறை (சதுர் வேத) என்னும் வழக்கெழுந்தது. வேதக் காலத்தின் பின், வேத சாத்திரங்களின் பொருளையும் பயனையும் சிறப்பையும் பெரும்பாலும் உரைநடையில் விளக் கும் உரையாகத் தோன்றியவை பிராமணம். காடுறைவு (வானப் பிரத்த) நிலையிற் பிராமணனுக்குப் பயன்படும் கொண் முடிபு நூல்கள் ஆரணியகம் (ஆரண்யக). துறவு (சந்நியாஸ) நிலையிற் பிராமணனுக்குப் பயன்படும் மெய்ப்பொருள் நூல்கள் உபநிடதம் (உப நிஷத்). உப நிஷத் = உடன் கீழிருக்கை. உப = உடன், நி - கீழ், ஸத் (Sad) = இருத்தல். ஆசிரியன் அடி யருகிருந்து அவன் நுவற்சியைக் கேட்டல் என்பதே விளக்கப் பொருள். பரம்பொருளறிவால் அறியாமையை ஓய்ந் திருக்கச் செய்கை என்பர் வடமொழியாளர். நன்கு அழித்தற்கு ஸாதனம் என்பர் பர். (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார். வேதத் தெய்வியம் பல்தெய்வியமே (Polytheism). பல்லொரு தெய்வியம் (Honotheism) என்று மாக்சு முல்லரும், ஒரு தெய்வியம் (Monotheism) என்று மாகடானெலும் (Mac Donell) கூறியது தவறாம். ஆரியர் பரம்பொருளறிவைத் தமிழரிடமே பெற்றனர். பல்சிறு தெய்வ வேள்வி மதத்திற்கும் பரம் பொருட் சமயத் திற்கும் மடுவிற்கும் மலை முடிக்கும் உள்ள தொலைவே. ஸத் என்னும் சொல்லும் தென் சொல் திரிபே. குத்து - குந்து, L. Sid, Sed, AS. Sitt, E. Sit, Goth. Sit. ON, Siti, OHG. Sizz, Skt. Sad. கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்குப் பின், கோவிலமைப்பு, படிமை யமைப்பு, வழிபடு முறை, பூசகன் தகுதி, கொண் முடிபு முதலிய வற்றைக் கூறும் தொழு மறைகள் தோன்றின. அவற்றுள், சிவ னியத்திற்குரியவை தோன்றியம் (ஆகமம்) என்றும், மாலியத்திற் குரியவை தொகுப்பியம் (ஸம்ஹிதை) என்றும், காளியத்திற்கு (சாக் தத்திற்கு) உரியவை பாவகம் (தந்திரம்) என்றும் பெயர் பெறும். இந்திய ஆரிய வளர்ச்சியின் ஐந்நிலைகள் (1) வடுகம் (தெலுங்கு) (2) வடதிரவிடம் (பிராகிருதம்) (3) மேலை யாரியம் (தியூத்தானியம், இலத்தீனம், கிரேக்கம்) (4) வேத மொழி (5) சமற்கிருதம் இந்திய ஆரியத்தில் தென்சொற்கள் கலந்த முக்காலம் (1) வடதிரவிடக் காலம் (2) வேதமொழிக் காலம் (3) சமற்கிருதக் காலம் தென் மொழிக்கும் வட மொழிக்கும் வேறுபாடு தென்மொழி வடமொழி 1. இயன் மொழி திரிமொழி 2. மெல்லோசை மொழி வல்லோசை மொழி 3. உலக முதன் மொழி மேலை யாரியத்தின் பின் தோன்றிய (இந்தைரோப்பிய மொழி (இந்தைரோப்பிய மொழிக் மொழிக் குடும்பத்தின் குடும்பத்தின் இறுதி முனை) தொடக்க முனை) 4. தூய ஓரினத் தாய்மொழி ஈரினக் கலவை மொழி 5. குமரி நாட்டு மொழி தனக்கென ஓர் இடமில்லாத நாடோடி மொழி 6. கலையும் அறிவியலும் கலையும் அறிவியலும் பற்றிய பற்றிய முதலிலக்கிய வழியிலக்கிய மொழி மொழி 7. உள்ளது சொல்லும் இல்லது சொல்லி ஏமாற்றும் மெய்ந் நூன் மொழி பொய்ந் நூன் மொழி 8. கடவுள் வழிபாட்டு சிறு தெய்வக் கொலை வேள்வி மொழி மொழி 9. இயற்கைப் பான்மொழி செயற்கைப் பான்மொழி 10. செம்மை வரம்பு மொழி செம்மை வரம்பிலா மொழி 11. பொருளிலக்கணம் பொருளிலக்கணம் இல்லா மொழி உள்ள மொழி 12. மன்பதை முழுவதையும் ஓரினத்தையே நாற் பிறவிக் ஒன்றுபடுத்தும் மொழி குலமாகப் பிரிக்கும் மொழி 13. பேச்சு மொழி இலக்கிய மொழி 14. மக்கள் மொழியென்று தேவமொழி யென்று ஏமாற்று ஒப்பு மொழி மொழி தேவ மொழியின் இயல்புகள் தொன்மை, முன்மை, இயன்மை, வியன்மை, தாய்மை, தூய்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, அம்மை, செம்மை, இனிமை, தனிமை, மறைமை, இறைமை என்னும் பதினாறும் தேவ மொழிக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பு களாம். இப்பதினாறும் உடையது தமிழ் ஒன்றே. வட மொழிக்கு ஓரிரு பண்புகளே உள்ளன. தமிழைப் போற் பிற மொழி கலவாது பேசத் தக்க மொழி உலகில் வேறொன்று மில்லை. ஆரிய மொழிகள் பிற தமிழ்ச் சொற்களை விலக்கினும், சுட்டுச் சொற்களை விலக்கவே முடியாது. ஆதலால், அவற்றின் உயிர் வாழ்விற்குத் தமிழ்த் துணை இன்றியமையாத தாம். ஆகவே, தமிழே தேவ மொழி என்று தெற்றெனத் தெரிந்து கொள்க. சமன் சமன்: அம்முதல் = பொருந்துதல், ஒத்தல் அம் - சம் - சமம் = ஒப்பு. சமம் - சமன் = துலைக்கோல். நிறுக்குமுன் இருபுறமும் ஒத்து நிற்கும் நிலை. சமம் - ஸம (வ.). (தி.ம.: 742) சரம் சரம் - ஸா நீர்ப்பொருள் ஒரு துளையினின்று நேராக விரைந்து ஒழுகுதலை, சர் என்று பாய்கிறது என்று கூறுவது வழக்கம். ஒழுகல் நீட்சிக் கருத்தை யுணர்த்தும். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். 800) சர் - சரம் = நீண்ட அல்லது நேரான மணிக்கோவை அல்லது மலர்த்தொடை. சரஞ்சரமாய்த் தொங்குகிறது என்னும் வழக்கை நோக்குக. சரக்கொன்றை = நேர் மலர்த் தொடையாகப் பூக்கும் கொன்றை. வடவர் காட்டும் ரு என்னும் சொற்கும் ஒழுகு, ஓடு என்பனவே பொருள். (வ.வ. 144-145). சருக்கம் சருக்கம் - ஸர்க (g) சருக்கம் - நூற்பிரிவு. வடவர் ருஜ் என்னும் சொல்லொடு பொருத்திக் காட்டுவர். அதற்கு விடு, எறி, வீசு, வெளிவிடு என்ற பொருள்களே உண்டு. (வ.வ. 144.) சருக்கரை சருக்கரை - சர்க்கரா வடமொழியில் சரள், சிறுகல், கூழாங்கல், கற்கண்டு என்று பொருள் தொடர்பு காட்டுவர். (வ.வ.144). சருவு சருவு - சருகு. சருகுதல் = சாய்தல். சருகு - சருக்கு. சருக்குதல் = சாய்தல், வளைதல், சறுக்குதல். சருக்கு - சருக்கம் = வட்டம், நூற்பிரிவு L. circum = வட்டம். சருக்கு - சருக்கரம் - சக்கரம் = வட்டம், உருளி, குயவன் சக்கரம், சக்கரப்படை, வட்டக்காசு, சக்கரப்புள், மாநிலம், செக்கு. சக்கரப் பாடித் தெருவு (பெரியபு. கலியனா 5). Gk kuklos, E cycle = சக்கரம். சருக்கரம் - சருக்கரை - சர்க்கரை - சக்கரை = வட்டமாக வார்க்கப் பெற்ற வெல்லக்கட்டி. ஒ.நோ. வட்டு = வட்டமான கருப்புக்கட்டி. சருக்கரம் - (சருக்காரம்) - சக்காரம் (மூ.அ.) = இனியதேமா. இன்றும் சக்கரைக்குட்டி என்று ஒரு மாம்பழப் பெயர் வழங்குதல் காண்க. சக்காரம் - அக்காரம் = சருக்கரை. அக்காரமன்னார் (நாலடி. 374) அக்காரடலை, அக்காரவடிசில் என்பன சருக்கரைப் பொங்கல் வகைகள். பதநீரை (தெளிவை) அக்காரநீர் என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. அக்காரம் என்று மாங்கனிக்கும் பெயர். அக்காரக்கனி நச்சுமனார் என்னும் புலவர்பெயர் அக்கனியால் வந்ததுபோலும்! சக்கரம் - (சக்கு) - செக்கு = எண்ணெயாட்டும் வட்டமான உரல். x.neh.: பரு-பெரு, சத்தான் - செத்தான். சக்கு - சக்கடம் - சக்கடா = கட்டை வண்டி. தெ. செக்கடா பண்டி. சக்கடம் - சகடம் = சக்கரம், வண்டி, தேர், வட்டில், முரசு. சகடம் - சகடி = வண்டி. சகடிகை = கைவண்டி. சகடு = வண்டி. சகடு - சாகாடு = வண்டி. பீலிபெய் சாகாடும் (குறள். 476). சகடு - சாடு = வண்டி. குறுஞ்சாட் டுருளை (பெரும்பாண். 188). சாடு - சாடுகம் = வண்டி. சகடு - சகடை = வண்டி, முரசு, அமங்கலச் சிறுபறை. சகடை - சகண்டை = முரசு, பறைப்பொது. சகடம் - சகோடம் = சக்கரப்புள், அதன் வடிவான யாழ். சகோடம் = சகோரம் = சக்கரப்புள். சக்கு - சங்கு =- உள் வளைந்துள்ள நந்துக்கூடு, வலம்புரி, இடம்புரி. புரிதல் - வளைதல். x.neh.: கோடு = சங்கு. சுரிமுகம் = சங்கு. வளை = சங்கு. வாரணம் = சங்கு. சங்கு - சங்கம் = 1. சங்கு. அடுதிரைச் சங்க மார்ப்ப (சீவக. 701). 1. கைவளை. சங்கங் கழல (இறை. 39 உரை). சக்கரம் முதல் சங்கு வரை பல சொற்கள் வளைவுக் கருத்தடிப் படையில் ஒரே தொடர்புடையனவாதலின், ஒருங்கு கூறப்பட்டன. சக்கர என்னும் வடசொல் வடிவிற்கு வடமொழியாளராற் குறிக்கப்பட்டுள்ள மூலம் க்ரு(செய்) என்பதே. மா.வி. அகரமுதலி சர் (car) என்னும் சொல்லை வினாக்குறியுடன் குறித்துள்ளது. சர் = இயங்கு இவ்விரண்டும், முன்னதின் பொருந்தாமையையும் பின்னதின் வன்புணர்ப்புத் தன்மையையும், அறிஞர் கண்டு கொள்க. சகடம் - சகட (ளÝ,வ@). மா. வி. அ. “of doubtful derivation” என்று குறித்திருத்தல் காண்க. (வ.வ. 135-137.) சல்லகம் சல்லகம் - ஜல்லக (jh) = தாளக்கருவி. சல் - சல்லகம் = சல்லென வொலிக்கும் தாளக்கருவி. சல்லரி சல்லரி - ஜல்லரீ (jh) சல்லரி = 1. திமிலைப்பறை. சல்லரி யாழ்முழவம் (தேவா. 89.2). 2. கைத்தாளம். (வ.வ.145). சல்லிக்கட்டு ஏறு தழுவல் என்னும் பண்டை வழக்கமே இன்று கள்ளர் மறவரிடைச் சல்லிக்கட்டு என்றும் மஞ்சுவிரட்டு என்றும் வழங்கி வருகின்றது. சல்லிக் கட்டு மாட்டுத் தொழுவை இன்றும் பாடி அல்லது பாடிவாசல் என்றழைப்பது இவ்வழக்கம் பண்டைக் காலத்தில் ஆயர்பாடியில் நிகழ்ந்தது என்பதை உணர்த்தும். (த.தி. 5). சலசம் சலசல - ஜலஜ்ஜல (jh) = நீர்த்துளிகள் விழும் ஒலிக்குறிப்பு. சலசல மும்மதஞ் சொரிய (சீவக. 82). (வ.வ.145) சலவை சலவை - க்ஷால சல் - சலவை = துணிவெளுக்கை. தெ. சலவ (c), க. சலவெ. வ. க்ஷல் = அலசு, சலவை செய். (வ.வ. 145). சலி சலி - சல் (c) சல் - சலி. சலித்தல் = அசைதல், மனங்கலங்குதல், சோர்வடைதல், அருவருப்புக் கொள்ளுதல், சல்லடையாற் சலித்தல் அல்லது சுளகால் (முறத்தால்) தெள்ளியெடுத்தல். சலியடை - சல்லடை. க. ஜல்லிசு, தெ. ஜல்லிஞ்சு = சல்லடையாற் சலி. அசைதல், நடுங்குதல், கலங்குதல், நெறி திறம்புதல் என்னும் பொருள்களே வடசொற்குள. (வ.வ. 145) சவ்வு சவ்வு - சவி (ch) = தோல், மீந்தோல். சவ் - சவ்வு = மெல்லிய தோல், மூடுதோல். (வ.வ. 145). சவம் சவம் - சவ = பிணம். சா - சாவு - சாவம் - சவம் = பிணம். (வ.வ. 10). வடவர் சூ அல்லது ச்வி என்னும் சொல்லைக் காட்டி, ஊதிப் போனது என்று பொருட்காரணங் கூறுவர். ச்வி = ஊது, வீங்கு. (வ.வ. 145-146). சவலை சவலை - சபல (c) சவளுதல் = வளைதல், துவளுதல். சவள் - சவல் - சவலை = 1. மெலிவு. தாய்ப்பாலில்லாக் குழந்தையின் மெலிவு. ம.சவல, தெ. த்சவிலெ. சவலை மகவோ சிறிதும் அறிந்திடாதே (தண்டலை. சத. 97) 2. தாய்ப்பாலின்றி மெலிந்த குழந்தை. சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ (திருவாச. 50, 5) சவலைப் பிள்ளை என்பது உலகவழக்கு. 3. உறுதியின்மை. சவலை நெஞ்சமே (வைராக். சத. 3) 4. இரண்டாம் அடி குறைந்த அளவியல் வெண்பா. வடவர் கம்ப் என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது குறிக்கும் பொருள் நடுக்கம். தமிழ்ச்சொற்கில்லாத பல பொருள்களை வடசொல் குறிக்கின் றது. அவை மீன், காற்று, இதள் (பாதரசம்), கருங்கடுகு, ஒருவகை விரை, ஒருவகைக் கல், ஒருபேய், திப்பிலி, நாவு, கற்பிலா மனைவி, சாராயம், திருமகள் என்பன. (வ.வ. 146). சவை சவை - சர்வ் (c) சப்பு - சவை. சவை - சபா (bh) (வ.வ. 146) சளப்பு சளப்பு - ஜ்ல்ப் சளப்புதல் = அலப்புதல். (வ.வ. 146). சன்னம் சன்னம் - தனு. க.தெ.சன்ன. L. tenuis. (வ.வ.146). சாகாடு சாகாடு : சருக்கு - சக்கு - சக்கடம் - சகடம் - சகடு - சாகாடு - சாடு. சகடு - சகடி - சகடிகை. சகடம் - சகட்ட (வ.). (தி.ம. 742). சாணம் சாணம் - சகண (ch, g) சண்ணுதல் = நீக்குதல். கீழாநெல்லி ... காமாலைகளைச் சண்ணும் (பதார்த்த. 300) சண் - (சாண்) - சாணம், சாணி = மாட்டுப் பவ்வீ. வடவர் பல்வேறு மலத்தையும் சாணியையும் குறிக்கும் சக்ருத் என்னும் சொல்லினின்று சக்ன் என்றொரு மூலத்தை வலிந்து திரிப்பர். (வ.வ. 146-147). சாணை சாணை - சாண, சான. சவள் - சாள். சாளுதல் = வளைதல். சாள் - சாய். சாய்தல் = வளைதல். சாள் - சாளை = வட்டமான குடிசை. சாளை - சாணை = 1. வட்டமான சாணைக்கல். ம. சாணக்கல்லு. f., து. சாணெக்கல்லு. 2. வட்டமான புளியடை. 3.வட்டமான பணியாரவகை, 4. வட்டமான கதிர்ச் சூடு. வடவர் சோ (தீட்டு) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சாணைக்கல் ஒன்றற்குத்தான் சிறிது பொருந்தும். (வ.வ. 147). சாத்தன் சாத்தன் - சாதா சாத்து - சாத்தன் = வணிகச் சாத்தினர் வணங்குந் தெய்வம். பெருஞ்சாலை வழிகளிற் சாத்தன் (ஐயனார்) கோவிலிருப் பதையும், அங்குப் பொதிசுமத்தற்கேற்ற குதிரைகள் போன்ற உருவங்கள் செய்து வைத்திருப்பதையும், நோக்குக. பண்டைக்காலத்திற் பெரும்பாலும் வணிகரே சாத்தன் என்னும் பெயர் தாங்கியிருந்தனர். எ-டு: கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். (வ.வ. 147). சாத்து சாத்து - ஸார்த்த சார் - சார்த்து - சாத்து = 1. கூட்டம். சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் (கல்லா. 63: 32) 2. வணிகர் கூட்டம். சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11:190) (வ.வ. 147) சாந்து சாந்து - சந்தன (c) சார் - சார்த்து - சாத்து, சாத்துதல் = 1. பூசுதல் (பிங்.) 2. திரு மண் காப்பிடுதல். தன்றிரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா. கடிமண. 49) 3. சந்தனம் பூசுதல். சாத்தியருளச் சந்தன முக்கசும் (sI.I.II.187) சாத்து - சாந்து = 1. சுண்ணாம்புச் சேறு. 2. அரைத்த சந்தனம் புலர்சாந்தின் ... வியன்மார்ப (புறம் 2. சந்தனமரம். ம. சாந்து) சாந்து சாய் தடங்கள் (கம்பரா. வரைக்காட்சி. 44) 4. நெற்றிப் பொட்டுப் பசை. க. சாது. 5. எட்பசை. வெள்ளெட் சாந்து (புறம் 246). சாந்து - சாந்தம் = சந்தனம். சாந்த நறும்புகை (ஐங்குறு 253). சாந்து - சந்து = சந்தன மரம் வேரியுஞ் சந்தும் (திருக்கோ. 301). சந்து - சந்தனம். (வ.வ. 147-148). சாமை சாமை - ச்யாமா. சமை - சாமை சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும். என்பது பழமொழி. வடவர் கரியது என்று பொருட்காரணங் கூறுவர். சாமை கரிதாயின்மை காண்க. (வ.வ.148). சாய் சாய் - சீ (இ.வே.) சாய்தல் = படுத்தல். திருக்கையிலே சாயு மித்தனை (ஈடு. 2:7:5) சாய்கை = படுக்கை. வ.சய = படுக்கை, தூக்கம். சயன = படுக்கை, தூக்கம். (வ.வ. 148). சாயுங்காலம் சாயுங்காலம் - சாயம் (ஸ) - இ.வே. கதிரவன் சாயுங்காலத்தைப் பொழுது சாய்கிற வேளை என்பது இன்றும் பெருவழக்கான உலக வழக்கு. ஆங்கிலரும் decline என்று கூறுதல் காண்க. சாயுங்காலம் - சாயங்காலம் - சாய்ங்காலம். இது வெளிப்படை. வடவர் ஸோ என்பதை மூலமாகக் காட்டுவர். ஸோ = அழி, கொல், முடி. சாயம் = நாள்முடிவு. (வ.வ. 148). சாயை சாயை - சாயா (ch) - இ.வே. சாய் - சாயை = நிழல். நிழல் சாய்கிறது என்பதே வழக்கு. கி.கிய = நிழல். (வ.வ.148). சாலை சாலை - சாலா (அ.வே.) சாலுதல் = நிறைதல், கூடுதல். சால் - சாலை = கூடம். பட்டறை, தொழிலகம், அலுவலகம், அகன்ற பாதை. (வ.வ.149). சாவி சாவி-சப் சா - சாவி (பி.வி.). சாவித்தல் = அங்கதம் பாடி அல்லது சினந்துரைத்துச் சாகப் பண்ணுதல், சாவு குறித்த சொற்களைச் சொல்லித் திட்டுதல். வாழ்த்து (வாழவை) என்னும் பிறவினைக்கு எதிராகச் சாவி என்னும் சொல்லே பொருத்தமாயிருத்தல் காண்க. இனி ஒருவன் கடுமையாகத் திட்டும் போது. சாவிக்கிறான் என்று கூறும் உலக வழக்கையும் நோக்குக. சாவி - சாவம் - சாப (வ.). (வ.வ. 149). சாறு சாறு - ஸார (இ.வே) தெள் - தெறு - தெற்று = தெளிவு. தெற்றென = தெளிவாக. தெறு - தேறு. தேறுதல் = தெளிதல், துணிதல். தெ. தேரு. தேறு - தேறல் = தெளிவு, தெளிந்த கள், தேன், தெளிந்த சாறு (சாரம்). கரும்பினின் றேறலை (திருவாச. 5:38). தேறு - சேறு = 1. கள். சேறுபட்ட தசும்பும் (புறம். 379:18). 2. தேன் சேறுபடு மலர்சிந்த (வீவக. 426). 3. பாகு கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப். 75:6). 4. இனிமை தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல். 26). 5. மணிநீரோட்டம். 6. சாறு (சாரம்). சேறு சேர்கனி (சூளா. சுயம். 66). ஒ.நோ. தாறு - சாறு - காய்கனிக் குலை (பிங்.). சேறு - சாறு = 1. கள் (பிங்.). 2. நறுமணப் பண்டங்கள் ஊறின நீர். சாறுஞ் சேறு நெய்யு மலரும் (பரிபா. 6:41) 3. மிளகுநீர். சாற்றிலே கலந்த சோறு (அருட்பா. 4, அவாவறு. 2). க. சாறு, தெ. து. சாரு. 4. இலைகனி முதலியவற்றின் நீர் (சாரம்). கரும்பூர்ந்த சாறு (நாலடி. 34) k., து. சாரு. (வ.வ.149) சான்றுவகை ஆவணம் - பத்திரம் (Record) அத்தாட்சி - மெய்ப்பிக்கும் கையெழுத்து (ஹத சாக்ஷி) சான்று - ஆதாரம் (Evidence) கரி (witness) (சொல். 42). சிச்சிலி சிச்சிவி - தித்திரி (வே.) சிச்சிலி = 1. மீன்கொத்தி (சீவக. 2199, உரை). 2. கதுவாலி வகை. அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும் (திருமுறைகண் 17) (வ.வ.150) சித்தம் சித்தம் - சித்த (c) வடவர் சித்தன் என்னும் சொல்லை, ஸாத் (dh) என்பதன் திரிபான ஸித் (dh) என்பதனொடு தொடர்புபடுத்தி, ஸித்த (siddha) என்றும், சித்தியை ஸித்தி (siddhi) என்றும், காட்டுவர். ஸித் = முடி, கைகூடு. ஸித்தி = முடிவு. முடிபு, கைகூடல், பேறு. ஸித்த = அரும்பேறு பெற்றவன். சித்தன் ஆற்றலைத் தமிழிற் சித்து என்பதே மரபு. சித்து விளையாடல் என்பது உலக வழக்கு. கலம்பக வுறுப்பும் சித்து என்றே பெயர் பெற்றிருத்தல் காண்க. (வ.வ. 150). சித்திரம் சித்திரம் - சித்ர (c) - இ.வே. செத்தல் = ஒத்தல். செத்து = ஒத்து, போல (தொல். பொ. 286, உரை). செ + திரம் = செத்திரம் - சித்திரம் = ஒப்பு. ஓவியம், பலவண்ணம், திறமை, புதுமை. திரம் ஒரு தொழிற்பெயரீறு. எ-டு: மாத்திரம், மோட்டிரம் - மோத்திரம் - மூத்திரம். சித்திரக் கம்மம் = ஓவிய வேலைப்பாடு. செந்நூல் நிணந்த சித்திரக் கம்மத்து (பெருங். உஞ்சைக் 35:98). சித்திரக்கம்மி = ஓவியத் தொழிலமைந்த ஆடைவகை (சிலப். 74: 108, உரை). சித்திரச் சோறு = பலநிறச் சோறு. சித்திரச் சோற்றிற் செருக்கினேன் (அருட்பா 6, அவா வறுப்பு. 7). சித்திரப் படம் = பல வண்ண அல்லது பூத்தொழிலமைந்த உறை. சித்திரப் படத்துட் புக்கு (சிலப். 7:1) சித்திரப் பாலடை, சித்திரப் பாலை என்பன பூண்டு வகைகள். சித்திரப் புணர்ப்பு = வல்லெழுத்தை மெல்லெழுத்தாகக் கொள்ளும் பண்ணீர்மை (சிலப். 3:56, உரை). சித்திரமாடம் = ஓவியம் வரைந்த மாளிகை. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் (புறம். 59) சித்திர வண்ணம் = நெடிலுங் குறிலும் விரவிய ஓசை. சித்திர வண்ணம் நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே (தொல். 1478) செய்தல் = ஒத்தல். வேனிரை செய்த கண்ணி (சீவக. 2490) செள் - செறு - செறி. செள் - செண்டு - செண்டை = இரட்டை. செள் - செய் - செ. ஒ.நோ. பொய் - பொ. பொத்தல் = துளைத்தல். சித்திரம் - சித்திரி. சித்திரித்தல் = சித்திரம் வரைதல். சுவடித்தல், வண்ணித்துப் பேசுதல். வடவர் சித்ர என்பதைச் சித் என்பதன் திரிபாகக் கொண்டு, தெளிவாய்த் தெரிதல், விளக்கமான நிறம், வண்ண வேறுபாடு, வண்ணப்படம் என்று வலிந்து பொருத்திக் காட்டுவர். சித்திரித்தல் என்னும் வினை வடமொழியிலில்லை. (வ.வ.150-151). சித்து சித்து - சித் (c) - இ.வே. செத்தல் = 1. கருதுதல். அரவுநீ ருணல்செத்து (கலித். 45) 2. அறிதல். துதிக்கா லன்னந் துணை செத்து (ஐங். 106) செ - செத்து = கருத்து. அறிவு. செத்து - சித்து = கருத்து, அறிவு. x.neh.: செந்துரம் - சிந்துரம். சித்து - சித்தன் = அறிவன், முக்கால அறிவுள்ள முனிவன். மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் (தொல். 1021) சித்து - சித்தம் = கருத்து, மனம், அறிவு, ஓதி, (ஞானம்). சித்தம் - சிதம் = மனம், அறிவு, ஓதி. வடவர் சி (ci) என்றொரு செயற்கை மூலங்காட்டுவர். அது செ என்பதன் திரிபே. சித் = கருது, அறி, காண், கவனி. (வ.வ. 150). சிதம்பரம் சிதம்பரம் - சிதம்பர (c) சிற்றம்பலம் - (சித்தம்பலம்) - (சித்தம்பரம்) - சிதம்பரம். தில்லையிற் சிற்றம்பலம் பேரம்பலம் என ஈரம்பலங்களுண்டு. அவற்றுள் சிற்றம்பலமே இறைவன் திருக்கோயில். சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் (திருக்கோ.). வடவர் திரிபு வடிவை இயல்பு வடிவாகக் கொண்டு அறிவுவெளி (ஞானாகாசம்) என்று பொருள் புணர்க்க முயல்வர். அம்பலம் (மன்றம்) வேறு; அம்பரம் (வானம்) வேறு. மேலும், சித். அம்பர என்னும் இரு வடசொற்களும் தென்சொற்றிரிபே என்பதை அறிக. சிதை சிதை - சித் (chid) - இ.வே. சிதைத்தல் = பிரித்தல், குலைத்தல், பிய்த்தல், கெடுத்தல், வெட்டுதல், அழித்தல். சிதர்த்தல் = பிரித்தல், குலைத்தல், வெட்டுதல். (வ.வ. 152). சிந்தாமணியின் செவ்விய வனப்பியல் செய்யுள், ஒன்றாய்த் தனித்திருப்பது பற்றித் தனிநிலை என்றும், பலவாய்த் தொடர்ந்திருப்பது பற்றித் தொடர்நிலை என்றும் இரு வகைப்படும் தொடர் நிலையும், சொற்றொடர்நிலை. பொருட் டொடர் நிலை என இரு திறப்படும். செய்யுள் நூல்களையெல்லாம் பிற்காலத் திலக்கணியர் வடநூற் பாகுபாட்டைத் தழுவிச் சிறு காப்பியம், பெருங்காப்பியம் என இரு வகையாகப் பகுப்பர். தொல்காப்பியர் உள்ளிட்ட தொல்லா சிரியரோ, அவற்றை அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபென எண் வகை வனப்பாகக் பகுப்பர். ஆகவே, வனப்பு என்பதே அவர் செய்யுள் நூற்கு இட்ட பெயராம். தனிநிலைச் செய்யுளும் ஓராயிரம் அடியும் ஈராயிரம் அடியும் கொண்டு ஒரு காவிய மாகலா மாதலானும். தொடர்நிலைச் செய்யுள் காவியமாய் மட்டுமன்றி. இலக்கண நூலும் மருத்துவ நூலும் அற நூலும் பிற நூலுமாயிருக்கலா மாதலானும். தொடர்நிலைச் செய்யுள் என்பது காவியம் என்னும் வடசொற்கு நேரான தென்சொல்லன்று. இதுபோது தமிழிலுள்ள வனப்புகளுள், சிந்தாமணியும் சிலப் பதிகாரமும் தலைசிறந்தன என்பதை, நடுநிலையறிஞர் எவரும் மறார். ஒரு வனப்பு சொற்சுவை, பொருட்சுவை, யாப்புச்சுவை, அணிச் சுவை என்பவற்றிற் சிறந்திருத்தல் மட்டும் போதாது. மிகுந்த சொல் வளமும் இலக்கணச் செம்மையு முடையதாயும். பலகலையியல்பை விளக்குவதாயும், வருங் காலத்தில் வரையப்படும் வரலாற்று நூற்குச் சான்றாகப் பல செய்திகளைக் கொண்டதாயும், சிறந்த வாழ்க்கை வரம்புகளை வகுத்து உயர்ந்த குறிக்கோளை வலியுறுப்பதாயும், சொல்லாராய்ச்சிக்குத் துணை செய்வதாயும் இருத்தல் வேண்டும். இவ் வளவைப்படி, சிந்தாமணியின் வனப்பியற் செம்மையை ஆராய்வாம். (1) சொற்றிறம் 1. சொன்னயம் 1. இன்சொற்புணர்ப்பு தேவர் இசைத்தமிழில் முற்றத் துறைபோகி இன்னிசை யின்பத்தை நுண்ணிதினுகரும் எஃகுச் செவி படைத்தவராதலின் இன்னோசைச் சொற்களைத் தேர்ந்தாளுவதோ டமையாது. செவிக்கின்பஞ் சிறக்குமாறு இன்னோசைச் சாரியை கொண்டும் சொற்களைப் புணர்த்துக் கொள்கின்றார். எ-டு: அண்ணலங்குமரன், ஆழியங்கழனி, மயிலஞ்சாயல், முல்லையங் கோதை. 2. இலக்கணச் செம்மை மதவியல் பற்றிச் சிந்தாமணியில் பல வடசொற்கள் புகுத்தப்பட்டி ருப்பினும், அவற்றை யாண்டும் தமிழியல்பொடு பொருந்தத் தற்பவமாகவே வடித்தாளுகின்றார் தேவர். கம்பராமாயணத்தில் லோபேன் என்னும் லகர முதற்சொல் வந்துள்ளது போல. அன்முதலெழுத்தை மொழி முதற்கொண்ட ஒரு வடசொல்லும் சிந்தாமணியில் வந்தில்லை. 3. சொற்றூய்மை சிந்தாமணிச் சொற்றொகுதி, அந் நூற்காலத்தோடு பொருந்த நோக்கின், எத்துணையோ தூய்மையானதாகும். பெரும்பான்மை யான செய்யுட்கள் தனித்தமிழிலேயே இயன்றுள்ளன. வடசொற்கள் வந்துள்ள சில செய்யுட்களிலும், அவை நூற்றுக்கு அரை முதல் முப்பது வரையே வந்துள்ளனவாதலின். சிந்தாமணியின் செந் தமிழ்த்திறத்தைப் பெரிதும் சிதைக்கவில்லை. சாமெனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றும் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவோ டொப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார் (1605) என்னுமிச்செய்யுள் தனித்தமிழில் இயன்றது. காமன், திரு என்பன தென்சொல்லே. பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதி ரீன்று பின்னாக் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேற் பிணிசெய் பன்மா உழவிர்காள்! மேயும்; சீல வேலியுய்த் திடுமின், என்றான். (379) இதில், சீலம் என்னும் ஒரு சொல்லே வடசொல்லாம். அதுவும் சீர் என்னும் தென்சொற்கு இனமாதலின். அதை இரு மொழிப் பொதுச்சொல் எனக் கோடலே சாலச்சிறந்ததாம். குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் விரல்கவர்ந் தெடுத்த கீதம் மிடறெனத் தெரிதல் தேற்றார் சுரரொடு மக்கள் வீழ்ந்தார்; சோர்ந்தன புள்ளு மாவும்; உருகின மரமுங் கல்லும்; ஓர்த்தெழீஇப் பாடுகின்றான். (723) இதில், கீதம் என்னும் ஒன்றே தெளிவான வடசொல். சுரர் என்பது இருமொழிப் பொது. குரோதனே மானன் மாயன் கூர்ப்புடை யுலோப னென்பார் விரோதித்து விரலிற் சுட்டி வெருவரத் தாக்க வீரன் நிரோதனை யம்பிற் கொன்றான் நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ வெகுண்டனன்; அவரும் வீழ்ந்தார். (3080) இதில், குரோதன், உலோபன், விரோதி, வீரன், நிரோதன், நித்தை (நித்திரை), பசலை (பிரசலை), விராகு (விராகம்), என்னும் எட்டும் வடசொற்கள். மானன், மாயை என்பன அருக சித்தாந்தச் சொற்களாயினும் முறையே மானி மாய் என்னும் தென்சொல் லடியாய்ப் பிறந்தவை. இச் செய்யுளில் எண் வடசொற்களிருப் பினும், செந்தமிழோசை சிதையா திருத்தல் காண்க. தீந்தமிழ்ச் சிலப்பதிகாரத்திலும், மதுரைத் தமிழ் மணிமேகலையிலுமே வட சொற்கள் பயின்றிருத்தலின், சிந்தாமணிக்கு அவற்றால் சிறப் பிழப்பில்லை என்க. தேவர், பல இடங்களில், அருக சித்தாந்தக் குறியீடுகளான வடசொற் களையும் தூய தமிழில் மொழி பெயர்த்தே செல்கின்றார். 3081 ஆம் செய்யுளில், ஞானம், தரிசனம். அந்தராயம் என்னும் வடசொற்கள், முறையே, உணர்வு, காட்சி, பேறு என மொழி பெயர்க்கப்பட் டிருத்தல் காண்க. 2. சொல் வளம் 1. அரும்பொருட் பெயர்கள் எ-டு: அச்சுறு கொழுந்தொடர் - மரக்கட்டைகளில் இரும்பைத் தைத்து யானையின் வேகத்தை அடக்குமாறு அதன் கழுத்தில் மாலை போல இடுவதொரு கருவி. அடியூசி - அடியொட்டி (தப்பியோடுவார் அங்ஙனம் ஓடாதவாறு நிலத்தில் நட்டு வைக்கும் முள்). அணிகம் - ஊர்தி. இளவுடையான் - இளவரசன். கோட்டகம் - பயிருள்ள நீர் நிலை. பண்ணுரை - புனைந்துரை (உபசார வார்த்தை) பாம்புரி - அகழியின் கீழ்ச் சூழ அமைத்த ஒரு மதிலுறுப்பு முகவியர் - ஏற்றுக் கொள்பவர். வலஞ்சுழி - நந்தியாவட்டம். வடகம் - ஓர் உடை வகை. 2. அருந்தொடர் மொழிகள் தேவர் சொல்லாட்சித் திறனில் மிக விஞ்சியவராதலின், வேண்டிய வாறெல்லாம் விழுமிய தொடர்மொழிகளைப் புனைந்து கொள்கின்றனர். எ-டு: கட்டழலெவ்வம் - இணரெரி தோய்வன்ன இன்னா. பொன் வண்ணப்புழுக்கல் - பருப்புச்சோறு. நாண் மெய்க் கொண்டீட்டப்பட்டார் - நாணமே வடிவாய பெண்டிர். (2) பொருட்டிறம் 1. கலைகள் நீர்நின் றிளகிற் றிதுவேண்டா; நீரின் வந்த திதுபோக; வார்நின் றிளகு முலையினாய்! வாட்புண் ணுற்ற திதுநடக்க; ஒரு முருமே றிதுவுண்ட தொழிக; ஒண்பொ னுகுகொடியே! சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விது. (718) என்றான். இது இசை பற்றியது. இங்ஙனமே. யாழ் மரத்தின் ஏனைக் குற்றங் களும், நரப்புக் குற்றங்களும், யாழுறுப்புகளும், யாழ்வகைகளும், பாடும் முறையும் காந்தருவதத்தையா ரிலம்பகத்தில் கலைமுறைப் படி கூறப்பட்டுள்ளன. தோற்பொலி முழவும் யாழும் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் தோற்றினாள் முகஞ்செய் கோலம் துளக்கினாள் மனத்தை யெல்லாம் (675) இது கூத்துப்பற்றியது. மொழிந்துநஞ் சுகுத்த லச்சம் இரைபெரு வெகுளி போகம் கழிந்துமீ தாடல் காலம் பிழைப்பென வெட்டி னாகும்; பிழிந்துயி ருண்ணுந் தட்டம் அதட்டமாம் பிளிற்றி னும்பர் ஒழிந்தெயி றூனஞ் செய்யுங் கோளென மற்றுஞ் சொன்னான். (1286) இது (நச்சு) மருத்துவம் பற்றியது. இதற்கடுத்த இரு செய்யுட்களும் இதுவே. ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ ருலாமுகிற் கிழிக்கு மாட (2527) சூல நெற்றிய கோபுரத் தோற்றமும் (303) பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக் கன்னிமூ தெயில் (1250) இவை சிற்பம் பற்றியன. சூலம் - இடி தாங்கி. 2. தொழின்முறை நாமக ளிலம்பகத்தில், உழவுத்தொழில் மிக விரிவாக வரையப் பெற்றுளது. கோவிந்தையா ரிலம்பகம், காந்தருவதத்தையா ரிலம்பகம். மண்மக ளிலம்பகம் ஆகிய மூன்றனுள்ளும், போர்த் தொழில் அக்கால முறைப்படி அழகாகக் கூறுப்பட்டுள்ளது. பொற்கம்மியம் பற்றிய சில செய்திகள் ஆங்காங்குக் காணப்படு கின்றன. எ-டு: கறந்த பாலினுட் காசில் திருமணி நிறங்கி ளர்ந்துதன் நீர்மைகெட் டாங்கு (1325) கந்துக்கடன் என்னும் ஆட்சிறப்புப் பெயர், ஒருகால், கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும் வணிகத் தொழிலை உணர்த்த லாம். காந்தருவதத்தையா ரிலம்பகத்தில் கடல் வாணிகம் கூறப் பட்டுளது. 3. விளையாட்டுகள் கோட்டிளந்த கர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற் சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக் காட்டியார்க்குங் கெளவையுங் கடியுங்கெளவை கெளவையே (73) இது, தகர்ப் போர், சேவற் போர், காடைப் போர் முதலிய ஆடவர் விளையாட்டைக் கூறுகின்றது. இதில், அவற்றின் ஊறுளார் என்று தேவர் குறிப்பது, அவரது அருட்பொலிவை உணர்த்தும். வைத்த பந்தெ டுத்தலும் மாலை யுட்க ரத்தலும் கைத்த லத்தி னோட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் பத்தி யிற்பு டைத்தலும் பைய ரவ்வி னாடலும் இத்தி றத்த பந்தினோ டின்ப மெல்லை யில்லையே. (151) இது மகளிர் விளையாட்டாகிய பந்தாட்டு. குணமாலையா ரிலம்பகத்தில், இருபாலார்க்கும் பொதுவான இளவேனில் நீர் விளையாட்டு விரிவாக வருணிக்கப்பட்டுள்ளது. 4. பழக்க வழக்கங்கள் அறுபத்துநாள்கலையுங் கற்றல், இழந்த அரசை எத்திறத்தும் கைப்பற்றுதல், வேண்டியவரை உயர்த்தி வேண்டாதவரை அடியோடழித்தல். பல மகளிரை மணத்தல், திரிபன்றி எய்தல் முதலிய அருஞ்செயல்களை யாற்றி மறக் கைக்கிளை மணம் புரிதல். பார்ப்பனர்க்குப் பெரும்பொற்கொடை அளித்தல், குற்றவாளிகட்கு நடை விளக்கெரித்தல் முதலிய கடுந்தண்டம் விதித்தல் இவை முதலியன பழக்க வழக்கங்கள். 5. அரசர் முதலியவர் வழக்கங்கள் வளமனைகளில் வாழ்தல். கொல்லாப்பண்டி, சிவிகை முதலியன வூர்தல், ஐம்புல வின்பமும் ஆசை தீர நுகர்தல் இவை முதலியன அரசர் வழக்கங்கள். நறுஞ்சுண்ணம் பூசுதல், கிளி பூவை முதலியன வளர்த்தல், முல்லைக் கொடியை இல்லத்தில் வளர்த்து அதன் முதற்பூ மலர்ச்சி யன்று விழவயர்தல் இவை முதலியன மகளிர் வழக்கங்கள். ஆணுடை யணிந்து உவளகக் காவல் பூண்பது மறமகளிர் வழக்கம். புள்ளுங் குறியும் (நிமித்தம்) கண்டு போர்க்குப் புறப்படல், பூசையும் பலியுமிட்டுத் தேரைச் செலுத்துதல், பொற்றகடுவாயுளிட்டுப் போர் செய்தல் இவை முதலியன மறவர் வழக்கங்கள். கார்த்திகை மாதக் கார்த்திகை நாளில் விளக்கேற்றி விழாவயர்தல். கணியம் பார்த்தல். பொன் தொட்டுச் சூளிடுதல். அரசரைத் தெய்வமாகக் கருதுதல், செல்வரையே மதித்தல், மாலையமைப்பு வாயிலாகக் காதலர் செய்தி யறிவித்துக் கொள்ளுதல் இவை முதலியன இருபான்மக்கள் வழக்கங்கள். 6. பிள்ளை வளர்ப்பு முறை காடி யாட்டித் தராய்ச்சாறுங் கன்னன் மணியு நறுநெய்யுங் கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப் பாடற் கினிய பகுவாயுங் கண்ணும் பெருக வுகிருறுத்தித் தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த் தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார். (2703) என்னுஞ் செய்யுள் மிக இன்புறத்தக்கது. 7. வாழ்க்கை முறை தேவர், துறவறமே சிறந்ததெனக் கொள்ளும் அருக மதத்தினரா யினும், உலகியலுண்மையையும் இல்லறத்தின் இன்றியமையா மையையும் உணர்ந்த வராதலின், இருபாலாரும் மணவாமலே துறக்க இயலாவிடத்து, முதற்கண் இல்வாழ்க்கையை நடாத்தி இல்லற இன்பத்தை இயன்ற அளவு நுகர்ந்த பின்னரே துறவை மேற்கொள்ள வேண்டும் என்னுங் கருத்தை, சீவகனும் அவன் தாயும் அவன் தேவிமாரும் வாழ்ந்த வாழ்க்கை முறையில் வைத் தும்; இம்மையில் துறவு கூடாவிடினும் உம்மையில் கவனித்துக் கொள்ளலாம் என்னுங் கருத்தைப் பிறர் வாழ்க்கை முறையில் வைத்தும்; ஒரு கணவனுக்குப் பல மனைவியரிருப் பினும். ஒரு மனைவிக்குப் பல கணவரிருத்தல் உகந்ததன்றென்பதை, திருமக னருளப் பெற்றுத் திருநிலத் துறையு மாந்தர் ஒருவனுக் கொருத்தி போல உளமகிழ்ந் தொளியின் வைகிப் பருவரு பகையு நோயும் பசியுங்கெட் டொழிய (2377) என்னும் அடிகளில் வைத்தும் உலகிற்குணர்த்துகின்றார். ஒருவன், கற்புக்காலத்தில் சிற்சில காரணம்பற்றித் தன் மனைவியை அல்லது மனைவி யரைவிட்டுப் பிரிய நேரினும். அவரைக் கைவிடக் கூடாதென்பதும், அவரொடு மீண்டும் கூடி வாழ வேண்டுமென் பதும் சீவகன் வாழ்க்கையால் உணர்த்தப் பெறுகின்றன. 8. குறிக்கோள் மருந்தைத் தனியாக வுண்டலும் உண்டியிற் கலந்துண்பித்தலும் பயனளவில் ஒன்றேயாதல் போல. அறவிதிகளை அறநூல் வாயிலாக அறிவித்தலும் வனப்புநூல் வாயிலாக அறிவித்தலும் குறிக்கோளளவில் ஒன்றே. சிறந்த அறவனப்பு நூல்கள் குறிக் கொள்வதெல்லாம் அறம் பொருளின்ப வீட்டுப் பேறே. சிந்தா மணி ஒரு சிறந்த வனப்பு நூலாதலின், அதன் கண்ணும் நான் மாண் பொருள்களே நன்முறையில் வலியுறுத்தப் பெற்றுள. குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர் (2620) நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்கல் ஆண்மக்கள் கடன் (1119) உறுவர்ப் பேணல் உவர்ப்பின்மை உலையா வின்பந் தலைநிற்றல் அறிவர் சிறப்பிற் கெதிர்விரும்பல் அழிந்தோர் நிறுத்தல் அறம்பகர்தல் சிறியா ரினத்துச் சேர்வின்மை சினங்கை விடுதல் செருக்கவித்தல் இறைவ னறத்து வார்க்கெல்லாம் இனிய ராதல் இதுதெளிவே. (2816) இவை அறம். துன்பத்திற் கலங்காமை, நட்பிற் குலவேற்றுமை காட்டாமை முதலிய சில பண்பாட்டியல்புகளும், தேவரால் ஆங்காங்குக் கூறப்படுகின்றன. செய்கபொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கும் எஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணும் ஐயமிலை யின்பமற னோடெவையு மாக்கும் பொய்யில்பொரு ளேபொருள்மற் றல்லபிற பொருளே. (492) இது பொருள். தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை மேவர் தென்தமிழ் மெய்ப்பொரு ளாதலின் கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை புகுவல். என் றெண்ணினாள் (1328) காதலாற் காம பூமிக் கதிரொளி யவரு மொத்தார் மாதருங் களிற னானு மாசுண மகிழ்ச்சி மன்றல் ஆதரம் பெருகு கின்ற வன்பினா லன்ன மொத்தும் தீதிலார் திளைப்பி னாமான் செல்வமே பெரிது மொத்தார் (189) இவை இன்பம் மெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்க டம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி உய்வகை யுயிரைத் தேயா தொழுகுத லொழுக்கம்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும், என்றான். (1436) இது வீடு. முத்தியிலம்பகத்தில் வீடுபேற்றைப்பற்றி ஆருகத முறையில் மிக விரிவாகக் கூறுகின்றார் தேவர். அறவழியிற் பொருளீட்டி அதனைக்கொண்டு அறவழியில் இன்பந்துய்க்க வேண்டு மென்னும் திருவள்ளுவத்தேவர் கொள் கையே. திருத்தக்க தேவர் கொள்கையுமாம். ஆயின், இல்லறத் தாலும் வீடுபேறுண் டென்பது பின்னவர்க்கு உடம்பாடன்று. அஃது அவர் மனப்பான்மையும் மதமும் பற்றியது. சிந்தாமணி, சிலப்பதிகாரம் போல உள்ளோன் தலைவனாக உள்ளதும் இல்லதும் புணர்க்காது. இல்லோன் தலைவனாக இல்லதும் உள்ளதும் புணர்த்தலின், அதன்கண் வரலாற்றுச் சான்றுகள் காணக்கூட வில்லை. ஆயினும், தேவர் காலத்துத் தமிழ்நாட்டு நாகரிகத்தை அறிவதற்குத் துணையான பல செய்திகள், நூல் நெடுமையுங் கூறப்பட்டுள. (3) யாப்புத்திறம் வெஞ்சின வெகுளியிற் குஞ்சர முழங்கலின் மஞ்சுதம் வயிறழிந் தஞ்சிநீ ருகுத்தவே (570) இது வஞ்சித்துறை. இதனைக் குறளடி நான்காய் வந்த கொச்சக வொருபோகு என்பர் நச்சினார்க்கினியர். மடமா மயிலே குயிலே மழலை நடைமா ணனமே நலமார் கிளியே உடனா டுமெனை யனையென் றுருகாத் தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே. (1526) இது கலி விருத்தம். மாசித் திங்கள் மாசின சின்னத் துணிமுள்ளின் ஊசித் துன்ன மூசிய வாடை யுடையாகப் பேசிப் பாவாய் பிச்சை யெனக்கை யகலேந்திக் கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார். (2929) இது கலித்துறை கருங்கொடிப் புருவ மேறா கயல்நெடுங் கண்ணும் ஆடா அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறும் தோன்றா இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார் (668) இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்ம மாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில் பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங் குண்டலமுந் தாம்பதைப்ப விருந்து பாட விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக் கண்கனிய நாடகங்கண் டமரர் காமக் கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தா ரன்றே. (3138) இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். புன்காஞ்சி ... இளவேனில் (648) தண்காஞ்சி ... இளவேனில் (649) குறுத்தாள் ... இளவேனில் (650) இவை தாழிசைக் கொச்சகம். இங்ஙனம், தேவர், நவில்தொறும் இன்பம் பயக்கும் பல்வகைச் செய்யுளும். அவ்வப் பொருட்கேற்ப வேவ்வேறோசை பட அச்சில் வார்த்தாற்போல அழகாக யாத்திருக்கின்றனர். (4) அணித்திறம் மடமா மயிலே ... சோர்ந்தனளே (1526) என்பது தலைசிறந்த தன்மையணி. சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. (53) இஃது அரிய உவமை. என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர்ப்புறம் பொலிய வேய்ந்திட் டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான் மன்பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள வென்றான். (1377) மன்னர்தம் வெகுளி வெந்தீ மணிமுகில் காண மின்னிப் பொன்மழை பொழியின் நந்தும் அன்றெனிற் புகைந்து பொங்கித் துன்னினார் தம்மை யெல்லாஞ் சுட்டிடும். (1117) விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி (435) இவை இனிய உருவகம். முத்தி யிலம்பகத்தில் சீவகன் வீடுபேறு ஓர் உருவக நாடகமாக வரையப்பெற்றுளது. திருப்போரும் பிரபுலிங்க லீலையும் போல. வெஞ்சின ... உகுத்தவே (570) என்பது தற்குறிப்பேற்றம். சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட ... ... ... ... ... முந்திநலி கின்றமுது மூப்பொழியு மென்றான். (2020) இஃது இரட்டுறல். இதையே வில்லிபுத்தூரர் தம் பாரதத்தில் ஆள்கின்றார். காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பான் ஆழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான் வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான் மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே. (1230) இஃது ஒரு சொல்லோவியம். கம்பராமாயணத்திற் போல வரம்பிறந்த உயர்வு நவிற்சிகள் சிந்தா மணியிலில்லை. பகுத்தறிவிற்குப் பொருந்துமாறு அறிஞரை இன் புறுத்தும் அரிய அழகிய அணிகளையே தேவர் ஆளுகின்றார். (5) சொல்லாராய்ச்சித் துணை சிந்தாமணிச் சொல்லாராய்ச்சியால் அறியப்படும் சொல்லியல் உண்மை களாவன : 1. சொற்களின் முந்து வடிவம் அரவு (அரா), நறவு (நறா), கோன் என்னுஞ் சொற்களின் முந்து வடிவம், முறையே, அர, நற, கோவன் எனபன. இவ்விருந்தான் (இவ்விடத்திருந்தான்) என்னும் வழக்கு. சுட்டிடைச் சொற்கள் ஆதியில் பெயரும் ஈரெச்சமுமாகப் பயன்பட்டதை உணர்த்தும். காதற் பொருளை உணர்த்தும் மாதர் என்னும் சொல்லின் பகுதி மாது என்பது, மாதியாழ் என வருதல் காண்க. 2. வழக்கற்ற சொற்கள் இலக்கித்து (எழுதி) என்னுஞ்சொல். இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்களின் பகுதியான இலக்கு என்பதினின்று திரிக்கப்பட்டு இலக்கி என ஒரு வினை பண்டைக்காலத்து வழங்கினமையை உணர்த்தும். பொற்ற (நல்ல), பொற்றது (பொலிவு பெற்றது) என்னுஞ் சொற்கள். பொல் என்னும் வழக்கற்ற வினையடியாய்ப் பிறந்த பெயரெச்சமும். வினைமுற்றுமாகும். கல், வில் என்னும் வினை யடியாக, கற்ற கற்றது விற்ற விற்றது என்னும் பெயரெச்ச வினைமுற்றுகள் பிறத்தலைக் காண்க. பொல்லுதல் = பொலிதல். அழகாயிருத்தல். பொல் - பொன். பொல் - பொலம். பொல் - பொலி - பொலிவு. பொல் + பு = பொற்பு. பொலம் - பொனம். பொற்பு என்னும் உரிச்சொல். பொற்ற எனத் திரிந்ததென்று நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாது. உரிச்சொல் என்பது செய்யுட் சொல்லே யன்றி இலக்கண வகைச் சொல் அன்று. பொற்பு என்னும் தொழிற்பெயர் செய்யுளிற் சிறப்பாகப் பயின்று உரிச்சொல்லாயிற்று. 3. புலவர் சொற்றிரிப்பு புலவர் சொற்களைத் தம் செய்யுட்களில் மோனையெதுகைக் கேற்பத் திரித்துக் கொள்வர் என்பது, கம்பலம் (கம்பலை), அளமரு (அலமரு). இறுவரை (இருவரை), பிளிற்றல் (பிலிற்றல்), மத்தம் (மத்து). பொனம் (பொலம்) முதலிய சொற்களாற் பெறப்படும். 4. தொல்காப்பிய வழு நும் என்னும் சொல்லினின்று நீயிர் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் திரிந்ததாகத் தொல்காப்பியர் கூறுவது பற்றி. நீம் என்னும் சிந்தாமணிச் சொல்லைத் தேவர் படைப்பாகச் சில புலவர் கருதுகின்றனர். நீம் என்னுஞ் சொல்லே முந்தியதாம். நீன், நீம் நீங்கள் (நீம் + கள்) என்பன முன்னிலை யொருமை பன்மைப் பெயர்கள். நீன், நீம் என்னும் சொற்கள் இன்றும் தென்னாட்டில் நாட்டுப்புற மக்களிடை வழங்குகின்றன. கன்னடத்தில். நீன் என்பது திரி யாதும். நீம் என்பது நீவு (நீம்-நீமு-நீவு) எனத் திரிந்தும் வழங்கு கின்றன. நும் என்பது (இறந்துபட்ட) நூம் என்பதன் வேற்றுமை யடி யாகும். தன்மை முன்னிலைப் பெயர்களும் படர்க்கைப் பதிற்பெயர் களும், எழுவாய் வடிவில் நெடின்முதலவே அன்றிக் குறின் முதல் அல்ல. 5. வடசொல்லென மயங்கும் தென்சொற்கள் கோட்டி = ஒருவரொடு கூட இருத்தல். கொள்ளுதல் = பொருந்துதல். கூடுதல். கொளுத்துதல் = பொருத்துதல். கொள் - கோள் = குலை (காயின் கூட்டம்). கோள் + தி = கோட்டி (கூட்டம், அவை). இலக்கி என்னுஞ்சொல் முன்னரே கூறப்பட்டது. இதுவே வடமொழியில் லேக் என்றும், இந்தியில் லிக் என்றும் திரியும். 6. நூலளவை ஒரு துறையில் பல நூல்களிருப்பினும், அவற்றுள் ஒன்றிரண்டே அளவை நூலாகும். திருக்குறட் கருத்துக ளனைத்தையுந் தழுவிச் சொல் மாற்றி ஒருவர் ஒரு புதுநூல் இயற்றிவிடின். அது முதலியன்மை பெற்று விடாது. தேவர் காலத்தில், பாவின யாப்பில் சிந்தாமணிக்கு அச்சுக்கட்டாக அல்லது வழிகாட்டி யாக ஒரு வனப்பு நூலும் இருந்ததாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் கால வனப்புக்களெல்லாம் கடைக்கழகக் காலத்திலேயே இறந்து பட்டன. தேவார திருவாசகங்களோ, வழுத்து நூற்கள். திருக்கோவை தலைசிறந்த பாவின நூலாயினும். யாப்பினும் பொருளினும் ஒரு துறைப் பட்டது. ஆகவே, தேவர், தம் மதியைத் தொல்காப்பியத் தால் துலக்கித் திருக்குறளால் தீட்டிப் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கால் பாரித்திருப்பினும், வனப்புக் கலையைப் பொறுத்தமட்டில், சிந்தாமணி யாப்பின் பெரும் பகுதி அவரது திறப்பாட்டின் விளைவே என்பது திண்ணம். கம்பராமாயணம் உட்பட்ட பிற்கால வனப்புக்கெல்லாம். சிந்தாமணி சிறந்த வழிகாட்டியா யிருந்ததென்பதை எவரும் மறுக்க முடியாது. சிந்தாமணியைப் பின்பற்றிய பின்னருங்கூடக் கலைத்திறத்தில் வறுமைப் பட்டும், அணித்திறத்தில் அழகிழந்தும், தீர்ப்பியலில் நடுத்திறம்பியும் பிற்கால நூல்கள் பொலிவற்றிருப்பது, சிந்தா மணியை மேன்மேலுஞ் சிறப்பிக்கும். சுதஞ்சணன் செய்தியும் கலுழவேகன் செய்தியும் தேவியற் பட்ட வாயினும், மதத்துறை சார்ந்தவாதலானும், சிலப்பதிகார மணி மேகலையினுள்ளும் அத்தகைய செய்தி காணப்படுதலானும், இல்லோன் தலைவனாகவுள்ள புனையியல் வனப்பிற்கு ஏதும் இழுக்கில்லை என்க. (சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவு மலர் 1952.) சிந்து இசைத் தமிழ்ப் பாட்டு வகைகளுள் ஒன்று அடிக்குறுமை பற்றிச் சிந்து எனப்பெயர் பெறும். அச் சிந்து வகைகளுள் ஒன்று நெடியதும் குறியதுமாக ஈரடி கொண்டுள்ளமையாலும் நொண்டி நொண்டிச் செல்வது போன்ற ஓசையுடைமை யாலும் நொண்டிச் சிந்து எனப்படும். (சொல் 10). சிந்து என்னும் பெயர் ஆரியர் வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறி யிருந்தமை யாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல் தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர் அல்லது திரவிடர் மேலையா சியாவிற்கும் அதன்பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்ப ராதலாலும், சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்ட தமிழ்ப்பெய ராகவே யிருக்கலாம். சிந்துதல் சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப் பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல், மழை துளி துளியாகப் பெய்தலின், மழை பெய்தல் துளி சிதறுதல் என்று சொல்லப்படும். தாழிருள் துமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி யூழிற் கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான் (குறுந். 120) என்பது முகில் துளி சிதறுதலையும், அருவி யன்ன பருவுறை சிதறி யாறுநிறை பகரு நாடனை (குறுந். 121) என்பது ஆறு துளி சிதறுதலையும், குறித்தன. முகில் துளி சிந்தியே மக்கட்குக் கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால், சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு (பிங்.) என்னும் இருபொருளும் ஏற்பட்டன. இனி, சிந்துதல் என்னும் வினைச்சொற்குத் தெளித்தல் என்பத னொடு ஒழுகுதல் என்னும் பொருளு மிருத்தலால், சிந்து என்னுஞ் சொல் ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும் பொருத்த மானதே. வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை. மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத - ஆங்கில அகரமுதலியில், ஒரு கால் சித் (Sidh) என்பது மூலமா யிருக்கலாம் என்று ஐயுறவாகக் குறிப்பர். அச்சொற்குச் செல்லுதல் (to go) என்னும் பொருளே உள்ளது. மேலும், இருக்கு வேதத்தில் சிந்தாற்றிற்குச் சரசுவதி யென்னும் பெயரே வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. பிற்காலத்தில் ஆரியர் பிரமவர்த்தம் சென்ற பின்னரே, அந்நிலப் பகுதிக்கு மேலெல்லையாகவும் சட்டிலெசு என்னும் கிளை யாற்றிற்குத் துணைக் கிளையாகவும் இருந்த, சிற்றாற்றிற்கு அப்பெயரை இட்டதாகத் தெரிகின்றது. அது இன்று சுர்சூதி (Sursooty) என்று வழங்குகின்றது. பழம்பாரசீகரின் சொராத்திரிய (Zoroastrian) வேதமாகிய செந்து அவெத்தாவில் (Zend-Avesta), ஹப்த ஹைந்தவ என்பது அகுரமத்தாவினாற் படைக்கப்பட்ட பதினாறு தெய்வங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பதனாலும், ஹரக்வைதி (Haraquaiti) என்பது ஓர் ஆபுக்கானிய ஆறாகக் குறிக்கப்பட்டிருப்பதனாலும், பல தெய்வங்கள், சிறப்பாக அக்கினி, சொராத்திரியர்க்கும் இருக்கு வேதியர்க்கும் பொதுவாயிருப்பதனாலும், அவ்விரு வகுப்பாரும் ஒருகாலத்திற் சிந்துவெளியில் ஓரினத்தாரும் ஒரே மதத்தாருமாய் வாழ்ந்திருந்து, பின்னர் முன்னவர் மேற்கும் பின்னவர் கிழக்குமாகப் பிரிந்து போயினர் என்பது, உய்த் துணரப் படும். சகரம் அல்லது ஸகரம் பாரசீகர் வாயில் ஹகரமாகத் திரியும். எ-டு: சிந்து (ஸிந்து) - ஹிந்து ஸப்தன் (ஏழு) - ஹப்தன் அசுரன் (அஸூர) - அஹூர இம்முறையிலேயே, ஸப்தஸிந்து என்பது ஹப்தஹிந்து என்றும், ஸரவதி என்பது ஹரக்வைதி என்றும், திரிந்துள்ளன. இதனால், சிந்தாறு ஒருகாலத்தில் எழுகிளைகள் கொண்டிருந்த தாகத் தெரிகின்றது. சிந்தாற்றுத் தேவிக்கு ஏழ் உடன் பிறந்தாண் மார் (sisters) என்ற இருக்குவேதியர் கொள்கையினாலும் இது வலியுறும். இனி, சில தெய்வ வேறுபாட்டினாலும் கொள்கை மாறுபாட்டி னாலும், சொராத்திரியரின் முன்னோர் பகைமை கொண்டே பிரிந்து போனதாகத் தெரிகின்றது. செந்து அவெத்தாவிற் கூறப் பட்டுள்ள அஹூர மதா இருக்கு வேதத்திற் குறிக்கப்படவில்லை. சொராத்திரியர் அசுரரை நல்லவராகவும் தேவரைத் தீயவராகவுங் கொண்டனர். இந்திய ஆரியர் கருத்து இதற்கு முரணானது. சிந்தூரம் சிந்தூரம் - ஸிந்தூர செந்தூள் = செம்பொடி, செந்நீறு. செந்தூள் - செந்தூளம் - செந்தூரம் - சிந்தூரம் = 1. செந்நீறு. சிந்தூரத் தாது கொடுத்திலரேல் (உபதேசகா. உருத்திரா. 67) 2. செம்பொடி. மதகரியைச் சிந்தூர மப்பியபோல் (கம்பரா. மிதிலைக். 151) 3. சிவப்பு (பிங்.). 4. செங்குடை. (பிங்.). 5. செம்புள்ளியுள்ள யானை முகம் 6. யானை. (பிங்.). 7. செம்மலர் பூக்கும் வெட்சி மரம். 8. சேங் கொட்டை. 9. செவ்வீயம். சிந்தூரம் - சிந்துரம் = 1. சிவப்பு சிந்துரச் சேவடியான் (திருவாச. 18 : 5). 2. செம்பொடி. சிந்துரமிலங்கத் தன் திருநெற்றிமேல் (திவ். பெரியாழ். 3:4. 6). 3. நெற்றிச் செம்பொட்டு. சிந்துர வாதித்த வித்தாரமுடையார் (கந்தரந். 5). 4. புகர்முக யானை 5. புளியமரம். புகர்முகம் (செம்புள்ளியுள்ள முகம்) என்பது சினையாகு பெயராய் யானையைக் குறிப்பது போன்றே, சிந்தூரம், சிந்துரம் என்னும் சொற்களும் யானையைக் குறிக்கும். சிந்தூரப்பொட்டு = குங்குமப்பொட்டு. சிந்தம், சிந்தகம், சிந்துரம், சிந்தூரம் என்பன புளியின் செந்நிறம் பற்றிப் புளியமரத்தையுங் குறிக்கும். (வ.வ. 152-153). சிந்தூரம் - சிந்திடீ (c), திந்திட = புளியமரம் சிந்தூரித்தல் = தாதுக்களை (உலோகங்களை)ச் சிந்தூரமாக்குதல். சுருக்குக் கொடுத்ததைச் சிந்தூரித்து (பணவீடு 230) சிந்தூரி - சிந்துரி. இவ்வினை வடிவங்கள் வடமொழியிலில்லை. வடவர் காட்டும் மூலம் யந்த் (அல்லது யத்) = இயங்கு, ஒழுகு, பாய், ஓடு. சென்னைப் ப.க.க.த.அ. சிந்தம் என்னும் தென்சொற்குச் சிஞ்ச்சா (cinca# = புளியமரம்) என்பதை மூலமாகக் காட்டும். (வ.வ. 153). சில்லாங் குச்சு விளையாட்டு பாண்டி நாட்டு முறை ஆட்டின் பெயர் : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு சில்லாங்குச்சு எனப்படும். இப்பெயர் சிறுபான்மை சீயாங்குச்சு எனவும் மருவி வழங்கும். ஆடுவார் தொகை : இவ்விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சமதொகையான இருகட்சியாகப் பிரிந்து கொள்வர். ஆடு கருவி : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுனியில் கூர்மையும், உள்ள ஓர் உருண்டை குச்சும்; ஒரு முழம் முதல் இருமுழம் வரை (அவரவர் கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இவ் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும் பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும். கோலைக் கம்பு என்பர். ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணை யர்க்கும் ஒவ் வொரு கோலுங் குச்சும் இன்றியமையாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன் தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித் தனி வைத்துக்கொள்வது முண்டு. குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர் நுனியிற் கோலால் தட்டி யெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரை விரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத் திருக்கும் போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப் பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப் பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும். ஆடிடம் : அரைப்படைச்சால் (½ furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டு ஆடப்படும். ஆடுமுறை : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே. இருவராயின், இருவரும் ஒரே குழியில் முன்பின்னாக வாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாகவாவது, தம் குச்சை வைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழு முன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர். யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்த தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தியாடல் வேண்டும். விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பியடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்க வேண்டும். யார் அடிப்பினும் குச்சையடித்துப் போக்கியபின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே கிடத்தி நிற்பின். இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப்பிடிக்க முயல்வான். பிடித்துவிடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவ னாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியாவிடின், குச்சு நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தி யிருக்கும் கோலிற்படும்படி யெறியவேண்டும். கோலிற் பட்டு விடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிப்பவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன் போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்ப வன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டுவிடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடாவிடின், குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத் தெறி தலுக்கு எடுத்தூற்றுதல் என்று பெயர். குச்சடிக்கிறவன் எவ்வகையிலும் தவறாதும் பிடிகொடாதும் அடிப்பின், விளையாட்டை நிறுத்தும்வரை எத்தனை முறையும் தொடர்ந்து அடிக்கலாம். பல இணையர் சேர்ந்து ஆடின், தொடங்குங் கட்சியை தீர்மானிக் கும் ஆட்டத்தில் குச்சை மிகத் தொலைவிற் போக்கிய கட்சியார் முந்தியாடுவர்; இதற்கு, ஒரு கட்சியார் அனைவரும் மிகத் தொலைவிற் போக்க வேண்டும் என்னும் யாப்புறவில்லை. அவருள் ஒருவர் போக்கினும் போதும், முந்தியாடுங் கட்சியார் அடிப்பாரும் பிந்தியாடுங் கட்சியார் எடுப்பாருமாய், ஆட்டந் தொடங்கும். அடிக்குங் கட்சியாருள் ஒவ்வொருவனும் அடிக்குங் குச்சை, அவ் வவனுடன் உத்திகட்டிய எதிர்க்கட்சி இணைஞனே எடுப்பான். இணைஞனுக்கு உத்தியாள் என்று பெயர். அடித்த குச்சை உத்தியாள் உடனே வந்து எடுக்காவிடின், அடித்தவன் அதைத் தொடர்ந்து அடித்து, மிகத் தொலைவிற் போக்குவதுமுண்டு. எடுக்குங் கட்சியார் எல்லாருங் குச்சுக்களை யெறிந்த பின்புதான், அடிக்குங் கட்சியார் ஒரே சமையத்தில் மீண்டும் அடிப்பர். தவறும் வசையும் தவறாது ஆடும் வகையும், இருவர் ஆடினும் இரு கட்சியார் ஆடினும் ஒன்றே. ஒவ்வொருவனாகவோ ஒருங்கேயோ அடிக்கும் கட்சியார் அனைவரும் தொலையும் வரை (அதாவது தோற்கும் வரை), எதிர்க் கட்சி நிலைமை மாறாது ஆயின், அடிக்குங் கட்சியார் தொலையத் தொலைய, அவ ருடைய இணைஞரான எதிர்க் கட்சியார் நின்றுகொண்டே வருவர். அடிக்குங் கட்சியின் இறுதியாளுந் தொலைந்த பின், இரு கட்சியும் வினைமாறும். ஆட்டுத் தோற்றம் : இவ் விளையாட்டு வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. குறிஞ்சி நிலத்திலுள்ள குறவரா யினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயினும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார் உயிர் களைக் குறுந்தடி கொண்டே யெறிந்து கொல்லுவது வழக்கம். இவ்வழக்கத்தினின்றே கோழியடிக்கக் குறுந்தடி வேண்டுமா? என்னும் பழமொழியும் எழுந்துளது. ஒரு குறவனும் அவன் கையாளான சிங்கன் என்னுங் குறவனும் குறுந்தடிகொண்டு வேட்டையாடின், குறவன் புதர் புதராய்க் குறுந்தடியால் தட்டிப் பார்ப்பான். ஒரு புதரினின்று திடுமென்று ஒரு காட்டுக் கோழி பறக்கும்; அல்லது ஒரு முயல் குதிக்கும். அந் நொடியே, குறவன் அதைக் குறுந்தடியால் அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற் போய் விழும். குறவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான். வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும். இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டி யெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ்வுயிரிகளைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற்போய் விழுவது, அடிபட்ட வுயிரிகள் தொலைவிற்போய் விழுவது போன்றது. குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குறவன் எடுத் தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது. ஆட்டின் பயன் : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில் விழு முன்னும், தாழப்பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்குமுன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒரு கருவியால் அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்திற்கு எறிவதும்; ஒரு குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம். (2) சோழ கொங்கு நாட்டு முறை I. கில்லித்தாண்டு பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு நாட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றே. ஆயினும், இடவேறு பாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு சில வேற்றுமைகள் உள. 1. பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் வழங்கும். பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக் கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது புட்டம் எனப் பெயர்பெறும், இது கீழ்வரும் கிட்டிப் புள்ளிற்கும் ஒக்கும். எடுத்து ஊற்றுதல் என்னும் பாண்டி நாட்டுக் குறியீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு கஞ்சி வார்த்தல் என்பதாகும். 2. கருவி : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுங் கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங், கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம். 3. முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க் கட்சியார் எல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரேனும் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்த பின் இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்தபின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது கிரிக்கட்டு (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒருபுடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை இந்தியக் கிரிக்கட்டு என நகைச் சுவையாகக் கூறுவது வழக்கம். பாண்டிநாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந்தொலைவை அளந்து அதுகொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந் தொலைந்தபின், எதிர்க்கட்சியார் ஆடல் வேண்டும். சோழ கொங்கு நாட்டிலோ, தாண்டை அளவு கோலாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப் பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவிகொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்தவுடன் எதிர்க் கட்சியாரைக் கத்திக் காவடி, யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப்பேரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை தொடர்ந்தடித்துப் போக்கிய தொலைவிலிருந்து, எதிர்க்கட்சியார் கத்திக் காவடி கவானக் காவடி என்று இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே கத்திக் காவடி யெடுத்தல் என்பது. கத்திக் காவடியெடுக்கும் போது இடையிற் சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடி யெடுக்கச் செய்வர். அதையெடுத்து முடிந்தபின், முன்பு அடித்த வரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக் காவடி யெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனை யெனப்படும். முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்தபின்பும் குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்க் கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே அத்தோல்வியின் விளை வாம். ஆகவே, கத்திக் காவடித் தண்டனை எடுக்குங் கட்சியார்க் கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும். பாண்டி நாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறோரு தண்டனையுமில்லை. II. கிட்டிப்புள் கிட்டிப்புள் என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன : பெயர் : கில்லி என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும். முறை : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நீட்டுப் போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும், கிட்டிப் புள்ளிலோ, குச்சுக் குழியின் குறுக்கே வைத்து அதற்கு நட்டுக் குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டி யெடுக்கப்பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலை யிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே அதை அடித்தல் வேண்டும். அசைவு நின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந்தவன் அடிக்கவேண்டியிருக்கும் இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது கில்லிக்குத்து எனப்படும். குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும். பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இவ்விளை யாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்க முடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆட்டு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் கொட்டிப் புள் என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே. சில்லி சில்லி - ஜில்லி (jh) = சிள்வண்டு சில்லிடுதல் = ஒலித்தல், சில்லெனல் = உச்சமாகக் கூர்ந்தொலித்தல். சில்லி சில்லென் றொல்லறாத (திவ். பெரியதி. 1:7:9). சில் = சிள். சில் - சில்லி - சில்லிகை. சில் - சில்லை. (பிங்.). சில்லுறு - சில்லூறு = சிள்வண்டு. சில்லிகை - ஜில்லிகா (jh) = சிள்வண்டு (வ.வ. 153). சில அரசியற் கருத்துக்கள் பழந்தமிழரசரும் புலவரும் பொதுமக்களும், பின் வருமாறு சில அரசியற் கருத்தக்களைக் கொண்டிருந்தனர். 1. அரசன் உலகத்திற்கு உயிர். 2. தெய்வம், தான், தன் வினைஞர், கள்வர், பகைவர், விலங்கு ஆகிய அறுவழியில் வந்த தீங்குகளை அரசன் நீக்கித் தன் குடிகளைக் காத்தல் வேண்டும். 3. அரசன் தொழில்கள், ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டித்தல் என ஐந்து. 4. அரசவெற்றிக்கு அறநெறியாட்சி காரணம். 5. அரசவெற்றிக்கு உழவுத் தொழில் காரணம். 6. செங்கோலரசன் நாட்டில் மழைவளம் பொழியும்; மக்கள் ஒழுக்கந் தப்பார்; விலங்கு ஊறு செய்யாது; கல்வியும் அறமுந் தழைக்கும். கொடுங்கோல் நாட்டில் இவை நிகழா. 7. கொடுங்கோல் அரசன் ஆளும் நாட்டினும், கடும்புலி வாழுங் காடு நன்று. 8. கோன்நிலை திரியின் கோள்நிலை திரியும். 9. அரசன் இறப்பைக் கோள்நிலை முன்னறிவிக்கும்., 10. மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனில் இல்லை. 11. மக்களை நன்னெறிப் படுத்துவது அரசன் கடமை. 12. மழை பெய்யாமைக்கும் விளைவுக் குறைவிற்கும் இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிக்கும், அரசன் காரணம். 13. அல்லற்பட்டழுத குடிகளின் கண்ணீர் அரசனை அழித்து விடும். 14. அறம் பிழைத்த அரசனுக்கு அறமே கூற்றமாகும். 15. குடி பழிதூற்றுதல் அரசனுக்கு மிக இழிவு. 16. அரசர் தெய்வங்களை இகழ்ந்தால் அவர் நாட்டிற்கு அழிவு வரும். 17. அரசரால் அவமதிக்கப்பட்ட முனிவரும் புலவரும் சபிக்கின் அரசும் நகரும் அழியும். 18. தெய்வங்கட்குப் படைக்கினும் பலியிடினும் மழை பெய்து நாடு செழிக்கும். 19. அரச வாழ்க்கை துன்பம் நிறைந்தது (செங்குட்டுவன் கருத்து). 20. நாடுகளிற் சிறந்தது தமிழ்நாடு (தமிழரசர் கருத்து). 21. முத்தமிழ் நாடுகளுட் சிறந்தது பாண்டி நாடு (பூதப்பாண்டியன் கருத்து). 22. அரசின்மையும் வேற்றரசும் நாட்டுக் குற்றமாகும். 23. அரசன் எப்படி, குடிகள் அப்படி. 24. அரசன் குற்றம் குடிகளையும் குடிகள் குற்றம் அரசனையும் சாரும். 25. அரசன் பிறநாடுகளை வெல்வது குணமேயன்றிக் குற்றமன்று. 26. ஒருவன் செய்த அல்லது செய்வித்த கொலைக்கு அவனிடத்து மட்டுமின்றி அவன் குலத்தாரிடத்தும் பழி வாங்கலாம். அது ஒரு தெய்வத்தின் கோபத்தைத் தணிப்பதாகக் கருதப்படின். 27. கொள்ளைச் சொத்தும் பறிமுதலும் கோயிற்குச் சேர்க்கப் பெறின் தீதில்லை. 28. போரில் செய்த தீவினைகட்குக் கோயிற்றிருப் பணிகள் கழுவாய். 29. சித்தரும், முனிவரும் போன்ற பெரியாரைத் துணைக்கோடல் அரசர்க்கரண் செய்யும்; அவரைப் பிழைத்தல் அவருக்கு அழிவு தரும். (ப.த.நா.ப.) சிலந்தி உடம்பில் தலைக்குக் கீழ் எங்கேனும் புறப்படும் கொப்புளம் சிலந்திப் பூச்சியின் உடல்போல் திரண்டு இருத்தலால் சிலந்தி எனப்பெயர் பெற்றது. (ஒருவகைக் கட்டியை ஆங்கிலத்தில் Cancer என்றும் Canker என்றும் அழைப்பர். அது நண்டு போல் இருத்தலின் இப்பெயர் பெற்றது. L. Cancer, Crab, Cancer. Tumour named from Swollen veins like crab’s limbs - C.O.D.] (சொல். 9). சிலம்பு கழி நோன்பு வதுவைக்கு முன் மணமகள் காலில் அவள் பெற்றோரால் அணியப்பட்டிருந்த சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப் படும். அது சிலம்பு கழி நோன்பு எனப்படும். (த.தி.7). சிலை உருவம், சிலை, படிமை என்னும் ஒருபொருள் முச்சொற்களுள் முதலதும் ஈற்றதும் ஐயுறவற்ற தூய தென்சொற்கள். உருவம் உரு என்னும் வடிவும் உருவத்தைக் குறிக்கும். உருக்கல் = கோவில் கட்டியவருடைய கற்சிலை. இது கட்டடக் கலை வழக்கு. உருவம் = சிலை (பிரதிமை). உருவாரம் = சிலை (பிரதிமை) இது உலக வழக்கு. உருவம் என்பது ரூப என்னும் வடசொல்லின் திரிபென்பர். இது ஏமாற்று. உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம். வடிவம், வடிவுடைப் பொருள், படிமை. உரு - உருவு - உருபு = வேற்றுமை வடிவம்; அதைக் குறிக்கும் எழுத்து அல்லது அசை அல்லது சொல். உருவம் என்ற தென்சொல்லே வடமொழியில் ரூப எனத் திரிந்துள்ளது. படிமை படி = ஒப்பு, வகை, உருவம் (சீவக. 1156) அப்படி = அதுபோல். அவ்வகை, ஒருபடியாய் (வகையாய்) வருகிறது. ஒரு வடியாய் என்பது நெல்லை வழக்கு. படியோலை = மூல மொத்த ஓலை. படி = ப்ரதி (வ.) இதையும் ப்ரதி > படி எனத் தலைகீழாய்க் காட்டி ஏமாற்றுவர் வடவர். படி - படிமை - ப்ரதிமா (வ.) - பதுமை (தற்பவம்). படிமை - படிமம் = நோன்புக் கோலம், தவவடிவம். (படி - படிவு - படிவம்; படிவு - வடிவு; படிவம் - வடிவம்) சிலை சிலை என்னும் சொல் வடமொழியில் கல் அல்லது பாறை என்றே பொருள்படும். Silex என்னும் இலத்தீன் சொல்லும். அதனின்று திரிந்த silica என்னும் ஆங்கிலச் சொல்லும் வன்கல்லை (second stone) யன்றி உருவச் சிலையைக் குறியா. நாம்தான் அதைக் கருவி யாகுபெயராய் உருவம் என்னும் பொருளில் வழங்குகின்றோம். சிலா சாசனம் = கல்லில் எழுதப்பட்ட கட்டளை. கற்பட்டயம். விக்கிரகம், மூர்த்தம் என்பனவே உருவத்தைக் குறிக்கும் வட சொற்கள். மூர்த்தம் உடையவன் மூர்த்தி. ப்ரதிமா என்பது தென்சொற்றிரிபு. நாம் கற்சிலை என்பதுபோல் வடவர் சிலாசிலா என்ன முடியாது இருப்புச்சிலை, வெள்ளிச்சிலை, செப்புச்சிலை, பொற்சிலை, வெண்கலச் சிலை என்று உருவப்பொருளில்தான் வழங்குகின்றோம். கற்பொருளில் என்றும் வழங்குவதில்லை தெய்வ உருவம் தெய்வச்சிலை எனப்படும். வடமொழியில் கல் என்னும் பொருட்கும் வேர் அல்லது முதனிலை இல்லை. மானியர் வில்லியம்சு தம் அகரமுதலியில் ஒருகால் சி மூலமாயிருக்கலாம் என்பர். சி என்பதற்கு நல்கு. பொந்திகை (திருப்தி)ப் படுத்து. கூராக்கு என்னும் பொருள்கள்தாம் உண்டு. அவை பொருந்தா. தமிழிலும் திட்டமாகவோ, தேற்றமாகவோ மூலங்காட்டுதற் கில்லை. சிலை என்னுஞ் சொற்குச் சில் என்பது தான் மூலமாயிருத்தல் வேண்டும். சில் = துண்டு. வட்டம். வட்டப்பொருள். சில்லெனல் = குளிர்தல், ஒலித்தல். சில் - சிலை = வளைந்த வில், ஒலிக்கும் எதிரொலி. சில் - சிலம்பு = ஒலிக்கும் கழல் (பரல் இடப்பட்ட காலணி). எதிரொலியிடும் மலை, ஒலிக்கும் சிலம்பக் கழி (சிலம்பு - சிலம்பம்). சிலைத்தல் = ஒலித்தல், முழங்குதல், ஆரவாரித்தல் - மலைபடு கடாம். இக்கருத்தது. பாடும்போது எதிரொலித்தலைச் சிலை யோடுதல் என்பர் நெல்லை நாட்டார். சில் என்பது வட்டம் என்னும் கருத்தில் சுல் என்பதன் திரிபாகும். சுலவுதல் = வளைதல். துண்டு என்னும் கருத்துதான் சில் என்பதைச் சிலையோடு இணைக்க ஓரளவு உதவும். சில் - சிலுக்கு = வெட்டின துண்டு. சிலுக்கு - சிதுக்கு - செதுக்கு. (ல - த போலி) ஒ.நோ.: சலங்கை - சதங்கை; கலம்பம் - கதம்பம். மெல் - மெது. சில் - சிலை = வெட்டின அல்லது செதுக்கின உருவம். ஆதலால். கல் என்னும் பொருள் தமிழில் இல்லை. இனி, சிலை என்பது சிலம்பு என்பது போல் மலை என்றும் தமிழில் பொருள் கொண்டிருப்பதால். மலை என்னும் பொருளினின்றே கல் (மலைப்பிஞ்சு) என்னும் முதலாகுபெயர்ப் பொருளும் தென்மொழியிலும், வடமொழியிலும் தோன்றிற்று என்று கொள்ளவும் இடமுண்டு. சிலை = மலை வணங்காச் சிலை அளித்த தோளான் (பு.வெ.2:12) சிலை = கல் (பிங்க). ஆகவே, சிலை என்னும் உருவப்பொருட் சொற்குத் தமிழ் மூலம் சற்று வலிந்து கொள்வதாகவே இருப்பினும், பின்வரும் ஏதுக்களால் அதைத் தென்சொல் என்று கொள்ளவும் இடமுண்டு. 1. வடமொழியில் சிலை என்னும் சொற்கு மூலமில்லை. 2. அம் மொழியில் அச் சொற்குக் கற்பொருளேயன்றி உருவப் பொருளில்லை. தமிழில் இரண்டுமுண்டு. 3. ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்பே தமிழகத்தில் உருவக் கலை இருந்தது. 4. வடமொழியில் குறைந்தபக்கம் ஐந்திலிரு பகுதி தென்சொல். 5. உருவம் படிமை என்னும் தென்சொற்களும் வடசொல்லாகக் காட்டப்படுகின்றன. அவை போன்றே சிலை என்பதும். 6. வேத ஆரியர்க்கு வேள்வி வழிபாடேயன்றி உருவ வணக்க மில்லை. தென்னாடு வந்தபின்னரே தமிழரிடமிருந்து மேற் கொண்டனர். 7. சிலா என்னும் வடசொல்லில் இருமொழிப் பொதுவெழுத்தே யன்றி வடமொழிச் சிறப்பெழுத்தில்லை. 8. தமிழ் ஐகாரவீறு வடமொழியில் ஆகார ஈறாய்த் திரிவது இயல்பே. எ-டு: மாலை - மாலா, வடை - வடா. 9. சிலா என்னுஞ் சொல் இருக்கு வேதத்திற்குப் பிற்பட்ட வடநூல் களிலேயே ஆளப்பட்டுள்ளது. 10. சிலம்பு, சிலை என்னும் இரு (மலைப்பொருட்) சொற்களும், தமிழில் சில் என்னும் ஒரே மூலத்தையும் ஒலித்தல் என்னும் ஒரே வேர்ப்பொருட் கரணியத்தையும் கொண்டுள்ளன. 11. தமிழ் மேலை ஆரியத்திற்கும் அடிப்படைச் சொற்களை உதவிய பெருவளமொழி. (நாகைத் தமிழ்ச்சங்க மறைமலை யடிகள் நினைவு மலர் 1969.) சிவன் சிவன் - சிவ சிவத்தல் = செந்நிறமாயிருத்தல். சிவ - சிவம் - சிவன் = சிவந்தவன். சிவன் குறிஞ்சிநிலத் தெய்வமான சேயோன் கூறாதலால். சிவன் எனப் பெற்றான். அந்திவண்ணன், அழல்வண்ணன், செந்நீ வண்ணன், மாணிக்கக் கூத்தன் முதலிய பெயர்களை நோக்குக. வடவர் சிவன் அழிப்புத் தொழில் திருமேனி என்று கொண்டு, சிவன் என்னும் சொற்குச் சீ (படு) என்பதை மூலமாகக் காட்டி, எல்லாப் பொருள்களும் ஒடுங்கும் இடமானவன் என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருள் கூறுவர். சிலர், மங்கலமானவன், நன்மை செய்பவன் என்று பொருள் கூறுவர். சிவன் தமிழ்த் தெய்வமாதலானும், நெருப்பின் கூறாகக் கொள்ளப் படுதலானும், முத்தொழில் முதல்வன் என்பதே தமிழ்க் கொள்கை யாதலானும், குமரிக் கண்டத்திலேயே சிவ வணக்கம் தொடங்கி விட்டமையானும், ஆரியவழிப் பொருட்காரணம் ஒரு சிறிதும் பொருந்தா. சிவன் - சிவை (மலைமகள்). (வ.வ. 153-154) சிவிகை (1) சிவிகை : சிவிதல் = சுருங்குதல், சிறுத்தல். சிவி - சிவிகை = சிறிய மூடு பல்லக்கு. சிவிகை - சிவிகா, சிபிகா (வ.). (தி.ம. 742). சிவிகை (2) சிவிகை - சிவிகா, சிபிகா சிவிதல் = சுருங்குதல். சிவிந்தபழம் = முற்றாது சுருங்கிப்போன பழம். சிவிங்கி = சிறுத்தைப் புலி. சிவிகை = இருவர் தூக்கும் சிறிய மூடு பல்லக்கு. (வ.வ. 154). சிவிகை வகை சிவிகை - மூடு பல்லக்கு பல்லக்கு - திறந்த பல்லக்கு (சொல். 44) சிற்பம் சிற்பம் - வல்ப சிற் - சிற்பு - சிற்பம் = மிகக் கொஞ்சம். சிற்பங்கொள் பகலென (கம்பரா. சடாயுகாண் 8) (வ.வ. 154) சிறந்த விருந்து உறவினரையும் நண்பரையும் பேணுதலும் அவர்க்கு விருந்தளித் தலும் இல்வாழ்வான் கடமையெனினும், புதுமையாய் வந்தோர்க்கு விருந்தளித்தலே சிறப்பாம். விருந்து என்னும் சொல் முதலாவது விரும்பிச் செய்யும் வேளாண்மையைக் குறிக்கும். பின்பு அஃது ஆகு பெயராய்ப் புதுமையாய் வரும் விருந்தாளையும் அவர்க்கிடும் உணவையும் குறித்தது. விருந்துண்போரில் சிறந்தவர் புதிதாய் வந்தவர் என்பது தமிழர் கருத்து. இதனால் தமிழரின் விருந்தோம் பற் சிறப்பு அறியப்படும். (சொல். 109). சிறு கூலங்கள் வரகு காடைக்கண்ணி குதிரைவாலி (சொல் 74). சிறுதெய்வ வணக்கம் 1. பேய் வகைகள் திடுமென்று கொலையுண்டவர் அவர்க்குக் குறித்த வாழ் நாளெல்லை வரையும், வரம்பிறந்த கொடியோரும் தூய பெரியோராற் சாவிக்கப்பட்டவரும் நெடுங்காலமும், இறந்தபின் பேயாய்த் திரிவ ரென்பது, பொதுவான கருத்து. அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல் (மருள்) என்பன பேயின் பொதுப்பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உள; தீயனவும் உள. குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி (சடை முனி), அரமகள், அணங்கு எனப் பேயினம் பல திறத்ததாகச் சொல்லப் படும். குறளியைக் குட்டிச் சாத்தன் என்பர். பேய்களுட் காட்டேறி தூர்த்தேறி முதலிய பலவகைக ளிருப்ப தாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம் பெரும்பூதம் என இரு வகைய. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944:1). அரமகளைத் தேவமகள் என்று, அரைத் தெய்வத்தன்மை கொண்ட ஒரு தனியினமாகக் கூறுவது இலக்கிய வழக்கு. அரமகளிர் (nymphs), மலையர மகளிர் நீரர மகளிர் என இருவகையர். இருவகையரும் அடுத்த மாந்தரை அச்சுறுத்திக் கொல்வதால், சூரர மகளிர் எனப்படுவர். சூர் என்பது அப்பெயர்க் குறுக்கம். எக்கர் நண்ணிய எம்மூர் வியன்றுறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே. (குறுந். 53). பன்மையிற் குறிக்கப் பட்டதனால், அவர் கூட்டங் கூட்டமாக வாழ்வதாகக் கொள்ளப்பட்டனர் போலும்! அணங்கு என்பது, தன் அழகு மிகுதியால் ஆடவரை மயக்கிக் கொல்லும் பெண்பேய். தாக்கணங்கு என்றார் திருவள்ளுவரும் (குறள். 1082). கொல்லிமலை அப்பெயர் பெற்றது ஒரு தாக்கணங்கினாலேயே. கொல்வது கொல்லி. உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின் ................................................... தேனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய வினைமாண் பாவை (நற். 185) இதனுரையில், கொல்லிப்பாவை - அம்மலையிலுள்ள தேவரையும் முனிவரையுந் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும், அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும் படி, தேவ தச்ச னாக்கிவைத்த பெண்வடிவினது. அவுணரும் அரக்கரும் போதரு காலை, அவர் வாடை பட்டவுடன் தானே நகைசெய்யு மாறு பொறியுள் வைக்கப்பட்டது. அது நகைத்துக் கொல்லு மென்பதனை, ............................................ திரிபுரத்தைச் செற்றவனுங் கொல்லிச் செழும்பாவை யுந்நகைக்கக் கற்றதெல்லா மிந்தநகை கண்டேயோ (சித்திரமடல்) என்றதனாலு மறிக. என்று, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் குறித்திருப்பதைக் காண்க. அவுணரையும் அரக்கரையுங் கொல்லத் தேவ தச்சன் புனைந்த பொறி வினைப் பாவை என்னுங் கொள்கை, ஆரியத் தொல்கதை தோன்றிய பிற்காலத்தது. அது கொல்லி யணங்கின் பேரழகையும் கொல்லுந் திறத்தையும் பற்றிய உயர்வு நவிற்சியே. மக்கள் அவ்விடத்தை யணுகாவாறு எச்சரித்தற்கே, அவ்வணங்கின் படிமை அங்கு வைக்கப் பட்டிருத்தல் வேண்டும். மொகு - மோகு - மோகன் - மோகனை - மோகினி. மோகினி - கவர்ந்திழுப்பது. அணங்கை இன்று மோகினி என்னும் வட சொல்லாற் குறிப்பர். மாந்தர்க்கு அறியாமையும் அச்சமும் மிக்கிருந்த முதற் காலத்தில், பேயாட்சியும் மிக்கிருந்தது. அக்காலத்து மதம் பேய் மதமே. பேயாடிகளும் பேயோட்டிகளும் பேய்மந்திரிகரும் பெருமதிப்புப் பெற்றிருந்தனர். ஒருவரைப் பிடித்த பேயோட்டவும், நோய் நீக்கவும், ஒருவரை நோய்ப்படுத்தவும் வாய்கட்டவும் இயக்கந் தடுக்கவும் விரும்பிய இடத்திற்கு வருவிக்கவும் வசியஞ் செய்யவும் சாவிக்கவும், ஒருவர் மீது பேயேவவும், ஒருவ ருடமையை மறைக்கவும் அழிக்கவும், சண்டையிலும் கலகத்திலும் போரிலும் வெற்றி தரவும், இறந்தோரைப் பேசுவிக்கவும், தம்மால் இயலு மென்று பேய்மந்திரிகர் தருக்கினர். இன்றும், பேயோட்டல் பெருவழக்காகவும், வசியமுஞ் செய்வினையும் அருகிய வழக்காகவும், இருந்து வருகின்றன. குறளியேவல் சில செய்தித் தாட்களிலும் வெளியிடப்பட்டது. போர் வெற்றிக்கு மந்திரிகரைத் துணைக் கொள்வது, திப்பு சுல்தான் காலம்வரை தொடர்ந்தது. இறந்தான்குறி (Necromancy) கேட்கும் இடமும் இன்று சிலவுள்ளன. கடைக்கழகக் காலத்தில், பேயனார் என்றொரு புலவரும், பேய்மகள் இளவெயினி என்றொரு புலத்தியாரும், இருந்தனர். பேயாழ்வார், பூதத் தாழ்வார் என்று இறைவனடியார் பெயர்களும் அடுத்து வழங்கின. பேயன், பேய்ச்சி என்னும் இயற்பெயர் தாங்கிய மக்களை, இன்றும் நாட்டுப்புறத்திற் காணலாம். பண்டைக்காலத்திற் பேய்களே பெருவழக்காகப் பொதுமக்க ளால் வணங்கப்பட்டதனாலும், சில பேய்கள் நன்மையே செய்வனவாக இருந்ததனாலும், பேய்க்கு நாளடைவில் தெய்வம் என்னும் பெயரும் ஏற்பட்டது. சிலப்பதிகார காடுகாண் காதையில் பேய்மகள் தெய்வம் எனப் பட்டமை காண்க. இனி, பேய்கட்கு எல்லாச் செய்தியும் தெரியு மென்பதும், எவ்வடிவுங் கொள்ள இயலுமென்பதும், பொருத்த மாகப் படைத்து மொழியுந் திறனுண் டென்பதும், நொய்யவுடம் பன்றிக் கனவுடம்பும் இரவும் பகலும் எடுக்கவும் கானிலந் தோய நடக்கவும் கூடுமென்பதும், தம் தலைவியாகிய காளிக்குக் கட்டுப் பட்டும் பத்தினிப் பெண்டிர்க்கும் தூய துறவியர்க்கும் அஞ்சியும் ஒழுகும் கடப்பாடுண்டென்பதும், இப்பகுதியால் அறியப்படும். பேய்கள் பட்டப் பகலிலும் கனவுடம்பு கொண்டு பாதம் நிலத்திற் பதிய நடக்குமென்பதை, பழையனூர் நீலி கதையும் மெய்ப் பிக்கும், அல்லாக்கால், வணிகனை மட்டுமன்றி ஊராரையும் ஊர் முதலிகளாகிய எழுபது வேளாளரையும், நீலிப்பேய் ஏமாற்றி யிருக்க முடியாது. பேய்கட்கும் பூதங்கட்கும், கள்ளும் இறைச்சியும் படைப்பதும் கடாவும் சேவலும் காவு கொடுப்பதும், கல்வியும் பண்பாடுங் குன்றிய பொதுமக்கட்குக் களிப்பையும் ஊக்கத்தையும் ஊட்டு வனவாயிருந்தன. சில சமையங்களிற் புதைய லெடுக்கவும், கிணறு வெட்டவும், கட்டிடங் கட்டவும், நரக்காவு கொடுக்க வேண்டிய தாயிற்று. புதையலைப் பூதங் காத்தாற் போல் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல் என்னும் உவமைப் பழமொழிகள் கவனிக்கத்தக்கன. கள் + து - கடு + கு = கடுகு - கரிது, கடிப்பு - கடுகு. தீய ஆவிகள் சிறுபிள்ளைகளைத் தீண்டாவாறு, அவர்களின் தலையுச்சியில் அரைத்த வெண்சிறு கடுகை அப்பி வந்தனர். போரிற் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாவாறு, பெண்டிரும் உறவினரும், வேப்பங் குழையை வீட்டிற் செருகியும், மையிட் டும், வெண்சிறு கடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப் பண் பாடியும் காத்தனர் என்பது, தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி ஆம்ப லூதி இசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே என்னும் புறப்பாட்டால் (281) அறியப்படும். பேய்ப்புண்ணோன் - தொல் கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே என்று, புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத் தரை வெட்டிப் பாடி வேம்பின் சிறப்பை நாட்டியது இங்குக் கவனிக்கத்தக்கது. 2. கடிமரம் கடிமரம் என்பது, ஒவ்வொரு குறுநில மன்னனும் பெருநில வேந்தனும், கொடியும் முத்திரையும் போலத் தன் ஆள்குடிச் சின்னமாகக் கொண்டு, பகைவர் வெட்டாதவாறும் அவர் யானையை அதிற் கட்டாதவாறும், காத்து வந்த காவல்மரம். கடைக்கழகக் காலத்தில், கடிமரம் ஓர் அரசச் சின்னம் போன்றே கருதப்பட்ட தாயினும், முந்துகாலத்தில் அது அரசக் குடியைக் காக்கும் தெய்வ மாகவே வணங்கப் பட்டிருத்தல் வேண்டும். பண்டைக் காலக் கடிமரங்களுள் கடம்பு ஒன்று. அதைக் கொண்டவர் கடம்பர். பிற்காலத்தில் அரசமரம் தெய்வத்தன்மை யுள்ளதாகப் பொது மக்களாற் கருதப்பட்டதும், பிள்ளைப்பேறு வேண்டிய பெண்டிர் அரசமரத்தைச் சுற்றி வந்ததும், அரசமரத்தைச் சுற்றி வந்ததும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம். என்னும் பழமொழி யும், இக்கொள்கையை வலியுறுத்தும். (3) நாற்பூதம் நிலம் நிலம் மக்களைத் தாங்குவதனாலும், உணவு விளையும் இடமாயிருப்ப தனாலும், இறுதியில் எல்லா வுடம்பும் அதற்குள் ஒடுங்குவதனாலும், தாயாகக் கருதப்பட்டது. நிலமக ளழுத காஞ்சியும் (புறம். 365) நீர் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளைவிப்பதா யும், தானும் குடிக்கப்படுவதாயும், உடம்பையும் பொருள்களை யும் துப்புரவு செய்வதாயும், சமைக்க வுதவுவதாயும், உள்ள நீர்நிலை, எங்குங் காணப்படாமையால், ஆண்டு முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் பேராறுகள் தெய்வமாக வணங்கப்பட்டன. குமரிமலையும் பஃறுளியாறும் கடலுள் மூழ்கினபின், கங்கையே நாவலந்தேயத் தலைமைப்பேராறானமையின், அது ஒரு தாயாக அல்லது பெண்தெய்வமாக வணங்கப்பட்டது. கங்கையம்மன் என்பது இன்றும் ஒரு சிற்றூர்த் தெய்வம். ஆற்றுநீரை மிகுதியாகப் பயன்படுத்துபவர் வேளாள ராதலின், அவர் கங்கை புதல்வர் எனப்பட்டனர்.அவர்குலம் கங்கை குலம் எனப்பட்டது. கங்கை நாடு ஆரிய நாடாக மாறியபின், வேளாளர் காவிரி புதல்வர் எனப்பட்டனர். பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் (சிலப். 10: 148) தீ தீ பல்வகையிற் பெருநன்மை செய்வது பற்றித் தலைசிறந்த தெய்வமாக வணங்கப்பட்டதனால், தெய்வம் என்னும் பெயரே தீயைக் குறிக்குஞ் சொல்லினின்றே தோன்றிற்று. மரங்களும் கற்களும் பிறவும் ஒன்றோடொன்று உரசுவதனால் தீப் பிறப்பதைக் கண்டனர். அதனால், ஞெலிகோல் என்னும் தீக்கடை கோலால் தீயுண்டாக்கும் வழியைக் கண்டுபிடித்தனர். பொருள்களின் உராய்வினால் தீத் தோன்றலைக் கண்டபின், உராய்தலைக் குறிக்கும் தேய் என்னும் வினையினின்று, தீ என்னும் பெயரும் தெய்வம் என்னும் பெயரும் தோற்றுவிக்கப் பட்டன. தேய்தல் - பொருள்கள் ஒன்றோடொன்று உராய்தல். தேய் - தேயு = உராய்ந்து பற்றும் நெருப்பு. தேயு - தேசு = நெருப்பின் ஒளி, ஒண்மை. தேசு - வ. தேஜ. தேய் - தே = 1. தெய்வம் (பிங்.). தேபூசை செய்யுஞ் சித்திரசாலை (சிவரக. நைமிச. 20). 2. நாயகன். (இலக். 81). தே - தீ - 1. நெருப்பு. வளித்தலைஇய தீயும் (புறம். 2). 2. விளக்கு. தீத்துரீஇ யற்று (குறள். 929). 3. வயிற்றுத் தீயாகிய கடும்பசி. வயிற்றுத் தீத்தணிய (புறம். 74). 4. தீ போன்ற சினம். மன்னர்தீ யீண்டுதங் கிளையோடு மெரித்திடும். (சீவக. 250). 5. தீயின் தன்மை, தீமை, தீப்பால தான்பிறர்கட் செய்யற்க (குறள். 206). 6. நஞ்சு. வேகவெந் தீநாகம் (மணி. 20 : 98). 7. நரகத்தீ. தீயுழி யுய்த்துவிடும் (குறள். 867). தே-தீ. x.neh.: தேன்சுவை - தேஞ்சுவை - தீஞ்சுவை. தேய் - தெய் = தெய்வம். (பிங்.). தேய் - தேய்வு - தேவு = 1. தெய்வம். (பிங்.). நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696:2). 2. தெய்வத் தன்மை. தேவு - தேவன் = கடவுள். ஒருவனே தேவனும் (திரு மந். 2104). தேவன் - வ. தேவ. தேய்வு - தெய்வு - தெய்வம் = 1. வணங்கப்படும் பொருள். தெய்வ முணாவே (தொல். பொ. 18). 2. தெய்வத் தன்மை. 3. தெய்வத் தன்மையுள்ளது. 4. கடவுள். அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் (பழமொழி). 5. கடவுளின் ஏற்பாடாகிய ஊழ். தெய்வம் - வ. தைவ. தெய்வம் - தெய்வதம். ஆங்கத் தெய்வதம் வாரா தோவென (மணி. 9: 70). தகரம் எழுத்துப் பேறு. ஒ.நோ.: படவு - படவர் - பரவர் - பரதவர். தெய்வதம் - வ. தைவத (daivata). தெய்வம் - L. deus, Gk. theos. தமிழரை என்றும் தம்மடிப் படுத்தவும் உலகத்தை ஏமாற்றவும் திட்டமிட்டுள்ள சமற்கிருத வெறியரான பிராமணர், மொழியிய லுண்மையை நெஞ்சார மறுத்து, தைவ என்னுந் தென்மொழித் திரிசொல்லினின்று தாம் செயற்கையாகத் திரித்துக் கொண்டதிவ் என்னும் மூலத்தினின்று, தெய்வம் தேவு தேவன் முதலிய தென் சொற்கள் பிறந்துள்ளதாகக் கூறுவர். தேய் என்னும் மூலத்தி லுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலு மிருப்பதை யும், இலத்தீன கிரேக்கச் சொற்களிலும் யகரம் ஒலிப்பதையும், நோக்குக. தொட்டாற் சுடுவதும் தொடர்ந்து பட்டால் எரித்துக் கொல்வ தும் பற்றி, தீக் கொடியதென்று கருதப்பட்டு, அதன்பெயரினின்றே தீமை என்னுஞ்சொல் தோன்றியிருப்பினும், பிற பூதங்கள் செய்யாத பல்வேறு பெருநன்மைகளைச் செய்வதால், சிறப்பாக இரவில் இடம் பெயர்விற்கும் அறிவுப் பேற்றிற்கும் உணவு தேடற்கும் இன்றியமையாத ஒளியைத் தருவதால், தீயானது இன்றும் போற்றப்படுவதிலும் விளக்கேற்றியவுடன் வணிகரால் தொழப் படுவதிலும், வியப்பொன்று மில்லை. வளி (காற்று) நாற் பூதங்களுள்ளும் வலி மிக்கது வளி. வளிமிகின் வலியு மில்லை (புறம். 51). வலிமை மிக்கவனை வளிமகன் என்பர். அரக்கில்லை வளிமக னுடைத்து (கலித். 25) மென்காற்றாகிய தென்றலாலும் தண்காற்றாகிய கொண்ட லாலும் இன்பத்தையும், வெங்காற்றாகிய கோடையாலும் குளிர் காற்றாகிய வாடையாலும் துன்பத்தையும், வன்காற்றாகிய சூறா வளியால் துன்பத்தொடு சேதத்தையும், கண்ட மாந்தர், வெங்காற் றும் வன்காற்றும் வீசாவாறு காற்றுத் தெய்வத்தை வேண்டி வந்தனர். இதை, முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் தறுகென வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ என்னும் கலித்தொகை யடிகள் (பாலை. 16) உணர்த்தும். வளிதருஞ் செல்வன் என்றது காற்றுத் தெய்வத்தை, வேனிற் காலத் தில் வெங்கான வழியாகச் செல்லுங் கணவன் மீது, வெம்மையாக வீசாவாறு காற்றுத் தெய்வத்தையே தலைவி வேண்டக்கருதி, தன் கற்பினால் மயங்கினாள். முதல் தாழிசையில் இன்னிசை யெழிலி யென்றது முகில் அல்லது மழைத் தெய்வத்தை. இரண் டாம் தாழிசையில் கனை கதிர்க் கனலி என்றதே ஞாயிற்றை. நச்சி னார்க்கினியர் மூவிடத்தும் ஞாயிறென்றே பொருள் கொண்டு, ஞாயிற்றைப் பாலைக்குத் தெய்வமாகக் கூறினார். பாலைத் தெய்வம் காளியே. கதிரவனும் திங்களும் நானிலத் திற்கும் ஐந்திணைக்கும் பொதுவாகும். தொல்காப்பியர், மாயோன் மேய (தொல். 951) என்னும் நூற்பாவில், பாலைக்குத் தெய்வங் கூறாது விட்டதால், இம் மயக்கம் நேர்ந்தது. இருசுடர் கதிரவன் பகலைத் தோற்றுவித்துப் பல்வேறு தொழிலும் உலக வாழ்க்கையும் நடைபெறச் செய்யும் கதிரவனை வணங்கியது, இயற்கைக்கு முற்றும் ஒத்ததே. இன்றும், நீண்ட நாள் இடைவிடாது அடைமழை பெய்யும் போதும், கடும்பனிக் காலத்திலும், கள்வரச்சமும் கடுவிலங்கச்சமும் உள்ள இடத்தில் இராத்தங்கும் போதும், விழா நாட்களிலும், வேலை நெருக்கடி யுள்ள போதும், நோய் நிலையிலும், தூக்கம் வராத போதும், கண்ணன்ன கேளிரைக் காண விரையும் நிலையிலும், இரவிற் சவமுள்ள வீட்டிலும், கதிரவன் தோற்றத்தின் மீது வேண வாக் கொள்வது இயல்பாதலால், நாகரிகம் குன்றிய பண்டைக் காலத்தில் அது மிக்கே யிருத்திருத்தல் வேண்டும். கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ என்னுங் கலித்தொகையடி (16), கதிரவன் வணங்கப் பட்டதைக் குறிப்பாக வுணர்த்தும். காவிரிப்பூம்பட்டினத்திற் கதிரவன் கோவில் இருந்தது. உச்சிக் கிழான் கோட்டம் (சிலப். 9:11). முற்றத் துறந்த முழு முனிவராகச் சொல்லப் பெறும் இளங்கோ வடிகளே, தம் இயைபு வனப்புத் தொடக்கத்தில், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று மங்கல வாழ்த்துப் பாடினார். உலக விளக்காக விருந்து உயிர் வாழ்க்கை நடைபெறச் செய்யும் கதிரவன், தீயின் கூறாக விருப்பதனாலும் பெருஞ்சிறப்புப் பெறுவதாயிற்று. அதனால், தெய்வப் பெயரினின்று கதிரவன் பெயரொன்றும் தோன்றிற்று. சுள்ளுதல் = எரிதல், காய்தல், சுடுதல். சுள் - சுள்ளி = காய்ந்த குச்சு. சுள் - சுள்ளை = கலமுஞ் செங்கலும் சுடும் காளவாய். சுள்ளை - சூளை. சுள்ளென்று வெயிலடிக்கிறது என்று, இன்றுஞ் சொல்லும் உலக வழக்கை நோக்குக. சுள் - வ. ஸுஷ். சுள் - சுர் - சுறு - சுடு - சுடல் - சுடலை. சுர் - சுரம் = சுடும் பாலை நிலம், உடம்பு சுடும் காய்ச்சல் நோய். சுரம் - வ. ஜ்வர. நெருப்பைத் தொட்டவர், சுரீர் என்று சுட்டுவிட்டதென்று இன்றுஞ் சொல்லுதலைக் காண்க. சுரம் - சுரன் = தீ வடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். சுரன் - வ. ஸுர. சுரன் - சூரன் - 1. நெருப்பு. (பிங்.). 2. கதிரவன். (பிங்.). காதற் சூரனை யனைய சூரா (பாரத. பதினேழாம். 49). சூரன் - வ. ஸூர்ய. ளகரம் லகரத்தின் திரிபு வளர்ச்சியாதலால், சுள் என்பதன் மூலம் சுல் என்பதே. L. sol, E. sun. OE. sunne, sunna, ON. sunna, OS., OHG. sunno, sunna, Goth. sunno. ஒரே மூலத்தினின்று திரிந்த வடசொற்கள், ஸுர என்றும் ஜ்வர என்றும் முதலெழுத்து வேறுபட்டிருத்தலை, ஊன்றி நோக்கி உண்மை தெளிக. எல்-1. ஒளி. எல்லே யிலக்கம். (தொல். சொல். 271). 2. வெயில். (பிங்.). 3. கதிரவன். எற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74). எற்பாடு = கதிரவன் சாயுங் காலம். 4. பகல். எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறம். 170). 5. நாள். (பிங்.). எல்லவன் = கதிரவன். எல்லவன் வீழு முன்னம் (பாரத. பதினெட். 119). எல்லினான் = கதிரவன். புயங்க முண்டுமிழ்ந்த வெல்லினானென் (கந்த பு. அக்கினி. 223). எல்லோன் = கதிரவன். (பிங்.). எல்லி = 1. கதிரவன். (பிங்.). 2. பகல். இரவோ டெல்லியு மேத்துவார் (தேவா.344: 8). x.neh.: Gk. helios. புது + எல் = புத்தெல் - புத்தேள் = புதிதாக ஒளிவடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். புத்தே ளுலகத்தும் (குறள். 213). இதனால், எல் என்பது கதிரவனுக்கும் தேவனுக்கும் பொதுப் பெயரானமை காண்க. திங்கள் ஞாயிறு மறைந்த இராக்காலத்தில், நிறைந்தும் குறைந்தும் மறைந்தும் அதற்குச் சிற்றளவு தலைமாறாகத் தோன்றுவது திங்கள். தழு - தகு - திகு - திகழ் - திங்கள். தழு - தழல் - தணல். தழதழ - தகதக. தக - தகம் - தங்கம். ஆயிரக்கணக்கான வெள்ளி களை விட விளக்கமாய்த் திகழ்வதால், திங்கள் எனப்பட்டது. சிற்றொளி வீசுதல் தவிர வேறொரு நன்மையுஞ் செய்யாவிடினும், வேனிற்கால வெப்பந் தாங்க முடியாது வருந்திய மாந்தர், தண்ணொளி வீசும் திங்களையும் புகழ்ந்து போற்றினர். பிறை தொழுகென்றல் என்னும் அகப் பொருட்டுறை, திங்கள் வணக்கம் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தமையைக் காட்டும். காவிரிப் பூம்பட்டினத்தில் திங்கட்கும் கோவிலிருந்தது. இளங்கோ வடிகளும், திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று மங்கல வாழ்த்துப் பாடினார். நிலாக் கோட்டம் (சிலப். 9: 13). திங்களைப் போல் தீயும் இரவில் ஒளி தருவதால், கதிரவன் திங்கள் தீ ஆகிய மூன்றும் முச்சுடர் எனப்பட்டன. அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் (தக்க யாகப். 281). பண்டைத் தமிழக முப்புலங்களுள், தென்புல மென்னும் பாண்டிநாடு வெப்பமிக் கிருந்ததனால், பாண்டியன் திங்களைத் தன் குல முதலாகவும்; குணபுல மென்னும் சோழநாடு பனிமலை வரை தொடர்ந்து வெப்பங் குன்றியிருந்ததனால், சோழன் கீழ்த்திசையி லெழுங் கதிரவனைத் தன் குல முதலாகவும்; குடபுல மென்னும் சேரநாடு நாள்தோறும் பெருமழை பொழியும் குடமலைத் தொடரைக் கொண்டிருந்ததனால், சேரன் தீயைத் தன் குல முதலாகவும்; கொண்டிருந்தனர். மூவேந்தர் குடிக்கிளை களே, வட நாவலம் ஆரிய நாடாக மாறியபின், சந்திர வமிசம் சூரிய வமிசம் அக்கினி வமிசம் எனப் பெயர் பெற்றன. நச்சுயிரி தமிழகத்தில் மக்களைத் தொன்று தொட்டுக் கொன்று வந்த நச்சுயிரிகளுள், தலைமையானது பாம்பு. பாம்பினத்தில், தீயதும் தீய தல்லாததும் ஆக இரு சாருள. தீயவற்றுள்ளும், நச்சுப் பல்லாற் கொத்தி மேனி நோயுண்டாக்குவனவும் விரைந்து உயிர் போக்குவனவுமான சிற்றுடம்பினவும், வாயினாற் பற்றி மக்களை யும் விலங்குகளையும் இரையாக விழுங்கும் பேருடம் பினவும், ஆக இரண்டு வகுப்புக்களுள. கொல்வது மட்டும் செய்வனவற் றுள், நல்ல பாம்பு, விரியன் முதலிய பலவகை யுள. அவற்றுள்ளும், ஒவ்வொன்றும் பல திறப்பட்டதாகும். பாம்பு என்பது, முதற்கண் நல்ல பாம்பின் பெயராகவேயிருந்து, பின்னர்ப் பொதுப் பெயராயிற்று. பாதல் பரவுதல். பா-பாவு. பா-பாம்-பாம்பு. நல்ல பாம்பு தன் படத்தைப் பரப்புவதால் பாம்பு எனப்பட்டது. அது பொதுப் பெயரான பின், குல மரத்தை நன் மரம் என்றாற் போலக் குலப் பாம்பை நல்ல பாம்பு என்றனர். நாகம் என்பதே பாம்பின் பொதுப் பெயர். நகர்வது நாகம். ஒ.நோ. OE. Snakan = to creep; Snak - Snake. நாகம் - வ. நாக (na#ga). நக (naga) என்னும் சொல்லினின்று திரித்து, மலையிலிருப்பது நாகம் என்று வடமொழியாளர் கூறுவது, பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தி. நச்சுப் பாம்புகளுட் பெரு வழக்காக மக்களில்லங்களை யடுத்து வாழ்வது, நல்ல பாம்பே யாதலால், நாளடைவில் நாகம் என்னும் பொதுப் பெயர் நல்ல பாம்பின் சிறப்புப் பெயருமாயிற்று. நாகப் பாம்பு பைத்தனைய (சீவக. 561). நன்மணி யிழந்த நாகம் போன்று (மணி. 25 : 195). முடிநாகராயர், இளநாகனார், நன்னாகனார், நாகனார், நாகன் தேவனார் என்னும் பண்டைப் புலவர் பெயர்களும், நாலை கிழவன் நாகன் என்னும் கடைக் கழக வேள் பெயரும், நாகப்பன் நாகராசன் நாகலிங்கம் நாகம்மை நாகமுத்து என்னும் இற்றை இயற்பெயர்களும், நாகபடம் (பாம்படம்) நாக முடிச்சு நாகர் நாகவொத்து என்னும் பெண்டிர் அணிப் பெயர்களும், குறிப்பா கவும்; சில அரச மரத்தடியிலும் மேடைமேலு முள்ள, ஐந்தலை நாகமும் எழுதலை நாகமும் இருநாகப் பிணையலும் ஆகியவற் றின் உருவம் செதுக்கிய கற்கள், வெளிப்படையாகவும்; பண்டை நாக வணக்கத்தைத் தெரிவிக்கும். பாம்புக் கோவில் சந்தை என்றொரு புகைவண்டி நிலையமும் உள்ளது. இன்றும் நாகக் கற்களை வணங்கும் மாந்தர் ஒரு சிலர் உளர். நல்ல பாம்புப் புற்றோ வளையோ உள்ள வீடுகளில், நாள் தோறும் அல்லது செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பாலும் பழமும் படைப்பது வழக்கம். வதி தெய்வம் பண்டை மாந்தர், ஒவ்வொரு மலையிலும் சோலையிலும் இயற்கை நீர் நிலையிலும், ஒவ்வொரு தெய்வம் நிலையாக வதிந்ததாகக் கருதி, அவற்றையும் வணங்கி வந்தனர். சீகாழி சீகாழி - ஸ்ரீகாலீ திரு-ஸ்ரீ. காளி-காலீ. திருக்காளி - திருக்காழி - ஸ்ரீகாழி - சீகாழி. சிலர் சீர்காழி - சீகாழி என்பர். (வ.வ. 154). சீமையரசாட்சி வகைகள் சீமை என்பது 1. நகரச் சீமை (City State) 2. இனச் சீமை (Nation State) 3. தேயச் சீமை (Country State) 4. கூட்டுச்சீமை (Federal State) என நால்வகையாகக் கூறப்படும். ஒரே பேரூராயிருர்ப்பது, அல்லது ஒரே நகரமும் அதனைச் சார்ந்த சிற்றூர்களும் சேர்ந்தது நகரச்சீமை; ஒரேயின மக்கள் வாழும் நாட்டுச் சீமை இனச்சீமை; பல இன மக்கள் வாழும் நாட்டுச் சீமை தேயச் சீமை; பல நாடுகள் சேர்ந்தது கூட்டுச் சீமை. சேரசோழ பாண்டிய நாடுகள் மூன்றும் ஒரின மக்களையே கொண்டனவாயும், வெவ்வேறு. அரசின் கீழ்ப்பட்டனவாயும் இருந்ததினால், அவற்றை ஆங்கில நிலச்சீமை (Territorial State) என அழைக்கலாம். அகப்பொருட் செய்யுட் கிளவித்தலைவர், வெற்பன் குறும் பொறை நாடன் ஊரன் துறைவன் விடலை எனக் குறுநிலத் தலைவராகவும் தனியூர்த் தலைவராகவுமே குறிக்கப் பெறுவதால், சேர சோழ பாண்டியவரசுகள் தோன்று முன் நகரச் சீமைகளே தமிழகத்திலிருந்தன எனக் கொள்ள இடமுண்டு. அரசு அல்லது அரசியல் என்பது, 1. கோவரசு (Monarchy) 2. குடியரசு (Democracy) 3. சீரியோரரசு (Aristrocracy) என மூவகைப்படும். கோவரசை முடியரசு என்றுங் கூறலாம். முத்தமிழரசுங் கோவர சாகும். பிற்காலத்தில் பார்ப்பனச் செல்வாக்கு மிக்கிருந்ததினால், அதை ஒருவகைப் பார்ப்பனச் சீரியோர ரசு (Brahmin Aristrocracy) என்னலாம். தமிழ்க்கோவரசு பெரும்பாலும் செங்கோலாட்சியாகவும் (Righteous government), சிறுபான்மை கொடுங் கோலாட்சியாகவும் (Despotic government), இருந்தது. இரண்டும் முற்றதிகாரக் கோவரசே (Absolute monarchy), நிலைத்த ஆட்சி (Stable government) பொறுப்பாட்சி (Responsible Government) என்னுந் தன்மைகள் செங்கோலாட்சிக்கிருந்தன. சிற்றரசர் நாடுகட்கெல்லாம் தன்னாட்சி (Autonomy) வழங்கப் பட்டிருந்தது. இற்றை அரசியல் நூல் (Politics) வகுக்கும் சீமை பாகுபாட்டின் படி, தமிழ்ச் சீமைகளின் வகைமையைக் கூறின், நெகிழும் சட்டமுறைமையும் (Flexible constitution), தேர்தல் பெறாக் கருமச் சுற்றமும் (Non-elective Executive), சட்டநீதியும் (Rule of law) கொண்ட தாராளத் (Liberal) தனிச் சீமை (Unitary State) என்னலாம். பிற்காலத்தில் ஆரியக் குலப்பிரி வினையால் ஏற்பட்ட குலவாரி நீதியை, ஆள்வினை நீதி (Administrative law) என்னலாம். சீர்த்தி சீர்த்தி - கீர்த்தி (அ.வே.). சீர் = 1. பெருமை. சீர்கெழு கொடியும் (புறம். 1). 2. மதிப்பு. வணக்கருஞ் சீர் ... மன்னன் (பு.வெ.9:22). 3. புகழ். ஆனாச்சீர்க் கூடலுள் (கலித். 30) சீர்த்தல் = சிறத்தல். பொருடன்னிற் சீர்க்கத் தருமேல் (திவ். திருவாய். 8:7:6). சீர் - சீர்த்தி = மிகுபுகழ். சீர்த்தி மிகுபுகழ் (தொல். சொல். 313). சீர்த்தி - கீர்த்தி = புகழ். விண்சுமந்த கீர்த்தி (திருவாச. 8:8). கீர்த்திமான் = புகழ்பெற்றவன். கீர்த்தி - கீர்த்திமை. அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி (திவ். திருப்பா. 13). கீர்த்தித்தல் = புகழ்தல். தான்றன்னைக் கீர்த்தித்த மாயன் (திவ். திருவாய். 7:9:2). வ. கீர்த் = புகழ் (ஏ. வி. - அ. வே. கீர்த் - கீர்த்தி - இ.வே. இதற்குக் க்ரு (2) என்னும் சொல்லை மூலமாகக் கூறி, காரு = புகழ்வோன், பாவலன் (இ.வே.) என்று எடுத்துக் காட்டுவர். (வ.வ. 144-145). சீர்தூக்கல் சீர்தூக்கல் என்பது முதலாவது, துலைக் கோலில் ஒன்றை நிறுத்த லுக்குப் பெயர். சீர், துலைத்தட்டு; தூக்கல் - நிறுத்தல். இன்று, மனத்தில் ஒன்றை நிறுத்தல் போல ஆராய்ந்து பார்த்தலுக்குச் சீர் தூக்கல் என்று பெயர். மனமாகிய துலைக் கோலில், மதி நுட்ப மாகிய வரை அல்லது படியிட்டு, நடு நிலையாகிய நாவினால் நிறுப்பது போல ஆராய்தல் சீர்தூக்கல். (சொல். 11) சீரகம் சீரகம் - ஜீரக சீர் - சீரம் = சீரகம் (மூ. அ.). சீரம் - சீரகம். உலகில் முதன்முதற் சிறந்த முறையிற் சமையல் தொழில் தொடங்கியதும் அதற்குச் சீரகத்தைப் பயன்படுத்தியதும் தமிழகமே. சிறுபிள்ளை யில்லாத வீடும் சீரகமில்லாத கறியும் செவ்வை யாயிரா. என்பது தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி. சீரகக்கோரை, சீரகச்சம்பா, சீரக வள்ளி என்பன ஒப்புமை பற்றிப் பெயர் பெற்ற நிலைத்திணை (தாவர) வகைகள். பொன்னளவையிற் சீரகம் என்பது ஓர் அளவு. 5 கடுகு = 1 சீரகம். 5 சீரகம் = 1 நெல். அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி யுளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே அவைதாம் கசதப வென்றா நமவ வென்றா அகர உகரமோ டவையென மொழிப. என்னுந் தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா (170) வுரையில், கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை என்று இளம்பூரணரும்; கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை இவை நிறை என்று நச்சினார்க்கினியரும் கூறியிருத் தலையும், நோக்குக. செரி - (செரியகம்) - சீரகம். வடவர் மூலங்காட்டும் வகை - ஜீரக = ஜீரண. ஜ்ரூ - ஜீரண. ஜ்ரூ = கிழமாக்கு, கட்டுக்குலை, கரை, செரிக்கச் செய். ஜ்ரூ என்பது கிழ என்னும் தென்சொற் றிரிபே. (வ.வ. 155-156). சீரை சீரை - சீர (c) சிரைத்தல் = 1. மயிர் கழித்தல். ம. சிரெ. க கெரெ. 2. செதுக்குதல். புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ (ஈடு, 3: 9: 6). சிரை - சீரை = 1. செதுக்கப்பட்ட மரப்பட்டை, மரவுரி. சீரை தைஇய வுடுக்கையர் (திருமுரு. 126). 2. சீலை (பிங்.). சீரை - சீலை - சேலை. வடவர் காட்டும் மூலம் சி (ci). சி = அடுக்கு, அடுக்கிக் கட்டு. (வ.வ. 156). சுக்கு சுக்கு + சுஷ்க உள் - சுள், சுள்ளெனல் = சுடுதல். சுள் - சுள்ளை = பானைசட்டியும் செங்கலும் சுடுமிடம். சுள்ளை - சூளை. சுள் - சுடு - சுடல் - சுடலை = சுடுகாடு. சுள் - சுட்கு. சுட்குதல் = காய்தல். வறளுதல். சுட்கம் - சுட்கு - சுக்கு. சுக்குதல் = உலர்தல். சுக்கு = காய்ந்த இஞ்சி (திவா.) சுட்கம் - சுஷ்க சுள் என்று வடமொழியில் சுஷ் என்று திரியும். x.neh.: உள் - உஷ். சுஷ்க = உலர்ந்த பொருள். சுக்குச் சுக்காய்க் காய்ந்து போய்விட்டது என்னும் வழக்கு தமிழில் இருந்தாலும், சுக்கு என்பது தமிழிற் சிறப்பாய் உலர்ந்த இஞ்சியைத்தான் குறிக்கும். வடமொழியிலோ அது உலர்ந்த பொருள்கட் கெல்லாம் பொதுவாகும். (வ.வ.156). சுட்டுக் கருத்து வளர்ச்சி மொழி வரலாற்றில், முதன்மையாய்க் கவனிக்க வேண்டிய மூன்று காலங்கள் உள. அவை, சைகைக்காலம், குறிப்பொலிக்காலம், சுட்டொலிக்காலம், என்பன. விலங்கும் பறவையும் போல உணர்வொலிகளை மட்டுங் கொண்டு. அவற்றால் உணர்த்த முடியாத பிற கருத்துக்களை யெல்லாம் சைகைகளைக் கொண்டே உணர்த்திய காலம், சைகைக்கால மாகும். இச்சைகை முறையைச் சைகைமொழி (Gesture language) என்பர். சிறுபான்மை சைகைகளைத் துணைக் கொண்டு, உணர் வொலி முதலிய ஐவகைக் குறிப்பொலிகளையுங் கையாண்ட காலம், குறிப்பொலிக் காலமாகும். இக்குறிப்பொலி மொழியை இயற்கை மொழி (Natural language) என்பர். குறிப்பொலிகளுடன் சுட்டொலிகளையுங் கையாண்டு, அவற்றினின்று பல்லாயிரக் கணக்கான சொற்களைத் திரித்துக் கொண்ட காலம், சுட் டொலிக்காலமாகும். சுட்டொலிகள் தோன்றிய பின்னரே மொழி வளர்ச்சியடையத் தொடங்கிற்று. (1) சுட்டொலிகள் முந்தியல் மாந்தர், முன்னிலைக்கும் அண்மைக்குமன்றிப் பயன் படாமையும் தெளிவின்மையும் சில கருத்தறிவித்தற் கியலாமையும் ஆகிய முக்குறைகள் சைகை முறைக்கிருத்தலைக் கண்டபின், அண்மை சேய்மையாகிய இருமைக்கும் பயன் படுமாறு அறுவகை ஒலிகளைக் கருத்தறிவிக்கும் வாயிலாகக் கையாண்டு வந்தனர். அவற்றுள் சுட்டுக்கருத்தைத் தெரிவித்தற்குக் கையாளப் பட்டவை ஆ (அ), ஈ (இ), ஊ (உ) என்பன. இம்மூன்றையும், முறையே, சேய்மைச் சுட்டாகவும் அண்மைச் சுட்டாகவும், முன்மைச் சுட்டாகவும் ஆண்டு வந்தனர். சுட்டொலியடிச் சொற்களே. உண்மையில் சுட்டொலியடிச் சொற்றொகுதியே மொழியெனினும் இழுக்காகாது. சுட்டொலிகள் தோன்றிய பின் சொல் வளர்ச்சியடைந்த மொழியைப் பலுக்கு மொழி (Articulate language) என்பர். இதுவே மொழியெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது. ஆகவே, சுட்டொலித்தோற்றம் முற்கால மொழியாகிய திருந்தா மொழிக்கும் பிற்கால மொழி யாகிய திருந்திய மொழிக்கும் இடைப்பட்ட எல்லைக் கோடாகும். முதற்காலத்தில் சைகைகளே பெரும்பாலும் கருத்தறிவிப்பிற்குப் பயன் படுத்தப்பட்டமையின், பின்னர் அவற்றிற்குப் பதிலாக ஒலிகளைக் கையாண்டபோதும், அவற்றையும் ஒருவகைச் சைகைகளாகவே கருதி வந்தனர். உண்மையில், ஒப்பொலிகளும் வாய்ச்செய்கையொலிகளும் ஒலிச்சைகைகள் (Sound-gestures) என்னத் தக்கனவே. ஒரு காக்கையின் வடிவைக் கைச்சைகையால் நடித்துக் காட்டுவது போன்றதே. அதன் குரலைக் காக்கா வென்று ஒலிச்சைகையால் நடித்துக் காட்டுவதும். ஒருவனுடைய உடல் நிலையை அல்லது உளநிலையை அதற்குரிய உணர்வொலி களால் இன்னொருவன் நடித்துக்காட்ட முடியுமாதலின், உணர் வொலிகளும் ஒலிச் சைகைகளாகப் பயன்படுத்தக் கூடியவையே. சுட்டொலிகளும் முதலாவது வாய்ச் சைகை யொலிகளாகவே பிறப்பிக்கப் பட்டன. வாய்ச் செய்கை யொலிகட்கும் இவற்றிற் கும் வேறுபாடென்னையெனின்; அவை ஓரிடத்தையுஞ் சுட்டாது சில வாய் வினையைச் சுட்ட. இவை எவ்வினையையுஞ் சுட்டாது மூவிடத்தையும் அவற்றிலுள்ள பொருளையும் சுட்டுவதே. சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடங்களையும் முறையே சுட்டக்கூடிய ஒலிகள், ஆ, ஈ, ஊ என்னும் மூன்றாய்த்தான் இருக்க முடியும். வாயை ஆவென்று விரிவாகத் திறந்து சேய்மையைச் சுட்டும் போது ஆகார வொலியும், ஈயென்று பின்னோக்கி யிழுத்துச் சேய்மைக்குப் பின்மையாகிய அண்மையைச் சுட்டும் போது ஈகாரவொலியும், ஊவென்று முன்னோக்கிக் குவித்து முன்மையைச் சுட்டும் போது ஊகாரவொலியும், பிறத்தல் காண்க. நெடிலின் குறுக்கம் குறிலும் குறிலின் நீட்டம் நெடிலு மாதலின் ஆ, ஈ, ஊ எனினும் அ, இ, உ எனினும் ஒன்றே. குறிலினும் நெடில் ஒலித்தற் கெளிதாதலானும், குழந்தைகள் குறில்களைப் பெரும்பாலும் நெடிலாகவே யொலித்தலானும், குழந்தை நிலையிலிருந்த முந்தியல் மாந்தன் வாயில் நெடில்களே முந்திப் பிறந்திருத்தல் வேண்டும். வாயினால் சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடங்களை யும் சுட்டவேண்டுமாயின், இன்றும் மேற்கூறிய மூவகையிலல்லது வேறுவகையில் சுட்ட முடியாது. அம் மூவகைச் சுட்டு நிலையில், ஆ, ஈ, ஊ தவிர வேறெழுத்தொலி களையும் பிறப்பிக்க முடியாது. சேய்மையைச் சுட்ட வேண்டுமாயின் வாயை விரிவாய்த் திறத்தல் வேண்டும். அந்நிலையில் ஆகாரந்தான் ஒலித்தற்கியலும். சேய்மைக்குப் பின்மையாகிய அண்மையைச் சுட்ட வேண்டுமாயின வாயைப் பின்னோக்கி யிழுத்தல் வேண்டும். அந்நிலையில் ஈகாரம் தான் ஒலித்தற்கியலும். முன்மையைச் சுட்ட வேண்டுமாயின் வாயை முன்னோக்கிக் குவித்தல் வேண்டும். அந்நிலையில் ஊகாரந்தான் ஒலித்தற்கியலும். ஆகவே, சுட்டொலிகள் மூன்றும் கணிதம் போல் அளவைப்பட்டனவும், திட்டமானவும், எவ்வகை யிலும் மாறாதனவும் ஆகும். ஆகார ஈகாரச் சுட்டுக்களை இக்கால மக்கள் முத்தியல் மாந்தர் போல் ஒலிப்பதில்லை. ஊகாரச் சுட்டு இதழ் குவிந்தொலிப்ப தாதலின், அதை ஓரளவு முன்னோரொத் தொலிக்கலாம். ஆயின், அது இன்று வழக்கற்றது. சைகைக் கால மாந்தர் கைச் சைகையால் சேய்மை யண்மை முன்மையிடங்களைச் சுட்டி வந்தது போன்றே, சுட்டொலிக்கால மாந்தரும் வாய்ச் சைகையாற் சுட்டி வந்தனர். முச்சுட்டுக்களை யும் ஒலிக்கும்போது, அவர் வாய்ச்சைகையை முதன்மையாய்க் கவனித்தனரேயன்றி, அவ்வொலி களை யன்று. அறுவகை யொலிகளினின்றும் சொற்கள் தோன்றி மொழி வளர்ச்சியுற்ற பின்னரே, மக்கள், வாய்ச் சைகை யுணர்ச்சியின்றி ஒலிகளையே அல்லது சொற் பொருளையே நோக்கி வருகின்றனர். சுட்டொலிகள் தோன்றிய காலம் அசைநிலைக்கால மாதலின், அன்று அவை வாய்ச் சைகை யொலிகளாகவே யிருந்து செவ்வை யாய்ப் பலுக்கப்பட்டன. பின்பு ஈரசைச் சொற்களும் மூவசைச் சொற்களுந்தோன்றி, வாய்ச் சைகையின்றிச் சொற்களே சுட்டுப் பொருளை யுணர்த்துந் திறம் பெற்றபின், வாய்ச் சைகை விட்டு விடப்பட்டது. அதனால், இன்று சுட்டொலிகளின் வாய்ச்கைகைத் தன்மை பொதுவாய் உணரப்படவில்லை. இதனை ஓர் ஓரன்ன நிகழ்ச்சியால் விளக்கலாம். ஒருவரால் கொடுக்கப்பட்ட பொருளின் சிற்றளவைக் குறித்தற்கு, ஆட்காட்டி விரலின் நுனியில் ஒரு சிறு பகுதியைப் பெருவிரலால் தொட்டுக்காட்டி, இத்துணை யுண்டு (இத்துணைப்போலக்) கொடுத்தான் என்று முன்பு சைகையோடு கூறிய கூற்று, இன்று சைகையின்றியே பொருளுணரப் படுதலால், சைகையில்லாமலே கூறப்படுதல் காண்க. இங்ஙனமே சுட்டொலிகளும், இத்துணை யுண்டு இத்துணைப் போல என்னுந் தொடர்கள், இன்று கொச்சை நடையில் இத்துனூண்டு இத்தினிப் போல எனத் திரிந்து வழங்குகின்றன. மூவகை சுட்டுக் கருத்துக்களினின்றும், சிறப்பாக முன்மைச் சுட்டுக் கருத்தினின்று, பற்பல கருத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றினின் றொன்றாகவும் தொடர்ந்து தோன்றியுள்ளன. அவற்றைக் குறித்தற்கே மூவகைச் சுட்டொலிகளினின்றும் கணக்கற்ற சொற்கள் திரிக்கப்பட்டு, மொழி வளர்ச்சி யடைந்து வளம் பெற்றுள்ளது. மூவகைச் சுட்டுக்களுள், முன்மையென்பது அணுகிய எதிர்நிலை. அண்மை யென்பது, முன்மையினும் பிற்பட்ட அல்லது பேசுபவ னுக்கும் முன்நின்று கேட்பவனுக்கும் இடைப்பட்ட, அருகு நிலை. முன்மைக்கப் பாற்பட்டது சேய்மை. உரையாடும் இருவருள் முன்னிற்பவன் நிற்கக் கூடிய தொலைவரையும் முன்மையிடமாக. ஊகாரச் சுட்டு வழக்கற்றதினாலும், முன்மை யென்பது சேய்மைக்கும் அண்மைக்கும் ஒருவகையில் இடைப் பட்டதாத லானும், இடைக்காலத் திலக்கணியர் முன்மைச் சுட்டை இடைமைச் சுட்டெனக் கருதினர் போலும்! மூவகைச் சுட்டுக்களையும் ஆ, ஈ, ஊ என்ற முறையிற் கூறுவதே நெடுங்கணக்கு மரபாயினும், அம்மூன்றும் சொற்பெருக்க வகையில் முறையே ஒன்றினொன்று சிறந்திருத்தலால், சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்னும் உத்தி பற்றி, அவை ஈங்கு ஊ, ஈ, ஆ முறையிற் கூறப்படும். முன்மைக் கருத்தினின்று முன் வருதலாகிய தோன்றற் கருத்துப் பிறக்கும் வித்தினின்று முளையும் மரத்தினின்று துளிரும் தாயி னின்று சேயும்போல, எப்பொருளும் ஒன்றினின்றே தோன்றுத லானும்; குட்டியுங் குழவியும் முகமும் முன்னுங் காட்டியல்லது புறமும் பின்னுங் காட்டித் தோன்றாமையானும்; எப்பொருட் கும் முற்பகுதி முகம் எனப்படுதலானும்; முகத்திற்கு எதிர்ப்பட்ட பக்கம் முன்மை யாதலானும்; புதிதாய் ஒன்றினின்று ஒன்று தோன்றுதலெல்லாம் முன்வருதலேயாதல் அறிக. இங்ஙனம் உலகியல் நிகழ்ச்சிகளையெல்லாம் ஊன்றிக் கவனித்து, சுட்டுக் கருத்துக்களோடு அவற்றைத் தொடர்பு படுத்தி, உளநூற் கொப்பவும் ஏரணநூற்கிசையவும், இயற்கை யுண்மை எள்ளளவுந் தப்பாது. எல்லாக் கருத்துக்களையுங் குறிக்கும் சொற்களை ஆக்கிக் கொண்ட முன்னைத் தமிழரின் நுண்மாண் நுழைபுலம் என்னே! மூவகைச் சுட்டுக்களிலும், முற்போக்குக் கருத்தை யுணர்த்தும் முன்மைச் சுட்டே, மொழி வளர்ச்சியிலும் முன்னேற்றத்தை யுண்டுபண்ணியது, முன்னி மகிழ்த்தக்கது. (சு.வி.) சுட்டுச் சொற்கள் தமிழிலும் திரவிடத்திலுமுள்ள சுட்டுச் சொற்கள், ஆ (அ), ஈ (இ), ஊ (உ) என்னும் மூன்று சுட்டொலிகளும் அவற்றின் வளர்ச்சி யுமாகும். சுட்டொலிகள் மூன்றும் கைச்சுட்டை யொத்த வாய்ச்சுட்டொலி களாகத் தோன்றியவை. வாய்ச்சுட்டாகத் தோன்றக் கூடிய ஒலிகள் ஆ ஈ ஊ என்னும் மூன்றே. வாயை விரிவாய்த் திறப்பதால் சேய்மைச் சுட்டாகிய ஆகாரமும், வாய்மூடியாகிய உதட்டைப் பின்னுக்கிழுப்பதால் அண்மைச் சுட்டாகிய ஈகாரமும், அதை முன்னுக்குக் குவிப்பதால் முன்மைச் சுட்டாகிய ஊகாரமும், பிறக்கின்றன. சுட்டுக்களெல்லாம் முதலில் நெடிலாகவே தோன்றிப்பின் குறுகின. குறில் நிலையில் வாய்ச்சைகை தெளிவாய்த் தோன்றாது. நெடில் நிலையிலும் முதற்காலத்திற்போல் அத்துணைத் தெளிவா யில்லை. ஒலியளவிலேயே பொருள் தெரிந்து விடுவதாலும் சோம்பலாலும், இற்றைத் தமிழர் முதற்காலத் தமிழர்போல் வாய்ச்சைகையோடு சுட்டுக்களை ஒலிப்பதில்லை. ஆயினும், இன்றும் பொருளளவிற் சுட்டொலிகள் கைச்சுட்டுப் போன்றே திட்டவட்டமாயுள்ளன. எக்கரணியத்தையிட்டும் முச்சுட்டுக்களும் இடமாறிச் சுட்டுவதில்லை. இவ்வியல்பு ஆரிய மொழிகளில் இல்லை. இதனால் ஆரிய மொழிச் சுட்டுச் சொற்கட்கெல்லாம் தமிழ்ச் சுட்டொலிகளே மூலமென்பது தேற்றம். சுட்டொலிகள் இன்றும் தமிழிலும் திரவிடத்திலும் குறிப்புப் பெயரெச்சமாகத் தமித்து வழங்குகின்றன. எ-டு: ஆயிடை, இக்காலம் (தமிழ்) ஈயாள், அவ்விடே (மலையாளம்) ஊகார அல்லது உகரச் சுட்டு இன்று தாய்நாட்டுத் தமிழில் வழக் கற்றது; யாழ்ப்பாணத்தில் வழங்குவதாகச் சொல்லப்படுகின்றது. இந்தியில் ஈகாரச் சுட்டு ஏகாரமாகவும் முன்மைச் சுட்டு சேய்மைச் சுட்டாகவும் திரிந்து வழங்குகின்றன. எ-டு: ஈ - ஏ = இது, இந்த. ஊ - ஓ = அது, அந்த; உதர் = அங்கு. ஈகாரம் ஏகாரமாகத் திரிந்துள்ள நிலை வடமொழியிலுள்ளது. இடமாறா வடமொழிச் சுட்டுச் சொற்கள் சேய்மை அண்மை எ-டு அத (adas) = அது, அங்கு, இஹ = இங்கு, இவ்வுலகில். அவ்வாறு. ததா (tatha#) = அப்படி. ஏத்தத் (e#tad) = இது அஸவ் = அந்த இங்கு இடமாறிய வடமொழிச் சுட்டுச் சொற்கள் சேய்மை அண்மை எ-டு: இயத் = அவ்வளவு அத (atas) = இங்கிருந்து அதுநா (dh) = இப்போது அயம் = இந்த ஈரிடப்பொது வடமொழிச் சுட்டுச் சொற்கள் எ-டு: அத்ர = இங்கு, அங்கு தத் (d) = அவன், அவள், அது, இது. இதம் = இந்த; அங்கு. ஏநா = இங்கு, இவ்வாறு; அங்கு, அன்று. சுட்டொலித் திரிபு மூவகைச் சுட்டுக் கருத்துக்களினின்றும் நூற்றுக்கணக்கான வழிமுறைக் கருத்துக்கள் தோன்றியுள்ளமையால். மூவகைச் சுட்டொலிகளினின்றும், ஒரு பொருட்பல சொல்லும் பல பொரு ளொரு சொல்லுமாக, பல்லாயிரக்கணக்கான சொற்கள் தோன்றி யுள்ளன. ஓரசைச் சொல்லாக மட்டுமன்றி ஓரெழுத்துச் சொல் லாகவுமுள்ள ஆ, ஈ, ஊ என்னும் மூன்றே மூன்று சுட்டொலிகளி னின்று, இத்துணை எண்ணருஞ் சொற்கள் தோன்றியுள்ள தெங்ஙனம்? பல்வகைத் திரிபுகளே அதற்குக் காரணம். ஒரு சொல்லின் பொருள் திரியும்போது அச்சொல்லும் உடன்திரிய வேண்டும் என்னும் சொல்லியல் நெறிமுறைப்படி, ஆ, ஈ, ஊ என்னும் முச்சுட்டுச் சொற்களும், மூவகைப் புணர்ச்சித் திரிபு, அறுவகைச் செய்யுள் திரிபு. பலவகைப் பண்புத்திரிபு. முக்குறை, மும்மிகை, மூவகைப் போலி, இலக்கணப்போலி, முறைமாற்று, இனத்திரிபு. மோனைத்திரிபு, எதுகைத்திரிபு, மரூஉ முதலிய பல்வகைத் திரிபுகளால் பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன. இத்திரிபுகளெல்லாம் குறிப்பொலிகட்கும் செல்லுமேனும், சிறப் பாகச் சுட்டொலிகட்கே பொருந்துவதனால் கூறப்பட்டன. சுட்டடிச் சொல்லாக்கத்திற்குப் பெருந்துணை செய்யுந் திரிபுகள், மும்மிகை, இனத்திரிபு, மோனைத்திரிபு என்னும் மூன்றாகும். மும்மிகை என்பன முக்குறைக்கு நேர்மாறானவை. அவை முதன்மிகை, இடைமிகை, கடைமிகை என்பன. எ-டு: முதன்மிகை : உந்து - நுந்து இடைமிகை : இலகு - இலங்கு கடைமிகை : முன் - முன்பு இனத்திரிபு என்பது, உயிரினத்திரிபு, மெய்யினத்திரிபு என்னும் இருவகை இனவாரித் திரிபாகும். அவற்றுள் மெய்யினத்திரிபு. வல்லினத்திரிபு மெல்லினத்திரிபு முதலிய நால்வகைப்படும். எ-டு: உயிரினத்திரிபு பரு - பெரு. வாயில் - வாயல் மெய்யினத்திரிபு சலங்கை - சதங்கை, தொழுதி - தொகுதி வல்லினத்திரிபு பொற்றை - பொச்சை அத்தன் - அச்சன் மெல்லினத்திரிபு கழங்கு - கழஞ்சு இடையினத்திரிபு பிள் - பிய் ஒலியினத்திரிபு ஒளிர் - ஒளிறு இத்திரிபுகள் இரண்டும் பலவும் சேர்ந்தும் வரும். எ-டு: மலங்கு - விலங்கு (விலங்கு) இலந்தை - இரத்தி மோனைத் திரிபு என்பது மோனையாகத் திரிந்து செல்வது. அது ஒருமடி திரிவதும், பலமடி திரிவதும் என இருதிறப்படும். எ-டு: கிண்டு - கெண்டு ஒரு மடி மோனை நீள் - நெடு தேம் - தீம் - தித்தி பலமடி மோனை குள்(குடம்) - கூள் - கொடு - கோடு கூள் = வளைவு. வளைந்த வாழைப்பழ வகை கூளிவாழை யெனப்படுதல் காண்க. கோடு = வளைவு. முறி - மறி முழுங்கு - விழுங்கு முடி - மடி முளகு - மிளகு குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்குமாதலின், மேற்கூறிய திரிபுகளை முறையே ஊ - ஆ, ஊ - ஈ என்றுங் கொள்ளல் வேண்டும். எ-டு: ஊ - ஆ ஊ - ஈ தூண்டு - தீண்டு (தூண்டா விளக்கு = தீண்டா விளக்கு) மூட்டு - மாட்டு நூறு - நீறு பூறு - பீறு நூன் - நீன் பூளை - பீளை பூட்டை - பீட்டை மெய்யினத்திரிபுகளுள், ள் - ய் சிறப்பாகக் கவனித்தற் குரியது. பல ளகர மெய்யீற்றுச் சொற்கள் யகர மெய்யீற்றுச் சொற்களாகத் திரிகின்றன. உயிரெழுத்துக்களில் எதுவும் எதுவாகவேனும் திரியலாமேனும், உ-அ, உ-இ, என்னுந்திரிபுகள் பெருவழக்கானவும் மொழிவளர்ச் சிக்குப் பெருந்துணை செய்பவும் முதன்மையாய்க் கவனிக்க வேண்டியவுமாகும். எ-டு: உ - அ உ - இ உகை - அகை துற்றி - திற்றி குள் - கள் புணை - பிணை குடும்பு - கடும்பு புட்டம் - பிட்டம் குட்டை - கட்டை புய் - பிய் குலை - கலை புரள் - பிறழ் குறுவாய் – கதுவாய் புரண்டை - பிரண்டை துக்குணி - தக்குணி புழுக்கை - பிழுக்கை துளிர் - தளிர் முடுக்கு - மிடுக்கு துணை - தனை முண்டு - மிண்டு முடங்கு - மடங்கு முல்லு - மில்லு எ-டு: கொள் - கொய் தொள் - தொய் பிள் - பிய் மாள் - மாய் ஐகார ஔகார உயிர்ப்புணரொலிகள் (vowel Dipthongs) தோன்றியபின், தனி அகரக்குறிலையடுத்த யகரமெய் அய் என்று எழுதப்படாமல் ஐ என்றே எழுதப்பட்டு வந்திருக்கின்றது. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறதல் காண்க. (மொழி மரபு. 23) எ-டு: அள் = கூர்மை; அள் - (அய்) - ஐ = நுண்மை. நொள் - (நள் - (நய்) - நை. நொள்ளுதல் = தளர்தல். நொள் - நொள்கு. நைதல் = தளர்தல். பொள் - பொய் - (பய்) - பை. பொய் = உட்டுளையுள்ளது. வள் - (வய்) வை = கூர்மை. அன் என்பது அய் என்று திரிந்தபின் உயிரேறின் ஐகாரமாக எழுதப்படுவதில்லை. எ-டு: (அய்) - அயில் = கூர்மை பள் - (பய்) - பயம் = பள்ளம் (வய்) - வயிர் = கூர்மை. இத்தகைய திரிபுகள் தமிழில் நிரம்ப வுள. சில்லிடத்து உயிரினத்திரிபொடு மோனைத் திரிபு கலப்பது முண்டு. இம்முறையில், உ - அ என்பது ஒ - அ என்றாகும்; உ - இ என்பது உ - எ என்றாகும்; உ - எ என்பது மீண்டும் ஒ - எ என்றாகும். உ - ஓ. இ - எ. என்பன மோனையாதல் காண்க. எ-டு: ஒ-அ உ-எ ஒ  எ ஒழி - அழி உகள் - எகிர் சொருகு - செருகு ஒடுங்கு - அடங்கு குழுமு - கெழுமு மொழுகு - மெழுகு கொம்பு - கம்பு துளி - தெளி தொள்ளாடு - தள்ளாடு தொளத்தி - தளத்தி பொலிசை - பலிசை மொக்கை - மக்கை கம்பைக் கொம்பு என்பது வடார்க்காட்டு வழக்கு. அதுவே முந்து வடிவாகும். குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்கும். எ-டு: ஓ - ஆ ஆ - ஏ ஓ - ஏ கோல் - கால் ஊர் - ஏர் (எழுச்சி) தோண்டு - தேண்டு நோடு - நாடு கூழ்வரகு - கேழ்வரகு நோடு - நேடு (நோட்டம் - மோடு - மேடு நாட்டம்) மோளம் - மேளம் இங்குக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுச் சொற்களுள், முழுங்கு முளகு மொழுகு மோளம் என்பன பார்த்த அல்லது கேட்ட வளவில் கொச்சை போலத் தோன்றும். ஆயின், அவையே மூலவடிவம் என்பதும், அவற்றின் இகர முதல் வடிவம் அவற்றின் திரிபே என்பதும், விளங்கும். சுட்டடிச் சொல்லாக்கத்திற் கேதுவாக, முச்சுட்டொலிகளும் முதலாவது அடைந்த திரிபு கடைமிகை. எ-டு: ஆ - ஆன் (ஆங்கு), ஆது. சுட்டொலிகள் முதல் நிலையில் நெடிலாயிருந்தன. அடுத்தபடியாக நிகழ்ந்த சுட்டொலித் திரிபுகள் திரிதலும் இடைமிகையும். எ-டு: ஆங்கு, ஆண்டு. ஞாங்கர் (ஆங்கர்) என்னும் முதன்மிகை புலவர் புனைவாகத் தெரிகின்றது. நாளடைவில் முச்சுட்டொலிகளும் குறுகின. எ-டு: ஆ - அ, ஆது - அது, ஆங்கு - அங்கு. அதா - அந்தா. அதோ - அந்தோ முதலிய திரிபுகளால், சுட்டுச் சொற்களின் இடைமிகை யுணரப்படும். சுட்டொலிகள் குறுகியபின். உகரச்சுட்டினின்று உல் என்னும் ஒப்புயர்வற்ற மாபெரு மூலவடி தோன்றிற்று. அதுபின்பு, உகரத் தொடு கூடி மொழி முதலாகும். அறுமெய்யோடுஞ் சேர்ந்து. குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் அறுபெருங் கிளையடிகளைத் தோற்றுவித்தது. அவற்றினின்று, ஊகாரச் சுட்டுக் கருத்து ஒவ்வொன்றிற்கும், கவையுங்கொம்பும் கிளையுஞ் சினையும் போத்துங்குச்சும் இணுக்குங்கொழுந்துமாக, பற்பல சொற்கள் கிளைத்துந் தோன்றியுமுள்ளன. லகரமெய்யினின்று பிறமெய்கள் திரிகின்றன. மூவின மெய்களுள் வல்லினமெய் தமிழ்ச் சொற்கு ஈறாவதில்லை. மெல்லின மெய்களுள் மகரமும் இடையின மெய்களுள் லகரமும். ஒலித்தற்கெளியவாம். இவ்விரண்டனுள் மகரமே முந்தியதாயினும், சொல்லாக்கத்திற்கு லகரவீற்றடியே பெரும் பாலும் பயன்படுத்துப் பெற்றுளள்ளது. சில கருத்துக்கட்குச் சில கிளையடிச் சொற்கள் மறைந்து விட்டன. அவை வழங்கின நிலம் இந்துமாவாரியில் மூழ்கிப் போனமையாலும், அவை ஆளப்பெற்ற நூல்கள் இறந்து பட்டமையாலும், அவற்றை இன்று காட்டற்கில்லை. ஆயினும், அவற்றின் முன்னுண்மை, ஊகிப்பு ஒப்பு ஆகிய இருவகையளவை களான் உணரப்படும். வகரம் உகரத்தோடு கூடி மொழி முதல் வரும் எழுத்தன்மையின், உகரச் சுட்டடிச் சொற்கள் வகர முதலவாயிருக்குமாயின், அவை பகரமகரச் சொற்களின் திரிபென்றே அறிதல் வேண்டும். எ-டு: பண்டி - வண்டி, முழுங்கு - விழுங்கு. முடுக்கு - விடுக்கு. பண்டி என்னுஞ் சொல் புல் என்னும் சிளையடியினின்று பிறந்ததாகும். உ - ஊ - ஒ - ஓ என்பது உகரமோனையுயிர் வரிசையாதலால், இதிலுள்ள எவ்வெழுத்து மொழி முதல் வரினும் ஒன்றே. ஈகாரச்சுட்டு, உல் என்னும் மூலவடிக்கும் குல் சுல் முதலிய கிளை யடிகட்கும் ஒப்பாக, ஒழுங்கான இனப்பெருக்க அடிகளைத் தோற்றுவித்திலது. ஆயினும், சில மெய்களோடு கூடிச் சில கருத்துப்பற்றிய சொற்களைப் பிறப்பித்துளது. ஆகாரச்சுட்டு அதுவுமின்றிச் சுட்டுக் கருத்தொன்றே பற்றி நின்று, சில சுட்டுச் சொற்களைமட்டும் பிறப்பித்துளது. சுட்டு விளக்க முடிவு வடமொழிக்கும் தென்மொழிக்கும் நூற்றுக்கணக்கான இன்றிய மையாத சொற்கள் பொதுவாயிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் வேரும் (Root) அடி (Stem) யும் தமிழில் தான் உள. வடமொழி இற்றை நிலையும் சம்கிருதம் என்னும் பெயரும் பெற்றது ஆரியர் இந்தியாவிற்கு வந்த பின்னரே (கி.மு. 3000). அதற்கு முன் அது செருமனியம், கிரேக்கு, இலத்தீன் முதலிய மொழிகளைப் போன்றேயிருந்தது. வடக்கினின்று தமிழ் நாட்டிற்கு வந்ததினா லேயே அது வடமொழி எனப்பட்டது. தமிழோ, கி.மு. 10000 ஆண்டுகட்கு முன்னமே குமரிநாட்டில் தானே தோன்றித் தானே முழுவளர்ச்சி யடைந்த தனிமொழி. தென்மொழியும் வடமொழியும் முறையே உலகப் பொதுமொழி வடிவத்தின் முன்னிலையும் பின்னிலையுமாகும், இவை இரண்டும் ஒன்று கூடியது அளைமறி பாம்பும் அரத்த வோட்டமும் போலக் கொள்க. சேய்மையும் அண்மையுமாகிய இருவகைச் சுட்டுச் சொற்களே வடமொழிக்குத் தமிழ் மூல மென்பதைக் காட்டி விடும்; அகரச் சுட்டு (சேய்மை) இகரச் சுட்டு (அண்மை) தத் - அது இதம் = இது அத = அது, இது இத்தி = இப்படி அத்த = அதனால் இத்தம் = இவ்வண்ணம் தத்ர: = அங்கு இக = இங்கு தத்த: = அங்கிருந்து ஏதத் = இது தத்தா = அவ்வண்ணம் ஏவம் = இப்படி ததா = அன்று (இ-எ-ஏ) அத்ர (இங்கு), அதுனா (இன்று), அத்ய (இன்றைக்கு) முதலிய சொற்கள் இகர முதல் அகர முதலாகத் திரிந்துள்ளன. (சு.வி.) சுண்ணகம் சுண்ணகம் - சூர்ணக (c) சுண்ணம் - சுண்ணகம் = நீறு, பொடி. வடவர் காட்டும் மூலம் சர்வ் (c) என்பதே சர்வ் = பல்லினால் அரை, மெல், சவை, சுவை. இது சவை என்னும் தென்சொற் றிரிபே. (வ.வ. 157). சுண்ணம் சுண்ணம் - சூர்ண (ந) சுள் - சுள்ளை - சூளை. சுண் - சுண்ணம் = நீற்றுதல், நீறு (வ.வ.) சுண்ணாம்பு சுண்ணாம்பு, பொடி, பூந்தாது. தாழைக்கொழுமட லவிழ்ந்த சுண்ணம் (மணி. 4: 18) சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு. சுண்ணித்தல் = நீற்றுதல் (சங். அ.) (வ.வ. 157). சுதை சுதை - ஸுதா (dh) = சுண்ணாம்புச் சாந்து. சுல் - சுல்லு = வெள்ளி (சூடா. வெண்பொன்). சுல் - (சுலை) - சுதை = 1. வெண்மை (சூடா.) 2. வானவெள்ளி (அக. நி.) 3. மின்னல் (சங்.) அக). 4. சிப்பிச் சுண்ணாம்பு. வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து (மணி. 6: 43) 5. பால். சுதைக்க ணுரையைப் பொருவு தூசு (கம்பரா. வரைக். 16). 6. அமிழ்து சுதையனைய வெண்சோறு (கம்பரா. குலமுறை. 18). இங்குக் குறிக்கப்பட்டுள்ள பொருள்களெல்லாம், வெண்மையாய் இருத்தலை நோக்குக. ல-த, போலி. ஒ.நோ. சலங்கை - சதங்கை, மெல் - மெது. மா. வி. அ. காட்டியுள்ள மூலமும் பொருள் வரிசையும் வருமாறு: ஸு - தா (dh) = ஸு + தே (dhe) = நற்குடிப்பு, தேவர் குடிப்பு, அமிழ்து, தேன், சாறு, நீர், பால், வெள்ளை யடிப்பு, பூச்சு, சாந்து, சுதை. ஸு = நல்ல. தே = உறிஞ்சு, குடி. (வ.வ. 157). சும - க்ஷம் = பொறு. பொறுத்தல் = சுமத்தல், தாங்குதல், தாளுதல், மன்னித்தல், இடந்தருதல். இளக்காரங் கொடுத்தல், துன்பந் தாங்குதல் (பொறை), அமைதியாய்க் காத்திருத்தல் (பொறுமை). சும, பொறு என்பவை ஒருபொருட் சொற்கள். பொறு என்னும் சொல்லின் பொருள்களே க்ஷம் என்னும் சொற்கும் உரியன. உம் - உம்பு - உம்பர் - மேல், மேலிடம். உச்சி உம் - சும் - (சுமை) - சிமை = உச்சி, குடுமி. சும் - சும. சுமத்தல் = மேற்கொள்ளுதல், தாங்குதல். சும் - சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை, முதுகு, பிடரி, குதிரையின் பிடரி மயிர், உயர்ந்தமேடு. வேங்கைச் செஞ்சுவல் (புறம். 120). வடமொழியிற் க்ஷம் என்னுஞ் சொற்கு மூலமில்லை. (வ.வ. 158). சுர சுர - ரு (இ.வே.) சுரத்தல் = ஊறுதல், ஒழுகுதல், சொரிதல். சுள் - சுர் - சுரி. சுரித்தல் = துளைத்தல் சுரி = துளை. சுரை = உட்டுளை. சுர் + சுர: சுரத்தல் = உள்ளிருந்தொழுகுதல். சுள் - சுன் - சுனை = ஊற்று, ஊற்று நீர்நிலை. சுரப்பு = ஊற்று. (வ.வ. 158). சுரங்கம் சுரங்கம் - ஸுரங்கா சுர் - (சுரங்கு) - சுரங்கம். x.neh.: அர் - அரங்கு - அரங்கம். சுரங்கம் = பாறையுடைக்க வெடி மருந்து வைக்கும் குழி, கள்வரி டுங் கன்னம், கீழ்நில வழி, குடைவரைப் பாதை (tunnel). (வ.வ.158). சுரப்பி சுரப்பி = ஸுரபி (bh) சுர - சுரப்பு - சுரப்பி = பால் மிகுதியாய்ச் சுரக்கும் ஆவு. குடஞ் சுட்டு. சுரப்பு = பால் சுரத்தல். சுரப்பி - சுரபி. வடவர் ஸு + ரப் (bh) எனப் பகுத்து, இனிதாய்த தாக்குதல் (“affecting pleasantly”) என்று வேர்ப் பொருளுரைப்பர். இருக்கு வேதத்தில், நறுமணங் கமழ்தல், வசியஞ் செய்தல், இன்புறுத்தல், அழகாயிருத்தல் என்னும் பொருள்களிலேயே சுரபி என்னும் சொல் ஆளப் பெற்றிருப்பதாகவும், பிற்கால வடநூல்களிலேயே அது காமதேனு என்னும் ஒரு கற்பனை ஆவைக் குறித்ததாகவும்,மா.வி. அகர முதலியினின்று அறியக் கிடக்கின்றது. ஸு = நன்றாய். ர = பற்று, தழுவு. (வ.வ. 158). சுரம் சுரம் - ஜ்வர சுள் - சுர் - சுரம் = காய்ச்சல், சுடும் பாலைநிலம். சுரமென மொழியினம் (தொல். பொ. 216). பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானல் (தனிப்பாடல்) அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாய் காடென்றார் (கலித். 10) என்பவை பாலைநில வெம்மையை யுணர்த்தும். சுரம் என்னும் சொல் முதுவேனிற் காலத்திற் கடுமையாய்ச் சுடும் பாலை நிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டமையால், சுரநோயைக் காய்ச்சல் என்றே சொல்ல வேண்டும். ஜ்வர என்னும் சொல் காய்ச்சலை மட்டுங் குறிக்கும்; பாலை நிலத்தைக் குறிக்காது. (வ.வ. 159). சுரிகை சுரிகை - சுரிகா (ch) சுர் - சுருக்கு. சுறுக்கெனல் = குத்துதற்குறிப்பு. சுர் - சுரி. சுரித்தல் = துளைத்தல். சுரி - சுரிகை = 1. உடைவாள். சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை (பெரும்பாண். 73). 2. கத்தி. வடமொழியில் சுரிகா என்பதன் அடி சுர். ஆயின், மா. வி. அ. க்ஷுர் என்பதை மூலமாகக் காட்டும். இவையிரண்டும் சுரி என்பதன் திரிபே. சுரி - சூரி = ஓலையில் துளையிடுங் கருவி, சுரிகை. ம., க., து. சூரி, தெ. த்சூரி. சூரிக்கத்தி = சூரியுள்ள கத்தி. க. சூரிக்கத்தி, தெ. த்சூரிக் கத்தி. சூரி என்பது உலக வழக்கு; சுரிகை என்பது செய்யுள் வழக்கு. ஏட்டில் துளையிடுங் கருவியைச் சுரியூசி என்பது யாழ்ப்பாண வழக்கு. (வ.வ. 159). சுருங்கை சுருங்கை - ஸுருங்கா சுருங்குதல் = ஒடுங்குதல். சுருங்கு = (ஒடுங்கிய) சாய்கடை (பிங்.), இனி, உட்டுளையான வழி என்றுமாம். சுருங்கு - சுருங்கை = 1. நுழைவாயில் (பிங்.). 2. சிறுசாளரம். மாடமேற் சுருங்கையிலிருந்து (சீகாளத். பு. நக்கீர. 30) 3. நீர் செல்லுங் கரந்துபடை. பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணி. 12: 79). 4. கோட்டையிற் கள்ளவழி (சூடா.). 5. தப்பியோடும் கீழ்நில நெடுவழி. கீழ்நில வழியைக் குறிக்கும்போது, சுரங்கம் என்பது உலக வழக்கு. (வ.வ. 159-160). சுல் (குத்தற் கருத்து வேர்) சுல்1 சுல் - சூல் = 1. குத்தும் கூரிய படைக்கலம். 2. முக்கவர் வேல். குலிசங் கதைசூல் (சேதுபு. தேவிபுரா. 27). சூல் - சூலம் = 1. முக்கவர் வேல். ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9:17). 2. இடிதாங்கி. ஒள்ளிலைச் சூல ... மாடம் (சீவக. 2527). 3. சூலவேல் வடிவில் மாட்டிற்கு இடும்சூட்டுக்குறி. 4. கிழமைச் சூலை, 5. தோணி (இரேவதி) நாள். (பிங்.). 6. குத்தலுங் குடைச்சலுமுள்ள பல்வகைச் சூலைநோய். 7. கூரிய முனையுள்ள கழு (w). சூலம் - சூல (வ.). சூலம் வேல்வகைகளுள் ஒன்றென்பது உருகெழு சூல வேல் திரித்து (சங். அக.) என்னும் தொடரால் அறியப்படும். சூல வேலைப்போல மூன்று வழி (சிலப். 11:73, உரை). வேல் முருகனது சிறப்புப் படைக்கலமாகக் கொள்ளப் பட்டது போல், சூலவேல் சிவனது சிறப்புப் படைக்கலமாகக் கொள்ளப் பட்டதனால், சிவன் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல் சூலக்கல் என்றும், சூலக்குறி பொறிக்கப்பெற்ற சிவன்கோயில் அளவை மரக்கால் சூலக்கால் என்றும், சூலக்குறியிடப்பெற்ற சக்கரமுள்ள சிவன் கோவில்வண்டி சூலக்கால் வண்டி யென்றும், சிவன் கோவிற்காகச் சூலவடிவிற் சூடிட்டு விடப் பெற்ற காளை சூலக்காளையென் றும், பெயர்பெறும். சிவநெறி தமிழர் சமயமே யென்பதும், ஆரியர்க்குச் சிறு தெய்வ வேள்வியன்றி வேறு மதமில்லை. சிவபிரானது சூலம் குறுக்கே நிற்பதால், இன்னின்ன திசை இன்னின்ன கிழமையில் வழிப்போக்கிற்கு ஆகாதென்று விலக்கப் பட்ட கிழமைக்குற்றம், கிழமைச்சூலம் எனப்படும். அஃது இன்று வாரசூலை என இலக்கியத்தில் வழங்குகின்றது. சூலம் என்பதே உலக வழக்கு. திங்கட்கிழமை தெற்கே சூலம் என்றே மக்கள் கூறுதல் காண்க. சூல் - சூலை = 1. ஒருசார் நோய். அன்னவனை யினிச் சூலை மடுத்தாள்வன் (பெரியபு. திருநாவுக். 48). 2. கிழமைச் சூலம் (வாரசூலை). சூலை - சூலா (வ.). சூலைநோயால் உண்டாகும் திருகுவலி சூலைக்குடைச்சல் எனப்படும். அடைவிலமண் புரிதரும சேனர்வயிற் றடையுமது வடவனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம் கொடியவெலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகங்குடையப் படருழந்து நடுங்கியமண் பாழியறை யிடைவிழுந்தார். என்னும் பெரியபுராணச் செய்யுளால் (திருநாவுக். 50); சூலை நோயின் குடைச்சல்வலியை ஒருவாறுணரலாம். சூல் (சூலம்) - சூலி = 1. சூலப்படை தாங்கிய சிவன். சூலிதன் னருட்டுறையின் முற்றினான். (கம்பரா. கிட்கிந்தா. நட்புக். 37). 2. சூலப்படை கொண்ட காளி. சூலிநீலி மாலவற் கிளங்கிளை (சிலப். 12:68). சூலி (சிவன்)-வ. சூலின். சூலி (காளி) - வ. சூலினீ. சுல் - சுள். சுள்சுள்ளென்று குத்துகிறது என்பது உலக வழக்கு. சுள்ளாணி = முட்போன்ற சிறிய ஆணி. சுள்ளெறும்பு = சுள்ளென்று கடிக்கும் செவ்வெறும்பு. சுள் - சுளி - சுளிக்கு = கூர்மையான முனையுள்ள கைக்கோல். 1. சுளிக்கெ. சுள் - சுளு - சுளுகு = 1. நுண்ணறிவு. 2. சதுரப்பாட்டுப் பேச்சு. 3. வலக்காரச்சொல். சுளுகுகள் விவரமொ டுரையிடுவார் (திருச்செந். பு. செயந்திபுர. 55). சுளுகன் = சதுரப்பாட்டுப் பேச்சாளன் (யாழ். அக.) சுள் - சுண் - சுணை = 1. இலை காய் முதலியவற்றிலுள்ள சிறுமுள். 2. முட்குத்துப் போன்ற உணர்ச்சியுள்ள அம்மைக் கொப்புளம். 3. கூர்மை. சுணை யில்லாக் கத்தி (உ.வ.). 4. கூருகிராற் சொறிவு வேண்டும் தினவு. 5. நெஞ்சகத்திற் குத்தும் மானவுணர்ச்சி. துகிலு மிழிந்து சுணையு மழிந்து (பட்டினத். உடற்கூற்றுவண்ணம், 249). 6. கூரிய அறிவு. சுணை (முள்) - ம. சுண, தெ. சொன. சுணை (கூர்மை) - ம. கண. சுணைகெட்டவன் = மானவுணர்ச்சி யில்லாதவன். ம. சுண கெட்டவன். சுணைப்பு = மானவுணர்ச்சி. ஒருதரஞ் சொன்னால் தெரியாதா? உனக்குச் சுணைப்பில்லையா? என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உனக்குச் சுணை யில்லையா? என்பது தமிழ் நாட்டு வழக்கு. சுணைத்தல் = தினவெடுத்தல். மராட்டி - சுணச்சுண. சுள் - சுர் - சுர. சுரசுர - சுரசுரப்பு = முள்முள்ளாய் அல்லது கரடுமுரடாய் இருத்தல். சுரசுர - சரசர - சருச்சரை = சுரசுரப்பு. “களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே” (பு.வெ.12, பெண்பாற்., 2, உரை). இனி, சுர் - சுரு - சரு - சருச்சரு - சருச்சரை என்றுமாம். சுர் - சுரி. சுரித்தல் = குத்துதல். சுரி - சுரிகை = 1. உடைவாள். சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73). 2. கத்தி. கற்கம் வழித்தற்கு ... கைச் சுரிகை (தைலவ. தைல.). சுரிகை - வ. சுரிகா (C). சுரி - சூரி = 1. சூரிக்கத்தி. 2. ஓலையில் துளையிட உதவுங் கருவி. 3. நத்தைச்சூரி. 4. சுணையுள்ள புளிச்சை. சூரி (சுத்தி) - ம., க., து. சூரி., தெ. த்சூரி. சூரிக்கத்தி - க. சூரிக்கத்தி, தெ. த்சூரக்கத்தி. சூரி என்ற வடிவம் வடமொழியில் இல்லை. சுர் - சூர் - சூரை = ஒருவகை முட்செடி. சுர் + அணை = சுரணை = குத்தும் மானவுணர்ச்சி. சுரணை கெட்டவன் என்பது உலக வழக்கு. 2. தன் உணர்ச்சி. அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு (இராமநா. உயுத். 33). சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி (Lexicon), நினைவு அல்லது தன்னுணர்ச்சி என்று மட்டும் பொருள்படும் மரண என்னும் வடசொல்லை, சுரணை என்னும் சொற்கு மட்டுமன்றிச் சுணையென்னும் சொற்கும் மூலமாகக் காட்டியுள்ளது. சுணை, சுரணை என்னும் தென்சொற்கள் குத்தற் கருத்தை அடிப்படை யாகக் கொண்ட சுள் என்னும் வேரினின்றும், மரண என்னும் வடசொல் நினை என்று பொருள்படும் ம்ரு என்னும் வினை முதனிலையினின்றும், பிறந்துள்ளன என வேறுபாடறிக. இங்ஙனம் மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோட்டுக் காட்டுவதற்குத் தமிழரின் பேதைமையும் பேடிமையுமே முழுக் கரணியமாகும். சுரணை மரணை என்னும் இணைமொழியிலுள்ள இரண்டாம் சொல்லே வடசொல்லாகும். அஃது ஒலியொப்புமையும் இற்றைத் தமிழரின் மொழி யுணர்ச்சியின்மையும் பற்றி இணைந்ததென அறிக. சுர் - சுரு - சுறு - சுறுக்கு. சுறுக்கெனல் = 1. குத்துதற் குறிப்பு. சுறுக்குச் சுறுக்கென்று குத்துகிறது என்பது உலக வழக்கு. 2. பாம்பு கடித்தல். பாந்தள் சீறிச் சுறுக்கெனவே கடிக்க (சிவரக. அபுத்திபூ. 13). 3. தேட்கொட்டுதல். 1. சுருக்கென. சுறுசுறெனல் = பன்முறை முட்குத்துதல். 1. சுறுசுறெனெ. சுறு - சுறீர். சுறீரெனல் எறும்பு சுறீரென்று கடித்து விட்டது (உ.வ.) க சுரீரெனெ. சுறு - சுறுக்கு = 1. கூர்மை. 2. விரைவு. சுறுக்காய் வா (உ.வ.) 3. சுறு சுறுப்பு, 4. கடுமை. 5. காரம். 6. விலையேற்றம், 7. கேட்பு (Demand) மிகுதி. ம.க. சுறுக்கு தெ.து. சுறுக்கு. சுறு - சுறுசுறு - சுறுசுறுப்பு = 1. விரைவு. 2. ஊக்கம். ம. சுறுசுறுப்பு. தெ. த்சுரத்சுர. சுறு - சுறுதி = விரைவு. சுறு - சுறா = கத்திபோல் வெட்டும் செதிலுள்ள கடல்மீன். சுறவ ஓரை (Capricorn of the zodiac). ம. சுறா, க. சொற, தெ. த்சொர. சுறா - சுற (Shark). சுற வழங்கும் இரும் பௌவத்து (பொருந. 203). சுற - சுறவு (Shark). சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப (புறம். 13:7). சுறவுவாய் = ஒரு மகளிர் தலையணி. சுறவுவாயமைத்த (பெரும்பாண். 385). சுறவு - சுறவம் (Shark) எயிற்றிறப் பாய்ந்தது சுறவம் (திருவிளை. வலைவீசி. 37). சுறாளம் = 1. விரைவு. 2. சினம். சுறவை = கடுமை. சுறு - சுறண்டு. சுறண்டுதல் = 1. உகிராற் பறண்டுதல். 2. கூரிய கருவியாற் களை பறித்தல். களைசுறண்டி = களை வறண்டி. 3. உடம்பைச் சுறண்டி ஒன்றைக் குறிப்பித்தல். 4. சமையற் கலங்களிலுள்ள பற்று வழித்தல். 5. பிறன்பொருளைக் கவர்தல். என் சொத்தையெல் லாம் சுறண்டிவிட்டான் (உ.வ.) 6. கற்பழிக்க ஒரு பெண்ணைத் தொடுதல். ம. சுறண்டு, க. கெரண்டு. சுறு - (சுறி) - சொறி = 1. முட்போன்ற சிரங்குப் புண். எ-டு: சொறிப்பிடித்தவன், சொறிநாய் 2. உயிரிகளின் கரடு முரடான புறத்தோல். எ-டு: சொறித்தவளை. சொறி - சொறியன் = 1. சொறிப்பிடித்தவன். சொறித் தவளை. சுறு - (சுற்று) - சுத்து - சுத்தி = குத்துவதுபோல் தட்டும் சிறு சம்மட்டி. சுத்தி = சுத்தியால் = சிறு சம்மட்டி. x.neh.: மொத்து ... மொத்திகை - மத்திகை = குதிரைச் சமட்டி. சுத்து - சொத்து - சொட்டு. சொத்துதல் வினை இன்று வழக்கற்றுப் போய் ஒலிக்குறிப்பாக மட்டும் வழங்குகின்றது. எ-டு: பழம் சொத்துச் சொத்தென விழுகின்றது. சொட்டுதல் = தட்டுதல், தட்டுதல்போல் துளி ஒன்றில் விழுதல். சொட்டு - சொட்டை = தட்டுவதால் உண்டாகும் தட்டை, மொட்டை, வழுக்கை, வழுக்கைக் குற்றம். x.neh.: தட்டு - தட்டை. பட்டு - பட்டை. சொட்டு = சொட்டும் துளி, சொட்டு வதால் உண்டான தட்டை அல்லது வழுக்கை, சொட்டை அல்லது வழுக்கை என்னுங் குற்றம். x.neh.: குறு - குற்று - குத்து - குத்தி - குட்டு. குத்து - கொத்து -கொட்டு. கொற்று - கொத்து. தகரம் மென்மையையும் டகரம் வன்மையையும் றகரம் இடைமையையும் பொதுவாக உணர்த்தும். (வே.க.) சுல் (சுடுதற் கருத்து வேர்) சுல் - சுல்லி = 1. அடுப்பு (திவா). சுல்லியுர லுலக்கை (சைவச. பொது. 266). 2. மடைப்பள்ளி. (இலக். அக). சுல்லி - வ. சுல்லீ (C): சுல் - சுள். சுள்ளெனல் = கடுமையாகச் சுடுதல், காய்தல். சுள்ளென்று வெயிலடிக்கிறது என்பது உலக வழக்கு. சுள் = வெயிலிற் காய்ந்த கருவாடு என்னும் மீன்வற்றல். சுள்ளினைக் கறித்தனர் (கந்தபு. அசமுகிநகர். 18). சுள் - வ. சுஷ். சுள்ளாப்பு = கடுவெயில். சுள்ளி = வெயிலிற் காய்ந்த சிறு கொம்பு (மரக்கிளை). சுள் - சுள்ளை = 1. மட்கலஞ்சுடும் சூளை. (தொல். சொல். 449, உரை). 2. செங்கல் சுடும் காளவாய். சுள்ளை - சூளை = 1. செங்கல் சுடும் காளவாய். அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை (புறம். 228:3.) 2. ஈமவிறகு. சூளை - ம. சூள. சுள் - சுளுந்து = 1. சுள்ளியாலான தீப்பந்தம், தீப்பந்தம். சுள் - சுடு. சுடுதல் = 1. பொசுக்குதல் : வெம்பிச் சுடினும் புறஞ் சுடும் (நாலடி. 89). 2. காய்ச்சுதல். சுடச்சுடரும் பொன்போல் (குறள். 267). 3. எரித்தல். 4. பலகாரஞ் சுடுதல். பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள் (திருவாலவா. 30:20). 5. சுள்ளையில் வேகவைத்தல். 6. நீற்றுதல். 7. சூடிடுதல். 8. வெடிசுடுதல். 9. நெருப்பில் வாட்டுதல். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் (மூதுரை, 4). 10. வருத்துதல். துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (குறள். 267). 11. கெடுத்தல். குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின் (குறள். 1019). நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல் (தனிப்பாடல்). ம., க., து. சுடு. சுடு - சுடல் = 1. விளக்கிலிருந்து விழும் எண்ணெய்த் துளி. 2. எரிந்து கரிந்த திரிமுனை. விளக்கெரியும்படி சுடலைத் தட்டிவிடு என்பது உலகவழக்கு. சுடல் - க. சொடல். சுடல் - சுடலை = சுடுகாடு. இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் (மணி. 6:101). ம. சுடல, து. சுடலெ. சுடு - சுடர் = 1. ஒளி. தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு (புறம். 6:27). 2. கதிரவன். சுடர்சுட்ட சுரத்தேறி (புறம். 136:18). 3. வெயில். வல்லிருள் புதைப்பச் செல் சுடர் சுருக்கி (பெருங். உஞ்சைக். 33:155). 4. திங்கள். சுடரொடு சூழ்வரு தாரகை (பரிபா. 19:19). 5. விளக்கு. இரவின் மாட்டிய விலங்கு சுடர் (பெரும்பாண். 349). 6. தீநாவு. விளக்கினு ளொண்சுடரே போன்று (நாலடி. 189). 7. நெருப்பு. சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 43). சுடரவன் = கதிரவன். (திவா). சுடரோன் = கதிரவன். (பிங்). கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன் (திருக்கருவை. கலித். 11). சுடரார் = கடவுள். என்னகத் திருந்த சுடரார் (திரு நூற். 26). சுடு = சுடுகை. சுடுவிற் றேனுடைந்த வண்ணமே (சீவக. 416). சுடு - சுடுவல் = வெப்பமான அரத்தம் (திவா). சுடுவல் - சுடுவன். (பிங்.) சுடு - சூடு = 1. வெப்பம். 2. சுடப்பட்டது. கடலிறவின் சூடு தின்றும் (பட்டினப். 63). 3. சுடுபுண். 4. ஒத்தடம். 5. சூட்டுக்குறி. கருநரைமேற் சூடேபோல் (நாலடி. 186). 6. வடு. பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி (பெருங். மகத. 8:14). 7. சினம் 8. சினமூட்டுவது. 9. மானவுணர்ச்சி. 10. விலையேற்றம். ம. சூடு, து. சூடு, தெ. த்சூடு (வெப்பம்), சூடு (சூட்டுக் குறி), க. தூடு (சூட்டுக்குறி). சூடு - சூடம் - சூடன் (கர்ப்பூரம்). சூட்டுக்கோல் - சுட்டுக்கோல். ம. சூட்டுக்கோல். சூட்டு = 1. சூட்டிறைச்சி. 2. நாணல் தீப்பந்தம் (க. சூட்டெ). சுள் - சுண்டு. சுண்டுதல் = 1. உலைநீர் வற்றுதல். 2. முகஞ் சுருங்குதல். 3. பயறு வேகவைத்தல். சுண்டு - சுண்டல் = நீர் முற்றும் வற்ற வேகவைத்த பயறு. சுண்ட வைத்தல் = குழம்புகறி மறுநாளுங் கெடாதிருக்கு மாறு நெருப் பெரித்து நீர் வற்றவைத்தல். சுண்டு - சுண்டான் = சிறுபிள்ளைகள் தீக்கொளுத்தி விளையாடுங் குச்சு (சுண்டாங் கொள்ளி). சுள் - சுண் - சுண்ணம் = 1. நீறு. 2. சுண்ணாம்பு. 3. நறு மணப் பொடி. பலர்தொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர் (மதுரைக். 399). 3. பொடி. செம்பொற் சுண்ணம் (பெருங். உஞ்சைக் 33: 120) 4. பூந்தாது. தாழைக் கொழுமடலவிழ்ந்த ... சுண்ணம் (மணி 4:18). சுண்ணம் - பிரா. சுண்ண. வ. சூர்ண. சுண்ணம் - சுண்ணாம்பு - சுண்ணாம்பு = 1. சுட்ட சுண்ணாம்புக் கல். 2. நீற்றின சுண்ணாம்பு. விரைப்பாகு வெள்ளிலை சுண்ணாம் பினொடு (வாயுசங். கிரியா. 23). 3. அரைத்த சுண்ணாம்பு. ம. சுண்ணாம்பு. சுண்ணாம்புக்காரன் = சுண்ணாம்பு விற்குங் குலத் தான். சுண்ணம் - சுண்ணகம் = நறுமணப் பொடி. சுண்ணகம் - வ. சூர்ணக (C) சுண்ணம் - சுணம் = 1. சுண்ணப்பொடி. புரிந்த பூவொடு பொற் சுணங் கழும (பெருங். உஞ்சைக். 39: 46). 2. அழகு தேமல். சுண நன்றணி முலையுண்ண (திவ். பெரியாழ், 2:3:4). சுண்ணித்தல் = நீற்றுதல். (சங். அக.) சுண் - சுணங்கு = 1. பூந்தாது. பசுமலர்ச் சுணங்கின் (ஐங்குறு. 76). 2. பூந்தாது படர்ந்தாற் போன்ற பசலை. 3. அழகு தேமல். மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின் (பெருங். மகத. 16:5). சுள் - சுள்கு - சுட்கு - சுக்கு = காய்ந்த இஞ்சி - ஒ. neh.: வெள் - வெள்கு - வெட்கு. ம. சுக்கு. வ. சுஷ்க. சுக்குதல் = காய்தல், உணத்தல் (நாஞ்சில் வழக்கு). சுட்குதல் = வறளுதல். சுட்கு - சுட்கம் = 1. வறட்சி. 2. வறண்டது. 3. வறுமை. 4. கஞ்சத்தனம். 5. ஒருவகை நோய். ஒ.நோ: வெட்கு - வெட்கம். சுக்கு - சுக்கான் = 1. சுண்ணாம்புக்கல். சுக்கான் கல்லாகிய பகையாலே (பொருந. 44, உரை). 2. உருக்குச் செங்கல், சுக்கான் சுண்ணாம்பு, சுக்கான் பாறை என்பன வழக்குச் சொற்கள். சுள் - சுட்பு - சுப்பு. சுப்பெனல் = விரைந்து நீர் வற்றுதல். சுப்பு - சுப்பல் = சுள்ளி. சுப்பு - சுப்பி = சுள்ளி. சுள்ளி சுப்பல் (சுப்பி) என்பது உலக வழக்கிணை மொழி. சுப்பு - சும்பு - சம்பு - சாம்பு. சாம்புதல் = 1. எரிதல். 2. வாடுதல். நெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கண் (பட்டினப். 12). 3. கெடுதல். செறிற் சாம்புமிவள் (கலித். 78). 4. குவிதல். (திவா.) 5. ஒடுங்குதல் (பிங்). 6. உணர்வழிதல். சாதல் காப்பவரு மென்றவத்திற் சாம்பினார் (கம்பரா. சுந்தர. உருக்காட். 21). 7.ஒளி மழுங்குதல். மன்னரெல்லாந் தளர்ந்துகண் சாம்பினாரே (சீவக. 811). சாம்பு - சாம்பல் = 1. எரிந்த சாணம். சுடுகாடான சாம்ப லரங்கத்திலே நிருத்தமாடி (பு. வெ. 9:43, உரை). 2. வாடற்பூ. ஆம்பற் பூவின் சாம்பலன்ன (குறுந். 46). 3. முதுமை. (பிங்.). 4. பருத்தி புகையிலை முதலிய பயிர்களைக் கெடுக்கும் பூச்சி. 5. சாம்பல் நிறம். எ-டு: சாம்பல் வாழை. ம. சாம்பல். சாம்பல் - சாம்பர். 1. திருநீறு. சாம்பரகலத் தணிந்தாய் போற்றி (தேவா. 967 : 4). 2. எரிந்த தூள். முடிசார்ந்த மன்னரு மற்று முள்ளோரு முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து மண்ணா வதுங் கண்டு (பட்டினத். திருத்தில்லை, 7). சுள் - சுர் - சுர் - சுரசுரா = சிறு பிள்ளைகள் கொளுத்தி விளை யாடும் வாணவகை. சுர் - சுரம் = 1. தீப்போற் சுடும் பாலைநிலம். சுரமென மொழி யினும் (தொல். பொ. 216). வெங்க லழற்சுரந் தாம் படர்ந்தார் (பு.வெ.2:3). 2. அருநெறி. (திவா). சுரம் - வ. ஜ்வர (காய்ச்சல்). சுள் - சள் - சண்டு = காய்ந்த புற்றாள், கூளம். சுர் - சர் - சருகு = 1. காய்ந்த இலை. ஒலியாலசையச் சருகெழ (வெங்கைக்கோ. 173). உதிர்சருகு கந்தமூலங்க ளேனும் (தாயு. சச்சி). சண்டுசருகு என்பது உலகவழக்கிணை மொழி. சர் - சரகு - சரக்கு = 1. காய்ந்த பண்டம். ‘fhait¤j bjšyh« ru¡fh» É£ljh? (உலக வழக்கு). 2. காய்ந்த வணிகப் பண்டம். 3. வணிகப் பண்டம். 4. மருந்துப்பண்டம். எ-டு: பலசரக்கு. 5. கல்வியறிவு. அவரிடத்தில் நிரம்பச் சரக்கிருக்கிறது (உலக வழக்கு). சரக்குப் பண்ணுதல் = வெயிலிற் காயவைத்தல். சரக்குப் பிடித்தல் = வணிகத்திற்குப் பண்டங்களை மொத்தமாக வாங்குதல். சரக்குக் கட்டுதல் = விற்பனைக்குப் பண்டம் அனுப்புதல். சரக்குப் பறித்தல் = கப்பலினின்று பண்டங்களை இறக்குதல். சரக்கேற்றுதல் = வண்டியிலும் கப்பலிலும் வணிகப் பண்டம் ஏற்றுதல். சரக்கு மாறுதல் = பண்டமாறுதல். கிளைக் கருத்துக்கள் 1. சினம் சுள் - சுள்ளம் = சினம். சுள்ளம் - சுள்ளக்கம். = சினம். சுள்ளக்கம் - வ. க்ஷுள்ளக்க. சுள்ளாப்பு = பழிச்சொல். சுள்ளாப்பெல்லாம் பொல்லாப்பு (பழமொழி). சுள் - சுளி. சுளிதல் = சினத்தல். கழை காண்டலுஞ் சுளியுங் களியானை (திருக்கோ. 111). சுளித்தல் = 1. சினத்தல். சுளிமுகக் களிறனான் (சீவக. 298) 2. வெறுத்தல். (சைவச. மாணாக். 33). சுண்டுசொல் = சுடுசொல். சுடுசுடு வென்றிருத்தல் = சினவியல்பாயிருத்தல். சுடுமூஞ்சி, சுடுநோக்கு, சுடுசொல் என்பன சினக்கருத்தை யுணர்த்து தல் காண்க. சினம் நெருப்பை யொத்த குணமாதலின், நெருப்பைக் குறிக்குஞ் சொல் சினத்தையுங் குறித்தது. எரிதல் என்னுஞ் சொல் சினத்தலையுங் குறித்தலையும், சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி என்று திருவள்ளுவர் கூறியிருத்தலையும் நோக்குக. 2. உறைப்பு சுவைகளுள் நெருப்புப் போன்றது உறைப்பு. சுள் = உறைப்பு. க. சுள். சுள்ளிடுதல் (சுள்ளெனல்) = உறைத்தல். சுள்ளென்று உள்ளே போகும் என்பது உலகவழக்கு. சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிடுவான் = மிளகு. சுண்டு - சுண்டி = சுக்கு. சுண்டி - வ. சுண்ட்டி. 3. வெறிவேகம். சுடு - சுடிகை = கள். சுண்டு - சுண்டம் - கள் (மூ. அ). சுண்டை = கள். வ. சுண்டா. சுண்டியுண்டை = சதுரக்கள்ளி, சித்திரகம், கொழுஞ்சி ஆகிய வற்றின் வேர்ப்பட்டையாலும் சீரகத்தாலும் செய்து, சோற்றைப் புளிக்க வைப்பதற்குப் பயன்படுத்துங் குளிகை. சுண்டு சோறு = வெறிப்புளிப் பேற்றிய சோறு. 4. சுருங்கல் வெயிலாலும் நெருப்பாலும் நீர் வற்றுவதாலும், காய்ந்த பொருள் வடிவிற் சுருங்குவதாலும் சூட்டுக் கருத்தில் சுருங்கற் கருத்துத் தோன்றிற்று. சுண்டி = தொட்டால் வாடி (தொட்டாற் சுருங்கி, தொட்டாற் சிணுங்கி). சுண்டி - சுண்டில் = தொட்டால் வாடி (மலை). சுட்கு - சுட்கம் = கஞ்சத்தனம். (ஈகை அல்லது செலவுச் சுருக்கம்). சுக்குச் செட்டு = கஞ்சத்தனம். கஞ்சனைச் சுக்குச் செட்டி, சுக்கஞ் செட்டி, சுக்காஞ் செட்டி என்று சொல்வது உலக வழக்கு. சும்பு - சம்பு. சம்புதல் = விலை குறைதல். சம்பு - சம்பல் - 1. விலை யிறக்கம். 2. மலிவு. சுணங்கு = மெலிவு. 5. சோம்பல் சுணங்குதல் = 1. வினையிற் சோர்தல். 2. காலந்தாழ்த்தல். சுணக்கம் = 1. மனத்தளர்ச்சி. 2. காலத்தாழ்ப்பு. சும்பு - சூம்பு. சூம்படைதல் = சோம்பற் படுதல் (நெல்லை வழக்கு). சூம்பு - சோம்பு. சோம்புதல் = 1. வினைமடிந் திருத்தல். சோம்பி யிருந்ததக் குரங்கு மென்றார் (கம்பரா. சுந்தர. பஞ்சசே. 67). 2. மதிமந்த மாதல். 3. திடாரிக்கங் குறைதல். சூல மன்னதோர் வாளியாற் சோம்பினன் சாம்பன் (கம்பரா. யுத். முதற்போர். 199). 4. வாடுதல். 5. கெடுதல். அரிவையர் கற்புச் சோம்பி (கலிங். 247). 6. பின்வாங்குதல். ஒரு காசுக்குச் சோம்புவான் என்பது உலகவழக்கு. சோம்பு - சோம்பல். சோம்பு - சோம்பன் = சோம்பேறி. சோம்பு - சோம்பி = சோம்பேறி. சோம்பேறு - க. சோமாரி. காணிக்குச் சோம்பல் கோடிக்குக் கேடு (பழமொழி). சோம்பு = 1. மடிமை. (தொல். பொ. 260, உரை). 2. மந்தம். சோம்பு தவிர்ப்பிக்கும் (திருமந். 566) 3. தூக்க மயக்கம். 4. மயக்கம். x.neh.: GK. Somnus (Sleep). சும்பு - சும் = மடிமை. சும்மா (சும்மாக) = மடிமையாக, ஒரு வினையுஞ் செய்யாமல், ஒன்றுஞ் செய்யாமல், ஒன்றுஞ் சொல்லா மல், ஒன்றுங் கொடாமல், ஒன்றும் பெறாமல், ஒரு பயனுமின்றி, ஒரு கருத்துமின்றி, ஒரு நோவுமின்றி, ஒரு வகை அச்சமுமின்றி, இக் கருத்துக்களை யெல்லாம் சும்மாயிருத்தல் என்னும் மரபுச் சொல் உணர்த்துதல் காண்க. கொண்முடிபு (சித்தாந்த) நூலாரும் மெய்ப்பொருள் (தத்துவ) நூலாரும், இச் சொல்லை இருவகைப் பற்று மறுத்து முற்றத் துறந்த முழு முனிவரான ஓகியர் இருவினையுஞ் செய்யாது இறைவன்மேல் எண்ணத்தை நிலையாக நிறுத்தி அமைதியா யிருக்கும் இணையற்ற இன்ப நிலைமையைக் குறிக்கப் பயன் படுத்தியுள்ளனர். மௌன குருவடிகள் தாயுமான அடிகட்குச் சும்மாயிரு என்று செவியறிவுறுத்தியதையும், அதை நினைந்து தாயுமான அடிகள். .................................................................................................................. வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாம லுலகத்து லாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம் சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு சரீரத்தினும் புகுதலாம் சலமே னடக்கலாங் கனன்மே லிருக்கலாம் தன்னிகரில் சித்திபெறலாம் சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே. என்று பாடியிருத்தலையும், நோக்குக. வெப்பத்தினால் மந்தமும் மடிமையும் உண்டாகுமாதலால், வெப்பக் கருத்தில் சோம்பற் கருத்துத் தோன்றிற்று. வெப்பக் காலத்திலும் வெப்ப நாட்டிலும் வினைமுயற்சி குன்றுவதையும், குளிர் காலத்திலும் குளிர் நாட்டிலும் அது மிகுவதையும், உலகியலை நோக்கிக் காண்க. சுல் (சிவத்தற் கருத்து வேர்) சுல் - சுல்லி = 1. அடுப்பு. 2. மடைப்பள்ளி. சுல் - சுள். சுள்ளல் = சுடுதல், காய்தல். சுல் - சுல்லம் = செம்பு. (மலை.) சுல்லம் - வ. சுல்ல. சுல் - சுல்வு - சுல்வம் = செம்பு. சுல்வத்தா லமைத்த நெடுங் களத்தின் (சேதுபு. தனுக்கோ. 9). சுல்வம் - வ. சுல்வ. நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்புக் கருத்தினின்று சிவத்தற் கருத்துத் தோன்றிற்று. ஒ.நோ: எரி = நெருப்பு. சிவப்பு. எரிமலர் = 1. சிவந்த முருக்கமலர். 2. செந்தாமரை. செம்பு செந்நிற மாழை (உலோகம்). அதனால் அப்பெயர் பெற்றது. சுல் - செல் - சேல் = செந்நிறக் கெண்டை மீன். சேல்விழி = சேல் மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண். சேலுண்ட வொண்கணாரிற் றிரிகின்ற செங்காலன்னம் (கம்பரா. நாட்டுப். 13). செல் - செள் - செட்டு - செட்டி = 1. சிவந்த அடியையுடைய வெட்சிச் செடி. செங்கால் வெட்சி (திருமுரு. 21) 2. சேயோன் (செந்நிற முருகன்). செட்டு - செச்சு - செச்சை = 1. சிவப்பு. செச்சை வாய்திறந்து (திருவிளை. வலை. 24. 2. வெட்சி. செச்சைக் கண்ணியன் (திருமுரு. 208). 3. செந்துளசி. (மலை.). செச்சு - செஞ்சு = செம்மை, செவ்வை, நிறைவு. செஞ்சுறு செஞ்சுடர் (திருமந். 1713). செஞ்சு - செஞ்சம் = 1. நேர்மை. 2. நிறைவு, முழுமை. செஞ்சமுற வேறல் செயமென்று (குற்றா, தல. திருமால். 114)., இயல்பாக எல்லாரையுஞ் சுடவேண்டிய நெருப்பானது, வாய்மை, குற்றமின்மை, கற்பு, தெய்வநம்பிக்கை முதலிய பண்புகளை மெய்ப்பிக்கும் தெய்வச் சான்றாக நின்று சுடா திருப்பதால், தீயின் நிறப்பண்பாகிய செம்மைக் கருத்தினின்று. தூய்மை அல்லது நேர்மைக் கருத்தும், நேர்மைக் கருத்தினின்று நிறைவுக் கருத்தும், கிளைத்தன. செள் - செய் - செய்ம்மை = செம்மை (சிவப்பு). செய்ய = 1. சிவந்த. செய்ய தாமரைகளெல்லாம் (கம்பரா. நீர்விளை. 3). 2. செப்பமான, நேர்மையான, செய்ய சிந்தைப் பேரருளாளர் (கம்பரா. விபீடண. 128). செய்யவள் = சிவந்த திருமகள். செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (குறள். 167). செய்யவன் = 1. சிவந்தவன். 2. சிவன். செய்யவனே சிவனே (திருவாச. 6:7). 3. செவ்வாய்க்கோள். (விதான. குணாகுண. 12). 4. கதிரவன் (W). செய்யவன் = செம்பாம்பு. (சித்தர். சிந்து). செய்யாள் = 1. செங்கோலத் திருமகள். செய்யாட் கிழைத்த திலகம் போல் (பரிபா. 22 : 4). 2. மூதேவியின் தங்கை போன்ற தாயின் தங்கை (சிறிய தாய்) - தஞ்சை வழக்கு. செய்யான் = 1. சிவன். செய்யானை வெண்ணீறணிந்தானை (திருவாச. 8 : 13). 2. செம்பூரான். செய்யோள் = 1. செந்நிற முள்ளவள். எய்யா விளஞ்சூற் செய்யோள் (பொருந. 6). 2. திருமகள். செய்யோள் சேர்ந்தநின் மாசிலகம் (பரிபா. 2:31). செய்யோன் = 1. செந்நிறமுள்ளவன். செய்யோனகளங்கன் (பெருந். தொ. 817) 2. செவ்வாய். மீனத்து மந்தன் செய்யோன் மதியெழு (விதான. கர்ப்பா. 10). செய் - செயல் - செயலை = சிவந்த அடியையுடைய அசோக மரம். செயலைத் தண்டளிர் (திருமுரு. 207) என்னுந் தொடருக்கு. சிவந்த அரையினையுடைய அசோகிற் குளிர்ந்த தளிர் என்று நச்சினார்க்கினியர் பொருள் வரைந்திருத்தல் காண்க. சேந்த செயலை (மலைபடு. 160) = சிவந்த அசோக மரம். செய்தல் = 1. சிவத்தல், 2. கை சிவக்குமாறு வேலை செய்தல். 3. ஏதேனு மொரு வினை செய்தல். 4. செய்யுள் இயற்றுதல். வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நன். 268). 6. நூலியற்றுதல். பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும் (நன். 49). 7. உண்டாக்குதல். செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காமம் (கலித். 140). 8. ஈட்டுதல். செய்க பொருளை (குறள். 759). 9. ஒத்தல். வேனிரை செய்த கன்னி (சீவக. 2490). தமிழருள் தொன்று தொட்டு வெள்ளாளர், காராளர் என இரு வண்ணத்தார் இருந்து வந்திருக்கின்றனர். வெள்ளாளர் என்றது பொன்னிறத்தாரை. காராளர் என்றது குரால் (கபில) நிறத்தாரையும் கரியரையும். கரியரும் புதுநிறத்தார் முதல் கன்னங்கரியர் வரை பல திறத்தர். பொன்னரைச் சிவப்பர் என்பதுமுண்டு. மெய்வருந்தி யுழைப்பின், வெள்ளாளர் அகங்கை சிவந்தும் காராளர் அகங்கை கருத்தும் போகும். அதனால், வினைசெய்தலைக் குறிக்கச் செய்தல் கருத்தல் என்னும் இரு சொற்கள் தோன்றின. கருத்தல் வினைவழக் கிறந்து போயிற்று. இன்று அது கருவி, கருமம், கரணம் என்னும் பெயர்ச் சொற்களில் முதனிலையாக மட்டும் நிற்கின்றது. கரு என்னும் தென்சொல்லே வடமொழியிற் க்ரு என்று திரியும். செய்ம்மை - செம்மை - செம். ஒ.நோ : வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை - வெம். செம்மை = 1. சிவப்பு. (திவா.) 2. செவ்வை, (திவா.). 3. நேர்மை. செம்மையி னிகந்தொரீஇ (கலித். 14). 4. மனக்கோட்டமின்மை. செம்மையுஞ் செப்பும் (தொல். பொருளியல், 15). 5. கேது. (சூடா.). 6. துப்புரவு. 7. அழகு. 8. பெருமை. செம்மை சான்ற காவிதி மாக்களும் (மதுரைக். 499). செம் = 1. சிவந்த. எ-டு: செந்நீர். 2. நேர்மையான. எ-டு: செங் கோலாட்சி. 3. நடுநிலையான. செம்மனத்தான் (நள. 46) 4. இலக் கணம் பிறழாத. எ-டு: செந்தமிழ். 5. முதிர்ந்த. எ-டு: செங்காய். 6. சொல்லழகில்லாத. எ-டு: செந்தொடை, 7. இயல்பான. செம்மகள் (கல்லா. 5:31) 8. தகுந்த, ஏற்ற. எ-டு: செந்துறை. 9. சமமான, எ-டு: செம்பாகம். 10. ஒரே யொழுங்கான. எ-டு: செந் தூக்கு. 11. கோட்ட மில்லாத எ-டு: செங்குத்து. 12. எண்ணிடைச் சொல் பெறாத. எ-டு: செவ்வெண். பருவியற் கருத்தினின்று நுண்ணியற் கருத்துத் தோன்றுவது போன்றே, நுண்ணியற் கருத்தினின்று பருவியற் கருத்துந் தோன்றும். குணத்தின் அல்லது நடத்தையின் நேர்மை நுண்ணியல்; கோலின் அல்லது உடம்பின் நேர்மை பருவியல். செம் + படு = செம்படு - செப்படு. செப்பட = செவ்விதாக. செப்பட முன்கை யாப்ப (சீவக. 2665). செம்+ஆ= செம்மா. செம்மாதல் = செம்மையாதல். என் கண்ணன் கள்வ மெனக்குச் செம்மாய் நிற்கும் (திவ். திருவாய். 9:6:6). செம்மன் = காவி நிறமுள்ள திருக்கை மீன்வகை. செம்மல் = 1. வாடிச் சிவந்த பழம்பூ. உதிர்ந்த ... செம்மல் மணங்கமழ (சிலப். 7. பாடல் 39). 2. பெருமை, தலைமை. அருந்தொழில் முடித்த செம்மற் காலை (தொல். கற்பியல், 5). 3. வலிமை. (பிங்.). 4. தருக்கு. செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் (குறள். 880). 5. பெருமையிற் சிறந்தோன் தலைவன். (திவா.). 6. பெருமையுள்ள மகன். பருதிச் செல்வன் செம்மலுக்கு (கம்பரா. அனும. 18) 7. இறைவன். (திவா.). 8. சிவன். (சூடா.) ம. செம்மு. தலைவன் அல்லது அரசன் செம்மல் எனப்பட்டது, நேர்மையான ஆட்சியால்; சிவன் செம்மல் எனப்பட்டது செந்திறத்தால். செம்மாத்தல் = 1. வீறுபெறுதல். அண்ணல் செம்மாந்திருந்தானே (சீவக. 2358). 2. இறுமாத்தல். மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ் (குறள். 1074). செம் - செம்பு = 1. தாம்பரம். செம்பிற் செய்நவும் (சிலப். 14:174). 2. செம்பினாற் செய்த குடிநீர்க்கலம். 3. ஒரு முகத்தலளவு. ம. செம்பு. க. செம்பு, கெம்பு. செம்பு - செம்பை = ஒருவகைப் பூச்செடி. செம்பு - செப்பு = 1. செம்பு. 2. செம்பினாற் செய்த நீர்க்கலம். சேமச் செப்பிற் பெறீஇயரோ (குறுந். 277). 3. சிமிழ். செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் (குறள். 887). ம. செப்பு. செப்பு - செப்பம் = 1. செம்மை. செப்பமும் நாணுமொருங்கு (குறள். 951). 2. நடுநிலை. செப்பம் உடையவனாக்கம் (குறள். 112)., 3. ஒக்கிடுகை. குடையைச் செப்பஞ் செய்ய வேண்டும். (உ.வ.). 4. செவ்வையான பாதை. சேந்த செயலைச் செப்பம் போகி (மலைபடு. 160). 5. செவ்வையான தெரு. (பிங்.). செப்பு - செப்பல் = 1. செந்நிறம். பொழுது செப்பலோடிவரும் பொழுது (யாழ்ப்.). 2. அருணன் எழும் நேரம். செப்பம் - செப்பன். செப்பனிடுதல் = செவ்வை செய்தல், ஒக்கிடுதல், பழுது பார்த்தல், புதுப்பித்தல். செப்பல் - செப்பலி = செந்நிறமுள்ள கடல் மீன் வகை. செம் - செவ். செஞ்செவ்வே - செஞ்செவே = 1. நேராக செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா. பூக்கொய் 7). 2. எளிதாக. செஞ்செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை. 13). 3. முழுதும். செஞ்செவே யாண்டாய் சிவபுரத் தரசே (திருவாச. 28:6). ம. செஞ்செம்மே. செஞ்செவே - செஞ்ச = 1. நேராக. செஞ்ச நிற்போரைத் தெரிசிக்க (திருமந். 2079). 2. முழுதும். செவ் - செவ்வல் = 1. செந்நிறம். செவ்வலங் குன்றம் (களவழி. 10). 2. செம்மண் நிலம். செவ்வன் = செவ்வையாக. செவ்வ னிறைகாக்கு மிவ்வுலகில் (பு. வெ. 10, முல்லைப். 9). செவ்வன் = செவ்வனம் = செவ்வையாக. செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள் (மணி. 3:81). செவ் - செவ்வி = 1. தகுந்த சமயம். கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி (குறள். 130). 2. காட்சி. செவ்வியுங் கொடாஅன் இவ்வியல் புரிந்தனன் (பெருங். 2:9:198). 3. பேரரும்பு. (பிங்.). 4. விளைச்சற் பருவம். முதிர்ந்த செவ்வித் தினையினை (கந்தபு. வள்ளி. 158). 5. புதுமை. காயா மலருஞ் செவ்விப்பூப் போல (பு. வெ. 9:4. உரை). 6. அழகு. வண்டுறை கமலச் செவ்வி வாண்முகம் பொலிய (கம்பரா. சூர்ப்ப. 2). 7. சுவை. பாற் சோற்றின் செவ்வி கொளறேற்றா (நாலடி. 322). 8. மணம். நாவிய செவ்விநாற (கம்பரா. கார்கால. 35). 9. தன்மை. 10. செம்மை. செவ்வியிற் றொடர்ந்த வல்ல செப்பலை (கம்பரா. இரா. வதை. 210). செவ்வு = 1. செம்மை. 2. நேர்மை. ஆருயிர் செவ்விராது (கம்பரா. காட்சி. 29). 3. நேர் (திசை). இந்தச் செவ்வுக்குப் போனாற் கல்லூரியைக் காணலாம். (நாஞ்). f., ம. செவ்வு. செவ்வே = 1. நன்றாக. செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் (திருவிருத். 98). 2. நேரே. செவ்வே பாரிற் செல்கின்ற (கம்பரா. முதற் போர். 216). ம. செவ்வே. செவ் - செவ்வை = 1. செப்பம். அது செவ்வையான பாதை. (உ.வ.). 2. நேர்மை : தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி 3. ஒழுங்கு. எல்லாம் செவ்வையா யிருக்கின்றன. (உ.வ.). செவல் = 1. செம்மண் நிலம். செவேர் எனல் = செந்நிறமாயிருத்தல். செவ் - சிவ். சிவ்வெனல் = சிவந்திருத்தல். சிவ் - சிவ. சிவத்தல் = 1. செந்நிறமாதல். காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்ப (பெருங். இலாவாண. 14:63). 2. சினத்தல். சிவந்தனை காண்பாய்தீ தீதின்மை (கலித். 91). சிவத்தை = 1. சிவப்பு. 2. பொன்னிறப் பெண். 3. செந்நிறக் காளை. சிவப்பு = 1. செந்நிறம். 2. சிவப்புக்கல். 3. சினம். கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். உசி. 74). ம. சுவப்பு. சிவப்பன் = பொன்நிறத்தான். பேர் கறுப்பன் நிறஞ் சிவப்பன் (தனிப்பாடல்) சிவப்பு - சிகப்பு. சிவப்பி = 1. பொன்னிறத்தாள். 2. செந்தெங்கு. சிவ - சிவம் = 1. செம்பொருள் (சிவன்). 2. சிவன் தன்மை. சித்தமல மறுவித்துச் சிவமாக்கி (திருவாச. 51:1). 3. வீடு, பேரின்பம். சிவம் - சிவன் = சிவநெறியாராற் செந்நிறத்தான் எனக் கருதப்படும் இறைவன் அல்லது கடவுள். சிவன் - சிவை = சிவன் தேவியாக உருவகிக்கப்பட்ட திருவருள். சிவ - சிவல் = செம்மண் நிலம். 2. பெரும்பாலும் சிவற்காடான முல்லை நிலத்துக் கதுவாலி என்னும் பறவை. சிவல் - சிவலை = செந்நிறக்காளை. நெற்றிச் சிவலை (கலித். 104). சிவீர் எனல் = சிவந்திருத்தல். சிவீர் = சிவேர். சிவேர் எனல் = சிவந்திருத்தல். செவ் - செவு - செகு - செக்கு - செக்கம். செக்கம் = 1. சிவப்பு. 2. சினம். செக்கஞ் செகவென்றவள்பா லுயிர்செக வுண்ட பெருமான் (திவ். திருவாய். 1:9:5). செக்கச் செவேர் எனல் = மிகச் சிவந்திருத்தல். செக்கச் சிவத்தல் = மிகச் சிவத்தல். விழியிணை செக்கச் சிவந்து (திருப்பு. 126). செக்கம் - செக்கல் = 1. செவ்வந்தி. 2. அந்திமாலை. செக்கல் - செக்கர் = 1. சிவப்பு. சுடுதீ விளக்கஞ் செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற (புறம். 16). 2. செவ்வானம். செக்கர் கொள் பொழுதினாள் (கலித். 126). செகு - செகில் = சிவப்பு. செகிலேற்றின் சுடருக் குளைந்து (திருவிருத். 69). செகில் - செகின் = மீனின் சிவந்த மூச்சுறுப்பு (gills). செகிள் - செகிடு = அலகடி, கன்னம். செகிட்டைக் கட்டியறைந் தாள். (உ.வ.). செகிள் - செவிள் - செவிடு = செவியொட்டிய கன்னம். செய் - சேய் = 1. சிவப்பு. சேயுற்ற கார்நீர் வரவு (பரிபா. 11:114). 2. செவ்வாய். (பிங்.). 3. செந்நிற முருகன். பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கை ... ........................................................ சேவலங் கொடியோன் (குறுந். கட. வாழ்) என்றது காண்க. 4. முருகனை யொத்த மறவன். பாரதப் போர் செற்றானுங் கண்டாயிச் சேய் (நள. 137). சேய் - சேயன் = செந்நிறத்தான். வண்ணமு மாயனவனிவன் சேயன் (தொல். உவ. 32, உரை). சேயன் - சேயான் = செந்நிறத்தாள். சேயவன் = 1. செவ்வாய். (திவா.). 2. செந்நிற முருகன். ஆறுமாமுகச் சேயவன் (கந்தபு. தெய்வயா. 58). சேயோன் = 1. முருகன். சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். அகத். 5). 2. சிவன். சேயது - சேய்து - சேது = 1. சிவப்பு. (சூடா.). 2. சிவந்தது. சேது - கேது = சிவந்த சாயைக்கோள், the descending node (திவா.). ஒ.நோ : செம்பு - கெம்பு (க.). சீர்த்தி - கீர்த்தி (வ.). சேது - சேத்து = சிவப்பு. (திவா.). சேத்தகில் புழுகு சந்தம் (பாரத. பதினான். 219). சேது + ஆ = சேதா = செந்நிற ஆன். சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா. (நற். 359). சேது + ஆம்பல் = சேதாம்பல் = செவ்வாம்பல். சேதாம்பற் போதனைய செங்கனி வாய் (கம்பரா. நகர் நீங். 101). சேய் - சே. சேத்தல் = சிவப்பாதல். அவன் வேலிற் சேந்து (கலித். 57). 2. சினத்தல். நித்தில மேந்திச் சேந்தபோல் (சீவக. 329). சே = 1. சிவப்பு. சேக்கொள் கண்ணை (கல்லா. 85:9). 2. சேங் கொட்டை. (மலை.). சே - சேப்பு = 1. சிவப்பு. ஊடலிற் செங்கண் சேப்பூர (பரிபா. 7: 70). 2. சிவப்புக்கல். சேத்து - சேந்து = 1. சிவப்பு. (பிங்.). 2. தீ. (யாழ். அக.). சேந்தி னடைந்த வெலாஞ் சீரணிக்க (அருட்பா, i, நெஞ்சறிவுறுத்தல், 689). 3. அசோகு. (மலை.). சேந்து - சேந்தன் = முருகன். சூர்தடிந் திட்ட சேந்தன் (தேவா. 942:6). சேந்தன் = சேந்து. ஒ.நோ : வேந்தன் - வேந்து. சேந்து + இல் = சேந்தில் - செந்தில். சேந்து + ஊர் = சேந்தூர் - செந்தூர் (திருச்செந்தூர்). சே - சேவு = செவ்வயிரம், வயிரம். செய்த கை சேவேறும், செய்யாதகை நோவேறும் (பழமொழி). சேவு - சேகு. சேகுவாயிரம் = செவ்வயிரம். சேகு - சேகை = சிவப்பு. அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச் சேகையாய் மல்குந் திருத்தாள் (கந்தபு. இரணியன்பு. 14). குறிப்பு : சிவம் என்னும் சொல்லிற்கு, நன்மை என்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி ஒரு பொருள் கூறியிருப்பது, வடநூல் வழக்கைத் தழுவியதாகும். சிவன் தென்னவர் தெய்வ மாதலால், அப்பொருள் பொருந்தாது. நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில், உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக் கும் பொதுவாக வழங்கிய, சிவ: என்னும் அடைமொழியாகிய வடசொல் வேறு; நெருப்பின் கூறாகக் கொள்ளப்பட்டு அழல் வண்ணன் எனப்பட்ட இறைவன் பெயராகிய சிவன் என்னும் தென்சொல் வேறு. சிவனியம், மாலியம் ஆகிய இரு தமிழ மதங்களையும் ஆரியப் படுத்தற் பொருட்டு, ஆரியர் வகுத்த முத்திருமேனிக் கூட்டில், முத்தொழில் தலைவனாகிய சிவனுக்கு அமங்கலமான அழிப்புத் தொழிலே ஒதுக்கப்பட்டதுபற்றி, சிவனியத் தமிழர்க்குள்ள மனத்தாங்கலைத் தீர்த்தற்கே, சிவன் என்னும் சொற்கு நன்மை செய்பவன் என்று பொருள் கூறி, சிவனுக்குச் சங்கரன் (சம் + கர - சங்கர = நன்மை செய்வன்) என்றொரு பெயரையும் அமைத்தனர் என அறிக. (வே.க.) சுல்4 (வளைதற் கருத்துவேர்) வளைதல் என்பது, சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை முதலிய பல கருத்தைத் தழுவும். சுல் - சுலவு. சுலவுதல் = 1. சுற்றுதல். அரவூறு சுலாய் மலை தேய்க்கும் (திவ். திருவாய். 7:4:2). 2. சுழலுதல். சுலவுற் றெதிர் போகிய தூவியனம் (நைடத. அன்னத். 45). சுலவு - சுலாவு, சுலாவுதல் = சூழ்தல். விரைகமழ் சோலை சுலாவி யெங்கும் (தேவா. 418 : 1) சுலாவு = (வளைந்து வீசும்) காற்று. சுலாவாகி (தேவா. 1227 : 3). சுல் - சில் = 1. வட்டமான துண்டு. 2. கடற்சில் (வட்டமான கடற்செடி விதை). 3. உருளை, தேர்க்கால். சில் - சிலை = 1. வளைந்த வில். கொடுஞ் சிலைக்கைக் கூற்றினை (பு.வெ. 1:10) 2. வானவில். சிலைத்தா ரகலம் (புறம். 61:14). 3. சிலையோரை (தனுராசி) (விதான. யாத், 13). 4. சிலை (மார்கழி) மாதம். சிலையில் வெங்கதிரைத் திங்களொன்றிய (பாரத. முகூர்த் 4). சில் - சிலந்தி = 1. வட்டமான நூல்வலை யமைக்கும் பூச்சி, 2. சிலந்திப் பூச்சிபோன்ற கொப்புளக்கட்டி. ம. சிலன்னி. சிலந்தி - சிலந்தி - சிலம்பி. சிலம்பி வானூல் வலந்த மருங்கில் (பெரும் பாண். 236). சுல் - சுன் - சுன்னம் = சுழி. சுன்னம் - பிரா. சுன்ன - வ. சூன்ய. சுன் - சூன் = வளைவு. சூன் நிலம் (உ.வ.). சுன் - சின் - சினை = 1. முட்டை (பிங்.). சினைவளர் வாளையின் (பரிவா. 7:38). 2. மக்கள் விலங்கு பயிர் முதலிய உயிரிகளின் கரு. தெ. ஜென. சுல் - சூல் = 1. முட்டை. ஞமலி தந்த மனவுச் சூலுடும் பின் (பெரும்பாண். 132). 2. கரு. இளம் பிடி யொருசூல் பத்தீ னும்மோ (புறம். 130:2). 3. முகில் நீர் நிரம்பியிருக்கை. சூன்முதிர் முகில் (பரிபா. 20:3). சூல் - சூலி = கருவுற்றவள். சூலி முதுகிற் சுடச்சுட (திருக்கை வழக்கம், கண்ணி, 12). சூலுதல் = கருக்கொள்ளுதல். சூலாமை சூலிற்படுந் துன்பம் (சிறுபஞ். 75). ம. சூல். க. சூல். தெ. த்சூலு. சுல் - சுள் - சுளகு = வளைத்துப் பின்னும் புடைப்புத் தட்டு. சுள் - சுளி. சுளிதல் = திரிதல். சுளித்தல் = வெறுப்பால் முகத்தைத் திரித்தல். சுள் - சுளு - சுளுக்கு = நரம்புப் புரட்சி. k., க. சுளுக்கு, து. உளுக்கு, தெ. இலுக்கு. சுளுக்குதல் = நரம்பு பிசகுதல். சுளி - சளி. சளிதல் = ஒரு பக்கம் சரிதல், சுற்றிவரச் சரிந்து சப்பளிதல். ம. சளி(க்க). சளி - சழி. சழிதல் = உடற்சதை சரிந்து தளர்தல். சழிவு நெளிவு = கோணல் மாணல். சுள் - சுழகு - சுழங்கு. சுழங்குறுதல் = சுழலுதல். நெஞ்சகஞ் சுழங்குற (காஞ்சிப்பு. பன்னிரு. 276). சுழலுதல் = 1. வட்டமாகச் சுற்றிவருதல். சுழன்றிலங்கு வெங் கதிரோன் (திவ். பெரியதி. 9:4:6). 2. உருண்டோடுதல், உருளுதல். தேர்க்கா லாழியிற் சுழன்றவை (பெருங். வந்தவ. 12: 205). 3. பம்பரம்போற் சுற்றியாடுதல். 4. பித்தன்போல் உடம்பைச் சுற்றி யாட்டுதல். சுழலலுஞ் சுழலும் (மணி. 3: 111). 5. சுற்றித் திரிதல். குழலின்படி சுழலும் (கம்பரா. கங்கைப். 3). 6. காற்றிற் கப்பல் போல அலைவுபடுதல். 7. மனம் அலசடிப் படுதல். சுழலுஞ் சுரா சுரர்க ளஞ்ச (திவ். இயற். 1:48) 8. பொறி மயங்குதல். கண்ணுஞ் சுழன்று பீளையோடு (திவ். பெரியதி. 7: 4:1). ம. சுழலு (க.) தெ. சுடியு. சுழலமாடுதல் = 1. விடாமுயற்சி செய்தல். 2. ஒருவரை அடிக்கடி கண்டு தொழுதல். சுழலி = மாந்த வலிப்பு வகை. சுழலை = வஞ்சகம். சுழலை பெரிதுடைத் துச்சோதனை (திவ். பெரியாழ். 1: 8: 5). சுழல் = 1. சுருள். சுழலிடு கூந்தலும் (கம்பரா. மிதிலை. 43). 2. பீலிக்குடை (பிங்.). 3. காற்றாடி (சூடா). 4. சுழற்சி. சுழற்கண் வேதாள மானான் (சேதுபு. வேதாள. 72). 5. வளைவு. சுழல்படை = வளைதடி (சூடா.). 6. சுழிநீர். 7. சுழல்காற்று. 8. அலசடி (சஞ்சலம்). சுழலார் துயர் (தேவா. 294: 19). 9. ஏமாற்று, வஞ்சகம். ம. சுழல். சுழன்மரம் = மரத்திரிகை. சுழன்மரஞ் சொரித்த (அகம். 393). சுழல் - சுழற்று - சுழற்றி = 1. இறாட்டைக் கைப்பிடி. 2. துளையிடு கருவி, துறப்பணம். சுழற்றல் = கிறுகிறுப்பு. ம. சுழற்று. சுளி - சுழி. சுழிதல் = 1. வளைதல், சுருளுதல். சுழியுங் குஞ்சி மிசை (கம்பரா. எழுச்சி. 34). 2. சினத்தாலும் வெறுப்பாலும் முகந்திரிதல். தழலுமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகஞ்சுழிய (தேவா. 1148:7). 3. வட்டமாதல். 4. நீர்ச்சுழிபோற் சுற்றுதல். 5. மனங் கலங்குதல். வரிவிழி கொண்டு சுழியவெறிந்து (பட்டினத். பா. உடற். 3) 6. இறத்தல் (இடத்து வழக்கு). க. சுளி. சுழி = 1. சுன்னம். 2. எழுத்துச் சுழி. எ-டு: அ, ள, ன, ண. 3. மயிர்ச்சுழி. 4. ஆகூழையோ போகூழையோ குறிக்கும் உடம்புச் சுழி. சுழிகொள் வாம்பரி (கம்பரா. எழுச். 32). 5. சுழிமதி. சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் (கம்பரா. பள்ளி. 74). 6. கடல். கொண்ட சுழியுங் குலவரை யுச்சியும் (திருமந். 2966). 7. நீர்ச்சுழி. கங்கையின் சுழியிற்பட்ட (சீவக. 1096). 8. சுழிக்காற்று. 9. சுழற்சி. 10. சுருள். k., சுழி, சுளி, தெ. சுடி. சுழியன் = 1. குறும்பன். 2. சுழல்காற்று. சித்திரைச் சுழியன் (உ.வ.). சுழியம் = 1. ஒருவகை இனிப்புருண்டைப் பலகாரம். 2. மகளிர் தலையணி வகைகளுள் ஒன்று சுழியஞ் சூடி (கம்பரா. கடிமணப். 52). சுழியம் - சுசியம் = ஒருவகை. இனிப்புருண்டைப் பலகாரம் (நெல்லை வழக்கு). சுழியம் - சுழியன் - சுகியன் = ஒருவகை இனிப்புருண்டைப் பலகாரம். அவல்பொரி சுகியன் (திருப்பு. 926). சுள் - சூள் - சூளிகை = நீர்க்கரை. நன்னீர்ச் சூளிகை தோறும் (அரிச். பு. விவாக. 46). சூள் - சூழ். சூழ்தல் = 1. சுற்றியிருத்தல். அறைகடல் சூழ் வையம் (நாலடி. 230). 2. சுற்றி வருதல். சூழ்கதிர் வான் விளக்கும் (பு. வெ. 9:16). 3. ஆராய்தல். நின்னொடு சூழ்வல் தோழி (கலித். 54). 4. கருதுதல். புலைசூழ் வேள்வியில் (மணி. 13:28). 5. கெடுதலை யெண்ணுதல். கொடியவன் கடிய சூழ்ந்தான் (சீவக. 261). 6. தெரிந் தெடுத்தல். சூழ்புரவித் தேர். 7. பண்ணுதல். பாவை சூழ்ந்தும் (பட்டினப். 102). 8. வரைதல். தொய்யில் சூழிளமுலை (கலித். 125). சூழ் = 1. சுற்று. சூழா மெட்டே யாயிரவேதி (கந்தபு. அசுரர்யா. 61). 2. ஆராய்ச்சி. கற்றார் சூழ் சொல்லுமாங் கண்டு (சி. போ. 8:1:1). 3. தலையணிமாலை. மென்பூச் சூழு மெழுதி (திருக்கோவை. 79). சூழ் - சூழ்ச்சி = 1. தேர்ந்தெண்ணல். போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் (புறம். 2:7). 2. நுண்ணறிவு. கருமக் கிடக்கை யுங் கலங்காச் சூழ்ச்சியும் (பெருங். உஞ்சைச் 46:117). 3. ஆம்புடை (உபாயம்). சொல்லா யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே (திவ். திருவாய். 3:2:3). சூழ்ச்சி - சூழ்ச்சியம் = மதித்திறமை (Ingeniousness). சூழ் - சூழல் = 1. சூழ்ச்சி. 2. கூட்டம். வானவர் சூழலோடு (கந்தபு. மேருப். 48). 3. இடம். (பிங்.). சூழி = 1. வட்டமான நீர்நிலை. அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி (புறம். 375). 2. கடல். சூழியல் = வீட்டிறப்பு, வீட்டிறப்புத் தாங்குஞ் கம்பு. சூழியற்படை = வீட்டுச்சுவரின் எடுத்துக்கட்டி. சுள் - சுட்டி = 1. குழந்தைகளும் மகளிரும் அணிந்து கொள்ளும் வட்டமான நெற்றியணி. சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து (பெருங். உஞ்சைக் 40:102) 2. மாட்டின் நெற்றியிலுள்ள வெண்சுழி. சுட்டியை நெற்றியிலே யுடைய கரிய எருது (கலித். 101, 21, உரை). 3. பாம்பு முதலிய உயிரிகளின் உச்சி வெள்ளை. 4. நெற்றிப் பட்டம் (அக. நி.). 5. தலைச்சுழி. 6. குறும்பு. 7. குறும்பன். k., f., து. சுட்டி. சுட்டி சுட்டியாக = வட்டம் வட்டமாக. அவன் உடம்பில் சுட்டி சுட்டியாக வெள்ளை விழுகிறது. (உ.வ.). சுட்டித் தலையன் = 1. தலையிற் சுழியுள்ள குறும்பன். 2. உச்சி வெள்ளை யுடைய விலங்கு. சுட்டித்தனம் = குறும்புத்தனம். சுட்டிப்பயல் = குறும்பு செய்யும் பையன். சட்டி - சுட்டிகை = மகளிர் நெற்றியணி. சூளிகையுஞ் சுட்டிகை யும் (பதினொ. ஆதியுலா. 68). சுட்டிகை - சுடிகை = 1. நெற்றிச்சுட்டி. (திவா.). 2. நெற்றிப் பொட்டு. (திவா.). 3. தலையுச்சி. (திவா.) 4. மயிர் முடி. (திவா.). 5. சூட்டு. பஃறலைச் சுடிகை மாகணம் (கந்தபு திருநாட்டுப். 19). 6. மகுடம். (திவா.). சுடிகை - வ. ஜுட்டிக்கா. சூள் - சூடு: சூடுதல் = வளைதல், வளைந்திருத்தல். வண்டிச் சக்கரம் சூடியிருக்கிறது. (நாஞ்சில் நாட்டு வழக்கு). சூடு = வட்டமாக அடைந்த கதிர்ச்சாணை. சூடு - சூடகம் = வளையல். பாடகத் தரவமுஞ் சூடகத் தோசை யும் பெருங். வத்தவ. 12: 240). க. சூடக. (g) து. சூடக (c) (g), தெ. சூடிகமு (g). சூடு - சூட்டு = 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச் சூழத் தைக்கப் பட்ட வளைவுச் சட்டம். கொழுஞ் சூட்டருந்திய திருந்துநிலை யாரத்து (பெரும்பாண். 46). 2. பூமாலை.மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க (பெருங். உஞ்சைக். 46:233). 3. நெற்றிப் பட்டம். செம்பொற் சூட்டொடு கண்ணி (சீவக. 2569). 4. மகளிர் நுதலணி. (பிங்.). 5. பறவைகளின் உச்சிக் கொண்டை. காட்டுக் கோழிச் சூட்டுத்தலைச் சேவல் (பெருங். உஞ்சைக். 52: 62). 6. பாம்பின் படம். செங்க ணாயிரஞ்சூட் டராவி னறிதுயி லமர்ந்து (கூர்மபு. வருணாச். 3). 7. அம்பு விடும் அறை. (இடுசூட் டிஞ்சியின் (பு. வெ. 6:18, கொளு). சுடிகை - சூடிகை = 1. மணிமுடி. (பிங்.). 2. கோபுரக் கும்பம். சூடனீத்தன சூடிகை சூளிகை (கம்பரா. பள்ளி. 24). சூடிகை - வ. சூடிகா (c, k). சூள் - சாள் - சாளை = வட்டமான குடிசை (கோவை வழக்கு). சாளை - சாளையம் = வளைவு. சாளையக்கை = பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ஆகிய மூன்றை யும் நீட்டி, மோதிரவிரல் சுண்டு விரல்களின் நுனி உள்ளங்கை யிற் படும்படி வளைத்து, விரல்கட்குள் இடைவெளி தோன்றச் செய்து மணிக்கட்டை வளைத்துக் காட்டும் நளி நயக்கை. (பரத. பாவ. 24). சாளை - சாணை = 1. வட்டமான கதிர்ச் சூட்டு (நெ. வ.). 2. சருக்கரை முதலியவற்றால் வட்டமாய்ச் சுட்ட பணியார வகை. (வி.அ.). 3. வட்டமாய்த் தட்டிய புளிமொத்தை. 4. வட்டமான சாணைக்கல். வாடீட்டிய கிடந்த சாணை (நைடத. அன்னத்தைத். 14). சாணை - வ. சாண, சான. சாணைக்கல் - ம. சாணக்கல்லு, க. சாணெக்கல்லு. சாள் - சாடு. சாடுதல் = 1. சாய்தல். பட்டம் வாலுக்குச் சாடுகிறது (உ.வ.) 2. சாய்ந்து ஒன்றன் மேல் விழுதல். 3. மோதுதல். 4. தாக்குதல். 5. சண்டித்தல். சாடு - சாட்டம் = சாய்வு. அங்கணம் வாட்டஞ் சாட்டமாய் (வாட்ட சாட்டமாய்) இருக்க வேண்டும் (உ.வ.). சாடு - சாடி = ஒருவனைத் தாக்கிச் சொல்லும் கோட்சொல் (பிங்.). சாடு - சாடை = 1. சாயல். அண்ணனுந் தம்பியும் ஒரே சாடை, (உ.வ.) 2. சிறிது ஒப்பு. பார்வையும் பேச்சம். இராமசாமிக் கவுண்டர் சாடையாயிருக்கிறது 3. குறிப்பு சாடை பேசிய வகையாலே (உ.வ.) (திருப்பு. 572) சாடையாய்த் திட்டி னான் (உ.வ.). 4. சைகை. வரும்படி கைச் சாடை காட்டினான் (உ.வ.). 5. தெரியாதது போலிருத்தல். அவன் குற்றத்தை யறிந்தும் சாடையாக விட்டுவிட்டார் (உ.வ.). சாடை சாடையாய்ப் பேசுதல், சாடைமாடையா யிருத்தல் (விட்டு விடுதல்) என்பன மரபுத் தொடர்மொழிகள். சாள் - சாய். சாய்தல் = 1. வளைதல். சாய்செவிக் குருளை (சிறுபாண். 130). 2. கவிழ்தல் நாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின் (பொருத. 31). 3. கதிரவன் வானிற் சாய்ந்திறங்குதல். 4. சார்தல். தூணின்மேற் சாய்ந்தான் (உ.வ.). 5. படுத்தல். திருக்கையிலே சாயு மித்தனை (ஈடு, 2:7:5). 6. நடுநிலை திறம்புதல், ஒரு பக்கம் சேர்தல். 7. தோற்றோடுதல். வந்தவர் சாய்ந்த வாறும் (பாரத. நிரைமீட்சி. 137). 8. நடந்தேறுதல். அந்தக் கருமம் (காரியம்) சாய்ந்தது (உ.வ.). 9. திரண்டு செல்லுதல், அல்லது வருதல். திருவிழாவிற்கு மக்கள் திரள் சாய்கிறது (உ.வ.). 10. தளர்தல். கள்ளொற்றிக் கண் சாய்பவர் (குறள். 927). 11. வருந்துதல். சாய்குவ ளல்லளோ (கலித். 79 : 10). 12. மெலிதல். சாயினள் வருந்தியா ளிடும்பை (கலித். 121). 13. வற்றுதல். கான்யாற்றுக் கடும்புனல் சாஅய் (அகம். 25). 14. விழுதல். 15. இறத்தல். 16. அழிதல். மறஞ்சாய (பு. வெ. 2:1, கொளு). ம. சாய், வ. சய் (c), சீ, க்ஷய். சாய்கடை - சாக்கடை = வாட்டமாகவுள்ள அங்கணம் (சலதாரை). உ. சாக்கித். ஒ. நோ : சூல் - சால் - சாலகம் = அங்கணம். சாலுதல் = சாய்தல். சாய் = 1. சாயல், அழகு. சங்கஞ் சரிந்தன சாயிழந்தேன் (திவ். திருவாய். 8:2:1). 2. சாயம், நிறம். சாயாற் கரியானை (திவ். இயற். பெரிய திருவந். 14). 3. சாயை, நிழல். 4. ஒளி. சாய்கொண்ட விம்மையும் (திவ். திருவாய். 3:9:9). 5. புகழ் இந்திரன் தன் சாயாப் பெருஞ்சாய் கெட (கம்பரா. நாகபா. 21). சாய்கால் அல்லது சாய்காலம் = சொற் செல்லும் (செல்வாக்குள்ள) காலம். சாயுங்காலம் (சாயுந்தரம்) = கதிரவன் சாயும் எற்பாடு. பொழுது சாய்தல் என்னும் வழக்கை நோக்குக. சாயுங் காலம் - சாயங்காலம் - சாய்ங்காலம். வடமொழியாளர் சாயங்காலம் என்னும் வழுநிலைச் சொல்லை மாரிக்காலம் என்பது போன்ற காலப் பெயராக மயங்கி, சாயம் என்னும் நிலைமொழி வடிவை எற்பாட்டைக் குறிக்கும் வடசொல்லாக அமைத்துக் கொண்டனர். சாயம் - வ. ஸாயம். சாய்தல் = படுத்தல். தலை சாய்த்தல் = படுத்தல், சிறிது நேரம் உறங்குதல். தலைசாய்க்க நேரமில்லை (உ.வ.). சாயல் = படுக்கை, துயிலிடம் (பிங்.). சாய் - (சாயனம்) - வ. சயனம் = படுக்கை. சாய்கை = படுக்குமிடம், இளைப்பாறுமிடம், தங்குமிடம். ஒ. நோ.: இ. (இந்தி). ஜகா, உ. (உருது). ஜாகா. சாய் - சாயை - 1. நிழல். தன்னது சாயை தனக்குதவாது (திருமந். 170). நிழல் சாய்கிறது (உ.வ.). 2. படி வடிவம் (பிரதிபிம்பம்). 3. நிழற்கோள் (இராகு கேதுக்கள்). 4. ஒப்பு. இக் குழந்தைக்குத் தகப்பன் சாயை உள்ளது (உ.வ.) 5. புகழ். நின்சாயை யழிவுகண்டாய் (திவ். பெரியாழ். 5:3:3). 6. நிலப்பகுதி, கொந்து, ஒரு சாயையிலே மேகம் வர்ஷியா நின்றால் (ஈடு, 4:5:2). சாயை - வ. சாயா (c). சாய் - சாயல் = 1. சார்பு. அன்பர்கள் சாயலுளடைய லுற்றிருந்தேன் (தேவா. 154:7). 2 நிழல் 3. ஒப்பு. பாலனை நின் சாயல் கண்டு ..... மெல்லியலா ளெடுத்தாள் (தனிப்பாடல்). 4. மேனி. தளர்ந்த சாயற் றகைமென் கூந்தல் (சிலப். 8 : 100). 5. நிறம். (பிங்.). 6. அழகு. கண்ணாருஞ் சாயல் (பரிபா. 11:54). 7. மென்மை. நீரிலுஞ் சாயலுடையன் (கலித். 42). சாயல் மாயலாய் = சாடைமாடையாய் (இ.வ.). சாய் - சாயம் = 1. நிறம். 2. நூலிற்கும் ஆடைக்கும் ஊட்டும் வண்ணம். 3. உண்மைத் தன்மை. சாயம் துலங்கி விட்டது (உ.வ.). 4. பொய்த்தன்மை. சாயம் வெளுத்து விட்டது (உ.வ.). சாய்தல் = விழுதல், இறத்தல். ஒ.நோ : படுதல் = விழுதல், இறத்தல். தலை சாய்தல் = இறத்தல் (உ.வ.). சாய் - சா. சாதல் = இறத்தல். சா - சாவு, சாக்காடு. சா - செ - செத்தல் = 1. சாகை. 2. தேங்காய் நெற்று. 3. உலர்ந்து சுருங்கிய காய்கனி தண்டுகள். 4. ஒல்லி. 5. மெலிவு. செத்தற் பிள்ளை (யாழ். அக.). செத்தல் - செத்தலி = எலும்புந் தோலுமான பெண். (யாழ்ப்.). சாள் - சார். சார்தல் = 1. சாய்தல். 2. சென்றடைதல். சாரா வேதங்கள் (திவ். திருவாய். 10:5:8). 3. புகலடைதல். 4. அடுத்தல். கடல் சார்ந்து மின்னீர் பிறக்கும் (நாலடி. 245). 5. பொருந்தி யிருத்தல். நலமாட்சி நல்லாரைச் சார்ந்து (நாலடி. 175). 6. கலத்தல். நல்லெழில் மார்பனைச் சார்ந்து (கலித். 142). 7. உறவு கொள்ளுதல். 8. ஒத்தல். ம. சாரு, க. சார். சார் - சார்பு = 1. சாய்ப்பு. 2. குட்டுகை. 3. கூட்டு, கூட்டுறவு. 4. பற்று. சார்புகெட வொழுகின் (குறள். 359). 5. ஒருதலைப் பற்று. அவனுக்குச் சார்பாகப் பேசுகிறான் (உ.வ.). 6. புகலிடம். ஓர் சார்பிலாமையால் (திருவிளை. வளையல். 28). 7. துணை. மதலையாஞ் சார் பிலார்க்கு (குறள். 449). 8. ஆட்பக்கம் அல்லது கட்சிப் பக்கம். நடுவர் எதிர் வழக்காடி பக்கம் தீர்ப்புக் கூறினார் (உ.வ.). 9. இடம். படைஞர் சார்புதொ றோகி (கந்தபு. முதனாட். 30). 10. சேர்ப்பு. 11. ஒருபுடை யொப்பு. சார் - சார்ப்பு = 1. சாய்ப்புக் கூரை. 2. மலைச்சரிவு. சார் - சார்ச்சி = 1. சாய்வு. 2. அடுக்கை. சகுனி கௌசிகன் சார்ச்சியை (பெருங். மகத. 26:47). 3. சேர்கை. 4. தொடர்பு. கருமச் சார்ச்சி யல்லாத (தொல். சொல். 84, உரை). 5. சார்விடம் (பிங்.). 6. சார்த்திக் கூறல். எ-டு: சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு). சார் - சார்ந்து. சார்த்துதல் = 1. சாரச் செய்தல். 2. சேர்த்தல், இணைத்தல். ம. சார்த்து. சார்த்து - சாட்டு. ஒ.நோ. துவர்த்து - துவட்டு. சாட்டுதல் = 1. பொறுப்பை அல்லது கடமையைப் பிறனிடஞ் சார்த்துதல். 2. ஒருவர்மீது குற்றஞ் சுமத்துதல். 3. தலைக்கீடாக (வியாஜமாக) க் கொள்ளுதல். கோவிலைச் சாட்டி வயிறு வளர்க்கிறான் (உ.வ.). பிள்ளையைச் சாட்டி வேலையைக் குழப்புகிறாள். (உ.வ.). சார் - சாரி = 1. வட்டமா யோடுகை. திரிந்தார் நெடுஞ் சாரி (கம்பரா. வாலிவ. 37). 2. உலாவுகை. 3. செல்லுகை, நடை. 4. சேர்க்கை, கூட்டம். எறும்பு சாரி சாரியாய்ப் போகிறது (உ.வ.). 5. பக்கம். அவன் வீடு வடசாரியில் இருக்கிறது. சாரி கொள்ளுதல் = இடம் வலமாகச் சுற்றி நடஞ் செய்தல். பதசாரி சாரிகொள்ள (விறலிவிடு. 419). சார் = 1. சாய்ந்த தாழ்வாரம். 2. கூடுகை (சூடா.) 3. வகுப்பு, கூட்டம். ஒரு சாரார், ஒரு சாராசிரியர் (உ.வ.). 4. அழகு (பிங்.). 5. பக்கம். பழுமரத்தின் புறத்தொரு சார் (திருவிளை. பழியஞ்சு. 12). 6. இடம். (பிங்.). 7. இடப் பொருள் வேற்றுமை யுருபு. காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை (கலித். 117:11). சார் - சாரல் = 1. மலைச்சரிவு, மலைப்பக்கம். வழையமை நறுஞ்சாரல் (கலித். 53). 2. மலை (பிங்.). 3. பக்கம். மாளிகையின் சாரல் (கம்பரா. சுந்தர. ஊர் தேடு. 100). 4. சாய்ந்து 4. சாய்ந்து பெய்யும் தூறல் சாரல் மழை பெய்கிறது. சம்பாக் கோழி கூவுகிறது. (சிறுவர் பாட்டு). 5. சாய்ந்து இறைக்குந் தூவானம். 6. சேர்க்கை, கிட்டுகை. தாஞ்சாரற் கரிய தனுவளைத்தான் (பாரத. திரௌபதி, 57). 7. மருத யாழ்த் திறங்களுள் ஒன்று. ம. சாரல் (மழை). சார் - சாரம் = சுவரைச் சாரக்கட்டும் மரம். சார் - சாரி - சாரிகை = பக்கம். சாரல் நாடன் = மலைச் சரிவிலுள்ள நாட்டரசன். சாரல் நாட வாரலோ வெனவே (குறுந். 141). சாரல் - சேரல் - சேரலன் = சேரன். சேரலர் சுள்ளியம் பேரியாற்று (அகம். 149). குடமலைநாடு சேரனுக்கே சிறப்பாக வுரியதா யிருந்தமையையும், அதனால், மலையன், மலையமான், பொறையன், வானவன், வானவரம்பன் என்னும் பெயர்கள் அவனுக்கு வழங்கியமையையும், நோக்குக. சேரலன் - சேரன். சேரன் பொறையன் மலையன் றிறம்பாடி (சிலப். வஞ்சி. ஊசல்வரி, 2). சேரலன் - சேரல். குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு (சிலப். பதி. 2). சேரலன் என்ற பெயர் ஈறுகெட்டுச் சேரல் என நின்றது. ஒ. நோ : பாண் (பாட்டு) - பாணன் (பாடல் தொழிலான்) - பாண் = பாணர் குலம். சேரலன் - சேரலம் - ம. கேரளம் - வ. கேரல. சேரலன் - கேரளன் = 1. சேரன் (திவா). 2. சேரநாட்டான். வெற்றிக் கொடிக் கேரளர் (பாரத. வெளிப்பா. 21). சார் - சேர். சேர்தல் = சென்றடைதல், கூடுதல், பொருந்துதல், திரளுதல். ம. சேருக. R., து. சேரு தெ. சேரு (C). சுல் - சுர் - சுரி, சுரிதல் - 1. சுழிதல், வெள்ளைச் சுரி சங்கொ டாழியேந்தி (திவ். திருவாய். 7:3:1). 2. கடை குழலுதல். சுரியிரும் பித்தை (பொருந, 160). 3. மடிப்பு விழுதல். சுரித்தல் = 1. சுழிதல். 2. சுருளுதல். 3. வளைந்து கிடத்தல். சுரிக்கு மண்டலந் தூங்குநீர் (கம்பரா. தேரேறு. 30). 4. திரைதல். 5. மனஞ் சுழலுதல். சுரிச்சிராது நெஞ்சே யொன்று சொல்லக் கேள் (தேவா. 369:3). சுரி = 1. சுழி. சுரியேறு சங்கினாய் (திவ். இயற். 3:49). 2. எருதின் நெற்றி வெள்ளைச் சுழி. சுரிநெற்றிக் காரி (கலித். 101). 3. சுழற்சி. 4. அணியுறுப்பு வகை. உருத்திராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி (S.I.I. ii, 156:39). சுரித்த மூஞ்சி = 1. வெறுப்பை அல்லது சினத்தைக் காட்டும் முகம். 2. மூப்பினால் திரைந்த முகம். சுரிகுழல் = (சுருண்ட கூந்தலையுடைய) பெண். (பிங்). சுரிமுகம் = 1. (சுழிந்த முகமுள்ள) சங்கு. (திவா). முரசுடன் சுரிமுகந் தழங்க (பாரத. அருச்சுனன்றீ. 77). 2. நத்தை. (திவா). சுரியல் = 1. வளைவு. சுரியற்றாடி (மணி. 3:116). 2. குழன்ற மயிர். தென்றல் ..... சுரியற் றூற்றும் (அகம். 21). 3. நீர்ச்சுழி. (திவா). சுரிந்து = நீர்ச்சுழி. நீர் .... சுரிந்தோடு மதனைச் சுரிந்தென்றும் சுழியென்றும் வழங்குவதுபோல் (யாப். வி. பக். 282). சுரிதகம் = ஒருவகைத் தலையணி. சுரிதக வுருவினதாகி (நற். 86). சுரி - சரி. சரிதல் = 1. சாய்தல். 2. சரிவாயிருத்தல். 3. கூட்டமாகச் சென்று குவிதல். 4. நழுவுதல். சரிந்த துகில் (திருவிசை. கரு. 5:10). 5. கீழே விழுதல். சரிந்த பூவுள (கம்பரா. அயோத். மந்திரப். 56). 6. பின்னிடுதல். நேர்சரிந்தான் கொடிக்கோழி கொண்டான் (திவ். திருவாய். 7:4:8). 7. குலைதல். சாடிய வேள்வி சரிந்திட (திருவாச. 14:5). 8. சாதல். சரி = 1. மலைச்சாரல். சிங்கம் வேட்டந் திரி சரிவாய் (திருக்கோ. 156). 2. மலைவழி, பெருமலைகளிடைச் சரியிற் பெரும்பன்றி புனமேய்ந்து (பெரியபு. கண்ணப்ப. 142). 3. கூட்டம். (பிங்.) 4. வளையல் வகை. சரியின் முன்கை நன்மாதர் (தேவா. 118:3). தெ. த்சரி. சுர் - சுருள். சுருளுதல் = 1. வட்டமாக வளைதல். நீண்டு குழன்று ... கடை சுருண்டு (கம்பரா. உருக் காட்டு. 57). 2. சுருங்குதல். 3. nrh®jš k., க. சுருள். சுருள் = 1. சுருண்ட பொருள். தாமரை மென் சுருள் (சூளா. நாட்டுப். 18). 2. வெற்றிலைச் சுருள். சுருளைச் சேடியர் செப்பொடு மேந்த (சீவக. 197, உரை). 3. ஓலைச் சுருள் மடிப்பு. சுருள்பெறு மடியை நீக்கி (பெரியபு. தடுத்தாட். 58), 4. மகளிர் ஐம்பான் முடிகளுள் ஒன்று. (பு. வெ. 9:35, உரை.) 5. மகளிர் காதணி வகை. செம்பொன் செய்சுருளுந் தெய்வக் குழைகளும் (கம்பரா. பூக்கொய். 5). 6. திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத் துடன் கொடுக்கும் பரிசு. சுருள் - சுருளி = 1. ஒருவகை மரம். 2. ஒருவகைச் செடி. 3. ஒரு மலை. ம. சுருள், க. சுருளி, து. சுருள். சுருள் - சுருளை = 1. சுருள். 2. சுருண்ட குருத்து. வாழையுள் ளெழுசுருளை வாங்கி (சூளா. சுயம். 87). 3. காதணிவகை. செம்பொன் செய் சுருளை மின்ன (சூளா. சுயம். 79). க. சுருளெ. சுருளை - சுருணை = 1. இலைச்சுருள். 2. சுணக்கெழுதிய ஓலைச் சுருள். (திவ். பெரியாழ் 5:2:2 வ்யா). 3. வீணைக் கம்பிச் சுருள்.4. சாணித் துணிச்சுருள். 5. தீப்பந்தத் துணிச் சுருள். நெருப்பானது சுருணையை வேவப் பண்ணி (ஈடு. 5:4:6). 6. பூண். கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் (அகம். 113). 7. கட்டட வளைவு வகை. (W). ம. சுருண. க. சுருளெ. சுருள் - சுருட்டு = 1. சுருட்டுகை. 2. சுருட்டிய பொருள். 3. புகையிலைச் சுருட்டு. 4. சுருட்டுப் பட்டு (உயர்ந்த பட்டு வகை). 5. விரகு (தந்திரம்) - யாழ்ப். ம. சுருட்டு, தெ. த்சுட்ட, க. சுட்டி. சுருட்டு - சுருட்டி = 1. பெரியோர் முன் சுருட்டி வீசப்படும் பாவாடை. 2. எடுபிடிவகை. சந்த்ரோதயம் போற் றயங்குஞ் சுருட்டிவர (கூளப்ப. 69). 3. ஒரு பண். 4. ஒரு பூண்டு (மலை). bj., க. சுரட்டி. சுருட்டு - சுருட்டை = 1. சுருள்மயிர். 2. விரியன் பாம்பு வகை. 3. மிளகாய்ச் செடியிற் காணும் நோய்வகை. ம. சுருட்ட. சுர் - (சுரு) - சரு - சருவு. சருவுதல் = சாய்தல், சரிதல். சருவு - சருவல் = 1. சாய்வு. 2. சரிவான நிலம். சருவுசட்டி = மேல் நோக்கிச் சரிவான சட்டி. சருவு - சருவம் = மேல் நோக்கிச் சரிவாகவுள்ள கலம். சருவம் - வ. சராவ. சருவப் பானை, சருவச்சட்டி என்னுங் கலங்கள் மேனோக்கிச் சரிவாயிருத் தலைக் காண்க. வாயகன்ற பாத்திர வகை என்று சென்னைப் ப.க.க. தமிழ் அகர முதலி (Lexicon) இயல்வரை யறுத்ததோ டமையாது, சராவ என்னும் வட சொல்லின் திரிவாகவுங் காட்டியிருப்பது, நெஞ்சழுத்தமான குறும்புத் தனத்தையே காட்டு வதாகும். சருவுட சரிவு. Declivlty, steep side of a rock; சரிவு (W). சருவு - சருகு. சருகுதல் = சரிதல். சருகு - சருக்கு. சருக்குதல் = சாய்தல், சரிதல், வளைதல், வழுவுதல், வழுக்குதல், சறுக்குதல். ம. சர்க்கு. bj., க. ஜருகு. சருக்கு - சறுக்கு. சறுக்குதல் = 1. வழுக்குதல். ஆனைக்கும் அடி சறுக்கும் (பழமொழி). 2. வழுவுதல். 3. கருமம் தவறுதல். க. ஜரகு, தெ. த்ஜாரு. சருக்கு - சருக்கம் = வட்டம் (L. Circum), நூற்பிரிவு. ஒ. நோ : மண்டலம் = வட்டம், நூற்பிரிவு. சருக்கம் - வ. ஸர்க (g). வடமொழியாளர் இச்சொல்லை ருஜ் என்னும் சொல்லொடு பொருத்திக் காட்டுவர். அதற்கு விடு, எறி வீசு, வெளிவிடு என்ற பொருள்களே உண்டு. சருக்கு - சருக்கரம் - சக்கரம். சக்கரம் = 1. வட்டம். (பிங்). 2. உருளி. (சூடா). 3. குயவன் சக்கரம் சக்கரந்தான் சுழற் றத்தகுங் குயத்தி (சிவப் பிரபந். பிக்ஷாடன. 6. 4. சக்கரப் படைக்கலம். சக்கரக்கை மன்னுயிர் முதல்வன் (மணி. 13; 57). 5 ஆட்சிச் சக்கரம். வழுக்கில் சக்கரம் வலவயி னுய்க்கும் (பெருங். வத்தவ. 5:106). 6. சக்கரக் கட்டு (சக்கர பந்தம். தண்டி. 94). 7. சக்கர மாற்று. சக்கரஞ் சீர்த்தமிழ் விரகன் (தேவா. 146:12). 8. சக்கர அணி வகுப்பு. (சீவக. 757, உரை). 9. பழைய வெள்ளிக் காசுவகை. சால்பு திருவை யாற்றுச் சக்கர மென்றும் (பணவிடு. 14). 10. சக்கரவடிவம் பொறித்த காசு. 11. ஒரு நெசவுக் கருவி. 12. கொலைத் தண்டனைச் சக்கரம். 13. சகோரப்புள் (சூடா.). 14. திரிகை. 15. செக்கு. தயிலவினைத் தொழின் மரபிற் சக்கரப் பாடித் தெருவு (பெரியபு. கலியனா. 5). 16. சக்கரவாளம். 17. ஞாலம். (பிங்.). 18. கடல். (சூடா.). 19. பிறவித் தொடர்ச்சி; (சூடா.). 20. அறுபதாண்டுக் காலம். செக்கு வட்டமா யிருத்தலாலும் வட்டமாய் எள்ளாடுதலாலும் சக்கரம் எனப்பட்டது. செக்காரக் குடியைச் சக்கரப் பாடித் தெருவு என்று பெரியபுராணம் கூறுதல் காண்க. சக்கரம் (ஆழி) - Gk kuklos, Ecycle. வ. சக்ர (c). சருக்கரம் - சருக்கரை - சர்க்கரை - சக்கரை = வட்டமாக வார்க்கப்பட்ட வெல்லக் கட்டி. ஒ. நோ : வட்டு = வட்டமான கருப்புக்கட்டி. சருக்கரம் - சருக்காரம் - சக்காரம் (மூ. அ.) = சருக்கரை போல் இனிக்கும் தேமா. இன்றும் சர்க்கரைக்குட்டி என்று ஒரு மாங்கனிப் பெயர் வழங்குதல் காண்க. சக்காரம் - அக்காரம் = சருக்கரை. அக்கார மன்னார் (நாலடி. 374). அக்காரடலை (அக்காரவடலை), அக்காரவடிசில் என்பன சருக்கரைப் பொங்கல் வகைகள். பதநீரை (தெளிவை) அக்காரநீர் என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. அக்காரம் என்று மாங்கனிக்கும் பெயர். அக்காரக்கனி நச்சும னார் என்னும் புலவர் பெயர் அக்கனியைப் பாடியதனால் வந்தது போலும்! சக்கரம் - (சக்கு) - செக்கு = எண்ணெயாட்டும் வட்டமான பேருரல். செக்கு - செக்கான் = எண்ணெய் வாணியன். ச - செ. ஒ. நோ : சத்தான் - செத்தான். சற்றே பொறு - செத்த (கொச்சை) பொறு. சருமன் (வ.) - செம்மான். சக்கு - சக்கடம் - சக்கடா = கட்டை வண்டி. தெ. செக்கடாபண்டி சக்கரத்தின் பெயர் அதை யுறுப்பாகக் கொண்ட ஊர்திக்கு ஆகிவந்தது சினையாகு பெயர். ஒ.நோ : வண்டி = சக்கரம், சக்கரத்தையுடைய ஊர்தி. இன்றும், கமலை வண்டி, வண்டி யுருட்டுதல் என்னும் வழக்குக்களை நோக்குக. சக்கடம் - சகடம் = 1. சக்கரம், 2. வண்டி. பல்கதிர் முத்தார் சகடம் (சீவக. 363). 3. தேர். சகட சக்கரத் தாமரை நாயகன் (கந்தபு. காப்பு. 1) 4. தேர் வடிவ அணிவகுப்பு. சகடமாம் வெய்ய யூகமும் (பாரத. எட்டாம். 3). 5. ஒரு நாண்மீன் (பிங்). 6. முரசு (பிங்). 7. வட்டில் (பிங்). சகடம் - சகடு - சகடி = வண்டி. சகடி - சகடிகை = கை வண்டி. சகடம் - வ. சகட்ட. சகடி - வ. சகட்டீ. பிரா. சாட்டீ. சகடிகை - வ. சகட்டிகா. சகடு - 1. வண்டி பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபு. திருநா. 6.) 2. தேரைக் குறிக்கும் சூதரங்குக்காய். 3. ஒரு நாண்மீன். வானூர் மதியஞ் சகடணைய (சிலப். 1:50). ம. சகடு. சகடு என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. சகடு - சாகாடு = வண்டி. பீலிபெய் சாகாடும் (குறள். 476). சகடு - சாடு = வண்டி. குறுஞ்சாட் டுருளை (பெரும் பாண். 188). ம. சாடு. சாடு - சாடுகம் - வண்டி. சகடு - சகடை = 1. வண்டி. (புறம். 60:8, உரை). 2. பெருமுரசு. சகடை யோ டார்த்த வன்றே (கம்பரா. பிரமாத்திர. 5). 3. அமங்கலச் சிறுபறை. சகடை - சகண்டை = பெருமுரசு. (பிங்). சகடம் - சகோடம் = 16 நரம்பு கொண்ட யாழ். (சிலப். 3:26, உரை). சகோடம் - சகோரம் = சக்கரப்புள். (திவா.) சகோரம் - வ. சக்ர. சக்கு - சங்கு = 1. உள் வளைந்துள்ள நந்துக்கூடு. சங்குதங்கு தடங்கடல் (திவ். பெரியதி. 1:8:1). 2. சங்கு வடிவான ஐம்படைத் தாலி யுரு (சூடா). 3. சங்கு வடிவான வரை. (திவா). 4. சங்கினாற் செய்த கைவளை. சங்கமரு முன்கை மடமாதை (தேவா. 89:1). 5. சங்கு போன்ற ஊட்டி என்னும் மிடற்றுறுப்பு. 6. மிடற்றில் இயல் பாக எழும் குரல் என்னும் இசை (திவா). 7. சங்கு வளைவுகளால் அல்லது முட்களால் ஏற்பட்ட பேரெண். சங்குதரு நீணிதியம் (சீவக. 493). 8. பேரெண் கொண்ட போர்ப் படை. (சூடா). 9. பெருவிரல் நிமிர மற்ற நால் விரல்களும் வளைந்து நிற்கும் இணையா விணைக்கை வகை. (சிலப். 3:18, உரை). சங்கு வடிவான தலையுடைய கோழி. (அக. நி.). ம. சங்கு. சங்கு உள்வளைந்திருப்பதால், கோடு, சுரிமுகம், புரி, வளை, வாரணம் என்னும் அதன் பெயர்களெல்லாம் வளைவுக் கருத்தையே வேர்ப்பொருளாகக் கொண்டிருப்பது கவனிக்கத் தக்கது வலம்புரி = வலமாக வளைந்தது. இடம்புரி = இடமாக வளைந்தது. சங்கு - சங்கம் = 1. பெரிய சங்கு. அடுதிரைச் சங்க மார்ப்ப (சீவக. 701). 2. சங்குக் கைவளை. சங்கங் கழல (இறை. 39, உரை).3. ஊட்டி (குரல்வளை). 4. இலக்கங் கோடி என்னும் எண். நெய்த லுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும் (பரிபா. 2:13). 5. 2187 தேரும் 2187 யானையும் 6561 குதிரையும் 10935 காலாட்களுங் கொண்ட போர்ப்படை (பிங்). 6. பேரெண் கொண்ட பொக்கசம். சங்கம் - வ. சங்க (kh). சக்கரம் முதல் சங்கு வரை குறிக்கப்பட்ட சொற்களெல்லாம் வளைவுக் கருத்தடிப்படையில் ஒரே தொடர்புடையனவா யிருத்தல் காண்க. சக்ர என்னும் வடசொல் வடிவிற்கு வடமொழியாளராற் குறிக்கப் பட்டுள்ள மூலம் க்ரு (செய்) என்பதே. மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலி சர் (car) என்னும் சொல்லை வினாக்குறிப்புடன் குறித்துள்ளது. இவ்விரண்டுள், முன்னதன் பொருந்தாமையையும் பின்னதன் வன்புணர்ப்புத் தன்மையையும், அறிஞர் கண்டு கொள்க. மா. வி. அ. “Of doubtful derivation” என்று குறித்திருத்தலையும் நோக்குக. அம் பெருமைப் பொருட் பின்னொட்டாதலால், இலக்கண நெறிப்படி, சங்கம் என்பது பெருஞ் சங்கையே குறிக்கும். சங்கு என்னும் இயல்பான வடிவு வடமொழியிலின்மை, அது வடசொல்லன்மையை யுணர்த்தும். சுர் - சூர். சூர்த்தல் = சுழலுதல். சூர்த்த நோக்கு. சூர் = சூர்ப்பு = 1. சுழற்சி. 2. கைக்கடகம். சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை (புறம். 153:3). சூர்ப்பு - சூர்ப்பம் = வளைந்த முறம். (பிங்). வ. சூர்ப்ப. சூர் - சூரல் = சுழித்தடிக்கை. சூரலங் கடுவளி யெடுப்ப (அகம். 1). சுர் - சுறு - சுற்று. சுற்றுதல் = 1. வளையக் கட்டுதல். சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்பலவர் (திருக்கோ 134). 2. உடுத்துதல் கூறையைச் சுற்றி வாழினும் (நாலடி. 281). 3. வளையச் சூடுதல். குடர்நெடு மாலை சுற்றி (திருவாச. 6:30). 4. சுருட்டுதல். பாயைச் சுற்று. (உ.வ.) 5. சுழற்றுதல். சிலம்பஞ் சுற்றுகிறான். (உ.வ.). 6. சூழ்ந்திருத்தல். தோகை மாதர்கள் மைந்தரிற் றோன்றினர் சுற்ற (கம்பரா. பிணிவீட். 45). 7. வளைந்து பற்றுதல். காலிற் சுற்றிய நாகமென்ன (கம்பரா. நீர்விளை. 11). 8. சுற்றியியங்குதல். கடிகாரத் தில் நிமைய முள் ஒரு மணிக்கு ஒரு முறை சுற்றிவரும். (உ.வ.). 9. சுற்று வழியிற் செல்லுதல். 10. அங்குமிங்கும் அலைதல். 11. சுழன்று செல்லுதல். ஞாலம் ஒரு நாளைக்கு ஒரு முறை சுற்றும். (உ.வ.). 12. கிறு கிறுத்தல். பித்தத்தினால் தலை சுற்றுகிறது (உ.வ.). ம. R‰W, f., து. சுத்து, தெ. த்சுட்டு. சுற்று - சுற்றம் = 1. சூழவிருக்கும் உறவினர். 2.தலைவியின் தோழி மார் கூட்டம். தொடிமாண் சுற்றமு மெம்மு முள்ளான் (அகம். 17). 3. அரசனின் உறுதிச் சுற்றம் அல்லது பரிவாரம். ம. சுற்றம். தெ. த்சுட்டமு. திருச்சுற்று = கோவிலின் சுற்றுத்தெரு. சுறு - சூறு. சூறுதல் = சூழ்தல். சூறிய விமையோர் (பாரத. கண்ட வ.31) சூறு - சூறை = 1. சூழல் காற்று சூறை மாருதத்து (திருவாச. 3:10). 2. சுழல்காற்றுப்போல் வாரிக் கொண்டு போம் கொள்ளை. சூறை (கொள்ளை) - க. சூறெ, து. சூரெ, தெ. சூர (C). சூறாவளி = சூறைக்காற்று.