kiwkiya«-- 22 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமயம் - 3  மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (தொகுதி - 1) ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+312 = 344 விலை : 430/- மறைமலையம் - 22 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலையடிகளின் மும்மொழிப்புலமை இவ்விருபதாம் நூற்றாண்டில் ஈடும் எடுப்பு மின்றித் திகழ்ந்த மாபெரும் புலவர் மறைமலையடிகள் என்பது, எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வுண்மையாகும். உலக மொழிகள் (ஏறத்தா) மூவாயிரத்துள், ஒரு போதும் வழங்கா இலக்கியப் பெருமொழி யென்னும் வகையிற் சமற்கிருதமும், என்றுமுள்ள உலகமுதல் உயர் தனிச் செம்மொழி யென்னும் வகையில் தமிழும், உலகப் பொதுக் கலவைப் பெருமொழி யென்னும் வகையில் ஆங்கிலமும், தலைசிறந்த மொழிகளாகும். இம் மூன்றும் ஒருங்கே கைவந்தார் பலர் இருந்தாரேனும், அவரனைவருள்ளும், எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோ லகன்றும், அமைதி வாரியின் (Pacific Ocean) தென்னகழி போலாழ்ந்தும், பிறங்கித் தோன்றிய பெரும் புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே யென்பது, மிகையாகாது. - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 11 - 14) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டை யும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம்: நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம்: கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை: நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம. சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோஜா முத்தையா நூலகம் புலவர் கா. இளமுருகன் (மறைமலையடிகள் மன்றம், புன்சை புளியம்பட்டி) மறை. தாயுமானவர் (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: புலவர். கா. ஆறுமுகம் மணிமொழி கருப்பையா நாக. சொக்கலிங்கம் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி வி. சித்ரா, திருமதி செல்வி, திருமதி மலர், திருமதி ஹேமலதா, திரு. ஆசம், பிராசசு இந்தியா (Process India), திருமதி கலைவாணி, திருமதி புகழ்ச்செல்வி நூல் வடிவமைப்பு : திருமதி வி. சித்ரா மேலட்டை வடிவடைப்பு : கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், திராவிடன், வே. தனசேகரன், மருது தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை, எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, பிராசசு இந்தியா மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்கு பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் பாகம் - 1 பூம்புகார் பதிப்பகம் 2003இல் வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகிறது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை.. மாணிக்கவாசகர் தேவார மூவர்க்கு முன்னவர் என்றும், பின்னவர் என்றும் இருவேபறு ஆய்வாளர்கள் உளர். மாணிக்க வாசகர் சொல்நடை, சங்க நடைசார்ந்ததாதலின் மூவர்க்கு முன்னவர் என்றும், சுந்தரர் பாடிய திருத் தொண்டத் தொகையில் மாணிக்கவாசகர் பெயர் குறிப்பிடப்படாமையால் அவர்க்குப் பின்னவர் என்றும் இருசாராரும் கூறுவர். இச்சிக்கலை அகற்றும் உறுதியால், அடிகளார் ஆழ மாக ஆராய்ந்து மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டே என்று முடிவுகட்டினார். மாணிக்கவாசகர் வரலாறு புராண நூல்களில் வெவ்வேறாகக் காணப்படுவதால் அவற்றை உண்மையெனக் கொள்ளாமல் திருவாசகம் திருக்கோவை நூல்களில் காணப்படும் குறிப்பு களையே வரலாற்றுச் சான்றாகக் கொள்ள வேண்டும் என்னும் தேர்ந்த முடிவில் ஆய்ந்து வரைந்த பெருநூல் இஃதாகும். - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் PREFACE The Tamil Work on St. manickavachakar’s life and Times:’ which appewars in th following pages, is the fruit of six years:’ arduous labour almost unremitting except on a few occasions when it had to be laid aside for a short period of a month and a half each time, in order to make room for the preparation of smaller works that demanded my exclusive attention on such occasions. The work war begun on the 16th of August, 1992 and completed only on the 5th of September, 1928. During this long interval, the first call came to me from the Secretary of the All - india Oriental Conference for the contribution of a paper in English on the system of Saiva Siddhanta, to be read at its sittings that were to commence then in madras on the 23rd of Decenber. 1924. In Response to the call, I prepared a paper in English on ‘The Conception of God as Rudra’ but at the end of a month and a half when the work had progressed to three - fourths of the whole, the secretary pressed me for the paper. I, therefore, sent a copy of it so far writtern and after the emergency was over, left it incomplete and returned to this my Tamil work, for its subject - matter was ever present in my mind and interested me more than anything else. Again in the first quarter of the year 1926, many of my readers and friends repeatedly expressed their wish for a second edition of my treatish on ‘caste and its Evil’ which was long out of print. And in compliance with their wish I had to leave the present work for time and direct my attention to rewriting the book on ‘caste and its Evil’. To keep it abreast of the times, much new and additional matter was introduced into it, and the book grew four times in size of its first edition and appeared in June, 1926, in its full and final form. Again, from the time my Tamil work on : ‘Personal magnetism:’ began to appear part by part in my magazine: ‘Unansagaram’, demands for it in a complete book - form increased som much that towards the end of 1926. I found it no longer possible to delay its publication. and so, I took up that most Useful work, completed and published it in book - form in February, 1927. In the middle of 1923, a hot controversy was opened in the Tamil papers on the subject whether the Velala people should be included in the Vaisya, the mercantile caste or in the Sudra, the slave caste of the Aryan classification. I was called upon to decide this moot point, and consequently a critical and historical study of that interesting question was made on the basis of facts gathered from Tamil and Sanscrit Literatures. I traced the origin and growth, the rank and station of the velala community and the results were published in a book-form in Nov., 1923. The copies of the first edition having sold off in three years and half, the second edition was called for early in 1927, and was, with a few more additions, published in july, 1927. Besides these interruptions caused by literary works, many a public function, which I was called upon to perform, delayed the present work still more, Every now and then I had to go to Perur, thanjavur, Tiruchi, Madras and Thiruppathirippuliyoor for presiding over the grand annual celebrations and Thiruppathirippuliyoor for presiding over the grand annual celebrations of Tamil sangams and Saiva Siddhanta Societies that were held in those places. In the midst of Such varied activities, I was also for a time striving my utmost to print my English lecture on ‘Saiva Siddhanta as a philosophy of practical knowledge’, but the printing of it could not be finished as yet, since some of its parts require expansion which I can do only after my present literary works leave my hands. In addition to being the author and publisher, I have to be the printer of my own writings. This causes me no little trouble and allows me not even sufficient time for taking necessary rest. With all these troubles, difficulties and frequent interruptions, it gives me no samll pleasure to think that was enable by the grace of Lord Siva to complete this most important work of mine ofter so long a time. This work comprises two parts. The first part treats of the life of St. Manickavachakar and the second of the times in which he lived. The method pursued in dealing with the two subjects would seem to be quite novel to the present day Tamilians who, having, for the last four or five centuries, come under the influence of the Aryan priesthoond, have lost their independent and rational way of thinking and have become slaves to the Aryan laws, customs and manners. They now remain hopelessly unprogressive and inimical to all kinds of salutary reforms. Their observances of rites, of reliigious practices and social customs are formal and inflesible, for they care little to understand the significance of what they so strictly but unwittingly obseve. This slavishness, this petrified concervatism has so thickened the gloom of their ignorance as to render them throughly impervious to the ray of light coming from the critical and historcal spirit of the modern culture. Even the few who have acquired and extensive knowledge of Tamil grammar and modern Tamil literature, are unable to recongnize the great value and importance of the critical and historical methods of inquiry, for a clear comprehension of the subject they have taken to study. This is due partly ot their want of acquaintance with the pure subject matter of the ancient Tamil classics which depict nature and human nature as they truly appear, and partly also to their indiscriminate understanding of the later Puranic literature which contains nothing but exaggrated and distorted accounts of nations conflicts as well as the mythical and legendary histories of gods and goddesses. These Puranic stories being quite foreign to the Tamil genius which keeps itself strictly close to nature, are either things imported into Tamil from Sanscrit narratives. In this state of our Pandits:’ knowledge, it is no wonder that my way of treating the history of our St. manickavachakar should appear novel, nay, even strange to their mind. But it is most gratifying to note that, within the last three decades, from the time I began the publication of my Tamil magazine Jnanasagaram in which for the first time appeared not only my essays on comparative religion, science of language and literary criticism, but also historical studies of ancient authors and Tamil translations of some notable works in Sanscrit and English, a new inquiring spirithas been kindled perceptibly in the minds of educated young men but imperceptibly in the aged Tamil scholars, in a way that it has forcibly opened the eyes of the latter to recognise the merit of this kind of study to and appreciable extent. At the present time there are many here and there who can understand and admire works of this kind, although those who can produce the like of which are still few and far between. The fact, however, cannot be denied that,. during the past ten or fifteen years, a few books in English and a very few in Tamil purporting to deal with the history of the Tamil language and literature did come out; but it is deplorable that many of them bear no marks of originality nor do they indicate that their authors possessed much first - hand knowledge of the sources from which they pretend to have drawn the materials for their works. As the only exception to this charge might be cited an earlier ENglish work, called ‘The Tamils Eighteen Hundred Years Ago’ but it treats of the Tamils that lived before the third century A.D. and leaves out of account the important period - important from a religious point of view, which intervened between the third and the twelfth century A.D., and which th language, the religion, the literature and the social conditions of the Tamils had under gone a marked change by the introduction of the Buddhist, the Jain, and the Brahmanical religions into this country. This defect might have been removed by a later English work called ‘Tamil studies’ in which the treatment of this period though not full, in correct in many respects; by sadly the merit of it has been detracted by the brahmanical bias and haughtiness which drove the author most unjustifably to stigmatize the whole Tamil people as liars and extol the whole of brahmins as the only truth - telles. Further, the author’s mind is prepossessed with a strong desire to attribute the civilization of the Tamils solely to the influence of the Aryans that migrated to the south. For a true, impartial, and sympathietic study of an ancient civilized race as the Tamils, I need hardly say that souch a biased state of mind is quite unfit, In the body of this work, I Have gone fully into a discussion of such malicious views and opinions expressed in ‘Tamil Studies’ and have exposed their fallacy and shallow reasoning, by drawing parallel pictures of the Tamils’s and Aryan’s ethical and religious lives. This is done either by quoting my authorities from the literatures of the tow languagesor by referring to the chapter and verse of the works in which they occur and in this way the contrase that have existed from early times between the moral and religious life of the one race and that of the other is set forth, I believe, as clearly as possible. From such unjust and uncharitable estimates of a nation’s life and gross racial prejudices against a highly civilized race, Dr.Krishnaswamy Iyengar’s Ancient India,’ and ‘Some Contributions of South India to Indian Culture’ may be regarded as free to a large extent, though not in toto. For, in these too is visible the tendency to attribute to Aryan influence whatever is excellent in the ancient and modern Tamil classics. Of couse, the tendency of the author might have been due either to his brahminicals caste-prejudice or simply to inadvertence to take congnizance of the schemes and methods of government and of the social, moral, philosophical and religious ideas that were common in olden times to the ruling powers and thinkers, both in the southern and the northern parts of India. There are clear evidences to prove that alomost all the kings who ruled over India in the past, were of the Tamilian stock, whom the Aryan priests had called the kshattriyas. should the same be found also in the Artha Sastra of Kautilya in Sanscrit, one bearing a striking resemblance to the other, anable historian as Dr. Krishnaswamy would not be justified, as he has done in his ‘contributions’,1 in concluding from that and that alone that Thiruvalluvar borrowed his konwledge of it from Kautilya. You must show several other coincidences, not one or thow stray points of similarities as in the present case, before you forgotten that ancient writers on politics were in a large measure recording in their works not their won ideas with regard to what ought to be the principles of an administrative system and how they have to be carried into execution, but only the ideas they had obsered to prevail already among the kings and to guide their ruling operations. Unfortunately this has been overlooked by Dr. Krishnaswamy when, in his eagerness to establish the influence of the Aryan writers over the Tamilian, he had lighted on a passage in the sacred Kural of St. Thiruvalluvar which makes reference to a state-craft, resembling that in the Artha Sastra of Kautliya. The root-cause of souch a misapprehension even on the part of great scholars who have imbibed the ideas of refined western education, lies deep in the high opinion which one froms of himself, and of his caste at the expense of others and other castes, It is a Iamentable fact that, in spite of their extreme reluctance of mingle with the brahmins of the north, the South Indian brahmins identify themselves with the Tamils. Still, there is not a shadow of proof to establish their claim of descent from the Aryans of the north. Probably they imagine that their caste - superiority can be maintained only by keeping themselves entirely aloof from the people of this country and by claiming only Sanscrit as their own language which, being dead and therefore little understood by the people, serves their purpose to make it the language of the celestials and the exclusive repository of revealed scriptures. Further, they repudiate the very idea that any one, not born brahminï even though his mind be imbued with the culturw of Europeanlearning, is scarcely free from this feeling of his caste-supremacy. His mind has becom so saturated with it that it has become part and parcel of his being. He cannot, therefore, brook the thought that anything excellent or original can exist outside the pale of the brahmin caste and brahmin literature. This Extremely self-conceited state of the brahmin mind has so frequently and so prominently shown itself in almost all branches of Sanscrit literature that it has not escaped even the admiring eyes of some great oriental scholars. Forced by its undue prominence, they have not disdained to a vow their disapproval of it. To quate one instance: Zenaide Ragozin onserves: “At a later period, the followers of Vasistha and his descendants represent the narrowly orthodos brahmanic school with its petty punctiliousness in the matter of forms, rites, observances, its intolerance of everything un-Aryan, its regid seperatism.”1 It is no wonder then that Dr. Krishnaswamy should attempt, of course without success, to make the divine sage Thiruvalluvar, the most original of Tamil poets and ethical philosophers and the reputed author of the Sacred Kural, the crestjewel of Tamil Classics, a debtor to Kautilya whose existence prior to the first century A.D., the age of Thiruvalluvar, is still in dispute.1 Apart from such flaws - fortunately they are very few, the writing of Dr.Krishnaswamy dealing with the history of Tamil kings and poets, on the whole, a reliable source of valuable information, although the dates assigned by him to be Vaishnava Alwars are incorrect as is shown in the following work of mind. Coming now to a few Tamil books and magazine articles that have appeared within the last one or two decades, treating of the history of Tamil literature, I find only two books which require special mention here, for in the whole range of the following work, no other views that what were advocated in the two, have had to be taken for a searching criticism and an elaborate discussion, In the course of his perusal, the reader cannot fail to notice the necessity which impels me to meet at every turn the arguments set forth in both the works. Of these two works, one is ‘A History of Tamil Literature’ by Mr.K.Srinivasa Pillai and the other is ‘The life of Seran Senguttuvan’by Pandit M.Raghava Iyengar. The first is replete with errors resulting from guesses and conjectures and from twisted interpretations but by the verses quoted in support of his views. Apart from the matter taken out of the excellent exegetical editions of Tamil Classics brought out by the veteran Tamil scholar Pandit V.Saminatha Iyer and some others, what constitues the original contrubutions of the author is, I am very sorry to say, mostly erroneous. Had such matter been presented at least in a style as artistic and as fascinating as that in the historical writings of J.A.Froude, the reader would have been benifited to a degree. Even such a compensating virtue cannot be met with in this ‘History of Tamil Literature.’ Its Tamil style is impure, commonplace, insipid and ungrammatical, while the matter is mostly incorrect. The subject - matter of my book, being necessarily related to all that is treated in this book, it has become indispensable for me to expose the errors lurking in it and give a true and connected account of almost all the standard Tamil works that preceded and succeeded the time of St. Manickavachakar. For Manickavachakar lived at a time that stands midway between the classical and mediaeval periods of Tamil literature and one who inquires into the characteristic features of his age and its literary productions cannot do full justic to his subject without comparing them with the nature and conditions of the works that were produced both before and after his time. Now, the second treatise not only relates the life of the powerful Sera monarch Senguttuvan, but also attempts to fix his age, as well as the ages of the classical epics the Silappadhikaram and the Manimekhalai, of the prose commentary of Nakkirar on the Tamil poetics called Iraiyanar Ahapporul, and of the lyrics composed by the poet Mamoolanar. Thea biographical portion of the book is admirable in every way, whereas the historical is grounded mainly on bare suppositions, wild conjectures and on wrong interpretations of verse-quotations. If a student who has familiarised himself with the classical Tamil poems and the old exegetical prose writings, would take the trouble to inquire into the conditions of time that called them into being, he cannot but be struck with the author’s fruitless endeavour to reduce the antiquity of the above mentioned calssics to a comparatively later age. The brahmins, as a whole, hold that there cannot exist in any language, except in their own Sanscrit, any valuable intellectual product that can claim high antiquity. Should any irrefutable facts be foruthcoming to prove the contrary, they evince a pronounced tendency to twist their meaning and character so as to render them conformable to their own favourite views and opinions. This tendencey of the brahmins to distort the meanings of the original text that contain matter unpalatable to them may best be seen in the commentaries written skillfully by their forefathers on several old works in antique Sanscrit. In the present instance the same is what we fine to be the case with the autor of the treatise calles ‘Seran Senguttuvan.’ In the following work I have reviewed one by one all the facts he brought in proof of his views, and have considered them in the light of the indisputable evidence furnished by Tamil and Sanscrit literatures and by epigraphical records, to see whether they lend any support to his theories. The result is that my conclusions have reached a position diametrically opposed to those he arrived at in his treatis ‘Seran Senguttuvan’, I have placed before the reader all my evidence drawn from a first - hand knowledge of the original sources, with the help of which he can himself test the points of defference between us and can easily distinguish what is true from what is untrue. Thus the two treatise and several others that had equally clamied my attention in the matter of correctly fixing the time of St. Manickavachakar, have had to be unavoidably subjected to a searching criticism and analysis, simply for the sake of truth. My first attention to the subject war awakened in this wise: Twenty seven years ago when Dr. G.U. Pope’s excellent and scholarly English translation of Thiruvachakam made its appearance, the learned translator’s opinion as regards the date of St. Manickavachakar,1 gave a strong impulse to an investigation of the views held on the subject by Tamil Pandits and by same English scholar who possessed also a knowledge of Tamil. Between the first and the ninth century A.D.did the opinions of these two distinct classes of learned people oscillate for the age of our Saint. At that time I was running the first volume of my Tamil periodical ‘Jnanasagaram’, and the question of our Saint’s age, being then discussed everywhere in educated circles, drew my attention to it and kindled my interest so much that I Immediately made a careful study of it and published the results in an article contrubuted to that organ. This article was also translated into English by my student Mr.F.T.Peters, B.A. (then in the madras christian college, now Deputy Postmaster General) and was published in ‘The Christian College, Magazine’ for 1904. A Little later the epigraphist Mr.Gopinatah Rao, M.A. contersted my arguments and published his views on the same subject in the same magazine. And a rejoinder to it was writtern by me in my Jnanasagaram for 1908 and with that the controversy about the age of St. Manickavachakar was set at rest. But after a long time it was raked up by Mr.Srinivasa Pillai in his ‘History of Tamil Literature’. Ofcourse for the deification of Tamil students, the same subject may be brought up for discussion any number of times, I am far from objecting to it but every time that it is thus brought up, it must be made to gain ever so much greater light and show the way to a true historcal knowledge based on a sound co-ordinaion of literary and epigraphical evidence. On no account must the writer of a historcial treatise allow himself to be carried away by conjectures and fancied theories about literal facts so as to live in a sphere unreal but agreeable to his own favourite purposes but must restrain himself in order that the facts themselves may make room for the emergence of truth and help it live there. But Sadly the author of the work in question betrays a want of this sound historcial sense. For a just and adequate treatment, the history of Tamil literature still awaits the hand of a Max Muller or a Weber, a Macdonell, or a Ragozin. In the folliwing work, I have, to the best of my ability, surveyed the whole extent of Tamil literature beginning with the Tholkappiam the age of which goes back to 3500 B.C., and ending with the Sivajanabodham of the 12th centuray A.D. For the time fo St. Manickavachakar stand midway between the close of the ancient pure classical Tamil period and the beginning of a some-what mixed kind of literary Tamil period, and cannot be adequately treated of without entering fully into the causes that led to the formation of wholesome literature and into those that introduced extraneous matter into its system and made way for its decay. I Believe I have not passed over any point of importance in fixing the time of several literary and religious strata and if any one will have the kindness to point out omission of any important point, I shall be very thankfull to him and shall not tail to notice it in the second edition. I have to say a work concerning the way in which the life of our Saint is treated here. Of the verse compositions that narrate the life of our Saint, only four have been taken for a comparative study of his life. Of these four, The Thiruvilaiyadal Puranam by Perumapatrappuliyoor Nambi is the earliest, being, as has been shown by its learned editor Pandit Saminatha Iyer, composed in the eleventh century A.D. The author of this treatise seems to have had a fair historical sense, since many of his accounts, I find to my great astonishment, are reliable. Next in point of time comes ‘The Thiruvilaiyadal Puranam’ by Paranjoti, a contemporary of the king Ati Vira Rama Pandian whose reign began between 1562 and 1563 A.D. (see Dr.Krishnaswami Iyengar’s Ancient India, p.375). The author of this work being much influenced by the Sanscrit Purana, gives not only a false colouring even to historical incidents but introduces also many things new and unhistorical and unauthorized by previous works. And the third one is ‘The Thiruvathavurar Puranam’ written by Kadavulmamunivar at the beginning of the19th century A.D. Unlike the above two this is devoted exclusively to a graphic account of the life of our Saint; and this for the most part of our Saint’s life which is touched but very briefly and incompletely in the other. And the last one ‘The Thirupperunthurai Puranam’ by meenakshisundaram Pillai, was writtern in the latter half of the 19th century and possesses little or no historical value for our purpose. Though the four treatises agree in giving a general description of his life as a whole, points of differences in details are many and numerous among them. wherever it seemed useful and necessary to note the differences between one narrative and the other, I have not only shown them but also argued for and against the one or the other and chose what was possible and reasonable under the circumstances pertaining to our Saint’s life. In many a place I have quoted the very words of our Saint to make clear why I have chosen one account in preference to another. For fortunately for us and for the whole religious world, the sacred syrical utterances themselves of our Saint are interspersed with number of incidental references to all the important events to his life, so that a careful student who studies them with a critical understanding cannot but notice the points which, if picked up and strung together, will constitute a coherent and genuine autobiography of a great soul that was God face to face and attained spiritual perfection. in the matter of studying the lives of such great religious founders as Gautama Buddha, Jesus Christ, Mahomed and others, it is not given for us to rely upon the words uttered by the teachers themselves - for they were irretrievably lost unrecorded, but are left to look up to the accounts given by interested persons who came long after them. The description of a rose-flower by a poet, however glowing it may be cannot set before us the exquisite beauty of its form and its colour and the sweetness of its perfume, as the flower itself can directly do. so too the accounts given of a great saint by others, even though they be his intimates, can never draw a true picture of his real self, nor can express the inner workings of his heart as faithfully as he himself can do. Nothing in the world is more mysterious than the ways of a saintly person who struggled through the experience of this lower world to that of a higher one which transcends the knowledge of ordinary mortals. Unless a man can reach the summit of self-realization attained by that great soul, he cannot hope to place himself in a standpoint different from his own, and view the extent as well as profound depth of that great mind. For a true comprehension, therefore, of the essential nature of sanctified souls, the history written of them by others who stand not only much below their level but also far from their time, cannot help us much. If we be so fortunate as to possess the very utterances of such holy men, as in the case of St. Manickavachakar and other great Saiva Saints, we may with the necessary equipment, venture to enter into the sacred precincits of their life and hope to obtain the inexhaustible treasures of spiritual experience they so surely acquired within so short a time. The glory of Tamil literature consists in its possession of such spiritual legacies as have come down to us directly from our great Saints and Sages as Manickavachakar, Appar, Thirujnanasambandar, Sundarar and Maikandadevar. The like of which, we are sorry to say, have not been bequeathed to posterity by any other saint or religious founder in any language, literature, of religion so far as our knowledge goes. The value of a literary production that has come from a grea soul who saw God in a visible form and described Him in a way that makes it easier for us all to bring his image before our mental eye, cannot be rated too highly. One can estimate the value of our Saint’s utterances only by bringing before his mind the great and irreparable loss the world sustains in ignoring them. So long as humanity blindly follows the precepts of the so-called world-teachers, who, according to their own followers, seem to have long groped for the Supreme basic principle of the universe, but who, finding at last their efforts fruitless, gave them up in despair, and took to preaching what they deemed best under such circumstances; so long the humanity can have no true conception of the Personality of God, nor can they know anything definite of Him to fix their mind upon. Without a form physical or ideal before him, man will never be able to think of God in the true sense of the term. It is this necessity of his nature that makes him create from his crude imagination a multitude of fantestic form and ascribe them to God. But God has a personality of his own which man can never perceive, unless God himself appears before him and reveals it by His grace. In the case of St.Manickavachakar and St. Thirujnana Sambandar we have strong internal evidence in their hymns to establish that God appeared before them in the form of a respledent person uniting in itself the rose-coloured side of the father and the blue coloured side of the mother. I have given a scientific treatment of this dual aspect of Godhead in my paper on ‘The conception of God as Rudra’ and so I do not like to enter again into this subject in a preface like this. To the reader it will be now plain how clear/ how definite has been the manifestation of God’s Personality, it would be better for mankind to meditate on His gracious form that revealed itself to Manickavachakar and is described by him in vivid and unambiguous words. For it is plainly laid down in the Isavasyopanished that those who worship the forms and images of their own make mistaking them for the real Person of God, enter, at their death, into the regions of blinding darkness. Therefore let those who hanker after the salvation of their souls, accomplish it by a whole-hearted devotion of their mind to the contemplation of the one Almightly Parent of the universe as He is depicted in the Sacred Utterances of St.Manickavachakar. Now, with the object of presenting the life of Manickavachakar in the form in Which it discloses itself incidentally in his own hymns addressed to Lord Siva, I Studied his ‘Thiruvachakam’ and Thiruchitrambalakkovaiyar’ for days and nights together in a way quite differnt from that in which his Puranic biographers and others have viewed it. And the method of my study will be clearly seen in the extreme closeness in which the following narrative is bound up with the quotations taken from the two poems just mentioned. In spite of my ceaseless efforts to enter fully into a description of the life and experiences of our Saint, I cannot claim to have exhausted the subject in the large work that follows. As my study deepens, new facts are daily coming into light, and I cannot hope to embody them all in a single treatise of this kind. if God be willing I may be spared to publish the present work in a much more enlarged form, samy, in three or four volumes. when I first entered upon this work some seven or eight years ago, I never thought that the work would swell to its present size of more than thousand pages. Within the last twenty seven years from the time when my interest was first kindled in the investigation of our Saint’ Life and Times, many a magazine - article many a book and booklet, came from able hands, and most of these I had to study and criticize from time to time, in order to reach definite and positive conclusions as regards the two. This was how the work increased to its persent size. After so careful and comprehensive a study of the subject, it gives me no small pleasure to find that my position remains the same as it was nearly three decades back, that nothing that came in the interval from any has shaken it in the least, and that other theories, however antagonistic to my own, have, when viewed in their proper perspective, only tended in the end to bring the truth of my conclusions into fuller relief. My study of the evidences then led me to fix the age of Manickavachakar in the third century A.D., and now the same conclusion is ratified by further evidences that have come to light during this long interval. To the following Tamil work I have prefixed an English introduction epitomizing the salient points in the Life and Times of our Saint, so that it may serve as a guide to the English knowing students who do not possess a scholarly knowledge of Tamil but who ardently wish to acquaint themselves with the treasures in Tamil literature. It is my belief that those who have imbibed English education can appreciate better the method of historical criticism used in this book than most of the tamil pandits who do not and want not to know what is history, and what is myth. Finally I wish to call the attention of the reader to the pure Tamil style of the treatise which is entirely free from Sanscrit and other foreign words. Let him judge from it whehter a living and at the same time a very ancient language, which can deal with all the higher aspects of human thought, without borrowing words from any other language, can be called poor and ordinary. Let him remember that Tamil is the only living language on his globe that unites in itself the glories of the vanished past with the culture of the living present. And let him therefore endeavour his best to spread Tamil learning and uplift his Tamil brethren in the social, moral, intellectural and religious culture that is within the easy reach of them all. The sared Order of love, pallavaram, 22nd January,1930. VEDACHALAM Footnotes 1. ‘Some Contributions of South India to Indian Culture’ P.124. 2. ‘Vedic India’, P.320 3. Prof. A.B. Keith assigns. ‘The Arthasastra of Kautilya’ to the third century A.D. see his ‘History of Sanscrit Literature’ PP.458-462 4. Dr. Pope indifferentlyn assigns the date of Manickavashakar to the 9th century in on eplace and to the 10th in another. See his English translation of ‘The Thiruvachakam.’ P. LXVII and P. LXXV திருச்சதகம் The Sacred Cento விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணு மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும் புலைய னேனையும் கோயில் வாயிலில் பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக் குரிய னாக்கினாய் தாம்வ ளர்ந்ததோர் நச்சு மாமரம் ஆயினுங் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே. I AM THINE, SVE ME! without a seed, the fruit thou causest spring; th’eintire of heaven and earth, and all therein Thou didst ordain; and wilt destroy! Me too deceitful mean, within Thy temple gates Thou fill’d’st with frenzy; mad’st to join the band of Thy great loving ones! Ev’n should the tree They plant yield poison, men destroy it not;- and thus am I, my Owner, and my Lord! - Dr.G.U.Pope. திருக்கோத்தும்பி The Humming bee தினைத்தனை உள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியும குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. All SWEETNSS IS IN HIM Honey from any flower sip not, though small as tiniest grain of millet seed! where’er we think on Him, whene’er we see, Whene’er of Him our lips converse, Then sweetest rapture’s honey ever flows, till all our frame in bliss dissolves! To Him alone, the mystic Dancer, go; And breathe His praise, thou humming bee! Dr.G.U.Pope. முகவுரை வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையுமென் உடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன், குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே. (இராமலிங்க அடிகள்) மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத்தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சியினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவராயிருப்பினும், அவர் வேறெங்குங் காணாத ஒரு பேரின்பம் எய்தித் தம் உடம்பும் உயிருமெல்லாம் அதன் வயமாய் நிற்கப் பெறுவரென்பதூஉம், மக்களாற் காணவுங் கருதவும் இயலாத இறைவனை அவர் எளிதிலே தமதகத்துக் கண்டு அவனோடு ஒருமைப்பட்டு நின்று பேரின்ப வாழ்விற் பிரிவின்றி வாழ்வரென்பதூஉம் நன்கு தெருட்டப்பட்டமை காண்க. இங்ஙனமாகத், தன்னை ஓதுவா ருள்ளத்தையும் உணர்வையும் உயிரையுமெல்லாம் பேரின்ப வுருவாக்குந் திறம் ஏனை எந்த நுல்களுக்கும் வாயாமல் திருவாசகத்திற்கு மட்டும் வாய்த்ததென்னையெனின்; இவ் வுலக வாழ்க்கை யில் வரும் இன்ப நுகர்ச்சிகளில் எங்கும் புலனாகாத ஒரு பேரின்பம் இதனை யோதுவா ரெல்லாரிடத்தும் பிறழாது நிகழக் காண்கின்றே மாகலானும், அத்துணை விழுமிய அவ்வின்பம் ஒன்றையும் பற்றாது தனித்து நிற்பதின்றி உலகு உயிர்களிலெல்லாம் நிறைந்து நிற்கும் ஒரு முழுமுதற் பெரும் பொருளான கடவுளைப் பற்றிக் கொண்டே நிற்பதொன்றா கலானும், அத் தன்மையரான கடவுளைத் தலைக்கூடினார்க் கன்றி அது வாயாதாகலானும், இறைவனை இறுகப் பற்றிக் கொண்ட மாணிக்க வாசகப் பெருமான்றன் மன மொழி மெய்கள் எல்லாவற்றையும் அப் பேரின்ப வெள்ளமானது தேக்கி அவரது திருவாயின் வழியே திருவாசகமாய்ப் பெருக் கெடுத்துப் போந்ததாகலானும் அந் நூலுக்கு அத் திறம் உளதாயிற்றென்று அறிதல் வேண்டும். கற்கண்டின் பாகும் முப்பழச் சாறும் நறுநெய்யும் ஒருங்கு கலந்த அடிசில் தீஞ்சுவைத் தெள்ளமிழ்தமாய்த் திகழ்தல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் எல்லையற்ற பேரின்பத்தில் முழுதுந் தோய்ந்த வாதவூராரின் மன மொழி மெய்களும் பேரின்ப வுருவாய்த் துலங்கலாயின. இளவள ஞாயிற்றொடு கூடிநிற்கும் மாசற்ற நீலவான் பரப்பெல்லாம் அதன் பேரொளியால் ஊடுருவப் பெற்று மிளிர்தல் காண்டுமன்றே: அதுபோற் சிவத்தின் எல்லையற்ற அறிவாற் கவரப்பெற்ற அடிகளின் தூய அறிவும் அளப்பிலாச் சிறப்பினதாய்ச் சுடர்வதாயிற்று. சுடர்ந்தெரி தீயின் சேர்க்கை யால் தூய ஆன்இழுது நீராளமா யுருகி யொழுகுதல் காண்டுமன்றே; அதுபோற் சிவத்தின் வரம்பிலடங்கா அருளாலும் அன்பாலும் நிறையப் பெற்ற அடிகளின் திருவுள்ளமும் அன்பாலும் அருளாலும் பொங்கித் ததும்பித் திருவாசகம் பொழிவதாயிற்று என்க. உலகில் வேறெங்குங் காணப்படாத ஒரு தனித் தெய்வ மாட்சி மாணிக்கவாசகப் பெருமான் ஒருவரிடத்தே மட்டுங் காணப்படலான இந் நுட்பத்தை ஆழ்ந்து ஆராயுங்கால், அஃது எல்லாம் வல்ல கடவுளே வலியவந்து அவரை ஆட்கொண்ட பேரருட்டிறத்தின் பெருவிளைவாதல் புலனாகா நிற்கும். கடவுள் ஒருவர் உண்டு என அதன் இருப்பை மட்டும் உணர்வார்க்குப் பொதுவகையால் ஒரு மெய்யறிவு விளங்குமே யல்லாமல், அதனின் மேற்பட்ட ஓர் இன்ப வுணர்வு தோன்றாது. கடவுளின் பேரறிவு விளக்கத்தினை அவனாற் படைக்கப் பட்ட புற்பூண்டுகள் முதல் மக்களுடம்பு ஈறாக வுள்ளவற்றிற் கண்டு கண்டு வியப்பார்க்கு அவ்வறிவுக் காட்சியில் ஒருவகை மகிழ்ச்சியுங் களிப்புந் தோன்றுமே யல்லாமல் அதனின் மேற்பட்ட மாறா இன்ப நிலை தோன்றாது. தமது சிறுமையுங் கடவுளின் பெருமையும் அறிந்து தமக்கு வேண்டுவன வெல்லாந் தந் தலைவன் பாற் கேட்க அறியாத என்பில்லாப் புழுமுதல் எல்லா உயிர்கட்குந் தானாகவே உளங்கனிந்து பல்வேறு வியத்தகு யாக்கை களையும் அவற்றின் நுகர்ச்சிக்குப் பல்வேறு வியத்தகு பண்டங்களையும் அமைத்து வைத்த முதல்வனின் அருட் பெருந்தகைமையினை ஆராய்ந்து நினையுந்தொறும் நினையுந் தொறும் அங்ஙனம் நினைவார்க்கு முன்னில்லாத ஓர் உள்ளக் கசிவும் ஓர் உள்ளக் களிப்புந் தோன்றுமேயல்லாமல், அதனின் மேற்பட்டு என்பெலாம் புரைபுரையுருக்கும் பேரின்ப நிலை தோன்றாது. இவ்வாறு நம்மனோர் தமது சிற்றறிவு முயற்சி கொண்டு எத்துணை தான் கடவுள் நிலையினை உணர்வாராயினும், அவர் அங்ஙனம் உணரும் உணர்ச்சிதான் இறைவனை அண்முதற்கு ஒரு வழியினைத் தோற்றுவிக்குமே யல்லாமல், அவன்றன் உண்மை நிலையினை வருவித்துக் காட்டமாட்டாது. மற்றுத் தமது சிற்றறிவுமுயற்சி அவிந்து சிவத்தையே களைகணாய்ப் பற்றி ஏசற்றிருப்பார்க்கே, சிவம் தானே முனைந்து தோன்றித் தன் முழுமுதல் இன்ப விளக்கத்தை அவரது உள்ளத்தில் ஏற்றிவைத்துத், தன் உண்மைநிலை முற்றும் அவர்க்கு நன்கினிது புலனாமாறு செய்யும். இவ்வாறு, சிவம் தானேவந்து அருள்செய்யப் பெற்றார் தம்முள் மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பெற்ற அப்பெறலரும் பேற்றைத் தம்மைச் சார்ந்த எம்போல்வா ரெல்லாம் எளிதிற் பெற் றின்புற்றிருக்குமாறு தாம் திருவாய் மலர்ந்த திருவாசகச் செந்தமிழ் மாமறைவழியே வழங்கிய வள்ளன்மை யுடைய ராகலின், அவர் எம்மனோர்க்குத் தலைக்கணியாய் நிற்குந் தனிமுதன்மை யுடையரென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. மாணிக்கவாசகரைப் போல் இறைவனைக் கண்டு அவனருளை முற்றப் பெற்றார் பலர் அவர்க்கு முன் இருந்தது உண்மையா யிருக்கலாமேனும், அவரெல்லாந் தாங் கண்ட அருட்பெருங்காட்சிகளையும், அவற்றால் தாம் பெற்ற பேரின்ப நிலைகளையும், இறைவன் தமக்குச் செய்த அருட்பேருதவிகளையும், தாம் இறைவற்கு ஆளாய் நின்று உருகின வகைகளையும் இவர்போற் செந்தமிழ்ப் பாக்களில் நிறைத்து யாமெல்லாம் பருகிக் களிக்க வழங்கியவரல்லர். மாணிக்க வாசகராற் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை கண்டபின் என்று உயர்த்துப் பாடப்பெற்ற கண்ணப்ப நாயனார்தம் ஒப்பற்ற அன்பின் நிலையினையும் பிறர் வாயிலாக அறியப்பெறுகின்றன வேயன்றி, அவர் உற்ற அவ்வன்பின் நிகழ்ச்சிகளை அவர் வாயிலாகவே அறியப் பெறுகின்றனம் இல்லையே! மற்று, மாணிக்கவாசகப் பெருமானோ தாம் இறைவனைக் கண்டடைந்த இன்ப நிகழ்ச்சிகளை யெல்லாம் நெஞ்சம் நெக்கு நெக்குருகக் கண்ணீர் ஆறாய்ப் பெருகக் குழைந்து குழைந்தலறித் தம் அருந்தமிழ்ச் செய்யுட்களில் மிழற்று கின்றார். இவரது இந் நிலையினை எளிதிலுணர விழைவார்க்கு, ஓய்வலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள் தந்து, நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறி காட்டித், தாயிலாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனி காணேன் தீயில் வீழ்கிலன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. என்று அவரருளிச்செய்த ஒரு திருவாசகச் செய்யுளே போதும், ஏனை எல்லா மக்கட்கும் புலனாகாத அருவ நிலையில் நிற்கும் இறைவன் தம்பொருட்டுக் கட்புலனாம் மேதகும் அருளுருவிற் றோன்றித் தமக்கு அருள்செய்து உடனே மறைந்து சென்றமையால், அவ்வருளுருவினை எந்நேரமுங் காணப்பெறாத ஆற்றாமையினை நனிகாணேன் என்னும் அருமைத் திருமொழிகளாற் புலப்படுத்தி அழுது அலறும் இச்செய்யுள், அவர் இறைவனைக்கண் டெய்திய பேரன்பின் பெருக்கினை எத்துணை வெளியாகக் காட்டிக், கல்லினும் வல்லென்ற நெஞ்சினையும் எத்துணையெளிதிற் கரைக்குந் தகையதாய் மிளிர்கின்றது! தம்மாற் காணப்படாத ஒருவரின் குணநலங்களைக் கேட்டு அவர்பால் அன்புமீதூரப் பெற்ற மற்றொருவர் அவர் மாட்டு எத்துணைதான் அன்பு பூண்டு ஒழுகுவாராயினும், அவர்க்குள்ள அவ்வுள்ள நெகிழ்ச்சி அந் நண்பரை அவர் நேரே காணப்பெறுங்கால் அடையும் பேரின்பப் பெருக்கிற்கு ஒரு சிறிதும் ஒவ்வாது; அவரைக் காணாமுன் வைத்த அன்பு அவரைக் கண்டபின் கரைகடந்து பெருக, அதனை ஆற்றாராய் அம்மற்றவர் கண்ணீர் உகுந்துக் கதறியழுது ஆடிப்பாடித் தன்னை மறந்த தன்மையினராய்க் குழைந்து நீராயுருகும் நிலையினை நேரிற் கண்டுணர்ந்தவர்க்கே யாங் கூறும் இவ் வுண்மை தெற்றென விளங்கா நிற்கும். இங்ஙனமே, முழுமுதற் கடவுளின் அருட்பெருந் தன்மைகளை நேரே காணப்பெறாமல் உய்த்துணர்ந்தறிந்து அவ்வாற்றால் அவர்பால் அன்பு நிகழப் பெற்றார்க்குள்ள அன்பின் நிலை, அக்கடவுளைத் தம் கண்ணெதிரே கண்டு அவர் மாட்டுக் கரையிகந்து பெருகும் அன்புடையராயினார்க்கு மீதூரும் பேரின்ப நிலைக்கு ஒரு தினைத்தனையும் ஈடாகாது. மாணிக்கவாசகர் தாங் கண்ட இறைவன் திருவுருவினையும், அவ் வுருவின் நிறத்தினையும், அவ் வுருவின் அடையாளங்களையும் தாம் அருளிச் செய்த திருவாசகத்திற் பலகாலும் பலவிடத்தும் அடுத்தடுத்து ஓதுகின்றார்; அவற்றுட் சில இங்கே காட்டுதும்:- எந்தாய் உன்றன் வண்ணந்தான் அதுகாட் வடிவுகாட்டி மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட்கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக்கேனே. அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ வென் எம்பிரான் என்று திருச்சதகத்தும், கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேயன வளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித் தாட்கொண்டவா நயந்து நெஞ்சஞ் சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ என்று திருத்தெள்ளேணத்தும், நான் தனக்கு அன்பின்மை நானும்தானும் அறிவோம் தான் என்னை யாட்கொண்டது எல்லாருந் தாமறிவார். கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. நானும் என்சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம் தானுந் தன்தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் என்று திருக்கோத்தும்பியினும் போந்த அருமைத் திருமொழிகள் என்றும் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இங்ஙனமாக, எவரானுங் காணப்படாத அரும்பெரும் பேரின்பக்கடலினை நேரேகண்டு அதன்கட் டிளைத்துப் பேரின்ப வுருவான அடிகள் அருளிச்செய்த திருவாசகம் அவர் நுகர்ந்த அப்பேரின்பத் தேறலைத் தன்னிற் பொதிந்து வைத்திருத்தலின், அதனைப் பருகுவா ரெல்லாம் அப்பேரின்ப நிலையினை எளிதில் எய்துவரென்பது சொல்லவும் வேண்டுமோ? இத்துணை விழுமிதான திருவாசகத்தை ஓதியும் உருகாத ஓருயிர் இருக்குமாயின், அதனைக் கல்லென்று கழறுதுமோ, அன்றி மண்ணென்று வகுக்குதுமோ, இரும்பென்று இயம்புதுமோ, சொன்மின்கள்! மேலுங் கடவுளை நேரே காணாதவர்கள், காணாமையின், அதன் பேரின்பத்தை நுகர்ந்தறியாதவர்கள், பிறதுறையில் எவ்வளவுதான் சிறந்தவர்களாயினும், அவர்கள் பால் யாம் அப்பேரின்பச் செல்வத்தைப் பெறுதல்கூடுமோ? கூடாது. பெரும்பொற்றிரள் புதைந்ததோர் இடம் இக் கானகத்தின்கண் உளதென்று மட்டும் ஒருவாற்றா னறிந்து, அதன்கண் அஃதுள்ள இடம் இதுதான் என்று குறித்துணரமாட்டாது அல்லும் பகலும் அப் பொருளுக்காக ஏக்கற்று நின்று வருந்தும் ஒரு வறிஞன் மற்றையொரு வறிஞனுக்கு அதனை எடுத்துத்தர மாட்டுவனோ? இங் ஙனமே கடவுளைக் காணப்பெறாத ஆசிரியர்களைப் பின்பற்றிச் செல்வாரெல்லாருந் தாம் கருதிய பயனைப் பெறாமல் ஏமாந்து, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினவரோடு ஒப்பத் தம் அரும்பெறற் பிறவிப்பயனையும் இழப்பர். ஒருவன் உலகம் எல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து விடுவனாயின் யாது பயன்? என்று மேனாட்டு ஆசிரியரொருவர் வினாவியாங்குக், கடவுள் அல்லாத மற்றைப் பொருள்களின் உண்மையெல்லாம் ஒருவன் ஓராசிரியர்பால் உசாவித் தெளிந்தானாயினுந், தன் னுயிர்க்குயிராய் நின்று பிறவிகடோறுந் தனக்குப் பெருந் துணையாயிருந்து உதவுங் கடவுளின் உண்மைநிலையைத் தெளிந்திலனாயின், யாது பயன்? பொறுத்தற்கரிய விடாய்கொண்டு தீம்புனல்வேட்டு வருவான் ஒருவனுக்கு, அவன் வேண்டிய அந் நீரினைக் காட்டாமல், நீரின் நலங்களை மட்டும் விரித்து உரைத்துக் கொண்டிருப்பான் ஒருபேதை எதிர்ப்படின், அவன் இவன் சொல்லை ஒரு பொருட்டாகக் கருதிக் கேட்டு நிற்பனோ? நில்லானன்றே; தான் வேண்டிய குளிர்ந்த நீநிலையைக் காட்டும் ஏனையொருவனை நாடியேயன்றோ செல்வன். அதுவோல், நம்மைப் படைத்த நம் அப்பனைக் காணும் விழைவு மிக்கு அதனை ஆற்றாதே நிற்கும் நாமும், அவனைத் தாம் கண்டு நமக்குங் காட்டவல்ல உண்மை யாசிரியரைச் சார்ந்தன்றோ அப் பெறலரும் பேற்றைப் பெறுதல் வேண்டும். அத்தகைய உண்மையாசிரியன்மார் மாணிக்கவாசகரும் அவர்க்குப்பின் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரருமேயாதலை அவர்கள் அருளிச்செய்த திருவாசகந் தேவாரம் என்னும் அருட்செம் பாடல்களால் நன்கறியப் பெறுகின்றோம். கடவுளைக் கண்டவரின் நிலைகளும், அவர் கண்ட காட்சிகளும் அவர்தாமே எடுத்துரைக்க வல்லுநரன்றி, ஏனையோர் வல்லுநர் ஆகார். புதிது விரிந்த ஒரு கொழுந் தாமரை மலரின் நறுமணமும் பெருநலனும் அது தானே நமக்கு விளங்கக் காட்டி நம்மை இன்புறுத்துமல்லால், அவற்றை வாயாற் சொல்வா ரொருவர் அங்ஙனம் அவற்றைக் காட்டி நம்மை இன்புறுத்த மாட்டுவரோ? மேலும் ஓராசிரியரின் நிலைகளை எடுத்துரைக்கப் புகும் மற்றொருவர் அவர்பால் மிகுந்த பற்றுடையராயின், அவரை அளவிறப்பப் புகழ்தலோடமையாது; அவர் காணாதவைகளைக் கண்டனவாகவுஞ் செய்யாதவைகளைச் செய்தனவாகவுஞ் சொல்லி உண்மைக்கு மாறான பொய்களைப் புனைந்து கட்டிவிடுவர். அங்ஙனமே ஓராசிரியற்பாற் பகைமை கொண்டாரொருவருந் தம் பகைமையை வெளிக்காட்டாது அகத்தடக்கி அவர்தம் நிலைகளைக் கூறப் புகுவராயின், இவர் அவரைக் குறிப்பாலிகழ்தலோடமையாது, அவரிடத்தில்லாத குற்றங் குறைகளையெல்லாம் ஏற்றிப் பொய்யான பலவற்றையும் புனைந்து கட்டிவிடுவர். இவ்வாறாக, ஆசிரியரின் நிலைகளைக் கூறப் புகும் ஏனையோர் இருதிறத்தினராய் அவர்தம் உண்மை நிலைகளைப் புரட்டிவிடும் பெற்றியினராகவே பெரும்பாலுங் காணப்படுதலால், அவருரைகள் ஏற்கற்பாலன அல்ல. கடவுளைக் காண்டற்குரிய பேறு வாயாதவர்களையெல்லாம் அது வாய்த்தவர்களாகக் கட்டிவிட்டுப் பிறர் சொல்லிய கதைகட்கோர் அளவேயில்லை. ஆதலால், அத் தன்மையவாம் பொய்க்கதைகளுட் சேர்ந்தனவாகாமற், சைவசமய ஆசிரியன் மார் கடவுளை நேரே கண்டு தாம் எய்திய பேரின்ப நிலைகளும், தாம் பெற்ற அப் பேரின்ப நிலைகளை இவ் வையகமெல்லாம் பெறல் வேண்டுமெனக் கருதி அவர் செய்த செயற்கருஞ் செயல்களும் அவரருளிச் செய்த திருவாசக தேவாரச் செந்தமிழ் மாமறைகளிலிருந்தே நன்கு புலனாகிக் கமழ்தலால், அவர்தம் வரலாறுகளை ஆய்ந்துணரும் உணர்ச்சியொன்றே பிறவிக்கடலிற் கிடந்துழலும் நம்மனோரைப் பேரின்பக் கரையில் ஏற்றவல்லதா மென்பதை யாவருங் கடைப்பிடித்தல் வேண்டும். இனிச், சைவசமயாசிரியன்மார் நால்வருள்ளுந் திருஞான சம்பந்தப் பெருமான் மூன்றாண்டுச் சிறுகுழந்தையாயிருந்த போதே அம்மையப்பராம் இறைவன்றன் அருளுருவினை நேரே கண்டு, அருட்பால் ஊட்டப் பெற்றுப், பதினாறாயிரஞ் செந்தமிழ்த் தெய்வப்பாடல்களைப் பொழிந்து, கடவுள் இல்லையென்று பாழ்ங்கொள்கை பேசிய சமணராற் கடவுளை நம்பினார்க்கு இழைக்கப்பட்ட கொடுந் தீங்குகளை யெல்லாம் வியத்தகு கடவுளருள் நிகழ்ச்சிகளாற் சுவடறத் தொலைத்து, எல்லாம் வல்ல இறைவனருட் பேற்றிற்கு எல்லாரும் உரியராம்படி அவ் வருள் ஒளியை இத் தமிழ் நாடு யாங்கணுந் திகழச் செய்த அளப்பருந் தெய்வமாட்சியில் ஒப்பாரும் மிக்காரும் இலராயினும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தெய்வப் பாக்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தைப் போல் ஓதுவார் நெஞ்சத்தை உருக்குந் தகையஅல்ல. அஃது ஏனென்றால் திருஞானசம்பந்தர், இந் நிலவுலகின்கண் மக்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்துவருங் கவலை நோய் காமம் வெகுளி பொய் புரட்டுக் கொலை களவு துயர் முதலான பல்வேறு அல்லற் படுகுழிகளைக் கண்டு, அவற்றின் கட் கிடந்து துன்புறும் மக்கட் பகுப்பினர் தம் நிலைகளையெல்லாம் உணர்ந்தவர் அல்லர். இவ்வுலக வாழ்க்கையின் இடர்களை உணர்வதில்லாச் சிறு குழவிப் பருவத்திலேயே, அம்மையப்பர் அருளுருவினை நேரே கண்டு அதன்கட் டமது உணர்வு முற்றும் பதியப் பெற்றவர். உலக இயற்கைத் தோற்றங்களிலுள்ள அழகுகளும், இறைவன்றன் அருள்மாட்சிகளுமே இவர்தம் பாடல்களிற் பெரும் பாலுங் காணப்படுதற்கு இதுவே ஏதுவாகும். இவர் குழவிப் பருவங்கடந்து இளமைப்பருவத்தை எய்தியகாலத்தே. உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்கள் சில இவரது உணர்வுக்குப் புலனாகத் துவங்கினவென்பது, அப்போது அவரருளிச்செய்த சில திருப்பதிகங்களால் உய்த்துணரக் கிடப்பினுந், துன்பம் நிறைந்த இவ் வுலக வாழ்விற் பெரிதும் வெறுப்புற்று, அவர் தமது திருமணம் நிகழ்ந்த அஞ்ஞான்றே இறைவன் றிருவருளிற் கலந்திட்டா ராகலின், மக்களின் துன்ப நிலைகளையும், அவற்றினின்று திருவருளுதவியால் மீண்டு இறைவனருளைத் தலைக்கூடும் வகைகளையும் மாணிக்கவாசகரைப் போல் அத்துணை உருக்கமாக எடுத்து விரித்துப் பாடுதற்கு அவர் இடம்பெற்றிலர் மற்று, மாணிக்கவாசகரோ அவரைப்போல் தமது குழவிப் பருவத்திலேயே இறைவனைக் கண்டு, சிறிதுகாலத்தில் அவனருளிற் கலந்தவரல்லர். ஏனை மக்களுட் சிறந்த குடிப்பிறந்த மகாரைப்போல், அஞ்ஞான் றுள்ள கலைகளையெல்லாம் பல்லாண்டுகள் முயன்று கற்று அறிவு நிரம்பித், தாய்தந்தையர் சுற்றத்தவரால் மணஞ் செய்விக்கப் பெற்று, அவரிடையே செல்வவாழ்க்கையில் வாழ்ந்து, பின் பாண்டிய அரசற்கு அமைச்சராய் அமர்ந்து, உலகியலுள் விரசிக் காணப்படும் நலந் தீங்குகளையெல்லாம் மாறிமாறி நுகர்ந்து, பின்னர்ச் சடுதியிலே திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்ணாரக் காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானவர்; இவ்வாறவர் உலகவாழ்வி னூடுசென்று சிவபிரான்றிரு வருளைப் பெற்ற குறிப்பு, மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்துஎன்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல் காட்டி, ஆடுவித்துஎனது அகம்புகுந்து ஆண்டதோர் அற்புதம் அறியேனே என்று அவர் தாமே அருளிச்செய்த திருப்பாட்டால் நன்கு விளங்கா நிற்கின்றது. இத்தகையதொரு செய்யுளைத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களிற் காண்டல் அரிதினும் அரிது; மற்றுத், திருவாசகத்திலோ இன்னோ ரன்ன கருத்துக்கள் உள்ளடங்கிய செய்யுட்கள் பற்பல. இங்ஙனம் மக்கள் வாழ்க்கையில் எங்குங் காணப்படுங் குற்றங் குறைகளை ஒருவர் நினைந்து, அத்துணைத் தீங்கு களையும் பொறுத்து எத்துணையுந் தூயனாகிய இறைவன் எத்துணையும் எளிய தம்மை ஒரு பொருட்டாக்கி ஆளும் அருட்டிறத்தையும் நினைந்து, அவை இரண்டனையும் ஒப்பிட்டு நோக்கி நெஞ்சம் நெக்கு நெக்குருகி அலறிப் பாடுவராயின் அவர் பாடும் அச் செய்யுட்களே, நமது சிறுமை யினையும் எல்லாம் வல்ல ஐயன்றன் அருட்பெரும் பெருமை யினையும் மறுதலைப் படுத்துக் காட்டி நமதுள்ளத்தை உருக்கி நம்மை இறைவன் றிருவடிக்கு ஆளாக்குவனவாகும். இவ்வாறு மக்கட்பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில் எடுத்தெடுத்து விளம்பி, அம் மக்களுள்ளத்தைக் கரைத்துத் தூய்மை செய்தற்கண் மாணிக்கவாசகர் திருவாசகத்துக்கு ஈடாவதொரு நூல் எம்மொழியினுமே இல்லை இதற்கு, நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நான்எனது எனும்மாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்நின்றுஅப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்துஅடித்துஅக் காரம்முன் தீற்றிய அற்புதம் அறியேனே என்னும் ஆரமிர்தன்ன அடிகளின் திருபபாட்டே பின்னும் ஒரு சான்றாம். மேலும், அடிகள் இறைவனை முன்னிலைப்படுத்து அழுதுரைக்கும் பாக்களைப் போல்வன, ஏனை ஆசிரியன்மார் தேவாரத்திருப்பதிகங்களில் மிகுதியாயில்லை. அவர் அருளிச்செய்த திருப்பதிகங்களெல்லாம் பெரும்பாலுஞ் சிவபிரானைப் படர்க்கையிடத்துவைத்தே பரவுகின்றன. தன் தலைவன் முன்நின்று அவனை முன்னிலைப்படுத்து ஓர் அடியவன் தனக்குள்ள குற்றங் குறைகளை எடுத்து மொழிந்து அவனது அருளை வேண்டுங்கால், அவன் நெஞ்சம் நெகிழ்ந் துருகுமாறுபோல், தன் தலைவனைக் காணாவிடத்தே யிருந்து அவன் எத்துணைதான் தன் சிறுமையினையுந் தன் றலைவன்றன் அருட்பெருமையினையும் நினைந்து பார்ப்பினும் உரைப்பினும் அவன் நெஞ்சம் அத்துணை மிகுதியாய் உருகாது. இவ் வியற்கை மன நிகழ்ச்சிக்கு இசையவே, இறைவனை முன்னிலைப்படுத்துப் பாடிய அடிகளின் திருவாசகமுங் கன்னெஞ்சினையும் உருக்குந்திறம் பெறலாயிற்றென்றும். அவனைப் படர்க்கை யிடத்து வைத்துப் பாடிய ஏனையாசிரியன்மார் மூவரின் திருப்பதிகங்கள் அத்துணை யுருக்கம் பெரும்பாலும் வாயா வாயினவென்றும் அறிந்துகொள்ளல் வேண்டும். அதுவல் லாமலும், இறைவனைக் கண்ணாரக் கண்டு அவனுக்கு ஆளான காலந்தொட்டு, மாணிக்கவாசகர் தமக்கு எளியனாய் வந்த அவ் வாண்டவனுருவினைத் தமது அகக்கண் எதிரே ஓவாது கண்டு உருகுதற்கு உரியவரானார். திருப்பெருந்துறையிற் குருந்தமரநீழலில் அடியவர் குழாத்தொடும் போந்தமர்ந்து தம்மை ஆட்கொண்ட குருவடிவினையும் அதன்பிற் குதிரைகள் கொணர்ந்த வாணிகச்சாத்திற்குத் தலைவனாய் ஓரழகிய பரிமீது இவர்ந்து பாண்டியன்முன் போந்து தம்பொருட்டு அக்குதிரையின் பல்வேறு நடைகளையும் அவ்வரசன்முன் நடாத்திக்காட்டிய சேவகன் வடிவினையும், அதன்பின் மதுரைப் பிட்டுவாணிச்சி பொருட்டு மண்சுமக்குங் கொற்றாளாய்ப் போந்து பாண்டிவேந்தன் கையாற் பிரம்படியுங்கொண்டு மறைந்த ஐயனருமைத் திருவுருவினையும் மாணிக்கவாசகர் நேரே கண்டவராதலின், பொல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட மக்களுக்காகத், தேவர்க்கும் அரியனான சிவபிரான் அத்துணை எளியனாய் வந்து செய்த பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து ஆற்றா நிலையினராகி அவ் வாண்டவன்பால் வைத்த பேரன்பால் ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியப் பெற்றார். பலகாற் பல்லாருங் காணவந்து இறைவன் மாணிக்கவாசகர்க்கு அருள்செய்தவாறு போல் வேறெவர்க்குஞ் செய்திலன். இஃது அடிகளே, கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை யம்பலத்தே கண்டேனே என்று அருளிச்செய்தவாற்றால் தெற்றென விளங்கா நிற்கின்றது. திருஞானசம்பந்தப்பெருமானுக்குப் புலனாய்த் தோன்றிய இறைவனுருவம் வேறெவர்க்கும் புலனாயிற்றில்லை. அப்பர்க்குத் தோன்றியதும் அப்பெற்றியதே, சுந்தரர்க்குப் பார்ப்பன முதியோனாய்த் திருமணப் பந்தலிற் றோன்றிய வடிவம் பல்லாருங் காண வந்ததொன்றே யாயினும், அது திருவெண்ணெய் நல்லூர்க்கு அவரை ஈர்த்துச் சென்று மறைந்தக்கால், அதனைக் கண்டு தெய்வமெனத் தெளிந்தவர் சுந்தரரைத் தவிர மற்றையோர் அல்லர். மற்று, மாணிக்கவாசகர் பொருட்டுக் குருவடிவிற் போந்து மறைந்த முதல்வனையோ எல்லாருங் கண்டனர்; கொற்றாளாய் வந்து பாண்டியன் கைப்பிரம்பால் அடியுண்டு மறைந்த கோலத்தினையும் அங் ஙனமே ஆண்டிருந்தாரெல்லாருங் கண்டு மெய்ம்மறந்த நிலையினரானார். அதனால், எல்லாம்வல்ல சிவபிரான் மாணிக்கவாசகர் பொருட்டு எல்லார்க்கும் எதிரே எளியனாய்த் தோன்றி மறைந்தாற்போல், வேறெவர் பொருட்டும் எங்கேனுஞ் செய்ததுண்டோ வெனின், அதற்குச் சான் றின்மையின், அவ்வாறு செய்ததில்லையென்பதே தேற்றமா மென்று முடிக்க. இவ்வாறு, எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை நேரே கண்டு அவற்கு அடிமையாகி அவன்மேற் குழைந்து குழைந்து அழுதழுது பாடிய மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஓதியுருகாதார் நெஞ்சம் வேறெதனாலும் உருகா தென்பதுபற்றி யன்றோ, திருவாசகத்தின் உருகார் மற்றொருவாசகத்தும் உருகார் என்னும் பழமொழியும் யாண்டும் வழங்கிவருகின்றது. நெஞ்சக்கசிவு, நெஞ்சக்குழைவு இல்லாதவர்கட்கு அருளும் அன்பும் இரக்கமும் உண்டாகா; அவையில்லாதவர்கள் தம்மோடொத்த மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்களிடத்தும் அருளும் அன்பும் இரக்கமும் உடையராகார்; இச்சிறந்த மென்குணங்கள் இல்லாதவர்கள் இம்மையிலும் இனிய வாழ்க்கையினை எய்தாராய் பெரிதுந் துன்புற்று மடிவதோடு, மறுமையிலும் இறைவனருளைப் பெறாராய் இழிந்த பிறவிகளிற் சென்று புகுந்து துன்புறாநிற்பர். தமக்கு இப் பிறவியைத் தந்த தலைவன்பால் நன்றிமிக்கு, அவனை உருகி வழுத்தாதவர்க்கு இம்மை மறுமையிரண்டிலும் இன்பமில்லையாத லாலும், தமக்குப் பேருதவி செய்த தலைவனை வணங்கி வழுத்துதல்விட்டுத் தம் தலைவனல்லாத மக்களையும் ஏனைச் சிற்றுயிர்களையுந் தம் தலைவனாகப் பிழைபடக் கொண்டு வழிபடுவார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்கள் வாயாவாதலாலும், தந்தலைவன் இன்னவன்றான் என்றுணராருந் தமக்குத் தலைவனேயில்லையென்று மறுப்பாரு மான போலியாசிரியர்களைப் பின்பற்றி நிற்பார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பேறுகள் வாயாவாதல் திண்ணமாமாதலாலும், உலகுயிர்கட்கெல்லாம் ஒரே தலைவனாய்த் தாயுமிலி தந்தையிலியாத் தனிநிற்குஞ் சிவ பிரானை நேரேகண்டு அவன்பால் என்பெலாம் நெக்கு நெக்குருகப் பாடிய மாணிக்கவாசகர் தந் திருவாசகம் ஒன்றே நமக்கு இம்மை மறுமைப் பேறுகளெல்லாம் ஒருங்கே யுதவுமென்று கடைப்பிடித்தல் வேண்டும். இத்துணைச் சிறந்த தெய்வத் திருவாசகத்தையும் அதனை அருளிச்செய்த மாணிக்கவாசகப் பெருமானையும் இத் தென்றமிழ் நாட்டிலுள்ள நன்மக்கள் முறையே ஒப்புயர் வில்லாத் தமிழ்மறையாகவும் சமயாசிரியராகவும் வைத்து வழிபட்டுவருதல், அவர்தம் மெய்யறிவின் மாட்சியையே விளக்கிக் காட்டுகின்றது. ஏனை எந்த நாட்டவர்க்கும் வாயாத இவ் வரும்பெரும்பேறு தமக்கு வாய்த்திருத்தலை நன்குணர்ந்த தமிழ்மக்கள், திருப்பெருந்துறையில் உள்ள திருக்கோயிலில் மாணிக்க வாசகரையே சிவபிரானாக வைத்து வழிபாடு செய்துவருவது பெரிதும் போற்றற்பாலதொன்றாம். வெறு நாடகக்காப்பியம் இயற்றிய செகப்பிரியர் என்னும் ஆங்கில நல்லிசைப்புலவர் உயிர்வாழ்ந்த இல்லத்தையும் ஒரு கோயிலாக்கி, இவ் வுலகமெங்கணுமுள்ள ஆங்கில அறிஞர்கள் மெய்யன்புடன் அங்கே சென்று அங்கு அமைந்திருக்கும் அவர்தம் உருவத்தை வணங்கிச் செல்கின்றார்களென்றால், எவராலுங் காணமுடியாத கடவுளைக் கண்டு அவர்க்குந் தமக்கும் உண்டான கெழு தகைமைகளை யெல்லாம் எம்மனோர்க்குத் தெய்வத் தமிழ்ப் பாக்களால் தெளிய அறிவுறுத்திய இத்தெய்வ ஆசிரியர் மாணிக்கவாசகரை, இத்தென்றமிழ் நாட்டவரேயன்றி இவ்வுலக மெங்கணுமுள்ள அறிஞர்களெல்லாரும் வந்து வணங்கிப் பெறற்கரும் பேற்றைப் பெறுகவென்றழைத்தல் எம்மனோர்க்கு இன்றியமையாத கடமையன்றோ? இவ் வரும்பெருங் கடமையினை நன்கு நிறைவேற்றுதற் பொருட்டாகவே, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் இப் பெருநூலினை மாணிக்கவாசகப் பெருமான் திருவடித் துணை கொண்டு ஆறு ஆண்டுகளாக ஆராய்ந்தெழுதி வெளியிடலானேம். இப்பெருமான்றன் திருவடித் தூசின் மிகச் சிறு துகள் ஒன்றிற்கும் ஒவ்வாத சிற்றறிவினேமாகிய எம்மையும் இம் முயற்சியிற் புகுத்தி, இதனை நிறைவேற்றி வைத்த சிவபிரான் திருவடிப்போதுகளுக்கே இந்நூலை மாலையாக அணிந்து அவற்றை வழுத்துகின்றோம். இனி, இந் நூல் எழுதுதற்கட் கைக்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி முறைகள் சிலவற்றைப்பற்றிச் சில கூற வேண்டுவது இன்றியமையாததாகின்றது. மாணிக்கவாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல, அவ்வரலாறு நுவலும் நூல்களில் உள்ள படியே இங்கு எடுத்து எழுதப்படவில்லை. ஏனென்றால், அக் குறிப்புகளிற் பல ஒரு புராணத்திற் காணப்பட்டபடியே, மற்றொரு புராணத்திற் காணப்படவில்லை; ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படுகின்றன; அம் மாறுபாடுகளும் பிறவும் இந்நூலின்கண் ஆங்காங்கு எடுத்துக்காட்டி அவற்றுட் கொள்ளற்பாலன இவை, தள்ளற்பாலன இவை யென்பதை நன்கு விளக்கிக்காட்டி யிருக்கின்றோம். இவ்வாறு காட்டு மிடங்களிலெல்லாந் திருவாசகச் செந்தமிழ்ப் பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சான்றுரைகள், அடிகளின் உண்மை வராற்றுக் குறிப்புகள் இவையென்று நாட்டுதற்கு உதவியாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இறைவனை வழுத்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக் குறிப்புகளைத் தம்வய யின்றியே மொழிந்துவிடுமாறு நேர்வித்த சிவபிரான்றிரு வருட்கு எங்ஙனம் நன்றி பகரவல்லேம்! அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகந் திருக்கோவையாரிற் காணப்படுங் குறிப்புகளுடன் வைத்து ஒத்து நோக்கி அவைதம்மை எழுதியிருந்தனராயின், புராணகாரர்கள் அங்ஙனந் தம்முள் மாறுகொண்டுரையார், புராண காரருரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப் படாத குறிப்புகளை ஆராய்ந்துகண்டு எழுதுகின்றுழியுந், திருவாசகந் திருக்கோவையாரின் இடை மிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின் வரலாற்றுண்மையினைத் துணிதற்குக் கருவி களாயின. இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவரியற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட்குறிப்புகளையே பெருந்துணையாய்க் கொள்ளும் ஆராய்ச்சி முறை இந் நூன்முழுதும் ஊடுருவி நிற்றல் கண்டுகொள்க. அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம். இனி, அடிகளிருந்த காலமும் அக் காலநிலையும் உண்மையாக விளங்கினாலன்றி, அவரது வரலாற்றினுண்மையும், அவர் அருளிச்செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறியவேண்டி நிற்கும் முற் கால பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களிற் காலங்கடோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் தமிழ்மொழி தனித்தமிழுங் கலப்புத்தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற அரசியல்களின் உண்மையும் அவ்வக் காலங்களில் திரிபெய்திவந்த ஒழுக்கங்களின் உண்மையும் பிறவும் உள்ளவாறறிதல் இயலாது நூல்களின் காலவரையறை தெரியாதவரையிற், பழையது புதியதாகவும் புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும் பொய் மெய்யாகவும், முன்னிருந்த ஆசிரியர் பின்னிருந்த வராகவும் பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப் பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடு மாற்றமே தலைவிரித்தாடும். இத் தலைதடுமாற்றப் பேயாற் பிடியுண்டு நிற்கும்வரையில் மக்கள் பொய்யான வழிகளில் அலைந்து திரிந்து மீளாத் துன்பத்திற்கு ஆளாகி நிற்பர். ஆனதனாற்றான், உண்மையை யுள்ளவாறுணர்ந்து இம்மக்கட்பிறவியை உண்மைநெறியிற் செலுத்தி முன்னேற்றுதற்கு, அறிவையும் இன்பத்தையும் நமக்கு வழங்கிய நம்மாசிரியரிருந்த காலங்களையும் அக் காலநிலைகளையும் உணர்வதில் ஐரோப்பிய அறிஞர்கள் பெருவேட்கையும் பெருமுயற்சியும் உடையவர்களா யிருக்கின்றனர். முற்காலத் திருந்த அறிஞரின் உண்மைநிலைகளை யெல்லாம் உண்மையாக ஆராய்ந்தறிந்து, உண்மையறிவில் தலைசிறந்து வருதலினாற் றான் மேனாட்டு வெண்மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் நாகரிகத்திலும் இன்பவாழ்விலும் நாளுக்குநாள் வளர்பிறை போல் வளர்ந்து, அவ்வுண்மையறிவு வாயாத மற்றை நாட்டவர்களையெல்லாந் தம் அடிக்கீழ்ப் படுத்துச் செங்கோ லோச்சி வருகின்றனர். கால ஆராய்ச்சி செய்து அவ்வக்கால நிலைகளையும் அவ்வக்காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமையினாற்றான், நம்நாட்டவர்கள் பொய்க் கதை களிலும் பொய்த் தெய்வ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாதவர் களாய், அதனாற் றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழி வகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித், தம்முட் பகைமையும் பொறாமையுங் கொண்டு, நோயிலும் வறுமையிலும் உழன்று, தீவினைக்காளாகி மங்கி மடிந்து போகின்றனர்! எனவே, இம் மக்கட்பிறவியைத் தெய்வப்பிறவி யாக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்குவது, கால ஆராய்ச்சியால் உரங் கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம். இத்துணைச் சிறந்த கால ஆராய்ச்சிமுறை இத் தமிழ்நாட்டகத்திலுள்ள அறிஞரெவராலும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு, நந் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலினும் இது காறும் விரிவாகக் காட்டப்படாமையின், மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்கவாசகர் காலம் எம்மால் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று. புதிது புகுந்த தமிழ்ச்சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களிற் றோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன் நூல்களி லின்றிப் பின் நூல்களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராண கதைகளாலும், முற்பிற் காலங்களிற் பொருள் வேறுபட்ட சொற்களாலுஞ் சமயக் கோட்பாடுகளாலுங், காலங்கடோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர் நூலிலுள்ள சொற்பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும் வகைகளாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந்நூல்களிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகைகளாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயின வற்றிற் புலனாம். அரசரின் காலக்குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல்நாட்டவர் வரைந்துவைத்த வரலாற்று நூல்கள் முதலாயினவற்றில் தமிழர் ஆரியரைப் பற்றி நுவலும் பகுதிகளாலும், இன்னோரன்ன பிறவற்றாலுந் தமிழாசிரியர் தமிழ்நூல்களின் காலவரையறைகளும், அவ்வக் கால வியல்புகளும், அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப் பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களுஞ் சுட்டிச் சொல்லப்பட்டிருக் கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப்பட்டிருத்தலால், இந் நூலைக் கற்பவர்கள்யாம் செய்து காட்டும்ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற்கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல் கூடும். பெரும்பாலும் தமிழில் உரை நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதும் அறிஞர்கள் தமது கோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர்களைக் கூட மொழியாதுபோவர்; ஏனென்றால், அங்ஙனங் குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும் பேருழைப்பும் நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையுங் காலக் கழிவினையும் பொருட்செலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்பதொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ் வொன்றுக்கும் மேற்கோள்களும் அவையுள்ள இடங்களுங் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம் முறை யினைத் தாமுங் கையாண்டு உண்மையராய்ச்சியினை ஓம்புவாராக! இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலுந் தெய்வத்தன்மை யுடைய வராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும் பிழையெனக் கண்டவைகளை மறையாது வெளிப்படையாக எடுத்துக் காட்டியிருக்கின்றேம். கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்தவராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரே. அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு என்று அருளிச்செய்தமையானுந் தெளியப்படும். ஆகவே, அறிவில் மிகச் சிறந்த சான்றோர்களும் ஒரோவழிப் பிழை படுவராயின், அவர் செய்த அப் பிழைகளை உண்மை விளக்கத்தின் பொருட்டு எடுத்துக்காட்டுதல் அவர்பால் யாம் வைத்துள்ள அன்புக்கும் நன்கு மதிப்புக்கும் எள்ளளவும் பழுதுசெய்யாது. ஒரோவொருகாற் பேரறிவினர்பால் மெய்யல் லாதன தோன்றுதலுஞ், சிற்றறிவினர்பால் மெய்யாவன தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சிகளிற் காணக்கிடத்தலின், உண்மையாராய்ச்சி செய்பவர்கள், அவ்வவர்தம் பெருமை சிறுமை பாராது, அவ்வவற்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து கண்டெழுதுதலே, உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுக லாறாம்; இது தேற்றுதற்கன்றோ ஆசிரியர் திருவள்ளுவனாரும், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று அருளிச் செய்வாராயினர்? இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப்பிடியாய் நில்லாது, இவர் தெய்வத்தன்மை வாய்ந்த ஆசிரியர்; இவரியற்றிய இந்நூலிற் குற்றங் குறையாவது ஏதும் இராது என்று குருட்டுப் பிடியில் உறைத்துநின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையுங் கண்டவாறு புறம் பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் உளர்; அத்தன்மையினாருரைகளை ஒருபொருட்டாக வையாது, மெய்மையாராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க. மாணிக்கவாசகப் பெருமான் இருந்த காலம் இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டுகட்குமுன், அஃதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட்படுவதா மென்பதனை, இருபத்தேழு ஆண்டுகட்குமுன் வெளிவந்த ஞானசாகர முதற் பதுமத்தின்கண் வெளியான மாணிக்க வாசகர்கால நிருணயம் என்னுங் கட்டுரையில் நன்கு விளக்கினேம். அக்கட்டுரையும் இந் நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதன்பின் இருபஃதாண்டுகளாய்ப் பொதுவாகத் தமிழ்நூற் கால அளவைகளைப் பற்றியுஞ் சிறப்பாக மாணிக்கவாசகரிருந்த காலவரையைப் பற்றியும் அறிஞர் பலரால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் நூல் களையுஞ் செவ்வனே ஆராய்ந்துபார்த்து, அவற்றுட் பொருந்துவனவும் பொருந்தாதனவும் வேறுபிரித்துக் காட்டிப், பண்டைத் தமிழ்ப்பெரும் பனுவலாகிய தொல்காப்பியம் முதற் பின்றைத் தமிழ்ப் பேரறிவு நூலாகிய சிவஞான போதம் ஈறாக வந்த தென்னூல் வடநூல்களின் காலங் களையெல்லாம் வரையறை செய்து நிறுவி, அம் முகத்தால் மாணிக்கவாசகப் பெருமான் காலம் திருநாவுக் கரையர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் முதலான சைவசமயாசிரியர் ஏனை மூவர் காலத்திற்கும் முன்னே கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்கண் மிளிர்வதாதலை இப்போது மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றோம். இங்ஙனம் யாம் எமது இளமைக்காலத்திலேயே இவ்வுண்மையைக் கண்டுணரு மாறு எமதுணர்வுக்கு உணர்வாய் நின்று விளக்கி, அதனை என்றும் நிலைபெறச் செய்த சிற்றம்பலத்தெங்கள் செல்வப் பெருமான் திருவடிகட்கு எமது புல்லிய வணக்கம் உரிய தாக! ஓம்சிவம். பல்லவபுரம், மறைமலையடிகள் பொதுநிலைக்கழக நிலையம், திருவள்ளுவர் ஆண்டு 1960 மாசி, முதல்நாள் மாலை. பொருளடக்கம் மாணிக்கவாசகர் வரலாறு பக்கம் 1. மாணிக்கவாசகர் பிறப்பு 45 2. அருள்பெற்றவரையுள்ள ஆய்வு 49 3. ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு 55 4. ஆவணி மூலத்திற் குதிரை வருமென்றல் 69 5 குதிரைப்பாகற்கும் மன்னற்கும் இடை நிகழ்ந்த நிகழ்ச்சி 80 6. நரியைப்பரியாக்கியது அடிகள் பொருட்டே 87 7. இறைவன் மண்சுமந்து அடிபடுதல் 96 8. பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் 105 9. புத்தரொடு சொற்போர் தொடங்குதல் 117 10. புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல் 124 11. சைவ சமயக் கோட்பாடுகளை விளக்கல் 134 12. புத்தகுரு தோற்றபின் நிகழ்ந்தவை 149 13. சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி 155 14. நால்வரே நல்லாசிரியர்கள் 169 15. பொருந்தாக் கொள்கைகள் புகுந்தமை 178 16. பொருந்தாக் கொள்கைகள் - தொடர்ச்சி 182 17. பௌத்தகுருவுக்கு விளக்கிக்காட்டிய உண்மைகள் 197 18. சிவவொளியில் மறைந்தமை 201 மாணிக்கவாசகர் காலம் 1. வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும் 207 2. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாது 214 3. திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல் 220 4. சிவனடியார் பலர் திருத்தொண்டத் தொகையிற் கூறப்படாமை 230 5. திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை 246 6. திருக்கோவையாரின் செய்யுட்பொருள் பழந்தமிழ் நூல்களோடு ஒத்தல் 264 7. வடநாட்டிற் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது 277 8. கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் 286 1. மாணிக்கவாசகர் பிறப்பு பாண்டி நாட்டில் வைகையாற்றங்கரையில் உள்ள திருவாதவூரின்கண் மானமங்கலத்தில் மறையோதும் ஓர் அந்தணர் குடியில் மாணிக்கவாசகப் பெருமான் பிறந்தருளினார், இவர் தாய்தந்தையர் பெயர் புலப்பட வில்லை. இவர் தந்தையார் பெயர் சம்புபாதாசிரியர் எனவும், அன்னையார் பெயர் சிவஞானவதியார் எனவும் இஞ்ஞான்றுள்ளார் சிலர் கூறினும் இப்பெயர்கள் நம்பியார் திருவிளையாடலினும், திருவாதவூரர் புராணத்தினுங் காணப்படாமை யானும், இத்தகைய வடமொழிப் பெயர்கள் பழைய நாளிலிருந்த தமிழர்க்குள் வழங்காமையானும் திருஞான சம்பந்தப் பெருமான் தந்தையார் பெயராகக் கூறப்படுஞ் சிவபாதவிருதயர் என்பதன் மொழி பெயர்ப்பாகச் சம்புபாதாசிரியர் என்னுஞ்சொற் காணப்படுதலோடு அவர் தம் அன்னையாரின் பெயரான பகவதி என்பதைப்போற் சிவஞானவதி என்னும் மொழியுங் காணப்படலானும் இப்பெயர்கள் பிற்காலத்தார் எவரோ புனைந்து கட்டி விட்டனவாதல் தேற்றமாம். இனி, இவர் பிள்ளைப் பருவத்தினராய் இருந்தஞான்று இவர்க்கு வழங்கிய பெயரும் இன்னதென்று புலனாகவில்லை. திருவாதவூரர் என்பதும் அவர் திருவாதவூரிற் பிறந்தமைபற்றிப் பிற்றை ஞான்று வழங்கிய தொன்றேயல்லது, அஃது அவர்தம் இயற்பெயரன்று, இனி மாணிக்கவாசகர் என்பதும் அவர் அருளிச்செய்த நூல்களின் சொல் விழுப்பம்நோக்கிப் பின்வந்த பெயராக விளங்குதலின், அதுவும் அவரது இயற்பெயரன்று. அது நிற்க. திருவாதவூரடிகள் பிள்ளைப்பருவத்தே இயற்கை நுண்ணறிவு மிக்கவரா யிருந்தமையாற், பதினாறியாண்டு நிரம்புதற்குள் தமிழ் ஆரியம் முதலான மொழிகளில் உள்ள கருவி நூல்களும் அறிவு நூல்களுமெல்லாம் முற்றக்கற்று மறுவற்ற முழுமதிபோற் செய்கையறிவும் நிறைந்து திகழுவா ராயினர். அக்காலத்து மதுரையிற் செங்கோலோச்சிய பாண்டிய மன்னன் அடிகளின் நுண்ணறிவையுங் கல்விப் புலமையையும் ஏனை நல்லியல்புகளையும் ஆன்றோர் பலர் வியந்துரைக்கக் கேட்டு அவரைத் தன்மாட்டு வருவித்துப் பார்த்து, அவ்வான்றோர் உரைத்ததற்கு மேலாய் அவரியல்பு கள் இருத்தல் உணர்ந்து அவர்பாற் பேரன்புபூண்டு, அவர்க்குச் சிறந்ததொரு பட்டப் பெயருஞ் சூட்டி, அவரைத் தனக்கோர் அமைச்சராகவும் அமர்த்திக் கொண்டான். இங்ஙனந் தன்மாட்டு அவர்க்கு அமைச்சுரிமை நல்கிய பாண்டியமன்னன் பெயர் பழைதாகிய நம்பியார் திருவிளையாடலிலாதல் திருவாதவூரர் புராணத்திலாதல் எடுத்துக் கூறப்படாமையின், பிற்காலத்தினரான பரஞ்சோதி முனிவர் அவர் பெயர் அதிமர்த்தனன் எனச் சொல்லியதற்குத் தக்க சான்று இது தான் என்று துணிதல் ஏலாது பழையநாட் பாண்டியமன்னர் பெயர்களெல்லாம் பெரும்பாலுந் தூய தமிழ்ச்சொற் களாயிருக்க, அரிமர்த்தனன் என்னும் இது வடமொழியா யிருத்தலும் ஐயுறற்பாலதொன்றாம். இனி, அடிகள் அமைச்சராயிருந்தபொழுது எல்லாச் செல்வ வளங்களும் உடையராய், எல்லா இன்பங்களும் நுகர்ந்திருந்தாரென்பது மேற்குறித்த இரு புராணங்களாலும் விளங்குதலோடு, திருவாசகந் திருக்கோவை யாரில் அவர் ஆங்காங்கு அருளிச்செய்திருக்குங் குறிப்புகளானும் நன்கு புலப்படும். இவர் பிறவியிலேயே உளந்தூயராய்ச் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்புபூண்டு ஒழுகினமையின், உலகவின்பங்களை ஆராந்துய்த்து, அவற்றின்கண் உவர்ப்பு வரப்பெற்றாராய்த் தம்மைத் திருவருணெறிக் கட்படுவித்துத் தம் பிறவிவேர் அறுப்பானாகிய மெய்க்குரவனைத் தேடியடையும் வேட்கை மீதூரப்பெற்றார். ஞானாசிரியனைப் பெறுதற்கு மேன் மேலெழும் வேட்கை ஒருபால் ஈர்க்க, அரசன் தம்மேல் வைத்த அமைச்சியற்றொழிற் கடன் மற்றொருபால் ஈர்க்க இங்ஙனம் இவ்விரண்டன் இடையே சிவபிரான் றிருவருள் உதவியை எதிர்நோக்கியபடியாய் அடிகள் ஒழுகிவரலானார். இங்ஙனம் இருக்க, ஒருநாட் பாண்டிய மன்னன் அத்தாணி மண்டபத்தின்கண் வந்து வைகியவழிக், குதிரைத் துறைக்காவலர் அவன் திருமுன்போந்து பணிந்தெழுந்து ஐயனே! அளவிறந்த குதிரைகள் நோயால் இறந்து வீழ்ந்தன; எஞ்சி நிற்பனவும் பிழைக்குமோ பிழையாவோ என்னும் நிலையில் இருக்கின்றன; இதனாற் குதிரைப்படை கேடுறு மாதலால், உடனே ஓரிலக்கங் குதிரைகள் புதியவாய்க் கொண்டுவந்து சேர்த்தற்குத் திருவுளம் பற்றி யருள்க! என மொழிந்தனர். அதன்மேல் அரசன் குதிரைகள் எங்கே விலைகொள்ளலாம் என்று உசாவச், சோழ நாட்டில் திருப்பெருந்துறையை யடுத்த கடற்கரைப்பட்டினத்திலே மிலேச்சநாட்டு ஆரியர்கள் உயர்ந்த குதிரைகளைத் திரள் திரளாகக் கொண்டுவந்து இறக்கியிருக்கின்றனர்; அவற்றை யாங்கள் கண்டுவந்தோம், பெருமானே என்று ஒற்றர் சிலர் தொழுது கூறினர். அதுகேட்ட அரசன் தனக்கு முதல் அமைச்சராய்த் திகழும் மாணிக்கவாசகரைத் தன்மாட்டு வருவித்து நங் குதிரைத்துறைக் காவலர் நம் பரிகள் பெரும்பாலும் நோயால் இறந்தனவென் றறிவித்தார். ஆதலால், நீர் நமது களஞ்சியத்திலிருந்து வேண்டியவளவு பொன் எடுத்துச் சென்று, பரி நூல் இலக்கணத்திற்கு ஒத்த உயர்ந்த குதிரைகள் விலைகொண்டு வருதல் வேண்டும் என்று மொழிந்தான். அடிகளும் அங்ஙனமே விரைவிற் செய்வேன் எனக் கூறி விடைபெற்றுப் போந்து, கருவூலத்தைத் திறந்து, வேண்டும் பொருள் எடுப்பித்துக் கொண்டு, எடுத்த பொருள் இவ்வளவெனக் கணக்கிலும் பதிவித்துப், பரிவாரங்களைப் பயணத்திற்கு ஒழுங்குசெய்கவெனக் கற்பித்துக், கூடலாலவாய்க் குழகனையும் அங்கயற் கண்ணியையுந் தொழுதற்குக் கோயிலுட் சென்றார். br‹W ïiwtidí« ïiwÉiaí« m‹ghš mf§fiuªJ gªJ ‘m«ikna m¥gh, x¥ãyh kÂna, gh©oak‹d‹ VtštÊ¢ bršY« moa nd‰F¢ bršY«Éid Ôâ‹¿ ïÅJ ifTLkhW mUŸbraš nt©L«; vËand‰F Ëid ašyh‰ ã¿J Jizí©nlh bg«khnd! என வேண்டிப் பணிந்து திரும்புகின்றபொழுது, ஓர் அந்தணன் அவரெதிரே போந்து உவப்புடன் திருநீறு அளிக்க, அதனைப் பெற்று அணிந்து மேற்கொண்ட வினை கை கூடும் என மனங்களித்துவந்து தமது சிவிகையிலேறிக் கூடப்போதுவார் குழாம் சூழ்ந்துவர, மதுரை விட்டு அகன்றார். அகன்று பரிவாரங்களோடும் பெருவழி கடந்து திருக் கானப்பேர் என்னுஞ் சிவபிரான் திருக்கோயில் கொண் டருளிய ஊருக்கு வந்துசேர்ந்தார். அங்கே பரிவாரங் களுந்தாமுமாக இறங்கி நாட்கடன்கள் கழிப்பிச் சிவபிரானை வழிபட்டு, அயர்வு தீர்ந்தபின், அவ்வூரைவிட்டுப் புறப்பட்டு வழிச் செல்வாராயினார். இவ்வாறு நெடுவழி போய், முடிவாகத் திருப்பெருந்துறை என்னும் ஊருக்கு அணித்தாக வந்தனர். அவ்வூர்க்கு மிக அருகில் வந்துசேர்தலும், நெஞ்சமும் உரையும் வேறு தன்மையை அடைய, அன்பு கரைகடந்து எழக் கண்களில் நீர் ஒழுக, அனல்சேர் மெழுகென உள்ளங்கரையப்பெற்றார். இதற்குமுற் செல்வத்தின் மேலிருந்த அவாவானது அற்றுப்போகத் தமது நெஞ்சம் ஒருவழி யொடுங்குதலைக் கண்டு மிகவும் வியப்புற்று, இவ்விடத்தின் கண் ஏதோ ஒரு புதுமை இருத்தல் வேண்டும் என்று உணர்ந்தாராய், அவ்வூரின்கண் ஒரு பூஞ்சோலையின் பக்கமாய் அடிகள் தம் பரிவாரங்களோடுஞ் செல்வுழி, அச் சோலை யினின்றும் அறிவு நூல் ஓதுவார்தம் ஒலியானது வரக்கேட்டுத், தம் ஏவலர் சிலரை யழைத்து அஃதென்னை என்று பார்த்து வம்மின்! என ஏவினார். அவ்வேவல்வழிச் சென்றார் மீண்டு வந்து ஒரு குருந்தமர நீழலிலே அடியார் பலர் புடைசூழச் சிவபிரானை யொத்தவரான ஒரு பெரியார் எழுந் தருளியிருக்கின்றார் என்று கூறினார்கள். அதுகேட்ட தும், அவரைக் காணும் வேட்கை பெரிதுடையராய் அக் காவினருகே சென்று, சிவிகைவிட்டு இழிந்து, அதனுட்புகுந்து, அம்மெய்க்குரவனைக் கண்ட வளவானே தஞ்செயலற்று, உடல் நடுங்கி நிலத்தின்மீது விழுந்து பன்முறை பணிந்துநின்றார். அவ்வாசிரியனுந் தனது திருநோக்கத்தான் அடிகளை முடிமுதல் அடிகாறும் நோக்கி, அவரைப் புனிதராக்கித், தனதருகே அழைத்துப் பலகாலும் முறுவலித்து, அவர்தம் முடிமிசைத் தன்திருவடிகளைச் சூட்டித் திருவைந் தெழுத்தின் உண்மையை அவரது செவிப்புலத்து அறிவுறுத் தருளினான். 2. அருள்பெற்றவரையுள்ள ஆய்வு இதுவரையிற்போந்த வரலாற்றின்கண் ஆராய்ந்தறியற்பாலன சில உள. நம்பியார் திருவிளையாடலிலும், கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணத்திலுங் காணப் படும் இவ்வரலாற்றுப் பகுதியிற் சிற்சில மாறுபாடுகள் உள்ளன. அடிகள் திருப்பெருந்துறைக்கு அருகில் வருதலும் தஞ்நெஞ்சம் ஒடுங்கி அன்பின்வழிப்படுதல் கண்டு. அவ்விடத்தின்கண், தாமெடுத்து வந்த பொருட்டிரளோடும் வைகுதற்குக் கருதித், தம்முடன் வந்த பரிவாரங்களை யெல்லாம் நோக்கி ‘ஆவணித்திங்களிற்றான் குதிரைகள் வந்திறங்கும்; அப்போது அவற்றை யான் விலை கொண்டு வருவேன்; நீங்கள் இப்போதே பாண்டியமன்னன்பாற் சென்று இச்செய்தியை அறிவிமின்கள்! என்று சொல்லி விடுத்தருளினாரென்று நம்பியார் திருவிளையாடல் கூறாநிற்கும். மற்றுத் திருவாதவூரர் புராணமோ, அடிகள் அங்கெழுந்தருளிய மெய்க்குரவனால் ஆட்கொள்ளப்பெற்றுத், தாம் மேற்கொண்டு வந்த மன்னனது வினையை மறந்திருக்க, அவருடன் போந்த பரிவாரங்கள் அவரை யழைத்தும், அவர்களை இன்னா ரென்றறியாமல் அப்புறம் அகல்கவென்று ரைக்க, அவர்கள் தாமாகவே பாண்டியன்பாற் சென்றனரென்று கூறும். இவ்வாறு முரணும் இவ்விருவேறு வரலாறு களையும் ஆராய்ந்து பார்க்குங்கால் திருவாதவூரர் புராணவுரையே இவ்விடத்திற்குப் பொருத்தமாகக் காணப்படுகின்றது. என்னை? திருப்பெருந்துறையை அணுகியவுடன் தமக்கு நேர்ந்த உள்ள உருக்கத்தைக் கண்டு, சடுதியில் தம் பரிவாரங்களைப் பாண்டியன்பால் திருப்பி விட்டனரென்னும் நம்பியார் கூற்று ஆராய்ந்து செய்யாக் குற்றத்தை அடிகள்பால் ஏற்றுவதாய் முடிதலானும், எதனையுந் தீரத்தெளிந்து செய்யும் அமைச்சியற்றிறத்தில் தலைநின்றார் அடிகளென்பது இரு புராணங்களுக்கும் உடன்பாடாகலின் அவரது அத்தன்மைக்கு இழுக்காமல் அவர்தம் ஆசிரியனால் அடிமைகொள்ளப் பட்டபின் தாம் மேற்கொண்டுவந்த வினையை மறந்திருக்க அப்பரிவாரங்கள் தாமாகவே அவரை அகன்று பாண்டியன்பாற் சென்றனவென்று மற்றுத் திருவாதவூரர் புராணங் கூறுதலானும் என்பது. தஞ்செயலற்றுச் சிவன்செயலாய் நின்று உலகியல் நிகழ்ச்சிகளை மறந்திருப்பாரைக் குற்றங் கூறுவார் யாண்டும் இலர். பேய்பிடி யுண்டாரையும் வெறிபிடித்தாரையுந் தங் கடமைகளின் வழிஇயனார் எனக் குறை கூறுதல் எவர்க்கும் உடன்பாடன்று. இனி, அடிகள் தம் பரிவாரங்களையெல்லாம் போக்கிய பின் தாம் திருப்பெருந்துறையிலுள்ள திருக்கோயிலுட்புக, அங்கு ஒருபக்கத்தே அடியார் புடைசூழ மெய்க்குரவன் எழுந்தளியிருத்தலைக் கண்டார் என நம்பியார் திருவிளை யாடல் கூறத் திருவாதவூரர் புராணம் அடிகள் திருப்பெருந் துறையில் ஒரு பூஞ்சோலைப் பக்கமாய்ப் போதுகையில் அதனினின்று அடியார் ஓதும் அறிவு நூல்ஒலி வருதல்கேட்டு, ஒற்றரைவிடுத்து, அவர் வந்துரைத்ததன் மேல், அச்சோலையுட்புக்கு ஆசிரியனையும் அவனைப் புடைசூழ்ந்த அடியார் குழாத்தினையுங் கண்டாரெனப் புகலும் இவ் வரலாற்றுப் பகுதியிலும் நம்பியார் திருவிளையாடல் பிழைபடுகின்றது. திருப்பெருந்துறை யில் அடிகள் சென்ற காலத்து ஆண்டுச் சிவபிரான் திருக்கோயில் இருந்த தில்லையென்பதற்கு அதன்கண் இஞ்ஞான்றும் சிவலிங்க வடிவம் இல்லாமையும் ஆண்டுச் செய்யப்படும் நாள் வழிபாடு மாணிக்கவாசகப் பெருமாற்கும் அவரை ஆண்டருளிய ஆசிரியன் வைத்துச் சென்ற திருவடிச்சுவட்டிற்குமே ஆற்றப்படுதலும், திருவிழா வென்னுஞ் சிறப்பு வழிபாடு மாணிக்கவாசகப் பெருமாற்கே செய்யப்படுதலும் சான்றாமென்க. தம்மைத் திருப்பெருந்துறையில் இறைவன் ஆசிரியவடிவிற்றோன்றி அடிமைகொண் டருளியவாற்றினையே அடிகள் திருவாசகத்தின்கண் அருளிச்செய்கின்றனரன்றி, ஆண்டுத் திருக்கோயில் உண்டெனக் கொண்டு அதன்கட் சிவபிரானை வழுத்துந் திருப்பதிகங்கள் அருளிச் செய்யாமை யும், திருப்பெருந்துறையில் நிறைமலர்க்குருத்தம் மேவியசீர் ஆதியே என்றருளிச்செய்தாரல்லது திருக்கோயிலுட் குருந்தம் மேவியசீர் ஆதியே என்று அருளிச் செய்யாமையுங் கருதற் பாலவாம் மாணிக்கவாசகப் பெருமாற்கு அருட்பாடு நிகழ்ந்த பல நூற்றாண்டுகட்குப் பின்னரேதான் திருப்பெருந்துறையில் திருக்கோயில் அமைக்கப்பட்டதென்பது தேற்றமாம். அற்றன்று, அடிகட்கு முன்னும் ஆண்டுத் திருக்கோயில் உண்டெனின் அதன்கண் இன்றுகாறுஞ் சிவலிங்க வடிவம் இல்லாமையும், அடிகட்கு முற்காலத்த தாயின் ஆண்டுச் சிவலிங்க வடிவம் இருந்ததாதல் வேண்டுமாகலின், அது பின் இல்லையாதல் இசையாமையும் தேர்ந்துணர வல்லார்க்கு அவ்வாறுரைத்தல் பொருந்தாது என்க. எனவே, அடிகள் திருப்பெருந்துறை சென்ற ஞான்று தம் மெய்க்குரவனைக் கண்டது ஒரு பூங்காவிலேயாமென்னுந் திருவாதவூரர் புராணவுரையே உண்மை வரலாறாமென்று கடைப்பிடிக்க. இனி, அடிகள் தம் ஆசிரியனைக் காண்டலும் நெஞ்சம் உருகப்பெற்றாரேனும், அவரை மனத்தினால் வணங்கி மெய்யினால் வணங்காராய் அவரெதிரே சென்று அவர் தந்திருக்கையில் உளதாகிய ஓர் ஏட்டுச்சுவடியைக் கண்டு, ‘அ ஃது யாது? என்று வினவினாரென்றும் அது சிவஞான போதம் என்று ஆசிரியரின் விடையளிக்க அடிகள் மறித்தும் சிவமாவது யாது? ஞானமாவது என்னை? nghj« v‹gJ vjid¡ F¿¥gJ? என்று கேட்க ஆசிரியன் சிவமென்பது ஒன்றேயாம், ஞானமாவது அச்சிவத்தினியல்பை உள்ளவாறறிவது, போதமோ வென்றால் அங்ஙனம் உணர்ந்ததனைத் தன்வயிற் றெளியக் காண்டலாம்; என்று விளக்கி விடை மொழிந் தருளினரென்றும், அவ்விளக்கவுரையைக் கேட்டு அடிகள் ஆசிரியன் திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சித் தம்மை யடிமை கொள்கவென வேண்டினாரென்றும், அதற்கிணங்கி ஆசிரியன் அப் பூங்காவில் தம்மடியார் பலரையும் ஏவிப், பட்டினாலும் பூமாலைகளாலும் ஓர் அழகிய கோயில் சமைப்பித்து அதன்கண் மாணிக்கவாசகரோடு தனியிருந்து சிவஞானபோதப் பொருள் முழுவதூஉம் விரித்துரைத்து அவரை அடிமை கொண்டருளினா ரென்றுங் கடவுண்மாமுனிவர் திருவாதவூரர் புராணத்தின்கட் கூறினார். ஆனால், இங்ஙனமொரு வரலாறு பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடலிற் காணப்படுகின்றிலது. பெரும்பற்றப்புலியூர் நம்பி, கடவுண்மாமுனிவர் காலத்திற்கு மிக முற்பட்டிருந்தவரென்பது நன்கு புலனா கின்றது குருந்தமர நீழலில் எழுந்தருளிய குரவன் அடிகளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்துவதாகக் கடவுண்மாமுனிவர் தாங் கூறிச்செல்லும் பகுதியிற் சிவஞானசித்தியில் உள்ளவாறே உயிரினியல், மலத்தினியல், இருவினையியல், இறைவன்றன் அருவுருவினியல், சரியை, கிரியை, யோக ஞானங்களினியல், வீடுபேற்றி னியல் முதலாயினவெல்லாந் தெளிந்தெடுத்துக் கூறுதலின், அவர் சிவஞானசித்தி யாக்கியோரான அருணந்தி சிவனாக்கும் பிற்பட்டவராதல் ஒருதலை, இனி, அருணந்திசிவனாக்கும் அவர்தம் ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார்க்கும் முற்பட்ட காலத்தே, திருவிளையாடலியற்றிய பெரும்பற்றப் புலியூர் நம்பி இருந்தாரென்பது அதன் பதிப்பாசிரியர் அவரது காலம் ஆராய்ந்துரைத்த பகுதியால் நன்கு விளங்கா நிற்கின்றது. சிவஞான போதநூல் அருளிச் செய்த மெய்கண்டதேவ நாயனார் காலத்திற்குப் பின் வந்தவரான கடவுண்மாமுனிவர் அச்சிவஞான போதம் குருந்தமரநீழலில் எழுந்தருளிய ஆசிரியன் திருக்கையில் இருந்ததெனக் கூறுதலும், மெய்கண்ட தேவர் காலத்திற்கு முற்பட்ட பெரும்பற்றப் புலியூர்நம்பி சிவஞானபோத நூலையாதல் அந்நூலிற்போந்த பொருளையாதல் அம் மெய்க்குரவன் அடிகட்கு அறிவுறுத்தருளினானென்று சிறிதாயினுங் கூறாமையும் என்னென்று புடைபடவைத்து ஆராய்ந்து உணர்வார்க்குக் கடவுண்மா முனிவர் ஈண்டுக் கூறிய இவ்வரலாறு உண்மையன் றென்பதூஉம், அஃது அவரே கட்டிச் சொன்னதா மென்பதூஉம் நன்கு விளங்காநிற்கும் தமது காலத்திற் சிவஞான போதநூல் இருந்ததாயின், அதனையே குருந்தமர நீழலில் எழுந்தருளிய குரவன் மாணிக்கவாசகப் பெருமானுக்கு அறிவுறுத்தருளியது உண்மை யாயின் அவ் விரண்டனையும் பெரும்பற்றப் புலியூர்நம்பி தமது திருவிளை யாடலில் நன்கு எடுத்து மொழிந்திருப்பார். அவர் காலத்தில் அந்நூலும், அந்நூலை அறிவுறுத்தருளி னாரென்னும் வரலாறும் வழங்காமையின் அவர் அவற்றைக் கூறிற்றிலர். மற்றுக், கடவுண்மாமுனிவர் மெய்கண்டதேவ நாயனார் காலத்திற்குப் பிற்பட்டிருந்தமையின், அக் குரவன் அடிகட்கு அறிவுறுத்தது சிவஞானபோத நூலாயிருக்கலாமென்று தாமாகவே கருதி அங்ஙனம் உண்மையல்லாத தொன்றைப் புனைந்துகட்டிச் சொல்லினார்; அதுவேயுமன்றிச், சிவஞான போதநூல் அளவை நூன்முறையோடு படுத்து முப்பொரு ளுண்மையினைப் பரக்க ஆராய்ந்து அதனைத் தேற்றுங் கடப்பாடே பெரும்பான்மையும் உடைத்தாய், உயிர் மாசுதீர்ந்து தூய்தாகி இறைவன் திருவருளோடு இரண்டறக் கலந்து நிற்குமாற்றினைச் சிறுபான்மை கூறுவதன்றி அதனைத் தான் எடுத்துக்காட்டுவதன்று, அவ்வருளோடு தலைக்கூடி நிற்கும் நிலை அருட்குரவன் நேரே எழுந்தருளி அடையாளங் களான் அறிவுறுக்கும் முகத்தானன்றி வாயாது, அவ்வருணிலை முடிபே ஐந்தெழுத்தின் குறிகளால் ஆசிரியன் அறிவுறுத்தத் தெளியப்படும் முடிபொருணிலையாம். நன்மாணாக் கனது மிக முறுகிய அன்பின் பதத்தினை யறிந்து அருட்குரவன் நேரே யெழுந்தருளிக் காட்டுவது ஐந்தெழுத்தருணிலையே யாகுமல்லாமல், இதன்கீழ் அறிவுநிலையாய் நிற்கும் பரந்த முப்பொருளாராய்ச்சி யாகாது. அம் முப்பொருளாராய்ச்சி முற்றும் அறிவுநூலாசிரியனுதவிகொண்டு பலகாலும் பலநாளும் ஆராய்ந்து தெளிந்து மெய்யறிவு விளங்கி, இறைபணி பேணி, அன்புமிக முறுகி முதிர்ந்து, அறிவு நிலைக்கு மேற்கண்ணதான அன்புநிலையிற் சென்றுவைகிய மாணாக்கற்கு அருட்குரவன் தானே எழுந்தருளி வந்து; ஐந்தெழுத்தருணிலை காட்டி, ஒரு நொடிப்பொழுதில் அவரைத் தனக்குரிமையாக்கி ஆண்டுகொள்வன். ஆதலால், இங்ஙனம் நடைபெறுவதாகிய அருளுரை மரபுக்குப் பொருந்த நம்பியார் திருவிளையாடல் அடிகள் அருட்குரவனைக் கண்ட ஞான்றே அவனால் ஐந்தெழுத்துண்மை அறிவுறுக்கப்பட்டு அருளொடு தலைக்கூடினார் என்னும் வரலாற்றுரையே உண்மைநெறி திறம்பாததாமென்க. மற்று, அடிகள் தாம் இளைஞராயிருந்த காலத்தும் அமைச்சராயிருந்த காலத்தும், வடமொழி தென்மொழிகளி லுள்ள கருவிநூல் அறிவு நூற்பொருள்களெல்லாம் ஒருங்காராய்ந்து அவற்றிற்கோர் எல்லையாய் நின்றாரென்பது இவரது வரலாற்றினைக் கூறும் எல்லாம் புராணங்கட்கும் ஒப்பமுடிந்தமையின், அவர் குருந்தமரநீழலில் அருட் குரவனைத் தலைப்பட்டு அவனால் ஆட்கொள்ளப்பட்ட வழியும் அவ்வறிவுநூற் பொருளாராய்ச்சியே அறிவுறுத்தப் பட்டாரெனக் கொண்டு அம் முப்பொருளாராய்ச்சியினை விரித்துக் கூறும் கடவுண்மா முனிவரது திருவாதவூரர் புராணவுரை ஈண்டும் பிழைபடுகின்றதென ஆராய்ந்துணர்ந்து கொள்க இவ்வாற்றால், திருவாதவூரடிகட்கு அருட்குரவன் அறிவுறுத்தது ஐந்தெழுத் தருணிலையேயா மென்பதூஉம், அதனால் அந்நூல் அறிவுறுக்கப் பட்டதென்னும் வரலாறு பொருந்தாமையோடு அந்நூற்பொருள் அறிவு நூலாராய்ச்சிக்கட் படுவதாகலின், அவையெல்லாம் முன்னரே முற்றுமுணர்ந்துபோந்த அடிகட்கு மறித்தும் அவற்றையே மெய்க்குரவன் செவியறிவுறுத் தருளினா னென்றல் அருளுரை மரபொடும் மாறாமென்பதூஉம் இனிது பெறப்படும். அடிகளும் செத்திலாப்பத்தில் என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் எனத் தெரித்துரைத்தலும், சிவ புராண முதலில் நமச்சிவாய எனத் தொடங்கிக் கூறுதலும் அவர்தம் ஆசிரியன்பாற் பெற்றது ஐந்தெழுத் துண்மையே யாதலைத்தெற்றெனப் புலப்படுக்குமென்க. 3. ஆட்கொள்ளப்பட்டபின் நிகழ்வு இனி, அடிகள் இவ்வாறு அருட்குரவனால் ஆட்கொள்ளப்பெற்று அன்புருவாகி ஆசிரியனை வழுத்தியபடியாய் அவனை அகலாதிருந்துழிக், குரவனாய் எழுந்தருளிய பெருமான் தன்னைப் பாடுகவென்று கட்டளை யிட்டருளச் சென்னிப்பத்தும், அச்சோப்பத்தும் அங்ஙனமே அருளிச்செய்தார் என்று நம்பியார் திருவிளையாடல் கூறா நிற்கும். இறைவனே அருட்குரவனாய் எழுந்தருளித் தம்மை ஆண்டுகொண்ட அருட்டிறத்தைச் சென்னிப்பத்தில், பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப் பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான் எத்த னாகிவந் தில்பு குந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவ டிக்கணஞ் சென்னி மன்னி மலருமே என்று அடிகள் தாமே அருளிச்செய்தல் காண்க. இறைவன் அங்ஙனம் அருட்குரவனாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டதுந் திருப்பெருந்துறையிற் குருந்தமரம் ஒன்றன் நீழலிலேயாம் என்பதனை அடிகளே திருவாசக அருட்பத்தில், திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை எம்பிரான் என்றென் றருந்தவா நினைந்தே ஆதரித்தழைத்தால் என்றருளிச் செய்தவாற்றானும் நன்கு பெறப்படும். இவ்வாறு அடிகள் இறைவனைத் தலைப்பட்டு அவன் றிருவருட்பேற்றிற் குரியரானபின், அவருள்ளம் முழுதும் அருள் வழிப்பட்டு முன்னை இயல்பு முற்றும் திரிபுற்றுப் பேரின்ப வெள்ளந் தேக்கப் பெற்றமையிற், புன்சிரிப்புடையராய்க் கண்களில் இன்பநீர் வார்ந்திழியத் திருநீற்றை மேனியெங்கும் பூசிக், குறுவியர் பொடித்த மெய்யுடன், அன்பின் பெருக்கால் உரை தழுதழுப்ப உள்ளம் பொங்கித் திருவாசகம் ஓதி உருகியபடியாய் நின்றார். பின்னர் அவ்வருட்குரவன், தன்னொடும்போந்து அங்கு மறையோதிக்கொண்டிருந்த அடியார் குழாத்தினைச் சென்று காண்கவென்று அடிகளைப் பணிப்ப, அங்ஙனமே அவர் அவ்வடியார் கூட்டத்தை யடைந்து, அத்தன் ஆண்டுதன் அடியரிற்கூட்டிய அதிசயங்கண் டாமே என்பதனை ஈறாகவுடைய அதிசயப்பத்தைப் பாடியுருகினார். சொல் விழுப்பமும் பொருள்விழுப்ப முந்துறும், அன்புநறை யொழுக, அரும்பெருஞ் செந்தமிழ்ப் பாடல்கள் அருளும் அடிகளின் ஒப்புயர்வில்லாத் திறத்தினை உலகம் உணர்ந்து உய்தற்பொருட்டு அவ்வருட்குரவன் அடிகளை மாணிக்க வாசக! என்றழைத்து, நம்மைத் தில்லையம்பலத் தின்கண்ணே வந்துகாண்; இப்போது இங்குநில்! என்று கட்டளையிட்டுத் தன்னடியார் குழுவினோடும் மறைந்தருளினன். இவ்வாறு தம்மை இந்நிலவுலகத்தே நிறுத்தித் தன்னொடும் போந்த அடியார் குழாத்தொடும் இறைவன் மறைந்து சென்ற வரலாற்றினைக் கீர்த்தித்திருவகவலில், நாயி னேனை நலமலி தில்லையுட் கோலம் ஆர் தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்குஒழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும் என்று அடிகளே அருளிச்செய்தல் காண்க. அருட்குரவனாய் எழுந்தருளிய இறைவன் அடிகளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுத் தருளியபின், திருப்பதிகங்கள் பாடுமாறு அவருக்குப் பணித்து, அங்ஙனமே சில பாட, அவற்றைக் கேட்டு உவந்து, அவரை விடுத்து மறைந்தருளினான் என்று நம்பியார் திருவிளையாடல் கூறுமாற்றால், இறைவன் அடிகளை ஆட்கொண்டருளிய அஞ்ஞான்றே மறைந்தருளினா னென்பது பெறப்படும் மற்றுக், கடவுண்மாமுனிவர் புராணமோ, மாணிக்கவாசகருடன் போந்தவர், அவர் துறவொழுக்கத் தினராய் மாறியது கண்டு, பாண்டியமன்னன் வினைமேற்கொண்டு வந்த கடமையை நினைவுறுத்தி அவரை யழைப்பவும், அவர் அன்னார் சொற்களை உணராமல் தம்மை மறந்திருத்தல் தெரிந்து திரும்பிப் பாண்டிய மன்னன்பாற் சென்று நிகழ்ந்தமை அறிவிப்ப, அவன் பெரிதும் வெகுண்டு அடிகட்கு ஒரு திருமுகம் எழுதிவிடுப்ப, அடிகள் அதனை ஏற்றுத் தம்மையாண்ட நல்லாசிரியன் முற்சென்று வைக்கப், பின்னர் அவ்வருட்குரவன் அவரை அஞ்சாவண்ணந் தேற்றி, அவர்க்கு மணிக்கலன்கள் பலவும் நல்கி ஆவணித்திங்கள் மூல நாள் அன்று பரித்திரள் வரும் என்று மீனவன்பாற் சென்று இயம்புதி, யாமே அந்நாளில் அழகிய வாம் பரித்திரள் கொண்டுவருவம் எனக் கூறி விடுத்தனன் என்றுரைக்கு மாற்றால், அவ்வாசிரியன் அடிகளை அடிமை கொண்டருளிய பின்னும் பலநாட்கள் அத்திருப்பெருந்துறைப் பூங்காவின்கண் அமர்ந் தருளினானெனக் கொள்வதாயிற்று. இங்ஙனம் முரணும் இவ்விருவேறு வரலாறுகளுள் எதுமெய்யென்று ஆராயின், நம்பியார் உரையே உண்மையாமென்பது புலனாம். மாணிக்கவாசகப் பெருமானை ஆண்டருளிய ஆசிரியன் இந்நிலவுலகத்து மக்களுள் ஒருவனாயின், அவன் பலநாள் இந்நிலமிசைத் தங்கினான் என்றல் பொருத்தமேயாம். மற்று, ஆங்ஙனம் எழுந் தருளிய குரவன் இறைவனே என்பது நன்கு புலப்பட, ஈறி லாதநீ எளியை யாகி வந்து ஒளிசெய் மானுட மாக நோக்கியுங் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே1 என்று அடிகளே அருளிச் செய்தமையின், அவன் அடிகளை யாட்கொண்ட பின்னும் பலநாள் இம் மண்மிசைத் தங்கினா னென்றல் அமையாது. அதனால், அவரை அடிமைகொண்டு ஐந்தெழுத்துண்மை உணர்த்திய ஞான்றே இறைவன் மறைந்தருளினான் என்னும் நம்பியார் உரையே வாய்வதா மென்க. அடிகளும தம் ஆசிரியனைப் பலநாளுங் காணப் பெறாது கதுமெனப் பிரிந்தமையாற் பெரிதும் ஆற்றாராய், ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறி காட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே என்று நைந்தழுது பாடுதல் காண்க; இதனுள் மிகுதியுங் காணேன் எனப் பொருள்படும் நனிகாணேன் என்னுஞ் சொற்றொடர் அடிகள் தம் ஆசிரியனைப் பல நாளுங் காணப் பெறாது பிரிந்ததனை நன்கு புலப்படுத்துதல் உணர்ந்து கொள்க. இனிக், குதிரைத்திரள் விலைகொள்ளும் பொருட்டுக் கொணர்ந்த பொருட்குவையும் பிறவும், தாம் இறைவனால் அடிமைகொள்ளப்பட்ட ஞான்று அடிகள் தம் ஆசிரியன் திருவடிக்கீழ் வைத்துத், தம்முயிரையும் உடம்பை யுங் கூடச்சேர்த்து எல்லாவற்றையும் அவர்க்கே உரிமையாய்க் கொடுக்க, ஆசிரியனும் அவைதம்மை யெல்லாம் ஒருங்கேற்றுப் பின்னர்ச், செல்வப்பொருளை அடிகளுக்கே நல்கி இப் பொருளையெல்லாம் கோயில்கள் எடுப்பித்தற்கும் அவற்றைப் பழுதுபார்ப்பித்தற்கும் பிறவற்றிற்கும் ஆகப், பல திருப்பணி கட்குக் கொடுமின்! மேலான அருந்தவத்தினர்க்கு வழங்குமின்! நுகர்தற்கின்றி வறுமையான் நலிந்தார்க்கு உதவுமின்! என்று அருள்செய்து மறைந்தமையின், அடிகளும் அப்பொருண் முழுமையும் அங்ஙனமே செலவிட்டார். அடிகள் தம்மையுந் தமக்குரிய பொருளையுந் தம் ஆசிரியனுக்கு உரிமையாக்குதலே பொருத்தமாமன்றித், தம்முடையவல்லா அரசன் பொருளை அவற்குரிமையாக் குதலும், பின்னர் அவன் பணித்தவாறு செலவிட்டு அழித்தலும் அமைச்சியற் கடமையின் வழுவுதலாதலொடு பிறர் பொருளைக் கவர்ந்து செலவழித்த குற்றத்தினையும் அடிகள்பால் ஏற்றுமன்றோவெனின்; அற்றன்று, அடிகள் அமைச்சராய் நின்றநிலையில் அரசனது பொருளைத் தாம் வேண்டியவாறு செலவழித்தாரல்லர்; குருவடிவிற்போந்த இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றுத் தமது பழைய நிலைமாறி அவன்றன் திருவடித்தொண்டரானபின் தமது முன்னைநிலையை முற்றும் மறந்து அன்புவடிவினரானமையின், அஞ்ஞான்று தம்மையுந் தம்மோடு உடனிருந்தவைகளையும் தம்மையடிமைகொண்ட தலைவற்கு உரிமையாக்கிப் பின்னர் அத்தலைவன் ஏவியபடியே தம்பாலுள்ள பொருண்முழுதுஞ் செலவிட்டார். அன்புவடிவாய்த் திரிபுற்ற அடியவர் செயலும், பேய்பிடியுண்டோர் அருள் கொண்டார் இளஞ்சிறார் என்னும் இவர் செயலுந் தம்முள் ஒக்குமென்பது பேரன்பின் திறம் அறிந்தார்க்கெல்லாம் ஒப்ப முடிந்ததொன்றாம் இவ்வுண்மை, ஞாலமதின் ஞானநிட்டையுடையோ ருக்கு நன்மையொடு தீமையில் நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச் செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை கோலமிலை புலனில்லை கரண மில்லை குணமில்லை குறியில்லை குலமு மில்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வர் என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டில் தெருட்டப்பட்டமை காண்க. அடிகள் தம் ஆசிரியனைத் தலைப்பட்டு அவற்கு அடிதொழும் அன் பரானபின் தமது முன்னைநிலை முற்றும் மாறி அன்புருவானாரென்பது, திருவாதவூரர் புராணத்தில், அன்புடன் நேக்கி நிற்பர் அழுவர்கை தொழுவர் வீழ்வர் இன்புற வெழுவர் பின்பால் ஏகுவர் இரங்கி மீள்வர் நன்பகல் கங்குல் காணார் ஞானநல் வடிவே கண்டு கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யானார் எனவும், ஐயர்நீர் வருதல் வேண்டு என்றவர் அழைத்த போதிற் றெய்வநீ றணிவார் தானைத் திறத்தினர் தம்மை நோக்கி மையலாம் உணர்வின் மிக்கீர் யாவர்நீர் மாயா பேதப் பொய்யெலாம் உரைத்தல் வேண்டா போமினி யகல வென்றார் எனவும் மீனவன் எழுது மோலை கேட்டபின் மின்பால் அன்பர் ஆனவர் அடியார் எம்மை யடிமையா உடைய ரல்லால் தான்எனக் கண்ணல் என்றுந் தன்னையான் பிழைத்தே னென்றும் மாநில மன்னன் சொன்ன தென்னென மனத்தி லெண்ணி எனவும் போந்த செய்யுட்களால் நன்கு விளங்கா நிற்கும். தமது நிலை மாறிநின்ற அடிகள்திறம் அறியாது, அவர் அரசன்விடுத்த திருமுகங் காண்டலுந் தாஞ்செய்த பிழையினை நினைந்து உளங்கலங்கினாரெனக் கூறும் நம்பியார் திருவிளையாட லுரையும், பரஞ்சோதியார் திருவியைடலுரையும் இவ்விடத் திற்குப் பொருத்தமில்லனவாய்க் காணப்படுகின்றன. அடிகள் இறைவனால் அடிமை கொள்ளப்பட்டபின் தந்நிலை திரியாது முன்னையுணர்வொடு நின்றனராயின், தாம் மேற்கொண்டு வந்த அமைச்சியற் கடனை மறந்திரார். மற்று அவர் அவ்வாறின்றித் தமதுணர்வு முற்றும் மாறிச் சிவவுணர்வினராய் நின்றமை, நவமாய செஞ்சுடல் நல்குதல் நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ2 என்று தாமே தமது திருமொழியிற் கிளந்துகூறுதலானும், தாம் நின்ற அந்நிலையினுண்மை தெரியாமற் பிறர் தம்மை யிகழ்ந்துரைத்தமை யினையும் ஏசாநிற்பர் என்னையுனக் கடியானென்று பிறரெல்லாம் பேசாநிற்பர்3 எனத் தாமே மொழிந்தருளுதலானும், தம்மை உன்மத்தன் என்றே கொண்டு அஞ்ஞான்றுள்ளார் தத்தம் மனத்திற்குத் தோன்றிய வாறெல்லாந் தம்மை ஏசிப் பேசினமையும், உத்தம னத்தன் உடையா னடியே நினைந்துருகி மத்த மனதொடு மால்இவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊர்ஊர் திரிந்தெவருந் தத்த மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே4 என்னுந் திருப்பாட்டிற் றாமே குறிப்பிடுதலானும் அவரது பின்னைநிலையைக் கூறுதற்கண் திருவாதவூரர் புராணவுரையே பொருத்தமுடைத்தாதல் தெளியப்படும். பிறர் பழிதூற்று முரையைக் கேட்குங்கால் வருந்துமுணர்வுங் கெடுதல் வேண்டுமென இப்பாட்டின்கண் அடிகள் வேண்டுதலும் நினைவுகூரற்பாற்று. எனவே, தஞ்செயல் இழந்து அருட்செயல் வழியராய் நின்று தம்பாலிருந்த பொருட்டிரளையெல்லாஞ் செலவு செய்தமையின், அஃது அடிகள்பாற் குற்றமாகாதென்று தெரிந்துணர்ந்து கொள்க. அடிகள்பால் அது குற்றமாகாதாயினும், குரவனாய் வந்து அவரை அடிமைகொண்ட இறைவன் நடுநிலை வழிஇ அரசனுக்குரிய அப்பொருளைப் பலதுறைகளிற் செலவிட்டு அழிக்கும்படி ஏவியது அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காகாதோவெனின்; எண்ணிறந்த வுலகங்களுக்கும், அவ்வுலகங்களிலுள்ள எல்லையில்லாப் பொருள்களுக்கும் எஞ்ஞான்றும் உண்மையில் உரியவன் முழுமுதற் கடவுள் ஒருவனேயாம்; இவ்வுகலங்களில் இடையிடையே வந்து போம் மக்களெல்லாரும் அவனருளால் அவற்றிற் சிறிது சிறிது பெற்றுச் சிலகாலம் அவற்றைக் கையாண்டு கழியும் நீரர் ஆவர். ஆகவே, இறைவன் அவர்க்கிரங்கித் தனது பெரும்பொருளில் ஒரு சிறுகூற்றை அவர்க்குச் சிறிது காலத்திற்கு நல்கியது போலவே, மீட்டும் அவர்பானின்றும அதனைப் பிரிப் பித்துத், தன் மெய்யடியார் வேண்டும்போது அவர்க்குப் பயன்படுமாறு அதனை வழங்குதலுஞ் செய்வன். இங்ஙனமே ஒருகாற் பாண்டிய மன்னனுக்கு நல்கிய பெரும் பொருளில் ஒரு பகுதியைப் பிறிதொருகால் அடியவர்க்குப் பயன்படுமாறு அவனின்றும் பிரிப்பித்துச் செலவிடுவித்தது இறைவற்குக் குற்றமாதல் செல்லாது. அற்றன்று, பாண்டியனுக்கென்றே தந்த பொருளை அவன் வேண்டியவாறு செய்யவிடுதலே முறையாமல்லது, அவனது கருத்துக்கு மாறாக அவனை ஏமாற்றி அதனை வாங்கிச் செலவிடுவித்தல் முறையாகாதாலெனின்; மக்கள் முதலான உயிர்கட்கும் இறை வற்கும் உள்ள உறவு ஒரு தந்தைக்கும் அவன் புதல்வர்க்கும் உள்ள உறவு போல்வதாம். புதல்வர்க்குப் பகுத்துக்கொடுத்த பொருள்களை அவர் தம்மிற் சிலர் நல்வழியிற் பயன்படுத்தாது தமது சிற்றறிவால் தீயவழிகளிற் செலவு செய்து தமக்கும் பிறர்க்குங் கேடு சூழ்குவராயிற் பேரறிவும் பேராற்றலு முடைய தந்தையாயினான் அதுகண்டு வருந்தி, அவர்க்குத் தான் றந்த அப்பொருளை அவர்பானின்றும பிரிப்பித்து வேறு நல்லார்க்கு நல்ல துறைகளிற் பயன்படுத்துவானல்லானோ? அதுபோலவே, தான் பாண்டிய மன்னனுக்குத் தந்த பொருளை அவன் தன் குதிரைப் படையைப் பெருக்கி வலிவாக்கி அதன்றுணையால் வேற்று வேந்தர்மேற் படையெடுத்துச் சென்று அவருடைய நாடு நகரங்களைக் கைக்கொள்ளல் வேண்டினானல்லது, அப்பொரு ளால் நாட்டை வளம் படுத்துக் குடிகளைக் கல்வியிலுஞ் செல்வத்திலும் அன்பிலும் வாழ்வித்தற்கு முயன்றான் அல்லன். அதனால், குதிரைத் திரள் கொள்ளுதற்கு அவன் தந்த பொருளை வேறு நல்ல துறைகளிற் பயன்படுத்துமாறு செய்தது இறைவற்குக் குற்றமாகாதென்க. நன்னெறியிற் பயன்படுத்தாத பிள்ளைகளின் பொருளை அவர்தந் தந்தை அவர்பானின்றும் வலிந்து பற்றியாதல் மறைவாய்ப் பற்றி யாதல் வேறு பயன்படு நெறிகளிற் செலவு செய்தலைக் குற்றமெனக் கூறுவார் இவ்வுலகத்தியாரும் இலர், திருவாதவூரடிகளை அமைச்சராய்க் கொண்டிருந்த பாண்டியமன்னன் போரில் மிகு விருப்புடையனாய், வேற்றாசர் நாடு கவரல் வேண்டியே தனது குதிரைப் படையைப் பெருக்கி வலிவாக்கக் கருதினானென்பது. பொற்பிலங்கு புதுப்பரி இங்குநங் கொற்றம் ஓங்க விரைவிற் கொளப்படும் என்றும், மண்ணின் நீள்மறு மண்டலங் கொள்பவர்க் கெண்ணி லங்கொர் இலக்கம் இவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத்தகும் என்றுங் குதிரைத் துறைக்காவலர் கூறியதாக நம்பியார் திருவிளையாடல் கூறுமாற்றால் நன்கு பெறப்படும். மேலும், இவன் சிவபிரானிடத்துஞ் சிவனடியாரிடத்தும் அன்புடையன் அல்லன் என்பதற்குத், திருவாதவூரடிகள் இறைவனால் அடிமை கொள்ளப்பட்ட வியத்தகு நிகழ்ச்சியும், அவர் தாங் கொண்டு சென்ற பொருட்டிரளை யெல்லாஞ் சிவனடி யார்க்கும் சிவபிரான்றிருக்கோயிற் றிருப்பணிக்கும் செலவிட்டுத் தம்மை மறந்து சிவபிரான் திருவடிப் பேரன்பில் மூழ்கியிருந்த நிலையுங் கேள்வியுற்றும் மனங்கசியப் பெறானாய் எடுத்துச் சென்ற பொருளுக்குத் தக்க குதிரைகள் விலை கொண்டு உடனே வாரீரேல், நுமக்குப் பழுதுநேரும் என அவன் கடிந்து அவர்க்கு ஒரு திருமுகம் எழுதி விடுத்தமையும், பரிகளெல்லாந் திரும்ப நரிகளாய ஞான்று நடுநிலை வழீஇ அடிகளைப் பெரிது வத்தினமையுமே சான்றாம். இஃதிங்ஙன மாகவும், ஓடும் பல்நரி ஊளைகேட்டு அரனைப், பாடின என்று படாம்பல அளித்த வரகுண பாண்டிய மன்னனே அடிகளை அமைச்சராய்க் கொண்டிருந்தவன் ஆவன் என்று ஒருவர் கூறியது நகையாடற் பாலதாமென்க. சிவபெருமா னிடத்தும் அவனடியாரிடத்துங் கரை கடந்த பேரன்புடை யராய் விளங்கிய வரகுண பாண்டியரே அடிகளை அமைச் சராவுடையராயின் தமது அரசுரிமைச் செல்வமெல்லாம் அவர் தந் திருவடிக் கீழ்வைத்து அவர் வேண்டியவாறு செலவிடக் கொடுத்திருப்பாரல்லது, சிவபெருமான் திருவடிப் பேரன்பிற் பிணிப்புண்ட அடிகளைச் சிறிதும் வருத்தி இரார். ஆகலான், அடிகளை அமைச்சராய் உடைய பாண்டிய மன்னன் வரகுணர் அல்லன் என்பது ஒருதலை; இன்னும் அவ்வரலாற்றினை, அடிகள் காலத்தை ஆராய்ந்து வரையறுக்கும் மூன்றாம் பகுதியில் நன்கு விளக்கிக் காட்டுதும். இனி, அடிகள் நனவே தமைப்பிடித்தாண்ட அருளாசிரியன் திருவடிப்பேரன்பாற் றமதுள்ளந் தேக்கப்பெற்றுத், தமக்குள்ள இவ்வுலகத் தொடர்புகளை முற்றும் மறந்தாராய் என்பெலாம் புரை புரை கனிய அன்புரை ததும்புந் திருவாசகத்திருப்பதிகங்கள் பல அருளிச்செய்தபடியாய்த் தாம் அருள்பெற்ற குருந்தமரத்தி னருகிருப்பா ராயினர். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. அரசனுக்குரிய வினைமேற்கொண்டு குதிரைத்திரள் விலை கொள்ளச் சென்ற தங்காதலர் பல நாட்களாகியுந் திரும்பிவராமை கண்டு, திருவாதவூரடிகளின் கற்பிற் சிறந்த மனைவியார், அவரோடு உடன் சென்று மீண்டாரை வினாவி, அவர் சிவபிரான் திருவடித் தொண்டராகித் தமது முன்னைநிலை திரிபுற்றமை தெரிந்து, அவரைப் பிரிதல் ஆற்றாராய், உடனே திருப்பெருந் துறைக்குப் போந்து, தம் அருமைக் கொழுநரான அடிகளை வணங்கி அன்பினால் நெஞ்சம் நெக்குருகி வருந்தாநிற்பத், திருவருள் இயக்கத்தால் அதனை உணரப்பெற்ற அடிகள், தம் ஐயன் திருவடிக்கட் பதிந்த தமதுணர்வு சிறிது அதனினின்றும் மீண்டு புறத்தே இவ்வுலகியல் நிகழ்ச்சிகளிற் செல்லப்பெற்றார்; பெற்றுத் தங் கற்புடை மனைவியார்க்கிரங்கி அவரைத் தேற்றி அவர்க்குச் சிவபெருமான் திருவருட் பாங்குகளை விரித்தோதா நின்றார். தமது பிரிவாற்றாமையால் வந்து வருந்திய தங் கற்புடை மனைவியார் பொருட்டே, இறைவன் றிருவருளால் உந்தப்பட்டு அடிகள் இவ் வுலகிய லுணர்வு மீளப்பெற்றார் என்பதற்கு, முடித்த வாறும் என்றனக்கே தக்க தேமுன் அடியாரைப் பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேன்இங் கொருத்திவாய் துடித்த வாறுந் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே5 என்று அவர் தாமே அருளிச் செய்தமையே சான்றாம். மாதரை நோக்கிக் கூறுவனவாக அடிகளால் அருளிச் செய்யப்பட்ட திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல் என்னும் பத்துள் திருச்சாழல் ஒழிய ஏனைய வெல்லாந் தங் கற்புடை மனைவியாரும் அவர் தம் அன்புடைப் பாங்கிமாரும் தம் இறைவற்கு ஆட்படல் வேண்டி அவர்தம்மை நோக்கியே அருளிச் செய்யப்பட்டனவாகப் புலனாகின்றன; இவை பத்தின் ஈற்றிலுள்ள அன்னைப் பத்து அடிகள் தம் அருமைப் புதல்வியை நோக்கி அருளிச் செய்தாராகல் வேண்டுமெனவே பாலதாயிருக்கின்றது; இளஞ்சிறார் தம் அன்னையை நோக்கிக் கூறுவதாக அடிகள் அதனை அருளிச் செய்திருப்பதே அதற்குச் சான்றாமென்க. சிவபிரான் றன்அளப்பரிய அருட்பெருமைகளை அடிகள் எடுத்தோதக் கேட்ட அவர்தம் மனைவியார் தாமும் அப் பெருமான்பாற் பேரன்பு மீதூரப் பெற்றாராதல், ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய்ஓவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறு6 என்று அடிகளே ஓதுமாற்றல் நன்கு தெளியப்படும். இனித், திருவெம்பாவையை அடிகள் அருளிச் செய் தது திருப்பெருந்துறையிலேயாம்; இதன் பதினோராஞ் செய்யுளில் மொய்யார் தடம்பொய்கை புக்குமுகேரென்னக், கையாற் குடைந்து குடைந்து குடைந்துன் கழல்பாடி எனத் திருப்பெருந்துறையிலுள்ள மொய்யார் தடம் பொய்கை என்னுந் திருக்குளத்தில் நீராடுமாறு சொல்லப்பட்டிருத்தலின், இது திருப்பெருந்துறையிலன்றித், திருவண்ணாமலையில் அருளிச் செய்ததாக மாட்டாது; அதனால், அதன் றலைப்பின் கண் திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது என எவரோ குறித்து வைத்தது தவறுடைத்தாமென்க. இதற்கடுத்த திருவம்மானை திருவண்ணாமலையில் அருளிச் செய்ததாகல் வேண்டும்; என்னை? பேணு பெருந் துறையிற், கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட, அண்ணாமலையானைப் பாடுதுங்கா ணம்மானாய் என்று தாம் பெருந்துறையில் ஆட்கொள்ளப்பட்டதனை இறந்த காலத்தும், அண்ணாமலையானைப் பாடுதலை எதிர் காலத்தும் வைத்து அடிகள் ஓதுதலின் என்பது; மேலும், இதன் கட், பந்தம் பரியப் பரிமேற் கொண்டான் எனவும், கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டக் கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய் எனவும் நரியைப் பரியாக்கி அதன்மே லெழுந் தருளிய இறைவன் றிறத்தையும், மதுரையிற் பிட்டுக்கு மண்சுமந்து பாண்டியனால் அடியுண்ட ஐயனருள் விளையாட்டையும் அடிகள் எடுத்தோதுதலின், அவர் அவை யிரண்டும் நிகழ்ந்தபின் மதுரையைவிட்டுப் புறம்போந்து திருவண்ணாமலையில் இறைவனைத் தொழுதிருந்தக்கால் இஃது அருளிச்செய்த தாகுமென்பது பெற்றாம். இதற்கடுத்த திருப்பொற்சுண்ணம் என்பது, அணிதில்லை வாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே, அம்பலத் தாடினானுக் காடப்பொற் சுண்ண மிடித்து நாமே, சிட்டர்கள் வாழுந்தென் றில்லைபாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடி எனத் தில்லைவாணனைப் பலகாற் பாடுதலின், அது தில்லை யிலருளிச் செய்யப்பட்டதாதல் விளங்கா நிற்கும். இதற்கடுத்த திருக்கோத்தும்பி என்பதூஉந் தில்லையம் பலவனையே பலகாலுங் குழைந்துருகிப் பாடுதலின் அதுவுந் தில்லைக்கண் அருளிச் செய்யப்பட்டதெனவே கருதற்பாற்று. இதற்கடுத்த திருத்தெள்ளேணம் ன்பதூஉம் தில்லை யம்பலவன் மேற்றாய் வருதலின் அதுவுந் தில்லைக்கட் பாடப்பட்டதெனவே கோடற்பாற்று. இதற்கடுத்த திருச்சாழல் என்பது ஈழ மண்டலத்தினின்றும் போந்த புத்தரும் புத்த அரசனும் தில்லைக்கண் அடிகளோடு வழக்கிட்டுத் தோல்வியுற்றாராக, அப் புத்த மன்னன் வேண்டு கோட்கியைந்து ஊமையாயிருந்த அவன் புதல்வியை வாய்பேசச் செய்து, அவள் வாயிலாக விளங்கிய சைவ வுண்மைகளை அடிகள் வினாவும் விடையுமாக வைத்துப் பாடியருளினாராகலின் இதுவுந் தில்லைக்கண் அருளிச்செய்ததென்பது தானே போதரும். இதற்கடுத்த திருப்பூவல்லியில் மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட வரலாறு கூறப்படுதலின் இஃது அதற்குப் பின் பாடப்பட்டதா மென்பதூஉம், அம்பலவனையே பெயர் கிளந்தோதிப்பாடுதலின் இதுவுந் தில்லைக் கண்ணேதான் அருளிச் செய்யப்பட்டதா மென்பதூஉம் பெறப்படும். இதற்கடுத்த திருவுந்தியாரின் இரண்டாஞ் செய்யுளில் ஏகம்பர் ஒருவருமே குறித்துச் சொல்லப்படுதலானும், இதன்கண் வேறெங்கும் வேறு திருக்கோயில்களிலுள்ள சிவபெருமான் சிறப்புப் பெயர்களுள் ஏதும் அங்ஙனங் குறித்துச் சொல்லப் படாமையானும் இது திருக்கச்சியேகம்பத்திற் செய்யப்பட்டதென்பது பெறுதும்; இது தில்லையிற் செய்ததென்பது பிசகு. இதற்கடுத்த திருத்தோணோக்கம் என்பது தில்லையம் பலவன் மேற்றாய் வருதலின் இது தில்லைக்கண் அருளிச்செய்ததாகு மென்க. இதற்கடுத்த திருப்பொன்னூசலில் ஒவ்வொரு செய்யுட் கண்ணுந் திருவுத்தரகோச மங்கை கிளந்தெடுத்துப் பாடப் படுதலின், இஃதத் திருப்பதியின்கட் செய்யப்பட்டதாகுமன்றி, எவரோ இதன் றலைப்பிற் குறித்து வைத்தவாறு இது தில்லைக் கண் அருளிச் செய்யப்பட்டதன்று. இதன்கண் எட்டாஞ் செய்யுளில் ஞாலம் மிகப் பரிமேற்கொண்டு நமை யாண்டான் என்று அடிகள் ஓதுதலின், இவர் தமது அமைச் சுரிமையை முற்றும் விட்டுத், திருவுத்தரகோசமங்கை போந்தபின் இதனை அருளிச் செய்தாராகல் வேண்டு மென்பதூஉம் தானே பெறப்படும். இதற்கடுத்த அன்னைப்பத்து இளஞ்சிறுமகார் தாம் அன்னையோ டுரையாடும் பரிசாகவைத்து அடிகள் இதனையருளிச் செய்திருத்தலின், அடிகள் தம் அருமைச் சிறு புதல்வியின் பொருட்டு இதனைப் பாடினாரென்றல் இழுக்காது. இதன்கண் ஏழாஞ் செய்யுளிற் பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல் கொண்டென், உள்ளங்கவர் வரால் அன்னே யென்னும் என்று தம்பொருட்டு மதுரையிற் குதிரைமேல் வந்த பெருமானைக் குறித்தலானும், ஆறாஞ் செய்யுளில் உத்தரகோச மங்கைப் பெருமானை எடுத்து மொழிதலானும் இதுவும் உத்தரகோச மங்கையில் அருளிச் செய்யப்பட்ட தல்லது, தில்லையில் அருளிச்செய்யப்பட்டதன்று. இதன் மூன்றாஞ்செய்யுளிற் றென்னன் பெருந்துறை அத்தரை நினைவு கூரும் அவ்வளவே சொல்லப் படுதலின் இஃது அங்கு அருளிச்செய்த தாகாது. இங்ஙனம் திருவெம்பாவை திருப்பெருந்துறையிலும், திருவம்மானை திருவண்ணாமலையிலும், திருப் பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோணோக்கம் என்னும் ஆறுந் தில்லையிலும் திருவுந்தியார் திருக்கச்சியேகம் பத்திலும் திருப்பொன்னூசல், அன்னைப்பத்து என்னும் இரண்டும் திருவுத்தரகோச மங்கையிலும் ஆக ஐந்து வேறு திருப்பதிகளில் அவை பதினொன்றும் அருளிச் செய்யப்பட்டனவாயினும், தம்மைப் பிரியாது தம்மோ டுடன்போந்த தம் காதற் கற்புடை மனைவியாரும், அவர்தம் இன்னுயிர்ப் பாங்கிமாரும், ஈழமண்டலத்துப் புத்தமன்னன் மகளாரும், தம் அருமைச் சிறு புதல்வியாரும் ஆகிய மகளிர் பொருட்டுச் செய்யப்பட்டமை யால் அப்பதினொன்றும் ஒரு தொகுதியாய் ஒருங்கு வைக்கப் பட்டமை பொருத்தமேயா மென்க. இனி அடிகளைப் போலவே அவர்தம் மனைவியாருந் தன்றிருவடிக்கண் அளவுபடாப் பேரன்புவைத்து ஒழுகுதல் கண்ட சிவபெருமான் அவர்க்கு மிக இரங்கி அவர்பொருட்டு அடிகளின் உணர்வைச் சிறிது நெகிழ்த்திப் புறத்தே செல்ல விட, அடிகளுந் தம்பால் வந்து குழுமிய தம் மனைவியார்க்கும் பிறர்க்கும் சிவபிரானுடைய அருட்பெரும் பரிசுகளைச் செழுந் தமிழ்ப் பாக்களில் எடுத்தோதி எல்லா ருள்ளங்களையும் பேரன்பாம் பெரும்பெருக்கிற் படிவித்துத் தாமும் அதிற்றலைநின்று வரலானார். அடிக்குறிப்புகள் 1. திருவாசகம். திருச்சதகம் (91) 2. திருத்தெள்ளேணம் (4) 3. கோயின்மூத்த திருப்பதிகம் (4) 4. திருச்சதகம் (3) 5. திருச்சதகம் (57) 6. திரும்வெம்பாவை (15) 4.ஆவணி மூலத்திற் குதிரை வருமென்றல் இஃதிவ்வாறிருப்ப, அடிகளோடு உடன்போந்த ஏவலாளர், அவர் தம்மை மறந்து அன்பால் என்புநெக் குருகிக் கண்ணீர்வார ஆடுதலும் பாடுதலுஞ் செய்து மால்கொண்டார் போலிருத்தலைக் கண்டு இவர் பித்துப் பிடித்தவரானார் எனக் கருதி, அவரை விட்டுப் பிரிந்து, மதுரையிற் பாண்டியன் பாற் சென்று அவனுக்கு அடிகளின் வேறுபட்ட நிலையை அறிவித்தார். அதுகேட்ட அம்மன்னன் அடிகளின் உண்மைநிலை யுணராமே புடைபடக்கவன்று, நாணாளுந் தன் ஒற்றரை விடுத்து, அடிகள் உணர்வு தெளிந்திருக்கும் நிலையை அவரால் தெரிந்து கொண்டபின், தென்னவர் பரவுந் தென்னவன் எழுதும் ஓலை தென்னவன் பிரமராயர் காண்க! பொன் நிறைந்த பொருட் களஞ்சியத்திற் பல பொருள் எடுத்துக்கொண்டு பரித்திரள் கொள்வதற்குப் பரிவொடு சென்ற நீர், இன்னுந் திரும்பி வந்திலாமை யாது நினைந்து? அமைச்சற்கு இப்படிச் செய்தல் தக்கதாங்கொல்! இது காண்டலும் வலிமை மிக்க வாம்பரித்திரள் கொண்டு விரைந்து வருதலே செயற்பாலது; இல்லையேல் அது நுமக்குப் பழுதாம் என்றெழுதி அடிகட்கு ஒரு திருமுகம் விடுத்தான். அதனை எடுத்துவந்த தூதுவர் அதனை அடிகள்பால் உய்க்க, இப்போது தமது புறத்துணர் வோடும் இருந்த அடிகளும் அதனை வாங்கிப் பார்த்துத் துணுக்குற்றுத், தாம் குதிரைத் திரள் கொள்ளும் பொருட்டுப் பாண்டியனது பெரும் பொருள்குவையை எடுத்துவந்த தமது முன்னைவகையெல்லாம் நினைவு கூர்ந்து உள்ளஞ் சிறிது கலங்கிப், பின்னர்த் தாம் தம்மையாண்ட ஐயன் அருள்வழி யொழுகினமை நினைந்து தேறி, தங் குருமுதல்வன் எழுந்தருளிய குருந்தமரத்தினெதிர்சென்று தங்குரவனைத் தமது அகக் கண்ணிற் கண்டு தொழுது அழுது தமது குறையறிவிப் பாராயினர்; அருள்வளர் விளக்கே, ஏழை அடியேனை யாட்கொண்ட அருந்தவப் பேறே, தேவர் தந் தேவே, பாண்டிய மன்னன் பரிமாக்கொண்டு வல்லே வருகவெனப் பணித்திட்டான்; அடியனேன் அவன் பணித்தவாறு அவன்பாற் செல்லுமாறு யாங்ஙனம்? அருள்செய்யாய், குருந்தின் மறைந்ந மறைக்கொழுந்தே! என்று கூறி இரப்ப, ஐயனும் அம் மெய்த்தவர்க்கு இரங்கி நினக்கு யாம் உண்டு, உள்ளத்தில் அச்சங்கொள்ளேல், உயர்ந்த புரவிகள் விரைவில் வருமெனப் பாண்டிய மன்னனுக்கு ஓர் ஓலை யெழுதிவிடு என்று அவரது செவிக்கு மட்டும் புலனாகக் கட்டளையிட்டருளினார். அதுகேட்ட அடிகளும் தம்மிறைவனைப் பணிந்து போந்து, புகழ்மிக்க பாண்டிய அரசர்க்கு அடியனேன் வாதவூரன் தெரிவிப்பதைத் தாம் திருவுளத்து ஏற்றருளல் வேண்டும்; பிறர் கூறும் புறங் கூற்றுரைகளைக் கேட்ட லாகாது; ஐந்தாறு நாட்களிற் றிரண்ட குதிரைகள் வரும்; அவை தம்மைக் கட்டி வைப்பதற்குப் பந்திகளும், அவை அருந்துவதற்குத் தண்ணீர்த் தடங்களும் அமைத்துத், தெருக்களையும் நகரங்களிலுள்ள வையாளிகளையும் ஒப்பனை செய்வித்து, அடியேனைக் குற்றமாக நினையாமற் பண்டு போல் மெய்யாகத் தெளிந்து அன்பு பாராட்டல்வேண்டும் என எழுதிய திருமுகத்தைத் தூதுவர் கையிற் கொடுத்துவிடுத்த பின், அமைந்த வுள்ளத்தோடுங் குருந்தமரத்தின் மருங்கே, அகமுகமாய்த் திரும்பிய வுணர்வைத் தம் குரு முதல்வன் திருவுருவின்கண் நிறுத்தி அறிதுயிலில் அமர்ந்திருந்தார். அப்போது, அவரை யாண்ட ஐயன் அவரது அகக் கண்ணெதிரே தோன்றி, நாம் குதிரைகளைப் பாண்டியற்குச் சேர்ப்பித்தல் திண்ணம்; அவற்றை யாம் சேர்ப்பிக்குமுன் நீ பாண்டியன்பாற் சென்று, மனத்திட்பத்தோடும் அவன் களிகூரத்தக்க சொற்களைச் சொல்லிக்கொண்டிரு என்று புகன்று மறைந்தருளினான். அடிகளும் அவ்வறிதுயில் நிலையினின்றும் விழித்தெழுந்து, தங்குரவன் தம்மை அடிமைகொண்ட குருந்த மரத்தினையுந் திருப்பெருந்துறையினையும் பிரிதற்கு ஒருப் படாராய்ப் பெருக வருந்திப், பின்னர்த் தம் ஆண்டவன் கட்டளையை நினைந்து ஒருவாறுளந்தேறி மதுரைக்குத் திரும்பினார். தாம் வருதற்குமுன் எழுதிவிடுத்த திருமுகத்தைக் கண்டு சினம் அவிந்த பாண்டியமன்னனும் அடிகளை அன்பாக ஏற்றுத் தன தரசிருக்கை மண்டபத்தில் தனதருகே அவரை இருத்தி, ஏனை யமைச்சரையெல்லாம் போகவிட்டு, அவரோடு தனி யிருந்து, எடுத்துச்சென்ற பொருளுக்குக் குதிரை எவ்வளவு கொண்டீர்? அக்குதிரைகள் வந்திறங்கிய துறை முகங்களும் நாடுகளும் எவ்வெவை? அக்குதிரைகள் எவ்வளவு உயரமும் எவ்வெந் நிறங்களும் உடையன? அவை தம்முள் எமக்கு இசைந்தது யாது? அதன் இலக்கணங்கள் யாவை? கூசாமற் சொல்லவேண்டும் என்று கேட்ப, அடிகளும் வெள்ளியம்பலப் பெருமானை நினைந்து, மன்னரேறே, மாராட்டகம் காம்போசம் ஆரியம் சாம்பிராணி சைந்தவம் முதலான நாடுகளிலிருந்து போந்த குதிரைகளையே மிகுதியாய்க் கொண்டேன். அவை சொல்லுதற்கரிய விரைந்த செலவினையுடையவை; கடலலையினும் அதன் முழக்கத்தினும் ஒன்றுக்கொன்று மிக்கெழுபவை; அவை தமக்கெல்லாம் இம்மதுரைமா நகரும் இடம் போதாது. அவற்றின் இலக்கணங் களையும், வகைகளையும் விரைந்த செலவினையும் விரித்துரைக்கப் புகுந்தால் அவை என் ஒரு நாவினால் உரைக்கப் படுந் தகையவல்ல. அப்பரிகளை நேரே காணும்போது மாட்சிமையுடையீரே நன்குணர்வீர். யான் இவ்வாறு விலைகொண்ட பரித்தொகுதியெல்லாம் மதுரை ஏகுதற்கு நன்னாள் ஆவது எதுவென்று கோள்நூல் வல்லாரை உசாவ, அவர் ஆவணித் திங்களின் மூலநாளே அதற்கு ஏற்பதாமென் றுரைத்தமையின் அந்நாளை எதிர்பார்த்தவாறாய்த் திருப்பெருந்துறையிலே யிருந்தேன், நும் படைஞரோ வென்றால் தாம் மதுரைக்கு மீளும் விருப்பால் என்னை விட்டகன்று இங்கே முந்துறப் போந்தார். போந்தவர் என்மேற் பொய்யானவைகளைப் புனைந்து கட்டி நுமக்கு உரைப்ப, நீரும் எளியேன்மேற் பெரிதும் வெகுண்டு, கடிது வருக வென ஓலை வரைந்து விடுத்தீர்; அதுகண்டு உடனே இங்குப் போந்தேன். குறிப்பிட்ட நாளிற் சிறந்த பரித்தொகுதி இங்கு வரும், என்று விடை கூறினார். அச்சொற்களைக் கேட்ட அரசன் மிகவும் உள்ளம் களிந்தானாய், நுமக்கும் எமக்கும் உண்டான நட்பினைச் சிதைக்க நினைந்த கரவுடையார் சொற்களைக் கேட்டு, அங்ஙனம் அன்பிலாதேம்போல் எழுதிவிடுத்தேம். அது பற்றி இனி நீர் வருந்துதல் ஒழிமின்! என்று பழைய நட்புரிமை பாராட்டிப் பேசி, மணிக்கலன்கள் குதிரைகள் வெண்பட்டுக் குடை முத்துமாலை பொற்சரிகை மிடைந்த போர்வைகள் பட்டாடைகள் முதலியனவெல்லாம் அடிகட்கு வழங்கி, அவர் தமது மனையகம் ஏகவும் விடை கொடுத்தான். அடிகள் அதுபெற்றதும், சொக்கப் பெருமான் திருக்கோயில் புக்குக் கரைகடந்த அன்பினால் நெஞ்சம் நெகிழ்ந்து நீராய் உருக இறைவனை இறைஞ்சியேத்தி, நாயிற் கடைப்பட்ட அடியேனையும் ஒரு பொருட்படுத்தியாண்ட தாயினுஞ் சிறந்த பரிவுடைப் பெருமானே, குதிரைகள் வருமெனப் பாண்டியற்கு உரைசெய்தேன்; அவன் தந்த பொருள்களையோ அடியார் தமக்குப் பயன்படுத்திவிட்டேன்; இனி ஆமாறு சொல்லாய் அருளுடை யரசே, நின்னை யன்றி வேறு புகலிடங் காணேன் அம்பலத் தெய்வமே என்று கூறி யழுது குறையிரப்ப, அஞ்சற்க எனும் ஓர் ஓசை அடிகளுக்குச் செவிப் புலனாயிற்று. அது கேட்டலும் ஆறுதல் உடையராய் அடிகள் தம் மனையகஞ் சென்று தம் மனைவியார் மக்கள் சுற்றத்தாரிடை அமர்ந்திருந்தார். அப்பொழுது அடிகளின் சுற்றத்தாரெல்லாம் ஒருங்கு திரண்டு அவர்பாற் போந்து, ‘அரசற்குரிய வினைமேற்கொண்டு குதிரை கொள்ள எடுத்துச் சென்ற பெரும்பொருட்டிரளை யெல்லாம் வறிதே செலவிட்டது பெரிதும் ஏதமாம், வேந்தன் சீறின் யாதாய் முடியுங் கொல்! என்று இடித்துரைப்ப, அடிகள் அவர் சொற் களுக்கு அஞ்சாது, எம்பெருமானே மக்கள் வடிவிற் போந்து எளியேனை யாட்கொண்டருளினான்; அதனால் எனது பிறவித் துன்பமும் அற்றேன்; மன்னவற்குப் பிழைசெய்தல் ஆகா தென்பதுபற்றி இங்கு மீண்டேன்; அவற்குரிய பெரும் பொருட் கடனை ஒருவிரகாற் போக்குவேன்; இதற்கோர் ஐயம் இன்று; நீவிர் யார்? யாம் யார்? எல்லீரும் எமக்கு அயலவரே யாவீர்; இம் மாநிலத்தின்கண் எம்மை வெறுப்பார் யார்! உவப்பார் யார்! நீவிர் நுமக்குரிய வினைமேற் சென்மின்! என்று கூற, அவரெல்லாரும் அடிகளை யகன்றுபோயினார். மற்றை ஞான்று, அரசற்கு நெருங்கிய ஏவலாளராய் உள்ளார் அடிகள்பாற் போந்து புரவிகள் வந்தனவோ? எனத் தொழுது வினவ, அவர் அவை மெய்யாகவே வரும், இப்போது விரைதல் வேண்டா; தெருக்களை யெல்லாம் கோடித்து வைக்கச் சொல்லுமின்! யாம் உரைத்தசொல் தப்பாது; அரசற்குக் கூறுமின்! என்று சொல்லிவிடுப்ப, அவ்வேவலரும் அரசன்பாற் சென்று அடிகள் கூறியவற்றை அங்ஙனமே எடுத்துச்சொல்ல, வேந்தனும் மகிழ்ச்சி மிக்குத் தெருக்கடோறும் பசிய வாழைமரங்கள் நாட்டி, நிறைகுடங்கள் வைத்து, நறுமணங் கமழும் பூமாலைகள் தொங்கவிட்டு, இடங்கடோறுங் விளக்குகள் ஏற்றிப், பட்டாடைகளை மேன்மறைப்பாகக் கட்டிக், குதிரைப் பந்திகள் வையாளிகள் கழக மண்டபம் பண்டாரங்கள் மாடங்கள் திருமடங்கள் கோபுரங்கள் சொக்கபிரான் திருக்கோயில் அதன் வாயில்கள் முதலியனவெல்லாம் அழகுமிக்கு விளங்கக் கோடித்து, அம்மதுரைமாநகர் வான்நகரே யென்னப் பொலிவுறச் செய்தான். இப்பெருஞ் சிறப்புக் களையெல்லாங் கண்ட அமைச்சரில் ஒருவன், பாண்டிய மன்னன் தனித் திருக்கும் நேரம் பார்த்து அவனுழைச் சென்று வணங்கி, எம் பொருநை நாட்டரசே! அடியேன் கூறுவதொன்றுண்டு; நும்பாற் சிறப்புப் பெயர்பெற்ற திருவாதவூரர் குதிரைகொள்ளும் பொருட்டுச் சோழநாட்டையடைந்தவர் நீறு பூசிய சிவனடியார் கையில் நின்பொருளையெல்லாங் கொடுத்துச செலவு செய்து விட்டார். நீர் விடுத்த தூதுவர் ஏகி நுமது ஓலையைக் காட்டியபின்னர், அவர் நும்பால் வந்து நுமது சீற்றத்தைத் தணித்துத் தாம் உயிர் பிழைக்கல் வேண்டி அன்புடை யார்போல் நின்று ஆவணி மூலத்திற் பரித்திரள் வருமெனக் கூறினார்; அவர் கூறிய வெல்லாம் பொய்யுரைகளாகும் மன்னரேறே! என்று புகன்றானாக, அச்சொற் கேட்ட பாண்டியன் அருகுநின்ற தூதுவரை, வெகுண்டு நோக்கி நீவிர் திருப்பெருந்துறைக்கு விரைந்துபோய் அங்கே குதிரைகள் உளவோவெனக் கண்டு விரைந்துவந் துரைமின்! என்று பணித்தான். உடனே, வலிய தூதுவர் வல்லே திருப்பெருந்துறை சென்று அதன் கண்ணும் அதனைச்சூழ்ந்த பிறவூர்களின் கண்ணுந் தேடிப் பார்த்துங் குதிரைகளைக் காணாமையின் வருத்தத்தோடுந் திரும்பிவந்து பெருமானே! பரிகளைக் கண்டிலேம் எனப் பகர்ந்தார். பகர்தலும், பாண்டியன் மிகச் சினந்து தண்டத் தலைவரை நோக்கி, நமது வினையைத் தான் முடிப்பதாகச் சொல்லி நமக்கு இடரே செய்வானாகிய அவ்வாதவூரனைத் துன்புறுத்திச் சிறையிலிட்டு நம்முடைய பொருளையெல்லாம் அவன்பா னின்றும் வாங்குமின்கள்! என்று கட்டளையிட்டான். அத்தண்டத் தலைவர்களும் உடனே அடிகளின் எதிரே சென்று முனிவு கொண்ட முகத்தினராய் நின்று, சீற்றமுடைய நம் மன்னன் அந்நாள் நுமக்குக் குதிரை கொள்ளக் கொடுத்த பொருளையெல்லாம் நும்பால் நின்றும் வாங்கும்படி எமக்குக் கட்டளையளித் திருக்கின்றனன். அரசன் இங்ஙனங் கூறியது என்னையெனின், மன்னவனால் ஏவப்பட்ட ஒற்றர் பெருந்துறை சென்று அங்கே குதிரைகளைக் காணாராய்த் திரும்பி வந்து கூறிய மாற்றங்கேட்டு அரசனும் நும்பால்வைத்த நேசத்தை விட்டான்; இனி நீர் அமைச்சரா யிருந்து அரசாளுதற்கும் விடான்; இனிமேல் நீர் அரசற்குரிய பொருளையெல்லாந் தருதல் வேண்டும் என உரைப்ப, அடிகள் ஏதுங் கூறமாட்டாராய் வாளா இருப்ப, அவரை வலிந்துபற்றிச் சென்று சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைப்பித்த அத்துணையிற் பாண்டிய மன்னன் சினம் அடங்கானாய்ப், பின்னும் அவரை வருத்துதற்பொருட்டுப் பிரம்படிகாரரை ஏவ, அவரும் அவர்பாற் போந்து, அவரை அடித்துத் துன்புறுத்துதற்கு நெருங்கினவர் அவர்பால் வியக்கத் தக்க சில கடவுள் நிகழ்ச்சிகளையும் குழைந்துருகும் அன்பின் பெருக்கையுங் கண்டு அவரை அடித்துத் துன்புறுத்த மாட்டாராய் அஞ்சிநிற்ப, அஃது ஒற்றரால் உணர்ந்த அரசன் கூற்றினுங் கொடிய சிலரை ஏவ அவர் போந்து அவரைக் கடுவெயிலில் நிறுத்தி, அவரது அருமைத் திருமேனியை வளைத்து வருத்துவாரானார். அக்கொடுந் துன்பம் பொறுக்கமாட்டாமற், பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ அருள் இலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே என்பதை முதலாக உடைய வாழாப்பத்தும். சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் நீற்றாய் பங்கயத் தயனும்மால் அறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருத்தும், மேவியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. என்பதை முதலாகவுடைய அருட்பத்தும் அருளிச்செய்து அடிகள் மிக நைந்துருகினார் என்பது புலனாகின்றது. இவ்வாறு துன்புறுத்தப்பட்ட காலத்திலேயே குழைத்தாற் பண்டைக் கொடுவினை நோய் எனத் துவக்குங் குழைத்த பத்தையும் அடிகள் அருளிச் செய்தாரென நம்பியார் திருவிளையாடல் உரையாநிற்கும். இவ்வாறு, திருவாதவூரடிகள் அரசன் ஏவிய வன் கண்ணரால் துன்புறுத்தப்பட்டு அத்துன்பம் பொறாமல் அழுது பாடுதலும், அடியார் துயர்நீக்குந் திருப்பெருந்துறை யாண்டவன் அவ்வூர்க்குப் பக்கத்தேயுள்ள மிழலைநாட்டு நரிகளையெல்லாம் வருவித்து, அவை தம்மை யெல்லாம் அழகிலும் நடையிலுஞ் சிறந்தவாம் பரிகளாக உருமாற்றிக், கட்புலனாகாத நுண்ணுடம்பில் அணுக்கராய் நிற்குந் தன் றிருவடித் தொண்டரைக் குதிரைச் சாத்தாய்க் கட்புலனாம் உருவில் வருமாறு கற்பித்துத், தானுமோர் அளவுபடாச் சிறப்பினையுடையதொரு புரவிமீது அமர்ந்து, அக் குதிரைத் திரளும் அதனை நடாத்தும் வணிகச் சாத்துந் தன்னைப் புடைசூழ்ந்துவரத், திருப்பெருந்துறையிலிருந்தும் புறப்பட்டு, அவ்வூர்க்கு மேல்பால் உள்ளதாகிய மதுரைமாநகரை நோக்கி விரைந்து வந்தனன். இவ்வாறு வந்தமையினை அடிகளே, குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்1 என்று கூறுதல் காண்க. திருப்பெருந்துறையிலிருந்தே சிவ பெருமான் குதிரை கொண்டு குதிரைச்சேவகனாய் வந்தருளினா னென்பதூஉம். பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின் மேல் வந்தருளி2 எனவும், மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன்3 எனவும், ஆடலமர்ந்த பரிமாஏறி ஐயன் பெருந்துறையாதி அந்நாள் ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவார்4 எனவும், வண்சாத்தி னொடுஞ் சதுரன் பெருந்துறையாளி அன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறிவார்5 எனவும், பரியின் மேல்வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை6 எனவும், நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை- வீட்டி அருளும் பெருந்துறையான்7 எனவும், நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையான்8 எனவும், அடிகளே பலகாலும் பலவிடத்தும் அருளிச் செய்திருத்தல் கொண்டு நன்கு தெளியப்படும். அங்ஙனந் திருப்பெருந் துறையிலிருந்து சிவபிரான் கொணர்ந்த குதிரைகள் நரிகளால் ஆக்கப்பட்டனவேயா மென்பதூஉம் இறுதியிற் காட்டிய நரியைக் குதிரைப் பரியாக்கி என்பதனாலும், அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்9 ஒருங்குதிரை உலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே10 என்பவற்றாலும் நன்கு தெளியப்படும். இவ்வாறு இறைவன் நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொணர்ந்தது திருவாதவூரடிகள் பொருட்டே யாமென்பதூஉம், ஞாலம் மிகப் பரிமேற்கொண்டு நமையாண்டான்11 எனவும், பரிமேற் கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி யுருவறியாது, என்றன் உள்ளமதே12 எனவும், இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேஉன் பேரருளே.13 எனவும் அடிகளே தம் அருமைத் திருமொழிகளால் எடுத்தோதுதல் கொண்டே தெற்றென விளங்கற்பாலதாம்; இம்மூன்று மேற்கோள்களுள் முன்னையது மாயம் மிகக் குதிரைமேல் எழுந்தருளிவந்து நம்மை ஆண்டு கொண்டான் என்றும், அடுத்தது குதிரைமேல் எழுந்தருளி வந்த பாகனார் ஒருவரையல்லாமல் வேறொருவரது உருவத்தினை என் உள்ளமானது அறியமாட்டாது என்றும், மூன்றாவது, இரும்பையொத்த மனத்தினையுடைய என்னை இழுத்து இழுத்து, என் என்பினையும் உருகச்செய்து, கரும்பின் சாற்றை யொத்த பேரின்பச் சுவையை நின்றிருவடித் துணைகளால் எனக்குக் காட்டியருளினை; அஃது ஒன்றோ, முழுதுங் கங்கைநீர் உலவுஞ் சடையினை உடையானே! நரிகளையெல்லாம் பெருங் குதிரைகளாக்கிய வாற்றானும் அந்நாளில் உனது பேரருளை எனக்குக் காட்டினை என்றும் பொருள் தந்து அடிகள் பொருட்டே இறைவனால் நரிகள் பரிகளாக்கப்பட்டன என்னும் உண்மையினை நன்கு வலியுறுத்திக் காட்டுதல் காண்க; மூன்றாஞ் செய்யுளின் ஈற்றடிகட்கு நரிகளையெல்லாம் பெருங் குதிரைகளாக்கிய வகையானுமன்றோ, உனது பேரருளை எனக்குக் காட்டினை என்று பொருளுரைப்பினும் ஆம். அவ்வரிய பெரிய மேற்கோள்களாலும் அடிகள் வரலாற்றினைக் கூறும் எல்லாப் புராணங்களாலும் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் அடிகள் பொருட்டாகவே ஒருகாலத்து ஒரு முறையே நிகழ்த்தப்பட்டமை வெள்ளிடை மலைபோல் இனிது விளக்கிக்கிடப்பவும், இவற்றுக்கெல்லாம் முற்றும் மாறாக ஏதொரு மேற்கோளும் இன்றி நரியைப்பரியாக்கியது அடிகள் பொருட்டாகவன்றி அவர்க்கும் முற்பட்ட காலத்தே பிறிதொன்றும் நிகழ்ந்திருக்கலாம் எனத் தமக்குத் தோன்றிய வாறே பிழைபடக் கூறிப் பெரிது மகிழ்வாருஞ் சிலர் உளர். ஒரு மேற்கோடானும் இன்றி முன்னை நூல்கட்கெல்லாம் முழுதும் முரணாகக் கூறும் இவரது பிழையுரை தான் ஆராய்ச்சியுரை போலும்! இவர் தம் இப் பிழைபாட்டுரையை அறிவுடையார் கண்டு நகுதலே செய்வராகலின் அதுபற்றி வரக்கடவதோர் இழுக்கின்று. இப் பிழைபாட்டுரையின் இயல்பை, அடிகள் காலம் இதுவென்று வரையைறுக்கும் மூன்றாம் பகுதியிற் பரக்க ஆராய்ந்தொழிப்பாம். இனி, இறைவன் பதிமீதிவர்ந்து வராநிற்ப, அடிகளோ தாம் பிறந்தருளிய திருவாதவூரின்கண்ணே சிறையில் இடப்பட்டு வருந்தாநின்றார். அடிகள் திருப்பெருந்துறையினின்றும் மீண்டபின், பாண்டியனுக்குஅமைச்சராயிருந்து அரசாளுதலில் விருப்பில்லாமையின், மதுரைமா நகரில் இருத்தலைவிட்டுத் தமது திருவாதவூரில் தமது உரிமை மனையகத்தே வந்திருந்தாரென்பதும், திருப்பெருந்துறையிற் குதிரைகள் இல்லாமையை வேவுகாரரால் உணர்ந்த பாண்டியன் தன் தண்டற்காரர்களை ஏவி அவரைச் சிறையில் அடைப்பித்துப் பலவாற்றானும் வருத்தியது திருவாதவூரிலேயா மென்பதும் நம்பியார் திருவிளையாடலை உற்றுநோக்குதலாற் புலப்படுகின்றன. குதிரைத்திரளை நடாத்திவந்த பெருமானோ வாதவூர்ப் புறமாய்ப்போந்து, தமது திருவடிச் சிலம்பின் ஒலியை எழுப்ப, அதனைச் சிறையிலிருந்தவாறே கேட்ட அடிகள் ஈதென்னையாண்ட எம்பெருமான் திருச்சிலம் போசையே யாம் எனத் தெளிந்து இறைவனை வழுத்தி, மதுரைக்கு ஒரு காதந் தொலைவில் உள்ள தமதூரின்கட் பரிகள் வந்தமை யறியாராய் அவை வருதலை வேண்டி அழுது குறையிரப்பா ரானார், இங்ஙனம் வருந்தா நின்ற அடிகளின் திருச்செவிகட்குப் புலனாகக், குதிரைமேல் வந்த பெருமான் தனது திருச்சிலம் போசை எழுப்பிய அருட்டிறத்தை, வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்14 என்று அடிகளே அருளிச் செய்திருத்தல் காண்க. அடிக்குறிப்புகள் 1. கீர்த்தித் திருவதவல், (27, 28) 2. திருவம்மானை, (20) 3. குயிற்பத்து, (7) 4. திருவார்த்தை, (4) 5. திருவார்த்தை, (10) 6. பண்டாய நான்மறை, (2) 7. பண்டாய நான்மறை, (3) 8. ஆனந்த மாலை, (7) 9. கீர்த்தித் திருவகவல், (25, 26) 10. திருவேசறவு, (1) 11. திருவேசறவு, (1) 12. திருப்பொனூஞ்சல், (8) 13. திருப்பாண்டிப் பதிகம், (1) 14. கீர்த்தித் திருவகவல், (52, 53) 5. குதிரைப்பாகற்கும் மன்னற்கும் இடை நிகழ்ந்த நிகழ்ச்சி இனி, வாதவூரிற் சிறைக்காவலரா யிருந்த தூதுவர் பரித்திரள் வருகையைக் கண்ட அளவானே மனம் மகிழ்ந்தாராய், உள்ளே அடிகள்பாற் சென்று புரவிகள் வந்தமையினை அறிவித்து அவற்றின் வருகையைப் பாண்டிய மன்னற்குச் சென்று அடிகளே நேரிற் றெரிவிக்குமாறு ஏவி, அவரைச் சிறையினின்றும் விடுதலை செய்தார். அதனைக் கேட்டதும், அடிகளும் அளவில்லாத மகிழ்ச்சிமிக்காராய், மதுரை ஏகிப் பாண்டிய மன்னனை நெருங்கித் தென்னர் பெருமானே! EkJ Ó‰wª jÂjš nt©L«.; நமது மதுரைப்புறத்தே குதிரைத் திரள்வந்த தென்று தூதுவர் வந்து கூறினார் என்றுரைப்ப, அம்மன்னனுங் குதிரைகளின் வரவை எதிர்நோக்கித், தெருவின்கண்ணதோர் அழகிய மண்டபத்தில் வந்து வைகினான். வைகி நெடுநேரங் காத்திருந்தும், இறைவனது திருவிளையாட்டாற் பரிகள் வந்தில, அதனால், அரசன் மனம் புழுங்கி ஒற்றரை ஏவ, அவரும் மதுரைப் புறத்தே நாற்பாலுஞ் சென்றுநோக்கி மீண்டு பரிகளின் வரவை எப்பக்கத்துங் காண்கிலேம் என்று கூறினார். அச்சொற் கேட்ட மன்னன் வெஞ்சினம் மிக்கு ஐயகோ! நமக்கு நல்ல அமைச்சன் வாய்த்தான்! நம் பொருளையெல்லாம் எடுத்துச் சென்று வீணே அழித்ததல்லாமலும், வென்றி மிக்க குதிரைகள் இப்போது வரும்! இதோ வந்தன! எனவும் பொய்த்து உரையாடா நின்றான். குறும்பனாகிய இவ்வமைச்சனை ஊர்க்குட் கொண்டுபோய் நிறுத்திப் புளிய மிலாறுகளால் இவனை முதுகின்மேல் அடித்துத் துன்புறுத்துமின்கள்! அங்ஙனஞ் செய்தற்கு நீவிர் அஞ்சிக் கூசாதீர்கள்! இது நீவிர் அரசற்குச் செய்ய வேண்டி கடமையாம் என்று கூறிவிடுப்ப, அவர்களும் அங்ஙனமே அடிகளை ஈர்த்துப் போய் அவரை அடிப்பதற்கு நெருங்கக்கண்டு, விழிகளில் நீர் ஒழுகத் திருமுகம் வியர்க்கச் சிவபெருமானை நினைந்து அடைக்கலப் பத்துப் பாடுவாரானார். இதனோடு, குயிற்பத்தும் இவ்விடர்ப் பாடான நேரத்திலேயே அடிகள் அருளிச் செய்தாரெனக் கூறும் நம்பியார் புராணவுரை ஈண்டைக்குப் பொருத்த முடைத்தாகக் காணப்படவில்லை; யாங்ஙனமெனிற், குயிற்பத்தின் ஏழாஞ் செய்யுளின்கண் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் எனப் பரிமேல் வேந்ததனை இறந்த காலத்தில் வைத்துக் கூறுதலின்; இப்பதிகம் அடிகள் மதுரையை விட்டகன்று திருவுத்தரகோச மங்கை சென்றபின் அருளிச் செய்ததாகல் வேண்டும். இனி, அடைக்கலப்பத்துப் பாடி அடிகள் உள்ளம் நைந்து வேண்டிய வளவிலே பரித்தொகுதிகள் தாம் வாவி வரும் விரைவால் எழுப்பிய புழுதிகள் வானத்தை மறைப்பவும், தம்மேல் வருவார் ஊதும் எக்காள ஓசை மதுரைமா நகரிலுள்ளார் செவிகளைச் செவிடுபடுத்தவும் எல்லாருங் காண நகர்க்குள்ளே வந்து புகுந்தன. இதனைக் கண்ட பாண்டிய மன்னன் பெரிதும் வியப்படைந்து, கேட்போர் உள்ளம் உருகியுகுமாறு திருவாசகச் செழும் பாடல்கள் அழுதழுது கூறும் அடிகளை அழைத்து அருகு இருத்தி, அவர்தங் கண்ணீரைத் துடைத்துத், தாஞ் செய்த பிழையினைப் பொறுக்கும்படி வேண்டினான். இதற்குட் சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய அப் பரிகளைச் செலுத்திக் கொண்டு குதிரைச்சாத்தவர்கள் அம்மதுரைமா நகரின் கோமறுகினூடே வந்தார்கள். கடலின் அலைகள்போற் பிடரிமயிர் குலுங்கப், பல்வகை நடையும் ஓங்கிய எழிலும் கடிவாளம் பொருத செவ்வாயும் உடைய வாய் வந்த அக் குதிரைகளின்மேல் இருந்த சாத்தவர்கள் எல்லாரும் தலையிற் பாகையும் உடம்பிற் குப்பாயமும் கையிற் சம்மட்டியும் உடையராயிருந்தனர். அவர்கட்கு நடுவே, மழமழவென மிளிரும் ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் அமர்ந்து, தோள்மிசை நித்திலமாலை புரள மாணிக்கக் குழைகள் செவியின்கட் சுடர் விரிந்து விளங்கப் பளபளப்பான குப்பாயம் உடம்பின்கண் மினுமினுவென்று திகழ அவர்கட்குத் தலைவனான ஒருவன் தன் குதிரையின் கடிவாளங்களை ஒரு கையில் வலித்துப் பிடித்து மற்றொரு கையிற் செண்டு ஏந்தியபடியாய் அதனை வலமிடமாகச் செலுத்திக்கொண்டு வந்தனன். இங்ஙனம் வரும் இத் தலைவனது பேரழகினைக் கண்டு அத் தெருவின்கண் நிறைந்த மகளிர் ஆடவர் என்னும் இருபாலாரும் அவன்மேற் கரையிகந்த பேரன்பு கொள்ளப் பெற்றார். இங்ஙனம் பரிமேல்வந்த பாகனாரைக் கண்டு மங்கையர் தம்முட் காதல்கொண் டுரையாடினமை பொருளாகக் கொண்டு அடிகள் அன்னைப்பத்து இயற்றி யருளினாரென்னும் நம்பியாருரை பொருத்தமாகக் காணப்படவில்லை; என்னை? குதிரைப்பாகன் கோலத்தோடு பலியேற்ற கோலத்தினையும் புணர்த்துக்கூறுதலின்; அந் நேரத்திற் செய்யப்பட்டதாயிற் பரிப்பாகன் கோலம் ஒன்றுமே கூறுதல் வேண்டுமென்க. கண்டா ரெல்லாங் காதல்கொண்டு உள்ளம் வியப்பத் தோன்றிய இப் புரவித் தலைவனும் அவன்றன் சாத்தவர்களும், அரசனால் முன்னமே வகுத்து ஒப்பனை செய்யப்பட்டிருந்த வையாளிப் பெருந் தெருவின்கண் வந்து நிரல்பட நின்றனர். அவர்க டம்மைக் கண்ட பாண்டிய மன்னன், அத் தலைவனும் அவனுடன் போந்த சாத்தவர்களும் உருவம் பருவம் அணி படை முதலிய எல்லாவகையிலும் ஒருங்கொத்திருத்தல் நோக்கி வியப்புற்று, இவர்களுள் தலைவர் யார்? என்று வினவப், பக்கத்திருந்த வாதவூரடிகள், இதோ அவர் எதிரில் வருவர், என்று விடைபகர்ந்த அளவிலே, அத் தலைவனும் தன்னிரண்டு கால்களாலுந் தன் குதிரையின் விலாப்புறங்களை அதுக்கிக், கசைக்கோலால் அதன் புறத்தில் அடித்துக், கடிவாளத்தைச் சிறிது தளர்த்திப் பிடித்தபடியாய் பாண்டியன் எதிரே வந்தனன். அதனைக் காண்டலும் பாண்டியவேந்தன் அடிகளை நோக்கி, இவ் வாரியப்பாகர் இவ் வையாளிப் பெருந் தெருவின்கட் பலபடியாய் அதனை நடத்திக்காட்டுமாறு சொல்லும்! என்று கூற, அச் சொற்கேட்ட அடிகள் எல்லாம் வல்ல தம் பெருமானைத் தாம் ஏவும்படி கற்பித்தானே யென்று உள்ளம் நைந்து, ஆயினும் அதனைப் புறத்தே காட்டாராய் அக் குதிரைப்பாகன்பாற் சென்று அவனை மனத்தாற்றொழுது, எம்பெருமானே! கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயினேன் பொருட்டாகக், கடவுளரானுங் காண்டற் கரிய நுமது திருவுருவத்தைப் புழுத்தலை நாயினேன் கண்ணாரக் காண எத்தவம் புரிந்தேன்! பெம்மானே! நீ இப்போது எழுந்தருளிய படியாக நுமது திருவுருவத்தைக் கண்டு வணங்கும் அவ்வளவே யல்லாமல், வேறு எவ்வாற்றால் எவர்தாம் நுமது வடிவினை யறிவல்லார்! எல்லையற்ற இவ் வருட்பெருக்கினைக் கண்டன்றோ உயர்ந்தா ரெல்லாருந்தேவரீர் அடியார்க்கு எளியர் என்பர்! என்று கண்ணீர் யாறாய்ப் பெருகப் பலவாறு வழுத்துரை கூறிப், பாண்டியனது விருப்பத்தைத் தெரிவித் தருளினார். குதிரைப்பாகனாய் வந்த ஐயனும் அவரது வேண்டுகோளைத் திருச்செவியேற்றுக், குதிரையேற்றத்தில் மிக வல்லுநராயிருப்பவரும் இதற்குமுன் எங்கும் காட்டியிராத அத்துணைப் புதுவகையா லெல்லாம் அதனைத் திறம்உற நடாத்திக்காட்ட, அவற்றையெல்லாங் கண்ட மன்னன் வியப்பினாலுங் களிப்பினாலுந் தன்னை மறந்தானாய்க், கைகள் தலைமேற்குவிய அப் பெருமானை வணங்குதற் கெழுந்தவன், பின்னர்த், தன்னுணர்வுபெற்று அரசன் ஒரு குதிரைப்பாகனை வணங்குதல் தக்கதன் றெனத் தன்னைத்தான் தடுத்திருந்தான்; மற்று அங்குநின்ற பிறரெல்லாந் தம்மை மறந்து ஐயனைத் தொழுதார். அதன்பின், அக் குதிரைப்பாகன் வென்றிவேந்தர் கொள்ளத்தக்க பரிகளுக்கு ஆகும் இலக்கணங்களும் ஆகா இலக்கணங்களும் விரிவாக வகுத்து விளக்கித் தான் கொணர்ந்த புரவிகள் எத்தகைய குற்றமும் இல்லாத நற்பரியினத்திற் சேர்ந்தவாதலையும் எடுத்துக் காட்டி, அப் பரிகளெல்லாம் அம் மன்னன் ஏறுதற்கிசைந்தனவேயா மென்பதும் உணர்த்தித், தான் திரட்டி வந்த குதிரைகள் ஓரிலக்கத்திற்கும் விலைகள் இவ்விவ்வளவாயின வெனவுங் கணக்குச் சொல்லி மாற்றாரை வெல்லுதல் வேண்டிய அரசர்க்குச் சிறந்த குதிரைப்படை இன்றியமையாததாதலும் அக்குதிரைகளைத் தான் சிறிது காலந் தாழ்த்துக் கொணர்ந்தமை இறைவன் திருவிளையாட்டாதலும் அவன் ஏற்கக்கூறி, அக் குதிரைகளைக் கயிறு மாறிக் கொண்டபின் வரும் நன்மை தீமைகள் அரசன் பாலவே யாகுமல்லால் தன்பால் ஆகா எனவும் வற்புறுத்தி அப் பரித்திரள் முற்றும் பாண்டியன் கையில் ஒப்படைத்தான். பாண்டிய மன்னனும், அக் குதிரைத் தலைவன் சொல்லிய வற்றிற்கெல்லாம் முழுதும் உடன்பட்டு, நாம் இவை விலைகொள்ளுதற்குக் கொடுத்த பொன் முழுதும், இவற்றுள் ஒரு குதிரைக்கும் போதாது என்று எண்ணினவனாய் அவற்றைக் கைக்கொண்டான்; கொண்டு, பரித்துறைக் காவலாளரைக் கூஉய், அப் புரவிகளை யெல்லாம் அவர்பால் ஒப்புவித்து, அவை தம்மையெல்லாம் பந்திகளிற் சேர்ப்பிக்கு மாறு கட்டளையிட்டான். பின்னர்க், கிடைத்தற்கரிய துள்ளுவாம்பரிகள் கிடைக்கப் பெற்ற பெருங்களிப்பினாலும், அக் குதிரைப் பாகன் காட்டிய குதிரையேற்றத்தைக் கண்டு அவனை வியந்த வியப்பினாலும் பாண்டிய மன்னன் விலையிடுதற் கரிய பொற்பட்டாடை ஒன்றைத் தன் கையாலெடுத்து அதனை அக் குதிரைத் தலைவற்கு நல்க, அத் தலைவன் அதனைத் தன் சாட்டைக் கோலின் முனையால் வாங்கித், தன்னடியாரான வாதவூரர் பொருட்டு அதனைத் தன் முடிமிசைப் புனைந்துகொண்டான். இங்ஙனங், குதிரைத் தலைவன் குதிரையேற்றங் காட்டித் தான் கொணர்ந்த புரவிகளின் குற்றமற்ற இலக்கணங்கனையெல்லாம் விரித்துரைத்து அவை தம்மையெல்லாம் பாண்டிய மன்னன் பால் ஒப்படைத்தபின், விலைவரம்பற்ற பரிகளைப் பெற்றமைக்கும் அவற்றுள் ஒன்றை வியக்கத்தக்கவாறாய் நடாத்திக் காட்டிய பெருந்திறமைக்கும் மிக உவந்து இறுதியில் அம் மன்னன் அத்தலைவற்குப் பொற்பட்டுத் தூசு நல்கினான் என்று நம்பியார் திருவிளையாடல் உரையா நிற்கத், திருவாதவூரர் புராணமோ அக் குதிரைப்பாகன் தன் புரவியை நடாத்திக்காட்டிய அளவிலே பெரிது மகிழ்ந்து அரசன் அவற்குப் பட்டுத்தூசு நல்கினானென்று கூறும். குதிரையேற்றங் காட்டி அவற்றின் இலக்கணங் களும் முற்றவுரைத்து அவை தம்மைப் பாண்டியன்பால் ஒப்படைத்த பின், அவன் அக் குதிரைத் தலைவற்குப் பொற்றூசு வழங்கி அவனை வழிவிடுத்தா னென்றலே இயற்கை நிகழ்ச்சிக்கு ஒத்ததாகலின் நம்பியா ருரையே ஈண்டைக்குப் பொருத்தமுடைத்தாதல் காண்க. இனிப், பாண்டியன் விலைவரம்பற்ற அப்பொற்பட்டினை எடுத்து நல்கியக்கால், அக்குதிரைத்தலைவன் அதனைத் தன் செண்டுக்கோலின் முனையால் வாங்க, அதுகண்டு மன்னன் சினங்கொள்ள, அருகிருந்த அடிகள் அஃது அவரது நாட்டு வழக்கம் என்று கூறி அவனது சினத்தைத் தணிவித்தார் என்று நம்பியார் திருவிளையாடலும் திருவாதவூரர் புராணமுங் கூறாநிற்கப், பரஞ் சோதி முனிவர் திருவிளையாடலோ அங்ஙனம் பாண்டியன் நல்கிய துகிலினை அக் குதிரைத் தலைவன் தன் குதிரை யினின்றும் இறங்கிப் பணிவுடன் ஏற்றுத் தன் தலைமேற் சூடிக்கொண்டான் எனக் கூறும். நம்பியார் திருவிளையாடல் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்கும் திருவாதவூரர் புராணத்திற்கும் மிக முற்பட்ட பழைய காலத்தே இயற்றப் பட்ட தொன் றாகலானும், அதன்கட் கூறப்படும் வரலாறுகள் ஆராய்ந்து பார்க்குங்காற் சிற்சில வகைகளிற் றவிரப் பெரும் பாலும் பொருத்தமாகவே காணப்படுதலானும், அதற்குப் பின்வந்த திருவாதவூரர் புராணமும் அந் நூலுட் கூறுமாறே இவ் வரலாற்றினைக் கூறுதலானும் இவ்விரண்டு நூல்கட்கும் மாறாகப் பரஞ்சோதியார் திருவிளையாட லுரைக்கு முரை கொள்ளற்பால தன்றென மறுக்க, ஆராய்ந்து பார்க்குந்தோறும் பரஞ்சோதியார் திருவிளையாடல் ஒருகாற் சிலகாலன்றிப் பலகாலும் பிழை படக் காண்டலின் முன்னை நூல்களோடு முரணும் இடங்களிலும், ஆராய்ச்சிக்குப் பொருந்தா இடங்களிலும் இதனுரை உண்மையெனத் துணியற்பாற்றன்று. இனிக் குதிரைமேல் வந்த அத் தலைவன் சிவபிரானே யென்பதூஉம், நேரே கண்டு வைத்தும் அவன் அப் பெருமானாதலைப் பாண்டியன் சிறிதும் உணர்ந்தில னென்பதூஉம் அடிகளே, “ஈண்டிய மாய இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்லவல்லன் அல்லன்!1 என அருளிச் செய்தவாற்றால் நன்கு பெறப்படும். இது கொண்டு, இப் பாண்டிய மன்னன், வேப்பங் கனிகளையுஞ் சிவலிங்க வடிவாய்க் கண்ட வரகுண பாண்டியன் அல்லனென்பதூஉம் மேலுமேலும் வலியுறுத்தப்படுதல் காண்க. இனிக் குதிரைமேல் வந்த இறைவன் ஆரியர்க்குரிய குப்பாயச்சட்டை அணிந்திருந்தா னென்பதுஉம், பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்2 என்று அடிகளே ஓதுமாற்றாற் பெறப்படும். இனிப், பாண்டிய மன்னன் அக் குதிரைத் தலைவனோடுடன் போந்த சாத்தவர்கட்கெல்லாம் உயர்ந்த தூசுகள் நல்கி எல்லாரையும் விடைகொடுத்துப் போக்கியபின், திருவாதவூரடிகட்குப் பொற்பட்டம் முதலான வரிசைகள் அளித்து அவரையும் மனைக்கேகப் பணித்துத் தானுந் தன் அரண்மனைக்கட் புகுந்தான். குதிரைச் சேவகனாய் வந்த பெருமான் பாண்டியன்பால் விடைபெற்று ஏகத் துவங்குகையில் அடிகள் பிடித்தபத்துப் பாடியருளினாரென்னும் நம்பியா ருரை பொருத்தமாகக் காணப்பட வில்லை; என்ன? தம்மையுந் தம் மனைவிமக்கள் முதலான குடும்பத்தாரையும் உலக வாழ்க்கையில் வாழவொட்டாது பிரித்துத் தனது திருவடிப் பேரின்ப வாழ்வில் வாழவைத்த இறைவனது திருவருட்டிறத்தை வியந்து, ஊத்தையென் றனக்கு வம்பெனப் பழுத்தேன் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே3 என்று அதன்கட் டாம் அமைச்ச வாழ்க்கையினின்றும் விடுவிக்கப் பட்டமையினை நன்கெடுத்துக் கூறுதலானும், தாம் இறைவற்குத் திருவடித் தொண்டரான சிறப்பும் தம்பொருட்டுக் குதிரை கொண்டு குதிரைமேல் வந்த எல்லாம் வல்ல பெருமானின் உண்மையும் அறியாமல் தம்மை அமைச்சராகவும் தம்பொருட்டு வந்த ஆண்டவனைக் குதிரைச் சேவகனாகவுமே நினைந்து அதற்கேற்பவே ஒழுகிய அம் மன்னன் முன்னிலையில் தம்மியல்பையுந் தம் தலைவனியல்பையுந் தமக்குள்ள அன்பின் பெருக்கையுந் தெற்றெனப் புலப்படுத்தி அப் பிடித்தபத்தினை அருளிச் செய்தல் ஆகாமையானும் என்பது. அது நிற்க. அடிக்குறிப்புகள் 1. திருப்பாண்டிப் பதிகம், (6) 2. அன்னைப் பத்து, (7) 3. பிடித்த பத்து, (1) 6. நரியைப்பரியாக்கியது அடிகள் பொருட்டே இனி, அரசனையுள்ளிட் டெல்லாருந் தத்தம் இருக்கை சேர்ந்தபின் பகலவனும் மேல்பால் மறைந்தனன். குதிரைத்துறைக் காவலரும் அக் குதிரைகளைப் பந்திகளில் நிரல்படக் கட்டி, அவை தமக்கு உணவாகப் பருப்பும் நெய்யுங் கருப்புக் கட்டியும் சேர்த்துக் கலந்து, இனிய புல்லைக் கொணர்ந்து இட்டுப், பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரையுங் கழுவி வேவுவித்துப் பையில் நிறையப் பெய்து கட்டி எவ்வளவோ முயன்ற தீனி கொடுத்தும், அவைகள் அவற்றை அயின்றில. பின்னர் வரவர இருள்மிகுந்து நடுயாமம் ஆதலும், வந்த அப் புதுப்பரிகளெல்லாம் நரிகளாக உருமாறி, அப்பந்திகளில் தமக்கு முன்னரே யிருந்த குதிரைகளின் அடிவயிற்றைக் கடித்து உள்ளுள்ள குடர்களைப் பிடுங்கு வனவும், கழுத்தைக் கடித்து இரத்தத்தை மாந்துவனவும், உயிர்துறந்து கீழ்வீழ்ந்த பழங் குதிரைகளின் உடம்பைக் கிழித்து உள்ளுள்ள தசை நிணம் மூளை முதலியவற்றைக் கிண்டிக் கிளறித் தின்பனவுமாய்ப் பந்தியிலிருந்த பழங் குதிரைகளையெல்லாம் ஒருமிக்கக் கொன்று, பிறகு அவற்றினின்றும் புறப்பட்டுத் தெருக்களிலும், ஆவணங்களிலும், அங் கணங்களிலும், வீடுகள் மடங்கள் சாவடிகளென்னும் இவற்றின் முற்றங்களிலுந் திரள் திரளாய்ச் சென்று ஊளையிட்டு ஓடுவவாயின. இந் நிகழ்ச்சியைக் கண்டு வெருக்கொண்ட பரித்துறைக் காவலரும் நகர்க் காவலரும் அவற்றை அடித்துக் கொல்லுதற்குப் படைக் கலங்களோடு எதிர்த்தும், அந் நரித்தொகுதிகள் அவர்க்கு அஞ்சாவாய்த் தாமும் அவரை எதிர்ப்பவாயின. இதற்குள் ஊரிலுள்ள குடிமக்க ளெல்லாருந் துயிலினின்று திடுமென எழுந்து கூக்குரலிடுவா ராயினர், இது, நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழவித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறை யான்1 என்று அடிகளே ஓதுமாற்றால் உண்மையாதல் தெளியப்படும். நரிகளின் ஊளையொலியும், காவலர் அவற்றை வெருட்டும் ஒலியும், நகரமாந்தர் துயில்நீங்கி எழுந்து அச்சத்தாலிடுங் கூக்குரலொலியும் ஒருங்குசேர்ந்து பேரிரைச்சலை விளைக்கவே பாண்டிய மன்னனுந் துயிலி னின்று திடுக்கிட்டெழுந்து அவ்விரைச்சல் நிகழ்தற்கு ஏது வென்னையென்று தன் மெய்க்காப்பாளரையும் வாயில் காவலரையும் வினவாநிற்கப், பரித்துறைக் காவலரிற் சிலரும் விரைந்து வந்து அவனை வணங்கி, நேற்றுவந்த புதுப் பரிகளெல்லாம் இன்றிரவின் நடுயாமத்தில் நரிகளாக மாறிப் பழம்பரிகளையுங் கொன்று பிடுங்கித்தின்று கூட்டங் கூட்டமாய் ஊளை யிட்டுக் கொண்டு ஊரெங்கும் உலவா நின்றன என்று அவ்வகை களையெல்லாம் விரித்துச் சொல்லி முறையிட்டார். அச் சொற் கேட்ட மன்னவன் இடிமுழக்கங் கேட்ட அரவென மனம் மடிந்து ஆற்றொணாத் துயரமும், அதனூடேயூடே, ‘பரிகள் நரிகளானவாறு யாங்ஙனம்! என வியப்புங் கொள்வானானன். சிவபிரான் தன் மெய்யடியார் பொருட்டுச் செய்யும் அருட்டிறங்களையும், அவற்றை அவனாற் செய்வித்துக்கொள்ளும் மெய்யடியார் உண்மை களையும் அறியமாட்டாத அப் பாண்டிய மன்னன், இத்தகைய மாயஞ் செய்தற்கு வாதவூரன் இந்திரசாலங் கற்றவனா யிருத்தல் வேண்டும் நாம் தந்த பொருட்டிரளை யெல்லாம் வீணே செலவிட்டு, அவற்றிற்கு ஈடுகட்டுவான் போல் நரிகளையெல்லாம் பரிகளாக உருமாற்றிக் கொணர் வித்து நம்பால் ஒப்படைத்தான்! என்று தன்னுள்ளே எண்ணிச் சீற்றங் கொண்டான்! இதனாலும், இவன் வெள்ளை நீறு மெய்யிற் கண்டு, கள்ளன் கையிற் கட்டு அவிழ்ப்பித்த வரகுண பாண்டிய மன்னன் ஆகான் என்பது பின்னும் வற்புறுத்தப்படுதல் காண்க. இவ்வாறு பாண்டியன் சீற்றமுந் துயரமும் வியப்புங் கொண்டி ருக்கையில் புலரிக்காலம் வந்தது; பகலவன் தன் அலர்கதிர்களைப் பரப்பிக்கொண்டு கீழ்பாலிற் செம்பொற்றிரளைப்போற் றோன்றினான். திருவாதவூரடிகள் செய்கடன்கள் கழிப்பிப், பாண்டியனைக் காண்டற்குத் தமது வாதவூரினின்றும் புறப்பட்டுச் சிவிகையூர்ந்து வந்தார். வந்து அரண்மனை புகுந்து பாண்டிய அரசனை வணங்கி அவனது முகத்தை நோக்கினவர், அது தழலிடைப்பட்ட தாமரைப்போல் வாடியிருக்கக் கண்டு, பெருமானே! வாடியிருப்ப தென்னை? என்று வினவினார். அதற்கவன் சினநகை புரிந்து, நீ நல்ல அறிவுடைய அமைச்சன்! தேடிப்பார்த்தால் உன்னையொப்பார் யாவர்! நல்ல பரிகள் கொண்டுவந்தனை! நீ தேடிச் செய்த அருமை சிறிதோ! பொல்லாங்கும் வேறுண்டோ! என்று கடுகடுப் போடு கூறினான். அதுகேட்ட அடிகள் துணுக்குற்று, வேந்தர் பெருமானே! சிறந்தனவாக ஆராய்ந்து தெரிந்தெடுத்துக் கொணர்வித்த குதிரைகளுள் ஏதேனும் பழுதுண்டோ? நேற்று அவைகளை ஒவ் வோரினமாய்ப் பிரித்துணர்ந்து அறிஞர் முன்னிலையில் அகமகிழ்ந்து கைக்கொண்டீரன்றோ? என்று வினவினார். அச்சொற்களைச் செவிமடுத்த மன்னன் நெருப்பில் நெய் சொரிந்தாலொப்ப மேன்மேற் சினங்கிளர்ந்து நெஞ்சம் அஞ்சாமல் என்னை யணைந்து இவற்றைக் கூறுகின்றனையோ? நேற்று நீ கொணர்வித்த பரிகளெல்லாம் நரிகளாகி முன்னமேயுள்ள எம்முடைய குதிரைகளையுங் கொன்று பிணமாக்கி ஊளையிட்டுத் திரிகின்ற செய்தியைப் பித்தா, நீ உணர்ந்திலையோ! ஆசிரியர்மாட்டும் அரசரிடத்தும் தூய அருளாளர் பாலும் அன்பிற்சிறந்த தோழர் மாட்டும் அருந்தவத் தோரிடத்தும் நெஞ்சம் அஞ்சாமற் கரவு செய்வோர்க்குக் கொலையல்லாது வேறு செய்யத் தக்கதோர் ஒறுத்தல் உண்டோ! நரிகளையெல்லாம் பரிகளாக்குவித்து அழைத்து எம்முடைய குதிரைப்பந்திகளிற் கட்டுவித்தாய்! அறிவை மயக்கி இந்திரசாலஞ் செய்வது எம்மிடத்திலேயோ! வேந்தர்க்குரிய பொற்றிரளை அழிப்போர் தாமோ வீடுபேற்றினையடையும் நல்லோர்! மாவேறிக் காட்டிய குதிரைச் சேவகன் எங்கே? அவனுடன் போந்த சாத்தவர்கள் எங்கே! நீ மறைநூல்கள் ஓதினமை யெல்லாம் இங்ஙனம் செய்தற்குத்தானோ! நின்னுடம்பினை வருத்தி ஒறுத்தலே செயற்பாலது, என்று கொடுஞ் சொற்களை வாரி இறைத்துக், கூற்றினுங் கொடியரான தண்டக்காரர்களை விளித்து, இவனைக் கொண்டுபோய்ச் சிறையிலிட்டு வளைத்து, இவன் நமக்குத் தரவேண்டும் பொருள்களையெல்லாம் வாங்கு மின்கள்! என்று ஏவினாள். அவர்களும் அங்ஙனமே செய்தற்கு அவரை அழைத்துச் சென்றவர்கள் அவரது பேரன்பின் றிறத்தைக்கண்டு உள்ளம் உருகி, அவரது உடம்பினை வருத்துதற்கு மனம் இசையாராய், அவரை ஓறாமல் விடினும், அரசன் தமக்குத் தீங்குபுரிவானென உன்னி அச்சத்தால், அவரைச் சிறையில் அடைத்து வளைத்து வைத்தார்கள். இவ்வாறு சிறையில் வளைத்துவைக்கப்பட்ட அடிகள் அத் துன்பம் பொறுக்க மாட்டாமற் பாருருவாய பிறப்பற வேண்டும்? என்பதனை முதலாகவுடைய எண்ணப் பதிகம் அருளிச்செய்து அழுது குறையிரந்திருக்கலாமென்று கருதற்கு இடமிருக்கின்றது திருப்புலம்பலும் இந்நேரத்தில் அருளிச்செய்ததா யிருக்கலா மேனும், அதன் முதற் செய்யுளில் திருவாரூர் குறிக்கப் பட்டிருத்தலால், அஃது அத்திருக் கோயிலை வணங்குதற்கு அடிகள் சென்றபோது அருளிச் செய்ததா யிருக்கலாமோ என்று ஐயுறுதற்கும் இடஞ் செய்கின்றது. மற்றொரு நேரத்தில் அவர் அருளிச்செய்தது இரும்புதரு மனத்தேனை என்னுஞ் செய்யுளை முதலாக வுடைய திருவேசறவே என்று நம்பியார் திருவிளையாடல் உரைக்கு மேல் பதிகம் அப் பதிகத்தின்கண் அடிகள் தாம் துன்புறுவதனைக் கூறாமல், தாம் துன்பங்கள் பலவற்றிற்கு ஆண்டவன் நல் வருளாற் றப்பிப் பிழைத்தமையினையும், ஆண்டவர் தம்மை அஞ்சேல் என்று ஆண்ட திறத்தினையுமே, நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால் உய்ஞ்சேன்எம் பெருமானே யுடையானே அடியேனை அஞ்சேல்என்று ஆண்டவா றன்றே. என்றாற்போல அத்திருப்பதிகத்தில் அடுத்தடுத்து ஓதுதலானும், அதன் ஒன்பதாஞ் செய்யுளில், அருள் எனக்கு இங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே எனத் திருவிடைமருதூரைக் கிளந்து கூறுதலானும் அப் பதிகம் இந் நேரத்தில் அருளிச்செய்யப்படாமல், அடிகள் மதுரையையும் அமைச்சுரிமையையும் விட்டகன்று திருவிடை மருதூர்க்குச் சென்றபோது அருளிச் செய்யப்பட்ட தாகுமென்பதே தேற்றமாம். இனி, அரசனேவலால் அவன் தண்டற்காரர் அடிகளைக் கொண்டுபோய்ச் சிறையிலிட்டு வளைத்துவைத்தாரென்று நம்பியார் திருவிளையாடல் கூறுமேனும், அடிகளின் துயர் நீக்கும்பொருட்டு இறைவன் வைகையாற்றிற் பெருவெள்ளத்தைப் பெருகவிட்ட பின்நிகழ்ச்சியை ஆராய்ந்து காணுமிடத்து அரசன்றன் ஏவலர் அடிகளைக் கொண்டு போய் வைகையாற்று மணலில் நண்பகற்போதிற் கடுவெயிலிற் நிறுத்தி, அவரது அருமைத் திருமேனியை வளைத்து முதுகின்மேல் கருங்கல்லை ஏற்றிவைத்து வருத்தினாராதல் வேண்டுமென்பதே கருதற் பாலாதா யிருக்கின்றது. இத்தகைய பொல்லாக் கொடுந்துன்பத்தைப் பொறாமல் அடிகள் நைந்தழுது புலம்புதலைக் கண்ட எல்லாம்வல்ல சிவபிரான் மிக இரங்கித் தன்றிருவருளாணையால் உலகினைக் கெடுப்பதும் எடுப்பதுஞ் செய்யும் முகிற்குழாங்களை நினைந்து அவை பெருமழை பொழிகவெனத் திருவுளத்தெண்ணினான். எண்ணுதலும் அளவுக்கு மிஞ்சிய பெருமழை அன்றைக்குப் பொழிந்தது. இங்கொன்று ஆராயற்பாற்று சித்திரை வைகாசி ஆனி, ஆடி என்னும் நான்கு திங்களுமே கதிரவன் கடுவெயில் எறிக்கும் வேனிற்காலமாம். ஆவணித் திங்களோ கார்காலந் துவங்குங்காலமாம். அடிகள் மதுரை மாநகர்க்குக் குதிரை கொணர்வித்தது ஆவணித்திங்கள் மூலநாளிலேயா மென்பது நம்பியார் பரஞ்சோதியார் என்னும் இருவர் தம் திருவிளை யாடற் புராணங்கட்குந், திருவாதவூரர் புராணத்திற்கும் ஒப்பமுடிந்தது. ஆவணி மூலத்திற்கு அடுத்த நாளிலேயே பரிகளெல்லாம் நரிகளாகி மதுரைமாநகரைப் பித்தேறச் செய்தமையால், அன்றைக்கே பாண்டியன் அடிகளைத் தன் ஏவலரிடம் ஒப்பித்து வருத்தினானாதல் வேண்டும். அங்ஙனம் அவரை வருத்திய அந்நாளும் அத் திங்களும் கார்காலத்து வான் தலைப்பெயலை நிறையப்பெய்தற்குரிய காலமேயாதலின், அவ்வாறு கார்காலத்தில் இயற்கையாகவே மழை மிகப் பெய்து வைகையாறு பெருகியதனை இறைவனருளால் நிகழ்ந்ததெனக் கூறுதல் யாங்ஙனமெனிற் கூறுவாம். மாணிக்கவாசகப் பெருமானை அமைச்சராகப் பெற்ற பாண்டியன் சிவபெருமானிடத்தும் அவனடியாரிடத்தும் முதிர்ந்த பேரன்பு கொண்டவன் அல்லன்; வேற்றரசர் மேற் படையெடுத்துச் சென்று அவரை வென்று அவர்தம் நாடுகளைக் கைப்பற்றுதலிலேயே கருத்துடையவன். குடிகளிடத்து வாங்கிய இறைப்பொருள்களை அவர்களுடைய நன்மைகளுக்காகப் பயன்படுத்தாமல், அவற்றைக் கொண்டு உயர்ந்த வாம்பரிகள் திரட்டித் தனது குதிரைப் படையை வலிதாக்கி வேற்றரசரோடு போர்புரிதற்கு முனைந்தான். அந் நினைவுடைய அவன் றந்தபொருள் அவனோடு ஒத்த நினைவுடைய ஓர் அமைச்சர் கைப்படாமற், சிவபிரான் றிருவடிக்கட் பேரன்பு பூண்டு பிறவி வேரறுக்கும் நினைவுடைய அடிகள் கையிற்பட்டமையால், அந் நற்பொருள் பலவகையான அறங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது தன் பொருளாகாமல் தன் குடிகளால் தரப்பட்ட அப் பொருள் அக் குடிமக்களின் நன்மையின் பொருட்டே செலவழிக்கப் பட்டதனை உணர்ந்தும் பாண்டியன் அதற்குடன்படாமல் அப்பொருளுக்குக் குதிரை கொள்ளு தலிலேயே கருத்துவைத்து, அக் கருததின்படி நடவாராயின் அடிகளை வருத்துவதற்கே உறுதி கொண்டிருந்தான். ஆகவே, தன்னடியவரைப் பாதுகாத்தற் பொருட்டும், பாண்டியனது போர் வேட்கையை அவித்து அவனது செருக்கை அடக்குதற்பொருட்டுமே இறைவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொணரத் திருவுளம் இசைந்தான். இனிப், பரிகள் திரும்ப நரிகளாய் உருமாறி ஓடிப் போகக் கண்டும் அப் பாண்டியன் உளந்திருந்தி அடிகளின் பெருமையுணரானாய் அவரைப் பெரிதும் வருத்துவ னென்பதும், அங்ஙனம் வருத்தும்வழி மழையை மிகப் பொழிவித்து வைகை யாற்றைப் பெருக்கி வெள்ளம் கரைபுரண்டோடி நகர்க்குட் புகுமாறு செய்வித்தால் அவ்வரசன் உணர்வு தெளியப் பெறுவன் என்பதும், அவ்வாறு மழை பொழிவித்தற்கு ஏற்றதாக உலக இயற்கையில் தன்னால் வகுக்கப்பட்ட காலம் ஆவணித் திங்களே யாதலின் இந் நிகழ்ச்சிகட்கு இசைந்துவருமாறு குதிரைகளை அத் திங்களின் மூலநாளிலேயே கொண்டு செல்லல் வேண்டுமென்பதும் எல்லாம்வல்ல இறைவன் முன்னரே தன் றிருவுளத்தடைத்துக் கார்காலத்தின் கண்ணேயே அங்ஙனம் மழையை நிரம்பப் பெய்வித்துத் தான் கருதியதை முடித்தானென்க. அற்றேல், நரிகள் பரிகளாகவும், அப்பரிகள் திரும்ப நரிகளாகவும் உலக வியற்கை நிகழ்ச்சிக்கு மாறாய்ச் செய்து காட்டியதுபோலக், கார் மழை பெய்தற்கு ஏற்றதல்லாத வேனிற்காலத்தில் அது பொழியுமாறு செய்துகாட்டாதவா றென்னையெனின்; முதன் முறை இயற்கை நிகழ்ச்சிக்கு மாறாய்ச் செய்துகாட்டிய நரிபரி மாற்றத்தின் அருமையையே உய்த்துணரமாட்டாது அதனை இந்திரசாலமென இகழ்ந்து அடிகளை வருத்திய அப் பாண்டிய மன்னனுக்கு மேலும் அங்ஙனம் ஒன்று செய்து காட்டுதலாற் போதரும் பயன் ஒன்றின்மையானும், தன்னடியாரைக் காத்தலே இறைவன் றிருவுளக் குறிப்பாகலானும், இரண்டாமுறை அவரைக் காத்தல் வேண்டி இயற்கை நிகழ்ச்சியோடு ஒப்பவே வைத்து மழையைப் பொழிவித்தானென்க. ஒன்றை இயற்கை நிகழ்ச்சி யோடு ஒவ்வாமல் வைத்துக் காட்டியது தன்னடியவரின் பெருமை தோற்றுவித்து அவரைப் பாதுகாத்தற்கும், மற்றொன்றை அந் நிகழ்ச்சியோடு ஒப்பவைத்துக் காட்டியது முன்னையதால் உணர்வு தெளியப் பெறாத அம்மன்னனை ஒறுத்துத் தன்னடியவரைப் பாதுகாத்தற்குமேயா மென்க. அல்லதூஉம், கீழ்கடற்கரை மருங்கேயுள்ள ஊர்களிற் கார்காலத்தில் மழை தப்பாது பெய்தல் போலக், கடற் கரையை மிக அகன்றிருக்கும் உள்நாடுகளில் அக்காலத்திலும் மழை தப்பாது பெய்தல் இல்லையாகும்; பாண்டிநாடு கீழ் கடற்கரைக்கு அருகிலில்லாமல் எட்டி உள்ளிடத்தில் இருப்பதொன்றாகையால், அதன்கட் கார் காலத்தில் மழைபெய்யாது போதலும் அதனால் அந் நாட்டில் அடுத் தடுத்து வற்கடம் உண்டாதலும் பழைய நூல்களாலும் உலகத்தார் உரையானும் அறியப்பட்டனவேயாம். இந் நிகழ்ச்சி யுண்டான அப் பழையகாலத்திலுங் கூட மதுரைமா நகரத்திலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் வேனிற்கால வெப்பந் தணியாமல் அஃது ஆவணித் திங்கள் முற்றுந் தொடர்ந் திருந்தமையாலன்றோ பாண்டியன் ஏவலாட்கள் அடிகளை அக்கடுவெயிலிற் கொண்டுபோய் நிறுத்திவைத்து நலிவ ராயினர். அங்ஙனம் மழைபெய்தல் அரிதாய அவ்வாவணித் திங்களில் அடிகளை அவர் வருத்திய அன்றைக்கு அளவு படாப் பெருமழை பொழிந்து வைகையாறும் உடைப் பெடுத்ததாயின், அஃது அடிகளைக் காத்தற்பொருட்டாகவே இறைவன் ஆணையால் நிகழ்ந்த புதுமையாமென்றே கொள்ளற் பாற்று. அவ்வாறு கொள்ளாம், இயற்கையாய் நிகழ்ந்த அந் நிகழ்ச்சியே அடிகளைக் காத்தற்கும் உதவியாயினது காக்கை ஏறப் பனம்பழம் வீழ்ந்த நிகழ்ச்சியோ டொப்பதே யாமெனின்; அடிகளின் பொறுத்தற்கரிய துன்பத்தைப் போக்குதற்கு இன்றியமையாததான அந் நேரத்தில் அம் மழை பொழியுமாறு தொடர்பு படுத்தியது கடவுட் செயலே யல்லாமற் பிறிதென்னை? ஒரு பேரரறிவின் செயலால் உந்தப்படாமல் அறிவில்லா மழை தானாகவே அந்நேரத்திற் பெய்ததென்று உரைக்கும் அறிவில்லா வழக்குப் பயனுடையதோ, தன்னடி யாரைக் காக்கும் பொருட்டு முற்றறிவுடைய ஒரு முழுமுதற் பொருளால் ஏவப்பட்டு அஃது அந் நேரத்திற் பெய்ததென் றுரைக்கும் அறிவுடை வழக்குப் பயனுடையதோ என்று ஆராய்ந்து பார்க்கவல்ல நுண்ணறிவுடையார்க்கு, எல்லா அறிவுமுடைய இறைவனருளாற் செலுத்தப்பட்டு அஃது அங்ஙனம் பெய்ததெனக் கொள்ளுதலே வாய்ப்புடைத் தாய்த் தோன்றும். எல்லா அறிவும் ஆற்றலும் உடைய ஒரு கடவுளின் றிருவருளால் உலகமும் உலகத்து நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன வெனக் கூறுதல் தமது அறிவுக்குப் பெருமையாகா தென்று கருதி, எல்லாம் அறிவின்றி இயற்கையாகவே இயங்கு கின்றனவென்று அறியாமைக்கே ஏற்றஞ்சொல்லி மகிழ்வோர் தம்மை ஒருவர் அறிவில்லாதவர் எனவும், தாம் செய்வன வெல்லாம் அறிவின்மையேயாம் எனவுங் கூறியக்கால் அச் சொற்கேட்டு வருந்துதல் என்னையோ? அதனால், அறியாமைக்கு ஏற்றஞ் சொல்லும் அவரது உள்ளமே அவர்தம் கொள்கைக்கு மாறாய் நிற்றலின், உலகத்து நிகழ்ச்சிகள் எல்லாம் எல்லையற்ற ஒரு பேரறிவால் தொடர்பு படுத்தப்பட்டு நிகழ்கின்றன வென்பதே தேற்றமாம். ஆகவே, அடிகள் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி முன்னைநாட் கொணர்ந்த இறைவனே அவர்க்குப் பின்னை நாள் நேர்ந்த கொடுந் துன்பத்தினையுந் துடைத்தற் பொருட்டு அங்ஙனம் பெருமழை பெய்வித்து அருளினா னென்று கடைப்பிடிக்க. அடிக்குறிப்பு 1. ஆனந்தமாலை, (7) 7. இறைவன் மண்சுமந்து அடிபடுதல் இவ்வாறு அளவுக்கு மிஞ்சிப் பெய்த பெருமழையினால் வெள்ளம் பெருகி வைகையாற்றில் புரண்டு வரலாயிற்று. அடிகளை அவ்யாற்று மணலில் நிறுத்தி வருத்திய தண்டற்காரரும் அவரை விடுத்துத் தத்தம் மனையகம் நோக்கி ஓடினர். தம்மைக் காத்தருளிய சிவபிரான் திருவருளை நினைந்து நினைந்துருகிய உள்ளத்தினராயும் அழுதகண்ணின ராயும் அடிகளும் வைகையாற்றை விட்டு அதன் கரைமீ தேறிச் சொக்கப் பெருமான் திருக்கோயிலுட் சென்று அவனைத் தொழுது வழுத்தியபடியாய் இருந்தார். இதற்குள் அவ்யாற்றின் வெள்ளங் கரைகளை நெடுக உடைத்து மதுரைமா நகர்க்குள் எங்கும் புகுந்து நிரம்பி மேன்மேல் உயர்தல்கண்ட அந் நகரத்து மாந்தரெல்லாங் கூக்குரலிட்டு ஓலமிடுவாரானார். இவைகளை யுணர்ந்த பாண்டிய மன்னன் நெஞ்சங் கலங்கித் திருவாதவூரடிகளை யான் ஒறுத்துப் பெரும்பிழை செய்தமையால் இப்பேரிடர் நேர்ந்தது போலும்! என் செய்வோம்! என உளம்வருந்தித், தன் அமைச்சரையெல்லாங் கூஉய் என்றும் வாரா இப்பெரு வெள்ளம் இன்றுவந்து இந் நகரை அழிப்பான்புக்க தென்னை! இதற்குடனே செயற்பாலது யாது? என்று வினவுதலும், அவரெல்லாம் முன்நாள் பின்நாள் நிகழ்ச்சிகளை நன்குணர்ந்து பார்த்துத், திருவாதவூரர் சிவபிரான்மாட்டு வரம்பிகந்த பேரன்புடையராய்க் காணப்படுதலின், அவரது தன்மையுணராதே அவரை வருத்திப் பிழைசெய்ததனாலே தான் இது நேர்ந்தது! அவரை வருவித்து வணங்கி அவரது அருளைப் பெற்றால் மட்டும் இவ்வெள்ளந் தணியும், என விடை பகர்ந்தார்கள். தனது கருத்தும் அவர்களது கருத்தும் ஒத்திருக்கவே பாண்டியன் தான் செய்தவை யெல்லாம் பிழையெனத் தெளிந்து, சொக்கப்பெருமான் திருக்கோயிலி லிருந்த அடிகளை வருவித்துத் தான் செய்பிழையினைப் பொறுக்கும்படி வேண்டி, வெள்ளம் ஊர்க்குள்ளே புகாமல் வடிந்துபோகும்படி பணித்தருளல் வேண்டும், எனக் குறையிரந்து, உடைபட்ட கரைகளையும் ஊரிலுள்ளார் அனைவரும் ஒருங்குவந்து நின்று அடைக்குமாறும் தேவரீரே தலைவராய் நின்று செய்தல் வேண்டு மெனவும் பணிவுடன் மொழிந்தான். முன்னர் அரசன் தம்மேற் சினந்தகாலத்தும் பின்னர் இப்போது மகிழ்ந்த காலத்தும் வெறுப்பு விருப்பற்று ஒரு நிலையில் நின்ற உள்ளத்தினரான அடிகள் தம்மையாட் கொண்ட ஐயனருளை வியந்து வெளிப்போந்து, பரிமேல் வந்த பெருமானது திருவுருவத்தை உள்ளத்தில் உருகி உன்னி வெள்ளந் தணிந்து ஏகுமாறு வேண்டியவாறாய் வைகை யாற்றங் கரையில், வேந்தன் பணி செய்வாரொடும் வந்து சேர்ந்தார். சேர்ந்து, மதுரைமா நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டாரும் உடைந்துபோன கரையில் இவ்விவ்வளவு இடம் அடைத்துக் கரையை உயர்த்துதல் வேண்டுமென அப் பணியாளாராற் பறையறைவித்து, அற்றைநாள் மாலைக்குள் அவரெல்லாம் அவை யடைபடுமாறு செய்விக்க வெனவுங் கட்டளையிட்டருளினார். தன் அடியார் துயர்களையும் பொருட்டு வெள்ளத்தைப் பெருக விட்ட இறைவன் துயர்ஒழிந்த அடிகளின் வேண்டுகோளுக்கிணங்கி அஃது ஊரைவிட்டு வடிந்தேகவுஞ் செய்தான். பறை யறைவிப்புக் கேட்ட ஊரவரெல்லாம் விரைந்துவந்து தத்தமக்கு அளந்துவிட்ட கரையினை அடைக்கும் முயற்சியில் முனைந்து நிற்க, அப்பணியாளர் அவரை அத்தொழிலில் விரைந்தேவுதற்கண் முறுகி நிற்பாரானார். இஃதிங்ஙனம் நடவாநிற்க, அம் மதுரைமா நகரிற் றென்கிழக்கு மூலையிலுள்ள ஒருமனையில் பிட்டுச்சுட்டு விற்றுப் பிழைக்கும் நரை முதியோளான ஒரு பிட்டு வாணிச்சி இருந்தனள். அவள் சிவபிரான்மாட்டுப் பெருகி முதிர்ந்த பேரன்புடையவள். அவளுக்கு நெருங்கிய உறவினராயிருந்தா ரெல்லாம் இறந்துபட்டமையின், அவள் தன்னந் தனியாளா யிருந்து பிட்டு விற்பனையில் வரும் மிகச் சிறு ஊதியப் பொருளைக்கொண்டு உயிர் வாழ்ந்து வரும் ஏழையாவள். ஏனையோர்க்கு அளந்துவிட்ட பங்குகளை யெல்லாந் தங் கூலியாட்களைக் கொண்டு அடைப்பிப்போரும், கூலியாட்கள் கிடைக்கப் பெறாவிடின் தாமே யடைப்பாருமாய் நிற்க, இப் பிட்டு வாணிச்சிக்கு அளந்துவிட்ட பங்கோ முதுகு கூனி வலிவிழந்த அவள் தன்னால் அடைக்கக் கூடாமலும் தக்க கூலிகொடுக்கப் பொருளில்லாதவளாகலின் கூலியாள் கொண்டு அதுசெய்ய இயலாமலும் வறிதே கிடந்தது. அதனைக் கண்ட வேந்தன் பணியாளர் அவள்பாற் சென்று அவளை நெருக்க, அவள் அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் தனது நிலைமைக்கேற்ற கூலியாள் கொள்ளும் பொருட்டு அந்நகரெங்கும் மெல்லமெல்ல உழன்று திரிந்தும் எவருங் கிடைக்கப் பெறாமையால், நெஞ்சம் அஞ்சிக் கலங்கி, மேலுந்திரிவதற்கு இயலாமல் இளைப்புற்றுச் சொக்கப்பிரான் திருக்கோயில் வாயிலிற் சென்று நின்று, அழுது குறையிரப் பாளானாள். இவ்வாறவள் நிற்கையில், தலையிற் கவிழ்த்த கூடையும் தோள்மேல் மாட்டிய மண் வெட்டியுங் கொண்டு, புழுதிபடிந்த மேனியனாய், அரையில் அழுக்கடைந்த பழந்துணியுடுத்தவனாய்க் கட்டழகிற் சிறந்த ஓர் இளைய கூலியாள் ‘என்னைக் கூலிக்கு ஏவல் கொள்வார் உண்டோ? எனக் கூறிக்கொண்டு அவ்வழியே வரக்கண்டாள். கண்டதுந், தான் உற்ற துயரஞ் சிறிது தணியப் பெற்றாளாய் அக் கூலியாளை அருகழைத்து, மைந்தனே! வைகையாற்றங்கரையுடைப்பில் எனக்கு அளந்துவிட் டிருக்கும் பங்கை அடைத்துத் தருவாயோ? என்று கேட்டாள். அதற்கவன், அன்னாய்! அப்படியே அடைத்துத் தருகின்றேன். எனக்கு யாது கூலிகொடுப்பாய்? என்றான். அப்பனே! உனக்குக் கூலிகொடுக்க என்கையிற் பொருளில்லை. யான் சுட்டுவிற்கும் பிட்டினையே உனக்குக் கூலியாகத் தருவேன். அது தின்பதற்குச் சுடச்சுட நறுவிதாய் மணமுடையதாயிருக்கும், என்றனள் அம்முதியோள். அம்மே! நீ வட்டமாய்ச் சுட்டு விற்கும் முழுப்பிட்டுக்கூடக் கொடுக்க வேண்டுவதில்லை. அப்பிட்டுகளினின்று உதிர்வனவற்றை எனக்குக் கூலியாகக் கொடுத்தால் அவையே போதும். இப்போதெனக்கு மிகப் பசிக்கின்றது. உதிர்ந்துபோன சுவைப்பிட்டை எனக்கு இட்டால் அதனை முந்தத் தின்று இளைப்பாறிப் பிந்தி நின் கரையைப் போய்க் கட்டுவேன், என்றான் அக்கூலியாள். அதற்கவள் மகிழ்வுடனிசைந்து அங்ஙனமே தந்த பிட்டினுதிர்வை அவன் ஏற்றுத் தனது அரைத்துணியிற் கட்டிவைத்து, ‘இதனை யொப்பதொரு சுவைப்பண்டம் வேறில்லை! எனச் சொல்லிய வாறாய் அதனைத் தின்றுகொண்டே வைகையாற்றங்கரை மருங்கு சென்றான். அம் முதியோளும் தனக்குரிய கோலறையைக் காட்டும் பொருட்டு அவனோடு கூடவே வைகையாற்றங் கரைக்குத் தானுஞ் சென்றாள். சென்று, அங்குநின்ற அரசன் கணக்கர் அவனைப் பிட்டு வாணிச்சியின் கூலியாள் என்று தமது ஏட்டில் வரைந்து கொள்ளுமாறு செய்வித்து, மனமகிழ்வோடுந் தனது மனையகந் திரும்பிப் பிட்டுச் சுட்டிருப்பாளானாள். இவளது பங்காகிய கோலறையை அடைக்கச் சென்ற அக்கூலியாளோ அதனை அடைக்குந் தொழிலைச் செய்யாமல், அம் முதியோள்பாற் பெற்றுவந்த அப் பிட்டை இடையிடையே தனது மடியினின்றும் எடுத்தெடுத்துத் தின்பதும், இது மிக்க சுவையினையுடைத்து என்று சொல்லிக் கொண்டே ஆடுவதும் பாடுவதுஞ் செய்யா நின்றான். அரசன்றன் ஏவலாளர் தன்னருகே வரக்கண்டால் ஒருகூடை மண்ணை வெட்டி எடுத்துச் சுமந்து கொண்டு மெல்லப்போய்க் கரையிற் கொட்டி அதனால் இளைப்புற்றான்போல் நிற்பன். இவ்வாறு மண் சுமந்த உழைப்பால் வியர்வை மிக வரப்பெற்று அதனைக் கழுவு வான்போல் அவ்வாற்று நீருட்சென்று குளிப்பதும், அதன் கண் நீந்தி விளையாடுவதுஞ் செய்வன். பின்னர்க் கரையேறி ஏனைக் கூலியாட்களையெல்லாம் நோக்கிப் பேசுவதும் நகைப்பதுஞ் செய்வன். அதன்பிற் றனக்குப் பசியெழுந்ததெனக் கூறிக் கொண்டு அம் முதியோள்பால் இடையிடையே சென்று அம்மே! மண்சுமந்த உழைப்பால் எனக்கு மெத்தப் பசிக்கின்றது, உதிர்ந்த பிட்டை யிடு’ என்று கேட்டு, அவளும் சுடச்சுடப் பெரும்பாலும் உதிர்ந்து போன நறுஞ்சுவைப் பிட்டை யிட, அவற்றைப் பெற்றுத் தின்றுகொண்டே அவ் யாற்றங்கரைக்கு மீள்வன், மீண்டு, முன்போலவே சிறிது மண்ணைச் சுமந்தும், அதனைக் கரையிலிட்டும், பின்னர் நீரில் நீந்தி விளையாடியும், கரையேறியாடியும், மற்றைக் கூலியாட் களோடு சொற்போர் தொடுத்தும், பின்னர் அவரோடு நகைத்தும், மன்னவர் காவலர் கடுகின் அதற்கஞ்சுவான்போற் காட்டி அவரை ஏமாற்றியும், அவர்கள் தன்னைப் பிடித்தடிக்க நெருங்கினால் விரைந்தோடி ஆழமான ஆற்றுவெள்ளத்தி னிடை நீந்திச் சென்றும், கண்டாரெல்லாம் ‘இவன் பித்தனோ! என்று சொல்ல வேலை செய்யாமல் அதனை மழுப்பிவிடலானான். உச்சிப்பகல் கழிந்து, ஞாயிறு மேல்பாற் சாயும் பிற்பகல் வருதலும், வேலை செய்தமையால் வந்த அயர்வு தீர்ப்பான் போல், மற்றவர்க்குத் தெரியாமல் மறைவாய்ச் சென்று அவ் வாற்றங்கரை மருங்கினதொரு கொன்றைமர நீழலில் மணலை அணையாகச் சேர்த்து, மண் கூடையைத் தலையணையாக வைத்துக்கொண்டு துயில்வானாயினன். இவன் இவ்வாறு துயிலிலிருக்க மாலைப்பொழுதும் வந்தது. ஊரார் எல்லாம் தத்தமக்கு அளந்துவிட்ட கோலறைகளை அடைத்து, யாற்றங்கரையையும் உயர்த்து விட்டனர். பாண்டிய மன்னன் கரைமுழுதும் அடைக்கப் பட்டதாவெனக் காணும் பொருட்டுத், திருவாதவூரடி களைத் தலைமையாக்கொண்ட அமைச்சர் குழாத் தோடும் வைகையாற்றங் கரையருகே வந்துசேர்ந்தான். சேர்ந்ததும், அங்குள்ள கரை யுடைப்புகளை யெல்லாம் வரிசையாகப் பார்த்துக்கொண்டு வந்து கடைப்படியாகப் பிட்டுவாணிச்சி பங்கண்டை வருதலும், அஃது அடை படாமல் இருக்கவும், அதன் வழியே வெள்ளம் மிகுந்து பெருகிப் பக்கத்துள்ள கரைகளையும் அறுக்கவுங் கண்டு பாண்டியன் கதுமெனச் சினங்கொண்டு, மருங்கே நின்ற ஏவலரை நோக்கி இஃதேன் அடைக்கப்படவில்லை? என்று உறுக்கி வினாவ, அவர்களுள் தலைவனாவான் அரசனைப் பணிந்து வேந்தர் பெருமானே! இது முதியோளான பிட்டுவாணிச்சி கோலறை; அவளுக்குக் கூலியாளராய் வந்த கொற்றாள் ஒருகூடை மண்ணாவது வெட்டியிட்டானில்லை; அவன் இன்று முழுதும் விளையாட்டிலேயே காலங்கழித்தான்; அவனைப் பிடித்து அடித்து வேலைவாங்க எவ்வளவோ முயன்றும் அவன் எம் கையிற் பிடிபட்டானில்லை, என்று அஞ்சிக் கூறினான். அதனைக்கேட்ட அரசன் பின்னும் பெருஞ் சீற்றமுற்று ஆ! அப்படியா! அவனை எப்படியாவது தேடிப்பிடித்து என்பாற் கொணர்மின்கள்! என்று கூறினான். உடனே அரசன் காவலர் பலர் அங்குமிங்குமாய் ஓடித்தேட, அக்கொற்றாள் அக்கரையின் ஓர் ஒதுக் கிடத்தே ஒரு கொன்றைமர நீழலிற் படுத்து உறங்கக் கண்டு அவனைப் பிடித்தற்கு நெருங்கினார்கள். அவர் நெருங்குதலைக் கண்ட அக்கொற்றாள் திடுமென எழுந்து, தன் மண் வெட்டியால் மண்ணையெடுத்துக் கூடையிலிட்டு அதனைச் சுமந்துகொண்டு வேலை செய்வான் போல மெல்ல இயங்க, அவ்வேவலர் அவனைப் போய்ப் பற்றிக் கொண்டார்கள். பற்றியவாறே அவனை ஈர்த்துக் கொணர்ந்து பாண்டியனெதிரே நிறுத்த, அவன் அக்கொற்றாளை நோக்கி, ஏடா! பிட்டு வாணிச்சிக்கு அளந்துவிட்ட இக்கோலறையை அடையாமல் நீ இன்று முழுதும் விளையாடியதென்னை? என்று சினந்து வினாவ, அவன் ஏது முரையாமல் வாளாநின்றனன். அதுகண்ட பாண்டியன் பின்னுஞ் சீற்றம் மிக்குத், தன்கையிற் பொற்பிரம் பொன்றை வாங்கி ஓங்கி வீசி அக்கொற்றாளின் முதுகின்மேற் புடைத்தனன். புடைத்ததும் அவ்வடி சுறீரெனப் பாண்டியன் முதுகிலும், திருவாதவூரடிகளை யுள்ளிட்ட அமைச்சர் முதுகிலும், அரசனேவலர் முதுகிலும், ஊரவர் எல்லார் முதுகிலும் உயிருடைப் பொருள்கள் எல்லாவற்றின் முதுகிலும் பட்டது; அதே நேரத்தில் எல்லார் வாயில் நின்றும் ‘ஓ! என்னும் ஓர் அலறுதல்ஒலி எழுந்தது; இங்ஙனம் அக்கொற்றாளை அடித்த அடி எல்லார் முதுகிலும்பட்ட ஓர் இமைப்பொழுதிற்குள் அவன் தன்தலையிற் சுமந்திருந்த ஒரு கூடை மண்ணையும் உடைபட்டிருந்த பிட்டு வாணிச்சி பங்கிற் கொட்டினான்; அவ்வுடைப்பும் அடைபட்டது; ஆனால் தம் கண் எதிரே சென்ற அக்கொற்றாளை எவருங் கண்டிலர். உடனே, அங்கு நின்ற திருவாதவூரடிகள், அடிபட்டு மறைந்த அக்கொற்றாள் சிவபிரானேயாதல் தெளிந்து; அடியற்ற பனைபோல் நிலத்தின்மேல் விழுந்து புரண்டு கடவுளர்க்கும் அரியையாகிய நீ நாயினேம்பொருட்டு எளிய கொற்ளாளாப் போந்தனையோ! போந்து திருமுடிமேல் மண்ணுஞ் சுமந்து திருமேனியிலே அடியும் பட்டனையோ! எனப் பலவாறு கூறித் தேம்பித் தேம்பியழுது புலம்பு வாரானார். அவரது ஆற்றாமையைக் கண்டும், கொற்றாளை யடித்த அடி எல்லார் முதுகிலும் பட்டமையும், ஓர் இமைப் பொழுதிற்குள் ஒரு கூடை மண்ணால் அப்பேருடைப்பினை அடைத்து அவன் மறைந்தமையும் நேரே பார்த்தும் பாண்டியனும் அவனோடு அங்குநின்றா ரெல்லாரும் கரைகடந்த வியப்பும் ஆற்றாமையு முடையராய் உள்ளங் கரையக் கண்ணீர் யாறாய் ஒழுக அழுது வருந்துவாரானார். இப்பெற்றித்தாக இறைவனைப் பிரிந்து ஆற்றா நேரத்தே, நெஞ்சை நீராய் உருக்கும் செத்திலாப்பத்துப் போன்ற சில பதிகங்களை அடிகள் அருளிச்செய்திருக்கலாமென்பது புலனாகின்றது. சிவபெருமான், தன்பாற் பேரன்பினளாகிய ஒரு பிட்டுவாணிச்சி, பொருட்டாகவே ஒரு கொற்றாளாய்வந்து, பிட்டமுதுசெய்து, தன் திருமுடி மேல் மண்ணுஞ் சுமந்த அருட்டிறத்தை நேரே கண் டிருந்தமையாலன்றோ அடிகள். ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்1 என்றும், திண்போர் விடையான் சிவபுரத்தார் போர்ஏறு மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ2 என்றும், பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே.3 என்றும் தமது அருமைத் திருவாசகத்திற் பலவிடத்தும் எடுத்தோதுவாராயினர். கொற்றாளாய் வந்த அப்பெருமான் பித்தனைப் போல் ஆடிப் பாடி விளையாடி வேலை செய்யாது திரிந்தமை யினைக் கண்ட ஏனையோர் அவனைப் ‘பித்தனோ! என்று கூறினமை தெரித்தற்கே, பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே என்றருளிச் செய்தார். இனி, அக்கொற்றாள் நாள்முழுதுங் கரையடையாமற் காலம் போக்கினமை கண்டு சினந்து அற்றை மாலையில் அவனை அடித்தவர் அரசன் றன் ஏவலரே என நம்பியார் திருவிளையாடலும் திருவாதவூரர் புராணமுங் கூறாநிற்கப் பரஞ்சோதியார் திருவிளையாடல் ஒன்றுமே அப்போது அக்கொற்றாளை அடித்தவன் பாண்டியன் எனக் கூறுவதாயிற்று; மற்றுத் திருவாதவூரடிகளோ, கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்4 எனவும், மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ5 எனவும், நேரிருந்துகண்டு பாண்டியனே சிவபிரானைத் தண்டாலே அடித்தனனென்று கூறுகின்றமையின், ஏனை யிரண்டு புராணங்களின் கூற்றும் இதன்கட் பிழைபடுகின்ற தெனவும், பரஞ்சோதியார் திருவிளையாடற் கூற்றொன்றுமே ஈண்டுப் பொருத்தமுடைத்தாய் நிற்கின்ற தெனவுந் தேர்ந்துணர்ந்து கொள்க. அடிக்குறிப்புகள் 1. கீர்த்தித் திருவகவல், (46, 47) 2. திருப்பூவல்லி, (16) 3. திருக்கழுக்குன்றம் பதிகம், (2) 4. திருவம்மானை, (8) 5. திருப்பூவல்லி, (16) 8. பாண்டியன் பிழைபொறுக்க வேண்டுதல் இனிச், சிவபெருமான் கடவுளர்க்குங் காட்டாத தனது அருமைத் திருவுருவைத் தம்பொருட்டுக் காட்டித் திருமேனிமிசை அடியும் உண்ட பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து அடிகள் பெரிதும் ஆற்றாராய் அக்கரைமேற் புரண்டு புரண்டு அலறுதலைக் கண்ட பாண்டியன் நெஞ்சம் நெக்குருகி, உள்ளம் பொறானாய் அவர்திரு முன்னர்ப்போந்து கீழ்விழுந்து வணங்கி, வாதவூர் வந்த வள்ளற் பெருமானே! தேவரீர் தமியனேற்கு அமைச்சராய் வந்தருளியது எல்லாம்வல்ல சிவபிரான் பரிமீது எழுந்தருளி வந்து ஒன்றுக்கும் பற்றாத புழுத்தலை நாயினேனுக்குந் தனது அருமைத் திருக்கோலத்தைக் காட்டி என்னைப் பிணித்த அறியாமைக் கட்டை அறுத்தற்கேயன்றோ! மறைத்தவக் கொழுந்தே! அன்பின் கனியே! எனது கரு மாளக் காட்டிய அத் திருக்கோலத்தின் அருமையுணராதே பேயனேன் புல்லிய ஆடையொன்றும் எம்பெருமானுக்கு அளித்துப் பிழை செய்தேனே! எம் பெருமானை ஏவல்கொண்ட அடிகளின் மெய்த்தவப் பேரன்பின் பெற்றியை அறியாமே, தீவினைக் கேதுவாகிய செல்வப் பொருளை வேண்டித் தேவரீர் திருமேனியையும் வருந்தச் செய்த கொடியனேன் சிறுமையாற் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள்வீரோ! அன்பின் விளக்கே! ஆண்டவனே! முழுமுதற் கடவுளாகிய ஐயன் தூமுடிமேல் மண்ணுஞ் சுமந்து பொல்லாப் பாவியேனது கொடுவினைக் கையால் அடியும்பட்டது தேவரீர் பொருட்டு என்னும் புகழ் ஒன்றுமே தேவரீர்க்குப் போதுமே! இந் நிலத்தை ஆளும் அரசு தேவரீரதேயாக அடியேன் தேவரீருக்கு நாளும் பணிசெய்தொழுகுமாறு கடைக்கணித்தருளல் வேண்டும்! என்று கண்ணீர்வார அழுது குறையிரந்தான். அச் சொற்களைச் செவிமடுத்த அடிகள் தாம் அமைச் சுரிமையினின்றும் நீங்கித் திருப்பெருந்துறை செல்லுதற்கு இதுவே வாய்ப்பான நேரமெனத் தேர்ந்து எழுந்து, மன்னர் பிரானே! நுமக்கு யான் அமைச்சனாயிருக்கப் பெற்றமையா லன்றோ நாய்க்குத் தவிசு இட்டாலென்ன யான் இங்ஙன மெல்லாம் என் ஆண்டவன் திருவருட்பேற்றிற்கு உரியனாகப் பெற்றேன். நீர் என்னை இவ்வமைச்சுரிமையினின்றும் விடுவித்து, யான் திருப்பெருந்துறைக்கு ஏகுமாறு விடை கொடுப்ப தொன்றே எனக்கு அரசவாழ்வு அளிப்பதாகும், என்றார். அதுகேட்ட மன்னவன் அவரைப் பிரிதற்கு ஆற்றானாய் மிக வருந்தி, எல்லா வுலகங்களுக்கும் உயிர் களுக்கும் முதலரச ராகிய சிவபெருமான் றிருவடிகளைச் சார்ந்த மெய்யடியராகிய அவர் இனித் தன்பால் இரார் என்பதைத் தெளியவுணர்ந்து, தேவரீர் திருவுளப் பாங்கின்படியே செய்தருளுக! என்று கூறி, அவர் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சித், தன் அரண்மனைக்கு ஏகினான். அதன் பின் உடனே, அடிகள் தாம் அணிந்திருந்த அமைச்சர்க் குரிய கோலத்தைக் களைத்து, சிவபெருமான் திருவடித் தொண்டுபேணும் நற்றவக்கோலம் பூண்டு, ஆலவாய் அண்ணலுழைச்சென்று அன்பால் அகங் கரைந்துருகி யேத்தி விடைகொண்டு, தம் பெருமான் தம்மைக் குருவடிவிற் போந்து ஆண்டருளிய திருப்பெருந்துறைக்கு விரைந்தேகினார். இவ்வளவில், நம்பியார் திருவிளையாடல் அடிகள் வரலாற்றைக் கூறி மேல் நடப்பனவற்றை இரண்டு செய்யுட் களிற் பாடி முடித்துவிட்டது. பரஞ்சோதி முனிவரோ, மதுரையை விட்டகன்றபின் அடிகள் சிவபிரான் திருக் கோயில்கள் பலவும் இறைஞ்சிக் கடைப்படியாகத் தில்லை யம்பலஞ்சென்று புத்தரை வழக்கில் வென்று சிவபிரான் றிருவடிநீழல் எய்தினாரெனப் பின்வரலாற்றைச் சுருக்கி முடித்துவிட்டார். மற்றுக் கடவுண்மாமுனிவர் இயற்றிய திருவாதவூரர் புராணம் மட்டுமே அடிகளின் பின்வரலாற்றை முற்றவெடுத்துக் கூறுதலின், அதன்வழியே சென்று அதன்கட் பொருந்துவனவற்றை யெடுத்து ஒரு கோவைப்படுத்து அடிகளின் பின்வரலாற்றினை வரைகுவாம்; மேற்சொல்லியவாறு அடிகள் மதுரைமாநகரை விட்டகன்று திருப்பெருந்துறைக்கு மீண்டபோது, முன்னே அவரைக் குருவடிவில் வந்து ஆட்கொண்ட பெருமானுந் திருத் தொண்டர்களும் பின்னும் அங்கேயே எழுந்தருளியிருந் தனரெனத் திருவாதவூரர் புராணங் கூறும். முன்னே குருவடிவில் எழுந்தருளிய முதல்வன் திருவடிகளையாட்கொண்டு அவர்க்குச் செவியறிவுறுத் தருளியது ஐந்தெழுத்தாலாய ஒரு சொல்லின் முடிந்த வுண்மையேயாமென்பது. மன்ன என்னையோர் வார்த்தையுட்படுத்துப், பற்றினாய்1 என்று அடிகளே ஓதுமாற்றாற் பெறப்படுதலானும், அவ்வாறாட் கொண்டருளியவுடனே அக்குரவன் தன்னடியார் குழாத் தொடும் மறைந்தருளினமை, தொண்ட னேற்குஉள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்ன கண் மாயமே2 என்று அடிகளே அருளிச்செய்யுமாற்றாற் பெறப்படுதலானும், அங்ஙனங் குரவன் மறைந்தவழி அடிகளைத் தனியே விடுத்துப் போயினானென்பது, அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்குஎனை, இருத்தினாய் முறையோ3 என்பதனாற் றெளியக் கிடத்தலானும், குருந்தமர நீழலில் முன்னரொருகால் தம் குரவனைக் கண்ட அடிகள் பின்னர் அக் குருவடிவில் அவனை ஒருநாளுங் கண்டிலரென்பது, காணுமாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும்4 என்னும் அடிகள் திருமொழியானே நன்குணரக் கிடத்தலானும் திருவாதவூரார் புராணக் கூற்று உண்மை நிகழ்ச்சியொடு மாறுபடுகின்றமையின், அஃது ஏற்றுக்கொள்ளற் பாற்றன்று. அஃது அங்ஙனமாயினும், அடிகள் மீண்டுந் திருப் பெருந்துறைக்குச் சென்றபின் தங்குரவன் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட குருந்தமரத்தைப் பிரியாராய், அதனருகிருந்து, தங்குரவனை நினைந்து நினைந்து ஆற்றாமைமிக்கு அழுதழுது திருச்சதகம் பாடியபடியாய்த், தங் குரவனது அருமைத் திருவுருவிற் றமது நினைவைப் பதித்துத் தம்மைத் தன்பால் இறைவன் வருவித்துக் கொள்ளுமாறு வேண்டியிருப்ப, ஒருநாள் இறைவன் அவர்க்குக் கனவிற் றோன்றி, ஆண்டுள்ள மொய்யார் தடம்பொய்கையைக் காட்டி இதன்கண் ஒருநாள் தழல்வடிவிற்றோன்றி நினக்கும் நின்னைச் சூழ்ந்த அடியார்க்குங் காட்சி தந்தருளுவேம்; அப்போது நின்னைச் சூழ்ந்த அடியார் பலரும் அத் தழலின்கட் சென்று வீழ்ந்து மறைகுவர்; ஆனால், நீ மட்டும் அவ்வாறு அதன்கட் சென்று வீழற்க! அதனைக் கண்டுஇறைஞ்சிய பின்னர்த் திருவுத்தரகோசமங்கை சென்று ஆண்டும் அங்ஙனமே தோன்றும் தழல் வடிவைக் கண்டு தொழுது, அதன்பின் யாம் எழுந்தருளியிருக்குந் திருக் கோயில்கடோறுஞ் சென்று வணங்கித், திருக்கழுக்குன்றில் மீண்டுந் தோன்றும் அத்தழலுருவைக் கண்டிறைஞ்சிய பின்னர்த் தில்லைச் சிற்றம்பலம் போதுக! எனக் கட்டளையிட்டு மறைத்தருளினன். அதன்பிற் சில நாட்கள் காறும் அடிகள் அக் கட்டளைப்படியே ஆங்குத் தவத்திலிருந்து, அதன் நிறைவேற்றத்தை எதிர்பார்த்திருக்கையில், ஒருநாள் அப் பொய்கையினூடே சொல்லற்கு அரிய பேரொளியோடும் ஓர் அனற்பிழம்பு கிளர்ந்து தோன்றி ஒளிர, அதனைக் கண்ட அடிகளை யுள்ளிட்ட அடியார் குழாத்துட் பலர் அதன்கட் சென்று வீழ்ந்து மறைந்தனர். எஞ்சி நின்ற அடிகளும் மற்றுஞ் சிலரும் அத் தழற் பிழம்பைக் கண்டு தொழுதுருகினர். தமக்கு வெளிப்பட்டு அருளல் வேண்டுமெனக் குறையிரந்த அடிகட்கு இரங்கி இறைவன் அழல் வடிவிற்றோன்றினமை, எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்5 என்று அடிகளே அருளிச்செய்தவாற்றால் தெளியப்படும். இனி, அடிகள் மட்டும் எஞ்சி நின்றமையும் ஏனை அடியவர்களெல்லாரும் அத் தழலிற் புகுந்து மறைந்து இறைவன் திருவடி சேர்ந்த குறிப்பும், விச்சுக்கேடு பொய்க்காகாதென்று இங்கு எனைவைத்தாய் இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்6 எனவும், அடியேன் அல்லேன் கொல்லோதான் எனை ஆட் கொண்டிலை கொல்லோ அடியாரானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் எனவும், சிவமாநகர் குறுகப் போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே எனவும், பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் எனவும். அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த மெழுகே யன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே எனவும் அடிகளே ஓதுமாற்றால் உணரப்படும். இனி, மொய்யார் தடம் பொய்கையிற் கிளர்ந்து தோன்றிய இறைவனது தழல்வடிவை அடிகள் கண்டு மெழுகாயுருகித் தொழுத பின்னர்த், தன்கட்புக்க அடியாரோடும் அவ்வனற்பிழம்பு மறைந்தது. இறைவன் தமக்கிட்ட கட்டளையை நினைந்து அடிகள் குருந்தமரத்தின் அடியைப் பலகாலும் வீழ்ந்திறைஞ்சி ஆற்றாமையோடும் அதனைப் பிரிந்து, திருப்பெருந்துறையை விட்டுப் புறப்பட்டுத், திருவுத்தரகோசமங்கையைச் சென்று சேர்ந்தார். அங்கே அடிகள் சின்னாள் இருந்து தவம் இயற்ற, ஆங்குள்ளதொரு குளத்தில் மறித்துந் தழல்வடிவு கிளர்ந்து தோன்றி விளங்க லாயிற்று. இவ்வாறு அங்குத் தோன்றிய தழல்வடிவினையே, தெங்குலவு சோலைத் திருவுத்தரகோச மங்கை தங்குலவு சோதித் தனியுருவும் வந்தருளி எங்கள் பிறப்பறுத் திட்டு7 என்று அடிகளும் ஓதியருளினார். உத்தரகோசமங்கையில் அடிகள் தவத்திலிருந்த காலத்து இறைவன் தமக்கு வெளிப்படுதலை வேண்டிக் குறையிரந்து பாடியது நீத்தல் விண்ணப்பம் என்னும் செய்யுட் டொகுதியே யாதல், அதன்கண் முதல் இருபது பாட்டுக்களில் உத்தரகோசமங்கை எடுத்துக் கூறப்பட்டிருப்பதே சான்றாம். இனி, ஆண்டு இறைவன் தழலுருவிற் றோன்றி அவர்க்குக் காட்சி தந்து அருளியபின், அடிகள் பாடியது திருப்பொன்னூசல் என்பதூஉம் அறியற்பாற்று. இத், திருபபொன் னூசல் தில்லையில் அருளிச் செய்யப்பட்ட தென்று எவரோ வரைந்து வைத்தது சிறிதும் பொருந்தாது; என்னை? அத் திருப்பொன்னூசல் ஒன்பது செய்யுட்களிலும் திருவுத்தரகோச மங்கையே விதந்தெடுத்து வைத்துப் பாடப்படுதலின் என்க. அடிகள் திருவுத்தரகோச மங்கையிற் றோன்றிய தழற்பிழம்பைக் கண்டு தொழுதபின்னர், அங்கே தமது தவம் நிறைவேறப் பெற்றார். இறைவன் தமக்குப் பணித்தருளியவாறே திருவுத்தரகோச மங்கையை விட்டகன்று, பாண்டிநாட்டிலுள்ள திருக்கோயில்கள் பலவற்றிற்குஞ் சென்று ஆண்டாண்டு இறைவனை வணங்கிக் கொண்டு, பின் சோழநாட்டின் கண்ணதான திருவாரூரை அடைந்து சிவபிரானைத் தொழுது திருத் தெள்ளேணத்தில் முதற் பத்துப்பாட்டும், திரும்புலம் பலில் முதற் பாட்டும் பாடியருளினார். இங்கே திருவாதவூரர் புராணக் கூற்று மாறுபடுகின்றது. பாண்டிநாட்டை விட்டு அகன்றபின் அடிகள் முதலிற் சோழ நாட்டில் திருவிடை மருதூரை அடைந்தார் எனவும், அதற்பிற் றிருவாரூரை அடைந்து ஆண்டுத் திருப்புலம்பல் முற்றும் ஓதினார் எனவும் அப் புராணங் கூறா நின்றது. மற்று மதுரையைவிட்டு வடக்கு நோக்கிச் சோழ நாட்டுத் திருக்கோயில்கட்குச் செல்வார் முதலிற் றிரு வாரூரை யடைந்தே, அதன்பின் அதற்கும் வடக்கேயுள்ள திருவிடை மருதூர் செல்ல வேண்டுதலின் அப் புராணத்திற் கூறிய முறை பொருந்தாதென்றுணர்ந்து கொள்க. அதுவேயு மன்றித், திருப்புலம்பல் மூன்று பாட்டுக்களில் முதற்பாட் டொன்றுமே திருவாரூர் மேலதாய்ப் பாடப்பட்டிருப்ப தல்லாமல், இரண்டாம் பாட்டுத் திருப்பெருந்துறை மேலும் மூன்றாம் பாட்டுத் திருக்குற்றாலத்தின் மேலும் பாடப்பட் டிருத்தலின் இவை மூன்றும் ஒரு காலத்தே ஒருங்கே திருவாரூரில் அருளிச் செய்யப்பட்டன வென்றால் பொருத்தமில் உரையாம். ஒவ்வொரு திருக்கோயிலில் ஒவ்வொருகால் ஒன்றுஞ் சிலவும் பலவுமாய் அடிகளாற் பாடப்பட்ட பாட்டுக்களே பின்னுள்ளோரால் தமக்குத் தோன்றியவாறு தொகுத்தும் வகுத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்கு ஒரு சிறிதும் விளங்கா. திருத்தெள்ளேணத்தில் பிற பத்துப் பாட்டுக்கள் சிலவற்றில் தில்லையம்பலங் கூறப்பட்டிருத்தலின் அவை பத்தும் ஆண்டுச் செய்யப்பட்டன வென்பது பெறுதும்; முதற்பத்தின் இரண்டாஞ் செய்யுளில் திருவாரூர் கூறப்பட் டிருத்தலின் அவை பத்தும் ஆண்டுச் செய்யப்பட்டனவென்பது பெறுதும்; அற்றாயின், அவ்வத்திருக்கோயிற் பெயர் மட்டும் உடைய செய்யுட்கள் மட்டுமே ஆண்டாண்டுச் செய்யப் பட்டன, ஏனைய அல்லவெனக் கொள்ளாமோவெனிற்; கொள்ளலாம். ஒரு திருக்கோயிலைப் பாடுங்கால் அதன்மேற் பெரும்பாலும் பத்துச் செய்யுட்கள் இயற்றுதல் தொல்லாசிரியர் முறையாய்ப் போதலின், திருவாரூர்ப் பெயர் சொல்லிய செய்யுள் ஒன்றாயிருப்பினும் அதனோ டியைந்த ஏனை ஒன்பது திருத்தெள்ளேணச் செய்யுட்களும் அக்கோயிலின் மேலனவாகவே இயற்றப்பட்டனவாகு மெனக் கோடல் இழுக்காது. இங்ஙனமே அதன் பிற்பத்துச் செய்யுட்களும் தில்லை யம்பலத்தின் மேலவாதல் கொள்ளப்படும் இனித், திருவேசறவு ஒன்பதாஞ் செய்யுளில், அருள் எனக்கு இங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே. என்று திருவிடைமருதூர் கூறப்பட்டிருததலின் அச் செய்யுட்கள் பத்தும் அங்கே அருளிச்செய்யப்பட்டமை பெறப்படும்; அற்றேல் அதன் ஏழாஞ் செய்யுளில், தென்பாலைத் திருப்பெருந்துறை யுறையுஞ் சிவபெருமான். என்றுரைக்கப்பட்ட தென்னையெனின்; தமக்கு இறைவன் ஆண்டுக் குருவடியில் எழுந்தருளி அருள்செய்ததனை நினைந் துரைத்த அத்துணையே யல்லது, இங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே என்னும் அதன் ஒன்பதாஞ் செய்யுளிற் போலக் கூறாமையின், அப்பதிகம் திருப்பெருந் துறையிற் செய்ததாகாதென் றுணர்ந்து கொள்க. இனி, அடிகள் திருவிடைமருதூரை விட்டகன்று திருக்கழுமலம் என்னும் சீர்காழியை அடைந்து ஆண்டு இறைவனை வணங்கினார். இவ்விடத்தே பிடித்தபத்து அருளிச்செய்தார் என்ற திருவாதவூரர் புராணங் கூறும். ஆனால், அப் பிடித்தபத்துப் பாட்டுக்களில் எங்குஞ் சீர்காழியைப் பற்றிய குறிப்பு ஏதுங் காணப்படாமையால் அவை அங்கே தான் இயற்றப்பட்டன வென்று துணிந்து கூறல் இயலாததாயிருக்கின்றது. சிலநாட் சீர்காழியில் வைகி, அதன்பின் தில்லையம்பலம் இருக்கும் மூலைநோக்கி வணங்கிக்கொண்டு, தமக்கு இறைவன் பணித்தவாறே அடிகள் திருக்கழுக்குன்றஞ் செல்லும்வழி மேற் கொள்வாரானார். அவ் வழியினிடையே திருமுதுகுன்றம், திருவெண்ணெய் நல்லூர் என்னுந் திருப்பதிகளையுஞ் சென்று அடிகள் வணங்கினாரெனத் திருவாதவூரர் புராணங் கூறுமேனும், அக் கோயில்களின் பெயரேனும் குறிப்பேனும் திருவாசகந் திருக்கோவையாரில் எங்குங் காணப்படாமையின் அவ்வுரை கொள்ளற்பாலதன்றென்க. மற்றுத் திருக்கழுக்குன்றம் நோக்கிச் செல்லும் அவ்வழியினிடையே அடிகள் திருவண்ணாமலை சென்று, அங்கே இறைவனை வணங்கியுறையும் நாட்களில், மார்கழித் திங்கள் வந்தது. அங்கே சிவபிரான் கோயிலிற் றிருத்தொண்டு செய்யும் மாதர்கள் அத்திங்களின் புலரிக்காலையிலே துயில் நீங்கியெழுந்து, அங்ஙனம் முன் எழாது இன்னுந் துயிலிலிருக்குந் தம்மினத்தவரில் மற்றையரை அவர் கூறுமாறாகச் சிவ பிரான்றன் அருட்டிறங்களைப் பாட விழைந்து, அவரையுந், தம்மோடுடன் போந்த தம் மனைவியார் அவர்க்குப் பாங் காயினார் முதலியோரையும் முன்னிலைப்படுத்தித் திருவெம் பாவை அருளிச் செய்தார். இஃது இத் திருக்கோயி லின்மேல் அருளிச் செய்யப்பட்ட தென்பதற்கு, இதன் பதினெட்டாஞ் செய்யுளில் அண்ணாமலையான் அடிக்கமலம் என்று போந்த குறிப்பே சான்றாம். இஃது அக் கோயிற் றிருத்தொண்டு புரியும் மாதரை நோக்கிச் சொல்லப்பட்டமைக்கு அதன் பத்தாஞ் செய்யுளிற் கோதில் குலத்தான்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள் என்று அவர்களை விளித்து அடிகளே அருளிச்செய்தமையே சான்றாம். இனி, அதன் பதினைந்தாம் செய்யுளில், ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய்ஓவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையர்க்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறு என்று அடிகள் ஓதுதலை உய்த்து நோக்குங்கால், அவர் இதன்கட்டம் மனைவியார் சிவபிரான்மாட்டு வைத்த பேரன்பின் றிறத்தை வியந்து பாடினாரென்றல் இழுக்காது. இதனோடு, ஆண்டுக்கோயிலிற் றொண்டு புரியும் அந் நங்கைமார் விளையாடிய அம்மானை விளையாட்டைக் கண்டு, அதனாலும் அவர்கள் சிவபிரான் அருட்டிறங்களில் நினைவைப் பதித்துப் பேரின்பத்திற் படிதல் வேண்டித், திருவம்மானை இருபது செய்யுட்களும் அருளிச்செய்தார். இத் திருவம்மானை அண்ணா மலைக் கண்ணேதான் அருளிச் செய்யப்பட்ட தென்பது, அதன் பத்தாஞ் செய்யுளில் அண்ணாமலையானைப் பாடுதுங் காண் அம்மானாய், என்று அடிகளே கூறியவாற்றாள் போதரும். இனி, அடிகள் திருவண்ணாமலைக்கு எழுந்தருளியதும் மார்கழித் திங்கள் வந்ததென்பதால், அவர் ஆவணித் திங்கள் மூலநாளுக்குப் பின் மதுரையை விட்டகன்று சிறிதேறக்குறைய மூன்று திங்கள் வரையில் இடையிடையேயுள்ள திருக்கோயில்கட்குச் சென்று ஆண்டாண்டு இறைவனை வழிபட்டு வந்தாரென்பது பெறப்படும் என்க. இனி, அடிகள் திருவண்ணாமலையை விட்டகன்று திருக்கச்சியேகம்பம் சேர்ந்து, ஆண்டு அம்மை தழுவக் குழைந்த பெருமானை யேத்தி, அங்கே உந்தி என்னும் விளையாட்டைப் புரியும் மகளிரைக் கண்டு அவர்கூறும் பரிசாகத் திருவுந்தி யார் அருளிச்செய்தார். இஃது அங்கே அருளிச்செய்யப்பட்ட தென்பதற்கு, ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் என்று அதன் இரண்டாஞ் செய்யுளில் ஏகம்பர் என்னும் பெயர் கூறப்பட்டிருத்தலே சான்றாம். இத் திருவுந்தியார் தில்லையில் அருளிச் செய்யப்பட்டதென்று உரைப்பதற்குச் சான்று அப்பாட்டுக்களில் எங்குங் கண்டிலம். அற்றேல், திருப்பொற் சுண்ணம் நான்காம் பாட்டிற் கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி என்று இத் திருக்கோயில் குறிக்கப்பட்டிருத்த லானும், அங்ஙனமே திருப்பூவல்லி பதினான்காம் பாட்டில் ஏகம்பம் மேயபிரான் என்று இத் திருக்கோயிலில் ஏழுந்தருளியிருக்குஞ் சிவபிரான் பெயர் கூறப்பட்டிருத்தலானும் அவையிரண்டுங் கச்சியேகம்பத்திலேதான் அருளிச் செய்யப் பட்டனவென்று கொள்ளாமோ வெனின்; திருப்பொற்சுண்ணம் முதற்பாட்டில், அத்தன் ஐயாறன் என்னுந் திருவையாற்றுப் பெருமான் பெயரும், அதன் ஒன்பதாம் பாட்டில் அணிதில்லை வாணனுக்கே எனவும், பதினோராம் பாட்டில், அம்பலத் தாடி னானுக்கும் எனவும், பத்தொன்பதாம் பாட்டில், தில்லைபாடிச் சிற்றம்பலத் தெங்கள் செல்வம் பாடி எனவுந் தில்லைப்பெருமான் பெயரும் போதரக் காண்டலின், பெரும்பான்மைபற்றித் திருப்பொற்சுண்ணம் தில்லையில் அருளிச் செய்யப்பட்டதென்றும், அங்ஙனமே திருப்பூவல்லி முதற்பாட்டு இரண்டாம் பாட்டு ஏழாம்பாட்டுப் பதினான்காம் பாட்டுக்களில் தில்லைம்பலமும் தில்லைப் பதிக்கரசுங் கூறப்பட்டிருத்தலின் அத் திருப்பூவல்லியும் அவ்வாறே தில்லையில் அருளிச்செய்யப்பட்ட தென்றுங் கொள்ளுதலே பொருத்தமாம் என்க. அதன்பின், அடிகள் திருக்கச்சியேகம்பத்தினின்றும் நீங்கித் திருக்கழுக்குன்றம் வந்து இறைவனைத் தொழுது தவத்தில் வைகினார். அவ்வாறிருக்குநாளில் அவர்க்கு முன்னே சிவபிரான் தனது அருள்ஒளி வடிவினைக் காட்ட, அடிகள் அதனைக் கண்டு பேரின்ப வெள்ளத்து அழுந்தினராய்ப் பிணைக்கிலாத என்பதனை முதலாக உடைய திருக்கழுக் குன்றப் பதிகச் செய்யுட்கள் ஏழும் அருளிச் செய்தனர். அச் செய்யுள் ஒவ்வொன்றன் ஈற்றிலும் இறைவன் தனது திருக்கோலத்தைத் தமக்குக் காட்டியபடியை அடிகளே அருளிச்செய்திருத்தல் காண்க. ஈண்டு அடிகள் கண்ட கோலம் அனற்பிழம்பு வடிவே என்பது எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் என்று அவர் தாமே அருட்பத்தில் ஓதுமாறுபற்றித் துணியப்படும். அவ் வடிவிலன்றித், திருப்பெருந்துறையில் முதற்கட்போந்த குருவடிவிலேயே ஈண்டும் இறைவன் அவர்க்குக் காட்சி தந்தருளினானென்று கொள்ளாமோ வெனிற், கொள்ளாம்; என்னை? முதற்கட் குருவடிவிற் போந்து தம்மை அடிமை கொண்ட ஐயனது அவ் வுருவத்தையே ஈண்டுங் கண்டனராயின் அதன்பால் அன்புமீதூரப்பெற்ற அவர் அத்திருவுருவத்தின் இயல்பை இப் பதிகத்திற் கிளந்தெடுத்துக் கூறாது இரார் ஆகலின் என்க. பின்னர் அடிகள் திருக்கழுக்குன்றத்தை ஆற்றாமையோடும் விட்டகன்ற, இறைவன் பணித்த கட்டளைப்படியே தில்லை மூதூர் வந்து சேர்ந்தார். அங்கே திருச்சிற்றம்பலத்தில் இடையறாது திருக்கூத்தியற்றும் சிவ பிரான்றன் இன்பவுருவினைக் கண்டு கண்ணீர்வார மெய்ம்மயிர் பொடிப்பப் பெருங் களிப்புற்று இந்திரிய வயமயங்கி என்பதனை முதலாக உடைய கண்டபத்து அருளிச் செய்தார். அதன்பிற் பொன்னம்பலத்தை வலங் கொண்டு சென்று, புலிக்கால் முனிவனும் நாகமும் வழி பட்ட இறைவன் திருவடையாளங்களை வணங்கிப் போய், அத் தில்லை நகரின் புறத்தே யுள்ளதொரு காட்டில் தவத்தில் ஓவியம்போல் அசைவற்றிருந்தனர். இங்ஙனம் பன்னாள் தவத்தில் இருப்பதும், அவ்வாறு அகத்தே இறைவன் அருட்பெருக்கில் படிந்த தமது மெய்யுணர்வு ஓரோவொருகாற் புறத்தே திரும்பியவழித் திருவாசகச் செழும்பாடல்கள் ஓதுவதுமாக அடிகள் அகப்புறமிரண்டினுஞ் சிவபிரானது அருட்பெருந் திருவுருவிற் றோய்ந்த மெய்யன்பின் உருவானார். அடிக்குறிப்புகள் 1. செத்திலாப் பத்து, (2) 2. திருச்சதகம், (42) 3. திருச்சதகம், (93) 4. திருச்சதகம், (84) 5. அருட் பத்து, (4) 6. திருச்சதகம், (81, 83, 87, 88) 7. திருப்பொனூஞ்சல், (9) 9. புத்தரொடு சொற்பேர் தொடங்குதல் ஈதிவ்வாறிருக்கச், சிவபிரான் திருவடிக்கண் இடையறா அன்புபெருகுந் திருத்தவம் உடையார் ஒருவர், சோழநாட்டின்கண் உள்ள தில்லை முதலான திருக்கோயில் களைத் தொழுதானபின், பழுதில்லா ஈழநாட்டின்கண் உள்ள திருக்கேதீச்சரம் திருக்கோணமலை முதலான திருக்கோயில் களையும் வணங்கல் வேண்டி அங்கே சென்றார். சென்றவர் அங்கே செல்லும் இடங்கடோறும் பொன்னம்பலம் பொன்னம்பலம் என்றே சொல்லிக்கொண்டு செல்வாரானார். அக்காலத்தே இலங்கைத் தீவானது பௌத்த சமயத்தவனான ஓர் அரசன் ஆளுகைக்குள் இருந்தது. பௌத்தசமயத்தைத் தழுவின குடிமக்களும அந் நாடெங்கும் பரவியிருந்தனர். அப் பௌத்த சமயத்தவர்களிடையே அச் சிவனடியார் பொன்னம்பலம் என்னுஞ் சொல்லை ஓவாது உரைத்த படியாய்ச் செல்லவே, அவரது சிவவடிவத்தைக் கண்டும், அவர் கூறும் பொன்னம்பலம் என்னுஞ் சொல்லைக் கேட்டும் மனம் புழுங்கிய பௌத்தக் குருமார் சிலர் தம் அரசன்பாற் சென்று அக்குமாலை பூண்டு நீறுபூசி ஐயம் ஏற்று உண்பானாகிய சைவன் ஒருவன் நிற்கும்போதும் இருக்கும் போதும் எக்காலும் பொன்னம்பலம் என்று சொல்லியபடியாய் உலவு கின்றனன், என்று கூறினர். அச்சொற்கேட்ட அம் மன்னவன், அவனை இங்கே கொணர்வீராக! என்று தூதுவர்க்குக் கட்டளை தந்தான். அங்ஙனமே, அவர் சென்று அவ்வடியாரை அரசன்பால் அழைப்ப, அதற்கு அவர் ஒன்றை வேண்டுதலும், மற்றொன்றை வெறுத்தலும் இன்றி நாடோறும் ஐயம் ஏற்று உண்டல் ஒன்றல்லது வேறேதுங் கருதாத எம்போல்வார் மாட்டும் அரசர்க்கு ஆவது ஏதும் உளதோ? என்று மறுத்துரைத்தார். மேலும், அத்தூதுவர் நீர் ஊரில் ஐயம் ஏற்று உண்டாலும், உமக்குப் பிறிதொரு முயற்சி இல்லை யானாலும், தனது நாட்டில் இருப்பார் எல்லாரையுங் காத்தல் மன்னற்குக் கடனாதலால், எம் அரசன் விருப்பப்படி நீர் வருதல் வேண்டும், என்று மொழிந்து மீண்டும் அழைப்ப, அவ்வடியாரும் அதற்கு இசைந்து அவருடன் ஏகினார். தூதுவர் அவரை அரண்மனையினுள்ளே அழைத்துப் போய்ப், புத்த குருவினுடன் அத்தாணிமண்டபத்தே வைகி யிருக்கும் மன்னவன் எதிரே விடுத்தார். அம் மாதவரும் அவ்வரசன் அருகே சென்று பொன்னம்பலம் எனக் கூறிய மாந்தார். அச் சொற்கேட்ட அப் புத்தமன்னன் அவ்வடியாரை நோக்கி, இப்போது நீர் பொன்னம்பலம் எனக் கூறியது என்னை? என்று வினவினான். அதற்கு அவர் சோழ அரசராற் செங்கோல் செலுத்தப் படுங் காவிரி நாட்டின்கண் தில்லையம்பலம் என்று ஒன்று உளது. அதுவே இந்நிலவுலகத்தில் முதற்கண் உண்டாகிய திருக்கோயிலாகும்; இந் நிலவுடம் பிற்கு நெஞ்சத் தாமரைபோல் வயங்காநின்ற அத்திருக் கோயிலினுட் பொன்னம்பலம் என ஒன்றுளது; இவ்வுடம் பினகத்தே எல்லா உயிர்களின் நெஞ்சத்தாமரையின் வெளியில் இறைவனது இயக்கமானது நடைபெற்று இவ்வுடம்பின் கண் உயிர் உலவுதற்கு உதவுதல்போல உயிரோடு கூடிய இவ் வுடம்புகள் உலவுதற் பொருட்டும் இந் நிலவுடம்பை நிலைபெறுத்துவான் வேண்டி இறைவன் அதன் நெஞ்சம் போல்வதாகிய பொன்னம்பலத்திலே இடையறாது ஆடுதல்செய்து உதவிபுரிகின்றான். மனுவின் மைந்தன் ஒருவன் கொண்ட தொழுநோயை மாற்றி அவனது உடம்பினைப் பொன்போல் ஒளிரச்செய்த சிவகங்கை யென்னுந் திருக் குளமும் அத் திருக்கோயிலினுள் உண்டு; அத் திருக்குளத்தின் கண் மெய்யன்புடன் மூழ்கியெழுந்து பொன்னம்பலத்தே ஐந்தொழில் அருட்கூத்து இயற்றா நின்ற இறைவன்றன் றிருவுருவை உள்ளம் நீராய் உருகித் தொழுவார்க்கு இவ் வுலகில் மீண்டும் பிறந்து வருந்தா வீட்டுநெறி எளிதிற் கிட்டும். இத்துணைப் பெருஞ்சிறப்புடையதான பொன்னம்பலத்தை ஒருகாற் சொல்லும்; அது, சிவ எனுந் திருமறையை இருபத்தோராயிரத்து அறுநூறுமுறை செப்பி உருவேற்றியதற்கு ஒப்பான பெரும்பயனைத் தரும், என்று மொழிந்திட்டார். இச் சொற்களை அரசனருகிருந்த புத்த குரு கேட்டுப் பெரிதும் வெகுண்டு, பிடகநூல் மூன்றும் உரைசெய்த எம் தலைவனாகிய சாக்கியமுனிவ னல்லாது வேறுமொரு கடவுள் உண்டோ! இப்போதே யாம் தில்லைநகர் சேர்ந்து, அங்குள்ள சைவரொடு வழக்கிட்டு, அப் பொன்னம்பலத்தில் ஆடுங் கூத்தனது அடிகளிற் றொடுத்த கழலையும் மேலெடுத்த ஆனேற்றின் கொடியையும் அறுத்துப், புத்த முனிவன் ஒருவனே முழுமுதற் கடவுள் என உலகோர் அறிய உரைசெய்து, அம்மன்றத்தை அரசின் நீழற் பெருமானுக்குப் பள்ளியாக ஆக்குவேம். இச்செயலை மூன்று நாட்களில் முடிக்கக் கடவேம், என வஞ்சினம் புகன்று, தில்லைக்கேகத் தொடங்கினார். அப் புத்த அரசனுந் தன் மகட்குள்ள ஊமைத் தன்மையானது தில்லைப் பொன்னம்பலஞ் செல்ல நீங்குமெனக் கோணூல் கூறினமை தெரிந்தானாகலின், தானுந் தன் மகளோடும் இலங்கைவிட்டும் புறப்பட்டு அத் தில்லைநகர் வந்து சேர்ந்தான்; புத்தகுரு தில்லைத் திருக்கோயிலினுள்ளே தன்னரச னோடுஞ் சென்று ஒரு மண்டபத்தின்மீ தமர்ந்திருக்க, அதுகண்டு அக்கோயிலில் திருத்தொண்டு செய்வாரெல்லாம் அவர்பால் வந்து குழுமி, ஓபுத்தகுருவே! நீர் இங்கிருத்தல் ஆகாது. இத் தில்லைநகர் எல்லையை உடனே கடந்து செல்லுதலே தக்கது, என்று உரைப்ப, அதற்கு அப் புத்தகுரு, சோழவேந்தன் முன்னிலையில் உயர்ந்த அளவை நெறியால், நீவிர் தழுவியொழுகும் சைவம் மெய்மையுடைத் தன்றென மறுத்து, எங்கள் கௌதமபுத்தரே முதற்கடவுள் என்பதை நிலைநிறுத்திய பின்னல்லது இதனைவிட்டு யாம் ஏகுவ தில்லை, என்று மறுமொழி கூறினார். இவ்வாறு புத்தகுரு கூறுதலைக்கேட்ட அக் கூட்டத்தினர் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றுங் கோயில் அந்தண ரிடத்தும், சைவநூலுணர்ச்சி யுடையாரிடத்தும் போய் நடந்தவைகளை எடுத்துச்சொல்ல, அவரெல்லாம் சினத் தோடும் அப்புத்தகுருவினருகே போந்து, நீர் அச்சமின்றி இங்கே வந்தமை ஏன்? என்று வினவ, அதற்கவர், நுங்கள் சமயநூற்படி நுங்கள் கடவுளே முதற்கடவுள் என்று நீங்கள் நிலைநிறுத்துவீர்களாயின். அதனை மறுத்து, எமது சமய நூற்படி புத்தக்கடவுளே முதற்கடவுள் என்று நிலைநாட்டுவேம்; ஆதலால், எம்மோடு வழக்கிட வம்மின்கள்! என்று அறைகூவி அழைத்தார். அதன்மேற் சினங்கொண்டு அக் குருவை வைத அந்தணர்கள் பிறகு தெளிவடைந்து, புத்தன் வினாவியவற்றிற்கு விடைகூற அறியாமல் அவனை வைதார் அடித்தார் என்று உலகம் நம்மைப் பழிக்கும்; ஆதலாற் சோழ வேந்தன் முன்னிலையில் ஒரு பேரவை கூட்டி யாம் வழக்கிட்டால் தக்கதிது, தகாததிது வென்று ஏதொரு கலகமும் நடவாமல் முடிக்கலாம், என்று தம்முள் ஒரு தீர்மானத்துக்கு வந்து, பின்னர், நிகழ்ந்தவைகளையும் தமது தீர்மானத்தையும் விரித்தெழுதிச் சோழ மன்னனுக்கு ஒரு திருமுகமும், இங்ஙனமே தென்றமிழ் நாட்டிலுள்ள ஏனை மன்னர்க்கும் கற்றார்க்கும் அருந்தவத்தோர்க்கும் பலப்பல திருமுகங்களும் போக்கித், தத்தம் மனையகத்தே சென்று, அன்றிரவு, பெரியதொரு மனக்கவலையோடுந் துயில் கொள்ளலானார். அவ்வாறு அவரெல்லாம் துயில்கையில், அவரெல்லார்க்குங் கனவின் கண்ணே, தழைத்த சடைமுடியும் நீறு பொலிந்த திருமேனியும் பிரப்பங்கோல் தாங்கிய கையும் உடைய அழகிய ஓர் அருந்தவர் உருவந்தோன்றலாயிற்று; தோன்றிய அத் திருவுருவம் வாய் திறந்து, நீவிர் மனங்கலங்குதல் ஒழிமின்! இவ்வூர் எல்லைப்புறத்தே வாதவூரன் என்னும் ஒரு முனிவன் அருந்தவத்தில் அமர்ந்திருக் கின்றான்; அம் முனிவனை அழைத்துவருவீரேல் அவன் அளவை நூன்முறை வழுவாதே புத்தரோடு வழக்கிட்டு அவரை வெல்வான், என்று உரைத்து மறைந்து போயிற்று. வியக்கத்தக்க வகையாய் நிகழ்ந்த இக் கனவு கண்டு விழித்த அந்தணர் எல்லாம் இறைவனைத் தொழுதெழுந்து, புலரிக் காலையிலே கோயிலில் ஒரு மண்டபத்தே வந்துகூடித் தாங்தாங் கண்ட கனவு நிகழ்ச்சியினை எடுத்துக்கூறித், தம் மெல்லார்க்குந் தோன்றிய திருவுருவமும் அஃது உரைத்தனவும் முற்றும் ஒத்திருத்தல் கண்டு மிக வியப்புற்று, ஐயனருளை வாழ்த்தி மனக்கலக்கந் தீர்ந்து, எல்லாருமாய் ஒருங்கே திருவாதவூரடிகள் இருக்கும் அடவிநோக்கிச் சென்றனர். அடிகளோ புறத்துணர்ச்சி சிறிதும் இல்லாராய்ச் சிவபிரான் றிருவடிக்கண் முழுதும் பதிந்த நினைவினராய் இருப்ப, அவரை அழைக்கச் சென்ற அந்தணர்கள் அவரது அசைவற்ற தவநிலையினையும், அவர் தமது வருகையையும் உணரா ராயிருத்தலையுங் கண்டு நிரம்ப மனம் வருந்தித் தத்தம் மயைகஞ்சென்று அன்றிரவு துயில் கொள்கையில் முன்னாட் கனவிற் றோன்றிய தவவுருவம் இந்நாட்கனவினுந் தோன்றி அம்முனிவனை மாணிக்கவாசகன் என்னும் பெயர் சொல்லி அழைமின்கள்! என்று மொழிந்து மறைந்தது. அது கண்டு விழித்த அந்தணர் எல்லாரும் மீண்டும் அவ்வடவி நோக்கிச் சென்று அப் பெயர் சொல்லி அழைப்ப, உடனே அடிகள் அகத்தே நினைவு ஒருங்கியநிலை கலைந்து விழித்துத், தம்பால் வந்த அவ்வந்தணர் வேண்டுகோளுக்கு இசைந்து அவ ருடன் போந்து, அம்பலக்கூத்தனை வணங்கியெழுந்து, புத்த குருவும் அவர் தம் குழாத்தினரும் ஒருங்கு கூடியிருந்த மண்டபத்தின்கண் ஏறி, அந்தணருங் கற்றாருந் துறவோருந் தம்மைப் புடைசூழ, ஆண்டு இடப்பட்ட ஓர் இருக்கை மீது அமர்ந்தருளினார். அப்போது, அந்தணர்களால் முன்னரே திருமுகம் விடுத்து அழைக்கப்பட்ட சோழமன்னனும் வந்து அவ்வவைக் களத்தே புகுந்து அடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கி யெழுந்து, அவராற் பணிக்கப்பட்டவாறே அங்கிடப்பட்ட தோர் அணைமேல் அமர்ந்தனன். அங்கு அதற்கு முன்னரே வந்திருந்த ஈழ மன்னன் அச்சோழனுக்கு அடங்கி அரசு புரிவோனாதலின் அவனை வணங்கி அவனது கட்டளை பெற்றுத் தன்னிருக்கையில் இருந்தான். இருதிறத்தார் வழக்குகளையும் கேட்டு நடு நின்ற சான்றுகூறுவாரான சான்றோரும் வந்து தாமிருக்குமிடத்தே வீற்றிருந்தனர். வருதற்குரியாரெல்லாம் வந்து நிறைந்து அப்பேரவை ஒழுங்குபெற்றபின், சோழ வேந்தன் எழுந்து அடிகளை வணங்கித் தேவரீர் புத்த குரு கூறுங் கொள்கைகளை மறுத்துச் சைவக் கொள்கையினை நிலைநிறுத்துதற்குத் திருவுளம்பற்றுவீராக! என்று வேண்டினான். அவ்வேண்டுகோளுக்கு ஒருப்பட்ட திருவாதவூரடிகள் புத்தகுருவை நோக்கி, நுமது கடவுளின் இலக்கணமும், அக் கடவுளின் திருவடியைச் சேரும் வீட்டினிலக்கணமும் நீவிர் எடுத்துரைமின்! என்று கூறினார். அதற்கு அப் புத்தகுரு, எல்லாவற்றையும் முற்றும் அறிந்து, கொலை களவு பொய் கள் காமம் என்னும் ஐவகைக் குற்றமுங் கடிந்து, பழுதில்லா அருட்பெருந்தன்மை யினாலே பல பிறவிகளிலும் பிறந்த அவ்வவ்வுயிர்த் துன்பமும் பொறானாய் அத் துன்பங்களைத் தான் ஏன்று கொண்டு அவற்றிற்கு நன்மை செய்து, விநயபிடகம் சத்தபிடகம் அபி தன்மபிடகம் என்னும் வழுவில்லாத மூன்று ஆகமங்களையும் அருளிச்செய்து அரசமரநீழலில் எழுந்தருளியிருக்கும் புத்த முனிவனே எம் இறைவனாவான் என்று அறிமின்! இனி, உருவம் வேதனை குறிப்புப் பாவனை விஞ்ஞானம் என்னும் ஐவகைக் கந்தகமும் ஒருங்கு தொக்கதொகையே உடம்பும் உயிரும் ஆவதன்றி, இவையைந்தின் வேறாக உடம்பும் உயிரும் எனத் தனித்து இரு பொருள்கள் இல்லை. இக் கந்தங்களுள் எதுவும் உயிரன்று என்பது எம்முடைய பிடகநூல்களில் மறித்தும் மறித்தும் வற்புறுத்தப்படுகின்றது. உடம்பும் ஏனைப் பொருள்களும் இடையறாது மாறிக்கொண்டே யிருக்கின்றன. முற் கணத்திருந்த அதே ஆண்மகன் பிற்கணத்து உள்ளவன் அல்லன்; அவனிடத்தில் என்றும் நிலைபேறாய் உள்ளது எதுவும் இல்லை. இவ்வைவகைக் கந்தங்களும் ஒருங்கு தொக்கவழி யான் ஒருவன் உளன் என்னும் உணர்ச்சி தோன்றா நிற்கின்றது. இவ்வைந்துங் கூடிய தொகை அழிந்தவழி யான் உளன் என்னும் உணர்வும் அழியா நிற்கும். இவ் வைந்தின் கூட்டமுங் கலைவும் அறியா திருக்குங்காறும் வினையாற் பிறவியுளதாம்; அவை யுணர்ந்தவழி மெய்யுணர்வு தோன்றிப் பிறவி இல்லையாம்; இதுவே வீடுபேறாம் என்று தெளிமின்! இனி, இங்ஙனம் இவை எல்லாவற்றிற்கும் முதலாகிய உருவம் வேதனை குறிப்புப் பாவனை விஞ்ஞானம் என்னுங் கந்தங்களைந்தும் யாவையென்பிரேல், அவை தம்மையும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுதும்: உருவக் கந்தமாவது பொருள்களின் உருவும் அப் பொருட் பண்புகளின் உருவும் என இருவகைத்தாய் ஒவ்வொன்றும் நந்நான்காம்; பொருள்களின் உரு; மண் புனல் அனல் கால் என நான்காம்; அப்பொருட் பண்புகளின் உரு: வன்மை சுவை ஒளி நாற்றம் என நான்காம்; வேதனைக் கந்தமாவது இன்பமுந் துன்பமும் அவ்விரண்டும் இன்மையும் என மூன்றாம்; குறிப்புக் கந்தமாவது மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளும் அவற்றைப் பொருந்தி நிற்கும் மனமும் என ஆறாம். பாவனைக் கந்தமாவது, மனம் மொழி மெய் என்னும் மூன்றையும் பற்றி நிகழும் நல்வினை பத்தும் தீவினை பத்துமென இருபதாம், அவற்றுள் நல்வினை பத்தாவன; அருள் அவாவின்மை தவ விருப்பம் என மனத்தான் நிகழும் மூன்றும், இனியவை கூறல் மெய்ம்மை கூறல் பயனுளகூறல் அறமுரைத்தல் என மொழியான் நிகழும் நான்கும், வணக்கம் ஈகை தவம்புரிதல் என மெய்யாண் நிகழும் மூன்றும் ஆம்; தீவினை பத்தாவன: தீயன நினைத்தல் அவா வெகுளி என மனத்தான் நிகழும் மூன்றும், கடுஞ்சொல் பொய்கூறல் பயனில சொல்லல் கோட்சொல்லல் என மொழியான் நிகழும் நான்கும், களவு கொலை வீண் செய்கை என மெய்யான் நிகழும் ஆம். விஞ்ஞான கந்தமாவது ஐம்பொறிகளையும் மனத்தையும் பற்றி நிகழும் ஆறறிவுகளாம் என்று இவ்வாறு உணர்ந்து கொண்மின்! என்று விடை கூறினார். 10. புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல் அதன்மேல் திருவாதவூரடிகள் அப் புத்தகுரு கூறியவைகளை நிரலே மறுப்பாராய் பின்வருமாறு உரை நிகழ்த்துவாரானார்; முற்கணத்தில் இருந்தது பிற்கணத்தில் இல்லையாம் என்பதே நுமது கோட்பாடாதலால், நும் புத்தமுனிவன் ஒருகணத்தில் அறிந்த அறிவும் அதற்கு அடுத்த கணத்தில் இல்லையாம் என்றே நுமது கோட்பாட்டின்படி முடிக்கப்படும்; அவ்வாறு முடிக்கப்படவே, முற்கணத்து நிகழ்ந்த அறிவு மாய்ந்து போகப் போகப் பிற்கணத்து அவன் புதிது புதிதாக அறிதலே நிகழாநிற்கும். அதனால் அவற்கு நிகழ்கால அறிவே தோன்றித் தோன்றி மாயுமல்லது, இறந்தகால அறிவும் அக் காலத்து நிகழ் பொருளினறிவும் அவற்கு இலவாதல் வேண்டும். அல்லதூஉம், ஒருகணத்து மட்டுமே நிகழும் அறிவு அதன் பிற்கணங்களில் நிகழ்வனவற்றை அறியாத தாகல் வேண்டும்; அங்ஙனம் அறியாதாகவே அவற்கு வருங்கால அறிவும் இலதாதல் பெறப்படும். இனிக் கணங்கடோறுந் தோன்றும் நிகழ் காலவறிவும் நிலைபேறின்றி மாய்ந்தொழிதலின் அவ்வறிவு நிகழ்ச்சியாற் போந்த பயனும் ஒன்றும் இன்றாம். இங்ஙனம் முக்கால அறிவு நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்ப்பாடு நுமது கொள்கையின்கண் இன்மையின், நும் புத்தமுனிவன் எல்லா வற்றையும் ஒருங்குணர்வன் என்பது பொருள்இல் கூற்றேயாம். நேற்று இதனைச் செய்தவன் யானே என இறந்த காலவுணர்வும், இன்று இதனைச் செய்கின்றேன் என நிகழ்கால உணர்வும், நாளை இதனைச் செய்து முடிப்பேன் என எதிர்கால வுணர்வும், ஒரு தொடர்பாக நிகழப்பெறும் மக்களுக்குள்ள அத்துணை யறிவுதானும் நுமது கடவுளுக்கு இன்மையின், அஃது எல்லா அறிவும் முதன்மையும் உடைய முழுமுதற்கடவுளாதல் யாண்டையதென்றொழிக! இனி, நும் இறைவன் பிறவுயிர்களின் துன்பம் பொறானாய் அவ் வுயிர்களின் துன்பத்தைத் தான் ஏன்று கொள்ளல் வேண்டித் தான் பல்லுயிர்களாய்ப் பிறவி யெடுப்பனென்றதூஉம், அவன் கொலை முதலாய குற்றங்கள் கடிந்தோ னென்றதூஉம் பொருந்தாமை காட்டுவாம். ஓருயிர்க்கு வந்த துன்பத்தை நீக்கலுறுவோன் தான் அத்துன்பத்திற் பற்றப்படாதவனாய் இருந்தாலன்றி அத்துன்பத்தை நீக்க மாட்டுவான் அல்லன். கண்ணிழந்த ஒரு குருடனுக்கு உதவி செய்யவல்லவன், கட்பார்வை நன்குடைய மற்றொருவனே யல்லாமல் அவன்போற் கண்ணில்லாத வேறு ஒரு குருடன் அல்லனே. அவ்வாறிருக்கப் பிறவித்துன்பத்திற் கிடந்துழலும் உயிர்களின் துன்பத்தைத் துடைக்கல் வேண்டி நுமது கடவுளும் அவ்வுயிர்களைப்போற் பல பிறவிகளை யெடுத்தானென்று நும்மனோர் கூறுவது, வலையில் அகப்பட்டுத் துடிக்கும் பல மான்களைக் கண்ட மற்றொருமான் அவற்றின் துன்பத்தை நீக்குதற்பொருட்டுத் தானும் அவ் வலையிற் சென்று அகப்பட்டுக்கொண்டதனையே ஒக்கும். அற்றன்று, உயிர்கள், தம்மை யறியாமலே பிறவிகளிற் கிடந்துழன்று துன்புறும், எம் புத்தமுனிவனோ தன்னுணர்வும் தன்வலிமையும் முற்றும் உடையனாய் அவ்வுயிர்களி னிடையே பிறந்து அவற்றின் துன்பத்தைப் போக்குவான் என்றுரைப்பிரேல், அவ்வாறு எல்லா அறிவும் ஆற்றலும் உடையான் அவ்வுயிர்கள்போற் பிறவியெடாமலே அவற்றின் துயர் களைய வல்லனாதல் வேண்டுமன்றி, அவர்போற் றானும் பிறவி யடுத்துழலல் எற்றுக்கு? மேலும், வினைநுகர்ச்சியின் பொருட்டாகவே பிறவி வருமென்பது நும்மனோர்க்கும் உடன்பாடாகலின், பிறவி யெடுத்த உயிர்களுள் ஒன்றாய் நிற்கும் நும் புத்தமுனிவனை அவ்வினையின் நீங்கிய இறைவனாகக் கோடல் யாங்ஙனம்? வினையிலும் பிறவியிலுங் கூடி நிற்பனாயினும் எம் புத்த முனிவன் எல்லாம்வல்ல இறைவனே யாவன் என்று பொருந்தாவழக்குப் பேசுவிராயின், அங்ஙனமே வினையிலும் பிறவியிலுங் கூடிநிற்கும் ஒவ்வோருயிரையும் இறைவனாகக் கொள்வோம் என்பார்க்கு நீர் விடைபகருமாறு இன்றாம்; இன்றாகவே, நும் புத்தமுனிவன் உயிர்களுள் ஒருவனே யாவனல்லால், அவன் முதற்கடவுளாதல் செல்லா தென்றுணர்க, அற்றன்று, உயிர்கள் இரக்கத்தாற் பிறந்தா ரல்லர், எம் புத்தமுனிவனோ இரக்கத்தாற் பிறந்தா னென்பிரேல், நும் புத்தன் பிறந்த ஞான்று தன் அன்னையின் வலது விலாப்புறத்தைப் பிளந்துகொண்டு பிறக்க, அதனால் அவனை ஈன்றாள் சில நாளெல்லாங் குற்றுயிராய்க் கிடந்து இறந்தாள் என நீவிரே கூறுதலின், தன் அன்னையின் துன்பத் திற்கும் சாவிற்கும் ஏதுவாய் வந்த அவன் இரக்கமுடையனாதல் யாங்ஙனம்? அதுவேயுமன்றி, நும் முனிவன் நரியும் புலியும் அரிமாவுமாகப் பிறந்தவழி வேறு மெல்விலங்குகளைக் கொன்று தின்றானாதல் வேண்டுமன்றோ? அதனாலும் அவன் இரக்க முடையானென்றலுஞ் செல்லாது; கொலை முதலியன கடிந்தானென்றலுஞ் செல்லாதென்றுணர்ந்துகொள்க. அல்லதூஉம், ஐந்து கந்தங்களின் தொகையே உருவாவதல்லால், வேறுருவ மென்பதொன்றில்லை யென்பதே நுமது கோட் பாடாகலின், நுமது கடவுளுக்கு நீவிர் உரைக்கும் உருவமும் அத் தகையதே யாதல் வேண்டும்; இல்லாததோர் உருவத்தை அவன் பிறவிகடோறும் எடுப்பானென்றலும் அதனாற் பொருந்தாமையும் காண்க. இனி, நும் புத்தமுனிவன் வழுவில்லாத பிடகநூல்களை அருளிச்செய்தனன் என்றலும் ஆகாது. அறமும் அறமல்லாதனவும் விரவிக் கிடக்கும் இவ் வுலகத்தே உயர்ந்த அறங்களை ஆராய்ந்து பிரித்தெடுத்து ஒரு நூலாக அருளிச் செய்தற்குப் பலநாளும் ஒரு தொடர்பாக ஒருவற்கு உணர்வு நிகழ்தல்வேண்டும். மற்று நீவிரோ ஒரு கணத்து நிகழ்ந்த வுணர்வு அதன் பிற்கணத்து இல்லையாய் மாய்ந்தொழியப், பிற்பிற் கணத்துப் புதிது புதிதாக உணர்வு தோன்று மென்கின்றீர். நுமது கூற்றின்படி பார்க்குங்கால், நும்புத்த முனிவனுக்கு ஒரு தொடர்பான வுணர்வு இல்லை என்பதே பெறப்படுமாதலால், தொடர்பான வுணர்வு கொண்டன்றிச் செய்யப்படாத அறிவு நூல்களை அவன் அருளிச் செய்தானென்றல் நுமது கோட்பாட்டுக்கு முற்றும் முரணாம்; அதுவேயுமன்றி, அவன் அந் நூல்களை அருளிச்செய்யத் தொடங்குதல் எழுத்துக்களால் ஆக்கப்பட்ட சொற்கள் அச்சொற்களால் ஆக்கப்பட்ட சொற்றொடர்களென்னும் கருவிகளைக் கொண்டன்றிப் பிறிதொருவாற்றானும் இயலாமையினாலும், ஒரு கணத்துத் தொடங்கிய ஓர் எழுத்தோசை அதன் பிற்கணத்து இல்லையாய் ஒழிதல் வேண்டு மென்பதே நுமது கோளாகலின் அவ்வாற்றாற் பலவெழுத்துக்கள் தொடர்ந்த சொற்களும் பல சொற்கள் தொடர்ந்த சொற்றொடர்களும் அவற்றால் ஆகிய நூலும் உளவாதல் ஆகாமையினாலும் அவன் அந் நூல்களை ஆக்கினான் என்னும் நுமதுரை பொருளில் கூற்றே போலும்! இனி, உடம்பும் உயிரும் ஐவகைக் கந்தங்களின் தொகையேயல்லாமல், மற்று அவை வேறு தனிப் பொருள்கள் அல்லவென்றும், எல்லாப் பொருள்களுங் கணங்கடோறும் மாய்ந்து மாய்ந்து புதியனவாய்த் தோன்றுவனவே யல்லது நிலைபேறாயுள்ளது எதுவும் இன்றென்றுங் கூறாநின்றீர். அவ்வாறு கணங்கடோறும் மாறுவது இல்பொருளான வெறும் பாழோ அல்லது உள்ளதொரு பொருடானோ என வினாயினார்க்கு, அஃது இல்பொருளேயாமென உரைப்பிராயின், மயிரில்லாத திண்ணிய யாமை ஓட்டின்கண் மயிர்முளைத்ததென்றும், அம்மயிராற் கம்பலம் நெய்து மலடிபெற்ற மகன் போர்த்துக் கொண்டா னென்றுங் கூறும் முழுப் பொய்யுரைக்கே, நீர் கூறும் இல்லதன்கண் எல்லாந்தோன்றிக் கணங்க டோறும் மாயும் எனும் போலியுரை ஒப்பாம். அற்றன்று, உள்ளதொரு பொருளே பருவடிவில் மாறுதலுற்றுக் கெட்டு மடியும், நுண்வடிவில் என்றும் உளதாம் என் றுரைக்குவிராயின் அது சைவராகிய எமது கோட்பாடாவதே யன்றிப் புத்தராகிய நுமது கோட்பா டன்று. அன்றாகவே, பருவடிவிற் கட்புலனாய் நிற்கும் இவ்வுடம்பிற்கே மாறுதலுங் கேடுமல்லாமல் இதற்கு முதலாய் நிற்கும் நுண்பொருளான மாயைக்கு அவை யில்லை யென்றுணர்விராக இன்னும் நீவிர் உரைக்குமாறே ஐவகைக் கந்தங்களின் தொகையே உயிராய், அவற்றின் வேறாகத் தொடர்ந்த உணர்விற்றாகிய உயிரென்பதொன்று இலதாயின், நேற்று இந்நூலை எழுதத் துவங்கினவன் யானே, இன்றிதனை எழுதுகின்றவனும் யானே, நாளை இதனை எழுதுவோனும் யானே என ஒருவற்கு ஒரு தொடர்பான வுணர்வு நிகழா தாகல்வேண்டும். மற்று, இவ்வுலகத்து நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் அவற்றைச் செய்யும் உயிர்களுக்கு ஒரு தொடர்பான வுணர்வு நிகழுமாறு பற்றி யன்றிப் பிறிதொருவாற்றானும் நிகழாமை எல்லார்க்குங் கண் கூடாய் அறியக்கிடத்தலின், இவ்வுண்மையொடு திறம்பி ஐவகைக் கந்தங்களின் வேறாய்த், தொடர்புபட்ட வுணர்வுடைய உயிர் என்பதொன் றில்லையென்றல் சிறிதும் அடாது. மேலும், ஐவகைக் கந்தங்களையன்றி வேறு உயிர் இல்லையாயின், ஒருவன் விழித்திருக்கையிலும் உறங்குகையிலும் அவன் ஒரு படித்தான வுணர்வுடையனாதல் வேண்டும். அவ்வாறன்றி விழித்திருக்கையிற் பாம்பைக் கண்டாலும் அஞ்சுமவன், உறங்குகையில் அஃது அவன் மேல் ஏறிச் சென்றாலும் அதனையவன் உணராதிருத்தல் என்னை? விழிப்பினும் உறக்கத்தினும் அவ் வைவகைக் கந்தங்களும் உளவல்லோ? கணங் கடோறும் உணர்வு கெட்டுக் கெட்டுத் தோன்றுமென்பதே எமது கோட்பாடாகலின் விழிப்பின்கட் காணப்படும் உணர்வு உறக்கத்தின்கட் கெடுமாறுபற்றி எமக்கு ஆவதோர் இழுக்கில்லையென்பிரேல், விழிப்பின்கண் நிகழ்ந்த வுணர்வு கெட்டு உறக்கத்தின்கண் வேறொரு புத்துணர்வு தோன்று மாயினன்றே அது நுமது கோட்பாட்டிற்கு இசைந்ததாம்; அவ்வாறன்றி விழிப்பின்கண் எல்லாவுணர்வு முடையனாயிருந்தான் ஒருவன் அயர்ந்த உறக்கத்தின்கண் அவ் வுணர்வு ஒரு சிறிதும் நிகழப்பெறாது கட்டை போலவுங் கற்போலவுந் தன்னைமறந்து கிடத்தல் கண்டாமாகலின், இது நும் மதத்தின் பொய்மையையே அறிவிப்பதன்றி அதற் கெவ்வாற்றானும் உதவிசெய்வதன்று. அதுவேயுமன்றி, நேற்றுப் பகல் விழித்திருந்தக் கால் ஒருவற்குண்டான உணர்வு நேற்றிரவு உறங்கச் சென்றக்காற் கெட்டு, இற்றைநாட்காலையிற் புதிது தோன்றுமென்றலே எமது கோட்டிபாட்டிற்கு ஒத்ததாம் என்பிரேல், நேற்றுப் பகல் ஓர் ஆடையை நெய்தற்குத் துவங்கினான் ஒரு கைக்கோளன் அஃது அன்றே முடிந்திடாமையின், அதனை அரைகுறையாய் விட்டுவைத்து, நேற்றிரவு துயிலச்சென்ற அளவானே அதனை நெய்தற்குரிய எல்லா வுணர்வும் முற்றுங் கெடப்பெற்று, இற்றைக் காலையில் அத்துயில் நீங்கி எழுந்தவளவானே தன்னை இன்னொன்று உணரும் உணர்வும் நேற்றுத் தான் நெய்தற்கு எடுத்து அரைகுறையாய் விட்டுவைத்த ஆடையைப் பற்றிய வுணர்வும் ஆகிய எல்லாம் முற்றும் இழந்து, இற்றைக்குத் தன்னை ஒரு குயவனாக நினைந்து குடமும் பானையும் வனையப் புகுதல்வேண்டும். நேற்றுத் தன்னை அரசனாய்க் கருதினானொருவன் இற்றைக்குத் தன்னை ஓர் ஏவற்காரனாகவும், இற்றைக்குக் கூலியாளாயிருப்பான் நாளைக்கு அரசனாகவும் இன்றைக்கு மக்கட் பிறவியிருப்பது நாளைக்குத் தன்னை ஒரு விலங்குப் பிறவியாகவும், நேற்றுப் பெண்ணாயிருந்தது இன்று ஆணாகவும், இன்று ஆணா யிருப்பது நாளைப் பெண்ணாகவும் நேற்றுக் கல்லாயிருந்தது இன்று தன்னை ஒரு மரமாகவும், இன்று மரமா யிருப்பது நாளைத் தன்னை ஒரு மகனாகவுங் கருதிக் கொள்ளல் வேண்டும்! திருவருட் செயலால் அத்தகைய பொய்ம் மாற்றவுணர்வும், அதுபற்றி வரக்கடவனாய பெருங் குழப்பங்களும் இலவாய், அறிவில்லாப் பொருள் முதற்கொண்டு ஓரறிவு ஈரறிவு மூவறிவு நாலறிவு ஐயறிவு ஆறறிவு உடைய உயிர்கள் ஈறாக எல்லாம் ஒருமுறையுள் அடங்கித் தொடர்புபட்ட நிலையும் உணர்வும் வாய்ந்தனவாய் மிக வியத்தக்க ஒழுங்கோடும் நடைபெறக் காண்டல் கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தார்க்கும் ஒப்ப முடிந்ததாகலிற், சிறிது கற்று ஆராய்ச்சியுணர்வு இலராயினாரை மயக்கும் நும் போலிக் கொள்கை எவர்க்கும் எத்தகைய பயனுந் தருவதன்றென உணர்விராக. அற்றேல், நேற்று நிகழ்ந்த நிகழ்ச்சிகளிற் சிலவும், முந்திய திங்களில் நிகழ்ந்தவைகள் பலவும், முன்னாண்டுகளில் நிகழ்ந்தவற்றில் மிகச்சில தவிர ஏனையெல்லாமும் முற்பிறவிகளில் நிகழ்ந்தவற்றிற் சிலதாமுமின்றி முற்றும் மறந்தொழிய வேறுவேறுணுர்வுகள் புதிய புதியவாய் நம்மனோர்மாட்டெல்லாங் கண்கூடாய்க் காணப் படுதலின், எமது கொள்கை குற்றமாதல் யாங்ஙனமென்று உசாவுதிராயின், முன் நாளினும் முற்றிங்களினும், முன்னாண்டுகளினும், முற் பிறவிகளினும் நிகழ்ந்த உணர்வு நிகழ்ச்சிகள் மாய்ந்து போயின வென்றல் உண்மையன்று; அவ்வுணர்வு நிகழ்ச்சிகள் அத்துணையும் ஒரு தினையளவுங் கெடாமல் மக்கள் உள்ளத்தினும் ஏனையுயிர்களின் உள்ளங்களினும் நன்கு பதிந்தேயிருக்கின்றன. அல்லாக்கால், ஒரு சிலர் வேறு பலரினும் மிக்க நினைவுடையராய்க் கழிந்தகால நிகழ்ச்சிகளை யெல்லாம் நன்கு நினைவுகூர்தல் ஆகாது. சிலர் நினைவின் மிக்கவராயும் பலர் அதிற் குறைந்தவராயுங் காணப்படுதற்கு ஏது வென்னையென்று நுணுகி நோக்கும்வழி, நினை வினாற்றல் மிகுந்துள்ளார்க்கு அவருள்ளத்தைப் பொதிந்த அறியாமை யிருள் விலகிநின்று அவர்தம் அறிவு சுடர்ந்து விளங்க இடந்தந் திருக்கின்ற தென்றும், நினைவினாற்றல் மிகக் குறைந் துள்ளார்க்கு அவரது உள்ளத்தைக் கவிந்த அறியாமையிருள் விலகி நில்லாமையின் அவரதறிவு அவ்வாறு விளங்குதற்கு இடம் இலதாயிற் றென்றும் அவ் வேறுபாட்டின் உண்மை புலப்படாநிற்கும். இவ் வேறுபாட்டினை ஓர் எடுத்துக்காட்டின் கண் வைத்துக் காட்டுதும்: ஈரம் ஏறிய விறகில் தீ உளதாயினும், அவ் ஈரம் உள்ளளவுந் அதன்கண் அத் தீ புலப்பட்டுத் தோன்றாதாகும்; மற்று அவ்வீரம் நீங்கியவழி அவ்விறகின்கண் அது விளங்கித் தோன்றும். இங்ஙனமே, அறியாமை யுள்ளளவும் உயிரின் அறிவிற் பதிந்த உணர்வு நிகழ்ச்சிகள் புலப்பட்டுத் தோன்றாவாகும்; அறியாமை நீங்கநீங்க அதன்கட் பதிந்த நிகழ்ச்சிகளெல்லாம் படிப்படியாய்ப் புலப்பட்டு நினைவிற்கு வரும். கல்விக்கழகம் ஒன்றிற் பயிலும் மாணாக்கர் பல்லோரும் ஒரேவகையான நினைவுடையராய் இல்லாமையும், அவருள் அறிவு மிகுதியும் உடையார் சிலர்க்கு நினைவு மிக்குத் தோன்று தலும், முதலில் அறியாமையாற் கவரப்பட்டிருந்தாரும் பயிலுந்தோறும் பயிலுந்தோறும் அவ்வறியாமை சிறிது சிறிதாய்த் தேய அம்முறையே அவரது நினைவும் படிப்படியாய் வலிவுற்று விளங்கித் தாங்கற்றபொருள்களை மறவாது நினைவு கூர்தலும் எமது சைவக்கொள்கையின் மெய்ம்மையை நன்கு நிலைபெறுத்தும். அதுவேயுமன்றித், தவத்தான் மனந் தூயராய் அறியாமை தேயப்பெற்ற அடியார் சிலர் முன்னும் முற்பிறவிகளினும் நிகழ்ந்தவற்றை யெல்லாம் ஒருங்குணர்தலை நூல்களானும், கண்கூடானும் இடை யிடையே அறிதுமாகலின் முன்நிகழ்ந்த உணர்வு நிகழ்ச்சி களெல்லாம் முற்றும் மாய்ந்துபோகப், பின் புத்துணர்ச்சிகள் உண்டாமென்னும் நுமதுரை உண்மை யன்றாதல் தெளியக் கடவிராக. இனி, மக்களல்லாத சிற்றுயிர்களும் தொடர்புபட்ட வுணர்வுடைமையினாலேதான் தத்தம் வாழ்நாள் எல்லை யளவும் உயிர்வாழ்கின்றன. பறவைகள் தாம் முட்டையிடுங் காலம் வந்ததுணை யானே பலநாட்களும் முயன்று கூடுகள் கட்டுகின்றன. அக் கூடுகளைக் கட்டத்துவங்கிய நாள்முதல் அவை முடிவு பெறுங்காறும் அப் பறவைகள் தொடர்ந்த வுணர்வினவாய் அவைதம்மைச் செய்து முடித்தல் கண்டாமன்றே. அவை தமக்குத் தொடர்ந்த வுணர்வு இல்லையாயின், முன் நாட்களிற் கட்டத்துவங்கிய கூடுகளை மறந்து பின் நாட்களில் அவை வேறு பலவற்றைச் செய்யத் துவங்கித் துவங்கி ஒன்றையுஞ் செய்துமுடிக்க மாட்டாவாய் ஒழிதல் வேண்டும்; தாம் முன்நாளில் ஈன்ற குஞ்சுகளையும் மறந்து அவற்றிற்கு இரை தராதொழிதலும் வேண்டும். இவ்வாறெல்லாம் நுமது கொள்கைப்படி ஒரு சிறிதாயினும் நடைபெறக் காணாமை யானும், உலகத்தின்கட் காணப்படும் எல்லா நிகழ்ச்சிகளும் எமது சைவக்கொள்கையின்படியே ஒரு தொடர்பாய் ஓர் ஒழுங்கின்கட் பட்டு நடைபெறக் காண்டலானும் ஒரு தொடர்பான வுணர்வுடைய உயிர் இல்லையெனும் நுமது கோள் உலக வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் ஒவ்வாத பொய்க் கோளாமென்று கடைப்பிடிப்பீராக. இனி, இதுகாறும் யாம் கூறியதுகொண்டே ஐந்து கந்தங்களின் வேறாய்த் தொடர்ந்த வுணர்வுடைய உயிர்கள் பல உளவென்பதும், தொடர்ந்த வுணர்வுடைய அவ்வுயிர் களின் உள்ளத்தைத் தொன்றுதொட்டே அறியாமை யென்னும் ஓரிருள் மறைத்துக்கொண்டிருத்தலின் அவற்றி னுணர்வுகள் முற்றும் விளங்காமல் இடையிடையே மறைந்து போகின்றன வென்பதும், அவ்வறியாமை நீக்கத்தின் பொருட் டாகவே இவ் வுடம்பும் இவ் வுடம்பின்கண் அமைந்த வியத்தகும் உறுப்புகளும், இவ்வுலகமும், இவ்வுலகத்துப் பல் பொருள் களும் எல்லாம்வல்ல சிவபெருமானால் இவ்வுயிர்கட்கு வழங்கப்பட்டன வென்பதும், இக்கருவிகளின் உதவிகொண்டு தமது அறியாமையைத் தொலைத்து உணர்வு முழுதும் விளங்கிச் சிவபிரான் றிருவடிப் பேரின்பத்தைப் பெறுதலே உயிர்கட்கு வீடுபேறாமல்லது உணர்வு முழுதுங்கெட்டு மீண்டும் பெரியதோர் அறியாமையிற் சென்று புகுவதாகிய நிருவாணமே வீடுபேறாமெனக் கூறும் நுமது கோட்பாடு பெரிதும் பிழைபடுவதா மென்பதும் தாமே பெறப்படுதல் காண்க என்று அடிகள் அருளிச்செய்தார். அதுகிடக்க உடம்பும் உலகமும் ஆகிய கருவிகளை உயிரின்கட் கூட்டுதற்குச் சிவம் என்று ஒரு கடவுள் வேண்டிற்றென்னை? ஒருவன் உணர்வோடு செய்த செயலால் வினை யென்பதொன்று உண்டாக, அவனும் அவ்வுணர்வும் அழிந்துபட்ட விடத்தும் அவ்வினை அழியாதாய் நின்று அவனுக்குப் பின்னும் பின்னும் பிறவிகளை உண்டாக்கும் என்றலே எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாம், என்று அப்புத்த முனிவன் இடைமறுத்துக் கூறப்பின்னும் அவனுரையை மறுத்து அடிகள் அருளிச் செய்தார்: பிறவி உண்டாதற்கு வினை ஓர் ஏதுவாமென்பதே எல்லார்க்கும் உடன்பாடாவதன்றி, அவ் வினையே பிறவியை உண்டாக்கு மென்றல் எவர்க்கும் ஒத்ததன்று. கூலிக்கு ஊழியஞ் செய்தான் ஒருவனுக்கு, அவன் செய்த ஊழியமே அவனுக்குக் கூலியைக் கொடாது; அவன் செய்த ஊழியத்தின் இயல்பறிந்து அதனை அவற்குத் தருவானான தலைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படும். அஃது எதனாலெனின், அவன் செய்த ஊழியமாகிய வினை அறிவுடையதுமன்று, அவற்குரிய கூலியினைத் தரவல்லதுமன்று, அதுபோல ஒரு பிறவியில் ஒருவன் ஆற்றிய வினையின் தொகுதியும் அறிவிலதாகலின், அவற்கு இனித் தரத்தக்க பிறவி இன்னதென அறியவும் மாட்டாது, அதனை அது தானே படைத்துக் கொடுக்கவும் வல்லதன்று, இனி முற்றுணர்வும் அதுபற்றி நிகழும் பேராற்றலும் சிற்றறிவினராய் உயிர்கட்கு இன்மை தெளியக்கிடந்த தொன்றாகலின், அவர் தாமே தமக்கு வேண்டும் பிறவியை அமைத்துக்கொள்ள மாட்டுவாரும் அல்லர்; இங்ஙனம் வினை தானே பிறவியைத் தராதாக, வினை செய்தாரும் அது தன்னைப் படைத்துக்கொள்ளாராக, அவ்வவர் வினைக்குத் தக்க பிறவியைத் தருதற்கு எல்லாவறிவும் எல்லா ஆற்றலும் முதன்மையும் ஒருங்கு உடைய இறைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படு மென்க. மேலும், ஊழியஞ் செய்தான் ஒருவன் இருந்தே கூலியைப் பெறுதல் வேண்டுமாகலின், வினைசெய்த உயிர் அழியாதிருந்தே அதன் பயனான பிறவியைப் பெறுதல் வேண்டும்; அதனாலும் உயிர் இல்லையாக வினைவாற்றானும் ஒவ்வாதென் றுணர்க. அற்றேல், நீர் கூறும் அவ் விறைவற்குரிய இலக்கணந்தான் என்னை? என்று அப் புத்த முனிவன் வினாவ, அடிகள் அருளிச் செய்வார். 11. சைவ சமயக் கோட்பாடுகளை விளக்கல் எம்மிறைவன் எண்ணிறந்த உயிர்கட்கு உடம்புகளைத் தந்து, அவை தம்மை எண்ணிறந்த உலகங்களில் வைத்து,. அவை தம்மை இயற்கையே பொதிந்த அறியாமையை நீக்கி அவைதமக்கு அறிவுச்சுடர் கொளுத்தல் வேண்டும் பேரிரக்கமும் அருளும் உடையனாகலின், அவன் அவ்வுயிர்கள் எல்லாவற்றுள்ளும் அவ்வுலகங்கள் எல்லாவற்றுள்ளும் எள்ளும் எண்ணெயும்போற் கலந்து நிற்பனாவன். நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. (திருச்சதகம்,46) இங்ஙனம், அவ்வுயிர்களும் உலகங்களும் வேறு, தான் வேறு, என்று பிரித்துக்காணல் இயலாவாறு, அவை தம்மோடு ஒருங்கியைந்து அவையே தானாய் இரண்டற்று நிற்கு நிலையும், அங்ஙனம் நிற்பினும் சிற்றறிவினவாகிய உயிர்களினும் அறிவில்லனவாய் மாறுந் தன்மையவாகிய உலகங்களினும் வேறாந்தன்மை யுடைமையின் அவற்றின் வேறாய் ஒரு பெற்றியனாய் நிற்கும் உண்மை நிலையும் உடையனாம். இருளை வெளியே இகபர மாகி இருந்தவனே. (நீத்தல் விண்ணப்பம்,17) ஈசனேநீ யல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசி னேன்ஓர் பேத மின்மை. (திருச்சதகம், 78) பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்குஒளிசேர் விண்ணாகி இத்தனையும் வேறாகி; (திருவெம்பாவை, 18) போற்றிஇப் புவன நீர்தீக் காலொடு வானம் ஆனாய் போற்றிஎவ் வுயிர்க்கும் தோற்ற மாகிநீ தோற்ற மில்லாய் போற்றிஎல் லாவு யிர்க்கும் ஈறாய்ஈ றின்மையானாய் போற்றிஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யனே. (திருச்சதகம்,70) பித்தனே எல்லா வுயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவை அல்லையாய் நிற்கும். எத்தனே (பிடித்தபத்து, 8) வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண்கெடினுந் தான்கெட்ட லின்றிச் சலிப்பு அறியாத் தன்மையனுக்கு. (திருத்தேள்ளேனம், 18) உலகத்துக் காணப்படும் உயிர்களின் உடம்பு களெல்லாம் ஆண் பெண் என்னும் இருகூற்றின்கட்படுதலின், அவ் விருவகை யுடம்புகளின் நிற்கும் உயிர்களும் அவ்வுடம்பு களோடொத்த ஆண்டன்மையும் பெண்டன்மையும் உடையனவேயாம் என்பது பெறுதும். பெறவே, இவ்வுயிர் கட்கெல்லாம் முதல் உயிராய் நிற்குங் கடவுளும் ஆணும் பெண்ணுமாகிய ஈருயிராய் அம்மையப்பராய் நிற்குமென உணர்ந்து இவ்வாறிருவகைப்பட்டு நிற்கும் இறைமுதற் பொருள்களுள், இறைவன் தன் இறைவியோடு பிரிப்பின்றி உடங்கியைந்து நிற்க, இறைவி உலகுயிர்களில் அவ்வாறு ஒருங்கியைந்து நிற்க இங்ஙனமே எல்லாப் பொருள்களும் உயிர்களும் அம்முழுமுதற் பொருளோடு கூடிநின்று ஆணும் பெண்ணுமாய்த் தொழிற்படா நிற்கின்றன வென் றறிவிராக. இங்ஙன மல்லாக்கால், ஆணும் பெண்ணுமாய் நின்று நடைபெறும் இவ்வுலகத்தின் இயல்பு வேறு எவ்வாற்றானும் விளங்கா தென்றறிக. உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால், (கோயின்மூத்த திருப்பதிகம், 1) பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே. (திருப்பள்ளியெழுச்சி, 8) அண்ணல் தன் ஒருபால் அவள் அத்தனாம் மகனாம். (திருச்சிற்றம்பலக்கோவையார்,112) யாவையும் ஆம் ஏகத்து ஒருவன். (திருச்சிற்றம்பலக் கோவையார், 71) இனி, உலகங்களிலும் உயிர்களிலும் மறைந்து நின்று அவை தம்மை இயங்கும் இறைவன் அதுபற்றி அருவமாய் நிற்பனாகலின், அவனை அன்பராயினாரன்றி வேறெவரும் உணரவுங் காணவும் வல்லுநரல்லர்; அங்ஙனம் அன்பரல் லாரால் அறியப்படானாயினும், அன்பராயினர்க்குத் தனது அருளாலாய உருவத்திரு மேனியிற் றோன்றிப் பேரருள் புரிதலும் உடையன். எனவே, அவற்கு அருவம் உருவம் என்னும் இருவகைத் திருமேனியும் உளவாம். அவன் தனது அருளால் மேற்கொள்ளும் உருவத்திருமேனி, நம்மனோர் வினைவழியே ஒரு தாயின் கருப்பையுட் புகுந்தெடுக்கும் ஊனுடம்பின் உருப்போல்வதன்று; அஃதவன் நினைந்தவளவானே அருளிற் றோன்றி அருளில் மறைவதாகும்; அதனால், அவற்கு எஞ்ஞான்றுந் தாய் தந்தையர் இலரெனத் தெளிமின்! யாவராயினும் அன்பரன்றி அறியொணாமலர்ச் சோதியான். (சென்னிப்பத்து,1) மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான். (திருவெண்பா.9) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாம்அறியாச் சேவேறு சேவடி (திருக்கோத்தும்பி,1) ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் வாவா என்று என்னையும் பூதலத்தே வலித் தாண்டு கொண்டான். (திருத்தெள்ளேணம், 7) பத்தி வலையிற் படுவோன் காண்க. (திருவண்டப்பகுதி, 42) அருவாய் உருவமும் ஆனபிரான். (திருத்தெள்ளேணம், 2) உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே. (திருப்பூவல்லி, 6) செந்தழல்புரை திருமேனியுங் காட்டி. (திருப்பள்ளி யெழுச்சி, 8) தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. (திருச்சதகம், 42) மற்றும் யாவர்க்குந் தந்தையாய் தம்பிரான் தனக்கு அஃது இலான். (திருச்சதகம், 47) இனி, அன்பராயினார்க்கு அருள்செய்தற் பொருட்டு எம்மிறைவன் எடுக்குந் திருவுருவம் தீயினோடு ஒப்பதாகும்; அதனால், அனற் பிழம்பையே எம் ஐயனுக்கு ஒரு திருமேனியாகவும் அறிவுநூல்கள் கூறாநிற்கும். அற்றேல், உலகின்கட் காணப்படும் எல்லாப் பொருள்களையும் விடுத்துத், தீயை இறைவற்கொரு திருமேனியாகக் கூறுவது என்னை யென்பிரேல், மண் புனல் அனல் கால் வெளி என்னும் ஐம்பெரும் பகுப்பிலும், உயிரிலும் எல்லாப் பொருள்களும் அடங்கும்; இவைதம்முட் காற்றும் வெளியும் உயிரும் கட்புலனாகாதவை யாகலின், அவை உருவத்திருமேனிக்கு ஏற்றன ஆகா; எஞ்சிய மண் புனல் அனல் என்பவற்றில் மண்ணும் நீருங் கையாற் பற்றப்படும் பருப் பொருளேயாக இறைவன் மேற்கொள்ளும் அருளுருவோ அங்ஙனங் கையாற் பற்றப்படும் பருப்பொருள் அன்றாகலானும், அவையிரண்டுந் தோன்றியபடியே கிடப்பனவல்லால் இறைவனுருப்போல் தோன்றியவுடன் மறையுந் தன்மைய அல்லவாகலானும் அவ்விரண்டும் இறைவனுருவத் திருமேனியோடு ஒப்பனவல்ல. மற்று, அனற் கொழுந்தோ கையாற் பற்றப் படாமையானும், கையாற் பற்றப்படா தாயினுங் கட்புலனுக்கு விளங்கித் தோன்றும் உருவுடைமையானும், உடன்தோன்றி உடன் மறையுந் தன்மைத் தாகலானும் அஃதொன்றுமே இறைவனது உருவத்திருமேனியோடு ஒப்பதூஉம் அதற்கு இடமாவதூஉம் ஆம். அதுவேயுமன்றி, இறைவன் இயற்கையொளியுடையனாய் உயிர்களின் அகவிருளாகிய அறியாமையை நீக்கி அறிவொளி தோற்றுவித்தல்போலத், தீக்கொழுந்தும் இயற்கை யொளியுடைத்தாய்க் கண்ணை மறைக்கும் புறவிருளையோட்டி எவற்றையும் விளங்கச் செய்தலானும், இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் என்னுந் தொழில்களைச் செய்தல்போலத், தீயும் ஓரெல்லையுள் நின்று உயிரோடுகூடிய உடம்புகளைத் தோற்றி நிலைபெறுவித்துத் தன்னெல்லை கடந்தவழி அவற்றை யழித்து உயிர்கட்கு அறிவுவிளங்கச் செய்தலானும், கட்புலனாய்த் தோன்றும் இறைவன் உடனே மறைந்து எங்கும் அருவமாய் நிற்றல் போலக் கட்புலனாய்த் தோன்றுந் தீயும் மறைந்தவழி எங்கும் உளதாகலானும், இறைவன் தான் தூயனாய் நின்றே தூயவல்லாப் பொருள்களோடு விரவிய வழியும் தான் அவற்றாற் பற்றப்படானாய் அவற்றின் தூவாமை நீக்கித் தூய்மை செய்தல்போல, தீயும் தான் தூயதாய் நின்றே தூயவல்லாப் பொருள்களோடு கூடியக் காலும் தான் அவற்றால் அழுக்கடையாது அவற்றின் அழுக்கையெல்லாம் எரித்துத் தூய சாம்பராக்குதலானும், அருவும் உருவும் ஒளியும் ஒருங்குடைய இறைவனைப் போலவே அனற் கொழுந்தும் அருவும் உருவும் ஒளியும் ஒருங்குடையதாய் நிற்றலானும் கட்புனலாய்த்தோன்றுந் தீயே கட்புலனாகா இறைவனது அருளுருவத் திருமேனி விளக்கத்திற்கு இடமாமென்று தெளியற்பாற்று. இது பற்றியன்றே, உலகத்தின்கண் ஆண்டாண்டிருந்த பண்டைமக்கள் எல்லாரும் தீவடிவினும், தீயின் கூறான ஞாயிறு திங்கள் வடிவினும் வைத்து இறைவனை வழிபட்டு வரலாயினா ரென்க. இன்னும் ஆண்டன்மைக்கு அடையாளமான கடுந்தன்மையுடைய தீ சிவந்த நிறம் உடையதாதல் பற்றியே ஆண் உருவினனாகிய சிவபிரானுக்குச் சிவந்த திருமேனியும். அத் தீயின்கண் அடங்கித் தோன்றுங் குளிர்ந்த நீர்வடிவு நீலநிற முடையதாதல் பற்றியே இறைவனாகிய சிவபிரான்கண் அடங்கி மிளிரும் மெல்லிய அருட்பெரும் பெண்டன்மையுடைய இறைவிக்கு நீலநிறத் திருமேனியும் நூல்களுட் கூறப்படுவவாயின: உலகத்துள்ள எல்லா உயிர்களும், பொருள்களும், பொருட்டன்மைகளும், நிறங்களும், ஆண், பெண், தீ, நீர், வெப்பந் தட்பம், செம்மை நீலம் என இரு பெரும் வகுப்பில் அடங்கும் இயல்பினை நுனித்தாராயுங்கால், இவை யெல்லாவற்றிற்கும் முதலாய் நிற்கும் இறைவனும் இறைவியும் அவ்விரு வகையியல்பு முடையராம் உண்மை தானே விளங்காநிற்கும். இனித், தீயின்கண் இறைவன் முனைத்து விளங்குதல் பற்றியே அத் தீப்பிழம்பின் வடிவாகத் திரண்டு நீண்டு குவிந்த சிவலிங்கத் திருவடிவம் திருக்கோயில் கடோறும் நிறுத்தி வழிபாடு செய்யப்படுகின்ற தெனவும், சிவமாகிய நெருப்பிற் படிந்த அடியார்க்கு அவரைப் பற்றிய மும்மலங்களும் அதனால் எரிக்கப்பட்டுத் தூயவாய் அவரை வருத்தாதொழிய அவரும் முற்றுந் தூயராகிச் சிவபிரான் திருவருளிற் றோய்ந்து பேரின்பம் நுகர்ந்திருத்தலைத் தெரிக்கும் அடையாளமாகவே ஆவின் சாணத்தை நெருப்பிலிட்டுச் சாம்பராக்கி மூன்று வரியாக நெற்றிமேலிட்டும் மெய்யெங்கும் பூசியும் வெள்ளிய தூய ஆனேற்றினை அச் சிவலிங்கவடிவின் முன்வைத்தும் ஆன்றோரெல்லாம் பண்டுதொட்டுத் திருக்கோயில் வழிபாடு ஆற்றி வருகின்றன ரெனவும் உணர்ந்துகொள்க. சுடர்கின்ற கோலம் தீயேயென மன்னுசிற்றம் பலவர். (திருச்சிற்றம்பலக் கோவையார், 370) செந்தழல்புரை திருமேனியுங்காட்டி; (திருப்பள்ளி யெழுச்சி, 8) எமக்கு வெளிப் படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய். (அருட்பத்து, 4) சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே. (கோயிற்றிருப்பதிகம், 9) அரத்தமேனியாய். (திருச்சதகம், 93) பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில். (திருவெம்பாவை, 13) தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. திருச்சாழல், 9) மூலமாகிய மும்மலம் அறுக்கும். (கீர்த்தித்திருவகவல், 111) உள்ளமலம் மூன்றும் மாய. (பண்டாய நான்மறை, 2) செம்மைநல மறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து. (அச்சோப் பதிகம், 9) நீறு இட்ட அன்பரோடு. (திருச்சதகம், 49) திருநீற்றை யுத்தூளித் தொளி மிளிரும் வெண்மையனே. (நீத்தல் விண்ணப்பம், 22) செம்மேனி யான் வெண்ணீற் றான். (திருவம்மானை, 9) தோள் உலாம் நீற்றன் ஏற்றன். (அச்சப்பத்து, 6) ஏறு உடையான். (திருப்படையாட்சி, 9) கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன். (திருச்சதகம், 14) இனி அறியாமையினும், அறியாமை வாயிலாக வரும் இருவினையினும், இவை இரண்டன் நீக்கத்தின் பொருட்டு இறைவனால் உலகும் உடம்புமாகத் தரப்பட்ட மாயையினுங் கிடந்து உழலும் உயிர்கள் ஓரறிவுடைய புல் முதல் ஆறறிவுடைய மக்கள் தேவர் ஈறாகப் பலப்பல பிறவிகள் எடுத்து, அவற்றால் அறியாமை தேய்ந்து தேய்ந்து அறிவு விளங்க விளங்க, இறுதியில் இறைவனே குருவடிவிற் றோன்றி அவர்க்கு முற்றறிவு விளங்கச் செய்து, அவரைத் தனது திருவருட் பேரின் பத்தில் அடக்கிக் கொள்வன். இதுவே வீடுபேறாம்; இப்பேற்றை எய்தினார்க்கு மீளப் பிறவி உண்டாகாது, எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாம் அழியாப் பேரின்பமே உளதாம். இப்பெற்றித்தாம் பேரின்பம் இறைவன்மாட் டன்றி வேறெங்கும் இன்மையானும், வரம்பிலறிவு வரம்பிலாற்றல் முதலாக இறைவற்குரிய ஏனை இலக்கணங்களெல்லாவற்றினும் வரம்பி லின்பமுடைமை யாகிய ஈதொன்றுமே இறைவற்குச் சிறப்பிலக்கண மாகலானும், துன்பத்திற் கிடந்துழலும் உயிர்கள் ஏனை நினைவுகளை யெல்லாம் விட்டு விட்டு அவற்குரிய அவ் வின்பவுருவினை இடையறாது நினைவு கூரக்கூர அவ்வுயிர்கள் அவன்றன் இன்பவுருவினை எய்துமாகலானும், அவ் வின்பவுருவினை அவ் வுயிர்கட்கு நினைவில் ஏற்றுதற்கண் இறைவற்குரிய ஏனை இலக்கணங்களை யுணர்த்தும் ஏனைப் பெயர்களெல்லா வற்றிலும் அன்பு இன்பம் எனப் பொருடந்து அவன்றன் இன்ப வுருவினை மட்டும் நினைவுறுத்தும் சிவம் என்னுஞ் சொல்லே கழிபெருஞ் சிறப்பிற்றாய் நிலையுதலானும் எல்லாம்வல்ல இறைவற்குச் சிவம் என்னும் அப்பெயரே பெயராக எம் முன்னோராற் றொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரலாயிற்றென் றுணர்ந்து கொள்க. வல்வினையேன் றன்னை, மறைந்திட மூடிய மாயஇருளை. (சிவபுராணம், 50, 51) கழிவில் கருணையைக் காட்டிக் கடியவினை யகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன். (திருப்பாண்டிப் பதிகம், 8) கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போடு இறப்பென்னும் அறம்பாவ மென்றிரண் டச்சந் தவிர்த்தென்னை யாண்டுகொண்டான், (திருத்தெள்ளேணம், 8) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கலலாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் (சிவபுராணம், 26-31) வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு. (திருச்சதகம், 22) நின் மலர்கொள் தாளிணை வேறிலாப் பதப்பரிசு பெற்றநின் மெய்ம்மையன்பர் உன்மெய்ம்மை மேவினார். (திருச்சதகம், 91) தென்னன் பெருந்துறையான் காட்டாதன வெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த. (திருவம்மானை, 6) புகுவதாவதும் போதரவு இல்லதும். (திருச்சதகம், 36) பேராவுலகம் புக்கார் அடியார். (திருச்சதகம், 87) என்னையுந் தன் இன்னருளால் இப்பிறவி யாட்கொண்டு இனிப் பிறவாமே காத்து. (திருவம்மானை, 12) பேதைகுணம் பிறருருவம் யான்என தென் உரை மாய்த்துக் கோதுஇல் அமுதானானை, (கண்டபத்து, 5) நாம் ஒழிந்து சிவமான வாபாடி. (திருத்தெள்ளேணம், 4) பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே. (பிரார்த்தனைப்பத்து, 6) மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே. (கோயிற்றிருப்பதிகம், 1) இனி, யாம் வழிபடும் இன்பவுருவிற்றான சிவம் முழு முதற்கடவுளே யன்றிப் பிறிது அன்று என்பதற்குப் பிறவாமை, இறவாமை, என்றும் ஒரு பெற்றித்தாய் நிற்கும் பேரின்பநிலை, முதலாக எம் முன்னோர் பண்டுதொட்டு வழங்கிவரும் கடவுளிலக்கணங்கள் எம் மிறைவனாகிய சிவபிரான்மாட்டு எஞ்ஞான்றும் பிறழா இயல்பினவாய்க் காணப்படுதலின், அவன் புராணங்களிற் கூறப்படும் நான்முகன் மால் காலவுருத்திரன் என்னும் மூவரில் ஒருவன் அல்லன்; ஆரிய வேதங்களிற் கூறப்படும் இந்திரன் வருணன் மித்திரன் சீகண்டவுருத்திரன் முதலான தேவர்களுள்ளும் ஒருவன் அல்லன்; இத்தேவர்க ளெல்லாரும் பிறப்பும் இறப்பும் துன்பமும் உடையரென அந்நூல்களிலேயே சொல்லப்படுதலின் அவருள் எவரும் முழுமுதற்கடவுளாகிய சிவம் ஆகார். மும்மல வயப்பட்ட சிற்றயிர்களாகிய அவரெல்லாந் தவத்தால் எம்மிறைவனருளைப் பெற்றுத் தேவராயினர். அதனால், எம் முன்னோரும் யாமும் எம்மனோரும் அச்சிவமாகிய முழுமுதற் கடவுளையன்றி வேறொன்றனைத் தெய்வமாகக் கனவிலும் நினையேம். இன்னும், இவ் வின்பவுரு விற்றாகிய சிவம் எல்லாவுயிர்கட்குந் தனது பேரின்பத்தை ஊட்டல் வேண்டியும், தலைவனாகிய தன்னையும் உயிர்களாகிய தம் மியல்பையும் உணராமற் சிற்றுயிர்களெல்லாம் அறியாமையாற் கவரப்பட் டிருத்தலின் அவை தமக்கு அவ்வறியாமையை நீக்கி அறிவுச் சுடர் கொளுத்தல் வேண்டியும் பிறவிகடோறும் அவற்றிற்கு மிக வியத்தக்க அமைப்போடு கூடிய பலவே றுடம்புகளை அமைத்துக் கொடுத்து வருகின்றான். ஒவ்வோர் உயிரும் தன் றனக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரையில் தன்றன் உடம்பி லிருந்து அறிவு விளங்கல் வேண்டுமாகலின், அவ்வுயிர்களின் உடம்பை உணவின்பொருட்டுச் சிதைத்தலும் சிதைப்பித்தலும் அவன் கருத்துக்கு முற்றும் மாறாய், இரக்க மில்லாக் கொடுந் தீவினை யாகும். ஆகவே, எல்லா வுயிர்களும் தத்தம் உடம்புகளில் இருந்து உயிர்வாழ்தற்கு ஏற்ற உதவிகளை எம்மாலியன்ற வரையிற் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். எவ்வுயிரையுங் கொல்லாமையும், கொன்று அதன் ஊனைத் தின்னாமையும் ஆகிய அருளொழுக்கம், எவ்வுயிர்க்கும் இன்பத்தைச் செய்யும் சிவபிரானை வழிபடுஞ் சைவராகிய எமக்கே உரிய சிறந்த அறமாமெனத் தேறுமின்! இனி உயிர் என்பதுங் கடவுள் என்பதும் இல்லையென்னும் நுமது கொள்கையும், எவ்வுயிரையுங் கொல்லல் ஆகாது என்னும் நுமது அறிவுரையும், ஆயினும் பிறராற் கொன்று சமைக்கப் பட்ட ஓர் உயிரின் ஊனைத் தின்னும் நுமது செய்கையும் ஒன்றோடொன்று மாறுபடுதலின், அருளொழுக்கத்திற்கு முரணான நுமது புத்தசமயம் முற்றும் பொய்யாமென்று தெளிந்துகொள்ளக் கடவீராக! யாவர்க்குந் தந்தைதாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் (திருச்சதகம், 47) தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ (திருச்சாழல், 3) துன்பம் பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் (பிடித்தபத்து, 10) அட்டமூர்த்தி அழகன் இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான் (சென்னிப்பத்து,2) எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் (திருத்தோணோக்கம், 9) செழும் பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய்நின்ற முதல்வன் (திருச்சதகம், 30) முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானை (திருவம்மானை, 19) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடி (திருக்கோத்தும்பி,1) அந்தரர்கோன் அயன்றன் பெருமான் ஆழியான் நாதன் நல்வேலன் தாதை (திருப்பொற்சுண்ணம், 3) ஆவா அரிஅயன் இந்திரன் வானோர்க்கு அரியசிவன் (திருத்தெள்ளேணம், 7) முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் (திருப்பள்ளியெழுச்சி, 8) மூவர்நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்து மும்மைத் தேவர்சென்று ஏத்துஞ் சிவன் (திருச்சிற்றம்பலக் கோவையார். 337) கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதுஅடியாரொடு அல்லால்நர கம்புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின்இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே (திருச்சதகம், 2) மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது (போற்றித்திருவகவல், 74) என்கடைக் கண்ணிலும் யான்பிற ஏத்தாவகை (திருச்சிற்றம்பலக்கோவையார், 298) கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதநண்ணி மற்றும்ஓர் தெய்வந்தன்னை உண்டென நினைந்துஎம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே; எம்பிரான் தம்பிரானாம் திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே (அச்சப்பத்து, 1,2) வேண்டேன் புகழ்வேண்டேன் செல்வம்வேண்டேன் மண்ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பிறப்புச் சிவம் வேண்டார்தமை நாளுந் தீண்டேன் (உயிருண்ணிப்பத்து, 7) எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே (திருவேசறவு, 4) வல்வினையேன்றன்னைமறைந்திடமூடியமாயஇருளைஅறம்பாவமென்னும்அருங்கயிற்றாற்கட்டிப்புறந்தோல்போர்த்தெங்கும்புழுவழுக்குமூடிமலஞ்சோரும்ஒன்பதுவாயிற்குடிலை ................eyªjhன்இலhதசிறியே‰குநல்»(சிவபுராண«. 50-58) உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக்கடல் (திருத்தெள்ளேணம், 17) புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் (திருத்தோணோக்கம், 6) இனி உடம்போடு கூடி யியங்கும் எல்லா உயிர்களும் விழித் திருக்கையிலும் உறங்குகையிலும் அவை தம் உடம்புள் ளிருந்து ஓவாது அசைவது நெஞ்சப்பை ஒன்றுமேயாகும். இவ்வசைவு அவ்வுடம்புகளிலிருந்து பலவகை முயற்சிகளைப் புரியும் உயிர்கள் தம்மால் நடத்தப்படுவதன்று. தம்முடம்புக்குள் ளிருக்கும் நெஞ்சப்பையின் அமைவும், அஃது vங்ஙனம்eடைபெறுகின்றbதனmதன்Vதுவும்cணரமாட்டாதcயிர்கள்mதனைmங்ஙனம்Xவாதுmசைக்கவல்லவாதல்vவ்வாறுiககூடும்?அந் நெஞ்சப்பை அசையுங்காறும் உயிர்கள் உடம்புகள் நிலைபெறுதலும், அதன் அசைவு நின்ற வுடனே உயிர் உடம்பை விட்டு நீங்குதலுங் கண்கூடாய் அறியக்கிடந்த உண்மைகளாம். இவ்வாறு உயிர்கள் நிலைபெறுதற்கும் நீங்குதற்கும் முதல் ஏதுவாய் நடைபெறும் நெஞ்சப்பையின் அசைவு அந் நெஞ்சப்பையைத் தமக்கு உரிமையாவுடைய உயிர்கட்கே ஒரு சிறிதும் விளங்காமை யானும், விளங்காததோடு அதனை அசைக்கும் ஆற்றலும் அவை தமக்கு இல்லாமையானும், எல்லா ஆற்றலும் உடைய ஓர் அறிவுப்பொருள் அசைத்தாலன்றி அவ்வசைவு நடைபெறுதல் ஒருவாற்றானும் ஆகாமையானும், எல்லாம்வல்ல இறைவனே அந் நெஞ்சப்பைகடோறும் முனைத்து விளங்கிநின்று அவை தம்மை இயக்கி, அவ்வாற்றால் உயிர்கள் உடம்புகளில் நிலைபெறநின்று அறிவுந்தொழிலும் உடையராய் போதர உதவி செய்து வருகின்றான் என்று தெளிமின்! இங்ஙனம் எல்லா வுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின்கட் சிவபிரான் முனைத்துநின்று ஆடி அதனை ஆட்டுவிக்கும் அருள் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து மக்களெல்லாரும் அதன்கட் டமது உணர்வினை யொடுக்கி வழிபடுதற்கு எளிதாம் பொருட்டே, புறத்தே இந் நிலமடந்தைக்கு நெஞ்சத்தாமரை போல் வயங்குவதாகிய இத் தில்லை அம்பலத்தே அவ் வாண்டவன் அருட்கூத்தின் நிலை எம்முன்னோரால் அமைத்துக் காட்டப்பட்ட தென்றுணர்க. அகத்தே உடம்பிலும் புறத்தே உலகத் திலும் எம்மையன் இங்ஙனந் திருக்கூத்து நிகழ்த்தி அவை தம்மை இயக்குதல் பற்றியே அவன் அம்பலக் கூத்தன் எனவும் பெயர் பெறுவன் என்க. இங்ஙனம் எம்மிறைவன் இயற்றும் அருட்கூத்து உயிர்கள் உய்தற் பொருட்டேயன்றித் தன் பொருட்டு அன் றென்பதூஉம் உணரற்பாற்று. இவையே எமது சைவசமய வுண்மையென்று அறிவிராக! உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே பெருகுதலைச் சென்று நின்றேன். (திருச்சிற்றம்பலக் கோவையார், 104) சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணங் குறியொன்றும் இல்லாத கூத்தன்றன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (அச்சோப்பதிகம், 2) பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தன் இவன்என என்னை ஆக்குவித்துப் பேராமே சித்தம் எனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே. (கண்டபத்து, 7) நள்ளிருளின் நட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே. (சிவபுராணம், 89-90) 12. புத்தகுரு தோற்றபின் நிகழ்ந்தவை இவ்வளவிற் புத்தகுருவுக்கும் திருவாதவூரடிகட்கும் நடந்த எதிர்முக வழக்கு முடிந்தது,. தமது புத்தக்கொள்கைகளை அளவைநூன் முறை வழுவாது அடிகள் நிரலே மறுத்துக் கூறியக்காலும், சைவசமய உண்மைகளை விரித்து விளக்கியக்காலும் மாறுசொல்ல மாட்டாது அவற்றின் உண்மைகண்டு வாய்வாளாதிருந்த அப் புத்தகுரு தாமுந் தம்மதமுந் தோல்வியுற்றதனால் உண்டாய இழிவுபொறாது, நூல்வரம்புக்கு அடங்காத பொருந்தா வழக்குகளையும் கொடுஞ் சொற்களையும் உரத்த குரலால் வெகுண்டுரைத்துக் கூவ, அடிகள் அவரது செருக்கையடக்கித் தெளிவு பிறப்பித்தற் பொருட்டு நீர் பேசும் வலியிழந்து ஊமையாகுக என்று கட்டளையிட்டார். எல்லாம் வல்ல சிவபிரான் திருவருள் வழிநின்று அடிகள் பணித்தபடியே, அப்புத்தகுரு பேசும் வலியிழந்து ஊமை ஆயினார். அதுகண்டு அவ் அவைக்களத்திருந்தார் அனைவரும் அச்சமும் வியப்புங் கலந்து மீதூரப்பெற்ற உள்ளத்தினராய், அடிகளது தவப்பெருமை யினையும் அவரை யாட்கொண்ட சிவபிரான் திருவருளையும் வியந்து செயலற்றிருந்தனர். அப்பொழுது, அப் புத்தகுரு வினோடு உடன் போந்த இலங்கை மன்னன் எழுந்துநின்று அடிகளை வணங்கிப், பெருமானே! ஊமையைய் இருக்கும் என்மகள் ஊமைத்தீர்ந்து, எம் புத்தகுருமார் நிகழ்த்துந் தடைகட்கெல்லாம் விடைகூறிச், சிவபெருமானே முழுமுதற் கடவுளென்று நிலைநிறுத்துமாறு திருவுளம்பற்றி யருள்க என்று வேண்டினான். அடிகளும் சிவபிரான் திருவருளை நினைந்து, அவன் வேண்டு கோட்கிணங்கி ஊமையா யிருக்கும் அப் பெண்மகளை அவ் அவைக்களத்தே வருவித்து இருத்தி, நங்காய்! நீ ஊமைநீங்கி, இப் புத்த குருவின் மாணாக்கர் வினவும் வினாக்கட்கெல்லாம் ஏற்றவிடைகள் கூறி, நம் சிவபிரான்றன் முழுமுதற்றன்மையை நன்கு விளக்கி நிலைநிறுத்தக்கடவாய்! என்று பணித்தருளினார். அங்ஙனம் அடிகள் பணித்தவளவிலே, அவ்வரசன் புதல்வி பிறவி முதற் றனக்கிருந்த ஊமைநீங்கிப், பேசும் ஆற்றலும் பேரறிவும் வரப்பெற்றாள். அடிகள் பணித்தவாறே பேசும் ஆற்றலிழந்து ஊமையாய் ஒடுங்கியிருக்கும் அப் புத்தகுருவின் பக்கத்தே யிருந்த அவர் தம் மாணாக்கர் இருபது பெயர் தம் ஆசிரியன் பேசமாட்டாதிருத்தல் கண்டு தாமே ஒருவர்பின் ஒருவராய்த், தம் மன்னன் புதல்வியை நோக்கி இருபது வினாக்கள் நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய அவ்வினாக்கட் கெல்லாம் அந் நங்கையார் மிகவும் பொருத்தமான விடை களைப் பேரறிவோடும் எடுத்துக் கூறினார். அவற்றை அங்கிருந்தா ரெல்லாரும் கேட்டுப் பிறவிமுதல் ஊமையாய்க் கல்வி கல்லாதிருந்த அம் மடந்தை, அடிகள் பணித்தவளவிலே ஊமை தீர்ந்து சிவபிரான் முழுமுதற் றன்மையை நன்கு விளக்கிக்காட்டியது, எல்லாம்வல்ல அப்பெருமானது அருட்டிறமும், அதற்கு இடனாய்நிற்கும் அடிகளது பேரன்பின் றிறமும் அல்லாமற் பிறிதன்றெனத் தெளியவுணர்ந்து அடிகளையும் ஐயனையும் வியந்து மகிழ்ந்து வாழ்த்திப் பேரன்பின் வழியரானார். இலங்கை மன்னன் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பேரன்பால் ஈரக்கப்பட்டுச் சென்று மாணிக்கவாசகப் பெருமான் திருவடிகளில் வீழ்ந்து அழுது தீவினையேனை அடிமைகொண்டருள்க! v«bgUkhnd! என்று குறையிரக்க, அடிகள் உளம் இரங்கி அவற்குத் திறுநீறு அளித்து அவனைச் சிவபிரான் திருவடிக்கு ஆளாக்கினார். அரசன் அவ்வாறானபின், அப் புத்தகுருவின் மாணாக்கரும் அடிகளை வணங்கித் திருநீறு பெற்றுச் சைவசமயந் தழீஇயினார். அதன்பின்னர் அம் மன்னனும் அம் மாணாக்கரும் தம் குருவின் ஊமைதீர்த்து அவரையும் அடிமை கொண்டருளல் வேண்டுமென அடிகளைப் பெரிதுங் குறையிரப்ப, அதற்குந் திருவுளம் இசைந்து அப்புத்தகுருவும் ஊமைதீர்ந்து மீண்டும் பேசுமாற்றல் பெறக் கற்பித்தருளினார். தமக்குவந்த ஊமைத்தன்மை நீங்கப் பெற்றவுடன் அப் புத்தகுருவும் உளந்திருந்தி அடிகளை வணங்கித் திருநீறுங் காவியாடையும் பெற்றுச் சைவ சமயந் தழீஇயினார். இவ்வருட் புதுமைகளையெல்லாங் கண்டு நெஞ்சம் நீராய்க் கரையப்பெற்ற சோழவேந்தனையுள்ளிட்ட எல்லாரும் அடிகளின் திருவடி களைச் சென்னி மேற்சூடிப், பின் அம்பலக் கூத்தனை வணங்கி, அடிகள் பால் விடைபெற்றுத், தத்தம் இருப்பிடஞ் சேர்ந்தனர். பின்னர்த் திருவாதவூரடிகள் அப் புத்த குருவின் மாணாக்கர் இருபது பெயர் வினாய இருபது வினாக்களையும் ஊமை தீர்ந்து இலங்கை மன்னன் புதல்வி அவை தமக்குக் கூறிய இருபது விடைகளையும் அமைத்துத் திருச்சாழல் இருபது பாட்டுக்கள் அருளிச் செய்தார் என்பது. தோல்வியுற்ற புத்தர் உளந்திருந்திச் சைவ சமயந் தழீஇயினார் என்னும் அவ்வளவே திருவாதவூரர் புராணங் கூறாநிற்கப், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலோ அங்ஙனந் தோல்வியுற்ற புத்தரைச் சோழவேந்தன் செக்கிலிட்டு அரைப்பித்தான் என்னுங் கொடியதொரு பொய்க் கதை கட்டிவிட்டது சைவசமயத்திற் றலைசிறந்து நிற்குங் கொள்கை அருளொழுக்கத்தைப் பற்றியதேயாகும். சைவசமயத்திற்கு உயர்வு கூறுவேமெனப் புகுந்து அதன் கொள்கைக்கு மாறான அறக்கொடிய நிகழ்ச்சிகளைப் பொய்யாக அதன் மேலேற்றிச் சான்றோரெல்லாம் அதனைப் பழிக்குமாறு பொய்ப்புன்செயல் புரிந்த பரஞ்சோதி முனிவர்தம் இழுக்குரை பெரிதும் அருவருக்கற்பாலதொன்றாம். இங்ஙனமே தமிழ்ச் சிவதருமோத் தரம் இயற்றினவர் புறச்சமயம் புக்காரைக் கொல்க வென அறிவுறுத்தியதும் சைவ அருளொழுக்கத்திற்கு முற்றும் மாறாயிருத்தலின் அதுவும் ஆன்றோரால் அருவருத்தொதுக்கற் பாலதாம். விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே, எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்ற தாமே, என்று சைவசமய ஆசிரியரான திருநாவுக்கரசடிகளும், அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ் அவர் பொருளாய், என்று சந்தான ஆசிரியராகிய அருணந்தி யடிகளும் அறிவுறுத்திய சைவ அருளொழுக்கப் பான்மையை உணரவல்லார்க்குப் பரஞ்சோதி முனிவருரை அறக்கொடிய பொய்யுரையாதல் நன்கு விளங்கும். தமது புத்தசமயக் கொள்கையைப் பரப்பவந்த அவ்வளவேயன்றிச், சைவசமயத்தவர்க்கு வேறு ஏதொரு தீங்குஞ்செய்யாத அப் புத்தர்களை, அருளொழுக்கமே தமக்கு யிராய்க்கொண்ட மாணிக்கவாசகப் பெருமான் அங்ஙனஞ் செக்கிலிட்டு அரைப்பித்துக் கொடுங்கொலை செய்தற்கு ஒருப்படுவரோ! அற்றேற், சைவசமயத் தலைவரான திருஞானசம்பந்தப் பெருமான் தம்மொடு வழக்கிட்டுத் தோற்ற சமணக் குருக் கண்மாரைக் கூன்பாண்டியன் கழுவிலேற்றுவித்தற்கு ஏவிய காலையில், அதனை அவர் விலக்காதிருந்தது என்னையெனில்; அப்பாண்டியமன்னன் மனைவியாரான மங்கையர்க் கரசியாரது வேண்டுகோளுக்கிணங்கிப் பல்லாயிரம் அடியார் திருக்கூட்டத்தோடும் மதுரைமாநகர்க்கு எழுந்தருளி, ஆண்டிருந்த சமணர்க்கு ஏதொரு தீதும் நினையாது, சிவபிரானை வணங்கிக்கொண்டு வாளாது வைகிய தம்மையும் தம் அடியார் பல்லாயிரவரையும் அச் சமணர் ஓர் இரவில் தீயிட்டுக் கொளுத்தின கொடுங்குற்றத்தை நினைந்து, திருஞான சம்பந்தப் பிள்ளையார் அரசியல் முறை வழுவாது பாண்டியன் அச் சமணரை ஒறுக்கப்புக்க அதனை விலக்காராயினார். அஃதொக்குமாயினும், தமக்குப் பெருந்தீங்கு இழைத்தாரையும் அருளொழுக்கத்தில் மிக்கார் ஒறாது விடுதலன்றோ செயற்பாலதெனின்; தம் ஒருவர்க்கு மட்டுந் தீங்கியற்றினராயின் அவரை ஒறாது விடுதல் சால்பேயாம்; தம்முடன் போந்த குற்றமற்ற பல்லாயிரஞ் சிவனடியா ருயிரைக் கொள்ளை கொள்ளுங்கொடிய கொலைச் செயலைப் புரிந்தாரைத் தாம் மன்னித்து விடுதல் அருள் அன்றாம்; அதனாற் பிள்ளையார் பாண்டியனை விலக்காதிருந்தது அவர்க்கு ஒருவாற்றானுங் குற்றமாகாது. மற்றுத், தில்லைமா நகர்க்குவந்த புத்தரோ சைவர்க்கு ஏதொரு தீங்கும் இழைத்த தில்லாமையால், வெறுங் கொள்கையளவில் தோற்றதே பற்றிச் சோழன் அவரைச் செக்கிலிட்டு அரைப்பித்தானென்றலும் அதற்கு மாணிக்க வாசக அடிகள் உடன்பட்டிருந்தாரென்றலும் அரசியன் முறையும் அன்று, அருளொழுக்க முறையும் அன்று. இம் முறைகளையெல்லாம் ஒரு சிறிதும் ஆய்ந்து பாராமல், திருஞானசம்பந்தப் பிள்ளையாரொடு வழக்கிட்டுத் தோற்ற சமணர்கள் கழுவில் இடப்பட்டதற்கு ஒப்பாக, அடிகளொடு வழக்கிட்டுத் தோற்ற புத்தரும் செக்கிலிட்டு அரைக்கப்பட்டார் என்று சொல்லுதலொன்றுக்கே விழைந்து பரஞ்சோதி முனிவர் அங்ஙனம் ஒரு பொய்க்கதை கட்டிவிட்டார். இப் பெற்றிப்பட்டதொரு நிகழ்ச்சி திருவாதவூரடிகள் புராணத் திலாதல், பழைய நூலாகிய பெரும் பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணத்திலாதல் காணப்படாமையின் இப் பொய்க்கதை பரஞ்சோதி முனிவரே கட்டிவிட்ட தென்பது ஒருதலை. இங்ஙனமே பரஞ்சோதி முனிவர் ஆராயாது கூறினவும், தாமே கட்டிவிட்டனவும் மிகப்பல; அவையெல்லாம் ஈண்டு எடுத்துக்காட்டலுறின் இது விரியுமென அஞ்சி விடுத்தாம். அது நிற்க. இனிப், புத்தகுருவுக்கும் அடிகட்கும் வழக்கு நிகழ்ந்த காலையில், அப் புத்தகுரு தம்முடைய புத்தசமயக் கொள்கைகளாக எடுத்துக்கூறியவை எவையென்பதும், அவை தம்மைத் திருவாதவூரடிகள் மறுத்துக் கூறியது எவ்வெவ்வாறு என்பதும் பழையநூலாகிய பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலில் ஒரு சிறிதுங் கூறப்படாமையின், திருவாதவூரடிகள் புராணத்திற் சொல்லப்பட்டபடியே அவை நடத்திருக்குமோ என ஓர் ஐயுறவு தோன்றாநிற்கும். மெய்கண்ட தேவநாயனார் அருளிச்செய்த சைவ சித்தாந்த முதல்நூலாகிய சிவஞானபோதத்திற்கு வழி நூலாக அருணந்திதேவர் இயற்றியருளின சிவஞானசித்தியார் பரபக்கத்திற் சொல்லப்பட்ட சௌத்திராந்திக புத்தன் மதத்தையும் அதன் மறுப்பையும் பெரும்பாலுந் தழுவியே திருவாதவூரர் புராணங் கூறிச் செல்லுதலை உற்று நோக்குமிடத்துத், திருவாதவூரர் புராணம் அவ்விரண்டும் அவ்விருவர்க்கும் இடைநிகழ்ந்தபடி தானாகவே அறிந்தெடுத்துக் கூறுகின்றதெனக் கொள்ளுதற்கு இடமில்லை. என்றாலும், இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகிய சிவஞானசித்தியாரிற் காணப்பட்ட படியாகவேதான் அப் புத்த குருவுக்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் எதிர்முகவழக்கு நடைபெற்றிருக்க வேண்டு மென்று நம்புதற்கு இடம் உளது. யாங்ஙன மெனிற் சிவஞான சித்தியாரிற் சொல்லப்பட்டபடியாகவே பழையநாளி லிருந்த சௌத்திராந்திக புத்தமதக் கொள்கைகள் வழங்கின வென்பது, பாளி மொழியிலும் வடமொழியிலும் உள்ள அப் புத்தசமய நூல்களையாம் ஆராய்ந்து பார்த்தமையால் நன்கு விளங்கின மையானும், மாணிக்கவாசகப் பெருமான் சைவசித்தாந்தக் கொள்கைகளே முற்றும் உடைய ரென்பது அவர் அருளிச் செய்த திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களி லிருந்து யாம் திரட்டியெடுத்து மேலே காட்டிய மேற்கோள் களைச் சைவசித்தாந்தத் தெளிபொருள் நூல்களாகிய திருமூலர் திருமந்திரம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்பவற்றின் பொருள்களோடு ஒப்பவைத்து நோக்கு மாற்றால் தெற்றென விளங்குதலின், அங்ஙனஞ் சைவ சித்தாந்தக் கொள்கையுடைய அடிகள் மேற்காட்டிய புத்த சமயக் கொள்கைகளை மறுக்கும் முறை சிவஞானசித்தியார் பரபக்கத்தில் மறுக்கும் முறையாக வன்றி வேறொருவாற்றான் ஆதல் இயலாமையானும் அவ்வாறு கொள்ளு தல் பொருத்தமேயா மென்று துணியப்படும். இனி, மேற்காட்டிய புத்தமதக் கொள்கைகள் பழைய புத்தசமய நூல்களில் உளவாதல் காட்டுதும்: புத்த மதத்தைப் புதிது தோற்றுவித்த முதலாசிரியரான கௌதம சாக்கியர்க்கும், அவரைப் பின்பற்றிவந்த ஏனோர்க்குங் கொள்கை யளவில் வேறுபாடு மிகுதியாய்க் காணப்படுகின்றது. கௌதசாக்கியர் கொண்ட கொள்கையை இனிது விளக்குதற் பொருட்டுப், புத்தசமயத்தின் பழைய வேதங்களாகிய பிடக நூல்களில் தீகநிகாயத்தின் தேவிச் சசுத்தத்தில் வாசெட்டன் என்னும் பார்ப்பனனுக்குக் கௌதம சாக்கியர் செவியறி வுறுத்திய அறிவுரைப் பகுதியை இங்கே மொழி பெயர்த் தெழுது கின்றோம். 13. சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி இரபிதி யாற்றங்கரையில் மனசாகடம் என்னும் இனியதோர் இடத்திற், செல்வத்தாற் சிறந்து புகழ்பெற்ற பார்ப்பனர் பலர் இருந்தனர். அவ்விடத்தைச் சுற்றிலும் வேலிகள் இட்டு அடைப்பாக்கி, அதனுள் தாம் இருத்தற்குப் பல குடில்கள் அமைத்து, அவர்கள் ஒருங்குகூடித் தம் வேத மந்திரங்களைப் பாராயணஞ் செய்தல் வழக்கமாய் நடந்து வந்தது. வாசெட்டன், பாரத்துவாசன் எனப் பெயரிய பார்ப்பன இளைஞர் இருவர் நாள்முழுவதும் அவற்றைப் பாராயணஞ் செய்து உருவேற்றிய பின் மாலைக் காலத்தில் அவ் யாற்றுக்குப் போய்த் தலைமுழுகி அதன் பின் அவ்வியாற்றங்கரை மணலில் அங்குமிங்குமாய் உலவுவர். ஒருநாள் அவர் அங்ஙனம் உலவுகையில், ஆழ்ந்த நினைவுடையராய் எது மெய்யான வழி? vJ bghŒahd tÊ? என்று தமக்குள் உசாவலாயினர். அவ்விருவருந் தாந்தாம் அறிந்த பார்ப்பன மறை ஆசிரியரை மேற் கோளாகக் காட்டி உரையாடியும், ஒருவர்க்கும் உறுதி பிறக்கவில்லை. ஆகவே, வாசெட்டன் மற்றவனை நோக்கிக் கூறுவான்: பாரத்துவாச! சாக்கியகுலத்திற் பிறந்த சமண கோதமர் என்பார் அக்குலத்தை நீங்கிப் போய்த் துற வொழுக்கம் பூண்டார். அவர் இப்போது மன சாகடத்திற்குத் தெற்கே யாற்றங்கரையில் உள்ள மாந்தோப்பில் வந்து தங்கியிருக்கின்றார். மாட்சிமை தங்கிய அக்கோதமரைப்பற்றி எங்கும் பெரும்புகழ் பரம்பியிருக்கின்றது. அவர் முழுதும் அறிவுவிளங்கி இம்மையிலேயே வீடு பெற்றவரென்றும், மெய்யுணர்ச்சியினும் நன்மையினும் மிக்கவரென்றும், மேலுலகங்களின் நிகழ்ச்சிகளை அறிந்து பேரின்பத்தில் வைகியிருக்கும் புத்தர் என்றும் பாராட்டிப் பேசப்படுகின்றார். ஆதலாற், பாரத்துவாச! வருக, நாம் அச் சமணகோதமர் இருக்கும் இடத்திற்குச் செல்வம் சென்று அவர்பால் இதைப்பற்றி உசாவுவம்; அவர் நமக்கு அறிவுறுத்துவதை நாம் நமது கருத்தில் இருத்தக் கடவம். அங்ஙனமே அவர்கள் அவர்பாற் சென்று தமக்கு நேர்ந்த இடர்ப்பாட்டை அறிவிக்கலாயினர். அவர் அவர்கள் கூறியவற்றை உற்றுக்கேட்டு, அவ்விருவர் உரையும் நூற் கருத்துகளைச் சார்ந்திருத்தல் கண்டு, அவ்விருவர் தமக்குள் உண்டான கருத்து வேறுபாட்டையும் வழக்கையும் எடுத்துச் சொல்லும்படி கேட்டார். வாசெட்டன் உரைப்பான்: கோதமரே! ஓர் ஊர்க்கேனும் நகரத்திற்கேனும் அருகிற் பல்வேறு வழிகள் உள்ளனவாயினும், அவ்வழிகளெல்லாம் அவ்வூரின்கண் வந்து ஒருங்கு கூடுதல்போல, அத்தரிய பிராமணங்கள், மித்திரிய பிராமணங்கள் சந்தோக பிராமணங் கள் சந்தவ பிராமணங்கள், பிரமசரிய பிராமணங்கள் என்னும் பல்வேறு பிராமணங்களால் அறிவுறுத்தப்பட்ட பல்வேறு வழிகளும் இருக்கின்றன. இவையெல்லாம் வீடு பயக்கும் வழிகளா? அவை, தம்முட் கூறியபடி ஒழுகுபவனைப் பிரமத்தோடு ஒன்று கூட்டும் வழிகள் தாமா? வாசெட்ட! அவை யெல்லாந் தவறாமற் செலுத்து மென்று நீ சொல்லுகின்றனையா? என்று கோதமர் வினாயினார். கோதமரே! யான் அங்ஙனந்தான் சொல்கின்றேன். அங்ஙனமாயின், வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்லரான பார்ப்பனருள்ளேனும், அல்லாதவர் மாணாக்கருள் ளேனும், அல்லதவர் ஆசிரியருள்ளேனும், அல்லாதவர் கால்வழியில் ஏழாந் தலைமுறைவரை வந்தவருள்ளேனும், பிரமத்தை எப்போதாயினும் நேர்க்குநேராகக் கண்டவர் எவராவது ஒருவர் உளரா? இல்லை என்று இவை யெல்லாவற்றிற்கும் வாசெட்டன் விடைகூறினான். நல்லது, வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்ல இப் பார்ப்பனர்க்கு உரிய முன்னோரான இருடிகளாவது, இப் பாட்டுக்களை ஆக்கியோராவது, இவற்றை முற்காலத்தில் இருத்த சொற்களின் முறைப்படியே வைத்து ஓதுவோரும் பாராயணஞ் செய்வோருமாவது, முன் ஓதப்பட்ட அல்லது பாராயணஞ் செய்யப்பட்ட முறைப்படியே இப்போது அவை தம்மைத் திருத்தமாக ஓதுவோரான அல்லது பாராயணஞ் செய்வோரான பார்ப்பனராவது, பிரமம் எங்கே உளது, பிரமம் எங்கிருந்து வருகிறது, எங்கே செல்லுகிறது என யாம் அதனை அறிவோம், யாம் அதனைப் பார்த்திருக்கிறேம் என்று இங்ஙனஞ் சொல்லி யிருக்கின்றனரா? கோதமரே! அங்ஙனஞ் சொல்லவில்லை. அங்ஙனமாயின், வாசெட்டனே! ஏழு தலைமுறை வரையில் ஒரு பார்ப்பனனாவது பிரமத்தை நேருக்கு நேர் என்றுங் கண்டதில்லையென நீயே சொல்லுகின்றனை. பண்டை நாளிலிருந்த இருடிகளேனும், தொன்றுதொட்டு வருகிற முறைப்படியே இஞ்ஞான்றுள்ள பார்ப்பனருந் தவறாமல் ஓதியும் பாராயணஞ் செய்தும் வருகிற அப்பழைய மந்திரமொழிகளை உரைப்போரேனும் ஆக்கினோரேனுங் கூடப் பிரமம் எங்குளது எங்கிருந்து வருகிறது. எங்கே செல்லுகிறதெனத் தாம் பார்த்ததாகவாதல் அறிந்ததாகவாதல் கூறவில்லை என்கின்றாய். MjÈdh‰wh‹, _‹W ntj§fËY« tšy gh®¥gd® ‘eh« mjid¥ gh®¥gJ« ïšiy, m¿ªjJ« ïšiy, Mfnt, mjndhL x‹W To ÆU¤j‰FÇa tÊiaí« e«kh‰ fh£lš ïayhJ! என்று உண்மையைச் சொல்லிவிட்டார்கள். வாசெட்டனே! ஒருவரையொருவர்பற்றி நிற்கும் ஒரு கோவையான குருடருள் முதல் நிற்பவரும் ஒன்றனைப் பார்க்க மாட்டுவாரல்லர், இடை நிற்பவரும் அதனைப் பார்க்கமாட்டுவாரல்லர், கடைநிற்பவரும் அதனைப் பார்க்கமாட்டுவாரல்லர்; அங்ஙனமே வாசெட்டனே! மூன்று வேதங்களிலும் வல்லுநராயினும் பார்ப்பனர் கூறும் உரைகளுங் குருட்டு உரைகளாகவே இருக்கின்றன. முன்னோரும் அதனைக் காணவில்லை, அவர்தம் ஆசிரியரும் அதனைக் காணவில்லை, அவர்தம் மாணாக்கருங் காணவில்லை. ஆகவே, மூன்று வேதங்களிலும் வல்லுநரான இப் பார்ப்பனர்தம் உரை நகைப்புக் கிடமான வெறுஞ் சொற்களாய்ப், பொருளற்ற வீண் உரைகளாய் முடிகின்றன! கௌதமர் கூறிய இவ் வுண்மைமொழிகளைக் கேட்ட வாசெட்டன், ஞாயிற்றிலுந் திங்களிலும் உள்ள கடவுளோடு ஒன்றியைந்து நிற்றற்குரிய நெறியைப் பார்ப்பனர் காட்டவல்லுநர் அல்லரென ஒத்துக்கொண்டான். அவ்வாற்றவன் ஒத்துக்கொண்ட பின் கௌதமர் பின்னும் அவனை உசாவுவார்: வாசெட்டனே! ஒருவன் யான் இந்நிலவுலகின்கண் நிகரற்ற அழகுடையளான ஒரு நங்கையை எவ்வளவு காதலிக்கின்றேன் எவ்வளவு விழைகின்றேன் என்று உரைக்கக், குடிமக்கள் அவனை நோக்கி, நல்லது நண்பனே! நீ அங்ஙனங் காதலித்து விழையும் இந் நிலத்தில் நிகரற்ற அழகியாள் ஓர் அரசியோ, அல்லதொரு பார்ப்பனியோ, அல்லதொரு வணிகமாதோ, அல்லதொரு தொழுத்தையோ அறிவையா? என்று வினாவ, அவன் அதற்கு இல்லை என்றுரைப்ப, மேலும் அக்குடிமக்கள் அவனை நோக்கி, நல்லது இனிய நேசனே! இந் நிலவுலகத்திற் பேரழகியாய் நின்னால் விரும்பிக் காதலிக்கப் படும் அம்மாதின் பெயராவது, அல்லது அவள் குடும்பப் பெயராவது நீ அறிவையா? mšyJ mtŸ caukh, FŸskh, fW¥gh eL¤juÃwkh, vªj CÇš, mšyJ vªj¥ g£od¤âš, mšyJ vªj efu¤âš ciwgtŸ? என்று கேட்க அவற்றிற்கெல்லாம் அவன் இலலை என்று விடைகூறப், பின்னும் அம் மக்கள் அவனை நோக்கி, அப்படியானால், நல்ல நண்பனே! நீ அறியாத அல்லது காணாத அந் நங்கையையோ நீ காதலிப்பதூஉம் விழைவதூஉம்? என்று வினாவ, அதற்கும் அவன் இல்லை என்று விடுப்பனாயின், வாசெட்டனே; நீ யாது நினைக்கின்றாய்? அத்தகைய அவ்வாண்மகனது உரை அறிவற்ற மடவோனது உரையென்று முடிக்கப்படுமன்றோ? கோதமரே! உண்மையாகவே அஃது அப்படித்தான் ஆகும், என்று வாசெட்டன் விடை நவின்றான். அதன்பிற் கௌதமர் வேறோர் உவமையும் எடுத்துக் காட்டும் தொடுத்துக்காட்டி மேலுங் கூறுவார்: மறுபடியும், வாசெட்டனே! இந்தப் பெரிய இரபிதியாறு நீர் நிரம்பிக் கரைபுரண்டு ஓட, அப்பக்கத்துக் கரையில் ஓர் அலுவல் ம்ற் செல்லவேண்டுவான் ஒருவன் இப்பக்கத்துக்கரை மேல் வந்து நின்று எதிர்க்கரையை விளித்து ஓ எதிர்க்கரையே இங்கே வா, இந்தக் கரைக்கு வா! என்று வேண்டினால், வாசெட்ட, இவ் விரபதியாற்றின் அந்தக் கரை அவ் வாண் மகனின் அழைப்புக்கும் வேண்டுகோளுக்கும் நம்பிக்கைக்கும், புகழ்ச்சியுரைக்கும் இணங்கி இந்தக் கரைக்கு வந்துவிடுமா, நீ யாது நினைக்கின்றாய்? திண்ணமாய் வராது, கோதமரே! அங்ஙனமே, வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்லரேனும், ஒருவனை உண்மையாகவே பார்ப்பனன் ஆக்கும் உயர்ந்த தன்மைகளிற் பழகுதலைக் கைவிட்டு, மெய்யாகவே மக்களைப் பார்ப்பனராக்க மாட்டாத இழிந்தவைகளை விடாப்பிடியாய்க் கைக்கொண்டிருக்கும் இப் பார்ப்பனரும் இந்திரனே நின்னை வேண்டுகின்றேம், சோமனே வேண்டு கின்றேம் வருணனே வேண்டுகின்றேம், ஈசானனே வேண்டு கின்றேம், பிரஜாபதி வேண்டுகின்றேம், யமனே வேண்டுகின்றேம்! என்று கூறுகின்றார்கள். வாசெட்ட! மெய்யாகவே இப்பார்ப்பனர் தீமையைக் கைப்பற்றிக் கொண்டு, நன்மையைக் கைந்நெகிழவிட்டிருக்குங் காறும், கடவுளரை வேண்டுதலாலும் வழிபடுதலாலும் நம்புதலாலும் புகழ் தலாலும், இவ் வுடம்பு அழிந்துபோகும் சாக்காட்டிற்குப் பின் அவர்கள் பிரமத்தோடு ஒன்றாய்ப் போதல் கூடுமோ, அஃது உண்மையாகவே ஒருகாலத்தும் இல்லை. இவ்வாறே, ஐம்புல அவாக்களினும் இணைவிழைச்சினும் ஈடுபடுதலும், பகைமை மடி செருக்கு தன்னலம் ஐயம் என்னும் இவ்விழிந்த தன்மைகள் உடையராதலும் ஒருவர்க்கு உண்மையிலே விலங்குகளாயிருந்து தடை செய்வனவல்லால், அவை பிரமத்தோடு அவரை ஒன்று பொருத்தமாட்டா என்று பின்னும் பல உவமைகளாலும் வினாக்களாலும் அறிவுறுத்திக் கௌதமர் கூறுவார்: வாசெட்டனே! பார்ப்பனர் சினம் உடையராயும் அகத்தே பகைமை கொண்டவராயும் தீவினை யாளராயும் அடக்கமில்லாதவராயும் இருக்கின்றனரென நீயே கூறுகின்றாய்; மற்றுப் பிரமமோ சினமும் பகைமையுந் தீவினையும் இல்லாது, அடக்கம் உடையது; இங்ஙனந் தம்முள் மாறுபட்ட இயற்கையுடைய பார்ப்பனருக்கும் பிரமத்திற்கும் தம்முள் ஒப்புமையும் ஒற்றுமையும் உண்டாதல் யாங்ஙனம்? உண்மையாகவே உண்டாதல் இல்லை, கோதமரே! அங்ஙனமாயின், வாசெட்ட! இந்தப் பார்ப்பனர் தமது வேதவுணர்ச்சியில் நம்பிக்கையுடையராய் அமர்ந்திருக்கை யிலேயே, அவர்கள் மெய்யாகவே சேற்றுள் அமிழ்ந்திப் போகிறார்கள். அவ்வாறு அமிழ்ந்தியும், தாம் ஏதோ ஓர் இன்ப வுலகத்திற்குச் செல்வதாக நினைந்து, இறுதியில் மனத்தளர்ச்சி அடைகின்றார்கள். ஆதலினாற்றான் வேதங்களில் வல்ல அப் பார்ப்பனரின் மூவகைப்பட்ட உணர்ச்சியானது நீர் அற்ற பாலை நிலம் என்று சொல்லப்படுகின்றது. அவர்களின் அம்முத்திற உணர்ச்சி வழியற்ற காடு என்றும் புகலப்படு கின்றது. அவர்கள் தம் அம் முப்பாலுணர்ச்சி பெருங்கேடு என்றும் பகரப்படுகின்றது! இச் சொற்களைக் கேட்ட வாசெட்டன் மனம் நெகிழ்ந்தோனாய், ஆசிரியர் கௌதமர் தாமே, பிரமத்தோடு ஒன்றுபடும் நெறியைத் தனக்குக் காட்டல் கூடுமாவென்று கேட்க, அவரும் அது தன்னால் ஆகும் என்றுரைப்ப அவ்வாறே அதனைத் தனக்குக் காட்டும்படி மன்றாடி, மாட்சிமை தங்கிய கேதமர் பார்ப்பன இனத்தைப் பாதுகாக்க! என்று புகன்றான். அதற்கு இணங்கி முதலிற் கொல்லாமை யறத்தை வற்புறுத்துவராய், ஓ வாசெட்டனே! உயிருள்ளவற்றைக் கொல்லுதலை நீக்கி, வீடுபேற்றை விரும்பினோன் எவ் வுயிரையும் அழிப்பான் அல்லன். அவன் கத்தியையும் தடியையும் அப்புறப் படுத்துகின்றான்; தூய்மையும் இரக்கமும் நிறைந்தோனாய், உயிருள்ள எல்லாவற்றினிடத்தும் அன்பும் உருக்கமும் வைத்து ஒழுகுகின்றான், என்று உரைத்து, அதன்பிற் களவு, காமம், பொய், புறங்கூற்றுரை, இன்னாச் சொல், பயனில்சொல், என்றிவற்றது தீமையும், இவற்றுக் கெதிரிடையான நல்லவற்றின் நன்மையும் விரித்துரைக்க இறதியாக, வாசெட்டனே! ஆர்வமுடையனாய், அன்பால் நிறைந்து, தூய உள்ளத்தோடுந் தன்னை அடங்கச் செய்யும் அந்த ஆண்மகனே, இவ்வுடல் கெட்டு இறந்தபின் பிரமத்தோடு ஒன்றுகூடப் பெறுவானாதல் வேண்டும். அத்தகைய நிலை எவ்வாற்றானும் இயல்வதேயாம்! என்று கோதமர் முடித்துக் கூறினார். இங்ஙனம் போந்ததாகிய கௌதம சாக்கியரின் அறிவுரையை நடுநின்று நன்கு ஆராய்ந்து பார்க்குங்கால், அவருடைய கொள்கைகள் பழைய சைவசமயக் கொள்கை களோடு முழுதும் ஒத்துநிற்கக் காண்கின்றனமே யல்லாமல், அவற்றோடு மாறுபடுதலைச் சிறிதுங் காண்கின்றிலேம். இப்போது வேதங்கள்என்னும் பெயரால் வழங்கப்படும் ஆரியரின் சிறு தெய்வப் பாட்டுகள் கௌதம சாக்கியர் இருந்த காலத்தில், அஃதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன், மூன்றாகவே இருந்தனவன்றி நான்காக இருந்தன அல்ல வென்பதற்குக் கௌதமர் அவற்றைக் குறிக்கும் இடங்களினெல்லாம் மூன்று வேதங்கள் என்று பேசுதலே சான்றாம். இது கொண்டு, பழைய செந்தமிழ் நூல்களிலும் பாட்டுகளிலும், இடைக்காலத்துத் திருவாசகம், திருமந்திரம், தேவாரம் முதலாக, ஒரு முழுமுதற் கடவுளை வலியுறுத்தும் நூல்களிலுங் குறித்து ஓதப்பட்ட நான்மறை என்பன, மேற் கூறப்பட்ட வணக்கப் பாட்டுகளான ஆரிய வேதங்களை ஓதுதலானும், அத் தெய்வங்கள் பொருட்டு யாடு மாடு எருமை குதிரை ஆண்மக்கள் என்பவற்றைக் கொன்று வேள்விகள் வேட்டலானும் முழுமுதற் கடவுளைத் தலைக்கூடியிருப்பதாகிய பேரின்பநிலை வாயாது; அருளொழுக்கமும் உண்மையன்பும் உடையார்க்கே அது வாய்ப்பதாகும் என்னுங் கொள்கை கௌதம சாக்கியர்க்கு உரியதாதல் போலவே, தமிழ்நாட்டின் கண் இருந்த திருவள்ளுவர், மாணிக்கவாசகர், திருமூலர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தரமூர்த்திகள் முதலான சான்றோர்க்கும் உரியதாயிருக்கின்றது. இதற்கு, அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று, மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர், ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் என்று திருவள்ளுவரும், தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவிலாததோர்பொருளதுகருதலும் ஆறுகோடிமாயாசக்திகள்வேறுவேறுதம்மாயைகள்தொடங்கின,ஆத்தமானார்அயலவர்கூடிநாத்திகம்பேசிநாத்தழும்பேறினர்,............................................................................ விரத பேர மாக வேதியரும் சரத மாகவே சாத்திரங் காட்டினர் என்று மாணிக்கவாசகரும், கொலையே களவுகட் காமம் பொய்கூறல் மலைவான பாதகமா மவைநீக்கித், தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு இலையாம் இவை, ஞானானந்தத் திருத்தலே வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் சத்தியம் இன்றித் தனிஞானந் தன்இன்றிஒத்தவிடயம்விட்டுஓரும்உணர்வின்றிப் பத்தியும்இன்றிப்பரன்உண்மைஇன்றிஊன் பித்துஏறும்மூடர்பிராமணர்தாம்அன்றேஎன்று திருமூலரும், வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் வாடி ஞானம் என்னாவதும், எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு இசை பாடும் ஞானம்வல்லார் அடிசேர்வது ஞானமே என்று திருஞானசம்பந்தரும் வேதம் ஓதில்என் வேள்விகள் செய்கில்என் நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என் ஓதி அங்கம்ஓர் ஆறும் உணரில்என் ஈசனை உள்குவார்க் கன்றி இல்லையே செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ அத்தன் என்று அரியோடு பிரமனுந் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே என்று திருநாவுக்கரையரும், குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மை யேவருந் திண்ணமே மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதெழு மடநெஞ்சமே புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந்தொழப் போதுமே பொய்யா நாவதனாற் புகழ்வார்கண் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான் என்று சுந்தரமூர்த்திகளும் அருளிச்செய் திருத்தலே சான்றாம். இனி, ஆரியப் பார்ப்பனர் தாம் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளை வேதம் எனுஞ் சொல்லால் உயர்த்துக் கூறி வழங்கலாயினது பற்றிச் சைவசமய ஆசிரியர்கள் அதனையுந் தழுவிக் கூறுவராயினும், அவ்வாரிய வேதங்களின் வேறாக அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை யுணர்த்தும் தமிழ் நான் மறைகள் பிற உளவென்பதற்கு, அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அருமறையோ டைம்பூதந் தானேயாகி என்று திருநாவுக்கரசு அடிகளும், பங்கமேறு மதிசேர் சடையார் விடையார் பலவேதம் அங்கம் ஆறும், மறைநான் கவையுமானார் என்று திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் ஆரியர்க்குரிய வேதம் என்பதனோடு மறை என்பதனையும் உடன்வைத்து ஒதுதலே சான்றாம். ஆரிய வேதங்களை அங்ஙனந் தழுவி ஓதுகின்ற விடத்தும் அவற்றுள் மந்திரம் பிராமணம் என்னும் இருபகுதியையும் விடுத்துத், தூய ஞானமாய் விளங்கும் உபநிடதங்களையே தம் கருத்துட் கொண்டு ஓதுகின்றா ரென்பது தெளியற்பாற்று. ஏனெனின், மந்திரம் பிராமணம் என்னும் அவ் விருபகுதிகளிலும் இந்திரன் வருணன் முதலான சிறுதெய்வ வணக்கமும், அவை தமக்குச் செய்யும் வேள்வி முறைகளுமே பெரும்பாலும் நிரம்பிக் கிடத்தலிற், சிவம் என்னும் பிறப்பு இறப்பில்லா முழுமுதற் கடவுள் ஒன்றையன்றிப் பிறிதெதனையுங் கனவினும் நினையாத சைவசமய ஆசிரியர் அச் சிறுதெய்வப் பாட்டுகளை உயர்த்துக் கூறாராகலானும், மற்றுப் பழைய உபநிடதங்கள் பன்னிரண்டுமோ மந்திரம் பிராமணம் என்னும் அவ் விரண்டையும் அவற்றுட் கூறிய தெய்வங்களையும் அவற்றிற்கு ஆற்றும் வழிபாடுகளையும் அபரம் எனக் கழித்துச் சிவம் ஒன்றற்கே முழுமுதற்றன்மை கூறுதலின் அவை தம்மையே அவர் உயர்த்துக்கூற ஒருப்படுவராகலானும் என்பது. எனவே, திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், தேவாரம், சிவஞான போதம் முதலான செந்தமிழ் மறைநூல்கள் ஆரியமொழி வேதங்களைத் தழுவிக்கூறும் இடங்களிலெல்லாம் வேதம் என்னுஞ் சொல்லுக்கு உபநிடதம் எனப் பொருள் கோடலே ஆசிரியர் கருத்தாதல் தெளிக. இனி, மந்திரப் பகுதியாய் உள்ள இருக்கு எசுர் சாமம் என்னும் வேதங்கள் இந்திரன் வருணன் முதலான சிறு தெய்வ வழிபாட்டினையே பெரும்பான்மையும் எடுத்துக் கூறுதலானும், அம் மந்திரப் பகுதிகட்கு உரையாய் விரிந்த பிராமணங்களும் அச் சிறுதெய்வங்கள் பொருட்டு வேட்கப்படுங் கொலையுங் குடியும் மலிந்த வெறியாட்டு வேள்விகளையே மிக்கெடுத்துச் சொல்லுதலானும் அவ்வேதநூல் உணர்ச்சி கொண்டும், அவ்வேதங்களை ஓதுவாரான பார்ப்பனர்தம் உதவிகொண்டும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான சிவத்தையறிதல் செல்லாதென்பது கோதமர்க்கு உடம்பாடாதல் போலவே, சைவசமய ஆசிரியர்க்கும் உடம்பாடாதல் மேலெடுத்துக் காட்டிய அவர்தந் திருமொழிகளால் நன்குவிளங்கும். இதனை இன்னும், வேதநான்கும் ஓலமிட்டு வணங்கும் நின்னை (திருச்சதகம், 75) மறைஈறு அறியா மறையோனே (திருச்சதகம், 85) மறையில் ஈறுமுன் தொடரொணாதநீ (திருச்சதகம், 95) பண்டாய நான்மறையும் பால்அணுகா மால் அயனுங், கண்டாரும் இல்லை (பண்டாய நான்மறை, 1) என்றற் றொடக்கத்துத் திருவாசகத் திருமொழிகளும் வற்புறுத் துதல் காண்க. சிவம் அன்பராலன்றிப் பிறர் எவராலும் அறியப்படாமை, யாவராயினும் அன்பர் அன்றி அறியொணா மலர்ச் சோதியான் (சென்னிப்பத்து, 1) என்று அடிகள் தெளிவுறுத்திக் கூறுதலால் துணியப்படும். இனி, ஆரியவேதமும், அவ்வேதத்தை ஆக்கியோரும், அது தன்னை ஓதும் பார்ப்பனரும் சிவத்தைக் கண்டவர் அல்லர் என்பது கௌதமசாக்கியர் காலத்திலேயே சான்றோர்க் கெல்லாந் தெரிந்த உண்மையாம். அதனாற் கடவுளை நேரே கண்டு அவரது திருவருளைப் பெற்றார்க் கல்லாமல் அவரைக் காணப்பெறாத ஏனையோர்க்கு அவரது உண்மைத் தன்மையைத் தெரிந்துரைக்கும் ஆற்றல் உளதாகாது என்பதே கௌதமர்க்குக் கருத்தாகின்றது. அறவொழுக்கத்தின் மேன்மையை அஞ்ஞான்றுள்ளார்க்குப் பலகாலும் எடுத்து விரித்துரைத்த கௌதமசாக்கியருங்கூடத் தாம் கடவுளை நேரே கண்டதாக யாண்டும் மொழியாமையாற், கடவுளின் உண்மைத் தன்மையை எடுத்துப் பேசும் உரிமை தமக்கு இல்லையென அவர் நன்கு கண்டு தம்பால் அறவுரை கேட்கவந்தார்க் கெல்லாம் அவ்வுண்மையைக் கூறுதல்விட்டுத், தாம் நன்குணர்ந்த அறவொழுக்க வகையினையும் அதன் மேம்பாட் டினையுமே தெளிய விளக்கிப் பேசுவாராயினர். ஒருகால், மாலூங்கியா புத்தர் என்னுங் கௌதம மாணாக்கர் ஒருவர், உலகம் என்றும் உள்ளதா இல்லதா; உலகம் ஒரு வரம் புடைப்பொருளா, அஃது இல்லதா; உயிரும் உடலும் ஒன்றா, வேறா; இறந்த பின்னும் முனிவன் உளனா, இலனா; அல்லது அவன் உளனும் இலனுமா? என்னும் வினாக்களுக்கு விடை கொடுத்து, அவற்றுள் இன்னவைதாம் உண்மையெனத் தம் ஆசிரியர் தம்மைத் தெளிய வைத்தில ரென்பது பற்றி மனக்கவற்சி மிகுதியும் உடையோராய், அவரையணுகித் தமக்கு அவற்றின் உண்மைத் தன்மையை அறிவுறுத்தும்படி வேண்ட, அதற்குக் கௌதமசாக்கியர், மாலூங்கியா புத்த! நீ என்னையடுத்துத் தவ வொழுக்கத்தை நடத்து, உனக்கு இவ்வுண்மைகளை அறிவுறுத்துவேன் என்று எப்போதாயினும் யான் உன்னிடம் சொன்னதுண்டா? என விடைகூறி, அவரது வேண்டுகோளை மறுத்துப் பின்னும் பின்வருமாறு விளம்பினார்: மாலூங்கியா புத்த! நன்றாக நஞ்சு ஊட்டிய அம்பினாற் புண்பட்டு வீழ்ந்த ஒருவன்பால், அவன் நண்பரும் தோழரும் உறவினருங் கேளிருந் தேடிச்சென்று ஒரு மருத்துவனைக் கொண்டுவந்தக்கால், அவன் அம்மருத்துவனை நோக்கி என்மேல் அம்பு எய்தவன் அரசனா, அல்லது பார்ப்பனனா, அல்லது வணிகனா, அன்றி உழவனா, அன்றி ஒரு தொழுத்தையா? அது தெரிந்தாலல்லாமல், என்னிலிருந்து அவ் அம்பினை எடுக்கவிடேன் என்றும்; அங்ஙனம் அவ் வம்பெய்தவன் பெயரும், அவனது வகுப்பும், அவன் உயரமா குள்ளமா நடுத்தரமா என்பதும், அவன் கறுப்பா மாநிறமா பொன்னிறமா என்பதும், அவன் இவ்வூரானா அவ்வூரானா நகரத்தானா பட்டினத்தானா என்பதும், அவ் அம்பு எய்த வில் சாபமா கோதண்டமா என்பதும், அவ் வில்லின் நாண் புல் மூங்கில் நரம்பு முதலியவற்றுள் எதனால் ஆக்கியது என்பதும், என்னைப் புண்படுத்தின அக் கணை கழுகு நாரை மயில் முதலியவற்றின் சிறகுகளுள் எதனால் இறக்கை அமைக்கப்பட்ட தென்பதும் பிறவும் தெரிந்தாலல்லாமல் என்னிலிருந்து அவ் வம்பினை எடுக்கவிடேன் என்றுஞ் சொல்லிக் கொண்டிருப்பா னாயின், இவைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னரே நஞ்சு தலைக்கேறி அவன் இறந்துபோவானல்லனோ? இதைப் போலவே, மாலூங்கியா புத்தனே! உலகம் என்றும் உள்ளதா இல்லதா, அஃது ஒரு வரம்புடைப் பொருளா அஃதில்லதா, உயிரும் உடலும் ஒன்றா வேறா, இறந்த பின்னும் முனிவன் உளனா இலனா என்பவற்றின் உண்மைகளைத் தெரிந்தாலன்றி, யான் தவவொழுக்கத்தைச் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருப்பவனும், ததாகதர் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுதற்குமுன், இறந்துபோவான். மாலூங்கியா புத்தனே! தவவொழுக்கமானது, உலகம் என்றும் உள்ளது, அன்றி இல்லது என்னுங் கொள்கையைச் சார்ந்து நிற்கவில்லை. பிறப்பும் முதுமையும் இறப்பும் துன்பமும் துயரமும் கவலையும் மனநோயும் மனத்தளர்வும் எங்குந் தங்கியிருக்கின்றன; அவற்றை இப் பிறவியிலேயே அவிப்பதற்கான முறைகளையே யான் வகுத்துரைக்கின்றேன். நீ கேட்டவைகளை யான் ஏன் விளக்க வில்லை யென்றால், அதனாற் போதரும் பயன் ஒன்றுமில்லை; மேலும், அது சமய உட்பொருளோடும் இயைபுடைத் தன்று; அதனால் உலக வாழ்க்கையில் வெறுப்பாவது, அவாவொடுக்க மாவது, அமைதியாவது, உயர்ந்த அகக்கருவி விளக்கமாவது, மெய்யுணர்ச்சியாவது, நிருவாணமாவது வரப்போவதுமில்லை; அதனாலேதான் யான் அதனை விளக்கிற்றிலேன்.. அற்றேற், பின்னை யாதுதான் விளக்கினேன் என்பையேல், துன்பம் இன்னதெனவும், அத் துன்பத்திற்கு முதல் இன்னதெனவும், அத் துன்பத்தின் அவிப்பு இன்னதெனவும், அதனை அவித்தற்குச் செலுத்தும் வழி இன்ன தெனவும் விளக்கிக் காட்டி யிருக்கின்றேன். இங்ஙனங் கௌதமசாக்கியர் திறந்து சொல்லிய அறிவுரையை ஆராய்ந்துகாணுங்காற், கடவுளின் றிருவருளால் அவரை நேரே காணப் பெற்றார்க்கன்றி, ஏனையோருக்குக் கடவுளின் இயல்புகளைப்பற்றியும், அவராற் றோற்றுவிக்கப் பட்ட உலகம் உயிர் என்னும் இருவேறு வகைப்பட்ட பொருள்களின் இயல்புகளைப் பற்றியும் உண்மையுணர்தல் ஏலாதா மென்பதூஉம், ஏலாதாகவும் அவரெல்லாந் தம்மைத் தூயராக்கி அமைந் தொழுகுதற்கேற்ற அறநெறியைக் கடைப்பிடித்தலே செயற்பாலதா மென்பதூஉம் இங்ஙனஞ் செயற்பாலதாகிய அறத்தைக் கைவிட்டு வறிதே அத்தகைய ஆராய்ச்சியுட் புகுந்து வாணாட்கழித்தல் வீணாமென்பதூஉம் நன்கு புலப்படா நிற்கும். அறவொழுக்கங்களில் வழுவா தொழுகி ஒருவன் தன்னைத் தூயனாக்கிக் கொண்ட அளவானே, எல்லாம்வல்ல இறைவன் அவனுக்கு விளங்கித் தோன்றி அவனை அடிமைகொண்டருள்வனாதலால், அங்ஙனம் அவனருளைப் பெற்ற ஆன்றோர் மட்டுமே அவனையும் அவன்றன் அருட்டிறத்தையும் பற்றிப் பிறர்க்கு எடுத்துரைக்கும் ஆற்றலும் உரிமையும் உடையராவர். 14. நால்வரே நல்லாசிரியர்கள் அவ்வாறாயின், இறைவனை நேரே கண்டு அவன் றிருவருளைப் பெற்று, அதனால் அவனுடைய அருட்பெருந் தன்மைகளை எடுத்துப்பேசும் உரிமை வாய்ந்தார் எவரென்று நடுநின்று உண்மையை உள்ளவாறு ஆராய்ந்து நுணுகி நோக்குங்கால், மாணிக்கவாசகப் பெருமான் திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலான ஆசிரியன்மார் சிலரே முழுமுதற் கடவுளை நேரே காணும் பெரும்பேற்றையும் அவன் றன்மைகளைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் உரிமையையும் பெற்றோராவரென்பது புலப்படும். அங்ஙனமே, மற்றைச் சமயத்தவரும் தத்தம் சமய ஆசிரியர் கடவுளை நேரே கண்டனரென எழுதி வைத்திருத்தலின் அவருள் எவர் கடவுளைக் கண்டவர் எவர் காணாதவர் எனத் துணிதல் கூடுமெனின்; பிறர் எழுதி வைத்த கதைகளைக் கொண்டு அவ்வாறு துணிதல் இயலாததேயாம். கடவுளை நேரே கண்ட சான்றோரைப்பற்றிய உண்மையான கதைகளும் வழங்குகின்றன; கடவுளைக் காணாத மற்றையோரும் கடவுளைக் கண்டதாகப் பொய்ப்பற்றினாற் பிறர் பொய்யாகக் கட்டிய கதைகளும் அவற்றோடு உடன் வழங்குகின்றன. இங்ஙனம் பொய்யும் மெய்யுங் கலந்து காணப்படுதலாற் பிறர் கூறுங் கதைகளைக் கொண்டு கடவுளைக் கண்டவர் இவர்தாம் என்று துணிந் துரைத்தல் கூடாததாயிருக்கின்றது. அஃது அவ்வாறாயினும், சான்றோர்கள் தாந் தாமே பாடியிருக்கும் பாட்டுக்களைக் கொண்டும், அவர் பிறர்க்குக் கூறிய அறவுரைகளைக் கொண்டும் அவர்களுள் எவர் கடவுளைக் கண்டவர் எவர் காணாதவர் என்று பகுத்துணர்ந் துரைத்தல் கூடும். பழையகாலத்திருந்த அருட்சான்றோர்கள் தாமே பாடிய பாட்டுகள் தமிழ் மொழியின்கண் இருத்தல்போல ஏனை மொழிகளுட் பெரும்பாலும் இல்லை. நக்கீரர், மாணிக்க வாசகர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தரமூர்த்திகள் முதலான அரும்பெருஞ் சான்றோர்கள் அருளிச்செய்த பாடல்களை நாம் நேரே காண்கின்றோம். ஆனாற் கௌதம சாக்கியர், ஏசுக்கிறித்து முதலிய பெரியோர் தாமே கூறிய சொற்களை நாம் நேரே காணவில்லை; கௌதமரும் ஏசுவும் கூறியனவாக அவர்தம் மாணாக்கரும் அவர் வழியில் வந்தாரும் எழுதிவைத்தவைகளையே யாம் காண்கின்றேம். இவ்வா றிவர்கள் எழுதிவைத்தவைகளை முற்றும் பொய்யென்று நாம் தள்ளாவிடினும், சான்றுகளாகக் கொள்ளுங்கால், மாணிக்கவாசகர் முதலான ஆசிரியன்மார் நேரே அருளிச் செய்திருக்கும் பாடல்களைப் பார்க்கினும், பிறர் எழுதிவைத்தவைகள் வலிகுறைந்தனவாகவே காணப்படு கின்றன. என்றாலும், கௌதம சாக்கியர், ஏசுக்கிறித்து முதலியோர் கூறியனவாக வழங்கிவரும் உரைகளையும் எடுத்துக் கொண்டு அவை தம்மை மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலியோர் நேரே அருளிச்செய்திருக்குஞ் செழுந்தமிழ்ப் பாடல்களோடு வைத்து ஒத்து நோக்கி ஆராய்ந்திடுவமாயின் இவருள் எவர் கடவுளைக் கண்டவ ரென்னும் உண்மை நன்கு தெளிந்து கொள்ளப்படும். கௌதமசாக்கியர் தாம் கூறிய அறவுரைகளுள் எங்குந் தம் கடவுளைக் கண்டதாகக் கூறவில்லை. ஏசுக்கிறித்து மேலுலகத்துள்ள என் தந்தை என்று கடவுளைக் குறித்துப் பலகாலும் பலவிடங்களிலும் பேசினாராயினும், தாம் அத் தந்தையை நேரே கண்டதாக எங்குங் கூறிற்றிலர். இனி, இருக்கு, எசுர் முதலான ஆரியவேதப் பாட்டுகளை இயற்றினோரான ஆரியக் குருமாரும் தாம் கடவுளைக் கண்டதாக யாண்டுங் கூறக் காணோம்; அவ்வரியக் குருமாரால் வணங்கப்பட்ட இந்திரன் வருணன் மாதரிவான் முதலான தேவர்களுங் கூடக் கடவுளைக் கண்டவர் அல்லரெனக் கேனோபநிடதங் கூறுகின்றது. இவரெல்லாம் இங்ஙனமாக, மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பாடியருளிய திருவாசகச் செழுந்தமிழ் மறையில் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள்தம் கட்புலனுக்கு எதிரே வெளிப்பட்டுத் தோன்றித் தமக்கு அருள்செய்த அரும்பெருந்திறத்தை ஆராமையோடும் பல இடங்களிலுங் குறிப்பிட்டிருக்கின்றார்; அக் குறிப்புகளிற் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுகின்றாம். திகழாநின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய். (குழைத்தபத்து, 10) பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை, (திருவம்மானை, 10) உருநாம் அறியஓர் அந்தனனாய் ஆண்டு கொண்டான் (திருத்தெள்ளேணம், 1) இவ்வாறு இறைவன் தம் கண்ணெதிரே தோன்றித் தம்மை யாட்கொண்டது நனவிலேயே யல்லாமற் கனவில் அன்று என்பது நன்கு விளங்க, நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி. (போற்றித் திருவகவல், 144) நனவே எனைப்பிடித்து ஆட் கொண்டவா (திருத்தெள்ளேணம். 10) என்று அடிகளே அருளிச்செய்திருத்தல் நினைவுகூரற் பாலது. அங்ஙனந் தமக்கு வெளிப்பட்ட இறைவனது திருவுருவம் பொன்வடிவாய்ச் சிவந்து மிளிர்ந்ததென்றும், அதன் பக்கத்தே நீலவடிவான அம்மையின் திருவுருவமும் ஒருங்கு காணப்பட்ட தென்றும், அங்ஙனம் எழுந்தருளிய இறைவன் தம்மைக் கட்டுப்படுத்திய மும்மலங்களையும் அறுத்துத் தம்மைத் தூய்மை செய்தானென்றும் பல விடங்களிலும் அருளிச் செய்திருக்கின்றார்; அவற்றுட் சில வருமாறு: பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து எனை ஆண்ட ஆருடை அம்பொனின் மேனி அமுதினை (குயிற் பத்து, 9) அரத்தமேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கு எனை இருத்தினாய், (திருச்சதகம் 93) மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி (திருக்கோத்தும்பி, 14) பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் ------------------------------------ எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் (திருவெம்பாவை, 13) பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை, (கண்டபத்து, 4) மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான் நம்மை ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மைஎனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (அச்சோப்பதிகம், 9) திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தம்மை அடிமை கொண்ட முதல்வன் தம்மைவிட்டு மறையும்பொழுது தில்லை யம்பலத்தே வா! எனக் கட்டளையிட் டருளினமையை, நாயினேனை நலமலி தில்லையுட் கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி. (கீர்த்தித் திருவகவல், 127-129) என்று அடிகளே அருளிச் செய்திருத்தல் காண்க. இங்ஙனமாக மாணிக்கவாசகப் பெருமானுக்கு இறைவன் தனது உண்மைத் திருவுருவத்தை நனவே விளங்கக் காட்டிப் பேரருள் புரிந்தமை, அவனை நேரே கண்ட அப் பெருமானே நமக்குத் தமது அருமைச் செந்தமிழ்ப் பாடல்களில் ஐயுறுதற்குச் சிறிது இடன் இல்லாதவாறு நவின்றிருத்தலால், அது கொண்டு அவரது வரலாற்றினைக் கூறும் புராணவுரைகளும் மெய்யுரை களெனவே துணியற் பாலனவாயிருக்கின்றன. இனி, மாணிக்கவாசகர்க்கு இறைவன் கட்புலனாய்த் தோன்றி அருள்செய்தவாறு போலவே, ஏனையொரு காலத்து ஏனையொருவர்க்குத் தோன்றி அருள்செய்த திருவுருவமும் மாணிக்கவாசகர் கண்ட திருவுருவத்தினோடு ஒப்பதென அவ்வேனையோர் மிழற்றிய இன் உரை கொண்டுந் துணியப்படு மாயின், அவ்விருவர் கண்டகாட்சியும் மெய்க் காட்சியே எனப் பெறப்படுதலோடு, அவர் தங்காட்சிக்குப் புலனாய இறைவனது திருவுருவமும் இப் பெற்றிதேயாம் என்றும் இனிது துணியப்படுமன்றே! அற்றேற், பிறிதொரு காலத்து அங்ஙனம் இறைவனது உண்மையுருவினைக் கண்டார் யாவரெனின்; அவர்தாம் திருஞான சம்பந்தப் பிள்ளையார் என்று அறியற் பாற்று. திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனைக் கண்டதிற், பின்னும் ஒரு பேருண்மை இருக்கின்றது. பிள்ளையார் இறைவனைக் கண்ட காலத்து மூன்று ஆண்டுமட்டும் உடைய ஓர் இளங் குழந்தையாய் இருந்தனர். உலக இயற்கையும் மக்களியற்கையும் சிறிதும் உணரப் பெறாததும், தான் வேண்டிய பால் சோறு முதலியவற்றையுங் கூடச் செவ்வையாகச் சொல்லத் தெரியாமற் பாச்சி சோச்சி என்று சொல்லுவதுமான ஒரு சிறுமகவு கடவுளின் திருவுருவத்தை நேரே கண்டு அதனாற் பேரருள் செய்யப்பெற்றுத், தான்கண்ட அத் திருவுருவத்தின் இயல்பினையும், அது தனக்குச்செய்த பேரருட்டிறத்தையும் குறிப்பிட்டுப், பன்னெடுங்காலங் கல்வி பயின்றவர்களாலும் பாடமுடியாத அழகிய பாடல்களில் அக் கடவுளை வாய்திறந்து பாடுமெனின், அக் குழந்தையின் அரும் செம் பாடல்களைக் கேட்டோர் அதன் அருட்பேற்றை நினைந்து நினைந்து வியப்பரன்றி, அதன் சொற்களிற் றினைத்துணையும் ஐயம் உறாரன்றே! இங்ஙனமே, சிறுமதலையா யிருந்தபோது திருஞான சம்பந்தப் பிள்ளையார் இறைவனது திருவுருவத்தை நேரே காணப்பெற்று, அவ்வுருவத்தின் றன்மையினையும் அது தனக்குச் செய்த அரும்பேற்றினையுங் குறிப்பிட்டுச் சொல்லிக், கற்றவராலும் பாடமுடியாத அத்துணை அரும் செந்தமிழ்ப் பாடல் அப்போது தாமே பாடியிருக்கின்றார், அச் செய்யுள் வருமாறு:- போதையார் பொற் கிண்ணத்து அடிசில்பொல்லாதுஎனத் தாதையார் முனிவுஉறத் தான்எனை ஆண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை இருந்ததே அரும்பெறல் மணியே அனைய இவ் அருந்தமிழ்ச் செய்யுளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார், தாம் சிறுகுழந்தையாய் இருந்தபோது தம் கண்ணெதிரே இறைவன் வெளிப்பட்டுத் தோன்றி ஒரு பொற்கிண்ணத்தில் தமக்குப் பால் ஊட்டித் தம்மை ஆட்கொண்டருளின அருட்பெருக்கினையும், அங்ஙனந் தமக்கு இறைவனே பாலூட்டின அதனை அறியாத தம் தந்தையார் தம்மேல் வெகுண்டமையினையும், தம்மெதிரிற் றோன்றிய இறைவன் றிருவுருவம் காதிற் குழையிட்ட ஆண்வடிவம் அதன் பக்கத்தே ஒரு பெண்வடிவும் உடையதாய்த் திகழ்ந்தமையினையும் தெளித்துக் கூறியிருக்கின்றார். இவ்வாறு சிறுமகவா யிருந்த காலத்தில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவன் திருவுருவினை நேரே கண்டு அருள்பெற்று, அவ்வருட் பேற்றாற் பெரிதுஞ் சிறந்த செந்தமிழ்ப் பாட்டுகள் பாடுந் திறமும் அக் குழவிப் பொழுதிலேயே அடைந்து, அவ்விறைவன் திருவுருவம் இங்ஙனந்தான் இருந்ததெனவுந் திட்டமாகப் பாடியிருத்தலின், அவர் கண்டு சொல்லிய அவ்வரும்பெருங் காட்சி உண்மையோ அன்றோ என ஐயுறுதற்கு எவரும் இடம்பெறார் என்க. மேலும், பிள்ளையார் கண்டு சொல்லிய இறைவன் திருவுருவமும் மாணிக்கவாசகர் கண்டு சொல்லிய இறைவன் திருவுருவமும் ஒரு சிறிதும் மாறுபடாது எல்லாவற்றானும் முழுதொத்துக் காணப் படுதலின், அவ்விருவரும் வெவ்வேறு காலத்துக் கண்ட அவ்வுருவமே இறைவற்கு உண்மையான உருவமாம் என்பதூஉம், அவ் விருவருமே இறைவனை உண்மையாகக் கண்டோராவர் என்பதூஉம், அதனால் அவ் விருவருமே தாம் உண்மையாகக் கண்ட கடவுளின் இயல்புகளையும் அஃது உயிர்கட்குச் செய்யும் ஆரருள்களையும் எடுத்துப்பேசும் உரிமையும் ஆற்றலும் வாய்ந்தோராவர் என்பதூஉம் கடைப்பிடித் துணரற்பாலன. இவ்விருவருங் கடவுளை நேரே காணப்பெற்ற அருளாள ரானதனாலன்றோ, கடவுளைக் காணாது அறவொழுக்கத்தை மட்டும் அறிவுறுத்தி வர்த்த மானர் ஆக்கிய சமணமதமும், கௌதம புத்தர் ஆக்கிய புத்த மதமும் அவ்விருவர்க்கு முன் நிற்கலாற்றாது தோற்று மறைந்தன. கௌதமர் கருத்துப்படி, முழுமுதற் கடவுளைக் கண்ட அவ்விருவருமே அக் கடவுள் வழிபாடாகிய சைவ சமயத்தை இவ் விந்திய நாட்டின்கண் நிலைநிறுத்தும் உரிமைபெற்றார் என்க. பிள்ளையாரும், அடிகளுங் கண்ட திருவுருவமே முழுமுதற் கடவுளுக்கு உண்மையுருவமாதல் ஆராய்ச்சிவகை யானும் இனிது விளங்குமாற்றை எமது சிவஞானபோத ஆராய்ச்சி யில் அம்மையப்பர் என்ற தலைப்பின்கீழ் விரித்துக்காட்டியிருக்கின்றேம். அஃதொக்கும், திருஞானசம்பந்தர் கடவுளைக் கண்ட ஞான்று சிறுமதலையாய் இருந்தார் என்பது அவரது வரலாற்றினைக் கூறும் திருத்தொண்டர் புராணத் தாற் பெறுதுமோ, அதனினுஞ் சிறந்த பிறிதொரு சான்றாற் பெறுதுமோவெனிற், பிள்ளையார் மதுரைமாநகர்க்கு எழுந்தருளிய ஞான்று, சமணக் குருக்கண்மார் பிள்ளையார்க்கு இழைத்த தீங்குகளைக் கண்டு பெரிதும் உள்ளம் வருந்திய மங்கையர்க்கரசியார் என்னுங் கூன்பாண்டியன் மனைவியாரை நோக்கி, மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாய்ஒரு பாலன்ஈங்குஇவன் என்றுநீபரி வெய்திடேல் யானை மாமலை ஆதியாய விடங்களிற்பல அல்லேல் சேர் ஈனர்கட்குஎளி யேன்அலேன்திரு ஆலவாய்அரன் நிற்கவே என்று பிள்ளையார் திருவாய்மலர்ந்த கொழுந்தமிழ்ப் பாட்டின் கண் தம்மைப் பால் ஒழுகும் வாயையுடைய ஒரு பாலன் என்று தாமே தம்மைக் குறிப்பிட்டிருக்கும் சாலச் சிறந்த அகச்சான்று கொண்டே நன்கு பெறுதுமென்க. இங்ஙனங் கடவுளை நேரே கண்டு அவன் றிருவருளைப் பெற்றாரான திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் மாணிக்க வாசகப் பெருமானும் அருளிச்செய்திருக்கும் மெய்யுரை கொண்டே, கடவுளின் திருவுருவ உண்மையினையும், மும்மலப் பிணிப்புண்ட உயிர்கள் அவன் திருவடியைச் சார்ந்து அம் மலக்கட்டு நீங்கிப் பேரின்ப வீடு பெறுமாற்றினையும் அறிந்து உய்தல் வேண்டுமே யல்லாமற், கடவுளைக் காணாத ஏனையாசிரியர் கூறும் உரைகளை நம்பி வறிதே வழக்காடி வாணாளை வீணாளாக்குதல் மிகவும் இரங்கற்பாலதாம். மேற்கூறிய இரு சான்றோரைப் போலவே திருமூலரும் முழுமுதற் கடவுளை நேரே கண்டாராதலும், அக் கடவுள் அறிவுறுத்தமையால் மெய்ப்பொருளுணர்ச்சி முழுதும் பெற்றாராதலும் திருமந்திரத்தின்கண், நான் அறிந்த தன்றே இருக்கின்ற ஈசனை வான் அறிந் தார்அறி யாது மயங்கினர் ஊன்அறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தாள்அறி யான்பின்னை யார்அறி வாரே. எனவும், பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவாகி வந்துஎன் உளம் புகுந்தானே. நானும்நின்று ஏத்துவன் நாடொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் ஒக்குஞ்செம் மேனியன் வானின்நின்று ஆர்மதி போல்உடல் உள்உவந்து ஊனின்நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே. எனவும், மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலரங்க மேனியன் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. எனவும், பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல் தவம் செய்கிலீர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே எனவும், அவர் தாமே அருளிச் செய்திருக்கும் திருப்பாட்டுகளால் நன்கு விளங்குதலின், அவர் அத் திருமந்திரவேதத்தின்கண் நுணுக்கமாக விரித்துக்காட்டியிருக்குஞ் சைவ சித்தாந்தப் பொருள்களும், இங்ஙனமே தாம் இளங்குழவியாய் இருந்த ஞான்று இறைவன் றிருவருளால் அறிவுறுக்கப்பட்டு ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞானபோதச் செம்பொருள்களும் முழுதொத்துக் காணப்படுதலின், இவ்விரு நூல்களிலுங் கடவுள் உயிர், மலம், மாயை, வினை, வீடுபெறு என்பவற்றை ஆராய்ந்து காட்டும் அறிவுரைகளே உண்மை உரைகளாம். இறைவனது அருட்பேறின்றிச் சிற்றறிவினரான நம்மனோர் தாந்தாம் வல்லவாறு அவ்வுண்மை உரைகளோடு திறம்பிக் கூறுவன மெய்ம்மை யுணராப் பொய்யுரைகளேயாதல் திண்ணம். கடவுள் முதலான மெய்ப்பொருள்களை ஆராயப்புகும் நம்மனோர், அக் கடவுளை நேரே கண்டு எல்லாம்வல்ல அம் முதல்வன் தனது முற்றறிவு கொண்டு அறிவுறுத்த மெய்ப் பொருளுணர்ச்சி வலியாற் செந்தமிழ்ப் பாடின மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர், திருமூலர், மெய்கண்ட தேவர் என்னும் மெய்யுணர்வின் முற்றுப்பேறுடைய ஆசிரியர்கள் அருளிய மெய்யுரைகளையே அடிப்படையாகக் கருத்திலிருத்தி அவற்றொடு முரணாமல் ஆராய்ந்து தமதறிவை விளக்கிக் கொளற் பாலார். இதுவே, பண்டை நாளிலிருந்த புத்தசமய ஆசிரியரான கௌதம சாக்கியர் கருத்தாதல். இதுகாறுங் கூறியவாற்றால் தெளிவுற விளங்கும். கடவுளை நேரே காணாதாரும், அவனதருளை நேரே பெறாதாரும், அவனருளால் மெய்யுணர்வு தெளியப் பெறாதாரும், தாந்தாம் வல்லவாறு தத்தம் அறிவிற்கு உண்மையெனத் தோன்றியவற்றைக் கூறுவாரும் ஆன ஏனையோரை ஆசிரியராகப் பெற்ற ஏனைச் சமயத்தவர்கள், கடவுள் முதலான பொருள்களைப் பற்றி வீணே வழக்குப் பேசிக்காலம் போக்குதலைக் கைவிட்டு, மக்கள் எல்லார்க்கும் நல்லனவாகிய அறவொழுக்கங்களின் வழுவா தொழுகித் தம்மைத் தூயராக்கிக்கொள்ளுதலே செயற்பாலதாம் என்க. இங்ஙனமாகக், கடவுளைக் கண்டாருங் காணாதாருங் கடைப்பிடித்தொழுகல் வேண்டும் முறைகளை வகுத்துக்கூறிய கௌதம சாக்கியருரை எல்லார்க்கும் உடம் பாடாவதேயாகலின், அது சிவநெறிக் கோட்பாட்டிற்கும் இணக்க மாவதேயா மென்று உணர்ந்து கொள்க. 15. பொருந்தாக் கொள்கைகள் புகுந்தமை இனிக், கௌதம சாக்கியாக்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கரும் அவரைப் பின்பற்றினாரும், தம் முதலாசிரியர் கருத்து இதுவாதல் தெளியமாட்டாது, கடவுள் உயிர் உலகம் என்பவற்றைப் பற்றி அவர் ஏதும் மொழிந்திடாமைகொண்டு அவை மூன்றும் உண்மையில் இல்லாத வெறும் பாழ் என்று இல்வழக்குப்பேசி வெவ்வேறு புத்த மதங்கள் கட்டினார். கௌதமர் இறந்துபட்ட சில ஆண்டுகளிலேயே, அவர்தம் மாணாக்கருள்ளும் அவரைப் பின்பற்றினாருள்ளும் கொள்கை வேறுபாடுகள் பலப்பலவாய்க் கிளைத்துக் கௌதமரின் அறிவுரைகளைப் பலப்பலவாய்க் கிளைத்துக் கௌதமரின் அறவுரைகளைப் பலப்பலவாறு பிறழ்த்த, அவருள் முதியராய் இருந்தோர் அவைதம்மை ஒரு நெறிப்படுத்தி ஒழுங்கு செய்தற் பொருட்டு இராஜகிருகம் என்னும் நகர்க்கருகே வேனிற் காலத்தில் ஒரு பேரவை கூட்டி, ஆண்டின் முதிர்ந்தோருங் கௌதமர் இருத்திய புத்தசங்கத்தில் முதல் உறுப்பினரும், ஆன மகாகாசியபர் தலைமையின்கீழ் அவற்றைச் சீர்திருத்தஞ் செய்தார்கள். இவ் அவையத்தார் ஒன்பது திங்கள் கூடியிருந்து இத்தகைய சீர்திருத்தங்கள் செய்தனரென இலங்கைப் புத்த சமய சரித்திரங்களான மகாவம்சம், தீபவம்சம் என்னும் இரண்டு நூல்களும் புகலுகின்றன. இங்ஙனம் ஒழுங்கு செய்தும், புத்தசமயக் கொள்கைகள் ஒருவழிப்படாது பின்னும் பலவாறாய்ப் பல்க. முதற்கூடிய பேரவைக்கு நூறாண்டு கழித்து, இரண்டாவது பேரவை வைசாலி என்னும் நகரில் எட்டுத் திங்கள் வரையிற் கூடிப் புத்த சமய அறவுரைகளைப் பின்னுஞ் சீர்திருத்தஞ் செய்தது. இதனாலும் பயன் விளைந்திலது. வேறுபாடுகள் பின்னும் பெருகிக் கொண்டே போயின வென்று தீபவம்சம் கூறுகின்றது. முதலில் மகாயானம், ஈனயானம் என இருபெரும் பகுப்பாய்ப் பிரிந்த புத்தமதம், பின்னர்ப் பதினெட்டுச் சிறுசிறு வகுப்புகளாகப் பிரிந்ததென்று அச்சரித்திரங்களே நுவலுகின்றன. கி.பி. ஏழாவது நூற்றாண்டின் முற்பாதியில் (629-648) இவ்விந்திய நாட்டிற்கு வந்து இதனூடு நெடுகச் சென்று ஆங்காங்குத் தாங்கண்ட காட்சிகளையெல்லாம் எழுதிவைத்த ஹையூன்த்சாங் என்னும் சீன அறிஞர்தாம் கண்ட புத்தமதப் பிரிவுகளைப் பற்றிப் பின்வருமாறு வரைகின்றார்; அறிவுநூற் பிரிவினர் எந்நேரமும் ஒருவரோடொருவர் மாறுபட்டு நிற்கின்றனர்; அவர்கள் மிக்க உறைப்போடும் இடும் வழக்குகளின் ஓசை கடலின் அலைகள் போல் எழுகின்றன. பல்வேறுவகைக் கொள்கையினரும் ஒவ்வோர் ஆசிரியரைப் பின்பற்றி நிற்கின்றனர்; ஆனாற், பல வழிகளாலுஞ் சென்று ஓரிடத்திலேயே சேர்கின்றனர்.1 இங்ஙனமெல்லாம் கௌதம சாக்கியர்க்குப்பின் பலப் பலவாறாய்ப் பிரிந்த புத்தசமயக் கொள்கைகளுள், தமிழ் நாட்டின்கண் வழங்கினவை சௌத்திராந்திக பௌத்தம், யோகாசார பௌத்தம், மாத்தியமிக பௌத்தம், வைபாஷிக பௌத்தம் என்னும் நான்கேயாதல் சிவஞான சித்தியார் பரபக்கத்தாற் புலனாகின்றன. இவருட் சௌத்திராந்திக பௌத்தரே ஏனை மூவரினும் முற்பட்டவராகக் காணப்படு கின்றனர். கௌதம சாச்சியர் சிறுசிறு சூத்திரங்களாக அறிவுறுத்திவந்த அறவுரைகளின் முடிபை ஓர் அடிப்படை யாகக் கொண்டு இவர் மதம் எழுந்தமையால் இவர் சௌத்திராந்திகர் எனப் பெயர் பெற்றார். மாணிக்க வாசகப் பெருமானால் மறுக்கப்பட்ட கொள்கைகளெல்லாம் இலங்கைப் பாளிமொழி நூல்களாகிய மூன்று பிடக நூல்களிற் காணப்படு தலால், அந் நூல்களை இயற்றினவர்கள் சௌத்திராந்திக பௌத்தர்களேயாதல் ஒருதலை. மேலும், தமது காலத்து மக்களாற் பேசப்பட்டன மாகதி, பிராகிருதம், பாளி, தமிழ் முதலிய மொழிகளோயாதலால்1 தம்முடைய அறவுரைகள் எல்லார்க்கும் விளங்கல் வேண்டிக் கௌதமர் அவைகளை அம் மொழிகளிலேயே அறிவுறுத்தி வந்தனர்; அக் காலத்திலேயும் ஆரியமொழி இறந்துபட்டதொன்றாய் எல்லார்க்கும் விளங்காதபடி யிருந்தமையால், அவர்தம் அறஉரைகளை அதிற் பேசிற்றிலர். இவ்வாறாக கௌதமர் அறிவுறுத்திய அறவுரைகள் மாகதி, பாளி முதலான மொழிகளிலேயே முதன் முதற் பொதிந்துவைக்கப்பட்டமை யானும், அவற்றுட் பாளிமொழி நூல்களாகிய திரிபிடகங்களும் அவற்றின் கொள்கைகளும் பண்டுதொட்டு இலங்கைத் தீவிலேயே வழங்கப்பட்டு வருதலானும், இலங்கையிலுள்ள இவ் ஈனயான வழக்கே பௌத்த மதத்தின் தொன்றுதொட்ட வழக்காமெனப் பௌத்தநூல் ஆராய்ச்சிவல்லார் இஞ்ஞான்றுங் கூறுதலானும், இலங்கையிலிருந்து வந்த புத்தர்களே மாணிக்க வாசகரோடு வழக்கிட்டவரென எல்லாப் புராணங்களும் உரைதருதலானும், மாணிக்கவாசகப் பெருமானால் மறுக்கப்ட்டவைகள் சௌத்திராந்திக பௌத்தர்தங் கொள்கைகளேயாதல் நன்கு புலனாம். இனி, மகாயான பௌத்தத்திற் சேர்ந்த யோகாசார மானது அசங்கர் என்பவரால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாகும்2. மகாயான பௌத்தத்தின் மற்றொரு பிரிவான மாத்தியமிகமானது நாகார்ச்சுனர் என்பவராலே கி.பி. முதல் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் பட்டதாகும். கி.பி. 78-இல் அரசியல் பெற்றுச் செங்கோல் ஓச்சிய கானிஷ்க மன்னன்3 அவைக்களத்திருந்த நாற்பெரும் பௌத்த ஆசிரியரில் நாகார்ச்சுனரும் ஒருவராகச் சொல்லப் படுகின்றார்4. அறிவொன்றுமே உள்பொருளாகுமென்றும், உலகமும் உலகத்துப் பொருள்களுங் கனவுபோல் அவ்வறிவின் வெறுந்தோற்றமாய்க் காணப்படுவனவே யாதலால் அவை இல்பொருளே யாமென்றுங் கூறம் யோகாசார பௌத்தமும்; புலனுணர்வே உடல் எனத் தோன்றுதலின் அவ் வுணர்வு கெட்ட வழி உடலும் இல்லையாம், உடலின்றி அறிவு நிகழாமையின் அவ் வுடல் கெட்ட வழி அறிவும் இல்லையாம் எனக் கூறும் மாத்தியமிக பௌத்தமும் முறையே விஞ்ஞான வாதம் சூனியவாதம் என நுவலப்படும் இவ்விருவர்க்கும் முந்திய சௌத்திராந்திக பௌத்தம் எல்லாப் பொருள்களுங் கணங் கடோறுங் கெட்டுக்கெட்டுத் தோன்றும் எனக் கிளத்தலின் அது கணபங்கவாதம் எனச் சொல்லப்படும். இவ்வாறு இப் பௌத்த மதங்களெல்லாம் புறத்தே காணப்படும் உலகத்தையும், அகத்தே காணப்படும் உயிரையும் இல்பொருள்களெனக் கோடற் கண் ஒருங்கு ஒத்தலின் இவையெல்லாம் மாயாவாதம் என ஒரு பெயரான் வைத்து வழங்கப்பட்டன. பிற்காலத்தே தோன்றிய சங்காராசாரியார் கட்டிய கொள்கையும் உலகமும் உயிர்களும் இல்பொருள்களேயா மெனக் கோடலின், அதுவும் அப் பௌத்த மதத்தோடு ஒருவைத்து மாயாவாதம் எனவும் பிரசின்ன பௌத்தம் எனவும் வழங்கப்படலாயிற்று. சங்கராசாரியார் காலத்திற்கு முன்னரே மாயாவாதி என்னும் பெயர் வழக்கும், அதனாற் குறிக்கப்படுங் கொள்கையும் இருந்தமை அச் சங்கராசாரியார்க்கு முற்பட்டவரான திருமூலர் ஐயைந்து மாயாவதிக்கே என்று அருளிச் செய்தமையால்5 நன்கு புலனாம். இவ் வுண்மையை ஆராய்ந்து பாராதார் ஒருவர் மிண்டிய மாயாவாதம் என்று6 கூறியதேபற்றி மாணிக்கவாசகப் பெருமான் சங்கராசாரி யார்க்குப் பின் வழங்கிய மாயாவாதக் காற்று வீசப் பெற்றார் என்று பொருந்தாவுரை நிகழ்த்தினார். இப்பொருந்தாவுரையின் பெற்றி காலவாராய்ச்சியில் விரித்துக் காட்டுதும். இனி, நான்காவதாய்க் கூறப்பட்ட வைபாஷிக பௌத்தமானது இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட சிவஞானசித்தி யாரிலும், நானூற்றைம்பது ஆண்டுகட்கு முன் சாயனரால் எழுதப்பட்ட சர்வதரிசன சங்கிரகத்திலும் இருநூறு ஆண்டுகட்குமுன் திபேத் நாட்டிலிருந்த தாரநாதர் எழுதிய பௌத்தசமய வரலாற்றிலுங்7 காணப்படுகின்றதே யல்லாமல் இவற்றிற்கும் முற்பட்ட நூல்களிற் கூறப்படுதலைக் கண்டிலம். அடிக்குறிப்புகள் 1. Buddhist India, pp. 153, 154 2. The Early History of India by Dr. Vincent Smith; p. 29 3. Ibid. p. 255. 4. E.B. Cowell’s Buddha ChaRITYA; see introdctionï Sscred Books of the Eastï Vol. XLIX. 5. திருமந்திரம், 8, 3, 38. 6. திருவாசகம், போற்றித்திருவகவல், 54. 7. The History of Indian Literature by A. Weber, p. 309. 16. பொருந்தாக் கொள்கைகள் - தொடர்ச்சி இனி, யோகாசாரம், மாத்தியமிகம் என்னும் இவ்விரண் டையும் உள்ளடக்கின மகாயான பௌத்தம் தோன்றியவாறு யாங்ஙனமெனிற் கூறுதும்; அறியாமையென்னும் இருளில் அழுந்தித் தம்மையும் உணராமல், எல்லா அறிவுக்கும் எல்லா இன்பத்திற்கும் இடனாய் விளங்குந் தம் தலைவனையும் உணராமல், தமக்குப் பல்வகையிற் பயன்படுவனவாய்த் தம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களையும் உணராமற் கிடக்கும் சிற்றறி வுயிர்கட்கெல்லாம் அறிவை விளக்கிப் பேரின்பத்தை ஊட்டுதற் பொருட்டே எல்லாம்வல்ல இறைவன் பேரிரக்கம் உடையனாய். அவ்வவ்வுயிர்கட்கு இவ் வவற்றிற்கேற்ற ஆண் பெண் உடம்புகளைத் தந்து, அவை அவ் வுடம்புகளோடு கூடியிருந்து உயிர்வாழ்வதற்கேற்ற உலகங்களையும் அவ் வுலகத்துப் பல்பொருள்களையும் படைத்துக் கொடுத்து இம்முறையால் அவ்வவ் வுயிர்களின் அறியாமையைச் சிறிது சிறிதா நீக்கி அறிவை விளங்கச்செய்து, அவ்வறிவு விளக்கத்திற் கேற்ற இன்ப நுகர்ச்சியையும் முறைமுறையே மிகுதிப்படுத்தி வருகின்றான். இதனை உணராதார் யாவர்? பழுதற்ற இவ் வுடம்பினையும், இவ் வுடம்பிற் பழுதற்ற உறுப்புகளையும் பெற்றுப் பிறவாவிட்டால் மக்கள் முதற் புழுவீறான இவ் வுயிர்கட்குச் சிறிதேனும் அறிவு விளங்குமோ? உடம்போடு கூடிப் பிறந்தாலும் இவ்வுலகம் இல்லையானால் இவ்வுயிர் கட்குச் சிறிதேனும் அறிவு விளங்குமோ? உடம்போடு கூடிப் பிறந்தாலும் இவ்வுலகம் இல்லையானால் இவ்வுயிர்கள் எங்கேயிருந்து உயிர்வாழும்? உடம்பும் உலகமும் இருந்தாலும் இவ்வுலகின்கட் பலதிறப்பட்ட பொருள்கள் இல்லையானால். அவை அவற்றை நுகர்தலும் அவற்றால் அறிவு விளங்கி இன்புறுதலும் யாங்ஙனங் கைகூடும்? இவையெல்லாம் அமைக்கப்பட்டிருந்தாலும்? ஆண் பெண் என்னும் வியப்பான அரிய அமைப்பு இல்லையானால், உயிர்கள் ஒன்றை ஒன்று மருவி இன்பம் என்பது இத்தகையதுதான் என்று உணர்தலும் அதன் வழியே அதனினுஞ் சிறந்த பேரின்பத்தின் இருப்பை யுணர்ந்து அதனைப் பெறுதற்கு அவாவுதலும், அதன் வாயிலாய் ஏனையுயிர்கள் பிறவியெடுத்து இங்ஙனமே நலம்பெறுதற்கு இடஞ்செய்தலும் யாங்ஙனங் கைகூடும்? இருந்தாவற்றால், இவ்வுலகத்திற் காணப்படும் எல்லா அமைப்புகளும், உயிர்களின் அறிவு விளக்கமும் இன்ப நுகர்ச்சியுமாகிய நன்மையின் பொருட்டாகவே அமைக்கப் பட்டிருத்தல் எத்துணைச் சிற்றறி வுடையார்க்கும் விளங்காமற் போகாது. இத்துணைச் சிறந்த இவ்வமைப்புகளில் ஒரு தினையளவாவது மக்களின் மிகச் சிறந்தோராலும் செய்தல் இயலுமோ? இயலாதே! இவை யெல்லாவற்றையும் வகுத்தவன் எல்லாம்வல்ல அறிவும் எல்லா ஆற்றலும் உடைய ஒரு முழு முதற் கடவுளேயாதல் வேண்டுமென்னும் உணர்ச்சியும் எல்லா மக்கள் உள்ளத்திலும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றது. இவ்வாறு மக்களின் நன்மையின் பொருட்டாகவே வகுக்கப்பட்டிருக்கும் இவ்வமைப்புகளைப் பெற்று உயிர் வாழும் ஆண் பெண் என்னும் இருபாலாரும், அவற்றை வகுத்தவனது நோக்கமும், அவற்றைத் தம்முடைய அறிவு வளர்ச்சிக்கும் இன்ப நுகர்ச்சிக்கும் ஏற்றவாறு பயன்படுத்தித் தம்மைத் தூயராக்கிக் கொள்ளும் முறையும் நன்கறிந்து ஒழுகி, இவற்றை இங்ஙனம் வகுத்துக் கொடுத்த இறைவனது பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்கு நெக்குருகி, அவ்வாற்றால் தமது உணர்வானது, உலகு, உலகின் பொருள்கள், உடம்பு, உயிர் என்னும் இவற்றிற் பதிந்திருந்த பழக்கத்தைப் பையப்பைய நெகிழவிட்டுக், கடைப்படியாகத் தம்மையும் மறந்து தம் தலைவனது பேரின்பவெள்ளத்திற் படிந்து அவ் வின்பவுருவாகி நிற்கும் பெயராப் பெருஞ்செல்வ வாழ்வைப் பெறுதலே செயற்பாலார். மற்றுக், கௌதம சாக்கியர்க்குப்பின் எழுந்த பௌத்தமதமோ உலகமும் இல்லை, உலகத்துப் பொருள்களும் இல்லை, உடம்பும் இல்லை, உடம்பினுள் உயிரும் இல்லை, எல்லாம் கணங்கடோறுங் கெட்டுக் கெட்டுத் தோன்றி மாயும்; எல்லாப் பொருள் களையும் அருவருத்து நீக்கி, அவாவை யொழித்து உணர்வற்றுக் கிடத்தலே செயற்பாலது என்று வற்புறுத்துக் கூறுவதாயிற்று. இங்ஙனம் அவாவை ஒடுக்கி உணர்வற்ற கற்போற் கிடத்தலால் யாது பயன்? ஆறறிவுடைய மக்களினும் இயற்கையிலேயே யறிவின்றிக் கிடக்குங் கல் உயர்ந்ததன்றோ? என்று வினவின், அப் பௌத்தர்கள் எல்லாந் துன்பமாகவே யிருத்தலின், அத் துன்பத்தை நீக்கும்பொருட்டு அவாவை ஒடுக்கி உணர்விழந்து கிடத்தலே நன்று என்பர். உலகத்தின் அமைப்புகளையும், அவற்றை அமைத்தவனது நோக்கத்தையும் அறிந்து அவற்றிற்கு ஏற்ப ஒழுகினால் மக்களுக்குத் துன்பமே வராது. அவற்றிற்கு ஏலாமற் பிழைத்து ஒழுகுவதனாற்றான் துன்பம் உண்டாகின்றது; அத்துன்பம் வந்தவுடனே, தான்செய்த அப்பிழையினால் அத்துன்பம் வந்ததென்றுணர்ந்து, திரும்பவும் அப் பிழைசெய்யாமல் அறிவோடு கூடி ஒழுக இன்பமே வருகின்றது. ஆகவே, துன்பம் வருதலும் அது தனக்கு ஏதுவாகிய அறியாமையை நீக்கி அறிவுமிகுத்து, இன்பத்தை வருவித்தற்கே யாதலால், எங்கும் துன்பமே உளது என்னும் அப் பௌத்தருரை உலக வழக்கிற்கு ஒவ்வாததாகவே யிருக்கின்றது. ஒவ்வோர் ஆண்மகனும் ஒவ்வொரு பெண்மகளும் நாடோறும் தாம் அடையும் இன்ப துன்பங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், துன்பமென்பது குறைவாயும் இன்பமென்பது மிகுதியாயும் இருக்கக் காண்பார்கள். நெற்றித் தண்ணீர் நிலத்தில்விழக் காலைப்பொழுது துவங்கி மாலை வரையிற் பெரும்பாடுபட்டு உழைப்பவர்களுங் கூடத், தாம் செய்யும் தொழிலை மனக்கிளர்ச்சியோடும் அறிவோடும் செய்வார்களானால் தமக்கு அதனால் இன்பமே யுண்டாகக் காண்பர். மிகவருத்தி முடிக்கவேண்டிய தொழில்களும் அறிவு நுட்பத்தால் வருத்தமின்றியே முடிவு பெறுகின்றன. முற்காலத்தில் வலிமை மிக்க ஆடவர்களால் நெடுங்காலம் அரிது முயன்று முடிக்கப்பட்டு வந்த தொழில்களெல்லாம், இப்போது அறிவுநுட்பம் உடையவர்கள் அமைத்து வைத்திருக்கும் நீராவிப் பொறிகள் மின்பொறிகள் முதலிய வற்றால் வருத்தமின்றி விரைவில் முடிக்கப்படுகின்றன. அறியாமை தேய்ந்து அறிவு மிகமிகத் துன்பமும் முறைமுறையே குறைந்து இன்பம் மிகுதலைக் கண்ணெதிரே காண்கின்றனம் அல்லமோ? அறிவுநூல் நுட்பங்களை அமைந்தாராய்தலால் எவ்வளவு இன்பம் மிகுகின்றது! எவ்வளவு அறிவு விளக்கம் உண்டாகின்றது! அறியாமையைத் தேய்த்து அறிவை மிகுக்கும் முயற்சி மேலோங்க மேலோங்க இன்பமும் மேலோங்குதல் திண்ணம். இவ்வுண்மை நாடோறும் எல்லாரானும் அறியப்பட்டு வரவும், இவ்வுண்மைக்கு மாறாய், எல்லாந் துன்பமாகவே யிருத்தலால், அவாவை அவித்து உணர்விழந்து கற்போற் கிடத்தல் வேண்டும் என்று கூறும் பௌத்தருரையே, அது தன்னைக் கைப்பற்றுவோர்க்குச் சோம்பலையும், அது பற்றிவரும் அறியாமையையும், அதனை யடியாகக் கொண்டு வரும் பலவகைத் துன்பங்களையும் வருவிக்கும் என்க. எதுபோலவெனின்; உடம்பைப் பாதுகாத்தற்கு உணவு இன்றியமையாததாகலின், அவாவை முற்றும் அறுத்தேம் என்பார்க்கும் உணவை விடுதல் ஆகாது; ஆகவே, கிடைத்த உணவைச் சுவைவேண்டாமல் உண்ணலாம் என்றால், ஒருவரது உடம்பிற்கு ஏற்ற உணவு பிறரொருவர்க்கு ஏலாது; ஆகவே, தமக்கு ஏலாத உணவை ஏற்றுண்பதனாலும் நோயாகிய துன்பமே உண்டாகின்றதன்றோ? சுவையில்லாமல் எருப் போலிருக்கும் உணவை உண்டற்கண்ணும் துன்பமே உண்டாகின்றதன்றோ? ஆகவே, முயற்சியும் உணர்ச்சியும் இன்றி, இன்பத்தை அவாவாம லிருப்பார்க்கும் துன்பமே வருவதல்லால் அதனால் அவரடையும் பயன் ஏதும் இன்று முயற்சியும் உணர்ச்சியும் கைவிட்டு அவா அறுக்கின்றேம் என்பார்க்கு மேன்மேலுந் துன்பமே கிளைத்தலல்லால் அத் துன்பத்தைக் களைதல் சிறிதும் ஏலாது. எல்லா உயிர்களின் இயற்கையானது துன்ப நீக்கத்தை மட்டுமே நாடிநிற்கவில்லை; அத்துன்ப நீக்கத்தோடு இன்ப ஆக்கத்தையே பெரிதும் விழைந்து நிற்கின்றது. இவ்விரண்டன் பொருட்டு எல்லாவுயிர்களும் எல்லா முயற்சியும் உடையனவா யிருக்கின்றன. முயற்சியும் உணர்ச்சியும் இல்லாதவன் தனக்கு ஏலாத உணவைப் பெற்று உண்டு துன்பத்தை எய்த அவ் விரண்டும் உடையவனோ தான் நன்றாகப் பாடுபட்டுத் தேடிய பொருளால் தன் உடம்பின் நலத்திற்கு இசைந்த உணவுப் பண்டங்களை வாங்கிக் கொணர்ந்து, அவற்றைச் சுவை யுண்டாக ஒருங்குகூட்டும் வகைதெரிந்து கூட்டிச் சமைத்து, அமைதியாக ஓரிடத்திருந்து வாயிற்பெய்து சுவைத்து உண்ணுங்கால் மிக்க இன்பத்தையும், உண்டபின் உடம்பின் நலத்தையும் பெற்று இனிது வாழ்கின்றான். ஆதலால், முயற்சியும் உணர்ச்சியும் மிகப்பெற்றுப் பொருள்களைத் துய்க்கவேண்டு மளவறிந்து துய்த்தல் உயிர்க்கு நன்றே யாகுமல்லது. ஒருகாலுந் தீயதாகாது. அற்றேல், திருக்குறள் முதலான உயர்ந்த அறிவுநூல்களெல்லா அவாவறுத்தலை மிக வற்புறுத்திக் கூறுதல் என்னை யெனின்; அவ்வறிவு நூல்கள் அவா என, இழித்துக் கூறியது ஒருவனது அறிவின் ஆட்சிக்கு அடங்கி நில்லாமல் அதனை மேற்கடந்து சென்று தீதுபயக்கும் பெருவிருப்பினையே யாம். எவ்வாறெனிற், பாடுபட்டுத் தேடிய பொருள்கொண்டு சுவை மிக ஆக்கிய உணவினை உண்ணுங் கால் அதன்மேற் சென்ற பெருவிருப்பினால் அதனைத்தன் தீனிப்பை கொள்ளும் அளவினும் மிகுத்து உண்பனாயின் அதனால் நோய்கொண்டு துன்புறுவனன்றே; அவ்வுணவின் மேல் வைத்த பெருவிருப்பினால், தானே வருந்திப் பொருள் தேடி அதுகொண்டு அவ் வுணவைப் பெறாமற் பிறர் பொருளைக் களவு செய்து அதனைப் பெற்றுண்பனாயின் அதனாற் றானும் தன்னாற் பிறருந் துன்புறுதற்கு இடஞ்செய்வ னன்றே; இங்ஙனமாக, ஒருவனது அறிவின் ஆட்சிக்கு அடங்காமல் மேற்செல்லும் அவா துன்பத்திற்கேதுவாய் முடிதலால், அத்தகைய அவாவினை அறுத்தல்வேண்டும் என்பதும், மேன்மேற் பொருளை நாட நாடக் கீழ்க் கீழ்ப் பொருளிற் செல்லும் அவாவைத் துடைக்கவேண்டும் என்பதும் அவ்வறிவு நூற் கருத்தாமல்லது, தீங்கு பயவாது நலம்பயக்கும் அவாவினைத் தன் அறிவின் ஆட்சிக்கீழ் வைத்து அவாவிய பொருளைத் துய்த்து இன்புற்று நடத்தலுங் குற்றமாமென்பது அவற்றின் கருத்தன்று. இதுபற்றி யன்றே ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயானார், ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின் எனவும், ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து எனவும், அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து எனவும் அருளிச்செய்தார். பெருந்தவச் செல்வரான திருமூல நாயனாரும், அஞ்சும் அடக்கு அடக்குஎன்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே என்று அறிவுறுத் தருளினமை காண்க. எனவே, பகுத்துணர்ச்சி யோடு கூடி ஐம்புல நுகர்ச்சிகளையும் நுகர வேண்டும். அளவறிந்து நுகரல் இன்பமே பயப்பதல்லது துன்பத்தைப் பயவாதென்க. மற்றுத் துன்பத்தை நீக்குதற்கு வழிகாட்டுவே மெனப் புகுந்து ஐம்புலன்களையும் இடர்ப்படுத்தி அடக்கும் முறையைக் கற்பித்த பௌத்த சமயத்தினரோ அம்முறையாற் றுன்பத்தைக் களைய மாட்டாராய், மேன்மேற் றுன்பங்கள் கிளைத்தற்கு இடஞ் செய்வாராயினர். ஆமையானது தன்னுறுப்புகளைத்தான் வேண்டும்போது இடர்புகுதாமற் றன்னுள்ளிழுத்து அடக்கிக் கொள்ளுதல் போலத், தான் நுகர்தற்குரிய தகுதியுண்டான விடத்து ஐம்புலவின்பங்களை நுகர்தலும், அத் தகுதியில்லா விடத்து அவற்றின்கட் செல்லும் அவாவை மறந்து தன்னை அடக்கிக்கொள்ளுதலுமே சைவசமய ஆசிரியரால் அறிவுறுக்கப்பட்ட அறிவுமொழியாம். இதற்கு, ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து என்னும் திருக்குறளே சான்றாம். அதுவேயுமன்றி, வேண்டும்போது ஐம்புல வின்பங்களை நுகர்வதூஉம், வேண்டாக்கால் அவற்றினுஞ் சிறந்த தனது இயல்பையும் தனக்கு அவற்றைத் தருவானும் தராது மறுப்பானும் ஆன எல்லாம்வல்ல இறைவனியல்பையும் உணர்ந்து அவனைப் பற்றிநின்று அவற்றை நுகராது விடுவதூஉமாகிய உயிர் ஒன்று உண்டெனக் கொள்ளும் சைவசமயக் கொள்கையே உலகமெங்கணுங் காணப்படு கின்றது. உலகின்கட் பகுத்துணர்ச்சியுடைய மக்களெல்லாரும், தம்மை என்றும் உள்ள உயிர் என்று கருதி வாழ்கின்றனரே யல்லாமல், ஒவ்வோர் இமைப்பொழுதும் தோன்றித் தோன்றி இல்லாமல் மாய்ந்து போகும் வெறும் பொருளேதாம் என்று தம்மைக் கருதுகின்றிலர்; தாம் நுகர விரும்பிய பொருள்களைத் தகுதியுள்ளவிடத்து நுகர்கின்றார்கள், தகுதியில்லா விடத்துத் தமது கருத்தை அவற்றினின்றுந் திருப்பி வேறு துறைகளிற் செலுத்துகின்றனர். ஈதல்லாமல், தம்முடைய முயற்சியையும் உணர்ச்சியையுங் கைவிட்டு ஏதுஞ்செய்யாது மடிந்து வெறுங்கற்போற் கிடக்கின்றிலர்; இவ்வுலகத்திற் றம்மைப் படைத்து விடுத்துத் தமக்கு எல்லா நுகர்பொருளையுந் தந்த கடவுள் ஒரோவழி அப்பொருள் நுகர்ச்சிகளைத் தமக்குத் தந்திலனாயின், அஃது அவற்றினும் மேற்பட்ட தமது நிலையையும் தம்மை அடிமையாவுடைய அத் தலைவனது நிலையையும் உணர்வித்து எல்லாவற்றினும் மிக்க பேரின்பத்தை நுகர்வித்தற்பொருட்டே யாம் என்று கூறி வாழ்குநரை எங்குங் காண்கின்றனமே யல்லாமல், துன்பம்! துன்பம்! என்று சொல்லித் தம்மையுங் கடவுளையும் நினையாது மனம் மடிந்து சாவாரைக் காண்கின்றிலம்; அல்லது, அரிதாய் அங்ஙனஞ் சாவாருளராயின் அவரை அறிவுதிரிந்து மருண்டு உயிர்நீத்த கிறுக்கரெனவே கூறாநிற்கின்றேம். இவ்வாறு உலகமெங்கும் உண்மையாய்ப் பரவியிருக்குங் கொள்கைகளையே சைவசமய ஆசிரியர் அறுவுறுக்கின்றமை, மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்று திருவள்ளுவநாயனாரும், நாயிற் கடையா நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட் டிருக்கும் அதுவன்றி ஆயக் கடவேன் நானோதான் என்ன தோஇங்கு அதிகாரங் காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணாது இரவும் பகலும்நான் அவையே எண்ணும் அதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே வேண்டத் தக்கது அறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின்அல்லால் வேண்டும் பரிசுஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே (குழைத்த பத்து) என்று மாணிக்கவாசகப் பெருமானும் அருளிச்செய்திருக்கும் அருளுரைகளால் நன்கு தெளியப்படும். இவ்வாறு மக்கள் உள்ளத்தில் இயற்கையாகவே ஊடுருவிப் பாய்ந்து வேரூன்றி நிற்கும் உண்மைக் கொள்கைகளுக்கு மாறாய்ப், பௌத்த மதத்தினர் உயிரும் இல்லை, கடவுளும் இல்லை என்று கூறினால் அவைகள் அவர்கள் உள்ளத்தில் ஏறுமோ? உயிர் என்பதே ஒன்று இல்லையானாற், பின்னை நான் துன்பத்தை அடைகின்றேன் என்று சொல்வதும், அத் துன்பத்தை நீக்க நான் முயலல் வேண்டும் என்று கருதுவதும் யாது? அற்றன்று, உண்மையில் இல்லாத உயிர் அறியாமையால் தன்னை உயிர் என்னும் ஓர் உள்பொருளாகக் கருதிப் பிழைபடுகின்ற தெனின் இல்லாத உயிர்க்கு அறியாமை எங்கேயிருந்து வந்தது? அவ்வுயிர் தான்நினைப்பனவுஞ் சொல்வனவும் முயல்வனவும் எல்லாம் அறியாமையேயாயின், அவ்வறியாமையின் வேறாய் அதனை நீக்கிக் கொள்ளவல்ல அறிவுடைய உயிர் என்பதொன்று இல்லாமை உண்மையேயாயின், அறியாமை ஒன்றுமே எங்குமுள்ள மெய்ப்பொருள் ஆம் என்பதும், அவ்வறியாமை யின் வேறான அறிவும் அதனையுடைய உயிரும் இல்பொருள் களேயாம் என்பதும் பெறப்பட்டுப், பௌத்தராகிய நீர் கூறுவனவெல்லாம் முழுதும் அறியாமையேயாய் முடிந்து, இவ் வறியாமையைக் கூறும் நீவிர் என்றும் இல்லாத வெறும் பாழாம் என்றும் கொள்ளுதற்கு இடன் உண்டாம் அன்றே? நீவிர் கூறுவனவெல்லாம் வெறிய அறியாமையாய், நீவிரும் வெறும் பாழாய் ஒழிந்தவழி, நீவிர் பிறவுயிர்களின் துன்பத்தைத் துடைத்தற்கு வழிகாட்டுகின்றேம் என்றுரைப்பவெல்லாம் முன்னொடுபின் முரணான வெறும் போலியுரைகளாமன்றே? என்று இங்ஙனமெல்லாஞ் சொல்லிச் சிறிதறிவுடையாரும் பௌத்தமதக் கொள்கைகளை மறுத்து அவற்றை ஒரு பொருட்படுத்தாது போவர். இவ்வாறு உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் மாறான பொய்க் கொள்கைகளைக், கோதமர்க்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கர்கள் திறப்பாக வெளியிட்டுச் சொல்லி வந்தமையினாலே தான், கோதமர் காலந்துவங்கி ஒரு முந்நூறாண்டுகள் வரையில் எங்கும் பரவிவந்த பௌத்த மதமானது வரவரத் தன் ஒளி மழுங்கிச் சுருங்கலாயிற்று. அங்ஙனம் அது மங்குவதைக் கண்ட நாகார்ச்சுனர் என்னும் பௌத்தமத அறிஞர் ஒருவர், அதனை மங்காமல் நிலை நிறுத்துவதற்கு ஏற்றவழி; சைவசமயக் கொள்கைகளிற் சில பலவற்றையும், மந்திரக் கிரியைகளிற் சில பலவற்றையும், எடுத்துச்சேர்த்துப் பௌத்த மதத்தை முழுதுந் சைவசமயத்தின் ஓர் உட்பிரிவாய்ச், சிவபெருமாற்குக் காதற்கிழத்தியென வமர்ந்து உலகுயிர் எல்லாம் வருந்தாது ஈன்ற இறைவியான அம்மையையே வழிபடுஞ் சாத்தமத மந்திரக் கிரியைகளையுங் கோட்பாடுகளையும் எடுத்துச் சேர்த்துத் திருத்தி, அங்ஙனந் திருத்திய பௌத்தமதத்தை மகாயான பௌத்தம் என்று வழங்கலாயினர். இவர்க்குப்பின் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வந்த அசங்கா என்பவரும் அங்ஙனமே சாத்தமத தந்திரக் கொள்கையும் மந்திரக் கிரியைகளையும் இன்னும் மிகுதியாய் எடுத்துச் சேர்த்து மகாயானத்தின் மற்றொரு பிரிவான யோகாசாரா பௌத்தத்தை உண்டாக்கினர். இவ்வாறு சைவசமயக் கோட்பாடுகள் கலந்த பின்னர்தான் மகாயான பௌத்தமானது வடக்கே இமயமலைக்கு அப்பாலுள்ள நேபாளம், திபேத்து, சீனம், யப்பான், சீயம், பர்மா முதலான நாடுகளில் மிக விரைந்து பரவி உலகத்தின் அரைப்பகுதிக்கு மேல் உள்ள மக்கட்கு உரிய மதமாயிற்று. இங்ஙனம் சைவசமயக் கோட்பாடுகளை எடுத்துச் சேர்த்துத் திருத்திய பௌத்த மதமானது. இதற்கு முந்தியிருந்த பௌத்த மாணாக்கர்களாற் கட்டப்பட்டுக் கணபங்கவாதம் ஒன்றே நுதலுவதாகிய சௌத்திராந்திக பௌத்தத்தினுஞ் சிறந்ததென வடநாட்டிலுள்ள பௌத்தர்களாற் கருதப்பட்டது பற்றிச் சிறந்தவழி எனப் பொருள்படும் மகாயானம் என்னும் அடைமொழி கொடுத்து வழங்கப்படலாயிற்று. மற்று, இதனினும் முற்பட்டுத் தோன்றி இலங்கையில் வழங்கிவரும் பௌத்தம் எல்லாம் இல்லை என வெறும் பாழ் கூறுஞ் சூனியவாதமாய் மட்டும் முடிதலின், இழிந்தவழி எனப் பொருள்படும் ஈனயானம் எனும் அடைபுணர்த்து வழங்கப் படலாயிற்று. சூனியவாதங் கூறுதற்கண் மகாயானமும் ஈனயானமும் ஒருங்கொக்குமேனும், மகாயானமானது சூனிய வாதத்தைக் கொள்கை யளவாய் வைத்துக்கொண்டு, கடவுளரை வழிபடும் முறைகளெல்லாம் சைவசமயத்திலுள்ள வாறே செய்து மக்களியற்கைக்கு ஒத்து ஒழுகுவதாயிற்று. இவ்வாறு ஒழுகத் துவங்கியபின்னர்த்தான், புத்தசமயமும் இந்துமதத்தின் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்படலாயிற்று; அப் புத்தசமயத்தின் முதலாசிரியரான கௌதமசாக்கியரும் திருமால் எடுத்த அவதார மூர்த்திகளுள் ஒருவராகக்கருதப்படு வாராயினர். எனவே, புத்தசமயதிற்கு வந்த பிற் சிறப்புக் களெல்லாம் அது சைவசமயக் கொள்கைகளோடு கலக்கப் பெற்றமை யினாலேயாமென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. இங்ஙனமே, இப் புத்தசமயத்தினின்றுந் தோன்றிச் சைவ சமயத்திற்குரிய வேதாந்தம் என்னும் பெயரையும் தானெடுத்துப் புனைந்துகொண்டு, இப்போது உலகமெங்கணும் பரவிவரும் மாயாவாத வேதாந்த மானது, உலகமும் இல்லை, உயிரும் இல்லை, கடவுளும் இல்லை, எல்லாம் அறியாமையே யாம் என்று சூனியவாதம் அறிவித்தலின், அது தன்னை மக்களெல் லாருந் தழுவி நடவாமை கண்டு. அதனை நாட்டிய சங்கரா சாரியாரும் அவர் வழியில் வந்தாரும், அதனைப் பரவச் செய்தற் கேற்ற வழி, சைவசமய அடையாளங்கள் வழிபாடுகள் மந்திரக் கிரியைகள் முதலியவற்றை அதன்கட் சேர்ப்பித்தலேயா மெனத் தெரிந்து அவற்றை அங்ஙனமே சேர்ப்பித்து, அவ்வாற்றால் தமது மாயாவாத வேதாந்தமும் சைவ சமயமேயா மெனப் பிறர் நம்பும்படிசெய்து, முடிவில் தமது சூனியவாதத் தையே புகட்டி, அதனை யாண்டும் பரவச் செய்து வருகின்றனர். சைவசமயத் தினர்க்குரிய அடையாளங்களான திருநீறு சிவமணி காவி யாடை முதலியவற்றை மாயாவாத வேதாந்திகள் தாமும் அணிந்து கொண்டு, சந்திரமௌலீசுவரர் என்னும் சிவபெருமான் திருவுருவின் வழிபாடும், நமச்சிவாய என்னுஞ் சிவமந்திரமும், திருக்கோயில் எடுப்பித்தல், திருக்கோயிற் றொண்டுபுரிதல், சிவனடியார்க்குத் திருவமுதூட்டல், அவர்க்குத் தொண்டு செய்தல், அறுபத்துமூவர் திருமடங்கள் அமைத்தல் முதலான சைவசமயக் கிரியைகளும் மேற்கொண்டு, உண்மைச் சைவர்க்குந் தமக்கும் வேற்றுமை தெரியாதவாறு நடந்து வருதலைச் சைவசித்தாந்தம் உணர்ந்தார் எவரும் நன்கு அறிவர். சித்தாந்தக் கல்வி கல்லாத ஏனைச் சைவர்கள் இம்மாயா வாத வேதாந்திகளையே உண்மைச் சைவராக நம்பிப் பலவகை யாலும் ஏமாற்றம் அடைந்து வருதலும் சைவசித் தாந்திகள் நன்குணர்வர். உலகம் இல்லை. உயிருமில்லை, கடவுளுமில்லை; எல்லாம் அறியாமையேயாம் எனக்கூறும் மறைந்த பௌத்தர் களான1 மாயாவாத வேதாந்திகள் தமது சூனியவாதக் கொள்கையை மட்டுந் திறப்பாக வெளிக் காட்டினால் அதனை மக்கள் எவருங்கைக்கொள்ள மாட்டாரெனத் தெரிந்து கொண்டு சைவ சமய அடையாளங் களையும் வழிபாட்டு முறைகளையும் தாம் தழுவினமையாலே தான். அவர்கள் தமது மாயாவாதக் கொள்கையை எங்கும் பரப்ப இடம் பெற்றார்கள். பரப்பியும் என்! தாம் கூறுஞ் சூனியவாதக் கொள்கையின்படி அவர்தாமும் நடத்தல் ஏலாது பிறரை நடப்பித்தலும் ஏலாது உலகமும் உயிரும் பொய்ப்பொருள் களேயாம் என்று அவர்கள் கடைப்பிடியாய்க் கூறினும், தாம் உண்ணும் உணவையும் தாம் அணியும் திருநீறு சிவமணி காவியாடை முதலியவைகளையும் பொய்யென அகற்றி யொழுகுதல் அவர்களால் ஒரு சிறிதும் ஏலாது. உயிர்களாகிய தாமே கடவுள், கடவுளெனப் பிறிதொன்றில்லை யென வொருகாற் கடவுளை மறுத்தும், உயிர்களெல்லாம் பொய். அவ்வுயிர்களின் வேறாய்க் கடவுளே மெய்யெனப் பிறிதொரு கால் உயிர்களை மறுத்தும் பேசும் அம் மாயா வாதிகள் சிவபிரானை வழிபடுதலும் அவன் திருவடிக்குத் தொண்டு செய்தலும் நீக்கமாட்டாராயிருக்கின்றனர்; இஃது ஏன் எனின், இவ்வாறு செய்யாவிட்டால் தம்மை உலகத்தார் ஒரு பொருட்டாக வையார் என்பதை அவர் நன்குணர்தலினாலே யாம் என்க. எல்லாம்வல்ல கடவுளிடத்தே பிரிவற நிற்கும் மாயை என்பதொன்று உண்டென்றும், அம்மாயையானது அக் கடவுளைக் கட்டுப்படுத்தி அதன் அறிவையும் ஆற்றலையும் இழப்பித்து, அது, தன்னையே இவ் வுலகமாகவும் உயிர்களாகவுங் காணும்படி செய்து விட்டதென்றும், இங்ஙனங் கடவுளினும் வல்லதாக அவராற் சொல்லப்படும் அம் மாயையானது அறியாமையுருவாய் எவற்றையும் மறைத்திருத்தலின் யாண்டும் அறியாமையே உளதல்லது அறிவென்பதொன்று இலதென்றும் அவர் ஆரவாரவுரை நிகழ்த்துவரேனும். அறிவென்பது இன்றி எங்கும் அறியாமையே யுண்டென்னுந் தமது அக் கொள்கை யானது அறிவையே அவாவி நிற்கும் மக்களின் மனவியற்கைக்கு முழுதும் மாறாய்நின்று எவரானும் ஏற்றுக்கொள்ளப் படாமை கண்டு, தாமும் அறிவை நாடுவார்போன்று அறிவுநூற்கல்வி கற்றலுங் கற்பித்தலுஞ்செய்து போதருகின்றார். இருவினைக் கீடான உடலெடுத்துப் பிறப்பிறப்புத் துன்பங்களிற் கிடந்துழலுஞ் சிற்றுயிர்களும், இயல்பாகவே வினையின் நீங்கி எவ்வகைத் துன்பமும் இலதாய் அறிவாய் விளங்கும் முழுமுதற் கடவுளும் ஒரு பொருளேயாமென்றலும், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளை அறியாமையுருவான மாயையானது மறைத்து அதனியல்பைக் கெடுத்து அதனைச் சிற்றுயிர்களாக்கி உழல்வித்த தென்றலும் யாங்ஙனம் பொருந்து மெனின்; இத்தகைய கேள்விகள் கேட்டல் ஆகாது, இவையெல்லாம் அனுபவத்திலே தான் விளங்கும் என்று தாம் எல்லா அனுபவமுங் கண்டார்போற் சொல்லிப் பிறரை ஏமாற்றும் இம் மாயாவாத வேதாந்திகளின் முன்னோடுபின் முற்றும் முரணும் வழுக்கொள்கைகளும், அவர் மேற்கொள்ளும் சைவசமய அடையாளங்களினாலேதாம் எங்கும் பரவிவருகின்றன வென்று கடைப்பிடிக்க. இவ்வாறெல்லாம் மகாயான பௌத்த மாயாவாதமும் வேதாந்த மாயாவாதமும் சைவசமய அடையாளங்களைத் தழுவா நிற்ப இவை தமக்கு முற்பட்ட சௌத்திராந்திக பௌத்த மாயாவாதமோ எவ்வகையினுஞ் சைவ சமயத்தோடு இணங்கா தாய், அகத்தும் புறத்தும் அதனொடு முழுதும் மாறுபட்டு நிற்பதொன்றாயிற்று. அது கௌதம சாக்கியராற் கட்டப் பட்டதன் றென்பதூஉம், அவரையடுத்து அவர்க்குப்பின் வந்த மாணாக்கராற் கட்டப்பட்டதா மென்பதூஉம் மேலே விளக்கிக் காட்டினாமாதலிற், கௌதமர்க்குப் பின்னெழுந்த சௌத்தி ராந்திக மதமே சைவசமயத்திற்கு முழுதும் மாறாய் நிற்பதாகு மென உணர்ந்துகொள்க மாணிக்கவாசகப் பெருமான் அச் சௌத்திராந்திகக் கொள்கைகளை மறுத்த முறை, சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் சிறந்த பழைய நூல்களுள் ஒன்றாகிய சிவஞானசித்தியார் பரபக்கத்துள் மறுத்த முறையாகவேதான் இருத்தல் வேண்டுமென்பதை முன்னரே காட்டினம். இனி, அச் சிவஞானசித்தியார் பரபக்கத்துட் காட்டி மறுக்கப்பட்ட கொள்கைகளே பழைய ஈனயான பௌத்த நூல்களில் உளவென்பதனை ஈண்டு அடைவே வகுத்துக் காட்டுவாம். முற்கணத்திருந்தது பிற்கணத்து இல்லையாமெனவும், முன்முற் கணத்திருந்தது கெட்டுக் கெட்டு மாயப், பிற்பிற் கணத்துப் புதிது புதிது தோன்றுமேயன்றித் தொடர்பாக என்றுமுள்ள உயிர் என்பதொன்று இல்லையென்னுங் கொள்கை, மிலிந்த பங்கம், நாற்பதாம் இயலில் நாகசேனன் என்னும் பௌத்த முனிவர் ஒருவர்க்கும் மிலிந்தன் என்னும் அரசற்கும் இடைநிகழ்ந்த வினாவிடையுரையுள் நன்கு காணப்படுகின்றது. இனிப், பௌத்தமத முதலாசிரியன் பிறவுயிர்களின் துன்பம் பொறானாய், அவற்றைக் களைதல்வேண்டி மக்களும் விலங்குகளுமாகிய பல்வேறு பிறவிகளை எடுத்த கதைகள் ஜாதககாதை என்னும் நூலுள் ஒருங்கு தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இனிக், கௌதமசாக்கியர் பிறந்தஞான்று அவர் தம் அன்னையின் விலாப்புறத்தைக் கிழித்துக்கொண்டு பிறக்க, அவர்தம் அன்னை ஏழாம் நாள் உயிர் துறந்தன ரென்பது அவகோஷா என்பவர் எழுதிய புத்த சரிதத்திலும், ஜாதககாதை முகவுரையிலும் புகலப்பட்டிருக்கின்றது. இனிக், கொடிஞ்சியுந் தட்டுந் தூணும் இருசும் உருளும் நுகரும் ஆகிய உறுப்புகள் ஒருங்கு தொக்க தொகையே தேர் எனப்படுவ தல்லால் இவ் வுறுப்புகளின் வேறாகத் தேர் என்பதொரு முதல் இல்லாமை போல, ஐவகைக் கந்தங்களும் ஒருங்குதொக்க தொகையே உடம்பும் உயிருமாவதன்றி அக் கந்தங்களின் வேறாய் உடம்பென்றும் உயிரென்றும் நுவலப்படும் முதல்கள் இல்லையென்னுங் கொள்கை மிலிந்தபங்கம், இருபத்தைந்தாம் இயலிலும், விசுத்திமார்க்கம், பதினெட்டாம் இயலிலும் விரித்தோதப்பட்டிருக்கின்றது. இனி, அவாவும் புலனுணர்வும் மனனுணர்வும் ஏனையுணர்வுங் கெட்டு அடைவதே நிருவாணம் என்பது. சம்யுக்தநிகாயத்தில் இருபத்திரண்டாம் இயலிற் சொல்லப் பட்டிருக்கின்றது. இவ்வாறு நிருவாணத்தை அடையும் உயிரும் இல்பொருளா மென்பதே இப்பௌத்தர்தங் கொள்கை யாதலின், இந் நிருவாணம் என்பது ஒன்று மில்லாத வெறும் பாழாகிய சூனியமே யல்லது பிறிதன் றென்பதூஉம் இதனால் அறியப்படும். இனி, ஒருவன் எடுத்த ஒரு பிறவியில் அவன்றன் உடம்பும் உயிரும் உணர்வுமாகிய எல்லாம் ஒருங்கே கெட்டொழிய, அவன் அப் பிறவியிற் செய்த வினைகள் மட்டும் அங்ஙனங் கெடாமல் நின்று அவற்கு வேறொரு பிறவியினைத் தரும் என்னும் பௌத்தர் கொள்கை விசுத்திமார்க்கம் பதினேழா வதியலிற் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வாறு காட்டப்பட்ட மேற்கோள்கள் கொண்டு, சிவஞானசித்தியார் பரபக்கத்தில் எடுத்து மறுக்கப்பட்ட சௌத்திராந்திக பௌத்தர்தங் கொள்கைகள் எல்லாம் பழைய பௌத்தசமய நூல்களில் உள்ளனவேயா மென்பது நன்கு தெளியப்படும். அடிக்குறிப்பு 1. மாயாவாதம் அசச்சாத்ரம் ப்ரச்சந்நம் பௌத்தம் ஏவச - பதுமபுராணம். 17. பௌத்தகுருவுக்கு விளக்கிக்காட்டிய உண்மைகள் இனிப், பௌத்தகுரு, சைவசமய உண்மைகளை எடுத்துச் சொல்லும்படி மாணிக்கவாசகப் பெருமானைக் கேட்ட பொழுது, அவர் எடுத்துக் கூறியனவாகத் திருவாதவூரர் புராணங் காட்டியிருக்குஞ் சைவசமயக் கொள்கைகள் அவை தம்மைக் கேட்கும் புறச்சமயத்தார் ஏற்றுக் கொள்ளத் தக்க அளவைமுறையிற் காட்டப்படவில்லை. நுமது கடவுள் எத்தகையது? என்று புத்தகுரு வினவியதற்கு, எமது கடவுள் திருவாலநீழலமர்ந்து அறம் உரைப்பது, பொன்னம்பலத்தே திருக்கூத்தியற்றுவது. மேலே திருநீ றணிந்திருப்பது. தனது ஒரு கூற்றில் உமைப் பிராட்டியாரை வைத்திருப்பது அதன் பெருமை நம்மாற் சொலற்பாலதன்று என்று மட்டும் விடைகூறினால், அஃது அப் புத்தகுருவே யன்றி, ஏனை எச் சமயத்தவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க வாய்ப்புடையதாகாது; அஃது அவர் எல்லாரும் நகுதற்கே இடந்தருவதாம். ஆகவே, எல்லா நுண்ணறிவும் ஒருங்கு வாய்க்கப்பெற்று அளவைநூன்முறைக்கு ஒரு வரம்பாயுள்ள அடிகள். அங்ஙனம் அப்புராணங் கூறுமாறு விடைகள் அளித்திருப்பரென்று கொள்ளுதல் சிறிதும் பொருந்தாது. மற்றைச் சமயத்தவர் கொள்கைகளை மறுக்கும் போது மட்டும் அளவை நூன்முறை பிறழாது அறிவு நுட்பத்தோடு மறுத்துப் பேசித், தம்முடைய சமயக் கொள்கைகளைப் பிறர்க்கு எடுத்துக்காட்டு மிடத்தோ அவைதம்மைக் கேட்கும் புறச்சமயத்தார் அறிவு பற்றுமாறு பொருந்தப் பேசாது இவையெல்லாம் எம்முடைய வேதங்களில் நன்கு தெளிவுறுத்தப்பட்டிருக்கின்றன; இவை களின் பெருமை எல்லாம் எடுத்துச் சொல்லலாந் தன்மைய தன்று என்று மொழிதல் எத்துணைச் சிறிய அறிவினார்க்கும் ஏற்பதன்று. இங்ஙனமே, ஒவ்வொரு சமயத்தாருங் கூறிடுவராயின், அவரெல்லாம் ஒரு முடிவுக்கு வருதலும் இயலாது. எந்தச் சமயத்தில் உண்மை உளதென்று காண்டலும் இயலாது. அற்றேல், உலகத்திலுள்ள சமயத்தவர் ஒவ்வொருவருந் தத்தங் கொள்கையே உண்மையானதென்று பகர்ந்து வழக்கிடக் காண்டலின், அவரெல்லாம் ஒரு முடிபுக்கு வருதல் யாங்ஙனங் கைகூடுமெனின்; எதன்கண் உண்மை உளது எனக் காணும் வேட்கையுடையார்க்கன்றித் தாந்தாங் கொண்டே உண்மை. ஏனைப் பிறர் கூறுவனவெல்லாம் வெறும் பொய்யெனக் கருதுந் தீய பற்று உடையார்க்கு ஒருகாலத்தும் உண்மை விளங்காது; இத்தகைய தீய பற்றுடையாரே உலகில் மிகப் பலராயினும், ஒவ்வொரு சமயத்தும் உண்மை காணும் வேட்கையுடையார் சிற்சிலரேனும் இருப்பராகலின், அவர்கட்கு உண்மையை எடுத்துச் சொன்னால் அவர்கள் அதனைக் கைப்பற்றாது விடார். அஃதொக்குமாயினும், ஒன்றினொன்று ஒவ்வாக் கொள்கைகள் உடைய பல்வேறு வகைப்பட்ட சமயத்தவர்களும் அங்ஙனம் ஒரு முடிபுக்கு வருதல் யாங்ஙன மெனின்; உலகத்தில் உள்ள எல்லா மக்கட்கும் உடம்பாடான கொள்கைகள் பல எங்கும் உண்டாகலின், அவற்றின் உதவிகொண்டு முடிந்த உண்மை களைத் தெரிதல் எவர்க்கும் இயல்வதேயாம். எதுபோலவெனிற் காட்டுதும்; ஒவ்வோர் உயிரும் தன்தன் உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், அப் பாதுகாப்புக்கு இன்றியமையாத உணவுப் பண்டங்களைத் தேடித் தன்றனக்கே வரைந்து வைத்துக் கொள்ளும் முயற்சியிலும் நிரம்பவுங் கருத்தாயிருக்கின்றது உலகமும் உலகத்துப் பொருள்களும் பொய், உடம்பும் பொய். உயிரும் பொய், ஆதலால் உடம்பைப் பாதுகாவாதே. உணவுப் பண்டங்களைத் தேடாதே. அப் பண்டங்களை உட் கொள்ளாதே என்று மாயாவாதி ஒருவன் அறிவுகூறப் புகுவனாயின், அவனை அறிவு பிறழ்ந்துபோன மருளன் என்று சொல்லிக்குநர். அவன் கூற்றை ஒரு பொருட்படுத்தாது எல்லாரும் ஏகுவரேயல்லாமல் அதனை அறிவுரையென்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எவருங் கொள்ளார். இவ்வாறு உலகத்திலுள்ள ஒவ்வோர் உயிருந் தன்னைத் தனித்தனி யுயிரென்றே கருதித் தன்றன் உயிர் நிலையைப் பாதுகாப்பதிற் பெரிதும் ஈடுபட்டு நிற்றலின். இப்பொதுக் கொள்கைக்கு முரணாக எல்லாம் ஓர் உயிரே என்றேனும், உயிர் என்பதொன்றில்லை. கடவுள் ஒன்றுமே யுளது என்றேனும், உலகத்திற் காணப்படுவன வெல்லாம் இல்லாத வெறும் பொய் என்றேனும் மாயாவதி கூறுவனாயின், அவனுரை மெய்யென எவரானுங் கைக்கொள்ளப்பட மாட்டாது. அல்லது, அவனுரையின் புரட்டில் மயங்கி அதனை உண்மையெனக் கொள்வார் சிலர் உளரேனும், அவர்தாமும் அக் கொள்கையின் படியே தமது உடம்பைப் பாதுகாவாதும், பசித்தபோது உணவெடாதும் நடந்துகாட்ட மாட்டுவாரல்லர். உலகத்தார் கடைப்பிடியாய்க் கைக்கொண்டொழுகும் பொதுக் கொள்கைக்கு மாயாவாதியார் உரைக்குங் கொள்கை மாறுபட்டு அவர் தம்முள் எவரானுங் கைக்கொள்ளப்படா தொழியச் சைவசித்தாந்தியார் கூறுங் கோட்பாடோ அப் பொதுக் கொள்கையோடு முழுதும் ஒத்து எல்லா மக்களானுங் கைப்பற்றப்பட்டு வருகின்றது. ஒவ்வோர் உயிரும் அறியாமை யோடு கூடியிருத்தலால், அவ்வறியாமை நீக்கத்தின் பொருட்டாகவே அவ்வவ்வுயிர்க்கு ஏற்ற உடம்புகள் மெய்யாகவே தரப்பட்டனவென்றும், அத்துணைச் சிறந்த உடம்புகளைப் பாதுகாத்து உயிரின் அறிவை வளர்த்தல் இன்றியமையாத தாமென்றும், ஒவ்வோருயிர்க்குமுள்ள இன்பதுன்பங்களும் அறிவறியாமைகளும் இறப்புப் பிறப்புக்களுந் தனித்தனியாய் நிகழக் காண்டலால் உயிர்கள் பலப்பலவே ஆகுமல்லது ஒன்றாகமாட்டாவென்றும் சைவசித்தாந்திகள் கூறுங் கோட்பாடு உலகத்தார் எல்லாருங் கைக்கொண்டொழுகும் பொதுக் கொள்கைகளோடு முழுது மொத்திருத்தல் காண்க; இதுபற்றியன்றே, உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென் றுடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே என்று திருமூலநாயனாரும், அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு என்று திருவள்ளுவ நாயனாரும் அருளிச்செய்வாராயினர் என்க. இங்ஙனமே மக்களெல்லார்க்கும் ஒப்பமுடிந்த இன்னும் பல பொதுக் கோட்பாடுகளோடு ஒத்தும் ஒவ்வாதும் நிற்கும் முறையினை அமைதியோடும் ஆழ்ந்து நுனித்து ஆராய்ந்து பார்க்கும் முகத்தால் இச் சமயக் கொள்கை உண்மை எனவும் இது பொய் எனவும் பகுத்துணர்ந்து கோடல் இயல்வதேயாம். ஆகவே மாணிக்கவாசகப் பெருமானும் தமது சைவசமய வுண்மையினைப், புத்தரும் மற்றைச் சமயத்தினரும் குழுமிய ஒரு பேரவைக்களத்தில் எடுத்துக்காட்டி நிலைபெறுத்துகின்றுழி, மக்களெல்லார்க்கும் இயற்கையில் உரியனவான பொதுக் கோட்பாடுகளை அடிப்படையாய்க்கொண்டு, அவற்றின்மேல் வைத்தே அதனை விளக்கிக்காட்டினாராதல் வேண்டும் என்னும் இவ்வுண்மையை நினைந்து பார்த்துத் திருவாதவூரர் புராணத்திற் காட்டப்படாத இதனை யாமே கூர்த்தறிந்து எழுதி, அங்ஙனம் எழுதிய சைவசமயக் கோட்பாடுகள் முற்றும் மாணிக்கவாசகப் பெருமான் தழீஇயினவேயாம் என்பதற்குச் சான்றாக அவர் அருளிச்செய்த திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் இரு நூல்களிலிருந்து மேற்கோள்களும் உடனுக்குடன் எடுத்துக் காட்டலானேம். இவ் வளவோடு பௌத்தர்க்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இடைநிகழ்ந்த எதிர்முக வழக்கிற் கூறுதற்கு இயைபுடையவைகளைக் கூறிமுடித்தாம். இனி, அதன்பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவும் இயம்பி அடிகள் வரலாற்றினை முடிப்பாம். 18. சிவவொளியில் மறைந்தமை இனி, மாணிக்கவாசகப் பெருமான் பௌத்தரை வழக்கில் வென்று சைவசமயமே மெய்ச்சமயமென நாட்டியபின், தமது இலைக்குடிலில் வைகியபடியாய் அகத்தே சிவபிரான் றிருவருளில் தமது அறிவைப் படிவித்திருப்பதும், அவனை விட்டுப் புறத்தே அறிவு திரும்பிய வழியும் சிவபிரான் றிருவுருவினைக் கண்குளிரக் கண்டு வணங்கித் திருவாசகச் செழுந்தமிழ்ப் பாடல்கள் ஓதுவதும் ஆக முழுதுஞ் சிவநினைவே உடையராய் இருப்பாரானார் அவ்வாறிருந்த நாட்களிலே திருப்படையாட்சி, திருப்படை யெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து முதலிய திருவாசகத் திருப்பதிகங்களை அருளிச்செய்தனரெனத் திருவாதவூரர் புராணம் உரைக்கின்றது. இங்ஙனமிருக்கும் நாட்களில் ஒருநாள் ஒரு பெரியவர், அடிகளிருக்கும் இலைக்குடிலை அணுகி அவர்முன் நின்றார். நின்ற அப்பெரியரை அடிகள் நோக்கி ‘இரும்!’ எனக் கூற, அவரும் அங்ஙனே அமர்ந்தபின், ‘நீவிர் எங்கிருந்து வருகின்றீர்? என்று அடிகள் வினாயினார். அதற்கு அவர், யாம் பாண்டிநாட்டிலிருந்து வருகின்றோம் என விடையளித்தார். தமக்கு இறைவன் குருவடிவிற் றோன்றி அருள்புரிந்த இடமாகலிற் பாண்டிநாடு என்னும் பெயரைக் கேட்ட அளவானே, அடிகள் பேரன்பால் மனங் கசியப் பெற்றாராய் அப் பெரியவர்பாற் பின்னும் அன்பு மீதூர்ந்து சிலசொற் சொல்லியபின், ‘தேவரீர் இங்குவந் தருளியது எதன் பொருட்டு? என்று வினாயினார். அதற்கு அவர், அடிகளே! நும்மைத் திருப்பெருந்துறையின்கண் ஆட்கொண்டருளிய சிவபிரான் ஆணையாலே நும்மைக் காண்டற் பொருட்டே வந்தனம். தேவர்களாலுங் காண்டற் கேலாத பெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த நுமது பெருமையாலே பாண்டிநாடு வாழ்ந்தது. திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும்போய் ஆண்டு ஐயனை வழிபட்டபின், திருக்கழுக்குன்றஞ் சென்று வணங்கி, அதன்பின் இப் பொன்னம்பலம் அடைந்து புத்தரை வழக்கில் வென்றீர் என்னுஞ் சொற்கேட்டுப் பாண்டி நாட்டவ ரெல்லாரும் பெரு மகிழ்ச்சிகொண்டார். முழுமுதற் பெரும் பொருளாகிய சிவபிரான் மீது நீவிர் அன்பினாற் பாடின செந்தமிழ்ப்பாடல்கள் அத்துணையும் ஓதுவீரானால் அவற்றை எழுதிக்கொண்டு பாராயணஞ்செய்வேம் என்று சொல்லக் கேட்டு, அடிகளும் தாம் பாடியவைகளையெல்லாம் விளம்ப, அப் பெரியவர் அவற்றை முற்றும் விடாமல் ஏட்டிலே தெளிவு பெற எழுதிக்கொண்டார். இங்ஙனந் திருவாசகச் செந்தமிழ்ப் பாடல்கள் எழுதி முடிந்தபின், அம்பலத்தாடும் அம்மை யப்பரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவையும் பாடியருளல் வேண்டும் என்று அப்பெரியவர் கேட்பப் பண்டைச் செந்தமிழ் அகப்பொருட்டுறை வளனெல்லாம் ஒருங்கு பொதிந்தூறத் திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் அரும்பெறல் நூலையும் அடிகள் இயற்றிச் சொல்லியருளினார். அவ் வருந்தமிழ்க்கோவை நானூறு பாடல்களையும் ஏட்டில் தெளித்தெழுதிக் கொண்டபின்னர், அவ் வேட்டைச் செவ்வை யாக எடுத்துக் கட்டிக்கொண்டு, அப் பெரியவர் மின்னொளி போற் சடுதியில் மறைந்து போயினார். அங்ஙனம் அவர் மறைந்தமை கண்ட அடிகள் எழுந்தோடி அவரை இங்குமங்குந் தேடியுங் கண்டிலாமையின், வந்த அப் பெரியவர் சிவபிரானே யெனத் தெரிந்து கண்ணீர் மாலைமாலையாய் ஒழுகக் குழைந் தழுது ‘எங்கே, சென்றனை எம்பெருமானே! என மண்மேற் செயலற்று வீழ்ந்து பேரின்ப வெள்ளத்தில் அமிழ்ந்திக் கிடந்தார். ஈதிங்ஙனமாக, மற்றைநாட் காலையிற் கோயில் வழிபாடு ஆற்றுவார் பொன்னம்பலத் திருக்கதவந் தாழ்நீக்கித் திறந்த அளவிலே, அதன் வாயிற்படியின்மேல் ஓர் ஏட்டுச் சுவடி யிருக்கக்கண்டு, ஈது ஒரு பெரும்புதுமை! இச்சுவடி இங்கு வந்தமை தெய்வத்தான் நேர்ந்ததாகல் வேண்டும். இதனை இத்தில்லை நகரின் உள்ளார்க்கெல்லாம் அறிவித்து அவரெல்லாம் வந்து கண்ட பின்னரே, இதனை யின்னதென்று எல்லார் முன்னிலையிலும் எடுத்துப்பார்த்தல் வேண்டும் என்று உறுதிசெய்து, அங்ஙனமே அவ்வூரிலுள்ளார்க் கெல்லாம் அவ்வியப்பினைத் தெரிவிக்க, அவ் வூரின்கண் இருந்த சான்றோரெல்லாம் அப்பொன்னம்பலத்தே வந்துகூடி, அவ் வேட்டுச்சுவடி உள்ளே படியின் மீது வைக்கப் பட்டிருத் தலைக் கண்டு, எம்பெருமான் எழுந்தருளும் இம்மன்றின்கண் தேவரும் புகார்; அங்ஙனமாகவும் இச் சுவடி இதன்கண் வந்தது தெய்வத்தின் அருளாலே யாதல்வேண்டும் என்று வியந்து, அதனை இன்னதென எடுத்து அவிழ்த்துப் பார்த்தலே செயற்பாலதென எல்லாரும் ஒருமித்துக் கூறினார். கூற, ஒருவர் அவ்வாறே சென்று அச்சுவடிமேல் மலர்தூவி வணங்கி, அதனை யெடுத்துக்கொண்டு புறம்போந்து அவிழ்த்துநோக்க முதற்கண் நமச்சிவாய வாஅழ்க என்று தொடங்குங் கலி வெண்பாவி லிருந்து, ஈற்றில் அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே என்று முடியும் திருவாசகச் செழுந் தமிழ்மறை அறுநூற்றைம்பத்தாறு செய்யுட்களும், அவற்றின் பின் திருச்சிற்றம்பலக் கோவையார் நானூறு செய்யுட்களும் எழுதப்பட்டு இருக்கவும், அக் கோவையாரின் முடிவிடத்தே, இவை திருவாதவூரன்பாட, அழகிய திருச்சிற்றம்பல முடையான் எழுதியவை, என்று குறிக்கப்பட்டிருக்கவுங் கண்டு, எல்லாரும் நெஞ்சம் நீராய்க்கரைந்து உடம்பெங்கும் மயிர்க்கூச் செறிந்து குறுவியர் பொடிப்பக், கண்களில் நீர்வார அன்பால் இன்புற்றுப் பெருந்தவமுடைய மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த இத் தமிழ்மறையை யல்லாமல் வீட்டினை எய்துவிக்கும் நூல் வேறொன்றுமில்லை என்று புகன்றார்கள் புகன்று. இந் நூற்பொருளை அடிகளே திருவாய்மலர்ந்தருள அதனை எஞ்செவியான் மாந்துவேமாக என எல்லாரும் ஒருப்பட்டு, அடிகளுழைச் சென்றார்கள். சென்று, அடிகளின் திருவடிமிசை வீழ்ந்து இறைஞ்சித் தாங் கொணர்ந்த அத் திருமுறையினையும் அவர் திருமுன்பு வைத்து எல்லாம்வல்ல முதல்வன் செய்த திறமெல்லாம் இயம்பினார்கள். அச் சொற்கேட்ட அடிகள் ‘என் புல்லிய பாடலையும் எம்பெருமான் இங்ஙனந் திருவுள முவந்து பாராட்டுதற்கு அடியேன் இயற்றிய தவம் யாது கொல்! எனக் கூறி அகம்உருகி அழுதிட்டார். அப்போது அங்கு நின்ற சான்றோரெல்லாம் பெருமானே! சிவபெருமானே தேவரீர் பால் இசைச்சுவை மிக்க இப்பேரன்பின் பாடலைக் கொண்ட வாற்றினை அடியேங்கட்கு நவின்றருளல் வேண்டுமென இரப்ப, இறைவன் ஒரு பெரியவர் வடிவிற் போந்து தம்பானின்றும் அவற்றைப் பெற்று எழுதிக் கொண்டு மறைந்த திறனெல்லாம் மொழிந்துருகினார். அவையெல்லாங் கேட்ட அச்சான்றோர் வியப்பும் களிப்பும் மிக்கெய்தித் தில்லையில் எம்பெருமானைச் செப்பிய இத் தமிழ் மாலையிற் பொதிந்த நல்ல அரும் பொருளை அடியேங்கள் கேட்டு உய்யுமாறு தேவரீரே நலக்கவுரை நிகழ்த்தருளல் வேண்டு மெனக் குறை நவின்றார்கள். அவ் வேண்டுகோளுக்கு அடிகளும் மகிழ்வுடன் இசைந்து பொன்னம்பலத்தின் எதிரே போயிருந்து அதன் பொருள் புகல்வேம் எனப் பகர்ந்து கோயில் நோக்கிச் சென்றார்; அங்குக் குழுமிய சான்றோரும் அவர் பின்னே திருக்கோயிலுக்கு ஏகினர். ஏகி, எல்லாருமாய்ச் செம்பொன்னம்பலத்தே திரண்டு நிற்க. மாணிக்கவாசகப் பெருமான் ‘இத் தமிழ்மாலைக்குப் பொருள் இவரே! என அம்பலக் கூத்தனைச் சுட்டிக் காட்டியவாறே மன்றினுட் புக்கு ஆண்டெழுந்த சிவ அருட் பேரொளியிற் கலந்து மறைந்தருளினார். அவ் வருட்பெருங் காட்சியினைக் கண்டு ஆண்டுநின்ற பெருந்தவமுடையா ரெல்லாம் கண்ணீருங் கம்பலையும் உடையராய்ச் சென்னிமேற் கைகூப்பித் தொழுது அன்பிற் றேக்கினார். அன்று தொட்டுத் தமிழ்நாட்டின்கண் உள்ளாரெல்லாரும் திருவாசகந், திருக்கோவையாராம் திருமறைத் தமிழ் ஓதியுய்யும் பெறற்கரும்பேறு பெற்றாரென்பது. ஓம் சிவம். மாணிக்கவாசகர் வரலாறு - முற்றும் - பொருளடக்கம் பக்கம் மாணிக்கவாசகர் காலம் 1. வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும் 207 2. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாது 214 3. திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல் 220 4. சிவனடியார் பலர் திருத்தொண்டத் தொகையிற் கூறப்படாமை 230 5. திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை 246 6. திருக்கோவையாரின் செய்யுட்பொருள் பழந்தமிழ் நூல்களோடு ஒத்தல் 264 7. வடநாட்டிற் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது 277 8. கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் 286 1. வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும் இற்றைக்கு இருபத்திரண்டு ஆண்டுகட்குமுன் மாணிக்கவாசகப் பெருமானது காலவரையறையைப் பற்றிப் பிழைபட எழுதிவிட்டவர் தம் கொள்கைகளை யெல்லாம் தக்க சான்றுகளுடன் மறுத்து அப்பெருமான் நிலவிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலை வலி யுறுத்திக் காட்டி, அங்ஙனங் காட்டிய எமது கட்டுரையைக் கி.பி. 1902-இல் வெளிப்போந்த எமது ஞானசாகர முதற்பதுமத்தின் இதழ்களில் வெளியிட் டேம். பின்னர் அதுதன்னையே ஆங்கிலம் உணர்ந்தாரும் அறிந்து கொள்ளல்வேண்டி ஆங்கிலத்தில் எழுதி, 1904இல் வெளியான சென்னைக் கிறித்துவக் கல்லூரிப் பத்திரிகையிலும் வெளியிடுவித்தேம். அதற்குப்பின் திருக் கோபிநாதராவ் என்னும் ஆங்கிலம் வல்ல அறிஞர் ஒருவர் மாணிக்க வாசகப் பெருன் காலத்தைப் பற்றிப் பிழைபாடானவைகளை எழுதினாராகலின், அவரெழுதியவைகளை மறுத்து 1908இல் வெளியான எமது ஞானசாகர நான்காம் பதுமத்தில் மற்றொரு கட்டுரை எழுதி வெளியிட்டேம். அதற்குப்பின் இதுகாறும் வேறுஞ் சிலர் அடிகளது காலத்தைப் பிழைபட்ட கொள்கைகளால் ஒன்பதாம் நூற்றாண்டின் கண்ணதாகக் கூறுகின்றனர். இங்ஙனங் கூறுவாருள் முன்நிற்பவர் தமிழ் ஆராய்ச்சிகள்1 என்னும் நூலை ஆங்கிலத்தில் இயற்றிய திரு. எம். சீநிவாச ஐயங்கார் அவர்களே யாவர். இவரைப் பின்பற்றியே தமிழ் வரலாறு (1922) என்னும் நூலை எழுதினோருங் கூறிச் செல்வதால் இவ்விருவர் கூற்றுக்களையும் ஆராய்ந்து மறுத்து, அடிகள் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டே யாதல் மீண்டும் வலியுறுத்துவாம். இவ் வாராய்ச்சி அடிகளின் வரலாறு நிகழ்ந்த முறையே வைத்து ஆராயப்படும். மாணிக்கவாசகர் இந் நிலவுலகத்திற் பிறந்தருளுதற்கு முன்னர்ச் சிவபிரானுக்கு அணுக்கராய் அவர்பாலிருந்தனர் என்பதும், பின்னர் அவரது கட்டளையால் மக்கட் பிறவியில் வரலாயினார் என்பதும் அடிகள்தாம் அருளிச்செய்த திருவாசகத்தில் தாமே கூறியிருக்கின்றனர். அது. நீக்கி முன்எனத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து என அதிசயப்பத்து 8 ஆம் செய்யுளிற் போந்த அடியால் அறியப்படும். அதன்பொருள்: முன்னே சிவபிரானாகிய தன்னோடு அணுக்கமாநின்ற என்னைப் பின்னொருகால் அங்ஙனம் நில்லாதபடி தன்னினின்றும் நீக்கி இவ் வுடம்பாகிய குடிலினுட் புகுமாறு புகுத்தி என்பதாம். எனவே, சிவபிரான் மாட்டு அணுக்கராயிருந்த அடியார் ஒருவரே அங்ஙனம் மாணிக்கவாசகராகப் பிறந்தருளினா ரென்பது தேற்றமாம். மேலுலகத்திற் சிவபிரான் மாட்டு அணுக்கராய் நிற்குந் தூய தொண்டர்கள் சிவகணங்கள் என்று வழங்கப்படுவர். அச் சிவகணங்களுள் தலைவராய் நிற்குஞ் சிலர்க்கு நந்திகள் என்னும் பெயர் உண்மை. நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடில் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.2 என்னுந் திருமந்திரத்தில் திருமூல நாயனார் நந்திகள் நால்வரென அருளிச்செய்தவாற்றால் நன்கு விளங்கும். அங்ஙனஞ் சிவகணங்களுள் தலைவராய் நின்ற நந்திகளுள் ஒருவரே மாணிக்கவாசகராக இந் நிலவுலகிற் பிறந்தருளினர். அவ் வுண்மைகண்டே மாணிக்கவாசகர்க்குப் பின் வந்த திருநாவுக்கரசு நாயனார். குராமலரோடு அராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்3 என்று அருளிச் செய்தனர். அற்றேல், நம்பியார் திருவிளையாடல், திருவுத்தரகோசமங்கைப் புராணம், கடம்பவன புராணம் முதலிய நூல்கள் கணநாதரை நந்தி என்னும் பெயராற் கூறாமை யென்னையெனிற், கணங்களுள் நாதராய்ச் சிறந்தோர் சிலர்க்கு நந்தி எனும் பெயருண்மை திருமந்திரத்தால் அறியப்படுதலின், கணநாதர் எனினும் நந்தி எனினும் ஒன்றேயாம். அவ்வாறாயின், ஒரு புராணமாயினும், அவரை நந்தி என்று கிளந்து கூறிய தில்லையாலெனின்; புராணங்கள் எழுதினோர் மிகுந்த ஆராய்ச்சி யுடையவர் அல்லர்; முன்னுள்ள ஒரு புராணம் ஒன்றைச் சொன்னால் பின்வருவோர் அதனை ஆராய்ந்து பாராமல் அதனை அங்ஙனே சொல்லிவிடுவர். இறைவன் செம்படவர் உருவிற் சென்று பிடித்தது கெளிற்றுமீன் என்பது புலப்படத் திருவாதவூரடிகள். கேவேடர் ஆகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்4 என்று கூறா நிற்க. நம்பியார் தமது திருவிளையாடலில் அதனைச் சுறவுமீன் எனக் கூறுவர் (28,8) பரஞ்சோதி முனிவரும் அதனை அங்ஙனமே சுறவென ஆராய்ந்து பாராமற் கூறுவர் (57, 9). இவ்வாறு புராணவுரைகள் ஆய்ந்து பாராமல் கூறப் படுவனவும், ஒன்றோடொன்று முரணாகக் கூறப்படுவனவும் பலப்பல; அவை தம்முட் சில மாணிக்கவாசகர் வரலாற்றில் ஆண்டாண்டு காட்டியிருக்கின்றேம். ஆதலால், இப் புராணங்கட்கு முற்பட்டிருந்த திருநாவுக்கரசுகள் குடமுழநந்தீசன் எனக் கூறியது பிற்பட்ட இப் புராணங்களிற் புகன்றபடி இல்லாமை கண்டு அதற்கு வேறுபொருள் பண்ணுவேமெனப் புகுதல் பெரிதும் பிழைபாடுடைத்தாம். தாம் முன்னே சிவபிரான் பக்கல் அணுக்கராய் நின்ற வுண்மையினை; நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து என்று அடிகள் தாமே கூறுமாற்றானும், பிற்போந்த அப் புராணவுரைகளும் அவரை அங்ஙனம் நின்ற ஒரு கணநாதர் எனவே ஒருப்பட்டுக் கூறுதலானும், அங்ஙனம் இறைவன்பால் அணுக்கராய் நிற்றற்குரியார் நந்திகள் எனப் பெயர்பெற்ற ஒருவரன்றிப் பலர் உண்மையானும், அவருள் ஒருவரே மாணிக்க வாசகராய்ப் பிறந்தனரென்பார், குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார் என்று அரசுகள் அருளிச்செய்தனர். குடமுழா இயக்கும் நந்தி ஒருவரே உளர் என்பதற்கு எதிர்ப்பக்கத்தவர் மேற்கோள் காட்டாது இயைபில்லாதவற்றைப் புராணங்களினின்றும் விரித்தது பொருத்தமின்றாம். முன்னாசிரியரான மாணிக்க வாசகர் திருநாவுக்கரையர் முதலானோர் அருளிச்செய்த திருமொழிகட் கேற்பப் பின்வந்த புராணக்காரர் கூற்றுகட்கு உரைசெய்ய வேண்டுமே யல்லாமல், இப் பின்னோர் கூற்றுகட்கேற்ப முன்னோர் மொழிகளைத் திரித்துப் பொருள்செய்தல் ஆகாதென்க. இனி, மேற்போந்த அப்பரது திருத்தாண்டகத்தில் மாணிக்கவாசகன் என்று சொல்லப்படாமல் வாசகன் என்று மட்டுஞ் சொல்லப்பட்டிருத்தலால், அஃது அவரைச் சுட்டுமாறு யாங்ஙனமெனின்;- மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி என்னுஞ் சொற்றொடரின் மரை என்ற சொற்குப் பொருள் யாதென ஆராயுமிடத்துப், பின்வரும் இதழையும், அவ்விதழை யொக்கும் மகளிரின் மெல்லிய சிற்றடியையும் நோக்கி, அது தாமரை என்னுஞ் சொல்லின் முதற்குறையாய்த் தாமரை மலரை யுணர்த்துமே யல்லாமல், மானை யுணர்த்தாதென்று துணிகின்றாம். இதுபோல், நந்தியே வந்து பிறத்தற்குரிய வாசகன் யாவன் என்று ஆராய்ந்து பார்க்குமிடத்தும், மாணிக்கவாசகர் தமது பிறப்பைப் பற்றித் தாமே யருளிய குறிப்பானும் சிவகணத்தார் ஒருவரே அவ்வாறு மாணிக்க வாசகராய் வந்தனரெனப் புராணங்கள் நுவலு மாற்றானும், சிவகணங்கட்குத் தலைவராய் நிற்கும் நாதர்கள் நந்திகள் எனப் பெயர் பெறுதலை மேலே காட்டியவாற்றானும் மாணிக்க வாசகன் என்னுஞ் சொல்லே முதற் குறைந்து வாசகன் என நின்றதென்பது முடிக்கப்படும் என்னை? ஒரு சொல்லுக்குப் பொருள்செய்யுங் கால், முன்பின் உள்ள சொற்களோடு அஃது இயைந்து பொருள் தரும் வகையினையும், அச்சொல்வழங்கிய காலத்து அதற்குள்ள பொருள்களில் எப்பொருள் ஆண்டைக்குப் பொருந்துகின்ற தென்பதனையும் நன்கு ஆராய்ந்து பார்த்து, அதன்மேலும் ஆக்கியோன் கருத்தையும் ஒட்டி அதற்குப் பொருள் துணிதலே தொல்லாசிரியரும் பிறருங் கைக்கொண்ட முறையாகலின் என்க. அற்றன்று, வாசக: என்னுஞ்சொல் வடமொழியாக லானும், அதற்குத் தூதுவன் என்னும் பொருளும் உண்மை வடமொழி நிகண்டுகளில் அறியக்கிடத்தலானும், திருக்கைலாயத்தில் இறைவனைத் தொழவந்தவர் களை இன்னவரென்று இறைவற்குத் தெரிவித்துப் பின்னர் உள்ளே புகுத்துந் தூதுவர் கடமையும் மேற்கொண்டு அங்கே வாயில் காவலனாய் நிற்போன் நந்திதேவனாகலிற் குடமுழா இயக்கும் நந்தியத் தலைவனைத் தூதுவனாய்ப் பெற்றான் என்பதே அச் சொற்றொடர்க்குப் பொருளாமா லெனின்; வாசகன் என்னும் சொல்வழக்கையும், அதனை வழங்கிய ஆசிரியன் கருத்தையும் ஆய்ந்துணராது, அகராதியில் ஒரு பொருளைக் கண்டவள வானே அதனைத் தமது கொள்கையை நாட்டுதற்கு உதவியாக வெடுத்துக்கொண்டு கை கொண்ட மட்டும் எழுதி விடுவது நுண்ணறிவினார் கழகத்தில் ஏறாது. வாசகன் என்னும் சொல்லுக்கு உரைவல்லான் என்னும் பொருளே வடமொழிக் கண்ணும் பரவி வழங்குவதாகும்: தூதுவன் என்னும் பொருள் எங்கோ அருகி வழங்குவது. சிவராமன் என்பார் எழுதிய வடமொழி யகராதியிலும் உரைவல்லான் என்னும் பொருளே அதற்கு முதற்பொருளாகக் காட்டப்பட்டிருக்கின்றது; தூதுவன் என்னும் பொருள் அருகிய வழக்காய் இருத்தலின் அது நான்காவதாக இறுதியில் வைத்துரைக்கப்பட்டிருக் கின்றது, வடமொழிச் சொல்லாகிய வாசக என்பது தமிழில் வந்து வாசகன் என வழங்குங்கால். அது வடமொழியிற் பெருகிய வழக்காய்க் குறிக்கும் சொல்வல்லான் என்னும் பொருளையே தருவதன்றி, வடமொழிக்கண் யண்டோ ஓரிடத்து அருகிய வழக்காய்க் குறிக்கும் தூதுவன் என்னும் பொருளைத் தராது. வாசக என்னும் ஆண்பாற்சொல் மொழிவல்லான் என்னும் பொருளையே முதன்மையாய்ச் சுட்டுவதேன் என்றால்; அது தோன்றிய வாசக என்னும் உரிச்சொல்லும் அதன் முதனிலையும் சொல் என்னும் பொருளையல்லாமல், தூது என்னும் பொருளைத் தருவன அல்ல; அதனால், வாசகன் என்னுஞ் சொல்லுக்கு மொழிவல்லான் என்னும் பொருளே பெருகிய வழக்காய் வழங்கும் உரிமை இயற்பொருளாயிற்று; தூதுவன் என்னும் பொருளோ அருகி வழங்கும் ஆகுபெயர்ப் பொருளாயிற்று. ஒரு மொழியிற் பிறமொழிச் சொல் ஒன்று வந்து வழங்குங்கால், அப் பிறமொழியில் அது பெருகிய வழக்காய்ச் சுட்டிய பொருளையே தான் புகுந்த புதுமொழியினுங் குறிக்குமல்லது, தன்மொழியில் ஒரோவிடத்துத்தான் அருகிச் சுட்டிய பொருளை அப்புதுமொழியிற் குறியாது இவ் வுண்மை, மொழியாராய்ச்சி வல்லார்க்கு நன்கு விளங்கிக்கிடந்த தொன்றாம். வாசகம், வாசகன் என்னுஞ் சொற்கள் பழைய தமிழ் நூல்களிலெல்லாம் மொழி, மொழிவல்லான் என்னும் பொருள்களிலேயே வழங்கி வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், பெருங்கதை முதலிய நூல்களையும், திருவாசகம், பிங்கலந்தை, சூடாமணி நிகண்டு முதலியவைகளை நோக்குக. பிற்றை ஞான்றை நூல்களிலும் வாசகன் என்னுஞ்சொல் தூதுவன் என்னும் பொருளில் வருதலை யாம் அறிந்தவரையில் யாண்டுங் கண்டிலேம். ஈதிங்ஙனமாகத் திருநாவுக்கரையர் வாசகன் என்னும் சொல்லைத் தூதுவன் என்னும் பொருளில் அருளிச்செய்தாராகல் வேண்டுமென ஒருமுறையு மின்றித் தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தல் போலியுரையுமா மென்க. தமக்கு முற்பட்ட காலத்து நூல்களிலாதல், அல்லது தற்காலத்து நூல்களிலாதல் வாசகன் என்னுஞ் சொல் தூதுவன் என்னும் பொருளில் வழங்கப்பட்டிருக்குமா யினன்றே, திருநாவுக்கரையர் தாமும் அதனை அப் பொருளில் வழங்கினாரெனக் கோடல் பொருத்தமாம். தமக்கு முன்னும், தங்காலத்தும் அச் சொல் அப்பொருளில் வழங்காவிடினும், தாமே அதனைப் புதுவதாக அப் பொருளில் வழங்கினாரெனக் கொள்ளாமோவெனின்; அங்ஙனம் அவரே அதனைப் புதுவதாக வழங்கினாரெனின் அதற்குச் சான்று என்ன? தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களில் வேறெங் காயினும் அச் சொல்லை அவர் அப்பொருளில் வழங்கினரா? என வினவப்படுமாகலானும், அவ் வினாவிற்கு விடைகூறுதல் ஏலாமையானும் அங்ஙனங் கொள்ளாமென்பது. எனவே, குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார் என்னுஞ் சொற்றொடரிற்போந்த வாசகன் என்னுஞ் சொல்லுக்குத் தூதுவன் எனப் பொருளுரைத்தல் தமிழின்கண் ஒருவாற்றானும் பொருந்தாமையானும், மொழி வல்லான் எனப் பொருளுரைத்தலே எவ்வாற்றானும் பொருந்துதலானும் மாணிக்கம்போற் சிறந்த மொழிவல்லா ராகிய மாணிக்க வாசகரைக் கூறுதலே திருநாவுக்கரசு நாயனார் கருத்தாமென்க. தூதுவன் என்றே கூறல் வேண்டினாராயின் அச் சொல்லையே வைத்துக் குடமுழ நந்தீசனைத் தூதுவனாக் கொண்டார். என்றே ஓதியிருப்பார்: அதனாற் செய்யுளோசை சிதைதலு மின்று; அதனாலும் அவர்க்கது கருத்தன்றென்பது தெளிக. அரிய பெரிய பழந்தமிழ் இலக்கியங்களைப் பெரிதும் ஆராய்ந்து பேருழைப்போடும் வெளியிட்டுத் தமிழ் உலகிற்குப் பெருநலம்புரிந்த நல்லிசைப்புலவர் திரு. சாமிநாதையரவர்கள், குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார் என்பது மாணிக்க வாசகர் மேற்றாதலைத் தாம் பதிப்பித்த பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடற் புராண முகத்திற் றாம் எழுதிய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்றிலும் (பக்கம் 97) இனிது விளக்கிக் காட்டி யிருக்கின்றார்கள். இஃதிங்ஙனமாகவும், இக் கோட் பாட்டிற்கு மாறாய் நிற்கும் எதிர்ப்பக்கத்தவர் சாமிநாதையரவர் களைத் தமக்கும் ஒரு துணையாகக் கொண்டது எற்றிற்கோ! வடமொழிக் கண் உள்ள மாணிக்கவாசகர் சரித்திர நூல்கள் இரண்டிலும் நந்திதேவரே மாணிக்கவாசகராய்ப் பிறந்தருளின ரென்று கூறப்பட்டதெனக் காட்டும் சாமிநாதையரவர்களு ரையை மறுத்துக் கூறுவோர், பின்னர் அவரைத் தமக்குத் துணை கூட்டுவதும் ஒரு புதுமையே! யாம் மேற்காட்டிய வாற்றால் நந்திதேவரே மாணிக்கவாசகராய் வந்தனர் எனக் கூறும் வடமொழிப் புராணவுரையும் சிவகணநாதர் ஒருவரே மாணிக்கவாசகராய் வந்தனர் எனக் கூறுந் தமிழ்ப் புராண வுரையுந் தம்முள் முரணாமை நன்கு விளங்கும். அது நிற்க. அடிக்குறிப்புகள் 1. Tamil Studies, 1914. 2. திருமந்திரம், 77. 3. தனித்திருத்தாண்டகம், 11 4. கீர்த்தித்திருவகவல், 17 2. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாது இனி, மாணிக்கவாசகப் பெருமான் தாமியற்றிய திருச்சிற்றம்பலக்கோவையாரில் வரகுணனாந் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (306) எனவும், சிற்றம்பலம் புகழும், மயலோங் கிருங்களி யானை வரகுணன் (327) எனவும் அருளிச் செய்தமையானே, அவர் வரகுண பாண்டியன் காலத்திலாதல், அல்லது அவனுக்குச் சிறிது பின்னராதல் இருந்தவராகக் கொள்ளல்வேண்டும் என்றும், கல்வெட்டுக்களாற் பெறப்படும் வரகுண பாண்டியர் இருவரில் கி.பி.862-இற் பட்டம் எய்திய இரண்டாம் வரகுணன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தனரென ஒருவரும், அவ்வாறு அல்லாக்கால் அவனுக்குப் பிற்பட்ட பத்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டுமென மற்றொருவருங் கூறுதலின் அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட்படுவதாம் என்றும் முடிவு கட்டுதலே பொருத்தமாமெனின், அது பொருந்தாமை காட்டுதும்; வெறும் பெயர்களைக் கொண்டு உறுதிகட்டுதல் பிழைபாடாய் முடியும். இடைப்பட்ட காலத்துச் சேரசோழ பாண்டிய மன்னர்களாற் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்வோர்கள். சிலகாலத்திற்குமுன் அகப்பட்ட கல்வெட்டுக்களை நோக் குகையில் வரகுணன் எனப் பெயர் தாங்கிய பாண்டியன் ஒருவனைப் பற்றிய குறிப்புகளைக் கண்டார்கள். கண்டவுடன் அப்பெயர் பெற்ற பாண்டியன் ஒருவனே உளன் எனக் கருதிப் பிழையான வரலாற்றுக் குறிப்புகளை எழுதிவிட்டார்கள். பின்னர் அகப்பட்ட கல்வெட்டுக்களில் வரகுணன் என்னும் அப் பெயர் தாங்கிய மற்றும் ஒரு பாண்டியனைப் பற்றிய குறிப்புக ளிருக்கக் கண்டு. தாம் முன்செய்த பிழையினைத் திருத்தி அவ்வரலாற்றுக் குறிப்புகளை வேறாக மீண்டும் எழுதினார்கள்.1. கல்வெட்டுக்களால் அறியப்படும் சேரசோழ பாண்டியர் கள் எல்லாரும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வர்கள். இந் நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட அரசர்களால் செதுக்கப்பட்ட கல்வெட்டுத் தமிழ்நாட்டில் ஒன்றாயினும் இதுகாறும் அகப்படவில்லை.2 அவ்வரசர்களைப் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் பழைய செந்தமிழ் இலக்கண இலக்கியங் களினும், இடைக்காலத்தெழுந்த சில புராணங்களின் மட்டுமே காணப்படுகின்றன. இடைக்காலத்துக் கல்வெட்டுக்களை ஆக்குவித்த அரசரின் பெயரோடு ஒத்த பெயர்பூண்ட வேற்றரசர் பலர் பழைய காலத்தில் இருந்தனரென்பது நூற்களாற் புலப்படுகின்றது. கல்வெட்டுக்களை ஆக்கிய அரசருள்ளும் ஒரே பெயரைப் பூண்டோர் பலர் கி.பி. நாலாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களாற் கட்டப்படும் கரிகாற் சோழன் ஒருவன் உளன். இடைக் காலத்துக் கல்வெட்டுக்களாற் புலப்படும் கரிகாற்சோழர் மூவர் உளர்; அம் மூவருள் ஒருவன் குலோத்துங்கன் என மற்றொரு பெயரும் பூண்டு கி.பி. 1070 முதல் 1118 வரையில் அரசுபுரிந்தவன்; மற்றொருவன், தன் மாமனான இராஜேந்திர சோழன் கி.பி.1053 முதல் 1060 வரையில் அரசு புரிந்த காலத்தில் உறையூரில் அரசு செலுத்தினவன்; மற்று மூன்றாம் கரிகாலன், ஆதித்தன் என வேறுமொரு பெயர்புனைந்து கி.பி.950 முதல் 985 வரையில் அரசு புரிந்தவன். ஆகவே, பழைய தமிழ் இலக்கியங்களிற் காணப்பட்ட கரிகாலனோடு, இடைக் காலத்துக் கல்வெட்டுக்க ளாற் பெறப்பட்ட கரிகாற்சோழர் மூவருங்கூட அப் பெயர் பூண்டோர் நால்வராவர்.3 இனிக், கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழ மன்னரிற் குலோத்துங்கன் எனப் பெயர்பூண்டோரும் மூவர் இருந்தன ரென்பது4 இதுகாறும் அறியப்பட்ட தொன்றாம். ஆகவே, கல்வெட்டுக்களாற் பெறப்பட்ட இரண்டு வரகுண பாண் டியர்க்கு முன், அப்பெயர் பூண்டோர் பிறர் இலர் எனக் கட்டுரைப்பது பெரிதும் பிழைபடுவதாகும். திருவிளையாடற் புராணங்களிற் சொல்லப்பட்ட வரகுணபாண்டியன் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டவனாவன் என்பதூஉம், கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் தமிழ்நாடு தமிழ் வேந்தரது ஆட்சிக்குள்ளிருக்கச் செந்தமிழ் மொழியானது மிக உயர்ந்த நிலையையடைந்து அரசர்களாலும் அவர்களால் போற்றப்பட்ட தமிழ்ப்புலவராலும் அவர் ஆக்கிய அரியபெரிய நூல்களாலும் பேரொளி விரித்து விளங்கினமையின் அக்காலத்திருந்த வேந்தர்கள் தாம்செய்த அரிய செயல்கள் புலவர்களால் நூலிற் புகழ்ந்துரைக்கப்பட்ட அளவே அமையுமெனக்கொண்டு கருங்கற்களில் அவைதம்மைச் செதுக்கி வையாராயினரதனால் அக்காலத்திருந்த வரகுணனை யுள்ளிட்ட மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணப்படாவாயின வென்பதூஉம், அவ் வரகுணபாண்டியற்குப் பிற்பட்ட காலத்தே வடுகக் கருநாடர் தென்றமிழ் நாட்டிற் போந்து பாண்டி மண்டலத்தைக் கைக்கொண்டு தமிழ் நூல்களையும் சைவசமயத்தையும் அழித்துச் சமணமதத்தைப் பரப்பும் முயற்சி பெரிதுடையரானமையின் அவரை மூர்த்தி நாயனார் வென்று துரத்திச் செங்கோல் செலுத்திய காலந்தொட்டுப் பின்வந்த தமிழரசர்கள் தங்காலத்திற் றமிழ்மொழிப்பயிற்சி சுருங்குதல் கண்டும் வடநாட்டவர் அடுத்தடுத்துத் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்துப் புகுதல் கண்டும் ஆங்காங்குத் தாம் செய்த அரியசெயல்களைக் கருங்கற்களிற் பொறித்துவைப்பாராயின ரென்பதூஉம். இதனாற்றான் கி.பி. நாலாம் நூற்றாண்டிற்குப் பின்னர் மட்டுங் கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுவ வாயின வென்பதூஉம் தெரிந்துணரற்பாலனவாம். இனிப், பாண்டி நாட்டின்கட் படையெடுத்து வந்து அப்போதிருந்த பாண்டிய மன்னனை வென்று, அவனது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அதிற் சிறிதுகாலம் அரசுபுரிந்தவன் சமணமதந் தழுவிய வடுகக் கருநாடர் மன்னவனாமென்பதும், பின்னர் அவனைத் தொலைத்துப் பாண்டிநாட்டிற் செங்கோல் செலுத்தினவர் மூர்த்தி நாயனாராவ ரென்பதும், துன்னு சேனையிற் றுளங்கிய ஒருகருநாட மன்னன் அன்னநாள் வந்தருட் டென்னனை யோட்டிக் கன்னி மண்டலங் கொண்டமண் கையர்கைவிழுந்து முன்னநீடிய வைதிக முறையையும் ஒழித்தான் எனவும், வன்சமண் இருள்விட்டேக வைதிகத் தீபம் ஏற்றி இன்பர சாள்வல் என்ன இயைந்தியா வரும்முன் சொன்ன அன்புறு பகுதி மூன்றுஞ் செய்தருச் சித்தார் போற்றி முன்பருள் கரந்த சொக்க மூர்த்தியின் மூர்த்தி வேந்தை எனவும்.5 நம்பியார் திருவிளையாடலும், அதனினும் பழைய பெரியபுராண முங் கூறுமாற்றான் அறியப்படும். வடுக ராவார்; தமிழ்நாட்டின் வடவெல்லை யாகிய வேங்கடமலைக்கு வடபுறத்துள்ள நாடுகளில் உறைந்தவராவர்; இஃது அகநானூற்றிற் போந்த, வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்க் கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி சுரியிரும் பித்தை கரும்படச் சூடி இகன்முனைத் தழீஇய ஏறுடைப் பெருநிரை நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும் வானிணப் புகவின் வடுகர் தேஎத்து6 என்னுந் தாயங்கண்ணனார் செய்யுளால் அறியப்படும். இங்ஙனம் வேங்கடமலைக்கு வடபாலுள்ள நாடுகளிலிருந்த வடுகரைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்து வந்தபோது, அங்கே சமணசமயமானது மிகப் பரவியிருந்த தென்பது மேற்கூறிய புராணங்களால் நன்கு பெறப்படும். அவ்வாறு சமணசமயம் தமிழ்நாடெங்கும் மிகப் பரவிய காலம் திருநாவுக்கரசு நாயனார் இருந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னே கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டின் நடுவரையிலேயாம். திருஞான சம்பந்தப் பிள்ளையாரோடு வழக்கிட்டுத் தோற்றபின் சமணர்கள் தமது ஒளி சுருங்கித், தங் கொள்கைகளைப் பரப்ப வலியற்ற வரானார்கள். வடுகக் கருநாடர் பாண்டி நாட்டுட் புகுந்தபோது ஆண்டுச் சமணமதம் பரவியிருந்த தென்பதனால், அவர் அங்குப் புகுந்தகாலம் ஆறாம் நூற்றாண்டிலாதல் அதற்கு முற்பட்டதால் இருத்தல் வேண்டுமென்பது சொல்லாமே யமையும். திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தவரான நின்றசீர் நெடுமாறர் என்னுங் கூன்பாண்டியன்மேற் பகைத்துவந்து, நெல்வேலியில் அவரொடு பொருது தோற்றவரும் சேய்மையிலுள்ள வடபுலத் தரசரேயாதல், ஆயவரசு அளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வர்எதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றின்நிரை பரப்பிஅமர் கடக்கின்றார் எனவும், இனையகடுஞ் சமர்விளைய இகல் உழந்த பறந்தலையிற் பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப் புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து எனவும் பெரியபுராணங்7 கூறுமாற்றால் தெளியப்படும். ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் வந்த வடபுல வடுகர் இங்ஙனம் நெடுமாறரால் தோல்விபெற்றுச் சென்றமையானும், இந் நெடுமாறர்க்குப் பின் பத்தாம் நூற்றாண்டு வரையிற் பாண்டியர் பலர் அரசாண்டமை கல்வெட்டுக்களிற் காணப்படுதலானும்.8 எட்டாம் நூற்றாண்டின்கண் இருந்தவராகப் பெறப்படும் சுந்தரமூர்த்தி நாயனார்9 தாம் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகையில் மூர்த்தி நாயானாரையுங் கூறுதலின் அம் மூர்த்தி நாயானார் வென்று துரத்திய வடுகக் கருநாடர் பாண்டியனது அரசை வௌவியது ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் திண்ணமேயாம். இனிச் சின்னமனூரில் அகப்பட்ட செப்புப் பட்டயங்களானும், வேள்விக்குடி நன்கொடைப் பட்டயத் தானும் நெல்வேலி வென்ற நெடுமாறர்க்கு முன்னே செழியன் சேந்தன். மாவர்மன் அவநி சூளா மணி, கடுங்கோன் எனப் பாண்டியர் மூவர் அரசு புரிந்தமை தெளியப்படுகின்றது.10 ஒவ்வோர் அரசரின் ஆட்சிக்கு முப்பது ஆண்டு விழுக்காடு வைத்துக் கணக்குப் பண்ணினால் இப் பாண்டியர் மூவரின் அரசுக்குத் தொண்ணூறாண்டுகள் செல்லும். செல்லவே, நெடுமாறர்க்கு ஒரு நூற்றாண்டு முற்பட்ட காலத்தேதான் வடுகக் கருநாடர் பாண்டி நாட்டுட் புகுந்து பாண்டியனது அரசை வௌவிச் சிலகாலம் அரசு புரிந்ததும், பின்னர் அவரை வென்று மூர்த்திநாயனார் செங்கோலோச்சியதும் ஆகல் வேண்டும். அடிக்குறிப்புகள் 1. See pilgraphist’s Report for the year 1906, July 2nd. 2. See ‘The Beginnings of South Indian History’ By Dr. S. Krishnaswami Aiyangar, p.22. 3. Ancient India by Dr. S. Krishnaswami Aiyangar, p.361. 4. Ibid. pp. 112, 153 and 154. 5. நம்பியார் திருவிளையாடல், 51,2,13 6. அகநானூறு. 213. 7. நின்றசீர் நெடுமாறநாயானார் புராணம் 3,7 8. Dr. Smith Early History of India.. 453. 9. Dr. Krishnaswami Aiyangar’s Ancient India. p.394. 10. The Beginnings of S. Indian History by the same author p.258. 3. திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல் இனிச் சாக்கிய நாயனார், இடைக்காடர், காரைக்கால் அம்மையார் முதலான அடியார்களை எடுத்தோதியவாறு போல, அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் முதலியோரை எடுத்தோதாத கல்லாடம் என்னும் அரிய செந்தமிழ் நூல் அம் மூவர்க்கும் முற்பட்ட தாதல் துணியப்படுதலின், அஃது ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் இயற்றப்பட்டதாதல் வேண்டும். கல்லாடம் ஐந்தாம் நூற்றாண்டின்கண் இருந்ததாயின், நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியன்மார் தம்முரை யுள் அதனை மேற்கோளாக எடுத்துக்காட்டாத தென்னையெனின்; உரையாசிரியன்மார் எல்லாரும் பண்டைச் சங்கத்தமிழ் இலக்கியங்களையும் தொல்காப்பிய இலக்கணத்தையுமே சிறந்த மேற்கோளாய்க் கொண்டவர்கள்; தாம் எழுதும் உரையில் அந் நூல்களிலிருந்தே மேற்கோள் காட்டிச் செல்லுங் கடப்பா டுடையவர்கள்; திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு உரையெழுதிய பேராசிரியரும், சீவகசிந்தாமணிக்கு உரை யெழுதிய நச்சினார்க்கினி யருங்கூடத் தாம் எழுதிய தொல்காப்பிய உரை, கலித்தொகை யுரை, பத்துப் பாட்டுரைகளில் திருச்சிற்றம்பலக் கோவையார், சூளாமணி, சீவகசிந்தாமணி முதலிய இடைக்காலத்து நூல்களிலிருந்து அருகி ஓரோ விடத்தன்றி மேற்கோள்கள் மிகவெடுத்துக் காட்டிற்றிலர். திருச்சிற்றம்பலக் கோவையாரில் மேற்கோளாக எடுத்துக் காட்டுதற் கிசைந்த அகப்பொருட் டுறைகள் மலிந்து கிடந்தும், அவற்றைத் தொல்காப்பிய அகத்திணையியல், களவியல், கற்பியல் முதலியவற்றின் உரையில் எடுத்துக் காட்டாது, பண்டைச் சங்கத்தமிழ் இலக்கியங்களிலிருந்தே மேற்கோள்கள் எடுத்துக் காட்டும் பேராசிரியர் நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியரின் உரை முறையை ஆய்ந்து பார்க்குங்கால் சங்கத்தமிழ் இலக்கியங்கட்குப் பிற்பட்ட காலத்தெழுந்த நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல் அவர்கள் கருத்தன்று என்பது தெற்றென விளங்கும். இவ் வுண்மையைக் கருதிப்பாராது உரைகாரர் எவருங் கல்லாடத் தினின்றும் மேற்கோள் எடாமை ஒன்றேகொண்டு அதனை அவ் வுவரைகாரர்க்குப் பின்னெழுந்த நூலென்று அழிவழக்குப் பேசுவார்க்கு, அங்ஙனமே பதினோராம் நூற்றாண்டின் கண்ணதான பெரிய புராணத்தினின்றும் மேற்கோள் காட்டாமைபற்றி அதனையும் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த நச்சினார்க்கினியர்க்குப் பிற்பட்ட தென்று கூறல்வேண்டும்; கம்பராமாயணத்தினின்று மேற்கோள் காட்டாமைகொண்டு அதனையும் அவர்க்குப் பிற்பட்ட தென்றே கூறல்வேண்டும்; வீரசோழியத்தினின்றும் மேற்கோள் எடாமையின் அதனையும் அவர் காலத்திற்குப்பின் வந்ததெனக் கூறல் வேண்டும். மற்று இந் நூல்களெல்லாம் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவை யென்பது காலவாராய்ச்சியில் நன்கு புலனாதலின், அவர் அவற்றை மேற்கோளா யெடாமை ஒன்றையே பற்றிக்கொண்டு அந் நூல்களை அவர் தமக்குப் பிற்பட்டவை என்று உரைத்தல் கூடுமோ? கூடாதன்றே; அதுபோலவே, உரைகாரரால் மேற்கோளாக எடுக்கப்படாமை ஒன்றையே ஏதுவாய்க் கொண்டு, கல்லாடம் அவர் தமக்குப் பிற்பட்ட காலத்த தென்றல் வழுவுரையா மென்க. அதனை அவ்வாறுரைப்பதற்கு வேறுபல ஏதுக்களும் உளவாயினல்லது. அங்ஙன முரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க. இனிச், சிவபிரான்மாட்டும் அவனடியார்மாட்டும் பேரன்பு உடையராகக் காணப்படுங் கல்லாட நூலாசிரியர் காரைக்காலம்மையார் மூர்த்திநாயனார் முதலியோரைத் தம்மருமைச் செய்யுட்களிற் குறிப்பிட்டவாறுபோலச் சிவபிரான் முழுமுதற்றன்மையை இத்தென்றமிழ் நாடெங்கும் நிறுவித் திகழ்ந்த அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலாயினாரைத் தம் செய்யுட்களில் எங்குங் குறிப்பிடா மையின்; அவர் மூவர்க்கும் முன்னிருந்தா ரென்பது ஒருதலை. ஈதென்னை! உரையாசிரியர் எவரும் மேற்கோளாக எடாதது கொண்டே கல்லாடநூலை அவர்க்குப்பின் வைத்தல் ஆகா தெனக் கூறும் நீவிரே; அப்பர் சம்பந்தர் சுந்தரரைக் குறிப்பிடாமை கொண்டே அந்நூலை அவர்க்கு முன்வைத்தல் வேண்டுமென வுரைத்தல் முன்னொடுபின் முரணாமன்றோ வெனின்; அவ் வியல்பினை ஒரு சிறிது விளக்குதும்; இன்மையேது1 எவ்விடத்து வலிவுடையது, எவ்விடத்து வலிவில்லது எனப் பகுத்தாராய்ந்து வலிவுடைய விடத்து அதனை ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு ஒரு முடிபுக்கு வருதல் வேண்டும். உரையாசிரியர்கள் பண்டைக் காலத்து இலக்கண இலக்கியங்களையே மேற்கோளாகக் கொண்டு உரை யெழுதுங் கடப்பாடு உடையர் என்பது. தமக்கு முற்பட்ட இடைக் காலத்திலக்கியங்கள் பலவற்றிலிருந்து மேற்கோள் எடாமையால் நன்கு பெறப்படுதலின், அவர்கள் கல்லாடத் தினின்று மேற்கோள் காட்டாமைபற்றி அதனை அவர்கட்குப் பின்னெழுந்த தென்றல் சாலாது; அதனால், இவ்விடத்து இன்மையேது வலிவுகுன்றி நிற்கின்றது. மற்றுக் கல்லாடம் இயற்றிய ஆசிரியர் சிவபிரான்மாட்டும் அவனடியார் மாட்டும் பேரன்புடையரென்பது அவரருளிச் செய்த பாக்களால் நன்கு தெளியக்கிடத்தலின், அவர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் இயற்றிய அரும்பெருஞ் செயல்களை எடுத்து ஓதாமைக்கு ஓர் ஏது வேண்டுமன்றே; அவர் அங்ஙனம் அவர்களை ஓதாதுவிட்ட மைக்கு வேறோர் ஏது வேறு ஒருவாற்றானும் பெறப்படா மையின், ஈண்டு இன்மையேது மிகவும் வலிவு பெற்று நின்று கல்லாட நூலாசிரியர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் மூவர்க்கும் முற்பட்ட காலத்திருந்தா ராதலைப் பெறுவிக்கும்; இங்ஙனமாக இன்மையேது வின்வலிவறிந்து முடிவுகாண வல்லார்க்கு யாங்கூறியது முன்னொடுபின் முரணாமை நன்குவிளங்கா நிற்குமென்க. அஃதொக்குமாயினும், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவ ரான சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பாணபத்திரர் வழியே சிவபிரான் திருமுகப்பாசுரம் எழுதிவிட்ட வரலாறு ஒன்று கல்லாடநூலின் 15ஆம் செய்யுளிற் காணப்படுதலின், அதனைக் குறிப்பிட்ட அந் நூலாசிரியர் சுந்தரமூர்த்திகட்குப் பிற்பட்டவ ரென்பது பெறப்படுமென எதிர்ப்பக்கத்தவர் கூறினாரா லெனின்; அது பொருந்தாது; அம்மண் மதம் புகுந்து, இறைவன் தந்த வயிற்றுவலியால் அறிவு தேறிச் சைவசமயந் தழீ இச் சொற்றுணை வேதியன் என்னுந் திருப்பதிகம் ஓதித் தம்மை சமணர் கட்டி வீழ்த்திய கல்லையே புணையாகக் கொண்டு கடலைக் கடந்து கரையேறி இறைவனருளாற் பல செயற்கருஞ் செயல்களெல்லாஞ் செய்து, திருக்கோயில் கடோறுஞ் சென்று செந்தமிழ் வளமும் அன்பின் பெருக்குந் துளும்புந் திருப்பதிகங்கள் கட்டளையிட்டுத் திருவருளில் மறைந்த அப்பரையும், மூன்றாம் ஆண்டு செல்கின்ற இளங்குழந்தையா யிருந்துழியே இறைவனையும் இறைவியை யுங் கண்ணெதிரே கண்டு அவர் தந்த அருட்பாலை யுண்டு அருந்தமிழ் பாடிச், சமணர் இட்ட தீக்குத் தம்மையுந் தம்மடியரையுந் தப்புவித்துப், பாண்டியன் வெப்புநோய் தீர்த்தும், தீயில் இட்டெடுத்த பச்சேட்டானும் வைகை நீரின் எதிரேறிச் செல்லவிடுத்த திருப்பதிகவேட்டானும் முழுமுதற் கடவுளின் திருவருட்டுணையை உலகறிய நாட்டியும் திகழ்ந்த திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், எல்லாருங் காணத் திருமணப்பந்தலிலே இறைவனே ஓர் அந்தணவடிவிற் றோன்றி ஆவணங்காட்டி மணத்தைத் தடுத்து ஈர்த்துச் சென்று திருவெண்ணெய் நல்லூரில் தம்மை ஆட்கொண்டு மறையும் பெரும்பேற்றினைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரையும் குறிப்பியாது. காரைக்கால் அம்மையாரையும் மூர்த்தியாரையும் பிட்டு வாணிச்சியையும் திருவாதவூரர் பொருட்டு நிகழ்ந்த கரிபரித் திருவிளை யாடலையும், இவை போன்ற வேறு சில பழையவற்றையும் மட்டும், சிவநேயம் சிவனடியார் நேயம் மிக்க கல்லாட நூலாசிரியர் குறிப்பிட்டது என்னையென்று அமைதியோடு ஆராய்ந்து காணமாட்டுவார்க்கு, அக் கல்லாட நூலாசிரியர் சுட்டிய சேரலன் சுந்தரமூர்த்திகள் காலத்தவன் அல்லன் என்னும் உண்மை உரம்பெற்று விளங்கித் தோன்றும். அற்றேற், பெரும்பற்றப்புலியூர் நம்பியார் திருவிளை யாடலும் பெரியபுராணமும் பாணபத்திரர் இறைவன்றந்த திருமுகங்கொண்டு சென்றது சேரமான் பெருமாளிடத்தே யாமென்று கூறிய தென்னையெனின்; நம்பியார் திருவிளை யாடல் அச் சேரமன்னனைச் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவன் என்று யாண்டும் ஓதுகின்றிலது அத் திருமுகப் பாசுரத்திலும் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க2 என்று சொல்லப்பட்டதே யன்றிச் சேரமான் பெருமாள் என்றாவது, கழறிற்றறிவார் என்றாவது சொல்லப்படவில்லை. திருமகப் பாசுரத்துள் அவ்வாறு சொல்லப்படாவிடினும், அவ் வரலாற்றினைக் கூறும் திரு விளையாடல்2 ஏழாஞ் செய்யுளில் நிலத்துயிர் கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும் அன்புடைச் சேரமான்காண் என்று நம்பியாராற் சொல்லப் படுதல் என்னை? சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமாளுக்கே கழற்றறிவார் என்னும் பெயர் உரித்தாதல் கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கும் அடியேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையுள் அருளிச்செய்யுமாற்றாற் பெறப்படு கின்றதா லெனின்; பெரும்பற்றப் புலியூர் நம்பி தாங்கூறிய கடவுள் வாழ்த்தில் மாலை, முடிகொள் சுந்தரர் தாள் போற்றி என்று வணக்கங் கூறி யிருத்தலின், அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்ட காலத்தே இருந்தாரென்பது நன்கு பெறப்படும். அங்ஙனம் பிற்பட்ட காலத்திருந்த அவர், பாபத்திரர் காலத்தவரான சேர மானை எடுத்துக் கூறுகின்றுழி, அவ்வரசனும் சுந்தர மூர்த்தி தோழரான சேரமான் பெருமாளும் ஒருவரே போலும் எனச் சிறிது மயங்கியே, திருத்தொண்டத் தொகையுட் போந்த கழறிற்றறிவார் என்னும் பெயரை யெடுத்துக் கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும் என அங்ஙனம் வினைப்பத்து ஓதினார். அவ்வாறு ஓதினும், தமக்கு முன்னிருந்த நூல்களில் அவ்விரண்டு சேரமன்னரையும் ஒருவராக்குவதற்குப் போதிய சான்று காணாமையின் ஐயுற்றுத் திருத்தொண்டைத் தொகையிற் போலக் கழறிற்றறிவார் என்பதனை அம் மன்னர்க்குப் பெயராக உரையாது, கழறுஞ் சொற்கள் அனைத்தையும் அறிந்திரங்கும் என அச்சொற்றொடரை வினைப்படுத்துச் சேரமான் என்னும் பெயர்க்கு அடை மொழியாக்கினார். இவ்வாறு பெரும்பற்றப் புலியூர் நம்பியார் அச் சொற் றொடரைப் பெயராக வுரையாது. ஒரு பெயர்க்கு அடைமொழி யாக்கிக் கூறுதலானும், பாணபத்திரர் காலத்திருந்த சேரமான் சுந்தரமூத்திகட்குத் தோழராய் அவரோடு கைலாயத் திற்கு உடன்சென்ற சேரமான் பெருமாளேயாயின் அச்சிறப்பினை அவர் கூறாதுவிடா ராகலானும் இவ் அடைமொழித் தொடரின்கண் வந்த இரண்டு சொல்லொப்புமைபற்றி அவ் விரண்டு சேரமன்னரும் ஒருவரேயெனத் துணிதல் சிறிதும் பொருந்தாதென்க. அற்றாயினும், முன்னர் எடுத்துக்காட்டிய கல்லாடச் செய்யுட் பகுதியிற் பரிபுரக்கம்பலை இருசெவி யுண்ணுங், குடக்கோச் சேரன் என அச் சேரமன்னற்கு அடைமொழி யாய்ப் போந்த சொற்றொடரே, நாடோறும் இறைவற்கு வழிபாடாற்றுங் காலங்களிலெல்லாம் இறைவன் இயற்றுந் திருக்கூத்தினால் ஒலிக்கும் இறைவன் காற்சிலம்பொலியினைக் கேட்டவர் சேரமான்பெருமாளேயன்றி வேறு பிறர் அல்லர் என்பதனைக் காட்டும். இதற்குப் பெரியபுராணத்தின்கட் காணப்படும் அவர் வரலாறும் சான்றா யிருத்திலின், கல்லாடச் செய்யுளிற் குறிப்பிடப்பட்ட சேரமன்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழரான சேரமான் பெருமாளே யாவரெனின் அதுவும் பொருந்தாது. பெரியபுராணத்தின்கட் கூறப்பட்ட வரலாறுகள் அதற்கு முற்பட்ட நூல்களிற் காணப்படாமை யோடு அவற்றொடு மாறு கொண்டும் நிற்குமாயின் அவை கொள்ளற்பாலன அல்ல. சேரமான் பெருமாள் நாடோறுந் தாம் ஆற்றிய இறைவழிபாட்டு முடிவின்கண் இறைவனார் திருச்சிலம் பொலி கேட்டுவந்த துண்டாயின் அப்பெருஞ் சிறப்பினைப், பெரிய புராணத்திற்கு முற்பட்டு அதற்கு முதல் நூலாய் விளங்கிய நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதி கூறியிருத்தல் வேண்டும்; மற்று அதைப்பற்றிய குறிப்பினை அது சிறியதாயினுங் கூறக்கண்டிலம். அற்றன்று. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருத் தொண்டத் தொகைக்கு வகையாக நம்பியாண்டார் நம்பி திருத் தொண்டர் திருவந்தாதி இயற்றியருளினாராகலிற், சுருக்க நூலாகிய அதன்கண் அது கூறப்படாமைபற்றி இழுக்கில்லை; அந் நூலின் விரிவாக இயற்றப்பட்ட பெரிய புராணத்தின்கண் அவ் வரலாறு காணப்படுதலே மரபாமாலெனின் திருவந்தாதி சுருக்க நூலாயினும், வழிபாட்டு முடிவின்கண் இறைவன் காற்சிலம் பொலியினைக் கேட்டலாகிய பெருஞ்சிறப்புச் சேரமான் பெருமாள் நாயனாருக்கு வாய்த்திருந்ததாயின் அதனைக் கூறாது விடாது; என்னை? சுருக்க நூல்களெல்லாம் இன்றியமையாச் சிறப்புக்களைக் கூறுதலும், அங்ஙனமல்லாத வற்றைக் கூறாது விடுதலுங் கைக்கொண்டு நடத்தலானும், விரிந்த நூல்கள் அச்சிறப்புக்களையும் அவற்றினும் குறைந்த சிறப்புக்களையும் ஒருங்கு விளக்கிச் செல்லலானும் என்பது இறைவன் திருச்சிலம்போசை கேட்குந் தனிப்பெருஞ் சிறப்பு ஏனைச் சிறவாவற்றைப் போல் விடற்பாலதன்றாகலின், அது தன்னைத் திருத்தொண்டர் திருவந்தாதி சேரமான் பெருமாள் வரலாற்றில் எடுத்துரையாது விட்டமை பெரிதுங் கருத்துறற் பாலதாம். அதனால் சேரமான் பெருமாள் நாயனார்க்கு முன்னிருந்தோரான சேரமன்னருள் ஒருவரேதாம் இயற்றும் வழிபாட்டு முடிவின்கண் இறைவன் காற்சிலம்பொலி யினைக் கேட்டவராதல் வேண்டும். அது பற்றியே அக் குறிப்பு ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக் கண்ணதாகிய கல்லாடத் தின்கட் காணப்படுவதாயிற்று; இக்கல்லாடநூல் சுந்தரமூர்த்தி தோழரான சேரமான் பெருமாட்குப் பிற்பட்டதாயின், சுந்தரமூர்த்தி நாயனார்க்குச் சேரமான் பெருமாள் தோழராம் உரிமையினை உரையாது விடாது. அற்றேற், பழைய சேரமன்னருள் அங்ஙனம் இறைவன் திருவடிச் சிலம்போசை கேட்டார் யாவர் எனவும், அது காட்டாக்கால் எமதுரை கொள்ளற்பாலதாமோ எனவும் எதிர்ப்பக்கத்தவர் ஒருவர் வினவினார். பழைய சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை முறையாக வகுத்துக் கூறும் நூல்கள் உளவாயினன்றே அவ்வாறு வினா நிகழ்த்தலாம். எம் முன்னோரோ, வரலாற்று நூல்களின் அருமை தெரிந்து அவற்றை வரைந்துவைக்குங் கடப்பாடு உடையரல்லர். அதனாற் பண்டைக் காலத்திற் செங்கோல் ஓச்சிய அரசர்கள் வரலாறும், அவர் காலத்திருந்த புலவர்கள் வரலாறும், அவரியற்றிய நூல்களின் வரலாறும், அவ்வக்காலத்து மக்களின் நடையுடை நாகரிக வரலாறும் பிறவும் முறையாக உணரப் பெறுகின் றிலேம். பண்டைநாளில் இயற்றப்பட்ட எண்ணிறந்த அருந்தமிழ் நூல்களில் இறந்தனபோக, எஞ்சியிருந்தன வற்றுள்ளும் அச்சியற்றி வெளிப்படுத்தப் பட்டனவற்றின் கணிருந்து அரிது முயன்று திரட்டப்படுங் குறிப்புக்கள் சில பலவற்றைக் கொண்டே பழைய வேந்தர், புலவர்கள், நூல்கள், மக்கள், மக்களின் வழக்கவொழுக்கங்கள் முதலியவற்றைச் சிறிது சிறிதா அறியப் பெறுகின்றோம். இந் நிலைமையில், அங்ஙனம் இறைவன் திருவடிச் சிலம்பொலி கேட்ட பழைய சேரமன்னர் எவர் என வினாதலும், அவரை இன்னார்தாம் எனக் காட்டாவிடின் எமதுரை கொள்ளற்பால தன்றென மொழிதலும் வெறும் போலியேயாம். இறைவனது திருவடிச் சிலம்போசை கேட்ட சேரமன்னர் ஒருவரின் குறிப்புக் கல்லாடத்துக் காணப்படுதலின், அஃது எம்மாற் புதிதாகப் படைத்திட்டுக்கொண்டு சொல்லப்பட்டது. அன்றென அவர் தெளியக் கடவர். இனிச், சேரமான் பெருமாளைத் தவிரச், சிவபிரான் மாட்டுப் பேரன்புடைய சேரமன்னர் வேறு உளரெனக் கூறுவாரைக் காணேம் என எதிர்ப்பக்கத்தவர் ஒருவர்தாம் சேர மன்னர் எல்லார் வரலாறுங் கூறக் கேட்டார்போல் நெகிழ்ந் துரையாடினர். முற்காலத்திருந்த சேரமன்னர்களும் அவர் வரலாறுகளும் பெருக அறியக்கூடாதிருக்கும் இந் நிலையில் இவ்வாறுரை நிகழ்த்தல் பெரியதோர் இழுக்காம். மேலும், சிலப்பதிகார நூலாசிரியரான இளங் கோவடிகளின் தமையனும், புகழோங்கிய வெற்றிவேந்தனும், கற்பின் கிழத்தியாகிய கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்தவனுமான சேரன் செங்குட்டுவன் சிவ பெருமான் திருவருளாற் றோன்றினவ னென்பது நன்கு விளங்கச், செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய் என்று சிலப்பதிகாரம்3 கூறுமாற்றால், இவனைப் பெற்ற சேரலாதன் என்னுஞ் சேரமன்னன் சிவபிரான் றிருவடிக் கண் மெய்யன்புடையவனாதல் இனிது பெறப்படும். இனி, அவ்வாறு பிறந்தருளிய அச்செங்குட்டுவனும் சிவபிரானையன்றி வேறெதனையும் வணங்காதவனென்பது, அவன் வடநாடு நோக்கிச் செல்லுங்கால் அவன் அப் பெருமானை வணங்கினமை கூறும். நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு என்னும் அந் நூலின் அடிகளால்4 தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, ஆடகமாடத் தறிதுயில் அமர்ந்த திருமாலின் சேடத்தைச் சிலர் கொண்டுவந்து கொடுத்து வணங்கச், செங்குட்டுவன் அச் சேடத்தை ஏற்றுத், தன் முடி சிவபிரான் திருவடியைத் தாங்குவதொன்றாகலின் அதனை அதன்கண் அணிதல் ஆகாதெனக் கருதித், தன் றோள்கள்மேல் அணிந்தனன் என்பது தெள்ளிதிற் புலப்பட, ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன் என்று அந்நூலே5 கூறுதலுங் கருத்திற் பதிக்கற்பாற்று. ஆகவே, சேரமான் பெருமாளைத் தவிர அவர்தம் முன்னோரில் எவருஞ் சிவபிரான்மாட்டுப் பேரன்புடைய ரல்லரெனக் கிளக்கும் எதிர்ப்பக்கத்தவர் கூற்றுப் பொருந்தாக் கூற்றாய் ஒழிதல் காண்க. இதுகாறுங் கூறியவாற்றாற், சுந்தரமூர்த்தி தோழரான சேரமான்பெருமாட்கு முன்னிருந்த சிவனடியாரான சேரமன்னர் மற்றொருவரே தாம் ஆற்றும் வழிபாட்டு முடிவிற் சிவபிரான் திருச் சிலம்பொலி கேட்டவராதல் வேண்டு மென்பதூஉம். சுந்தரமூர்த்திகளைக் குறிப்பிடாத கல்லாடம் தான் குறிப்பிட்ட அச் சேரமன்னர் சேரமான்பெருமாள் அல்லரென்பதூஉம் நன்கு பெறப்படும்; பெறப்படவே. அக் கல்லாட நூல் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்டதாகாமல், அவர்க்கு முற்பட்டதாதலுந் தானே பெறப்படும் முற்பட்ட தாகிய கல்லாடநூலிற் காணப்பட்ட பரிபுரக் கம்பலை யிருசெவியுண்ணுங், குடக்கோச் சேரன் என்னுங் குறிப்பினையே பெரியபுராணம் சேரன் என்னும் பெயரொற்றுமை பற்றி மயங்கி அதனைப் பிழைபடத் திரித்தெடுத்துச் சுந்தரமூர்த்திகள் தோழரான சேரமான் பெருமாண்மேல் ஏற்றியுரைப்ப தாயிற்றென்று உணர்ந்து கொள்க. அடிக்குறிப்புகள் 1. Negative evidence. 2. திருமுகங்கொடுத்த திருவிளையாடல். 3. கால்கோட்காதை, 98,99. 4. கால்கோட்காதை, 54-57. 5. கால்கோட்காதை. 61-67 4. சிவனடியார் பலர் திருத்தொண்டத் தொகையிற் கூறப்படாமை இனி, இறைவன் றந்த திருமுகப்பாசுரம் பெற்றுச் சென்ற பாணபத்திரர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்திற்கும் முற்பட்டவராவதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்; திருஞானசம்பந்தப் பெருமான் திருவாலவாயில் அருளிச்செய்த ஆலநீழல் உகந்த என்னுந் திருவியமகப் பதிகத்தில் நக்கமேகுவர் என்னுந் திருவியமகப் பதிகத்தில் நக்கமேகுவர் என்னுஞ் செய்யுளில் தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே என்று பாணபத்திரர் பொருட்டு இறைவன் இசைபாடினமை அறிவுறுத்தருளினார். தாரம் என்பது குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசையுள் முதற்றோன்றும் இசையாகும். இக் குரன் முதல் ஏழினும் முற்றொன்றியது தாரம் என்றார் அடியார்க்கு நல்லாரும்.1 இஃது அவ் வுரைகாரர் எடுத்துக்காட்டிய, தாரத்துள் தோன்றும் உழையுழை உள்தோன்றும் ஒருங் குரல்குரலின் உள்தோன்றிச் - சேரும் இளி உட்டோன்றுந் துத்தத்துள் தோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு1 என்னும் பழம்பாட்டினாலும் நன்கறியப்படும். இத் தாரம் என்னுஞ்சொல் ஆகுபெயராற் சாதாரிப் பண்ணினை உணர்த்தும் என்று யாங் கூறியதனை இடர்ப்படுபொருள் என்று கூறினாரும் உளர். அணுக்கப்பொருளில் வரும் ஆகுபெயர்க்கும், அகன்ற பொருளில்வரும் ஆகுபெயர்க்கும் வேறுபாடு காணும் இலக்கணவறிவு தமக்கு இல்லாமையின், அவர் யாம் உரைத்த பொருளை இடர்ப்படுபொருள் என்றார். அவர் இலக்கணவறிவு நிரம்பப் பெறாதவர் என்பதற்கு அவரது தமிழ்வரலாற்றில் அவர் தாமாக எழுதுவன இலக்கணப் பிழைகள் நிறைந்தன வாயிருத்தலே சான்றாம். அதுகிடக்க. ஒரு சினைப்பொருளின் பெயர் அதன் முதலுக்காகி வருதலும், ஒரு நிறத்தின் பெயர் அந் நிறத்தினையுடைய பொருட்கு ஆகிவருதலும் அணுக்கப் பொருளுடைய ஆகுபெயராம். என்னை? சினையும் அதன் முதலும், பண்பும் பண்பியும் ஒற்றைவிட்டொன்று பிரியாத தற்கிழமைப் பொருள்களா யிருத்தலின். மருக்கொழுந்து என்னும் ஒருறுப்பின் பெயர் அதனையுடைய முழுப் பூண்டிற்கும் பெயர் ஆகிவரும்; நீலம் என்னும் நிறத்தின் பெயர் அதனையுடைய நீலப் பூவுக்கும் பெயர் ஆகிவரும். இங்ஙனமே, ஏழிசையுள் ஒன்றாகிய தாரம் என்பதன் பெயரும் அதனை ஓர் உறுப்பாகவுடைய சாதாரிப்பண் ணாகிய முதலையு முணர்த்துதல் நெருங்கிய தொடர்புடைய ஆகுபெயர்ப் பொருளாகும். இனிக், கங்கையின்கண் வேடச்சேரி, கட்டில் கூப்பிட்டது என்றாற்போல்வனவற்றுட் கங்கை என்பது கங்கைக் கரையினையும், கட்டில் என்பது கட்டிலுள்ளாரையும் உணர்த்துதற்கண். இயற்பெயர்ப் பொருட்கும் ஆகுபெயர்ப் பொருட்கும் அத்துணை நெருக்கமின்மையின் அவை அகன்ற பொருட்கண் வந்த ஆகுபெயராயின. அகன்ற பொருட்கண் வரும் ஆகுபெயரும். ஆக்கியோன் கருத்தை ஒட்டிப் பொருளுரைக்குங் கால் ஒரோவழி இன்றியமையாது வேண்டப்படுவதே யாகும். இவ்வாறு ஆக்கியோன் கருத்துக்கு மாறாகாமற் பொருளுரைக்கும் வழிவரும் ஆகுபெயர்ப் பொருளையுங்கூட இடர்ப்படு பொருளென்று கூறி விடுபவர் தொல்லாசிரியர் நூலுரைகளிற் பயின்றறியாதவரே யாவரென்பதனை நிலைநிறுத்தும். இனித் தாரம் என்பதற்குச் சாதாரிப் பண்ணெனப் பொருள் கூறுதல் இடர்ப்படுபொருளே யாமென்று கொள்வார்க்குச் சாதாரியென்று சிறப்புப் பொருள் கூறாது, தாரமாகிய இசையென்றே பொருள் கொண்டு இறைவன் பாணபத்திரர் பொருட்டு அருளோடு இசையைப் பாடிச் செல்லுத்தினன் என்று நேர்பொருளே கூறினும். அதுவும் இறைவன் இசைபாடினமையையே அறிவிக்கின்றதன்றோ? தாரம் ஏழிசையுள் ஒன்றாகலின் அதற்குச் சாதாரி என்று பொருளுரைப்பினும் அன்றித் தாரமாகிய இசையென்றே பொருளுரைப்பினும் அஃது இசையென்னும் பொருளிற் றீர்ந்து நில்லாமை காண்க. ஆகவே, அஃது இடர்ப்படு பொருளாதல் யாண்டையதென்க. இனித் தாரம் என்பதற்கு எவ்வகையான பொரு ளுரைத்தல் ஆக்கியோன் கருத்துக்கு இயைந்ததா மென்பதனை ஆராய்ந்து காண்பாம். தாரம் என்னும்சொல் தமிழினும் உளது; வடமொழியினும் உளது. திருஞான சம்பந்தர்க்கு முற்பட்ட பழைய தனித்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் தாரம் என்னுஞ் சொல்லுக்குப் பல பண்டம் என்னும் பொருளும், ஏழிசையுள் உரத்த ஒலி என்னும் பொருளுமே காணப் படுகின்றன. இவ்விரண்டும் பொருளிற் பலபண்டம் என்னும் பொருள் வடமொழியில் உள்ள தாரம் என்னுஞ் சொல்லுக்குக் காணப்படாமையின், அப் பொருளை யுணர்த்தும்வழி, அது தனித் தமிழ்ச் சொல்லாதல் பெறுதும். இனி, ஏழிசையுள் உரத்த ஒலியை உணர்த்தும் தாரம் என்னுஞ்சொல் வடமொழிக் கண் உளதாயினும், இசையின் இலக்கணங்க ளெல்லாந் தமிழ் நூல்களிலிருந்தெடுத்தே வடமொழிக்கண் எழுதப்பட்டன வென்று வடமொழிக்கண் முதன் முதல் இயற்றப்பட்ட இசையிலக்கண நூல் கூறுதலின்,2 ஏழிசையில் உரத்த ஒலியையுணர்த்தும் தாரம் என்னுந் தமிழ்ச் சொல்லே வடமொழிக்கண்ணுஞ் சென்ற தென்பது தெளியப்படும்.3 இனி. இச்சொல் உரத்த ஓசையை யுணர்த்துமிடத்தும் ஏழிசையுள் ஒன்றாகிய உரத்த ஓசையை யுணர்த்தி வருதலே பழைய தமிழ்நூல்களிற் காணப்படுகின்ற தல்லாமல், உலகத்தில் நிகழும் ஏனை உரத்த ஒலிகளை உணர்த்துதல் அவற்றிற் காண்கின்றிலம். அவ்வாறாகவும், எதிர்ப்பக்கத்தவர், ‘இறைவன் இடைவெளியில் உரத்த வோசை யெழுப்பி நீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பொற்பலகை இடுவித்ததனை உணர்த்தாதோ? என்று அச் சொல்லுக்கு இவ்வளவு பொருளும் வலிந்து கொண்டார். இசையுள் ஒன்றை உணர்த்தும் அச்சொல் சாதாரிப் பண்ணுக்கு ஆம் என்ற எமதுரைப்பொருளை இடர்ப்படு பொருள் என்று குற்றங் கூறிய இவர், தாரம் என்னுஞ் சொல்லுக்குப் பழைய நூல்களிற் காணப்படாத பொருள் களையெல்லாந் தமக்குத் தோன்றியவாறு புகுத்தித் தம் மனம்போனபடி யுரைக்கும் உரைதான் இடர்ப்பாடில்லாத உரைபோலும்! முதலில் இவர் இச் சொல்லுக்குப் பொதுவான உரத்த ஓசை என்று தாமாகவே ஒரு பொருள் சொல்லிக்கொண்டார்; அதன்பின் அவ் வுரத்த ஓசை வான்வெளியில் இறைவன் எழுப்பின தென்றார்: எதன் பொருட்டு என்பார்க்கு. நீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பொற்பலகை இடுவித்தற் பொருட்டு என்றுஞ் சொல்லிக் கொண்டார். தாரம் உய்த்தது பாணற் கருளொடே. என்னுந் திருஞானசம்பந்தப் பெருமா னருளிய சொற்றொடரிற் போந்த தாரம் உய்த்தது என்பதற்கு இவர் கூறும் இவ்வளவு பொருளும் வலிந்த பொருளோ, இசையைப் பாடியது என்னும் எமதுரை வலிந்த பொருளோ என்று ஒப்பிட்டுக் காணவல்ல சிறிதறிவுடை யார்க்கும் எமதுரையே நேர்பொருளாதல் தெற்றென விளங்கா நிற்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஏறியிருந்து பாடுதற்கு இருக்கையாக இறைவன் பலகை இடுவித்தனன் என்று திருஞானசம்பந்தப் பிள்ளையார் கூறல் வேண்டினாராயின், தட்டும் உய்த்தது பாணற் கருளொடே என்று பாடித் தமது கருத்தை ஐயமற விளங்க வைத்திருப்பர். தட்டு என்னுஞ்சொற் பலகை எனப் பொருள்படுதல், பழைய திவாகரத்துள் தட்டியம் பலகை தட்டுமா வட்டணை எனப் போந்த சூத்திரத்தால் நன்கறியப்படும். தட்டு என்னும் இச் சொல்லைவைத்துக் கூறுதலாற் செய்யுளோசையுஞ் சிதையாது, மோனையுங் கெடாது. இங்ஙனம் எல்லாவாற்றானும் இசைந்து பலகை யெனும் பொருளையும் தெளிவுபெறக் காட்டும் தட்டு என்னுஞ் சொல்லை விடுத்து. இசையை யுணர்த்தும் தாரம் என்னுஞ் சொல்லைவைத்துத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்தமையானே, இறைவன் பாணபத்திரர் பொருட்டு இசைபாடின அருட்டிறத்தைக் குறிப்பித்தலே அவர்தங் கருத்தாதல் தெள்ளிதிற் புலனாம். பாணபத்திரர் பாடிய இசைக்கு உவந்து இறைவன் அவரது வறுமைதீரத் திருமகப்பாசுரங் கொடுத்து அன்பனாகிய பழைய சேரமன்ன னொருவன்பால் விடுத்தருளிய குறிப்பினைத் திருக்கோளிலிப் பதிகத்தில் நாணமுடை வேதியன் என்னுஞ் செய்யுளிற் பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் என்று பிள்ளையார் கூறுதலானும். தார முய்த்தது பாணற் கருளொடே என்புழி அவர் குறிப்பித்ததும் பாணப்பத்திரரை யேயாதல் பெறப்படும். இனித் திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்தும் அவர்க்கு முற்பட்ட காலத்தும் வழங்கிய பொருள்களில், தாரம் என்னுஞ் சொல்லுக்குப் பொருள்காணாது. பொது வான வல்லோசை என்று அதற்குத் தாம் வேண்டியவாறு பொருந்தாப் பொருளுரைத்து, மேலும் பலவற்றை வலிந்து வருவித்து ஆரவாரஞ்செய்த எதிர்ப்பக்கத்தவர் அவ்வளவில் அமையாது. தாரம் என்னும் அச் சொல்லுக்குத் தாம் அகராதியிற் கண்ட பொருள் களையெல்லாம் எடுத்துக்காட்டி, இங்ஙனம் பொருளுரைத்தல் ஆகாதோ? அங்ஙனம் பொருளுரைத்தல் ஆகாதோ? என்று வினா நிகழ்த்துகின்றார். இலக்கண இலக்கிய வரம்பில் நில்லாமலும், ஆக்கியோன் கருத்தை ஒட்டாமலும் எச் சொல்லுக்கு எப்பொருள்தான் கூறலாகாது! இஞ்ஞான்றைத் தமிழ்ப்புலவரிற் பலர் ஆக்கியோன் கருத்தை அளந்து பாராது. அவனியற்றிய செய்யுட்குப் பத்து உரை கூறுவேம். பதினாறுரை கூறுவேம் என்று தந்திறமையை வியந்து கூறுவர்! இவ்வாறு வியந்துரைக்குந் தமிழ்ப் புலவர்க்கும், சரித்திரவுண்மையை ஆராய்ந்து காட்டுவே மெனப் புகுந்து அதற்கு மாறாகப் பொருந்தாவுரை கூறி ஆரவாரம்புரியும் இவர்க்கும் வேறுபாடென்னை? அது நிற்க. தாரம் என்னும் சொல்லுக்கு எல்லை எனவும், பிளவு எனவும் பொருள் உண்டு என்கின்றார் வடமொழியில் தகரவெழுத்துக் குரிய நான்கு ஓசைகளில் மூன்றாம் ஓசையில் நிற்குந் தார என்னும் பெயர்ச்சொல்லுக்கே பிளவு என்னும் பொருளும், நான்காம் ஓசையில் நிற்குந் தார என்னும் பெயருரிச்சொல்லுக்கே எல்லை என்னும் பொருளும் ஆரியத்தில் உளவாம். தமிழில் இதுகாறும் அகராதி எழுதினோர். மொழிநூல்,4 வரலாற்று நூல்5 என்னும் இவற்றின் உணர்வு வாய்ப்பப் பெறாத வராகையால், இப்பொருளில் இச்சொல் தமிழ் மற்று இப்பொருளில் இஃது ஆரியம். இச்சொல் இன்ன காலத்து இப்பொருளில் வழங்கிற்று என்றெல்லாம் அவ்வச் சொற்பொருளுண்மை ஆராய்ந்து காட்டும் அறிவாற்ற லுடையரல்லர்; மற்றுத் தமிழினும் ஆரியத்தினுந் தாம் கண்ட கண்ட பொருள்களை யெல்லாம் தாங் குறித்த சொற்ளுக்குக் கூறி ஏட்டை நிரப்பிவிடும் நீரர். இங்ஙனமாகவே, தாரம் என்னுஞ் சொல்லுக்கும் அகராதிக்காரர் பொருள்களை எழுதி நிரப்பியிருக்கின்றனர்; அதனால் அவருரை கொள்ளற் பாற்றன்று. வடமொழியில் இருவேறு சொற்களாய் வழங்கிய தாரம் என்பதற்கே எல்லை, பிளவு என்னும் பொருள்கள் உளவாம். யாம் ஆராய்ந்து பார்த்த மட்டில் தமிழ்நூல்களில் இச்சொல் இப் பொருள்களில் வழங்குதலைக் கண்டிலம். பழைய நிகண்டு நூல்களாகிய திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி முதலிய வற்றுள்ளும் இச் சொல்லுக்கு இப் பொருள்களைக் காண்கிலம். இம் மூன்றனுள் முற்பட்டதாகிய திவாகர நூலின் காலத்தே இச் சொல்லுக்கு நான்கு பொருள்களே வழங்கின; இதற்குத், தாரம் அரும்பண்டம் வெள்ளி அதன்ஒளி சேரும் ஏழ்நரம்பில் ஓர்நரம்புஞ் செப்பும் என்று அந் நூல் நுவலுமாற்றால் விளங்கும். இந்நான்கு பொருள்களிலும் அரும்பண்டம், என்பதும், ஏழிசையுள் ஒன்று என்பதுமே மிகப் பழைய தனித்தமிழ் நூல்களிற் காணப்படுதலின் அவற்றை முதலிலும் ஈற்றிலும் வைத்து, வெள்ளி, வெள்ளியினொளி என்னும் வேறு இரண்டு பொருள்களும் வடமொழியிலிருந்து வந்தனவாகலின் அவற்றை இடையினும் வைத்து அஃது ஓதுதல் உற்றுநோக்கற்பாலது. மற்றுப், பிங்கலத்தை நூலின் காலத்திலோ இச்சொல்லுக்கு ஏழுபெருள் வழங்கலாயின வென்பது. வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் யாழின் நரம்பும் அரும்பண்டமும வெண்டாதுந் தராவும் நாவுந் தாரம் என்ப என்று அந்நூல் கூறுமாற்றால் விளங்கும் சூடாமணி நிகண்டும். தாரம் வல்லிசை நாவெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப, எனக் கண் என்னும் மற்றொரு புதுப் பொருளுஞ் சேர்த்துக் கூறுகின்றது. இந் நிகண்டு நூல்களி னெல்லாங் காணப்படாத பிளவு, எல்லை என்னும் வடமொழிப் பொருள்களைத் திவாகர காலத்தை யடுத்துவந்த பழந்தமிழ்ச் செல்வராகிய திருஞான சம்பந்தப் பிள்ளையாரது திருப்பாட்டிற் போந்த தாரம் என்னுஞ் சொல்லுக்கு ஏற்றியுரைத்தல் பொருந்துமோ? இச் சொல்லுக்கு இவ் வேறுபொருள்களை ஏற்றுதல் ஒரு சிறிதும் பொருந்தாமையால். இப் போலிப் பொருள்கள் பற்றி எதிர்ப்பக்கத்தவர் உரைத்த ஏனையவும் பொருந்தாப் போலி களாய் ஒழிதல் காண்க. இனி, இறைவன் பலகை இடுவித்தது பாணபத்திரர்க்கே யன்றித், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அன்றென்பதூஉம் ஒரு சிறிது காட்டுதும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருகோளிலி என்னுந் திருக்கோயிலுக்குச் சென்று கட்டளை யிட்டருளிய திருப்பதிகத்துள், நாணமுடை வேதியன் என்னுஞ் செய்யுளிற் பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனக் குறிப்பித்தது இறைவன் பாண பத்திரருக்குத் திருமுகங் கொடுத்ததை யாதல், அவர் ஏறியிருந்து பாடுதற்குப் பலகை யிடுவித்ததையாதல், அல்லது ஒருங்கே அவ்விரண்டையுமாதல் வேண்டும். பாணன் அன்பினால் இசைபாடிய அளவிலே இரங்கிக்கொடுத்தான் என்றதல்லாமற் கொடுத்தது இன்னதென்று கூறாமையாற் பாணபத்திரர்க்குத் திருமுகம் வழங்கியதும் பலகையிடுவித்தது மாகிய இரண் டனையும் ஒருங்கு உய்த்துணர வைத்தலே பிள்ளையார்தந் திருவுளக்கருத்தாம். என்னை? பரிந்தளித்தான் என்னும் வினைக்குச் செயப்படுபொருள் ஒன்றே கூறல் வேண்டினராயின் அதனைக் கிளந்து கூறியிருப்பராகலானும் இறைவன் பாணபத்திரர்க்குப் பரிந்தளித்தன ஒன்றாகாமல் திருமுகமும் பலகையுமாகிய இரண்டாயிருத்தலின் அவ்விரண் டையும் ஆண்டுப் பெற வைத்தற்பொருட்டே இரண்டி லொன்றைக் கூறாது விட்டாராகலானும். சொல் இல்வழி இங்ஙனம் உய்த்துணர்தலே முறையா மென்பது சேனா வரையர் முதலான பழைய உரைகாரர் கருத்தாகலானும் என்க. பாணபத்திரர் மழையில் மிக நனைந்து தமது கையில் ஏந்திய யாழ் ஈரத்தால் இயக்குதற்கு ஆகாதவாறிருந்தும், தாம் சிவபிரான் றிருவடிக்கண் வைத்த அன்பு சிறிதும் மாறாது இசைபாடுதல் கண்டு ஐயன் இரங்கி, நனையாமல் அவர் ஏறியிருந்து பாடுதற்குப் பலகையிடுவித்தானென்றே நம்பியார் திருவிளையாடலும் பிறவுங் கூறாநிற்கும். இஃதிவ்வாறிருப்பப், பெரிய புராணமோ, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவால வாய் சென்று இறைவ னெதிரில் இசைபாட, இறைவன் அவரது யாழை வைத்தற்குப் பொற்பலகை இடுவித்தானென்று கூறுகின்றது. திருஞானசம்பந்தப் பிள்ளையாரோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பலகை இடுவித் தனனோ, அன்றிப் பாணபத்திரர்க்குத்தாம் இறைவன் பலகை யிடுவித்தனனோ என்பது ஆராயற்பாற்று. பெரிய புராணத்துட் கூறப்படும் வரலாறுகளுள் ஐயம் வந்துழி, அதனை அகற்றுதற்கு அதற்கு முந்திய முதனூலாகிய நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி கருவியாயிருந் துவுகின்றது. இந்நூல், திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாற்றினைப் பின்வருமாறு ஒரே செய்யுளாற் கூறுகின்றது:- தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன் நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனை நீள், சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை புனையப் பரனருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே. இச்செய்யுள், திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகங்களை இசையிலிட்டுப்பாடி இறைவனருளைப் பெற்றாரென்று மட்டுஞ் சொல்கின்றதே யல்லாமல், இறைவன் அவர்க்குப் பலகை யிடுவித்தானென்று ஒரு சிறிதாயினுங் கூறுகின்றிலது. அவர்க்குப் பலகையிட்டதுண்டாயின் அதனைப் புகலுதற்கு இச் செய்யுளில் இடம் மிகுதியுமிருக்கின்றது. தனையொப்பரும், தகுப்புகழோன், நினையொப்பரும், சினையொப் பலர் பொழில், என்பர் இப்பூதலத்தே முதலான அடைமொழித் தொடர்களை நீக்கிப் பலகையிட்ட வரலாற்றை எளிதிற் கூறிவிடலாம். அங்ஙனம் ஒருவரலாறு அவர் பொருட்டு நிகழாமையானும், அவரது வரலாறெல்லாம் திருஞான சம்பந்தப் பிள்ளையாரோடிருந்து இசைபாடியதொன்றே யாகலானும், அதனைச் சொல்லுதல் சில சொற்களால் ஆகின்றமையானும், அவ்வாறு அடைமொழிகளை அழகுற நிரப்பிப் பாட்டை முடித்தாரென்பது இவ்வாறு திருத் தொண்டர் திருவந்தாதி யிற் காணப்படாத ஒரு வரலாறு. அதற்குப் பின்வந்த பெரிய புராணத்துள் மட்டுங் காணப் படுமாயின் அது பெரிதும் ஆராய்ந்து நோக்கற் பாலதாம். மேலும், பெரிய புராணத்தின் மட்டுங் காணப்படும் அவ் வரலாற்றுக்கு மாறானதொன்று வேறொரு பழைய நூலிற் காணப்படுமாயின், அவ் விரண்டனையும் நன்காராய்ந்து எது கைக்கொள்ளற் பாலதோ அதனையே கொள்ளல் வேண்டும். ஆகையால், பாணபத்திரர்க்குப் பலகையிட்டதனையும், திருநீலகண்டர்க்குப் பலகையிட்ட தனையும் ஒத்து நோக்குவோம்: மதுரையிற் பாணபத்திரர் செல்வவளத்தாற் சிறந்து வாழ்தல்கண்டு, அவர்க்கு உறவினரான ஏனைப் பாணரெல்லாம் அவர்மேற் பொறாமை கொண்டு அவரை வெறுப்ப, அதுகண்ட இறைவன் பாணபத்திரர்க்குள்ள பேரன்பைப் புலப்படுத்துவான் வேண்டிப், பெருங் காற்றோடு கூடிய பெருமழையினைப் பெய்விக்க, அதற்குப் பின்வாங்காது நள்ளிருளினுங் காலாற் றடவிக்கொண்டு கோயிலிற் சென்று, இறைவனெதிரே வெள்ளத்தினும் நின்றபடியாய்ப் பாணபத்திரர் யாழினை இயக்கி இசைபாட, அது கண்டு ஐயன் இரங்கி, அவர் ஏறியிருந்து பாடுதற்கு ஓர் உயர்ந்த பொற்பலகை இடுவிக்க, அவர் அதன்மேல் ஏறியிருந்து பாடினார். அவர்தம் உறவினரும் அவரது பேரன்பின் பெருக்கினயும், அவர்க்கு இறைவன் அருளிய திறத்தினையுங் கண்டு பொறாமை நீங்கினாரெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற் புராணங் கூறாநிற்கும். மற்றுப் பெரிய புராணமோ, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவாலவாய் சேர்ந்து, தாம் பாணர்குலத்திற் பிறந்தமை பற்றிக் கோயிலினுட் செல்லப்பெறாமல் வாயிலில் நின்றபடியே தமது யாழினை வீக்கிச், சிவபிரான் அடியார்க்குச் செய்த அருட்டிறங் களையெல்லாம் விரித்துப் பண்களாக்கி, அவ் வியாழில் இட்டு உள்ளங் குழைந்து குழைந்து உருகிப் பாடினார். அவர்தம் அன்பின் பெருக்கை இறைவன் புலப்படுத்துதல் கருதி, அற்றைநள்ளிரவில் தம் தொண்டர்கட்குக் கனவிற் றோன்றி, யாழ்ப்பாணரைக் கோயிலினுள்ளே புகுத்துக என்று ஏவத் தொண்டரெல்லாரும் விழித்தெழுந்து, திருநீல கண்ட யாழ்ப் பாணரின் பெருமையுணர்ந்து, மற்றைநாள் அவரைக் கோயிலினுள்ளே அழைத்துச் சென்று இறைவன் திருமுன்னர் விடுத்தனர். பாணரும் திருமுன்பிருந்து இறைவன் அருட்பாங்கு களை யாழிலிட்டு நெஞ்சம் நெக்குருகிப் பாடப், பாணர்பாடும் அழகிய யாழ் நிலத்தின்மீதிருந்தால் ஈரந்தாக்கிக் கட்டு அழியும்; ஆதலால், அதனை வைத்தற்கு ஒரு பொற்பலகை இடுமின்!என்று வான் வெளியில் ஓர் ஓசை எழத் தொண்டரெல்லாரும் அங்ஙனமே அதற்கொரு பொற்பலகை இட்டனரென்கின்றது. இவ்விரண்டு வரலாறுகளுட் பாணபத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்தமைக்கே பொருத்தமான ஏதுக் காணப் படுகின்றது. பாணபத்திரர்மேற் பொறாமை கொண்டு, அவர் இறைவன்மேல் வைத்த அன்பின் பெருக்கை அறியாமல் இகழ்ந்து வந்த மற்றைப் பாணர்களுக்கு அவரது அன்பின் மிகுதியைப் புலப்படுத்துதல் வேண்டியே இறைவன் பெருங் காற்றோடு கூடிய பெருமழையைப் பெய்வித்தனன். பகற்பொழுதே யன்றி இராப் பொழுதினும் இறைவன் திருக்கோயிலின் எதிரே சென்று இசைபாடுதலை ஓர் அன்பின் கடப்பாடாய்க் கொண்டொழுகிய பாணபத்திரர் அம் மழையினை ஒரு பொருட்படுத்தாது. அம் மழைநா ளிரவினும் நனைந்தபடியாய் நின்றே இறைவன் எதிரிற் பாடினர். அதுகண்டு இறைவன் இரங்கி, அவரும் அவரது யாழும் நனையாமைப் பொருட்டே, ஒருசிறு குடில்போல் மேலுங் கீழும் மறைப்பாகச் செய்யப்பட்ட பொன்னிறமான ஒரு பலகை இடுவித்தான். மற்றுத் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கோ அத்தகைய பகைவர் இலர். இறைவன் இவரது அன்பைப் புலப்படுத்தும் பொருட்டுச் செய்ததெல்லாம், தம் தொண்டர்தங் கனவிற் றோன்றி, யாழ்ப்பாணரைக் கோயிலினுள்ளே புகுத்துக! என்று அருளிச் செய்த தொன்றேயாம். தொண்டரும் அவரைக் கோயிலின் உள்ளே அழைத்துச் சென்றுவிட யாழ்ப்பாணர் தமது வழக்கம் போல் அங்கிருந்து இறைவன் புகழ்களை யாழிலிட்டுப் பாடினர். அப்போது மழை பெய்ததென்று ஏதுஞ் சொல்லப்படவில்லை. மேலும், யாழ்ப்பாணர் கோயிலினுள்ளே யிருந்து பாடினமையால், மழை பெய்தாலும் அதனால் அவர் இடர்ப்பட்டிரார். அங்ஙனமிருக்க, நிலத்தின் ஈரம்தாக்கி அவரது யாழ் கட்டுவிட்டுப் போமென்று இறைவன் பொற்பலகை இடுவித்தானென்பது யாங்ஙனம் பொருந்தும்? அற்றன்று, மழை பெய்யவில்லை யாயினும், நிலததின்மேல் வைக்கப்பட்ட அவரது யாழ் அந் நிலத்தின் குளிர்ச்சி தாக்கிக் கட்டழியுமென்று அங்ஙனம் பொற்பலகை இடுவித்தான் என்னாமோவெனின்; என்னாம்; நிலத்தின்கண் உள்ள குளிர்ச்சி யாழின்கட்டை யழிக்க வல்ல அத்துணை ஆற்றலுடையதன் றாகலானும். அங்ஙனம் அழிக்க வல்லதாயின் இஞ்ஞான்றும் நிலத்தின் மேல் வைத்து இயக்கப்படும் வினையும் அதுபோலவே அதனாற் கட்டழிக்கப்படுதல் வேண்டுமாகவும் அவ்வாறு நிகழக் காணாமையானும், நீலகண்ட யாழ்ப்பாணர் இதற்கு முன்னெல்லாம் தமது யாழை நிலத்தின்மேல் வைத்துப்பாடி வந்திருக்க அப்போதெல்லாம் நிலத்தட்பத்தாற் கட்டுநெகிழாத அவ் யாழ் இப்போது மட்டும் அதனாற் கட்டுவிடுமெனக் கருதல் பொருந்தாமையானும் வெப்பத்தால் ஒன்றன்கட்டு நெகிழ்க காண்டுமே யன்றித் தட்பத்தால் அது நெகிழக் காணாமை யோடு அதற்கு மாறான கட்டின் இறுக்கமே நிகழக் காண்டலானும், நில ஈரம் படாமைப் பொருட்டுப் பலகை இடுவித்தான் என்னும் இவ் வரலாறு ஒரு சிறிதும் பொருந்தாப் பொய்யுரையாமெனவே புலனாகின்றது. ஆகவே, திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடு வித்ததாகக் கூறும் பெரியபுராணச் செய்யுட்கள் இரண்டும், பாணபத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இட்டாற்போற் றிருநீலகண்ட யாழ்ப் பாணர்க்கும் இட்டான் எனக் கூறவிழைந்த எவராலோ மாற்றிச் சேர்த்துவிடப்பட்டனவா மல்லது, ஆராய்ச்சியில் வல்ல அருளாளரான ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டனவல்ல வென்க. இதனாலன்றோ, நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த திருத்தொண்டர் திருவந்தாதி திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு கூறுகின்றுழி அவர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாக ஏதும் உரைக்கின்றிலது. பாணபத்திரர் கோயில் வாயிலின் புறத்தே இராப்பொழுதிற் பெருமழையினுங் காற்றினும் வருந்தியபடியாய் அன்பின் மாறாது இசை பாடுதலைக் கண்டு இறைவன் இரங்கிப் பலகை யளித்ததனைப் பரிந்தளித்தான் என்பதோ, அவ்வாறு மழையினுங் காற்றினும் வருந்துதலின்றிக் கோயிலினுள்ளேயிருந்து இசைபாடிய திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் அருளியதைப் பரிந்தளித்தான் என்பதோ என்று தமிழறிவு சிறிதுடை யாரைக் கேட்பினும், அவர், பரிந்து அளித்தல் அல்லது இரங்கிக் கொடுத்தல் என்னும் வினை, மழையினும் இடியினுங் காற்றினும் இருளினும் அன்பின் மாறாது நின்று பாடிய பாணபத்திரர்க்குப் பலகையிட்டதனுக்கே பொருத்தமுடைத்தா மென அறிவுறுத்துவர். அதுவேயுமன்றிப் பாணபத்திரர் வறுமையால் மிக வருந்தினமை கண்டு இறைவன் அவர்க்கு இரங்கித் திரு முகங் கொடுத்துச் சேரமன்னன்பால் விடுத்தமையினையும் உட் கொண்டே திருஞானசம்பந்தபெருமான் பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் என்று அருளிச் செய்தனராகலின், வறுமையான் அங்ஙனம் நலிவுறாத திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அருள்செய்த தனைப் பரிந் தளித்தான் எனக் கூறினாரென்றல், சொற்களின் ஆற்றலறிந்து பொருள்கூற மாட்டாதார் கூற்றேயா மென்க. இன்னுந் தாரம் உய்த்தது பாணற் கருளொடே எனவும், பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனவும் பிள்ளையார் இருகாற் குறிப்பிட்டது பாணபத்திரரையே யாமென்பதற்கு. அவர் வெய்யவன் பல்லுகுத்தது என்னந் திருவாலவாய்த் திருச்செய்யுளில் ஆலவாய் அரன் கையது வீணையே என்று அருளிச் செய்து இறைவன் பாணபத்திரர் பொருட்டு யாழ்தாங்கிச் சாதாரியிசை பாடினதனைக் குறிப்பித்தமையே சான்றாம். இறைவன் பாணபத்திரர்க்காக இசைபாடச் சென்றக்கால் யாழ் ஒன்று கொண்டு சென்றானென்பது, பழையதோர் பொல்லம் பொத்திய பத்தர்யாழ்க் கோல்தோள் உழையதாக என்னும் பரஞ்சோதி முனிவர் பாட்டானும்.6 இசை பாடுங்கால் அவ் யாழை இயக்கியே பாடினனென்பது குண்டுநீர் வறந்திட்டனன் நெடுங்கொடிக் குறுங்காய்ப் பத்தர்த் தண்டுநீள் நிறத்த நல்யாழ் இடந் தழீஇத் தெறித்து என்று மீண்டும் அவரே கூறினமை யானும்7 இனிது பெறப்படும். இங்ஙனமெல்லாம், இறைவன் பாணபத்திரர்க்குப் பொற்பலகை இடு வித்தமைக்கு ஏற்புடைய ஏதுக்கள் உளவாகத் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பலகை இடுவித்தமைக்கோ அத்தகைய ஏதுக்கள் இலவாதலை ஒப்பவைத்து நோக்க வல்லார்க்குப் பாணபத்திரர்க்குப் பலகையிட்ட வரலாறே பொருத்த முடைத்தா மென்பதூஉம், நீலகண்ட யாழ்பாணர்க்குப் பலகை யிட்டிடதாகச் சொல்லும் வரலாறு பொருத்த மின்றாய்ப் பாணர் என்னும் பெயரொற்றுமை பற்றிப் பாணபத்திரர்க்குரியதனை அவர்க்குப் பின்னிருந்த நீலகண்ட யாழ்ப்பாணர்மேல் ஏற்றிப் பிறராற் கற்பித்துச் சேர்க்கப்பட்டதா மென்பதூஉம் நன்கு விளங்கும். எனவே, தாரமுய்த்தது பாணற் கருளொடே எனவும். பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனவும், ஆலவாயான்கை யதுவீணையே எனவுந் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்தவை யெல்லாம் அவர்தங் காலத்திற்கு முன்னிருந்த பாணபத்திரர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களையே குறிப்பனவாமல்லது தங்காலத்துத் தம்மோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு வேறுவகையாற் காட்டிய அருட்டிறங்களை அல்லவாமென்பது கடைப்பிடிக்க இப் பாணபத்திரர், திருஞானசம்பந்தருக்கு முற்பட்டவ ராதலோடு, மாணிக்க வாசகப் பெருமானுக்கும் முற்பட்டவராவர்; அதனாலன்றோ அடிகள் திருவாசகத்தில்.8 இன்னிசை விணையில் இசைந்தோன் காண்க! அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க! என்று அருளிச்செய்தனர். இனிப், பாணபத்திரர் பெரும்பாலும் பத்திரர் எனவும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர்9 எனவும் வழங்கப் படுவரென எதிர்ப்பக்கத்தவர் கூறினர். இவர் தமது கூற்றுக்கு மேற்கோள் காட்டாமையின், அது பொய்யுரையாதல் தானே பெறப்படும். மற்றுக் கல்லாடத்தின்கண் தென்றிசைப் பாணன் அடிமை யான் எனவும், அன்புருத்தரித்த இன்பிசைப் பாணன் எனவும், பாணபத்திரரே அங்ஙனம் பாணன்10 என்னுஞ் சொல்லால் வழங்கப்படுதல் காண்க. இனி, அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் திருஞானசம்பந்தப் பெருமான் தமது பதிகத்துட் புகழ்ந்துபாடாது. பாண பத்திரரைப் பாடினாரென்றல் யாங்ஙனம் பொருந்தும்? என்று அவ்வெதிர்ப்பக்கத்தவர் பொருந்தாப் போலிவினா ஒன்று நிகழ்த்தினார். நாயன்மார் அறுபத்துமூவர் என்னுந் தொகை, சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகை அருளிச் செய்தபின் னெழுந்ததே யல்லாமல், அவர்க்கு முற்பட்ட திருஞானசம்பந்தர் காலத்தது அன்றென்பதனை அவர் மறந்தார்போலும்! அற்றேற், சுந்தரமூர்த்திகள் பாணபத்திரரை எடுத்து ஓதாமை யென்னை யெனின்; சைவசமயாசிரியர் மூவரும் பத்து அல்லது பதினொரு செய்யுட்கள் அடங்கிய பதிகங்களே அருளிச்செய்யுங் கடப்பாடுடையர்; அப்பர் அருளிய சித்தத்தொகைத் திருக்குறுந்தொகையைத் தவிர ஏனையவெல்லாம் பெரும்பாலும் பதினொரு செய்யுட்களுள் அடங்குவனவேயாம். ஒருசிலவற்றில் மட்டும் பன்னிரண்டு செய்யுட்கள் உள்ளன. சுந்தரமூர்த்திகள் அருளிச் செய்த திருத்தொண்டத்தொகைப் பதிகம் பதினொரு செய்யுட்களே யுடையது. இவற்றுட் பத்துச் செய்யுட்களுள் அடங்கும் அளவே தனியடியார்களைக் கூறிக் கூறாதுவிட்ட அடியார் களை யெல்லாம் ஒருங்கு தொகுத்து அடக்குதற்குப் பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கும் அடியோன் என்னுஞ் செய்யு ளொன்றும் அவர் அருளிச்செய்தார். தனியடியாரைக் கூறும் பத்துச் செய்யுட்களில் அடங்காமையாலன்றோ, நக்கீரர். இடைக்காடர், கபிலர், உருத்திரசன்மர். வரகுணபாண்டியர். கல்லாடர். ஔவையார் முதலான அடியார் பற்பலர் மொழியாது விடப்பட்டனர். சுந்தரமூர்த்திகள் தமக்கு முன்னிருந்த அடியார் எல்லாரையுந் தனித்தனியே கூறுவேமெனப் புகுந்து நூற்றுக் கணக்கான செய்யுட்கள் அருளிச்செய்திருந்தனராயின், அவர் ஏன் இந்த அடியாரைச் சொல்லவில்லை? அந்த அடியாரைச் சொல்ல வில்லை? என்று வினா நிகழ்த்தலாம். மற்று அவர் அருளிச் செய்யப் புகுந்த தனியடியார் செய்யுட்களெல்லாம் பத்தேயாகலான். இவற்றுள் ஏனைப் பலர் ஓதப்படாமை என்னையென வினாதல். பொருளுண்மையறியாக் குறை பாடாய் முடியுமென்க. இனித், திருவியமகத்தினுள்ளுந் திருநீலகண்டப் பாணர்க் கருளிய திறமும் போற்றி எனப் பெரிய புராணத்திற் காணப்படுஞ் செய்யுள் இவ்வரலாற்று ண்மையறியாத பின்னையோரால் எழுதிச் சேர்க்கப் பட்டதேயாம். இங்ஙனமே வரலாற்றுண்மைக்கு மாறான செய்யுள்கள் பற்பல பின்னையோரால் எழுதிப் பெரிய புராணத்தின்கட் சேர்க்கப்பட்டமையும். அச் செய்யுட்கள் ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டனவாதல் சொல்லாமையும் சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் எமது ஆராய்ச்சி யுரையில் தக்க சான்றுகளோடு விளக்கியிருக்கின்றேம். ஆகவே, பாணபத்திரரைச் சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையுள் எடுத்தோதாமையால், சுந்தரமூர்த்திகட்கு முன்னிருந்த திருஞானசம்பந்தப் பெருமானும் தாரமுய்த்தது பாணற் கருளொடே. பாணனிசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான் என்பனவற்றுட் பாணபத்திரரைக் குறித்துச் சொல்லியிரார் என வழக்குப்பேசுதல் ஆ! எவ்வளவு முறை யுள்ளதா யிருக்கின்றது! முன்னுள்ளோரான திருஞான சம்பந்தப் பிள்ளையார் ஒருவரைக் குறியாது விட்டனராயின், பின்வந்தோரான சுந்தரமூர்த்திகளும் பிள்ளையாரைப் பின்பற்றி அவரைக் குறியாது விட்டனரெனப் புகலுதல் ஒருவாறு பொருந்தும். மற்றுப் பின்வந்தோரான சுந்தர மூர்த்திகள் சொல்லாது விட்டமையால், அவர்க்கு முன்னிருந்த திருஞானசம்பந்தரும் அவரைச் சொல்லாது விட்டனரென்பது யாங்ஙனம் பொருந்தும்? இன்னோரன்ன மயக்கவுரைகள் வழக்கு முறையாகா வென்றுணர்க. எனவே, மேற்காட்டிய சொற்றொடர்களிற் பிள்ளையார் குறிப்பிட்டது பாண பத்திரரையே யாதல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெற்றென விளங்கா நிற்கும் என்றிதுகாறும் விளக்கியவாற்றால், திருஞானசம்பந்தப் பிள்ளையார் குறிப்பிட்ட பாணபத்திரர், சுந்தரமூர்த்திகள் தோழரான சேரமான் பெருமாள் நாயனார் காலத்தவராதல் செல்லாமை பெறப்பட்டது. இனிப், பாணபத்திரரைக் குறிப்பிட்ட கல்லாடனார், எல்லாம் ஓதாதுணர்ந்து பிள்ளைமைக்காலத்தே பேரருளாளராய் வயங்கிய திருஞானசம்பந்தப் பெருமானையும் அப்பரையுங் குறிப்பிடாமை யால், அவர் இவ்விருவர்க்கு முன்னும் பாணபத்திரர்க்குப் பின்னும் இருந்தாராதலும் தானே பெறப்படும். பெறப்படவே, கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதி முதலிருந்த அப்பர்க்குக் குறைந்தது ஐம்பதாண்டுகள் முற்பட்ட காலத்தேதான் ஆசிரியர் கல்லாடனார் கல்லாடம் என்னும் அருந்தமிழ் நூலை ஆக்கினாராதல் வேண்டும். அதனாற் கல்லாடம்கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் இயற்றப்பட்டதொரு நூலாதல் தேற்றமாம். அடிக்குறிப்புகள் 1. சிலப்பதிகாரம் வேனிற்காதை 32. 2. இற்றைக்கு ஆயிரத்து நானூறாண்டின் முன் வடமொழியில் இசைநூல் இயற்றிய பரதரும். அறுநூற்றெண்ப தாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்கதேவரும் தமிழிசையிலிருந்தெடுத்தே வடமொழிக்கண் இசை வகுக்கப்பட்டதெனக் கூறினாரென்பர் இவ்வாராய்ச்சிவல்ல விருதைச் சிவஞானயோகிகள். 3. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கட் சென்ற உண்மை ஆபிரகாம்பண்டிதர் மிகவிரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்தசாகரம் என்னும் இசைத்தமிழ் நூலில் நன்கு விளக்கிக்காட்டப்பட்டிருக்கின்றது. 4. Philology 5. Historical Science 6. விறகுவிற்ற படலம் 13 7. விறகுவிற்ற படலம் 27 8. திருவண்டப்பகுதி 35,36 9. கல்லாடம் 44 10. கல்லாடம் 15 5. திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை இனிப், பா வகையாலும் திருவாசகம் கல்லாடம் என்பன அப்பர் சம்பந்தர்க்கு முற்பட்ட காலத்தனவாதல் காட்டுதும். செந்தமிழ் மொழிக்குப் பழைமையாக உரிய பாக்கள் அகவலும் வெண்பாவுங் கலியும் வஞ்சியுமென நான்கேயாம் (தொல்காப்பியம், செய்யுளியல், 81,82,83,84). இவற்றுள்ளும் அகவற்பாவே மிகச் சிறந்ததாம். அதனானன்றே அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பத்துப்பாட்டு, சிலப்பதி காரம், மணிமேகலை, பெருங்கதை முதலான பழைய நூல்களெல்லாம் பெரும்பான்மையும் அகவற் பாவினாலேயே ஆக்கப் படுவவாயின; அதனானன்றே தொல்காப்பியத்தும் அகவற்பாவே முன் வைத்துரைக்கப் பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கம்முதல் தமிழ் நாட்டின்கண் தொகுதி தொகுதியாய் வந்து புகுந்த பௌத்தர் சமணரின் வழியே தமிழின் கண் வடமொழிக் கலப்பு நேர்வதாயிற்று. அக் கலப்பினால், அகவற்பாவில் நூலெழுதும் பழக்கம் வரவரக் குறையக் கலிப்பாவினின்று கட்டளைக் கலித்துறை என்னும் ஒரு புதிய பாவும் அதிலிருந்து விருத்தமும், அகவற்பாவினின்று ஆசிரிய விருத்தங்கள் பலவுந் தமிழ்ப் புலவர்களால் உண்டாக்கப்பட்டன. கட்டளைக் கலித்துறை; கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம் முதலிய பாக்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய தமிழ் நூல்களுள் யாண்டுங் காணப்படாமை பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதாகும். கட்டளைக் கலித்துறை முதலான இப் புதிய பாக்களின் இலக்கணங்களும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, முதலான இடைக்காலச் செய்யுளிலக்கணங்களிற் காணப் படுதல் போலத், தொல்காப்பியத்தின்கட் காணப்படா மையும் பெரிதும் நினைவுகூரற்பாலதாம். இஃதொன்றே தொல் காப்பியம் இவற்றிற்கெல்லாம் முற்பட்ட மிகப் பழைய நூலாதலைத் தெரிக்கும். அகவற்பாக்களாலும் கலிப்பாக் களாலும் ஆக்கப்பட்ட சிலப்பதிகாரம் என்னும் உயர்ந்த அருந்தமிழ் நூலை ஆறு ஒன்பது பத்துப் பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் இயற்றப் பட்டதென்றும், தொல்காப்பியம் நான்காம் நூற்றாண்டின் கண் இயற்றப் பட்ட தென்றும், தமக்குத் தோன்றிய வாறெல்லாம் எளிதாகக் கூறினாரும் உளர். பழைய தமிழ்ச் செய்யுள் வழக்கும். சொல்வழக்கும், புலனெறிவழக்கும் ஆய்ந்துணர்ந்தனராயின் அவரெல்லாம் அங்ஙனம் பிழைபட உரையார்; அவை யுணரப் பெறாமையோடு, வடமொழி நூல்களின் தொன்மையை உயர்த்தித் தமிழ் நூல்களின் தொன்மையைக் குறைத்துவிடல் வேண்டுமென்னும் பேரவாவும் உடைய அவர் தமிழை இழித்ததற்கு யாதுதான் சொல்லார்! அவர் திறம் நிற்க. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னே துவங்கி இன்றுகாறும் இயற்றப்பட்டுவருந் தமிழ்ச் செய்யுள் நூல்களெல்லாம் ஆயிரத்திற்குத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது விழுக்காடு விருத்தப் பாக்களாலும், சிற்சில கட்டளைக் கலித்துறை யாலும் இயற்றப்பட்டு வருதல் எல்லார்க்குந் தெரிந்த தொன்றாம்; இவற்றினிடையிற் பிறந்தனவாயிற், சிலப்பதிகாரத் துள் இப் பெற்றிப்பட்ட பாக்கள் ஒருசிறிதுங் காணப்படா மையும். இப் பாக்களைப்பற்றிய இலக்கணங்களும் அங்ஙனமே தொல்காப்பியத் துட் காணப்படாமையும் என்னையென்று நடுவுநின்று நோக்கவல்ல சான்றோர்க்குச் சிலப்பதிகாரமும், தொல்காப்பியமும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்றொட்டே உள்ள நூல்களாதல் நன்குவிளங்கும். இனிக், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு துவங்கித் தமிழின்கட் புதியனவாய்த் தோன்றிய கட்டளைக் கலித்துறையும் அதன் வழியே பிறந்த விருத்தங்களும், அம் மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் இயற்றப்பட்ட நூல்களில் மெல்ல மெல்லப் புகுந்து ஒரு முந்நூறாண்டுகள் வரையிற் பழைய அகவற்பா வெண்பா கலிப்பா என்பவற்றோடு போராடி, அவற்றை முழுதுந் துரத்திவிட மாட்டாமையிற் சிற்சில நூல்களில் அவற்றோடு உடனிருந்தும். தமிழ்ப்பற்று மிகவுடைய சிலரால் இயற்றப்பட்ட வேறுசில நூல்களிற் பழைய பாக்களே முழுதும் இடம்பெற்று நிற்கத் தாம் மற்றுஞ் சிலவற்றிற் குடி புகுந்தும் இவ்வாறெல்லாம் ஆறாம் நூற்றாண்டு வரையில் அல்லற்பட்டுக், கடைப்படியாக ஆறாம் நூற்றாண்டுமுதற் சைவசமயக் கிளர்ச்சியின் பேருதவி கொண்டு பழைய தமிழ்ப்பாக்களை முற்றும் ஒட்டிப் பின்னெழுந்த நூல் களிலெல்லாந் தாமாகவேயிருக்க இடம்பெற்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டுவரையில் இயற்றப்பட்ட நூல்களிற் புதிய கட்டளைக் கலித்துறையும் விருத்தமும் பழைய தமிழ்ப் பாக்களாகி அகவல் வெண்பா கலி என்பவற்றோடு விரவி. அவற்றோடு தாமும் இருக்க இடம் பெற்றது முதன்முதல் திருவாசகம் ஒன்றிலேதான். திருவாசகம் பழைய தமிழ்ச் செய்யுள் வழக்கையும் பண்டைச் சொற்பொருட் புலனெறி வழக்கையும் பெரும்பான்மையுந் தழுவி இடையிடையே புதிது புகுந்த பாவகைகளையும் சொற்பொருள்களையும் ஏற்று நிற்கின்றது. மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த மற்றொரு நூலாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் பண்டைத் தமிழ்ப் புலனெறி வழக்கை முற்றுந் தழுவிப், பாவகையில் மட்டும் புதிதுபுகுந்த கட்டளைக் கலித்துறையால் ஆக்கப் பட்டிருக்கின்றது. இனித், திருவாசகத்திற் பழைமையும் புதுமையும் ஒருங்கு விரவிநிற்றலைச் சிறிது காட்டுதும். திருவாசகத்தின் முதற்செய்யுள் பழந்தமிழ்ப் பாவாகிய கலிவெண்பா வால் ஆக்கப்பட்டிருக்கின்றது. அதற்குப் பின்னுள்ள மூன்று செய்யுட்களும், பத்துப்பாட்டுக்களிலுள்ள அகவற்பாக் களைப்போல் நீண்ட அகவற்பாக்களால் ஆக்கப் பட்டிருக்கின்றன. முதற் கணுள்ள இந் நான்குபாக்களும் சொன்னடையிலும் பொருளமைப்பிலும் பத்துப்பாட்டுகளை ஒத்திருக்கின்றன. அவற்றுள் திருவண்டப்பகுதியிற் போந்த ஒரு பகுதியை ஈண்டெடுத்துக் காட்டுகின்றோம்: பாமர னந்தப் பழங்கடலதுவே கருமா முகிலிற் றோன்றித் திருவார் பெருந்துறை வரையி லேறித் திருத்தகு மின்னொளி திசைதிசை வரிய ஐம்புலப் பந்தனை வாளர விரிய வெந்துயர்க் கோடை மாத்தலை காப்ப நீடெழிற் றோன்றி வானொளி மிளிர எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட எஞ்சா வின்னருள் நுண்டுளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட வரையு றக் கேதக் குட்டங் கையற வோங்கி இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன, ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித் தூழூழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்பறித் தெழுந் துருவ வருணீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட வுழவர் ஆரத் தந்த அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க! கார்கால நிகழ்ச்சியினைக் கூறும் இத் திருவாசகச் செய்யுட் பகுதியை, அங்ஙனமே கார்கால நிகழ்ச்சியைக் கூறும் முல்லைப் பாட்டின் பகுதியோடு ஒப்பிட்டு நோக்குக - அப்பகுதி வருமாறு: இடஞ்சிறத் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி இன்ப விமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள் அஞ்செவி நிறைய ஆலின வென்றுபிறர் வேண்டுபுலங் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கான நந்திய செந்திலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் றிரிமருப் பிரலையொடு மடமான் உகள எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர் வினைவிளக்கு நெடுந்தேர் பூண்ட மாவே. பத்துப்பாட்டுக்களில் ஒன்றான முல்லைப்பாட்டின் பகுதியாகிய இதற்கும், மேலெடுத்துக் காட்டிய திருவாசகச் செய்யுட் பகுதிக்கும் வேறுபாடு மிகுந்திலாமை தமிழ்ச் செய்யுள் வழக்கில் நன்கு பயின்றார்க்கெல்லாந் தெள்ளிதிற் புலனாம். இவை யிரண்டிற்குமுள்ள வேறு பாடெல்லாம் திருவாசகத் தில் வடசொற்கள் சிறிது கூடக் கலக்க இயற்கைப் பொருள் களோடு சைவசமயப் பொருள்கள் ஊடுருவி மிளிர்தலும் முல்லைப் பாட்டு பகுதியில் வடசொற்கள் மிகச் சிலவாய்க் கலக்க இயற்கைப்பொரு ணிகழ்ச்சிகள் மட்டும் விளங்கித் தோன்றுதலுமே யாம். இத் திருவாசகப் பகுதி முப்பது வரிகளிலும் உள்ள நூற்றெழுபத்து மூன்று சொற்களில் நூற்று ஐம்பத்தாறு சொற்கள் செந்தமிழ்ச் சொற்கள் ஏனைப் பதினேழும் வடசொற்கள்; மற்று முல்லைப்பாட்டின் பகுதி பதினெட் டடிகளில் உள்ள நூறுசொற்களில் தொண்ணூற்றெட்டுச் செந்தமிழ்ச் சொற்கள். இரண்டு மட்டுமே வடசொற்கள். ஆகவே, திருவாசகத்தில் நூற்றுக்குப் பத்து விழுக்காடும் வடசொற்கள் விரவியிருத்தல் இச்சிறு பகுதிகளைக் கொண்டு ஒருவாறு துணியப்படும். ஆனாற், சமயப் பொருள் கலவாத திருவாசகப் பகுதிகள் சிலவற்றில் நூற்றுக்கு இரண்டு மூன்று வடசொற்களும், வேறு சிலவற்றில் முந்நூற்றுக்கு ஒரு வடசொல்லும் காணப்படு கின்றன. ஆகவே, திருவாசகம் முழுதும் உள்ள சொற்களை எண்ணிப் பார்க்க முதன்மை யாயுள்ளன இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம்; இவற்றுள் முந்நூற்று எழுபத்துமூன்று வடசொற்கள் இவற்றை வகுத்துப் பார்த்தால் நூறுசொற்கள் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று தமிழ்ச் சொற்களும், மற்றைய எட்டு அல்லது ஏழு வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே, திருவாசகத்தில் நூற்றுக்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து விரவலாயின வென்பது புலப்படும்; மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த மற்றொரு நூலாகிய திருச்சிற்றம்பலக் கோவையாரிற் சமயப் பொருள் மிக விரவாமற் பெரும் பாலுந் தமிழின் அகப் பொருளே விரவிநிற்றலால் அதன் கண் நூற்றுக்கு ஐந்து விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன. மணிமேகலை, சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னெழுந்த சங்கத்தமிழ் நூல்களுள்ளும் மிகப் பழைய பகுதிகளுள் ஐந்நூற்றுக்கு ஒன்றிரண்டு விழுக்காடும். அங்ஙனமல்லாத பிற்பகுதிகளுள் நூற்றுக்கு ஒன்றிரண்டு விழுக்காடும் வடசொற்கள் அரிதாய்க் காணப்பட, மணிமேகலை காலத்தில் நூற்றுக்கு நாலைந்து விழுக்காடும். அதற்குப்பின் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரையிற் றோன்றிய நூல்களில் நூற்றுக்கு ஆறு, ஏழு, எட்டு விழுக்காடும் வடசொற்கள் வரவர மிக்குக் கலந்து காணப்படுகின்றன. கல்லாடம் என்னும் நூலிலும் நூற்றுக்கு ஆறு, ஏழு விழுக்காடே வடசொற்கள் கலந்து காணப்படுதலால், அஃது ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே எழுந்த நூலாதல் தெற்றென விளங்கும். மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் ஓங்கி விளங்கிய புத்தசமயம் மூன்றாம் நூற்றாண்டி னீற்றிலிருந்து தன் ஒளிமழுங்கி யொடுங்க, அதற்குப் பின் தலை தூக்கிய சமண சமயமும் வடநாட்டிலிருந்து வந்ததொன்றாகையால் அதன் வழியே வடசொற்கள் பின்னும் பின்னும் மிகுதியாய்ப் புகுந்து தமிழிற் கலப்பனவாயின. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னெழுந்த அப்பர் சம்பந்தர் தேவாரங்களில் சமயப் பொருள் நுதலும் பாக்களில் நூற்றுக்கு இருபது விழுக்காடு வடசொற்கள் விரவிக் காணப்படுகின்றன; தமிழ்ப் பொருளே நுதலும் பாக்களில் வடசொற்கள் அவ்வளவில்லை. மிகக் குறைந்தே யுள்ளன; தேவாரப் பாட்டுகளை ஒருவாறு முழுதுங் கணக்கிட்டுப் பார்த்தால், நூற்றுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு விழுக்காடு வடசொற்கள் கலந்துநிற்கக் காணலாம். இவ்வாறு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டிற் குடிபுகுந்த புத்தசமண மதங்களோடு, தமிழ்நாட்டிற்கே பெரிதும் உரித்தாகிய சைவசமயமானது எதிர்த்துப் போராடுகின்றுழி, அப் புத்த சமணர் வழங்கிய வடசொற்கள் சொற்றொடர் களாகிய கருவிகளை அது தானும் எடுத்து வழங்கி அப் புறச் சமயங்கள்மேல் திருப்பி ஏவி வெற்றி கண்டது. வெற்றி கண்டபின் அக் கருவிகளைப் புறந்தள்ளாது தன்னிலும் தன் தமிழிலும் அவை இருந்து உயிர்வாழ இடமும் தந்தது. இவ்வாறு இருக்க இடம்பெற்ற வடசொற்களும் வடசொற் றொடர்களும் தாம்பெற்ற இடம் இனிதாயிருக்கக் கண்டு. தம்மினத்தைப் பின்னும் பின்னும் வருவித்துத் தமிழினும் சைவத்தினும் சைவத்தோடு தொடர்புடைய வைணவத்தினும் முதன்மையான இடங்களைக் கவர்ந்துகொண்டு தமிழை இழித்து விடுதற்கும். இயலுமாயின் அதனை இல்லாமலே ஒழித்து விடுதற்கும் முனைந்து நிற்கின்றன. பத்தாம் நூற்றாண்டிற்குப்பின் இஞ்ஞான்றை வரையில் எழுந்த பற்பல தமிழ் நூல்களில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வடசொற்கள் வந்து புகுந்து விட்டமையோடு, வடநூற் கதைகளும ஏராளமாய் நுழைந்து நிலைபெற்று விட்டன. இஞ்ஞான்று சிலர் எழுதும் தமிழ் உரை நூல்களில் நூற்றுக்கு எண்பது தொண்ணூறு விழுக்காடும் வடசொற்கள் மிகுந்து நிற்றலை எளிதிற் காணலாம். இங்ஙனமாகத் தமிழ்நூல்களில் வடசொற்கள் புகுந்திருக்கும் அளவினை மிகவும் விழிப்பாயிருந்து கணக்குப் பண்ணிப் பார்த்தால், அவ்வந்நூல்கள் இயற்றப்பட்ட காலத்தைப் பெரும் பாலும் பிழைபடாமல் வரையறுத்துக் காட்டலாம். அது நிற்க. மேலே, திருவாசகத்தின் திருவண்டப்பகுதியி லிருந்தெடுத்த பாட்டின் பகுதியையும், பழைய சங்கச் செய்யுளாகிய முல்லைப் பாட்டிலிருந்தெடுத்த பகுதியையும் ஒப்பிட்டுக் காண்புழி. அவை சொல்நோக்கு சொற்பொருள் நோக்குகளிற் பெரும்பாலும் ஒற்றுமைகொண்டு நிற்றலும் வடசொற் கலப்பில்மட்டுஞ் சிறுபான்மை வேற்றுமையுற்று நிற்றலுந் தெற்றென விளங்கா நிற்கும். எனவே, பழைய செந்தமிழ் வழக்கே மிக முனைத்து நிற்க. அதன்கண் வடமொழி வழக்குச் சிறிது புகுந்த காலத்திலேதான் திருவாசகம் இயற்றப்பட்ட தென்பதூஉம். அது தமிழோடு வடமொழி வழக்கையுஞ் சிறிது தழுவியதா மென்பதூஉம் பெறப்படும். இனித், திருவாசகத்தின் முதல் நான்கு பாட்டுக்கள் பழந்தமிழ்ப் பாவால் ஆக்கப்பட்டிருப்ப, அந் நான்கின்பிற் புதிது புகுந்த கட்டளைக் கலித்துறை யால் ஆக்கப்பட்ட பத்துச் செய்யுட்களும் அவற்றின்பிற் பழைய தரவு கொச்சகக் கலிப்பாவால் ஆக்கப்பட்ட பத்துச் செய்யுட்களுங் காணப்படு கின்றன. இவைகளின்பின் அறுபது விருத்தப்பாக்கள் காணப்படுகின்றன. இவற்றின்பிற் கலிப்பாவிலிருந்து தோன்றிய கலிநிலைத்துறையிற் பத்துச் செய்யுட்கள் இருக்கின்றன. இங்ஙனமே இடையிடையே விருத்தப் பாக்களும், கட்டளைக் கலித்துறைகளுமாகிய புதிய பாவினங்களோடு, பண்டைச் செந்தமிழ்ப் பாக்களாகிய தரவு கொச்சகக்கலிப்பா, கலித்தாழிசை முதலியனவும் விராய்க்கிடக்கின்றன. தொடக்கத்திலுள்ள நான்கு நீண்ட பாட்டுக்களையும் நந்நான்கடியாகப் பகுத்தலால், அவை நூற்றறுபத்திரண்டு செய்யுட்களுக்கு ஒப்பாகும். இவையல்லாத ஏனை விருத்தப் பாக்கள் முந்நூற்றிருபத்தாறு கட்டளைக் கலித்துறை புதிய பாவேயாயினும், வெண்பாவிற்குரிய இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளைகளும், கலிப்பாவிற்குரிய துள்ள லோசையும் பெற்றுவருதலின் அவை தமிழ்ப் பாக்களோடு சேர்த்து எண்ணப்பட்டன. கலிநிலைத்துறையும் கலிப் பாவினோசைபற்றி அவ்வாறு அவற்றோடு சேர்க்கப் பட்டன கலித்தாழிசை பழைய தமிழ்ப்பாவே யல்லது புதிது புகுந்தது அன்று. இஃது இவ்வாறாகவும் தமிழ் வரலாறு எழுதினவர், சங்ககாலத்துச் சான்றோர் செய்யுட்களில் தாழிசை இல்லையெனப் பிழைபடக் கூறினர். கலித்தொகை என்னுஞ் சங்கநூலில் தாழிசை வருதலை இவர் உணர்ந்திலர். அதுவேயு மன்றிக் கடைச்சங்க இலக்கியங்கட்கு முற்பட்டதாகிய தொல்காப்பியம் செய்யுளியலில் வண்ணகவொத்தாழிசைக்கு இலக்கணங்கூறும், வண்ணகந் தானே, தரவே தாழிசை யெண்ணே வாரமென் றந்நால் வகையிற் றோன்று மென்ப.1 என்னுஞ் சூத்திரத்தையும், ஒத்து மூன்றாகும் ஒத்தா ழிசையே2 என்னும் ஒத்தாழிசை இலக்கணச் சூத்திரத்தையும், கொச்சகவொரு போகு இலக்கணங்கூறும், தரவின் றாகித் தாழிசை பெற்றும்3 என்னுஞ் சூத்திரத் தையும் அறிந்திருந்தனராயின் இங்ஙனம் வழுப்படவுரையார் செந்தமிழ் மொழீக்கு ஒரு நந்தாமணி விளக்காய்த் திகழும் தொல்காப்பியம் செவ்வனே அறியாதார் தாமும் தமிழ் வரலாறு எழுதப் புகுதல் இரங்கற்பால தொன்றாம். அதுநிற்க. இனி, முதல்நின்ற நான்கு நீண்ட பாட்டுக்களும் நூற்றறுபத் திரண்டு செய்யுட்களுக்கு ஈடாய் நிற்றலால், இவற்றோடு வெண்பா கலிப்பா கலித்துறை முதலியவற்றைக் கூட்டத் தமிழ்ப்பாக்கள் நானூற்றெண்பத்தெட்டும், முற்றும் புதியவாய விருத்தப்பாக்கள் முந்நூற்று முப்பதும், ஆக எண்ணூற்றுப் பதினெட்டுச் செய்யுட்கள் திருவாசகத்தின்கண் உள்ளன; இவை தம்முள் ஒன்றரைப் பங்கு செந்தமிழ்ப்பாக்களும், ஒருபங்கு புதிய விருத்தபாக்களுமாக இந் நூலின்கண் விரவிக்கிடத்தல் தமிழுணர்ந் தார்க்குச் செவ்விதிற் புலனாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட செந்தமிழ் நூல்க ளெல்லாம் பண்டைத் தமிழ்ப் பாக்களாலும் பாவினங்களாலுமே ஆக்கப்பட்டிருப்பக் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களெல்லாம் புதிது புகுந்த விருத்தப்பாக்களாலேயே ஆக்கப்பட்டிருப்பத், திருவாசகமோ ஒன்றரைப்பங்கு பண்டைத் தமிழ்ப்பா பாவினங்களாலும், ஒருபங்கு புதிது தோன்றிய விருத்தப் பாக்களாலும் ஆக்கப்பட்டிருத்தலை நுனித்துக் காண வல்லார்க்குப், பண்டைத்தமிழ் வழக்குச் சிறிது சிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்லமெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசக நூல் இயற்றப்பட்டதாதல் நன்கு விளங்கும். இத் திருவாசகத்தைப்போற் பழைய வழக்கும் புதிய வழக்கும் ஒருங்கு விரவிய பிறிதொரு தமிழ்நூலைக் காண்டல் அரிது. அங்ஙனம் விரவிய வழக்கினுள்ளும் பழைய வழக்கையே அது பெரிதுஞ் சார்ந்து நிற்கக் காண்டலிற் புதிய வழக்குக்குத் தோற்றவாய் காட்டும் சிலப்பதிகாரத்தின் காலத்தை நெருங்க அடுத்தே திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்கள் தோன்றியவாதல் தெளியப்படும். அற்றேல், நந்திக் கலம்பகம், காசிக் கலம்பகம் முதலிய பிற்காலத்து நூல்களுள்ளும் பழையவும் புதியவுமாய எல்லாத் தமிழ்ப் பாவினங்களுள் கலந்து காணப்படுதல் என்னை யெனின்; அவையும், மும்மணிக் கோவை, நான்மணிமாலை போல்வனவுமெல்லாம் தமிழ்ப்பா பாவினங்களைக் காட்டுதற் பொருட்டுப் புலவர்களாற் செயற்கையாகச் செய்யப் பட்டனவே யல்லாமல், அவ்வக்கால வழக்கொடு பொருந்தி இயற்கையாக இயற்றப்பட்ட திருவாசகம் திருக்கோவையாரைப் போல்வன அல்லவாம். பட்டினத்தடிகள் அருளிச்செய்த கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை முதலியனவும் அன்பினாற் பாடப்பட்டனவேனும், அவை, வெண்பா கலித்துறை விருத்தம் அகவல் என்னும் நால்வகைப் பாவானும், அகவல் வெண்பா கலித்துறை என்னும் மூவகைப் பாவானுமே முறையே ஆக்கப்படுதல் வேண்டுமென்னும் செயற்கை முறைபற்றி வந்தவாறு போலல்லாமல் திருவாசகத்தின்கட் பழையவும் புதியவுமாகிய பாக்கள் பலவும் கால இயற்கையின் வழியே ஒருங்கு விராய்க் கிடத்தல் உற்று நோக்கற் பாலதாம். அதுகிடக்க. இனிக், கல்லாடமோ திருவாசகத்திற்குப் பின்னெழுந்த நூலாயினும், பண்டைத் தமிழ் வழக்கு முழுதும் வீழ்ந் தொழியாத காலத்ததாகலின், பழைய தமிழ்ப் பாவாகிய அகவலினாலேயே அது முற்றும் யாக்கப்படுவதாயிற்று. மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையார் பழைய அகப்பொருள் வழக்கையே தழுவி இயற்றப்பட்டதாயினும், பழைய தமிழ்நூல்களிற் காணப்படாத கட்டளைக் கலித்துறை என்னும் புதியதொரு யாப்பினால் இயற்றப்பட்டிருத்தலின் இது கொள்ளற் பாலதாமோ என அதன்மேற் குற்றங்கூறக் கருதினார் ஒரு புலவர்க்கு. அவர்கொண்ட கருத்தினை மாற்றுதற்பொருட்டுக் கல்லாடனார் என்னும் நல்லிசைப் புலவர் அத் திருக் கோவையார் நானூறு செய்யுட்களில் ஒரு நூறுசெய்யுட்களை யெடுத்து, அவற்றின்கட்சொல்லப்பட்ட அகப்பொருள்களைப் பண்டையோர் பாடியபடியாகவே தமது காலத்தும் வீழாது வழங்கிய அகவற் பாவாற் பாடிக்காட்டினாரென ஆன்றோர் கூறும் இக்கதை எவ்வாறாயினும், கல்லாடநூல் பழைய தமிழ்வழக்கு முற்றும் வீழ்ந்து போகாத ஒரு காலத்தே இயற்றப்பட்டதாதலும். ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டுத் தோன்றிய நூல்களில் ஏதும் கல்லாடத்தைப் பிற்பட்டுத் தோன்றியநூல்களில் ஏதும் கல்லாடத்தைப்போல் முழுவதும் அகவற் பாவினாற் அகப்பொருண்மேற் செய்யப்படாமையே இதற்கொரு பெருஞ் சான்றாதலும் தெளியவல்லார்க்கு இக்கதை முற்றும் பொய்யாகாமை புலனாம். அற்றேல், ஞானாமிர்தம், சங்கற்பநிராகரணம், என்னும் நூல் களிரண்டும் முற்றும் அகவற் பாவால் யாக்கப்பட்டிருத்தல் என்னையெனின்; அவையிரண்டுஞ் சமயப்பொருள் பற்றி இயற்றப்பட்டனவே யல்லாமற், கல்லாடம் போற் பழைய தமிழ்ப் பொருண்மேல் இயற்றப்படாமையானும், கல்லாடத்தைப் பார்க்கினும் இவ்விரண்டினும் வடசொற்களும் சொற்றொடர் களும் மிகுதியாய்க் கலந்திருத்தலானும், பழைய செந்தமிழ்ச் சொற் பொருணயங்கள் கல்லாடத்திற் காணப்படுதல்போல் இவ்விரு நூல்களினுங் காணப்படாமையானும், கல்லாடத்தில் அகவற் பாவின் அமைப்புப் பழைய அகவற்பாவினமைப்பை யொத்திருக்க மற்று இவ்விரு நூல்களிலுள்ள அப்பாவின் அமைப்புப் பெரிதும் வேறுபட்டுப் புதிய முறைபற்றி வந்திருக்கலானும். இவை, பழந்தமிழ் வழக்கே பற்றிவந்த கல்லாடத்தைச் சிறிதும் ஒவ்வாமற் புதுத் தமிழ் வழக்கின் கட்படுவனவா மென்றே துணியப்படும். இவ்வுண்மை, இம் மூன்று நூல்களினும் உள்ள செய்யுட்கள் சிலவற்றைச் சங்கச் செய்யுட்களோடு ஒப்பிட்டு நோக்குதலால் இனிது விளங்குமாதலிற், சுருக்கத்தின்பொருட்டு முதலிற் குறுந்தொகை யிலிருந்து ஒரு செய்யுளை இங்கெடுத்துக் காட்டுதும்: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ அறியும் பூவே4 இதனோடு, இப்பொருளே பற்றிவந்த, அருடருங் கேள்வி அமையத் தேக்கப் பற்பல ஆசான் பாங்கு செல் பவர் போல் மூன்றுவகை பத்த தேன்றரு கொழுமலர் கொழுதிப் பாடுங் குணச்சுரும் பினங்காள்! உளத்துவே றடக்கி முகமன் கூறாது வேட்கையின் நீயிர்வீழ் நாட்பூ வினத்துட் காருடற் பிறையெயிற் றரக்கனைக் கொன்று வச்சிரத் தடக்கை வரைப்பகை சுமந்த பழவுடற் காட்டுந் தீராப் பெரும்பழி பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள் பெம்மான் வாழும் பெருநகர்க் கூடல் ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன் கொலையின ருள்ளருங் குறைகொள இருண்டு நான நீவி நாண்மலர் மிலைந்து கூடி யுண்ணுங் குணத்தினர் கிளைபோல் நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த கருங் குழற் பெருமணம்போல ஒருங்கு முண்டோ பேசுவி ரெமக்கே.5 என்னுங் கல்லாடச் செய்யுளையும், இதனோடு, காரியங் காசினி யாதி ஏரியல் ஈசன் கத்தா இவற்கிது போகம் ஆதல் செல்லா தகன்றுயர் கருமந் தானோ நுகர்தல் செல்லா தானா தென்னை செய்த தென்னின் அனனோ கொன்னே செய்யான் தன்னேர் இல்லோன் பாரிசேட மதனிற் பரனுக் கோரியல் பரன்பசு என்றறி இனிதே6 என்னும் ஞானாமிர்தச் செய்யுளையும். அதனோடு, உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண் வருபிர மாணம் மறையெனில் அருமறை ஒன்றென்ற தன்றி இருபொரு ளுரைத்தல் நன்றன் றபேத நாடிய பொருளேற் பேதமும் அபேதமும் ஓதல் வேண்டா, பேத மெனினும் அபேத மெனினும் பேதா பேத மெனினும் அமையுநின் ஐயமில் உரையிற் பையவந் துளதாந் திகழ்பிர மாண இகழ்வும்உண் டன்றிப் பெத்தம பேதம் முத்தி அபேதமேல் அவநத் திதமாம் அவையிரு திறனும். என்றற் றொடக்கத்துச் சங்கற்பநிராகரணச் செய்யுளையும்7 ஒப்பிட்டு நோக்குக. இந் நான்கு செய்யுட்களிலுங் குறுந் தொகைச் செய்யுளுங் கல்லாடச் செய்யுளுஞ் செந்தமிழ்ச் சொற்பொருள் வழக்கிற் பெரும்பான்மை யொத்துச் சிறு பான்மை வேறுபட்டு நிற்றலும், ஏனை ஞானாமிர்தச் செய்யுளுஞ் சங்கற்பநிராகரணச் செய்யுளும் அவ் விரண்டோடு சிறுபான்மை யொத்துப் பெரும் பான்மை வேறுபட்டு நிற்றலுந் தெற்றென விளங்காநிற்கும். இங்ஙனமாயினும், ஞானாமிர்தச் செய்யுட்களிற் பெரும் பாலன சமயப்பொருள் பெரிது நுதலா இடங்களிற் பழைய சங்கத்தமிழ்ச் சொற் பொருணயங்கள் செறிந்து மிளிரக் காண்டலின், அது கல்லாட காலத்தை யடுத்துச் சிவாகம ஞானபாதக் குறியீடுகள் தமிழின்கண் விரவத்தொடங்கிய காலத்தே. அஃதாவது, ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதோர் அரிய நூலாதல் தெளியப்படும். திருமூல நாயனார் அருளிச்செய்த திருமந்திரம் என்னும் சைவ சித்தாந்தத் தனிப்பெரு ஞான நூலும் இவ்வாறாம் நூற்றாண்டின் இடையே, ஞானாமிர்தத்திற்குச் சிறிது முன்னே தோன்றிய தொன்றாகும்; இதன் வரலாற்றினைப் பின்னே விளக்குதும். மற்றுச் சங்கற்பநிராகரணமோ, ஏழஞ் சிருநூ றெடுத்த ஆயிரம் வாழுநற் சகனம் மருவா நிற்ப. என்று அதன் பாயிரங் கூறுமாற்றால் இற்றைக்கு அறுநூற்றுப் பதினோராண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டமை நன்கு பெறப்படும்.8 அற்றேல், மணிமேகல என்னுந் தமிழ்ப்பெருங் காப்பியத்திற் சமணக்கணக்கர் தந்திறங் கேட்ட காதையிலும், பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதையிலும் வட சொற்களுஞ் சொற்றொடர்களும் நிரம்பியிருத்தல் காணப் படுதலின், அதுபற்றி அந்நூலையும் ஆறாம் நூற்றாண்டின்கட் பட்டதென்றுரைத்தல் அமையாது. மணிமேகலையில் எவ்வகையான வடசொற்கள் கலந்தன? திருமந்திரம், ஞானாமிர்தம் என்பவற்றில் எவ்வகையான வடசொற்கள் கலந்தன? என்று ஆராய்ந்து பார்த்துப் பின்னர் ஒரு முடிபுக்கு வருதல் வேண்டும். மணிமேகலையுட் கலந்த வடசொற்கள் புத்த மதத் தொடர்புடையனவாகும். புத்தமதம் வடமொழி மிக்கு வழங்கிய வடநாட்டிற் பிறந்து பின்னர் இத் தென்றமிழ் நாட்டிற் புகுந்தமையால், அம் மதத்தோடு தொடர்புடைய சொற்களுஞ் சொற்றொடர்களுமே அப் புத்த சமயப் பொருள் நுதலும் மணிமேகலையின் அவ்விரு காதைகளிலும் மிகுந்து காணப்படுகின்றன. இவ்வளவே யல்லாமற் சைவசமயத் தொடர்புடைய வடசொற்கள் சொற்றொடர்கள் அதன்கட் காணப்படுகின்றில. இனிப் புத்த மதம் மூன்றாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து தன்னொளி மழுங்கி யொடுங்கிப் போக, அதற்குப்பின் சமண சமயந் தலை நிமிர்ந்துலவ லாயிற்று. இதுவும் வடநாட்டிலிருந்தே வந்ததொன் றாகையால் நான்காம் நூற்றாண்டுமுதல் இதனோடு தொடர்புடைய சொற்களுஞ் சொற்றொடர்களுந் தமிழில் வந்து கலப்பவாயின. இங்ஙனம் வந்த சமணமதக் குறியீடுகளைப் பெருங்கதை, சூளாமணி, சிந்தாமணி முதலிய நூல்களுட் காண்க. இனி, ஆறாம் நூற்றாண்டிலிருந்து சைவ சமயமானது சமணமதத்தோடு போராடவேண்டி வந்தமையால், அச் சமணமதச் சொற்கள் குறியீடுகளையுந் தானெடுத்து வழங்கியதோடு. அக்காலத்தே வடநாட்டிலிருந்து போந்து தமிழ்நாட்டிற் குடியேறிய சைவசமயக் குருக்கண்மார் வழங்கிய சைவசமயக் குறியீடுகள் சொற்கள் கொள்கைகள் முதலிய வற்றையுந் தான் தழுவி வழங்கலாயிற்று. இக் காலம்முதல் எழுந்த திருமந்திரம், ஞானாமிர்தம், மூவர்தேவாராம், பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான சைவசமய நூல்களிலெல்லாங் காணப்படும் வடசொற்களும் குறியீடுகளும் இம்முறையால் வந்து வழங்கினவேயாம். மற்று, இச் சமணமத புத்தமத காலங்களுக்கு முற்பட்ட நாட்களிலோ இத் தென்றமிழ் நாட்டிற் சைவசமயக் கொள்கைகளே ஏனையெல்லாவற்றினும் மேம்பட்டு விளங்கின வென்பதற்கு, மணிமேகலை, சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி, புறநானூறு முதலிய வற்றின்கண் முக்கட்பிரானாகிய சிவபெருமானே முழுமுதற் கடவுளாக ஏனை யெல்லாக்கடவு ளர்க்கும் முன்வைத்துரைக்கப் படுதலே சான்றாம்.9 ஆனாற், பண்டைத் தமிழர் கைக் கொண்டொழுகிய சைவக் கொள்கைகள் எல்லார்க்கும் பொதுவாவனவாய் நாடோறும் வழக்கத்திலுள்ள தனித் தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டு எல்லாரானும் எளிதில் உணரக் கிடந்தன; அதனால், அவை இன்னார்க்குத்தாம் உரியவை இன்னார்க்கு உரியவல்ல என்று பிரித்துக் காணப்படாமல் எல்லார்க்கும் பொதுவாய் இருந்தன. முக்கண்ணன், கடவுள், பிறவா யாக்கைப்பெரியோன், மன்னுயிர், பல்லுயிர், மனமாக, ஊழ், வினை, அறம், மறம், இன்பதுன்பம், ஒளியுலகம், இருளுலகம், நிலையாயாக்கை, நிலையாவுலகம், இல்லறம், துறவறம், அன்பு, அருள், சுட்டு, வீடு, பிரிவில் நிலை, இரண்டறக் கலத்தல், திருவடித் தொண்டு கோயில் வழிபாடு, முதலான தனித்தமிழ்ச் சொற்களையும் அச்சொற்களாற் றொடுத்த கொள்கைகளையும் வழங்கிய வரையில் இவை இன்னமத மென்று எவர்க்குந் தெரியாவா யிருந்தன; எல்லாரும் அவற்றை நாடோறும் கைக்கொண் டொழுகுதலால் அவற்றை அவர் வேறாக நினைத்தலுஞ் செய்திலர். மற்று, இவைதம்மையே புதிது வந்த வடசொற் களால் வழங்கப்புகுந்த அளவானே எல்லா மதப் பிரிவுகளும், மதப் போராட்டங்களுங் கிளைக்கத் தலைப்பட்டுத் தமிழ்மக்களை எண்ணிறந்த பிரிவுகளாகப் பிரித்து ஒற்றுமை குலைத்து, அவர்களைப் பெருந் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டன. அவரவர் தத்தங் கொள்கைகளை உயர்த்துதற் பொருட்டு மிக அருவருக்கத்தக்க பொய்க்கதைகளை, எல்லார்க்குந் தெரியாத வடமொழியில் எளிதாக வரைந்து வைத்துச் சாதிச் சண்டை சமயச் சண்டைகளை இத் தமிழ்நாடெங்குங் கிளப்பிவிட்டனர். இத்தகைய பிரிவுகளும் மதவேற்றுமைகளும் பொய்க் கதைகளும் பழைய தனித்தமிழ் நூல்களிற் காணப்படாமை கற்றறிவுடையார் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலர். பழைய தனித்தமிழில் இயற்றப்பட்டிருப்பதனாலேயே திருக்குறள் என்னும் அரியபெரிய நூல் எல்லாச் சாதியினர்க்கும் எல்லாச் சமயத் தினர்க்கும் பொதுவாய். எல்லாரானும் பொன்னே போற் போற்றித் தழுவப்படும் ஒப்புயர்வற்ற நூலாய்த் துலங்குகின்றது. இவ்வொருநூலை மட்டும் எல்லாருங் கருத்தாய்க் கற்று அதன்படி ஒழுகுவாராயின், அவர் எல்லாரும் பேரறிஞராய் மனஞ்சொற்செயல்கள் தூயராய் அன்பினாலும் அருளினாலும் அளவளாவி, ஒருவருக்கொருவர் பயன்பட்டு, முடிவில் இறைவன் றிருவடிப் பேற்றினையும் எய்தி ஈறிலா இன்பத்தில் வைகுவர். ஆனால், அத்தகைய தனித்தமிழ் மாட்சி திரும்பவும் முன்போல் ஒளியுடன் விளங்கிப் பயன்படுநாள் எந்நாளோ அறிகிலம்! இருந்த வாற்றால், தனித் தமிழ் வழங்கிய காலந்தொட்டு, அதற்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாய்வந்த காலவேறுபாடுகளை அவ்வக்காலங்களிற் பிறந்த நூல்களிற் காணப்படும் அடையாளங்களைக் கொண்டு இனிது தெளியப் பெறுகின்றேம். நிலநூலார்10 நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும். அவ்வப் படைகளிற் புதைந்துகிடக்கும் பற்பல பொருள்களையும் ஆராய்ந்துபார்த்து. அவ்வப்படைகள் உண்டான காலத்தையும், அவற்றில் உலவிய உயிர்கள். அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள், அப்பண்டங்களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையுமெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல்போலத் தமிழ் நூலாராய்ச்சி செய்வோரும் தனித்தமிழ் உண்டானது முதல் இதுவரையிற் போந்த காலத்தையுந் துருவிப்பார்ப்பாராயின், அது பலபடைகளாய்ப் பிரிந்திருக்கவும், அப்படைகளிற் புதைந்துகிடக்குந் தமிழ் நூல்கள் அவ்வக்காலப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்களியல்பையும் தெற்றெனக் காட்டவுங் காண்பார்கள். எமதாராய்ச்சிக்கு விளங்கிய அளவு, அக்காலத்தைத் தனித்தமிழ்க்காலம், புத்தகாலம், சமணகாலம், சைவ வைணவ காலம், பார்ப்பனகாலம், ஆங்கிலகாலம் என ஆறு கூறாக வகுக்கின்றேம். பாரதப்போர்11 நிகழ்ந்தபோது உடனிருந்த முதஞ்சியூர் முடிநாகராயர் காலந்தொட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டுவரையிற் சென்றகாலத்தைத் தனித்தமிழ்க் காலமெனவும், கி.பி. முதல்நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டுவரையிற் சென்ற காலத்தைப் புத்தகாலமெனவும், நான்காம் நூற்றாண்டுமுதல் ஏழாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சமண காலமெனவும், ஏழாம் நூற்றாண்டு முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சைவ வைணவகால மெனவும், பதினான்காம் நூற்றாண்டுமுதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிற் சென்றகாலத்தைப் பார்ப்பன காலமெனவும், பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் இதுகாறுஞ் சென்ற காலத்தை ஆங்கிலகாலமெனவுங் கூறுதல் இழுக்காமை. இவ் வறுவகைக் காலங்களிற் றோன்றிய நூல்களை நன்காராயும் முகத்தாற் றெளியலாம். இவற்றுட் புத்தகாலத்துத் தோன்றிய சமயநூல்களில் அப் புத்தசமயச் சொற்கள், குறியீடுகள், கொள்கைகளே முனைந்துநிற்கக் காண்டுமல்லது. ஏனைச் சமண சைவச்சொற்கள் குறியீடுகள் கொள்கைகள் முனைத்துநிற்கக் காணாமையின், அக்காலத்துப் பிறந்த மணிமேகலையை அதில் வடசொற்கள் காணப்படும் அவ்வளவே பற்றிச் சமண காலத்தின்கட் படுவதாகிய ஆறாம் நூற்றாண்டிற் சேர்த்தல் ஒருவாற்றானும் ஒவ்வாது. அற்றேற், சைவ வைணவ காலத்திற் சேர்க்கற் பாலனவாகிய திருவாசகம், திருமந்திரம், ஞானாமிர்தம் முதலியனவற்றைப் புத்தகால சமணகாலங்களிற் சேர்த்த தென்னையென்றாற், சைவ வைணவ சமயங்கள் புதிது தோன்றியனவல்ல; அவை தமிழ் மக்கட்கே முற்றும் உரியனவாய்த் தனித்தமிழ்க்காலந் தொட்டு இற்றைநாள் வரையும் அவியாது பொலிவனவேயாயினும், இடையிடையே புகுந்த புத்தசமணப் பெருங் காற்றுகளால் அலைப் புண்டு. பின்னர் அவ்வக்காலங்களிற் றோன்றிய மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலான அருட்டிருவாளரால் வகுக்கப் பட்ட அருளரண்களுள் நிலைபெற்றுச் சுடர்ந்து ஒளிர்கின்றன. அவ்வக்கால வகுப்புகளில் முனைத்துக் கிளர்ச்சியாய் நின்ற கொள்கைகள் பற்றிப் புத்தகாலம் சமணகாலம் என்றதல்லது. அக் காலங்களிற் சைவ வைணவங்கள் இருந்திலவென்பது கருத்தன்று. எல்லாக்கால வகுப்பு களினூடும் இவ்விரு சமயங்களும் நிலைபெற்று வருதல் நுனித்தறிவார்க்கு விளங்கா திராது. அல்லதூஉம், அவ்வக் காலத்துப் புகுந்த வட சொல்லாராய்ச்சி யானும், பிறசான்றுகளானும், திருவாசகம், திருமந்திரம், கல்லாடம் முதலிய நூல்கள் புத்தசமண காலங்களிற் பிறந்தன என்றாம். அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், செய்யுளியல். 140. 2. தொல்காப்பியம், செய்யுளியல், 142. 3. தொல்காப்பியம், செய்யுளியல், 149. 4. குறுந்தொகை, 2. 5. கல்லாடம், 37. 6. ஞானாமிர்தம், 5. 7. மாயாவாதி சங்கற்ப நிராகரணம் 8. See also Dr. G.U. Pope’s English Translation of the Tiruvachakam, Notes. P. LXXV. 9. See for an impartial of this subject in Dr. S. Krishnaswami Aiyanagar’s recent work: ‘Some Contributions of South India to Indian Culture’ pp. 54-56 and 215-216 10. Geologists 11. பாரதப் போர் ».K.மூthÆu¤âš நிகழ்ந்ததென்று ஒருசாராரும் கி.மு. ஆயிரத்தில் நிகழ்ந்ததென்று மற்றொரு சாராரும் வழக்காடா நிற்பர். 6. திருக்கோவையாரின் செய்யுட்பொருள் பழந்தமிழ் நூல்களோடு ஒத்தல் இனித், தேவாரத்தில் விருத்தங்கள் மட்டும் உள்ளன. திருவாசகந் திருக்கோவையாரில் அவ்விருத்தங்களோடு துறைகளும் உள்ளன; வரவரப் பாவினங்கள் பெருகுதல் இயல்பாதலால். அங்ஙனம் அவை பெருகிய காலத்திலேதான் திருவாசகந் திருக்கோவையார் என்பன இயற்றப் பட்டவாதல் வேண்டுமென எதிர்ப்பக்கத்தவர் கூறினாராலெனின்; அவர் தேவாரப் பாக்களின் இலக்கணம் ஆராயாது விளம்பி னமையின் அவருரை கொள்ளற்பாற்றன்று. திருவாசகந் திருக்கோவை யாரில் உள்ள கட்டளைக் கலித்துறைப் பாக்கள் போல்வன எத்தனையோ தேவாரத்தின்கண் உள்ளன. முதலில், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த திருக்கோவை யாரிலிருந்து ஒரு கட்டளைக் கலித்துறைச் செய்யுளை ஈண்டெடுத்துக் காட்டுகின்றாம் அணியும் அமிழ்தும்என் ஆவியும் ஆயவன் தில்லைச்சிந்தா மணியும்ப ரார்அறி யாமறை யோனடி வாழ்த்தலரிற் பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே. இது முதலில் அணி என்னும் நிரையசையால் தொடங்கி யிருத்தலின் ஒவ்வோரடியிலும் ஒற்றுத் தள்ளிப் பதினேழுழுத் திருக்கின்றன; ஒவ்வோரடியும் ஐந்துசீர்களை உடைத்தாய் இயற்சீர் வெண்டனையும் வெண்சீர் வெண்டளையும் பிழை படாமல் வந்திருக்கின்றன. நேரசையை முதலாகவுடைய செய்யுளாயின் ஒவ்வோரடியிலும் ஒற்றுத் தள்ளிப் பதினா றெழுத்தே இருத்தல்வேண்டும்; இதுவே கட்டளைக் கலித்துறைக்கு இலக்கணமாதல். அடியடி தோறும் ஐஞ்சீராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே1 என்பதனால் அறியப்படும். இவ்விலக்கணத்தோடு ஒத்து வருந்தேவாரச் செய்யுட்கள் வருமாறு:- நெருப்புறு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண், மருப்புறு வன்கண்ணீர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன் மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே, (சம்பந்தர் - பிரமபுரம்) குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும், பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப் பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே, ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவர்க்காய்ச், சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம், என்றுவந் தாயென்னும் எம்பெரு மான்றன் றிருக்குறிப்பே. (அப்பர் - கோயில்) இம்மூன்று தேவாரச் செய்யுட்களில் முதலிரண்டும் நிரையசையால் தொடங்கியிருத்தலின் அடிகடோறும் ஒற்றுத் தள்ளிப் பதினேழுத்துக்களும், மூன்றாஞ் செய்யுள் நேரசை யால் தொடங்கியிருத்தலின் அடிகடோறும் ஒற்றுத் தள்ளிப் பதினாறெழுத்துக்களும் உடையவாய், இயற்சீர் வெண் டளையும் வெண்சீர் வெண்டளையும் பிழையாமல் வந்து தூய கட்டளைக் கலித்துறைகளாயிருந்தல் காண்க. இவ்வாறு கட்டளைக் கலித்துறை யிலக்கணம் வழுவாமல் வருஞ் செய்யுட்கள் தேவாரத்தின்கண் எவ்வளவோ உள்ளன! அற்றேல், இவை திருவிருத்தம் என்னும் பெயராற் குறிக்கப் பட்டிருத்தல் என்னையெனிற், கட்டளைக் கலித்துறையினின்றே விருத்தப் பாக்கள் பிறந்தனவென்று மேலே யாங் கூறியதற்குச் சான்றாக, அக் காலத்திற் கட்டளைக்கலித்துறைகளும் விருத்தமென வழங்கினவேயன்றிக்; கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற் பிறழா இவை ஏனை விருத்தப்பாக்களின் வேறாமென்றே துணிக. இங்ஙனமாகத் தேவாரத்துட் கட்டளைக் கலித்துறைப் பாவால் வந்த செய்யுட்கள் மிகமலிந்து கிடப்பவும், அவை தம்மை ஆராய்ந்துணர மாட்டாதார் தாமும் தமிழ் வரலாறு எழுதப் புகுதல் நகையாடற் பாலதேயாம் என்க. தேவாரத்துள் துறையில்லையெனக் கூறவந்தார் கோள் புரைபடுதலின் அதுகொண்டு மாணிக்கவாசகப் பெருமான், ஏனை மூவர்க்கும் பின் என்னும் அவரது கோளும் புரையாதல் காண்க. இனித்; திருவாசகத் தின்கட் காணப்படும் திருவம் மானை திருவுந்தியார்; திருப்பொன்னூசல், திருச்சாழல் போல்வன வெல்லாம் பண்டைக் காலத்தன வல்லவென்றும், இவை பிற்காலத்துப் பெருகினவேயா மென்றுங் கொள்ளல் வேண்டும் எனக் கூறிய எதிர்ப்பக்கத்தவர் தம் கூற்றுக்குச் சான்று ஏதுங் காட்டாமையின் அஃது ஒரு பொருட்டாகக் கருதற்பாலதன் றென்றும், அவர் பண்டை நூற்பயிற்சி யில்லாமையின் இங்ஙனம் உரை நிகழ்த்தினா ரென்பது ஈண்டுக் காட்டற்பாற்று. திருவம்மானை, திருவுந்தியார் முதலாயின இயற்றமிழோடு இசைத் தமிழுங் கலந்த பாக்களாகும்; இவ்வாறு இசைத் தமிழோடு கலந்து பாடப்படுவன வரிப்பாட்டு எனப்படுதலும். அது பல்வகைப் பாகுபாடுகள் உடைத்தாய் நடைபெறுதலும் சிலப்பதிகாரத் தும் அதன் உரையினுங் காண்க.2 அம்மானை வரி, ஊசல்வரி என்பன; திருவாசகத்தில் உள்ளவாறே சிலப்பதிகாரத்தினுங் காணப்படுதலை அவ்விரண்டி னுள்ளுமிருந்து ஒவ்வொரு செய்யுள் எடுத்துக் காட்டித் தெளிவிப்பாம்: பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் கற்றிய கற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய் என்னுந் திருவாசகத் திருவம்மானைப்பாட்டை (20) வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை ஓங்கரணங் காத்த உரவோ னொளிவிசும்பிற் றூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கண் அம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை.3 என்னுஞ் சிலப்பதிகார அம்மானை வரியோடு ஒப்பிட்டு நோக்குக. கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞாலம் மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ. என்னுந் திருவாசகத் திருப்பொன்னூசற் பாட்டை (8) ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்4 என்னுஞ் சிலப்பதிகார ஊசல் வரியோடு ஒப்பிட்டு நோக்குக. இவைபோன்ற வரிப்பாட்டுகள், தமிழும் தமிழ் மக்களும் மிகச் சிறந்திருந்த பண்டைக் காலத்திலேதான் மலிந்து விளங்கினவே யல்லாமல், ஆரியக் கலப்பால் தமிழுந் தமிழ் மக்களுங் கிளர்ச்சி குன்றிப்போய் பிற்காலத்தே பெருகினவல்ல; இத்தகைய வரிப்பாட்டுக்களைப் பின்றைக்காலத்து நூல்களிற் காண்டலும் அரிது. உண்மை யிவ்வாறிருப்பவும், இதனைத் திரித்து முழுதும் பிறழக்கூறிய தமிழ்வரலாறு உடையார் திறம் எத்துணைச் சிறந்தது! இவர், சிலப்பதிகாரத்தை ஒருமுறை யாயினும் முற்றும் பார்த்திருப்பாராயின் இங்ஙனம் பிழைபட உரையார் வரிப்பாட்டுகளும், அவற்றோடு கூடிய பல்வரிக் கூத்துகளும் பண்டைக் காலத்திற் பெரிதும் மலிந்திருந்தன வென்பது உரைகாரர் அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய சிந்துப் பிழுக்கையுடன் என்னும் நீண்ட கலிவெண்பாட்டால்5 நன்கு துணியப்படும். இந் நீண்ட செய்யுளின் எடுத்துக் கூறப்பட்ட பல்வரிக் கூத்துகள் பலவற்றுள், திருவாசகத்தின்கட் காணப்படும் அம்மானை; வண்டு (திருக்கோத்தும்பி), தோள் வீச்சு (திருத்தோணோக்கம்), சாழல், உந்தி, அவலிடி (திருப்பொற் கண்ணம்), கொய்யு முள்ளிப்பூ (திருப்பூவல்லி) படுபள்ளி (திருப்பள்ளி யெழுச்சி) முதலியனவெல்லாங் கூறப்பட்டிருத்தல் காண்க. இவ்வாறெல்லாம் பண்டைத் தமிழர்க்கே யுரிய இசைத்தமிழ் நாடகத்தமிழ் முறைகளை யொட்டிப் பாடப்பட்ட தமிழ்நூல்கள் பின்றைக் கால இலக்கியங்களுள் யாண்டுங் காணப்படாமை யானும், அவற்றோடு ஒட்டிய சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல், முதலிய நூல்களெல்லாம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப்பட்டனவாதல் தெளியப்படு கின்றமையானும் அப் பழைய இசை நாடகவழக்குப் பற்றிவந்த திருவாசகமும், சிலப்பதிகாரத்தை யடுத்துத் தோன்றிய நூலாதல் திண்ணமா மென்க. இங்ஙனமாகத் திருவாசகத்தின் பழைமையை நாட்டுதற் குரிய வரிப்பாட்டு வகைகளையே, அதன் புதுமையை நாட்டுதற் கேற்ற கருவிகளாக எடுத்துரைத்த தமிழ் வரலாறு உடையார் அறிவின் பிறழ்ச்சி பெரிது! பெரிது! இனிப், பாட்டியலிற் சொல்லப்படும் நூல்வகைகளுட் பெரும்பாலான தேவாரகாலத்திற்குப்பின் எழுந்தனவேயா மென்றும். அதனால் அந் நூல்வகைகளுள் ஒன்றாகிய கோவையின்பாற் படுந் திருச்சிற்றம்பலக் கோவையார் தேவார காலத்திற்குப் பிற்பட்டதேயா மென்றும் தமிழ் வரலாறு உடையார் வரைந்ததனைச் சிறிது ஆராய்வாம். பல்வேறு நூல் யாப்புகளைச் சொல்லும் வச்சணந்தி மாலையின் உரைகாரர், அவ்வச்சணந்திமாலை இந்திரகாளியம் என்னும் நூலுக்கு வழிநூலாகச் செய்யப்பட்ட தென்றுரைத் தார். ஆகவே, வச்சணந்திமாலையிற் காணப்படும் நூல் வகைகளிற் பல இந்திரகாளியம் என்னும் நூலிற் சொல்லப் பட்டவைகளே யாதல் பெறப்படும். பன்னிரு பாட்டியலிற் காணப்படுஞ் சூத்திரங்களிற் பல இந்திரகாளியத் தினின்றும் எடுக்கப்பட்ட வைகளென்று குறிக்கப்பட்டிருத் தலானும்; அச் சூத்திரப் பொருள்கள் வச்சணந்தி மாலை நூற்பொருளையே ஒத்திருத்தலானும்; இவ் விந்திர காளியத்தைப் பழையதோ ரிசைத்தமிழ் நூலாகக்கொண்டு அடியார்க்கு நல்லார்6 அதனைத் தமதுரையில் மேற்கோளாக எடுத்தாளுதலானும், இவைகளிற் சொல்லப்பட்ட உலா, அந்தாதி, மும்மணிக் கோவை என்பன எட்டாம் நூற்றாண் டின்கண் இருந்த சேரமான் பெருமாள் நாயனாராலும் இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி முதலியன நான்காம் நூற்றாண்டிலிருந்த காரைக்காலம்மை யாராலும், கைலைபாதி, காளத்திபாதி யந்தாதி, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழு கூற்றிருக்கை, திரு முருகாற்றுப்படை திருக் கண்ணப்ப தேவர் திருமறம் முதலிய நூல்வகைகள் கி.மு. முதல் நூற்றாண்டின் கண்ணும் ஐந்தாம் நூற்றாண்டின் கண்ணும் இருந்த வெவ்வேறு நக்கீரராலும் அருளிச் செய்யப்பட்டிருத் தலானும் இந் நூல்வகைகளெல்லாம் தேவாரகாலத்திற்குப் பின்னுண்டாயின வென்றல் தமிழ் நூலாராய்ச்சி நன்கு வாயாதார் கூற்றாம். இனித், தசாங்கம், பிள்ளைத்தமிழ் முதலிய வகைகளும் பழைய திவாகர நிகண்டிற்7 சொல்லப்பட்டிருத்தலின் அவையும் பழைய காலத்தனவேயாம். இன்னும் இத்திறத்த நூல்வகை களெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்துரைத்த எண்வகை வனப்பினுட் படுதலும்,8 உரைகாரரான பேராசிரியர் கார், களவழி, காப்பியம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை யெல்லாம் அவ்வனப்பினுட் கொணர்ந்து அடக்குதலுங் கண்டுகொள்க. இன்னுந் திருக்கோவையாரிற் காணப்படுஞ் செய்யுட் பொருள்களோடு ஒத்த அகப்பொருள்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலியவற்றில் அமைந்திருக்கின்றன. பொருள்வகையில் இச் சங்கத் தமிழ் நூல்களுக்கும் திருக்கோவையாருக்கும் ஏதொரு வேற்றுரையுங் காணேம். இனி, அளவினாலும் அவற்றிற்கும் இதற்கும் வேறுபாடு காண்கின்றிலம். என்னை? பிற்காலத் தெழுந்த தஞ்சைவாணன் கோவை முதலாயின நானூறுக்கு மேற்பட்ட செய்யுட்களான் மிக்கு முடிந்தவாறுபோல் இல்லாமல், திருக்கோவையா ரின்கண் உள்ளவை. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை யிற்போல நானூறு செய்யுட் களாலேயே முடிந்திருக்கின்ற வாகலின் என்க. புறப் பொருள் பற்றிவந்த புறநானூறும், அறம்பொருள் இன்பங்களைக் கூறும் நாலடியார், பழமொழி என்பனவும் நானூறு நானூறு செய்யுட்களால் ஆக்கப்பட்டிருத்தலும் உற்று நோக்கற் பாலதாம். இவ்வாறு சங்கத்தமிழ் நூல்களிற் சிறந்தன பல, நானூறு நானூறு செய்யுட்களினால் ஆக்கப் பட்டிருத்தல் போலவே, திருக்கோவையாரும் நானூறு செய்யுட்களால் ஆக்கப் பட்டிருத்தலை ஆராயுங்கால், திருவாதவூரடிகள் சங்கத் தமிழ்க் காலத்தை அடுத்து வந்தமைபற்றியே அந் நூல்களிற் சிறந்த பலவற்றின் செய்யுள் அளவினைத் தாமும் தழீஇயனார் என்க. மற்று, மேற்காட்டிய சங்கத் தமிழ் நூல்கட்கும், திருக்கோவையாருக்கும் வந்த வேறுபாடெல்லாம், அச் சங்கத்தமிழ் நூல்களுள் யாண்டுங் காணப்படாத கட்டளைக் கலித்துறையென்னும் பாவினால் இஃது ஆக்கப்பட்டிருத்தலே யாம். இக் கட்டளைக் கலித்துறை யாப்பு மூன்றாம் நூற்றாண்டிற் புதிது புகுந்த தொன்றாயினும், அது பண்டைத் தமிழ்ப் பாக்களுக்கு முற்றும் வேறுபட்டதன்று. அது பழைய கலிப்பாவினின்று பிறந்த தொன்றாம். கலிப்பா பெரும்பாலும் நான்கு சீராலாகிய அடிகளால் ஆக்கப்படுவதேயாயினும், ஒரே வழி ஐந்துசீரானும் ஐந்திற்குமேல் ஆறு ஏழுசீர் அடிகளானும் அஃது ஆக்கப்பட்டு வருதலும் பண்டைச் செய்யுள் வழக்கின்கண் உண்டு; இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்.9 அளவடி மிகுதி உளப்படத் தோன்றி இருநெடி லடியுங் கலியிற் குரிய. என்று ஓதுமாற்றால் அறியப்படும். எனவே, ஐஞ்சீரடியான் வந்த கலிப்பாவே வரவர வெண்டளையும் எழுத்து வரையறையும் உடைத்தாய் மாணிக்கவாசகப் பெருமான் காலம்முதற் கட்டளைக் கலித்துறை என்னும் பெயர் கொண்டு வழங்கலாயிற்று. அஃதொக்குமாயினும், கட்டளைக் கலித்துறை ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து திருநாவுக்கரசு நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் காலம் முதற் கொண்டுதான் தேவாரத்திற் பயின்று வரலாயிற்றென்று கூறுதலாற் படும் இழுக்கென்னை யெனின்; தேவாரத்தில் முற்றும் புதுத் தமிழ்ப் பாக்களே காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருவெழு கூற்றிருக்கை என்னும் ஓர் அகவலைத் தவிர, வேறு அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்னுந் தூய பழந்தமிழ்ப் பாக்களைத் தேவாரத்தில் ஒரு சிறிதுங் காண்டல் இயலாது. ஆகவே, தேவார காலத்தில் தூய பழந்தமிழ்ப்பாக்கள் முற்றும் வழக்கு வீழ்ந்துபோக, அவற்றினின்று பையப்பையத் தோன்றி வளர்ந்துவந்த புதுத் தமிழ்ப்பாக்களே முற்றும் நிலை பெற்றுப் பெருகி வழங்கலாயினமை ஐயமின்றித் தெளியப்படும். மற்று, மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களினெல்லாம் மேற்குறித்த தூய தமிழ்ப்பாக்களே காணப்படுமல்லாமற், கட்டளைக் கலித்துறை விருத்தம் முதலிய புதுத் தமிழ்ப்பாக்கள் மருந்துக்கும் அகப்படா அங்ஙனம் அவை ஆண்டு மருந்துக்கும் அகப் படாவாயினும். பழைய தமிழ்ப்பாக்களாகிய கலி ஆசிரியம் முதலியவற்றி னின்றே அவை பிறந்தமை மேற்காட்டினமாகலின், அவை இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இடையே நானூறாண்டுகள் கழித்து ஏழாம் நூற்றாண்டில் திடுமெனத் தோன்றித் தேவாரத் தில் முழுதும் நிலைபெற்றுப் பழைய தமிழ்ப்பாக் களை ஒட்டித், தமிழகத்தைத் தாம் முற்றுங் கவர்ந்துகொண்டன வென்றல், ஓர் அரசியின், அகட்டினின்று கதுமெனப் பிறந்த ஒரு பச்சிளங் குழவி உடனே தன் அன்னையைத் தொலைத்து விட்டுத தானே முடிகவித்துத் தன்அரசின்கண் உள்ள எல்லாத்தொழில் களையும் தானே மேற்கொண்டு நடத்த லாயிற்றென்று கூறுதற்கே ஒப்பாம். ஒரு பிள்ளை கருக்கொண்டு முதிர்ந்து பிறத்தற்கும், பிறந்து உடம்பும் உணர்வும் வளர்ந்து முற்றுதற்கும் முற்றியபின் அறிவாற்றல்களுடைத்தாய்த் தன்னை ஈன்றார் நடாத்திப் போந்த அரசியல் முறைகளைப் பையப்பைய ஏற்று அவர் தம்மை ஓய்ந்திருக்கவிட்டுத் தானே அம்முறைகளை முழுதும் நடத்துதற்கு மெல்லாம் மெல்லமெல்ல நீண்டகாலஞ் செல்லல் வேண்டுமன்றே அப் பிள்ளை பிறந்து வளர்ந்து முற்றுங்காலம் வரையில் அதனை ஈன்றோரும் உடனிருக்கக் காண்டுமன்றே. இங்ஙனமே, கலித்துறை விருத்தம் என்னும் மகவுகளும் பழைய தமிழ்ப் பாக்களாகிய அன்னையரின் அகட்டினின்றுந் தோன்றி வளருங்காலத்து அவ்வன்னையரோடு உடனுறைந்து வளர்ந்து முற்றி ஏழாம் நூற்றாண்டில் நிலைபெறுதற்குங் காலம் வேண்டுமன்றோ. அதனால், கலித்துறை விருத்தம் முதலான புதுப்பாக்கள் ஏழாம் நூற்றாண்டின் துவக்கதிற் கதுமெனத் தோன்றிப், பழைய பாக்களை முற்றும் அகற்றித் தாமாகவே நிலைபெற்றன வென்றல் சிறிதும் அடாத உரையாமென்க. ஆதலால், மூன்றாம் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிற் சென்ற நானூறு ஆண்டுகளில், இப் புதுப்பாக்கள் பழைய பாக்களினின்றும் பிறந்து பின்னர் அவற்றோடு உடனிருந்தே வளர்ந்து, அதற்பிற் றேவார காலத்தில் நிலைபெற்றனவாதல் வேண்டும். இவ்வாறு இவை வளர்ந்து வந்தமுறை திருவாசகம் ஒன்றிலன்றி, வேறெந்த நூல்களினுங் காணப்படமாட்டாது. திருவாசகத்திற் பழந்தமிழ்ப் பாக்களே முனைந்து நிற்கப், புதுத் தமிழ்ப் பாக்களாகிய கட்டளைக் கலித்துறையும் விருத்தமும், தம் அன்னையரின் ஊடே ஊடே மருங்கில் விளையாடும் மகாரையொப்ப. அவற்றினிடை யிடையே தோன்றுகின்றன. இவ்வாறு திருவாசக காலத்திற் றோன்றிய இவை, பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து தலையெடுத்துப் பழந்தமிழ்ப் பாக்களை வழக்கு வீழ்த்தித் தேவார காலத்தில் தாமே முற்றும் நிலைபெறலானமையால், இவை இத் தேவாரகாலத் திலேதான் கதுமெனத் தோன்றினவென்றல் சிறிதும் ஏலா வுரையாமென்க. இனிக், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு களிற் பழைய தமிழ்ப்பா வழக்கு முற்றும் வீழ்ந்திலாமை மேற்காட்டின மாதலின், இக் காலங்களிற் பண்டைச் செந்தமிழ் நெறியே முற்றுந் தழீஇயெழுந்த கல்லாடம், பெருங்கதை என்பனவும். இவை தம்மை யடுத்துத்தோன்றிய ஞானா மிர்தமும் முழுவதூஉம் அகவற்பாவினாலேயே யாக்கப்பட்டு விளங்குவவாயின. அற்றேல், இம் மூன்று நூல்களையும் திருவாசக காலத்தோடொப்ப மூன்றாம் நூற்றாண்டின்கட் படுத்து ஓதாமையென்னையெனின்; இவை, சமண சைவ காலங்களிற் றோன்றி, அச் சமயங்களில் வழிப் புகுந்த வடசொற்களுங் குறியீடுகளும் உடைமையின் புத்தகாலத்திற் பிறந்த திருவாசகத்தோடு உடன்வைத்து எண்ணுதல் ஆகாதென்க. இதனை முன்னேயும் விளக்கினோம். அற்றேற், கல்லாடம் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படவில்லை என்பது ஒன்றேகொண்டு அதன் ஆசிரியரை ஒருவர் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்வந்தவர் எனக் கூறினாராலெனின்;10 அவர் நன்காராயாது கூறினமையின் அவருரை கொள்ளற்பாற்றன்று. சிவபிரான் மாட்டும் அவனடியார் மாட்டும் பேரன்புடையரெனக் கல்லாடம்என்னும் நூல்கொண்டே துணியப்படும். அதன் ஆசிரியர் கால்லாடனார் அருளிச்செய்த திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னுந் திருப்பாட்டுங் கல்லாடத்தைப் போலவே அகவற்பாவினால மைக்கப்பட்டு நம்பியாண்டார் நம்பி கோத்த பதினோராந் திருமுறைக்கட் காணப்படுதலானும், நம்பியாண்டார் நம்பி கி.பி. பதினோராம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தாரென்பது கல்வெட்டுகளாற் றுணியப்படுத லானும்11 இக் கல்லாடனார் காலம் பதினோராம் நூற்றாண் டிற்கு முற்செல்வதாமல்லது. அதற்குப்பின் பதின் மூன்றாம் நூற்றாண்டிலாதல் அதற்கும் பின்னுமாதல் செல்வதாகாது. இனி, உரையாசிரியர் எவருங் கல்லாடத்தை மேற் கோளாக எடுத்திலர் என்பதும் உண்மையன்று. ஏனெனில், திருமுருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையேயன்றிப் பரிமேலழகர் எழுதிய ஓர் உரையும் உண்டு. அஃது. அரிமே லழகுறூஉம் அன்பமை நெஞ்சப் பரிமே லழகன் பகர்ந்தான் - விரிவுரைமூ தத்கீரிஞ் ஞான்று தனிமுருகாற் றுப்படையாம் நக்கீர னல்ல கவிக்கு என்னும் அதன் உரைச்சிறப்புப் பாயிரத்தால் இனிதுணரப் படும். இன்னும், மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கி நிமிர்தோள்12 என்னுந் திருமுருகாற்றுப்படை அடியுரையில் இனி மொய்ம்பினை யுடைத்தாய் ஒளிவிட்டு நிறைந்து வளையவேண்டுமிடம் வளைந்து நிமிரவேண்டு மிடம் நிமிருந் தோள் என்றும் உரைப்பர் என நச்சினார்க்கினியர் காட்டியிருக்கும் வேறுரை அவ்வடிக்குப் பரிமேலழகர் எழுதிய வுரையாகவே இருத்தலின், திருமுருகாற்றுப்படைக்குப் பரிமேலழகர் எழுதிய உரை நச்சினார்க்கினியர் காலத்திற்கும் முற்பட்டதாதல் துணியப்படும். மேலும், திருக்குறள் உரையில் திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்13 என்னுந் திருவாய்மொழியை எடுத்துக் காட்டி என்று பெரியாரும் பணித்தார் என்று கூறுமாறு போலவே. தொண்டகச் சிறுபறை குரவை அயர14 என்பதன் உரையிலும், குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்15 என்னுந் திருவாய் மொழியை எடுத்துக்காட்டி எனப் பெரியாரும் பணித்தமை யானும் அறிக என்று உரையெழுதியிருத்தலை நோக்கின், திருமுருகாற்றுப் படைக்குள்ள இப் பழையவுரை பரிமேலழகர் இயற்றியாதாதல் நன்கு துணியப்படுவதாகும். இங்ஙனமாக நச்சினார்க்கினியர் உரைக்கும் முற்பட்ட தாகிய திருமுருகாற்றுப்படை பரிமேலழகருரையின் இரண்டிடங்களிற் கல்லாடத் தினின்று மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. ஒன்று: ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி16 என்பதன் உரையில், பொடித்து அரும்பாத என்னுங் கல்லாடச் செய்யுளில் (9) உள்ள பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய என்னும் அடி மேற்கோளாகக் காட்டப் பட்டிருக்கின்றது; மற்றொன்று; நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுளை, ஐவரும் ஒருவன் அங்கை ஏற்ப. அறுவர் பயந்த ஆறமர் செல்வ17 என்பதன் உரையிற் கல்லாடத்தின் 2ஆது செய்யுளில் உள்ள இமயம்பூத்த கனைமாண் டொட்டி என்னும் அடி மேற் கோளாகக் காட்டப் பட்டிருக்கின்றது. ஆகவே, உரையாசிரியரெவருங் கல்லாடத் தினின்று மேற்கோள் காட்டவில்லை என்பாருரை ஆராய்ச்சியுணர் வில்லாதார் போலியுரையாய் முடிதலின், அது கொள்ளற் பாற்றன்றென மறுக்க மறுக்கவே, கல்லாடம் இயற்றிய ஆசிரியர் கல்லாடனார் உரைகாரர் பரிமேலழகியார் காலத்திற்கு முற்பட்டவராதலோடு, தம்மால் அருளிச் செய்யப்பட்ட திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்னும் அகவற் செய்யுளைப் பதினோராம் திருமுறையிற் கோத்த நம்பியாண்டார் நம்பி காலத்திற்கும் முற்பட்டிருந்தாராதல் தானே பெறப்படும் என்க. எனவே. கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கல்லாடத்தின் காலந் துணியப்பட்டமையின், இனி, அஃது அதற்கும் முற்பட்டு எக்காலத்தில் இயற்றப்பட்டதென்று வினாவுவார்க்கு விடை ஆறாம் நூற்றாண்டின் துவக்கமா மென்பது முன்னரே நன்கு விளக்கப்பட்டது. என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்த வாற்றால், திருவாசகம், கல்லாடம் என்பன பாவகையாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல்களாதல் தெற்றென விளங்காநிற்கும். இவ்வாறு நூல்களின் சொல்லாராய்ச்சியாலும், பா ஆராய்ச்சியாலும் அந் நூல்களின் கால வரையறை துணியப்படுமென ஆங்கில அறிஞரும் இம்முறையைப் பெரிதுந் தழுவுப.18 அதுகிடக்க. இதுகாறுங் கூறிய கல்லாடநூற் காலவரையறையாது, பழந்தமிழ் நூல்களும் புதுத்தமிழ் நூல்களுந் தோன்றிய கால எல்லைகள் புலனாகாமல் ஒருங்கு விராய்க்கிடந்த சிக்கினைப் பிரித்து அவ்வவற்றின் கால வெல்லைகளை வரையறுத்ததற்கும். அவ்வந் நூல்களின் சொற்பொருட் பெற்றி தெளிந்து உண்மை காண்டற்கும் பெரியதோர் உதவியாய் நிற்றலின், அதனை இத்துணை விரித்து விளக்கல் இன்றியமையாததாயிற்று. இக் கல்லாடநூலின் பாவகைப்பற்றி யெழுந்த ஆராய்ச்சியில், இக் கட்டுரைப் பொருளான திருவாசகந், திருக்கோவையார் என்பவற்றின் பாமுறையும் ஆய்ந்து உரைத்தற்கு இடங்கிடைத்த மையின், ஒன்றின முடித்தல் தன்னினம் முடித்தல் என்னும் உத்திபற்றி அவற்றையும் உடன்வைத்து விளக்கலாயினேம். அடிக்குறிப்புகள் 1. யாப்பருங்கலக்காரிகை முதற் செய்யுளுரையில் மேற்கோள் 2. கானல்வரி 1 3. வாழ்த்துக்காதை 4. வாழ்த்துக்காதை 5. அரங்கேற்றுகாதையுரை மேற்கோள் 6. சிலப்பதிகார உரைப்பாயிரம் 7. திவாகரம் பல்பொருட் கூட்டத் தொருபெயர்த் தொகுதி 8. தொல்காப்பியம் செய்யுளியல், 236, 243 9. தொல். செய்யுளியல் 19. 10. செந்தமிழ் 15ஆம் தொகுதி 11. See Mr. M. Srinivasa Aiyangar’s Tamil Studies. p.293. 12. திருமுருகாற்றுப்படை 105-106 13. திருக்குறள் 39ஆம் அதிகார முகவுரை 14. திருமுருகாற்றுப்படை 197 15. நம்மாழ்வார் திருவாய்மொழி 6,44 16. திருமுருகாற்றுப்படை 247 17. திருமுருகாற்றுப்படை 253 - 255. 18. See Studies in Shakespeare by Swinburne. Dowden Furnivall and others. 7. வடநாட்டிற் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது இனி, மாணிக்கவாசகப் பெருமானாற் குறிப்பிடப்பட்ட வரகுணபாண்டியன், கல்லாடத்திற் குறிக்கப்பட்டபடி1 கருநடர் வேந்தன் மதுரையை வௌவிப் பாண்டியனரசைக் கைப்பற்று தற்குமுன் (அஃதாவது ஐந்தாவது நூற்றாண்டிற்குமுன்) கல்வெட்டுகள் இத்தமிழ்நாட்டில் உண்டாகாத காலத்தில் இருந்தோனாவ னென்பதூஉம். திருவிளையாடற் புராணங்கள் இரண்டிலுஞ் சொல்லப் பட்டோன் இவனேயல்லாமல் இடைக்காலத்துக் கல்வெட்டுகளாற் பெறப்பட்ட வரகுண பாண்டியர் இருவரில் ஒருவன் அல்லனென்பதூஉம் விளக்கப் புகுவாம். போர்க்களத்திற் புறங்கொடாது பொருது வீழ்ந்த மறவர்க்கு மட்டும், அவர்தம் பெயரும் பெருமையும் எழுதிக் கல்நடுதல் முற்காலத்து உள்ள வழக்கென்பது. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர என்று ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதுமாற்றானும்,2 அகநானூற்றில் நோய்பாடியார். நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.3 என்றுரைக்குமாற்றானும் நன்கு விளங்கும். இவ்வாறு இறந்துபட்ட மறவர்க்குத் தவிர, அரசர் தம்பெயரும் பீடும் எழுதித் தமக்குங் கல்நாட்டின ரென்பது பழைய தமிழ் நூல்களில் யாம் ஆராய்ந்த பகுதிகளில் யாண்டுங் கண்டிலேம். ஒரு சாரார், பழைய தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படாமை கொண்டு, முன்நாளிலிருந்த தமிழர்க்கு எழுத்து எழுதுதல் தெரியா தென்றும், வடக்கிருந்த பல்லவ அரசர்கள் தமிழ் நாட்டினுட் புகுந்தபிறகு தான் தமிழர் எழுதக் கற்றாரென்றுங் கூறாநிற்பர். தொல்காப்பிய எழுத்ததிகாரத் தொடக்கத்தில் தமிழெழுத்துக் களின் வடிவ வேறுபாடுகள் சொல்லப் பட்டிருத்தலானும். இவ்வாராய்ச்சிவல்ல ரிடேவிட் என்னும் ஆங்கில அறிஞர் இதுகாறும் பெற்ற சான்று களெல்லாம் இந்திய எழுத்துக்கள் ஆரியரால் வந்தன அல்ல என்றும், அவை தமிழ் வியாபாரிகளால் இந்தியாவினுட், கொணர்ந்து உய்க்கப்பட்டன என்றும் காட்டுகின்றன.4 எனக் கூறுதலானும், மேற்காட்டிய பழைய அகநாநூற்றுச் செய்யுள் கல்லிற் பெயரும் பீடும் எழுதும் பண்டைத் தமிழர் வழக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டு தலானும் பழைய தமிழர்க்கு எழுத்து எழுதத் தெரியாதென் பாருரை பொருந்தாவுரையாமென்க. இதன் விரிவைப் பண்டைக் காலத் தமிழர் ஆரியர் என்னும் எமது நூலிற் காட்டியிருக் கின்றேம், ஆண்டுக் கண்டுகொள்க. இமயமலை வரையிற் சென்று தமது வெற்றிக் கொடியை நாட்டிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கரிகாற் சோழன், சேரன் செங்குட்டுவன் என்னும் வேந்தரின் வரலாறுகளைப் பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் நூல்களால் உணரப் பெறுகின்றனமே யல்லாமல், அவராற் செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுகளை இதுகாறுங் காண்கிலேம். தலையாலங் கானத்து மாற்றரசர் எழுவரைப் பொருது தொலைத்த நெடுஞ்செழியனாலாவது, ஆரியரை வென்று துரத்திய நெடுஞ்செழியனாலாவது, ஆக்கப்பட்ட கல்வெட்டுகளையுங் காணேம். சிவபெரு மானுக்கும் திருமாலுக்குந் தமிழ்நாடெங்கும் பற்பல திருக் கோயில்கள் கட்டுவித்தவனென்று தேவாரத் தானுந் திருவாய் மொழியானுந் துணியப்படும். சோழன் கோச்செங் கண்ணானைப் பற்றிய பழைய நூல்களால் ஏதும் அறிகின்றனமே யல்லாமல், அவன் வெட்டுவித்த கற்பட்டயம் ஒன்றாயினுங் காணோம். இவ்வாறு நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டிருந்த மாப்பேர் அரசர்களின் கல்வெட்டுகள் அறவே காணப்படாமை என்னையென்று ஆராயும்வழி, அதற்கு இரண்டு ஏதுக்கள் புலனாகின்றன. முதலாவது: அஞ்ஞான்றிருந்த சேர சோழ பாண்டியர் என்னுந் தமிழ்வேந்தர் மூவரும் தமக்குள் இடையிடையே போராடி நிற்பினும், பிற நாட்டரசர்க்கு இடங்கொடாத ஒற்றுமையும் அதனாற் பெருகிய பேராற்றலும் நெடுங்காலம் வாய்க்கப்பெற்றிருந்தனர் என்பதேயாம். தமது அரசு வேற்றரசரால் வௌவப்பட்டு நிலைகுலைந்தழியும் எனக் கனவினும் அவர் நினைந்திலர். அதனாற், பல மாறுதல்கட் கிடையிலும் நிலைத்து நிற்க வல்ல கற்பட்டயங்களை வெட்டுவித்திலர். இரண்டாவது பண்டைக்காலந் தொட்டே தமிழ்வேந்தர் மூவரும் செந்தமிழ்ப் பயிற்சியைப் பெரிதும் வளரச்செய்து, இங்ஙனங் கொடை கொடுத்தலும் இயலுமோவெனக் கேட்டார் ஐயுற்று வியக்குமாறு தமிழ் கற்றார்க்கு மிகப் பெரிய பொருளுதவி செய்து தமிழையுந் தமிழரையுஞ் செழிப்புறப் பெருக்கிக், குடிகள் உவக்குமாறு செங்கோல் செலுத்திவந்தமையேயாம். இதனாற் கற்றார் தொகையும், அவரியற்றிய அளவிலா நூல்களும் பதிற்றுப் பத்து முதலியவற்றைப்போல் அவ்வேந்தர்தம் பெயரும் பீடும் உரைத்து அவற்றை மங்காமற் றுலங்கவைத்தமையாலும் அவர் கல்வெட்டுகள் ஆக்கிவைக்குங் கருத்தே இலராயினார். சேரசோழ பாண்டியரென்னுந் தமிழ்வேந்தர் மூவரும் பண்டை நாளிற் பேராற்ற லுடையராய் விளங்கி, ஏனை நாட்டரசரால் வெல்லப்படாமலும், அவர்க்குக் கீழடங்கி வாழாமலும் தனியரசு நடாத்திவந்தன ரென்பதற்குத், தமிழ் நாடொழிய இந்தியாவிலுள்ள ஏனை யெல்லா நாடுகளையும் வென்று தன் வெண்கொற்றக்குடை நீழற்கீழ் வைத்துச் செங்கோல் செலுத்திய மன்னர் மன்னனான பௌத்த அசோகன்5 தான் கற்பாறைகளில் வெட்டுவித்த பதினான்கு கல்வெட்டுகளில் இரண்டாவது கல்வெட்டிலும் பதின் மூன்றாவது கல்வெட்டிலும் சேரசோழ பாண்டியர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் தனது அரசியல் நாட்டின் எல்லைக்கு எதிரே தெற்கின்கண் உள்ளவராகக் கூறியிருக்கின்றமையே சான்றாதல் காண்க. இவ் வசோகமன்னன் கிறித்து பிறப்பதற்கு முன் 269ஆம் ஆண்டில் அரச கட்டில் ஏறினவனாதலால்.6 கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழ் வேந்தர் மூவரு புகழோங்கிய தனியரசு நடாத்தினமை இனிது விளங்கா நிற்கின்றது. தமிழ்நாடு தவிர இந்தியநாடு முழுமையும் செங்கோல் ஓச்சிய அசோக அரசனுக்கும் அடங்காமல், இத் தமிழ்வேந்தர் தனியரசு நடத்திய திறத்தையும் அரசியற் சிறப்பையும் ஆழ்ந்து நோக்குங்கால், தொன்றுதொட்டு இவர்களின் முன்னோர்கள் எத்தனை நூற்றாண்டுகளாக அரசியல் முறையினும், படைத்திறத்தினும், செல்வவளத்தினும் பெருகி வந்திருக்க வேண்டுமென்பது புலனாம். ஒரு சிறுபகுதி தவிர இந்தியநாடு முழுதும் ஒருங்காண்ட ஒருபேர் அரசனுக்கும் உட்படாமற், றனியரசு நடத்தத்தக்க ஆற்றலும் அறிவும் செல்வமும், அச்சிறு பகுதியிலிருந்த அரசர்க்குத் திடுமென வந்துவிடமாட்டா. அவை வருதற்குமுற் பல நூற்றாண்டுகள் கழிந்திருக்க வேண்டு மென்பது திண்ணம். பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் பாண்டவர் படைக்கும் துரியோதனன் படைக்கும் பதினெட்டு நாள் வரையிற் பெருஞ்சோறு வழங்கிய மெய் வரலாற்றினையும் இதனோடு அடுக்கவைத்து ஆராய்வோ மாயின், கி.மு. ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னரே (வைத்தியா, எம்.ஏ. என்பவரின் கணக்குப்படி கி.மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே) தமிழ்வேந்தருந் தமிழும் தமிழரும் மிக உயர்ந்த நாகரிகவாழ்க்கையி லிருந்தமை தெளியப்படும். இவ்வுண்மைகளை நடுநிலை திறம்பாது நின்று காணவல்ல அறிஞர்க்கு, இறையனராகப்பொருளுரை முகத்தே சொல்லப் பட்ட தமிழ் வரலாறு தமிழரசர் வரலாறுகள் பெரும் பான்மையும் உண்மையாதல் புலப்படும். அது நிற்க. இங்ஙனம் பண்டைத் தமிழரசரின் ஆட்சிக்கீழ் அமைதி யுற்றிருந்த பழைய தமிழ்நாட்டின்கட் பழைய கல்வெட்டுகள் காணப்படாமைக்கு ஏது, அதன்கண் அந் நாளில் தமிழ்நூல்கள் மிகுந்திருந்தமையும், அழிவுக்கு இடமான மாறுதல்கள் நிகழாமையுமேயாம். மற்று வடநாட்டிலோ, ஆரியர் ஐரோப்பாவிலிருந்த கொடிய பல்வகை மக்கட் பிரிவினரும் ஒருவர்பின் னொருவராய்ப் புகுந்து சூரையாடியும், உயிர்க் கொலை புரிந்தும், மாதரைக் கற்பழித்தும், நாடுநகர் வளங்களைக் கொளுத்தியும், திருக்கோயில்களைத் தகர்த்தும் பெருந்தீங்கு இழைத்துப் பெரிய மாறுதல்களை உண்டாக்கி வந்தமையால், ஆரியர்க்கு முற்றொட்டே வடநாடெங்குங் குடியேறியிருந்த பண்டைத் தமிழ்மக்கள் தமது தமிழ்மொழிப் பயிற்சியைப் பையப் பையக் கைவிட்டு, தம் பின்னோர் நினைவு கூர்தற் பொருட்டுத் தாந்தாஞ் செய்த செயல்களை அவ்வக் காலத்து மிக்கு வழங்கிய அயல்மொழிகளிலேயே கற்களிற் செதுக்கி வைப்பாராயினர்.7 இங்ஙனமே, ஐரோப்பாவிலும் ஆசியாவின் பல பிரிவுகளிலுங் கல்வெட்டுகள் தோன்றினமைக்கு ஏது, அந் நாடுகளிற் பண்டைநாளிலிருந்த மக்கட் பிரிவினர் பலருங் கொடுத்தன்மையுங் கொடுஞ் செயலும் உடையராய் ஒருவரை யொருவர் அலைத்து, நெருப்பினுஞ் செந்நீரினும் அந்நாடுகளை மூழ்குவித்துப் பெருங் குழப்பங்களை உண்டாக்கி வந்தமையே யாம். எனவே, அயலவர் கலப்பினாலும் அவரால் நேர்ந்த அல்லல்களாலும் வட நாட்டின்கட் கல்வெட்டுகள் அமைத்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டுப் பின்னர் அங்கிருந்து தெற்கு நோக்கிப் போந்து ஒருநானூறு ஆண்டுகள் வரையில் அரசு செலுத்திய தமிழரில் ஒரு பிரிவினரான ஆந்திரர் என்னும் வடுகரால் அவ்வழக்கம் தக்கணத்திற் பரவி, அதன்பின் அவ்வாந்திரர் வழிவந்த பல்லவர் தமிழ்நாட்டின்கட் போந்து நிலைபெற்ற காலமுதல் அஃது இங்கும் பரவலாயிற்று. இதனாலன்றோ பல்லவர் புகுதற்குமுன் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றாயினும் இத் தென்றமிழ் நாட்டில் இதுவரையில் வெளிவந்திலது. இதனாலன்றோ மாணிக்க வாசகராற் குறிப்பிடப்பட்ட வரகுண பாண்டியன் வரலாற்றைப் பற்றிய கல்வெட்டு ஒன்றும் இதுகாறும் அகப்பட்டிலது. ஆகவே, பல்லவ ராட்சிக்கு முற்பட்ட வரலாறுகளை ஆய்ந்துரைத்தற்குப் பழைய தமிழ்நூல்களே பெரிதும் பயன்படுவனவென்பது உணரல்வேண்டும். பல்லவ ராட்சிக் காலத்தில் உண்டான கல்வெட்டுகளைக் கொண்டு, அவற்றை நன்காராய்ந்து வரையவேண்டுமேயல்லாமல், நூற்பொருள் களோடு ஒவ்வாமல் முரணும் கல்வெட்டுகளையே கருவியாகக் கொண்டு ஒரு வரலாற்றினை வரைந்து முடிவு கட்டுவது பிழைபடுதற்கு ஏதுவாம் இவ்வுண்மை, கால வரலாற்றுத் துறையில் தேர்ச்சிபெற்று விளங்கும் திருவாளர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்களாலும் தாம் இயற்றிய தென்னிந்திய வரலாற்றுத் துவக்கம்8 என்னும் ஆங்கிலநூலில் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. இனித், தமிழ்நாட்டின் வடவெல்லையாகிய வேங்கடத் திற்கு அப்பாலிருந்த வடுகநாட்டிலிருந்து வந்தவர்களை யெல்லாம் தமிழர் வடுகக் கருநாடர், எனவே வழங்கினர். கல்லாடம், பெரியபுராணம் நம்பியார் திருவிளையாடல் முதலியவற்றிற், பாண்டி நாட்டில் வந்து பாண்டியனரசைக் கைப்பற்றிக் கொண்டவராகச் சொல்லப்படும் வடுகக் கருநாடர் என்போர் முதன்முதல் வடக்கிருந்து தென்றமிழ் நாடடிற் புகுந்த பல்லவ அரசரேயாதல் வேண்டும். இப் பல்லவ அரசர்க்கு உறவினரான ஆந்திர வடுகர் கி.மு. 73ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 218ஆம் ஆண்டுவரையில் தக்கண நாட்டிற் சிறக்க அரசு புரிந்து வந்தனர்.9 இத் தக்கண நாடென்பது, மிகப் பழைய காலத்தில், வடக்கே நருமதையாற்றங் கரையையும், தெற்கே கிருஷ்ணை யாற்றங் கரையும், மேற்குங் கிழக்கும் மேல்கடல் கீழ் கடற்கரை களையும் எல்லைகளாக உடைய ஒரு பெரிய நிலப்பரப்பாகும்; இது. மேல்பால் மகாராட்டிர தேயத்தையும், கிழக்கே தெலுங்கானத்தையும், கோதாவரி யாற்றங் கரையினெடுக இருமருங்குமுள்ள தண்டகாரணியம் என்னுங் காட்டையும் உள்ளடக்கிய தாகும். குமரிநாடு கடல் கொண்டகாலத்து, அப் பெருநாட்டி லுறைந்த தமிழ் மக்களின் பல்பெரும் பிரிவினரான பிராகுவியர்,10 ஆந்திரர், கோடர், தோடர், கோண்டர், நாகர், துளுவர், கருநாடர், மலையாளர், வேளாளர் முதலாயினார் வடக்கும் வடகிழக்கும் வடமேற்குமுள்ள பல்வேறு நாடுகட்கும் பிரிந்து போய்க் குடியேறுவாராயினர்; அப்போது, இவ் விந்திய நாட்டின் மேல்கரை வழியே வடக்கே சென்றோருள் முற்பட்டவரான பிராகுவியர் வடமேற்கே பெலுசித்தானம் வரையிற் சென்று அங்கே குடியேறினர்; அவர்க்குப்பின் ஆந்திரர் கீழ்கரை வழியே சென்று கங்கையாற்றங் கரையை யடுத்த வட நாடுகளிலும், நருமதை கோதாவரி கிருஷ்ணை முதலான ஆறுகளையடுத்த தக்கணநாட்டின் பகுதிகளிலுந் தங்கினர்; அவர்க்குப்பின் அவரையடுத்துச் சென்ற கோடர், கோண்டர், நாகர், என்போர் முறையே நீலகிரியிலும், நாகபுரியின் வடபால் உள்ள மலைகளிலும், தக்கணத்திலுள்ள காடுகளிலும் குடியேறினர்; துளுவர், கருநடர், எருமை நாட்டில் (மைசூரில்) போய்ப் பரவினர்; மலையாளர், கீழ்கரை யோரமாயுள்ள நாடுகளிற் குடிபுகுந்தனர்; வேளாளர் மலையாளத்தின் கிழக்கே குமரி முதல் வேங்கடம் ஈறாயுள்ள நாடுகளிற் சென்று நிலைபெற்றனர். பல்பெரும் பிரிவினரான இத்தமிழ் மக்களுள் அஞ் ஞான்று நாகரிகத்திற் குறைந்தோரான பிராகுவியர் தமிழ்நிலங் கடல் வாய்ப்படுதல் கண்டவுடன் அஞ்சித் தம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும் பண்டமும் பிறவும் இல்லாமையின் அவர் எல்லாரினும் முற்பட்டு நெடிது சென்றார்; வேளாளர் ஏனையெல்லாரினும் பார்க்க நாகரிகத்திற் சிறந்திருந்தமையின் கடல்கோளைத் தடுத்து நிற்கக் கூடுமளவும் நின்று, பின்னர் அங்ஙனம் நிற்க இயலாத எல்லை கண்டவுடன் தாமிருந்த பழைய நிலத்தைவிட்டு மெல்ல மெல்லப் பெயர்ந்து நீளச் செல்லாமல் இத் தென்னிந்திய நாட்டின்கண் தங்கி இதனைப் பலவாற்றானும் வளம்படுத்த லாயினர். இங்ஙனஞ்சென்று ஆங்காங்கு குடியேறிய பண்டைத் தமிழ் மக்கள் பல்லோருள் தக்கணத்திற் சென்று வைகிய நாகர் என்னும் வகுப்பினரே பிற்காலத்தில் நாகரிகத்திற் சிறந்தபின் பல்லவர் என வழங்கப்பட்டார். பல்லவர் என்னும் இச் சொல் யாங்ஙனம் வந்ததெனின், வேளாளர் என்னுந் தமிழ்ச் சொல் கல்வியறி வில்லாரால் வெள்ளாளர் என வழங்கப் படுதல் காண்டலின், அதுவே வடக்கே பின்னுஞ் சிதைந்து பல்லவா என ஆயிற்றென்று உய்த்துணரல் வேண்டும். தக்கணத்திற் பல்லவ ரோடு ஒருங்கு உறைந்து, பின்னர் அவர்க்குப் பெரும்பகைவராய் மாறிய சாளுக்கியர் பழைய திவாகர நிகண்டில் வேள்புல அரசர் என்று கூறப்படுதலை உற்று நோக்குமிடத்து, ஆந்திரர் சாளுக்கியர் பல்லவர் முதலியோர் பழைய வேளாளரினின்று பிரிந்தவராவ ரென்பதூஉம். அங்ஙனம் வேளாளராதல் பற்றியே அவரெல்லாம் ஒருங்குறைந்த தக்கணதேயம் அக்காலத்தில் வேள்புலம் எனப் பெயர்பெற்ற தென்பதூஉம் உய்த்துணரற் பாலனவாம். நாகப்பட்டினத்துச் சோழன் ஒருவன் நாகநாட்டின்கட் சென்று நாககன்னி யொருத்தியை மணந்து பெற்ற பிள்ளையைத் தொண்டை (ஆதொண்டை)க் கொடிகட்டி அவள் கடல் வழியே விடுப்ப, அங்ஙனம் வந்த பிள்ளைக்குத் தனது நாட்டின் வடபகுதியைப் பகுத்துக்கொடுத்து அரசேற்றிவைக்க அவன் அரசாண்ட நாடு தொண்டை நாடு என்னும் பெயர்த்தாயிற்று என்று உரைகாரர் நச்சினார்க்கினியர். திரை தரு மரபின் உரவோன் உம்பல் என்னும் பெரும்பாணாற்றுப் படை யடிக்கு (31) வரைந்திருக்கும் உரையும். வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன் தன்மகள் பீலிவளை தான்பயந்த புனிற்றிளங் குழவியை. (29, 3-5) என மணிகேலை கூறும் பகுதியும் கரிகாற்சோழன் மரபில் வந்தோனான கிள்ளிவளவனுக்கும், நாகநாடெனப்பட்ட தக்கணத்திலிருந்த பழைய நாகமன்னன் ஒருவனுக்கும் உண்டான தொடர்பையும் அத் தொடர்பிலிருந் துண்டான மன்னன் ஆகிய இளந்திரையன் காலந்தொட்டுச் சோழநாடு தென்பாலும் வடபாலும் என இருகூறாகப் பிரிந்து, வடபாலுள்ளது தொண்டை நாடெனவும் தென்பால் உள்ளது பழைய சோழ நாடெனவும் வழங்கலானமையுங் காட்டா நிற்கின்றன. கிள்ளிவளவன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தவனாக, அவனை நாகபட்டினத்துச் சோழன் என்று நச்சினார்க்கினியர் வரைந்ததென்னையெனின்; நாகநாட்டிலிருந்த பீலிவளை தான் ஈன்ற புதல்வனை மரக்கலத்தில் ஒரு கம்பளச்செட்டியிடம் ஒப்புவித்து விடுப்ப, அம் மரக்கலங் காவிரிப்பூம் பட்டினக் கரைக்கு அணித்தாக வருகையில் ஏதோ பிழை நேர்ந்து முழுகி, அப்பிள்ளை காணாமற்போக, அஃதுணர்ந்த கிள்ளிவளவன் பெரிதும் ஆற்றானாகித் தன் மகனைத் தேடும் முயற்சியில் இந்திரனுக்கு விழாவெடுத்தலை மறந்துவிடவே, அத் தெய்வங் கொண்ட சீற்றத்தாற் கடல் பொங்கிக் காவிரிப்பூம் பட்டினத்தை அழித்ததென மணிமேகலை கூறுதலின்,11 அவ்வரசன் அழிந்து பட்ட தன் நகருக்குக் கரைவழியே அருகில் உள்ளதாகிய நாகபட்டினத்தில் வந்து வைகிப், பின் அங்கே அரசு செலுத்தினானாதல் வேண்டும். அதுபற்றியே நச்சினார்க் கினியர் அவனை நாகபட்டினத்துச் சோழன் என்றார். இவ்வாறாகச் சோழ நாட்டின் வடபாலைக் கிள்ளிவளவன் மகன் தொண்டைமான் இளந்திரையன் அரசாளப் புகுந்த காலந்தொட்டு அது தொண்டை நாடென்னும் பெயர்த் தாயிற்று. இவனுடைய ஆட்சியின் வழிவந்த தொண்டையர் பல்லவரே என்பதற்கு நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்12 பொருளதிகாரவுரையில் எடுத்துக் காட்டிய, முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப மலர்தலை யுலகம் ஓம்பும் என்ப, பாசிலைத் தொண்டைப் பல்லவன் ஆணையின் வெட்சித் தாயத்து வில்லே ருழவர் பொருந்தா வடுகர் முனைச்சுரங் கடந்து கொண்ட பல்லா நிரையே, என்னும் பழம் பாட்டே சான்றாதல் காண்க. அடிக்குறிப்புகள் 1. கல்லாடம் 57 2. தொல்காப்பியம் புறத்திணையியல் 5. 3. அகநானூறு 67. 4. “All the present available evidence tends to show that the Indian alphapet is not Aryan at all; that it was introduced into Indian by Dravidian merchants” - Buddhist India by Prof. Rhy Davids. p. 119. 5. See Dr. Vincent A. Smith’s Asoka, pp. 160 and 186. 6. Ibid. p.73. 7. For an almost correct view of this state of affairs in ancient North India. sec Prof. E.J. Rapson’s Ancient India. pp.28-35. 8. The Beginnings of S. Indian History. pp.193,194,264. 9. Dr. R.G. Bhandarkar’s Early History of Dekhan. pp. 26-28. 10. Brahuis. 11. 25-வது காதை, 176-204. 12. அகத்திணையியல். 54. 8. கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம் இனிப், பழைய சங்கத்தமிழ் இலக்கியங்களிற் சொல்லப் பட்ட இவ் வரலாறு பழைய கல்வெட்டுகளாலும் நிலை பெறுத் தப்படுதலை ஒரு சிறிது காட்டுவாம். தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியில் இளவரசனாய் அரசு புரிந்த சிவகந்தவர்மன் என்பான். ஆந்திரபதம் எனப்படும் வடுக நாட்டிலுள்ள விரிப்பரை என்னும் ஊரை நன்கொடையாக வழங்கியதைக் குறிப்பிட்டுக் கிருஷ்ணையாற்றங் கரையை யடுத்துள்ள தன்னகடம் அல்லது அமராவதிநகர்க் கண்ணிருந்த தன் காவலாளர்க்கு ஒரு கட்டளை விடுத்தனன். இங்ஙனம் அவன் விடுத்த கட்டளையானது பொறிக்கப்பட்ட பட்டயங்கள் குண்டூர்க் கூற்றத்தின்கண் உள்ள மயிடவோலு என்னும் ஊரில் அகப்பட்டன. அப் பட்டயங்களை ஆராய்ந்து பார்க்க, அக்கட்டளை பிறப்பித்த சிவகந்தவர்மன் காஞ்சி நகரத்தில் அரசாண்டவன் என்றும், பல்லவர் குடியையும் பாரத்துவாச கோத்திரத்தையுஞ் சேர்ந்தவனென்றும் அவைகளில் வரையப் பட்டிருந்தன. இவன்றன் காவலாளர் அமராவதியில் இருந்தன ரென்பதனால், இவன் அரசு செலுத்திய தொண்டை நாட்டின் எல்லை, வடக்கே கிருஷ்ணையாறு ஓடும் வடுகநாடு வரையில் இருந்தமை நன்கு பெறப்படும். தெலுங்காணத்தை (வடுகநாட்டை) அரசாண்ட ஆந்திர பிருத்திய அரசரில் மிகச் சிறந்தவனாகிய இரண்டாம் புளுமாயி என்னும் மன்னவன் புதல்வனான சிவகந்தன் என்பான் கி.பி. 177 ஆம் ஆண்டு முதல் 184 ஆம் ஆண்டு வரையில் அரசாண் டனன்.1 இப்போது திரும்ப ஆராய்ந்து கணக்குச் செய்யப் பட்டபடி இலங்கையில் அரசாண்ட முதற்கயவாகுவின் காலம் கி.பி. 171 முதல் 193 வரையிலென்று துணியப் பட்டிருத்தலால்2 அக் கயவாகுவின் காலத்தவனான சேரன் செங்குட்டுவனும். அவனுக்கு உறவினனான நாகபட்டினத்துச் சோழன் கிள்ளிவளவனும் வடுகநாட்டில் அரசாண்ட சிவகந்தன் காலத்தவரென்பது சொல்லாமே யமையும், அமையவே, கிள்ளிவளவன் நாகநாட்டிற் சென்று மணந்து கொண்டது சிவகந்தன் மகளையேயாதல் வேண்டும். அம் மகள் வயிற்றிற் பிறந்தமைபற்றியே தொண்டைமான் இளந்திரையன் தன் தாயைப்பெற்ற பாட்டன் பெயராகிய சிவகந்தன் என்பதனோடு வர்மன் என்பதுஞ் சேர்த்துச் சிவகந்த வர்மன் எனப் பெயர் சூட்டப்பட்டானென்க. இலங்கைப் பௌத்த அரசரின் வரலாறு கூறும் மகாவம்ஸத் தானும் மயிடவோலுப் பட்டயங்களானும் தனித்தனியே ஒரு காலத்தவராகத் துணியப்பட்ட முதற் கயவாகு. சேரன் செங்குட்டுவன் கிள்ளிவளவன், ஆந்திர சிவகந்தன் என்பவர்களெல்லாம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்தவர்களென்பது ஐயுறவின்றித் தெளியப்படு தலாற், கிள்ளிவளவன் மகனும் ஆரிய சிவகந்தன் பேரனும் ஆன தொண்டைமான் சிவகந்தவர்மன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இளவரசனாய்க் காஞ்சிமா நகரைத் தலைநகராய்க்கொண்டு தெற்கே பாலாறுமுதல் வடக்கே கிருஷ்ணையாறு வரையில் விரிந்துபரந்த நாட்டை அரசாண்டன னென்பதூஉம் மலைவின்றிப் பெறப்படும். இவன் அரசாளத் துவங்கிய காலந்தொட்டு இப் பெருநிலப்பரப்பு தொண்டைநாடு என்று பெயர்பெறலாயிற்று. இத் தொண்டைமான் கடல்வழியே வந்தவனாதலின் திரையன் எனவும் பெயர்பெற்றான். இவன் வழியில் வந்த பல்லவர்கள் பல்லவதிரையர் என வழங்கப்பட்டனர்.3 அற்றேற், பீலிவளையின் மகனான இத் தொண்டைமான் இளந்திரையன் வந்த மரக்கலம் முழுகிப்போனதென மணிமேகலை சொல்லியதே யல்லாமல், அவன் அதனோடு கடலில் மூழ்கி இறந்துபோகாமல் தப்பினா னென்றேனும், அவனை அவன் றந்தை கிள்ளிவளவன் தேடிக்கொணர்ந்தா னென்றேனும் அது கூறிற்றிலதாலெனின்; அற்றன்று. அஃது, அங்கப் புதல்வன் வருஉ மல்லது பூங்கொடி வாராள் புலம்பல் இதுகேள்.4 என்று ஒரு சாரணன் கிள்ளி வளவனுக்குக் கூறியதாகக் காட்டுதல் கொண்டு, அச் சோழமன்னன் கடல்கோட்பட்ட தனது காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு, நாகபட்டினத்தைத் தனது தலைநகராக்கி கொண்ட பொழுது, பல தீவுகளிலுந் தேடி எதன்கணிருந்தோ அம் மகனைக் கண்டு கொணர்ந்து அவனுக்குத் தன்னரசிற் பாதி கொடுத்தானாதல் வேண்டு மென்பது உய்த்துணரப்படும்; இதற்கு நச்சினார்க்கினியர்பெரும்பாணாற்றுப்படையிற் கூறிய வரலாற்றுரையும் சான்று பகருமென்க. இவ்வாறு வடக்கேயுள்ள வடுகரில் ஒரு சாராரான பல்லவர்க்கும் தெற்கேயுள்ள சோழர்க்கும் தொடர்புண்டாகி அத் தொடர்பினாற் றோன்றிய ஓர் அரசன் இரு மரபினர்க்கும் பொதுவாய்க் காஞ்சிமாநகரிற் செங்கோல் செலுத்தப் புக்க காலந்தொட்டு, வடுகநாட்டிலிருந்த வடுகர் இத் தமிழ்நாட்டில் ஏதொரு தடையு மின்றி வருதற்கு இடம் பெற்றனர். இதற்குமுன் இத் தமிழ்நாட்டின்கண் வருதற்பொருட்டு வடுகமன்னர் எவ்வளவோ முயன்று பார்த்தும், அஞ்ஞான்றெல்லாஞ் சோழ வேந்தர்கள் பேராற்றலுடையராய் விளங்கினமையின் அவர்களால் அஃது இயலாதாயிற்று. இன்னொருகால் வடுக மன்னர் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்தபோது சோழன் இளஞ்சேட்சென்னி அவர்களை வென்று துரத்தினனென்பது. தென் பரதவர் மிடல் சாய வட வடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் நற்றார்க் கள்ளின் சோழன்5 என்னும் புறப்பாட்டான் நன்கறியப்படும். இச்செய்தி. விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி6 என்று அகப்பாட்டினுள்ளுங் கூறப்படுதலின் இதனையை யுறுதற்கு இடஞ் சிறிதும் இன்றாதல் காண்க. இன்னும் பௌத்த அசோக மன்னன் காலத்து மோரியர் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்தும், சேரசோழ பாண்டியர்களை வெல்ல மாட்டாதவர் களாய்த் திரும்பி விட்டமையும் பிறவுமாகிய இவ்வுண்மை களெல்லாம் வரலாற்று நூற் புலமையினரான திருவாளர் கிருஷ்ண சுவாமி ஐயங்கார் அவர்களால் தாம் எழுதிய ஆங்கில நூல்களில் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றன.7 சோழ வேந்தர்களின் ஆட்சி வடுகநாடு வரையிற் பரவியிருந் தமையாலும். அக்காலத்துச் சோழர்கள் பேராற்றலுடைய வர்களாயிருந்தமையாலும், முதலில் அவர்களை வென்று கொண்டு தமிழ்நாட்டினுட் புகுவது வட ஆரியர்க்கும் வடுகர்க்கும் முற்றும் ஏலாததா யிருந்தது. பின்னர் இளந்திரையன் காலந்தொட்டே வடுகர் தமிழ்நாட்டிற் றொகுதி தொகுதியாய் வந்து சேரலாயினர். காவிரிப்பூம்பட்டினம் கடல்வாய்ப்பட்டபின் சோழ மன்னர் ஆற்றலும் வரவரச் சுருங்கலாயிற்று. நன்கு ஆராய்ந்து பாராது கோவலனை நடுவின்றிக் கொல்வித்ததனானே, கற்பிற் சிறந்த அவன்றன் மனைவி கண்ணகி கொண்ட பெருஞ்சீற்றத் தாற் பாண்டிய மன்னனும் உயிர் துறந்தான். இவனுக்குப்பின் வந்த வெற்றிவேற் செழியன் கோவலனைக் கொல்வித்தமைக்கு ஏது யிருந்தவன் ஒரு பொற்கொல்லன் என்பதுபற்றிப் பொற் கொல்லர் அனைவர்மேலும் பெருஞ்சினங்கொண்டு அவர் களுள் ஆயிரவரைக் கொன்று கண்ணகியின் ஆவிக்குப் பலிகொடுத்தானென்று சிலப்பதிகாரங் கூறாநிற்கின்றது.8 இவன் காலத்திற் பாண்டி நாட்டில் மழையில்லையாகி வற்கடந் தோன்றி மன்னுயிர்கள் மடிந்தன. இப்பாண்டியனும் இறந்துபட இவனுக்குப்பின் உக்கிரப்பெருவழுதி பட்டத்திற்கு வந்தானாகல் வேண்டும். இவ்வுக்கிரப் பெருவழுதியோடு கடைச்சங்கம் முடிவுபெற்றதென்று இறையனாரகப் பொருள் முகவுரை கூறுகின்றது. வெற்றிவேற் செழியன் ஆட்சிக்கு இருபது ஆண்டும் உக்கிரப்பெருவழுதியின் ஆட்சிக்கு இருபது ஆண்டும் வைத்து இலங்கைக் கயவாகுமன்னன் ஆட்சிக்காலத்தின் இடைய தாகிய கி.பி. 180 ஆம் ஆண்டிலிருந்து கணக்குச்செய்ய உக்கிரப் பெருவழுதியும் கடைச்சங்கமும் இல்லையாய்ப் போன காலங் கி.பி. 220 ஆம் ஆண்டென்று முடிவு கட்டப்படும் உக்கிரப் பெருவழுதிக்குப்பின் வந்த பாண்டியர் இன்னாரென்று தெரிந்து தொடர்புபடுத்துதற்குத் தக்கசான்று மிகுதியுங் கண்டிலேம். ஆயினும் நம்பியார் திருவிளையாடல் கூறுவது கொண்டு இவற்குப்பின் வந்தோன் கல்வெட்டுகளுக்கு முற்பட்ட வரகுண பாண்டியனா யிருக்கலாமென்று உய்த் துணர்தல் இழுக்காது. நம்பியார் திருவிளையாடலிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியன் சிவபிரான் திருவடிக்கட் பேரன்பு பூண்டவன். இவன் ஒருகால் ஊர்காவலர் பிடித்துக்கொணர்ந்த கள்வன் ஒருவன் உடம்பெங்குந் திருநீறு அணிந்திருக்கக் கண்டு இவர் சிவனடியார். ïtiu ÉLjiybrŒ«Ä‹! என விடுவித்து விட்டான்; பின்னர் ஒருகால் ஓடும் நரிகள் ஊளையிட்ட ஒலி சிவபிரான் பெயரைக் கூவுவதுபோல் தன்செவியிற்பட அவை குளிரால் வருந்தாமைப் பொருட்டு அவற்றின்மேற் போர்வை களை வீசினன்; மற்றொருகால், குளத்திலுள்ள தவளைகள் அரற்றிய ஓசைகேட்டு அவை சிவபிரானைப் பாடினவெனக் கருதி அவற்றிற்குப் பரிசிலாகப் பொற்காசுகளை எறிந்தனன்; வேறொருகால், ஒருவன் திருக்கோயிலில் இருந்த எள்ளைத் தின்னக் கண்டு அவனைப் பிடித்து. ஏன் இங்ஙனஞ் செய்கின்றாய்? v‹W Édt, mt‹ âU«gî« ãwÉbaL¤J ï¤ âU¡nfhƉ bwh©L brŒj‰F’ v‹W ÉilTw, ‘m‰nwš vd¡F« ï¤jifa ãwÉ tUf! என்று அக் கள்வன் வாயிலுள்ள எள்ளை இடித்தெடுத்து அவ் வெச்சிலைத் தானும் நுகர்ந்தனன்; பின்னும் ஒருகால் திருவிடை மருதூர்க்கோயிலின் சுற்றில் ஒருபுறத்துத் தனியே கிடந்த ஒரு மண்டை யோட்டைக் கண்டு கீழ்விழுந்து வணங்கி உம்மைப் போல எமது இத் தலையும் இவ்விடத்தே கிடத்தல் வேண்டும் என்று கூறி அடுத்தடுத்து இரந்து கேட்டனன்; மற்றும் ஒருகால் திருக்கோயிலின் முற்றத்தே கிடந்த நாயின் மலத்தைக் கண்டு இஃது இங்கே கிடக்கப்பெற்றதே, எனக் கொண்டாடி அதனைத் தானேயெடுத்து அப்புறப்படுத்தினன்; இன்னும் ஒருகால் காம்பினின்றும் உதிர்ந்த வேப்பங் கனிகளைக் கண்டு அவையெல்லாஞ் சிவலிங்க வடிவினவாயிருத்தல்பற்றி அவற்றிற்குப் பட்டாடைகளை மேலே வெயில் மறைப்பாகக் கட்டினன்; கடைசியாகச், சொல்லளவில் அடங்கா அழகுடைய ளாய் இருந்த தன் மனைவியைப் பார்த்துப் பெரிதும் விரும்பத்தக்க இவள் சிவபிரானுக்கே உரிமையாகத்தக்காள் என நினைந்து, அவ்வம்மையை அங்ஙனமே அன்போடும் சிவபிரானுக்கே அளித்துவிட்டனன் என்று இப் பாண்டி யனுடைய பேரன் பின்றிறங்களை, நம்பியாண்டார் நம்பிக்கு முன்னிருந்த பட்டினத்தடிகள் தாம் அருளிச்செய்த திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் விரித்துரைத்தாற்போலவே, நம்பியார் திருவிளையாடலுங் கூறுகின்றது. இருந்தவாற்றால், இப்பாண்டிய மன்னன் செயலெல்லாம், கிறுக்குப் பிடித்தவர் செயல்களை யொப்பனவாய் உலகத் தார்க்குக் காணப்படுகின்றன. இவ்வியல்பினனான இம் மன்னன் அரசாளுதற்கும் இசைந்தவன் அல்லன்; ஏனை அரசரோடு போர்புரிதற்கும் முன்நிற்பவன் அல்லன். இவன் அரசாளுதற்கு இசையாதவன் என்பது இவனைப் பற்றிய இரண்டு நிகழ்ச்சி களால் நன்கு தெளியப்படும் ஒன்று: காடுகளிலுள்ள மறவிலங்குகள் மிகப் பெருகிப் பயிர்களை அழிப்ப, உழவர் இட்ட முறையீட்டிற்காக ஒரு கால் வேட்டம் ஆடக் காட்டிற்குச்சென்ற இம் மன்னன் பகலெல்லாம் காடுகளில் உலாவி இரவிற் றிரும்புங்கால், வழியிடையே கிடந்த ஒரு பார்ப்பனன், தான் அறியாமலே தன் குதிரைக் குளப்படிகளால் மிதிபட்டு இறந்ததனை அடுத்தநாள் விடியற்காலையிற் கேட்டு, அத் தீவினை நீங்க மறையோர் ஓதிய கழுவாய் பலவுஞ் சிறக்கச் செய்தும், தான் மன அமைதிபெறானாய், அத் தீவினை ஓர் உருவு கொண்டு தன் பக்கல்நின்று தன்னை வருத்துவதாகவே நம்பி நீளத் துன்புற்று வந்தனன் என்பது. மற்றொன்று: இப் பாண்டியன் அரசாள்வதிற் கருத்தில்லாதவனாய்த் தன் படைகளையுந் திறம்பட வைத்திலனென்பது தெரிந்து இவனது அரசினைக் கைப்பற்றுதற்குச் சோழமன்னன் ஒருவன் இவன்மேற் படையெடுத்து மதுரையை அணுகத், தான் அவனோடு போர் இயற்ற இசையாமையால் திருவாலவாய்ப் பெருமானிடஞ் சென்று தன்குறையை யறிவிப்ப இறைவன் இவன் பேரன்பிற்குகந்து ‘தூங்கியிராது அச்சோழனை எதிர்த்து ஓட்டுக! என்று ஏவியபின், இவன் கடவுட்டுணை கொண்டு அவனொடு பொருது அவனைத் துரத்தினன் என்பது. இவ்வாறு ஒரு பார்ப்பனனது இறுதிக்குத் தான் ஓர் ஏதுவாயிருந்ததும், எதிர்த்துவந்த சோழனொடு தான் போர்புரியுங் கால் தன் படையிலுள்ள மறவரும் பகைவன் படையிலுள்ள மறவரும் மடிந்துபட அதற்குத் தான் அரசனாயிருந்தமையே ஓர் ஏதுவானதும் நினைந்துநினைந்து இறைவன் மாட்டு அன்பின் முதிர்ந்த இம் மன்னவன் ஆற்றானாயினான் என்று கொள்வதே பொருத்தமாம். ஏனெனிற் சோழனொடு போர்புரிந்தபின் இவன் அரச வாழ்க்கையைத் துறந்து, சிவபிரான் திருக்கோயில்கடோறும் வணங்கிச் செல்கையில், திருவிடை மருதூர்த் திருக் கோயிலினுட் புகுதலும், இவனை உருவுகொண்டு வருத்திய பழிதொலையப், பின்னர் இவன் திருக்கைலாயத்தை இறைவனருளாற் கண்டு வணங்கி இவ் வுலகவாழ்வு நீத்தமையா லென்க. இவன் அரசுபூண்ட சிறிது காலத்திலெல்லாம், அதன்பால் உவர்ப்புத் தோன்றி, அவ் வரசுரிமையைத் தன் மகனுக்கோ அல்லது தன்னுடன் பிறந்தானொருவனுக்கோ கொடுத்துத் தான் திருக்கோயில் வழிபாட்டிற் சென்றானாதல் வேண்டும். இவ் வரகுண பாண்டியனுக்குப்பின் வந்த மற்றொரு பாண்டிய மன்னனிடத்தேதான் மாணிக்கவாசகப் பெருமான் முதலில் அமைச்சரா யிருந்தாராகல் வேண்டும். மற்றுத் தமிழ்வரலாறுஉடையாரோ, மேற்கூறிய வரகுணபாண்டி யனிடத்திற்றான் திருவாதவூரடிகள் அமைச்சராயிருந்தனர் போலும் என்கின்றார். மேற்காட்டியவாற்றால் வரகுண பாண்டியன் சிவபிரான்மாட்டு எல்லையற்றதோர் அன்புடைய னென்பது தெற்றென விளங்குதலால், மாணிக்கவாசகர் தாம் குதிரை வாங்குதற்கு எடுத்துச்சென்ற பொருளைச் சிவத் தொண்டிற் செலவழித்தமை பற்றி அவனாயிற் சிறிதும் வெகுண்டிரான்; அவரை பேரன்பின் றிறத்தைக் கண்டு தன்னரசுரிமைச் செல்வமெல்லாம் அவரது திருவடிக்கே வைத்திருப்பான். மற்று, அவரை அமைச்சராக்கொண்ட பாண்டியனோ அவர் சிவத்தொண்டிற் செலவிட்ட பொருளை யெல்லாந் தரும்படி அவரைச் சிறையிலிட்டுத் தொடர்பாகப் பெரிதுந் துன்புறுத்தினவன்; ஆதலால், திருவாதவூரடிகள் அமைச்சராயிருந்தது, வரகுண பாண்டியனிடத்தன்றி அவற்குப் பின் அரசுக்கு வந்த மற்றொரு பாண்டியனிடத்தே யாமென்பது ஒரு தலை. அவ்வாறாயினும் மாணிக்கவாசகப் பெருமான் அமைச்சுரி மையைக் கைவிட்டுத் தில்லையில் வந்து வைகித் திருச்சிற்றம் பலக் கோவையார் அருளிச்செய்தகாலத்து, அவ் வரகுண பாண்டியனும் அவர்க்கு முன்னமே தில்லைக்கண்வந்து வைகி அம்பலக்கூத்தனை வணங்கியபடியாய், இருந்தன னென்பது புலனாகா நிற்கின்றது. என்னையெனின், தமது திருச்சிற்றம்பலக் கோவையாரில் வரகுணனைத், தென்னவன் ஏத்து திருச்சிற்றம் பலத்தான் (306ஆவது செய்யுள்) எனவும். சிற்றம்பலம் புகழும், மயலோங் கிருங்களியானை வரகுணன் (327வது செய்யுள்) எனவும் இரண்டிடத்தில் ஏத்து, புகழும் என அடிகள் நிகழ்காலவினைச் சொற்களாற் கூறுதலினென்க. தம்மோடு உடனிருந்தமையாலன்றோ, அவ் வரகுணதேவரின் பேரன்பைக் கண்டு வியந்து அடிகளும் அவரை அங்ஙனம் பாராட்டி அருளிச் செய்வாராயினர். தாம் அமைச்சரா யிருந்தபோது நரிகளைப் பரியாக்கி ஒரு பேரெழிற் பரிமேல் வந்த சிவபெருமானைத் தம் அரசனாகிய பாண்டியனுந் தெரிந்திலன் என்பது புலப்பட, ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்லவல்லன் அலன்9 என்று அடிகளே அருளிச்செய்திருத்தலின், இவர் அமைச்சரா யிருந்தபோது அரசாண்டவன் வரகுண பாண்டியன் அல்ல னென்பது திண்ணமாம் வரகுண பாண்டியனாயிற் பரிமேல்வந்த இறைவனைத் தெரியாதிரான். இதனை மாணிக்கவாசகர் வரலாற்றினுள்ளும் எடுத்துக்ககாட்டினாம்.10 அதுநிற்க. இனி, மாணிக்கவாசகரானும், நம்பியார் திருவிளை யாடலானுங் கூறப்பட்ட வரகுண பாண்டியன், கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படும் வரகுணபாண்டியர் இருவரிற் சேர்ந்தவன் அல்லனென்பதை விளக்குவாம். கல்வெட்டுகளாற் கட்டப்பட்ட அவ் விருவரில் முற்பட்டவனான வரகுணபாண்டியன் ஓயாமற் படை யெடுத்துச் சென்று வேற்றரசர் நாடுகளைக் கவர்ந்து கொண்டு அவர்கட்குப் பெருந் துன்பத்தை விளைத்தவன்; தன் காலத்திற் சோழ நாட்டையும், தொண்டை நாட்டின் தென்பகுதி களாயிருந்த தஞ்சை திருச்சிராப்பள்ளி மாகாணங்களையும் தன் மதுரை நாட்டோடு சேர்த்துக் கொண்டவன்; கி.பி.779 முதல் 830 வரையில் தொண்டை மண்டலத்தை அரசாண்ட தண்டி வர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் இவ் வரகுண பாண்டியன் காவிரியாற்றங் கரையில் வந்து அவ்வரசன் ஆட்சிக் கீழ் இருந்த தொண்டை நாட்டின் தென்பாதியைக் கைப்பற்றிக் கொண்டான்; இவனுக்கு மாறன் சடையன் என்னும் பெயரும் உண்டு.11 இவன் சிவபிரானிடத்தும் அவனடியாரிடத்தும் அன்புள்ளவன் என்பதற்கு ஏதொரு குறிப்பும் இவன் காலத்துக் கல்வெட்டுகளில் அகப்படவில்லை. அதனால், திருவாதவூரடி களாலும், நம்பியார் திருவிளையாடலாலுஞ் சுட்டப்பட்ட வரகுண பாண்டியன் இவனல்லன் என்பது தெற்றென விளங்கும். இனி, இம்மாறன் சடையன் என்னும் வரகுண பாண்டியனுக்குப் பேரனாகக் கொள்ளப்படும் மற்றொரு வரகுண பாண்டியன் பட்டத்துக்கு வந்தகாலம் கி.பி. 862க்கும் 863க்கும் இடையிலாகும். இவன் காலத்திற் றொண்டை மண்டலத்தை ஆண்ட அரசன் அபராஜித பல்லவனானவன்.12 இவ் இரண்டாம் வரகுணனும் எந்நேரமும் பகைமேற் சென்று போர்புரிதலையே தொழிலாக் கொண்டவன். இவன் இத் தன்மையானதலை, இவன் காலத்திற் செதுக்கப்பட்டதும் திருச்சிராப்பள்ளி மலையின் மேலைக்குகையிற் கண்டெடுக்கப் பட்டதுமான ஒரு கல்வெட்டுப் பட்டயமுஞ் சான்று பகர்கின்றது.13 அஃதெங்ஙன மாயினும் ஆகுக. இவன் பாட்டனான வரகுணன் சோழன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டமையால், இவனை எதிர்ப்பவர் சோழநாட்டில் எவருமே இலர். ஆகவே, இவ் வரகுணன் தொண்டை நாட்டைக் கைப்பற்றுதற்காகவும், அதற்கும் மேற்கே கங்கா பல்லவர் ஆண்ட நாடுகளைக் கைப்பற்றுதற்காகவும் அடுத்தடுத்துப் படைமேற் கொண்டு சென்றானென்பது கல்வெட்டுகளின் ஆராய்ச்சியால் நன்கு புலனாகின்றது. கி.பி. 846 முதல் 866 வரையிற் சென்ற காலத்துட் பாண்டியன் ஒருவன் இலங்கைமேற் படையெடுத்து வந்தன னென்று இலங்கைப் பௌத்த வமிசாவளியாகிய மகாவமிசம் கூறுமதுவும்,14 இவ் வரகுண பாண்டியன் காலத்ததாகப் புலப்படுதலால், இவன் தொண்டையர் கங்கையர் நாட்டளவில் அமைதிபெறாது, இலங்கைமேலும் படைமேற் கொண்டு சென்றமை அறியப்படும். ஆகவே, இவனுக்கும் திருவிளை யாடல்களிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியனுக்கும் ஏதோ ரொற்றுமையுங் காணப்படவில்லை. மேலும், நம்பியார் கூறிய வரகுணன் சிவபிரான் திருவடிக்கண் அன்புடையனாய் மதுரைமா நகரிலேயே அமைந்திருக்க, ஒரு சோழ மன்னன் அவன்மேற் படையெடுத்து மதுரையை நெருங்கினானென்று திருவிளையாடல் கூறுகின்றது. சோழமன்னர் அங்ஙனம் வலிவுடையராய் விளங்கிய காலம், வடுகக்கருநாடர் அல்லது பல்லவர் வலிமையுடையராய் இத் தமிழ் நாட்டிற் புகுந்து நிலைபெறுதற்கு முன்னரேயாம்; அஃதாவது, கி.பி. நாலாம் நூற்றாண்டிற்கு முற்பட்டாதல் வேண்டும். மற்று, ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்தவனான இவ் வரகுண பாண்டியன் காலத்திலோ சோழமன்னர் எவரும் வலியுடையராயும் இருந்திலர். இவனை எதிர்த்தும் வந்திலர். இவன் காலத்துச் சோழமன்னர் இவனுக்கு நண்பராக இருந்தமையால், இவன் அவரோடு ஒருங்கு சேர்ந்துகொண்டு மேலைக் கங்கா பிருதிவியரசர்களை எதிர்த்தன னென்று 1912ஆம் ஆண்டில் வெளியான 337ஆவது கல்வெட்டு ஒன்றும் புகல்கின்றது. ஆகவே, முதலிற் போர் புரியும் வேட்கையின்றி யிருந்து, பின்னர்ச் சிவபிரான் திருவருட்டுணைகொண்டு சென்று, வலிய வந்தெதிர்த்த பாண்டியன் சோழமன்னர் வலிமையின் மிக்கவராய் நிலவிய மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவனா மென்பதூஉம். மற்றுக் கல்வெட்டுகளால் நுவலப்படும் இவ் விரண்டாம் வரகுண பாண்டியன் சோழமன்னர் வலிசுருங்கி யிருப்பப் பல்லவ அரசர் வலிமிகுந் தோங்கிய காலத்தின் இறுதிக் கண்ணதான ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்தவனா மென்பதூஉம் பாகுபடுத் துணர்தல் வேண்டும். மேலும், இவன் பாட்டனான வரகுண பாண்டியன் தன் காலத்திலேயே சோழநாட்டைக் கைப்பற்றி அதனைத் தனது அரசின்கீழ் அடக்கி வைத்தன னென்பது முன்னரே காட்டினமாதலின், அவன்றன் பேரனான இவ் வரகுணன் காலத்திற் சோழ மன்னர் இவனுக்கு அடங்கி யிருந்தன ரென்பது சொல்லாமே யமையும். இனித், திருவிளையாடலிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியன் தன்னை வந்தெதிர்த்த சோழனொடு போர் புரியச் சென்றக்கால் தனது திருமேனி யெங்குந் திருநீறணிந்து சென்று போர்க்களத்தே நின்றனனாக அவன் மேற் பகைவன் ஏவிய கணைகள், இறைவனது அருள் நடுவில் வைகிய அவனுக்கு ஏதஞ் செய்யமாட்டாமல் அவன்றன் அடிகளிலே வந்து வீழ்ந்தன வென்று நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த. பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகஅடிக்கே கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா வடியே படஅமை யுங்கணை யென்ற வரகுணன்றன் முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழற்கே என்னுங் கோயிற் றிருப்பண்ணியர் விருத்தத்தை எடுத்துக் காட்டிய தமிழ்வரலாறுடையார் பின்னர்த் தாங் கூறிய இதனை மறந்து, போர்புரிதலிற் கருத்தில்லா மெய்யன்பனான பழைய வரகுண பாண்டியனையும், போர் வெறியே கொண்டலைந்த பின்னை வரகுண பாண்டியனையும் ஒன்று படுத்திய வழுவுரை அறிவுமிக்க சான்றோர் கண்டு இரங்கற்பால தொன்றாயிற்று. இனித், திருவிளையாடலிற் சொல்லப்படும் வரகுணன், தன்மேற் படையெடுத்துவந்த சோழமன்னனை இறைவனரு ளால் வெற்றிகண்டபிற் சிவபிரான் றிருவடிக்கண் மேலுமேலும் மிக்கெழுந்த பேரன்பின் வழியனாய்த் திருவிடைமருதூரிற் றிருக்கோயிற் றொண்டுபுரிந்து சிலகாலம் வைகியும், அதன்பிற் றில்லைச சிற்றம்பலத்தே கடவுளை வணங்கிச் சிலகால மிருந்தும், அதன்பிற் றன் மதுரைமா நகர் சென்று சிவபிரான் அடியார்பொருட்டு நிகழ்த்திய அருட்செயல்களை விரித்தோதும் அருள் நூல்களையே ஆராய்ந்திருந்தும் அன்பிற் பெருகிச் சிவவுலக மெய்தினானென்று நம்பியார் திருவிளையாடல் கூறாநிற்கும்.15 இதனாற், சோழனைத் துரத்தியபின் இவ் வரகுண பாண்டியன் தன்னாட்சியைத் தன் மகன்மேலேற்றித் தான் தவநெறி சார்ந்தமை தேற்றாம். இவ் வரகுணபாண்டியனுக்கு மகன் ஒருவன் இருந்து அரசு செலுத்தினானென்பது, நம்பியார் விடைக்குறி யம்பெய்த திருவிளையாடல் முதற்செய்யுளி லேயே கூறியிருக்கின்றார். கோவலனைக் கொல்வித்த பிறகு பாண்டியர் அரசின் வலி வரவரக் குறைந்துபோயிற் றென்பதற்கு, வெற்றிவேற் செழியன் காலத்திற் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வெப்பு நோயுங் குருவுந்தொடர வருந்திற்றென ஆசிரியர் இளங்கோ வடிகள் அருளிச் செய்தமையும் வரகுண் பாண்டியன் றன்னை எதிர்த்து மேல்வந்த சோழனொடு போர்புரிதற்கு அஞ்சி இறைவன் றுணையை வேண்டினானென நம்பியார் கூறினமை யுமே உறுஞ் சான்றாம். அதுவேயுமன்றி, வாதவூரடிகள் பாண்டிய மன்னன் பால் அமைச்சராய் வந்தமர்ந்த காலத்து, அவனிடத்துள்ள குதிரைப் படைகளெல்லாம் பெரும்பாலும் அழிந்துபட்ட தனானே மீண்டும் அவற்றை வலிபெறுத்தும் பொருட்டுக் குதிரைகொள்ள அடிகள் பாற் பெரும்பொருள் நல்கி அப் பாண்டியமன்னன் அவரை விடுத்தனன் என்பதனால், அடிகள் அமைச்சராய் இருந்துழிப் பாண்டியன் படைவலி சுருங்கி யிருந்தமை நன்கறியப்படும் அடிகள் தாம் எடுத்துச்சென்ற பொருளுக்குக் குதிரைகள் வாங்கி வராமல், அப் பொருட்டி ரளை யெல்லாம் சிவனடியார்க்கும் அற்றார்க்கும் அலந்தார்க்கும் நல்கிச் செலவு செய்துவிட்ட மையாலும், அடிகள் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொணர்ந்து விட்டுப்போக, அப்பரிகள் முன்னை நரிகளாய் உருமாறி எஞ்சிநின்ற பழைய குதிரைகளையுங் கிழித்துக் கொன்றுவிட்டு ஓடிப்போயினமையாலும் வரகுணன் மைந்தன் பின்னும் படைவலி சுருங்கி இறைவன்றன் றிருவருளையே துணையாக நாடிநிற்க வேண்டியவனானான். இவ்வாறு வரகுணபாண்டியன் மைந்தன் தனது படைவலி சுருங்கியிருத்தல் கண்டு, முன்னர் இவன் தந்தைக்குத் தோற்று ஓடிப்போன சோழன் இப்போது தனக்குக் கருநாடரைத் துணையாகக் கூட்டிக்கொண்டு மீண்டும் மதுரைமேற் படையெடுத்து வந்தனனென்பது நம்பியார். நம்புற வாழ்வோன் றன்மேல் நவையிலா அறிவான் மிக்க செம்பியன் ஒருவன் பேசித் தெறுங்கு படையி னோடும் வெம்பெரும் படையி னோடும் வினைசெய்வான் அடைந்தான் நாளும் உம்பர்சூழ் மதுரை மூதூர் ஓசனை யென்ன ஆங்கு.16 என்று கூறுதலால் இனிதறியப்படும். வரகுணபாண்டியன் மேற் படை யெடுத்துவந்த சோழனே மீண்டும் அவன் மைந்தன்மேற் படையெடுத்து வந்தனன் என்பதற்கு, அங்ஙனம் வந்த சோழன் தன் படையிலுள்ள கரி பரி காலாள் எல்லாம் இளைத்துப்போன பாண்டியன் படையிலிருந்து ஒருவன் ஏவிய வாளியால் துணிக்கப் பட்டுக் கணக்கின்றி வீழ்தலைக் கண்டு, துப்பமர் மெய்யன் ஒப்பிலா அறஞ்சேர் சொக்கநா யகன் பெருஞ் செய்தி செப்பிடிற் பத்த ரள வினிற் காம தேனுவென் றியாவரும் அறைவர் மெய்ப்பட இவனும் அவனை முன் னிட்டே வென்றனன் மற்றியார் வெல்வார் தப்பிலை இவன்றன் தந்தையன் தனக்கும் உதவினன் தாரணி வியப்ப என்று இவற்கும் இவன் றந்தை வரகுணற்கும் இறைவன் உதவி புரிந்ததனை எடுத்துக்காட்டினமையாற் றுணியப்படும். தம்மேல் எதிர்த்துவந்த சோழமன்னன் ஒருவன் காலத்திலேயே வரகுணனும் அவன்றன் மகனும் அரசாண்டமை மேற்காட்டிய வாற்றால் நன்கு புலனாதலின், சிவபிரான் திருவடிக்கண் மெய்யன் புடையனாகிய வரகுணன் நீண்டகாலம் அரசு புரிந்திலன் என்பதும் இது கொண்டு தெற்றெனத் துணியப்படும். துணியப் படவே, வரகுணனிடத்தன்றி, அவன்றன் மகன் அரசுக்குவந்த பின்னரே திருவாதவூரடிகள் அவ்விளை ஞனிடத்து அமைச் சராய் அமர்ந்தாராகல் வேண்டும் என்பதூஉம் உய்த்துணரப் படும். முற்பகுதியி லெல்லாம் அடிகளின் அருமைபெருமையும் பேரன்பும் உணராது அவரை மிகவுந் துன்புறுத்திய அவ்விளம் பாண்டியன், இறைவனே ஒரு கொற்றாளாய் வந்து பிட்டுக்கு மண்சுமந்த தன் கைப்பிரம்பால் அடியுமுண்டு மறைந்ததனைத் தானே நேரேயிருந்து கண்டபின், அவ்விறைவன்பால் அன்பு மீதூரப் பெற்றுத், தன் படைகளை வலுப்படுத்தும் முயற்சியுங் கைவிட்டு இறைவனது அருளையே சார்ந்து நின்றானாதல் வேண்டும். அங்ஙனம் அவன் படை வலிவின்றி யிருந்தமை கண்டே அவன் தந்தையை முன்வந்தெதிர்த்த சோழன் இப்போது கருநாடகரைத் துணைகூட்டிக் கொண்டு மீண்டும் அவனைவந்து எதிர்த்தானாதல் வேண்டும். இரண்டாம் முறை இச்சோழன் கருநாடரைத் துணைகூட்டிவந்தா னென்றமை யால், வடுகக் கருநாடர்க்கும் சோழமன்னர்க்கும் அக்காலத்தே உறவுண்டானமையும் அவ் வுறவு முதன் முதல் நாகபட்டினத்துச் சோழனால் உண்டாகிப் பின்னர் அவன் மகன் தொண்டை மான் இளந்திரையன் வழியே பெருகினமையும் ஐயுறவின்றித் தெளியற்பாலனவாம். பழைய சங்கத்தமிழ் இலக்கியங்களாற் புலனான இவ் வுண்மைகளும், பெரும்பற்றப் புலியூர் நம்பியார் இயற்றிய திருவிளையாடற்புராண வுரைப் பொருள்களும் தம்மில் ஒத்துநிற்கக் காண்டலின்; பழைய பழைய நிகழ்ச்சி களைக் கூறுதற்கண் நம்பியார் திருவிளையாடல் பெரும்பாலும் வரலாற்றை முறை வழுவாது நின்று உண்மை உரை கூறுதலும் பிற்காலத்திற் பரஞ்சோதியார் ஆக்கிய திருவிளையாடல் பழைய செய்திகளை நன்காராயாது தனக்குத் தோன்றிய வாறெல்லாம் பொய்யும் புளுகும் விரவப் புனைந்து கட்டிச் சொல்லுதலும் பாகு படுத்துணர்தல் வேண்டும். வரலாற்று முறையிற் பிழைபடாது செல்லும் நம்பியார் திருவிளை யாடலுரை பழையகால நிகழ்ச்சிகளின் உண்மை யுணர்தற்கு ஓர் இன்றியமையாத கருவியாதலுங் கடைப் பிடித்துணர்தல் வேண்டும். அது கிடக்க. இனி, வரகுண பாண்டியனைப்போல், அவன் மகனும் இறைவன் அருளுதவி கொண்டே தன்மேலும் எதிர்த்து வந்த சோழனையும் அவனுக்குத் துணைவந்த கருநாடரையும் வென்றனன் என்பதனால் இப்பாண்டியர் இருவர் காலத்தும் அவர்தம் படைவலி மிகக் குறைந்துபோனமை ஐயமின்றித் தெளியப்படும். இங்ஙனம் இவர் காலத்திலேயே பாண்டியரது படையாற்றல் சிறுகிவிட்டமையின், இவ்விருவர்க்கும் பின்வந்த பாண்டியன் காலத்தில் அது பின்னுஞ் சிறுத்துப்போயிருக்க வேண்டுமென்று சொல்லுதலே வேண்டா. இதற்கு அறிகுறியாக நம்பியார் கூறுவது பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாற்று. அவர், வரகுண பாண்டியன்றன் மகன்பொருட்டு இறைவன் நிகழ்த்திய அருள் விளையாட்டையும் அதனையடுத்து அப் பாண்டிய இளைஞன் காலத்து நிகழ்ந்த உலவாக் கோட்டை வைத்த திருவிளையாடலையுங் கூறி முடித்தபின், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடலைப் பாடத் துவங்குகின்றுழித். துன்னு சேனையிற் றுளங்கிய ஒருகரு நாட மன்னன் அன்நாள் வந்துஅருட் டென்னனை யோட்டிக் கன்னி மண்டலங் கொண்ட அமண் கையர்கை விழுந்து முன்ன நீடிய வைதிக முறையையும் ஒழித்தான் என்னும் 2ஆஞ் செய்யுளால் வரகுணபாண்டியன்றன் மகனுக்கும் பின் அரசுக்குவந்த பாண்டியமன்னன் காலத்தில் வடுகக் கருநாடர் மீண்டும் படையெடுத்துவந்து அப்பாண்டி யனை வென்று துரத்தி அவனது அரசைக் கைப்பற்றிக் கொண்டமை தெரித்தார். மூர்த்தியார்க்கு அரசளித்த இத் திருவிளையாடற்கு முன் வரகுண பாண்டியன்றன்மகன் அரசும். அதற்குமுன் வரகுண பாண்டியன் அரசுங் கூறி, அவ் விரண்டு அரசுக்கும் பிற்பட்ட இப்பாண்டிய னரசை வைத்து அவர் தொடர்புபடுத்திக் கூறுதலை ஆழ்ந்து காண்பார்க்கு. இம் மூர்த்தியார் திருவிளையாடலின் முகத்துச் சொல்லப்பட்ட பாண்டியன் வரகுண பாண்டியன் மைந்தர்க்குப் பின் வந்தோனாதல் இனிது விளங்கும். வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல் முதல் மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் ஈறான நான்கும், வரகுண பாண்டியன் முதலாக அரசர் மூவர் காலத்திலும் நிகழ்ந்தமை தொன்றுதொட்டு வரும் வரலாற்றான் அறிந்தமையா லன்றோ, அந் நான்கினையும் நம்பியார் ஒன்றன்பின் ஒன்றாக அடைவுபடுத்தி வைத்து ஓதினார். இவ்வாறே இவர் நூன்முழுதும் அவ்வப் பாண்டியர் அரசுகளை ஒன்றன்பின் ஒன்றாக அடைவுபட வைத்தோதச் சான்றுகள் காணாமையின், அவை தம்மை ஆண்டாண்டு முன்னது பின்னும் பின்னது முன்னுமாக வைத்துரைத் தாராயினும், ஈண்டு வரகுண பாண்டியனது அரசுக்குப்பின் நிகழ்ச்சிகளைக் கூறுதற்கண் மட்டும் இம்மூன்று திருவிளை யாடல்களும் தொன்றுதொட்டு வந்த வரலாற்று முறையினவாய்க் காணப்படுதலின், அவை தம்மை ஒன்றன்பின் ஒன்றாய் ஒருங்குவைத் தோதினாரென்க. ஆகவே, வரகுண பாண்டியனை எதிர்த்துத் தோல்வியுற்ற சோழமன்னனே, பின்னர்த் தனக்கு வடுகக் கருநாடரைத் துணைகூட்டி வந்து அவன்றன் மகனோடெதிர்த்துத் தோற்றுச் சென்றபிற், சிலகாலங் கழித்து அச் சோழமன்னர் வலியுஞ் சுருங்கிவிட, அவ் வடுகக் கருநாடர் மன்னன் ஒருவன் தானே வலியனாய்ப் போந்து மேலை வரகுணபாண்டியனுக்குப் பேரனாய்க் கருதத்தக்க பாண்டியனை வென்று ஒட்டி அவனது அரசைக் கவர்ந்து கொண்டா னென்பது புலப்படாநிற்கும். இவ்வாறு பழைய நாளிற் பாண்டிநாட்டை வடுகக் கருநாடர் கைப்பற்றிக் கொண்டு அதன்கட் சிறிதுகாலம் அரசு புரிந்தது ஒரே முறைதான் என்பது கல்வெட்டுகளாற் புலப்படுதலானும், நின்றசீர் நெடுமாற நாயனாரென்னும் பாண்டிய அரசர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் அரசு புரிந்தவராகலின் அவர்க்குமுன் மதுரையை யாண்ட செழியன் சேந்தன், மாறவர்மன் அவநி சூளாமணி, கடுங்கோன் என்னும் பாண்டியர் மூவர்க்குந் தொண்ணூ றாண்டு வைப்பக் கடுங்கோனுக்கு முன்னரே பாண்டிநாட்டைக் கைக்கொண்ட களப்பிரரது ஆட்சி ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியிலோ இன்னும் அதற்கு முன்னரோ செல்லவேண்டு மாதலானும் அவ்வடுகக் கருநாடர் மதுரையைக் கைப்பற்றியது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டின் முற்பாதிக்கும் இடையிலாதல் வேண்டும். மற்று அக் காலந்தான் யாதோ வெனின், மேலே விரிவாக ஆராய்ந்து காட்டிய முடிபாற் கல்லாடம் என்னும் நூலின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈறு அல்லது ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் என்ப பெறப்பட்ட மையின்,17 அந்நூலிற், படைநான்கு உடன்று பஞ்சவற் றுரந்து மதுரை வௌவிய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்துநின்று அருட்பணி யடைப்ப18 என்று குறிக்கப்பட்ட கருநாடர் ஆட்சி ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் தேறப்படும். அற்றாயின், அவரது ஆட்சி ஆறாம் நூற்றாண்டிற்குமுன் எப்போது துவங்கிற்றெனின்; வரகுண பாண்டியன் மைந்தனோடு வந்து போர்புரிந்த சோழமன்னற்கு வடுகக் கருநாடர் துணையாகப் போந்து தோற்றுப் போனமையும். அதன்பின் வரகுண பாண்டியற்கும் பேரனாகக் கொள்ளத்தக்க பாண்டியன் காலத்திற் கருநாடர்வேந்தன் தானே போந்து அவனது அரசுரிமையினை வௌவினமையும் மேற்காட்டின மாகலின், உக்கிரப் பெருவழுதிக்குப்பின் வந்தவனாக மேற் காட்டிய ஆராய்ச்சியாற் பெறப்படும் வரகுண பாண்டியனுக்கு ஓர் இருபஃதாண்டும், அவன் மைந்தற்கு ஓர் இருபஃதாண்டும். அவன்றன் பேரற்கு ஓர் இருபஃதாண்டுமாகக் கூட்டிப் பெற்ற அறுபஃதாண்டுகளை, உக்கிரப் பெருவழுதியின் இறுதிக் காலமாகிய கி.பி. 220ஆம் ஆண்டொடு கூட்டிக் கணக்குச் செய்யக் கி.பி. 280 ஆம் ஆண்டில் அஃதாவது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வடுகக் கருநாடர் மன்னன் பாண்டி வேந்தனது அரசைக் கைப்பற்றினானாதல் வேண்டு மெனக் கொள்க. அதுவேயுமன்றி, அங்ஙனம் வந்த கருநாடர்மன்னன் சமண மதந் தழுவிச் சிவபிரான் றிருக்கோயிற் பணிகளை அடைப்பித்து விட்டானென்று மேற்காட்டிய கல்லாடச் செய்யுள் நுவலு தலின், அஞ்ஞான்று சமணமதந் தலை நிமிர்ந்து நிற்கப் புகுந்த மையும் விளங்கும். அஞ்ஞான்று தான் சமணங் கிளர்ச்சிபெற்று எழுந்த தென்றமையால், அதற்குமுன் கிளர்ச்சிபெற்று நிலவிய புத்தமதம் அப்போதுதான் அக் கிளர்ச்சி குன்றி ஒடுங்கி விட்டமையும் விளங்கா நிற்கும். இவ்வாறு, பௌத்தமதம் ஒளி குன்றி மங்குதற்கும், சமணமதம் ஒளிதுன்றிப் பொங்குதற்கும் உரியகாலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டேயாம். தில்லையம் பலத்தே மாணிக்கவாசகப் பெருமானொடு வழக்காடித் தோற்றபின் பௌத்தமதம் முற்றுந் தன் கிளர்ச்சி குன்றிப் போயிற்று; அதற்குப் பின்னர்தான் சமணமதம் நிலவத் துவங்கிற்று. வடுகக் கருநாடர் தமிழ் நாட்டிற் புகு முன்னம் சமணமதம் இங்குளதாயினும். அவர் இங்குவந்த பின்னரேதான் அது பெரிதுங் கிளர்ச்சிபெற்று ஓங்கலாயிற்று. வடக்கே தக்கணநாட்டிலிந்த வடுகர் பௌத்த சமணமதங்களையே பெரிதுந் தழுவினவர்.19 வடமேற்கே எருமை நாட்டை (மைசூரை) ஆண்ட கங்கை அரசர்களும் சமணமதந் தழுவினவர்களே யாவர்.20 இங்ஙனமாக வடக்கும் வடமேற்கு முள்ள வடுகக் கருநாடர் பெரும்பாலுஞ் சமணமதத்தினரா யிருந்தமையால், அவர் தமிழ்நாட்டிற் புகுந்தபின் அதனை மிகவும் வளர்த்து ஓங்கச் செய்வாராயினர். தக்கணத்தினும், தென்றமிழ் நாட்டினும் சமணமதம் கி.மு. நான்காம் நூற்றாண்டு முதலேயிருந்ததாகலின், தன்னை வளர்ப்பவரான வடுகக் கருநாடர் வந்தபின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு துவங்கி அது பெருக்க முறுவதாயிற்று என்க. அஃதொக்கும், மேலே காட்டிய அரசரின் ஆட்சிக்காலத்தைக் கணக்கிடுகின்றுழி, ஒருகால் ஒவ்வொருவர்க்கு முப்பது ஆண்டு விழுக்காடும். பிறிதொருகால் இருபதாண்டு விழுக்காடும் வைத்துக் கணக்கிட்ட தென்னை யெனின்; தமது ஆட்சிக் காலத்தில் வறுமையும் நோயுந் துன்பமும் தோல்வியும் நிகழப் பெற்ற அரசரது ஆட்சி ஒவ்வொன்றுக்கு இருபது ஆண்டும், வறுமையுந் நோயுந் துன்பமுந் தோல்வியும் இல்லாத அரசரது ஆட்சி ஒவ்வொன்றுக்கு முப்பது ஆண்டுங் கூறுதல் பொருத்தமேயாம்; என்னை? துன்பமுங் கவலையும் உடையார்க்கு ஆண்டு குறுகுதலும், அவை இல்லார்க்கு அது நீளுதலும் எல்லார்க்கும் உடன்பாடாகலின் என்க. அதுகிடக்க. இனி, மேற்காட்டியவாறு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தென்னாடு புகுந்து பாண்டியனது அரசை வௌவிய வடுகக் கருநாடரில் ஒரு சாராரே அக் காலத்திற் களப்பிரர் எனப் பெயர் பெற்றமையாற் போலும். வேள்விக் குடிப் பட்டயத்தின் தமிழ்ப் பகுதியில் அவர் அப்பெயராற் குறிப்பிடப்படுவாரா யினர். இப்போது பாதாமி என வழங்கும் பழைய வாதாவி நகரைச் சிறுத்தொண்டை நாயனாராகிய தன் படைத் தலைவரைக் கொண்டு தகளாக்கி, அதன்கண் அரசாண்ட பேரரசனான இரண்டாம் புலி கேசனை வெற்றிகண்ட முதலாம் நரசிங்கவர்மவேந்தனால் தோல்வியுற்றோருட் களப்பிரரையும் ஒருவராகக் கூறுகின்றன கூரத்துப் பட்டயங்கள்.21 சாளுக்கியர் போராடிவந்த அரசர்களுட் களப்பிரரும் ஒருவரெனக் கேந்தூர்ப் பட்டயங்கள் புகலுகின்றன.22 மேற்சொன்ன இரண்டாம் புலிகேசனுக்குப் பேரனும் கி.பி. 680ஆம் ஆண்டிற் பட்டத்திற்கு வந்தவனுமான விநயாதித் தியன் தான் அரசுக்கு வந்தபின், பதினோராம் ஆண்டிற்கும் பதினான்காம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற், றனக்கு நண்பராக்கிக் கொண்ட அரசர்களுட் களம்பிரர் அல்லது களப்பிரரும் ஒருவராகச் சொல்லப்படுகின்றார்.23 இனி, இவ் விநயாதித்தியனுக்குப் பேரனான, இரண்டாம் விக்கிர மாதித்தியன் கி.பி. 733ஆம் ஆண்டிற் பட்டத்திற்கு வந்தவுடன் பல்லவ அரசர்க்குத் தலைநகராகிய காஞ்சி மேற் படை யெடுத்து வந்து, அப்போது அதன்கண் அரசாண்ட நந்திப் போத்தவர்மனை வென்று அவனுடைய செல்வங்களை யெல்லாங் கவர்ந்தனனென்றும், அதன்பிற் சேர சோழ பாண்டியர்களையும் களப்பிரரையும் எதிர்த்து அவருடைய வலிமையைக் குறைத்தனன் என்றுந் தக்கணநாட்டு வரலாறு கூறுகின்றது.24 ஆக, ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே களப்பிரர் என்னும் வடுகக் கருநாடர் தமிழ்நாட்டிற் புகுந்து நிலைபெற்றுத் தமிழ் அரசருள் ஒருவராகக் கருதப்பட்டமை இவற்றால் நன்கு விளங்காநிற்கும். தமிழ்நாட்டிற்குப் புறத்தேயிருந்து வந்த இக் களப்பிரர் இதன்கண் நிலைபெற்றுத் தமிழரசர்களுள் ஒருவராகக் கருதப்படுதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளாவது சென்றிருக்க வேண்டுமாதலால், இவர்கள் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்தாரென்பது சாலப் பொருத்தமேயாம் என்க. இனி, ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே தமிழ்நாட்டில் நிலைபெற்ற இக் களப்பிரரைத், தமிழ்வரலாறு உடையார் ஏதொரு சான்றுங் காட்டாமற், கலபூரியர் அல்லது கலசூரியர் என்பாரோடு ஒன்றுபடுத்திக், கலபூரியர் என்னுஞ் சொல்லே களப்பிரர் எனச் சிதைந்த தென்று தமக்குத் தோன்றியவாறே கூறினார். கலபூரியரே களப்பிரராவர் என்பதற்குச் சான்று என்னை? ஏதொரு தொடர்புங் காட்டாமற் றமக்குத் தோன்றிய வாறு எழுதுதல்தான் ஆராய்ச்சியின் வந்த வரலாறு போலும்! மேற்சொல்லிய விநயாதித்தியனால் அடக்கிக் கீழ்ப்படுத்தப் பட்ட மன்னர்களுட் களப்பிரரேயன்றி ஹைஹயரும் ஒருவராகச் சொல்லப்படுகின்றனர்; இந்த ஹைஹயரே கலசூரியர் ஆவரென வடமொழி ஆங்கிலமொழி முதலிய வற்றில் மாபெரும் புலவராய் வயங்கிய இராமகிருஷ்ண கோபால பண்டாரகர் கூறினார்.25 களப்பிரரும், கலசூரியரும் ஒருவரேயானால் அவரை இருவேறு மன்னராக ஓதுதல் வேண்டா மற்று, விநயாதித்தியன் வெட்டுவித்த கல்வெட்டு ஒன்றில் அவ்விருவரும் இருவேறு வகை யினராகவே ஓதப்படுதலால், இஃதறியாது களப்பிரரை யுங் கலசூரியரையும் ஒருவரேயென்ற தமிழ்வரலாறு உடையார் கூற்றுப் போலியேயாம் என்க. மேலும், கலசூரியர் என்போர் வடக்கே யமுனை யாற்றினையும் தெற்கே நருமதை யாற்றினையும் எல்லைகளாக உடைய சேதிநாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட ஓர் இனத்தார் ஆவர்.26 இவ் வினத் தவனான விச்சல மன்னன் கி.பி. 1162ஆம் ஆண்டிலிருந்து 1167 ஆம் ஆண்டுவரையிற் கல்யாண நகரில் அரசாண்டனன்.27 இங்ஙனம் வடநாட்டளவில் ஒடுங்கிப்போன கலசூரியர் தென்னாட்டில் வந்தனரென்பதற்கும், அவரே களப்பிரர் அல்லது, ஆந்திரவடுகர் அல்லது நாகர், பல்லவர் என்பதற்கும் ஏதொரு சான்றும் இதுகாறுங் கிடைத்திலாமையின் தமிழ்வரலாறு உடையார் கூற்று ஒரு சிறிதும் ஏற்றுக்கோடற் பாலது அன்று என மறுக்க. இனித், தொண்டைமான் இளந்திரையன் தெற்கேயிருந்த சோழமன்னற்கும், வடுகநாட்டிலிருந்த ஒரு நாகமன்னன் புதல்விக்கும் புதல்வனாய்ப் பிறந்து தெற்கே பாலாறு முதல் வடக்கே கிருஷ்ணையாறு வரையும் விரிந்த தொண்டை நாட்டை ஆளப் புகுந்த நாள் முதல் வடுகக் கருநாடர் தொகுதி தொகுதியாய்த் தமிழ்நாட்டின் கண் வந்து குடியேறப்பெற்றா ராயினும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் வடுக நாட்டை யாண்ட சாளுக்கிய அரசர்க்கும் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியில் அரசு புரிந்த பல்லவ வேந்தர்க்கும் ஓயாப் போர் நிகழ்ந்துவந்தமையால், அதுமுதல் வடுகக் கருநாடர் தமிழ் நாட்டிற்கு வருதலும் ஓய்ந்தது. ஆகவே, கல்வெட்டுகளிற் காணப்படும் வரகுண பாண்டியர் இருவர் காலத்தும் வடுகக் கருநாடர் தமிழ்நாட்டிற்குள் வந்தது மில்லை. வந்து அப் பாண்டியரோடு போர்புரிந்தது மில்லை; அவர் வந்ததெல்லாம் கல்வெட்டுகள் உண்டாதற்கு முற்பட்ட காலத்திலேயா மென்பதூஉம், அங்ஙனம் வந்து அவர் எதிர்த்தது பழைய வரகுண பாண்டியன் மகனையும் பேரனையுமேயா மென்பதூஉம் பகுத்தறியற் பாலன. கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனோ தன் காலத்தே தொண்டை நாட்டை அரசாண்ட அபராஜித பல்லவனையும் அவனுக்குத் துணையாய் வந்த மேலைக் கங்கா அரசனான முதலாம் பிருதிபிதியையும் எதிர்த்தவன் என்பதனை மேலெடுத்துக் காட்டினாம்.1 அங்ஙனம் அவன் அவ்விருவரை எதிர்த்ததும் அவர், தனது மதுரைநாட்டிற்மேற் படையெடுத்து வந்தமையாலன்று; இவனே அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றுதற் பொருட்டு அவர்மேல் வலியச் சென்றவன் ஆவன். கல்வெட்டுகளுக்கு முற்பட்ட பழைய வரகுணபாண்டியன் அங்ஙனம், வலிந்து எவர்மேலும் போர்க்குச் சென்றவன் அல்லன்; வலிய வந்தெதிர்த்த சோழனையும் இறைவனருட்டு ணையால் வென்று ஓட்டினவன். மற்றுக் கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனோ வலியப் படையெடுத்துச் சென்று அபராஜித பல்லவ வேந்தனோடும் அவற்குத் துணையாய்வந்த மேலைக் கங்கா பிருதிவிபதியோடும் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்திற் போர்புரிந்து அவரால் தோல்விபெற்றுச் சென்றவன். உண்மை இங்ஙனமிருக்கத், தமிழ் வரலாறு உடையார் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த பழைய வரகுணனையும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்த வரகுணனையும் ஒன்றுபடுத்துதற்கு முனைந்த தமது கருத்து நிறைவேறுதற் பொருட்டுக் திருப்புறம்பயத்திற் போர்புரிந்த இந்தவரகுண பாண்டியன் அபராஜிதனைக் கொன்று வெற்றிபெற்றான் என்று ஒரு முழுப் பொய்யுரையுங் கட்டி, உண்மையைத் திரித்துச் சொன்னார் தாம் பிழையாகப் பிடித்த தொன்றனை நாட்டிவிட வேண்டினாற் பொய்யும் புளுகும் மேன்மேற் சொல்லநேரும் என்பதற்குத் தமிழ்வரலாறு உடையார் ஓர் எடுத்துக்காட்டாயினார் கண்டீர்! பழைய வரகுணன் தன்னை வந்தெதிர்த்த சோழமன்னனை வென்று துரத்தினன் என்று திருவிளையாடற் புராணங் கூறுதலிற், கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனும் அங்ஙனமே வெற்றி பெற்றானென்று காட்டினாவல்லாமல் அவ் விருவரையும் ஒருவராக்குதற்கு முனைந்த தமது கருத்து நிரம்பாதெனக் கண்டே தமிழ்வரலாறு உடையார், பிற்பட்ட வரகுணனும் வெற்றிபெற்றானென்று தாமாகவே ஒரு பொய்யைப் படைத்து மொழிந்தார். இப் பிற்கால வரகுணன் வெற்றிபெற்றானென்றும் அவர் கூற்றுப் பொய்யாதலை விளக்கிக் காட்டுதும்: மேலைக்கங்கா அரசனான இரண்டாம் பிருதிவிபதி வெட்டுவித்த உதயேந்திரப் பட்டயங்கள் அவன் பாட்டனான முதலாம் பிருதிவிபதியின் போர்த்திறங்களை நுவலுகின்றன; அப் பட்டயங்களின் செய்யுட்களுள் ஒன்று அறிவாளர் ஹூல்சு துரையவர்களால் திருத்தி வெளியிடப்பட்டபடி பின்வருமாறு காணப்படுகின்றது: ய: ஸ்ரீ புறம்பிய - மஹாஹவ மூர்த்தி தீர : பாண்ட் யேச்வரம் வரகுணம் ஸஹஸா விஜித்ய - க்ருத்வ - ஆர்த்த யுக்தம் - அபராஜித - ஸாப்தம் - ஆத்மப்ராண - வ்யயேந ஸுஹ்ரித - த்ரிதிவாஞ் -ஜகாம. இதற்கு அவர் ஆங்கிலத்தில்28 எழுதியதன் தமிழ்மொழி பெயர்ப்புத் திருப்புறம்பயத்தில் நடந்த பெரிய போர்க்குத் தலைவனாய் நின்று. படையாற் பாண்டியவேந்தன் வரகுணனைத் தோல்வி அடைவித்து, அதனால் தன்நண்பன் பட்டப்பெயராகிய அபராஜிதன் (அஃதாவது வெல்லப் படாதவன்) என்பதைப் பொருளுடையதாக்கி இந்த வீரன்தன் உயிரைக் கொடுத்து வானுலகு புகுந்தான் என்பதேயாகும். இதனால், மேலைக்கங்கா அரசனான முதலாம் பிருதிவிபதி தன் நண்பனான அபராஜித மன்னனுக்குத் துணைவனாய்ச் சென்று, திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில் வரகுணபாண்டிய னைத் தோற்றோடச் செய்து தான் அப்போரிற்பட்ட படுகாயத்தில் இறந்துபட்டா னென்பது நன்கு புலனாகின்ற தன்றோ? இங்ஙனம் அபராஜித மன்னனோடும் அவனுக்குத் துணைவந்த முதலாம் பிருதிபதியோடும் போர்புரிந்து அவர்க்குத் தோற்றுப்போன வரகுண பாண்டியனை அப் போரில் வெற்றியடைந்தவன் என்று நெஞ்சந் துணிந்து பொய்யுரை கூறிய தமிழ் வரலாறு உடையார் கூற்றுச் சால அழகிது! இவ்வாற்றற் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற் போரிற் றோற்ற இவ் வரகுணபாண்டியனும், மூன்றாம் நூற்றாண்டில் தன்மேல் வந்தெதிர்த்த சோழ மன்னனை இறைவனருளால் வென்ற வரகுணபாண்டியனும் வேறு வேறு ஆவரல்லது ஒருவராகாமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதல் காண்க. வெறும் பெயரொப்புமைபற்றிப், பழைய சங்க நாட் புலவராகிய பொய்கையாரையும், அவர்க்கு நெடுநாட் பின்னிருந்த பொய்கையாழ்வா ரையும் ஒன்றுபடுத்துதல் ஆகாதெனக் கூறிப்பிறரை மறுக்கும் தமிழ்வரலாறு உடையார். இம் மறுப்பு மாணிக்கவாசகர் காலத்திருந்த வரகுணனையும் பிற்காலத்திருந்த வரகுணனையும் வெறும் பெயரொப்புமை பற்றி ஒன்றுபடுத்த முனைந்த தம்மையுஞ் சாருமென அறியாத தென்னையோ! பிறரை மறுக்குங் கால் ஒருவாறாகவும், தாம் ஒன்றை யெழுதுங்காற் பிறிதொரு வாறாகவும் முறையிகந்து செய்தல் நடுவு நிலைமையாகாதென் றுணர்க. அற்றேற், பழைய வரகுணபாண்டியனைப் போலவே பிற்காலத்தவனான இரண்டாம் வரகுணனும் சிவபிரான் மாட்டு அன்புடையனென்பது அவன் வெட்டுவித்த அம்பா சமுத்திரக் கல்வெட்டினாற் புலப்படுதலின், அதுபற்றி அவ் விருவரையும் ஒருவரென்றலாற் போதரும் இழுக்கென்னையெனிற்; பழைய வரகுணபாண்டியன்றன் அன்பின் செயல்களை மேலே விரிவாக எடுத்துக்காட்டினாம்; அச் செயல்களுள் ஒன்றாயினும் அம்பாசமுத்திரக் கல்வெட்டிற் குறிக்கப்படவில்லை. இக் கல்வெட்டிற்குரிய வரகுணன் தொண்டை நாட்டிற் பெண்ணை யாற்றங் கரைமேலுள்ள அரசூரிற்போய்ப் பாசறையிலிருந்த போது முள்ளிநாட்டைச் சேர்ந்த இளங்கோக் குடியிலுள்ள திருப்போத்துடையாராகிய சிவபிரானுக்கு நான்கு காலமும் வழிபாடு நடப்பித்தற்பொருட்டு அவ்வூர் மன்றத்தார் கையில் இருநூற்றுத் தொண்ணூறு காசுகொடுத்து அக் காசுக்கு வரும் வட்டியைக்கொண்டு அவ் வழிபாடு நடப்பிக்கும் வகைகளை அக் கல்வெட்டிற் பொறிக்கச் செய்திருக்கின்றனன்.29 இவ்வளவே யல்லாமல், அக் கல்வெட்டினால் அறியற்பாலது வேறேது மில்லை. அக் காலத்திருந்த தமிழ்வேந்தர்கள் இங்ஙனஞ் சிவபிரான் திருக்கோயில் வழிபாட்டிற்காகப் பொருள் நல்குதலும் இறையிலியாக நிலங்கள் விடுதலும் வழக்கம். சிவபிரான் திருக்கோயிலுக்கேயன்றித் திருமால் கோயிற்கும், பௌத்தர் சமணர் பாழிகட்கும் இங்ஙனங் கொடை கொடுத்திருக் கின்றார்கள். அவ்வத் தெய்வங்களின் பழைய கோயில்களைப் புதுக்கியும், கோயில் இல்லாதவற்றிற்குப் புதுக்கோயில்கள் எடுப்பித்தும் வந்திருக்கின்றார்கள். அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழர் திருமாலுக்கும் பல கோயில்கள் எடுப்பித்தமையே யாங்கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். ஆகவே, சிவபிரான் திருக்கோயிலொன்றில் நாள்வழிபாடு செவ்வையாய் நடக்குமாறு பொருள்தந்து உதவினமை ஒன்றே கொண்டு பிற்காலத்திருந்த இவ் வரகுண பாண்டியனைச் சிவபிரான் மாட்டு அளவிறந்த அன்புடைய னெனக் கொண்டு, இவனே மாணிக்கவாசகர் காலத்தவன் என்றல் பெரியதொரு பிழைபாடாய் முடியும். அல்லது, இவனும் சிறந்த சிவனடியா னென்றே கொள்ளினும், இவனையும் பழைய வரகுண பாண்டியனையும் ஒன்றுபடுத்துதற்கு ஏதொரு தொடர்புங் கண்டிலம். தன் அன்பின் மிகுதியாற் பழைய வரகுணன் செய்த செயல்களில் ஒன்றாயினும் இவ்வரகுணன் செய்த செயல்களுட் காணப்பட்டாலல்லாமல் இவ் விருவரையும் ஒருவராகக் கருதுதல் முற்றுந் தவறாமென்க. எனவே, பழைய வரகுணன் இவ் வரகுணனின் வேறாதல் தேற்றமாம் என்பது. பழைய வரகுணனைப் போல் இவன் அத்துணைப் பெரிய அன்பினன் என்பது அறிதற்கு வாயில்கள் இல்லையாயினும் இவனும் சிவபிரான்மாட்டு அன்புடையனா யிருக்கலாம்; அதுபற்றி இருவரும் ஒருவராதல் யாங்ஙனம்? சிவபிரானிடத்து அன்புடையன் என்பது ஒரு சிறிது தெரிந்தவளவானே இவன் பழைய வரகுணனே யாவன் என்று கோடற்குச் சான்றுகள் யாவை? சான்றுகள் ஒருசிறிதுங் காணப்படாமையால் அங்ஙனங் கோடல் ஆகாதென்க. மாணிக்கவாசகர் காலத்து வரகுணன் பழைய காலத்தவன் ஆயின். வரகுணன் என்னும் வடசொற்பெயர் தாங்கியிருத்தல் என்னை? பண்டைச் சேரசோழ பாண்டியர்களெல்லாரும் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆய பெயர்களல்லவோ புனைந்தவ ரெனின்; அற்றன்று. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்களே தூய தமிழ்ப்பெயர் புனைந்தோர் ஆவர். சிலப்பதிகாரம் மணிகேலை எழுதப்பட்ட இரண்டாம் நூற்றாண்டிலும், அதற்குமுன் நூற்றாண்டிலும் மெல்லிய தமிழ் ஓசையோடும் ஒத்த சிற்சில வடசொற்கள் தமிழின்கண் வந்து கலப்பவாயின. அங்ஙனம் வந்து கலந்தவற்றுள் வரம் குணம் என்பனவும் சேர்ந்தனவாம். சிலப்பதிகாரத்தின் ஒரு பிரிவாகிய வரந்தருகாதை என்பதன் பெயர் முதலில் வரம் என்னுஞ் சொல்லும். இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன் (நாடுகாண்காதை. 184) என்பதிற் குணன் என்னுஞ் சொல்லும் வந்திருத்தல் காண்க. கடைச்சங்கத்தின் இறுதியில் இருந்த உக்கிரப்பெருவழுதி என்னும் வடசொல் வந்திருத்தலும் அறியற்பாற்று. அரிமர்த்தனன், பராக்ரமன், ஜடிலவர்மன் என்பனபோல் வல்லோசை மிக்கு நிற்கும் வடசொற் பெயர்களே இரண்டு, மூன்று, நான்காம் நூற்றாண்டுகள் வரையில் தமிழில் வந்து வழங்காதனவாகும். வடக்கிருந்துவந்த வடுகக்கருநாடரது ஆட்சிக்குப் பின்னர்த் தான் வல்லோசை மிக்க வடசொற்களுந் தமிழில் வரலாயின. இனித் தமிழ்ப் புராணங்கள் கற்றாரிற் சிலர், பழைய வரகுண பாண்டியன் சிவபிரான்பாற் பேரன்புடை யனாகலாற், சம்பா அரிசியால் ஆக்கிய உணவை அவ்விறைவற்குப் படைத்து, அப் பெருமாற்குத் தகுதியான அவ்வரிசி யுணவைத் தானும் உணடல் பழுதெனக் கருதித், தான் வரகினால் ஆக்கிய உணவை உட்கொண்டு வந்தமைபற்றியே வரகுணன் எனப் பெயர்பெறலானான் என்று கூறக்கேட்டேம். அஃது உண்மையாயின் வரகுணன் என்னும் பெயர் வரகுஉணன் எனப் பிரிந்து தூய தமிழ்ச் சொற்களாய் வரகை உணவாகக் கொள்பவன் என்று பொருள் பயக்கும் என்க. எனவே. இச் சொற்பெயரை ஒரு கருவியாகக் கொண்டு வரகுணனைப் பிற்காலத்தவனாக்க முயல்வார் கருத்து நிரம்பாதென் றறிக. மேலாராய்ந்தவாற்றால் மாணிக்க வாசகர் காலத்திருந்தவனும், அவராற் குறிப்பிட்ட சிவபிரான் திருத்தொண்டனுமான வரகுண பாண்டியன். வடுகக் கருநாடர் மன்னன் மதுரையை வந்து கைப்பற்றுதற்குமுன், அஃதாவது நான்காம் நூற்றாண்டிற்குமுன், இருந்தோனாவன் என்பதூஉம். எனவே மாணிக்கவாசகப் பெருமானும் அந் நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராவர் என்பதூஉம் இனிது பெறப்பட்டன வென்க. அடிக்குறிப்புகள் 1. M. Jouveau - Dubreuil’s ‘The Pallavas’ ch.1. 2. Geiger’s Mahavamsa, p. XXXVIII 3. The late Mr.V. Kanakasabhai Pillai’s ‘The Tamils Eighteen Hundred Years Ago’, p.48. 4. மணிமேகலை 24,60-61 5. புறநானூறு 378 6. அகநானூறு 375 7. Secially see ‘The Beginnings of South Indian History’ Ch.11. 8. சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை. 1. 9. திருவாசகம் திருப்பாண்டிப்பதிகம் 6 10. பக்கம் 44-48 11. M. Jouveau - Dubreuil’s ‘The Pallavas’ p.77 12. Ibid p.82. and also see vatteluthu inscription found at Aivarmalai in the Madura Dist. (No. 705 of 1905). 13. See Epigraphist’s Report for 1904-1905. para 22. 14. Wijesimha’s translation. ch. L. 15. வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளை யாடல், 31-வது செய்யுள் 16. நம்பியார் திருவிளையாடல் 49, 2. 17. இந்நூல் 178, 238ஆம் பக்கங்கள் 18. கல்லாடம் 57. 19. Ancient India by Dr. S. Krishnaswami Aiyangar, p. 34. 20. Dr.V. Smith’s Ancient India. p.199. 21. M. M. Jouveau - Dubreuil’s ‘The Pallavas’ p.41 22. Ibid. p.44. 23. Dr.R.G. Bhandarkar’s Early History of the Dekkan. p.43. 24. Ibid. p.44. 25. Early History of the Dekkan, p.70. 26. Dr. V. Smith’s The Early History of India, p.390. 27. Ibid, p. 432. 28. “Having defeated by force the Pandya lord Varaguna at the head of the great battle of Sri Purambiya and having (thus) made (his) friend’s title Aparajita/(i.e the unconquered) significant. this hero entered heaven by sacrificing his own life. “South Indian Inscriptions, Vo.II p. 334. verse 18. 29. See Epigraphica Indica, vol. IX. part 2.