kiwkiya«-- 29 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமூக இயல் - 1 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்  வேளாளர் நாகரிகம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+304 = 328 விலை : 410/- மறைமலையம் - 29 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 328 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். பண்டைக்கால தமிழரும் ஆரியரும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1966ல் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகிறது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... தமிழ்ச் சொற்கள் மிகுதியாக வடமொழியில் கலந்துள்ள உண்மையினையும், பாணினிக்கு நானூறு ஆண்டுகள் முந்தியவர் தொல்காப்பியர் என்ற செய்தி யினையும், வடமொழியிலும் தொல்காப்பிய இலக்கணமே சிறப்பு வாய்ந்தது என்ற கருத்தினையும் அடிகளார் விளக்கியுள்ளார். வாழ்வியல் வரலாற் றாராய்ச்சிக்கும் மொழிவரலாற்றாராய்ச்சிக்கும் சொல்லாய்வு இன்றியமையாத கருவியாயிருத்தலை வற்புறுத்தும் அடிகளார், தத்துவ உரிமையைக் காத்து மெய்ப்பொருள் காணுதலையே கடைப்பிடிக்க வேண்டுகிறார். மெய்ப்பொருள் காணவும் காக்கவும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய பழந்தமிழ் நூல்கள் நமக்குப் பெருந்துணைகளாகின்றன என்பது அவர்தம் கருத்தாகும். இந்நூல் வழி, அடிகளார் தமிழிகழ்வு, தமிழ் நாகரிக இகழ்வு முதலியவற்றைத் தக்க சான்று களுடன் மறுத்தொழிக்க முற்பட்டார். - டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 8) PREFACE TO THE FIRST EDITION The matter which forms the subject in the subsequent pages is a lecture delivered by me in May 1905, at the annual meeting of the Madura Tamil Sangam. Many points which were slightly touched and many a quotation which was omitted during the course of its delivery owing to want of time, are here enlarged and inserted for the benefit of the readers. The subject is quite a new one to the main portion of the Tamil-speaking population. Even to the historians of the west it is a new theme. It is only of late that Pandit D. Saviriroyan and Prof. Rhys Davids have given a new turn to the historic studies of the Indian races and their literature. Pandit Saviriroyan’s ‘Admixture of Aryan with Tamilian:’ and Prof. Davids’ ‘Buddhist India’ have set up new lines of researches to be carried on in the study of Indian history and stimulated the interest of all impartial students whether Brahmin or Non-Brahmin to seek for their guide the old Tamil literature and the ancient Buddhist works in Pali. The indigenous races of India belonged to Tamil and even in the dim pre-historic times they were far advanced in mental culture. When the Aryans had come into contact the with Tamils, the civilization of the latter was the primary element at work in effecting a thorough change in the social, moral and intellectual constitution of the former. The result produced by the commingling of the two races is, I believe, clearly shown in this lecture. Still the subject is such that it requires an elaborate treatment of the facts briefly mentioned here and I hope to do it in my separate English work ‘Tamilic India.’ I need hardly say that I am deeply indebted to Pandit Saviriroyan and Prof. Rhys Davids my forerunners in the new lines of studies in the history of ancient India. Madras, R.S. VEDACHALAM 25th July, 1906. இரண்டாம் பதிப்பின் முகவுரை பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் என்னும் இந் நூல் முதன்முதல் எமது ஞானசாகர மூன்றாம் பதுமத்தில் வெளிவந்தது. அதன்பின் 1906-ஆம் ஆண்டு ஏழாந் திங்களில் அது தனிப் புத்தகமாக வெளிப்படுத்தப்பட்டது. அத் தனிப் புத்தகப் பதிப்புப் படிகள் பெரும்பாலுஞ் செலவழிந்தனவேனும், அப்பதிப்பின் பழஏடுகள் சில பலமிஞ்சியிருந்தமையின், அவற்றை நிறைவுசெய்தற் பொருட்டே இப்போது இதில் முந்நூற்று முப்பது படிகள் திரும்பப் பதிப்பிடப்பட்டன. சென்ற பல ஆண்டுகளாக யாம் இடைவிடாது செய்து வரும் ஆராய்ச்சிகளால், இந்நூலின்கட் புதியனவாய்ச் சேர்க்கவேண்டிய பொருள்களும், இதன்கண் முன்னுள்ள சொற்பொருள்களிற் செய்யவேண்டிய மாறுதல்களும் நிரம்பப் பல உளவேனும், இப்போது எம்மால் எழுதப்பட்டு வரும் நூல்கள் முடியும்வரையில், இவற்றைச் செய்து முடித்தற்கு வேறு ஒழிவுகாலம் இல்லாமைபற்றி, இந்நூலின் இவ் விரண்டாம் பதிப்பு முற்றும் முன்னுள்ள படியாகவே பதிப்பிக்கப்படலாயிற்று. இந்நூலின்கண் தமிழர் ஆரியரைப் பற்றி யாம் பதினெட்டு ஆண்டுகட்கு முன்னரே வரைந்துள்ள கருத்துக்கள் மேன்மேல் ஆராய்ச்சிகளால் மேன்மேல் உரம்பெற்று வருகின்றனவே யல்லாமல், அவை சிறிதும் மாறுபடவில்லை. அவ்விரிவு களெல்லாம் இதன் மூன்றாம் பதிப்பின்கண் எடுத்துக்காட்ட நினைந்திருக்கின்றேம். இந்நூல் நடையின்கண் ஆங்காங்கு விரவியுள்ள சிற்சில வடசொற்களும் அம் மூன்றாம் பதிப்பின்கண் முற்றுங் களைந்து விடப்படும். பல்லாவரம் பொதுநிலைக்கழகம், மறைமலையடிகள் 12-10-1924 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்* மனவியற்கையினும் உடல் அமைப்பினும் மற்றை வழக்க ஒழுக்கங்களினுந் தம்முட்பெரிதும் வேறுபட்ட மக்கட்சாதியுள் தமிழரும் ஆரியரும் எனப்படுகின்ற இவ்விருதிறத்தினருந் தமக்குள் எவ்வாற்றானும் வேறுபடுதல் போல ஏனைப் பிறர் அங்ஙனம் முரணி நிற்றல் ஆராய்தற்குச் சிறப்புடைத்தென்று தோன்ற மாட்டாது. இவ்விருசாதியாரும் பண்டை நாளில் நிரம்பவும் மாறுபட்டு நின்றவாறு போலப், பின்றை நாளில் மிகவும் ஒருமைப்பட்டு இவர் தமிழர் இவர் ஆரியர் என்று பகுத்துணர் தற்கு அரியராய் வாழ்ந்து வருகின்றார். இங்கே தமிழர் என்று குறிப்பிடப்பட்டோர் தமிழ்மொழி வழங்குவோர் என்று கொள்ளற்க. பிற்றைஞான்று தமிழரும் ஆரியரும் வேற்றுமை தோன்றாவாறு கலந்து ஒருவர்க்குரிய மொழியினையும் வழக்க வொழுக்கங்களையும் ஏனையோர் பின்பற்றிப் போதருகின்றா ராகலின், இவர் தம்முள் வழங்கும் மொழியினை ஓர் அடையாளமாகக் கொண்டு இவர் தம்மைத் தமிழர் ஆரியர் என்று பகுத்துரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாது. பண்டைக்காலத்துத் தன்னந்தனியராய்த் தென்றிசைக்கண் வாழ்ந்து தமக்குரிய ஒழுக லாற்றினைப் போற்றித் தமிழ்வழங்கிய முதுமக்களின் இரத்தக் கலப்பிற் றிரண்டெழுந்து போதருகின்ற வழி முறையாரே பிற்றைஞான்று தமிழர் எனப்பெயர் பெறுதற்கு உரிமையுடையா ரென்பதும், அவ்வாறே முன்னை நாளில் ஆசியாக்கண்டத்தின் வடக்கே யுள்ள வடநாடுகளில் வசித்துக் கொண்டு ஆரியமொழி வழங்கிய முதுமக்களான ஆரியர்மாட்டுத் தோன்றிய வழிமுறையாரே பின்னாளில் ஆரியரென்று பெயர் பெறுந் தகுதியுடையா ரென்பதும் ஈண்டு உணரற் பாலனவாம். பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழரும் ஆரியரும் ஒருங்கு கலந்தமையாற் றோன்றி வழி முறைப்பாகுபா டுடையராய் வருகின்ற இந்தியரை இவர் தாம் தமிழர் இவர்தாம் ஆரியர் என்று வேற்றுமை இனிது புலனாம்படி பிரித்து வழங்கல் இஞ்ஞான்று ஒரு சிறிதும் ஏலாதாயினும், இக் கட்டுரையில் பண்டை நாளில் வேற்றுமை விளங்க வாழ்ந்த அவ்விரு சாதியாரைப் பற்றியே ஆராயப்புகுந்தே மாகலின் அங்ஙனம் வேறு வேறு பெயர் குறித்துக் கூறல் குற்றமாதல் இல்லை என்க. அது கிடக்க. ஐரோப்பிய அறிஞர்கள் வடமொழி தென்மொழியில் எழுதப்பட்ட நூலுரைகளின் காலம் வரையறுத்தற் பொருட்டு இடைவிடாது செய்து வரும் பெருமுயற்சிகளால், கிறித்து பிறந்தநாள் தொடங்கி இன்றுகாறும் எழுந்த நூலுரைகளின் காலம் ஒருவாறு துணியப்பட்டு வருகின்றது. சைவ சமயாசிரியரான திருஞானசம்பந்தர் காலம் உறுதிசெய்யப் பட்டமையால், அவர்க்கு முன்னும் பின்னும் மிக இருண்டு கிடந்தநூலுரைகளின் காலம் விளக்கமுற்று வருகின்றன. இவ்வாறே வடமொழியில் மிகச் சிறந்த நல்லிசைப் புலவரான காளிதாசர் முதலியோர் காலம் உறுதிசெய்யப் பட்டமையால் அவர் காலத்திற்கு முற்பிற்பட்ட நூலாசிரியர் உரையாசிரியர் காலம் வரம்பு குறித்துரைக்கப்படுகின்றன. சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு தொடர்புற்றுக் கருகி யிருண்ட கால இருளின் இடையே மறைபட்டுப் புதைந்து கிடந்த நந்தாமணி விளக்காம் அப் பெரியார் காலம், மனவெழுச்சியும் நுண்ணறிவு முடைய சிலரால் அகழ்ந்தெடுத்து உண்மைக் காரணங்களாற் றிரண்ட குன்றின்மேல் வைக்கப்படுதலின் நீண்ட அக்காலவிருள் வலிகுறைந்து வெளிறுகின்றது. இனி, இவ்விரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டு இடிந்து வெறும்பாழாய்க் கிடக்குங் கால அரண்மனை வாயிலை அணுகி உட்செல்ல நோக்குகையில், அங்கு மிகப் பரவித்தோன்றும் இருள் கரிய மைச்சேறு குழைத்த குழம்புபோல் மிகத் திணிந்து காணப்படுவதாயிற்று. அதனைக் காண்டலும் எம் உள்ளம் பெரிதும் புழுக்க முற்று ஆ! இக்காலஅரண்மனையினுள்ளே பண்டைக் காலத்து எம் முது மக்கள் தொகுத்து வைத்த களஞ்சியங்கள் எத்தகையனவோ, அவற்றை எங் கண்ணாரக் காணவும் பெறுகின்றிலமே! அவற்றின் அருமை பெருமைகளை எங்ஙனம் உணர்வேம்! என்று நினைந்து நினைந்து ஊடுருவிச் செல்லுதற்கு அரிதாம் அவ்விருளை நோக்கிய வண்ணமே மிக வருந்தி நின்றேம். அங்ஙனம் நிற்பேமுக்கு எதிரில் விரிந்த அவ்விருளின் நடுவிலே மனவலிமையும் விடாமுயற்சியும் ஆழ்ந்த வறிவு முடைய சிலர் அஞ்சா நெஞ்சினராய் இயங்கும் அரவம் செவிப்புலனாயிற்று. கதுமென அப் பக்கமாய் உறுத்து நோக்க அவர் அங்கே புற்றுமூடிய சரக்கறையினைத் திறம்படப் பிரித்து, அதனுள் ளிருந்த பொற் பேழையினை உடைத்து அதனுள்ளிருந்த முழுமாணிக்க மணிகள் சிலவற்றைப் புறத்தே எடுத்து வைத்தனர். உடனே, அக்கால வரணில் விரிந்த இருள்வலி சுருங்குவதாயிற்று. அது கண்டு கரை கடந்த உவகையுடை யேமாய் உள்நுழைந்து அவற்றினருகே சென்று விழைந்து நோக்க அவ்வரிய பெரிய முழுமாணிக்கமணிகள் தொல்காப்பியம், திருக்குறள், இருக்குவேதம், திரிபிடகம் முதலியனவாய் இனிது விளங்கின. பின் இவ்வருமருந்தன்ன நூல் விளக்கத்தினாலே அப் பண்டைக் கால வரண்மனை யினுட் சிறந்த இடங்கள் பலவுங் கண்டு வியப்பேமாயினேம். அது நிற்க. இனி இந்நூல்களின் துணைகொண்டு பண்டைக் கால வியல்பு முற்று முணர்தல் அரிதாய விடங்களினெல்லாம், தமிழ் ஆரியம் முதலான மொழிகளில் முனனும் பின்னுமுள்ள சொற்பிரயோகங்கள் தோன்றி நின்று அவ்விடர்ப்பாட்டை விலக்கி நம் ஆராய்ச்சியினை வலிபெறுத்தி வருகின்றன. நில நூல் வல்ல ஆசிரியர் இந்நிலவுலக அமைப்பினையுந் தோற்றத் தினையும் நன்காராய்ந்து இதற்கு அகவை குறிக்கின்றனர். இந்நில வுருண்டையின் நடுவு மிகவிரிந்த குடைவாக விருக்கின்றது. அக் குடைவிலே தீக்குழம்பு நிறைந்து எரிந்து கொண்டிருக்கின்றது. அக் குடைவுக்கும் இந் நிலத்தின் மேற்புறத்துக்கும் இடையிலுள்ள மட்பகுதி பல அடுக்குகளாக அமைந்திருக்கின்றது. படைப்புக் காலத்திலே ஒரு பெருந்தீப்பிண்டமாக இருந்த இந்நிலங் காலந்தோறும் இறுகி யுறைந்து செல்கின்றதாகலின் இங்ஙனம் பல மண்ணடுக்குகள் உண்டாயின. இவ்வடுக்குகள் ஒவ்வொன் றனையும் அகழ்ந்து பார்த்து அவ்வடுக்குகள் உண்டாதற்குரிய காலம் இத்துணையாம் என்று நில நூல்வல்ல ஆசிரியர் வரையறுத்திருக்கின்றனர். அவற்றுள் மேற்புறம்பிலுள்ள நான்காவ தடுக்கிலும் ஐந்தாவ தடுக்கிலும் புதைந்து கிடக்கும் கல்லாலமைத்த கருவிகள் செம்பாலமைத்த கருவிகள் இரும்பா லமைத்த கருவிகள் முதலியவற்றின் ஆராய்ச்சியால் அவ்வப்படையில் வாழ்ந்த மக்கள் நாகரிக நிலையினை உற்றுணர்ந்து நன்கு விளக்குகின்றனர். இவ்வாறே இதுகாறுஞ் சென்ற காலத்தினையும் பல வடுக்குகளாகப் பகுத்து, ஒரு காலத்து வழங்கிய சொற்கள் அக்கால முடிவில் தாமும் வழங்குதலின்றி அதன்கட்புதைந்து கிடப்ப மற்றை யொருகாலத்து அப்பொருளைக் குறிக்க மற்றை யோர்சொல் தோன்றி அதுவும் அக்கால விறுதியிலே இறந்துபட்டுக் கிடப்ப வருஞ் சொன்முறையை நன்காராய்ந்து அவ்வக்கால வியற்கை யினையும் அக் காலத்து மக்களியற்கையினையும் தெரித்துக் கூறுதல் வரலாற்று ஆராய்ச்சிக்கு இன்றியமையாத கருவியாம். ஒரு மொழியிலுள்ள ஒவ்வோர் சொல்லும் அம்மொழியின் வரலாற்றை நன்கறிவிக்குங் கருவியாமென்பது கடைப்பிடிக்க. இனி மகாபாரதப் போர் நடந்ததுதொட்டு இது காறுஞ் சென்ற காலத்தினை வரலாற்று ஆராய்ச்சிக்குள் வைத்து மூன்று கூறாக அறுத்து முதல் இடை கடையென நிறுத்தி அவற்றினியல்புகள் பெரும்பாலும் நன்கு விளங்கவகுத்துக் கூறுதல்1 வரலாற்றுக்கால ஆராய்ச்சி எனப் பெயர் பெறாநிற்கும். இனி இங்ஙனங் காலவரையறைப்படுதலின்றிப் பாரதப் போருக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பண்டைக்காலம் எனப் பெயர் பெறும். கிறித்து பிறப்பதற்கு 1400- ஆண்டுகளுக்கு முன் நடந்த பாரதப் போரில் பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பதினெட்டுநாள் வரையில் உதியஞ்சேரலாதன் என்னும் அரசன் சோறு கொடுத்தான் என்பதும், அதுபற்றியே அவனுக்குப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னும் பெயர் வழங்குவதாயிற்றென்பதும் அவ்வரசனோடு ஒரு காலத்தினரான முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பாடிய மண்டிணிந்த நிலனும் என்னும் புறநானூற்றுச் செய்யுளால் இனிது விளங்குதலின் அவ்வரசன் காலம் இற்றைக்கு மூவாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்று நிறுவப்படும். இம்மூவாயிரத்து நானூறு ஆண்டுகளுந் தொடர்ப்பட்டு வாழ்ந்துவருந் தமிழ் மக்கள் வரலாற்றினை ஒருவாறு காலங்குறித்து ஆராய்ந்துரைத்தல் சாலுமாகலின் இதனை வரலற்றுக்காலம் என்றுரைத்தாம். இங்ஙனங் காலவரை யறுத்துச் சொல்லுதற்கு ஏலாது இம் மூவாயிர ஆண்டு களுக்கும் முற்பட்ட காலத்தைப் பண்டைக்காலம்1 என்று மட்டும உரைத்தல் பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க. இவ்வாறே ஆரியர்க்குள்ளும் பாரதப் போர்க்கு முற்பட்ட காலம் வேதகாலம் எனப் பெயர் பெறுவதாயிற்று. அது கிடக்க. இனி, இம் மூவாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டுச் சென்ற பழைய காலத்திலே இருந்த இருபெருஞ் சாதியாரான தமிழர், ஆரியர் என்பாரை நன்காராய்ந்து தங்கருத்து வெளியிடுதல் வரலாற்றுநூல் வல்ல ஆசிரியரெல்லார்க்கும் இன்றியமையாப் பெருங் கடமையாம். இஃதிங்ஙனமாகவும், வரலாற்றுநூல் வல்லாரிற் பெரும்பாலார் ஆரிய மக்களைப்பற்றியே பெரிதாராய்ந்து கூறி ஏனையோரை யாராயாது வைத்து வழுப்பட்ட கருத்துக்களையே மொழிந்து போயினார். தமிழ் மக்கள் வழங்கிய தமிழ்மொழி மிகப் பழையதாதலும், அஃதொரு தனித்த முழுமுதற் சொல்லாதலுந் தேறாத அவர் பிற்றை ஞான்று தோன்றிய சில தமிழ் நூல்களில் வடசொற்கள் சில வழங்குதல் பற்றித் தமிழ் வட மொழியினின்று தோன்றிய தாமென்று கூறினார். அதுவேயு மன்றித் தமிழ்மொழியில் உள்ள அரிய பெரிய நூல்களெல்லாம் கி.பி. 11-வது அல்லது 12-வது நூற்றாண்டிலே தாம் இயற்ப்பட்டனவென்றுங் கூறினார். இவர் கூற்றுக்களெல்லாம் நியாயவாராய்ச்சியின்றிக் கூறப் பட்டனவாகலின், அவற்றின் பொய்ம்மை ஈண்டறிவித்தல் வேண்டற்பால தொன்றேயாம். ஒரு மொழி பிறிதொரு மொழியோடு இனமுடைத்தோ அன்றோ என்று அறிதல், அம்மொழிகள் முதன்முதற் றோன்றுங்காற் பிறந்த சொற்களை வைத்து ஒத்துநோக்கு முறையான் மட்டும் பெறப்படுவதாம். மக்கள் தங்கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தல் வேண்டி இட்ட ஒலிக் குறிகளே சொற்களென்று கொள்ளப்படும். ஒருவர் மற்றையொருவரொடு பழகப் புகுந்தவிடத்துப் பேசுகின்ற பிறரையுஞ் சுட்டுதற்குச் சொற்கள் வேண்டுவர்; அச்சொற்கள் நான், நாம்; நீ, நீர்; அவன், அவள், அவர், அது, அவை என்பனவாம்; இவை ஒவ்வொரு மொழியினும் முற்பிறந்தனவா மாகலின் அவற்றை ஒத்து நோக்குதலால் மொழி யொற்றுமை நன்கு தெளியப்படும். வடமொழியில் அகம், வயம் என்பன முறையே தன்மை யொருமைப் பன்மையாகும்; த்வம், யூயம் என்பன முன்னிலை யொருமப் பன்மையாகும்; அஸௌ, அமூ:, அத:, அமூநி என்பன படர்க்கை உயர்திணை யஃறிணை ஒருமைப் பன்மையாம். தமிழிலும் வடமொழியிலுமுள்ள இவ்விடப் பெயர்கள் தம்முள் ஒற்றுமை சிறிதும் எய்தாமையால் அவை வேறுவேறாதல் தெற்றெனத் துணியப்படும். இனி மக்கள் தம்மோடு இன உரிமை யுடையாரைக் குறிக்குஞ் சொற்களும் அவ்வாறே முதற் பிறந்தனவாம். தமிழர் தமக்கு உறவினராவாரை அம்மை, அப்பன், பிள்ளை, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, அக்கை, தங்கை என வழங்குவர்; ஆரியர் அவரை யெல்லாம் முறையே மாதா, பிதா, சுத அல்லது பால, பதி:, பார்யா, அக்ரஜா, ப்ராதா, வஸா எனப் பெயரிட்டு வழங்குவர். இம் முறைப்பெயர்களுந் தம்மோடு இனப்படுதலில்லாமையால் இவையும் வேறு வேறென்பது துணிக. இன்னும் இவ்வாறே உணவுப்பெயர், எண்ணுப்பெயர், காலப் பெயர், இடப்பெயர், பூதப்பெயர், விலங்கின் பெயர், உறுப்புப்பெயர், வினைப்பெயர் முதலியனவும் இவ்விரு மொழிகளினும் வேறுபடுதல்காண்க. அவையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும். Phdrhfu¤âš ‘jÄœ tlbkhÊÆÅ‹W ãwªjjhkh? என்னும் பொருளில் விரித்து விளக்கினாம், ஆண்டுக் கண்டுகொள்க. இவ்வாற்றால் இவ்விருமொழியுந் தம்முள் ஒன்றோடொன்றியைபில்லாத் தனித்தனி மொழிகளாதல் நன்கு பெறப்படும். இனித் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவு, குறும்ப, இருள, எர்க்கலா, ஏனாதி முதலான மொழிகட்கெல்லாம் இப் பத்துவகைச் சொற்களும் பொதுப்பட நிற்றல் கண்கூடாயறியக் கிடத்தலின் இவ் வொன்பது மொழிகளும் ஒன்றோடொன் றினப்பட்ட ஒரு தொகுதியா மென்ப துணரப்படும். இனி, ஆரியருந் தமிழரும் பிற்றைஞான்று மிக நெருங்கி மருவி வாழ்ந்தனராகலின் ஆரிய மொழிக்குரிய சொற்கள் தமிழினும் தமிழுக்குரிய சொற்கள் ஆரியத்தினுங் கலப்புற்றன. அவர் அங்னம் நெருங்கியிராது வேறாயிருந்த காலத்தே எழுதப்பட்ட நூல்களில் விரவிய சொல் வழக்குக் காணப்படுதல் சிறிதுமில்லை யென்க. சங்கச் செந்தமிழ் நூல்களில் ஒரோவோர் ஆரியச் சொற்கள் காணப்படுத்ல என்னையெனின்;- ஆரிய மக்கள் தமிழரோடு அக் காலத்துத்தான் விரவுதற்குப் புகுந்தனராகலின் அச் சொற்கள் ஒரோவொன்று சுத்தச் செந்தமிழ் நூல்களினுங் காணப்படுவனவாயின. காணப் படினும், நூற்றுக்கு ஒன்றல்லது இரண்டு விழுக்காடு மிக அருகிவந்ததே யன்றிப் பிற்றை ஞான்றை நூல்களிற்போலப் பெருகிய வரவினவாய் அவை வந்ததில்லை யென்க. இனி, அள், கள், கல், கு, சா, பண், பக், மின், வள், நல், மு முதலான சுத்தச் செந்தமிழ்ப் பகுதிகளிற் பிறந்த ஆணி, அடவி, கடு, கலா, குடி, குண்டம், கூனி, குளம், கோட்டை, சவம், சாயா, பட்டினம், பாகம், மீனம், வளையம், நாரங்கம், முகம் முதலான தமிழ்ச்சொற்கள் ஆரிய மொழியில் வழங்குதல் உய்த்துணரற் பாலதென்க. இவற்றின் விரிவெல்லாம் முன் ஞானசாகரத்திற் காட்டினாம். இன்னுமிதன் பெற்றி யாமெழுதிய முல்லைப் பாட்டாராய்ச்சியினும் நன்கு விளங்கம். அது நிற்க. இனித் தமிழ் வடமொழியின் வேறாயதோர் தனி மொழியாயினும் அஃது ஆரியம்போல் அத்துணைப் பழமையுடையதன்று, நிரம்பவும் புதிதாய்த் தோன்றிய தொன்றாம் என்றுரைப்பார் உரை பொருந்தாமையும் அம்மொழி யாராய்ச்சியான் ஒரு சிறிது காட்டுதும். தமிழில் ஒருபொருளை யுணர்த்துதற்குப் பல பொருள் நிற்றல் பிங்கலந்தை முதலான நிகண்டு நூல்கற்ற சிறு மகாரும் நன்குணர்வர். ஒரு பொருளை யுணர்த்துதற்கு ஒரு சொல்லே சாலுமாகவும் அங்ஙனம் பல சொற்கள் வேண்டப்படுவ தென்னையென நுணுகியாராயின் அதனுண்மை இனிது புலப்படா நிற்கும். எடுத்துக்காட்டுமிடத்துக், குணத்தினை யுணர்த்த உக சொற்களும், உயர் வினை யுணர்த்த கஎ சொற்களும், வலிவினை யுணர்த்த ஙச சொற்களும், அச்சத்தினை யுணர்த்த ககூ சொற்களும், மலையினை யுணர்த்த உஅ சொற்களும் வருகின்றன. பிறவும் இவ்வாறே. ஒரே காலத்து இச் சொற்களெல்லாம் ஒருங்கு பிறந்தனவாகா. ஒவ்வோர் சொல்லும் ஒவ்வோர் காலத்துத் தோன்றிச் சிலகாலமெல்லாம் நடைபெற்று அச்சொல் வழங்கிய மக்களோடு அதுவுமொழிய, அவர்க்குப் பின்னெழும் மக்களோடு பிற புதிய சொற்கள் தோன்றி அவையுமவ்வாறே நடைபெற்றொழிய இங்ஙனம் மொழி நாடோறுந் திரிபெய்தி வரும் இயற்கைத்தாமென்க. இவ்வாறு சொற்கள் தோன்றியும் வழங்கியும் மறைந்தும் போதரப் போதரும் மொழி நாகரிக முதிர்ச்சியுடைய மக்கட்குரியதாயின் அதன்கண் அவ்வக் காலத்திருந்த அறிவுடையோரால் எழுதப்பட்ட நூல்களில் அச்சொற்கள் கன்மேலெழுத்துப்போற் செதுக்கப்பட்டு நிலைபெறும். அம்மொழி அங்ஙனமன்றி அநாகரிகமுடைய மக்களால் வழங்கப்படுவ தொன்றாயின் அதன்கட் காலந்தோறும் பிறந்த சொற்கள் எல்லாம் ஒருங்கே மறைந்தொழிய அம்மொழியும் நாளடைவில் இறந்தொழியுமென்க. ஒரு காலத்திருந்த மக்கள் ஒரு பொருட்கண் உள்ள ஒரு குணச்சிறப்புப் பற்றி அப்பொருட்கொரு பெயரிட்டு வழங்குவர். அவ்வாறு வழங்கி வருகையில் அப்பெயர் பன்முறையும் வழங்கப்பட்டு வருதலின் அதன் காரணம் மறைந்தது; மறையவே, அச்சொல்லையுந் தமக்கு வேண்டியவாறெல்லாம் திரிவுபடுத்திக் கொண்டு வருதலின் அச்சொல் கடைசியில் வழக்கு வீழ்ந்தொழியப் பின் வருவோர் அச் சொல்லைவிட்டு அப்பொருட்கண் தாம் சிறப்பாய்க் கண்ட குணம்பற்றி வேறு பெயர் தருகுவர். எடுத்துக்காட்டுங்கால், மரக்கொம்புகளை வெட்டுகின்ற கருவிக்குக் கோடரி என்று பெயர் (கோடு - கொம்பு; அரி - அரிவது); அதனைப் பன்முறையாலும் வழங்கி வரும் மக்கள் அதன் காரணம்பற்றி மறந்தமையின் அப்பெயரைக் கோடாலி எனத் திரித்து வழங்குகின்றார். இச்சொல் தன் உண்மை வடிவத்துடன் தமிழ் நூல் களிற் காணப்படாதொழியின் அஃதிஞ்ஞான் றிறந்து போயிருக்கு மென்பதிற் றடையென்னை? முன்வழக்கு வீழ்ந்தொழிந்த சொற்களுந் தமிழ் நூல்களிற் பொறிக்கப்பட்டிருத்தலின் பின்வருவோர் அவற்றையும் ஒரோ வொருகா லெடுத்து வழங்குதலுஞ் செய்திடுகின்றார். அங்ஙனம் வழங்குவதுஞ் செய்யுள் வழக்கிற்கே பயன் படுவதன்றி, எல்லா மக்களுக்கும் உரிய உலகவழக்கில் அஃதில்லாமையால் உலகவழக்கிற்கு யாண்டும் புதுச் சொற்கள் வேண்டப்படு மென்றல் ஒருதலையாம். அற்றேல், காலங்கடோறும் பழஞ்சொற்கள் வீழ்ந்தும் புதுச்சொற்கள் தோன்றியும் வருமாயின் மொழியே முன்நிலை கெட்டுப் பின் வேறோர்நிலை எய்துமாலோ வெனின்; அற்றன்று, ஒரு மொழி முதன்முதல் தோன்றிறுங் காலத்துப் பிறந்த பத்துத் தொகுதியிற் சேர்ந்த சொற்கள் அனைத்தும் எல்லாரானும் நாடோறும் திரிவின்றி வழங்கப்படும் இன்றியமையா நெறிமையுடைய வாகலின் அச்சொற்கண் மட்டும் வழக்கு வீழ்ந்தழியா வென்பது நடைமுறையில் வைத்துக் கண்டுகொள்க. அம் முதற்பிறவிச் சொற்கள்பற்றியே ஒரு மொழி வழக்கு வீழாது நிலைபெறுமென் றுணர்ந்து கொள்க. இனி அச்சொற்கள் ஒவ்வொன்றும் பிறந்து வழங்கி மறையப் பல நூற்றாண்டுகள் செல்லுமென்றல் பழக்கவறிவுடையா ரெல்லார்க்கும் இனிது புலனாம். பண்டைத் தமிழ்மக்கள் மலைநாடுகளினுங் கடற்கரையோரங்களினும் வாழ்ந்தவரென்பது பின்னே காட்டப்படுமாதலால், அவர் வழங்கிய மொழியில் மலை, கடல் என்னுமிரண்டையுஞ் சுட்டும் பெயர்கள் மிகுதியாகக் காணப்படும். அச்சொற்கள் எல்லாவற்றையும் பழைய தமிழ் நூல்களில் ஆய்ந்து பொறுக்கி, எவ்வெச்சொல் எவ்வெக் காலத்து நூலிற் றோன்றிற்றென்று உறுதிப் படுத்தி அம்முறையால் அச்சொற்களை முன் பின் வைத்துக் கணிப்பின் தமிழ்மொழியின் காலம் இனிது நாட்டப்படும். இங்ஙனங் காலங் கணிக்கும் முறையின் அருமையை நன்குணர்ந்தன்றே மாரி என்னும் ஆங்கிலவாசிரியர் தாமெழுதிய ஆங்கிலமொழி வரலாற்றில் இதனைக் கடைப்பிடித்து அதன் காலவளவைச் செவ்வனே குறித்திட்டார். அதுபோலவே, தமிழ்நூல் வல்ல ஆசிரியரும் இம்முறை வழாது ஆராய்ந்து தமிழ் மொழியின் பழஞ்சிறப்பை நிறுவுதற்குப் பெரிதுங் கடமைப்பட்டிருக்கின்றார். இக்கட்டுரையில் எம்மால் அங்ஙனங் காலஉறுதி செய்வதற்குக் கூடாதாயினும். ஒரு பொருளைச் சுட்டுதற்குப் பல சொற்கள் காணப்படும் அத்துணையே பற்றித் தமிழ்மொழி மிகப் பழைய மொழியா மென்று கூறுதல் குற்றமாமாறில்லை யென்க. அது கிடக்க. இனிச், சொல்வழக்கானே யன்றிச் சொல்லுச்சரிப்பு முறையானுந் தமிழ் மிகப் பழையதொன்றாதல் காட்டப்படும். தமிழில் வழங்கும் எல்லாச் சொற்கள் முதலினும் ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டெழுத்துக்கள் நில்லாவென இலக்கண நூல்களில் ஒரு விதி காணப்படுதல் சிறிதிலக்கண அறிவுடையாரும் அறிவர். டமருகம், ரகு, ராமன், லம்பகம் முதலியனவாக ஆரிய மொழிச்சொற்கள் அவ்வெழுத்துக்களை முதற்கொண்டு வருமாகவும், தமிழ் மட்டும் அங்ஙனம் அவ்வெழுத்துக்களை முதற்கண் நிறுத்துக் கொள்ளாமையும், அப் பிறமொழிச் சொற்களையுந் தானெடுத்து வாங்கும் போது இடமருகம், இரகு, இராமன், இலம்பகம் என உயிர் முதல் நிறுத்து வழங்குதலும் என்னை என்று ஆராய்கின்றுழி அதனியல்பு நன்குணரக் கிடக்கும். படைப்புக்காலத் தொடக்கத்திலே தோன்றிய மக்களியல்பும், நம் பழக்கத்திற் காணும் சிறுமகார் இயற்கையும் தம்முட் பெரும்பான்மையுஞ் சமமுடையனவாம். இஃதறிவுடையா ரெல்லார்க்கும் ஒப்ப முடிந்த வோர் உண்மையேயாகும். பிள்ளைப்பருவத்திலே, சொல் உச்சரித்தற்கு இன்றியமையாக் கருவிகளான இதழ், நா, பல், அண்ணங்கள் வேண்டியவாறு இயங்காமையின் அப் பருவத்தே அம்மகார் வழங்குஞ் சொற்கள் மிகச் சிதைவுபடும். சிறுமகார் ராமா என்பவனை ஆமா வென்றழைப்பர். இவ் வுண்மை நாடோறும் பழக்கத்தா லறியற்பாலதேயாம். முன் மொழிக்கு முதலாகா வெனப்பட்ட எட்டு மெய்யெழுத்துக் களும் நா மேலண்ணத்தைச் சென்று தொடும் முயற்சியாற் பிறப்பனவாம். நாவை மேலே சேர்த்தி உச்சரிக்கும் அம்முயற்சி பிள்ளைப்பருவத்தே தோன்றாமையின், அப் பருவத்தே பிறக்குஞ் சொற்களெல்லாம் அவ்வெழுத்துக்களை உடையன வாகா; படைப்புத் தொடக்கத்திற் றோன்றிய மக்களது நிலைமையும் பிள்ளைப்பருவத்தோடு இயைந்ததாகலின், அஞ்ஞான்று அவர் றப்பித்த சொற்களிலே அவ் வெழுத்துக்கள் காணப்படாவாயின. இதனால், தமிழ்ச்சொற்கள் மக்களுடைய முதற்பருவத்திலே தோன்றி நிலவுதலுற்றன வென்பது எளிதிற் பெறப்பட்டது. வடமொழி முதலான மற்றைமொழிச் சொற்கள் முதலிலெல்லாம் அந் நாவெழுத்துக்கள் நிற்றல் அறியப்படுதலின், அவை மக்களுடைய பிற்பருவத்திலே தோன்றியவா மென்பது துணிபொருள். மேலும், இப்போது நூல்வழக்காயுள்ள வடமொழி மக்களால் எஞ்ஞான்றும் பேசப்பட்டதில்லை யென்றும், இதற்குத் தாய்மொழியான ஆரியமே அங்ஙனம் பேசப்பட்டதொன்றா மென்றும் அம்மொழி யாராய்ச்சிவல்ல பண்டிதர்கள் பலரும் உரையா நின்றார். இவ்வாற்றால், மக்களுடைய முற் பருவத்திலே பிறந்த தமிழ்மொழி அவருடைய பிற் பருவத்திலே தோன்றிய வட மொழிக்கும் முற்பட்ட தொன்றாதல் முடிந்த வுண்மையாம். இதன்விரிவும் தமிழ் மிகப் பழையமொழி என்னும் ஞானசாகர உரையுட் காட்டினாம். அது நிற்க. இனித், தமிழ் இலக்கண இலக்கிய விரிவானும் மிகப்பழைய தொன்றென்பது காட்டப்படும். இப்போது தமிழில் வழங்கும் இலக்கண நூல்களுள் மிகப்பழையது தொல்காப்பியம் ஒன்றேயாம். குறைபாடின்றிப் பாகுபாடு நனிதெரித்து எழுதப்படும் இலக்கண நூல் தமக்குடய மொழி களெல்லாம் மிகச் சீர்திருத்தமுற்று நாகரிகம் நிரம்பிய மொழிகளாகுமென்று அறிவுடையோர் ஒருப்பட்டுக் கூறுகின்றார். ஆங்கிலமொழி இஞ்ஞான்று எவ்வளவோ சீர்திருத்தம் அடைந்தும் அதன்கண் உள்ள இலக்கண நூல்கள் ஒன்றாயினும் குறைபாடின்றி எழுதப்படவில்லை. தமிழோடு இனமுடைய தெலுங்கு மலையாளம் கன்னடம் முதலான மொழிகள் பல நூற்றாண்டுகளாகச் சீர்திருத்தஞ் செயப்பட்டு வந்தும், அவற்றின் கண்ணும் இதுகாறும் இலக்கணநூல் ஒன்றேனுஞ் செவ்வையாக எழுதப்படவில்லை. இலக்கணநூல் செவ்வையாக இயற்றப்பட்ட மொழிகள் இவ்வுலகில் எத்தனையுள்ளன வென்று எண்ணிப்பார்க்கும் வழி அவை மிகச் சிலவே உளவாதல் எல்லாரானும் எளிதிலே யறியப்படும். அவற்றுள், தமிழ், வடமொழி என்னும் இரு மொழிகளினும் எழுதப்பட்ட இலக்கணநூல்களின் பெருமையும், நுணுக்கமும், நிறைவும் ஆராயுந் தோறும் பேரின்பத்தை விளைக்கின்றன. ஒரு மொழியைச் சீர்திருத்தம் பண்ணுவது ஒருவரிருவரான் முடியும் எளியகாரியமன்று. சுழன்று செல்லும் புயற் காற்றினையும், அணைகடந்து பெருகும் வெள்ளத்தினையும் இடைமறித்து நிறுத்தினும் நிறுத்தலாகும்; ஒரு மொழியின் விரைந்த செலவை அடக்கியாளுதல் யார்க்கும் முடியாத தொன்றாம். வேத காலத்திலே எழுதப்பட்ட ஆரிய மொழி காவிய காலத்தில் எவ்வளவோ மாறுதலடைந்தது. போவுல்ப் கேடிமான் காலத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழி சாசர் காலத்திலும், சாசர் காலத்திய மொழி செகப்பிரியர் காலத்திலும், செகப்பிரியர் காலத்திய மொழி டெனிசன் காலத்திலும் எத்தனை எத்தனையோ மாறுதல் அடைந்தன. இங்ஙனங் காலங்கடோறும் ஒரு மொழியின் முன்னுருவந் திரிபெய்தி வருமாயின் அம் மொழியின் ஒழுங்கை யறிந்து இலக்கண நூல்கள் இயற்றுதல் மிக அரிதாம். அது காலங்கடோறும் வேறுபட்டு வருமாயின் அதனை வழங்கும் மக்கள் தங்கருத்தறிவிக்க எளிதான கருவி காணமாட்டாது மிக இடர்ப்படுவர். இதுபற்றியே ஆங்கில அரசுடையார் தம்முடைய மொழியினை ஒழுங்க கடவாது நிலைபெறுவித்தற் பொருட்டுக் கல்விச்சாலைகள் பலப்பல வியற்றி மொழியினைத் திருத்தமுறக் கற்பித்துக் கல்விவளம் பெருக்கி வருகின்றார். நாகரிக மக்களிடத்து நடைபெறும் மொழிகள் விரைவிலே வேறுபடுதலில்லை; புதிய சில சொற்கள் பிறரிடமிருந்து போந்து சேரும் அம்மட்டே யன்றித் தம் உருவவியல் பெரிதுந் திரிபெய்தாது பரவி வழங்கும். ஒரு மொழி உருவந் திரிபடையாது நிலைநிற்றற்கு வேண்டும முயற்சி என்னை என்று ஆயும்வழி அதன்கண் ஒவ்வொரு சொல்லும் பண்டு தொட்டு வாங்குமாறும், அச் சொற்கள் தோன்றுங்காற் பெற்ற காரணமும், அவை வாக்கியங்களில் தொடர்புற்று நின்று பொருள் அறிவிக்குமாறும், அவற்றோடு கலந்து வழங்கும் பிறமொழிச் சொற்கள் இவை என்றலும் இனிது அறியப்பட்டு வருதலேயாம். இவை இவ்வாறு அறியப்படுதல் கற்றோரிடத் தன்றி மற்றை யோரிடத்து இல்லையாலோவெனின்; ஓர் ஊரில் கற்றறிவுடையார் ஒருவர் இருப்பினும் அவரால் அவ்வூரார் எல்லாரும் திருத்தமடைவார். தாழி நிறையப் பெய்த தீம்பாலில் குற்றிய உறைத்துளி மிகச் சிறிதாயினும், அஃது அப் பால் முழுவதையும் தீஞ்சுவைத் தயிராகத் திரிபு செய்தல்போலக் கற்றார் ஒருவரேயாயினும் அவர் தம்மைச் சூழ்ந்தார் அனைவரும் நலம் பெறச் செய்வர். எங்ஙனமெனின், அவர் தம்பால் வந்தணுகுவோர்க்குத் திருந்திய சொற்பொருளை அறிவிப்ப, அறிவிக்கப்பட்ட அவர் மாணவர் தாம் அவற்றைப் பிறர்க்கு அறிவிப்ப, அப் பிறர் அவற்றை வேறு பிறர்க்கு அறிவிப்ப, இங்ஙனம் ஓரிடத்துத் தோன்றிய அலை தடாகத்தின் நாற்புறங்களினும் பல அலைகளைத் தோற்றுவித்து நடைபெறச் செய்தல்போல அக் கற்றறிவுடையார் தாம் பெற்ற அத்திருத்தங்களெல்லாம் அவரறிந்தும் அறியாமலும் யாண்டும் பரவிக்கொண்டேயிருக்கும். இவ்வாறு உலகத்தில் நடைபெறும் ஒழுக்கங்களெல்லாம் கற்றாராற் சீர்திருந்தப் பெற்று வருதல் பற்றியே உலகமென்ப துயர்ந்தோர் மாட்டே என்னும் திருவாக்கு எழுந்தது. இனி, எந்த நாட்டில் தொன்றுதொட்டுக் கற்றோர் மிகுதியாய்ப் பல்கி வருவரோ அந்த நாடு வளம் பெருகும்; அதன்கண் உள்ளார் எல்லாரும் கல்வி மணம் பெற்று அறிவு விளக்கமுடையராவர்; அவர் வழங்கும் மொழி மிகுந்த சிறப்புடையதாய் நிலைபெறும். தமிழ்நாட்டிற் பண்டைக் காலத்துக் கற்றறிவுடைய சான்றோர் கணக்கின்றி யிருந்தா ரென்பதற்கு அவர்களால் திருவாய்மலர்ந்தருளப்பட்ட அளவிறந்த நூல்களும், அளவிறந்த பாட்டுக்களுமே சான்றாம். புறநானூறு முதலான பழைய சங்கத் தொகைநூல்களைக் காண்பேமாயின், அவற்றிற் பெறுதற்கரிய முழுமணி போன்ற அரிய பெரிய செய்யுட்களை இயற்றியருளிய அப்பெருந்தகை யாளர் பேரறிவும் பெருந்தொகையும் பெரிதும் வியக்கற் பாலனவா யிருக்கின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னே நமது செந்தமிழ்மொழி எவ்வளவு திருத்தமாக வழங்கப் பட்டுலாவியது! அந்நாட்களிலிருந்த கற்றோர் நுண்ணறிவு எவ்வளவு தெளிவாக அவரியற்றிய பாக்களிலே துளும்பி ஒளி வீசுகின்றது! அப்போதிருந்த நன்மக்களெல்லாரும் எவ்வளவு இன்புற்று வாழ்ந்தனர்கள்! என்று நினைக்க நினைக்க எம் உள்ளம் வரைகடந்த இன்பத்தாற் பொங்குகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட தெய்வத் திருக்குறளுக்கு இணையான நூல் இவ்வுலகத்தில் உண்டோ? அஃது உயர்வு ஒப்பில்லா உவரா அமிழ்தமன்றோ! உள்ளன உள்ளபடி கூறிய முழுக்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவற்றின்முன் தலையெடுத்து நிற்கும் வேறு காப்பியங்கள் இவ்வுலகில் எந்த மொழியிலேனும் உளவா? இல்லையே! மக்கள் மெய்யுணர்வின் இயற்கையினைப் பகுத்து விளக்கிய இறையனாரகப் பொருளுரை போன்ற நூல் இவ் விரிகடலுலகினும் இல்லையே. கலித்தொகையிலுள்ள இயற்கைப் பொருள் நுட்பமும், பலதிறப்பட்ட மக்கள் வழக் ஒழுக்க ஆராய்ச்சியும் வேறு எம்மொழி நூலிலாயினும் உள்ளனவா? மனு முதலிய அறநூல்களெல்லாம் நாலடியாரை ஒக்குமோ? ஆ! அக்காலத்துத் தோன்றிய திருச்சிறப்பம்பலக் கோவையார் என்னும் அவ்வொரு நூலை நோக்கினும் தமிழ்மொழியின் அமைதியும் சிறப்பும் இனிது புலப்படுமே. நண்பர்காள்! இங்ஙனஞ் சீர்திருத்தமுற்று நிலாவிய இச்செந்தமிழை வழங்கிய மக்கள் எத்துணை நாகரிகமுடையரா யிருந்தனராவர்! இனி இந்நூல்களுக்கெல்லாம் மிக முற்பட்ட தொல்காப்பிய நூற்பெருமையைச் சிறிது ஆராய்ந்திடுவே மாயின் தமிழர் வரலாற்றுக் காலத்திற்கு முன்னும் மிக்க நாகரிகம் பெற்று வாழ்ந்தாரெனல் தெற்றென விளங்குகின்றது. தொல்காப்பியம் முற்கூறிய தமிழ்நூல்கள் எல்லா வற்றிற்கும் முன்றோன்றிய தாதலை ஒரு சிறிது ஆராய்வாம். இது வடமொழியிற் பாணினி முனிவர் இயற்றிய அட்டாத்தியாயி என்னும் அரிய பெரிய இலக்கண நூலுக்கும் முந்தியதென்று நாட்டவே, இதன் காலம் அத் தமிழ் நூல்களுக்கெல்லாம் முற்பட்டதாதலும் நன்கு பெறப்படும். ஆகலின் முதலிற் பாணினி முனிவர் காலம் ஈண்டுச் சுருங்க வகுப்பாம். பாணினி முனிவர் தாமியற்றிய அவ்விலக்கண நூலில் இவ்விந்திய நாட்டின்கண் உள்ள இடங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி அவற்றின் பெயர்க் கெல்லாம் இலக்கணம் வகுத்துரைக்கின்றார். பெரும்பாலும் அவராற் குறிக்கப்பட்ட நாடு நகரங்களெல்லாம் பஞ்சாப் நாட்டிலும் அப்கானித்தானத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் தெற்குப் பக்கங்களில் அவராற் குறிக்கப்பட்ட இடங்கள் கச்ச,1 அவந்தி2 கோசல3, கரூச,4 கலிங்க5 முதலியன வாம். இவை யெல்லாம் விந்தியமலைக்கு வடக்கேயுள்ளன. விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நாடு நகரங்களில் ஒன்றாயினும் அவராற் குறிக்கப்படவில்லை. ஆகவே, பாணினி முனிவர் காலத்து ஆரியமக்கள் விந்தியமலைக்கு வடக்கே உள்ள நாடுகளில் இருந்தாரென்பதும், அம் மலையைக் கடந்து இப்பகுதி வந்திலரென்பதும் இனிது பெறப்படுவனாம். இனிப், பாணினீ யத்திற்கு வார்த்திகை உரை எழுதிய காத்தியாயனார் விந்தியமலைக்குத் தெற்கே உள்ள நாடு நகரங்களைக் குறிப்பிடுகின்றார். ஓர் இடத்தின் பெயர்பற்றி அவ்விடத்திற் பிறந்த மக்கட்குப் பெயர் வருமாற்றைச் சுட்டிப் பாணினிமுனிவர் விதி கூறிப் பஞ்சாலத்தில் தோன்றினவன் பாஞ்சாலன், சால்வத்திற் றோன்றினவன் சால்வேயன் என்பனவாக எடுத்துக்காட்டினார். ஈண்டு இச்சூத்திரத்தில் வேறு சில விடப்பட்டன என்றுரைத்துக் காத்தியாயனர் பாண்டியன் எனுஞ்சொற் பாணினியாற் சொல்லப்பட வில்லை; பாண்டு குடியில் அல்லது பாண்டு நாட்டிற் பிறந்தோன் பாண்டியன் எனப்படுவான் என்று புதிய ஓர் உரைவாக்கிய முஞ் சேர்த்தெழுதினார். இன்னும் இவ்வாறே சோழர் மகிஷ்மத் என்னுஞ் சொற்களும் அக் காத்தியாயனரால் ஆராய்ந்துரைக்கப் பட்டன. இனிப், பாணினீயத்திற்கு மாபாடிய முரைத்த பதஞ்சலியார் மாகிஷ்மதீ வைதர்ப்ப காஞ்சீபுர கேரள முதலியவற்றையும் ஆராய்ந்து உரையுரைத்தார். அதுவேயு மன்றித் தம்முரையுட் காத்தியாயனர் வார்த்திகவுரை பாட பேதங்கள் பல உளவாதலும் எடுத்துக் காட்டினார். காத்தியாயனர்உரை பல பாடபேதங்கள் உடைத்தாய்த் திரிபெய்துதற்குப் பல நூற்றாண்டுகள் செல்லுமாகலின், அப் பாடபேதங்களைத் தம்முரையுட் குறித்த ஆசிரியர் பதஞ்சலி யார்க்கு முந்நூறு நானூறு ஆண்டுகளின்முன் அக் காத்தியாயனர் இருந்தாராகற்பாலார். மற்றுப் பதஞ்சலியார் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐம்பத்தாறு ஆண்டுகளின் முன் இருந்தாரென வடநூல் வரலாற்று அறிஞர்கள் நிறுவினா ராகலின், காத்தியாயனர் காலம் 2350 ஆண்டுகளின் முற்பட்ட தென்பது பெற்றாம். இனிப் பாணினி முனிவராற் சொல்லப்படாத புதிய இலக்கண விதிகள் சில காத்தியாயனராற் சொல்லப் பட்டிருப்பது கொண்டு, அவ்விதிகள் பெறுதற்குரிய சொல் வழக்குகள் சில பாணினி முனிவர் காலத்திலில்லை என்பதூஉம், அவை காத்தியாயனர் காலத்தே தான் தோன்றின என்பதூஉம் பெறப்படுகின்றன. அதுவேயு மன்றிப் பாணினி முனிவர் காலத்து நடைபெற்ற சொற்கள் பல காத்தியாயனர் காலத்து வழக்கு வீழ்ந்தொழிந்தன. இங்ஙனம் மொழி திரிபெய்துதற்குப் பல நூற்றாண்டுகள் செல்லுமாகலின் பாணினி முனிவர்க்கும் காத்தியாயனர்க்கும் இடையில் விரிந்த காலம் நானூறு ஆண்டிற்குக் குறையாதாகும். எனவே, பாணினி முனிவர் இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன்னிருந்தா ரென்பது இனிது பெறப்படும். இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லிலக்கணங் களெல்லாம் முற்றவுங் கூறினா ராயினும், அச்சொற்கள் எவ்வாறு பிறந்தன என்று ஆய்ந்து அவைதம்மை யெல்லாம் பகுத்துப் பகுதிகளாக அடக்கிக் காட்டினாரில்லை. அங்ஙனமாயினும், ஒவ்வொரு சொல்லுங் காரணம் பற்றியே தோன்றினவென்றும், அக் காரணம் அறிவுடையார்க்கல்லது ஏனையோர்க்கு விளங்கத் தோன்றா வென்றும் குறிப்பிட்டு மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று சூத்திரஞ் செய்தருளினார். இவ்வாற்றால் தமிழ்ச்சொற்களைப் பகுதி, விகுதி முதலியனவாகப் பகுத்து ஆராய்ந்துரைக்கும் முறை தொல்காப்பியனார் நூலெழுதிய ஞான்று தமிழாசிரியர்க்குத் தெரியாதிருந்த தென்றே துணியப்படும். மற்றுப் பாணினி முனிவர் தாமியற்றிய அட்டாத்தியாயியில் தங்காலத்து வழங்கிய பல்லாயிரம் ஆரிய மொழிகளை யெல்லாம் பகுதி விகுதிகளாகப் பகுத்தாராய்ந்து அவற்றை யெல்லாம் தாதுபாதத்திற் சில்லாயிரம் பகுதிகளிலே அடக்கினார். தொல்காப்பியனார் பாணினி முனிவர் காலத்தி லேனும், அல்லது அதற்குப் பின்னேனும் இருந்தனராயின் இலக்கண ஆராய்ச்சிக்கு இன்றியமையாப் பெருஞ் சிறப்னிதான சொல்வரலாற்று முறையைத் தவறாது கூறியிருப்பர். பாணினி முனிவர்க்குப் பிற்பட்ட காலத்திலிருந்தவரான பவணந்தியார் இச்சொல் வரலாற்று முறையைத் தமது நன்னூலில் தழுவிக் கூறினமை அறியவல்லார்க்கு யாம் உரைத்தது மிகவும் பொருத்த முடைத்தாதல் இனிது விளங்கும். ஆகவே, சொல்வரலாற்று முறை தெரிந்துரைத்த பாணினி முனிவர்க்கும், அம்முறை தங்காலத் தில்லாமையால் அதனை உரையாது விடுத்த தொல்காப்பியனார்க்கும் இடைப்பட்ட காலம் மிகப் பெரிதாதல் வேண்டும். பாணினி முனிவர்க்கு நானூறு ஆண்டு களின் முன்னே ஆசிரியர் தொல்காப்பியனார் இருந்தனர் என்று கொள்ளும்வழி, இற்றைக்கு மூவாயிரத்திருநூறு ஆண்டுகளுக்குமுன் அவ்வாசிரியர் காலம் கணிக்கப்படுமென்று கொள்க. இனி, மற்றுமொரு வாற்றால் தொல்காப்பியனார் காலம் ஆயும்வழி அது நாலாயிர ஆண்டுகளுக்கும் முற்பட்டதென்று நாட்டப்படும். தொல்காப்பியம் பஃறுளியாறு கடல் கொள்ளப்படுமுன் எழுதப்பட்டது; அக்காலத்திற் குமரியாறு தென்றிசையில் ஓடிக் கொண்டிருந்தது. இது வடவேங்கடந் தென்குமரி என்னும் பனம்பாரனார் பாயிரவுரையானும், அதற்குரை கண்ட இளம்பூரணர் முதலான உரையாசிரியர் உரையானும் நன்குணரப்படும். இவ் யாறுகளும் இவற்றைச் சூழ்ந்த நிலங்களும் கடல் கொள்ளப்பட்டது இற்றைக்கு நாலாயிரத்து முந்நூறு ஆண்டுகளின் முன்னென்று இலங்கைப் பௌத்த வமிசாவளியிலே குறிக்கப்பட்டிருக்கின்றது. இங்ஙனங் குறிக்கப்பட்ட காலமும், விவிலிய நூலில் குறிக்கப்பட்ட நோவா என்பவர் காலமும் மிகவும் ஒத்திருக்கின்றன. எனவே, தொல்காப்பியனார் நாலாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தா ரென்று துணிந்து கூறுவாம். இனி, இத்துணைப் பழை காலத்தே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் தமிழ்க் களஞ்சியத்தில் தொகுக்கப் பட்டுள்ள பொருள் நுட்பங்கள் ஈண்டு முற்றவும் எடுத்துக காட்டல் ஏலாமையின், ஒவ்வோரதிகாரத்திலும் ஒன்றிரண்டு எடுத்துரைப்பாம். எழுத்ததிகாரத்தின் முதலிலேயே அவ்வாசிரியர் தமிழ் ஒலி எழுத்துக்களை முறையே நிறுத்திக் கூறிய திறம் பெரிதும் வியக்கற் பாலதாம். மூடி இருந்த வாயைத் திறந்த மாத்திரையானே அகர ஒலி இயற்கையாய்த் தோன்று தலின் அதனை முன்னும், அதன்பின் இகரம் நாவாற் பிறத்தலின் அதனைப் பின்னும், அதன்பின் அவ்வோசை இதழ் வழியே உகரமாய்ச் சென்று அழிதலின் அதனை அதன் பின்னுமாக நிறுத்தியருளினார். முற்பிறக்கும் ஓசை யெல்லாம் குறுகி யிருக்குமாதலானும், அவ்வோசை பிற்கணத்திற் றொடர்ப்பட்டு நீளுவதே நெடிலாமாதலானும் முன்னே அ, இ, உ என்னுங் குற்றெழுத்துக்களையும், அவற்றின் நீட்டமான ஆ, ஈ, ஊ என்பவற்றைப் பின்னுமாக வைத்தார். ஏனைய ஓசைகளின் முறையும் ஈண்டுரைப்பிற் பெருகும். அவையெல்லாம் ஆசிரியர் நச்சினார்க்கினிய ருரையிற் காண்க. அற்றேல் அங்ஙனமாக, இவ்வெழுத்துமுறை வடமொழி முதலான பிறமொழிகளினும் காணப்படுவதாக இதனைத் தமிழுக்கே வரைந்து சொல்லிய தென்னையெயனின்; - வடமொழியை ஒழித்து ஒழிந்த இந்திய மொழிகளிலெல்லாம் காணப்படும் இம்முறை, தமிழ் ஆரியத்தின் முறைகண்டு செய்து கொள்ளப் பட்டதாகலின் அஃதீண்டு ஆராயற்பாற்றன்று. மற்று வடமொழியில்இம்முறை பண்டுதொட்டுக் காணப்படுதலின் அஃதொன்றே ஈண்டாராயற் பாலதாம். தமிழர் செய்த முறையைக் கண்டு ஆரியர் தாம் அம்முறை காட்டினரோ, அல்லது ஆரியர் செய்த முறையைக் கண்டு தமிழர்தாம் அது காட்டினரோ என்பதுதான் ஈண்டு உறுதிசெய்யற்பாலதாம். ஆரியர் இவ்விந்தியா தேசத்திற் புகுமுன்னே அம்முறை கண்டறிந்தனராயின் அஃது அவர்க்கே உரியதாகும்; அவர் இந்தியாவிற் புகுந்த பின் அங்கிருந்த தமிழர் அதனை எடுத்தாண்டு கொண்டாராவர். மற்று ஆரியர் இந்தியாவிற் புகுமுன் அம்முறை காணாதிருந்து புகுந்தபின் அது கண்டனரென்று உரை நிறுவப்படுமாயின், தமிழர்க்கே அம்முறை உரியதாகு மென்பதும் அதனையே ஆரியர் எடுத்தாண்டு கொண்டன ரென்பதும் பெறப்படும். இனி ஆரியர் இந்தியாவிற் புகுமுன்னே அம்முறை அறிந்தாரில்லை; அஃதறிந்தது உண்மையாயின் அவ்வாரியப் பிரிவினராய் ஐரோப்பாக் கண்டத்தின் தென்றிசை, மேற்றிசை, வடமேற் றிசைகளிற் புகுந்த ஏனை ஆரிய சாதியார் வழங்கிய இலத்தின், கிரீக்கு, டியுடானிக், சிலாவிக் முதலிய ஆரிய மொழிகளினும் அம்முறை காணப்படுதல்வேண்டும். அவற்றி லெல்லாம் உயிர் எழுத்து மெய்யெழுத்துக்கள் ஒரு முறையுமின்றிப் பலவாறு மயங்கிக் கிடத்தலின், அம்முறை ஆரிய மொழிக் குரியதன் றென்பது அங்கையுள் நெல்லிபோற் றெளியப்படும். மற்று அவ்வாரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமக்கு முன்னே அங்கு வாழ்ந்து வருந் தமிழ் ஆசிரியர் கண்ட அவ்வெழுத்து முறையை எடுத்தாண்டு கொண்டார் என்க. இவ்வுண்மை பௌத்த இந்தியா என்னும் வரலாற்று நூலில் இரை டேவிட் என்ற அறிஞராலும் நன்கு காட்டப் பட்டது.1 அதுகிடக்க, ஆரியமொழி இலத்தீன், கிரீக்கு முதலியவற் றோடு இனமுடைத்தாதல் யாங்ஙனமெனிற் காட்டுதும். ஒரு மொழி பிறிதொன்றனோடு இனமுடைத் தென்பது அவற்றின் முதல் தோற்றச் சொற்களின் உருவொப் புமையால் நன்கு துணியப் படுமன்றே! என்னுஞ் சொல் மகனைக் குறிக்கும். அவ்வாரியத் தோடு இனமான ஸெண்ட் என்னும் பாரசீக மொழியிலும் அப்பொருளைக் குறிக்கும் அச்சொல் ஹுநு என்று வழங்குகின்றது; டியூடானிக் மொழியில் சுநு எனவும் அவ்வாறே வழங்குகின்றது. ஆரியத்தில் மகளைக் குறிக்கும் துகிதார் என்னுஞ் சொல், ஸெண்டில் துக்தர் எனவும், கிரீக்கில் துகாதீர் எனவும், டியூடானிகில் தொஹ்தர் எனவும், சிலாவிகில் துதெர் எனவும் வழங்குகின்றது. ஆரியத்தில் உடன் பிறந்தானைக் குறிக்கும் ப்ராதர் என்பது, இலாவிகில் ப்ரதுரு எனவும் ஸெண்டில் ப்ராதர் எனவும், கிரீக்கில்ப்ராதீ எனவும், இலத்தீனில் வ்ராதெர் எனவும், டியூடானிகில் ப்ரோதர் எனவும், ஸெல்டிகில் ப்ராதிர் எனவும் வழங்குகின்றது. ஆரியத்தில்மாட்டைக் குறிக்கும் பசூ என்னுஞ் சொல், ஸெண்டில் பசு எனவும், இலத்தீனில் பிக எனவும், டியூடானிகில் வைஹு எனவும், சிலாவிகில் பிகு எனவும் வழங்குகின்றது. ஆரியத்தில் ஆட்டைக்குறிக்கும் ஆவி எனுஞ்சொல், கிரீக்கில் ஓயீ எனவும், இலத்தீனில் ஓவி எனவும், டியூடானிகில் அவி எனவும், சிலாவிகில் ஓவிகா எனவும், ஸெல்டிகில் ஓய் எனவும் வழங்குகின்றது. ஆரியத்தில் பாம்பைக் குறிக்கும் அகி என்பது, ஸெண்டில் அஷி எனவும், கிரீக்கில் எகி எனவும், இலத்தீனில் அங்குயி எனவும், டியூடானிகில் அங்க் எனவும், சிலாவிகில் அங்கீ எனவும் வழங்குகின்றது. இன்னும் இவ்வாறே வருவனவெல்லாம் காட்டப்புகின் இச் சொற்பொழிவு வரம்பின்றி மிக விரியுமென அஞ்சி இத்துணையே ஈண்டைக்குப் போதுமென நிறுத்துகின்றோம். இக் காட்டிய வாற்றால் ஆரியமொழி ஸெண்ட், கிரீக்கு, இலத்தீன் முதலான மொழிகளோடு ஒற்றுமையுடைத்தாதல் நன்கு தெளியப்படும். இனி ஆரியத்தில் வழங்கும் சூநு, துகிதார், ப்ராதர், பசூ, ஆவி, அகி என்னும் அச்சொற்களுக்குத், தமிழில் முறையே மகன், மகள், உடன்பிறந்தான், மாடு, ஆடு, பாம்பு என வழங்குஞ் சொற்கள் ஒருவாற்றாலும் உரு வொப்புமை பெறாது நிற்றலும் ஈண்டு அறியற்பாலதாம். இனிக், கிரேக்கர், உரோமர், ஆங்கிலர், ஆரியர் முதலான ஆரிய சாதியார் ஆரியர் இந்திய நாட்டிற் புகுமுன்னே ஓசைகள் பிறக்கும்முறை அறிந்து எழுத்துக்களை முன்பின்னாக நிறுத்தின ராயின் அம்முறை அவ்வாரிய மொழிகள் எல்லாவற்றிலுங் காணக் கிடக்கும். மற்று அம்முறை அவ்வாரிய மொழிகளிற் காணப்படாமல் அகரத்தின்முன் பகரமும் அதன்பின் சகரமுமாக இங்ஙனம் ஒருமுறையுமின்றி நிறுத்தப்பட்டுக் கிடத்தலால், ஆரியர் அம்முறை முன் அறியாராய் இந்தியாவிற் புகுந்தபின் அறிந்தாரென்பது இனிது நாட்டப்படும். இனி, ஆரியர் வருதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிக முடையரா யிருந்தனரென்பது இருக்குவே தத்தினாலேயே இனிது அறியப்பட்டதொன்றாம். ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து குடியேறிய காலத்தில், உள்நாட்டில் இருந்த தமிழர் எழுவகை அரண்மனைகளும், தொண்ணூறு கோட்டைகளும் உடையராய் வாழ்ந்தனரென இருக்குவேதம்1 உரை தருகின்றது. இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழர் அழகிற் சிறந்த எழுநிலை மாடங்களும், உயர்ந்த கற்கோட்டைகளும் கட்டுவித்து வாழ்ந்தனராயின், அவ்வரிய பெரிய கட்டிடங்கள் அமைப்பதற்கு இன்றியமையாப் பெருஞ் செல்வவளமும், அவை தம்மைத் திருத்தமுறக் கட்டுவித்து முடிப்பதற்கு உரிய நூல் உணர்வும், அவற்றுள் நடத்தப்படும் பலதிறப்பட்ட இலௌகிக கருமங்களும் உடையராய் இருந்தாராதல் தெற்றெனத் துணியப்படும். இத்துணைப் பெரிய நாகரிக வாழ்க்கை உடையராயிருந்த தமிழர் தமது நாகரிக வாழ்க்கை இனிது நடைபெறுதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தமிழ் மொழியினை இலக்கண இலக்கிய அமைதியோடு முற்றக் கற்றுவந்தா ரென்பதூஉம், இதனால் நிலைநிறுத்தப்படும் முடிபொருளாம். ஆகவே, ஓரிடத்தும் நிலைபெறமாட்டாது திரிதரு வாழ்க்கை யுடையராய் இந்தியாவினுட் புகுந்த ஆரியர் கங்கையாற்றுக் கரைப் பக்கங்களில் நிலைபெற்ற வாழ்க்கை நடாத்திச் செங்கோல் ஓச்சிய தமிழ்மக்களால் நெறிப்படுத்தப் பட்ட இலக்கணமுறை கண்டு தாமும் உயிர்மெய் எழுத்துக்களை முறைப்படுத்தினாரென்று துணிக. ஆரியர் வருஞான்று, தமிழர் அரசியல் முறை பிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் அசுரர் என்று பெயரிட்டு வழங்கினார். இருக்கு வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் அசுர என்னுஞ் சொல் வலிய அல்லது அதிகாரமுடைய என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழங்கப்பட்டு வரகின்றதென்றும், அசுரர் என்பதற்கு அதனால் தலைவர் என்னும் பொருள் பெறப்படுகின்ற தென்றும் உரோமேஷ் சந்திரதத்தரும் இனிது விளக்கினார். ஞிமிறு என்பது மிஞிறு எனவும், தசை என்பது சதை எனவும், விசிறி என்பது சிவிறி எனவும் எழுத்து நிலைமாறி வருதல்போல அரசு என்னுந் தமிழ்ச்சொல் அசர என நிலைமாறி இருக்குவேதத்துள் வழங்கப்படுவதாயிற்று.1 தமக்கு எதிரே நாகரிகம் நிரம்பி விளங்குகின்ற தமிழ அரசரைத் தமக்குந் தலைவராக ஒருப்பட்டுப் பண்டை ஆரியமக்கள் அசுரர் என வழங்கினார். பிற்காலத்து வடமொழியில் மட்டும் அசுரர் என்னும் அச்சொல்லின் உயர்ச்சிப்பொருளை மாற்றி அதற்கு அரக்கரெனப் பொருள் கட்டிவிட்டார்கள். மற்று இருக்குவேதமோ அரசியல்நெறி திறம்பாத தமிழரசரைச் சுட்டி அசுரர் என மிகவும் பாராட்டி வழங்கியது. இத்தமிழரசர் தங்கீழ் வாழ்வார்க்கெல்லாம் மிக இனியராய் ஒழுகியதுபற்றி, இவர்க்கும் இவர் குடும்பத்தார்க்கும் அரசினியர் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. அரசினியர் என்னும் இச்சொற் றொடரையே இருக்குவேத காலத்து ஆரியமக்கள் ராஜந்யர் எனத் தமக்கேற்றவாறு திரித்து வழங்கினார். அரசினியார் எனப்படும் பண்டைக்காலத் தமிழரசர் நுண்ணறிவு நூலுணர்ச்சியாற் றத்துவங்கள் பலவும் ஆய்ந்து முடி பொருட் டேர்ச்சியுற்று விளங்கினாரென்பதூஉம் அப்பழைய ஆரிய நூலாற் பெறப்படும் உண்மையாம். இதனைப் பின்னே விரித்து விளக்குவாம். இனி இதுவேயுமன்றித் தமிழ் மக்கள் தாம் உரையாடுங் காற் றோன்றும் ஓசைகளைப் பல்வகை எழுத்துக் களால் இட்டெழுதிப் பண்டே நாகரிக முதிர்ச்சி உடையராயு மிருந்தனர். ஆரியரோ தம்பாற் பிறந்த ஓசைகளை எழுத்திலிட்டுக் காட்டும் வகை அறியாமையினால், தம் முன்னோராற் பாடப்பட்ட பாட்டுக்களை நெட்டுருப் பண்ணுதற்குக் கிடைகூட்டிப் பயின்று வந்தார். அவ்வழக்கம் இன்றும் பலர் ஒருங்கு கூடியிருந்து வேதம் ஓதுமாற்றால் நன்கு அறியப்படும். இங்ஙனம் எழுத்துக்களின்றி வெறும் ஓசை மாத்திரையாய் வேதங்கள் அவராற் பயிலப்பட்டு வந்தமையாலன்றே அவை எழுதாக்கிளவி எனறு பெயர் பெறுவனவாயின. அல்லதூஉம், வடமொழிக்கென்றே ஓரெழுத்து இல்லாமை யினாலேதான், வடநாடுகளிலுள்ளார் மகாராட்டிரத் திற்குரிய தேவ நாகர எழுத்துக்களானும், தென்னாடு களிலுள்ளார் தமிழுக்குரிய கிரந்தாக்கரங்களாலும், ஆந்திர நாட்டிலுள்ளார் தெலுங்கிற் குரிய தெலுங்கெழுத்துக் களானும் வடநூல்களை எழுதுதலும் பதிப்பித்தலுஞ் செய்து போதருகின்றார். பண்டை நாள் ஆரியர் எழுத்தறியாமையின் தம்முடைய பழைய நூல்களைப் பாதுகாத்து வழங்கற் பொருட்டுத் திருத்தமாக அவற்றை ஓதுதற் குரிய முறைகளை எல்லாம் பிராதிசாக்கியங்களில் மிகவிரித்தெழுதினார். எழுத்தறிந்தனராயின் அவ்வா றெல்லாம் அவற்றை ஓதுதற்குரிய முறைகளை மிகவருந்தி விரித்தெழுதல் வேண்டப்படாதென்க. நினைக்கப்படுவது என்னும் பொருளை யுடைய மிருதி என்னுஞ் சொல்லும் கேட்கப்படுவது என்னும் பொருளை யுடைய சுருதி என்னுஞ் சொல்லும் அவ்வடநூல்களுக்குப் பெயராய் அமைந்ததனை உற்றுநோக்கு மிடத்து அவை நினைக்கப்பட்டுங் கேட்கப் பட்டும் வந்தனவே யல்லது எழுத்திலிட்டு எழுதப்படவில்லை யென்பது போதரும். இனி ஆரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமிழருடைய நாகரிக முதிர்ச்சியினையும், அவர் தாங் கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங்கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்த ஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது கோல்ட் டக்கர் என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். இரைடேவிட் பண்டிதரும் இந்தியாவிலுள்ள எழுத்துக்கள் ஆரியர்க்குரிய வல்ல வென்றும், அவை திராவிட வியாபாரிகளாற் கொண்டுவந்து தரப்பட்டன வென்றும் கூறுமாற்றானும்1 அவை தமிழர்க்கே உரியவென்பது இனிது பெறப்படும். இனி, வரலாற்று நூல் அறிஞரில் ஒருசாரார் பினீ சியரென்னும் நாகரிக சாதியாரோடு வாணிகம் நடாத்திய தமிழர் அவரிடமிருந்து எழுதுமுறை கற்றுப் பின் அதனை இந்தியாவெங்கும் பரப்பினார் எனக் கூறுகின்றார். இவருரைக்கும் இவ்வுரையோடு யாம் ஒரு வாற்றால் இணங்கு தலும் பிறிதொரு வாற்றால் இணங்காமையும் உடையேம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளின் முன் மேற்றிசை யிலுள்ள பினீசியர் என்னும் வகுப்பார் தென்னிந்தியாவின் மேற்கே மலையாளக் கரையினும், கிழக்கே உவரி, கொற்கை என்னுங் கடற்றுறைப் பட்டினங்களினும் வந்திறங்கித் தமிழரோடு வாணிகம் நடாத்தினார். அவர் தம் நாட்டுக்குத் திரும்பிப்போம் போது யானைக் கொம்புகள், தோகை மயில்கள், குரங்குகள், சந்தனக் கட்டைகள், விலை உயர்ந்த முத்துகள், அரிசி, கருவாப்பட்டை முதலிய சரக்குகளை ஏற்றிக் கொண்டுபோயினார். அவர்கள் சாலமன் என்னும் மேல் நாட்டரசன் காலத்திற் கூட்டங் கூட்டமாய் வந்தனரென்று ஈபுருமொழியில் எழுதப்பட்ட விவிலிய நூலால் நன்கறி கின்றோம். அந்நூலில் தமிழ்நாட்டுக் கடற்றுறைப் பட்டினமான உவரி என்பது ஓயிர்2 எனவும், அவர் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றிக் கொண்டுபோன பொருள்களான, மயில், சந்தனம், அரிசி என்பவற்றின் பெயர்கள் தோகை, அனுகம், அரிசி எனவும் அவ்விவிலிய நூலில் எழுதப்பட்டிருக்கின்றன.3 சாலமன் என்னும் வேந்தன் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளின் முன் செங்கோலோச்சினா னென்பது வரலாற்று நூல் அறிஞர்க் கெல்லாம் ஒப்பமுடிந்தமையின், அவன் காலத்தில் தமிழ்நாடு போந்து தமிழரோடு வாணிகம் நடாத்திய பினீசியர் தாம் பயன் படுத்திவந்த எழுது முறையைத் தமிழர்க்குங் கற்பித்தார். ஆயின், தமிழர் அவர் வருதற்குமுன் எழுதுமுறை அறியாரோ வெனின்; அற்றன்று. பினீசியர் வருதற்கு முன்னுந் தமிழர் அம்முறை நன்கறிந்தார் என்பது தேற்றமாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்ததிகாரம் என ஒன்று வகுத்துக்கொண்டு எழுத்துக்களின் இலக்கணத்தைச் செவ்வனே கூறுகின்றமை யானும், எழுத்துக்கள் இல்லாவிடின் அங்ஙன மெல்லாம் இலக்கணங் கூறுதல் ஆகாமையானும் உட்பெறு புள்ளி யுருவா கும்மே என்னுஞ் சூத்திரத்தில் மகர எழுத்து முன் நாளில் எழுதப்பட்ட வரிவடிவும், மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல் என்னுஞ் சூத்திரத்தில் மெய்யெழுத்துக்கள் புள்ளி பெற்று நிற்றலும் எகர ஒகரத் தியற்கையுமற்றே என்பதனால் எகர ஒகர எழுத்துக்களும் அவ்வாறே பண்டை நாளில் புள்ளி பெற்று நின்றமையும் புள்ளியில்லா எல்லா மெய்யும், உருவுரு வாகி அகரமொடு உயிர்த்தலும், ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும், ஆயீரியல உயிர்த்தலாறே என்பதன்கண் மெய்யெழுத்துக்கள் உயிர்களோடு கூடியவழி வரிவடிவில் உருவு திரிதலும் இனிதெடுத்து ஓதினாராகலானும், உரையாசிரியர் நச்சினார்க் கினியர் உருவுதிரிந் துயிர்த்தலாவது மேலுங் கீழும் விலங்கு பெற்றுங் கோடுபெற்றும் புள்ளி பெற்றும் புள்ளியுங்கோடும் உடன்பெற்றும் உயிர்த்தலாம். கி.கீ முதலியன மேல் விலங்குபெற்றன. கு கூ முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ கே முதலியன கோடுபெற்றன. கா ஙா முதலியன புள்ளிபெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். கொ கோ ஙொ ஙோ முதலியன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன என்று உரை விரித்துக் கூறுதலானும் தமிழர் தமக்கென வேறெழுத் துடையரா யிருந்தன ரென்பது துணிபொருளாம். அற்றேல், பினீசியரால் தரப்பட்ட எழுத்துக் களுக்கும் தமிழர்க்கே உரிய எழுத்துக்களுக்கும் வேறுபாடு என்னை எனின்; - பினீசியர்க்குரிய எழுத்துக்களெல்லாம் வலதுகைப் புறத்திலிருந்து இடதுகைப்பக்கமாய் எழுதப்படுவனவாம்;1 தமிழர்க்குரியனவோ இடதுகைப் புறத்திருந்து வலது பக்கமாய் எழுதப்படுவனவாம். இவ்வேறு பாட்டுடன், அவர் கொண்டு வந்தன உருவத்தானும் தமிழ் எழுத்துக்களின் வேறாவனவாம். எகுபதி நாட்டில் எழுப்பிய தூபிகளின் மேற் பொறிக்கப் பட்டிருக்கும் சித்திர எழுத்துக்களினின்றுந் திரித்துச் செய்து கொண்டனதாம் பினீசியர்க் குரிய எழுத்துக்கள்; மற்றுத் தமிழ் எழுத்துக்களோ வெனின், அக்கடியர் என்னுஞ் சாதியார் பல்லாயிர மாண்டுகளின் முன்னே வழங்கிய முளை எழுத்துக்2 களினின்றுந் தோன்றி நடைபெறுவனவாம். அக்கடியர் என்னுஞ் சாதியாரும் பண்டைக்காலத் தமிழரும ஒருவரே யென்பது திருவாளர் பண்டிதர் சவரிராயரவர் களாற் சித்தாந்ததீபிகையில் இனிது விளக்கப்பட்டது; அதன் விரிவு பின்னே காட்டுதும். இனிப், பௌத்த சமயம் விளக்கிய அசோக மன்னன் காலத்திற் செதுக்கப்பட்ட கல்வெட்டெழுத்துக்கள் இருவகைப் படுகின்றன. ஒன்று வலதுபுறத்திருந்து இடது பக்கமாகவும், ஒன்று இடதுபுறத்திருந்து வலதுபக்கமாயும் எழுதப்பட்டிருக் கின்றன3. முன்னையது கபுர்த்தகிரிச் சிலாசாதனங்களிற் காணப் படுகின்றது; இது வட அசோகலிபி என்று சொல்லப்படும். பின்னையது அசோக வேந்தன் கல்வெட்டுக்கள் பெரும்பாலன வற்றிலுங் காணப்படுகின்றது; இது தென் அசோகலிபி என்று சொல்லப்படும். வட அசோகலிபி இந்தியாவின் வடமேற்குப் பாகங்களில் மட்டும் அருகி வழங்குகின்றது. தென் அசோகலிபி இந்தியாவிற் பெரும்பாலும் எங்கும் வழங்குகின்றது. ஆகையால், தென் அசோகலிபி இந்தியாவிலேயே பிறந்த எழுத்துக்களாகு மென்பது நன்கு பெறப்படும். என்னை? புறநாட்டிலிருந்து வந்த எழுத்துக்கள் இந்தியாவிலுள்ள இந்தியமக்கள் எல்லார்க்கும் விளங்காமையின் அவை அப் புறநாட்டை யடுத்த இந்திய எல்லையில் மட்டும் பயன்படுத்தப்பட்டன; உள்நாட் டெழுத்துக்கள் யார்க்கும் புலப்படுமாதலால் அவை இந்தியா வெங்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இங்ஙனந், தென் அசோகலிபி இந்தியாவிற்கே உரிய தென்பதனை இவ்வியல்பு முற்றவும் ஆராய்ந்த தாம, கன்னிங்காம் என்னும் கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர் இருவரும் நன்கு விளக்கினார். இனித், தென் அசோகலிபி என்பது தமிழ் வட்டெழுத்துக் களின் திரிபேயன்றி வேறென்று கூறுதல் ஆகாமையால், அது தமிழர்க்கே உரிய எழுத்தாமென்று நாட்டப்படும். வட அசோகலிபியும் தமிழர் வழியாய்ப் பெறப்பட்ட பினீசியர் எழுத்தேயல்லது பிறிதில்லை. இவ்வவாறு எழுத்துக்களின் இருவகைப் பாகுபாடும் பொருந்தக் காட்டப்பட்டமையால் இந்தியாவில் வழங்கப்படும் எழுத்துப் பினீசியரிடமிருந்து போந்ததென்று உரைப்பார் உரையும், அற்றன்று அஃது இந்தியாவிலேயே பிறந்து வழங்குகின்றதென் றுரைப்பார் உரையும் தம்முள் முரணாமை காண்க. பினீசியரிடமிருந்து போந்ததெல்லாம் இந்திய வடமேற்கெல்லையில் அருகி வழங்கும் வட அசோகலிபியே யாகுமென்பதூஉம், இந்தியா விலேயே தோன்றிப் பண்டுதொட்டு நடைபெறுவது தமிழவட்டெழுத்தின் திரிபான தென்னசோகலிபியே யாகுமென்பதூஉம் பாகுபடுத்து விளங்க உணர்தல் வரலாற்று நூல் வல்லார்க்கு இன்றியமையாத கடமையாம். இவ்வுண்மை தேறாது அவையிரண்டினையும் ஒன்றெனக் கூறி முடிபுரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க. இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணை யென்றும் அஃறிணை யென்றும் பகுத்தோதினார். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறியுணர்வோடு இவற்றைப் பகுத்துணர்கின்ற மனவறிவும் உடைய உயிர்களெல்லாம் மக்களெனப்படுவர் என்றும், இம்மக்களே உயர்திணை யாவரென்றும், ஐம்பொறி உணர்வு மட்டும் உடைய விலங்கு, புள் முதலியனவும் உயிரில்லாத ஏனைச் சடப்பொருளுமாகிய எல்லாம் அஃறிணையாமென்றும் இனிது விளக்கிச் சூத்திரஞ் செய்தருளினார். ஆண் பெண் என்னும் பாற்பகுப்பும் உயர்திணையில் மட்டும் தெற்றென விளங்குதலின் அப் பாகுபாடும் உயர்திணைக்கே கூறி, ஏனை அஃறிணையில் உயிருள்ள எறும்பு முதலியவற்றுள் அப் பகுப்பு அவ்வாறு விளங்காமையின் அதற்கது கூறாராய் விடுத்தனர். எம் அரிய நண்பர்காள்! இப்பாகுபாட்டின் அருமையும், நுட்பமும் நாமுணரா திருக்கின்றோம். பிற மொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக்கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியி லெழுதப்பட்ட இலக்ண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அவற்றின்கண் இவ்வரிய பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது; அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்திபெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும் இதனைக் காணேம் இஃதொன்றோ, அவ் வடமொழியிலுள்ள சொற்பொருட் பாகுபாடுகள் நுண்ணறிவிற்குச் சிறிதும் இயையாவாறாய் அமைந்து கிடக்கின்றன. இல்லம் வீடு என்பன உயிரில்லாத அஃறிணைப் பொருள்களென்பதும், அவை தம்மை ஆண், பெண் என வழங்கல் நகையாடுதற் கேதுவா மென்பதுஞ் சிறுமகாரும் அறிவர். இங்ஙனமாகவும், வடமொழியில் கோயில் என்னுஞ் சொல் ஆண்பாலாகச் சொல்லப்படு கின்றது; சாலை என்பது பெண்பாலென்று சொல்லப்படு கின்றது. மயிர்க்கற்றை என்னும் பொருளுடைய கபரீ என்பது பெண்பாலாம், கேசவேச என்பது ஆண்பாலாம்; விருப்பம் என்று பொருள்படும `இச்சா என்பது பெண்பாலாம்; மநோரத என்பது அண் பாலாம்; மாலைப்பொழுது என்று பொருள்படும். திநாந்த என்னும் ஒருசொல் ஆண்பாலாம்; சந்த்யா என்னும் மற்றொரு சொல் பெண்பாலாம்; உலகம் என்று பொருள்படும் ஜகதோ என்பது பெண்பாலாம்; லோக என்பது ஆண்பாலாம்; சுவர் என்று பொருள்படும் பித்தி என்பது பெண்பாலாம்; குட்ய என்பது அலிப்பாலாம்; காது என்று பொருள்படும் கர்ண என்பது ஆண்பாலாம்; ருதி என்பது பெண்பாலாம்; ச்ரவண என்பதுஅலிப்பாலாம். நண்பர்காள்! ஈதென்ன புதுமை பாருங்கள்! சடப்பொருளான இவையெல்லாம் ஆண் பெண் எனக் கூறினால் யாருக்குத்தான் நகை விளையாது. இவ்வாறு சொற்களை ஒரு வரன்முறையுமின்றித் தோன்றியவாறு அண் பெண் எனக் கூறி, அவைதம்மைச் சொற்றொடர்களில் இயைத்துக் கூறுங்கால் ஆண்பெயர்க்கேற்ப ஆண் வினையும் பெண்பெயர்க்கேற்பப் பெண்வினையும் கூட்டி யுரைக்கவென விதித்தால் இவை தம்மை அறிவுடையோர் கற்க முந்துவரா? வேறு மொழி தெரிதற்கு வழியின்றி ஆரியத்திற் பிறந்து இடர்ப்படுவாரே அதனைக் கற்றற்கு உரியார். பொருள் வகையால் ஈது உயர்திணை, ஈது அஃறிணை யென்று வகுத்தால் பொருட்கேற்பச் சொற்களை வழங்குதலில் யார்க்கும் இடர்ப்பாடு தோன்றாது. பொருள் வகையால் அஃறிணை யென்றே உலகத்திற்கு ஒப்பமுடிந்த ஒரு சொல்லை ஒருகால் ஆணாகவும் ஒருகாற் பெண்ணாகவும் ஒருகால் அலியாகவும் கூறல் வேண்டுமென ஒருமுறையுமின்றி விதித்தால், இச் சொற்களை ஆராய்ந்து இவை ஆண், இவை பெண்,இவை அலி என உறுதி செய்தலிலேயே மாணாக்கர்க்கு வாணாள் கழியும். இனி, இவற்றாற் பெறப்படும் பொருளை யுணர்ந்து அதனை உரிமை கோடற்கு வாணாள் எங்கே உளது? சில வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினரான மக்கள் தம்முயிர்க் குறுதிபயக்கும் உண்மைப் பொருளை உணர்வதற்கு ஒரு கருவியாயமைந்த மொழி கற்றற்கும் பயன்படுத்தற்கும் எளிதாக இருத்தல் வேண்டுமே யல்லது, கடின சொல்லுடைத்தாதல் பயனின்றாம். கருவியே பெரிதிடர் பயப்பதாயின் அதனாற் பெறப்படு பொருள் பயன்தருவ தியாண்டுமில்லை யென்க. இத்துணைக் கடினச் செவ்வி யுடைமையினாலன்றோ வடமொழி உலக வழக்கின்றி இறந்தொழிந்தது. திருஞானசம் பந்தப் பெருமான் முதலான அருட்டிருவாளரும் முழு முதற்கடவுளை வழிபட்டுய் தற்குரிய எளிதான நெறியைச் செந்தமிழ்த் திருப்பாட்டுக்களிலே அருளிச் செய்வாராயினர். இப்பெற்றி இனிது தேர்ந்தே, கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ. என்று திருவிளையாடற் புராண முடையாருங் கூறினார். செந்தமிழ் நண்பர்காள்! இற்றைக்கு நாலாயிரத்து முந்நூறு ஆண்டுகளின் முன்னரே தமிழ்மக்களும் தமிழ் இலக்கண ஆசிரியரும் உயர்திணை அஃறிணைப் பாகுபாடு பொருள் வகையால் இயற்கைநெறி திறம்பாதே உணர்ந்து அறிவுடையார் எல்லார்க்கும் ஒப்ப முடிவதாக விளக்கிய அரிய நுண்ணறிவாற்றல் நுங்களாற் பெரிதும் போற்றற்பாலதேயாம். இன்னொரன்ன வற்றை இதுகாறும் பொதுவாக நினைத்து வந்தது போல் நினையன்மின்! பண்டைத் தமிழ் நூல்களிற் சொல்லப்பட்ட ஒவ்வொரு பொருளும் கிடைத்தற்கரிய முழுமாணிக்கங்களாமென்று தேர்மின்கள்! இவ்வரும் பெறல் மாணிக்கங்களெல்லாம் வரன்முறையே தொகுத்த தொல்காப்பியம் விலை வரம்பு அறியாக் களஞ்சியம் என்று ஆராய்ந்து வியப்பெய்துமின்கள்! இனி, நீர் வேட்டுச் செல்கின்றான் ஒருவன் நறுமணங் கமழும் இளமரக்காவின் இடையிடையே தங்கி அயர்வு சிறிது ஒழிந்து முப்பழச் சாறுந் தேனும் விரசினாற்போற் சுவைக்கும் தெண்ணீர் நிரம்பிய நீர் நிலையிற் சென்று நீர் ஆரப்பருகி வேட்கையொழிந்து அயர்வு முற்றும் நீங்கினாற்போல, ஆசிரியர் தொல்காப்பியனார் திருவாய்மலர்ந்தருளிய எழுத்ததி கார சொல்லதிகாரங்களினிடையே தங்கித் தமிழ்ப்பெருமை தெரியா அறியாமை சிறிது சிறிதே ஒழிந்து இப்போது பொருளதிகாரத்திற் சென்று ஆண்டுவிரிந்த நுண்பொருட் டொகுதியில் ஒன்றிரண்டு நுகர்ந்து எமதறியாமை முற்றும் போக்குவாம். நண்பர்காள்! ஆசிரியர் பொருளை அகம், புறம் எனப் பகுத்த முறையே பெரிதும் நுண்ணறிவு நிறைந்ததாம். உயிர்களின் அறிவு நிகழ்ச்சியே அகம், புறம் என இருதிறப்படுகின்றன. உயிரினுள் நிகழும் அறிவு அவ்வுயிர்க்கே புலனாவதாம். உயிர்க்கு ஓர் உடல் படைக்கப்படா முன்னெல்லாம் அதன் அறிவு புலப்பட்டு நிகழாதாய்ச் செயலின்றி மழுங்கிக் கிடந்தது. இனி அவ்வறிவு அங்ஙனம் மழுங்கிக்கிடக்க வொட்டாது அதனை எழுப்பி விரிவு செய்தற்பொருட்டு அதற்கோர் உடல்தரப்பட்டதாகலின், உயிர் உள்ளறிவு புறப்பொருளோடு இயைந்து நின்று அம்முறையே பெருகுதற்கு இவ்வுடம்பு இடைநின் றுதவுவதொன்றாம். இதனால், அகம், நடு, புறம் என்னும் மூவகைப் பெறப்படு கின்றன. அகம் அறிவு, நடு உடம்பு, புறம் பொருள் என ஆகும். கண் ஒருபொருளைக் காண்டற்கு ஞாயிறு விளக்கமாய் இடைநின்று காட்டுதல்போல உயிரறிவு புறப்பொருளைப் பற்றுதற்கு உடம்பு ஒரு விளக்காமென்க. இதுபற்றியே மெய்கண்டதேவர் மாயா தனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல், ஆயாதா மொன்றை என்றருளிச் செய்தார். இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருட்குணமும் நுட்பவடிவமாய் இவ்வுடம்பிற் பொருந்திக் கிடக்கின்றன; இவற்றோடு வேறற ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற உயிரறிவு அவற்றால் இன்ப துன்ப நுகர்ந்து அறியாமை நீங்கி விளக்கமுடையதாகின்றது. வெளியே தோன்றும் எல்லாப் பொருட் குணங்களும் இவ்வுடலென்னும் பளிக்குப் பாறையிலே வெளிப்பட்டுத் தோன்றுகின்றனவாகலின், இதன் நடுவில் வாழ்கின்ற உயிரறிவு இவையனைத்தையும் உணர வல்லதாகின்றது. ஆகவே அகத்தே தோன்றும் உயிரின் அறிவொழுக்கங்களெல்லாம், புறத்தே அவற்றை எழுப்புதற்குக் காரணமாயுள்ள பொருட் பாகு பாட்டுடன் பொருந்தியே இருக்கும். இந்நுட்ப மெல்லாம் முற்றவும் அறிந்த ஆசிரியர் அகவொழுக்கத்தைக் கைக்கிளை முதற் பெருந்திணை இறுதியாக எழு கூறாகப் பிரித்தார்; அங்ஙனம் பிரித்ததற்கேற்பவே அவற்றோடு ஒற்றுமையுடைய புறப்பொருளையும் எழு கூறாக்கினார். இனி ஓருயிர் பிறிதோர் உயிரோடு பொருந்தும் வழிப் பிறக்கும் இன்பதுன்ப நுகர்ச்சியெல்லாம் ஆசிரியர் ஒருங்கே விளக்கியுரைக்கும் திறம் மிகப் பெரிது. இவர்போல் உயிர் இயற்கை முழுதுணர்ந்து உரைத்த வேறு புலவர் ஆங்கிலமொழி வல்ல செகப்பிரியர் ஒருவரேயாம். அகத்தே தோன்றும் அவ்வின்ப துன்ப நிகழ்ச்சிக் கேற்ற இடம் பொழுது முதலாக ஆசிரியரான் ஆராய்ந்துரைக்கப் பட்டனவெல்லாம் இன்று காறும் உலக இயற்கை பிழையாது வருகின்றன. இங்ஙனம் உலக இயற்கை முழுதுணர்ந் திலக்கண முரைத்த ஆசிரியரை வேறு எத்தேயத்தினும் எந்த மொழியினுங் காண்டல் அரிது அரிது. இனி, உயிரின் அகத்தே தோன்றும் உணர்வு நிகழ்ச்சிக ளெல்லாம் இவ்வுடம்பின் புறத்தே முகத்திற் றோன்றுன்பது மெய்ப்பாட்டியலில் வரம்பு செய்துரைக்கப்பட்டது. இன்னும் அம்முகத்திற் கண்களிலேயே அக நிகழ்ச்சி முழுது முணரப்படுமென்று விளக்கி, நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். என்று கட்டளை யிட்டருளினார். தெய்வப்புலமைத் திருவள்ளுவரும் இதனைச் சிறப்பித்துக் கூறுமாறு காண்க. உரிமை நண்பர்காள்! உலக இயற்கை உயிர் இயற்கை களெல்லாம் இங்ஙனம் வரைசெய்த இலக்கணமெழுதிய ஆசிரியர் தொல்காப்பியனாரை ஒத்த ஆசிரியரையாயினும், அல்லாதவர் அருளிச் செய்த தொல்காப்பியம் போன்ற பிறிதொரு நூலையாயினும் இற்றைக்கு நாலாயிர ஆண்டுகளின் முன் நாகரிகமெய்திய எத்தேசத்திலாயினும் எம்மொழியி லாயினுங் காட்டுதல் கூடுமா? நடுநிலைதிறம்பா துரைமின்கள்! இனி, இவ்வுலகத்தின் உள்ளும் புறம்புமாய் நின்று அறியவல்லதை அறிவித்தும், அசைய வல்லதை அசைவித்தும் பேரொளிப் பிழம்பாய் அருவாய் அறிவாய் இன்பமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் நிலையைச் சுட்டி ஆசிரியர் தொல்காப்பியனார் இற்றைக்கு நாலாயிர ஆண்டுகளின் முன்னே நிறுவிய பொருட்டிட்பத்தை அதேகாலத்திற் றோன்றிய ஆரிய சாதியார் நூல்களிற் சொல்லிய தெய்வ நிலையோடு ஒப்பிட்டுக் காண்போமாயின் தமிழரது பண்டைக்கால நாகரிக வளம் மேலும் மிக்குவிளங்கும். ஆசிரியர் கொடி நிலை கந்தழி வள்ளி என்ற சூத்திரத்தில் கந்தழி என்னும் முழுமுதற் பரம்பொருள் ஒரு பற்றுமற்று அருவாய்த தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள் என்று வலியுறுத்தார். இஃததற்குரை கண்ட நச்சினார்க்கினியர் கூறுமாற்றான் நன்கு பெறப்படும். இதனாற் கந்தழி எனப்படுங் கடவுள் சித்து, சடம் என்னும் இருவகை யுலகினுள்ளும் ஒன்றன்றாய் இவை தம்மையெல்லாம் முற்றும் சூழ்ந்து கொண்டு எவ்வகைப்பற்றுமின்றி நிலைபெறும் பேரின்ப நிலையமென்பது பெற்றாம். அத்துணைப் பழைய காலத்தே கடவுட்டன்மையினை இவ்வாறுணர்ந் துரைத்தவர் உலகில் வேறு யாண்டுங் காணப்படார். மிகவும் பழைய நூலான இருக்குவேதத்தை ஆராய்ந்து பார்மின்! இருக்குவேத காலத்து ஆரியர் ஒளியுடைப் பொருளையும் அவற்றோடு தொடர் புடையவற்றையும் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். இதற்குத் தேவ என்னுஞ் சொல்லே சான்றாம்; இச்சொல் ஒளி என்று பொருள்படும் திவ் என்னும் வேர்ப்பொரு ளினடியாகப் பிறந்ததாகும். ஆகவே, ஒளியுற்று விளங்கும் விண்ணையும், வான்மீன்களையும், கதிரவனையும், விடியற் காலத்தையும், நண்பகற் பொழுதையும், பிறவற்றையுந் தெய்வங் களாகத் துணிந்து வழிபடுவாராயினர். இன்னுந் தேவர் களெல்லாம் வான். நிலன் என்னும் இரண்டின் பிள்ளை களென்றும் ஆண்டாண்டு அந் நூலிற் சொல்லப்பட்டனர். சோம என்னும் ஒரு வகைப் பூண்டை நசுக்கிப் பிழிந்தெடுத்த இரசம் மதுக்களிப்பைத் தருவதெனவும்; இச் சோமரசமே வான், நிலன், நெருப்பு, கதிரவன், இந்திரன், திருமால் என்னுந் தெய்வங்களை யெல்லாந் தோற்றுவித்த தெனவும் ஒரு சில இடங்களில் இருக்கு வேதங் கூறுகின்றது. வேறு சில இடங்களில் சாவித்திரியும், நெருப்பும் தேவர்கட்கு இறப்பில்லா வரம் அருளிச் செய்தனர் என்கின்றது. மற்றுஞ் சில இடங்களில் எல்லாத் தேவர்களும் ஒரே வகையான ஆற்றலுடையரென் றுரைத்துப் போய்ப் பின் நெருப்பு, இந்திரன், கதிரவன் எனும் மூவரே மற்றை எல்லாரினுஞ் சிறந்தோராவ ரென்கின்றது. இன்னும் இவரைத் தவிரத் தய, பிருதிவி, அதிதி, ஆதித்யர், வருணன், பர்ஜன்யன், வாயு, மருத்துக்கள், மித்திரன், பூஷன், உஷ, அசுவினிகள், த்வதிரி, ரிபுக்கள், விசுவகர்மன், ப்ரஜாபதி, ப்ருகபதி, வாக், சோம, ருத்ர, யமன் விசுவ தேவர்கள், பித்ருக்கள் முதலாகத் தேவர் பலப்பலர் கூறப்படுகின்றனர். விஷ்ணு என்று சொல்லப்பட்ட தெய்வம் திருமால் அன்று. சூரியனே காலை, நண்பகல், பிற்பகல் என்னு முப்பொழுதினும் வான் கடந்து செல்லு நிலையில் இங்கே விஷ்ணு வென்னும் பெயரோடு பொலிகின்றான் என்று சொல்லப்பட்டிருக்கின்றத. உருத்திரன் என்று சொல்லப்பட்ட தெய்வம் சிவபிரான் அன்று; சூறாவளிக்குத் தெய்வமே உருத்திரன் என்று ஆண்டுச் சொல்லப்பட்டிருக்கின்றது. ருத்ரன் என்னுஞ் சொல்லுக்கு வேர்ப்பொருள் முழக்கமிடு வோன் ஊளையிடுவோன் என்பனவாம். இவ்வேற்றுமை தெரியாதார் உருத்திரனுஞ் சிவனும் ஒருவரேயெனத் தமக்குத்தோன்றியவாறே மொழிவர். சிவம் என்பது கந்தழி என்னும் வேறு பெயருமுடைய பரம்பொருள்; அஃது உருத்திரன் பிரமன் என்றற் றொடக்கத்துத் தேவர்கட்கெல்லாம் அப்பாற்பட்டதொன்றாம்; இவ்வுண்மை, தேவர்கோ வறியாததேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்க்கோ னாய்நின்ற முதல்வன். என்ற மாணிக்கவாசகப் பெருமான் அருமைத் திருவாக்கானும் நன்று தெருட்டப்படும். இருக்கு வேதம் முழுவதும் துருவித் துருவிப் பார்ப்பினும் சிவம் என்னும் பரம்பொருளியல்பு காணப்படமாட்டாது. அங்கெல்லாம் உலக இயற்கைப் பொருள்களாற் றாம்பெறும் பயன் குறித்து அவை தம்மையெல்லாம் தம் அறியாமையாற் றெய்வங்களாகக் கருதி ஆரியமக்கள் வழிபட்டு வந்த கீழ்நிலை அறிவு புலப்படக் கிடக்குமே யல்லது, பரம்பொருட் சொரூப முணர்ந்த மேல்நிலை அறிவு சிறிதாயினும் ஆண்டுப் பெறப்படுதலில்லை. அறிவிற் சிறந்த தமிழ் மக்காள்! இங்ஙனம் வேதத்தின் உண்மைகூறி மாந்தர்க்கு அறிவு கொளுத்த வருவாரைக் கண்டு மனம் புழுங்கி உயர் குலத்தினரெனத் தம்மை இறுமாந் தெண்ணி யிருப்பார் சிலர் அவை திகர் எனப் புறம்பழிப்பர். அவர் கூறும் அப் புறம் பழிப்புரைக்குச் சிறிதும் அஞ்சன்மின்! எவர் யாது கூறினும் உண்மை கரக்கப்படாதென்க. இத்துணைக் கீழ்நிலை அறிவையே போதித்துப் பயனின்றி விரிந்துகிடக்கும் அவ்வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாதவர் என்று எம்மைப் புறம் பழிப்பதுபற்றி நம்மனோர்க்கு வரும் இழுக்கென்னை? ஒருசிறிது மில்லையாகலின், நாம் தத்துவ வுரிமை கைவிடாமாய் மெய்ப்பொருள் கூறுதலையே கடைப் பிடிப்பாமாக. நமக்கும் மற்றும் அறிவுடையார் எல்லார்க்குஞ் சிறந்த பிரமாண மெய்ந்நூல்களாயுள்ள தொல்காப்பியம், திருக்குறள் முதலியனவே நமக்குச் சாலுமென்று மனந்திருந்து மின்கள்! பிறர் கூறும் பகட்டுரைக்கஞ்சி உண்மையைக் கைவிட்டு விடாதீர்கள்! இனிச், சிவம் என்னும் அப் பரம்பொருள்நிலை அவ்விருக்குவேதத்திற் கூறப்படாதது கொண்டு அதன் பெருமை குன்றுமாறில்லை. பரப்பிரமப்பொருள் நிலையறிய மாட்டாத அறிவில்லாப் பிள்ளைமைப் பக்குவத்தின் கண்ணரான ஆரியமக்கள் செய்த அவ் விருக்கு வேதத்திற் கழிபெருநுண்ணறிவாற் றமிழ்நன்மக்களறிந்த அம்முழுமுதற் பொருள் நிலை எவ்வாறு காணப்படும்? சிறார் இழைத்து விளையாடும் மணற்சிற்றிலிலே நுண்ணறிவுவாய்த்த தச்சரியற்றும் அழகிய மாடங்கள் காணப்படதலுண்டோ? எந்த நுண்பொருள் எவர் வயின் வருமோ அஃது அவர்பாலே ஆராயற்பாலதாம். அஃதொழிந்து ஓர் அறிவுடையாரிடத்துப் பெறப்படும் ஓரரும் பொருளை ஏனையோர் அறிவிலாரிடத்துக் கேட்க முந்துவாரைப்போல் தமிழ் நூற்களிற் குறிக்கப்படும் அந்தரங்க மெய்ப்பொருட்குப் பிரமாணம் வடநூலிற் றேடுதல் பெரிதும் நகையாடி இகழற்கே ஏதுவாம். இவ்வாற்றால் யாம் வடநூல்களை இகழ்கின்றேம் என்று நினையன்மின்! யாம் அவற்றின் உண்மைத்தன்மை கூறியதே யன்றிப் பிறிதில்லை. இனி வடநூலிற் சிறந்த நுண்ணறிவு காணப்படும் சாங்கியம், உபநிடதம், வேதாந்த சூத்திரம், சிவாகமம் முதலியவற்றை இங்ஙனந் தாழ்த்துக் கூறுதற்கு யாம் ஒரு சிறிதும் ஒருப்படேம் ஒருப்படேம். இனி அவ்விருக்குவேதத்திற் போந்த அப் பல்தேவர் வழிபாடேனும் விழுப்பமுடையவா வென்று ஒருசிறிது ஆராய்வாம். மதுக்களிப்பை விளைத்து அறிவை மயக்கி மழுக்கும் சோமரசபானத்தைச் சிறப்பித்துப் புகழ்ந்த பதிகம் ஒன்றனை இங்கே மொழி பெயர்த்து வரைகின்றோம்; அது கொண்டு அவ்விருக்கு வேதப்பான்மை அறிவுடையார்க்கு எல்லாம் இனிது விளங்கக்கிடக்கும். இருக்குவேத ஒன்பதாம் மண்டிலம், முதற்பதிகம் சோமபவமானம் இந்திரன் பருகுதற்பொருட்டு நறுக்கிப்பிழிந்த ஓசோமரசமே! மிகத் தித்திப்பதாய் மகிழ்ந்த செலவினை யுடைய நீரோடைபோல் சுத்தமாய் நின்வழியே ஒழுகுக. (1) பகைவரை யடக்குவோய்! மக்களெல்லார்க்கும் நட்பாள! அப்பரிசையால் அவன்தன் உயர்நிலையையும் இருப்பரணையும் அடைந்தான். (2) நீ வீருத்திரனைக் கோறற்குச் சிறப்புடையை யாகுக, இன்பந் தருதற்குத் தலைமையுடையை யாகுக, மிகுந்த வள்ளன்மை யுடையை யாகுக: செல்வமிகுந்த எம் இளவரசர் கொடையை விருத்திசெய்க. (3) வலிய தேவர்கட்கு ஆற்றும் விருந்திற்கு நினது இரசத் தை ஒழுகச்செய்க: எங்கட்கு வலிவும் புகழும் உண் டாதற்பொருட்டு இங்கே வருக. (4) ஓ இந்துவே! நாளுநாளும் இவ்வாறே கருத்தோடு நின்னருகே வருகின்றோம்: நினக்கே எம் வேண்டுகோள் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. (5) சூரியன் புதல்வி என்றும் யாட்டுமயிர்க் கம்பலத்தால் நின் சோமரசத்தை வடித்துச சுத்தியாக்கி ஒழுகவிடுகின்றாள். (6) மெல்லியரான பதின்மர்தோழிமார் நறுக்கும் இயந்திரத்தில் அவனைப் பிடித்துவைத்து முடிவுநாள் வரையில் அவனை விடாது கொண்டிருக்கின்றனர். (7) அக்கன்னிமகளிர் பின் அவனைப் போகவிடுகின்றார்: இசை கூட்டுவானைப்போல் அவர்கள் துருத்தி ஊதிப் பகைவரை ஒட்டும் முக்கூட்டுப் பானத்தை உருகச் செய்கின்றனர். (8) இந்திரன் பருகுதற்பொருட்டு, ஊறுசெய்யப்படாத பால் ஆக்கள் அவனைச் சுற்றிலுங் கூடியிருந்து புதிய இளஞ் சோமரசத்தில் தமதுபாலைக் கலப்பிக்கின்றன. (9) இவ்விரசத்தைப் பருகின பெருகளிப்பால் இந்திரன் விருத்திரரை எல்லாம் கொல்கின்றான்: அவன் தன்செல்வத் தை நமக்குச் சொரிந்து தருகின்றான். (10) இப்பெற்றியவாம் பதிகங்களே இருக்குவேதம் முழுவதும் நிரம்பிக் கிடடக்கின்றன. இன்னோரன்ன பதிகங்களிற் காணப் பட்ட வழிபாடுகள் இன்றும் மிக மந்த பக்குவமுடைய மாக்கள் நாடுகளிற் காட்டேரி, இருளன், கறுப்பன் முதலிய சிறு தெய்வங்களை வழிபட்டு வரும் முறைகளோடு ஒத்திருக் கின்றனவே யல்லது வேறென்னை? இன்னும் ஆரியர் சோமரசபானத்தான் வேள்விகள் வேட்டதன்றியும் வெள்ளாடுகள், செம்மறியாடகள், பசுமாடுகள், எருமை மாடுகள், குதிரைகள், மனிதர் முதலிய எண்ணிறந்த உயிர்களைக் கொன்றுவேட்டு அவற்றின் ஊனைப் புசித்து வந்தார்கள். மனிதன் மனிதனைக் கொன்று புசிக்குஞ் செய்கை எவ்வளவு கொடுமையான செயல்! நக்கவாரம் முதலிய தீவகங்களில் வசிக்கும் மிக்க அநாகரிக சாதியாரே இன்றும் மனித ஊன் புசித்து வருகின்றனர். உயிர்களில் மனிதர்க்குப் பலவகையாலும் பயன்படுதலுடைய பசுமாடு, குதிரை முதலியவற்றைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்று அவற்றின் ஊனைவிரும்பி வேண்டியமட்டும் புசித்து வந்தனராயின், பண்டைக் கால ஆரியசாதியார் எவ்வளவு கொடியவர்க ளென்றும் எவ்வளவு அறியாமை யுடையவர்களென்றும் எண்ண வேண்டியிருக்கின்றது! இவ்வளவு கொடுஞ் செயலுஞ் செய்து கொண்டு, இக்கொடுஞ்செயலுக் குதவியாகத் தாம் பாடி வைத்துக் கொண்ட இழிந்த வேதப்பாட்டுக்கைளைத் தம்மின் வேறான தமிழ்மக்களும் ஒருப்பட்டுத் தழுவிச் சிறப்பிக்கும்படி வற்புறுத்து வரும் அவர் செயல் நினையுங்கா லெல்லாஞ் சாலவும் வஞ்சனையுடைத்தென்று தோன்றுகின்றது. இத்தகைய கொடுஞ் செய்கையுஞ் சுவர்க்கத்தைத் தருமென்ற அவரது போலிப் பொய்யுரையை மறுத்தற்கன்றே நம்முது குரவரான தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. என்று திருவாய் மலர்ந்தருளினார். சாங்கியம் என்னும் அரிய தத்துவநூல் வகுத்தெழுதிய பேரறிவாளரான கபிலரும் கணக்கில்லாப் பிராணிகளைக் கொல்வித்து அவற்றின் இரத்தத்தை ஆறாய்ப் பெருகச் செய்வித்தலின் வேதங்கள் அசுத்தமுடையன.1 என்று ஓதினார். அது நிற்க. இனி, மேற்கூறியவாறு இருக்குவேதம் முதலியன சாமானிய பௌதிக வழிபாட்டில் தலை நின்றனவாயினும், அவ்வேத முடிபான உபநிடதங்களும் சாங்கியம் வேதாந்த சூத்திரம் முதலியனவுமெல்லாம் உயர்ந்த தத்துவ நுண்பொருள் போதிக்கக் காண்டலின் ஆரியமக்கள் பிற்றைஞான்று பேரறிவுடையராயினா ரென்னாமோ வெனின்;- என்னாம். உபநிடத முதலான ஞானநூல்கள் ஆரியமொழியில் எழுதப் பட்டிருத்தல்பற்றி அவை ஆரியமக்களாற் செய்யப்பட்டன வென்றல் வழுவாம். பண்டைநாளில் தமிழ்மக்கள் வடக்கே இமயமலைச் சாரல்வரையிலும், மேற்கே ஆப்கானிதானம் வரையிலும் பரவியிருந்தனர். இதற்கு அறிகுறியாக இன்றும் ஆப்கானி தானம் பெலுசிதானம் என்னும் நாடுகளில் தமிழோடு மிக்க தொடர்புடைய பிராகி என்னும் மொழி வழங்கப்பட்டு வருகின்றது. இமயமலைச் சாரலில் வாழும் குன்றவர் களெல்லாரும் தமிழின் றிரிபான ஒரு மொழி வழங்கி வருகின்றனர். இதுவே யன்றி வடநாட்டிற் பழைய பல ஊர்களெல்லாந் தமிழ்ப் பெயர்பெற்று விளங்குகின்றன. தமிழூக் என்னும் ஊர் வடநாட்டிலிருத்தல் யாருமறிந்த தொன்றேயாம். இஞ்ஞான்றும் வடநாட்டி லிருப்போரிற் பெரும்பாலார் பண்டைக்காலத் தமிழ் மரபினரேயாவர். மொழி காலவேறுபாட்டால் வேறு படினும் மக்கள் சாதிப் பிறப்பு யாண்டும் ஒருதன்மையாகவே யிருக்கும். முன்நாளிற் றமிழர் மிகப் புகழ் பெற்று வாழ்ந்தபோது வடஆசியாவிலிருந்து சிந்து நதிப் பக்கமாய் ஆரியமக்கள் இந்தியாவினுட் புக, உள்ளிருந்த தமிழர்இயற்கையிலே விருந்து வருவாரை ஓம்பிப்போற்றுங் கடப்பாடுடையராதலால் தம் நாடு தேடிப் பிழைக்கவந்த ஆரியமக்களை நல்வரவாக ஏற்று அவர்க்கு வேண்டுவன தந்து ஓம்பினார். ஆரியர் வருங்காலத்துத் தமிழர் மிக்க நாகரிக வாழ்வுற்றிருந்தன ரென்பதை இருக்குவேத வுரைகொண்டு முன்னரே இனிது விளக்கினாம். இனி, அங்ஙனம் போந்த ஆரிய மக்களோடு தமிழர் பெரிதும் அளவளாவினாரகலின், அவர்க்குரிய ஆரிய மொழியினையுந் தாங்கற்று அதனையும் பண்படுத்துவந்தனர். ஆரியமக்கள் செய்யும் வேள்வி விழாக்களுக்குத் தாமும் பொருளுதவி செய்து அவற்றை நடைபெறுவித்து வந்தனராயினும், அவ்வேள்வி வேட்டல் சிறிதும் பயன்படாமை அறிவித்து அவர்க்குத் தத்துவ நுண்பொருள்களையுந் தமிழர் ஆங்காங்கு உணர்த்து வாராயினர். புதியராய் வந்தோர் தாம் வழக்கமாக மேற்கொண்டு செய்யும் ஒரு கருமத்தைச் சடுதியிற் செய்யவேண்டாமென்று நிறுத்தினால் அவர்மிக மனம் வருந்துவராகலின், அவர்க்கு முதலில் உதவியாளராய் நின்று அவர் வேண்டிய வேள்விக் கன்மங்களையும் நடாத்திவந்த தமிழர் பின் சிறிது சிறிதே அவர்க்குத் தத்துவ நுண்பொருளறிவு கொளுத்தி வேள்வி வேட்டல் பயன்படாமையே யன்றித் தீவினையுடைத் தாதலுங் காட்டுவர். இங்ஙனந் தமிழாசிரியர் காட்டிய அறிவுமொழிகளே உபநிடதங்களென்று பிற்றைஞான்று பெயர் பெறலாயின. உபநிடதங்களெல்லாம் ஒரு முகமாய் நின்று வேள்விவேட்ட லாகாதென்றும், மக்களெல்லாருந் தத்துவஞானந் தலைப்படுதல் வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றன. வேதங்களிற் சொல்லிய கன்மங்களுக்கு முற்றும் மாறுபாடாய் நின்று அவை தம்மைப் பழித்துத் தத்துவ ஞான மேம்பாடு புலப்படுக்கும் பெற்றியனவாம். அவை வேதாந்தமெனவும் பெயர்பெறுகின்றன. வேதமும் வேதாந்தமும் தம்மிற் பெரிதும் முரணி நிற்பனவாம். வேதம் கன்மங்களை மிக்கெடுத்துக் கூறுவன; வேதாந்தம் அவற்றைப் பழித்து ஞானத்தை மிக்கெடுத்துக் கூறுவன; வேதம் ஆரிய மக்களாற் செய்யப்பட்டன; வேதாந்தம் தமிழ்மக்களாற் செய்யப்பட்டனவாம். வேதமட்டும் அறிந்த ஆரியர் வேதாந்தமறிந்த தமிழர்பால் அதனைக் கற்றறிவா ராயினர். பண்டைக் காலத் தமிழர்க்குட் புகழ்பெற்ற வேந்தரா யிருந்த சனகன் சைவலி, அசாதசத்துரு முதலிய மன்னர் மன்னர் ஆரியர்க்கு வேதாந்தம் உணர்த்திய வரலாறு சதபாதபிராமணம், உபநிடதம் முதலிய நூல்களாற் றெற்றென விளக்கப்படுகின்றது. தமிழமன்னரும் அம்மன்னர் குடியாரும் ஆரியரால் அரசினியார் என்றழைக்கப்பட்டவாறு முன் இனிது விளக்கிப் போந்தாம். அப்பெற்றியராம் ராஜந்யர் ஆரியர்க்குத் தத்துவஞானம் புலங்கொள அறிவுறுத்து வந்தமைக்கு ஈண்டு இரண்டோர் உதாரணங் காட்டுதும்: சதபாதபிராமணம் 11 ஆம் புத்தகம் விதேகர்கட்கு மன்னனான சனகன் அப்போதுதான் வந்த பிராமணர் சிலரைச் சந்தித்தான். அங்ஙனம் சந்திக்கப் பட்டவர்கள் சுவேதகேது ஆருணேயர், சோமசுஷ்ம சத்தியஞ்ஞர், யாஞ்ஞவற்கியர் என்பவராம். mt‹ mt®fis neh¡»: ‘Ú§fŸ m¡Ã nAh¤âu¤ij v›thW brŒ»‹Ö®fŸ? என்று வினவினான். பிராமணர் மூவரும் தம்மாற் கூடியவரையினும் விடை கூறினராயினும், அவர் கூறிய தொன்றேனும் திருத்தமான தன்று. யாஞ்ஞவற்கியர் கூறியது சிறிது பொருந்தினும் அதுவும் முற்றும் திருத்தமாகவில்லை. சனகன் அவ்வளவுதானேவென்று சொல்லிவிட்டுத் தன் இரதத்தின்மேலேறிப் போயினான். அக்குருக்கள் மூவரும் ராஜந்ய வகுப்பைச் சேர்ந்த இப்பயல் நம்மை அவமானம் செய்தனனே என்று கூறினார். யாஞ்ஞவற்கியர்மட்டும் இரதத்தின் மேலேறி அவ்வரசனைத் தொடர்ந்து போய் அவனால் அதன் நுண்பொரு ளறிவிக்கப்பட்டுத் தமதறியாமை நீங்கினார். அதுமுதற் சனகன் பிராமணனாக நன்கு மதிக்கப் பட்டான் என்று சொல்லப்பட்டது. சாந்தோக்கிய உபநிடதம் ரு-வது பிரபாடகம், 3-வது கண்டம், சுவேதகேது ஆருணேயர் பாஞ்சால மன்னன் அவைக்களத்தே சென்றார். பிரவாகன சைவலி என்னும் அவ்வேந்தன் அவரை நோக்கிப் பிள்ளாய்! Ëwªij Ãd¡F Phndhg njrŠ brŒjduh? என்று கேட்டான். ஐயா! ஓம் அவர் செய்தனர் என்று அவர் விடை கூறினார். (1) ‘இந்நிலத்தினின்றும் மக்கள் எங்கு எழுகின்றனர் நீ அறிவையா?’ என்று வேந்தன் வினவினான் அதற்கு அவர் ‘ஐயா, நான் அறியேன்’ என்றார் ‘திரும்ப அவர் எங்கு செல்கின்றார் அறிவையா?’ என வினவினான்; அதற்கவர் ‘ஐயா நான் அறியேன்’ என இறுத்தார்; தேவயானத்திற்கும், பிதிர்யானத் திற்கும் எங்கே பேதமுண்டாகின்றது அறிவையா?’ என வினவினான்; ‘ஐயா நான் அறியேன்’ என்றார்.(2) ‘மறுமையுலகம் ஏன் நிறைக்கப் படுவதில்லை அறிவையா?’ என்று வினவினான்; அதற்கு அவர் ‘அறியேன் ஐயா’ என்றார்; ‘பஞ்சமாகுதியில் திரவப்பொருள்கள் ஏன் புருஷசப்தமெய்துகின்றன அறிவையா?’ என்று வினவினான்; அதற்கவர் ‘ஐயா நான் அறியேன்’ என்றார்.(3) அப்படியாயின் உபதேசம் பெற்றேனென்று ஏன் இங்கு வந்தாய்? ஒன்றுமறியாதவன் அறிவிக்கப்பட்டானென்று நீ எப்படிச் சொல்லலாம்? என்றான் அரசன். அதனைக் கேட்டலும் மிக்க விசனத்தோடும் தன் தந்தையிடம் திரும்பிப் போய் தந்தாய்! எனக்கொன்றும் உபதேசியாமலே, எல்லாம் உபதேசிக்கப்பட்டன வென்றீரே’ என்றான்.(4) அப்பொல்லாத அரசன் என்னை ஐந்து வினாக்கள் வினாவினான், அவற்றுள் ஒன்றற்கேனும் என்னால் விடை யிறுக்க முடியவில்லையே என்றான். அது கேட்ட தந்தை ‘நீ சொன்ன அக் கேள்விகள் ஐந்தனுள் ஒன்றற்கேனும் எனக்கே விடை தெரியவில்லையே; அவை எனக்குத் தெரிந்தனவாயின் நினக்கேன் யான் சொல்லாமலிருப்பேன்? என்று கூறினான்(5). கௌதமகோத்திரத்தாரான அவர் தந்தை அவ்வரசன் அரண்மனைக்குப் போயினார். அவர் வருகையைக் கண்ட அரசன் விருந்தினர்க்குச் செய்யும் வழிபாடுகளெல்லாம் ஆற்றினான். மறுநாட் காலையில் அவர் அரசன் அவைக் களத்தே சென்றார். அரசன் அவரை நோக்கி, ஓ கௌதமரே! உலகத்துப் பொருள்களிற் சிறந்ததெதுவென்று நினைக்கின்றீரோ அதனைக் கேளும் என்றான். அதற்கவர் உலகியற்பொருள்கள் எனக்கு வேண்டாம் அவை நின்பாலே யிருக்கட்டும். ஓ வேந்தனே! நீ என் புதல்வனைக் கேட்ட ஐந்து வினாக்களையும் எனக்கு விளக்கிச் சொல்லுதல் வேண்டும் என்றார் (6) அதுகேட்டரசன் விசனமுடையானய், என்னுடன் சிலநாள் இருக்கக்கடவீர் என்று கட்டளையிட்டான். அது கழிந்தபின் அரசன் அவரை நோக்கி, நீர் இவ்வாறு விசாரணை செய்யப் புகுந்தமையானும், இதற்கு முன் பிராமணன் எவனும் இவ்விரகசியத்தை அறியானாகலானும், இவ்வுலகத்திலுள்ள எல்லா மக்களுள்ளும் ராஜந்யர்க்கு மாத்திரமே இதனை உபதேசிக்கும் உரிமையுண்டாகலானும் யாம் இதனை உமக்கு அறிவுறுத்துகின்றாம் என்று உபதேசிக்கத் தொடங்கினான் என்று சொல்லப்பட்டது. இன்னும் இவைபோல உபநிடதங்களில் ஆண்டாண்டு வருவனவெல்லாம் ஈண்டுக் காட்டலுறின் இது மிகவிரியுமென வஞ்சி விடுக்கின்றாம். இவை தம்மால் தேறப்படும் முடிபுரை யாதெனின், ராஜந்யர் அல்லது அரசினியார் என்று ஆரியரால் அழைக்கப்பபெற்ற பண்டைக்காலத் தமிழ் நன்மக்களே ஆரியப் பிராமணர்க்குத் தத்துவ ஞானோபதேசஞ் செய்து வந்தன ரென்பதேயாம் என்க. ஆகவே, உபநிடதம் தமிழாசிரியரால் ஆரியமொழியில் எழுதப்பட்டன வென்னுமுண்மை தெளிபொருளாய் நிலைநிறுத்தப் பட்டது. வேதாந்த சூத்திரம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், முதலியனவெல்லாம் வகுத்து நுண்பொருள் பொதுள எழுதினார் தமிழாசிரியரேயா மென்பதூஉம், புத்தசமயம் விளக்கிய கௌதமசாக்கியரும் தமிழாசிரியரேயா மென்பதூஉம் முல்லைப்பாட்டாராய்ச்சி, திருக்குறளாராய்ச்சியில் நன்கு விளக்கிக் காட்டினாம். ஆண்டுக் காண்க. இவ்வாறு தத்துவஞானங்களும் அவை திருந்த விளக்கிய உபநிடதம் சிவாகம முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற் றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியனவெனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப்பெறாரெனவுங் கூறுதல் சிறுமகாரானும் எள்ளி நகையாடற்பாலதாம். இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர்பார்த்தல் ஒப்பத் தமக்கு அறிவுகொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்துபோதரும் படிற்றொழுக்கம் மிகப்பெரிது! அவர் படிற்றொழுக்க வியல்பு இனைத் தென்றறியாத நம்மனோரும் அவர்மயக்கவுரையில் விழுந்து அவமேயாகின்றார். இனியேனும் தம் பெருஞ்சிறப் புணர்ந்து ஆக்கமெய்துவாராக. அடிக்குறிப்புகள் 1. 1905 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் செய்த சொற்பொழிவு. 2. Historic Times. 3. Pre - Historic Times. 4. 4-ஆம் அத். 2, 13 5. 4-ஆம் அத். 1, 126. 6. 4-ஆம் அத். 1, 171. 7. 4-ஆம் அத். 1, 178. 8. 4-ஆம் அத். 1, 178. 9. Prof. Rhys David’s Buddhist India P. 156. 10. Vide Pandit. Saviriroyan’s excellent article on ‘The Admixture of Aryan with Tamilian’ - The Light of Truth. 11. Compare Pandit Saviriroyan’s able and admirable article on the Aryan Admixture with the Tamilian. 12. “All the present available evidence tends to show that the Indian alphabet is not Aryan at all;; that it was introduced into India by Dravidian merchants,” - Buddhist India, p.119. 13. OPhir. 14. Max Muller’s Science of Language, Ist Vol. 15. Buddhist India, p.114 16. Cuneiform Letters. 17. R.C. Dutt’s Ancient Indiaia, p.24, 2nd Vol. 18. சாங்கியகாரிகை. பின் இணைப்பு 1. உயிர்களின் தோற்றம் இந் நிலஉலகத்தில் உயிர் உள் பொருள்களும் உயிர்இல் பொருள்களும் ஆகிய இருவகையும் ஒருங்கு காணப்படுகின்றன. இவற்றுள், உயிர்உள் பொருள்களுக்குப் பயன்படுமுகத்தால் உயிர்இல் பொருள்கள் ஆராய்ந்தறியப்படுகின்றனவேயன்றி, இவை முன்னையவற்றின் தொடர்பின்றி அங்ஙனம் அறியப் படுதலைக் காண்கிலேம். ஆகவே, உயிர்ப் பொருள்களைப் பற்றித் தெளிவான அறிவு பெற்றால், அவ்வறிவு பெறுவார்க் கெல்லாம் அஃது அறிவும் இன்பமும் அளித்து, அவரது மண்ணுலக வாழ்க்கையை விண்ணுலக வாழ்க்கை யோடொப்பச் செய்யுந் திறத்ததாம் என்பதனை அனைவரும் நினைவிற் பதித்தல் வேண்டும். இனி, இங்ஙனம் இன்றியமையாது ஆராய்ந்து அறியற் பாலனவாகிய உயிர்களோ எண்ணிறந்த கோடியன; என்றாலும், அவைதம்மிற் புலனாகும் உணர்வின் அறிவின் பெருமை சிறுமை கண்டு, அவைதம்மை ஆறு தொகுதிகளாகப் பகுத்துப், பண்டைத் தமிழாசிரியராகிய தொல்காப்பியனார் அளவு படுத்தி யிருக்கின்றார். தொட்டாலுணரும் உணர்ச்சிமட்டும் உடைய ஓர் அறிவுயிர்களும், தொடுதலுடன் நாவினாற் சுவைத்துணரும் ஈர் அறிவுயிர்களும், தொடுதல் சுவைத்தலுடன் மோந்துணரும் மூக்குணர்வும் வாய்ந்த மூவறிவுயிர்களும், இம் மூன்றனுடன் கண்ணாற் கண்டுணருங் கண்ணுணர்வும் வாய்ந்த நாலறிவுயிர்களும், இந்நான்கனுடன் செவியாற் கேட்டுணருஞ் செவியுணர்வும் வாய்ந்த ஐயறிவுயிர்களும், இனி இவ்வவைம் புலன்களால் அறிந்தவற்றை, நல்லதிது தீயதிது, இஃது இதனையொப்பது, இஃது இதனின் வேறாவது எனப்பகுத்துக் காணும் மனவறிவும் ஒருங்குகெழுமிய ஆறறிவுயிர்களும், என ஆறு பெரும்பகுப்பில் எல்லா உயிர்களையும் அடக்கி, அவற்றிற்கு ஒவ்வொரு பகுப்பிலிருந்தும் ஒருசில உயிர்களையும், அவற்றின் அறிவியக்கத்தையும் எடுத்துக் காட்டியிருக்கினறார் ஆசிரியர்.1 இவ்வாறாக உயிர்களெல்லாவற்றையும், அவ்வவற்றின்கட் காணப்படும் அறிவின் ஏற்றத்தாழ்வு கண்டு, ஆறு வகையில் அடக்கிக்காட்டிய மிகப் பழைய நூல் தமிழ் மொழியிலுள்ள தொல்காப்பியத்தைத் தவிர, வேறெந்தப் பழைய மொழியிலும் எந்தப் பழைய நூலும் இல்லாமை கருத்திற் பதிக்கற்பாற்று. இதுகொண்டு, பழைய தமிழாசிரியரின் நுட்ப ஆராய்ச்சியறிவின் மாட்சி தெற்றென விளங்காநிற்கும். இனி, இங்ஙனம் பகுக்கப்பட்ட அறுவகை உயிர்களில், மனவறிவுடன் ஆறறிவுகூடிய மக்களே உயர்ந்த பிறப்பினர். அதனால், ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களை உயர்திணை என்றும், மக்கள் அல்லாத ஏனை ஐந்தறிவுக்குட்பட்ட உயிர்களை அஃறிணை என்றும் வழங்கினார்.2 இனித், தொடுதலுணர்ச்சி ஒன்றேயுடைய புல்லும் மரனுமே முதன்முதற் றோன்றிய உயிர்களாகும். இந்நிலவுலகத்தின் மேற்பரப்பெல்லாங் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பனிப்பாறைகளால் மூடப்பட்டிருந்தன. அப் பனிப்பாறைகள் பகலவன் வெப்பத்தால் உருகிக் கரையக் கரைய, நீர்பெருகிப் பள்ளத்தாக்கான இடங்களில் நிரம்பிக்கொண்டு பரம்பவே, ஆறும் ஏரியும் சிறுகடல் பெருங்கட ல்களுமாகிய நீர்நிலைகள் தோன்றலாயின. பின்னர், இந் நீர்நிலைகளின் அடிப்படையில் ஓரறிவுயிர் களிற் கடைப்படி யினவாகிய நீர்ப்பூண்டுகளும், ஈரறிவுயிர் களாகிய நத்தை, சங்கு, இப்பி, கிளிஞ்சில் முதலியனவும், மூவறிவினதாகிய அட்டையும், நான் கறிவினதாகிய நண்டும், ஐயறிவினவாகிய மீன்களும் பிற் பிற்காலங்களிற் றோன்றுவ வாயின. நீரின்கட்டோன்றிய நிர்ப்பூண்டுகள் காலஞ் செல்லச் செல்ல நிலத்தின்மேல் இவர்ந்து வளர, அவற்றையடுத்து வான்அளாவிய பரிய பரிய மரங்கள் தோன்றலும், அவை அடர்ந்த காடுகள் பல ஆங்காங்கு இம்மண்மிசைப் பொலிவவாயின. இத்தகைய காடுகளிற் பல பல்லாயிர ஆண்டுகளுக்குப்பின் மடிந்து நிலத்தின்கட் புதைந்து போகவே, பட்டுப்போன அவைகளின் மரங்கள் பல நூற்ண்டுகளுக்குப் பின் கரிகளாக உருமாறின; அங்ஙனம் மாறிய கரிகளே, இப்போது நிலத்தை அகழ்ந்த சுரங்கங்களிலிருந்தும் மிகுதியாய் எடுக்கப்பட்டு, நீராவி வண்டிகளையும், நீராவிக் கப்பல்களையும் விரைவாகச் செலுத்துதற்குப் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. இனி, நிலத்தின்கண் இயங்கும் உயிர்களில் இருப்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவனவாகிய எல்லா உயிர்களும் முதன்முதல் நீரின் கட்டோன்றிப் பிற்காலங் களிற்றாம் நிலத்தின்மேல் ஏறிவந்து உயிர்வாழப்பெற்றன. இதற்குச் சான்றாக நீர்க்கோழியையும் நீராமையையும் உற்றுப் பார்மின்கள்! நீர்க்கோழி நீருள் அமிழ்ந்தி வாழவும் வல்லது, நிலத்தின் மேல் இயங்கவும் வல்லது, வானிற் பறந்து செல்லவும் வல்லது. மற்று, நீராமை நீரில் நீந்தி உயிர்காவழ்தற்குத் துணைசெய்யும் செட்டைகள் வாய்ந்ததாயிருத்தல் போலவே, நில ஆமை நிலத்தின்மேல் நடமாடுதற் கேற்ற அடிகளுடன் கூடிய கால்கள் வாய்த்திருத்தல் அறியற்பாலது. இன்னும் நிலத்தின்கண் உலவும் நாய், குதிரை, யான, குரங்கு முதலான விலங்குகளோ டொப்ப, நீர்நாய், நீர்க்குதிரை, நீர்யானை, நீர்க்குரங்கு, முதலான விலங்குகள் கடலின்கண் உலவா நிற்றலைக், கண்காட்சி நிலையங்களில் அவைதம்மிற் சில கொணர்ந்து வைக்கப்பட்டிருத்தலைக் கண்டு நன்கறியலாம். இன்னும், நிலத்தின்மேல் உள்ள உயிர்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிய உருவம் வாய்ந்த உயிர்கள், மக்கள் தோன்றாத அந்நாளிற் கடல் நீரிலும் மணல்வெளிகளிலும் இயங்கின. மக்கள் தோன்றிய பின்னாளிலும் அவ்விரண்டிலுங் காணப்பட்டு வருகின்றன.1 நிலத்தின்மேல் உள்ள தேளை விட மிக மிகப் பெரிய உருவினவாகிய கடற்றேள்கள் ஒன்பதடி நீளம் உள்ளனவாய் அந்நாளில் தோன்றியிருந்தன. அங்ஙனமே, மிகப் பரியவான சில விலங்குகள் எண்பத்து நான்கடி நீளமும், மற்றுஞ் சில நூறடி நீளமும் உள்ளனவாயிருந்தன. இஞ்ஞான்றுள்ள யானையைவிடப் பத்துப் பதினைந்துமடங்கு பெரிய உருவினவான பேரியானைகளும் அஞ்ஞான்றிருந்தன. ஆனாலும், இவ்விலங்குகளிற் பெரும்பாலன மக்கள் தோன்று தற்கு முன்னமே மாண்டடொழிந்தன. அவற்றுள், உயிர்மாண்டு பனிப்பாறைகளின் ஊடே கிடந்து புதைந்துபோனவை பின்நாளில் அப் பனிப்பாறைகள் கதிரவன் வெப்பத்தால் உருகிக் கரைந்துவிடவே, எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன் மாண்டு போன அவற்றின் முழுவுடம்பும் புத்தப் புதியனவாய்க் கண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. பனிப்பாறைகள் இல்லாத இடங்களில் மாய்ந்தவைகளோ அங்குள்ள மண் கற்பாறைகளாய் இறுகிவிட அவற்றினிடையே கிடந்து தசை கழிந்து மட்கிப்போக, வெறும் எற்புக் கூடுகளாய் வெட்டி வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இங்ஙனம், இருப்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவனவாகிய சிற்றுயிர்கள் முதன்முதல் நீரிற் றோன்றி இயங்கிப், பின்னர் அவற்றிற் பல நிலத்தின் மேல் இவர்ந்து, வரவரப் பல்கி வாழலாயினாற் போலவே, மக்கள் யாக்கை யினையுடைய உயிர்களும் முதலில் நீரின்கட்டோன்றிப், பின்னர் நிலத்தின் மேல் வந்து உயிர்வாழ்ந்து பெருகலா யினமையும் ஒரு சில நிகழ்ச்சிகளாற் புலனாகின்றது. ஒரு கால் மேல்நாட்டு மக்களாற் செலுத்தப்பட்டுச் சென்ற ஒரு மரக்கலம் ஒரு கடற்பகுதியிற் செல்லுங்கால், அங்குள்ள கடல்நீரினின்றும் மக்கள் வடிவினதாகிய ஓர் ஆண் உயிர், அம் மரக்கலத்தின்மேல் ஏறிவந்து, அதன் முன் அணியத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெண்பாவை யுருவினைச் சிறிதுநேரம் உற்றுநோக்கிக் கொண்டிருந்து, அக்கப்பல் மீகாமனும் பிறருந் தன்னைப் பிடிக்க முயன்றபோது, அக்கடல்நீரிற் குதித்து அமிழ்ந்திப்போன உண்மை வரலாற்றினை எமது `சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூலில் எடுத்துக்காட்டி யிருக்கின்றேம். இத்தகைய நிகழ்ச்சியிலிருந்து, கடல்நீரிலும் மக்கள் வடிவினவாகிய உயிர்கள் இயங்குதல் அறியப்படுகின்ற தன்றோ? இவ்வாறு எல்லா உயிர்களும் இவ்வூன் உடம்பிற் றேன்றுதற்கு இன்றியமையாத இடமாகிய கடல்நீரில் முதன்முதற் றோன்றியே, பன்னெடுங் காலங்களுக்குப் பிறகு மக்களும் நீர்வாழ்க்கையை விட்டு நிலவாழ்க்கையைக் கடைப்பிடிக்கலா யினரென்று உணர்தல் வேண்டும். அஃதுண்மையேயாயினும், உயிர்வாழ்க்கைக்கு இன்றி யமையாது வேண்டப்படும் எல்லாக் கருவிகளும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற இந்நிலத்தின்மிசை உயிர்கள் முதன்முதற் றோன்றாமல், நீரின்கண் முதன்முதற் றோன்றலானது என்னையெனிற், கூறுதும்: படைப்பின் துவக்கத்திலேயே இம் மண்ணுலகம் உயிர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதாய் இருந்தால், புன்முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் இம் மட்பாங்கர் மிசையே தோன்றியிருக்கும். ஆனால், இந்நிலவுலகின் இயல்போ பல்லாயிரங்கோடி ஆண்டுகளுக்குமுன் இருந்த நிலைவேறு, இங்ஞான்றுள்ள நிலை முழுவதூஉம் வேறு. வெய்யவன் மண்டடிலம் ஒரு பெருநெருப்புத் திரளையாய் அன்றும் இன்றும் விளங்காநிற்கின்றது. இது நினைத்தற்கும் இயலாக் கடுவிரைவுடன் சுழலா நிற்கையில் இந்நிலமும், திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான கோள்களும் அவ்வெய்யவனாகிய தீப்பிழம்பினின்றுந் தெறித்துப்போந்த நெருப்புப் பொறிகளேயாகும். சிறிய பொருள்களையே அறிந்து நுகர் தற்பான்மையவான கண் முதலான சிறுபொறிகள் மட்டுமே அமையப்பெற்ற சிற்றறிவினராகிய நம்மனோர் கண்களுக்கு நாம் வாழும் இம்மண்ணுலகம் மிகப் பெரியதுபோற் காணப்படினும், உண்மையான் ஆராய்ந்து காண்பார்க்குக் கதிரவன் மண்டிலமே இந்நிலவுலகத்தைப் பார்க்கிலும் முந்நூற்று முப்பதினாயிர மடங்கு பெரியதாதல் விளங்குமென்று இஞ்ஞான்றை வான்நூலாசிரியர் கணக்குச் செய்திருக்கின்றனர்.1 அதனால், இம்மண்ணுலகங் கதிரவன் மண்டிலத்தினின்றுந் தெறித்துப் போந்த ஒரு சிறு நெருப்புப் பொறியேயல்லால் வேறன்றாதல் தேர்ந்துணரற்பாற்று. அங்ஙனம் ஒரு நெருப்புப்பொறியாய் முதன் முதல் உண்டான இந்நிலவுலகு எத்தனையோ நூறாயிரம் ஆண்டுகளாய் வெம்மை குறைந்து ஆறி இறுகிவருகின்றது. இன்றுங்கூட இதன் உட்பகுதி அளவிடப்படாத வெப்பம் வாய்ந்த தீக்குழம்பு உடையதாய்க் கொதித்துக் கொண்டிருக் கின்றது. இந்நிலத்தின் மையமான இடத்தினூறு ஆங்காங்குள்ள எரிமலைகளின் புழைவழியே இத்தீக்குழம்பு ஒரோவொருகாற் கொதித்துப் பொங்கி மேலெழுந்து வழிந்துவிடுதல் உண்டு; இவ்வாறு வழிதலால் எரிமலைகளின் அடிவாரத்திலும் அண்மையிலும் உள்ள ஊர்களும் நகர்களும் எரிந்து சாம்பலாய்விடுகின்றன. கி.பி 501 - ஆம் ஆண்டில் வெசுவியசு என்னும் எரிமலையினின்றும் பொங்கி வழிந்த தீக்குழம்பால் அதனை அடுத்திருந்த பெரிய நகரங்கள் எரிந்து சாம்பராயின; பதினெண்ணாயிரம் மக்களும் மடிந்துபோயினர்! இங்ஙனம், உயிர் வாழ்க்கைக்குப் பேரிடர் பயப்பதான தீவடிவினதாய் முதற்கண் இருந்தமையால், இந்நிலவுலகத்தின் மேற்பரப்பிற் பலகோடி ஆண்டுகள் வரையிற் புற்பூண்டுகள் முதல் மக்கள் ஈறான எத்தகைய உயிருந் தோன்றாவாயின. பிறகு, பன்னூராயிரம் ஆண்டுகளாக இந்நிலவுலகின் வெம்மை ஆறி வரவர, இதன் மேற்பரப்பு இறுக, இறுகிய கற்பாறையின் பள்ளத்தாக்கான இடங்களில் மழைநீர் நிரம்பி, ஏரி, சிறுகடல் பெருங்கடல் முதலான நீர்நிலைகளைத் தோற்றுவிக்கலாயிற்று. அங்ஙனம் உண்டான நீர்நிலைகளின் அடிப்படையில் நீர்ப்பூண்டுகளும், அவற்றின்பிற் பல நூற்றாண்டுகள் கழித்துப், பெருக்கக் கண்ணாடியின் உதவியின்றி நம் கட்புலன்களுக்குச் சிறிதும் புலனாகாத மிக நுண்ணிய உயிர்களுந் தோன்றுவ வாயின. அவற்றின்பிற் பல நூற்றாண்டுகள் கழித்து நங் கட்புலன்களுக்குப் புலனாகும் ஈரறிவுயிர்களும், அவற்றின்பின் மூவறிவு, நாலறிவு ஐயறிவுடைய உயிர்களும், இறுதியாக ஆறறிவுயிர்களாகிய மக்களுந் தோன்றலாயினர். இங்ஙனம் நீரின்கட்டோன்றிய உயிர்களிற் பல நிலத்தின்மேல் இவர்ந்து வந்து உயிர்வாழ்தற்கு ஏற்றபடியாக, நீர் நிலைகளை அடுத்த நிலப்பகுதிகளிற் சிறியவும் பெரியவுமான புற்பூண்டுகளும், மரஞ்செடி கொடிகளும் உண்டாகி இலையும் பூவங், காயுங் கனியுங், கிழங்குகளும் வித்துக்களும் ஆகிய உணவுப் பொருள்களை மிகுதியாக அளித்தன. உணவுப் பொருள்கள் மிகுந்து வரவே, அவற்றை அயிலும் உயிர்களும் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரமாய்ப் பல்கலாயின. இவ்வாறாக, நிலத்தின் மேற்பரப்பில் நீர்த்தோற்ம், கற்பொடித்தோற்றம், புற்பூண்டுத்தோற்றம், சிற்றுயிர்த்தோற்றம் முதலான நிகழ்ச்சிகளெல்லாம் படிப்படியே யுண்டாகிப், பலகோடி ஆண்டுகள் சென்ற பின்னரேதான் மக்களுயிர்களின் தோற்றம் உளதாயிற்று. விலங்கின் யாக்கையில் நின்ற உயிர் பலகோடி யாண்டுகளாக அவ்வியாக்கைகளை விட்டுவிட்டுக் கடைப்படியாக மக்கள் யாக்கையில் வரலானது இற்றைக்கு ஐந்நூறாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயன்றி, அதற்கு முன் மக்களுடம்புடைய எத்தகைய உயிருமே இல்லையென்று இத்துறையிற் பேருழைப்பெடுத்துப் பெரிதாராய்ந்த நில நூல் உயிர் நூல்வல்ல மேல்நாட்டாசிரியர்கள் முடிவுகட்டி யிருக்கின்றார்கள். ஆகவே, இம் மண்மிசைத் தோன்றிய உயிர்த்தொகைகளிற், கடைமுறையாகத் தோன்றியவை மக்களுடம்பு வாய்ந்த ஆறறிவுயிர் களேயென்றும், இவை தோன்றிய காலம் ஐந்நூறாயிர ஆண்டுகளுக்குமேற் சென்றதாகாதென்றும் நினைவிற் பதித்தல் வேண்டும். 2. மக்கள் முதன்முதற் றோன்றிய இடம் இனி, இந்நிலவுலகின் எந்தப் பகுதியில் முதன் முதல் எல்லா உயிர்களும் வாழத் துவங்கின என்பது ஆராயற்பாற்று. நீரைவிட்டு நிலத்தின்மேற் போந்த பின் உயிர்கள் பசியால் வாடி மடியாமல் நிலைப்படுதற்கு வேண்டியவை உணவுப்பண்டங்கள் அல்லவோ? ஆகவே, உணவுப்பண்டங்கள் முதன்முதல் எந்த இடத்தில் மிகுதியாய்த் தோன்றிக் கிளர்ந்தனவோ, அந்த இடமே உயிர்கள் நன்கு உயிர்வாழ்ந்து பல்குதற்கு ஏற்ற பெருவளன் உடையதாதல் வேண்டுமென்பதை எவருமே அறிவர். இந்நிலவுலகின் வடமுனைப் பாங்கரும், இதன் தென்முனைப் பாங்கரும் அன்றும் இன்றும் பனிப்பாறைகளால் மூடப்பட்டிருத்தலின், அங்கே புற்பூண்டுகளும் மரஞ்செடி கொடிகளும் உண்டாவதில்லை. அவை யில்லையாகவே உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையா உணவுப்பண்டங்களும் அப்பகுதிகளிற் கிடைப்பதில்லை. ஆகவே, வடமுனை தென்முனைகளை நெருங்கிய நாடுகளில் மக்கள் முதன்முதற் றோன்றி வாழ்ந்திருத்தல் இயலாது. பின்னர், அவ் வடமுனை தென்முனைகளுக்கு மிக விலகி, இந்நிலத்திற்கு நடுவணதான குமரி நாடே, பகல் இராப்பொழுதுகளும் வெப்பதட்பங்களும் ஒத்த நிலையில் இயற்கையே பொருந்தப்பெற்று, மரஞ் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்து, நெல், கோதுமை, பல்வகைப் பயறுகள், தீஞ்சுவைக் காய்கனி கிழங்குகள் முதலான உணவுப் பண்டங்களை வழங்குதலின், ஈதொன்றே மக்களும் பிற உயிர்களும் முதன்முதற்றோன்றி உயிர்வாழ்ந்து, பல்கிப் பலமுகமாய்ப் பரவுதற்கு இடஞ்செய்ததென்பது ஆழ்ந்த ஆராய்ச்சியால் நன்கு விளங்கா நிற்கின்றது. இவ்வியல்பினதான குமரிநாடே மக்கட்டோற்றத்திற்கு முதற்றாயகமாய் இருந்த உண்மையினை மேனாட்டா சிரியர்கள் பலமுகமாய்ப் பரக்க ஆராயந்து முடிபு கட்டியிருக்கின்றார்கள். அடிக்குறிப்புகள் 1. நனிமிகப் பழங்காலத்து மக்கள் முதன்முதல் தோன்றி வாழ்ந்த இடம் தென்றமிழ்க் குமரிநாடே என வலியுறுத்தப்படுவதால் தமிழ் மொழியும், தமிழ் மக்களும், தமிழர் நாகரிகமுமே முன்னுள்ளன என்பதனை வலியுறுத்தி இந்நூலை விரித்தெழுத அடிகளார் தொடங்கியுள்ளார்கள் என்பது புலனாகின்றது. அதனால் அதனைப் பின் இணைப்பாக ஈண்டுச் சேர்த்துள்ளாம். 2. தொல்காப்பியம், மரபியல், 27. 3. தொல்காப்பியம், சொல். 1. 4. H.G. Well’s ‘The Outline of History, 1930, pp.23,42. 5. Outline of Modern Belief, Vol.1, P.23. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் - முற்றும் - Preface to the Second Edition This Tamil work on ‘Caste and Its Evil’ first appeared in the form of a somewhat long essay in the sixth volume of my Tamil magazine Jnanasagaram in October, 1911. The occasion which called it into existence was in this wise. In response to the invitation of the Saiva Siddhanta Sabha at Tuticorin, I had to go there in December, 1910, in order to preside at its grand annual gathering and so to conduct it as to make it meet the needs of the time. I took an active part in its proceedings, as it was ably managed by learned, intelligent and well-meaning Saivites and was also attended by a large number of men and women of enlightenment, earnestness and understanding. Everything went on smoothly and delightfully on the first day, except in one important respect. Able lecturers filled with enthusiasm for introducing reforms into religious and social matters, came from distant parts of the country, but some of them were not treated with that respect which learning, good intentions and good manners claim, but were treated, as appeared to my mind, rather badly, simply because they happened to belong to non-vegetarian castes. Whether learned or unlearned, good or bad, religious or irreligious only those who were known to be Saivites, that is, those only whose lineage was known to have originated with the vegetarian velala parents, were invited to sit in one hall and dine together, while others, whose adherence to Saiva religion and clean vegetarian mode of living could not be questioned but whose only fault was what was occasioned by the mere accident of birth, were made to sit aloof in a separate place and served meals rather lately. This I observed on the first day and, on the next, I questioned some of the prominent members of the society why they were treated thus. One amongst them replied me that they belonged to non-vegtetarain castes, and, therefore, could not be admitted into the dining - hall of the Saivites. But I said that though they were no born vegetarians, they too were Saivites in so far as they followed the principles of Saiva religion and adopted the vegetarian mode of living, and that, therefore, they ought to be encouraged, so that other like them might also come up in the hope of mingling with a higher class people and lead a purer and a truer form of religious life. I added that, if their object of conducting such religious meetings were sincere, they should spread the beneficial, teachings of the Saiva religion not in brotherly love and affection towards each other as all are the children of a single Heavenly Father Lord Siva and by prompting those of them who are morally and intellectually stronger to uplift the weaker and make them their own, and that such merciful, tender and benevolent kind of service by drawing together the choice people from every class and community, would not only tend to increase the strength of the Saivite community but would also heighten the value of their service to humanity at large. To this the man curtly replied that it was not the custom to do so. Again, I argued with him at some length pointing out to him that what he called ‘the custom’ was not really so but the reverse of it was the true one as is evident in the lives of the Saints and Sages who founded and spread the Saiva religion. But unfortunately the man was not amenable to reason, since his false and arrongant notion of the superiority of his caste blinded his whole mental vision. Thereupon I made up my mind to dine rather with the excluded party than with such self - conceited Saivites. And accordingly I did dine with the forbidden brethren. But so much did this action of mine enrage the Saivite brethren that, on the next day, they forbade me entering their dining hall during meal-times. This put me on my mettle and I told them point blank that, as the way to my room lay through their dining - hall, I could not go but through it as usual; and said also that I should not take the meals cooked by their men under their supervision, since i thought the meals prepared in the midst of such inhuman people get themselves contaminated. On that day, the sitting of the Conference was to commence at 3 p.m. with me in the chair; it was nearly 2 p.m., still I had not touched my meals; having seen me persevering in my determination, all the Saivite members, except one or two, had the kindness to come to me and apologize for what the had done and expressed their willingness to treat henceforth the lecturers and other with equality and without minding any caste - distinctions. Of course, there were one or two dissenting elements but these were eliminated from our group. We then sat together, prayed to God for blessing us with that bond of unity, and partook of our meals with one joyous heart. On that third sitting day of the conference, the lectures had been very illuminating and the proceedings were brought to a successful close by my concluding speech which impressed on the minds of the audience the urgent necessity of cutting at the root the evils of caste - distinctions. Nevertheless, a few mischievous elements with whom caste was everything, while virtue, learning, intelligence. piety, religiousness and such other great qualities count for nothing, could not be silenced either by reasoning or by any regard to social unity, but they bestirred themselves most actively and attacked me in a magazine - article which, with much abusive matter, asserted the superiority of their caste on false and most erroneous grounds. I might have treated it with indifference, for it contained no argument worth contending for, but for the harmful influence it was likely to have on the minds of the unenlightened. I had, therefore, to take up the cudgels on behalf of the down - trodden and in the interest also of the true Saiva community whose progress consisted not in its exclusiveness but in absorbing into it and assimilating with itself persons of higher qualities turned out from lower orders and having an eager expectation to be lifted up from above; and the result was the first edition of this treatise. The first edition was merely a booklet of 22 pages, which dealt chiefly with the practical aspect of the caste question, while its theoretical part it touched but rather too briefly. How the barriers raised between one caste and another are mere fictitious ones existing only in the imagination of certain class of people in whom it was bred by their own arrogance and ignorance, how a mixture of castes results as a product of natural human needs and takes place both openly and covertly from the very beginning of the human family, and how easily a fusion of the good and cultured people picked up from every caste and community can be effected for the immense benefit of all, were clearly shown in it. That the tenets of Saiva religion do not stand against but lend a free, unstinted, undisguised support to such a whole-some fusion of the select, was also shown by quotations taken direct from the writings of the founders and exponents of tha religion. How useful the booklet proved to those who looked forward with eagerness to such a reform of castes, thought they themselves had not the courage to express the need of it might be seen from the rapid sale the thousan copies of it had in a few months. Inevitably the book had been long out of print, though demands for it increased day after day. The elaborte research - work unaided I had to do, in order to redeem the literary and religious history of the land from the thick gloom of myth and uncertainty created and cast over it by selfish and selfinterested persons, the constantanduremitting study I pursued of works on ‘New psychology’, stimulated by a strong desire to introduce its subjects into Tamil, left me little leisure to devote to the preparation of its second edition earlier. But, now that I was enabled to undertake the work, years of study and research - work facilitating it for me, I set myself to enlarging the briefly - touched - subject on ‘The origin and growth of the institution of caste,’ since I thought that, for healing its present corruption and infusing new life into it, only a thorough knowledge of its past history could afford a proper and effective remedy. And accordingly the subject has been amplified and treated fully and extensively in the first five chapters of this edition. In the first chapter, it is shown that the present day castes cannot be identified with those of the past since the callings of the former have undergone so radical a change as is opposed to the ordinances laid down in the Sanscrit Vedas and Dharma Sastras. Modern castes have become hardened into unworkable masses by losing completely their pliancy of meaning and original good quality. When the composition of the first nine mandalas of the Rig Veda took place, the four castes were quite unknown to the Aryans. But, by the time when the tenth was added, the institution of four castes had become almost an established fact. Still it should be borne in mind that this division of the Indian people into four castes was based merely upon division of labour and was introduces as a convenient theoretic classification intended for the purposes of social and economical sciences. Practically there was no any hard and fast rule that one caste shouldnot adopt the profession of another nor should the one mix with another. Many Dravidian kings, merchants and even slaves took part in the composition of the Vedic hymns and followed professions that suited best their taste and capacity. In the second chapter, the same subject is continued and discussed how, even at the time of the twelve oldest upanishads and the two epics the Mahabharata and the Ramayana when attempts were made by brahmins to make castes hereditary and exalt themselves at the expense of others, only merit and not birth was regarded as constituting a high caste. In the third chapter are shown how, at the time when a series of Sanscrit works called Dharma Sastras came to be written, the hereditary claims of castes were just beginning to tighten their hold on the people, how the brahmins were attempting to demand exclusive privileges for themselves and devise the cruellest and the most oppressive measures for the labouring classes, how, even then, importance was attached not to birth but to merit, and how the brahmins and others who failed, in the smallest degree, to perform the prescribed duties and functions of their caste lost their caste and became low-born. Here, for the first time, the mischief is pointed out of including the Tamilians in the Sudra or slave caste. The institution of caste-system originated not with the Aryans as is erroneously supposed by oriental scholars, but with the statesmen of the ancient Tamilians themselves who had attained to a high degree of civilisation long before the Aryans entered India. In the fourth chapter, a critical inquiry of the ‘Tolkappiam’, a very ancient Tamil work which is older then even some portions of the Rig-Veda, is taken up - especially of its sections dealing with the social classifications of the Tamil people. How the Tamil people reached the agricultural stage many centuries before when the Aryans were still in the pastoral stage leading the life of nomads and how the life of an agricultural people necessitated the classification of its men and women into different classes according to their occupations, are clearly proved by the aid of its study. Though this division of the Tamil people was rendered necessary by the conditions of their civilized life, there was no prohibition in any Tamil classics of old of any caste - intermixture. On the other hand there are clear references in them to free intermingling of castes. In ther fifth chapter in which the later day Saiva and Vaishnava religious literatures are taken up for solving this intricate and difficult problem of caste, are given numerous instances and clear quotations from the lives and writings of the Saints of the two great religious, in proof that it was only Love towards God and his servants and not caste was regarded and respected in them. In the sixth chapter the whole of the first edition which dealt with the practical aspect of the castequestion is included with necessary alterations. In the seventh and th concluding chapter, easy and practical means for wiping away caste-distinctions and consolidating the refined elements coming above from every grade of society, are set forth. Another prominent feature of this edition is its pure Tamils style entirely free from Sanscrit words. In fine it is my great pleasure to express my thanks and heart-felt gratitude to my esteemed friend Mr. C. Ariya Nayagam, Proctor, at Matale (Ceylon), for the extreme kindness with which he promptly sent me a charitable contribution of Rs 250 towards the printing expenses of the book. Words are inadequate to express sufficiently my deep debt of gratitude to this generous-hearted gentleman for similar contributions which he was making frequently for the past ten years and more towards the printing expenses of my writings. But for his munificent help, I would have been much embarassed in carrying out my literary and religious work successfully. By the grace of God may he live long in all glory! The Sacred Order of Love VEDACHALAM Pallavaram, 1st June, 1926. பொருளடக்கம் பக்கம் 1. பழைய வேதத்தில் சாதி இல்லை 67 2. பழைய உபநிடதங்கள் இதிகாசங்களில் சாதி இல்லை 82 3. மிருதிகளிற் சாதிப்பிரிவும் ஒழுக்கம் பற்றியரே 91 4. தொல்காப்பியத்திற் சாதிப்பிரிவு தொழில்பற்றியது 104 5. சைவ வைணவ நூல்களிலுஞ் சாதிவேற்றுமை இல்லை 126 6. உலக வழக்கிலும் சாதி இல்லை 136 7. சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் வழிகள் 151 சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுங் குலமுங்கொண் டென்செய்வீர், பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல் மாத்திரைக்குள் ளருளும் மாற்பேறரே. திருநாவுக்கரசு சுவாமிகள் இயல் - 1 பழைய வேதத்தில் சாதி இல்லை சைவசமயமானது அருள் ஒழுக்கத்தையும், சிவபிரான் மாட்டும் அவன் அடியார் மாட்டும் ஏனையெல்லா உயிர்கள் மாட்டும் அன்புபூண்டொழுகும் ஒழுக்கத்தையும் அறிவுறுத் துவதென்று உணரும் நல்வினை இல்லாத போலிச் சைவர் சிலர் சாதிவேற்றுமையே தாம் சைவசமயத்தாற் பெறும் மெய்யுணர்வாகும் என்று மயங்கி உணர்ந்து, அம் மயக்க வுணர்ச்சியைத் தம்மிடத்தும் தம்மோ டொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வதோடு அமைதிபெறாமல், அதனைத் தமக்கு இசைந்த பத்திரிகைகளினும் எழுதி வெளியிடுவித்துச், சைவ வுண்மைகளை உள்ளவாறே எடுத்து விளக்கிவரும் தவ வொழுக்கமுடைய பெரியாரையும் தமக்குள்ள பொறாமை யாலும் இழிந்ததன்மையாலும் தமக்குத் தோன்றியவா றெல்லாம் இகழ்ந்து பேசுதலுஞ் செய்கின்றார். ஒருவருடைய உயர்வுந் தாழ்வும் அறிவான் மிக்க சான்றோர் மதிக்கற் பாலரே யல்லாமல், அறிவில்லாக் குறும்பர் மதிக்கற்பால ரல்லர்; ஆகவே, அறிவில்லார் கூறும் இகழுரைகளையும் பொய்ம் மொழிகளையும் அறிவுடையார் ஒரு பொருட்டாக எண்ணாராகலின் அவர் கூறும் பழிச் சொற்களை விடுத்து, அவர் கூறும் மற்றப் பகுதிகளில் உள்ள குற்றங்களை மட்டும் ஒரு சிறிது எடுத்துக்காட்டி மறுத்தல் அவர் கூறியவற்றைக் கண்டு ஆராய்ச்சி யுணர்வில்லாதார் மயங்காமைப் பொருட்டேயாம். சாதிவேற்றுமை பழையகாலந்தொட்டே வேதம் முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந்நூல்களை ஒப்புக்கொண்டவர்கள் அவ்வேற்றுமையினைக் கைப்பற்றி யொழுகுதலே செயற்பால ரென்பது ஒருசாரார் கொள்கை. சாதிவேற்றுமை பழமையாக உள்ளதென்றே கொண் டாலும், அதனைத் தழுவியொழுகல் வேண்டுமென்பது பகுத்தறிவில்லார் கூற்றாம். பழையனவெல்லாம் நல்லன வாதலும் இல்லை, புதியனவெல்லாம் தீயனவாதலும் இல்லை; பழையனவற்றில் தீயனவும் உண்டு புதியனவற்றில் நல்லனவும் உண்டு. இவ்வுண்மையைச் சைவசித்தாந்த ஆசிரியருள் ஒருவரான உமாபதி சிவாசாரிய அடிகள் தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா என்று அறிவுறுத்தருளினமையுங் காண்க. இஞ் ஞான்றுள்ள பல்வகை மக்கட்பிரிவினரும் தத்தமக்குப் பண்டுதொட்டே உரிய கடமைகளிலாவது பிறழாமல் வாழ்கின்றனரோ வென்றால் அதுவுமில்லை. பார்ப்பனரிற் பெரும்பாலார் தமக்கு உரிய நூல் ஓதுதல், வேள்விவேட்டல், பிறர்கொடுக்கும் பொருளை யேற்று வயிறுவளர்த்தல் முதலான தொழில்களை அறவே கைவிட்டு ஆங்கில நூல்களைக் கற்றுத், தம்மால் மிலேச்சராகக் கருதப்பட்ட வெள்ளைக்காரரின் கீழ் அலுவல்களில் அமர்ந்து, அவர்கள் ஏவிய பற்பல தொழில்களையும் செய்துவருகிறார்கள் அல்லரோ? இங்ஙனமாகத் தமக்குரிய தொழில்களைக் கைவிட்டு, அரசரின்கீழ் அலுவல் பார்ப்போர் பார்ப்பனர் ஆகமாட்டார் என்று மனுமிருதி (3, 4) வற்புறுத்திக் கூறியும், அரசரின்கீழ் ஊழியம் செய்வதே இப்போது அவர்கட்கு இயற்கையாய் விட்டதன்றோ? கடல்கடந்து வேற்றுநாடு களுக்குப் போதல் பார்ப்பனர் களுக்கு விலக்கப்பட்டிருந்தும் (மனு, 3, 158), அவர்களிற் பலர் கடல்கடந்து சென்று ஆங்கிலங் கற்றும், பொருள் தேடியுந் திரும்பிவந்து தம்மினத்தவரோடு உறவுகலந்து பார்ப்பனரிற் சிறந்தோராகக் கருதப்படுதலை நாம் காண்கின்றனம் அல்லமோ? உணவு சிற்றுண்டிவிற்றலாலும், இசைபாடு தலாலும், சோதிடஞ் சொல்லுதலாலும், சம்பளம் பெற்றுக் கொண்டு பிறர்க்குக் கல்வி கற்பித்தலாலும் உயிர் பிழைப் போர் பார்ப்பனர் ஆகமாட்டார், அவர் மிக இழிந்தோரே யாவர் என்று மனமிருதி (3, 152, 155, 156, 162) நன்கு வலியுறுத்திச் சொல்லியும், இப்போது இத்தகைய தொழில் களைச் செய்து வயிறு வளர்த்தலே அவர்கட்கு இயற்கையாய் வந்து விட்டதன்றோ? இன்னும் ஆவின் (பசுமாட்டின்) இறைச்சியைத் தின்று உயிர்வாழ்தல் பண்டைக்காலத்திருந்த பார்ப்பனர்க்கு வழக்க மாயிருந்த தென்று `தைத்திரீயசங்கிதை, 7, 1, 4 விளக்கமாகச் சொல்லியும், அதற்கு ஒப்ப இன்று காறும் வடநாட்டின்கண் உள்ள பார்ப்பனர்கள் மீன் மறி முதலியவற்றின் ஊனை வெளிப்படையாகத்தின்று உயிர் வாழாநிற்பவும், தென்னாட்டிற் புகுந்து குடியேறிய பார்ப்பனர் மட்டும் இங்குள்ள சைவ வேளாளர்களின் புலால் உண்ணா அருளொழுக்கத்தைக் கண்டு தாமும் தமது பழைய புலைத்தொழிலைக் கைவிட்டுப், புலால் உண்ணாப் புதிய நடையைக் கைக்கொண்டு ஒழுகுதல் எல்லாரும் அறிந்த தொன்றன்றோ? இவ்வாறு பார்ப்பனர்கள் தமக்கு உரிய பழைய வழக்க ஒழுக்கங்களைக் கைவிட்டு, இக்காலத்துக்கு ஏற்ற வழக்க ஒழுக்கங்களையும் நடையுடை சாயல்களையும் கைப்பற்றி உயிர் வாழ்தல் போலவே, மற்றை வகுப்பினருந் தத்தமக்குரிய பழைய தொழில்களையும் முறைகளையுங் கை விட்டுப் புதிய தொழில் களையும் முறைகளையும் கைப்பற்றி நடந்து வருகிறார்கள். உழுதுண்ணும் வேளாளரிற் பலர் அவ்வுழுதொழிலைவிடுத்துப், பற்பல கைத்தொழில்களிற் புகுந்திருக்கிறார்கள். உழுவித் துண்ணும் வேளாளரிற் பலர் தேவார திருவாசகம் ஓதல், தமிழ் நூல்கள் கற்றல் கற்பித்தல், சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றல், திருக்கோயிற்றொண்டு புரிதல், அரசரின் கீழ் அமைச்சராயும் பிறராயும் அலுவல் பார்த்தல், அயல்நாடுகளிலும் தம் நாடுகளிலும் உள்ள பண்டங்களைக் கொண்டுவிற்றல், கற்றோர்க்கும் இரவலர்க்கும் வேண்டிய உதவிகளைச் செய்தல், தமிழையும் சைவத்தையும் வளர்த்தல் முதலான தமக்குரிய விழுமிய செயல்களைக் கைந்நெகிழவிட்டுக், கல்வியறிவும் சிவநேயமும் இலராய், அவையில்லாமையால் அரசர்க்கும் உலகினர்க்கும் பயன் படாராய்த், தம் வயிறு வளர்த்தற்கு எத்துணை இழிதொழி லாயினும் அதனைப் புரிதற்குப் பின்னிடை யாராய்த், தம்மை யோம்புதலிலும் தம்மை வீணே உயர்த்தி இறுமாத்தலிலுங் கருத்து மிகுந்து பிறரது நன்மையைப் பொருட்படுத்தாமற், காலம் வாய்த்தபோது பிறர் உடைமைகளைக் கவர்ந்து அவர்க்குத் தீமைசெய்வதிலும், அரசமன்றங்களில் அழிவழக்காடு வதிலும் முனைத்து நிற்கின்றனரல்லரோ? என்றாலும், இவர்களுட் சிலர் இக்காலத்திற்கு வேண்டும் பயனுள்ள முறைகளையும் ஒழுகலாறுகளையுந் தழுவி, ஆங்கிலத்தோடு தமிழ்கற்றும், ஆங்காங்கு அரசியற் றொழிலை மேற்கொண்டும், சாதி வேற்றுமைகளை ஒழித்தும், திரை கடலோடிச் செல்வத்தினைத் தொகுத்தும் வருகின்றன ரென்பதூஉம் மறுக்கற்பாலதன்று. ஆயினும், இவ்வுழுவித் துண்ணும் வேளாளர் தமக்குரிய பண்டை நற்பெருங் கடமை களை முற்றுஞ் செலுத்துகின்றிலர்; அவற்றிற் பெரும்பாலும் வழுவியே நிற்கின்றனர். மேலும், இந்நாட்டவர் களுள் ஆண்பாலார் தமக்கு வழக்கமாயுள்ளபடியே உடையுடுத்தாது, மேல்நாட்டவரைப்போற் காற்சட்டை மேற்சட்டை யிட்டும், தலையிற் குல்லா தொப்பி கவித்தும், அடிகளுக்குச் சப்பாத்து மாட்டியும் பலவகையால் தமது பழைய முறையை மாற்றி வருகின்றனரல்லரோ? பெண்பாலார் தம் காதுகளைத் தொளைத்து அவற்றை மூக்குச்சளிபோல் தொங்கவளர்த்து அவற்றிற் சுமை மிகுந்த பொன்னுருக்களை யிடும் பழைய அழகற்ற முறையை மாற்றி, அவற்றிற் சிறுதுளையிட்டுச் சிவப்பு வைரம் முதலியவற்றாற் சமைத்த அழகிய தோடுகளை அழகுறப் பொருத்தி எழில்மிகுந்து உலவக்காண்கின்றனம் அல்லமோ? பெண்பாலார் தமது மார்பை மூடாமல் திறப்பாக விடுதலும், மார்பின்மேல் துணியிடுவார்கூட இரவிக்கை யிடாது உலவுதலுமே நன்முறையென்று சொல்லிவந்தவர்க ளெல்லாம், பார்க்க அருவருப்பான அந்த முறையை யொழித்து மார்பைப் புடைவையால் நன்கு மறைத்தும் இரவிக்கை யணிந்தும் வரக் காண்கின்றோமே. இன்னும், பத்தாண்டுகளுக்குமுன் காலையிற் பழைய சோறும் மோரும் உண்டு நன்கு வளர்ந்தவர் களெல்லாம், இப்போது விடியும் நேரத்திலேயே காப்பித் தண்ணீரும் உரொட்டியும் உண்ணக் கற்றுக்கொண்டனரே. இங்ஙன மெல்லாம் நமது நாட்டவர் வாழ்க்கையிற் புதிது புகுந்திருக்கும் மாறுதல்களையெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால், இவ்வேடு இடங்கொள்ளாது. இம்மாறுதல்களில் நல்லனவும் உண்டு, தீயனவும் உண்டு, இவையெல்லாம் பழையகாலத்தில் இருந்தவைகள் அல்ல; புதிது வந்தவைகளே. இவ்வாறு மக்களுடைய நாகரிக வளர்ச்சிக்கும் அறிவின் மேன்மைக்கும் ஏற்பக் காலந்தோறும் பழைய ஏற்பாடுகள் அழிந்து போதலும் புதிய ஏற்பாடுகள் புகுந்து பொருந்து தலும் இயற்கையாம். இது பற்றியன்றோ பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவலகால வகையினானே என்னும் ஆன்றோர் மொழியும் எழுந்தது. ஆகவே, சாதி வேற்றுமை பழையகாலந்தொட்டு இருத்தல் பற்றியே அதனை விடாது கைப்பற்றி யொழுகல் வேண்டு மென்பது சிறிதும் பொருத்தமில்லாத போலி யுரையாம். இனிச் சாதி வேற்றுமை பழமைதொட்டே உள்ள தென்பதும் ஆராய்ச்சி அறிவில்லார் கூற்றாம். மிகப் பழைய நூலாகிய இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிங் களினும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. இருக்குவேதம் முதல் ஒன்பது மண்டிலங்களினும் `பிராமணன் என்னுஞ் சொல் `வேள்வி வேட்கும் முனிவனையும், `பதிகங்கள் பாடும் புலவனையுங் குறிக்கின்றதே யல்லாமற், பிற்காலத்தில் வழக்கும் பார்ப்பன வகுப்பினனைக் குறிக்கவில்லை. ஏனை மூன்று வகுப்பினரின் பெயர்களான க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களுங்கூட அவ்வொன்பது மண்டிலங்களினுங் காணப் படவில்லை. இதனால், அவ்வொன்பது மண்டிலங்களும் எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லாரும் ஒரே வகுப்பின ராயிருந்தனரே யல்லாமல், நால்வேறு வகுப்பினராய்ப் பிரிந்திலரென்பது புலனாகின்றதன்றோ? மக்கள் முதன் முதல் மலைகளிலுங் கடலோரங்களிலும் உயிர்வாழ்ந்தன ரென்றும், அக்காலங்களில் அவர்கட்கு வீடுகள் இல்லை யென்றும், அத்தகைய கிருத ஊழியிற் சாதிவேற்றுமை சிறிதுமே இல்லை யென்றும் வாயு புராணமும் (8, 53, 62) புகலா நிற்கின்றது. எனவே, இறைவனாற் படைக்கப்பட்ட பண்டைக்காலத்தே மக்களுள் ஏதொரு வேற்றுமையும், உயர்வு தாழ்வுகாட்டும் ஏதொருபிரிவும் இருந்ததில்லை யென்பதும் புலனாம். இனி, அவ்விருக்குவேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங் களுக்குப்பின், பத்தாம் மண்டிலம் எழுதப்பட்ட காலத்திலே தான் முதன் முதல் நால்வகை மக்கட்பிரிவு தோன்றுவ தாயிற்று. அங்ஙனந் தோன்றியவிடத்தும், மக்களுள் இவ் வகுப்பினர் உயர்ந்தோர், இவ் வகுப்பினர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு தோன்றிற்றில்லை. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் நால்வகைத் தொழில் களைச் செய்வோர் நால்வேறு வகுப்பினராகச் சொல்லப் பட்டன ராயினும், அந்நால்வகுப்பினரும் எல்லாம்வல்ல இறைவனுக்குப் புதல்வர்களே யாவர் என்பதுங் கூடவேவைத்துத் தெளித் துரைக்கப்பட்டது. யாங்ஙனமெனிற் காட்டுதும்: இருக்கு வேதத்தின் இறுதிக்கண்ணதாகிய பத்தாம் மண்டிலத்தில் உள்ள புருடசூத்த மந்திரமானது (12), பிராமணன் அவனது வாய் ஆயினன்; ராஜந்யன் அவனுடைய தோள்கள் ஆயினன்; வைசியன் எனப்பட்டோன் அவனுடைய தொடைகள் ஆயினான்; சூத்திரன் அவனுடைய அடிகளிற் றோன்றினன் என்று ஓதுமாற்றால், நால்வகைப்படுத்துச் சொல்லப்பட்ட மக்கள் அனைவரும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளினின்றே தோன்றின ரென்னும் உண்மை இனிது புலப்படாநிற்கும். அற்றேற், பார்ப்பனன் இறைவனது மேலுறுப்பாகிய வாயிலிருந்தும், மற்றையோர் மற்றைக் கீழ் உறுப்புகளாகிய தோள் தொடை அடி என்பவற்றிலிருந்தும் தோன்றினர் என அம்மந்திரம் உரைத்தது என்னையெனின்; அந் நால்வகை வகுப்பினரின் தொழில் வேறுபாடுகளை அறிவித்தற்கு அஃது அங்ஙனம் உருவகவகையாற் கூறினதே யன்றி, அவர்களுள் உயர்வு தாழ்வு கற்பித்தற்கு அங்ஙனங் கூறிற்றில்லை. நூல் ஓதுதல் வாயின்தொழில் ஆதலால், ஓதுதற்றொழிலையே தமக்குச் சிறப்பாகக்கொண்ட பார்ப்பனர் இறைவனது வாயினின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டார்; விலங்கு களாலும் பகைவர்களாலுங் குடிமக்களுக்குத் தீங்குநேராமல் வில்லுங் கணையும் பிடித்து வேட்டமாடுதலும் போர்புரிதலுங் தோள்களின் தொழில் களாதலால் அத் தொழில்களைச் செய்யும் ராஜந்யர் இறைவனுடைய தோள்களினின்றும் பிறந்தவராகச் சொல்லப் பட்டார்; ஓரிடத்துண்டாகிய பண்டங்களை விலைகொண்டு பிறிதோரிடத்திற் சேர்ப்பித்தும், பிற இடங்களில் உண்டாகிய பண்டங்களை ஓரிடத்திற் கொணர்ந்து தொகுப் பித்தும் விற்று மக்கள் எல்லாரும் வேண்டும் பொருள்களை அவர்கள் எளிதிற்பெறத் திரட்டித்தந்து பெரிது பயன்படுங் கொண்டுவிற்றற் றொழிலைச் செய்தல் கால்களினால் ஆகுந் தொழிலாகலின் அதனைப் புரியும் வைசியர் இறைவனுடைய தொடைகளினின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டார்; இனி இம்மூவகைத் தொழில்புரிவாரும் ஏவிய பிறதொழில் களை விரைந்துசென்று முடித்து அவர்க்கு மிகவும் பயன்படுங் குற்றேவற்றொழிலைச் செய்தல் பெரும்பாலுங் காலடி களினால் ஆகற்பாலதாகலின் அதனைச் செய்யும் சூத்திரர் இறைவனுடைய திருவடிகளி னின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டனர். ஆகவே, இப்பகுப்புகள் தொழில்பற்றி வந்தனவேயல்லாமல் வேறல்ல வென்பது சொல்லாமே இனிது விளங்கும். அற்றன்று, இறைவனதுவாய் மேலுறுப்பும், அவன்றன் அடி கீழுறுப்பும், ஏனைத் தோளுந் தொடையும் இடைப்பட்ட உறுப்புக்களு மாகலின், அம்முறையே மேலுறுப்புக்களிற் றோன்றிய பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் என்னும் மூவகுப்பினரும் மேலோரெனவும், கீழ் உறுப்பிற்றோன்றிய சூத்திரர் கீழோரெனவுங் கொள்ளுதலே பொருத்தமுடைத்தெனின்; இக்கூற்றும் பகுத்துணர்ச்சி இன்மையால் நிகழ்வதொன்றாம்; என்னை? எவ்வகைப் பட்ட உயிரும் உடம்போடு கூடிப் பிறத்தல் என்பது, தந்தை தாயைமருவ வெளிப்படும் பாற்றுளியானது தாயின் வயிற்றுள்ளே கருப்பையிற்புகுந்து தங்கிக் கருவாய்ச் சமைந்து கை கால் முதலான எல்லா உறுப்புகளும் பொருந்திப் படிப்படியே வளர்ந்து முற்றிப், பின் அக்கருப்பையை விட்டகன்று வெளிப்படுதலாகவே எங்கும் எக்காலத்தும் நிகழ்ந்து வருதலைக் கண்டுங் கேட்டும் அறிந்தும் வருகின்றோமாகலானும், இவ்வாறு எங்கும் மாறாமல் நிகழ அமைத்த இறைவனது அமைப்புக்குமாறாக வாயிற் பிறத்தலும் தோள் தொடை அடி என்னும் உறுப்புக்களிற் பிறத்தலும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் நிகழக்காணோ மாகலானும் என்பது. அங்ஙனமன்று, மக்களுக்குத்தான் மகவுகளை வயிற்றில் அமைத்துப் பிறக்கவைத்தனனே யல்லாமல், எல்லாம்வல்ல இறைவன் தன்னினின்று மக்களைத் தோற்றுவித்தற்கு அத்தகைய அமைப்பை வேண்டுவான் அல்லன்; அவன் தனது உறுப்பில் எந்த இடத்தினின்றும் அவரைத் தோற்றுவிக்க வல்லன் எனின்; அங்ஙனம் எல்லாம் வல்ல இறைவன் மக்களைத் தோற்றுவித்தற்கு அவனது நினைவொன்றே போதுமாயிருக்க, வாய் தோள் தொடை அடி முதலிய உறுப்புக்களும் அதற்கு வேண்டுமோ எனக் கூறிமறுக்க. மேலும், இறைவன் தன்னுறுப்புக்களினின்று மக்களைப் படைத்ததனை அம்மக்களுள் ஒருபாலாராகிய கற்றவர் கண்டறிவதெங்ஙனம்? எவரும் தாய்வயிற்றினின்று பிறக்கின்ற ஞான்று தாம் அங்ஙனம் பிறத்தலை அறிந்த வரல்லர். தாம் பிறந்து வளர்ந்து அறிவுடைய ரானபின், குழவிகள் தாய்வயிற்றினின்றும் பிறத்தலைப் பலகாலுங் கண்டுவைத்தே தாமும் அங்ஙனம் பிறந்திருத்தல் வேண்டுமென எல்லாரும் உய்த்துணர்கின்றார். இம்முறை யோடு ஒப்ப, முழுமுதற் கடவுளும் இப்போது எவ்விடத்தாயினும் தம்முடைய வாய் தோள் தொடை அடி முதலான உறுப்புகளிலிருந்து பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்பாரைத் தோற்றுவிக்க நாம் காணினன்றோ, முதன்முதல் அவர் அந் நாற்பிரிவினரையும் படைத்த காலத்தில் அவர்களை அங்ஙனமே தோற்றுவித்திருப்பாரென உணரலாம். அவ்வாறு கடவுள் தம்முடைய நால்வேறு உறுப்புக் களினின்று நால்வேறு வகுப்பினரைத் தோற்றுவித்தல் எங்கும் நிகழக்காணாமை யானும், இயங்கும் உயிர்கள் அத்தனையும் தாய்தந்தையரின் சேர்க்கையாற் றாயின் கருப்பையினின்றே தோன்றக் காண்டலானும், இவ்வாறு நடைபெறும் உயிர்களின் பிறப்பு உலகம் உண்டான காலமுதற் பிறழாமல் நிகழ்ந்துவருதல் முன்னுள்ள உண்மையறிவினர் தொன்றுதொட்டு வரன் முறையாக எழுதிவைத்திருக்கும் உண்மை நூல்களால் அறியக் கிடத்தலானும், தாய்தந்தையரின் சேர்க்கையினால் தாயின் கருப்பையினின்றே பார்ப்பனர் அரசர் வணிகர் அடியோர் என்னும் எல்லாமக்களும் பிறத்தலைக் கண்கூடாக யாவருங் கண்டுவருதலானும், இம்முறையையே தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்று இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னரே அருளிச் செய்திருத்தலானும், இங்ஙனம் பிறவியெடுக்கும் அமைப்புக் கடவுள் வகுத்ததேயல்லாமற் பிறரெவரும் வகுத்த தல்லாமையானும், தான் வகுத்த இவ்வமைப்புக்கு மாறாக இறைவன் வேறொருவாற்றால் மக்களைத் தோற்றுவித்தா னென்றால் பிறழா இயற்கையனாகிய அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காதலானும், மற்று அவ்வாறு மாறான தோற்றங் கூறுதல் எல்லார்க்கும் புலனாய் நிகழும் உண்மை நிகழ்ச்சிக்கும் பண்டுதொட்டு உண்மையறிவினர் கூறிவரும் எல்லா உண்மையுரைக்கும் முற்றும் முரணாய் முடிதலானும் அங்ஙனங் கடவுள் வாய் முதலான உறுப்புக்களினின்றே நால்வகை மக்கட்பிரிவினரையுந் தோற்றுவித்தானென வரை யறைகடந்து பேசுதல் பெரிதும் ஏதமாமெனக் கூறிவிடுக்க. அதனால், அந்நால்வகை மக்கட்குரிய நால்வேறு தொழில்களை உணர்த்துதற்கே உருவக வகையால் இறைவன்றன் வாய் முதலிய உறுப்புகளினின்று அந் நால்வருந் தோன்றினாரென அப் புருடசூத்தவுரை மொழியலாயிற்றென அதற்குப் பொருந்து மாறு பற்றிப் பொருளுரைத்துக் கொள்க. அங்ஙனமாயின், மேல்கீழ் என்னும் உயர்வுதாழ்வுகளை உணர்த்துதற்கே, அஃது அங்ஙனம் உருவக வகையால் மேலுறுப்பாகிய வாயினின்று பார்ப்பனரும் ஏனைக் கீழ் உறுப்புகளாகிய தோள் தொடை அடிகளினின்று ஏனை யோருந் தோன்றினர் எனக் கூறிற் றென்றாற் படும் இழுக்கென்னையெனிற்; புலால் நாற்றம் வீசும் மக்களின் உடம்புகள் வினைகளை நுகருதற்பொருட்டு மாயையில் அமைத்துக் கொடுக்கப்பட்டனவாகலின், இவ்வுடம்புகளிற் பொருந்திய மேலுறுப்புகளை உயர்ந்தனவென்றும், மலக் கழிவுகளுக்கு இடமான கீழ் உறுப்புகளைத் தாழ்ந்தன வென்றுங் கூறுதல் ஒக்கும். மற்று எல்லாம் வல்ல இறைவனது திருவுருவமோ அங்ஙனம் பிறரொருவரால் மாயையினின்று ஆக்கப்படுவது அல்லாமையினாலும், அவன் தன் அன்பர்க்குப் புலப்பட்டுத்தோன்றி அருள்செய்தற்கு நினைந்தவளவானே அஃது அவ்வருள்நினைவிற் றோன்றி மின்னொளியினும் மிக்க பேரொளியும் நுண்மையுந் தூய்மையும் வாய்ந்ததாய் மறைவதொன்றாகலானும், அப்பெற்றித்தாகிய அவனது தூய அருளுடம்பில் ஓர் உறுப்பினை உயர்ந்ததென்றலும் மற்றை ஓர் உறுப்பினைத் தாழ்ந்ததென்றலும் ஒருவாற்றானும் ஒவ்வா. பைம்பொன்னினாற் சமைக்கப்பட்ட ஒருபாவை மேல்கீழ் இடமெங்குஞ் சுடர்விடு பொன்வடிவாயே விளங் குதல்போலவும், தூய கன்னற்பாகினால் வார்த்தமைக்கப் பட்ட ஒரு பாவையின் உடம்பெங்குந் தித்திக்கும் இயல் பிற்றாகவே இருத்தல் போலவும் இறைவனது உடம்பு முழுதும் ஒரே தூய்மைத்தாய் விளங்குமல்லாமல், அது தன்னிலே உயர்வு தாழ்வுகள் உடைத்தாய் இருப்பதன்றென உணர்ந்து கொள்க. ஆகவே, இறைவனது மேலுறுப்பிற் றோன்றினாரென்பது பற்றிப் பார்ப்பனரை மேலோர் என்றலும், கீழுறுப்பிற் றோன்றினாரென்பது பற்றி ஏனை மூவரைக் கீழோர் என்றலும் சிறிதும் ஒவ்வா, அந்நால்வரும் இறைவனுடைய நால்வேறு உறுப்புகளிற் றோன்றினார் என்றது, அந் நால்வகுப்பார்க்குந் தனித்தனியே சிறப்பாக உரிய நால்வகைத் தொழில்களை உணர்த்தியபடியாம்; இதுவே அப் புருடசூத்த உரையின் உண்மைப் பொருளென்று கடைப்பிடிக்க. மேலும், இந் நால்வகுப்பினரும் இறைவன் ஒருவனிடத்தே நின்று தோன்றினவரென்பது அதனுள் விளக்கமாகச் சொல்லப் பட்டிருத்தலின், அவர்கள் ஒரு தந்தைக்குப் பிறந்த மக்களேயாவ ரென்பதும், அதனால் அவர்தமக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் சிறிதும் ஏலாதென்பதும் கருத்திற் பதிக்கற்பாலனவாகும். இந்நால்வகை மக்கட்பிரிவினரின் பெயரை அவ்வவர் தொழில் வேறுபாடு பற்றி எடுத்தோதும் பதிகம் இப்புருடசூத்த மந்திரத்தைத் தவிர வேறேதும் இருக்குவேதத்தில் எங்குங் காணப்படாமை யானும், ஒன்பதாஞ் செய்யுளில் இருக்கு எசுர் சாமம் என்னும் மூன்றுவேதங்களின் பெயரை எடுத்துச் சொல்லும் இப்புருட சூத்தம் அம்மூன்று வேதங்களுந் தோன்றிய பின்னன்றி முன்னிருந்தது ஆகாமையானும், நால்வேறு மக்கட் பாகுபாடும் அதனையெடுத்துக் கூறும் புருடசூத்தமும் இருக்கு எசுர் சாமம் என்னும் மூன்று வேதங்களும் இயற்றப் பட்ட காலத்தில் இருந்தன அல்ல என்பதும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி, மாபாரதப்போரில் முனைந்துநின்ற குருகுல பாஞ்சால அரசர்களையும், அவர் வழியில்வந்த ஜனகன், அஜாதசத்துரு, ஜனமே ஜயபரிக்ஷித், இவற்கு ஆசிரியனாகிய வைசம்பாயனன் முதலியோரையும் எடுத்தோதும் கிருஷ்ண சுக்லயஜுர் வேதமும் அதனோடு ஒரு காலத்ததாகிய சாமவேதமும் அம் மாபாரதப்போர் நிகழ்ந்ததற்குப்பின் ஆக்கப்பட்டனவாதல் தெளிப்படும். இவ்விரண்டு வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தை யடுத்தே, அவ் வேதங்களுக்கு விளக்கஉரைகளாய் எழுந்த `பிராமணங்களும், அவற்றை யடுத்தே வேள்வி வேட்டலை மறுத்து முழுமுதற்கடவுளின் மெய்ம்மையைப் புலப்படுத்தவும் பன்னிரண்டு பழைய `உபநிடதங்களும் ஆக்கப்பட்டன. இவைகளுண்டான காலத்திலுங்கூடப், பிறப்பளவில் சாதிவேறுபடு சொல்லப் படவில்லை. சுக்கிலயசுர்வேதத்தின் முப்பதாம் இயலிற் பலவேறு தொழில்களைச்செய்யும் பலவேறு மக்கட் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே எடுத்துரைக்கப்பட்டிருக் கின்றன; இங்ஙனமே தைத்திரீய பிராமணத்திலுஞ் சொல்லப் பட்டிருக்கின்றன; ஆனால், அவற்றுட் சாதிவேறுபாடுகளும், அவற்றின் உயர்பு இழிபுகளும் பேசப்படவில்லை. அதற்கு ஒருசான்று எடுத்துக் காட்டுதும்: முன்னொருகால் சரசுவதி யாற்றங்கரையிலே இருடிகள் ஒருவேள்வி வேட்கலாயினர். அப்போது `இல்லூஷை என்னும் ஓர் அடிமைப் பெண்ணின் புதல்வரான `கவஷா என்பவர் அவ்வேள்விக்கு வந்திருந்தனர். அவர்கள் அவரை ஓர் அடிமையின் பிள்ளை என்பதுபற்றி இகழ்ந்து, அவ்வேள்விக்களத்தினின்றுந் துரத்த, அவர் சென்ற இடத்திற்கே அவ் யாற்று நீர் செல்லுமாறு கடவுள் அருள்செய்தனர்; அதனை யுணர்ந்த இருடிகள் அவரை யிகழ்ந்த தமது அறியாமைக்கு வருந்திப் பின்னர் அவரை ஒரு சிறந்த இருடியாக ஏற்று வணங்கினர்; என்று ஐதரேயபிரா மணம் (2, 19) புகலுகின்றது. இக் `கவஷா என்பவரே இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டிலத்திற் பல பதிகங்களை இயற்றி யிருக்கின்றனர். இவ்வாற்றாற் பிராமணங்கள் எழுதப்பட்ட காலத்திலும் சாதி வேற்றுமை நிலைபெறவில்லை யென்பது புலனாகின்றதன்றோ? இன்னும், பல வேள்விகளைச் செய்து முடித்தவனும், அவ்வேள்விகளில் முனிவரர்க்கும் பிறர்க்கும் ஏராளமான நன்கொடை வழங்கினவனும், விசுவாமித்திர முனிவரைப் பாதுகாத்தவனும், இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின் 18 ஆம் பதிகத்திற் பாராட்டப்பட்டவனுமான `பைஜவனன் என்பான் ஒரு சூத்திரனே என்று மாபாரதம் சாந்திபர்வம் (2304 -ஆம் செய்யுளிலிருந்து) நுவல்கின்றது. இன்னும், இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய முனிவரர் பலரும் அரச வகுப்பினையும் வணிக வகுப்பினையுஞ் சேர்ந்தோர் ஆவரென்று மற்சபுராணத்தின் 132-ஆம் இயல் வகுத்துரைக்கின்றது. இருக்குவேதத்தின் மூன்றாம் மண்டிலத்தை ஆக்கிய விசுவாமித்திரரும், மற்றை மண்டிலங் களிற் பதிகங்கள் பலவற்றை ஆக்கிய வைவசுவதமனு, இடன், புரூரவர் முதலாயினாரும் அரசவகுப்பினரே ஆவர்; பலந்தர், வந்தியர், சங்கீர்த்தி முதலியோர் வைசிய வகுப்பினராவர். இருக்குவேதத்தின், முதல் மண்டிலத்துள்ள 100 ஆம் பதிகத்தை இயற்றிய ரிஜ்ராசுவர், அம்பரீஷர், சகதேவர், பயமாநர், சுராதர் முதலான இருடிகள் ஐவரும் விருஷாகிர் அரசன் புதல்வராவர் என்று இருக்குவேதத்தின் அநுக்கிர மணிகையே புகல்கின்றது. இங்ஙனமே, அவ்விருக்குவேதத்தின் 6 வது மண்டிலத்திலுள்ள 15-ஆம் பதிகத்தை ஆக்கிய அம்பரீடர் மகனான சிந்துத்வீபரும், அதன் 75- ஆம் பதிகத்தை இயற்றிய பிரியமேதர் மகனான சிந்துக்ஷித்தரும், அதன் 179-ஆம் பதிகத்தைப்பாடிய உசீநரரின் மகன் சிபியும், காசிமன்னன் திவோதாசன் மகன் பிரதர்த்தனரும், அதன் 98- ஆம் பதிகத்தைப் புகன்ற சந்தநுவின் மகன் தேவாபியும் எல்லாம் அரச இனத்தைச் சேர்ந்தோரே யாவர். இவ்வாறே இன்னும் பலர் உளர். மேற்சொல்லிய இருக்குவேதப் பதிகங்களை ஆக்கிய க்ஷத்திரிய வைசியர் என்பார் தமிழ வேளாள வகுப்பினரே யாவர். யாங்ஙன மெனிற் கூறுதும்: மேற்காட்டிய ரிஜ்ராசுவர் முதலான அரச முனிவர் ஐவரும் சேர்ந்தியற்றிய பதிகத்தின் 12 ஆம் செய்யுளில் `சோமன் என்னுங் கடவுள் ஐந்து இனத்தாரைக் காப்பவராகச் சொல்லப்படுகின்றனர். இச் `சோமன் என்னுஞ் சொல் `ச உமா என்னும் இருமொழிப் புணர்ச்சியாற்றோன்றி உமையோடு கூடினவர் என்று பொருள்படும் என அதர்வசிர உபநிடத உரையிலே விளக்கப்பட்டிருத்தலின், அச்சொல் சிவபிரான் மேற்றாதலும், `சோமநாதம் என்னும் வடநாட்டுச் சிவபிரான் திருக்கோயில் அப் பெயர்பெற்றிருத்தலின் அஃது அதற்குப் பின்னும் ஒருசான்றாதலும் நன்கு விளங்கும். இனிச் சிவபிரானாற் காக்கப்படும் ஐவகை இனத்தினர் ஆவார் துருவாசர்களும் யதுக்களும் அணுக்களும் துருகியர்களும் பூருக்களும் என ஐவர் ஆவரென்று கிரிபித் என்னும் ஆசிரியர் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார்.1 இவ் வைவகை இனத்தினரும் தமிழ் மக்கட் பிரிவினரே யாவரென்று ராகொசின் என்னும் வரலாற்று நூலாசிரியர் தாம் ஆழ்ந்தாராய்ந் தெழுதிய வேத இந்தியா என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றார்2. வடக்கிருந்துவந்து இந்தியநாட்டுள் நுழைந்த ஆரிய மக்களை எதிர்த்த பத்து அரசர்களுக்குத் தலைவராய் நின்றோர் பூருக்களும், அவர்க்குத் துணைவராய் அஞ்சா நெஞ்சினராய் நிலவிய பரதர்களும் ஆவர். இத் தமிழ அரசர் பதின்மருட் சிவர் (சைவர்) விஷாநியர் (வைஷ்ணவர்) என்பார் இருவரும் சேர்த்துச்சொல்லப்படுகின்றனர்3. ஆகவே, அத்துணைப் பழையகாலத்திலேயே தமிழருட் சிவபிரானை வணங்குஞ் சைவரும், விஷ்ணுவை வணங்கும் வைஷ்ணவரும் வலியராயிருந்து ஆரியரை எதிர்த்து நின்றமை புலனாகும். பழைய தமிழ்மக்களுட் போர் வலிமையில் மிகச் சிறந்துநின்ற பரதர் தம் குடியிற்றோன்றிய அரசர்களே இவ் இந்தியநாடு முழுமையும் ஆண்டுவந்தனர்; அதுபற்றியே, அவர்களின் செங்கோல் நீழலில்வந்து வைகிய ஆரியமக்கள் இவ் இந்தியநாட்டைப் `பாரதவர்ஷம் என்று அழைப்பாராயினர். குமரிநாடு கடல்கொண்டபின் அங்கிருந்த தமிழர்களே வடநாடுவரையிற் சென்று ஆங்காங்குக் குடியேறிப் பத்துவகை அரசியலை நாட்டினார்கள். அவர்களுள் வடமதுரையில் அரசாண்ட யதுகுலத்த வர்களே பின்னர்க் கண்ணனைத் தலைவனாய்க் கொண்டு துவாரகையில் வந்து குடியேறினர். அவ் யதுகுலத்தவரில் ஒரு பகுதியாரே பெயர்த்துந் தமிழ்நாட்டிற் போந்து எருமையூரிற் குடியேறினர்1. எருமையூரிற் குடியேறிய யதுகுலத்தவராகிய வேளிர்க்குத் தலைவனே புறநானூற்றிற் கூறப்படும் இருங்கோவேள் என்னும் மன்னன் ஆவன். இவ்வாறு இவர்போற் றமிழ்நாட்டினும் பிறநாடுகளினும் அந்நாளிற் பரவியிருந்த வேளாள மன்னர்கள் வரலாறுகளை உரைக்கப்புகின் இது மிக விரியும். இத்தமிழ் வேளாள அரசர்களையே பழைய வடமொழி வேதங்களும் உபநிடதங் களும் `ராஜந்யர், `க்ஷத்திரியர் என்னும் பெயர்களாற் குறிப்பவாயின என்பதற்கு, மனு திராவிடர்களை `க்ஷத்திரியர் என்று கூறுதலே (10, 43, 44) சான்றாம்2. தமிழ வேளாளரில் உழவுதொழில் செய்தாரும், உழவுதொழிலாற் பெற்ற பண்டங்களைக் கொண்டுவிற்றாருமே வட நூல்களில் `வைசியர் என்று நுவலப்படுவாராயினர். இவ்வாறு காட்டப் பட்ட க்ஷத்திரியரும் வைசியருமாகிய தமிழ வேளாளரே தொன்று தொட்டுச் சிவபிரானை வணங்கி வருபவராய் இருத்தலின், அம்மக்கட் பிரிவினர் ஐவரையுங் காப்பவர் `சோமன் என்னும் சிவபிரானாக இருக்குவேதம் புகலுவ தாயிற்றென்க. எனவே, இருக்குவேதத்திற் பலப்பல பதிகங்கள் இயற்றிய க்ஷத்திரிய வைசியர்கள் அனைவரும் தமிழ வேளாளர்களே யாதலைத் தெற்றென உணர்ந்து கொள்க. இவ்வாறு க்ஷத்திரிய வைசியராகிய வேளாளர்களும், இவர் தமக்குக் குற்றேவற்றொழில் புரிவாரான சூத்திரரும், மற்றை ஆரியரும் கலந்து வேதங்களையும் பிராமணங் களையும் பன்னிரண்டு உபநிடதங்களையும் ஆக்கிவைத்த காலத்திற், பிறப்பளவில் தமக்குள் உயர்வுதாழ்வுகாணாது, உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நால்வேறு தொழில் களையுஞ் செய்துகொண்டு உண்ணல் கலத்தல்களில் ஏதொரு வேறு பாடுமின்றி ஒருமித்து வாழ்ந்தனராகலின், அக் காலத்திற் பிறப்பளவில் உயர்வுதாழ்வு கொள்ளும் சாதிவேற்றுமை சிறிதுமில்லையென்று தெளிக. இதனாலன் றோ வாயு புராணமும் (8, 890 - 193) தீயவனுக்கு, மனத் தூய்மை இழந் தவனுக்கு வேதங்களும், அவற்றின் சடங்கு களும் வேள்விகளும் பட்டினிகிடத்தலும் தென்புலத்தார் கடனிறுத்தல் முதலான வினைகளும் பயனைத் தருகின்றில; அகத்தே இழிந்த இயற்கையுடையவனா யிருப்போன் புறத்தே எத்துணை முயற்சியோடு சடங்குகளைச் செய்தா னாயினும், அவை சிறிதும் பயன்படா. ஒருவன் அழுக்கு நெஞ்சத்தோடு தனக்குள்ள பொருள் முழுதுங் கொடுத்தா னேனும், அதனால் நன்மை எய்தமாட்டான்; ஆதலால், நல்ல தன்மையே உயர்ச்சிக்கு ஏதுவாகும். என்று கூறுவதாயிற்று. இனி, மூன்று வேதங்களுக்கும் பிற்பட்டதாகிய புருட சூத்தத்திலும், அதற்கும் பிற்பட்டதாகிய பிருகதாரணியக உபநிடத்திலும் (1, 4, 15) நால்வகைச் சாதிப்பெயர் காணப் படினும், முன்னையதில் அந் நாற்சாதியினரும் ஒரு முழுமுதற் கடவுளின் பிள்ளைகளாதலும், பின்னையதில் அந் நாற்சாதி யினரிடத்தும் இறைவன் நிறைந்து விளங்குதலும் நன்கு வற்புறுத்து உரைக்கப்படுதலின், இந் நூல்கள் தோன்றிய காலத்தில் நால்வகைச்சாதிகள் இருந்தமை பெறப்படினும், அவருள் உயர்வு தாழ்வுகள் இருந்தமை புலனாகவில்லை. பிராமணங்கள் தோன்றுவதற்கு முற்பட்ட வேத காலத்தில் பூணூல் அணியும் வழக்கங் காணப்படாமையால், அதுபற்றி யுண்டான சாதிவேற்றுமையும் அஞ்ஞான்று இருந்ததில்லை. சதபதபிராமணத்திலும் (2, 4, 2), கௌஷீதகி உபநிடதத்திலுமே (2, 7) பூணூல் அணியுங்குறிப்பு முதன்முதற் காணப்படுகின்றது. இவ்விரண்டிலுங்கூடப் பகலவன் கீழ்பால் எழும்போது அவனை வணங்குங் காலைப்பொழுதிலும், வேள்விவேட்கும் பொழுதிலுமே மாந்தர் பூணூல் அணிந்து மற்றைக் காலங்களில் அதனைக் கழற்றிவிடும் வழக்கம் நன்கு தெரித்தோதப் பட்டமையால், இந் நூல்கள் உண்டான காலத்திலும் சாதிவேற்றுமையின் பொருட்டுப் பூணூல் அணியப்படவில்லை யென்பதும், இறைவனை வழிபடுந் தொழிலிற் புகுந்திருப்போர் அத்தொழிலிற் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போதற்கு ஓர் அடையாளமாகவே அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்திருந்தனரென்பதும் இனிது விளங்கும். மற்று இக்காலத்திலோ இறைவனை வணங்காமல், உலகியற் றொழில்களையே அல்லும் பகலும் புரிந்து தமது வயிற்றுக்கும் தம்மைச் சேர்ந்தாரது வயிற்றுக்குமே பாடுபட்டு உழன்று தீவினைகளை ஈட்டுவோர் எந்நேரமும் அப்பூணூலை அணிந்துகொண்டு தம்மை உயர்ந்த சாதியாராக எண்ணி இறுமாந்து ஐயகோ! மேன்மேற் றீவினைகளைப் பெருக்கி வருகின்றனரே! அது கிடக்க. அடிக்குறிப்புகள் 1. See R.T.H. Griffith’S English translation of the Rig Veda, Vol. I. p. 10, foot note. 2. Vedic India by Zenaide A. Ragozin, pp. 323-329. 3. இருக்குவேதம், 7, 18. 4. See A History of Civilisation in Ancient India, by R.C. Dutt, Vol. I . 219. 5. Ibid. VIl. II. p. 86. இயல் - 2 பழைய உபநிடதங்கள் இதிகாசங்களில் சாதி இல்லை இனி, ஈசகேன கடம் முதலான பழைய பன்னீருப நிடதங்களிற் பல தோன்றிய காலத்தும் நால்வகைச் சாதி வகுப்பு மிகுதியாய்க் காணப்படாமல், பிராமணர் ராஜந்யர் என்னம் இரண்டு பிரிவுமட்டுமே அடுத்தடுத்துக் காணப் படுகின்றது. இவ்விரண்டு பிரிவும் அவ்வவர் தொழில் பற்றி வந்தனவே யல்லாமல், அவர் தமக்குள் எவ்வகையான வேறுபாடேனும் இருந்தமைபற்றி வந்தன அல்ல. வேள்வி வேட்டலும் நூல் ஓதுதலுமாகிய தொழில்களைச்செய்பவர் பிராமணர் என்றும், போர் புரிதலும் நாடு காத்தலுமாகிய தொழில்களைச் செய்பவர் ராஜ்ந்யர் அல்லது சத்திரியர் என்றும் தொழில்களையே செய்ய வேண்டு மென்னும் கட்டுப்பாடு சிறிதும் இருந்ததில்லை. துரோணரும் அவர் ஆசிரியர் அக்கினிவேசரும் அவர் புதல்வர் அசுவத்தாமரும் அவர் மைத்துனர் கிருபரும் போன்ற பிராமணர் போர்த்தொழில் பயின்றமையும், பிரியமேதர் சினி கார்க்கியர் திரையாருணி முதலான க்ஷத்திரியர் நூல்கள் ஓதிப் பிராமணரானமையும் (விஷ்ணு புராணம், 4, 19, 9, 10) மேற்கூறியதனை நாட்டுதற்குப் போது மான சான்றாம். இவை மட்டும் அல்ல. இவ் விருவகுப்பாரும் ஏதும் வேறுபாடின்றி ஒன்றுசேர்ந்து உணவருந்தியும், பெண் கொண்டு கொடுத்தும் ஒருமையாய் வாழ்ந்து வந்தார்கள். சர்யாத அரசன் புதல்வி சுகன்யையைச் சயவநர் மணந்தமை சதபதபிராமணத்திற் சொல்லப்பட்டது; ரதவீதி அரசன் புதல்வியைச் சியாவாசுவர் மணந்தமை இருக்குவேதத்தில் (5, 61) சொல்லப்பட்டது. விதர்ப்பன் என்னும் க்ஷத்திரியன் புதல்வியை அகத்தியர் மணந்துகொண்டார்; உலோமபாதன் புதல்வியை இருசிய சிருங்கர் மணந்துகொண்டார்; (மாபாரதம்); இங்ஙனமே ராஜந்யர் புதல்விகளைப் பிராமணர் மணந்துகொண்ட வரலாறுகள் இன்னும் எண்ணிறந்தன இருக்கின்றன. இனிப் பிராமணர் புதல்விகளை மற்றை வகுப்பாரான ராஜந்யர் மணந்துகொண்ட வரலாறுகளும் பல இருக்கின்றன. சுக்கிராச்சாரியார் என்னும் பிராமணர் தேவயாநீ என்னும் தம் புதல்வியை யயாதி என்னும் அரசனுக்குக் கொடுத்தார்; மற்றொரு பெண்ணை அனூகனுக்குக் கொடுத்தார் (மாபாரதம்). இழிகுடிப்பிறந்த அக்ஷமாலை என்னும் பெண்ணை வசிட்டரும் சாரங்கியை மந்தபாலருங் கூடினமை மனுமிருதி (9, 22) இற் சொல்லப்பட்டது. இங்ஙனமே ஞானோபதேசங்களும் வேற்றுமையின்றிச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. விதேகமன்னனாகிய ஜனகன் சுவேதகேது அருணேயர், சோமசுஷ்மசாத்யயஞ்ஞி, யாஞ்ஞவல்கியர் முதலான பார்ப்பன முனிவர் பலர்க்கு ஞானோபதேசஞ் செய்தனன் என்று சதபதபிராமணம் (10, 6, 2, 1) புகல்கின்றது; காசிமன்னனாகிய அஜாதசத்துரு என்னும் அரசனால் பாலாகி என்னும் பிராமணரிஷி ஞானோபதேசஞ் செய்யப்பட்ட வரலாறு பழைய கௌஷீதகீ பிராமண உபநிடதத்திற் (4,1) காணப்படுகின்றது. பாஞ்சால மன்னனாகிய பிரவாகநஜைவலி என்பான் சுவேதகேது அருணேயர்க்கு மெய்ப்பொருள் அறிவுறுத் தினமை, சதபதபிராமணம் (14, 9, 1, 1), பிருகதாரணியக உபநிடதம் (6, 2,1), சாந்தோக்கிய உபநிடதம் (5, 3, 1) முதலிய வற்றில் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றது. இவ்வுண்மைகளால் இருக்குவேதத்திற்குப் பிற் பழைய உபநிடதங்கள் எழுந்த காலத்திலும் பிராமணர் க்ஷத்திரியர் என்னும் இரண்டு வகுப்பே இருந்தன வென்பதும், அவ்விரண்டு வகுப்புந் தொழில் பற்றி உண்டாயினவே யல்லாமற் பிற்காலத்திற்போலப் பிறப்பளவால் உண்டாயின வல்ல வென்பதும், அவ்விரு வகுப்பாரும் தமக்குள் ஏதும் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களால் ஒருமித்து வாழ்ந்தனர் என்பதும் இனிது விளங்கும். இனிப் புராணங்கள் இதிகாசங்கள் பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இந் நால்வகைச் சாதியாரும் ஒரே தந்தைக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்து நால்வேறு தொழிலால் நால்வகைப்பட்டார்களே யல்லாமல் அவர்களுள்ளும் உண்ணல் கலத்தல்களில் ஏதும் வேற்றுமை ஏற்பட்டதில்லை. சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்பசூத்திரங்களிற் சொல்லப்பட் டிருக்கின்றது.1 வாயுபுராணத்தும்2 பின் வருமாறு சொல்லப்பட்டிருக் கின்றது. கிருதயுகத்தின்கண் சாதிகள் ஏதுமே இல்லை; அதன்பின்னர் நான்முகன் அவ்வவர் தொழில்களுக்கு ஏற்ப மக்களுள் நான்கு வகுப்புகள் ஏற்படுத்தினான். பிறரை ஆளுதற்கேற்ற ஆண்மைச்செய லுடையவர்களைப் பிறரைக் காக்கும் பொருட்டு க்ஷத்திரியரென்று நியமித்தான். தந்நயம் பாராட்டாமற் பிறர் நலங் கருதி உண்மையே பேசி வேதத்தைச் செவ்வையாக ஓதினவரைப் பிராமணர் என வைத்தான். முன்னே வலியற்றவர்களாய் நிலத்தை உழுவதிலும் கைத்தொழில் புரிவதிலுந் தலையிட்டு உழவினால் உயிர் வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றை எடுத்துத் தந்தவர்களை வைசியர் என வைத்தான். துப்புரவு செய்பவர்களாய் ஏவிய தொழில்மட்டுஞ் செய்யும் வலியற்றவர்களைச் சூத்திரர் என்று வைத்தான். இவ்வாயுபுராண உரையுள்ளும் சாதியானது தொழில்பற்றி வந்ததென்று சொல்லப்பட் டிருக்கின்றதே யல்லாமற், பிறப்பினால் வந்ததென்று சிறிதும் சொல்லப்படவில்லை. இனி, இந்நால்வகைச் சாதியா ருள்ளும் எவர் உயர்ந்தோர் எவர் தாழ்ந்தோர் என்று வினாவுங்கால், ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியா ரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியா ரெனவும், மகாபாரதம் சாந்தி பருவத்தின் கண் (6925) உறுதிப்படுத் துரைக்கப் பட்டிருக்கின்றது. அப்பகுதி வருமாறு: பாரத்துவாச முனிவர் பிருகு முனிவரை வினாவு கின்றார்: நால்வகைச் சாதிவேற்றுமைக்கும் நிறந்தான் ஏதுவாகு மென்று சொன்னால் எல்லாச் சாதியுள்ளும் நிறங்கள் பல திறப்பட்டுத் தோன்றுகின்றன. விருப்பும் வெகுளியும் அச்சமும் பேரவாவும் கலக்கமும் கவலையும் பசியும் களைப்பும் நம்மெல்லாரிடத்தும் மிகுந்து தோன்றுகின்றன; இங்ஙனமாயின் சாதிப்பகுப்பு எவ்வாறு பொருந்தும்? வியர்வையும் சிறுநீரும் மலமும் சளியும் பித்தமும் இரத்தமும் எல்லார்க்கும் பொதுவாய் உள்ளன; எல்லாருடைய உடம்புகளும் அழிந்துபடுகின்றன; இங்ஙனமாயின் எதனைக்கொண்டு சாதி வகுக்கப்படும்? அசையும் பொருளும் அசையாப் பொருளுமாகிய வகைகளும் எண்ணிறந்தனவா யிருக்கின்றன; இப் பகுப்புகள் பலவற்றுள்ளும் சாதிவகுப்புச் செய்தல் எங்ஙனம்? இவற்றிற்குப் பிருகு மறுமொழி கூறுகின்றார்: சாதிவேற்றுமை என்பது ஒன்றில்லை. உலகமுழுதும் நான் முகனாற் படைக்கப்பட்டமையால் தொடக்கத்தில் எங்கும் பிராமணர் மட்டுமே இருந்தனர். தொழில்களி னாலேயே சாதிகள் உண்டாயின. ஐம்பொறி யின்பநுகர்ச்சியில் விழைவுள்ளவர்களும், கொடுமையும் எரிச்சலும் நிறைந்தவர்களும், தாம் வேண்டும் பொருள்களைப் பெறுவதில் ஊக்கம் வாய்ந்தவர்களும், தாம் செய்தற்குரிய உடமைகளை விட்டவர்களும், செந்நிறம் வாய்ந்தவர்களும் ஆய் இருபிறப்பாளரான பிராமணர் க்ஷத்திரியருடைய நிலைமையை அடைந்தார்கள். ஆடு மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டவர் களும், மஞ்சள் நிறம் வாய்ந்தவர்களும், உழவுதொழிலாற் பிழைப்பவர்களும், தம்முடைய கடமைகளில் நில்லாத வர்களும் ஆய் இருபிறப்பாளரான பிராமணர் வைசிய ருடைய நிலையை அடைந்தார்கள். குறும்பு செய்வதிலும் பொய் கூறுவதிலும் விருப்ப முள்ளவர்ளும், பேரவாப் பிடியுண்டவர்களும், எல்லாவகை யானதொழில்களையும் செய்து அவற்றாற் பிழைப்பவர் களும், கரியநிறம் வாய்ந்தவர்களும், தூய்மை துப்புரவு இல்லாதவர் களும ஆய் இருபிறப்பாளரான பிராமணர் சூத்திரருடைய நிலைமையை அடைந்தார்கள். இத்தகைய தொழில்களாற் பிரிக்கப்பட்டு இருபிறப் பாளரே சாதிகளாக வகுக்கப்பட்டனர். அறமும் வேள்விச் சடங்குகளும் இவர்களில் எவர்க்கும் எப்போதும் விலக்கப்பட்டனவல்ல. ஐந்தாம் வேதமாகிய பாரதத்திலே பாரத்துவாசரும் பிருகுவும் உரையாடியதாகப் பெறப்பட்ட இந்தப் பகுதி யினாற் சாதிவகுப்பு ஒழுக்கத்தினால் வகுக்கப்பட்டதே யல்லாமற் பிறப்பினால் அன்றென்பது இனிது விளக்கப் பட்டிருக்கின்றது. அக்காலங்களில், உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர். பிறப்பினால் இழிந்தவராயிருப்பினும், அவர் உண்மைபேசுதலிற் பிறழாதவராயின் அவரே பார்ப்பனராகப் பாராட்டப்படுவாராயினர். இது சாந்தோக்கிய உபநிடதத்திற் (4,4, 1-5) போந்த சத்தியகாமஜாபாலன் கதையினால் நன்குவிளங்கும்; அது வருமாறு: ஜபாலா என்பவரின் மகனாகிய சத்தியகாமன் என்பான் தன் அன்னையை நோக்கி, `அம்மா, நான் பிரமசாரிய ஒழுக்கத்தை மேற்கொள்ள விரும்புகின்றேன். நான் எந்தக் குடும்பத்திற் குரியவன்? என்று வினவினான். அதற்கு அவள்: `குழந்தாய், நீ எந்தக் குடும்பத்திற்கு உரியை என்பதை யான் அறியேன். என் இளமைக்காலத்தில் யான் ஓர் ஊழியக்காரியாய் அங்குமிங்குமாய் இருக்கையில் நின்னைக் கருக்கொண்டேன். ஆதலால், நீ எந்தக் குடும்பத்திற்கு உரியையென்பதை யான் அறியேன். என்பெயர் ஜபாலா; உன் பெயரோ சத்தியகாமன். ஆகவே, நின்னைச் சத்தியகாமஜாபாலன் என்று தெரிவித்துக்கொள் எனக் கூறினாள். அதன்பின் அவன் ஹாரிதுருமத கௌதமரிடம்போய், `ஐய நான், ஒரு பிரமசரியத்தவனாய்த் தங்களிடம் இருக்க விரும்புகின்றேன். அதனாலேதான் ஐய, யான் தங்கள்பால் வந்தேன் என்றான்: “அவர் அவனைநோக்கி, `ஓ நண்பனே, நீ எந்தக் குடும்பத்திற்,கு உரியை? என வினவினார். அதற்கு அவன், ஐயா, யான் எந்தக்குடிக்கு உரியேன் என்பதை அறியேன். யான் என் அன்னையைக் கேட்ட போது அவள், `எனது இளமைக் காலத்தில் யான் ஓர் ஊழியக்காரியாய் அங்கு மிங்குமாய் இருக்கையில் நின்னைக் கருக்கொண்டேன். அதனால் நீ எக்குடிக்கு உரியை என்பதை யான் அறியேன். என்பெயர் ஜபாலா, நின்பெயரோ சத்தியகாமன் என மறுமொழி தந்தாள். ஆகையால், ஐய, யான் சத்தியகாம ஜாபாலன் எனப்படுவேன் என்றான். அதன்பின் அவர் அவனைநோக்கிப், `பிராமணன் அல்லாதவன் இங்ஙனம் உண்மைபேசுந் தகுதியுடையவன் ஆகான். குழந்தாய், ஓமவிறகு கொண்டுவா, நீ உண்மை பேசுதலிற் பிறழாமையால், யான் நினக்கு மெய்ப்பொருளை அறிவுறுத்துவேன் என்றார். பழைய விழுமிய அறிவுநூலாகிய சாந்தோக்கிய உபநிடத்திற் போந்த இவ்வரிய கதையைக்கொண்டு, பிறப்பினால் எத்தகையவராயிருப்பினும் உண்மை கூறுதலில் வழுவாதவரோ பார்ப்பனராய் உயர்குடிப் பிறப்பினராய்ப் பாராட்டப்பட்டதனை அறிகின்றனம் அல்லமோ? இன்னும், உயர்ந்த சாதியான் எவன் என்று ஆராய்ந்து முடிவு கட்டிய வஜ்ரசூசி உபநிடத உரை பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதொன்றாய் இருத்தலின் அதனையும் இங்கே மொழிபெயர்த்துக் காட்டுவாம்: அறியாமையைப் போழுவதும், அறிவிலாரை இழித்துத் தெய்வவுணர்ச்சி யுடையோனை உயர்த்துவதும் ஆகிய வஜ்ரசூசி என்னுங் கருவி ஈதெனத் தெரித்துரைக்க இப்போது புகுகின்றேன். பிராமணரும் க்ஷத்திரியரும் வைசியரும் சூத்திரரும் என நால்வகைச் சாதியினர் உளர். அவர்களுட் பிராமணரே மிகச் சிறந்தோராவரென்று வேதவுரைகளுக்குப் பொருத்த மாகவே மிருதிகளும் புகலுகின்றன. ஆதலால் இஃது ஆராயற்பாலதா யிருக்கின்றது. பிராமணன் என்னுஞ் சொல்லால் நுவலப்படுவது யாது? அஃது ஓர் உயிரா? அல்லது அஃது ஓர் உடம்பா? அஃது ஒரு வகுப்பா? அல்லது அஃது ஒரு ஞானமா? (அறிவா?). அன்றி அஃது ஒரு கர்மமா? (வினையா?) அல்லது அஃது ஒரு தருமத்தை (அறத்தைப்) புரிவோனா? முதலிற், பிராமணன் என்பது உயிரா? அன்று. கழிந்து போன பல உடம்புகளிலும், இனி வரக்கடவ பல உடம்பு களிலும் புகுந்தும் புகுவதாயும் வருவது ஓர் உயிரேயாக லானும், வினைக்கீடாகக்கிடைத்த பலதிற உடம்பு களிலிருந்து வரும் உயிர் ஒன்றேயாகலானும் உயிர் பிராமணன் ஆக மாட்டாது. அற்றேற், பிராமணன் என்பது உடம்பா? அன்று. ஐவகைப் பொருள்களால் ஆக்கப்பட்ட உடம்பான சண்டாளன் ஈறாக எல்லா மாந்தர்க்கும் ஒரே தன்மைத்தாய் இருத்தலானும், முதுமையும் இறப்பும் அறமும் (தர்மமும்) மறமும் (பாவமும்) அவர்களெல்லார்மட்டும் பொதுமையில் நிகழ்தலானும், பார்ப்பன ரெல்லாரும் வெண்ணிறத் தினராயும் அரச ரெல்லாரும் செந்நிறத்தினராயும் வணிக ரெல்லாரும் மஞ்சள் நிறத்தினராயும் அடியோரெல்லாரும் கருநிறத் தினராயுமே இருப்பரென வரையறுத்த வேறுபாடு யாண்டும் இல்லாமை யானும், தன் றந்தை முதலாயினார் பிணத்தைச் சுடுகையில் ஒரு பார்ப்பனனைக் கொன்ற பழி புதல்வர் முதலாயினார்க்குச் சேருமாதலானும் உடம்பு பிராமணன் ஆகமாட்டாது. இனிப், பிராமணன் என்பது ஒரு வகுப்பா? அன்று. மகருஷிகள் (பெரிய முனிவரர்) பலர் படைப்பின்கண் உள்ள மற்றை வகையினரிலிருந்துஞ் சாதியினரிலிருந்துந் தோன்றினர். ருஷியசிருங்கர் ஒரு மான்வயிற்றி பிறந்தார்; கௌசிகர் குசைப்புல்லிற் பிறந்தார்; ஜாம்புகர் ஒரு நரிவயிற்றிற் பிறந்தார்; வால்மீகி ஒரு புற்றிலிருந்து உண்டானார்; வியாசர் ஒரு செம்படவன் மகள்வயிற்றிற் பிறந்தார்; கௌதமர் ஒருமுயலின் பிட்டத்திலிருந்து உண்டானார்; வசிட்டர் ஊர்வசி என்னுந் தாசிவயிற்றிற் பிறந்தார்; அகத்தியர் ஒரு கும்பத்தில் (குடத்தில்) உண்டானார்; இவ்வாறு யாங்கள் சொல்லக்கேட்டோம். இவர்களுட் சாதிக்குப் புறம்பானாருங்கூடப், பிரமஞானத்தைக் (கடவுளுணர்ச்சியை) அறிவுறுக்கும் ஆசிரியரில் முதற்கண் நின்றார்கள்; ஆதலால், ஒரு வகுப்பும் பிராமணனாக மாட்டாது. அற்றேற், பிராமணனென்பது ஞானமா? (அறிவா?). அன்று. கடவுளுண்மையினை அறிவதில் நிரம்பத் தேர்ச்சி பெற்ற க்ஷத்திரியரும் மற்றையோரும் பலர் உளராகலின், ஞானம் பிராமணன் ஆகமாட்டாது. அங்ஙனமாயிற், கர்மம் (வினை) பிராமணனா? அன்று. பிராரப்தம் (கழிந்தவினை), சஞ்சிதம் (எச்சவினை), ஆகாமியம் (ஏறும்வினை) என்னுங் கர்மங்கள் எல்லா உயிர்களுக்கும் ஒரே தன்மையவாய் இருத்தலானும், கர்மத்தினால் ஏவப் பட்டே எல்லாமாந்தர்களும், தத்தம் வினைகளைச் செய்தலானும் கர்மம் பிராமணனாகமாட்டாது. அற்றேல், அறத்தைத் (தர்மத்தைச்) செய்பவன் பிராமணனா? அல்லன். பொன்னை வழங்கினோர் க்ஷத்திரி யோரிலும் மற்றையோரிலும் பலர் உளராகலின், அறத்தைச் செய்வோன் பிராமணன் ஆகான். அவ்வாறாயின் உண்மையிற் பிராமணன் என்போன் யாவன்? அவன் எவனாய் இருப்பினும், தன் உயிர்க்கு உயிராயிருக்கும் இறைவனை உணர்ந்தோனே, தன்னோடு ஒத்த இரண்டாவ தொரு பொருள் இல்லாததாய்ச் சாதியுஞ் செயல்களும் அற்றதாய் அறுவகை மாறுதல்களும் அறுவகைக் கறைகளாகிய குற்றங்களும் நீங்கியதாய் உண்மையும் அறிவும் இன்பமும் என்றுமுள்ள தன்மையும் உடையதாய்த் தன்னில் ஏதொரு மாறுதலும் இல்லதாய் எல்லாக் கற்பங்களுக்கும் அடிப்படையாய் எல்லாப் பொருள் களையும் ஊடுருவிக் கொண்டு இருப்பதாய் வான்வெளி போல் எல்லாப்பொருள் களின் உள்ளும்புறம்பும் நிறைந்து நிற்பதாய்ப் பகுக்கப்படாத இன்ப உருவினதாய் வழியளவையின் வைத்து அறியப்படாததாய் உயிரினால் நேரே உணரப் படுவதாய்த் தன்னுள் விளங்கும் பரமான்வை (முழுமுதற் பொருளை)த் தன் உள்ளங்கையின் நெல்லிக்கனிபோல் நேராக உணர்ந்தோனே, தான் விழைந் ததைப் பெற்றமையால் உலகத்துப் பொருள்களையும் இன்பங்களையும் விழையும் குற்றங்கள் அற்றோனே, இருவினை யொப்பு முதலான உயர்ந்த தன்மைகள் வாய்ந்தோனே, மனஅசைவு பொறாமை உலகத்துப் பொருள்களில் அவா விருப்பு மயக்கங்களில் நீங்கினோனே, தற்பெருமையாலும் தற்செருக்காலும் தீண்டப்பெறாத உள்ளத்தோனே, மொத்த மாய் இவ்வெல்லா இயல்புகளும் அவற்றை யடைதற்குரிய வழிகளும் ஒருங்கு உடையோனே பிராமணன் ஆவன். வேதங்கள், மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களின் கருத்து இப்படித்தான் இருக்கின்றது. இவ்வாறன்றி ஒருவன் பிராமணனது நிலையை அடைதல் முடியாது. ஒருவன் தன்னுள்ளிருக்கும் பரமான்மாவைச் சச்சிதானந்த (உண்மை யறிவின்ப) உருவிற்றாக இரண்டற்ற பிரமமாக வைத்து நினைத்தல்வேண்டும். ஆம், தன்னுள்ளிருக்கும் பரமான்வைச் சச்சிதானந்த பிரமமாக வைத்தே நினைத்தல் வேண்டும். இத்தகையதுதான் இவ்வுபநிடதம். சாமவேதத்தின் பாலதாகிய இவ் வஜ்ரசூசி உபநிடதமானது பிறப்பளவினால் எவனும் உயர்ந்த சாதியான் ஆகமாட்டான் எனவும், புனிதத்தன்மையும் முழுமுதற்கடவுளை யுணர்ந்து அதனை வழிபடும் விழுமிய ஒழுக்கமுமாகிய செயற்கை வகையினாலேயே எக்குடிக் பிறந்தவனாயிருப்பினும் அவன் உயர்ந்த சாதியான் ஆகின்றான் எனவும் ஆராய்ந்து வரையறுத்து எல்லா நூல்களின் கருத்தும் அதுவேயென முடிந்த முடிபை வலியுறுத்திச் சொல்லுதலின் பிறப்பளவிற் சாதியுயர்வு கொள்ளுதல் வேதம் முதலாகிய எந்தநூலுக்கும் உடன்பாடு அன்றென்பது நன்குபெற்றாம். அடிக்குறிப்புகள் 1. ஆபதம்ப தர்மசூத்திரம், 2, 2, 3, 4-9 2. வாயுபுராணம், 8, 161- 165. இயல் - 3 மிருதிகளிற் சாதிப்பிரிவும் ஒழுக்கம் பற்றியதே இனி, ஆபதம்பர், கௌதமர், வசிஷ்டர், போதாயநர், மநு முதலாயினார் தருமசாத்திரங்களும் மிருதிநூல்களும் ஆக்கிய காலந்தொட்டே நால்வேறு சாதிவகுப்பும், அவ்வவர்க் குரிய தொழில்களும் வரையறுத்து உரைக்கப் பட்டன. அவ்வாறு அவை வகுத்து உரைக்கப்பட்ட விடத்தும் உயர்ந்த தொழில்களைச் செய்வோரே உயர்ந்த சாதியாராகவும், இழிந்த தொழில்களாக அவர்களாற் கருதப்பட்டவைகளைச் செய்வோரே இழிந்த சாதி யாராகவும் வைக்கப்பட்டன ரல்லாமற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை மேற்கூறிய தரும சூத்திரங்கள் மிருதி நூல்களுள் யாண்டுஞ் சொல்லப்பட வில்லை. உயர்ந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடித்துச் செய்தற் குரியோர், அவற்றினின்றும் வழுவுவராயின் அவர் இழிந்த சாதி யினராகவே அவற்றுள் ஐயந்திரிபுக்கு இடனின்றிச் சொல்லப்பட் டிருக்கின்றனர். வாசிஷ்ட தரும சூத்திரம், பிராமணனாவது க்ஷத்திரியனாவது கற்கள், உப்பு, சணல், பட்டு, சணற்றுணி, தோல் முதலியவைகளை விற்றல் ஆகாது; சாயம் ஏற்றிய புடைவைகளும் விற்றல் கூடாது; சமையற்செய்த வுணவும், பூக்கள் பழங்கள் கிழங்குகள் மண்ப்பண்டங்கள் உணவுக்கு நறுமணச்சுவை ஏற்றும் பொருள்கள் முதலியனவும், தண்ணீர் பூண்டுகளி லிருந்து இறக்கிய சாறு முதலியனவும் விற்றல் கூடாது; சோமப் பூண்டு படைக்கலங்கள் நச்சுப்பண்டங்களும் விற்றல் ஆகாது; இறைச்சியாவது பாலாவது அவற்றால் அமைக்கப் பட்ட உணவாவது, தகரம் செம்மெழுகு ஈயம் முதலியன வாவது விற்றல் கூடாது (2,24-27) எனவும், வேதத்தை ஓதாதவரும் அதனைப் பிறர்க்குக் கற்பியாதவரும் அழல் ஓம்பாதவர்களும் ஆன பிராமணர்கள் சூத்திரை ஓத்தவரா கின்றனர்; வேத உணர்ச்சி யில்லாதவனைப் பிராமணன் என்று அழைத்தல் ஆகாது; வியாபாரஞ்செய்து பிழைப்ப வனையும், நாடகம் ஆடுவோனையும், சூத்திரர்க்கு ஏவல் செய்வோனையும் கள்வனைப்போற் பிறர்பொருளைக் கவர்வோனையும், மருத்துவஞ்செய்து பிழைப்போனையும் அங்ஙனமே பிராமணன் என்று கூறுதல் ஆகாது; தமக்குரிய தூய கடமைகளைச் செய்யாமலும், வேதம் அறியாமலும் ஐயம் ஏற்றுப் பிழைக்கும் பார்ப்பனர்கள் இருக்கும் ஊரை அரசன் ஒறுத்தல் (தண்டித்தல்) வேண்டும்; ஏனெனில் அத்தகைய ஊர் கொள்ளைக்காரருக்கு உண்டிகொடுக் கின்றது. தம்முடைய புனிதக் கடன்களை நிறைவேற்றாமலும், வேதத்தை அறியாமலும், பிராமணன் என்னுஞ் சாதிப்பெயர் ஒன்றைமட்டுங் கொண்டு பிழைப்பைத்தேடும் பிராமணர் பல்லாயிரம்பேர் ஒருங்குகூடினாலும், அவர்கள் அறங்கூறும் அவையத்தார் ஆகமாட்டார்கள் (3, 1-5) எனவும் வற்புறுத்துரைக்கின்றது. இதற்கு இசையவே கௌதம தருமசூத்திரமும் (7, 8-21), மநு மிருதியும் (12, 114) புகலாநிற்கின்றன. நால்வகைச் சாதிகளும் அவற்றிற்குரிய கடமைகளும் வரையறுத்துப், பார்ப்பனரை வரைகடந்து உயர்த்தி, ஏனை மூவரையும் அவருட் கடைப்பட்ட சூத்திரரையும் இழித்துப், பெருந் தொகையினரான இந்துமக்களை இழிந்த சூத்திர வகுப்பிற் சேர்த்து, அவர்களைக் கல்வியிலும் நாகரிகத்திலும் தலையெடுக்க வொட்டாமல் நசுக்கிப், பன்றி நாய் கழுதை முதலான விலங்கினங்களிலும் அவர்களைத் தாழ்த்தி, நினைப்பினும் நெஞ்சம் நடுங்குங் கொடுந் தண்டனைகளை (ஒறுத்தல்களை)ச் சிறிதும் இரக்கமும் ஈர நெஞ்சமும் இன்றி அச் சூத்திரர்க்கு மட்டுமே ஏற்படுத்திச், சாதிப்பிரிவுகளுக்கு அழுத்தமான அடிப்படைகோலிய தருமசூத்திரங்கள் மிருதிகளுங்கூடப் பிறப்பளவில் ஒருவனைப் பிராமணனாகக் கூறுதற்கு ஒருப்படாதிருக்கத், தாம் அந்தண அரச வணிக வகுப்புகளுக்கு உரியவர்களாயிருந்தும் அவ்வுண்மையை அறிந்துகொள்ளுதற்கு ஏற்ற கல்வியறிவும் ஆராய்ச்சி யுணர்வும் இன்றிக், கிறிதுவர் `அஞ்ஞானி என்றழைத்தால் அதன் இழந்த பொருளை யறியாமல் அதனைத் தனக்குரிய உயர்ந்த பட்டப்பெயராகக் கருதித் தன்னைத்தானே `அஞ்ஞானி என்று சொல்லிக்கொள்ளும் புலையனைப் போலத், தம்மைப் பார்ப்பனர் `சூத்திரர் என்றழைத்தால் அச்சொல்லின் இழிந்தபொருளை யறியாமல் தாமுந் தம்மைச் `சூத்திரர் எனவுஞ் `சற்சூத்திரர் எனவுஞ் சொல்லிக் கொள்ளும் போலிச்சைவர்கள் மட்டும் பிறப்பளவில் உயர்ந்தவர் ஆதல் யாங்ஙனம்? நால்வகை மக்கட்பிரிவினரில் மிக உயர்ந்தோராகக் கருதப்பட்ட பார்ப்பனருக்கே பிறப்பளவில் உயர்ச்சி கைகூடாதாயின், அந் நால்வகை யினரிலுங் கடைப்பட்ட சூத்திர வகுப்பினராகத் தம்மைத்தாமே ஒப்புக்கொண்ட போலிச் சைவர்கள்மட்டும் பிறப்பளவில் உயர்ந்தவராதல் யாங்ஙனம்? மனுமிருதி எட்டாம் அத்தியாயத்தில் (413 - 415). ஒரு சூத்திரன் விலைக்கு வாங்கப்பட்டாலும் விலைக்கு வாங்கப் படாவிட்டாலும், அவனை அடிமைவேலை செய்யும்படி ஒரு பார்ப்பனன் கட்டாயப்படுத்தலாம்; ஏனென்றால், அவன் பார்ப்பனனுக்கு அடிமையா யிருக்கும் படி கடவுளாற் படைக்கப்பட்டான். தன் தலைவனால் விடுவிக்கப்படினும் ஒரு சூத்திரன் தன் அடிமைத் தன்மையினின்றும் விடுவிக்கப்பட்டவன் அல்லன்; அஃது அவனுக்கு இயற்கையாய் இருப்பதனால், அவனை அதனினின்றும் யார்தாம் விடுவிக்கக்கூடும்? சண்டையில் வென்று சிறையாகப்பிடித்துக் கொணரப் பட்டவன், தன் அற்றைச் சோற்றுக்காக ஊழியஞ்செய்பவன், தன் வீட்டில் தன் வேசிக்குப் பிறந்தவன், விலைக்கு வாங்கப்பட்டவன், பிறராற் கொடுக்கப்பட்டவன், தன் முன்னோர் காலந்தொட்டுத் தனக்கு அடிமைப் பொருளாய் வருபவன், குற்றத்திற்காக அடிமைப்படுத்தப்பட்டவன் எனச் சூத்திரர் எழுவகைப்படுவர். என்று சூத்திரர் இன்னா ரென்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றது. தம்மைச் சூத்திரர் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளும் போலிச் சைவர்கள், மேலே மனு சொல்லிய எழுவகைச் சூத்திரரில் எந்த வகையிற் சேர்ந்தவர்களோ அதனை அவர்களே எடுத்துச் சொல்லக் கடவர். அவ்வேழுவகையில் அவர்கள் எதிற்சேர்ந்தவரா யிருந்தாலும் இருக்கட்டும் அவர்கள் தம்மைச் சூத்திரர் என்று தாமே ஒப்புக்கொண்ட மட்டில் அவர்கள் பார்ப்பனர் வீட்டுக் கடைவாயிலிற் காத்திருந்து அடிமைவேலை செய்யும் ஊழியக்காரரே யாவரல்லாமல், உயர்ந்த சாதியாராதல் யாங்ஙனம்? அற்றன், `யாங்கள் கொலைபுலைதவிர்ந்து சிவவழிபாடு இயற்றி உழவும் வாணிகமும் நடாத்திச் செல்வாழ்க்கை யுடையேமாய் இருத்தலின் எம்மை மற்றைச் சூத்திர வகுப்பார் எல்லாரோடும் சேர்த்தல் ஆகாது, யாம் சூத்திரரிற் சிறந்த சற்சூத்திரரே ஆவேம்எனின்; மேலெடுத்துக்காட்டிய மனு முதலான பழைய மிருதி நூல்களிற் சூத்திரரில் ஒருவகையே சொல்லப்பட்டிருக்கின்ற தல்லாமற், சற்சூத்திரர் என்னும் மற்றொருவகை அவற்றுள் யாண்டும் சொல்லப்படவில்லை; சூத்திரர் என்போர் பார்ப்பனர் அரசர் வணிகர் என்னும் ஏனை மூன்று வகுப்பினர்க்கும் அடிமைகளாய் ஊழியம் ஒன்றே செய்தற்குரிய ரல்லாமல், உழவு வாணிகம் நடாத்திச் செல்வந் தொகுக்கவாவது, கல்வி கற்கவாவது, சிவவழிபாடு இயற்றவாவது உரிமை வாய்ந்தவர்கள் அல்லர். ஆதலாற் `சற்சூத்திரர் என்னுஞ் சொல்வழக்குப் பழைய வடமொழி மிருதி நூல்களுக்கு முற்றும் மாறாவதொன்றா மென்று உணர்ந்துகொள்க. அற்றேற், `சற்சூத்திரர் என்னும் பெயரும் அவர்க்குரிய கடமைகளும் சிவாகமங்களிற் சொல்லப்பட்டிருக் கின்றனவே யெனின்; `சிவாகமங்கள் என்னும்பெயரால் இப்போது நடைபெறும் சில வடமொழி நூல்கள், கோயிலில் வழிபாடு ஆற்றும் முறைகளையுங் கோயில் அமைக்கும் வகைகளையுந் தெரித்தற்பொருட்டு இருநூறு முந்நூறு ஆண்டுகளாகக் கோயிற் குருக்கண்மார்களால் எழுதிவைக்கப்பட்டன வாகும். கோயில்வழிபாடுகளும் கோயிற்குருக்கண்மார் பிழைப்பும் செல்வர்களாயுள்ள சைவவேளாளர்களின் பொருளுதவியைக் கொண்டே நடைபெற வேண்டியிருத்தலின், அவர்களைச் சூத்திரவகுப்பா ரெல்லாரோடும் பொதுவாகச் சேர்த்துக் கூறுதற்கு, அஞ்சியே, அந்நூல்களை எழுதிய அக் குருக்கண்மார்கள் அவர்களைச் சிறிது உயர்த்திவைத்தற்காகச் `சற்சூத்திரர் என்னுஞ் சொல்லைப் புதிதாகப்படைத்து அவற்றுள் நுழைப்பாராயினர். சிவபிரான் றிருக்கோயிற் குருக்கண் மார்கள் உண்மையிற் சைவவேளாள மரபினைச் சேர்ந்தவர் களாயிருந்தும், தம்மை அம்மரபிற் குரியவர்களாகச் சொல்லிக் கொள்வது இழிவென நினைந்து, வடக்கிருந்துவந்து குடியேறிய ஆரியப்பார்ப்பன இனத்தில் தம்மையும் மெல்ல மெல்லச் சேர்த்துக்கொள்வான் விழைந்து, தம்மவரான சைவவேளாளரைச் சூத்திரரெனவுந் தம்மைப் பிராமணர் எனவும் வேறுபகுத்து, அங்ஙனம் பகுப்பினுந் தமது பிழைப்புக்குப் பலவகையில் உதவியாளராய் நிற்கும் சைவவேளாளரை ஆரியப்பார்ப்பனர் செய்தவாறு போல் தாமும் முழுச் சூத்திரவகுப்பிற் சேர்த்துவிடுதற்கு இயலாமல், அவர்களைச் சிறிது உயர்த்திச் `சற்சூத்திரர் என்னும் ஒரு புதுப்பெயரைப்படைத்து அதனைத் தாம் சிவாகமப் பெயரால் இயற்றிய அந்நூல்களில் எழுதிவைப்பாராயினர். `சற்சூத்திரர் என்னும் இப் பெயர்வழக்கு, எல்லாரும் ஒப்புக் கொண்ட பழைய வடநூல்களில் எங்குங் காணப் படாமையின் இதனை ஆரியப்பார்ப்பனர் எவரும் தழுவிக் கூறுகின்றிலர்; இன்னோரன்ன புதுவழக்குகள் விரவிக் காணப்படும் இவ்வாகம நூல்களைப்பற்றிய குறிப்பும் பழைய வட நூல்களில் எங்குங் காணப்படாமையின், வடநூல் ஆராய்ச்சியுடையார் எவரும் இவ்வாகம நூல்களை எங்கும் மேற்கோளாகவும் எடுத்துக் காட்டுகின்றிலர். அற்றேல், வேதாந்த சூத்திரத்திற்குச் சைவ பாடியம் எழுதிய நீலகண்ட சிவாசாரியார் யாம் வேத சிவாகமங்களுக்கு வேற்றுமை காண்கின்றிலம் எனத் தமதுரையுள் உரைத்த தென்னை யெனின்; அவராற் குறிப்பிடப்பட்ட சிவாகமங்கள் என்பன வடமொழி யிலுள்ள உபநிடதங்களைப்போற் கடவுள் உயிர் மலம் (பதிபசுபாசம்) என்னும் முத்திறப் பொருளியல்புகள் தெரித்து வீடுபேறு பயக்கும் உணர்வினைத் தோற்றுவிக்கும் வடமொழி தென்மொழி அறிவுநூல்களேயாம். தமிழ் மொழிக்கண் உள்ள திருமந்திரம் அப் பெற்றித்தான தொரு விழுமிய சிவாகம நூலாகும். இத் திருமந்திரம்போன்ற சிவாகம நூல்கள் பல தமிழிலும் வடமொழியிலும் அக் காலத்திருந்தமையின் அவை தம்மையே நீலகண்ட சிவாசாரியார் தமது பாடியவுரையிற் குறிப்பாராயினரென்க. பண்டைநாளிலிருந்த தமிழ் வடமொழிச் சிவாகம நூல்களைப்பற்றிய ஆராய்ச்சியினை எமது மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலுள் விரித்துக்காட்டி யிருக்கின்றேமாகலின் அதனை அங்கே கண்டுகொள்க; ஈண்டுரைப்பிற் பெருகும். இனி, இத் தென்றமிழ்நாட்டிலுள்ள சைவ வேளாளர்கள் உண்மையில் ஆரியப்பார்ப்பனர்க்கு மேலான வழக்க ஒழுக்கங்களையுடைய உயர்ந்த சாதியாராயிருந்தும், தமக்கு உரிய அருள் ஒழுக்கத்தையும் கல்விப்பயிற்சியையும் ஆராய்ச்சியுணர் வினையும் அறவே கைவிட்டு, இங்கே பிழைக்கவந்த அவ்ஆரியப் பார்ப்பனர் கட்டிச் சொல்லிய பொய்க் கதைகளிற் சிக்குண்டு, தமக்குள்ள செல்வத்தை யெல்லாம் அவர்கட்கும் அவர்கள் காட்டிய உலகப் பொய்ம்மாய இன்பங்கட்கும் அளவின்றிச் செலவிட்டுத், தமக்குப் பலவகையான பயன்படுங் கைத்தொழில்களைச் செய்து கொடுத்துத் தம்மைச் செல்வத்திற் புரளவைத்த பதினெண் தொழில்புரியும் அருமைத் தமிழ்மக்களையெல்லாந் தம்மினுந் தாழ்ந்தசாதியாராக இழிபுபடுத்தித், தம்மை அவரெல்லாரினும் உயர்ந்த சாதியாராகக் கருதி இறுமாந்து, அவ்வாரியப் பார்ப்பனரை மட்டுந் தம்மினும் மேலான சாதியாராகப் பிழைபட நினைந்து சைவ வேளாளர்கள் தம் முன்னோரது அருள் ஒழுக்கத்திற்கு முற்றும் மாறாக நடக்கப்புகுந்த காலந்தொட்டே இழிந்த சூத்திரராயினார் கண்டீர்! தமக்கு உதவிசெய்யுந் தொழிலாளரைத் தாம் இழிந்த சாதியாராக நினைந்து தருக்கி அவர்கட்குப் பல கொடுமைகளைச் செய்தமையா லன்றோ சைவ வேளாளராகிய தாமும் ஆரியப் பார்ப்பனரால் இழிபு படுத்தப்பட்டு இழிந்த சூத்திரராயினார்! பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும் என்னும் பொய்யாமொழி ஒருகாலும் பொய்படாதன்றோ! பதினெண்வகைத் தொழில்களைச் செய்து தருவாரான கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பார், பாகர், பறையர் என்போர் தத்தந் தொழில்களைச் செவ்வனே செய்து தருத லாலன்றோ வேளாளரும் அரசரும் அந்தணரும் இனிதுயிர் வாழ்கின்றனர். உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத இக் கைத்தொழில்களைச் செய்து தந்து நாம் துன்பமின்றி இன்பமாய் நன்குவாழ உதவிபுரியும் அருந்தமிழ் மக்களாகிய நம் உடன்பிறப்பினரையும் அவர் இயற்றும் அத் தொழில்களையும் இழிபுபடுத்தி நினைத்தலுங் கூறுதலுந் தெய்வத்திற்கு அடுக்குமா? இவர்கள் தாந்தாஞ் செய்யுந் தொழில்களைச் செய்யாது கைவிட்டு வறிதேயிருந்தால், தம்மைச் சைவ வேளாளர் என்றும், க்ஷத்திரிய ரென்றும் பிராமண ரென்றுஞ் சொல்லி இறுமாந்து திரிவோர்தம் இறுமாப்பு எவ்வாறாகும்! இவர் தம் சாதியுயர்வெல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோமன்றோ! இருக்குவேத காலத்தில் ஒரு குடும்பத்தாரிலேயே பற்பல தொழில்களைச் செய்வாரிருந் தனரென்பது நன்கு காட்டப்பட்டிருக்கின்றது. இருக்குவேத ஒன்பதாம் மண்டிலத்தில் (112, 3) யான் பாடல்களைச் செய்கின்றேன், என் தந்தையோ ஒரு மருத்துவன், என்தாயோ திரிகையில் தானியங்களை அரைக்கின்றாள். செல்வத்தைப் பெறுதற்பொருட்டாகப் பலவேறு சூழ்ச்சிகளால் ஆக்களைப்போல யாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கின்றோம். எனப் போந்த பாட்டினால் ஒரு குடும்பத்தினரே பல தொழில்களைச் செய்து உயிர்வாழ்ந்தமை பெறப்படுதல் காண்க. இவ்வாறு பண்டை நாளில் ஒரு குடும்பத்தினரே உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பற்பல தொழில்களைச் செய்து தம்முள் ஏதும் வேற்றுமையின்றி நன்கு உயிர்வாழ்ந்து வந்தமைபோல, இப்போதும் பயன்படும் பற்பல அரியபெரிய கைத்தொழில்களைச் செய்துவரும் வகுப்பினர் பற்பலரும் அங்ஙனமே தம்முள் உயர்வுதாழ்வு காணாது ஒருமித்து அளவளாவி உயிர்வாழப் பழகுவராயின் நம் இந்தியநாடும் இந்திய மக்களும் எவ்வளவு சிறந்த நிலையை அடைகுவர்! வெள்ளைக்கார நன்மக்கள் தாந்தாம் வேண்டிய பல்வேறு பயன்படுந் தொழில்களைச் செவ்வையாகச் செய்துகொண்டு, அத்தொழில்களையாவது அத் தொழில்களைச் செய்யுந் தம் மினத்தவரையாவது ஒரு சிறிதும் இழிபாக நினையாது, எல்லாரையும் ஒத்த இயல்பினராகவே கருதி உண்ணல் கலத்தல்களில் ஏதும் வேறுபாடின்றி ஒருங்கு அளவளாவி ஒரு குடும்பத்தாரைப் போல் வாழ்ந்துவருதலாலன்றோ, அவர்கள் கல்வியிலுஞ் செல்வத்திலும் நுண்ணுணர்விலும் ஆற்றலிலும் இன்பத் திலும் மேம்பட்டு இவ்வுலகின்கண் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றிப், பெரும்பாலும் ஏனையோரை யெல்லாந் தங்கீழ்ப்படுத்துத், தாம் அவர்க்கு மேலாய்த் தேவரைப்போல் விழுமியராய் வாழ்கின்றனர்! மற்று, நம் இந்தியமக்களோ தம்முட் பல்வேறு பயன்படுதொழில்கள் செய்வாரையும் அவர் செய்யும் அத்தொழில்களையுந் தாந்தாமே இழிபுபடுத்திக் கொண்டு, அதனால் ஒருவர்க்கொருவர் அன்பும் ஒற்றுமையும் இன்றிப், பொறாமையும் சூதும் வஞ்சமும் மிக்க அழுக்கு நெஞ்சினராய்க், கல்வியும் அறிவும் ஆற்றலும் இன்பமும் அற்றுக், கவலையும் வறுமையுந் துன்பமும் மிகுந்து, பொய்க் கதைக்கும் அறியாமைக்கும் அடிமைகளாகி, அதனால் இவ்வுலக வாழ்க்கையை நரகவாழ்ககையாக்கி அலகை களைப்போற் காலங்கழிக்கின்றனர்! ஐயோ! நம் இந்திய மக்கள் நல்லறிவும் ஒற்றுமையும் பெற்று முன்னேற்றம் எய்தும் நாள் எந்நாளோ! அறிகிலம். அதுகிடக்க. மேற்கூறியனவெல்லாம் ஒக்கும்; சைவவேளாளர் சூத்திரர் அல்லராயின் அவரைப் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் என்னும் மற்றை மூவகையில் எதன்கண் அடக்குதல்வேண்டும் எனின்; அம்மூவரினும் அவர்க்கு மேற்பட்ட நிலையினும் வைகிய பழைய சைவ வேளாளரை அம்மூவகுப்பில் மட்டும் அடக்குதல் பொருந்தாது. பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால்வகைப்பிரிவும்பெயரும் ஆரியக் குருமார் எழுதிய தரும சூத்திரங்களினும் மிருதிநூல்களினும் மிகுதியாய்க் காணப் படினும், அவை ஆரியர்க்கே உரியனஅல்ல. இவ் இந்திய நாட்டுக்குப் புறம்பே இருந்த காலத்தும் அதன்பின் இதற்குட் புகுந்து முதன்முதற் குடியேறிய காலத்தும் ஆரியர்க்குள் அத்தகைய தொரு பிரிவு இருந்தது உண்மையாயின், அவர்கள் அக் காலங்களிற் பாடிய இருக்குவேதப் பாட்டுகளில் அந்நாற்சாதிப் பிரிவு சொல்லப்பட்டிருத்தல் வேண்டும்; மற்று அஃது அவ் இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங்களில் ஓரிடத்தாயினும் ஓர் எட்டுணையேனும் சொல்லப்படாமை யினை மேலே விளக்கிக்காட்டினே மாகலானும், ஆரியருள் ஒவ்வொரு குடும்பத்தாரும் பற்பல தொழில்களைச் செய்து தம்முள் ஏதும் வேற்றுமையின்றி உயிர்வாழ்ந்தமையினைச் சற்று முன்னே குறித்தேமாக லானும் அவர்கள் இவ் விந்தியநாட்டுட் புகுந்து வைகிய நெடுங்காலம் வரையில் அந்நாற்சாதிப் பிரிவினை அறியாரா யிருத்தமை நன்கு பெறப்படும். அவர்கள் வருதற்குமுன்னரே வடக்கே இமயமலை வரையிற் பரவியிருந்த தமிழ் மக்களோடு, இதனுட்புகுந்த அவ்வாரியர் இதன்கண் இருப்பிடம் பெறுதற்பொருட்டு நெடுகப் போராடிக் கொண்டிருந்த காலம்வரையில் தம்மை `வெண்ணிறமுடைய ஆரியர் எனவும், தம்மை எதிர்த்துத் தடைசெய்த தமிழர்களைக் `கருநிறமுடைய தாசர்கள் எனவும் இருவகைப்படுத்தே ஓதிவந்தனர்1. இங்ஙனம் இருவகை நிறவேறுபாடுபற்றி வந்தமையினாலேயே முதன் முதற் சாதியானது `வர்ணம் என்னும் பெயரால் வழங்கப்பட்டது. வர்ணம் என்னும் பெயரால் முதன்முதல் உண்டான சாதியானது இந்திய நாட்டுக்கும் புறம்பேயிருந்து வந்த வெண்ணிறத்தினரான ஆரியரையும், இவ்விந்தியநாட்டுக்குள் முன்னரே யிருந்த தமிழரிற் கருநிறமுடைய அவர்தம் ஏவலாளரையுங் குறிப்பதொன்றாய் இருந்தது. இங்கே நினைவிற் பதிக்கற்பாலது ஒன்று உளது; தமிழர் எல்லாருங் கரியநிறத்தினர் அல்லர். அவருள் நூல் ஓதும் அந்தணரும், அரசவகுப்பாரும், உழுவித்துண்ணும் சைவ வேளாளக் குடியினரும் வெயிற் படாமற் கோயில்களிலும் அரண்மனைகளிலும் மாளிகை வீடுகளிலும் உறைந்து வருபவர்களாதலின் அவர்களிற்பலர் பொன்னிறத் தினராயும் மற்றும்பலர் செந்நிறத்தினராயும் இன்னும்பலர் பழுப்பு நிறத்தினராயும் வேறுபலர் மாந்துளிர் நிறத்தினராயும் உளர்; இவரல்லாத உழுதுண் வேளாண் குடியினரும், மற்றைக் கைத்தொழில்புரியும் பதினெண் குடிமக்களும், அரசனது படையிற் போர்த்தொழில் பயிலும் மறவரும் கடுமுயற்சி யுடையவர்களாய்ப் பெரும்பாலும் வெயிலில் நிற்றலின் இவர்கள் மட்டுமே கருநிறமுடையராயிருக் கின்றனர். இந்தியநாடு பகலவன் செல்லும் சூடுமிகுந்த நடுக்கோட்டின் (Equator) அருகில் இருத்தலால் வெயில் வெப்பம் மிகுதியும் உடையதாயிருக்கின்றது; எவ்வளவு அழகிய நிறமுடைய ராயினும் அவர் சிலநாட்கள் வெயிலில்நின்று உழைப்பராயின் தமது நிறம் மாறிக் கருநிறமுடையராதலை நங் கண்ணெதிரே இன்றுங் காணலாம்; மற்று, இந்தியநாட்டுக்குப் புறம்பேயுள்ள வடநாடுகள் நடுக்கோட்டுக்குப் பெரிதும் விலகியிருத்தலால், அவை வெயில்வெப்ப மின்றிக் குளிர்மிகுந்தனவாயிருக் கின்றன; அதனால், அந்நாடுகளில் உறைவோர் எவ்வளவு உழைப்பான தொழில்களைப் பகல் வெளிச்சத்தினின்று எத்தனை நாட்கள் செய்வாராயினுந் தமதுநிறம் சிறிதும் மாறுதலின்றி வெண்மையாகவே இருப்பர். தமிழரில் உழைப்பாளிகள் கரியநிறத்தினரா யிருப்பினும் அவர்களிற் பெரும்பாலார் திருத்தமான உறுப்புகள் வாய்ந்து அழகியராகவே இருக்கின்றனர். வெள்ளைக்காரரிற் பலர் வெண்ணிறத்தினராயிருப்பினும், திருத்தமான உறுப்புகள் வாயாமையின் அழகு இலராயும் இருக்கின்றனர். ஆகையாற், கரியநிறம் பற்றித் தமிழரிற் கைத்தொழில்புரிவாரை அழகிலரென இகழ்ந்துரைத்தல் அமையாது. யாங்கூறிய இவ்வுண்மை நுண்ணிய ஆராய்ச்சிவல்ல கால்ட்வெல் ஆசிரியராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டது.1 அதுநிற்க. இந்திய நாட்டுட் புகுந்து தமிழரொடு நெடுங்காலம் போராடியும் அவரை முறியடித்தல் இயலாமை கண்ட ஆரியர் பிறகு அவருடன் நட்புக்கொண்டு அவ்வழியால் வடநாட்டிற் பல இடங்களினுங் குடியேறி வைகுவாராயினர். இந்திய நாட்டுக்கு வரும்முன் ஆரியர்கள் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு, அவற்றின் மேய்ச்சலுக்குப் புல்வளர்ந்த நிலங்களைத் தேடித்திரிந்தபடியாகவே இருந்தனர். இவ்விந்தியநாட்டுக்குப் புறம்பேயுள்ள வடபால் நிலங்கள் பெரும்பாலும் பனிக்கட்டி களால் மூடப்பட்டிருத்தலானும், ஆறு திங்களில் இரண்டரைத் திங்கள் வரையிற் பகலவன் வெளிச்சம் இன்றி எங்கும் இருளாயும் மற்றை மூன்றரைத் திங்கள் சிறுவெளிச்சமாயும் அவையிருத்த லானும் அங்கே உழவுதொழில் நடைபெறுதல் இயலாது. ஆதலால், அவ்வடபால் நிலங்களிலிருந்த ஆரியர் ஆடு மாடுகள் வளர்த்து அவற்றாற் பெறப்படும் பால்தயிர் நெய்யையும் அவற்றின் இறைச்சியையும் அயின்றே பெரும் பாலும் உயிர்வாழ்ந்து வந்தனர். பண்டை நாளில் வடபகால் இருந்த ஆரியரின் உயிர்வாழ்க்கை இத்தன்மைத்தாதல் அவர்கள் அஞ்ஞான்றுபாடிய மிகப் பழைய இருக்கு வேதப்பதிகம் ஒன்றால் (1, 42) நன்கு புலனாகின்றது. அப்பதிகத்தை இங்கே மொழிபெயர்த்து உரைக்கின்றாம்; ஓ பூஷனே, எங்கள் வழிகளைச் சுருங்கப்பண்ணுக, வழியிலுள்ள இடையூறுகளை அப்புறப்படுத்துக; வானிற்பிறந்தோய், எமக்குமுன்னே எம்மை அணுகிச்செல்க. பூஷனே, எமது வழியினின்றும் ஓநாயை, நன்மையற்ற கெட்ட ஓநாயைத் துரத்துக: அஃது எம்மைத் துன்புறுத்துதற்குப் பதுங்கியிருக்கின்றது. நாங்கள் செல்லும் வழிப் பக்கமாய்க் கொள்ளைக்காரன் கள்ள நெஞ்சத்தோடும் ஒளிந்திருக்கின்றான்: அவனைப் பாட்டையினின்றும் எட்டத் துரத்திக்கொண்டுசெல்க. இரட்டைநா உடைய அப் பொல்லாதவன் எவனா யிருப்பினும், அவனிடமுள்ள கொள்ளிக்கட்டையை நின் அடிகளினால் மிதித்துத் தேய்த்துவிடுக. அறிவான்மிக்க பூஷனே, புதுமைகளைச் செய்வோய், பழைய எம்முன்னோர்க்கு உதவிபுரிந்த நின்துணையை எமக்கும் இப்போது உரியதாக நின்னை நாடுகின்றோம். ஆகையாற், செல்வமெல்லாவற்றிற்கும் தலைவ, பொன்னிறமான கத்தியை நன்கு சுழற்றுவோய், செல்வத்தைப் பெறுதல் எளிதாகுமாறு செய்க. எம்மைப் பின்றொடர்வோர்க்கு முன்னதாக எம்மைக் கடத்தி நடத்துக, எமது வழியை இனியதாக்குக, அதனை மிதிப்ப ` தற்கு நேர்த்தியாக்குக: ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத் தேடுக. புற்கள் செழுமையா யிருக்கும் புல் நிலங்களுக்கு எம்மைச் செலுத்துக: எமதுவழியில் முன்நேரத்திலேயே வெப்பத்தை விடாதே: ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத்தேடுக. எமக்கு நீ அருளுடையாய் இரு, எம்மை நிறையப்பண்ணு, எமக்கு உணவினைத்தா, எமக்கு உயிர்ப்பு ஏற்று. ஓ பூஷனே, இதற்கு நீ வலிமையைத்தேடுக. பூஷனை யாம்குற்றமாகச்சொல்லுதற்கு ஏதும்இலம்; அவனை எம் புகழுரைகளாற் பெருமைப்படுத்துகின்றோம்: செல்வத்தின் பொருட்டு வலிமையிற்சிறந்த அவனை யாம்நாடுகின்றோம். இந்தப் பதிகமானது, ஆரியர்கள் இமயமலைக்கு வடக்கே மிகவும் எட்டியுள்ள இடங்களில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு ஊர் ஊராய் அலைந்து திரிந்த நிரம்பப் பழைய காலத்தே பாடப்பட்ட தொன்றாகக் காணப் படுகின்றது. அவர்கள் அப்போது `பூஷன் என்னும் பெயரால் வணங்கியது விடியற்கால ஒளித்தோற்றமே யல்லாற் பிறிதில்லை. இரண்டரைத் திங்கள் வரையில் இருளிற் கிடந்து மாழ்கிய ஆரியர்கள் அவற்றின் கழிவிற் கதிரவன் வெளிச்சந் தோன்றக் கண்ட வளவானே பெருங்களிப்புற்று அத்தோற்றத்தைத் தெய்வ வடிவாக நினைந்து வணங்கியது இயற்கையே யாம். இங்ஙனமே `உஷாக்கள், `அசுவிநிகள் என்னும் பெயர்களால் அவர்கள் வணங்கிய தெய்வங்களும் அவ்விடியற் காலத்திற் காணப்படும் ஒளிவிளக்க மாறுதல் களேயாம். இமயமலைக்கு மிக வடக்கேயுள்ள அந்நாடுகளில் ஏறக்குறைய ஒன்றரைத்திங்கள் வரையில் விடியற்காலஒளி மிகுந்து கொண்டே செல்லுவ தன்றிக் கதிரவன் காணப் பட்டான்; இவ்வாறு ஒன்றரைத் திங்கள் வரையில் விடியற் காலமாகவே இருக்கும் அந்நாடுகளில் அவ்வொளியின் காட்சி மிகஅழகியதாய் வியக்கத்தக்கதாகவே யிருக்கின்றது; அவ்வொன்றரைத் திங்களும் சென்றபிறகுதான் பகலவன் கட்புலனாக அங்கே தோன்றுவன்; ஆதலால், அந் நாடுகளில் அஞ்ஞான்றிருந்த ஆரியர்கள் அவ்வொன்றரைத் திங்கள்வரையிற் பலவேறு மாறுதல்களோடு தோன்றும் அவ்விடியற்காலக் காட்சிகளைப் பலவேறு தெய்வங்களின் வடிவாகவைத்து வணங்கலாயினர். இந்திய நாட்டிற்கு வருமுன் ஆரியர் வணங்கிய தெய்வங்கள் மேற்காட்டிய `பூஷன், `உஷாக்கள், `அசுவினிகள், `ஏழு ஆதித்தியர்கள் என்பவை களாகவே இருத்தல் வேண்டும்1. இத்தெய்வங்கண் மேல் அவர்கள் பாடியபாட்டுகளும் மிகப்பழையனவாகவே இருத்தல்வேண்டும். இவ்வாறு இந்தியநாட்டுக்குப் புறம்பே உறைந்த காலத்தில் ஆரியர்கள் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு அவற்றைக் கொண்டே பிழைப்பவர்களாய், அவற்றின் மேய்ச்சலுக்குப் புல்நிலங்களைத் தேடித் திரிபவர்களாய் இருந்தமையின் அவர்கட்கு அந்நாளில் உழவுதொழில் இன்னதென்றே தெரியாது. மற்று, அவர்கட்குமுன் இவ்விந்தியநாட்டின்கண் இமயமலைச் சாரல் வரையிற் பரவியிருந்த தமிழர்களோ ஆரியர்களைப்போல் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அலைந்து திரியும் வாழ்க்கையில் இல்லாமல், நாகரிகத்திற் சிறந்து தாந்தாம் சென்ற இடங்களில் ஆறுகளும் ஏரிகளும் உள்ள பக்கங்களில் நிலையாகக் குடியேறி உழவுதொழிலைச் செய்து, அதனாற் செல்வம்பெருக்கி நாடுநகரங்கள் அமைத்துத், தமக்குள் அரசர்களை ஏற்படுத்தி வறுமையின்றி இனிது உயிர்வாழ்ந்தவர்களாவர். இங்ஙனஞ் செல்வத்தாற் சிறந்த நாகரிகவாழ்க்கை யுடையவர்களுக்குள்ளேதான் பலவகைத் தொழிற் பிரிவுகளும், அத்தொழில்களைச் செய்யும் மக்கட் பிரிவுகளும் உண்டாகுமேயல்லாமல், நிலையான இருப்பிடம் ஏதும் இன்றி இன்றைக்கு ஓரிடத்தும் நாளைக்கு ஓரிடத்துமாக அலைந்துதிரியும் மக்கள்பால் அத்தகைய தொழில்களும் பிரிவுகளும் உண்டாக மாட்டா. அடிக்குறிப்புகள் 1. R.C. Dutt’s “A History of Civilisation in Ancient India,” Vol. I, pp. 48-53. 2. See Dr.R. Caldwell’s “A Comparative Grammar of the Dravidian Languages,” Ist Edition, p. 512. 3. See ‘The Arctic Home in the Vedas’ by B. G. Tilak. இயல் - 4 தொல்காப்பியத்திற் சாதிப்பிரிவு தொழில்பற்றியது இனித், தமிழர்களின் நாகரிக முதிர்ச்சிக்கு அடிப் படையாய் இருந்தது உழவுதொழிலேயாகும். அவ்வுழவு தொழிலை முதன்முதற் கண்டறிந்தவர்கள் `வேளாளர்கள் எனப்படுவர். மனுமிருதி (10, 83) போதாயனதருமசாத்திரம் (1, 10, 30) முதலான ஆரியர்தம் ஒழுக்க நூல்கள் உழவுதொழிலை மிக இழித்துப் பேசுதல்கொண்டு, அத்தொழில் ஆரியர்க்குச் சிறிதும் உரியதல்லாமை நன்கு உணரப்படும். மற்றுத் தமிழ்வேதமாகிய திருக்குறளோ உழவுதொழிலை ஏனை எல்லாத் தொழில்களினுஞ் சிறந்ததாகவைத்து உயர்த்திப் பேசுதலின் அதனை முதன்முதற் கண்டறிந்தவர்கள் தமிழரேயாதலும், வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி எனத் தமிழ்ப் பண்டை மறையாகிய தொல்காப்பியம் (மரபியல், 80) அதனை வேளாளர்க்கே வரைசெய்து உணர்த்தலின் அத்தொழில் தமிழருள்ளும் வேளாளர்க்கே சிறப்பாக உரித்தாதலும் நன்குபுலனாம். உழவு தொழிலுக்கு ஏற்றஇடங்கள் யாறு ஏரி முதலான நீர்நிலை களையடுத்த வளவிய நிலங்களேயாகும்; இவ்வளவிய நிலங்களையே மருத நிலமெனப் பண்டைத் தமிழ்நூல்கள் புகலாநிற்கும். இந் நிலங்களில் நெல் கோதுமை முதலான நன்செய்ப்பயிர்களையும் துவரை உழுந்து முதலான புன்செய்ப் பயிர்களையும் விளைத்து, வேளாளர் அவ்வாற்றாற் செல்வ முடையரானமையின், தமது செல்வத்தை உழவுதொழில் அறியாத ஏனையோர் கவர்ந்து கொண்டு செல்லாமைப் பொருட்டுத், தமக்குள் ஒரு தலைவனையும் அவனுக்கு உதவியாக ஒரு படையினையும் அமைத்துவைக்க, அங்ஙனம் அவர் வைத்த தலைவனே நாட் செல்லச்செல்ல அரசன் ஆயினன்1. இங்ஙனம் வேளாண் குடியினர் நிலை பெற்ற மருதநிலத்தின் கண்ணேயே அரச வாழ்க்கையும், அரசன் அரண்மனையும், நகரமும் உண்டானமை, உழிஞை தானே மருதத்துப்புறனே (புறத்திணை இயல், 9) என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய சூத்திரத்தானும், அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானும் உணர்ந்து கொள்க. இவ்வாறு வளப்பம் மலிந்த மருதநிலங்கள், பகலவன் செல்லும் வெப்பம் மிகுந்த நடுக்கோட்டைச் சார்ந்துள்ள இந்திய நாடும், வட ஆப்பிரிக்காவும், நடுஅமெரிக்காவுமே யாகுமென்றும், இந்நாடுகளில் உணவுப் பண்டங்கள் ஏராளமாய் விளைந்தமையின் இவற்றின் கண் இருந்தமக்கள் மிகப் பல்கி நாடுநகரங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து திகழ்ந்தனரென்றும், நடுக்கோட்டுக்குப் பெரிதும் எட்டி யுள்ள வடதேயங்களில் உறைந்தோர்க்கு உழவுதொழில் செய்தலும் உணவுப் பொருள்களை மிகுதியாய் விளைத்தலும் ஏலாமையின் அவர்கள் நாகரிகம் இலராயே இருந்தன ரென்றும் இவ்வியல்பு களை நன்கு ஆய்ந்த ஆங்கில ஆசிரியர்களும் இவற் றினுண்மையை இனிது எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.2 ஏராளமான பொருளுடையவரே அவற்றைக் காத்தற்கு ஓர் அரசனையும் அவற்கு உதவியாகப் படைகளையும் அமைத்தல் வேண்டும்; பொருள் இல்லாதவர்க்குக் காக்க வேண்டும் ஏதும் இல்லாமையின் அவர்கட்கு அரசனும் இலன், படைகளும் இல. ஆதலால், இந்திய நாட்டுக்கு வரும்முன் இடம் இடமாய் அலைந்து திரிந்த ஆரியர்களுக்கு அரசனும் இலன், படைகளும் இல. தமிழரிற் சிறந்த வேளாளரோ உழவு தொழிலாற் பெருஞ்செல்வராயிருந் தமையின் அச்செல்வத்தைக் காத்தற்பொருட்டு அரசனையும் படைகளையும் அமைக்க வேண்டுவது அவர்க்கு இன்றியமை யாததாயிற்று என்க. இனி, நாகரிகத்திற் சிறந்த வேளாளர் கல்வியறிவிலும் கடவுள் வழிபாட்டிலும் உறைத்து நின்றமையின், தாம் சென்ற இடங்கடோறும் சிவபிரானுக்குப் பெரிய பெரிய திருக்கோயில்கள் கட்டுவித்து, அவற்றின்கண் இறைவனுக்குத் தொண்டு புரிதற்காகத் தம்மவருள் ஒரு பகுதியாரைப் பிரித்து அத்தொழிலில் அவர்களை நிலைபெறுவித்து அவர்தம் வாழ்க்கைக்கு வேண்டும் படித்தரங்களையும் ஏற்படுத்தி வைத்தனர். இங்ஙனம் வகுத்துவைக்கப்பட்ட வேளாள அந்தணர்களே இக்காலத்தில் `ஆதிசைவர், `நம்பியார், `பட்டர் என்னும் பெயர்களால் வழங்கப்படுகின்றனர். மணச்சடங்குகள் பிணச்சடங்குகள் இயற்றுதற்கும் இவர் களுள்ளேயே `சைவக் குருக்களும் வகுத்துவைக்கப்பட்டனர். தமக்குட் கல்வியறிவிற் சிறந்தோரையும் தவம்புரியும் ஒழுக்கத் தோரையும் தமக்குக் குருவராக மேல்நிறுத்தி அவர்கட்கு ஆண்டாண்டு திருமடங்கள் அமைப்பித்து, அவர்பாற் சென்று நூலறிவுங் கடவுளுணர்ச்சியும் பெற்றுவரலாயினர். இம்முத்திறத்தவரும் வேளாளரில் அந்தணரும் நூலோதும் பார்ப்பனரும் சமய ஆசிரியரும் ஆவர். இம்முத்திறத்தினரிற் கோயிற் றொண்டுபுரியும் அந்தணரும், சடங்குகள் செய்வித்து நூலோதும் பார்ப்பனக் குருக்களும் மெல்ல மெல்ல வடமொழிச் சொற்களையுங் குறியீடுகளையும் எடுத்தாண்டு கொண்டு ஆரியப்பார்ப்பன இனத்திற் சேர்ந்துகொண்டனர், இன்னுஞ் சேர்ந்து வருகின்றனர். இத் தமிழ்நாட்டின்கண் இப்போது `பார்ப்பனர் என்று வழங்கப்படுவார் எல்லாரும் ஆரியப்பார்ப்பனர் அல்லர். வடக்கிருந்து வந்து இங்கே குடியேறிய ஆரியப்பார்ப்பனர் மிகச்சிலரேயாவர். இங்கிருந்த வேளாளப் பார்ப்பனரே நாளடைவில் தம்மை ஆரியப் பார்பனராகத் திரித்துக் கொண்டனர். இத் தமிழ்நாட்டின்கண் உள்ள பார்ப்பனர் எவரும் ஆரியத்தோடு இனமான வடநாட்டு மொழிகளுள் எதனாலும் தம் மனைவிமக்களோடு பேசக்காணாமை யானும், தொன்றுதொட்டு அவர்கள் தமிழ் மொழியிலும், தமிழோடு இனமான மலையாளம் தெலுங்கு கன்னடம் முதலான மொழிகளிலுமே உரையாடக் காண்ட லானும், வடநாட்டிலுள்ள ஆரியப் பார்ப்பனரைப்போல் ஊன் உண்ணக் காணாமையானும் நூல் அளவிற் சிறிது வடமொழி ஓதுதல் பற்றி இவர்களை ஆரியப்பார்ப்பன ரென்றல் அமையாது; இவ் விந்தியநாட்டின்கட் காணப்படும் துலுக்கர் கிறித்துவரிற் பெரும்பாலார் இந்துமக்களிலிருந்தே திரிபடைந்த வராதல்போல, இந்நாட்டின்கண் உள்ள பார்ப்பனரிற் பெரும்பாலாரும் சில நூற்றாண்டுகளுக்குமுன் வேளாளக் குருக்களாய் இருந்தவர்களேயாவர். இதற்கு அறிகுறியாக, வேளாளர்க்குரிய `பிள்ளை என்னும் பட்டப்பெயர் திருச்செந்தூர் முதலான இடங்களில் உள்ள பார்ப்பனர்க்கு இன்றுகாறும் வழங்கிவருகின்றதென்றும், அப் பட்டப்பெயரை அவர்கள் மெல்லமெல்ல மாற்றி வருகின்றன ரென்றுங் கேள்வியுறுகின்றோம். இன்னும், ஆழ்வார்கள் பாடிய செந்தமிழ்ப் பாடல்களுக்கு உரை எழுதிய பார்ப்பனராகிய `பெரியவாச்சான்பிள்ளை என்பவர் `பிள்ளைப்பட்டம் பூண்டிருத்தலும் இதற்கொரு சான்றாம். இனி, இவ்வேளாளருள் அரசர்களுங், குறுநில மன்னர் களும், அவரின்கீழ் அமைச்சராயும் படைத்தலைவராயும் இருந்தோரும், இவர் தமக்கெல்லாம் உறவினராய் உழவு தொழிலை நடப்பித்துச் செல்வராய் வாழ்ந்தோரும் எல்லாம் ஒரு தொகுதியாய் அரசமரபினராயினர். உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியும் அவன்மகன் கரிகாற்பெரு வளத்தானும் போல்வார் வேளாளரிற் பெருவேந்தராய்ப் பழையநாளில் இத்தென்றமிழ் நாட்டில் அரசுபுரிந்தோர் ஆவர்; வேள்பாரி, வேள்எவ்வி, இருங்கோவேன் முதலாயினார் வேளாளரிற் குறுநில மன்னராவர்; சேக்கிழார் போல்வார் அரசர் பால் அமைச்சராயிருந்த வேளாளர் ஆவர்; கோட்புலிநாயனார் போல்வார் அரசருக்குப் படைத் தலைவராய் இருந்தவேளாளர் ஆவர்; சோழன்கரிகாற் பெருவளத்தானுக்குப் பெண் கொடுத்த நாங்கூர் வேள் போல்வார் அரசர்க்கு உறவினராய் உழவுதொழில நடப்பித்துக்கொண்டு வாழ்ந்த வேளாளர் ஆவர் என்க. இனி, உழவுதொழிலாற் பெற்ற பல பண்டங்களையும் ஓரிடத்திற்றொகுத்துப் பலரும் எளிதிற் பெறுமாறு விற்று வாணிகம் நடாத்தினோரே வேளாளருள் வணிகராயினர். இவ்வணிக வேளாளர் செட்டிப் பட்டம் பெற்றிருத்தலும், இவர்கள் மேற்கூறிய உழுவித்துண்ணும் வேளாளரோடு ஒருங்கிருந்து உணவெடுத்தலும் அவரோடுபெண் கொண்டு கொடுத்து உறவுகலத்தலும் இன்றுகாறும் நடைபெற்று வருகின்றனர். இனி, உழுதுண் வேளாளரும், குற்றேவல்செய்வாரும் பல கைத் தொழில் புரியும் பதினெண்மரும் மேற்காட்டிய மூவகையினரைப்போற் செல்வராய் இல்லாமையினாலும், நாள்முழுதுந் தொழில்கள் பல இயற்றுதலாற் கல்விகற்க ஒழிவுநேரம் பெறாமையினாலும், உயர்ந்த உணவுப் பண்டங்களை மேலோர் மூவர்க்கும் ஒப்படைத்து விட்டுத் தாம் விலைகுறைந்த வரகின்கூழ், இலைக்கறி, மீன் முதலான சிற்றுயிர்களின் ஊன் என்பவற்றை உணவாகக்கொண்டு உயிர் வாழ்ந்தமையினாலுங் கீழோர் ஆயினர். இவ்வாறு இயற்கைத் தொழின்முறையால் மருதநில மாந்தரே அந்தணர், அரசர், வணிகர், அடியோர், வினைவலர் என்னும் ஐம்பெரும் பிரிவினராயினர். இவ் ஐவகையினரில் அடியோரும் வினைவலரும் ஒருவகையில் அடக்கப்பட்டுக் `கீழோர் எனவும், `இழிந்தோர் எனவும் வழங்கப்படுவா ராயினர். இவர் தம்முள் உழுவித்துண் வேளாளர் அரசர் வகுப்பினும், உழுதுண்வேளாளர் அடியோர் வினைவலர் பாங்கினும் அடங்காநிற்பர். பதினெண்டொழில புரிவாரைத் தவிர, ஏனை அந்தணரும் அரசரும் உழுவித்துண் வேளாளரும் வணிகரும் உழுதுண்வேளாளரும் எல்லாம், முதன்முதல் வேளாண்மைத் தொழிலைக் கண்டறிந்த வேளாளரினின்றும் பிரிந்தோரேயாவர் என்பதனை மேலே விளக்கினாம்; வேளாண்மைத் தொழிலை முன்னறியாத தமிழ் மக்கள் அதனை முன்னறிந்த அவ்வேளாளர் ஏவிய பற்பல கைத்தொழில்களைச் செய்துவந்தமையின், அத்தொழில்கள் பதினெண்வகையவாய்ப் பகுக்கப்பட்டு அவற்றைச் செய்யும் பதினெண் வகுப்பாரும் வேளாளர் அல்லாத பிறவகுப்பில் ஒரு தொகைப்படுத்து வைக்கப்படுவாராயினர். தொழில் பற்றிய இவ் வகுப்புமுறை செந்தமிழ்த் தொல்லாசிரியரான தொல்காப்பியனார், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்1 என்றோதிய வாகைத் திணைச் சூத்திரத்தால்1, நன்கறியப்படும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களைச் செய்வார் பார்ப்பனராவரென்பதூஉம்; ஓதல், வேட்டல், ஈதல், படைவழங்குதல், குடியோம்புதல் என்னும் ஐவகைத் தொழில்களைச் செய்வார் அரசராவ ரென்பதூஉம், ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் அறுதொழில்களைச் செய்வார் வணிகர் வேளாளர் என்னும் இருபாலாரும் ஆவரென்ப தூஉம் இனிது பெறப்படுதல் காண்க. வணிகரையும் வேளாளரையும் ஏனோர் என்னுஞ் சொல்லால் ஒன்றாய் அடக்கி அவ்விருவர்க்கும பொதுப் பட ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வ்ணிகம், நிரையோம்பல் என்னும் ஆறு தொழில்களையும் ஆசிரியர் தொல்காப்பியனார் வெளிப்படையாய் ஓதியிருக்க, இத் தொல்லாசிரியர்க்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டு பிற்பட்ட வடமொழிப் பார்ப்பனரால் எழுதிவைக்கப்பட்ட வடமொழி மிருதி நூலின் நால்வகைச் சாதியுட் கடைப்பட்ட சூத்திரச் சாதியில் வேளாளரைப் பிழைபட அடக்குவான் புகுந்த இளம் பூரணர், நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர் உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடுபுறந்தருதல், வழிபாடு, வேதமொழிந்த கல்வி முதலிய ஆறுமே வேளார்க்கு உரியவாகக் கூறினார். வடமொழி மிருதி நூல்களிற் சூத்திரர் என்னும் வகையில் வைக்கப் பட்டவர்கள்: சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொள்ளப் பட்டவர்களும், தமது அற்றைச் சோற்றுக்காக ஊழியஞ் செய்பவர்களும், வேசிக்குப் பிறந்தவர்களும், விலைக்கு வாங்கப்பட்டவர்களும், பிறராற் கொடுக்கப்பட்டவர்களும், முன்னோர் காலந் தொட்டு தமக்கு அடிமைகளாய் வருபவர்களும் குற்றத்திற்காக அடிமைப் படுத்தப்பட்டவர்களுமே ஆவ ரென்பதனை மேலெடுத்துக் காட்டினமாகலின், அந்தணராயும் அரசராயும் வாணிகம் உழவு நடாத்துவோராயும் பண்டு தொட்டுச் சீருஞ் சிறப்பும் உடையராய்த் தமிழ்நாட்டின்கண் வாழ்ந்துவரும் வேளாளரைச் சூத்திரவகுப்பிற் சேர்த்தல் பெரியதோர் இழுக்காதலை வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலில் விரித்து விளக்கினாம்; அதனை அங்கே கண்டுகொள்க. வாணிகம் நடாத்துவாரை `வைசியர் என்னும் வட சொல்லால் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறினாற்போல, வேளாளரைச் `சூத்திரர் என்னும் வட சொல்லால் அங்ஙனமே அவர்யாண்டுங் கூறாமையின், அவரைச் சூத்திரராகக் கொண்டு உரைகூறிய உரைகாரரின் உரை ஆசிரியர் கருத்துக்குமாறான பிழையுரை யாமென விடுக்க. மேலும் சூத்திரர்க்குக் குற்றேவற்றொழில் ஒன்றுமே மிருதி நூல்களிற் கூறப்பட்டிருக்க, உழவும் நிரையோம் புதலும் ஆகிய தொழில்கள் வைசியர்க்கு மட்டுமே அவற்றுள் வரையறுத் துரைக்கப் பட்டிருத்தலானும்1, வேதநூற் கல்வியும் வேள்வி வேட்டலும் வைசியர்க்கும் உரியவாதல் மநுமிருதியிற் பெறப்பட்டலானும்2, தமிழ்நாட்டிலுள்ள வேளாளர்கள் பண்டுதொட்டு நூல் ஓதியும் சிவவேள்விகள் வேட்டும் உழவு வாணிகம் நடாத்தியும் ஆன்நிரையோம்பியும் ஈகையிற் சிறந்தும் வாழ்ந்துவரக் காண்டுமேயல்லாமல் ஏனையோர்க்குக் குற்றேவற்றொழில் புரிந்துவரக் காணாமை யானும் வேளாளரைச் சூத்திர ரெனக்கொண்டு அவர்க்கு அறிவுநூற்கல்வியினை மறுத்த உரைகாரருரை போலியுரையா மெனவிடுக்க. மேலும், விருந்தோம்புதற்றொழில் அந்தணர் அரசர் வணிகர் முதலான எல்லா வகுப்பினர்க்கும் பொதுமையில் உரியதாகவும், அதனை வேளாளர்க்கு மட்டும் வரைப்படுத்திக் கூறியதூஉம் பொருந்தாவுரையாம் என்பது. ஆசிரியர் தொல்காப்பியனார் வணிகரையும் வேளாளரையும் ஏனோர் என்னும் ஒருசொல்லால் அடக்கி, அவ் விருவர்க்கும் இருமூன்று தொழில்களைப் பொதுப்பட ஓதினாரல்லது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் தனித்தனி வெவ்வேறு ஆறு தொழில்களை ஓதிற்றில ராகலின், அவர் கருத்துக்கு மாறாக வணிகர்க்கு ஒருவகையான ஆறு தொழில்களையும் வேளாளர்க்கு மற்றொருவகையான ஆறுதொழில்களையுந் தாமே புதியவாய்க் கற்பித்துக் கொண்டுரைத்த இளம்பூரணர் நச்சினார்க் கினியர் உரைகள் சான்றோராற் கொள்ளற்பாலன அல்லவென்று உணர்க. வணிகரும் வேளாளரும் ஒரு வகுப்பினரேயென்பது ஆசிரியர்க்குக் கருத்தாயின், வைசிகன் பெறுமே வாணிக வாழ்ககை என வைசியரை ஒருபாலாகவும், வேளாண் மாந்தர்க் குழு தூண் அல்லது, இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி என வேளாளரை மற்றொரு பாலாகவும் வைத்து அவர் வேறுபடுத்து ஓதியதென்னையெனின்; சூத்திரர்க்குக் குற்றேவற்றொழில் ஒன்றுமே கூறி, ஏனை வைசியர்க்கு வாணிகமும் உழவுமாகிய தொழில்களை வரையறுத்துக் கூறுதற்கண், ஆபதம்பம், போதாயநம், மநுமுதலான வடநூலாசிரியர் எல்லாரும் ஒருங்கொத்து ஒருமுகமாய் நிற்றலின், வைசியருள்ளேயே வாணிகம் நடாத்துவோரை ஒரு பாலாகவும் உழவு நடாத்துவோரை மற்றொரு பாலாகவும் வைத்து ஆசிரியன் அங்ஙனம் சூத்திரஞ் செய்திட்டான் என்பது. ஏனைத் தொழில்கள் போலாது, வாணிகம் உழவு என்னும் இரண்டும் உலகியல் நடத்தற்கு இன்றியமையாது வேண்டப் படும் இருபெருந் தொழில் களாய்த் தலைசிறந்து நிற்றலின், அவ்விருவேறு தொழில்களைப் புரியும் வைசியரை வணிகரெனவும் வேளாளரெனவும் இருவகைப்படுத்து ஓதியது, அறிவுநூல் வழக்கோடு உலகியலறிவும் ஒருங்குவாய்த்து அகன்ற ஆசிரியன் தொல்காப்பியனது பேரறிவு மாட்சியின் பெற்றி தெரிப்ப தொன்றா மென்க. இவ்வாறு ஆசிரியன் வேளாளரை வைசிய வகுப்பின்பாற் படுத்தலொன்றின் மட்டும் அமையாது, அவரை அரச வகுப்பின் பாலும் படுக்குங் கருத்தின னென்பது, வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே என்னுஞ் சூத்திரத்தில்1, அவர் அரசராற் படைத்தலைவராஞ் சிறப்பும் மாலை சூட்டப்படும் மாட்சியும் பெறுதல் கூறுதலானும், வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுங் தாரும் ஆரமுந் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரியடு என்னுஞ் சூத்திரத்தில்2 வேளாளர் குறுநில மன்னராய் அரசாளுதற்கு உரிமையுடையராதல் கூறுதலானும் பெறுதும் என்பது. மற்று, அடியோருள்ளும் வினை வல்லோருள்ளுங் குறுநிலமன்னராவார் உளரேனும், அவர் வேளாளரைப் போற் படைத்தலைமையுங் கண்ணியும் வில் வேல் கழல் தார் ஆரம் தேர் வாள் முதலியனவும் வேந்தராற் பெறுதற்கு உரிய சிறப்பு உடையரல்லரென்பது, அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை3 என்று ஆசிரியன் ஓதிய வாற்றால் தெளியப்படும். எனவே, வணிகரையும் வேளாளரையும் ஏனோர் எனவும், அவரிற் கீழோரான அடியோர் வினைவலரை இழிந்தோர் எனவும் ஆசிரியன் யாண்டும் உரைப்பக் காண்டலின், வேளாளரை இழிந்த சூத்திரவகுப்பின்பாற் படுத்தல் ஆசிரியன் கருத்துக்கு முற்றும் மாறாமென்றும், அதனால் உரைகாரரின் உரைகள் கொள்ளற்பாலன அல்லவென்றும் மறுக்க. அற்றேல், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பகுப் பினரினும் வேறாக `இழிந்தோர் எனப்படுதற்குரிய அடியோரையும் வினைவலரையும் ஆசிரியன் மரபியலின் ஓதிற்றிலனாலெனின்; பொருளதிகாரத்தின் முதற் கண்ண தாகிய `அகத்திணையியலில், அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங் கடிவரை இலபுறத்து என்மனார் புலவர் என ஆசிரியன் முன்னரே அவர் தம்மை ஓதிப்போந் தானாகலிற், பின்னும் அவரை `மரபிய லிற் கிளந்துகூறாது `இழிந்தோர் என்னும் பொதுச்சொல்லாற் கூறினானென்க. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலத்துள்ளும் பொதுமக்கள் ஆவாருந் தலைமக்களாவாரும் அடியோர் வினைவலர் ஆவாரும் உளர் என்பதனை ஆசிரியன், பெயரும் வினையும் என்று ஆயிருவகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே எனவும், ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉங் கிழவரும் உளவே எனவும், ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலப் பெயரே எனவும், அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங் கடிவரை இலபுறத் தென்மனார் புலவர் எனவும் ஓதியவாற்றால்1 தெளிந்துகொள்க. இங்ஙனம் உரைப்பவே, குறிஞ்சிநிலத்துப் பொது மக்கள் பெயர்: குறவர், குறத்தியர், கானவர், வேட்டுவர், அவருள் தலைமை பெற்றோர் பெயர்: மலையன், கொடிச்சி ஆம் என்பதூஉம், முல்லை நிலத்துப் பொதுமக்கள் பெயர்: ஆயர், ஆய்ச்சியர், அவருள் தலைமை பெற்றோர் பெயர்: அண்ணல், மனைவி ஆம் என்பதூஉம், பாலைநிலத்துப் பொதுமக்கள் பெயர்: எயினர், எயிற்றியர், அவருள் தலைமைபெற்றோர் பெயர்: மீளி, விடலை ஆம் என்பதூஉம், மருத நிலத்துப் பொதுமக்கள் பெயர்: உழவர், உழத்தியர்; அவருள் தலைமை பெற்றோர் பெயர்: மகிழ்நன், ஊரன், மனையோள் ஆம் என்பதூஉம், நெய்தல்நிலத்துப் பொதுமக்கள் பெயர்: நுளையர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர், அவருள் தலைமைபெற்றோர் பெயர்: சேர்ப்பன், துறைவன் ஆம் என்பதூஉம், அவ்வந் நிலத்துத் தலைவர் ஏவிய செய்வார் அடியோரும் வினைவலரும் ஆவரென்பதூஉம் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர்கூறிய உரைகளால் நன்கு பெறப்படும். எனவே, ஒவ்வொரு நிலத்தின் கண்ணும் பொதுமக்களாவாருந் தலைமக்களாவாரும் ஏவிய செய்வாரும் உளர் என மக்களை ஆசிரியன் முத்திறப்படுத்து ஓதினமை இனிது விளங்காநிற்கும். இங்ஙனமாக எல்லா நிலத்தின் கண்ணும் இம்மூவகை வேறுபாடும் உளவேனும், இவை மருத நிலமாந்தர்க்குட் சிறந்து தோன்றுமாப்போல், ஏனை நிலத்துள்ளாரிற் சிறந்து தோன்றுவதன்று; ஏனென்றால், மருதநிலம் ஒன்றுமே உழவு தொழிலுக்கு ஏற்றதாய்ப் பல்வகை உணவுப் பண்டங்களையும் விளைத்துக்கொடுத்து, அவ்வாற் றால் தன்னகத்துள்ள மாந்தரை வளம்பெறச் செய்து, அவருள் அறிவானும் உயர்ந்த ஒழுக்கத்தானும் செல்வத்தானும் மிக்காரை உயர்த்தி, அத்தகைய நலங்கள் இலராய் அந்நலங் களை யுடையாரைச் சார்ந்து அவர் ஏவியசெய்து பிழைக்கும் இயல்புடையாரைத் தாழ்த்தி, அவ்வாறுயர்ந்தாரை உயர்ந்த சாதியாரெனவும் தாழ்ந்தாரைத் தாழ்ந்த சாதியாரெனவும் வேற்றுமை விளங்கித் தோன்றப் பண்ணுந் திறத்தது ஆகலின் என்க. மருதநிலம் ஒழிந்த மற்றைநிலங்களில் உள்ளார்க்குள் இத்தகைய வேறுபாடு மிகுந்து காணப்படாமை இஞ்ஞான்றும் நாம் கண்கூடாய்க் காணலாம். குறிஞ்சிநிலத் துள்ள வேட்டுவரும், முல்லைநிலத் துள்ள ஆயரும், பாலைநிலத்துள்ள எயினரும், நெய்தல்நிலத் துள்ள செம்படவரும் தத்தம் வாழ்க்கைக் குரிய வேட்ட மாடுதல், நெய் பால் தயிர் விற்றல், ஆறலைத்தல், மீன்பிடித்து விற்றல் முதலான ஒரோவொரு தொழிலையே செய்து செல்வமிலராய் வயிறு வளர்த்தலானும், இவர்தந் தொழிற்குத் துணையாக வேண்டப்படும் பிற தொழில்கள் இன்மையானும், இம்மக்களுட் சாதிவேற்றுமை இலதாயிற்று; மற்று, மருதநிலத்து மாந்தர் செய்யும் உழவு தொழிலுக்கோ பலவேறு கைத்தொழில்களின் உதவி வேண்டியிருத்தலானும், அவ் வுழவுதொழில் உகலத்தில் நடைபெறும் நாகரிகநிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பிறப்பித்து அவற்றிற்கெல்லாம் அடிப் படையாய் நிற்றலானும், அதனையுடைய மாந்தர்தமக் குள்ளேதான் எல்லா வகையான வேறுபாடுகளுங் கிளைப்ப ஆயின என்றறிதல் வேண்டும். ஆகவே, சாதி வேற்றுமை முதன்முதல் உண்டானது, உழவு தொழிலைச் செவ்வனே யறிந்து அதனைத் திறம்பட நடத்தி நாகரிக முற்ற தமிழ்மக்கட்குள்ளேதா னென்பது பெரிதும் நினைவிற் தமிழ் மக்கள் நிலையும், இந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்து வந்து இதன்கண் இருக்க இடம் பெற்ற ஆரியமக்களின் நிலையும் ஒத்த இயல்பினவாய் நாகரிகம் அற்றனவாய் இருந்ததனைத் தமிழ்ப் பண்டை நூலாகிய தொல்காப்பியத்தானும், வடமொழிப் பண்டை நூலாகிய இருக்குவேதத்தானும் நன்கறிகின்றே மாகலின், சாதிவேற்றுமை யினை முதற்கண் உண்டாக்கினவர்கள் மருதநிலம் அல்லாத மற்றைநிலத் தமிழ்மக்களும் அல்லர், புறம்பேயிருந்து வந்த ஆரியமக்களும் அல்லர். உழவு தொழிலையறிந்து நடத்திய தமிழ வேளாளர்களே தாம் சென்ற சென்ற இடங்கடோறுஞ் சாதி வேற்றுமையினை உண்டாக்கினர். வேளாளர் மலிந்த இத் தென்றமிழ்நாட்டின் கட் சாதி வேற்றுமையின் கொடுமை காணப்படுமாறுபோல், வடநாட்டின்கட் சாதிவேற்றுமை அத்துணைக் கொடுமையாகக் காணப்படுகின்றிலது. வடநாட்டின்கண் ஒரேயறையிற் பார்ப்பனரும் பார்ப்பனர் அல்லாத பிறரும் ஒருவரை யொருவர் காண அருகிருந்து உணவுகொள்ளுதலை, அங்கே செல்வார் எவரும் இன்றைக்குங் காணலாம். வடநாட்டி லுள்ள சிவபிரான் திருக்கோயில்களிலுந் திருமால் திருக்கோயில்களிலும் இந்துமக்கள் எல்லாரும் ஏதொரு வேற்றுமையும் இன்றி இறைவன் திருவுருவத்தின் கிட்டச் சென்று, எல்லாரும் அத்திருவுருவத்தினைத் தொட்டுத் திருமுழுக்குச் செய்வித்தும் மலர்கள் தூவியும் வணங்குதலை நாடோறுங் காணலாம். ஆனால், இத்தென்னாட்டிலோ உணவெடுக்கும் இடங்களில் ஒருவரை யொருவர் பாராமல் இனம் இனமாய்ப் பிரிந்து அதனை விழுங்குதலும், உறவு கலக்குங்கால் ஒருவர் மற்றொருவரின் சாதி இழிபுகளைச் சொல்லிக் கலாம் இடுதலும், திருக்கோயிலினுள் இந்துமக்க ளுள்ளேயே இன்ன சாதியார் செல்லாமை இன்னவர் செல்லலாகாதென்றும் உள்ளே செல்வாருள்ளும் இன்னவர் திருவுருவத்தின் அருகிற்செல்லலாம் இன்னவர் அருகிற் செல்லலாகாதென்றும் இடும் கூக்குரலுமே எங்கும் நிரம்பி, ஒன்றோடொன்று ஓயாமற் சண்டையிடும் ஓநாயும் புலியுங் கரடியுஞ் சிங்கமும் நிறைந்த பாழ்ங்காடாக இந்நாட்டினை ஆக்கிவிட்டன! இக்கொடிய சாதிவேற்றுமை என்னும் என்புருக்கிநோய் தென்னாட்டவர்க்கே உரித்தாவதாய், அவர்களது பெருங்கூட்டமாகிய உடம்பை அவர்களறியாமலே தின்று, அவர்கள் இருந்த சுவடுதானுந் தெரியாதொழியும் படி, அவர்களை வேரொடு அழித்துப் பாழாக்கிக், கூற்றுவனுக்குப் பெருவிருந்து ஆற்றும் பெற்றியதாய் ஆங்காங்குப் பெரிதும் பரவி வருகின்றது. இச் சாதி வேற்றுமை யாகிய கொடுநோயை `மனு மிருதி என்னும் அழகிய பாழ்ங்குழியினின்றுந் தோற்றுவித்து, அதனை இந்து மக்கட்குழாம் என்னும் உடம்பினுள் நுழையவிட்டவனும் மனு என்னும் ஒரு தமிழவேளாள அரசனே ஆவன். திராவிடதேயத்தின்கண் உள்ள மலையநாட்டில் ஓடும் கிருதமாலை என்னும் ஆற்றங்கரையி லிருந்து தவம் புரிந்த மனு ஒரு திராவிட மன்னனே (த்ராவிடேச்வர:) ஆவன் என்று பழைய மற்சபுராணமும் (1, 12, - 13), பாகவதபுராணமும் (8, 24, 7, 13) தெளித்துரைத்தல் காண்க.1 அற்றேற், பண்டைநாளிற் கொல்லாமை புலால் உண்ணாமையாகிய அருளொழுக்கத்தில் தலைசிறந்து நின்ற வேளாளர்கள், தமது அருளொழுக்கத்திற்கு மாறாவதும் இறுமாப்புக்கு இடமாவதுமான இச் சாதிவேற்றுமையினை எங்ஙனம் உண்டாக்கினார்களெனின்; அதனையும் சிறிது விளக்கிக்காட்டுதும். உழவுதொழிலைத் தெரிவதற்கு முன் தமிழ்மக்கள் எல்லாரும் மலைகளினும் மலைக்காடுகளினும் உறைந்துகொண்டு, மான் மரை கடம்பை வரையாடு முதலான விலங்கினங்களை வேட்டம் ஆடி, அவற்றின் இறைச்சியை யுண்டு உயிர்வாழ்ந்தவர்களே யாவர். அவர்கள் மிகப் பழைதாகிய அக்காலத்தில் வில்லும் அம்பும் ஏந்தி வேட்டமாடிப், பிழைத்தமையினாலேதான், தாம் அந்நாளில் வணங்கிய முதற்றெய்வமாகிய முருகப்பிரானை வேட்டுவ வடிவில் மலைமேல் வைத்து வழிபட்டும், வேடன் மகளாகிய வள்ளிநாச்சியாரை அவற்கு மனைக்கிழத்தியாக மணம் புணர்த்தி வணங்கியும் வருகின்றார்கள்; வடநாட்டிற் சென்ற அக்காலத்துத் தமிழ்மக்களுந் தமது தென்னாட்டுத் தமிழ் இனத்தவரைப்போலவே அந்நாளில் வேட்டமாடி உயிர் வாழ்ந்து வந்தமையால், தாம் அஞ்ஞான்று வணங்கிய சிவபிரானுக்குங் கையில் வில்லுங் கணையும் உளவாக வேட்டுரு கற்பித்து அவனையும் மலைமேல் வைத்து வணங்கியதோடு, மலையரையன் பொற்பாவை உமைப்பிராட்டியாரையும் அவற்கு மணமகளாகப் புணர்த்தி வழிபடலாயினார். இவ்வாற்றாற் பண்டைத் தமிழ்மக்களெல் லார்க்கும் பண்டை முதற்பெருந்தெய்வம் முருகப்பிரானும் சிவபெருமானுமே யாவர் என்பதூஉங் கடைப்பிடித் துணர்ந்து கொள்க. திருமுருகாற்றுப்படை என்னும் பழைய தனிச்செந்தமிழ்ப் பாட்டில் முருகனுக்கு ஆட்டிறைச்சி வைத்துப் படைத்தமை சொல்லப்பட்டிருத்தலின்1, முன்நாளிலிருந்த தமிழர்கள் வேட்டுவ வாழ்க்கையில் இறைச்சி தின்று வாழ்ந்தவராதல் நன்கு பெறப்படும். இனி, அவருள் அறிவான்மிக்கோர் சிலர் மலையைவிட்டுக் கீழ் இறங்கி ஆறும் ஏரியும் வாய்ந்த வளவிய வெளிநிலங் களில் வந்து வைகி, நிலத்தை உழுதுதிருத்தி, நெல் கோதுமை பதினெண் கூலங்கள் முதலியன வித்திவிளைத்தும், வாழை மா பலா தெங்கு முதலியவற்றைப் பயிர்செய்தும், அவற்றின் பயன்களாற் சுவை முதிர்ந்த உணவுகளை ஆக்கி உட்கொள்ளக் கற்றுக்கொண்டபின், தம்மைப்போல் இன்பதுன்ப உணர்ச்சி யுடைய உயிர்களைப் பதைபதைக்கக் கொன்று, அவற்றின் ஊனை உண்டல் பெருந்தீவினையாமென நினைந்து, அதனை அறவே கைவிட்டார்கள். அங்ஙனம் ஊணுணவைக் கைவிட்ட பின், உயிர்க்கொலையையும் அதனால்வரும் இறைச்சியையும் அதனை உண்பாரையுங் காண அருவருப்புற்றனர்; அவரோடு அளவளாவுதற்கும் அஞ்சினர். ஆகவே, மருதநிலத்திற் குடியேறிய தமிழருள் ஊன்உண்ணாதார் ஒரு பிரிவினராகவும், ஊன் உண்பார் மற்றொரு பிரிவினராகவும் பிரிந்தனர். இங்ஙனம் முதலில் இரண்டுபிரிவுகளே உண்டாயின. புலால் அருந்தாதார் புலால் அருந்துவோரைத் தம்மிற் றாழ்ந்தவராக நினைந்து அவரை அருவருத்து விலக்குதல்போலப், புலால் உணவு கொள்வோர் அது கொள்ளாதாரை அருவருத்து விலக்குதற்கு ஏது இன்மையினாலே, புலான்மறுத்த தமிழர் உயர்ந் தோராயும், அவரால் அருவருத்து ஒதுக்கப்பட்ட ஏனைத் தமிழர் தாழ்ந்தோராயுங் கருதப்படலாயினர். எனவே, முதன்முதல் மருதநிலத்துத் தமிழ்மக்களுள் உண்டான சாதி இரண்டேயா மென்பதூஉம், அவர் புலான் மறுத்தோரும் அது மறாதோருமேயாவர் என்பதூஉம், இப்பிரிவுக்கு ஏதுவா யிருந்தது கொல்லாமை புலா லுண்ணாமை யாகிய அருளொழுக்கமேயா மென்பதூஉம் எளிதின் விளங்காநிற்கும். இனி, இங்ஙனம் பிரிந்த இருதிறத்தார்க்குள்ளும் இன்னும் பல பிரிவுகள் உண்டாவதற்கு ஏதுவாயின: தூய்மையுங் கல்வியறிவுங் கடவுள் வழிபாடுமேயாகும். இவற்றுள், தூய்மையாவது அகந்தூய்மை புறந்தூய்மை என இருவகைப் படும்; இவை தம்முள அகந்தூய்மை என்பது பொய்கூறாது மெய்யேபேசுதல், பிறர்க்குள்ள உயர்ச்சிகண்டு பொறாமை கொள்ளாதிருத்தல், கண்ட கண்ட பொருள் களையெல்லாம் பெற அவாவுறாதிருத்தல், பிறர்பாற் குற்றங்கண்ட வழியெல்லாம் சினவாதிருத்தல், பிறர்மேல் தீயசொற்களைச் சொல்லா தொழுகுதல் முதலியவற்றால் மனம் மாசியின்றி யிருப்பதாகும். இனிப், புறந்தூய்மை என்பது தன் உடம்பும், தான் உடுக்கும் உடையும், தான் இருக்கும், இடமும், தான் புழங்குங் கருவிகள் ஏனங்கள் பண்டங்கள் முதலியனவும், அழுக்கில்லாமலுந் தீ நாற்றம் வீசாமலுந் துப்புரவாய் இருக்க வைத்தல். இங்ஙனம் அகம் புறம் இரண்டுந் தூயவாய் இருக்கும்படி வைத்தலும், உலகநூல் அறிவுநூல்களை எந்நேரமும் ஓதுதலும், கடவுளை இடையிடையே வழிபடுதலும் முற்றும் வழுவாமற் செய்தல் அரசராயிருந்து குடிகளைப் பாதுகாப்பார்க்கும், பதினெண் டொழில் புரிவாரைத் தத்தந் தொழில்களில் ஏவி உழவு தொழிலை நடப்பிப்பார்க்கும், பல நாடுகளிலுள்ள பண்டங்களை ஒருங்கு தொகுப்பித்துங் காலினுங் கலத்தினுஞ் சென்று அயல்நாடுகளில் அவற்றை விலைப் படுத்தியும் வாணிகம் புரிவார்க்கும் இயலாமையின், அகம் புறந் தூய்மையினும் கல்வி கடவுள் வழிபாட்டினும் வழுவாது நிற்கவல்ல வேளாளர் மட்டுமே, `அந்தணர் என்னும் பெயர்க்கு உரியராய் உழுவித்துண்பாரையும் பாதுகாத்து, உலகினை ஓம்பி அகம் புறந் தூய்மை கல்வி கடவுள்வழிபாடு என்னும் இவற்றில் அந்தணர்க்கு அடுத்தபடியில் வழுவாது நிற்க வல்லராகலின், அரசர், ஏனை வணிகர் வேளாளரிற் சிறந்த சாதியாராயினர். வணிகரும் வேளாளரும் ஏனைப் பதினெண்டொழில் புரிவாரைவிட மேற்கூறிய அருளொழுக் கத்தினும், தூய்மை கல்வி கடவுள் வழிபாட்டினும் மேம்பட்டிருத்தலின், அவரும் அப் பதினெண்மரினுஞ் சிறந்த சாதியாராக வைத்துப் பாராட்டப் பட்டு வருகின்றனர். இனிப், புலால் உண்ணும் பதினெண்டொழிலாள ருள்ளும் அகந்தூய்மை புறந்தூய்மையில் இயன்றமட்டும் வழுவாது நிற்போருங், கல்வியுங் கடவுள்வழிபாடும் வாய்ந் தோருமே உயர்ந்த சாதியாராகக் கருதப்பட்டு வருகின்றனர். புலால் உணவு கொள்ளுதலில் உழுதுண் வேளாளரும் இடையரும் அகம்படியரும் கள்வரும் மறவரும் ஒருங்கொப்ப ராயினும், அகம் புறந்தூய்மையினுங் கல்வி கடவுள் வழிபாட்டினும் உழுதுண் வேளாளரும் இடையரும் ஏனை யோரிற் சிறந்துநிற்றலின், அவர்கள் அகம்படியர் கள்வர் மறவரினும் உயர்ந்த சாதியாராகக் கருதப்படுகின்றனர். தூய்மை கல்வி கடவுள்வழிபாடு இல்லாமை யோடு, கள்ளுண்டும் விலங்குகளில் மிகத் தூயனவும் பெரிது பயன்படுவனவுமாய ஆவினையும் எருதினையும் உணவாகக் கொண்டும் நிரம்பவுந் தீய ஒழுக்கத்தினரா யிருத்தலின், பள்ளரும் பறையரும், அகம்படியர் கள்வர் மறவரினும் இழிந்தசாதியா ராயினர். இனி, இவ்வாறு பல்வேறுவகையினராய்ப் பிரிந்த சாதியாருள்ளும் மகளிரது ஒழுக்கத்தால் உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாய்ப் பிளவு பட்ட சிறுச்சிறு வகுப்பாரும் பற்பலர். கொண்டானைவிட்டுப் பிறன் தோள்தோய்ந்த மகளிரும் அவரைச் சேர்ந்தாரும் ஒரு சாதியினுள்ளேயே இழிந்தவகுப்பினர் ஆயினர். முதலில் ஒரு கூட்டத்தினராய் இருந்த மருதநிலத் தமிழ்மக்களே பின்னர் நாட்செல்லச் செல்ல இங்ஙனமெல்லாம் பற்பல கூறுகளாய்ப் பகுக்கப் படுதற்கு ஏதுவாய் இருந்தவைகள்: கொல்லாமை புலால் உண்ணாமை யும், அகந்தூய்மை புறந்தூய்மை கல்வி கடவுள் வழிபாடும், மகளிர் ஒழுக்கமுமேயா மென்பதனைக் கடைப்பிடித்து உணர்ந்துகொள்க. இங்ஙனம், பிறவுயிர்க்குத் துன்பம் பயவாத தூய உணவையும், தன் உடம்பும் உயிரும் தூயவாதற்கு ஏற்ற முறைகளையும், இன்ப வேட்கையை நெறிதவறாமல் நுகருதற்குரிய வகைகளையுங் கைப்பற்றி யொழுகும் வரையில், அங்ஙனங் கைப்பற்றி யொழுகுவார் எக்குடிப் பிறந்தோராயினும் அவர் உயர்ந்தோராகப் பாராட்டப்படுதற் குரிய விழுப்பம் வாய்ந்தோராதலைச், செந்தமிழ்த்தொல்லா சிரியராகிய தொல்காப்பியனார் தமது காலத்திருந்த மருதநில மாந்தரையும் பிறநிலத்தாரையும் அவ்வவர் தொழின்முறைபற்றிப் பகுத்து ஓதியவாறு பற்றி இவ்வியலில் இதுகாறும் விளக்கிக் காட்டினாம். தூயவுணவானுந் தூய செயலானும் உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாய்ப் பிரித்துப் பாராட்டப்பட்டோர் தத்தம் ஒழுக்கங்களின் வழுவியவழி உயர்ந்த சாதியாராகப் பாராட்டப்படவில்லை என்பதற்குத், தொல்காப்பியனார்க்குப் பின் பண்டைத் தெய்வ ஆசிரியராய்த் தோன்றிய திருவள்ளுவ நாயனார் இரண்டாயிர ஆண்டு களுக்கு முன்னரே, மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (14, 3, 4) என்று அருளிச்செய்த திருக்குறட் பாக்களே (14, 3, 4) சான்றாம். திருக்குறளுக்குச் சிறிது பிற்பட்ட காலத்தாகிய நாலடியாரும், நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி ஆள்வினை என்றிவற்றின் ஆகுங் குலம் (195) என்று உயர்ந்த செயல்களே உயர்குல அடையாளமாகக் கருதப்பட்டமை யினை வற்புறுத்து உரைத்தல் காண்க. இன்னும், ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில், உயர்ந்த ஒழுக்கத்தால் உயர்குலத்தவராக நன்கு மதிக்கப் பட்ட மருதநிலத்து வேளாண் குடித்தலைவர், குறிஞ்சிநிலத் தின்கண் உள்ள குறவர் குடித்தலைவரின் பெண்மக்களை மணந்துகொண்டனர். இது தொல்காப்பியங், களவியலில், ஒத்த கிழவனுங் கிழவியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே (2) என்று அவர் அருளிச்செய்தவாற்றால் நன்கறியக்கிடக்கின்றது. அங்ஙனங் குறிஞ்சி நிலத் தலைமகளிரை மணந்துகொண்ட வேளாண்டலைவர் அவரது இல்லத்தில் விருந்தினராய்ச் சென்றவழி அவர் தந்த உணவினை அயின்று மகிழ்ந்தமையும் ஆசிரியர் தொல்காப்பியனார், புகாஅக் காலைப் புக்கு எதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் (களவியல், 16) என்று (களவியல், 16) ஓதியவாற்றாற் பெறப்படும். `புகாக்காலை என்பது உணவுகொள்ளுங்காலம். இவ் வியல்புகள் எல்லாம் அச் சூத்திரங்களுக்கு நச்சினார்க் கினியர் உரைத்த உரையுள் எடுத்துக்காட்டப்பட்ட பழம் பாட்டுகளில் தெளியக்காணலாம். காணவே, பண்டைக் காலத்தில் ஒழுக்கத் தால் எத்துணை உயர்ந்த குடிப்பிறப்பினரா யிருந்தாரும், தம்மிற் றாழ்ந்த குடிப் பிறப்பினரில் மேம்பட்டு வருவாரைச் சிறிதும் ஒதுக்கிவையாது, அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்து, அவரைத் தம் மினத்திற் சேர்த்துக் கொண்டு இனிது வாழ்ந்துவந்தமை நன்கு புலனாகாநிற்கும். மருதநிலத்து வேளாண்டலைவன் குறிஞ்சி நிலத்து வேட்டுவப் பெண்ணை மணம் புரிந்துகொண்ட வழக்கம் முற்காலத்தில் இருந்ததனை மாணிக்கவாசகப் பெருமான், தெங்கம் பழங் கமுகின் குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர் நாட்டினைநீ, உமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச் சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமிஎந் தேமொழியே என்று திருச்சிற்றம்பலக்கோவையாரில் (100) அருளிச் செய்திருத்தல் கொண்டு உணர்க. இதுபோலவே, நெய்தல் நிலத்துப் பரதவர்குடிப் பெண்ணை வேளாண்டலைவன் மணந்துகொண்டமைக்குச் சந்தநு மன்னன் மச்ச கந்தியை மணந்தமையும் (மாபாரதம்), சிவபிரான் பெயர்பூண்ட ஒரு பாண்டிய மன்னன் ஒரு செம்படவப் பெண்ணை மணந்தமையுமே (நம்பியார் திருவிளையாடற் புராணம்) சான்றாம். இங்ஙனமே முல்லை நிலத்து ஆயர்தலைவன் மகளை மருதநிலத்தலைவன் மணந்தமுறை, படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண் இடையார் மெலிவுங்கண் டண்டர்கள் ஈர்முல்லை வேலிஎம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட்டார் வியன்றென்புலியூர் உடையார் கடவி வருவதுபோலும் உருவினதே (136) போந்த திருச்சிற்றம்பலக்கோவையார் திருப்பாட்டானும், அருச்சுனன் ஆயர் தலைவனான கண்ணன் தங்கை சுபத்திரையை மணந்த வரலாற்றானும் அறியப்படும். இவ்வாறு இழிந்த ஒழுக்கமுடைய இழிந்த சாதியார்க் குள்ளும் உயர்ந்த ஒழுக்கமும் இயல்பும் உடையராய் வருவாரைப் பண்டை வேளாளர் தம்மினத்திற் சேர்த்துக் கொண்டு வாழ்ந்த வரலாறுகளை உற்று ஆராயுங்கால், அவ்வவர்பாற் காணப் படும் உயர்ந்த இயல்புகள் பற்றியே சாதியுயர்பு உண்டாய தல்லாமற் பிறப்பளவில் அஃது உண்டாகவில்லை யென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்குவிளங்கும். உயர்ந்த செயலும் இயல்பும் வாய்ந்த குடிமக்களில் இழிந்த செயலும் இயல்பும் உடையார் தோன்றுவராயின் அவரை இழிந்தோ ரென்றும், இழிந்தசெயலும் இயல்புமுடைய குடியில் உயர்ந்த செயலும் இயல்பும் உடையார் தோன்றின அவரை உயர்ந்தோ ரென்றும் நம் தமிழ்மக்கள் கொண்டாரென்பதற்கு, ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (44, 3) மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு (41, 9) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (41, 10) என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தமையே சான்றாம். பண்டைக் காலத்திருந்த தமிழ் வேந்தர்களுங், கல்வியிலும் பிறநலங்களிலும் உயர்ந் தோரையே உயர்ந்தோரெனக் கொண்டு பாராட்டின ரல்லாமற், பிறப்பளவில் எவரையும் உயர்ந்தோரெனக் கொண்டில ரென்பதற்கு, ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன், உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே, பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும், ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும், வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளுங் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே என்று1 ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய செய்யுளே சான்றாம். இவ்வாறாக, உயர்ந்தோர் தாழ்ந்தோராதலும், தாழ்ந்தோர் உயர்ந் தோராதலும் அவ்வவர்பாற் காணப்படும் இழிந்த இயல்பு செயல்கள், உயர்ந்த இயல்பு செயல்கள் பற்றியே யல்லாமல், வெறும் பிறப்பளவில் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று கூறுதற்கு வேறு ஏதோர் அடையாளமும் உண்மைபற்றியன்றாம். ஏனெனிற், பிறப்பளவில் நோக்கினால், மக்கள் எனப்படுவார் எல்லாரும் புலால்நாற்றம் வீசும் ஊனுடம்பு வாய்ந்தவர் களாகவே யிருக்கின்றனர்; அவர்க்குள்ள அவ்வூனுடம்புதானும் ஒன்பது வாயில்களிலுங் கசியும் மிக அருவருப்பான மலம் நிறைந்ததா யிருக்கின்றது; அவ் வுடம்பிற் புண் உண்டானாற் சீழும் செந்நீரும் வடிகின்றன, புழுக்கள் நெளிகின்றன, பார்ப்பாருடம்பும் இவ்வியல்பினவே, அரசர் வேளாளர் உடம்பும் இவ்வியல்பினவே, பறையர் உடம்பும் இவ்வியல் பினவே; சிலகாலம் உயிரோடிருக்கையிலும் இவ்வுடம்பு திரைத்து மூத்து வலிவுகுன்றிப்போகின்றது; அவ்வுயிர் போனபின் அவ் வுடம்பு மண்ணிற் புதைக்கப்பட்டு மண்ணாய் விடுகின்றது, அல்லது நெருப்பிலிட்டு நீறாக்கப் படுகின்றது. இவ்வியற்கை எல்லாருடம்புகட்கும் பொதுவாயிருத்தலால், ஆசிரியர் திருவள்ளுவர், பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும் என்று அருளிச் செய்தார். ஆகையால், வெற்றுடம்பை மட்டுங் கண்டு இது பார்ப்பாருடையது, இது மன்னருடையது, இது வேளாளருடையது, இது பறையருடையது என்று கூறுதல் இயலாது. மேல் உடுத்த உடைகளையும், பூணூல் உச்சிக் குடுமிகளையும் களைந்துவிட்டால் இவர் பார்ப்பனரென்று அறிதல் ஏலாது; இங்ஙனமே அரசர் வேளாளர் பறையர் முதலானோர் தாந்தாம் வேற்றுமை தோன்ற அணிந்திருக்கும் அடையாளப் பொருள்களை அகற்றிவிட்டால் அவர்களை இன்னாரென்றறிந்து கொள்ளுதல் எவர்க்கும் ஏலாது. இவ்வாறு மக்களுள் இவர் இன்ன சாதியார் இவர் இன்ன சாதியார் அல்லர் என்று இனம் பிரித்துகாட்டல் இயற்கையில் இயலாமைபற்றியே, அஃகி அகன்ற செந்தமிழ்த் தொல்லா சிரியராகிய தொல் காப்பியனார் `சாதி என்னுஞ்சொல்லை மக்கட்பிரிவினர்க்கு இட்டு வழங்காமல், தம்முன் இனம் இனமாக இயற்கை யிலேயே வேற்றுமைகாட்டும் சிற்றுயிர்ப் பிரிவுகளுக்கு அச்சொல்லை இட்டு வழங்கினார். அவர், நீர் வாழ்சாதியுள் அறுபிறப்பு உரிய என்று மரபியற் சூத்திரத்தில் (42) சாதி என்னுஞ்சொல்லை மீனின் இனங்களைக் குறித்தற்குக் கருவியாகக் கொண்டமை காண்க. நீர்வாழ் மீன்களில் இவை ஆண்பால் இவை பெண்பாலென்று பகுத்தறிதற்கு ஏற்ற உறுப்பு அடையாளங்கள் உடையன உளவென்றும், அவற்றுள் ஆணுறுப்பு உடைய வாய்ப் `போத்து என வழங்கப்படுதற்கு ஏற்றவை ஆறு சாதியாமென்றும் ஆசிரியர் அச் சூத்திரத்தால் அறிய வைத்தார். ஆணுறுப்புடைய ஆறுசாதி மீன்களாவன: சுறாவும் முதலையும் இடங்கரும் கராமும் வராலும் வாளையுமென இவை என்று அதற்கு உரைகாரர் கூறியதூ உங்காண்க. எனவே, தத்தம் உடம்பின் அமைப்பால் இவை சுறா, இவை முதலை, இவை வரால், இவை வாளை எனப் பகுத்துணர்தற்குரிய இயற்கை வேற்றுமையுடைய சிற்றுயிர் களின் இனங்களே `சாதி எனப் பெயர்பெறுதற்கு இயைந்தனவாம் என்பதூஉம், இங்ஙனம் இயற்கையிற் பிரித்துணர்தற்கு ஏலா மக்கட்பிரிவினர் அப்பெயர் பெறுதற்கு ஏலாரென்பதூஉம், அதனால் மக்களுட் `சாதி இல்லை யென்பதூஉம் தெய்வப் பெற்றியாளரான ஆசிரியர் தொல்காப்பியனார்க்குக் கருத்தாதல் பெறப்பட்டமை காண்க. இவ்வாற்றால், உயர்ந்த செயல்கள் உடையாரை உயர்ந்தோ ரென்றலும், இழிந்த செயல்கள் உடையாரை இழிந்தோ ரென்றலுமே செந்தமிழ்மறை வகுத்த தொல்லா சிரியராகிய தொல்காப்பியனார்க்கும், அவரது மரபு பிழையாமல் வந்த தெய்வத் திருவள்ளுவனார்க்கும், அவ்விருவரது மந்திரமொழி பேணிவந்த ஏனைத் தமிழாசிரியர் எல்லார்க்கும் ஒத்த கருத்தாதல் வெள்ளி டைமலைபோல் விளங்காநிற்கும் என்பது. அடிக்குறிப்புகள் 1. “Their superfluous hordes of the nations which had remained nomad, precipitate themselves upon those which had already become agricultural; until, these having become sufficiently powerful to repel such inroads,the invading nations, deprived of this outlet, were obliged also to become agricultural communities.” - J.S. Mill’s Principles of Political Economy, P. 7. 2. “In Asia, in Africa, in America, all the ancient civilizations were seted in hot climates (p. 37). Asiatic civilization has al ways been confined to that rich tract where alone wealth could be easily obtained. This immense zone comprises some of the most fertile parts of the globe; and of all its provinces, Hindustan as extending south to Cape Comorin is certainly the one which was for the longest period has possessed the greatest civilization (pp. 39-40). We find that no people living in a very northern latitude have ever possessed that steady and unflinching industry for which the inhabitants of temperate regions are remarkable. The reason of this becomes clear, when we remember that in the more northern countgries the severity of the weather, and, at some seasons, the deficiency of light, render it impossible for the poeple to continue their usual out of foor employments (p. 24).” - H.T. Bucle’s History of Civilization, Edition of G. Routledge & Sons, Ltd. 3. தொல்காப்பியம், பொருளதிகாரம், 75. 4. மநுமிருதி, 1, 90; 8, 410; 5. மநு, 10, 79. 6 தொல்காப்பியம், பொருள், மரபியல், 81. 7. தொல்காப்பியம், பொருள், மரபியல், 83. 8. தொல்காப்பியம், பொருள், மரபியல், 84. 9. தொல்காப்பியம், பொருள், அகத்திணையியல், 22, 23,24, 25. 10. Compare also the account given by Ragozin in his ‘Vedic India’, pp. 341-343. 11. திருமுருகாற்றுப்படை, 218, 232 - 233. 12. புறநானூறு, 183. இயல் -5 சைவ வைணவ நூல்களிலுஞ் சாதிவேற்றுமை இல்லை இனிச், சைவ வைணவ ஆசிரியர்கள் அருளிச்செய்த நூல்களிலாயினும் பிறப்பளவிற் சாதிவேற்றுமை சொல்லப்பட் டிருக்கின்றதோவென ஆராய்ந்தாற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டுதல் இறைவனது திருவருளைப் பெறவொட்டாமல் தடைசெய்து அங்ஙனம் அது பாராட்டுவாரை அறியாமை யிலுஞ் செருக்கிலும் ஆழ்த்தி அவர்களைத் தீராப் பெருந்துன்பச் சுழலிற் படுப்பித்து வருத்துமென்றும், சாதி வேற்றுமையினை அறவே தொலைத்து இறைவன்பால் அன்புமிக்க அடியார் எவராயிருப்பினும் அவர்பால் ஏதொரு குற்றமும் ஆராயாது அவர்க்குத் தொண்டுபூண்டு ஒழுகுதலே இம்மை மறுமை யிரண்டிலுந் திருவருட் பேரின்பத்தைத் தருமென்றும் அவ்வுண்மை நூல்களுள் வற்புறுத்துச் சொல்லப்பட்டிருக் கின்றனவே யல்லாமற், சாதிபற்றிய உயர்வு தாழ்வுகள் ஒரு தினைத்தனை யேனும் அவற்றின்கட் சொல்லப்படவில்லை. இவ் வுண்மை யினையும் அவ்வாசிரியன்மார் நிலவிய கால அடைவின் படியே அவர்தம் திருமொழிகளினும் வரலாறுகளினும் இருத்தெடுத்து விளக்கிக் காட்டுதும். சைவ வைணவ ஆசிரியர் எல்லாரினும் முற்பட்ட காலத்தவரும், பாண்டிய வேந்தனுக்கு அமைச்சராயிருந்து, பின் திருப்பெருந்துறையிலே சிவபெருமான் தமது திருவுருவத் தோடும் நேரே எழுந்தருளி ஆட்கொள்ளப் பெற்றவருமான அந்தணர் குடிப்பிறந்த மாணிக்கவாசகப் பெருமான், சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமுது ஆனானைக் குலாவுதில்லைகண்டேனே (திருவாசகம், கண்டபத்து,5) என்று அருளிச்செய்திருக்குந் திருப்பாட்டாற், சாதி குலம் பிறப்பு என்பவைகள் மக்களை மேல் நிலைக்குச் செல்ல வொட்டாமல், அவர்களைத் தற்செருக்கால் மயங்கச்சுழற்றி ஆழ்த்தி மடிவிக்கும் மீளா நீர்ப்பெருஞ் சழிகளாதலை அறிகின்றனம் அல்லமோ? இனிப், பௌத்தசமய காலத்திலிருந்து அதனை ஒடுக்கிய மாணிக்க வாசகர்க்குப்பின், சமணசமயகாலத் திருந்தவரும், சமண்மதம் புகுந்து பின் சிவபெருமான் றந்த சூலைநோயால் மீண்டுஞ் சைவசமயம் புகுந்தவரும், சமண அரசனாகிய மகேந்திரவர்மன் தம்மைக் கருங்கல்லிற் பிணைத்துக் கடலில் வீழ்த்தவும் சிவபிரான் திருவருளால் அக்கல்லையே புணை யாகக்கொண்டு கரையேறி அவ்வரசனையும் சைவனாக்கு வித்தவரும், சைவ வேளாண்குடியிற் பிறந்தவருமான திருநாவுக்கரசுநாயனார், சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுங் குலமுங் கொண்டு என்செய்வீர் பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே (திருமாற்பேறு) என்றருளிச் செய்து வெறுங் குலங்கோத்திரங்களால் இறைவன் திருவருளை யெய்துதல் ஆகாதெனவும், மெய்யன் புடைமையே அதனைப் பயக்குமெனவும் அறிவுறுத்திய தோடு, முக்கோலும் புற்கட்டும் எடுததுத் தோற்பூணூலும் பூண்டு `யான் பார்ப்பனன் என்று தன்னைப் பெருமை பாராட்டுதலால் ஒருவன் ஏதும் பயன்பெறான், நுண் உணர்வால் வரும் மெய்யன்பே ஒருவற்கு மெய்ப்பயன் தருவதா மென்பது போதரக், கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரம்உற்று என்பயன்? நீலமா மயிலாடு துறையனே நூலும் வேண்டுமோ நுண்உணர்ந் தோர்கட்கே (திருமயிலாடு துறை) என நன்கெடுத்து அருளிச்செய்தமை காண்க. பார்ப்பனரையே பிறப்பளவில் உயர்ந்தவராகக் கொள்ளாத அப்பருக்கு, வேளாளரைப் பிறப்பளவில் உயர்த்துதல் சிறிதும் உடன்பாடாகாதன்றோ? இனித், திருநாவுக்கரசு நாயனார்பாற் கரைகடந்த மெய்யன்பு பூண்டு, அவ் அன்பின் பெருக்கால் தம் புதல்வர்க் கெல்லாம் திருநாவுக்கரசு நாயனாரது திருபெயரையே வைத்து அழைத்தும், தாம் அறத்திற்காக வழிநடையில் அமைத்த அழகிய தண்ணீர்ப்பந்தருக்கும் அப்பெயரையே சூட்டியும் ஒழுகிய அந்தணரான அப்பூதியடிகள், திருநாவுக் கரசு நாயனார் தமதில்லத்திற்கு எழுந்தருளக்காண்டலும் தம்ம வருடன் சென்று அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரோடு அருகிருந்து உணவுகொண்ட அன்பின் திறங்க ளெல்லாம் அன்பின் வழிப்படும் நல்லார்க்கு நினையுந்தோறும் அகம்நெகிழ்ந் துருகச்செய்யும் இயல்பின வாமன்றோ? இனி, உலக இயல்பினையுந் தன்னியல்பினையுங் கடவுளியல்பினையும் உணரல் இயலாத மூன்றாண்டுச் சிறுகுழந்தையாயிருந்த காலத்திலேயே அம்மையப்பர் வடிவாய்த் தமது கண்ணெதிரே தோன்றிய முழுமுதற் கடவுளைக் கண்டு, அதனால் ஞானப்பால் ஊட்டப்பெற்று எல்லாம் ஓதாதுணர்ந்து, கண்டோரெல்லாம் இதனை யொப்பதொரு புதுமை யாண்டுங் கண்டிலேம் என வியந்து வணங்கத், தமது சிறுகுதலைவாய் திறந்து அம்மையப்பரை எண்ணிறந்த திருப்பதிகங்களாற் பாடிக், கடவுள் இல்லை யென்று நாத்திகம் பேசித் தமது அருளொழுக்கத்துக்கே மாறாக எண்ணிறந்த சிவனடியார்களைத் தீயிட்டுக் கொளுத்தத் துணிந்த சமணர்களை ஒடுக்கி, அவர்க்கும் பிறர்க்கும் எதிரிலே சிவபெருமான் உளன் என்பதைப் பல புதுமைகளால் விளங்கக் காட்டிய அந்தணரான திருஞானசம்பந்தப் பிள்ளையார், எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் (திருப்பிரமபுரம்) என்றருளிய திருப்பாட்டால் தன் அடியார் உயர்ந்த குடியிற் பிறந்தாரேனும் இழிந்தகுடியிற் பிறந்தாரேனும் அவர் எந்தநிலையில் உள்ளாரேனும் அவர்தம் அன்பின் பெருக்கையே பாராட்டி இறைவன் அவர்க்கு அருள் புரிவானென விளக்கினரல்லரோ? இன்னும் அவல், குலவராகக் குலம் இலருமாகக் குணம் புகழுங்கால் உலகின் நல்லகதி பெறுர் (திருப்புகலூர்) எனவும், நலம் இலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற குலம் இலராக குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை பரவும் (திருவாலவாய்) எனவும், அடியார் எக்குடிப் பிறப்பினராயினும் அவரது குடிப்பிறப்பு நோக்காது அவரைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க. இங்ஙனம் அவர் தாம் மொழிந்த சொல்லளவில், அமையாது, தாம் மொழிந்தபடியே அன்பின்மிக்க அடியார்பால் ஏதும் சாதிவேற்றுமை பாராட்டாது அதனைத் தமது செய்கையிலுங் காட்டி யொழுகினார். பாணச்சாதியிற் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர் மனைவியாரையும் எப்போதும் தம்முடனேயே வைத்திருந்ததோடு, பார்ப்பனரான திருநீலநக்க ரென்னும் மற்றொரு சிவனடியார் திருமாளிகைக்கு எழுந்தருளிய போது அவரோடு ஒருங்கிருந்து திருவமுது கொண்டு, இரவில் திருநீலநக்கரது மிகவுந் தூயதான் வேள்விமேடையிலே யாழ்ப்பாணருக்கும் அவர் மனைவி யார்க்கும் இருக்கை அமைத்தனர்கள். அவ்விருவரும் அம்மேடையிற் சென்றவுடனே, அங்கே வேள்விக் குண்டத்தில் இடஞ்சுழித்து எரிந்த சிவத் தீயானது இவர்களின் வரவால் மிகமகிழ்ந்து வலஞ்சுழித் தெழுந்து எரிந்ததெனச் சேக்கிழார் அடிகள் அருளிச் செய்திருக்கின்றார். பாணரென்பவர் பறைச்சாதியிற் சிறிது மேலானவரென்று எண்ணப் பட்டவர்; இவ்வியல்பினரான பாணரை நம் திருஞான சம்பந்தப் பெருமானும் திருநீலநக்கரும் தம்மோடு உடன் வைத்து அளவளாவினதும், அவ்வருமையைத் தீவடிவாயிருந்த நம் ஆண்டவன் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்ததும் போலிச் சைவர் உணரார் கொல்லோ! நான்காம் ஆசிரியரும் ஆதிசைவப் பார்ப்பனருமான சுந்தரமூர்த்தி நாயனாரும் திருத்தொண்டத்தொகையின்கண் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் என அடியார் களின் பிறப்பை நோக்காமல் அவர்கள் எல்லாரையும் வணங்கினார். இனிச், சிவபெருமான் பிறப்பினால் உயர்ந்தவர்களுக்கே தனது அருளை வழங்கியது யாண்டும் இல்லை. அன்பினாற் சிறந்தவர்கள் எப்பிறப்பினராகப் பிறராற் கருதப்படினும், அதனைத் தான் சிறிதும் பாராதே அவர்களுக்கே தனது பேர் அருளை வழங்கி வந்திருக்கின்றான். இதற்குப், பெரிய புராணத்தின்கட் போந்த பல்வகைப் பிறப்பினரான அடியார்கள் எல்லாரும் அவனது திருவருளைப் பெற்றமையே பெருஞ் சான்றாம். மேலும், பிறப்பினால் தம்மை உயர்ந் தோராகக் கருதிச் செருக்கடைவோர் குறும்பை வேரோடும் அறுத்து அவரை மாய்க்க வேண்டுமென்பதே எல்லாம்வல்ல அவ்வாண்டவன் திருவுளக்குறிப்பாமென்பது, உண்மை வரலாறுகள் பலவற்றாலும் நன்கு தெளிவுறுத்தப்பட்டிருக் கின்றது. திருவம்பர் மாகாளத்திற் சோமாசிமாற நாயனார் தாம் செய்த வேள்வியில் இடும் அவிசைச் சிவபெருமான் நேரே வந்து ஏற்றுக்கொண்டருளல் வேண்டுமென்று தவங்கிடந்து இரந்த போது, அவ் வேள்விக் குண்டத்தைச் சூழத் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோராகக் கருதிச் செருக்குற்றிருந்த பார்ப்பனர் அத்தனைபேர்க்கும் தனது அருளை வழங்க இசையானாய், நம்பெருமான் சண்டாளப் பறையன் உருத்தாங்கி அவ் வேள்விக் குண்டத்திற்கு எழுந் தருளினான்; அதுகண்ட ஏனைப் பார்ப்பனர் எல்லாரும் `தூய வேள்விக்களத்திற்குப் பறையன் வந்தான் என்று சொல்லி ஓடிப்போக, அன்பினாற் பெரிய சோமாசிமாற ராகிய உண்மைப் பார்ப்பனர் உடனிருந்த சுந்தர மூர்த்தி நாயனாரால் அறிவுதெளிந்து அங்கு எழுந்தருளின நம்பெருமானுக்கு அவிசைத்தந்து பெரும்பேறு பெற்றனர். இன்னுந், திருஞானசம்பந்தப் பெருமானாலும் திருநாவுக் கரசுநாயனா ராலும் தம்முடைய திருப்பதிகங்களிலே வியந்து பாராட்டப் பெற்றவரும் சமணர்கள் சொல்லிய பழித்துரை பொறாமல், அவர்கள் எல்லாரும் நாணமும் அச்சமும் எய்தத், திருவாரூர்ச் சிவபிரான் திருககோயிலிலே தண்ணீரால் விளக்கு எரித்தவரும் ஆன நமிநந்தியடிகள், ஒருகால் பங்குனித் திருவிழாவில் எழுந்தருளிய ஆண்டவன் திருவுருவினைப் பெருங்கூட்டத்திற் சென்று கண்டு வணங்கிப், பின்னர்த் தம்மனைக்கு ஏகினார். ஏகினவர், தாம் பார்ப்பன குலத்திற் பிறந்தமையால் ஏனை இழிகுலத்தார் கலந்த கூட்டத்திற் சென்று வணங்கினது, தமக்குத் தீட்டு உண்டாக்கிற்றென்று நினைந்து, தமது மனையின் உள்ளே புகாமற், புறத்தே திண்ணையில் ஒதுங்கியிருந்து, தாம் தலைமுழுகி உள்நுழைந்து பூசை யாற்றுதற்காகத் தண்ணீர் கொணரும்படி தம் மனைவியார்க்குக் கற்பித்தார். மனைவியார் அவரது தலைமுழுக்குக்கு வேண்டுவன ஒழுங்குபடுத்தச்செல்ல, அவர் சிறிது கண்உறங்கினார். அப்போது அவரது கனவிற்றோன்றிய சிவபிரான், திருவாரூரில் உள்ளவர்க ளெல்லாரும் நம் அடியார் கூட்டத்திற் சேர்ந்தவ ரென்பது அறிந்திலையோ! அவரை இழிகுலத்தாராக நீ கருதியது என்னை! எனக்கூறி மறைந்தருளினர். அதுகண்டு உடனே விழித்தெழுந்த நமிநந்தியடிகள் தாம் செய்த பிழையினை நினைந்து வருந்தித், தலைமுழுகாமலே தமது இல்லத்தினுட் புகுந்து சிவபிரானுக்குப் பூசையாற்றி உணவு கொண்டு துயின்றார். மறுநாள் அவர் திருவாரூரில் இறைவனை வணங்கச் சென்றுழி, அவ்வூரில் உள்ளார் அனைவரும் முதலிற் சிவபிரான் வடிவினை ராய்த் திகழ்ந்து பின்னர்த் தத்தம் பழைய வடிவத்தோடுந் தோன்றக் கண்டு, அவர் அன்றுமுதற் சாதிவேற்றுமையினை ஒழித்து இனிது வாழ்ந்தார். இவ்வாறே நிகழ்ந்த வரலாறுகள் அளவிறந்தன. அவற்றைப் பெரியபுராணம் முதலான உண்மைநூல்களுட்கண்டு தெளிக. இனி, வைணவ சமயத்துள்ளும், சாதிவேற்றுமையானது திருமாலின் திருவடிகளை அடையவொட்டாமற் றடுக்கும் பெருந்தடையா தலைக் காட்டும் வரலாறுகள் பல இருக்கின்றன. அவற்றுட் சில மட்டும் இங்கே எடுத்துக் காட்டுதும், திருமாலுக்குத் தொண்டுசெய்து அவரைப்பாடிய ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரான திருப்பாணாழ்வார் என்பவர், பறையரில் இசைபாடும் வகுப்பிற்சேர்ந்த பாணர் குடியிற் பிறந்தவர் ஆவர். இவர் திருமால் திருவடிக்கண் அன்புமீதூரப் பெற்றமையால், நாடோறுங் கையில் யாழ்ஏந்தி வந்து, தமது கலத்தின் இழிபால் தாம் திருவரங்கப் பெருமாள் கோயிலின் உள்ளே புகக்கூடாததுபற்றிக், காவிரித் தென்னாற்றின் தென்கரையில் திருமுகத்துறையில் தொலைவில் நின்றபடியே இறைவனைப் பாடிப்பாடி நெஞ்சம் நெக்குருகுவார். இவர் இங்ஙனம் புறத்தே எட்டநின்று தொழுது உருகுதலைக்கண்டு மனம்பொறாத திருவரங்கப் பெருமாள், லோகசாரங்க முனிவர் என்னும் அந்தணர்க்குக் கனவிலேதோன்றி, நம்பால் மெய்யன்பு பூண்டொழுகும் பாண்பெருமாளை நீர் நெகிழ நினைத்துப் போகவேண்டாம்; அவரை நுமது தோளில் ஏற்றிக்கொண்டு நம் பக்கலில் அழைத்துவரல் வேண்டும். என்று கட்டளையிட்டு மறைத்தருளினார். லோகசாரங்கர் உடனே விழித்தெழுந்து இறைவனது பேரருளை நினைந்து வியந்து, விடியற்காலையில் திருமுகத்துறையிலே நீராடி, அங்குவந்து நின்று இறைவனைப் பாடாநின்ற திருப்பாணாழ்வார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப், பெருமாள் செய்த கட்டளையை அவர்க்குத் தெரிவித்து, அவரைத் தமது தோளின்மேல் ஏற்றிக்கொண்டு, திருக்கோயிலின் உள்ளே சென்று, அவரை அரங்கப்பெருமாள் எதிரிலேவிட்டார். என்னும் இவ்வரலாற்றினால், அன்பினால் மிக்கவர் பிறப்பினால் இழிந்தவராயினும், பிறப்பினால் உயர்ந்தோராகக் கருதப்படுவோரும் அவரை வணங்கி அவர்க்குத் தொண்டு செயற்பால ரென்பதே இறைவனது திருவுளக்குறிப்பாதல் பெறப்படு கின்றதன்றோ? இன்னுந், திருமழிசையாழ்வார் தாம் தாயின் கருப்பை யினின்றும் வெளிப்பட்ட காலத்திலேயே தாய்தந்தையராற் காட்டிலே தனியே விடப்பட்டு, அக் காட்டிற் பிரம்பு அறுக்கச் சென்ற திருவாளன் என்பனாற் கண்டெடுக்கப்பட்டு, அவனாலும் அவன்றன் மனைவியாலும் வளர்க்கப்பட்டவர்; அவர் இன்ன குலத்தினரென்று பிறப்பு அறியப்படா மலிருந்தும், அவர் திருமால் திருவடிக்கண்வைத்த பேரன்பின் மிகுதியால் உயர்ந்தோராகப் பாராட்டப் படுகின்றன ரல்லரோ? இன்னும், வைணவசமயத்தவராற் பெரிது கொண்டாடப்படுந் திருமங்கையாழ்வார் மிலேச்ச குலத்திற் பிறந்தவராகச் சொல்லப்படுகின்றார். இவர் கல்வியிற்சிறந்த பாவாணராத லோடு, திருமால் திருவடிக்கட் பேரன்பு பூண்டொழுகினவர். நாலாயிரப்பிரபந்தத்தில் இவர் பாடிய செந்தமிழ்ச்சுவைப் பாடல்களே மிகுந்துள்ளன. இவர் குலத்தினாற் றாழ்ந்தோரா யிருந்தும், தமது கல்விப் பெருக்கானும் பேரன்பானும் இவர் மிக உயர்த்துப் பாராட்டப்படுகின்றனரல்லரோ? இன்னும், முதலாழ்வார்களாகிய பொய்கை, பேய், பூதம் என்பவரின் குலங்கள் இன்னவை யென்பது புலப்படாதிருந்தும், அம்மூவரும் ஏனையெல்லாரினுஞ் சிறந்தோராக வழுத்தப்படுதலைக் காண்டுமல்லமோ? இன்னும், வைணவர்களால் நம்மாழ்வார் எனச் சிறந்தெடுத்துக் கொண்டாடப்படுஞ் சடகோபர் வேளாளகுலத்திற் பிறந்தவராயிருந்தும், அவர்தங் கல்விப் பெருமையினையுந் தவவொழுக்கத்தினையும் திருமால் திருவடிக்கண்வைத்த பேரன்பினையும் நோக்கிப், பார்ப்பன குலத்திற் பிறந்தவராகிய மதுரகவி யாழ்வார் அவர்க்கு மாணாக்கராகி அவர்க்குத் தொண்டுசெய் தொழுகின ரல்லரோ? இன்னும் இங்ஙனமே பிறப்பிழிபு சிறிதுங் கருதாமல், அன்பின் மிகுதிபற்றி உயர்ந்தோராகப் பாராட்டி வணங்கப் பட்ட வைணவப் பெரியார்கள் பற்பலர் உளர். இங்ஙனம் அன்பராயினார் எவராயினும் அவரை மகிழ்ந்து ஏற்கும் தம் ஆண்டவன் திருவுளக்குறிப்பை இனிது உணர்ந்த அவன் அடியார்கள் அவ் அன்பர்களின் பிறப்பை ஒரு சிறிதும் நோக்காது அவர்களின் அன்புக்கே மகிழ்ந்து அவர்களுடன் ஏதும் வேற்றுமையின்றி அளவளாவி இன்புற்றார்கள். இனிச், சிவவேடத்தைக் கண்டு பிறரை அடியார்கள் வணங்கினாலும சிவவேடமுடையார் தாமேவந்து சொல்லு கிறபடி யெல்லாம் அடியார் நடவார் என்று போலிச்சைவர் சிலர் பொய்யுரை புகல்கின்றார் மெய்ப்பொருள் நாயனார் தம்முடைய பகைவன் சிவவேடந் தாங்கி வந்தவுடன் அவனை வணங்கியதும், அப்பகைவன் தம்மைக் கத்தியாற் குத்திய அரவங்கேட்டுத் தத்தன் என்னுங் காவலாளன் அவனைப் பிடித்துக்கொள்ள ஓடிவந்தபோது, நிறைத்தசெங் குருதிசோர வீழ்கின்றார் நீண்ட கையால், தறைப்படுமளவில் தத்தா நமர் எனத் தடுத்து அவனைப் பிறர் கொல்லாமற் கொண்டு போய்விடு என்று கூறியதும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! ஏனாதிநாத நாயனார் தம் பகைவனைப் போரிற் பலகால் தோல்விபெறச் செய்தமை யால், அவன் இவரை வேறுவகையால் வெல்லல் ஏலாதென்று உணர்ந்து தன் நெற்றியில் திருநீறிட்டு அதனைத் தெரியாமல் மறைத்துவந்து இவரைப் போருக்கு அழைக்க, இவரும் அவனுடன் சென்று போர்புரிந்து அவனை வெட்டப் புகுந்த பொழுதில், அவன் தன் முகமறைப்பை விலக்கித் திருநீறிட்ட நெற்றியைக்காட்ட, உடனே அவர் அவனைச் சிவனடி யாராக நினைத்து வெட்டாமல் விட்டுத் தம்மை அவன் வெட்டும்படி நின்றார் என்பதையும் இன்னும் இவை போன்ற பலவற்றையும் போலிச்சைவர் அறியார் கொல்லோ! இவ் வுண்மைகளை இனிது விளக்கிய, மண்ணாளும் மன்னவன்றன் மகன் குணந்தீங் கிரண்டும் வைய கத்தார் பாராதே வணங்கிடுவ ரஞ்சி எண்ணாளும் இறையமலன் திருவேடந் திருநீ றிட்டார்கள் குணங்குணக்கே டெனுமிரண்டும் எண்ணார், விண்ணாளத் தீவினையை வீட்டியிட விழைந்தார் விரும்பிஅவர் அடிபணிவர் விமலனுரை விலங்கல் ஒண்ணாதே யெனக்கருதி ஒருப்பட்டே அமலன் ஒப்பரிய புரிவாழ்வு மற்றையருக்குண்டோ எனவும், தேடிய மாடுநீடு செல்வமுந் தில்லைமன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும்என்று நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார் எனவும், வெண்ணீறும், வேடமும் பூசையும் மெய்யென்றான் பொய் யென்றான், மாடையும் வாழ்க்கை மனையுமே எனவும், எவரேனுந் தாமாக இலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டாலுள்கி உவராதே அவரவரைக் கண்ட போதே யுகந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. எனவும் போந்த திருவுரைகளையும் போலிச்சைவர் உணரார் கொல்லோ! இங்ஙனம் வேடத்தைக் கண்ட அளவானே வேற்றுமை பாராது அவர் களோடு அளவளாவுதல் வேண்டுமென அறிவுநூல்கள் கட்டளையிடுமானால், அவ்வேடத்தோடு கல்வியும் நல்லியல்பும் நல்லொழுக்கமும், மெய்யறிவும், சிவநேயமும் உடையாரை எவ்வளவு கொண்டாடி அவரோடு அளவளாவி அன்புபாராட்டல்வேண்டும்! இவற்றை யெல்லாம் ஒருசிறிதும் நோக்காது வெறுஞ் சோற்றுக்கே அழுது தீவினையை ஈட்டும் போலிச்சைவர் வேறு என்கடவர் என்க. இவை தம்மையெல்லாந் தெரிதற்குரிய பெருங்கல்வி போலிச் சைவர்மாட் டில்லையாயினும், பள்ளிக்கூடச் சிறுவர் நாடோறும் ஓதிவரும், சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ளபடி. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே. என்னும் பிற்காலத்து அரிய அறநூலின் அறிவுரை களையேனும் அவர் தெரியப்பெறாதது பெரிதும் வருந்தத்தக்க தொன்றாம். இயல் - 6 உலக வழக்கிலும் சாதி இல்லை இவைதாம் போலிச்சைவர் தெரியப்பெறாரேனும் உலகவாழ்க்கையாவது தெரிந்து அவர் நலம் அடைய லாகாதா? அந்தோ! போலிச்சைவர் அறியாமை இருந்தவா றென்னை! போலிச்சைவர் ஒருவர் கரவும் பொறாமையும் மன அழுக்கும் உடையவராகிப் பொய்பேசியும் பிறரை இகழ்ந்து உரையாடியும் பிறர் பொருளைக் கவர்ந்தும் வர, அவரைக்கண்டு ஏ! இழிகுலத்தாய் என் இங்ஙனமெல்லாம் தீது செய்கின்றாய்? என்று வினவினால், அதற்கு அப் போலிச்சைவர் நானா இழிகுலத்தேன்? நான் என் தகப்பனுக்கேயன்றோ பிறந்தேன். நான் தேவாரம் ஓதவில்லையா? நான் தகப்பன் பெயர் தெரியாதவர்களிற் சேர்ந்தவனா? நான் திருவாவடுதுறை தருமபுர ஆதீனங்களில் எல்லாரோடுமிருந்து வயிறு நிறைய நன்றாய்ச் சோறுதின்று கறுத்துத் தடித்துப் பருத்திருக்க வில்லையா? பாருங்கள்! என்று தமதுடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்டினால் அவர் சொற்களை உலகத்தார் ஏற்றுக்கொள்வார்களோ? அடே பேதாய்! இவற்றை யார் உன்னைக் கேட்டார்? நீ உன் தகப்பனுக்கே பிறந்தாய் என்பது உனக்கு எப்படித் தெரியும்? பெண் களுடைய திறமையும் சூழ்ச்சியும் உனக் கெங்ஙனந் தெரியும்? முற்றத்துறந்த பட்டினத்துப் பிள்ளையார், கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன் கையையெடுத் தப்புறந் தன்னில் அசையாமல் முன்வைத் தயல்வளவில் ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி யேகம்பனே. என்று அருளிச்செய்ததை அறியாயோ? பெண்களுடைய பேச்சை நம்பி நான் என் தகப்பனுக்கே பிறந்தேன் என்றும், பிறர் தகப்பன் பெயர் தெரியாதவர் என்றும் இகழ்ந்து பேசாதே. மறைவிலே பிறனுக்குக் கருக்கொண்டு பெற்ற பிள்ளைகளை மாதர்கள் தங்கணவன் பெயரால் வளர்த்து விடும் நிகழ்ச்சிகள் எண்ணிறந்தன. மிகவும் மறைவாய் நடந்த அவைகளைத் தெரிந்த சிலர் அவைகளைச் சில ஏதுக்கள் பற்றி வெளிவிடாமையால் அவை மறைபொருளாகவே நின்றுவிடுகின்றன. உன் இழிந்த தன்மைகளையும் செய்கை களையும் பார்த்தால், நீ உண்மையான சைவனுக்குப் பிறந்தாய் அல்லை என்பது எமக்குத் தோன்றுகின்றது. நீ யாருக்குப் பிறந்தால் எமக்காவதென்னை? நீ தேவாரம் ஓதி என்செய? திருவாசகம் படித்து என்செய? உன் மன அழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்றில்லையே. ஆதீனங்களில் உடனிருந்து சோறு தின்னுவதை ஒரு பெருமையாகப் பேசிக்கொள்ளு கின்றாய். நாங்கள் கேள்விப்பட்ட மட்டில் இப்போது சைவமடாதீனங்கள் பலவற்றில் உள்ளவர்கள் துறவிகள் என்று பெயர்மட்டும் உடையவர்களாக இருக்கின்றார்களே அல்லாமல், அவர்கள் உலக வாழ்க்கையில் ஒழுக்கங்கெட்ட வர்களினும் மிக இழிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும், அளவிறந்த அறப்பொருள்களை வைத்துக்கொண்டு அவற்றை நல்வழியிற் பயன்படுத்தாமல் தீய வழிகளில் அவற்றை வாரிவாரி இறைக்கின்றார்கள் என்றும் கேள்வி யுறுகின்றோம். அப்படி யிருந்தால் அவர்களோடு உடனிருந்து சோறுதின்னுவதில் உனக்கு யாது பெருமை வந்துவிட்டது? அவ்வாதீனங்களுக்கு உண்மை யறிவுடையோர்கள் செல்வ தில்லை யென்றுங் கேள்விப்படுகிறோம். சோற்றையும் பணத்தையும் விரும்பினவர்கள் அங்கே சென்று அவர்களுக்கு இனிக்கப் பேசிக் காலங் கழிக்கின்றார்களாம். பிறரைச் சேராமல் தாமே கூடியிருந்து சோறு தின்பவரைப் பற்றிப் பெருமை பேசிக் கொள்ளுகின்றாய். அப்படியானால் பிறவற்றைக் கிட்டே சிறிதும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னுஞ் சில விலங்குகள் அவர்களை விடச் சிறந்தன என்றன்றோ சொல்லல் வேண்டும்? உன் அறிவு ஆ! எவ்வளவு உயர்ந்தது! அது நிற்கட்டும். நீ உனக்குள்ள தீய தன்மை தீய செயல்களினின்றும் விலகி நல்வழியில் நடவாவிட்டால் நீ இழிபிறப்பினன் ஆதல் திண்ணம். என்று உலகத்தார் கூறுவார்க ளன்றோ? அதனைக்கேட்டும் அறிவு விளங்காமல், வேளாளர், தொண்டை மண்டில முதலிமார், கார்காத்தார், சோழியார், ஓதுவார், குருக்கள் முதலாயினாரல்லரோ உயர்ந்தசாதியார்? அவர்கள் மட்டும் அன்றோ ஒன்று கூடியிருந்து சோறு திண்ணல் வேண்டும்? இழிந்த சாதியாரான இடையர், வடுகர், கள்வர், மறவர், அகம்படியர், கைக்கோளர், நாட்டுக் கோட்டைச் செட்டிமார் முதலாயினோர் வேளாளருடனிருந்து உண்ணுவது கூடாதன்றோ? இழிந்தசாதியார் மேற்கூறிய உயர்ந்த சாதியாரோடு சேர்ந்து உண்ணாமையால், சைவகுலத்திற் பிறந்தவனாகிய நான் எவ்வளவு கெட்ட ஒழுக்கமுடையவனா யிருந்தாலும் நான் உயர்ந்தவனே. என்று அப் போலிச்சைவர் கூறினால் அதனைக்கேட்ட உலகத்தார். சோழியர், கார்காத்தார் முதலான வேளாளர் உள்ளபடியே இரக்க நெஞ்சமும், கல்வியும், நல்லொழுக்கமும், சிவபிரான் மாட்டும் அடியார் மாட்டும் மெய்யன்பும் உடையவர்களாயிருந்தால் அவர்களை உயர்ந்தோர் என்று சொல்வதில் தடையில்லை; அத்தகைய உண்மை வேளாளர் மற்றைச் சாதியாரை இழிவாக நினையாமல் எல்லாரிடத்தும் இரக்கமும் அன்பும் உடையவர்களாகி, மற்றைச் சாதியாரில் உயிர்களைக் கொன்று அவற்றின் இறைச்சி உண்பவர்களைக் கண்டால் `நீங்கள் கொலையாலும் புலால் உண்ணுதலாலுமே இழிவடைந்தீர்கள். அவற்றை அறவே ஒழித்து எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் பாராட்டுவீர்களானால் நீங்கள் சிவபெருமான் திருவருளைப் பெறுதல் திண்ணம். நீங்களும் நம்முடனே கலந்து உறவாடலாம். என்று பலகாலும் எடுத்துச்சொல்லி அவர்களைத் திருத்தி, அங்ஙனம் திருந்தினவர்களைத் தம்மோடு உடன்வைத்து உண்டு அளவளாவி வாழ்வார்கள்; அருளொழுக்கத்தைப் பரவச்செய்து சிவபிரான் திருவடித் தொண்டை விளக்குங் கலைஞரையும் தவப்பெரியாரையுங் கண்டால் அவரிடத்து அன்பினால் அகங்குழையப் பெற்றவராகி அவர்க்க அடிமை பூண்டு ஒழுகுவர். இத்தகைய உண்மைச் சைவர்களாலே நாடெங்கும் அருள் ஒழுக்கமும் சிவத்தொண்டும மிகும்; உயர்ந்த வொழுக்கமுடைய உயர்ந்த சாதியாரோடு ஒன்றுசேர்ந்து அளவளாவலாம் என்ற எண்ணத்தால், கொலைத் தொழிலையும் புலாலுணவையும் பிறர் எல்லாரும் அறவே ஒழித்து மேம்படுவார்கள். இங்ஙனம் செய்வதைவிடுத்து ஏ பேதாய், `பிறர் எவ்வளவுதான் நல்லொழுக்க முள்ளவர்களாய்த் திருந்தினாலும், நான் எவ்வளவுதான் கெட்ட ஒழுக்க முள்ளவனானாலும், நான் சைவகுலத்திற் பிறந்தவனாகையால் அவர்களோடிருந்து சோறுண்ணமாட்டேன். என்கின்றாய். இழிந்த இயற்கை இழிந்த செய்கையால் இழிந்த பிறப்படைந்த உன்னுடனிருந்து சோறுண்டால் நல்லொழுக்கத்தில் திருந்திய அவர்களுக்கும் இழிவேயாகு மல்லது உயர்வு ஏது? ஆகையால், சோறா சோறென்று சோற்றையே கட்டிக்கொண்டு அழும் போலிச் சைவனான உன்னை, அருளொழுக்கத்திற் சிறந்த உண்மைச் சைவர்கள் தம்முடன் சேர்க்க கூசுவர் அல்லரோ? சில காலத்துள் அழிந்துபோவதாகிய உடம்பையும் அவ்வுடம்புக்கு இடும் சோற்றையுமே பெரியனவாக எண்ணி அறியாமை யால் மிகவும் இறுமாப்படைந்து பிதற்றும் நீயும் உன்னை யொத்த சிலருங் கூறும் பொருந்தாச் சொற்கள் நாம் சிறிதுங் கருத்தில்வைக்கத் தக்கனவல்ல, என்று சொல்லாமற் போவார்களோ? இங்ஙனம் உலகத்தார் கூறும் உலகவாழ்க்கையும் போலிச் சைவர்கள் உணராமல் தம்மையுயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் செருக்குற்று உரைக்கின்றார்கள்! இவர் பிறப்பினாலேயே தம்மை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வாரானால், அவ்வாறு சொல்வதனால் இவருக்கு இழிவே உண்டாகு மல்லாமல் உயர்வுண்டாதற்குச் சிறிதும் இடம் இல்லை. ஏனென்றாற், பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத்தவிர மற்ற எல்லாரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றார்கள். ஊன் உண்பவரும் உண்ணாதவரும் ஆகிய எல்லாரையும் அவர்கள் ஒரேவகை யாகத்தான் நடத்துகின்றார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினனாய்ச் சென்றால் அவனுக்குப் பிராமணர் தாம் உண்டு மிகுந்த எச்சிலையே புறத்தேவைத்து இடுகின்றார்கள்; ஊண் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இடுகின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவராயிருந்தால் தம்போற் பிறப்பினாலுயர்ந்த பிராமணருடனிருந்து உண்கின்றது தானே? பிறப்பினாலேதான் சாதியென்று சொல்லும் போலிச் சைவர் தம்மைச் சூத்திரர் என்று தாமே ஒப்புக்கொள்வ தனால் அவர் அச் சூத்திரவகுப்பினின்று தப்ப வகையில்லை; அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனுமுதலிய மிருதி நூல்களின்படி பிராமணர் கடைவாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியைத் தாம் தலையாற்செய்து அவர் இடும் எச்சிற்சோற்றை உண்டு ஊழியக்காரராய்க் காலங்கழிக்க வேண்டுமேயல்லாமற், பட்டை பட்டையாய்த் திருநீறு பூசிக்கொண்டு, பகட்டான காசித் துப்பட்டா பொன்கட்டின உருத்திராக்கமாலை எல்லாம் அணிந்துகொண்டு, தம்மினும் பிறப்பினால் உயர்ந்த பிராமணருக் கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும், நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்ல முன்வந்த போலிச்சைவர் தம் புன்மொழியால் அருளொழுக் கத்தினும் சிவத்தொண்டினும் அடியார்பால் அன்பினுஞ் சிறந்து விளங்கும் உண்மைச் சைவவேளாளரையும் பிறரையும் இழிந்த சூத்திரராக்கி விட்டாரே! அந்தோ! உண்மைச் சைவர்களாகிய அன்பர்களே, பிறப்பினாலேதான் சாதியென்று உரைக்கும் போலிச்சைவர் புன்மொழிகளைக் கேட்டு மயங்கிவிடாதீர்கள்! பிறப்பினாலே தான் சாதி யென்னும் அவர் சொற்களைக் கேட்டு நம்பிவிடுவீர் களானால், நீங்கள் எல்லீரும் இழிந்த சூத்திரராகக் கொள்ளப் படுவீர்கள்; ஊன் உண்கின்றவர்களுககும் ஊன் உண்ணாமல் அருளொழுக்கத்தில் நிற்கின்ற உங்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும். யாம் வட மொழி வேதம் தமிழ்மறை முதலியவற்றையும் உலக வழக்கையும் மேற்கோளாகக் கொண்டு அருள் ஒழுக்கத்தினாலேதான் சாதி உயர்வுண்டு என்று சொல்லுவனவற்றை நம்புவீர் களானால், நீங்கள் மிக உயர்ந்த சாதியாராக அறிவுடையோர் எல்லாராலும் நன்கு பாராட்டப் படுதல் திண்ணம். அறிவுடையார் பாராட்டு தலையே சீராட்டாகக் கொண்மின்கள்; அறிவில்லார் பாராட்டை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்; அறிவில்லார் ஆயிரவர் பாராட்டுதலினும் அறிவுடையார் ஒருவர் பாராட்டுதலே உயர்ந்ததாகுமென்று உணர்மின்கள்! அங்ஙனமாயின் இழியாக்குலத்திற்பிறந்தோம், குலம் பொல்லேன் என்று சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனார் குலத்தின் உயர்வையும் தாழ்வையும் எடுத்துக் கூறியது என்னையெனின்; `அருள் ஒழுக்கத்தில் மிகுந்து சிவபிரா னிடத்தும் அடியாரிடத்தும் அன்பு மிக்க குலத்திற் பிறந்தோம் என்றும், `அவ் வொழுக்கங்கள் இல்லாத குலத்திற் பிறந்தோம் என்றும் பொருள் கூறுதலே ஆசிரியர் நாயனார் கருத்தா மென்று துணிக. இவ்வுண்மை யுணராது பிறப்பினாலேயே குலப்பெருமை சொல்லுவாரின் அறியாமையைச் சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள், கோத்திரமுங் குலமுங்கொண் டென்செல்வீர் என்று நாயனாரே திருவாய்மலர்ந்தருளிய திருப்பாட்டால் உணர்ந்து தெளிக. பிறப்பினாற் சைவரென்று தம்மை உயர்த்துச் சொல்லிக் கொள்வோரிற் சிலர் அருளும் இரக்கமும் சிவபிரானிடத்து மெய்யன்பும் அடியார் பணியும் இல்லாராய்ச், செருக்குமிகுந்து, பொய்யும் புனைசுருட்டும் கள்ளமும் பொறாமையும் நிரம்பிப், பிறரைக் கொல்லாமற் கொல்லுவதிற் கருத்தூன்றி அலைகின்றார்கள்; இத் தன்மை யோரை உயர்ந்தகுலத்தவர் என்று கூற அறிவுடையோர்க்கு நா எழுமா? உலகத்தாரும் அறிவுடையாரும் ஒருவன் பிறப்பை நோக்காது `அவன் நல்லியல்பு உள்ளவனா? ešbyhG¡f« thŒªjtdh? என்றன்றோ வினாவு கின்றார்கள். ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் தாம் `குடிமை என்னும் இயலில் உயர்குலம் இழிகுலம் என்றன ஒழுக்கத்தாற் சிறந்தகுலம் ஒழுக்கத்தாற் றாழ்ந்தகுலம் என்று வெள்ளிடை மலைபோல் விளங்க உரைத்தாராகவும், ஆசிரியர் கருத்தறிந்த பரிமேலழகியாரும் `நான்கு வருணத்திலும் உயர்குலமும் தாழ்குலமும் உண்டென்பதை விளக்கினாராகவும் அவற்றை அறியும் அறிவு மதுகை சிறிதுமில்லாத போலிச்சைவர் குலம் பிறப்பினாலேதான் உளது என்று நாயனாருஞ் சொன்ன ரெனத் தமக்குத் தோன்றி யவாறெல்லாம் பிதற்றுவர்; அவர் பிதற்றுரையின் பொய்ம்மையை யாம் மேலே எடுத்துக் காட்டிய ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம், இழிந்த பிறப்பாய் விடும். என்னும் நாயனாரது அருமைத் திருக்குறளால் தெளிந்துணர்க. தாய்தந்தையரும் அவருக்கு நெருங்கிய உறவினரும் நல்லியல்பு நற்செய்கையிற் சிறந்து விளங்குப வராயின், அவர் கூட்டத்தை நற்குடி என்றும், அந்நற்குடியிற் பிறந்த பிள்ளையினிடத்து அந் நல்லியல்பு நற்செய்கைகள் அமையப்பெறும் என்றுங் கூறுதலே நாயனார்க்குக் கருத்தாதல் தக்கார் தகவிலரென்ப தவரவர், எச்சத்தாற் காணப்படும் என்னும் அவர் திருமொழியால் நன்கு துணியப்படும். ஒழுக்கத்தினாலேதான் குலத்தினுயர்வு பெறப்படும் என்று தமதுநூல் முழுதும் வற்புறுத்திச் சொல்லும் திருவள்ளுவ நாயனாரையும் தமது புல்லறிவுக்குத் துணைகொண்டு சேர்க்கப்பார்க்கும் போலிச்சைவர் தம் கருத்து நிறைவேற வேறு எதுதான் செய்யமாட்டார்! அது நிற்க. அங்ஙனம் ஒழுக்கத்தினாலேயே உயர்வு பெறப்படல் வேண்டுமாயின், திருநாளைப் போவாரென்னும் நந்தனார் சிவத்தொண்டில் தாம் மிக முதிர்ச்சியுடையராயிருந்தும் தமது குலத்தின் இழிவு நோக்கித் தில்லைக்கோயிலுட் புகாமற் புறத்தே ஒதுங்கி நின்றதும், சிவபெருமான் அவரை உட்புகுவித்தல் வேண்டி தில்லைவாழ் அந்தணரைக்கொண்டு தீவளர்ப்பித்து அதன்கண் நந்தனாரை முழுகுவித்துத் தேவவடிவாக எழச்செய்து பின்னர் உள்ளே ஏற்றுக் கொண்டதும் என்னை யென்றாற்; பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று; மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதரு மோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால் தயிர் நீர் சாணாகம் என்னும் ஐந்தினைக் கொடுப்பதாய் உள்ள ஆவினை அச்சாதியார் கொன்று அவற்றின் இறைச்சியை யுண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர்; இங்ஙனம் மிகக் கொடிதான புலை யொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடைய லாயிற்று; இங்ஙனம் இது தாழ்வடையலானதும் ஒழுக்கத் தாழ்வினாலேதான். மற்றச் சாதியாரெல்லாம் ஒன்றுகூடி உறையும் நாடு நகரங்களுக்குப் புறத்தே விலக்கமாகப் பறைச்சேரி அமைக்கப்பட்டிருத்தலும் இந்த ஏதுவினாலே தான். இத்தன்மையதான அறிவில்லாப் புலைச்சாதியில் நந்தனார் பிறந்தமையினாலே இவரது பெருமையைப் பிறர் அறியார் என்றெண்ணி அதனை அறிவிக்கும் பொருட்டே சிவபெருமான் அங்ஙனஞ் செய்தனரென் றுணர்க. அல்லதூஉம், சிவத்தொண்டின் மேன்மையை அறிவித்தற்கும், சிவ நேயம் உண்டானாற் புலையுடம்பும் புனிதவுடம்பாம் என்பதனை உலகத்திலுள்ள எல்லார்க்குந் தெளிவித்தற்குமே சிவபெருமான் நந்தனாரை நெருப்பில் முழுகுவித்து எழச்செய்தார் என்க. அவ்வாறானால், ஊன் உண்ணும் மற்றைச் சாதியாரும் ஊனைவிட்டுச் சிவநேயத்தில் மேம்படுவராயின் அவரைச் சைவர்கள் ஏற்றுக் கொள்ளுமுன், சிவபெருமான் அவர் பெருமையை அங்ஙனமே ஓர் அருஞ்செயலால் அறிவித்தல்வேண்டு மெனின்; சிவநேயத்திற் சிறந்த அடியார்க்குப் புலையுடம்பும் புனிதவுடம்பாம் என்பதனை ஒருகாலத்து ஓரிடத்து ஓர் அரிய நிகழ்ச்சியால் தெளியச்செய்தால், அதனைப் பிற்காலத்து வருவோர் ஏற்றுப் பின்னர் அடியார் பணிசெய்து நடத்தல்வேண்டுமே யல்லாமல் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமைசெய்து காட்டினால்தான் இவரை அடியார் என்று ஏற்போம் என்றல் அறிவில்லா விழலர் கூற்றாய் முடியும்; திருஞானசம்பந்தப் பெருமான் சைவ சமயமே மெய்ச்சமயம் என்பதனை வெப்புநோய் நீக்கியும் அனலில் ஏடெழுதி யிட்டும் புனலில் ஏடெழுதிவிட்டும் பற்பல செயற்கரிய செய்கைகளால் இனிது விளக்கி யருளினார்; அதுபோலவே, இப்போது சைவசமயமே மெய்ச்சமயம் என்று நாட்ட வருகிறவர்களும் அங்ஙனமே செயற்கரியது செய்து காட்டினால்தான் அதனை ஏற்றுக்கொள்வோம் என்று கூறுவாருண்டோ? இல்லையே. அங்ஙனமே, சிவநேயம் உடையார்க்குப் புலையுடம்பும் புனிதவுடம்பாமென்பதை நந்தனாரைக்கொண்டு ஒரு புதுமையாற் சிவபெருமான் ஒருமுறை விளக்கிக் காட்டினால், அவ்வாறே பலமுறையும் விளக்கல் வேண்டுமென்று அறிவுடையோர் கூறார். அகத்தேயுள்ள சிவநேயம் என்கின்ற சிவநெருப்பினால் சிவனடியாருடம்பு தூய்மையுடைய ஒளியுடம்பாகும் என்பதனையே, நந்தனார் புறத்தே நெருப்பிற் குளித்த அரிய நிகழ்ச்சி விளக்குவதாகும். சிவநேயம் உடையார்க்கு அகக்கருவி புறக்கருவிக ளெல்லாம் சிவவுருவாய் விளங்குமாகலின் அவரைப் பிறப்பு நோக்காது சிவமாகவே கொண்டு வழிபடல் வேண்டு மென்னும் உண்மையை உணர்த்துதற் கன்றோ திருநாவுக்கரசு நாயனார், சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க்கே காந்த ரல்லராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில் அவர் கண்டீர் யாம் வணங்குங் கடவுளாரே. என்று அருளிச்செய்தனர். இங்ஙனமே, யச்சண்டாளசிவ இதிவாசம் என்னும் முண்ட கோபநிடத உரையானது எவன் ஒருவன் சிவ என்னும் மொழியைச் சொல்லுகின்றானோ அவன் சண்டாள குடும்பத்திற் பிறந்தவனாயிருந்தாலும் அவனோடு பேசுக, அவனோடு இருக்க, அவனோடு அருகிருந்து உண்ணுக என்று கூறுகின்றது. இங்ஙனமே, புலையரே யெனினும் ஈசன் பொலன்கழ லடியிற் புந்தி நிலையரே லவர்க்குப்பூசை நிகழ்த்துதல் நெறியேயென்றுந் தலையரே யெனினும்ஈசன் றாமரைத்தாளின் நேசம் இலரெனில் இயற்றும்பூசைப் பலந்தருவாரே யாரோ? என்று சிவதருமோத்தரமும், எள்ளற் படுகீழ் மக்களெனும் இழிந்தகுலத்தோ ரானாலும வள்ளற் பரமன் றிருநீறு மணியுமணிந்த மாண்பினரை யுள்ளத்துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே கொள்ளத்தகைய அறிவினரே பிறவிக்கடலிற் குளியாதார். என்று பிரமோத்தர காண்டத்தும் சொல்லப்பட்டிருத்தல் காண்க. இவைபோலுந் திருவுரைகளுக் கெல்லாம் வழிசெல்லத் தெரியாத போலிச்சைவர் அன்பினாற் செய்வனவற்றிற்கு முறையும் விலக்கும் இல்லை; மற்றை உலகவழக்கத்திற்கோ சாதிவேற்றுமை பாராட்டியே வரல்வேண்டும் என்கின்றார். உலகவழக்கிலும் ஒருவனை அவன் பிறப்பு நோக்காது அவன் கல்வியறிவினையும் நல்லியல்பு நற்செய்கைகளையுமே பாராட்டி அவனைப் பலவகையாலும் பெருமைப்படுத்தி உயர்ந்த நிலைகளையும் வரிசைகளையும் அளிக்கின்றார்கள் என்பதனை மேலே விளக்கிக்காட்டினாம். ஆதலால், அன்பு நெறிக்குத்தான் சாதி வேற்றுமை இல்லை, உலகநெறிக்குச் சாதிவேற்றுமை உண்டு என்னும் போலிச்சைவர் கூற்றுப் பொய்க்கூற்றேயாம் என்க. அங்ஙனமன்று பிறப்பினாற் றாழ்ந்தவனுக்குக் கல்வியும் நல்லியல்பு நற்செய்கைகளும் பற்றி உயர்ந்த நிலைகளும் வரிசைகளும் அளித்தும் அறிவுடையோர் கூடிய அவைகளில் முன் அமரச்செய்தும் அவனைப் பெரிது பாராட்டினாலும், உயர்ந்த சாதியார் அவனோடு அருகிருந்து உண்பதில்லையேயெனின்; போலிச் சைவர் தாம் அப் பெரியவனோடு அருகிருந்து உண்ணோம் என்று தமது அறியாமையாற் செருக்குற்றுப் பேசுவார்களே யல்லாமல், உண்மைச் சைவர் அப்பெரியானோடு அளவளாவி யிருந்துகண்டு நல்வினையும் மகிழ்ச்சியும் எய்துவர்; அறிவுவடிவாய் விளங்குங் கற்றோர் கழகங்களில் தலைமையோ டிருந்து அறிவுரை நிகழ்த்துங்கால் அப்பெரியோன் காற்கீழிருந்து அதனைக் கேட்டும், அவன் உயர்ந்த நிலையில் அமர்ந்திருக்குங்கால் அவனெதிரே கைகட்டி வாய்புதைத்து நின்று அவன் ஏவிய பணிசெய்தும், தமது தாழ்மைக்காட்டி வந்த போலிச்சைவர் சிலர் சோறு தின்னும்போது மட்டும் தாம் அவனோடிருந்து உண்பதில்லை என வெறுஞ்சோற்றுப் பேச்சைப்பேசித் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ளும் பதரானபேதைமைச் செய்கையைக்கண்டு அறிவுடையோர் நகையாடாமல் இரார். சாப்பாட்டு ராமசாமிகளான போலிச்சைவருக்குச் சோற்றைத் தவிர வேறுயாது தெரியப் போகின்றது! ஒருவரிடத்துள்ள அறிவின் அருமையும் நல்லியல்பு நல்லொழுக்கங்களின் பெருமையுஞ் சோற்றாட் களுக்கு எங்ஙனந் தெரியும்? அவர்களுக்குச் சோறுதான் தெய்வம்; ஊனுங் குருதியும் சீழுஞ் சளியும் நீரும் மலமும் வழியும் புழுப்பாண்டமான தமதுஉடம்பின் பிறப்புத்தான் அவர்களுக்குத் தேவப்பிறப்பு! கடவுள் அன்பிற் சிறந்தவர்களுக்கும் அறிவுமிக்க துறவிகளுக்குந் தாம் சாதிவேற்றுமை இல்லையென்று போலிச்சைவர் மொழிந்தால், தெய்வமில்லை யென்னும் நாத்திகர்களுக்கும் அறிவிலிகளுக்குந் தாம் சாதிவேற்றுமை வேண்டுமென்பது பெறப்படும். போலிச் சைவர் சாதி வேற்றுமையைப் பாராட்டிக்கொண்டு அறியாமைச் சேற்றிலும் நாத்திகப் படுகுழியிலுமே கிடக்கவேண்டு மென்று விரும் பினாரானால், அவர் அப்படியே கிடக்கட்டும். தமது புல்லறிவை உண்மைச் சைவர்களிடங் காட்டி அவர்களையுந் தாங்கிடக்கும் படுகுழியில் வீழ்த்த முயல் வராயின், அவரது புல்லிய செய்கையைக்கண்டு அறிவுடையார் வருந்தா திருப்பரோ? எமக்கு அன்பும் வேண்டாம் அறிவும்வேண்டாம் நல்லியல்பு நற் செய்கைகளும் வேண்டாம், அவற்றிற் சிறந்த நல்லோரிணக்கமும் வேண்டாம், எமக்குச் சோறு ஒன்றுதான் முதன்மையானது, அதுமட்டுந்தான் எமக்குவேண்டியது என்று போலிச்சைவர் சொல்வரானால், அவ்வளவு அறியாமையிலும் ஆணவத்திலும் அமிழ்ந்திக் கிடக்கும் அவர் இன்னும் பலகோடி பிறவிகள் எடுத்தா லன்றித் திருந்தமாட்டார்; ஆகையால், அத்தன்மை யோரைத் தம்மோடு உடன்வைத்து அளவளாவுதல் உண்மைச் சைவர்க்குப் பெருந்தீவினையாய் முடியுமாதலால் அவர்களை இவர்கள் சேராமல் ஒழுகுதலே செயற்பாவர். இன்னும், பிறப்பினாலேதான் சாதியுயர்வு பெறப்படு மென்று போலிச்சைவர் கூறுவரானால், சைவவேளாளர் தம்மைப் பிறப்பினால் உயர்ந்தோர் என்று கூறிக்கொள்வது போலவே, மற்றைச் சாதியாரும் தம்மைத் தாம் உயர்ந்தோர் என்று சொல்லிக்கொள்கின்றார்கள். ராஜபுத்திரர் என்னுஞ் சாதியார் தாம் ஊன் உண்பவராயிருந்தாலும் பார்ப்பனர் முதலான எந்தச்சாதியார் வீட்டிலும் தாம் சாப்பிடு வதில்லாமையால் தாமே எல்லாச் சாதியாரினும் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்கின்றார். கம்மாளர் தாமே பார்ப்பனர் என்று மேற்கோள்கள் பல காட்டித் தம்மை உயர்த்திக் கொள்கின்றார். வன்னியர் தாமே `க்ஷத்திரியர் என்று மேற்கோள்களோடு நூல்கள் எழுதித் தம்மை உயர்த்திக் கொள்வதோடு, வேளாளர் முதலான மற்றவரை எல்லாம் தாழ்ந்த சூத்திரவகுப்பினர் எனவுஞ் சொல்லி வருகின்றார். சான்றார் தாமே `க்ஷத்திரியர் என்று இதழ்களினும் நூல்களினும் எழுதிவருகின்றார். இடையர் தம்மைக் `கோவைசியர் எனவும், கோமுட்டிகள் வாணிகர் முதலாயினார் தம்மைத் `தனவைசியர் எனவுஞ் சொல்லி வருகின்றனர். வேளாளரில் ஒருவரும் தமது சாதியாரை `வைசியர் என எழுதியிருக்கின்றார். நாட்டுக்கோட்டைச் செட்டிமாரும் தம்மைத் தனவைசியரென்று எழுதி வருகின்றார். பறையர் வகுப்பிற் கல்வியிற் றேர்ந்தவர்கள் தம்மைப் பார்ப்பனரினும் மேலானவர் என்று சொல்வதோடு, பார்பானுக்கு மூத்தான் பறையன் கேட்பாரில்லாமற் கீழ்ச்சாதியானான். என மேற்கோள்களுங் காட்டுகின்றார்கள்; இப் பறையரிற் கல்வியினுஞ் செல்வத்தினும் உயர்ந்த செல்வர்களின் கடைவாயிலிற் காத்திருந்து அவர் இடுவன வற்றைப் பெற்று மகிழ்ந்து வரும் வேளாளப் புலவர்கள் எத்தனைபெயர்! போலிச்சைவர் எத்தனை பெயர்! அவர்கள்மேற் பாட்டுகள் பாடினவர்களும், பாடுகிறவர்களும் எத்தனை பெயர்! இவ்வாறெல்லாம் அவர்கள் வீசி எறிவன வற்றைக் குனிந்து பொறுக்கியுண்டு நன்றி மறந்து அச்செல்வர்களைப் பறையரென இகழ்ந்துரைப்பது எவ்வளவு பேதைமை! சைவசமயத்திற் சார்ந்த பறையரையுஞ் சான்றாரையுங் கோயிற் கோபுரவாயில்களினும் நெருங்க விடாத போலிச்சைவர் முதலாயினார், புறச் சமயத்தினராய் எல்லா வகையான ஊனும் உண்ணும் கிறித்துவ மகமதிய அதிகாரிகள் வந்தால் அவர்கள்முன் பல்லை இளித்துக்காட்டி அவர்களைக் கோயிலினுள்ளே அழைத்துச்செல்வது என்னை! இங்ஙனமே இன்னும் போலிச்சைவர் முதலாயினார் மற்றையோரிடத்துக் கள்ளமாய் நடக்கும் படிற்றொழுக்கத்தை விரிக்கப்புகுந்தால் இது மிகவிரியும். எனவே, உலகவழக்கில் நிகழும் உண்மை நிகழ்ச்சிகளை உற்று ஆராய்ந்துபார்த்தால், மறைவாகவும் வெளிப்படையாகவும் ஒரு வகுப்பாருடன் மற்றொரு வகுப்பார் கலந்துவிடுதல் இயல்பாகப் பண்டு தொட்டு நிகழ்ந்து வருதலை நன்கு அறியலாம். ஒரு வகுப்பினரின் இரத்தத்தில் மற்றொரு வகுப்பினரின் இரத்தங் கலந்துவிடுதல் இஞ்ஞான்று எங்கும் நிகழ்தல்போலவே, பண்டைநாளிலிருந்த நம்முன்னோரிலும் ஒருவகுப்பினரின் இரத்தத்தில் மற்றொரு வகுப்பினரின் இரத்தங் கலந்து வந்தமை பழைய நூல்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. சதபதபிராமணத்தில் (3,2, 1, 40) இந்தப் பார்ப்பனர் இப்போதுதான் தூயனாக்கப்பட்டான்; இதற்குமுன் இவன் இன்னபிறப்பினனென்பது திண்ணமாய்த் தெரியாது. ஏனென்றால் `அரக்கர்கள் மாதர்களைப் பின்றொடர்ந்து செல்கின்றார்கள்; ஆதலால், அரக்கர்களே மாதர்களின் உள்ளே வித்தை நுழைக்கின்றார்கள் என்பது நுவலப்பட்டிருக்கின்றது. இன்னும், அந்நூலில் (2, 5, 2, 20), வேள்வி வேட்கும் வேள்வியாசிரியன் மனைவிக்குக் காமக் கணவர் பலர் உளரென்றும், அதனால் அவன் `வருணப் பிரகாசம்’ என்னம் அவியைக் கொடுக்கும் நேரத்தில் தன் மனையாளை வேள்விக் களத்திற்குக்கொணர்ந்து `இப்போது எந்தக்கணவனோடு கூடியிருக்கின்றனை? எனக்கேட்டு, அவனது வாய்ப்பிறப்பை யறிந்து உண்மை தெரிந்த பின், அவளுடனிருந்து அவ் அவியைக் கொடுக்கும்வகை நன்கெடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. இங்ஙனமே மகாபாரதம், ஆதி பருவத்தில் (122, 4719) மாதர்கள் தம் கணவரைவிட்டுப்போய்த் தம்மால் விரும்பப்பட்டோருடன் கூடியிருத்தல் குற்றமாகக் கருதப்படவில்லை என்பது கூறப்பட்டிருக்கின்றது. இன்னும் அதன் வனபர்வத்தில் (12480), ஒரு மலைப்பாம்பிற்குந் தருமபுத்திரனுக்கும் இடை நிகழ்ந்த உரையாட்டில், அம் மலைப்பாம்பு ஒருவனது செய்கையைக் கொண்டே அவனைப் பார்ப்பனன் என்று உறுதிப்படுத்தல் வேண்டுமென்றால், செய்கையானது தெரியும்வரையிற் பிறப்புப் பயனற்றதாகின்றது என்று தருமபுத்திரனை நோக்கிக் கூற, அவன், எல்லாச் சாதிகளும் ஒன்றோடொன்று கலப்புற்று நிற்கும் இப்போதுள்ள நிலைமையிற், பிறப்பு இன்னதென்று பிரித்துக்காண்டல் இயலாததேயாகும்; எல்லாவகையான ஆண்மக்களும் எல்லாவகையான பெண்மக்களோடுங் கூடித் தொடர்பாகப் பிள்ளைகளைப் பெறுகின்றார்கள். பேச்சும், பிள்ளைப் பெறும் வகையும், பிறப்பும், இறப்பும் எல்லா மக்களுள்ளும் ஒரு தன்மையவாகவே காணப்படுகின்றன. ஆதலால், உண்மையை உற்றுணரும் நுண்ணறிவினோர் உயர்ந்த ஒழுக்கமே முதன்மையாக வேண்டற்பாலதென அறிகின்றார்கள். எனவிடை புகலுமாற்றால், தருமபுத்திரன் இருந்த இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரேயே ஒரு சாதிமக்கள் மற்றொரு சாதி மக்களொடு கலப்புற்று நின்றமை தெற்றென அறியப்படுதலால், அவர் வழியில் வந்தோரான நம்மனோருள் எவரையுங் கலப்பில்லாத் தனி இனத்தவரெனக் கூறுதல் தினைத்தனையும் ஆகாமை காண்க. இவ்வாறே, சாதிக் கலப்பால் வெளிப்படையாக உண்டான பல்வேறு சாதிகளை மனு முதலியோரும் வகுத்துரைக்கின்றனர். ஒரு பார்ப்பனனக்கு ஒருவைசியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் அம்பட்டன் எனப்படுவான்; ஒரு சூத்திரப்பெண்ணி னிடத்தே பிறந்தவன் `நிஷாதன் அல்லது `பாரசவன் எனப்படுவான். ஒரு க்ஷத்திரியனுக்கு ஒரு சூத்திரப் பெண்ணினிடத்தே பிறந்தவன் `உக்ரன் எனப்படுவான். ஒரு க்ஷத்திரியனுக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணிடத்தே பிறந்தவன் `சூதன் எனப்படுவான். ஒரு வைசியனுக்கு ஒரு க்ஷத்திரியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் `மாகதன் எனவும், ஒரு பார்ப்பனப் பெண்ணினிடத்தே பிறந்தவன் `வைதேகன் எனவும் பெயர்பெறுவான். ஒரு சூத்திரனுக்கு ஒரு வைசியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் `ஆயோகவன் எனவும், ஒரு க்ஷத்திரியப் பெண்ணினிடத்தே பிறந்தவன் `க்ஷத்திரி எனவும், ஒரு பார்ப்பனப் பெண்ணினிடத்தே பிறந்தவன் `சண்டாளன் எனவும் பெயர்பெறுவான். என்றற் றொடாக்கத் தனவாக இன்னும் பற்பல கலப்புச் சாதியார் களையும் மனுமிருதி பத்தாம் இயலில் ஆறாஞ் செய்யுளிலிருந்து முப்பத்தொன்பதாஞ் செய்யுள்காறும் விரித்துரைத்தல் காண்க. இங்ஙனமே கௌதமர், வசிட்டர், போதாயனர் இயற்றிய தருமநூல்களுங் கலப்புச் சாதிகளை விரிவா யெடுத்துக் கூறுதல் கண்டுகொள்க. இவ்வாறு பண்டைக் காலந்தொட்டே மக்கள் ஒருவரோடு ஒருவர் பலவாறு கலந்து வருதலால், அம்முன்னோர் கால்வழியில் வந்தோரான நம்மனோரில் எவருந் தம்மைக் கலப்பில்லாத் தனிப்பிறவி யாகச் சொல்லிக்கொள்ளுதலினும் பெரும் பேதைமை பிறிதில்லை. காமமுங், காதலும், பசியும், பொருண்மேல் அவாவும் உள்ளவரையில் மக்களுள் எவருங் கலப்பில்லாத் தனியராய் இருந்து உயிர்வாழ்தல் இயலாது. இக்காமம் முதலியவற்றின் கொந்தளிப்புகளைத் தணிக்கும் பொருட்டு அறிவுடையோர் எத்தனையோ நூல்களை எழுதிவைத்தும், எத்தனையோ சாதிக் கட்டுப்பாடுகளைச் செய்துவைத்தும், அவையெல்லாம் அவற்றின் எழுச்சிக்குமுன் பஞ்சாய்ப் பறந்துபோகின்றன. ஆகவே, மக்கட்பிறவி யென்கின்ற பேராற்றிலே இயல்பாக அமைந்த பெருஞ் சுழல்களாகிய காமங் காதல் பசி பொருட்பற்று என்னும் இவைகளைச் சாதிக்கட்டுப்பாடு என்னும் வைக்கோற் றிரணைகொண்டு தடுத்தல் சிறிதும் இயலாதாகையாற், சொல்லளவாயுள்ள அச் சாதிக்கட்டுப்பாடுகளைத் தொலைத்து, அறிவுமிக்க உயர்ந்த முறைகளால் அவற்றின் மும்முரத்தைத் தணித்தலே விரைவிற் செயற்பாலதாகும் என்க. இயல் - 7 சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் வழிகள் இனி, மக்களுக்குப் பெருந்தீங்கு பயப்பனவாகிய சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் வழிகள் தெரிதல் வேண்டு மாயின், முன் நாளில் அவ் வேற்றுமைகளைக் கிளறி விட்ட மூலங்களை அறிந்தே அவ்வாறு செய்தல் வேண்டும். ஒருவனுக்கு ஒரு பொல்லாத நோய்வந்தால் அதனை நீக்கலுறுவோன், அந்நோயை உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி, அவன் அதனை முற்றும் நீக்கமாட்டுவான் அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய் முற்றும் ஒழிந்துபோம். அதுபோலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய மூலங் களையும் நன்கு ஆராய்ந்துகண்டு, பின்னரவ் வேற்றுமை களை ஒழித்தலே இன்றியமையாது செயற்பாலதாகும். அற்றேல், அம் மூலங்கள் யாவையோவெனிற் கூறுதும்: மேலே நான்காம் இயலில், உழவுதொழிலையறிந்த வேளாளர்கள் அத்தொழிலாற் பல உணவுப்பண்டங்களைப் பெருக்கி, அதற்குமுன் தாம் உண்டுவந்த இறைச்சியுணவை விட்டுச் சைவவுணவே கொள்ளத் தலைப்படமையினையும், அதுமுதல் தம்மில் ஊன்உணவு கொள்வாரான ஏனை யோரைத் தம்மின் இழிந்தோராக விலக்கிவைத்துத் தாம் அவரின் உயர்ந்தோரானமையினையும், அங்ஙனஞ் சைவரான தம்முள்ளுங் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலும் அகந் தூய்மை புறந்தூய்மையிலும் மேம்பட்டு நின்றோர் `அந்தணர், `பார்ப்பனர் என மேற்குலத்தவர் ஆனமையினையும், அந்நெறியில் இயன்றமட்டும் நின்று குடிகளைப் பாது காத்தலிலும், செல்வம் பெருக்கி உழவுதொழிலை நடப்பித்தலிலும், உழவுதொழிலாற் பெற்ற பண்டங்களைக் கொண்டுவிற்றலிலும் நின்றோர் `அரசர், `வணிகர் என வேறிரண்டு இனங்களாய்ப் பிரிந்தமையினையும், இம் முத்திறத்தார்க்கும் இன்றியமையாத பதினெண் டொழில் களையும் ஏவற்றொழிலையும் புரிந்தோர் `அடியோர், `வினைவலர் என்னுஞ் சூத்திரரானமையினையும், இந் நாற்பெரும் பிரிவினரிலுந் தத்தம் மகளிரது ஒழுக்கத்தால் மேலும் பற்பல பிரிவுகள் உண்டானமையினையும் விரித்து விளக்கிப்போந்தாம். எனவே, இத்தென்றமிழ் நாட்டின்கட் சாதிவேற்றுமைகளைப் பிறப்பித்தற்கு அடிப்படை மூலங்களாய் நின்றவை: ஊன் உண்ணாமை, கல்வி, கடவுள் வழிபாடு, அகந்தூய்மை, புறந்தூய்மை, மகளிரது ஒழுக்கம் என்பவை களேயாமென்பது நன்கு புலனாகின்ற தன்றோ? சாதி வேற்றுமைகளைப் பல்குவித்தற்கு ஏதுவாய் நின்ற இம் மூலங்களைக்கொண்டே சாதிவேற்றுமைகளை ஒழித்தற்கு வழிதேடல் வேண்டுமென்று உணர்ந்துகொள்க. அஃது யாங்ஙனமெனின், அடைவே விளக்கிக்காட்டுதும். முதலாவது `புலால்உண்ணா ஒழுக்கமே தன்னைக் கைக்கொண்டு ஒழுகிய மக்களை உயர்ந்த சாதியாராக ஆக்கினமையாற், புலால் உண்ணாதவர் எவராயிருப்பினும் அவரை `அந்தணர், `பார்ப்பனர், `சைவவேளாளர் என்று கூறுதல்வேண்டும். அங்ஙனம் புலால் உண்ணா ஒழுக்கத்தைக் கைக்கொண்டோரை, அவர் பிறந்த இழிகுலப் பெயரால் அழைத்தலும், முன்னரே சைவராய் உள்ளார் அவரைத் தம்முடன் சேர்த்து உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் அவரை அவ்வழிகுலத்திலேயே இருக்கவிடுதலும் பெருந் தீவினையாம். எங்ஙனமெனில், ஊன் உண்பார் ஒருவர் அவ்வூன் உணவு கொள்ளும் பெருந்தீவினைப் படுகுழியி னின்றும் மேலேறுவராயின், ஊன்உண்ணா மேல் நிலையில் நிற்போர் அவரைக் கைகொடுத்துத் தூக்கித் தம்மோடு உடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்; அவ்வாறு செய்யின் அங்ஙனஞ் சேர்த்துக்கொள்ளப்பட்டோர் கொல்லா அறத்தில் வழுவாது நிற்பர்; அதனால் எத்தனையோ மீன்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள் முதலிய உயிர்கள் உயிர் பிழைக்கும்! அவ்வாறு அம் மேலோர் அவரை மேலே தூக்கி விடாமல் அப்பாழ்ங் குழியிலேயே அவரை மீண்டும் விழ அழுத்துவராயின், மேல்நிலைக்கு வருவோரைக் கெடுத்த பெருந் தீவினைக்கும், ஊன் உண்பார் கூட்டத்தில் மீண்டுஞ் சேர்ப்பிக்கப்பட்ட அவர் மீண்டும் மீன் முதலான உயிர்களின் இறைச்சியை உணவு கொள்ளவேண்டி வருதலால் அதனால் உண்டாகும் அவ்வுயிர்களின் கொலை வினைக்கும் அம்மேலோர் உள்ளாகிச் சிறிது காலத்தில் தாமுந் தம்மினத்தவரும் இப்பிறவியிலேனும் அல்லது வரும்பிறவி யிலேனும் புலையராவர். அற்றன்று, யாங்கள் பண்டு தொட்டுப் புலால் உண்ணாக் கொல்லா அறத்தில் வழுவாது நிற்றலாற், புதிதாகப் புலால் உணவு நீக்கி வருவாரை எம்முடன் சேர்த்தல் ஆகாது என்று உரைப்பராயின், அவருரை அருளொழுக்கத்திற்குமாறான தீவினை உரையேயாகும். உயிர்க் கொலையும், அதனால் வரும் ஊனுணவும் நீக்கி அருளொழுக்கத்தைக் கைக்கொண்டவர், அங்ஙனமே கொலைபுலை நீக்கிவருவாரைத் தம்முடன் சேர்த்து, ஊன்உண்ணார் தொகையைப் பெருக்கிவந்தா லன்றி உலகிற் `கொல்லா அறம் பரவமாட்டாது; கொல்லா அறம் பரவாத வரையில், எண்ணிறந்த உயிர்கள் கொல்லப்படுதலால் வருந்து வினை சைவரையுஞ் சாராது ஒழியாது. ஊனின் பொருட்டுத் தாம் உயிர்களைக் கொல்லாவிடினும், அதற்காகக் கொல்வாரைத் தடைசெய்யாமலுங், கொலைபுலை தவிர்ந்து வருவாரைத் தம்முடன் சேராமலும் விடுதலாற், கொலை புலை மேன்மேற் பெருகுதற்குத் தாமும் ஏதுவாயிருத்தல் பற்றிச், சைவர்களுக்கும் அக் கொலைத் தீவினையிற் பெரும்பங்கு உண்டு. சைவராகிய தம்மைக் கொடியார் சிலர் கொல்லவருகையில், அங்ஙனங் கொல்லவருவாரைப் பிறர் விலக்காதிருந்தால் அச் சைவரது நிலை எப்படிப்பட்டதாய் இருக்கும்! விலக்காதிருந்தாரை அச்சைவர் குற்றஞ் சொல்லா திருப்பரோ! அங்ஙனமே உயிர்க்கொலையை விலக்காத சைவர்க்கும் பெருந்தீவினையிற் பங்கு உண்டென்று அறிந்து கொள்க. உயிர்க்கொலையைத் தடைசெய்யாமையால் வருந் தீவினை பெரிதாயினாற்போலவே, அதனைத் தடைசெய்து கொலை புலை தவிர்ந்தாரைத் தம்முடன் சேர்த்துக் கொள்வதாற் சைவர்க்கு வரும் நன்மையும் அளப்பிலதாகும்; புதிய சைவர்களைத் தம்முடன் சேர்த்தலாற் சைவர்களின் தொகை மேன்மேற்பெருகும்; இறைவனாற் படைக்கப்பட்ட எண்ணிறந்த சிற்றுயிர்கள் கத்தியால் வெட்டப்பட்டுத் துடிதுடிக்கும் பெருந்துன்பத்தினின்று தப்பிப்பிழைக்கும்; நாடெங்கும் அருளொழுக்கம் பரவும்; அது பரவவே, பொய்யும், புனைசுருட்டும், ஒருவர் மற்றொருவர்க்குத் தீங்கிழைக்கும் எண்ணிறந்த பொல்லாவழிகளுந் தொலையும். இங்ஙன மெல்லாங், கொலை புலை தவிர்ந்துவருவாரைச் சைவர்கள் தம்முடன் சேர்த்துக்கொள்வதாற் போதரும் நன்மைகளைச் சொல்லப்புகுந்தால், அவை அளவிலவாய் விரியும். அங்ஙனமே, புதிது சைவராவாரைச் சேர்த்துக் கொள்ளாமையாற் கிளைக்குந் தீங்குகளுஞ் சொல்லுக்கு அடங்கா. ஆகையால், நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (திருமந்திரம், 95) என்று சைவசித்தாந்த முதலாசிரியரான திருமூலநாயனார் அருளிச்செய்திருக்கும் விழுமிய அறவுரையைக் கடைப்பிடித் தொழுகவேண்டிய வரான சைவர்கள், தாம் கைக்கொண்ட சீரிய சைவ வொழுக்கத்தைப் பிறருங் கடைப் பிடிக்குமாறு செய்து, அங்ஙனம் அதனைப் புதிது கடைப்பிடித்தாரைத் தம்மோடு உடன்வைத்து அளவளாவுதலே இன்றியமையாது செயற் பாலதாம்; அவ்வாறு செய்யாராயின் தம் ஆசிரியர் கற்பித்த சொல்வழி நடவாத பெருங் குற்றத்திற்கு ஆளாகிச், சைவ வொழுக்கத்திற்கு இன்றியமையாத அருளிரக்கம் இல்லாமையின் தங்குலமும் வரவர மாய்ந்து ஒழியப்பெறுவர். தமது சைவ ஒழுக்கத்தைப் பரப்புதலிற் கருத்தில்லா மலும், புதிது சைவவொழுக்கம் பூண்டாரையும் பிறரையுந் தம்மாட்டு அணுகவிடாமலுந் தமது ஊனுடம்பின் பிறப்பையே மேலதாகக் கருதி இறுமாந்தொழுகும் போலிச்சைவ வகுப்பினரின் குடும்பங்கள் கால்வழியின்றி நாளுக்குநாட் குன்றி மாய்ந்துபோதலைப் பல இடங்களில் எம் கண்ணெதிரே கண்டு வருகின்றேம், அவ்வகுப்பினரிற் பற்பலர் அதனைச் சொல்லக்கேட்டும் வருகின்றோம். இதற்கு ஏது என்னென்றால், தம்போன்ற ஏனை மக்களின் நன்மையைக் கருதாமையும், புது இரத்தக் கலப்பு இன்மையு மேயாம். ஒவ்வொரு போலிச் சைவவகுப்பினரும் நாங்கள் முப்பது வீட்டுக்காரர்கள்; எங்களுக்குள்ளேதான் உண்ணல் கலத்தல்களைச் செய்கின்றோம்; இந்த முப்பது வீடுகளைத் தாண்டி வேறொரு வீட்டிற் கையைக்கூட நனைக்க மாட்டோம் என்று மிகுந்த தலையெடுப்போடும் பேசுகின்றார்கள். இப்படித் தம்மிற் சிலர்க்குள் மட்டும் உண்ணல் கலத்தல்களைச் செய்வதால், தமக்காவது பிறர்க்காவது இவர்கள் செய்த நன்மையாது? அதனால் இவர்கள் தேவர்களாய் விட்டார்களா? அல்லது இவர்களின் உடம்பு எவர்க்கும் இல்லாத பொன்னுடம்பு ஆய்விட்டதா? அல்லது அறிவிற் பெரியவராகிக் கடவுளை நேரே கண்டு விட்டார்களா? அப்படியொன்றும் இல்லையே. மற்றை எல்லாரையும் போல்ச் சிலநேரங்களில் மற்றை யோரைவிடப் போலிச்சைவர்கள் மிக இழிந்த செயல்களையுஞ் செய்யக் காண்கின்றோமே. தம்மைச் சைவரெனக் கருதி இறுமாப் போரில் எத்தனை பேர் பொதுமகளிர் வீட்டிற் புலைத் தொழில் செய்து கிடக்கின்றனர்! எத்தனைபேர் சீமைச் சாராயமும் வறுத்த ஆட்டிறைச்சியுங் கோழி முட்டையும் மறைவில் உட்கொள்கின்றனர்! எத்தனைபேர் சூதாட்டத் திற்கு காலங் கழிக்கின்றனர்! எத்தனைபேர் பிறர் பொருளை ஏமாற்றிப் பறிக்க மன்றிப் படுபொய்பேசி அழிவழாக்காடு கின்றனர்! எத்தனை பேர் தமக்கு ஆகாதவர்களை ஆள்விட்டு அடித்துக் கொல்கின்றனர்! எத்தனைபேர் நோய்வாய்ப் பட்டுப் புழுத்த அழுகி நாறிக் கிடக்கின்றனர்! எத்தனைபேர் கல்வியறிவு சிறிதும் இல்லாதவர்களாய் அறியாமைச் சேற்றில் அமிழ்ந்திக் கிடக்கின்றனர்! எத்தனைபேர் கடவுள் இல்லையென `நாத்திகம் பேசி நாத்தழும்பேறி நிற்கின்றனர்! எத்தனை பேர் எசக்கி, மாரி, வீரன், கறுப்பன் முதலான பேய்களை வணங்கி அவற்றிற்கு எண்ணிறந்த ஆடு, கோழிகளை வெட்டுகின்றனர்! இங்ஙனமே இன்னும் போலிச் சைவர்களின் இடையே நடைபெறும் அடாத செயல்களையெல்லாம் எடுத்துரைக்கப்படின் இவ்வேடு இடங்காணாது. இத்தகையயோரான போலிச்சைவர் தம்மைத்தாமே உயர்ந்த சாதியாராகச் சொல்லிக்கொண்டு தம்மில் இறுமாப்புற்றுத், தாந்தாமே கூடிக்களித்தால், அதனைக் கண்ட உயர்ந்த அறிவினர் அவரையும் அவர் சொல்லையும் ஒருபொருட்டாக மதிப்பரோ! `சைவர் என்னுஞ் சொல்லுக்கு ஏற்பத் தாம் அருளொழுக்கத்திலும், சிவநேயத்திலும், அடியார் பணியிலுந் தலைசிறந்து நிற்பதோடு, தம்மோடொத்த ஏனை மக்களையுந் தமது அருளொழுக்கத் திற்றிருப்பி அவரோடு அளவளாவி, அவ்வாற்றாற் சைவவொழுக்கத்தை எங்கும் பரவச் செய்யினன்றோ, அறிவான்மிக்க ஆன்றோர் அவரை உண்மைச் சைவரென உயர்த்துப் பாராட்டுவர்! மேலும், முப்பது நாற்பது நூறு இருநூறு வீட்டுக் காரர்களுக்குள்ளேதான் யாங்கள் உண்ணல் கலத்தல்களைச் செய்வோம் எனத் தருக்கிப் பேசி அவ்வாறு நடந்துவரும் போலிச்சைவரின் குடும்பத்தாருடம்புகளிற் பழைய இரத்தமே வரவர வலிவிழந்து ஓடிவருதலால், அவர்கட்குப் பிள்ளைப்பேறு வாயாமற் போகின்றது; பிள்ளைப்பேறு வாய்ப்பினும் உயர்ந்த அறிவும், திட்பமான மனமும், முறுக்கான யாக்கையும், சிறந்த தன்மையும் வாய்ந்த பிள்ளைகளைப் பெறுதல் அவர்களுள் அரிதினும் அரிதாய்ப் போகின்றது. புதுநீர் வரத்தின்றிப் பழைய கட்டுக்கிடைத் தண்ணீரேயுள்ள ஒரு குளம் நாற்றமெடுத்து, நோய்ப்புழுக்களை யுண்டாக்கி யார்க்கும் பயன்படாமல், வரவர வற்றிவறண்டு முடிவில் நீரற்றுப்போதல் போல, அகலஉள்ள குடிகளில் அறிஞராய் வலியராய் நல்லராய்ப் பிறந்தார் தம் புதிய இரத்தமானது, தமது பழங்குடிப் பிறந்தார்தம் உடம்புகளில் வந்து கலத்தற்கு இடங்கொடாத போலிச்சைவக் குடும்பத்தினருந் தமது வலிவிழந்த பழைய இரத்தங்கெட்டு அகத்தும் புறத்தும் நோய்களுக்கு இரையாகி வற்றி வறண்டு போகத் தாமும் இருந்த இடந் தெரியாமற் சிலகாலத்தில் மாய்ந்துபோகின்றனர். பார்மின்கள்! நம் இந்தியநாட்டவர் அல்லாத வெள்ளைக்காரருள்ளும் அவரோடொத்தார் பிறருள்ளும் இத்தகைய பொல்லாப் போலிச் சாதிக் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? இல்லையே; அவை இல்லாமையின், அவர்கள் தம்மில் ஆண்மக்களும் பெண்மக்களும் தத்தம் இயற்கைக்கு இசைந்தாருடன் இனிதுகூடி வாழ இடந்தந்து, அவ்வாற்றால் அறிவிலும் ஆண்மையிலுஞ் சிறந்த மக்களை அளவின்றிப் பெற்று, உலகமெங்குந் தாமாகவே பரவி, எல்லா நலங்களும் எய்தி, அந்நலங்கள் இல்லாத நம் நாட்டவர்களைத் தம் அடிக்கீழ்ப்படுத்து, நம்மனோர் தம்மைச் சார்ந்து அண்டிப் பிழைக்க நம்மை ஆண்டு நமக்கு உதவியும் புரிந்துவருகின்றனர். இவ்வாறிருக்க, அளவிறந்த சாதிக் கட்டுப்பாடுகளுடைய நம்மனோர், அச் சாதிக்கட்டுப் பாடுகளாற் பெற்ற பயன் ஏதேனும் உண்டா? ஏதுமேயில்லை. அவற்றால் உயர்ந்த பயன்கள் உண்டாகாவிடினும் விடுக; தீமைகளேனும் விளையாமலிருக்கின்றனவா வென்றால் அப்படியுமில்லை; அவை நன்மையைத் தராதமட்டில் அமையாமல், அடுத்தடுத்துப் பல தீமைகளையும் விளை விக்கின்றன! தம்மை உயர்ந்தசாதியாராக நினைப்பவர்கள் தம்மோடொத்த மக்களை எவ்வளவு இழிவாக நினைத்து இறுமாக்கின்றார்கள்! இழிந்தோராக ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வளவு துன்பத்தை அடைந்தாலும் அவர்களை உயர்ந்த சாதியார் என்போர் கண்ணெடுத்தும் பார்க்கின்றார் களில்லையே! தாழ்ந்த சாதியாரிடத்தில் எல்லாவகையான ஏவற்றொழிலை யும் வாங்கிக்கொண்டு அவ்வாற்றால் மிக்க செல்வமுடையராய் வாழ் கின்றவர்கள், அவ்வேழை ஏவலர் ஒருநாளைக்கு ஒருவேளை கூழ்உணவு கூடக் கிடையாமற் களைத்துக்கிடக்க, அவர்கட்கு ஒருபிடிசோறாவது கொடுக் கின்றார்களா, இல்லையே! இழிந்த சாதியார் கடுவெயிலில் நாள் முழுதும் நின்று கை எரியக் கால் ஓய முதுகுநோவ வெட்டியெடுத்துத் தந்த கிணற்றுநீரைத் தமது வீட்டு நிழலிலிருந்து வெட்டிவேர் இட்டு மணம் ஊட்டிப் பருகுகின்ற மேற்சாதியார், அக் கீழ்ச்சாதியார்கள் வெயிலால் நாவறண்டு உடல்தளர்ந்து ஒரு குடங்கை நீராவது முகந்து குடிக்கலாம் என்று அக்கிணற் றண்டை வந்தால் அவர்களை எவ்வளவு வன்னெஞ்சத்தோடுந் துரத்துகின்றனர்! மேற்சாதியாரென்போராவது தமக்குள் அன்பும் ஒற்றுமையும் பூண்டு ஒழுகுகின்றார்களாவென்றால் அப்படியும் இல்லை. அவர்கள்ளும் பற்பல சாதிவேற்றுமைகள்! ஒருசிறு வகுப்பினர் மற்றொரு சிறுவகுப் பினரைத் தம்மிற் றாழ்ந்தவர் எனக் கருதி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் இறுமாக்கின்றனர்! எந்நேரமுஞ் சாதியுயர்வு தாழ்வுகளைப் பற்றியே பேசுகின்றனரல்லாமல், வேறு உயர்ந்த பொருள் களைப்பற்றி எட்டுணையும் பேசுகின்றிவர். இன்னகாலத்தில் அழியும் என்று அறியப்படாத ஊடனும்பின் பிறப்பையே எந்நேரமும் நினைந்து அறியாமையில் மாழ்க்கிடக்கும் இப் பேதைமக்கட்கு உயர்ந்த நோக்கங்களும் உயர்ந்த பொருள் களைப்பற்றிய பேச்சுக்களும் எங்கே யிருந்து எப்படிவரும்? இவ் இந்துமக்களைப்போல ஒற்றுமை கெட்ட நெல்லிக்காய் மூட்டைகளை இந்நிலவுலகத்தில் வேறெங்குங் காண்டல் இயலாது. தமக்குள் ஒருவரை யொருவர் தாழ்வாக நினைந்து, போலி மேலோர் போலிக் கீழோரைக் கொடுமையாக நடத்துதலுக்குத் தண்டனையாக வன்றோ, எல்லார்க்குந் தந்தையான கடவுள் நம் இந்து மக்களைச் சென்ற எழுநூறு ஆண்டு களுக்குமேலாக அயல் நாட்டவர் படையெடுப்பிற் படுத்துத் துன்புறுத்தியும், அவரது ஆட்சியின் கீழ் வைத்துத் திருத்தியும் வருகின்றது. தன் புதல்வர்களுள் எளியாரை வலியார் கொடுமைப் படுத்துதல் கண்டு, பேர்இரக்க முடையனாகிய இறைவன், நம் இந்துமக்களை அயலவரால் எவ்வளவோ திருத்தி வந்தும், நம்மவர்கட்கு இன்னும் நல்லுணர்வும் அன்பும் ஒற்றுமையும் வந்த பாடில்லையே! எழுநூறு ஆண்டுகளுக்கு முற்றொட்டுத் துலுக்கர்கள் படையெடுத்துவந்து நம்மனோரைச் சின்ன பின்னமாய் வெட்டி வீழ்த்தியும், பொருள்களைச் சூறையாடியும், பெண்மக்களைக் கற்பழித்தும், ஊர்களைக் கொளுத்தியும், திருக்கோயில்களை இடித்தும் வருத்தி வந்தக்கால் நம்மனோர்தம் சாதிவேற்றுமைகள் எங்கிருந்தன? அவை எல்லாம் பஞ்சாய்ப் பறந்தொழிந்தனவல்லவோ? `தைமூர் அமீர் என்னுந் துலுக்கமன்னன் கிபி 1398 இல் வடநாட்டிற் படையெடுத்து வந்த ஞான்று `துலம்பா என்னும் ஊரிலிருந்த நம் இந்துக் குடிமக்களைச் சின்னபின்னமாய் வெட்டி வீழ்த்தி, எஞ்சினோரை அடிமைப்படுத்தினான்! பின்னும் ஒருகால் நம்மனோரில் நூறாயிரம் பேரைக் குருதியொழுகக் கொன்றான்; டில்லி நகரை ஐந்துநாள் வரையிற் கொள்ளையிட்டான்; அப்போது எண்ணிறந்த நம் பெண்மக்களைச் சிறை பிடித்தான்1. அக் காலம்முதல் நம்மனோரில் எத்தனைகோடி பேர் துலுக்கராயினர்! எத்தனை யாயிரம்பேர் வறுமைப்பட்டுக் கீழ்ச்சாதியாரா யினர்! அடித்தவனுக்கு ஆமுடையாள், பிடித்தவனுக்குப் பெண்டாட்டி என்றபடி நம் பெண்மக்களில் எத்தனை யாயிரம்பேர் துலுக்கர் கையிற் சிக்கிமீண்டவர்கள்! அத்துலுக்க அரசர்களால்நேர்ந்த குழப்பங்களின் இடையே, நம் இந்து அரசர்களும், அவர்களின் கீழ்த் தலைமை செலுத்தினவர்களும், ஏனைச் செல்வர்களும், ஆள்வலிமை படைத்தவர்களும் செய்துவந்த தகுதியற்ற கொடுஞ் செயல்களுஞ் சொல்லுக்கு அடங்கா; அவர்களால் துன்புற்றுத் தமது நிறை சிதைந்த நம் இந்துப் பெண்மக்களும் எண்ணிறந்தவர்கள்! அறம் வழுவாத நம் ஆங்கிலவேந்தரின் ஆட்சி இந்நாட்டில் நிலைபெற்றபின்னரன்றோ, நாமும் நம் பெண்மக்களும் அச்சமின்றி இனிது வாழ இடம்பெற்றோம். இந்தச் சீரிய அரசியலிலுங்கூட, ஒதுங்கியுள்ள நாட்டுப் புறங்களில் இடம் பொருள் ஏவல்களால் வலியராய் உள்ளார் தம்மைச் சூழ்ந்திருக்குங் குடிமக்கட்குப் பெருந் தீங்குகள் செய்துவருகின்றார்கள்; அத் தீயார் இருக்கும் இடங்களிற் கற்புடைய மகளிரும் இருப்பரோ என்பது ஐயுறற் பாலதாகவே யிருக்கின்றது. சில ஆண்டுகளுக்குமுன் மலையாள நாட்டில் நிகழ்ந்த கொடியநிகழ்ச்சிகள் இன்னும் நமது நினைவைவிட்டு நீங்கிற்றில, அங்குள்ள நம்பூரிப் பார்ப்பனரும் நாயர்களும் நீள இழைத்துவந்த சாதிவேற்றுமைக் கொடுமைகளைப் பொறுக்க ஏலாமையாலன்றோ, அங்குள்ள துலுக்கர்கள் அவர்களை உயிரோடுவைத்துத் தோலுரித்தும், அவர்களின் மகளிரைச் சிறைபிடித்துச் சென்றும், அவர்களின் இல்லங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அவர்கள் தொழுங் கோயில்களை இடித்துப் பாழாக்கியும் நினைப்பினும் நெஞ்சம்நடுங்கும் வகையா லெல்லாம் அவர்களைத் துன்புறுத்தினார்கள்! அங்குள்ள நம்பூரிகளும் நாயர்களும் தம்மோடொத்த மக்களான `தீயர், `ஈழுவர், `புலையர் முதலியோரைக் கொடுமைப்படுத்தாமல் அன்பாக நடத்தியிருந்தாற், பெருந்தொகையினரான அவர்களெல்லாரும் ஒருங்குசேர்ந்து, சிறுதொகையினரான நம்பூரிகளையும் நாயர்களையும் பாதுகாத்துத், துலுக்கர்களை எளிதில் அடக்கியிருப்பரன்றோ! நம் ஆங்கில அரசினர் தம் படைகளை விடுத்து அத் துலுக்கர்களை அடக்கியிரா விட்டால், நம்பூரி நாயர்களின் சாதிக்கட்டுப்பாடுகளெல்லாந் துகளாய்ப் பிறந்து, மலையாளம் முற்றுந் துலுக்கநாடாய்ப் போயிருக்கு மன்றோ? இவ்விந்திய நாடெங்கும் பார்ப்பன ராலும் போலிச்சைவர்களாலும் வேரூன்றி நிற்கும் சாதிவேற்றுமையால், எல்லா மக்களும் எண்ணியடங்காப் பற்பல பிரிவினராகி ஒற்றுமைகெட்டு, ஒருவரிடத்தொருவர் அன்பிலராய்த், தம்மைத்தாமே பெரியராகநினைந்து இறுமாந்து நடக்கின்றனர்; இவர்களைத் துலுக்கர்கள் மற்றொருமுறை எதிர்க்க நேரம் வாய்க்குமானால், இந்துக்கள் அனைவரும் வேரோடு மாய்க்கப்படுதல் திண்ணமாய் முடியும். சில கிழமைகளுக்குமுன் கல்கத்தாவில் நடந்த `இந்து முலீம் கலகமே இதற்கொரு சான்றாம். அரசியல் நெறிவழுகுவாத நம் ஆங்கில துரைத்தனத்தார் இக் கலகத்தை உடனே அடக்காதிருந்தால், இக்கலகம் எவ்வளவு அஞ்சத்தக்கதாய் முடிந்திருக்கும். சாதிவேற்றுமை என்னும் பெரும் புயற்காற்றாற் சின்ன பின்னப் படுத்தப்பட்டுச் சிதறிக் கிடக்கும் நம் இந்துமக்களில், தலைவரெனத் தம்மைக் கூறிக்கொள்வோர் இந் நிலைமைகளைச் சிறிதாயினும் ஆராய்ந்துபாராமல், நம் ஆங்கில அரசை இந்நாட்டி னின்றுந் துரத்தப்பார்க் கின்றார்களே! மாதவர் நோன்பும் மடவார் கற்புங் காவலன் காவல் இன்றித் தங்கா என்று நம் பழைய ஆன்றோராகிய இளங்கோ வடிகள் `சிலப்பதிகாரத்தில் அருளிச்செய்திருக்கும் அறவுரையை அவர்கள் அறியார் கொல்லோ! ஆங்கில அரசினர் இந்நாட்டைவிட்டு அகலும் அன்றைக்கே இது பிணக் காடாம் என்பதை அவர்கள் உணரார்கொல்லோ! நம் இந்துக்களுக்கு எல்லாவகையானுந் தீராப் பெரும பகைவராய்த், தம்முள் ஒற்றுமையும் அதனால் வலிமையும் தமக்கு உதவிபுரியுந் துலுக்க அரசர்களும் நன்கு வாய்க்கப் பெற்றாராய், இவ்விந்து நாடெங்கணும் பெருந்தொகை யினராய்க் குடிகொண்டிருக்குந் துலுக்கர்களைப் பார்த்தாயினும் நம்மவர்கள் சாதிவேற்றுமை யினை யொழித்துத் தமக்குள் ஒற்றுமை எய்தலாகாதா! ஓர் எழுநூறு ஆண்டுகளாக இவ்விந்தியநாடெங்கும் நிகழ்ந்துவரும் மாறுதல்களை நடுவுநிலைமையோடு நின்று ஆராய்ந்து காண்பவர்களுக்கு, இங்குள்ள எந்தச் சாதியாரேனும் பிறசாதிக் கலப்பின்றித் தனிச்சாதியாராய் வாழ்ந்திருக்கலாம் என்று ஐயமின்றிச் சொல்வதற்குச் சிறிதும் இடம் இல்லாமையாலும், வெவ்வேறினமாய் நிற்கும் மக்கள் ஒன்று கலத்தலாற் பிறக்கும் பிள்ளைகள் அறிவு மிகுதியும் உடல் வலிமையும் பெற்று உலகிற்குப் பெரிதும் பயன்படுதலை நாளுங் காண்கின்றோ மாகலிற் சாதிக்கலப்பு மிகவும் வேண்டற் பாலதாய்த் தோன்றலாலும், இம்மை மறுமைப் பயன்களை விழையும் உண்மைச் சைவர்கள் பிறசாதியாரிலிருந்து புலாலுண்ணாப் புனிதராய் வருவாரைத் தம்மொடு சேர்த்து வலிமையிலும் அறிவிலுந் தொகையிலும் அருளொழுக்கத் திலும் மிகுந்து நலம்பெறக் கடவராக! இனி, மற்றைத் தாழ்ந்த வகுப்பினரிற் கொலைபுலை தவிர்ந்தாரை உண்மைச் சைவர்கள் தம்மினத்திற் சேர்த்துக் கொள்வது ஒன்றின் மட்டும் அமையாது, கல்வியில் மிக்காரையுங், கடவுள் வழிபாட்டிற் சிறந்தாரையும், அகந் தூய்மை புறந்தூய்மை வாய்ந்தாரையும் பிறப்பிழிபு நோக்காது தம்மொடுசேர்த்து உண்ணல் கலத்தல்களைச் செய்தல் வேண்டும். எல்லா மக்களிடத்தும் எல்லா நலங்களும் அமைதல் அரிதாகையால், எவ்வெவரிடத்து எவ்வெந் நலங்கள் காணப்படுகின்றனவோ, அவ்வந் நலங்கள் பற்றியே அவ்வவரைப் பாராட்டுதல் வேண்டும்; அவரிடத்திற் காணப்படாத நலங்களுக்காக அவரைக் குறைசொல்லல் ஆகாது. சில நலங்கள் உடையராய் வேறு சில நலங்கள் இலராயினாரையுந் தம்மொடு சேர்த்து அளவளாவிவரின், அவர் உண்மைச் சைவரின் சேர்க்கையால் வரவர எல்லா நலங்களும் நிரம்பப்பெறுவர். தமக்குள்ளேயே சைவ வொழுக்கத்தின் வழுவிப் புலாலுணவு கொண்டுங் குடித்தும் பரத்தையரை மருவியும் ஏமாற்றங்கள் செய்தும் வருவார் பலர் இருக்க, உண்மைச் சைவர்கள் அவர்களை நீக்க மாட்டாமற் சிறப்புநாட்களில் அவர்களோடு உடனிருந்து உண்டும், அவர்கள்பாற் பெண்கொண்டு கொடுத்தும் அளவளாவி வாழவில்லையா? அங்ஙனமே மற்றைத் தாழ்ந்த வகுப்பாரிலுந் திருந்தத்தக்காராய்ச், சில நலங்களேனும் உடையார் இருந்தால், அவர்களை உண்மைச் சைவர்கள் தம்மினத்தில் உடனே சேர்த்தல் இயலாதாயினும், அவர்களோடு முதலில் நெருங்கிப் பழகவேண்டு மளவுக்குப் பழகி, அப் பழக்கத்தால் அவர்கள் முற்றுந் திருந்தக்காணின், பின்னர் அவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளல் இன்றியமையாததாகும். பிற சாதியார்கள் கல்வியுங் கடவுள்வழிபாடுந் தூய்மையும் இலராதல்பற்றி, அவரை விலக்கிவைத்து, அவர்கள் திருந்துதற்குரிய வழிவகைகளைச் செய்யாமல் நம்மவர் இன்னும் பராமுகமாயிருப்பரானால், அவர் களெல்லாருங் கிறிதுவர், துலுக்கர், பௌத்தர் முதலான பிறசமயத்தவரால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நம் இந்துசமயப் பகைவராகிச், சில நூற்றாண்டுகளில் இவ்விந்திய நாடெங்கும் நிறைந்து, நம்மனோரும் நம் சைவவைணவ சமயங்களும் இருந்தவிடமுந் தெரியாமல் வேரோடு அற்றுப்போகச் செய்குவர். நம்மனோர் செய்த கொடிய சாதிக்கட்டுப்பாடுகளின் துன்பம் பொறுக்கமாட்டாமை யாலன்றோ, கணக்கிறந்த நம் இந்துமக்கள் கிறிதுவ ராய்விட்டனர்! நம்மனோரில் நாளொன்றுக்கு முந்நூறுபேர் விழுக்காடு கிறிதுவராய் விடுகின்றார்களென்று, அதனை ஆராய்ந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டேம். நாளொன்றுக்கு முந்நூறுபேர் கிறிதுவராய்விட்டால், ஒரு திங்களுக்கு ஒன்பதினாயிரம் ஆகச் சில நூற்றாண்டுகளில் இந்தியநாடு முழுதுங் கிறிதுவராலேயே நிரப்பப்படும். கிறிதுவர்கள் தங்களது சமயத்தைப் பரப்பும்பொருட்டு ஒவ்வொருநாளும் எண்ணிறந்த நூல்களைப் பரப்பி வருகின்றார்கள்; தம்மிற் கற்றவராயுள்ள குருமார்களுக்கு மிகுந்த சம்பளங்கள் கொடுத்து, அவர்களை ஆயிரக் கணக்காகப் பலப்பல இடங்களுக்கும் போக்கித், தம்முடைய சமயக் கோட்பாடுகளை எல்லார்க்கும் எடுத்துச்சொல்லி, விரும்பினோரைத் தமது சமயத்தில் ஏற்றுக்கொள்கின் றார்கள். நம்மனோராற் சிறிதேனும் பாராட்டப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏழையெளிய சாதியார்கள் இருக்கும் இடங்கள் எங்குங் கிறிதுவக் குருக்கள்மார் போய் ஆங்காங்குப் பள்ளிக்கூடங்கள் திறப்பித்து, அவர்கட்கு ஊண்கொடுத்து உடைகொடுத்துக் கல்வியறிவு புகட்டி, அவர்கள் துப்புரவாயிருக்கக் கற்பித்து, அவர்களைச் சிறந்த அலுவல்களிலும் அமரச் செய்து இங்ஙனமெல்லாம் அவர்கட்குப் பற்பல நன்மைகளைப் புரிந்துவருதலால், அந்நன்மைகளைப் பெற்று உயரும் அவ்வெளிய சாதியார்கள் அக் குருமார்கள்பால் மிக்க நன்றியறி வுடையவர்களாய்த், தமக்கு ஏதோர் உதவியுஞ் செய்யாமல் தம்பால் எல்லா உதவிகளும் பெற்றுக் கொண்டு தம்மைப் பட்டினியிலும் பசியிலும் மிகத் தாழ்ந்தநிலையிலுங் கிடக்கவிட்டுத் தம்மை மீளாத் துன்பத்திற்கு ஆளாக்கிவரும் நம்மனோரையும் நம்முடைய சைவவைணவ சமயங்களையும் நீங்கி அக்கிறிதுவக் குருக்கள்மார் காட்டும் கிறிதுவசமயம் புகுகின்றார்கள். எளிய சாதியார்கட்கு உதவிபுரிவார் இல்லாத காலங்களிலே, மேற்சாதியாரெனக் கூறிக் கொள்ளும் ஓ இரக்கமற்ற கொடிய இந்துமக்களே, நீங்கள் அவர்களை ஆடு மாடு கழுதை குதிரை பன்றி நாய் முதலான விலங்கினங் களினுங் கடைப்பட்டவராக நடத்தியும், அவர்களுக்கு அரைவயிற்றுக் கூழுணவுகூடக் கிடையாமற் செய்தும், அவர்களில் ஆண் மக்களாயினார் கோவணத்திற்குமேல் ஒருசிறு கந்தைத்துணி கூட உடுக்க விடாமலும், அவர்களிற் பெண்மக்களாயினார் தமது மார்பினை மறைத்து மேலாடை உடுப்பதற்குங்கூட மனம்பொறாமற் சினந்தும், அவர்கள் தூய்மையாயிருக்கக் கல்வியறிவுதானும் புகட்டாமலும் நும்மோடொப்ப இறைவனாற் படைக்கப்பட்ட அம்மக்களைப் பெருந்துன்பத்திலும் அறியாமையிலும் இருத்தி, அவர்கள் பால் எல்லாவகையான வேலை களையும் வாங்கிவந்தீர்கள்! நுங்களுடைய ஈரமற்ற வன்னெஞ்சத்தையும் இரக்கமற்ற கொடுஞ்செயல்களையுங் கண்டன்றோ, அவ்வேழை மக்கட்கு உதவிபுரிதற் பொருட்டு அருட்கடலாகிய ஆண்டவன் ஆங்கிலநன் மக்களையும் அவர் வழியே கிறிதுவக் குருமார்களையும் இந்நாட்டுக்கு வரும்படி அருள்புரிந்தான்! அவர்கள் வராதிருந்தால் பல கோடிக் கணக்காயுள்ள அத் தாழ்த்தப்பட்ட பழந் தமிழ்மக்களின் நிலைமை இன்னும் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளாகி யிருக்கும்! இவ்வாறு எல்லா இரக்கமும் வாய்ந்த இறைவனால் ஏவப்பட்டு ஆங்கில அரசுங் கிறிதுவக் குருமாரும் இங்குவந்து அவ் வேழைமக்கட்கும் பிறர்க்கும் எல்லாவகை யான நலங்களும் புரிந்துவருவதைப் பார்த்தும், ஐயோ! இந்துமக்களே, ஓ போலிச்சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்தபாடில்லையே! நுங்களை நுங்கள் கால்வழியற்றுப்போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடாரியாய்ச் சாதிவேற்றுமை இருப்ப துணராது, அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதைமை! ஊரின் நடுவே வெடிமருந்துக் கொத்தளத்தின் மேலிருந்து கொள்ளிக் கட்டையைச் சுழற்றி மகிழ்வோனுக்கும் நுங்கட்கும் யாம் வேற்றுமை காண்கிலேம். ஒரு தீப்பொறியானது அக்கொத் தளத்தை வெடிக்கச்செய்து அவனையும், அவ்வூரிலுள்ளா ரனைவரையுஞ் சிறிது நேரத்திற் படுசாம்பராக்கி விடுதல் போலப், பாழுஞ் சாதிவேற்றுமையால் இனி யுண்டாவதற்கு மும்மரித்து நிற்கும் ஒருசிறு கலகமானது நுங்களையும் நுங்களிறுமாப்பினையும் நுங்கள் சாதிக் கட்டுப்பாடு களையும் எளிதில் மாய்த்தொழிக்குமேயென அஞ்சு கின்றோம்! வெள்ளம் வருவதற்கு முன்னரே அணைகோலிவைத்தல் அறிவுடையார் செயலாதல்போலப், பெருந் தீமைக்கு ஏதுவான கலகம் வருதற்குமுன்னமே அதனை வருவிக்குஞ் சாதிவேற்றுமை யினைத் தொலைத்துவிடுமின்கள்! ஆடு மாடு குதிரைகளைப்போலச் சைவவுணவு மட்டுங் கொள்ளுதலால் நீங்கள் நுங்களைச் `சைவர் எனச் சொல்லிக்கொள்ளுகின்றீர்கள்; நீங்களேனும் மருத்துவர் சொல்லைக் கேட்டுச் சிலகாலங்களில் ஊனுணவையும் உட்கொள்வீர்கள்; ஆனால், ஆடு மாடு குதிரைகளோ எக்காலத்தும் ஊனுவுகொள்ளா; கடவுள் இல்லையென நாத்திகம் பேசும் சமணர்கள் கொல்லா அறத்தில் நுங்களை விடப் பன்மடங்கு சிறந்தவர்கள் ஊன் உண்ணாமையே `சைவம் என நுவலுவீர்களாயின், ஆடு மாடு குதிரை களையும் சமணரையுமன்றோ நுங்களைவிடச் சிறந்த சைவராகச் சொல்லுதல் வேண்டும்? அற்றன்று, நாங்கள் சிவபெருமானை வழிபடுகின்றோம், தேவார திருவாசகங்கள் ஓதுகின்றோம், திருநீறும் சிவமணியும் அணிகின்றோம், ஐந்தெழுத்து மந்திரம் உருவேற்றுகின்றோம், அடியார் திருத்தொண்டின் பெருமை களையும் `சிவஞானபோதம் முதலான சைவசித்தாந்தத் தனிப்பெரு நூல்களையும் பயின்றறிகின்றோம்; இவைகளே சைவராகிய எமக்குச் சிறப்படையாளங்கள் என்று உரைப்பீர் களாயின், இவ் வடையாளங்கள் உடையவர் நுங்களில் எத்தனைபேர் உளர்? பதினாயிரவரில் ஒருவரேனும் உளரா? துணிந்து சொல்வீர் களா? சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதற்குரிய இலக்கணங்களை நுங்களில் நன்கு உணர்ந்தவர் எவ்வளவு பேர்? தேவார திருவாசகங்களுக்குப் பொருளும் அவற்றைப் பிழையற ஓதுதலுந் தெரிந்தோர் எவ்வளவினர்? திருநீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்பவற்றின் உண்மையை யாராய்ந்தறிந்தோர் எத்தனைபேர்? `பெரிய புராணம், `சிவஞானபோதம் என்பவற்றின் பெயர்களையேனுந் தெரிந்தோர் நுங்களில் ஆயிரத்தில் ஒருவரேனும் உளரா? உண்மைச் சைவர்க்குரிய இவ் வடையாளங்களுள் ஒரு சில தாமும் வாய்க்கப்பெறாதார் வெறும் பெயரளவில் தம்மைச் சைவரென இறுமாப்புடன் சொல்லிக்கொள்ளா நிற்கையில், மற்றைச் சாதியாரிலிருந்து இவ் வடையாளங்கள் எல்லாம் முற்றும் உடையராய் வரும் புனிதரை `உண்மைச் சைவர் எனக்கொண்டு அவருடன் உண்ணல் கலத்தல்களைச் செய்தலாற் போதருங் குற்றம் என்னை? பிறசாதியாரிற் சைவநலங்கள் சிலவற்றோடு பெருஞ்செல்வமும் உடையார் இருந்தால், அவருடன் ஏதொரு வேற்றுமையும் பாராமல் உண்ணல் கலத்தல்களைச் செய்யும் சைவர்களைப் பாராதார் யார்? பிற சாதியார்களிற் செல்வம் மிகுந்தோர் எத்தனையோ பெயர் தஞ்சாதியை விடுத்துச் சைவ குலத்தில் எளிதாகப் புகுந்து கலந்துவிடுகின்றனர். பணம் பந்தியிலே குலங் குப்பையிலே என்னும் பழமொழியும் இவ்வாறு நேருஞ் சாதிக்கலப்புகளையே உணர்த்தாநிற்கின்றது. சைவகுலத்தில் மட்டுமே இத்தகைய கலப்புகள் நேர்கின்றனவென்று நினைத்தல் வேண்டாம். எல்லாச் சாதியாரிலும் இவை போன்ற கலப்புகள் நிகழ்ந்துகொண்டே போகின்றன. இப்போது எல்லாக் குலத்தினரிலும் மேற்பட்ட குலத்தினராகக் கருதப்படும் பார்ப்பனருங்கூடத், தம்மினும் மிகத் தாழ்நத வராகக் கருதப்படுஞ் சாதியாரிற் செல்வமுங் கல்வியும் முதலான நலங்களுடையார் விரும்பினால் அவர்கட்குத் தம் பெண் மக்களை மனைவியராக வாழ்க்கைப்படுத்துகின்றனர்; அவர்கள் பாற் பெண்மக்களிருந்தால் அவர்களைத் தாமும் மணம் முடித்துக் கொள்கின்றனர். இங்ஙனமெல்லாம் பிறசாதியாரிற் செல்வம் மிக்கார்பால் ஒருவகையாகவும், செல்வங் குறைந்தார்பாற், பிறிதொரு வகையாகவும் நடக்கும் போலிச் சைவரின் வஞ்சவொழுக்கந் தீயினுங் கொடியதா மென்க. இன்னும், பிறசாதியாரிற் றாழ்ந்தகுலத்தவராகத் தம்மாற் கருதப்பட்ட வகுப்பினர் சிலரைத் தென்னாட்டுத் திருக்கோயில் களினுள் நுழையவிடாத போலிச்சைவரின் புல்லிய செய்கை யால், எத்துணைப் பெருந்தீங்குகள் நிகழவிருக்கின்றனவோ என்பதை நினைக்க எம்நெஞ்சம் நடுங்குகின்றது! இத்தடையால் இதுவரையில் நிகழ்ந்த தீமைகட்கே அளவில்லை. எல்லா மக்களையுந் தோற்றுவித்த இறைவனாகிய தம் அப்பன் அமர்ந்திருக்கும் பொது இடமாகிய கோயிலிற் சென்று மக்கள் எல்லாரும் மனங் கரைந்து வணங்கவேண்டியவரா யிருக்க, அப்பொது இடத்திலும் பொல்லாத சாதிவேற்றுமையை நுழைத்து, இறைவன் படைத்த மக்களுட் பெரும்பாலாரைத் தாழ்ந்த சாதியாராக்கி, அவர்களைக் கோயிலினுள் நுழையவிடாத கொடுஞ்செய்கை யினுங் கொடியது வேறு யாதிருக்கின்றது! தாழ்ந்தசாதியார்கள் கோயிலினுட் நுழையவிடாத கொடுஞ்செய்கையினுங் கொடியது வேறு யாதிருக்கின்றது! தாழ்ந்தசாதியார்கள் கோயிலினுட் புகுந்து தம்மை வணங்கலாகாதென்று கடவுள் தடைசெய்திருக் கின்றாரா? அப்படியொன்று மில்லை யென்பதும், சாதி இறுமாப்புக் கொண்டோர்க்குக் கடவுள் அருள்புரியாமல், தாழ்த்தப் பட்ட சாதியார்க்கே அவர் மிகுதியும் அருள்புரிந்திருக் கின்றா ரென்பதும் உண்மை வரலாறுகள் பலவற்றால் மேலே விளக்கிக்காட்டின மன்றோ? அல்லது கடவுளை நேரேகண்டு அவனதருளைப் பெற்ற உண்மையடியார் களாவது தாழ்த்தப்பட்ட சாதியார்களை உள்ளே விடுதலாகாதென்று விலக்கியிருக்கின்றார்களா? அப்படியும் இல்லையே. அவர்கள், ஈழக் குலச்சான்றாராகிய ஏனாதி நாயனாரையும், பறைக் குடியினரான நந்தனாரையும், பாணர் குடியினரான திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், வண்ணார் குடிப்பிறந்த திருக்குறிப்புத் தொண்டரையும், எண்ணெய் விற்கும் வாணிகர் குடிப்பிறந்த கலியனாரையும் வணங்கி அவர்களைக் கோயிலினுள் நுழைய இடங்கொடுத்த மட்டில் அமையாது, அவர்களையெல்லாம் ஏனை நாயன்மார் திருவுருவங்களோடு உடன் வைத்து, அறுபத்து மூவராக ஒவ்வொரு சிவபிரான் திருக்கோயில்களிலும் ஒவ்வொரு நாளும் வழிபாடுசெய்து வருகவெனவுங் கட்டளையிட் டிருக்கின்றன ரல்லரோ? அக் கட்டளைப்படியே அந் நாயன் மார்கட்கு நாள் வழிபாடும் ஆண்டுவிழாவும் ஒவ்வொரு திருக்கோயில்களினுந் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருதலைப் போலிச் சைவர்கள் பார்த்ததில்லையா? இழிந்த சாதியாராகக் கருதப்பட்ட நாயன்மார்கள் சிவபிரானோடு ஒப்பக் கோயில்கடோறும் வைத்து வணங்கப்பட்டு வருகையில், அந்நாயன்மார் மரபிற் பிறக்குந் தவம்உடைய சான்றார், பறையர், செம்படவர், வண்ணார், எண்ணெய் வாணிகர் என்போரைத் தென்னாட்டுச் சிவபிரான் திருக்கோயில்களில் நுழையவிடாத போலிச் சைவரின் புல்லறிவினுந் தலையெடுப்பின் கொடியவை வேறுண்டோ கூறுமின்கள்! இவர்களுடைய இக் கொடுமைக்கு அஞ்சி யன்றோ திருநெல்வேலி மாகாணத் திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதியாரில் எண்ணிறந்தோர் கிறிதுமதம் புகுந்தனர்! இன்னும் புகுகின்றனர்! இவ்வாறு சைவசமயத்திற் பிறந்த மக்களெல்லாரும நாளுக்குநாட் கிறிதுவராய்விட்டாற் பிறகு சிவபிரான் கோயில்களை வணங்க வருவார்தாம் யார்? இதுதானும் உணர்ந்து பார்க்குஞ் சிறியதோர் அறிவுதானும் இன்றிச், சைவசமயத்தவராய் இருக்கும் வரையில் தாழ்த்தப் பட்ட சாதியாரை முன்னேற வொட்டாமற் பலவகையால் ஈரநெஞ்சமின்றித் துன்புறுத்தித் தாமே, அவர்களைக் கிறிதுவமதம் புகுமாறுசெய்துவிட்டு, அவர்கள் கிறிதுவம் மதம் புகுந்து மேல்நிலைக்கு வந்த பின், அவர்கள்முன் அடக்கஒடுக்க வணக்கத்தோடு சென்று, பல்லை இளித்துக் காட்டியுங் கெஞ்சியமுகத்தோடு தலைகுனிந்து நின்றும், அவர்கற்பாற் பல உதவிகளைப்பெறும் போலிச்சைவரின் செயல் பெரிதும் அருவருக்கத்தக்கதா யிருக்கின்றதன்றோ? எல்லாச் சாதியினரையுங் கோயிலினுள் விடுத்து, அவருட் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்பு பூண்டு ஒழுகினார்க்கு, அக் கோயில்களினுள்ளேயே திருவுருவங்கள் சமைத்து நிறுத்தி அவரை வழிபட்டுவரும் வழக்கந் தொன்றுதொட்டு நடைபெற்று வராநிற்பவும், அச்சிறந்த வழக்கத்திற்கு மாறாகப் போலிச் சைவர்கள் தாழ்ந்த வகுப்பினரைக் கோயில் களினுள்ளே விடுவதில்லையெனப் புதியதொரு போலி வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அப்போலி வழக்கத்தின் துணையால் ஆங்கில அரசரைத் தமக்குத் துணை கூட்டி வைத்துத், தாழ்ந்த சாதியாரைக் கோயிலினுள்ளே நுழைய விடாமல், அம்முயற்சியில் மட்டும் விடாப்பிடியாய் நிற்கின்றார்களே! நம் நாட்டவரும், நம் சமயத்தவரும், நம்முடைய வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டும் எல்லா உதவிகளையுஞ் செய்து வருபவருமான பறையர், சான்றார், ஏகாலியர், எண்ணெய் வாணிகர் முதலியோர்க்குக் கொடுமை செய்வதாகிய தீயவழியில்தானா இப் போலிச் சைவர்ளுக்கு இத்துணை முயற்சியும் விடாப்பிடியும் இருத்தல்வேண்டும்! தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் போலிச் சைவர்கள் இவ்வா றெல்லாம் மிக வருந்தி அவர்களின் அக்கொடுஞ்செயலை அருவருத்துப்பேசாநிற்ப, அப்போலிகள் எவருடைய மதிப்பைப் பெறல்வேண்டியோ அவ் வேழைகளை இங்ஙனமெல்லாங் கொடுமைப்படுத்து கின்றனர்? அறிவுடையோர் விரும்பாததைச் செய்தலின், அப்போலிகட்கு இம்மையில் இகழ்ச்சியே யல்லாமற் புகழ்ச்சியில்லை. இறைவன் திருவுள்ளத்திற்கு ஆகாததைச் செய்தலின் அவர்கட்கு மறுமையிலும் பாவமேயல்லாற் புண்ணியமும் இல்லை. இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலுந் தமக்கத் தீமையேதரும் இக்கொடுஞ் செயலைப் போலிச்சைவர் உடனேநீக்கி, அனைவரையுஞ் சாதி வேற்றுமை பாராமற் கோயிலினுட் போகவிட்டு, அறிவுடை யோர் நன்கு மதிப்பையும் இறைவனது அருளையும் பெறக்கடவராக! இவர்கள் அவ்வாறு செய்யாதொழியின் நம் அருளாள ரான ஆங்கில அரசரே அனைவருந் திருக்கோயிலினுட் புக விடைதரும்நாள் விரைவில்வரும். அப்போது இப்போலிச் சைவர்கள் தம்மால் ஆவதொன்றுமின்றிச் செயலற்று எல்லாராலும் இழிக்கப்பட்டு நிற்பர். பாருங்கள்! மலையாளத் திலுள்ள வைக்கத்தில் தாழ்ந்த சாதியாரைத் தெருவிற் செல்லவிடோமென்று அங்குள்ள போலி மேற்சாதியார் எவ்வளவு விடாப்பிடியாய் நின்றனர்! மலையாள அரசர் வாளா இருக்கும் வரையில், அப்போலி மேலோர் எவ்வளவு இறுமாப்புடன் அறிவுடையோர் சொல்லைக் கேளாமல் ஏழைவகுப்பினரைத் துரத்தித் தலைவிரித்தாடினர்! ஆனால், இப்போது மலையாள அரசை ஏற்ற அருள் அரசியர் தமது திருவுளமிரங்கித் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எல்லாருந் தமது நாட்டின் கண் உள்ள தெருக்களெல்லாவற்றிலுந் தடையின்றிச் செல்லலாம் என்று கட்டளை பிறப்பித்தபின்னர் அம்மேற் சாதிப் போலிகள் தம் செயல்அவிந்து இப்போது எவ்வளவு இழிக்கத்தக்க நிலையி லிருக்கின்றனர்! இத்தகைய நிலை வருதற்கு முன்னமே அவர்கள் தாமாகவே எல்லாரையுந் தாமிருக்குந் தெருக்களிற் செல்லவிட்டிருப்பர்களானால், அவர்களது நற்செயலை உலகம் எவ்வளவு புகழ்ந்து கொண்டாடியிருக்கும்! திருநெல்வேலியிலுள்ள சைவரும் பார்ப்பனரும் இப்போதே எல்லாவகுப்பினரையும் உயர்வு தாழ்வு கருதாது திருக்கோயில் களினுட் செல்லவிடுகுவ ராயின், அவர்களது அவ்விரக்கச் செயலை உலகம் மீக்கூறிக் கொண்டாடும். அவர்கள் அங்ஙனஞ்செய்யாது தமது கொடுஞ்செயலிற் காழ்ப்பேறி நிற்பராயின், ஆங்கில அரசினரே திருவுளமிரங்கி எல்லா வகுப்பினருங்கோயிலின் உட்செல்லக் கட்டளையிடும் போது அப்போலிச்சைவரும் பிறருந் தம்மாற் செய்யலாவ தின்றி இழிபுற்று எல்லாரானும் ஏளனஞ் செய்யப்பட்டு மாழ்கி நிற்பரென்க. இனி, இச்சாதிவேற்றுமைக்கட்டுப்பாடுகளால் நம் தமிழ்மாதர்கள் ஆளாகி வருந் துன்பங்கள் மிகக் கொடியன வாயிருத்தலால், அவற்றை ஒழித்தற்கும் எல்லாரும விரைவில் முயலல் வேண்டும். `நமக்குப்படிப்பும் வேண்டாம், பணமும் வேண்டாம், அழகும் வேண்டாம், நல்லாசாதியானாய் மட்டும் இருந்தாற்போதும், அவன் ஏழையாயிருந்தாலுங் கல்வியில்லாத வனாயிருந்தாலுங் கிழவனாயிருந்தாலுங் குற்றமில்லை என்று சொல்லி அழகிய அறிவுள்ள நல்ல இளம்பெண்ணை ஒரு மடையனுக்காவது அல்லது ஒரு கிழவனுக்காவது கட்டி விடுகின்றனர்! ஆண்மக்களைப் போலவே பெண்மக்களுக்கும் அறிவுண்டு, இன்ப துன்பங்கள் உண்டு, விருப்பு வெறுப்புக்கள் உண்டு, பசி காமங்கள் உண்டு என்பதை நம்மனோர் சிறிதாயினும் உணர்ந்து பார்க்கின்றார்களில்லை. மகளிரை அறிவும் உணர்வும் அற்ற இயந்திரங்களாகவே நினைக்கின்றனர். உள்ளநாள் உள்ளமட்டும் ஆடவர்தமக்குக் குற்றேவல்செய்து வயிறுகழுவி அவர்க்கு இன்பந்தந்து தாம் துன்பத்தில் வைகும் எளிய விலங்குகளாகவே மாதர்கள் நடத்தப்படுகின்றனர். இசையாதவனுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட ஓர் ஏழைச் சிறுமி அவனாற் படுந்துன்பங்களைப் பொறுக்கமாட்டாமல் அவனைவிட்டு நீங்குவளாயின், அவளுக்குச் சிறிதும் இரங்காமல் அவள்மேற் பழிகூறுவாரே எங்கும் உளர்! ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப் படுத்தப்பட்டவள் சில நாட்களில் அவன் இறந்துபோக அழுதகண்ணுஞ் சிந்திய மூக்குமாய் உயிரற்ற பிணம்போற் காலங்கழிக்கும்படி தன் வாழ்நாள் முழுதுங் கட்டாயப்படுத்தப் படுகின்றாள்; அவள் அக் கடுங்கட்டுப்பாட்டிற் சிறிது பிசகுவளாயினும் அவட்கு வரும் பழிச்சொல்லுந் துன்பமும் அளவிடப்படா! இவ்வாறு நம்பெண் மணிகளைத் துன்புறுத்தும் ஆடவர்கள் தாமாவது பிசகுபடாது நடக்கின்றார்களா? எனில், அதுவுமில்லை. ஒரு கெட்டவன் எத்தனைமுறை வேண்டுமானாலுந் தான் சாகுமட்டும் மகளிர் பலரை மணந்துகொள்ளலாம்; வேசிவீட்டிலேயே குடியாயிருக்கலாம்; தனக்குள்ள பொருளை யெல்லாங் குடிக்குங் கூத்துக்குஞ் சூதுக்கும் வம்புவழக்குக்கும் செலவழித்துவிட்டுத், தம் மனைவி மக்களைச் சோற்றுக்குந் துணிக்கும் அலைந்து திரியவிடலாம்; தான் எழுபது ஆண்டு ஆனாலும் பதினைந்தாண்டுள்ள ஒரு சிறுமியை மணந்து கொள்ளலாம். இவைகளைக் கேட்பாரில்லை. ஆனால், இவனுக்குப் பிணைக்கப்பட்ட ஏழைச்சிறுமியோ இக்கொடிய சாதிக்கிழவனைவிட்டு விலகுவளாயின், அவள் உடனே கற்பொழுக்கத்தில் வழுவியவள் ஆய்விடுவளாம்! ஐயகோ! அவனுக்குத் தாலியறுத்த அவள் பிறகு வேறொருவனை மணந்து கொள்ளலாகாதாம்! அது சாதிக்குறைவாம்! பெண்மக்களை ஈ எறும்பு கொசுகுபோல் நசுக்கும் இத்தனை சாதிக் கொடுமைகள் ஓர்ஆலிலை மூக்குப்போலிருக்கும் இச்சிறிய தென்னாட்டி லன்றி, ஆலிலைபோற் பரந்த வேறெந்த நாட்டிலுங் காணப் படுவதில்லை. மற்றை நாடுகளில் உள்ள பெண்பாலார் ஆண்பாலாரோடொப்ப எல்லா உரிமைகளும் பெற்று இனிது வாழ்ந்துவருதலால், அவர்கள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அறிவிலும் அழகிலும் ஆண்மையிலும் பிற நலங்கிளிலுஞ் சிறந்து உலகிற் பயன் பட்டு வாழ்கின்றனர். துன்பத்தில் உழலும் நம் இந்துமாதர் களின் வயிற்றிற் பிறக்கும் பிள்கைளோ அறிவில்லா மடையராய் அழகில்லா முசுக்களாய் அவற்றிற்கேற்ற தீய தன்மையுந் தீய செயலுமுடையராய்த் துன்பவாழ்விற்பட்டு விரைவில் உயிர்மாளுகின்றனர்! இவ்வளாவுஞ் சாதி வேற்றுமையால் விளைந்த துவினையாகும்! ஒரு பெண்ணுக்கு ஏற்ற இளைஞன் எந்த மரபிற் பிறந்தவனா யிருந்தாலும், அவள் அவனை விரும்புவாளாயின் அவனுக்கே அவளை வாழ்க்கைப்படுத்துதல் வேண்டும். அப்போதுதான் மகளிர்க்குக் கற்பொழுக்கம் நிலைபெறும். ஏலாதவன் ஒருவனுக்குப் பிணைக்கப்பட்டவள் தனக்கேற்றவனைக் காண நெருங்கால் அவனை விரும்பாது இராள். இஃது எல்லா மக்களிடத்தும் மாற்றமுடியாத இயற்கையாக இறைவனால் அமைக்கப்பட்டிருக்கின்றது. முற்றுந்துறந்த முனிவர்களும், மக்களினுஞ் சிறந்த தேவர்களும் இவ்வியற்கையைக் கடக்கமாட்டாது. தத்தளித்தனரென்றால், எளிய மக்கட் பிறப்பினரான ஏழை இளம்பெண்களைக் குற்றஞ் சொல்லுதல் அடுக்குமோ! ஓர் இளைஞன் தனக்கு இசையாதவளைத், தனக்குமேல் ஆண்டின் மூத்த ஒரு கிழவியை மணக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், அவன் உள்ளம் எப்படிக் கொதிக்கும்! அவன் அவ்வேற்பாட்டுக்கு இணங்கி நடப்பனா? அப்படித்தானே ஏழை யிளம் பெண்கள் மனமும் இருக்கும்! ஆதலாற் பெண்மக்களை அவர் தமக்கு ஏறற ஆண்மக்களோடு மணஞ் செய்வித்தலே உடனே செயற்பாலது. சாதிக் கட்டுப்பாடுகளால் மகளிர் ஒழுக்கப் பிழைபடுதலும், அதனாற் பல தீங்குகள் விளைதலும் நாளுக்குநாட் பெருகுகின்றன! ஒரு சிறு சாதிக்குள்ளேயே நல்ல மணவாளன் கிடைத்த லரிது; ஒருவன் இருந்தாற் பெண்களைப்பெற்றோரிற் செல்வராய் உள்ளோர் போட்டிபோட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான தொகைகளைக் கொடுத்து அவனை விலைக்கு வாங்கி விடுகின்றார்கள்! அங்ஙனம் விலைக்கு வாங்கப்பட்ட மணமகன் மேலுமேலுந் தன் மனைவியின் வழியே பொருள் பறிக்கும் பேரவாவுடையனாய்ப் போதலின், அவன்தன் மனையாளை இடையறாது துன்புறுத்துகின்றான். அதனால் அவ்விருவர்க் குள்ளும் உயர்ந்த காதலன்பு இல்லாதாகின்றது. கொழுநனும் மனைவியும் அன்பிலரானால் இல்வாழ்க்கை வெறும் பாழாகின்றது. இனிப் பொருள் கொடுத்து மணமகனைப் பெற வழி இலாதவரோ தமது சாதியைக் கடந்து தாண்ட மாட்டாராய் இசையாதவனுக்குங் கிழவனுக்கும் பெண்ணைக் கொடுத்துத் துன்புறுகின்றனர்! தன் கழுத்திற்குக் கயிறு தானேயிட்டுக்கொண்டதுபோல உண்மையில் இல்லாத சாதிவேற்றுமையினைத் தாமாகவே வகுத்துக்கொண்டு இவர்கள் இங்ஙனமெல்லாந் துன்புறு வதேன்! நல்லராய்த் தூயராய் இருப்பார் எக்குடிப் பிறந்தவராயிருப்பினும் அவர்க்கு மகளைக் கொடுத்தலும் அவர்பால் மகட்கோடலும் எல்லாருந் துணிந்து செய்குவ ராயின், மனைவிக்கேற்ற கணவனும், கணவர்கேற்ற மனைவியும் வாய்ப்பர். அதனால், இல்லற வாழ்க்கை உயர்ந்த தூய இன்பவாழ்க்கையாம். இப்போதுள்ள துன்பங்களும், மணமக்களை விலைகொடுத்து வாங்குதலும் ஒழியும். மகளிரது கற்பொழுக்கமும் எவருஞ் சொல்ல வேண்டாமலே இனிது நிலைபெறும். இனிப், பிறசாதியாரிலிருந்து தூயராய் வருவார் கடைப்பிடியாய்ச் செயற்பாலதும் ஒன்றுண்டு. இழிந்தகுடி ஒன்றிற் பிறந்தோர் அதற்குரிய இழிந்த தன்மைகளை விட்டுத் தூயராய் வரும்போது, தம்மை மீண்டும் அவ்விழிந்த குடிக்கு உரிய பெயராற்கூறித் தம்மைத்தாமே தாழ்வு படுத்திக்கொள்ளல் ஆகாது. ஒரு தூயவர் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ள வழிதேடவேண்டுமே யல்லாமற், பிறர் தம்மை உயர்த்துவார் என்று நம்பியிருத்தலாகாது. ஏனெனில், நம்மனோர் சக்கையைப் பிடித்துச் சாற்றை ஒழுகவிடும் பன்னாடையைப் போல்வர்; உயர்ந்தார் ஒருவர் பால் உள்ள குற்றங்களை ஆராய்ந்து அவற்றையே பேசும் நீரர் அல்லாமல், அவர்பால் உள்ள உயர்ந்த நலங்கைப் பேசும் இயல்பினர் அல்லர். ஆதலால், இத்தகைய தீய மக்களிடையே தூயராய் உயர்வார் தமது இழிகுடிப் பிறப்பையுரையாது, தம்மைச் சைவர் எனவும் பார்ப்பனர் எனவுங் கூறி யொழுகுதல்வேண்டும்; தம்மோடு உடனிருந்து உணவுகொள்ளாதார் வீட்டில் தாமும் உணவெடுத்தல் ஆகாது, இம்முறையை விடாப்பிடியாய்க் கொண்டு ஒழுகினாற்றான் கீழோரில் தூயராய் வருவோர் உயரக்கூடும் இவ்வாறு நாளடைவிற் செய்தே பார்ப்பனருஞ் சைவரும் உயர்ந்தனர். இம் முறையைக் கைப்பற்றித் தூயராவார் எல்லாருந் தாமும் ஒருமையுற்றுப், பிறர் எல்லாரையுந் தூயராக்கி ஒருமைப்படுத்திச், சாதிவேற்றுமைகளை அறவே யொழித்து எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய தந்தைக்கு இனிய புதல்வராய் இனிது வாழ்வாராக! சாதி வேற்றுமையும் போலிச்சைவரும் - முற்றும் - முதற் பதிப்பு முகவுரை கி.பி. 1921 ஆம் ஆண்டு மார்கழித் திங்களில் யாம் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்பர்களால் அழைக்கப்பட்டு, அங்கே விரிவுரை நிகழ்த்தச் சென்று, யாழ்ப்பாண நகரத்தும் அதனையடுத்துள்ள பல ஊர்களிலுஞ் சைவசித்தாந்தப் பொருள்களையுந் தமிழ்ச்சிறப்புகளையும் எடுத்துப் பல விரிவுரைகள் நிகழ்த்தினேம். அவ் விரிவுரைகளை யெல்லாம் பெருந்திரளான அன்பர்கள் ஆங்காங்கு வந்துகேட்டு இன்புற்றனர். கடை முறையாக யாம் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படுதற்குச் சில நாட்களின்முன், அஃதாவது கி.பி. 1922 ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள் அன்று யாழ்ப்பாண நகரமண்டபத்தில் மாலை 6 மணிக்குத் துவங்கித் தமிழர் நாகரிகம் என்னும் பொருளை விரித்துப் பேசினேம். தமிழர் நாகரிகத்தின் வரலாறுகளை அவ்விரிவுரை புதுமுறை ஆராய்ச்சியால் நன்கெடுத்து விளக்கினமையால், அவற்றை ஆண்டுக் குழுமியிருந்து கேட்ட அறிவுடை அவையத்தார் எல்லாரும் அவ் விரிவுரையை மிக வியந்து பாராட்டினர். அவ் விரிவுரையின் அருமை இலங்கையிலும், யாழ்ப்பாணத்து நன்மக்கள் மிகுதியாய்ச் சென்று குடியேறி வாழும் மலாய் நாடுகளிலும் விரைந்து பரவலாயிற்று. யாழ்ப்பாணம், கந்தரோடையிலிருந்து சென்று மலாய் நாட்டில் இரெங்கான் என்னும் ஊரிற் புகைவண்டிநிலை உதவித் தலைவராய் (Assistant station Master) அலுவலில் அமர்ந்திருந்த திருவாளர் ந.சி. கந்தையா அவர்கள் சைவசித்தாந்த உண்மைகளையுந் தமிழின் அரும்பெருஞ் சிறப்புகளையும் நாடெங்கும் பரவச் செய்வதில் நிரம்பக் கருத்தூன்றினவர்களாதலின் தமிழர் நாகரிகம் என்னும் அவ் விரிவுரையை ஒரு நூலாக அச்சிட்டு வெளியிடும்படி எம்மைக் கேட்டுக் கொண்டதோடு, செகமத் என்னும் ஊரில் அரசினர் மருத்துவ விடுதியில் (Government Hospital) அலுவல் பார்க்குந் திருவாளர் குமாரசாமி அவர்களை ஊக்கி, அவர்களும் அவர்களின் நண்பர் சிலருமாக ஒருங்கு சேர்ந்து அந்நூற் பதிப்புச் செலவுக்கு இருநூறு ரூபா பொருளுதவி செய்யுமாறும் புரிந்திட்டார்கள். தமிழில் இத்தகைய புதுமுறை ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதற்கு உதவி செய்தலினுஞ் சிறந்த அறம் வேறு இல்லை. இவ்வுயர்ந்த அறத்தைச் செய்துவருந் திருக்கந்தையா அவர்கட்கும் அவர்களின் நண்பர் திருக் குமாரசாமி அவர்கட்கும் அவர்களோடு ஒத்து உதவி செய்த மற்ற நண்பர்கட்கும் யாம் பெரிதும் நன்றி செலுத்துகின்றேம். கல்விவளர்ச்சியின் பொருட்டுப் பல நன்முயற்சிகளை யாம் இடைவிடாது செய்துவருதலால், தமிழர் நாகரிகம் என்னும் இதனை எழுதி வெளியிடுதற்கு அமயம் வாயாது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. பிறகு, நாட்டுக்கோட்டைச் செட்டிமார் முன்னேற்றத்தின் பொருட்டு வெளியிடப்படுந் தனவைசிய ஊழியன் என்னும் இதழில் (கி.பி. 1923 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 12 ஆம் நாள்) அதன் தலைவர் வேளாளர் உண்மை வரலாறுகளை அறியாமல் அவரைச் சூத்திரர் என்று இகழ்நது, தம் மரபினரில் உள்ள ஆடவர்கட்கு வேளாள மரபினரிலிருந்து பெண்கள் எடுத்து மணஞ் செய்வித்துக் கொள்ளுதலைப்பற்றிப் பேசியவிடத்துத், தாம் வைசிய வகுப்பினராகலான் தம்மவர் தம்மிற்றாழ்ந்த சூத்திர வகுப்பினரான வேளாளரிடமிருந்து பெண்கள் எடுத்து மணஞ் செய்து கொள்ளல் முறையேயாம் என்று எழுதிய கட்டுரை ஒன்றைக் கண்டேம். அப்போது நமக்கு நண்பராயுள்ள சைவ வேளாளர் சிலர் வேளாளரின் பண்டை உண்மை வரலாறுகளை ஆராய்ந்து ஒரு கட்டுரை விரைந்தெழுதும்படி எம்மைப் பெரிதுவேண்டினர். பண்டைக்காலந் தொட்டு நம் செந்தமிழ் மக்களில் நாகரிகத்தாற் சிறந்து வாழ்ந்து, தமிழ்மொழியையுஞ் சிவ வழிபாட்டையும் நிலைநிறுத்தி ஆரியரையுந் திருத்தி நல்வழிப் படுத்தினோர் வேளாளரே என்பது எமது ஆராய்ச்சியில் நன்கு புலப் பட்டமையால், ‘வேளாளர் யாவர்? என்பதனை விளக்குகையில் தமிழரது நாகரிகத் தையும் உடன் விளக்க வேண்டுவது இன்றியமையாததாய்த் தானே வந்து கூடிற்று. ஆகவே, யாம் முன்னர் எழுதக் குறித்திருந்த தமிழர் நாகரிகம் என்பதனையும் இதன்கண் விரித்து விளக்க இடம் பெற்றேம். ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகும் முன்னரே தமிழர் நாகரிக வாழ்க்கையில் முதிர்ச்சிபெற்று நின்று, பின்னர்த் தம்மொடு வந்து கலந்த அவ்வாரியரைத் திருத்தினமை இதன்கண் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. பழந்தமிழ் நூலாராய்ச்சியின்றி, வட நூற் பயிற்சி ஒன்றேயுடையார் ஆரியரை உயர்த்துத் தமிழரை இழித்துக் கூறுவனவெல்லாம் பொருந்தாமையுந், தமிழரே எவ்வாற்றானும் உயர்ந் தோராதலும் இவைதம்மை ஆராயாதார்க்குப் புதுமையாய்த் தோன்றினும், யாம் ஆராய்ந்து சான்றுகளோடு உரைப்பன வற்றை நடுநிலை வழாது நின்று காண்பார்க்கு எம் உரையின் மெய்ம்மை தானே விளங்குதல் திண்ணம். - மறைமலை அடிகள் இரண்டாம் பதிப்பு முகவுரை இவ்விரண்டாம் பதிப்பிற் பல புதியகுறிப்புகள் விரித்தெழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முற்பதிப்பில் இருந்தவைகளிற் சிற்சில திருத்தங்களுஞ் செய்யப்படிருக் கின்றன. இவ்வாறற்றால் இந்நூல் முன்னையினும் ஒருபங்கு கூடப்பெருகிவிட்டது. இனித் தமிழருட் சிறந்த வேளாளர் நாகரிகத்தை விளக்கவே தமிழரது நாகரிகமுந் தானே பெறப்படுமாகலானும், முதற் பதிப்புக்கு வைத்த `தமிழர் நாகரிகம்’ அல்லது `வேளாளர் யாவர்? என்னும் இருபெயர்கள் வழங்குதற்கு இடர் பயத்தலானும் இப் பதிப்புக்கு அவ்விரண்டையும் உள்ளடக்கிய `வேளாளர் நாகரிகம் என்பதனைப் பெயராக அமைத்தாம். பல்லாவரம் மறைமலையடிகள் கி.பி. 1927 Preface to the Second Edition The first edition of this work was published in November, 1923 and 500 copies of it were sold within four years - a period too short for the sale of a Tamil book of this kind which in contradistinction to the current fashion for a mixed kind of Tamil prose, is written in a scrupulously pure Tamil style, setting forth at the same time views of a revolutionary character in the sphere of social, religious and historical ideas of the Tamil people. In point of truth the views themselves are neither strange nor revolutionary, being the outcome of a comparative study carefully made of both Tamil and Sanscritr literature. If they appear strange surely they must appear so, to many it is because their knowledge is partial: and where that knowledge claims to be derived from the literatures of the two languages, it does not go beyond the pale of modern Puranic literature of the two. No doubt, beneath the legendary accounts of Puranas critics of trenchant intellect - such are rarely to be met with in this country, may detect facts of great value for studying the history of ancient people, but others, who are untrained in the critical and historical methods of looking at things and events, take every bit of them as so many literal truths. People in every country, befopre they get the benefits of an excellent education, are moree credulous than children, since children cannot rest satisfied in a blind belief with respect to a certain thing or an occurrence, unless they receive satisfying answers to all they want to know about the one or the other. This, the self-interested persons know full well and such of them as are versed in the knowledge of a language know also how to work upon the people’s fancy by making that language as a medium for their artifices. This was how the huge body of Puranic literature came to be written first in Sanscrit and then translated into Tamil and other living languages in India. Sanscrit being the dead and not the spoken language understood by people, the authors of the Puranas adopted it is the means best suited to their purpose and said in them all that was to be said in their own interest and to the great disadvantage of the people. And as if to give a finishing and successful stroke to their artifices, not only did they uniformly conceal their human authorship of the Puranas, but they also attributed the composition of which invariably to Divine Beings such as Siva and Narayana. Being Divine utterances their contents were taught to be unquestionable under penalty of hell-fire to unbelievers. Having thus established the unquestionable authority of the Puranas, their authors, selecting for the basis a few cardinal facts, did their work excellently by exaggerating them so much out of all proportion, twisting them so much out of their shape, and combining them so much out of all hormony, that, to the degree they succeeded in the abnormal treatment of the subject, the legends appealed the more strongly to the minds of the credulous and led their belief to take deep root in them. As a consequence of this artifice people have become slaves to blind faith and ineradicable supersitition and they completely distrust that there can be anything as reason to question about their truth or untruth. Nay the very attitude of a person who dares to doubt the legend is repugnant to the people and they are sure to look upon him as their bitterest enemy and heretic. The hold which the Puranas thus have on the mind of the people and the intensity of the prejudice which they foster in their mind against a man who doubts them, one may best learn by nothing the strength of the Puranic belief even in those who have imbibed western education. Under this deplorable condition it is no wonder that Tamil books written on modern critical and historical lines should seem strange and revolutionary to men of such mental calibre. Still the sale of 500 copies within four years betokens a brightening prospect and authors of my type need not despair of a better condition in future. For man cannot always rest in ignorance. He is ever prompted by an innate desire to learn the nature and constitution of things and ascertain the causes that are at work within the heart of things. He is ever free to think on life and life -struggles and no power can restrain his thought nor can hold it eternally captive. To this freedom of thinking, the spread of western education is contributing its mighty and accelerating influence and we, on our part must do our utmost to bring the people to think for themselves and examine their beliefs in the lightr of reason before communicating them to their youngsters. The object of this book is to examine some of the important beliefs that have clustered around the mind of the people and to rid it of such beliefs as are likely to mislead them or to hamper their progress in the path of right knowledge. In the first place attention is directed to Velalas the civilized agricultural class of the Tamils, and to their origin, and organization. From references made to them, their occupation and social rank, in Tholkappiam the most ancient and existing Tamil work in all its entirety, the age of which goes back to 3500 B.C., it is shown that at a time when all the people except those who lived all along the equatorial regions, were leading the life of hunters or nomads, these Velalas attained perfection in the art of agriculture, built towns and strong forts, had been priests, kings and traders and by means of navigation occupied the whole of India settling in rich and fertile countries along the coasts and river - sides. When the Aryan hordes came from the north-west of Punjab and poured forth into the interior, it was the ten velala kings then ruling in the north that stopped their advance (See Ragozin’s Vedic India.). When after a while, the intellectual section of the Aryan nomads found it impossible to get admission into the Tamilian territories by combating with their kings, they sought it by peaceful means and were thereafter accorded a cordial reception and admitted to a high rank in the Tamilian society. To the few stray hymns brought by the Aryans, the Tamil kings added a greater number of their own: and, in imitation of their four Tamil vedas which treated of practical ethics, political economy, love and heavenly bliss, they classified the hymns into four books and called them ‘Vedas’. That the word ‘Veda’ is a pure Tamil one, is etymologically proved in the body of this work, by grouping a number of pure Tamil words all having a single root ‘Ve’ and cognate in meaning, After a century of laborious research in linguistic matters, oriental scholars in Europe and America are just now coming to recognise that not only was the Taqmilian civilization prior to the Aryan but it was also much superior to it and was the great formative force that modelled it after its own. (see prof. Rapson’s Ancient India). In spite of the repeated efforts which the Taqmil kings made, as is manifest from the Chandogya, Kaushi taki and other upansihads, to divert the attention of the Aryan priests from costly rituals supposed to bring only transient benefits, to a contgemplation of eternal verities and problems of philosophy, the priests were persisting in the performance of bloddy sacrifices so much so that as time went on their conduct became more and more revolting to the delicate feelings of the humanitarian Velals. So long as the Tamil kings and rich trading communities yielded to the wishes and devices of the Aryan priests and lavished their wealth on rituals, the latter pretended to treat them with utmost respect by designating them the Kshatriyas and Vaisyas, while in fact they were positing themselves openly at the zenith in the scale of castes and casting down others secretly much below. But from the moment the kings and nobles and others began to suspect the motives of the Aryan priests, these supercilious parasites gave up their bloody sacrifices but devised other effective means to such the wealth of the Tamilians. At first they brought all the Tamils under the three denomination of Kshatriya, Vaisya and Sudra, formulated rigid rules exclusively for each and ordained numerous ceremonies toeach, doing all these, byu means of a dead language Sanscrit, as if in the interest of the people’s welfare both here and hereafter, but in fact to establish their supremacy among them and make their priestly help seem indispensable to the people for consultin them on such rules and conducting the ceremonies prescribed for each. In this design the Aryan priests succeeded so well, that the Tamils whether kings or nobles, rich or poor, learned or ignorant, all have become thorough slaves no only to the Aryan priests but also to all who have joined the Aryan fold and bear the name of brahmin. After this the further work of vilifying the Tamils was made much easier, and all those who, in course of time, styled themselves brahmins discovered it, to their great benefit and glory, to efface the three grades of distinctions into which their predecessors classed the Tamils and to put them all together under the generic term ‘Sudra’ which means but the contemptuous menials as a whole. But in the Tamil country nobody will call himself a Sudra, or a Vaisya or a Kshatriya. The Tamils are either agriculturists or traders, artisans or labourers; every class of people follows a hereditary profession and calls themselves by the name of that profession. But quite recently a great mania has taken possession of some classes of people whose professions though much useful are looked upon as low by brahmins and their imitators, to bring themselves under the Aryan appellations of brahmin, kshatriya and vaisya and escape being called the Sudra. This mania is setting one class against the other and breeds enmity and arrogance in each. All this mischief and injustice of classifying the Tamils who are above such caste iniquities, are exposed in the body of this treatise and remedial measures suggested. Unfortunately owing to the influfence of brahmins, European scholars devoted their attention exclusively to Sanscrit and have acquired the most amazing mastery in it. Had they spent half so much labour on ancient Tamil classics, the result would have been more fruitful, more accurate and more enlightening in the study of ancient Indian history, Philosophy and religion.My truth dispel falsehood and love overcome hate and God who is both truth and lvoe illumine our understanding! The Sacred Order of love, Vedachalam Pallavaram 20, July, 1927 பொருளடக்கம் பக்கம் 1. வேளாளர் வாழ்க்கை 187 2. ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை 198 3. ஆரியர் வேளாளரைத் தாழ்த்தச் செய்த சூழ்ச்சி 202 4. அருளும் அன்பும் உடையாரே உயர்ந்த சாதியார் 205 5. ஆரியப் பார்ப்பனர் தமிழையுஞ் சிவத்தையும் இகழ்தல் 211 6. வேளாளர் ஆரியத்தையும் பார்ப்பனரையுங் கொண்டாடல் 214 7. தொல்காப்பியரும் வேளாளரும் 217 8. வடநாட்டிற் குடியேறிய வேளாளர் 223 9. இந்தியாவின் வடமேற்கிற் குடிபுகுந்த ஆரியரின் புலையொழுக்கம் 225 10. வேளாளர் ஆரியரை அருவருத்து ஆரியத்தில் அறிவு நூல்கள் இயற்றினமை 230 11. மாயாவாதி ஒருவர் உருத்திரவழிபாடு தமிழரதன்று என்றது பொருந்தாமை 235 12. நடுநிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திர வழிபாடு தமிழரதென்றமை 242 13. உருத்திரனிலுஞ் சிறந்த சிவத்தைத் தமிழர் மறைத்து வைத்தமை 246 14. தமிழர்கள் `உபநிடதம் , `சாங்கியம் முதலிய அறிவுரை நூல்கள் வகுத்தமை 251 15. இந்திரன் முதலிய பெயர்கள் சிவத்தைக் குறியாமை 252 16. ஓம் என்னும் பிரணவந் தமிழுக்கே உரித்தாதல் 256 17. வேளாளர் உபநிடதங்கள் இயற்றினமைக்குச் சான்று 258 18. புராண இதிகாசக் கருத்து 260 19. ஆரியர் தம்மை உயர்த்தச் செய்த சூழ்ச்சி 262 20. சேக்கிழாரும் வேளாளரும் 264 21. பழைய வேதங்களென்பன தமிழ் மறைகளேயாம் 270 22. மக்கட் பிறவியின் இழிபும் ஒப்பும் 288 23. தூயராவார் எல்லாம் வேளாளர் ஆதற்கு உரியர் 290 24. ஆரியச்சேர்க்கை தமிழர்க்கும் தமிழ்க்கும் ஆகாது 292 1. வேளாளர் வாழ்க்கை இப்போதிருக்குந் தமிழ்நூல்களில் மிகப் பழையதாகிய தொல்காப்பியத்தில் வேளாளர்களும் அவர்களுக்கே சிறப்பாக உரிய உழவுதொழிலும் ஒருங்கேவைத்துச் சொல்லப் படுதல் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. தொல்காப்பியம் ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாகையால், அதிற் குறிப்பிட்ட வேளாளர்கள் அந்நூலுக்கு முற்பட்ட காலத் திலேயே அஃதாவது ஆறாயிர ஆண்டுகளுக்கு முன்னரேயே உழவு தொழிலைக் கண்டறிந்து பெருக்கி, அதனால் தாமும் நாகரிகத்திற் சிறந்து, பிறரையுஞ் சிறப்புறச் செய்து வாழ்ந்தமை புலனாம். ஆடு மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டு, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோரிடத்திற் குடியேறிக், கடைசியாக இப் பரத நாட்டிற் புகுந்த ஆரியர் அஞ்ஞான்று வடக்கே வாழ்ந்த வேளாளரின் உழவு தொழிற் சிறப்பும், அதனால் அவர் பெற்ற நாகரிக வாழ்க்கையுங்கண்டு வியந்து அவ் வேளாளரை அண்டிப் பிழைக்கலாயினர். வேளாளருந் தமக்குள்ள செல்வப் பெருக்காலும், இரக்க நெஞ்சத்தாலுந் தம்பால் வந்து தமது உதவியை அவாவிய ஆரியர்க்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமுந் தந்து பலவாற்றாமலும் அவர்களைப் பாதுகாத்துவந்தனர். ஆகவே, வேளாளர் என்னுஞ் சொல் ஈகையுடையார் என்னும் பொருளில் அவர்க்கே வழங்கி வரலாயிற்று. வேளாண்மை என்னுஞ்சொல் இங்ஙனம் பண்டுதொட்டு ஈகைப் பொருளில் வழங்குதல், வேளாண்மை யுபகாரம் ஈகையும் விளம்பும் என்னும் பழைய திவாகரச் சூத்திரத்தால் விளங்கும். உழவுதொழிலோ மிகவும் வருத்தமான தொன்று, உழவு தொழிலைச் செய்பவர்கட்கே வருத்தம் இன்னதென்பது தெரியும்; அதனைச் செவ்வையாய்ச் செய்து முடிப்பதற்கோ முன்பின் ஆராயும் நுண்ணறிவு வேண்டும். ஆதலால், அதனைச் செய்வார்க்கே உயர்ந்த அறிவும் அவ்வறிவினைப் பயன் படுத்தும் முறைகளும் விளங்கும். ஆதலினாற்றான், வேளாளர்க்கு இரக்கமும் அறிவும் ஈகையுந் தொன்றுதொட்டு வரும் இயல்பு களாகக் கூறப்படுகின்றன. தம்மையொத்த மக்கள் வறுமை யாலும் நோயாலுந் துன்புறக் கண்டால், அவர்க்குள்ள அத்துன்பத்தின் கொடுமையினை நினைந்துருகி, அவை தம்மைப் பொருளாலும் மருந்தாலும் நீக்கவல்லவர்கள் வேளாளர்களே யாவர். பிறர் தரும் பொருளைப் பெற்றுத் தம் மெய்வருந்தாமல் இல்லத்திருந்து இனிது காலங்கழிப்பவர்க்குப், பிறர் படுந்துயர் தெரியாதாகை யால் அன்னவர் வறியோருக்கும் நோயாளர்க்கும் பிறர்க்குஞ் சிறிதும் இரங்கார். ஆதலினாற்றான், வேளாள ரல்லாத பிறர் பிறர்க்கு உதவி செய்தல் அரிதாயிருக்கின்றது. ஈகையும் விருந்தோம்பலும் வேளாளர்க்கே சிறந்தனவாக வைத்து நூல்கள் ஓதுதலும் பின்னே காட்டப்படும். இனித், தம்மோடொத்த மக்களின் துயர் களைதலேயன்றி, மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை கோழி கொக்கு முதலான சிற்றுயிர்கள் படுந் துன்பத்தையும் நன்குணர்ந்து, அவைகட்குத் தம்மாலும் பிறர் தம்மாலுந் தீங்கு நேராதபடி கொல்லா அறத்தை வளர்க்கவல்ல ஆற்றலும் வேளாளர்க்கே உரித்தாயிற்று. உயிரோடிருக்கும் மக்களுக்கும் மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுக்கும் உதவியாற்றுதலோடு அமையாது, தம்மைப் பெற்று வளர்த்துப் பெரியராக்கிய தம் மூதாதைகளின் பேருதவியையும் நினைந்து, அவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகங்கட்குச் சென்ற பின்னும், அவர்களது உயிர் தூய பிறவியையோ பிறவியொழிந்து இறைவன் திருவடியையோ அடையுமாறு இறைவனை வேண்டி வழுத்துதலும் வேளாளர்க்கே உரித்தாயிற்று. இனித், தமதறிவு வளர்ச்சிக்கும் முயற்சியின் ஈடேற்றத்திற்கும் இன்றியமையாத வழிவகைகளைக் காட்டி அவ்விரண்டினுஞ் சிறந்த தம்முன்னோர்கள் எழுதிவைத்த நூல்களை ஓதி, அவ்வாற்றாற் கல்வியைப் பரவச்செய்தலும் வேளாளர்க்கே சிறந்ததோர் அறமாயிற்று. ஆகவே, ஈகைக்குப் பெயரான வேளாண்மை என்னுஞ் சொல், அவ் வீகைக்குக் கருவியான பயிர்த்தொழிலுக்கும் பெயராயிற்று. பின்னர் அவ்விரண்டு தொழில்களையும் ஆள்வாரான வேளாளர்க்கும் அது பெயராயிற்று. இவ் வேளாளர் ஏனை மக்களை நோக்கிச் செய்யும் ஈகையும் விருந்தோம்பலும் மக்கள்வேள்வி (மாநுடயாகம்) எனவும், ஏனைச் சிற்றுயிர்களைப் பாதுகாத்தற் பொருட்டு அவர் மேற்கொண்டு ஒழுகுங்கொல்லா அறம் உயிர்வேள்வி (பூதயாகம்) எனவும், இறந்து பட்ட தம் முன்னோரை நோக்கிச் செய்யும் நன்றிக்கடன் தென் புலத்தார் வேள்வி (பிதிர்யாகம்) எனவும், இவ்வாறு பிறர்க்காற்றும் உதவி பயன்தரற் பொருட்டு இறைவனை நோக்கிச் செய்யும் வழிபாடு கடவுள் வேள்வி (தேவயாகம்) எனவுந் தமக்கும் பிறர்க்கும் அறிவை விளக்கி முயற்சியைப் பயன் பெறுவிக்கும் நூலோதுமுறை கலைவேள்வி (பிரமயாகம்) எனவும் ஆன்றோரால் வகுத்துரைக்கப்பட்டன. எனவே ஈகையும் ஈகைக்குக் கருவியாவனவும், ஈகையைப் பாராட்டும் நன்றிக்கடனும் ஈகையைப் பயன்படுத்துமாறு வேண்டும் வழிபாடும் வேள்வி என்னும் பெயர்க்கு இயைபுடையவாய் நிற்றல் கண்டுகொள்க. கொல்லா அறம், சிற்றுயிர்கள் தத்தம் உடம்புகளில் நின்று அறிவு விளங்குதற்கு உதவி செய்வதாகலின், அதுவும் வேள்வி என்னும் பெயர்க்குப் பெரிதும் உரிமை பூண்டு நிற்றல் கண்டு கொள்க. இங்ஙனமாக ஐவகை வேள்விகளையும் ஆள்பவராகலின், பண்டைத் தமிழரில் உழவுதொழிலாற் சிறந்து நாகரிக வாழ்க்கையை வகுத்த நன்மக்கள் வேளாளர் எனப்படுவாராயின ரென்பது. உழவுதொழிலை யறிந்து அதனைத் திறமையாகச் செய்யத் தெரியாத காலங்களில், மக்கள் உண்ணப் போதுமான உணவும் உடுக்கச் செவ்வையாக உடையும் இன்றி மிகவும் மிடிப்பட்டு உயிர்வாழ்ந்தனர்; காடுகளிலும் மலைகளிலும் உள்ள மான், மரை, கடம்பை, முள்ளம்பன்றி, ஆடு, மாடு முதலான விலங்கினங்களை அளவிறந்த வருத்தத்தோடு வேட்டமாடிக் கொன்று, அவற்றின் இறைச்சியையும் அரிதிற் கிடைத்த காய் கனி கிழங்குகளையும் அயின்று, தழைகளையும் தோலையும் உடுத்து, நாகரிகம் இன்னதென்றே தெரியாமல் மலைக்குகை களிலும் மரப் பொந்துகளிலும் இருந்து காலங்கழித்தனர். எவ்வளவோ தேடித்திரிந்தும் அவ் விலங்குகளும் காய் முதலியனவும் அகப்படாத காலங்களிற் பட்டினியும் பசியுமாயிருந்து அவர்கள் பொறுத்தற்கரிய துன்பத்திற் கழித்த நாட்களும் பல! வேட்டுவ வாழ்க்கையில் இப்போதும் நாகரிகமின்றி உயிர்வாழும் மலை வாணருங் கானவரும் நிரம்பவும் மிடிப்பட்ட நிலையிலிருத்தலை நாம் இஞ்ஞான்றும் நேரே சென்று காணலாம், இங்ஙனமாகப் பண்டைக்காலத்தில் வறுமையிற் கிடந்துழன்ற மக்களின் கொடுந் துன்பமெல்லாம், உழவு தொழிலை முதன்முதற் கண்டறிந்த அறிவுடை நன்மக்களாலேதாம் நீங்கின. தமிழ்மக்களுள் வேளாளர் உழவு தொழிலைக் கண்டறிந்த பண்டை நாட்களில், எகுபதி, சாலடி முதலான சிற்சில நாடுகளில் உறைந்த மக்கட் பகுதியினர் சிற்சிலரைத் தவிர, ஏனைப் பெரும்பாலார் எல்லாரும் உழவு தொழிலை அறியாராய் வேட்டுவ வாழ்க்கையிற் பெரிதும் வறுமைப்பட்டு வாழ்நாட் கழித்தனர். வேளாளர் உழவு தொழிலை நடாத்தி நாகரிகத்தைப் பெருக்கச் செய்த பண்டை நாளில், ஆரியர் வேட்டுவ வாழ்க்கையிலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர் வாழ்க்கையிலுமே இருந்தனர். அதனாலேதான், ஆரியரும் அவர் வழிப்பட்டாருஞ் செய்த நூல்களில் உழவு தொழில் இழித்துரைக்கப்பட்டிருப்பதோடு, அதனைத் தம் மினத்தவர் எவருஞ் செய்தலாகாதென்னுங் கட்டுப்பாடுங் காணப் படுகின்றது.1 ஆனாற், றமிழ வேளாளாரோ அவ்வுழவு தொழிலைத் தமது நுண்ணறிவாற் கண்டுணர்ந்து அதனைச் செவ்வையாகச் செய்து வந்தமையால், அத்தொழில் வேளாளர்க்கே சிறந்ததாக வைத்து வடமொழி தென்மொழியிலுள்ள நூல்களெல்லாம் ஒருமுகமாய் நின்று ஒத்துரைப்பவாயின. இவ்வாறு உழவு தொழிலை வேளாளர்கள் தோற்றுவித்து பிறகு தான் உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்திற்கும் மிடிப்பட்ட துன்ப வாழ்க்கை நீங்கிற்று. உணவுக்காக விலங்கினங்களைக் கொல்லுங் கொலைத் தொழில் நீங்கிற்று; அளவுக்குமேல் விளைந்த நெல் துவரை முதலான பண்டங்களைத் தம்போற் பசியால் வருந்தும் ஏனைமக்கட்கும் பகுத்துக் கொடுக்கும் ஈர நெஞ்சமும் ஈகையுங் கிளைப்பவாயின; விளைந்த பண்டங் களைப் பாதுகாத்து வழங்குதற்கு அரசனும் நாடு நகரங்களுஞ் செல்வமுங் கல்வியும் இன்பவாழ்க்கையும் இறைவன் வழிபாடும் ஒன்றன்மேலொன்றாய்ப் பெருகாலாயின. இன்னும் மிகுத்துக் கூற வேண்டுவதென்! இஞ்ஞான்றை மக்கட்கு வந்தள்ள நாகரிக வாழ்வெல்லாம் பண்டும் இன்றும் வேளாளர் கண்டறிந்து நடாத்தும் உழவினால் வந்தனவே யாமென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இங்ஙனம் எல்லாத் தொழிலுஞ் சிறந்ததாய் எல்லார் உயிர்வாழ்க்கைக்கும் இன்றியமையாததாய் உள்ள உழவு தொழிலைப் பண்டுதொட்டு நடாத்திவரும் வேளாளர் கொலையும் புலையும் நீக்கி நாகரிகத்திற் சிறந்தாராய் விளங்குதலின் அவரது பெருமை பழைய நல்லாசிரியர் இயற்றிய தமிழ் நூல்களிற் பாராட்டப்பட்டிருப்பதோடு, அஃது இன்றுகாறும் மங்காது ஏனை யெல்லா வகுப்பினர்க்குரிய பெருமையினும் மிக்கு விளங்காநிற்கின்றது. இவர்கள் தமக்குள்ள அறிவின் றிறத்தாற், காலமறிந்து நிலத்தைத் திருத்தி வளம்படுத்தி நெல் முதலான நன்செய்ப்பயிரும் துவரை முதலான புன்செய்ப் பயிரும் விளைவித்து, அவற்றால் வரும் பயன்களைத் தாமும் உண்டு பிறரும் உண்ணக் கொடுத்து, யாடு மாடு மீன் முதலான மற்றை உயிர்களைக் கொல்லாமலுங், கொன்று அவற்றின் ஊனைத் தின்னாமலும் அருளொழுக்கத்தில் இன்று காறுந் தலை நின்று வருகின்றார்கள். இவர்களது உண்மைப் பெருமையினை யுள்ளவாறுணர்ந்தே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், உழுவார் உலகத்தார்க்கு ஆணி எனவும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர். எனவும், இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் எனவும், உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை எனவும் அருளிச் செய்தனர். ஏனைத் தொழில் செய்வாரெல்லாந் தம துயிர்வாழ்க்கைக்கு வேளாளரையே நாடி நிற்றலின் அவரை உலகத்தார்க்கு ஆணி யென்றார். பிற தொழில்களைச் செய்வாரெல்லாம் பிறரிட்ட ஊழியஞ் செய்து அவரைத் தொழுது கொண்டு செல்பவராயிருக்க, வேளாளரோ பிறரெவர்க்கும் ஏவல் புரியாராய்ப் பிறரைத் தம் ஏவல் வழி நிறுத்தித் தமதுரிமையில் மேம்பட்டு வாழுமியல்பின ரென்பது தெரிப்பார் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார்; உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத எல்லாப் பொருள் களையும் வேளாளரே விளைப்பவராயிருத்தலின் அவர் பிறரிடத்துச் சென்ற இரந்து பெற்றுக் கொள்ள வேண்டுவது எதுவும் இன்றென்பதுந், தம்மை வந்து இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயவல்ல ரென்பதும் உணர்த்துவார். இரவார் இரப்பார்க்கொன்றீவர் என்றார்; இதனால் இரத்தற் றொழிலையே தமக்கு இயல்பாகவுடைய பார்ப்பன மாந்தரும் பிறரும் வேளாளரைச் சார்ந்தே பிழைப்ப ரென்பது பெற்றதாம். இனி, ஐம்புல அவாக்களைத் துவரத்துறந்த துறவோரது தவவொழுக்க மும் வேளாளரது உதவி இல்லையானின் நிலைபெறா தென்பார், உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம், விட்டேமென் பார்க்கு நிலை என்றார், இனித் தமது வெண் கொற்றக்குடை நீழலில் உலகத்தைப் பாதுகாக்கும் அரசரது அரசவாழ்க்கையும் வேளாளர்தம் வேளாண் வாழ்க்கையின் கீழ் அடங்கும் என்பதனையும் விளக்கிப், பல குடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். என்று ஓதிய தெய்வத் திருவள்ளுவர் கருத்தை உற்று நோக்கின் வேளாளரினுஞ் சிறந்த இனத்தினர் வேறில்லை யென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கும். இங்ஙனங் கூறிய திருவள்ளுவநாயனார் கருத்துக்கு இணங்கவே பண்டைத் தமிழ்ப் பாட்டாகிய பட்டினப்பாலை யுள்ளும் அதன் ஆசிரியர் உருத்திரங் கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்தி லிருந்த பழைய வேளாளரைப் பற்றிக் கூறுகின்ற விடத்துக், கொலை கடிந்துங் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் நல்லானொடு பகடு ஒம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்நிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசை உழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுகின்ற நன்னெஞ்சினோர் வடு அஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசுந் தொல்கொண்டித் துவன்று இருக்கை என்று கூறினார், கொலைகளவு நீக்கிக் கடவுளரை வணங்கியும் வேள்விகள் வேட்டும், எருது முதலியவைகளைப் பாதுகாத்தும், நான்மறை வல்ல அந்தணர்களின் புகழைப் பரப்பியும் விருந்தினர்க் குப் பல பண்டங்களைக் கொடுத்துஞ், சோறு தந்தும், நல்வினையினின்றும் பிறழாத அன்பு சுரக்கும் வாழ்க்கையினையுடைய கலப்பைத் தொழிலை விரும்பும் உழவராகிய வேளாளர் நடுவுநிலையில் நிற்கின்ற சிறந்த உள்ளத்தினராய்ப் பழியை அஞ்சி உண்மையே பேசித் தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பண்டங்களையும் ஒப்பாகப் பார்த்துத் தாம் பிறர் பொருள்களை விலை கொள்ளுங்கால் விலைக்கு மேல் அப் பொருள்களை மிக அளந்து வாங்காமலும், தம் பொருள்களைப் பிறர்க்கு விலைப்படுத்துங்கால் அவர் கொடுக்கும் விலைக்கு அவற்றைக் குறைய அளந்து கொடாமலும் ஊதியத்தை வெளிப்படையாகச் சொல்லி விற்பவர் என்பது இப் பகுதியால் நன்கு விளங்குகின்றது. இதனால், உழவுதொழிலும், அவ்வுழவு தொழிலாற் பெற்ற நெல் துவரை முதலான பல் பண்டங்களை விலைப்படுத்தும் வாணிக வாழ்கையும் பண்டுதொட்டு வேளாளர் ஒருவர்க்கே உரியவாய் வருதலுந் தெற்றென விளங்கா நிற்கும். இனிப், பழமைக் காலந்தொட்டே இரப்போராகிய பார்ப்பனச் சுற்றத்தை யும், உலகத்தைப் புரப்போராகிய அரசரையுந் தமது வேளாண் முயற்சியிலிருந்தும் வேளாளர்கள் உண்டாக்கிவந்தனரென்பது சிலப்பதி காரத்து நாடுகாண் காதையில், பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும் (148 - 150) என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறியவாற்றால் நன்கு புலப்படும். அதுவேயுமன்றித் தம்முள் நுண்ணறிவாற் சிறந்தாரை அறிவு நூல் ஓதுதற்குந் திருக்கோயில்களிற் கடவுள் வழிபாடு ஆற்றுதற்கும் ஒரு வகுப்பினராகப் பழைய நாளிலிருந்தே பிரித்துவைத்தார்கள்; இவர்களே தமிழ்நாட்டு அந்தணராவர்; இவர் தம்மை இக்காலத்தார் ஆதிசைவர் என்றுங், குருக்கள், பட்டர், நம்பியார் என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின்கண் உள்ள பழைய திருக்கோயில்களெல்லாந் தமிழ் மக்களால் அமைக்கப்பட்டுத் தமிழர்க்கே உரியவாகி வருதலால் தமிழ வேளாளரினின்றும் அந்தணராகப் பிரித்துவைக்கப்பட்ட இவ்வா திசைவ வகுப்பாரை யன்றி, ஆரியப் பார்ப்பனர் எவரும் இத்திருக்கோயிலிலுள்ள திருவுருங்களைத் தொட்டு வழிபாடு செய்தற்கு இடம்பெறாராயினர். இப்பண்டை வழக்கம் இன்று காறும் நடைபெற்று வருதல் காண்க. பழையநாளில் ஆரியப் பார்ப்பனர் ஆ எருது முதலியவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று வந்தமையின், அவர் தமிழ்நாட்டுக் கோயில்களுள் நுழைதற்கும் இறைவன் திருவுருவத்தைத் தொடுதற்குந் தகுதியிலராக ஒதுக்கி வைக்கப்பட்டனர். கொலைத் தொழில் புலைத்தொழில்களைக் கைக்கொண்டு ஒழுகினமை பற்றி வேளாளரால் தாழ்த்தப்பட்ட ஆரியப் பார்ப்பனர் பையப் பைய அவ்விழி தொழில்களைக் கைவிட்டுத் தம்மைத்தாமே உயர்த்துப் பேசிக்கொண்டு, தம்மைத் தாழ்த்திய வேளாளர்களைத் தாமுந் தாழ்த்துதற் பொருட்டு அவரைச் சூத்திரர் என்று வழங்கலாயினர்; அவரை மட்டுமோ! அவ் வேளாளரினின்று பிரிந்த ஆதிசைவ அந்தண ரையுங் கூடச் சூத்திரரெனக் கூறி வருகின்றார்கள்! இனி, வேளாளர் ஓதுதற்குங் கடவுள் வழிபாடு ஆற்றுதற்கும் தம்மினின்று ஓர் அந்தணக் குடியை வகுத்து வைத்தவாறு போலவே, போர் செய்தற்குரிய ஆற்றலுங் குடிகளைப் பாதுகாத்தற்குரிய அறிவு வலியுமுடைய வேளாண்மக்களைப் பிரித்து அரசாளுதற்கு வைத்தார்கள். பண்டைநாளில் மிழலைக் கூற்றத்தை அரசாண்டவனுங், கொடை கொடுப்பதிற் சிறந்தவனு மான வேள்எவ்வி என்னும் மன்னன் வேளாண் வகுப்பினனே யாவன், கடையெழு வள்ளல்களில் ஒருவனும், முந்நூறு ஊரையுடைய பறம்பு நாட்டிற்கும் பறம்பு மலைக்கும் அரசனுஞ், சைவசமயாசிரியருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாராலே கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங் கொடுப்பாரிலை என்று பாராட்டி யருளிச் செய்யப்பட்டவனு மாகிய வேள்பாரி என்னும் மன்னனும் வேளாள வகுப்பினனே யாவன்; துவரையை அரசாண்டவனுஞ், சிறந்த கொடையாளியும் ஆகிய இருங்கோவேள் என்னும் அரசனும் வேளாள வகுப்பினனே யாவன். ஒருகாற் குமரிமுதல் இமயம் வரை ஒருமொழி வைத்து உலகாண்ட வேந்தர்பெருமானாகிய சோழன் கரிகாற் பெருவளத்தான், நாங்கூர்வேள் என்னும் வேளாண் தலைவனிடத்துப் பெண் கொண்டமை யானும், இக் கரிகாற் சோழனுக்குத் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் மன்னர் பிரான் அழுந்தூர்வேள் என்னும் வேளாண் தலைவன்பால் மகட்கொண்டமையானும் பண்டைநாளிலிருந்து சிறந்த சோழ அரசர்களும் வேளாள வகுப்பினரேயாதல் நன்கு தெளியப்படும். இன்னும் பழைய நாளில் அரசாண்ட வேளாள அரசர்களை யெல்லாம் எடுத்துரைக்கப்புகின் இது மிக விரியுமென அஞ்சி, அவருட் சிலரையே ஈண்டு எடுத்துக் கூறினாம். இனி, வேளாளர் தமது உழவு தொழிலால் விளைவித்த பொருள்களை அறவோர்க்குக் கொடுத்தும் அவற்றால் அந்தணரைப் பாதுகாத்தும், அவை தம்மைத் துறவோர்க்கு எதிர்சென்று வழங்கியும், விருந்தினரை ஏற்று அவர்க்கு அருத்தியும், அவ் வாற்றானெல்லாங் குறைபடாமல் மிகுந்த பண்டங்களை விலைப்படுத்தும் பொருட்டு, அத் தொழில் செய்தற்கேற்ற கணக்கறிவும் இன்சொல்லும் இயற்கையே வாய்ந்தாராய் உள்ள தம்மினத்தவரில் ஒரு சாராரைப்பிரித்து அவரை வணிகராக நிறுத்துவாராயினர். இங்ஙனம் நிறுத்தப்பட்ட வணிக வேளாளரே தொன்றுதொட்டு இன்று காறுங் கொலைபுலை முதலியன தவிர்ந்த அறவொழுக்கத் தினராய் வேளாண் செட்டிகள் என்று பெயர்பெற்று வருகின்றனர். இனிக், கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் றாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுதொழிலுக்குந் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில் களைப் புரியும்படி ஏவி, அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப் பதினெண் வகுப்பினராவார்; கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பார், பாகர், பறையர் என்பவரேயாவர். இப் பதினெண் வகுப்பினருந் தத்தமக்குரிய தொழில்களைச் செய்துகொண்டு வேளாளர் ஏவல்வழி நின்று அவர்க்கும் அவரது உழவு தொழிலுக்கும் பயன்படுவாராயிருந்து வாழ்ந்துவருதலைத் தமிழ்நாட்டிலுள்ள வேளாள நத்தங்களில் இன்றும் நேரே காணலாம். இங்ஙனமாகத் தமிழகத்தில் முதன் முதல் உழவு தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலை புலை தவிர்ந்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரிகமும் உடைய வேளாளரே தமிழ்மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித், தம்மினின்று அந்தணர் அரசர் என்னும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்துவைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ்மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதினெண் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின்கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்து வரலானார்கள். மக்களின் தோற்றத்தையும் நாகரிகத்தையும் பெரிதும் வியக்கத்தக்கவாறாய் ஆராய்ந்தறியும் ஆங்கில நூலாசிரியர்களும் முதன் முதல் உழவு தொழிலைக் கண்டறிந்த மக்களிலிருந்தே நாகரிகந் தோன்றி வளர்ந்து வரலாயிற்று என்று இவ்வுண்மையைப் புலப்படுத்தியிருக் கின்றார்கள். தமது தாளாண்மையாற் கொலைபுலை கடிந்து ஈகை அறங்களை இத்தமிழகத்தில் நிலை நிறுத்தின வர்கள் வேளாளர் ஒருவரேயாதல் நன்குணர்ந்தே சைவ சமயாசிரியருள் முதல்வரான திருஞான சம்பந்தப் பெருமானும், வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே என்று திருவாய் மலர்ந்தருளினர். இத்துணைச் சிறந்த வேளாளர் நாகரிகத்திற்குப் பிறப்பிடமாய், ஏனை நாகரிக வகுப்பினர் எல்லாருந் தோன்றுதற்கு முற்றோன்றினவராய் இருத்தலின், இவர்கள் ஆரியர் கூறிய பிரம்ம சத்திரிய வைசியசூத்திரர் என்னும் நால்வகை வகுப்பினுள் ஒன்றினும் அடங்காராய் அந் நால்வகையினர்க்கும் முற்பட்டாராய்ச் சிறந்து விளங்குதல் நடுவு நின்று ஆராய்வார்க்கு நன்கு விளங்கும். இவ் வேளாளர் அன்பிலும் அறத்திலுஞ் சிறந்து நின்றாராதலின், எத்தகையோராயினும் எவ் வகுப்பினராயினுந் துன்புறக் கண்டால் அத் துன்பத்தை நீக்கும் பொருட்டுத் தமக்குள்ள பொருள்களையுஞ், சில நேரங்களில் தமது உயிரையுங்கூடக் கொடுத்துதவும் அத்துணை இரக்கநெஞ்சமும் அன்புங் கண்ணோட்டமும் உடையரென்பது இவர் தம் வரலாறுகளை ஆராய்தலால் நன்கு விளங்காநிற்கும். விருந்தினரை அகமும் முகமும் மலர்ந்து ஏற்று அவர்க்கு வேண்டுவன வெல்லாஞ் செய்து அவரை உவப்பித்தல் இவரது இயற்கை இஃது, இன்மையாற் சென்றி ரந்தார்க் கில்லையென்னாது ஈந்து உவக்குந் தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே என்னுந் திருஞானசம்பந்தப் பெருமான் அருளுரையால் தெளியப்படும். அடிக்குறிப்பு: 1. மனு 3, 64; 10, 83 84 2. ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை இத் தன்மையினரான வேளாளரை ஆரியர் கூறும் நால்வகைச் சாதிப் பெயரால் வழங்காமல் அவர் கொண்ட நாற்சாதியார்க்கும் முற்பட்டவராகவும் அந் நால்வரினும் மேற்பட்டவராகவும் கொள்ளுதலே பொருத்த முடைத்தாம். ஏனென்றால், வேளாளரினின்றே அந்தண வகுப்பும் அரச வகுப்பும் பிரிந்தமையின் இவர்களைப் பிராமணரென்றாவது சத்திரியரென்றாவது கூறுதல் பொருந்தாது; அல்லது ஆநிரை காத்து உழவும் வாணிகமும் நடாத்துதல் பற்றி இவரை வைசிய ரென்போ மென்றால், இவர்களுட் பலர் அந்தணராயும் அரசராயும் பண்டுதொட்டு வாழ்ந்துவரக் காண்டலால், இவர்களை அவ்வாறு வைசியரென்று வரையறுத்துக் கூறுதலும் ஆகாது. இனி, இவரைச் சூத்திரரென்று கூறுவோமென்றால், அது முற்றும் அடாத உரையாம். ஆரியர் கூற்றின்படி, சூத்திரரென்போர் பிராமணர் சத்திரியர் வைசியர் என்னும் மூன்று சாதியார்க்குங் குற்றேவல் செய்தல் ஒன்றே உடையரல்லது, வேறு ஏதோர் உரிமையும் ஏதோர் உடைமையும் ஏதொரு முதன்மையும் உடையரல்லர். மற்று, வேளாளரோ அந்தணராயிருந்து நூலோதல் ஓதுவித்தல் திருக்கோவில்களிற் கடவுளுக்கு வழிபாடு ஆற்றல் முதலான உயர்ந்த தொழில்கட்கு உரிமையும், அரசர்க்கு முடிசூட்டும் உரிமையும் அரசாளும் உரிமையும், பண்டுதொட்டுப் பெற்றாராய் வரக்காண்ட லானும், அரசர்களாயும் பெருஞ்செல்வர்களாயும் முன்னும் பின்னுமிருந்து வருகின்றமையின் அவர்கள் எல்லாச் செல்வங்களும் உரையராதல்தானே பெறப்படுதலானும், இவ்வாறெல்லாம் அறிவுஞ் செல்வமும் கல்வியும் வாய்த்த இவர்கள் தனிமுதன்மையுடையராயிருந்து எல்லார்க்குந் தம் பொருள்களை இரக்கத்தானும் அன்பானும் ஈந்து தம்மால் நிறுத்தப்பட்ட பதினெண் வகுப்பினர்பாலுந் தாம் ஏவல்வாங்கி வருதலன்றித் தாம் எவர்க்குங் குற்றேவல் செய்யாமை இரவார் இரப்பார்க்கொன் றீவர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல்பவர் என்னும் தெய்வத் திருவள்ளுவர் திருக்குறட்பாட்டுகளாலும், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும், உழவிடை விளைப்போர் எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அருளிச்செய்த திருமொழியானும், வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர், இன்மையாற் சென்றிரந்தார்க்கு இல்லையென்னாது ஈந்து உவக்குந், தன்மையார் எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய அருளுரையானும் பெறப்படுமாற்றானும் இவரைச் சூத்திரரென்னும் இழித்துரை யின்பாற் படுத்து வழங்கல் ஒரு சிறிதம் அடாதென்க. இன்னும் பண்டைக்காலந் தொட்டுச் சைவ வேளாளர்கள் கொலையும் புலாலுணவும் மறுத்துச் சிவ வழிபாடு இயற்றி வருகின்றமையின், புலாலுண்டுஞ் சிவவழிபாடு செய்யாமலும் இருக்கும் எந்த வகுப்பினரிடத்தும் உடன் உண்ணுதலும் உடன் கலத்தலுஞ் செய்யாமலே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் எல்லாச் சாதியார்களும் சைவ வேளாளர் வீட்டில் உணவெடுப்பர்; சைவ வேளாளர் வேறெந்தச் சாதியார் வீட்டிலும் உணவெடார். ஆரியப் பார்ப்பனர் பழைய நாளிற் புலாலுணவு கொள்வாரா யிருந்தமையின், அவர்கள் வேளாளராகிய தம்மைக் கண்டு புலால் மறுத்த பின்னும் வேளாளர் அவர்கள் பால் உணவு கொள்ளாமலே இருந்தனர். சிவதீக்கை பெற்ற சைவ வேளாளர் இந்நாளிலும் ஆரியப் பார்ப்பனர் வீட்டில் உணவெடார். இங்ஙனமாகச், சைவ வேளாளர் எல்லா வகையானும் உயர்ந்தாராய், ஆரியர்பால் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் அவர் தம்மை புறத்தொதுக்கி வந்தமை கண்ட ஆரியப் பார்ப்பனர் தாமும் அச் சைவ வேளாளரைத் தாழ்த்துதற் பொருட்டுத் தம் முன்னோர் எழுதிவைத்த மனு முதுலான மிருதி நூல்கட்கும் மாறாகச் சூத்திரர் என்னும் இழிந்தபெயரை வேளாளர்க்கு வைத்து வழங்கத் தொடங்கினர். மனு முதலான பழைய ஆரிய நூல்களின்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேளாளரைச் சூத்திரர் என்று சொல்வதற்கு ஒரு சிறிதம் இடமேயில்லை. மனு தர்மநூலின் ஒன்பதாம் அத்தியாயத்தின் இறுதியில், வைசியன் மறைநூல் ஓதியபின் திருமணஞ் செய்து கொண்டு ஆவைக்காத்தலும், உழவுதொழில் நடாத்தலுமாகிய முயற்சியினை மேற்கொண்டவனாயிருக்கவேண்டும். நான்முகன் ஆனிரைகளைப் படைத்து அவற்றைக் காக்கும் பொருட்டு வைசியனிடத்துங், குடிமக்களைப் படைத்து அவர்களை இம்மை மறுமையிற் காக்கும் பொருட்டுச் சத்திரிய பிராமணரிடத்தும் ஒப்புவித்தான். நாம் ஆக்களைக்காத்தல் வேண்டாமென்று வைசியன் நினைத்தல் ஆகாது. அவன் காக்கும்போது வேறெந்தச் சாதியானும் ஆக்களைக் காத்தல் கூடாது. முத்து மணி பவளம் உலோகம் ஆடை கருப்புரம் முதலிய நறுமணப் பண்டம் உப்பு முதலிய சுவைப்பண்டம் இவைகளுக்கு அவ்வந் நாடுகளில் உள்ள விலையில் ஏற்றக் குறைச்சல்களையுஞ் சரக்குகளின் நன்மை தீமைகளையும் வைசியன் அறிதல் வேண்டும். தருமமாக வியாபாரஞ்செய்து பொருளைப் பெருக்குதற்கு முயலல் வேண்டும். மற்ற தானங்களைவிட எல்லா உயிர்களுக்குங் கட்டாயமாக அன்னதானஞ் செய்தல் வேண்டும். என்று வைசியனுக் குரிய ஒழுகலாறுகள் வரையறுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இதனையடுத்துச் சூத்திர தருமத்தைக் கூறுங்கால், வேதநூல் ஓதியுணர்ந்து புகழ்பெற்ற இல்லறத்தானாகிய பிராமணனுக்கு ஊழியஞ் செய்வதே சூத்திரனுக்கு வீடு பேற்றை அடைவிக்கும் மேலான அறமாகும். உள்ளும் புறம்புந் தூயன் ஆகிய உயர்ந்த சாதியானைக் கொடுமையாகப் பேசாமல், பிராமணனுக்கும், அவனில்லா விடின் சத்திரியனுக்கும், அவனில்லாவிடின் வைசியனுக்கும் மேலான பணிவிடை செய்து கொண்டு செருக்கில்லாமல் நாடோறும் அவர்களை யடுத்திருக்கிற சூத்திரன் மேலான சாதியானாவன்! என்று சூத்திரன் ஊழியத்தொழில் ஒன்றற்கே உரியனாதலை அம் மனுதர்ம நூல் வலியுறுத்துக் கூறுகின்றது. ஆரியர்க்குரிய தரும நூல்களில் மிகச் சிறந்ததாகிய மனுதர்ம நூலின்படி பார்த்தாலும், ஆன்நிரை ஓம்பல் உழவும் வாணிகமும் நடாத்தல் என்னும் இத்தொழில்களையன்றி, எவர்க்கும் ஊழியஞ்செய்யுந் தொழிலினை மேற்கொள்ளாமல் தொன்று தொட்டு அறவொழுக்கத் தின்கண் வாழ்ந்து வருபவரான வேளாளரை வைசியரெனக் கூறலாமேயன்றிச் சூத்திரரெனக் கூறுதல் ஒரு சிறிதும் அடாது. வேளாளர்க்கு ஏவல்புரியும் ஏனைப் பதினெண் வகுப்பினரைக்கூட அவ்வாறு சூத்திரரெனக் கூறுதல் பொருத்தமாகாது. இனி, வடமொழியில் எல்லார்க்கும் பொது நூலாகிய அமர நிகண்டிலும் வைசிய வர்க்கத்தைச் சொல்லுமிடத்து உழவு வாணிகம் ஆனிரை ஓம்பல் என்னும் மூன்று தொழிற்கும் உரியார் வைசியரெனக் கூறப்பட்டிருக்கின்றனர். சூத்திரவர்க்கத்தைச் சொல்லுமிடத்துக், குயவர், கொற்றர், கைக்கோளர், துன்னர், கொல்லர், தட்டார், தச்சர், ஓவியர், நாவிதர், வண்ணார், கூத்தர், பாணர், வேடர், கள்விலைஞர், ஊன்விளைஞர், ஏவலர், இழிகுலத்தோர், மடவோர் என்னும் இவர்களே சூத்திர வகுப்பில் அடக்கிக் கூறப்பட்டிருக்கின்றனர். இவ் வடமொழிப் பொது நூலின்படி பார்த்தாலும், உயர்ந்தோருந் தலைவருங் காணியாளருமாகிய வேளாளரை இழிந்தோர்க்குரிய சூத்திரப் பெயராற் கூறுதல் பெரிதுங் குற்றமுடைத்தாதல் காண்க. 3. ஆரியர் வேளாளரைத் தாழ்த்தச் செய்த சூழ்ச்சி இனிக், குடியேறிப் பிழைக்கவந்த ஆரியப் பார்ப்பனரை அன்பாக வரவேற்று, அவர் இருக்க இடங்கொடுத்தும், அவர் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும் வழங்கியும், நூல் கற்க உதவிகள் புரிந்தும் அவர்க்குப் பலவாற்றான் நன்றிசெய்து அவரைப் பாதுகாத்த தமிழ் நன்மக்களாகிய வேளாளர்க்குத் திரும்ப நன்றி செய்தற்கு மாறாகத் தீட்டின மரத்திற் கூர் பார்த்தலோடு ஒப்ப, அவ்வாரியப் பார்ப்பனர் அவரை மிகவுந் தாழ்த்துதற்குக் கங்கணங் கட்டிக்கொண்டு,நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவரைச் சூத்திரரென வாய் கூசாது சொல்லுதற்குஞ், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திற்குப் பிற்பட்ட தமிழ்நூல் வடநூல்களில் அங்ஙனமே அவரைச் சூத்திரரென எழுதிக் கரவாய்ச் சேர்த்து விடுதற்குந் துணிந்து வரலானார். இப் பிற்பட்ட காலத்தில் எழுந்த துலுக்கர் அரசாட்சியால் நேர்ந்த பல குழப்பங்களில் அகப்பட்டு வேளாளரிற் கல்வி கற்பார் தொகை மிகச் சுருங்கிப்போகவே, ஆரியப் பார்ப்பனர் இழித்துக் கூறுஞ் சூத்திரர் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் தெரியாமல், அவ் வேளாளர் தாமும் அச்சொல்லைத் தமக்கு உரியதெனக் கொண்டு அச்சொல்லால் தம்மைத் தாமும் வழங்கிக் கொள்வாரானார்கள். இங்ஙனமே, இஞ்ஞான்றை இந்து சமயத்தவர் பலருந் தம்மை அஞ்ஞானிகள் என்று கிறித்துவ மதத்தினர் இகழ்ந்து கூறும் பெயரைத் தமக்கு ஓர் அணிகலனாக ஏற்றுக்கொண்டு, அஞ்ஞானிகள் என்னும் அப்பெயரி னாலேயே தம்மைத் தாம் சொல்லிக் கொள்கின்றனர்! ஐயோ! அறியாமையின் பெருமிதம் இருந்தவாறென்னை! இப் பிற்பட்ட காலத்தில் தோன்றிய புராணங்கள் பலவற்றிலும் ஆகமங்களிலும் பிற நூல்களிலும் ஆரியப் பார்ப்பனரும் அவர்வழிச் சார்ந்த தமிழ் அந்தணரும், வேளாரைச் சூத்திரரென வழங்குதற்கு வேண்டும் நிலையான ஏற்பாடுகளையெல்லாஞ் செய்து அவற்றின்கட் செருகி விட்டனர். ntshslj f‰wt® vtnuD« ï¥òu£Lfis¤ bjǪJ bfh©L, ntshsÇ‹ g©il tH¡fbthG¡f§ fbsšyh« Äf¢ áwªjdthÆU¤jÈ‹, ït®fis¥ giHa üšfbsšyh« ca®Fy¤âduhf ÄF¤J¡ Tw, ÚÉ® k£L« ïtiu¢ N¤âu® vd ïʤJ¡ TWjš v‹id? என்று அவ்வாரியப் பார்ப்பனரையும் அவர் வழிச் சார்ந்தாரையும் வினவினால், அப்போது அவர்கள் மிகவும் ஆழ்ந்த சூழ்ச்சியுடையராய்ச் சூத்திரரென்னும் பெயரை எடுத்து விடாமலும், அச் சூத்திரப்பெயர் கொண்டே அவரை அந்நேரத்தில் மகிழ்வித்தல் வேண்டியும் நீங்கள் சற்சூத்திரர் உங்களுக்கு ஊழியம் புரியும் ஏனையோரெல்லாம் அசற் சூத்திரர் எனக் கூறியும், அதனை நூல்களில் எழுதியும் அவரை ஏமாற்றி வந்தனர். அவ்ஏமாற்றங்களைத் தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சி யுணர்வில்லாதவர்களும் வடமொழியில் எவர் எவைகளை எழுதி வைத்தாலும் அவைதம்மையெல்லாம் ஆராய்ந்து பாராமற் கடவுள் அருளிச் செய்தனவாகவே நம்பி விடுவாருமான தமிழ் கற்றார் சிலர் தாம் வேளாளரா யிருந்துந் தம்மைச் சற்சூத்திரர் எனச் சொல்லிப் பெருமை பாராட்டிக் கொள்கின்றனர்! சூத்திரர் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் மடமை யுடையோர் பிறர்க்கு ஏவல்வேலை செய்வோர் என்பனவாதல் அமர நிகண்டினால் நன்கு விளங்குதலால், தம்மைச் சற்சூத்திரர் என்போர் தம்மை நல்ல மடையர் நல்ல வேலைக்காரர் என்று கூறி மகிழ்வாரையே ஒத்திருக்கின்றனர். தமக்கு உதவி புரிந்த வேளாளரைச் சூத்திரரெனக் கூறித் தாழ்த்தி வைக்கும் பொருட்டு ஆரியப் பார்ப்பனர் அதுவே கண்ணுங்கருத்துமா யிருந்து பல ஏற்பாடுகளைப் பிற்காலத்திற் செய்து வைத்த தல்லாமலுந், தமிழ்நாட்டில் வேளாளரே செல்வமுஞ் சீருஞ் சிறப்புங் கல்வியும் நன்னடையும் நாகரிகமும் வலிமையும் உடையராயிருத்தலால், அதனையுஞ் சிதைக்கும் பொருட்டு, அவர்க்கு அடங்கி அமைதியாய் வாழ்ந்த குடிமக்கள் பலரையும் அவர்கட்கு எதிரிகளாக்கல் வேண்டி அவருட் சிலரை சத்திரியர் என்றுஞ் சிலரை வைசியர் என்றுஞ் சொல்லித் தூண்டிவிட்டு, அவ்வாற்றால் அவர்கள் வேளாளரைத் தம்மிற் றாழ்ந்த சூத்திரரெனச் சொல்லி அவர்களோடு மாறாடி நிற்கும்படி செய்துவிட்டு, அவ்வாரியப் பார்ப்பனராகிய தாம் அவரெல்லாரினும் உயர்ந்தாராகத் தனி நின்று கொண்டு, அவரிடும் போரினைக் கண்குளிரக் கண்டு மகிழ்கின்றார்கள்! இவர் செய்த இப்பொல்லாத சூழ்ச்சியால், தமிழ்நாடடில் முன்னே ஒருவர்க்கொருவர் உதவியாய் ஒற்றுமை கொண்டு உறவாடி அமைதியாய் வாழ்ந்த குடிமக்களெல்லாரும் இப்போது பல்லாயிரம் பிரிவினராய்ப் பிரிந்து ஒற்றுமையிழந்து பகைமை மேற்கொண்டு, தமக்குரியவல்லாத சத்திரியர் வைசியர் என்னும் ஆரியப் பெயர்களைத் தாமாகவே புனைந்தனராய் மல்லாடி நாட்டின் நலத்தைக் கெடுக்கின்றனர்! ஊர் இரண்டுபட்டாற் கூத்தாடிக்கு இலக்கரம் என்னும் பழமொழிக்கு இணங்க ஆரியப் பார்ப்பனர் பழந் தமிழ் மக்களைத் தம்முட் போராடவிட்டு, அவரெல்லார்க்குந் தாம் மேலானவர்போல் தனி நின்று அவருடைய நலங்களையெல்லாந் தாம் கைப்பற்றி வருகின்றனர்! இனியேனும், இத் தென்றமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் தம் பழைய வழக்க ஒழுக்கங்களைப் பண்டைத் தனித்தமிழ் நூல்களின் உதவிகொண்டு ஆராய்ந்து தெளிந்து, தாம் சிக்கிக்கொண்ட ஆரியர் வலையினின்றுந் தம்மை விடுவித்துத், தம்மை உண்மையாக, உயர்த்துதற்குரிய தமிழ் முறையால் தம்மை உயர்த்தி ஒருமித்து வாழ்வதிற் கருத்தாய் விரைந்து முயலல்வேண்டும். 4. அருளும் அன்பும் உடையாரே உயர்ந்தசாதியார் தம்மை உயர்த்துதற்குரிய தமிழ்முறையாதென்றால் அஃது அறிவும் அன்பும் அருளும் உடைய ஒழுக்கமேயாகும். எந்த உயிர்க்குந் தீங்கு செய்யாத அருளொழுக்கமே எல்லா ஒழுகலாற்றினுஞ் சிறந்ததாய்த் தன்னை யுடையார்க்கு எல்லா உயிர்வினையுந் தரும். இது, கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் என்னுந் தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளால் நன்கு விளங்கும். எந்த உயிரையுங் கொல்லுதலும் ஆகாது. கொன்று அதன் ஊனைத் தின்னுதலும் ஆகாது. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்? என்று ஆசிரியர் திருவள்ளுவர் கேட்டலாற், கொலையும் புலையும் நீக்காதார் அருளுடையவர் ஆகார். ஆரியர் எண்ணிறந்த யாடு மாடு குதிரை முதலிய உயிர்களை வேள்விவேட்கின்றேமென்று சொல்லிக் கொண்டு கொன்று தின்றமையால் அவர் அருளுடையராகார்; அதனால் அவர் உயர்ந்தோராதலும் இல்லை. ஆதலால், அவரைப் பின்பற்றி, அவர் கூறிய பெயர் களால் தம்மைச் சத்திரியர் எனவும் வைசியர் எனவுஞ் சொல்லிக்கொண்டு உயர்வு தேடுதலால், ஒருவர்க்கு உயர்வு வந்துவிடமாட்டாது. கொலையும் புலாலுணவும் நீக்கி அருளொழுக்கத்தில் வந்து நிலைபெற்றால் மட்டும் ஒருவர் வேளாளரைப்போல் உயர்ந்தவராகலாம். இப்போது தம்மைச் சத்திரியர் எனவும் வைசியர் எனவுங் கூறித் தமக்குப் பெருமை தேடுந் தமிழ்க் குடிமக்கள், வேளாளரைப் போற் கொலைபுலை நீக்கித் தூய அருளொழுக்கத்தினராய் நடக்கின்றார்களா வென்றால் அதுவுமில்லை. வேளாளர்களோ பண்டைக்காலந் தொட்டே தமது நுண்ணறிவால் நிலத்தை உழுது பயிர்செய்து பல உயர்ந்த சுவைப் பண்டங்களை விளக்கத் தெரிந்து, அவற்றை உணவாக அருந்தி மற்றை உயிர்களைக் கொல்லாமலும் அவற்றின் ஊனைத் தின்னாமலும் அருளொழுக்கத்தின் கண்ணராய், இன்று காறும் ஏனைஎல்லா மக்களானும் உயர்த்துக் கொண்டாடப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இயற்கையில் உயர்ந்தோராய் நிற்கும் நன்மக்களை வறிதே சூத்திரர் என்று சொல்லி விட்டால் அவ்வளவில் அவர்களைத் தாழ்த்திவிடுதல் கூடுமோ? கொலைபுலையாகிய இழிந்தவற்றைச் செய்யும் ஏனை வகுப்பினர் தம்மைப் பிராமணர் சத்திரியர் வைசியர் என்று வாளா கூறிக்கொண்டால் அவ்வளவில் அவர் உயர்ந்தாராய் விடுதல் கூடுமோ? இரண்டுமில்லை. இது பற்றியன்றோ தெய்வத் திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று அருளிச் செய்தாரென்க இனி, மக்களாய்ப் பிறந்தோர் தம்மையொத்த எல்லார்க்கும் பசியும் நோயும் வறுமையும் உண்டென்பதனை உணர்ந்து, அவர்பால் இரக்கமும் அன்பும் மீதூரப் பெற்றாராய் அவர்க்குச் சோறு தந்து பசியை நீக்கியும், மருந்து ஊட்டி நோயைத் தீர்த்தும், பொருள் வழங்கி வறுமையைக் களைந்தும் ஒழுகுவதோடு, அவர் இம்மை மறுமைப் பயன்களை எய்துதற்கு இன்றியமையாத கல்வியறிவைம் தந்து நடத்தல்வேண்டும். இதுவே அன்பொழுக்கமாம். இவ்வொழுக்கம் ஆரியப் பார்ப்பனர்பால் இல்லை யென்பதை எவரும் உணர்வர். தம் இனத்தவரல்லாத பிறர் எவரேனும் பசியாலும் விடாயாலும் மிக வருந்தி வந்து ஒரு பிடி சோறும் ஒரு குடங்கை நீருங் கேட்டாலுந் தீட்டுப்பட்டுப்போம் என்று சொல்லி அவற்றைக் கொடாமல் அவரைத் துரத்துவர்; தாம் நீர் முகக்குங் கிணற்றில் பிறர் நீர் எடுக்கவும் விடார்; தாம் குளிக்கும் நீர்த் துறையிற் பிறர் இறங்குதற்கும் ஒருப்படார்; தமது வீட்டுத் திண்ணையிற் பிறர் களைத்திருக்கவும் இடங்கொடார்; பழந்தமிழ்க் குடிகளாகிய பறையர் பள்ளர் தம் தெருவண்டை நெருங்குதற்கும் மனம் ஒப்பார். நல்ல நிலைமையிற் சிறிது உதவி வேண்டினார்க்கே அதனைச் செய்யாத ஆரியப் பார்ப்பனர் நோயும் வறுமையுங் கொண்டு தமது நிலைமை கெட்ட ஏனையோரைத் திரும்பியும் பார்ப்பரோ! நடுநிலைவுடையீர் கூறுமின்கள்! இனி, இவர் தாங்கற்ற கல்வியைத் தம்மினத்தவர் அல்லாத பிறரெவர்க்குங் கற்றுக் கொடார்; தம்மினத்தவர் மட்டுமே வீட்டு நெறி யெய்துதற்குரியராதலால், ஏனையோர் அவ் வீட்டு நூல்களைக் கற்கலாகா தென்பர். தாமோதும் வீட்டு நூல்களைப் பிறர் ஓதின் அவர் நாவைப் பிளக்க வேண்டு மெனவும், அவற்றைக் கேட்பிற் காய்ச்சி உருகின ஈயத்தை அவரது செவியில் உகுத்தல் வேண்டுமெனவுங் கூறுவர். இவையெல்லாம் அவர்களெழுதி வைத்த மனு முதலான மிருதி நூல்களிற் பரக்கக் காணலாம். இவ்வாரியப் பார்ப்பனவர்க்குப் பிறர்மாட்டு ஆ! எவ்வளவு இரக்கம்! இனித், தமிழ் நன்மக்களான வேளாளர்களோவென்றால் எல்லா மாந்தரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையராய்ப், பசித்து வருந்தினார்க்கு அப் பசியைத் தீர்த்தற்கு அறச்சோற்று விடுதிகளும், நீர்விடாய் தணித்தற்கு அறக்கூவல் குளங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் இளமரக்காக்களும், வழிப்போவார் தங்குதற்குச் சத்திரஞ் சாவடிகளும், நோயுற்று வருந்தினார்க்கு நோய் தீர்க்கும் மருந்து விடுதிகளுங், கல்வி கற்பிக்குங் கல்விக் கழகங்கள் திருமடங்களும், கடவுளை வழிபடுதற்குத் திருக்கோயில்களும் பண்டுதொட்டு ஆங்காங்கமைத்துப் பல்வகை அறங்களுஞ் செய்திருக்கின்றனர். அவை மட்டுமோ, பொருளின்றித் தம்பால் வந்த புலவர்க்குந் துறவோர்க்கும் மழையைப்போற் கொடை கொடுத்து, அவர் தம்மால் உலகிற்குப் பல நலங்களை விளைவித்திருக்கின்றனர். வேளாளர் இங்ஙனம் பல்வகை அறங்களைச் செய்துவைக்க, அவற்றை இன்றுவரையில் துய்ப்பவர்கள் மட்டும் பெரும்பாலும் ஆரியப் பார்ப்பனராயிருத்தலை அறியாதார் யார்? ஆரியப் பார்ப்பனர் தம்மினத்தவர் அல்லாத வேறொருவர் தமக்கு நண்பராதல் பற்றித் தம் வீட்டிற்கு விருந்தினராய் வந்தால் அவர் எவ்வளவு பசியோடிருந்து முகங்குழைந்தாராயினும் அவரைப் புறத்திண்ணையில் இருக்கச் செய்து, வாயிற் கதவை அடைத்துக் கொண்டு தாமுந் தம்மினத்தவரும் உள்ளேயிருந்து நன்றாய் விலாப்புடைக்க மெல்லத் தின்று முடித்தபின் மிஞ்சியதைப் பசித்துப் பாதி உயிர்போன அவ் விருந்தினர்க்கு வாயிற் கதவண்டை நடையில் வைத்து இடுதலும், அவர் எச்சிற் சோற்றை மனவருத்தத் தோடும் அரைகுறையாய் உண்டபின் அவரே தாம் உணவுகொண்ட எச்சிற்கல்லையைக் கையில் தூக்கிக் கொண்டு தெருவே செல்ல, அவர்க்குச் சோறிட்ட அப்பார்ப்பனரின் மகளிர் அவர் பின்னே சாணத்தைக் கரைத்துத் தெளித்துக்கொண்டு வருதலும் இன்று காறும் நடக்கக் காணலாம். வேறினத்தவர் எவராயிருப்பினும் - அவர் தம்மைச் சத்திரியரெனக் கூறிக்கொள்பவராயினும் வைசியரெனக் கூறிக்கொள்பவராயினும் அன்றித் தம்மையும் பிராமணரெனவே கருதிக் கூறுபவராயினும் அல்லது தம்மைச் சூத்திரரெனவே ஒப்புக்கொண்டவராயினும், அவரெல்லாம் ஆரியப் பார்ப்பனர் தமக்கு ஆருயிர் நேசராதல் பற்றி அவர் வீட்டுக்குத் தப்பித் தவறி விருந்தினராய்ச் சென்றால், அவர்கட்கு அங்கே இவ்வளவு பெருஞ் சிறப்பும் நடக்கின்றது! வெட்கங்கெட்ட இவ் வெச்சிற் சோற்றைத் தின்னுதற்குத் தமிழரில் மானமுடையோர் எவரும் இவ் வாரியப் பார்பப்னர் வீட்டுக்குச் செல்வரோ? இனி, வேளாளரோவென்றால்எ வேளாளர் நாகரிகம் எ விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்று ஒப்புயர்வற்ற தமிழ்மறை கூறுகின்றபடி, வந்த விருந்தினரைப் புறத்தே பசித்திருக்க விட்டுத், தாமும் தம்மினத்தவருமாக உள்ளே கதவடைத்துக் கொண்டு உண்ணும் நீரர் அல்லர்; வந்த விருந்தினர், தம்மோடு உடனிருந்து உண்ணுதற்கு ஏற்ற சைவ வொழுக்கம் இல்லாதவராயிருப்பின் அவரை முன்ஊட்டிப் பின் தாம் உண்பர்; அல்லது அவரை ஒரு பக்கத்து வைத்துத் தாம் ஒரு பக்கத்திருந்து, அவருந் தாமும் ஒரே காலத்தில் உணவு கொள்ளத் தக்கதான ஒழுக்குஞ் செய்வர். தம்மினத்தவர் அல்லராயினுங், கொலை புலை தவிர்ந்த சைவவொழுக்கத் தினராயிருப்பவரைத் தம்மோடு உடன்வைத்துண்ணுதற்கும் வேளாளர் பின் நிற்பவர் அல்லர். ஆனால், வேளாள வகுப்பினரிற் சிலர் இக்காலத்தில் ஆரியப் பார்ப்பனரைப் பார்த்துத் தாமும் அவர் போல் ஆகல்வேண்டி, விருந்தினராய் வந்த வேற்றினத்தாரைப் புறத்தே வைத்துத் தாம் உண்ணுதலும், உண்டு மிஞ்சிய மிச்சிற்சோற்றை அவர்க்கு இடுதலும், தாம் உண்டபின் எஞ்சிய உணவுகளைப் பறையர்க்கு இட்டால் தமக்குத் தீட்டாகும் என்று பிழைபடக் கருதி அவற்றை நிலத்தின்கண் வெட்டிப் புதைத்தலுஞ் செய்து நடத்தல் உண்மையே; என்றாலும், அன்பும் இரக்கமும் அருளும் பண்டுதொட்டு இயற்கையாகவுடைய வேளாள நன்மக்கட்கு இத்தகைய இரக்கமற்ற கொடுஞ் செயல் சிறிதுந் தகாதென்பதை யுணர்ந்து தம்மைத் திருத்திக் கொண்டு, சைவ வொழுக்க முடைய வேற்றினத்தாருஞ் சைவ வொழுக்கமில்லா வேற்றினத் தாருமாகிய எல்லாக் குடிமக்களையும் அவரவர்க்கேற்ற தகுதியாக எவர் மனமும் வருந்தாமற் சிறப்பாக நடப்பித்தலி லேயே கண்ணுங் கருத்தும் வைத்தல் வேண்டும். சைவ வொழுக்கத்தினராய் உயர்ந்துவரும் வேற்றினத்தாரைக் கீழே தூக்கி அழுத்தாமல், அருட்கை கொடுத்து மேற்றூக்கி அவரைத் தம்மினத்தராக்கிக் கொள்ளல் வேண்டும். அப்போது தான்கொலையும் புலையுங் கட்குடியும் இவை வாயிலாகவரும் ஏனைத் தீவினைகளும் உலகில் வரவரக் குறையும். ‘ah« ca®ªjh‰nghJ«, ãw® v§‡dkhÆ‹ vk¡F v‹! என்று தமது நலமே கருதிப் பிறர் நலங் கருதாதார்க்கு அன்பும் அருளும் இரக்கமும் இன்மையால் அவர்அவையெல்லாம் ஒருங்கே உடைய கடவுளின் திருவருளைப் பெறமாட்டார்; அவர் இம்மை மறுமை யிரண்டிலும் உயர்ந்த நலங்களைப் பெறார்; அவர் உண்மை வேளாளரும் ஆகார்; அவரை உயர்ந்தோரென அறிவுடையோருங் கொள்ளார். ஆகையால், அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டொழுக லான் என்னுந் தெய்வமறையின் உண்மையைக் கடைப்பிடித்து வேளாளராவர் பண்டைக் காலந்தொட்டு வருந் தமக்குரிய அருளொழுக்கத்தினின்றுஞ் சிறிதும் வழுவாது ஒழுகுதலே அவர்க்கு என்றும் மங்காத பெருமையையும் இறைவனருட் பேற்றையுந் தரும் என்க. தொன்றுதொட்டு வருந் தமது அருளொழுக்கப் பெருமையைக் கற்றும் கேட்டும் ஆய்ந்தறியாத அறியாமையுடைய வேளாளரிற் சிலர் ஆரியப் பார்ப்பனரைப் பார்த்து அவர்போல் அருளொழுக்கத்தில் வழுவி நடப்பராயினும், அங்ஙனம் அருளிலாராய் நடப்பது அவர்க்கு இயற்கை யன்றென்பது, அவர்கள் திருவிழாக் காலங்களிலும் ஏனைச் சிறப்பு நாட்களிலும் எல்லா வகுப்பினரையும் வேற்றுமையின்றி ஒருங்கு வைத்த உடனிருந்து உணவு கொள்ளுதலாகிய மகேசுர பூசை நடத்துமாற்றால் நன்கறியப்படும் அதுநிற்க. 5. ஆரியப் பார்ப்பனர் தமிழையுஞ் சிவத்தையும் இகழ்தல் இன்னும், ஆரியப் பார்ப்பனர் தமக்குப் பல்வகையால் உதவியாற்றிவருந் தமிழ்மக்களெல்லாரையும் ஒரு தொகைப் படுத்துச் சூத்திரர் என்று இகழ்தல் அல்லாமலும், ஆரியர்க்கு முன்னே தொட்டுத் தமிழ் மேன்மக்கள் வழிபட்டு வரும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானையுஞ் சூத்திர தெய்வமென இகழ்ந்துவருவதுடன், அதனைத் தமது வசிட்ட மிருதி நூலிலும் எழுதிவைத்திருக்கின்றார்கள். தமிழ்மொழி அவர்கட்கு எட்டிக்காயினுங் கசப்பதாகும். இறந்துபட்ட தமது சமகிருத மொழியினையுஞ், சில நூற்றாண்டுகட்கு முன் தோன்றிப் பல மொழிக் கலப்புடையவாய் வழங்கும் ஆங்கிலம் இந்தி முதலான மொழிகளையும் எவ்வளவு உயர்த்துப் பேசவேண்டுமாயினும் அதற்கு மடிகட்டிநிற்பர். இன்னகாலத்திற்றான் தோன்றிய தென்று கூறுதற்கு ஆகாத அத்துணைப் பழமையுடையத்தாய்ப், பண்டைக்காலத்திலேயே இலக்கண இலக்கிய வரம்புபெற்று, எல்லா வளங்களும் நிரம்பி இன்றுகாறும் நடைபெறாநின்ற தமிழையுந் தமிழ்நூல்களையும் அவை கற்றாரையுங் கண்டாற் சூத்திரபாஷை சூத்திர நூல்கள் சூத்திரப் படிப்பாளிகள் என்று இகழ்ந்து முகஞ்சுளித்துப் போவர். இத் தென்றமிழ் நாட்டிற் பிறந்தவர்களாயிருந்தும் இவ்வாரியப் பார்ப்பனர். வடநாட்டிலுள்ளவர்களையும் அவர்கள் தம்முடைய மொழிகளில் எழுதிவைத்திருக்கும் நூல்களையுமே எந்நேரமுங் கொண்டாடுவர். இவர்களிற் சிற்சிலர் தமிழ்மொழியைக் கற்றுத் தமிழ்ப்புலவரா யிருந்து பொருள் தேடினும், இவர்களை நெருங்கி ஆராய்ந்தால் இவர்களுந் தமிழையுந் தமிழ்நூல்களையுந் தமிழரையும் இகழ்பவராகவே காணப்படுகின்றனர்; அதனால், இவர்கள் தமிழ்கற்றது வயிற்றுப்பிழைப்புக்கே யன்றிப் பிறிதன்றென்பது நன்கு புலப்படும். இதுமட்டுமோ, தமிழ் நாட்டிற் பிறந்தருளி முழுமுதற் கடவுளின் உண்மையை நாட்டியருளின திருஞானசம்பந்தர் முதலான சைவ சமயாசிரியரில் மூவர் அந்தணர்களாயிருந்தும் அவர்களையுஞ் சூத்திரர் எனக்கூறி, அவர்கள் அருளிச் செய்த நூல்களைச் சூத்திரப் பண்டாரப் பாட்டென்று இகழ்ந்து, சைவவேளாளர் மிகுதியாயுள்ள திருநெல்வேலி முதலான ஊர்களிலுங்கூடச், சிவபிரான் திருக்கோவில்களில் ஓதுவார் பாடும் இத்தேவார திருவாசகங்களைத் தாம் செவிகொடுத்துக் கேட்டாற் பார்ப்பனராகிய தமக்குத் தீட்டாம் என்று கருதி, ஓதுவார் அவற்றைப் பாடத்தொடங்கும் முன்னரே நம்பியாரிடந் திருநீறு பெற்றுக்கொண்டு அவ்வாரியப் பார்ப்பனர் கோயிலை விட்டு அகன்று போதலை இன்றும் பார்க்கலாம். தமிழராற் கட்டிவைக்கப்பட்டுத், தமிழராற் பெரிதும் போற்றி வழிபாடு செய்யப்பட்டுவருந் தமிழ்த்தெய்வமாகிய சிவபெருமான் உறையுங் கோயில்களிலே, முழுமுதற்கடவுளாகிய அச் சிவபிரான் திருவுருவத்தின் எதிரிலே, ஆரியப் பார்ப்பனர் தாம் வணங்கிப் போந்த இந்திரன் வருணன் அசுவினி முதலான சிறுதேவர்கள்மேல் தம் முன்னோர்கள் பாடிவைத்த ஆரிய வேதங்களை முதலில் ஓதும்படி, அவ் வேதங்களின் சிறுமையுணராத தமிழர்களை ஏமாற்றி ஏற்பாடு செய்துவிட்டது மல்லாமற், சிவபிரான் ஒருவனையே வழுத்துந் தேவார திருவாசகங்களை முதலில் ஓதாதபடிக்குஞ் சூழ்ச்சிசெய்து விட்டார்கள்! இதனினும் வேளாளரை இழிவுபடுத்தத் தக்கது வேறு எதுவேண்டும்! இதுமட்டுமோ, தமிழ்நாட்டிலிருந்து செயற்கருஞ் செயல்கள் புரிந்து உண்மையன்பாற் சிவபிரான் திருவடிதலைக்கூடிய சைவத்திருத் தொண்டர் வரலாறுகளை இவ்வாரியப் பார்ப்பனர் இகழ்ந்து ஒதுக்கி, வடநாட்டிற் பிறந்து சிறு தெய்வங்களை வணங்கிப் போன தாசர்களின் வரலாறு களையே எந்நேரமும் விரும்பிக் கற்றுக் கொண்டாடுவர்! இவர்கள் சிவபிரான் கோயில்கட்குச் செல்லுதல் தமிழராற் பாராட்டப் படுதற்குந், தம் ஆரிய முறைகளை ஆண்டு நுழைத்தற்குமேயாம். இவர்கள் கடவுள் ஒருவன் உண்டெனக் கொள்ளாமல் தம்மையே கடவுளாகக் கருதும் நாத்திகர் என்பதற்கு, இவர்கட்கே உண்மையாக உரிய மீமாஞ்சைநூல் கடவுள் இல்லையென மறுப்பதனாலுஞ் சங்கராசிரியர் நானே கடவுள் என நாட்டிய மாயவாத வேதாந்த கொள்கையையே இவர்கள் அனைவருங் கைக்கொண்டு நடத்தலாலும் நன்கு துணியப்படும். இன்னும் இங்ஙனமே இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையுந் தமிழ் நூல்களையுந் தமிழரையுந் தமிழ்ப் பெரியாரையுந் தமிழ்த் தெய்வத்தையுந் தாழ்வுபடுத்திவருஞ் சூழ்ச்சிகளையெல்லாம் ஈண்டுரைக்கப்புகின் இது மிகவிரியும். பொதுவாய்த் தமிழ்த்தொடர்புடைய எதனையும் இகழ்ந் தொதுக்குதலே இவர் தங் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரிய மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற்குத் தக்க ஏற்பாடுகளை யெல்லாம் எப்படியோசெய்துவைப்பர்! இவர்திறம் இவ்வாறிருக்க. 6. வேளாளர் ஆரியத்தையும் பார்ப்பனரையும் கொண்டாடல் இனி, வேளாளர்களோ வென்றால் வந்தேறுங் குடிகளாய்ப் போந்த ஆரியப் பார்ப்பனர்களை அகமும் முகமும் மலர்ந்தேற்று அவர்க்கு வேண்டுஞ் சிறப்புக்களை யெல்லாம் இன்றுகாறும் இன்னும் மனங் கோணாமலே செய்து வருகின்றனர். பழையநாளில் வந்த ஆரியர் இருக்க நிலங்களும் இல்லங்களும் உயிர் வாழ்க்கைக்குக் கழனிகளும் பொருள்களும் வேளாளர் வழங்கியிருக்கின்றனர். தமது நூன்முறைப்படி வேளாளர் ஆரியப் பார்ப்பனரைக் குரவராகக்கொள்ளக்கூடா திருந்துந், திருமணக் காலங்களிலுந் தென்புலத்தாரை வணங்குங் காலங்களிலுந் திருக்கோயில் வழிபாடு செய்யுங் காலங்களிலும் பிற சிறப்பு நாட்களிலும் அவர்களையும் வருவித்துத், தம் தமிழ் அந்தணர்க்கு அடுத்த நிலையில் அவரையுங் குரவராக வைத்து அவர்க்கும் வேண்டுவனவெல்லாங் கொடுத்து வந்தனர்; இன்றுங் கொடுத்து வருகின்றனர். சைவசமய ஆசிரியர்கள் தமிழைச் சிறப்பித்துக் கூறும் இடங்களில் ஆரியத்தையும் உடனெடுத்துச் சிறப்பித்து அருளிச்செய்கின்றனர்; தமிழ் நான்மறைகளைச் சிறந்தெடுத்து ஓதுகின்றுழி ஆரிய வேதங் களையும் உடன்வைத்துச் சிறப்பித்துப் பாடியிருக்கின்றனர்; தமக்குரிய இசைக்கருவியாகிய யாழ் என்பதனைக் குறித்துச் சொல்லுங்காற் கூடவே ஆரியர்க்குரிய வீணை யையும் உடன் வைத்துச் சொல்கின்றனர். இங்ஙனமெல்லாம் பலகாலும் பலவிடத்துந் தமிழ்ச் சான்றோர் தம்மால் உயர்த்துப் பாராட்டப்படுதற்குரிய தகுதியில்லாத ஆரியரையும் அவர்செய்த நூல்களையும் அருண்மிகுதியால் உயர்த்துப் பாராட்டுதல் போல, ஆரியருள் எவரேனுந் தமிழரையும் அவரியற்றிய அரும் பெரும் நூல்களையும் பாராட்டித் தம் வடமொழிநூல்களிற் பேசியிருக்கின்றனரா? இல்லையே, இதனாலேயே, தமிழர் அருளாளராதலும், ஆரியர் அழுக்காறுடையராதலும் நன்கு விளங்கும். இன்னுந், தமிழர் வாய்மையே கூறும் இயல்பின ரென்பதற்கும், ஆரியர் பொய்யும் புளுகும் புனைந்து கட்டிச் சொல்லித் தம்மை உயர்த்தும் நீரர் என்பதற்கும் அவரவர் தத்தம் நூல்களைப் பற்றிக் கூறுவனவேசான்றாம். அளக்கலாகாப் பெருமையுடைய திருக்குறள், நாலடியார், தேவார திருவாசகங்கள் முதலிய நூல்களையெல்லாந் தமிழ் மக்கள் அவ்வவற்றை இயற்றிய சான்றோர் பெயர்களால் உண்மையை உள்ளவாறே சொல்லி வழங்குவர். ஆரியரோ மேற்கூரிய தமிழ்நூல்களின் அரும்பொருள்களில் நூறாயிரத்து ஒன்றுகூட இல்லாமற், பெரும்பாலுஞ் சிறு தெய்வங்கள்மேற் சிறப்பில்லாத வகையாகத் தம்மவராற் பாடப்பட்ட இருக்கு முதலான வேதங்களையும், அருளறத்திற்கு ஒவ்வாத முறைகளைக் கூறும் மிருதிகளையுங், கடவுளின் இறைமைத் தன்மைக்கு இழுக்கந்தேடும் பொய்க்கதைகள் மிக நிரம்பிய புராணங்களையும் எல்லாங் கடவுள் அருளிச் செய்தனவாகப் பொய்கூறி, அவற்றின்கண் எல்லாம் ஆரியராகிய தாம் தேவர்களாகப் பேசப்பட்டிருத்தலைக் காட்டித் தம்மை உயர்த்திச் செருக்குவர். இன்னும் ஆரியர் தமது மொழியில்தாம் உயர்வாகக் கொள்ளும் நூல்களிற் காணப்படாமல் தமிழில் உயர்ந்தனவாகக் காணப்படுவனவற்றைக் கைக்கொள்ளாதும் அவற்றாற் பயன்பெறாதும் போதலைக் கண்டு இரங்கிய பிற்காலத்துத் தமிழறிஞர் தாம் எழுதுந் தமிழ்த் தலபுராணங் களையும் பிறவற்றையும் அவர் கைக்கொண்டு பயன்பெறல் வேண்டித் தாம் அவற்றை வடநூல்களிலிருந்து மொழி பெயர்த்துச் செய்யதாகவுங் கூறித் தம்மை வெறுத்துத்தள்ளும் அவர்களோடும் உறவு பாராட்டா நிற்பர். தமிழ் நாட்டுச் சைவசித்தாந்தத் திருமடங்களுக்குத் தலைவரும் ஆசிரியருமாய் இருக்குந் தமிழ வேளாளக் குரவர்கள் தமது சைவசித்தாந்தக் கொள்கைக்கு முற்றும் மாறான மாயாவாத வேதாந்தக் கொள்கையுடைய ஆரியப் பார்ப்பனரைக் கூட்டங் கூட்டமாகத் தம் மடங்களில் வைத்துக் கொண்டு அவர்கட்கு எல்லா வகையான உதவிகளும் புரிந்து வருதலை இஞ்ஞான்றும் பார்க்கலாம். ஆனால், ஆரியப்பார்ப்பனக் குருவான சங்கராசாரியாரோ தம் மடங்களில் வேளாளர் முதலான தமிழர் எவரையும் அணுதற்கும் விடுவதில்லை; எவரேனுந் தமிழரை, அச் சங்கராசாரியார் கண்டு பேசும் படி நேர்ந்தால் அவரது முகத்தை நோக்கிப் பேசுதலுந் தமக்குத் தீட்டாமெனக் கருதித் தம் ஆரியப்பார்ப்பனருள் எவரது முகத்தையேனும் நோக்கிய படியாகவே பேசுவர். இன்னுந், தமிழ வேளாளர் தாம் கட்டி வைத்த பற்பல சத்திரஞ்சாவடிகள் பள்ளிக்கூடங்கள் கோயில்களில் ஆரியப் பார்ப்பனரைத் தலைவர்களாக ஏற்படுத்தி, அவ்வாற்றால் அவை தம் தமிழினத்தார்க்கும் பயன்படாவாறு செய்துவர, ஆரியப்பார்ப்பனரோ தாம் எடுப்பித்தசிற்சில சத்திரங்கள் கோயில்கள் சமகிருத பாடசாலைகளில் தமிழர் எவரையும் நெருங்கவிடாது வருதலையும் இன்று காறும் எவரும் நேரே கண்டு தெளியலாம். இங்ஙனமே, ஆரியப் பார்ப்பனர் தம்மினத்தவ ரல்லாத மற்றெவரும் முன்னேற்றம் அடைதற்குத் தினையளவும் இடங்கொடாமல் ஓரவன்னெஞ்சம் உடையராய்ச் செய்து வரும் பொல்லாத கட்டுப்பாடுகளையும், தம்மினத்தவ ரல்லாததுடன் தம்மை ஓயாது புறம்பழித்து வருவாருமான அவ்வாரியப் பார்ப்பனர்க்கும் பிறர்க்குந் தமிழ வேளாளர் ஈர மென்னெஞ்சமுடையராய்ச் செய்து வரும் அருளுதவிகளையும் ஈண்டு முற்ற வெடுத்து மொழியப் புகுந்தால் இது மிகவிரியுமென அஞ்சி இதனை இவ்வளவில் நிறுத்தி, வேறொன்று கூறத் துவங்குவாம். 7. தொல்காப்பியரும் வேளாளரும் இவ்வாறு பண்டைக்காலந் தொடங்கிச் சீருஞ் சிறப்பும் உடையராய் வரும் வேளாள வகுப்பினரைச் சூத்திரரெனவும், இத்தகைய சீருஞ்சிறப்பும் இல்லாத ஏனை வகுப்பினரைப் பிராமண சத்திரிய வைசியரெனவுங் கூறினால் அதனை நடுவுநிலை பிறழா அறிவுடையோர் எவரேனும் ஒப்புவரோ? ஒரு சிறிதும் ஒப்பாரன்றே. அற்றன்று, செந்தமிழ்த் தொல்லாசிரியராகிய தொல்காப்பியனார் தாம் இயற்றியருளிய ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்துள் வேளாளரைச் சூத்திரரெனக் கூறிய தென்னையெனின்; இது தொல்காப்பியம் என்னும் ஒப்புயர்வில்லாச் செந்தமிழ்த் தனி முதல் நூலை நன்கு பயின்று அறியாதார் கூறுங் கூற்றாம். ஆசிரியர் தொல்காப்பியனார் வேளாளரை வேளாளரென்றே ஓதினரல்லது சூத்திரரென யாண்டும் ஓதிற்றிலர். அற்றன்று, சூத்திரர் என்னுஞ் சொல் வடமொழிப் பெயராகலின் பண்டைச் செந்தமிழ் நூலாகிய அத் தொல்காப்பியத்தின்கண் அச் சொல்லால் அவரைக் குறித்திலரெனின்; வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை என்னுஞ் சூத்திரத்தில் வைசிய எனும் வடமொழிச் சொல்லை அவர் எடுத்தாண்டிருத்தலின், வேளாளரையுஞ் சூத்திரரெனக் கூறல்வேண்டினாராயின் அவர் அச் சொல்லை அவர்க்குப் பெயராக வழங்காதிரார். இஃதொன்று கொண்டே வேளாளரைச் சூத்திரரெனக் கொள்ளுதல் தொல்காப்பியனார் திருவுளக்கருத்துக்கு இணங்குவதன் றென்பது பெற்றாம். அஃதொக்குமாயினும் அந்தணரையும் அரசரையும் வைசியரையுங் கூறியபின் அவர் வேளாளரை நான்காம் முறைமைக் கண் வைத்து வடநூலார் கூறுமாறே கூறுதலின், வேளாளரைச் சூத்திரரென வெளிப்படையாக வைத்துக் கிளந்து கூறிற்றிலராயினும், அவர் தம்மைச் சூத்திரரெனக் கூறுதல் தொல்காப்பியனார்க்கும் உடன்பாடேயாமெனின்; நன்று கூறினாய், நான்காம் முறைமைக்கண் வைத்துக்கூறிய துணையானே அவரைச் சூத்திரரெனக் கொண்டாரென்பது ஆசிரியன் கருத்தை முன்னொடுபின் ஆராய்ந்து உணர மாட்டாதார் கூற்றாம். ஆசிரியர் இன்னாரை இன்ன வகுப்பினர் எனக் கொண்டானென்பது, அவரவர்க்கு வரையறுத்த தொழில் களை அவன் எடுத்துக் கூறும் வழியா னல்லது வேறு வகையாற் றுணியப்படாது. மேலே யாம் விளக்கிக் காட்டியபடி பழைய ஆரிய நூல்கள் சூத்திரர்க்கு வரையறுத்த தொழில்; மேல் வகுப்பினர் மூவர்க்கும் அவர் ஏவிய குற்றேவற்றொழில் புரிதல் ஒன்றேயாம். சூத்திராவார் உழவுதொழிலாயினும் வாணிக மாயினுஞ் செய்தற்கு உரிமையுடைய ரல்லர். ஆரியர் வகுத்த சூத்திர வகுப்பில் வேளாளரை அடக்குதல் ஆசிரியர் தொல் காப்பியனார்க்குக் கருத்தாயின் அவர் அவ்வேளாளர்க்குக் குற்றேவற்றொழில் ஒன்றுமே கூறியிருப்பர்; மற்று அவர் அவ்வா றுரையாது, ஆரிய நூல்கள் வைசியர்க்கு உழவு தொழிலைச் சிறந்ததாக வைத்துக் கூறுமாறு போலவே, வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி எனக் கிளந்து கூறினாராகலின் அவரைச் சூத்திரரெனக் கோடல் அவர்க்குக் கருத்தன்றாதல் துணியப்படும். மேலும், வேளாளர் காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி உழவுசெய்யும் வகையினை முதன்முதற் கண்டறிந்த நாகரிக உயர்குடி மக்களாதல் பற்றி அவர்க்கு உழவுதொழிலைச் சிறந்ததாக வைத்துக் கூறினாராயினும், அவர்கள் அரசர்க்கு உதவியாளராய் அவர்க்குப் படைத்தலைவரும் அமைச்சரும் ஆதற்குரியா ரென்பதூஉம், அரசர் தரும் வரிசைகளைப் பெற்றுக் குறுநிலமன்னர் ஆதற்குரியாரென்பதூஉம் மேற் சூத்திரத்தை யடுத்து, வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே என்று ஆசிரியர் மீண்டுங் கூறுதலாற் றெளியப்படும். இங்ஙனம் வேளாளர் ஒருவர்க்கே யுரிய சிறப்புத் தொழிலும், அவர் அரசரைச் சார்ந்து பெறுந் தண்டத்தலைமை முதலிய பொதுத் தொழிலுங் கூறி, அந்தணாளர் ஒரோ வழி அரசு செலுத்துதற்குரியராதலும் அரசர்க்குரிய வரிசைகளிற் பல குறுநில மன்னர் பெறுதற்குரியராதலுங் கூறிமுடித்தபின் ஆசிரியர், அன்ன ராயினும் இழிந்தோர்க்கு இல்லை என்னுஞ் சூத்திரம் அருளிச் செய்திருத்தலின், இச் சூத்திரத்தின் கண் இழிந்தோர் எனக் குறிப்பிக்கப்பட்டவர், வேளாளர்க்கு ஏவல் புரிவாராக வகுக்கப்பட்ட ஏனைப் பதினெண் வகுப்பினராதல் இனிது விளங்கும். வடமொழிக்கண் மிருதிநூல் முதலியவற்றிலும் அமர நிகண்டிலும் இப் பதினெண் வகுப்பினருஞ் சூத்திரவர்க்கத் தின் கண் அடக்கப் பட்டிருத்தற்கேற்பவே, ஆசிரியரும் இவரை இழிந்தோர் என்பர். இப் பதினெண்மருஞ் செல்வத்தான் மிக்குயர்ந்தாராயினும், அரசனாற் பெறுந் தண்டத் தலைமை அமைச்சுரிமை சிற்றரசர்க்குரிய அடையாளங்கள் முதலாயின வெல்லாம் பெறுதற்குரியர் அல்லரென்பது தொல்காப்பியனார் கருத்து. அந்தணரும் அரசரும் வேளாளரும் அல்லாத பிறரே இழிந்தோர் என ஆசிரியராற் கொள்ளப்பட்டன ரென்பது எற்றாற் பெறுதுமெனின், உயர்ந்தோராவார் தத்தமக்குரிய கடமைகளைத் தமக்கு மேம்பாடுண்டாகு மாறு செய்து முடிக்கும் வகைமையை வாகைத்திணையுள் ஆசிரியன், அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்று ஓதியவாற்றாற் பெறுதுமென்பது, இதன்கண் அரசரல்லாத ஏனோர் எனப்பட்டவர் மரபியலிற் கூறியாங்கு அரசராற் பெறும் வரிசைக்கு உரிமையுடைய வேளாளரே யாவர்; இவர் தமக்குரிய இருமூன்று கடமைகளாவன; ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் என இவை. இவ் வறுவகைத் தொழில் வேளாளர் அல்லாத ஏனைப் பதினெண் வகுப்பினுட் பட்டார்க்கு அக்காலத்து இல்லாமையின், இச் சூத்திரத்தின் கண் மூன்முறாம் வகுப்பினராக ஓதப்பட்டவர் வேளாளரே யாதல் ஐயுறவின்றித் தெளியப்படுகின்ற தன்றோ? இவ்வாறு இவ்வறுவகைத் தொழில் வேளாளர் ஒழிந்த எனைக் கீழ் வகுப்பினர் பதினெண்மருக்கும் பெரும்பாலும் இல்லாமை யானும், அவை இல்லையாகவே அவற்றின்கட் சிறந்து வென்றி பெற்றுத் தோன்றுதலும் அவர்க்கில்லாமையானும் அந் நான்காம் வகுப்பினரை ஆசிரியன் இச் சூத்திரத்தின்கண் ஒதிற்றிலன். அற்றேல், இவ் வாகைத்திணைச் சூத்திரத்தில் வேளாளரை மூன்றாம் வகுப்பின்கண் வைத்து ஓதிய ஆசிரியன், மரபியலில் வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை என வைசியனை மூன்றாம் முறைமைக்கண் வைத்து, அதன் பின் வேளாண்மாந்தர்க்கு என்னுஞ் சூத்திரத்தை நிறுத்தி வேளாளனை நான்காம் முறைமைக்கண் வைத்தோதியவா றென்னை யெனின் உழவும் வாணிகமும் வேளாளர்க்கு ஒப்ப உரியவாயினும், அவருள் ஒரு பகுதியார் உழு தொழிலைவிட்டு வாணிகம் ஒன்றையே நடத்துங்கால் அவரை அத் தொழில் பற்றி அஞ்ஞான்று வேறு பெயரான் வழங்கினமை தெரிப்பர் வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை என்றோதினார்; இக் காலத்திலும் வாணிகஞ் செய்யும் வேளாளர் வேளாண் செட்டிகள் என்று வழங்கப்படுதல் காண்க. உழவு தொழில் வேளாளர்க்கு என்றுஞ் சிறந்த உரிமையாதல் பற்றி அவர்க்கு எஞ்ஞான்றும் வழங்கும் வேளாண் பெயராற் சூத்திரஞ் செய்தார். இவ்வாறு வேளாளரை இருவேறு தொழில்பற்றி இருவகைப்படுத்தோதுங்கால், இவரல்லாத ஏனைப் பதினெண் குடிமக்களையும் ஒரு தொகைப் படுத்து ஐந்தாம் வகுப்பாக்கி, அவர் தம்மை இழிந்தோர் எனவும் கீழோர் எனவும் ஆசிரியன் கூறுவன்; அவ்வாறு வேளாளரை இருவகைப் படுத்தாது ஒன்றாக்கி ஒரு வகுப்பினராகக் கூறும் வழி அவ்வேளாளர் தம்மை ஏனோர் எனவும் பின்னோர் எனவுங் கூறுவன். ஓதுதற்றொழில் அந்தணர் ஒருவர்க்கே சிறந்த தாயினும், அஃது ஏனை அரசர் வணிகர் வேளாளர் என்னும் ஒவ்வொரு சிறப்புத் தொழில் உடையார்க்குந், தனித்தனிக் கைத்தொழில்களுடைய ஏனைப் பதினெண் வகுப்பார்க்கும் பொதுவகையில் உரித்தென்று ஓதுகின்றுழி, அந்தணரல்லாத அவ் வேனையோரை நான்கு வகுப்பாக்கி, அவ் வந்தணரை ஒரு வகுப்பாக்கி மேலோர் முறைமை நால்வருக்கும் உரித்தே என்று ஆசிரியன் தன் கருத்தை இனிது புலப்படுத் துரைத்தல் காண்க; இச் சூத்திரத்தில் மேலோர் முறைமை என்றது அந்தணர்க்குச் சிறப்பாகவுரிய நூல் ஓதுந்தொழில்; நால்வர்க்கும் உரித்து என்றது அவ்வோதுதற்றொழில்; அஃது ஏனைத்தொழில்களிற் றனித்தனிச் சிறந்தாராகிய அரசர் வணிகர் வேளாளர் இவரல்லாத ஏனைப் பதினெண்மர் என்னும் நால்வகை யார்க்கும் பொதுப்பட உரியதாகும் என்றபடியாம். இனி, அந்தணரை வேறு பிரியாமல் அவரையும் அகப்படுத்து, வணிகரையும் வேளாளரையும் ஒருவகுப்பாக்கி யுரைக்கும்வழி, அந்தணர் அரசர் வேளாளர் என்னும் மூவரையும் மேலோர் எனவும், அவரல்லாத ஏனைப் பதினெண்மரையுங் கீழோர் எனவும் ஆசிரியன் ஓதுவன்; அது, மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே என்னுந் தொல்காப்பியக் கற்பியற் சூத்திரத்தால் நன்கு தெளிப்படும். இச் சூத்திரப் பொருள் மேலோராகிய அந்தணர் அரசர் வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச்சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பார்க்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாம். இங்ஙனம் ஒருகால் நால்வகுப்பினராகவும், பிறிதொரு கால் ஐவகுப்பினராகவும் பகுத்து உயர்ந்தோராகவும் இழிந்தோராகவும் ஆசிரியனாற் கூறப்பட்ட மக்கள் மருதநிலத்திற்கு உரியராவர். வயலும் வயல்சார்ந்த இடமுமாகிய மருதநிலமே மக்கள் உழவு தொழிலாற் சிறந்து நாகரிகமுற்று வாழ்தற்கு உதவி செய்வதாகலின், அந் நிலத்தாற் பெருகிய மக்களையே ஆசிரியன் மேலோரெனவுங் கீழோரெனவும் வகுத்து அவ்வவர்க்குரிய தொழில் வேறுபாடுகளை எடுத்து மொழிந்து நூலருளிச் செய்தான். அரசனது அரண்மனை மருத நிலத்தின்கண்ணேதான் உளதென்பது உழிஞை தானே மருதத்துப் புறனே எனவும், முழுமுதலரணம் முற்றலுங் கோடலும், அனைநெறி மரபிற் றாகுமென்ப எனவும் ஆசிரியன் புறத்திணையியலிற் கூறிய சூத்திரங்களான் அறியப்படும். இனி, மருதநிலம் அல்லாத முல்லை, குறிஞ்சி, முதலான நிலப்பகுதி களிலும் மேலோருங் கீழோருஞ் சிறுபான்மை உளரென்பது, ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉங் கிழவரும் உளரே என ஆசிரியன் கூறுமாறுபற்றி உணர்ந்துகொள்க. எனவே, தமிழ்நாட்டின்கட் பிறந்த மக்கள் வகுப்பு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலம்பற்றி எழுந்த தொன்றாதல் நன்கு பெறப்படும். இந் நால்வகை நிலத்தும் மேலோரான நன்மக்கள் தம்முள் ஏதும் வேறுபாடின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்து வந்தமை தொல்காப்பியம் இறையனாரகப் பொருள் திருச்சிற்றம்பலக்கோவையார் முதலான தெய்வத் தமிழ்மறை நூல்களால் நன்கறியப்படும்; அவையெல்லாம் ஈண்டுரைக்கப் புகின் மிகவிரியுமாதலின் அவை தம்மை அந்நூல்களுட் கண்டு கொள்க. இங்ஙனம் நால்வகை நிலத்தும் அவ்வந் நிலத்து மக்களின் தொழில் வேறுபாடு பற்றிப் பல்வகுப்பினராகப் பிரிக்கப்பட்டோருட், கொலையும் புலாலுணவும் மறுத்து ஓதல் வேட்டல் அரசுபுரிதல் வாணிகஞ் செய்தல் உழவு நடாத்தல் என்னும் உயர்ந்த தொழிற்கண் நிலைபெற்று நின்றோர் மேலோர் எனவும், அவர்தம் ஏவல்வழி நின்று அக்கொலையும் புலையும் நீக்காமற் பெரும்பாலுங் கைத்தொழில் செய்யும் அவ் வளவில் நின்ற ஏனை வகுப்பினர் கீழோர் எனவும் இருபெரும் பிரிவில் வகுக்கப்பட்டு, அவரவரும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் தொழிலாலுந் தத்தமக்குள்ள உயர்வு தாழ்வுகளை நினைந்து, கீழோர் மேலார்க்கு அடங்கி நடக்கவும், மேலோர் தங்கீழ்வாழும் குடிமக்களை இனிது பாதுகாத்து வரவும் இவ்வாறு மிகவும் அமைதியாகவும் ஒழுங்காகவும் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்க்கை இனிது நடைபெறலாயிற்று. 8. வடநாட்டிற் குடியேறிய வேளாளர் நாகரிக வாழ்க்கையிற் சிறந்த இத் தமிழ்மக்கள் இத் தென்னாட்டின்கண் மட்டுங் குடிவாழ்ந்தவர் அல்லர். இவர்கள் இத் தமிழ்நாட்டின் மேல் கடற்கரைப் பக்கமாகவும் வடக்கு நோக்கிச்சென்று இமயமலைச்சாரல் வரையிலுள்ள வட நாடெங்கும் பரவி, ஆங்காங்கு நாடு நகரங்கள் அமைத்துத் தமது நாகரிகத்தைப் பெருக்கி வந்தனர். இங்ஙனம் பெருக்கி வந்த தமிழர்களுள் வேளாள வகுப்பினரே முதன்மையானவர். வடக்கே மேல்கடற்கரையைச் சார்ந்த பல ஊர்களும் நகர்களுங், கீழ்கடற்கரையைச் சார்ந்த தெலுங்குநாட்டு ஊர்களும், அங்கு அரசாண்ட ஆந்திர சாளுக்கிய அரசர்களும், வேள்புலம் வேளாளபுரம் வேளகம் வேள்காம் வேள்பட்டி எனவும்; வேளிர் வேண்மார் எனவும் முறையே வழங்கப்பட்டுவந்தமையே இதற்குச் சான்றாம்.1 வடக்கே கீழ்கடற் கரையிலுள்ள நாடுகளை அரசாண்ட சளுக்கியர்களும் வேளாளரேயாவர்; வேள்புல அரசர்களுக்கு வேந்தர் என்னுந் திவாகரச் சூத்திரமும் இதற்குச் சான்றாம். இவ் வேளாள அரசர்கள் வடக்கே கங்கையாறு பாயும் இடங்களிற் பெருந்தொகையினராகிய தம் மினத்தவரோடு குடியேறி வாழ்ந்து வந்தமை பற்றி, வேளாளர் கங்கையின் புதல்வர் என்றும் வழங்கப்படுவர். இங்ஙனம் வடநாடுகளில் அரசாண்ட வேளிரும் அவர் இனத்தவருமான வேளாண்மக்கள் தென்னாட்டிலிருந்த தம் முன்னோரைப் பிரிந்து போனவரனும், அவர்கள் தம் முன்னோரின் பிறப்பிடமான தமிழ்நாட்டையும், அதன்கண் தம் முனனோர் வழிவந்த வேளாண்மரபினரையும் மறந்தவரல்லர். காலம் வாய்த்துழி யெல்லாம் அவர்கள் தென்னாட்டிலுள்ள தம் உறவினரோடு உறவு கலந்தும், நேரிமலைக்குத்2 தெற்கேயுள்ள காடுகளை யழித்து அவற்றின்கண் நாடுநகரங்கள் அமைத்து அரசுபுரிந்தும் வந்தனர். நடுநாடாகிய மைசூரில் இப்போது துவாரசமுத்திரம் என வழங்கும் துவரை நகரை வேளிர் அரசர் நாற்பத் தொன்பது தலைமுறை செங்கோல் செலுத்தி வந்தனரென்பதும், அவருள் இறுதியாக வந்தோன் இருங்கோவேள் என்னும் மன்னனாம் என்பதும் புலப்பட, நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்புனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே. என்று கபிலர் கூறுதல் காண்க.3 இது கொண்டு, பண்டைநாளில் தென்னாட்டிலும் வடநாட்டிலும் பரவியிருந்த வேளாளரும், அவருள் அரசராயிருந்த வேளிரும் நாகரிகத்திற் றலைசிறந்தவரா யிருந்தமையின், தாம் ஒருவரை யொருவர் மறவாது, வடநாட்டிலுள்ளார் தென்னாடுபோந்தும், தென்னாட்டில் உள்ளார் வடநாடு சென்றும் இடையிடையே உறவுகலந்து வந்தமை தெற்றென விளங்கா நிற்கும். இங்ஙனமாகத் தமிழரில் மிகச் சிறந்த வேளாளர் இவ் இந்திய நாட்டில் வடபால் எங்கும் பண்டைக்காலத்திற் பரவி யிருந்தன ரென்பதற்கு, மகதநாட்டை ஆண்ட ஆந்திரர் பேசிய தெலுங்கு மொழியும், நருமதையாறு பாயும் இடங்களிலும் நாகபுரியின் வடக்கிலுமுள்ள கோண்டு மொழியும், இராசமகல் மலைச்சாரல்களில் வழங்கும் இராசமகல், ஊராவோன் மொழி களும் இவ்விந்தியாவின் வடமேற்கெல்லையிலுள்ள பெலுசித்தான மலைப்பக்கங்களிலுள்ள குன்றவர் வழங்கும் பிராகுவி மொழியும், இமயமலைச் சாரலிலும் வடகிழக்கு நாடுகளிலும் பேசப்படும் மொழிகள் சிலவுந் தமிழ்மொழியோடு இனம் உடையவை களாயிருத்தலே ஒரு பெருஞ் சான்றாம் என்க. அடிக்குறிப்புகள் 1. வேளிர் வரலாறு, 1916 பக்கம் 14. 2. நேரிமலை என்பது விந்தயமலை; கல்லாடம் 2. 3. புறநானூறு, 201. 9. இந்தியாவின் வடமேற்கிற் குடி புகுந்த ஆரியரின் புலையொழுக்கம் இவ்வாறிவர்கள் இந்தியாவினுள் எங்கும் மேம்பட்டு வாழு நாளையில், இவ்விந்திய நாட்டின் வட வெல்லையாய் உள்ள இமயமலைக்கும் வடக்கே நெடுந்தொலைவில் இந்நிலவுருண்டையின் வடமுனைநாடுகளில் இருந்த ஆரியர், அந்நாடுகள் வரவரக் குளிர்மிகுந்து உயிர்வாழ்வதற்கு ஏற்ற தன்றாய் மாற, அவர்களுட் பலர் தாம் இருந்த இடத்தை விட்டுத் தெற்கு நோக்கிவந்து, இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லையிலுள்ள பெலுசித்தானத்தின் வழிப் புகுந்து பஞ்சாபிலுள்ள சிந்துயாற்றங்கரையிற் குடியேறினார்கள்.1 அப்போது அங்கு அரசாண்ட தமிழரசர்களாகிய வேளிர், பல நகரங்கள் அமைத்து வலிய கோட்டைகள் கட்டி வலிமையும் நாகரிகமும் உடையராய் விளங்கினரென்பது அவர்பால் வந்தெய்திய ஆரியரே தம்முடைய இருக்குவேதப் பாட்டுகளிற் கூறுமாற்றால் நன்குவிளங்கும். பொன்னாலும் மணிக்கலன்களாலும் ஒப்பனை செய்து கொண்டவர்களாய் அவர்கள் (தாசர்கள்) இந்நிலத்தின் மேல் ஒரு மூடுவலையைவிரித்தார்கள்2 இலபிசனுடைய வலிய கோட்டைகளை இந்திரன் உடைத்துப் பிளந்தான்3 மறஞ்சிறந்த நெஞ்சினனாகிய நீ பிப்ருவின் கோட்டை களை உடைத்து வீழ்த்தினாய், ஆரியர்களையுந் தாசியர்களையும் நீ நன்றாகப் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும், உறுதியாகக் கட்டிவைக்கப்பட்ட கஷ்ணாவின் கோட்டைகளை அவன் (இந்திரன்) துண்டு துண்டாகப் பிளந்தான்.4 இந்தச் சோமபானத் துளிகளால் உவந்து இந்திரன் தாசியர்களைக் கலைத்துத் துரத்த, நாங்கள், அவர்களின் பகைமைக்குத் தப்பிப்பிழைத்து, ஏராளமான உணவைப் பெறுவேமாக. ஓ! இந்திரனே, ஏராளமான செல்வத்தையும் உணவையும் பெற்று, மிகச்சிறந்த வலிமையினால் நாங்கள் வானளவும் உயர்ந்து விளங்குக. இரிஜிஸவான் அவர்களைச் சூழ்ந்து முற்றுமையிட்ட, ஞான்று, நீ சிறிதும் விட்டுக்கொடாமல் வங்கிரிதனுடைய நூறுகோட்டைகளை நுறுக்கியிருக்கின்றனை.2 இவ்விருக்குவேதப் பாட்டுகளில் ஆரியர்கள் இந்திரனை நோக்கிக் கூறும் வேண்டுகோளுரைகளால், தம் காலந்திருந்த வேளாண்மக்களையும் அவர்க்குத் தலைவரான வேளிர் அரசர்களையும் நிரம்பக் கொடுமையாக இகழ்ந்துரைத்தனராயினும், ஆரியர் அவர்களின் பெருங்செல்வத்தையும் நாகரிக அரசவாழ்க்கையையும் பொறாமையால் உடன் உயர்த்துக் கூறுதலுங் காண்க. ஆரியர்களாகிய தம்மையுந் தம்மால் தாசியரென வழங்கப்பட்ட தமிழரையும் பிரித்துக்காணுமாறு அவ் விந்திரனை வேண்டிக் கோடலும் நினைவுகூரற்பாற்று. இன்னுந் தமிழராகிய பிறர் இனிது வாழ்தலைக் காண இவ்வாரியர் மனம்பொறாது எரியும் இயல்பினர் என்பதற்குக், குயவன் என்பவனின் மனைவியர் இருவரும் பாலிலே தலைமுழுகின்றனரே! அவர்கள் சிபா யாற்றின் ஆழத்திலே அமிழ்ந்தி இறவார்களா.3 என்னும் அவர்களது கொடிய வேண்டுகோளுரையே சான்றாம். அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார், வழுக்கியும் கேடீன் பது என்னுந் தெய்வத் திருக்குறளின்படி, பெருஞ் செல்வத்தில் வாழ்ந்த இத் தமிழ் நன்மக்களை வயிறெரிந்து வைத ஆரியர் உண்ணச் சோறும் உடுக்கச் சீரிய துணியும் இருக்கச் சிறந்த இல்லமும் இன்றி மிக மிடிப்பட்டுக் காலங்கழித்தனரே யல்லாமற் பிறிதில்லை யென்பது அவர்களது வாய்மொழி யினாலேயே நன்கு புலப்படுகின்றது. அற்றேல், விருந்தோம்பும் நல்லறத்திற் சிறந்த பண்டைத் தமிழ் வேளாளர் மிடிப்பட்டு வருந்தி வந்த ஆரியரை வருத்தியது என்னையெனிற் கூறுதும். பண்டை நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற் கடவுளின் உண்மையை உணர்ந்தவர் அல்லர்; அதனை யுணராமையின் தாம் அம் முதற்பொருளை வழிபடு மாறும் உணராராயினர். தமக்காகத் தம் பகைவரோடு போர் இயற்றவும், மழைபெய்வித்துத் தமக்கு உணவுப் பண்டங்களை விளைவித்துத் தரவும் வல்லனவாகத் தம்மாற் கருதப்பட்ட இந்திரன் மித்திரன் வருணன் மருத்துக்கள் முதலான சிறு தெய்வங்களையே பெரிதும் வேண்டி வணங்கிவந்தனர். சோமப்பூண்டின் சாற்றினாற் சமைத்த களிப்பான பானகத்தை அத் தெய்வங்களுக்குப் பருகக் கொடுத்தலானும், யாடு, மாடு, குதிரை முதலிய விலங்கினங்களை வெட்டி அவற்றின் இறைச்சியை அவை தமக்கு உணவாகக் கொடுத்துத் தாமும் உண்டாலானும் தாம் இந் நிலவுலகத்திற் பெறவேண்டிய எல்லாச் செல்வங்களையும் பிழையாமல் எளிதிற் பெறலாம் என்று நம்பி வந்தார்கள். இந்நம்பிகையாற் சோமபானத்தையும் விலங்கின் இறைச்சியையும் அவியாகக் கொடுக்கும் பொருட்டு அளவிறந்த வேள்விகளையும் வேள்விச் சடங்குகளையும் நாடோறும் பெருக்கி வந்தனர். அதற்கு இருக்கு வேதத்தின் ஐந்தாம் மண்டிலத்தின் கண் உள்ள, ஓ! பிராமணர்களே மருத்துக்களே, யான் கருத்தாய்ப் பிழிந்த இந்தச் சோமபானத்தை இந்திரன் பருகட்டும்; ஏனென்றால் இந்தக் காணிக்கையானது ஆடவனுக்கு ஆடுமாடுகளைத் தேடித் தந்தது; இந்திரன் அதனைப் பருகிய பின் அவ் அரவினைக் கொன்றான். ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு உதவி செய்தல் போல அக்கினியானவன் அவன் வேண்டிய படியே முந்நூறு எருமை மாடுகளை விரைந்து பாகம் பண்ணிக் கொடுத்தான். இந்திரனும், விருத்திரனைக் கொல்லுதற்கு ஆடவனது காணிக்கையாக, நெருக்கிப் பிழிந்த மூன்று பெரிய தொட்டிச் சோமபானத்தை உடனே குடித்து விட்டான். மகவான், நீ முந்நூறு எருமை மாடுகளின் இறைச்சியைத் தின்று, மூன்று தொட்டிச் சோமபானத்தைப் பருகிய போது, தேவர்களெல்லாரும் வென்றி முழக்கத்தை எழுப்பினார்கள்; அவன் அரவினைக் கொன்றதற்காக அவனைப் புகழ்ந்தார்கள்.1 என்னும் பாட்டே சான்றாம். மயக்கத்தைத் தருங் கள்ளை யொத்த சோம பூண்டின் சாற்றை ஏராளமாகப் பருகிய தல்லாமலும், முந்நூறு எருமை மாடுகளையுங் கொலை செய்து பலியூட்டி ஆரியர் தம் தெய்வமாகிய இந்திரனுக்கு ஒருகால் வெறியாட்டு அயர்ந்தமை இதன் கண் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றதன்றோ? இங்ஙனமே வெள்ளாடுகளுஞ் செம்மறிக்கிடாய்களும், எருதுகளும், ஆக்களும், குதிரைகளும், ஆரியரால் அளவின்றிக் கொல்லப்பட்டமையினை இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், ஐந்தாம் மண்டிலம், ஆறாம் மண்டிலம், பத்தாம் மண்டிலங்களில் இடையிடையே காணலாம். இச்சிற்றுயிர்களையே யல்லாமல் தம்மையொத்த மக்களையுங்கூட ஆரியர் கொலைபுரிந்து புருஷ மேதம் செய்தமையுஞ் சதபத பிராமணத்தாற் புலனாகின்றது; கடைசியாக ஓர் ஆண்மகனைக் கொன்று பலியூட்டினவன் சியாபர்ணசாய காயனனே ஆவன் என்று சதபதபிராமணங் கூறுதல் காண்க. 1 இவ்வாறாகக் குடியுங் கொலையும் மலிந்த வெறியாட்டுச் சடங்குகள் கொண்டாடுவதைத் தவிர, அத் தீவினையைஒழித்து எல்லா அருளும் உடைய ஒரு முழுமுதற் கடவுளைத் தமக்கு இயன்றமட்டுமாவது வணங்குதலில் ஆரியர்க்குக் கருத்துச் செல்லாமை, அவர்கட்கு இன்றியமை யாததாகிய மீமாஞ்சை நூலாலும் நன்கு விளங்கும்; இம் மீமாஞ்சை நூல் முழுமுதற்கடவுள் என ஒன்று இல்லை என்று மறுப்பதோடு, பன்னூறு வகையவான இத்தகைய வெறியாட்டு வேள்விச் சடங்குகளை வாளா விரித்தோதுதலும் யாம் கூறுவதன் உண்மையை நிலைநாட்டும். மேலும், ஆரியர் தாம் இயற்றும் இவ் வெறியாட்டு வேள்விச் சடங்குகளுக்குத் தமிழவேளாளர் இசையாமையை அவ்வாரியார் தாமே, இந்திரனே, நீ நின் துணைவருடன் சென்று நின்கையிலேந்திய குலிசப்படையாற் செல்வம்மிக்க தாசியரைத் தனியே கொல்கின்றாய்! சடங்குகள் புரியாமல், எமக்கு முன்னமே பழையராய் உள்ள அவர்கள் வான் நிலத்தினின்றும் பலமுகமாய்ச் சிதறியோடி அழிந்தார்கள்.2 என்று இருக்குவேதத்திற் கூறுமாற்றால் அறிந்து கொள்க. அடிக்குறிப்புகள் 1. இது பாலகங்காதரதிலகர் நுணுகி ஆராய்ந்தெழுதிய வேதங்களிற் கூறிய வடமுனை இல்லம் (Arctic Home in the vedas) என்னும் நூலிற் காண்க. 2. இருக்குவேதம், 1, 33, 8 3. இருக்குவேதம், 1, 33, 12 4. இருக்குவேதம், 1, 51 5. இருக்குவேதம், 1, 563 6. இருக்குவேதம், 1, 104 7. இருக்குவேதம், 5, 29, 3 , 7, 8 8. இருக்குவேதம், 1, 33 9. சதபதபிராமணம், 6, 2, 1, 39 10. வேளாளர் ஆரியரை அருவருத்து ஆரியத்தில் அறிவுநூல்கள் இயற்றினமை கொலை புலை தவிர்ந்த அருளொழுக்கத்தில் நிலை பெற்று நிற்கும் வேளாளர், கொலை புலை கட்குடி முதலிய தீவினைகளைப் பெருக்கி ஆரியர் கொண்டாடிய வெறியாட்டு வேள்விகளில் மிக வெறுப்புக்கொண்டு அவ்வேள்விகளை அழித்தற்கும், அவை செய்வதில் உறைத்து நின்ற ஆரியரோடு போர்புரிந்து அவரை அடக்குதற்கும் முன்நின்றமை ஒரு வியப்பன்று. இங்ஙனத் தாஞ்செய்த வெறியாட்டு வேள்விகளை அழித்தமைபற்றியே அவ்வாரியர் பெரிதுஞ் சினங் கொண்டு அவ் வேளாளரையும் அவருள் அரசரான வேளிரையுந் தாசியர், இராக்கதர், அசுரர் என்று இகழ்ந்து கூறி, அவரைத் தாழ்த்துதற் பொருட்டுப் பொய்யான பல புராணக் கதைகளையும் எழுதிவைப்ராயினர். ஆரியர் இங்ஙன மெல்லாம் நூல் வழியாலும் பல கொடுமைகளைச் செய்து வரவே, அவர் எழுதிய அந்நூல்களில் பொய்ம்மையும் அவர் தம் பொருந்தாச் செயலும் எல்லார்க்கும் விளக்கல் வேண்டி, அவர்க்குரிய ஆரிய மொழியைத் தமிழ வேளாளராகிய தாமுங் கற்றுக் கொலை புலை கட்குடி மறுத்த தமதுயர்வுந், தாம் வழிபடும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் அருட்சிறப்பும், அவனை யடைதற்குரிய மெய்யுணர்வின் மாட்சியுந் தெளித்து இருக்கு எசுர் சாம அதர்வண வேதப்பாட்டுகள் சிலவும், உபநிடந்தங்கள் சிலவும், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், யோகம், வேதாந்தம் முதலிய ஐந்து மெய்யுணர்வு ஆராய்ச்சி நூல்களும், இதிகாசங்கள் புராணங்கள் சிலவும் இயற்றி யிட்டார்கள். ஆரிய மொழியில் தமிழர் இயற்றிய இந் நூல்களிலும் பாட்டுகளிலும், உயிர்களைக் கொன்று செய்யும் வேள்விச்சடங்குகளின் இழிபும், அவர் வணங்கிய இந்திரன் வருணன் மித்திரன் மருத்துக்கள் முதலான சிறுதெய்வங்களின் சிறுமையும், அவர் தம்மைத் தேவரெனச் சொல்லிக் கொள்ளும் அகம் பிரமச் செருக்குரையின் இழுக்குந் தெரித்துக் கூறப் பட்டிருப்பதுடன், கொல்லாமை புலாலுண்ணாமை களியாமை என்னும் அறவேள்விகளின் உயர்வும், பிறப்பு இறப்பு இல்லாத் தனிமுதற்கடவுளான சிவத்தின் முழு முதற்றன்மையும், பிறந்து நோயாலுங் கவலையாலும் இடையிடையே மாய்ந்து போகும் மக்கள் பிரமம் ஆதல் செல்லாமையும், அன்பும் அருளும் மெய்யுணர்வின் முற்றுப்பேறும் உடையராய்ச் சிவபிரான் திருவடித் தொண்டில் இடையறாது நிற்பாரே மீண்டு வாரா வீட்டு நெறி தலைக்கூடிச் சிவத்தோடு இரண்டறக் கலக்குமாறும் வற்புறுத்துச் சொல்லப்படுதல் பகுத்தாராய்ந்து கொள்க. இவ்வாறு ஆரியமொழியில் அதற்குரிய ஆரியரும் அதற்கு வேறான தமிழறிஞரும் இயற்றிய செய்யுட்களும் நூல்களும் ஒன்றோடொன்று விரவித் தலைமயங்கிக் கிடப்பினும், அவற்றுள் இவை ஆரியர் செய்தன, இவை தமிழர் செய்தன வென்று மேற்காட்டியவாற்றாற் பகுத்துணர்ந்து கோடல் எளிதேயாம். ஆரியர் செய்தவைகளில் ஆரியராகிய தம்மைப் பற்றிய உயர்வும், விலங்குகளைக் கொன்று வேட்கும் வெறியாட்டு வேள்விகளின் சிறப்பும் மயக்கந் தருஞ் சோமச்சாற்றின் பெருமையும், இந்திரன் வருணன் முதலான சிறுதெய்வ வணக்கமும், தமக்குந் தம் இழி செயல்களுக்கும் உடம்படாத தமிழர்களை இகழும் இகழுரைகளும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானைப் பழிக்கும் பழிப்புரைகளும், இன்னும் இவை போன்றவைகளும் மலிந்துகிடக்கும் தமிழறிஞர் செய்தவைகளில் அன்பு அருள் என்னும் உயர்ந்த நெறிகளின் மாட்சியும் வெறியாட்டு வேள்விச் சடங்குகள் பயனிலவாதல் காட்டும் அறிவுரைகளும், உலகு உயிர் இறை என்னும் இவற்றின் உண்மைத் தன்மையை ஆராயும் ஆராய்ச்சிகளும், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் சிவம் ஒன்றே என்னும் மெய்யுரையும் பிறப்பு இறப்புக் கவலைநோய் முதலியவற்றிற் கிடந்துழலும் புல்முதல் மக்கள் தேவர் ஈறான எல்லா உயிர்களும் மாசு பொதிந்தனவா யிருத்தலின் அவை முதன்மையிலவாதல் தெரிக்கும் உண்மையுரைகளும், அவை மலமாசு தீர்ந்து இறைவனைத் தலைக்கூடி நிற்கும் வகையாகிய தவநிலைகளும், இன்னும் இவை போல்வனவும் நிரம்பிக் கிடக்கும். இவ்விரு வேறு அடையாளங்கள் கொண்டு ஆரிய மொழியில் ஆரியர் தமிழர் என்னும் இவ்விரு வேறு வகுப்பாரும் இயற்றிய செய்யுட்களையும் நூல்களையும் பிரித்து அறிந்து கொள்க. இனி, மண் நீர் நெருப்புக் காற்று வான் என்னும் ஐம்பெரும் பொருள்களின் கலப்பாற் றோன்றிய இவ்வுலகங்களின் உள்ளும் புறம்புமாகிய எவ்விடங்களினும் இறைவன் எள்ளில் நெய்போற் கலந்து நிற்பனாயினும், மக்கள் தன்னை எளிதில் கண்டு வழிபடுதற் பொருட்டு அவன் அனற்பிழம்பின் கண்ணே முனைத்துத் தோன்றுவன். அது பற்றியே, சுடர்கின்ற கொலந், தீயே யெனமன்னு சிற்றம் பலவர் என்று மாணிக்கவாசகப் பெருமானும், பொங்கு அழல் உருவன் பூத நாயகனால் என்று திருஞானசம்பந்தப் பெருமானும், எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவருக்கமது ஆவது உணர்கிலார் என்று திருநாவுக்கரசு நாயனாரும் அணுவாகி ஓர் தீயுருக் கொண்டு என்று (திருநனிபள்ளித் தேவாரம்) சுந்தரமூர்த்தி நாயனாரும் அருளிச் செய்திருக்கின்றனர். அனற்பிழம்பு இறைவனுக்குத் திருமேனியாய் நிற்றலின் உண்மையைச் சிவஞானபோத ஆராய்ச்சி யில் விரித்து விளக்கியிருக்கின்றேமாகலின் அதனை அங்கே கண்டு கொள்க. இங்ஙனந் தீப்பிழம்பும், அத் தீப்பிழம்பின் வடிவாய் வானத்தின்கட்டிகழும் ஞாயிற்று மண்டிலமும் இறைவற்குச் சிறந்த திருமேனியாதல் கண்டு, தீயினையும் ஞாயிற்றினையும் பண்டைக்காலந்தொட்டே தமிழ்முது மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆரியரும் அங்ஙனமே அவ்விரண்டனையும் வழிபட்டு வருவரெனின்; அவர் அவற்றையே தெய்வங்களாகக் கருதி வணங்குவரல்லது, அவற்றுக்கும் மேற்பட்ட முழு முதற் கடவுள் ஒன்று உண்டென்றும், அவ்வொன்றே அவ்விரண்டிலும் ஏனை ஒளியுடைப் பொருள்களிலும் பிறவற்றிலும் ஊடுருவி விளங்குவதென்றும் ஒருசிறிதும் உணரார்; தீயை வளர்ப்பர், ஆனால் அது சிவபெருமான்றன் உருவ வகைகளில் ஒன்றாதலை அவர் உணர்ந்திலர் என மேலெடுத்துக் காட்டிய திருநாவுக்கரசுநாயனார் அருளிச் செய்த திருப்பாடலும் அறிவுறுத்துதல் காண்க. இங்ஙனமே, அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ என்று அந் நாயனார் மீண்டும் அருளிச் செய்யுமாற்றால், ஞாயிற்றினை வணங்கும் ஆரியர் அஃது இறைவற்கோர் உடம்பாதலைச் சிறிதும் உணர்ந்திலரெனத் தெளிவித்தல் காண்க. ஆரியர் தீயினையும் ஞாயிற்றினையுந் தனித் தனித் தெய்வங்களாகக் கொண்டு வணங்கா நிற்கத், தமிழரோ அவற்றை எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளுக்குச் சிறந்த வடிவங்களாக மட்டும் வைத்து வழிபடா நிற்பர். ஆகவே, இருக்கு முதலான வேதங்களில் தீயையும் ஞாயிற்றையுந் தனித்தனித் தெய்வங்களாக வைத்து வணக்கவுரை கூறும் பாட்டுகளெல்லாம் ஆரியராற் செய்யப் பட்டனவாகுமென்றும் அவை தம்மை இறைவன்றன் ஒளி வடிவங்களாக வைத்து வழிபடும் பாட்டுகளெல்லாந் தமிழ்ச் சான்றோராற் செய்யப் பட்டனவாகு மென்றும் பகுத்துணர்ந்து கொள்க. விசுவாமித்திரர் என்னுந் தமிழரசமுனிவராற் செய்து சேர்க்கப்பட்ட இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திரமானது, ஞாயிற்று மண்டிலத்தின்கண் முனைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவபிரான் மேற்றாய் விளங்குதலே யாம்கூறும் உண்மைக்குச் சான்றாம் என்க. இவ்வாறாக, ஆரியரைத் திருத்தும் பொருட்டுத், தமிழ்ச்சான்றோர் அவரோ டுடன் பழகி அவர்தம் ஆரிய மொழியையுங் கற்று, அவர் வணங்கிய தீயும் ஞாயிறும் என்னும் இரண்டின் வழியே சிவபிரானை வழிபடும் உயர்ந்த நெறியை அவர்க்கு உய்த்துணரவைத்துக் காட்டியும் அவ் வாரியர் அதிற் கருத்தில்லாதவராய், விலங்கினங்களைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்னும் வெறியாட்டு வேள்விகள் புரிவதிலேயே முயற்சியுங் கருத்தும் உடையராய் நின்றனர். உயர்ந்த நுண்பொருள் உணர்ச்சியில் அவர்க்கு உள்ளஞ் செல்லாமையைக் கண்ட தமிழ்ச்சான்றோர் எப்படியாவது அவரை உய்விக்கவேண்டுமென எண்ணி, அவர்தங் கொடுந்தன்மைக் கேற்றதாக ஓர் உயர்ந்த கடவுள் வணக்கத்தை நிலைபெறுத்துவான் வேண்டிச் `சீகண்ட உருத்திரர் மேற் சில பதிகங்களுஞ் சில வழுத்துரைகளும் இயற்றி அவற்றையுஞ் சேர்த்து இருக்குவேதத்தை ஒழுங்குபடுத்தினர். சீகண்ட உருத்திரர் நான்முகன் திருமால் காலருத்திரர் என்னும் மூவர்க்கும், இந்திரன் வருணன் மித்திரன் முதலான ஏனைத் தேவர்கட்கும் மேற்பட்டவராய்ச், சைவசமயத்தவரால் வணங்கப் படும் முதற்பெருந் தெய்வமாய் இருத்தலின், அவரை வணங்குதற்குப் புகுந்த வளவானே, ஆரியர் ஏனைச் சிறு தெய்வ வழிபாட்டையும் உயிர்க் கொலையையும் விட்டுப் பையப் பையத் தமது தமிழ்க் கொள்கையைத் தழுவுவரெனத் தமிழ்ச் சான்றோர் எண்ணினார். எண்ணியும், இவை யெல்லாஞ் செய்து வைத்தும் என்! ஆரியர் இன்றுவரையிற் றமது சிறுதெய்வ வழிபாட்டை விட்டவர் அல்லர். இன்னும் உற்றுநோக்கின், அவர்அச்சிறு தெய்வ வழிபாட்டினுந் தாழ்ந்த மக்கள் வழிபாட்டிலே இப்போதும் மிகுதியாய் இறங்கி விட்டனர்; இராமன், கண்ணன் முதலான அரசர்களையே மிக வணங்குவதோடு, தம்மின்வேறாகக் கடவுள் ஒன்றில்லை, தாமே கடவுள் என்னும் ஒரு பொல்லாத கொள்கையையும் விடாப்பிடியாய்க் கைக்கொண்டு ஒழுகி வருகின்றார்கள். அதுமட்டுமோ, சீகண்ட உருத்திரரையுஞ் சூத்திரர்க்குரிய சூத்திரதெய்வமென ஒதுக்கி வைத்துவிட்டார்கள்! 11. மாயாவாதி ஒருவர் உருத்திரவழிபாடு தமிழரதன்று என்றது பொருந்தாமை உண்மையிவ்வாறிருக்க, எல்லாம் பொய், நானே கடவுள் என்னும் மாயாவாதக் கொள்கையுடைய தமிழர் ஒருவர், உருத்திர வழிபாடு ஆரியர்க்கே உரியதெனவும் அதனை ஆரியரே தமிழர்க்குத் கற்பித்தாரெனவும், இந்திர வருண வழிபாடுகளையே ஆரியர் தமிழரிடமிருந்து பழகிக் கொண்டாரெனவுஞ் சான்றுகள் காட்டாது தமக்குக் தோன்றியவாறே கூறினார். உருத்திரவழிபாடு ஆரியர்க்கே உரியதாயின், இருக்கு வேதத்திலுள்ள முழுத்தொகைப் பதிகங்கள் ஆயிரத்து இருபத்தெட்டில் இருநூற்றைம்பது பதிகங்கள் இந்திரன் மேலும், இருநூறு பதிகங்கள் அக்நி மேலும் நூறு பதிகங்கள் சோமப்பூண்டு சோமபானத்தின் மேலும், ஏனைய ஏனைத் தேவர்கள் மேலுமாக, அவற்றுள் மூன்று நான்கு பதிகங்களே உருத்திரர் மேலனவாய் இருத்தல் என்னை? உருத்திரர் மேல் மூன்று நான்கு பதிகங்கள் அல்ல, எத்தனையோ பல இருக்கு வேதத்தில் உள்ளன வென்று கூறும் அவர் அப் பதிகங்கள் இவ்விவையென எடுத்துக் காட்டாமையே அவரது கூற்று உண்மையன்றென்பதனை நன்கு புலப்படுத்தும், ஏனைத் தேவர்கள் மேல், முதன்மையாய் அக்நிமேற் பாடப்படும் பதிகங்களில் இடையிடையே சிற்சில இடங்களில் உருத்திரப் பெயர் வருமாயினும், ஆண்டது அக்நியையும் உருத்திர கணங்களையும், ஒரோவழிச் சீகண்டருத்திரரையுங் குறியாநிற்கும். அவையெல்லாந் தமிழ்ச் சான்றோராற் சேர்க்கப்பட்டனவே யாம். இன்னும், உருத்திரவழிபாடு ஆரியர்க்கே உரியதாயின் வடநாடு தென்னாடுகளில் அவ் வேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஆரியப்பார்ப்பனர் அனைவரும் அவ்வுருத்திரனைச் சூத்திர தெய்வமென வழிபடாமல் ஒதுக்கி, இராமன் கண்ணன் நாராயணன் முதலான ஏனையோரையே வழிபடுதல் என்னை? தென்னாட்டில் உள்ள தமிழர் அவ்வழிபாட்டிற்கு உரியரல்ல ராயின், அவர் தென்னாடெங்கணும் பல்லாயிரந் திருக்கோயில்கள் பண்டுதொட்டு அமைத்து அவற்றின்கண் அவ்வுருத்திரனை வழிபட்டு வருத லென்னை? இந்திரன் வருணன் முதலான சிறு தெய்வ வணக்கமே தமிழருக்கு உரியதாயின், தமிழ்நாட்டில் ஓரிடத்தேனும் அத்தெய்வங் களுக்குத் தனிக்கோயில்கள் இல்லாமையும், அவற்றை அவர் வணங்காமையும் என்னை? பண்டை நாட்டொட்டுத் தமிழ் மேன்மக்கள் சிவபிரானையே வழிபட்டு வந்தனர் என்பதற்குக், குமரிநாடு கடல் கொள்ளப்படுமுன் பாடப்பட்டதாகிய தமிழ்ச் செய்யுள் ஒன்றில், பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே1 எனப் போந்த குறிப்பும், அந்நாள் முதல் இந்நாள் காறும் ஒரு தொடர்பாகப் போதருகின்ற சிவ வணக்கச் செய்யுட்களுஞ், சிவபிரான் திருக்கோயில்கள் திருவிழாக்கள் முதலியவற்றின் மாட்சியும் நன்கு சான்று பகர்கின்றனவல்லவோ? சிவபிரானோடு ஒப்பவைத்து ஏனைச் சிறு தெய்வங்களைத் தமிழ் மேன்மக்கள் வழிபட்டு வந்தனர் என்பதற்கு ஒரு தினையளவு சான்றும் இல்லாதிருக்கத், தாம் தமிழரது வழிபாட்டை முற்று முணர்ந்தாற்போற் செருக்கிப் பொய்யுரை கூறித் தமிழரை இழித்துரைக்கப் புகுந்தது அறிவுடையாரால் நகையாடி விடுக்கற் பாலதாமன்றி மற்றென்னை? அற்றேற், காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்கு விழா எடுத்தமையும் நெய்தல் நில மக்கள் வருணனை வழிபடுதலும் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுதல் என்னையெனின்; மழை வேண்டியுங் கடல் நீரால் இடர்நேராமைப் பொருட்டும் இந்திரனையும் வருணனையும் மருதநில நெய்தல் நில மக்கள் வணங்கும் வணக்கம் அவ்வந் நிலத்துக் குடிமக்களாற் செய்யப்படுவ தல்லது, தமிழ் நிலத்துள்ள எல்லா மக்களும் அவருள் உயர்ந்தாருஞ் செய்வதொன்றன்று, இஞ்ஞான்றம் இழிந்தாரான தமிழ்க் குடிமக்கள் செய்யும் மாரி மதுரைவீரன் முதலான சிறுதெய்வ வணக்கத்தை மட்டுங் கண்டு, ஆங்காங்குள்ள சிவபிரான் திருக்கோயில்களையும் அவற்றின்கட் டமிழ் மேன்மக்கள் செய்து போதரும் வழிபாடுகளையுங் காணப்பெறாத வேற்றுநாட்டார் ஒருவர் தமிழர்க்குரியது இழிந்த சிறுதெய்வ வணக்கமே என்று கூறிடுவராயின், தமிழ்மேன்மக்கள் அவரது மடமைக்கிரங்கி அவரை நகையாதொழிவரோ? இங்ஙனமே பண்டைத் தமிழ் மேன்மக்கள் இழித்துரைக்கும் இப் போலித் தமிழர் கூற்றும் நகையாடி விடுக்கற் பாலதாம் என்க. பண்டைநாளில் தமிழ்மக்களால் வணங்கப்பட்ட தெய்வங் களுள்ளும் அத் தெய்வங்கள் உறையுங் கோயில்களுள்ளுஞ் சிவபிரானும் அவனுறையுந் திருக்கோயிலுமே முதன்மையாக வைக்கப்பட்ட உண்மைக்குப், பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் எனச் சிலப்பதிகாரத்திற் 1 சிவபிரான் கோயில் முதலிலும், இந்திரன் கோயில் கடையிலுங் கூறப்பட்டிருத்தலே சான்றாம். இதனோடு ஒப்பவே மணிமேகலையிலும், நுதல்வழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக2 என்று சிவபிரானே முழுமுதற் கடவுளாக முதற்கண் வைத்து ஓதப் பட்டிருத்தல் காண்க. அஃதொக்கும், இந்திரன் வருணன் முதலான ஆரியர்க்குரிய தெய்வங்களைப் பண்டைக் காலத்திலேயே தமிழ் மக்களும் வணங்கலாயினது என்னையெனின்; ஆரியர் வணங்கிய இந்திரனுந் தமிழர் வணங்கிய இந்திரனும் ஒருவர் அல்லர். ஆரியர்க்குரிய இந்திரன் இடி மழை மின்னல் முதலியவற்றிற்குரிய தெய்வமாதலோடு அவர்தம் பகைவரோடு போராடுங்கால் அவர்க்கு உதவியுந் துணையுமாய் நின்று அவர்க்கு வெற்றியைத் தருபவனாகவும், அவர் தருஞ் சோமச் சாற்றையும் விலங்கி னிறைச்சியையும் நிறைய உட்கொண்டு அவர் வேண்டிய நலங்களையெல்லாம் அவர்க்கு விளைப்பவ னாகவுஞ் சொல்லப்படுகின்றான். தமிழர் வணங்கிய இந்திரனோ வயலும் வயல்சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தில் உள்ள உழவர்களால் மழையின் பொருட்டு மட்டும் வேண்டி வணங்கப்பட்ட மழைக் கடவுள் ஆவன்; மழையின் பொருட் டாகவன்றி வேறெந்த நன்மைப் பேற்றின் பொருட்டாகவேனுந் தமிழர்களால் அவன் வணங்கப் பட்டவன் அல்லன். இருக்கு வேதத்திலுள்ள பாட்டுகளில் மூன்றில் ஒரு கூறு இந்திரன் மேற் செய்யப்பட்டிருத்தல் போலத் தமிழ் நூல்களில் எங்கும் ஒரு பாட்டேனும் இந்திரன் மேற் செய்யப்படவில்லை. பழந்தமிழ் நூல்களில் உள்ள வணக்கச் செய்யுட் களெல்லாஞ் சிவபிரான் மேலும் முருகக்கடவுள் மேலுந் திருமால் காடுகிழாள் முதலான ஏனைச் சில தெய்வங்கண் மேலுமே பாடப் பட்டனவாய் இருக்கின்றன. அதுவேயு மன்றித், தொல்காப்பியம் முதலான மிகப்பழைய தமிழ்நூல் களில் இந்திரன் என்னுஞ் சொல்லே காணப்படவில்லை. மருதநிலத்து மக்களாற் கொண்டாடப்படுந் தெய்வம் வேந்தன் என்று சொல்லப்படுகின்றது; வேந்தன்மேய தீம்புனல் உலகமும்1 என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதல் காண்க. தமிழர் மழையை வேண்டி வணங்கிய வேந்தனும் ஆரியர் மழையின் பொருட்டாகவும் வணங்கிய இந்திரனும் மழைக் கடவுளாதல்பற்றிப் பிற்காலத்தவரால் அவ்விருவரும் ஒருவராகக் கொள்ளப்படுவாராயினர். அவ்வாறு கொள்ளப்படினுந் தமிழர்க்குரிய வேந்தனுக்கும், இருக்குவேத ஆரியர்க்குரிய இந்திரனுக்கும் ஏதோர் இயைபும் இல்லையென்பது அவ்விருவர்தம் பழைய நூல்களையும் நன்காராய்ந்து பார்க்கும் நடுநிலையாளர்க்கும் நன்கு விளங்கும். பிற்காலத்துப் புராண நூல்களிற் சொல்லப்படும் இந்திரனுக்கும் இருக்குவேதத்திற் சொல்லப்படும் இந்திரனுக்குங் கூடச் சிற்சில வகைகளிற் றவிர மற்றப் பல வகைகளில் ஏதோர் ஒற்றுமையும் இல்லை. உற்று ஆராயுங்கால் தமிழர்க்குரிய வேந்தன் என்போன், தமிழர்க்குள் முதன்முதற் றலைவனய்த் தோன்றி, மழைபெய்யுங் காலமும், அம் மழையினுதவியாற் பயிர் செய்வதற்கேற்ற வளவிய நிலமும் அந் நிலத்தைத் திருத்திச் செவ்வனே பயிர் விளைக்கும் வகைகளும் நன்குணர்ந்து உழவுதொழிலைக் கற்பித்துத் தமிழ்மக்களை மேல்நிலைக்குக் கொணர்ந்தவனாதல் வேண்டு மென்பது புலப்படும். நன்றிசெய்த முன்னோரை நினைந்து அவர்களைப் பரவுதல் தமிழர்க்கு இயற்கையாதலால், அவர் கால்வழியில் வந்த மருதநிலத்து உழவர் முதல்வேந்தனான அவனது ஆவியை வேண்டி வணங்குவாரானார் என்க. மருத நிலத்தின் கண்ணேதான் அரசனும், அரச வாழ்க்கையும் அவனது அரண்மனை வாய்ந்த நகரமும் இருந்தமை பண்டைத் தமிழ்நாட்டு வழக்கு என்பதனையும் மேலே காட்டினாம். அங்ஙனந்தமிழர் தம் முதல் வேந்தனை வணங்கினும் அவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டிலர் என்பது யாம் மேலே காட்டியவாற்றால் நன்கு புலனாம். இனி, ஆரியர் வணங்கிய வருணனும் வேறு, தமிழர் வணங்கிய வருணனும் வேறு. ஆரியர்க்குரிய வருணன் வானின் தெய்வமாக இந்திரனோடு ஒப்பவைத்துச் சிறந்தெடுத்து அவரால் வணங்கப் படுவோன் ஆவன்; இருக்கு வேதத்தில் இவன் மேற் பாடப்பட்ட பதிகங்கள் பல, தமிழர்க்குரிய வருணனோ தமிழருட், கடலுங் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்திலுள்ள மக்களால் மட்டுங் கடற்றெய்வமாக வைத்து, வணங்கப்படுபவன் ஆவன், இருக்கு வேதத்திலுள்ள வருணன் கடற்றெய்வமாக ஒரோவொருகால் அருகிச் சொல்லப்படினும், பிற்காலத்துப் புராணங்களிற் சொல்லப்படும் வருணனுக்கும் இருக்குவேத வருணனுக்கும் ஏதோர் இயைபுங் கண்டிலேம். தமிழ வருணனும், ஆரிய வருணனுஞ் சொல்லால் ஒத்தல் பற்றி அவ்விருவரையும் ஒருவரென்றல் ஆராய்ந்துணராதார் கூற்றாம். தமிழரில் நெய்தல் நில மக்கள் வருணனை வணங்குதல் தமக்கு வலைவளம் வாய்த்தற் பொருட்டுங், கடல் மேற்செல்லுந் தமக்குத் தீங்குநேராமைப் பொருட்டுமேயாம். இத்துணையே யன்றித் தமிழரில் ஏனையோர் வருணனை ஒரு பெருந்தெய்வமாக வைத்து வழிபட்டவர் அல்லர். அவ்வருணனுக்குத் தனிக் கோயில்களாதல், அவனை வழுத்திய பாடல்களாதல் தமிழ்நாட்டினுந் தமிழ்மொழியினும் இல்லை ஆகையால், ஆரியர் தமக்குரிய பெருந்தெய்வங்களாக வைத்துப் பலவாற்றானுங் கொண்டாடிய இந்திர வருண வழிபாடுகளை அங்ஙனம் அவற்றைக் கொள்ளாத தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்க ளென்பதுந், தமிழர்களில் ஒவ்வொரு நிலத்து மக்கள் வணங்கிய வேந்தனும், வருணனும், ஆரியர் எல்லாரும் வணங்கிய இந்திரனும் வருணனுந் தம்மிற் பெரிதும் வேறுபாடுடையராயிருப்ப, அவ்விருவரும் ஒருதிறத்தினரே யாமெனக் கூறுதலும் பகுத்துணர்வில்லாதார் கூறும் போலியுரையாமென்று தெளிக. இனி, ஆரியர் தமிழரோடு கலந்தபின் அவர்க்குரிய இந்திர வருண வழிபாடுகளைத் தாம் கற்றுந், தமக்குரிய உருத்திர வழிபாட்டை அவர்க்குக் கற்றுக் கொடுத்தும் வந்தது உண்மையாயின், தமிழர் இருந்த இவ்விந்திய நாட்டுக்குள் வராமல், அதற்குப் புறம்பே தம்மினத் தவரான பாரசிகர் கிரேக்கர் முதலியோருடன் ஆரியர் அயல் நாடுகளிற் குடியிருந்த அக்காலத்தில் அவரெல்லாருமாய்ச் செய்தது உருத்திர வழிபாடாயிருத்தல் வேண்டும். தமிழர்க்குரியதாயின் இந்திரவருண வழிபாட்டைப் புறம்பேயிருந்த அவ்வாரிய வகுப்பினர் அந் நாளிற் சிறிதும் அறியாராயிருத்தலும் வேண்டும். மற்று, அவ் வாரிய வகுப்பினரான பண்டைப் பாரசிகரின் அவதா என்னும் நூலையுங், கிரேக்கருடைய பழைய நூல்களையும் ஆராய்ந்து பார்ப்பின் அவற்றின்கண் உருத்திர வழிபாடு ஒருசிறிதுங் காணப்படாமையின், அவ்வழிபாடு பண்டை யாரியர்க்கே உரியதென்பார் உரை பெரும் பிழை பாட்டுரையேயாம். இன்னும், இந்திரனுக்கும் வருணனுக்கும் உரிய பெயர்களாக இருக்குவேதத்தில் வழங்கும் விருத்திரகன் அசுரன் என்னுஞ் சொற்கள், பாரசிகர்க்குரிய பழைய வேதமாகிய அவதா என்னும் நூலிற் காணப் படுவதோடு, வருணன் என்னுஞ் சொல்லுஞ் சிறிது திரிபோடு கிரேக்கருடைய பழைய நூல்களிலும் வழங்குகின்றது. இங்ஙனமே ஆரியரெல்லார்க்கும் பொதுவாக உரிய தெய்வங்கள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றின் பெயர்கள் இருக்குவேத ஆரியர்க்கும் பாரசிகர் முதலான பழைய ஆரியவகுப்பினர்க்கும் பொதுவாயிருத்தல் கண்டுகொள்க. அவையெல்லாம் ஈண்டெடுத்துரைப்பின் இது மிக விரியும். இங்கே காட்டினமை கொண்டு இருக்குவேதத்திற் சொல்லப்பட்ட இந்திர வருண வழிபாடுகள் ஆரியர்க்கே உரியனவாமென்றம், அதில் இடையிடையே புகுத்தப்பட்ட உருத்திரவழிபாடு தொன்றுதொட்டுத் தமிழ் நன்மக்கட்கே உரியதாமென்றும் பகுத்துணர்ந்து கொள்க. அடிக்குறிப்புகள் 1. புறநானூறு, 6. 2. இந்திரன் விழவூரெடுத்த காதை, 169 - 173. 3. மணிமேகலை, விழாவரை காதை, 54 - 55 4. தொல்காப்பியம், பொருளதிகாரம் 5. 12. நடுநிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திரவழிபாடு தமிழரதென்றமை இக்கோட்பாடு யாம்மட்டும் புதிதாகக் கூறுவதன்று, வடமொழி நூல்களை நடுநிலைமையோடு எழுத்தெண்ணிக் கற்று அவற்றின்கண் நிகரற்ற புலமையுடையராய் விளங்கும் ஐரோப்பிய அறிஞரும், ஆரிய வேதங்களின் இடையிடையே காணப்படும் உருத்திர வழிபாடு சிவவழிபாடுகள் பண்டு தொட்டு ஆரியர்க்கு உரியன அல்லவென்றும், அவை தமிழர் பால் நின்றும் ஆரியர் கைக்கொண்டனவா மென்றும், இந்திரவருண வழிபாடுகளே ஆரியர்க்கு உண்மையில் உரியனவாமென்றும் நடுநிலை பிறழாமல் உண்மையை உள்ளவாறே ஆராய்ந்து காட்டி விளக்கியிருக்கின்றார்கள். அவையெல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டலுறின் இது மிகவிரியும். 1மாக்மூலர், மியூர், டெய்லர், வீபர், ராகொசின், கிரிபித் மாக்டனல் முதலான மிகச் சிறந்த வடநூற் புலவர்கள் எழுதியிருக்கும் அரும்பெரு நூல்களில் அவற்றின் பரப்பைக் கண்டுகொள்க. இவ்வைரோப்பிய அறிஞர்க்குள்ள ஆராய்ச்சித் திறத்திலும் வடமொழிப் புலமையிலும் நூறாயிரத்து ஒரு சிறு கூறேனும் வாய்ப்பப் பெறாதார் தாமுந் தமது அறியாமையை யே அறிவாகப் பிழைபடக் கருதி அவ்வைரோப்பியர் செய்த ஆராய்ச்சிகளையெல்லாம் பிழையென எளிதாகச் சொல்லி விடுவர். இவ்விந்தியநாட்டிற் பிறந்து, ஒவ்வொரு கோட்பாட்டிற் குரியராய், ஏனைக் கோட்பாடுகளை முற்றும் இகழ்ந்து, ஏனையோர் கூறுவனவற்றை நடுவுநின்று ஆராய்ந்து உண்மை கண்டறியும் வேட்கையிலராய்த், தாந்தாம் பிடித்த தனையே நிலை நாட்டும் பொய்ப்பற்று உடைய நம் இந்திய நாட்டுப் புலவர்களிற் பெரும்பாலார் ஆரியவேதங்கள் உபநிடதங்கள் முதலியவற்றின் பொருள்களை நடுநின்று கண்டு உண்மையை உள்ளவாறு உரைக்கும் நீரர் அல்லர். ஆரிய வேதங்களுக்குச் சொற்பொருள்களும் உரைகளும் எழுதிய யாகர், சாயனார், மகீதர், அந்வதர் முதலியோரும், உபநிடதங்கள் வேதாந்த சூத்திரங்கள் முதலியவற்றிற்கு உரைகள் எழுதிய நீலகண்டர், சங்கரர், இராமாநுசர், மத்வர் முதலியோரும், பிற்காலத்தில் இவை தமக்கு உரைகளும் விளக்கங்களும் வரைந்த தயாநந்த சுரசுவதி, ராசாராம் மோகன்ராய் முதலியோருந் தாந்தாம் உரை வகுத்தற்கெடுத்த நூற் பொருள்களை நடுநின்று ஆராய்ந்துகண்டு கூறாமல், தாந்தாம் வேண்டிய பொருள்களை நுழைத்து, ஒருவரோடொருவர் பெரிதும் மாறுகொண்டு உரை யுரைத்தலைச் சிறிது ஆராய்ச்சியுடையாரும் நன்கு உணர்ந்து கொள்வர். நிலன் நூல், வான்நூல், மொழிநூல், உயிர்களின் தோற்ற வளர்ச்சி நூல், மக்கட்டோற்றநூல் மனநூல், முதலான பல்வகை நூலுணர்ச்சியினும் ஒப்புயர்வில்லாப் புலமை யுடையராய் விளங்கும் ஐரோப்பிய அமெரிக்க அறிஞர்களில் வடமொழியையும் ஆராய்ந்து உண்மை காணப்புகுந்த புலவர்களே, நம் இந்திய உரைகாரரை விட அம் மொழிநூற் பொருள்களின் உண்மையை உள்ளவாறறிந்து உரைக்கும் நீரராவர். இவ்விரு திறத்தார் உரைகளையும் ஒத்துநோக்கிப் பயில்வார்க்கே யாம் கூறுவதன் உண்மை விளங்கும். யாமே பிரம மாதலால் எம்மிடத்தே எல்லா நூலுணர்ச்சியும் உள்ளன; யாம் பிறர் நூல்களை உணர்தல் வேண்டாம் என்று கூறித் தமதறியாமையையே அறிவெனக் கருதி இறுமாந்திருப்பார்க்கு எத்துணை உயர்ந்த அறிவுநூலும் வேண்டப்படுவதில்லை அத்தன்மை யினார்க்கு யாம் கூறும் உண்மையுரைகள் ஏறாவாதலால், அவரை விடுத்து ஏனை அறிவுவேட்கை யுடையார் பொருட்டே யாம் இஃது எழுதவேண்டிற் றென்க. இங்ஙனம் யாம் எழுதியது கொண்டு ஐரோப்பிய அமெரிக்க அறிஞரே இத்தகைய ஆராய்ச்சியிற் சிறிதும் பிழைபடுதல் இல்லாதவர் என்று கொள்ளற்க. அவர் வடமொழியையும் வடமொழி நூல்களையும் ஆராய்ந்த அளவுக்குப் பழைய செந்தமிழ் மொழியையும் அதில் எழுதப்பட்ட நூல்களையும் நன்காராய்ந்து பாராமையால், தமிழரின் பண்டை வழக்க வொழுக்கங்களையுங் கடவுள் வழிபாட்டினையும் ஒரோ விடத்து இகழ்ந்து கூறியும் பிழைபடுவர். ஆயினும், அது பற்றி அவர் இகழப்படார். ஏனெனில் நம் இந்தியநாட்டுப் புலவர்போற், செருக்கும் பொய்ப்பற்றும் உடையராய் நூற்பொருள்களை தத்தமக்கு வேண்டியவாறே திரித்து உரையாமல், அவ்வறிஞர் தாம்செய்யும் நடுநிலை ஆராய்ச்சியில் தாம் அறிந்தவற்றை அறிந்தவாறே திறப்பாக வெளியிட்டு உண்மைவளர்ச்சிக்கு இடஞ்செய்தலான் என்க. எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று தெய்வத் திருக்குறள் கட்டளையிடுமாறே, வெள்ளைக்காரரேனும் இந்தியரேனுங் கூறுவனவற்றை நடுநின்று ஆராய்ந்து எவர் கூற்றில் எஃது உண்மையோ அதனைக் கைக்கொள்ள வேண்டுவதாயிருக்கப், பல்வகை நுண்ணிய ஆராய்ச்சியிலுஞ் சிறந்து விளங்கிவரும் வெள்ளைக்காரர் கூறும் உறுதிப் பொருள்களை இகழ்ந்து, அவருடைய ஆராய்ச்சியிலும் அறிவிலும் ஒரு தினையளவு கூட இல்லாத நம் இந்திய மக்களிற் பெரும்பாலார் தம்மைத் தாம் உயர்த் துரைத்தல், கூவல் ஆமை குரை கடல் ஆமையைக் கூவலோடு ஒக்குமோ கடல் என்று கூறுதற்கே ஒப்பாம். இந்தியர் கல்லை வணங்குகிறார்களென்று வெள்ளைக் காரர் அவரது கடவுள் வழிபாட்டை இழித்துரைப்பதாக மாயாவாதியார் கூறினார்; வெள்ளைக்காரர் எல்லாரும் அங்ஙனம் இகழ்ந்து கூறுபவர் அல்லர். மாக்மூலர் பல இடங்களில் இந்தியர் கல் முதலிய திருவுருவங்களிற் செய்யும் வழிபாட்டின் கருத்தையும் மேன்மையையும் நன்கு விளக்கியிருக்கின்றனர்.1 அமெரிக்காவிற் பேரறிஞராய் விளங்கிய உவில்லியம் ஜேம் என்பவர் திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமையை வற்புறுத்திப் பேசி இருக்கின்றார்.2 ஆதலால், இம் மாயாவாதியார் கூற்று வெறும் பொய்யேயாம். இம் மாயாவாதியாராற் கொண்டாடப்படுந் தயாநந்த சரசுவதி சுவாமிகள் நம்மனோர் பண்டுதொட்டுச் செய்து போதருந் திருவுருவ வழிபாட்டைப் பெரிதும் இகழ்ந்து ஒதுக்கவில்லையா? தயாநந்த சரசுவதி வடமொழியில் வல்லரேனுந், தமிழ்நூல் உணர்ச்சியில்லாதவராகலின், தம்முடைய கோட்பாட்டுக்கு இணங்க இருக்கு வேதப்பாட்டுகள் பலவற்றின் உண்மைக் கருத்தைத் திரித்துத் தாம் வேண்டியவாறே அவற்றிற்கு உரைகள் எழுதினார்; அவர் தமிழராற் செய்யப்பட்ட வடமொழிச் சாங்கியநூல் உணர்ச்சிகொண்டு சைவசித்தாந்தத்தோடு ஒத்த கோட்பாடுகளைக் கண்டறிந்து, சங்கராசிரியர் கட்டிய மாயாவாத வேதாந்தத்தைத் தகர்த்தெறிந்த பேரறிஞரே யாயினுந், தமிழ் நூலுணர்ச்சியுந் தமிழரின் நுண்ணறிவு விழுப்பமும் அறியாதவராகலின் ஒரோவிடங்களிற் சைவ சித்தாந்தத்திற்கு ஒவ்வாதவற்றையுங் கூறி இழுக்குவர். ஆதலால், தயாதந்த சரசுவதிசுவாமிகள் கூறுவனவெல்லாம் ஆராயாமற் கைக்கொள்ளற்பாலன அல்ல. இனிப், பிரம சமாசத்தைத் தோற்றுவித்த ராசாராம் மோகன்ராய் என்பவர் வடமொழிநூல்களில் மிக வல்லுநரா யிருந்துந் தமிழ் நூலறிவு பெறாதவராகலின், அவரும் நம்மனோர் செய்யுந் திருவுருவ வழிபாட்டை இகழ்ந்தொதுக்கவில்லையா? நம் இந்திய நாட்டவரிலேயே இங்ஙனம் நாம்செய்யுந் திருவுருவ வழிபாட்டை இகழ்பவர் பலராயிருக்க,வெள்ளைக்கார அறிஞரே அதனை யிகழ்பவர் என்று அவர் மேற் பழி சுமத்துவது பெரிதும் ஏதமாமென்க. எனவே, பல்வகை நூல் உணர்ச்சியிலும்மிக்காராய், அவ்வுணர்ச்சி வலியால் உலகத்திற்குப் பல அரும்பெரு நன்மைகளை விளைத்துவரும் வெள்ளைக்கார அறிஞரின் நடுநிலையாராய்ச்சி யுரைகள் நம்மனோராற் பெரிதுங் கைக்கொள்ளத் தகுவனவே யல்லாமல் இகழ்ந்தொதுக்கற் பாலனவல்ல வென்று கடைப்பிடிக்க. அடிக்குறிப்புகள் 1. Max Muller, Muir, Taylor, Weber, Ragozin, Criffith Macdonell. 2. Prof. Max Muller’s ‘Six Systems of Indian Philosophy, p.216’ 3. Prof. W. James, ‘The Varieties of Regligious Experience’, Lecture XIX 13. உருத்திரனிலுஞ் சிறந்த சிவத்தைத் தமிழர் மறைத்து வைத்தமை இனி, உருத்திர வழிபாட்டினுஞ் சிறந்த சிவழிபாட்டைத் தமிழ் நன்மக்கள் இருக்குவேதத்தின்கட் புகுத்துச் சொல்லாமை என்னையெனின்; உயிர்க்கொலையாகிய கொடுஞ்செயலைப் புரிந்து, அதற்கேற்ற இந்திரன் வருணன் மருத்துக்கள் முதலான கொடிய சிறு தெய்வங்களை வணங்கி வெறியாட்டு வேள்விகள் புரிந்துவருவாரான ஆரியர்க்கு, அன்பும் அருளும் இன்பமுமே உருவான சிவத்தின் வழிபாட்டைக் கற்பித்தால் அதில் அவர்க்குக் கருத்துச் செல்லாது. அதுபற்றியே அம் முழுமுதற் கடவுள் வணக்கத்தை ஆண்டுச் சொல்லாமல் அக் கடவுள் அருள்வழி நின்று அழித்தற் றொழிலைச் செய்வாரான சீகண்ட உருத்திரனின் வணக்கத்தை மட்டும் ஆண்டுச் சேர்த்தார்கள். அவரவர்தம் மனநிலையும் அறிவுநிலையும் அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கதாக மெய்ப்பொருள்களைப் படிப்படியாக அறிவுறுத்தி, அவரவரை அவ்வாற்றான் மேனிலைக்குக் கொண்டு வருதலே மெய்யுணர்வுடைய தமிழ்ச்சான்றோர் கோட்பாடு. இம் முறையால், இந்திரன் வருணன் முதலிய ஏனைக் கடவுளர் எல்லாரினும் உயர்ந்த சீகண்ட உருத்திரரை வணங்குவார் அதனால் மெய்யுணர்வு பிறந்து, அவர்க்கு மேற்பட்ட மகேசுவரர் சதாசிவரை வழிபட்டு, அதன்பின் மலமாசு தீர்ந்து, அவர்க்கு மேற்பட்ட முழுமுதற் கடவுளாகிய சிவத்தினைத் தலைக்கூடி அழியாப் பேரின்பத்தில் வைகுவர். இப் படிவழி முறைதான் சைவசித்தாந்தத்தால் உணர்த்தப்பட்டதாகும். சீகண்ட உருத்திரர் சைவசமயத்தவரால் வணங்கப் படுபவரேனும், அவர் சைவசித்தாந்த முடிபொருளாக உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவம் அல்லர். இவ்வுண்மை சிவஞானமாபாடியத்திலுங் காண்க. இருக்குவேதப் பாட்டுகளில் மிகப்பழையன வற்றிற்குரிய பழைய ஆரியர்க்குக் கற்பிக்கப்பட்ட உருத்திரர் சீகண்ட உருத்திரரே யல்லாமற் சிவபெருமான் அல்லர் என்பதற்கு, அவர்மேற் பாடப்பட்ட பழைய இருக்குவேதப் பாட்டுகளில் எங்கும் அவர்க்குச் சிவன் என்னும் பெயர் சொல்லப்படாமையே சான்றாம். அப் பழைய ஆரியர் தாழ்ந்த மனநிலையுடையரா யிருந்தமையின், அவர்க்கு அறிவுறுத்தப் புகுந்த தமிழ்ச்சான்றோர் சீகண்டருத்திரர்க்கு மேற்பட்ட கடவுள் நிலையை உணர்த்துதற்கு ஒருப்பட்டிலர். சீகண்டருத்திரர்க்கு மேற்பட்ட மகேசுவரர் சதாசிவர் முதலிய தலைமைக் கடவுளரை யாதல், அவர்க்கும் மேற்பட்டு எப்பொருளுங் கடந்து நிற்குஞ் சிவத்தையாதல் இருக்கு வேதப் பழம்பாட்டுகள் சிறிதும் உரையாமையே இதற்குச் சான்றாம் என்க. அற்றன்று, இருக்குவேத காலத்திருந்த தமிழர் உருத்திரர்க்கு மேற்பட்டுச் சிவம் என்பதொன்று உண்டென்பதனை அறியார் எனக் கொள்ளாமோ வெனின்; இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின்கண் உள்ள இருபத்தோராவது பதிகத்திலும், பத்தாம் மண்டிலத்தின்கண் உள்ள தொண்ணுற் றொன்பதாவது பதிகத்திலும் அந்நாளில் தமிழ் நன்மக்கள் செய்து போந்த சிவலிங்க வழிபாடு குறிப்பிடப்பட்டிருத்தலின், அவர் சிவத்தை யறியார் என்பது பொருந்தாது. அந்நாளில் தமிழவேளாளர் செய்து போந்த சிவலிங்க வழிபாட்டின் பெருமையை ஆரியர் அறிந்து கொள்ளத்தக்க நுண்ணறிவு இலராய்இருந்தனர் என்பதே தேற்றமாம். அவ் வாரியர் அவ்விரண்டு பதிகங்களிலும் ஆண்குறித்தெய்வம் என்று பொருள்படுஞ் சிசிநதேவர் என்னுஞ் சொல்லால் அச் சிவலிங்கத்தை இழித்துரைத்த தோடு, அதனை வழிபடுந் தமிழ் நன்மக்களையுந் தாசர்கள் என வைதமையும் யாங்கூறும் இவ்வுண்மைக்குச் சான்றாம் என்க. எனவே, சைவ சித்தாந்த முடிபொருளாயுள்ள சிவத்தை உணர்த்தாத இருக்குவேதமும் அதன் வழிவந்த ஏனை ஆரியவேதங்களுஞ் சைவசித்தாந்தத்திற்கு மேற்கோள்களாகா வென்று உணர்ந்து கொள்க. அற்றேல் இருக்குவேதத்தினின்றும் பிரித்தெடுத்துச் செய்யப்பட்டதாகிய எசுர் வேதத்திற் போந்த சதருத்ரியத்திற் சிவன் என்னும் பெயர் காணப்படுதல் என்னையெனின்; எசுர்தேவம் ஒழுங்குபடுத்திய பிற்காலத்தில் ஆரியர் தாம் செய்து போந்த சிறுதெய்வ வணக்கத்தை மெல்ல மெல்லக் கைந்நெகிழ விட்டுத் தமிழ்ச்சான்றோர் அறிவுரைகளை ஏற்று உருத்திர வழிபாட்டைக் கைக்கொள்ளப் புகுந்தமையின், அவரை அவ்வுருத்திர வழிபாட்டினின்றும் மேலுயர்த்திச் சிவவழி பாட்டிற் கொண்டு செல்லும் பொருட்டே, எப்பொருளுங் கடந்த சிவத்தின் பெயரை அவ் வுருத்திரர் மேல் வைத்து, அச் சத்ருத்ரியத்தினை இயற்றி அவ்வெசுர்வேதத்தில் முதன்மைபெற வைத்ததல்லது, ஆண்டு முழுமுதற் கடவுளான சிவத்தை அவர்க்கு உணர்த்தியபடி யன்றாம். இஃது எற்றாற் பெறுது மெனின்; அப்பகுதிக்குச் சதருத்ரியம் என உருத்திரச் சொல்வழியே பெயரமைத்தமையானும், அவ்வுருத்திரர்க்குரிய நீலமிடறும், சீகண்டர் எனும் பெயரும் அதன்கட் சொல்லப் படுதலானும் பெறுதும் என்பது. அவ்வுருத்திரரின் கொடிய திருவுருவத்திற்கு மிக அஞ்சியிருந்த ஆரியர், இப்போதுதான் அஃது அன்புருவாதலுந் தீது செய்யாதது ஆதலுந் தெளிந்து, மலைகளில் எழுந்தருளுவோய், கொடியல்லாத இன்பவுருவினதுந், தீங்கு குறியாததும் ஆன நின் திருவுருவத்தோடும் எங்கள் மேல் துளங்கியருள்க என்று பொருள்படும் யாதே ருத்ர சிவாதநூர் அகோர பாபகாசிநீ தயாநதந்வா சந்தமயா கிரிசந்தாபிசாக சீஹி என்னும் வணக்கவுரையால் அச் சதருத்ரியத்தின் முதலிலேயே வழிபாடு செய்தல் காண்க; அவ்வுருத்திரர்க்கு அவ்வாரியர் மிக நடுங்கிய நடுக்கம் இன்னும் அவரது நினைவைவிட்டுத் தீர்ந்திலாமை இதிற் கண்டுகொள்க. இங்ஙனமே பின்னாளில் வரவர ஒழுங்குபடுத்து வேதங்களாகச் சேர்க்கப்பட்ட அதர்வவேதப் பாட்டுகளிற் சீகண்டருத்திரர் வழிபாடு மிகுந்து வரலானமை, வரவரத் தமிழ வேளாளர் செய்து போந்த முதற்கடவுள் வழிபாட்டின் மேன்மையை ஆரியர் உணர்ந்து கொண்ட தனாலேயாம். சீகண்டருத்திரர் வழிபாட்டில் தொன்று தொட்டுத் தலைநின்றவர்கள் வேளாளரும், அவருள் அரசராகிய வேளிருமே யாவர் என்பது பண்டைத்தமிழ் ஆரிய நூல்களால் மேற்காட்டியவாறு விளங்குவதோடு, பின்றைக் காலத்தில் இவை தம்மை யெல்லாம் ஒருங்காராய்ந்துணர்ந்த ஆசிரியர் சேக்கிழார், நஞ்சையமுது செய்தவருக், கிம்பர்த்தலத்தில் வழியடிமை என்றுங் குன்றா இயல்பில் வருந் தம்பற்றுடைய நிலைவேளாண் குலத்தில்1 என்று அருளிச் செய்யுமாற்றானும் நன்கு புலனாதல் காண்க. இருக்கு முதலிய நான்கு வேதங்களும் மாபாரதப் போர்க்குப் பின் ஒழுங்குபடுத்தப்பட்டமையினைப் பின்னே காட்டுதும். அங்ஙனமாயின், பின்றைக் காலத்துஞ் சைவசமய உண்மையை நிலைநாட்டிய மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் முதலான ஆசிரியன் மாருஞ் சிவ வழிபாட்னைஓதாது, சீகண்ட உருத்திரரையே வழிபட்டுப் பதிகங்கள் அருளிச் செய்தல் என்னையெனின்; மலர் மாயை வினை என்னும் மும்மலவயத்தாராய் நின்று பிறப்பு இறப்புகளிற் பட்டுழலும் நான்முகன் மால் இந்திரன் முதலிய ஏனைச் சிறு தேவர்கள் போலாது, இயற்கையே மலமாசு பெரிதுந் தேய்ந்து, சிவத்தின் தலைமைத்தன்மை (அதிகாரம்) தங்கட் பதியப்பெற்று அதன் அருட்பேற்றிற்கு முற்றும் உரியராய் நிற்குஞ் சீகண்டருத்திரர், சிவபெருமானுக்குரிய எல்லா அடையாளங்களும் உடைய ரெனவும், மனமொழிகளுக்கு எட்டா இயல்பினதாகிய சிவத்தை நினைத்தலும் வழுத்தலும் இந்நிலவுகத்துள்ளார்க்கு ஏலாமையின் அவர் சீகண்டருத்திரர்பாற் செய்யும் வழிபாடு களெல்லாம் முழுமுதற் சிவத்தையே சென்று சேருமெனவுஞ் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்கள் வலியுறுத்துக் கூறுதலிற் சைவசமயாசிரியர் சீகண்டருத்திரர் மேல் வைத்துக் கூறிய வழிபாடுகள் சிவத்தையே சாருமென்று ஓர்ந்துகொள்க. இஃது எதுபோலவெனின், நம்மையாளும் அரசர்க்கு நாம் நேரே செய்தற்கு இயலாமல், அவ்வரசர்க்கு ஈடாக நம்மெதிரே நமக்கு அணுக்கராய் நிற்கும் ஆட்சித்தலைவர்பால்1 நாம் செய்யும் வழிபாடுகள் அவ்வரசரைச் சென்று சார்தல் போல வென்க. அங்ஙனம் ஆட்சித் தலைவர்பால் நமது வணக்கத்தைச் செலுத்துகின்றவிடத்தும், அஃது அவாக்கு முதல்வரான அரசரையே நினைத்துச் செய்யப்படுதல் போலச் சீகண்டருத்திரர்பாற் செய்யப்படும் வழிபாடுகளுஞ் சிவத்தை நினைந்தே செய்யப்படுவனவாம். முழுமுதற்சிவம், மூவர்க்கும் ஏனைத் தேவர்க்கும் மேற்பட்டதென்பது, மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் என்று மாணிக்கவாசகப் பெருமானும், எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ என்று திருஞானசம்பந்தப் பெருமானும் அவனருளே கண்ணா கக்காணி னல்லால், இப்படியன் இவ்வுருவன் இவ்வண் ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என்று திருநாவுக்கரசு அடிகளும் அருளிச் செய்தவாற்றால் நன்கு உணரப்படும். ஈண்டுக் கூறியவாற்றால், முழுமுதற் சிவத்தை நினைந்து செய்யப்படுகின்றுழி அன்புருவாகவுந் தான் செய்யும் அழித்தற்றொழிலை நினைந்து செய்யப்படுகின்றுழிக் கொடிய வடிவாகவும் வைத்து வழுத்தப்படுஞ் சீகண்டருத்திர வழிபாட்டின்இருதிறமுஞ் சைவ சித்தாந்த வழிநின்ற பண்டைத் தமிழ் வேளாளர்க்கு உரியவேனும் ஆரியர்க்கு அவர் செய்துவந்த வெறியாட்டு வேள்விக் கேற்ற அச்சவடியே உணர்த்தப் பட்டமை தெள்ளிதிற் புலனாம். அடிக்குறிப்புகள் 1. திருத்தொண்டர் புராணம் மூக்க நாயனார் 2. Governor - general 14. தமிழர்கள் உபநிடதம் சாங்கியம் முதலிய அறிவுரை நூல்கள் வகுத்தமை இனி, வேதங்களை ஒழுங்குபடுத்தி, உருத்திர வழிபாட்டைக் கற்பித்த பின்னும், வெறியாட்டு வேள்விகள் புரிதலையுஞ், சிறு தெய்வ வணக்கத்தையும் ஆரியர் விட்டு நீங்காமையின், அவ்வேள்விகளையும் அவ் வணக்கத்தையும் அறவே தொலைத்தற் பொருட்டாகவே தமிழ்ச் சான்றோர்கள் ஈசகேந கடப்பிரசினமுண்டக மாண்டூக்ய தைத்திரீய பிருகதாரணியக சாந்தோக்கிய முதலான மிகப் பழைய அறிவு நூல்களாகிய உபநிடதங்களையுஞ் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் யோகம் வேதாந்தம் முதலான மெய்ப் பொருளாராய்ச்சி நூல்களையும் இயற்றினார்கள். வெறியாட்டு வேள்விச் சடங்கு களையுஞ் சிறு தெய்வ வணக்கத்தையுங் கூறும் இருக்கு முதலிய வேதங்கள் பயனிலவாதலும், உலகு உயிர் கடவுள் என்னும் முப்பொருட் டன்மைகளை உள்ளவாறு ஆராய்ந்து மெய்யுணர்வு தலைக்கூடி இன்பவுருவினதாகிய சிவத்தை எய்துதலே மக்கட் பிறப்பெடுத்ததன் பயனாதலும் இந் நூல்களில் நன்கு விளக்கி அறிவுறுத்தப்படுதல் காண்க. இந் நூல்கள் எழுந்த பிறகுதான் கன்மகாண்டத்தின் இழிவும், ஞானகாண்டத்தின் உயர்வும் பிரிந்து விளங்கலாயின. வேதத்தினும் வேதாந்தமாகிய உபநிடதங்களே சிறந்தன வெனவும், வேதாந்த உணர்ச்சியே பெரும்பயனை யளிப்பதெனவும் எல்லாரும் விளங்க அறிவாராயினர். முழுமுதற் கடவுளாகிய சிவபிரான்முன், இந்திரன் அக்நி வருணன் மாதரிவான் முதலாக வேதங்களிற் சொல்லப்பட்ட கடவுளர் ஒரு சிறு துரும்பையும் அசைக்க வலியிலராதலும், அவனது அருட்சத்தியாகிய உமைப் பிராட்டியாராலன்றி அவன் அறியப்படாமையுங் கேநோப நிடதத்தில் நன்கு வலியுறுத்தப்பட்டன. 15. இந்திரன் முதலிய பெயர்கள் சிவத்தைக் குறியாமை இனி, இவ் வுண்மைகளைப் பகுத்துணர மாட்டாத மாயாவாதியார் இந்திரன் வருணன் முதலான பெயர்கள் பற்பல தெய்வங்களைக் குறிப்பன அல்ல, அவையெல்லாம் ஒரு முழுமுதற் கடவுளையே குறிப்பனவாம் என்று கூறினார். இந்திரன் முதலிய பெயர்கள் முழுமுதற் கடவுளையே குறிப்பது உண்மையாயின், அப்பெயர்களால் உணர்த்தப்படும் அத்தெய்வங்கள் முழுமுதற் கடவுட்குரிய இலக்கணங்கள் உடையனவாய் இருத்தல் வேண்டுமல்லவோ? அக்நி இந்திரன் சோமன் என்போர் பிரசாபதியாற் படைக்கப்பட்டவர் எனச் சதபத பிராமணங் கூறுதலானும்,1 மித்திரன் வருணன் தாத்திரி அரியமான் அம்சன் பகன் விவவதன் ஆதித்யன் என்னும் எண்மரும் அதிதியின் புதல்வர் என அஃது அங்ஙனமே எடுத்துச் சொல்லுதலானுங், கட்குடியும் விலங்குகளின் கொலையால் வரும் ஊன் உணவும் அவர் கைக்கொண்டமை மேலே காட்டப் பட்டமையானுந், தந்தையைக் கொல்லல் மகளைப் புணர்தல் முதலான மக்களினும் இழிந்த பல செயல்களை அத் தெய்வங்கள் புரிந்தமை அங்ஙனமே அந்நூல்களிற் காணப்படுதலானும், அவர் பகைவரால் தோல்வியடைந்தமையுந் தாம் இறவாதிருத்தற் பொருட்டுச் சாவாமருந்து வேண்டினமையும் அவற்றின்கண் வெளிப்படையாகக் காட்டப்பட் டிருத்தலானும் அவரெல்லாருஞ் சிற்றுயிர்களேயாவ ரல்லது, இக் குற்றங்கள் ஒரு சிறிதுந் தீண்டப் பெறாத முழுமுதற் சிவம் ஆகார் என்பது சிறிதுணர்வுடையார்க்குந் தெற்றென விளங்கும். சொற்களும், அச் சொற்களால் உணர்த்தப்படும் பொருள்களும், அப்பொருள்களின் இலக்கணங்களும் ஒன்றோடொன்று மாறுபட்டு வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், அவற்றையெல்லாம் ஒன்றெனல் உண்மையாராயுந் தருக்கத் திற்குக் கட்டுப்படாமல் தமக்குத் தோன்றியவாறே பேசும் மாயாவாதியார் ஒருவர்க்கேயன்றி ஏனை மெய்யுணர் வுடையார்க்கு அடாது. நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் தம்மில் வேறுபட்டனவாய் இருப்பவும், அவையிரண்டனையும் ஒன்றெனக் கூறி உப்புத்தண்ணீரைக் கொடுத்தால் எவரேனும் பருகுவரா? சோறும் புழுவும் வேறாயிருக்க அவை தம்மை யொன்றென வற்புறுத்திச், சோற்றுக்கு மாறாகப் புழுக்களை வட்டித்தால் அவற்றை எவரேனும் உண்பரா? இரும்பும் பொன்னும் வேறாயிருப்ப அவையிரண்டும் ஒன்றெனவே வாயாடிப், பொன்னுக்கு மாறாக இரும்பை எடுத்துக் கொடுத்தால் மாயாவாதியார் அதனை ஏற்றுக் கொள்வரா? ஆதலால் அறிவாராய்ச்சிக்கும் உலக வழக்கிற்கும் இசையாதபடி வைத்து, எல்லாச் சிறு தெய்வப் பெயர்களும் ஒரு முழு முதற் கடவுளையே குறிக்கு மென்றல் அறிவுடையார் கழகத்தில் நகையாடி விடுக்கப்படும் என்க. அற்றேல், இருக்கு வேத முதன் மண்டிலம் நூற்றறுபத்து நான்காம் பதிகத்தில் சத்துப் பொருள் ஒன்றேயுளது, கற்றவர் அதனைப் பல பெயர்களால் வழங்குகின்றார்கள் என்று காணப்படுதல் என்னையெனில்; இக் கொள்கை இருக்கு வேதத்தில் இவ்வோரிடத்தில் தவிர வேறெங்குங் காணப் படாமையானும், ஓரிடத்தில் மட்டும் புதிதாகக் காணப்படும் இக் கொள்கை ஆரியர்க்கு உரியதாயின் மேற்காட்டியவாறு முதற்கடவுள் இலக்கணத்திற்குப் பொருந்தாமல் மக்களினுந் தாழ்ந்த பழிச் செயல்களைப் புரிவாரான அச்சிறு தெய்வங் களை அவர் வணங்குதல் செல்லாமையானும், இச்சிறு தெய்வப் பெயர்களெல்லாம் முழு முதற் சிவத்தையே குறிப்பனவாயின், வேதங்களினுஞ் சிறந்த வேதாந்தமாகிய கேநோபநிடதத்தில் இத் தெய்வங்களெல்லாம் இயக்க வடிவத்திற் றோன்றிய சிவத்தின் முன் வலியிலராய் ஒழிந்தமை தெளிவுறுத்தப்பட்டதற்கு வேறுவழி காட்டுதல் இயலாமையானும் அக் கொள்கை ஆரியர்க்கு உரியதன் றென்பதே முடிபாம். பண்டைக் காலத்திருந்த தமிழ்ச் சான்றோர்கள், பல சிறு தெய்வங்களை வணங்கும் ஆரியரது சிறுமையை ஒழித்தல் வேண்டியே, ஆரிய வேதங்களை ஒழுங்குபடுத்திய ஞான்று தமக்குரிய அக் கொள்கையை அவ்வாரிய நூலின் இடையே புகுத்தி வைத்தனர். ஆரியர் பல பெயர்களான் வணங்குஞ் சிறு தெய்வங்கள் முதற் கடவுள் ஆகார். எவர் எவ்வகைப் பெயரில் எத் தெய்வத்தை வணங்கினும், அத்தெய்வங்கள் பிறந்திருந்து மாய்வன வாதலால் அவை அவர் வழிபாட்டை ஏன்று கொண்டு அவர்க்கு அருள்புரியமாட்டா; எல்லாம் வல்ல முழுமுதற் சிவம் ஒன்றே அவரவர் அவ்வத்தெய்வத்திற் செய்யும் வழிபாட்டை ஏன்று கொண்டு அவரவர்க் கேற்ற பரிசாகத் தனது அருளை வழங்கி அவரை மேன்மேல் உயர்த்தும் என்பதே தமிழ்ச்சான்றோர் கொள்கையாம். இது, விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே எனத், திருநாவுக்கரசு நாயனாரும், அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வலர் பொருளாய் வேறாங், குறியது வுடைத்தாய் எனவும், யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படும்இ றக்கும் பிறக்கும்மேல் விளையுஞ் செய்யும் ஆதலால் இவை இலாதான் அறிந்தருள் செய்வ னன்றே எனவும் அருணந்தி சிவாசிரியரும் ஓதுமாற்றால் நன்கு தெளியப்படும். இவ் வுண்மையையே இக் காலத்திருந்த இராமலிங்க அடிகளும் அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர் என்பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே என்று ஓதுதல் காண்க. எல்லா உயிர்களும் அவனை இன்றி இயங்காமையானும், அவன் எல்லா உயிர்களிலும் பிரிவின்றிக் கலந்து நிற்றலானும் அம் முறைபற்றி எல்லா உயிர்ப்பெயரும் இறைவற்கு உரியனவாகக் கூறப்பட்டனவே யல்லாமல், அங்ஙனங் கூறப்பட்ட அப்பெயர்கட்குரிய சிற்றுயிர்கள் அதனால் அம்முதல்வனாவான் செல்லுதல் ஒருசிறிதுமில்லை யென்க. இஃது என்போலவெனின்; அரசன் ஆணைவழி நின்று அரசுசெலுத்தும் அமைச்சர் தண்டத்தலைவர் ஊர்காவலர் முதற் பலருந் தத்தம் அளவிற் கேற்ற தலைமைப்பாடும் பெருமையும் உடையரேனும், அது பற்றி அவரெல்லாம் அவ்வரசனேயாதல் செல்லாமை போலவும் அவர் மாட்டெல்லாம் ஊடுருவி நின்று அவர்க்கு அச்சிறப்பினை நல்குந் தனது ஆணையை அவர்மாட்டு நின்றும் அரசன் வாங்கிக் கொண்டவழி அவர் அப் பெருமையையும் பெயரையும் ஒருங்கிழத்தல் போலவும் என்க. இங்ஙனமாகவே, ஆரியர் வணங்கிய சிறுதெய்வப் பெயர்களும், அத்தெய்வங்கள் முதலான எல்லாச் சிற்றுயிர்களிலும் நிறைந்து நிற்குஞ் சிவத்திற்கும் பெயர்களாக முகமனாயத் தமிழ்ச் சான்றோரால் உரைக்கப்பட்டனவே யல்லாமல், அப்பெயர்க்குரிய சிறுதெய்வங்கள் அச் சிவமாதல் ஒருவாற்றானும் இல்லையென் றொழிக. இதுவே, ஏகம்சத் விப்ரா பகுதாவதந்தி என்னும் அவ்விருக்கு வேதத்தொடர் மொழிக்குப் பொருளாமென்று கடைப்பிடிக்க. இன்னும் இதன் விரிவை எமது சைவ சித்தாந்த ஞானபோதத்திலும், சிவஞானபோத ஆராய்ச்சியிலுங் கண்டு கொள்க. இக் கூறியவாற்றால், உருத்திரசிவ முழுமுதற் கடவுள் வழிபாடொன்றுமே தொன்று தொட்டுச் சைவ வேளாளர்க்கு உரித்தாமெனவும், இந்திரன் வருணன்முதலான ஏனைச்சிறு தெய்வவழிபாடுமட்டுமே ஆரியர்க்கு உரித்தாமெனவும் பகுத்தறிந்து கொள்க. அடிக்குறிப்பு 1. சதபதபிராமணம், 11, 1, 6. 16. ஓம் என்னும் பிரணவம் தமிழுக்கே யுரித்தாதல் அஃதொக்குமாயினும், எல்லா ஒலிவடிவு வரிவடிவு கட்கும் முதலாவது ஓங்காரமாகிய பிரணவமே என்பது பெறப்படுதலானும், அப் பிரணவம் வடமொழிக்கே உரித்தாகலானும், அப் பிரணவவடிவாய் விளங்கும் எல்லா வடமொழிக்கலைகளும் இறைவன் வாய்மொழியேயாம் என்று மாயாவாதியார் கூறுமாறென்னையெனின்; அவர் ஆராயாது கூறினமையின் அதுபொருந்தாக் கூற்றேயாம். பிரணவம் என்பது ஓ என்னும் ஒலியேயாம். ஓ என்பது நெட்டெழுத்து. நெட்டெழுத்துகளெல்லாங் குற்றெழுத்துகளின் நீட்டமே யாதலால் முதலில் குற்றெழுத்தொலிகளும் அவற்றின்பின் அவற்றோடொத்த நெட்டெழுத் தொலிகளுந் தோன்ற நிற்கும். அகரந் தோன்றிய பிறகே ஆகாரந் தோன்றும். ஒகரந் தோன்றிய பிறகே ஓகாரந் தோன்றும்; ஒகரம் இன்றி ஓகாரந் தோன்றாது. இனித் தமிழ்மொழியில் மட்டும் ஒகரமாகிய குற்றொலியும் அதன் நீட்டமாகிய ஓகார ஒலியும் இருப்பக் காண்டுமன்றி, வடமொழியில் ஓகாரத்திற்கு முதலாகிய ஒகரஒலி வழங்கக் காண்கிலேம். குற்றொலி இன்றி அதன் நெட்டொலி வழங்குதல் ஏலாமையால் ஒகரம் இல்லாத ஓகாரம் வடமொழிக்கு உரியதாதல் யாங்ஙனம்? தமிழில் ஒகர ஓகாரம் இரண்டும் இருத்தலால், அவ்விரண்டுந் தமிழுக்கே உரியவாதல் நன்கு துணியப்படும். மேலும், ஓசையைக்குறிக்கும் ஒலி ஓசை ஓதை ஓலம் முதலிய தமிழ்ச் சொற்கள் ஒகர ஓகார ஒலிகளை உடையதாதல்போல, வடமொழிக்கண் உள்ள சப்தம் த்வநி முதலிய சொற்களில் அப் பிரணவ ஓசை காணப்படாமை யானும் பிரணவமாகிய ஓங்காரந் தமிழ்மொழிக்கே உரித்தாதல் தெளிந்துகொள்க. அதுவே யுமன்றித் தமிழல்லாத வேறுமொழிகளிலும் பிரணவமானது வரிவடிவில் எழுதப்படுங்கால் தமிழுக்குரிய ஓ எழுத்தால் எழுதப்படுவதல்லது வேறுவடிவின்மையானும், பிரணவத்தின் ஒலிவடிவு வரிவடிவு இரண்டுந் தமிழ் மொழிக்குந் தமிழர்க்குமே உரியவாதல்தெற்றென விளங்கற்பாலதாம். இவையெல்லாம் எமது சைவ சித்தாந்த ஞான போதத் தில் தமிழ்நான்மறை என்ற தலைப்பின்கீழ்ப் பதினைந்து ஆண்டுகட்கு முன்னமே யாம் விரித்து விளக்கியிருக்கின்றேம். இந் நுட்பங்களை ஆய்ந்துணராது மாயாவாதியார் பிரணவம் வடமொழிக்கே உரியதெனக் கூறியது போலியுரையேயாம் என்க. ஓங்காரத் தமிழிற்குரியதாகவே, அதன் விரிவாய்த் தோன்றிய தமிழ்மொழியுந் தமிழ்மறைகளும் மட்டுமே இறைவன் வாய்மொழியாமென்று தெளிந்துகொள்க. இன்னும் இம் மாயாவதியார் தமிழ்மொழிக்குத் தாய் பாகதமொழியா மென்னுந் தமது கூற்றிற்குச் சான்று ஏதுங் காட்டாமையின், அவர் கூற்றுச் சிறு மகார் கூறும் பொருள் இல் கூற்றேயாமென்க. இனிச் சைவ சமாயசிரியர் வேதங்களெனத் தாந்தழுவிக் கூறுபவை, பெரும்பாலுஞ் சிறு தெய்வ வெறியாட்டு வேள்விகளைக் கூறும் ஆரியவேதங்கள் அல்லவென்பதூஉம், அவை அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் வேள்விகளைக் கூறுந் தமிழ்மறைகளே யாமென்பதூஉம் எமது திருவாசக விரிவுரையில் விரித்து விளக்கியிருக்கின்றே மாதலின், அதனை ஆண்டுக் கண்டுகொள்க; ஈண்டு விரிப்பிற் பெருகும். 17. வேளாளர் உபநிடதங்கள் இயற்றினமைக்குச் சான்று இவையெல்லாம் ஒக்குமேனும், ஆரியமொழியிலுள்ள உபநிடதங்களைத் தமிழர் எழுதினாரெனக் கூறல் யாங்ஙனம் பொருந்துமெனிற்; கடவுள் உயிர் உலகு முதலான மெய்ப்பொருள்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளை ஆரியப் பார்ப்பனர் அறியாது மயங்கினமையும், அவற்றை அவர்க்கு அஞ்ஞான்றிருந்த தமிழ் அரசர் அறிவுறுத்தினமையும் பழைய உபநிடதங்களிலேயே நன்கு எடுத்துச் சொல்லப்படுதலின் அவை தமிழ்ச்சான்றோரால் இயற்றப்பட்டன. ஐவர், வைவாநர ஆத்மாவைப்பற்றித் தமக்கு அறிவுறுத்தும் படி உத்தாலக ஆருணி என்பவரை அடைய அவர் அதனை அறிவுறுத்தும் ஆற்றல் தமக்கில்லாமையைத் தெரிவிக்க, அவரோடு அறுவரும் அவபதிகைகேயன் என்னும் அரசன் பாற் சென்று தமது விருப்பத்தையுணர்த்த, அவ்வரசன் அவர்க்குள்ள அறியாமையை முதலில் எடுத்துக் காட்டி, அதன்பின்னர் அவ்வாத்மாவைப் பற்றிய உண்மையை அவர்க்குத் தெருட்டினானென்று பழைய சாந்தோக்கிய உபநிடதங்கூறாநிற்கும்.1 இன்னும் ஆரியவேதநூல் உணர்ச்சியிற் பெரிதும் புகழ் பெற்று விளங்கிய கார்க்கியபாலாகி என்னும் பார்ப்பன ஆசிரியன், காசீ மன்னனாகிய அஜாதசத்துரு என்பவன்பாற் பிரமத்தைப் பற்றிப் பிழைபாடான பன்னிரண்டு உரைகளைக் கூறித், தான் கூறியவற்றிலுள்ள அப்பிழைகளை அம் மன்னவன் எடுத்துக் காட்டியபின், அப் பார்ப்பனன் தன் அறியாமை யுணர்ந்து அவனுக்கு மாணாக்கனாகி, அவனாற் பிரமத்தின் உண்மைத் தன்மை தெளியப்பெற்றன னென்று பிருக தாரணி யகோபநிடதமுங் கௌஷீதகி உபநிடதமுங் கூறுதல் காண்க.2 இவ்வாத்ம ஞானமானது அரசரைத் தவிர, ஆரியப் பார்ப்பனர் எவரும் அறியாரென்பதும் அவ் வுபநிடதங்களில் நன்கு வலியுறுத்தப்படுதல் காண்க. பிரவாகன ஜைவலி என்னும் அரசன், ஆருணி என்னும் ஆரியப் பார்ப்பன ஆசிரியனுக்கு ஞானோபதேசஞ் செய்தபின், ஓ கௌதமனே! நீ சொல்லிய படியே, இந்தக் கொள்கையானது இதுகாறும் பார்ப்பனர்க்குள் வழங்காமையால், அரச வாழக்கையானது எல்லா உலகங்களிலும் அரச வகுப்பினர் கையிலேயே தங்கியிருக்கின்றது3 என்று, பழைய வேளிர் அரசர்க்கே மெய்யுணர்வும் அரசுரிமையுந் தொன்று தொட்டு உளவாதல் காட்டினமை சாந்தோக்கியத்தில் தெளிவுறுத்தப்படுகின்றது. இவ் விந்திய நாட்டுள் வந்தேறுங் குடிகளாய் ஆரியர் பிழைக்கவந்த ஞான்று, அரசராய் அவர்க்கு முன்னே தொட்டு இமயம் முதல் குமரிவரையில் இதன்கண் அரசாண்டவர்கள் தமிழ வேளாள அரசரே என்பது மேலே காட்டப்பட்டமை யானும், ஆரியப்பார்ப்பனர்க்கு அறிவுறுத்தும் அவ்வரசர்கள் தம்மை அவரோடு ஓர் இனப்படுத்திக் கொள்ளாமல் தம்மையுந் தமது மெய்யுணர்வினையும் அவரினின்றும் வேறுபிரிந்தே கூறுதல் மேற்குறிப்பிட்ட உபநிடதங்களில் நன்கு தெளியக் கிடத்தலானும் அவற்றிற் சொல்லப்பட்ட அவ் வரசர்கள் தமிழரேயாதல் ஐயுறவின்றித் துணியப்படுமென்க. அடிக்குறிப்பு 1. சாந்தோக்கியம், 5, 11 - 24 2. பிருகதாரணியகம், 2, 1 கௌஷீதகி, 4, 3. சாந்தோக்கியம், 5, 3, 7 18. புராண இதிகாசக் கருத்து இனி, ஆரியவேதங்களின் புன்மையும் அவற்றின்கட் சொல்லப்பட்ட இந்திரன் முதலான சிறுதெய்வ வழிபாட்டின் சிறுமையும், அவரைக் கொண்டாடும் வெறியாட்டு வேள்விகளின் தீவினையும் எடுத்துக்காட்டி, முழு முதற் கடவுள் சிவம் ஒன்றேயாதலும் அதனை உள்ளவாறு உணரும் மெய்யுணர்வின் மாட்சியும் அதனை எய்துதற்குரிய மெய்யறிவின் சிறப்புந் தேற்றித் தமிழ்ச்சான்றோர்கள் ஈசகேனம் முதலான பழைய உபநிடதங்களையுஞ் சாங்கியம் முதலான தரிசனங்களையும் இயற்றியும், ஆரியர் அவற்றானும் அறிவு திருந்தாராய்த் தமக்குரிய வெறியாட்டு வேள்விகளைப் பெருக்கிச் செய்தற்குந், தமிழர் அறிவுறுத்திய முதற் கடவுள் வழிபாட்டை மறுத்தற்குமாக மீமாஞ்சை நூல் இயற்றிவிட்டார். அவர் செய்த அம் மீமாஞ்சை நூல் உணர்ச்சியும் அன் வழியே வெறியாட்டு வேள்விகளும் பின்னும் பெருகவே, ஆரியர்க்குந் தமிழர்க்கும் பெரும் போர் மூண்டது. இங்ஙனம் மூண்ட பெரும்போரின் வரலாறுகளே பின்னர்ப் புராணங்களிலும் இதிகாசங்களினும் எழுதி வைக்கப்பட்டன. இவற்றின்கட் சொல்லப்பட்ட தாருகாவனத்து இருடிகளின் வேள்விகளுந், தக்கன் முதலாயினோர் சிவபிரானை இகழ்ந்து செய்ப வேள்விகளும் எல்லாம் ஆரியராற் செய்யப்பட்ட வெறியாட்டு நாத்திக வேள்விகளேயாம்; அவ்வேள்விகளை அழித்து அவற்றைப் புரிந்த ஆரியரை ஒறுத்து அவர்தஞ் செருக்கை அடக்கின பிட்சாடன ருத்திரர் வீரபத்திரருத்திரர் முதலியோரின் செயல்களெல்லாந் தமிழ்மக்களின் செயற்கருஞ் செயல்களேயாம். ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கரென்று இகழ்ந்து பேசப்படுவாராயினர். இத் திறங்களெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும். இனி யாம் எழுதுந் தமிழர் ஆரியர் வரலாறு என்னும் நூலில் அவையெல்லாம் விரித்துக் காட்டுதும். இவ்வாறாக, ஆரியர் உலகத்திற்குப் பெரிது பயன்படும் ஆ, ஆன்கன்றுகள், எருதுகள், எருமைகள், குதிரைகள், யாடுகள், சிற்சில அமயங்களில் உயிர் பிறப்பினரான மக்கள் முதலான எத்தகைய உயிர்களையுங் கொன்று கட்குடித்து வெறியாட்டு வேள்விகள் புரிந்து, முழுமுதற் கடவுளை வணங்காத நாத்திகராய் உழன்றமையினாலேதான் அன்பு அருள் அறம் கல்வி முதற் கடவுள் வழிபாடு நாகரிகம் முதலியவற்றிற் றலைசிறந்து விளங்கிய பண்டைத் தமிழ் நன்மக்களான வேளாளரும் அவர்க்கு அரசராயிருந்த வேளிரும் இயற்கையிலேயே விருந்தோம்பும் வாழ்க்கையிற் சிறந்தவராயிருந்துந், தமது நாகரிக முறையில் திருத்தப்படுதற்கு இசைந்து வராத ஆரியர்மேல் வெறுப்புற்று அவர் தம்மை ஒறுத்துவரலாயினா ரென்க. 19. ஆரியர் தம்மை உயர்த்தச் செய்த சூழ்ச்சி இதன்பின், எல்லாவாற்றானுந் தமிழ்மக்களுந் தமிழரசருஞ் சிறந்தாராயும் நிகரற்ற வலிமையுடையாராயும் இருத்தல் கண்டு, ஆரியர் அவரை நேரே எதிர்த்தலும் இகழ்தலுஞ் செய்தலைவிட்டு, அவரோடு அளவளாவி அவர்தம் வழக்க. வொழுக்கங்களைக் கைப்பற்றுவார்போற் புறத்தே காட்டி, அகத்தே அவரைத் தாழ்த்தித் தம்மை உயர்த்துதற்கு வேண்டுஞ் சூழ்ச்சிகளெல்லாம் மிகவுங் கருத்தாய்ச் செய்து வருவதில் முயற்சியுடையரானார். அக் கருத்து நிரம்புதற்கு முதலில் ஊன் உணவையும் வெறியாட்டு வேள்விகளையும் அறவே ஒழித்தனர். அதன்பின், தம்மை எல்லாரினும் உயர்ந்த பிராமணர் எனவும், ஆரியரல்லாத தமிழரைச் சத்திரியர், வைசியர், சூத்திரர் எனவும் பிரித்து, இவ்வேற்பாடு கடவுளால் வகுக்கப்பட்டதென எழுதி, மெல்ல மெல்ல வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின்கண் அவ் வெழுத்தை நுழைத்துவிடுவாராயினர். களங்கமில்லா உள்ளத்தினரான தமிழர் அவ்வாறு அவர் நுழைத்த அவ்வேற்பாட்டினை உண்மையென நம்பத்தலைப்பட்டபின், அதனை மேலும் மேலும் வலியுறுத்தி விரித்து மநு முதலான மிருதிநூல்களை எழுதிவைக்கலாயினர். இம் மிருதிநூல்கள் வழங்கத் துவங்கிட தமது கருத்து எளிதாய் எங்கும் நிறைவேறுதலைக் கண்டபின், ஆரியர் தம்மைப் பிராமணர் எனவும், ஆரியரல்லாத தமிழரைச் சத்திரிய வைசிய சூத்திரரெனவும் வகுத்த நால்வேறு வகுப்பையுங்கூட ஒழித்துத் தமிழர் எல்லாரையும் ஒருங்கு சேர்த்துச் சூத்திரரென முற்றும் இகழ்வாகவே வழங்குவதற்குந் துணிந்து, கலிகாலத்தில் சத்திரிய வைசிய வகுப்பில்லை, பிராமணர் அல்லாத அனைவருஞ் சூத்திரரே ஆவர் என ஒரு கதை புனைந்துகட்டி, அதனைத் தாம் இயற்றிய சில நூல்களிடையே நுழைத்துவிட்டு, அதனையுந் தமிழர் எல்லாரும் எளிதிலே நம்பும்படி செய்து தமது கருத்தை நிறை வேற்றிக்கொண்டார்கள். இங்ஙனம், இவர்கள் கருத்து நிறைவேறிய பிற்காலத்திற் றோன்றிய உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியோர், ஆரியப் பார்ப்பனர் வழக்கத்திற் கொணர்ந்த இவ்விகழ்ச்சிப் பொய்யுரையை மெய்யென நம்பித், தாம் உரை எழுதுதற்கு எடுத்துக்கொண்ட தொல்காப்பியம் முதலான பழைய செந்தமிழ்த் தனி நூல்களில் வேளாளரைப் பற்றிக் கூறுமிடங்களிலெல்லாம் பிழையான உரைகளை எழுதி விடலானார்கள். இவ் விந்திய நாட்டிற் சரித்திர நூல்களும், அவற்றின் வழியே மெய் இது, பொய் இதுவெனப் பகுத்துக் காணுங் சரித்திர வுணர்வும் இல்லாமையால், ஆரியப் பார்ப்பனர் தமிழ் நன்மக்களைத் தாழ்த்துதற்குச் செய்த இச் சூழ்ச்சிகளை அறியாமல், அவையெல்லாங் கடவுள் வகுத்த ஏற்பாடெனவே நம்பி அவற்றுக்கு மாறாக ஏதுங் கூறமாட்டாராய், நூலாசிரியர் கருத்துக்கு முரணாக அவர்கள் அங்ஙனம் பிழைபட்ட உரைகள் எழுதியது ஒரு வியப்பன் றென்க. 20. சேக்கிழாரும் வேளாளரும் இனித், திருத்தொண்டர் புராணம் அருளிச் செய்த ஆசிரியர் சேக்கிழார் வேளாளரைச் சூத்திரக் குலத்தவராகக் கூறுதல் என்னை? என்று அறிஞர் சிலர் நிகழ்த்திய தடைக்கு விடைகூறி, அதன்பின் அவர் நிகழ்த்திய ஏனைச் சிலவற்றிற்கும் முடிபு கூறுவாம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் வேளாளக் குடியிற் பிறந்தவர்கள் பதின்மூவராவர் என்று உமாபதி சிவனார் தாம் அருளிச்செய்த சேக்கிழார் புராணத்திற் கூறியிருக்கின்றார். சேக்கிழாரும் இப் பதின்மூவர் வரலாறுகளையும் உரைக்கின்றுழிச் சத்திநாயனார் புராணத்தில் விரிஞ்சை யூரினில் வாய்மை வேளாண்குலம் எனவும், விறன்மிண்டர் புராணத்தில் அப்பொற்பதியினிடை வேளாண்குலத்தை விளக்க அவதரித்தார் எனவுந் திருநாவுக்கரையர் புராணத்தில் மேதக்க நிலை வேளாண் குலத்தின்கண் எனவுஞ், சாக்கியர் புராணத்தில் தகவுடைய வேளாளர் குலத் துதித்தார் எனவுங், கோட்புலியார் புராணத்தில் வேளாண் குலம்பெருக வந்துதித்தார் எனவும் மானக் கஞ்சாறார் புராணத்தில் விழுமிய வேளாண் குடிமை எனவும், ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால் எனவும், மூர்க்கர் புராணத்தில் நஞ்சையமுது செய்தவருக்கு, இம் பர்த நலத்தில் வழியடிமை என்றுங் குன்றா இயல்பில் வருந் தம் பற்றுடைய நிலை வேளாண் குலத்தில் எனவும் அரிவாட்டாயர் புராணத்தில் தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய, மிக்க செல்வத்து வேளாண்டலைமையார், எனவுஞ், செருத்துணையார் புராணத்தில் திருந்து வேளாண் குடிமுதல்வர் எனவும், முனையடுவார் புராணத்தில் வேளாண் தலைமைக் குடிமுதல்வர் எனவும் பதினொரு நாயன்மார் குலத்தை வேளாண்குலம் என்னும் பெயரினாலேயே விளங்கக் கூறியிருக்கின்றனர். இவ்வாறு கூறியவிடத்தும் வேளாண்குலம் என வாளா கூறாது, அக் குலத்தவர் மெய்ம்மையே பேசும் இயல்பினர் என்பது புலப்பட வாய்மை, நம்புவாய்மையின் நீடு என்னுஞ் சொல்லையுஞ் சொற்றொடரையும், அவர் பொருந்திய தகுதிப்பாடு உடையர் என்பது விளங்க மேதக்க தகவுடைய என்னுஞ் சொற்றொடர்களையும், இக் குலஞ் சிறந்தது என்பது தெரிக்க விழுமிய என்னுஞ் சொல்லையும், இக் குலத்தவர் ஈகையிற் சிறந்தவர் என்பது புலனாக வேளாண்மையில் உயர்ந்த என்னுந் சொற்றொடரையும், இக் குலத்தவர் சிவபிரான் ஒருவற்கே வழிவழி யடிமைசெய் தொழுகுங் குறையா இயல்பும் பற்றும் உடையர் என்பது நன்குணர்த்த நஞ்சையமுது செய்தவருக்கு, இம்பர்த் தலத்தில் வழியடிமை என்னுங் குன்றா இயல்பில் வருந், தம் பற்றுடைய என்னுஞ் சொற்றொடரையும் வேளாளர் தொன்று தொட்டுப் பெரும் பொருட்டிரள் உடைய மிக்கசெல்வ வாழ்க்கையினர் என்பது தெளிவுறுத்தத் தொக்க மாநிதித் தொன்மையில் ஓங்கிய மிக்க செல்வத்து என்னுஞ் சொற்றொடரையும், வேளாள குலந் திருத்தமானது என்பது தெருட்டத் திருந்து என்னுஞ் சொல்லையும், வேளாள குலம் ஏனை எல்லாக் குலங்கட்குந் தலைமையானது என்பது அறிவுறுத்த வேளாண் தலைக்குடி என்னுஞ் சொற்றொடரையும் ஆசிரியர் சேக்கிழார் அடைகளாகப் புணர்த்தி வேளாண் குலத்தின் உயர்வைப் பலவாற்றானும் நன்கு விளக்கியிருக்கின்றனர். இத்துணைச் சிறந்த உயர்வுடையதாகத் தம்மாற் கூறப்பட்ட வேளாளர் குலத்தை இழிந்த சூத்திர குலமாகக் கூறுவது சேக்கிழார் திருவுள்ளக் கருத்தாகுமா என்பது ஆராயற்பாலதன்றோ? சூத்திரராவார் இன்னர் என்பது மநுவினால் நன்கு காட்டப்பட்டிருக்கின்றது. சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொணரப் பட்டவன், அன்புடன் ஊழியஞ் செய்பவன், தன்வேசி மகன், விலைக்குக் கொள்ளப்பட்டவன், ஒருவனாற் கொடுக்கப்பட்டவன், குலவழியே தொன்று தொட்டு ஊழியஞ் செய்பவன், குற்றத்திற்காக வேலை செய்பவன் எனச் சூத்திரர் எழுவகைப்படுவர் எனவும். பார்ப்பனன் ஐயம் இன்றி மேற்கூறிய எழுவகைச் சூத்திரரிடத்திலிருந்தும் பொருளை வலிந்து எடுத்துக் கொள்ளலாம். தம் தலைவன் எடுத்துக் கொள்ளுதற்ரிய பொருளையுடைய அந்தச் சூத்திரர் தம் பொருளுக்குச் சிறிதும் உரிமையுடையர் அல்லர்.1 எனவும் மநுகூறுஞ் சூத்திர இலக்கணந் தமிழ்நாட்டிலுள்ள வேளாளர்பாற் காட்டல் கூடுமா? ï§FŸs ntshs® r©ilƉ áiwahf¥ ão¡f¥g£ltuh?அல்லது எவர்க்கேனும் ஊழியஞ் செய்பவரா? அல்லது பார்ப்பனர் தம் வேசிக்கேனும் மக்களாய்ப் பிறந்தவரா? அல்லது எவரிடத்தேனும் விலைக்கு வாங்கப்பட்டவரா? அல்லது எவராலேனும் விலைக்குக் கொடுக்கப்பட்டவரா? அல்லது கால்வழி கால்வழியாக எவர்க்கேனும் அடிமையூழியஞ் செய்பவரா? அல்லது எந்தக் குற்றத்திற்காக வேனும் வேலை செய்பவரா? எந்த வேளாளராவது தமக்குந் தம் பொருளுக்கும் உரிமையில்லை யென்று அவை தம்மைப் பார்ப்பனர் வலிந்து எடுத்துக் கொள்ள விட்டிருக்கின்றனரா? இங்குள்ள வேளாளர் இச்சூத்திர இலக்கணங்களெல்லாம் உடையர் என்று ஒருகால் அவ்வறிஞர் தாமாகவே நாட்டத் துணிவராயினும், ஆசிரியர் சேக்கிழார் வேளாளரையும் வேளாண் குலத்தையும் உயர்த்துக் கூறும் உயர்ச்சிகட்கெல்லாம் இவர் என் சொல்லமாட்டுவார்! மநு சூத்திரரைப்பற்றிக் கூறும் இழித்துரை இலக்கணங்களும், சேக்கிழார் வேளாளரைப்பற்றிக் கூறும் உயர்த்துரை இலக்கணங்களும் ஒன்றோடொன்று பெரிதும் மாறுபட்டு நிற்றலின் வேளாளரைச் சூத்திரரெனக் கோடல் சேக்கிழார்க்குக் கருத்தன்று என்பது தானே பெறப்படும். அற்றன்று, மநு கூறியவாறே வேளாளரைச் சூத்திரரெனக் கொண்டாரா யினுந் தாம் அவ் வேளாண் குலத்திற் பிறந்தமைபற்றி அதனைச் சேக்கிழார் உயர்த்துப் பேசுவாராயினரெனின்; அங்ஙனம் மநு கூறியதற்கு மாறாக அக் குலத்தைப் பொய்யாக உயர்த்துப் பேசுதல் சேக்கிழார்க்கு ஒரு பெருங் குற்றமாய் முடியுமன்றோ? அதுவேயுமன்றித், தமிழ்நாட்டின்கண் உள்ள வேளாளர் பண்டு தொட்டே உழவு வாணிகம் ஈகை அறம் முதற்கடவுள் வழிபாடு முதலியவற்றிற்கு உரியராய் அந்தணராயும் அரசராயும் அமைச்சராயும் படைத்தலைவராயுங் கொலைபுலை தவிர்ந்து நாகரிகத்திற் சிறந்தாராயும் வாழ்ந்து வந்திருத்தல், பண்டைத் தமிழ் நூல் வழக்கானும், இன்றுகாறும் நடைபெற்று வரும் உலகவழக்கானும் நன்கு துணியக்கிடத்தலின், இவற்றிற் கெல்லாம் மாறாகச் சேக்கிழார் இவர்களைச் சூத்திரரெனக் கொண்டாரென்பது, பண்டை நூலாராய்ச்சியின்மை உலக வழக்கொடுமாறு கொள்ளுதல் என்னும் பெருங் குற்றங்களைச் சேக்கிழார் பால் ஏற்றுவதாய் முடியுமன்றோ? மநுவுக்கு மாறாகச் சேக்கிழார் பொய்கூறி வேளாளரை உயர்த்தினாரென்று ஒரு பக்கத்தும், வேளாளர் உண்மைச் சிறப்பை உள்ளவாறு அறிவிக்கும் பண்டைத் தமிழ் நூல்களையும் அறியாமல் சேக்கிழார் வேளாளரைச் சூத்திரரெனக் கூறினாரென்று மற்றொரு பக்கத்துமாகச் சேக்கிழார்மேற் பொய்யும் அறியாமையும் ஆகிய பெருங் குற்றங்களை ஏற்றுதல் நன்றோ, திருத்தொண்டர் புராணத்தில் இரண்டு மூன்று இடங்களில் மட்டும் வேளாளரைச் சூத்திரரெனக் கூறியவை சேக்கிழாராற் செய்யப்படாமல் ஆரியப் பார்ப்பனராற் செய்து சேர்க்கப்பட்டனவாமென்று கூறுதல் நன்றோ, என்பதை அறிவுடையார் ஆராய்ந்து கைக்கொள்ளக் கடவர். திருத்தொண்டர் புராணத்திற் பதினொரு நாயன்மார் வரலாறுகளைக் கூறுகின்றுழி, அவர்களுடைய குலத்தை வேளாள குலமென அக்குலத்தினர்க்குரிய பல உயாந்த தன்மைகளாற் சிறந்தெடுத்துக் கூறிய ஆசிரியர் சேக்கிழார், வாயிலார், இளையான் குடிமாறர் என்னும் இருவர் புராணங்களில் இரண்டிடத்துமட்டும் இழிந்த சூத்திரப் பெயர்களால் வேளாளரைக் கூறியிருப்பரா? வாயிலார் புராணத்திற் போந்த தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம் என்னுஞ் சொற்றொடரிற் பழமை எனப்பொருள் படுந் தொன்மை தொல் என்னுஞ் சொற்கள் ஒரு பயனுமின்றி இருகால்வந்து கூறியது கூறல் என்னுங் குற்றத்திற்கு இடனாய்நிற்றலின் இச்சொற்றொடர் சேக்கிழாராற் செய்யப் பட்டபடியாக வன்றிச், சூத்திரச் சொல்லை நுழைத்தற் பொருட்டு ஆரியப் பார்ப்பனர் எவராலோ திரிவு படுத்தப்பட்ட தொன்றா மென்பது துணியப்படும். இங்ஙனமே, இளையான்குடிமாறர் புராணத்திற் போந்த நம்புவாய்மையின் நீடு சூத்திர நற்குலம் என்னுஞ் சொற்றொடரில் இழிவினைக் குறிக்கஞ் சூத்திரச்சொல், நற்குலம் என்னும் உயர்வினைத் தருந் தொடர்மொழியோடு இயைதற்கு உரிமையின்றி மாறுபடுகின்றமையின் அது மாறுகொளக் கூறல் என்னுங் குற்றத்திற்கிடனாய்ச், சேக்கிழாராற் செய்யப்படாமற் பிறரொருவராற் செய்யப்பட்டதேயா மென்பதனை நன்கு புலப்படுத்தும். இங்ஙனமே, சேக்கிழாராற் செய்யப்படாமல் ஆரியப் பார்ப்பனரால் இடையிடையே திரிபுபடுத்தப்பட்டனவுஞ் செருக்கப்பட்டனவு மாகிய வழுவுடையச் செய்யுட்களை அவரே செய்தனவாக நாட்டுதற்குப் புகுந்து, அறிவின் மிக்கஅச்சான்றோர்க்கு இத்தகைய புல்லிய குற்றங்களை ஏற்றுதற்கு இடந்தருதல் அறிவுடையார்க்கு முறையாகுமா கூறுமின்கள்! இனித், திருவாக்கூர்த் தேவாரத்தில் இன்மையாற் சென்றிரந்தார்க்கு இல்லையென்னாது ஈத்துவக்குந் தன்மையார் என்று திருஞானசம்பந்தப் பெருமானது அருமைத் திருமொழியால் உயர்த்துக் கூறப்பட்டவர்கள் வேளாளரே என யாம் கூறச், சேக்கிழார் புன்மையால் இரந்து சென்றார்க் கில்லையென் னாதே ஈயுந், தன்மையா ரென்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை, மன்னனார் அருளிச் செய்த மறைத்திரு வாக்கூர் அவ்வூர் என்று அவரை அந்தணராகக் கொண்டாரென எதிர்ப்பக்கத்தவர் கூறினார். திருஞான சம்பந்தப் பெருமுன் அருளிச் செய்த திருவாக்கூர்த் தேவராப் பதிகத்தை முதலிலிருந்து ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும், ஆண்டு அப்பெருமானாற் சிறப்பித் துரைக்கப்பட்டவர்கள் வேளாளரேயாதல் தெற்றென விளங்கா நிற்கும் அப்பதிகத்தின் மூன்றாஞ் செய்யுளில், வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே என வேளாளரையே அவர்க்குரிய பெயரால் வெளிப்பட எடுத்தோதி, யார் எவற்றைக் கேட்பினும் அவர்க்கு அவற்றையெல்லாம் வரையாது கொடுத்துதவும் ஈகையிற் சிறந்தார் அவ் வேளாளர்களே யென்பதுந் தெளித்துக் கூறியிருக்கின்றார். இவ்வாறு திருவாக்கூரில் இருந்த வேளாளர்கள் வள்ளன்மையால் மிக்கவர்கள் என்பது மூன்றாஞ் செய்யுளிற் கூறப் பட்டிருத்தலால் இதற்குப் பின் ஒன்பதாஞ் செய்யுளில் வரும், இன்மையார் சென்றிரந் தார்க்கு இல்லையென்னாது ஈந்துவக்குந்தன்மையார் என்பதும் அவ் வேளாளரையே குறிப்பதால் சிறுமகாரானும் உணரற்பாலதே யாம். அற்றேல், இத்துணை எளிதில் உணரக்கிடப்பதாகிய இத் தேவாரப் பதிகப் பெருளை ஆய்ந்துணராமல் ஆசிரியர் சேக்கிழார் அதனை வேதியர் மேல் ஏற்றியது என்னை யெனின்; வேதியர் என்னும் சொல்லைக் கேட்ட அளவானே, இக்காலத்துப் போலிச் சொல் வழக்கைக் கொண்டு அக்காலத்து வழங்கிய அதற்கு ஆரியப் பார்ப்பனர் என்று பொருள் கோடல் சிறிதும் பொருந்தாது; வேதங்கள் என்பன ஆரியவேதங்களே என்று கோடலும் பொருந்தாது. அடிக்குறிப்பு 1. மநுமிருதி நூல், 8 ஆம் அத்தியாயம், 415, 417 21. பழைய வேதங்களென்பன தமிழ் மறைகளேயாம் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகையுறுதிப் பொருள்களைப் கூறிய பழைய தமிழ் நூல்களே நால்வேதம் எனவும், நான்மறை எனவுந் தமிழ் மொழிக்கண் வழங்கப்பட்டன. பண்டைக்காலத்து வழங்கிய தமிழ் நான்மறைகள் அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நால்வகை யுறுதிப் பொருள்களை உணர்த்து மென்பதும், அவை இறைவனால் ஆலமர நிழலின்கீழ் அருந்தவர் நால்வர்க்கு அறிவுறுத்தப்பட்டன வென்பதும், ஆல நீழல் அன்றிருந்து அறநெறி நால்வர் கேட்க நன்கினிது உரைத்தனை எனத் திருவெழுகூற்றிருக்கையில் ஆசிரியர் நக்கீரனாரும், அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கூறிய இயம்பேடீ எனத் திருச்சாழலில் மாணிக்கவாசகப் பெருமானும், அன்றாலின் கீழிருந்தங்கு அறம்புரிந்த அருளாளர் எனத் திருஞானசம்பந்தப் பெருமானும், அன்றாலின் கீழிருந்தங்கு அறஞ் சொன்னானை எனத் திருநாவுக்கரசு நாயனாரும், அன்றாலின் நீழற் கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து எனச் சுந்தரமூர்த்தி நாயனாரும் அருளிச் செய்யுமாற்றால் நன்கு விளங்கும். ஆரிய வேதங்களோ இவ்வாறு அறம் பொருளின்ப வீடுகளை உணர்த்துவன வென்றாதல், அவை சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டன வென்றாதல், பழைய ஆரிய நூல்களுள் யாண்டுஞ் சொல்லப்படவில்லை. ஆரிய வேதங்களின் பிறப்பைப் பற்றிக் கூறும் பழைய ஆரியநூற் கூற்றுகளும் ஒன்றோடொன்று பெரிதும் மாறுபட்டு நிற்கின்றன; அம் மாறுபாடுகளுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும். இருக்கு சாமம், எசுர் என்பவற்றின் செய்யுட்கள் புருஷனைப் பலியாக வேட்ட வேள்வியினின்று பிறந்தன என்று இருக்குவேதத்துப் புருஷசூக்தம் (10 - 90) மொழிகின்றது. இனி, கம்பம் என்னும் நிலைக்களப் பொருளிலிருந்து இருக்குமொழிகள் வெட்டியெடுக்கப் பட்டன. எசுர் மொழிகள் பிறாண்டியெடுக்கப்பட்டன; அப் பொருளின் மயிர்களே சாமப் பாட்டுகள்; அதர்வ ஆங்கீரசப் பாக்கள் அதன்வாய் (10, 7, 20) என்றும் இருக்கு மொழி யிந்திரனினின்று பிறந்தது, இந்திரன் இருக்கினின்றும் பிறந்தனன் (13, 4, 38) என்றும் வேதங்கள் காலத்திலிருந் துண்டாயின (19, 54, 3) என்றும், வேள்விக்குப் பின் எஞ்சிய எச்சிலிருந்து இருக்கு சாமப் பாக்களும், பாவகைகளும், புராணங்களோடு எசுரும், வானில் உறையும் எல்லாத் தேவர்களும் உண்டாயினர் (10, 7, 24) என்றும் அதர்வவேதம் நுவல்கின்றது. வேதங்கள் அக்நி வாயு சூரியன் என்னும் மூன்றிற் றோன்றின எனச் சாந்தோக்கிய உபநிடதம் புகல்கின்றது. ஈரவிறகில் உண்டாக்கின தீயிலிருந்து புகையின் பல வேறு திரிபுகளும் உண்டாதல்போல, இந்தப் பெரிய பொருளின் உயிர்ப்பிலிருந்து இருக்குவேத எசுர்வேத சாமவேதங்களும், அதர்வாங்கிரசுகளும், இதிகாச புராணவித்தைகளும், உபநிடதங்கள் சுலோகங்கள் சூத்திரங்கள் பல்வேறுரைகளம் உண்டாயின (14, 3, 4, 10) என்று சதருத பிராமணம் புகல்கின்றது. வேதங்கள் பிரஜாபதியின் தாடி மயிர்கள் (3,39,1) என்று தைத்திரீய பிராமணங் கூறுகின்றது. இவ்வாறு ஆரியவேதங்களின் பிறப்பைப் பற்றிப் பழைய ஆரிய நூல்கள் ஒன்றோடொன்று மாறுபட மொழிதல் போலவே, பின்றைக் காலத்து வடமொழி நூல்களும் அவற்றின் பிறப்பைப் பலவேறுபடக் கிளந்து மாறுபட்டு நிற்கின்றன. அம் மாறுபாட்டுரைகளுள்ளுஞ் சில இங்கெடுத்துக் காட்டுதும்: பிரமாவின் வாயிலிருந்து வேதங்கள் பிறந்தன (3,12,34,37) எனப் பாகவத புராணமும் வேதங்கள் காயத்திரியிலிருந்து உண்டாயின (11, 5, 16) என அரிவம்சமும், சரசுவதியே வேதங்களுக்குத் தாய் (சாந்திரபர்வம், 12, 920) என மகாபாரதமும், அவன் (விஷ்ணு) இருக்கு சாம எசுர் வேதங்களாய் இருக்கின்றான் (3,3,19) என விஷ்ணு புராணமும் புகல்கின்றன. இனி, வேதங்களை ஆக்கிய இருடியர்களே தாந்தாமே அவ் வேதப் பாட்டுகளைப் பாடியவர்களாக அவற்றின்கண் விளக்கமாய்ச் சொல்லி யிருக்கின்றனர்; அவற்றுட் சில வருமாறு, கண்ணுவர்கள் நினக்கு ஒரு வேண்டு கோளுரையைச் செலுத்துகின்றனர் (1,47,2) எனவுங், குதிரைகளை நுகத்திற் பூட்டும் ஓ இந்திரனே, கோதமர்கள் நினக்குச் செவ்வையான பதிகங்களைப் பாடுமாறுசெய் (1, 64, 61) எனவும் ஓ அகவினிகளே, நும்மைப் பெருமைப் படுத்தும் இவ் வேண்டுகோளுரைகளைக் கிரித்சமதர்கள் நினக்காகச் செய்தனர் (2, 39,8) எனவும், பதிகங்கனை ஆக்குவோனான விருகதுக்தன் ஏற்கற்பாலதும் மாட்சிமிக்கதும் ஆன ஒரு பதிகத்தை இந்திரனுக்குப் பாடினான் (10, 54, 6) எனவும் இருக்கு வேதத்தினுள்ளேயே அவ்விருடிகள் சொல்லுதல் அறியப்படும். இங்ஙனம் இருடிகள் தாமே அப்பதிகங்களை ஆக்கினா ரென்பது அவ்விருக்கு வேதத்தில் இன்னும் பல விடங்களிலுஞ் சொல்லப் பட்டிருக்கின்றது. அவையெல்லாம் ஈண்டெத்துக் காட்டப்புகின் இது மிக விரியும். இங்ஙனமாக மேற்காட்டிய ஆரியமொழி நூலுரைகளில் ஓரிடத்தாயினுஞ் சிவபிரான் ஆலநீழலிலிருந்து அருந்தவர் நால்வர்க்கு ஆரியவேதங்களை அறிவுறுத்தினனென்னும் வரலாறு ஒரு சிறிதுங் குறிப்பிடப் படாமையால், தமிழ்நாட்டின்கட் பண்டுதொட்டுப் பழந்தமிழ் நூல்களில் வழங்கிவரும் அவ் வரலாறு, இறைவன் ஆலின் கீழமர்ந்து அருந்தவர்க்கு அறிவுறுத்தின தமிழ் மறைகளையே குறிக்கும் அல்லாமல், இந்திரன் வருணன் முதலான சிறு தெய்வங்கள்மேல் ஆரியர் பாடிய பாட்டுகள் நிறைந்த எசுர் சாமம் அதர்வம் முதலான ஆரிய நூல்களைக் குறியாதென்று கடைப்பிடிக்க. உண்மை யிவ்வாறிருப்ப, இற்றைக்கு ஐந்நூறாண்டுகட்கு முன் தமிழ்நாட்டின்கண் இயற்றப்பட்ட வடமொழிக் கந்த புராணத்தும், அதற்குச் சிறிதுகாலம் பிற்பட்டுக் கச்சியப்பசிவாசாரியாரால் அதன் மொழிபெயர்ப்பாகச் செய்யப்பட்ட தமிழ்க் கந்தபுராணத்தும், இவ் வரலாறு ஆரிய வேதங்களையே குறிப்பதொன்றாகப் பார்ப்பனர்களாற் கரவாய் ஒரு புரட்டுரை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் செய்தது தம் ஆரிய நூல்கட்குப் பெருமை தேடிக் கொள்ளுதற்கேயாம். மெய்யும் பொய்யும் பகுத்துணர மாட்டாமல், ஆரியர்க்கு அடிமைகளாய்த் திரியுந் தமிழ்ப்புலவர் சிலரும் இக் கந்தபுராணப் புளுகை ஒரு மேற்கோளாய் எடுத்துக்கொண்டு ஆரிய வேதங்களையே சிவபெருமான் அருந்தவருக்கு ஆலின்கீழ் அறிவுறுத்தினான் எனக் கரைகின்றனர்; ஆயினும், இது மேற்காட்டிய ஆரிய நூன் மேற்கோள்களுக்கெல்லாம் முற்றும் முரணாதல் காண்க. சிவபெருமான் அருளிச் செய்தவை எல்லாம், அறம் பொருள் இன்ப வீட்டின் இலக்கணங்கள் இன்னனவென்று விளக்கும் விளக்கவுரைகளும், அவற்றை எய்துதற்கு வாயிலாவன இவையாகலின் இவற்றைச் செய்கவென்னும் வியங் கோளுரைகளும், அவற்றைப் பயவாதன இவையாகலின் இவற்றைத் தவிர்கவென்னும் விலக்குரை களுமாய்த் தொல்காப்பியம், திருக்குறள் போல் இருக்குமே யல்லாமல் ஒப்புயர்வற்ற முழுமுதற் றெய்வமாகிய தன்னின் எத்தனையோ படி கீழ்த்தாழ்ந்து பிறப்பு இறப்புத் துன்பங்களிற் கிடந்துழல்வாரான இந்திரன் வருணன் முதலிய சிறு தெய்வங்களை வேண்டிப்பாடும் வணக்கவுரைகளாய் இருத்தல் ஒருவாற்றானும் இசையாதாகலின், இவ் வுண்மையினை நடுநிலை பிறழாது ஆராய்ந்தறிந்த கொள்க. எனவே, சிவபிரான் ஆலின்கீழிருந்து அறம் பொருள் இன்ப வீடுகளை அருந்தவருக்கு அறிவுறுத்திய அருமறைகள் தமிழ்நான் மறைகளேயாம் என்பதுந் தெற்றென வுணரற்பாற்று. இந் நால்வகை யுறுதிப் பொருள்களைச் சிறக்கக்கூறுந் திருவள்ளுவரின் திருக்குறள் மறை எனவும் வேதம் எனவும் பண்டுதொட்டு இன்று காறும் வழங்கப் படுதலுங் காண்க. அற்றேல், வேதம் என்பது வடசொல்லன்றோவெனின்; ஆரிய நூல்களில் மிகப் பழையதாகிய இருக்குவேதத்தில் வேதம் என்னுஞ்சொல் அறிவுநூல் என்னும் பொருளிற் காணப் படவில்லை. ஆனால், அதன் எட்டாவது மண்டிலம் 9 ஆம் பதிகம், 5 ஆவது செய்யுளில் மட்டும் வேதேந என்னும் ஒரு சொற் காணப்படுகின்றது; அங்கு அச்சொல் புற்கட்டினால் என்னும் பொருளில் வழங்கப் பட்டிருக்கின்றது. எசுர் வேதத்திலும் வேதம் என்னுஞ் சொற் புற்கட்டினுக்கே பெயராக வழங்கப்பட்டிருக்கின்றது. சாம வேதத்தில் வேதம் என்னுஞ் சொற் காணப்படவேயில்லை. மற்று இறுதிக் கண்ணதாகிய அதர்வ வேதத்திலேதான் அது முதன் முதற் காணப்படுகின்றது; இவ் வதர்வவேதம் ஏனை மூன்று வேதங்களுக்கும் பிற்பட்ட காலத்தே தோன்றிய தென்பதற்கு, அவ் வதர்வவேதப் பாட்டொன்று1 அம் மூன்று வேதப் பெயர் களொடு தன்னையும் எடுத்தோது மாற்றால் தெளியப்படும். எனவே ஏனை மூன்று வேதங்களோடு அதர்வவேதப் பாட்டு களையுஞ் சேர்த்து வேதங்களை நான்காக்கிய காலத்திலேதான், ஆரியருந் தமிழரும் ஒருங்குசேர்ந்து தொகுத்து வகைப்படுத்திய அவ் வாரியமொழிப் பாட்டுகளுக்கு வேதம் என்னும் பெய் சூட்டப்படுவதாயிற்று. இனி, இவ் வாரிய மொழிப் பாட்டுகளை அங்ஙனம் வேதங்களாக்கிய காலந்தான் யாதோவெனின், அது மகாபாரதப் போர் நிகழ்ந்த காலத்திற்கும் பிற்பட்டதேயாம். யாங்ஙனமெனிற், சுக்கில எசுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராமணத்திற் பாண்டவரின் வழித்தோன்றலாகிய ஜநமேஜய பரிக்ஷித் என்னும் அரசன் பெயர் கூறப்படுதலானும், பாண்டவர் ஐவரில் ஒருவனான சகாதேவமன்னன் பெயரும், அவன் புதல்வனாகிய சோமகன் பெயரும், பீஷ்மரின் தந்தையாகிய சந்தநுவின் பெயரும், அவனுடன் பிறந்த தேவாபி முனிவன் பெயரும் இருக்குவேதத்திற் காணப்படுதலானும், இத் தேவாபி முனிவனாற் செய்யப்பட்ட பதிகம் ஒன்றும் அவ்விருக்குவேதத்திற் சேர்ந்திருத்தலானும் இருக்குவேதப் பாட்டுகள் முற்றும் இவ்வரசர்கள் காலத்திற் செய்யப்பட்டனவல்லவாயினும், அவையெல்லாம் ஒருங்கு தொகுத்து வகுக்கப்பட்ட காலம் மேற்குறிப்பிட்ட மன்னர்கள் காலத்திற்கும் பிற்பட்டதேயாமென்பது மட்டுந் தெற்றெனத் துணியப்படும். இதனாற், பாண்டவர் காலத்தவரான வியாசரால் ஆரிய மொழிப் பாட்டுகள் வேதங்களாக வகுத்து ஒழுங்கு செய்யப்பட்டன வென்னும் வழக்கும், அதுபற்றியே அவர் வேதவியாசர் எனப் பெயர்பெற்றனர் என்பதும் உண்மையாதல் காண்க. இங்ஙனம் பாரதப் போர் நிகழ்ந்த காலத்திற்குப் பின்னே ஆரியமொழிப் பாட்டுகள் இருக்கு எசுர் முதலியனவாகப் பாகுபடுத்தப் பட்டபோதுதான் அவற்றிற்கு வேதம் என்னுங் சொல் சூட்டப்படுவதாயிற்று. இனி, அவ் வேதம் என்னுஞ் சொல் மறைநூல் என்னும் பொருளிற் பாரதப் போர்க்குப் பிற்பட்ட ஆரிய நூல்களிற் காணப்படுதல்போல, அப் போர் நிகழ்ந்த காலத்தும் அதற்கு முன்னுந் தோன்றிய ஆரிய நூல்களிற் காணப்படாதாக அவ் வேதம் என்னுஞ் சொல்லும் அதனோடொத்த மறை என்னுஞ் சொல்லும் அப்பாரதப்போர் நிகழ்ந்த காலத்தும் அதற்கு மிக முற்பட்ட காலத்தும் எழுதப்பட்ட செந்தமிழ்ப் பாட்டுகளிலே காணப்படுமாயின், அச் சொற்கள் தமிழர்க்கே உரியனவாமென்பது இனிது துணியப்படுமன்றோ? பாரதப் போர் நிகழ்நத காலத்தே முரஞ்சியூர் முடிநாகராயராற் பாடப்பட்ட மண்டிணிந்த நிலனும் 1 என்னும் மிகப்பழைய செய்யுளில் நால் வேத நெறிஎன வேதம் என்னுஞ் சொல்லும் அது நால்வகைத்தாதலுங் குறிக்கப்பட்டமை காண்க. பாரதப்போர் நடைபெற்ற காலத்தில் ஆரியமொழிப் பாட்டுகள் நான்கு கூறாகப் பகுக்கப்படவில்லை யென்பதும், அவற்றிற்கு வேதம் என்னும் பெயர் சூட்டப்படவில்லை யென்பதும் மேலே காட்டப்பட்டமையின், அவ் வாரிய மொழி வேதங்களுக்கு முன்னே பாடப்பட்டதாகிய இச்செந்தமிழ்ப் பாட்டிற் குறித்துரைக்கப்பட்ட நால் வேதங்கள் தமிழ்மறைகளே யாதலும், வேதம் என்னும் பெயர் தமிழ்ச் சொல்லே யாதலும் நன்கு பெறப்படும். இனிப், பாரதப்போர் நிகழ்தற்குப் பன்னூற்றாண்டுகள் முன்பிருந்த குமரிநாட்டில் அரசுபுரிந்த பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யைக் காரிகிழார் பாடிய வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்2 என்னுஞ் செய்யுளில் நான்மறை என்னுஞ் சொற்றொடர் காணப்படுதலின், ஆரிய மொழி வேதங்கள் தோன்றுதற்குப் பன்னெடுங்காலம் முன்னரே தமிழில் நான்கு வேதங்கள் உண்மையும், அவை மறை என்னும் பெயரானும் வழங்கப்பட்டமையும் பெற்றாம். முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனும், அவனைப் பாடிய புலவர்களான காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லி யத்தனார் என்னும் புலவர்களும் இப்போதுள்ள குமரிமுனைக்குத் தெற்கே பண்டைநாளில் நிலனாயிருந்த குமரிநாட்டில் இருந்தவர்கள் என்பதற்கு, அக் குமரிநாட்டில் ஓடிய பஃறுளியாற்றை நெடும்பல்லியத்தனார் என்னும் புலவர் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே3 என எடுத்துக் கூறுமாற்றால் தெளியப்படும். பஃறுளியாறு ஓடிய பண்டைத் தமிழகமாகிய குமரிநாடு பின்னர்க் கடல் கொண்டமை பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள4 எனப் போந்த சிலப்பதிகார அடிகளால் இனிது அறியப்படும். எனவே, பண்டைத் தமிழ் அறிவுநூல்கள் மறை எனவும், வேதம் எனவும் பெயர்கொண்டு வழங்கினமை தெள்ளிதிற் புலப்படும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு கூறாக வகுக்கப்பட்ட பண்டைத் தமிழ் மறைகளின் விழுப்பமும் நுட்பமும் நன்குணர்ந்தே தமிழரோடு உறவாடிய ஆரியர் பின்னர் தாங்கொணர்ந்த பாட்டுகளையுந் தமிழ்ச்சான்றோர் உதவியால் நான்கு கூறாக வகுத்துக்கொண்டு, அவற்றிற்குத் தமிழர் வழங்கிய வேதம் என்னுஞ் சொல்லையுஞ் சூட்டிவிட்டனர். குமரி நாடு கடல்வாய்ப்பட்ட காலத்திலேதான் தமிழ் வேதங்களும் ஏனைப் பல்லாயிரந் தமிழ் நூல்களும் நீரில் அமிழ்ந்திப் போயின. ஓர் அரக்கன் வேதங்களை யெடுத்துக் கொண்டு கடலில் அமிழ்ந்திப் போயினான் என்னும் பழையபுராண கதையுந் தமிழ் வேதங்கள் கடல்கோட்பட்ட உண்மையினையே தெரிப்பதாகும். முதலிலிருந்த தமிழ்வேதங்கள் இங்ஙனங் கடல்வாய்ப்பட்டனவேனும், அவற்றின்கட் கூறப்பட்ட பொருள்கள் தொன்றுதொட்ட வழக்காய்த் தொடர்ந்து வருதலின், அதன்பின்றோன்றிய காலத்தில் ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அவற்றை யெல்லாந் தமது அஃகா அறிவால் முழுதெடுத்துத் தொகுத்து வகுத்துத் திருக்குறள் இயற்றியருளினாரென்க. அறம் பொருளின்பங்களை இலக்கண வகையால் விளக்குவது தொல்காப்பியம் என்றும், இலக்கிய வகையால் விளக்குவது திருக்குறள் என்றும் உணர்தல் வேண்டும். இவ்விரண்டு நூல்களிலும் வீட்டியல் சுருக்கமாகக் கூறப் பட்டமையின், அதனை விரித்து விளக்குதற்கே, ஆகமங்கள் எனப் பெயரிய தமிழ்நூல்கள் பின்னர் எழுந்தன. இப்போது வடமொழியில் எழுதப்பட்டுள்ள சிவாகமங்களெல்லாம் பழைய நாளிலிருந்த தமிழாகமங்களின் மொழி பெயர்ப்பேயாம். இஃது எற்றாற் பெறுதுமெனின்; இவ்வாகமங்களிலுள்ள சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகைப் பொருள் களெல்லாந் தமிழ்நாட்டையுந், தமிழ்நாட்டிலுள்ள சிவபிரான் கோயில்களையுந், தமிழரது மெய்யுணர்வி னியல்பையுமே பற்றியனவாய் இருப்பக் காண்டுமல்லது, ஆரியர் பெருந்தொகையினராய் வந்து குடியேறிய வடநாட்டையும் வடநாட்டுக் கோயில்களையும் வடவரது உணர்வினி யல்பையும் பற்றியனவாய் இராமையும், வடக்கேயுள்ள மிகச்சிறந்த வடநூற் புலவர்களும் இச் சிவாகம நூற்பொருள்களை ஒருசிறிதும் உணராராயிருத்தலும் ஆகிய ஏதுக்களாற் பெறுதுமென்பது. தமிழ்மறைகள் கடல் கொண்டு மறைந்த பின்னரே, ஆரியமொழிப் பாட்டுகள் வேதங்களெனப் பெயர் பெற்று ஆரியரது பெரு முயற்சியாற் பெரிது வழங்கலாயின. அற்றேற் கடல்கோட்பட்டவை தமிழ்வேதங்களே யல்லாமல், ஆரியவேதங்கள் அல்லவென்பதற்குச் சான்று என்னையெனிற்; கூறுதும், பண்டைநாளிலேயே தமிழ்மொழி எழுத்துவடிவில் எழுதப்பட்டு வந்ததொன்றாகும்; அவ்வுண்மை, உட்பெறு புள்ளி யுருவா கும்மே மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் எசுர ஓகரத் தியற்கையும் அற்றே புள்ளி இல்லா எல்லாமெய்யும் உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும் ஏனை யுயிரோடு உருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்த லாறே 1 என்றற் றொடக்கத்துத் தொல்காப்பியச் சூத்திரங்களால் ஐயுற வின்றித் துணியப்படும்; இவ்வாற்றால், தொல்காப்பியனார் காலத்துக்கு முற்றொட்டே தமிழ்நூல்கள் வரிவடிவில் எழுதப்பட்டு வந்தமை தேற்றமாம். ஆகவே, ஏட்டுச் சுவடிகளாயிருந்த தமிழ்மறைகளும் ஏனை எண்ணிறந்த தமிழ்நூல்களுங் கடல்வாய்ப் புக்கமையே உண்மை நிகழ்ச்சியாதற்கு ஏற்புடைத்து. மற்று ஆரியவேத காலத்தில் ஆரியர் தமது மொழியை எழுத்து வடிவில் எழுதத் தெரிந்தார் அல்லர்; அதனால் அவர் வேதப்பாட்டுகளையும் பிறவற்றையுங் கிடைகூட்டி நெட்டுருப்பண்ணியே பாதுகாத்து வந்தனர். அவர் அவர்களுடைய ஆரிய நூல்கள் ஏட்டுச் சுவடிகளாயிருந்ததேயில்லை. தம்முடைய நூல்களைக் கிடைகூட்டி நெட்டுருப்பண்ணிச் சொல்லும் ஆரியரது வழக்கம், அவ்வாரியரை முழுதும் பின்பற்றிய பார்ப்பனர்பால் இன்றும் நடைபெறக் காணலாம். இங்ஙனம் ஏட்டுச்சுவடிகளாயில்லாமல், ஆரியர் தம் நினைவளவாய் வழங்கிய ஆரியவேதங்கள் கடல்வாய்ப் புகுதல் ஆகாமையாற் கடல் கொண்டு மறைந்தன தமிழ்மறைகளோயாமென்பதூஉம் அங்ஙனம் மறைந்த தமிழ்மறைகளையே இறைவன் மக்கள் உய்யவேண்டி ஆசிரியர் திருவள்ளுவநாயனார் வாயிலாக வெளிப்படுத்தருளினா னென்பதூஉம் அறியப்படும். தமிழ்மறைகள் வழங்கிய காலத்து உடன் வழங்கி, அவற்றின் பொருள்களை இலக்கண வகையால் விரித்தோதிய தொல்காப்பியம் ஒன்றுமே, அம் மறைகளின் பழைய வழிநூலாய் இப்போ தெஞ்சிநிற்பதாகும். மற்றுத் திருக்குறளோ அம் மறைகளுக்குப் பின் அவற்றின் பொருள்களை ஆண்டுள்ளவாறே பெரும்பாலும் எடுத்து இலக்கியவகையால் விளக்குவதாகும் என்று உணர்ந்து கொள்க. அற்றேல், தமிழ்நான்மறைகள் வழங்கிய காலத்து உடன் வழங்கிய தொல்காப்பியங் கடல்வாய்ப்படாமல் இன்றுகாறும் வழங்கிவராநிற்ப, அத் தமிழ்மறைகள் மட்டுங் கடல்வாய்ப் புக்கது என்னையெனின்; அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கில் இலக்கண வகையாலும் இலக்கிய வகையாலும் அரிதுணர் பொருளனவாய்க் கிடந்த அரும் பொருள்களை அவை தம்மை ஆராவேட்கையோடு ஏற்றுப் பயன்படுத்தத் தக்கார்க்குமட்டும் மறைவாய் அறிவுறுத்துவனவே மறைகள் ஆகும்; அத் தகுதிப்பாடு இல்லாதார்க்கு அந் நுண்பொருட் பெற்றிகளை அவை உணர்த்துவன அல்ல. ஆகவே மறைகள் எல்லார் மாட்டும் பரவி வழங்குவனவும் அல்ல, தகுதியுடையார் சிலர்க்குள் மட்டும் வழங்கி, அவர் இல்லையானவழி அவைதாமும் இல்லையாதலே மரபு. பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டில் உயிர்வாழ்ந்த பண்டைத் தமிழ்மக்கள், தமது நாட்டின் நிலவள நீர் வளத்தானுந், தமக்குள்ள அறிவு அன்பு அருள் கடவுள்வழிபாடு முதலான நலங்களானும் நாகரிகத்தில் நாளுக்குநாட் பிறைவளருமாறு போல் வளர்ந்து வந்தனர். அந் நாளிற் கடவுளின் திருவருட் பேரின்பத்தைப் பெறத்தக்க பெரியாரும் அவருட் பலர் மிகுந் திருந்தனர். அதனாற் கடவுளின் பேரருளும் அவர்பாலிருந்து அவர்க்கு இம்மை மறுமைக்குரிய உதவிகளையெல்லாம் ஆற்றிவந்தது. அவ்வாறு இறைவனருள் அவர்க்கு உதவியாய் நின்று, அவரிற் சான்றோரா யிருந்தாருள்ளத்தை உந்தி வந்தமையினாலேயே, அச் சான்றோர்பால் நின்றுந் தமிழ்மறைகள் தோன்றித் தக்கார்க்குப் பயன்படலாயின. இங்ஙனமெல்லாம் நாகரிக வாழ்க்கையிற் சிறந்தோங்கி வந்த பண்டைக் குமரிநாட்டுத் தமிழ்மக்களின் கால்வழியில் வந்தோர் காலஞ் செல்லச் செல்லத் தாம் பெற்ற பொருட் செல்வத்திலும், அதன் வாயிலாக வருஞ் சிற்றின்ப விளையாட்டிலும் இறங்கித், தம் முன்னோர்க்குரிய அன்பு அருள் கடவுள்வழிபாடு என்பவற்றில் வழுவித், தீய ஒழுக்கத்தினராய் மாறவே, அவருட் சான்றோராயினார் தொகை சுருங்கிற்று. அவரைத் திருத்துதற்கு வழியாவது அவர் மயங்கிய இம்மைச் செல்வத்தை யழித்தலேயெனத் திருவுளங்கொண்டு இறைவனுக்குஞ் சினம் மூண்டது. உடனே, தமிழ் நாட்டுக்கு வடக்கிலும் மேற்கிலுங் கடல்களாய் இருந்த பகுதிகள் நிலங்களாய் மாற, அக் கடல்கள் வற்றிய நீர் ஆவியாய் மேலெழுந்து, கடவுளின் திருவருளாணையாற் குமரிநாட்டிற் பொழிந்து பெருக்கெடுத்து அதனைக் கடலாக்கி அழித்தது. அக்காலத்து அழிந்துபட்ட அந் நாட்டில் முன்னே அருகி வழங்கி வந்த தமிழ்மறைகளும், பெருகிய வழக்கில் இல்லா ஏனை எண்ணிறந்த தமிழ்நூல்களும் அவ் வெள்ளத்தே புக்கு மறைந்தன, மற்றுத் தொல்காப்பியமோ, அறம் பொருள் இன்ப வீடுபேற்றுறுதிப்பொருள் நுட்பங்களைத் தக்கார்க்கு மட்டும் அங்ஙனம் மறைவில் வைத்து விளக்குவதன்றாய், எல்லார்க்கும் புலனாமாறு அவற்றை இலக்கண வகையால் எடுத்து விரித்து விளக்குவதொன்றாய்த், தமிழ் கற்பார் எத்திறந்தவராயினும் அவர் எல்லார்க்கும் இன்றியமையாப் பெருநூலாய் இருந்தமையின், அதனைக் குமரிநாட்டில் இருந்தார் மட்டுமேயன்றி, அதற்கு வடக்கின்கண்ணதான இத்தமிழ் நாட்டிலிருந்தாரெல்லாருங்கூடப் பயின்று பாதுகாத்துவந்தனர். அதனாற் குமரிநாட்டோடு உடனழியாது எஞ்சி நின்ற இத்தமிழ்நாட்டில் தொல்காப்பியம் இன்றுகாறும் வழங்கப் பெறுவதாயிற் றென்க. பண்டைக் குமரிநாட்டில் இருந்தாரைப் போலவே, இவ்வுலக வாழ்வில் மயங்கி அருளொழுக்கத்தையுங் கடவுள் வழிபாட்டையுங் கைவிட்ட எகுபதியர், சாலடியர், அசீரியர், எபிரேயர், பெரூவியர், மெக்சிகர், கிரேக்கர், உரோமர் முதலான பழைய நாகரிக மக்களெல்லாருந், தம் நாகரிக வாழ்க்கையின் உச்சியைத் தொட்டுத் தலைதடுமாறிய சில பல நூற்றாண்டு களுக்குப் பின், கடவுளது சினத்தால் அழிக்கப்பட்டு மறைந்தமை அவர்தம் வரலாறுகளால் நன்கறியப்படும். வடநாட்டிற் குடிபுகுந்த ஆரியரும் இங்ஙனமே தமது நாகரிக வாழ்வில் மயங்கத் தலைப்பட்டதும், அலக்சாந்தர் முதல் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்த அயல் நாட்டரசரால் அலைக்கப்பட்டுத் தமதுரிமை யெல்லாம் இழந்து நிற்றல் காண்க. இத் தமிழ்நாட்டிற் செங்கோல் ஓச்சிய சேர சோழ பாண்டியர்கள் வேற்றரசரால் வெல்லப்படாத அத்துணை வலிமையுடையராய் ஐயாயிர ஆண்டுகளுக்குமேல் அரசு புரிந்தும், பின்னர் ஆரியர் மாயத்துள் அகப்பட்டு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டுச் சிவத்தை மறந்தமையினாலே தான் அவர்களும் இப்போது இல்லாதே போயினர். மாணிக்கவாசகருந் திருஞானசம்பந்தரும் புத்தர் சமணர்களைவென்று, சைவ சமயத்தை உயிர்பெற்று எழச் செய்தபின், ஆரியப்பார்ப்பனர் அதுவே வாயிலாகத் தமதுயர்வை நாட்டவுஞ் சிவத்தை மறைக்கவும் முயன்ற தீய முயற்சிக்கு ஒத்து நின்றமையினாலேயே சைவமக்கள் தேவாரப் பதிகங்கள் எண்ணிறந்தவற்றை இழந்து தமது பெருமையிலுங் குன்றிப் போனார்கள்! இங்ஙனமே தமிழையுஞ் சிவத்தையும் மறந்தமையால் தமிழர்கள் நாளடைவில் இழந்துபோன நூல்களும் எண்ணிறந்தன! நலங்களும் எண்ணிறந்தன! இவ்வளவுக்குந் தப்பிப் பிழைத்துத் தொல்காப்பியமுந் திருக்குறளும் ஏனைத் தமிழ்நூல்கள் சிலவும் இன்னும் யாம் காணக்கிடைத் திருப்பதை நினையுங்கால், இன்னுந் தமிழ்மக்களில் தக்கார் சிலர் உளரென்பதும், அதனால் எல்லாம் வல்ல சிவத்தினருள் தமிழர்க்குந் துணையாய் இன்னும் உதவுகின்றதென்பதும் புலனாம்! ஆகவே, தமிழிலக்கண மறையாகிய தொல்காப்பியந், தன் காலத்து உடன் வழங்கிய தமிழ்மறைகள்போல் தக்கார்க்குள் அருகிய வழக்காயின்றி, தமிழ் நாடெங்கணும் பெருகிய வழக்காய் இருந்தமையினாலேதான், அஃது இன்றுகாறும் வழங்குகின்றதென ஓர்ந்து கொள்க. அது கிடக்க. மறை என்பது பருப்பொருளறிவினார்க்கு விளங்காத நுண்ணிய மறைபொருள்களை உணர்த்துதல் பற்றி அறிவு நூல்களுக்குப் பெயராக அமைக்கப்பட்டாற் போல், வேதம் என்னுஞ் சொல்லுந் தமிழ்ச் சொல்லாயின் அதுவும் அத்தகையதொரு பொருளைத் தருதல் வேண்டுமாலெனின்; வேய்தல் என்னுஞ் சொல் மூடுதல் என்னும் பொருளை யுணர்த்துதல் பழைய நூல்களிற் காணப்படுகின்றது,1 இக்காலத்தும் வீடு கூரைமூடுதலைக் கூரை வேய்தல் என்ப. இவ்வேய்தல் என்னுஞ் சொல்லுக்கு முதனிலை வே என்பதே யாகையால் அதனடியாய்ப் பிறந்த வேதம் என்னுஞ் சொல் மூடுபொருள் உடையது அல்லது மறைபொருள் உடையது என்னும் பொருட்டாவ தேயாம்2 ஆகவே, மறை வேதம் என்னுந் தமிழ்ச் சொற்களிரண்டும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாமென்க. இவ்வாற்றால், வேதம் என்பது பழைய தமிழ்ச் சொல்லே யாதலும், அது பின்னர் ஆரியரால் எடுத்துத் தமது பழைய நூலுக்குப் பெயராக வழங்கப் பட்டமையுந் தெளிந்து கொள்க. அஃது யாங்ஙனம்? வடசொற்களே தமிழில் வந்து வழங்கக் காண்டுமன்றித், தமிழ்ச் சொற்கள் அவ்வாறு வடமொழிக்கட் சென்று வழங்குதல் கண்டிலமாலெனின்; இது மொழியாராய்ச்சி யில்லாதார் கூற்றாம். இருக்குவேத காலந் தொட்டே பல்லாயிரந் தமிழ்ச்சொற்கள் வடமொழிக்கட் புகுந்து வழங்கலாயின. mt‰W£ gyt‰iw¤ ‘jÄœ tlbkhÊÆÅ‹W ãwªjjhkh? என்னும் எமது கட்டுரையில் ஞானசாகர முதற்பதுமத்தில் நெடு நாட்குமுன்னரே எடுத்துக்காட்டி விளக்கியிருக்கின்றேம். அதுவேயுமன்றிப், பிரயோக விவேக நூலாசிரியர் வடமொழியில் தமிழ்ச் சொற்கள் உண்டென்பதனை உடன்பட்டு அவற்றுட் சிலகாட்டுதலானும், இன்னோரன்ன மொழி நூலாராய்ச்சியில் மிகச் சிறந்த அறிவினராய் விளங்கிய கால்ட்வெல் ஆசிரியர் வடமொழி இலத்தீன் கிரீக் முதலான பல மொழிகளிலும் புகுந்து வழங்கிய பன்னூறு தமிழ்ச் சொற்களை நன்கெடுததுக் காட்டி விளக்கு தலானும் எமதுரை யுண்மையாதல் கண்டுகொள்க. இதுகாறுங் கூறியது கொண்டு, வேதம் என்னுஞ் சொல் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களைக் கூறும் நான்கு தமிழ் வேதங்களையே உணர்த்தலும், அதனடியாகப் பிறந்த வேதியர் என்னுந் தமிழ்ச் சொல்லும் அத் தமிழ் நான்மறைகளை யுணர்ந்த வேளாள அந்தணரையே குறித்தலும் நன்கு பெறப்படுதலால், திருஞானசம்பந்தப் பெருமான் தாம் அருளிச் செய்த திருவாக்கூர்த் தேவாரத் திருப்பதிகத்திற் குறிப்பிட்ட வேளாளரை ஆசிரியர் சேக்கிழார் வேதியார் எனக் கூறியதில் ஏதும் மாறுபாடில்லையென உணர்க; ஆண்டுக் குறிப்பிடப்பட்ட வேதியர் இக் காலத்துப் பொருந்தா வழக்குப் பற்றி ஆரியப் பார்ப்பனர் என்று பொருள் பண்ணிக் கொண்ட எதிர்ப்பக்கத்தவர் கொள்கையே பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க. ஆரியப் பார்ப்பனரை ஈகையிற் சிறந்தாராகக் கூறுந் தமிழ் நூல் வடநூல்கள் யாண்டுங் காணப்படாமையின் ஈகையிற் சிறந்த மாட்சியை வேளாளர்மேல் வைத்துப் பாடிய திருஞானசம்பந்தப் பெருமானது திருவாக்கூர்ப் பதிகத்தை இரத்தற் றொழிலையே கடனாக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்மேல் வைத்துரைத்தல் சேக்கிழார் திருவுள்ளக் கருத்தாகா தென்றொழிக. அற்றேற், பழைய தமிழ நூலாகிய திவாகரம் ஆதி நூலென்பது வேதநூற் பெயரே என்று ஓதிப், பின்னர் அதனை ஆரியவேதங்களாகிய இருக்கு முதலியவற்றின்மேல் வைத்துக் கூறுதல் என்னையெனின்; திவாகரம் மிகப் பழமையான தமிழ்நூல் அன்று. அது கடைச்சங்க காலத்து நூல்கட்கும், மாணிக்கவாசகப் பெருமான் காலத்திற்கும், பிருகற்பதி காத்தியாயநம் பராசரம் முதலிய மிருதி நூல்களின் காலத்திற்கும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் உண்டான பிரமம் நாரதீயம் வாமநம் வராகம் பாகவதம் வைணவம் முதலான புராணங்களின் காலத்திற்கும் பிற்பட்டதொன் றென்பதற்கு, அது பிற்சொல்லிய நூல்களை இறுதித் தொகுதியிற் குறிப்பிடுதலே சான்றாம். அஃது அன்னதாதலை மாணிக்கவாசகர் காலம் என்னும் எமது நூலுள் விரித்து விளக்குதும், ஆண்டுக் கண்டுகொள்க. இனித், திவாகரமுனிவராய் சிறப்பித்துரைக்கப்பட்ட அம்பற்சேந்தன் என்னும் மன்னன் கடைச்சங்க காலத்தவன் என்றும், அதனால் திவாகரங் கடைச்சங்க காலத்தே இயற்றப்பட்ட தொன்றாம் என்றுங் கூறினாரும் உளர். அவர் கூற்றுப் பொருந்தாது. சேந்தன் என்னும் அரசன் பெயர் கடைச்சங்க காலத்து நூல்களில் யாண்டுங் காணப்படவில்லை. அம்பர்கிழான் அருவந்தை என்னும் ஓர் அரசன் பெயரும், அவன்மேற் பாடப்பட்ட செய்யுள் ஒன்று மட்டும் புறநானூற்றிற், 1 காணப்படுகின்றன. அம்பர்கிழான் அருவந்தை என்னும் பெயர்க்குமேற் சேந்தன் என்னும் பெயருஞ் சேர்ந்த தொடர் மொழி கடைச் சங்ககாலத்து நூல்களிற் காணப்படாமையின், அருவந்தை என்னும் மன்னனே அச் சங்ககாலத்தவனென்பது பெறப்படு மல்லது, சேந்தனும் அக்காலத்தவனென்பது பெறப்பட மாட்டாது. அற்றேல், ஆடவர் திலகன் அம்பன் மன்னன், ஈடிசைத் தலைவன் அருவந்தைச் சேந்தன் என்று திவாகரங் கூறுதல் என்னையெனின்; அம்பல நகரை அரசாண்ட அருவந்தை என்னும் அரசன் கால்வழியில் வந்தோன் சேந்தன் என்பதே அதற்கும் பொருளாகலின் அருவருதைச் சேந்தன் என அஃது அவ் விருவரையும் ஒருங்குசேர்த்து ஓதுவாயிற் றென்க. எனவே, அம்பல்நகரை ஆண்ட அருவந்தை என்பவன் வேறு, அவன் வழியில் வந்து பின்னர் அதனை ஆண்ட சேந்தன் என்பவன் வேறென்பதே துணியப் படுமாகலிற், சேந்தன் சங்ககாலத்தவன் அல்லனென்பதூஉம் அல்லனாகவே அவன் காலத்தாகிய திவாகரமும் சங்ககாலத்து அன்றென்பதூஉம் உடன் துணியப்படுமென்க. அற்றேற், கடைச்சங்க காலத்தவளாகிய ஔவையாற் பாடப்பட்டவன் சேந்தன் என்பது போதர ஔவை பாடிய அம்பற் கிழவன், தோன்றாச் சேந்தன் என்று திவாகரங் கூறுதல் என்னையெனின்; ஔவை யென்னும் பெயர் கொண்ட பெண்பாற் புலவர் பலர் இருந்தனர். அவருட் சங்ககாலத்திருந்தவர் வேறு; சேரமான் பெருமாள் காலத்திருந்தவர் வேறு. சேரமான் பெருமாள் கைலைக்குச் சென்ற காலையில் உடன்சென்ற ஔவையார் பாடிய செய்யுளொன்று தமிழ் நாவலர் சரிதையிற் காணப்படுதலானும், தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியுங் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒரு வாசக மென் றுணர் என்னும் ஔவையார் செய்யுளிற் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த தேவாரங் குறிப்பிடப்படுதலானுங் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முற்பகுதிவரையில் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர் தோழரான சேரமான் பெருமாள் நாயனாரும் இருந்தமை மேலே காட்டப்பட்டமையின் அவர் அருளிச்செய்த தேவாரத்தைக் குறிப்பிட்ட ஔவையார் அவ்வொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலன்றி அதற்கு முன்னிருந்தவராதல் செல்லாமையானுஞ், சங்காலத்து ஔவைப் பாட்டுகளின் தமிழ்நடையும் ஒன்பதாம் நூற்றாண்டி லிருந்த ஔவைப் பாட்டுகளின் தமிழ்நடையும் பெரிதும் வேறுபட்டு நிற்றலானும், முதல் ஔவையாற் பாடப்பெற்ற அரசர்களின் காலங் கி.பி. முதல் நூற்றாண்டின் கண்ணதாயிருப்ப இரண்டாம் ஔவையாற் பாடற்பெற்றார் காலங் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின்கட் படுதலானும், அம்பர்கிழான் அருவந்தைச் சேந்தனைப் பாடிய ஔவையார் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த வேறொருவரே யாவரென்று துணிந்துகொள்க. எனவே அம்பற் சேந்தனைப் பாட்டுடைத் தலைமகனாகக் கொண்ட திவாகரம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலாதல் பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் இயற்றப்பட்டதாகல் வேண்டுமென்க. ஆகவே, தமிழ் வேதங்கள் மறைந்தபிற் பல நூற்றாண்டுகள் கழிந்து, ஆரியரும் ஆரியப்புரட்டும் மலிந்த பிற்காலத்தே இயற்றப்பட்டதாகிய திவாகரம் ஆரிய வேதங்களை முதல்நூல் என்று உயர்த்துக் கூறுதல் ஒரு வியப்பன்று; அது பற்றி யாம் கூறியது பிழைபடுதலும் இல்லையெனத் தெளிக. ஆகவே, பண்டைக்காலத்திற் றமிழில் வழங்கிய நான்மறைகளே நால்வேதங்கள் எனக் கூறப்பட்டன வெண்பதூஉம் அவ் வேதங்களைப் பயிலுதற்குங் கடவுள் வழிபாடு ஆற்றுதற்குமாக வேளாளரினின்றும் பிரித்து ஒரு தனி வகுப்பினராக வைக்கப்பட்ட தமிழ் அந்தணரே வேதியர் என ஆசிரியர் சேக்கிழராற் சொல்லப்பட்டன ரல்லது அவர் ஆரியப் பார்ப்பனராதல் பற்றி அப் பெயராற் கூறப்பட்டன ரென்பது பொருந்தாதாமென்பதூஉம், இங்ஙனங் கொள்ளாக்கால் திருவாக்கூரிலிருந்த அந் நன்மக்களை வேளாளரெனவே வெளிப்படையாகக் கூறிய திருஞானசம்பந்தப் பெருமான் திருமொழியொடு முரணிச் சேக்கிழார் கூற்றும் வழுவுடைத் தாய் முடியுமென்பதூஉம் நன்கு பெறப்படுதல் காண்க. இவ்வாறெல்லாம் பெறப்பட்டதன் முடிபாய், எவ்வாற்றானும் உயர்ந்த தமிழ நாகரிக நன்மக்களாகிய வேளாளரைச் சூத்திரரென இழித்துக் கூறுதல் வேளாண்டலைவராகிய சேக்கிழார்க்கும் ஆசிரியர் தொல்காப்பியர் முதலான ஏனைத் தொல்லறிவாளர்க்குங் கருத்தன் றென்பதூஉம் இனிது விளங்குமென்க. அடிக்குறிப்புகள் 1. அதர்வதேவம், 10, 7, 20 2. புறநானூறு, 2, 3. புறநானூறு, 6, 4. புறநானூறு, 9, 5. சிலப்பதிகாரம், 11, 17, 20 6. தொல்காப்பியம், எழுத்ததிகாரம் சூ. 14, 15, 16, 17 7. புறப்பொருள் வெண்பாமாலை 10, 11 8. வேதம் என்பது வே என்னும் முதனிலையிற் பிறந்த தமிழ்ச் சொல்லாயின, அதற்குப் பகுபத இலக்கணம் யாது? என்றொருவர் எம்மை வினாயினார். வே என்பது பகுதி (முதனிலை), அம் என்பது விகுதி (இறுதிநிலை), த் என்பது இடையே, எழுத்துப்பேறு அல்லது விரித்தல். அற்றேல், வேய்தல் என்பதில் முதனிலை வேய் என நின்றாற்போல வேதம் என்பதன் கண்ணும் வேய்தம் என நிற்றல் வேண்டுமாலெனின்; அறியாது கூறினாய்; ஒருமுதனிலை ஒரு பொருளை யுணர்த்துங்கால் ஒரு வகையான எழுத்துப் பேறு பெற்றும், அதுவே வேறொரு பொருளை யுணர்த்துங்கால் வேறொரு வகையான எழுத்துப் பேறு பெற்றும் பல வகையாற் றிரிபெய்திப் பற்பல சொற்கள் பிறத்தற்கு இடனாய் நிற்கும். அங்ஙனம் ஒரு முதனிலை பலவேறு பொருளுடைய பல சொற்களைப் பிறப்பிக்குங்கால், தான் முதன்முதல் உணர்த்தும் பொருளும், பின்னர்ப் பலப்பல சொற்களில் இயைந்து நின்று உணர்த்தும் பொருளும் உவம உருவக வகையால் ஒன்றோடொன்று, தொடர்புடையனவாயே யிருக்கும். இவ்வியல்புகளை வேதம் என்னுஞ் சொல்லுக்கு முதனிலையான வே என்பதனின்றே காட்டுதும். வே என்னும் முதனிலைக்கு முதன்முதல் உண்டான பொருள் தீயிற்பட்டு அல்லது தீயின் சேர்க்கையால் ஒரு பொருள் வேகுதலே யாகும். இப்பொருளை யுணர்த்துந் தமிழ்ச் சொற்களில் வேகுதல் வேக்காடு என்பவற்றின் முதனிலை ககர ஒற்றப் பெற்று வேக் என நிற்கும்; வேடை, வேட்டல் என்பவற்றின் முதனிலை டகர ஒற்றுப் பெற்று வேட் என நிற்கும்; வேதல், வேதி, `வேது என்பவற்றின் முதனிலை தகர ஒற்றுப் பெற்று வேத் எனநிற்கும்; வேவு என்பதன் முதனிலை வகர ஒற்றுப்பெற்று வேவ் எனநிற்கும், வேள்வி என்பதன் முதனிலை ளகர ஒற்றுப் பெற்று வேள் என நிற்கும்; வேனல் வேனில் என்பவற்றின் முதனிலை னகர ஒற்றுப்பெற்று வேன் என நிற்கும். இனி, வே என்னும் முதனிலை வெ எனக் குறுகி அப்பொருள்படும் பல சொற்களைப் பிறப்பிக்குமிடத்தும் அங்ஙனமே பல்வேறு ஒற்றெழுத்துகளைப்பெற்று நிற்கும்; வெக்கை, வெச்சு, வெட்டை, வெண்டல், வெதுப்பு, வெந்திப்பு, வெந்தை, வெப்பம், வெம்பல், வெயில், வெய்து, வெவ்விது என்பவற்றின் முதனிலைகள் முறையே வெக், வெச், வெட், வெண், வெத், வெந், வெப், வெம், வெய், வெவ் எனப் பலவேறொற்றுக்கள் பெற்று நிற்றல் காண்க. இனி, இவ் வே என்னும் முதனிலை வேறு பொருள்களை யுணர்த்துமாறு காட்டுதும். ஒரு பொருளை வேவுவிக்குங்கால், அதனை ஒரு பாண்டத்தின் உள்ளே நீரிற்பெய்து, அப் பாண்டத்தின் வாயை ஒரு தட்டிட்டு மூடித் தீமேல் வைத்து வேவுவிக்கக் காண்கின்றோம். அவ்வொப்புமை பற்றி வே என்னும் முதனிலை மூடுகின்ற அல்லது மறைக்கின்ற பொருள்களையும் இரண்டாவதாக உணர்த்தும்; இப்பொருளில் வேடு என்பது மூடுசீலை யினையும், வேதல் என்பது வீடு கூரை மூடுதலையும், வேதம் என்பது மூடு பொருளையுடைய நூலினையும், வேயுள் என்பது மூடப்பட்ட வீட்டினையும், வேய்தல் என்பது கூரைமேய்தலையும், வேலி என்பது ஒரிடத்தைச் சுற்றிக் காவலாய் மறைப்பதையும், வேவு என்பது மறைந்து நின்று செய்தியறியும் ஒற்றரையும் உணர்த்தா நிற்கும். இச் சொற்களின் முதனிலைகளும் மேற்காட்டியவைகளைப் போலவே வேட், வேத், வேய், வேல், வேவ், எனப் பல வேறு ஒற்றுகள் பெற்றுநிற்றல் காண்க; அவ்வாறு பலவேறு ஒற்றுக்கள் பெற்று நிற்பினும், அம்முதனிலைப் பொருள் அவையெல்லாவற்றினுள்ளம் ஊடுருவிநிற்றல் இனிது விளங்காநிற்கும். இங்ஙனமாக, வேதம் என்னுஞ் சொல்லின் முதனிலை தமிழ்ச் சொற்கள் பலவற்றில் நின்று மூடுபொருளை யுணர்த்தி நிற்கக் காண்டலானும், அவ்வாறது வடமொழிக்கண் நிற்பக் காணாமையானும், அச்சொல் தமிழ்சசொல்லே யாதல் தெளியப்படும். ஈண்டுக் காட்டிய இச் சொல்லராய்ச்சியை இன்னும் விரிப்பிற் பெருகும். Mjyhš, ah« ïUg¤ijª jh©Lf£FK‹ Phdrhfu Kj‰gJk¤âbyGâa ‘jÄœ tlbkhÊÆÅ‹W ãwªjjhkh? என்னுங் கட்டுரையில் இவ்வாராய்ச்சி முறையைக் கண்டு கொள்க. 9. புறநானூறு, 385. 22. மக்கட் பிறவியின் இழிவும் ஒப்பும் இனி, வேளாளர் அல்லாத ஏனைப் பதினெண் வகுப்பிலுள்ள மக்களிற் கொலை புலைதவிர்த்து கல்வியறிவு ஆற்றல்களினும் நாகரிகத்தினும் உயர்ந்து வருவாரை வேளாள வகுப்பினர் தம்மினத்திற் சேர்த்துக் கொள்ளலாமோ? என்று நிகழும் வினாவினையுஞ் சிறிது ஆராய்வாம். மக்களின் தோற்றத்தையும் அவர்தம் நாகரிக வளர்ச்சியையும் ஆராய்ந்துரைக்கும் உண்மை நூல்களை1 நாம் பயின்றறியுங் கால், மிகவும் பழையதாகிய காலத்தில் மக்கள் எல்லாரும் விலங்கினத்தோடொத்த அறிவுஞ் செயலும் உடையராய்த் தினைத்துணையும் நாகரிகம் அற்ற நிலையில் இருந்து, பின்னர் அறிவு வளரவளரச் சிறிதுசிறிதாக நாகரிகத்திலும் வளர்ந்து வரலாயினரென்னும் உண்மை நன்கு விளங்கும். இப்போதுங் கூடப் பிள்ளைப் பருவத்தில் இருக்கும் நாட்களில் எல்லா இனத்துப் பிள்ளைகளும் ஏறக்குறைய ஒத்த இயற்கை யுடையராகவே காணப்படுகின்றனர். பின்னர் வளருந்தோறுந் தாந்தாஞ் சார்ந்த முதுமக்களின் பழக்க வழக்கங்கள் பேச்சுகள் முதலியவற்றைத் தழுவி, அவற்றிற்கு ஏற்ற அறிவுஞ் செயலுந் தன்மைகளும் உடையராய்ப் பல்வேறு இனங்களாகப் பிரிபடுகின்றனர். மக்கள் எல்லாரும் புழைகள் ஒன்பதின் வாயிலாக வெளிவரும் மலங்களும் முடைநாற்றங்களும் உடையர்; பசியும் நீர் விடாயும் எல்லாரையும் வருத்துகின்றன; எல்லார்க்கும் நோயுந் துன்பமுங் கவலையும் நரை திரை மூப்புச் சாக்காடுகளும் உள்ளன; சில நேரங்களில் நல்ல இயல்புகளுஞ் சில நேரங்களில் தீய இயல்புகளும் எல்லாரிடத்தும் நிகழ்கின்றன. காலம் வந்துழி எல்லாரும் இவ்வூனுடம்பை விட்டுச் சொல்பவர்களே யல்லாமல் நிலையாக இங்கிருப்பவர் எவருமே இலர். எல்லாரும் ஒரு முழுமுதற் கடவுளாற் படைக்கப்பட்டு அவனருளைப் பெறுதற்காக, அந் நிலவுலகமாகிய கல்விக் கழகத்தில் வந்து அதற்குரிய வழிவகைகளை ஆராய்பவர்களாகக் காணப்படுகின்றனரே யல்லாமல், இந்த ஊனுடம்பின் பொருட்டாகவே வாழ்பவராகக் காணப்படவில்லை. ஆகவே, மக்கள் எல்லாரும் பிறப்பளவில் ஒத்த இயல்பினரே யல்லாமல் வேறெவ்வகையான ஏற்றத்தாழ்வும் உடையரல்லர். இவ்வுண்மை தெருட்டுதற்கே தெய்வப்புலமைத் திருவள்ளுவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்றும், நாலடியார் ஆசிரியர், நல்ல குலமென்றும் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை என்றுந், திருமூலநாயனார், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றும் அருளிச் செய்வாராயினர். இங்ஙனமாக மக்களெல்லோரும் ஒத்த இயல்பினரா யிருக்க, அவருள் முதன்முதல் அறிவானும் முயற்சியானும் மிகுந்து கொலை புலை முதலான கொடிய செயல்களை ஒழித்து, உழவுதொழிலால் உலகத்தை வளம்படுத்திய சிலரே முதன்முதல் நாகரிகத்திற் சிறந்த வேளாளராயினர். அங்ஙனம் அவர்போற் சிறவாமல் அவ் அறிஞரின் ஏவல்வழிநின்ற ஏனையோர் அவரவர் தகுதிக்குந் தொழிலுக்கும் ஏற்றப் பதினெண்ம ராயினர். இதுவே மக்கள் பல்வேறு வகுப்பாய்ப் பிரிந்ததன் உண்மை வரலாறாம். அடிக்குறிப்பு 1. See. for instance, Lord Avebury’s Pre - historic Times of S. Laing’s Human Origins. 23. தூயராவார் எல்லாம் வேளாளராதற்கு உரியர் இனி, வேளாளர் அல்லாத ஏனையோரில் அறிவு ஆற்றல்களானுங் கொலை புலை தவிர்ந்த அருளொழுக்கத் தானுஞ் சிறந்து வருவாரை வேளாளர் தம்மினத்திற் சேர்த்து அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தல், அவ்வாற்றால் அவர் தம்மினத்தையும் பெருக்கி, அருளறங்களையும் வளரச் செய்து, ஏனையோரையும் புனிதராக்குமாதலால், அஃது உலகத் திற்குப் பெரு நன்மையைத் தந்து இறைவனது திருவுளக் குறிப்பை ஈடேற்றுஞ் செயற்கரிய செயலாகுமே யல்லால், அது வேறு எத்தகைய தீங்கும் விளைவியாது. ஏனை வகுப்பினரிற் சிறந்தாராய் உள்ளவரை வேளாளர் தம்மினத்திற் சேராமல் தாம் தனிநின்றுகொண்டு நாங்கள் இருபது வீட்டுக்குள்ளே தான் கொள்வது கொடுப்பது என்று வெறுஞ் செருக்குரை பகர்வதால் அவர்க்கு வரும் ஏற்றஞ் சிறிதுமில்லை; இங்ஙனம் தனி நின்ற எத்தனையோ வேளாள வகுப்புகள் பிள்ளைகட்குப் பெண்கள் கிடையாமையாலும் பெண்களுக்குப் பிள்ளைகள் கிடையாமை யாலும், இன்னும் எத்தனையோ பல பொருந்தாக் கட்டுப்பாடுகளாலும் அகம் புழுங்கி நாளடைவில் மாய்ந்து போயின; இன்னும் எத்தனையோ மாய்ந்து வருகின்றன; பின்னும் பல மாயும் நிலைமையிலிருக்கின்றன. இத்தகைய போலிக் கட்டுப்பாடுகள் சிறிதும் இல்லாத கிறித்து சமயத்தவர் தொகை நாளுக்குநாட் பெருகி உலகத்தைக் கவர்ந்துவருகின்றது; இதற்கு ஏற்ற பரிசாக வேளாளருந் தாம் வைத்திருக்கும் பொருந்தாக் கட்டுப்பாடுகளை யொழித்து, ஏனை வகுப்பாரிற் புனிதராய் வருவாரைத் தம்முடன் சேர்த்துத் தம்மினத்தைப் பெருக்கி உலகில் அறத்தை வளர்த்தலே செயற் பாலதாம். புனிதராய் வருவார் எத்தகைய இழி குலத்திற் பிறந்தவராயிருப்பினும், அவரெல்லாஞ் சைவ சமயத்தவரோடு கலக்கப் பெறுதற்கும், அவரால் வணங்கப் பெறுதற்கும் உரியாரென்பதற்குப் பல்வேறு வகுப்பினராய் அறுபத்துமூன்று நாயன்மாரும் அவர்தம் உண்மை வரலாற்றினைக்கூறுந் திருத்தொண்டர் புராணமுமே உறுபெறுஞ் சான்றாமென்று தெளிக. பிறவியெடுத்தது அன்பு அருள் அறங்களில் ஓங்கி ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று இறைவன் றிருவடிப் பேரின்பத்தைப் பெறுதற்கே யல்லாமல், நிலையிலா ஊன் பிறவியின் உயர்வு தாழ்வுகளைச் செருக்குடன் பாராட்டி அறியாமையில் மாய்ந்தொழிதற்கு அன்று என்பதை வேளாளரும் பிறருந் தமது கருத்திற் பதித்து, எல்லாரும் ஒரு முழுமுதற் கடவுளாகிய தந்தைக்குப் புதல்வராதலை யுணர்ந்து, அதற்கேற்றவாறு இனிது ஒழுகி, அத் தந்தையின் வீடுபேற்றின்பப் பெருஞ் செல்வத்தை எய்துதற்கு முயலல் வேண்டும். 24. ஆரியச் சேர்க்கை தமிழர்க்கும் தமிழ்க்கும் ஆகாது இதனோடு, தமிழ்மக்களின் முன்னேற்றத்திற்குப் பலவகையிலுந் தடையாய் நிற்கும் ஆரியப் பார்ப்பனர் தம்மையணுகுதற்குந், தாம் அவர் சொல்லைக் கேட்டு நடத்தற்குந் தமிழர் எவருஞ் சிறிதும் இடந்தருதல் ஆகாது. தமிழ் நாட்டுத் திருமடங்களின் ஆசிரியர்களுங் குறுநில மன்னர்களும் (சமீந்தார்கள்), செல்வர்களுங், கற்றவர்களும், பிறரும் இப்போது தம்முடைய சீருஞ்சிறப்பும் அறிவும் புகழும் இழந்து தமது மேனிலை குலைந்து சிறுமை எய்தி அல்லல் உழப்பதெல்லாம் ஆரியப் பார்ப்பனரைத் தம்முடன் சேர்த்து அவர் சொல்வழி நடத்தலினாலேயாம். தமிழரிற் செல்வமுஞ் சிறப்பும் உடையார் இவரென்று கண்டால் ஆரியப் பார்ப்பனர் உடனே அவர்பாற் சென்று சூழ்ந்து அவர்க்கு இணங்கியபடியாக வெல்லாம் நடந்து, அவர்பாற் றாம் பெறவேண்டியன வெல்லாம் நயமாகப் பெற்றுக்கொண்டு, அவர் அச் செல்வமுஞ் சிறப்பும் இழத்தற்கு வேண்டும் வழிவகைகளெல்லாந் திறமையாகச் செய்து, முடிவில் அவர் வறியராகித் தாழ்வடைந்தபின் அவரைவிட்டு நீங்குவார்; தம்மாற் சிறுமையடைந்த அவரைப் பின்னர்த் திரும்பியும் பாரார்; அவரைக் காணநேர்ந்தால் அவரை அறியாதார் போல் அகன்று ஒளித்துப் போவர். இங்ஙனம், முன்னமே உயர்ந்து நிற்குந் தமிழ்ப் பெரியாரையுங் கரவாகக் கெடுத்துத் தாழ்த்தித், தாழ்ந்து கிடக்குத் தமிழரையும் உயரவொட்டாமற் பெருந்தடைகளை விளைத்துத் தமிழ் மக்களெல்லார்க்குந் தொடர்ந்து தீது புரிந்துவரும் பார்ப்பனரை நஞ்சினுங் கொடியராக நினைந்து, அவர் எவ்வகையிலுந் தம்பால் அணுகுதற்கு இடந்தராது விழிப்பாயிருத்தலே தமிழர் ஒவ்வொருவருங் கருத்தூன்றிக் கைக்கொள்ளற் பாலதாகிய முதற்பெருங் கடமையாம். இன்னும், ஆரியப் பார்ப்பனர் தமக்குரியதாகக் கருதிப் பெருமை பாராட்டிக்கொள்ளும் ஆரியமொழி பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே உலகவழக்கில் இன்றி இறந்து ஒழிந்தமை கண்டு, அதனைத் திரும்பஉயிர்பிக்க எவ்வளவோ முயன்று பார்த்தும் அது முடியாமையின், மெல்ல மெல்லச் சமகிருதமொழிச் சொற்களைத் தமிழிலுந், தமிழோடு இனமாகிய மலையாளம்,தெலுங்கு, கன்னடம் முதலாகிய மொழிகளிலும் நுழைத்து, அவ்வாற்றால் அம்மொழிகளின் தனிச் சுவையினையும் ஆற்றலினையும் கெடுத்து, அவற்றை வடமொழியுருவாக்கப் பெரிது முயன்று, அம் முயற்சியில் அரைவாசிக்குமேல் தேர்ந்து விட்டார்கள்; தமிழ்மக்களைத் தவிர, மலையாளத்தாருந் தெலுங்கருங் கன்னடரும் எளிதிலே ஏமாறி விட்டார்களாதலால், ஆரியப் பார்ப்பனர் அம் மொழிகளை முக்கால்வாசி வடமொழியுருவாக்கிவிட்டார்கள். பண்டுதொட்டுத் தமிழ்மக்கள் நாகரிகத்திற் சிறந்தாராய்த் தமது தமிழ் மொழியை நன்கு ஆராய்ந்து அதற்கு இலக்கண இலக்கிய வரம்புகட்டி அதனைப் போற்றித் தனித்து வழங்குதலின், ஆரியப்பார்ப்பனர் அதனை வடமொழியுருவாக்க எவ்வளவோ முயன்றும் அது கைகூடாமல், அதனைக் கெடுக்க இன்னும் எவ்வளவோ சூழ்ச்சி செய்து வருகின்றார்கள். அவர்களின் கரவையுஞ் சூழ்ச்சியையும் அறியாத தமிழ்ப்புலவர் சிலர் அவர்தம் வலையிற் சிக்கிக்கொண்டு, தமிழைத் தனித்து வழங்கல் இயலாதென்றும் ஏராளமான வடசொற்களை அதன்கட் சேர்த்து வழங்கலே அதனை வளம்படுத்துவதாகுமென்றும் பொருந்தாவுரை கூறித் தனித் தமிழ் வளத்தைக் கெடுக்கப் பார்க்கின்றார்கள். தண்ணீரை ஜலம் என்றும், தலைமுழுகுதலை நாநம் என்றும், உணவை ஆகாரம் போஜநம் என்றும், ஒளியைப் பிரகாசம் என்றுஞ், சோற்றை அன்னம் சாதம் என்றும், பயனைப் பிரயோஜனம் என்றும், வழிபாட்டைப் பூஜை அனுஷ்டானம் என்றும் இன்னும் இங்ஙனமாகப் பலப் பல வட சொற்களை இப்போதே நுழைத்து விட்டமையால் தண்ணீர் முதலான தமிழ்ச்சொல் வழக்கு வரவரக் குறைந்து வருகின்றது. இவ்வாறே தமிழ்ச்சொல் வழக்கு ஒவ்வொன்றாய் ஒழிந்துபோக, அவற்றிற்கு மாறாக வடசொற்களே வழங்குமானால் அப்புறந் தனித் தமிழ்மொழி என்பதே ஒன்று இல்லையாய் விடுமன்றோ? தமிழர்க்குள்ள பெருமையெல்லாம் அவர் தொன்று தொட்டுத் தூய்தாக வழங்கிவருந் தமிழ்மொழி யினையே சார்ந்திருக்கின்றது. ஆனால், இப்போதுள்ள தமிழர்களோ அப்பெருமையினை யறியாராய்த், தண்ணீரைத் தண்ணீர் என்றுஞ் சோற்றைக் சோறு என்றுந் தமிழாற் சொல்வது தாழ்வென நினைந்து அவற்றை ஜலம் சாதம் என்று வன்சொல்லாற் கூறுதலே பெருமையெனக் கருதுகின்றார்கள். இங்ஙனங் கருதுவது தம்மைத்தாமே இழிவுபடுத்திக் கொள்வதாய் முடிவதை எண்ணிப் பார்க்கின்றார்களில்லை. தமக்குரிய தண்ணீர், சோறு எனுந் தூய தமிழ்ச்சொற்கள் இழிந்தவை களாய் இருப்பினல்லவோ, அவற்றையொழித்து, வடசொற்களை யெடுத்து வழங்கல் வேண்டும்! இளங்குழவிகளாய்ப் பால் பருகிய காலந்தொட்டு நாம் வழங்கி வந்த அத் தனித் தமிழ்ச் சொற்கள் எங்ஙனம் இழிந்தவைகளாகக் கூடும்? அவற்றை வழங்கிய நாம் இழிந்தவர்களாய் இருப்பினல்லவோ அவையும் இழிந்தனவாயிருக்கும்? உலகத்திலுள்ள மற்ற மகக்ளெல்லாம் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும் இன்றி, விலங்கினங்களைக் கொன்று உண்டுந், தழைகளை யுடுத்தும், ஊர் ஊராய் அலைந்து திரிந்த அத்துணைப் பழையகாலத்திலும், அறிவு முதிர்ச்சியுந் தாளாண்மையும் உடையராய் நிலத்தைத் திருத்திப் பல்வகை வளவிய உணவுப் பண்டங்களை விளைவித்து, நாடு நகரங்கள் வகுத்து, நாகரிகத்திற் சிறந்து திகழ்ந்த தமிழ்ச்சான்றோர் மரபில் வந்த நாம் இழிந்தோராதலும் நம் தனித்தமிழ்ச் சொற்கள் இழிந்தவையாதலும் யாங்ஙனம்? தாம் ஏதொரு நன்முயற்சியுந் செய்யாமலுஞ், செய்து பொருள் ஈட்டிப் பிறரைப் பாதுகாவாமலும், முயற்சி மிக்காரை யேமாற்றி அவர் தரும் பொருளைக் கொண்டு வயிறு கழுவுவாரல்லரோ இழிஞர்? அவர் பேசுஞ் சொற்களல்லவோ இழிந்தனவாகும்? மேலும், வடமொழியானது எவரானும் பேசப் படாமல் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து பட்டதொன்று. நமது அருமைச் செந்தமிழ் மொழியோ பல்லாயிர ஆண்டுகளாக நடைபெற்றுத், தனது புத்திளமை குன்றாது இன்றும் உலவுவது. இங்ஙனம் வாழ்நாள் வரவரப் பெருகி வழங்குந் தமிழ்மொழி சிறந்ததோ? குறுகிய வாழ்க்கைத்தாய் முன்னரே இறந்தொழிந்த வடமொழி சிறந்ததோ? நடுநிலையுடையீர் ஆராய்ந்துரைமின்! எவ்வாற்றால் நோக்கினும், உயர்ந்ததாய் ஒளிரும் விழுமிய நம் செந்தமிழ்மொழிச் சொற்களை வழங்காமல், இறந்துபட்ட வடமொழிச் சொற்களை உயர்ந்தனவாய்ப் பிழைபடக் கருதி வழங்கும் பேதைமைச் செயலை அறவே ஒழிமின்கள்! உயர்ந்த பல கருத்துக்களையும், புதுப் புதுப் பண்டங்களையும் வழங்குதற்கேற்ற தமிழ்ச் சொற்கள் ஏராளமாய் இருப்பவும், அவையில்லையெனக் கரைவாருரை கரவுரையாகல் வேண்டும். அல்லது அது பேதைமையே யாகல்வேண்டும். ஆதலால் தமிழ்மொழி கற்குந் தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும், அவர் தமக்குத் தமிழ் கற்பிக்குந் தமிழாசிரியர் ஒவ்வொருவரும் வடமொழி முதலான பிற மொழிச் சொற்களைத் தமிழின்கண் வந்து நுழையாதபடி அறவே விலக்கி, இப்போது வழங்காமற் பழைய தமிழில் வழங்கிய சொற்களையே மீண்டும் எடுத்து வழங்கித் தமிழை வளம் படுத்துப் பாதுகாக்கக் கடவராக! வடமொழி முதலானபிறமொழிச் சொற்களைக் கலவாமல் எத்தகைய பொருளையுந் தனித் தமிழில் எழுதக்கூடும் என்பதற்கு, யாம் தனித்தமிழ் நடையில் எழுதியிருக்கும் இந்நூலும், மாணிக்கவாசகர் வரலாறுங், காலமும், முல்லைப் பாட்டாராய்ச்சியுரை பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை முதலான ஏனை எம்முடைய நூல்களுமே சான்றாம். இனி, மணவினை பிணவினை முதலியன நடாத்துங் காலங்களில் தமிழ்மக்களில் ஒவ்வொரு வகுப்பாருந் தத்தம் இனத்தவரிலிருந்தே அவற்றைச் செய்துவைத்தற்குச் சிலரை ஏற்படுத்தி, அவரைக்கொண்டு அவற்றை நடப்பித்துக் கொள்ளல் வேண்டும். இங்ஙனந் தத்தம் இனத்தவரிலேயே சிலரை ஆசிரியராக அமர்த்தி மேற்கூறிய வினைகளைச் செய்வித்தல் சோழநாடு பாண்டியநாட்டிலுள்ள சைவ வேளாளரிற் பண்டு தொட்டு இன்று காறும் நடந்து வருகின்றது. தமிழர்கள் தாம் நடத்தும் மணவினை பிணவினைகளுக்கு ஆரியப் பார்ப்பனரை ஆசிரியராக வருவித்துவைத்து நடத்தல் பெருங்குற்றமாமென்று அறிவு நூல்களுங் கூறுகின்றன. ஆதலால், தமிழர் தம்வினைகளுக்கு ஆரியப் பார்ப்பனரை வருவித்தலை அறவே விட்டொழித்தல் வேண்டும். இனிப், பெரும்பாலுந் தமிழர்க்குரிய சிவபிரான் கோயில் பெருமாள் கோயில்களில் வழிபாடு ஆற்றுவோர் தொன்று தொட்டுத் தமிழ் அந்தணர்களாகவே இருக்கின்றனராயினும் அவரும் ஆரியப் பார்ப்பனரோடு தம்மைச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு ஆரிய வேதங்களையும் வட மொழியையும் பயன்படுத்துகிறார்கள். சிவபிரானுந் திருமாலும் பண்டுதொட்டுத் தமிழ் முதுமக்களால் வணங்கப்பட்டு வந்த தமிழ்த் தெய்வங்களாகும். எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளே தந்தை வடிவிற் சிவபிரான் எனவுந், தாய் வடிவில் திருமால் எனவும் வைத்து வணங்கப்பட்டது. இவ்விருவரும் பிறவாதவர், இறவாதவர். இவ் இருதெய்வங்களையும் பழைய ஆரியர் சிறிதும அறியார். இருக்குவேதத்தில் வணங்கப்பட்ட உருத்திரர் தமக்கு மேற்பட்ட சிவபிரான் றன் திருவருளாணை வழி நின்று படைத்தல் காத்தல் அழித்தல் என்னம் முத் தொழில்களைப் புரிபவர். இருக்குவேதத்தில் வணங்கப்பட்ட விஷ்ணு வோ பகலவனே யல்லாமல், உலகங்களைப் படைத்துக் காக்கும் எல்லாம்வல்ல உலகன்னையாகிய திருமால் அன்று. பிற்காலத்திற்றென்னாடு புகுந்த ஆரியப் பார்ப்பனரே ஆண்மைச் செயல்புரிந்த அரசரையும் பிறரையுந் திருமாலின் பல்வகைப் பிறவிகளாகக் கொண்டு பொய்ப் புராண கதைகளை வடமொழியில் வேண்டுமட்டுங் கட்டியெழுதித், திருமாலின் முழுமுதற் றன்மையைக் குறைத்துத், தமிழ் நன்மக்களைச் சைவர் வைணவர் என இருவேறு வகுப்பாக்கி, அவ்விருவருந் தத்தந் தெய்வமே தெய்வமெனக் கரைந்து, ஒருவரையொருவர் கைக்கப்பகைத்துப் போராடுதற்கு இடஞ் செய்தவர்கள். அது மட்டுமோ! தமிழர்கள் அத் தமிழ்த் தெய்வங்களைத் தாம் அமைத்த திருக்கோயில்களில் வைத்துத் தாமே வழிபட்டு வந்த முறைகளையும் அவர்கள் அடியோடு மாற்றிவிட்டார்கள். முற்காலத்தில் தமிழர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருங்களைத் தாமே தொட்டு நீராட்டிப் பூவிட்டு அகில் புகைத்துச் சூடங்கொளுத்தி வழிபட்டு வந்தார்கள். இஞ்ஞான்றும் வடநாட்டிலுள்ளவர்கள் அங்குள்ள திருக்கோயில் களில் தாமே திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு ஆற்றுதலை நேரே பார்க்கலாம். இக் காலத்தில் இறைவனைத் தொட்டு வழிபாடு ஆற்றுதற்கு உரியவராக ஏற்படுத்தப்பட்டிருக்குந் தமிழந்தணர்கள் அக் காலத்தில் திருக்கோயில்களை ஒழுங்காக வைத்தற்கும், வணங்க வருவார்க்குக் கூட இருந்து உதவி புரிதற்கும் நிறுத்தப் பட்டவர்களேயல்லாமல் வேறில்லை. ஆரியப் பார்ப்பனர் வந்தபின், இத் தமிழந்தணர் அவருடன் உறவுகொண்டு, தம்மவர் அல்லாத பிறர் எவரும் இறைவனுருவத்தைந் தொடலாகாதெனக் கட்டுப்பாடுசெய்து, இதற்குமுன் தாம் தமிழிலுள்ள அருட்பாக்களைச் சொல்லி வழிபாடாற்றி வந்த இனிய முறையைக் கைவிட்டு, வடமொழியிலேயே எல்லா வழுத்துரைகளுஞ் சொல்லி ஆரவாரம் புரிவராயினர். தமிழர்கள் வரவரக் கல்வி கேள்விகளிற் குறைந்து, ஆரியப் பார்ப்பனர் மயக்குரைகளில் வீழ்ந்துவிட்டமையின் தமிழர்களாகிய தமக்குரிய திருக்கோயில்களில் ஆரியரும் அவரோ டுறவுகொண்ட தமிழந்தணருஞ் செய்த இச் சூழ்ச்சி களையும் புரட்டுக்களையும் ஒரு சிறிதும் அறியாமல், அவற்றிற்கெல்லாம் இணங்கி நடப்பாராயினர்! ஈதொன்றோ! ஆரியர் தாம் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளாகிய ஆரிய வேதங்களைத் திருக்கோயில்களில் முதற்கண் ஓதல்வேண்டுமெனவும், அவை ஓதி முடிந்தபின் ஆரியப் பார்ப்பனராகிய தம்மை அனுப்பிவிட்டுப், பின்னர்த்தான் தமிழ் வேதங்கள் ஓதல் வேண்டுமெனவும் ஒரு பொருந்தாக் கட்டுப்பாடும் விரகாகச்செய்துவிட்டாக்ள். பிறந்து இறந்து உழலுஞ் சிறு தெய்வங்கண்மேல் ஆரியர் பாடின ஆரியவேதப் பாட்டுகளை, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் திருமால் முன்னிலையிற் பாடுதலைப்போற் குற்றமாவது பிறிதில்லை. ஊர் காவற் சேவகர் மேற் பாடிய புகழுரைகளை நாடாளும் அரசன் முன்னிலையிற் கொண்டுபோய்ப் பாடினால், அவ் அரசன் அவற்றைக் கேட்டு மகிழ்வனோ? அவ் அடாத செயலைத் தன் முன்னிலையிற் செய்த குறும்பரைச் சினந்து ஒறுத்துச் சிறையிடுவனல்லனோ? அங்ஙனமே ஆரியச் சிறு தெய்வப் பாட்டுகளை, உலகங்களுக்கெல்லாந் தலைவராகிய அம்மையப்பர் முன்னிலையிற் பாடும் ஆரியரையும் அவர்க்கு இணங்கியொழுகுந் தமிழரையும் இறைவன் ஒறுத்தல் திண்ணமாமென்க. இப் பரதநாடெங்கணும் உள்ள சிவபிரான் திருமால் திருக்கோயில்களுக்கு வந்திருக்குஞ் சீருஞ் சிறப்புமெல்லாந், தேவாரந் திருவாசகம் ஆழ்வார் பாடல்கள் என்னுந் தெய்வச் செந்தமிழ் மறைகளில் அவை பாடப்பெற்றிருப்பதனால் வந்தனவேயாம். இச் செந்தமிழ மறைகளிற் பாராட்டப்படாத கோயில்களை எவருங் கொண்டாட மாட்டார். இத் திருக்கோயில்களின் சிறப்புக்கு ஏதுவான இத் தமிழ் மறைகளோ சிவபிரான் திருமாலைத் தவிர வேறு தெய்வங்களைப் பாடுவனவும் அல்ல; இத் தமிழ்மறைச் செம்பாடல்களைக் கேட்டலிலேதான் இறைவனுக்குப் பெருவிருப்பு. இந் நறுந்தமிழ்ப்பாடல்களில் தன் திருவுளம் ஈடுபட்டதனாலன்றோ இறைவன் மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் நால்வார்க்கும் எளியனாய்த் தோன்றித், தான் ஒருவன் உளன் என்பதை உலகம் எளிதில் அறிந்து உய்யச் செயற்கருஞ் செயல் களெல்லாஞ் செய்தருளினன்? தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் உருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்? என்று வினாவிய பெரியார், தமிழாலன்றி வடமொழியைக் கொண்டு இறைவன் திருவருட்பேற்றிற்கு உரியரானாரும், இறைவனொருவன் உளனென்பதைப் பல புதுமைகளால் நாட்டினாரும் இல்லையென்பதைத் தெளிவாக அறிவுறுத்து கின்றனர் அல்லரோ? தென்னாடு வடநாடுகளில் உள்ள சிவபிரான் திருமால் திருக்கோயில்களில் ஒன்றையேனுங் குறிப்பிடாத வடமொழி வேதங்களை அத் திருக்கோயில்களில் ஓதுவது குற்றமன்றோ? முழுமுதற் கடவுளாகிய அம்மையப்பரை மட்டும் வழுத்தாமல் எண்ணிறந்த சிறு தெய்வங்களாகிய பேய்களைக் கொண்டாடும் ஆரிய வேதங்களை அம் முழுமுதற் கடவுள் முன்னிலையில் ஓதுதலை விடக் குற்றமான பேதைமைச் செருக்குச் செயல் பிறிதுண்டோ? இறைவன் திருவருளாணை கடவாத மெய்யன்பரான நம் முதுதமிழ்ச் சான்றோரின் வழித்தோன்றிய தமிழ்மக்காள் விழித்தெழுமின்கள்! இதுகாறும் ஆரிய மாயத்திற் சிக்குண்டு அறிவு மயங்கித் தூங்கிய பெருந் தூக்கத்தினின்றும் விழித்தெழுமின்கள்! இனி ஆரிய மொழியையும் ஆரிய வேதங்களையும் நம் திருக்கோயில்களில் ஓதுதலை அறவேயொழித்துத், தேவார திருவாசக நாலாயிரப் பாடல் களையே ஓதி, அவற்றிலுள்ள மந்திரங்களாலேயே அம்மை யப்பர்க்கு எல்லா வழிபாடுகளையும் ஆற்றி, இறைவன் திருவருளால் இம்மை மறுமைப் பயன்களை ஒருங்கெய்துவீர்களாக! ஓம். வேளாளர் நாகரிகம் - முற்றும் - மறைமலையம் (பொருள்வழி பிரிக்கப்பட்டு - காலநிரல் செய்யப்பட்டவை) மருத்துவம்: 1. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 2. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை 1, 2 1933 மறைபொருளியல்: 3. மரணத்தின் பின் மனிதர் நிலை 1911 4. யோக நித்திரை அல்லது அறிதுயில் 1922 5. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி 1927 6. தொலைவிலுணர்தல் 1935 இலக்கியம்: 7. சாகுந்தல நாடகம் 1907 8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 இதழ்கள்: 9. ஞானசாகரம் 1902 சங்க இலக்கிய ஆய்வு: 10. முதற் குறள் வாத நிராகணம் 1898 11. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903 12. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906 13. முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர் 1936 14. திருக்குறள் ஆராய்ச்சி 1951 பாடல்: 15. மறைமலையடிகள் பாமணிக்கோவை 1977 16. முனிமொழிப் பிரகாசிகை 1899 நாடகம்: 17. அம்பிகாபதி அமராபதி 1954 புதினம்: 18. குமுதவல்லி நாகநாட்டரசி 1911 19. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 கடிதம்: 20. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 கட்டுரை: 21. சிந்தனைக் கட்டுரைகள் 1908 22. அறிவுரைக் கொத்து 1921 23. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 24. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 25. அறிவுரைக்கோவை 1971 26. உரைமணிக் கோவை 1972 27. கருத்தோவியம் 1976 சமயம்: 28. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை1900 29. சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901 30. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1929 31. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 32. மாணிக்கவாசகர் மாட்சி 1935 33. திருவாசக விரிவுரை 1940 34. மாணிக்கவாசகர் வரலாறு 1952 35. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 தத்துவம்: 36. சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898 37. துகளறு போதம் உரை 1898 38. வேதாந்த மத விசாரம் 1899 39. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 40. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 41. சிவஞான போத ஆராய்ச்சி 1958 வரலாறு: 42. இந்தி பொது மொழியா? 1937 சமூக இயல்: 43. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906 44. சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1923 45. வேளாளர் நாகரிகம் 1923 46. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 47. தமிழர் மதம் 1941 மறை மலையடிகள் நாட்குறிப்புகள் 1988 பொது நிலைக் கழக உரை விவேகாமிர்தம் பிரசண்ட மாருதம் வேதாந்த சித்தாந்தம் சைவ சமயப் பாதுகாப்பு ஆங்கில நூல்கள்: 48. Oriental Mystic Myna bi Monthly 1908 49. Ocean of Wisdom’ bi Monthly 1935 50. The Tamilian and Aryan Forms of Marriage 1936 51. Ancient and Modern Tamil poets 1937 52. Can Hindi be the Lingu franca of India? 1937 53. Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940 54. The Concemption of God Rudhra