வெள்ளிவிழா தமிழ்ப் பேரகராதி JublieeTamilDictionary 3 இரண்டாவது பொருளகராதி செந்தமிழ்த் தெய்வ வணக்கம் மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே யறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம். செந்தமிழ்ச் சிறப்பு தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை யுண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்டமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். தற்சிறப்புப் பாயிரம் அருளகத் தனைத்துமே யாளு நாதனை மருளகத் தகற்றிட வணங்கி நூற்படி தெருளகத் தொருபொருட் செப்பும் பல்பெயர்ப் பொருளக ராதியாம் புகலு வாமரோ. அ - சிவன்; பிரணவத்து முதல் அக்கரம், அகாரம் பிரமன், உகாரம் விஷ்ணு, மகாரம் உருத்திரன் எனக்கொள்வ தொன்றாயினும் அவற்றிற்கு அதி தேவதை பரசிவனே யென்க. அகக்கூத்து - அகம், அகமார்க்கம், அகநாடகம், குணவழியது. அகங்காரதத்துவம் - முப்பத்தாறு தத்துவங்களுள் ஒன்று ஆங்காரம் எனவுஞ் சொல்லப்படும் இது புத்தி தத்துவத்தினின்றுந் தோன்றி, இவ்விடத்து யாவர்தான் என் னோடு ஒப்பவர், ஒருவரும் இல்லை யென அகந்தைப்படுதற்குக் காரண மாய், வாயிற் காட்சிக்குவிடய மாய்த் தோன்றிய தொன்றனை இஃது இன்னதென்று புத்தி தத்துவம் நிச்சயிக்கும் படியாக யான் எனவும், எனது எனவும் அதன்கண் ஒருப்பட் டெழுந்து ஆண்மாவுடன் முதல்வனது ஆணையினாலே வேற்றுமை யின்றி நிற்கும் என்க. அது குண வொற்றுமைபற்றி முத்திறப்படும். அகங்காரவகை - வைகரி யாங்காரம், தைசதாங்காரம், பௌதிகாங் காரம் இவற்றினுள்ளே தைசத அகங்காரத்தினின்றும் மன மானது தோன்றி யெதிர்ப்பட்ட பொருளைச் சித்தரூபமாய், நின்று சிந்தித்தும், ஐயுற்றவதனை நிச்ச யித்தற் கண்ணதாய வேட்கை யைச் செய்தும் நிற்கும். அதன் பின் செவி, மெய், கண், நா,மூக்கு என்னும் பஞ்சேந்திரியங்கள் தோன்றா நிற்கும். இவற்றை முறையே வடநூலார் சோத்திரம், துவக்கு, சட்சு, சிங்குவை, ஆக் கிராணமென்பர். வைகரி யகங் காரத்தினின்றும் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்துந் தோன்றும். பூதாதியகங் காரத்தி னின்றும் சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னுந் தன் மாத் திரைகள் ஐந்துந்தோன்றும் தன் மாத்திரைகளும், இச்சா ரூபமாகிய அந்தக் கரணங்கள் மூன்றுங் கூடிப் புரியட்டக சரீரம் எனப்படும். அகசியம் - விகடம், விநோதக் கூத்து. அகசு - பகல்மானம், அளவு. அகச்சமயங்கள் - பாடாணவாத சைவம், சங்கிராந்தவாதசைவம், அவிகார வாதசைவம், பரிணாம வாத சைவம், சுத்த சைவம், பேத வாத சைவம் என்னும் ஆறுமாம். இவற்றுள், பாடாண வாத சைவ மாவது ஆன்மா முத்தியிலுஞ் சகசமலமென்னும் இயற்கை மலம் நீங்காது, ஆகந்து கமலம் என்னும் செயற்கைமலம் மாத்தி ரம் நீங்கப் பெற்றுக் கல்லுப் போலக் கிடக்கு மென்பதாம். சங்கிராந்தவாத சைவம் ஆவது விகாரமின்றி நிற்கும் ஆன்மாவின் சந்நிதியிலே அசத்தாகிய கருவிகளே சத்தாகிய சிவத்தைச் சிவ கரணமாய் நின்று அறியுமெனக் கொள்வதாம். அவிகாரவாத சைவம் ஆவது கொடிய வெப்ப மிக்க வெயி லிலே நடந்தோரால் அடையப் படுகின்ற மர நிழல் போலப் பதி விகாரமின்றி நிற்ப, ஆன்மாவா னது தானே பக்குவமடைந்த போது ஞானக்கண் பெற்றுப் பதியைச் சேரும் எனக் கொள்வ தாம். பரிணாமவாத சைவம் ஆவது உயிர்கெட்டுக்கூடி அர னடியில் ஒன்றாய் நிற்கு மென் பதாம். சுத்த சைவம் ஆவது ஆன் மாவுஞ் சிவமுங்கூடிய விடத்து ஆன்மா சிவ அநுபவத்திற்கு உரித் தாகாது எனக் கொள்ளுமதம். பேதவாதசைவம் ஆவது ஆன்மா தத்துவஞான மடைந்த போதே மும்மலமும் நீங்கப்பெறு மென் றும், இதுவே முத்தியென்றுங் கொள்வதாகும். அகடிதகடனா சாமர்த்தியம் - மாயம், கூடாததையுங் கூட்டுந் தன்மை. அகண்டானந்தமுனி - இலக்குமி தோத்திர முதலிய நூல்களைச் செய்த சம்ஸ்கிருத கவி. அகத்தி - அச்சம், கரீரம், முனி. அகத்தியசங்கிதை - இஃது அகத்திய மகாமுனிவரால் வடமொழியிலே செய்யப்பட்ட ஒரு நூல். அகத்தியப்பட்டன் - அகத்திய பண் டிதன், இப்பண்டிதர் வடமொழி யிலே பாலபாரதம் என்னும் நூலைச் செய்தவர். அகத்தியபக்தவிலாசம் - சிவனடிய வர்களின் சரித்திரங்களைக் கூறும் வடமொழி நூல். அகத்தி யராற் சொல்லப்பட்டது. அகத்தியப்பிராதா - அகத்திய சகோ தரன். அகத்தியம் - முதனூல், முத்தமி ழிலக்கணம். இஃது இயல் இசை நாடக மென்னும் முத்தமிழ் இலக் கணத்தையும் பன்னீராயிரஞ் சூத்திரத்தாற் றெரிவிப்பதாகிய இலக்கணநூல். தென்மதுரைக்க ணிருந்த தலைச் சங்கப் புலவர் களுள் முதல்வராகிய அகத்திய னாராற் செய்தருளப்பட்டது. இது நச்சினார்க்கினியர் காலத் திலே இறந்ததென்ப. தொல் காப்பிய உரையாசிரியர்களும் பிறரும் ஆங்காங்குச் சிற்சில சூத்திரங்களை யெடுத்துக் காட்டி யிருக்கின்றனர். பேரகத்தியம், சிற்றகத்தியம் எனப் பிரசுரிக்கப் பட்டன. பிறழ்வென்பது பெரி யோர் கிடக்கை. அகத்தியன் - கடயோனி, கடோற் பவன், கலசமுனி, கலசோற்பவன், குடமுனி, கும்பசம்பவன், கும்ப சன், கும்பயோனி, கும்போற் பவன், கும்பமுனி, குறுமுனி, மலயமுனி, முத்தமிழுரியோன், மைத்திரா வருணி, தத்தோத்திரி, வாரிகுடித்தோன், கும்போனி, புலத்தியன் மைந்தன், பிரீதி புதல்வன், சித்தன்றாதை, தமிழ் வளர்த்தோன், உலோப முத்திரை கணவன். அகத்தியன் என்னும் பெயருடைய இவர், இருடி சிரேட்டர்களுள் முதல்வர், மித்தி ராவருணர் என்னும் முனிவ ரானவர் சமுத்திரக் கரையிற் சஞ் சரித்தபோது அங்கே ஊர்வசிவர, அவள் மீது கொண்ட மோக மேலீட்டினாலே இந்திரியங்கலித மாக, அதனை யவர் குடத்தில் விட அதனினின்றுந் தோன்றினவர். சிலர் பிரமதேவர்செய்தயாக கும்பத்தினின்றுந் தோன்றினர் எனவுங் கூறுவர். குடத்தினின்று முற்பவித்தமையாற்றான் கும்ப யோனி, கலசமுனி, கும்பசம்பவர், கடோற்பவர் எனப்பெயர் பெற்ற னர். ஆரியர்கள் விந்த மலைக்குத் தெற்கே போகலாகா தென்ற கட்டுப்பாட்டைக் கடந்து முதன் முதல் தக்ஷிணம் வந்து அந்நாட் டியல்புகளைத் திருத்திச் செம்மை செய்தவர் இவரே. சிவ பெருமா னிடத்துங் குமாரக் கடவுளிடத் துஞ் செந்தமிழி னியல்புகளைச் சந்தேகம் விபரீதம் மயக்கம் என்னுமுக்குற்றமுமறத் தெரிந்து தெளிந்தார் இவர் ஒருவரே. பிரமனு மறியாப் பிரணவப் பொருளுண் மையைக் குன்றமெறிந்த தேவ குஞ்சரி நாயகனிடத்துக் கேட்டுணர்ந்தாரும் இவரே. உமாதேவி யாரின் கல்யாணத்துக்குத் தேவர் முதலிய அண்டத்துள்ள வுயிர் வர்க்கங்கள் யாவும் அணுகித் திரண்ட போது இமயமலைத் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதுகண்டவர் முதலாயினோர் அன்னோ! சிவனே யென்று இரங்க, சிவபெருமான் அகத்தியரையே தென்றிசைக் கணுள்ள பொதி யத்துச் சென்றிருவெனக் கட்டளை யிட அவர் அதனைச் சிரமீதேற்றுச் சென்று பொதிய மலையிலமரப் பூமிசமப்பட்டது. பின்னர் அங் கேயே திருமணக் கோலத்தையுந் தரிசித் தருளினர். ஓர்கால் மேரு மலையின் பக்கத்துத் தவஞ் செய் திருந்தனர். அப்போது மேரு மலையோடு பகைத்த விந்தமா மலையானது வளர்ந்து பெருத்துத் தேவர்கள் செலவைத்தடுப்பத், தேவர்கள் யாவரும் அகத்திய முனிவரே யோலமோலம்!! என்று அழைத்திரங்க, அதனையுணர்ந்த முனிவனார் மலையின் வலியை யடக்கித் தேவர் துயரைத்தீர்ப் பான் எண்ணிச் சிவபிரானைத் தியானிக்க, அவர் தோற்றியருளி விந்தமலையை யடக்கும் ஆற்ற லும், பூசை நிமித்தம் கயிலையி லிருந்த காவிரி தீர்த்தமுங் கொடுக் கப் பெற்றவர். புத்திரப் பேறு விரும்பி விதர்ப்பராசன் பயந்த உலோபா முத்திரையாரை விவா கஞ் செய்து, சித்தன் என்னுங் குமாரனைப் பெற்று வைத்துத் தென்றிசை நோக்கிச் சென்றனர். சமுத்திரா கன்னிகையை மணந்து பெருஞ்சாகரர் என்னும் புத்தி ரரைப் பெற்றார் என்றும், உலோ பா முத்திரை புலத்தியனாரின் சகோதரி எனவுஞ் சொல்லா நிற்பர். இவர் குமாரராய சித்த முனி வரின் புத்திரரான சுபதிட்ட முனி வர் இலங்கையை யரசாண்ட புலவசி காரத்தினமாகிய பரராச சேகரன் என்னுஞ் சக்கிரவர்த்தி யின் கொலு மண்டபத்திற்கு வந்து பறங்கிக்காரர், உலாந்தக்காரர், ஆங்கிலேயராதியர்.இவ்வூரை யிந்த விந்தக்காலத்து அரசாள்வ ரெனச் சொல்லிப் போயினர் எனப் பாரம்பரிய கதையு மொன்றுளது. வழியில் கிரவுஞ்சன் என்னும் ஓர் அசுரன் மலைவடிவாய்நின்று மயக்கக் கோபமுற்று, மலையாக நின்று வானவர் முனிவரை மயக் கிக் கந்தக் கடவுளின் வேலாயுதத் தால் அழியக் கடவையெனச் சாப மிட்டு மீண்டு, விந்த மலையைப் பாதலம் போயழுந்து மாறுகை யால் இருத்தி, அசமுகியின் மைந் தர்களான வில்வலன் வாதாவி யென்னும் இரண்டசுரர் களையும் அழித்துத், திருக்குற்றால மென் னுந் தலத்தை யடைந்து, விஷ்ணு விம்பத்தைச் சிவலிங்கமாகத் தாபித்துப் பொதியமலைக்குச் சென்று வீற்றிருந்தனர். காவிரி பூமியில் வந்ததற்கும் இவரே காரணர். தமது கமண்டலத்தி லிருந்த காவிரியை விநாயகக் கடவுள்காக வடிவாய்ச் சென்று கவிழ்ப்பப் பரந்தோடிய அதனை அரசிளங் குமரரைத் துணையாகக் கொண்டு, ஒருமுகமாகத் திருப்பி நாடு வழியே பாயுமாறு விடுவித்த வரும் இவரே. பொதியமலையின் பாங்கருள்ள காடுகளையெல் லாம் நாடாக்கினார். அவைகளே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரைநாடு. ஏழ்முன் பாலைநாடு, ஏழ்பின் பாலைநாடு. ஏழ்குன்ற நாடு, ஏழ்குண காரைநாடு, ஏழ்குறும் பனை நாடு, குமரி, கொல்லம் முதலிய பன்மலைநாடு எனப் பட்டனவாம். இவைகளைத் திருத் தியபின் யமதக்கினி யாருழைச் சென்று அவர் மகனார் திரணதூ மாக்கினியாரை வாங்கிக் கொண்டு துவாரகைக்குச் சென்று கண்ண மூர்த்தி வழிக்கண் வந்த அரசர் பதினெண் மரையும் பதினெண் கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து அந்தநாடு தோறு மிருத்திக் குரு பீடமாய் விளங்கினர். அப்போது இலங்கை நகரத்திருந்து இராக்க தர்கள் வந்து பற்பல துன்பஞ் செய்ய யத்தனித்தார்கள். அது கண்ட அகத்தியனார் இராவண னைச் சங்கீதத்தாற் சிநேகஞ்செய்து இராக்கதர் அந் நாட்டிற்கு வாரா திருக்குமாறு செய்வித்தனர். அகத் தியரோடு வந்த அரசிளங் குமரரே சேர சோழ பாண்டி மண்டலங் களை அமைத்தவர். அதற்கு முன் அரசு செய்தவர் குறுநிலமன்னர் ஆகும். தென்னாட்டைத் திருத்திப் பலவகை யானும் விருத்தி செய்த வர் துவரா பதி அரசிளங் குமரரே யாம். அது “சுராதிராசன் முதலாக வருசோழனுமுனாட் சோழ மண்டல மமைத்த பிறகு” எனவும், “காலனுக்கிது வழக் கெனவுரைத் தவவனுங் காவிரிப் புனல் கொணர்ந்தவ வனும்” எனவுங் கலிங்கத்துப் பரணி கூறுவத னால் அறிக. இந்திரன் முதலிய தேவர் பொருட்டுக் கடலின்க ணொளித் திருந்த! விருத்திராசுரனை வெளிப் படுத்த நினைந்தருளித் திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளருளி னாற் கையைநீட்டி உழுந்தள வாகக் கடலை யடக்கி யுண்டனர். காசியம் பதியிலே சம்ஸ்கிரு தத்தை விருத்தி செய்யும்படி பாணினி முதலிய முனிவரர்கள் சங்க மொன்று தாபித்தனர். அதிற்றம்மையுஞ் சேர்க்குமாறு முனிவர் பெருமான் வேண்டவும் அவர் மறுத்தாராக, கோபமுற்றுத் திருங்வேங்கடப் பதிபோந்து, சிவ சுப்பிரமணியக் கடவுளை நோக்கித் தவங் கிடப்ப, அவர் தோன்றிச் செந்தமிழினியல் பெல்லாந் தெரிக்கத் தெரிந்து பொதியத்திற் சென்று தம்நாட்டுக்குரிய தமிழ்ப் பாஷையையுஞ் செம்மை செய்யக் கருதி, அகத்தியம் என்னும் முத னூலைச் செய்தனர். அதன் பின்னர்ச் சோதிடம், வைத்தியம் முதலிய நூல்கள் பலவற்றைச் செய்தனர். அவையெல்லா மிறந் தொழிந்தன. இக்காலத்து அவர் பெயரால் வழங்கப்படும் வைத்திய முதலிய நூல்கள் யாவும் அவராற் செய்யப் பட்டனவல்ல. இங்ஙனம் நூல்களையியற்றித்திரண தூமாக் கினி என்னுந் தொல்காப்பிய னார், அதங்கோட்டாசிரியர், துராலிங்கர், செம்பூட் சேஎய், வையாபிகனார், வாய்ப்பியனார், பனம் பாரனார், கழாரம்பனார், அவிநயனார், காக்கைபாடினி யார், நற்றத்தர், வாமனர் என்னும் பன்னிருவர்க்கும் போதித்தனர். அதன் பின்னராய முதலூழி யிறுதிக் கண் தென்மது ரையகத்து இறையனாரையுங் குமரவேளை யும் உடனிருக்க வேண்டி முரிஞ்சி யூர் முடிநாகராயர், நிதியின் கிழவ னார் என்றி வருள்ளிட்ட நானூற்று நாற்பத் தொன்பதின்மர் கூட ஆராய்ந்து, தம் நூல்களை யரங் கேற்றினர் அன்றி மற்றையோர் எண்ணிறந்த பரிபாடலும் மூது நாரையும், முதுகுருகும், களரியா விரையும் முதலிய நூல்களைச் செய்தனர். நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு ஆராயப் பட்டது. இத் தலைச் சங்கமிரீஇ யினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறாயுள்ள பாண்டியர் எண்பத்தொன் பதின்மர். அவருட் கவியரங்கேற்றினார் எழுவர். பாண்டியருள் ஒருவனாய சமயா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப் பியம் புலப்படுத்து இரீ இயனான். இத்தலைச் சங்கம் குறித்த வருடம் அளவும் நிலைபெற்று வருங் காலத்தில் அதற்கிடமா யிருந்த தென்மதுரை கடல் கொள்ளப் பட்டது. இதுவன்றி மேற்காட் டிய நாற்பத்தொன்பது நாடுகளும் அழிபட்டன. இக் காலத்தை ஆராயுமிடத்துத் துவாபர கலியுக சந்தியாதல் வேண்டுமென்றும், எனவே இற்றைக்குப் பன்னீரா யிரம் வருடத்திற்கு முன்எனவுங் கூறா நிற்பர். இன்றைக்கு 1148 1- வருடங்க ளுக்கு முன்னர் ஒரு பிரளயம் வந்த தென் றும், அப்பிரளயத்தால் இப்பூமுகத் திலே சமுத்திரக் கரையாற் சூழப் பட்ட நாடுகளெல்லாஞ் சிதைந் தும் வேறுபட்டும் போயின வென் றும், “போசி டோனிஸ்” முதலிய தீவுகள் கடல் வாய்ப்பட்டழிந்ததும் அப்பிரள யத்தாலேயாமென்றும், “அத்தி லாந்திச் சரித்திர” மெழுதிய எல்லியட் என்னும் ஆங்கில பண்டிதர் கூறியதும் இதற்கோர் ஆதார மாம். அதுநிற்க, தேவவிருடியாகிய இக் குறு முனிபாற் கேட்ட மாணாக் கருள் சிகண்டி என்னும் அருந் தவ முனிவர் ஒருவருளர் என்றும், அவர் இடைச் சங்கத்து அநா குலன் என்னுந் தெய்வப் பாண் டியன் தேரோடு ஆகாய வழியிற் செல்லும்போது திலோத்தமை யைக் கண்டு தேரிற் கூடினவிடத் துத் தேவரும் முனிவருஞ் சரியா நிற்கத் தோன்றினமையாற் சார குமாரன் எனப் பெயர்பெற்ற அக் குமாரன் அறிதற்காக இசை நூலாகிய இசை நுணுக் கத்தைச் செய்தனர் என்றும் அடியார்க்கு நல்லார் உரைத் திருக்கின்றனர். ஓர்காலத்து இந்திரசபையிற் சென் றிருந்த அகத்திய முனிவரை இந்திரன் மகிழ்விக்குமாறு உருப் பசியை யழைத்து நடனஞ் செய்க வென்ன, அவளும் அங்ஙனம் ஆடத் தொடங்கும்போது, சித்தி ரசேனன் என்னுங் கந்தருவன், கோலமுங் கோப்பும் இசையும் நடமுந் திருத்திக் கரந்து வருகின்ற திரையுட் புகுந்துபாட, வெளிப் பட்டு ஆடுகின்றவள் சயந்த குமாரனிடத்து மோகங் கொண் டாள் அதனையறிந்த நாரத மகா முனிவர் கலகப்பிரிய ராதலின் அம் மோகத்தைப் பலர்க்கும் அறிவிக்க விரும்பிப் பகை நரம்பு படயாழ் வாசித்தனர். அதனால் ஊர்வசியின் ஆடல் நெகிழ்ந் தமையும், பாடல் முதலிய பல வகைக் கருவிகள் நெகிழ்ந்தனவுங் கண்ட அகத்தியனார் சினந்து. சயந்தனை மூங்கிலாகவும், உருப் பசியை மானுட மகளாகவும், நார தரதுயாழை மங்கல மிழந்து மண் மிசைத் தங்கும் வீணையாகவும் ஆகவென்று சபித்தார் எனவும், அங்ஙனமே சயந்தன் விந்தமலை யில் மூங்கிலாகவும், உருப்பசி காஞ்சிமா நகரத்தில் மாதவி யென்னும் பெயருடன் றேவ கணிகையாகவும் பிறந்தனர் என வும், மகதியாழ் மண்மிசைத் தங்கிய தெனவுஞ் சரிதமுண்டு. அதனை “வானவர் கோமான் வானிடை யிருந்து” என வரும் சுத்தானந்தப் பிரகாச பரதநூற் செய்யுளானும், “நாரதன் வீணை” என்னும் கட லாடு காதைச் செய்யுளானும், “திருந்திய பொதியிலருந் திற லகத்தியன்” என்னும் சிலப்பதிகார நூன்முகச் செய்யுளானுமறிக. இன்னுமிம் முனிவரனார் நகுடன் என்னும் அரசன் தேவேந்திர பதம் பெற்ற காலத்தில் அவன் சிவிகையை முற்றாங்கிச் சென்றா ராக, அவன் விரைவாகச் செல் லுங்கள் என்னும் பொருள்பட “சர்ப்ப சர்ப்ப” எனக் கூற, உடனே மலைப்பாம்பாகச் சபித்தார் என மகாபாரதமும், சீதாதேவியின் சிறை மீட்டற்காக இராமபிரான் இலங்கை யம்பதி நோக்கி வரு வழியில் இம் முனிவரின் ஆச்சிர மத்திற்றங்கி, இராவணன் வர லாற்று முறைமைகளையும், இலங் கையின் மகாத்மியம் முதலான வற்றையுங் கேட்டுணர்ந்து, அவ ராற் கொடுக்கப்பட்ட பிரமாஸ் திரத்தைக் கைக்கொண்டு அவர் அருளையும் பெற்றுச் சென்று வெற்றியடைந்தனர் எனக் கூர்ம மகாபுராணமும், இராமாயணமுங் கூறுகின்றன. “கொங்கு தேர்வாழ்க்கை” என ஆலவாயடிகளாற் றிருவாய் மலர்ந் தருளப்பட்ட திருமுகப் பாசுரத் திற்குக் குற்றங் கூறிய கடைச் சங்கப் புலவருள் ஒருவராய கள வியற் பொருள் கண்ட மதுரைக் கணக்காயன் மகனாரான நக்கீ ரர்க்கு மயக்கம் நீங்க இலக் கணங் களையிறைவன் ஆக்ஞைப்படி உபதேசித்தனர் என ஆலாசிய மான்மியங் கூறுகின்றது. இவ்விருடியர் பெருமானது கலை களுளொன்று, தற்காலத்து எம்ம னோரையுய் விப்பான் சிவஞான முனிவர் (சிவஞான யோகிகள்) என்னுந் திருநாமத்தோடு தோன்றி, திருக்கையலாய பரம்பரைத் திரு வாவடுதுறை யாதீனத் தமர்ந்து செந்தமிழை விருத்தி பண்ணிய தன்றிப் பரமத நிராகரணமும், சைவ சித்தாந்த மாகிய சுவ மத ஸ்தாபனமுஞ் செய்து, சிவஞான போதம் முதலிய உண்மை நூல் களுக்குத் திராவிடமா பாடியம் எனப் பெயரிய உரையும், வார்த் திகமுஞ் செய்து விளங்கிற்று என்பது வெள்ளிடை மலை போற் றெள் ளிதின் விளக்கமே எனவே யிவர் செந்தமிழ் நங்கைக்குச் செவிலித் தாயாய் விளங்கின ரென்பது திண்ணமே யாம். அகத்தியமுனிவர் பெயரால் ஒரு நட்சத்திரமு மிருக்கின்றது. அஃது தோன்றுமாயின் சமுத்திர அலைகள் ஒடுங்கும் இது கடல் குடித்த பெருமாட்சிமைக்கு ஓரறி குறியாக் கொள்ளத் தக்கதாம். அகத்தீசுவரர் - திருவகத்தியான் பள்ளியென்னுந் திவ்விய nக்ஷத் திரத்திலே எழுந்தருளியிருக்குஞ் சுவாமி பெயர். அகநகர் - நகருள்ளிடம், இராச தானியைச் சூழ்ந்த நகரம். அகநானூறு - இஃது எட்டுத் தொகை யுள் ஏழாவது தொகை, வாழ்த்து உட்பட 400 - செய்யுளையுடை யது. உத்தர மதுரைக் கணிருந்த கடைச்சங்கப் புலவர்களுள் பார தம் பாடிய பெருந்தேவனாரால் வாழ்த்துச் செய்யுளும், மாமூல னார் முதல் உலோச்சனார் இறுதி யாகவுள்ள புலவர் பலரால் மற்றை நானூறு செய்யுட்களுஞ் செய்யப் பட்டுள்ளது. அகப்பொருட் பகுதி களையே பொருளாகவுடையது. பதின் மூன்றடிச் சிறுமையும் முப்பத் தேழடிப் பெருமையு முள்ள ஆசிரியப் பாக்களா லமைந்தது. இத்தொகைக்கண் வாழ்த்து ஒழிந்த நானூறு செய்யுட் களில் முன்புள்ள நூற்றிருபது செய்யுள் களிற்றி யானை நிரை எனவும், அவற்றின் பின்புள்ள நூற்றெண்பது செய்யுள் மணி மிடை பவளம் எனவும், மற்றைய நூறும் நித்திலக் கோவை எனவும் கூறப்படும். இத்தொகை தொகுத் தவர் மதுரை உப்பூரி குடிக்கிழார் மரபிற் றோன்றிய உருத்திரசன் மர். தொகுப்பித் தவன் உக்கிரப் பெருவழுதி. இது அகம், அகப் பாட்டு எனவும் பெயர் பெறும். அகநிலைப்பாசக்கை - சுட்டு விரல் நுனியிற் பெருவிர லகப்படுவது. அகநிலை - ஊர். அகநிலைமருதம் - உழை குரலாய கோடிப் பாலை. அகநீகு - தேவானீகன் புத்திரன், குருவின் பிதா. அகப்புறக்கருவி - எழுவகை முழவின் ஒன்று, மத்திமமான தண்ணுமை, தக்கை, தகுணிச்ச முதலாயின. அகப்புறச்சமயங்கள் - சைவம், பாசு பதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்னும் ஆறு மாம். இவற்றுள் சைவசமயி சிவன் தாண்டவ பூஷணமூர்த்தி யாய் அருள் செய்வர் எனக் கூறுவன், பாசுபத சமயி திருநீறுஞ் சடை முடியுந் தரித்த மூர்த்தி யாகவும், மாவிரதி என்பு மாலை தரித்த மூர்த்தியாகவும், காளா முகத்தன் படிகம் புத்திர தீப மணிகள் தரித்த மூர்த்தியாகவும், வாமசமயி அக்கி னியும் உபவீதமுந் தரித்த மூர்த்தி யாகவும், வைரவ சமயி தமருகமுஞ் சிலம்புந் தரித்த மூர்த்தியாகவும் அருள் செய்வர் என்றுங் கூறுவர். இவ் வறுவருஞ் சிவபெருமானையே கடவுளாகக் கொண்டு அவர்க்கு முக்கண்ணுடைமையை யொப்பி நிற்றலாற் சிறிது வேறுபாட்டை யுடையர். அகப்பை - கோரிகை, மூறி, மூழை. அகமார்க்கம் - அருமையிற் பாடல், மெய்க்கூத்து. அகமுழவு - முழவு வகையின் ஒன்று. அஃதாவது உத்தமமான மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா வென்ற இவையாம். அகம்பன் - கும்பகன்னன் புத்திரன், இவன் அநுமானாற் கொல்லப் பட்டான். அகலம் - அகலுள், அகறல், ஆய்வு, ஆன்றல், இடம், இடம்பாடு, கண் ணறை, சேண், ததம், நளம், நளி, நனவு, நியக்குரோதம், படர்தல், பாழி, மார்பு, விபுலம், வியல், விரிவு, விசாலம், வியலிடம். அகலிகை - முற்கலமுனிவர் புத்திரி. இவள் அதிக சுந்தரமுடையவள். அதனால் அநேகர் மணஞ்செய்ய விரும்பவும், அதுகண்ட முனிவர் நீர்க்குள் நின்று நெடுங்காலந் தவஞ் செய்வார்க்கே இவள் உரிய வள் என்று சொல்ல, பற்பல முனிவருந் தேவரும் அங்ஙனம் புகுந்தும் முடியாராயினர். இந்திர னும் பற்பலமுறை மூழ்கி மூழ்கிச் செய்ய இயலாமற் போயினர். கௌதமரே அங்ஙனம் நெடுங் காலஞ் செய்தமையால் மனைவி யாக்கப் பெற்றனர். இந்திரன் மாய வடிவங்கொண்டு வந்து சேர்ந் தமையால், கௌதம முனிவரால் கல்லாகக் கிடக்கும்படி சாபம் பெற்றனள். பின் இராமசுவாமி யின் றிருப்பாத தூளி பட்டமை யால் முன்னுருவாகி முனிவரைச் சேர்ந்தனள். பன்னிரு வருடம் மழையில்லாமல் எங்கணுமுள்ள முனிவர் யாவரும் இவள் ஆச்சிர மத்திற்குச் செல்ல அவர்களைக் கௌதமர் இவளுடைய துணைப் பலத்தாற்றான் பாதுகாத்து வந்த னர். இவள் கங்கையின் வரத்தி னால் எங்கே தோண்டுகின்றனளோ அங்கே தூயநீர்வருமென்ப. அகலுள் - தெரு, எவ்விடமும் அகல் - இடிஞ்சில், சராவம், சுத்திகை தகழி, பாண்டில். அகவல் - ஆசிரியம், தொகை, இத னிலக்கணமாவது - அவளடி யுடைத்தாய், இயற்சீர் பயின்றும், அயற்சீர் விரவியும், தன்றளை தழுவியும், பிறதளை மயங்கியும், கருவிளங்கனி, கூவிளங்கனியென் னும் இருசீருங் கலவாது மூன்று முதலிய பல வடிகளால் முற்றுப் பெற்று, ஈற்றிற் பெரும்பாலும் ஏகார ஓகாரங்கள் வந்து நடக்கப் படுவதாம். நேரிசை யாசிரியப்பா, நிலமண்டில ஆசிரியப்பா, இணைக் குறளாசிரியப்பா, அடிமறிமண் டில ஆசிரியப்பா என நான்கு வகைப்படும். அகவற்பாவினம் - ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என மூவகைப்படும். அகவிதழ் - அல்லி. அகவை - பதினாறு வயதிற்கு உட் பட்ட பிராயத்தை யுடையவள். அகழி - அகழ், உடு, ஓடை, கயம், கிடங்கு, கேணி, பரிகம், பரிகை, பாம்புரி, அகப்பா. அகழெலி - இரும்பன். அகறல் - தணத்தல், வல்லி, பிரிதல், நீங்கல், உணர்தல், தவிர்தல். அகற்றல் - உச்சாடனம், ஒருவுதல், துறத்தல், நீக்கல், தவிர்த்தல், துரத் தல், ஓட்டல், நீத்தல், பரித்தல், கழித்தல், தீர்த்தல், விடுத்தல். அகன்மணிப்பொதுப்பெயர் - அரதனம், சலாகை. அகன் - அகாசுரன்; இவன் கஞ்ச னேவலால் மலைப்பாம்பு வடிவாய் வந்து கண்ணனை விழுங்கி அவ ராற் கொல்லப்பட்டவன். அகிகேத்திரம் - உத்தர பாஞ்சாலத்து இராசதானி. அகிலாண்டேசுவரி - திருவானைக் காவிலே கோயில் கொண்டிருக் கும் தேவியார் பெயர். அகிலேசர் - திருவாரூரிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமி பெயர். அகிலேசுவரி - திருவாரூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர். அகில் - அகரு, உலோகம், காக துண்டம், சாகாதுண்டம், சோங் கம், பூழில் வமிசகம். அகில்வகை - அருமணவன், தக் கோலி, கிடராவன், காரகில். அகோபிலம் - தொண்டை நாட் டிற்கு வடமேற்றிசையிலுள்ள ஓர் வைணவ மடம். அகோரசிவாசாரியர் - சைவ சித்தாந் தத்தைப் பற்பல அத்தியாற்புத செய்கைகளானும் போதனை யினானும் நிலை நிறுத்திய மகான்களுள் இவரும் ஒருவர். சைவ சித்தாந்தத்திற்கு வேண்டிய நூல்களை வடமொழியில் இயற் றினர். மிருகேந்திராகமம் முதலிய சிவாகமங்கட்கு உரை செய்தும் வியாக்கியானஞ் செய்துமுள்ளார். ஆதிசைவப் பிராமண குலத் தில் அவதரித்தவர். சிதம்பர nக்ஷத் திரத்திலே பரிபூரண தசையடைந் தனர். அவதரித்த தானமும் அது வென்று கூறுகின்றனர். அகோர தேவரென்று இவர்க்குப் பெயரு முண்டு. அதிவீரராம பாண்டி யர்க்குத் தீக்ஷh குருவாயிருந்தனர் என்றுங் கூறுவாருமுளர். அகோரசிவாசாரியார்பத்ததி - இது வடமொழியிலே அகோரசிவா சாரியாராற் செய்தருளப்பட்ட ஓர் நூல், பத்ததிகளுள்ளே இது வும் வாமதேவ சிவாசாரி யாராற் செய்தருளப்பட்ட வாமதேவபத் ததியுமே முக்கியமாகக் கைக்கொள் ளப்படுகின்றன. இவை சைவக் கிரியைக் கிரமங்களைப் போதிக் கும். அகோரம் - சிவபெருமானது ஐந்து திருமுகங்களுள் ஒன்று. இது கண் டவர்க்குப் பயங்கரமுண்டாக்குந் தோற்றமுடைய தாய், கீழே தூங்குந் தாடியைக் கொண்டு, புறப்பட்ட பற்களும் விருத்தர் முகம்போன்ற தன்மை யுமுடைத்தாய், கருநிற முற்று வலப்புயத்தின் மேல் தெற்கு நோக்கி விளங்கும், விசயம், நிச்சு வாசம், சுவாயம்புவம், ஆக்கி னேயம், வீரம் என்னும் ஐந்து ஆகமங்களையும் பாரத்துவாச விருடி பொருட்டுத் தோற்றுவித் ததும் இதுவே. அத்தியான்மக நூல்கள் தோன்றின வென்றுஞ் சிவாகமங் கூறுவது. அக்கசாலையர் தெரு - ஆவேசனம். அக்கபாதன் - நியாயநூல் செய்த ஆசிரியன். அக்கயபாத்திரம் - சூரியதேவனிடத் தின்றும் அவன் பேரனாய தரு மராசன் பெற்றுக் கொண்ட வற்றாத பாத்திரம். எவ்வளவு ஆயிரவர் வரினும் அவர்கள் யாவர்க்கும் அன்னங் கொடுக்கும் விசேட முடையது. அக்கன் - இராவணன் மகன், அநும னாற் கொல்லப்பட்டவன். அக்காரக்கனிநச்சுமனார் - கடைச் சங்கப் புலவரு ளொருவர். அக்கினிட்டி - ஞெகிழி, இந்தனம், குப்பிடு கலம், அனற் குவை. அக்கினிதேவன் - சாதவேதா, மை வாகனன், தீபதி, சித்திரபானு, தனஞ்சயன், தென்கீழ்த் திசை யோன்,தேயு, வாயு சகன், பாவகன். அக்கினிமுகன் - சூரபன்மனது புத்திரருள் ஒருவன், வீரவாகுவின் றுணைவராய ஒருவரானுங் கொல்லப்படா திருந்த வீரதீரன், வீரமார்த்தாண்டன், வீரகேசரி முதலிய எண்மர்களையும் போர் முகத்திற் கொன்றவன். இவனே காளியின் வரபல முடையவன். அக்கினிவகை - ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினியம் என்னு மூன்றுமாம். இவை முறையே சதுரம், வில் வட்டம், கோணம் என்னு மூவடிவின வாம். அக்கினிதிக்கு - தென்கீழ்த் திசை. அக்கினிமனைவி - சுவாகாதேவி அக்கினிவாகனம் - ஆட்டுக்கடா. அக்குமணி - சங்குமணி, மனவு, வளைமணி, மனா. அக்குரோணி - பதாதிவகை, அநீகம் மூன்று பங்க கொண்டது. அக்குரோகணிவகை - பதாதி, சேனா முகம், குமுதம், கணகம், வாகினி, பிரளயம், சமுத்திரம், சங்கம், அனிகம் என்னு மொன் பதுமாம். இவற்றுள் பதாதி யாவது - ஓரி யானையும், ஓர் தேரும், மூன்று குதிரைகளும், ஐந்து காலாளுங் கொண்டது. சேனாமுகம் ஆவது பதாதி மூன்றுபங்கு கொண்டது. குமுதம் ஆவது சேனாமுகம் மூன்று பங்கு கொண்டது. கணகம் ஆவது குமுதம் மூன்றுபங்கு கொண்டது. வாகினி ஆவது கணகம் மூன்று பங்கு கொண்டது. பிரளயம் ஆவது வாகினி மூன்று கொண்டது. சமுத்திரம் ஆவது பிரளயம் மூன்று கொண்டது. சங்கம் ஆவது - சமுத்திரம் மூன்று கொண்டது. அனிகம் ஆவது சங்கம் மூன்று கொண்டது. அவற்றின் றொகை யாவன. 1. பதாதிக்கு யானை - 1 தேர் - 1 குதிரை - 3 காலாள் - 5 2. சேனாமுகத்திற்கு - யானை - 3 தேர் - 3 குதிரை - 9 காலாள் - 15 3. குமுதத்திற்கு யானை - 9 தேர் - 9 குதிரை - 27 காலாள் - 45 4. கணத்திற்கு யானை - 27 தேர் - 27 குதிரை - 81 காலாள் - 135 5. வாகினிக்கு யானை - 81 தேர் - 81 குதிரை - 243 காலாள் - 405 6. பிரளயத்திற்கு யானை - 243 தேர் - 243 குதிரை - 729 காலாள் - 1215 7. சமுத்திரத்திற்கு யானை - 729 தேர் - 729 குதிரை - 2187 காலாள் - 3945 8.சங்கத்திற்கு யானை - 2187 தேர் - 2187 குதிரை - 9591 காலாள் - 10935 9. அனிகத்திற்கு யானை - 1591 தேர் - 1591 குதிரை - 19683 காலாள் - 32805 அங்கக்கிரியை - வசைக்கூத்தினிலக் கணத்தொன்று. அங்கதன் - குரங்குச் சேனாவீரருள் ஒருவன் அங்கநாடு - விஷ்ணு மூர்த்தியின் மனத்தினின்றுந் தோன்றினமை யால் மனோபவன், மனோசன், சித்தசன் எனப் பெயர்பெற்ற மன்மதனானவன், சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனற் குமாரர் என்னும் நான்கு மகாமுனிவர்களுக்குஞ் சிவஞான யோகத்தைக் காட்டா நிற்புழி, பிரமன் முதலிய தேவர்களின் ஏவலாற் சென்று அம்பு பிரயோ கிக்க, நெற்றிக் கண்ணினின்றுந் தோன்றிய அக்கினி சுட்டதனால் வெந்து விழுந்த நாடாம். அங்கதேசராசன் - கன்னன். அங்கவகை - படை, குடி, கூழ். அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறுமாம். அங்காகமம் - மதனநூல், கொக் கோகம். அங்காடி - கடைவீதி, ஆவணம், கூலம், பீடிகை, ஞெள்ளல். அங்குலன் - சாகபுரத்தி லிருந்த வேடன் பாதகங்களைச் செய்தவன். இவன் ஒரு நாள் வேட்டையாட வனத்திற்குச் சென்று அங்கு மிருகம் பறவைகள் ஒன்றும் அகப் படாமையால் வருந்தி, நீரருந்த வரும் மிருகங்களைக் கொன்று போவோம் என்று நினைத்து, ஓர் கரையினிடத்துள்ள வில்வ மரத் தின் மேல் ஏறி மறைவாயிருக்கும் இலைகளையெல்லாம் தன் வாளி னாலும் கைகளினாலும் அரிந்தும் பிடுங்கியும் எறிய, அவையெல் லாங் கீழிருந்த சிவலிங்கத்தி னுச்சியிற் பட்டன. இங்ஙனமே மிருக பயத்தினால் நித்திரையின்றி யிராமுழுவதுங் கழித்தமையாலும், அந்தத் தினத்து ஊணின்றியிருந் தமை யானும், சிவ சந்நிதியினுள்ள வில்வ மரத்து இலைகளைப் பறித்து எறிய அவை யருச்சினை செய்தது போலாகலானும், சிவராத்திரி தினமாகிய அவ்விரதத்தை யன் புடன் அநுட்டித்தவரது பலன் அவனுக்குக் கிடைத்தது. இங்ஙன மாயவேடன் மறுநாள் தன்வீடு சென்று மனைமக்களோடு சிறிது காலம் வாழ்ந்து இறந்தனன். யம தூதர்கள் பாசத்தினாற்கட்டி யம லோகங் கொண்டு போகச் சிவ பெருமான் றிருவருளாஞ்ஞைப்படி நந்தி கணங்கள் சென்று யமதூதர் களை யடித்துத் துரத்திப் பாசத்தை யவிழ்த்து விமானத்திலேற்றிச் சிவலோகஞ் சார்ந்தனர். சிவபெரு மான் அவ் வேடனை நோக்கி அன்பனே! சிவராத்திரி விரதத்தை யநுட் டித்த பலனை யுடையை. ஆதலாற் சிவ கணத்தவர்களுள் ஒருவனாய் இருக்கக் கடவா யென்று கூறியருள அங்ஙனமிருந் தனன். அசகாயசூரன் - வேறொருவரது சகாயமில்லாமற் பகைவரை வெல்லும் பல முள்ளவன். அசதி - குட்டினி, தொழுத்தை, கூளி, குறளி, படுவி, குண்டம், துட்டை அசதியாடல் - நகை, நயச்சொல், மிக்குச்சிரித்து விளம்பல். நகல், நயக்கிளவி. அசமுகி - காசிபமுனிக்கும் மாமை யென்பவட்கும் பிறந்தவள், துரு வாச முனியுடன் சேர்ந்து வில்வலன் வாதாவியென்னு மிருமைந்தரை யும் பெற்றவள். வீரமாகாளரால் கை வெட்டப்பட்டவள். அசிதம் - சிவாகமம் இருபத்தெட்டினு ளொன்று. சத்தியோ சாத முகத்தி னின்றுந் தோன்றியது. நாற்பாகங் களையும் பதினாயிரங் கிரந்த சங்கியைகளையு முடையது. நான்கு உபபேதங்களை யுடையது. இது சதாசிவ மூர்த்திக்கு முழுந்தா ளென்ப. இது கேட்டவர் சிவர்சு சிவர் அச்சுதர் ஆகும். அசுணமா - கேகயம், இசையறி பறவை. அசுத்தபுவனம் - ஆன்ம தத்துவம் எனவும் படும், பிரகிருதி முதற் பிருதிவிதத்துவ மிறுதியாகவுள்ள இருபத்து நான்குமாம். அசுத்தமாயை - மாயாமலத்தின் கூறுபாடினுளொன்று. இது சுத்த மாயையினின்றுந் தோன்றிய தாய், பிரகிருதி மாயை தோன்று தற்குக் காரணமாயுள்ளது. பிர பஞ்ச சங்கார காலத்தில் இஃதழிந் தால் மீட்டும் இதனை யுண்டாக் கும் அப்பொருளுக்கும் ஒருபாதான மாக அநவத்தா தோடமடைத லால் இதற்கு அநித்தியத்துவங் கூடாத படியினாலே அழிவில்ல தாய், அருவ மாய், அநேகமென் கின்ற பிரமாணமில்லாதபடியி னாலே ஒன்றாகி, சகல சகத்துக்குங் காரணமாய், காரியஞ் சடமாயிருத் தலாற்றானுஞ் சடமாய். எவ் விடத்துங் காரியங் காணப் படுகையினாலே வியாபகமாய், நிருமலராகிய சிவ பெருமானுக்குப் பரிக்கிர கசத்தியாய், ஆன்மாக் களுக்கு மாயே யமான தனுகரண புவன போகங்களை யுண்டாக்குவ தாய், ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்பட்ட மலங்களில் ஒன்றாய மாயா மலத்தின் சாரியப் பாட்டினு றொன்றாய் விளங்குவ தாம். எனவே விந்துவின் கீழாய டங்கி மல கன்மங்களோடு விரவி முதற்காரணமாய் நிற்பதாம். அசுத்தமாயைத் தோற்றம் - வாயு வானது கடலின் ஒரு பிரதேசத்தை விகாரப் படுத்து மாறுபோல அனந்த தேவநாயனார் கிரியாசத்தி யால் அந்த மாயையினொரு பிரதேசத்தை விகாரப்படுத்தி, அதனின்றுங் கால தத்துவத்தை யும் நியதியையு முண்டாக்குவர். எனவே முதல்வனாணையால் அனந்தேசுர நாயனார் கிரியா சத்தியைப் பிரேரிக்க, அது சத்தி சத்துவத்தை யெழுப்ப, சத்தி தத்துவங் காலதத் துவத்தை யெழுப்ப, அது ஆன்மா வுக்குள்ள கன்மத்தைக் கூட்டுமெனக் கொள்க. அந்தக் காலம் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என முத்திறப்பட்டு இறந்த காலத்து எல்லையும், நிகழ் காலத்திற் பலமும், எதிர்காலத்தில் புதுமையு முண்டாக்கும். நியதி தத்துவம் அரசன் நியாயம் போலச் சிவ பெருமானாற் கன்மத்துக் கீடாகக் கொடுக்கப்பட்ட போகங்களைப் புசிக்கும்படி யறுதியிடும். கலா தத்துவம் நியதிக்குப் பின் தோன்றி ஆணவத்தைச் சிறிது நீக்கி ஆன்மா வின் சேட்டைக்குக் காரணமாய கிரியா சத்தியைத் தோற்றுவிக்கும். அசுத்தம் - அசுகி, அருவருப்பு, குற்சிதம், சூதகம், தூயதின்மை, பயிர்ப்பு, வாலாமை, ஆசௌசம். அசுரர் - அவுணர், சுக்கிரசீடர், தகுவர், தநுசர், தானவர். திதிசுதர், திதி மைந்தர், தைதேயர், தைத்தியர், நிசாசரர், நிசிசரர், பூர்வதேவர், வானோர் மாற்றலர், கண்டகர், மேனிகரப்போர், கார்வண்ணர். மாயைமைந்தர். அசுவத்தாமன் - துரோணாசாரியின் புதல்வன், சிவனது வீரியத்தால் குதிரை வயிற்றினின்றும் பிறந்த வன், சிரஞ்சீவிகளுள் ஒருவன். அசுவினிதேவர் - நாதன், தத்தியன். அசை - தாளவகையுளொன்று, ஒரு மாத்திரை, இதற்குவடிவு - எ அசை - எழுத்துக்களால் ஆக்கப் பட்டுச் சீர்க்கு உறுப்பாய் வருவது. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும். அவற்றுள் நேரசையாவது குற்றெழுத்தேனும் நெட்டெழுத்தேனுந் தனித்தும் ஒற்றடுத்தும் வருவது. நிரையசை யாவது குறிலிணைந்தும் குறி னெடில் இணைந்தும், குறில் இணைந்து ஒற்றடுத்தும், குறி னெடிலிணைந்து ஒற்றடுத்தும் வருவது. அசைச்சீர் - நேரசையாயினும் நிரை யசையாயினுந் தனித்து நின்று சீராய் வருவதாம். உதாரணம் நேர் (நாள்) நிரை (மலர்) இவை பெரும் பாலும் வெண்பாவினீற்றிலுஞ் சிறுபான்மை மற்றையவற்றுள் ளும் வரும். அசைச் சொல் - அத்து, அந்தில், அம்ம, அரோ, அன்று, ஆங்கு, ஆம், ஆல், இகும், இட்டு. இருந்து, கின்று, ஒரும், கா, குதிரை, சின், தம், தாம், தான், தில், நின்று, பிற, பிறக்கு, போம், போலும், மன், மன்னோ, மர, மாது, மாதோ, யா, இக, மியா, போ, நும், வான், கொல், மற்று, ஆங்க, ஓ, உம், இவற்றுண், மா வென்னு மசைச் சொல் வியங் கோளோடும் வரும். அன்றியும் முன்னிலையசைச் சொல் முதலிய தத்தம் வரியிற் காண்க. இவை அசை நிலைகளெனவும் படும். என்னை? வேறுபொருள் உணர்த் தாது பெயர்ச் சொல் லோடும் வினைச் சொல்லோடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்ற லான். அசைத்தல் - சார்த்துதல். அசைத்தல் - அலங்கல், ஊசல், ஓசி தல், சலித்தல், சாய்தல், ததும்பல், தயங்கல், தளம்பல், தள்ளாடல், திவளல், துயல்வரல், துவளல், கசடல், தரளுதல், கம்பிதஞ்செய் தல், சஞ்சரித்தல், தளர்தல், ஆடல். அசைத்தல் - ஆட்டல், இரட்டல், ஒசித்தல். சலிப்பித்தல், துவட் டல். அசைத்தொழில் - தாக்கியெழுதல் அசைமீட்டல் - மிருகங்க டாம் உண்ட உணவை இரைப்பையினுட் செலுத்துதல். அசையாநிலை - அசலம், சலியாமை, சாசுவதம், துருவம், துவம், தம்ப நிலை. அசைவு - உலோகம், கம்பனம், கம்பம், கம்பிதம், கஞ்சலம், சலம், சலனம், தரளம், துலிதம், மடிவு. அசோகமரம் - காகோளி, சிஞ்சுபம், செயலை, சேந்து, பிண்டி. அசோகவனம் - இராவணனது உத்தி யான வனம், சீதேவியைச் சிறை வைத்த இடம். அச்சக்குறிப்பு - அளுக்கல், உலமரல், ஒடல், குலைதல், குலையல், குளிர், கூசல், ஞெரேலெனல், ஞொள் கல், திட்கல், துட்கல், துணுக் கெனல். துண்ணெனல், தேங்கல். வெட்கல், வெய்துறல், துடுக்கெனல், திடீரெனல், திண் ணெனல். அச்சமின்மை - அபயம், நிர்ப்பயம், வெருவாமை, தறுகண்மை, அஞ் சாமை. அச்சமுள்ளோன் - கரிதன், காதரன், சிதன், பீதன், பீரு, பீருகன், பீலுகன், சகிதன். அச்சம் - அடுப்பு, அணங்கு, அற்றம், உட்கு, உரும், உருவு, உறுகண், கடி, கம்பலை, கலக்கம், கவலை, கொன், கோரம், சூரம், சூர், தரம், நாம், பயம், பனி, பனிப்பு, பீதி, பீர், புலம்பு, பைரவம், பேம், பிறப்பு, வெடி, வெருவந்தம், வெருவு, வெறி, வெறுப்பு, கோன், அதிர்ப்பு, பயானகம். அச்சவவிநயம் - நாடகவுறுப்பி னொன்று, அஃதாவது ஒடுங்கிய உடம்பும், நடுங்கிய நிலையும், மலங்கிய கண்ணும், கலங்கிய மனமும், மறைந்து வருதலுடை மையும் கையெதிர் மறுத்தலும் பரந்த நோக்கமும் இசைந்த பண் பினதாம். அச்சியந்திரம் - எழுதாவெழுத்து, எழுத்துப்பதி கருவி. அச்சிரவகாலம் - வாடையொடு வரூஉங்காலம், முன்பனி. அச்சு - தென்னாதெனா வென்று பாடல், பாரணை, ஆளத்தி. அச்சுமாறாவாதிமதம் - ஆன்மாக்கள் பிறவியையடையும் போது முன்னர் ஆணாய்த் தோன்றியது ஆணாகவும், பெண்ணாகப் பிறந் தது பெண்ணாகவும் பிறக்கு மென்றும், சிவபூசையின் பலத் தினறாற் பிறவி யொழிந்து சிவ சந்நிதியிலே அச்சு மாறாமலே யிருக்கு மென்றுங் கொள்வதாம். அச்சுருவாணி - அச்சாணி, அச்சு. அச்சுவகண்டன் - ஓர் விஞ்சையன், திவிட்ட குமாரனாற் கொல்லப் பட்டவன். அச்சுவினிநாள் - இரலை, ஏறு, ஐப்பசி, சென்னி, பரி, புரவி, மருத்துவ நாள், முதனாள், யாழ், வாசி. அச்சுவினிதேவர் - பரிமருத்துவர், அச்சுவினிகள், மருத்துவதர், மருத்துவதி குமாரர். அஞ்சலிக்கை - இரட்டைக்கை, அஃதாவது இரண்டு கையும் பதாகை போல மார்பிலே ஒன்றிக் கூப்புவது.என்னை? “அஞ்சலி யென்பதறிவுறக் கிளப்பி, னெஞ்ச லின்றி யிருகையும் பதாகையாய், பந்தகம் பொருந்து மாட்சித் தென்ப” என்றாராகலின். அஞ்சலித்தல் - கும்பிடுதல், கை கூப்பல், கைம்முகிழ்த்தல். அஞ்செழுத்து - பஞ்சாக்கரம், சீலித மந்திரம், மகாமனு. அஞ்சல் - உட்கல், கலங்கல், பயப் படல், மருளல், வெருவுதல், வெருளல். அஞ்சனக்கோல் - கோல். அஞ்சனாட்சி - இவர் கல்வியிற் சிறந்து விளங்கிய தஞ்சையி லிருந்த வித்வாம்சை, கம்பநாடன் இராமாயணம் பாடி முடித்து அரங்கத்திற்கு அரங்கேற்றக் கொண்டுபோன காலத்து, அங் குள்ள பிராமணர் அவரை நோக்கி, புலவீரர்! இன்னவின்ன விடங்கள் சென்று இவ்விவர் கையொப்பமுங் கொண்டு வருக! வென்றபோது இவர் கையொப் பமுங் கொண்டுவருக வென்றா ரென்றும், கம்பர் அங்ஙனமே சென்று கேட்டபோது, அதிக வியப்புற்று, தாமிந்த அற்ப காரி யத்தையிட்டு வருதல் சாலுமா வென்று இங்கித வுரைகூறி, “அம்பரா வணிசடை யரனயன் முதலும்பரான் முனிவரான் யோக ராலுய - ரிம்பராற் பிணிக்கரு மிராம வேழஞ்சேர் - சம்பராம் புலவரைக் கருத்திருத்துவாம்” என்னுஞ் செய்யுளையும் பாடிக் கொடுத்தனர் என்றுங் கதை கூறுவர். இவர் தாசி குலத்திற் பிறந்தவர். சண்பக வடிவு முதலிய மாது சிரோமணிகள் போல இவ ருஞ் சிறந்த பண்டிதை யென்க. இவர் காலம் கம்பநாடர் காலமே. இற்றைக்குச் சுமார் ஆயிரத்திரு நூறு வருடங்களுக்கு முன்னராம். அஞ்சுமான - சிவாகமம் இருபத் தெட்டினு ளொன்று, வாமதேவ முகத்தினின்றுந் தோன்றியது. நாற்பாதங்களையும் பன்னிரண்டு உபதேசங்களையு முடையது. இது சதாசிவநாயனார்க்கு முதுகென்ப. ஐந்திலக்கங்கிரந்த சங்கியைகளை யுடையது. இது கேட்டவர் அம்பு, உக்கிரர், ஆதித்திய ராம். அஞ்சைக்களம் - திருவஞ்சையென வும் பெயர், தேவாரம் பெற்ற சிவதலங்களுள் ஒன்று. அஞ்ஞாதவாசம் - தான் இன்னா னென்று ஒருவரும் அறியாதபடி வசிப்பது, ஞாதம் - அறியப்பட் டது. ந என்னும் நஞ்ஞூ ஈண்டு இன்மைப் பொருளது. இவ்வா சம் பாண்டவர்களாலுந் திரௌ பதியினாலுஞ் செய்யப்பட்டது. தருமராசன் சந்நியாச வேடத் துடன் கங்கபட்டர் என்னும் பெய ரோடு, சொக்கட்டானாட்டம், பட்சி சகுனம், இரத்தின பரீiக்ஷ, வேதாந்த சித்தாந்த சாத்திர போதனை, பஞ்சாங்க முரைத்தல் முதலியவற்றால் வசித் தனன். வீமன் வல்லன் என்னும் பெயரு டன் பாகசாலைத் தலைவனாய்ச் சுயம் பாகித் தொழிலில் அமர்ந் திருந்தான். அர்ச்சுனன் ஊர்வசி சாபத்தா லடையும் அலிவேடத்தை யெடுத்துப் பிருகந்நளை யென் னும் நாமத்தோடு விராடராசன் மகளாகிய உத்தரையென்ப வட்கு வீணை வாசித்தல் முதலாய விநோத வித்தைகளைக் கற்பித்தான். நகுலன் தந்திபாலன் என்னும் பெய ரினனாய் அரசனிடத்தில் அசுவ சிட்சை செய்திருந்தான். சகாதேவன் கோலுங் குழலுங் கொண்ட இடையன் உருவங் கொண்டு தாமக்கிரந்தி யென்னும் பெயருடன் பசு நிரைகளை மேய்த்துப் பாதுகாத்து வந்தான். த்ரௌபதி யானவள் தான் சைரந் திரி சாதியிற் பிறந்தவளென்றும், கந்தருவர் ஐவரின் மனைவியென் றும், துவாரகையிலும், அத்தினா புரியிலும் உருக்குமிணி முதலா யினோருக்குக் கோலஞ் செய்யும் பணிவிடையிலிருந்தவள் என்றும், தன் பெயர் மாலினி என்றும், விராட ராசன் மனைவியாகிய சுதேட்டிணையினிடத்துச் சொல்லி தன் கந்தருவருடைய பயத்தா லும், தேவதைகளின் பலத்தாலும் தன்னை யெவருங் கற்பழிக்க முடியாதென்றும் நம்பச் செய்து, அரசிக்கு இஷ்டமானபடி நடந்து கோலமகளிர் வேலையிலிருந்து கழித்தாள். அஞ்ஞானம் - அவிச்சை, அவித்தை, அவிவேகம், மிச்சை, பொய்யறிவு. அஞ்ஞானவிதம் - தமசு, மோகம், மகாமோகம், தாமிச்சிரம், அந்த தாமிச்சிரம் என்பனவாம். இவை யைந்தும் அதர்மத்திலே பிர விருத்தி பண்ணின ஆன்மாக் களுக்குச் சிவபெருமானது ஆஞ்ஞையினாலே பிரவிர்த்திக்கு வரும். இவற்றுள் தமசாவது அநான்மாவாகிற தேகாதிகளை ஆன்மாவென்று புத்தி பண்ணு கை, அது நாலுபூத சம்யோகமே ஆன்மா வென்பதும், பஞ்ச பூதங் களே ஆன்மா வென்பதும், ஞானேந்திரியங்களைந்துமே ஆன்மா வென்பதும், பஞ்சதன் மாத்திரைகளே யான்மாவென்ப தும், மனமே யான்மாவென்ப தும், புத்தியே யான்மாவென்ப தும், அகங்காரமே யான்மா வென்பதும், குணதத்துவமே யான்மா வென்பதும், அவ்வியத்த அதோபாகமாகிய சித்தமே யான்மா வென்பதும், புருட தத்துவமே யான்மா வென்பதும் என இவ்வாறு பத்து வகைப் படும். மோகமாவது மயக்கம். அது அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், என்னும் எட்டனுள் ஒவ்வொன்றைப் பற்றி அதுவே மேலாய பேறு எனக் கொள்ளலால் எட்டு வகைப் படும். மகர மோகமா வது சத்த முதலிய ஐந்து விடயங் களும் அதிமானுட கிருத்தியமாகத் தூல சிரவணாதிகளுண்டாய், ஐந்து சித்தியிலும் சத்தாதிகளைத் தேவ லோகத்தும் பூவுலகத்துங் கிரகிக் கையாகிய பத்துமே பரப்பிரயோ சன மென்கை. தாமிச்சிரமாவது திவ்விய அதிவ்விய பேதமாகிய சுத்தமுதலிய பத்துவகைச் சித்தி காரணமாகவும், அணிமா வாதி யஷ்டசித்தியின் பொருட் டுஞ் செய்யப்படுகின்ற சாதனக்குறைவு வந்த காலத்துஞ் சித்தியாய், இவை களுக்கு நாசம் வந்த காலத்திலும் இந்தப் பதினெட்டி னும் வருந் தாபம் யாதொன்றுண்டோ அது வேயாம். அந்த தாமிச் சிரமாவது திவ்வியா திவ்விய பேதத்திலே சத்தாதிகள் பத்தும், அணிமா முதலிய சித்திகளெட்டும் பெற்று, அதனிலே அத்தியந்தாபி நிவேசம் பண்ணுதல். (அபிநிவேசம் - மனப் பற்று) இவ்வாறாக அஞ்ஞான பேதம் ஆக அறுபத்து நான்காம். அடக்கம் - அடங்கல், ஒடுக்கம், ஒருங் கல், குத்தி, சங்கோசம், நொறில். முணங்கு, முடக்கம், மடங்கு. அடங்கல் - ஒருங்கு, அமைவு. அடமானம் - அடகு, ஈடு, கடன், பிணை. அடம்பு - பாலிகை, அடப்ப மரம். அடரொலி - அதிர்த்தல், தெழித்தல், அதட்டல், உரைத்தல், உரப்பல். அடலியன் - பனையோலைக் கடை, ஈர்க்கு, துடைப்பம். அடிமுதல் - எழுவாய், மோனை, ஆதி, பூருவம் தலைத்தாள். அடிசில் - அடப்படுவது, சோறு, போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணா, புழுக்கல். வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அசனம், ஊன், கூழ், ஓதனம், புகா, அவி, பவி, சரு, அமிழ்து, புற்கை, நிமிரல், கவளம், உதரகம். அடிச்சேரி - அடிக்குதல். அடித்தல் - அகைத்தல், அதுக்கல், அறைதல், எரிதல், ஏற்றல், குத்தல், கொட்டல், புடைத்தல், மொத் தல், மோதல், வழுக்கல், மொக் கல், தாக்கல். அடிமை - ஆள், கிணகர், சேடர், தாசர், தொண்டு, தொத்து, தொழும்பர், தொழும்பு, தொறுவு, பிருத்தியர், விருத்தி, தாதர், தாதி, தாசி. இவற்றுட் சிறந்த பெயர் சேடர், சேடியர் என்பனவாம். அடிமையோலை - ஆவணவோலை, முறி. அடியவர்வகை - சாமுசித்தர், பிராகிரு தர், வைநயிகர் என மூவகையர். அடியாரிலக்கணம் - பொதுவிலக் கணம், சிறப்பிலக்கணம் என விரு வகைப்படும். அவற்றுள் பொது விலக்கணங்களாவன: கொல் லாமை, புலாலுண்ணாமை, கள் ளாமை, கள்ளுண்ணாமை, பிறர் மனை நயவாமை, இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய், தந்தை, முதலிய பெரியோரை வழிபடுதல் முதலி யனவாம். சிறப்பிலக்கணம் ஆவது புறத்திலக்கணம், உடலிலக்கணம் அகத்திலக் கணம் என மூவகைப் படும். புறத்திலக்கணம் பத்து, உட லிலக்கணம் பத்து, அகத்திலக் கணம் மூன்று. ஆகச் சிவனடியா ரிலக்கணம் மூன்று. அவற்றுள், புறத்திலக்கணம் பத்தாவன : விபூதி உருத்திராக்கம் என்னுஞ் சிவ சின்னங்களைத் தரித்தல், குருவை வழிபடல், சிவபெரு மானைத் தோத்திரஞ் செய்தல், சிவ நாமங் களையுச்சரித்தல், சிவ பெருமானைப் பூசை செய்தல், சிவதரு மங்களைச் செய்தல், சிவ புராணங்களைக் கேட்டல், சிவாலய தரிசனஞ் செய்தல், சிவனடி யாரிடத்தன்றிப் பிறரி டத்துப் போசனம் பண்ணாமை, சிவனடியார்களுக்குக் கொடுத் தல் என்பவைகளாம். உடலிலக்கணம் பத்தாவன: சிவ பெருமானுடைய பெருமையைச் சிந்திக்குந் தோறும் பேசுந்தோறுங் கண்டம் விம்முதல், நாக்குத் துடித் தல், உதடு துடித்தல், சரீரநடுங் குதல், உரோமஞ் சிலிர்த்தல், குறு வேர்வை கொள்ளல், நாத்தழு தழுத்தல், ஆனந்தக் கண்ணீர் சொரிதல், வாய்விட்டழுதல், பரவசமாய்த் தன்னை அயர்த்தல் என்பவைகளாம். அகத்திலக்கணம் மூன்றாவன: பஞ்சாக்கரத்தை மானதமாகச் செபித்தல், மானதபூசை, சிவ பெருமானைத் தன்னோடு பிரி வறக் காண்டல் என்பவை களாம். அடியார்க்குநல்லார் - இவர் பண் டைக்காலத்து உரையாசிரியர் களுள் ஒருவர். இளங்கோவடி களாற் செய்யப்பட்ட சிலப்பதி காரம் என்னும் பெருங்காப்பியத் திற்கு உரை செய்தவர் இவரே. இவ் வுரையாசிரியரது இடம் காலம் முதலியன நன்கு விளங்க வில்லை. ஆயினும் உரைச் சிறப்புப் பாயிரத்தில் “அடியார்க்கு நல்லான் காருந் தருவு மனையா னிரம்பை யர் காவலனே” எனக் கூறப்பட்டி ருந்தலான், நிரம்பை யென்ற ஊரிற் பிறந்தவரெனவும், “பொப் பண்ண காங்கேயர் கோனளித்த சோற்றிச் செருக்கல்லவோ தமிழ் மூன்று முரைத்ததுவே” என்ற தனால், பொப்பண்ண காங்கேயன் என்ற அரசன் சமஸ்தானத்தி லிருந்தவர் என்பதும், அதன் கேள்விப்படியுரை செய்தனர் என்பதும், பெறப்படலால் அவ் வரசன் காலத்தவர் எனவுங் கொள்ளக் கிடக்கின்றது. அன்றி யும், நச்சினார்க்கினியரால் மறுக் கப்படுவனவற்றுட் சில இவரு டைய கொள்கையாக இருத்தல் பற்றி நச்சினார்க்கினியரது காலத் திற்கு முந்தியிருந்தா ரெனத் துணி புறக்கிடக்கின்றது. இவரது சமயம் சைவ சித்தாந்த சமயமே. இவர் சைவ சித்தாந்தவுணர்ச்சிகளி னும், முத்தமிழ்த் துறைகளினும், அருகமதக் கலை களினும் மிக்க ஆராய்ச்சியுடைய ரென்பது இவருரையாற்றெள்ளிதிற் புலப் படுகின்றது. மற்றை யுரை யாசிரி யர்கள் போலாது தாம் எடுத்துக் காட்டும் மேற்கோள்கள் இன் னின்ன நூலின் கணுள்ளனவென்று பெரும்பாலுங் குறிப்பிட்டுள்ளார். இவர் மேற்கொண்ட நூல்களுட் பெரும்பாலும் அகத்தியம், அக நானுறு, அணியியல், இசை நுணுக்கம், இந்திரகாளியம், உதயணன் கதை, ஓவிய நூல், கலிங்கத்துப் பரணி, கலித்தொகை, களரியாவிரை, கனாநூல், குண நூல், குருகு, குறுந்தொகை, கூத் தநூல், சயந்தம், சிந்தாமணி, சிறு பாணாற்றுப்படை, சூளாமணி, செயிற்றியம், தண்டியலங்காரம், தாளவகையோத்து, திருக்குறள், திருச்சிற்றம்பலக்கோவையார், திருமுருகாற்றுப்படை, திவாகரம், தொல்காப்பியம், நாலடியார், நான்மணிக்கடிகை, நூல், நெடுநல் வாடை, பஞ்சபாரதீயம். பஞ்ச மரபு, பட்டினப்பாலை, பதிற்றுப் பத்து. பரதசேனாபதீயம், பரதம், பரிபாடல், பழமொழி, பாசண் டம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, பெருங்குறிஞ்சி, பெருநாரை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப்படை, மணிமேகலை, மதிவாணர் நாடகத் தமிழ் நூல், மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம், முத்தொள்ளா யிரம், முறுவல், வளையாபதி, வெண்டாளி முதலிய நூல்களின் பிரமாணங்களே காட்டப்பட் டிருக்கின்றன. சிற்சிலவிடத்துப் பிரயோசனமும், அலங்கார மும் மெய்ப்பாடுகளும், வேறு சில குறிப்புக்களும் இவராலெழு தப்பட்டுள்ளன. அரும்பதவுரை யைத் தழுவியும், சிறுபான்மை மறுத்தும், சிலவிடத்துப் பதவுரை யாகவும், ஒரேவிடத்துப் பொழிப் புரையாகவும் எழுதி, ஆங்காங்குச் சொன்னயம் பொருணயங்களை யினிது புலப்படுத்தி, இயற்றமிழ்ப் பகுதியாகிய ஐந்திலக்கணங்களை யும் இசைத் தமிழ் நாடகத்தமிழ்ப் பகுதிகளையும், ஐந்திணைக்கு முரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் இவற்றுள் ஒவ்வொன்றின் வகை பலவற்றை யும் மேற்கோளோடு விரித்திருக் கின்றனர். இவராற் சுட்டப்பட்ட வுரையாசிரியர் நக்கீரர், இளம் பூரணர், அரும்பதவுரையாசிரியர் என்னு மூவரேயாம். இவரது உரை நடை சிலசில விடத்து எதுகை மோனை முதலிவற்றோடு கூடி இனிய சுவை பயந்து செய்யுண டையாக வமைந்துள்ளது. பழ மொழிகளும், திசைச்சொற்களும், வரு மாயின் இன்னது இன்ன பழ மொழியென்னும், இன்னசொல் இன்ன நாட்டு வழக்கு என்றுங் காட்ட நிற்பர். இவரது உரைக் கண் இக்காலத்து விசேடித்து வழங்கலில்லாத இசை, நாடகத் தமிழ் நூற்சூத் திரங்களும், பரி பாடைகளும் வேறுபலவும் நிறைந்துள்ளன வாகலின் படிப் போர்க்கு மிகவும் பயன்படும். சிலப்பதிகாரத்திற்கன்றி வேறு நூல்களுக்கு உரை செய்ததாக விளங்கப்படவில்லை. அடியிலக்கணம் - அஃதாவது நேரொன்றாசிரியத்தளை முதலிய தளைகள் ஒன்றும் பலவும் அடுத்து வருவதாம். அடிவகை - குறளடி, சிந்தடி, அளவடி, அல்லது நேரடி, நெடிலடி, கழி நெடிலடியென ஐந்து வகைப் படும். அவற்றுள் இருசீரான் வரு வது குறளடி, முச்சீரான் வருவது சிந்தடி, நாற்சீரான் வருவது அள வடி, ஐஞ்சீரான் வருவது நெடி லடி, ஐந்தின் மிக்க சீரான் வருவன கழிநெடிலடியாம். அடிவெண்குருத்து - முருத்து அடுக்களை - அட்டில், மடைப் பள்ளி, பாகசாலை. அடுக்குதல் - ஏற்றல். அடுப்பு - உத்தானம், காமரம், குமு தம், சுபாலிகை சுல்லி, சோபா லிகை, மணவை, நிரை. அடை - அப்பம். அடைகுறடு - பட்டடை. அடைக்கலம் - அபயம், இல்லடை, கையடை, சரணம், சரண், மறை, புகல், தஞ்சம். அடைக்கலம்புகுதல் - சரணடைதல், சரணம், சரண்புகல், மறை, புகல். அடையாளம் - அங்கம், அச்சு, அறி குறி, ஆணை, ஆவணம், இலக்க ணம், இலாஞ்சனம், இலிங்கம், களங்கம், குறி, கேது, சாதனம், சின்னம், துவசம், நிமித்தம், பதம், பாளி, பொறி, முத்திரை, வியஞ் சனம். அடைவு - ஆம்பல். அட்டகசம் - ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பந்தம், சாருவ பூபம், சுப்பிர தீபம் என்பனவாம். அட்டகணிதம் - சங்கலிதம், விபக லிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கன மூலம் என்பனவாம். அவற்றுள் சங்கலித மாவது கூட்டல், விபக லிதமாவது கழித்தல், குணனம் ஆவது பெருக்கல், பாகாரம் ஆவது பங்கிடல் (பிரித்தல்), வர்க்கமா வது சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம், கனமாவது சமமாகிய மூவெண்ணின் பெருக்கம். அட்டகிரி - இமயம், ஏமகுண்டம், கைலை, நிடதம், நீலம், மந்தரம், விந்தம், கந்தமாதனம் என்பன வாம். அட்டசித்திகள் - அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிரா காமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பனவாம். இவையிற்றுள் முதன் மூன்றும் தேகசித்தியான ஐசுவரியங்களாம். அணிமாவாவது பரமாணுவிலுஞ் சூக்குமமான தேகத்தையுடைத் தாயிருக்கை. மகிமா ஆவது தேகேந்திரியாதி களினால் வியாபியாய்ப் பிரம லோக பரியந்தமுள்ள தேகத்தை யுடைத்தா யிருக்கை. இலகிமா ஆவது சீக்கிர வேகியாய்ச் சேற்றி லுஞ் சலத்திலும் அடியமிழ்ந்தா மற் செல்லுந் தேகத்தை யுடைத் தாயிருத்தல், கரிமாவாவது பர்வ தத்திலும் பாரமாய் மகா வாயுவி னாலும் அசைக்கப்படாமல் இருத் தலாம். பிராத்தியாவது மனத்தி னாலே நினைத்த பதார்த்தங்கள் யாவும் முன்னே வந்தடையப் பெறுதல், பிரகாமியமாவது திவ்விய ரூபமான அநேக பெண் களை மனச்சங்கற்பத்தினாலுண் டாக்கி யாவரோடும் ஏக காலத் திலே அவற்றிற் கொத்த வடிவங் கள் கொண்டு கூடுவதாம். ஈசத் துவமாவது பிரமன் விஉஷ்ணு முதலிய சர்வ தேவர்கள் முனி வர்கள் ஆகிய யாவரிடத்துந் தன் னுடைய ஆக்கினையைச் செலுத் தல். வசித்துவமாவது சர்வ சனங் களையும் பிரகிருதியையும் வசீ கரணம் பண்ணிச் சிருட்டி முத லிய கிருத்தியங்களைச் செய்த லாம். இவை வேறு வித மாகவும் உரைக்கப்படும். இவை பூவுலகத் திற்கு மேலாகப் பிசாச பதம் முத லாக உத்தரோத்தரந்து விகுண மாய் அறுபத்துநாலு குணமாம். அவையாவன:- பிசாச பதவாசிக ளான உருத்திர பிசாசங்களுக்குப் பிருதிவி புவனங்களை வியாபித்த அணிமா முதலிய எட்டுக் குணங் கள் உண்டு. மனுடர்களுள் சிவ பூசா தாரதம் மியத்தினாலே இரௌத்திர பிசாசகண பதத்தை யடைந்தவர் களுக்கும் இவ்வாறே யுண்டாம். இரnக்ஷhலோகவாசி கட்குப் பிருதிவி அப்பு என்னுமிரண்டு புவனங்களையும் வியாபித்துத் துவி குணமான ஐசுவரிய முண்டு. இயக்கலோகத் திருப்பவர்க்குப் பிருதிவி, அப்பு, தேயு என்னு மூன்று தத்துவங்களுடைய புவனங் களையும் வியாபித்த முக் குண மான ஐசுவரிய முண்டு. கந்தருவலோகத்தில் வசிப்ப வர்க்குப் பார்த்தி வாப்பிய தைசத வாயவ் வியமான நாலு தத்துவ புவனங் களையும் வியாபித்த சதுர்க்குணமான ஐசுவரியமுண்டு. இந்திரனுலகில் இருப்பார்க்கு ஐந்து புவனங்களையும் வியா பித்த ஐங்குண ஐசுவரிய முண்டு. சோமலோக வாசிகளுக்குப் பஞ்ச பூதங்களுள் மனோ தத்துவமுஞ் சேர்ந்த ஆறு புவனத்தையும் வியா பித்த அறுகுண ஐசுவரிய முண்டு. பிரசாபத்திய வுலகர்த்தவர்க்குக் கீழ்ச் சொன்ன ஆறுடன் அகங் கார தத்துவமுமாக ஏழு புவனங் களையும் வியாபித்த எழுகுண ஐசுவரியங்களுள. பிரமலோகவாசிட்குக் கீழ்ச் சொல்லப் பட்ட ஏழுடன் புத்தி தத்துவ புவனமுங்கூட எட்டுப் புவனங் களையும் வியாபித்த அட்ட ஐசுவரிய முண்டு. இங்ஙனமே மானுடர்களுள்ளும் சிவ பூசையின் தாரதம்மியங்களி னாலேயந்தந்த உலகத்தையடைந் தவர்களுக்கு இவ்வாறாகிய ஐசுவரிய சித்திகள் உண்டென்க. அட்டதிக்கு - கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்பனவாம்.பூமி ஆகாயமென்று மிரண்டனையுஞ் சேர்த்துப் பத்தென்பதுமாம். அட்டதிக்குப்பாலகர் - இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வரு ணன், வாயு, குபேரன், ஈசானன் என்பவர்களாம். பிரம விஷ்ணுக் களையுங் கூட்டிப் பத்தென்பது மாம். அட்டதிக்குப்பாலகர்குறி - கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, காகம், யானை யென் பனவாம். அட்டபரிசம் - தட்டல், பற்றல், தட வல். தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல் என்பனவாம். அட்டமங்கலம் - கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல் என்பனவாம். அட்டமாநாகம் - அனந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன் என்பனவாம். இவை படமும் வாலுமுடையனவாய் மற்றைய வுறுப்புகள் எல்லாந் தேவ வடிவங் கொண்டிருப்பனவாம். அட்டமூர்த்தம் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமானன் என்பனவாம். அட்டமூர்த்தவிறைவர் - பவன், சருவன், ஈசானன், பசுபதி, வீமன், மாதேவன், உக்கிரன், உருத்திரன் என்னு மிவர்களாம். அட்டமூர்த்தவிறைவர்மனைவியர் - சுவர்ச்சலை, உரோகணி, உஷை, சுகேசி, சுவாகை, திசை, சிவை, தீக்கை யென்பவராம். அட்டமூர்த்தவிறைவர்மைந்தர் - சனி, புதன், சுக்கிரன், செவ்வாய், குகன், சுவர்க்கன், மனோசிவன், சந்தா னன் என்பவர்களாம். அட்டவசுக்கள் - தரன், துருவன், சோமன், ஆபற்சைவன், அனலன், அனிலன், பூரத்தியூசன், பிரபாசன் என்பவர்களாம். அட்டவீரட்டத்தலம் - திருக்கண்டியூர், திருக்கோவலூர், திருவதிகை, திருப்பறியலூர். திருவிற்குடி, திரு வழுவூர், திருக்குறுக்கை, திருக்கட வூர் என்னுமிவைகளேயாம். இத் தலங்களினடந்த வீரங்களைமேல் முறையே காண்க. அட்டவீரட்டம் - பிரமனைத் தலை கொய்தல், அந்தகனை யழித்தல், திரிபுரமெரித்தல், தக்கன்றலை தடிந்தமை, சலந்தரவதம், சயாசுர சங்காரம், காம தகனம், காலனை யுதைத்தமை யென்னுமிவைகள் சிவபிரானாற் செய்தருளப்பட்ட முக்கிய வீரங்களாம். அட்டாங்கயோகம் - இயமம், நியமம், ஆதனம், பிராணயாமம், பிரத்தி யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம். இவற்றுள், இயமமாவது கொல்லாமை, மெய்ம்மை கூறல், கள்ளாமை, பிறர் பொருள் விழையாமை, இந்திரிய மடக்கல் என்பனவாம். நியமமாவது தவம், சுத்தமுடைமை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழி படல் என்பனவாம். ஆதனமாவது பத்திரம், கோ முகம், பங்கயம், கேசரி, சுவத்திகம், சுகா தனம், வீரம், மயூரம் முதலிய இருப்பினு ளொன்றாயிருத்தல். பிரணாயாமம்ஆவது பிராண வாயு வைத்தடுத்தல், இரேசகபூரக கும் பகங்களாற் றடுத்தல். இரே சகம் என்பது மூச்சை விடுக்குதல். பூரகம் என்பது வாயுவை யுட் செலுத்துதல். கும்பகம் என்பது அங்ஙனேற்றிய வாயுவை நிறுத் தல். இது அகற்பம், சகற்பம் என விருவகைப்படும். மந்திரமில்லாது நிறுத்தல் அகற்பம். பிரணவத் துடன் காயத்திரி மந்திரத்தையும் உச்சரித்து நிறுத்தல் சகற்பமாம். பிரத்தியாகாரம்ஆவது மன மானது இந்திரிய வாயிலாகவிட யாதிகளிற் சென்று பற்றி யுழலா வண்ணம் அடக்குதலாம். எனவே சீவ வுபாதியை நீக்கிப் பிரபஞ்ச உபாதியைச் சிவ சொரூபமாகப் பார்த்தல். தாரணை ஆவது உந்தி, இதயம், உச்சியென்னு மூன்றிடத்தும் சித்தத்தை நிலை நிறுத்தல். இது வன்றி முழங்கால், குதம், இதயம், கண்டம், கபாலம் என்னும் ஐந்து இடங்களினும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களையு மொடுக்கி, அவ் விடங்களின் முறையே பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன், என்னும் பஞ்ச மூர்த்தி களையும் இருத்திப் பாவித்தலாம் என்றுங் கூறுவர். தியானம் ஆவது ஐம்புலத்தையும் அந்தக்கரணத்தையு மடக்கி ஒரு கரத்து மழுவும், ஒரு கரத்துமானும் ஏந்தியதாய், அபயவரத அத்தங் களை யுடையதாய், சதுர்ப்புயம், காளகண்டம், திரிநேத்திரம் உடையதாய் விளங்குஞ் சிவமூர்த் தியை தியானித்தலாம். சமாதி ஆவது ஓரிடத்தேனும், மந்திரத்தோடு நோக்காமல் எங் கணுஞ் சிவவியாபகமாய் நோக்கி, அவ்வஸ்துவையுந் தன்னையும் பிரிவறப் பொருந்தல். இவற்றின் விரிவுகளை யெல்லாங் கூர்ம மகா புராணம், சூதசங் கிதை, வாயு சங்கிதை முதலிய முந்நூல் களில் வரிவாகக் காண்க. அட்டாங்கவணக்கம் - கை இரண்டு, தோள் இரண்டு, கால் இரண்டு, மார்பு, நெற்றியென்னும் எட்டு றுப்பும் நிலத்திற்றோய விழுதல், இது சாஷ்டாங்கம் எனவுஞ் சொல்லப்படும். அட்டாவதானம் - வேலும் மயிலும் என்று இடைவிடாது கூறுதல், கையில் இலாடசங்கிலி வைத்துக் கழற்றுதல், ஒருவன் கேட்ட வினாக் களுக்கு விடை சொல்லுதல், எதிரில் சூதாடல், முதுகில் கல்லு, எள்ளு, நெல்லு, உழுந்து, ஒருவர் எறியின் பரிசவுணர்ச்சி யால் அவை யொவ்வொன்றும் இவ்வளவின வென்று சொல்லுதல், சதுரங்கம் ஆடல், புலவோர் சொல் கவியை யவதானித்துப் பொருள் சொலல், அறுபத்து நான்கு பேர் எழுதி வருவதற்கு அவர் கேட்டபடி கவி சொல்லுதல் என்பனவாம். தசாவ தானம் சோடசாவ தானம், சதாவ தானம் முதலிய அவதானங்களு முள. அட்டிகை - சரடு, கழுத்தணி. அட்டை - உரு, சளூகம், சளுகம். அணி - அஃதாவது செய்யுட் கழகு செய்து நிற்பதாம். அது பொரு ளணி, சொல்லணி யென இரு வகைப்படும். அவற்றுட் பொரு ளணி உவமையணி முதல் ஏது வணி யிறுதியாக நூறு வகைப் படும். அணிகலச்செப்பு - கண்டிகை, பீடிகை, காண்டம், கடிப்பம், கோடிகம். அணிகளின்கடைப்புணர்வு - மடை, கயில். அணிதல் - ஆர்த்தல், சூடல், தரித் தல், புனைதல், பூணல், மலைதல், மிலைதல், வேய்தல், மிளைச்சல், எய்தல், வரித்தல். அணிநூல் - தண்டி யாசிரியராற் செய்யப்பட்ட நூல், உவமான அலங்காரம், உருவக வலங்கார முதலிய செய்யுள் அழகுகளைக் கூறுமென்க. அணியியல் - இஃது ஓர் அலங்கார நூல், தண்டி யாசிரியராற் செய் யப்பட்ட தண்டியலங்கார மென் னும் அணி நூலுக்கு முந்தியதே. இது யாப்பருங்கல முதலியவற்றிற் பேசப்பட்டமையின் துணிபா யிற்று. அணில் - இலுதை, வரிப்புறம், வெளில் இதன் பிள்ளை குட்டி, பறழ், பிள்ளை. அண்டகோளகை - கூடம், கடாகம். அண்டங்காக்கை - கலோலம். அண்டசம் - முட்டையிற் றோன்று வனவாய உயிர்கள். அண்டச்சுவர் - பித்திகை. அண்டபகிரண்டம் - துருவ சக்கரத்துக்கு உள்ளண்டங்களும் வெளி யண்டங் களுமாம். அண்டமுகடு - மூதண்டம். அண்ணல் - மேல்வாய், அணரி, அணர். அண்ணன் - தமையன், முன்னை, முன்னோன், முன், சேட்டன், தம்முன் தோன்றல், மூத்தோன். அண்ணன்மனைவி - அண்ணி, குரு மனைவி. அதங்கோட்டாசிரியர் - அகத்திய முனிவர் மாணக்கருள் ஒருவர். கபாடபுரத்திலிருந்த இடைச் சங்கப் புலவருள் ஒருவர். தொல் காப்பியனார் அகத்தியரொடு மாறுபட்டுத் தொல்காப்பியஞ் செய்து, அரங்கேற்றுங் காலத்து, அகத்தியனார் இவரை நோக்கி, நீ தொல்காப் பியன் செய்த நூலைக் கேளற்கவென்று கூறினர். தொல் காப்பியனாரோ பல்காலுஞ் சென்று யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும் என்று கூறவே, இவ்விருவரும் கோபங் கொள்ளாத வகையைத் தெரிந்து இந்நூலிற் குற்றங் கூறிடுவேன் எனக் கருதி அரங்கின் கட்சென்று தொல்காப்பியத்தில் ஆங்காங்கு மாறுகாட்டி யாnக்ஷபித்தார். அவைகட்கெல்லாம் தொல் காப்பியனார் விடை கொடுத்தனர் என நச்சினார்க்கினியர் உரைத் துளர். திராவிடமா பாடிய கருத் தாவாகிய சிவஞான யோகிகள் இவற்றை மறுத்து, ஒருவராற் செய்யப்பட்ட நூல் ஒரு வேந் தனது அவைக்களத்தில் ஒரு புலவ னுக்கு ஏற்பித்தரங் கேறின் அது சிறக்குமாகலின் பாண்டியனவை யின் அதங் கோட்டாசாற்கரிறபத் தெரித்தனர் என்று சாதித்தார். இதனை, “நிலந்தரு திருவிற் பாண் டியனவையத் தறங்கரை நாவி னான் மறை முற்றிய வதங்கோட் டாசாற் கரிறபத் தெரிந்து” என்று பனம்பாரனார் பாயிரங் கூறிய வாற்றானறிக. அதட்டல் - அதிர்த்தல், உரப்பல், ஒப்பல், சீறல், தெழித்தல், தொனித் தல், முழுங்கல். அதள்புனையரணம் - தோற்கைத் தளமென்னுங் கருவி. அதமத்தோற்கருவி - முழவேழ் வகையினொன்று, புறமுழவு, புறப் பறமுழவு. அவையாவன: கணப் பறை முதலாயினவுமாம், நெய்தற் பறை முதலாயினவுமாம். அதிகமான் - திருவள்ளுவ நாயனாரது சகோதரருள் ஒருவர் அவர்க்குச் சேட்டராம். இவர் வளர்ந்த இடம் “அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி - யதிகனில்லிடை யதிகமான் வளந்தனன்” என இவர் சகோதர ராகிய கபிலர் கூறுவதனால் அறிக. அதிகன் - அதிகமான் எனவும், அதிக மானெடுமான் வஞ்சியெனவும் பெயர் பெறுவன். இவனது ஊர் வஞ்சியாகும். அக்காலத் திருந்த அரசருள் ஒருவன். இவனே திரு வள்ளுவ நாயனாரது தமயனாகிய அதிகமானை யெடுத்து வளர்த்தவ னாகும். வள்ளலாருள் ஒருவனாக வும் எண்ணப்பட்டவன். இவன் றன்னூர் மலைப் பக்கத்து நின்று அழகு பெற்ற கருநெல்லியினது அமிழ்து விளையும் பழத்தை ஒளவையார் விரும்பிக் கேட்பக் கொடுத்தா னென்றும், அதனை யுண்டமையால் அக்கல்வியின் முதியாள், வயதினும் முதியவ ளாய் விளங்கினள் எனவுந் தெரி கின்றது. அதனைப் புற நானூற் றிற் பாடாண்டிணையில் வாழ்த் தியற்று றையாய ‘வளம் படுவாய் வாளேந்தி’ என்னுஞ் செய்யுளால் ஒளவையாரே தெரித்திருக்கின் றனர். அன்றியும் ஏறுமாநாட்டு நல்லியக் கோடனை, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனர் பாடிய சிறுபாணாற்றுப் படை யினும்” கமழ்பூஞ்சாரற் கவினிய நெல்லி-யமிழ்து விளை தீங்கனி யௌ வைக்கீந்த - வரவுச் சினங் கனலு மொளிதிகழ் நெடுவே - லரவக் கடற்றானை யதிகனும்” எனக் கூறப்பட்டிருக் கின்றது. காலம் திருவள்ளுவ நாயனார் ஒளவை யார் முதலிய புலவர் காலமாம். அதிகாயன் - இராவணனது மகன், இவன் பிரமனிடத்தில் அழித்தற் கரிய கவசம் பெற்றுப் பின்னர் அநுமனாற் கொல்லப்பட்டான். அதிகாரம் - அதிகரித்தலையுடைய படலம். அதிசயங்கள் - அருகனாற் செய்யப் பட்ட தரும வொழுக்கங்களாம். அவை சகசாதிசயம், கர்மக்ஷயாதி சயம், தெய்வீகாதிசயம் என மூவகைப்படும். அதிசயச்சொல் - அக்கோ, அச்சோ, அத்தோ, அந்தோ, அன்னோ, ஆஅ, எற்றே, என்னோ, ஐயோ, ஓஒ, அம்மா, அப்பா, என்னே, என்ன. அதிசயம் - அதிரேகம், அற்புதம், இறும்பூது, சித்திரம், விசித்திரம், விபரீதம், விம்மிதம், வியப்பு, இரும்பு. அதிபத்தநாயனார் - அறுபான் மும்மை நாயன்மாருள் ஒருவர். அதிபலை - இராமலக்குமணர் காட்டு மார்க்கமாக விசுவாமித்திரர் பின்போனபோது, பசியானும், சோகத்தானும் வருந்தா வண்ணம் விசுவாமித்திரர் உபதேசித்த இரு மந்திரங்களி னொன்று இது. அதிமதுரகவி - இவர் திருமலை ராயனது சமஸ்தான வித்துவான் களுட் சிரேட்டர். இவர்க்கு அறு பத்து நான்கு கனக தண்டிகைப் புலவர்கள் கற்றுச் சொல்லிகளா யுளார். அவர்கள் தம் இருபாங் கருந் தாரகாகணம் போலச் சூழ்ந்து வர உடுபதி போல நடுவே மதயானை யொன்றினேறி இராச விமரிசைகளோடு அரசன் சமு கஞ் சென்று திரும்புவார். இவர்க் குங் காள மேகப் புலவர்க்கும் வாக்குவாதம் நேர்ந்தது அதில் இவர் தோற்றனர். இவைகளைக் காளமேகப் புலவர் என்னும் வரி யிற் காண்க. ஆயினுஞ் சிறந்த வித்வான் என்பதற்குச் சந்தேக மில்லை. இவர் தனிப்பாடல்கள் அன்றி வேறு நூல்கள் செய்ததாகக் காணோம். இவர் காலம் திருமலைராயன் காலமே. அதிமதுரம் - அதிங்கம், மதுகம், யட்டிசல்லி. அதிவீரராமபாண்டியர் - மதுரையி லிருந்து அரசு புரிந்த அநுலோமப் பாண்டிய அரசருள் ஒருவர். கொற்கை மாநகரத்தை யரசாண் டவர் என்று “நறுந் தொகை” வெற்றிவேற்கையிற் கூறப்பட்டுள் ளது. இவர்க்கு வல்ல பதேவர், பிள்ளைப்பாண்டியன், குண சேகரவழுதி, யெனவும் பெயர்கள் உண்டு. இவர் துணை வரும் இவரைப் போலச் சிறந்த அரச ரேறாகவும், புலவரேறாகவும் விளங்காநின்று பிரமோத்தர காண்டம் முதலிய பல நூல்களை யியற்றி யுள்ளார். அவர் பெயர் வரதுங்கராம பாண்டியர். ஆத லாற்றான், “பாண்டியில் இரண்டு பட்டியிலிரண்டு” என்று முது மொழி வழங்கப்படுகின்றது. பட்டி யென்றது ஸ்ரீலஸ்ரீ சிவஞான யோகிகளும், கச்சியப்ப முனி வரருமேயாம். இவர் சிவபெரு மானையே பரமபதியெனக் கொண்டு வழிபடுகின்ற சைவ சித்தாந்தியாகும். இவர் சந்திரவமிசத்துச் சிற்றரசர் களுள் ஒருவர். சிலர் பாண்டி நாட்டின்கணுள்ள தென்காசியி லிருந்து அரசு செலுத்தினர் என வும், சிலர் மதுரையிலிருந்து அரசு புரிந்தவர் எனவுங் கூறா நிற்பர். மதுரைப் புராணத்திற் கூறியபடி பாண்டியர்கள் நெடுங் காலமாகக் கொற்கை யென்னும் நகரத்திலே வசித்தார்களெனத் தெரிகின்றது. அது “பெரிபிளசு” என்னும் நூலாசிரியர் கூறிய பாண்டியர் பட்டினமாகிய கொல்கியேயாம். அல்லதேல் டிஆன்வில்லியென்ப வர் சொல்லும் இராமேசுவரத் துக்கு அருகி லிருக்கும் கீழ்க்கரை என்பதேயாம் என்று பாண்டி தேச சரித்திரங் கூறாநிற்கும். இத னாலும் நறுந்தொகைக் கூற்றா னும் இவரும் தம் வமிச அரசர் போலக் கொற்கையிலிருந்தார் எனத் தெளிவாகின்றது. இமயந் தொடங்கிக் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள விடங்களைத் தமக்குச் சுவாதீனமாகக் கொண்டு மற்றைய தேசத்து அரசர் கடமக் குத்திறை கொடுக்க ஆண்டவர். அரசு செலுத்துவதிற்றங் காலத்தைக் கழித்து விடாது உலகத்தவர்க் குறுதி பயப்பனவாய் வடமொழிக் கண் விளங்கும் புராணங்களையும் காவியங்களையும் வேறு தனி நூல்களையும் மொழிபெயர்த்துச் செந்தமிழ் நடையிற் சிறந்த கவிக ளாற் பாடியருளினர். இதனாற் சம்ஸ்கிருதத்தன்றித் தெள்ளிய திராவிடத்தும் மிக்க புலமையை யுடையவர் என்பது வெளியாகின் றது. இவர் பாடிய நூல்கள் கூர்ம மகா புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், திருக்கருவை வெண்பா வந்தாதி, நறுந்தொகை யெனப்படும் வெற்றி வேற்கை, வாயு சங்கிதை முதலியனவாம். இவற்றுள் வாயு சங்கிதை குல சேகரன் என்னும் பாண்டிய அரச னால் இயற்றப்பட்டதென்பர். அது சரியன்றென்பது பலர் கிடக்கை; என்னெனிற் குலசேகரன், குண சேகரன் என்னும் பெயர்கள் இவ் வரசனுக்கே சிறப்புடைத்தாய், பாநடையுமிவர் நடைபோலிருத் தலினென்க. இவர் இளமையிலே சிற்றின்பப் பிரியராயிருந்து வினை வயத்தால் அதனையே மெய்யின் பாக் கருதி யொழுகி, அதனியல் பெல்லாவற்றையும் உணர்த்தும் கொக்கோக ரிஷியினாற் செய்யப் பட்ட கொக்கோக நூலை மொழி பெயர்த்து அப்பெயர் சாத்தியும், இந்திரபுரிப் படலத்திற் கூறப் பட்ட மதனாகமவியல்களை “மதனக்கோவை” எனச் சூட்டி யுஞ் செய்தார் எனவும் அவற் றைத் தம் சகோதரர் பெயரால் வெளிப்படுத்தினார் எனவுங் கூறுப. இங்ஙனமின்றி இணங்கா மனைவியரையும் முறையா னிணங்கியில்லறச் சகடத்தை யிழுத்து உலகு விட்டு நெறியடையு முபாயத்தாற் செய்தன வென்பர். இவர்க்குக் காமவொழுக்க மிகுதி யாற்றொழு நோய் பற்றிய விடத்துத் திருக்கருவை nக்ஷத்திரத்தி லெழுந்தருளியிரா நின்ற சிவபெருமான் மீது மேற் படி யந்தாதிகளிரண்டனையும் பாடித் துதிக்க, அது நீங்கப்பெற்று அதன் பின்னர் இறைவன் றிருவடி யின்பமே மெய்யின் பெனக்கண்டு, அது பெறுவானருந்தவங் கிடந்த னராம். இவர்க்கு வித்தியா குரு சுவாமி நாததேவர் என்பவரும், தீட்சாகுரு அகோர சிவாசாரியர் அவர்களுமென்று கொள்ளக் கிடக்கின்றது. ஏனெனில், அவர்க ளிருவரையும் தாம் செய்த நூல் களிற் குரு வணக்கமாகப் போற் றினமையினென்க. இவர் செய்த நைடதமே யன்றி மற்றைய நூல் களும் புலவர்க் கௌடதம் என்ப திலையமின்று. இவர் அருளிச் செய்த வெற்றி வேற்கை யென்னுஞ் சிறுநூலினருமை நோக்கி ஆங்கில திராவிடாரிய பாடா வல்லவராய “பயிலர்” என்னும் பாதிரியார் இங்கிலீஷில் மொழி பெயர்த் திருக்கின்றனர். இவரிருந்த காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டெனவும், பதினொன்று அல்லது பன்னிரண் டாம் நூற்றாண்டெனவும் கூறா நிற்பர். சேது புராணம் செய்தரு ளிய நிரம்ப வழகிய தேசிகர் இவர்க்கு ஆசிரியராயிருந்தனர் என்னுங் காரணங் காட்டிப் பதினைந்தாம் நூற்றாண்டெனக் காட்டல் சாலு மெனின், அங்ங னங் குருவணக்கச் செய்யுளிற் பாண்டியனார் கூறிப் போந்தில ராகலின் அது முற்று மியையாது. ஆக்ஸ்போர்ட் என்னும் நகரத்தி லிருந்த சம்ஸ்கிருத பாஷாவிற் பனரும் ஆகிய ஹோரெஸ் ஹோ மென் வில்சன் துரையவர் கள் சாசனங்களைக் கொண்டாராய்ந்து எழுதிய “கிங்ஹ்டம் ஆவ் பாண் டிய” என்னுஞ் சரித்திர நூலிலே “தமிழ்க் கல்வியிலே பாண்டியன் என்னும் பேர்தான் ஒரு பிரபல மான பெயர். மேற் படி பாண்டிய ராசனை அரிவீரன், அல்லது அதி வீர பாண்டியனெனச் சொல்வது முண்டு. அவன் வடமொழியி லிருந்து அநேக நூல்களைத் தமி ழிலே மொழி பெயர்த்திருக்கின் றானென்றும், கிறிஸ்து வருஷம் ஆயிரத்து நாற்பத்தொன்றுக்குச் சரியான சாலிவாகன சதாத்தம் 973-ம் வருடத்திலேயவன் பிரபலித் திருந்தானென்றுஞ் சொல்லப் பட்டிருக்கின்றது. அது சரிதா னென்று ஒத்துக் கொள் ளத்தக்க திருட்டாந்தங்களு மிருக்கின்றன” என்று கூறியிருக்கின்றனராதலால் அவர் காலம் பதினோராவது நூற்றாண்டெனக் கொள்ளலே தகுதியதாம். இன்னும் இவற்றின் விரிவுகளையெல்லாம் கூர்மமகா புராண விருத்தியின் முகவுரைக் கண் விளக்கமாகக் காணலாம். ஆங்குக் கண்டுணர்க. அதிவீரன் - சூரபன்மனது சேனா வீரருள் ஒருவன். வீரவாகு தேவராற் கொல்லப்பட்டான். அத்தினாபுரி - அத்தி, அத்திப்பதி, குருகேத்திரம். இதனைத் துரியோதனன் முற்காலத் தாண் டிருந்தனன். யானைச் சேனை மிகுதியாக விருத்தல் பற்றி இப்பெயர் பெற்றதெனவும், ஹஸ்தி யென்னும் அரசனால் முதலில் ஏற்படுத்தப்பட்டமையால் இப் பெயர் பெற்றதெனவுங் கொள்ளப் படும். இது இக் காலத்து டில்லி யென வழங்கப்படுகின்றது. இங்கே தான் துவாபரயுக முடிவில் துரி யோதனாதி யர்க்கும் பாண்ட வர்க்கும் பாரத யுத்தம் நடந்த தென்ப. அத்தநாள் - அங்கிநாள், ஐம்மீன், ஐவிரல், களிறு, கன்னி, காமரம், கைம்மீன், கைனி, கௌத்துவம், நவ்வி. அத்தவாளம் - வடகம், உல்லாசம். அத்தான் - முன்னவள் கொழுநன், மைத்துனன். அத்திமரம் - அதவு, உதும்பரம். கோளி, அதம். அத்திரசத்திரந்தைத்த புண்மாற்று மருந்து - சல்லியகரணி. அத்தியாயம் - படலம், இலம்பகம், சருக்கம், காண்டம், பரிச்சேதம். அத்துவா - மந்திராத்துவா புவனாத் துவா, கலாத்துவா, வர்னாத்துவா, தத்துவாத்துவா, பதாத்துவா என ஆறாம். அநபாயன் - சோழராசர்களுள் ஒருவன். திருநீற்றுச் சோழனென வும் பெயர். இவ்வரசரேறு தான் அருண்மொழித்தேவரென்னும் ஸ்ரீசேக்கிழார் நாயனார் திருத் தொண்டர் பெரியபுராணஞ் செய்தருளத் துணை நின்றவர். அநவத்தாதோடம் - அநவத்தை அஃ தாவது ஒன்றற்கொன்று வேண் டப்பட்ட அளவுகடந்த குற்றம். அநவரததாண்டவம் - சிதம்பரத்தின் கணுள்ள கனகசபையினிடத்தே சிவபெருமான் ஆன்மாக்களின் இருவினைகளையும் புசிப்பித்துக் கழிப்பித்து முத்தியளிக்க வேண் டித் தனுகரண புவன போகங் களுக்காகச் செய்யும் படைத்தல் முதலிய ஐந்தொழில்களும் நிகழ்த் துமாறு எப்பொழுதுஞ் செய்தரு ளும் நிருத்தமாம். அநாகுலன் - இடைச்சங்கத்தார் காலத்திருந்த தெய்வப் பாண்டியன். திலோத்தமை யுடன்சேர்ந்து சார குமாரனைப் பெற்றவன். அநாரியர் - மிலைச்சர், மிலேச்சர். அநாதி - ஆதியின்மை, தொடக்க மில்லது. அநாமிகை - ஆழிவிரல், பவித்திர விரல். அநித்தியம் - நித்திய மல்லாதது, நிலையற்றது. அநிருத்தன் - காமன்மகன். அழகிற் சிறந்தவன். வாணாசுரன் மகளாய உஷா வென்பவள் இவனைமாயத் தாற்றரு வித்துப் புணர்ந்து கருப்ப முற்றனள். அதனைக் கேட்ட அவள் தந்தையாகிய வாணாசுரன் கோபமுற்றுச் சிறை யிட்டனன். அச்சிறை மீட்டற்காகவே கண்ணபிரான் பஞ்ச லோகத்தா னும் மண்ணானுஞ் செய்யப்பட்ட குடங்கொண் டாடி வாணனைக் கொன்று மீட்டனராம். அநீகம் - சங்கமூன்று, அக்குரோணிப் பகுதி. அநுத்திரபஞ்சமம் - அயிர்ப்பு. அநுலோமத்தாணும் பிரதிலோமப் பெண்ணுங் கூடிப் பிறந்த பிள்ளை - அந்தளாரன். அநுலோமப் பிரதிலோமம் - விபூதி தரிக்கும் வகையினொன்று அஃ தாவது பெருவிரல், நடுவிரல், ஆழிவிரல், என்னு மூன்றானுந் தரிப்பதாம். அநுலோமப்பெண்ணும்பிரதிலோமத்தாணுங் கூடிப் பிறந்தபிள்ளை - விராத்தியன். அந்நுவயம் - கண்ணழிவு, அஃதாவது ஒரு செய்யுளைப் பொருளுக் கியையப் பதங்களைப் பிரித்துக் கோடல். அந்தணர்க்குரியமார்க்கம் - வேதம், ஆகமம், சுத்த சைவம், வைதிக சைவம். அந்தணர் - பார்ப்பார், அறவோர், பூசுரர், அறுதொழிலாளர், பிரா மணர், இருபிறப்பாளர், எரி வளர்ப்போர், ஆதி வருணர், வேதியர், வேள்வியாளர், மறைய வர், விப்பிரர், மேற்குலத் தோர், முற்குலத்தோர், ஐயர், வேதபார கர், முப்புரிநூலோர், தொழு குலர், முத்தீமரபினர், கமலத் தாரினர், வேதக்கொடியர், தருப் பையர், முஞ்சியர், சமித்தினர், ஆய்ந்தோர், மெய்யர், முனிவர், உயர்ந்தோர், சிகைவர். அந்தணரறுதொழிலின் பெயர் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட் பித்தல், ஈதல், ஏற்றல். அந்தணர்மாலை - தாமரைமாலை. அந்தணர்கொடி - வேதக்கொடி. அந்தணர்க்குரியபொருள் - தருப்பை, சமித்து, முஞ்சி, தண்டு, கமண்ட லம். அந்திப்பொழுது - சந்தி, சாயங்காலம், சாயம், சாய்பொழுது, மாலை, கோதூழி. அபயவத்தம் - இரட்டைக்கை, அஃதாவது இரு கரங்களும் சுக துண்டமாக நெஞ்சுறநோக்கி நெகிழ்ந்து நிற்பது. அபரபக்கம் - கிருட்டின பக்கம், தேய்பிறை, பிற்பக்கம். அபானவாயு - உச்சத்தலத்தில் நிற்பது. அபானவாயுத்தொழில் - மல மூத்திரங் களைப் பெய்வித்தல். அப்பவர்க்கங்கள் - அஃகுல்லி, அடை, அண்டகை, அபூபம், இலட்டுகம், கஞ்சம், நொலை, தோசை, பூரிகம், பொள்ளல், போளி, மண்டிகை, மோதகம், இலையடை, மெல் லடை, நொலையல், பூரிகை, போனகம், இடி, சஃகுல்லி, பிட்டு, நுவணை, மலாவகம், ஒச்சை, துவை. இவற்றுள் அஃகுல்லி யென்பது உக்காரிக்கும் சிற்றுண் டிக்கும், அடை அப்பத்திற்கும், அபூபம் வடைக்கும், கஞ்சம் ஓர் அப்பத் திற்கும், இடிமாவிற்கும், சஃகுல்லி பில்லடைக்கும், நுவணை தினை மாவிற்கும் பேராம். அப்புதல் - கொட்டல், சதுர்த்தல், சாத்தல், அப்பல், அடித்தல், ஒட்டுதல். அமங்கலை - கைம்மை, கைனி, கலன் கழி மடந்தை, விதவை, தாபத நிலையள், கைம்பெண், முண்ட கச்சி, வெள்ளைச் சேலைக் காலி, மொட்டைச்சி. அமரர்மாது - அரமகள், அரம்பை, சூர்மகள், அணங்கு. அமாவாசை - இந்திரவி கூடல், குகு, அமை, மறைமதி, காருவா. அமிழ்து - அமரி, அமிர்தம், அமுதம், அமுது, சுதை, பியூடம், மருந்து, சாவா மருந்து, பால், மழை. உணவு. அமைச்சர் - தேர்ச்சித்துணைவர், எண்ணர், நூலோர், சூழ்வோர், உழையர், மந்திரர், முதுவர், முன் னோர், அமாத்தியர், அமைச்சு, மந்திரி. அமைத்தல் - கெழுமல், சமைத்தல், புல்லுதல், பொருத்தல். அமையுமென்றல் - அலம். அம்பலம் - சபை, பொதி, பொதுவில், மன்றம், மன்று. அம்பிறகு - ஈர்க்கில், உடு. அம்பு - அத்திரம், ஆசுகம், ஆவரி, ககம், கங்கபத்திரம், கணை, கதிரம், காண்டம், கோ, கோல், சரம், சாயகம், சிலீமுகம், தொடை, தோணி, பகழி, பத்திரம், பத்திரி, பல்லம், பாணம், பிரதரம், புங்கம், புதை, மார்க்கணம், வண்டு, வாளி, விசிகம், வேத்திரம், இவற்றுண் மொட்டம்பு உதணம், முன்விடு மம்பின் பெயர் அத்திரம், சாயகம். அத்திரம் - அம்புக்கட்டு, புதை. அம்புக்குதை - குலை, பகழி, புங்கம். அம்புக்குப்பி - புழுது. அம்புக்கூடு - ஆவநாழிகை, ஆவம், கணைப்புட்டில், தூணம், தூணி, தூணீரம். அம்புத்தலை - உடு. சுரை. அம்புத்திரள்கட்டுங்கயிறு - பற்றாக்கை, பாணங்கட்டும் பாசம். அம்மனைப்பருவம் - பெண்பாற் பிள்ளைக் கவிப்பருவத் தொன்று, இஃது ஐந்து வயதிற்கு மேல் ஒன்பது வரைக்குமுள்ள ஆண்டின் கண் நிகழ்வது. அம்மானை - அம்மனை, ஓர் விளை யாட்டு. அம்மானைவரி - ஓர்வகைச் செய்யுள். அம்மி - அரைசிலை. அம்மிக்கல் - குழவி. அயலோர் - ஏதிலர், நொதுமலர், வம்பலர், அருகினர். அயல் - ஏதில், ஒன்றுவிட்டயல், உபாந்தியம், அருகு, பக்கம், அண்டை, பாரிசம். அயனுலகு - பிரமலோகம், சத்திய லோகம், மனோவதி. அயன்மனைவியர் - வாணி, சாவித்திரி, காயத்திரி. அயன்வாழ்நாள் - கற்பம், பரம். அயன்வாழ்நாளின்பாதி - பரார்த்தம். அயிராணியாடல் - கடையம். அயிராவணம் - சிவலோகத்துள்ள யானை, இரண்டாயிரங் கொம் புள்ளது. அயிராவதம் - வெள்ளையானை, நாற்றந்த யானை, அமரரும்பல். அயிரை - நொய்ம்மீன், சிறுமீன், ஓர் நதி. அயோத்தி - கோசலம், சாகேதம், வினிதை. அரக்கர் - இராக்கதர், யாது, தான வர், நிசாசரர், பிசிதாசனர், நிரு தர், சாலகடங்கடர். அரக்காம்பல் - செங்குமுதம், செவ் வல்லி, செவ்வாம்பல். அரக்கு - அரத்தம், தமரம், தும்பு. அரக்குதல் - சிதைத்தல், தேய்த்தல், கீழ்த்தல். அரங்கம் - ஆற்றிடைக்குறை, சீரங் கம், இஃது விட்டுணுத் தலம், விபீடணனாற் பிரதிட்டை செய்யப்பட்டது. அரங்களக்குமுறை - ஆடுதற்கு மூன்று கோலும், ஆட்டுவோர்க்கு ஒரு கோலும், பாடுநர்க்கு ஒரு கோலும், அந்தரமொரு கோலும், குயிலுவர் நிற்றற்கு ஒரு கோலுமாக அளந்து கொள்க. அரங்கு - நாடகசாலை. அரசமரம் - அச்சுவத்தம். கணவம், குஞ்சராசனம், சுவலை, திருமரம், பணை, பிப்பலம், போதி. அரசரறுதொழி - ஓதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல், வேட்டல், படைபயிறல். அரசரறுவகைத்தானை - வேல், வாள், வில், தேர், பரி, களிறு. அரசர்க்குரியபரி - பெண்களது மணம்போல் மிக்க மணத்ததாய், வாளை மடலைப்போலச் செவி யினையுடைய தாய், நான்கு காலும், பிடரு முகமும், முதுகும், முன்புற மும், வெண்ணிறமுடைய தா யெண்பத்திரண்டு விரலுயர்ந்த குதிரை தத்தமக்குரிய குணங் களை யுடைய அரசர்க்குரியது. அரசர்க்குரியபாவகை - பிள்ளைக் கவிமுன் நேரிசை யாசிரியப்பாவா யினும், கொச்சகக் கலிப்பாவா யினுங் கூறுதல். அரசர்க்கெண்வகைத் துணைவர் - கரணத்தியல்வோர், கருமவதி காரர், சுற்றத்தார், கடைகாப்பாளர், நகரமாக்கள், படைத் தலைவர், இவுளிமறவர், யானை வீரர். அரசர்க்கை வகையுறுதிச்சுற்றம் - நட்பாளர், அந்தணாளர், மடைத் தொழிலாளர், மருத்துவக் கலை ஞர், நிமித்திகப் புலவர். அரசர்கோயில் - மாளிகை, சாலை, மந்திரம், பவனம், குலம். அரசவீதி - பூரியம். அரசன் - புரவலன், பெம்மான், ஏந்தல், பூபாலன், வேந்தன், மன் னன், நரபதி, பொருநன், சக்கிரி, நிருபன், குரிசில், பார்த்திவன், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலைவன், காவலன். அரசன்மனைவி - அரசி, பெரு மாட்டி, பூமிச்செல்வி, தலைவி, இறைவி, இராணி, கொற்றவை, பூமாதா. அரிமுகவம்பி - சிங்கமுக வோடம், சீயப்புணை. அரசியலாறு - அறநிலையறம், மற நிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப்பொருள், அறநிலை யின்பம், மறநிலையின்பம். அரசிருக்கை - அத்தாணி, பூரியம், ஆசாரம், வேத்தவை. அரசிறை - திறை, மிறை, கப்பம், பாகுடம். அரசுவாவினிலக்கணம் - நான்கு காலுந் துதிக்கையுங் கோசமும் வாலும் ஆகிய ஏழுறுப்பும் நிலத்திற் றேய்வதும், பாலையுஞ் சங்கையு மொத்த வெண்ணிறம் வாய்ந்த கால்நக முடையதுமாய், காலினாலுந் தனது துதிக்கை யினாலும் சரீரத்தாலும் வாலி னாலுங் கொம்பினாலுங் கொல்ல வல்லதாய், ஏழு முழமுயர்ந்து ஒன்பது முழநீண்டு பதின்மூன்று முழஞ் சுற்றுடைத்தாய், சிறிய கண்ணையுஞ் சிவந்த புள்ளிகளையு முடையதாய், முன்பு முற்கூறியவா றுயர்ந்து பின்பு தாழ்ந்தது அரசி யானை யென்று அறிவுடையோர் சொல்வர். அரம் - முடுகியல். அரிசி - அரி, தண்டுலம், பரியவம், வீயம். அரிசாரம் - பழுப்பு. அரித்துவாரம் - மாயாபுரி, வங்காத் துவாரம். அரிதல் - சேதித்தல், அறுத்திடல், விடுவாய் செய்திடல், சூலல், கொய்தல், ஈர்தல். அரிவாள் - குயம், கூனிக்குயம், கூனிரும்பு, கொடுவாள், புள்ளம், ஈர்வாள். அருகன் - அசோகன், அண்ணல், அதிசயன், அந்தணன், அமைவன், அரியணைச் செல்வன், அருட் கொடி வேந்தன், அறவோன், அறிவன், ஆசான், ஆதன், ஆத்தன், உரவன், உறுவன், கந்தன், கமல வூர்தி, கருத்தா, கலைநாதன், காதி வென்றோன், காமற்காய்ந் தோன், குற்றங்களில்லோன், கொல்லா வேதன், சதுமுகன், சமி, சம்பு, சாதரூபி, சாதுசாந் தன், சித்தன், சிவகதி யிறைவன், சினவரன், சினன், சினேந்திரன், சீமான், செய்யோன், செல்வன், சைனன், தத்துவன், தருமராசன், திகம் பரன், திருமறுமார்பன், தீர்த்தன், நக்கன், நான்முகன், நிச்சிந்தன், நிராயுதன், நீதி நூலி, நீத்தவன், பண்ணவன், பரமேட்டி, பிதா, புண்ணியன், புத்தன், புலவன், புனிதன், பூமிசை நடந்தோன், பொன்னெயிற் கோன், போதன், மாமுனி, மால், முக்குடைச் செல் வன், முத்தன், முனிந்தோன், முனைவன், யோகி, வரதன், வாமன், விதாதா, விநாயகன், விராகன், விறலோன், வீரன், அநகன், எண் குணன், அறவாழி வேந்தன், வரன், தேவன், மூவுல குணர்ந்த மூர்த்தி, எண்சிறப்பு முள்ளோன், அத்தன், சோதி, பகவான், அநயன்ம, சுயம் புமா சேனன், வென்றோன். அருகன்கன்மசயம் - எண்வகைக் கன்மங்களாம். அவையாவன: ஞானாவரணீயம், தரிசனாவரணீ யம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயம் என்பனவாம். அருகன்குணங்கள் - கடையிலா வறிவு, கடையிலாக் காட்சி, கடை யிலா வீரியம், கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியா வியல்பு என்பனவாம். அருகன்கேவலஞானம் - மதிஞானம், சுருதஞானம், அவதிஞானம், மனப்பரியாய ஞானம் என்பன வாம். இவற்றுள் மதிஞானமாவது சுபாவ புத்தி, சுருதஞானமாவது நூலுணர்ச்சி, அவதி ஞானமாவது தன்னுடைய முற்பிறப்பை யறியு மறிவு, மனப்பரியாய ஞானமாவது தன்னுடைய முற்பிறப்பையும். பிற ருடைய முற்பிறப்பையும் அறியு மறிவு, கேவலஞானமென் பது திரிகால வுணர்ச்சியாம். அருகன்கையறவு - அகிம்சை, சத்தி யம். அஸ்தேயம், பிரம சரியம், சங்கிரகம் என்னும் ஐந்து மாம். அருகன்விரதம் - அனுவிரதம், குண விரதம், சிட்சாவிரதம் என மூ வகைத்து. அவற்றுள் குணவிரத மானது திக்குவிரதம், தேச விரதம், அநர்த்ததண்ட விரதம் என மூன்று வகைப்படும். அருகோடுமாகமம் - அங்காகமம், பகுசுருதி யாகமம், பூர்வாகமம் என மூவகைத்தாம். அவற்றுள், அங்காகமம் பன்னிரண்டு பகுப் புடைத்து. அவையாவன:- ஆசா ராங்கம், சூத்திர கிருதாங்கம், ஸ்தானாங்கம், சமவாயாங்கம், வியாக்கியாப் பிரஞ்ஞபத்யாங் கம், ஞாதுருக தாங்கம், உபாசகா த்தியாய னாங்கம். அருகன்சத்திரம் - சகலபாசனம், சந்திராதித்தியம்,நித்திய விநோதம். அருகன்கொடி - காட்சி, சீலம், ஞானம். அருகன்படை - தருமசக்கரம், அம்புயம். அருகன்மதில் - உதயதரம், கல்யாண தரம், பிரீதிதரம். அருகன்வழிபாடு - அருக சரணம். அருகன்வாகனம் - தாமரைப்பூ. அருகன்வகைஞானம் - மதிஞானம், சுருதஞானம், அவதிஞானம், மனப்பரியாய ஞானம்,கேவல ஞானம். அருகனூல்மூன்று - அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதி யாகமம். அருங்கலச்செப்பு - மணிக்கலம், பெய்த பணிப்பெட்டகம். அருச்சித்தல் - புட்பஞ் சமர்ப்பித்தல், பூப்பலியிடல், மலர் தூவல். அருச்சுனன் - அனுமக் கொடி யோன், ஆண்டொழின் மைந்தன், காண்டீவன், கிரீடி, கிருட்டிணன், கேசவற் றோழன், சவ்வியசாசி, சுரேந்திரன் மைந்தன், சுவேதவாக னன், தனஞ்சயன், பற்குணன், பார்த்தன், மாதவி கொழுநன், விசயன், வீபற்சு, கிருட்டிண சகாயன். அருந்ததி - சாலி, வடமீன், ஊர்ச்சை, வசிட்டபத்தினி. அருந்தவப்பெண் - கௌம்மை, கௌந்தி. அருநெறி - அத்தம், கடற்சுரம். அருமைசெய்தல் - பேராண்மை. அரும்பண்டம் - தாரம். அரும்பாலைவகை - உழை குரலாதல். அரும்பு - குகை, நனை, கலிகை போகில், முகுளம், மொக்குள், மொட்டு, கோலகம். அரும்பொருள் - ஞாபகம், பிசி. அருவருத்தசேறு - நொளில், ஊழில், நொதி. அருவருப்பு - குற்சிதம், பயிர்ப்பு. அருவல் - பருவரல். அருவி - கழிமுகம், மலைநீர். அருவிப்புனல்வீழிடம் - தூவானம். அருளோன் - காருண்ணியன். அருள் - கதவு, கருணை, இரக்கம், தயவு தயா, கிருபை, அபயம். அரைஞான் - அரைநூல், இரதம், இரத்னம். அரைப்படிகை - அத்து, கலை, மனாவு. அலங்கரித்தல் - அணிதல், ஒப்பனை, கை செய்தல், கைத்தல், புனைதல், பூசுதல், பொற்புறுத்தல், மண்ணல், வனைதல், வேய்தல். அலங்காரம் - அணி, ஒப்பனை, கட்டழகு, காமர், கை, சிங்காரம், துப்புரவு, தையல், பொற்பு. அலரி - அயமரம், கனவீரம், கர வீரம், கவீரம். அலர்தல் - விரித்திடல், அவிழ்தல், விள்ளல், எதிர்த்தல். அலாபத்திரக்கை - அஃதாவது சிறு விரல் முதலாகிய ஐந்தும் வளை வது என்னை “அலாபத்திரமே யாயுங்காலைப்புரை மையின் மிகுத்த சிறுவிரன் முதலா வரு முறை யைந்தும் வளைந்து மறி வதுவே” என்றாராகலின். அலி - பேடி, பேடு, நபுஞ்சகம், பேடன், பேதை, பெண்டகன், சண்டகன். அலியிலக்கணவகை - நச்சுப்பேசல், நல்லிசை யோர்தல், அச்சுமாறல், ஆண் பெண்ணாதல், ஒரு கையை வீசி நடத்தல், தலையிலொரு கை வைத்தல், எதிர்ந்தோரைக் கண்டு விலகல், எதிர்ந்தோர் மேற்செல் லுதல், பார்வை வேறுபடுதல், பிறருக்கு நடுநடுங்கிச் சுழலுதல், பிறரைக் கண்டு நகைத்தல், நாணு தல், பல நாடகஞ் செய்தல், பக்கம் பார்த்தல், பதுங்கித் திரிதல், கார மில்லாமற் பலவற்றைக் கோபங் கொண்டு பேசுதல், தன் முலையைத் தானே வருத்தல், அசக்கல், அழுதல், சேர்ந்தரு வருத்தல், குறுக்கிக் கூட்டிப் பார்த்தல், இடையில் ஒரு கை வைத்தல், அதனை வாங்கல், இரங்கிப் பேசல், எல்லென்று பாடுதல் இவை போன்ற பிற செய்கைகளு முடைத்தாதலாம். அலிக்கை - நாடகவுறுப்பி னொன்று, பொதுக்கை, அஃதாவது, மூன்று, சொல்வளையம் அபிநயத்துடன் நாட்டிச் செய்யு மிடத்துச் செய்யு முறைமை வகையினொன்று, அது சர்ப்பசிரம், வண்டு, முகுளம், கத்தரிகை, கேசம், கபித்தம் என அறுவகைத் தாம். அலிமரம் - வெளிறு. அலையல் - அலைதல், அழுங்கல், ஆஞ்சிசோம்பு, நெகிழ்தல், ஞொள்கல், துளும்பல், தளும்பல், நடுங்கல். அலியெழுத்து - மெய்யெழுத்துப் பதினெட்டுமாம். அல்குல் - அகல், கடிதடம், நிதம்பம், பெண்குறி, வடிவு, அரை, யோனி, பகம், பூப்பகம், பொன், சின்னம். அல்லியவாடல் - மாயனாடல், ஆறுறுப்பி, அலிப்பேடு. அவதாம் - உசித சமயம். அவமதிசிரிப்பு - அசி. அவயவம் - காத்திரம், உறுப்பு, அங்கம், வடிவு. அவநதிநகர் - உஞ்சை. அவரை - சிக்கடி, சிம்பை, முதிரை. அவலத்தவிநயம் - துன்பக் காட்சி, அஃதாவது, துன்பத்துடன் கூடிய கண்ணீர் மழையும், வாடிய தன்மையும் வருந்திய செலவும், பெருமை யழிவும் பிதற்றிய சொல் லும், நிறை கை யழிதலும், குண மில்லாச் சொல்லுமுடைமை யாம். அவாவின்மை - வெறுப்பு, முனைவு, ஒவ்வாமை, வேண்டாமை, உவர்ப்பு, மா, அறுத்திடல். அவிட்டநாள் - ஆவணி, காகப்புள், பறவை, புள், வசு நாள். அவித்தல் - நதுத்தல், நமிழ்தல், நுதத்தல், நொதுத்தல், தணித்தல், நூத்தல், அணைத்தல். அவிழ் - பதம். அவிநயநிலம் - நிற்றலும், இருத் தலும், கிடத்தலும், இயங்கலும் என்னு நான்குமாம். இவையன்றி சரிகம பதநி என்னு மெழுவகைப் பட்ட எழுத்தடியாகப் பிறக்குங் குரன் முதலாகிய ஏழுமாம். அவிநயவகை - வெகுளல், சோம்பல், குளித்தல், ஐயமுறல், உவத்தல், அழுக் காறுடைமை, இன்ப முறல், தெய்வமுறல், ஞஞ்ஞை யுறல், உடன்படல், உறங்கல், துயி லுணர்தல், சாதல், மழை பெய்யப் படல், பனித்தலைப்படல், வெயிற் றலைப்படல், நானாமுறல், வருத் தமுறல், கண்ணோவுறல், தலை நோவுறல், அமுற்றிறம்படல், சீத முறல், வெப்பமுறல், நஞ்சுண் ணல் என்னுமிருபத்து நான்கு மாம். அவ்விடம் - அங்கு, அங்ஙனம், அந்தில், அம்பர், அவன், ஆங்கு, ஆண்டு, ஆங்க. அழகு - அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம், அம்மை, அலரி, ஆரியம், இராமம், இல் லிதம், இலா வண்ணியம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு, கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம், சந்தம், சவி, சாயல், சித்திரம், சீர், சுந்தரம், செவ்வி, செழுமை, சேடு, சொக்கு, சோ பம், சௌமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம், தையல், தோட்டி, தோல், நலம், நவ்வி, நன்கு, நோக்கம், நோக்கு, பதம், பத்திரம், பந்தம், பந்துரம், பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு, மவசுளம், மணி, மதன், மயம், மனோகம், மனோக்கியம், மாண்பு, மாதர், மாமை, மாழை, முருகுயாணர், யௌவனம், வகுப்பு, வடிவு, வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம், அன்றி யும் பேரழகின் பெயர், அலங் காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம், சிறப்பு, பொலிவு, மா. அழகுவகை - கொம்மை, மனோ கரம், சுந்தரம், சித்திரம், சாரு. அழிஞ்சில் - அபகோலம், செம்மரம், சேமரம். அழித்தல் - அரக்குதல், அரைத்தல், கீழ்த்தல், சுட்டித்தல், சிதைத்தல். சிரத்தல், தேய்த்தல், நூறல். விரகு. அழிவின்மை - அச்சுதம், கன்னி, குமரி, கோணை, நிறை. அழிவு - கிலம், சிதிலம், சீரணம், சிதைவு, தேய்வு, குறைவு. அழுக்காறு - ஒளவியம், கோட்டம், பொறாமை, மனக்கோட்டம், மனத்தழுக்கம், நோனாமை. அழுக்காறுடையயோனவிநயம் - குற்றத்தோடு கூடிய பொருளுடை மையும் குவிந்த வாயும், கோண லாம் சொல்லும், நடுக்கமுற்ற கையுடைமையும் கோப முடை மையும், காரணமில்லாமல் மெலிந்த முகமுடையனா தலும் மெலிவருகொண்ட துன்பமும் பொருந்து மென்று புலவர் கூறா நிற்பர். அழுக்கின்மை - அமலம், நிருமலம், நின்மலம். விமலம். அழுக்கு - களங்கம், மலம், மலினம், மாசு. அழுங்கின்குருளை - மறி. அழுங்கு - விலங்கு, மறி. அழுதல் - அரற்றல், அழுங்கல், இரங்கல், உரோதனம், ஏங்கல், கசிதல், கலங்கல், கலுழ்ச்சி, கலுழ் தல், பொருமல், விம்மல், புலம்பல், துறுமல். அழுந்தல் - அமுங்கல், அரங்கல், ஞெமுங்கல். அழைத்தல் - அகவல் , ஆகருடணை, இருதல், உளைத்தல், கரைதல், குயிறல், கூவல், கேதல், மாவெனல், வாங்கல், வாவெனல், விளித்தல். அளகம் - குழல், கூந்தல், கூழை, குந்தளம், ஓதி, ஐம்பால், கதுப்பு, சுருள்ளலோதம், பரிசாரம், கேசம், சுரியல், விராட்டம், கோதை, குருள், குரம், கூமல். அளத்தல் - கச்சல், கடத்தல், அளத்தல். அளபெடை - புலுதம். அளகக்குழற்சி - குந்தளம், விலோதம். அளகமுடிக்கும் ஐம்பால் - முடி, குழல், தொங்கல், பனிச்சை, சுருள், இவற் றுள் மயிரை யுச்சியின் முடித்தல் முடி, சுருட்டி முடித்தல் குழல், மயிரை முடிந்து தூங்க விடுதல் தொங்கல், பின்னி விடுதல் பனிச்சை, பின்னே சொருகுதல் சுருள். அளகமுடி - மயிர், கொப்பு, மிஞ்சம் கசி, கொண்டை, தம்மிலம், முச்சி, சிகழிசை. அளபெடைவகை - இயற்கை யள பெடை, செயற்கையளபெடை, இசைநிறையளபெடை, இன்னி சையளபெடை, சொல் லிசையள பெடை. அளவளாவல் - கலாவல், துழாவல், வளாவல், சிவணல், புணர்தல், பொருந்தல். அளவுப்பாணி - தாளவகை அஃதாவது தாக்கினவோசை நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். அளவின்மை - அநந்தம், அபரிமிதம், பாடிரம், அமானம், அமிதம், எல்லையின்மை. அளவு - அந்தரம், அவதி, அளவை, காநிறு, தனை, தாறு, துணை, பிரமாணடி, மடங்கு, மட்டு, மாத் திரை, மாடிம், மிதம், வரை, வரை யறை, வல்லி. அளவை - கச்சம், கடன். அறச்சாலை - புறம், சாலை, பள்ளி. அறம் - சுகிர்தம், தருமம், நல்வினை, புண்ணியம், வீறு, ஒழுக்கம், ஆசாரம், உறுதி, கை, தவம். அறத்தின் பிரயோசனம் - பொருள், பரனன்பு வீடு. அறவகை - ஒழுக்கம், வழக்கு, தண் டம், இவற்றை முறையே ஆசாரம், விவகாரம், பிராயச் சித்தம் என்பர் வடநூலார். அறநிலைப்பொருளியல் - நெறிவழி நின்று தத்த நிலையினால் முயன்று பெறு பொருளறநிலைப் பொரு ளாம். அறநிலையின்பவியல் - குலமு மொழுக்கமுங் குணமும் பருவமு மொத்த கன்னியைத் தீவேட்டு மனைக்கணிருத்தல். அறநிலையறத்தினியல் - நான்கு வருணத்தாருந்தத்தம் வருணத்திற் பிறழாது நிலைபெறப் பாது காத்தல். அறவோர்பள்ளி - அருகர் பள்ளி, புத்தர் பள்ளி. அறனோம்படை - தருமம் போதிக்கு மிடம். அறிந்துமறியார்போறல் - அறிமடம். அறிவனார் - பஞ்சமரபு நூலார். அறிவிலான் - அஞர், அஞ்ஞன், அஞ்ஞை, அவிவேகி, அறிவிலி, ஆதன், இழுதை, ஏழை, சிதலை, சிதடன், பேதை, மடன், மண்ணை, முழுமகன், மூடன். அறிவின்மை - அசேதனம், அவி வேகம், அறியாமை, எய்யாமை, சிதடு, பேதைமை, மடமை, மடம், மருட்சி, மாழை, வெண் மை, வெளிறு, வெறிது. அறிவு - உணர்வு, உண்மை, உரன், உறழ்வு, ஒண்மை, ஒதி, காட்சி, சேதனம், சைதன்னியம், ஞாபகம், ஞானம், தீ, துப்பு, தெருட்சி, தெளிவு புத்தி, புந்தி, புலன், பொறி, போதம், மதி, மேதை, விவேகம், அன்றியும், பேரறிவு, முகரிமை, முதுக்குறைவு. அறிவுடைப்பொருள் - சித்து, சேதனம், உயிர், ஆன்மா, சித்தம், தன், பசு, இயங்கியற்பொருள், சங்கமம், சத்து. அறிவுடைமையில் பொருள் - அசித்து, அசத்து, சடம், அசேதனம், பாசம், மலம், நிலையியற்பொருள், தாவரம். அறிவுடையோர் - அறிஞர், ஆய்ந் தோர். ஆரியர், ஆன்றவர், உயர்ந் தோர், உரவோர், உரியோர், உலகம், எழுத்தாளர், கணக் காயர், கலைவல்லோர், கவிஞர், குசலர், கூவலர், சான்றோர், சீரியர், தகுதியோர், நல்லோர், நிபுணர், நூலுரைப்போர், நூலோர், மிக வல்லோர், மிக்கோர், மேதா வியர், மேலோர், விபுனர். அறுகு - இளம்புல், சட்பம், தூர்வை, பதம். அறுகுவெள்ளரிசிகலந்தது - அக்கதம். அறுகை - அறுவை, தோளிலிடுமுறி, அருகரத்தராசங்கம். அறுத்தல் - அகைத்தல், ஆரிதல், ஈர்தல், கடிதல், கத்தரித்தல், சொய் தல், சூலம், சேதித்தல், தடிதல், அணித்தல், துண்டித்தல், பகல், பரீதல், விடுவாய்செய்தல். அற்பத்தின்பெயர் - சிறுமையைக் காண்க. அறுவகைச்சுவை - தித்தித்தல், கூர்த்தல், துவர்த்தல், கார்த்தல், கைத்தல், புளித்தல். அறுவகைப்பருவம் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், இவை முறையே ஆவணி புரட்டாசி கார். ஐப்பசி கார்த் திகை கூதிர், மார்கழி தை, முன்பனி, மாசி, பங்குனி பின்பனி, சித்திரை வைகாசி இளவேனில், ஆனி ஆடி முதுவேனில். அறுவகைப்புறச்சமயம் - உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ் சராத்திரம்,பாட்டாசாரியம். அறுவகையிருது - வசந்தம், கிரீடம், வருடம், சரம், ஏமந்தம், சிசிரம், இவை முறையே சித்திரை வை காசி வசந்தம், ஆனி ஆடி கிரீடம், ஆவணி புரட்டாசி வருடம், ஐப்பசி கார்த்திகை சரம், மார்கழி தை ஏமந்தம், மாசி பங்குனி சிசிரம். அறுவகையுட்சமயம் - வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம். அறை - பாறை, முரஞ்சு. அற்பம் - கணம், இறை, வறிது, சின்னம், கன்று, ஆசு, தன்னம், ஒட்டு சிலம், தோகம், இட்டிடை. அற்புதம் - கோடிபத்துக்கொண்டது. அனந்தன் - சகத்திரசிரன், சர்ப்ப ராசன், சேடன், பாரேந்தி, போக வதிக்கிறை, பதஞ்சலியவதாரன். அனற்பொறி - புலங்கம். அனற்றிரள் - உற்கம். அனிச்சமயம் - அருப்பலம், சுள்ளி, நறவம். அனுகரணவுபயவோசை - வெடுவெ டெனல், திடு திடெனல், களக ளெனல், கொளகொளெனல், நெடுநெடெனல், மொகமொ கெனல், நெறு நெறெனல், பட படெனல், மொடுமொடெனல், சடசடெனல், சளசளெனல், கலக லெனல், சலசலெனல், கிடுகி டெனல். அனுகரணவோசை - இம்மெனல், கல்லெனல், இழுமெனல், வல்லெ னல், பொம்மெனல், ஒல்லெனல், பொள்ளெனல், ஞெரேலெனல், கொம்மெனல், சரேலெனல், ஞொள்ளெனல், கொல்லெனல், அம்மெனல். அனுடநாள் - தாளி, தேள், பனை, புல், பெண்ணை, போந்தை, மித்திர நாள். அனுபவித்தல் - திளைத்தல், துய்த்தல், நுகர்தல். அனுபோகம் - துப்பு, துவ்வு, நுகர்ச்சி, போகம். அனைத்துமுண்டாகும்நிலம் - உறா வரை. அன்பு - அளி, ஆணம், ஆர்வம், இட்டம், ஈரம், காமம், நாரம், நார், நேசம், நேயம், பரிதல், பரிவு, பற்று, பாசம், பரிவு, வாரம், விசுவாசம், அன்றியும் விடாது தொடர்ந்த வன்பு உழுவல். அன்றில்-கிரவுஞ்சம், தரிஞ்சகம். இதனாண் - அகன்றில், இதன் குஞ்சு - பிள்ளை, கவிஞ்சம். அன்னத்திறகு - தூவி. அன்னம் - அஞ்சம், உன்னம், எகி னம், ஓதிமம், மராளம், வக்கி ராங்கம், விகங்கம், இதனாண் - சேவல். இனிதாகப் பாடுமன்னம் காதம் பம். இனிதாக நடக்கு மன்னம் - மென்னடை. ஆ ஆவென்னும்பெயர் - எருமை, பசு, மரை. ஆகமம் - தந்திரம், சிரௌதம், நிகமம், ஞானம். ஆகாயச்சொல்லிலக்கணம் - நெஞ் சொடு கூறல், கேட்போர்க் குரைத்தல், தானேகூறல். ஆகாயத்தின்குணம் - வெகுளி, மதம், மானம், ஆங்காரம், உலோபம் என விவை. ஆகாயம் - அண்டம், அநந்தம், அந்தரம், அம்பரம், ஆசினி, இடம், உம்பர், உலகம், ககனம், கம், காயம், குடிலம், தலை, சேண், நபம், நாகம், புட்கரம், மங்குல், மாகம், மாதிரம், மீமேல், வானம், வான், விசும்பு, விண், விண்டலம், வியோமம், குண்ட லம், வெளி, வேனி. ஆக்கம் - நந்தல், பெருக்கம், அதிகா ரம், செல்வம். ஆங்காரம் - அகங்காரம், செருக்கு, தருக்கு கர்வம், மமதை. ஆசாரியன் - ஒச்சன், பணிக்கன், உபாத்தி, தேசிகன், பட்டாரகன், பதி, பண்ணவன், பகவன், அத்தன், தீர்த்தன், ஆசான், அடிகள், புங்க வன், சாமி, ஈசன், நாதன், இறை வன், கடவுள், கோமான், குரவன், ஐயன். ஆசிரியப்பா - அகவல். ஆசிரியர்கூற்று - கவிக்கூற்று, முது மொழி, மேற்கோள், ஆசிரிய வசனம், பழஞ் சூத்திரம். ஆசிரியவிருத்தம் - மண் விருத்தம். ஆசுகவிவகை - பொருள், அபி, பா, அணி முதலிய கொடுத்து மற் றொருவன் பாடுக என்றவுடனே பாடுவது. ஆசை - அணங்கு, அருத்தி, அரை, ஆதரம், ஆர்த்தி, ஆர்வம், ஆவல், இச்சை, இராகம், வட்டை, காதல், காமம், காமர், நசை, நச்சு, நம்பு, நயப்பு, கரம்பு, பற்று, பிணை, புரி, பெட்பு, மாதர், மோகம், வயாவு, வாஞ்சை, விதுப்பு, விருப்பு, விழுப்பம், விழைவு, விளரி, விளைவு, வெப் பம், வெம்மை, வேட்கை, வேட்பு. ஆசைப்பெருக்கம் - அவா, இரதி, இவறல், கவர்தல், காதலித்தல், சார்வு, தாழ்தல், நச்சுதல், நம்பல், நயத்தல், நல்கல், பற்றல், பெட் டல், பேணல், மேவல், விரும்பல், விழைதல், வீழ்தல், வெஃகல், வேட்டல், வேண்டல். ஆச்சாமதம் - ஆ, சாலம், சுள்ளி, மராமரம், யாலம். ஆடலாசிரியனமைதி - இருவகைத் தாகிய அகக்கூத்தினிலக்கணங் களை யறிந்து பல வகைப்பட்ட புற நடங்களையும் விலக்குறுப் புக்களைச் சேரப் புணர்க்கவும் வல்லனாகி, அல்லிய முதற் கொடு கொட்டி யீறாக்கிடந்த பதினொரு கூத்துக்களும் அக் கூத்துக்களுக் குரிய பாட்டுக்களும், அவற்றுக் கடைத்த வாச்சியங்களின் கூறு களும் நூல்களின் விதித்த வழியே தெரிந்து கூத்தும் பாட்டும் தாளங் களும் தாளங்களின் வழி வந்த தூக்குக்களும் தம்மிற் கூடின நெறியையுடைய அகக்கூத்தும் புறக்கூத்து முதலாயின நிகழ்த்து மிடத்துப் பிண்டி பிணையல் எழிற்கை தொழிற்கை யென்று சொல்லப்பட்ட நான்கினையும் நூலினகத்துக் கொண்ட கூறு பாட்டையறிந்து அகக்கூத்து நிகழுமிடத்துக் கூடைக்கதியாகச் செய்த கைவாரக் கதியுட் புகா மலும் வாரக்கதியாகச் செய்த கை கூடைக் கதியுட் புகாமலும் புறக் கூத்து நிகழுமிடத்து ஆடனிகழு மிடத்து அவிநய நிகழாமலும், அவிநய நிகழுமிடத்து ஆடனி கழாமலும், குரவைக் கூத்தும் வரிக்கூத்தும் தம்மில் விரவாத படியுஞ் செலுத்தியமைந்த தன்மை யுடையனாம். ஆடல் - அகவல், அசைதல், ஆவர், குனித்தல், தாண்டல், தூங்கல், தடித்தல், நுடங்கல், பெயர்தல், மாறல், இவற்றுள் வாயார்த் தாட லின் பெயர் ஆவலங் கொட்டல். ஆடவர் கூட்டம் - சவை, பண்ணை, சங்கம், கோட்டி, அவை, சபை. ஆடவர் கொடைவீரத்தாலணிவது - கழல். ஆடாதோடை - வாசை. ஆடிமாதம் - ஆசாடம், சுசி, ஆஷாடம். ஆடு - அசம், அருணம், உடு, ஒருவு, துருவை, துள்ளல், புருவை, வெறி, செம்மறி, துள்ளல், புருவை, வெறி, செம்மறி, மோத் தை, உதள், கொச்சை, ஏழகம், வற்காலி, பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, கொறி, சாகம், தகர், மேழகம், வெள்ளாடு முதலிய வகையைத் தத்தம் வரியிற் காண்க. ஆட்டுக்குட்டி - குட்டன், சோரன், பறழ், மணங்கு, மறி, வெள்ளை. ஆட்டுவாணிகன் - சாபலன். ஆணி - கீலம். ஆணை - சத்தியம், சபதம், சூள், தெரி சொல், தேவசாட்சி, பிர மாணம், விரதம், அன்றியு மிடும் பாடை யின் பெயர் சபதம், வஞ்சம், வஞ்சனை. ஆணைச்சிறப்பிக்கும்பெயர் - நம்பி புருடோத்தமன், புமான். ஆணையிடல் - தகைதல், தடுத்தல், தட்டல், வடித்தல், வாரித்தல். ஆண்குறி - இலிங்கம், கோசம், சிசுநம், மேகநம், மேட்டிரம். ஆண்ஞெண்டு - அலவன். ஆண்டிற்பாதி - அயனம். ஆண்டு - ஆயனம், சமை, அயனம், தெய்வதம், வருடம், வற்சரம். ஆண்பாலெழுத்து - அகர முதல் ஒளகாரமிறுதி யாகிய உயிரெழுத் துக்கள் பன்னிரண்டும் ஆணெ ழுத்துக்களாம். ஆண்பாற்பிள்ளைப் பாட்டின் வகை - இதனிலக்கணத்தைத் தெளி வாகக் கூறுமிடத்து இரண்டா மாதத்திற் செங்கீரை கூறுதலும், ஐந்தா மாதத்திற் சொற்பயில்வு சொற்றலும், ஏழா மாதத்தில முதூட்டலும், எட்டா மாதத்திற் றாலாட்டு தலும், ஒன்பதா மாதத் திற் சப்பாணி கொட்டலும், பதினோரா மதத்தில் முத்தங் கூறலும், பன்னிரண்டா மாதத் தில் வாரானை கூறுதலும், பதி னெட்டா மாதத்திற் சந்திரனை யழைத்தலும், இரண்டாம் வரு டத்திற் சிறுபறை கொட்டலும், மூன்றாமாண்டிற் சிற்றில் சிதைத் தலும், நாலாமாண் டிற்சிறுதே ருருட்டலும், பத்தா மாண்டிற் பூணணிதலும், பன்னி ரண்டாம் ஆண்டில் கச்சினோடு உடை வாளை விரும்பத் தரித்தலு மென்று சொல்லப்பட்டவையும் இவை யொழிந்த பிறவுமாம். இவைகளுள் கூறுதல் கற்றலோடு அமுதூட்டலும், பூணணிதலும், கச்சோடு சுரிகை புனைதலும் என்னும் இவற்றை யொழிந்த காப்பு முதல் பத்தும் ஆண்பாற் பிள்ளைக் கவியில் வரும். இவற் றுள் ஓராண்டுகாறு முரைத்த நிலங்கள் இருபாலுக்கு முரியன வாம். ஆண்பான்மயிர்முடி - பின்னகம், பந்தம், முடி, முச்சி, கொண்டை, சிகழிகை, குழல், சுடிகை, மௌலி. ஆண்பான்மயிர் - குஞ்சி, பித்தை, ஓரி, குழல், கார், பங்கி, கேசம், சுரியல், கதுப்பு, தளை, நவிர், பிச்சம், சிகை. ஆண்பெயர் - அஃறிணையில் உயர் திணையில் வரும் புல், பறவை, விலங்கு, மணிதர் முதலாயி னோர்க்காம். ஆண்மகன் - ஆடூஉ, காளை, குமரன், புமான், புருடன், மகன், மாந்தர், மாண்பர், மைந்தர், மானவன், ஆடவன். அன்றியும் ஆண் மக னுக்குச் சிறந்த பெயர் புமான், நம்பி. ஆண்மயிர்க்கும் பெண்மயிர்க்கும் பொது - கதுப்பு, கேசம், சுரியல், குழல். ஆண்மரம் - எகின், சேமரம். ஆண்முதலை - கரா. ஆண்வண்டு - சுரும்பு, மதுகரம், தும்பி. ஆதல் - நந்துதல். அதாரநிலை - கந்து, ஆலம்பம், ஆலம், பனம், தஞ்சம், தூவு. ஆதி - அடி, ஆரம்பம், எழுவாய், தலை, தாழ், தொடக்கம், பிரசாயம், பூருவம், முதல், முன்னர், மூலம், மோனை. ஆதிவேதம் - இருக்கு பௌடிகம். ஆதொண்டை - தொண்டை. ஆத்தி - ஆரம், ஆர், சல்லதி, தாதகி. ஆந்தை - இருடி, கின்னரம், கூன், பிங்கலை. ஆபரணக்கடைப்புணர்வு - கயில், மடை. ஆபரணத்தின்றூங்கணி - தூக்கம், தொங்கல், நிலை, மதலிகை. ஆபரணத்தொங்கல் - உத்தி. ஆபரணமுதலியவைக்கும்வீடு - பண்டசாலை. ஆபரணம் - அணி, அணிகலம், அணி கலன், ஆரம், இழை, கலம், கலன், நகை, பணி, பூடணன், பூண், மஞ்சு, மதாணி, வள்ளி. இவற்றுட் பேராபரணத்தின் பெயர் : ஆரம், மதாணி, பூணாகக் கட்டுமாபர ணத்தின் பெயர் கிம்புரி, தாங்கி, வயிரம், மணி வடத்தின் பெயர் ஆரம், காழ், சரம், தாமம், மணிக் கோவையின் பெயர் - காழ், சவி; அன்றியுங் காதணி முதலிய வகையைத் தத்தம் வரியிற் காண்க. ஆபரணம்வைக்குஞ்செப்பு - கடிப்பம், கண்டிகை, காண்டம், கோடிகம், துமானன், பரணி, பீடிகை. ஆபரணவோசை - கிஞ்சிதம். ஆமணக்கு - ஏரண்டம், சித்திரம். ஆமை - அண்டசம், அம்பணம், அழுங்கு, உறுப்படக்கி, ஒடுங்கி, கச்சபம், கமடம், கல்வி, கூர்மம், இதன் பெண் இடுலி, துளி. ஆம்பற்பொது - அல்லி, சயம், நெய்தல், இவற்றுட் செவ்வாம்பல், அரக் காம்பல், செங்குமுதம், செவ் வல்லி, சேதாம்பல், வெள்ளாம் பலின் பெயர், கயிரவம், குமுதம். ஆயத்தமானோன் - சந்நத்தன். ஆயம் - உல்கு, சாரியை, கங்கம். ஆயர்வீதி - ஆபீனன். ஆயிரம் - நூற்றுப்பத்து, சகசிரம், சகத்திரம். ஆயிவியநாள் - அரவு நாள், ஆயில், கௌவை, பாம்பு. ஆயுதஞ்சூது கூத்துப்பயில்களம் - அரங்கம். ஆயுதப்பொது - அசி, அரி, அலகு, இரும்பு, எஃகு, எதி, கருவி, கழுமுள், காண்டம், காத்திரை, கூர்த்திகை, சுதனம், சேனை, தானை, துப்பு, படை, படைக் கலம், வேல், இவற்றுட் கைவிடு மாயுதப் பொதுப்பெயர் அத்திரம், தூரியம், கைவிடா வாயுதப் பொதுப் பெயர் சத்திரம். ஆயுதவுறை - உறை, கருவிப்புட்டில், தடறு, படையுறை. ஆயுள்வேதியர் - மாமாத்திரர், மத்து வதர், மருத்துவர், வைத்தியர், பிடகர், பரிகரிப்போர். ஆயுதவெழுத்து - அஃகேனம், ஆய்தம், ஒற்று, தனிநிலை, முப்புள்ளி. ஆரவகை - மலையாரம், தீமுரன் பச்சை, கிழான்பச்சை, பச்சை வெட்டை, ஆரி, சந்தனம், வேர்சுக் கொடி, ஆரபடியாவது - பொருள் பொருளாக வீரராகிய மானுடர் தலைவராக வருங்கூத்து. ஆரம்பம் - எழங்க முடையது, முகம், எழுவகையுழவு. இது ஏழு வகைப் பட்ட வுழவினாற் சமைக்கப்பட்ட புழுதியுளிட்ட வித்துப் பவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது. ஆராதனை - அருச்சனை, அர்ச்சனை, பத்தி, பலி, பூசனை, பூசை, வந்தனை, வழிபாடு, வேள்வி. ஆராய்தல் - ஆய்தல், ஆலோசனை, ஓர்தல், சூழல், சூழ்ச்சி, தூக்கு, தெரிதல், தெளிதல், தேர்தல், ஙணுகுதல், ஙளைதல், உசாவுதல், எண்வைதல். ஆரான்மீன் - ஆரல், ஆரால். ஆலகாலவிடம் - காளகூடம், ஆலாலம், ஆலம். ஆலமரம் முதுமரம் - ஆலம், ஆல், கான்மரம், கோளி, தொன்மரம், நியக்கு ரோதம், பழுமரம், பாலி, பூதவம், வடம், இதன் விழுது, வீழ். ஆலவட்டம் - உக்கம், காலசம், தாலவிருந்தம், பீலி. ஆலாங்கட்டி - ஆலி, கரகம், கனோ பலம். ஆலிங்கனம் - தழுவல், விள்ளல், முயங்கல், விழைச்சல், தைவரல், புல்லல், பொருத்தல், சேர்த்தல். ஆலீடம் - வலக்காலை மண்டிலித்து இடக்காலை முன்னுற வைத்தல். ஆலை - இயந்திரம். ஆலோசனை - சூழல், சூழ்ச்சி, தேர்தல், தெளிதல், மந்திரம், விசாரம். ஆவஞ்சி - இடக்கை, குடுக்கை, வினைக்கிரியைகள் இடக்கையாற் செய்ய வேண்டலின் இடக்கை யென்றும், குடுக்கையாக வடைத் தலாற் குடுக்கை யென்றும் பெயர் வந்தது. ஆவஞ்சியென்னும் பெயர்க் காரணம் - (ஆ) பசுவினுடைய வஞ்சித் தோலைப் போர்த்தலால் அப் பெயர்த்து. ஆவணிமாதம் - சிராவணம், நபம். ஆவிரை - பகரி. ஆவிறைச்சி - வள்ளுரம். ஆழம் - அழுந்து, கம்பீரம், கயம், குட்டம், குண்டு. ஆழ்வாரிநிலம் - ஒதை. ஆளத்திக்குவருமெழுத்து - குறிலைந் தும், நெடிலேழும், மெய்களுள் தவ்வும், நவ்வும், மவ்வுமாம். ஆளத்திக்குவாராவெழுத்து - த, ந, ம, அல்லா வேனை மெய்கள். ஆளத்தியாவது - முதற்பாடு மிடத்து மகரவொற்றாலே நாதத்தை யுச்ச ரித்து அதனைத் தொழில் செய்யு மிடத்துக் குறிலாலு நெடிலாலுஞ் செய்யப்படுவது. ஆளத்திவகை - காட்டாளாத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி, இவற்றுள் அச்சுட னிகழ்வது காட்டாளத்தி, நிறங்குலையாமற் பாரணையுடன் நிகழ்வது நிற வாளத்தி, பண்ணையே கருதி வைக்கப்படுவது பண்ணாளத்தி. ஆற்றுவரிச்செய்யுள் - காவிரியைச் சுட்டிய பா. ஆறு - உந்தி, ஒலியல், ஓணம், குடிஞை, சிந்து, தடினி, தரங்கணி, திரை, தீபவதி, தீர்த்திகை, துறை, துனி, நதி, புனல், யாறு, வருபுனல், வேணி, இவற்றுண் மேற்கோடு மாறு - நதம். கிழக்கோடுமாறு - நதி. நிறையாறு - பீராறு, வழாறு - வாரி. புதுப்புனல்வரவு, தலையல், நீந்துபுனல், அகாதம், நீத்து. ஆறுமுகத்தம்பிரான் - திருவண்ணா மலையா தீனத்தைச் சார்ந்திருந்த வித்வஜனர்களு ளொருவர். இவர் சேக்கிழார் நாயனாராற் செய் தருளப்பட்ட திருத்தொண்டர் பெரியபுராணம் என்னும் பன்னி ரண்டாந் திருமுறைக்கும், திரு முறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம், மூத்தநாயனார் இரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்பவற்றிற்கும் விசேடவுரை செய்தனர். அவ் வுரைகளால் அவரது கல்வித் திறமையும், சிவபத்தியும், உல கோபகாரமும் நன்கு விளங்கும்,. இவர் இற்றைக்குச் சில வருடங் களுக்கு முன்னர் இவ்வுலக வாழ் வொருவினர். சைவசித்தாந்த வுணர்ச்சியில் வல்லவர். ஆற்றிடைக்குறை - அரங்கம், இலங்கை, துருத்தி. ஆனாயநாயனார் - அறுபத்து மூவர் களுள் ஒருவர். இவர் மழநாட்டின் கணுள்ள திருமங்கல மென்னுந் திருப்பதியில் திருவவதாரஞ் செய்து பசுக்களை மேய்த்து வந்தார். திருக்கொன்றை மரத்தின் அருகுசார்ந்து புள்ளாங்குழலிலே பஞ்சாக்கர மந்திரத்தை யமைத்து வாசித்து வருதலை நியதமாகக் கொண்டார். அவ்விசை கேட்ட சராசரவுயிர்கள் யாவும் கேட்டு உள்ளமுருகிப் பரவசமடைந்து நிற்ப, சிவபெருமான் தோன்றி யருள் செய்து எந்நாளுஞ் சிவ பதத்தி லிருந்து புள்ளாங்குழல் வாசிக்கக் கடவாய் என்ன, அவ ருடன் சென்றனர். இவர் குரு பூசைத்தினம் கார்த்திகை மாதத்து அத்த நட்சத்திரமாம். ஆனிமாதம் - சுக்கிரம், சேட்டம். ஆன்பொருந்தநதி - ஆனிவானி, ஆன்பொருநை, சூதநதி. ஆனென்னும்பெயர் - ஆ, எருமை, மரை. ஆன்மலக்கணம் - ஆன்மாவானது பிரமப்பொருளின் பரிணாம மாய்த் தோன்றி அறிவிச்சை செயல் களை யடைந்து ஏகாநேககுண குணிபாவமாய் நிற்குமென்று பரிணாமவாதி கூறுவான். குண குணித் தன்மையின்றிக் கேவலம் அறிவுமாத்திரையாய் நிற்கு மென்று சாங்கியன் கூறுவன். உருவப் பொருளா யிருப்ப தென்று பௌராணிகர் கூறுவர். அரு வுருவப் பொருள் என்று கவுளகர் கூறுவர். ஆகாயம் போல அருவாய் அவிகாரியாய் நிற்கு மென்று பாதஞ்சலர் பகர்வர். உயிர் அறி வில்லாத சடமாயினும் மனத் தோடு கூடிச் சித்தா யறியு மென்று வைசேடிகர் விளம்பு வர். சித்தும் அசித்துமா மென்று சைவரில் ஓர் சாரார் கூறுவர். கருவியை யுறாத சித்துப் பொருளாம் என்று பட்டாசாரிய மதத்தார் உரைப் பார். சரீரத்தி னிடத்தே பரமாணு அளவிற்றாய் நிற்பதெனப் பாஞ் சராத்திரிகள் விளம்புவர். உடம் பினிடத்துப் புன்னுனித் துளி போல ஏகதேசமாய் இதயத் தானத் தினிற்ப அவ்வுயிரினறிவு விளக்கொளி போல எவ்விடத் தும் வியாபிக்கு மென மிருதி நூலோர் செப்புவர். உடம்பளவில் நிறைந்து நின்று அங்கே யறிவதா மென்று சமணர்கள் சாற்றா நிற்பர். முதல்வனைப் போல எங்கணும் வியாபியாய் நின்று அறிவதாம் என்று ஐக்கியவாதிகள் அறைவர். இங்ஙனமே மற்றைய சமயிகள் யாவரும் முரணாகக் கூறியது போலவே மாயாவாதி யும் ஆன்மாவொன்றென்றும், அது பிரமமே யென்றும், அப் பிரமம் மாயையினாலே வாதிக்கப் பட்டுக் கூடத்தன், ஈசுவரன், சீவன் என்னும் பெயரு டன் மேகாகாயம், மேகசலப் பிரதிபிம்பாகாயம் போல விளங்கும் எனவும், சீவனுக்கு ஆன்ம சப்தஞ் சொல்லா தெனவும் விளம்புவன். இவர்கள் கூற்றெல் லாம் பூர்வபக்கமாக்கி நின்ற சைவசித்தாந்த உண்மையாவது:- ஒருவாற்றானும் அசித் தாதலில் லாத வியாபகப் பொருள் போல ஒளபச்சிலேடிக வியாபகமாத லும் அதுபற்றி அதி சூக்கும சித்தா தலும் இன்றி, அது வதுவாய் வசிப்புண்ணும் வியாபகமாம் வழக்கு உடைத்தாய், அநாதியே பசுத்துவ மெனப்படும் ஆணவ மலத்தின் மறைக்கப்பட்டுக் கிடக் கின்ற அழியாத இச்சா ஞானக் கிரியைகளை யுடைத்தாய்த் தூல சித்தாகிக் கேவலப்பட்டு நிற்கு மென்றும், அதன்பின் அனந்த தேவராற் கலக்குண்ட பகுதியா கிய காரண சரீரத்தைப் பொருந் திப் பொதுவகையாற் சமட்டி ரூபமாய் மாயா தத்து வத்தினின் றுந் தோன்றுங் கலாதிகளாகிய கஞ்சுக சரீரத்தைப் பொருந்தி, வியட்டி ரூபமாய்ப் பிரிந்துதோன்றி, அந்தக்கரண முதலிய வைகளைத் தமக்குள் ளடக்கி நின்ற முக்குண சரீரங்களினிடமாக வரும் விடயங் களின் வியா பரிக்க நின்று, சூக்கும தூல தேகங் களையும் பெற்று ஐந்தவத்தைப் பட்டு நிற்கும் என்ப தாம். ஆன்மா - பசு,உயிர், புற்கலன், சீவன், சேதனன், அணு, இயமானன், ஆதன், செந்து, ஆவி, பூதன், உறவி, கூத்தன். இ இக - ஓரசைச்சொல். இகழத்தகுபொருள் - இழிதகவு, இழிவு, தண்மை, பரிபவம். இகழ்ச்சி - இகழ்வு, இழிவு, உவர்ப்பு, ஒல்லாமை, தாழ்ச்சி, தாழ்வு, நகவு, நகை, நிந்தை, பழி. இகழ்ச்சிக் குறிப்பு - இனி, எல், என், ஏஎ, சீச்சீ, சையெனல். இகழ்ச்சிச்சொல் - அங்கதம், இழி சொல், வகைச்சொல். இகழ்தல் - இகழ், எள்கல், எள்ளல், நகுதல், நிந்தித்தல், பழித்தல். இசங்கஞ்செடி - குண்டலி, முத்தா பலம். இசை - இராகம், கந்தருவம், காநம், காந்தாரம், தென், நரம்பு. இவற் றுண் மந்த விசையன் பெயர் - காகுளி, மந்தரம், சமனிசையின் பெயர் - துத்தம், மதுரம், மத்திமம், உச்சவிசையின் பெயர் - தாரம், வல்லிசை. இசைக்காரணம் - பல இயற்பாக்களு டனே நிறத்தை இசைத்தலால் இசையென்னும் பெயர்த்து. இசைக்குப் பிறப்பிடம் - நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலை என விவை. இசைக்குரியஎண்வகை - ஆராய்தல், குறும்போக்கு, கையூழ், செலவு, தை வரல், பண்ணல், பரிவட்ட ணை, விளையாட்டு, இவற்றுள் பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயருந் தன்மாத்திரை யறிந்து வீக்குதல் பண்ணலாம். ஆரோகண அவரோகண வகை யால் இசையைத் தெரிதல் ஆராய் தலாம். குடச்செலவும் துள்ளற் செலவும் பாடுதல் குறும்போக்கு. வண்ணத்திற் செய்த பாடலெல் லாம் இன்பமாகப் பாடுதல் கை யூழ். ஆளத்தியிலே நிரம்பப் பாடுதல் செலவு, அநு சுருதியேற் றல் தைவரல் வீக்கின நரம்பை யகவிரலாலும் புறவிர லாலும் காரணஞ் செய்து தடவிப் பார்த் தல் பரிவட்டணை யாம். இசைக்குரிய எழுத்து - சரிகமபதநி. இசைக்குழலிசை - சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம். இசைக்குழலிலக்கணம் - மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி என்னுமிவற்று ளொன் றாற்செய்யப்படுவது. மூங்கிலிற் செய்வது உத்தமம். வெண்கலம் மத்திமம். ஏனையவை யதமம். மூங்கில் பொழுது செய்யும் வெண் கலம் வலிது. மரம் எப்பொழுதும் ஒத்து நிற்கும் இக்காலத்துக் கருங் காலி செங்காலி இவற்றாற் கொள் ளப்படும். இவை கொள் ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலுகாற்று மயங்கின் நாதமில்லையாமாதலின் மயங்கா நிலத்தின் கண் இளமையும் நெடும் பிராயமு மின்றி ஒரு புருடா யுப்புக்க பெரிய மரத்தை வெட்டி யொரு புருடாகாரமாகச் செய்து அதனை நிழலிலே யாறவிட்டு வைத்துத் திருகுதல், பிளத்தல், போழ்ந்து படுதல் முதலிய செய்கை யறிந்து ஓரியாண்டு சென்ற பின் இலக்கண வகையான் வங்கிய மாய குழல் செய்யப்படும். இசைக்குழற்பிண்டி யிலக்கணம் - நீளம் இருபது விரல், சுற்றளவு நாலரை விரல், இது துளையிடு மிடத்து நெல்லரிசியில் ஓர் பாதி மானிறுத்திக் கடைந்து வெண் கலத்தாலே யணைசு பண்ணியிட முகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். இசைக்குழற்றுளை யிலக்கணம் - அளவு இருபது விரல். இதிலே தூப முகத்தின் இரண்டு நீக்கி முதல் வாய்விட்டு இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினு மிரண்டு நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப் படும். இவற் றுள் ஒன்று முத்திரை யென்று கழித்து நீக்கி நின்ற ஏழி னும் ஏழுவிரல் வைத்து ஊதப் படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலங் கொள்ளப்படும். இசைக்குழல் - ஆம்பல், வங்கியம், வாரி, வேய்ங்குழல், இவற்றுண் மூக்கால் வாசிக்குங் குழல் முரளி. இசைஞானியார் - சடைய நாயனார் தேவியார். அருந்தவப்பேற்றால் சுந்தர மூர்த்தி சுவாமிகளைத் தமக்குப் புத்திரராகப் பெற்றனர். சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரத்திலே முத்தியடைந் தனர். இசைநிறையசைச்சொல் - ஏ, குரை. இசை நுணுக்கம் - இது சாரகுமாரன் அல்லது சயந்த குமாரன் இசை யறிதற் பொருட்டு அசத்திய முனிவர் மாணாக்கரு ளொரு வரால் சிகண்டி என்னும் அருந்தவ முனிவரால் வெண்பா வாலியற்றப் பட்ட இசைத்தமிழ் நூல். இஃது இடைச்சங்க மிருந்த காலத்துச் செய்யப்பட்டதென்று அடி யார்க்கு நல்லாருரையானும், அச் சங்கத்தினர்க்கு நூலாக விருந்த தென்று இறையனார் அகப் பொருளுரையானுந் தெளியப் படுகின்றது. இசைப்பாமுகநிலை - கொச்சகம், மூரி. இசைப்பட்டு - இசை, இராகம், கந்தருவம், காந்தாரம், காமரம், கானம், கீதம், குழல், கேயம், கேரளை, பாட்டு, பாணி, பாண், மனை விழி, வரி. இவற்றுள் வாச் சியத்தோடு பாடு மிசைப் பாட்டு சங்கீதம், பாண். இசைப்பாவகை - செந்துறை, வெண் டுறை, பெருந்தேவ பாணி, முத்த கம், பெருவண்ணம், ஆற்று வரி, கானல்வரி, விரி முரண், தலை போகு மண்டிலம். இன்னும் சுத்தம், சாளகம், தமியென்னுஞ் சாதியோசைகள் மூன்றினுடனுங் கிரியை களுடனும் பொருந்தும் இசைப்பாக்கள் ஒன்பது வகைப் படும். அவையாவன: சிந்து, திரி பதை, சவலை, சமபாதம், விருத் தம், செந்துறை, வெண்டுறை, தேவ பாணி, வண்ணம். இசைப்பு - அத்து, இசை, இயை, உத்தானம், சந்தி, புணர்ச்சி, இயைபு, இசைவு. இசையாசிரியனிலக்கணம் - யாழ்ப் பாடலும் வங்கியப் பாடலும் இரு வகைத் தாளக் கூறுபாடுகளும் மிடற்றுப் பாடலும் மந்தமாகிய சுரத்தினையுடைய தண்ணுமை யும் அகம்புறம் பதினோராடல் என்னும் கூத்துக்களினும் வல்லவ னாய் இவற்றுடனே சேரச் செய்த உருக்களை இசைகொள்ளும்படி யும் இரசம் பொருந்தும் படியும் புணர்க்கவும் வல்லவனாய், இரு வகைப்பட்ட பாடல்களுக்கும் பொருளான இயக்கம் நான் கினையுமமைத்துத் தேசாந்தரங் களின் கணுள்ள பாஷை களையு மறிந்து அந்தப் பாஷைகள் இசை பூணும் படியையு மறிந்து இயற் புலவனினைவும், நாடகப் புலவ னீடும் வரவுகளும், இவற்றுக்கடுத்த பாடல்களும் தம்மிற் சந்திப்பிக்கு மிடத்துக் குற்றந்தீர்ந்த நூல் வழக்காலே விரிக்கவும் வகுக்கவும் வல்லவ னென்ப. இசைவிகற்பம் - ஏனை. இஞ்சி - அல்லம், ஆத்திரதம், மருப்பு, வேர்க்கொம்பு. இடக்கை - வாமகரம், ஆமந்திரிகை. இடக்கை வாத்தியம் - ஆமந்திரிகை, இடக்கைவாத்தியமென்னுங் கார ணம் வினைக்கிரியைகள் இடக் கையாற் செய்தலினப் பெயர்த்து. இடங்கழி நாயனார் - கோநாட்டின் கணுள்ள கொடும்பாளூரில் வாழ்ந்த குறுநிலமன்னருள் முதல் வர். அறுபத்து மூன்று அடி யருள் ஒருவர். கனக சபையைப் பொன் னால் வேய்ந்த சோழ வமிசத்தவர். ஓரடியார் திருவமுதிற்கு நெல் லில்லாமை காரணமாகத் தம் பண்டாரத்தைக் கொள்க வென்று கொடுத்தவர். இவரது குருபூசைத் தினம் ஐப்பசி மாதத்துக் கார்த் திகை நட்சத்திர மேயாம். இடதுபக்கம் - அபசவ்வியம், இடம், வாமம். இடத்தையச்சொல் - யாண்டு, யாங்கு, யாங்ஙனம், யாண்டை. இடபம் - ஏறு, உக்கம், நரை, நந்தி, கூளி. இடபவிராசி - இடபம், இறால், எருது, ஏறு, குண்டை, சே, நந்தி, நரை, பசு, பாண்டில், பாறல், புல்லம், பூணி, பெற்றம், மூரி, விடை. இடம் - அகம், அயல், அரங்கு, இடை, இல், உழி, உளி, உள், உறை, கடை, கண், களம், கால், கீழ், சார், தலம், தலை, தாமம், தானம், திகை, திணை, தேம், தேயம், நிலம், பக்கம், பட்டி, பதி, பாங்கர், பாடு, பால், பின், புடை, புலம், புறம், மாடு, முகம், முதல், முன், மேல், வயின், வலம், வழி, வளாகம், வாய், வைப்பு. இடம்புரிச்சங்கு - இப்பியாயிரஞ் சூழ்ந்தது. இடாகினி - சுடுகாட்டிற் பிணங் களைத் தின்னும் பேய், மாயவள், வஞ்சனி, வலவை. இடி - அசனி, அனலேறு, இகளி, உரும், எறு, ஒலி, செல், மடங்கல், வானேறு, விண்ணேறு, வெடி. இடுதிரை - அவிடி, கஞ்சிகை, அவளி கை, காண்டம், எழினி, கண்டம், பாரகம், கழனி, படம், படாம். இடை - உக்கம், நடு, நுசுப்பு, நுண் ணிடை, மத்திமம், மத்தியம், மருங்கு. இடைக்காடர் - இடைக்கழிநாடு என்னும் ஊரிற் பிறந்தவராதலால் இந்நாம மெய்தியது போலும். இவர் கலாவல்லவராகி ஊசிமுறி என்னும் இலக்கண நூலைச் செய் தார் என்று கூறுப. திரு வள்ளுவர் குறளை யரங்கேற்றிய காலத்து “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்” எனச் சிறப்பித்தனர். மற்றைய சரிதங்களைத் திருவிளையாடற் புராணம் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்திற் காண்க. இடைசுருங்குபறை - துடி. இடைச்சங்கப்புலவர் - அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசியார், வெள் ளூர்க்காப்பியர், சிறுபாண்டரங் கனார், மதுரை யாசிரியனார், மாறனார், துவரைக் கோமான், கீரந்தையார், வெண்டேர்ச் செழி யன், முடத் திருமாறன் முதலிய ஐம்பத்தொன்பதின்மர். இடைச்சொல் - அம், ஆம், அல், ஆல், உம், எம், ஏம், ஏ, தம், தில், நம், பாக்கு, பான், மன், வான். இடைப்பக்கம் - ஒக்கல். இடைப்பானிலம் - அரங்கு, நிலம், குழிதோண்டிய விடத்து மண் மிகாமலும் குறையாமலு மிருக்கு நிலம். இடையரூர் - ஆய்ப்பாடி, ஆவிரம், இடைச்சேரி, உவளகம், பல்லி, வல்லியம், வாடை. இடையர் - முல்லை நிலமாக்களைக் காண்க. இடையர்வீதி - சிரேணி, சேடி, சேரி, பாடம், பாடி, வாடை, வேணி. இடையாபரணம் - குறங்கு செறி, கவானணி, அரைப்பட்டிக்கை, மேகலை. இண்டு - இண்டை, ஈகை, ஈங்கை, ஈண்டு, புலிதொடக்கி. இதோபதேசம் - நீதிகளைக் கற்பிக்கும் ஓர் வடமொழி நூல். இதனைத் தமிழிலே யாழ்ப்பாணத்து நாக நாத பண்டிதர் அவர்கள் மொழி பெயர்த்துளர். இத்திமரம் - இரத்தி, இரத்திரி, இறலி. இந்திரகாளியம் - இது யாமளேந்திர ரென்னும் ஆசிரியராற் செய்யப் பட்ட இசைத் தமிழ் நூல். அடி யார்க்கு நல்லார் உரை யெழுது வதற்கு மேற்கோளாகக்கொண்ட நூல். இந்திரகோபம் - ஈயல், கோ, பம்மூதா. இந்திரன் - அமராவதியோன், ஆயி ரங்கண்ணன், சதமகன், கோபதி, போகி, சங்கிரந்தனன், பாகசா தனன், வச்சிரப்படை யோன், மேகவாகனன், விண் முழுதாளி, வாசவன், மகவான், வானவன், கௌசிகன், ஆகண்டவன், அயி ராதவன், வலாரி, புருகூதன், சக்கிரன், புரந்தரன், மருத்துவன், மருதக் கிழவன், வரைச்சிறகரிந் தோன், அரி, சசிவல்லான், திரு மலி, சுவர்க்கன் வேள், விநாயகன், புலவன், வேந்தன், புரோகிதன், சுனாசி, கரியவன், புனிதன், காண் டாவனன், மால், வெள்ளை, வாரணன், தேவர் வேந்தன், பொன்னகர்ச் செல்வன், ஐந்தரு நாதன். இந்திரன் அணிவது - சிந்தாமணி, சூமணி. இந்திரன் உணவு - அமுதம். இந்திரன்குதிரை - உச்சைச் சிரவம். இந்திரன்கொடி - இடி. இந்திரன்கோ - காமதேனு. இந்திரன் சேமநிதி - நவநிதி. இந்திரன்தேவி - இந்திராணி. இந்திரன்நகரம் - அமராவதி. இந்திரன்படை - வச்சிரம். இந்திரன்பண்டாரம் - சுதன்மம். இந்திரன் புனைவது - கற்பக மலர். இந்திரன்மகன் - சயந்தன். இந்திரன்மண்டபம் - சயந்தம். இந்திரன்மாளிகை - வசந்தம். இந்திரன்மேகம் - சம்வர்த்தம், ஆவர்த் தம், புட்கலாவர்த்தம், சங்காரித் தம், துரோணம், காளமுகி, நீல வருணம். இந்திரன்யானை - ஐராவதம். இந்திராணி - அயிராணி, இந்திரன் மனைவி, சசி, சுந்தரி, புலோமசை, ஐந்தருச் செல்வி. இந்திராணி கூத்து - கடையம். இந்திரியம் - கந்தம், கரணம், பொறி. இந்துப்பு - சயிந்தவம். இப்பிறப்பு - இம்மை, இப்பவம், இகம். இப்போழ்து - இன்று, இன்னே. இமயமலை - இமயம், இமாசலம், பனிமலை, பார்வதி பிறந்த மலை. இம்மியளவு - தேர்த்துகள் எட்டுக் கொண்டது. இயமம் - பொய், கொலை, களவு, காமம், பொருளாசை இவ்வைந் தையு மடக்கியது. இயமன் - யமன், அரி, அந்தகன், தென்றிசைக் குரியோன், சமன், சண்டன், சண்பன், தருமன், நமன், மறலி, தண்டதரன், சைமினி, நகரோன், வைதரணி நதியோன், செங்கோற் கடவுள், நாசவன், நடுவன், கூற்று, எருமை யூர்தி, வைவச்சுதன். இயமன்கொடி - சிங்கம். இயமன்படை - தண்டு. இயமன்மந்திரி - காலன். இயமன்வாகனம் - எருமை. இயமானன்கணவகை - நேர், நேர்நேர், தேமாங்காய். இயம்புதல் - இசைத்தல், பிதற்றல், பேசல், இறுத்தல், கதை, நுவல், காதை, கிளவி, பனுவல், அறை, பறை, வாணி, கூற்று, மொழி, குயிறல், புகறல், மாற்றம், மறை, நொடி, பரவல், இசை, இயம், பேச்சு, உரை, எதிர்ப்பு. இயற்பகைநாயனார் - அறுபத்து மூவருள் ஒருவர். சிவனடியார்க்கு விரும்பிய பொருள்கள் யாவுங் கொடுப்பவர். சிவபெருமானே வஞ்சவேடங் கொண்டு வந்து ‘நின் காதலியைத் தருக’ வென்ன அன்போடுங் கொடுத்தவர். இவர் குரு பூசைத் தினம் மார்கழி மாதத் துவரும் உத்தரநட்சத்திர மேயாம், இவர் காவிரிப்பூம் பட்டினத்திலே வணிகர் குலத்திற் றிருவவதாரஞ் செய்தவர். இயைபு - இசைப்பு, புணர்ச்சி. இரக்கச்சொல் - அக்கோ, அச்சோ, அந்தோ, அய்யோ, அன்னோ, ஆஅ, எறே, என்னே, ஓஒ. இரக்கம் - இனைவு. இரங்குதல் - இளைதல், இனைதல், குனிதல், நைதல், பரிதல். இரட்டைக்கை - பிணையல், இணைக்கை. இரட்டைக்கைவகை - அஞ்சலி, புட் பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கற்கடகம், சுவத்திகம், கடகா வருத்தம், நிடதம், தோரம், உற் சங்கம், புட்பபுடம், மகரம், சயந் தம், அபயவத்தம், வருத்த மானம் என்ற விவைகளாம். இரட்டையர் - இரு வித்துவான்கள்; ஒருவர் முடவர், ஒருவர் குருடர், ஆமாத்தூர்க் கலம்பகம், ஏகாம் பர நாதருலா முதலிய சொற் சுவை பொருட்சுவைக ணிறைந்த அருமையான பாடல்களைப் பாடியுள்ளார்கள். இரண்டாம்பக்கம் - பத்திரை. இரண்டாம்வேதம் - யசு, தைத்திரியம். இரண்டு - யுகளம், உபயம், இணை, துணை. இரதம் - சபலம், சூதம், பாதரசம், பாரதம், பேதி. இரத்தக்கண்ணன் - ஓரசுரன். இரத்தபீசன் - ஓரசுரன். இரத்தம் - அரத்தம், ஆர்க்கம், உதிரம், எருவை, கறை, கீலாலம், குருதி, சுடுவல், செந்நீர், செம்பால், செம்புனல், சோணிதம், சோரி, தோரை, தோன்றி, நெய், நெய்த் தோர், புண்ணீர், புலானீர். இரத்தல் - இரவு, ஏற்பு, ஏற்றல், குறை கோள், யாசித்தல், வேண்டல். இரத்தவிந்து - ஒருவகை மாணிக்கம். இரத்தினகுணம் - எட்டுப் பலவகை யும் ஆறு கோடியும் தாரையும் சுத்தியும் தராசமும் எனவிவை. இரத்தினக்குற்றம் - சரைமலம், கீற்று, சம்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், மிருத்து, கோடியில்லன, கோடி முறிந்தன, தாரை மழுங்கல் என்னுமிப் பன்னிரண்டு மாம். இரப்போர் - இரவலர், இரவோர், தீனர், நிரப்போர், பரிசிலாளார், மார்க்கணர், யாசகர், வறிஞர். இரப்போர்கலன் - கடிஞை, கப்பரை, பாத்திரம், மண்டை, ஓடு, சிரட்டை, குடுவை. இரப்போர்க்கீயு மிடைவள்ளல் - அந்தி மான், சிசுபாலன், அக்குரன், வக்கிரன், சந்திமான், கன்னன், சந்தன். இராகப்புள் - மிதுனம், கின்னரம். இராகு - கரும்பாம்பு, தமம், மதிப் பகை, மதியுணி. இராகுகாலம் - சுபகருமங்கள் செய்யத் தகாதகாலம். இராகுதசை - இராகுவின் அனுபவ பலாபலம் வருங்காலம். இராக்கதர் - அரக்கர், இடும்பர், சால கடங்கடர், நிருதர், பிசிதாசனர், யாது, யாதானவர், நிசிதரர், தைத் தியர், வானோர் மாற்றவர். இராசதகுவணவகை - தானம், தவம், தமம், பேணல், ஞானம், கல்வி, நலன், கேள்வி. இராசதானி - புரம், புரி, நகரம். இராசதேவிமனை - அந்தப்புரம், கந்த வாரம். இராசப்பகவிராயர் - இவர் திரிகூடரா சப்ப கவிராயர் எனவும் பெயர் பெறுவர். திருநெல்வேலிக் குற்றா லத்திற் பிறந்தவர். திருக்குற்றாலப் புராணம், திருக்குற்றலக் குற வஞ்சி யென்னுமிவைகளை யியற் றினவர், இராசமனை அரமனை, குலம், கோயில், சாலை, நகரம், பவனம், மத்திரம், மாலை, மாளிகை. இராசவாகனம் - சஞ்சிகை, மனிக் காற் பள்ளி. இராசா - அண்ணல், அதிபதி, அதி பன், அயன்றோள் வந்தோன், அரசன், ஆண்டகை, இறை, இறைவன், இனன், ஏந்தல், ஓங்கல், காரணன், காவலன், குரிசில், கோ, கொற்றவன், கோமான், கோன், சக்கிரி, தராபதி, தலைவன், தோன் றல், நரபதி, நிருபன், பதி, பார்த்தி வன், புரவலன், பூபதி, பூபாலன், பெருதகை, பெருமகன், பெரு மான், பொருநன், மாண்டலீகன், மன்னவன், மன்னன், மீளி, முதல் வன், வாகுசன், வேந்தன், இவற் றுண் மற்றொருவரைப் பணியா துலகாள்வோன் பெயர் :- சக்கிர வர்த்தி சார்வபௌமன், மண்ட லேசுவரன், குறுநில மன்னர் பெயர் - அரட்டர், குறும்பர், புரோசர், வேளிர், சாளுவர் பெயர் - சளுக்கு வேந்தர், வேல்புல வரசர். இராசிகளின்பொது - இல், ஓரை, பவனம். இராசியின்பெயர் - மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பன வாம். இராசவீதி - மேடவீதி, இடபவீதி, மிதுன வீதி, இவற்றுள் மேட வீதி யாவது இடபம், சிங்கம், மிதுனம், கர்க்கடகம், இடபவீதி யாவது - மீனம், மேடம், கன்னி, துலாம், மிதுனவீதியாவது - தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம். இராத்திரி - அல், அல்கல், அல்லி, இரசனி, இரவு, இரா, எல்லி, ஏமம், கங்குல், திநாந்தகம், திதீ, நத்தம், நிசா நீசி, மாலை, யாமம், யாமினி, விபாவரி. இராமகவிராயர் - சென்னைக்கடுத்த பொன்னேரியிற் பிறந்தவர். திரு வாய்ப்பாடிப்புராணம், சாரப் பிரபந்தம் என்னு மிரண்டனை யுஞ் செய்தவர். இராமசுவாமிஐயர் - வேத வேதாந்த கணித சாத்திரங்களில் வல்லவர். யாழ்ப் பாணத்திலே வட்டுக் கோட்டையிற் பிறந்தவர். நாடகத் தமிழில் நன்கு பழகியவர். இராமன் - தசரதபுத்திரன், விட்டுணு வின் அவதாரமென்ப, சீதேவியின் சிறைமீட்டற்காக இலங்கையம் பதியை யணைவழியாச் சென்ற டைந்து இராவணாதியரைச் சங்க ரித்தவர். இராமன்குரு - வசிட்டமுனிவர். இராமன்புத்திரர் - குசலவர். இராமன்மனைவி - சீதை. இராமாநுசன் - வைணவாசாரியருள் ஒருவர். வியாச சூத்திரத்திற்குப் பாடியஞ் செய்தாருள் ஒருவர். உடையவர் வேதாந்தசாரியர் எனவும் பெயர்பெறுவர். இராமாயணம் - இதிகாசத்துளொன்று இராமனது சரித்திரங்களையும் பிறவற்றையும் உணர்த்துவது. இது பாலராமாயணம், முல்ல ராமாயணம், வால்மீகி ராமா யணம், அத்தியாத்ம ராமாயணம், கம்பராமாயணம், சம்பு ராமா யணம் எனப்பல வகைத்து. இரிதல் - ஓடல், உடைதல், கெடுதல், நீளல், பாறல், நிமிர்தல். இருடிகள் - முனிவர், மாதவர், இலிங் கிகள், முனைவர், படிவர், உறுவர், பண்ணவர், ஐயர், அறவோர், தபோதனர், அறிஞர், அந்தணர், துறவோர், கடிந்தோர், மேனியர், யோகியர், கோபங் காய்ந்தோர், நீத்தோர், மெய்யர், தாபதர். இருத்தல்விகற்பம் - யானை, தேர், புரவி, பூனை முதலியன. இவை திரிதாவுடைய பகுதியவாம். பது முகம், உற்கட்டிதம், ஒப்படி யிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண் டிலம், ஏகபாதம் இவை திரிதர வில்லாத பகுதியனவாம். இருதுறையின்வகை - செந்துறை, வெண்டுறை. இருந்தையூர்க் கருங்கோழி மோசியார் - இடைச்சங்கப் புலவர் ஐம்பத் தொன்மதிரு ளொருவர். இருபத்தைந்துதத்துவம் - பூதம் (5) ஞானேந்திரியம் (5) கன்மேந்திரியம் (5) புலன் (5) அந்தக் கரணம் (4) ஆன்மா (1). இருப்புக்காந்தம் - சும்பகம். இருப்புமுள் - தாறு. இருப்புலக்கை - முசலம். இருப்பை - மதுகம், குலிகம். இருமல் - ஐ. இரும்பு - அகி, அயம், அயில், கருங் கொல், கருந்தாது, கரும்பொன். இரும்புலவாங்குஞ்சலாகை - சும்பகம். இருவாட்சி - அனங்கம், கருமுகை, மயிலை. இருவேலி - மூலகந்தம், வேரி, பீதகம். இருள் - அந்தகாரம், அந்தரம், அல், கங்குல், கச்சளம், கருவரி, கருள், கார், சருவரி, தமம், திமிரம், துணங்கறல், துவாந்தம், நத்தம், நிசி, நீலம், மங்குல். இரேவதிநாள் - இரவிநாள், கடை நாள், கலம், குலம், சூலம், தொழு, தோணி, நாவாய், பஃறி, புருட நாள், பெருநாள். இலக்கியபொருட்டொடர் - நிலைச் செய்யுட் கூறுபாடு - அத்தியா யம், இலம்பகம், காண்டம், சருக்கம், படலம், பரிச்சேதம். இவற்றுள், வேத நூல் விரிக்கும் இலக்கியத் திற்கும் முனிவருரைத் தலக்கியத் திற்குங் கூறுபாடு - அத்தியாயம் தொடுத்த பொருண் முடிக்குங் கூறுபாடு - இலம்பகம், சருக்கம். இலக்குமணன் - இராமன் தம்பி, இளையவன். இலக்குமி - அரிப்பிரியை, ஆக்கம், இந்திரை, இரமை, இளையாள், உலகமாதா, கமலை, கோகனகை, சீதேவி, செய்யாள், செல்வி, திரு, திருமகள், நளினி, பதுமாசனி, பதுமாலயை, பதுமை, பார்க்கவி பாற்கடற் பிறந்தாள், பின்னை, பொருட்செல்வி, பொறி, பொன், மா, முண்டகாசனை, விமலை. இலக்குமிகூத்து - பரவை. இலதைக்கை - அஃதாவது நடுவிரலுஞ் சுட்டு விரலுங்கூடி நிமிரப்பெரு விரலவற்றின் கீழ் வரைசேர, ஒழிந்த இரண்டு விரலும் வழிமுறை பின்னே நிமிர்ந்து நிற்பது. இலந்தை - இரத்தி, குலவலி, குல்லரி, கோலி, கோற்கொடி, வதரி. இலந்தைக்கனி - குலம், கொண்டை, கோலம். இலவந்திகை - நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை. இலவமரம் - சான்மலி, பூரணி, பொங்கர். இலவம்பஞ்சு - பூளை. இலாபம் - அதிகம், ஆக்கம், ஆயம், ஊதியம், சலபம், நத்ல், நயன், பசை, பயம், பயன், பலன், பலித் தல், பேறு, பொலிசை, அன்றியுந் தொழிலிலாபம் உருத்திதம், விருத்தி. இலை - அடை, சதம், சதனம், தகடு, தண்ணடை, தமாலம், தலம், தழை, தளம், பத்திரம், பத்திரி, பலாசம், பலாசு, பன்னம், பாசடை, பாசிலை, முறி, அன்றியும் ஏடு பனைக்கும் பூவிதழுக்கு முரித்து ஓலை - பனை, தெங்கு, தாழைக்கு முரித்து. மடல் - ஈந்தில், கமுகு, தாழை, தெங்கு, பனை, வாழைக்கு முரித்து. அன்றியும் தோடு - தாழை, தெங்கு, பனை, பூவிதழ்க்கு முரித்து. இலைக்கறி - அடகு. இலைநுகர்விலங்குணா - குளகு. இலைமூக்கரிகத்தி - குளிர், கணிச்சி. இல்லறத்தின்றுறை - தன்னையொ ழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந் தினர்க்கும், சுற்றத்தார்க்கும், பிறர்க்குந் துணையாதலும், வேள்வி செய்தலும், ஒழுக்கங் காத்தல் முதலியனவு மாம். இல்லெலி - ஆகு. இவ்விடம் - இங்கு, இங்ஙனம், இம்பர், இவண், ஈங்கு, ஈண்டு. இழிகட்பெருங்கண்ணனார் - கடைச் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின் மருள் ஒருவர். திருவள்ளுவமாலை யில் இவர் இயற்றிய பாடலொன்று மிருக்கின்றது. இழிந்தேறும்வழி - படுகர். இழிப்பினவிநயம் - இடுங்கிய கண்ணும், வெளிப்பட்ட பற்களும், ஒடுங்கிய முகமும், நடவாக் காலும், சோர்ந்த வுடலும், சொல் நிரம்பாமையும் உடைத்தாதல். இழிவு - அவமானம், இழிதகவு, இளிவு, தாழ்வு, பரிபவம். இளங்கதிர் - பீள். இளங்கொம்பு - வளார், மெல்லியல். இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம் என்னும் பஞ்ச காவியங்களுள் ஒன்றைச் செய்தவர் இவரே. இவர் சேரநாட்டில் வஞ்சி நகரத் திருந்து அரசுசெய்த சேரலாத னென்னும் அரசனுடைய புத்திரர். சேரன் செங்குட்டுவனுடைய தம்பி. இத னால் இவர் முதலில் இளங்கோ வென்று சொல்லப்பட்டுப் பின்பு துறவு பூண்டமையால் இளங்கோ வடிகளென்று பெயர் பெற்றனர். பதி விரதமுடைய மகளிரைத் துதித்தலையுட் கொண்டும் இக் கதை முகமாகச் சில தருமங் களை உலகத்தார்க்குத் தெரிவிக்க வேண்டு மென்பதைக் கடைப் பிடித்துமே சிலப்பதிகாரஞ் செய்தனர். இவர் மலைநாட்டினராதலால் அந் நாட்டுச் சொற்கள் பலவற்றை நுழைத்திருக்கின்றனர். இவர் சமயம் சைவசமய மென்று கொள்ள றுணிபு. சைனமதக் கொள்கையை அதிகங் கூறியிருத்தலால் அஃ தென்றுங் கூறுவர். இவர் காலங் கடைச்சங்கப் புலவர் காலமே. அஃதாவது இலங்கைச் சரித்திரத் திற் கூறிய படி முதலாங் கயவாகு வின் காலமே யாம். இளஞ்சூல் - மீட்டை. இளஞ்சென்னி - வெற்றிவேற் செழிய னென்றும் பெயர். பாண்டி அரசர் களுள் ஒருவன். இளந்திரையன் - தொண்டை மான், தொண்டை மானிளந் திரையன், ஆ தொண்டைச் சக்கிரவர்த்தி யெனவும் பெயர் பெறுவன், நாக பட்டினத்துச் சோழன் பிலத் துவாரத்தாற் சென்ற பாதலலோக மடைந்து நாககன்னியைப் புணர்ந்து பிரியுங் காலத்து, மகவை யென்செய்வேனென்று கன்னி கேட்டாளாகச் சோழன் நோக்கி, மாதே! ஆண்குழந்தை பிறக்கும் அதனைத் தொண்டைச் செடி யாற் கட்டிக் கடற்கணெறியக் கடவாய். அது நம்மூர் வந்து சேரும், அப்போது எம்மர சினை யதற்களிப்ப மென்று சென்றனன். நாகமங்கை யங்ஙனமே குழந்தை பிறந்தவுடன் கணவன் கட்டளைப் படி தொண்டைச் செடியாற் கட்டிக் கடலகத்திட்டாள். திரை கொண்டு வந்து கரையிற் சேர்த் தது. குழந்தையை யெடுத்து அரச னிடங் கொண்டு சென்று காட்ட, அரசனை தவாங்கி, அள விலா ஆனந்தங்கொண்டு திரைதருதலால் திரையன் எனவும் தொண்டைச் செடியாற் கட்டினமையின் தொண்டைமான், ஆதொண்டைச் சக்கரவர்த்தியெனவும் பெயர் வைத்து அரசாள வைத்தனன் என்று பத்துப்பாட்டுட் கூறப் பட்டது. இளமரம் - கன்று, குழவி, பிள்ளை, போதகம், போத்து. இளமை - இளை, எழில், கயம், கன்னி, குருகு, குருளை, குழவி, குழவு, கொம்மை, கோமளம், சேடு, சேய், தருணம், நவ்வி, நாகு, புருவை, போதகம், மஞ்சு, மண்ணை, மழவு, முருகு, விளரி, விளர், வெண்மை. இளமைநாயனார்குளம் - சிதம்பரத் தின்கணுள்ள ஓர் தீர்த்தம். திரு நீலகண்ட நாயனாரும் அவர் தேவியாருஞ் சிவனடியவரின் றிருவோடு காரணமாகச் சத்தியஞ் செய்தற்கு இதன் கண் முழுகி எழுந்தபோது இளமைப் பருவ மடைந்து முத்திபெற்றாராகலின் இளமை நாயனார் குளமெனப் பட்டது. பெரிய புராணத்திற் காண்க. இளம்பனை - போந்தை. இளம்பிறைக்கை - சுட்டுவிரலும் நடுவிரலும் பவித்திர விரலும் சிறு விரலுஞ் சேர்ந்து உள் வளையப் பெருவிரல் அவற்றை விட்டு நீங்கி வேறா யிருப்பது. இளம்புல் - சட்பம். இளம்பூரணர் - தொல்காப்பியத்திற்கு உரை செய்தாருள் இவரும் ஒருவர். இவர் அடியார்க்கு நல்லார், நச்சி னார்க்கினியர் என்பவர்க்கு முற் பட்டனர். தொல்காப்பியத்திற்கு இவரே முதன்முதல் உரையெழுதிய காரணத்தினால் இவர்க்கு உரை யாசிரியர் என்னும் பெயர் வழங் கப்பட்டது. இளவேட்டனார் - கடைச்சங்கப் புலவர் நாற்பத் தொன்பதின்மருள் ஒருவர். திருவள்ளுவர் குறட்குச் சிறப்புக் கவி கூறியுள்ளார். “மதுரை யறுவை வாணிகர் இள வேட்ட னார்” எனக் கூறுவதனால் இவர் ஊர் மதுரை யெனவும், குலம் ஆடைவிற்கும் வணிககுல மெனவுங் கொள்ளக் கிடக்கின்றது. இளவேனில் - மது மாதவம், வசந்தம். இளைஞர் - ஆடவர், இளவல், உவா, காளை, குமரன், சேய், மழவு, முருகன், யுவா. இளைத்தல் - எய்த்தல், கிரிசம், சிக்கல், சிங்கல், ஞொள்கல், தகைதல், தேம்பல், தேய்தல், நாம்பல், பழங் கண், மெலிதல். இளையனார் வேலூர் - தொண்டை மண்டலத்திலே செங்கற்பட்டுச் சில்லாவிலுள்ள ஓர் சுப்பிரமணிய ஸ்தலம். இளையான்குடிமாற நாயனார் - அறு பான்மும்மை நாயன்மாருள் ஒருவர். வேளாண் குடியிலே திரு வவதாரஞ் செய்த இவர் வறுமை யால் உணவின்றி மிகப் பசித் திருந்தும் இருளோடு கூடிய மழைக்காலத்துச் சிவபெருமான் அடியார் வேடங்கொண்டு எழுந் தருள, வயலை யுழுது விதைத்த சம்பாநென் முளைகளை மனை யலக்கால் அமுதாக்கிக் குழி நிரம் பாத புன்செய்ப் பயிரின் கீரையா லாகிய கறியமுதைச் சமைப் பித்துக் கொடுத்துச் சிவபெருமான் றிருவருளான் முத்தி யடைந்தனர். முத்தியடைந்ததினம் ஆவணி மாதத்து மக நட்சத்திரமே யாம். இறகினடிமுள் - முருந்து. இறகு - இறை, குரல், கூரல், கூழை, சதம், சதனம், சிறகு, சிறை, செட்டை, தூவி, தோகை, பக்கம், பத்திரம், பர்ணம், பறை, பிச்சம், பிஞ்சம், வாசம். இறக்குதல் - அவரோகணம், அவா வுதல், இழிதல். இறங்குதல் - அவா, சுத்தம், அவ தாரம். இறலி - இத்தி. இறால் - இறவு. இறுக்கல் - தற்றல். இறுமாப்பு - செம்மாப்பு, எக்கழுத்தம். இறை - பொறி, வரை. இறைகூடை - அம்பி, இடார், இறைவை, காராம்பி, கிழார், பிழார், புட்டில், பூட்டை, பட்டை அன்றியும் நீரிறைக்கு மரப்பத்தல் இறைவை. இறைச்சி - துன்னு, மேதை, வள்ளுரம், இவற்றுளாவினிறைச்சி வள்ளுரம், சூட்டிறைச்சி சூசியம், படித்திரம். இறையனார் - பாண்டியனும் கடைச் சங்கப் புலவர்களும் பொருணூல் இல்லாது வருந்த, ஆலவாயடி களே ‘அன்பினைந்திணை’ என் னும் அகப்பொருளிலக்கணத்தை யருளிச் செய்தார். இறையனாரகப்பொருள் - அன்பினைந் திணை, களவியல், அகப் பொரு ளெனவும் பெயர் பெறும். இஃது “அன் பினைந்திணை” முதலாய அறுபது சூத்திரங்களை யுடைத்து. இறைவனா லருளப்பட்டு அவன் றிருநாமத்துடன் விளங்கும் அகப் பொருள் நூல் இதுவன்றி வேறொன்று மின்று. இந்நூற்குக் கடைச்சங்கப் புலவர் நாற்பத் தொன்பதின் மரும் உரை செய் தார்கள். அவற்றுள் மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் செய்தவுரையே உருத்திர சன்மக் கடவுளானும், மற்றை யோர்க ளானும் மெய்யுரையெனக் கொள் ளப்பட்டது. மதுரை மருதனிள நாகனார் உரையைக் கேட்ட காலத்து உருத்திரசன்மர் ஓரிடத்து மாத்திரம் கண்ணீர் சொரிந்தும், மயிர் சிலிர்த்தும், பரணனாருரை கேட்ட காலத்து சில சில விடங்கள் தோறும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தும், மயிர் சிலிர்த்தும், நக்கீரனாருரை கேட்ட காலத்து ஒவ்வோர் பதந் தோறும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தும் மயிர் சிலிர்த்தும் வியப்புக் காட்டினர். நக்கீரர் தமது உரையைக் கீரவி கொற்றனார்க்கும், அவர் தேனூர்க் கிழார்க்கும், அவர் படியங் கொற் றனார்க்கும், அவர் செல்வத் தாசிரியர் பெருஞ்சுவனார்க்கும், அவர் மணலூர் ஆசிரியர் புளி யங்காய்ப் பெருஞ்சேந்தனார்க் கும், அவர் சொல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமார னார்க்கும், அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கும், அவர் மாதளவ னார் இளநாகனார்க்கும், அவர் முசிறி ஆசிரியர் நீலகண்டனார்க் கும் முறையே உரைத்தனர் என்ப. இனிமை - அமிழ்து, ஆனு, இமிழ், இரதம், இமுமெனல், சாரம், சுவை, சேறு, தமிழ், தீ, தீம், மதுரம். இனியவைநாற்பது - பதினெண் கீழ்க் கணக்கினுளொன்று. இனியன வாகிய விஷயங்களை நாற்பது பாக்களாற் றெரிக்கும் நூல். பூதஞ் சேந்தனார் என்பவராற் செய்யப் பட்டது. கடைச் சங்கத்திலரங் கேறப்பட்டதென்ப. முழுவதும் இன்னிசை வெண்பாவாற் செய்யப் பட்டுச் சொற்சுவை பொருட் சுவைகளை யுடைத்து. இனியென்பது - ஞாங்கர், புறம், மற்று, முன், மேல். இன்சுவைதீம் - இரதம். இன்பமொடுபுணர்ந்தோனவிநயம் - துன்ப நீங்கப்பெற்றுத் துவர்த்த யாக்கையும் பெருமகிழ் வுடை மையும் செலவு மிகுதி யுடை மையும் அழகு பொதிந்த சொற் பொலிவுடைமையும், அழகுஅ டனே மலர் சூடியிருத் தலும் பருத்த புயமுடைமையுங் கொண் டுள்ள தென்ப. இன்பம் - ஏமம், கடி, களிப்பு, சுகம், சேமம், தொய்யல், நகை, நயன், நலன், நன்னிலை, பரிவு, மகிழ்ச்சி, அன்றியும், பேரின்பம், ஆனந்தம். இன்னாநாற்பது - இதுவும், பதி னெண் கீழ்க்கணக்கினுளொன்று, இனியவையல்லாத விஷயங்களை நாற்பது பாக்களாற் றெரிக்கும் நூல், கபில தேவராற் செய்யப் பட்டது. கடைச் சங்கத்தார் காலத் திற் செய்யப்பட்டது. முழுவதும் இன்னிசை வெண்பாவால் இயற் றப்பட்டுளது. இன்னிசையளபெடை - அளபெடை யிருபத் தொன்றனு ளொன்று. பாட்டிலோசை குறையாதா யினும் அளபெடுக்கிற் சந்தவின்ப முடைத்தாயின் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீண்டு ஒலிப் பதாம். “கெடுப்பதூஉங் கெட் டார்க்குச் சார்வாய் மற்றாங்கே - யெடுப்பதூஉ மெல்லாமழை” என்னுந் திருக்குறளானறிக. இன்னிசைவெண்பா - வெண்பா வகையினு ளொன்று. அஃதாவது முதன் மூன்றடியும் நான்கு சீர் பெற்றும், இறுதியடி யொன்று முச்சீர்பெற்றுந் தனிச் சொல் லின்றி வருவதாம். “வேதசிவாக மத்தான் மெய்ச்சமய மென்று தெளிபோதசிவ சித்தாந்த பூடண வொண்மைக்கருளு - மீரா யிர மருப்பியேறி விளையாட்டருளு - மோரா யிரமருப்பியோர்” என் னுஞ் சைவபூஷண சந்திரிகைச் செய்யுளா னறிக. ஈ ஈகை - அளி, இடுகை, உதவி, உதா ரம், உபகாரம், கடப்பாடு, கவிகை, தத்தம், தானம், தியாகம், பிரதம், புரவு, வண்மை, வாகை, விதரணம், வேளாண்மை, வேள்வி, அன்றியும் வரையாக் கொடை யின் பெயர் கொடை, மடம். ஈகையாளன் - உபகாரி, கொடை யாளன், தனதன், தாதா, தியாகி, புரவலன், வதானியன், வேளாளன், வேள்வியாளன், அன்றியும் வரை யாது கொடுப்போன் பெயர் ஒளதாரியன், வள்ளல், வள்ளி யோன். ஈசல் - சிதல், ஈயல். ஈசன்செயல் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம். ஈசன்நவபேதம் - சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன் என்பனவாம். ஈசன்வில் - பினாகம், மேரு. ஈசாவாசியோபநிடதம் - உபநிடதத்து ளொன்று. ஈசானர் - வடகீழ்த் திசைப் பாலகர். ஈசானதிசை - வடகிழக்குத் திசை. ஈசானம் - சிவபெருமானது ஐந்து திருமுகங்களுளொன்று. ஈசானியமடம் - சிதம்பரத்தின்கணுள்ள தருமபுர ஆதீனத்தார் மடம். ஈசானியதேசிகர் - இயற்றமிழாசிரியர். ஈடணாத்திரயம் - உலகவீடணை, தனவீடணை, தாரவீடணை யென்பனவாம். ஈட்டி - இட்டி, கழுக்கடை, கழுமுள், சலாகை, சவளம். ஈதல் - அருளல், அளித்தல், இகுத் தல், இகைத்தல், இடுதல், உதவல், கொடுத்தல், தருதல், நல்கல், நீட் டல், நேர்தல், பகுத்தல், பணித்தல், புரத்தல், பொழிதல், வழங்கல், வீசல். ஈந்து - கர்ச்சூரம். ஈயம் - சீருள், தகரம், வங்கம். ஈரப்பலா - ஆசினி, பலாசம். ஈரல் - ஈருள், குண்டி, சுருள். ஈரெண்வகைக்கூலம் - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்பனவாம். ஈரொற்றுவாரம் - இரண்டு மாத்திரை பெற்று வருஞ் செய்யுள். ஈர்வாள் - அரி, இரம்பம், கர பத்திரம், வேதினம். ஈழதேசம் - சிங்களம், பொன்னகரம், இலங்கை, சிம்மளம், சிங்களத் துவீபம். ஈழவர் - மலையாள தேயத்துள்ள ஓர் வகைச் சாதியார். ஈனம் - அடம், இகழ்ச்சி, இரதம், இழிவு, இழுக்கு, கீழ், கீழ்மை, குறைவு, தாழ்வு, நிரப்பு, புன்மை, பொல்லாங்கு, மறவி. ஈன்றணிமை - புனிறு. ஈன்றபசு - வற்சலை. ஈன்றவள் - அவ்வை, அம்மனை, அம்மை, அன்னை, ஆயி, தம் மனை, தாய், பயந்தாள், மோய், யாய். ஈன்றவன் - அச்சன், அத்தன், அப்பன், அம்மான், ஐயன், தந்தை, தாதை, பிதா. உ உகந்தமலை - இலங்கையிலே திரி கோண மலைக்குச் சமீபத்துள்ள சுப்பிரமணிய ஸ்தலம். உகப்பாட்டு - தலைப்பாட்டு, இது கூட்டக் கூத்தியர்க்குரியபா. உகவை - தலைப்பாட்டுக் கூத்தியர். உகமுடிவு - ஊழி, மடங்கல். உசிர்நிலைப்பசாசக்கை - சுட்டு விரலும் பெருவிரலும் நகநுனியைக் கௌவி நிற்பது. உக்காரி - அஃகுல்லி. உக்கிரமம் - கீதவடிவுகள் மூன்றனு ளொன்று. உக்கிரப்பெருவழுதி - சோமசுந்தர பாண்டிய குமாரர். இவரைக் குமாரக் கடவுளது திருவவதார மென்ப. “கலையுணர் புலமையிற் றலைமை யோனாகி - விதி முறை வழாது முதுநிலம் புரக்கும் - பெருந்தகை யுக்கிரப் பெருவழுதி யென்னுந், தன்னிகரில்லா மன்ன வர் பெருமான்” எனச் சிறப்பித் துக் கூறப்பட்டவர் இவரே. சங்கப் புலவராயிருந்து தமிழாராய்ந் தாருள் இவரும் ஒருவரே. இவர் வரலாறுகளைத் திருவிளை யாடற் புராணத்திற் காண்க. உசிலமரம் - சிக்கிரி, துரிஞ்சில். உச்சாகம் - உள்ளத்தின் மிகுதியைக் காண்க. மனக்கிளர்ச்சி, மனக் குதுகலம். உச்சி - குடுமி, சிகரம், சிக்கம், சுடிகை, சூழி, நவிரம், நனந்தலை. உச்சிப்பொழுதில் வந்தோனவிநயம் - சொரியாநின்ற பெருந்துன்பில் வருந்திவன் உடம்பு எரிவுற்றுச் சிவந்த கண்ணும் அயர்ந்த நோக்க முமுற்று இருப்பதாம். உஞ்சல் - ஊசல், விண்டாண்டு. உஞ்சை - உச்சயினிமாநகரம், இஃது அவந்தி தேசத்துள்ளது. உடலவர்த்தனை - மெய்சாய்தல், இடை நெரித்தல், கழித்தல், அணைத்தல், தூக்குதல், அசைத் தல், பற்றல், விரித்தல், குவித்தல் என்னுமொன்பது மாம். “மெய் சாய் விடைநெரிவு மேற்கழிவோ டாங்கணைத்தல், கைதூக்கசைத் தல் கலைபற்றல் - கைகள், விரித் தல் குவித்தலிவை சிங்களமா மென்று - தெரிந்தனர் தண்டமி ழோர் தேர்ந்து” என்றதனா னறிக. உடல் - அங்கம், அவயவம், ஆகம், ஆதாரம், உடம்பு, உயிர்நிலை, உரு, உறுப்பு, கடம், களேபரம், காத்திரம், காயம், குரம்பை, சடம், சட்டகம், சரீரம், சதுரம், தனு, தாவரம், துவக்கு, தேகம், தேயம், படிவம், பிண்டம், புகல், புணர்வு, புதை, புரம், புற்கலம், பூட்சி, பூதியம், மூர்த்தம், மெய், யாக்கை விக்கிரகம், வியம், அவ் வுருவத்தின் பெயர், சட்டகம், படிவம், மேனி, வடிவம். உடற்குறை - கவந்தம், மட்டை, முண்டம், யூபம். உடற்றழும்பு - அங்கிதம், சேர்க்கை, வசி, வடு. உடனிகழ்ச்சி யிடைச்சொல் - ஒடு ஓடு. உடன்படல் - இசைதல், ஒட்டல், சம்மதித்தல், நேர்தல், வலித்தல். உடன்பிறந்தாள் - சகோதரி, பகினி. உடுக்கை - துடி. உடுக்கைப்பறை - ஒருவகைத் தோற் கருவி. உடுத்தல் - இறுக்கல், ஒற்றல், சுற்றல், தற்றல். உடும்பு - அண்டசம், கோதா, தடி, முசலி, முசலிகை. உடைவாள் - சுரிகை, பத்திரம், குறும்பிடி. உட்சொல் - நெஞ்சொடு கூறல். உட்சொல்லிலக்கணம் - நெஞ்சொடு கூறும் நீர்மைக்காக அது சுண் ணம், சுரிதகம், வண்ணம், வரிதக மென நான்கு வகைப்படும். உட்டணம் - அழல், அனலம், உருப்பம், உருமம், கருமம், கோரம், தகம், தாபம், வெப்பம், வெம்மை. உட்டுளை - அரி, குழல், சுகிர், சுரை, தசிரம், தூம்பு, நாடி, நாழி, நாளம், புரை, புழை, வேணு, வேய். உட்பகையாறு - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்ச் சரியம். உணவு - அசனம், ஆகாரம், இரை, உணா, உண்டி, ஊட்டி, ஓதனம், துப்பு, பதம், போசனம், வல்சி. அன்றியும் பேருணவின் பெயர் - பிறப்பு, சிற்றுணவின் பெயர் - அப்பவர்க்கத்தைக் காண்க. உண்கலம் - கலம், தட்டம், தளிகை, தாலம், பாசம், பாசனம். உண்டல் - புசித்தலைக் காண்க. உண்டாக்கல் - காண்டல், சிருட்டித் தல், தோற்றுவித்தல், நியமித்தல், நிருமித்தல், படைத்தல், பயத்தல், பாரித்தல், விதித்தல். உண்டாதல் - அஞ்சிதம், சுரத்தல், நந்தல், படல், பூத்தல், விளைதல். உண்டிப்பொருத்தவகை - ஒகர நீங்கிய உயிர்க்குற்றெழுத்து நான்கும், கசத நபமவ என்னும் மெய் யெழுத்து ஏழும், அமுதெழுத் தாகக் கூறலால் இவ்வெழுத்துக் களுளொன்றை முதலாகவுடைய முதற்சீர்க்குக் கூறிய கணத்திற் குரிய நட்சத்திரத்தோடு பாட வேண்டுதல் முறையாம். இதுவு மன்றித் தலைவன் பிறந்த நாளே னும் பெயர் நாளேனும் இரண்டி லொன்று பொருந்தக் கூறிய அடியை முதலெடுத்துச் சொன் னால் அப்பாட்டுடைத் தலைவ னுக்குச் செல்வம் எப்போதும் வளர்ந்து வருமெனப் புலவர் கூறா நிற்பர். உண்ணா - அண்ணம். உண்பன - தூற்றி. உண்மாசு - உபமலம். உண்மிடறு - அணல். உண்மைவிளக்கம் - சித்தாந்த சாத்திரம் பதினான்கனு ளொன்று, சிவஞான போதம் சிவஞான சித்தியார் என்னு முதனூல்களின் உண்மைப் பொருள்களைச் சுருக் கமாகத் தெரிப்பது. மெய் கண்ட தேவநாயனார் மாணாக் கருள் ஒருவராகிய திருவதிகை மன வாசங் கடந்த தேவநாயனாராற் செய்தருளப்பட்டது. ஐம்பத்து நாலு திருவெண்பாக்களையுடை யது. இது சாலிவாகன சகாத்தம் 1177 ´த்தில் இயற்றப்பட் டுள்ளது. உண்மைநெறிவிளக்கம் - சித்தாந்த சாத்திரம் பதினான்கனு ளொன்று. ஆறு திருவிருத்தங்களையுடை யது. திருக்கடந்தை மறைஞான சம்பந்த தேசிகரது மாணாக்க ராகிய கொற்றவன் குடி உமாபதி தேவநாயனாராற் செய்தருளப் பட்டது. தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம ரூபம், ஆன்மதரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவபோகம், சிவானந்தம் என்னுந் தசகாரியங்களையு மெடுத்து விளக்குவது. இது சாலிவாகன சகாத்தம் 1234´த்திற் செய்யப் பட்டது. உதடு - இதழ், துடி, பாலிகை, முத்தம், அன்றியு மேலுதடு - ஓட்டம்; கீழுதடு அதரம். உதயகிரி - சூரிய சந்திரர் தோன்று மலை; கிழக்கின்கணுள்ளது. உதயணன்கதை - இஃது பைசாச பாடையிற் குணாட்டியரென்னும் மகாபண்டிதரொருவரால் முற் காலத்துச் செய்யப்பட்டுள்ள பிருகத் கதையின் மொழி பெயர்ப் பாகவுள்ளது. நூலாசிரியர் பெயர் புலப்படவில்லை. சொற்சுவை பொருட் சுவைகளிலே மிகச் சிறந் தது. உதயணன் என்னும் இராச குமார னொருவனது சரித்திரத் தைக் கூறுவது. சிந்தாமணி முத லிய காப்பியங்களினும் இதனை மேலாகமதித்து அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டியிருக் கின்றனர். ஒவ்வொரு சிற்றுறுப் புக்களும் மிகப் பெரிய ஆசிரியப் பா ஒவ்வொன்றால் இயற்றப்பட் டுள்ளது. அவ் வுறுப்புக்கள் பலவமைந்து காண்டம் என்னும் பேருறுப்பு விளங்கும். அவற்றுள் முதலாவது உஞ்சைக் காண்டம் 58 பகுப்பினையும், இரண்டாவது இலாவாண காண்டம் 20 பகுப்பி னையும், மூன்றாவது மகத காண் டம் 27 பகுப்பினையும் நான்கா வது வத்தவ காண்டம் 17 பகுப்பி னையும், ஐந்தாவது நரவாண காண்டம் 9 பகுப்பினையும் உடையன. இப்பொழுது கிடைத்த கையெழுத்துப் பிரதியின் முதலுங் கடையுஞ் சிதைந்து காணப்பட்ட மையால் ஐந்தாவது காண்டத்திற்கு மேல் இத்தனை காண்டங்க ளுள்ளன வென்பதும், அவற்றின் சிற்றுறுப்புக்கள் இவ்வளவின வென்பதும் புலப்படவில்லை. இது கதையெனவும், பெருங் கதை யெனவும் வழங்கும் இஃது இடைச் சங்கத்துப் புலவர்க்கே செய்யு ளிலக்கியமாக விருந்ததென்றும், அவர்கள் அதனை யாராய்ந்தறிந்து கலி, குருகு, வெண்டாளி முதலிய நூல்களையியற்றினார் எனவுங் கூறப்பட்டிருக்கின்றது. உதயண குமாரன் கதையென்று விருத்தப் பாவினாலமைந்த தமிழ் நூலொன்று சைனர்களது ஆட்சியிலுள்ளது. அதனையுரையாசிரியர் அங்கீ கரிக்கவில்லை எனத் தெரிகின்றது. உதயம் - புலரி, விடியல், வைகறை. உதாத்தம் - வேதமோதுஞ் சந்தையி னொன்று. உதாரணம் - இதியாசம், இலக்கியங் காட்டல், பிசிதம். உதானவாயுவின்குணம் - உண்டன வற்றைக் கீழாக்குவது. உதானன் - நாபியினிலை பெற்று நிற்பது. உதைகாற்பசு - சுதை. உத்தமதானம் - அறத்தானீட்டிய பொருளை முக்குற்றமற்ற நற்றவத் தோரைக் கொள்கெனப் பணிந்து குறையிரந்து மனமகிழ்ந்து கொடுத்தல். உத்தமத்தோற்பெருங்கருவிவகை - மத்தளம், தண்ணுமை, இடக்கை, சல்லி கையென்னு நான்குமாம். உத்தமமானதோற்கருவி - மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா என்று சொல்லப்பட்ட இவைகளாம். இவற்றுள் மத்தளம் மத்து ஓசைப் பெயர், இசையிடனாகிய கருவி கட்கெல்லாம் தளமாதலான் மத்தள மென்று பெயராயிற்று. இக் கருவி பல கூத்திற்கும் உரித்தாகலானும் பாடல் எழுத்தான் உள்ளே பிறத்த லானும், முழவுகளெல்லாம் இத னுள்ளே பிறத்தலானும் இதனை நாண் முழவென்றுங் கூறுப. சல்லிகை சல்லென்ற ஓசை யுடைத்தாதலாற் பெற்ற பெயர். இடக்கை யென்னுங் காரணப் பெயர் முன் னுரைத்தாம். கரடிகை கரடி கத்தினாற் போலும் ஓசை யுடைத்தாதலினப் பெயர்த்து. உத்தரகுரு - போக பூமியாறினு ளொன்று. உத்தரகௌத்தன் - வாரணவாசி நகரத்தரசன். உத்தரகுமாரன் - விராடன் மகன். உத்தரன் - கனகவிசயர்க்குத் துணை யாய் நின்ற ஓரரசன். உத்தரை - விராட ராசன் புத்திரி. அபி மன்னன் மனைவி. உத்தரீயம் - உத்தரா சங்கம், ஏகாசம், அன்றியு மேற் பார்வை மீக்கோள். உத்தரட்டாதிநாள் - அறிவனாள், நீபம், பிற்கொழுங்கோல், மன்னன், முரசு. உத்தரநாள் - கடையெழுஞ்சனி, கதிர் நாள், செங்கதிர் நாள், செங் கதிர் பிறந்தநாள், பங்குனி, மானேறு. உத்தராடநாள் - ஆடி, ஆனி, கடைக் குளம், விசுவ நாள். உபகரணம் - ஆயுதம், ஏது, கரணம், துணைக்காரணம், சாமக்கிரி, துப்பு. உபகாரம் - நலம், நன்மை, வேளாண்மை. உபசாரம் - சன்மானம், நயம், முகமன். உபப்பிலாவியம் - குருநாட்டின் கணுள்ள ஊர். இங்குத் தரும புத்திரர் முதலாயினோர் தங்கி யிருந்தார்கள். உபபுராணம் - நாரசிங்கம், சனற் குமாரம், நாரதீயம், சிவ தருமம், துருவாசம், நந்திகேச்சுரம், அவு சனம், காளிகம், வாருணம், காம் பேசம், பராசரம், பார்க்கவம், காபிலம், மானவம், வரசிட் டலைங்கம், சவுரம், மாரீசம், பிரமாண்டம். உபயாங்கவாச்சியம் - கீதம், நிருத்தம் என்னும் இரண்டற்கும் வாசிப் பது. உபரிகை - மேல் நிலை. உபாங்கம் - ஒருவகைத் தோற்கருவி. உபாத்தியாயன் - அய்யன், ஆசான், ஆ சாரியன், ஆசிரியன், தீர்த்தன், தேசிகன், பணிக்கன். உபாயம் - யோகம், விரகு. உபேந்திரன் - இந்திரனது வேண்டு கோளின்படி காசிப முனிவர்க்கும் அதிதி யென்பவட்கும் புத்திரராகத் திருவவதாரஞ் செய்த திருமா லாகும். உப்பமைப்போர் - அளவர், உமணர், கழியர். உப்பமைப்போர் பெண்கள் - அளத்தியர். உப்பளம் - அளக்கர், அளம், இருணம், உவர்க்களம், உவர்த்தரை, உவள கம், கழி. உப்புவாணிகர் - அளவர், உப்பர், உமணர். உமாபதிசிவாசாரியர் - உமாபதி நாயனார், கொற்றங் குடியார், கொற்றங்குடி முதல், அந்தணர் பெருமான் எனவும் பெயர் தில்லை வாழந்தணர் மூவாயிரருள் ஒருவர் சிதம்பரத் தலத்தைச் சார்ந்த கொற்றங்குடி யென்கின்ற ஊரிற் றிருவவதாரஞ் செய்தார். இவர் திருப்பெண்ணா கடத்திலெழுந் தருளியிருந்த மெய்கண்ட தேவர்க் குச் சிஷ்யரான ஸ்ரீ அருணந்த சிவாசாரியர் மாணாக்கராய் திருக்கடந்தை மறைஞான சம் பந்த நாயனாரிடந் தீiக்ஷ பெற்று, வேத சிவாகமாதி கலைகளில் வல்லவராய், ஞானமார்க்கத்தைக் கைக்கொண்டிருந்தனர். இருக்கு நாளிலே உலக முய்யும் படி சைவ சித்தாந்த உண்மைகளை யெல்லாந் திரட்டி ஒவ்வோர் நூலாகத் திரு வாய் மலர்ந்தருளினர். அவைகள் பதிபசு பாசம் என்னுந் திரிப தார்த்த லக்கணங்களை யெடுத்து விளக் கா நிற்கும், அவையாவன திருவருட் பயன், சிவப்பிரகாசம், வினா வெண்பா, போற்றிப் பஃ றொடை, கொடிக் கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்பன வாம். இவற் றுட் சிவப்பிரகாசம் 101 - திரு விருத்தங்களையுடை யது. இதற்கு மதுரை சிவப்பிர காசர் உரையிட்டனர். காஞ்சி புரம் பிள்ளையார் பாளையம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் உரையிட்டனர் எனவுங் கூறுப. இந்நூலை யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டைச் சாத்திரத் தலைவராயிருந்த “ஒயி சிங்றன்” என்னும் ஆங்கிலேய பாதிரி யொருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, அமரிக்க கீழைத்தேச சங்கத்தார் “ஹஅநசiஉயn டீசநைnயைட ளுடிஉநைவல” அச்சிற் பதிப்பித்திருந்த னர். சிவப்பிரகாசம் சாலிவாகன சகாத் தம் 1228´த்தும், திருவருட் பயன் 1229´த்தும், வினா வெண்பா ³ முப்பதினும் போற்றிப் பஃறொடை முப்பத்தொன்றினும், கொடிக்கவி முப்பத்திரண்டினும், நெஞ்சுவிடு தூது முப்பத்தி மூன்றினும், சங்கற்ப நிராகரணம் முப்பத்தைந்தினும், உண்மை நெறி விளக்கம் ³ சகாப்தம் 1234 ´த்தினும் அருளிச் செய்யப்பட்டது. திருவருட் பயன் 101 திருக்குறளையும், வினா வெண்பா 13 திருவெண் பாக்களை யும், போற்றிப் பஃறொடை 190 அடி களையும், கொடிக்கலி கலித்துறை யொன்றையும் திருவெண்பா மூன்றனையும், நெஞ்சு விடு தூது கலிவெண் பாவாய 258 அடிகளை யும், உண்மை நெறி விளக்கம் 6 திருவிருத்தங்களையும், சங்கற்ப நிராகரணம் இருபது திருவாசிரியங் களையு முடையன. சேக்கிழார் நாயனார் செய்தருளிய பெரிய புராண சரிதத்தை ஒரு செய்யுளில் இயற்றித் திருத்தொண்டர் புராண சாரம் எனப் பெயரிட்டனர். அருண்மொழித் தேவராய சேக் கிழார் சரிதத்தையும் சேக் கிழார் புராணம் என்னு நூலாற்றெளித் தருளினர். சிதம்பர மான்மியத்தை விரித்துக் “கோயிற் புராணம்” எனப் பெயரிட்டுப் பாடி முடித்த னர். அதற்கு ஸ்ரீலஸ்ரீ நாவலர் அவர்கள் உரை செய்தனர். திரு முறை கண்ட புராணம் என்னு நூலையும் திருப்பதிகக்கோவை, திருநட்சத்திரம் (நாயன்மார் முத்தியடைந்த நாள்) என்ப வற்றையும் இயற்றினர். சிவ புண் ணியத் தெளிவு என்னு நூலையும் இயற்றினர். “அடியார்க் கெளியன் சிற்றம் பலவன் கொற்றங், குடியார்க் கெழுதிய கைச்சீட்டுப் - படி மிசைப், பெற்றான் சாம்பனுக்குப் பேதமறத் தீக்கை செய்தே, முத்தி கொடுக்கு முறை” எனச் சிவபெரு மான் பாடியனுப்பி யருளிய திரு முக மேற்றுப் பெற்றான் என்னும் புலையனுக்கு முத்திகொடுத் தரு ளினர். இதனை யறியாத சாம்பன் மனைவி யரசனிடஞ் சென்று, தன் புருடனை யாரோ மோசஞ் செய் தனர் என்று முறையிட, அரசனிவ ரிடஞ் சென்று சந்தேகத்தை நீக்கி யருள வேண்டுமென்று பிரார்த் திக்க, அங்க ணின்ற முள்ளிச் செடிக்கும் முத்தி கொடுத்தனர் என்ப. கோயிற் புராணம் அரங் கேற்றப்படாது பேடகத்துளிருக்கச் சபா நாயகர் மற்றைய அந்தணர் களது சொப்பனத்திற்றோன்றி, ‘நாம் கொற்றவன்குடி உமாபதி யுடைய பெட்ட கத்துளிருக்கின் றேம்’ என்று திருவாய் மலர்ந்தருள, அவர்கள் விரைவில் அதனை யரங்கேற்று வித்தனர் எனவுங் கூறுப. இம் மகானுக்கு அருணமச் சிவாய தேசிகர் முதலாம் பல மாணாக் கருளர். இம் முனிவர் பெரு மானைச் சிவஞானப் பெருஞ் செல்வ சித்தாந்த தீபமாகிய தாயு மான சுவாமிகள் “குறைவி லருண் ஞானமுதற் கொற்றங் குடியடிக, ணறைமலர்த் தாட் கன்பு பெற்று நாமிருப்ப தெந் நாளோ” எனத் தங்குரு மரபினில் வைத்துத் துதி செய்தாராயின் இவரது பெருமை யையளவிட யார்க்கும் அரிதரிது சாலவு மரிதே யாம். உமை - ஆரியை, காமக்கோட்டி, அம்பிசை, நாரி, சத்தி, நாயகி, கௌரி, தேவி, சாம்பவி, தருமச் செல்வி, மலைமகள், சங்கரி, மாதா, ஐயை, பரை, பராபரை, உருத்திரை, பார்ப்பதி, அந்தரி, நீலி, கன்னி, நிமலை, குமரி, வேத முதல்வி, விமலை, முக் கண்ணி, அமலை, இமயவதி, அயிராணி, அபிராமி, சமய முதல்வி, தற்பரை, மனோன்மணி, உருத்திராணி, சிவை, அம்மை, அரணிடத்தவள், உலகமாதா, பவானி, புண்ணிய முதலவி, கௌரி. உம்பலென்னும்பெயர் - யானை, யாடு. உயர்ச்சி - உகப்பு, உச்சம், உத்தரம், உத்துங்கம், உந்தி, உந்துதல், உம்பர், உரை, உவணம், உவப்பு, உறை, உன்னதம், ஊக்கம், எழுமை, ஏந்தல், ஒக்கம், ஒழுகல், ஒழுக்கம், ஓங்கல், சிகரம், சிறப்பு, சீர், சேண், துங்கம், நிமிர்தல், நிவப்பு, நிவர்தல், நீள், பிறங்கல், புங்கம், புரை, பொங்கல், மிசை, மீ, மேக்கு, மேடு, மேம்பாடு, மேன்மை, மோடு, யோகம், வார் தல், ஓச்சல், மீச்செலவு, வரை. உயர்ந்தபெண்ணும்இழிந்த ஆணுங் கூடிப் பிறந்தபிள்ளை - பிரதிலோமர். உயர்ந்தோர் - உலகம். உயர்ந்தவாணு மிழிந்த பெண்ணுங் கூடிப் பிறந்தபிள்ளை - அநுலோமர். உயிர் - அணு, ஆதன், ஆவி, ஆன்மா, இயமானன், உறவி, கூத்தன், சிவன், செந்து, சேதனன், பசு, பிராணன், புற்கலன், பூதம். உயிர்தருமருந்து - மிருத சஞ்சீவனி. உயிர்த்தோற்றம் - பை, முட்டை, வியர்வை, வித்து, கொடி முதலியன இவற்றை முறையே சராயுசம், அண்டசம், சுவேதசம், உற்பிசம் என்பர் வடநூலார். உயிர்ப்பு - ஆவி, கொறுக்கை, சுவாசம், தும்மல், மூச்சு. உயிர்வாழ்தல் - உய்தல், உய்தி, சீவனம், சீவித்தல், பிழைத்தல், வாழ்தல். உயிர்வேதனை - அனல், சீதம், வாதம், அசனி, புனல், ஆயுதம், விடம், மருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை என்பனவாம். உய்தல் - ஆற்றுதல், வலிதல். உய்யவந்ததேவநாயனார் - திருவியலூ ரிற்றிருவவதாரஞ் செய்த காரணத் தினால் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் என்ப. சைவ சித் தாந்த சாத்திரம் பதினான் கனுள் ஒன்றாய திருவுந்தியார் என்னும் நூலையியற்றினர். இதனில் நாற் பத்தைந்து பாக்களுள்ளன. இதற் குத் திருவாவடு துறை யாதீ னத்துத் தில்லைச் சிற்றம்பலவர் என்னுஞ் சிவப்பிரகாசனார் உரை செய்தனர். இவர் உத்தர பூமி யினின்றுந் தக்கிண பூமியிலுள் ளாரது ஆன்ம லாபத்தி னிமித்தம் சேது வரைக்கும் யாத்திரை செய்து லாவிக் காவேரிநதி தீரத்தில் வந்து எழுந்தருளி யிருக்கும் நாளிலே திருக்கடவூரிற் றோன்றி யருளிய ஆளுடைய தேவநாயனார் இவரைக் கண்டு, ஓர் ஞான நூல் இயற்ற வேண்டுமெனக் கேட்ட போது இத் திருவுந்தி யாரையியற் றினர். இதனை “வைய முழுது மலக் கயங் கண்டிடு முய்யவந்தா னுரை யுந்தீபற-வொரு பொரு ளாலே யென்றுந்தீபற” என்னுஞ் செய்யு ளானறிக. உரல் - உலூகம், எருந்து, கறை, திட்டை. உராய்தல் - உரிஞ்சல், உரோஞ்சல். உரித்து - ஆட்சி, ஆவணம், காணி, கெழு, தகைமை, தகவு, தகுதி, தாயம், பாங்கு, பால். உரிமை - ஆட்சி, இதம், உரித்து, ஒற்றுமை, காணி, கிழமை, குறிக் கோள், கெழுதகைமை, தகவு, தகுதி, பாங்கு, பால். உரிமையின்மை - அதிகம். உரியோர் - கிழவர். உருக்கு - எஃகு. உருத்திரங்கண்ணர் - கடியலூரிற் பிறந்தமையால், “கடியலூர் உருத் திங்கண்ணர்” எனப் பெயர் பெறுவர். இவர் பத்துப்பாட்டுள் ஒன்றாய பெரும் பாணாற்றுப் படையைச் செய்தனர். அது 500 அடிகளையுடையது. தொண்டை மானிளந் திரையனைப் பாட் டுடைத் தலைவனாகக் கொண்டு கூறப்பட்டது. இவர் காலங் கடைச்சங்கத்தார் காலமே. இவர் செய்த நூலுக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரைசெய்தனர். உருத்திரசன்மகண்ணர் - கடைச் சங்கப் புலவர் நாற்பத் தொன் பதின்மருள் ஒருவர். திருவள்ளுவ மாலைச் செய்யுளொன்று செய் தனர். உருத்திரசன்மர் - இவர் குமாரக் கடவுளின் றிருவவதாரமா யுள்ள வர். மதுரைமா நகரிலே உப்பூரி குடிகிழார் குலத்திற் றோன்றின வர். கடைச் சங்கத்துப் புலவரு ளொருவரா யிருந்தார். அன்பி னைந்திணை யென்னும் அகப் பொருளிலக்கண நூலின் மெய் யுரையிதுவென்று தெரிவித்தார். திருவிளையாடற் புராணத்திலே இவர் தனபதி யென்னும் வணிகர் தவத்தால் அவற்குப் பிள்ளை யாய்ச் சென்று வளர்ந்தனர் எனக் கூறப்பட்டிருக்கின்றது. திருவள் ளுவநாயனார் திருக்குறளையரங் கேற்றும் போது அவருடன் அச் சங்கப் பலகையில் கூட யார் இருக்க வேண்டும் என்று சந்தே கம் வந்தபோது, “திருத்தகு தெய் வத் திருவள்ளுவரோ - டுருத்தகு நற் பலகை யொக்கவிருக்க, வுருத்திர சன்மரென வுரைத்து வானி - லொருக்கவோ வென்ற தோர் சொல்” என்று அசரீரியாற் குறிக்கப்பட்டார் இவரே. உருத் திரனால் அடைந்த சன்மத்தை யுடையவர் எனப் பொருள் விரிப்பார் சிலர். சிவபெருமான் உமா தேவியார்க்குப் பிரணவ உபதேசஞ் செய்தருளிய காலத்தில் குமாரனார் ஒளித்திருந்து கேட்ட தனால் மதுரையில் மூங்கைப் பிள்ளையாய்ப் பிறக்கச் சபித்தார் எனவும், அதனால் பூமியிற் றோன் றினார் எனவுங் கூறுப. சர்மா என்பது பிராமண சாதிக் குரிய சிறப்புப் பெயராகலின் உருத்திர னாகிய சர்மன் எனவும் உரைப்பது மொன்று. எனவே வைசியப் பிராமணர் எனக் காட்டுவார். உருவுதல் - சிதகல். உரை - அத்தம், அருத்தம், சொற் பயன், பதம், பாழி, அது நால் வகையாம் : அகலவுரை, கருத் துரை, பதவுரை, பொழிப்புரை. உரைகல் - கட்டளை, கட்டளைக்கல். உரைதல் - உராஞ்சல், உராய்தல், உராய்போதல், உரிஞ்சல், உரைஞ் சல், உரோஞ்சல், தேய்தல். உரைப்பொருள் - விரித்துரை, மெய் யுரை. உரையுரைத்தல் - பயனுரைத்தல், மெய்யுரைத்தல், பிரித்துரைத்தல், அன்றியும் பதவுரை யுரைத்தலின் பெயர். கண்ணழித்தல், பொழிப்புத் திரட்டல் பொழிப்புரைத்தல். உரோகணிநாள் - அயநாள், உருளி, உருள், உரோணி, ஊற்றால், சகடம், சகடு, சதி, தேர், பண்டி, பார், மோனம், வையம். உலகத்தோற்றம் - புராண இலக் கணங்கள் ஐந்தன ளொன்று. அதா வது உலகத்தினுற்பத்தியைப் பற்றிக் கூறுவதாம். முதலவனாணையாலே சுத்த மாயையினின்று அசுத்த மாயையும், அதினின்று காலதத் துவமும் நியதி தத்துவமும் கலா தத்துவ மும் முறையே தோன்றும். இக் கலையினின்றும் வித்தியா தத்து வந்தோன்றி யிறிவினைச் சிறிது உதிக்கப்பண்ணும். வித்தை, அராகம், புருடன் இவை யொன்றி னொன்று முறையே தோன்றும். அதன்பின் மூலப் பிரகிருதியா னது கலையினின்றும் வருகின்ற அவ்வியத்த குணவடிவாய் முதல் வனாணையாலே தோன்றிக் குண தத்துவத்தை யுண்டாக்க, அதி னின்றும் புத்தி தத்துவமும் அகங் காரதத்துவமு முதிக்கும். அது குணவேற்றுமை பற்றி பூதாதியகங் காரம், வைகரி யகங்காரம், தைசத வகங்காரம் என மூவகைப் படும். அவற்றுள் தைசதவகங் காரத்தி னின்றும் மனமும் ஞானேந்திரியங் களுந் தோன்றும். வைகரி யகங் காரத்தினின்று கன்மேந்திரியங்க டோன்றும். ஞானேந்திரியங் களுக்கு விடயமாகச் சத்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்பவை பொருந்தும். பூதாதி யகங்காரத்தி னின்றும் மேற் சொல்லப்பட்ட சத்தாதி பஞ்ச தன்மாத்திரைகளுந் தோன்றும். இத் தன்மாத்திரைகளி லிருந்து பிருதிவி முதலிய தூல பூதங்க டோன்றும். இதுவே சைவ சித்தாந்தத்திற் கூறப்பட்ட முறை யாகும். உலகவொடுக்கம் - முற்சொல்லியபடி ஒவ்வோர் காரிய தத்துவங்களும் அதன் காரணத்தி லொடுங்கு தலாம். உலகம்பதினான்கு - கீழேழுலகம் மேலேழுலகம் அவையாவன :- கீழேழுலகம் - அதலம், விதலம், சுதலம், தலாதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன வாம். மேலேழுலகம் - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சன லோகம், மகலோகம், தவலோ கம், சத்தியலோகம் என்பனவாம். உலகின்பொது - அவனி, தலம், நாடு, புவனம், புவி, பொழில். உலக்கை - உரோங்கல், தடி, முசலம். உலக்கைப்பாட்டு - வள்ளை. உலண்டு - கீடம், கோற்புழு. உலர்ந்தபுல் - திரணம். உலர்ந்தபூ - உணங்கல், சாம்பல், வாடல். உலர்மரம் - வானம். உலாப்போதல் - சாரி, பவனி. உலாவல் - அசைதல், தியங்கல், திரிதல், வழங்கல். உலைக்களம் - உரவி. உலைத்துருத்தி - அத்திரி, உதை, சிரை. உலைப்பு - அகைத்தல், மிறைத்தல், வேதனை. உலைமூக்கு - குருகு, சிவை. உலையாணிக்கோல் - சுட்டுக்கோல். உலோகக்கட்டி - ஆடகம், சுவணம், தகணை, மாழை, வங்காரம். உலோபன் - கிருபணன், பிசுனன். உல்லாசம் - அத்தவாளம், ஏகாசம், மீக்கோள், மேற்போர்வை, வடகம். உவகை - உகவை, ஓகை, களிப்பு, சந் தோடம், பிரியம், பிரீதி, மகிழ்ச்சி, மாராயம், முத்தம், மோதம். உவகைப்பறை - தூரியம். உவந்தோனவிநயம் - உயர்ந்து இனிதா யுள்ள கண்மலருடைமையும், இனிமையான உள்ளமுடைமை யும், கோபமின்றிய முறுவலும், நகையுமுடைமையும், இருத்தலும், சோலை முதலியவற்றிற் சென்று விளையாடலுடைமையு முதலி யனவாம். உவமை - இகல், இடை, இணை, ஈடு, உவமம், உறழ்வு, எதிர், ஒப்பு, கட்டளை, சங்காசம், சதிரிசம், சமம், சமானம், சன்னியம், சாயல், துணை, துல்லியம், நிகர், நிகாசம், நிபம், நேர், புரை, பொருவு, பொருவுதல், போல், மலை, மானம், மான். உவமையின்மை - அசமானம், அதுலம், தனிமை. உவமையுருபு - அற்று, அனைய, அன்ன, ஆங்கு, இகல், இயைய, இன்ன, உழற, என்ன, எய்ப்ப, ஒப்ப, கடுப்ப, கதழ்வு, கேழ், சன்னியம், சேத்து, தூக்கு, நிகர, நேர, புரைய, பொருவ, போல, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, வெள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொற்ப, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, துணைப்ப, காய்த்த. உவர்க்களம் - உவளகம். உவர்த்தரை - இருணல், கழிநிலம். உவர்த்தல் - இலவணம், உப்பு, பௌவம். உவர்நீர் - உரவுநீர், உறை. உவ்விடம் - உம்பர், உவணை. உவா - யூகநாதன், உம்பல், யானை யரசு, களிறு. உவாவாளி - அறுகு, பூட்கை. உழக்குதல் - உழுதல், மடித்தல். உழவு - தொய்யில். உழிஞ்சில் - உன்னம். உழுந்து - மாடம். உழுபடைச்சால் - சீதை. உளி - இடங்கம், கணிச்சி உளு - உசு. உள் - அகடு, அகணி, அகம். உள்ளங்கை - அகங்கை, அங்கை, குடங்கை. உள்ளதுசிறத்தல் - களிப்பு, கூர்ப்பு. உள்ளமிகுதி - ஆட்சி, ஆண்மை, ஆள் வினை, உத்தியோகம், உரம், உரன், உற்சாகம், ஊக்கம், சால்பு, சான்றாண்மை, தாளாண்மை, யோகம். உள்ளான் - உள்ளல். உள்ளோசை - ஞெளிர், தெளிர், நரல்வு, நுழைவு, நுணுக்கம், முரல்பு, விழைவு. உறவு - இகுளை, இனம், உறவி, ஒக்கல், கடும்பு, கயிரை, கிளை, குடும்பம், கூளி, கேண்மை, கேள், சுற்றம், தொடர்பு, நட்பு, நண்பு, நள்ளி, பந்தம், பரிசனம், பாசனம். உறவோர் - அடைந்தோர், இகுளை, இனத்தார், உரியோர், உற்றார், கிளைஞர், சார்ந்தோர், சிறந் தோர், சுற்றத்தார், சூழ்ந்தோர், தக்கார், தமர், நட்டோர், கள்ளி யர், பரிசனம், பற்றினர், மேவினர். அன்றியுந் தந்தை வழிச்சுற்றம் - தாயம், இல்வழி யுறவோர், ஞாதிகள், தாயத்தார், தாயாதிகள். குடியிலிறந்தோர் பெயர் - தென் புலத்தார், பிதிர்க்கள். உறி - சிக்கம், சிதர், சிமிலி, தூக்கு. உறுதிச்சொல் - இடி, இடித்தல், கழறல், நெருங்கல். உறுதிப்படுத்தல் - தெருட்டல், வருட்டல், வற்புறுத்தல். உறுப்பு - அங்கம், அவயவம், காத் திரம், சினை. உரைகாரர் - காரோடர், முச்சியர். உறையூர் - உறந்தை, கோழி. உற்சவம் - காறு, சேறு, துணங்கறல், முருகு, விழா. உற்சாகம் - உஞற்று, இயற்றல், உழப்பு, உத்தியோகம், ஆள்வினை, தாளாண்மை, தாள், முயற்சி, ஊக்கம். உற்பவம் - பிறப்பு, சனனம், தோற்றம். ஊ ஊக்கம் - உள்ளமிகுதியைக் காண்க. ஊசி - சூசி. ஊசித்துளை - பாசம். ஊசிமுல்லை - தளவு, நைதிகை, மாகதி. ஊடலைத்தீர்த்தல் - உணர்வல், ஒல்லல். ஊடல் - பிணக்கு, புலவி, துணி. ஊதுகொம்பு - ஆம்பல், இரலை, கொம்பு, கோடு, வயிர். ஊமத்தை - உன்மத்தம், மத்தம். ஊமை - ஊமன், குணி, சொல்லிலி, மூகன், மூகை, மூங்கை. ஊரிலுள்ளார் உண்ணும் நீர் - ஊருணி. ஊர் - அகலுள், அருப்பம், இருக்கை, உறையுள், எயில், ஒக்கம், காடு, காண்டகம், குடம், குடி குடிக் காடு, குப்பம், சும்மை, சேரி, நத்தம், நிவேசனம், பக்கணம், பட்டினம், பதி, பாக்கம், பாடி, பாழி, புரி, பூக்கம், பூண்டி, பூரியம், பேடு, முட்டம், மேடு, வாசம், வாழ்க்கை, வேலி, வைப்பு. அன் றியும், சிற்றூரின் பெயர் - நொச்சி, பட்டி, பட்டு, பள்ளி. இராஜ தானியின் பெயர் நகரம், புரம், புரி. நூறு குடியூரின் பெயர் - பெருங் கிராமம். ஐந்நூறு கிராமங்கட்குத் தலைகிராமத்தின் பெயர்மடப்பம். மலைகள் செறிந்தவூரின் பெயர் - கேடகம். மலையும் யாறும் சூழந்த வூரின் பெயர் கார்வடம். மலைமே லேற்றியவூரின் பெயர் - சம்வாகம். பகைமேற் சென்றோ ருறைவிடத் தின் பெயர் - பாசறை, பாடிவீடு, முனைப்பதி அன்றியும் பகை வரூர் - பாழி. அன்றியுங் குறிஞ்சி முதலைந்திணையூரின் பெயர் - தத்தம்வரியிற் காண்க. ஊர்க்குருவி - கடலகம், கலிங்கம், கல்லி, குலிங்கரி, சகடம், சடகம், புலிங்கம். ஊர்சூழ்சோலை -வனம். ஊழிக்காலம் - உகமுடிவு, மடங்கல். ஊழித்தீகடையனல் - தீத்திரள், மடங்கல், வடவாமுகம், வடவை. ஊழ் உண்மை - தெய்வம், நியதி, வரன் முறை, விதி. ஊறிபுனல் - உறவி, ஊற்று. ஊற்று - உறவி, ஊறல், மணற்கேணி. ஊற்றுநீர் - ஊறுநீர். ஊன் - ஊத்தை, ஊழ்த்தல், தசை, தடி, தூவு, பிசிதம், புண், புரணி, புலவு, புலால், புளிதம், வள்ளூரம், விடக்கு. ஊன்விற்போர் - சூனர். ஊன்றுகோல் - ஊற்றுகோல், தண்டம், தண்டு, பற்றுக்கோல். எ எச்சில் - உச்சிட்டம், எச்சம், சேடம், மிச்சில். எடுத்தலோசை - அகவல், குமுறல், கிருமித்தல், குளிறல், சிரற்றல், ஞெளிர்தல், தெளிறல், நரல்வு, நெளிர்தல், பயிறல், முக்கல், பிறற் றல், முரல்வு. எடுத்தலோசைவகை - உளை. எடுத்துக்கோள்வரி - தான் கையற வெய்தி - வீழ்ந்தாளாக வீழ்ந்து, பிறர் எடுத்துக் கொள்ளும்படி நடித்தல். எட்டிமரம் - கரளம், காஞ்சிரம், கோடரம் பதுகம், முட்டி. எண் - கரணம், கணக்கு, கணிதம். எண்காற்புள் - சம்பரம், சரபம், சிம்புள், துரோணம், பெரும் பறை, வருடை, வாருண்டம். எண்கூட்டிப்பெருக்கல் - உறழல், அன்றியும், ஒற்றைபட வெண் ணல் ஒன்றித்தல், இரட்டைபட வெண்ணல் இரட்டித்தல். எண்டிக்கு - கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு. எண்டிசைப்பாலர் - இந்திரன், அக்கினி, இயமன், கிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். எண்டிசையானை - ஐராவதம், புண்ட ரீகம் வாமனம், குமுதம், அஞ் சனம், புட்ப தந்தம், காருவ பூமம், சுப்பிர தீபம். எண்டிசையோனி - கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, காகம், மான். எண்ணெய் - தைலம், நேயம். எண்வகுப்பு - ஒன்று முதல்முப்பத் தாறு தானம் வருமாறு, அஃது. (1) ஒன்று - ஏகம், இரண்டு - உபயம், துவந்துவம், துலி, மிதுனம், யுகம், யுகளம், யுகளி, மூன்று - திரி, நான்கு - சது. ஐந்து - பஞ்சம், ஆறு - சடு, ஏழு - சத்தம், எட்டு - அட் டம். ஒன்பது - ஒன்பான், தொண்டு, நவம். (2) தசம் - பத்து. (3) சதம் - நூறு. (4) சகத்திரம் - ஆயிரம். (5) ஆயுதம் - பதினா யிரம். (6) நியுதம் - இலட்சம், நூறாயிரம் (7) பிர யுதம் - பத்தி லட்சம். (8) தசகோடி - பத்து கோடி. (9) சதகோடி - நூறு கோடி (10) அற்புதம் - ஆயிரங் கோடி (11) நிகற்புதம் - பதினா யிரங்கோடி (12) கர்வம் - லட்சங் கோடி (13) மகா கர்வம் - பத்து லட்சங்கோடி (14) பதுமம் - கோடா கோடி (15) மகா பதுமம் - பத்துக் கோடா கோடி. (16) சங்கம் - நூறு கோடா கோடி (17) மகா சங்கம் - ஆயிரங் கோடா கோடி (18) கோணி - பதினாயிரங் கேடா கோடி (19) மகா கோணி - இலட்சங் கோடாகோடி (20) கிதி - பத்தி லட்சங் கோடாகோடி (21) மகா கிதி - கோடி கோடா கோடி (22) சோபம் - பத்துக்கோடி கோடா கோடி (23) மகா சோபம் - நூறு கோடி கோடாகோடி (24) பராத் தம் - ஆயிரங்கோடி கோடாகோடி (25) சாகரம் - பதினாயிரங்கோடி கோடாகோடி (26) பரதம்-இலட்சங் கோடி கோடா கோடி (27) அசிந் தியம் - பத்து லட்சங் கோடி கோடா கோடி (28) அத்தியந்தம் - கோடாகோடி (29) அனந்தம் - பத்துக்கோடி கோடா கோடி (30) பூரி - நூறு கோடி கோடி கோடா கோடி (31) மகா பூரி - ஆயிரங் கோடிகோடி கோடாகோடி (32) அப்பிர மேயம் பதினாயிரங் கோடிகோடி கோடா கோடி (33) அதுலம் - இலட்சங் கோடி கோடி கோடா கோடி (34) அகம் மியம் - பத்தி லட்சங் கோடி கோடி கோடா கோடி (35) அவ் வியத்தம் கோடி கோடி கோடி கோடாகோடி. இன்னுமோர் வகையாவது : ஒருபலம் - தொடி. துலாமிருபது - பாரம். காற்பலம் - கஃசு. மாகாணிப்பலம் - வீசம். ஒன்று - ஏகம். பத்து - தசம். நூறு - சதம். ஆயிரம் - சகஸ்ரம். பதினாயிரம் - ஆயுதம். நூறாயிரம் (இலட்சம்) நியுதம். பத்துநூறாயிரம் - பிரயுதம். கோடி - (பிரயுதம்பத்து) தச பிரயதம். அற்புதம் - (கோடிபத்து) தசகோடி. நிகற்புதம் - (அற்புதம்பத்து) தசாற் புதம். கும்பம் - (நிகற்புதம்பத்து) தசநிகற் புதம். கனகம் - (கும்பம்பத்து) தசகும்பம். கற்பம் - (கணகம்பத்து) தசகனகம். நிகற்பம் - (கற்பம்பத்து) தசகற்பம். பதுமம் - (நிகற்பம்பத்து) தசநிகற் பம். சங்கம் - (பதுமம்பத்து) தசபதுமம். சமுத்திரம் - (சங்கம்பத்து) தசங்கம். அந்தியம் - (சமுத்திரம்பத்து) தசச முத்திரம். மத்தியம் - (அந்தியம்பத்து) தசாந் தியம். பார்த்தம் - (மத்தியம்பத்து) தசமத் தியம். பூரியம் - (பார்த்தம்பத்து) தச பார்த்தம். பிரமகற்பம் - (பூரியம்பத்து) தச பூரியம். எண்வகைக்கணவகை - அறம், பொருள், இன்பம், வீடென்று சொல்லப்பட்ட இவற்றினது பாகுபாடமையை ஒரு நூலைச் சொல்லுங்காலத்து நீர், நிலம், தேயு, வாயு, அந்தரம், இயமானன், சூரியன், சந்திரன் என்று சொல்லப் பட்ட எண்வகைக் கணங்களுமுதற் செய்யுளின் முதலிலமையைக் கூற வேண்டும். இவற்றுள் நீரின் கணவகை - நேர் நிரை நிரை, கூவிளங்கனி. நிலத் தின் கணவகை - நிரை நிரை, நிரை கருவிளங்கனி. தேயுவின் கண வகை - நிரை நேர் நிரை, புளிமாங் கனி. வாயுவின் கண வகை - நேர் நேர் நிரை, தேமாங் கனி. அந்தர கணவகை - நிரை நிரை நேர், கரு விளங்காய். இயமானன் கணவகை - நேர்நிரை நேர், கூவிளங்காய். சந்திர கணவகை - நிரை நேர்நேர், புளிமாங் காய், இவ் வெட்டினுள் நிலம், நீர், மதி, இயமானனாகிய தேமாங்காய், புளிமாங்காய், கரு விளங்கனி, கூவிளங்கனிச் சீர்கள் முன்வரில் நன்று, மற்றைத் தேயு வாயு அந்தர சூரிய கணங்களா கிய தேமாங்கனி, புளி மாங்கனி, கருவிளங்காய், கூவிளங்காய் முன் வரிற் றீது. எண்வகைமாலை - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, இவற்றுள் :- வெட்சியாவது - அரசனால் அனுப் பப்பட்டு முனைப்புலங் காத் திருந்த தண்டத்தலைவர் பகை நிலத்தே சென்று களவினாலே பசுக் கூட்டங்களைக் கவர்ந்து சென்று பாதுகாத்தலை யுடைத்து. இது படையியங் கரவம், பாக் கத்து விரிச்சி, புடை கெடப்போ கிய செலவு, புடை கெட ஒற்றி னாகிய வேய், வேய்ப் புற முற்றி னாகிய விறை, முற்றிய ஊர்க் கோலை ஆகோள், பூசன் மாற்று, நோயின்றுய்த்தல், நுவலுழித் தோற்றம், தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு கொடை எனப் பதினான்கு வகைப்படும். வஞ்சியாவது - இருபெரு வேந் தருட் டோற்றோனொரு வன் ஒருவன் மேற்செல்லுங்கால் வஞ்சி மாலை யணிந்து செல்வதாம். இது முல்லை எனப்பட்ட அகத் திணைக்குப் புறனாம். இயங்கு படை யரவம், எரிபரந்தெடுத்தல், வயங்கலெய்திய பெருமை, கொடுத்த லெய்திய கொடாமை, அடுத்தூர்ந்தட்ட கொற்றம், மாராயம் பெற்ற நெடுமொழி, பொருளின்றுய்த்த பேராண் பக்கம், வருவிசைப் புனலைக் கற்சிறை போல வொருவன் தாங்கிய பெருமை, பிண்டமேய பெருஞ் சோற்று நிலை, வென்றோர் விளக் கம், தோற்றோர் தெய்வு, குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளை, அழி படை தட்டோர் தழிஞ்சி எனப் பதின்மூன்று துறையினையுடைத்து. உழிஞையாவது - வேற்று வேந் தனுடைய அரணைச் சென்ற வேந்தன் வளைத்தலும், இருந்த வேந்தன் காத்தலுமாகிய இருவழி யான விலக்கணத்தை யுடைத்து. இது மருதமாகிய அகத்திணைக்குப் புறனாம். கொள்ளார் தேசங்குறித்த கொற்றம், உள்ளியது முடிக்கும் வேந்தன் சிறப்பு, தொல்லெயிற் கிவர்தல், தோலின் பெருக்கம், அகத்தோன் செல்வம், முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம், திறப்பட வொருதான் மண்டிய குறுமை, உடன்றோர் வருபகை பேணார் எயில் கூறல் என எட்டு வகைத் துறையை யுடைத்து. முரச வுழிஞை யெனவும் வேறோர் வகை கொள்ளலு மொன்று. தும்பையாவது - உலகம் புகழ் தலையே பொருளாகக் கொண்ட அரசன் வேறோர் வேந்திடஞ் சென்று அவன் றலைமை தீர்க்கு மிலக்கணத்தை யுடைத்து. இது நெய்த லென்னும் அகத்திணைக்குப் புறனாம். களங்குறித்துப் போர் செய்யும் வெட்சிப்புறத் தும்பை, வஞ்சிப் புறத்தும்பை, உழிஞைப் புறத்தும் பையெனவும் பாகுபாடு பெறும். நோனாருட்கு மூவகை நிலை, தார்நிலை, இருவர் தலைவர் தபுதிப்பக்கம், கூழை தாங்கிய வெருமை, படையறுத் துப் பாழி கொள்ளும் ஏமம், களிறெறிந்தோர் பாடு, களிற்றோடுபட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோர் ஆடும மலை, இருபெரு வேந்தருஞ் சுற்றமுமொரு வருமொழியாத் தொகை நிலை, எள்வாள் வீசிய நூல் எனப் பன்னிருவகைப் பட்ட துறவினை யுடைத்து. வாகையாவது - நான்கு வருணத் தாரும் அறிவரும் தாபதர் முதலி னோரும் ஒழுக்கத்தானே தம்மை மிகுதிப்படுத்தலாம். இதுபாலைத் திணை யென்னும் அகத்திணைக் குப் புறமாகும் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம், ஐவகை மரபி னரசர் பக்கம், அறுவகைப் பட்ட வேறோர்பக்கம், அறிவின் தேயம், தாபதப்பக்கம், அறி மரபிற்பொரு நர் பகுதி எனவெழு வகைத் துறையை யுடைத்து. காஞ்சியாவது - அறம் பொரு ளின்பமாகிய பொருட் பகுதியா னும், அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமு மிளமையு முதலியவற் றானும் நிலைபேரில்லா வுலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை யுடைத்து. இது உரிப்பொருளல் லாத பெருந் திணைக்குப் புறனாம். மாற்றருங் கூற்றஞ்சாற்றிய பெருமை, கழிந்தோர் ஒழிந் தோர்க்குக் காட்டிய முதுமை, புண்கிழித்து முடியுமறம், புண் ணோனைப் பேயோம்பிய பேய்ப் பக்கம், இரங்கிய மன்னை, வஞ் சினக்காஞ்சி, துன்னுதல் கடிந்த தொடாக்காஞ்சி, அஞ்சினக் காஞ்சி, முதுகுடி மகட்பாடு அஞ் சிய மகட்பால், சேர்த்திக் கொண் டோன் தலையொடு முடிந்த நிலை யெனப் பத்து வகைப்படும். எதிர்த்தல் - எதிரூன்றல் எதிர்த்தல், ஏற்றல், கிடைத்தல், கிட்டல், தலைப்படல், தாக்கல், நேர்தல், மலைதல், முடுகல், முட்டுதல், மோதல். எதிர்மொழி - உத்தரம், விடை. எப்பிறப்பு - எம்மை. எப்பொருட்கு மிறையோன் - அதிபன், அரசன், ஆதி, ஆதிபன், ஈசன், காந்தன், கொழுநன், கோன், செம்மல், நாதன், நாயகன், பதி, பிரான், பெருமான், மன்னன். எப்போழ்தும் - அவிர்தம், அனவரதம், அனாரதம், என்றும், சத்தம், சதா, சந்தம், சர்வதா, நித்தம், நிரந்தரம். எயிறு - விளிம்பு, தந்தம், மூரல், பல். எருக்கு - அருக்கம், அருச்சுனம், அர்க்கம். எருது - இடபம், இறால், எறு, குண்டை, கூளி, கொட்டியம், கோ, சே, நந்தி, நூபம், பகடு, பசு, பாண்டில், பாறல், புல்லம், பூணி, பெற்றம், போத்து, மூரி, விடபம், விடை. அன்றியும் பொதியெரு தின்பெயர் - தூரியம், தூர் வகம், பகடு, பாறல். பொலியெருது - கூளி. எருத்தின்றிமில் - அக்கு, இமில், முறிப்பு. எருமை - கவரி, காரா, காரான், சயிரிபம், தேனு, மகிடம், மூரி, மேதி, வடவை. இதன்பெண் - ஆ, நாகு. இதன்பிள்ளை - கன்று, குழவி. இதன்மடி - செருத்தல் இதன் மலடு - மைமை. எருமைக்கடா - உம்பல், ஏறு, ஒருத்தல், பகடு, போத்து. எலி - ஆகு, களியும், சிகரி. எலுமிச்சை - அருணம், இலிகுசம், சதாபலம், சம்பீரம், முருக்கு. எலும்பு - அக்கு, அங்கம், அத்தி, என்பு, களேபரம். அன்றியும், தசை கழிந்த முதுகெலும்பின் யெயர் - கங்காளம், நெட்டை, முழு வெலும்பு. எல்லாம் - அகண்டம், அகிலம், அடங்கல், அடையல், அடைவு, அனைத்தும், எவையும், ஒருங்கு, சகலம், சமத்தம், சமம், சர்வம், நிகிலம், பூரணம், முடியல், முழுதும், முற்ற, முற்றும், யாவும். எல்லை - அவதி, அளவை, ஏணி, கரை, காடு, கொத்தம், பரியந்தம், வரப்பு, வரம்பு, வரைவு. எவ்விடம் - எங்கு, எம்பர், எவண், யாங்கு, யாண்டு, யாண்டை. எழாலும் மயிலுமொழிந்த பறவை யினாண் - சேவல். எழால் மயிலென்னு மிரண்டினாண் பெயர் - போத்து. எழிற்கை - அழகுபெறக் காட்டுங்கை. எழுகடல் - உப்பு, தேன், கருப்பஞ் சாறு, தயிர், நெய், பால், சுத்தோ தகம். எழுச்சி - அகைத்தல், இவர்தல், உம்பல், உறுமல், எற்பு, ஒழுகல், ஓங்கல், கஞறல், கதித்தல், கலித் தல், நேர்பு, பம்பல், பாச்சல், பொலிதல், மறல். எழுதல் - கிறுக்கல், கீறல், தீட்டல், தெரித்தல், பொறித்தல், வரிதல், வரைதல். எழுதீவு - நாவல், இறலி, கிரவுஞ்சம், குசை, இலவம், தெங்கு, புட்கரம். எழுதுகோல் - கோல், துகிலிகை, தூரியம். எழுதுவோன் - இலேசகன். எழுத்தாணி - ஆணி, இலேகினி, ஊசி, ஓலைதீட்டும் படை, கண்டம். எழுத்தின்சாரியை - கரம், காரம், கான், அகரம், ஏனம். எழுத்து - அக்கரம், அட்சரம், இரேகை, இலேகை, பொறி, வரி. எழுத்துப்பொருததவகை - நல்ல கணமென்றும், நில நீர் மதி இயமானன் என்பவற்று ளொன் றாய் வரும் மூவசைச்சீர் நான்கும் வல்லெழுத்தே யன்றி, மெல்லெ ழுத்து முதற்சீராக வரத் தொடுக் கக்கூடா எவ்வகைப் பட்ட செய் யுளுக்கும் நற்கணம் வகையால் வருமூவகைச்சீரே முதற்சீராய்ப் பாடவேண்டும். எழூபத்தீராயிர நாடிநிலை - மூலா தாரக் கண்ணுள்ள இந்நாடிகள் பீர்க்கம்பழக் கூட்டின் மூன்று கண்ணும்போல இடை, பிங்கலை, சுழுமுனை யென்னும் மூன்று நாடிகளுமாய் நடுவுநின்ற சுழு முனை யொழிய இரண்டு மூக்கா னும் ஓரோர் பாரிசத்து ஐந்து நாழிகையாகக் கொண்டு ஒரு மாத்திரையில் நூற்றிருபத் தைந்து சுவாசமாய் ஒரு சுவாசத்திலே பன்னிரண்டங்குலி வாயப்புறப் பட்டு நாலங்குலி தேய்ந்து எண் விரலடங்கும் பிராணவாயுவாகச் செறிந்து நிற்கும் என்க. எழுநரகங்கள் - கூடசாலம், கும்பி பாகம், அள்ளல், அதோகதி, ஆர் வம், பூதி, செந்து என்பனவாம். எழுபிறப்பு - ஏழ்பவம் இவைதேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பன வாம். எழுப்பல் - எடுப்பல், ஏற்றல், கிளப்பல். எழுமலை - கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், எம கூடம், நீலகிரி, என்பனவாம். எழுமேகம் - சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தும், துரோணம், காளமுகி, நீலவருணம் என்பனவாம். இவை முறையே மணி, நீர், பொன், பூ, மண், கல், தீ யென்னும் மழை களைப் பொழி வனவாம். எழுவகைத்தாது - இரதம், உதிரம், என்பு, தோல், தசை, மூளை, சுக்கிலம் என்பனவாம். எழுவகைநதி - கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, காவிரி, குமரி, கோதாவரி. எழுவகை நரகவட்டம் - பெருங் களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரிபரல்வட்டம், அரி படைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ் வட்டம், இருள்வட்ட மென்பனவாம். எழுவகைப்பெண்பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். இவற்றினாண்டாவன - முறையே 8, 11, 13, 19, 25, 31, 40 ஆகும். எழுவகையோனி பேதவிரிவின் யெயர் - தேவர் பதினான்கு நூறாயிர யோனி பேதம், மக்களொன்பது நூறாயிரயோனி பேதம், தாவரம் இருபது நூறாயிர யோனிபேதம், ஊர்வன பதினொரு நூறாயிர யோனிபேதம், நீர் வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம், விலங்கு பத்து நூறாயிரம், பரவை பத்து நூறாயிரம் ஆக என்பத்து நான்கு நூறாயிர யோனிபேதமாம். எளிமை - எண், எண்மை, தஞ்சம். எள் - எண், திலம், நூவு, வெள்ளெள் ளின் பெயர் - குமிகை. இளங்கா யின் பெயர் - கௌவை. எள்ளினளவு - இம்மி எட்டுக் கொண் டது. எறிச்சலூர்மலாடனார் - கடைச் சங்கப் புலவர் நாற்பத் தொன்பதின்மருள் ஒருவர். இவர் ஊர் எறிச்சலூர் எனத்தெரிகிறது. “பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே, தூய துறவறமொன் றூழாக - வாய, அறத்துப்பா னால்வகை யவாய்ந் துரைத்தார் நூலின் - றிறத்துப் பால் வள்ளுவனார் தேர்ந்து” என்று திருவள்ளுவ மாலைக்குச் சிறப்புக் கவி சொற்றுளார். எறிதல் - இடுதல், ஏற்றல், ஒச்சல், செலவிடல், விடுதல், விலக்கல், வீசுதல். எறிமணி - சேகண்டி. எறியாயுதம் - எஃகம், தோமரம், பிண்டி, பாலம், பீலித்தண்டு. எறும்பு - உறவி, பிபீலிகை, பிலஞ்சு லோபம். இதன் பேதம் - சூகை. ஏ ஏகதாளம் - ஓரொத்துடையதாளம், அரை மாத்திரை கொண்டது. ஏகம் - தனிமை, ஒன்று. ஏகபாதம் - ஓரிருப்பு, கூத்து விகற் பத்துளொன்று. ஏகம்பவாணர் - இவர் ஓர் பண்டித ரெனக் கூறுவர். கம்பநாடன் காலத்திலே இருந்தார் என்பதற்கு ஐயமில்லையாம். இவர் வாணன் என்னும் ஓர் வேளாளப் பிரபுவின் மைந்தர். தென்னாட்டில் வசித்து 1000 ஏர் வைத்து உழவுத் தொழில் செய்த ஓர் வேளாளனுக்கு வாணன் என்று பெயர். அவன் மனைவி ஓராண் பிள்ளையைப் பெற்று இறந்தனன். வாணன் தனக்கும் அந்திய காலம் நேரிட்டதை யுணர்ந்து தன் பண்ணைக்காரருள் ஒருவனாய் ஏகன் என்னுஞ் சாம் பானைக் கூவித் தன் புதல்வனை யவனிட மொப்புவித்து உன் பிள்ளைபோல இவனைப் பாது காத்தல் நின் கடமை. கொல்லை யிலே திரவியம் இருக்கிறது என்று இறந்தனன். ஏகன் என்னுஞ் சாம் பானோ ஓர் வேளாளனை யேற் படுத்திப் பாலனுக்குச் சோறூட்டி வித்து வளர்த்துக் கம்பரிடங் கல்வி கற்க விடுத்தனன். பருவ காலத்திலே தகுந்த குடும் பத்திலே யோர் பெண்ணையும் விவாகஞ் செய்து வைத்திறந்தான். அப் புதல் வன் றன்னை வளர்த்த சாம்பான் இறந்தமையால் அதிக வருத்த முற்றுச் செய்ய வேண்டிய கிரியை களையுஞ் செய்து நிறைவேற்றினன். அதன்பின் அவ் வாலிபர் தந்தை போலிருந்து தன்னையன்புடன் வளர்ப்பித்த ஏகன் சாம்பான் என்னும் நாமத்தில், ஏகன் சாம் பான் என்னும் நாமத்தில், ஏகன் என்னும் முதற்பதத்தையும் தன் ஆசிரியரான கம்பரின் நாமத்தை மத்தியிலும், தந்தையின் பெயரைக் கடைசியினும் வைத்து ஏககம்ப வாணன் என்னும் பெயரைத் தனக்கு வைத்துக் கொண்டார். அது ஏகம்ப வாணன் என மரூஉவிற்று. இவர் கவிபாடுவதில் மகா சாமர்த்திய ராம். ஏகம்பவாணன்மனைவி - இவர் சொல்லப்பட்ட வாணனது மனைவியான ஓர் பண்டிதை. தன் புருடன் ஓர் நாட் கழனிக்குப் போயிருந்த காலத்துச் சேரசோழ பாண்டியர் என்னு மூவரும் ஏகம்ப வாணனைக் காணுமாறு அவன் வீட்டிற்கு வந்து, முதலியார் யாண்டுப் போயினர் என வினாவ, அவன் காதலியாகிய இப் பண் டிகை, அவர் கழனிக்குப் போயினர் என உத்தரமனுப்ப, அரசர்கள் கேட்டு, ஆ! ஆ!! “முதலியார் முடி நடப் போயினரா” என்று உழவுத் தொழிலை இழித்துப் பேச அச்சுடு சொற்கள் காதில் விழப்பெற்ற பதிவிரதா சிரோமணியாகிய இம் மாது பெருங் கோபமுற்று, அரசர் என்றதையும் பாராமல், “சேனை தழையாக்கிச் செங்குருதிநீர் தேக்கி - யானை மிதித்த வருஞ் சேற்றின் - மானபரன், பார் வேந்தனே கம்ப வாணன் பறித்து நட்டான் - மூவேந்தர் தங்கண் முடி” என்னும் பாடலை வரைந்து உடனே யரசர் சமுகத்திற் கனுப்பினராம். அர சர்கள் அதனைப் பார்த்தவுடனே யதிக சந்தோஷமும் வெட்கமு முற்றுத்தத்தம் பதியேகினர். பின்னர்த் தனது நாயகன் வீட்டுக்கு வந்துழி நடந்த வரலாற்றையெல் லாஞ் சொல்ல, வாணன் ஓர் பூதத் தின் சகாயத்தால் அவர் களைச் சிறைப்படுத்தி அவர்கள் பகுதி கொடுப்ப ஒப்பிய பின் சிறையி னின்றும் விடுத்து ஆண்டனன் என்ப. ஏகம்பன் - ஏகம்பநாதம், ஏகன், ஏகாம்பரன், கம்பன், கம்பநாதன் எனவும் பெயர். இவை காஞ்சி புரத்திலெழுந்தருளி யிருக்குஞ் சுவாமி பெயர். ஏகலைவன் - பாண்டவர் இருந்த காலத்துள்ள ஓர் வேடன். இவன் றுரோணரிடஞ் சென்று வில் வித்தை கற்றுக் கொடுக்கும்படி பிரார்த்திக்க, அவர் வீட்டுமராதி யரின் அபிப்பிராயப்படி மறுத் தனுப்பினர். அகன்றவனாய இவன் தானிருக்குமிடஞ் சென்று ஆண்டுத்துரோணரைப்போல ஒருருவஞ் செய்து அத்தியந்த அன்புடனேயவர் கற்பிப்பது போலத் தன் மனத்தே பாவகம் பண்ணிக் குருவழிபாட்டின் மிகுதி யினாலே தேர்ந்து விசயனைப் போல விளங்கினன். பின்னர்த் துரோணர் ஓர் கபடங் காரண மாக அழைப்பித்து உனது பெரு விரலை யெனக்குக் குரு தக்கிணை யாகக் கொடு வென்னத் தடை யின்றிக் கொடுத்தனன் என்று மகா பாரதங் கூறுகின்றது. ஏகாதசி - பதினோராந் திதி. ஏகாதசிநோன்பு - தேவர்கள் பாற் கடல் கடைந்த காலத்திற் றோன் றிய ஆல காலத்தைச் சிவபெரு மான் தேவ ஸ்திரீகளின் மங்கல நாண் நிலைபெறும் பொருட்டாக உண்டு கண்டத்திலடக்கினர் அத்தின மேகாதசியாம். அற்றை யிரவு முழுதும் தேவர்கள் சிவ பெருமானைப் பூசித்து நற்பேறு பெற்றனர். இதனை “பொங்குங் கங்காதரன் காள மயின்றே யொன்றும் புகலாம லிருந்தனன்” என வருஞ் சகலாக மத்திரட்டுச் செய்யுளானறிக. இது யாவரு மநுட்டிக்க வேண்டிய விரதமாம். ஏகாதசிநோன்புப்பலன் - புரூரவாகு என்பவன் அநுட்டித்துத் தன் விலங்குரு வொழிந்து சக்கிரவர்த்தி யாயினன். அயோத்தி நகரத்திருந் தரசாண்ட உருக்கு மாங்கதன் அநுட்டித்துப் பரமபதமடைந்தான். அவன் ஏவற் பெண்ணொருத்தி யநுட்டித்து ஓராமகள் கொம் மட்டிக் கொடியிற் சிக் குண்டு நின்றமையை விலக்கித் தேவ லோகஞ் செல்ல விடுத்தனள். அம் பரீடனென்பவன் அநுட்டித்து உலகையொரு குடையினாண்டு வைகுந்த மடைந்தான். வீமன் அநுட்டித்து நினைத்தது பெற் றான். மற்றையோர் சரித்திரங் களை மேற்கூறுதும். ஏகாதசிபுராணம் - இஃது சொற்சுவை பொருட் சுவைகளானிறைந்துள்ள ஓர் காப்பியம். யாழ்ப்பாணத்துச் சன்னாகப்பதியி லெழுந்தருளி யிருந்த அ-வரத ராஜ பண்டிதர் அவர்களாற் செய் தருளப்பட்டது. சைவர், வைணவர் ஸ்மார்த்தர் முதலாயினோர் அநுட்டிக்க வேண்டிய ஏகாதசியின் கூறுபாடு களையும் அநுட்டித்தார் பெற்ற பேறுகளையும் எடுத்து விளக்கு வது. கடவுள் வாழ்த்து, கால நிர்ணயச் சருக்கம், உருக்கு மாங்கதச் சருக்கம், வீமே காதசிச் சருக்கம் என நான்கு பாகங்களை யுடைத்து. முந்நூற்றைம்பத் தெட்டுச் செய்யுட்களையுடை யது. காருடபுராணம், சூரிய சித்தாந்தம், பிரம கைவர்த்தம், ஆக்கினேயம், விஷ்ணு புராணம், பவிடிய புராணம், பதுமம், பிரம புராணம், கந்தபுராண முதலிய நூல்களிலிருந்து கண்ணுவர், உத்தாலகர், சனற்குமாரர், காத்தி யாயனர், பிருகற்பதி, மார்க்கண் டர், வியாதர், சேடர், தேவலர், கபிலர், பயிட்டினசி, யாக்கியவற் கியர், இருசிய சிருங்கர் முதலாயி னோர் சொல்லிய சாரங்களை யெல்லாம் வித்தியா தரணிய முனிவர் திரட்டியோர் நூல் செய் தனர். அதனையுங் கொண்டு இயற்றினர். ஏகாதசிமாதவிரதம் - பன்னிரு மாதங் களிலே வருகின்ற இருபக்க ஏகாதசி களின் பெயரும் அநுட்டித்தார் பெயரும் வருமாறு :- ஏகாதசிவிரதம் - அநுட்டிப்போர் மார்கழி மாதத்திலே பூருவ பக்கத் தில் வரும் ஏகாதசியையே முத லாகக் கொண்டு அநுட்டிக்க வேண்டும் - ஆகலின் அது ஆரம்ப ஏகாதசி யெனப்பெயர் பெறும். முற்காலத்து நாடி சங்கன் மகனாய மரு என்னும் அசுரனுக்குத் தோற் றோடிய இந்திரன், திருமால் சமுகத்திற் சென்று முறையிட அவரது திருமேனியினின்றும் ஓர் சத்தி பெண்ணாகத் தோன்றி யவ்வ சுரனைக் கொன்று இந்திரனாதி யிமையவர் துன்பத்தை யிரியச் செய்தனன். அதனால் அச் சத்தி யானவள் ஏகாதசி யென்னும் பெயருடையவளாய் அத்தினத் தையும் ஏகாதசியென நோற்பிக்கும் வரத்தையும் பெற்றான். மற்றைய அபர பக்கத்து வரும் ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி யென்று பெயர். இதனைக் கோகுலபுரத்து வைகா னசர் என்னும் இராச விருடி யனுட்டித்து முத்தியடைந்தனர். தைமாதத்திலே பூர்வ பக்கத்தில் வரும் ஏகாதசிக்கு புத்திரதா ஏகாதசியென்று பெயராம். இதனைப் பத்திர வதிபுரக்கணிருந்த சுகேது என்னும் அரசனும், அவன் றேவியாய சைப்பியா என்னும் அரசியும் அநுட்டித்துப் புத்திரப் பேற்றை யடைந்தனர். அபர பக்கத்து வருவதற்குச் சபல ஏகாதசி யென்று பெயர். இதனைச் சம்ப காவதி பட்டினத்து அரச குமார னாய ஏகலன் உபாசித்துத் தத்துவ ஞானஞ் சாரப் பெற்று முத்தி யடைந்தான். மாசிமாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசியை சய ஏகாதசி என்று கூறுவர். இதனைக் கந்தருவ குலத்து மாலியவானும், அவன் மனைவியான புட்பவதியும் அநுட்டித்து இந்திரன் சாபத்தா னேர்ந்த பிசாச வடிவு நீங்கப் பெற்றனர். அபரபக்கத்து வரும் ஷட்டில ஏகாதசியை ஓர் பிராமண நங்கை நோற்று இட்ட சித்தி யெய்தப் பெற்றாள். பங்குனிமாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்கு ஆமலக ஏகாதசி யென்று பெயர். இதனை வைதிச நகர்ச் சசபிந்து மன்னனும், சலந்தி புரத்து விதுர வேந்தனும் நோற்று வேண்டிய பெற்றனர். மற்றைய அபர பக்கத்து வருகின்ற விசய ஏகாதசியை இராமச் சந்திரர் உபா சித்து இராவண வதஞ் செய்து, சீதாபிராட்டியையுஞ் சிறைமீட்டு அரசாட்சி பெற்றனர். சித்திரைமாதத்திலே பூர்வ பக்கத் தில் வரும் ஏகாதசிக்குக் காமதா ஏகாதசி யென்று பெயர். அதனை நாகலோ கத்திருந்த லலிதன் என்னுங் கந்தருவன் அநுட்டித்துப் புண்டரீகன் என்னும் அரசன் சாபத்தாலடைந்த இராக்கத ரூபம் மாறப்பெற்றான். மற்றைய அபர பக்கத்தாய பாவ மோசன ஏகா தசியை மஞ்சூடா வென்னுந் தேவ கன்னிகை யநுட்டித்துப் பாவங் கள் தொலையப் பெற்றாள். வைகாசிமாதத்துப் பூருவ பக்கத் தில் வரும் மோகினி ஏகாதசியை துதி மான் என்னும் அரசனும், திருட்டபுத்தி என்னும் வைசி யனும் நோற்றுப் பரமபத மடைந் தனர். அபர பக்கத்து வரூதீனி ஏகாதசியை அநேக மகாபாதகர்கள் அநுட்டித்து வைகுண்ட பதவி யடைந்தனர். ஆனிமாதத்திலே பூர்வ பக்கத்துப் பொருந்தும் பாண்டவ ஏகாத சியைப் பாண்டவர்கள் அநுட் டித்துக் கண்ணமூர்த்தியைத் துணை யாகக் கொண்டனர். மற்றைய அபார ஏகாதசியில் நித்திரை கொள்ளாத அநேக மகாபாதகர் கள் திருவருள் பெற்று வைகுண்ட மடைந்தனர். ஆடிமாதத்து வரும் பூருவ பக்கத் துப் பதும ஏகாதசியை மாந்தாதா என்னுஞ் சக்கிரவர்த்தி யநுட் டித்து மழை பெய்வித்துத் தேச வளப்பஞ்செழிக்கப் பரிபாலனஞ் செய்தான். அபர பக்கத்து வரும் யோகினி ஏகாதசியை இயக்கனாய எமமாலியும், அவன் மனைவி யரான விசாலாட்சி சுரூபை யென்பவர்களும் அநுட்டித்துக் குபேரனால் நேர்ந்த சாப நிவார ணம் பெற்றனர். ஆவணிமாதத்திலே பூருவபக்கத்து வரும் ஏகாதசிக்கு நந்தன ஏகாதசி என்று பெயர். அதனை மகிசித்து ராசன் என்பவன் நோற்று மகப் பேறடைந்தான். அபர பக்கத்து வரும் ஏகாதசிக்குக் கர்மிக ஏகா தசி என்று பெயர். அத்தினத்திற் பசியாயிருந்து உயிர் நீங்கிய பஞ்ச பாதகர் யாவரும் பரமபதஞ் சேர்ந்தனர். புரட்டாதி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்கு வாமன ஏகாதசி யென்று பெயர். இதனை யுபாசித்த விரோசன குமாரனாய மாவலிச் சக்கிர வர்த்தி யநுட் டித்து இன்புற்றான். மற்றைய அபர பக்கத்து ஏகாதசிக்கு அசா ஏகாதசி யென்று பெயர். இதனை யரிச்சந்திர மகாராசன் நோற்று இராச்சியங் கொண்டான். ஐப்பசி மாதத்திலே பூருவ பக்கத்து வரும் ஏகாதசிக்குப் பாசாங்குச ஏகாதசியென்று பெயர். இதனைத் தருமராசன் மெய்யன்புடனோற் றுத் தருமத்திற்கு அதிபதியா னான். மற்றைய இந்திர ஏகாதசி யை இந்திர சேனன் அநுட்டித்து தன் தந்தைக்குச் சுவர்க்கங் கொடுத்தான். கார்த்திகை மாதத்துப் பூருவ பக்கத்து ஏகாதசியாகிய பிரண போதினி ஏகாதசியே சிறப் புடைத்து. இத்தினத்திற்றான் அரி மூர்த்தி யறிதுயிலொருலி யெழுந் திருப்பர். இதனிற் போக முத்தி யடைந்தார் தொகையைப் புகலுத லரிதேயாம். மற்றையது இரமா ஏகாதசியாம். இதனைச் சந்திர பாகை என்னும் இராச குமாரி யநுட்டித்துத் தன் காதலனை யடைந்து வாழ்ந்தாள். இது ஏகா தசி புராணத்தினின்றும் எடுக்கப் பட்டது. ஏகாதசிவகை - சொல்லப்பட்ட ஏகாதசிகளுடன் பரம ஏகாதசி, பதுமினி யேகாதசி, கௌசிக யேகாதசி, கைசிக வேகாதசி, சர்வசீ வேகாதசி, தத்தவேகாதசி களுமுண்டு. ஏகாந்தம் - ஒருவந்தம், வேறிடம். ஏசுமதநிராகரணம் - துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் செய்த கிறிஸ்துமத கண்டன நூல். ஏட்டையென்னும்பெயர் - வெருகு, எருமை. ஏணி - இறைவை, கடவை, சேணி, அன்றியுங் கண்ணேனினி - மால்பு. ஏமாப்பு - ஏக்கழுத்தம், செம்மாப்பு, இறுமாப்பு. ஏயர்கோன் கலிக்காம நாயனார் - அறுபான் மும்மையடியார்களு ளொருவர். பெரிய புராண மென்னுந் திருத்தொண்டர் புரா ணத்தில் அவர் சரிதத்தைக் கண்டு தெளிக. அவர் முத்தி யடைந்த தினமாகிய குருபூசை நட்சத்திரம் ஆனி மாதத்து அசுவினி நட்சத் திரமாம். கலிக்காம நாயனார் என வும் பெயர் பெறுவர். ஏரகம் - திருவேரகம், சுவாமிமலை இஃது சுப்பிரமணியக் கடவுளின் றிருப்படை வீடு ஆறனு ளொன்று. அருணகிரிநாத சுவாமிகளாற் புனையப்பட்ட திருப்புகழுடை யது. ஏரண்டத்தைலம் - ஆமணக்க முத்து முதலிய வற்றாற் செய்யப்படும் ஓர் தைலம். ஏரம்பமூர்த்தி - விநாயகர் சகசிர நாமத்துளொன்று. உருத்திரர்க் குப் பக்கத்திலிருப்பவன் என்பது பொருள். ஏரெழுபது - கம்ப நாடன் வேளாளரது ஏரின் சிறப்பைப்பற்றி யெழுபது பாக்களாற் றெரித்த ஓர் பிரபந்தம். ஏர்மங்கலப்பாட்டு - ஏரைக் குறித்தும் பாடும் பாட்டு. ஏலம் - ஆஞ்சி, இலாஞ்சி, துடி. ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றென்பது “நாலடி நான்மணி நானாற் பதைந்திணை முப்பால் கடுகங் கோவை பழ மொழி மாமூல மெய்ந்நிலைய காஞ்சியோடே லாதியென்பவே கைந்நிலையா வாங் கீழ்க் கணக்கு” என்ற வெண்பாவாற் றெரியக் கிடக்கின்றது. ஏலேலசிங்கர் - திருவள்ளுவ நாய னார் காலத்திலே யப்பெருமா னிடத் திகத்தலில்லா அன்புவைத் தொழுகியவர். தமது மகளைத் திருவள்ளுவ நாயனார்க்கு இல்லற நடாத்தி விளக்கும்படி மனைவி யாகக் கொடுத்த ஓர் வேளாளப் பிரபுவாம். ஏவலிற்சிறந்தவள் - சேடி. ஏவலிற்சிறந்தவன் - பாங்கன். ஏவல் - ஆணை, பணி, பரிசாரம், வியங்கோள். ஏவல்செய்வோர் - உழையோர், கிங்கரரர், சிலதர், சிலதியர், சேடர், சேடியர், பரிசனம், பரிசாரகர். ஏவற்சிலதியர் - மடைப்பள்ளியார். ஏவுவான் - வியவன். ஏழிசை - சட்சம், இடபம், காந் தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்பனவாம். என்னை? சரிகமபதநி யென்றே ழெழுத்தாற் றானம் - வரி பரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய - வேழிசை யுந் தோன்று மிவற்றுள்ளே பண் பிறக்குஞ் - சூழ்முதலாஞ் சுத்தத் துளை” என்று கூறினாராதலின். ஏழுபாலை - செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, கரும் பாலை, கோடிப் பாலை, விளரிப் பாலை, மேற்செம்பாலை யென் பனவாம். ஏறங்கோட்பறை - ஓர் வாத்தியம். ஏறுதல் - ஆரோகணம், இவர்தல், உந்துதல், ஊக்கல், ஏக்கல், எஃகல், மிக்கோள். ஏறென்னும் பெயர் - புலி, உழை, மரை, ஆ, புல்வாய், எருமை, பன்றி, சுறா, சங்கு. ஏற்குமட்கலம் - கடிஞை, ஐயம், பாத்திரம். ஏற்போன் - இரவலன், பரிசிலாளன், யாசகன், தீனன். ஏற்றமரம் - பூட்டை. ஏற்றம் - கியாதி. ஏற்றல் - இரத்தல், குறைகோள், வேண்டுதல், யாசித்தல். ஏனப்படம் - பன்றி முகக்கடகு. ஏனாதிநாயனார் - அறுபத்து மூன்று அடியார்களுளொருவர். இவர் சரித்திரத்தைப் பெரிய புராணத்திற் காண்க. முத்தியடைந்த தினம் புரட்டாதிமாதத்துத் திருவோண நட்சத்திரமேயாம். ஐ ஐக்கியவாதி - சமயிகளு ளொருவன். அவன் கொள்கையாவது பதிபசு பாசம் என்னுந் திரிபதார்த்த வுண்மைகளைச் சொல்லுமிடத்து பதியென்று சொல்லப்பட்ட பரம சிவனொரு முதலா யிருப்ப தொன்று. பசுவென்று சொல்லப் பட்ட ஆன்மாக்கள் பல முதலா யிருப்பதொன்று. பாசமென்று சொல்லப்பட்டது. மாயை யென் றுங் கன்மமென்று மிருவகைப் பட்டிருப்பதொன்று. பிரபஞ்சத் திற்குத் தாய் தந்தையாகவுள்ள சிவபெருமான் தமது காருண் ணியத்தினாலே ஆன்மாவுக்குப் புண்ணிய பாவங்களுக்கீடான சரீரங்களை மாயையினினறுங் கொடுப்பர். கருமேகஞ் சூரியனிற் சென்று பொருந்து மிடத்து அவ் வாதித்தனது கிரணங்களெல்லாம் நீங்கின தன்மை போல் முதலிற் சுத்தமாய் அறிவாயிருக்கு மான்மா வினிடத்தில் மாயாதேக மொருக் காலுநீங்காமற் பொருந்தி வரும், முன்னே செய்த புண்ணிய பாவங் களை யிச்சரீரத்திற் கர்த்தாவிவ னுக் கெந்நாளும் புசிப்பிப்பன். புண்ணிய பாவ மிரண்டுந் துலை யொத்து ஒரு சனனத்தி லெல்லாக் கன்மங்களும் புசித்துத் தொலை யத் தக்கதாக வேதேனு மொரு சிவபுண்ணியம் வந்தெதிர்ப்பட்ட வவதரத்து, இவ்வான் மாவுக்குச் சத்திநிபாத மென்ப தொன்றுண் டாக இறைவன்றன் காருண்யமே தனக்குத் திருமேனியாகக் கொண் டருளி, உலகத்தவர் யாவருங் கொண்டாடத்தக்க ஆசாரிய னாக வெழுந்தருளி வந்து, அழுக் கினால் மிகுத்திருக்கும் புடை வையை வண்ணான் வெள்ளா வியிலே வைத்து அவ் வழுக்கை நீக்கிச் சுத்தமாக வெள்ளையாக் கின தன்மையைப் போல, இவ னிடத்துள்ள பாசத்தைத் தீக்கை செய்து கிரமத்திற் போகத்தக்க தாக உபதேச மருளுமாம். அங் ஙனஞ் செய்யவேயிவ் வான்மா விடத்துள்ள குறைகளெல்லாம் நீங்கச் சுத்தனாகித் தண்ணீருந் தண்ணீருந் தன்னிற் கூடி, ஐக்கிய மாயொன்றுபட்டு நிற்குந் தன்மை போலச் சிவனுடைய அறிவோடு தன்னறிவு கூடி ஐக்கியம் பிறந் தொன்று நிற்றலே முத்தியாம் என்க. இதனைச் சங்கற்ப நிரா கரணத்தாற் பூர்வ பக்கம் பண்ணப் பட்டமை யறிக. ஐங்கணை - தாமரை, மாம்பூ, அசோ கம், முல்லை, நீலோற் பலம் என்பனவாம். ஐங்கணைச்செயல்களாவன - பெரு மயக்கு, சிந்தாகுலம், புணர்ச்சிக் கிணங்குதல், மோகனம், சந்தா பம், வசீகரணம். ஐங்கணையவத்தைகளாவன - சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என் பனவாம். அவற்றுட் சுப்பிர யோக மாவது பேசாது ஒழியா நினை வாம். விப்பிரயோகமாவது பெரு மூச்செறிந்து வருந்துதலாம். சோக மாவது வெதும்பி யுணவு வெறுத் தலாம். மோகமாவது அழுதலும் பிதற்றலுமாம். மரணமாவது உயிர் சோர்தலு மயங்குதலுமாம். ஐங்கதி - மல்லகதி, மயூரகதி, வானர கதி, இடபக்தி, மனோகதி யென் பனவாம். ஐங்கலையாவன - வித்தியாகலை, நிவிர்த்தி கலை, பிரதிட்டாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை யென்பனவாம். ஐங்குரவர் - தாய், தந்தை, அரசன், உபாத்தியாயன், குரு என்பவர் களாம். ஐங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரண ரென்ற விவர் அரசர்க் கைம் பெருங் குழுவென்ப. ஐது - வரிசை, அழகு, நெருக்க மின்மை. ஐந்தக்கினி - தவாக்கினி, பஞ்சாக் கினி. இது தவஞ் செய்வோர்க் குரிய நெருப்பாம். அஃதாவது கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கு என்னும் நான்கு திசைகளிலும் மூடப்பட்ட அக்கினிகளுடன் மேலே சூரியாக்கினியுமொன்று கூடிய ஐந்தாம். ஐந்தடி - பாக்களி னடிவகைகள். அவையாவன :- குறளடி, சிந்தடி, அளவடி, நேரடி, கழிநெடிலடி யென்னு மைந்துமாம். அவற்றுள் இருசீரான் வருவது குறளடி. முச்சீரான் வருவது சிந்தடியாம். நாற்சீரான் வருவது அளவடி யாம். ஐஞ்சீரான் வருவது நேரடி ஐந்தின்மிக்க சீர்களான் வருவது கழிநெடிலடியாம். ஐந்தங்கம் - வாரம், திதி, கரணம், யோகம், நட்சத்திரம். இவை பஞ் சாங்கம் எனவுஞ் சொல்லப் படும். ஐந்தருவருக்கம் - சந்தானம், தேவ தாரம், கற்பகம், மந்தாரம், பாரி சாதம். இவை யிற்றைத் தெய்வ மரமென்றுங் கூறாநிற்பர் தெரிந் திசினோர். ஐந்தவத்தைகள் - சாக்கிரம், சொப் பனம், சுழுத்தி, துரியம், துரியா தீதம் என்பனவாம். ஐந்தறிவுயிர் - மக்களேயன்றிக் கட வுளையும் அவனருள் வழிப்பட் டோரையும் உள்ளவாறுணர்ந்து வழிபடாத மாக்களுமாம். ஐந்தாம்பக்கம் - சுக்கில பக்கத்து ஐந்து, பத்து, பதினைந்தாம் நாட்கள். ஐந்திணை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன வாம். இவற்றுள் மலையும் மலை சார்ந்த விடமும் குறிஞ்சி, குறிஞ்சியும் முல்லையுந் திரிந்தவிடம் பாலை, காடுங்காடு சார்ந்த நிலமும் முல்லை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலுங்கடல் சார்ந்த நிலமும் நெய்தல். ஐந்திணைத் தெய்வம் - குறிஞ்சிக்கு முருகன், பாலைக்குத் துர்க்கை, முல்லைக்குத் திருமால், மருதத் திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன் என்க. ஐந்திணைநிலமாவது - மலையும் மலை சார்ந்த நிலமுங் குறிஞ்சி. குறிஞ்சியும் முல்லையுந் திரிந்த நிலம் பாலை. காடுங் காடு சார்ந்த நிலமும் முல்லை. வயலும் வயல் சார்ந்தநிலமும் மருதம். கடலுங் கடல் சார்ந்த நிலமும் நெய்தலாம். ஐந்திணைப்பொழுது - குறிஞ்சித் திணைக்குப் பெரும்பொழுது கூதிரும் சிறுபொழுது நள்ளியா மமுமாம். பாலைக்குப் பெரும் பொழுது இளவேனில் முது வேனில் என்னும் இருவகை வேனிலும், சிறு பொழுது நண் பகலுமாம். முல்லை நிலத்திற்குப் பெரும்பொழுதுகாரும், சிறு பொழுது மாலைக்காலமுமாம். மருதத்திணைக்குப் பெரும் பொழுது இளவேனிலும், சிறு பொழுது யாமமும் வைகறையு மாம்.நெய்தற்றிணைக்குப் பெரும் பொழுது கார்காலமும், சிறு பொழுது இருவகை வேனிலு மாம். ஐந்திந்திரியங்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்பனவாம். இவை ஞானேந்திரியம் எனப்படும். இவற்றைத் துவக்கு, சிகுவை, சட்சு, ஆக்கிராணம், சுரோத் திரம் என்பர் வடநூலார். வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் இவ்வைந்துங் கன்மேந்திரியங்களாம். ஐந்திரவியாகரணம் - இந்திரனாற் செய்யப்பட்ட ஓரிலக்கண நூல் “ஐந்திர நிறைந்த தொல்காப் பியன்” எனத் தொல்காப்பியப் பாயிர வுரையினம், “புண்ணிய சரவணம் பொருந்துவீராயின் - விண்ணவர் கோமான் விழு நூலெய்துவிர்” எனச் சிலப்பதி காரம் காடுகாண் காதைச் செய்யு ளானும் அதனை யறியலாம். ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி யென்பன வாம். ஐந்துகாவியம் - சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி யென்பனவாம். ஐந்துசத்தி - ஆதிசத்தி, பராசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி யென் பனவாம். ஐந்துசுத்தி - சிவபூசைக்கு முன்னர்ச் செய்யப்படும் கிரியையி னொன்று. அதாவது பூதசுத்தி, மந்திரசுத்தி, திரவியசுத்தி, ஆன்ம சுத்தி, இலிங்க சுத்தி, யென்பனவாம். ஐந்துதந்திரம் - மித்திரபேதம், சுகிர் லாபம், சந்திவிக்கிரகம், லப்த கானி அல்லது அர்த்தநாசம், அசம்பிரேக்ஷிய காரித்துவ மென் பனவாம். இவை நட்புப் பிரிவு, நட்புப்பேறு, அடுத்துக் கெடுத்தல், பேறழிவு, ஆராயாது செயல் எனவும்படும். அவற்றுள் மித்திர பேதமாவது சிநேகிதத்தைக் கெடுத்துப் பகையுண்டாக்கல். சுகிர்லாபமாவது தங்களுக்குச் சமானமானவர்களோடு கூடிப் பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரகமாவது பகைவரை யடுத்துறவு செய்து வெல்லுதல், அர்த்தநாசமாவது தன் கையிற் கிடைத்த பொருளை யழித்தல், அசம்பிரேக்ஷிய காரித்துவமாவது காரியத்தைத் தேற விசாரியாமற் செய்தல். ஐந்துதிரவியம் - கடல்படுதிரவியம் ஐந்து, காடுபடுதிரவியம் ஐந்து, மலைபடு திரவியம் ஐந்து, நாடு படு திரவியம் ஐந்து, நகர்படு திரவியம் ஐந்து. ஐந்துபுலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பனவாம். இவை தன் மாத்திரை, விடயம் எனவுஞ் சொல்லப்படும். ஐந்துமந்திரம் - ஈசானாய, அகோ ராய, தற்புருடராய, வாம தேவாய, சத்தியோ சாதாய என்பவற்றின் இறுதியில் நமசப்தம் வைத்து உச்சரித்தலாம். ஐந்துமலம் - ஆணவம், கன்மம், மாயை, வைந்தவம், திரோதாயி. ஐந்துமுகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம். ஐந்துமூர்த்தி - பிரமன், விஷ்ணு, உருத்திரர், மகேசுரர், சதாசிவர் இவர்கள் அணுபக்ஷம், சம்புபக்ஷம் என விரு வகைப்படுவர். ஐந்துலோகம் - இரும்பு, பொன், வெள்ளி, ஈயம், செம்பு. ஐந்துவிரை - கோட்டம், துருக்கம், தகரம், அகில், ஆர மெனவிவை. ஐந்துருப்பு - பகுதி, விகுதி, இடை நிலை, சாரியை, சந்தி யென்பன வாம். ஐந்தெழுத்து - பஞ்சாக்கரம், சீவித மந்திரம், மகாமனு. ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம். இவற்றை முறையே சிருட்டி, திதி, சங்காரம், திரோ பவம், அநுக்கிரகம் என வட நூலார் கூறுவர். ஐப்பசிமாதம் - ஆசுவிகம், ஆசுவீசம். ஐம்படை - சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு, என்பன. இவற்றிற்குப் பெயர்களாவன:- பாஞ்ச சன்னி யம், சுதரிசனம், சார்ங்கம், நாந் தம், கௌமோதகி. ஐம்பால்வகை-ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல இவை முறையே ஆண் பால், பெண்பால், பலர் பால், ஒன்றன்பால், பலவின்பால் என்பன வாம். ஐம்பான்முடி - முடி, குழல், தொங்கல், பனிச்சை சுருள், இவற்றின் விவர மாவது முடி-மயிரை யுச்சியின் முடித்தல், குழல் - சுருட்டி முடித் தல், தொங்கல் - மயிரை முடிந்து தூங்கவிடுதல், பனிச்சை - பின்னி விடுதல், சுருள் - பின்னே சொரு கல். ஐம்பூதங்கள் - பிருதிலி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பனவாம் மண். நீர், நெருப்பு, காற்று, வெளி யெனவுஞ் சொல்லப்படும். ஐம்பூதங்களின்குணம் - ஆகாயம் சத்தகுணமுடைத்து. காற்று சத்த பரிசங்களை யுடைத்து. நெருப்பு சத்தம், பரிசம், உருவம் என்னு முக்குணங்களையு முடைத்து. சலம் அம்மூன்றனோடு இரச குணத்தையு முடையது. மண் அந் நான்கனோடு கந்தமென்னுங் குணத்தையு முடையது. ஐம்பூதத்தின்றொழில் - ஆகாயம் இடங்கொடுக்கும். காற்று - சலித்து எவைகளையுந் திரட்டும். நெருப்பு சுட்டு ஒன்று விக்கும். நீர்நெகிழ்ச்சி செய்து குளிர்விக்கும். மண் உரத்துத் தரிக்கும். ஐம்பூதnக்ஷத்திரம் - பிருதிவி காஞ்சி, அப்பு திருவானைக்கா, தேயு திரு வண்ணாமலை, வாயு திருக் காளத்தி, ஆகாயம் சிதம்பரம். ஐம்பொறிநுகர்ச்சி - துப்புரவு, துளவு. ஐயச்சொல் - என்னை, கொல், எவன், யாது. ஐயடிகள் காடவர்கோனாயனார் - அறு பான்மும்மை நாயன்மாருள் ஒருவர். தொண்டை மண்டலத் திலே காஞ்சி புரத்திலே யிருந்து அரசுபுரிந்த பல்லவராயன் என் னும் அரசனது குடும்பத்திற் பிறந் தவர். உலகமெல்லா வற்றையு மொருகுடையிலாண்டு விரத்தி யுற்று, சிவாலயசேவை செய்தலை யே தமக்கு அரசாகக்கொண்டு சிதம்பரnக்ஷத்திரத்தை யடுத்துச் சிவகாமி சமேத சபா நாயகரது திருப்பணி விடைகளைச் செய்து அவரது திருவருள் பெற்று, மற்றைய தலங்கடோறுஞ் சென்று தலவெண்பாக்கள் பாடி யருளி முத்தியடைந்தனர். அவர் குரு பூசைத்தினம் ஐப்பசி மாசத்து வரும் மூல நட்சத்திரமேயாம். ஐயமுற்றோனவிநயம் - அஃதாவது வாடிய வுறுப்பும், மயங்கிய பார் வையும், பீடழி புலனும், பேசா திருத்தலும், வேறுபட்ட செய்கை யும், ஆகாயத்தையுந் திசைகளை யும் பன்முறை மாறி மாறிப் பார்த் தலையுஞ் செய்வதாம். ஐயனார்கொடி - கோழிக்கொடி. ஐயனார்தேவிமார் - பூரணை, புட் கலை. ஐயனார்வாகனம் - வெள்ளை யானை, காரிக் குதிரை. ஐயனார் - அரிகர புத்திரன், அறத் தைக் காப்போன், ஆரியன், ஐயன், கருங்கடல்வண்ணன், காரி, கோழிக்கொடி யோன், சாதக வாகனன், சாத்தன், செண்டாயு தன், புட்கலை மணாளன், புறத்த வன், பூரணை கேள்வன், யோகி, வெள்ளையானை யூர்தி. ஐயை - மாதரிமகள். இவள் கண்ணகி யினிடத்து மிக்க அன்புள்ளவ ளாக விருந்தமையாற் றேவந்தி யோடு சேரனாடு சென்று கண்ணகி கோயிலை யடைந்தாள். ஐராவதம் - இந்திரனுக்குரியதாகி, சுவர்க்கலோகக் கணுள்ளதோர் வெள்ளானை; நாலுகொம்பர் களையுடையது. கந்தசுவாமியின் றேவியருளொருவராய தெய்வ யானை யம்மையாரை வளர்த்ததி துவே. இது பூசித்ததலம் ஐராவ தேசம் எனப்படும். ஐவகைக்குசலவித்தை - எண்ணல், எழுதல், இலை கிள்ளல், பூத் தொடுத்தல், யாழ்வாசித்தல். ஐவகைத்தந்தையர் - அரசன், தலை வன், தந்தை, முன்னோன், குரு. ஐவகைத்தாயர் - ஈன்றத்தாய், ஊட்டுந் தாய், முலைத்தாய், செவிலித்தாய், கைத்தாய். ஐவகைத்தெய்வமணி - சிந்தாமணி, சூடாமணி, சூளாமணி, சிமந்தக மணி, கௌத்துவ மணி. ஐவகைப்பாதம் - எழுவகைக் கூத்துக் களினிலக்கணத்தொன்று, அவை சமய நிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், குஞ்சிதம் என்பனவாம். ஐவகைமன்றம் - காவிரிப்பூம் பட்டி னத்தேயுள்ளன. அவையாவன வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், கல்மன்றம், பூத சதுக் கம், பாவை மன்றம் என்பனவாம். அவற்றுள். (1) வெள்ளிடை மன்றமாவது அளவும் நிறையும் எண்ணுமாகிய இலக்கங்கள் தம்மிடத்திடப்பட்ட பெயர் பொறித்த பொதிகள் பண்டசாலை வாயிலையும் மற் றாயத்துக் கருந்தாழாகிய காவ லையுமுடையோர் காத்திருக்கும் அரியவாய காவலையும் விடப் பட்ட வாகலான் இந் நகர்க்குப் புதிய மாக்கள் சிலர்கட்போருள ராயின், அவர் கழுத்துக்கடுக்கப் பொதியை வைத்து ஊரைச் சூழ்விப்பினல்லாது அவர்க்கே யவற்றைக் கொடுத்து விடாதாத லாற் களவென்பதனை மனத்தாற் கனவில் நினைப்பினும் நினைப் போரை நடுக்குவிக்கும் வெளி யான இடத்தையுடையதாம். (2) இலஞ்சி மன்றமாவது கூனர் முதலா யுள்ளோரும், தொழு நோயால் அழுகு மெய்யினை யுடையோரும் புகுந்து முழுகின வளவிலே பழுதில்லாத தோற்றத் தையுடைய நல்ல நிறம் பெறுகை யினாலே தன்னை வலஞ் செய்து தொழுது ஆடி நீங்கும் பொய்கை செறிய விருப்பதாம். (3) கல்மன்றமாவது வஞ்சனையாற் சிலர் மருந்தூட்டவுண்டு பித் தேறினாரும், நஞ்சை யுண்டு நடுங்கு துயரமுற்றோரும், அழலும் விடத் தையுடைய அரவின் வாயிற் கூர்த்த எயிறழுந்தக் கடியுண் டாரும், பிதுங்கின கண்ணை யுடைய பேய் பிடிக்கப்பட்டா ரும் என்னு மிவர்கள் ஒருகால் வலம்வந்து வணங்க, அதனுடனே யத்துயர்கள் நீங்குதற்குக் காரண மாகிய ஒளியைக் கால்வதோர் நெடிய கல் நாட்டி நாட்டப்பட் டிருப்பதாம். (4) பூத சதுக்கமாவது தம்மைப் பிறர் நம்புவதற்குத் தவவேடத்தின் மறைந்து நின்று அத் தவத்திற்கு இழுக்கான வற்றின்க ணொழுகும் பொய் வேடத்தாரும், தம்மைத் தங்கணவர் நம்புவதற்குப் பொய் யொழுக்கத்தின் மறைந்து நின்று வசீகரிப்பினொழுகும் அலவற் பெண்டிரும், தம்படை குடி முதலிய வைந்தினொடு உயிருறுப்புரிமைக் குத் தம்மைத்தேறி யளித்த அரசரைக் கீழ்மை யெண்ணுவாரையும், தமது மனைவியர் தனிப்பத் தனித்த பிறர் மனைவியரை விரும்புந்துச்சாரி களும், தமது நெஞ்சறி பொருளை வஞ் சித்துப் பொய்ச் சான்று ஏறுவாரும், சிறப்புச் செய்துழி அவர் முன்னிலையிற் புகழ்ந்து புறம் போக்கிற் றூற்றுவாரும் ஆகிய இவர்களே யென் கையிற் கொண்ட இப்பாசத் திடத்து அகப்படும் பெயரென அவ்வூர் நாற்காத வெல்லையுங் கேட்கும் படி தனது கடிய குரலாலுணர்த்திப் பின் அங்ஙனஞ் செய்வாரைப் பாசங் கட்டிவர நிலத்திற் புடைத் துண்ணும் பூத நிற்கப் பெறுதலை யுடைத்தாம். இது நாற்சந்தியா யுள்ளது. (5) பாவை மன்றமாவது அரசனு டைய செங்கோண்மையிற் சிறிது கோடிற்றாயினும் தரும நூன் முறைமையின் அறங்கூறுந் தரு மாசனத்தார் உரைக்கும் நடுவு நிலைமை கோடி யொருமருங்கு பற்றினும், நாவலாற் கூறாது நீருகுத்துக் கண்ணாற் கூறும் பாவை நிற்கப் பெறுவதாம். ஐவகைலோகத்தின்பொது - பொன் இவற்றின் கட்டி தகனம், மாழை, வங்காரம். ஐவகைவேள்வி - கடவுள் வேள்வி (தேவயாகம்), பிரம வேள்வி (பிரமயாகம்) பூதவேள்வி (பூத யாகம்), மானுட வேள்வி (மானுட யாகம்), தென்புலத்தார் வேள்வி (பிதிர் யாகம்), என்பன வாம். ஒ ஒடு - உடுப்பை. ஒடிதல் - இடிதல், இறுதல், ஒசிதல், ஞெமிர்தல், பரிதல், முரிதல், முறிதல். ஒடுங்கல் - கூம்பல், சாம்பல். ஒட்டகம் - அத்திரி, இரவணம், ஒட்டை, கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன். இதன் பெண் பிடி பெட்டை; இதன் குட்டி கன்று, குழவி. ஒட்டக்கூத்தர் - மகா கவிகளாகிய புகழேந்திப்புலவர், கம்பர் என்னுஞ் சைவதாசர்கட்கு எதிரியாயிருந்த ஓர் பண்டித சிரோமணியாம். கம்பர் சிவபதப் பிராப்தியாய காலத்திலே “இன்றைக்கோ கம்ப னிறந்தநா ளிப்புவியி, லின்றைக் கோ வென் கவிதை யேற்குநாள், இன்றைக்கோ, பூமடந்தை வாழப் பொறை மடந்தை வீற்றிருக்க, நா மடந்தை நூலிழந்த நாள்” எனப் பாடிக்களித்தும் ஓர்காற் றுக் கத்திற் குளித்துமுள்ள புலவர் உறையூரிலிருந்து அரசு புரிந்த இராசேந்திர சோழனுக்கும் அவன் மகன் குலோத்துங்க சோழ னுக்குஞ் சமஸ்தான வித்துவானா யிருந்தவர். தந்துவாயர், செங் குந்தர் என்னு நாமங்களைப் பெற்ற கைக்கோளர் மரபிற் பிறந் தவர். கூத்தர் என்பது இவரியற் பெயராம். இவரது சாதியாராகிய கைக்கோளர் வந்து இவரை நோக் கிப் புலவர் ஏறே, வேளாளர், வணிகர் முதலிய சாதியார்க்குச் சிறப்புப் பாடல் களிருப்பதுபோல எஞ்சாதி யார்க்குப் பாடல்க ளொன்று மில்லையே யென்று வருந்திய போது அவரை நோக்கி யங்ஙனம் பாடல் செய்யின் அதற் குப் பரிசாக நுங்குலைத் தலைப் பிள்ளைகள் எழுபது போது தலைகளைக் கொடுப்பீராவென்று கேட்டனர். அதற்குச் செங்குந்தர் ஏக்கமுற, அவர்களைத் திருப்பு வித்தனர். செங்குந்தர் தம் பிள்ளைகள் தலைகளை யறுத்துக் கொண்டு வர இவர் சோழராச னது ஆசார வாயிலிற் குவியுங்க ளெனக் கட்டளையிட்டனராம். அங்ஙனம் குவித்ததைக் கண்ட சோழராசன் கூத்தரைக்கூவி, ஐய கூத்தரே, இஃதென்னை கூத்து என்று வினவ, இவர் நடந்த விடயங் களைக்கூறி யத்தலைகளையெல் லாங் குவித்துச் சிங்காசனம் போலச் செய்து அவற்றின் மேலேறியிருந்து, “ஈட்டியெழுபது” என்னும், பிரபந்தத்தைப் பாடி முடித்து இறுதியில் “கலை வாணி நீயுலகி லிருப்பதுவுங் கல்வியுணர் கவி வல்லோரை நிலையாகப் புரப்பதுவு மவர் நாவில் வாழ்வது நிசமே யன்றோ” என்னுஞ் செய்யுளைப் பாடியுயிர் கொடுத்துத் தலையு முடலு மொட்டச் செய்தெழுப் பினமையால் ஒட்டக்கூத்தர் எனச் சிறப்புப் பெயர் பெற்றனராம். கலிங் கத்துப்பரணி என்னும் பிரபந் தத்தையிவர் பாடினர் என்ப. அது செயங் கொண்டான் செய்த தாகும். இவர் வீரபத்திர பரணி யென்னும் பரணியே செய்தன ராம். இராமாயணத்தில் சுந்தர காண்டம் இவராற் பாடப்பட் டது. புகழேந்திப் புலவர்க்கும் இவர்க்கும் வாக்குவாதமாக, நிகழ்த்திய பாடல்கள் பலவுள புகழேந்திப் புலவரைச் சிறைச் சாலையிலடைப் பித்து அவர்க் குப் பலவித விடும்பைகளைப் பொறாமை காரணமாகச் செய்த கோளர் இவரே. இவரது அகங் காரம், புகழேந்திப் புலவரிடம் சிறைச்சாலையிற் கற்பித்துத் தேர்ந்த குயவன், அம்பட்டன், கொல்லன், தச்சன் என்னுமிவர்க ளாலடக்கி மடக்கப்பட்டது. இவர் புகழேந்திக்குத் துன்பஞ் செய்ததன்றி, இராச சபைக்கு வந்த வேற நேக புலவர் களையும் சிறை செய்வித்தும், சிரச்சேதம் பண்ணுவித்தும் வந்தனர். இவரே பின்னும் கைக்கோளர் வேண்டு கோட்படி செங்குந்தரைப்பற்றி யாயிரக்கணக்காகப் பாடல் செய்து ஸ்ரீமத் கச்சியப்ப சிவா சாரிய சுவாமிகளாற்றிருவாய் மலர்ந் தருளப்பட்ட கந்தபுரா ணத்தினிறுதியிலுள்ள கந்தவிர தப் படலத்திற் சேர்க்க விருந்தனர் என்று கூறுப. இதன் உண்மை யறியாத மூடர்கள் சிலர் “கந்த புராணம் பதினாயிரஞ் சொன்ன கச்சியப்பர்” என்னுந் தொண்டை மண்டலசதகச் செய்யுளை, “கந்த புராணம் பன்னீராயிரஞ் சொன்ன கச்சியப்பர்” எனமாற்றியுஞ் செங் குந்த சரிதத்தை யருட் பெருங் காப்பியமாய வதனுள் நுழைக்க வெண்ணி யொழிந் தெரிவாய் நரகிற் கிறையாயினர். நிற்க, இவர் கோவை, உலா, அந்தாதிகள் பாடுவதின் மிக்க சாமர்த்தியராம். அது “வெண் பாவிற் புகழேந்தி பரணிக்கோ சயங்கொண்டான் விருத்த மென்னும் - மொண்பாவி னுயர்கம்பன் கோவையுலா வந்தாதிக் கொட்டக் கூத்தன்” என்னும் பாவிற் காண்க அதற்குச் சாட்சியாக இவர் பாடிய ஒலிய லந்தாதி குலோத்துங்கன் கோவை, விளங்குகின்றன. இவர் காலம் கந்தபுராண காரர்க்குப் பிற்பட்ட கம்பர் புகழேந்தி காலமே. ஒட்டலர்நாடழித்தல் - கொற்றவள்ளை. ஒட்டினர்மேற்சாராமை - தழிஞ்சி. ஒட்டுதல் - அணவல். ஒட்டுப்புதவம் - இரட்டைக்கதவு. ஒண்டி - ஊற்றாணி. ஒதுக்கிடம் - துச்சில். ஒதுங்கல் - ஒடுங்கல். ஒத்தறுத்தல் - தட்டல், வட்டணை, வட்டித்தல். ஒத்து - அந்தரக்கொட்டு, முக மென வும் பெயர். இந்த வொத்து ஆடின பின்னர் அல்லது உருக் காட்டுதல் வழக்கல்ல வென்ப என்னை? “முக மாடு தறிரியோகப் பொருட்டே” என்றாராகலின். ஒப்படியிருக்கை - யாழ்வாசிக்கு மிருப்பினு ளொன்று. ஒப்பனை - அணிதல், அலங்கரித்தல், கை செய்தல், புனைதல், பூசல், மண்ணல், வனைதல், வேய்தல். ஒய் - யானையைப் பாகர்வையு மாரியமொழி. ஒருகட்பகுவாய்ப்பறை - பதலை. ஒருகட்பறை - மொந்தை. ஒருகலை - அமா, திதி, பக்கம். ஒருகலைவருமதிநாள் - சினீவாலி. ஒருகுடி - உதிரப்பிரிவினர். ஒருகுடியிற்கொண்டோன் - சகலன். ஒருங்கு - உடங்கு. ஒருதலைக்காமம் - கைக்கிளை. ஒருத்தல் - கவரி, யானை, பன்றி. ஒருபலம் - கரடி, தொடி. ஒருபறைவிகற்பம் - பீலி. ஒருபாவொருபது - பிரபந்த வகை யினுளொன்று. ஒருபிறப்பு - ஒருமை. ஒருமை - இறையுணர்வு. ஒருவகைப்புல் - புதவு. ஒலி - அதிர்தல், அமலை, அரவம், ஆகுலம், ஆம்பி, ஆரவாரம், ஆர்ப்பு, ஆர்வம், இசை, இடி, இமிழ், இயம், இரக்கம், இரட்டு, இரை, உரை, ஒசை, ஒதை, ஒலை, கம்பலை, கலி, கவ்வை, களன், குரல், குரை, குளிறு, கோடணை, சிலை, சும்மை, சுருதி, ஞிமிர், துவை, ஞெளிர், துழனி, தொனி, நாதம், நினதம், பாடு, பிளிறு, புலம்பு, முழக்கம், வகுணி, வகுளி, அன்றியும், பறவையாலெழு மொலியின் பெயர் கலகலம், துழனிபயிர். விலங்கினாலெழு மொலியின் பெயர் கோலாகலம். அசையுஞ் சீலையானு மிலை யாலு மெழுமொலியின் பெயர். மருமராஞ்சம் அசையு மாபர ணத்தா லெழுமொலியின் பெயர் சிஞ்சிதம், அன்றியும் பேரொ லியைக் காண்க. ஒலிக்குறிப்பு - அனுகரணவோசை, அவையாவன அம்மெனல், இம் மெனல், இழுமெனல், ஒய்யெனல், ஒல்லெனல், கல்லெனல், கொம் மெனல், கொல்லெனல், கோவெனல், சரேலெனல், ஞொள்ளெனல், துடு மெனல், நெரேலெனல், பொம் மெனல், பொள்ளெனல், முக ரெனல், வல்லெனல், விடேலெனல், அன்றியு மீரடுக் கொலியின் பெயர் - உபயவோசை. அக் குறிப்புச் சொல்லாவன - கடகடெனல், கல கலெனல், களகளெனல், குளகு ளெனல், சடசடெனல், சரசரெனல், சலசலெனல், சளசளெனல், திடுதி டெனல், நெடுநெடெனல், நெற நெறெனல், பகபகெனல், பட டெனல், பதபதெனல், மடமடெ னல், மளம ளெனல், முகமுகெ னல், முடமு டெனல், இது அநு வாத மென்க. ஒலித்தலினுட்பேசலாலெழுமொலி - இரத்துதல், உழைத்தல், கரைத்தல், கல்லல், கவலல், குமுதல், குருமித் தல், குளிறல், சிரத்துதல், தெளிர் தல், நரலல், நெளிர்தல், பயிர்த்தல், பயிறல், பிதற்றல், பிளிறல், மரு ளல், மிழற்றல், முக்கல், முரவல். ஒலித்தல் - அரற்றல், அரிம்பல், அலறல், அழுங்கல், ஆர்த்தல், ஆலல், இசைத்தல், இடித்தல், இமிர்தல், இமிழ்தல், இயம்பல், இரங்கல், இரட்டல், இரைத்தல், உரற்றல், உரைத்தல், உலம்பல், உழம்பல், உளைத்தல், ஏங்கல், கதித்தல், கரைதல், கலித்தல், கவித்தல், கறங்கல், களைத்தல், குமுறல், குரைத்தல், குளிறல், சலித்தல், சிதைத்தல், சிம்பல், சிரத்துதல், சிலம்பல், சிலும்பல், சிலைத்தல், ஞெள்ளல், தழங்கல், துவைத்தல், தெவிட்டல், தெழித் தல், தொளித்தல், நரவல், நரற்றல், பயிறல், பிளிறல், பிறங்கல், புலம் பல், முரலல், முறற்றல், முழங்கல், விம்மல். ஒலியலந்தாதி - ஒட்டக்கூத்தர் பாடிய நூல். ஒலியின்காரியம் - எழுத்து. ஒழிதல் - ஓய்தல், ஓவல். ஒழியாமை - ஓவாமை. ஒழுக்கமின்மை - கையறல், கையறை. ஒழுக்கம் - ஆசாரம், இயல்பு, கை, கையாறு, சரிதை, சரித்திரம், சாரித்திரம், செயல், செய்கை, செய்தி, திணை, நசை, நடை, நன்னிலை, பத்தி, முறை, வாகை. அன்றியு நல்லொழுக்கம் - சீலம், ஞானம், விருத்தி. ஒழியா வொழுக் கத்தின் பெயர் - கை தூவாமை, கையொழியாமை. ஒழுங்கு - அணி, ஆவளி, ஆளி, இராசி, ஒளி, கோதை, சிரேணி, தாமம், தாரை, நிரல், நிரை, பத்தி, மாலை, வீதி. ஒளி - அரி, ஆதபம், இலக்கம், எல், கடி, கதிர், கரம், காந்தி, கானல், கிரணம், கிளர், கேழ், சவி, சுடர், செடி, சோதி, தாமம், துணி, துளக்கம், தேசிகம், தேசு, நகை, நிலவு, நிழல், நிறம், நீமம், மின், வாமம், வாள், விரியல், வில், வெயில், மிகுமொளி சுப்பிரம். ஒளிசெய்தல் - அலங்கல், அவிர்தல், இமைத்தல், இலகுதல், இலங்குதல், ஒடித்தல், ஒளிர்தல், சுடர்தல், தயங்கல், திகழ்தல், துலங்கல், துளங்கல், நகுதல், நிகழ்தல், நிலவல், பிறழ்தல், மிளிர்தல், மின்னல், வயங்கல், விரிதல், விளங்கல். ஒளித்தல் - கரத்தல், கரப்பு, கரவு, குவித்தல், மறைதல். ஒளிமழுங்கல் - அழுங்கல், புல்லெனல், மட்கல், மழுங்கல். ஒற்றர் - சாரணர், சாரர், வேயர். ஒற்று - வேய், செங்கோட்டியா ழுறுப்பினுளொன்று. ஒற்றுமை - ஒருவந்தம், ஒருமை, குறிக்கோள், தோட்டிமை. ஒற்றெழுத்து - உடம்பு, உடல், புள்ளி, மெய், வியஞ்சனம், விராமம், உறுப்பு. ஒற்றைக்கைவகை - இணையா விணைக்கையெனவுஞ் சொல்லப் படும். அவையாவன :- பதாகை, திரிபதாகை, கத்தரிகை, தூபம், அராளம், இளம்பிறை, சுக துண் டம், முட்டிகடகம், சூசி, கமல கோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திரம், பிரகரம், தாம்பிர சூடம், பசாசம், குமுளம், பிண்டி, தெரிநிலை, மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதம், மகரமுகம், வலம்புரி யென்னு முப்பத்து மூன்றுமாம். அதனை “இணையா வினைக்கை யியம்புங் காலை - யணைவுறு பதாகை திரிபதாகையே - கத்ரிகை தூபமராள மிளம்பிறை - சுகதுண்டம் மேமுட்டிகடகஞ் - சூசிபதும கோசிகந் துணிந்த - மாசில் காங்கூலம் வழுவறுக பித்தம் - விற்பிடி தெரிநிலை யலாபத்தி ரம்மே - பிரமரந் தன் னோடு தாம்பிர சூடம் - பசாச முகுளம் பிண்டி தெரிநிலை - பேசிய மெய்ந்நிலை யுன்ன மண்டலஞ் - சதுரமான் றலை சங்கே வண்டே - யதிர் விலிலதை கபோத மகர முகம் - வலம்புரிதன்னொடு முப்பத்து மூன்றென் - றிலங்கு மொழிப் புலவரிசைத் தனரென்ப” என்னுஞ் செய்யுளானறிக. ஒன்று - ஏகம். ஓ ஓசனித்தல் - போதற் கொருப்பட்டு முகறல். ஓசுநர் - பரவர். ஓசைசெய்தளை - குடச்சூல், ஞெகி ழம். ஓடம் - அம்பி, நாவாய், பகடு, பஃறி. ஓடவகை - அரிமுகவம்பி, கரிமுக வம்பி, பரிமுகவம்பி. இவற்றுள் சிங்கமுக ஓடம் அரிமுகவம்பி யாம். யானைமுக ஓடம் கரிமுக வம்பியாம். குதிரைமுகவோடம் பரிமுக வம்பியாம். ஓடல் - இரிதல், நிமிர்தல், நீளல், நெறிதரல், பாறல். அன்றியு நேரோடல், ஆதி, தாரை, வீதி, வட்டமாயோடலின் பெயர் சாரிகை, சுற்றல், மாதிவாளி. ஓடை - தடாகம், நீர்நிலை, யாற்றி டைக் குறை. ஓடைமரம் - உலமை. ஓட்டல் - செலுத்தலின் பெயரைக் காண்க. ஓணான் - அண்டசம், ஓதி, ஓந்தி, ஓமான், சரடம், சாயாதனம், தண்டு, முசலி. ஓதல் - பாடமையாடல். ஓதும்பள்ளி - அறப்புறம். ஓத்து - நேர்மையான இனம் பொருந் திய இரத்தினங்களை வரிசையாக வைத்தாற்போல ஓரினப் பொரு ளையொரு வழி வைப்பதாம். ஒத்துரைப்போர் - கணக்காயர். ஓமகுண்டம் - தடம், நித்தியவீதி, வேதி, வேள்வி, வேள்விக் குண் டம். ஓமமண்டபம் - சமித்தம். ஓமவிறகு - சமிதை, முளரி. ஓமாலிகை - முழுகுதற்குரிய நன்னீ ரிலே யிடப்படுஞ் சுகந்தப்பொருள் களுளொன்று. அது முப்பத்திரு வகைப்படும். அவை யாவன :- இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், கத்தூரி, வேரி, இலா மிச்சம், கண்டில், வெண்ணெய், கடு நெல்லி, தான்றி, துத்தம், வணக்கச் சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னைத்தாது, புலிநகம், பூஞ்சரளம், தமாலம், வகுளம், பது முகம், நுண்ணேலம், கொடு வேரி நாகம், மதாவரிசி, தக் கோலம், நன்னாரி, வெண் கோட்டம். ஓய்வு - ஒரினப்பொருளை வரிசை படவைப்பது. ஓமைமரம் - உகா. ஓரறிவுயிர் - பரிசவுணர்ச்சி யொன்ற னையேயுடைய புல் மரம் முதலி யனவாம். ஓரீற்றுப்பசு - கிட்டி. ஓரொற்றுவாரம் - ஒரு மாத்திரை பெற்று வரும் நாடகச் செய்யுள். ஒர்குடியிற்கொண்டோன் - சகலன். ஓலமிடல் - அபயமிடல். ஓவியர் - சித்திரகாரர். ஓவியற்குடியிற் பிறந்தோன் - நல்லியக் கோடன் என்னும் அரசன். இவனி லங்கையிற் பிறந்து இந்தியாவில் வந்து ஆமூர், ஏயிற்பட்டினம், வேலூர் என்னும் மூன்றூரினு மிருந்து அரசாண்டவன். பகை வராலடிக்கப்பட்ட ஓர் காலத் திலே குன்றமெரிந்த குமரவேளை வழிபட்டு அவராஞ்ஞைப்படி தானீராடிய கேணிப்பூவை வேலாகப் பாவித் தெறிய அது சென்று பகைவரை யழிக்கத் தான் அரசு கைக்கொண்டானென்க. ஒள ஒளகம் - இடைப்பாட்டு கி - இடைப் பாட்டுக்கூத்தி. ஒளசு - நோற்பா குணவு. ஒளவையார் - இவர் சரசுவதியின் அவதாரமென்ப. கருவூர் ஆதி யென்பாள் வயிற்றிற் பகவன் என்னும் பிராமணர்க்குப் புத்திரி யாக அவதரித்து “நரப்புக் கருவி யோர் நண்ணிடு சேரியில் பாண ரகத்தி லௌவை பிறந்தனள்” என்பதனால் பாணர் சேரியில் வளர்ந்து வந்தனர். “இல்லறமல் லது நல்லறமன்று” என்று கூறி னாராயினும் பிரம சரிய விர தத்தை யநுட்டித்து வந்தனர். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, கல்வி யொழுக்கம், மூதுரை, நல்வழி, விநாயக ரகவல், பந்தனந்தாதி, அசதிக்கோவை, நன்னூற் கோவை, நான்மணிக் கோவை, அருந்தமிழ் மாலை, தரிசனப் பத்து, ஞானக்குறள் என் பவற்றோடு பிடக நிகண்டு என்னு நூலையும் பாடினர். முன்னைய வாய ஆத்தி சூடி கொன்றை வேந்தன் என்னு மிரண்டனை யும், (னுச. துhடிநே) டாக்டர் ஜோன் என்பவரும், (சுநஎ. க்ஷளைளடிவ யனே ளுரனபநn) றெவறெண்டு பிஸ்ஸெட் என்ப வரும் சட்சென் என்பவரும் ஆகிய ஆங்கிலர் மூவரும் வியந்து இங்கிலீஷ் பாஷையில் மொழி பெயர்த்திருக் கின்றனர். அன்றிச் சர்மனி பாடையாரும், உலாந்தாக் காரரும் தத்தம் பாஷையில் மொழி பெயர்த்திருக்கின்றனர். இவர் அதிகமான் வஞ்சியினாற் கொடுக்கப்பட்ட அமிழ்து விளை யும் கருநெல்லிப் பழத்தைப் புசித்து அநேக காலம் வசித்திருந்தனர் எனத் தெரிகின்றது. அது புற நானூற்றுச் செய்யுளாற் காட் டியுள்ளாம். இவர் பற்பல தனிப் பாடல்களைப் பாடினர். கணபதி பூசை செய்து அவர் துதிக்கை யாற் கைலைக்கு விட அங்கு வாழ்ந்திருக்கின்றனராம். க கக்கரி - வாலுங்கி. கங்கணம் - தொடி. கங்கை - சானவி, சுரநதி, திரிபதகை, பகீரதி, மந்தாகினி, வரநதி. கசப்பு - கடு, கைக்கை, கைத்தல், கைப்பு, கித்தம். கச்சபாலயஐயர் - காஞ்சிபுரத்தில் பிறந்தவர். ஆதி சைவப் பிராமண குலத்தவர். சைவசித்தாந்தக் கோட்பாடுடையவர். பார்க்கவ புராண மென்னும் விநாயக புரா ணத்தை வசன நடையில் எழுதின வர் இவரே. இவர் அநேக தனிப் பாடல்கள் செய்துள்ளார். கச்சியப்பசிவாசாரியசுவாமிகள் - தொண்டை மண்டலத்திற் சிறந்து விளங்காநின்ற காஞ்சிபுரத்தின் கண்ணே, ஆதிசைவர் குலத்திலே, கல்வி யறிவொழுக்கங்களினாலுஞ் சிவபத்தி சிவஞானங்களினாலுஞ் சிறப்புற்றோங்கிய காளத்தியப்ப சிவாசாரியர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் காஞ்சீபுரத் துள்ள குமரகோட்டத் தருச்ச கருள் ஒருவர். அவர் நெடுங் காலம் புத்திரனில்லாமையாற் பெருங் கவலை கொண்டு புத்திர பாக்கியத்தின் பொருட்டுக் குமர கோட்டத்தின் கண் எழுந்தருளிய பெருங்கருணைக் கடலாகிய சுப்பிரமணியக் கடவுளை விதிப் படி சிரத்தையோடும் உபாசித்துக் கொண்டு வந்தார். வரும்பொழுது, அக்கடவுளது திருவருளினாலே, தமிழ் நாட்டார்கள் சுப்பிரமணிய பத்தி பெற்றுய்யும் பொருட்டு, அச் சிவாசாரியருக்கு அவருடைய கற்பினிற் சிறந்த பத்தினியாரது அருமைத் திருவயிற்றில் ஒரு சற் புத்திரர் திருவவதாரஞ் செய்தார். அப்புத்திரருக்குக் கச்சியப்பர் என நாமகரணஞ் செயப்பட்டது. அவர் ஐந்தாம் வயசிலே வித்தி யாரம்பஞ்செயப் பெற்று, சம்ஸ் கிருதம் தமிழ் என்னும் இரண்டு பாஷைகளையுங் கற்பாராயினார். அன்பு அருள் வாய்மை பொறை அடக்கம் முதலிய நற்குணங்க ளெல்லாம் அவரோடுடன் வளர்ந் தன. அவர் ஏழாம் வயசிலே உப நயனஞ் செயப்பெற்று, வேதாத் தியயனஞ் செய்வாராயினார். சில காலத்துள்ளே சம்ஸ்கிருதத்தில் வேத வேதாங்கங்களையும் தமிழில் இலக்கண விலக்கியங்களையுங் கற்ற வல்லவராயினார். அவர் சிலகாலமாயபின்சமயதீiக்ஷ பெற்று, தமிழ் வேதமாகிய தேவார திருவாசகங்களை ஓதுவாரா யினார். அதன்பின் விசேஷ தீiக்ஷ பெற்றுச்சை வாகமங்களிற் கிரியா காண்டங்களைக் கற்றறிந்து கொண்டார். அதன் பின் நிருவாண தீiக்ஷயும் ஆசாரியா பிஷேகமும் பெற்று சைவாக மத்தின் ஞான காண்டங்களை ஓதி, அவற்றின் பொருளையும் தேவார திருவாச கங்களின் பொருளையுங் கேட்டு, அப்பொருள் வேதத்தின் ஞான காண்டங்களாகிய உப நிடதங் களின் பொருளோடு அபேதமா யிருக்கக்கண்டு, அதனைச் சிந்தித்துத் தெளிந்து கொண்டார். இவ்வியல் புடையராய் விளக்க முற்ற கச்சியப்ப சிவாசாரியார் குமர கோட்டத்துச் சுப்பிரமணியக் கடவுளை மெய்யன்போடு பூசை செய்து கொண்டு வந்தார். ஒரு நாட் சுப்பிரமணியக் கடவுள் கச்சி யப்ப சிவாசாரியருக்குச் சொப்ப னத்திலே தோன்றி, “அன்பனே, நீ காந்த புராணத் தாறு சங்கிதை களுட் சங்கர சங்கிதையின் முதற் கண்டமாகிய சிவரகசிய கண்டத்தி னுள்ள நமது சரித்திரத்தைக் கந்த புராணம் எனப் பெயரிட்டுத் தமிழிலே பெருங்காப்பியமாகப் பாடக்கடவாய்” என்று ஆஞ்ஞா பித்துத் “திகட சக்கரச் செம்முக மைந்துளான்” என்று அடி யெடுத்துக் கொடுத்து மறைந் தருளினார். உடனே கச்சியப்ப சிவாசாரியர் விழித்தெழுந்து அழ லிடைப்பட்ட மெழுகு போல நெஞ்ச நெக்குருக, உரோ மஞ் சிலிர்ப்ப, உரைதடு மாற, கரை யற்ற இன்பக் கடலின் அழுந்தி, “ஒன்றுக்கும் பற்றாத புழுத்த நாயினுங் கடையனாகிய தமியே னையும் ஒரு பொருட் படுத்து வந்தருளிச் செய்த எம் பெருமா னாகிய சுப்பிரமணியக் கடவுளது பெருங் கருணைத் திறம் இருந்த படி என்னை என்னை” என்று ஆனந்தக் கூத்தாடினார். மற்றைத்தினத்திலே கச்சியப்ப சிவாசாரியர் நித்திய கரும முடித்துக் கொண்டு, சுப்பிரமணிய பூசை செய்தபின், புராணம்பாட ஆரம் பித்தருளினார். நாடோறும் நூறு செய்யுள் பாடி, அவை எழுதப் பட்ட ஏட்டையும், எழுத் தாணி யையும் இராத்திரி காலப் பூசை முற்றிய பின் குமர கோட்டத் தடிகளுடைய திருவடிக் கீழ் வைத்து விட்டுத் திருக்கதவந் திருக்காப் பிட்டுக் கொண்டு தமது திருமாளி கைக்குப் போவார். பிற்றை நாட் காலையிலே நித்திய கரும முடித்துக் கொண்டு, பூசையின் பொருட்டுத் திருக்கோயிலினுள்ளே புகுந்து ஏட்டை எடுத்துப்பார்த்து, அதிற் சிலவிடங்களிலே திருத்தப்பட் டிருத்தல் கண்டு அதனைச் சிர மேற்கொண்டு ஆனந்த பரவச ராய்ச் சிறிது பொழுது நின்று பின் பூசை செய்வார். இவ்வாறே கச்சியப்ப சிவாசாரி யர் கந்தபுராணம்பாடி முடிந்த பின், அதனைக் குமர கோட்டத் தில் அரங்கேற்றும் பொருட்டுச் சுபதினமுஞ் சுபமுகூர்த்தமும் நிச்சயித்துக்கொண்டு எங்குமுள்ள சிவனடியார்களெல்லாருக்கும் பத்திரம் விடுத்தருளினார். ஏவ லாளர்கள் திருக்கோயிலையும் திருவீதிகளையும் மிக அலங்கரித் தார்கள். சுட்டப்பட்ட சுப தினத் திலே, திருநெறித் தமிழாகிய தேவார திருவாசகங்களில் வல்ல பெரியோர்களும், சிவாகம விற் பன்னர்களும், வேத வேதாங்க பண்டிதர்களும், பிரபுக்களும், பிறருமாகிய எல்லாரும் வந்து கூடினார்கள். கச்சியப்பசிவாசாரியர் குமர கோட்டத் தடிகளைப் பூசைசெய்து, அவர் சந்நிதானத்திலே மெழுகிப் பீட மிட்டு, அதன்மேற் பட்டை விரித்து, புஷ்பங்களைத் தூவித் தூபங் கொடுத்து, ஆசனங் கற்பித்து, கந்தபுராணத் திருமுறையை அதன்மேல் வைத்து அருச்சித்து வணங்கித் துதித்தார். பின்பு இருந்துகொண்டு, “திகட சக்கரச் செம்முக மைந்துளான்” என்னும் முதற் செய்யுளை ஒரு முறை வாசித்து, “திகழ் தக்கரச் செம் முகம் ஐந்து உளான்” என்றெடுத்து, “விளங்கா நின்ற பத்துத் திருக்கை களும் செவ்விய ஐந்து திருமுகங் களுமுள்ள சிவபெருமானுடைய” என்று பொருளருளிச் செய்தார். உடனே அங்கிருந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர் “சுவாமி காள், திகழ்தசம் திகடசம் எனப் புணர்தற்கு விதி தொல் காப்பிய முதலிய இலக் கண நூல்களுள் ஒன்றிலாயினும் இலையே” என்றார். அதற்குக் கச்சியப்ப சிவா சாரியர் “தாங்கள் கூறிய தொக் கும், ஆயின் இம் முதலடி என் வாக்கன்று, சங்கப் புலவராகிய சுப்பிரமணியக் கடவுளது திரு வாக்கு, அவரே எனக்கு இவ்வடி யெடுத்தத் தந் தருளினர்” என்றார். அது கேட்ட அப்புலவர் புன் முறுவல் செய்து, “சுப்பிரமணியக் கடவுள் சுவாமி களுக்கு இவ்வடி யெடுத்துத் தந்தருளியது சத்திய மாயின் ஆகுக ஆயினும் அது இரகசியம். அதனை நாங்கள் அங்கீகரிப்ப தெங்ஙனம்? அக் கடவுள் சுவாமிகளுக்குத் தோன்றி யதுபோல எங்களுக்குந் தோன்றி இவ்வடி நாமே எடுத்துக் கொடுத் தருளினோம் என்று திருவாய் மலர்ந் தருளின் அங்கீகரிப்போம் அன்றேல், இதற்கு யாதானுமோ ரிலக்கண நூலில் விதி காட்டின் அங்கீகரிப்போம். அல்லாக்கால், அரங்கேற்ற வொட்டேம்” என்றார். கச்சியப்ப சிவாசாரியர் “இவ் விரண்டினுள் ஒன்று நாளைச் செய்யப்படும்’ என்றருளிச் செய்து சபை யாரைப் போக்கி விட்டு, அற்றைத் தினத்திலே திருவமுது செய்யாது, இராத்திரி காலப் பூசை முற்றிய பின் திருக் கதவம் திருக்காப்பிட்டுக் கொண்டு சந்நிதியிலே தரையிலே சயனித் தருளினார். அப்பொழுது சுப்பிர மணியக் கடவுள் கச்சியப்ப சிவா சாரியருக்குச் சொப்பணத்திலே தோன்றி, “அன்பனே சோழ தேசத்தில் வீர சோழியம் என்று ஓரிலக்கண நூலிருக்கின்றது திகழ்தசம் திகடசம் எனப் புணர் தற்கு அந்நூலிற் சந்தி படலத்திற் பதினெட்டாஞ் செய்யுளிலிருக் கின்றது. சோழ தேசத்துப் புலவ னொருவன் அந் நூலை நாளைக்கு இவ்விடத்திற் கொண்டு வந்து அவ்விதியை எல்லாருக்குங் காட் டுவன்” என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். மற்றைநாட் சபையா ரெல்லாருங் கூடி யிருந்தபொழுது, கச்சியப்ப சிவாசாரியர் தமக்கு முருகக் கட வுள் சொப்பனத்தில் அருளிச் செய்தமையை அவர்களுக்குச் சொல்லி யருளினார். உடனே ஒரு புலவர் ஒரு புத்தகங் கையிற் கொண்டு அங்கே வந்தனர். அவரை அங்குள்ளோர்கள் நோக்கி, “நீர் யாவர்? உமது கையிற் புத்தகம் யாது?” என்று வினவினார்கள். அதற்கு அப் புலவர் “நாம் சோழ தேசத்துள்ளேம், இப் புத்தகம் வீர சோழியம்” என்றார். அப்பொழுது முன்னை நாளின் ஆnக்ஷபித்த புலவர் விரைந்து சென்று, அப் புத்தகத்தை வாங்கிச் சந்தி படலத் திற் பதினெட்டாஞ் செய்யுளை வாசித்துத் திகட சக்கரம் என்னும் புணர்ச்சிக்கு விதி அதிலிருத்தலை உணர்ந்து விம்மிதமும் மகிழ்ச்சியு முற்றனர். மற்றைத் தமிழ்ப்புலவர் களும் ஒருவர்பின் ஒருவராக அதனை வாங்கிப்பார்த்து விம் மிதமும் மகிழ்ச்சியு முற்றார்கள். இறுதியிலே சோழ தேசத்துப் புலவர் அப்புத்தகத்தைக் கச்சியப்ப சிவாசாரியர் கையிற் கொடுத்து, சபையாரெல்லாரையும் நோக்கி, “ஆnக்ஷபம் ஒழிந்ததா” என்று சொல்லிவிட்டு மறைந்தருளினார். உடனே கச்சியப்ப சிவாசாரியர் தம்மையாண்டருளிய அறுமுகக் கடவுளது பெருங்கருணைத் திறத்தை நினைந்து நினைந்து, சரீரம் விதிர்ப்புற, மயிர்க்கா றோறும் திவலை உண்டாக, என் பெல்லாம் நெக்கு நெக்குருக, மத கிடைப் புறப்படும் சலம் போல ஆனந்த பாஷ்பம் பொழி யப்பரா நந்த பரவசராய் எழுந்தருளியிருந் தார். அப்பொழுது சபையாரெல்லா ரும் இங்ஙனம் எழுந்தருளி வந்த புலவர் குமாரக் கடவுளே என்று துணிந்து ஆச்சரியமடைந்து, வெயி லிடைப்பட்ட வெண்ணெய் போல மனங்கசிந்துருக உரோமஞ் சிலிர்ப்பக் குறுவேர்வை கொள்ள ஆனந்த வருவி சொரிய ஆனந்தக் கூத்தாடிக் கச்சியப்ப சிவாசாரிய ருடைய பெருமையை நன்குணர்ந்து, அவர் திருவடிகளில் அடியற்ற மரம்போல் விழுந்து நமஸ்கரித்து, அவரைத் தோத்திரஞ் செய்தார் கள். ஆnக்ஷபஞ் செய்த புலவர் கச்சியப்ப சிவாசாரியரைப் பல தரமும் நமஸ்கரித்து, “எம்பெரு மானே, புழுத்த நாயி னுங்கடை யேனாகிய தமியேன் சுவாமிக ளுடைய மகிமையைச் சிறிதும் அறியாது ஆnக்ஷபித்த பெருங் குற்றத்தைப் பொறுத்து அடியேன் மீது திருவருள் சுரந்தருளுக” என்று அதிவிநயத்தோடு பிரார்த்தித்து, மீட்டும் அடியற்ற மரம்போல் வீழ்ந்து கிடந்தார். கச்சியப்ப சிவா சாரியர் எழுந்து, அப்புலவருடைய இரண்டு கைகளையும் தம்மு டைய அருமைத் திருக்கைகளி னாலே பற்றி யெடுத்து இறுகத் தழுவி, “ஐயரே, தங்கள் ஆnக்ஷ பத்தினாலன்றோ இச் சபையா ரெல்லாருக்கும் திருவருளி னுண்மை வெளிப்பட்டது. இதன் பொருட்டுத் தங்களுக்குச் செயற் பாலதாகிய கைம்மாறு யாது, அறியேம் அறியேம்” என்று பாராட்டியருளினார். அதன்பின் சபையா ரெல்லாரும் நமஸ்கரித்து, “சுவாமிகள், இனிப் புராணத்தைத் தடையின்றி அரங் கேற்ற ஆரம்பித்தருளுக” என்று விண்ணப்பஞ் செய்தார்கள். அங் ஙனமே கச்சியப்ப சிவாசாரியர் அரங்கேற்றுவாராயினார். காஞ்சித் திருநகரத்திலுள்ள ஆதிசைவர்கள் முதலானவர்களுக்கும் கந்த புராணங் கேட்க வந்த எண்ணிறந்த அடியார்களுக்கும் போசன முதலி யவைகளெல்லாம் தொண்டை நாட்டுள்ள இரு பத்து நான்கு கோட்டத்து வேளாளப் பிரபுக் களுடைய செலவினாலே நடந்தன. எல்லாரும் நியமமாக வந்து பேராசையோடு கேட்கக் கச்சியப்ப சிவாசாரியர் தினந்தோறும் புராணம் வாசித்துப் பொருள் சொல்லி ஒரு வருஷத்திலே முடித் தருளினார். புராண முற்றுப் பெற்றவுடனே கச்சியப்ப சிவாசாரியார் புராணத் திருமுறையை விதிப்படி அருச் சனை செய்து நமஸ்கரித்தார். அப்பொழுது அங்குள்ள எத்திறத் தார்களும் அன்பினோடு விம்மி விம்மித் தண்டாகாரமாக விழுந்து, கச்சியப்ப சிவாசாரியரை நமஸ் கரித்தெழுந்து, இரண்டு கைக ளுஞ் சிரசின்மேலேறிக்குவிய நின்று துதித்தார்கள். கச்சியப்ப சிவாசாரியர் கந்தபுராணத் திரு முறையோடுந் தந்தச் சிவிகையில் எழுந்தருளி, இருபத்துநான்கு கோட்டத்துமுள்ள வேளாமை யுள்ள வேளாளப் பிரபுக்களுள்ளே சிலர் சிவிகை தாங்க, சிலர் வெண் சாரம், வீச, சிலர் குடை கொடி பிடிக்க, நானாவித மங்கல வாத்திய வொலியினாலே திக்குகளெல் லாஞ் செவிடுபட, பிராமணர்கள் வேதகோஷஞ் செய்ய, சிவனடி யார்கள் சரவண பவ! சரவண பவ!! என்று சொல்லும் பேரொலி தழைக்க திருநகர வாசிகள் திரு வீதிகடோறுஞ் சுத்தி செய்து வாழைகள் நாட்டித் தோரணங் கள் நிரைத்துப் பூமாலைகள் தூக்கிப் பூரண கும்பங்கள் வைத்துப் பொரி தூவித் திரு விளக்கேற்றி அறுகெடுக்க, தமது அருமைத் திருமேனியிலே தரிக் கப்பட்ட திருபுண்டரத்தின் அழ கையும், உருத்திராக்ஷ மாலை களின் அழகையும் சின்முத்திரை யையும், திருக்கண்களினின்று பொழியும் பரமானந்த வாரியை யும், அடியார்கள் கண்டு மன நெக்கு நெக்குருக வணங்கித் துதித்து ஆனந்தக் கூத்தாட, திரு வீதிவலஞ் செய்து, குமர கோட்டச் சந்நிதியை அடைந்து சிவிகையி னின்றும் இறங்கித் திருமுறையைத் திருக்கோயிலினுள்ளே கொண்டு போய்த் திரு முன்னே வைத்தருளி னார். உடனே எல்லாரும் கச்சி யப்ப சிவாசாரியரை, அவர் “அமை யும் அமையும்” என்ற வழியும் தவிராது, ஆராமையினாலே பல காலும், நமஸ்கரித்து, “பரம கருணாநிதி யாகிய எம்பெருமான் தமிழ் நாட் டாரெல்லாரும் பிழைக்கும் பொருட்டுத் திருவாய் மலர்ந் தருளிய அப்புராணமாகிய திவ்வியாமிர்தத்தை அடியேங்கள் எஞ்செவி வாய்மடுத்து உய்ந்தனம் உய்ந்தனம்” என்று விண்ணப்பஞ் செய்து இன்பமுற்றார்கள். தமிழ்நாடெங்கு முள்ள சிவனடி யார்களெல்லாரும், இக்கந்த புராணத்தை மிகப் பாராட்டி, சிரத்தையோடு எழுதுவோரும், வாசிப்போரும், பொருள் சொல் வோரும், கேட்போருமாய் இதன் சொற்சுவை பொருட்சுவைகளை அனுபவித்துப பேரானந்தப் பெருஞ் செல்வம் அடைந்தார்கள். பெருங்கருணைப் பிழம்பாகிய கச்சியப்ப சிவாசாரியர் பின்னருஞ் சில காலம் குமரகோட்டத் தடி களைப் பூசை பண்ணிக் கொண் டும் ஞான நிட்டை செய்து கொண்டும் இருந்து, அகண்டா கார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நின்ற சிவத்தோடும் இரண்டறக் கலந்தனர். இந்தக் கந்தபுராணத்தை விதிப்படி மெய்யன்போடு நியமமாகக் கேட்பவர்கள், நோய் நீக்கம், செல்வம், புத்திர பாக்கியம், சத்துரு ஐயம், இராச வசியம் முதலிய பயன்களைத் தாந்தாம் வேண்டியவாறே பெறுவர்கள். இது நெடுங்காலம் பலராலும் அநுபவத்தினால் நிச்சயித் துணரப்பட்ட விஷயம். இது சத்தியம் சத்தியம் முக்காலுஞ் சத்தியம். கச்சியப்பமுனிவரர் - இந் நூலாசிரியர் பெயர் கச்சியப்பமுனிவர். ஸ்ரீகைலாச பரம்பரைத் திருவா வடுதுறை ஆதீனத்து ஸ்ரீ நமச்சி வாய மூர்த்திகள் மரபில் அநுக் கிரகம் பெற்றவருந் தமிழ்ப் பாஷை தழைத்தோங்கும் வண்ணம் அவ தரித்த மஹான்களுள் ஒருவரு மாய் இச்சிரேஷ்டாசிரியர் இற்றைக்கு ஏறக்குறைய நூற்றைம் பது வருஷத்திற்குமுன், தொண்டை மண்டலத்திலே, தணிகைத் திருப் பதியிலே, காஞ்சி புரத்துப் பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே, அபிஷித் தர் மரபிலே அவதரித்து ஒழுக்கம் அன்பு அருள் முதலிய நற்குணங்களோடு வளருவாராயினார். தந்தை தாயர்களாற் றக்க பிராயத் திலே வித்தியாரம்பஞ் செய்விக்கப் பெற்றுச் சிறிது கல்விகற்ற அளவிலே அவர் சிவபுண்ணிய மேலீட்டினாலே சிவnக்ஷத்திர யாத்திரை செய்யத் தொடங்கினார் தொண்டை நாட்டிலுள்ள சிவ ஸ்தலங்கள் யாவுந் தரிசித்துக் கொண்டு, சோழநாட்டிலே விராட்புருடனுக்கு இருதய ஸ்தானமாகிய சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்தார். பின்னர் ஸ்ரீஞானக்கோமுத்தி, நவகோடி சித்தவாசபுரம், அரச வனம் ஆதியாகிய திருப் பெயர் கள் பூண்ட திருவாவடு துறையை அடைந்து, மடாலயத் தினுள்ளே புகுந்து, திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ பானுமாகிய ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளைத் தரிசித்துத், திருவருணோக்கஞ் சித்திக்கப் பெற்று, அப்பொழுது அத் திருமரபிற் சின்னப் பட்டத் தில் எழுந்தருளியிருந்த ஞானா சாரியராகியபின் வேலப்ப தேசிகரை ஒடுக்கத்திலே போய்த் தரிசித்துப் பேரன்போடு வணங் கினார். வணங்கியபின் அந்த ஞான தேசிகரிடத்திற்றானே சைவ சந்நி யாசமும் சிவதீiக்ஷயும் பெற்றுக் கொண்டார். இங்ஙனம் சிவதீiக்ஷ பெற்ற கச்சி யப்ப முனிவர், அகத்திய மஹா ரிஷியின் வரத்தினாற்றென்னாட் டில் அவதரித்து, எளிதிலே வட மொழி தென்மொழிக் கடல்கள் கரைகண் டுணர்ந்து, அவ்வே லப்ப தேசிகராகிய ஞானா சாரிய ரிடத்தே அனுக்கிரகம் பெற்று, மெய்யுணர்வின் முதிர்ந்து சித் தாந்த சைவ சிவஞான யோகீஸ் வரரை வித்தியா குரவராகக் கொண்டு அம் மெய்ஞ்ஞான முனிவரிடத்தே தென்மொழி யிலே பல இலக்கண நூல்களும் இலக்கியங்களுந் தருக்கமுஞ், சிவஞான நூல்களாகிய மெய் கண்ட சாஸ்திரம் பதினான்கும் பண்டார சாஸ்திரம் பதினான் கும் மற்றும் பல நூல்களும் ஒதி யுணர்ந்து, கல்வி கேள்விகளில் முற்றுப்பேறுடைய மஹா வித் துவானெனப் பெயர் பெற்று, அச் சிவஞான யோகிகளுடைய மாணாக்கராகிய இலக்கணம் சிதம்பரநாத முனிவர், தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவர், காஞ்சிபுரம் சரவணபத்தர், சிதம் பர பத்தர், இராமநாதபுரம் சோம சுந்தரம் பிள்ளை முதலிய பல்லோ ருள்ளும் மிகச் சிறந்தவராய் வீற் றிருந்தார். “இணரூழ்த்து நாறா மலரனையார் கற்றதுணர விரித்துரையாதார்” எனவும் “உய்த்துணர்ந்துஞ்சொல் வன்மையின் லெனி னென்னா மஃதுடைத்தேற் பொன்மலர் நாற்ற முடைத்து” எனவும் நாய னாராதியர் கூறியதற்கு இவரோர் இலக்கிய மாகத் திகழ்ந்தனர். இவரது வாக்கு வல்லபத்தையும் பிரசங்க சாதுரியத்தையும் புகழா தார் இல்லை. இவர்செய்யுளி யற்றும் விரைவு நெட்டுருப் பண்ணிய பழம் பாடம் ஒப்பித் தல் போல் இருந்ததென்று சொல் லுவர். இது மட்டோ? காலம் இடங் கட்குத் தக்கபிரகா ரம் நூதனம் நூதனமான யுக்திகள் வேண்டியவாறு அவரது வாயி னின்றுஞ் சனித்துக் கொண் டிருக்குமானால் அவர் பெருமை இத் துணைத்தென்று சொல்லற்பா லதா? பின்பு கச்சியப்ப முனிவரர் சிவ பெருமான் அப்புலிங்க மூர்த்தி யாக எழுந்தருளியிருக்கப்பெற்ற திருவானைக்காவில் அமர்ந்திருந்த பொழுது திருவானைக் காப் புராணமும் பூவாளூர்ப் புராணமும் மொழிபெயர்த்தருளினார். பின்னர்க் கொங்கநாட்டிலே விராட் புருடனுக்கு விந்துஸ்தான மாகிய ஆதிபுரியென்னுந்திருப் போரூரிற்கு எழுந்தருளி ஆண்டுச் சின்னாள் வதிந்து, பேரூர்ப் புராணம் மொழிபெயர்த் தருளி னார். அதன்பின் திருத்தணிசென்று ஆங்குச்சிலகாலம் வீற்றிருந்து, இயற்றமிழ்ப் போதகாசிரியர் விசாகப் பெருமாளையர், வித் அவான் சரவணப் பெரு மாளை யர் இருவருக்கும் பிதாவாகிய கந்தப் பையர் முதலாயினோர்க் குக் கல்வி கற்பித்தருளினார். அப் பொழுது அன்னோரும் அன் னோரன்ன பிறருந் தமிழிற்கு ஓர் புறச் சமயியாற் செய்யப்பட்ட சீவக சிந்தாமணியைப் பேரிலக் கியமாகக் கொண்டாடுதலைப் பார்த்துத், தமிழில் அவ்வித மாட் சிமை பொருந்திய இலக்கியம் பிறிதின்மையான் மனக்கவற்சி யுடையாய், அக் குறையைத் தாமே முடித்தல் வேண்டு மென்று திரு வுளத் தமைத்து இத்தணி கைப் புராணத்தை அருளிச் செய் தார். சொல்வளம் செய்யுணடை, சந்தம். பொருட்சுவை யென்றிவற்றில் தமிழிலுள்ள எந்த இலக்கியமும் இதற்கு மேற்பட்டில தென்பது இதனை வாசிப் போர்க்கு எளிதில் விளங்கும். சீவகசிந்தாமணியின் சந்ததமும் வனப்பும் இதில் யாண்டுங் காணலாம். தம்மாணாக்கரிற் சிறந்தவராகிய கந்தப்பையருக்கு வயிற்றிலே ஓர் குன்ம நோயுண்டு பட்ட பொழுது தணிகையாற்றுப் படையைப்பாடி அவர் நோயை மாற்றியருளினார். அதனான் அவர் எத்தனைச் சிவானு பூதிமா னென்பது தெள்ளிதிற் புலப்படும். இவையன்றித் திருத் தணிகைப் பதிற்றுப் பத்தாந்தாதி யும் வேறு சில பிரபந்தங்களும் அங்கே இருந்தபொழுது இயற்றி னார். பின்பு சென்னைமாநகர்க்குச் சென்று ஆங்குச் சிறிதுகாலம் வதிந்தார். அப்பொழுது அவ் விடத்துப் பக்த ஜனங்களுட் பிரபுக்களா யுள்ளோர் பலரது வேண்டுகோட் கிசைந்து விநாயக புராணம் சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ் முதலியன இயற்றி, அவர்கள் அடியுறையாக இரண்டாயிரம் வராகனிட அதைக் கொண்டு திருவாவடு துறையில் ஆதீன பரமாசாரி யராகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் சந்நிதி மண்டபப்பணி அணி பெறச் செய்வித் தருளினர். விநாயக புராணம் அரங்கேற்றிய சபைக்கு ஐயாப்பிள்ளை என்னும் ஒரு பெரியபிரபு, தாம்வர இதென்ன இராமாயணமா என்று சற்றிகழ்ந் தனர். மற்றப் பிரபுக்கள் முனி வர்க்கு அதனை மறைத்தும், அவர் யாரும் பிரமிக்கத், தமது புரா ணத்தை ஆரம்பியாது, இராமா யணத்தை எடுத்துக் கொண்டு, முதல் ஆறு செய்யுளில் நூறு குற்றம் ஏற்றினார். உடனே அப் பிரபு, நூறு வராகனும் மிக உயர்ந்த பட்டு வஸ்திராதிகளுங் கொண்டு போய்ப்பாத காணிக்கையாக வைத்துத், தீர்க்க தண்டஞ் சமர்ப் பித்துத், தேவரீர், சுவாமிகள் மகத்துவம் அறியாத ஏழையை மன்னித்தருள்க வென்று விண் ணப்பஞ் செய்ய, அதன்மேற் தமது புராணத்தை ஆரம்பித்து அரங் கேற்றினார். இம்முனிவர் சென்னப்பட்டணத் திலிருக்கும் போது, காஞ்சிபுரத் தில் எழுந்தருளியிருந்த அவராசி ரியராகிய சிவஞான யோகிகள் பால் ஆங்குள்ள தமிழ் வித்து வான்கள் ஒருங்கு சேர்ந்து, நீவிர் காஞ்சி மான்மியஞ் செய்யப் புகுந்து அதன்கட் கடவுள் வாழ்த் திற் “சங்கேந்து மலர்க் குடங்கைப் புத்தேளு மறைக்கோவுந் தழல் கால் சூலமங்கேந்து மம்மானுந் தத்தமது தொழிறலை நின்றாற்றச் செய்தோர் - பங் கேந்தும் பெரு மாட்டி விழிக ளிப்ப விருமுனிவர் பணிந்து போற்றக் - கொங்கேந்து மணி மன்றுட் குனித்தருளும் பெரு வாழ்வைக் குறித்து வாழ்வாம்” என்னுஞ் சபாநாயகர் துதியை முன்னர் அமைத்துத் “தணந்த பெருந் துயர்க் கடன்மீக் கூர்த லினான் மலைபயந்த தரளமூரற் - கணங்குழையாள் புரிபூசை முடி வளவுந் தரியாம லிடையே கம்பை - யணங் கினைத்தூ தென விடுத்து வலிந்திறுகத் தழீஇக் கொள்ள வமையாக்காதன் - மணந்தருளிக் குறி பூண்டவொரு மாவிற் பெரு மானை வணக்கஞ் செய்வாம்” எனத்தலநாயகராகிய ஏகம்பநாதர் துதியைப் பின்னர் வைத்தது தவறென்று சாதித்தனர். அவர் தமது மாணாக்கனைக் கொண்டு அவர்களைப் பங்கப் படுத்துவதே தகுமென்று திருவுளத் தமைத்து அதனைக் கச்சியப்ப முனிவருக்குத் தெரிவித்தார். உடனே முனிவரர் சென்னையினின்றும் புறப்பட்டுக் காஞ்சிக்குச் சென்று அனைவரை யும் ஏகம்பநாதர் மண்டபத்திற் சேரச் செய்து பிரசங்கம் பண்ண ஆரம்பிப்பாராகி, அந்த ஸ்தலத்து ஓதுவாரை நோக்கிச் சமய குரவர்க ளாகிய நாயன் மாராற் பாடப் பட்ட தேவாரத் திருமுறையில் இந்த ஸ்தலத்துப் பதிகங்களுள் ஒன்றனை முதலிலே ஓதும்படி சொல்ல அவர்கள், “திருச்சிற்றம் பலம்” என்று தொடங்கினர். அப் பொழுது அவர் வித்துவான்களை நோக்கி இவர்கள் “திருச்சிற்றம் பலம்” என்று ஆரம்பிக்கின்றார் களே, இது உங்கட்குச்சம்மதி தானோ? இவர்களை யெல்லாம் நீங்கள் சேர்ந்து இச்சந்நிதியில் இந்த ஸ்தலத்துப் பதிகங்களைப் பிருது வியம்பலம் என்று சொல்லி ஆரம்பிக்கும்படி செய்யக் கூடாதா வென்ன அனைவரும் வாயெடாது ஊமர்கள் போலத் தலைவணங்கி யிருந்தனர். அதன்மேற் கடவுள் வாழ்த்தில், முன்னர் விநாயக வணக்கமும், அதன் சபாநாயர் துதியுங் கூறுதலே சிறந்ததென்று பலபல பிரபல நியாயங்கள் காட்டி அவ் வித்துவான்கள் அவமான மடையச் செய்தனர். பின்னர் ஸ்ரீகாஞ்சிநகரத்தில் எழுந் தருளியிருக்கத் திருவுளங் கொண் டார். அங்கே வீற்றிருந்த போது தமது ஆசிரியர் சொல்லைத் தலைமேற் கொண்டுகாஞ்சிப் புராணத்து இரண்டாங் காண்டஞ் செய்தருளிப், பின்புகச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது, கச்சி யானந்தருத்திரேசர் பதிற்றுப் பத்தந்தாதி, பஞ்சாக்கரவந்தாதி யென்று இன்னோரன்ன பல நூல்கள் இயற்றியருளினார். இங்ஙனம்லோகோபகாரமாகப் பல நூல்கள் இயற்றிப், பல நன் மாணாக்கர்களுக்குக் கற்பித்துத் தமிழ் மொழியை அபிவிர்த்தி செய்து, சிவப்பேற்றிற்குக் காரண மாகிய சிவத்தியானாதிகளி னுறைப்பில் வதிந்தருளிக், கச்சி யப்ப முனிவரர் ஸ்ரீ காஞ்சி புரத்திலே சாலிவாகன சகாப்தம் 1812-க்குச் சரியான சாதாரண´ சித்திரைµ 112 யாகிய மங்கள வாரத்தில், புனர் பூச நக்ஷத்திரமும் பூருவ பக்ஷத்துச் சத்தமியுங் கூடிய கும்பலக்கினத்திற் பரிபூரண தசை யடைந்தனர். கச்சின்றலைப்பு - கஞ்சகம், சாரவாரம். கச்சு - பண்டிகை, வம்பு, வார், சிவிகை. கஞ்சா - கஞ்சம், குல்லை, கள். கஞ்சி - காடி, குழம்பு, பாகு, பாத்து, மோழை, வர்க்கு, அன்னப்பால். கடகக்கை - பெருவிரல் நுனியும் சுட்டு விரலின் நுனியும் பொருந்த வளைந்த நக நுனியைப் பொருந்தி நிற்ப மற்றைய மூன்று விரல்களும் நிமிர்ந்து நிற்பன வாம். அதனை “கடக முகமே கருதுங் காலைப் - பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு - மருவ வளைந்தவ் வுகிர் நுனி கௌவி - யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர - மொழிந்தன ரென்ப முடி பறிந்தோரே” என்னுஞ் சூத்திரத் தானறிக. கடத்தல் - அகறல், இகத்தல், உகளு தல், கழிதல், குதித்தல், குப்புறல், தாண்டல், தாவுதல், நீடுதல், நீந்தல், வாவுதல், செலுத்தல், நடத் தல், பாய்தல், பொழுது போக்கல், மீறுதல், வெல்லுதல். கடமை - காட்டுப்பசு, கடன், முறைமை. கடகம் - கங்கணம், கண்டிகை, கை வளை. கடகாவருத்தக்கை - இரண்டு கையுங் ககமாய் மணிச்சருக்குக் ஏற இயைந்து நிற்பது. அதனை ‘கரு திய கடகாவருத்தக் கையே யிரு கையுங் கடக மணக்கட் டியை வது’ என்னுஞ் சூத்திரத் தானதக. கடமையின்குட்டி - கன்று, குழவி. கடம்பு - அரத்தம், இந்துளம், கதம்பம், நீபம், விசாலம், அன்றியு நிலக் கடம்பு - கோகனம். வெண் கடம்பு - மரா, மராமரம். கடலை - சூரம், மஞ்சூரம், நவதானி யத்து ளொன்று. கடல் - அத்தி, அப்பு, அம்பரம், அம்பு ராசி, அம்போதி, அரி, அருணவம், அலை, அளக்கர், ஆர்கலி, ஊழி, உததி, உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார் கோள், குரவை, சக்கரம், சமுத் திரம், சலதி, சலநிதி, சலராசி, சாகரம், சிந்து, தெண் டிரை, நதிபதி நரலை, நீராழி, நேமி, பயோததி, பரப்பு, பரவை, பாரா வாரம், புணரி, பெருநீர், பௌ வம், மகராலயம், மகோததி, முந்நீர், வாரம், வாரணம், வாராசி, வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை, அன்னவம். கடல்சார்ந்தநிலம் - நெய்தல். கடல்படுதிரவியம் - உப்பு, ஒக்கோலை, சங்கு, பவளம், முத்து. கடவுண்மகாமுனிவர் - இவர் கச்சி யப்பமுனிவரர் காலத்தி லிருந்த வோர்புலவர். இலக்கணம் சிதம் பரநாத முனிவர் சகோதரன் என்பர். இவர் ஓர் குரூரநோய் வாய்ப்பட்டு உழந்ததைக் கண் ணுற்ற முனிவரனார் தம் உள்ளத் தாற் கிளர்ந்த அன்பு மேலீட் டாலே அவரை நோக்கி, நீவிர் வாத வூரடிகள் திருச்சரிதத்தைப் புராணமாகப் பாடு திரென்ன அங்ஙனம் பாடி முடித்துத் தம் நோய் நீங்கப் பெற்றனர் என்ப. இவர் பாடிய புராணத்திற்குத் திருவாத வூரடிகள் புராணம் என்று பெயர். அது ஏழு சருக்கங் களையும், 544 செய்யுள்களையு முடைத்து. கடவுண்மணி - நிதானம். கடவுமரம் - கடவை, கவரிறுக்கு, நடவை, மடவை. கடவுள் - அகண்டாகண்டன், அக நிலை, அகாரி, அசலன், அச்சயன், அச்சுதன், அடிகள், அதி குணன், அதுலன், அத்தன், அந்தாதி, அபயன், அமலன், அருட்குடை யோன், அருளாழி, வேந்தன், அரூபி, அறக்கொடி யோன், அற வாழி மன்னன், அறுகுணன், அனகன், அனந்த ஞானி, அனந்த லோசனன், அனந்தன், அனாதி, ஆதி, ஆதி புங்கவன், இறை யோன், ஈசன், ஈச்சுரன், ஈறிலி, உள்வழி, கடந்தோன், உள்ளத் துறை வோன், எண்குணன், ஏக தேவன், ஏகன், ஐ, ஐம்புலத் தடங் கான், கருணாலயன், கருத்தா, குணநிதி, குணபத்திரன், சக நாதன், சகலவியாபி, சச்சிதா நந்தன், சதா நந்தன், சயம்பு, சரு வேச்சுரன், சாமி, சீபதி, சோதி, தற்பரன், தனிக்கோலான், தாப ரன், தேவன், தேவாதி நாயகன், நிதானன், நித்தன், நிமலன், நிரஞ்சனன், நிரந்தரன், நிரம் பரன், நிராமயன், நிருநாமன், நிருமலன், நிரூபன், நீதிபரன், பகவன், பகாப் பொருள், பரஞ் சோதி, பரதுக் கதுக்கன், பரப் பிரமம், பரமம், பரமேச்சுரன், பரம், பராபரம், பிதா, பிரமம், பிரான், பிறப்பிறப்பில்லான், புங்கவன், பூரணன், மயேச்சுரன், மாசேனன், முக்குற்றங் கடிந் தோன், முதலோன், முத்தொழில் பகவன், முழுதொருங் குணர்ந் தோன், முன்னூற்கேள்வன், முன் னோன், மூவுலகாதாரன், மூவுல காளி, மூவுலகேந்தி, விதித்தோன், விமலன், வினைவிநாசன், வேதன், வேதா, வேதாந்தன், வேதார்த்தன். கடற்கரை - பாராவாரம், வேலை, கடலருகு. கடற்கரையிற் பலபலதீவிற் பண்டம் விற்குமூர் - பட்டினம். கடற்றிரை - அலை, அறல், ஓதம், சீகரம், தரங்கம், புணரி. அன்றி யும், பெருந்திரையின் பெயர் - உல்லோலம், கல்லோலம். கடன் - இருணம், இறை, முறைமை, கடமை. கடாரமென்னுமூர் - காழகம். கடிகைமாக்கள் - எட்டர், கவிகள், கறோர், வண்டர், வந்திகள். கடிகைமாக்கன் - மங்கல் பாடகர். கடிகைமுத்துப்புலவர் - இவர் திரு நெல்வேலியைச் சார்ந்த எட்டியா புரத்திற் பிறந்து அவ்வூர் அரச னாகிய சகவீரராம வேங்கடேசு வர எட்டப்ப நாயகனது சமஸ் தான வித்துவானாய் இருந்தனர். இவர் காலம் 18 வது நூற்றாண்டு, சாதிவேளாளர். இவரது பாடல் கள் மிகச் சிறந்த வருணனை களை யுடையது. நூறு செய்யுள் கொண்ட “கழிகரைப் புலம்பல்” என்னுஞ் சமுத்திர விலாசத்திற்கு இவர் ஆக்கியோர். 320 செய்யுள் கொண்ட “திக்கு விசயம்” என் னும் நூலையுஞ் செய்தனர். கடிகையார் - அரசனுக்குச் சென்ற நாழிகைக்குக் கவி சொல்லுவார். கடிப்பகை - வெண்சிறு கடுகு. கடிப்பு - குணில். கடிவாளப்பூண் - விருளை. கடுகு - ஐயவி, கடிப்பகை, வெண் கடுகு, சித்தார்த்தம். கடுக்காய்மரம் - அரிதகி, கடு, பத்தியம். கடுங்கோன் - தலைச்சங்க மிருத்திய பாண்டியர்களில் இறுதியான். கடுப்பு - ஒல்லை, கடுமை, கதமவு, கதனம், துரிதம், நொறில், வல்லை. கடுமரம் - அரிதகி, பத்தியம். கடுவனென்னும் பெயர் - குரங்கு, பூஞை. கடை - அந்தம், இறுதி, ஈறு, எல்லை, முடிதல், முடிவு, முற்றும், வாயில், பின். கடைக்கண்பார்வை - அபாங்கம், கடாக்ஷம், சிறக்கணிப்பு. கடைக்கூட்டல் - ஒருப்படுத்தல் அனுபவத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தல். கடைக்கொள்ளி - இராதம், உற்கை, ஞெகிழி, முளரி, அலாதம், உற்கம். கடைதல் - கவர்தல், குடைதல், ஞெலிதல், துருவல், மதநம், மதித் தல், கலக்குதல் மரம் உலோகம் முதலிய வைகளிலே சில சேர்க்கை வடிவப்பொருள்களைச் செய்தல். கடையவாடல் - கடைசிக்கூத்து, இந்தி ராணியாடல். இதற்கு உறுப்பு - ஆறு. கடையவாடற்கூத்து - பதினோ ராடலுளொன்று வாணாசுரனு டைய வடக்கு வாயிற்கணுள்ள வயலிடத்தே நின்று இந்திராணி யாடியது. கடைவீதி - அங்காடி, ஆபணம், ஆவணம், ஆவணியம், கூலம், நியமம், பீடிகை, விபணி, வீபணி. கட்டல் - அசைத்தல், ஆர்த்தல், இசைத்தல், இமித்தல், சிமிழ்த்தல், சுருக்கல், துவக்கல், தொடர்தல், தொடுத்தல், பிணித்தல், பிணைத் தல், யாத்தல், யாப்புறல், வளைத் தல், விசித்தல், வீக்குதல், பந்தம், கட்டுதல், உடுத்தல், தோண்டல். கட்டழகு - காமர், அலங்காரம், பேரழகு. கட்டில் - அங்கம், அரி, பரியங்கம், பாண்டில், பாரி, மஞ்சம், மஞ்சு. கட்டிளமையோன் - காளை, குமரன், சேடன், மழவன், முருவன். கட்டு - ஆர்ப்பு, பந்தம், பிணி, புரி, யாக்கை, யாப்பு. கட்டுத்தறி - ஆளானம், கந்து, தறி, வெளில். அன்றியுங் குறுந்தறி - போதிகை. கணகம் - கும்பம், பத்தாகக் கொண் டது. கணக்கர் - காவிதியர். கணக்கு - எண், எழுத்து. கணநாதநாயனார் - சீகாழியில வதரித்த இவர் அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவர். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தி லிருந்தவர். அவரிடத்து அன்பு செலுத்தியவர். திருத்தோணி யப்பருக்கு நந்தவனம் வைத்து மலர்கொய்து மாலை தொடுத் துச் சாத்திச் சிவஞானம் பெற்று முத்தியடைந்தனர். இவர் குரு பூசைத்தினம் பங்குனிமாதத் திருவாதிரை நாளாம். கணபதி - சிவபெருமானுடைய மூத்த குமாரர் பிரணவவடிவாகச் சித்திரித்த யானையினிடஞ் சிவா மிசமாகத் தோன்றியவர். இவர் பிரபாவத்தை விநாயக புராணத் துக் கண்டு கொள்க. கணப்பறை - ஒரு வகைத்தோற் கருவி. கண்ணொடையாட்டியர் - கள்ளை விற்கும் வலைச்சியர். கணம்புல்லநாயனார் - வட வெள் ளாற்றின் தென்றிசைக் கணுள்ள இருக்கு வேளூரின்கண் அவதரித் தவர். திருத்தில்லையின் கணுள்ள புலீச்சரத்தில் வீற்றிருந் தருளா நின்ற சிவபிரான் சந்நிதியில் திரு விளக் கிட்டுவந்து வறுமையா லொரு நாட்கணம் புல்லால் விளக்கிட அதுவும் குறித்த காலம் வரைக்கும் போதாமற்போகத் தமது தலைமயிரின்கண் நெருப் பைக் கொளுத்தும் போது சிவ பெருமான் றோன்றிச் சிவானந்த வாழ்வைக் கொடுத்தனர். இவர் குரு பூசைத்தினம் கார்த்திகைக் கார்த்திகை நட்சத்திரமேயாம். அறுபான் மும்மை யடியார்களு ளொருவர். கணிதம் - எண்ணம், சோதிடநூல். கணைக்கால் - சங்கம், சங்கு. கணையம் - எழு, பரிகம். கண் - அக்கம், அக்கி, அம்பகம், உலோசனம், குவளை, கோ, சக்கு, தாரை, திட்டி, திருக்கு, திருட்டி, நயனம், நாட்டம் நேத்திரம், நோக்கம், நோக்கு, பார்வை, விலோசனம், விழி. கண்குத்திப்பாம்பு - மாலுதானம், உதாசனன். கண்கூடுவரி - வரிப்பகுதியு ளொன்று அஃதாவது பிரியதரிசனம். கண்டசருக்கரை - அயிரம், கண்டம், பாளிதம், புல்லகண்டம். கண்ணகி - காவிரிப்பூம் பட்டினத் திலே வைசியர் குலத்திலே பிறந்த வள், மாநாய்கன் என்பவன் புத்திரி, கோவலனுக்கு மனைவி. இவளது கற்புநிலைமையை வெளிப்படுத் தற் பொருட்டே சிலப்பதிகாரஞ் செய்யப்பட்டது. இவளை மறக் கற்புடையாளென்பர். திருமாபத் தினி, பத்தினிக் கடவுள் மங்கல மடந்தை, வீரபத்தினி யென்பன பரியாய நாமங்களாம். இவளை இலங்கா புரத்திலிருந்து அர சாண்ட கயவாகு என்னு மரசன் தன் நகரத்திலே பலிபீடஞ் செய் வித்துக் கோயில் கட்டுவித்து வருடந்தோறும் உற்சவம் நடத்தி வந்தான். செங்குட்டுவனாகிய சேரனென்பவனுமிமய மலை யிலிருந்து சிலைகொண்டு வந்து இவள் வடிவஞ்செய்து பிரதிட்டை செய்தான். கண்ணப்பநாயனார் - அறுபத்து மூன்று அடியார்களுளொருவர். இவர் பொத்தப்பி நாட்டிலேயுள்ள உடுப்பூரிலே வேடக்குலத்திற் கதிபதியாகிய காகனென்ப வனது மனைவியாகிய தத்தை யென்பவள் வயிற்றிலே திருவவதாரஞ் செய் தார். இவர் முன்னர் அர்ச்சுனனா யிருந்தவர். திண்ணனார் எனப் பெயர் பெற்று வளர்ந்த இவர் ஓர் நாள் நாணன் காடன் என்னு மிருவரோடும் சென்று வேட்டை யாடினவர் திருக்காளத்தி மலையைக்கண்டு சென்று ஆங்குக் குடுமித் தேவரைக் கண்டு ஆராதகாதல் கொண்டு இறைச்சி யமுது படைத்து, அவர் விழிகளி னின்றும் இரத்தம் வந்தமை கண்டு மனம் பதைபதைத்து வருந்தித் தமது கண்ணைப் பிடுங்கி யப்ப, மற்றை விழியினின்றும் பாய, இவர் மற்றைக் கண்ணையும் பிடுங்குஞ் சமயத்தில் நில்லுகண் ணப்ப நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப எனத்திருவாய் மலர்ந் தருளிக் காளத்தி நாதர் தந்திருக் கரத்தாற் பிடித்துத் தம் வலப் பாவில் நிற்கவென்று நிலைபெற்ற திருவருள் புரிந்தார். இவர் குரு பூசைத்தினம் மார்கழி மாதத்து மிருகசீரிட நட்சத்திர மேயாம். கண்ணாடி - அத்தம், ஆடி, ஆதரி சனம், உருவங்காட்டி, ஒளிவட் டம், கஞ்சனம், கஞ்சனை, சுதரிச னம், தருப்பணம், படிமக்கலம், பளிங்கு, புளகம், முகுரம். கண்ணாளர் - அக்கசாலையர், அற்புதர், ஓவர், கண்ணுள் வினை ஞர், கம்மியர், கொல்லர், சிற்பி யர், தபதியர், துவட்டர், புனைந் தோர், யவனர். கண்ணிமை - இதழ், இமை, ஏடு, நிமை, விளிம்பு. கண்ணிலிடுமை - அஞ்சனம், கச்சளம். கண்ணுடையவள்ளாலார் - சீகாழித் திருஞானசம்பந்த நாயனாரது திருவருள் பெற்றமகான், வேதா கம சாஸ்திரக் கடல்கட்கு ஓர் தெப்பம் போன்ற இவர் செய்த நூல் ஒழிவிலொடுக்கம். இது பொதுவிலுபதேசம் முதல் நிலை யியல்பு இறுதியாகப் பத்து அதி காரங்களையும், 253 வெண்பாக் களையு முடைத்து இந் நூற்குத் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் ஓர் சிறந்தவுரை, செய்தனர். கண்ணுறல் - காட்சி. கண்ணேனி - மால்பு. கண்ணோட்டம் - ஏணிலையுடைமை, கண்மை, கேண்மை, தாக்ஷிண்யம், நயப்புணர்வு, நலம், நாகரிகம். கண்ணோவுற்றோனவிநயம் - கண்ணினின் றொழுகும் நீரை விரலாறெளித்தலும், வளைந்த புருவத்துடன் வாடிய முகமும், வெளியிடத்திற் பார்த்தால் பார்க் கக் கூடாதபயமும் உடையனாம் என்ப. கண்பார்வை - விழித்தல். கண்மணி - தாரை. கண்மூடல் - சிமிழ்த்தல். கண்வரி - அரி, அலரி. கதவு - அரணம், அரவம், கதவம், கவாடம், காப்பு, தோட்டி, புதவம், புதவு, வாரி. கதறல் - அரற்றல், அழைத்தல், கத்தல், முரற்றல். கதிர் - அலகு, ஈனல், ஏனல், குரல். கதிர்காமம் - ஈழநாட்டிலேயுள்ள திருப்புகழ்பெற்ற சுப்பிரமணிய ஸ்தலங்களுளொன்று. இது கதிரை, கதிரை மலை, ஏமகூடம், முத்திநகர், குன்றுதொறாடர்பதி, ஆகாய குமார nக்ஷத்திரம் எனவும் பெயர் பெறும், அருணகிரிநாத சுவாமிகள் ஆண்டுச்சென்று தரி சித்துத் திருப்புகழ் கூறியுள்ளார். சிவஸ்தலங்களுட் சிதம்பரம் எங் ஙனஞ் சிறந்ததோ அங்ஙனமே சுப்பிரமணிய ஸ்தலங்களுள் இது விசேடித்தது. சூரபன்மனைச் சங் கரிக்க அமர்ந்தருளிய பாடிவீடு என்று கூறப்பட்ட ஏமகூட மிதுவே. எவ்விடத்தும் எக்காலத் துங் கண்டு கேட்டிராத அத்தியற் புதத் திருச் செய்கைகள் இத் தலத்து இப்போதும் நடந்து வருகின்றன. உக்கிர சோழ மகாராசன், நர சிங்கச் சோழன் முதலாயினார்க்கு இராசதானியா யிருந்தது. சிவ ஞான வொளியால் பேரின்பத்தைக் கொடுப்பது என்பதுகாரண மாய்க் கதிர்காமம் எனவந்தது. இதன் விசேடத்தை nக்ஷத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ், திருப் புகழ், கதிர் காமக் கலம்பகம், கந்த புராணம், கதிர் காமமான்மிய மென்பவற்றுட் காண்க. இது இலங்கையின் தென் பாகத்திலே மகேந்திரக் கடலாய இந்து சமுத்திரத்திற்கு வடக்கே யுள்ள காலி என்னும் பட்டினத் துக்குச் சமீபமாயுள்ளது. இத் தலத்தின் உபயகதிர் காமமாயுள் ளது யாழ்ப் பாணத்து மேலைப்பு லோலியிலே யுள்ள “புதுச்சந்நிதி” என்னுந் தலமேயாம். அதன் மகிமையை மேலே காண்க. கதிகாமக்கலம்பகம் - இஃது யாழ்ப் பாணத்திற் பிறந்த சரஸ்வதி பீடம் கந்தப்ப சுவாமிகள் என்னு நாம முடைய வேளாளகுல திலக ராற் செய்தருளப்பட்டது. இது முடிந்த வுடன் அவர்க்குள்ள குரூரநோய் நீங்கியது. சொற்சுவை பொருட் சுவை நிறைந்துள்ள வோர் பிரபந்தம். கதிர்த்தொகுதி - கற்றை. கதுப்பு - அனு, கபோலம், கவுள், கன்னம், கொடிறு. கதை - காரணச்சொல். கத்தரிகைக்கை - திரிபதாகை போல வளைந்த பவித்திரவிரலின் பக் கத்து அங்குலியாகிய நடுவிரலைச் சுட்டு விரலோடு பொருந்த நிமிர்ப்பது. கத்தரிச்செடி - பிரகதி, வங்கம், வழுதலை, வழுதுணை. கத்தரித்தல் - கொய்தல். கத்தூரி - நானம், மான்மதம், மிருக மதம். கத்தூரிமிருகம் - இரம்பம், காசறை, துருக்கம், நரந்தம், நாரசம், நாவி, நான் மா, நானம், மறுவல், மறுவி, மான்மதம், மிருகமதம். கந்தபுராணம் - ஓரிலக்கங் கிரந்தங் களையும் ஆறு சங்கிதைகளையு முடையது. இதன் ஒவ்வோர் பாகங்கன் கந்தபுராணமெனவும், உபதேச காண்டம் எனவும், சூதசங்கிதை யெனவுந் தமிழிற் செய்யப்பட்டுள்ளன. கந்தருவர் - காந்தருவர், கின்னரர், தந்திரர், யாழ்வல்லோர், வீணை வல்லோர். கந்தவுருவானது - அகக்கூத்துக்குரிய உருவாய் அடி வரையறை யுடைத் தாய் ஒரு தாளத்தாற் புணப்பது. கந்தித்தல் - மணம், முருகு, மன்றல், வாசம், விரை, வதுவை, நாணம், வேரி, கடி, தேன், வம்பு, கான், நரைகந்தம், மோதம், நாற்றம், கமழல், வெறி. கபிலநிறம் - குரால், புகர், புற்கு. கமண்டலம் - கரகம், கரண்டம், காண்டம், குண்டிகை. கமர் - கது, நிலப்பிளப்பு, விடப்பு, விடம்பு, விடர், விடவு, விளவு. கமுகு - கந்தி, கமுகம், கிரமுகம், பூகம், பூக்கம் இதனோலை கூந்தல், மடல். கமுக்கட்டு - வாகுமூலம், கைம்மூலம். கம்பளி - கம்பலம், கம்பளம், சிம்புளி. கம்பு - செந்தினை, கவலை. கம்மாளர் - அக்கசாலையர், அறிவர், அற்புதர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல் லர், சிற்பியர், தபதியர், துவட்டர், புலவர், புனைவர், யவனர், வித்த கர், வித்தியர், வினைஞர். கயிலை - இராசதாசலம், கயிலாசம், விசயார்த்தம், வெண்மலை, வெள்ளிமலை, வேதண்டம். கயிறு - அக்கம், இரச்சு, கச்சை, கடம், தாமம், தாம்பு, நாண், நாரம், நார், பழுதை, பாசம், புரி, வடம். கரகம் - கற்கரி, கன்னல், சிரகம், சீக ரம், வற்கரி, ஆலங்கட்டி, கமண் டலம், நீர்த்துளி, நீர், கங்கை. கரடி - உளியம், எண்கு, எலு, குடா வடி, பல்லம், பல்லுகம், பல்லூ கம், மிளிறு. இதனாண் ஒருத்தல். கரடிப்பறை - தட்டை. கரடிப்பறைக்காரணம் - கரடிபோலக் கத்துவதனால் அப்பெயர்த்து. கரடு - மிசைத்திரள், காலடி, பரடு. கரணக்கூத்து - படிந்தவாடல். கரணம் - எண், மன முதலிய கரணம், கூத்தின் விகற்பம், காதலோர் கூட்டம், காரணம். கரண்டி - கரண்டம், கரண்டகம். கரத்தல் - நிறுத்தல், மறுத்தல், மாற்றல். கரந்துவரலெழினி - மேற்கட்டுத் திரையாகவுஞ் செயற்பாட்டு டனே வகுக்கப்படுவது. கரந்துவரலெழினிகட்டுகற்குக் காரணம் - ஆகாய சாரிகளாய்த் தோன்றுவார்க்கென்க. கரந்துவரலெழினியிலக்கணம் - ஒருமுகவெழினி, பொருமுக வெழினி யினுஞ் சிறப்புடைத் தாய், அந்தணர், அரசர், வணிகர், சூத்திர ரென்று சொல்லப்பட்ட வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசு வரன் என்னு நால்வகை வருணப் பூதர் களையுஞ் சித்திரத்தாலமைக்கப் பட்டு அரங்கிற்றூங்க விடுவது. இதனை “கூறியவரங்கிற் குறியொடு புணர்ந்தாங் - காடு நர்க்கியற்று மரங்கினெற்றிமிசை - உருவிப் பூத நான்கு முறைப்பட வெழுதின ரியற்ற லியல் புணர்ந்தோரே” எனவும், “முன்னிய வெழினிதான் மூன்று வகைப்படும்” எனவும் மதிவாணர் நாடகத்தமிழ் நூலி னும், “அரிதரங்கிற், செய் தெழினி மூன்றமைத்துச் சித்திரத் தாற் பூதரையு - மெய்தவெழுதி யியற்று” எனப் பரதசேனாப தீயத்துங் கூறியவாற்றானறிக. இப் பூத நான்கின் உண்டியும், அணி யும் ஆடையும், அணியும் மாலை யுஞ் சாந்தமும் பொழுதுஞ் செயலு முதலியவற்றை யெல்லாம் சிலப் பதிகாரம் அழற்படு காதைக்கண் உரைத்தவற்றா னுணர்க. கரி - இருத்தை, கந்துள், நல்லம். கரிகாடு - பொச்சை, சுரம், பொதி. கரிக்குருவி - கஞ்சரீடம், கஞ்சனம், கயவாய், காரி, கிகிணி, பாரத்து வாசம், பிள்ளை, வஞ்சுளன், வயவன், வயான், வலியான். கரியவன் - கள்வன். கரு - சினை, பீள், சூல், வயா, கருப்பம். கருக்குவாளிமரம் - கத்திகை, முத்தகம். கருங்காலிமரம் - கதிரம். கருங்கிளி - கீரம், கிள்ளை. கருங்குரங்கு - காரூகம், யூகம். கருங்குவளை - பானல். கருடன் - இமையில், உவணன், ககபதி, ககேசுவரன், கலுழன், சிதமுகன், சிதா நநன், சுபர்ணன், தார்க்கியன், நாகாசனன், நாகாந்த கன், பன்னகவயிரி, பன்னகாசனன், புதனுக் கிளையோன், புள்ளரசு, மாலூர்தி, வயினதேயன், விஷ்ணு ரதம். கருணைக்கிழங்கு - கந்தம், சூரணம். கருதல் - உன்னல், எண்ணுதல், கண் ணுதல் காணல், குறித்தல், சிந்தித் தல், சுட்டல், சூழல், நினைத்தல், நுதலுதல், புகறல், பேணல். கருத்து - இங்கிதம், உளம், உள்ளம், உன்னம், ஊகம், எண்ணம், குறிப்பு, சிந்தனை, சிந்தை, சேத்து, தியானம், நன்னயம், நாட்டியம், நினைவு, படர், மதம், முன்னம். கருநாரை - சிகரி. கருநிறம் - அசிதம், அஞ்சனம், இருள், கருள், காரி, காழகம், ககளம், காளிமம், கார், நீலம், நல்லம், மால், மா. கருநெய்தல் - நீலம், இந்தீவரம். கருநெய்தற்பேதம் - நீலோற்பலம். கருந்தினை - இறடி, கங்கு. கருப்பம்பயிலிடம் - பைங்குழி, பைசந்தி. கருப்பூரத்தின் வகை - மலைச்சரக்கு, மலை, அடைவுச் சரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கை யொட்டுக்கால், மார்ப்பற்று, வரா சான், குமடெறிவான், உருக்குருக்கு, வாறோசு, சூடன், சீனச் சூடன் என்பனவாம். கருமணல் - அறல். கருமபூமியில் - உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் என அறுவகைப்படுந் தொழிற்பாகு பாட்டினை யுடையது. கரும்பு - இக்கு, கழை, கன்னல், வேழம். கரும்புறா - கபோதம், பாராவாரம். கருவழலை - இராசமா நாகம். கருவியிசைக்குமுறை - வங்கியத்தின் வழியே நிற்பது யாழ்ப்பாடல் எனவும், மிடற்றுவழியது யாழா கலான் மிடற்று வழிப்பாடலும் யாழ்வழித் தெனவும், யாழ்ப் பாடலின் வழியே நிற்பது தண் ணுமை யென்னும் பெயரினை யுடைய மத்தளம் எனவும், மத்த ளத்தின் வழித்தாய் நிற்பது குட முழா எனவும், முழவோடு கூடி நின்று வாச்சியக் கூறுகளை அமைப்பது ஆமந்திரி கை என வும், இவ்வாமந்திரிகையுடன் முற்கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் பருந்தும் நிழலும் போல ஒன்றாய் நிற்குமெனவுங் கொள்க. கருவிளை - கன்னி, காக்கணம், சிகிணி. கருவூர் - வஞ்சி. கரைப்பொது - அணை, ஆழி, கூலம், கோடு, தடம், தீரம், பாரம், வரை, வாரம், விளிம்பு, அன்றியும், செய் கரை - அணை, குரம்பு, குலை, சேது. கர்க்கடகவிராசி - அலவன், கள்வன், குளிர், சேக்கை, ஞெண்டு, நண்டு, நள்ளி, மதி. கர்ப்பூரம் - கருப்பூரம், கனசாரம், சசி, சிதாப்பிரம், பளிதம், பாளிதம். கலக்கம் - கதனம், கவனம், துரிதம், துருக்கம், பிரமம், மதன், வெறி. கலங்கல் - கதுவுதல், கலுழல். கலங்கனீர் - ஆவினம், கலுடம், கலுழி, விலங்கல். கலசப்பானை - கஞ்சனை. கலத்தல் - அளாவல், கலவல், கலா வல், சார்தல், சிவணல், துழாவல், தோய்தல், படிதல், புணர்தல், பொருந்தல், வளாவல், விளாவல். கலப்பு - கலம்பகம், கலவை, களவம், சங்கீரணம், விரவு. கலப்புக்கட்டோசை - ஆகுலம், ஆர்ப்பு, அலப்பல், உலப்பல், உளறல், குமுறல், கோடணை, கோலாகலம். தமரம், துவைத்தல், துவைவரல், தெழித்தல், பூசல். கலப்பை - அலம், இதை, இலாங்கலி, உழுபடை, கலனை, ஞாஞ்சில், தொடுப்பு, படை, படைவாள், நாஞ்சில். கலவை - களபம். கலித்துறை - காரிகை, திலகம், இதற் கிராகம் - பைரவி. இது விருத்தக் கலித்துறை, கோவைக் கலித் துறை யென விருவகைப்படும். கலிப்பா - முரட்கை. கலியாணத்தின் பெயர் - விவாகத்தைக் காண்க. கலை - இரலை, கருமான், புல்லாய், வச்சயம். கலைவல்லோர் - கவிஞர். கல் - கிராவம், சிராவணம், சிலை, சையம், பாடாணம், அன்றியும் திரண்ட கல் - உபலம், உலம், குண்டு - பெருங்கல்லின் பெயர் கெளிதம். சிறுகல்லின் பெயர் - உபலம். கற்பதித்த விடத்தின் பெயர் - குட்டிமம். சலதாரை முதலியவற்றை யடைக்குங் கல் லின் பெயர் - துறுகல், பொறை. கல்லழுத்துங்குழிவட்டம் - கேவணம். கல்லி - உறதி, ஊதியம், ஓதி, கரணம், கலை, கேள்வி, சால்பு, தேர்ச்சி, விஞ்சை, வித்தை படிப்பு. கல்விபயிலுமிடம் - கல்லூரி, கல்வி யூரி, கழகம், கலாசாலை, பாட சாலை, பள்ளிக்கூடம். கவசம் - அந்தளம், அபரம், அரணம், அரணி,ஆசு, கசை, கச்சை, கண் டம், கந்தளம், கருவி, சடாரி, சாலி, சாவிகை, சுடாரி, சுரிகை, தடை, தம்பம், பரணம், பரம், பருமம், பாசம், பாரம், மெய்யுறை, மேழ கம், வாரணம். அன்றியுங் கைக் கவசத்தின் பெயர் - கைப் புடை, கோதை. கவண் - ஓடி, ஓடிசில், கவணை, குணில், குளிர், தட்டை, தழல். கவரிமா - அன்னம், எகினம், ஓதிமம், நானம், படகம், பட்டம், மானமா, இதனாண் - ஏறு, ஒருத் தல். இதன் பெண் - பிடி, பிணா. இதன் குட்டி - கன்று. கவர்வழி - கவலை. கவற்றிற்றாயம் - ஆயம். கவிஞனமைதி - ஆரவாரத்தை யுடைய கடல்சூழ்ந்த நிலத்திலே வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம் புனற் பௌவமெனத் தமிழ் நாட்டிற்கு எல்லை கூறப்பட்ட தமிழ்த்தேசத்தா ரறிய முத்தமி ழும் போமென்னும் தன்மையை யுடையனாகி, வேத்திய லென்றும் பொது வியலென்றுங் கூறப்பட்ட இரண்டு கூறுபாட்டினை யுடைய நாடக நூலை நன்றாகக் கடைப் பிடித்து, இசைப்புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர்மையை முதலும், முறையும் முடியும் நிறையும் குறையுங் கிழமையும் வலிவும் மெலிவும்சமனும் வரை யறையும் நீர்மையுமென்னும் பதினொரு பாகுபாட்டினானு மறிந்து, அறிந்த வண்ணம் அவன் தாள நிலையில் எய்த வைத்த நிறந்தன் கவியி னிடத்தே தோன்ற வைக்க வல்லவ னாய், பகைவராற் செய்யப்பட்ட வசையின் அளவறிந்து அவை தோற்றாத படியிலே வசையின் மொழிகளான நாட கக்கவி செய்யவல்ல நல்ல நூல் வல்ல புலவன் என்க. கவியரங்கேற்றிய பாட்டுடைத் தலைவன் செய்யும் வழிபாடு உருவக வணி, உவமை யணி, வழி நிலையணி, மடங்குதனவிற்சி யணி, தீவக வணி, வேற்றுமை யணி, வெளிப்படை யணி, கருத் துடை யடை யணி, குறிப்பு நிலை யணி, சுருங்கச் சொல்லலணி, மிகுதி நவிற்சி யணி, சொற்பின் வருநிலை யணி, தன்மை யணி, வேற்றுப்பொருள் வைப் பணி, சிறப்பணி, சிலேடை யணி, எதிர் மறுத்த லணி, உடனிலைக் கூட்ட வணி, உவமான வுருவக வணி, பிறிதி நவிற்சி யணி, ஒப்புமைக் கூட்டவணி, நிதரிசனவணி, புகழ்ச்சி யணி, பலபொருட் சொற்றொடர் நிலை யணி, ஐய வணி, உயர்வு நவிற்சி யணி, கலவை யணி, வாழ்த் தணி யென்னும் இருபத்தெட்டலங் காரங்களாலும் எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு வகையாலும் குற்றமறச் செய்யுள் பாடும் புலவனும் அவைக்களத்தி லுள்ளாரும் அரசனும் வியக்கப் பாடுகின்றவனும், இயலிசை நாடகமென்னு முத்தமிழில் வல்ல வனும், ஆக - மதுரம் - சித்திரம் - வித்தார மென்னும் பாக்களைப் பாடுகின்றவனும், உயர் குடியிற் பிறந்து மேம்பட்டவனும், எல்லா வுறுப்புக்களுங்குறைவின்றி நிறைந்து நல்லொழுக்க முடையா னும், முப்பது வயதிற்கு மேற் பட்டு எழுபது வயது வரையினுட் பட்டவனுமாயுள்ள கவிஞனொ ருவன் தன் மேற்பாடுங் கவிதை யை யாவருமாராய்ந் தறியத் தான் கொள்ளுங்கால் அவைக்களத் தில் தோரணத்தைக் கட்டித் துவ சத்தை நாட்டி, மங்கல முரசியம்ப, அந்தண ரொருபால் வாழ்த்த, இவ்வாறு மேன்மை மிக்க கோலத்தோடு விரித்த அழகிய கோகம், சிபீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங் கலர், கோபம், சித்திரக் கம்மி, குருதி, காரியல், பேடகம், பரியட்டக் காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை கவற்றுமடி, நூல் யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன் னெழுத்து, குச்சரி, தேவ கிரி, காத் தூலம், இறஞ்சி, வெண் பொத்தி, பணிப் பொத்தியென்று சொல்லப் பட்ட பலவகைத்தாகிய ஆடைத் தொகுதியு ளொன்றின்மேலமைத்த பல தானியங்களால் வாய்ந்த புகழ்ச்சியுள்ள முளைப்பாலிகை யுடன் தீபமும் நல்ல பூரண கலச மும் நிறைந்த மேற்கட்டியை யுடைய பந்தரின் கிழே அசைத லில்லாத தூண் வரிசையினெருக் கத்தாலும், பலவகைப்பட்ட தமது உறவினர் நெருக்கத்தினாலும், பெண்கள் பாடும் பல்லாண்டினா லும், நிறைந்த அழகமைந்த செல் வம் வாய்ந்த தன் கோயினடுவில் தான் வெள்ளாடையை யுடுத்தி, வெள்ளியபுட்பங்களை யணிந்து, தனது ஆசனத்தில் தன்மேற் பாடிய பண்டித சிரோமணியை யிருக்கச் செய்து, தான் பக்கத்திலிருந்து மங்கல மமைந்த செய்யுளை மகிழ்கூர்ந்து கேட்டு, பொன்னும் ஆபரணமுங் கடகமுமிவை போன்ற பிறவும் அக் கவிஞனுக்குக் கொடுத்து அவன் பின் ஏழடி சென்று அவன் நிற்கவெனத் தான் நிற்றல் பாட்டுடைத் தலைவர்க் குரிய கடமையாம் எனப்பன்னி னார் புலவர். கவுதாரி - இதல், கோரசம், சிரவம், சிவல், பூழான். கவ்வாணம் - படுமலை. கழலைக்கட்டி - அரலை. கழற்காய் - கழங்கு, முழல். கழற்கொடி - கற்சூரம், கழங்கு, கழல், முழல். கழாயர் - வேழம்பர். கழி - உப்பளம், காயல், கானல், முரம்பு. கழிக்கரைச்சோலை - கானல். கழிநிலம் - உவளகம், அளக்கர், காயல். கழிபிறப்பு - உம்மை. கழிமுகம் - அதோமுகம், அருவி, கயவாய், கயவு, கூடல், புகார். கழியுடலின் முழுவெலும்பு - கங்காளம். கழிவுநாள் - வைகல், காலி. கழுகு - உவணம், எருமை, சகுந்தம், பவணை, புண்டரம், புண்டரீகம். கழுக்கடை - கழுமுள். கழுதை - அத்திரி, இராடம், கத்தை, கரம், கரோடிகை, கர்த்தபம், கார்த்தபம், காளவாய், கோகு, வாலேபம், வேசரி, இதன் பெண் - பெட்டை. கழுத்தணி - கயில், கடை, சிறுபுறக் கோவை, கொக்குவாம். அஃதாவது வீரச்சங்கிலியும், நேர்ஞ் சங்கிலி யும், பூணப்படு ஞாணும் என்னு மிவற்றோடு கைபுனையப் பட்ட தொழில்களையுடைய கவடி, சரப்பளி முதலாயுள்ள அணி கட்கெல்லாந் தலை யொன்றாய்க் கொக்குவாய்ப் படுகண் தொடங் கிய பன்மணிக் கோவையால் தூக்கமாகச் செய்யப்பட்ட பின் றாலி முதலியனவுமாம். கழுத்தின் பின்குழி - சூறை, பளிச்சை. கழுத்து - கண்டம், கந்தரம், களம், களரி, கிரீவம், கில்லம், மிடறு. கழுத்தடியின் பெயர் - கந்து. கழுமரம் - கழுமுள். கழுவுதல் - பண்ணல். கழைக்கூத்தாடிகள் - கழாயர், கோரம்பர், வேலும்பர். களர் - களம், களரி, காரி, முது நிலம். களவு - கடுதல், கயவு, கரப்பு, கரவடம், கரவு, கள், கள்ளம், சோரம், கோர்வு, தேயம், படிறு, பட்டிமை. களாச்செடி - கள், களவு. களித்தல் - உவத்தல், செருக்குதல், மகிழ்தல், மதர்த்தல். களித்தோனவிநயம் - இரகசியத்தை மறையாதவனாய், சொல்லுத லின்மையும், கவிழ்ந்துஞ் சோர்ந் தும் தாழ்ந்துந் தளர்ந்தும் வீழ்ந்த சொற்களுடன் சாய்தலும், களி கவர்ந்த கண்ணோக்குடமையுங் கொண்டவ னென்க. களிப்பு - அபிமானம், ஆமோதம், உவகை, உவப்பு, ஏமம், கடி, களி, செருக்கு, தருக்கு, நகை, நயன், பாடவம், பெருமிதம், மகிழ்ச்சி, மதம், மதர், மதர்ப்பு, மதர்வு, மத்தம், மலர்ச்சி, யௌவனம். அன்றியுமிகு களிப்பின் பெயர் - இறுமாப்பு, எக்களிப்பு, எக்கழுத் தம், ஏமாப்பு, செம்மாப்பு, பூரிப்பு. களைதல் - கட்டல். கள் - அம்மியம், அரி, அரிட்டம், அருகி, அருப்பம், அளி, அறிவழி, ஆசவம், ஆதுவம், ஆம்பல், ஆம் பிலம், ஆலி, ஆலை, இக்கு, இரேயம், ஈழம், எலி, கஞ்சா, கல்லியம், கவ்வை, களி, காலி, குடு, குந்தி, கொங்கு, சாதி, சாய னம், சாலி, சாறு, சிக்கர், சுண்டி, சுமாலி, சுரை, சுலோகி, சுவிகை, சுழி கை, சேறு, சொல், சொல் விளம்பி, சோபம், ஞாளி, தணி யல், தும்பி, தேம், தேறல், தேன், தொண்டி, தொப்பி, நறவு, நனை, நாற்றம், படு, பாடலி, பாணி, பாலி, பானம், பிரசம், பிழி, பேதை, மகரந்தம், மட்டு, மது, மதுகரம், மதுரை, மதுவம், மருட்டம், மறவி, மாதவம், மாரி, மாலி, முண்டகம், முருகு, மேதை, மௌலி, யானம், வடி, வாணிதம், வாருணி, விகுணி, விசுளி, வெறி, வேரி. கள்விற்போர் - சவுண்டியர், துவசர், படுவர், பழையர், பிழியர், இவர் வகைப் பெண் - சாலினி. கள்ளி - வச்சிரம். கறிகள் - நீடாணம். அன்றியும் தாளித்த கறியின் பெயர் - குய். துவட்டற் கறியின் பெயர் - வறை. பொரிக் கறியின் பெயர் - கருணை. புளிக்கறியின் பெயர் - துவை, புளிங்கறி. கறிவர்க்கம் - கூட்டமை. கறுப்பு - அஞ்சனம், இருள், கருமை, கருள், களநகம், களம், களரி, கறை, காரி, கார், காழகம், காளம், காளிமம், சாமம், நல்லம், நீலம், நீலி, பரி, மா, மாசு, மாயம், மால், மை. கறையான் - ஆழல், சிதலை, செல். கற்கடகக்கையாவது - தெரிநிலக்கை யிரண்டும் அங்குலி பிணைந்து வருவது. கற்பகத் தருவிற்படர்கொடி - காமவல்லி. கற்படி - ஆரோகணம், சோபானம். கற்படுத்தநிலம் - குட்டிமம். கற்படை - சுருங்கை. கற்பம் - கனகம்பத்து கொண்டது. கற்பாழி - தாண்டை. கற்பு - முல்லை. கற்புடையாள் - சதி. கற்போன் - படிப்போன், மாணாக்கன், வித்தியார்த்தி, மாணவன், பயில் வோன். கற்றல் - கெழுமல், நவிலல், பயிலல். கற்றாழை - கன்னி, குமரி. கற்றோர் - நாவலர். கனம் - அடை, ஞாட்பு. கனவொழுங்கு - சுவாலை. கன்றைவளர்க்கும்பசு - வற்சலம். கன்னல்வகை - அகரந்தோற்றமாக, இகரம் இன்பத்தை யுண்டாக்கும், உகரம் அரசாகும், எகரம் உரங்கும், ஒகரம் மரணம். கன்னன் - அங்கர்கோமான், அதரித் திரன், கச்சைக்கொடியினன், கருணன், கவச குண்டலன், கனகக் கொடியோன், கானீனன், குந்தி முதற் புதல்வன், சவுரியன், பரா யணி, பாண்டவர் முன் பிறந் தோன், மிகுகொடையாளன். கன்னார் - கஞ்சகாரர், கன்னுவர். கன்னி - குமரி. கன்னியாற்றிற்குத்தெற்குளநாடுகள் - முதலூழியிறுதிக்கண் தென் மதுரை யகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும், குமரவேளும் முரிஞ்சியூர் முடி நாகராயரும், நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும், முது நாரையும் முதுகுருகும் களரியா விறையுமுள் ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயினார் காய்சின வழுதி முதற் கடுங்கோ னீறாயுள்ளார் எண்பத்தொன் பதின்மர். அவருட் கவியரங்கேறினார் எழுவர். பாண் டியருள் ஒருவனாகிய சயமா கீர்த்தி யென்னும் நிலந்தரு திரு விற் பாண்டியன் தொல் காப் பியம் புலப்படுத்து இழீ இயி னான். அக்காலத்து அவர் நாட் டுத்தென்பாலி முகத்திற்கு வட வெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென் னும் ஆற்றிற்கு மிடையே எழு நூற்றுக் காவதவாறும் இவற் றின்நீர் மலிவானத்தைப் போன்று மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், பின்பாலை நாடும், ஏழ் குன்றநாடும், ஏழ்குண காரை நாடும், ஏற்குரும்பனை நாடு மென் னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், பதியும், நதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறுங் கடல் கொண் டொழிந்தது என்ப. கன்னியிற்பெற்றபிள்ளை - கானீனன். கன்னியிராசி - பெண் பொதுப் பெய ரெல்லாஞ் சொல்லுக. கா காக்கணஞ்செடி - உயவை, கருவிளை, கன்னி, கிகிணி, கிருட்டினி. காக்கை - அரட்டம், உரண்டம், கரடம், கரவாகம், கரும்பிள்ளை, காகம், காரி, கேரண்டம், கொடி, துரோணம், நரந்தம், நராந்தம், பரபிருதம், பலிபுட்டம், புட்டம், வாயசம், அன்றியும் அண்டங் காக்கையின் பெயர் - காலோலம். காங்கூலக்கை - அஃதாவது சுட்டு விரலும் நடுவிரலும் பெருவிரலும் ஆகிய மூன்றுஞ் சேர்ந்து குவிய, பவித்திர விரல் வளைந்து சிறு விரல் நிமிர்ந்த பெற்றியதாம். அது குவிகாங்கூல முகிழ்காங் கூலம், விரிகாங்கூலம் என மூவகைப் படும். என்னை “காங் கூலமே கருதுங் காலைச் சுட்டும் பேடும் பெருவிரல் மூன்று, மொட்டி முன் குவிய வநாமிகை முடங்கிச் - சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும், முகிழ்காங் கூல முந்துற மொழிந்த - குவிகாங் கூலங் குவி விழந்ததுவே, மலர் காங் கூலமது மலர்ந் ததுவே” என்று பரத சேனாதிபதீய நூலிற் பகரப்பட்ட தனாலென்க. காசி - வாரணாசி, வாராணசி. காசிபன் - சுராசுரர்க்குப் பொதுத் தந்தை, இவர் மனைவிகள் திதி அதிதி. அசுரரெல்லாரும் திதி மைந்தர். சுரரெல்லாரும் அதிதி மைந்தர். காஞ்சிபுரம் - கச்சி, (கஞ்சி) பிரளய சித்து, சிவபுரம், விண்டுமாபுரம், திரிமூர்த்தி வாசம், பிரமபுரம், காமபீடம், தபோமயம், சகற் சாரம், சகலசித்தி, கன்னி காப்பு, துண்டீரபுரம், தண்டகபுரம். இவற்றுள் சாட்சி விருட்சமா னது தன்னிழல் பிரியாதிருத்த லால் காஞ்சி, பிரமதேவனது இரவி னும் ஊழிக்காலத்தும் பிரளய வெள்ளம் அந்தக ரெல்லைக்கண் போகாது சுற்றி நின்று ஒரு சத்தி காத்தலால் பிரளய சித்து; திருக் கயிலை மலைக்கண் சிவபிரானது திருக் கண்களை உமாதேவியார் மூட லும் இருளுலகை மூடிய பாவத்தினால் தேவியார் மாநிழற் கீழ் வந்து பூசை செய்து ஏகம்ப நாதனைத் தழுவக் குழைத்து அருள் பெற்றமையாற் சிவபுரம்; மும்மூர்த்திகளுந் தத்தம் பதவிகள் போல வீற்றிருப்பதினால் திரி மூர்த்தி வாசம்; பிரமன் தனது மனம் புனிதமாம்படி கச்ச பால யத்திற் சிவபெருமானைப் பூசித் தமையால் பிரமபுரம் போக முத்திகளை வழிபடுவோர் காமித்த வண்ணங் கொடுத்தலாற் காம பீடம்; பிரமாதி தேவர்கள் வரத்தை நாடித் தவம் புரிதலால் தபோமயம்; திரிலோகத்து முள்ள புண்ணிய nக்ஷத்திரங்களுள் தரும பலத்தைப் பார்க்கினும் ஈண்டுச் செய்யுந் தருமம் மிகு பலத்தைக் கொடுத்தலால் சகற்சாரம்; அணிமா முதலிய அட்டசித்தி; சிவபெருமான் உமாதேவியாரை யோர் காலத்து நீலியென்றுகூற, அவர் தனது கருநிறத்தைக் கழிக்க, அது துர்க்கையாகி இந்நகரத்தைக் காத்து நிற்றலால் கன்னிகாப்பு; கயிலையிலிருந்த சிவகணத்து ளொருவனான துண்டீரன் அரச னாய்ப் பிறந்தாளலால் துண்டீர புரம்; தண்டக ராசனாளலால் தண்டகபுரம் என்பது காரணம். காஞ்சொறிச்செடி - கண்டூதி. காடி - கீலாலம். காடு - அடவி, அத்தம், ஆரணியம், ககனம், கடம், கடறு, கட்சி, கட்டம், கண்டம், கவனம், கவை, களரி, காண்டகம், காண்டம், காந்தாரம், கானகம், கானம், கானல், கான், குறும்பொறை, சங்கிரம், சீரணி, சுரம், தாவம், தில்லம், பழுவம், பாணி, புறவம், பொச்சை, முளரி, வனம், விடர், விபினம், வியல். அன்றியம் குறுங் காட்டின்பெயர் - இரும்பு. பெருங் காட்டின் பெயர் - வல்லை. முது காட்டின் பெயர் - முதையல். காடுகள் - கொற்றி, சூரி, சூலி, மாரி, மூதணங்கு, மோடி, வகடுன்றாய், வடுகி. காடுபடுதிரவியம் - அரக்கு, இறால், தேன், நாவி, மயிற்பீலி. காடை - இதல், கபிஞ்சலம், குறும்பூழ். காட்சிவரி - அஃதாவது - தன் வருத் தத்தைப் பலருங் காணும்படி நடித்தல். என்னை “காட்சிவரி யென்பது கருதுங்காலைக் - கெட்ட மாக்கள் கிளைகண்டவர் முன் னர்ப் - பட்டது கூறிப் பரிந்து நிற் பதுவே” என்றாராகலின். காட்டல் - சுட்டல், தோற்றுவித்தல். காட்டழல் - தாவம். காட்டா - ஆமா, கவயம், இவனாண் - போத்து. இதன்பிள்ளை - கன்று. காட்டாளத்தி - அச்சுடனிகழ்வது. காட்டூர் கிழார்மகனார் கண்ணனார் - அகநானூற பாடிய புலவருளொரு வர். காணல் - கன்ணுறல், காண்டல், தரிசித்தல், தெரிதல், நோக்கல், பார்த்தல். காண்வரியாவது - பாகைப் பொதிந்த பவளத்தைத் திறந்து ஒளியைத் தருகின்ற முத்தையொத்த நகை நலத்தைக் காட்டி வருகென வந்து, வந்த பின்னர் மனமகிழ் வுறுவன தந்துபோக வெனப் போகுங் கூத்தாம். காதணிவகுப்பு - கடிப்பம், கடிப் பிணை, ககம்பி, கன்னப்பூ, கன்னா வதங்கம், குணுக்கு, குண்ட லம், குழை, கொட்டை, செவி மலர், தடாகம், தூக்கம், தொங்கல், தோடு, மஞ்சிகை, வல்லிகை, வேடம். காதம் - காவதம். காதலன் - அன்பன், உரியோன், கணவன், கண்டன், காந்தன், கேள்வன், கொழுநன், தலைவன், கொண்கன், தவன், பதி, நாயகன், மணவாளன், வல்லவன், வேட் டோன், மணமகன், பத்தா. காதலோர்கூட்டம் - ஆடல், கலவி, கிரீடை, கூடுதல், புணர்ச்சி, மைதுனம், விழைச்சு, விழைவு. காதற்பெண்டு - புறநானூறுபாடிய புலவருளொருவர். காது - அள், கன்னம், கேள்வி, சிர வணம், சிரவம், சுருதி, சுரோத் திரம், செவி, வள். காத்தல் - அளித்தல், தாங்கல், திதி, நிலை பெறுத்தல், நோக்கல், புரத்தல். காத்தளித்தோன் - பாலனன், புரவலன். காந்தம் - சலாகை, சும்பகம். காந்தள் - கோடை, தோன்றி, அன்றி யும், வெண்காந்தளின் பெயர் - காந்துகம், கோடல், கோடை. செங்காந்தளின் பெயர் - இலாங் கலி, தோன்றி. பற்றை. காந்தாரபஞ்சமம் - உறழ்ப்பு. காந்தாரம் - சாரல். காப்பியஞ்சேந்தனார் - நற்றினை பாடிய புலவருளொருவர். காப்பியாற்றுக்காப்பியனார் - ஒரு புலவர். காப்புக்கடவுள் - காப்பாக நூன்முகத் துரைக்கப்படுங் கடவுளாவான் மலர்களாற் கமழுந் தண்ணிய துழாய்மாலை சூடிய திருமாலே யாம். அத்திருமாக காத்தற் றொழி லுக்காகத் திருமகளைப் புணர் தலை யுடையவனாதலாலும் கிரீடமுங் கடகமும் நெருங்கிய மலர்மாலையும் குண்டலமும் உபவீதமும் நிலந்தங்கிய கௌத் துவமணியுமாகிய இவை யிற்றை யணியும் இறைவனாதலாலும், நிலைபெற்ற பிரமனைப் படைத் தவனாகலானும் நூன் முகத்துக் கூறுதற்குரியனாமென்று நூல் வல்லோர் கூறுவர். காமஞ்சோகுளத்தார் - ஒருசங்கப் புலவர். காமத்தின்பெயர் - ஆசைப் பெருக் கத்தைக் காண்க. காமநூல் - சுரதநூல், மதனாகமம். காமநோய் - காமக்கவலை, மதனம், மோகம், விகாரம், விரகம், அன்றி யும் ஒரு தலைக்காமத்தின் பெயர் கைக்கிளை, இருவரி லொருவர்க் கும் பொருந்தாக் காமம் பெருந் திணை. காமரப்பாட்டு - இசை, இராகம், கந்தருவம், கானம், கீதம், கேயம், கொளை, நாதம், பண், பாணி, வரி. காமவவிநயம் - அஃதாவது சுத்த மாகிய அலங்காரமுள்ள வடிவுந் தொழிலும், காரிகையை நோக்குங் கடைக்கண்ணும், பற்களு நகை யுஞ் சந்திரனு நிலவும் போலத் தோன்றலும், மலர்ந்த முகமும், இரந்த பெருமையாகிய சொற் களு முடையதாம். காமனாடல் - பேடு. காமன் - மான்மகன், மதனன், மகரக் கொடியோன், வேனிலாளி, வேள், வசந்தன், அங்கசன், அநங்கன், ஐங்கணைக்கிழவன், திங்கட் குடையோன், தென்றற்றேரோன், வில்லி, வனசன், போகன், மலர்க் கணையோன், மதிசகன், இரதி காந்தன், மாரன், மனோபவன், மனோசன், மனோபு, மன்மதன், திருமகண் மைந்தன், சம்பரசூதனன், உருவிலி, கடன் முரசோன், கைதைச் சுரிகையன், கந்தர்ப்பன், சித்தசன், பூவாளி, பூமான், கருப்பு வில்லி. காமன்கணை - அசோகம், குவளை, தாமரை, மாம்பூ, முல்லை. காமன்கணைச்செயல் - சந்தாபம், சிந்தாகுலம், புணர்ச்சிக் கிணங்கு தல், பெருமயக்கு, மோனம், வசீகரணம். காமன்கணையவத்தை - சுப்பிர யோகம், சோகம், மரணம், மோ சம், விப்பிரயோகம், அவற்றுள் சுப்பிரயோகமாவது பேசா தொழியா நினைவு. சோகமாவது வெதும்பியுணவு வெறுத்தல். மரணமாவது - உயிர்சோர்தல் மயங்குதல். மோகமாவது - அழு தல், பிதற்றல். விப்பிர யோகமா வது பெருமூச் செறிந்து வருந்து தல் என்பனவாம். காமன்காலம் - வசந்தம். காமன்குடை - சந்திரன். காமன்குதிரை - கிளி. காமன்கொடி - மீனக்கொடி. காமன்சேனை - பெண்கள். காமன்தேர் - தென்றல். காமன்மனைவி - இரதி. காமன் முரசு - கடலொலி. காமன்யானை - இருள். காமன்வில் - கரும்பு. காமன்வில்நாண் - வண்டு. காமன்வாள் - தாழைமடல். காயா - அஞ்சனி, அல்லி, காசை, புன்காலி, பூவை, வச்சி. காயாதமரம் - அவகேசி. காய் - தீயளி, பலன். அன்றியும் இளங்காயின் பெயர் - பிஞ்சு, வடு. காய்தல் - உரலல், முதிர்ந்திடல், முளித்தல், வறத்தல். காய்மரம் - பலினம். காரணச்சொல் - கதை. காரணம் - ஏது, திறம், நிபம், நிமித் தம், பொருட்டு, மூலம், வழி, வாயில், அன்றியும் ஆதி கார ணம், நிதானம் உபாதானம், முதல், மூலம். காராமணி - இதை, கூலம், முதிரை. காராம்பி - அம்பி. காரிப்பிள்ளை - வஞ்சுளன், வயவன், வயான். காரீயம் - நாகம். காரெலி - இடும்பன், கருப்பை. காரெலிவருக்கம் - இரும்பன், கருப்பை. கார்காலம் - கார், சரற்காலம், நவம், மாரிக் காலம். கார்த்தல் - உறைத்தல், கடு, கடுகம், கரில், காயம், காரம், காழ்த்தல். கார்த்திகைநாள் - அங்கி, அளகு, அளக்கர், அறுமீன், அறுவாய், ஆரல், இறால், எரிநாள், தழல், நாடன், நாவிதன், வாணன். கார்திகைநாள்வடிவு - அறுமீன் கூட்டம். கார்திகைமாதம் - ஊர்ச்சம், பாகுலம், ஓர்மாதம், தேட்டிங்கள், விருச்சி கரவி. கார்ப்பு - கடு, கடுகம், கரில், காயம், காரம், காழ்ப்பு. காலணிப்பொது - பாதசாலம், இவற்றின் பேதப்பெயர் - காற்சரி, கிண்கிணி, சதங்கை, சிலம்பு, பாடகம், இவற்றைத் தத்தம் வரி யிற் காண்க. அன்றியும், ஆடவர் கொடை வீரத்தணிவது - கழல். கால நுட்பம் - கலை, துடி, விகலை. காலநெடுமை - சிரம், நீட்டிப்பு, பரிதம், அமையம், எல்லை, காலை, கொன், செவ்வி, பதம், பாணி, பொழுது, போழ்து, வேலை. காலவிரைவு - இலேசம், இறை, ஒல்லை, கணம், சிறுவரை, மாத்திரை, வல்லை. காலன் - கூற்று, சண்டன், பாசகரன், மறலி, மறல், யமன், மந்திரி. காலாள் - பதாதி. காலை - முழவு, துடி. கால் - அங்கிரி, அடி, கழல், சரணம், தாள், பதம், பாதம். கால்விரலணி - மகரவாய் மோதிரம், பீலி, கான்மோதிரம், காலாழி. காவடி - கா, தோட்சுமை. காவலர் - கஞ்சுகி, மெய் காப்பாளர். காவல் - அரண், ஏமம், ஓம்படை, கடி, கட்டு, கதவம், கதவு, கழுது, காப்பு, சிறை, செயல், சேமம், சேவல், தட்டி, பராணம், பாது, வேலி. காவற்காடு - அரணம், அரண், இளை, கணையம். காவிக்கல் - காரிகம், தாது, நற் செங்கல். காவேரி - கவேரசை, காவிரி, பொன்னி. காவேரிப்பூம்பட்டினம் - புகார். காவேரிப்பூம்பட்டினத்துள்ள மன்றங்கள் - களவென்பதனை மனத்தாற் கனவில் நினைப்பினும் நினைப் போரை நடுக்கு விக்கும் வெளியான இடத்தையுடைய மன்றம்; கூனர் தொழு நோயர் முதலிய அழுகு மெய்யையுடை யோரும், நல்ல நிறம் பெறுகைக்குக் காரணமாயுள்ள பொய்கையை யுடைய மன்றம்; மருந்தூட்ட வுண்டு பித்தேறினாரும், நஞ்சை யுண்டு நடுக்குந்துயரமேறினாரும், பாம்புகடியுண்டாரும், பேய் பிடிக்கப்பட்டாரும் ஒருகால் சுற்றிவரின் அத் துன்பங்கள் நீங் கும் கல் நாட்டப்பட்ட மன்றம்; பூத சதுக்கம்; செங்கோண்மை கோடினாலும் நடுநிலை குறையி னும் நாவாற் கூறாது கண்ணீர் சொரித்தழுது காட்டும் பாவை மன்றம் ஆகிய ஐவகை மன்று மாம். காழ்த்தல் - கடுகம், கரில், காயம். காளம் - அம்மியம், காகளம், காளகம், சின்னம், தாரை. காளான் - ஆம்பி. காளி - ஐயை, அலகைக் கொடியாள், ஆரணி, எண்டோளி, கங்காளி, கவுரி, குண்டலி, குமரி, சண் டிகை, சாமுண்டி, சூரி, சூலி, தாருக விநாசனி, தாருகற் செற் றாள், நீலி, பதுமை, பத்திரி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதரி, மாயை மாயை யுற்றாள், மாலினி, முக்கண்ணி, யாமளை, யாளி யூர்தி, யோகினி, வல்லணங்கு, வீரி, வேதாளி. காளிக்கொடி - அலகைக்கொடி. காளியேவல்செய் மகளிர் - இடாகினி, மாயவள், வஞ்சனி, வலவை. காளிவாகனம் - ஓரி. காற்சரி - பரியகம். காற்பலம் - கஃசு. காற்றாடி - கதலி, கறங்கு, சுழல். காற்றின்குணம் - போக்கு, வரவு, நோய், கும்பித்தல், பரிசம் என விவை. காற்று - அம்போதி, அரி, அநிலம், ஆசுகம், உயிர், உயிர்ப்பு, உலவை, ஊதல், ஊதை, ஒலி, கந்தவகன், கந்தவாகன், கம், காலசம், காலிலி, கால், கோதை, சதாகதி, சமீரணன், சமீரன், சலனம், சுசனம், நிழலி, நீலம், நீல், பவமானன், பவனம், பிரபஞ்சனன், மருத்து, மாருதம், மால், வங்கூழ், வளி, வாதம், வாயு, விண்டு, வேற்றலம். அன்றியுங் கார்ப்பருவத்தின் காற்று வாடை. கூதிர்ப் பருவத்தின் காற்று கூதிர், கூதை. முன்பனிப் பருவத்தின் காற்று கொண்டல். பின்பனிப் பருவத்தின் காற்று தென்றல். முது வேனிற் பருவத்தின்காற்று கோடை. அன்றியுங் கீழ்காற்று - கொண் டல் மேல்காற்று - கோடை. தென் காற்று - தென் கால், தென்றல், வசந்தம். வட காற்று - வடந்தை, வாடை. கானல் - பிசாசரதம், பேய்த்தேர், மரீசிகை, வெண்டேர், வேனில். கானாங்கோழி - பூழ். கி கிடைத்தல் - சிக்கல், பயத்தல், பெறல், வாய்த்தல். கிட்டல் - அணவல், அணுகல், அண் டல், அருகுறல், உறல், குறுகல், சிவணல், சேரல், துன்னல், நணுகல், நண்ணல், நேர்தல், மருவு தல். கிணறு - அசும்பு, உறவி, குழி, கூடம், கூவல். துறவின் பெயர் - கேணி, பூவல். கிண்கிணி - நூபுரம், பரிபுரம், பரியகம். கிண்கிணிமாலை - தார். கிண்டல் - கிளர்தல், கிளைத்தல், நோண்டல். கிம்புரி - கோளகை, தாங்கி, பூண். கிரணம் - கதிர், கற்றை, காந்தி, பிரபை. கிராமணி - கிராமமுற்றோன், கிராமி யன். கிராமமுற்றோன் - கிராமியன். கிருகரன் - முகத்திடை நிற்கும் ஓர்வாயு. கிருகரன்குணம் - தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைப்பது. கிருபை - அபயம், அருள், இரக்கம், ஈரம், கருணை, காருண்ணியம், தகவு, தயாளம், தயை, நிழல். கிருபையுடையோன் - காருணிகன், காருணியன், கிருபாளு, தயாளன், தயாளு. கிலுகிலுப்பைச்செடி - பகன்றை. கிழக்கு - இந்திரி, ஐந்திரம், கீழ், கீழ்த்திசை, குணக்கு, பிராசி, பூருவம். கிழங்கு - கந்தம், சகுனம், பலம், மூலகம், மூலம். கிழமை - வாரம். கிழவி - மூத்தோள், விருத்தை. கிழித்தல் - அவிர்தல், கீண்டல், சீழ்தல், கீளல், கீறல், பீறல். கிளப்புதல் - திமைத்தல். கிளர்வரி - நடு நின்றார் இருவருக்குஞ் சந்து சொல்லக் கேட்டு நிற்பது என்னை? “கிளர்வரி யென்பது கிளக்குங் காலை, யொருவருய்ப்பத் தோன்றியவர்வா - யிருபுற மொழிப் பொருள் கேட்டு நிற்பதுவே” என்றாராகலின். கிளறுதல் - நோண்டல். கிளி - அரி, அவந்திகை, ஏசி, கிள்ளை, கீரம், சாரு, சுகம், சுவாகதம், தத்தை, வன்னி, அன்றியுங் கருங்கிளியின் பெயர் - கிள்ளை, கீரம். கிளிகடிகருவி - தட்டை, தழல். கிளிஞ்சில் - எருந்து, ஏரல். கிளைத்தல் - கிண்டல், ஞெண்டல், பிளிறல். கீ கீதாங்கம் - வாச்சியக்கூறினு ளொன்று அஃதாவது கீதத்திற்கு வாசிப்பது. கீரி - காத்திரம், காத்திரி, தீர்வை, நகுலம் இதன் பிள்ளை - குட்டி, பறழ், பிள்ளை. கீழறுத்தல் - அறை போதல். கீழறை - பிலம். கீழுதடு - அதரம். கீழ் - கயம், கிழக்கு. கீழ்காற்று - கொண்டல். கீழ்மக்கள் - அசடர், அந்தர், அற்பர், இதரர், இயவர், கண்டகர், கயவர், கலர், கல்லார், கனிட்டர், கையர், சிதையர், சிறியர், சிறுமையர், சீத்தையர். சுமடர், தீக்குணர், தீம்பர், தீயோர், தேரார், நீசர், நெறியிலார், பதகர், புல்லர், புள்ளுவர், பூரியர், பேதையர், பொறியிலார், மறையிலார், முசுடர், முசுண்டர், முறையிலார், மூடர், மூர்க்கர். கீழ்வாய்ப்புறம் - அணல். கீறல் - கிழித்திடல், கீண்டல், கீழ்தல், கீளல், கீன்றல், பீறல். கீற்று - கிழி. கு குகை - நிகுஞ்சம். குங்குமமரம் - கொங்காரம், ஞாழல், துருக்கம், நறவம், மரவம், மாலம். குங்குமம் - செஞ்சாந்து. குங்கிலியம் - குக்குலு, குங்குலு. குடக்கூத்து - கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த கண்ணன் வாணனகரமாகிய சோணித புரத்து ஆடிய கூத்துளொன்று இது ஐந்துறுப்பை யுடைத்து. குடங்கை - நாடக உறுப்புளொன்று அஃதாவது எல்லாவிரலுங் கூட்டி யுட் குழிப்பது. குடங்கையைக் குவித்துக் கொட்டல் - கொம்மை. குடமுழா - மண்கணை, முழவம். குடம் - இடக்கர், இடங்கர், இரும்பை, இறங்கர், கடம், கல சம், குடங்கர், குடந்தம், குணம், கும்பம், தசும்பு, தாழி. குடி - திணை. குடித்தல் - பருகல், பானம், மாந்தல். குடியிறை - இறுப்பு, கடன், கரம், கறை, வரி. அன்றியும், பகைவரிடு மிறையின் பெயர் - கப்பம், குறை, திறை, பாகுடம். குடுக்கையென்னும் பெயர்க் காரணம் - குடுக்கையாக அடைத்தலால் அப்பெயர்த்து. குடில் - குரம்பை. குடுமி - சிகை, சிக்கம், சிமி, சிமிலி, முடி. குடுவை - குண்டம். குடை - ஆதபத்திரம், கவிகை, கவிப்பு, சத்தி, சத்திரம், தொங்கல் பிச்சம்; அன்றியும் செங்குடை - சிந்தூரம், வெண்குடை - சுசி. குடைக்காம்பு - தண்டம். குடை - ஞெலிதல். குடைவேல் - உடை. குடையாடல் - வினாகானபுரத்துப் பச்சிம்புலவாகாண நகரப் புதுச் சந்நிதிக் கண் வீற்றிருந்தருளும் கந்தநாயகன் சூரபன்மனது மாயை களைத் தொலைத்தல் காரண மாகத் தமது குடையைத் தூக்கிச் சுழற்றி யாடியதாகும். இது நான்கு அங்கமுடைத்து. குட்டுதல் - தகர்த்தல், புடைத்தல். குணமிலாப்பசு - சுதை. குணமின்மை - சிதம்பு, சீத்தை, சீரணம், செடி. குணம் - இயல், இயல்பு, உரிமை, உழுவல், ஊழ், கிழமை, கொள்கை, கோள், சால்பு, சீலம், தகவு, தகுதி, தகை, தகைமை, தன்மை, திறன், நிலை, நிறம், நீர்மை, நுனித்தல், படி, பண்பு, பரிசு, பாடு, பால், பான்மை, பிரகிருதி, பெற்றி, மரபு, மாலை, முறை, வண்ணம், விதி. இவற்றுட்டீய குணத்தின் பெயர் - கராளம், கராளி. குணுக்கு - கடிப்பிணை. குண்டலம் - காதணி, குழை, தோடு, மஞ்சிகை. குதித்தல் - உகளல், உறுக்கல், குப்பு றல், துடித்தல், துள்ளல், பாய்தல், மிதித்தல். குதிரை - அசுவம், அச்சுவம், அத்திரி, அயம், அரி, இவுளி, உத்தரி, உன்னி, கண்ணுவம், கந்தருவம், கந்துகம், கற்கி, காண்டம், கிள்ளை, குந்தம், குரகதம், குரை, கொக்கு, கொய் யுளை, கோடகம், கோடரம், கோடை, கோணம், கோரம், சடிலம், சயிந்தவம், துரகதம், துரகம், துரங்கம், தூசி, தேனு, நானு ணகம், பத்திரி, பரி, பாட லம், பாய்மா, புரவி, மண்டிலம், மா, வயம், வாசி. இதனாண் - குண்டு, சேவல், மா. இதன்பெண் - கோளிகை, பெட்டை, வடவை. இதன் பிள்ளை - கன்று, குட்டி, மறி. அன்றியும் பெருங்குதிரை தேசி. குதிரைக்கடிவாளம் - கலினம், சவியம், கறுள், குசை, மூட்டு. இதன்பூண் - விருளை. குதிரைக்கயிறு - குசை, வடிகயிறு, வற்கம், வாய்வட்டம். குதிரைக்கல்லணை - படை, பண், பரம், பருமம், பல்லணம், பாரம், மாக்கருவி. குதிரைக்கழுத்திலணியுமயிர் - உளை. குதிரைக்குரல் - கடல், முகில், சங்கு, இடபம், முழவம் என்னுமிவை யிற்றைப்போலத் தொனிப்பன நற்சாதிக் குதிரைகளாம். குதிரைக்குளம்பு - குரச்சை, குரம், குரவம். குதிரைக்குற்றம் - கொம்பு, கன்னம், திருகுகன்னம், நஞ்சபாதம், கொள்ளிக்கால், வெள்ளிக்கண், சுடலை முகம், காளகண்டம், அண்டமின்மை. அண்டப் பெருக்க முதலியன குற்றமாமென்று நூலோர் கூறுவர். குதிரைச்சம்மட்டி - கோல், மத்திகை. குதிரைச்சுழி - சந்திரசுழி, அண்டா வத்தம், கௌவகம், காகாவர்த்தம், கேதாரி, கேசாவர்த்தம், பட்டடை யென்பனவாம். குதிரைச்சுழித்தானம் - சிரத்தில் இரண்டு, காதில் நான்கு, மார்பில் இரண்டு, நெற்றியினிடத்து ஒன்று, குளம்பி லொன்பதுமாகப் பத்துச் சுழிகள் குறையா திருக்க வேண்டு மென்ப. குதிரைநடை - கதி, கவனம், தாவு இவை ஐவகைப்படும், மெல்லிய நடை - சுவரிதகம், விரைவு நடை - ஆக்கிரந்திகம், இருகாற்றூக்கி யாடிவரு நடை - வல்கிதம், சுற்றி யோடல் - இரேசிதம், முழு வோட்டம் - புலிதம். குதிரைநிறம் - முத்து, சந்திரன், தாமரைப் பூந்தாது, பொன், காயாமலர், செவ்வரத்தவலர், பசுங்கிளியென்னு மிவை களையே கொண்டிருத்தல் நன்று. குதிரைநிறவழு - புலி, கரடி, கழுதை, செந்நாய், பூஞை, நரி, காகம், புகையென்னு மிவைபோன்ற நிற முள குதிரைகள் ஆகாவாம். குதிரைப்பந்தி - சாலை, பணை, மந்துரை. குதிரைப்பாகர் - பண்ணுவர், பரிமா வடிப்போர், மாவலர், வதுவர், வாதுவர். குதிரைபிறப்பிடம் - வேதங்களை நாவினுடைய பிரமதேவரது விழிப்புனலினும், அட்டவசுக் களிடத்தும், பாற் கடலினும், அக்கினியினும், கருப்பையினும், ஊக முட்டையினும் அமிர்தத் தினும் தோன்றுமென்க. குதிரைப்பெயர்கள் - மங்காளன், சாரங்கன், கங்காநீலன், மௌவழ கன், கொங்காளன், சன்னசம்பான், குங்குமச்சோரன், கரியான், நீலன், சாரன், மள்ளான், உரஞ்சிவந் தான், நல்லான், பொல்லான், கருங்காற் சம்பான் என்று சொல் லப்பட்டனவாம். குதிரைமயிர் - குசை, கூந்தல், கேசம், சுவல். குதிரைமார்க்கம் - மாதிகம். குதிரையங்கவடி - கச்சம், படி. குதிரையிலக்கணம் - சந்திரசுழி முதலிய தீச்சுழிகள் பொருந்தா தனவாய், கொம்பு கன்னம், முதலிய பழுதுகளின் சிர முதலி யனவற்றிற் சுழிகளை யுடையன வாய், அவக்குரலின்றி நற் குரலுள்ளனவாய், புலி முதலியன போன்ற நன்னிற முடையனவாய், நெற்றி யகன்று குளம் புயர்ந்து, வெண்மை நிறைந்து பற்க ளொத்து, நறுங்கந்தம் நிறைந்து, மாந்தளிர் போன்ற சிவப்பு நிறம் வாய்ந்த நாவுடைத்தாய், இரு கண்ணிமையுஞ் செறித்து நெருங்கி உக்கிரமான கண் பார்வையினை யுடையதாய், பல்லில் தசையில்லா மல் உள் வளைந்து முக்கோண மென விளங்கும் முகமுடையன வாகி பிடர்மயிருந் தலைமயிரும் ஒரு நிறமுற்று, மார்புங் கழுத்துஞ் சர்ப்பபடம் போன்று, சங்கு போன்ற தொனியையே மிகுதி யாகப் பெற்று, மண்டலமாகி வலியகுளம் புடையனவாகி, நரம் புகள் மறையப்பெற்று, முழந் தாள் நெளிகுறாமல், நெளித்த முதுகுகொண்டு திரண்ட தொடை யும் நீண்ட தண்டையும் உடை யனவாகி நெய்ப் பசுமை யாகிய உடலும், நாலுகால்களும் நெற்றி யும் வெளுக்கப் பெற்று, ஆகாயத் தும் நீரின்மீதும் செல்வனவாய் உள்ளனவே நற்பரிகள் என்க. குதிரையினார்ப்பு - தூளி. குதிரைவாயின் வடம் - வடிகயிறு, வற்கம். குதிரைவாய்நுரை - விலாழி. குதிரைவால் - தோகை, வாலதி. குதிரைவையாளிவீதி - செண்டு, செண்டு வெளி, திருமுற்றம், புரவி வட்டம். குதலை - குலை. குதிர் - புகல். குத்தல் - எறிதல், ஏற்றல், பற்றல், புடைத்தல், அன்றியும் நெல் முதலியன குத்தல் - அவைத்தல். குந்திநிற்றல் - குஞ்சித்தல். குபேரனகர் - அளகை. குபேரன் - அரன்தோழன், அளகை யாளி, இயக்கர் கோமான், இயக் கன், இருநிதிக் கிழவன், கின்னரர் பிரான், தனதன், தனபதி, நரர் பிரான், நரவாகனன், நிதிக் கிழ வன், நிதியோன், நிறை செல்வன், பிங்கலன், புட்பக விமானன், புருடவாகனன், மந்திரி, மரகதன், வடதிசைத் தலைவன், வைச்சிர வணன். குபேரன்மக்கள் - நளகூபரன், மணிக் கிரீவன். குபேரன்வாகனம் - நரவாகனம், புட்பகவிமானம். குமரனாடல் - குடை, அதனிலக் கணம், முன்னுரைத்தாம். குமிழமரம் - கடம்பல், கூம்பல். குமிழி - கொப்புள், நுரை, புற்புதம், பௌவம், மொக்குள். குமிழ்ப்புவடிவு - புளகம். குமுதம் - அல்லி, ஆம்பல், நெய்தல். குமுதவகை - சேதாம்பல், வெள் ளாம்பல். குமுதவளவு - கணகம் மூன்று பங்கு கொண்டது, அக்குரோணி வகை யுளொன்று. கும்பளவு - நிகர்ப்புதம்பத்துக் கொண்டது. கும்பராசி - காரம், குடங்கா, குடம், சாடி. கும்பிடுதல் - அஞ்சலித்தல், கை கூப்பல், தொழுதல். கும்மியாடல் - துணங்கை கொட்டல். குயவன் - கும்பகாரன், குலாவன், சக்கிரி, மட்பகைவன், மண்ணரி யான், மண்ணுடையான், வேட் கோவன். குயில் - அன்னியபுட்டம், கள கண்டம், காளகண்டம், கோகிலம், கோரகை, பரபிருதம், புரபுட்டம், பிகம். குரங்கு - அரி, கச்சகம், கடுவன், கபி, கலி, கள்வன், கானவன், கீசகம், கோகுலம், கோடரம், சிரை, கொங்கு, தோரணம், நகம், கிரந் தரம், பிலவங்கம், மந்தி, மர்க் கடகம், வலீமுகம், வானரம், அன்றியும் கருங்குரங்கு - கடுவன். பெண்குரங்கு - மந்தி, யூகம். குரங்கு முதற் கோட்டின்வாழ் விலங்கின் பிள்ளை - குட்டி, குழவி, பறழ், பார்ப்பு, பிள்ளை, மகவு. குரலிலக்கணம் - நான்கு மாத்திரை யிசையுடைத்தாம், குரல், குரலா யது. குரவைக்கூத்து - எழுவரேனும் ஒப்தின்மரேனுங் கைகோத்தாடுங் கூத்து. குரற்குரியதிறம் - ஆசான்றிறம். குரா - குடிலம், கோட்டம். குரு - அடிகள், அத்தன், ஆசாரி, ஆசான், ஆத்தன், ஆரியன், இறை வன், ஈசன், ஐ, ஐயன், கடவுள், குரவன், கோமான், சாமி, தலைவன், தீர்த்தன், தேசிகன், பகவன், பட்டா ரகன், பண்ணவன், பதி, புங்கவன், பெருமான். குருகு - சாரசம், தாரா, நரை, புட்கரம். குருகுலவேந்தர் - கௌரவர், பாரதர், பௌரவர். குருக்கத்தி - அதிகம், குருகு, நாகரி, மாதவி வசாந்தி. குருடன் - அதரிசனன், அந்தகன், கண்ணிலி, சிதடன். குருத்து - முருந்து. குருந்து - குந்தகம். குலங்கலந்தோர் - உயர்குலத் தந்தைக் கும் இழிகுலத் தாய்க்கும் பிறந் தோர் அனுலோமர். இழி குலத் தந்தைக்கு முயர் குலத் தாய்க்கும் பிறந்தோர் பிரதிலோமர். அனு லோமத் தந்தைக்கும் பிரதிலோமத் தாய்க்கும் பிறந்தோர் அந்தராளர். பிரதிலோமத் தந்தைக்கும் அனு லோமத் தாய்க்கும் பிறந்தோர் விராத்தியர். அன்றியுஞ் சாதி தருமம் விட்ட வருக்கம் விராத்திய ரென்று பெயர். குளமுளோன் - குலீனன். குலம் - இனம், உம்பல், ஒழுக்கம், குடி, திணை, வருணம், விழுப்பம். குலுங்குதல் - குலைதல், நடுங்குதல். குலைதல் - அளுக்கல், உலமரல், ஓடல், குலையல், கூசல், திடகல், துணுக்கெனல், துண்ணெனல், தெருமரல், தேங்கல், ஞொள்கல், வெய்துறல். குவடு - சிகரம், கோடு, கொடுமுடி, முடி. குவளைப்பொது - உற்பலம், குவலயம். அன்றியும், செங்குவளையின் பெயர் அரத்தம், அரத்தோற் பலம், எரு மணம், கல்லாரம், செங்கழுநீர், கருங்குவளையின் பெயர் - இந் தீவரம், காவி, நீலம், நிலோற்பலம், பானல். குவிதல் - இராசி, குப்பை, குளவு, குவால், குவிவு, குவை, கூம்பம், சாம்புதல், துற்றல், நூழில். குழந்தை - இளவல், குட்டன், குழவி, சிசு, சேய், பிள்ளை, மகவு, மழவு. குழம்பு - ஆணம், பாகு. குழலோனமைது - நூல்களிற் சொன்ன முறைப்படி இசைகொள்ளும் எழுத்துக்களின் மேலே வல் லொற்று வந்தவழி மெல் லொற்றுப்போலப் பண்ணீர் மை நிறுத்தலாகிய சித்திரப் புணர்ப்பும் இசை கொள்ளா வெழுத்துக் களின் மேலே வல்லொற்று வந்த வழி மெல்லொற்றுப்போல நெகித்துப் புணர்த்தலாகிய வஞ் சனைப் புணர்ப்புமாகிய இரு கூற்றினையு மறிந்து, பாடலாசிரி யனையொத்த அறிவினை யுடை யவனாகி, விரலால் உளர்ந்து ஊதுந்துளைகள் தர்ச்சனி முத லாகவிட்டுப் பிடிப்பது ஆரோ கண மாதலானும் கனிட்டை முத லாக விட்டுப் பிடிப்பது அவரோ கணமாதலானும், இப்படிச் செய் வது வர்த்தனை யாகலான் இப்படி யாய் நூற்று மூன்று பண்ணீர்மை களையும் தன்னிலை குலையாமற் காட்டவல்லவனாகி அரும் பாலை செம்பாலை இவை போல வல்லாத பாலைகளையும் இசை நூன் முறைப்படியிணை நரம்பு தொடுத்துப்பாடும் அறி வினையு முடையவனாய், முழ வின்கண் ணெறியினை யறிந்து, தண்ணுமை முதல்வனொடு பொருந்தி, இளிக்கிர மத்தாலே பண்களை யாழ் மேல் வைத்து இசைக்காரன் பாடிய பாட்டி னியல்பைச் சுரம் குறைவுபடாமல் நிறுத்தி வண்ணப் பாடலின் அழகெல்லாங் காட்டிப் பண்ணிலக்கணம் பதினொன்றை யும் நிரம்ப வைத்து, வாரப்பாடலை யளவுபெற நிறுத்தி இலக்கண விதி வழுவாமல் வாசித்துக்காட்ட வல்லவனாம். குழல் - வேங்கியம், பணை, ஆம்பற் குழல், கொன்றைத் தீங்குழல், முல்லைத் தீங்குழல். இவற்றுள், கஞ்சத்தாற் குமுதவடிவாக அணைசு பண்ணிச் செறித்தலின் ஆம்பற்குழல், கொன்றைப் பழத் தைக் குடைந்து துளை செய்து ஊதலால் கொன்றைக் குழல் முல்லைக் கொடியால் முப்புரி யாகத் தெற்றியவளையை வளை வாய்க்கட் செறித்தூதலின் முல்லைத் தீங்குழல் எனப் பெயர் பெற்றன. குழல்வாசித்தற்குரியவிரல்கள் - இடக்கையிற் பெருவிரலுஞ் சிறு விரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையிற் பெருவிர லொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரலுமாம். குழவியென்னும் பெயர் - யானை, கடமை, மரை, எருமை, மான் என்னுமிவற்றிற் காம். குழவு என்னும்பெயர் - குரங்கு முதலாய மரக்கோட்டில் வாழும் விலங்கின் பிள்ளைகட்காம். குழற்கொத்து - குந்தளம். குழாய் - தண்டு. குழிநாவல் - சாதேவம். குழைதல் - அணைதல், ஈடு, ஒல்கல், சுணைதல், நெகிழ்தல். குளகச்செய்யுள் - குற்றெழுத்துத் தொடர்ந்து வருவது. குழைத்தல் - இகுத்தல். குளநெல் - நீவாரம். குளவி - வேட்டுவன். குளித்தல் - ஆடல், குடைதல், தோய் தல், நானம், படிதல், மஞ்சனம், முழுகல். குளிர்ச்சி - அளி, ஈரம், சாந்தம், சீதம், சீதளம், தண், தண்ணம், தண்மை, நளி, நளிர், நிழல், பனி, மழை. குள்ளன் - குஞ்சன், குறளன், சிந்து, வாமனன். குறவரின்பெயர் - குறிஞ்சி நிலமாக் களைக் காண்க. குறளை - கொஞ்சம், கொடுவாய், கொண்டியம், தொடுப்பு, பிசுனம். குறிப்பின்பெயர் - அடையாளத்தைக் காண்க. குறிக்கொள்வார் - பாராயணர். குறிஞ்சித் தலைவன் - கானகநாடன், சிலம்பன், நண்பன், பொருநன், பொருப்பன், மலையன், வெற்பன். குறிஞ்சிநிலத்தூர் - குறிஞ்சி, குறும் பொறை, சிறுகுடி, சிற்றூர், சீறூர். குறிஞ்சிநிலப்பறை - துடி, தொண் டகம், முருகியம். குறிஞ்சிநிலப்பெண்கள் - குறத்தியர், கொடிச்சியர். குறிஞ்சிநிலமாக்கள் - இறவுளர், கானவர், கிராதர், குறவர், குன்றவர், புனவர், மள்ளர். குறிஞ்சிநிலம் - பறம்பணை, புறவணி, புறவம், மலைச்சார்பு, வன்பால். குறிஞ்சிப்பண் - அரற்று. குறிஞ்சிப்பறை - தொண்டகம். குறிஞ்சியாழ்த்திறப்பெயர் - நைவாளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, அரற்று, செந் திரம், பஞ்சுரம். குறிஞ்சியாழ்த்திரன் - அந்தாளி, நட்டபாடை, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கௌடி, உதயகிரி, பஞ்சுரம், பழம் பஞ்சு ரம், மேகராகக் குறிஞ்சி, கேதாளி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்காரகம், நாகம், மருள், பழந்தக்கராகம், திவ்விய வராடி, முதிர்ந்த விந்தளம், அநுத்திர பஞ்சமம், தமிழ்க் குச்சரி, அருட் புரி, நாராயணி, நட்டராகம், இராமக்கிரியை, வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவக் குறிஞ்சி, ஆனந்தை என்பனவாம். குறித்தல் - எண்ணல், கண்ணல், கருதல், காணல், சுட்டல், நுதலல், புகறல், பேணல். குறிப்பு - இங்கிதம், எண்ணம், கருத்து, சிந்தை, சூழல், நாட்டியம். குறுங்காடு - இரும்பு. குறுநிலமன்னர்குதிரை - கந்துகம். குறுந்தடி - குணில். குறுந்தெரு - மருகு. குறுமை - குறள், வாமனம். குறும்பாடு - சாபம், வருடை, வரை யாடு. குறைதல் - அஃகல், அருகல், அல்கல், எஞ்சல், குலைதல், குன்றல், சிகல், சிங்கல், சிறக்கணித்தல், சிறுகல், சுருங்கல், தவறல், தேய்தல். குறைபாடு - ஈனம், ஊனம், எச்சம், கயம், கீணம், தேவ நிறப்பு, விகலம். குற்றம் - அரி, அரிப்பு, அரில், ஆசு, இழிவு, ஏசு, ஏதம், கசடு, கடவை, கரில், கழிப்பு, களங்கம், களை, கறை, காசு, குறை, கொழிப்பு, கோது, சழக்கு, செயிர், தட்டு, தப்பு, தவறு, தீங்கு, தீது, துகள், தோம், நவை, நறை, பழி, பழுது, பிழை, புகர், புரை, போக்கு, மறு, மாசு, அவமானம், மிறை, மை, வசை, வடு, விண்டு, விடல், பூதி. குற்றல் - நவித்தல், துப்பல், துற்றல். குன்றிக்கொடி - குஞ்சம். கூ கூகை - ஊமன், கௌசிகம், நிசாசரி, பெரும்புள். கூடல் - குவிதல், சங்கு, பயினி, புல்லல், பொருந்தல், மணத்தல். கூடல்வகை - யோகம். கூடிநிற்றல் - இசை, இசைப்பு, உடங்கு, ஒருங்கு. கூடு - கூண்டு, பஞ்சரம். கூடை - இறைவை, புட்டில், வட்டிகை. கூட்டம் - அவை, ஆசிடை, இராசி, இனம், ஈட்டம், ஈண்டல், ஐமை, கணம், கருவி, களரி, குப்பை, குலம், குலவு, குவால், குவிதல், குழாம், குழு, குழுமல், கூளி, கோட்டம், கோட்டி, சங்கம், சஞ்சயம், சமரசம், சமவாயம், சமூகம், சமுதாயம், சமூகம், சமையம், சரி, சவை, சாலம், ஞாட்பு, திரள், தூறு, தொகுதி, தொகுத்தல், தொகை, தொழுதி, தொறு, தோடு, நளி, நிகரம், நிகாயம், நிவகம், பிருந்தம், முகை, மேளனம், மொய், யோகம். கூட்டுதல் - அடுத்தல், பொருத்தல். கூதாளிச்செடி - கூதாளம், துடி. கூத்தர்பெயர் - நாடகரைக் காண்க. கூத்தியதினிலக்கணம் - கூத்தும் பாட்டும் அழகுமென்று சொல்லப் பட்ட இம்மூன்றி னுள்ளும் ஒன்றுங் குறைவு படாமல் ஐந்தா மாண்டில் தண்டியம் பிடித்து ஏழாம் வயது வரையும் இயற்றிப் பன்னிரண்டா மாண்டில் அரசன ரங்கில் காட்டி யுள்ளவள் கூத்தி யென்க. இதனைப் “பண்ணியம் வைத்தானைமுகன் பாதம் பணிந்து நாள்” என வரும் பரத சேனாபதீயப் பாக்களானுணர்க. கூத்தினூல் - பரதம். கூத்தின்விகற்பம் - அலைப்பு, இலயம், உள்ளாளனம், கடகம், கரணம், குனிப்பு, கூடை, கொந்தளம், சிங்களம், தேசிகம், பவுரி, பிரமரி, மலைப்பு, மல், வீரட்டானம். கூத்து - இலயம், கண்ணுள், குரவை, தாண்டவம், துணங்கை, தூக்கு, நடம், நடனம், நடை, நட்டம், நாடகம், நாட்டியம், நிருத்தம், படிகம், பரணி, பரதம், புரியம், மண்டிலம், வாணி. அன்றியும் தேவர்க்காடுங் கூத்து - அணங்கு, ஆஞ்சி, கழங்கு, வெறியாடல், வேலனாடல். கூந்தற்கமுகு - தாலம். கூந்தற்பனை - தாளி, பூகம். கூப்பிடல் - அலறல், அழைத்தல், கதறல், கத்துதல். கூப்பிடுதூரம் - குரோசம். கூம்புதல் - ஒடுங்குதல், சாம்புதல். கூர்மன்குணம் - உரோமம் புளகித்தி மைப்பது. கூர்மை - அயில், அரி, அளம், அள், ஆர், உசி, எஃகு, கடி, தாரை, நிசிதம், நுணுக்கம், பூ, வசி, வயிரம், வள், வை. கூர்மையில்லோன் - மந்தன். கூர்மையின்மை - மந்தம். கூவநூலோர் - உல்லியர், கீழ்நீர்க் குறியறி நூலோர். கூறியதுகூறல் - புனருத்தி. கூறுபாடு - திறம், வகை. கூறை - ஆடை, கோடி, சூடி, கலிங்கம், காழகம், படம், தூசு, புடைவை, துகில், பரிவட்டம், ஆவரணம், தானை, உடை, ஆசா ரம், அம்பரம், நீவி, அறுவை, உடுக்கை, சம்படம், புட்டி, சாடி, சேலை, மடி, சீரை, வட்டுடை, கோசிகம், கலை, வாகனம். கூறைவிகற்பம் - கந்தை, விரிபம், கண்டை, பிடியல், வேதகம், புங் கம், பங்கம், கத்தியம், தூரியம், சிற்றில், நாகம், பாரி, பாளிதம், காம்பு, நேத்திரம், மயிரகம், வயிரியம். கூனன் - கூன், கோணல். கூன்வாள் - கோணம். கெ கெடுகுறி - உற்பாதம், துர்நிமித்தம், அவசகுணம். கெடுதல் - அவிதல், அழுங்கல், இரிதல், இறுதல், உடைதல், ஒருங்கல், கந்தல், குறைதல், சிகல், சிதைதல், சிந்தல், தபுதல், தௌவல், நந்தல், படல், பொடிதல், மங்கல், மடிதல், முரிதல், வட்கல், விளிதல், வீதல். கெண்டிகை - கரகம், கெண்டி, கோடிகம். கெண்டைமீன் - கயல், சபரம், சேல். கெந்தபொடி - சுண்ணம். கெவுழி - கோகிலம், பல்லி, புள்ளி, பொந்து, மனைக்கோள். கெளிற்றுமீன் - கெளிறு. கே கேகயப்புள் - அசுணமா, சிஞ்சுகம். கேடகம் - கடகம், கிடுகு, தட்டு, பரிசை, பலகை, மறை, வட்டணம், வட்டம், வேதிகை. அன்றியுந் தோலாற் செய்தது - தோல், தோற் பரம். பிரம்பினாற் செய்தது - தண்டை, வள்ளி. நெடும் பரிசை யின் பெயர் - நெடிய வட்டம், மரவட்டம். கேடு - அரிட்டம், அழிவு, ஆனி, இழிவு, இழுக்கு, இறல், ஏதம், கயம், சிதைவு, சுதம், சேதம், தா, துரிதம், நட்டம், பாடு, மடி, மிகை, வழுவு. கேட்டைநாள் - இந்திரநாள், எரி, செந்தழல், சேட்டை, வல்லாரை, வேதி. கேது - கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை, மதியுணி. கேத்திரம் - nக்ஷத்திரம், ஆலயம், தலம், புண்ணியத்தானம், மந்திரம், கோவில், கோட்டம். கேந்திரம் - உதயராசிக்கு நாலாம் ஏழாம் பத்தாமிடங்களாம். கேளாமை - வாளா, வேளா. கை கை - அத்தகம், கரம், கைத்தலம், சயம் தோள், பாணி. கை கூப்பி மெய்கொட்டி நிற்றல் - குடந்தம். கைகோத்தாடல் - குரவை. கைக்கட்டி - கைப்புடை கோதை. கைக்கவசம் - ஆசு, கைக்கட்டி, கைப் புடை. கைச்சரி - பரியகம். கைச்சிகி - விருத்தி யிலக்கணம், காமம் பொருளாகக் காமுகர் தலைவராக வருவது. கைத்தாளம் - கஞ்சம், கிட்டி, கிணி, பாண்டில். கைப்பிடிவாள் - கண்டம். கைப்பு - கைத்தல், தித்தம். கைம்பெண் - அமங்கலி, கலன்கழி மடந்தை, கைமை, கைனி, திருவிலி, விதவை. கைம்பெண்பிள்ளை - கோளகன். கைம்மணி - எல்லரி, படலிகை, பரந்தவடம், வட்டம். கைம்மைபெற்றோன் - கோளகன். கையாந்தகரை - அறுபதம், கோக ணம், ப்ருங்க ராஜம். கையொழியாமை - கைதூவாமை. கைவளை - கன்று, குருகு, சங்கு, சரி, சூடகம், தொடி, வண்டு, வள்ளி, அன்றியும் பிள்ளைக் கைவளை யின் பெயர் - பிடிகம். கைவிடாப்படை - சத்திரம். கைவிடுபடை - அத்திரம். கைவேல் - கப்பணம், தோமரம். கொ கொக்கு - குரண்டம், பகம், பலாகம், புதா, மஞ்சகம். கொசுகு - அசவல், அஞலம், அஞல், உலங்கு, கொதுகு, சகல், மும்மு துள்ளல், நிலம்பி, நுளம்பு, நொள் ளல், மசகம், முஞல், வலு ஒலுங்கு. கொடாமை - கரத்தல், கரவு, நிறுத்தல், மறுத்தல், மாற்றல். கொடி - கதலி, கதலிகை, கத்திகை, கேதளம், கேது, சத்தி, சருத்தி, துகில், துவசம், தோகை, படம், பதாகை, விலோதனம், சிறுகொடி யின் பெயர் - கத்திகை; வீதியிற் கட்டிய கொடியின் பெயர் - விடங்கம். கொடிக்கொத்தான் - நூழில். கொடிப்படை - தார். கொடியினுட்படர்கொடி - இலந்தை, நூழில், வல்லி, வள்ளி. கொடிவகை - கோற்கொடி, மென் கொடி. கொடுங்கை - மதலை, விடங்கம். கொடுபோதல் - போதரல். கொடுங்கோன்மன்னர் குடைக்கீழ் வாழ்கின்ற குடிகள்போலப் படுநிலம் - பாலை. கொடுமை - அகோரம், உக்கிரம், உறைப்பம், உற்பாதம், கடினம், கடுமை, கரில், கலாம், குரூரம், கூரம், கோடணை, கோரம், சடம், சண்டம், தூமகேது, பூதி, வக்கிரம், வஞ்சம், விபூதி. கொடுமையுள்ளோன் - வெய்யோன். கொடுவாள் - அரிவாள், குயம், புள்ளம். கொட்டாவி - ஆவித்தல். கொட்டாவி விடுதல் - ஆவலித்தல், ஆவித்தல். கொண்டல் வண்ணன் கூத்து - அல், குடம், மல். கொண்டாடல் - குலாவல். பாராட்டல், மெச்சல். கொண்டைமாலை - கோதை, தொங்கல். கொண்டோற்பிழைத்துப் பெருமகன் - குண்டகன். கொத்தமல்லி - உருளரிசி. கொத்தளிப்பாய் - அரை. கொத்தான்செடி - நந்தை. கொத்து - குச்சம், குடும்பு, குலை, சாறு, தாறு, படு, மஞ்சரி. குலை யுள்ளன - ஈந்து, கமுகு, காந்தள், தெங்கு, பனை, வாழை முதலா யின. தாறுள்ளன - ஈந்து, கமுகு, வாழை. கொப்பரி - கடாரம், கொப்பரை, தசும்பு. கொப்பளித்தல் - இமிழ்த்தல், உமிழ் தல், ஒக்குதல், காலல், தெவிட் டல், பிலிற்றல், பிளிர்த்தல், பில்கல். கொப்பிகொட்டல் - கைகுவித் தாடல், கைகூப்பல், கைகொட்டி, கொம்மை. கொப்புளம் - கொப்புள், கொம்மை, மொக்குள். கொப்பூழ் - ஆகு, இதலை, இலஞ்சி, உந்தி, நாபி, போகில். கொம்பிலாவிலங்கு - குமரம். கொம்பு - இரலை, கோடு, வயிர். கொய்சகம் - நீவி. கொய்யடிநாரை - குருகு, வண்டா னம். கொலை - அணங்கு, ஊறு, ஊறு கோள், காதம், காதை, கோள், நிகாரணம், நிசாரணம், நிடூதனம், நூழில், பராசனம், பிஞ்சம், மறம், மாரணம், வதை, விசரம், விச்சனம், வினாசம். கொலைசெய்வோன் - காதகன், காதன், சரருகன், நிகாரணன், நிசாரணன், நிடூதனன், பராசனன், பிஞ்சகன், வதன், வினாசன். கொல்லல் - அடுதல், இகுத்தல், எருக்கல், எற்றுதல், ஒழித்தல், களைதல், காதுதல், கோறல், சட்டித்தல், சவட்டல், செகுத்தல், செவிட்டல், செறித்தல், செறுத் தல், தெறுதல், தொலைத்தல், நீக்கல், படுத்தல், மாய்த்தல், முருக்கல், வகைத்தல், வீட்டுதல். கொல்லன் - கருமான், மனுவன். கொல்லுலைமூக்கு - குருகு, சிவை. கொல்லை - அவலம், துடவை, தொடுவு, தோட்டம், படப்பை, பாவகம். அன்றியும் பழங்கொல் லையின் பெயர் முதைப்புனம்; புதுக் கொல்லையின் பெயர் - விதைப்புனம்; காடுவெட்டிச்சுட்ட கொல்லையின் பெயர் - முதை. கொவ்வை - தொண்டை, விம்பம். கொழிஞ்சி - கோளி. கொழித்தல் - தெளித்தல், தெள்ளுதல், வரன்றல். கொழு - கோள். கொழுப்பு - நிணம், விழுக்கு, விளர். கொழுமை - செழுமை. கொளல் - கவர்தல், வவ்வல், வளைத்தல், வாருதல். கொள் - காணம் குலுத்தம், முதிரை. கொள்கலம் - இடுங்கலம், பாண்டம். கொள்ளல் - ஏற்றல், கொளல், கோடல், வரைதல், வாங்கல். கொள்ளிக்கட்டை - அலாதம், உற்கம், உற்கை, ஞெகிழி. கொள்ளை - கொண்டி, சூறை. கொள்ளையிடல் - கவரல், வவ்வல், வாரல். கொறுக்கை - எருவை, கொறுக்கச்சி, சரம், சரவணம், வேழம். கொன்றைமரம் - ஆர்க்குவதம், இதழி, கடுக்கை, தாமம், மதலை. கோ கோங்குமரம் - கன்னிகாரம், ஞாழல், துருமோற்பலம், பலினி, பிணர். கோடாலி - குடாரம், கோடரி, தாத்திரம், நவியம். கோடி - வெள்ளவகையி னொன்று, ஏகம் எட்டுப்பங்கு கொண்டது. கோடை - வசந்தம், வேனில். கோட்டமரம் - குரவம். கோட்டான் - உலூகம், குடிஞை, குரால், பொய்கை. கோட்டை - அரணம், அரண், அரலை, அருப்பம், ஆவரணம், கவை, வல்லை. அன்றியு மலைமேற் கோட்டையின் பெயர் - அழுவம், துருக்கம், துர்க்கம். அது நால் வகைப்படும். கடலரண், காட் டரண், மதிலரண், மலையரண். கோட்டையிற்கள்ளவழி - கற்படை, சுருங்கை. கோணத்தெரு - முடுக்கு. கோணாய் - தோண்டான். கோதாவரி - விருத்த கங்கை, அதன் பிரிவு கௌதம நிதி. கோதுமை - கோதி. கோத்தமலர் - மத்தகமாலை. கோத்தமாலை - சிகழிகை, தொடை யல், படலை, வாசிகை. கோத்திரம் - உம்பல், குடி, சந்ததி, சந்தானம். கோபக்குறிப்பு - கறுப்பு, சிவப்பு, கன்றல், புழுங்கல், புகைதல், கொதித்தல். கோபத்தின்பெயர் - சினத்தைக் காண்க. கோபுரம் - சிகரி. கோபுரவாயில் - அரிகூடம், ஆத்தா னம், கோட்டி, கோபுரம். கோபுரவாயிற்கதவுவிட்டுப்புகும் வழி - புதவு, பூழை. கோபுரவாயிற்படிச்சுருள் - அத்தினகம். கோபுரவாயிற்றிண்ணை - அளிந்தம். கோமேதகம் - இருவேருறுவி, மஞ்ச ளுஞ் சிவப்புங்கலந்த நிறமுடை யது. கோரை - எருவை, பஞ்சாய். அன்றியுந் திரள்கோரை - சாய். வாட்கோரை - செருந்தி, கோரைக்கிழங்கு - கனம், முத்தக்காசு. கோலச்சாரி - வரி, வேட்டுவவரி. இஃது வேட்டுவமகளாகிய சாலினி கொற்றவையுருக் கொண்டு ஆடு தலின் வேட்டுவ வரியெனப்படும். கோலஞ்செய்வோன் - வண்ணமகள். கோல் - காண்டம். கோவாங்குமணி - ஓரிரத்தினம், படிதம். இது கோவைப்பழம், செங்கல், குராமலர், மஞ்சள் என்னு மிவைபோன்ற நிறத்தினையுடை யது. என்னை? “செங்கல் குரா மலர் மஞ்சள் கோவை - குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமும்” என்றார் கல்லாடத் தாகலின். கோவிலின்பெயர் - தேவர் கோவிலைக் காண்க. கோவேறுகழுதை - வேசரி. கோவைக்கொடி - ஆதொண்டை, கொவ்வை, தொண்டை, விம்பம். கோழி - ஆண்டலை, காலாயுதம், குக்குடம், குருகு, பதாயுதம், வாரணம், இதனாண் - சேவல். கோழிகூகைகளின்பெண்பெயர் - அளகு. கோழை - ஐ, கபம், காசம், காசு, சிலேத்துமம். கோளன் - விசுனன். கோற்றேன் - பிரசம். கௌ கௌசிகம் - முகநிலை, தேவபாணிப் பண் மாயோன், பாணிப்பண். கௌசிகன் - இராசவிருடி, காதி மைந்தன், சகுந்தலைதாதை, வசிட்டர் மாற்றலன், கோசிகன், தவவீரன். கௌடம் - கௌடு, ஓர் பாடைநிலம். கௌடி - ஒருபண், செம்பாலைப்பண். கௌதமன் - அகலிகை நாயகன், நீர்க்குட்டவஞ் செய்தோன், இந்திரற்சினந்தோன், ஆயிரம், விழியளித்தோன், கோவந்தோன். கௌதமை - கோதை. கௌத்துவம் - தேவமணி, பாற்கடற் பிறந்தமணி, விண்டுவணியுமணி, சிகாமணி. கௌதமை - அமலை, தூநீர், கோதை. கௌந்தி - சாரணப்பெண். கௌவியம் - கோ சம்பந்தம், ஆனைந்து. கௌளி - பல்லி, காலக்கோள், சம்பவஞ் சொல்லி. ங ஙகரம் - இனந்தழுவு மெழுத்து, இரண்டாமெய். ஙனம் - அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம். ச சகாயம் - இணை, உதவி, உபகாரம், துணை, துப்பு. சகோடயாழ் - மூன்றாம்வீணை, சோடச நரப்பி. சக்கரம் - நேமி, பரிதி, வலயம், எஃகம், சுதரிசனம், அழி, ஒளி வட்டம், திகிரி, வளை. சக்கரவாகப்புள் - கோகம், சகோரம், சக்கரம், நேமிப்புள், பெருங் குருகு, யானைக்குருகு. சக்கராயுதம் - அரி, ஆழி, எஃகம், ஒளிவட்டம், சுதரிசனம், திகிரி, நேமி, பரிதி, வட்டம், வளை. சக்கிலியர் - சருமர், செம்மார், துன்னர், தோற்றுன்னர், பொல்லர். சங்கநிதி - சங்குபோன்ற விடிவினது. சங்கமம் - பதுமம் பத்துக் கொண் டது, வெள்ளம். சங்கம் - சமுத்திர மூன்றுபங்கு கொண்டது, அக்குரோணிவகை. சங்கறுப்போர் - வளைபோழ்நர். சங்காத்தி - அருகன், ஆத்தன், சமதன் அன்றியுஞ் சிநேகிதரைக் காண்க. சங்கிலி - அந்துகம், இடங்கணி, சிருங்கலம், துவக்கு, தொடர், நிகளம், அன்றியும் பாதசங்கிலி - தளை. சங்கு - இடம்புரி, இப்பி, ஊரி, கம்பு, கம்புள், கூனல், கோடு, சுத்தி, சுரிமுகம், தரா, நத்தம், நத்து, நந்து, நாகு, பணிலம், புரி, மனவு, வண்டு, வலம்புரி, சலஞ் சலம், பாஞ்ச சன்னியம், வளை, வளையகம், வாரணம், வெள்ளை. இதனாண் - ஏறு. வலம்புரிச் சங்கின் பெயர், கொக்கரை, இடம்புரிச்சங்கு ஆயிரஞ் சூழ்ந்தது. சலஞ்சலத்தின் பெயர் பணிலம். அது வலம்புரி ஆயிரஞ் சூழ்ந்தது. பாஞ்சசன்னி யம் சலஞ் சலங்களாயியிரஞ் சூழ்ந்தது. சங்குக்கை - சங்கமுத்திரை. அஃதா வது பெருவிரல் நிமிர ஏனைய நான்கு விரலும் வளைந்து நிற்பது. சங்குமணி - அக்கு. சடை - கிடை, குடிலம், கோடீரம், சடிலம், நெட்டி, பின்னல், வேணி. சடைமுடித்தபடிவர் - தாபதர். சடைமுனிவர் - தாபதர். சட்டப்பலகை - கிடுகு. சட்டம் - கிடுகு. சட்டி - குண்டை, விசளை, மட்கலம், பானை. சட்டுவம் - சிலகம், திவ்வி, தறுவி. சட்டை - அங்கி, கஞ்சுகம், கஞ்சுகி, கஞ்சுளி, காஞ்சுகம், காஞ்சுகி, குபுசம், குப்பாயம், தைப்பை, மெய்ப்பை, வாணம், வாரணம். சண்டாளர் - அகலர், இழிஞர், கவுண்டர், களைஞர், கனகதர், குணுங்கர், கொலைஞர், புலைஞர், மாதங்கர், வங்கர். சண்பகமரம் - சம்பகம், செண்பகம். சதங்கை - காலணி, கிண்கிணி, சிறு மணி. சதயநாள் - குன்று, சுண்டன், செக்கு, போர், வருணனாள். சதுரக்கள்ளி - கண்டீரவம், வச்சிரம், வச்சிராங்கம். சதுரக்கை - சுட்டுவிரலும் நடுவிரலுந் தம்முட் சேர்ந்து இறைஞ்சப் பெருவிரல் அகம்வரவைத்துச் சிறுவிரல் பின்பே நிமிர்ந்து நிற்பது. என்னை? “சதுரமென்பது சாற்றுங்காலை - மருவிய மூன்று நிமிர்ந்தகம் வளையப் - பெருவிர லகமுறப் பொற்பச்சேர்த்திச் - சிறு விரல் பின்பே நிமிர்ந்த செவ்வியி - னிறுமுறைத்தென்பவியல் புணர்ந் தோரே” என்று சுந்தானந்தப் பிர காச பரதநூலார் சொற்றா ராகலின். சத்திக்கொடி - தாடிமஞ்சம். சத்திபண்ணல் - உக்காரம், உமிழ்தல், ஓங்கல், கக்கல், வமி, வமநம், வாந்தி. சத்தியம் - ஆணை, சபதம், வஞ்சினம். சத்தியவகை - சூள், சூளுறவு, விகற்பம். சத்திரம் - மடம். சந்தனம் - அனுக்கம், ஆரம், ஈகம், கோரவாரம், சத்தம், சந்திர திலகம், சந்து, சாந்தம், படீரம், மலயசம், மலையாரம். சந்தி - அரி, அந்தி, கவலை, கோடகம், வரி. சந்திரகாந்தம் - சந்திர கிரணத்தா னீர்கால்வது. சந்திரனாள் - கலை, திதி, விளக்கம், அன்றியஞ் சந்திரனொருகலை தெரியுமிரா - சிநீவாலி; கலை தெரியாவிரா - குகு; முன் பக்கத் தின் பெயர் - சுக்கிலம்; பூருவம். பின்பக்கத்தின் பெயர் - அபரம், கிருட்டிணம். அன்றியுஞ் சந்தி ரனாட் கூறுபாடு - கலை. மூன்று நாள் வட்டம் - பக்கம். முதற் பக்கம் - நந்தை; இரண்டாம் பக்கம் - பத்திரை; மூன்றாம் பக்கம் - சயை; நான்காம் பக்கம் - இருத்தை; ஐந்தாம்பக்கம் - பூரணை. சந்திரனூர்தி - விமானம். சந்திரனொளி - சந்திரிகை. சந்திரன் - அமுதகதிரோன், அமுத கிரணன், அம்புலி, அரி, அரிச் சிகன், அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இனன், உடுபதி, உடுவின்வேந்தன், கலாநிதி, கலை யினன், களங்கன், குபேரன், குமுத நண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், தண்ணவன், தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிசாகரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர்த்தே, மதி, மதியம், மானேந்தி, முயலின் கூடு, விது, வீபத்து, வெண் கதி ரோன், வேந்தன். அன்றியு மிளஞ் சந்திரன் பெயர் - குழவி, பிறை. சத்து - கத்து, கந்து, கொளுந்து, பொருத்து, மூட்டு. சந்து - சதுக்கம். சந்தேகத்தின்சொல் - எவன், என், கொல், யா, யாது, யாதோ. சந்தேகம் - அயிர்ப்பு, அனுமானம், ஐயம், கடுத்தல், சகடு, சங்கை, செத்து. சபை - அவை, குழு, கோட்டி, கூட்டம், கணம், சமவாயம், சமுகம், சங்கம், தொகுதி. சமணதவத்தோர்பெயர் - ஆசீவகர், சமணமுனிவர், சாரணர். சமணர் - அருகர், சாவகர், சைனர். சமப்பால் - முல்லை, நெய்தல். சமயம் - அமைதி, அவகாசம், அற்றம், காண்டம், தருணம், வேளை, வேலை, ஓரை. சமனிசை - துத்தம், மதுரம், மத்திமம். சமாதியாவது - ஆதார தரிசனத் தையும் நிராதார தரிசனத்தையும் கடந்து மீதானத்து நிற்றல். சமானவாயு - கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது. சமானவாயுவின் குணம் - அறுவகைச் சுவைகளையும் அன்னத்தையும் பிரித்து எழுவகைத் தாதுவின் கண்ணுங் கலப்பிப்பதாம். சம்பங்கோழி - கம்புள். சம்மட்டி - கூடம். சம்மதித்தல் - அமைதல், அனுமதி, இணங்கல், இதையல், உடன் படல், நேர்தல். அன்றியும் உடன் படலைக் காண்க. சயந்தக்கை - இணைக்கை வகை பதினைந்னு ளொன்று. சயந்தம் - ஓர் நாடகத் தமிழ் நூல். சரச்சுவதி - அயன் மனைவி, இசை மடைந்தை, உலக மாதா, கலை மகள், காயத்திரி, சாவித்திரி, ஞானமூர்த்தி, தண்டாச் சிறப் பினள், தூயாள், நாமகள், நான் முகன் கிழத்தி, பனுவ லாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, பிராமி, பூரவாகினி, வாக்காள், வாணி, வெண்டா மரையாள், வெண்சலச முற்றாள், வெள்ளை நிறத்தாள், வெள்ளை மெய்யாள். சரசுவதிநதி - சோணை. சரபம் - எண்காற்புள், சம்பரம், சிம்புள், துரோணம், வருடை, வாருண்டம். சரப்பணி - வைரச்சங்கிலி. சரமணிக்கோவை - கலாபம், தோரை. சரளகம் - இசைவகையொன்று, சரளி. சரளகத்திற்குரிய வெழுத்து - நகர வருக்கம். சரி - கைவளை காற்சரிக்குங் கைச் சரிக்கும் பெயர், பரியகம். சரித்திரம் - கையாறு, சரிதம், சரிதை, சாரித்திரம், சீலம். சரியை - மெய்ஞ்ஞானம், அபர ஞானம், சிவஞான சாதனம், தாத மார்க்கம், தவம். சரியைப் பொதுத்தொழில் - சிவ பெருமான், தேவி, விநாயகர், குமாரக்கடவுள், வைரவக் கட வுள், வீரபத்திரர் கடவுள் என்னு மிவர்கள் எழுந்தருளியிருக்குந் திருக்கோயிலிற் சென்று திருவல கிடல், திருவொழுக்கிடல் கோட் டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ வென்னும் நால் வகை மலர்களை யுங் குற்றமறக் கொண்டு இண்டை, தார், மாலை, படலை, கண்ணி யென்னும் மாலைவகை சமைத் துச் சாத்தல், புகழ்பாடல், திரு விளக்கிடல், திருநந்தனவனம் வைத்தல், சிவனடியாரது திரு வேடத்தைக் கண்ட மாத்திரையே எதிர் சென்று வணங்கல். அவர் பணி செய்தல் முதலியனவாம். சரியைமுத்தி - சிவசாலோகம். சரியைவகை - சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்பனவாம். சரியைவழிபாடு - புறத்தொழின் மாத்திரையானே உருவத் திரு மேனியை வழிபடுதல். சரியையிற்கிரியை - சந்திர சேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாண சுந்தரர், பிச்சா டனர், காமாரி, காலாரி, திரிபு ராரி, சலந்தராரி, மாதங் காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர், அர்த்த நாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டே சாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகா நுக்கிரகர், சோமாஸ் கந்தர், ஏகபாதர், சுகா சீனர், தக்ஷிணாமூர்த்தி, இலிங் கோற்பவர் என்னும் இருபத் தைந்து மாகேசுர வடிவங்களு ளொன்றனை யாதல், விநாயகக் கடவுள் முதலிய ஆவரண மூர்த்தி களில் ஒன்றனையாதல் வழிபடுத லாம். சரியையிற்சரியை - திருக்கோயி லிற்றிரு வலகிடல், திருமெழுக் கிடுதல், திருவிளக்கிடல், விதானங் கட்டல், தோரண நாட்டல், தூப மிடல், திருநந்தனவனம் வைத்தல், பூக்கொய்தல், மாலை சமைத்தல், யாத்திரை செய்தல், நதி மூழ்கல், பிரதக்கிணஞ் செய்தல், தோத் திரம் பாடல், புல்லுச் செதுக்கு தல், திருக்குள முதலிய சுத்தி செய் தல், பசுக் காத்தல் முதலியனவாம். சரியையில் ஞானம் - அத்தியான பாவனையின் உறைப்பினால் ஓர் அநுபவவுணர்வு நிகழ்தலாம். சரியையில் யோகம் - இருதயத்தில் உருத்திரக்கடவுளைத் தியானஞ் செய்தலாம். சரீரவீணையினிலக்கணம் - மண் முதலாய ஐம் பூதங்களானுமாகிய உடம்பின் மத்திமத்தால் நாதத் தைத் தொழில் செய்யுமிடத்து மூலாதாரத்தினின்றும் எழுந்து பொருந்தான மெட்டானும் கிரியை களெட்டானுந் தோன்று மிசையை யுடைத்தாம். சருக்கரை - அக்காரம், அயிர், அழகு, கட்டி, கன்னல், குடம், குளம், சயம், பஞ்சதாரை, பாகு, விசயம். சர்ச்சரைவடிவு - பிணர். சலகொதுகு - துள்ளல், மசகம். சலஞ்சலம் - அரன் சங்கு, பணிலம். சலசூத்திரம் - அம்பி, காம்பி, காராம்பி கிழார், பூட்டை. சலஞ்சாதித்தல் - கறுவு, சாதனை, செறும்பு, செற்றம், தொந்தம், வயிரம், வேரம். சலதாரை - அங்கணம், சுருங்கு, தூம்பு, புழல். சலாகை - சராவம், நாராசம். சலாங்டு - பொய்யாப்புள். சலியாதுநிற்றல் - துருவம், துவம். சல்லிகை - பேரி, அக முழவு. சல்லிகையென்னும் பெயர்க்காரணம் - சல்லென்ற ஓசையுடைத்தாதலாற் பெற்ற பெயர். சல்லி - அறை, துணி, தூக்கு. சல்லியம் - செஞ்சந்தனம். சவரி - ஆகு, கவரி, சீகரம். சவரிவிகற்பம் - மரம், வெண்மயிர். சவை - அவை, கோட்டி, சங்கம், சமுகம், சாலம். அன்றியும் தரும சவை - ஆத்தானம். சளுக்குவேந்தர் - வேள்புல வரசர். சனி - அந்தணன், அந்தன், கதிர் மகன், கரியவன், காரி, கீழ்மகன், சந்தில், சவுரி, சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள். சா சாடி - அகளம், தளம், தாழி, பதலை. சாட்சி - கரி, சான்று. சாணி - புண்ணிய சாந்தம். சாணைக்கல் - சிலாவட்டம். சாதகப்புள் - சாரங்கம். சாதகமெழுதல் - சன்ன மெழுதல். சாதல் - அருகல், அலன்றல், இல் லென்றல், இறத்தல், உலத்தல், ஒழிதல், ஓய்தல், கழிதல், தவறல், தபுதல், துஞ்சுதல், துவன்றல், பொன்றல், மடிதல், மாய்தல், மாளல், முஞ்சல், முடிதல், மூசல், விடல், விளிதல், வீடல், வீதல். சாதியின்பெயர் - குலத்தைக்காண்க. சாதிலிங்கம் - இங்குலிகம், குலிகம். சாதிவகை - சுவையின் பின்னர் காட்டுதற் குரியன பத்து. அவை யாவன: அங்கம், ஈகாமிருகம், சம்வாகாரம், இடிமம், நாடகம், பாணம், பிரகசனம், பிரகரணம், வியாயோகம், வீதியென்பனவாம். சாதுரங்கமாணிக்கநிறம் - தாமரை, கழுநீர், சாதகப் புள்ளின்கண், இந்திரகோபம், மின்மினி, சூரி யன், விளக்கு, மாதுளம்பூ. அதன் விதை, நெருப்பு என்னும் பத்து வகைப்பட்ட நிறத்தினவாம். “சாதகப் புட்கண்டாமரை கழுநீர் - கோப மின்மினி கொடுங் கதிர் விளக்கு - வன்னி மாதுளம் பூ விதையென்னப் - பன்னுசாது ராங்க வொளிக்குணம் பத்தும்” என்றார் கல்லாட ராகலின். சாத்துவதி விருத்தி யிலக்கணம் - அஃதாவது அறம் பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவது. சாந்து - கலம்பகம், கலவைச்சேறு, களபம், காலேக வண்ணம், பீதம், வண்ணம், விரை. நால்வகைச் சாந்தின் பெயர் - காலேகம், பீதம், புலி, வட்டிகை. பலவற்றாற் கூட் டிய குழம்பின் பெயர் - கலம் பகம், கலவை, களபம், கெச்சை, தேய்வை. சாந்தினாலுடலிலிடுங் கோலத் தின் பெயர் - தொய்யில். நுதலி லிடுங் குறியின் பெயர் - திலகம், திலதம், புண்டரம். சாமம் - யாமம். சாமரம் - ஆகு, கவரம், கவரி, சவரம், சவரி, சீகரம், நரை, வெண்மயிர். சாம்பல் - அடலை, பலி, பூதி, வெண் பலி. சாயை - இயல், சாயல், நிழல். சாய்தல் - இடைதல், இரிதல், உடை தல், கெடுதல், சரிதல், நெரிதல், வழுவுதல். சாய்ந்தோர் மேற்படராமை - தழிஞ்சி. சாரி - நாய். சாரியை - அம், அற்று, இற்று, அத்து, அல், இல், அன், ஆன், ஐ, தம், நும், அ, குன் முதலியனவாம். சாரியைகள் - அக்கரஞ்சார்ந்து வரு வன அகரம், கரம், காரம், காண். சாரியை யிலக்கணம் - அஃதாவது சொல்தொடர்ந்து செல்லு நெறிக்கணின்று அதற்குப் பற்றுக் கோடாகச் சிறிது பொருள் பயந் தும் பயவாதுமாய் நிற்பது. சாரைப்பாம்பு - இராசிலம், இலஞ்சி, துண்டம். சார்தல் - அணவுதல், அணுகல், அண்ணுதல், சார்ச்சி, தொடல், தோய்வு, நணுகுதல், பிடித்தல், புணர்தல், புல்லல். சாவு - அந்தம், அளமாலினம், இல யம், இறப்பு, இறுதி, உலப்பு, சமாதி, நாசம், நிதனம், நெடுந் துயில், பஞ்சதம், பஞ்சதை, மர ணம், மாய்வு, யோகம், விளைவு, லீவு, சாறடை - திரிபுரி. சி சிங்கம் - அரி, அறுகு, ஆளி, கண் டீரவம், காளி, கேசரி, கொடும் புலி, கோளரி, சீயம், தெரிமா, நகாயுதம், பஞ்சாசியம், பஞ்சான னம், மடங்கல், மாபுலி, மிருகபதி, மிருகராசன், முடங் குளை, வட் புலி, வயப்புலி, வயப் போத்து, வயமா. இதன்பெண் - பெட்டை. இதன் குட்டி - போதகம். சிங்கவிராசி - அரிமா, ஆளி, ஐயா னனம், புலி, சிங்கம் முதலிய வற்றின் பெயரெல்லாம் பெறும். சிங்களம் - ஈழம், இலங்கை, பொன் னகரம், தக்ஷிண கைலாச வாசம், திரிகூட புரம், சிம்மளம். சிங்காசனம் - அரியணை, பத்திரா சனம். சிச்சிலிக்குருவி - கவுதம், சிரல், தித்திரி, பொன் வாய்ப்புள். சிதம்பரம் - தில்லை, புலியூர். சித்திரகாரர் - ஓவியர், சித்திரர், சிற்பர், மோகர், யவனர். சித்திரகாரர்வீதி - ஆவேசனம். சித்திரகூடம் - அம்பலம், தெற்றி. சித்திரப்படம் - கிழி. சித்திரப்புணர்ப்பாவது - இசை கொள் ளும் எழுத்துக்களின் மேலே வல் லொற்று வந்தவழி மெல்லொற் றுப் போலப் பண்ணீர்மை நிறுத்தல். சித்திரமெழுதல் - இரேகை தீட்டல், பொறித்தல், வரித்தல், வரைதல். சித்திரம் - ஓவியம், துகிலிகை, வட்டிகை. சித்திரைநாள் - அறுவை, ஆடை, சுவை, செவ்வி, தச்சன், துவட்டா நாள், தூசு, நடுநாள், நெய், பயறு, மீன். சித்திரமாதம் - சைத்திரம், மது. சித்து - அறிவுடைப்பொருள், சீவன், சேதனம், ஞானம், புற்கலன், ஆன்மா. சிந்தல் - உகுத்தல், உளர்தல், சிதர்தல், தவர்தல், தூவல். சிந்தூரம் - சேலேகம். சிந்தையுட்பட்டோனவிநயம் - முற் பட்டதாயினு மறியாத நிலையும், பிடித்த கையின்மே லடைத்த வழகும், முடிக்கப்படாத கரும நிலையும் பொருந்து மென்ப. சிரமஞ்செய்தல் - உழக்குதல், பரு மித்தல். சிரிப்பு - ஆசம், ஆர்ப்பு, இளி, நகை, முறுவல், மூரல், அன்றியும் அவ மதிச் சிரிப்பு - அசி, ஆசியம், இளி. சிரேணி - வாடை. சிலந்திப்பூச்சி - உலூதை, சிலம்பி. சிலம்பக்கூடம் - அரங்கம். சிலம்பிற்பெய்த பருக்கைக்கல் - அரி, சிரம்பம், சிலம்பம். சிலம்பு - அரவம், அரி, ஞெகிழி, தளை, நூபுரம், பரிபுரம். சிவசமயத்தோர் - காளாமுகர், சைவர், பாசுபதர், மாவிரதியர். சிவப்பு - அத்து, அரக்கு, அரத்தம், இங்குலிகம், இராகம், உலோ கிதம், கிஞ்சுகம், குருதி, குலிகம், சிந்துரம், சிந்தூரம், செக்கர், செம்மை, செய், சே, சேதகம், சேது, சேத்தல், சேத்து, சேந்து, சேப்பு, சோணம், சோணிதம், துப்பு, துவர், படீரம், பாடலம், பூவல், அன்றியு மிகுசிவப்பு - அருணம். கறுப்புக்கலந்த சிவப்பு - தூமலம், தூமிரம், பொன்மை கலந்த சிவப்பு பிங்கம், பிசங்கம். சிவல் - பகண்டை. சிவனாயுதங்கள் - சூலம், பாசம், பினாகமென்னும் வில். சிவனிருத்தம் - காபாலம், கொடு கொட்டி, பாண்டரங்கம். சிவனூர்தியுங்கொடியும் - இடபம். சிவனைம்முகம் - அகோரம், ஈசானம், சத்தியோ சாதம், தற்புருடம், வாமம். சிவன் - அந்தகாரி, அந்திவண்ணன், அரவணிந்தோன், அரன், அழ லாடி, அழலேந்தி, ஆலமர் கட வுள், ஈசானன், ஈச்சுரன், ஈமத் தாடி, உமாபதி, உருத்திரன், எண் டோளன், ஏறூர்ந்தோன், ஐம் முகன், கங்காதரன், கங்காளன், கங்கை வேணியன், கண்ணுதல், கபாலி, கயிலையாளி, கரியன், கறை மிடற்றன், காமநாசன், காமாரி, காலகாலன், கிரிசன், கிரீசன், குன்றவில்லி, கூற்றை யுதைத்தோன், கொன்றைசூடி, சங்கரன், சகிதரன், சடைமுடி யோன், சதாசிவன், சந்திர சேக ரன், சம்பு, சுடலையாடி, சூல பாணியன், சூலி, தந்தி யுரியோன், தாணு, திரிபுராந்தகன், திரியம் பகன், நக்கன் நந்தி, நந்திகேச் சுரன், நம்பன், நீலகண்டன், நீ றணிந்தோன், பசுபதி, பரசுபாணி, பவன், பாண்டரங்கன், பார்வதி கொழுநன், பிஞ்ஞகன், பித்தன், பிறப்பிலி, பிறைசூடி, பினாக பாணி, புர மூன்றெரித்தோன், புலித் தோலுடையோன், பூத நாதன், பெருமான், பேயுடனாடி, மங்கை பாகன், மழுவாளி, மாலயற் கரியோன், மானிடமேந்தி, முக் கண்ணன், மூர்த்தி, யானை யுரித் தோன், யோகி, வரன், வாம தேவன், விடையோன். சிவன்சத்தி - ஆதிசத்தி, பராசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி என்னு மைவகைச் சத்திகளு மாம். சிவன் புதல்வர் - விநாயகக் கடவுள், குமரக்கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக்கடவுள், அன்றியும் சிவனிந்திரியத்தாற் றிருமால் கையிற் பிறந்த பிள்ளை - ஐயனார். சிவன்மனைவி - பார்வதி. சிவிகை - அணிகை, தண்டிகை, யானம், வையம். சிவேதை - பகன்றை. சிள்வண்டு - சிதடி, சிமிலி, சில்லி, சில்லிகை, சில்லை, சிள்வீடு, நெடி. சிள்வீடு - சிதடி, சிமிலி, சில்லிகை, சில்லை. சிறுகீரை - சாகம், சாகினி, சில்லி, மேக நாதம். சிறுகொடி - கத்திகை. சிறுசவளம் - குந்தம். சிறுசின்னம் - தாரை, பீலி. சிறுசண்பகம் - கருமுகை, சாதி, பித்திகை, மாலதி. சிறுசெய் - குண்டில், பாத்தி. சிறுதிடர் - திட்டை, பதுக்கை. சிறுநூறு - அரில், அறல், இரும்பு, பதுக்கை, பொற்றை. சிறுபறை - ஆகுளி. சிறுபூழை - உழிஞை. சிறுமலை - இரும்பு, குறும்பொறை, குன்று, பதலை, பொச்சை, பொற்றை. சிறுமை - அணு, அற்பம், ஆசு, இறை, கன்று, கிஞ்சம், கிலம், கை, சிறுவரை, சின்னம், தனு, தன்னம், தினை, தொகம், பையுள், முளரி, வஞ்சம், வறிது. சிறுவட்டில் - கிண்ணம். சிறுவழி - விடங்கர். சிறை - காவல், சிக்கம், சேமம். சிறைப்படல் - தளைப்படல், வலைப் படல். சிற்பர்வீதி - ஆவேசனம். சிற்பாசாரியார் - மண்ணீட்டாளர், முறை தெரிந்தோர். சிற்றாலவட்டம் - சாந்தாற்றி, பீலி, விசிறி, வீசனம். சிற்றில் - குடங்கர், குடிசை, குடில், குரம்பை, கூரை. சிற்றுண்டி - அஃகுல்லி, அப்பம், இடிபிட்டு. சிற்றூர் - நொச்சி, பட்டு, பள்ளி. சினக்குறிப்பு - கஞறல், கறுப்பு, கன்றல், காந்தல், குறுகுறுப்பு, கொதித்தல், சிவப்பு, சுளித்தல், சுளிவு, புகைதல், புழுங்கல், பைத்தல், வெதிர்ப்பு, வெய்துறல். சினம் - உடற்றல், உடன்றல், உருத் தல், உறுக்கல், கடிதல், கடுத்தல், கதம், கலாம், கறுவம், காத்திரம், காய்தல், குரோதம், கோபம், சினவுதல், சீற்றம், சுளித்தல், சுளிவு, செயிர், செற்றம், துனி, தெழித்தல், தெழுத்தல், மறம், முனிதல், முனிவு, முனைவு, விடைதல், வியர்ப்பு, வெகுளி, வெறுத்தல், வேகம். அன்றி யும் பெருங்கோபத்தின் பெயர் - உரறல், உருத்தல், உருத்திரம், கரிதல், கனிதல், குறுத்தல், கொந் துதல், கோம்பல், சீறல், தீவிரம், விடைத்தல், வெம்பல். தணியாக் கோபத்தின் பெயர் - கறுவு, சலம். சினேகம் - இகுளை, கருவி, களன், கேண்மை, கேள், ஞேயம், தொடர்பு, நண்பு, நட்பு, நவம், பக்கம், மித்திரம். சினேகிதர் - அன்பர், ஆர்வலர், ஆவலர், இல்லுநர், எட்டினர், ஒட்டுநர், ஒல்லுநர், ஒன்றுநர், காதலர், காதலித்தோர், சேர்ந் தோர், துன்னுநர், தொடர்ந்தோர், நசைநர், நண்பர், நயந்தார், நயவர், நல்லவர், நள்ளுநர், நேர்ந்தார், பசைந்தார், புரிந்தோர், புல்லுநர், பெட்டார், மித்திரர், மேவினர், விழைந்தோர், வேட்டோர். சின்னம் - பீலி. சீ சீக்கிரத்தின் குறிப்பு - ஐயெனல், கதுமெனல், குத்திரம், கோரம், சண்டம், ஞெரேலெனல், ஞெள் ளல், நொய்தெனல், பொருக் கெனல், பொள் ளெனல், வெய் தெனல். சீக்கிரமுடையோன் - கவனன், வேகி. சீக்கிரம் - ஆசு, ஈண்டு, ஒல்லை, கடி, சடுதி, சபதி, சவம், துணவு, துரிதம், துருசு, துவல், நொறில், பரி, முடுகல், வல், வல்லை, விசை, விதப்பு, விரைவு, வெம்மை, வெறி, வேகம், கடுகல், கடுப்பு, கதழ்வு, கவனம். சீதமுற்றோனவிநயம் - சொல்லப் பட்ட துன்பமுற்ற மனத்துட னுழத்தலும், நனைந்தபுடைவை யுறுத்தலும், வெயிலிற் கிடந்து அக்கினியிற் காயவிரும்புதலும், சோர்ந்தும், தடுமாறியு நெட்டு யிர்ப்புவிட்டு முரைத்தலு முடை மையுமாம். சீதை - சானகி, செய்யாள், மைதிலி, வைதேகி. சீந்திற்கொடி - அமுதவல்லி, சீவந்தி. சீப்பு - கங்கம், சிக்கம், மயிர்வாரி. சீரங்கம் - விஷ்ணுவாசம், போலி யானிருக்கை, அரங்கம், ஏறு கட்டிய கொட்டில், உபய காவிரி முகம், அந்தர்நடு. சீலை - அம்பரம், அறுவை, ஆசா ரம், ஆசிடை, ஆடை, ஆவர ணம், இடைதல், இலக்காரம், உடுக்கை, உடை, ஏடகம், ஒலியல், கஞ்சிகை, கண்டை, கத்தியம், கந்தை, கப் படம், கலிங்கம், கலை, காடகம், காண்டம், காழகம், கூறை, கோசி கம், கோடி, கோடிகம், சம்படம், சம்பரம், சாடி, சிற்றில், சீரை, சூடி, சேலை, தானை, துகில், தூசு, தூட்டி, தூரியம், தோக்கை, நீவி, நீவியம், பஞ்சு, படாம், பட்டம், பட்டி, பட்டிகை, பரிவட்டம், மிடியல், புங்கம், புடவை, புட்டம், புனை, மடி, மாறுகம், மேகலை, வட் டம், வட்டுடை, வத்திரம், வாசம், வாதனம், அன்றியும் பட்டுச் சீலையின் பெயர் - கவுசிகம் கரம்பு, கோசிகம், தேவாங்கம், நேத்திரம், பணி, பரணம், பாளிதம். நற் சீலை யின் பெயர் - நாகம், பாரி. மரவுரி யின் பெயர் - ஆசினி, இறைஞ்சி, சீரம், சீரை. வற்கலை மயிர்ப் படாத்தின் பெயர் - மயிரகம், வயிரியம். சீலைத்துணியின் பெயர் - சிதர், சிதலை, சீரை, பட்டிகை, பறிவை. சித்திரை படாத்தின் பெயர் புத்தகம். சீவன் - ஆதன், அணு, ஆன்மா, இயமானன், சேதனன், பசு, சீவன், புற்கலன், கூத்தன். சு சுகதுண்டக்கை - சுட்டு விரலும் பெருவிரலுஞ் சேர்ந்து நக நுனி யைப் பற்றி வளைந்து சிறுவிரல் அணிவிரலுடன் முடங்கி நிமிர நிற்பதாம். சுக்கிரன் - அசுரமந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்தியமந்திரி, நற்கோள், பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி. சுக்கு - சுண்டி, நாகரம். சுங்கவிறை - ஆயம், உல்கு, சாரிகை. சுடல் - சந்தாபம், தூபிதம். சுடுகாடு - அறக்காடு, இடுகாடு, இறந் தோர் சேரிடம், ஈமம், காடு, காள வனம், சுடலை, சுடுநிலம், படுகாடு, பிணக்காடு, பிதிர்வனம், புறங் காடு, மயானம், முதுகாடு, வனம். சுட்டசாந்து - களபம், சுடுசுண்ணம், சுதை, மண். சுட்டி - சுட்டிகை, திலகம், திலதம். சுட்டுச்சொல் - அது, அவன், அவை, அவ், இது, இவன், இவை, இவ், உது, உவன், உவை, உவ். சுட்டுவகை - அகச்சுட்டு, புறச்சுட்டு. சுட்டெழுத்து - அ, இ, உ. சுண்டில் - சுச்சு. சுண்ணச்சாந்து - களபம், சுதைமண். சுத்தஞ்செய்தல் - உவளித்தல், துப்புர வாக்கல். சுத்தம் - உபலாளனம், சௌசம், சுசி, துப்பு, தூய், தூய்து, தூய்மை, பவித்திரம், பாவனம், புனிதம், பூதம், மேத்தியம், வால். சுத்தத்திற்குரியவெழுத்து - மகர வருக்கம். சுமத்தல் - தரித்தல், தாங்கல், துரியம், தூர்வகம், பரித்தல், பொறுத்தல், வகித்தல். சுமை - பரி, பாரம். சும்மாடு - கடும்பு, சிம்புரி, சுடுவு, சுமடு, சுமையடை. சுரபுன்னை - வாழை. சுரை - அலாபு, தும்பி. சுவத்திகக்கை - மணிக்கட்டிற் பொருந்திய பதாகை யிரண்டை யும் மணிக்கட்டி லேற்றி வைப் பது. “சுவத்தி யென்பது சொல் லுங் காலை - மணிக்கட் டமைந்த பதாகை யிரண்டையு - மணிக்கட் டேற்றி வைப்பதாகும்” என்றார் தொன்னூலார். சுவரகழ்கருவி - கன்னம். சுவர் - குட்டியம், பித்திகை. சுவாசத்தினளவு - மனுடரது இரு மூக்கானும் ஒவ்வோர் பாரிசத்து ஐந்து நாழிகையாகக் கொண்டு ஒரு மாத்திரையில் நூற்றிருபத் தைந்து சுவாதமாய் ஒரு சுவாதத் திலே பன்னிரண்டங்குலி வாயுப் புறப்பட்டு நாலங்குலி தேய்ந்து எண்விரலடங்கு மென்க. சுவாலை - இந்தனம், கீலம். சுவை - இரதம், சுவை. சுழலல் - அலமரல், உழலல், உழிதரல், கறங்கல், கொட்பு, சுலவுதல், சூர்த்தல், சொரிதரல், திரிதரல், தெருமரல், பிரமணம், பிரமரி, மறுகல். சுழல்காற்று - சாரிகை, சூறாவளி, சூறை, வளி. சுழல்படை - பாராவளை, வட்டம். சுற்றம் - உற்றவர், இகுளை, நட் டோர், உறவு, ஒக்கல், கிளை, சாந்தோர், பற்றினர், சிறந்தோர், நட்பு, பந்தம், பரிசனம், கேள், நண்பு, கூளி, குடும்பம், கடும்பு, நள்ளி, பாசனம். சுளகு - சூர்ப்பம். சுறா - ஏறு, கலை, களிறு, சுறவு, தகர், மகரம். சூ சூசிக்கை - நடுவிரல் பெருவிர லென்னு மிவ்விரு விரலுமொன் றோடொன்று சேர்ந்து சுட்டுவிர னிமிர்ந்து நிற்ப வொழிந்தவிரல் வழிவழியே முடங்கி நிற்பதாம். சூடு - சந்தாபம், தாபிதம், தூபிதம். சூடுதல் - மலைதல், மிலைதல், வேய்தல். சூதகப்பொது - ஆசூசம், புனிறு, அன்றியும் மகளிர்சூதகம் - இருது, தொடக்கு, பூப்பு, வாலாமை. சூதாடுகருவி - ஆயம், கவறு, கழங்கம், சாரி, சாரிகை, தாசு, தாயம், வட்டு, வல். சூதாடுதற்கு வகுத்தவறை - அரங்கு. சூது - கழங்கு, காசு, வல்லு. சூத்திரர் - அயன்பதத் துதித்தோர், இசையுந் தொழிலர், உழவர், களமர், காராளர், சதுர்த்தர், பின்னவர், மண் மக்கள், வினை ஞர், வெண்களமர், வேளாளர். சூத்திரயாப்பு - நூற்பாவகவல். சூரியகிரணம் - கதிர், கரம், தீவிரம். சூரியசந்திரரைச் சூழத்தோன்றும் வட்டம் - ஊர்கோள், பரிவேடம், பரிதி, வட்டம். சூரியமண்டலம் - விசயம். சூரியன் - அண்டயோனி, அரி, அரியமா, அருக்கன், அருணன், அலரி, அழலோன், அனவி, ஆதபன், ஆதவன், ஆதித்தன், ஆயிரஞ் சோதி, இரவி, இருள் வலி, இனன், உதயன், எல், எல்லை, எல்லோன், என்று, என்றூழ், எழ்பரியோன், ஒளி, ஒளியோன், கதிரவன், கனலி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்திரபானு, சுட ரோன், சூரன், செங்கதிரோன், சோதி, ஞாயிறு, தபனன், தரணி, திவாகரன், தினகரன், தினமணி, நபோமணி, பகலோன், பகல், பங் கயன், பதங்கன், பரிதி, பர்க்கண், பனிப்பகை, பானு, மார்த்தாண் டன், மித்திரன், விகர்த்தனன், விண்மணி, விரிச்சிகன், விரோச னன், வெஞ்சுடர், வெயில், வெய் யோன். சூரியன்வாகனம் - ஒற்றை யாழித் தேர், பொற்றேர். சூரியன்றேர்ப்பாகன் - அருணன், அனூரு, கருடன், மூத்தோன், காலிலி, சூர சூதன். சூரியன்றேர்க் குதிரைகள் - காயத்திரி, பிருகதி, உஷனிக், ஜகதீ, திருஷ் டுப்பு, அநுஷ்டுப்பு, பங்தி, என் னும் வேதச்சந்தசுகளேழுங் குதிரைகளாம். சூலம் - கழு, கழுமுள், காளம், குளிர், சத்தி, முக்குடுமி, முத்தலை, மூ விலை. சூழ்ந்திடல் - கோலல், சுற்றுதல், சூழ்தல், சூழ்போதல், வலத்தல், வளாகம், வளைத்தல். சூளை - சுள்ளை. செ செக்கான் - சக்கிரி, நந்தி. செக்கு - காணம், பூட்டை. செங்கருங்காலி - சிறுமாரோடம். செங்கல் - இட்டிகை. செங்கழுநீர் - குவளையைக்காண்க. செங்காந்தள் - இலாங்கலி, காந்தள், தோன்றி, பற்றை. செங்கோட்டியாழ்நரம்பு - ஏழு. செஞ்சந்தனம் - அட்டி, அனுகம், சல்லியம், பிசனம், மதுரம். செட்டிகள் - அயனுருவில் வந்தோர், இப்பர், எட்டியர், சிரேட்டியர், சிலேபியர், தனவைசிகர், தூணி கர், தேசிகர், தோன்றினர், நாயகர், பரதர், வணிகர், வணிபர், வைசியர். செண்பகம் - சண்பகம். செத்தோனவிநயம் - அஃதாவது பயமும் அழிப்பும் நிரைப்பல்லின் வெடித்துப் பொடித்துப் போந்த துணிவுடைமையும் வலித்த உறுப்புக்களும் மெலிவு பட்ட வயிறும், மிருதுத் தன்மையுடை மையும், வெண்மணி காணப்படக் கருமணி யொளித்தலும் உடை மையாம். செத்தை - காடு, சீக்கு, சோதினி, துரால், தூர்வை, நரல், மயல். செந்தினை - கம்பு, கவலை. செந்நாய் - அண்டிகம், கொக்கு, கோகம், முடுவல், விருகம். செந்நெல் - செஞ்சாலி, நன்னெல். செந்நெல்விளை - சாலேயம். செப்பஞ்செய்தல் - சீத்தல், தூய்தாக்கல். செம்பஞ்சு - அரத்தம், அலத்தகம், அலத்தம். செம்படாம் - சிம்புளி. செம்பரத்தை - மந்தாரம். செம்பாலைத்தோற்றம் - உழைமுதற் கைக்கினை யிறுதியாக மெலிவு நான்குஞ் சமம் ஏழும் வலிவு மூன்றுமாய் உழை முதலாகச் செம்பாலை யாயதென்க. செம் பாலை முதலியவற்றின் றோற்றம். குரல் குரலாயது செம்பாலை, துத்தங் குரலாயது படுமலைப் பாலை, கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை, உழைகுரலா யது அரும்பாலை, இளிகுரலா யது கோடிப்பாலை, விளரி குரலா யது விளரிப்பாலை, தாரம் குரலா யது மேற் செம்பாலை என வரன் முறையே ஏழுபாலையுங் கண்டு கொள்க. செம்பாலையுட்பிறக்கும்பண்கள் - குரலிற்பாதியும் தாரத்திலொன் றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கி நின்ற ஓரலகை விளரியின்மே லேறடப் படுமலை பாலையாம். இம் முறையே துத் தங் குரலாயது செவ்வழிப் பாலை யாம். செம்பு - உதும்பரம், எருவை, சீரு ணம், சீருள், சுற்பம், தாமிரம், தாம்பிரம், வடு. செம்புளிச்சை - தேவதாரம். செம்போத்து - குக்கில். செம்மறிக்கடா - அரி, ஏழகம், கம்ப ளம், தகர், திண்ணகம், மேழகம். செம்மறியாடு - கொறி, துருவை, மை. செம்முள்ளி - குறிஞ்சி. செய்கண்டி - பரந்தவட்டிகை. செயலின்மை - கையறல். செய்கடன் - நியதி, நியமம். செய்கரை - குரம்பு, குலை, சேது. செய்குன்றுசேர்ந்தசோலை - தோப்பு. செய்தல் - அழைத்தல், அமர்தல், ஆடல், ஆற்றல், இழைத்தல், குயிறல், குயிற்றல், சமைத்தல், செய்கை, பண்ணல், புரிதல், மாடல், வனை தல். அன்றியு மிக்கசெயல் - ஊராண் மை. அரிய செயல் - பேராண்மை, தொழிற் பயில்வு, தொறு. செய்தி - செயல், செய்கைசெய்தல். செருந்திமரம் - செங்கோடு, பஞ்சரம். செருப்புகழல் - தொடுதோல், பாத கவசம், பாதகாப்பு, காதரக்கை. செலவு - கதி, தாவு, படர். செலுத்தல் - அகைத்தல், இயக்குதல், உகைத்தல், உய்த்தல், ஊர்தல், ஏவல், ஓச்சல், ஓட்டல், கடத்தல், தூண்டல், நடத்தல், முடுக்கல். செவ்வப்பகுதி - தடம், மல், வளம், வாரி. செல்வம் - ஆக்கம், இடம், உத்தி, சீர், திரு, நடை, நிழல், பூதி, பெருக்கம், பொறி, மா, மாடு, யோகம், வாழ்க்கை, விபவம், விபூதி, விருத்தி, வெறுக்கை. செவி - அள், காது, கேள்வி, சுருதி, கன்னம், சோத்திரம். செவிடர் - பதிரர், வதிரர். செவிலித்தாய் - கைத்தாய், கோடாய், தாதி, வளர்த்தாள். செவியறிவு - சத்தம். செவ்வந்தி - பட்டிகை. செவ்வழியாழ்த்திறத்தின்பெயர் - சாதாரி, நேர்திறம், பெயர்திறம், முல்லை. செவ்வழியாழ்த்திறன்வகை - ஆரிய வேளர், குறண்டி, கொல்லி. தனுக் காஞ்சி, இயந்தை யாழ் பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி. செவ்வாய் - அங்காரகன், அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தீ வண்ணன், சேய், நிலமகன், பௌமன், மங்கலன், வக்கிரன். செவ்வாம்பல் - அரக்காம்பல், செங் குமுதம், சேதாம்பல். செவ்விது - செப்பம், செம்மை, செவ்வை, செவ்வன். செவ்வீரல் - இரத்தம். செவ்வை - அத்து, இருசு, செப்பம், செம்மை, செல்வன், செவ்வு நெறி, நேர். செறிகுழம்பு - செச்சை. செறித்தல் - அளித்தல், பாதீடு, பெயர்தல். செறிமயிர்ப்பரப்பு - உரோமம், சிரோந்தம். செறிவு - துறுதல், உறுப்பு, பிறப்பு, தைதல், மிடைதல், வெறிதல், துற்று, ஒதி, செற்று, வெறுப்பு, கஞறல், அடர்தல், நெருங்குதல், திணுங்குதல். சே சே - எருது, குதிரை, புல்வாய். சேகு - ஆசினி, காழ், காழ்ப்பு, அரி, சம்பம், சாரம், வைரம். சேங்கொட்டைமரம் - எரிமுகி, பல்லாதசி, வீரசாகி. சேமக்கலம் - எறிமணி. சேம்பு - சகுடம், சாகினி. சேரன் - உதியன், குடகன், குடக் கோன், குட்டுவன், கோளன், கொங்கன், கொல்லி வெற்பன், கோதை, சேரலன், பனந்தாரான், பூழியன், பொருநைத்துறைவன், பொறையன், போந்தின்றாரோன், மலையமான், மலையன், வஞ்சி வேந்தன், வானவரம்பன், வான வன், வில்லவன். சேரன்குதிரை - பாடலம், அவன் கொடிவிற்கொடி. அவன் மாலை - பனம்பூ. சேரி - பாடி. சேரிவகை - சிரேணி, பாடம், முறி, வாடை, வேணி. சேவலென்னும் பெயர் - அன்னம், கோழி. சேறு - அங்கணம், அசறு, அளக்கர், அளறு, அள்ளல், கலவை, கழனி, காலாழ், கும்பி, குழம்பு, குழை, கூழை, கொள்ளம், சகதி, சிறுமி யம், செதும்பு, செய்யல், சேதகம், தொய்யல், தொளி, தொள்ளம், தொள்ளி, தோணி, பங்கம், பூழி, வதி. அன்றியும் பெருஞ்சேறு - நொதி. சேற்றி லெழுங் குமிழி - பூழி, பொகுட்டு. சேனாமுகமென்பது - பதாதி மூன்று பங்கு கொண்டது. சை சைசவபருவம் - பாலப்பருவம், பாலா வத்தை, இளமைக்காலம். சைத்தியோபசாரம் - சீதவுபசாரம். சைரந்திரி - வண்ணமகள், திரௌ பதி, பாஞ்சாலி. சைமினிமுனி - வியாச சீடன். சைவர் - மாதிரவியர், பாசுபதர், காளாமுகர், வாமர், வைரவர். சொ சொக்கநிருத்தம் - சுத்த நிருத்தம், அது நூற்றெட்டுக் கரணமுடைத்து. சொரிதல் - உமிழ்தல், எக்கர், சோனை, பனித்தல், பெய்தல், பொழிதல். சொலித்திடல் - இடத்தல். சொல் - அசைப்பு, அறை, இசை, இசைப்பு, இயம், உத்தி, உரை, கதை, கரை, காதை, கிளவி, கீர், குயில், கூற்று, செப்பு, தோல், தோற்றம், நுலை, நுவற்சி, நொடி, பகர்ச்சி, பணி, புகறல், பேச்சு, மறை, மாற்றம், மொழி, வாக்கு, வாணி, வாய்மை, விளம்பு, வினா. அன்றியும் பயனில் சொல் லின் பெயர் - பெருஞ் சொல். மறைத்த சொல்லின் பெயர் - இடக்க ரடக்கல், ஏக்கர், கூசனம். நிரம்பா மெல்லிய சொல்லின் பெயர் - உல்லாபம், குதலை, கொஞ்சல், மழலை, மிழலை, மிழற்றல். தேவர் மொழியின் பெயர் - சங்கதம், சானுக்கிரகம். இழிசனர் மொழின் பெயர் - அவப் பிரபஞ்சம். எல்லா நாட்டின் மொழியின் பெயர் - பாத்தம். இவை மூவகைப்படும். வடசொற்றிரிந்த மொழி - தற்பவம். வடமொழிக்கும் பிறபாடைக்கும் பொதுமை - தற்சமம். அவ்வவ் நாட்டிற்குரிய சொல் - திசைச் சொல், தேசிகம். சொல்லின் பாகுபாடு - உட்சொல், புறச்சொல், ஆகாயச்சொல் என மூவகைப்படும். அவை கேட் போர்க் குரைத்தல், தானே கூறல், நெஞ்சொடு கிளத்தல். சொல்லுதல் - அதிர்தல், அறைதல், ஆடல், இசைத்தல், இயம்பல், இறுத்தல், உரைத்தல், ஒதுதல், கதைத்தல், கத்துதல், கரைதல், கிளத்தல், குயிலல், குயிறல், கூவல், கூறல், சாற்றல், செப்பல், சொற் றல், தெரித்தல், நவிலல், நவிறல், நுவலல், நொடித்தல், பகர்தல், பணித்தல், பயிலல், பயிரல், பர வல், பறைதல், பன்னல், பிதற்றல், பிறழ்தல், புகலல், பேசல், மிழற்று தல், மொழிதல், வகுத்தல், வலத் திடல், வழங்கல், விதித்தல், விரித் தல், விளம்பல். அன்றியும் விடாது பேசலின் பெயர் - கத்துதல், பிதற் றல். சிரித்துப் பேசலின் பெயர் - அசதி. நகைச்சொல்லின் பெயர் - நயச்சொல், நளினச் சொல். கூறி யது கூறலின் பெயர் - புனருக்தி. பரிந்து பேசலின் பெயர் - கொண் டாடல், மெச்சல். சொல்லின்வகை - சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்பன. சுண்ணம் நான்கடியான் வருவது. சுரிதகம் - எட்டடியான் வருவது. வண்ணம் - நானான்கடியான் வரு வது வரிதகம் - முப்பத்திரண்டடி யான் வருவது. சொறி - கண்டூதி, தினவு. சொன்மாலை - ஒளி, சீர், சுலோகம், தோற்றம். சோ சோகமாவது - வெதும்பி யுரைத்தல், வெறுத்தல். சோணிதம் - செம்பால். சோதிடநூல் - எண், கணிதம். சோதிநாள் - அனிலநாள், காற்று, தீபம், துணி, துளக்கம், மரக்கால், விளக்கு, வீழ்க்கை, வெறு நுகம். சோபனம் - பல்லாண்டு. சோம்பல் - அசைதல், அலசல், அலை தல், அழுங்கல், ஆஞ்சி, ஆவசியம், சம்படம், சோகம், சோபம், சோம்பு, ஞொள்கல், தளர்ச்சி, துஞ்சல், தூங்கல், மடி, மந்தம், மாழ்தல், மூரி. சோர்வு - கயக்கு. சோலை - அடவி, அரி, ஆராமம், உத்தியானம், உய்யானம், கா, கானம், கோடரம், தண்டலை, துடவை, நந்தனவனம், பூந் தோட்டம், பொழில், மரச்செறிவு. அன்றியு மூர்செறிந்த சோலையின் பெயர் - பாணி, வனம், கடற்கரைச் சோலையின் பெயர் - கானல். சோழன் - அபயன், ஆரக்கண்ணியன், ஏலுநன், கிள்ளி, கோழி வேந்தன், சூரியன், செம்பியன், சென்னி, நேரியன், நேரிவெற்பன், புலிக்கொடி யோன், புனனாடன், பொன்னித் துறைவன், மால்வளவன். சோழன்குதிரை - கோரம், கொடி - புலிக்கொடி. மாலை - ஆத்தி மாலை. சோளம் - இறுங்கு, சொன்னல். சோறு - அசனம், அடிசில், அமலை, அமுது, அயினி, அவி, அழுப்பு, அன்னம், உணா, உண்டி, ஊண், ஓதனம், கவளம், கூழ், சதி, சரு, சாதம், சொன்றி, துப்பு, தொடு பதம், தோரி, நிமிர்தல், பதம், பருக்கை, பலி, பாத்து, பாளிதம், பிசி, பிண்டம், புகர்வு, புழுக்கல், புளகம், புற்கை, புன்சம், பொம் மல், பொருகு, போசனம், போன கம், மடை, மிசை, மிதவை, முரல், வல்சி, அன்றியும் கட்டுச் சோறு - ஆற்றுணா, தோட் கோப்பு, பாதேயம், பொதிசோறு. சோனகர் - உச்சர், யவனர். ஞ ஞஞ்ஞையுற்றோனவிநயம் - பற்கள் மென்று இறுகப்பட்ட நாவழி வுடைமையும், நுரைசேர்ந்து கூம் பும் வாயும், பார்த்தவர்க் குரைப் பவன் போல அறிவிலா மையும், விழிப்போன் போல விழியா திருத்தலும், விழுத்தக வுடைமை யும், ஒழுக்கிலாமையும், பிரகா சிக்கு முகம் வாடிப் போதலும் பிறவும் மயங்கிய தென்ப. ஞா ஞாதியர் - தங்குடிச் சுற்றம், தாயத்தார். ஞாழல் - பலினி. ஞானசதுட்டயம் - நித்தியா நித்திய வத்து விவேகம், இக முத்திரார்த்த பல போக விராகம், சமாதி சட்க சம்பத்து, முமூட்சுத்துவம் என் பனவாம். ஞானபேதம் - பதிஞானம், பசுஞானம், பாசஞானம். ஞானவகை - பரஞானம், அபர ஞானம் என்பனவாம். இவற்றுள் பரஞானம் சிவஞானமாம் அஃது திருவடிஞானம், அருண்ஞானம், பதிஞானம், அத்துவிதஞானம், சுத்தஞானம், சன்மார்க்கஞானம், தத்துவஞானம், மெய்யுணர்வு, உண்மைஞானம், அபரோக்ஷ ஞானம், பரமஞானம் எனப் பெறும். அபரஞானம் - சரியை, கிரியை, யோகம் என்பனவாம். இவை மெய்ஞ்ஞானம், பரோக்ஷ ஞானம் எனப் பெயர் பெறும். இவற்றுள் யோகம், அட்டாங்க யோகம், சிவயோகம், கன்ம யோகம், மாயோகம், பரயோகம், இராசயோகம், ஆதாரயோகம், நிராதாரயோகம், மீதானயோகம் எனப் பல வகைப்படும். த தகடு - அடர், ஐம்மை. தகழி - இடிஞ்சல், பாண்டில். தக்கேசி - நவிர். தங்கல் - அசைதல், அல்கல், ஆர்தல், இயங்கல், இருத்தல், இறுத்தல், இறை, தரித்தல், தாழ்தல், தெவிட் டல், தேறல், வதிதல், வலிதல், வைகல். தங்குடித்தமர் - தாயத்தார். தங்கை - பின்னை, பின்னவள். தசவாயுவின்வகை - பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன். தசைதின்போன் - கூடிலி, சாடிலி. தச்சர் - சித்தருர், சூத்திரர், தபதியர், மரவினையாளர், யாணர். தடவல் - தளர்தல், தைவரல், நீவல், வருடல். இவற்றுட் காலைத் தடவலின் பெயர் - தைவரல். தடாகம் - அயம், அழந்தை, ஆவி, இலஞ்சி, உவளகம், ஏரி, ஏல்வை, ஒடை, கயம், கிடங்கு, குட்டம், குண்டம், குழி, குளம், கேணி, கோட்டம், சரசு, சலதரம், சுனை, சூழி, தடம், தாங்கல், நளினி, நீர்நிலை, பங்கம், படு, படுகர், பட் டம், பண்ணை, பயம், பல்வலம், பொய்கை, மடு, வட்டம், வாலி. தடி - ஏறுழ், கதை, தண்டு, அன்றியுங் குறுந்தடியின் பெயர் - குணில். தடுக்கு - தவிசு. தடுத்தல் - ஆணை, தகைதல், தட் டல், மறித்தல், மறுத்தல், வார ணம், வாரணை, வாரணையம், வாரித்தல். தட்டார் - அக்கசாலையர், செங் கொல்லர், சொன்னகாரர், பொன் செய் கொல்லர், பொன்வினை மாக்கள். தணக்குமரம் - துணவை. தணியாக்கோபம் - கனிதல், கொந்தல், கோம்பல், வெதும்பல், வெம்பல். தணியாமுனிவு - சலம், செற்றம், வைரம். தண்டனிடல் - வந்தனம், பணிதல், காணல், வழிபடல், பணிவு, இறைஞ்சல், வணங்கல், பார்த்தல், தாழ்தல். தண்டாயுதம் - எறுழ், கதை, சீர், முளை, வயிரம். தண்டை - காற்றண்டை, சீர். தண்ணீர்க்குடம் - கானவாழை. தண்ணுமை - உடுக்கை. தண்ணுமையோனமைதி - எல்லாக் கூத்துகளும் எல்லாப்பாட்டுக் களும், எல்லா விசைகளும், வட வெழுத்தொரீஇ வந்த எழுத் தானே கட்டப்பட்ட வாக்கியக் கடவுளைக் கூறுபாடுகளும் எல் லாப் பண்களும் இருவகைத் தாளங்களும், எழுவகைத் தூக்குக் களும், இவற்றின் குற்றங்களும் இயற்சொல் முதலிய நால்வகைச் சொற்களுமென்று சொல்லப் பட்டனவற்றை நுண்ணிதாக வுணர்ந்து ஒரோருருவை யிரட்டிக் கிரட்டி சேர்த்தவிடத்து நெகிழா தபடி நிரம்ப நிறுத்தவும் அவ் விடத்துப் பெறு விரட்டியே யாய்ப்பாகவுரு வானவழிநிற்கு மான நிறுத்திக் கழியுமானங் கழிக் கவும் வல்லவனாம். இப்படி நிகழ்ந்தவுருக்களில் யாழ்பாட லுங் குழலின் பாடலும் கண்டப் பாடலும் இயைந்து நடக்கின்ற படி கேட்போர் செவிகொள்ள அமைந்த காரணத்தாற் குறியறிந்து சேர வாசித்து மற்றைக் கருவிகளிற் குறை நிறப்புதலும், மிகுதியடக்கு தலும், ஆக்குமிடத்தும் அடக்கு மிடத்தும் இசையில் இரந்திரன் தோன்றாதபடியே செய்தலும் செய்யுமிடத்துக் கைத்தொழில் அழகு பெறச்செய்து காட்டலும் வல்லவனாய், அழகு தக்க தண் ணுமைக் கருவியினையும் அரிய தொழிலினையு முடைய ஆசிரிய னாம். ததியுணவு - தயிரிற்றிமிரல். தந்திரம் - உபாயம், சூழ்ச்சி. தந்திரிகரம் - செங்கோட்டி யாழினது அறுவகை யுறுப்பினு ளொன்று. அஃதாவது நரம்பு துவக்குதற்குத் தகைப் பொழிய இருசாண்நால் விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்த ஐம்பத்தோ ருறுப்பு. தந்திரியர் - ஆமர்த்தியர், ஏனாதியர், விதியர். தந்தை - அச்சன், அத்தன், அப்பன், அம்மான், ஐயன், ஈன்றான், குரவன், சனகன், தகப்பன், தாதா, தாதை, பிதா, அச்சன். தமிழ் - திரமிடம், திரவிடம், திரா மிடம், திரமிளம், தென்மொழி. தமிழ்கூத்தர் - வாயிலோர். தமையன் - அண்ணல், அண்ணன், சேட்டன், தலைவன், முன், முன் றோன்றல், முன்னவன், முன் னோன் மூத்தோன், வரன். தம்பட்டம் - ஆனகம், திண்டி, படகம், பணவம். தம்பதி - இரட்டை யாண்பெண். தம்பலப்பூச்சி - இந்திரகோபம், ஈயல், கோபம், மூதா. தம்பலம் - தம்பல். தம்பி - அலரசன், அனுசன், இளவல், இளையோன், உவா, கனிட்டன், பிள்ளை, பின்றோன்றல், பின்ன வன், பின்னோன். தயிர் - ததி, பெருகு, முசரு. தயிர்கடைதறி - வெளில். தயிர்கடைதாழி - குடாரு, மந்தனி. தரா - மதுமம். தரித்திரம் - அல்கல், இரப்பு, இலம் பாடு, இல்லாமை, இன்மை, உறு கண், ஒற்கம், குறுவாழ்க்கை, குறை, சிறுமை, நல்குரவு, நிரப்பு, மறல், மிசை, மிச்சை, மிடி, வறுமை. தரித்திரன் - அற்றான், ஆதுலன், ஆற்றான், இலம்பாட்டோன், இல்லோன், உறுகணாளன், ஏழை, கிஞ்சகன், தீனன், துயருறுவோன், நல்கூர்ந்தோன், பேதை, மிடியன், வறியோன். தருக்கம் - நியாயம், யூகம், வாதம். தருப்பை - குசம், குசை, கூர்ச்சம், பவித்திரி. தருமதேவதை - மரகதவல்லி, பூக நிழலுற்றவஞ்சி, பரமசுந்தரி, இயக்கி, பகவதி, அம்மை, அரு கனை, முடிதரித்தாள், அம்பிகை, அறத்தின் செல்வி, அம்பாலிகை. தருமநூல் - மநு, அத்திரி, விட்டுணு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கீ ரசம், உசனம், காத்தி யாயனம், சமவர்த்தம், வியாசம், பிருகற்பதி, சங்கலிதம், சாதான்மம், கௌத மம், தக்கம் என்னும் பதினெட்டு மாம். தருமம் - அறம், சீலம், சுகிர்தம், புண்ணியம். தருமராசன் - அறத்தின் மைந்தன், உதிட்டிரன், குந்தி புதல்வன், குவளைத் தாரான், பாண்டு மைந்தன், பொறையன், முரசக் கொடியோன், மெய்விரதன். தலை - உச்சி, உத்தமாங்கம், உவ்வி, கம்சிகரம், சிரம், சீரிடம், சென்னி, சேகரம், நவிரம், மத்தகம், முடி, முண்டம், மூர்த்தம், மூர்த்தினி, தலையோட்டின் பெயர் - ஓடு, கபாலம், வெண்டலை. தலை யோட்டுப் பொருத்து - கரோடி. தலையிற்றரிப்பதின் பொது - சேகரம், தலைச்சாத்து. தலைக்காவல் - இளை, உக்கிரம். தலைக்கோலம் - தலைச்சாத்து, பங்கு சம், பிஞ்ஞகம். தலைச்சீரா - கீசகம், சித்தகம், சிரகம், தலைத்திராணம். தலைப்பாளை - தொய்யகம். தலைப்பெய்தமழை - ஆவி, தலையல், உறை, தளி. தலைமயிர் - சிரோருகம். தலைமையள் - குரத்தி, பெருமாட்டி, ஆசாள், இறைவி, கோமகள், தலைவி, அடிகள், ஐயை, சாமி, அத்தை. தலையணை - உபாதானம், உபதை. தலையிலாக்குருவி - மழைக்குயில். தலையோடு - கபாலம், வெண்டலை. தலைவனைப்பிழைத்தீன்றசோரபுத்திரன் - குண்டகன். தலைவன் - அன்பன், ஆர்வலன், இறைவன், உரியோன், கணவன், கண்டன், காதலன், காந்தன், காவலன், கேள்வன், கொண்கன், கொழுநன், தலைமகன், தவன், துணைவன், நண்பன், நாயகன், பசூ, பத்தர், பிரியன், புருடன், மணமகன், மணவாளன், வல்ல வன், வேட்டோன். தலைவி - அடிகள், அத்தை, அரசி, ஆசாள், ஆட்டி, இறைமையாட்டி, இறைவி, ஐயை, கிழத்தி, கோமாட்டி, கோமாள், சாமி, சீமாட்டி, செல்வி, பிராட்டி, பெருமாட்டி, முதல்வி. தலைவிரிபறை - கத்திரி. தவத்தோரிருக்குமிடம் - கரண்டை, குகை, தாபதம், பள்ளி, பாழி, மடம். தவத்தோர்பீடம் - விட்டரம். தவப்பெண் - அம்மை, அவ்வை, ஐயை, கந்தி, கவுந்தி, கன்னி, பைமை. தவம் - உவவு, தவசு, நன்னிலை, நோற்றிடல், நோன்பு, நோன்மை, படிவம், மாதவம், வாகை, விரதம். தவளை - அண்டசம், அரி, காலூரம், தேரை, நீகம், நுணலை, பேகம், மண்டூகம், மரை. தவிடு - முட்டை. தவிர்தல் - வாளா. தழும்பு - அங்கிதம், கசடு, கச்சை, காய்ப்பு, சுவடு, வசி, வடு, வடுப் படலின் பெயர் - கதுவாய். தழுவுதல் - அணைத்தல், ஆலிங் கனம், முயங்கல், விள்ளல். தழை - உலவை. தளர்வு - இட்டளம், உடைப்பு, எளிமை, ஏதட்டை, சோர்வு. தளிர் - அலங்கல், உலவை, உல்லரி, கிசம், கிசலம், கிசலயம், கிளை, குழை, தழை, பல்லவம், மஞ்சரி, முறி, வல்லரி. தளிர்த்தல் - தளிர்தல், இழுக்கல், ஒல்கல், சோர்தல். தள்ளல் - ஊன்றல், நூக்கல், நோன்றல். தறித்தல் - ஏற்றல், கண்டித்தல், காதுதல், தடிதல், துண்டித்தல், பகுத்திடல், பரிதல், வெட்டல். தற்பதம் - மகாவாக்கியத்து ளொன்று. தனித்திருக்குமிடம் - ஏகாந்தம், ஒருவந்தம், வேறிடம். தனிமை - அந்தரம், ஏகம், ஒருமை, கேவலம், புலம்பு, விறு. தனுவிராசி - காண்டீபம், கொடு மரம், சாபம், சிலை, துரோணம். தன்னையறிந்தவர் அறியாதவர் - தன்னையறிந்தவர் சாயுச்சியத்தர், தன்னையறியாதவர் பிறப்போர். தன்மேம்பாடுதானிகழ்த்தல் - நெடுமொழி கூறல். தாடி - கட்டம், கீழ்வாய், மோவாய். தாண்டல் - அகறல், இகுத்தல், கடத்தல், தத்துதல், தரணம், தாவு தல், நீடுதல், பாய்தல், பாவுதல். தாதின்றூள் - சுண்ணம், மகரந்தம். தாதுமாதளை - தாடிமம். தாமதகுணம் - பேருண்டி, நீதிகேடு, உறக்கம், மறதி, பொய், சோம்பு, ஒழுக்கம் வழுவுதல், கொலை, வஞ்சம். தாமதம் - ஆலசியம், பாணி, விளம் பரம், விளம்பனம். தாமரை - அம்புயம், அம்போருகம், அரவிந்தம், ஆய்மலர், இண்டை, கஞ்சம், கமலம், குசேசயம், சதபத்ரி, சரோசம், சரோருகம், சலசம், சாரசம், சூது, திருமலர், திருமாலுந்தி, தோடகம், நளினம், நீரோருகம், பங்கசம், பங்கயம், பங்கேருகம், பதுவம், பற்பம், புட்கரம், முண்டகம், முளரி, வனசம், வாரிசம், அன்றியுஞ் செந்தாமரையின் பெயர் - கோக னகம். வெண்டாமரையின் பெயர் - சிதாம்புசம், பண்டரீகம். தாமரைக்காய் - வராடகம். தாமரைக்கொட்டை - கன்னிகை, பொகுட்டு. தாமரைப்பூ - இராசீவம், இறும்பு. தாமரையுட்சுருள் - பீசம், வளையம். தாம்பிரசூடமாவது - நடுவிரலுஞ் சுட்டுவிரலும் பெரு விரலும் தம்மில் நுனியொத்துக் கூடி வளைந்து சிறு விரலு மணிவிரலு முடங்கி நிமிர்வது. தாம்பு - கண்மணி, தாமணி. தாய் - அஞ்ஞை, அம்மனை, அம்மை, அவ்வை, அன்னை, ஆயி, ஆய், ஈன்றாள், சனனி, தம்மனை, தல்லி, தௌவை, பயந்தாள், மாதா, மொய்த்தாள், யாய். தாழி - அகளி, சாடி, தளம், பதலை. தாழை - கண்டல், கேதகை, கைதை, மடிமுகாரி, முசலி, முடங்கல், முண்டகம். தாழ் - கடிகை, காழ், சிப்பு. தாழ்தல் - இறைஞ்சல், குரங்கல். தாழ்த்தல் - ஆழ்த்தல், இகுத்தல், நாலல். தாழ்வாரம் - ஆரோகணம், சோபானம். தாழ்வு - அகப்பு, அதம், இழிபு, குண்டு, சாய்வு, தஞ்சம், தண்மை, தூங்கல், வட்டம். தாளம் - கஞ்சம், கஞ்சனம், கிட்டி. தாளம்போடல் - ஒத்தறுத்தல், தட்டல், வட்டித்தல். தாளவொத்து - சதி, சீர். தாளிக்கொடி - மஞ்சிகம், மஞ்சிகை. தாள் - கடிகை, சீப்பு, தாழ், தாழ்ப் பாள். தானப்பொருத்தவகை - குற்றெ ழுத்தைந்தும் அவற்றிற் கினமாகிய நெட்டெழுத்துக்க ளேழும் பாட்டுடைத் தலைவனியற்பெயர் முதலெழுத் தெந்த வெழுத்தோ அந்த வெழுத்தே பாலத்தான மாகக் கொண்டு மற்றை யெழுத் துக்களைக் குமாரன், இராசன், மூப்பு, மரணமாக எண்ணுதலால் தன்னெழுத்தைப் பாலனாகவும், இரண்டா மெழுத்தைக் குமரனா கவும், மூன்றாமெழுத்தை யிராச னாகவும், நான்கா மெழுத்தை மூப்பாகவும், ஐந்தாமெழுத்தை மரணமாகவும் காப்பியத்தின் முதற் செய்யுளின் முதற் சீரிற் கொள்க. தான்றிமரம் - கலித்துருமம். தி திசை - அம்பரம், அரிதம், ஆசை, உலகு, ககுபம், காட்டை, கோதிகை, திக்கு, காதிரம், வம்பல், விசும்பு. திசைச்சொல் - தேசிகம், கிராமியம். திசைநாற்கோணம் - அந்தராளம். திட்டை - திடர், பதுக்கை, பாறை, முரம்பு. அன்றியு மணற்றிட் டையின் பெயர் - புளினம். திண்ணியன் - அவணன், சமர்த்தன், திறலோன், பண்ணவன், பொரு நன், மள்ளன், மிண்டன், மீளி, வண்டன், வயவன், வல்லான், வல்லுநன், வியவன், விறலோன், வீரன். திண்ணை - குறடு, திட்டை, மண் ணீடு, வேதி, வேதிகை. திதி - பக்கம். தித்திப்பு - அமுதம், இழுது, இழுமு, இனிமை, கனி, சவாது, சேறு, தமிழ், தீயம், தேக்கு, தேம், மதுகம், மதுரம். திப்பிலி - ஆர்கதி, கலினி, காமன், சிறு மூலம், திப்பிலி, மாகதி. திமி - பெருமீன், யானை மீன். திமிங்கிலம் - யானைமீனை விழுங்கு மீன். திமிங்கிலகிலம் - திமிங்கிலத்தை விழுங்கு மீன். திமிர்தல் - துவர்தல், துளும்பல். திமிலை - சல்லரி. தியானம் - யோகம். திரட்கோரை - எருவை, சாய், பஞ்சாய். திரட்சி - அவயல், இராசி, இனம், உண்டை, கணம், கனை, காண் டம், குடந்தம், குப்பை, குவடு, குவிதல், குவை, குழியம், கொம்மை, சமூகம், சேடு, சேர்வு, சோகம், தரளம், திரள், துறுமல், தொகுதி, தொழுதி, பந்தம், பிண்டம், பிழம்பு, புஞ்சம், பூகம், மாழை, முடலை, முண்டம், முத்தை, வட்டு, வழி. திரட்டோசை - அலறல், கூப்பிடல், உரப்பிடல், தெழித்தல், பிளிறல். திரண்டகல் - உலங்கு, உலம், குண்டு. திரள் - உண்டை, கொம்மை, குழி யம், குப்பை, முத்தை, பூகம், சோகம், புஞ்சம், பந்தம், மாழை, வட்டு, பிண்டம், வழி, சேடு, சேர்வு. திரிகடுகம் - சுக்கு, திப்பிலி, மிளகு. திரிகை - தட்டு, பந்து, வட்டம். திரிசங்கு - சத்தியாதனன் எனவும் பெயர் பெறும். இச் சூரிய குலத் தோன்றலின் வரலாற்றை விளங்க வுரைப்பாம். அயோத்தியை யாண்ட அரசர்களுள் அம்பரீடன் என்னும் அரசனிருந்தான். அவன் மகன் உவனாச்சுவன் அவன் புதல்வன் அரீதன், அரீதன் புத்தி ரன் திரிசதேச்சு, அவன் மகன் சம்பூதி, அவன் மகன் மால் விருத்தன், அவன் மகன் அரண் ணியன், அவன் மகன் விடதச்சு வன், அவன் மகன் வசுமனா, அவன் மகன் திரிதனு, அவன் மகன் சூரிய வண்ணன் ஆகும். இச் சூரிய வண்ணன் என்னும் அரச னுக்குப் புத்திரனாகப் பிறந்து சத்தியாதனன் என்னும் பெயருடன் திரிசங்கு மகாராஜன் உலகை யொருகுடை நிழலில் இருந்து அரசாண்டு வந்தான். இவன் மனைவி பெயர் சத்தியவதி. இவ் விருவரும் புத்திரப் பேறின்மை யால் தன் குலகுருவாகிய வசிட்ட முனிவரை யடைந்து செய்வதென் னென்று பிரார்த்திக்க, வள்ளி மணாளக் குமரனையீன்ற புள்ளி மான் கரத்தனை நினைந்து தவஞ் செய்க வென்ன, அங்ஙனம் கிடந்து, அவன் றிருவருளால் வாய்மை நிறுத்திய பெரும்புகழாகிய அரிச் சந்திரனைப் புத்திரனாகப் பெற்று மகிழ்ந்திருந்தனர். மூன்று தோஷங்களை யுடைமையால் திரிசங்கு வென்ப. இவ்வரசன் பின்னரும் தனது குருவாகிய வசிட்டரை யடைந்து உடலோடு சுவர்க்க மடைதற்கு ஓர் யாகஞ் செய்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தான். முனிவனார் கூடாதென்று மறுத்தனர். அவர் புத்திரர்களிடஞ் சென்று கேட்கவே அவர்களுமவ்வாறு மறுத்தனர். அரசன் கோபங் கொண்டு பிற முனிவரிடஞ் சென்று நினைத்தது முடிப்ப னென்று அகல, அதனை யறிந்த வசிட்ட முனிவர் குருநெறி பிறழ்ந்தமையால் நீசனாகக் கட வாய் எனச் சபித்தார். அதனால் புலை யுருவேற்று வசிட்ட முனி வர்க்குப் பகைவர் யாரென்று ஆராய்ந்து, காதிமைந்தனெனக் கருதி, அவரிடஞ் சென்று நிகழ்ந்த வெலாம் வருந்தி யறைந்தான். முனிவர் சினமுற்று அபயங் கொடுத்து, மற்றைய முனிவர்களை யாகஞ் செய்தற்காக அழைத்தனர். அவர்களை வசிட்டமுனி புத்திரர் கள் தடுத்தார்கள். அதனை விசுவா மித்திர முனிவர் அறிந்து முனி புத்திரர்களையெல்லாம் வைது கொன்றனர். பின்னர்த் தாமே துணிந்து, தனித்து யாகத்தைச் செய்து அவிசொரிய, தேவர்கள் யாவரும் அவ்வவியை யேற்க வாராதிருந்தனர். அதனால் விசுவா மித்திரர்க்கு அதிக கோபமூண்டு, திரிசங்குவை நெய்யிறைக்குஞ் சுருவையினேற்றிச் சுவர்க்கம் போவென்னப் போனான். அது கண்ட தேவர்கள் நீசனே, இவ் விடம் வராதொழியென்று தலை கீழாய்த் தள்ளினர். உடனே திரி சங்கு விஸ்வாமித்திரரை நோக்கி யோல மிட்டனன். அவர் அர சனைத் தந் தவவலிமை யினால் அவ்வந்தரத்தினிற்றானே வீழாது நிற்கச்செய்து, வேறோர் சுவர்க் கத்தைச் செய்வேனென்று, நட்சத் திரங்கள் தேவகணங்கள், சரா சரங்கள் முதலிய சிலவற்றைப் படைத்தனர். தேவர்களும் இந்தி ரனும் இவற்றையெல்லாம் பார்த்துப் பயந்து விசுவாமித்திர முனிவரிடம் வந்து ஐயனே, தேவரீர் இனிப் படைத்தலைவிடுத்தருளும், இப்போ படைத்தவைகளும் திரி சங்குவும் நட்சத்திர மண்ட லத்தின் அருகில் இருக்கட்டும், என வேண்டினார்கள். முனிவர் திரிசங்குவை அங்ஙன மெந்நாளு மிருத்தியென்று வரங் கொடுத் தனர். அதுவே திரிசங்கு சுவர்க்கம் எனப் பெயர்பெற்று வழங்கப் படும். அரிச்சந்திரனோ குலகுரு வாகிய வசிட்டனாரையே யடுத் திருந்தான். இதனால் விசுவா மித்திரர் அரிச்சந்திரன்மீது அதிக கோபமுடையரா யிருந்தார். பின் னர் அது காரணமாகவே யவனை யவ்வளவு துன்பத்துக்குட்படுத் தினர். திரிபலை - கடுக்காய், தான்றி, நெல்லி. திருடர் - கரவடர், கரவர், கள்வர், கையர், சோரர், தேனர், பட்டி கள், பித்தர், புரையோர். திருடல் - கரத்தல், கவர்தல், வவ்வல். திருநீறு - விபூதி, பூதி, ஓமப்பொடி, காப்பு, புண்ணியசாந்தம், சாரம், வெண்டாது, பொடி. திருநீறு வைக்கும்பாத்திரம் - சம் புடம், விபூதிக் குடுக்கை. திருமகளாடல் - பரவை. திருவாதிரைநாள் - ஈசனாள், செங்கை, ஆதிரை, யாழ். திருவாரூர் - கமலை. திருவிழா - உற்சவம், சாறு, சேறு, தீர்த்தம், துணங்கறல், முருகு. திருவோணநாள் - உலக்கை, ஓணம், சிரவணம், சோனை, நள்ளு, மாயோனாள், முக்கோல், வயிரம். திருத்தாமனார் - புறநானூறு பாடிய புலவரி லொருவர், இவராற் பாடப் பட்டோன் சேரமான் வஞ்சன். திரை - அலை, அறல், அயை, ஓதம், கல்லோலம், சீகரம், தரங்கம், வாரம். திரைச்சீலை - அவிடி, எழினி, ஏமம், கஞ்சிகை, கஞ்சுகி, கண்டம், கவ ழிகை, கழனி, காண்டம், கைய டம், படகம், படாம், பாரகம். திலகம் - சுடிகை, சுட்டி, திலதம். திறக்குதல் - அங்காந்திடல், திறத்தல். திறமென்பது - குறை நரம்புள்ளது. தினவு - கண்டூதி, சொறி. தினை - ஏனல், அன்றியுங் கருந் தினை - இறடி, கங்கு. செந்தினை யின் பெயர் - கம்பு, கவலை. பைந் தினையின் பெயர் - ஏனல். தினைத்தாள் - அரு, விருவி. தினைப்புனம் - ஏனல், வளாசம். தினைமா - இடி, நுவணம், நுவணை, பிண்டி. தின்பன - திற்றி. தீ தீ - அக்கினி, அங்காரகன், அங்கி, அயவாகனன், அரி, அழல், அனல், ஆரல், உதகவன், உதாசனன், எரி, எழுநா, ஒளி, கருநெறி, கனலி, கனல், காலவம், காற்றின் சகாயன், சாதவேதா, சிகி, சித்திரபானு, சுசி, சுடர், சூரன், செஞ்சுடர், சேர்ந் தார்க் கொல்லி, ஞெகிழி, தகனன், தபனன், தழல், தனஞ்சயன், தூம கேது, தென் கீழ்த்திசையோன், தேயு, நெருப்பு, பாவகன், முளரி, வசு, வன்னி. அன்றியும் ஆறா வூழித்தீயின் பெயர் - உத்தரம், உற்கம், கடையனல், தீத்திரன், மடங்கல், வடவாமுகம், வடவை. தீக்கடைகோல் - அரணி, ஞெலிகோல். தீக்கணத்தின்பெயர் - அந்தரகணம் வேறு தேசத்திற் செலுத்துதலும், வாயுகணம் செல்வத்தைப் போக் கலும், சூரியகணஞ் சூனியஞ் செய்தலும், தீக்கணம் நோய் செய் தலுமாகிய குற்றத்தைத் தருமென்று நூலினை யாராய்ந்த புலவர் கூறா நிற்பர். தீக்கணவகை - தேயு, வாயு, அந்தரம், இயமானன் இந் நான்குந் தீது. தீது - தீங்கு, கோள், அந்தராயம், விக்கினம், முட்டுப்பாடு, அலாபம், தட்டு, ஊறு, அந்தரம். தீத்திரள் - அனற்றிரள், உற்கம். தீத்தெய்வத்தின்பாரி - சுவாகாதேவி. தீப்பொறி - கங்கம், ஞெகிழி, புலிங்கம். காட்டுத்தீயின் பெயர் - தாவம். தீமை - அந்தரம், அந்தராயம், அலா பம், இன்னல், இன்னா, ஊறு, கோள், தீ, தீங்கு, தீது, துட்டு, மாயம், முட்டுப் பாடு, வலாபம், விக்கினம். தீர்தல் - ஓவல், நிவாரணம், நீங்கல், மோக்கம், மோசனம், விடிதல், விமோசனம். தீர்த்தம் - காண்டம், பட்கரம். தீவினை - பவம், பாதகம், பாவம். தீன்துதிநாகனார் - தீன்மதிநாகனார், குறுந்தொகை பாடிய புலவரி லொருவர். து துகில் - இடையல், ஏடகம், பட்டு, வேதகம், ஆடை. துடுப்பு - சகிதம், முழை, மூழி. துடைத்தல் - இகுத்தல், துவட்டல், நீவல். துடைப்பம் - அலகு, வாருகோல், விளக்குமாறு. துணிவு - தெளிவு, தேறல், தேற்றம், நிச்சயம். அன்றியுங் கருமமுடியுந் தனையும் விடாத் துணிவின் பெயர் - ஓர்ப்பு, கடைப்பிடி, குறிக் கோள், தேற்றம். துணைக்காரணம் - உபகரணம், ஏது, சாதனம், துப்பு. துண்டம் - கடிகை, கண்டம், துணி. துதித்தல் - ஏத்தல், துதி, தோத்திரம், நுதி, பரசுதல், பரவல், பழிச்சல், புகழ்தல், போற்றல், மீக்கூறல், மெச்சல், வழுத்தல், வாழ்த்தல், வியத்தல். தும்பிசேர்கீரனார் - குறுந்தொகை, புறநானூறு பாடிய புலவரி லொருவர். தும்பை - துரோணம். துரிஞ்சில் - சீக்கிரி, முன்னம். துரியோதனன் - அரவக் கொடி யோன், காந்தாரிமைந்தன், குருடன் மைந்தன், சுயோதனன், திருதராட் டிரன் மைந்தன், நந்தியாவாத்தத் தாமன், மன்னர் மன்னன், வணங்கா முடியினன். துரியோதனன் குலத்தோர் - குரு குலத்தோர், கௌரவர், பரதர், பாரதர், பௌரவர். துருஞ்சில் - ஆலாலம். துருத்தி - தோல். அன்றியும் உலைத் துருத்தி - அத்திரி, உதி, சிவை, பதித்திரி. பெருந் துருத்தியின் பெயர் - விசிறி, பந்தம். மட்டத் துருத்தியின் பெயர் - பந்து. நீரை வீசுந்துருத்தியின் பெயர் - சிவிறி, சிறுதாரை. துரோணாசாரியன் - கும்பசம்பவன், பாரத்துவாசி, மெய்ந்நூலன், வின் னூலாளன், வேதக் கொடியோன். துர்க்கந்தம் - பூதி. துர்க்கை - அந்தரி, அமரி, அம்ப ணத்தி, அரியேறி, ஆளிவூர்தி, எண்டோளி, ஐயை, கலையா னத்தி, கலையூர்தி, கன்னி, காத்தி யாயனி, கார்த்திகை, குமரி, கொற் றவை, கொற்றி, கௌரி, சக்கர பாணி, சக்கராயு தத்தி, சண்டிகை, சமரி, சயமகள், சுந்தரி, சூலி, தேவி, நாரணி, நாராயணி, நீலி, பகவதி, பாலைக் கிழத்தி, மகிடற் செற்றாள், மாலினுக்கிளையாள், மேதிச் சென்னிமிதித்தாள், வாள்கைக் கொண்டாள், விசயை, விந்தை, விமலை, வீரச்செல்லி, வீரி. துர்க்கை கூத்தின் பெயர் - மரக்கால். துலராசி - கட்டளை, கோல், சீர், தராசு, துலை, தூக்கு, நிறை, வாணிகன். துவட்டல் - நுடக்கல். துவரை - ஆடகம், ஆடகி, முதிரை, கடலை முதலியன. துவர்ப்பு - சகாயம், துவரம். துவளல் - அசைதல், உவளல், ஒல்கல், திவளல், நுடங்கல், நுணங்கல். துழாவல் - அளாவல், கலம்பகம், கலவல், கலாவல், சங்கீரணம். துளசி - குல்லை, துழாய், துளவம், துளவு, பிருந்தை, வனம். துளி - ஆலி, உறை, சிதர், சீகரம், தளி, திவலை, தூவம். துளைத்தல் - குயிறல், துருவல், தெளிதல், தொள்ளல். துளையுடைப்பொருள் - குயில், குழல், குழை, கோகுலம், தண்டு, துள்ளை, புழல், புழை. துறப்பு - அள், கொல், பறலிகை, பூட்டு, வலிப்புற்று. துறவு - சந்நியாசம், சார்மறுத்தல், துறத்தல், நிவிர்த்தி, நீத்தல், நீப்பு, விரத்தி. துறுகல் - பொறை. துறைக்குறுமாவிற்பாலங் கொற்றனார் - நற்றிணை பாடிய புலவரி லொருவர். துறையூர் அரிசில்கிழார் - புறநானூறு பாடிய புலவரி லொருவர். துன்பம் - அஞர், அரந்தை, அரித்தை, அலக்கண், அலந்தலை, அலந்தை, அல்லகண்டம், அல்லல், இடர், இடுக்கண், இடுப்பு, இடும்பை, இட்டளம், இரக்கம், இன்னல், இன்னா, உறுகண், உறுவல், எவ்வம், ஏதம், கம்பலை, கலக்கம், கவலை, கவ்வை, கிலேசம், கேதம், கை தவம், கையாறு, கோட்டாலை, சிந்தை, சிலுகு, சிறுகு, சிறுமை, சூர், செல்லல், தாபம், துக்கம், துயர், துரால், துரிசு, துரிதம், துனி, தொய்யல், நடலை, நொ, நோய், படா, பரிவு, பழங்கண், பனி, பாசறை, பிணி, பீடை, பீழை, புன்கண், பைதல், பையுள், மம்மர், மிகை, யாதனை, வாதை, விழுமம், வீரை, வெய்துதல், வெறுப்பு, வேதனை. துன்னர் - பொல்லர். தூ தூக்கங்கள் - அறை உத்திகல்லி, துணி, தூக்கு, தொங்கல், மதலிகை. தூக்கணங்குருவி - சிதகன், சிந்தன், தூக்கு, தூதுணம். தூக்கிநிறை - நூறு பலம். தூக்கு - கா, துலாம். தூக்குக்கோல் - மட்டளை, கோ, துலை, நிறுப்பான், நிறை, வாணிகன். தூங்கல் - கனவு, துயில், கண்படை அனந்தல், படல், நித்திரை, பள்ளி, உறக்கம், துஞ்சல், உறங்கல். தூங்கலோரியார் - குறுந்தொகை நற்றிணை பாடிய புலவரி லொருவர். தூண் - எழு, கந்து, கம்பம், கால், தாணு, தூணம், நிலை பேறு, மதலை. தூண்டில் - கோல், படிசம், வெளிசம். தூதர் - ஒத்தபண்புரைப்போர், வழி யுரைப்போர், வித்தகர், வினை யுரைப்போர். தூதுளை - தூதுளம். தூபக்கால் - இந்தளம், தடவு, தூபமுட்டி. தூபமணி - சைம்மணி. தூரம் - சேண், சேய், செய்மை, நீளம், அன்றியுங் கூப்பிடு தூரத் தின் பெயர் - எல்லை, குரோசம். பறவை யளவு தூரத்தின் பெயர் - கிர வுஞ்சம். தூத்தர் - இடங்கழியர், காமுகர், நாகரிகர், படிறர், பரத்தவர், பல்லவர், விடர். தூபமுட்டி - இந்தளம், தடவு. தூம்புவாய் - அங்கணம். தூய்தாக்கல் - சீத்தல். தூவல் - சொரிதல், பொழிதல். தூறு - குன்மம், பஞ்சி, விடபம். தூறுதல் - கோள். தூற்றல் - பழிகூறல், புறங்கூறல், அன்றியுஞ் சிலரறிந்த பழிதூற லின் பெயர் - அம்பல், பலரறிந்த தூறலின் பெயர் - அலர். வெறும் புறங் கூறலின் பெயர் - குச்சம், குறளை, கொடுவாய், கொண்டி யம், கோள், தொடுப்பு, பிசினம். தெ தெங்கு - இலாங்கலி, ஏடகம், கேளி, தாழை, தென், நாரிகேளம், நாளிகேரம். தெப்பம் - அம்பி, உடுபம், கோலம், தொள்ளம், நாவாய், பகடு, படுவை, பட்டி, புணை, மிதவை, யாதனம், வள்ளம். தெய்வப்பசு - கபிலை, தேனு. தெய்வப்பெண் - அணங்கு, சூர். தெய்வம் - அணங்கு, கடவுள், சூர், தெய்வதம், தே, புத்தேளிர். தெய்வவுணவு - அமுது, அவி, சரு, நைவேத்தியம், பலி. தெரிதல் - ஆய்தல், தெள்ளுதல், தேர்தல். தெரு - ஆவணம், கோசம், ஞெள் ளல், நியமம், மறுகு, மார்க்கம், வீதி. அன்றியு நெடுந் தெருவின் பெயர் - நியமம், மன்றம், மார்க் கம். குறுந்தெருவின் பெயர் - கோணம். தெருப்பலகூடுமிடம் - கவலை, சந்தி. முத்தெருக்கூடு மிடத்தின் பெயர் - அந்தி, முச்சந்தி, நாற்றெருக் கூடு மிடத்தின் பெயர் - கோடகம், சதுக்கம், சந்து, சிருங்காடகம், நாற்சந்தி, வரிசந்தி. தெளிந்தநீர் - சற்சலம். தெளிவு - உணர்வு, துணிவு, தெருள், தெள்ளுதல், தேர்ச்சி, நனவு, பிரசன்னம், மானவு. தெள்ளுதல் - வறண்டல். தெற்கு - அவாசி, சிவேதை, தக்க ணம், தென், யாமம், யாமியம், யாமினியம். தென்றற்காற்று - சிறுகால், தென்றி, மலையக்கால், வசந்தன். தே தேக்கமரம் - மிகுதிகம், சாகம், சாதி. தேசாந்தரி - தேசிகன். தேசிக்குரியகால் - கீற்று, கடிசரி, மண்டிலம், வர்த்தனை, மரணம், ஆலீடம், குஞ்சிப்பு, கட்டுப் புரியம், காரியம், உள்ளாளம், கட்டுதல், கம்பித்தல், ஊர்தல், நடுக்கல், வாங்குதல், அப்புதல், அனுக்குதல், வாசிப்பு, குத்துதல், நெளிதல், மான்கால், இட்டுப் புகுதல், சுற்றி, வாங்குதல், உடற்பிரிவு, என்னும் இருபத்து நான்குமாம். தேசிக்குரியகை - கைத்தொழில், மார்க்கம், வடுகு. தேசிக்கூத்து - மண்டல நிலை என்னை, “கொண்ட தேசிப்பகுதி யெல்லா - மாண்ட நிலையின் வருதக வுடைத்தே” என்றாராகலின். தேடல் - கூடல், கையரிக்கொளல், துருவல், தொடர்தல், நாடல், நேடல். தேமல் - உத்தி, சுணங்கு, திகை, திதலை, திதனி, துத்தி, நுணங்கு, பொறி, வசந்திகை, வரி. தேமா - ஆமிரம், சகாகாரம், சேதாரம். தேயுவின்கணவகை - நிரை, நேர் நிரை, புளிமாங்கனி. தேய்த்தல் - அரக்கல், அரைத்தல், உரைத்தல். தேய்புரிப்பழங்கயிற்றினார் - நற்றிணை பாடிய புலவரி லொருவர். தேருருளை - ஆழி, உந்தி, உருளி, உருள், கால், சக்கரம், சில்லி, திகிரி, நேமி, பரிதி. தேர் - அரி, இயந்திரம், எந்திரம், கவரி, குயவு, கூவிரம், கூவிரி, கொடிஞ்சி, சயந்தனம், திகிரி, விமானம், வையம். இதனடுவின் பெயர் - தட்டு, நாப்பண். இதன் பரப்பின் பெயர் - பார். இதன் மரசுற்றின் பெயர் - கிடுகு. இதனுட் செறிந்த கதிரின் பெயர் - ஆர். இதன் மொட்டு - கூம்பு, கூவிரம், கொடிஞ்சி. இதன் முட்டி - பிரம்பு. தேர்க்கொடி - இடக்கியம், கூவிரம், சத்தி, சருத்தி, சிதவல், சீதாரம், துனி. தேர்ப்பாகன் - சாரதி, சூதன், வலவன். தேவகுலத்தார் - குறுந்தொகை பாடிய புலவரி லொருவர். தேவனார் - நற்றிணை பாடிய புலவரி லொருவர். தேவப்பசு - கபிலை, தேனு. தேவமாதர் - அரம்பையர், அரமகளிர், அமரர் மாதர். தேவராட்டி - சாலினி. தேவருணவு - அமிழ்தம், அவி, சரு, பலி. தேவர் - அண்டர், அதிதிமைந்தர், அதீதர், அமரர், அமுதர், ஐயர், ஆதித்தர், இமையவர், இலேகர், உம்பர், உயர் நிலத்தோர், கடவு ளர், சுடர்மவுலியர், சுரர், சுவர்க் கத்தோர், தானவர், பகைவர், பட்டாரகர், பண்ணவர், புங்கவர், புத்தேளிர், புலவர், மேலோர், வரர், வானோர், விண்ணவர், விபுதர். தேவர்கோவில் - ஆலயம், கற்கி, கோட்டம், சினகரம், சேதிமம், தளி, தேவநிலம், தேவநகர், நிகே தனம், நியமம், நிலயம், பள்ளி, பாழி, பீடரம், மந்திரம், வான வருறையுள், விமானம். தேவலோகம் - அமரர்கற்பம், அழுப் புகம், ஆனுலகு, உம் பருலகம், உயர் நிலை, உவணை, கற்பம், கோ, சுரரிடம், சுவர்க்கம், நாகம், பதவி, பவனம், புத்தேணாடு, பொன்னாடு, மேலு லகம், வியனுலகு விண். தேவி - இல், இல்லாள், இல்லவள், உரிமை, பன்னி, குடும்பினி, வல்லவை, களம், தாரம், மனை யாட்டி, மனை, விருத்தனை, பாரி, வாழ்க்கைத் துணை, களத் திரம், காந்தை, காதலி, நாயகி. தேவேந்திரன் - அரி, அமராவதி யோன், அயிராவதப் பாகன், ஆகண்டலன், ஆயிரங்கண்ணன், இந்திரன், இமையவர் வேந்தன், கரியவன், காண்டாவனன், காரி, கோபதி, கௌசிகன், சக்கிரி, சங்கி ரந்தனன், சசிமணாளன், சதிபதி, சதக்கிருதன், சதமகன், சிட்டுணு, சுத்ராமன், சுனாசீரன், சுரபதி, சுரேசன், சுரேந்திரன், துச்சவனன், நமுசி சூதனன், நாகநாதன், நான் மருப்பியானை யூர்தி, பலசூதனன், பலாரதி, பலாரி, பாகசாதனன், புரந்தரன், புருகூதன், புரோகிதன், புலவன், புனிதன், பொன்னகர்க் கிறைவன், போகி, மகவான், மருத நிலத்திறைவன், மருத்துவன், மால், மேகவாகனன், வச்சிரபாணி, வச்சிரி, வலாரி, வாசவன், வானோர் கோமான், விண்முழுதாளி, வெள்ளை வாரணன், வேந்தன், வேள்விவேந்தன், காசிப மைந்தன், அகலிகை, நயன்தோன், விருத் திராசுரற் காய்ந்தோன், கீழ்த் திசைக்கிறை, (இது அநுவாதம்). தேவேந்திரன்மனைவி - இந்திராணி, சசி, புலோமசை. மகன் பெயர் - சயந்தன். குதிரையின் பெயர் - உசசைச்சிரவம். யானையின் பெயர் - ஐராவதம். நகரின் பெயர் - அமராவதி. மாளிகையின் பெயர் - வசந்தம். மண்டபத்தின் பெயர் - சுதன்மம். நந்தனவனத்தின் பெயர் - கற்பகச்சோலை. கொடியின் பெயர் - இடி. ஆயுதத்தின் பெயர் - குலிசம், சதகோடி, சம்பம், வச்சி ரம். வயிரப்படை செய்த நூலின் பெயர் ஐந்திரம் (இதுவும் அநு வாதம்). தேள் - துட்டன், தெறுக்கால், நளி, பறம்பன், விருச்சிகம். தேற்றம் - தேற, மன்ற. தேற்றாமரம் - இல்லம், கதலி, சில்லம் தேறு. தேனீ - அலரி, சாமம், பிரசம். தேன் - நறவு, நறை, பிரசம், பிழி, மகரந்தம், மட்டு, மது. தேன்கூடு - இறால், கோற்றேன், பிரசம். தை தைத்தல் - அத்து, துன்னம், பொல்லம். தைமாதம் - தைடம், பௌடம், மகரரவி. தையற்காரர் - துன்னர், பொல்லர். தையங்கண்ணனார் - தாயங் கண்ணனார். ஓர் சங்கப்புலவர். தைவிகம் - தேவசம்பந்தம். தொ தொகைநிலை - இயமம், நியமம், ஆசனம், வழுநிலை, தொகை நிலை, பொறைநிலை, நினைதல், சமாதியென்னு மெண்வகை யோகப் பகுதிகளுளொன்று. அஃதாவது பொறிகளினுணர்ச்சி களைப் புலவழிப் போகாது ஒரு வகைப் படுத்தலாம். தொடித்தலை விழுத்தண்டினார் - புற நானூறு பாடிய புலவரிலொருவர். தொண்டி ஆமூர்ச்சாத்தனார் - அக நானூறு பாடிய புலவரிலொருவர். தொண்டமான் இளந்திரையன் - நற் றிணை, புறநானூறு பாடிய புலவரி லொருவர். தொல்கபிலர் - அகநானூறு, குறுந் தொகை, நற்றிணை பாடிய புலவரி லொருவர். தொடுதல் - ஊறு திவளல், தீண்டல், துவளல், பரிசம், சரிசனம், பரிசித் தல். தொடை - ஊரு, கவான், குறங்கு, சோகம், வாமம். தொழில் - கருமம், கன்மம், செயல், பணி, விதி, வினை. தொழில்செய்வோர் - கம்மியர், தொழுவர். தொழிற்கை - தொழிற்பெறக் காட் டுங்கை. தொழுமரம் - தொழு. தொழுவம் - தோழம். தோ தோசை - அடை, இலட்டுகம், மோதகம் (தோயை). தோடு - தாடங்கம். தோட்டம் - துடவை, படப்பை, கொல்லை. தோட்டவகை - ஆரம், தொடு. தோட்டி - அங்குசம், கணிச்சி, சரணம். தோணாமுகம் - சூழ்கழி யிருக்கை. தோணி - நாவாய், ஓடம், மரக்கலம், பஃறி, அம்பி, கப்பல், சிலுப்பு, கடற்றேர், புணை. தோண்டல் - அகழ்தல், சூளல், சூன்றல், தொடுதல், தொட்டல், நோண் டல். தோரணம் - மகரிகை, கொடி. தோரியமடந்தை - ஆடி முதிர்ந்தவள். தோரை - இயவை. தோரைக்கை - இரண்டு கையும் பதாகை யாக்கி யகம்புற மொன்றி முன் தாழ்ந்து நிற்பது. தோல் - அதள், உரி, உரிவை, எலியல், கிருத்திமம், சருமம், துவக்கு, தொக்கு, பச்சை, புரனி, புனிறு, போர்வை, மேதை, வடகம். தோல்வி - அஞ்சல், அபசயம், ஓட்டம், தொலைவு, தோல்வு, தோற்றல், நிலையழிவு, பின்னிடல், பிறக்கிடல். தோல்வினைஞர் - குயிலுவர், பறம்பர். தோழன் - எலுவன், காதலன், கேள்வன், சகாயன், சினேகிதன், சிலதன், சேடன், துணைவன், நண்பன், பாங்கன். தோழன்முன்னிலை - எல்லா, ஏடா. தோழி - அன்னை, இகுளை, இணங்கி காதலி, சிலதி, சேடி, துணைவி, பாங்கி. தோழிமுன்னிலை - எல்லீ, எல்லே, ஏடி, ஏழா. தோளணி - அங்கதம், கண்டிகை, கிம்புரி, கேயூரம், வாகுவலயம். தோளணிமாலை - தாமம், தொடையல். தோள் - புயம், மொய்ம்பு, பாகு, வாகு. தோள்மேல் - எருத்தம், சுவல், செகில், நிகலம், பிடர். தோற்கருவி - பணி. தோற்கருவிகள் - பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு. நீசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை என்பன வாம். தோற்கருவிமாக்கள் - இயவர், சுணுங்கர். தோற்பலகை - தட்டு, தோல், தோற் பாவம். தோற்பரம் - சருமம். தோற்பாவைக்கூத்து - தோலாற் பாவை செய்து ஆட்டு விப்பது. தோற்றமன்னரது குடை கொள்ளல் - பெரிய புகழையுடைய அரசர் பொருதுடைந்து புறங்கொடுத்த வழியவரது வெண்கொற்றக்குடைக் காம்பைத் தலைக் கோலாகக் கொள்க. தோற்றுதல் - பிறத்தல், தோன்றல், சனித்தல், நாறல், வெள்படல், உருத்தல். தோற்றுவித்தலின் பேர் - உண்டாக் கலைக் காண்க. தோற்றுன்னர் - செம்மார். தோன்றல் - உருத்தல், தோற்றல், நாறுதல், மலர்தல், வெளிப்படல். ந நகம் - உகிர், கரோருகம், புணர்ப் பவம். நகரத்தின்பொது - ஆலயம், நிகாயம், புரி, ஆகாசம், தாமம், சாதனம், தாவளம், சரணம், பதி, பள்ளி, பாழி, பாடி, நிலயம், நிகேதனம், நியமம், நிசாதனம், உறையுள், வசதி, உசம், சம்வாகம், குடம், வேசனம், கோட்டம், அரம், புரம். நகரப்பதியோர் - சதுரர், நாகரிகர். நகர்படுதிரவியம் - கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, யானை, வேந்தன். நகுதல் - மூரல், இளி, முறுவல். நகுலசகாதேவர் - மத்திரை மைந்தர், அச்சுவினி மதலையர், இரட்டை யர். நகையி னவிநயம் - மேற்பட்ட சிரிப் பினை யுடைத்து, பிற ரெள்ளலை மேற்கொண்டது, வளைத்தமுக முடைத்து, முரி புருவத்துடன் விலா வுறுப்புடையது, செய்வது பிறிதாய் வேறு சாதிப்பது. நக்கணன் - அகநானூறு பாடிய புலவரிலொருவர். நக்கண்ணையார் - ஒர் சங்கப்புலவர். இவராற் பாடப்பட்டோன் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. நஞ்சு - அமரி, ஆலகாலம், ஆலம், கடு, கரம், கரளம், காரி, காளம், சிங்கி, நீலம், அன்றியும் விடத்தைக் காண்க. நஞ்சுண்டோ னவிநயம் - கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும், பஞ்சுபோல வாயினின்றும் நுரை குவித்தலும், தனக்குப் பற்றுக் கோடான மனிதர் முகம்பார்த்து இனிய சொற்களைச் சொல்லு வோனைப் போல சொல்லாமையு முடையனாம். நடத்தலின்பெயரும் வகுப்பும் - இகைத் தல், இயங்கல், இல்லல், இவர்தல், இறத்தல், எகல், ஒதுங்கல், கடத்தல், கமனம், கழிதல், செல்லல், சேறல், படர்தல், பிரிதல், பெயர்தல், போதல், மீளல், வயங்கல், வருதல், வழங்கல், விடுதல். நடு - அகடு, அணவு, இடை, உந்தி, ஒத்தல், கூழை, சமன், செப்பம், நள்ளு, நனந்தலை, நா, நாப்பண், பகல், பிரமம், மத்திமம், மத்தியம், மையம். நடுக்கம் - அதிர்ப்பு, உலைவு, கம்பம், கம்பலை, கம்பனம், கம்பிதம், தளம்பல், நடலை, பனி, பனித்தல், பனிப்பு, பிறழ்தல், பொதிர்ப்பு, விதலை, விதிர்ப்பு, வெதிர்ப்பு. நடுச்சொல்வோன் - கரியன், கள்வன். நடுப்பகல் - நண்பகல், மத்தியானம். நடுப்பகல்வகை - உச்சி, உருமம். நடுவுநிலையவிநயம் - அஃதாவது கோட்பாடறியாத கொள்கையு மாட்சியும், மறங்கொண்ட மனமும், மாறியகண்களும், வேறு பட்ட காட்சி நீங்கிய நிலையும், குறிப்பிலதாகலும், நடுக்கமில் லாத பெருமை மிகவுடைமை யும், தண்ணென வுடைமையும், அளந் தறி யருமையும், அன்புடன் சேர்ந் திருத்தலும், கலக்கமொடு புணர்ந்த பார்வையும், கதிப்பும் விலக்கார் புலவர். நடை - ஒழுக்கம், கதி, சாரம், அன்றி யுமாறாநடையின் பெயர் - சதா கதி. நடையுளது - சரம், நடையிலது - அசரம், இரண்டுஞ் சராசர மெனப்படும். நட்டபாடை - நைவளம். நட்பு - கேண்மை, கேள், தொடர்பு. நண்டு - அண்டசம், கவைத்தாள், கள்வன், கர்க்கடகம், குளிர், குளீரம், ஞண்டு, நளிர், நள்ளி, மதி. இதனாண் - அலவன். நத்தை - கருநந்து, கூன், சுரிமுகம், நத்தம், நந்து, நாகு. நந்தி - எருது, விடை, ஏறு, இடபம், புங்கவம், இறை, வாகனம், சிவகணமுதல். நந்தியாவட்டம் - நந்தியாவர்த்தம், வலம்புரி. நமனாயுதம் - கணிச்சி, தண்டு, பாசம். அவன்வாகனம் - எருமைக்கடா. நமன் - அந்தகன், அரி, இயமன், எருகம் ஊர்தி, காலன் கால, கூற்றன், கூற்றுவன், சண்டன், சமன், சௌரி, செங்கோற் கடவுள், ஞமன், தருமன், தென்றி சைக்கோன், நடு வன், பாசகரன், பானுமைந்தன், மடங்கல், மறம், மறலி, மறல். நம்பிகுட்டுவநு - குறுந்தொகை, நற் றிணை பாடிய புலவரி லொருவர். நயச்சொல் - உபசாரம், சம்மானம், முகமன். நயம் - நறுமை, நன்னர், விழுப்பம். நரகத்திற் கொல்லாது வருத்துநோய் - யாதனை. நரகம் - அந்தகாரம், அழல், அளறு, அள்ளல், ஆர்வம், இருணிலம் இருள், ஊழல், கீழுலகம், கும்பி, சுவப்பிரம், செந்து, திமிரம், தீ, துவாந்தம், நராலை, நிரயம், பவர்க்கம், பாதாளம், புலவு பூதி, வீழ்கதி. நரம்பு - எசம், கன்னம், சிங்கம், சிரை, தாது, காடி, மேதை. நரம்புக்கருவி - குரல், கோல், தந்திரி. நரம்புக்கருவிக்குரியோர் - குயிலுவர். நரம்புபிறத்தல் - தாரத்து உழை பிறக்கும், உழையிற் குரல் பிறக் கும், குரலுள் இளி பிறக்கும், இளியுள் துத்தம் பிறக்கும், துத்தத் துள் விளரி பிறக்கும், விளரியுட் கைக்கிளை பிறக்கும் எனக் கொள்க. நரம்புமாத்திரை - குரலுந் துத்தமும் நான்கு, கிளைமூன்று, உழை இரண்டு, இளிநான்கு, விளரி மூன்று, தாரம் இரண்டு மாத் திரைகளை யுடைத்தாம். நரி - இகலன், உள்ளன், ஒண்டன், ஞரோட்டம், கோணாய், கோமாயு, சம்பு, சிறுகாலன், சிவை, சுரி, பூரிமாயு. இதனாண் - ஓரி. இதன் பெண் - பாட்டி. இதன்பிள்ளை - குட்டி, குருளை, பறழ். அன்றியுங் கிழநரியின் பெயர் - ஒரி, செந்து. நருமதைநதி - இரேவை, சோமன் புத்திரி. நரை - சரை, பலிதம். நரைமுடிநெட்டையார் - அகநானூறு பாடிய புலவரிலொருவர். நல்லழுசியார் - பரிபாடல் பாடிய புலவரிலொருவர். நல்லாடை - நாகம், பாரி. நல்லார்ப்பூண்கிழான் - அகநானூறு பாடிய புலவரிலொருவர். நல்லுணர்வு - சீலம், ஞானம். நல்லுருத்திரனார் - கலித்தொகை பாடிய புலவரிலொருவர். நல்வினை - தானம், அறம், தருமம், சீலம், அருள், மங்கலம், சுபம், சுகிர்தம், புண்ணியம், பாக்கியம். நவகண்டம் - வடபால் விதேகம், தென்பால் விதேகம், கீழ்பால் விதேகம், மேல்பால்விதேகம், வடபாலிரேவதம், தென்பா லிரேவதம், வடபாற்பரதம், தென் பாற்பரதம், மத்திமகண்டம். நவதாரணை - நாமதாரணை, வச்சிர தாரணை, மாயாதாரணை, சித்திர தாரணை, சத்தசாரணை, வத்து தாரணை, சதுரங்கதாரணை, செய்யுட்டாரணை, நிறைவு குறையாகிய வெண்பொருட் டாரணை. நவதாளம் - சமதாளம், அருமதாளம், அடதாளம், மடிமதாளம், சயதா ளம், பட்டியதாளம், விடதாளம், நிவர்த்த தாளம், துருவதாளம். நவபுண்ணியம் - எதிர்கொளல், பணிதல், இருத்தல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், அறுசுவையுண்டி யமைந்தோர்க் குதவல், புகழ்தல். நவமணி - வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேத கம், வைடூரியம், நீலம், புருட ராகம். நவலோகம் - பொன், இரும்பு, தாமிரம், ஈயம், வெள்ளி, இரதி, மதுகம், நாகம், கஞ்சம். நறுமணம் - சுகந்தம். நறும்புகை - குய், நரை, வெடி. நறுவிலிமரம் -அலி, செலு, வலி, வெளிறு. நற்கணத்தின்பயன் - நிலக்கணம் பெருக்கஞ் செய்வதாலும், சந்திர கணம் வாள்நாள் தருவதாலும், நீர்க்கணம் கீர்த்தியைத் தருதலா லும், இயமானன் கணஞ் செல் வத்தைத் தருதலாலும், அரசர்க் கும் பிறர்க்கும் இவை தக்கன வென்று நூலிற் கூறப் பட்டா லும், தலைவனியற் பெயரின் முதலெழுத்திற்கு இயைந்தசீர்க் குரிய நட்சத்திரத் தோடு சென்ம நட்சத்திர மாயினும் நாம நட்சத் திர மாயினும் பொருந்தாத விடத் துக் கொள்ளத்தகா. நற்கணவகை - நிலன், நீர், மதி, இயமானன் இந்நான்கும் முன்வரி னன்று. நற்பசு - பத்திரை. நற்பணித்தூசு - தேவாங்கம். நற்பொருள் - ஞாபகம், பிசி. நற்றானந்தீத்தானமாவன - தானப் பொருத்தம் நன்று தீது என்றிரு வகைப் படுதலால் தலைவனியற் பெயரின் முதலெழுத்து முதல் மூன்றும் நற்றானமாகவும், ஏனை யிரண்டுந் தீத்தான மாகவுங் கொள்க. நன்கணதீக்கணவகை - தேமாங் காய், புளிமாங்காய், கருவிளங் கனி, கூவிளங்கனி இவை நான் கும் நற்கணமாம்; தேமாங் கனி, புளிமாங்கனி, கருவிளங் காய், கூவிளங்காய் என்பன தீக்கண மாம். நன்மை - அணி, அவணி, ஆணு, உத்தமம், உறுதி, ஒண்மை, கடவுள், சிவம், சீர், சுகம், சுபம், சேடு, நமம், நயன், நலம், நறுமை, நன்கு, நன்றி, நன்று, நன்னர், படு, மாசறல், யாணர், வண்ணம், விழுப்பம், விழுமம். நன்னாட்டமைதி - செல்வம், விளை யள், பல்வளம், செங்கோல், குறும்பின்மை, பிணியின்மை. நன்னிமித்தம் - வாய்ப்புள், விரிச்சி. நா நாசிகுவை - தாரம், தாரை, தாலம், தாலு. நாகணவாய்ப்புள் - குரகம், சாரிகை, பூவை. நாகபாம்பு - மூர்க்கம். நாகப்பூச்சி - நாங்கூழ், பூநாகம். நாகம்போத்தன் - குறுந்தொகை பாடிய புலவரிலொருவர். நாகரவண்டு - நொள்ளை. நாகரிகர் - காமுகர், சதுரர். நாகலோகம் - பவனம். நாடகக்கணிகைபரிசு பெறுவழக்கு - முட்டில்லாத பாணர்கள்போல ஆடிய மகளிரும் நாளொன்றுக்கு ஆயிரம்பொன் பரிசாகக் கொள் வது முற்காலத்து வழக்கு. நாடகக்கணிகையரங்கேறல் - முன்னர் அரங்கு முதலிய எல்லா முதன் மையும் பெறுவதற்குக் காரண மாகிய தலையரங்கேறல் வேண்டு மென்க. நாடகசாலை - அரங்கம், அவிநய சாலை. நாடகசாலைக்கணிகை - கூத்தி, நடி, நிருத்தமாது, மாதவி. நாடகத்தரம்பையர் - உருப்பசி, மேனகை, அரம்பை, திலோத் தமை. நாடகநவரசம் - சிங்காரம், வீரியம், பெருநகை, கருணை, இரௌத் திரம், குற்சை, சாந்தம், அற்புதம், பயம். நாடகமாவது - தாளவொத்தின் றிறத்துக் கியைய நடிப்பது. நாடகர் - அவிநயர், கண்ணுளாளர், காரோடியர், கூத்தர், கோடியர், நடர், நாடகீயர், நிருத்தர், புலவர், பொருநர், வலரியர், அன்றியுந் தேவர்க்காடுவள் - சாலினி. நாடா - நூனாழி. நாடு - அகலுள், அரசு, அழுவம், உலகு, உறையுள், ஏணி, கோட் டம், சனபதம், சும்மை, தண்டம், தண்ணடை, தேயம், படப்பை, பாடி, பாண்டி, பைதிரம், பொழில், மண்டிலம். நாடுசார்ந்தநிலம் - மருதம். நாடுபடுதிரவியம் - செந்நெல், செவ்விள நீர், சிறுபயறு, கரும்பு, வாழை. நாட்பொருத்தவகை - உயிரும் உயிர் மெய்யும் இருபத்தேழு நட்சத் திரங்களாக வகுக்கப்பட்டிருத் தலால் தலைவனியற் பெயரின் முதலெழுத்துக் கமைந்த முதற் பாலின் முதற் சீரிலுள்ள எழுத்தை விதித்த அந் நட்சத்திரமாகக் கொண்டு பின்வரும் எழுத்திற் கமைந்த நட்சத்திரம் நன்மை யாம். அந்த முதலெழுத்திற்கும் நான்கா மெழுத்திற்கும் ஆறாம் எழுத்திற்கும் எட்டாம் எழுத் திற்கும் ஒன்பதாம் எழுத் திற்கும் உரிய நட்சத்திரங்களும் பகை வரை நட்பினராக்கும் நட்சத் திரங்கள் என்பர். நாட்டேழ்குற்றம் - விட்டில், கிளி, நாவாய் ஏனம், தொட்டியர், கள்வர், பெரும் புயல். நாணமுற்றோனவிநயம் - தாழ்ந்த தலையும், மறைந்த செய்கையும், வாடிய முகமும், கோடிய வுடம் பும், கெட்ட வொளியுங், கீழ்க்கண் ணோக்கமு முடைய தென்ப. நாணம் - வெட்கம், இலச்சை, வெள் கல், சமழ்த்தல், வட்கல், இருளை, மானம், உட்கு. நாணல் - காசை, சரம், சரவணம். நாணி - ஆயம் குணம், சிஞ்சினி, தொடை, நரம்பு, நாரி, பூட்டு, பூரி, வடம். நாணினொலி - மருமராஞ்சம். நாண் - பூரி, ஆவம், பூட்டு, தொடை, வடம், நாரி, நரம்பு, குணம். நாண்முடிவு - துடி. நாமகளமிசமாகவவதரித்தவர் - நக்கீரர், பரணர், கபிலர், மா மூலனார், கல்லாடர், சீத்தலைச் சாத்தனார், மருத்துவன் றாமோ தரனார், நாகன்றேவனார், அரிசி ற்கிழார், பொன்முடியார், கோத மனார், நத்தத்தனார், முகை யலூர்ச் சிறு கருந்துபியரர், ஆசி ரியர் நல்லந்துவனார், கீரந்தை யார், சிறுமேதாவியார், நல்கூர் வேள்வியார், தொடித் தலை விழுந் தண்டினார், வெள்ளி வீதி யார், மாங்குடி மருதனார், எறிச் சலூர் மலாடனார், போக் கியார் மோசிகீரனார், காவிரிப் பூம்பட் டினத்துக் காரிக் கண்ணனார், மதுரைத் தமிழ் நாயகனார், பாரத ம் பாடிய பெருந்தேவனார், உருத் திர சன்மகண்ணர், பெருஞ்சீத்த னார், நரிவெரூஉத்தலையார், மதுரைத் தமிழாசிரியர் செங்குன் றூர்க் கிழார், மதுரையறுவை வாணிகர் இளவேட்டனார், கவி சாகரப் பெருந்தேவனார், மதுரைப் பெருமரிதனார், கோவூர்க்கிழார், உறையூர் முதுகூற்றனார், இழிகட் பெருங் கண்ணனார், செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ண னார், வண்ணக்கஞ்சாத்தனார், களத்தூர்க்கிழார், நச்சமனார், அக்காரக்கனி நச்சுமனார், நப்பாலத்தனார், குலபதி நாய னார், தேனீக்குடிக்கீரனார், கொடிஞாழன் மாணி பூதனார், கவுணியனார், மதுரைப் பாலாசிரி யனார், ஆலங்குடி வங்கனார். நாமகளூர்தி - பூரம். நாமகள் - பாரதி, துய்யாள், பனுவ லாட்டி, வேதமுதல்வி, பிராமி, விமலை, வாணி, வெள்ளை நிறத் தினள், வாக்காள், நான் முகன் கிழத்தி, ஞானத்திறைவி, காயத் திரி, சாவித்திரி, பாமடந்தை, நூன் மடந்தை, உலகமாதா, இசை மகள், கலைமகள், வெண்டாமரை மகள், கண்ணாள், உயிர்த் துணைவி, வெள்ளை மெய்யாள், கலையானத்தி. நாயுருவி - கரமஞ்சரி. நாய் - அக்கன், அசுழம், அற்பம், எகினம், எகின், குக்கன், கூரன், சாரமேயன், சுணங்கன், சுவா, சுனகன், சூரன், ஞமலி, ஞாளி, துத்தம், பாசி, புரோகதி, மண்டலி, முடுவல். அன்றியும் பெண்ணா யின் பெயர் - பாட்டி, பிணா, பிணை, முடுவல். இதன் பிள்ளை குட்டி, குருளை, பறழ். நாரத்தை - நதம், நாரங்கம், நாரம். நாராசம் - சலாகை. நாராயணசமயத்தார் - பாகவதர், வைணவர், பாஞ்சராத்திரிகள். நாரை - குருகு, கொய்யடி, நரை, வண்டானம். அன்றியும் கருநாரை யின் பெயர் - சிகரி. வெண்ணாரை யின் பெயர் - சாரசம், முந்து. பெரு நாரையின் பெயர் - பிதா, போதா. நாலறிவுயிர் - ஞெண்டு, வண்டு. நால்வகைக்கேள்வி - கற்றல், கேட் டல், அவ்வழி நிற்றல், ஓதல். நால்வகைச்சாந்து - கலவை, புலி, பீதம், வட்டிகை. நால்வகைச்சேனை - காலாள், தேர், பரி, யானை. நால்வகைநிலை - ஆலீடம், பைசாசம், பிரத்தியாலீடம், மண்டிலம். நால்வகைப்புசிப்பு - உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. நால்வகைப்புண்ணியம் - தானம், கல்வி, தவம், ஒழுக்கம். நால்வகைப்புலமை - கவி, கமகன், வாதி, வாக்கி, இவருள் கவியர வான் ஆசு, மதுரம், சித்திரம், வித்தார மென்னு நாற்கவிகளை யும் பாடுவோனாம். கமகனா வான் அரும்பொருளைச் செம் பொருணடையாகக் காட்டி விவகரிப்போனாம். வாதியாவான் காரணமும் மேற்கோளுமெடுத் துக் காட்டிப் பிறர் மதத்தை மறுத்துத் தன்மத நிறுத்துவோ னாம். வாக்கியாவான் - அறம் பொருளின்பம் வீடென்னு நான் குறுதிகளைக் கேட்கவும் விரும்ப வும் இனியனவாக விரித்துக் கூறு வோனாம். நால்வகைப்பூ - கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ. நால்வகைப்பொன் - ஆடகம், கிளிச் சிறை, சாதரூபம், சாம்பூ நதம். நால்வகையுபாயம் - சாமம், பேதம், தானம், தண்டம். நால்வகையூறுபாடு - குத்தல், வெட்டல், எய்தல், எறிதல். நாவல் - அருகதம், சம்பு, நேரோ டம். அன்றியுங் குழிநாவலின் பெயர் - சாதேவம். நாவி - மறுவி. நாவிதன் - ஆசிதையன், ஏனாதி, மங்கலி, மஞ்சிகன், மயிர்வினை யாளன், மாசு தீர்ப்போன். நாழி - குஞ்சம், படி. நாழிகை - இருத்தை, கடிகை, கன்னல், நாழி, பதம், விகலை. நாழிகைவட்டில் - கன்னல், கிண்ணம். நாள் - அல்கல், அளவை, ஆனியம், எல், எல்லை, எல்வை, திவசம், திவா, தினம், பகல், வாரம், வைகல். இதன் பாதி-அரைநாள், அர்த்தநாள், பானாள். நாற்கதி - தேவகதி, நரககதி, மக்கட்கதி, விலங்குகதி. நாற்சந்தி - கோடகம், சதுக்கம், சிருங்காடகம், வரிசந்தி. நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு. நானிலம் - குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை. நான்கு - சது. நான்காம்பக்கம் - இருத்தை, அதாவது பூர்வபக்கம், அபாபக்கம் என் னும் இரு பக்ஷங்களிலும் வரும் நான்காம் ஒன்பதாம் பதினான் காம் பக்கங்களாய் வரும் நாட்க ளாம். நான்காம்வேதம் - அதர்வணம். நி நிகண்டன் தலைக்கோட்டுத் தண்டனார் - ஓர் சங்கப்புலவர். நிகழ்காலம் - பவிடியம், வேலை. நிகற்புதம் - அற்புதம் பத்துக் கொண் டது. நிச்சயம் - சாசுவதம், தீர்க்கம், துணிவு, தேறல், தேற்றம், நிகண்டு, நிதானம், நியமம், மன்றம். நிசாளம் - தண்ணுமை. நிடதக்கை - முட்டியாக இரண்டு கையுஞ் சமஞ்செய்வது. நிணம் - இழுது, கொழுப்பு, செழுமை, நெய், மேதை, வழுக்கு, வழும்பு, விழுப்பு, விளர். நிதம்பம் - கடிதடம். நித்திரை - அனந்தர், அனங்கல், உறக் கம், கண்படை, கனா, சயனம், துஞ்சம், துயில், பள்ளி. அன்றியும் நிரம்பாத்துக்கம் - தூங்கல். நித்திரைசெய்தல் - உறங்கல், கண் படல், துஞ்சல், துயிலல், துயிறல், தூங்கல், பள்ளி, வீங்கல். நித்திரையொழித்தல் - சாகரம், துயிலெடை, விழித்தல். நிந்தையின் பெயர் - இகழ்ச்சியைக் காண்க. நிமித்தம் - சகுனம், சோதிடம், வாய்ப் புள், விரிச்சி. நிமித்தம்பார்ப்பவன் - சகுனி. நியமமாவது - தவம், சௌசம், தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம், வழிப்படல். நிரம்பாத்துயில் - தூங்கல். நிரம்பாமென்மொழி - குதலை, மழலை, கொஞ்சல், உலோபம், மிழலை. நிருதர் - சாலகடங்கடர், நிசாசரர். நிருவாணி - திகம்பரன், நக்கன், நக்கினன். நிரைமுடிநெட்டையார் - ஓர் சங்கப் புலவர். நிலங்கு - பூழ். நிலத்தின்கணவகை - நிரை நிரை நிரை, கருவிளங்கனி. நிலப்பிளப்பு - கமரைக்காண்க. நிலம் - திணை, மா, வேலி. நிலவறை - கீழ்நிலை, சுரங்கம். நிலவு - சந்திரிகை. நிலாமுகிப்புள் - அஃபோதகம், சகோ ரம், சாரம், பேராந்தை. நிலாமுற்றம் - அரமியம். நிலை - ஆதாரம், ஏண், ததல், தம்பம், தாணு, தாகரம், திதி, திரம், நிற்றல், மன்னல். நிலைநீங்காமை - ஆரூபம், ஆனாமை, தண்டாமை. நிலைபெறுகல் - அற்றல், தாணு, திதி, துஞ்சல், நிலைத்தல், மன்னல். நிலைபேறு - திதி, துஞ்சல், மன்னல். நிலையின்மை - அற்காமை, வம்பு. நிலையுடைமை - எண். நிறம் - அரி, இராகம், உரு, எழில், கரு, கறை, குணம், குரு, கெழுமை, கேழ், கொழுமை, சந்தம், சாயல், சாயை, பயப்பு, புகர், பை, மாமை, மேனி, வண்ணம், வருணம். நிறுத்தல் - தூக்கல். நிறுத்துதல் - தோன்றல். நிறை - கட்டளை, துலாம், துலை, தூக்கு, பாரம். நிறைகல் - கட்டளைக்கல். நிறைதல் - ஆர்தல், கழுமல், கிளர்தல், கிளைத்தல், கெழுமல், கெழுவுதல், ததும்பல், திளைத்தல், துவன்றல் துற்றல், தெகுளம், தெவிளல், தெவிட்டல், தேக்கல், தேங்கல், நிரம்பல், பிறங்குதல், மலர்தல், மலிதல், மல்கல். நிறைபுனல் - பிராறு, வழாறு, வாரி. நிறைவு - கமம், கணை, செறிவு, நிதி, நிரப்பு, பிரகாமியம், புட்டம், பூரணம். நிறைவேறல் - சபலம். நினைத்தல் - உணர்தல், உள்கல், உள்குதல், உன்னல், ஊழ்த்தல், சிந்தித்தல், தெவிட்டல், படர்தல், முன்னல், வலித்தல். நினைவின் பெயர் - கருத்தைக் காண்க. நீ நீக்கல் - வரைவு. நீங்கல் - அகலல், உணர்வு, ஒருவு தல், ஓவல், தணத்தல், வரைதல், வல்லி, விலகல். நீதி - கடம், செங்கோல், தருமம், நடு, நயம், நியாயம், நிதம், நெறி, மறியாதம். நீந்துபுனல் - அகாதம். நீரின்கணவகை - நேர் நிரை நிரை யென்னுஞ் சீர்க்குச் சதைய நட்சத்திரமாம். நீரோட்டம் - கோலம். நீர் - அப்பு, அமுதம், அம், அம்ப ணம், அம்பு, அம்புதம், அயம், அலர், அளகம், அரல், ஆருவம், ஆலம், உதகம், கஞ்சம், கமலம், கம், கயம், கவந்தம், கனரசம், கனவிரதம், காண்டம், கார், கீலா லம், குசம், கோ, சம்பரம், சலம், சலிலம், சிந்து, சீலம், சீவனம், சீவனீயம், தீர்த்தம், தோணி, தோவம், நாரம், நீரம், பயசு, பயம், பாணி, பானீயம், பிசிதம், புட் கரம், புவனம், புனல், மறை, மாரி, மை, வயம், வாருணம், வனம், வாயம், வாரி, வார், அன்றியுந் தெளிந்த நீர் சற்சலம், தெண்ணீர். கலங்கனீரின் பெயர் - ஆவிடம், கலுடம், கலுழி, விலங்கல். நீர்க்காந்தை - அர்க்கம், கரண்டகம், காரண்டம். நீர்குமிழி - மொக்குள், கொப்புள், புற்புதம். நீர்க்குளிரி - கல்லகாரம். நீர்ச்சால் - இடங்கர், வட்டம். நீர்சிதறுந்துருத்தி - சிவிறி. நீர்ச்சுண்டி - சுச்சு. நீர்ச்சுழி - உந்தி, சுரியல். நீர்தகை கதவு - ஓ. நீர்த்திரை - அலை, அறல், கல்லோ லம், தரங்கம். நீர்நாய் - எகினம், எகின். நீர்நிலைவகை - இலஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, தடம், வாவி, தடாகம், ஆலி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வளம், நளினி, இலந்தை, மூழி, குளிகுளம். நீர்ப்பந்தல் - அம்பணம். நீர்முள்ளி - முண்டகம். நீர்வஞ்சி - பிசின், வானீரம். நீர்வாழ்பறவைப்பொது - உற்குரோசம், உன்னம், சின்னரம், குரகம். நீலமணி - மணி. நீலி - அவுரி, பத்தியம். நீளம் - ஆயுதம், ஆயம், உறை, கொடி, சேண், சேய்மை, தீர்த்தம், தீர்த்தல், நீக்கம், நெடில், நெடுமை, நெட்டை, நேர், நேர்பாடு, நேர்பு, வரி, வார். நீளுதல் - ஒழுகல், ஓடல், நீக்கல், நேர்தல், போதல், வடிதல், வார்தல். நீள்விழி - அளக்கர். நு நுணா - தணக்கு. நுண்மணல் - அதர், அயிர், எக்கர். நுண்மை - அணு, அயிர், ஆய்தல், இம்மி, ஐ, கூர்மை, சாய்தல், நிவறல், நிழற்றல், நுட்பம், நுணங்கல், நுணங்கு, நுணுக்கம், நுணுக்கல், நுணுங்கு, நுவணை, நுழை, நுனி, நூழை, நேர்மை, நொசி, நொய் தல், முளரி, முள். நுதலணி - இலம்பகம், சுட்டி, சூட்டு, புல்லகம். நுதலணிமாலை - இலம்பகம், சூட்டு. நுதல் - அலிகம், அளிமம், இலாடம், குளம், சங்கம், நெற்றி, பாலம், மத்தகம், முண்டகம். நுதற்குறி - திலகம், புண்டரம். நுதன்மேலணி - உத்தி, திருவுறுப்பு. நுரை - பேரு, பேனம். நுழைவாயில் - சுருங்கை, நூழை. நுனி - நுதி, நுனை. நூ நூல் - பனுவல், இலக்கண முதலா கிய நூல்கள். நூழில் - தன் மெய்க்கட் புதை படை களைப் பிடுங்கி மாற்றார் மேலெறிதல். நூறாயிரம் - நியுதம். நூறு - சதம். நூறுபலம் - நிறை, படி. நூற்கிறநூல் - இழை, சூத்திரம், தந்து, தொடர், நுவணம், நுவணை, பனுவல், பிசின். நூற்கும்பஞ்சிற்றொடர்நுனி - துய். நூற்பா - அகவல், சூத்திரம். நூற்றார் - நோழிகை. நெ நெடுங்கழுத்துப் பரணர் - புறநானூறு பாடிய புலவரிலொருவர். நெடுங்கோ - ஓர் சங்கப்புலவர். நெடுந்தெரு - நிகமம், மன்றம், மார்க்கம். நெடும்பல்லியத்தனார் - புறநானூறு பாடிய புலவரி லொருவர். நெடும்பல்லியத்தை - ஒர் சங்கப் புலவர். நெடும்போழ்து - நீட்டித்தல், நெடித் தல், பாணித்தல். நெட்டி - சடை, சடைச்சி. நெட்டிமையார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர். நெய் - அலி, ஆகாரம், ஆச்சியம், இழுது, கிருகம், துப்பகம், துப்பு, நேயம், அன்றியும் வெண்ணெயின் பெயர் - ஐயங்க வீனம், நவநீதம், நுரை. நெய்தற்கார்க்கியார் - ஓர் சங்கப் புலவர். நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்கிழார் - அகநானூறு பாடிய புலவரு ளொருவர். நெய்தற்றத்தனார் - அகநானூறு பாடிய புலவரு ளொருவர். நெய்தனிலத்தலைவன் - கடற் சேர்ப்பன், கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன், மெல்லன். நெய்தனிலத்தியாழ் - விளரி. நெய்தனிலத்திராகம் - செவ்வழி. நெய்தனிலத்தூர் - பட்டினம், பாக்கம். நெய்தனிலப்பறை - கோட்பறை, சாப்பறை, மீன். நெய்தனிலப்பெண் - கடற்பிணா, நுளைச்சி, பரத்தி, வலைச்சி. நெய்தனிலமாக்கள் - கடலர், கழியர், சலவர், திமிலர், நுளையர், பரதர், பரதவர், வலையர். நெய்தனிலம் - கடற்சார்பு, சமப்பால். நெய்த்துடுப்பு - சுருக்கு, சுருவை, துடுவை. நெய்வார் - காருகர், தந்துவர், பொருந்தர், வேதகாரர். நெரித்தல் - அவைத்தல், குத்தல், செறித்தல், தெறுத்தல். நெருக்கம் - அடர்பு, அரி, அளம், அள், இடங்கழிமை, உறுப்பு, ஐமை, ஓதி, கனை, வள், விறப்பு, சடிலம், சாந்திரம், செறிவு, துற்று, நளி, நனி, நிபிடம், நிறந்தம், பிரிப்பு, விரிப்பு. நெருங்கல் - அடர்தல், அள்ளுதல், கஞறல், கழறல், கிளைத்தல், குயிறல், செறிதல், ததைத்தல், திணுங்கல், துதைதல், துவன்றல், துறுமல், துறுவல், துன்றல், துன்னல், பம்பல், பன்னல், பிணங்கல், புளித்தல், பொதுளல், மிடைதல், மிண்டு தல், மீதூர்தல், மொய்த்தல், வெறி தல், இவற்றுள், வெளிப்படாது நெருங்கி நிற்றலின் பெயர் - ததைத்தல், துதைத்தல், மிடைதல். நெருப்பு - அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாகனன், தீ, எரி, சுசி, ஆரல், காற்றின் சகாயன், கரு நெறி, கனலி, அங்காரகன், சித்திர பானு, தழல், உதாசனன், தனஞ் சயன், சாதவேதா, முளரி, தென் கீழ்த்திசையிறை, சேர்ந்தார்க் கொல்லி, எழுநா, வன்னி, பாக வன், தேயு, அழல், சுடர், ஞெகிழி. நெருப்புறவிறகு - கொள்ளி, ஞெகிழி. நெல் - சாலி, வரி, விரீகி. அன்றியும் நன் நெல்லின் பெயர் - செஞ்சாலி, செந்நெல், சொல், தோரை நெல் லின் பெயர் - இயவை, மலை நெல்லின் பெயர் - ஐவனம். தூற்றா நெல்லின் பெயர் - பொங் கழி, பொலி. மூவருட நெல்லின் பெயர் - அசம். நெல்லிமரம் - ஆமலகம். நெல்லினாற்று - நாறு. நெல்லின் கதிர் - ஏனல், குரல், சொல். நெல்லின்போர் - சும்மை. நெல்லின்மணி - அலகு. நெல்லும் புல்லும் நிறைந்த மலையி னூர் - சம்வாகம். நெற்றிக்குறி - புண்டரம், திலதம். நெற்றிச்சுட்டி - சுடிகை. நெற்றித்திலகம் - சித்தூரம், திலகம், பொட்டு. நெற்றிப்பட்டம் - ஓடை. நென்மணி - பலகறை மகிழ்விதை யென்பன - அலகு. நென்மா - இடி. நேரோடுதல் - ஆதி, வீதி. நேர்த்திறம் - புறநீர்மைப்பண், பாலைப்பண்ணின்றிறம். நேர்மை - கை, ஒழுங்கு, வரிசை, செவ்வி, உறுதி. நேற்றைத்தினம் - கழிநாள், நெருநல், நென்னல். நை நைட்டிகன் - பிரமசாரியுளொருவன், மரணாந்தம் விவாகமின்றி யிருப் பவன். நைமிசாரணியம் - வதரி காச்சிரமம், நைமிசம், நேமிவனம், முனிவர் வாசம், இருடி கோத்திரம். நையமூதல் - மூக்கிலேற்றுதல், நசிய மூதல். நையாயிகர் - நியாய நூலார். நையாயிகம் - நியாய சம்பந்தம், ஓர் நூல் நையாயிகவழி - நியாய வழி. நொ நொச்சி - தாளி, வலி, பஞ்ச வில்வம், பத்திரம். நொச்சி நியமங்கிழார் - அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை பாடிய புலவருளொருவர். நொடி - பிதிர். நொய் - நொறுங்கு. நொய்மை - இலகு, இலேசம், நொவ்வு. நொறுங்கல் - தகர்தல், உடைதல், இடிதல், நெருங்கல். நோ நோக்குக்கூத்து - பாரமும் நுண்மை யும் மாயமு முதலாயின வற்றை யுடையது. நோயுற்றொழிந்தோன் - உல்லாபன். நோய் - அணங்கு, அருப்பம், அவ லம், அழுங்கல், ஆமயம், உரோ கம், உறுகண், காண்டகம், குத்து, குந்தம், சிதலை, சிறுமை, சூர், துனி, நடுங்கல், நிழல், நீழல், நொடி, படர், பிணி, புன்கண், பைங்கூழ், பையுள், மடங்கல், மடி, முடங்கல், முடங்கு, வாதை, வியாதி, வேதனை, அன்றியுந் தீராத நோயின் பெயர் எவ்வம். நோய்தீர்க்குமருந்து - உரை (உறை). ப பகடு - எருமை, பெற்றம், யானை யென்னு மிவற்றிற்குப் பெயராம். பகண்டை - சில்லை. பகல் - எல், திவா. பகிரண்டம் - அண்டரண்டம். பகை - அரி, ஆரலம், இகல், இரிபு, உறழ்வு, ஊழ், சத்துருத்துவம், தாவு, துப்பு, தூ, தூணம், தெவ், படர், படி, மரல், மற்கொல், மாற் றம், முரண், முனை, விரோதம். பகைமேறசெல்லல் - ஊராண்மை. பகைமேற்சென்றோருறைவிடம் - பாடி, பாசறை. பகைவரிடத்திற் செய்யுமரியசெயல் - பேராண்மை. பகைவர் - அகிதர், அடையலர், அண்டார், அமரார், அமித்திரர், அரிகள், இகலோர், இரிஞர், இன்னார், உள்ளார், எண்ணலர், எதிர்ந்தோர், ஒட்டலர், ஒட்டார், ஒல்லார், ஒன்னார், கருதலர், கூடார், கொள்ளார், சார்பிலார், சினவர், செறுநர், செற்றார், சேயார், சேரலர், சேரார், தரியலர், திருந்தலர், துன்னார், தெவ்வர், தெறுநர், நண்ணார், நள்ளார், நேரலர், நோணார், பரர், பற்சர், பற்றார், புல்லார், பொருந்தலர், மருவலர், மன்னார், மாணார், மாற்றலர், முனைந்தோர், மேவலர், வட்கார், விட்டார், வேண்டார். பகைவர் நாடழித்தல் - கொற்ற வள்ளை. பக்கம் - இடை, சிறை, ஞாங்கர், பாங்கர், பாங்கு, பாரிசம், பால், புடை, புறம், மருங்கு, மாடு. பக்கவாதம் - ஓரம், வாரம். பங்கு - கந்தம், கூறு, கூறுபாடு, திறம், பாகம், பாகு, பாத்தி, பாத்து, பால், வாரம். பங்குசெய்யல் - காதுதல், பகிர்தல், பகுத்தல், பாகிடுதல், பாத்தல், வகிர்தல். பக்குடுக்கை நன்கணியார் - புற நானூறு பாடிய புலவரு ளொருவர். பங்குனிமாதம் - பாற்குநம், பாற்கு நிகம். பசலை - பீர். பசிரி - பாய் விரி. பசு - ஆ, கபிலை, குரம், குரால், கூலம், கோவளம், சுரபி, சுரை, தேனு. அன்றியு நற்பசு - பத்திரை. குணமில்லாப் பசுவின் பெயர் - சுதை. கன்றுத்தாய்ப் பசுவின் பெயர் - வற்சலம். ஓரீற்றுப் பசுவின் பெயர் - கிட்டி, கிருட்டி. மலட்டுப் பசுவின் பெயர் - வற்சை. பசுக்கூட்டம் - கதம்பம், கதுப்பு, காலி, காலேயம், கோட்டம், தொறு, நிரை. பசுக்கொட்டில் - ஆனிலை, கொட் டம், கோட்டம், தொழு, தொழு வம், படப்பை. பசுவகை - நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை. பசுங்காய் - தீவினை. பசும்பயறு - பாசி, முற்கம். பசும்புல் - சட்பம். பசுவிற்குங் காளைக்கும் கொது - ஆ, ஆன், குடஞ்சுட்டு, கோ, நிரை, பசு, பெற்றம். பசுவின்கன்று - சோதனம், தன்னம், வசு, வற்சம். அன்றியு மிளங்கன் றின் பெயர் கொற்றி. பசுவின்முலை - சுரை. பச்சடி - அவி, துவையல். பச்சறுகு - தூர்வை, பதம். பச்சிலைமரம் - தமாலம், பசும்பிடி. பச்சை - அரி, அரிதம், அரிது, சாமம், சாமலம், பசுமை, பலாசு, பாசு, பை, பைமை, மரகதம். பச்சோந்தி - காமரூபி, கோம்பி, தண்டு. பஞ்சசத்தகருவி - தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி. பஞ்சலோகப்பொது - சீருள், பொன். பஞ்சு - துலவம், தூலம். படகம் - ஆனவம், திண்டி, பணவம். படி - ஆரோகணம், சோபானம். படிக்கம் - படியகம். படித்தல் - ஓதல், கற்றல், கெழுமல், நவிலல், பயிலல். படிப்பித்தல் - ஓதுவித்தல், கற்பித்தல், பயிற்றுதல். படிமத்துமோசிகீரனார் - குறுந் தொகைபாடியாரு ளொருவர். படுமலைத்தோற்றம் - துத்தமேகுர லாகிற் படுமலைப்பாலையாம். படுமாற்றூர்மோசிகீரன்கொற்றனார் - குறுந்தொகை பாடியாரு ளொரு வர். படை - அதிகம், அனீகம், ககனம், கவனம், சேனை, ஞாட்பு, தண்டம், தண்டு, தந்திரம், தளம், தார், தானை, பகுதி, பதாகினி, பதாதி, பலம், பாடி, யூகம், வாகினி, வானி. படைத்தலைவன் - சேநாபதி, பொருநன். படைத்தொகை - தேரொன்று, களிறொன்று, பரிமூன்று, காலா ளைந்து கொண்டது - பத்தி, பத்தி மும்மடிகொண்டது சேனாமுகம், சேனாமுக மும்மடி கொண்டது - குலுமம், குலும மும்மடி கொண் டது - கணம், கணமும் மடி கொண்டது - வாகினி, வாகினி மும்மடி கொண்டது - பிரதனை, பிரதனை மும்மடி கொண்டது - சமு, சமு மும்மடி கொண்டது - அனீகம், அனீகம் பத்து கொண் டது - அக்குரோணி, ஆகையினா லக்குரோணி யென்பது - தேர் 20870, களிறு 20870, குதிரை 65610, காலான் 109350, ஆக 218700. படையுறுப்பு - அணி, கூழை, கை, தூசி, நெற்றி. படையுறை - கருவிப்புட்டில், தடறு. படைவகுப்பு - அணி, ஆக்கம், உண்டை, ஒட்டு, கூழை, கை, தார், தூசி, நிரை, நெற்றி, யூகம், இவற்றுட் படை முன்னணியின் பெயர் - ஆக்கம், கொடிப் படை, தார், தூசி, நிரை, படைப்பின்னணியின் பெயர் - கூழை. படைவீரர் - அபயர், ஏறுழுவர், கலவர், கவியர், கூளியர், சூரர், செருநர், தறு கண்ணாளர், படர், பொருநர், மள்ளர், மறவர், மான வர், வயவர், வாளுழவர், விருதர், வில்லேருழவர், வீரர். படைவெள்ளவகை - அக்குரோணி எட்டுப்பங்கு கொண்டது ஏகம், ஏகம் எட்டுப் பங்கு கொண்டது கோடி, கோடி எட்டுப் பங்கு கொண் டது சங்கம், சங்கம் எட்டுப் பங்கு கொண்டது விந்தம், விந்தம் எட்டுப்பங்கு கொண்டது குமுதம், குமுதம் எட்டுப் பங்கு கொண் டது பதுமம், பதுமம் எட்டுப் பங்கு கொண்டது நாடு, நாடு எட்டுப் பங்கு கொண்டது சமுத் திரம், சமுத்திரம் எட்டுப் பங்கு கொண்டது வெள்ளம். பட்டடை - அடைகல், அடைகுறடு. பட்டம் - ஓடை. பட்டிகைமரம் - பறிவை. பட்டு - நேத்திரம். பட்டுவர்க்கம் - கோசிகம், பாளிதம். பட்டுவிகற்பம் - காம்பு. பணித்தட்டார் - கலந்தருநர். பண்டகசாலை - கலனிருக்கை. பண்டாரம் - கோசம், தண்டம். பண்டி - உருள், சகடு, வையம், சாகாடு, ஒழுகை, சாடு, சகடம். பண்டிதர் - கலைஞர், மேதையர், மூத் தோர், கற்றவர், அவை, விற் பன்னர், கவிஞர், சங்கம், சாரதி, சூரி, சாடு, புலவர், அறிஞர், புதர். பண்டியுள்ளிரும்பு - இருசு, கந்து. பண்ணுங்கூடு - குலாயனம், பஞ்சரம். பண்ணுவார் - மாவலர், வதுவர், வாதுவர். பண்பு - குணம், நிறம். பதக்கம் - ஆரம், கண்டிகை, மதாணி. பதக்கு - துரோணம். பதடிவைகலார் - குறுந்தொகை பாடியாருளொருவர். பதத்தணி - பாதசாலம். பதம் - உரை, பாழி. பதர் - பதடி. பசுவின்மடி - ஆபீனம், செருத்தல். பதனழிவு - ஊழ்த்தல், கன்றுதல், சிதம்பு, சிதலம், சிதிலம், சீத்தை, சீரணம், செடி. பதித்தல் - கசிதம், குயிற்றல். பதினாறாண்டிற்பெண்பெயர் - யுவதி. பதுங்கல் - ஒடுங்கல், ஒதுங்கல், பாந்தல். பதுமராகம் - கௌத்துமம். பதுமனார் - குறுந்தொகை பாடிய வருளொருவர். பந்தல் - காணவம், பந்தர். அன்றியுந் தண்ணீர்ப் பந்தலின் பெயர் - பிரபம், பிரபா. பந்து - கந்துகம். பம்பைப்பறை - தடாரி. பயங்கரம் - தாருணம், பீமம், பைரவம், வீமம், வெருவந்தம். பயறு - முதிரை, முற்கம். பயனின்மை - அல்லவை, அவம், கொன், நிஷ்பலம், வறிது, விபலம், விருதா, வீண். பயிர் - கூழ், பசும்புல், பைங்கூழ். இதன் கதிரின் பெயர் - ஏனல், குரல், இளங்கதிரின் பெயர் - இளஞ்சூல், பீட்டை, பீள். பயிறல் - கெழுமல், நவிறல். பரணர் - அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, குறுந் தொகை ஆகியவையில் பல பாட்டுப் பாடிய புலவர். பரணி - கோயம். பரணிநாள் - அடுப்பு, காடு, கிழவன், சோறு, தருமநாள், தாசி, தாழி, பகலவன், பாகு, பூதம், போதம், முக்கூட்டு. பரண் - இதணம், கழுது, படகம், பணவை. பரத்தல் - அழுவம், ஊர்தல், ஞெமிர் தல், பப்பு, பரப்பு, பரவை, பாய்தல், பாரித்தல், விரியல். பரப்பு - தாவல், பப்பு, பரவை, பாய்தல், விரியல். பரலடுத்துயர்நிலம் - பதுக்கை, முரப்பு. பரவு - படர்ச்சி, படலை, பம்பல். பராயனார் - நற்றிணை பாடியவரு ளொருவர். பராய்மரம் - பசுநா, புக்கு, விட்டில். பரார்த்தம் - மத்தியம், பத்துக் கொண் டது. பரிசில்பெறாவகை - தான் பாடிய பாட்டிற்குத் தலைவன் றனக்குப் பரிசு கொடானாகில் வேறொரு வன் பெயரினைத் தன்னூலில மைத்து அவன் ஊரையும் பெயரையு மொருசேர வதினின் றும் நீக்கிச் சீரினையுந் தளையை யும் பின்பு தன்னாற் பாடப்பட்ட வன் பாடுங் கவியை நாட்டுவா னாயின் முன்புள்ள தலைவன் செல்வமிழந்து துன்பம்பட இலக்குமியும் பின்புள்ளவனைச் சேருவாள். பரிகள்பூண்டீர்க்குமூர்த்தி - கஞ்சிகை, பாண்டில், வையம். பரிசையின்பெயர் - கேடகத்தைக் காண்க. பரிதியின்கிரணம் - கரம், தீவிரம். பரிதியின்வட்டம் - விசயம். பரிந்துகொண்டாடல் - குலாவல், பாராட்டல், மெச்சல். பரிவாரம் - பரியாளம். பரிவேடம் - ஊர்கோள், வட்டம். பருக்கைக்கல் - அரி, காழ், பரல். பருத்தி - காற்பாசம், பரி, பன்னல். பருத்திப்பஞ்சு - பரி, தூலம், பன்னல். பருந்து - உவணம், கங்கம், சேனம், பாரசிகை, பாறு. பருமை - காத்திரம், தடிப்பு, பணம், பணை, பரூஉ, பார், பீனம். பருவம் - ஆனியம், இருது, ததி. பரூஉமோவாய்ப்பதுமனார் - குறுந் தொகை பாடியவரு ளொருவர். பலகணி - குறுங்கண், சாலகம், சாலம், சாலேகம், சாரளம், நுழைவாயில், வாதாயனம். பலகறை - அலகு, கவடி, சோகி, பட்டி, வராடி, வெள்வரி. பலகை - கடகம், கேடகம், கிடுகு, தோல், சேடகம், தட்டி, வட்டி, வேதிகை. பலபண்டம் - கூலம், பண்டாரம், பண்ணிகாரம், பரிகாரம், பாணி, வளம். பலபத்திரன் - எட்டா மவதாரத்தில் விட்டுணு, அச்சுதன் முன் வந் தோன், அலமுறுபடையான், அலாயுதன், அனந்தன், இரேவதி கொண்கன், உரோகணிதநயன், கருந்துகிலோன், காமபாலன், குண்டலன், நாஞ்சிற் படை யோன், நீலாம்பரன், பலதேவன், பனைக்கொடியோன், பனைத் தாமன், முசலி, வெள்ளை. பலமிலாமரம் - அவகேசி. பலமுறை - பரியாயம். பலம் - தொடி, அதின் காற்பலம் - கஃசு. பலவிதம் - நானாவிதம், விவிதம். பலாமரம் - பலவு, பலாசம், வனசம், பாகல், வருக்கை, அன்றியு மீரப் பலா - ஆசினி. பல் - இரசனம், இரதனம், இரு பிறப்பு, எயிறு, தசனம், தட்டம், தந்தம், நகை, முறுவல், மூரல். பல்கால்விளம்பல் - மீதுரை. பல்பலமுறை - பரியாயம். பல்லக்கு - அணிகம், சிவிகை, தசம், தண்டிகை, யானம், வையம், அன்றியுமிரத்தினப் பல்லக்கின் பெயர் கஞ்சிகை. பல்லி - அண்டசம், கெவுளி, கோகி லம், கௌனி, புள்ளி, முசலி. பல்லுக்கும் நகைக்கும் பொதுப்பெயர் - முறுவல், மூரல். பவளமல்லிகை - சூதகம், திராமரம், பாரி சாதம். பவளம் - அரத்தம், துகிர், துப்பு, துவர், பிரவாளம், வித்தூருமம். பழகல் - உழத்தல், பயிலல். பழங்கொல்லை - முதைப்புனம். பழஞ்சொல் - முதுசொல், முதுமை, முதுமொழி முன்சொல், மூதுரை, மொழிமை. பழமை - ஆதி, ஊழ், ஒல்லை, தொடர், தொண்டு, தொத்து, தொல்லை, தொன்மை, தொன்று, பண்டு, புராணம், புராதனம், புரூவம், மரபு, முதுமை, முந்தை, முறை, முன், மூரி, மழி, விருத்தம். பழம் - கனி, பலம். பழமொழி - ஆத்தவாக்கியம். பழம்பஞ்சுரம் - பஞ்சுரம். பழம்பூ - சாம்பல், செம்மல், தேம்பல். பழிச்சொல் - அங்கதம், அபவாதம், அம்பல், அலர், இழிசொல், ஏசல், கவ்வை, சிறுசொல், தீச் சொல், தூறு, பரிவாதம், வித்தம். அன்றி யுஞ் சிலரறிந்த பழிச்சொல்லின் பெயர் அம்பல். பலரறிந்த பழிற் சொல்லின் பெயர் அலர். பொய்ச் சொல்லின் பெயர் குஞ்சம், குண்டியம், குறளை, கொடுவாய், தொடுப்பு, பிசினம். பழித்தல் - சிறுசொல், தீச்சொல், பரிவாதம், பழிச்சொல். பழிமொழி - அம்பல், அலர், ஏசல், கௌவை. பளிங்கு - ஆமலகம், காழ், படிகம், பருக்கை. பள்ளம் - அதம், அவல், இழிவு, உவளகம், கிழக்கு, கீழ், குழி, கூவல், ஞெள்ளல், தாழ்வு, படுகர், பயம்பு. பள்ளையாடு - வெள்ளை, வற்காலி. பறநாட்டுப்பெருங்கொற்றனார் - அக நானூறு பாடிய புலவருளொருவர். பறவை - அண்டசம், ஆசுகம், சுகம், குடிஞை, குருகு, சகுந்தம், சகுனம், சகுனி, பக்தி, பதகம், பதங்கம், பத்திரி, பதத்திரி, பிணிமுகம், புள், வயானம், விகங்கம், விகிரம். பறவைக்குஞ்சு - பார்ப்பு, பிள்ளை. பறவைக்குரல் - கலகலம், பயிர். பறவைக்கூடு - கட்சி, குஞ்சுறை, குடம் பை, குரம்பை, கூண்டு. பறவைக்கூட்டம் - தொழுதி, அக் கூட்டத்தோசையின் பெயர் - துழனி. பறவைசிறகடித்தல் - ஒசனித்தல், புடைத்தல். பறவைநாகம் - குக்குட சர்ப்பம். பறவைப்பெண்பொது - பெடை, பெட்டை, பேடை, அன்றியுங் கோழியுங் கூகையு மல்லன - பறவைப்பெண் அளகு. பறவையாணில் மயிலுமெழாலு மொழிந்தவற்றின் பெயர் - சேவல். மயிலெழாலென்னு மிரண்டி னாண் பெயர் - போத்து. பறவையிளமை - பார்ப்பு, பிள்ளை. பறவையுணவிற்கு மொருசார்விலங்கி னுணவிற்கும் பெயர் - இரை, உண்டி, உறை, ஊட்டி. பறவைவகுப்பு - அன்றில், அன்னம், ஆந்தை, உள்ளான், ஊர்க்குருவி, தூக்கணங்குருவி, எண்காற்புள், கருடன், கவுதாரி, கழுகு, காக்கை, கண்டபேரண்டம், அண்டங் காக்கை, நீர்க்காக்கை, காடை, கிளி, குயில், குருகு கூகை, கேகயம், கொக்கு, கோழி, கானாங்கோழி, சம்பங்கோழி, சக்கரவாகம், சாதகம், சிச்சிலி, சிவல், செம் போத்து, நாகண வாய்ப்புள், நாரை கருநாரை, பெருநாரை, வெண்ணாரை, நீலாமுகி, பருந்து, புறா, கரும் புறா, மாடப்புறா, பொய்யாப்புள், மயில், மீன் கொத்தி, வானம்பாடி, இப்பெயர் கடத்தம் வரியிற் காண்க. பறழ் - அணில், பாக்கன். பறித்தல் - கடுதல், களைதல், குற்றல், பரூஉ, பிறாங்கல், புயத்தல். பற்சீவுங்கோல் - மெல்கோல். பற்றல் - கழுவல், கழுமல், தொடுத்தல். பற்றிரும்பு - அள்ளு, பறளிகை, பறளை, வலி. பற்று - ஆர்வு, ஈரம், பிரிவு. பற்றுக்குறடு - தூவு. பற்றுக்கோடு - ஆலம்பம், தஞ்சம், தம்பம், பற்றுக்கோல். பனம்பாரனார் - குறுந்தொகை பாடியவருளொருவர். பனி - இமம், துகினம், நீகாரம், மஞ்சு. பனிக்காற்று - ஊதை, கூதிர். பனை - ஏடகம், கரும்புறம், தாலம், தாளி, நீலம், புல், புற்பதி, புற்றாளி, பெண்ணை, போந்து, போந்தை. இவற்றுளிளம்பனையின் பெயர் - போந்தை. பனையோடு - இதழ், ஓலை, கூந்தல், தோடு, மடல், மாழை. பனையின் இளங்காய் - நுங்கு. பனையின்பழுக்காய் - சீக்காய். பனையின்பாளையிலுலர்ந்தவிதழ் - கொக்கரை. பனையின்சாறு - கருப்பநீர், பனஞ் சாறு. பனையின்சாற்றடைவை - பாணி, பனங்கட்டி, கற்கண்டு. பன்றிப்பறை - குடப்பறை. பன்றி - அரி, இருளி, எறுழி, ஏனம், கருமா, களிறு, கனலி, கான்மா, கிடி, கிரி, கிருட்டி, குரோட்டம், கேழல், கோட்டுமா, கோணி, கோலம், சூகரம், பூதாரம், போத்திரி, போழ்முகம், மைம்மா, மோழல், வராகம், வல்லுளி. இதனாண் - ஏறு, ஒருத்தல், களிறு, மா. இதன்பெண் - பாட்டி, பிணா, பிணை. இதன் குட்டி - குருளை, பறழ், பிள்ளை. பன்னாடை - நாரி, நெய்யரி. பா பா - கவி, கவிதை, செய்யுள், தமிழ், தூக்கு, தொடர்பு, பாட்டு, யாப்பு. அன்றியுந் தனிப்பாவாய் வருவது - முத்தகம். பலபாவாற் பொருண் முடியும் பாக்கள் - குளகம். இரு பத்தாறெழுத் தடிநான்குள பா சந்தப்பாட்டு. அதின் மிகும்பா - தாண்டகம். பாகல் - காரவல்லி, கூரம், கூலம். பாக்கு - கோலம், துவர்க்காய், பாகு. பாசறை - தெவ்வர் முனைப்பதி, பாடி வீடு. பாசி - சடைச்சி, செவிரம், சைவலம், நாரம், பதியம், பீனம். பாஞ்சசன்னியம் - சலஞ்சலங்களா யிரஞ் சூழ்ந்தது. பாடகம் - பாதகடகம். பாடல்பயிலிடம் - பட்டி மண்டபம். பாடைவகை - சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல் லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், குசலம், தமிழ், சமஸ்கிருதம் என்பனவாம். பாடற்கீழ்மக்கள் - ஓவர், பண்டர். பாடுவாள் - இரட்டை, பாடன் மகடூஉ, பாடினி,பாட்டி, பாண் மகள், மதங்கி, விறலி. பாடை - ஆசந்தி, வெள்ளில். பாட்டன் - தாதை, பிதாமகன், முன் றாதை, மூதாதை. பாட்டு - கவி, கவிதை, செய்யுள், தூக்கு, பா, யாப்பு தொடர்பு. பாட்டுப்பாடலின் பெயர் - இசைப் பாட்டை காண்க. பாட்டுவகை - ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ். பாணர் - இன்னிசைக்காரர், கண்டி யர், கலமர், சூதர், சென்னியர், நீலந்தர், பண்ணவர், பாணர், மதங்கர், மாகதர், வந்தித்து நிற் போர், வைரியர். பாணள் - பாடினி, பாடன் மகடூஉ, பாட்டி, விறலி, மதங்கி. பாண்டரங்கண்ணனார் - புறநானூறு பாடிய புலவரு ளொருவர். பாண்டியன் - உசிதன், கவுரியன் குமரிச் சேற்பன், கூடற்கோமான், கைதவன், செழியன், தமிழ்நாடன், தென்னவன், பஞ்சவன், பொதிய வெற்பன், மாறன், மீனவன், வழுதி, வேம்பின்றா ரோன், வைகைத் துறைவன். பாண்டியன் அறிவுடைநம்பி - அக நானூறு, புறநானூறு பாடிய புலவர்களு ளொருவர். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் - புறநானூறு பாடிய புலவருளொருவர். பாண்டியன் ஏனாதிநெடுங் கண்ணனார் - ஓர் சங்கப் புலவர். பாண்டியன்கானப் பேரெயில்தந்த உக்கிரப்பெருவழுதி - அகநானூறு பாடிய புலவரிலொருவர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்றநெடுஞ்செழியன் - புற நானூறு பாடிய புலவரிலொருவர். பாண்டியன் பன்னாடுதந்தான் - குறுந் தொகை பாடியவருளொருவர். பாண்டியன்குதிரை - கனவட்டம், அவன் கொடி - சேற்கொடி, அவன் மாலை - வேப்பமாலை. பாண்டொழிற்கீழ்மக்கள் - ஓவர், பண்டர். பாதகிண்கிணி - நூபுரம், பரிபுரம். பாதக்குறடு - பாதுகம், பாவல், மிதி யடி, இவற்றின் குமிழின் பெயர் - கல்லை, குடை, கொட்டை. பாதவிருத்தி யிலக்கணம் - சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதியென் னும் நால்வகை விருத்தியுளொன்று. அஃதாவது கூத்தன்ற லைவனாக நடன் நடிபொருளாகக் காட்டி யும் உரைத்தும் வருவது. பாதாளம் - பாதலம். பாதி - அருத்தம், கூறு, நேர், பங்கு, பயில், பாகம், பாத்து, பால். பாதிரிமரம் - பாடலம், புன்காலி. பாதுகாத்தல் - ஓம்பல், பரித்தல், புரத்தல், போற்றல். பாந்தல் - ஒடுங்கல், பதுங்கல். பாம்பாட்டி - கவுசிகன். பாம்பினச்சுப்பல் - தட்டம், அதன் காற்று அதட்டம். பாம்பினஞ்சு - ஆலம், கடு, கரளம், காரி, காளம், விடம். பாம்பின்படப்பொறி - உத்தி, துத்தி. பாம்பின்படம் - பணம், பை. பாம்பின்பல்லின்பெயர் - காளி, காளாத்திரி, யமன், யமதூதன். பாம்பு - அகி, அங்கதம், அண்டசம், அரவம், அரவு, அரி, அனுக்கம், இரும்பை, உரகம், ஊன்றி, கஞ்சுகி, கட்செவி, காகோதரம், காலிலி, குண்டலி, கூடபதம், சக்கிரி, சர்ப்பம், தந்தசூகம், நாகம், பணம், பணி, பவனா சனம், பன் னகம், பாந்தள், புயகம், புயங்கம், போகி, மராளம், மாசுணம், விட தரம், வியாளம். அன்றியும்பறவை நாகத்தின் பெயர் - குக்குட சர்ப்பம். பெரும் பாம்பின் பெயர் - பாந்தன், மாசுணம். பாம்புச்சாதி - பிராமணன், க்ஷத்தி ரியன் வைசியன், சூத்திரன். பாம்புப்படம் விரித்தல் - பைத்தல். பாம்புயிர்ப்பு - அதட்டம். பாயிரம் - அணிந்துரை, தந்துரை, நூன் முகம், பதிகம், புறவுரை, புனைந்துரை, பெய்துரை, முக வுரை. பாய் - ஆரை, கொத்தளி, சாப்பை. இவை புற்பாய். அன்றியும் பிரப்பம் பாயின் பெயர் - சாதிப்பாய். தடுக்குப் பாயின் பெயர் - தவிசு. பாய்தல் - உகளல், குப்புறல், தாவல். பாரதம்பாடிய பெருந்தேவனார் - இவர் தொண்டைநாட்டினர். தமிழில் பாரதகதையை உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றி யவர். நற்றிணை, ஐங்குறு நூறு, புறநானூறு, அகநானூறு என்ப வற்றிலுள்ள கடவுள் வாழ்த்துக் களைப் பாடியவர் இவரே. திரு வள்ளுவமாலையினும் இவர் பாடியதாக ஒரு செய்யுளுண்டு. பாரம் - அடை, அதிபாரம், கனம், காத்திரம், குரு, சீர், ஞாட்பு, பரம், பொறை. பாரிமகளிர் - இவர்கள் பாரியென் னும் வள்ளலுடைய மகளிர். இவர் களுள் ஒருத்தி மழையில் லாத வறட்காலத்தில் இரந்து வந்த ஒரு பாணனை யுண்பித்தற் குச் சோறு பெறாமையாற் பொன்னை யுலை யிற்பெய்து சோறாக்கிக் கொடுத்தா ளென்று பழமொழியிலுள்ள ஒரு வெண்பாவாற்றெரிய வருகின் றது. இவர்கள் தங்கள் தந்தையின் பிரிவாற் றாதுவருந்திப் பாடிய பாடல்கள் எல்லோருடைய மனத் தையும் கலங்கச்செய்யும். தமது தந்தையின் தோழராகிய கபில ரால் பார்ப்பாருக்கு மணஞ் செய்து கொடுக்கப்பட்டனர். பாரைக்கோல் - மீன்குத்தி. பார்காப்பான் - ஓர் சங்கப்புலவர். பார்ப்பாரிடையிற் கட்டுநாணற் கயிற்றின் பெயர் - மௌஞ்சி, பூண நூலின்பெயர் - உபவீதம், பூண நூற்கலியாணத்தின் பெயர் - உபநயனம். பார்ப்பார் - அந்தணர், அயன் முகத்து வந்தோர், அய்யர், அறுதொழி லாளர், ஆதிவருணர், ஆய்ந்தோர், இருபிறப்பாளர், உம்பர், உயர்ந் தோர், செந்தீ வளர்ப்போர், தொழு குலத்தோர், நூலோர், பூசுரர், மறைக்கொடியோர், மறையவர், முப்புரிநூலோர், மெய்யர், மேற் குலத்தோர், விப்பிரர், வேதபாரகர், வேதியர், வேள்வியாளர் (அநு வாதம்) பார்ப்பு என்னும் பெயர் - தவழ் சாதிக்கிரியன். பார்வதி - அந்தரி, அமலை, அம்பிகை, அம்மை, அயிராணி, அரனிடத்த வள், ஆரியை, இமய வல்லி, உமை, உமையவள் உருத் திரை, ஐயை, கௌரி, காமக் கோட்டி, சங்கரி, சத்தி, சாம்பவி, சிவை, தேவி, நாயகி, நாரி. பகவதி, பருப்பதி, பரை, பவானி, மரகத வல்லி, மலைமடந்தை, மாதா, முக்கண்ணி. பார்வை - ஆலோகம், காட்சி, தரிசனம், நோக்கம் அன்றியுங் கடைக்கண் பார்வையின் பெயர் - அபாங்கம், சிறக்கணிப்பு. பாலத்தனார் - ஓர் சங்கப்புலவர். பாலர் - குறுமாக்கள், சிறார், மகார். பாலைக்கு - அருகு, சீர்கோடிகம். பாலைக்குப்புறம் - தேவாளி. பாலைக்குப்பெருகு - நாகராகம். பாலைக்கௌதமனார் - கோதமனார் என்னும் புலவர். பாலைத்திணை - செம்புலம், மறு பால், வன்பால். பாலைநிலக்கடவுள் - துர்க்கை. பாலைநிலத்தலைவன் - காளை, மீளி, விடலை. பாலைநிலத்திராகம் - பஞ்சுரம், வெஞ்சமம். பாலைநிலத்தூர் - குறும்பு. பாலைநிலப்பறை - துடி. பாலைநிலமக்கள் - எயினர், புள்ளுவர், மறவர். இவர் பெண்களின் பெயர் - எயிற்றியர், பேதையர், மறத்தியர். பாலைநிலம் - சுரம், செம்புலம், நீரிலா நிலம் படுநிலம், பொருபுவி, வன் பால். பாலைபாடிய பெருங்கடுங்கோ - சங்கப் புலவர்களி லொருவர் இவர் சேரருள் ஒருவர். பெருங்கடுங் கோ என்பது இவர் இயற்பெயர். பாலைத்திணையி னியல்பை நன்றாக விளக்கிப் பாடுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவராதலால் பாலைபாடிய என்னும் அடை மொழி சேர்க்கப்பட்டது. பாலைமரம் - சீவந்தி, சீவனி. பாலையாழின்பகுதி - ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப் பாலை, வட்டப்பாலை. பாலையாழ்த்திரம் - அராகம், ஆசான், உறுப்பு, குறுங்கலி, நேர்திறம். பாலையாழ்த்திறன்வகை - அந்தாளி, தக்கராகம், பாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுங்கு, தனாசி, சோமராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிகண்டி, தேசாக்கரி, சுருதி காந்தாரம். பால் - அமிழ்தம், அமிழ்து, கலசம், கீரம், சுதை, துத்தம், பயசு, பயம். பால்வகை - எழுத்தென்று சொல்லப் படுவன ஆண், பெண், அலியென மூன்று வகைப்படும். அவற்றுள் ஆண்பாலெழுத்தின் பெயர் - அகரமுதல் ஒளகார மிறுதியாகிய உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு மாணெழுத் துக்களாம். பெண் பாலெழுத்து உயிர்மெய்யெழுத் துக்களிருநூற்றுப் பதினாறுமாம் அலியெழுத்து மெய்யெழுத்துப் பதினெட்டும் அலியெழுத்துமாம். ஆண்முதலிய பகுதிகளின் எழுத்துக்குரியவள் நாமகளாத லால் பெண்பா லெழுத்தை முதற் சீரின் முதலெழுத்தாகக் கொண்டு பாட்டுக் கூறல் வேண்டும். பாவலன் பரிசுபெறாத விடத்துச் செய்யும் வகை - பண்டிதனானவன் தனக்குப் பரிசுகொடாதபாவி நூலை வேறு படவெழுதிச் சிவந்த பூவினைச்சூட்டி, தன் வீட்டுக்குப் புறத்திலுங் காளி கோவிலினும் பாம்பு வாழும் புற்றினிடத்தும் சுடுகாட்டினும் வீதியினுந் தான் வழிபடு கடவுளைத் தியானஞ் செய்திருந்து அவன்மேற் பாடிய நூலை நெருப்பிற் கொளுத்தி னால் பன்னிரண்டு மாதத்தில் மரணமடை வானென்று தண் டமிழ் வளர்த்த சங்கத்தாசிரிய னாய் அகத்திய முனிவர் திருவாய் மலர்ந்தருளிய சத்திய மொழியே யாம். அன்றியும் பாடிய பண்டிதன் பரிசுபெறாமை யான் மயங்கிய மனத்தோடு நிலைகலங்கிச் சுழல் வானாயின் அப் பாடலுக்குத் தலைவனா யுள்ளவன் கெடுவதன்றி யதனைக் கேட்டிருந்த அவனுற வினருங் கெடுவார்கள். பாவம் - அகம், ஏனம், கலுடம், செடி, தீவினை, துரிதம், பங்கம், பவம், பாதகம், பாபம், பிறந்தை, மறம். பாவாற்றி - குச்சு. பாவைக்கொட்டிலார் - அகநானூறு பாடிய புலவரு ளொருவர். பாழ்நிலம் - கரம்பு. பாறை - அறை, பதுக்கை, முரம்பு. பாற்சொற்றிச்செடி - பாயசம். பாற்சோறு - பாயசம், பாளிதம். பானை - அகலம், குண்டம், குளிசி, தடா, மிடா, முகை. பி பிசாசம் - அலகை, அறிவழி, இதி, கடி, கணம், கழுது, கிருத்திமம், குணபாசி, குணுங்கு, கூளி, சவம், சாவு, சோகு, பாசம், பிணம், பிரே தம், பேய், பை சாசு, மண்ணை, மயல், மருள், வியந்தரம், வெறி, வேதாளம். பிசின் - கீலம், தொடர். பிசிராந்தையார் - இவர் பாண்டி நாட்டிலுள்ள பிசிரென்னுமூரி லுள்ளார். கோப்பெருஞ் சோழ னுடைய உயிர்த்தோழர். அவன் துறந்து உயிர் நீத்தது கேட்டுத் தாமும் உடன் உயிர் நீத்தார். இவர் நரைதிரை மூப்புத் துன்பங்க ளின்றி வாழ்ந்தவர். பிச்சு - ஊழை, மாசு, மூளை. பிச்சை - உபாதானம், ஐயம், சரியை, படிகம், பைக்கம், பலி, பாகம், பிண்டம். பிச்சைவாங்கலின்பெயர் - இரத்தலைக் காண்க. பிஞ்சு - எலு, வடு. பிடரி - எருத்தம், கயில், சிறுபுறம், சுவல், செகில், தோண்மேல், நமம், பிடர், பிடர்த்தலை. பிடித்தல் - தொடல், தொட்டல், பற்றல். பிடித்தொன்றைப் பேசுதல் - பிதற்றல். பிடியென்னும்பெயர் - கரி, கவரி, யூகம். பிடுங்கலின்பெயர் - பறித்தலைக் காண்க. பிட்டு - ஆவி, வெந்தை. பிணக்கு - அபரம், அரில், துவக்கு, பின்னம், மறம், மறல். பிணம் - அழன், களேபரம், குணபம், சவம், பிரேதம். பிணம்வீழ்களம் - செம்புலம், பறந் தலை. பிணாவென்னும்பெயர் - நாய், பன்றி, புல்வாய். பிண்டிபாலம் - எஃகம், பீலித்தண்டு. பிண்ணாக்கு - கூட்டம், துவை, பிண்டி, மலாவகம், வறையல். பித்தளை - ஆரகூடம், ஆரகூலம், ஆரம், ஆருபதம், இரதி, இரீதி, மாயாபுரி. பிரண்டை - கிருட்டி, வச்சிரவல்லி. பிரத்தியாகாரமாவது - சீவ வுபாதியை நீக்கிப் பிரபஞ்ச வுபாதியைச் சிவ சொரூபமாகப் பார்த்தல். பிரத்தியாலீடநிலை - வலக்கான் முந்துற்றிடக்கான் மண்டலித்த லாம். பிரப்பு - கொள்கல மொன்றிற் குறுணி யாகப் பல்லுணவு பெய்வது. பிரமசாரி - வன்னி, ஒரு சங்கப்புலவர். பிரமனார் - புறநானூறு பாடிய புலவரிலொருவர், நிலையாமை யை நன்குணர்ந்தவர். பிரமன் - அந்தணன், அயன், அன்ன வூர்தி, இரணிய கருப்பன், இறை, எண்கணன், ஓதிம முயர்த்தோன், கமலயோனி, கம்குரவன், சதா னந்தன், சயம்பு, ஞானி, தமநியன் தாதா, திசைமுகன், நான்முகன், பகவன், பங்கயன், பரமேட்டி, பாரதி கொழுநன், பிதாமகன், போதன், மண் பொதுத் தந்தை, மலரோன், மாலுந்திவந்தோன், மான்மகன், வரன், வாணி கேள்வன், வானோர், முதுவன், விதாதா, விதி, விரிஞ்சன், வேதா. பிரமன்கொடி - மறைக்கொடி. பிரமன்படை - தண்டம், பாசம். பிரமன்வாகனம் - அன்னம். பிரம்பு - சாதி, சூரல், வேத்திரம். பிரளயம் - வாகினி மூன்றுபங்கு கொண்டது. பிராய்மரம் - பசுநா, புக்கி, விட்டில். பிரான்சாத்தனார் - நற்றிணை பாடிய புலவரி லொருவர். பிருதல் - அகலல், உணர்வு தணத்தல், நீங்கல், நீத்தல், நீப்பு, பகல், வல்லி, வியோகம். பிருட்டம் - குய்யம், சகனம், பாயுரு. பில்குதல் - தூவுதல், பிலிற்றுதல். பில்லடை - சஃகுல்லி. பிழைப்பு - இழுக்கம், வழுக்கு, தப்பல், உஞற்று, பணைத்தல். பிளத்தல் - ஈர்த்தல், கீழ்தல், பகல், போழ்தல், வகிர்தல். பிள்ளைக்கைவளை - பிடிகம். பிள்ளையென்னும்பெயர் - சங்கேறு, மான்குருளை. பிறகிடல் - பிறக்கிடல், பின்றல். பிறப்பு - அயனம், அனிலம், உருகம், உற்பத்தி, உற்பவம், சக்கரம், சம்ப வம், சம்பூதம், சனனம், சனிப்பு, சன்மம், சாதம், சூதகம், தோற்றம், தோற்றல், பவம், பிறந்தவம், பிறந்தை, பூ அன்றியும், இப்பிறப்பின் பெயர் - இகம் இக்கம், இப்பவம், இம்மை, வருபிறப்பின் பெயர் - அம்மை, மறுமை. முற் பிறப்பின் பெயர் - உம்மை. ஒரு பிறப்பின் பெயர் - ஒருபவம். எப்பிறப்பின் பெயர் - எம்மை. எழுபிறப்பின் பெயர் - எழுமை, எழுபவம். பிறமயிர் - ஓரி, பங்கி, உளை, உரோ மம், கேசம், மயிர், மராட்டம். பின்பிறந்தாள் - பின்னை, தங்கை. பின்புறம் - பிறகு, பிறக்கு. பின்றல் - பிறகிடல், பிற்றல். பின்னைநாள் - பிற்றை, பின்றை, வழிநாள். பீ பீசம் - அண்டம். பீடம் - ஆசனம், தவிசு, பீடிகை, வட்டம். பீர்க்கு - கோலம், பீரம், பீர். அன்றி யும் பெரும்பீர்க்கு - படலிகை. பீலிக்குஞ்சம் - குளிரி, சமாலம், தழை, தொங்கல், பிச்சம். பீலிக்குடை - சுழல். பு புகர்நிறம் - கபிலம், குரால், குற்பு. புகழாளன் - இயவுளன். புகழ் - இசை, ஊற்றம், ஏற்றம், ஒளி, தியாதம், சீர், சுலோகம், சொல், சொன்மாலை, தோற்றம், மீக் கூற்று, மேம்பாடு, யகசு, வண்மை. அன்றியுமிகு புகழின் பெயர் - கீர்த்தி, சீர்த்தி. புகழ்வோர் - சூதர், பப்புவர், பூகதர், மாகதர், வந்தியர், வேதாளியர். புகழ்வோர்க்குக் கொடுக்குங் கடை வள்ளலெழுவர் - பாரி, ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஓரி. புகை - அரி, ஆவி, தூபம், தூமம். அன்றியும், நறும்புகையின் பெயர் - இந்தனம், குய், நறை, வெடி. புசித்தல் - அமிழ்து செய்தல், அயிறல், அயின்றல், அருந்தல், ஆர்தல், உண்டல், கறித்தல், கைதொடல், சுவைத்தல், தின்றல், துத்தல், துய்த் தல், துவ்வல், துறுவல், நுகர்தல், பக்தித்தல், பருகுதல், பாரணம், போசனம், மாந்தல், மிசைதல், மேய்தல். இவற்றுட் பானமுந் துவையும் பருகுதல் - துத்தி, உ ண்டல், தித்தி, தின்றல், சோறுணல், அயிறல், கைதொட்டல், நுங்கல், பாரணம், மிசை தல், விழுங்கல். புடைப்பு - குமிழ்ப்பு, புளகம். புட்கூட்டத்தின்பெயர் - தொழுதி. புட்கூட்டத்தோசை - துழனி. புட்சிறகடித்துப் புடைத்துக் கூப்பிடுதல் - ஓசனித்தல். புட்பொது - விசங்கம், ஆசுகி, வீ, விகிரம், குடிஞை, பக்கி, சகுந்தம், பத்திரி, பதங்கம், பிணிமுகம், ககம், பறவை, பதகம், போகில், குரீஇ, வயானம். புணர்ச்சி - அணவுதல், ஆடல், இரதம், கலத்தல், கல்வி, கிரீடை, கூடல், சங்கமம், சங்கீரதம், சம்போகம், சையோகம், சுரதம், பிணைவு, புல்லல், மிதுனம், மைதுனம், யோகம், விழைவு. புணர்ச்சிக் கமையாததுபோற் சினந்து முறைப்படல் - புலத்தல், புலவி. புண் - வீரணம். புதன் - அறிஞன், அருணன், அணு வழி, கணக்கன், சவுமன், சாமன், சிந்தை, கூரியன், சௌ மியன், தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள், நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால், மேதை. புதியோர் - அதிதியர், வம்பலர், விருந்தினர். புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் - நற்றிணை பாடியவரு ளொருவர். புதுக்கொல்லை - இதைப்புனம். புதுச்சந்நிதி - யாழ்ப்பாணத்தில் திருப்புகழ்பெற்று விளங்கும் ஓர் சுப்பிரமணிய தலம். மேலைப் புலோலி யென்னு மூரினுளது. புதுமை - அபிநவம், கடி, கோடகம், கோடி, நவம், நவீனம், நூதனம், புணர், புதை, புத்தேள், புனிறு, யாணர், வம்பு, விருந்து. புதுவரம்பின்வழி - மரிசி. புதைத்தல் - கன்னம், கனிதல், கூடம், சேமித்தல், மறைதல், மூடல். புதையல் - ஏமம், சேமம், நிட்சேபம். புத்தன் - அகளங்கன், அண்ணல், அருங்கலை நாயகன், அருணெறி சுரக்குஞ் செல்வன், அறவன், அனந்த லோசனன், ஆதி, உலக சயன், எண்ணில் கண்ணுடை யோன், ஏகதேவன், சைனன், சாக்கியன், சாந்தன், சினவரன், தருமராசன், பகவன், பார்மிசை யோன், பிடகன், புங்கவன், புண்ணிய முதல்வன், புண்ணிய மூர்த்தி, புனிதன், பூமிசை நடந் தோன், போதிவேந்தன், மாயா தேவி சுதன், மாரசயன், முக்குற்றங் கடிந்தோன், முக்தன், முனி, முனிந்த சினன், முனீந்திரன், முனைவன், மூர்த்தி, வாமன், விநாயகன். புத்தர் - சாக்கியர், சீவகர், தேரர், பௌத்தர். புநர்பூசநாள் - அதிதிநாள், ஆவணம், எரி, கரும்பு, கழை, பாலை, பிண்டி, புணர்தம். புரசைமரம் - பலாசம், பிரமதரு. புராட்டாதிமாதம் - பாத்திரபதம், பாத்திரம். புரம் - நகரம். புருவம் - நுதல், பிருகுடி, பீரு, புகுடி, புதல், புரு, புரூரம், பூரு. புலத்தல் - ஊடல், புலவி, பிணக்கு. புலவர் - அவை, அறிஞர், ஆன்றோர், கலைஞர், கவிகள், கவிஞர், கற் றோர், சங்கம், சவை, சீரியர், சூரி, நாவலர், பண்டிதர், பருணிதர், பாவலர், புதர், புந்தியர், புலமை யர், முதுவர், மூத்தோர், பேதை யர், மேலோர், விசாரதரர், விற் பன்னர். புலவிநீடுதல் - துனி. புலால் - ஊழ்த்தல், தசை, பூழ்தி, முடை, வள்ளூரம். புலி - உழுவை, ஊகம், கடுவாய், குயவரி, குளியம், கொடுவரி, சார்த் தூலம், சித்திரகாயம், சிறுப்புல், தரக்கு, பாய்மா, புண்டரீகம், புல் மிருகாகி, வயமா, வயவரி, வரி, வல்லியம், வியாக்கிரம், வியாளம், வெல்லுமா, வேங்கை. இதனாண் - அறுகு, ஒருத்தல், போத்து. இதன் பிள்ளை - குட்டி, குருளை, போதகம். புலிதொடங்கி - இண்டு. புலையர் - கவுண்டர், கனததர். புல் - புதல், அன்றியும் புற்படி - காசை. அன்றியும் பசும்புற்றரை யின் பெயர் - அரிதம், சாட்டுவலம். புல்லறிவு - சிற்றறிவு, வெண்மை, வெளிறு. புல்லாற்றூர் எயிற்றியனார் - புற நானூறு பாடிய புலவரி லொருவர், இவர் இம்மை மறுமைப் பயன் களை நன்கறிந்தவர். புல்லாய் - இரலை. இதனாண் ஏறு, ஒருத்தல், போத்து. இதன் பெண் - பிணா, பிணை. புழு - கிருமி, கீடம், பொட்டு. புழுகு - வாசநெய். புழுங்கல் - புழுக்குவது. புழுதி - அதர், சுண்ணம், துகள், தூளி, நுண்பொடி, பூழி, பூழ்தி, பொடி. புழுதியாக்கல் - பொடித்தல். புளிங்கரி - துவை. புளிப்பு - ஆமிலம், ஆம்பிரம். புளிமா - எகின், சிஞ்சம், மாழை. புளியமரம் - ஆம்பிலம், எகினம், எகின், சஞ்சீவகரணி, சிந்தகம், சிந்தம், சிந்தூரம், திந்திருணி. புள்வகைப்பொருத்தம் - அகரம் வல்லூறு, இகரம் ஆந்தை, உகரம் காக்கை, எகரம் கோழி, ஒகரம் மயில். புள்ளி - இடாகு, பொறி. புறப்புறவகை - வாகை, பாடாண், பொதுவியல். புறப்பொருள் வகை - பசுக்கவர்தல், நிரை மீட்டல், பகைமேற் செல் லல், பகை முன்னெ திரூன்றல், தன்னரண் காத்தல், பகையரண் வளைத்தல், பொருதல், போர்வெல் லல். புறம் - புடை, புறணி. புறா - இரதபதம், கபோதம், களர வம், தூதுணம். அன்றியுங் கரும் புறாவின் பெயர் - கபோதம், பாரா வதம். மாடப் புறாவின் பெயர் - காளபதம். புற்கெனுநிறம் - கபிலம், குரால், புகர், புற்பாய், சாப்பை. புற்றாஞ்சோறு - குரும்பி. புற்று - நாகு, வன்மீகம், வாமலூரு. புனமுருங்கை - புன்கு. புனவெலுமிச்சை - குருந்து. புன்கு - காஞ்சநம், நத்தமாலம். புனற்றுளசி - குல்லை. புன்மை - நவிரம். புன்னைமரம் - நாகம், புன்னாகம். பூ பூ - அலரி, அலர், ஆலம், இணர், குசுமம், சுமம், சுமநசம், தாமம், தார், துணர், புட்பம், போது, மலர், வீ. பூங்கணுத்திரையார் - குறுந்தொகை, புறநானூறு பாடிய புலவரு ளொருவர். பூங்கண்ணன் - குறுந்தொகை பாடிய புலவருளொருவர். பூங்கொத்து - இணர், குலை, துணர், தொடர்ச்சி, தொத்து, மஞ்சரி, வல்லரி. பூசநாள் - காற்குளம், குருநாள், கொடிறு, தை, வண்டு. பூசுதல் - புலர்த்தல், வரித்தல், விரித்தல். பூசும்பரிமளம், பூசுவன - அங்கராகம். பூசை - பூசனை. பூஞைவெருகு - அலவன், ஓதி, விட ராகம், விலாளம், பூசை, மார்ச் சாலம், பாக்கன், இற்புலி. பூட்டு - வீகம். பூணூல் - உபவீதம். பூணூற்கலியாணம் - உபநயனம். பூண்கொள்கலம் - பீடிகை, துமானம். பூண்டு - புதல், பூடு. பூதம் - கணம், கிருத்திமம், குறள், கூளி, சாதகம், சாதம், பாரிடம். பூதம்வாழ்சதுக்கம் - தம்மைப் பிறர் நம்புவதற்குத் தவவேடத்தின் மறைந்து நின்று அத் தவத்திற்கு இழுக்கான வற்றின்கணொழுகும் பொய் வேடத்தாரும், தம்மைத் தம் கணவர் நம்புவதற்குப் பொய் யொழுக்கத்தின் மறைந்து நின்று வசீகரிப்பி னொழுகும் அலவற் பெண்டிரும், தம்படை குடி முதலிய வைந்தினொடு உயிரூறுப் புரிமைக்குத் தம்மைத் தேறிய வித்த அரசரைக் கீழ்மை யென்னு மமைச்சரும், தமது மனைவியர் தனிப்பத் தனித்த பிறர் மனைவி யரை விரும்புந் துச்சாரிகளும், தமது நெஞ்சறி பொருளை வஞ் சித்துப் பொய்ச்சான் றேறுவாரும், சிறப்புச் செய்துழி உழை நின்று புகழ்ந்து அவர் புறக்கொடையிற் பழி தூற்றுவாரு மாகிய இவர் களே யென்கையிற் கொண்ட இப் பாசத்திடத்து அகப்படும் பெய ரென அவ்வூர் நாற்காதவெல்லை யுங் கேட்கும் படி தனது கடிய குரலாலுணர்த்திப் பின் அங்ஙனஞ் செய்பவரைப் பாசங் கட்டிவர நிலத்திற் புடைத்துண்ணும் பூத நிற்றலாற் பூதசதுக்கமாம். பூந்தட்டு - கோடிகம், பீடிகை. பூந்தாது - இணர், கிளர், கேசரம், கொங்கு, சிதர், துணர், மகரந்தம், மகரம். பூந்தாள் - காம்பு, கால். பூந்தேன் - மகரந்தம். பூமணம் - வாசனை, கந்தம்,வேரி, மன்றல், நாற்றம். பூமி - அகலிடம், அகிலம், அசலம், அசலை, அநந்தை, அவனி, அளக் கர், உகம், உதகம், காசினி, கிடக்கை, கு, குத்தி, குவலயம், கூ, கோ, கோத்திரம், கோத்திரை, சகம், சக்கரம், ஞாலம், தகர், தரணி, தராதலம், தரித்திரி, தரைதலம், தாத்திரி, தாபரம், தாரணி, தாலம், தாலவட்டம், திணை, நாடு, நிலம், நேமி, படி, பவனம், பாரகம், பாரம், பாரி, பார், பார்த்திவம், பாலம், பிருதிவி, புடவி, புவனம், புவனி, புவி, பூ, பூதலம், பூதியம், பூவலயம், பொழில், பொறை, மசி, மண், மண்டலம், மண்டலி, மண் ணிலம், மாதிரம், மேதினி, யுகம், வசுதை, வசுந்தரை, வசுமதி, விபுலம், விபுலை, வேலாவலயம், வையகம், வையம். பூமிதேவி - காசினி, பூமகள், பூமின், அன்றியும் பூமிப்பெயரெல்லாங் கொள்ளும். பூரட்டாதிநாள் - நாழி, பூரட்டாதி, முற்கொழுங்கோல். பூரணை - அநுமதி, இடை, உவா பவ்வம். பூரநாள் - இடையெழுஞ்சனி, எலி, கணை, நாவிதன், பகவதி நாள். பூராடநாள் - உடைகுளம், நீர்முள், முற்குளம். பூரிகை - நொலையல். பூவரும்பு - கலுவடம், கன்னிகை, சாயகம், சாலகம், சாலேகம், சினை, நகை, நனை, போகில். அன்றியு மிளவரும் பின்பெயர் - கலிகை, களிகை, கோரகம், கோரகை, மொட்டு. மலரும் பருவத் தரும் பின் பெயர் - போது, முகிழம், முகிழ், முகை, மொக்குள். பூவரும் பலின் பெயர் - சினைத்தல், முரைத்தல். பூவலயம் - பூகண்டம், பூகோளம். பூவாடல் - சாம்பல், செம்மல், தேம்பல், பழம்பூ. பூவாதுகாய்க்குமரம் - பத்தியம், வானப்பிரத்தி. பூவிதழ் - அதழ், ஏடகம், ஏடு, தண்டு, தளம், தோறி, மடல். அன்றியு மகவிதழின் பெயர் - அல்லி. புற விதழின் பெயர் - புல்லி. பூனை - அலவன், ஆகுபகை, இந்தி, இற் புலி, ஓதி, பவனம், பாக்கன், பில்லி, பூசை, பூஞை, மண்டலி, மார்ச்சாரம், விடருகம், விலா ளம், வெருகு. இதனாண் - கடுவன், போத்து. இதன் பிள்ளை - குட்டி, பறழ், பிள்ளை. (இவையநுவாதம்). பெ பெட்டி - பேழை, மஞ்சிகம், மஞ்சிகை. பெட்டையென்னும்பெயர் - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை, சிங்கம். பெண்கணாற்குணம் - நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு. பெண்குறி - இராசியம், குய்யம், சின்னம், பகம், யோனி. பெண்குரங்கு - மந்தி, யூகம். பெண்ணாய் - முடுவல். பெண்பாலெழுத்து - உயிர் மெய் யெழுத்து இருநூற்றுப் பதினாறு மாம். பெண்மகள் - அங்கனை, அணங்கு, அரிவை, ஆடவள், ஆட்டி, இளம் பிடி, இளையாள், காந்தை, காரிகை, கோதை, சிறுமி, சுந்தரி, சுரிகுழல், தெரிவை, தையல், நல்லாள், நாரி, நுண்ணிடை, பாவை, பிணா, பூவை, பெண்டு, பெதும்பை, பேதை, மகடூஉ, மகள், மங்கை, மடந்தை, மட வரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின், வஞ்சனி, வஞ்சி, வனிதை. அன்றியும் பெண் ணிற் சிறந்தவள் பெயர் - நங்கை. பதினாறு வயதுப் பெண்ணின் பெயர் - மதங்கி, யுவதி, விறலி. பெண்வண்டு - கரும்புள், கேசவம், தேன். பெண்யானை - அத்தினி, கரிணி, பிடி, வடவை. பெயர் - அபிதானம், ஆக்குவயம், நாமதேயம், நாமம். பெயர்தல் - பிறழ்தல், பேர்தல். பெரியோ ரெழுவகைப்பெற்றி - அறம், அன்பு, இன்பம், புகழ், பொறுமை, மதிப்பு. பெருகுதல் - ஆர்தல், கழுமல், கெழுமல், ததும்பல், துவன்றல், தெகுளல், தெவுளல், நிரம்பல், நிறைதல், பிறங்குதல், பூரணம், பெருக்கம், மலிதல், மல்கல். பெருங்கல் - கேளிதம். பெருங்காயம் - இங்கு, இந்துளி, காயம். பெருங்குருகு - யானையுண்குருகு. பெருங்குறடு - முருடு. பெருங்குறிஞ்சி - கேரரண்டம், சூரண்டகம். பெருங்கொடை - ஈதல், வீசல், இசைத் தல், நீட்டல், புரத்தல், நல்கல், அருளல், பகுதல், கொடுத்தல், வழங்கல், அளித்தல். பெருச்சாளி - ஆகு, உந்துரு, கந்துளம், களகம், மூடிகம். பெருஞ்சவளம் - குந்தம், தோமரம், பீலி. பெருஞ்சினம் - உடற்றல், உருத்தல், காய்தல், சீறல், பைத்தல், முனை தல், விடைத்தல். பெருஞ்சூடு - சிவளிகை. பெருமை - அகலுள், அணி, அண் ணல், அமுதம், அழுவம், இயக் கம், இருமை, இறை, ஈடு, எந்தல், கதழ்வு, கயம், கயவு, கருமை, கலந்தை, குவவு, கொன், சக்கரம், செம்மல், செம்மை, சேடு, தகை, தகைமை, தஞ்சம், தளம், தலை, நடி, நளி, நனி, நன்று, நூங்கு, நெய்தை, பகடு, பனை, பரி, பாடு, பாழி, பிறங்கல், பீடு, பேழ், பொழில், மன், மா, மாட்சி, மாட்சிமை, மால், மானம், மிறல், மீளி, முடலை, மூரி, மோடு, வந்தை, வான், விபுலம், விபூதி, வியத்திகை, வியல், வியன், விறல், வீறு. பெருமையிற்சிறந்தோன் - அண்ணல், ஏந்தல், குரிசில், செம்மல், தகுதி யோன், தக்கான், தோன்றல். பெரும்பண்ணின்வகை - பாலையாழ் செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருபதுங் கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளர், கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌ சாளி, சீராகம், சந்தி. பெரும்பாம்பு - பாந்தள், மாசுணம். பெரும்பீர்க்கு - படலிகை. பே பேசுதல் - இசைத்தல், குறுத்தல், இயம்பல், புகறல், பிதற்றல். பேடு - அலி, கிலீபம், சண்டம், சிகண்டி, நபுஞ்சகம், பெண்டகர், பேடி. பேதைமை - மடமை, மருட்சி, வெறி. பேரீந்து - கர்ச்சூரம், குரவம். பேருண்டி - பிரப்பு. பேரெருது - பாறல், தூர்வகம், பகடு. பேரொலி - அதிர்ச்சி, அரவம், ஆகுலம், ஆரம்பம், ஆரவாரம், ஆர்ப்பு, உரற்றல், உளறுதல், கட்டோசை, களகம், களகளம், கற்கம், குமிலம், குமுதம், குமுறல், கோசனை, கோடணை, கோலா கலம், தமரம், தமரல், தழங்குரல், திமிலம், துல்லம், துவைத்தல், தெழித்தல், பூகல். பேர் - அபிதானம், நாமம். பேழை - மஞ்சிகை. பேறு - கம்மியம், பராப்பியம். பை பைசந்தியாவது - மேல் விளக்கத் திருந்து தோன்றுவனவாகிய பஞ்ச வன்னங்களையுஞ் சூக்கும ரூபமாய் அடைவுபட ஒடுக்கி நிற்பதாய் மயின் முட்டையிற் றரித்திடு நீர்போல வேற்றுமைப் பட்டவன்னம் வெவ்வேறு விபாக மாகி அங்கே மிகவுஞ் சூக்குமரூப மாய்க் கொண்டு நிருவி கற்ப வுணர்விற்கு ஏதுவாம் என்னும் இவ்விரண்டிலக்கணத்தையுடைத் தாமென்க. பைசாசநிலைவகை - ஒருகால் நிலை நின்று ஒரு காலினை முடக்கல். பைந்தினை - ஏனல், குரல், நுவணை. பொ பொங்குதல் - பூரித்தல், மிகுதல். பொடி - துகள், நீறு, சுண்ணம், குறுபல், சிதர், பராகம், கின்னம், பிதிர், நுணுங்கு, சன்னம், நூறு, தாது, பூதி, தூள், புழுதி, அணு. பொதியமலை - தென்மலை, மலையம். பொதியெருது - தூரியம், தூர்வகம். பொய் - அங்கதம், அசங்கவுதம், அநித்தியம், அநுத்தம், அவத்தம், இச்சை, இழுக்கு, இழுதை, கள்ளம், கிருத்திமம், கூடம், கைதவம், கோள், சடம், சலம், சாதனை, சித்திரம், தத்திகாரம், தப்பு, நடலை, படிறு, பழுது, பிசி, பெட்டு, பொக்கம், மடி, மாயம், மாயை, வக்கிரம், வஞ்சம், வலக் காரம், வழுது விகிர்தம். பொய்சொல்லுதல் - பொய்த்தல். பொய்சொல்லுவோன் - பிசுநன், பொய்யன். பொய்யாப்புள் - சலாங்கு. பொரவழைத்தல் - அறைகூவல். பொருதலிற்பகை நாடழித்தல் - கொற்ற வள்ளை. சாய்ந்தார் மேற்படை விடாமையின் பெயர் - தழிஞ்சி. பொருதல் - அடல், அமர்த்தல், ஆடல், ஆர்த்தல், இகலல், உட லல், உடன்றல், எக்கல், சிவணல், சினவுதல், நிகர்த்தல், நேர்தல், பாறல், பூசல், மலைதல், அன்றி யும் போரின் பெயரைக் காண்க. பொருநையாறு - பொருநல், பொருந்தம். பொருந்தல் - அஞ்சிதம், அந்தித்தல், அமைதல், இயலல், இயைபு, ஏலுதல், ஏத்தல், ஒல்லல், ஒன்றல், கூடல், சிவணல், வாய்த்தல். பொருளினை யுருக்குந்தட்டார் - பொன் செய்யும் புலவர். பொலியெருதின் பெயர் - இட பத்தைக் காண்க. பொலிவு - அதிகம், உவப்பு, களுமல், கலித்தல், துப்பு, துவன்றல், தொறு, பம்பல், பூ, பெருமை, பொக்கம், பொம்மல், பொறி, பொற்பு, மங்கலம், மலர்ச்சி. பொலிவழி தலின் பெயர் - புல்லெனல், மழுங்கல். பொல்லாநிலம் - அசும்பு, சகதி. பொழிப்புரை - பலபொருளைப் பிண்டமாகக் கூறுவது. பொழுது - அமையம், ஆனியம், ஏல்வை, கடி, காலை, கால், கொன், செவ்வி, நிலை, பதம், பருவம், பாணி, போழ்து, வேலை, காலத் தின் பெயர் - பருவம், யாண்டு. இவற்று ளிறந்த காலத்தின் பெயர் - பூதகாலம். எதிர்காலத்தின் பெயர் - வர்த்தமானம். வேலை நிகழ் காலத்தின் பெயர் - பவிடியம். பொழுது நீட்டித்தல் - நெடித்தல், பாணித்தல். பொழுதுபோக்கல் - உலாவல், குலாவல், விநோதம். பொறாமை - அழுக்காறு, ஒளவியம், கூரம், நோலாமை,நோனாமை, வக்கிரம். பொறுத்தல் - ஆற்றல், ஓர்ப்பு, கமித்தல், கமை, சகித்தல், சமித்தல், சாந்தம், தகுதி, நோற்பு, நோன்மை, நோன்றல், பொறை. பொற்கலநிறுக்கை - பொற் பண்டாரம். பொற்காசு - காணம். பொன் - அரி, அருச்சுனம், அருத்தம், அனந்தம், ஆக்கம், ஆசை, ஆடகம், இரணியம், ஈகை, ஈழம், உடல், உரை, ஏகாகாரம், ஏமம், கணையம், கல்யாணம், கற்பூரம், கனகம், கனம், காங்கேயம், காஞ் சனம், காணம், காரம், கூழ், கைத்து, சந்திரம், சாதரூபம், சாமி, சாமீகரம், சாம்பூநதம், சுவணம், செங்கோல், செந்தாது, செம் பொன், சொன்னம், தசும்பு, தமனி யம், தனம், திரவியம், தேசிகம், தேசி, தொடுக்கம், நீசி, நிதானம், நிதி, பண்டம், பிங்கலம், பீதகம், பீதம், பூரி, பொருள், பொலம், மாசை, மாடு, மாடை, மாழை, வசு, வித்தம், வெறுக்கை, வேங்கை. அன்றியுந் தாமரையுரு வாய்க் கிடக்கும் பொன் - பதுமநிதி. சங்குருவாய்க் கிடக்கும்பொன் - சங்கநிதி. தொன்பகுதி - ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம். பொன்மலை - ஏமகூடம், பரி சன்னி யம், பூதரம், மணிமலை, மகா மேரு. பொன்மைநிறம் - அரிதம், அரித்தி ராபம், பசப்பு, பாலரசம், பிங்க லம், பீதகம், பீதம், பொலன், அன்றியுங் கறுப்புக் கலந்த பொன்மை - கடாரம், கபிலம். சிவப்புக்கலந்த பொன்மை - பிங்கம், பிசங்கம். பொன்னாங்காணி - சீதை. பொன்வண்ணக்குறிஞ்சி - பீதை. பொன்னூமத்தை - மதமத்தை. போ போகபூமியியல் - பதினாறுவயது டையகுமரனும் பன்னிரண்டு வயதுடைய குமரியுமாய்த் தம்மு ளொத்த மரபும், தம்முளொத்த அன்புமுடையவராகிய தலைவ னுந் தலைவியுங் கற்பகம் போலச் செல்வந் துய்ப்பத் தாம் செய்த தவங்காறும் அப்பூமியி லின்ப நுகர்வது. போதலின் பெயர் - நடத்தலைக் காண்க. போத்தென்னும்பெயர் - மரை, ஆன், காரான், காட்டா, புல்வாய், புலி, சலசாதி. போர் - அமர், ஆகவம், ஆயோதனம், ஆர்ப்பு, இகல், இரணம், உரழ்வு, கணையம், கதனம், கலகம், கலி, காளையங்கம், குறும்பு, கூட்டம், சங்கரம், சங்கிராமம், சமரம், சமர், சமிதி, சமீரம், செரு, ஞாட்பு, தாக்கு, திறல், தும்பை, தெவ், நிகம், நிகர்ப்பு, பண்டனம், மலைப்பு, மலைவு, மறல், முயல், முரண், மொய், யுத்தம், விதர்ப்பு, விறப்பு, வினை. போர்க்களம் - அடுகளம், அரங்கம், ஆகவ பூமி, களம், களரி, செங் களம், செம்புலம், செருக்களம், பகையகம், படுகளம், பறந்தலை, பொருளகம், மொய், விளாகம். போர்க்காயத்தமானோன் - சந்நத்தன். போர்த்தலைவர் - பொருநர். போர் - சும்மை,போப்பு, இது நெல்லு முதலியவற்றிற் குரித்து. போர்வை - மீக்கோள். பௌ பௌடியம் - நிகழ்காலம், நிகழுஞ் சம்பவம். பௌதிகம் - பூதசம்பந்தம், பூதிகம், தூலவுடம்பு இயற்பியல். பௌத்தர் - சாக்கியர், தேரர், புத்தர், அத்தவத்தோர், சீவகர். பௌத்திரன் - புத்திர புத்திரன், பேரன், பாட்டன். பௌத்திரி - புத்திர புத்திரி, பேர்த்தி, பாட்டி. பௌரணை - (பூரனை) நிறைவு, வெள்ளுவா, முழுமதி, அனுமதி, இடை, உவா, பௌவம். ம மகநாள் - ஆதிச்சனி, எழுவா யெழுஞ்சனி, கொடுமுகம், பிதிர் நாள், மாசி, வாய்க்கால், வேட்டு வன், வேள்வி. மகமேரு - தேவராலயம், பெருமலை, பொன்மலை, மந்தரம், மூவா மலை, வடமலை. மகரமீன் - கலை, சுறா, மான், மீனேறு, மீன். மகரராசி - கலை, சுறா, தை, மான். மகரவாழை - மருகு. மகளிரகத்தெழுதுகோலம் - தொய்யில். மகளிராடுங்களம் - ஓரை. மகளிர்கூட்டம் - ஆயம், ஓரை, குழு, பண்ணை. மகளிர்விளையாட்டு - ஓரை, பண்ணை, கெடவரல், பொய்தல், உண் டாட்டு, கிரீடை, உப்பு, கேளி, வண்டல். மகள் - எச்சம், ஐயை, காதலி, சிறுமி, சிறுவி, கதை, தநயை, பந்தனை, புதல்வி, புத்திரி. மகன் - எச்சம், காதலன், காதல், கால், குட்டன், குமரன், குமாரன், சந்ததி, சிறுவன், சுதன், சூனு, செம்மல், சேய், தநயன், தநுசன், தோற்றம், தோன்றல், நந்தனன், பட்டி, புதல்வன், புத்திரன், பொருள், மகவு, மதலை, மருமான், முளை, மெய்யன், மைந்தன், வழி, வழித் தோன்றல். இவர் பன்மை சிறார், பாலர், மகர், மகார். மகன்மகளென்னு மிருபாற்கும்பொதுப் பெயர் - எச்சம். மகிழமரம் - இலஞ்சி, கேசரம், வகுளம். இதன்விதை - அலகு. மகிழ்ச்சியின் பெயர் - களிப்பைக் காண்க. மக்கட்பரப்பு - பைஞ்ஞீலம், மன்பதை. மக்கட்பொதுப்பெயர் - மனிதரை காண்க. மங்கலப்பாடகர் - எட்டர், கடிகை மாக்கள், கவி, கற்றோர், வண்டர், வந்தியர். மங்கலச்சொல்வகை - திரு, களிறு, தேர், பரி, கடல், பொலிவு, மணி, புகழ், பூ, சீர். மஞ்சள் - அரிசனம், கசற்பம், காஞ்சனி, நிசி, பீதம். மஞ்சனம் - நானம். மஞ்சாடிமரம் - திலகம், திலம். மடங்கல் - முடக்கம், முடங்கல். மடி - ஆபீனம், செருத்தல். மடித்தல் - உட்கல், ஊழ்த்தல். மடை - தூம்பு. மடையடைக்குங் கதவின் செயல் - ஓ. மடைப்பள்ளி - அடுக்களை, அட்டில், பாகசாலை. மடையர் - கூவியர், வாலுவர். மட்கலஞ்சுடுஞ்சூளை - சுள்ளை, தூமம். மட்கலத்தின்பொது - கலம், பாசனம், பாண்டம். மட்கலம்வளையுங்கூடம் - குயிலாயம், பஞ்சுரம். மட்டத்துரத்தி - பந்து. மணல் - சைகதம், அன்றியும் வெண் மணலின் பெயர் - வாலுகம். நுண் மணலின் பெயர் அதர், அயிர். கருமணலின் பெயர் - அலை, அறல். மணவாளர்க்குரியபெயர் - கணவன், கொழுநன், கந்தன், கேள்வன், மணமகன், காதலன், வல்லவன், உரியோன், பதி, தவன், கொண்கன், பத்தா, துணைவன், தலைமகன், தலைவன், கண்டன், வேட்டோன், நாயகன், உரிமை, வல்லவி, தாரம், துணைவி, வாழ்க்கைத் துணை, மணவாட்டி, பாரி, இல்லாள், பன்னி, விருந் தளை, இல்லவள், குடும்பினி, கள்ளம், காந்தை, இல், மனை, காதலி, நாயகி. மணற்றிட்டை - புளினம். மணிக்கட்டு - கிலுத்தம். மணிப்பொது - இரத்தினம், காசு, மனவு. அன்றியும் அகன்மணி - அரதனம், சலாகை, மாடு. மணியுளோசைமணி - கண்டம், கண்டை. மணியைப்பதிக்குங்குரி - கேவணம். மணிவடம் - ஆரம், காழ், சரம், தாமம். மண்டலமாவோடல் - சாரிகை, சுற்று, மாதி, வாளி. மண்டலிப்பாம்பு - கோளகம். மண்வெட்டி - அவதாரணம், களித் திரம். மதயானை - களிறு, தந்தி, மதகரி. மதித்தல் - கணித்தல், கருத்தல், குணித்தல், குறித்தல், பார்வை, பேணல், மேதகம், வரையறுத் தல். மதியின்கணவகை - நிரைநேர்நேர், புளிமாங்காய். மதிலுண்மேடை - அகப்பா, ஓதை, கற்பு, பதணம், பரிகம், பரிகை. மதிலுறுப்பு - ஏந்திரம், கோசம், ஞாஞ் சில், ஞாயில், தோணி, நாஞ்சில், பதப்பாடு, விதப்பு. மதில் - அகப்பா, அரணம், அரணி, அரண், ஆரல், ஆரை, இஞ்சி, உவளகம், எயில், ஓதை, கடகம், கற்பு, காப்பு, காவல், சாலம், சிறை, சுற்று, நாயில், நொச்சி, பதணம், பிரகாரம், புரிசை, புறம், வரைப்பு, வாரி, வேணகை, வேதி, வேலி. மதுரகவி - சொல்லாற்றல், தொடை, தொடை விகற்பம், பொருட்செல்வ மென்னு மிவைசெறிய வுருவக முதலிய வலங்காரத்தோடு இன் னோசைத்தாய் ஆராய்வோர் மனங்கட்கு அமுதம்போலினிமை பயப்பப் பாடுவது. மதுரைநகரம் - கூடல், ஆலவாய். மத்தளம் - தடாரி, தண்ணுமை, பதலை. மத்திமதானம் - ஆதுலர், அந்தகர், அவயவமிழந்தவர், பற்றுக்கோ டில்லாதவர், மாதர் என்னு மிவர் கட்குக்கொடுப்பது. மத்தியானம் - இராசி, உச்சி, உருமம், நடுப்பகல், நண்பகல். மத்து - கவம், கவ்வம், மந்தம், மூழி, மூழை, அன்றியுந் தயிர் கடையு மத்தின் பெயர் - வெயில். மந்தம் - ஆலசியம், சோம்பு, தாழ்த் தல். இதன் குறிப்பு - ஒய்யெனல், பையெனல், மெல்லெனல். மந்தரமலை - கவக்குன்று, பம்பரம், மத்து மலை, விட்டுணு மத்தாகக் கடைந்தமலை. மந்தவிசை - காகுளி, மந்தரம். மந்திரம் - மறை. மந்திரியர் - அமாத்தியர், அமைச்சர், இனம், உழையர், எண்ணர், ஏனாதியர், குரவர், சூழ்வோர், சொல்லே ருழவர், துணைவர், தேர்ச்சித் துணைவர், நீதியறிந் தோர், நுண்ணியர், நூல்வல்லோர், முதுவர், முன்னோர், மூத்தோர், விதியர். மந்திரித்தலைவர் - முதுவர், குரவர், மூத்தோர், முன்னோர், உழை யோர், சூழ்வோர், நூல்வல்லோர், அமைச்சர், தேர்ச்சித் துணைவர். மயக்கம் - அயர்வு, அனந்தர், இருள், இளமை, உணராமை, உன்மத்தம், ஏமம், கழுமல், களவு, களன், களி, பித்தம், பிரமை, பிராந்தி பேது, மத்தம், மயர்வு, மயல், மருள், மலைவு, மறலி, மறல், மால், மாழாத்தல், மாழ் கல், மான்றல், மைந்து, மையல், மோகம், விப் பிரமம், வெருள். மயக்கறவருத்தந்தீர்தல் - அயர் வுயிர்த்தல். மயிர்க்குழற்சி - அளகம், குந்தளம், குழற் கொத்து, விலோதம். மயிற்சாந்து - ஏலம், காசரை, கோடரம், தகரம். மயிர்ச்சுருள் - பனிச்சை. மயிர்ச்சூட்டுமாலை - அலங்கல், வாசிகை. மயிர்ச்செறிவு - சிரோந்தம். மயிர்ப்படாம் - மயிரசம், வயிரியம். மயிர்ப்பொது - கதுப்பு, குந்தளம், கேசம், கோலி, சிகுரம், சிரோ ருகம். அன்றியு மாண்மயிரின் பெயர் - இலை, ஓரி, குஞ்சி, குடுமி, சிகை, தளை, தொங்கல், நவிர், பங்கி, பிச்சம், பித்தை. பெண் மயிரின் பெயர் - அளகம், ஐம்பால், ஓதி, குந்தளம், குரல், குருள், குழல், கூந்தல், கூரல், கூழை, கோதை, சுரியல், சுருள், நெடுமை, பரிகாரம், மராட்டம், விலோதனம். புறமயிரின் பெயர் - உரோமம், மராட்டம். மயிர்முடி - உச்சி, கொண்டை, கொப்பு, சிகழிகை, தகமில்லம், பந்தம், பின்னகம், முச்சி. மயிர்முழுதுடலுடையோன் - கேசவன், கேசி, கேசிகன். மயிலிறகின்முள் - முருந்து. மயில் - ஓகரம், கேசயம், கேகி, கேதாரம், சிகண்டி, சிகாவளம், சிகி, ஞமலி, தோகை, நவிரம், பிணிமுகம், பீலி, மஞ்ஞை, மயூரம், இதனாண் - கலாபம், கலாபி, போத்து. மயிற்குரம் - அகவல், ஆவல், ஏங்கல். மயிற்சிகை - அநந்தரம். மயிற்சிறகு - தூவி. மயிற்றோகை - கலாபம், கூந்தல், கூழை, சரணம், சிகண்டம், தழை, தூவி, தொங்கல், பிஞ்சம், பீலி. இவற்றின் கண்ணின் பெயர் - கண், சந்திரகம், மேசகம். மரகதம் - அரி, பச்சை. மரகதத்தின்குணம் - நெய்த்தல், மயிற் கழுத்தொத்தல், பசுமையாதல், பொன்மை, அதனுடன் பசத்தல், வக்கிபாய்தல், பொன்வண்டின் வயிறுபோலிருத்தல், தெளிதல் என்பனவாம். மரகதத்தின்குற்றம் - கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பரிவு, தார், சாயையிறுகுதல் என்பனவாம். மரக்கலப்பாய் - இதை. பாய் மரத்தின் பெயர் - கூம்பு. மரக்கலமோட்டுங்கோல் - உடு. மரக்கலம் - அம்பி, ஓங்கல், கலம், சதர், சோங்கு, திமில், தொள்ளை, தோணி, நவ்வு, நாவாய், பஃறி, பாதை, பாரதி, பாறு, புணை, போதம், மதலை, யானம், வங்கம். அன்றியு மோடத்தின் பெயர் - அம்பி, பகடு, பஃறி. தோணியின் பெயர் - திமில், நவ்வி, பொறி. மரக்கன்று - குழவி, பிள்ளை, போதகம், போத்து. மரக்கால் - அம்பணம், கச்சம், கடன், கால், குளகம், தூம்பு, வள்ளம். மரக்காற்பறை - கோதை. மரக்கொம்பு - இபம், உலவை, உறுப்பு, கம்பு, கவடு, கவலை, குவடு, கொம்பர், கோடரம், கோடு, கோல், சாகை, சினை, தாரு, பணை, பொங்கர், விடபம். அன்றியு மிளங்கொம்பின் பெயர் - மெல் லியல், வளார். கவர்க் கொம்பின் பெயர் - கப்பு, கவை. இவற்றின் கணுவின் பெயர் - கண், பருவம், பவ்வம். மரச்செறிவு - உலவை, கோடரம், பொதும்பர். மரத்தின்வகுப்பு - அகத்தி, அசோகு, அத்தி, அரசு, அனிச்சை, ஆச்சா, ஆத்தி, ஆல், இத்தி, இலந்தை, இலவம், இலுப்பை, ஈந்து, உசில், எட்டி, எலுமிச்சை, ஓமை, கடம்பு, கடவு, கடு, கடுக்காய், கமுகு, கருக்குவாளி, கருங்காலி, கள்ளி, காயா, குங்குமம், குருந்து, கூந்தற் பனை, கொன்றை, கோங்கு, சந்தனம், சீவந்தி, செண்பகம், செருந்தி, தணக்கு, தெங்கு, தேக்கு, நறுவிலி, நாரத்தை, நாவல், நெல்லி, நொச்சி, பச்சிலை, பலா, பனை, பாதிரி, பாலை, பிராய், புளி, புன முருக்கு, புனமுருங்கை, புன்னை, பூவரசு, மகிழ், மஞ்சாடி, மருதம், மலைப்பச்சை, மலை மல்லிகை, மாதளை, மா, முருக்கு, முருங்கை, மூங்கில், வன்னி, வாகை, வில்வம், விளா, வெட்பாலை, வேங்கை, வேம்பு, வேல் இவை தத்தம் வரியிற் காண்க. மரத்தின்குலை - தடும்பு, கொத்து, கோடு, சாறு, தாறு, படு. மரத்தோல் - சீரை, வற்கலை. மரப்பொந்து - உலவை, கோடரம், செறிவு, பொதும்பர், பொய், பொள்ளல். மரம் - அகமம், அகலியம், அனோக் கம், குசம், கோடரம், சாதி, சாலம், தரு, தாபரம், தாரு, துரு மம், பலாசி, பாதபம், பூருகம், விடபி, விருக்கம். அன்றியு மிளமரத்தின் பெயர் - நாகு. காய்த்த மரத்தின் பெயர் - பலி, பலினம். காயாத மரத்தின் பெயர் - அவகேசி. பூவாது காய்க்கு மரத்தின் பெயர் - கோளி, வானபத்தி, வானப்பிரத்தி. பூத்துக் காய்க்கு மரத்தின் பெயர் - வான பத்தியம். ஒரு காற்காய்த்துப் படு மரத்தின் பெயர் - ஓடதி. அகவயிர முள்ள மரத்தின் பெயர் - ஆண் மரம். புறவயிர முள்ள மரத்தின் பெயர் - பெண்மரம். வயிரமில்லாத மரத்தின் பெயர் - அலி, வெளிறு. உலர்ந்த மரத்தின் பெயர் - வானம். மரல் - அரலை. மரவட்டை - சுதாபதி. மரவயிரம் - ஆரி, ஆசினி, கரி, கலை, காழ், காழ்ப்பு, சம்பம், சாரம், சேகு. இவற்றுள் உள்வயிரம் - அகக்காழ், அகங்காழ். புறவயிரம் - புறக்காழ், புறங்காழ். மரவுரி - இறைஞ்சி, சீரை, வற்கலை. மருக்கொழுந்து - தமனகம், தவனகம். மருதநிலத்தவன் - ஊரன், கிழவன், மகிழ்நன். மருதநிலத்திராகம் - மருதம். மருதநிலத்தூர் - அகரம், உறையுள், கிராமம், குடம், கோட்டம், சரணம், தண்ணடை, தாவளம், நகரம், நகர், நிகேதனம், நியமம், நிலயம், படப்பை, பள்ளி, பாழி, புரம், புரி, வசதி, வாழ்க்கை, வேசனம். மருதநிலப்பறை - சினை, பணை. மருதநிலப்பெண்கள் - ஆற்றுக் காலாட்டியர், உழத்தியர், கடைசி யர், பள்ளிகள். மருதநிலமாக்கள் - உழவர், கடைஞர், தம்பளர், களமர், கிளைஞர், தொழு வர், பள்ளர், மள்ளர், வினைஞர். மருதநிலப்பதி - இந்திரன். மருதநிலம் - அகணி, கணி, கம்பலை, கழனி, களன், படுகர், பணை, பண்ணை, பழனம், பானல், முத்தம், மென்பால், வயல். மருதமரம் - அருச்சுனம், பூதவம், மீக்குவம். மருதமரம் - அருச்சுனம், பூதவம், மீக்குவம். மருதயாழ்த்திறம் - செய்திறம், நவிர், வஞ்சி, வடுகு. மருதயாழ்த்திறன்வகை - தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாக தொனி, சாதாளி, இந்தளம், தமிழ் வேளர் கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்க ராகம், கௌசிகம், சிகா மரம், சாரல், சாங்கிமம். மருதோன்றிமரம் - குறிஞ்சி, கோரண் டம், இவற்றுள் வாடா பூவுளது - மகாசகை. செம் பூவுளது - குர வகம். பச்சைப் பூவுளது - குரண் டகம், கோரண்டம். பொன்னிறப் பூவுளது - பீதை. மேகவன்னப் பூவளது - சயிரேயகம். பொன்னி றங் கலந்த கரும்பூவுளது - சகசரி. மருந்துவர் - ஆயுள்வேதியர், பிடகர், மாத்திரர். மருந்து - உறை. அன்றியும் இரணத் தழும்பு தீர்க்கு மருந்து - சமா நகரணி. ஆயுதத்தாற்பட்ட காய மாற்று மருந்து - சல்லியகரணி. முறிந்தவுறுப் பினையிணைக்கு மருந்து - சந்தா நகரணி. மூர்ச்சை தீர்த் துயிர்தரு மருந்து - அமிர்தம், சஞ்சீவகரணி, சஞ்சீவநி. மருமகன் - பலவழித்தோன்றல், மருகன், மருமான். மரை - கானக்குதிரை. இதனாண் - ஏறு, ஒருத்தல், போத்து. இதன் பெண் - ஆ, நாகு, பெட்டை, இதன் குட்டி - கன்று. மலங்குமீன் - நூறை. மலட்டுப்பசு - வசை. மலட்டெருமை - மை. மலடி - மைமை, வந்தி, வந்தை. மலர்தல் - அலர்தல், அவிழ்தல், நெகிழ் தல், விகசம், விகசிதம், விரியல், விள்ளல். மலர்த்தாது - கோசரம், மகரம், சிதர், கொங்கு, கேசரம். மலை - அசலம், அடுக்கல், அத்திரி, அரி, இரவி, இறும்பு, இறும்பூது, ஏந்தல், ஓங்கல், ஓதி, ஓதிமம், கல், கல்லகம், கிரி, குதரம், குத்திரம், குவடு, குறும் பொறை, குன்று, கோ, கோத்திரம், கோத்திரை, சக்கரம், சயிலம், சாரல், சிகரி, சிமயம், சிமிலம், சிலம்பு, சிலை, சிலோச்சயம், சையம், தடம், தரணி, தரம், தராதரம், தாணு, தாபரம், திகிரி, நகம், நவிரம், நாகம், பதலை, பருப்பதம், பரம்பு, பாதவம், பிறங்கல், பூதரம், பொகுட்டு, பொங்கர், பொச்சை, பொருப்பு, பொறை, பொற்றை, போதி, மாதிரம், மேரு, வரை, விண்டு, விந்தம், விலங்கல், வீரம், வெற்பு, வேதண்டம். அன்றியுஞ் சிறு மலையின் பெயர் - இறும்பு, கறடு, குவடு, குறும் பொறை, குன்று, புதலை, பொச்சை, பொற்றை. மலைக்கணவாய் - பூழை. மலைச்சாரல்விளைநெல் - ஐவனம். மலைச்சாரல்வீழ்புனல் - அருவி. மலைப்பக்கம் - மடம், சரி, சாரல், சானு, தடம், நிதம்பம். மலைப்பச்சை - குளவி. மலைபடுதிரவியம் - அகில், குங்குமம், கோட்டம், தக்கோலம், மிளகு. மலைப்பிளப்பு - விடர். மலைமல்லிகை - கிரிமல்லிகை, சூட்சம், சக்கரம், வச்சகம். மலைமேற்றுருக்கம் - அரும்பம். மலையனார் - நற்றிணை பாடிய புலவரிலொருவர். மலையினுட்குகை - அளை, சுந்தரம், குகம், நிகுஞ்சம், முடுக்கர், முழை. மலையின்வீழாறு - அருவி, உவதை. மலையுச்சி - குவடு, கூடம், கொடுமுடி, கோடு, சிகரம், சிமயம், முகடு. மலையொடுசேர்ந்தசோலை - ஆராமம். மல்லிகை - அளங்கம், பூருண்டி, மாலதி. மழலைச்சொல் - உல்லாபம், குதலை, கொஞ்சல், மிழலை. மழு - கணிச்சி, குளிர், தண்ணம், நவியம், பரசு, பாலம். மழை - ஆர்கலி, ஆலம், ஆலி, உதகம், உறை, சீகரம், சொரி, தாரை, திவலை, துளி, தூவல், தூறல், மாரி, வருடம், வானம், வான். அன்றியும் பெருமழையின் பெயர் - ஆசாரம். விடாமழையின் பெயர் - சோனை. அடை மழையின் பெயர் - பனித்தல். மழை விடுதலின் பெயர் - தலையல். மழைத்துளி - ஆலி, உறை, சிதர், சீகரம், தளி, திவலை, துமி, தூவல். மழைத்தூவல் - அரி, சிதர், சீகரம், திவலை, தூவல், பிதிர். மழைபெய்தல் - சொரிதல், துளித்தல், தூவல், தூறல், பனித்தல், பொழி தல். மழைவண்ணக்குறிஞ்சி - நீலி, பாணம். மள்ளனார் - குறுந்தொகை, நற்றிணை பாடிய புலவரி லொருவர். மறதி - அயர்ப்பு, இவறல், பொச் சாப்பு, மறம்பு, மறல், மறலி, வழுக்கு. மறநிலையறத்தினியல் - நிரை மீட்ட லும் பகை வெல்லலுமாகிய செஞ் சோற்றுக் கடன் கழியா தாரைத் தண்டித்துக் குறைவுறச் செய்த லாம். மறநிலையின் பவியல் - ஏறுதழுவு தலும் வில்லாவிலக்க மெய்தலும் அரியபொருள் கொடுத்துக் கோடலும் வலிந்து கோடலும் ஆகியநெறியால் மணத்தல். மறவாமை - கடைப்பிடி. மறைதல் - ஒளித்தல். மறைத்தசொல் - இடக்கர், ஒக்கர், கூதனம். மறைவு - அபவாரணம், அற்றம், இரகசியம், ஒதுக்கம், குய்யம், புதை, மாய்தல், மாய்வு. மனக்கோட்டம் - அழுக்காறு, மனத் தழுக்கு, அவ்வியம். மனம் - அகம், இதயம், உளம், உள், உள்ளம், உன்னம், சித்தம், நெஞ்சு, முன்னம். மனுடர் - ஆடவர், ஆண்டையர், நரர், மக்கள், மண்ணோர், மனிதர், மாக்கள், மாந்தர், மானவர், மானிடர், மானுடர், மைந்தர். மனுடர்படுக்கை - அமளி, அரி, உறை யுள், கட்டு, கண்படை, கிடக்கை, சட்டகம், சயனம், சாயல், சேக்கை, சேர்விடம், தளிமம், துயிலிடம், பள்ளி, பாயல், பாழி. அன்றியும் விசியின் பெயர் - அரி, கட்டிலின் பெயர் - அங்கம், அரி, பரியங்கம், பாண்டில், பாரி, மஞ்சம், மஞ்சு. மனைவாயில் - துவாரம், வாரி, தோட்டி, உவளகம், புகுதி, கோட்டி, புதவு திடை, தடம், அருநெறிதூம்பு, சிதம். மனைவி - இல், இல்லவள், இல் லாள், எரிலம், களத்திரம், காதலி, காந்தை, குடும்பினி, தாரம், துணைவி, தேவி, நாயகி, பன்னி, பாரி, பாரியை, பிரியை, மண மகள், மனை, மனையாட்டி, மனையாள், வல்லவி, வாழ்க்கைத் துணை, விருந்தனை. மனோகரன் - சல்லவன். மன்மதன் - அங்கசன், அனங்கன், ஆழிமுரசோன், இரதிகாதலன், உருவிலி, ஐங்கணைக்கிழவன், கந்தர்ப்பன், கருப்புவில்லி, காமன், சம்பராரி, சித்தசன், சுரும்பாவன், திங்கட் குடையோன், திருமகண் மைந்தன், தென்றற்றோரான், பஞ்சபாணன், பூவம்பன், பூவாளி, மகரகேதனன், மதன், மதுசகன், மனோசன், மனோற்பவன், மாமகன், மாரன், மான்மகன், மீனக்கொடி யோன், மோகன், வசந்தன், வேள், வேனிலாளி. மன்மதன்கணைவகை - அரவிந்தம், அசோகம், குவளை, சூதம், முல்லை. இவற்றுட் சூதம் - மாமரம். அரவிந்தம் - தாமரை. இவ்வைங் கணையின் பெயர் உன்மத்தம், மதனம், மோகனம், சந்தாபம், வசீகரணம். அவை யாவன - மயக்கம், மௌனம், ஆசை, சிந்தா குலம், புணர்ச்சிக் கிணக்கம். அன்றியு மவ்வைங்கணை பயக்கு மவத்தையின் பெயர் - பேசா தொழியா நினைவு, சுப்பிரயோகம், இரங்கிப் பெரு மூச்சுயிர்த்தல், விப்பிரயோகம், வெதும்பியுணவு வெறுத்தல், சோகம், அழுது பிதற்றுதல், மோகம், மயங்கலுஞ் சாதலும் மரணம். மன்மதன்கூத்து - பேடு. மன்மதன்மகன் - அநிருத்தன். மன்மதன்மனைவி - இரதி. மா மா -அருப்பம் - இடி, பிட்டம், நுவணை, பிண்டி. மாசிமாதம் - தபம், மாகம், கும்பரவி. மாசின்மை - அமலம், அநகம், நிருமலம், விமலம். மாசு - அழுக்கு, கசடு, களங்கம், கறை, மலம், மலினம், மலீமசம், அன்றியு மனமாசு - உபமலம். மாடப்புறா - கன்மேய்வு, காளபதம். மாடம் - மண்ணீடு, வேயுள். மாடலூர்கிழார் - குறுந்தொகை பாடிய புலவரி லொருவர். மாட்சிமை - அமைதி, ஆன்றல், சால்பு, செழுமை, நிறை, மண், மதன், மாணம், மாண், மாண்டல், மாண்பு, வளம், வாய்த்தல். மாட்டார் - வல்லர். மாட்டுக்குளம்பு - கோப்பாதம். மாணிக்கம் - கவுத்துவம், செம்மணி, பதுமராகம், மாமணி. மாதம் - திங்கள், மதி. மாதரணிவடம் - ஆரம், இழை, கண் டிகை, கோவை, தாமம், மாலை. மாதரிடையணி - அரப்பட்டிகை, சரமணிக்கோவை, இவற்றின் பெயர் - தத்தம் வரியிற் காண்க. அன்றியும் ஏழு கோவைமணி யணி - மேகலை. எட்டுக் கோவை - காஞ்சி. பதினாறு கோவை - கலாபம். பதினெண்கோவை - தாமம், பருமம். முப்பத்திரண்டு கோவை - விரிசிகை. மாதீர்த்தன் - குறுந்தொகை பாடிய புலவரி லொருவர். மாதுளை - கழுமுள், மாதுளங்கம், மாதுளம், அன்றியுந் தாதுமா தளையின் பெயர் - தாடிமம். மாத்திரை - கணம். மாமரம் - ஆம்பிரம், இரதம், கொக்கு, சுள்ளி, சூதம், மாந்தி, மாழை. அன்றியுந் தேமாவின் பெயர் - சேதாரம், புளி மாவின் பெயர் - ஆம்பிரம், இபங்கம், எகினம், எகின், நாளினி. மாமன் - அம்மான், மாதுலன். மாமிலாடன் - குறுந்தொகைபாடிய புலவரிலொருவர். மாயேண்டன் - குறுந்தொகைபாடிய புலவரிலொருவர். மாயோனாடல் - அல்லியம், குடம், மரக்கால், மல். மார்கழிமாதம் - சகம், மார்க்கசிரம், மார்க்கம். மார்பிலணிமாலை - இலம்பகம், மஞ்சரி. மார்பு - அகலம், ஆகம், உரம், செப்பம், நெஞ்சு, மருமம். மாலை - அணி, அணியல், அரி, அலங்கல், ஆரம், இலம்பகம், ஒலியல், கண்ணி, கத்திகை, கோதை, சரம், சிகழிகை, சுக்கை, சுருங்கல், சூட்டு, தாமம், தார், தெரியல், தொங்கல், தொடர், தொடை, தொடையல், படலை, பிணை, பிணையல், மஞ்சரி, மாலிகை, வாசிகை. அன்றியும் நுதலணிமாலையின் பெயர் - இலம்பகம், சூட்டு. முடி மாலை யின் பெயர் - கரோடி, கரோடிகை, தொடுத்த மாலையின் பெயர் - சிகழிகை, தொடையல், மாலை, வாசிகை, பின்னிய மாலையின் பெயர் - பிணையல் கோத்தமாலை யின் பெயர், கோவை, சிகழிகை, படலை, வாசிகை, இவையன்றி யும் பகைவர் நிரையோட்டுஞ் சேவகர்க்கு வெட்சிமாலை, பகை வரோட்டின அந்நிரை மீட்ட வர்க்குக் கரந்தைமாலை, பகைவர் மேற் செல்லுஞ் சேவகர்க்குக் வஞ்சிமாலை. திரண்டுவரும் பகைவர் முன்னெதிரூடன்றுஞ் சேவகர்க்குக் காஞ்சி மாலை. தன்னரண் காப்பார்க்கு நொச்சி மாலை. பகைவரரண் பிடிப்பார்க்கு உழிஞைமாலை போர் வென் றோர்க்குத் துன்பமாலை. மாலைமாறன் - குறுந்தொகைபாடிய புலவரி லொருவர். மாவட்டணம் - தட்டியம், தட்டு, பலகை. மாவலி - வயிரோசனன். மாவளத்தன் - குறுந்தொகைபாடிய புலவரிலொருவர். மாறன்பொறையனார் - பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய ஐந்திணை யைம்பதைப் பாடியவர். மாறுபாடு - எதிர்த்தல், கோணல், தெரித்தல், தெற்றல், நீக்கல், மலைவு, வரைவு. மாற்றலர் - ஒல்லார், நோனார், ஒன்றலர், நண்ணலர், திருந்தலர், மேவலர், செற்றார், செறுநர், இன்னார், கருதலர், எண்ணலர், நள்ளார், பொருந்தலார், பற்றார், பற்றலர், புல்லர், சேரார், தெவ்வர், அடையலர், தரியலர், தெறுநர், ஒட்டர், அரிகள், பகைஞர். மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்கா விதியார் மகனார் புல்லங்காடனார் - பதினெண்கீழ்க் கணக்கிலொன் றாய கைந்நிலை பாடியவர். மாற்றல் - நீக்கல், மறுத்தல், வரைதல், விலக்கல். மான் - அரிணம், உழை, ஏனம், குரங்கம், சாரங்கம், சூனம், நவ்வி, பிணைமரி, மிருகம். இதனாண் இரலை, ஏறு, ஒருத்தல், கருமான், கலை, புல்வாய், வச்சுயம், இதன் பெண் - பிணை. இதன் பிள்ளை - ஏணி, கன்று, குழவி, தன்மை, பறழ், பார்ப்பு, பிணை, மறி. மான்றோல் - அயிணம், ஏனம். மி மிகவல்லோர் - குசலர், நிபுணர், விபுதர். மிகுதல் - பொதிர்தல், மிகப்படல், விதத்தல், வீக்கம். மிகுதி - அதிகம், அமலை, அமர்தல், அலைத்துவம், ஆற்றல், ஆன்றல், இறப்பு, உயரம், உருத்தல், உருப்பம், உறு, ஊக்கம், ஊங்கு, கடுமை, கட்டு, கதழ்வு, கயவு, கலிப்பு, கழி, கழிதல், கழுமல், கூர், சால், சிறப்பு, செறிவு, தவ, துப்பு, நனி, நன்கு, தூங்கு, பிறங்கல், புதுமை, பூரி, பூரிப்பு, பெடம், பெருமிதம், பெருமை, பொக்கம், பொங்கல், பொம்மல், பொலிவு, பொற்பு, மதர்வு, மல்லல், மன், மிகை, வாகை, வாசி, வால், விதப்பு, விளரி, வெள்ளம். மிகுத்தல் - உறுத்தல், தெறுதல். மிக்கது - மிஞ்சுதல், மீமிசை, விஞ்சுதல். மிடறு - அணம். மிடர் - கரீரம், குழிசி, தடா, முகை. மிதிலைநகர் - விதேகம். மிதுனராசி - இரட்டை, சயமகள், தண்டு, பாடவள், பாடவை, யாழ், விழவு. மிதுனவீதி - கும்பம், தனு, மகரம், விருச்சிகம். மிருகசீரிடநாள் - இத்திரன், ஐந்தா னம், நரிப்புறம், பாலை, பேரா ளன், மதிநாள், மார்கழி, மாழ்கு, மான்றலை, மும்மீன், வெய் யோன். மிருது - சுகுமாரம், மென்மை. மிலேச்சர் - அநாரியர், மிலைச்சர். மிளகு - அநாரியர், மிலைச்சர். மிளகு - கலினை, கறி, காயம், கோள கம், திரங்கல், மரிசம், மரீசி, மிரிதல். மிளைகிழான் நல்வேட்டனார் - நற் றிணையும் குறுந்தொகையும் பாடிய புலவரிலொருவர். மிளைக்கந்தன் - குறுந்தொகை பாடிய புலவரி லொருவர். மின்மினிப்பூச்சி - அழகு, கச்சோதம், கத்தியோதம், ஞலவல், நுலம்பு. மிளைப்பெருங்கந்தன் - குறுந் தொகை பாடிய புலவரி லொருவர். மிளைவேள்தித்தன் - குறுந்தொகை பாடிய புலவரிலொருவர். மின்னல் - கனருசி, சஞ்சலம், சஞ்சலை, சபலம், சபலை, சம்பை, தடி, தடித்து, துடித்து, மின், வித்துரு. மீ மீகாமன் - நீகான், நீவான், மாலுமி. மீதிப்பொருள் - எச்சம், சேடம், மிச்சில். மீதூர்தல் - இடங்கழி, நெருங்குதல். மீளல் - திரிதல், மடங்கல், மறிதரல். மீறுதல் - திருகல், முறுகல். மீனராசி - சலசரம், சலசலம், மச்சம், மயிலை. மீனெறிதுண்டிலார் - குறுந்தொகை பாடிய புலவரிலொருவர். மீனெறிபறவை - சிரசில். மீன் - அண்டசம், சகுலி, சலசரம், மச்சம், மயிலை, மீனம், வகுலி. இதனாண் - போத்து. இதன் பெண் - நாகு. இதன்சினை - குண்டி. இதன் முள்ளரிந்திடுங் கத்தியின் பெயர் - அயிர். மீன்குத்திக்குருவி - சிரல், மீனெறி. மு முகடு - மஞ்சு. முகத்தல் - தோண்டல், நொள்கல், நோண்டல், மொள்ளல். முகபடாம் - குழி. முகம் - ஆசியம், ஆனனம், துண்டம், வதனம், வத்திரம். முக்கர் ஆசான் நல்வெள்ளையர் - நற்றிணை பாடியவரு ளொருவர். முசு - கடுவன், கலை, கள்வன், கோலாங் கூலம், மைமுகன். இதனாண் - ஓரி, கலை. இதன் பெண் - மந்தி. முசுண்டி - தானை, படை, முற்கரம். முடக்கிடந்தநெடுஞ்சேரலாதன் - அக நானூறுபாடிய புலவரி லொருவர். முடங்கல் - துடங்கல், நுணங்கல், படங்கல். முடத்தாமக்கண்ணியார் - பத்துப் பாட்டி லொன்றாகிய பொரு நராற்றூப் படை இயற்றியவர். முடத்திருமாறன் - நற்றிணை பாடிய வருளொருவர். முடவன் - அனூரு, கூரியன், பங்கு. முடி - கிரீடம், கோடீரம், கடிகை, குடிசை, சேகரம், மகுடம், பதுமம். முடித்தல் - நீட்டித்தல். முடிமாலை - கரோடி, கோடி, பாடம். முடியாக்காலம் - ஊழி, உருத்திரன் வாழ்நாள். முடிவு - அந்தம், அந்தரம், இறுதி, ஒடுக்கம், ஓய்வு, கடை, கரை, காண்டம். முடுகியல் - அராகம், வண்ணகம். முடைதல் - நிணத்தல், வலத்தல். முட்டை - அண்டம், அரிட்டம். கரு, குடம்பை, கோசம், சினை. முட்பன்றி - எய், சமர், சல்லபம், சல்லியம், முண்மா. இதன் முள் ளின் பெயர் - சலம், சலலம், சல்லி. முட்பன்றிமுள் - சலம், சலலம். முதலை - அண்டசம், இடங்கர், சிஞ்சு மாரம், முதலி, வன்மீன். இதனாண் - கரா, கராம். முதல் - அடி, ஆதி, தலை, தாள், முன்னர். முதல்வகை - ஆதி, தலை, தாள், அடி, முன், எழுவாய், மோனை, பிராசயம். முதுகு - அபரம், சுவல், துன்னு, புறம், வெந், வெரிந். முதுகூத்தனார் - இவருடைய பாடல் கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணைகளிற் காணப்படுகின்றன. இவர் கூறிய வெண்பா ஒன்று திருவள்ளுவ மாலையிலுளது. இவர் வாக்கிற் பெரும்பாலும் காணப்படுவது பாலை நிலத்தினியல்பு. முத்தங்கோப்பார் - மணிகுயிற்றுநர். முத்திரை - பொறி, அன்றியு மடை யாளத்தைக் காண்க. முத்தீ - ஆகமனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினியம். முத்து - ஆரம், தாளம், திரட்சி, நாவி, நிலத்திலம், மணிமுத்தம், முத்தா பலம், மௌத்திகம். முத்துப் பிறக்குமிடம் - இப்பி, உடும்பு, கடன்மீன், கதலி, கமலம், கமுகு, கரும்பு, கொக்கு, சங்கு, செந்நெல், திங்கள், நத்து, நாகம், பசுவின்பல், பன்றி மருப்பு, மடந்தையர் கந்தரம், முதலை, மூங்கில், மேகம், யானை மருப்பு. முத்தூற்றுமூதெயினனார் - அக நானூறு பாடிய புலவரி லொருவர். முந்திரிக்கொடி - கோத்திரிகை, மறுரசம், மதுரம். முப்பத்துமுத்தேவர் - ஆதித்தர் பன்னிருவர், அசுவினிகள் இருவர், ஈசர், பதினொருவர், வசுக்கள் எண்மர். முப்போர்நாகனார் - நற்றிணை பாடிய வருளொருவர். மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை. முயல் - சசம், இதன்பிள்ளை, குட்டி, குருளை, பறழ், பிள்ளை. முயற்சி - ஆள்வினை, இயற்றி, உற்சாகம், உஞற்று, உத்தியோகம், உழப்பு, உள்ளம், தாளாண்மை, தாள். முருகனாயுதம் - வேள். முருகன் - அரன்மகன், அறுமீன் காதலன், அறுமுகன், ஆசான், ஆண்டலைக் கொடியோன், கங்கைமைந்தன், கடம்பன், கந்தன், கலையுணர்புலவன், காங்கேயன், கார்த்திகேயன், குகன், குழகன், குறிஞ்சி வேந்தன், குன்றெறிந்தோன், கௌரிநந்தனன், சண்முகன், சரவணபவன், சிகிவாகனன், சிலம் பன், சுப்பிரமணியன், சுரேசன், சூர்ப்பகைவன், செட்டி, செவ் வேள், சேந்தன், சேய், சேவற் கொடியோன், தாருகற் செற் றோன், தாருகாரி, தெய்வயானை காந்தன், தேவசேனாபதி, பாவகி, மஞ்ஞையூர்தி, மாயோன் மருகன், முருகு வரைபக வெறிந்தோன், வள்ளிமணாளன், வாகுலேயன் விசாகன், வேலன், வேலிறைவன், வேள். முருகன்கூத்து - குடை, கொடு கொட்டி. முருகன்கொடி - சேவற்கொடி. முருகன்வாகனம் - மயில், யாடு, யானை. முருக்கு - கவிர், கிஞ்சுகம், பலாசு, இவற்றுட் புன முருக்கின் பெயர் - பலாசு. முருங்கை - சிக்குரு, அன்றியும் புன முருங்கையின் பெயர் - புன்கு. முலை - அம்மம், உரோருகம், குயம், குருக்கண், கொங்கை, கொம்மை, சேக்கை சொர்க்கம், தனம், நகிலம், பயோதரம், பரம்பு. முலைக்கச்சு - பட்டிகை, வம்பு, வார், விசிகை. முலைக்கண் - சிலீமுகம், சூசுகம். முலைப்பால் - பீர். முல்லை - ஊதிகை, கற்பு, தளவம், தளவு, நைதிகை, மாலதி. முல்லைத்திணை - புறம்பணை, புற வணி, புறவம். முல்லை நிலத்தலைவன் - அண்ணல், கானகநாடன், குறும்பொறை நாடன், தோன்றல். முல்லைநிலத்தாறு - கலுழி, கான்யாறு. முல்லைநிலத்திராகம் - சாதாரி. முல்லைநிலத்தூர் - ஆய்ப்பாடி, ஆவிரம், இடைச்சேரி, உவளகம், பாடி, வல்லி, வல்லியம். முல்லைநிலப்பறை - ஏறங்கோட் பறை, பம்பை. முல்லைநிலத்தெய்வம் - திருமால். முல்லைநிலமக்கள் - அண்டர், அமுதர், ஆயர், ஆன்வல்லோர், இடையர், இப்பர், கானவர், குடவர், கோபா லர், கோவியர், கோவர், கோவர்த் தனர், கோவலர், கோவிந்தர், தொறுவர், பொதுவர், முல்லை யர். அந்நிலப்பெண்கள் - ஆய்ச்சி யர், இடைச்சியர், குடத்தியர், தொறுவியர், பொது வியர். முழங்கை - கூபரம், கூற்பரம். முழந்தாள் - சானு, முழந்து. முழவு - குளிர். முளை - அங்குரம், கால், தரி. முளைத்தல் - உருத்தல், கெழுமுதல், தோற்றல், நாறுதல், பொடித்தல். முள் - கடு, கண்டகம். அன்றியு முட் செடிப் பொதுப்பெயர் - முண்ட கம், முளரி. முள்ளி - கண்டலம், முண்டகம். முள்ளியூர்ப் பூதியார் - அகநானூறு பாடிய புலவரு ளொருவர். முறம் - சின்னம், சுளகு, சூர்ப்பம், தட்டு, முற்றில். முறிதல் - இடிதல், இறுதல், ஒகிதல், ஒடிதல், ஞெமிர்தல், பரிதல், முரிதல். முறித்தல் - அகைத்தல், இருத்தல், ஓசித்தல், ஒடித்தல், கோடல், முறித்தல். முறுக்கல் - திருகல். முறுக்காணி - மாடகம். முறுவெங்கண்ணனார் - நற்றிணை பாடியவரு ளொருவர். முறைமை - ஊழ், ஒப்பரவு, ஒழுக்கம், கடன், சுதம், செய்கடன், நியதி, நியமம், நிலை, பத்தி, பாரம் பரியம், மரபு, வழி. முற்பிறப்பு - உம்மை. முற்றம் - அங்கணம், முன்றில். முனிவரிருக்கும்பீடம் - பீடிகை, விட்டரம். முனிவரிருக்கும்வாசம் - கரண்டை, குகை, தாபதம், பள்ளி, பாழி, மடம். முனிவர் - அடிகள், அந்தணர், அய்யர், அருந்தவர், அறவோர், அறிஞர், இருடிகள், இலிங்கிகள், உயர்ந்தோர், உறுவர், ஐம்புலன் வென்றோர், கடவுளர், கடிந் தோர், சார்பில்லோர், சௌமியர், தபோதனர், தவத்தர், தவர், தாபதர், துறந்தோர், துறவோர், நீத்தோர், படிவர், பண்ணவர், பலமூல சாகாசனர், பற்றற்றார், பெரியோர், மாதவர், முனைவர், மெய்யர், மோனர், மௌனியர், யதிகள், யோகர், யோகியர். முனை - நுதி, நுனை. முனைமேற்சென்றோ ருறைபதி - கடவை, கேடகம், பாசறை, பாடி, பாளி, பாளையம், முனைப்பதி. முன் - புரம், முன்பு. முன்பிறந்தாள் - அக்காள், அக்கை, அன்னை, செவிலி, சேட்டை, தத்தை, தௌவை, முன்னை, மூத்தாள். முன்றானை - தோகை, கச்சம், கஞ் சகம், சாரவாரம், விடுந்தலைப்பு. முன்னிலையசைச்சொல் - அத்தை, இ, இக, இத்தை, மதி, மாள், மியா, மோ, யாழ், வாழிய. முன்னைநாள் - நெருநல், நென்னல். மூ மூக்கு - ஆக்கிராணம், கோணம், துண்டம், நாசி, நாசிகை, நாடி. மூக்குக்கண்ணாடி - உபநயனம், சுலோசனம். மூங்கில் - அமை, அம்பு, அரி, ஆம்பல், ஒங்கல், தட்டை, தண்டு, திகிரி, துளை, தூம்பு, நெட்டில், நேமி, பணை, பாசு, பாண்டில், பாதிரி, புனை, கழை, கண், காம்பு, கிளை, கந்தி, முடங்கல், முந்தூழ், முளை, வரை, விண்டல், விண்டு, வெதிர், வேணு, வேய், வேரல், வேல், வேழம். இதனரிசி - தோரை. மூச்சு - தும்மல், சுவாதம், கொறுக்கை, இரேசகம், பூரகம், கும்பகம், சுவாசம், நிசுவாசம். மூஞ்சூறு - சுசுந்தரி, சுண்டன், சுயவு, சூரன். மூடுதல் - கவித்தல், பொதிதல், போர்த்தல், மூய்தல், மொய்த்தல், வேய்தல். மூட்டல் - பொறுத்தல், மாட்டல். மூதறிவாளர், மூதுணர்ந்தோர் - முதுவர். மூதேவி - இந்திரைக்கு மூத்தாள், ஏகவேணி, கலதி, கழுதைவாகனி, காக்கைக் கொடியாள், கெட லணங்கு, கேட்டை, சிறப்பிலா தாள், சீர்கேடி, சேட்டை, தௌவை, முகடி. மூதேவிகொடி - காகம். மூதேவிபடை - துடைப்பம். மூதேவிவாகனம் - கழுதை. மூத்தோன் - அடிகள், அத்தன், அய்யன், ஆசான், ஆதிரன், இறை, ஈசன், உரவோன், குரவன், கோமான், சாமி சேட்டன், நாதன், பதி, பெரு மான், முதியோன். மூப்பினர் - விருத்தர், மூத்தோர். மூப்பு - கிழமை, முதுமை, முற்றல், விருத்தம் விருத்தாப்பியம். மூலநாள் - அசுரநாள், அன்றில், ஆனி, குருகு, தொக்கு, சிலை, தேட்கடை, வில். மூலங்கீரனார் - நற்றிணைபாடியவரு ளொருவர். மூவகைத்தமிழ் - இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ். மூவாதியார் - பதிணென்கீழ்க் கணக்கி லொன்றாய ஐந்திணையெழுபது பாடியவர். மெ மெத்தை - அணை, அமளி, நாகுளி, தவிசு, தளிமம், தற்பம். மெய் - ஆணை, உண்மை, கச்சம், சத்தியம், சாதம், தத்தியம், திடம், திண்மை, நிசாதனம், நிச்சயம், நிலைமை, நீதி, பசுமை, பட் டாங்கு, பொருள், வண்மை, வாய், வாய்மை, விதி, வேளாண்மை. மெய்காப்பாளர் - கஞ்சுகர், காவலர், வாயிலாளர், வாயிலோர். மெய்கொட்டிக் கைகுவித்தலின்பெயர் - குடந்தம். மெய்ம்மலம் - மாசு. மெய்யின்குற்றம் - பசி, நீர்வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண் டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு. மெலிவு - அற்றம், சிக்கம், தேம்பல், பழங்கண், புன்கண், வாடல். மெல்லல் - கவட்டல். மெழுகு - வள்ளியம். மென்மை - கயவு, கோமளம், சாயல், சுகுமாரம், மிருது. மே மேகம் - அப்பிரம், அம், அம்புதம், இளை, ஊரி, எழிலி, கதம்பம், கந்தரம், கருவி, கனம், கார், கார் முகம், காளம், குயின், கொண் டல், கொண்மூ, சலதரம், சீதம், சீமுதம், செல், தராதரம், நீலம், பயோதரம், புயல், மங்குல், மஞ்சு, மழை, மாசு, மாரி, மால், முகில், முதிரம், மை, வான், விசும்பு, விண், விண்டு, விளைவு. மேடவிராசி - ஆடு, உதன், கொறி, தகர், மறி, மை, யாடு, வருடை. மேடைவீதி - இடபம், கடகம், சிங்கம், மிதுனம். மேடு - உயர்நிலம், ஓங்கல், கரு, குப்பை, குவால், குவை, சுவல், திடர், திட்டு, திட்டை, படர், மிசை, வல்லை, வன்பால். அன்றி யும் பரன்மேடு - முரம்பு. மேலிதம் - ஒட்டம். மேல் - இந்நனம், உபரி, உம்பர், ஞாங்கர், மிசை, மீ, முன், மேக்கு, மேற்கு, வலம். மேற்கட்டி - கம்பளம், படங்கு, வானி, விதானம். மேற்கு - குடக்கு, பச்சிமம், பிரத்தி யக்கு, மேக்கு, மேல், வாருணம். மேற்கோள் - உதாரணம், உதா கரணம், பழஞ்சூத்திரம், எடுத்துக் காட்டு, ஆசிரிய வசனம். மேற்செம்பாலையின்வகை - தாரமே குரலாய் நிற்பதாம். மேன்மை - ஏற்றம், கயம், கயவு, கியாதகம், சாயல், சாலூரம், ஞெள்ளம், மேதம், மேதை, மேற்கோள், இவற்றுண் மேம் பாடுரைத்தல் - நெடுமொழி கூறல். மை மைத்துனன் - சம்மதன், மச்சான். மைந்தன் - சந்ததி, மதலை, தனயன், காதலன், நந்தனன், சிறுவன், மெய்யன், தோன்றல், செம்மல், முளை, சுதன், கால், பொருள், புதல்வன், புத்திரன், பிறங்கடை, எச்சம், சேய். மையோடக்கோனார் - இவர் பரி பாடலில் ஏழாம் செய்யுளைப் பாடியவர். இவர் பாடலிலிருந்து இவர் ராசபத்தி யுடையவரென்பது புலனாகின்றது. மொ மொட்டம்பு - உதண். மொட்டை - தட்டை, முண்டம், முண்டிதம். மொட்டையாக்கல் - மழித்தல். மொய்த்தல் - முடுக்கல், மூசல், மூஞ்சல், மூழ்த்தல். மோ மோகம் - அழுதல், பிதற்றல். மோக்கம் - அப்பவருக்கம், அமுதம், கேடிலுவகை, கேவலம், கைவல் லியம், சித்தி, சிவம், நிருவாணம், நிலைபேறு, பஞ்சமகதி, பரகதி, மீளாக்கதி, முத்தி, வீடு. மோசிகண்ணத்தனார் - நற்றிணை பாடியவரு ளொருவர். மோசிகொற்றன் - குறுந்தொகை பாடியவரு ளொருவர். மோசிக்கரையனார் - அகநானூறு பாடியவரு ளொருவர். மோதகம் - இலட்டுகம். மோதாசனார் - குறுந்தொகை பாடியவருளொருவர். மோதிரம் - ஆழி, இலச்சினை, வீகம். மோர் - அரிட்டம், அரும்பம், அளை, காலேயம், தக்கிரம், மச்சிகை, மதிகம், முசர். மௌ மௌவல் - வனமல்லிகை. மௌனம் - கேளா, மதனம், மூகம், மோனம், வாளா. ய யதி - எதி, சாது, சந்நியாசி. யமுனை - கதிரவன் புதல்வி, காளிந்தி. யா யாகத்தம்பம் - யூபம். யாகம் - இட்டி, எச்சம், ஓமம், கிருது, சத்திரம், சித்து, மகம், யசனம், யூபம், வேள்வி. யாழ்வலிக்கட்டு - திவவு. யாழ்நரம்போசை - கலித்தல், சும்மை, கம்பலை, அழுங்கல், சிலைத்தல், துவைத்தல், சிலம்பல், இரங்கல், இமிழ்தல், விம்மல், இரட்டல், ஏங்கல், கனைத்தல், தழங்கல், கறங்கல், அரற்றல், இசைத்தல். யாளி - அறுகு, பூட்கை; இதனாண் - தகர், இதன் பிள்ளை - குருளை, குழவி. யாற்றிடைக்குறை - அரங்கம், துருத்தி, இலங்கை. யானை - அத்தி, அறுகு, ஆம்பல், இபம், இம்மடி, உம்பல், உவா, எறும்பி, கயந்தலை, ஒருத்தல், ஓங்கல், கடிவை, கயம், கரி, கரிணி, கரேணு, களபம், களிறு, கள்வன், கறையடி, குஞ்சரம், கும்பி, கைப் பிலி, குழவி, கைம் மலை, கைம்மா, கோட்டுமா, சிந்தூரம், கண்டாலி, சூகை, துடியடி, தந்தாவளம், தந்தி, தாமம், திண்டி, தும்பி, தகர், தூங்கல், தெள்ளி, தோல், நாகம், நால்வாய், நூழில், பகடு, புகர் முகம், புழைக்கை, பூட்கை, பெருமா, பொங்கடி, போதகம், மதகயம், மதமொய், மதாவளம், மந்தமா, மருண்மா, மறமலி, மாதங்கம், மாதிரம், மொய், வயமா, வல்விலங்கு, வழுவை, வாரணம், வேதண்டம், வேழம், இதனாண் - உம்பல், ஒருத்தல், களிறு, தகர், பகடு, மா. இதன் பெண் - அத்தினி, கரிணி, பிடி, வடவை. இதன் கன்று - கயந்தலை, கயமுனி, களபம், குழவி, துடியடி, போதகம், முனி, அன்றியு மலை யிற் பிறந்த யானை - கிரிசரம், ஆற்றுச் சார்பிற் பிறந்த யானை - நதிசரம், வனத்திற் பிறந்த யானை - வனசரம். யானைகட்டுந்தரி - ஆளானம், வெளில். யானைக்கச்சை - கண்டம். யானைக்கடைக்கண் - நிரியாணம். யானைக்கதுப்பு - கடம், கரடம், கவுள், கொடிறு. யானைக்கயிறு - கச்சம், கச்சை, கவடு, தூசு, புரசை, புரோசை. யானைக்களிப்பு - மதக்களிப்பு. யானைக்கூட்டத்துத்தலையானை - யூதநாதன், யூதபம். யானைக்கூட்டம் - கடகம், கடம், யூகம். யானைக்கொம்பு - எயிறு, கோடு, தந்தம். இவற்றினடி - கரீரம், இவற்றினடு - பிருதுமானம். யானைச்செல்வழி - தண்டம். யானைசங்கிலி - அந்துகம், சிறுங்கலம், நிகளம். யானைச்சுவடு - கடம், கரடம், கொடிறு. யானைச்செவி - கன்னம், தாலம். யானைதிரியுங்காடு - கரிக்காடு. யானைதுயிலிடம் - சேவகம். யானைத்துதிக்கை - கை, சுண்டம், தண்டம், தொண்டலம், தொண்டை, இதனுனியின் பெயர் - ஆழி, புட் கரம், இது விடுநீரின் பெயர் - கரசீரகம், விலாழி. யானைத்தோட்டி - அங்குசம், குடாரி, கோணம், இதன் பிடர் -இயாதம். யானைநடுச்செவி - வட்டம். யானைநிற்குங்கூடம் - ஆலயம், ஒளி, வாரி. யானை நுதற்பட்டம் - ஓடை. யானைநோய் - பாகலம். யானைபடுக்குமிடம் - வாரி. யானைப்படுகுழி - பயம்பு. யானைப்பாகரதட்டுமோசை - அப்புது, ஆது, ஐ. யானைப்பாகர் - ஆதோரணர், பண் ணுவர், வதுவர், வாதுவர், மாவுத்தர். யானைப்பிடரி - இயாதம். யானைமணி - கண்டை. யானைமதம் - கடம், கடாம், தானம்; மதமொழிந்த யானை - நிருமதம். யானைமத்தகம் - கும்பம். யானைமீன் - திமிலம், பனைமீன், பெருமீன். யானைமுகபடாம் - குழி, படம், மந்தனம். யானைமுதுகு - மஞ்சு. யானைமுன்கால் - காத்திரம், பின் காலின் பெயர் - அபரம். யானைமேற்றவிசு - இலகடம், பலகாரம். யானையுண்ணுமுணவு - அங்கதம். யானையைவிழுங்குமீன் - திமிங்கிலம், திமி, அம்மீனை விழுங்கு மீன் - திமிங்கிலகிலம். யானைவால் - தாலவட்டம், வாலதி, இதனுனி - வேசகம். யானைவாற்கீழிடம் - வெருகம். யு யுகமுடிவு - ஊழி, மடங்கல். யுத்தகளம் - களம், பறந்தலை, போர்க்களம், களரி, ஆகவபூமி, விளாகம், செருக்களம், அடுகளம், செங்களம், அமர்க்களம், மொய், படுகளம். யோ யோகம் - கூடல். யோகினி - சன்மினி, சூர்மகள். யோகினிகொடி - பேய். யோகினிவாகனம் - ஓரி. வ வகிர்தல் - துவர்தல். வசமாக்கல் - வசித்துவம், வடித்தல். வசம் - வசீகரணம், வசீகரம். வசவி - அசதி, குட்டினி, குண்டனி, குறளி, கூனி, துட்டை, தொழுத்தை, படுவி. வசனம் - ஆமரி, பாசுரம், வலந்தம், வாக்கு, வாசநம், வார்த்தை. வச்சிராயுதம் - அசனி, குலிசம், சத கோடி, சதமுனை, சம்பவம், வயிரம். வஞ்சகம் - அகாதம், கஞ்சம், கபடம், கலி, கிருத்திமம், குடிலம், குத்திரம், குய்யம், பட்டிமை, புள்ளுவம், மாயம், வஞ்சனை. வஞ்சனையாளன் - அகாதன், தூர்த்தன், நிகாதன். வஞ்சி - பிசின், வானீரம். வடக்கு - உதக்கு, உத்தரம். வடமொழி - ஆரியம், பிராகிருதம். வடமவண்ணக்கன் - குறுந்தொகை பாடியவருளொருவர். வடமொழிக்கும் பிறபாடைக்கு மொத்த மொழி - தற்சமம். வடமொழியிற்றிரிந்தமொழி - தற்பவம். வடவாக்கினி - வடவை, தீத்திரள், மடங்கல், ஊழித்தீ, கடையனல், உத்தரம். வடிவு - ஆகாரம், உரு, உருவம், சட்டகம், சநதம், செண்ணம், படி, படிவம், மேனி, வண்ணம். வடுகு - இந்தளம். வட்டம் - ஆழி, கடகம், கனம், குண்டலம், மூடிலம், கொம்மை, கோளகை, சக்கரம், சில்லி, தட்டு, திகிரி, நேமி, படலிகை, பருதி, பாண்டில், பாலிகை, மண்டலம், மல்லை, வட்டணை, வலயம், வல்லை, வளையம், விம்பம், விருத்தம், வாங்கல், குலாவல், கோட்டம், வணர், வளாவல், இவற்றுட்டிரண்ட வட்டம் - குழியம். வட்டில் - கரகம், கோரம், சகடம், சாகை, சிகரம், வள்ளம், அன்றி யுஞ் சிறுவட்டிலின் பெயர் - கிண்ணம், கிராணம். வணங்குதல் - அஞ்சலி, இறைஞ்சல், காணல், காண்டல், குரங்கல், கைகூப்பல், சலாம், தாழ்தல், தெண்டனிடல், தொழுதல், பணி தல், பரவல், பார்த்தல், போற்றல், வந்தனை, வந்தித்தல், வழிபடல். வணிகரெண்குணம் - தனிமையாற் றல், முனிவிலனாதல், இடனறிந் தொழுகல், பொழுதொடு புணர் தல், உறுவது தெரிதல், இறுவதஞ் சாமை, ஈட்டல், பகுத்தல். வண்டி - ஊர்தி, ஒழுகை, சகடம், சகடு, சகடை, சாகாடு, சாடு, பண்டு, வையம், அன்றியும் பாண் டில் பூண்டவூர்தி - சகடம், சிவிகை, வையம். வண்டியுள்ளிரும்பு - அச்சாணி, இருசு, கந்து. வண்டு - அராபதம், அரி, அளி, அறுபதம், ஈ, கரும்புள், கழுது, கள்ளூன், காமன், கீடம், கீதம், கேசரம், கேசவம், சஞ்சரிகம், சஞ்சாளிகம், சாரங்கம், சிலீமுகம், சுரும்பு, சூதம், ஞிமிறு, தும்பி, தேன், பிரசம், பிரமரம், பிருங்கம், புண்டரீகம், புள், மதுகரம், மதுக ரம், மதுபம், மந்தி, மா, மிஞிறு, மொய், வடு, வரி, வரிக்கடை. இவற்றுளாண் வண்டு - சுரும்பு, தும்பி, மதுகரம். பெண்வண்டு - தேன். வண்டுணாமலர் - சண்பகம், வேங்கை. வண்கைக்கண்சொருமருங் குமரனார் - நற்றிணை பாடியவறா ளொருவர். வண்ணப்புறக் கல்லாடனார் - அக நானூறு பாடிய புலவரி லொருவர். வண்ணார் - ஈரங்கொல்லியர், ஏகா லியர், காழியர், தூசர். வதுவைத்திண்ணை - மனை, வேதிகை, ஆரியர், மண்டிதர், பிடமர், மருத்து. வயல் - அகணி, ஆலவாலம், கம்பலை, கழனி, கைதை, கோட்டம், செய், செறு, தடி, பணை, பண்ணை, பழனம், பானல், புலம், விளை புலம், அன்றியுஞ் சிறுவயல் - குண் டில், பாத்தி, செந்நெல் விளையு நிலம் - சாலேயம். வயிடூரியம் - வாலவாயம். வயித்தியர் - ஆமாத்தியர், ஆயுள் வேதியர், பிடகர், மருத்துவர். வயிரத்தின் பெயர் - மரவயிரத்தைக் காண்க. வயிரமணி - வச்சிரம். வயிரவன் - ஆபதோத்தாரணன், ஆரியை தநயன், கருங்குதிரை யாளி, காரி, குதிரையாளி, குமரன், கேத்திர பாலன், சித்தன், ஞாளி யூர்தி, தண்டாயுதன், பச்சைச் சடையன், பவழநெடுங்குஞ்சி யோன், பிள்ளை, முடுவல் வெம் படையோன், முத்தமிழ்க்குரி யோன், முத்தலைவேலோன், முத்தன், மூர்த்திகன், வடுகன், வித்தகன். வயிரவன்வாகனம் - ஞாளி, கருங் குதிரை. வயிறு - அகடு, உதரம், குக்கி, குழி, சடாம், துத்தம், பண்டி, மடி, மேடு, மோடு, வயின். வரகு - கேகனம், குணம், கோத் திரவம். வரகுவைக்கோல் - கருவை. வரம்பின்பக்கம் - கங்கு. வரம்பு - அணை, கங்கு, குரம்பு, கூலம், கோடு, தடம், பரம்பு, பாரம், வரை, வாரம். வரால் - கயல், கெண்டை, கெளிறு. வரிசை - பதம். வருங்காரியஞ்சொல்வோர் - கருமத் தலைவர், சாக்கையர், நிமித்தர், புரோகிதர், வள்ளுவர். வருடம் - ஆண்டு, ஆயனம், சமை, தெய்வம், யாண்டு, வற்சரம். இதன் பாதி அயனம். வருணம் - சாதி, குலம், குடி. வருணன் - புனல்வேந்தன், புனற் கரசன், மேற்றிசைப்பாலன். வருத்தஞ்செய்வோன் - அருந்துதன். வருத்தந்தீர்த்தல் - அயர்வுயிர்த்தல். வருத்தம் - அணங்கு, அயர்வு, அநுகம், அவலம், ஆகுலம், ஆய்வு, உயவு, உலைப்பு, ஏவு, கசிவு, கவற்சி, கொல், தாவு, நொசி, நோய், பரி, மிகை, மிறை, வயாவு, வேதனை. வருந்துதல் - அகைத்தல், அனுங்கல், அலமரல், அலைதல், அவலித்தல், அவிதல், அழுங்கல், ஆகுலித்தல், உயங்குதல், உலைதல், ஒறுத்தல், ஓவல், கவலல், துகைத்தல், பரு வரல், பளித்தல், மிறைத்தல், அன் றியும்; வருத்தமாற்றாது நிறம் வேறாதல் - பசத்தல், பசலை. வருபிறப்பு - அம்மை. வருமுலையாரித்தி - குறுந்தொகை பாடிய வருளொருவர். வரையாடு - சரபம், வருடை. வரையாதுகொடுப்போர் - வள்ளி யோர். வலப்பக்கம் - சவ்வியம், தக்கணம், வலம். வலம்புரிச்சங்காயிரஞ்சூழ்ந்தது - பாஞ்சசன்னியம். வலம்புரிச்சங்கு - கொக்கரை, சங்கா யிரஞ் சூழ்ந்தசங்கு - சலஞ்சலம், பணிலம். வலி - அடல், அரி, ஆண்மை, ஆற்றல், இகல், ஈடு, உம்பல், உரம், உழப்பு, உறுதி, ஊக்கம், எழில், எறுழ், எண், கருமை, கலி, கூளி, கொம்மை, கொற்றம், கோள், சத்தி, சத்துவம், ஞாட்பு, தரம், தற்செல்வம், தாவு, தானம், திண்ணம், திண்மை, திறம், திறல், தீரம், துப்பு, தோற்றம், நாட்பு, நோன்மை, பம்பல், பராக்கிரமம், பாழி, பீடு, மஞ்சு, மதம், மதன், மதுகை, மல், மல்லல், மள்ளல், மறம், மரவுரம், மானம், மிடல், மீளி, முடலை, முடுகல், முரண், முன்பு, மூரி, மெய்கலம், மைந்து, மொய்ம்பு, வயம், வள், வன்மை, வாய்மை, விறல், வீரம். வலிதருதல் - ஆற்றுவித்தல், வலி யுறுத்தல். வலித்தல் - மெல்லொற்றை வல் லொற்றாக்கல். வலியழித்தல் - ஆற்றறுத்தல். வலியன் - கஞ்சரீடம், கஞ்சனம், கிகிணி, பாரத்துவாசம், வயவன். வலியினம் - வன்கனம், வல்லொற்று, வல்லெழுத்து, வலி, வன்மை. வலை - கண்ணி, கொக்கரை, சாலம். வல்லான் - சமர்த்தன், வலவை, வல்லவன், வல்லுநன், வல்லாளன். வல்லூறு - இராசாளி. வழி - அடைவு, அதர், அயனம், ஆறு, இடவை, இயவு, இயவை, உத்த ரம், ஒழுக்கம், கால், கிறி, சரி, செப்பம், செலவு, தடம், தடி, தாரி, தாரை, துறை, தெரு, நடவை, நடை, நெறி, படர், பட்டம், பதம், பதவி, பதவை, பரி, பாதை, போக்கு, மார்க்கம், வகிர், வகுந்தம், வட்டை, வகி, வயவை, வரி, வனம், வாரி, வீதி. அன்றியுமரும்வழியின் பெயர் - அத்தம், கடம், கடறு, சுரம், தும்பு, கவர் வழியின் பெயர் - கல்லை, கவை. சிறுவழியின் பெயர் - விடங்கா. நீள்வழியின்பெயர் - அளக்கர். இறங்கி யேறும்வழியின் பெயர் - படுகர். புதுவரம்பு வழியின் பெயர் - மரிசி. பழய வரம்பு வழியின் பெயர் - மஞ்சில். இடுக்கு வழியின் பெயர் - இட்டிகை. வழிச்செல்வோர் - பதிகர். வழித்தோன்றல் - வழியோன். வழிப்படுத்தல் - ஆற்றுப்படை. வழிப்பறித்தல் - அதர்கொளல், ஆறலைத்தல். வழியுணவு - சம்பளம், தோட் கோப்பு, பொதி. வழுக்குநிலம் - இழுக்கல். வளமை - செழுமை, கொழுமை, மதன், மல், மல்லல், யாணர், வண்மை, வளப்பம், வளம். வளர்தல் - உருத்திகம், திமிர்தல், திமிறல், நிமிர்தல், வளர்ச்சி, விருத்தி. வளை - சுவப்பிரம், பிலம். வளைதடி - எழு, கணையம், சுழல் படை, பரிகம், பாராவளையம், வட்டம். வளைதல் - குடிலம், கூன், கோண், கோட்டம், கோணல், குலாவல், தடவு, வசிவு, வளாவல், வாங்கல். வளைத்தல் - குளித்தல், கோலல், சூழ்போதல், திருகல், தொடுத்தல், முற்றுதல், வணக்கல், வரையறுத் தல், வலத்தல், வளாவல், வாங்கல். வளைவு - ஆவல், குடிலம், குலாவல், கூன், கோடல், கோட்டம், கோணல், கோண், தடவு, தட்டு, முற்றல், வக்கிரம், வசிவு, வணங்கல், வணர், வலந்தம், வளாவல், வாங்கல். வள்ளை - ஞானிகம், நாளிகம். வள்ளைக்கொடி - இலைக்கொடி. வறட்சுண்டி - சமங்கை. வறத்தல் - முதிர்ந்திடல், முளித்தல். வறுமை - அல்கல், இலம்பாடு, இன்மை, ஒற்கம், வீதல். வறையல் - ஒச்சை. வற்புறுத்தல் - தெருட்டல், வருட்டல். வனமல்லிகை - மௌவல். வன்பால் - குறிஞ்சி, பாலை. வன்னிமரம் - கலிசம், குலிசம், சமிதமனி. வா வாகனம் - எருது, கரி, சிவிகை, தேர், பரி, வண்டி. இவை முதலிய வற்றிற்குப் பொதுப்பெயர் - ஊர்தி, வாகனம், வையம். வாகினி - கணகம் மூன்று பங்கு கொண்டது. வாகைமரம் - சிரீடம், பாண்டில், பீரம். வாசந்தருபலபண்டம் - தகரம், தக் கோலம், கோட்டம், சாதிக்காய், இலவங்கம், ஏலம், கச்சோலம், மாஞ்சி. வாசனை - ஆவி, கடி, கந்தம், கானம், கான், கொங்கு, சுரபி, தகரம், தேம், தேன், நரந்தம், நறவம், நறவு, நறை, நாரி, நாற்றம், நானம், பச்சை, மணம், மரு, மன்றம், மன்றல், முருகு, மோதம், வசந்தம், வதுவை, வம்பு, வாசம், விரை, வெறி, அன்றியு மிகு வாசனையின் பெயர் - ஆமோதம், சுகந்தம், பரிமளம், தீய வாசனையின் பெயர் - துர்க்கந்தம், பூதி, முடை. வாசனைக்குறிப்புச்சொல் - கம்மெனல். வாசனைப்பொடி - கதம்பம், கந்தப் பொடி. வாசனைவிடுதல் - கந்தித்தல், கமழ்தல், நறவுதல், நாறல், மணத்தல். வாசிகை - சிகழிகை, படலை. வாசித்தல் - ஓதல், படித்தல், பாடல், வேதமோதலின் பெயர் - அத்திய யனம். வாச்சியப்பிரிவு - அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நான் முழவு, காலை முழவு. வாச்சியப்பொது - அரியம், இயம், கருவி, காண்டம், கோடணை, சகடை, சகண்டை, தகுணிதம், தக்கை, தடாரி, தூரியம், பறை, பீலி, மண்கணை, மேளம். இவற் றுட் பல வாச்சிய கூட்டம் - மேளம். வாச்சியமடிக்குங்குறுந்தடி - குணில். வாச்சியமுதற்கருவி - மத்தளம். வாச்சியம்வாசித்தல் - இயம்பல், கொளுத்துதல், துவைத்தல், முழக் கல். வாச்சியவகுப்பு - இடக்கை, உடுக்கை, உறுமி, தம்பட்டம், பம்பை, பேரிகை, மத்தளம், முரசு, முரடு, முழவு, இவற்றி னிடக்கையின் பெயர் - திரிகை, யாமம். உடுக்கை யின் பெயர் - இடை சுருங்கு பறை, துடி; உறுமியின் பெயர் - தண் ணுமை. தம்பட்டத்தின் பெயர் - ஆனகம், திண்டி, திண்டி மம், படகம், பணவம். பம்பை யின் பெயர் - சல்லரி, தக்கை, தடாரி, திமிலை, மல்லரி. பேரிகையின் பெயர் - தடாரி, தண்ணுமை, பதலை. முரசின் பெயர் - அழுவம், தூரியம், பணை, பெருங் கோடணை, முரசம், முழவம். முழவின் பெயர் - குடமுழா, குளிர், முழவம், முழா. அன்றியு மொருகட்பறையின் பெயர் - உடுக்கை, நிசானம், மொந்தை. வாயகன்ற பறையின் பெயர் - தலை. சிறுபறையின் பெயர் - ஆகுளி. உவகைப் பறை யின்பெயர் - தூரியம். சாப்பறை யின் பெயர் - நெய்தற்பறை, அன் றியுங் குறிஞ்சி முதலைந் திணைக் குரிய பறை - தத்தம் வரியிற் காண்க. வாடாப்பிரமந்தன் - குறுந்தொகை பாடியவரு ளொருவர். வாடல் - அனுங்கல், உணங்கல், குழை தல், சாம்பல், சுனைதல், சோரல், தேம்பல், நைதல், புலர்தல், வெம்பல். வாட்கோரை - செருந்தி. வாயலகு - சுவவு, துண்டம், மூக்கு. வாயலகு - அருநெறி, கடை, துவாரம், தூம்பு, தோட்டி, வாய், வாரி, அன்றியு நுழைவாயிலின் பெயர் - சுருங்கை, நுழை. வாயிலான்தேவன் - குறுந்தொகை பாடியவ ரு ளொருவர். வாயில்காப்போர் - வாயிலாளர், வாயிலோர். வாயினுட்கீழ்வாய் - அணல், மேல் வாயின்பெயர் - அணம், அணரி, அண்ணம். வாய்க்கால் - கால். வாரம் - கிழமை, வாசரம். வாரல் - கவரல், கொளல், வெளவல். வாருகோல் - அலகு, சோதினி, துடைப்பம், மாறு. வாருதல் - கவர்தல், கொழித்தல், கொள்ளல், தெள்ளுதல், வரன்றல், வளைத்தல், வார்தல், வெளவல். வார் - கச்சம், வகிர், வள். வாலின்கீழிடம் - வெருகம். வால் - இலாங்கூலம், உலோமம், கூலம், தோகை, புச்சம், வாலகம், வாலதி, வேசகம். வாவல் - அஞ்சலிகை. வாழை - அம்பணம், அரம்பை, ஓசை, கதலி, கவர், சேகிலி, திரெணபதி. வாழ்த்து - ஆசி, ஆசிடை, கைவாரம், சோபனம், பல்லாண்டு. வாழ்நாள் - ஆயுகம், ஆயுள், உறை. வாளின்முட்டி - பாலிகை. வாளுறை - வள். வாள் - அசி, உவணி, ஏதி, கடுத்தலை, கடகம், கண்டகம், கரவாளம், கரவாள், சாயகம், தூவத்தி, நவிரம், நாட்டம், நாந்தகம், புட்கரம், மட்டாயுதம், வசி, வஞ்சம், வள், வேணு. அன்றியும் வளைந்த வாளின் பெயர் - கோணம், சிறுவாளின் பெயர் - கண்டம், குறும்பிடி, சுரிகை, பத்திரம். வாள்வகை - நாந்தகம். வானம்பாடி - கம்புள், கலிங்கம், காருணி, சாதகப்புள், தற்பாடி, மேகப்புள். வானவில் - இந்திரதனு. வான்மீகி - பிராசேதசன், வாமலூருத நயன். வான்மீன் - உடு, உற்கை, ஒளி, சிதம், சுக்கை, சோதி, தாரகை, தாரா, தாரை, பம், மீன். அன்றியும் அசுவினி முதலிருபத்தேழுக்கு நாளென்று பெயர். வான்மீன்வகை - புச்சம். வி விசாகநாள் - அனிலநாள், காற்று, முந்துநாள், சுளகு, சேட்டை, முறம், முற்றில், வைகாசி. விசி - அரி. விசிறி - கால்செய்வட்டம், சாந் தாற்றி, சிற்றாலவட்டம்,சிவிறி, தாலவிருந்தம், பீலி, விசனம், வீசனம். விசுவாமித்திரன் - காதிமைந்தன், கௌசிகன். விடம் - ஆலம், ஆலாலம், கடு, கரம், கரளம், காரி, காளகூடம், காளம், நஞ்சு. விடர் - கல்லளை. விடியல் - உதயம், காலை, புலரி, வைகல், வைகறை. விடுதல் - உகுத்தல், செலவிடல், தும்மல், துவைத்தல், நியதுதல், பொய்தல், மாறல், விடை, வியோகம். விடுத்தல் - உயிர்த்தல், ஒக்குதல், தீர்தல், நிவாரணம், நீக்கல், மோக்கம், மோசனம், வாரணம், விடை, வீடு. விடுந்தலைப்பு - குஞ்சம், கஞ்சம். விட்டகுதிரையார் - குறுந்தொகை பாடிய புலவரு ளொருவர். விட்டிற்பறவை - சலாபம், பதங்கம். விட்டுணு - அச்சுதன், அரவணைச் செல்வன், அரி, அரிந்தமன், அறிது யிலமர்ந்தோன், அனந்தசயனன், இராமலிங்கதாபிதன், உந்திபூத் தோன், உபமன்னிய சீடன், உவண கேதனன், கடல் வண்ணன், கமலக் கண்ணன், கரியன், கருடகேதனன், கேசவன், கொண்டல் வண்ணன், சக்ரபாணி, சக்கராயுதன், சக்கிரி, சங்கமேந்தி, சநார்த்தனன், சம்பு, சலசலோசனன், சாரங்கபாணி, சீதரன், சௌரி, திருநாதன், துழாய் மௌலி, நாரணன், நாராயணன், நெடியோன், பச்சை, பஞ்சாயுதன், பதுமநாபன், பாசுபதவிரதன், பிரமன்றாதை, பிருந்தாவனன், பிறப்பிலி, பின்னை, கேள்வன், பீதாம்பரன், பூமிகொழுநன், பெம்மான், பெருமாள், மாதவன், மாயன், மால், முகுந்தன், முண்ட காசனை கேள்வன், வலவன், வனமாலி, வாசுதேவன், விண்டு, வேலையிற் றுயின்றோன், வைகுந் தநாதன், அன்றியும் முதலவதா ரத்தி லெடுத்தபெயர் - மச்சம் இஃது சோமுகாசுர னென்பவன் பிரமன் கரத்திலிருந்த வேதங் களையெல்லாங் கவர்ந்து கடலி லொளித்த போது தேவர்கள் யாவருஞ் சிவபெருமானிடஞ் சென்று முறையிடவவர் திரு மாலைவிளித்து அவனைச் கொன்று வேதத்தைக் கொடுத் திடுக வென்று ஆஞ்ஞாபித் தருள, கமலக்கண்ணன் அதனைச் சிர மேல் வகித்துச் சென்று மச்ச வடிவு கொண்டு கடலுட்புக்கு சோமு கனைக் கடிந்து வேதங் கொடுத் தனன் என்க. இரண்டாமவதாரத்திலெடுத்த பெயர் - கூர்மம், இஃது தேவர்களும் அசுரர்களும் யுத்தஞ்செய்து ஒவ் வொருவர் பக்கத்தும் அநேகரிறந் தமையால் திருமாலிடஞ் சென்று முறையிட அவர் அமிர்தமுண் டால் சாவாது நெடுங் காலஞ்சமர் செய்யலாமென்று மந்தர மலையை மத்தாகவும், சந்திரனை அடை தூணாகவும், வாசுகியைக் கயி றாகவுஞ் செய்து, அசுரர் ஒரு பக்கத்தும் தேவரொரு பக்கத்தும் பிடித்துக் கடையத் தாம் ஆமை ரூபமாகி மந்தரமலை கீழ் மேல் பக்கங்களிற் சரிந்தும் ஆழாதும் மேற்போகாதும் நிலை நிற்றற் பொருட்டுத் தாங்கிக் கடை வித்துப் புதுசந்நிதிக்க ணெழுந் தருளு மெந்தையாகிய கந்தனா தனது தந்தையாகிய சிவபெரு மானது திருவருளால் ஆல முத லிய துன்பங்களினின்று நீங்கிய முத்தனத்தன ரென்க. மூன்றாமவதாரத்திலெடுத்தபெயர் - வராகம்; இஃது இரண்ணியாக்ஷ னென் பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிப் பாதலத்தி லொளிப்ப, அவனைக் கொன்று அதனை முன்போனிறுத்தற்காக எடுக்கப் பட்டது. நான்காமவதாரத்திலெடுத்தபெயர் - நரசிங்கம்; இஃது இரணியனைக் கொல்லுவதற்காக எடுக்கப் பட்டது. ஐந்தாமவதாரத்திலெடுத்தபெயர் - வாமனன்; இஃது மாவலியை வஞ்சித்துக் கொல்லுதற்காக வாமன ரூபமாய்ச் சென்று மூவடி மண் யாசித்துப் பின்னர் வஞ்சனை யாய் விக்கிரம வடிவெடுத்து உலகளந்தவனையு மடக்கியது. இந்திராவரசன், உலகளந்தோன், திரிவிக்கிரமன். ஆறாமவதாரத்திலெடுத்தபெயர் - பரசுராமன்; இஃது பூமியிலுள்ள அரசர்களை யெல்லா மழித்தற் காகக் கோடரி யாயுதங் கொண்டு பிறந்தது. ஏழாமவதாரத்திலெடுத்த பெயர் - இராகவன், இராமன், காகுத்தன்; இஃது பல்வளம் படைத்து இலங் கும் இலங்காபுரிக்க ணிருந் தரசாளும் இராவணனைக் கொன்று தன்றேவியையு மீட்டுத் தேவர் துயரையுந் தீர்த்தற்காகத் தசரதன் மனையாள் வயிற்றிற் றரித்துப் பிறந்தது. எட்டாமவதாரத்திலெடுத்தபெயர் - பலபத்திரராமன், குண்டலன், முதலியன; இஃது பாரத யுத்த பலத்திற்காகத் தோன்றியது. ஒன்பதாமவதாரத்திலெடுத்தபெயர் - அலகை முலையுண்டோன், உல குண்டோன், கண்ணன், கிருட் டிணன், கோவிந்தன், தாமோ தரன், தேவகி மைந்தன், நந்தணந் தனன், பஞ்சவர் தூதன், புத்தன், மதுசூதனன், முராரி; இஃது தன் றேவியாகிய பூமி மடந்தை பாரம் பொறுக்காது வருந்தி யிரக்க அது தீர்த்தற்காக வசு தேவன் மனை யாள் தேவகி வயிற்றிற் சேர்ந்து பிறந்து பாண்டு புத்திரரையும் திருதராட்டிரன் மைந்தர்களை யுஞ் சேர வொட்டாது பகைக்கச் செய்து போர் விளைத்துப் பாரந் தீர்ப்பிப் பான் எடுக்கப்பட்டதாம். பத்தாமவதாரத்திலெடுத்தபெயர் - கற்கி அயக்கிரீவன்; இஃது கலியுக வந்தத்திலே தருமங்க ளெல்லா முறை பிறழும்போது சிவபெருமான் றிருவருளால் குதிரை முகமுடையவ வீரனாய்ப் பிறந்து அவைகளை நிலை நிறுத் தற்காக எடுக்கப்படுவது. இப் பத்துப் பிறப்பும் பிருகு முனிவர் சாபத்தால் கிடைக்கப் பெற்ற தென்பது உண்மை நூற்றுணிபே யாம். விட்டுணுவின்குரு - உபமன்னிய முனிவர், திருநந்திதேவர். விட்டுணுகூத்து - அல்லியம், குடம், மரக்கால், மல். விட்டுணுகொடியும்வாகனமும் - கருடன்; பஞ்சாயுதம், சக்கரம், சங்கு, தண்டு, தனு, வாள்; இவற்றுட் டணுவின் பெயர் - சாரங்கம். விட்டுணுசமயத்தர் - பாகவதர், வைணவர். விட்டுணுபதம் - வைகுண்டம், வைகுந்தம். விட்டுணுபதினைந்தவதாரம் - சனகன், சனந்தனன், சனாதன், சனற் குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்கிரீவன், தத்தாத்திரயன், மோகினி, வேள்வி யின்பதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன். பலராமனொழிய மற்ற மூர்த்தங்களைப் புத்தனென்று சொல்லப்படும். விட்டுணுபத்தவதாரம் - மச்சம், கூர்மம், வராகம், நாரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலபத்திர ராமன், கண்ணன், கற்கி. விட்டுணுபூசித்தலம் - திருமாற்பேறு, திருவண்ணாமலை, திருத் தணிகை, காஞ்சி, இராமேச்சுரம், கதிர்காமம், சிதம்பரம் முதலி யனவாம். விட்டுணுமனைவிகள் - இலக்குமி, பூமிதேவி, புதல்வர் பெயர் - பிரமன், மன்மதன்; அன்றியுமிரா மாவதாரத்தி லிவனுக்கு மனைவி - சீதை; புதல்வர் குசன், இலவன்; அன்றியு மிவன் மோகினியாகிக் கையிலேந்திய சிவன் இந்திரியத் தாற் பிறந்த பிள்ளை - ஐயனார். விட்டேறு - கோல். விண்ணோரூண் - அமிழ்து, அவி, சரு, பலி. விண்மீன் - உடு, தாரகை, உற்கை, கணம், சுக்கை, நட்சத்திரம், பம். விதை - காழ், பரல், பீசம், வித்து, விரை. விதவைபெற்றபிள்ளை - கோளகன். விதிமுறை - நியமம். விதூடகக்கூத்து - நகைத் திறமுடை யது, வசைக்கூத்து, வசை. இத னிலக்கணத்தை ‘பல்வகை யுருவ மும் பழித்துக் காட்ட - வல்லனா தல் வசை யெனப்படுமே’ என் னுஞ் சூத்திரத்தான் அறிக. விதூடகக்கூத்தின்வகை - வேத்திய லாடல், பொது வியலாடல். வித்தாரகவிவகை - மும்மணிக் கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, மடலூர்தல், இயல், இசை, நாடகம், பல்வகைக் கவி, கூத்து, கிரீடை, பாடாண்டத் துறை, வகுப்பு, விருத்தக்க விதை யிவை முதலியவற்றை விரித்துப் பாடுவதாம். வித்தியாதரருலகு - சேடி, சேணி. வித்தியாதரரிடம் - சேணி, யாணர் நகர், விஞ்சைப்பதி. விநாயகமூர்த்தம் - சிந்தாமணி, விநாயகர், விக்கினராசர், வக்கிர துண்டர், பாலசந்திரர், கஜானனர், மல்லால ரெனவந்த மயூரேசர், தூமகேது, உடுண்டி விநாயகர், துண்டிராசர், மகோற்கடர், வல் லபை கணேசர், கணேசர் என வருவனவாம். விநாயகன் - அங்குசபாசமேந்தி, அம்பிகை தநயன், அரிமருகன், ஆகுவாகனன், இறைமகன், ஈசன் மைந்தன், ஏகதந்தன், ஏரம்பன், ஐங்கரன், ஒற்றைக்கொம்பன், கங்கை பெற்றோன், கணபதி, கயமுகன், கரிமுகன், கவுரி சேயன், காமன் மைத்துனன், நால்வாயன், பாசாங்குசன், முக்கண்ணன், முன் னோன், மூத்தோன், விக்கினேச் சுரன். விநாயகன்சத்திகள் - சித்தி, புத்தி, வல்லபை. விநாயகன்வாகனம் - பெருச்சாளி. விநோதக்கூத்து - குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பர். இவற்றுள் குரவை யென்பவை முன்னுரைத் தாம், கலி நடமென்பது கழாய்க் கூத்து. குடக் கூத்து - பதினோ ராடலு ளொன்று. கரணமாவது படிந்தவாடல். நோக்கென்பன பாரமும் நுண்மையும் மாயமு முதலாயினவற்றையுடையது. தோற்பாவை யென்பது தோலாற் பாவை செய்து ஆட்டுவிப்பது. ஏனைய முன்னர்க் காண்க. விநோதக் கூத்துக்கிரியை - சரிகை, புரிகை, சமகவி, திரிகை, ஊர்த்துவ கலிகை, பிருட்டகம், அர்த்த பிருட்டகம், சுவத்திகம், உல்லோ லம், குர்த்தனம், வேட்டனம், உப வேட்டனம், தானபதப்பிராய விருத்தம், உnக்ஷபணம், அவnக்ஷ பணம் நிகுஞ்சனம் என்னும் பதினாறுமாம். விநோதக்கூத்துக்கை - சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்பிர கீர்ணம், அடுத்தரேசிதம், அராள கடகாமுகம், ஆவித்த வத்திரம், சூசீமுகம், இரேசிதம், உத்தான வஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசந்தம், இலதை, கரிக்கை, பக்கவஞ்சிதம், பக்கப் பிரதியோகம், கருடபக்கம், தண்டபக்கம், ஊர்த்துவ மண்டலி, பக்கமண்டலி, உரோமண்டலி, உரப்பர் சுவார்த்த மண்டலி, மூட்டிகச் சுவத்திகம், நளினீபதும கோசம், அலபதுமம், உற்பணம், இலளிதை, வலிதை என்னுமுப் பதுமாம். இவை சுத்தானந்தப் பிரகாச நூலிற் காணப்பட்டன. விநோதர்கூத்துநிலை - வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம். விநோதக்கூத்துப்பாதம் - சமநிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், கிஞ்சிதம். விநோதக்கூத்து வருத்தனை - அப வேட்டிதம், உபவேட்டிதம், வியா வார்த்திதம், பராவர்த்திதம். விந்தம் - வெள்ளவகையி னொன்று, சங்கம் எட்டுப்பங்கு கொண்டது. விபூதி - ஏமம், ஓமப்பொடி, காப்பு, திரு நீறு, பூதி, விசிதம். விப்பிரயோகம் - பெருமூச்செறிந்து வருந்துதல். வியாசன் - கிருட்டிணன், துவை பாயனன், பராசரன்மைந்தன், புலத்தியன், வாதராயணன், சுகர் தாதை, சனற்குமார சீடன். வியாழம் - அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பன், குரு, சிகண்டிசன், சீவன், சுரர் குரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகற்பதி, பீதகன், பொன், மறை யோன், வேதன், வேந்தன். வியானவாயுவின்குணம் - போக்கு வரவு செய்து இயங்கப் பண்ணு வது. வியானவாயு - சரீரமுழுதும் வியா பித்து நிற்பது. விரணத்தழும்பு நீக்குமருந்து - சமன் கரணி. விரலிறை - தோரை, பிறங்கு, பொறி, வரிவரை. விரல் - அங்குலி, இவற்றுட் பெரு விரல் அங்குட்டம்; சுட்டுவிரல் தர்ச்சணி, நடுவிரல்மத்திமை, அலி, பேடி; அணி விரல் அநாமிகை; பவித்திர விரல் கடைவிரல், கனிட்டை. விரிதருதோகை - மேசகம். விரிதூறு - அதிரல். விரித்துரை - பதவுரை, கருத்துரை, தொகுத்துரை முதலிய பகுதிப் பொருளை யுடையது. விரிமலர் - இகமலர், தொடர்ப்பூ, வெதிர். விரிவு - அகலம், இடம்பாடு, விசாலம், விபுலம், வியன். விருச்சிகவிராசி - தெறுக்கால், தேள், பறப்பன். விருந்து - மகமுறை. விருப்பம் - மாதர், காதல், வயாவு, வேட்கை, ஆதரவு, ஆசை, அவா, ஆர்வம், நச்சு, நசை, விழைவு, நயப்பு, காமம், இச்சை, பெட்பு, மோகம், எட்டை, வெப்பம், பற்று, விழுப்பம், வீழ்த்தல், இவர்தல், கவர்தல், வேண்டல், பேணல், வேட்டல், வெஃகல், தாழ்தல். விரைவு - கதழ்வு, வல்லை, ஒல்லை, கடுகல், கடுப்பு, தாரை, துணைவு, நொறில், விசை, முடுகல், வேகம். விரைவுக்குறிப்பு - ஐயெனல், கது மெனல், நொய்தெனல், பொருக் கெனல், பொள்ளெனல். விரைவுவகை - கவனம், துரிதம். விலக்குறிப்பு - பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல் வகை, வண்ணம், வரி, தேசம், என்னும் பதினான் குமாம். அவற் றுள்:- பொருள் நான்கு வகைப் படும். “அறம் பொருளின்பம் வீடெனநான்குந் - திறம்படுபொரு ளெனச் செப்பினர் புலவர்” என்றார் மதிவாண னாராகலின். இவை நாடகத்திற் பிரிந்துங் கூடியும் வருமிடத்துப் பெயர் வேறுபடும். அவையாவன: - நாடகம், பிரகரணப் பிரகரணம், பிரகரணம் அங்கமெனப் பெய ராம். யோனி நான்கு வகைப்படும், உள்ளோன் தலைவனாக உள்ள தோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் றலைவனா கவுள்ள தோர் பொருண்மேற் செய்தலும், உள்ளோன்றலைவனாக வில்ல தோர் பொருண்மேற் செய் தலும், இல்லோன் றலைவனாக வில்ல தோர் பொருண் மேற்செய்தலு மாம். சந்தி - முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தலென வைந்தாம். சுவை - வீரச்சுவை, பயச்சுவை, இழிப்புச் சுவை, அற்புதச்சுவை, இன்பச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவை, நடுவு நிலைச்சுவை, உருத்திரச்சுவை யென ஒன்பதாம். குறிப்பாவது - சுவையதன் கட் டோன்றுவது. சத்துவம் - மெய்ம்மயிர் பொடித்தல், கண்ணீர் வார்தல், நடுக்கமடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனப் பத்துவகைப் படும். வண்ணம் - பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணமென மூவகைத்து. வரி - கண்கூடுவரி, கானல்வரி, உள் வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சி வரி, காட்சிவரி, எடுத்துக் கோள் வரியென வெட்டு வகைப்படும். சேதம் - ஆரியம், தமிழென விரு வகைப்படும். ஏனைய முன்னு ரைத்தாம். விலங்கினாண் - கலை, கடுவன், களிறு, போத்து, பகடு, சே, ஒருத் தல், தகர், ஐறு, உம்பல், எட்டை, மா, ஓரி, சேவல். விலங்கினுட்கொம்பிலாவிலங்கு - குமரம். விலங்கினுளிலைநுகர்விலங்குணவு - குளகு. விலங்கின்கூட்டம் - கணம், குலம், சாலம், யூகம், வியூகம், விருந்தம். விலங்கின்கொம்பு - உலவை, கோடு, சிருங்கம், மருப்பு, விடாணம். விலங்கின்படுக்கை - சேக்கை, பட்டம், பணை, பண்ணை, பாழி, போத்து. விலங்கின்பிள்ளை - குருளை, குட்டி, பறழ், பிள்ளை, மறி, கன்று, குழவி, பார்ப்பு, மகவு. விலங்கின்பொது - குரங்கம், மா, மான், மிருகம். இவற்றினாண் பொதுப்பெயர் - ஆண், பெண் பொதுப்பெயர் - பிணவல், பிணா, பெண். விலங்கின்வகுப்பு - அணில், ஆடு, குறும்பாடு, செம்மறியாடு, வெள் ளாடு, எருது, எருமை, எலி, காரெலி, ஒட்டகம், கத்தூரிப் பிள்ளை, கரடி, கவரிமா, கழுதை, கோவேறு கழுதை, காட்டா, கீரி, குதிரை, குரங்கு, சிங்கம், நரி, நாய், செந்நாய், நீர்நாய், நாவிப் பிள்ளை, பசு, பன்றி, முட்பன்றி, புலி, புல் வாய், பூனை, பெருச் சாளி, மரை, மான், முசு, முயல், மூஞ்சூறு, யாளி, யானையும் பிறவும், இவை தத்தம் வரியிற் காண்க. விலங்கின்வால் - தோகை, வாலதி, கூலம், வேசகம், இலாங்கூலம். விலங்கின்வாற்கீழிடம் - வெருகம். விலங்குதுயிலிடம் - பாழி, பண்ணை, பணை, பட்டம், போத்து, சேக்கை. வில் - கார்முகம், கொக்கரை, கொடு மரம், கோதண்டம், சராசனம், சாபம், சானகம், சிந்துவாரம், சிலை, தடி, தவர், தனு, துரோ ணம், முனி, வேணு; அன்றியுஞ் சிவன் வில் - பினாகம், திருமால் வில் - சாரங்கம், அருச் சுனன் வில் - காண்டீபம். வில்லின்குதை - குலை, தாறு. வில்வமரம் - கூவிளம், கூவிரம், கூவிளை, மாலூரம், மாவிளம், வில்லுவம். விவாகமில்லான் - பிரமசாரி. விவாகம் - உபயமம், கடி, கலியா ணம், கைப்பற்றல், தீவலஞ் செய் தல், பரிணயம், மங்கலம், மணம், மன்றல், வதுவை, வரைவு. விதி யுளி, வேட்டல். விழல் - விரணம். விழுக்கு - விளர், நிணம், கொழுப்பு. விழுக்குவகை - நெய், வழும்பு. விழுங்கல் - நுகர்தல், நுங்கல், கொண்டல். விழுதல் - சோர்தல், நாலல், வீழ்தல். விளக்கு - இராவணம், ஒளி, சுடர், தீபம், தீபகை. விளக்குத்தண்டு - கம்பம், கௌசிகம், சுடர்நிலை, தளி, தீபமத்திகை, மல்லிகை. விளரிப்பாலைவகை - விளரிகுரலாவது. விளாமரம் - கபித்தம், விளவு, வெள்ளில். விளையாட்டு - ஆடல், இலீலை, உண்டாட்டு, உப்பு, ஓரை, கிரீடை, கெடவரல், கேலம், கேளி, தகுளம், தொடலை, பண்ணை, விலாசனை. இவற் றுண் மகளிர் விளையாட்டு - உண்டாட்டு, உப்பு, ஓரை, கெட வரல், தொடலை, பண்ணை, பொய்தல், வண்டல். விளையாநிலம் - களர், சவர். விளைவு - போகம், வளாவல். விளைவுச்சந்தியிலக்கணம் - கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண் டிட்டுக்காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது. விறகு - இந்தனம், ஈமம், கட்டை, காட்டம், முருடு, முளரி, அன்றியு மோமவிறகின் பெயர் - சமிதை, முளரி. விற்குதை - குலை. விற்பிடிக்கை - சுட்டுவிரல், நடுவிரல், அநாமிகைவிரல், சிறுவிர லென் னுமிவை சேர்ந்து உள் வளையப் பெருவிரல் வேறாய் நிமிர்ந்து நிற்பது. விற்றல் - கூறல், கொடை பகர்தல், மாறல், விலை. விற்படித் தம்பினை யெய்வார்க்குரிய நிலை - பைசாசம், மண்டிலம், ஆலீடம், பிரத்தியாலீடம். இவற் றுள் ஒருகால் நிலைநின்று ஒரு காலை முடக்கல் பைசாசம். இருகாலும் பக்கல் வளையமண்டி லித்தல் - மண்டிலம். வலக்காலைமண்டிலித்து இடக்காலை முன்வைத்தல் - ஆலீடம். வலக்காலைமுன்வைத்து இடக்காலை மண்டிலித்தல் - பிரத்தியாலீடம். வினதைநகர் - கோலம். வினாவலுக்கெதிர்மொழி - விடை. வினாவலும்விடையுங்கூடல் - சல்லாபம். வினாவல் - கடாவல், வினவல். வினாவிடைவகை - அறிதல், அறி யாமை, ஐயுறல், கொளல், கொடை, ஏவுதல், என்பன வினா வகை. இவற்றிற்கு உதாரணம் - ஆசிரி யன் “இச் சூத்திரத்திற்குப்பொருள் யாது?” என்பது அறிவினா; மாணாக்கன் அங்ஙனஞ் சொல் வது அறியாவினா. குற் றியோ மகனோ என்பது ஐய வினா. பயறுளதோ வணிகீர் என்பது கொளல்வினா. சாத்தனுக் காடை யில்லையா என்பது கொடை வினா. சாத்தாவுண்டாயா என்பது ஏவல்வினா. சுட்டு, எதிர் மறுத் தல், உடன் படல், ஏவுதல், எதிர் வினாதல், உற்ற துரைத்தல், உறுவது கூறல் இனமொழி என்பன விடை வகை. இவற்றிற்கு உதாரணம்; - தில்லைக்கு வழியாது என்புழி இது என்பது சுட்டு, சாத்தாவிது செய்வாயா என்றபோது செய் யேன் என்பது மறைவிடை, செய்வே னென்பது உடன்படல், நீ செய் என்பது ஏவல்விடை செய் வோனோ என்பது வினா விடை, உடம்பு நோவா நின்றது உற்ற துரைத்தல் விடை, உடம்பு நோம் என்பது உறுவது கூறல், மற்றையது செய்வேன் என்பது இனமொழி விடை. வினாவெழுத்து - ஆ, எ, ஏ, ஓ, யா. வினை - கருமம், தொழில், விதி, பணி, வினையம், செயல். வீ வீசுதல் - ஓச்சல், எறிதல், செல விடல். வீடு - அகம், அகாரம், அரண் மனை, இடம், இடவகை, இல், இல்லம், உறையுள், கிருகம், குலம், கேகம், கோவில், சதனம், சரணம், சேர்பு, தாமம், நகர், நியாயம், நிகேதனம், நிசாந்தம், நிவேசனம், பதி, பவனம், பாத்தி, புக்கில், மந்திரம், மனை, மாடம், மாளிகை, வசதி, வயின்; இவற்றுட் பார்ப்பார் வீடு - அகாரம். வீட்டிறப்பு - இறவு, இறை, வளவி, தாழ் வாரத்தின் பெயர் - ஆரோ கணம், சோபானம். வீட்டின் மேலுலாவும்வெளி - அரமியம், நிலா முற்றம். வீட்டுத்திரம் - தூலம், அன்றியுஞ் சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரத்தின் பெயர் - சுற்றுவாரி, தாழ், துடை, முகடு, விடங்கம். வீட்டுமன் - கங்கைமைந்தன், காங்கேயன், சந்தனுமுன்மகன், தாலகேதனன், தெய்வவிரதன், பிரமசாரி, வன்னி, வீரன், மூதாதை. வீணைக்கருவி - கலம், கின்னரம், கோடவதி, கோட்டம், தண்டு, மாடகம், வல்லகி, விபஞ்சிகம், அன்றியு நிரைநரம் புள்ளது பண்; குறைநரம் புள்ளது திறம்; ஏழு நரம்புள்ளது இன்னிசை. வீணைமுறுக்காணி - குப்பி, மாடகம். வீணையினரம்பு - குரல், கோல்தந்திரி, நாடி, இவை யெழுவகைப்படும் - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். வீணைவலிக்கட்டு - திவவு. வீணைவாசித்தல் - கொளுத்துதல், தடவல், மீட்டுதல். வீதி - செப்பம், ஞெள்ளல். வீதியிற்கட்டியகொடி - விடங்கம். வீமன் - இடும்பிகொழுநன், கதா யுதன், கீசகாரி, குந்திபுதல்வன், பகாசுரவயிரி, பாண்டு புத்திரன், மடங்கற் கொடியோன், மாருதி, வாயுமைந்தன், விருகோதரன். வீரபத்திரன் - அழற்கண்வந்தோன், உக்கிரன், உமைமகன், ஐங்கரற் கிளையோன், குரோதன், சிங்கத் தோலுடையோன், சிம்புளா னோன், சிறுவிதி மகஞ்சிதைத் தோன், சுடர்விழியோன், செக்கர் வானிறத்தோன், தக்கன் மகஞ் சிதைத்தோன், பத்திரை கேள்வன், யானைமுகவற்கிளை யோன், வெஞ்சிலைச் செல்வன். வீரம் - சாகசம், சூரம், சேவகம், சௌரியம், பராக்கிரமம், புறம், மறம், விறல், வீரியம். வீரரின்பெயர் - படைவீரரைக் காண்க. வீழி - விழிமி. வீழ்த்தல் - இகுத்தல், விழுத்தல். வெ வெகுண்டோனவிநயம் - மடித்த வாயும் மலர்ந்த மார்புந் துடித்த புருவமும் சுட்டிய விரலும் கன்றிய வுள்ளத்துடன் கைபுடைத்தலு மன்ன நோக்கு முடைத்தலாம். வெகுவிதம் - நானாவிதம், விவிதம். வெட்கம் - இருளி, இலச்சை, உட்கல், உட்கு, சமழ்த்தல், சமழ்ப்பு, நாணம், நாண், மறுத்தல், மானம், வட்கல், வெள்கல். வெட்சி - குல்லை, சிந்தூரம், செச்சை, சேதாரம். வெட்டல் - இறுத்தல், எருக்குதல், எறிதல், எற்றல், கடிதல், கண்டித் தல், காய்தல், சேதித்தல், தடிதல், தண்டித்தல், தறித்தல், துணித்தல், துண்டித்தல், துமித்தல், பகுத் திடல், பரிதல். வெட்டிவேர் - இருவேலி, பீதகம், மூலகந்தம், வேரி. வெட்பமாலைமரம் - கிரிமல்லிகை, குடசம். வெண்கடுகு - ஐயவி, கடிப்பகை, சித்தார்த்தம். வெண்கலம் - உறை, கஞ்சம், தாரம். வெண்காந்தள் - காந்துகம், கோடம், கோடை. வெண்காயம் - காயம், அன்றியும், வெள்வெண்காயம் - அரிட்டம், இலசுனம், உள்ளி, ஈரவெண் காயத் தின் பெயர் - சுகாந்தம், பலாண்டு. வெண்குடை - கவிப்பு, கவிகை, ஆத பத்திரம், குளிர், தொங்கல், சத்தி, சத்திரம், பிச்சம். வெண்ணெய் - ஐயங்கவீனம், நவநீதம், வெண்கட்டி. வெண்ணெய்தல் - குமுதம். வெண்ணொச்சி - சிந்துவாரம், நீர்க் குண்டி. வெண்பா - முதற்பா, வெள்ளை, இதற்கிராகம் - சங்கராபரணம். வெண்மணல் - வாலுகம். வெண்மை - அரிணம், அருச்சுனம், அவதாரம், கம், கவுரம், குருகு, குருத்து, சிதம், சுக்கிலம், சுசி, சுதை, சுப்பிரம், சுவேதம், தவளம், நரை, பாண்டரம், பாண்டு, பாண் டுரம், பால், வால், விசதம், விளர், வெளிறு, வெள்ளி, வெள்ளை, அன்றியுஞ்சிறியதாய வெண்மை யின் பெயர் - தூசரம். வெம்மை - அழல், அழனம், உருப்பம், உருமம், கருமம், கோரம், வெப்பம். வெயில் - ஆதபம், ஊழ், எல், என்றூழ், ஒளி, கோடை. வெளி - செண்டு, மன்றம், மன்று, வயல், வெடி, வெள்ளிடை. வெளிப்படல் - மன்றுபடுதல். வெள்ளம் - ஓதம், நீத்தம், பிரளயம், பெருக்கு, வாரி; இதனோட்டம் - கோலம். வெள்ளரி - உருவாரம். வெள்ளாடு - காராடு, கொச்சை, பள்ளை, வற்காலி, வெள்ளை; இதன் குட்டி - வெள்ளை. வெள்ளாட்டுக்கடா - உதள், சகலம், சாகம், செச்சை, மோத்தை. வெள்ளி - அசுரமந்திரி, உசனன், பார்க்கவன், சுக்கிரவன், சுங்கன், கவி பளிங்கு, புகர், மழைக்கோள். வெள்ளி - இரசிதம், ஈனனம், களத வுதம், தாரம், துருவண்ணம், வங்கம், வெண்டாது, வெண்பொன். வெள்ளைநாரை - சாரசம். வெறியாட்டாளன் - முருகன், வேலன். வெறியாட்டு - அணங்கு, கழங்கு, வெறி, வெறுப்பு, அயர்வு, அரதி, அவாப்பு, மை, உவட்டல், உவர்த் தல், உவவினர், ஒல்லாமை, காய்ப்பு, கைத்து, துல்வாமை, பிறழ்தல், பொருந்தாமை, மா, முனைவு, வீறு, வேண்டாமை. வெற்றி - அடல், ஆடு, ஆணை, குடுமி, கொற்றம், சயம், படினம், புகல், முல்லை, வலன், வாகை, விசயம், விதர்ப்பு, விறப்பு, விரல், வெற்றம், வென்றி. வெற்றிப்பூ - பூளை. வெற்றிமாலை - வாகை. வெற்றிலை - தாம்பூலம், திரையல், தும்பை, மெல்லிலை. வெற்றிலைக்கொடி - இலைக்கொடி, தாம் பூலவல்லி, தாம்பூலி, நாக வல்லி. வெற்றிலைமூக்கறிகத்தி - குளிரி, குளிர். வென்றிக்கூத்து - அஃதாவது பகை வனொடுக்கத்தையும், பாட்டு டைத் தலைவனாய் மன்னனின் உயர்வையும் மேற்படக் கூறுவ தாம். வே வேகமுள்ளோன் - கவனன். வேங்கைமரம் - கணி, திமிசு, திமில், பிரசாரம். வேசி - கணிகை, சூளை, பயனிலாள், பரத்தை, பொதுமகள், பொருட் பெண்டு, வரைவின்மாது, விலை மகள், வேசை. வேடர் - ஆவியர், கானவர், கிராதர், குறவர், குன்றவர், கூளியர், கொலைஞர், சவரர், சிலவர், சில்லர், தீயர், பாவ மூர்த்திகள், புல்லர், புளிஞர், பொறையிலார், மறவர், மாகுலவர், முருடர், வனசரர், வியாதர். வேடர்வீதி - பக்கணம், வாடை. வேங்கடமலை - தமிழ் நாட்டு வட வெல்லை, அறுமுகன் பொருப்பு, நாகவரை, திருமலை, திருப்பதி, சுப்பிரமணியதலம். வேட்கைப்பெருக்கம் - மோகம், நம்பல், இரதி, வெஃகல், தாழ்தல், கவர்தல், பெட்டல், சார்பு, இவறல், வேண்டல், வீழ்தல், வேணவா. வேட்டை - ஆகேடகம், பாபத்தி. வேண்டல் - இரதி, நேர்தல். வேதகாரர் - பொருந்தர், கூடை முதலியவை பின்னுவோர். வேதத்தின்ஞானபாகை - ஆரணம். வேதநூலுரைப்போன் - அத்தியாபகன். வேதநூற்பொருள் - அருத்தபாகை, ஞானபாகை; கரும்பாகை; இத னுட்பம் - உபநிடதம். வேதமார்க்கம் - வைதிகம்; அம்மார்க் கத்தினடப்போர் - வைதிகர். வேதம் - அத்தியாயம், அந்தணர் வாக்கு, ஆதிநூல், ஆரணம், எழுதாக்கிளவி, ஒத்து, சாகை, சுருதி, நிகமம், மறை, முன்னூல் இவை நான்காம்; இவற்றுண் முதல் வேதம் - இருக்கு. பவுடிகம்; இரண்டாம் வேதம் - தைத் திரியம், யசு; மூன்றாம் வேதம் - கீதவேதம், கௌசிகம், சாமம், நான்காம் வேதம் - அதர்வணம். வேதவுட்பொருள் - உபநிடதம், சிரப் பொருள், வேதாந்தம். வேதனைசெய்வோன் - அருந்துதன். வேம்பு - நிம்பம், பிசிதம், பிசுமந்தம், மாலுகம். வேயரிசி - தோரை. வேயாமாடம் - வண்ணீடு. வேயுள் - வேய்தல். வேர் - சடை, சிவை, தூர், மூலம். வேர்வை - கசிவு, சுவேதம், வியர்த்தல். வேலமரம் - உடை, குடை. வேலி - இளை, கானல். வேல் - அயில், அரணம், உடம்பிடி, எஃகம், குந்தம், சத்தி, ஞாங்கர், விட்டேறு, அன்றியுங் கைவேலின் பெயர் - கப்பணம், சத்திரம், தோமரம். வேவு - ஒற்று, வே. வேவுகாரர் - ஒற்றர், சாரணர், வேயர், வேய்கள். வேளாளர்களின் பெருமை - கொற்றத் தையும் கருவையுஞ் சுற்றத்தையும் கொற்றத்தினும் அழலினும் உழ வினும் விளைப்போ ரென்க. வேளாளர்களின்பத்துவகைத் தொழில் - ஆணைவழி நிற்றல், மாண் வினை தொடங்கம், கைக் கட னாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம் போற்றல், நீங்காத முயற்சி, மன்னிறைதருதல், ஒற்றுமை கோடல், ஒழுக்கம், விருந்து புறந் தருதல். வேளாளர் - மண்மகள் புதல்வர், வளமையர், களமர், மள்ளர், நான் காம் வருணத்தவர், சூத்திரர், கங்கை மைந்தர், காவிரிப் புதல்வர், உழவர், மேழியர், ஏரின் வாழ்நர், இளங்கோ, பூபாலர், பின்னவர், பெருக்காளர், அறுதொழிலாளர், வாணர், காராளர், வினைஞர். வேளாளர்பட்டப்பெயர் - வேள், வெளிர், அரசு, ஏனாதி, காவலர், காவிதி, உழார், கிழார், தேவர், காவலர், முதலியார், பிள்ளை, தாசன். வேள்வியின்பெயர் - யாகத்தைக் காண்க. வேறுபடுத்தல் - விகற்பித்தல். வேற்றுமை - அந்தரம், திரிபு, பங்கம், பின்னம், பேதம், மாற்றம், விக டம், விகற்பம், விகாரம், விகிர்தம், விபரீதம், விரூபம், விரோதம், விள்ளல், விற்று, வேறுபாடு. வேற்றுமையுருபு - ஐ, ஆல், ஆன், ஓடு, ஒடு, கொண்டு, உடன், கு, பொருட்டு, நிமித்தம், இன், இல், நின்று, இருந்து, அது, உடைய, கண், கால், தனை, இடம், திசை, வாய், வயின், முன், பின், சார், வலம், இடம், கீழ், மேல், அத்து, கடை, புடை, கல், பாடு, அளை தேம், உழை, வழி, உழி, உளி, உள், அகம், புறம், இல். வை வைகறை - புலரி, விடியல். வைகாசிமாதம் - மாதவம், வைகாசம், வைசாகம். வைகையாறு - வேகவதி, வையை. வைக்கோல் - பலாலம், வழுது, வை. வைசியர் - அயனுருவில் வந்தோர், இப்பர், இளங்கோக்கள், எட்டி யர், சிலேபியர், செட்டியர், தருமக் கிழவர், தாளாளர், தூணிகர், தேசி கர், தோன்றிகர், நாய்கர், பரதர், மன்னர், பின்னர், முத்தொழி லோர், வணிகர், வாணிகர். வைசியர்சேரி - வாசிகை. வைசியர் தொழில் - ஏர்த்தொழில், ஓதல், ஓதுவித்தல், பொருளீட்டல். வைத்தியர் - ஆமாத்திகர், ஆயுள் வேதியர், ஆரியர், பண்டிதர், பிடகர், மருத்துவர். வைரச்சாதியின்பயன் - பிராமண சாதி வைரமணிந்தால் மறையோ னாகிப் பிறவியேழும் பிறந்து வாழ்குவர், அரசசாதிமணி யணிந் தால் எழு பிறப்பும் வேந்தனாகப் பிறந்து இந்நில வேந்தர் சூழவிருந் தரசாள்வர். வைசிய சாதி மணி யணிந்தால் மணியும் பொன்னு மலிய வாழ்வர். சூத்திரசாதி மணி பூணின் அளவில்லாத பொன்னு நெல்லும் பசுவு நிலமும் பொலிய வாழ்வர். வெள வெள - கவர்தல், கொள்ளையிடல். வெளவால் - அஞ்சலிகை, ஆவாலம், துருஞ்சில், வாவல். இரண்டாவது பொருளகராதி முற்றிற்று. மூ ன் றா வ து தொகையகராதி கடவுள் வணக்கம் ஊரி லான்குணங் குறியிலான் செயலிலா னுரைக்கும் பேரி லானொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் றனக்கு நேரி லானுயிர்க் கடவுளா யென்னுளே நின்றான். அருட்டொகை வகைவகுத் துலகனைத்து மங்கையி லேந்தி தயையிற்கரத் திருட்டொகை துடைத்தெழும் பரிதியைப்போ லெங்கணும் விளக்கிய வேரொன்பான் மருட்டொகை விலகெனப் பணிந்தேத்தி வழக்கொடு புலமையோர் முன்னுரைத்த பொருட்டொகை வகைப்பட விரித்துணர்த்திப் புகலுந் தொகையக ராதியென்றே. அகக்காழிற்குரியன - 21 - இலை, குருத்து, தளிர், மலர், தோடு, கப்பு, கம்பு, கொத்து, கொம்பு, நனை, இதழ், தாது, அல்லி, புல்லி, முளை, கிழங்கு, காய், பழம், தோல், செதில், வீழ். அகக்கூத்து - 2 - சாந்திக்கூத்து, விநோதக்கூத்து. என்னை? “அவை தாம், சாந்திக்கூத்தும் விநோதக் கூத்துமென், றாய்ந்துற வகுத்தன னகத்தியன்றானே” என்றாரா கலின். அவற்றுள் - சாந்திக் கூத்தா வது நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து. விநோதக் கூத்தாவது குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை யென்பனவாம். அகக்கூத்துக்கை - 2 - எழிற்கை, தொழிற்கை. அகங்காரவகை - 3 - தைசதாங் காரம், பௌதிகாங்காரம், வைதி காங்காரம். அகச்சமயம் - 6 - சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம். அகச்சுவை - 3 - இராசதம், சாத்து விகம், தாமதம். அகதத்துவம் - 5 - சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி சிவம். அகத்திணை - 7 - கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மரு தம், நெய்தல், பெருந்திணை. அகத்திணைமெய்ப்பாடு - 24 - புகு முகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநய மறைத்தல், சிதைவு, பிறர்க்கின்மை, கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழனிதைவரல், உடை பெயர்த்து உடுத்தல், அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல் வலியுறுத்தல், இருகையு மெடுத் தல், பாராட்டெடுத்தல், மடந்த பவுரைத்தல், ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல், தெரிந்துடம் படுதல், திளைப்பு வினை மறுத்தல், கரந்திடத்தொழிதல், கண்டவழி யுவத்தல், புறஞ்செயச் சிதைதல், புலம்பித்தோன்றல், கலங்கி மொழிதல், கையற வுரைத்தல். அகத்தியர்மாணாக்கர் - 12 - செம் பூட்சேஎய், வையாபிகர், அதங் கோட்டாசான், அவிநயர், காக்கை பாடினியர், தொல் காப்பியர், துராலிங்கர், வாய்ப்பியர், பனம் பாரனார், கழாரம்பர், நற்றத்தர், வாமனர். அகத்திலக்கணம் - 10 - எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதனிலை, இறுதிநிலை, இடை நிலை, போலி. அகநாடகவுரு - 28 - கந்தமுதலாகப் பிரபந்த வுருவீறாக வருவனவாம். அவற்றுள் கந்தமாவது அடி வரை யறை யுடைத்தாய் ஒரு தாளத்தாற் புணர்ப்பது. பிரபந்த மாவது அடி வரையறையின்றிப் பலதாளத்தாற் புணர்ப்பது. மற்றைய பெயர் களை வந்துழிக் காண்க. அகப்பகை - 6 - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்ச் சரியம். அகப்பாட்டுத்தலைவன் - 2 - பாட்டு டைத்தலைவன், கிளவித் தலை வன், இவருள் உயர்ந்தோன் பாட் டுடைத் தலைவனாம். அகப்பாட்டுசமயம் - 6 - பாடாண வாத சைவம், சங்கிராந்தவாத சைவம், பேத வாதசைவம், பேத சைவம், சுத்த சைவம், அவிகார வாத சைவம். அகப்புறச்சமயம் - 6 - ஐக்யிவாத சைவம், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் (சைவசித்தாந்தம்). அகப்புறத்தத்துவம் - 7 - காலம், வியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை. அகலக்கவி - 81 - பிள்ளைக்கவி, கலம்பகம், பன்மணிமாலை, மும் மணிக் கோவை, அகப் பொருட் கோவை, தொகை நிலைச்செய் யுள், இணைமணி மாலை, இரட்டைமணிமாலை, மும்மணி மாலை, நான்மணி மாலை, இரு பாவிரு பஃது, ஒருபாவொரு பஃது, ஒலியந்தாதி, ஊரின் இன் னிசை, வருக்க மாலை, கைக் கிளைச்செய்யுள், மங்கலவள்ளை, இரட்டை மாலை, ஊர்நேரிசை, பெயர் நேரிசை, மெய்க்கீர்த்தி, காப்பு மாலை, வேனின்மாலை, பல்சந்த மாலை, அங்கமாலை, வசந்த மாலை, நவமணிமாலை, பரணி, தசாங் கப்பத்து, பதிற்றந் தாதி, நூற்றந்தாதி, அட்டமங் கலம், அலங்கார பஞ்சகம், ஊசல், சின்னப்பூ, சதகம், எண்செய்யுள், ஐந்திணைச் செய்யுள், நாழிகை வெண்பா, நானாற்பது, பயோ தரப்பத்து, நயனப்பத்து, வில் விருத்தம், வேல்விருத்தம், வாள் விருத்தம், செங்கோல்விருத்தம், யானை விருத்தம், குதிரை விருத் தம் நாட்டு விருத்தம் ஊர் விருத் தம், கொடை விருத்தம், பெருங் காப்பியம், சிறுகாப்பியம், வள மடல், உலாமடல், உலா, அநுராக மாலை, மெய்க்கீர்த்திமாலை, புகழ்ச்சிமாலை, நாமமாலை, தாரகமாலை, உற்பவமாலை, தானைமாலை, வரலாற்று வஞ்சி, செருக்கள வஞ்சி, பொருள் வஞ்சி, குழமகன், பாதாதி கேசம், கேசாதி பாதம், யானைத்தொழில், சிறு பாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, பொரு நராற்றுப்படை, திருமுருகாற்றுப் படை, கூத்தராற்றுப்படை, தணி கையாற்றுப்படை, மலைபடு கடாம், குறிஞ்சிப்பாட்டு, அகப் பாட்டு, புறப்பாட்டு என்பன வாம். அகலக்கவிவகை - 2 - தொடர்நிலைச் செய்யுள், தனிநிலைச் செய்யுள். அகவலிறுவன –- 6 - ஏ, ஒ, ஈ, ஆய், என, ஐ. அகவலோசை - 3 - ஏந்திசை யகவ லோசை, தூங்கிசை யகவலோசை, ஒழுகிசை யகவலோசை. அகவற்சீர் - 4 - நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை இவற்றிற்கு வாய்பாடு தேமா, புளிமா, கரு விளம், கூவிளம் என்பனவாம். அகவற்பாவகை - 4 - நேரிசை யாசிரியப்பா, இணைக்குறளா சிரியப்பா, நிலைமண்டிலவாசி ரியப்பா, அடிமறி மண்டிலவாசி ரியப்பா. அகவற்பாவினம் - 3 - ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம். அகவற்றளை - 2 - நேரொன் றாசிரியத் தளை, நிரையொன் றாசிரியத் தளை. அகிற்கூட்டு - 5 - சந்தனம், கர்ப்பூரம், எரிகாசு, தேன், ஏலம். அகிற்கூட்டு - 6 - சந்தனம், கர்ப்பூரம், எரிகாசு, ஏலம், தேன், நேர்காட்டி. அக்கினி - 3 - ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினியம். அக்கினி - 5 - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு பக்கத்தும் அக்கினிமூட்டப் பட்டு மேலிற் சூரியாக்கினியுங் கொண் டுள்ளனவாம். அக்கினி - 5 - இராகம், கோபம், காமம், சடம், தீபனம். அக்கினிதேவர் வகை - 3 - சுசி, பவமானன், பாவகன். அங்கக்கிரியை - 14 - புரிகை, சக மலிகை, ஊர்த்துவகலிகை, பிருட் டகம், அர்த்த பிருட்டகம், சுவத் திகம், உல்லோலம், குர்த்தனம், வேட்டனம், உபவேட்டனம், தானப்பதப் பிராய விருத்தம், உnக்ஷபணம், அவnக்ஷபணம், நிகுஞ்சனம். அங்கதருமம் - 8 - ஐயப்படாமை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்க மின்மை, பழிநீக்கல், உறுதிநிறுத்தல், பேரன் புடைமை, அறம் விளக்கல். அங்கம் - 4 - தேர், கரி, பரி, காலாள், இவை சதுரங்கமெனவும் படும். அங்கம் - 5 - திதி, வாரம், நட்சத் திரம், யோகம், கரணம், இவை பஞ்சாங்கமெனப்படும். அங்கம் - 6 - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண். அங்கம் - 10 - மலை, யாறு, நாடு, ஊர், மாலை, பரி, கரி, முரசு, கொடி, செங்கோல்; இவை யரசர்க்குரிய தசாங்கம். அங்கயோகம் - 8 - இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தி யாகாரம், தாரணை, தியானம், சமாதி; இவற்றுள் இயமம் - கொல் லாமை, மெய்ம்மை கூறல், கள் ளாமை, பிறர்பொருளிச்சியாமை, இந்திரியமடக்கல்; நியமம் - தவம், தூய்மை, தத்துவ நூலோர்தல், மனமுவந்திருத்தல், தெய்வம் வழிபடல்; ஆதனம் - சுவத்திகம், கோமுகம் பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முத்தம், மயூரம், சுகம்; அவை யாவன சுவத்திகம் - தொடைக்கு முழங்காற்கு நடுவே யிரண்டுள்ளங் காலையுஞ் செலுத்தியிறுமாந் திருத்தல்; கோமுகம் - சகன பக்கத்திலிருகாற் பரட்டை யுமாறவைத் தவ்விருகாற் பெருவிரலைக் கைப்பிடித்திருத் தல்; பதுமம் - இருதொடை மேலு மிரண்டுள்ளங் காலையுமாறித் தோன்ற வைத்தல்; வீரம் வலத் தொடையி லிடக்காற் பரட்டைச் சேர்த்தி யிறுமாப்புற் றிருத்தல்; கேசரி - பீசத்தின்கீழ்ச் சீவனி யிடத்துப் பரட்டை வைத்து இட முழங்கையை முழந்தாளில் வைத் தங்குலி விரித்து நாசியைப் பார்த் திருத்தல்; பத்திரம் - பீசத்தின்கீழ்ச் சீவனியிடத் திருகாற் பரட்டையும் வைத்தவ்விருபதத்தையு மிருகையா லிறுகப்பிடித் தசையாதிருத்தல்; முத்தம் - இடக்காற் பரட்டாற் சீவனியை யழுத்தி வலக்காற் பரட் டின் கீழுந்த விருத்தல்; மயூரம் - முழங்கை யிரண்டு முந்திப் புறத்தி லழுந்தப் புவியிற்கை யூன்றிக் கானீட்டித் தலை நிமிர்ந்திருத் தல்; சுகம் - சுகமுந் திடமுமெவ் வாறிருக்கி னெய்துமோ அவ்வா றிருத்தல்; பிராணாயாமம் - பிராண வாயுவை இரேசகபூரக கும்பகஞ் செய்தல்; பிரத்தியா காரம் - உபாதியை நீக்கியுண் ணோக்கல்; தாரணை - கண்டம் இதயம் நெற்றி கபாலம் நாபி இவற்றி லொன்றிற்சந்ததம் சிந்தை வைத்தல்; தியானம் - ஐம் புலனடக்கி யோகஞ் செய்தல்; சமாதி - இந்திரிய முதலிய தத்துவ சேட்டைகட் கேதுவா யாக்கை யுணின் றவற்றோடு கூடினு மவற் றிற் பற்றின்றி யிருக்கு மான் மாவாகிய தன்னைத்தான் காண் டல்; இவற்றுள் இயமம் நியமம் ஆதனம் பிராணாயமம் என்பன யோகத்திற் சரியை; பிரத்தியா காரம், தாரணை என்னு மிரண் டும் யோகத்திற் கிரியை; தியானம் யோகத்தில் யோகம், சமாதி யோகத்தில் ஞானம். அங்காமத்தின் பகுப்பு - 12 - ஆசா ராங்கம், சூத்திரகிருதாங்கம், தானாங்கம், சமவாயாங்கம், வியாக் கியாப் பிரஞ்ஞப் பத்யாங்கம், ஞாக்ருகதாங்கம், உபாச காத்திய யனாங்கம், அந்தக் கிருத்த சாங்கம், அநுத்தரோப பிரதிகதசாகம், பிரச்சின வியாகரணாங்கம், விபாக சூத்திராங்கம், திருட்டி வாதாங் கம். அசங்க தவிரி - 6 - அர்த்தசந்திரம், உத்தானம், சிருங்காடம், கர்க் கடகசிருங்காரி, காகபாரி, கோதிகா. அசிதாகமோபபேதம் - 4 - பிர பூதாகமம், பரோற்பூதாகமம், பார்வதீ தந்திரம், பதுமசங்கிதை. அசுவினிதேவர் - 2 - தத்திரன், நாதத் தியன். அசை - 2 - நேரசை, நிரையசை. அஞ்சுமானுபபேதம் - 12 - வித்தியா புராணம், பாஸ்வராகமம், நீல லோகித தந்திரம், பிரகரனாகமம், பூததந்திரம், ஆத்மாலங்காரம், காசிபாகமம், கௌதாகமம், மகேந்திராகமம், பிரமாகமம், வசிட்டாகமம், ஈசானியோத் தரம். அஞ்ஞானவிரோதம் - 3 - சிரவணம், மனனம், நித்தியாசனம். அடி - 5 - குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி. அடித்தொடை - 5 - அடிமோனைத் தொடை, அடியெதுகைத்தொடை, அடிமுரண்டொடை, அடியியைபுத் தொடை, அடியளபெடைத் தொடை. அடியவரிலக்கணம் - 3 - உள்ளிலக் கணம், புறத்திலக்கணம், பொது விலக்கணம். அடியவர் - 3 - சாமுசித்தர், வைநயிகர், பிராகிருதர். அடியவர் - 63 - சுந்தரமூர்த்தி நாயனார், திருநீலகண்டர், இயற் பகை நாயனார், இளையான்குடி மாற நாயனார், மெய்ப் பொரு ணாயனார், விறன்மிண்ட நாய னார், அமர்நீதிநாயனார், எறிபத்த நாயனார், ஏனாதிநாத நாயனார், கண்ணப்ப நாயனார், குங்கிலியக் கலய நாயனார், மானக்கஞ்சாற நாயனார், அரி வாட்டாய நாய னார், ஆனாய நாயனார், மூர்த்தி நாயனார், முருகநாயனார், உருத் திரபசுபதி நாயனார், திருநாளைப் போவார் நாயனார், திருக்குறிப் புத் தொண்ட நாயனார், சண்டே சுர நாயனார், தண்டியடிகள் நாயனார், திருநாவுக்கரசு நாய னார், குலச்சிறை நாயனார், பெருமிழலைக்குறும்ப நாயனார், காரைக்காலம் மையார், அப்பூ தியடிக ணாயனார், திருநீலக்க நாயனார், நமிநந்தியடிக ணாய னார், திருஞானசம்பந்த நாய னார், ஏயர்கோன், கலிக்காம நாயனார், திருமூலநாயனார், மூர்க்க நாயனார், சோமாசிமாற நாயனார், சாக்கிய நாயனார், சிறப்புலி நாயனார், சிறுத் தொண்ட நாயனார், கழற்றறிவார் நாயனார், கணநாத நாயனார், கூற்றுவ நாயனார், புகழ்ச் சோழ நாயனார், நரசிங்க முனையரைய நாயனார், அதிபத்த நாயனார், கலிக்கம்ப நாயனார், கலிய நாய னார், சத்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோ னாயனார், கணம் புல்ல நாயனார், காரி நாயனார், நின்றசீர்நெடுமாற நாயனார், வாயிலார் நாயனார், முனையடு வார் நாயனார், கழற்சிங்க நாய னார், இடங்கழி நாயனார், செருத் துணை நாயனார், புகழ்த்துணை நாயனார், கோட்புலி நாயனார், பூசலார் நாயனார், மங்கையர்க் கரசியார், நேச நாயனார். கோச் செங்கட் சோழநாயனார், திரு நீலகண்ட யாழ்ப்பாண நாயனார், சடைய நாயனார், இசை ஞானி யார். அடியவர்சாதனம் - 3 - குரு, இலிங்கம், சங்கமம். அடியவருள் தொகையார் - 9 - தில்லைவாழந்தணர், பத்தராய்ப் பணிவார்கள், பரமனையே பாடு வார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், பொய்யடிமையில் லாப்புலவர், திருவாரூர்ப் பிறந் தார், முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார், முழுநீறுபூசிய முனி வர், அப்பாலுமடிச்சார்ந் தார் என்பவர்களாம். அடுக்குநிலைப்பொருள் - 10 - அசை நிலை, விரைவு, துணிவு, உடம் பாடு, ஒரு தொழில் பலகானிகழ்தல், வெகுளி, உவகை, அச்சம், அலவம், இசை, நிறை. அணிவகுப்புவகை - 4 - தண்டம், மண்டலம், அசங்கதம், போகம். அவற்றுள் தண்டமாவது சேனை யைக் குறுக்காக நிறுத்துவது. மண்டலமாவது பாம்பு மண்டல மிடுவது போலச் சேனையை நிறுத்துவது. அசங்கதமாவது சேனையை வேறுவேறாக நிறுத் துவது. போகமாவது நால்வகைச் சேனைகளையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக நிறுத்துவது. அணிவகுப்புறுப்பு - 7 - உரம், உறக்கை இரண்டு, மத்தியம், பிரதிக்கிரகம், பிரிட்டம், கோடி. அணிவியூகவிரி - 30 - பிரதரம், திருடகம், தியாவத்தம், குட்சி, பிரதிட்டம், சுப்பிரதிட்டம், சியே நம், விசயம், சங்கயம், விசாலம், நிசயம், சூசீ, தூணா கர்ணம், சமுமுகம், இரதாசியம், வலயகம், சர்வதோ பத்திரம், துர்சயம், அர்த்த சந்திரம், உத்தானம், சிருங்காடகம், கர்க்கடக சிருங் காரி, காகபாரி, கோதிகா, கோமூத் திரிகை, கிஞ்சகம், கஞ்சாரி, சகடம், பந்தம் என்பனவாம். இவற்றைக் காமந்தகம் என்னு நூலிற் காண்க. அணுவகை - 3 - அணு, பரமாணு இலேசம். அண்டம் - 5 - பிருதிவியண்டம், அப்பு அண்டம், தேயுவண்டம், வாயுவண்டம், ஆகாய அண்டம். அதமதானவகை - 7 - ஆர்வம், புகழ், அச்சம், கைம்மாறு காரணம், கண்ணோட்டம், கடப்பாடு. அதிகதுக்கங்கள் - 18 - கோள், துணிவு, துரோகம், பொறாமை, பிறன் குணத்திற்குச் சகியாமை, பிறர்பொருள் அபகரித்தல், காரணமின்றிக் கடிதல், வைதல், வேட்டையாடுதல், சூதாடுதல், பகனித்திரை, பயனில் கூறல், பிறனில் விழைதல், மதுப்பருகல், கூத்தாடல், இசைபாடல், வாத் திய முழக்க விரும்பல், வீணே திரிதல் என்பனவாம். அதிகதுன்பங்கொடுப்பன - 4 - மது பானம், சூது, பரதாரகமனம், வேட்டை. அதிகாரர் - 3 - கர்மகாண்டி, பத்தி காண்டி, ஞானகாண்டி. அதிசயம் - 3 - கர்மக்கயாதிசயம், சகசாதிசயம், தெய்வீகாதிசயம். அதிசயாலங்காரவகை - 6 - பொருளதி சயாலங்காரம், குணா திசயாலங் காரம், தொழிலதிசயா லங்காரம், துணிவதிசயாலங் காரம், திருவதிச யாலங்காரம், ஐயவதிசயாலங்காரம். அத்துவா - 6 - மந்திரத்துவா, வன்னாத்துவா, பதாத்துவா, தத்துவாத்துவா, புவனாத்துவா, கலாத்துவா. அதிகாரிகள் - 5 - கருமி, முமூட்சு அப்பியாசி, அநுபவி, ஆரூடன். அதிசயமொழி - 10 - ஆ, அ, ஓ, ஒ, அத்தோ, அந்தோ, அன்னோ, ஐயோ, அக்கோ, அச்சோ, என்னோ, எற்றே. அதிபாதவகை - 3 - மானசிக பாதகம், வாயிகபாதகம், காயிக பாதகம். அதிபாதகவிரி - 25 - சிவனுக்கொப் பாகவும் உயர்வாகவும் வேறு தெய்வமுண்டென்று நினைத்தல், சொல்லுதல், வேத சிவாகமங் களுக்கு ஒப்பாகவும் உயர்வாகவும் வேறு நூல்கள் உள்ளனவென நினைத்தல், சொல்லுதல், சிவ தூடணஞ் செய்தல், வேதநிந்தை, சிவாகம நிந்தை, சிவனடியார் நிந்தை, குருநிந்தை, சிவதிரவியம் சிவாகம் நூல் குருதிரவிய மென்ப வற்றை யபகரித்தல், இவரோ டிணங்குதல், சிவபத்தியில்லாமை, குருபத்தி யில்லாமை, நியதிவிடுதல், தவத்தரையிகழ்தல், ஆசார மில் லாமை, புறச்சமய நூல்படித்தல், ஞானநூல்களை விலக்கு வித்தல், கொலை, கட்குடித்தல், பிறனில் விரும்பல், பிறர் பொருள் விரும் புதல், பிறரைக் கெடுக்க நினைத் தல், பிறர் ஏங்க அழுதல், கோள் சொல்லல், பொய் சொல்லல். அத்தியாசம் - 4 - மித்தி யாத்தி யாசம், இதராத்தியாசம், இதரேத ராத்தியாசம், சத்தியாத்தியாசம். அத்தியாச்சிரமிநாமம் - 6 - சீவன் முத்தன், அவதூதன், திநபிரக்ஞன், குணாதீதன், பகவற்பத்தன், பிராமணன். அத்திராதிமுத்திரை - 26 - அத்திர முத்திரை, சக்கர முத்திரை, மகா முத்திரை, பஞ்சமுக முத்திரை, சோதனை முத்திரை, சங்கார முத்திரை, சுரபி முத்திரை, தீவிவிர முத்திரை, முகிளிகா முத்திரை, பதுமமுத்திரை, சசகன்ன முத் திரை, சத்தி முத்திரை, பீச முத் திரை, சாந்தி முத்திரை, ஆவாகன முத்திரை, மனோரம்மிய முத் திரை, துவச முத்திரை, இலிங்க முத்திரை, காயத்திரி முத்திரை, யோனி முத்திரை, காலகண்ட முத்திரை, சூலமுத்திரை, நமக்கார முத்திரை விசோடண முத்திரை, ஆச்சியா குணமுத்திரை, மகா சங்கார முத்திரை. அத்துவா - 6 - மந்திரம், வர்ணம், பதம், தத்துவம், புவனம், கலை. அநுபந்தலக்கணம் - 4 - விடயம், சம்பந்தம், பிரயோசனம், அதி காரம். அந்தணர்க்குரியபொருள் - 3 - சமித்து, தருப்பை, முஞ்சிப்புல். அந்தணர்தொழில் - 6 - ஓதல் ஓது வித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், அந்தணவருணமாகுமெழுத்துக்கள் - 18 - அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள க ங ச ஞ ட ண. அந்தக்கரணம் - 4 - மனம், புத்தி, சித்தம், அகங்காரம். அந்தணர்மார்க்கம் - 2 - வைதிக மார்க்கம், தாந்திரீக மார்க்கம். அந்நுவயலக்கணம் - 5 - விசேட ணம், விடியம், கருத்தா, கருமம், கிரியை. அபாவம் - 4 - பிராகபாவம், பிரத் துவம், சாபாவம், அந்நி யோந் நியாபாவம், அத்தியாந்தா பாவம். அபாவஅலங்காரம் - 5 - என்றும் பாவம், இன்மையதபாவம், ஒன்றி னொன்ற பாவம், உள்ளதன பாவம், அழிவு பாட்டபாவம் என்பனவாம். அவையாவன - எக் காலத்து மில்லாமையும், இல்லா மையை தில்லாமையும், ஒன்றின தின்மையும் அதன் கணஃதின்மை ஓரிடத்துமொரு காலத்துமுள்ள பொருள் பிறிதோரிடத்தும் பிறி தோர் காலத்து மில்லாமையும், முன்னுள்ள தழிவுபட்டில்லாமை யுமாம். அபாவவேறுபாடு - 5 - ஒருவழிக் காரணம் நிகழப் பிறிதொருவழிக் காரிய நிகழ்தல், காரண காரி யங்கள் ஒருங்கு நிகழ்தல், கார ணத்தின் முன்னர்க் காரியம் நிகழ் தல், காரணத்திற் கேற்ற காரியம் நிகழ்தல், காரணத்திற் கேலாக் காரியம் நிகழ்தல். அபானவாயுவின்பெயர் - 2 - மலத்தைக் கழிக்கல், மூத்திரம் விடுத்தல். அபிடேகதிரவியங்கள் - 20 - எண் ணெய்க்காப்பு, மாக்காப்பு, நெல் லிக்காப்பு, மஞ்சட் காப்பு, பஞ்ச கவ்வியம், இரச பஞ்சாமிர் தம், பலபஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கருப்பஞ் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, தமரத்தம் பழச்சாறு, குளஞ்சிப் பழச்சாறு, மாதுளம் பழச்சாறு, இளநீர், சந்தனக்குழம்பு என்ப வைகளாம். அப்பவருக்கம் - 10 - அபூபம், இலை யடை, கஞ்சம், சஃகுல்லி, நொலை யல், பூரிகை, பொள்ளல், போன கம், மண்டிகை, மெல்லடை. அமுதவெழுத்துக்கள் - 11 - அ-இ-உ-ஏ-க-ச-த-ந-ப-ம-வ என்பனவாம். அம்பரசித்திகள் - 8 - சாயா வீசினதை, இத்திரிய திரிசியதை குகச்சதி, தேட்ட விடய சங்கதி, சயிலலங்கம், சயிலகர்ப்பீ கரணம், ஆகாச பிண்டீ காரணம், அசரீரத் துவம். அரங்கிற்காகாநிலம் - 9 என்புள்ள நிலம், உமியுள்ளது, கன்னிலம், பரனிலம், களித்தரை, உவர்த் தரை, ஈரத்தரை, பொல்லாச் சாம்பற்றரை, பொடித்தரை. அரங்கினெழினி - 3 - ஒருமுக வெழினி, பெருமுக வெழினி, கரந்துவர லெழினி. அரங்கின்பூதர் - 4 - அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதராகிய வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்த கேசுவரன் என்னுமிவராம். அரங்கின்வாயில் - 2 - உட்புகு வாயில், வெளிவருதற் கொரு வாயில். அரங்கின்வாயில் - 4 - புகுவாயில், புறப்படுவாயில், கரந்து போக் கிடன், கண்ணுளர் குடிஞைப் பள்ளி. அரங்குறுப்பு - 5 - வாயில், கரந்து போக்கிடன், கண்ணுளர் குடிஞைப் பள்ளி, அவையரங்கம், புவிநிறை மாந்தர் பொருந்து கோட்டி. அரசர்குலம் - 3 - சூரியகுலம், சந்திர குலம், அக்கினிகுலம். அரசர்க்குரியன - 10 - படை, குடை, கொடு, முரசு, புரவி, களிறு, தேர், தார், மாலை, செங்கோல். அரசசின்னம் - 21 - முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக் கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம். அரசர் - 3 - சேரன், சோழன், பாண் டியன். அரசர்க்குழு - 5 - மந்திரியர், புரோகி தர், சேனாபதியர், தூதர், சாரணர். அரசர்க்குத்தானை - 6 - களிறு, தேர், பரி, வாள், வில், வேல். அரசர்க்குத் துணைவர் - 8 - மந்திரியர், கருமாதிகாரர், சுற்றம், கடை காப்பாளர், நகரமாக்கள், படைத்தலைவர், இவுளி மறவர், யானைவீரர். அரசர்க்குறுதிச்சுற்றம் - 5 - நட்பாளர், அந்தணாளர், படைத்தொழிலர், மருத்துவக் கலைஞர், நிமித்திகப் புலவர். அரசர்கொடி - 3 - சேரனுக்கு விற் கொடி, சோழனுக்குப் புலிக் கொடி, பாண்டியற்கு மீனக் கொடி. அரசர்தொழில் - 6 - ஈதல், உலகு புரத்தல், ஓதல், படைபயிறல், பொருதல், வேட்டல். அரசர்நிலை - 7 - அறம், இம்மை, இன்பம், புகழ், பொருள், மதிப்பு, மறுமை. அரசர்மாலை - 3 - சேரனுக்குப் பனந் தார், சோழனுக்கு ஆத்திமாலை, பாண்டியனுக்கு வேப்பமாலை. அரசவருணவெழுத்துக்கள் - 6 - த - ந - ப - ம - ய - ர. அரசியல் - 6 - படை, குடி, கூழ், அமைச்ச, நட்பு, அரண். அரசியல்வகை - 6 - அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப் பொருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறநிலை யின்பம்; அவையாவன தத்தம் வருணத்திற் பிறழாது நிலை பெறப் பாதுகாத்த லறநிலையறம். நிரைமீட்டுப்பகைவென்று செஞ் சோற்றுக் கடன் கழியாதாரைத் தண்டித்துக் குறைவறச் செய்தன் மறநிலையறம். நெறி வழி நின்று தத்தநிலையினான் முயன்று பெறு பொருளறநிலப் பொருள், பகை ஞர் பொருளுந் திறைப்பொருளுஞ் சூதில் வெல் பொருளு மறநிலைப் பொருள், பருவமுங் குலமு மொழுக்கமுங் குணமுமொத்த கன்னிகையைத் தீவேட்டில்லத் திருத்தலறநிலை யின்பம், ஏறு தழுவியும் வில்லிற் றொடுத்த வம்பி னாக்கமெய்து மிவ்வாறு மாறு படை நெறியின் மணத்தன் மற நிலை யின்பம். அரண் - 4 - மலை, காடு, மதில், கடல். அரிட்டதேவதைகள் - 35 - தந்தை, பீணி, காளிகை, வீமரூபி, அங்கு சினி, பூதினி, முத்தகேசி, ஆகா சினி, அரிகேராதினி, சகுனி, பூமாயி, உத்தமி, பிங்கலை, கோகர்ணி, பங்கயை, சீமுதி, சேனி, கும்பகர்ணி, தாபதை, காலார்க்கி, நந்தினி, குரோதினி, தானுனி, சாகினி, பஞ்சாளை, காமினி, மேதினி, நளினி, மகாகும் பினி, அரனி, ஆகாசகர்ணி, வாயு விசாக்கினி, சுகந்தினி, வனதேவி, குண்டனி. அரிபிறப்பு - 15 - சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன், நர நாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்கிரீவன், தத்தாத்தி ரேயன், மோகினி, வேள்வியின் பதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன். அருகன்குடை - 3 - சகலபாசனம், சந்திராதித்தியம், நித்திய வினோ தம். இவை முறையே பொற் குடை, முத்துக்குடை, இரத்தினக் குடை யென்று சொல்லப்படும். அருகன்குணம் - 8 - அநந்த சுகம், அநந்தஞானம், அநந்த தரிசனம், அநந்த வீரியம், நிக் கோத்திரம், நிர்நாமம், நிராயுஷ்யம் அந்தரா யுங்களின்பை. அருகன்சிறப்பு - 8 - தூபதீபக் காட்சி, தேவதுந்துபி, தெய்வத்துவனி, சிங்காதனம், பிண்டி, வெண் சாமரை, புட்பமாரி, மும்மைக் குடை. அருகன்மதில் - 3 - உதயதரம், கல்யாணதரம், பிரீதிதரம். அருகன்வென்றஉபாதி - 4 - அசக்குதரி சனாவரணீயம், அவதி தரிசனா வரணீயம், கேவலதரிசனா வரணீயம், சக்குதரிசனா வரணீயம். அருகன்வென்றவினை - 4 - ஆயுஷ் யம், கோத்திரம், சேதனீயம், நாமம். அருக்கியதிரவியம் - 8 - சலம், பால், தருப்பைநுனி, அக்கதம், எள், யவம், சம்பாநெல், வெண்கடுகு. அருவவடிவம் - 4 - சிவம், சத்தி, நாதம், விந்து. அருவுருவடிவம் - 1 - சதாசிவம். அருள் - 2 - மறக்கருணை, அறக் கருணை. அரை - 4 - பொருக்கரை, முள் ளரை, கோளரை, பொகுட்டரை. அலங்காரப்பா - 5 - வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்துமாம். அலங்காரம் - 35 - தன்மை, உவுமை, உருவகம், தீவகம், பின்வருநிலை, முன்னர் விலக்கு, வேற்றுப்பொருள் வைப்பு, வேற்றுமை, விபாவனை, ஒட்டு, அதிசயம், தற்குறிப் பேற்றம், ஏது, நுட்பம், இலேசம், நிரனிறை, ஆர்வமொழி, சுவை, தன்மேம் பாட்டுரை, பரியாயம், சமாயுதம், உதாத்தம், அவநுதி, சிலேடை, விசேடம், ஒப்புமைக் கூட்டம், விரோதம், புகழ்நிலை, புகழாப் புகழ்ச்சி, நிதரிசனம், புணர் நிலை, பரிவருத்தனை, வாழ்த்து, சங்கீரணம், பாவிகம். அலங்காரம் - 100 - உவமை, இயை பின்மை, புகழ்பொருளுவமை, எதிர்நிலை, உருவகம், திரிபு, பல படப்புனைவு, நினைப்பு, மயக்கம், ஐயம், ஒழிப்பு, தற்குறிப்பு, உயர்வு, நவிற்சி, ஒப்புமைக் கூட்டம், விளக்கு, பின்வரு விளக்கு. தொடர் முழுதுவமை, எடுத்துக்காட்டு வமை, காட்சி, வேற்றுமை, உட னிகழ்ச்சி, இன்மை நவிற்சி, சுருங்கச் சொல்லல், கருத்துடை யடை, கருத்துடையடைகொளி, பல பொருட் சொற்றொடர், புனைவிலி புகழ்ச்சி, புனைவுளி விளைவு பிறதினவிற்சி, வஞ்சப் புகழ்ச்சி, வஞ்சப்பழிப்பு, எதிர்மறை, முரண் விளைந்தழிவு, பிறிதாராய்ச்சி, காரணவாராய்ச்சி, கூடாமை, தொடர்பின்மை, தகுதியின்மை, தகுதி, வியப்பு, பெருமை, சிறுமை, ஒன்றற் கொன்றுதவி, சிறப்பு நிலை, மற்றதற்காக்கல், காரணமாலை, ஒற்றை மணிமாலை, மாலை விளக்கு, மேன்மேலுயர்ச்சி, நிர னிரை, முரையிற்படர்ச்சி, மாற்று நிலை, ஒழித்துக்காட்டு, உறழ்ச்சி, கூட்டம், வினை முதல் விளக்கு, எளிதின் முடிபு, விறல்கோள், தொடர்நிலைச் செய்யுட் பொருட் பேறு, தொடர்நிலைச் செய்யுட் குறி, வேற்றுப் பொருள் வைப்பு, மலர்ச்சி, கற்றோர் நவிற்சி, உய்த் துணர்வு, பொய்த்தற் குறிப்பு, வனப்புநிலை, இன்பம், துன்பம், அகமலர்ச்சி, இகழ்ச்சி, வேண் டல், இலேசம், குறிநிலை, அரதன மாலை, பிறிதின் குணம் பெறல், தொல்லுருப் பெறல், பிறிதின் குணம் பெறாமை, தன் குணமிகை, மறைவு, பொதுமை, மறையாமை, சிறப்பு, இறை, நுட்பம், கரவு வெளிப்படுப்பு, வஞ்சநவிற்சி, குறிப்பு நவிற்சி, வெளிப்டை நவிற்சி, யுத்தி, உலக வழக்கு நவிற்சி, வல் லோர் நவிற்சி, மடங்குதனவிற்சி, தன்மை நவிற்சி, நிகழ்வினவிற்சி, வீறு கோள், மிகுதி நவிற்சி, பிரி நிலை நவிற்சி, விலக்கு, விதி, ஏது. அலிக்கை - 6 - சர்ப்பசிரம், வண்டு, முகுளம், கத்தரிகை, கோசம், கபித்தம் என்பனவாம். இவற்றுள் வண்டாவது பெருவிரலும், அணி விரலும் வளைந்து நுனி யொன் றிச் சிறுவிர னிமிர்ந்து சுட்டு விர லும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்பது. என்னை “வண்டென் பதுவே வகுக்குங் காலை யநா மிகை பெருவிரனனி மிகவளைந்து, தாநுனி யொன்றித்த கைகால் சிறு விரல், வாலி தினிமிர மற்றைய வளைந்த, பாலின தென்பபய னறிந்தோரே” என்றாராகலின். முகுளமாவது : ஐந்து விரலுந்தம் மிற்றலைகுவிந்து உயர்ந்து நிற் பது, என்னை? “முகுள மென்பது மொழியுங் காலை, யைந்து விரலுந் தலைகுவிந்தேற்ப, வந்து நிகழு மாட்சித்தாகும்” என்றா ராகலின். கத்தரிகையாவது : திரிபதாகையின் முடங்கிய அணிவிரற் புறத்தாகிய நடுவிரலைச் சுட்டுவிரலோடு பொருந்த நிமிர்ப்பது. என்னை? “கத்தரி கையே காண்டக விரிப்பி, னத்திரி பதாகையினணியின் புறத்தைச், சுட்டக மொட்ட விட்டு நிமிர்ப்பதுவே” என்றா ராகலின். கபித்தமாவது : சுட்டுவிரனுனியும் பெருவிரனுனியும் உகிர் நுனை கௌவிப் பிடிப்பது. ஒழிந்த மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது. என்னை? “கபித்த மென்பது காணுங்காலைச், சுட்டு பெருவிர லொட்டி நுனி கௌவி, வொல்ல மூன்று மெல்லப் பிடிப்பதுவே” என்றாராகலின். ஏனைய வந்துழிக் காண்க. அவசியகருமஞ் செயலாகாவிடங்கள் - 19 - வழி, குழி, நீர்நிலை, நீர்க் கரை, கோமயமுள்ள இடம், சாம்பர் உள்ளவிடம், சுடுகாடு, பூந் தோட்டம், மரநிழல், உழுத நிலம், அறுகம்பூமி, பசுமந்தை நிற்குமிடம், இடிவீழிடம், காற்றுச் சுழலிடம், புற்று, அருவி பாயு மிடம், மலை, திருக்கோயில் தானம், திருமடம். அவதி - 3 - காரணம், சுவரூபம், காரியம். இவையன்றி ஞானாவதி, வைராக்கியாவதி, உபரதியவதி எனவுமாம். அவத்தை - 5 - சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியா தீதம். அவத்தைக்காரணவகை - 3 - கேவல அவத்தை, சகலஅவத்தை, சுத்த அவத்தை. அவத்தைக் காரியவகை - 3 - கீழால வத்தை, மேலாலவத்தை, மத்தியால வத்தை. அவத்தைக் காரியவிரி - 10 - கீழால வத்தையிற் சாக்கிரம், கீழாலவத் தையிற் சொப்பனசுழுத்தி, கீழால வத்தையிற் றுரியம், கீழாலவத்தை யிற்றுரியா தீதம், மேலாலவத்தை யிற் சாக்கிரம், மேலாலவத்தையிற் சுழுத்தி, மேலாலவத்தையிற் சொப்பனம், மேலாலவத்தையிற் றுரியம், மேலாலவத்தையிற் றுரியாதீதம். அவநுதி - 4 - சிறப்பவநுதி, பொருள வநுதி, குணவவநுதி, வினைபற்றிய சிலேடைபவ நுதி. அவிநயநிலம் - 4 - இயங்கல், இருத் தல், கிடத்தல், நிற்றல். இதனை “நிற்றலியங்க லிருத்தல் கிடத்த லென், றத்தகு நான்கே யவிநயக் களனே” என்னுஞ் சூத்திரத்தா னறிக. அவிநயம் - 24 - வெகுண்டோன விநயம், ஐயமுற்றோ னவிநயம், சோம்பினோனவிநயம், களித் தோனவிநயம், உவந்தோனவி நயம், அழுக்கா றுடையோனவி நயம், இன்பமுற்றோ னவிநயம், தெய்வ முற்றோ னவிநயம், ஞஞ்ஞை யுற்றோ னவியம், உடன்பட்டோ னவிநயம், உறங்கி னோனவிநயம், துயிலுணர்ந்தோ னவிநயம், செத்தோ னவிநயம், மழை பெய்யப் பட்டோனவிநயம், பனித்தலைப் பட்டோனவிநயம், வெற்றிலைப் பட்டோன விநயம், நாணமுற்றோ னவிநயம், வருத்த முற்றோ னவி நயம், கண்ணோவுற்றோ னவிநயம், தலைநோவுற்றோன விநயம், அழற்றிறம்பட்டோ னவிநயம், சீதமுற்றோ னவிநயம், வெப்ப முற்றோ னவிநயம், நஞ்சுண்டோ னவிநயம். இவற்றின் வரலாற்று முறையைப் பொருளகராதிக் கண் தத்தம்வரியிற் கண்டுதெளிக. அழகு - 8 - அம்மை, வனப்பு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழை. அழகு - 10 - சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசை யுடைமை, ஆழமுடைத்தா தல், முறையின் வைப்பு, உலக மலையாமை, விழுமியது பயத்தல், விளங்குதாரணத்த தாகுதல் என்பனவாம். அளவு - 4 - எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல். தெறித்த லோடைந் தொனவுங் கூறுப. அளபெடைவகை - 3 - செய்யுளிசை நிறையளபெடை, இன்னிசை நிறைக்கும் அளபெடை சொல் லிசை நிறைக்கும் அளபெடை. அளவை - 8 - காட்சி, அனுமானம், உவமானம், ஆகமம், அருத்தா பத்தி, அபாவம், ஐதிகம், சம்பவம்; அவையாவன காணல் காட்சி, புகையைக் கண்டு நெருப்புண் டெனலனுமானம்; மரை பசுப் போலெனலுவ மானம், பெரியோர் வாய்ச்சொ லாகமம், பகலுண் ணான் பருத்திருப்பா - னென்புழி யிரவி லோளித் துண்பானென வுணர்தலருத்தாபத்தி; முன்னு மில்லை பின்னுமில்லை ஒன்றி னொன்றில்லை யொருகாலத்து மில்லை யெனலபாவம்; இம் மரத்திற் பேயுளதென்பதைதிகம், ஆயிரத்தி னூறுண்டெனல் சம்ப வம். அறத்துப்பால் - 35 - அறன் வலி யுறுத்தல், இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், புதல் வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி யறிதல், நடுவுநிலைமை, அடக்க முடைமை, ஒழுக்க முடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்கா றாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை யச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ், அருளுடைமை, புலான் மறுத்தல், தவம், கூடாவொழுக்கம், கள் ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல் லாமை, நிலை யாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்பன வாம். அறத்துகை - 3 - ஒழுக்கம், தண்டம், வழக்கு. அறத்துறப்பு - 8 - ஐயப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்க மின்மை, பழியைநீக்கல், அழித்தோரை நிறுத்தல், அறம் விளக்கல், பேரன்புடைமை. அறத்தொடுநிலையின் வகை - 2 - முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி. அறத்தொடு நிற்றல் - விரி - 15 - கையறு தோழி கண்ணீர் துடைத் தல், தலைமகள் கலுழ்தற் கார ணங்கூறல், தலைமகன் தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை யெய்தக்கூறல், தலைவனி கந்த மையியம்பல், அதுகேட்டதோழி இயற்பழித் துரைத்தல், தலைமக ளியற் பட மொழிதல், இல்வயிற் செறித்தமை சொல்லல், செவிலி கனையிருளவன் வரக் கண்டமை கூறல், தலைமகள் வேற்றுமை கண்டு பாங்கியை வினாதல், வெறிவிலக்கல், வெறிவிலக்கிய வழிச்செவிலி தோழியை வினா தல், தோழி பூத்தரு புணர்ச்சி யால் அறத்தொடு நிற்றல், புனறரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல், களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல், தலைமகள் வேற்றுமை கண்டு நற்றாய் செவி லியை வினாதல், செவிலி நற் றாய்க்கு முன்னிலை மொழியான் அறத்தொடு நிற்றல். அறத்தொடுநிற்குங்காலம் - 9 - இயற்கைப் புணர்ச்சிக்காலம், பாங்கற் கூட்டக்காலம், இடந் தலைப்பாட்டுக் காலம், ஒரு விழித் தணத்தற் காலம், வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதற் காலம், தலைவனைச் செவிலிகுறியிடத்துக் காணுங் காலம், மனையிடத்துச் செறிக் குங்காலம், தலைமகளைப் பாங்கி வினவியகாலம், வினவாத காலம். அறத்தொடுநிற்பார்க்கு வினா நிகழு மிடம் - 4 - பாங்கிதலைவியை வினவல், செவிலி பாங்கியை வினவல், பாங்கியை நற்றாய் வினவல், நற்றாய் செவிலியை வினவல். அறத்தொடுநிற்றற் குரியார் - 4 - தலைவி, பாங்கி, செவிலி, நற்றாய். அறப்பகுதி - 2 - இல்லறம், துறவறம். அறம் - 32 - ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்குணவு, அறுசமயத் தார்க் குண்டி, பசுவுக்குவாயுறை, சிறைச்சோறு, ஐயம், தின்பண்ட நல்கல், அறவைச் சோறு, மகப் பெறுவித்தல், மகவு வளர்த்தல், மகப்பால் வார்த்தல், அறவைப் பிணஞ் சுடுதல், அறவைத் தூரி யம், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி, காதோலை, சேலை, கண்மருந்து, பெண்போகம், பிறர்துயர் காத் தல், தண்ணீர்ப் பந்தல், மடம், தடம், சோலை, ஆவுரிஞ்சுதறி, விலங்கிற் குணவு, ஏறு விடுத்தல், விலை கொடுத்துயிர் காத்தல், கன்னிகாதானம். அறவகை - 3 - ஒழுக்கம், வழக்கு, தண்டம். இவற்றை முறையே ஆசாரம், விவகாரம், பிராயச் சித்தம் என்பர் வடநூலார். அனுபந்தம் - 4 - விடயம், சம்பந்தம், பிரயோசனம், அதிகாரி. அன்மொழித் தொகைக்கூறுபாடு - 10 - இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை, மூன்றாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை, ஆறாம் வேற் றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, ஏழாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகை, உம்மைத் தொகைப் புத்துப் பிறந்த அன் மொழித் தொகை. அன்னுவய விலக்கணம் - 5 - விசே டணம், விசேடியம், கருத்தா, கருமம், கிரியை. அஃறிணைப்பால் - 2 - ஒன்றன்பால் பலவின்பால். அஃறிணைப்பெயர் - 11 - அஃறிணை யொருமைப்பெயர், அஃறிணைப் பன்மைப் பெயர், அஃறிணை யொன்றன் படர்க்கை. இறந்த காலம் தெரிநிலை வினையா லணையும் பெயர், அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை நிகழ் காலத் தெரிநிலை வினையா லணையும் பெயர், அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை யெதிர் காலத் தெரிநிலை வினையா லணையும் பெயர், அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக்குறிப்பு வினையாலணையும் பெயர், அஃறிணைப் பலவின் பாற் படர்க்கை யிறந்தகாலத் தெரி நிலை வினையாலணையும் பெயர், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை நிகழ்காலத் தெரிநிலை வினையாலணையும் பெயர், அஃறிணைப் பலவின் பாற் படர்க்கை யெதிர்காலத் தெரி நிலைவினையாலணையும் பெயர், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைக் குறிப்பு வினையா லணையும் பெயர், பால்பகா வஃறிணைப் பெயர். அஃறிணைவினைமுற்று - 8 - அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை யிறந்த காலத்தெரி நிலை வினைமுற்று, அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை நிகழ் காலத் தெரிநிலை வினைமுற்று, அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை யெதிர்காலத் தெரி நிலை வினைமுற்று, அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை யிறந்த காலத் தெரிநிலை வினைமுற்று, அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை நிகழ்காலத் தெரி நிலை வினைமுற்று, அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை யெதிர் காலத் தெரிநிலை வினைமுற்று, அஃறிணைப் பலவின்பாற் குறிப்பு வினைமுற்று, அஃறிணை யொன் றன்பாற் குறிப்பு வினைமுற்று. ஆகமங்களிற் றோன்றினவர் - 62 - பிரணவன், திரிகலன், அரன், சுத்தாக்கியன், வெகு, விபு, கார ணாக்கியன், சருவன், ஆதிபிர சாபதி, சிவன், சுசிவன், அச்சுதன், ஈசன், திரிமூர்த்திகள், சிவோ தாசனன், சூக்குமன், வைப்பிர ணவன், சுப்பிரபஞ்சன், காலருத் திரன், தருமன், மபு, உக்கிரன், தௌரசன், தசகன், விக்கினேச் சுரன், சசி, உருத்திரன், அநாதி, பரமேசுவரன், உதயன், கிரியை, நிதநேசன், சுயம்புவன், வியோ மன், உருத்திரோதாசனன், தேச சன், பிரசாபதி, பிரமணேசன், நந்தி, சேடாக்கியன் மகாதேவன், கருவாத்து மகன், வீரபத்திரன், அநந்தன், பிரகற்பதி, பிரசாந்தன், ததீசி, சூலிகச வாக்கிகன், மலை யன், இவலிதன், இந்திரன், தண் டேச்சுரன், வசிட்டன், சைசபா யன், சோமன், நரசிங்கன், தேவ பிதன், சர்வ வார்த்தகன், பவோற் பவன், சிவாத்துமன், மகாகாளன் என்பவர்களாம். ஆகமங்களின்சார்புநூல் - 8 - தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், தத்துவத்திரய நிர்ண யம், போககாரிகை, மோக்க காரிகை, நாதகாரிகை, பரமோக்க காரிகை, இரத்தினத் திரயம். ஆகமவுபபேதம் - 247 - சாமிசத்திற்கு உத்தரம் நாரசிங்கம் வயிரோத் திரம் என - 3, யோசசத்திற்கு - வீணாசிகோத்தரம் தாரதந்திரம் சௌக்கியாகமம் சாந்தாத்தி யாகமம் ஆத்மயோகம் என - 5, சித்தியத்திற்கு - சுசிந்தியாகமம் சுபகாகமம் வாமதந்திரம் பாப நாசகம் சர்வோற்பவம் அமிர்தா கமம் என - 6, காரணத்திற்கு - காரணதந்திரம் பாவன தந்திரம் தௌர்க்கீய தந்திரம் மகேந்திர தந்திரம் வீமதந்திரம் மாரண தந்திரம் ஈசானதந்திரம் என - 7, அசிதம் - பிரபூதாகமம் பரோற் பூதாகமம் பார்வதி தந்திரம் பதும சங்கிதை என - 4, தீப்தம் - அமே யாகமம் அப்பிரமாகமம் அசு வாகமம் அசங்கியாகமம் அமிதௌ சேசாகமம் ஆனந்தாகமம் மாதோற் பூதாகமம் அற்புதாகமம் அமிர் தாகமம் என 6, சூக்குமம் - சூக்கும சங்கிதை என - 1, சகத்திரம் - அதி தாகமம் அமல தந்திரம் சுத்தம் அப்பிர மேயாகமம் சாதிப னாகமம் பிரபுத்தாகமம், விபுதாகமம் அத்த தந்திரம் அலங்கார தந்திரம் சுபோதாகமம் என - 10, அஞ்சு மான் - வித்தியா புராணம் பாஸ் வராகமம் நீலலோகித தந்திரம் புரகரணாகமம் பூததந்திரம் ஆன்மாலங்காரம் காசிபதந்திரம் கௌமதந்திரம் மகேந்திரம் பிரம தந்திரம் வசிட்டாகமம் ஈசானி யோத்தரம் என - 12, சுப்பிரபேதம் சுப்பிரபேத தந்திரம் - என - 1, விசயம் - விசயதந்திரம் உபவ தந்திரம் சௌமி யந்திரம் அகோர தந்திரம் மிருத்தியுநாச தந்திரம் குபே ரேசாகமம் விமல தந்திரம் மகாகோர தந்திரம் என - 8, நிசு வாசம் - நிசுவாசம் உத்தர நிசுவா சம் நிசுவாச முகோதயம் நிசுவாச நயனம் நிசுவாச காரிகை கோர சங்கிதை சுசவுக்கியம் குய்யம் என 8 - சுவாயம்புவம் - சுவயம் பூதம் பிரசாபதிபதம் பதும தந்தி ரம் என - 3, அனலம் ஆக்கினே யம் என - 1, வீரம் - பிரஸ்தார தந்திரம் பிரஸ்புர தந்திரம் பிரபோத தந்திரம், போததந்திரம் போதக தந்திரம் அமோச தந்திரம் மோக சமயதந்திரம் சகட - தந்தி ரம் சகடீக தந்திரம் ஆலதந்திரம் விலேகன தந்திரம் புத்திரதந்திரம் வீரதந்திரம் என - 13, ரௌரவம் - காலதகனம் இரௌர வோத்தரம் கௌமாரம் காளம் மகாகாளம் இந்திராகமம் என - 6, மகுடம், மகுடம் மகுடோத்தரம் என - 2, விமலம் - அநந்த போகாகமம் ஆக்கிராந்தாகமம் இருத்தகாச தந்திரம் அலிக்கிருதாகமம் அற்பு தாகமம் மாரணதந்திரம் என - 6, சந்திர ஞானம் - திரசங் கிதை தானுசங்கிதை மகாந்த சங்கிதை நாதி சங்கிதை நந்தி கேச்சுர சங் கிதை ஏகபாத புராணம் சங்கா ரகம் நீலபத்திர தந்திரம் சிவபத்தி ராகமம் கலா பேதாகமம் ஸ்ரீ முகாகமம் சிவ சாதனாகமம் சிவசேகராகமம் தேவிமதம் என - 14, விம்மம் - சதுமுக தந்திரம் மலய தந்திரம் மகா யோகம் சோந்தோ பாகமம் பிரதி விம்பாகமம் அருத்தாலங்காரம் வாயவிய தந்திரம் கௌ டாக தந்திரம் குதூ டீனிகாகமம் துலாவிருத்தம் துலா யோகம் குட்டிமதந்திரம் வருக்க சேகரம் மகா வித்தயம் மகாசவூரம் என - 15, புரோற்கீதம் - கவுசாகமம் வராக தந்திரம் பிங்கள மதம் பாசபந்த சங்கிதை தண்டதர தந்திரம் குச தந்திரம் தாரணம் சிவஞானம் விஞ்ஞானம் திரிகால ஞானம் ஆயுர் வேதம் தனுவேதம் சருதமட்டிரி விபேதம் சங்கீதம் பரதம் ஆதோத்தியம் என - 16, இலளிதம் - இலளிதம் இலளி தோத்திரம் குமாரதந்திரம் விக்கி னேச ராகமம் என - 4, சித்தம் - சாரோர்த்தரம் தேவேசெசாத்தம் காலபேதம் சசிமண்டலம் என - 4, சந்தான சருவோத்தம் இலிங்கா திக்கம் சுரத்தியக்கம் சங்கர தந்தி ரம் மகேச்சுராகமம் அசங்கியா தந்திரம் அனிலாகமம் துவந்துவா கமம் சிவதரு மோத்தரம் வாயுப்பு ரோக்தம் திவ்விய புரோக்தம் ஈசானியம் என - 11, பாரமேசுரம் மதங்க தந்திரம் யக்ஷணிசாத்திரம் பதுமாகமம் பௌட்கரம் சுப்பிர யோகம் அம்சாகமம் சாமானியா கமம் என - 7, கிரகணம் - கருடா கமம் நைருதாகமம் நீலதந்திரம் விருக்காமமம் பரனாகமம் வைக் கிரமாகமம் புத்தாகமம் பிரபுத் தாகமம் கால தந்திரம் என - 9, பேதம் - பேதாகமம் என - 1, வாது ளம் - வாதுளம் உத்தர வாதுளம் காலாஞ்ஞானம் பிரலோகி தம் சர்வாகமம் சர்வாட்டாகமம் சிரேட்டாகமம் நித்தியாகமம் சுரதாகமம், மகான்னம் விசுவா கமம் விசுவாத்மாகமம் என - 12, ஆக நூற்றுத் தொண்ணூற்றெட்டு. ஏனையவந்துழிக்காண்க. ஆகமசிவபேதம் - 10 - காமிகம், யோகசம், சிந்தியம், அசிதம், தீர்த்தம், காரணம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம். ஆகமஞானம் - 2 - அபரஞானம், பரஞானம். ஆகமபாதம் - 4 - கிரியாபாதம், ஞானபாதம், சரியாபாதம், யோக பாதம். ஆகமப்பிரிவு - 2 - கிரியா காண்டம், ஞான காண்டம். ஆகமபேதம் - 2 - சிவபேதம், உருத் திர பேதம். ஆகமப்பொரு ளிலக்கணம் - 3 - பதி லக்ணம், பசுலக்கணம், பாசலக் கணம். ஆகமமார்க்கம் - 4 - சன்மார்க்கம், சகமார்க்கம், புத்திரமார்க்கம் தாதமார்க்கம். ஆகமவகை - 2 - ஆகமம், உபாகமம். ஆகமவுருத்திரபேதம் - 18 - விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம், இளொரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், விம்பம், புரோர்க்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், பாரமேசும், கிரணம், வாதுளம். ஆகமவுற்பத்தித்தானம் - 5 - ஈசானம், தற்புருடம், அகோரம், வாம தேவம், சத்தியோசாதம். ஆசமனீயதிரவியங்கள் - 6 - ஏலம், கிராம்பூ, சாதிக்காய், சண்பகப்பூ மொட்டு, பச்சைக் கர்ப்பூரம், பூலாங்கிழங்கு. ஆசனபேதம் - 38 - சித்தாசனம், சிங்காசனம், சுவத்திகாசனம், சௌவியாசனம், சூலாசனம், சுகாசனம், சருவதோபத்தி ராச னம், கோமுகாசனம், கருடாச னம், மயூராசனம், மச்சேந்தி ராச னம், மற்சாசனம் முற்கராசனம், மண்டூகாசனம், மிருகாசனம், நாகாசனம், குக்குடாசனம், குஞ்ச ராசனம், கூர்மாசனம், காஷ்டா சனம், கிரவுஞ்சாசனம், கடகாச னம், காமதகனாசனம், யோனி யாசனம், வியாக்கிராசனம், வைநி காசனம், வத்திராசனம், வாசவா சனம், வீராசனம், வராகாசனம், பரியங்காசனம், பதுமாசனம், பதாசனம், பச்சி மத்தாணாசனம், திரிபதாசனம், அத்தனாசனம், அயிம்மாசனம், அர்த்தாசனம் என்பனவாம். ஆசாரவகை - 3 - சதாசாரம், சணா சாரம், நிதாசாரம். இவற்றுள் தனது சன் மார்க்கத்தால் சகல சரண ருக்குஞ் சந்தோஷங் கொடுப்பதே சதாசாரமாம். சிவனையும் அடி யார்களையும் நிந்தை செய்கின்ற வரைத் தண்டிப்பனென்று தண் டிப்பதே கணாசாரமாம். அன்பி னால் தான் கொண்ட ஆசாரம் பிராணாந்தம் விடாமல் கைக் கொள்வதே நிதாசாரமாம். ஆசாரவிதம் - 3 - ஒழுக்கம், வழக்கு, தண்டம். ஆசாரியராதற் குரியகுலம் - 4 - பிராமணர், அரசர், வைசியர், வேளாளர். ஆசாரியர் - 4 - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்க வாசக சுவாமிகள். ஆசாரியவகையர் - 2 - தீட்சாகுரு, வித்தியாகுரு. ஆசான்சாதி - 4 - காந்தாரம், சிகண்டி, தசாக்கரி, சுத்தகாந் தாரம். இவற்றுள் ஆசான் என்னும் பண்ணியலுக்கு அகச்சாதி காந்தா ரம், புறச்சாதி சிகண்டி, அருகு சாதி தசாக்கரி, பெருகு சாதி சுத்த காந்தார மெனக் கொள்க. ஆசிரியர் - 3 - உரையாசிரியர், நூலா சிரியர், போதகாசிரியர். ஆச்சிரமம் - 4 - பிரமசாரி, இல்வாழ் வோன். வானப்பிரத்தன், சந்நியாசி. இவருள் பிரமசாரி ஆசிரியனிடத் தோதி விரதங்காத்து விவாகமின்றி யிருப்போன், இல்வாழ்வோன் - இல்லறத்தின் வழாதில்லாளோடுங் கூடி வாழ்வோன். வானப்பிரத்தன் - இல்லந் துறந்தில்லாளோடாயினுந் தனித் தாயினும் வனத்திற்ற வஞ் செய்வோன். சந்நியாசி - முற்றத் துறந்தோன். ஆடல்வகை - 37 - வசைக்கூத்து, புகழ்க்கூத்து, வேத்தியல், பொது வியல், வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, விநோதக் கூத்து, ஆரியம், தமிழ், இயல்புக் கூத்து, தேசிக்கூத்து, சுத்த நிருத் தம், வடுகு, சிங்களம், குரவை, கலிநடம், கரணம், நோக்கு, தோற் பாவை, நகைத் திறச்சுவை, அல்லி யம், கொடு கொட்டி, குடை, துடி, குடம், பாண்டரங்கம், மல், கடை யம், பாவை, மரக்கால், பேடு, கழங்கு, பந்து, அம்மனை, பொழில் விளையாட்டு, நீர் விளையாட்டு. ஆடலின் கூறுபாடு - 3 - தாண்டவம், நாட்டியம், நிருத்தம். ஆடவர்குணம் - 4 - அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. ஆடற்பேதம் - 2 - நின்றாடல், வீழ்ந்தாடல். ஆட்டின்வகை - 6 - காராடு, செம் மறியாடு, கம்பளியாடு, மலை யாடு, துருவாடு, பள்ளையாடு. ஆணவமலகாரியம் - 8 - விகற்பம், கற்பம், குரோதம், மோகம், நகை, கொலை, அஞர், மதம். ஆண்கை - 9 - முட்டி, சிகரம், பதுமம், சந்தஞ்சம், சிலந்தி, சூசி, சதுநம், பதாகம், திரிபதாகம் என்பனவாம். ஆண்டருளுமுறை - 2 - மர்க்கட சம்பந்தம், மார்ச்சார சம்பந்தம். ஆண்பா லெழுத்து - 12 - அஆ, இஈ, உஊ, எஏ, ஐ, ஒஓ, ஒள. சிலர் உயிர்க்குற்றெழுத்தைந்தும் உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண் ணூறும் ஆகிய தொண்ணூற் றைந்தும் என்பர். ஆண்பாற்பிள்ளைக் கவிப்பருவம் - 10 - காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப்பருவம், சப்பாணிப் பருவம், முத்தப்பருவம், வருகைப் பருவம், அம்புபுலிப் பருவம், சிறு பறைப்பருவம், சிற் றில் சிதைத்தற் பருவம், சிறு தேருருட்டற்பருவம், இவை முறையே இரண்டாம் மாதம், ஐந்தாமாதம், எட்டா மாதம், ஒன்பதாமாதம், பதினோரா மாதம், பன்னிரண்டாமாதம், பதினெட்டாமாதம், இரண்டா மாண்டு, மூன்றாமாண்டு, நான்கா மாண்டு என்னுங் காலங்களிற் கூறப்படுவனவாம். ஆதாரதலம் - 6 - மூலாதாரம் திருவாரூர், சுவாதிட்டானம் திரு வானைக்கா, மணி பூரகம் திரு வண்ணாமலை, அநாகதம் சிதம்பரம், விசுத்தி திருக்காளத்தி, ஆக்கினை காசி. ஆதாரம் - 6 - மூலாதாரம், சுவா திட்டானம், மணிபூரகம், அநா கதம், விசுத்தி, ஆக்கினை. இவற் றிற்கு முறையேயிடம் - குதம், குய்யம், நாபி, இதயம், அடிநா நெற்றி. ஆதார தேவதைகள் - 6 - விநாயகக் கடவுள் - மூலாதாரம், பிரமன் - சுவாதிட்டானம், விட்டுணு - மணி பூரகம், உருத்திரன் - அநாகதம், மகேசுரன் - விசுத்தி, சதாசிவன் - ஆக்கினை. ஆதாரதோற்றம் - 6 - பந்தம், விளக்கு, மின்னல், மின்மினி, சூரியன், சந்திரன். ஆதித்தன்பிள்ளைகள் - 8 - மனு, யமன், சனி, காளிந்தி, சுக்கிரீவன், கன்னன், நாதன், தத்தியன். ஆதித்தன் றேவிமார் - 2 - உஷா தேவி, சாயாதேவி. ஆதிமார்க்கீகசாத்திரம் - 3 - பாசுபத சாத்திரம், காபாலிகசாத்திரம், மாவிரதம். ஆதியான்மிக சாத்திரம் - 3 - சாங்கி யம், பாதஞ்சலம், வேதாந்தம். ஆயுதத்தொகை - 30 - வில், வாள், சக்கரம், மழு, சூலம், தோட்டி, வேல், வச்சிராயுதம், தண்டு, ஈட்டி, கைவேல், இருப்புலக்கை, பெருஞ் சவளம், சிறுசவளம், வளைக் கயிறு, ஊசி, முசுண்டி, உளி, கைக் கட்டி, குறுந்தடி, கத்தி, கைவாள், அடைவாள், அரிவாள், கொடு வாள், வட்டம், கழுமுள், நாராசம், பிண்டிபாலம், அம்பு. ஆயுதவகை - 2 - அத்திரம், சத்திரம். இவற்றுட் கைவிடுமாயுத மத்தி ரம், கைவிடாவாயுதஞ் சத்திரம். ஆய்தக்குறுக்கம் - 2 - லகரவீற்றிற் குறுகல், ளகரவீற்றிற் குறுகல். ஆய்தம் - 2 - குற்றாய்தம், முற்றாய்தம். ஆரபடியிலக்கணம் - 2 - பொருள் பொருளாக வருதல், வீரமானுடர் தலைவராக வருதல். ஆரவகை - 8 - மலையாரம், தீமுரன், பச்சை, கிழான்பச்சை, பச்சை வெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி. ஆலயவகை - 2 - இருதயப் பிரத்தம், சரீரப்பிரத்தம். ஆழ்வார்கள் - 12 - பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ் வார், பெரியாழ்வார், தொண்ட ரடிப் பொடியாழ்வார், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், திருப் பாணாழ்வார், நம்மாழ்வார், மதுர கவியாழ்வார், ஆண்டாள். ஆளத்தி - 3 - காட்டாளத்தி, நிர வாளத்தி, பண்ணாளத்தி. ஆளத்திக்குவருமெழுத்து - 12 - அகர முதல் ஒளகாரமிறுதி யனவாம். ஆற்றுப்படை - 5 - திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, தணிகை யாற்றுப் படை. ஆனந்தம் - 8 - விடயானந்தம், பிரமா னந்தம், வாகனானந்தம், முக்கியா னந்தம், நிசானந்தம், ஆன்மானந் தம், அத்து விதானந்தம், வித்தியா னந்தம். ஆன்மா - 2 - சீவான்மா, பரமான்மா. அவையாவன - சரீரராவச் சின்ன வான்மா - சீவான்மா, இதர பதார்த்தமான வச்சின்னவான்மா பரமான்மா. ஆன்மாக்களின்வகை - 3 - விஞ்ஞானா கலர், பிரளயாகலர் சகலர். ஆன்மசரீரம் - 3 - தூலசரீரம், சூக்கும சரீரம், காராணசரீரம். ஆன்மவறிவு - 6 - சுவையறிவு, ஒளி யுணர்வு, ஊறுணர்தல், ஓசை யுணர்வு, கந்தவறிவு, பகுத்தறிவு. ஆன்மதத்துவம் - 24 - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், மெய், வாய், கண், மூக்கு, செவி, வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம், சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம், மனம், புத்தி, அகங்காரம், குணம். இ இகழ்ச்சிக் குறிப்புச்சொல் - 9 - என், இளி, ஏயே, சீச்சீ, என்னே, எற்று, எவன், எல், சை. இசை - 3 - மந்தரம், மத்திமம், தாரம். இசை - 7 - குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம். இவற்றுண் மிடற்றாற் குரல், நாவி னாற்றுத்தம், அண்ணதாற் கைக் கிளை, சிரத்தாலுழை, நெற்றியா லிளி, நெஞ்சால் விளரி, மூக்காற் றாரம் இங்ஙனந் தனித்தனி பிறக்கும்; இவையே யேழ்சுர மெனவும், வீணையிலேழ் நரம் பெனவும்படும்; இவற்றிற்கோசை யுவமை - மயில், இடபம், ஆடு, கொக்கு, குயில், குதிரை, யானை; சுவையுவமை - பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங் கனி; வாசனை, யுவமை - மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், பொன்னாவிரை, புன்னை. அக்கரம் - ஆ, அ, ஈ, இ, ஊ, உ, ஏ, எ. ஐஇ, ஒஓ, ஒளஉ. மாத்திரை நான்கு குரல், நான்கு துத்தம், இரண்டு கைக்கிளை, மூன்றுழை, நான்கிளி, மூன்று விளரி, இரண்டு தாரம். இவற்றா லெழுபாலை பிறக்கும். அவை யாவன - குரலே குரலாயிற் செம் பாலை, துத்தமே குரலாயிற் படுமலைப்பாலை கைக்கிளையே குரலாயிற் செவ்வழிப்பாலை, உழையே குரலாயினரும்பாலை, இளியே குரலாயிற் கொடிப் பாலை, விளரியே குரலாயின் விளரிப்பாலை, தாரமே குரலா யின் மேற்செம்பாலை. இவற்றுட் செம்பாலைக்குக் கொடிப்பாலை வலிது, கொடிப் பாலைக்கு விளரிப் பாலையும் மேற்செம் பாலையும் வலிது. அன்றியுந் தாரத்துளுழையு முழையுட் குரலுங் குரலுளிளியு மிளியுட் டுத்தமுந் துத்தத்துள் விளரியும் விளரியுட் கைக்கிளை யும் பிறப்பது தகுதி. இவற்றிற் கிறைவர் விசுவாமித்திரன், சமதக் கினி, சந்திரன், சூரியன், கௌதமன், காசிபன், ஈசன். இவற்றிற்குயிர் ஈசன். இசைக்கரணம் - 8 - பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவ ரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு. இவற்றின் வரலாற் றைப் பொருளகராதி வரியிற் காண்க. இசைக்கருவி - 5 - தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி, கஞ்சக்கருவி. இசைக்கிரியை - 8 - எடுத்தல், படுத் தல், நலிதல், ரம்பிதம், குடிலம், எலி, உருட்டு, தாக்கு. இசைக்குரியசுவை - 7 - பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி. இசைக்குரியதேவர் - 7 - விசுவா மித்திரன், யமன், அக்கினி, சந்தி ரன், சூரியன், கௌதமன், காசி பன், எனவுங் கூறுப. இசைக்குரியமணம் - 7 - மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், தாமரை, புன்னை. இசைக்குழற்குரியன - 5 - கருங்காலி, சந்தனம், செங்காலி, மூங்கில், வெண்கலம் என்பனவாம். இவற் றுள் மூங்கிலிற் செய்வது உத்த மம். வெண்கலம் மத்திமம். ஏனைய அதமமாம். இசைக்குரியவகை - 8 - வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட் டல், நெருட்டல், அள்ளல், பட் டடை. இவற்றுள் வார்தலாவது - சுட்டுவிரலாற் றொழில் செய்தல். வடித்தலாவது - சுட்டுவிரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை யகமும் புறமுமாராய்தல். உந்த லாவது - நரம்புகளைத் தெரித்து வலிவிற் பட்டதும், மெலிவிற் பட்டதும், நிரல்பட்டது மறிதல். உறழ்தலாவது - ஒன்றிடையிட் டும் இரண்டிடையிட்டும் இரண் டிடையிட்டும் நரம்புகளைத் தெறித்தல். உருட்டலாவது - இடக்கைச் சுட்டுவிரலுருட்டலும், வலக்கைச் சுட்டுவிரலுருட்டலும், சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும், இருபெருவிர லுமியைந்துட னுருட்டலுமாம். பிறவற்றை வந்துழிக் காண்க. இசைப்பா - 19 - செந்துறை, வெண் டுறை, பெருந் தேவபாணி, சிறு தேவபாணி, முத்தகம், பெரு வண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகு. மண்டி லம், சிந்து, திரிபதை, சவலை, சம்பாக விருத்தம், சாதிக்கிரி யைச் செந்துறை, சாதிக்கிரியை வண் டுறை, சாதிக்கிரியைப் பெருந்தேவ பாணி, சாதிக்கிரியைச் சிறுதேவ பாணி. இசைநிறையசைச்சொல் - 6 - ஏ, ஓ, உம், அம்ம, அரோ, குரை. இசைப்பாச்சாதியோசை - 3 - சுத்தம், சுரளகம், தமிழ். இசைப்பாவகை - 9 - செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்று வரி, கானல் வரி, விரிமுரண், தலைபோகு மண்டிலம் என்பன வாம். இவை யன்றிச் சிந்து, திரி பதை, சவலை, சம்பாதம், விருத்தம், செந்துறை, வெண்டுறை, தேவ பாணி, வண்ணம் எனவுங் கூறுப. இசைபிறக்கும்வகை - 6 - தாரத்துள் உழை உழையுட் குரல், குரலுள் இளி, இளியுள் துத்தம், துத்தத் துள் விளரி, விளரியுட் கைக் கிளையுமாம். இசை - 7 - தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை. இசை பிறப்பிடம் - 7 - மிடற்றால் குரல், நாவினாற்றுத்தம், அண் ணத்தாற்கைக் கிளை, சிரத்தால் உழை, நெற்றியால் இளி, நெஞ் சால்விளரி, மூக்காற்றாரம். இசைபெருந்தானம் - 8 - நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண் ணாக்கு, உதடு, பல், தலை. இசைமாத்திரைகள் - 7 - குரலிற்கு நான்கு, துத்தத்திற்கு நான்கு, கைக் கிளைக்கு மூன்று, உழைக்கு இரண்டு, இளிக்கு நான்கு, விளரிக்கு மூன்று, தாரத்திற்கு இரண்டு. இசையெழுத்து - 7 - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. இசையெழுத்து - 7 - ச, ரி, க, ம, ப, த, நி. இசையிலக்கணம் - 9 - ஆடல், பாடல், ஆதியிசை, முத்தமிழ், பண், பாணி, தூக்கு, முடம், தேசிகம், இவற்றுள் ஆடலென் பது எல்லாக்கூத்து. பாடலென் பது பண்ணல் முதலிய எல்லாப் பாடலியல்பு. ஆதியிசை யென்பது நாப்படைவாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன் றாகிய விசை. முத்தமிழென்பது வடவெழுத் தொரீஇ வந்த வெழுத் தானே உறழ்ந்து கட்டப்பட்ட வாக்கியக் கூறுகளும், இயலிசை நாடகமென்று சொல்லப்பட்டவு மாம். பண்ணென்பது நாப்படை வால் நிறந்தோன்றப் பண்ணப்படா நின்ற பண்ணும் பண்ணியற் றிறமும், திறமும் திறத்திறமுமாம். பாணியென்பது இருவகைத்தாள விகற்பம், தூக்கென்பது செந்தூக்கு முதலாய எழுவகைத் தூக்கு. முட மென்பது இவற்றின் குற்றங்கள். தேசிக மென்பது இயற்சொல் முதலிய நான்கு சொற்கூறாய் சொற்பிர யோகமாம். இசையோசை - 7 - வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனு, ஆடு. இடத்தையச்சொல் - 4 - யாங்கு, யாங்ஙனம், யாண்டு, யாண்டை. இடந்தலைப்பாட்டின் வகை - 3 - தெய்வந்தெளிதல், கூடல், விடுத்தல். இடந்தலைப்பாட்டின்விரி - 5 - தந்ததெய்வந் தருமெனச் சேறல், முந்துறக் காண்டல், முயங்கல், புகழ்தல், உடன் புணராயத் துய்த்தல். இடப்பெயர் - 44 - தத்துவம், அதலம், விதலம், சுதலம், தராதலம், நிதலம், இரசாதலம், பாதலம், சத்திய லோகம், மகலோகம், தவலோகம், சனலோகம், சுவர் லோகம், புவர் லோகம், பூலோ கம், ஆகாயம், அண்ட கோளகை, அண்ட முகடு, அண்டச்சுவர், திக்கு, நவகண்டம், எழுதீவு, நாடு, நகரம், புரம், இராசதானி, பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம், மடப்பம், பெருங்கிராமம், சிறுகிராமம், சேரி, வழி, மேடு, பயம்பு, திணை, காடு, கடல், மலை, வயல், சுரம், செய், கரம்பு, களர். இடப்பொரு ளிடைச்சொற்கள் - 44 - கண், கால், கடை, இடை, தலை, வாய், திசை, வயின், முன், சார், வலம், இடம், மேல், கீழ், புடை, முதல், பின், பாடு, அளை, தேம், உழை, வழி, உளி, இல், அகம், புறம், உள், அந்தில், ஆங்கு, ஈங்கு, ஊங்கு, அவண், இவண், உவண், ஆண்டு, ஈண்டு, யாண்டு, யாங்கு, அங்கு, இங்கு, உங்கு, எங்கு, எவண், அயல். இடம் - 2 - வழக்கிடம், செய்யுளிடம். இடம் - 3 - தன்மை, முன்னிலை, படர்க்கை. இடைச்சொல் - 11 - உவம உரு பிடைச்சொல், தத்தம் பொரு ளுணர்த்துமிடைச் சொல், வேற் றுமை யுருபிடைச்சொல், இடை நிலை யுருபிடைச்சொல், விகுதி யுருபிடைச்சொல், சாரியையுரு பிடைச் சொல், இசைநிறையிடைச் சொல், அசைநிலையிடைச்சொல், ஒலிக்குறிப்பிடைச்சொல், அச்சக் குறிப்பிடைச்சொல், விரைவுக் குறிப்பிடைச்சொல். இடைச்சொற் பொருள்கோள் - 29 - தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விழைவு, ஒழியிசை, பிரிநிலை, கழிவு, ஆக்கம், சுட்டு, காலம், இடம், எல்லை, இடப் பன்மை, தொழில் பயில்வு, பய னின்மை, விகற்பம், இரக்கம், வியப்பு, அச்சம், இகழ்ச்சி, ஒலிக் குறிப்பு, அச்சக் குறிப்பு, விரைவுக் குறிப்பு. இடைவள்ளல் - 7 - அக்குரன், அந்தி மான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன். இணைக்கை - 15 - அஞ்சலி, புட் பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கற்கடகம், சுவத்திகம், கடகா வருத்தம், நிடதம், தோரம், உற் சங்கம், புட்பபுடம், மகரம், சயந் தம், அபய வத்தம், வருத்த மானம். இணையாவிணைக்கை - 33 - பதாகை, திரிபதாகை, கத்திரிகை, தூபம், அராளம், இளம்பிறை, சுகதுண்டம், முட்டி, கடகம், சூசி, கமல கோசிகம், காங்கூலம், கபித் தம், விற்பிடி, குடங்கை, அலா பத்திரம், பிரமரம், தாம்பிர சூடம், பசாசம், முகுளம், பிண்டி, தெரி நிலை, மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதம், மகர முகம், வலம்புரி. இதிகாசம் - 3 - சிவரகசியம், பாரதம், இராமாயணம். இயக்கம் - 4 - முதனடை, வாரம், கூடை, திரள்; இவற்றுள் முதனடை யென்பது மிகவுந் தாழ்ந்த செல வினை யுடைத்து; வாரம் - அளவு நிரம்புதலுடைத்து; கூடைப்பாடல் சொற் செறிவும், இசைச்செறிவு முடைத்து; திரட்பாடல் மிக முடுகிய நடையினையுடைத்து. இந்திரற்குரியன - 16 - அமுதம், உச்சைச்சிரவம், இடி, காமதேனு, நவநிதி, இந்திராணி, அமராவதி, ஐராவதம், வச்சிராயுதம், சுதன்மம், கற்பகமலர், சயந்த மண்டபம், சயந்த குமாரன், வசந்த மாளிகை, மேகவாகனம், மருத நிலம். இந்திரன்றருக்கள் - 5 - சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரி சாதம், கற்பகம். இந்திரன் மேகம் - 7 - ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சம்காரித்தம், காளமுகி, துரோணம், நீலவரு ணம், சம்வர்த்தம். இந்திரியங்களின்விடயங்கள் - 10 - வசதம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம், சத்தம், பரிசம், இரசம், உருவம், கந்தம். இந்திரியங்கள் - 10 - வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம், சுரோத் திரம், தொக்கு, சக்கு, சிங்குவை, ஆக்கிராணம். இந்திரியவகை - 2 - கன்மேந்திரியம், ஞானேந்திரியம். இயக்கர்நகரம் - 2 - உத்தரசேடி, தக்கிணசேடி. இயமம் - 10 - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரை யும் பொது மகளிரையும் விரும் பாமை, இரக்கம், வஞ்சமில்லாமை, பொறையுடைமை, மனங்கலங் காமை, அற்பாகாரம், கசியுடைமை. இயல்புவழக்கு - 3 - இலக்கண முடையது, இலக்கணப்போலி, மரூஉமொழி. இயற்கைப்புணர்ச்சிவகை - 2 - தெய்வப்புணர்ச்சி, தலைவியிற் புணர்ச்சி. இயற்கைப்புணர்ச்சிவிரி - 22 - கலந் துழி மகிழ்தல், நலம்பா ராட்டல், ஏற்புற வணிதல், வேட்கை யுணர்த்தல், மறுத்தல், உடன் படல், கூட்டம், இரந்து பின் னிற்றற் கெண்ணல், இரந்து பின்னிலை நிற்றல், முன்னிலை யாக்கல், மெய் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம்பெற் றுத் தழாஅல், வழிபாடு மறுத் தல், இடையூறு கிளத்தல், நீடு நினைந் திரங்கல், மறுத்தெதிர் கோடல், வறிதுநகை தோற்றல், முறுவற் குறிப்புணர்தல், முயங்குத லுறுத் தல், புணர்ச்சியின் மகிழ்தல், புகழ்தல். இயற்சொல் - 4 - பெயரியற் சொல், வினையியற்சொல், இடையியற் சொல், உரியியற்சொல். இரட்டைக்கை - 15 - அஞ்சலி, புட் பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கற்கடகம், சுவத்திகம், கடகா வருத்தம், நிடதம், தோரம், உற் சங்கம், புடப்புடம், மகரம், சயந் தம், அபயவத்தம், வருத்தம். இரதம் - 9 - சிருங்காரம், வீரியம், பெருநகை, கருணை, இரௌத் திரம், குற்சை, சாந்தம், அற்புதம், பயம். இரத்தினம் - 9 - மணியென்பதைப் பார்க்க. இரவுக்குறிவகை - 9 - வேண்டல், மறுத்தல், உடன்படல், கூட்டல், கூடல், பாராட்டல், பாங்கியிற் கூட்டல், உயங்கல், நீங்கல். இரவுக்குறிவிரி - 27 - இறையோ னிருட் குறிவேண்டல், பாங்கி நெறியின தருமைகூறல், இறை வன் நெறியின தெளிமை கூறல், பாங்கி தலைவனாட் டணியியல் வினாதல், கிழவோனவ னாட் டணியியல் வினாதல், தலைவற் குத் தன்னாட்டணியியல் பாங்கி சாற்றல், இறைவிக்கிறை யோன் குறியறி உறுத்தல், நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தல், நேரிழை பாங்கியொடு நேர்த்துரைத்தல், நேர்ந்தமை பாங்கி தலைவற் குணர்த்தல், குறியிடை நிறீஇத் தாய் துயிலறிதல், இறைவிக்கிறை வன் வரவறிவுறுத்தல், அவட் கொண்டு சேறல், குறியுய்த் தகறல், தலைவ னெதிர்ப்படுதல், பெரு மகளாற்றின தருமை நினைந் திரங்கல், புரவலன்றேற்றல், புணர் தல், புகழ்தல், இறை மகளிறை வனைக் குறி விலக்கல், தலைவ னிறைவியை யில்வயின் விடுத்தல், இறைவியை யெய்திப் பாங்கிகை யுறை காட்டல், இற் கொண்டே கல், இறைவனை வரவு விலக்கல், பெருமகன் மயங்கல், தோழி தலைமகடுயர் கிளந்து விடுத்தல், திருமகட் புணர்ந்தவன் சேறல் என்பனவாம். இரவுக்குறியிடையீட்டுவகை - 2 - அல்ல குறி, வருந்தொழிற்கு அருமை. இரவுக்குறியிடையீட்டுவிரி - 18 - இறை விக்கிகுளையிறைவர வுணர்த்தல், தான் குறிமருண்டமை தலைவி யவட் குணர்த்தல், பாங்கி தலை வன் றீங்கெடுத்தியம் பல், புலந்த வன் போதல், புலந்தபின் வறுங் களந் தலைவிகண்டிரங்கல், தன் றுணைக் குரைத்தல், தலைமகள வலம் பாங்கி தணித்தல், இறைவன் மேற்பாங்கி குறி பிழைப்பேற்றல், இறைவி மேலிறைவன் குறி பிழைப் பேற்றல், அவள் குறி மருண்டமை யவளவற்கியம்பல், அவன் மொழிக் கொடுமை சென்றவளவட் குறைத் தல், இறைமகள் நோதல், தாயு நாயு மூருந் துஞ்சாமை, காவலர் கடுகல், நிலவு வெளிப்படுதல், கூகை குழறல், கோழி குரற் காட்டல். இரப்பு - 2 - மானந்தீராவிரப்பு, அது தீர்ந்தவிரப்பு. இரவிமனைவியர் - 2 - உஷாதேவி, சாயாதேவி. இரவிமைந்தர் - 5 - யமன், காளிந்தி, சனி, சுக்கிரீவன், கன்னன். இராகத்தகுதி - 4 - இடம், செய்யுள், குணம், காலம்; இவற்றுளிடம் பற்றிய விராகமைந்தினை யிரா கம்; செய்யுள், பற்றிய விராகத் துள் வெண்பா விராகம் - சங்கரா பரணம்; அகவலிராகம், தோடி; கலியிராகம் - பந்துவராளி; கலித்துறையிராகம் - பைரவி, தாழிசையிராகம் - தோடி; விருத்த விராகம் - கலியாணி, காம்போதி, மத்தி மாவதி பலவும்; உலாவி ராகம் - சௌராட்டிரம், தோடைய விராகம், சௌராட்டிரம், நாட்டை, மங்களராகம்; மங்கள கௌசிகம், தேவாரத்திராகம் - பூபாளம்; பிள்ளைக்கவி ராகம் - கேதார கௌளம்; பரணியிராகம் - கண்டாரவம்; குணம் பற்றிய விராகத்துள் இரக்கராகம் - ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி, பியா கடை, புன்னாகவராளி, துக்க விராகம் - இரக்கராகங் களன்றி வராளியின் மேலாம்; மகிழ்சி யிராகம் - காம்போதி, காவேரி, தந்நியாசி, யத்தவிராகம் நாட்டை; காலம்பற்றிய விராகத்துள் வசந்த கால விராகம் - காம்போதி, அசாவேரி, தந்நியாசி, அன்றியு மாலை யிராகம் - கலியாணி, காபி, கன்னடம், காம்போதி; சாமராகம் - ஆகரி; விடிய லிராகம் - இந்தோ ளம், இராம கலி, தோசக்கரி, நாட்டை, பூபாளம்; உச்சியிராகம் - சாரங்கம் தேசாக்கிரி, அன்றியும் ஆசரி, இந்தோளம், இராமகலி, சாரங்கம்; பூபாள நீக்கி நின்ற மற்றவை எக்காலத்துக்கும் பொது மைய. இராகம் - 32 - பைரவி, தேவக் கிரியை, மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், வேளாவளி, மலகரி, பௌளி, சீராகம், இந்தோளம், பல்லதி, சாவேரி, படமஞ்சரி, தேசி, இல்லிதை, தோடி, வசந்தம், இராமக்கிரியை, வராளி, கைசிகம், மாளவி, நாராயணி, குண்டக் கிரியை, கூர்ச்சரி, பங்காளம், தந்நியாசி, காம்போதி, கௌளி, நாட்டை, தேசக்காரி, காந்தாரி, சாரங்கம். இவற்றுள்பைரவி - புருடவிராகம், பிராமணசாதி; இதன் மனைவிகள் தேவக்கிரியை, மேகரஞ்சி, குறிஞ்சி, அதிதேவதை யீசன்; பூபாளம் - புருடவிராகம், பிராமணசாதி, இதன் மனைவிகள் வேளாவளி, மலகரி, பௌளி; அதிதேவதை, திருமால்; சீராகம் - புருட விரா கம், அரசசாதி, இதன் மனைவிகள், இந்தோளம், பல்லதி, காவேரி, அதிதேவதை, சரச்சு வதி; படமஞ்சரி - புருட விராகம், அரச சாதி, இதின் மனைவிகள் தேசி, இலலிதை, தோடி; அதி தேவதை - இலக்குமி; வசந்தம் - புருட விராகம், வைசிய சாதி, இதன் மனைவிகள், இராமக் கிரியை, வராளி, கைசிகம்; அதி தேவதை - சூரியன்; மாளவி - புருடவிராகம், வைசிய சாதி, இதன் மனைவிகள் நாராயணி, குண்டக்கிரியை, கூர்ச்சரி, அதி தேவதை - நாரதன்; பங்காளம் - புருடவிராகம், சூத்திர சாதி, இதன் மனைவிகள் தேசாக்கரி, காந்தாரி, சாரங்கம், அதிதேவதை - தும்புருவன்; இவையன்றிப் பல வகைப்பட வழங்கு மிராகம் பலவுள. அவை கூறிற் பெருகும். இராசதகுணவகை - 8 - தானம், தவம், தருமம், பேணல், ஞானம், கல்வி, நலன், கேள்வி. இராசதகுணவிருத்தி - 9 - யான் எனது என்னும் அபிமானம், வீரத் தன்மை, கொடுமை, பெரு முயற்சி, வஞ்சனை, திடமுடைமை, இரக்கமின்மை, போகமுடைமை, இடம்ப முடைமை. இராசர் - 56 - அங்கன், அருணன், அவந்திநாடன், ஆந்திரன், இலா டன், யவனன், ஒட்டியன், கருசன், கலிங்கன், கன்னடன், கருநாடன், காசன், காசி மீரன், காந்தாரன், காம்போசன், கிராடன், குருகு தேசன், குடகராசன், குந்தளன், குரு நாடன், குவிந்தன், கூர்ச்சரன், கேகயன், கேரளன், கொங்கணன், கொல்லன், கோசலன், சகதேச ராஜன், சவ்வீரன், சாலுவன், சிங்களன், சிந்துநாடன், சீனராஜன், சூரசேனன், சோழராசன், சோனக நாடன், திராவிடன், துளுவன், தெங்கனன், நிடதன், நேபாலன், பாஞ்சாலன், பப்பரன், பல்லவன், பாண்டியன், புவிந்தன், போட நாடன், மகதன், மச்சராசன், மராடன், மலையாளன், மாள வன், யுகந்தரன், வங்கன், வங்காளன், விதர்ப்பன். இராசியுச்சக்கோள் - 9 - மேடத் திற்குச் சூரியன், இடபத்திற்குச் சந்திரன், மகரத்திற்குச் செவ்வாய், கன்னிக்குப் புதன், கர்க்கடகத் திற்கு வியாழன், மீனத்திற்கு வெள்ளி, துலாத்திற்குச் சனி, இடபத்திற்கு இராகு, விருச்சிகத்திற்குக் கேது வாம். இராசிவீதி - 3 - மேடவீதி, இடப வீதி, மிதுனவீதி. இராசி - 12 - மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம். இவற்றுண் முன்னாறு முத்தராயணராசி, பின்னாறு தக்கணாயன ராசி. அன்றியு முதன் மூன்றுங்கடை மூன்றுமேறு மிராசி, இடையாறு மிறங்கு மிராசி. இராமர் - 4 - சிவராமன், தசரத விராமன், பலராமன், பரசுராமன். இராமன்குமாரர் - 2 - குசன், இலவன். இராமாயணவகை - 6 - கம்ப ராமாயணம், வான்மீகியிராமா யணம், பால இராமாயணம், அத்தி யாத்ம இராமாயணம், முல்ல இராமாயணம், பட்ட இராமா யணம். இராமன் பூசித்தவிடம் - 5 - சித்தாச் சிரமம், இராமேச்சுரம், கதிர்காமம், திருமாற்பேறு, வாரணாவதம். இராமோபதேசமந்திரம் - 2 - பலை, அதிபலை. இருடியர் - 141 - விட்டுணு, விருத்தன், விசாலாக்கன், வச்சகுண்டினன், சாபலன், ஆருணி, முயல், சமதக் கினி, சடரன், சங்கமன், சயன், பக்கன், மகாக்கிரீபன், மகாகா யன், பாசதரன், மகோதரன், கருணன், பாரகன், மகாவாகுகா லன், உத்தாலகன், அகத்தியன், வசிட்டன், காசிபன், மார்க்கண் டேயன், பிருகு, அங்கிரா, கௌத மன், கவுசிகன், தக்கன், முற்கலன், கௌச்சிகன், மகாசேனன், காணன், ஆமலகப்பிரியன், ஆரார்த்தி தரன், திரிபாதன், உக்கிரவீரன், ஏதபாதன், துவிபாதன், பதும நாபன், இரணியாக் கன், கிலீபன், உலோபன், சடரன், கல்லாரன், வளாதரன், காலாக்கினி, சுவேத வாகு, உருத்திரபதி, சூலன், சுவேதாச்சுவதரன்; சித்தன், அதற் பன், காலமாலி, பங்கன், அருணன், நேயகன், சதன், பவுலன், சீலன் பாண்டகன், பிசிங்கி, பருப்பதன், சிலாதன், காலவன், கலாதரன், கவுசிகன், சாபாலன், ஆர்த்திதன், சிவசங் கற்ப பத்தன், மாபத்தன், இலம்ப கன்னன், மாண்டன், மோசன், மசகாண்டன், சபவாணன், சங்கு, சத்திதன், அரி, விசுவன், வசு, அக்கினிவண்ணன், சாபலி, சோமன், காலரூபன், நிருதி, தேவலன், பரந்தபன், சத்தியன், நிரதிதன், சரன், சுகன், சனி, சுதீக் கணன், தூமமன், சமதக்கினி, அரிதகன், பராசரன், சூதன், பரத்துவாசன். மாண்டலியன், வியாசன், பிரன், புதன், சதானந் தன், கண்ணுவன், உபயாசன், யாசன், மத்தியந்தினன், உபமன் னியன், பதஞ்சலி, வியாக்கிர பாதன், சிகண்டி, காண்டிப்பியன், சத்தி, அத்திரி, விபாண்டகன், குண்டலன், சௌநகன், கைவல்லி யன், பண்டி தோத்த மன், சயன், சரபங்கன், வாரன், கருணன், நார தன், துருவன், அசீதன், அங்கி வேத்திரன், கபிலன், இருசியசிருங்கி, மித்திரா வருணன், காத்தியாயனன், புலத்தியன், உசத்தியன், குச்சகன், மிருககண்டூயன், மிருகண்டூயன், வாமதேன், சிகண்டிமுதலாயி னோராம். இருத்தலின்பகுதி - 2 - திருதர புடையன, திரிதரவில்லாதன. இவற்றுள் திரிதரவுடையன யானை, தேர், புரவி, பூனை முதலியன போன்றிருத்தல். திரிதர வில்லாதன பதுமுகம், உற்சட்டிதம், ஒப்படியிருக்கை, கம்புடம், அய முகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏக பாதம் என விவை. இதனை “யது முகமுற்கட்டிதமே யொப்படி யிருக்கை, சம்புடமய முகஞ் சுவத்திகந் - தனிப்புட மடில மேக பாத-முளப்பட வொன்பது மாகுந் - திரிதர வில்லாவிருக்கை யென்ப” என்று உதயண காவியத்து நருமதைச் சம்பந்தத்துட் கூறப் பட்ட தனானறிக. இனி நாடக நூலார் இவ்விருப்பை ஐம்பதென விரி வரையறையாற் கூறித்தொகை வரையறை கூறுவார் அவற்றை யொன்பதினடக்கினரென வுணர்க. “ஆதிப்பா விருத்தி யைம்பதிற் புலவோ - ரோதிக் கொண்டன ரொன்பான் விருத்தி” என்றார் நாடகநூலாகும். இருமை - 2 - இம்மை, மறுமை. இலக்கணங்கள் - 47 - அகத்தியம், அணியியல், இசை நுணுக்கம், இந்திரகாளியம், குணநூல், கூத்த நூல், சயந்தம், செயிற்றியம், தண்டி யலங்காரம், தாளவகை யோத்து, தொல்காப்பியம், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து, பஞ்ச பாரதீயம், பஞ்ச மரபு, பரதசேனாதிபயம், பரதம், புறப் பொருள் வெண்பாமாலை, பெருங் குருகு, பெரு நாரை, மதிவாணர் நாடகத் தமிழ் நூல், முறுவல், இறையனாரகப் பொருள், யத்த கௌத்துவம், கையடம், சித்தாந்த கௌமுகி, பிரயோக விவேகம், வெண்பாப் பாட்டியல், நன்னூல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப்பாட் டியல், சம்பந்த பாட்டியல், பன்னிரு பாட்டியல், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தி, மாமூலர்யாப்பு, அவிநயம், துரா லிங்கம், வையாபிகம், அதங் கோட்டாசிரியம், காக்கை பாடி னியம், வாய்ப்பியம், பனம்பாரம், கழா ரம்பம், நற்றந்தம், வாமனம், செம்பூட் சேயம் என்பனவாம். இலக்கணம் - 5 - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி. இலக்கணவகை - 2 - அகத்திலக் கணம், புறத்திலக்கணம். இலக்கியங்கள் - 118 - சீவக சிந்தா மணி. சிலப்பதிகாரம், மணி மேகலை, வளையாபதி, குண்ட லகேசி, கந்தபுராணம், சூளா மணி, அசோதர காவியம், நாக காவியம், மேருமந்தர புராணம், மாபுராணம், பூதபுராணம், நீல கேசித்திரட்டு, உதயணகாவியம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், வாயுசங்கிதை, சூதசங்கிதை, இரகுவமிசம், அகநானூறு, புற நானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, கல்லாடம், கலித்தொகை, கலிங்கத்துப் பரணி, கம்பராமா யணம், குலோத்துங்க சோழனுலா, குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, சித்தாந்தத் தொகை, தக்கயாகப் பரணி, திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை, கோடீச் சுரக் கோவை, வெங்கைக்கோவை, திருக்குறள், நரிவிருத்தம், நற் றிணை, பதினெண் கீழ்க்கணக்கு, பரமததிமிரபானு, சைவசமய நெறி, புறப்பொருள் வெண்பா மாலை, பெரியபுராணம், விம்ப சாரகதை, நைடதம், ஒன்பதாந் திருமுறை, பத்தாந்திரு முறை, பதினோராந் திருமுறை, காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், ஆதியுலா, ஏகம்ப நாதருலா பரராசசேகரம், செகராசசேகரம், சேதுபுராணம், சிவராத்திரி புரா ணம், கலி, களரியாவிரை, கனா நூல், குருகு, பரிபாடல், பாசண் டம், பெருங்குறிஞ்சி, முத்தொள் ளாயிரம், வெண்டாளி, குசேலோ பாக்கியானம், மச்சபுராணம், வில்லிபுத்தூரர் பாரதம், நல்லாப் பிள்ளை பாரதம், பெருந் தேவ னார் பாரதம், நளவெண்பா, உபதேசகாண்டம், திருப்புகழ், மதுரைக் கலம்பகம், காசிக்கலம் பகம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், பண்டாரமும் மணிக் கோவை, சிதம்பரமும் மணிக்கோவை, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, சித்தாந்த ரத்தினா கரம். ஆசாரத் திரட்டு, நட்சத்திர மாலை, சாதிவிளக்கம், அளவை விளக்கம், ஆசாரசிந்தா மணி, ஞானாமிர்தம், தத்துவ விளக்கம், சௌந்தரியலகரி, சிவானந்தலகரி, திருப்போரூர் சந்நிதிமுறை, சகலாக மத்திரட்டு, தத்துவதீபம், திருச்சிற்றம்பல நாடித்திரட்டு, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, திருவிளையாடற்புராணம், திருவாதவூரடிகள் புராணம், பட்டி னத்துப் பிள்ளையார் புராணம், கந்தரந்தாதி, கம்பரந்தாதி, திருச் செந்திலந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி, திருக் கருவை வெண்பாவந்தாதி, பேரூர்ப் புராணம், திருவானைக் காப்பு ராணம், பார்க்கவ புராணம், சாமுத்திரிகா லக்கணம், அருணகிரி புராணம், கடம்பவன புராணம், கோயிற்புராணம், சிவரகசியம், ஏரெழுபது, சிலை யெழுபது, பாகவத புராணம், சரப புராணம் முதலாயினவாம். இலக்கியம் - 2 - சிறுகாப்பியம், பெருங்காப்பியம். இலக்கியப்பொருட் டொடர்நிலைச் செய்யுட் கூறுபாடு - 6 - அத்தி யாயம், இலம்பகம், காண்டம், சருக்கம், படலம், பரிச்சேதம். இலக்கினவகை - 3 - ஆண், பெண், அலி. இலங்கைசிவதலம் - 2 - திரிகோண மலை, திருக்கேதீச்சுரம். இலங்கைச் சுப்பிரமணியதலம் - 6 - கதிர் காமம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரக் கந்த சுவாமி கோயில், வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில், கொழும்புச் சுப்பிரமணியர் கோயில், மேலைப் புலோலிப் புதுச்சந்நிதிக் கோயில். இலிங்கம் - 5 - பிருதுவியிலிங்கங் காஞ்சியில், அப்புவிலிங்கம் திரு வானைக் காவில், தேயுவிலிங்கந் திருவண்ணாமலையில், வாயுவி லிங்கஞ் சீகாளத்தியில், ஆகாய விலிங்கஞ் சிதம்பரத்தில், இவையே பஞ்சபூத வடிவங்களான பிரதான பஞ்சவிலிங்கமாம். இலிங்கவகை - 7 - பரார்த்த லிங்கம், சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம், க்ஷணிகலிங்கம். இவற்றுள் பரார்த்தலிங்கமாவது சிவபெருமான் மகாசங்கார காலம் வரையும் சாந்நித்தியரா யிருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரகிக்கப் பெறுமிலிங்கமாம். இது தாவர லிங்கம், திரலிங்கம் எனவும் பெயர் பெறும். சுயம்புலிங்கமாவது தானே தோன் றியது. காணலிங்கமாவது விநா யகர் சுப்பிரமணியர் முதலிய கணங்களாலே தாபிக்கப்பட்டது. தைவிகலிங்கமாவது விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப் பட்டது. ஆரிடலிங்கமாவது முனிவர் களாலே தாபிக்கப்பட்டது; அசுரர் இராக்கதர் முதலாயினோராற் றாபிக்கப் பட்டதும் அதுவே. மானுட லிங்கமாவது மனுடர் களாற்றாபிக்கப்பட்டது. க்ஷணிகலிங்கமாவது - பூசித்தவுடன் விடப்படும் இலிங்கம், இவற்றுள் க்ஷணிகலிங்கத்தினு யர்ந்தது மானுடலிங்கம். மானுட லிங்கத் தினுயர்ந்தது ஆரிட லிங்கம், அதனினுயர்ந்தது தைவிக லிங்கம், அதனி னுயர்ந்தது காணலிங்கம், அதனி னுயர்ந்தது சுயம்புலி லிங்கம்; க்ஷணிகலிங்கம் மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்தி ராக்ஷம், சந்தனம், கூர்ச்சம், புஷ்ப மாலை, சருக்கரை, மா எனப் பன்னிரு பொருளாலுஞ் செய்யப் படுவது. இலிங்கபுராணப்பகுதி - 2 - பூருவ காண்டம், உத்தரகாண்டம். இல்லறத்தார்சீலம் - 15 - கொல் லாமை, பொய் சொல்லாமை, களவின்மை, காமமின்மை, இர வாமை, உயர்ந்த ஆசனத்து இருத் தல், கிடத்தலின்மை, சந்தனம் மாலை முதலியன தரியாமை, பொன் வெள்ளிகளைத் தீண் டாமை, பாடலாடல் விரும்பாமை, உதயத்திற்கு முன்பு புசித்தல் என் பனவாம். இது நீலகேசி விருத்தி சமய திவாகாத்திற் கண்டது. இல்லறத்தார் பொதுச்சீலம் - 5 - கொல் லாமை, திருடாமை, வியபிசாரஞ் செய்யாமை, பொய் கூறாமை, கள்ளுண்ணாமை. இல்லறநிட்டாபரர் சீலம் - 8 - மேற்குறித்த பொதுச்சீல மைந்த னோடு, இரவிற் சுத்தமில்லாத உணவைப் புசியாமை, சந்தன முதலிய மணமுள்ள பொருள் களை யுபயோகியாமை, தரையிற் பாய்மேலே படுத்தல் என்ற மூன் றுஞ் சேர எட்டாதல் காண்க. இது தர்மிகசூத்திரம் என்னும் பௌத்த நூலார் கொள்கை. இழிசொல் - 4 - குறளை, பொய், கடுஞ் சொல், பயனில்சொல். இழுப்பி னவிநயத்தன்மை - 6 - இடுங்கிய கண்ணுடைமை, வெளிப் பட்ட பற்களுடைமை, ஒடுங்கிய முகமுடைமை, நடவக்கா லுடைமை, சேர்ந்தவுடலுடைமை, சொல்நிரம் பாமையுடைமை. இறையனாரகப்பொருளி னுரையை முறையிற் கூறினவர் - 10 - நக்கீரர், கீரவி கொற்றனார், தேனூர்க் கிழார், படியங் கொற்றனார், செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார், மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார், சொல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமார னார், திருக்குன்றத்து ஆசிரியர் மாதளவனார், இளநாகனார், முசிறி ஆசிரியர் நீலகண்டனார். இறைவனிலக்கணம் - 2 - சொரூப லக்கணம், தடத்தலக்கணம். இறைவன்சத்திகள் - 5 - ஆதிசத்தி, இச்சாசத்தி, பராசத்தி, கிரியா சத்தி, ஞானசத்தி. இறைவன்தேவிமார் - 4 - உமை, விட்டுணு, காளி, துர்க்கை. இறைவன்தொழில் - 5 - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். ஈ ஈகைவகை - 4 - புகழ், வண்ணியம், நட்பு, நிட்காமியம். ஈசன்வீரநிகழ்ந்த இடம் - 8 - திருக் கண்டியூர், திருக்கடவூர், திரு வதிகை, திருப்பறியல், திருவிற் குடி, திருவழுவூர், திருக்குறுக் கை, திருக்கோவல். ஈசன் வீரம் - 8 - பிரமன்றலை கிள்ளல், காலனை யுதைத்தல், திரிபுரா தகனம், தக்க சங்காரம், சலந்தரவதம், கயாசுரவதம், காம தகனம், அந்தகாசுர மர்த்தனம். ஈசன்பேதம் - 9 - சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், விட்டுணு, பிரமன். ஈசன்வில் - 2 - பிநாகம், மேரு. ஈசுவரிபேதம் - 7 - அதிக்கிராந்த விந்துக பராசத்தி, அநதிக்கிராந்த விந்துக பராசத்தி, மனோன்மணி, மகேசுவரி, உமை, இலக்குமி, சரசுவதி. ஈச்சுரன்வகை - 3 - இலயசிவன், போகசிவன், அதிகாரசிவன். ஈச்சுரன்குணம் - 8 - தன்வயத் தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங் களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி வின்பமுடைமை இவை சைவாக மத்துட் கூறப்பட்டன. அன்றியும் வரம்பின் ஞானம், வரம்பில் காட்சி, வரம்பிலின்பம், வரம்பிலாற்றல், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, இடையூறின்மை என்பன ஆருகதராற் கூறப் பட்டன. ஈச்சுரசத்தி - 5 - ஆதிசத்தி, இச்சா சத்தி, கிரியாசத்தி, பராசத்தி, ஞானசத்தி. ஈச்சுரபேதம் - 9 - சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேச்சுரன், உருத்திரன், விட்டுணு, பிரமன். ஈச்சுரன் பிரபுத்துவசாமார்த்தியகுணம் - 3 - கர்த்தத்துவம், அகர்த்தத்து வம், அன்னிய தாகர்த்தத்துவம். ஈச்சுரன்முகம் - 5 - ஈசானம் தற்புரு டம், அகோரம், வாமம், சத்தியோ சாதம்; இவற்றுள் ஈசானம் அனைத்து மாளுதல், தற்புருடங் காத்தல், அகோர மழித்தல், வாமம் விளக்கல், சத்தி யோசாதந் தோற்று வித்தல். ஈச்சுரன்முக்கியகுணம் - 9 - சருவஞ் ஞத்துவம், சருவேச்சுரத்துவம், சருவநியந் திருத்துவம் சருவாந் தரியா மித்துவம், சருவ கற்பிதத் துவம், சருவ சத்தித்துவம்; அன்றி யும் தன் வயத்தனாதல், முதலில னாதல், உடம்பிலனாதல், எல்லா நலமுளனாதல், எங்கும் வியாபக னாதல், எவற்றிற்குங் காரண னாதல். ஈச்சுரன்மூர்த்தம் - 25 - சந்திர சேகரர், உமாமசேகர், இடபா ரூடர், சபாபதி, கல்யாண சுந்தரர், பிக்ஷhடனர், காமாரி, காலாரி, திரி புராரி, சலந்தராரி, மாதங் காரி, வீரபத்திரர், அரியர்த்தர், அர்த்த நாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டே சாநுக்கிரகர், நீலகண்டர், சக்கிரப்பிரதர், சகமுகா நுக்கிரகர், சோமாஸ் கந்தர், ஏகபாதர், சுகா சீனர், தக்கிணா மூர்த்தி, இலிங் கோற்பவர். ஈடணம் - 3 - தனவீடணை, தார வீடணை, புத்திர வீடணை. ஈதி - 7 - விட்டில், கிளி, நாவாய், பன்றி, தொட்டியர், களவர், பெரும்புயல். வேறுவகையாகப் பரிமேலழகருரைப்பர். ஈழமண்டலப்பிரிவு - 10 - கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், திரி கோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், குருநாக்கல், சப்பிர காமம், ஊவா என்பனவாம். இவை ஜில்லா அல்லது மாகாணம் எனப்படும். உ உகம் - 4 - கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம். உடம் பிற்றோன்றும்பாவம்-3-கொலை, களவு, காமம். உடல் வர்த்தனை - 9 - மெய் சாய்த் தல், இடைநெரித்தல், சுழித்தல், அணைத்தல், தூக்குதல், அசைத் தல், பற்றல், விரித்தல், குவித்தல், என்னை? “மெய் சாய் விடை நெரிவு மேற்சுழிவோடாங் கணைத் தல், கை தூக்கசைத்தல் கலைபற்றல் - கைகள், விரித்தல் குவித்த லிவை சிங்களமாமென்று, தெரித்தனர் தண்டமிழோர் தேர்ந்து” என்றா ராகலின். உடல் - 3 - தூலம், சூக்குமம், கார ணம். உடல்வகை - 3 - தூலம், சூக்குமம், காரணம். உடற்குறை - 8 - குறள், செவிடு, மூங்கை, கூன், குருடு, மருள், மா, உறுப்பிலாப்பிண்டம். உடற்குறைவு - 5 - கொட்டாவி, நெட்டை, குறுகுறும்பு, கூன் கிடை, நட்டுவிழல். உடற்குற்றம் - 18 - பசி, நீர்வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண் டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்ப் படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த் தல், தேகம், கையறவு. உட்சமயம் - 6 - வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசு பதம், சைவம். உட்பகை - 6 - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்ச்சரியம். உணவு - 5 - கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல். உண்டி - 4 - உண்டல், தின்றல், நக்கல், பருகல், அவையாவன சோறு முதலிய வுண்டல், கறி முதலிய தின்றல், தேன் முதலிய நக்கல், நீர் முதலிய பருகல். உண்மைப்பொருள் - 3 - பதி, பசு, பாசம். உதயணகாவியகாண்டம் - 6 - உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மசதகாண்டம், வத்தவ காண்டம், நரவாகனகாண்டம், துறவுக்காண்டம். உதயணன்மந்திரிகள் - 4 - யூகி, உருமண்ணுவான், வயந்தகன், விடபகன். உத்தமத்தோற்பெருங்கருவிவகை - 4 - மத்தளம், தண்ணுமை, இடக்கை, சல்லிகை. உத்தி - 32 - நுதலிப்புகுதல், ஒத்து முறைவைப்பு, தொகுத்துச் சுட் டல், வகுத்துக்காட்டல், முடித் துக் காட்டல், முடிவிடங் கூறல், தானெடுத்து மொழிதல், பிறன் கோட்கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்ச்சொற் புணர்த் தல், இரட்டுற மொழிதல், ஏதுவின் முடிதல், ஒப்பின் முடித்தல், மாட் டெறிந் தொழுகல், இறந்தது விலக்கல், எதிரது போற் றல், முன் மொழிந்து கோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்து மென்றல், உரைத்தாமென்றல், ஒருதலை துணிதல், எடுத்துக் காட்டல், எடுத்த மொழியினெய்த வைத்தல், இன்னதல்ல திதுவென மொழி தல், எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல், பிறநூன் முடிந்தது தானுடன் படுதல், தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல், சொல் லின் முடிவினப் பொருண் முடித் தல், ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல், உய்த்துணரவைப்பு. உத்தியோகத்தலைவர் - 29 - உவராசன், பிரதானி, அமைச்சர், புரோகிதர், சேனாபதி, தௌ வாரிகள், அந்தர்வம் சிகன், காரா காராதிக்கிருதன், அர்த்த சஞ்சயக் கிருது, காரிய நியோ சகன், பிராட் விவாகன், சேனா நாயகன், நகராத் தியக்ஷன், கருமாந்திரிகன், சப்பி யன்; தருமாந்தியக்ஷன், தண்ட பாலன், துர்க்கபாலன், இராட்டி ராந்த பாலன், சபிகர், தூதுவர், வித்துவாம்சர், இரதபரிணிதர், சதுர்வீத போக சங்கரர், நியாயா திபதி, நியாய துரந்தரன். உத்தமகுலத்தார் - 4 - பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர். உபசாரம் - 16 - தவிசளித்தல், கைகழு நீர்தரல், கால்கழுநீர்தரல், முக்குடி நீர்தரல், நீராட்டல் ஆடைசாத் தல், முப்புரிநூல் தரல், தேய்வை பூசல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும் புகைகாட்டல், விளக்கிடல், கருப்பூரமேற்றல், அமுதமேந்தல், அடைகாய்தரல், மந்திரமலரா னருச்சித்தல். உபநிடதம் - 108 - ஐதரேயம், கௌ பீதகீ, நாதவிந்து; ஆத்மப்ரபோ தம், நிருவாணம், முத்கலை, அக்ஷமாலிகை, திரிபுரை, சௌ பாக்கியம், வக்விருச்சானை; இப் பத்தும் இருக்குவேத உபநிடதம்; கடவல்லி, தைத்திரீயம், பிரமம், கைவல்லியம், சுவேதாச்சுவதரம், கர்ப்பம், நாராயணம், அமிர் தவிந்து, அமிர்தநாதம், காலாக் கினி, ருத்திரம், க்ஷ&ரிகை, சர்வ சாரம், சுகரகசியம், தேசோ விந்து, தியானவிந்து, பிரமவித்தை யை, யோகதத்துவம், தக்ஷிணா மூர்த்தி, ஸ்கந்தம், சாநீரகம், யோக சிந்தை, ஏகாக்ஷரம், அட்சியம், அவதூதம், கரம், உருத்திர விருதயம், யோக குண்டலினி, பஞ்சப்பிரமம், பிராணாக்கினி, தோத்திரம், வராகம், கலிசந்தரணம், சரசுவதி, ஈசாவாசியம், பிருகதாரணியம், சாபாலம், அம்சம், பரமகம்சம், சுபாலம், மந்திரிகை, நிராலம்பம், திரிசிகி, மண்டலம், அத்துவய தாரகம், பைங்கலம், பிட்சு, துரியா தீதம், அத்தியாத்துமம், தாரசாரம், யாஞ்ஞவல்லியம், சாட்டியாயனி, முத்திகம்; இவ் வைம்பத்தொன் றும் யசுர்வேத உபநிடதங்கள்; கேனம், சாந்தோக்கியம், ஆருணி, மைத்திராயணி, மைத்திரேயி, வச்சிர சூசிகம், யோக சூடாமணி, வாசு தேவம், மகத்து, சந்நியாசம், அவ்வியத்தம், குண்டிகை, சாவித் திரி, உருத்திராக்க சாபாலம், தரி சனம், சாபாலம் இப் பதினாறுஞ் சாமவேத உபநிடதங்களாம்; பிரச்சினம், முண்டகம், மாண் டூக்கியம், அதர்வசிரசு, அதர்வ சிகை, பிருகச்சாபாலம், நிருசிம் ஹதாபனி, நாரத பரிவி ராசகம், சீதை, சரபம், திரிபாத் வீயமகா நாராயணம், இராமரக சியம், இராமதா பனி, சாண்டில் லியம், பரமகம்சபரி, விராசகம், அன்ன பூரணை, சூரியன், ஆத் மம், பாசுபதம், பரப்பிரமம், திரிபுராத பினி, தேவி, பாவனை, பஸ்மசா பாலம், கணபதி, மகா வாக்கியம், கோபாலதபனம், கிருஷ்ணம், அயக்கிரீவம், தத் தாத்திரேயம், காருடம் என்னும் இம் முப்பத் தொன்றும் அதர்வணவேத உப நிடதங்களாம். இந் நான்கு வேதங் களும் ஆயிரத்து நூற்றெண்பது உபநிடதங்க ளிருப்பினும் அதிசார மாயும் இரகசியமாயும் உள்ளன இந் நூற்றெட்டும் பின்வரு முப்பத் திரண்டுமாம். இவற்றுள்ளே அதர்வசிரோப நிடதம், கைவல் யோப நிடதம், சுவேதாச்சுவரோப நிடதம், காலாக்கினி ருத்திரோபத நிடதம் என்னும் சாந்தோக்யோப நிடதம் ஐந்தும் பஞ்சருத்திர மெனப்படும். உபநிடதம் - 32 - சீருத்திரம், பிருக தராண்ணியம், சுவேதாசுவதரம், கைவல்லியம், காலாக்கினி, கடம், வல்லி, காத்தியாயனம், பிரமம், நாராயணம், அங்கிசம், பரமாங் கிசம், பாற்கரம், பிரமபிந்து, ஆருணி, அமிர்தபிந்து, பகுவ பஞ்சம், பிரம சாலாபம், தேசோ பிந்து, வார்சி யாய நீயம், போதாய நீயம், ஆசுவ லாயநீயம், சாங்கி யாயநீயம், வாசீ ராயநீயம், சௌன்கீயம், சிவசங்கற் பம், சிரவணம், பாராகம், கிம்பு ரோடியம், மாண்டூகம், முண்டிரம், மௌண்டிரம். உபபுராணம் - 18 - சனற்குமாரம், நாரசிங்கம், நந்தி, துருவாசம், சிவதருமம், நாரதீயம், காபிலம், மானவம், அவுசனம், வாசிட்ட லையங்கம், வாருணம், காளிகம், சாம்பேசம், சௌமியம், சவுரம், பராசரம், பார்க்கவம். இவை யொவ்வொன்றும் அகத்தியம் தொல்காப்பிய மென்றாற் போலக் கருத்தாவின் பெயரி னையே வேகிக்கிறது. இவற்றுள் நந்திபுராணம் நந்தகேச் சுரம், நந்தம் எனவும், சாம்பேச புரா ணம் சாம்பம் எனவும், சௌமிய புராணம் சோமம் எனவும், சவுர புராணம் ஆதித்யம் எனவும், பராசர புராணம் பராசரீயம் என வும், பார்க்கவ புராணம் விநாயக மான்மியம் எனவும் பெயர் பெறும். இவை பதினெட்டினுக்குங் கிரந்தத் தொகை ஓரிலக்கம். உபபுராணவிலக்கணம் - 5 - உலகத் தோற்றம், ஒடுக்கம், மநுவந்தரம், முனிவர் அரசர் மரபு, அவர் சரிதம் என்னும், ஐந்தும் இவற்றிற் குறைந்தவுமாம். உபவேதம் - 4 - ஆயுர்வேதம், அர்த்த வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம். உபாங்கம் - 4 - மீமாஞ்சை, தருக்கம், புராணம், மிருதி. உபாயம் - 4 - சாமம், தானம், பேதம், தண்டம். அவையாவன சமா தானத் தோடாயினும், பொருள் கொடுத்தாயினும், பிறரைப் பிரித் தாயினும், படைகொண்டாயினுங் காரியங்கொள்ளல், இந் நான்கு மரசர்க் குரியனவாம். உம்மைத்தொகைவகை - 4 - எண்ண லும்மைத் தொகை, எடுத்தலும் மைத் தொகை, முகத்தலும்மைத் தொகை; நீட்டலும்மைத்தொகை. இவற்றிக்கு முறையே உதாரணம் வருமாறு: ஒன்றேகால், கழஞ்சே கால், கலனே தூணி, சாணங் குலம். உயிர்த்தீ - 3 - உதரத்தீ, சினத்தீ, விந்துத்தீ. உயிர்த்தோற்றம் - 4 - கருப்பை, முட்டை, நிலம், வியர்வை, இவற்றை சராயுசம், அண்டசம், உற்பிசம், சுவேதசம் என்பர் வடநூலார். உயிர்ப்பொருள்களின் குணப்பண்பு - 32 - அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, உவப்பு, இரக்கம், நாண், வெகுளி, துணிவு, அழுக்காறு, அன்பு, எளிமை, எய்த்தல், துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி யென்பன வாம். உயிர்ப்பொருள்களின் றொழிற்பண்பு - 5 - துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல். உயிர்வேதனை - 12 - அனல், சீதம், அசனி, புனல், வாதம், ஆயுதம், விடம், மருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை. உயிர்ப்பிறப்பு - 6 - கரும்பிறப்பு, கருநீலப் பிறப்பு, பசும்பிறப்பு, செம்பிறப்பு, பொன் பிறப்பு, வெண் பிறப்பு. இவை அசீதவன் மதம். உரிச்சொல் - 4 - இசையுரிச் சொல், குறிப்புரிச்சொல், குணப்பண் புரிச்சொல், தொழிற் பண்புரிச் சொல். உருத்திரம் - 5 - அதர்வசி ரோப நிடதம், கைவல்யோப நிடதம், சுவேதாசுவத ரோப நிடதம், காலாக் நிருத்ரோப நிடதம், சாந் தோக்யோப நிடதம் (பஞ்சா ருத்ரம்). உருத்திரர் - 11 - மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோ கிதன், ஈசானன், விசயன், வீம தேவன், பவோற்பவன், காபாலி, சௌமியன். உருத்திரர் - 108 - இந்திர திக்கில் கபாலீசன், அசன், புத்தன், வச்சிர தேகன், பிரமத்தனன், விபூதி, அவ்வியன், சாத்தா, பினாகி, திரி சோதியன்; அக்கினி திக்கில் உருத்திரன், உதாசனன், பிங்கலன், காசதன், அயன், சுவலன், தகனன், வெப்புரு, பிருமாந்தகன், க்ஷயாந் தகன்; இயமதிக்கில் யாமியன், மிருத்தியு, அரன், தாதா, விதாதா, கத்திரு, காலன், தன்மன், சங் யோத்தா, வியோகிருதன்; நிருதி திக்கில்; நிருதி, மாரணன், அரந்தா, குரூர திருட்டி, பயாந்தகன், ஊர்த்துவ காயன், விரூபாக்ஷன், தூமிரு, உலோகிதன், தெங்கிருட் டினன்; வருண திக்கில் பலன், அதிபலன், பாசத்தன், மகா பலன், சுவேதா, செயபத்திரன், தீர்க்க வாகு, செலாந்தகன், வடவாமுகன், தீமான்; வாயு திக்கில் சீக்கிரன், இலகு, வாயு வேகன், தீக்ஷணன், சூக்குமன், க்ஷயாந்தகன், பஞ்சாந் தகன், பஞ்சசிகன், கபத்தி மேக வாகனன்; குபேர திக்கில் நிதீசன், ரூபவான், தன்னியன், சௌ மியன், சௌமியதேகன், பிரமத் தனன், சுப்பிரகடன், பிரகாசன், இலக்குமிவான், சோமேசன்; ஈசானதிக்கில் வியாத்தியாதீபன், ஞானபுகன், சருவன், வேதபார கன், மாத்துரு விருத்தன், பிங்க லாக்ஷன், பூதபாலன், பலிப்பிரி யன், சருவ வித்தியாதி யாதிபன், தாதா; அண்டகடாக வோட்டுக் குக் கீழே விஷ்ணு திக்கில் அனந் தன், பாலகன், வீரன், பாதாலிரதி பதி, விபு இடபத்து வசன், உக்கி ரன், சுப்பிரன், உலோகிதன், சருவன்; அண்ட கடாகத்தின் மேலே பிரம திக்கில் சம்பு, விபு, கெணாத்தியக்ஷன், திரியக்ஷன், திரீதேசக வாதகன், சன்வாகன், விவாகன், நபன், லீபசு, விலட்சு ணன் என்பவர்களாம். உருத்திராக்கத்தின் பெயர்கள் - 4 - அக்கம், கண்டி, கண்டிகை, கண்மணி. உருத்திராக்க வருணம் - 4 - வெண்மை நிற வுருத்திராக்கம் அந்தணசாதி; பொன்மை நிற வுருத்திராக்கமும் செந்நிற வுருத்தி ராக்கமும்; க்ஷத்திரிய சாதி; வெண்மை, செம்மை கலந்துள்ள மணி வைசிய சாதி; கருநிறமணி சூத்திரசாதி. உருத்திராக்கவகை - 5 - வெண்ணிற மணி, கபில நிறமணி, செந்நிற மணி, பொன்னிறமணி, கருநிற மணி. உருத்திராக்கவளவு - 2 - எண்ண ளவு, எல்லையளவு. உருத்திராக்கந் தரிக்குங் காலங்கள் - 11 - சிவமந்திர செபம், சந்தியா வந்தனம், சிவபூசை, சிவபுராண படனம், சிவத்தியானம், சிவாலய தரிசனம், தேவார திருவாசக பாராயணம், அவை கேட்டல், தீர்த்தமாடல், விரத மநுட்டித் தல், சிராத்தஞ் செய்தல். உருத்திராக்கந் தரிக்கலாகாத காலங்கள் - 6 - சயனம், மலசல, மோசனம், புணர்ச்சி, நோய், சனனா சௌசம், மரணா சௌசம். உருத்திராக்கந் தரிக்குந் தானங்கள் - 10 - குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள். உருத்திராக்க மணிமுகம் - 16 - ஒரு முகமணிமுதற் பதினாறு முக மணி வரைக்கும் உள்ளனவாம். உருத்திராக்க தாரண பிரீதித் தேவதைகள் - 80 - பிரமன், விட்டுணு, உருத்திரன், பிரமாணி, நாராயணி, மாகேசுவரி, கௌரி, நாராயணி, வராகி, உருத்திராணி, இந்திராணி, அநந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிபாதர், சிகண்டி, ஸ்ரீகண்டர், கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணநிதி, துங்க பத்திரை, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன் பவோற்பவன், கபாலி, சௌமியன், ஆதித்தர் பன்னிரு வர், அச்சு வினிகள் இருவர், ஈசர் பதினொருவர், வசுக்கள் எண்மர். உருவப்பரமலோகம் - 20 - பிரம, காயிகலோகம், பிரம புரோகித லோகம், காப்பிரமலோகம், பரீத் தாபலோகம், அப்பிரமாணாப லோகம், ஆபாஸ்வர லோகம், பரீத்த சுபலோகம், அப்பிரமாண சுபலோகம், சுபகிரூஸ்க லோகம், அசஞ்ஞியா சத்துவ லோகம், அப்பிரகலோகம், அதபலோகம், சுதரிச லோகம், சுதர்லோகம், அகநிட்டலோகம், ஆகாசானந் தியாயதன லோகங்க ணான்கு இதன்கண் பின்னர்ச் சொல்லப் பட்ட நான்குலகங்கள் அரூப்ப பிடமாலோகம் என்பர் மணி மேகலையார். உருவப்பிரமர் - 16 - சுரோபத்தி என்னும் முதலாவது தியானத்திற் றேற்றியவர்கள் மூவர், கிருதா காமி என்னும் இரண்டாவது தியானத்திற்றேறியவர்கள் மூவர், அநாகாமி என்னும் மூன்றாவது தியானத்திற்றேறியவர்கள் மூவர்கள், அர்க்கத் என்னு நான் காவது தியானத்திற் றேறியவர்கள் எழுவராம். இது புத்தமதம். உரை - 4 - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை, அவை யாவன: செய்யுட் கருத்துரைத் தலே கருத்துரை, சொற்றொறும் பதப்பயனுரைத்தலே பதவுரை, பொருடொகுத்துரைத்தலே பொழிப்புரை, இலக்கணமு மிலக் கியமு மெடுத்துக்காட்டிப் பொருள் விரித்துரைத்தலே யகலவுரை. உரைப்பொது விலக்கணம் - 14 - பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினா, விடை, விசே டம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரிய வசனம். உரையிலக்கணம் - 5 - பதம், பதப் பொருள், உதாரணம், வினா, விடை. உலகம் - 3 - பூமி, அந்தரம், சுவர்க் கம். அன்றியும் பூலோகம், பர லோகம், பாதாள லோகமென் பாருமுளர். உலகம் - 14 - மேலுலகேழுங் கீழுல கேழும் - மேலுலகாவன; பூலோகம், புவலோகம், சுவலோகம், சன லோகம், தபோலோகம், மகலோகம், சத்தியலோகம்; கீழுலகாவன; அத லம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம். உலோகம் - 9 - தமனியம், இரும்பு, தாமிரம், ஈயம், வெள்ளி, பதுகம், இரதி, நாகம், கஞ்சம். உலோகம் - 5 - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், இவையே பஞ்சலோகம். உலோகம் - 7 - செம்பொன், வெண் பொன், கரும்பொன், செம்பு, ஈயம், வெண்கலம், தரா. உவமைப்போலி - 18 - சாத்திய விக லன், சாதக விகலன், உபய விக லன், ஆசிரிய வீனன், அவ்வியாத் திய பிதானன், விபரீதவியாத்திய பிதானன், சாதனாவியா விருத் தன், சாத்தியாவ் வியாவிருத்தன், உபயவியா விருத்தன், ஆசிரய விகீனன், வியாவிருத்திய பிதானன், விபரீதவியாத்திய பிதானன், சந் தித்த சாத்தியன், சந்தித்தவு பயன், சந்தித்த வாசிரயன், சந்தித்த சாத் தியாவவிய விருத்தன், சந்தித்த சாதனாவ்வியா விருத்தன் என் பனவாம். இவற்றுள், 1 - சாத்தியவிகலனாவது மனம் அநித்தியம் என்கின்ற மூர்த்த மாகையினால் என்னும் எதுவிலே பரமானுவைப்போல் என்கிற திருட்டாந்தமாம். அநித்தியத் துவம் என்னுஞ் சாத்திய மில்லா மையா லென்க. 2 - சாதகவிகலனாவது மனம் அநித்திய மூர்த்த மாகையினாலே யென்னும் ஏதுவுக்குக் கன்மம் போல என்கிற திருட்டாந்தம்; மூர்த்தத்துவம் என்னுஞ் சாதன மில்லையாம் என்க. 3 - உபயவிகலனாவது - இந்தச் சாத்தியத்துக்கும், இந்த ஏதுவுக் கும், ஆகாயம் போல என்னுந் திருட்டாந்தத்தினாலே சாத்திய மாயிருக்கிற அநித்தியமும் சாதன மாயிருக்கிற மூர்த்தத்துவமும் ஆக இரண்டும் அல்லாமையா லென வறிக. 4 - ஆச்சரியவீனனாவது - இந்த வேதுவுக்குத்தானே ஆகாயத்திற் பூப்போல என்கிற திருட்டாந்த மாயிருக்கிற ஆகாய புட்பம் இல்லாத படியினால் என்க. 5 - அவ்வியாத்தியபிதானன் - ஆவது இந்த வேதுவுக்குத் தானே கடம் போலென்கிற திருட்டாந்தத்தி னாலோயாதொன்றுமூர்த்தம் அதுநித்தியம். கடம்போலென்கிற தலத்திலே யொழியப் புறத்தில் வியாத்தி தோன்றாத படியினால் எனவறிக. 6 - விபரீதவியாத்தியபிதானன் - ஆவது இந்தவேது சாத்தியங் களுக்கே யாதொன்றுமூர்த்தம் அது அநித்தியம் என்று வியாத்தி சொல்லாமல் இதற்கு விபரீதம்யா தொன்று அநித்தியம் அது மூர்த்த மென்று வியாத்தி சொல்லுகை யினானறிக. 7 - சாதனாவ் வியாவிருத்தனாவது - இந்தவேது சாத்தியங்களுக்குத் தானே யாதொன்றும் அநித்திய மல்ல, அது மூர்த்தமுமல்ல, பரமாணுவைப் போல வென்னுந் திருட்டாந்தத்தினாலே சாதன மாயிருக்கிற மூர்த்த தத்துவம் வியாவிருத்த மாகாமல் அதிலே யிருக்கையினாலெனவறிக. 8 - சாத்தியாவ் வியாவிருத்தனாவது - இந்தவேது சாத்தியங்களுக்கே கன்மவத் தென்கிற திருட்டாந்தத் தினாலே இங்ஙனமுள்ள வெதி ரேகவி யாச்சியத்தினாலே சாத்திய மாயிருக்கின்ற அநித்தியத்துவம் வியாவிருத்த மாகாமலிருக்கை யினா லெனவறிக. 9 - உபயவியா விருத்தனாவது - இந்தவேது சாத்தியங்களுக்குக் கடாதியைப் போலவென்கிற திருட்டாந்தம் பொருந்து கையினா லென்க. 10 - ஆச்சிரயவிகீனமாவது - இந்த வேது சாத்தியங்களுக்கு ஆகாயத் திற்பூப்போல என்கிற திருட்டாந் தம் பொருந்துகையினா லென்க. 11 - வியாவிருத்தியபிதானனாவது ஆச்சிரயம்போல என்கிற வியாத் தியுண்டா கையா லென்ப. 12 - விபரீதவிருத்தியபிதானன் - ஆவது இந்த ஏது சாத்தியங் களுக்கே விபரீ தவியாத்தியிலே ஆகாயவத்தென்கிற திருட்டாந் தம் பொருந்துதலா லெனவறிக. 13 - சந்தித்த சாத்தியன் - ஆவது சிவன் மகாராஜனாவான், சோம வமிச உற்பவனாகலால் இராச் சிய பாரத்துக்குக் கர்த்தரான இராசபுத்திரனைப் போல இந்த ஏது இவனிராச்சிய பாரத்துக்குக் கர்த்தனாகப் போகின்றா னென் னுஞ் சாத்தியத் தோடே கூடவி யாத்திக்குந் திருட்டாந்தம் நிச்ச யித்து இராச்சிய பாரத்தை யுடையவனாகையா லெனவறிக. 14 - சந்தித்தசாதனனாவது - இவன் அசர்வஞ்ஞன், அஃதெக் கார ணத்தா லெனின், இராகத் துவே ஷாதிகளுடன், கூடின வனாக லால் தெருவிற் செல்லும் புரு டனைப் போல, இந்த வேது வுக்குத் திருட்டாந்தமா யிருக்கிற தெருவிற் செல்லும் புருடனிச்சி தசாதனனாகலானும், சாத்திய மாயிருக்கும் இந்தப் புருடனி டத்திலே அசர் வஞ்ஞ இலக்கண முண்டோவில்லையோ எனச் சங்கையுறுதலானும் இது திருட் டாந்த ஆபாசமாயிற்று. 15 - சந்தித்தோ பயனாவது - இவன் சுவர்க்கத்தை யடையப் போகி றான், முற்பிறப்பில் தேடப்பட் டிருக்கிற சற்கரும பலத்தை யுடையவனாகலால், தேவதத் தனைப் போல, இந்தத் திருட் டாந்தத்திலே யேதுவா யிருக்கிற முன்பு அர்ச்சித்த சுத்த சருமத் துவமுஞ் சாத்தியமா யிருக்கிற சுவர்க்காதித்து வமுஞ் சந்தித்துவ மாகலா லென்க. 16 - சந்தித்தவாசிரயனாவது - இவன் சருவஞ்ஞனன்று, அஃதெக் காரணத்தாலாமெனில், வெகுவத் தாவா யிருத்தலான், இனிப் பிறக்குந் தேவதத்தனைப் போல என்னுந் திருட்டாந்தமாயிருக்கிற தேவதத்தன் பிறக்கின்றதற் கேது வாய் பிரமாண மில்லாமையா லென்க. 17 - சந்தித்தசாத்தியாவ்வியா விருத்தனாவது - யாரொருவன் மகத்தாயிருக்கிற அரசாட்சியைச் செய்யவில்லை. அவன் சந்திர வமிசத்திற் பிறந்தவனு மன்று வேறேயொரு இராச புருடனைப் போல என்கிற திருட்டாந்தத் திலே திருட்டாந்தமான இராச புத்திரனிடத்திலே சாத்தியாவ் வியா விருத்தீய முண்டாய்ச் சந்தேக முண்டாக லானென்க. 18 - சந்திக்க சாதனவ்வியாவிருத்தன் ஆவது யாவனொருவன் சருவஞ் ஞன் அவனே இராகத்து வேட மில்லாதவன்; சகல சாத்திரங்களி னும் வல்லவனைப்போல என்னுந் திருட்டாந்தத்திலே யிருக்கிற சமத்த சாத்திரக்கியனுக்கு இராகாதி யில்லையென்று பிரமாணமில் லாமையா லென்க. உவமைத்தொகை - 4 - வினை யுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவமம். உவமையுருபு - 52 - அற்று, அனைய, அன்ன, ஆங்கு, இகல், இயைய, இன்ன, உறழ, என்ன, ஏய்ப்ப, ஒப்ப, கடுப்ப, கதழ்வு, கேழ், சன்னியம், சேத்து, தூக்கு, நிகர, நேர, புரைய, போல, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, வெள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொற்ப, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, துளைப்ப, சுற்ற, காய்த்த. உவர்ப்பு - 6 - ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், குற்சை, இவை முறையே சிரிப்பு, ஆசை, வெறுப்பு, சோர்வு, அச்சம், அருவருப்பு. உலா - 2 - அமாவாசி, பௌர்ணமை. உழிஞைத்துறை - 8 - கொள்ளார் தேசஞ் குறித்த கொற்றம், உள்ளி யது முடிக்கும் வேந்தன் சிறப்பு, தொல்லெயிற் கவர்தல், தோலின் பெருக்கம், அகத்தோன் செல்வம், முரணிய புறத்தோனணங்கிய பக்கம், திறம்படவொரு தான் மண்டியகுறுமை உடன்றோர் வருபகை, பேணா ரெயில் கூறல். உழிஞையிலக்கணம் - 2 - வேற்று வேந்தனுடைய அரணைச் சென்ற வேந்தன் வளைத்தல், இருந்த வேந்தன் காத்தல். ஊ ஊழ்வகை - 3 - பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம். ஊறு - 8 - வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, திண்மை, நொய்மை, சீர்மை, சர்ச்சரை, இவையே தொடப்படும் பொருட் கெண்குணம். ஊறுபாடு - 4 - எறிதல், குத்தல், வெட்டல், எய்தல். எ எச்சவகை - 2 - பெயரெச்சம், வினையெச்சம். எச்சத்தோற்றம் - 8 - குறல், செவிடு, மூங்கை, கூன், மருள், குருடு, மா, உறுப்பில் பிண்டம். இதனை “திறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமுங் - கூனுங்குறளு மூமுஞ் செவிடு மாவு மருளுமுளப்பட வாழ்நர்க் - கெண்பேரெச்ச மென்றிவை யெல்லாம் பேதைமை யல்ல தூதியமில்லை” என்னும் புறநானூற்றுச் செய்யு ளானறிக. எச்சவிரி - 22 - செய்தவென்னும் - வாய்பாட்டிறந்தகாலத் தெரிநிலை வினைப்பெயரெச்சம், செய்கின்ற வென்னம் நிகழ்காலத் தெரிநிலை வினைப்பெயரெச்சம், செய்யுமென் னும் வாய்பாட் டெதிர்காலத் தெரிநிலை வினைப் பெயரெச்சம், எதிர்மறை முக்காலத் தெரிநிலை வினை பெயரெச்சம், செய்தென் னும் வாய்பாட் டிறந்தகாலத் தெரி நிலை வினையெச்சம், செய்புவென் னும் வாய்ப்பாட்டிறந்த காலத் தெரிநிலை வினையெச்சம் - செய்யாவென்னும் வாய்பாட் டிறந்தகாலத் தெரிநிலை வினை யெச்சம், செய்யூ வென்னும் வாய் பாட்டிறந்தகாலத் தெரிநிலை வினையெச்சம், செய்வதன் என்னும் வாய்பாட்டிறந்தகாலத் தெரிநிலை வினையெச்சம், செயவென்னும் வாய்பாட்டு நிகழ்காலத் தெரி நிலை வினையெச்சம், செயின் என்னும் வாய்பாட்டு எதிர்காலத் தெரிநிலை வினை யெச்சம் வான், பான், பாக்கு, கடை, உம், முன், கால், வழி, இடத்து என்னுமீற்று எதிர்கால வினையெச்சம், குறிப்பு வினைபெயரெச்சம், குறிப்பு வினை யெச்சம் என்பனவாம். எண்ணலளவை - 36 - ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி, அற்பு தம், நிர்ப்புதம், கர்வம், மகாகர் வம், பதுமம், மகா பதுமம், nக்ஷhணி, மகாnக்ஷhணி, சங்கம், மகாசங்கம், கிதி, மகாகிதி, nக்ஷh பம், மகாnக்ஷhபம், நிதி, மகாநிதி, சாகரம், மகாசாகரம், அரி, மகா வரி, சங்கை, மகாசங்கை, பணி, மகாபணி, கிருது, மகாகிருது. எழினி - 3 - ஒருமுக வெழினி, கரந்து வரலெழினி, பொருமுகவெழினி. எழுத்திலக்கணம் - 2 - அகத்திலக் கணம், புறத்திலக்கணம். எழுத்து - 2 - முதலெழுத்து, சார் பெழுத்து, இவற்றுள் முதலெ ழுத்து முப்பது, சார் பெழுத்து முந்நூற்று பத்தொன்பது. முத லெழுத்துக்களாவன - உயிர், மெய். சார்பெழுத்துக்களாவன - உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றள பெடை, குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், முற் றாய்தம், ஆய்தக் குறுக்கம். எழுத்துத்தானம் - 5 - பாலன், குமரன், அரசன், விருத்தன், மரணம், இவற் றிற்கு முறையே யெழுத்துக்களா வன, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஒள, எ, ஏ, ஒ, ஓ; பாட் டுடைத் தலைவன் பேரெழுத் தைப் பாலதானமாகக் கொண் டெண்ணப்படும். இவற் றுண் முன்னைய மூன்று நன்மை பயக் கும் பின்னைய விரண்டுந் தீமை பயக்கும். ஏ ஏகாதசிவகை - 31 - ஆரம்ப ஏகாதசி, மோக்க ஏகாதசி, புத்திரதா ஏகாதசி, சபல, ஏகாதசி, சய ஏகாதசி, சட்டிலஏகாதசி, ஆம லக ஏகாதசி, விசய ஏகாதசி, கமதா ஏகாதசி, பாவ மோசன ஏகாதசி, மோகினி ஏகாதசி, வரூதினி ஏகாதசி, பாண்டவ ஏகாதசி, அபார ஏகாதசி, பதும ஏகாதசி, யோகினி ஏகாதசி, நந்தன ஏகாதசி, கர்மிக ஏகாதசி, வாமன ஏகாதசி, அசா ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி, இந்திர ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி, இரமா ஏகாதசி, பரம ஏகாதசி, பதுமினி ஏகாதசி, கௌசிக ஏகாதசி, கைசிக ஏகாதசி, சர்வசீவ ஏகாதசி, தத்த ஏகாதசி என்பன வாம். ஏடணை - 3 - அர்த்தம், புத்திரன், உலகம். ஏது - 3 - இயல்பு, காரியம், அநுபலப்தி, இவற்றுள் இயல்பு சகசவேது வெனப்படும். அஃதா வது மா முதலிய சொற்கள் மா முதலிய பொருள்களை யுணர்த் துதற்கண் வேறு காரணமின்றி அச்சொற்களினியல் பானுளதா கிய வாற்றல். சாரிய வேதாவது புகை முதலாகிய காரியங்கள் நெருப்பு முதலிய தத்தங் காரணங் களை உணர்த்துவதாம். அநுபலப் பதியாவது குளிரில்லாமை முத லிய காரிய பாவங்கள் பனி இல் லாமை முதலிய காரண பாவங் களை யுணர்த்துவதாம். காரிய வேது வென்றமையால் ஒற்றுமை பற்றிக் காரண வேதுவுங் கொள் ளப்படும். அக்காரண வேதாவது, இடித்து மின்னி, இருண்டெழுந்த மேகம் மழை பெய்தலைக் காட்டு வது போல்வது. ஏதுப்போலிவகை - 3 - துணியப் படாதது, மறுதலைக்கட்படுவது, ஒருதலைப்படாதது. ஏதுப்போலிவகை - 3 - அசித்தன், விருத்தன், அகைகாந்திகன்; இவற் றுள் அசித்தனாவது நிச்சயிக்கப் படாத பக்கவிருத்தியை யுடை யது. விருத்தனாவது பக்கத்திலும் விபக்கத்திலும் உடைத்தாயிருக்கை. அகை காந்திகனாவது பக்கத்திர யத்தினாலும் விருத்தியிருத்தல். அசித்த பேதம் பன்னிரண்டாம். அவையாவன - சொரூ பாசித்தன், வியாத்திகரண சித்தன், விசேடி யாசித்தன், விசேடணாசித்தன், பாகாசித்தன், ஆசித்யாசித்தன், ஆசிரய ஏகதேசா சித்தன், வியாத்த விசேடியா சித்தன், வியாத்த விசேட ணாசித்தன், சந்தேகாசித்தன், சந்தித்த விசேடியா சித்தன், சந்தித்த விசேடணாசித்தன், என்பனவாம். வீருத்தபேதம் இரண்டாம். அவை யாவன :- பக்கவிபக்க வியாபக விருத்தன்; பக்கவிபக்க ஏகதேச விருத்தன், அநைகாத்திக பேதம் ஏழாம். அவையாவன - பக்கத் திரய விபக விருத்தி, பக்க வியாபக சபக்கவிபக்க ஏகதேச விருத்தி, பக்கவிபக்கவியாபக சபக்க ஏக தேசவிருத்தி, பக்கத்திரய ஏகதேச விருத்தி, விபக்கவியாபகன், பக் கவி பக்கவேகதேகவிருத்தி, சபக்க வியாபகன் என்பனவாம். ஏதுப்போலிவிரி - 21 - சார்பில்லது, சார்புண்மை யறியப்படாதது, சொரூபமில்லது, சொரூபமுண்மை யறியப்படாதது, சொரூ பத்தின் விசேணைமில்லாது, சொரூப விசேடண வுண்மை யறியப்படா தது, விசேடியமில்லது, விசேடிய முண்மையறியப் படாதது, ஒரு மருங்கில்லது, ஒரு மருங்குண்மை யறியப்படாதது, பரனுக்குடன் பாடில்லது, சாத் தியத்தோடு வியாத்தியுண்மை யறியப்படாதது, செயற்கைபற்றி வியாத்தியுடை யது, மறு தலைப் பொருள் சாதிப்பது, மறுதலைப் பொருள் சாதிப்பதாய்ப் பிறிதோரேதுவை யுடன் கொண்டு வருவது, காக்ஷி யளவையான் மறுக்கப்பட்டு வரு வது, பக்கச பக்க மாத்திரை யினன்றி விபக்கத்துஞ் சேறலுடை யது, சபக்கத்திற் சேற லின்றிப் பக்கமாத்திரையினுள்ளது, சபக்க விபக்கவிலக்கணங்கள் கிடைக்கப் பெறாதது, கருதலளவை யான் மறுக்கப்பட்டு வருவது, உரை யளவை யான் மறுக்கப்பட்டு வருவதுமாம். ஏவல்வினை - 2 - முன்னிலையேவல் வினை, ஏவல்வினை. இவற்றுள் முன்னிலையேவலாவது தன்மை வினை படர்க்கை வினைகளுக் கினமாய் முன்னின்றான் றொழிலை யுணர்த்துவது, ஏவல் வினையாவது இனமின்றி முன் னிலை யொன்றற்கே உரியதாய் முன்னின்றானைத் தொழிற் படுத்தும் வினை. ஏவல்வினைமுற்று - 2 - முன்னிலையே வலொருமை வினைமுற்று முன்னி லையேவற் பன்மை வினைமுற்று. ஏறு - 3 - அதிகாரநந்தி - திருமால் நந்தி, தரும நந்தி. ஐ ஐசுவரியம் - 8 - இராசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை. ஐந்தாம்வேற்றுமைப் பொருள்கோள் - 7 - எல்லைப்பொருள், ஏதுப் பொருள், ஒப்புப்பொருள், நீக்கப் பொருள், முதற் காரணப் பொருள், வேற்றுமைக் கெதிர்ப் பொருள். இவற்றிற்கு முறையே, உதாரணம் வருமாறு - மதுரையின் வடக்குச் சிதம்பரம், கல்வியிற் பெரியன் கம்பன், காக்கையிற் கரிதுகளம் பழம், மலையின் வீழருவி, மாயை யிற் றோன்றிய துலகம், பாவத்தின் வெறுக்கின் றான், மண்ணுலகின் வேறு விண்ணுலகம். ஐந்தாம்வேற்றுமையருபுகள் - 6 - இன், இல், நின்று, இருந்து, காட்டி லும், பார்க்கினும். ஐம்புல நுகர்ச்சியினிறப்பன - 5 - சுவை யாலிறப்பதுமீன், நாற்றத்தால் வண்டு, பரிசத்தால் யானை, ஓசை யால் அசுணம், ஒளியால் விட்டில். ஐயமுற்றோனவிநயக்குணம் - 6 - வாடிய வுறுப்பு, மயங்கிய பார்வை, பீடழிபுலன், பேசாதிருத்தல், வேறுபட்ட செய்கை, ஆகாயத் தையுந் திசைகளையும் மாறு மாறிப் பார்த்தல். ஐயவவிநயம் - 6 - வாடியவுறுப்பு, மயங்கிய பார்வை, பீடழிபுலன், பேசாதிருத்தல், வேறுபட்ட செய்கை, ஆகாயத்தையுந் திசை களையும் மாறிமாறிப் பார்த்தல். ஐயனார்தேவிமார் - 2 - புட்கலை, பூரணை. ஐயனார்வாகனம் - 2 - காரிக் குதிரை, வெள்ளை யானை. ஒ ஒருமை - 1 - இறையுணர்வு. ஒடுக்கம் - 5 - நித்தியப்பிரளயம், நைமித்திகப்பிரளயம், பிராகிரு தப் பிரளயம், ஆத்தி யந்தப்பிரள யம், மகாப்பிரளயம். ஒழிவு - 3 - பரப்பாழ், சீவப்பாழ், மாயைப்பாழ். ஒழுக்கவகை - 2 - இல்லற வொழுக் கம், துறவற வொழுக்கம். ஒற்றர் - 3 - தலைத்தூதுவர், இடைத் தூதுவர், கடைத்தூதுவர். ஒற்றெழுத்துவகை - 3 - வல்லினம், மெல்லினம், இடையினம். ஒற்றக்கை - 33 - பதாகை, திரி பதாகை, கத்திரிகை, தூபம், அரா ளம், இளம் பிறை, சுக துண்டம், முட்டி, கடகம், சூரி, கமலகோசி கம், காங்கூலம், கபித்தம், விற் பிடி, கிடங்கை, அலபத்திரம், பிரமரம், தாம்பிர சூடம், பசாசம், முகுளம், பிண்டி, தெரிநிலை மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான் றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதம், மகர முகம், வலம்புரி; இவை பிண்டி வகை, இணையா வினைக்கை வகை யெனவும்படும். ஓ ஓடவகை - 5 - கரிமுகவம்பி, பரிமுக வம்பி, அரிமுகவம்பி, தோணி, கப்பல். ஓமாலிகை - 32 - இலவங்கம், பச் சிலை, கச்சோலம், ஏலம், நாக ணம், கோட்டம், நாகம், மாத வரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி வேரி, இலாமிச்சம், கண்டில், வெண்ணை, கடுக்காய், நெல்லி, தான்றி, குத்தம், மரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னைத்தாது, புலிநகம், பூஞ்சுரளம், தமாலம், வகுளம், பது முகம், நுண்ணேலம், கொடு வேரி. ஒலக்கஅரசர் - 22 - அரிச்சந்திரன், நளன், புருகுச்சன், புரூரவன், முசுகுந்தன், காத்தவீரியன், கயன், அம்பரீடன், சசிபிந்து, சிபி, பிருது, மருத்துவான், பரதன், சுகோத் திரன், இராமன், திலீபன், இரகு, அந்திதேவன், யயாதி, மாந்தாதா, பகீரதன், அனங்கன். ஓலக்கலக்கணம் - 55 - அட்ட ஐசுவரிய யுக்தம், அட்டபோக சம்பன்னம், சப்த சந்தானம், சதுர் வித சம்பந்தம், அறுகுணமுடைமை, பஞ்சதந்திரப்பி ரவீணமுடைமை, வருக்கத் திரயவிசிட்ட முடைமை, சதுரங் கபலம், கபாசத்தாங்க பரிவேடித ருடைமை, கவீச்சுரர், காயகர், தாதிகள், பாரங்கதர், சதுர்வித மகா நாயகர், பிரமாண புருடர், இரதபரிணிதர், சதுர்வித போக சங்கரர், காயசாதி புருடர்கள், திரிவித நாயகியர், விசேட வனி தையர், சீமந்தியர், திருவித கோ பப் பிரசாதலக்கண லக்ஷிதலலி நியர், பிரபுடை கன்னியர், அவத்த காமியர், தசவித கேளிபால லீலா சதியர், காயஸ்திரீகள், பருணித பிரமதேயர், இரதிபேதகாந்தியர், பன்னிரு சத்து விசதியர், நால் வகைப் பிரீதியர், நால்வகை மோகமயர், திதிக்கிரம லக்கணர், ஆலிங்கனம், எண்வகைத் தாடன லக்கணீகர், சத்தந கோபாதிவிதர், நாடி வருணமகீபர், அநேககரண பரிணிதர், இரதிகலாகுசலர், வியோச சதுட்டயர், விப்பிரலம்ப வித்தகர், அவத்தாத்திரய பரீட்சகர், பஞ்ச மந்திர வன்னப் பிரதாபப் பிரவீணர், பஞ்சவிசுமாத்திரி கோபிதர், பித்துவகையவத்தாவி சாரபரர், ஐவகை மகா வாத்திய நவீக்ஷணர், வேத்தியர், மத்தளிகர், ஆசியக்காரர், நிருத்த நாயகியார், வாத்தியம், நிருத்தம், வத்திரம், ஆபரணம், இராச்சிய பாரம், விநயம், சத்தககதர். க கடல் - 7 - உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன். கடல்படுதிரவியம் - 5 - பவளம், முத்து, சங்கு, ஒக்கோலை, உப்பு. கடற்றிரை - 2 - உல்லோலம், கல் லோலம். அவற்றை யுரைக்கின் பெருந்திரை, சிறுதிரை எனக் கொள்க. கடன் - 3 - தேவர்கடன், பிதிரர் கடன், முனிவர் கடன். கடைவள்ளல் - 7 - பாரி, ஆய், எழிலி, நள்ளி, மலயன், பேகன், ஓரி. கடுகம் - 3 - சுக்கு, திப்பிலி, மிளகு; இவையே திரிகடுக மெனப்படும். கடைப்படுதானம் - 7 - ஆர்வம், புகழ், அச்சம், கைம்மாறு, காரணம், கண்ணோட்டம், கடப்பாடு. கணக்குவகை - 4 - தொகை, பிரிவு, பெருக்கு, கழிவு. கணம் - 8 - நிலம், நீர், மதி, இய மானன், சூரியன், தீ, வாயு, ஆகா யம். இவற்றுண் முன்னர் நான்கு நன்று, பின்னர் நான்குங்கலகம். நிரைநிரைநிரை நிலக்கணம், நேர்நிரைநிரை நீர்க்கணம், நிரை நேர்நேர் மதிக்கணம், நேர்நேர் நேர் உயிர்க்கணம், நேர்நிரைநேர் சூரிய கணம், நிரைநேர்நிரை தீக்கணம், நேர்நேர்நிரை வாயு கணம், நிரைநிரைநேர் ஆகாய கணம். கணம் - 18 - அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசிகள், போக பூமியர். கணாக்கிரகண்ணியர் - 12 - தண்ட தரர், தண்டமாதர், தண்டவாகு, பிரசண்டர், பிரசண்டார்ச்சிதர், பிரசண்டகாவர், பலர், பலவிகர ணர், சுமாலியர், சர்வ பூதர், தமனர், மனோன்மனர். கணாதிபதிமூர்த்தம் - 14 - வக்கிர துண்டர், சிந்தாமணி விநாயகர், விக்கினராசர், பாலசந்திரர், கசா னனர், மல்லாலரெனவந்த மயூரே சர், கணேசர், கணபதி, மகவாக வந்த மயூரேசர், தூமகேது, உடுண்டி விநாயகர், துண்டிராஜர், மகோற் கடர், வல்லபை கணேசர். கணிகையர் - 4 - தலைக்கோலரிவை, தோரிய மடந்தை, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப் பாட்டுக் கூத்தி. கணிதம் - 8 - சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்க மூலம், கனம், கனமூலம்; இவற்றுள் சங்கலிதம் - கூட்டல், விபகலிதம் - கழித்தல், குணனம் - பெருக்கல், பாகாரம் - பங்கிடல், வர்க்கம் - சமமாகிய வீரெண்ணின் பெருக்கம். அஃதாவது நிலத்தைச் சமமாக நாற்கோணஞ் செய்தல், வர்க்கமூலம் - அவ்வர்க்கத் தொகையி னின்றதன் மூலமாகிய வரம்பரிதல், கனம் - சமமாகிய மூவெண்ணின் பெருக்கம் அஃ தாவது - குழியைச் சமமாகப் பன்னிரு கோணப்படுத்தல் கன மூலம் - அக்கனத் தொகையி னின்றதன் மூலமாகிய வொரு மூலையறிதல். கணேசுரர் - 27 - நந்தீயீசுரர், பிருங்கி மகாளர், கிரீடி, கண்டர், காலர், கால கண்டர், மண்டாகருணர், சுபோடர், தண்டியீசானர், பிரம முனி, காலாக்கினி, ருத்திரர், வீர பத்திரர், பினாகி, காளகண் டர், அங்கிரி தராளர், கசகராளர், முககராளர், நேத்திரகராளர், சோத்திர கராளர், சண்டர், மாலா தரர், திரிசூலி, விசுவ மாலா பதி, அண்டாதி நாதர், காலாந்த கர், இலகு லீசர், மயூரானனர். கண் - 2 - அகக்கண், புறக்கண். கண்டம் - 9 - கீழ்விதேகம், மேல்வி தேகம், வடவிதேகம், தென்வி தேகம், வடவிரேபதம், தென்னி ரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திமகண்டம், இவையே நவ கண்டம். கண்டவகை - 9 - பரதகண்டம், குருகண்டம், கிம்புருட கண்டம், இளாவிருத கண்டம், அருவருட கண்டம், கேதுமாலகண்டம், இரமிய கண்டம், பத்திராசுவ கண்டம், இரணிய கண்டம். கண்ணன் மனைவியர் - 8 - உருக் குமணி, இலக்குமணை, சத்திய பாமை, சாம்பவதி, நீளா தேவி, காளிந்தி, மித்திரவிந்தை, பத்திரை. கண்ணோவுற்றோனவியம் - 4 - கண்ணீர்த்துளியை விரலாற் றெளித்தல், வளைந்த புருவ முடைமை, வாடிய முகம், வெள்ளிட நோக்கி யஞ்சுதல். கதி - 4 - தேவகதி, மக்கட்கதி, விலங் கின்கதி, நரககதி. கதிர்காமதலத்திருநாமங்கள் - 12 - ஏமகூடம், பூலோக கந்தபுரி, காரி காப்பு, வரபுரி, பஞ்ச மூர்த்திவாசம், வில்வகானனம், சகல சித்திகரம், அகத்தீயப் பிரியம், பிரமசித்து, அவ்வியத்த மூர்த்தம், சித்தகேத்தி ரம், கதிரை. கதிர்காமக்கடவுடிருநாமங்கள் - 9 - கதிர்காமசுவாமி, கதிரைநாயகன், கதிரை வேலன், மாணிக்கசுவாமி, கந்தக்கடவுள், ஆறுமுகப்பெரு மான், பரஞ்சோதிப்பெருமான், சுதாகாயநாதன், அவ்வியத்த மூர்த்தி. கந்தம் - 2 - நற்கந்தம், துர்க்கந்தம். கந்தபுராணசங்கிதை - 6 - பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சனற் குமார சங்கிதை, சூரசங்கிதை, சங்கர சங்கிதை, சூதசங்கிதை. கமகபேதம் - 22 - சுவரிதம், பிரமதம், தீர்க்கம், இல்லிதோற் சாரம், கிருதம், திதம், உல்லா சிதம், உல்லோ சீதம், கம்பிதம், சூக்குமிதம், தீர்க்கம், உலோ லிதம், இலீலோ தீர்க்கம், தீர்க்க லீதம், பிரத்துதம், தாந்திகம், ஊர்ச்சிதம், சிட்ட பதம், அடவி, மூலம், இரசிதம், கோமளம். கரணம் - 3 - மனம், வாக்கு, காயம், (திரிகரணம்). கரணம் - 4 - மனம், புத்தி, அகங் காரம், சித்தம். கரணம் - 11 - பவம், பாலவம், கவுல வம், தைதுலை, கரசை, வணசை, பத்திரை, சகுனி, சதுர்ப் பாதம், நாகவம், கிமிஸ் துக்கினம். கருங்கை - 2 - கொன்றுவாழ் தொழிலிற் கன்றியகை, வன்பணித் தொழிலிற் கன்றியகை. கரும்பூமிக்குரிமை - 6 - வரைவு, தொழில், வித்தை, வாணிகம், உழவு, சிற்பம். கருமேந்திரியம் - 5 - வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம். கருவுளமைப்பு - 6 - பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு. கருவுள்வாதனை - 5 - கருப் பாச யப்பையுறுத்தல், சலம்பூரித்தல், உதராக்கினி சுடுதல், பிராணவாயு முரித்துத் தள்ளுதல், யோனித் துவாரத்தா னெருக்குண்ணல். கலம்பகவுறுப்பு - 18 - புயவகுப்பு, மதங்கு, அம்மனை, காலம், சம் பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக் கிளை, தூது, வண்டு, தழை, ஊசல். கலித்துறைவகை - 2 - காப்பியக் கலித்துறை, கோவைக் கலித்துறை. கலிப்பாவினம் - 3 - கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம். கலைஞானம் - 64 - அக்கர விலக் கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத் திரம், சோதிட சாத்திரம், தரும சாத்திரம், யோகசாத்திரம், மந்திர சாத்திரம், சகுனசாத்திரம், சிற்ப சாத்திரம், வைத்திய சாத்திரம், வருவ சாத்திரம், இதிகாசம், காவி யம், அலங்காரம், மதுர பாடனம், நாடகம், நிருத்தம், சத்தப் பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திர பரீட்சை, கனகபரீட்சை, இரத பரீட்சை, சுகபரீட்சை, அசுவ பரீட்சை, இரத்தினபரீட்சை, பூமி பரீட்சை, சங்கிராம விலக்கணம், மல்யுத்தம், ஆகருடணம், உச்சா டணம், வித்துவேடணம், மதன சாத்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தருவவாதம், பைபீலவாதம், கவுத்துகவாதம், தாதுவா தம், நட்டம், காருடம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாயக மனம், பரகாயப்பிரவேசம், அதிரி சயம், இந்திரசாலம், மகேந்திர சாலம், அக்கினித் தம்பம், சலத் தம்பம், வாயுத் தம்பம், திட்டித் தம்பம், வாக்குத் தம்பம், சுக்கிலத் தம்பம், கன்னத் தம்பம், கட்கத்தம் பம், அவத்தைப் பிரயோகம். கலைவகை - 5 - பிரதிட்டாகலை, நிமிர்த்திகலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை, வித்தியாகலை. கலி - 4 - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். இவற்றுள் பொருளடி பாவணி முதலிய கொடுத்து மற் றொருவன் பாடுகவென்ற வுடனே பாடுவோனாசு கவி; பொருட் செல்வம், சொற்செல்வம், தொடை, தொடைவி கற்பஞ்செறிய வுருவக முதலிய வலங்காரத்தோடின் னோசைத்தா யமுதமுறப் பாடு வோன் மதுரகவி, மாலைமாற்று, சுழி குளம், ஏகபாதம், சக்கரம், எழுகூற்றிருக்கை, காதை கரப்பு, கரந்துறை, தூசங்கொளல், வாவன் ஞாற்று, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, கூடசதுக்கம், கோமுத் திரி, ஓரெழுத்தினம், ஒற்றெழுத் துத் தீர்ந்த வொரு பொருட் பாட்டு, சித்திரப்பா, விசித்தி ரப்பா, வினாவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தன மிவை முதலிய மிறைக்கவி தெரிந்து பாடுவோன் சித்திரக்கவி; மும் மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடலூர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப் பாடு வோன் வித்தாரகவி. களித்தோனவிநயக்குணம் - 8 - இரக சியத்தை மறையாமை, சொல்லு தலின்மை, கவிழ்தல், சோர்தல், தாழ்தல், தளர்தல், வீழ்ஞ்சொற்க ளுடைமை, களிகவர்ந்த கண் ணோக்குடைமை. கற்பம் - 2 - அகற்பம், சகற்பம். கற்பபேதம் - 3 - ஆன்மகற்பம், சிவ கற்பம், சத்திகர்ப்பம். கற்பிதம் - 2 - அத்தியாரோபம், அபவாதம். கன்மமலகாரியம் - 6 - ஒவ்வோர் தலங்களைப் பற்றியிருத்தல், நோயாய்க் கிடத்தல், புண்ணிய பாவங்களைச் செய்தல், ஒவ்வொரு பற்றுக்களாய் நின்ற தொந்தனை களை விடுத்தல், சர்வரையும் நிந் தித்தல், இகழ்ந்தாருடன், பொருந்தல். கன்னிகை - 5 - அகலிகை, திரௌ பதை, சீதை, தாரை, மண்டோதரி. கா காங்கூலக்கை - 3 - குவிகாங்கூலம், முகிழ்காங்கூலம், விரி காங்குலம். காஞ்சிபுரியின் றிருநாமங்கள் - 13 - கஞ்சி, பிரளயசித்து, சிவபுரம், விண்டுமாபுரம், திரிமூர்த்தி வாசம், பிரமபுரம், காமபீடம், தபோ மயம், சகற்சாரம், சகல சித்தி, கன்னிகாப்பு, துண்டீர புரம், தண்டகபுரம். காடுபடுதிரவியம் - 5 - அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி. காட்சி - 6 - ஐயக்காட்சி, வாயிற் காட்சி, விகற்பக் காட்சி, அந்நு வயக் காட்சி, வெதிரேகக்காட்சி, திருவுகாட்சி. காட்சியளவைவகை - 4 - வாயிற் காட்சி, மானதக்காட்சி, தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி. காதலர் - 3 - புருடன், தோழன், மகன். காப்பியம் - 5 - சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டல கேசி, வளையாபதி. காப்பியலக்கணம் - 38 வாழ்த்து, தெய்வ வணக்கம், உரைக்கும் பொருளுணர்த்தல், சிறந்த நாய கனைக்கோடல், நாட்டு வருணனை, நகர வருணனை, மலைச்சிறப்பு, கடல் வருணனை, பருவச்சிறப்பு, உதயாத்தமய வலங்காரம், கல்யா ணம், முடிகவித்தல், பொழில் விளையாட்டு, நீர் விளையாட்டு, மதுபானம், மக்கட்பேறு, கல்வி யிற் களித்தல், புலவியிற் புலத்தல், மந்திரம், தூது, போர்மேற் செலவு, போர்புரிதல், வெற்றி, வழிநடை, பவனி, களவொழுக்கம், கற் பொழுக்கம், ஆற்றுச்சிறப்பு, திணைவளம், சூது விளையாட்டு, உருதி கூறல், காண்ட சருக்காதி களின் பாகுபாடு, பொருட்டுறை, மெய்ப்பாடு, நவரசம், வனப்பு, உத்தி, மதம். காப்பியவகை - 2 - பெருங் காப்பி யம், சிறுகாப்பியம். காப்பியவமைப்புவகை - 2 - தருப்ப நெறி, கௌடநெறி. காமஅவிநயக்குணம் - 7 - சுத்த மாகிய அலங்காரமுள்ள வடிவும், தொழில், காரிகையை நோக்குங் கடைக் கண்ணுடைமை, பற்களும் நகையுஞ் சக்திரனு நிலவும் போலத் தோன்றல், மலர்ந்த முகமுடைமை, இரந்த சொற்களுடைமை. காயசாதிபுருடர் - 4 - பூமான், சந்தனன் பத்திர சன்னியன், பாஞ்ச சாலன்னியன். காரணம் - 3 - முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த கார ணம்; எனவே உலகிற்கு முதற் காரணம் மாயை, துணைக் கார ணம் சிவசத்தி, நிமித்த காரணம் சிவ பெருமான். இவற்றோடு அவாந்தர காரண மொன்றுங் கொள்வர். காருகத்தொழில் - 2 - ஆடை யாக்கல், சுமத்தல். காலம் - 3 - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம். காலம் - 6 - பருவத்தைக் காண்க. காலவகை - 23 - நிமிடம், காட்டை, கலை, முகூர்த்தம், சாமம், பகல், இரவு, நாள், வாரம், பக்கம், மாதம், இருது, அயனம், வருடம், சந்தியம்சம், சந்தி, யுகம், சதுர் யுகம், மகாயுகம், பிரளயம், கற்பம், பரார்த்தம், பரம். காலவகை - 2 - சூக்குமகாலம், தூல காலம். காவியம் - 5 - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி. காவிரிப்பூம்பட்டினப் பெயர்கள் - 11 - இந்திர விருத்தி, மூதூர், சம்பாபதி, பூம்புகார், பட்டினம், காகந்தி, முசுகுந்தநகரம், சோமப்பிரியம், சகலாகரம், காகநதி, சங்கமுகநகர். காவிரிப்பூம்பட்டினப்பொய்கை - 2 - சூரியகுண்டம், சோமகுண்டம். காற்றின்குணம் - 5 - போக்கு, வரவு, நோய், கும்பித்தல், பரிசம். கி கிரகம் - 9 - ஆதித்தன், சோமன், அங்காரகன், புதன், பிருகற்பதி, சுக்கிரன், சனி, இராகு, கேது; இவையே நவக்கிரகங்களெனப் படும். கிரகசமித்து - 9 - எருக்கு, முருக்கு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி, வன்னி, அறுகு, தருப்பை. கிரகதானியம் - 9 - கோதுமை, பச்சையரிசி, துவரை, பச்சைப் பயறு, கடலை, மொச்சை, எள், உழுந்து, கொள்ளு; இவை முறையே கொள்க. கிரகவகை - 3 - ஆண், பெண், அலி. கிரகத்துட்பெண் - 3 - சந்திரன், சுக்கிரன், இராகு. கிரகத்துளாண் - 3 - சூரியன், செவ்வாய், குரு. கிரகத்துளவி - 3 - புதன், சனி, கேது. கிரகவடிவம் - 3 - நெடுமை, குறுமை, சமம். கிரகத்துட்சமர் - 2 - சூரியன், சுக்கிரன். கிரகத்துட்பிராமணர் - 2 - குரு, சுக்கிரன். கிரகத்துட்சத்திரியர் - 2 - சூரியன், செவ்வாய். கிரகத்துள்நெடியர் - 4 - புதன், குரு, இராகு, கேது. கிரகத்துட்குறியர் - 3 - சந்திரன், செவ்வாய், சனி. கிரகத்துள்வேளாளர் - 2 - சனி, கேது. கிரகத்துள்வைசியர் - 2 - சந்திரன், புதன். கிரகபாஷைவகை - 5 - ஆரியர், தெலுங்கு, தமிழ், வடுகு, அந்நிய பாடை. கிரகபுட்பங்கள் - 9 - செந்தாமரை, வெள்ளாம்பல், சண்பகம், வெண் காந்தள், முல்லை, வெண்டா மரை, கருங்குவளை, மந்தாரை, செவ்வாம்பல், இவற்றை முறையே சூரியன்முதற் கேது இறுதியாக வுள்ள கிரகங்களுக்குக் கொள்க. கிரகரத்தினம் - 9 - மாணிக்கம், பவளம், புட்பராகம், நீலரத்தினம், வைடூரியம், முத்து, பச்சை, வைரம், கோமேதகம், இவை முறையே சூரியன், செவ்வாய், குரு, சனி, கேது, மதி, புதன், வெள்ளி, இராகு என்பவற்றிற்குக் கொள்க. கிரகலோகம் - 9 - தம்பாக்கு, ஈயம், செம்பு, பித்தளை, பொன், வெள்ளி, இரும்பு, கருங்கல், துருக்கல். கிரகவாகனம் - 9 - மயில், முத்து விமானம், அன்னம், குதிரை, யானை, கருடன், காகம், ஆடு, சிங்கம். கிரிகரன்குணம் - 3 - தும்மல் செய் வது, சினமூள்வது, வெம்மை விளைப்பது. கிரககாரகம் - 15 - சூரியன் பிதுர்கா ரகன், சரீரகாரகனாம்; சந்திரன் மாதுர்காரகன்; செவ்வாய் சகோ தரகாரகன், புதன் வித்தியாகார கன், குரு புத்திரகாரகன், சுக்கிரன் களத்திரகாரகன், வாகனகாரகன்; சனி, ஆயுட்காரகன்; இனி குரு பிதா மககாரகன், யோககாரகன், போககாரகன்; கேதுமாதாமக் காரகன், ஞானகாரகன், மோக்க காரகன் எனக் கொள்க. கிரகாங்கங்கள் - 9 - செவ்வாய்க்குத் தலை, சுக்கிரனுக்கு முகம், புதனுக்குக் கழுத்து, சந்திரனுக்குத் தோள், சூரியனுக்கு மார்பு, குரு வுக்கு வயிறு, சனிக்குத் தொடை, இராகுவிற்கு முழங்கால், கேது விற்கு உள்ளங் கால் ஆகுமென்ப. கிரகாசனம் - 9 - வட்ட வடிவம், சதுரம், திரிகோண வடிவம், அம்பு வடிவம், நீண்ட சதுரம், ஐங் கோணம், வில் வடிவம், கொடி வடிவம், முச்சில் வடிவு. கிரியைவகை - 4 - கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம்; இவற்றுள் கிரியையிற் சரிகையாவது சிவபூசைக்கு வேண்டும் உபகரணங்கள் செய்து கோடல். கிரியையிற் கிரியை யாவது சிவாகமத்தில் விதித்த வாறே ஐவகைச் சுத்தி முன்னாகச் சிவலிங்க வடிவிற் செய்யும் பூசனையாம். கிரியையில் யோக மாவது அகத்தே பூசை ஓமம் தியானம் மூன்றற்கும் மூவிடம் வகுத்துக் கொண்டு செய்யப்படும் அந்தரியாகம். கிரியையில் ஞான மாவது அவ்வந்தரியாக வுறைப் பின்கணிகழும் ஓரநுபவ வுணர்வு. கிருகத்தர்வகை - 2 - உதாசீனம், சாககன். கிருத்தியம் - 5 - சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம், அனுக் கிரகம். கீ கீதவுரு - 3 - உக்கிரம், துருவம், ஆபோகம். துருவ மென்பது துருமை யெனவும், ஆபோக மென்பது ஆயோக மெனவுஞ் சொல்லப் படுதலுமுள. கீதவுறுப்பு - 4 - உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை. கீழுலகம் - 7 - அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம். கு குணம் - 3 - சத்துவம், இராசதம், தாமதம், அவையாவன : ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, மேன்மை, மோனம், ஐம்பொறி, யடக்கலென வெட்டுஞ் சத்துவம்; மனவூக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி யென வெட்டுமிராசதம்; பேரூண்டி, நெடுந்துயில், சோம்பு, நீதிவழு, ஒழுக்கவழு, வஞ்சம், மறதி, பொய், கோபம், காமம், கொலை இவை தாமதம். குணம் - 8 - அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு; இவற்றுள் முன்னைய நான்கும் ஆடூஉக் குணம், பின்னைய நான்கும் மகடூஉக்குண மென்றறிக. குதிரைக்குரற்குணம் - 5 - கடல், முகில், சங்கம், இடபம், முழவம். குதிரைச்சுழி - 7- சந்திரசுழி, அண்டாவர்த்தம், கௌவகம், காகாவர்த்தம், கேதாரி, தேசா வர்த்தம், பட்டடை. குதிரைச்சுழியளவு - 10 - சிரத்தில் இரண்டு, காதில் நான்கு, மார்பில் இரண்டு, நெற்றியினிடத்து ஒன்று, குளம்பி லொன்றுமாகப் பத்துச் சுழிகள்குறையாதிருக்க வேண் டும். குதிரைநடை - 5 - சுவரிதகம், ஆக்கி ரந்திகம், வல்கிதம், இரேசிதம், புலிதம்; இவற்றிற்கு முறையே மெல்லியநடை, விரைவுநடை, இருகாற்றூக்கி யாடிவருநடை, சுற்றியோடல், முழுவோட்டம் எனப்பெயர். குதிரைநிறக்குற்றம் - 8 - புலி, கரடி, கழுதை, செந்நாய், பூஞை, நரி, காகம், புகை யென்னுமிவை போன்ற நிறம். குதிரைநிறம் - 7 - முத்து, சந்திரன், தாமரைப் பூந்தாது, பொன், காயாமலர், செவ்வரத்த வலர், பசுங்கினியிவை போன்ற நிற முடைமை நன்மை. குதிரைப்பெயர்கள் - 15 - மங்காளன், சாரங்கன், கங்காநீலன், மௌவழ கன், கொங்காளன், சன்னசம் பான், குங்குமச்சோரன், கரியான், நீலன், சாரன், மள்ளான், உரஞ்சி வந்தான், நல்லான், பொல்லான், கருங்காற் சம்பான். குதிரைவழுவிலக்கணம் - 9 - கொம்பு கன்னம், திருகு கன்னம், நஞ்ச பாதம், கொள்ளிக்கால், வெள்ளிக் கண், சுடலைமுகம், காளகண்டம், அண்டமின்மை, அண்டம் பெருக்கம். குதிரையின் பிறப்பிடம் - 7 - பிரமன் விழிப்புனல், வசுக்கள், பாற்கடல், அக்கினி கருப்பை, கோட்டான், முட்டை, அமிர்தம். குரவர் - 5 - அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன். குருவிந்தமாணிக்கநிறம் - 8 - மஞ்சாடி, உலோத்திரம், செம் பருத்திப்பூ, முறுக்கவலர், குன்றி மணி, முயலிரத்தம், சாதிலிங்கம், குக்கிற்கண். குறிக்கோள் - 8 - இன்பம், தெளிவு, நிதை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம். குறிஞ்சியாழ்த்திறன் - 32 - அந்தாளி, நட்டபாடை, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கௌடி, உதயகிரி, பஞ்சுரம், பழம்பஞ் சுரம், மேகராகக் குறிஞ்சி, கேதாளி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்கராகம், நாகம், மருள், பழந்தக்கராகம், திவ்விய வராடி, முதிர்ந்த விந்தளம், அநுத்திர பஞ்சமம், தமிக்குச்சரி, அருட்புரி, நாராயணி, நட்ட ராகம், இராமக் கிரியை, வியாழக் குறிஞ்சி, பஞ்ச மம், தக்கணாதி, சாவக்குறிஞ்சி, ஆனந்தை. குற்றம் - 3 - காமம், வெகுளி, மயக்கம். குற்றம் - 5 - கொட்டாவி, நெட்டை, குறு குறுப்பு, கூன்கிடை, நட்டு விழல். குற்றம் - 7 - ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுநாமம், கோத் திரம், அந்தராயம். குற்றம் - 10 - குன்றக்கூறல், மிகை படக் கூறல், கூறியதுகூறல், மாறுகொளக் கூறல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித் தல், வழுஉச்சொற் புணர்த்தல், மயங்கவைத்தல், சென்று தேய்ந் திறுதல், நின்று பயனின்மை. குற்றெழுத்து - 5 - அ, இ, உ, எ, ஒ. கூ கூத்தின் விகற்பம் - 15 - அலைப்பு, இலயம், உள்ளாளனம், கடகம், கரணம், குனிப்பு, கூடை, கொந் தளம், சிங்களம், தேசிகம், பவுரி, பிரமரி, மலைப்பு, மல், வீரட் டானம். கூந்தற்பால் - 5 - முடி, குழல், தொங்கல், பனிச்சை, சுருள்; இவற் றுள் மயிரையுச்சியின் முடித்தல் முடி, சுருட்டி முடித்தல் குழல், மயிரை முடிந்து விடுதல் தொங் கல், பின்னிவிடுதல் பனிச்சை, பின்னே செருகல் சுருள். கூத்துவகை - 2 - தேசிகம், மார்க்கம். கூலம் - 16 - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை என்பர் கூத்த நூலா சிரியர். கூலம் - 8 - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கினெல். “பதினெண்கூலமு முழவர்க்கு மிகுக” என்றார் மதீவாண நாடகத் தமிழ்நூலா ராகலின். பலசரக்கென்பாரு முளர். கூறைவிகற்பம் - 17 - கந்தை, விரிபம், கண்டை, பிடியல், வேதகம், புங்கம், பங்கம், கத்தியம், தூரியம், சிற்றில், நாகம், பாரி, பாளிதம், காம்பு, நேத்திரம், மயிரகம், வயிரியம். கே கேத்திரம் - 4 - உதயம், 4, 7, பத்தாம் இராசிகள். கேள்வி - 4 - அறம், பொருள், இன்பம், வீடு, இந்நான்குங் கேட்டல். கேள்வி - 5 - அறம், பொருள், இன்பம், வீடு, இந்நாற்கேள்வி யோ டிவற்றின் வழி நிற்றல். கை கை - 48 - பதாகை, திரிபதாகை, கத்தரிக்கை, தூபம், அராளம், இளம்பிறை, சுகதுண்டம், முட்டி கடகம், சூசி, கமலகோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திரம், பிர மரம், தாம்பிர சூடம், பசாசம், முகுளம், பிண்டி, தெரிநிலை, மெந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதமுகம், மகர முகம், வலம்புரி, அஞ்சலி, புட் பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோ தம், கற் கடகம், சுவத்திகம், கடகா வருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்த மானம். கைத்தொழில் - 5 - எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத் தொடுத்தல், யாழ்வாசித்தல். கொ கொடுந்தமிழ்நாடு - 12 - தென் பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேழி, பூழி, பன்றி, அருவா, அருவா வடதலை, சீதம், மலாடு, புனனாடு. கொடை - 7 - வழக்கத்திற் கொடுத் தல், உரிமையிற் கொடுத்தல், அச்சத்திற் கொடுத்தல், பாவனை யிற் கொடுத்தல், உவகையிற் கொடுத்தல், வெகுளியிற் கொடுத் தல், அவலத்திற் கொடுத்தல். உதாரணம் வருமாறு - மருமக னுக்கு மகளைக் கொடுத்தான் என்பது வழக்கத்திற் கொடுத்தல், மகனுக்கரசு கொடுத்தான் என் பது உரிமையிற் கொடுத்தல், அரசர்க்குத் திறைகொடுத்தா னென்பது அச்சத்திற் கொடுத் தல், தந்தை தாய்க்குத் திதி கொடுத் தா னென்பது பாவனையிற் கொடுத்தல், அவனுக்குப் பரிசு கொடுத்தானென்பது உவகையிற் கொடுத்தல், அவனுக்குத் தண் டனை கொடுத்தான் என்பது வெகுளியிற் கொடுத்தல், வாய்க் கரிசியிட்டான் என்பது அவலத் திற் கொடுத்தல். கொடைப்பயன் - 2 - காமியம், நிட்காமியம். கொடைவகை - 3 - வரைவின்றி யாவர்க்குங்கொடுத்தல், புகழ் வோர்க்குக் கொடுத்தல், இரப் போர்க்குக் கொடுத்தல். கோ கோசம் - 5 - அன்னமயம், பிராண மயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம்; அவையாவன - உடல் அன்னமய கோசம், கரு மேந்திரியமும் பிராணனும் பிராண மயகோசம், கருமேந் திரியமும் மனமும் மனோமய கோசம், ஞானேந்திரியமும் புத்தியும் விஞ்ஞானமயகோசம், அவித்தை யானந்தமயகோசம். கோடல்வகை - 10 - கேளாதேற்றல், கேட்டேயேற்றல், ஏலாதேற்றல், ஈவோனேற்றல், உயர்ந்தோனேற் றல், இழிந்தோனேற்றல், ஒப்போ னேற்றல், உணர்வின் றேற்றல், விருப்பாயேற்றல், வெறுப்பா யேற்றல். இவற்றிற்கு முறையே உதாரணம் - ஆவிற்கு நீர்விட்டான், வறியார்க் கீந்தான், மாணாக் கனுக்கறிவு கொடுத்தான், தனக்குச் சோறிட்டான், அரசனுக்குக் கண் ணலர் கொடுத்தானரி, அரிக்குச் சக்கரங் கொடுத் தானரன், சோழ னுக்கு விருந்திட்டான் சேரன், சோற்றிற்கு நெய்விட்டான், மாணாக்கற்குக் கசையடி கொடுத் தானாசிரியன், கள்ளனுக்குக் கசையடி கொடுத் தானரசன். கோடிவகை - 36 - கோசிகம், பீதகம், பச்சிலை, அறத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக் காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில் லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல் யாப்பு, திருக்குதேவாங்கு, பொன் னெழுத்து, குச்சநி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பாத்தி, செம்பொத்தி, பனிப் பொத்தி. கோவாங்குமணிநிறம் - 4 - செங்கல், குராமலர், கோவை, மஞ்சள். கௌ கௌடநெறி - 10 - செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண் மை, காந்தம், வலி, சமாதி யென் னும் பத்துக்குணங்களுக்கும் மாறாக வருவனவாம். கௌடம் - 5 - சுத்தகௌடம், கான குப்சம், சாரசுவதம், உற்கலம், மைதுலை. கௌவியம் - 5 - கோசலம், கோம யம், பால், தயிர், நெய். ச சக்கிரவர்த்திகள் - 6 - அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுற்சன், புரூரவன், காத்த வீரியன். இவர் கண் மற்றொருவனைப் பணியாது தரணியாண்டோர். சங்கு - 4 - இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், பாஞ்சன்னியம். சடக்குணப்பண்பு - 5 - பல்வகை வடிவு, இருகந்தம், ஐவ்வண்ணம், அறுசுவை, எட்டூறு. சதுரங்கம் - அங்கங்காண்க. சத்தம் - 5 - தோற்கருவீ, துளைக் கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி. இவையே சத்தத்துக் கைந்து காரணம். சத்திகள் - 42 - அதிக்கிராந்து விந்துக பராசத்தி, அந்திக்கிராந்த விந்துகபரா சத்தி, பராசத்தி, திரோதானசத்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி கிரியாசத்தி, சிவ சத்தி, விந்துசத்தி, மனோன்மணி, மகேசுவரி, உமை, திருவானை, ஆரணி, செனணி, உரோதயித்திரி, வித்தாரை, சுதாரை, போதினி, ஆப்பியாயிணி, தீத்தை, சூக்குமை, சேயை, விபூதி, விமலை, அமோகை, வித்துதை, சருவதோ முகி, பத்திரை, பலப்பிரமதனி, பலவிகரணி, கணாம்பிகை, காளி, துர்க்கை, திருமால், சர்வ பூதத மனி, இரௌத்திரி, வாமை. சத்தி - 3 - இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி; இவற்றுள் இச்சா சத்தி யுயிர்க்கருணேசம், ஞான சத்தி கருமங்களையறிந்தூட்டல், கிரியாசத்தி உலகங் களாக்கல். சத்தி - 5 - சிற்சத்தி, பராசத்தி, இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி, அவையாவன: உயிர்க் கொளி யாக நிற்பது சிற்சத்தி, பிராணன் முதலிய வாயுவாக நிற்பது பராசத்தி, பஞ்சபூதமாக நிற்பது இச்சாசத்தி, ஐம்பொறி யுணர்ச்சியாக நிற்பது ஞான சத்தி, மற்றை வினைத் துணையாக நிற்பது கிரியாசத்தி. சத்திநிபாதம் - 4 - மந்ததரம், மந்தம், தீவிரதரம், தீவிரம்; இவை முறையே தீக்கை பெற்றவுடன் உரோமஞ் சிலிர்த்தலும், சரீரம் நடுங்குதலும், மூர்ச்சித்தலும், சரீரம் விழுதலுங் குறிகளா மென்று சித்தாந்த சாரா வளியார் கூறுவர். அன்றியும் பதி யின் றிருநாமங் கேட்ட மாத் திரையே இவை நிகழப் பெறுதல் என்பர். சத்துவம் - 10 - மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்த்தல், நடுக்கமடுத்தல், வியத்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனப்படும். சந்தசு - 7 - காயத்திரி, பிருகத்தி, உட்டிணுக்கு, சகதி, திருட்டிப்பு, அநுட்டிப்பு, பத்தி. சந்தபேதம் - 26 - உத்தம், அதியுத் தம், மத்திமம், சலநிலை, நன் னிலை, காயத்திரி, உண்டி, அநுட் டிப்பு, பகுதி, பந்தி, வனுப்பு, சயதி, அதிசயதி, சக்குவரி, அதிசக்குவரி, ஆடி, அதியாடி, திருதி, அதி திருதி, கிருதி, பிரகிருதி, விக்கி ருதி, சங்கிருதி, அபிகிருதி, உற் கிருதி. சந்தானாசாரியர் - 4 - மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார். சந்தியாவந்தனம் - 4 - பிராதக்கால சந்தி, மத்தியானசந்தி, சாயங்கால சந்தி, அர்த்தயாமசந்தி; இவற் றுள் சமயதீக்ஷதருக்குப் பிராதக் கால சந்தி யொன்றே யுரியது. விசேட தீக்ஷிதருக்கு அதனோடு சாயங்கால சந்தியென்னு மிரண்டு முரியன. நிருவாண தீக்ஷதருக்கு அவ்விரண்டி னோடு மத்தியான சந்தியுங்கூட்டி மூன்று முரியன. ஆசாரியருக்கு நான்கு சந்திகளு முரியன. சந்திரன் - 3 - ஆதிதைவிகசந்திரன், ஆதியாத்மிகசந்திரன், ஆதி பௌதிக சந்திரன். சந்தி - 5 - முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல். சபை - 5 - இரத்தினசபை, கனக சபை, வெள்ளிச்சபை, தாமிரசபை, சித்திரசபை, திருவாலங்காட்டில் இரத்தினசபை, சிதம்பரத்தில் கனகசபை, மதுரையில் வெள்ளிச் சபை, திருநெல்வேலியில் தாமிர சபை, திருக்குற்றாலத்திற் சித்திர சபையு முள. சமயகுரவர் - 4 - திருஞான சம்பந்த மூர்த்திநாயனார், திரு நாவுக்கரசு நாயனார், சுந்தர மூர்த்தி நாய னார், மாணிக்கவாசக சுவாமிகள். சமயம் - 6 - சைவம், வைஷ்ணவம், சாத்தம், சௌரம், காண பத்தியம், கௌமாரம். இவை வைதிகமதம் என்க. சமயம் - 6 - கபிலமதம், கணாதமதம், பதஞ்சலிமதம், அக்ஷபாதமதம், வியாசமதம், ஜைமினிமதம். இவை வேதாந்த மதமெனப்படும். சமயம் - 6 - பௌத்தம், ஜைனம், பைரவம், காளாமுகம், உலோகா யுதம், சூனியவாதம். இவை புறச் சமய மென்பர் வைதிகர். சமயம் - 6 - வைரவம், வாமம், காளா முகம், மாவிரதம், பாசு பதம், சைவம் அன்றியும் புறச்சமயமாவன - உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ்சராத் திரம், பாட்டாசாரியம், இது சைவர் கொள்கை. சமயவகை - 34 - உலகாயதம், சௌத்திராந்திகம், யோகாசாரம், மாத்திமிகம், வைபாடிகம், நிகண் டவாதம், ஆசீவகம், பட்டாசா ரியம், பிரபாகரம், சத்தப்பிரம வாதம், மாயாவாதம், பாற்கரியம், நீரிச்சுரசாங்கியம், சிவசாங்கியம், விஷ்ணு சாங்கியம், பாஞ்சராத் திரம், தருக்கம், மீமாஞ்சை, சைவம், பாசுபதம், மாவிரதம், காளா முகம், வாமம், வைரம், பாடாண வாதசைவம், நிமித்தகாரண பரிணாமவாத சைவம், சுத்தசைவம், பேதவாத சைவம், சங்கிராந்தவாத சைவம், அவிகாரவாத சைவம், ஐக்கியவாதம், சிவ தமவாதம், கிரீடாப்பிரமவாதம். சமுத்திரம் - 7 - லவணம், இக்ஷ&, சுரா, சர்பீபி, ததி, க்ஷீரம், சுத்தோ தகம். சம்பந்தம் - 4 - தேகசம்பந்தம், ஆன்ம சம்பந்தம், விடய சம்பந் தம், காரணசம்பந்தம். சரியைவகை - 4 - சரியையிற் சரியை, சரியையி கிரியை, சரியை யில் யோகம், சரியையில் ஞானம்; இவற்றுள் சரியையிற் சரியை யாவது திருக்கோயிலிற்றிருவல கிடல், திருமெழுக்கிடல், திரு விளக்கிடல், தூபமேற்றல், நந்தன வனம் வைத்தல், புட்பங் கொய் தல், மாலை இண்டை கண்ணி தார்முதலிய மாலை சமைத்தல், விதானங் கட்டல், தோரண நாட்டல், யாத்திரை செய்தல், நதி மூழ்கல், திருவீதிப் பிரதக்கிணஞ் செய்தல், தோத்திரம்பாடல், புல்லுச் செதுக்குதல், திருக்குள முதலியன சுத்தி செய்தலாதிய லாம். சரியையிற் கிரியையாவது சந்திரசேகரர், இடபாரூடர், உமா மகேசர், சபாபதி, கல்யாண சுந்த ரர் பிச்சாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங் காரி, வீரபத்திரர், அரியர்த்தர், அர்த்தநாரீசுரர், சண்டேசாநுக் கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதர், கசமுகா நுக்கிரகர், சோமாஸ்கந் தர், ஏகபாதர், சுகாசீனர், தக்கிணா மூர்த்தி, இலிங்கோற்பவர் என்னு மிருபத்தைந்து மூர்த்தங்களு ளொன்றனையாதல் விநாயகர் முதலிய ஆவரண மூர்த்திகளு ளொன்ற னையாதல், வழிபடுத லாம். சரியையில் யோகமாவது இருதயத்தில் உருத்திரக் கடவுளைத் தியானஞ் செய்தலாம். சரியையில் ஞானமாவது அத்தியான பாவனை யினால் ஓரநுபவ வுணர்வு நிகழ் தலாம். சரீரம் - 3 - தூலம், சூக்குமம், காரணம். சயனம் - 5 - இலவம்பஞ்சி, செம் பஞ்சி, வெண்பஞ்சி, மயிர், அன்னத் தூலி இவற்றாற் செய்யப்பட்ட வமளி. இவையே பஞ்சாயனம் எனப்படும். சா சாதி - 4 - ஆந்திரம், கன்னடம், திராவிடம், மகராட்டிரம். சாதி - 4 - பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன். சாதி - 91 - குண்டகர், கோளகர், சவர்ணர், நக்ஷத்திரசீவகர், அம் பட்டர், கும்பகாரர், பாரசவர், நிடாதர், போசர், நாவிதர், சூதர், கூவிரர், மாகிட்டியர், விசன்மர், உக்கிரர், சூலிக்கியர், மனிகாரர், புளிந்தர், க்ஷத்தர், இலேச்சர், மாகதர், அத்தர், தௌட்டி யந்தர், கடகாரர், மாலாசிதர், உற்பலர், சண்டாளர், பாகுதாயர், வைதேகர், பலதர், அயோகவர், சத்திரியர், ஆவந்திரியர், மல்லர், சுதன்மர், மைத்திரர், பலகண்டர், இரசகர், புட்பதர், தக்ககர், சுவபசர், குகபர், கரணர், சருமகாரர், பாரகர், வேணுகர், கனகர், அத்திகர், வர்த்தனசாலிகர், கருமகாரர், தண் டகபோலர், மார்க்கவர், சல்லர், வந்திகர், வாடதானர், கண்டகர், கற்பர், சவுண்டிகர், சாத்துவதர், தசியவர், பைரவர், ஆசிரயிகர், கரண்டர், சாமுத்திரர், மாலா காரர், கைவர்த்தர், நீலகாரர், வருணாகரர், பிங்களர், நர்த்தகர், மாதங்கர், நடர், திரமிளர், கர்ம சீவியர், நீலாதிவர்ண விக்கிரேதர், சுலபாகர், குக்குடர், வேணர், புல் கசர், ஆவிரதர், அபீரர், திக்கு வணர், கசர், சைரந்திரியர், மைத்தி ரேயர், பார்க்கவர், காரூவாரர், பாண்டுசோபாகர், ஆகிண்டிகர், சோபாகர், அந்தி யாவசாயிகர். இப்பஞ்சம சாதியாரின் வரலா றாவன. நான்கு வருணத்தவ ருள்ளும் உயர் குலத்தாணும் இழி குலப் பெண்ணும் கூடிப் பிறந்த வர் அநுலோமர். இழிகுலத்தாணும் உயர்குலப் பெண்ணுங் கூடிப் பிறந்தவர் பிரதிலோமர். அநுலோமத் தானுக்கும் பிரதிலோமப் பெண் ணுக்கும் பிறந்தவர் அந்தராளர். பிரதிலோமத் தானுக்கும் அநு லோமம் பெண்ணுக்கும் பிறந்த வர் விராத்தியர். பார்ப்பனக் கன்னி, தன் குலத்துச் சோர நாயக னோடு கூடிப் பிறந்தவர் குண்ட கர். பார்ப்பன விதவை அங்ஙனங் கூடிப் பிறந்தவர் கோளகர். பிராமணன் விவாக முறைப்படி க்ஷத்திரிய கன்னிகையுடன் சேரப் பிறந்தவர் சவர்ணர். இவர் சவனர் எனவும் தெலுங்கர் எனவும் வழங் கப்படுவர். பிராமணர் க்ஷத்திரிய குலமகளிரைச் சோரத்தாற் சேரப் பிறந்தவர் நக்கத்திர சீவகர்; இவர் யாவரும் விரும்புங் குடியா ராதலின் வீழ்குடியார் எனவும், காணியாளர் எனவும், சிற்றரச ராகலின் வேளாண் சாமந்தர் எனவும் பெயர் பெறுவர். பிராம ணன் வைசிய குலக்கன்னியை விவாகஞ் செய்து பிறந்தவர் அம் பட்டர். வைசிய குலப் பெண் களைச் சோரத்தாற் கூடிப் பிறந்த வர் கும்பகாரர்; இவர்க்கு நாவிதர், குயவர் எனவும் பெயர். பிராமணன் சூத்திர குலக் கன்னியை விவாகஞ் செய்து பிறந்தவர் பாரசவர். சோரத்தாற் கூடிப் பிறந்தவர் நிடாதர். இவர்க்குச் சித்தர் வேட்டைக்காரர் எனவும் பெயர். க்ஷத்திரிய கன்னியும் விதவையும் தங் குலத்துச் சோரபுருடரைக் கூடிப் பெற்றவர் முறையே போசர், நாவிதர் எனப்படுவர். க்ஷத்திரியன் பார்ப்பன மகளிரை விவாக முறை யாவுஞ் சோரத்தானுஞ் சேரப் பிறந்தவர் முறையே சூதர் கூவிரர் எனப்படுவர்; அரசர் சபையில் நின்றேத்துவார் சூதர் எனப்படு வர்; க்ஷத்திரியன் வைசிய சூத்திர குலமகளிரை விவாகத் தானும் சோரத்தானுஞ் சேர்ந்து பெற்ற வர் முறையே மாகிட்டியம், விசன மர், உக்கிரர், சூலிக்கியர் எனப் படுவர். வைசிய குலக் கன்னியும் விதவையும் தங்குலத்துச் சோர புருடரோடு சேர்ந்து பெற்றவர் முறையே மணிகாரர் புளிந்தர் எனப்படுவர். வைசி யனானவன் பிரம க்ஷத்திரிய சூத்திர மகளிரை விவாகத்தினாலும் சோரத்தினா லுஞ் சேரப் பிறந்தவர் முறையே க்ஷத்தர், மிலேச்சர், மாகதர், அத்தர், தௌட்டியந்தர், கட காரர் எனப் பெயர் பெறுவர். இவருள் மாகதர் என்பவர், அரச சபையில் இருந்து புகழ் சொல் வோராம். தௌட்டி யந்தர் குந்த வேளாளர் எனப் பெயர் பெறு வர். சூத்திர குலக் கன்னியும் விதவையுந் தங்குலத்துச் சோர புருடரோடு கூடிப் பெற்றவர் முறையே மாலாசிதர், உற்பலர் எனப் பெயர் பெறுவர். சூத்திர னானவன் பிராமணர் முதலிய முக்குல மகளிரையும் முறையா னுஞ்சோரத்தானுங் கூடிப்பிறந்த வர் முறையே சண்டாளர், பாகு காயர், வைதேகர், பலதர், அயோ கவர், சத்திரியார் என்று சொல் லப்படுவர். பிரம விராத்தியர் முதல் சூத்திர குல விராத்திய ரீறாகவுள்ள நாற்குலத்து விராத் தியரும் நாற்குலப் பெண்களோ டுஞ் சேர்ந்து பெற்றவர் முறையே ஆவந்தியர், மல்லர், சுதன்மர், மைத்திரர் என அழைக்கப்படு வர். தௌட்டியந்தர், வைதேகர், நிடாதர், உக்கிரர், சண்டாளர், சுவபசர், குகபர், அயோகவர் என்பவர்களுக்கும் பிராமணப் பெண்களுக்குந் தனித்தனி பிறந் தவர் முறையே பல கண்டர், இரசகர், புட்பதர், தக்ககர், சுவப சர், குகபர், கரணர், சருமகாரர் எனப்பெயர் பெறுவர். சடாதர், நாவிதர், மாகதர், விராத்தியர், வைதேகர், கரணர், சண்டாளர், கனகர் என்பவர்கள் க்ஷத்திரியகுல மகளிருடன் முறை முறையே சேரப்பிறந்தவர். பாரகர், வேணு கர், கனகர், அத்திகர், வர்த்தன சாலிகர், கருமகாரர், தண்டக போலர், மார்க்கவர் எனப் பெயர் பெறுவர். பாரசவர், மாகிட்டியர், நிடாதர், உக்கிரர், கரணர், சற்பர், சவுண்டிகர், சாத்துவதர் என்ப வர்கள் வைசிய மகளிரோடு சேர்ந்து பெற்றவர் முறையே சல்லர், வந்திகர், வாடதானர், கண்டகர், சற்பர், சவுண்டிகர், சாத்துவதர், தசியவர் எனப் பெயர் பெறுவர். நிடாதர், சண் டாளர்,மாகதர், பலதர், தசியவர், சாத்துவதர், சவுண்டிகர், தண்டக போலர் என்பவர்களுக்குஞ் சூத் திரப் பெண்களுக்கும் பிறந்தவர் முறையே பைரவர், ஆசிரயிகர், கரண்டர், சாமுத்திரர், மாலாகா ரர், கைவர்த்தர், நீலகாரர், வரு ணாகரர் என்று பெயர் பெறுவர். பிராமணனுக்கும் அயோகவப் பெண்ணுக்கும் பிறந்தவர் பிங்க ளர். சவர்ணனுக்கும் அம்பட்டப் பெண்ணுக்கும் பிறந்தவர் நர்த் தகர். மாகிட்டியனக்கம் கரணப் பெண்ணுக்கும் பிறந்தவர் மாதங் கர். மல்லனுக்கும் விச்சுலைகுலப் பெண்ணுக்கும் பிறந்தவர் நடர். சற்பனுக்கும் க்ஷத்திரியப் பெண் ணுக்கும் பிறந்தவர் திரமிளர். நிடா தனுக்கும் காரோசருமப் பெண்ணுக்கும் பிறந்தவர் சர்ம சீவிரர். அயோகவனுக்கும் நீல காரப் பெண்ணுக்கும் பிறந்தவர் நீலாதிவன்ன விக்கிரோதர். க்ஷத்தாவுக்கும் உக்கிரசாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் சுவபா கர். சூத்திரனுக்கும் நிடாதப் பெண்ணுக்கும் பிறந்தவர் குக்கு டர். வைதேகனுக்கும் அம்பட்ட சாதிப் பெண்ணுக்குஞ் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவர் புல்க சர். பிராமணனுக்கு உக்கிரசாதிப் பெண்ணிடம் பிறந்தவர் ஆவிர தர். அம்பட்டக் கன்னிகை யிடம் பிறந்தவர் அபீரர். அயோகவப் பெண்ணிடம் பிறந்தவர் திக்குவ ணர். தண்டக போதரனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந் தவர் கசர். தசியு வென்பவனுக்கும் அயோகவப் பெண்ணுக்கும் பிறந் தவர் சைரந்தியர். வைதேகனுக் கும் அயோவகப் பெண்ணுக்கும் பிறந்தவர் மைத்திரேயர். நிடாத னுக்கும் அயோகவசாதிப் பெண் ணுக்கும் பிறந்தவர் பார்க்கவர். கரண்டனுக்கும் விதேகசாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் காரு வாரர். சண்டாளனுக்கம் வைதே கப் பெண்ணுக்கும் பிறந்தவர் பாண்டு சோபாகர். நிடாதனுக் கும் வைதேகப் பெண்ணுக்கும் பிறந்தவர் ஆகிண்டிகர். சண்டா ளனுக்கும் புல்கசாதிப் பெண்ணுக் கும் பிறந்தவர் சோபாகர். அவ னுக்கும் நிடாதசாதிப் பெண்ணுக் கும் பிறந்தவர் அந்தியாவசாயிகர். இங்ஙனம் ஒவ்வோர் குல ஆடவர் களும் மகளிர்களும் தத்தம் முறை தவறிக் கூடிப் பிறந்ததனாற் பல சாதிகளுள்ளன. அவற்றை யெல் லாம் சுப்பிரபேதாகமம், பிரம புராணம், வைகாநசம், மாதவி யம், சாதி விளக்கம் முதலிய நூல்களிற் கண்டு தெளிக. சாதி - 10 - அங்கம், ஈகாமிருக்கும், சம்வாகாரம், இடிமம், நாடகம், பாணம், பிரகசனம், பிரகரணம், வியாயோகம், வீதி. சாதிப்பெரும்பண் - 4 - அக நிலை மருதம், புறநிலைமருதம், அருகி யன் மருதம், பெருகியன் மருதம். சாதியோசைகள் - 3 - சுத்தம், தரளகம், தமிழ். சாதுரங்கமாணிக்கநிறம் - 10 - தாமரை, செங்கழுநீர், சாதகப் புட்கண், இந்திர கோபம், மின் மினி, சூரியன், விளக்கு, மாது ளம்பூ, அதன் விரை - நெருப்பு. சாத்திரம் - 3 - சாங்கியம், பாதஞ் சலம், வேதாந்தம், இவை முறையே கபிலர், பதஞ்சலி, வியாசரிம் மூவ ராற் கூறப்பட்டன; இவற்றையத்தி யான் மீகநூலென்ப. சாத்திரம் - 6 - வேதாந்தம், வைசேடி கம், பாட்டம், பிரபாகாரம், பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை. சாத்துவிககுணவிருத்தி - 16 - அசை யாது நிற்றல், மனம் உறுதியாய் நிற்றல், சாமர்த்தியம், மென்மை, நெய்ம்மை, மகிழ்ச்சி, நேர்மை, சுத்தி, புண்ணிய முயற்சி, பொறுமை, கிரகித்ததை மறவாதிருத்தல், போது மென்ற மைந்த நன்மனமுடைமை, முத்தி பெற வேண்டுமென்னும் மேலான இச்சை, புறக்கரணங் களை அடக்குதல், அகக்கரணங் களை அடக்குதல், பெருங்கருணை. சாந்திக்கூத்து - 4 - கொச்சகம், மெய், அவிநயம், நாடகம். சாந்துவகை - 4 - பீதம், கலவை, வட்டிகை, புலி. சாரணர் - 8 - தலசாரணர், சல சாரணர், பலசாரணர், புட்ப சாரணர், தந்துசாரணர், சதுரங் குலசாரணர், சங்கசாரணர், ஆகாயசாரணர். சி சித்தர் - 9 - சத்தியநாதர், சதோக நாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந் திரநாதர், கடேந்திரநாதர், கோரக் கநாதர். சித்தாந்தசாத்திரம் - 14 - திரு வுந்தியார், திருக்களிற்றுப் பாடி யார், சிவஞான போதம், சிவ ஞானசித்தியார், இருபாவிருவது, உண்மை விளக்கம், சிவப்பிரகா சம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், இவற்றுள் திருவுந் தியார் அருளிச் செய்தவர் உய்ய வந்த தேவநாயனார். திருக்களிற் றுப் படியார் அருளிச் செய்தவர் மேற்படியார் சீடரான திருக்கட வூர் உய்ய வந்த தேவநாயனார். சிவஞானபோதம் அருளிச் செய் தவர் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர். இவர்க்குச் சுவேதவனப் பெருமாள் என்பது பிள்ளைத் திருநாமம். சிவஞான சித்தியார், இருபா விருவது அரு ளிச் செய்தவர் சகலாகம பண்டி தர் என்னுங் காரணப் பெயர் பெற்ற திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார். இவர் மெய் கண்ட தேவர் சீடர் நாற்பத் தொன்ப தின்மருள்ளே தலைவர். உண்மை விளக்க மருளிச் செய்தவர் திரவ திகை மனவாசகங் கடந்தார். இவர் மெய் கண்ட தேவருடைய சீடருளொருவர். எஞ்சி நின்ற சிவப்பிரகாச முதலிய எட்ட னையு மருளிச் செய்தார் கொற் றவன் குடி உமாபதி சிவாசாரி யார்; இவர் தில்லை வாழ்ந்தணர் களுளொருவர். இவர் அருணந்தி சிவாசாரியருடைய சீடராகிய திருப்பெண்ணாகட மறைஞான சம்பந்த சிவாசாரியாருடைய சீடர். சித்தி - 8 - அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம். அவை யாவன: ஆன்மாப்போலாத லணிமா, மகத்துவமாதலே மகிமா, தன்னுடல் கண்டிப் பின்றாய்க் கண்டிப்புள்ளவற்றை யுருவவல்ல வனாதல் கரிமா, இலகுத்துவ மாதலே யிலகிமா, வேண்டுவன வடைதலே பிராத்தி, நிறையுள னாதலே பிரகாமியம், ஆட்சியுள னாதலே யீசத்துவம், எல்லாந் தன்வசமாக்க வல்லனா தலே வசித்துவம். சிந்தையுட்பட்டோனவிநயம் - 3 - முற்பட்டதாயினு மறியாநிலை, பிடித்த கையின் மேலடைத்த வழகு, முடிக்கப்படாத கருமநிலை. சிரஞ்சீவியர் - 7 - அசுவத்தாமன், மாபலி, வியாசன், அனுமான், விபீடணன், கிருபாசாரியன், பரசுராமன். சிவதத்துவம் - 5 - சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்; அவையாவன - ஞான மேறிக்கிரியை குறைந்தது சுத்த வித்தை, ஞானங்குன்றிக் கிரியை யுணர்ந்த தீச்சுரம், ஞான தீச்சுரம், ஞானங்கிரியை யொத்தது சாதாக்யிம், கிரியைநாடல் சத்தி, ஞான மொன்றல் சிவம். சிவதலங்கள் - 1008 - ஸ்ரீ கையிலாயே சுவரம், பூதேசுவரம், அம்பி கேசுவரம், சுரேசுவரம், கணே சுவரம், கந்தேசுவரம், தாரகேசு வரம், கங்கேசுவரம், நந்திகேசு வரம், பிருங்கீசுவரம், பாளகேசு வரம், சண்டீசுவரம், முஞ்சுகேசு வரம், இரத்தினேசுவரம், கெந்த கேசுவரம், கர்ப்பேசுவரம், வீரேசு வரம், சேஷ்டேசுவரம், குசுலேசு வரம், வீரபத்திரேசுவரம், கந்து கேசு வரம், பணீசுவரம், சுதேசு வரம், கபஸ்தீசுவரம், உருத்தி ரேசுவரம், பயிரவேசுவரம், கர வீரேசுவரம், நிஷதேசுவரம், வடேசு வரம், கச்சபேசுவரம், காசியபேசு வரம், ஆவட்டேசுவரம், அகரணீ சுவரம், கலகேசுவரம், சோடவி கேசுவரம், பதுமேசுவரம், மகதே சுவரம், துகுண்டேசுவரம், உகண் டேசுவரம், கடேசுவரம், சௌரே சுவரம், வருணேசுவரம், கருணே சுவரம், வயித்தியதேசுவரம், மற்சே சுவரம், தண்டகேசுவரம், மண்ட லீசுவரம், குண்டலிசுவரம், கண் டேசுவரம், பாண்டேசுவரம், கணிதேச வரம், கருடேசுவரம், சந்திரேஸ் வரம், மாருதேசுவரம், விதீசுவரம், சுதீசுவரம், தண்டுகே சுவரம், மகேசுவரம், உமேசுவரம், கபந்தீசுவரம், பத்திர கர்ணேசுவரம், சனாதனேசுவரம், சுந்தேசுவரம், சானந்தேசுவரம், செனேசுவரம், விக்கிரமேசுவரம், வசிஷ்டே சுவ ரம், குனிதம்மேசுவரம், ருண்டே சுவரம், நாகேசுவரம், கபாலே சுவரம், கரேசுவரம், அயிற்புத்தி னியே சுவரம், சமதக்கினியே சுவரம், விசுவாமித் திரேசுவரம், இராவணேசுவரம், பலீசுவரம், மனோன்மணீசுவரம், கதாதாமே சுவரம், மார்த்தாண் டேசுவரம், வலந்தீசுவரம், கவள்ளலீசுவரம், துர்வேசுவரம், கந்தர்வேசுவரம், விசுவகேசுவரம், பாகிபத்திரேசு வரம், கற்பேசு வரம், மரீபின்னீசு வரம், ஸ்தோர ணேசுவரம், அக் கிரதீசுவரம், உத்பலேசுவரம், மயேந்திரே சுவரம், தாண்டீசு வரம், பரீடூதசு வரம், அனந்தே சுவரம், கர்த்தமே சுவரம், அமிர் தேசுவரம், வப்புரு கேசுவரம், வாகுரேசுவரம், வர்மகேசுவரம், படுவத்திரே சுவரம், பிராமரேஸ் வரம், மிருகேந்திரேஸ்வரம், இரண்ணி யேஸ்வரம், பவீசுவரம், அக்கனித் திரேஸ்வரம், சந்நதீஸ் வரம், புருகு தீஸ்வரம், இரணேஸ் வரம், கிராதேஸ்வரம், கர்த்தகேசு வரம், வேணு தாரேசுவரம், சந்தே சுவரம், மத்திய மேசுவரம், சயங்க மேசுவரம், கதிஸ்வரம், வித்துருக் கர்மேஸ்வரம், திரிபு ரேஸ்வரம், அரீசவரம், பலப்பிரத ளேசுவரம், சர்வதேபூசுவரம், உகீனரேசுவ ரம், கற்பேசுவரம், மந்திரேசுவ ரம், தந்திரேசுவரம், சாமகேஸ்வ ரம், யோகேஸ்வரம், திகீஸ்வரம், திகீஸ் வரம், கபால மோசளேசுவரம், மணிகர் பேசுவரம், சாதுகர்ணேசு வரம், நிர்கீஸ்வரம், பாடலீஸ் வரம், கர்ணிகேஸ்வரம், சந்திரகேஸ் வரம், பிங்களேசு வரம், சிலேசு வரம், மத்துவீசு வரம், வாமகேசு வரம், யவ்வ னேஸ்வரம், அபத்த ரேஸ்வரம், பிராதேஸ்வரம், சன்னுகேசுவரம், கோமேசுவரம், அபிலேசுவரம், விசாலேசுவரம், சிம்மகேஸ்வரம், கண்டாகர் னேஸ் வரம், வியாக் கிரேஸ்வரம், சம்புகேஸ்வரம், வளிதேசுவரம், அமுர்தேஸ்வரம், வேதேஸ்வரம், திண்டிகேஸ் ககோளெசுவரம், துவரீசுவரம், நிர்மதீஸ்வரம், அநி லேசுவரம், சபிண்டிலே சுவரம், அந்திரீசு வரம், கனகேசுவரம், சுரேசுவரம், சத்தியோசாதேசுவரம், வகுளீசுவரம், பிலவேசுவரம், சோமேஸ்வரம், வாரணேசுவரம், சாபேசுவரம், சடேசுவரம், பங்க காரேசுவம், முத்தகேசுவரம், இராகேசுவரம், பல்லூகேசுவரம், விராகேசுவரம், கீரத்தனேசுவரம், அனகீசுவரம், உரகேசுவரம், கரோ ரேஸ்வரம், தர்த்தரேசுவரம், உரவரீசுவரம், ஷப்பிரேசுவரம், தாவ்வியேசுவரம், வினதேசுவரம், சசீசுவரம், சகுதேசுவரம், முகுந்தே சுவரம், பாவனீசுவரம், சனீசுவரம், விருஷ பேசுவரம், தேனுகே சுவரம், சவ்ர மேசுவரம், கணேசு வரம், இருக்ஷேசுவரம், சந்திரே சுவரம், மச்சேசுவரம், பாவனே சுவரம், துரங்கே சுவரம், மதங்கே சுவரம், காணதேசுவரம், பரிசே சுவரம், சலந்தேசுவரம், சுவேத வீஸ்சுவரம், சுகேசுவரம், வரைப் பீசுவரம், முகுந்தேசுவரம், கங் கணேசுவரம், பிரகேசுவரம், வித்தி யாதரேசுவரம், நிவேசுவரம், கட்சி வேசுவரம், பிரபேசுவரம், மரு தேசுவரம், குந்தீசுவரம், சுவர்க்கே சுவரம், மலயேஸ்வரம், மங்க ணேஸ்வரம், சாகதீஸ்வரம், விபு தேஸ்வரம், கரீசுவரம், கலேசுவரம், நிகூர ணேசுவரம், கொரஷே சுவரம், வாசகேசுவரம், கந்தப்பே சுவரம், சூரியகேசுவரம், புஷ்டே சுவரம், துஷ்டகேசுவரம், விராய சேசுவரம், மணிகண்டேசுவரம், அரந்தனேசுவரம், பார்வ தீஸ்வரம், வித்துருமேசுவரம், இலதேசுவரம், விரிஞ்சேசுவரம், கற்பேசுவரம், பிரசன்னேசுவரம், விச்சேசுவரம், பார்பூதேசுவரம், உலோகேசுவரம், பிரானிகேசுவரம், அந்தகேசுவரம், முத்திகேசுவரம், அரிகேசுவரம், இருஷீசுவரம், காருதேசுவரம், பதங்கேசுவரம், கன்னியேசுவரம், தவளேசுவரம், கந்தபத்திரேசுவரம், சுக்கி ரேசு வரம், அருணேசுவரம், அதலாப்பியே சுவரம், பாகேசுவரம், திரியமலகேஸ்வரம், கவுதமே சுவரம், கலேசுவரம், விதண்டே சுவரம், கடேசுவரம், வாரகே சுவரம், குலேசுவரம், கேதாரே சுவரம், பலோசுவரம், கின்னரே சுவரம், அமுர்தேசுவரம் இவை களாம். திருகயிலைக்குத் தென் பாகத்தில் விளங்குந் தலங்கள் அகோரேசுவரம், கபோலேசுவரம், குருரேசுவரம், அனலேசுவரம், இந்திரேசுவரம், எமேசுவரம், திருதீசுவரம், நபேசுவரம், உதார் வர்தேசுவரம், தட்சிணாவர்த்த கேசுவரம், பிகண்டேசுவரம், குடா ரேசுவரம், மானவேசுவரம், குலே சுவரம், மெசாபகேசுவரம், மௌனி கேசுவரம், அர்ச்சுனேசு வரம், கவி சுவரம், பகதத்தேசுவரம், நகுஷே சுவரம், அப்பிரிதீசுவரம், தங்கணே சுவரம், சந்தேசுவரம், மத்திமேசு வரம், சகீசுவரம், வித்தியேசுவரம், பன்னகேசுவரம், கிர்த்தனேசு வரம், நிரேசுவரம், திவோதாகேசு வரம், இராதித ரேசுவரம், சவன கேசுவரம், கண்பத்திரேசுவரம், சேஷேசுவரம், வாரகீசுவரம், சங்கபலேசுவரம், சிந்திரகுந்தே சுவரம், தண்ட பாணீ சுவரம், துர்க்கேசுவரம், சார்ச்சேசுவரம், அமசேசுவரம், மயூரேசுவரம், சக்கிரவாகேசுவரம், மந்தாளே சுவரம், மன்ம தேசுவரம், இரதீ சுவரம், கண்ட கேசுவரம், பாண்டி ரேசுவரம், வநேசுவசுவரம், புரந்தி ரீசுவரம், பலேசு வரம், காரணே சுவரம், தாரேணே சுவரம், கிருத்தி வாகே சுவரம், சனார்த்தனேசுவரம், விசுவேசு வரம், மகாகாளே சுவரம், சரசுவதீசுவரம், இலக்கு மீசுவரம், சசீசுவரம், சக்கிரமே சுவரம், புலகேசுவரம், புலஸ்தியே சுவரம், விர்த்தகாளேசுவரம், பரத் துவா சேசுவரம், சாகரேசுவரம், இரா மேசுவரம், விலேகினேசு வரம், சித்திரேசுவரம், பரதகேசு வரம், பிண்டாரே சுவரம், வானே சுவரம், திலகேசுவரம், திர்வே சுவரம், பிர்வேசுவரம், நலவே சுவரம், சிரிணீசுவரம், தானே சுவரம், காந்தமேசுவரம், கோவே சுவரம், கிருஷ்ணேசுவரம், பர்ண கேசுவரம், கங்காதரேசுவரம், மவு னேசுவரம், குருபத்திரே சுவரம், கமதளேசுவரம், சாளேசு வரம், பிலவகேசுவரம், அபசரேசு வரம், மோட்ச கேசுவரம், பூத ரேசு வரம், பதேசுவரம், அனரண்ணி யேசு வரம், பாகுதேசுவரம், வேணே சுவரம், கவுதுகேசுவரம், குசிரே சுவரம், விர்த்தினேசுவரம், நிரகே சுவரம், பர்ஜன்னியேசுவரம், இராம தேசுவரம், ஆடகே சுவரம், நதீசுவரம், விரோதேசுவரம், கங்கணேசுவரம், பரகேசுவரம், ஸ்தலேசுவரம், அரிந்தி ரேசுவரம், குங்குமேசுவரம், நாகோத்தார கேசுவரம், சுகேசுவரம், கியான கேசுரம், புத்தீசு வரம், முத்திகேசு வரம், அருண மோசனே சுவரம், காந்தீசுவரம், பவனேசுவரம், காஞ்சேசுவரம், கோகர்ணே சுவரம், சரேசுவரம், பாடீசுவரம், சலிகேசுவரம், வீதி கோத்திகே சுவரம், நீலேசுவரம், பீமேசுவரம், சங்கரேசுவரம், அமிர்தேசுவரம், பாரிசாதே சுவ ரம் மந்தரேசுவரம், சடேசுவரம், சிகண்டீசுவரம், பர்க்கேசுவரம், பலனேசுவரம், பணாமணீ சுவரம், இலக்கும ணேசுவரம், அருந்த தீசுவரம், பாகீசுவரம், பத்மகர்ப்பேசுவரம், அரண்மணீசுவரம், பக்ஷியே சுவரம், குசலீசுவரம், சலீசுவரம், உத்தால கேசுவரம், நகரதஞ்சரே சுவரம், பர்னகேசுவரம், சாண் டிவியே சுவரம், சாகலே சுவரம், நிர்ச்ச தேசுவரம், குசேசுவரம், தாரவே சுவரம், அனமித்திரே சுவரம், கரகந்தேசுவரம், ஸ்ரீவைசலே சுவரம், கயேசுவரம், அரித்துவா ரேசுவரம், கங்காவலேசுவரம், குருnக்ஷத்திரேசுவரம், சராபாண் டீசுவரம், யயாதீசு வரம், குதேசு வரம், வாராஸ்வரம், அலிமுக் தேசுவரம், களாகஸ்தீசு வரம், விஷ்ணுசக்கிரப் பிரதேசு வரம், உரோமந்தேசுவரம், அகஸ்தி யேசுவரம், மாலவேசுவரம், பகே சுவரம், அமகோலேசுவரம், பிர தானேசுவரம், மாரூதேசு வரம், பவேசுவரம், நட்சத்திரேசு வரம், காலகேசுவரம், வல்லிகேசு வரம், குருசேசுவரம், போகஅரீசு வரம், திரிசகேசுவரம், தனேசு வரம், சுவர்ணேசுவரம், தாண்ட லேசு வரம், மண்டலீ சுவரம், அமிர் தேசுவரம், தக்ககேசுவரம், பிரவா ளேசுவரம், அரிபத்திரே சுவரம், விரோதேசுவரம், தும்பு ரேசுவ ரம், நாரதேசுவரம், சுரேசுவரம், இரம்மியேசுவரம், விம்ரமேசுவ ரம், காத்தமேசுவரம், திரிகணே சுவரம், குடவங்கே சுவரம், சத்ம லேசுவரம், ஆரீசு வரம், மருதா மேசுவரம், சிந்தூரே சுவரம், அக்ர ணேசுவரம், இரா நதேசுவரம், பிறையாதேசுவரம், பிரதிஷ் டானபுரேசுவரம், கோதாவரீசு வரம், தாம்பர பர்ணீசுவரம், மர்த்துருதேசுவரம், பமலே சுவ ரம், பங்கிலேசுவரம், பனேசுவ ரம், புத்துதேசுவரம், ஆவர்த்தே சுவரம், சமேசுவரம், குலேசுவரம், விராடேசுவரம், பாலாகேசுவரம், கஸ்தேசுவரம், பிரளயேசுவரம், சாகதீசுவரம், திரிலோகேசுவரம், துருதீசுவரம், சம்புகேசுவரம், குரவதேசுவரம், எக்கியேசுவரம், உதும்பரேசு வரம், வாலீசுவரம், சண்டேசு வரம், வருணேசுவரம், பிரபாகேசு வரம், புஷ்கரேசு வரம், உருத்திர கோடீசுவரம், வால்மீகே சுவரம், கந்தரேசுவரம், ஸ்திரிண சோதீசு வரம், காயத் திரீசுவரம், சாவித்திரீ சுவரம், காலத்துவாரீ சுவரம், துங்கேசுவரம், பீமசண்டே சுவரம், இரத் தினகர்ப்பேசுவரம், காலஞ்சரே சுவரம், ஆரகே சுவரம், இரதி தேவே சுவரம், காலஞ்சரேசுவரம், அஸ்திசுவரம், பைப்பலாதே சுவாரம், கந்தர் வேசுவரம், திரிசூலசுவரம், இரஜதீ சுவரம், திவேசுவரம், சித்திர கண்டே சுவரம், துவாரபீடே சுவரம், திரிகூடே சுவரம், மங்களே சுவரம், ஆமல கேசுவரம், முத்தி ரேசுவரம், ஸ்தாடகேசுவரம், துவ தண்டிசுவரம், கசேசுவரம், காத்தி யாய னேசுவரம், யாக்கியல்கியே சுவரம், திரிஷ்டேசுவரம், விசுவ பர்மேசுவரம், மயேசுவரம், இரத் தகேசுவரம், வசுந்தரே சுவரம், ஷடிகேஸ்வரம், நாளகே சுவரம், மித்திரேசுவரம், சந்திரே சுவரம், காலவியேசுவரம், விபுதே சுவரம், பவமேசுவரம், பாரத்துரு மேசு வரம், கருடேசுவரம், கர்த்தி ரேசு வரம், கங்காதேசுவரம், காவிரியே சுவரம், சுவர்னதே சுவரம். திருக்கயிலைக்கு மேற்றிசையில் விளங்குந்தலங்கள் - தத்புருஷே சுவரம், தாண்ட வீசுவரம், பைங் கேசுவரம், குடகேசுவரம், சாலே சுவரம், ஸ்தாளகேசுவரம், வைன தேஸத லேசுவரம், முசலேசுவரம், அவுண்டகே சுவரம், குத்திரதன வீசுவரம், சுவர்ப்பரேசுவரம், அக்ஷியரேசுவரம், பிரணவே சுவரம், விதர்ப்பேசுவரம், தேவே சுவரம், அசதேசுவரம், அநங்கே சுவரம், சம்பகேசுவரம், உக்கிரே சுவரம், தான்னிய கேசுவரம், வலாகனேசுவரம், கனகோஷே சுவரம், வேதகர்ப்பேசுவரம், ஓங்காரே சுவரம், சகிஸே சுவரம், கதூத ரேசுவரம், பிலமுலே சுவரம், சர்ப்பேசுவரம், பார்த்தீ சுவரம், துங்கபத்திரேசுவரம், சகநாதே சுவரம், வைத்தியேசுவரம், குனிங் கேசுவரம், பிரகேசுவரம், மாண்ட வலியே சுவரம், ஸ்தம்ப கேசுவரம், போதே சுவரம், விசுகேசுவரம், சகசேசுவரம், தருப்பவீசுவரம், கணபதீசுவரம், சுக்கிலேசுவரம், பிரசித்தேசுவரம், சித்தேசுவரம், சனகேசுவரம், பட்சீசுவரம், பத்திரி கேசுவரம், வருளேஸ்வரம், அவனீஸ்வரம், பரவேஸ்வரம், பார்வதேசுவரம், குரவேசுவரம், காந்திகேசுவரம், பரிகயித்துவசே சுவரம், கபோதே சுவரம், கணீ சுவரம், சதேசுவரம், உரோமகே சுவரம், காவ்வியேசுவரம், வருஷகே சுவரம், சோம நந்தீசுவரம், விபலீ சுவரம், கரேசுவரம், அனயேதீ சுவரம், சதர்க் கேசுவரம், பவே சுவரம், விதூர தேசுவரம், காம்பீ சுவரம், கர்வேசுவரம், குணே சுவரம், ஊர்த்துவ கேசுவரம், சத்திரீசுவரம், ஸ்ரீககேசுவரம், சித்திரவ்வியாதே சுவரம், அரவப் பிரயேசுவரம், பந்தகேசுவரம், பசுபதீசுவரம், பயாரீசுவரம், சன்மாரீசுவரம், துக்காரீ சுவரம், பிரமயோனீசுவரம், விஷ்ணுகப் போசுவரம், உருத்திரவோகே சுவரம், இந்திர தாமேசுவரம், சந்திரசூடேசுவரம், அக்கினி கர்ப்பேசுவரம், வாயுவீசுவரம், சலேசுவரம், மகேசுவரம், வைத்திய தேசுவரம், ஆமோதேசுவரம், துரீசுவரம், தியாவாபூமிசுவரம், கேசாசினத ரேசுவரம், நாரசிம்மே சுவரம், அவுபாசனேசுவரம், அவ்வி யேசுவரம், கணிகே சுவரம், கர்ணி கேசுவரம், ததிதேசுவரம், சமகே சுவரம், கர்கடேசுவரம், வேணு விரேசுவரம், சவுத்திரேசு வரம், சாசீசுவரம், விஷ்ணுபேசு வரம், இராட்சகேசுவரம், இயக் கேசு வரம், பாத்மாரகேசுவரம், தூர் வாசே சுவரம், அயக்கிரீவே சுவரம், இராதாந்தரேசுவரம், சாமசாலேசுவரம், யசுமூர்த்தீசு வரம், இகேசுவரம், அதர்வகே சுவரம், புராணேசுவரம், உர்வசீசு வரம், பிரிதியாசேசுவரம், தர்ம சாரேசுவரம், சாங்கியேசுவரம், யோகீசுவரம், பவுளீசுவரம், பாலி கேசுவரம், குசம்பேசுவரம், சம்பே சுவரம், இராசராகேசு வரம், கதுமீ சுவரம், விசாகேசு வரம், ஸ்கன்னே சுவரம், பலீகேசுவரம், கதளீ சுவரம், பிஷ்டகேசுவரம், பிரிட்டு வீசுரம், காதர் முகேசுவரம், அந்தரிகஷேசுவரம், மைத்திரே சுவரம், குந்தமேசுவரம், உதாம கேசுவரம், மல்லேசுவரம், பிரமகே சுவரம், தர்வகேசுவரம், குர்வகே சுவரம், மகரந்தேசுவரம், சுதாதர மேசுவரம், கிருத கோகேசுவரம், வியானேசுவரம், விதர்க்கேசுவரம், கர்னனேசுவரம், அமிதேசுவரம், பத்திரமா லேசுவரம், கேதுமாலே சுவரம், மந்தரேசுவரம், வந்தியகே சுவரம், இமேசுவரம், நீலகே சுவரம், யகேந்திரேசுவரம், கர்மகே சுவரம், உருத்திவிசேசுவரம், தூண னேசுவரம், வீதஅவ்வியே சுவரம், அசுவத்தாமேசுவரம், சிககரசு வரம், தீர்த்தகேசுவரம், திரிண வேசுவரம், அப்ஸகேசு வரம், அபஸமார்த்தரேசுவரம், சோம சண்டீசுவரம், மார்க்கச காயே சுவரம், தேவீசுவரம், ருண கேசு வரம், சுவலணேசுவரம், பாலகேசு வரம், ஆங்கீரசே சுவரம், தட்கேசு வரம், விதட்கே சுவரம், நமனா கேசுவரம், சதீசுவரம், பிரமகே சுவரம், பிரமதீசுவரம், போர்கேசு வரம், விக்கிரமேசுவரம், இரீட்டி யேசு வரம், யோச்சியேசுவரம், கணவே தேசுவரம், காணகேசு வரம், யோச்சியேசுவரம், கரணவ தேசு வரம், கடேசுவரம், சேஷ் டேசு வரம், தாம்பிரேசுவரம், சௌன சேசுவரம், கர்ப்படேசுவ ரம், ஸ்ரீதாமேசுவரம், பாணா தேசு வரம், பிலேசுவரம், மாத்தி ரேசு வரம், பந்துகேசுவரம், அரே சுவரம், பிராத்துருகேசுவரம், சுகணேசுவரம், அவிதேசுவரம், அனாலேசுவரம், பூதேசுவரம், தூமாகேசுவரம், பந்தமோசன கேசுவரம், சதேசுவரம், பிரமரேசு வரம், காடகேசுவரம், துர்ம சண்டீசுவரம், விசாலேசுவரம், வசந்தேசுவரம், ககேசுவரம், கசா காரேஷசுவரம், நீலகண்டேசுவரம், சமித்திராவருணீசுவரம், கனஅப்கே சுவரம், சாவித்தி ரேசுவரம், கோம தீசுவரம், கோவர்த்தே சுவரம், விருஷேசுவரம், கதிபிரதேசுவரம், வியாகே சுவரம், கோளாகேசுவரம், மகாபூ தேசுவரம், வசேசுவரம், கந்தகேசுவரம், பாடகேசுவரம், படேகவாப சர்வ பிராணிதிகே சுவரம், தடாத கேசுவரம், கர்ப்ப கோசேசுவரம், தொரேணே சுவரம், இரதீசுவரம், ஆதப்பியே சுவரம், சுசீசுவரம், துந்துபீசுவரம், சிந்துரேசுவரம், கவனேசுவரம், கிருபேசுவரம், வீரபத்திரேசுவரம், காணதாரேசுவரம், தாம்பிரது வசே சுவரம், கோவிதாரேசுவரம், சதருத்திரீசுவரம், யுர்வதேசுவரம், தனேசுவரம், அருணேசுவரம், மரீசேசுவரம், திருமூலேசுவரம், விலேசுவரம், பூரணபத்திரே சுவரம், அரிதேசவனேசுவரம், இந்திர துவசேசுவரம், மகாரோக அரேசு வரம், தாமதானேசுவரம், பில வோதேசுவரம், நிமேசுவரம், இரலேசுவரம், நாகவேசுவரம், தாரணேசுவரம், அலிகேசுவரம். திருக்கயிலைக்கு வடபாரிசத்தில் விளங்குந்தலங்கள் - வாமதேவே சுவரம், கிளிகேசுவரம், சுகேசு வரம், பிரகஸ்பதீசுவரம், வர்த்த ணேசுவரம், மூகேசுவரம், கோகி லேசுவரம், பிரகண்ட சுவரம், வாமகரணே சுவரம், ஆனந்தேசு வரம், கர்மகேசுவரம், அமரேசுவ ரம், பதீசுவரம், வைராக்கியே சுவரம், கல்பகேசுவரம், அரி பிரமே சுவரம், குணேசுவரம், விகுணேசுவரம், பிர்மாண்டேசு வரம், சடேசுவரம், விலாசேசு வரம், சுகசேசுவரம், ஆமகேசு வரம், பிலவே சுவரம், அன்னகோ கேசுவரம், பிராணகேசுவரம், வித்தியானேசு வரம், அசுனாதே சுவரம், பிசாண கேசுவரம், விக்கி யானே சுவரம், ஆசுமேசுவரம், இரட்சுகே சுவரம், விசர்ப்பூசு வரம், வாமனே சுவரம், ஆம் பிரே சுவரம், கமடே சுவரம், சிதா சுனே சுவரம், உருகாயேசுவரம், கபிஞ்சலே சுவரம், காகேசுவரம், ஷண்டகே சுவரம், அங்கேசுவரம், சவகே சுவரம், சோதீசுவரம், காரணே சுவரம், அரிருத்திரேசுவரம், கிருபாணே சுவரம், திமீசுவரம், இரண காவர்க்கேசுவரம், அரிசே பாருணேசுவரம், அப்பிரேசுவரம், தப்பிரகே சுவரம், தந்தசூகேசு வரம், உதாரேசுவரம், இந்துவ வரீஸ்வரம், மகேசுவரம், சபேசு வரம், அரிகேசுவரம், திசோரீசு வரம், குத்தாலேசுவரம், அர்ப்ப கேசுவரம், யுலேசுவரம், உதே சுவரம், தர்வீசுவரம், அற்புதேசு வரம், அயிராகதேசுவரம், தஞ்சே சுவரம், துகேசுவரம், அகங்காரே சுவரம், பாலநேத்தி ரேசுவரம், வைளிசளீசுவரம், கிரகசேரசர்க்கே சுவரம், பதுமா சளேசுவரம், வாகாசுவரம், தகரேசுவரம், வட முலேசுவரம், உசனேசுவரம், பிருண்டேசுவரம், காலேசுவரம், பகந்தேசுவரம், விசித்திரேசுவரம், ஸ்ரீணீசுவரம், பற்பாரேசுவரம், சமசரோத தராணேசுவரம், களதௌதேசுவரம், உரோவே சுவரம், சிலேசுவரம், பரம்பஞ்சே சுவரம், பத்திரேசுவரம், பர்ணீ சுவரம், அசுவினீசுவரம், உரோகணீ சுவரம், பங்ககேசுவரம், விடே சுவரம், நிதினேசுவரம், ஸ்தோர்த் தலேசுவரம், பஸ்மமேசுவரம், சமேசுவரம், பபேசுவரம், சர்ப்பே சுவரம், பவதேசுவரம், கரசுவதே சுவரம், சுவாலேசுவரம், சாலகே சுவரம், தமேசுவரம், புண்ணியகே சுவரம், உசத்தியேசுவரம், அணி மாண்டேசுவரம், சர்வாத்தினே சுவரம், சுனக்கன்னேசுவரம், மாதனேசுவரம், பிரதூசுவரம், சிபி விஷ்டே சுவரம், அம்சே சுவரம், மிருகேசுவரம், கெசானனேசுவரம், சாணேசுவரம், வீரகேசுவரம், சண்டேசுவரம், முண்டேசுவரம், சுக்கிரேசுவரம், பணிகே சுவரம், அனசூயேசுவரம், கந்தமாதே சுவரம், பண்டேசுவரம், பிரசங்கே சுவரம், கலகஞ்சேசுவரம், மிருத்தி யுஞ்சயேசுவரம், சைலேசுவரம், சாரச்சியேசுவரம், கதீசுவரம், சுபவனேசுவரம், சாங்கதீசுவரம், சுபத்தீசுவரம், அனேசுவரம், சிதி சண்டேசுவரம், சூரியேசுவரம், கிரந்த கேசுவரம், ஸ்படிகேசுவரம், கர்த்தி ரேசுவரம், வர்த்தேசுவரம், சீரணீ சுவரம், சார்த்தூலேசுவரம், அரபச்சியேசுவரம், புணரே சுவரம், நர்த்தகேசுவரம், உருத்தி ராக்கேசுவரம், கவீந்திரேசுவரம், கவசேசுவரம், மணீசுவரம், பரிபீலீசுவரம், அமர்த்தேசுவரம், துருணேசுவரம், பிதாமதே சுவ ரம், துடிலேசுவரம், சஷீ சுவரம், பார்த்தேசுவரம், லெசரே சுவரம், செகஷுசுரோரேசுவரம், தண்ட கேசுவரம், இலங்கே சுவரம், மணிபத்திரேசுவரம், கடொத் தசே சுவரம், புரேசுவரம், நடேசு வரம், காமத்தேசுவரம், ஆம்பி ராதகேசுவரம், கணீ பூதேசுவரம், இரத்னபூஷே சுவரம், பிடாளலே சுவரம், மணீசுவரம், மவுதீசுவரம், புருஷேசுவரம், பரம்பேசுவரம், கவுரீசுவரம், இரமணீசுவரம், பிலவங்கேசுவரம், கரீநதிரேசு வரம், நரத்தியேசுவரம், பாஷகளீ சுவரம், மகாதானேசுவரம், மண்ட பேசுவரம், வலீசுவரம், சனிதே சுவரம், கீர்மகேஸ்வரம், பதுரப் பத்திரேசுவரம், புஷ்பாராகே சுவரம், கோமேதேசுவரம், லவே சுவரம், பிரதீசுவரம், இரட்சபே சுவரம், பிரசாதேசுவரம், குலே சுவரம், வச்சிரேசுவரம், nக்ஷத்திர கேசுவரம், காணிகாரேசுவரம், காவீசுவரம், புண்டரீகேசுவரம், விணாபாணீசுவரம், சந்திரீ சுவரம், கானகேசுவரம், ஆகாவுந் தீசுவரம், பயோதேசுவரம், குடே சுவரம், குடசாரேசுவரம், சுவேத் தானப்பிரீசுவரம், பிரதானேசுவரம், சிலாதேசுவரம், கந்தேசுவரம், பத்தேசுவரம், திரிலோச்னோ சுவரம், பக்ஷேசுவரம், ஸ்தூல கண்டேசுவரம், பிரகடேசுவரம், தாரகேசுவரம், கோதீசுவரம், யந்திரேசுவரம், மந்திரேசுவரம், கன்கலேசுவரம், காவலேசுவரம், பிரதானியேசு வரம், ஆதாரியேசு வரம், அனாதீ சுவரம், மித்திரவிந் தேசுவரம், சவரோகன அரேவசு வரம், சங்கேசுவரம், பிசங்கேசு வரம், பாரியேசுவரம், தாரணேசு வரம், ஆரிதேசுவரம், அடசேசு வரம், பக்தாலவியேசுவரம், உலோ பாமுத்திரேசுவரம், சுராபாண் டேசுவரம், மனுஅஸ்தீசுவரம், சித்திரதுவசேசுவரம், ரத்தின சௌதேசுவரம், காமசுவரம், உருத்திரணீசுவரம், அவந்தீசுவரம், கர்ப்படேசுவரம், சத்திரகேசுவரம், சுதேசுவரம், விசுதேசுவரம், புல்லே சுவரம், சாலகேசுவரம், தேவ கன்னியேசுவரம், நாதகண்ணு யேசுவரம், சத்தியேசுவரம், நாவே சுவரம், குபேரேசுவரம், வனேசு வரம், பவித்திரேசுவரம், வளட் டேசுவரம், மகாட்சேசு வரம், நகேசுவரம், சப்பினேசுவரம், தால தேசுவரம், சமாசீனேசுவரம், சர்வகாமச்சப்ரதேசுவரம், சச்சிரே சுவரம், சுகேசுவரம், பிரணதார்த் தியரேசுவரம், பஞ்சங்கேசுவரம், சுபத்மனாபேசுவரம், பஞ்சவத்தி ரேசுவரம், பஞ்சாட்சரேசுவரம், சமதேசுவரம், சந்தேசுவரம், கர்ச்சிரேசுவரம், அசரிசேசுவரம், காகேசுவரம், கலாவர்த்தேசுவரம், தாமரதுவஜேசுவரம், அம்சதுவ ஜேசுவரம், விருஷபத்துவஜேசு வரம், சிம்மதுவஜேசுவரம், பிஞ் சேசுவரம், குமரேசுவரம், நிஷங் கேசுவரம், கிலீசுவரம், ஈசானே சுவரம், விகர்த்தேசுவரம், சுரபீசு வரம், அணிகேசுவரம், சாரங் கேசுவரம், கடக்கேசுவரம், பந்து ரேசுவரம், கமேசுவரம், சம்பேசு வரம், மாதுரேசுவரம், உருத்திர கணேசுவரம் என்பனவாம். சிவபூசையியல்பு - 4 - சரியை, கிரியை, யோகம், ஞானம். சிவசின்னம் - 2 - உருத்திராக்கம், விபூதி. சிவன்வகை - 3 - அதிகாரசிவன், போகசிவன், இலயசிவன். சிவாகமம் - 28 - காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விச யம், நிச்சுவாசம், சுவாயம் புவம், அனலம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், விம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தான கருவோத்தம், பாரமேசுரம், கிரணம், பேதம், வாதுளம். இச்சிவாகமங்கள் மந்திரமெனவும், தந்திரமென வுஞ் சித்தாந்தமெனவும் பெயர் பெறும். ஒவ்வொன்றிற்குங் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக்கோடி கிரந்தங்களுள்ளன. சிவபெரு மானுக்குக் காமிகம் திருவடி களும், யோகசம் கணைக்கால் களும், சிந்தியம் திருவடி விரல் களும், காரணம் கெண்டைக் கால் களும், அசிதம் முழந்தாள் களும், தீப்தம் தொடைகளும், சூக்குமம் குய்யத் தானமும், சகச் சிரம் கடித் தானமும், அஞ்சு மான் முதுரும், சுப்பிரபேதம் கொப்பூழும், விசயம் உதரமும், நிச்சுவாசம் நாசியும், சுவாயம் புவம் முலைகளும், ஆக்கினேயம் கண்களும், வீரம் கழுத்தும், இரெ ளரவம் செவி களும், மகுடம், திருமுடியும், விமலம் கைகளும், சந்திரஞானம் மார்பும், முகவிம்பம் திருமுகமும், புரோற்கீதம் திரு நாக்கும், இலளிதம் கபோலேங்களும், சித்தம் திருநெற்றியும், சந்தானம் குண்டலமும், சருவோ கதம் உப வீதமும், பாரமேசுவரம் ஆரமும், கிரணம் இரத்தினாபரணங்களும், வாதுளம் திருப்பரி வட்டமும், காலோத்தரம் திருமேற்பூச்சும், மற்றைய உபாக மங்க ளெல்லாம் பரிமள திரவி யங்களும் புட்பங் களும், சைவ சித்தாந்தம் நைவேத் தியங்களு மாம். சிவாகமபாதம் - 4 - சரியாபாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞான பாதம். இவற்றுள் சரியா பாதத் திலே சமயாசாரங்களும், சமய விசேட நிருவாண ஆசாரியாபி டேக விதிகளும் கூறப்படும். கிரியாபாதத்திலே மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் முதலாயின வுங் கூறப்படும். யோகபாதத்திலே பிராணாயாம முதலிய அங்கங் களோடு கூடிய சிவயோக லக்க ணம் செப்பப்படும். ஞானபாதத் திலேபதி பசுபாசமென்னுந் திரிப தார்த்த லக்கணங்கள் பேசப்படும். சிற்பத்தொழிற்குறிப்பு - 10 - கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை தந்தம், வண்ணம், கண்ட சருக்கரை, மெழுகு. சிற்பநூல் - 32 - விச்சுவதருமம், விச்சுவேசம், விச்சுவசாரம், விருத் தம், தா வட்டம், நளம், மயம், அனுமான், பானு, கற்பாரியம், சிருட்டம், மான சாரம், வத்து வித்தியாதிபதி, பாராசரியம், அரிடிகம், சயித்தகம், வாத்து போதம், வித்தாரம், இந்திரம், வச்சிரம், சவுமம், விச்சுவகாசி பம், மகதந்திரம், விசாலம், சித்தி ரம், காபிலகாலயூபம், நாமசங் கிதை, சாத்திகம், விச்சுவபோதம், ஆதிசாரம், வெகுச்சுருதம், மான பேதம். சீ சீதமுற்றோனவிநயம் - 7 - துன்ப முற்ற மனத்துட னுழத்தல், நனைந்த புடைவை யுறுத்தல், வெயிலிற் கிடத்தல், அக்கினிகாய விரும்பல், சோர்தல், தடுமாறல், நெட்டுயிர்ப்பு விட்டுவிட்டுரைத்தல். சீவதேகம் - 3 - தூலம், சூக்குமம், காரணம். சீவாவத்தை - 3 - சாக்கிரம், சொப் பணம், சுழுத்தி. சு சுடர் - 2 - சூரியன், சந்திரன். சுடர் - 3 - சந்திரன், சூரியன், அக்கினி. சுட்டுவகை - 2 - அகச்சுட்டு, புறச் சுட்டு. சுத்தத்திற்குரியவெழுத்து - 12 - மக முதலிய பன்னிருவருக்க வெழுத் துக்களாம். சுபம் - 8 - மங்கலங் காண்க. சுப்பிரமணியர்குணம் - 6 - சருவஞ் ஞகை திருப்தி, அநாதிபோதம், அலுப்தசத்தி, அநந்தசத்தி, சுவதந் திரத்துவம். சுப்பிரமணியர்திருமுகம் - 6 - பிரண வம், இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியாசத்தி, ஆதிசத்தி, பராசத்தி. சுப்ரமணியர்தேவிமார் - 2 - தெய்வ யானையம்மை, வள்ளியம்மை. இருவருள் தெய்வயானை யம்மை யாரை ஞானசத்தி எனவும், வள்ளி யம்மையாரைக் கிரியா சத்தி யெனவுங் கூறுப. அன்றி இச்சா சத்தி வள்ளியம்மையார், கிரியா சத்தி தெய்வயானை யம்மை, ஞானசத்திகதிர் வேல் எனவுங் கொள்வர். சுப்பிரமணியர் பிரதானத்தலம் - 6 - திருப்பரங்குன்றம், திருச்சீரலை வாய், திருவாவினன்குடி, திரு வேரகம், குன்றுதோறாடல், சோலைமலை. சுரம் - 7 - ச, ரி, க, ம, ப, த, நி, அன்றியு மேழிசை காண்க. சுவை - 6 - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு. சூ சூதகம் - 5 - சனனாசூசம், மர ணாசூசம், சண்டாளர் நீரிற் றோய்தல், சுராபானம் பண்ணல், பொய்கூறல். சூதமுனிவர்மாணாக்கர் - 6 - சுமதி, அக்கினிவருச்சன், மித்திராயு, சாம்சபாயனன், அகிருத விர ணன், சாவர்ணி. சூரியர் - 12 - தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டா. இப்பெயர் சித்திரை மாத மேடவிராசி முத லொவ் வொரு மாதத் தொவ்வோரிரா சியிற் புகுந்த சூரியனுக்கு முறையே செல்லு மென்பர். இவரே துவாத சாதித்தர். சூரியசந்திரர்முதலியவீதி - 3 - மேடவீதி, இடபவீதி, மிதுன வீதி; அவை தாம் இடபம், சிங்கம், மிதுனம், கடகம் இந் நான்கும் மேடவீதி. மீனம், மேடம், கன்னி, துலாம் இந் நான்கு மிடபவீதி. தனு, மகரம், கும்பம், விருச்சிகம் இந்நான்கு மிதுனவீதி. சூரியன்றேர்க்குதிரைகள் - 7 - காயத்திரி, பிருகதி, உட்டிணிக்கு, சகதி, திருட்டிப்பு, அநுட்டிப்பு, பந்தி. சே சேனாவெள்ளவகை - 9 - ஏகம், கோடி, சங்கம், விந்தம், குமுதம், பதுமம், நாடு, சமுத்திரம், வெள் ளம். இவற்றுள் அக்குரோணி யெட்டுப்பங்கு கொண்டது ஏகம், அது எட்டுப் பங்கு கொண்டது கோடி, அது எட்டுப் பங்கு கொண்டது விந்தம். ஏனையவு மிங்ஙனேயொவ் வொன்றெட்டுப் பங்கு கொண்டனவாம். சேனைத்தொகை - 10 - பதாதி, சேனாமுகம், குமுதம், கணகம், வாகினி, பிரளயம், சமுத்திரம், சங்கம், அநிகம், அக்குரோணி. அவையாவன - யானை - 1, தேர்-1, குதிரை - 3, காலாள் - 5, இவை கூடியது பதாதி, பதாதி மும்மடி கொண்டது சேனாமுகம், சேனா முகமும்மடி குமுதம், குமுதமும் மடி கொண்டது கணகம், கணக மும்மடி கொண்டது வாகினி, வாகினிமும்மடி கொண்டது பிரளயம், பிரளயமும் மடிகொண் டது சமுத்திரம், சமுத் திரமும் மடி கொண்டது சங்கம், சங்கமும்மடி கொண்டது அநிகம், அநிகமும்மடி கொண்டது அக்குரோணி. சை சைவம் - 16 - ஊர்த்தசைவம், அநாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதைசைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க் குணசைவம், அத்துவாசைவம், யோசைவம், ஞானசைவம், அணு சைவம், கிரியாசைவம், நாற்பாத சைவம், சுத்தசைவம். சைவாகமச்சார்பு நூல்கள் - 8 - தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், தத்துவத்திரிய நிர்ண யம், போககாரிகை, மோக்ஷ காரிகை, நாதகாரிகை, பரமோக்ஷ காரிகை, நாதகாரிகை, பரமேக்ஷ நிராசகாரிகை, இரத்தினத்திரயம். இவை அட்டப்பிரகரணம் எனவும் பெயர் பெறும். சொ சொல் - 4 - பெயர், வினை, இடை, உரி. சொல்லின்பாகுபாடு - 3 - உட்சொல், புறச்சொல், ஆகாயச்சொல். சொல்வகை - 10 - பெயரியற் சொல், பெயர்த்திரிசொல், வினையியற் சொல், வினைத்திரிச்சொல், இடையியற்சொல் இடைத்திரி சொல், உரியியற்சொல், உரித்திரி சொல், வடசொல், திசைச்சொல். சொற்பாகுபாடு - 4 - சுன்னம், சுரிதகம், வண்ணம், வரிதகம். சுன் னமாவது நான்கடியான் வருவது, சுரிதகமாவது எட்டடியான் வரு வது, வண்ணமாவது நானான்கடி யான் வருவது, வரிதகமாவது முப்பத்திரண்டடியான் வருவது. ஞ ஞஞ்ஞையுற்றோனவிநயம் - 7 - பற்களை மென்றல், இறுக்கப் பட்ட நாவழிவுடைமை, நுரை சேர்ந்து கூம்பும் வாயுடைமை, பார்த்தவர்க் குரைப்பவன் போல அறிவிலாமை, விழிப்போன் போல விழியாதிருத்தல், விழுத்தக வொழுக்கிலாமை, பிரகாசிக்கு முகம் வாடிப்போதல். ஞா ஞானசதுட்டயம் - 4 - நித்தியா நித்திய வஸ்துவிவேகம், இக முத்திரார்த்த பலபோகவிராகம், சமாதிசட்க சம்பத்து முமூட்சுத் துவம். ஞானம் - 2 - அபரஞானம், பர ஞானம். ஞானவகை - 4 - கேட்டல், சிந்தித் தல், தெளிதல், நிட்டை கூடல். இவற்றுள் கேட்டல் ஞானத்திற் சரியை, சிந்தித்தல் ஞானத்திற் கிரியை, தெளிதல் ஞானத்தில் யோகம், நிட்டை கூடல் ஞானத் தில் ஞானம். த தகுதிவழக்கு - 3 - இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி. தத்துவம் - 96 - ஆன்மதத்துவம் - 24, நாடி - 10, அவத்தை - 5, மலம் - 3, குணம் - 3, மண்டலம் - 3, பிணி - 3, விகாரம் - 8, ஆதாயம் - 4, தாது - 7, வாயு - 10, கோசம் - 5, வாயு - 6, இவற்றுளான்மதத்துவ மாவன பூதம் - 5 புலன் - 5, ஞானேந் திரியம் - 5, கருமேந்திரியம் - 5, கரணம் - 4. இவைகளைத் தத்தம் வரியிற் காண்க. தந்தையர் - 5 - பிறப்பித்தோன், கற்பித்தோன், மண முடிப்பித் தோன், அன்னந்தந்தோன், ஆபத்துக்குதவினோன். தமிழ் - 3 - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ். தமிழ்நாடு - 13 - செந்தமிழ் நாடொன்று. இதற்கெல்லை கருவூரின் கிழக்கு மருவூரின் மேற்கு வைகையாற்றின் தெற்கு மருதயாற்றின் வடக்கு. இதனைச் சூழ்ந்த கொடுந்தமிழ்நாடு - 12 - தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூமி, பன்றி, அருவா, அருவா வடதலை, சீதம், மலாடு, புனனாடு. தயாவிருத்தி - 14 - களாபடனம், வியாதாகாரம், நிர்க்கத் தண்டனம், சந்தேகவாரணம், அன்னியகுண சகனம், பரதிருதூணயோகம், பார்த்த தேவப் பிரார்த்திகம், அவையாவன :- முறையே கல்வி பயிற்றல், துயர் தீர்த்தல், தண்டத்தி னீக்கல், ஐயந்தேற்றல், பிறர் குணத்தழுக்கா றின்றிப் பொறுத்தல், பிறராற் செய்யப் படும் தீமைமறந்து நன்றி நினைத் தல், பிறர்க்குவேண்டித் தெய்வம் வழிபடல். இவையுயிர்க் கேழுப காரம். அன்றியுஞ் சத்தாங்கோப காரம், அன்னம், பானம், அம்ப ரம், மந்திரம், தாசபாலனம், காரா மயத்திரிதவி மோசனம், சவச் சேமம், அவை, முறையே உணவு, பானம், உடை, இடம், அடிமை காத்தல், சிறை, நோய் மூன்றுந் தீர்த்தல், பிண மடக்கல். இவை யுடற் கேழுப காரம். தயாவிருத்தி - 8 - பிறர்க்குப் பொருள் வரவையுவத்தல், பிறர் செல்வம் பொறுத்தல், பிறர்கரு மத்திற் குடன்படல், தீமைக் கஞ்சல், பிறர்கரும முடிக்க விரை தல், பிறரையந்தீர்த்தல், நன்மை கடைப்பிடித்தல், பிறர் துயர்க் கிரங்கல். தராபதிநிலை - 7 - அறம், பொருள், இன்பம், இம்மை, மறுமை, புகழ், மதிப்பு. தரு - 5 - அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம். தருமநூல் - 18 - மநு, அத்திரி, ஒளரிதம், விட்டுணு, யாஞ்ஞவற் கியம், உசனம், ஆங்கீரசம், யமம், ஆபத்தம்பம், சம்வர்த்தம், காத்தி யாயனம், பிருகற்பதி, பராசரம், வியாசம், சங்கலிதம், தக்கம், கௌதமம், சாதான்மம், வசிட் டம். இவற்றுட் சங்கலிதம், பொது, இவற்றுள் கிருதயுகத்தில் மநுமிரு தியும், திரேதாயுகத்திற் கௌதம மிருதியும், துவாபாயுகத்திற் சங்க லிதமிருதியும் கலியுகத்திற்பராசர மிருதியு முக்கியமாயிருக்கும். தருமவகை - 2 - சிவதருமம், பரதருமம். தலைவள்ளல் - 7 - சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பி யன், விராடன். தா தாது - 7 - இரதம், இரத்தம், சுக்கி லம், மூளை, தசை, எலும்பு, தோல். தாமதகுணம் - 9 - பேருண்டி, நீதி, கேடு, உறக்கம், மறதி, பொய், சோம்பு, ஒழுக்கம் வழுவுதல், கொலை, வஞ்சம். தாமதகுணச் சித்தி - 8 - ஆகரு டணம், அதிசிரியம், அஞ்சனம், வசியம், இரசவாதம், வயத்தம்பம், தம்பனம், மோகனம். இவற்றுள் தூரத்திலிருக்கும் பொருளைச் சமீபத்தில் வருவிப்பது ஆகரு டணம்; காணப்படும் பொருள் களைக்காணாமற் செய்விப்பது அதிரிசியம்; காணப்படாமல் இருக்கும் பொருள்களை நேரே காணும்படி காட்டுவிப்பது அஞ் சனம்; பகைவரையும் உறவராக் கிக் கொள்வது வசியம்; செம்பு பித்தளை முதலிய உலோகங் களை மாற்றுயர்ந்த லோகமாக் கிக் கொள்வது இரசவாதம்; பாலியரை விருத்தர்கள் ஆகவும், விருத்தர்களைப் பாலியர்கள் ஆகவுஞ் செய்வது வயத்தம்பம்; கட்டுப்படாதவற்றையுங் கட்டுக் குளகப்படுத்துவது தம்பனம்; தன்னையா வரும் மோகிக்கச் செய்வது மோகனம். தாமதகுணவிருத்தி - 9 - பிரிய மின்மை சோம்பல், கோப முடைமை, கோட் சொல்லல், தன்னைப்பெரிதாக எண்ணல், அதிகநித்திரை, கர்வத்தால் வரும் சோம்பல், கேடுசெய்தல், மூடத் தன்மை. தாயார் - 5 - பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத் தாய், செவிலித்தாய். அன்றியு மரசன்றேவி, குருவின்றேவி, அண் ணன்றேவி, தன்றேவியையீன் றாள், தன்னை யீன்றாள். தாரணை - 9 - நாமதாரணை, வச்சிர தாரணை, மாயாதாரணை, சித்திர தாரணை, செய்யுட்டாரணை, நிறைவு குறைவாகிய வெண் பொருட்டாரணை, சத்ததாரணை, வத்துதாரணை, சதுரங்கதாரணை. தாளம் - 5 - சச்சற்புடம், சாமற் புடம், சட்பிதாபுத்திரிகம், சம்பத்து வேட்டம், உற்கடிதம். இவற்றுட் சச்சற்புடமாவதுகுரு 2, இலகு - 1, புலுதம் - 1 , ஆக மாத்திரை - 8, இஃதீசன் சத்தியோசாத முகத்திற் பிறந்தது, பிரமசாதி; சாமற் புடமாவது குரு - 1, இலகு - 2, குரு - 1, , ஆக மாத்திரை - 6, இஃதீசன் வாமமுகத்திற் பிறந்தது அரச சாதி; சட்பிதா புத்திரிக மாவது புலுதம் - 1, இலகு - 1, குரு - 2, இலகு - 1, புலுதல் - 1, , ஆக மாத்திரை - 12, இஃதீசன் கோர முகத்திற் பிறந்தது வைசியசாதி; சம்பத்து வேட்டமாவது புலுதம் - 1, குரு - 3, புலுதம், 1 - ஆக மாத்திரை - 12, இஃதீசன்றம்புருட முகத்திற்பிறந்தது வேளாளசாதி, உற்கடிதமாவது குரு - 3, , ஆக மாத்திரை - 6, இஃதீசான முகத்திற் பிறந்தது சங்கிரசாதி. தாளப்பகுதி - 4 - கொட்டு, அசை, தூக்கு, அளவு, என்னை? கொட்டு மசையுந், தூக்குமளவு மொட்டப் புணர்ப்பது பாணியாகும்” என் றாராகலின். அவற்றுள் கொட் டென்பது அரை மாத்திரை, வடிவு - 1; அசை யென்பது ஒரு மாத்திரை, வடிவு - 7; தூக்கென் பது இரண்டு மாத்திரை, வடிவு - 2; அளவென்பது மூன்று மாத் திரை. வடிவு - ஃ; என்னை? “ககரங் கொட்டே எகரமசையே - யுகரந் தூக்கேயளவே யாய்தம்” என்றா ராகலின். கொட்டாவது அமுக் குதல், அசையாவது தாக்கியெழு தல், தூக்காவது தாக்கித் தூக்கு தல், அளவாவது தாக்கி வோசை நேரேநின்று மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல் எனக் கொள்க. அவை சச்சபுட முத லான பஞ்சதாளமும், அரைமாத் திரை யுடைய ஏகதாள முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார் வதிலோசன மீறாகச் சொன்ன நாற்பத்தோரு தாளமும் ஆறன் மட்டம், எட்டன்மட்டம் என் பனவும், தாளவொரியல் தனி நிலை யொரியல், என்பனவும், ஒன்றன்பாணி முதலாக எண் கூத்துப்பாணி யிறுதியாகக் கிடந்த பதினொருபாணி விகற்பங்களும், முதனடைவாரம் முதலாயினவும் இறுதியாகக் கொள்க. தாளப்பகுதி - 7 துருவம், மட்டியம், உரூபகம், சம்பை, திரிபுடை, அட தாளம், ஏகதாளம். இவற்றுள் துருவத்திற்கு இலகு - 1, குரு - 1, துரிதம் - 1, , இதற்குச் சுரம் சரிகம, கரிசரி, கரிசரிகம; மட்டி யத்திற்கு இலகு - 1, துரிதம் - 1, இலகு - 1, , இதற்குச் சுரம் சரிகரி, சரி, சரிகம; உரூபகத்திற்கு இலகு - 1, துரிதம், 1, இதற்குச்சுரம் சரி. சரிகம; சம்பைக்கு இலகு - 1, அநுதுரிதம் - 1, துரிதம் - 1, , இதற்குச் சுரம் ச, ரிக, சரிகமா; திரிபுடைக்கு துரிதம் - 3, அனு துரிதம் - 1, , இதற்குச்சுரம் சரிகசரிகம; அடதாளத்திற்கு இலகு - 1, துரிதம் - 2, இலகு - 1, , இதற்குச் சுரம் சரிகா, சாரிகா, மா, மா ஏகதாளத்திற்கு இலகு - 1, இதற்குச் சுரம் சரிகம; சம்பைக்குப் பிரமசாதி தவிர நான்கு சாதியு முள. திரிபுடைக்கு மூன்று விராம முமோர நுதுரிதமுமானாலோரே சாதி, இலகுவிருந்தாலைந்து சாதியுமுள; மற்றையைந்து தாளங் கட்குமைந்து சாதியுமுள. அவற்றை யவ்வவ சாதியேக தாளலகு; அக்க ரங்களா லறியுமாறு, பிரமசாதி யிலகுவிற்கு நான்கக்கரகாலம், அரசசாதியிலகுவிற்கு மூன்றக்கர காலம் ஆறக்கரகாலமு மென்ப. வைசியசாதி யிலகுவிற் கேழக்கர காலம், சூத்திரசாதியிலகுவிற் கைந்தக்கர காலம், சங்கிரம சாதி யிலகுவிற் கொன்பதக்கர காலம், எச்சாதியிலு மநுதுரித மோ ரக்கர காலமுந் துரித மிரண் டக்கர காலமுமாம். தாளம் - 9 - அரிதாளம், அரும தாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிமிர்த்ததாளம், படிமதாளம், விடதாளம் இவையே நவசந்தி தாளம். தாளப்பிரமாணம் - 10 - காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், சாதி, களை, இலயை, யதி, பிரததாரம், இவையே தாளசப் பிராணமென்ப; இவற்றுட் காலப் பிரமாணம் 10 - அவை யாவன - கனம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துரிதம், இலகு, குரு, புலுதம், காகபதம் - இவற்றுட் கணம் தாமரையிதழ் நூறடுக்கி யதிலோ ரிதழிலூசி செலுத்துங் காலம், கணமெட்டுக் கொண்டதிலவம், இலவ மெட்டுக்கொண்டது காட்டை, காட்டையெட்டுக் கொண்டது நிமிடம், நிமிட மெட்டுக் கொண்டது துடி, துடியிரண்டு கொண்டது துரிதம், துரிதமிரண்டு கொண்டது லகு, இலகு, இரண்டு கொண்டது குரு, இலகு மூன்று கொண்டது புலுதம், குரு இரண்டு கொண்டது காகபதம். மார்க்கம் - 1 - தக்கணம் வார்த்தி கம், சித்திரம், சித்ரதரம், அர்த்த சித்திரம், அதிசித்திரம்; இவற் றுள் எட்டு மாத்திரையோர் களையாகக் கொண்டது தக்க ணம்; நான்கு மாத்திரை யோர் களையாகக் கொண்டது வார்த் திகம்; இரண்டுமாத்திரை யோர் களையாகக் கொண்டது சித்தி ரம்; ஒரு மாத்திரை யோர்களை யாகக் கொண்டது சித்திரதரம்; அரைமாத்திரை யோர்களை யாகக் கொண்டது அர்த்தசித்தி ரம் கான்மாத்திரை யோர்களை யாகக் கொண்டது அதிசித்திரம்; நொடியளவு மாத்திரை கிரியை - 2 - மார்க்கம், தேசிகம் இவற்றுண் மார்க்கம் - 8, இவற்றுள் நிசத்தம் - 4, சசத்தம் - 4, நிசத்தமாவது ஆவாபம், நிட்கிராமம், விட்சே பம், பிரவேசம்; சசத்தமாவது - துருவம், சம்மியம், தாளம், சன்னி பாதம்; தேசிகம் - 8 - துருவகம், சர்ப்பிணி, கிருடியை, பதுமினி, விசர்ச்சிகை, விட்சிப்தம், பதாகை, பதிதம், இவற்றி னிலக்கியங்களை நூலா னுணர்க; அங்கம் - 4, அவையாவன:- , இவை முறையே பிறை, மதி, கணை, வில், பாம்பு, புள்ளடி, முறையே யிவற்றின் பெயர் - அநுதுரிதம், துரிதம், இலகு, குரு, புலுதம், காக பதம்; இவற்றி னுற்பத்திகளும், பரியாய நாமங்களும், வண்ணங் களும், அதிதேவதைகளும், மாத் திரைகளும், அத்தாங்குலப் பிர மாணங்களும், காதைப் பிரமா ணங்களும் நூலானுணர்க. கிரகம் - 4, அதீதம், அநாகதம், சமம், விடமம் இவற்றுட்குரன் முன்னுந் தாளம் பின்னும் வருவத தீதம் - தாளம் முன்னும் குரல் பின்னும் வருவது அநாகதம், குரலுந் தாளமு மொத்துவரிற்சமம், குரலுந் தாளமு முன்னும் பின்னுங் கலந்து வருவது விடமம்; சாதி - 5 - சதுர சிரம், திரிசிரம், மிசிரம், கண்டம், சங்கீரணம். இவை முறையே பிரம வரச வைசிய சூத்திர சங்கிரமம், இவற்றை முற்கூறிய விலகு, அக்கர காலங்களாலறிவது. களை - 3 - ஏககளை, துவிகளை, சதுர்க் களை, இவற்றுளக் கரகாலமாயங் கிரியையோடும் வருவது ஏககளை, இதனை யிரட்டித்துக் கிரியை யோடு வருவது துவிகளை; இதனை யிரட்டித்துக் கிரியையோடு வருவது சதுர்க்களை; இலயம் - 3 - விளம்பம், மத்திமம், துரிதம், இவற்றுளக்கர காலமாய்க் கிரியை யோடு வருவது விளம்பம், இதனை யரட்டித்துக் கிரியையோடு வரு வது மத்திமம், இதனை யிரட்டித் துக் கிரியையோடு வருவது துரிதம்; யதி - 11 - சமம்; விடமம், மிருதங்கம், வேதமத்தியம், கோபுற் சம், சுரோதோவகம், இவற்றுள் நெட்டங்கமாயினுங் குற்குங்க மாயினும் ஒரேவிதமாய்வருவது சமயதி, , எல்லா வங்கமுங் கிரம மின்றிக் கலந்து வருவது விடய மதி , - முதலிலுங் கடையிலுங் குற்றங்கமுமிடையி னெட்டங்கமும் வருவது மிருதங் கயதி, , முதலிலுங் கடை யிலு நெட்டங்கமுமிடையிற் குற்றங் கமும் வருவது வேதமத்தியயதி, , முதலிலே நெட்டங்கமு மீற்றிலே குற்றங்குமாய் நேர்ந்து வருவது யாகோபுச்சயதி, , முதலிலே குற்றங்கமு மீற்றிலே நெட்டங்க முமாய் வருவது சுரோதோவகம், , மற்றைய விலக்கணத்தாற் கண்டுணர்க. தானம் - 3 - தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படு தானம். அவையாவன :- அறத்தா னீட்டிய பொருளை முக்குற்ற மற்ற நற்றவத்தோரைக் கொள் கெனப் பணிந்து குறையிரந்து தம்முள்ள முவந்தீதல் தலைப்படு தானம்; ஆதுலர், குருடர், மாதர் முதற் பிறர் சிறுமையைப்பற்றி மனமிரங்கி யீவதிடைப்படுதானம்; புகழ்வார் வங்கை மாறுசுச் சங்கண்ணோட்டங் காரணம் கடைப்பாடிவற்றைப்பற்றி யீவது கடைப் படுதானம். தானவகை - 25 - துலாபுருட தானம், இரணிய கருப்பதானம், பிரமாண்ட தானம், இரணியகற்ப தானம், அட்டோத்தர சகசிரகோதானம், இரணியவிடப தானம், இரணிய சுவாதரனம், இரணிய கன்னிகா தானம், திக்குப் பாலகதானம், சுவர்ணரததானம், பஞ்சலாங்கல தானம், சுவர்ண பூதானம், கற்பக லதா தானம், இரணிய சத்தசாகர தானம், இரத்தின தேனுதானம், சுவர்ண கும்பதா னம், சுவர்ண கணபதி தானம், விஷ்ணு விம்ப தானம், திலபதுமதானம், தில பருவத தானம், திலதேனுதானம், இலக்குமிதானம், அன்னதானம், வித்தியாதானம், திலதானம். தானியம் - 9 - கோதுமை, நெல், துவரை, பச்சைப்பயறு, கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள். தானை - 6 - தேர், கரி, பரி, வாள், வில், வேல். தி திக்கு - 8 - கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு; இவையே யட்டதிக்கு எனப்படும். திக்கு - 10 - மேற்சொன்னவை யன்றி மேலுங் கீழுங் கூட்டித் தச திசையெயென்ப. கிழக்கு கருட திசை, தென்கிழக்கு பூனைத்திசை, தெற்கு சிங்கத்திசை, தென்மேற்குச் சுனகதிசை, மேற்கு நாகத்திசை, வடமேற் கெலித் திசை, வடக்கு யானைத்திசை, வடகிழக்கு முயற் றிசை, மேல் விசும்புத்திசை, கீழ் பாதாள திசை. திக்குநாகம் - 8 - அனந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகா பதுமன், சங்கபாலன், குளிகன். திக்குப்பாலகர் - 8 - கிழக்காதி முறையே இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இவர்க்கு முறையே குறிகளாவன :- கொடி, புகை, சீயம், நாய், இடபம், கழுதை, யானை, காகம். திக்குயானைகள் - 8 - கிழக்காதி முறையே ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சாருவபூமம், சுப்பிர தீபம், இவையே அட்டதிக் கயம்; இவற்றிற்கு முறையே பிடியானை களாவன:- அப் பிரமை, கபிலை, பிங்களை, அநுபமை, தாமிரபருணி, சுதந்தி, அஞ்சனை, அஞ்சனாவதி. திணை-2 - உயர்திணை, அஃறிணை, இவற்றுள் உயர்திணை மக்களுந் தேவரும் நரகருமாம்; அஃறிணை மற்ற வுயிருள் ளனவு மில்லனவு மாகிய யாவுமாம். திணை - 5 - குறிஞ்சி, பாலை, முல்லை மருதம், நெய்தல்; இவற்றுள் மலைச்சார்பு குறிஞ்சி, நீரில்லாக் கடுநிலம் பாலை காட்டுச் சார்பு முல்லை, வயற்சார்பு மருதம், கடற் சார்பு நெய்தல். திணைவகை - 2 - அகத்திணை, புறத்திணை; இவற்றுள் அகத் திணையாவது கைக்கிளைத் திணை, முல்லைத் திணை, குறிஞ் சித்திணை, மருதத்திணை, நெய் தற்றிணை, பாலைத்திணை, பெருந்திணை யென்னு மேழுவாம். புறத்திணையாவது வெட்சி, வாகை, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி, பாடாண்டிணை யென்னுமேழு மாம். திதி - 15 - பிரதமை - 1, துவிதியை - 2, திரிதியை - 3 - சதுர்த்தி - 4 - பஞ்சமி - 5, சட்டி - 6, சத்தமி - 7, அட்டமி - 8, நவமி - 9, தசமி - 10, ஏகாதசி - 11, துவாதசி - 12, திர யோதசி - 13, சதுர்த்தசி - 14, இவற்றிற் சுக்கில பக்கத்திற் சுத்த மென்றுங் கிருட்டின பக்கத்திற் பகுளமென்றுங் கூட்டுக. பதினைந் தாந் திதியாவது சுக்கில பக்கத்திற் குப் பௌர்ணமி, கிருட்டிண பக்கத்திற்கு அமாவாசியை. திரவிடம் - 5 - திரவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச் சரம். திரவியம் - 5 - மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடு திரவி யம், நகர்படுதிரவியம், கடல்படு திரவியம்; இவற்றுள் மலைபடு திரவியம் - மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம். காடுபடுதிரவியம் - இறால், தேன், அரக்கு, மயிற்பீலி, நாவி. நாடுபடு திரவியம் - செந்நெல், சிறுபயறு, கரும்பு, வாழை, செவ்விளநீர். நகர்படு திரவியம் - அரசன், பித் தன், மந்தி, யானை, கண்ணாடி. கடல்படு திரவியம் - உப்பு, முத்து, பவளம், சங்கு, ஒக்கோலை. திரிதரவில்லாவிருக்கை - 9 - பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படி யிருக்கை, சம்புடம் அயமுகம், சுவத்திகம், தணிப்புடம், மண்டி லம், ஏகபாதம். திருமாலவதாரம் - 10 - மச்சம், கூர்மம், வராகம், நாரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலபத்திரன், கண்ணன், கற்கி; சிவசத்தியாகியும், சிவனடி யவருட் சிறந்தவராயும் விளங்கும் நந்திருமால் இவற்றை யெடுத்த தற்குக் காரணம் யாதெனில் கூறுதும்; வேதத்தைத் திருடிக் கடலி லொளித்த சோமுகாசுர னெனு மிராக்கதனைக் கொல்ல மச்சாவதாரம்; கடலைக் கடையும் போது மந்தரமலையைத் தாங்கக் கூர்மாவதாரம்; பூமி யைப்பாயாக விரணியாக்கன் சுருட்டினதை விரிக்கவுமவனைக் கொல்லவும் வராகாவதாரம்; இப்பழி வாங்கச் சருவதேவ வணக்கம் விலக்கின வவன் றம்பி இரணிய கசிபனைக் கொல்ல நாசிங்காவதாரம். இந் நான்கவதாரத்துக்குந் தந்தை தாய ரில்லை. மாவலியை யடக்கக் காசிபனுந் திதியுந் தந்தை தாயாக வாமனா வதாரம். அரசராற் றாழ்த்தப்பட்ட பார்ப்பார் நிமிர்த்த மவ்வர சரைக்கொல்லச் சமதக் கினியு மிரேணுகையுந் தந்தை தாயாகப் பரசுராமாவதாரம். இராவணன் முதலிய விராக்க தரைக் கொல்லத் தசரதனுங் கௌசலையுந் தந்தை தாயாக விராமாவதாரம். பிரலம் பன்முதற் பல விராக்கதரைக் கொல்ல வசு தேவனுந் தேவகியு முரோகணியுந் தந்தைதாயாகப் பலதிபத்திர ராமாவதாரம்; பாரதநடத்த வசுதேவனுந் தேவகியுந் தந்தை தாயாகக் கண்ணன வதாரம். அறத்தை நிலைபெறச் செய்யக் கற்கியவதாரம். திருமாலவதாரம் - 15 - சனகன், சனந்தனன், சனாதன், சனற் குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்கிரீவன், தத்தாத்தி ரேயன், மோகினி, யாகபதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன். திருமாலாடல் - 4 - அல்லியம், குடம், மல், மரக்கால், “அஞ்சன வண்ண னாடிய வாடலுள் என்ற சிலப்பதி காரச் செய்யுளில், அஞ்சன வண்ணனாடிய வாடல் பத்துள்” என்று, ‘அடியார்க்கு நல்லாரும், அங்ஙனே அரும்பத வுரை ஆசிரி யரும் உரைத்தலால் பத்தென்று விளங்குகின்றது. அவற்றை வந்துழிக் காண்க. திருமாலாயுதம் - 5 - சக்கரம், தனு, வாள் தண்டு, சங்கம். திறம் - 12 - நேர்திறம், ஏனைய வந்துழிக்காண்க. இத்திறைத்தைச் சாடவமென்பர் வடநூலார். திறவகை - 4 - தாரப்பண்டிறம், பையுள், காஞ்சி, படுமலை, இவை விரியான் நூற்று மூன்றாகும். தீ தீ - 3 - உரியிலுள்ளதீ, உதரத்துள்ளதீ, சினத்திலெழுந்தீ. அன்றியும் வேதாக்கினி - 3 - காருகபத்தியம், தக்கணாக்கினியம், ஆகவனீயம். தீக்கணத்தின்பெயர் - 4 - அந்தர கணம், வாயுகணம், சூரியகணம், அக்கினி கணம். தீக்கணப்பையன் - 4 - அந்தரகணம் வேறுதேசத்திற் செலுத்தலும், வாயுகணம் செல்வத்தைப் போக் கலும், சூரியகணஞ் சூனியஞ் செய்தலும், தீக்கணம் நோய் செய்தாலு மாகிய பயனைத்தரும். தீக்குணம் - 10 - பொய் சொல்லல், கோட் சொல்லல், கோபித்துச் சொல்லல், பயனில் சொல்லல், இந்நான்கும் வாக்கின் றீக்குணம், களவாடப் போதல், வறிதே தொழில் செயல், கொலை செயல் இம்மூன்றுங் காயத்தீக்குணம்; கொலைநினைக்கை, காமப் பற்று, ஆசை இம்மூன்று மனத் தீக் குணம். தீர்த்தவகை - 53 - கங்கை, யமுனை, சரச்சுவதி, கௌதமை, நருமதை, காவிரி, பொருநை, குமரி, ஆன் பொருந்தம், மணி கன்றிகை, மாணிக்க கங்கை, வைகை, கோதா வரி, பிரமதீர்த்தம், குருக்கடீர்த்தம், கோகன்னம், சித்தவாசம், மது வனம், சோமம், விசிவதீர்த்தம், விரசை, மகாகாளம், கனகலம், வைதரணி, சித்தி நதி, வியாத தீர்த்தம், பிருது, துங்கம், கவசிகம், கனகம், நந்தை, தேசாச்சுவமேதம், மாதுங்கம், சுவாமிதீர்த்தம், சுழு முனை, சிந்து, புண்டரீகம், குபேர துங்கம், பஞ்சநதம், பாவநாசம், சொன்னவதி, பிலக்காவதானம், காலசற்பி, மானசவாலி, கேதாரம், அசுவம், கிட்டிணவேணி, மாகா ளம், ஒக்கிசபிருட்டம், தன்மம், புருடை, சந்திரம், சாளக்கிராமம். இவையே விதக்கப்பட்ட புண்ணிய தீர்த்தங்களாம். தீவு - 7 - நாவல், இறவி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகு, இவ்வெழுவகைப் பொருளு மவ்வத்தீவின் மிக்கனவாகையா லிவற்றாற் பெயர் பெற்றன. து துரககதி - 5 - மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வானரகதி, விடபகதி. துவர் - 10 - நாவல், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக் காசு, மாந்தளிர். துவீபம் - 7 - ஜம்பு, பிலக்ஷம், சான் மலி, குகம், கிரௌஞ்சம், சாகம், புஷ்கரம். துறவறத்தின் றுறை - 4 - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னு மிவைகளே. நாகம் தோலுரித் தாற் போல அகப்பற்றும் புறப்பற்று மறுத்து இந்திரிய வசமறுத்து, முற்றத் துறத்தலையுடைய துறவறத் துறையெனச் சித்தாந்த மெய்ந் நூலாரன்றி சிலப்பதிகார மூர் காண் காதைக்கணு முரைத்துள் ளார் அடியார்க்கு நல்லார். தூபம் - 5 - குந்துருக்கம், சூடன், அகில், சந்தனம், கருஞ்சீதாரி. தூ தூக்கு - 7 - செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத் தூக்கு, கோயிற் றூக்கு, நிவப்புத் தூக்கு, கழாற் றூக்கு, நெடுந்தூக்கு. இவற்றுள் ஒரு சீர்செந்தூக்கு, இருசீர் மதலைத்தூக்கு, முச்சீர் துணிபுத் தூக்கு, நாற்சீர் கோயிற் றூக்கு, ஐஞ்சீர் நிவப்புத்தூக்கு, அறுசீர் கழாற்றூக்கு, எழுசீர் நெடுந் தூக்கு எனக்கொள்க. தே தேசிக்குரியகால் - 24 - கீற்று, கடிசரி, மண்டலம், வர்த்தனை, கரணம், ஆலீடம், குஞ்சிப்பு, கட்டுப் புரியும், களியம், உள்ளா ளம், கட்டுதல், கம்பித்தல், ஊர் தல், நடுக்கல், வாங்குதல், அப்பு தல், அனுக்குதல், வாசிப்பு, குத்துதல், நெளிதல், மாறுக்கால், இட்டுப் புகுதல், சுற்றிவாங்குதல், உடற் புரிவு. தேவேந்திரர் - 14 - அரி, விபசித்து, சுசாந்தி, சிவி, விபு, மனோசவன், புரந்தரன், மாவலி, அற்புதன், சாந்தி, விருடன், இருததாமன், திவற்பதி, சுசி என்பவர்களாம். இவருள் விபுவைவசு இரவியென வும், புரந்தரனை ஓசஸ்வி யென வுங் கூறுப. தேயம் - 56 - அகம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கர்னாடம், காசம், காஸ்மீரம், காந்தாரம், காம்போசம், கிராடம், குருகு, குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோச லம், சகம், சவ்வீரம், சாலவம், சிங்களம், சிந்து, சீனம், சூர சேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்க ணம், நிடதம், நேபாளம், பாஞ் சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலை யாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம். தேவராடல் - 11 - கொடுகொட்டி, பாண்டரங்கம், குடை, துடி, அல்லியம், மல், குடம், பாவை, மரக்கால், பேடி, கடையம். இவற்றுள் கொடுகொட்டியாவது தேவர் புரமெரிய வேண்டுதலால் வடவை யெரியைத் தலையிலே யுடைய பெரியவம்பு ஏவல் கேட்டவளவிலே அப்புரத்தில வுணர் வெந்து விழுந்தவெண் பலிக்குவையாகிய பாரதியரங் கத்திலே யுமாபிராட்டியார் ஒரு கூற்றினராய் நின்று பாணிதூக்குச் சீரென்னும் தாளங்களைச் செலுத்தத் தேவர் யாரினும் மிக்க வனாம் எம்மையாட் கொள்வான் புதுச்சந்நிதி யொரு பெருங் கோயிலுழை வீற்றிருந்தருளு மெந்தை கந்தவேளின் றந்தையாய் விளங்கும் இறைவன் சயானந் தத்தாற் கைகொட்டி நின்று ஆடியதாம். திரிபுரந் தீமடுத் தெரியக் கண்டும் இரங்காது கை கொட்டி நின்று ஆடுதலிற் கொடுமையுடைத் தாதனோக்கிக் கொடுகொட்டி யென்று பெயர் கூறுப. கொடுங் கொட்டியென்பது கொடுகொட்டியெண விகார மாயிற்றென்பர் ஆசிரியர் நச்சி னார்க்கினியரும் இதற் குறுப்பு நான்கு என்னை? “கொட்டிக் கொடுவிடையோ னாடிற்ற கற்குறுப் - பொட்டிய நான்கா மெனல்” என்றாராதலின். 2 - பாண்டரங்கமாவது - வானோ ராகிய தேரில் நான்மறைக்கடும் பரி பூட்டி நெடுப்புறமறைத்து வார்துகின்முடித்துக் கூர்முட் பிடித்துத் தேர் முன்னின்ற திசை முகன் பாரதியைப் பிரிந்த பரிவா னழுங்கவது தபுப்பான் பாரதி வடிவாய இறைவன் அவற்குமல நீற்றும் வெண்ணீற்றை யணிந்து ஆடியதாம் அது ஆறங்கமுடைத்து என்னை? “பாண்டரங்க முக்கண னாடிற் றதற்குறுப் - பாய்ந்தன வாறா மெனல்” என்றா ராகலின். 3 - குடையாவது - எதிரிலாத கதிரை வேறரித்த முருகவேள் அவுணர் விடுத்த படைக்கலங்களையெல் லாம் போரிற்காற்றாது போகட, அவர் வருத்தமுற்றாராக அவ்வள விலே பெருமானார் தங்குடையை முன்னே சாய்த்து அதுவே ஒரு முகவெழனியாக நின்றாடி யருளியதாம் அது நான் கங்க முடைத்து என்னை “அறு முகத் தோனாடல் குடைமற்றதற்குப் - பெறுமுறுப்பு நான்கா மெனல்” என்றாராகலின். 4 - துடியாவது - புதுச் சந்நிதிக் கதிரை நாயகக் கடவுள் கரிய கடலி னடுவுநின்ற சூரபன்மனது வேற்றுருவாகிய வஞ்சத்தை யறிந்து அதனடுவண்திரையே அரங்கமா நின்று துடிகொட்டி யாடியருளிய தாம். அஃது ஐந் தங்க முடைத்து என்னை? “துடி யாடல் வேன்முளி கனாடல தனுக் - கொடியா வுறுப்போ ரைந்தாம்” என்றாராகலின். 5 - அல்லியமாவது - அஞ்சன வண்ணனாய கண்ணபிரான் கஞ்சன் வஞ்சத்தின் வந்த குவலயா பீடம் என்னும் யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய தாம். இதனை அலிப்பேடென்றும், வைணவ நிலை யென்றங் கூறுவாருமுளர். அஃதாறங்க முடைத்து என்னை? “அல்லிய மாயவ னாடிற்றதற் குறுப்புச் - சொல்லுபவாறா மெனல்” என்றாராகலின். 6 - மல்லாவது - வாணாசுரனை வெல்லுதற்கு மல்லனாய்ச் சென்ற நெடுமால் சேர்ந்தாரிற் சென்று அறைகூலி உடற்கரித் தெழுந்து அவனைச் சேர்ந்த வளவிலே சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்தற்காடிய தாம் அஃது ஐந்தங்க முடைத்து என்னை? “நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற் - கொடியா வுறுப்போ ரைந்து” என்றாரா கலின். 7 - குடமாவது - வாணாசுரனான வன் காம குமாரனாகிய அநிருத்த னென்பவனைத் தன் மகள் உஷை காரணமாகச் சிறை வைத்தலின் அவனைமீட்டற் கெண்ணிய கண்ணன் அவ்வசுரனகரமாகிய சோவென்னம் புரவீதிக்குட்சென்று பஞ்ச லோகங்களானும் மண்ணா னுஞ் செய்யப்பட்ட குடங்கொண் டாடிய கூத்தாம். இஃது விநோதக் கூத்தாறினு ளொன்று. இதற் குறுப்பு ஐந்தாம். என்னை, “குடத் தாடல் குன்றெடுத்தோனாட லதனுக் - கடைக்குப வைந்துறுப் பாய்ந்து” என்றாராகலின். 8 - பாவையாவது - அவுணர் போர்க்கோலத்தோடு மோகித்து விழும்படி கொல்லிப்பாவை வடி வாய்ச் செய்யோளாகிய திரு மகளால் ஆடப்பட்டதாம். இதற் குறுப் பிரண்டு. என்னை? “பாவை திருமகளாடிற்றதற் குறுப் - போவாம லொன்றுடனே யொன்று” என்றாராகலின். 9 - மரக்காலாவது - மாயவளாகிய துர்க்காதேவி போர் முகத்தில் அவுணர் செய்யும் வஞ்சத்தைப் பொறாதவளாய் அவர் மாய மெலாம் நீங்க மரக்கால் கொண் டாடியதாம். மாயையாவது அசுரர் அவளை வேறல் கருதிப் பாம்பு தேள் முதலிய வாய்ப் புகுந்தமை. இதற்குறுப்பு நான்கு என்னை? “மாயவளாடன் மரக் காலதற் குறுப்பு - நாம வகையிற் சொலுங்கா னான்கு” என்றா ராகலின். 10 - பேடியாவது - காமன் தனது மகன் அநிருத்தனைச் சிறை மீட்டற்காக வாணனகரிடைச் சென்று ஆண்மைத் தன்மையிற் றிரிந்த விகாரமும் தாடியும் முலை முதலிய பெண்ணுறுப்புப் பலவு முடைய ஆண் பேட்டுருக் கொண்டு ஆடியதாம். அதனை “சுரியற்றாடி மருள்படு பூங்குழற், பவளற் செவ்வாய்த்தவள வொண் ணகை, நீணில மளந்தோன் மகன் முன்னாடிய, பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்” என மணி மேகலையினும் “ஆண்மை திரிந்த, பெண்மை கோலத்துக் காம னாடிய பேடியாடலும்” எனச் சிலப்பதிகாரத்துங் கூறப்பட்டத னானறிக. இதற்கு உறுப்பு நான்கு. என்னை? “காமன் தாடல் பேடா டலதற்குறும் வாய்வை யினாராயி னான்கு” என்றாராகலின். தொ தொகைநிலை - 8 - நியமம், இயமம், ஆதனம், வளிநிலை, தொகை நிலை, பொறைநிலை, நினைதல், சமாதி. தொழில் - 3 - ஆக்கல், காத்தல், அழித்தல். தொழில் - 5 - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்: இவையே சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம். இவையே இறைவன் செய்யும் பஞ்சகிருத்தியங்களாம். தொழில் - 6 - உழவு தொழில், வரைவு, வாணியம், விச்சை, சிற்பம். தொழில் - 6 - அந்தண ரறுதொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்; அரசரறு தொழில் - ஓதல், வேட் டல், ஈதல், உலகோம்பல், படை பயிறல், பொருதல்; வைசியரறு தொழில் - ஓதல், வேட்டல், பொரு ளீட்டல், ஈதல், பசுக்காத்தல், ஏருழல்; சூத்திரரறு தொழில் - முதன் மூவர்க்கேவல் செயல் பொருளீட்டல், உழுதல், பசுக் காத்தல், குயிலுவத் தொழில் செய்தல், காருகவினைகளாக்கல். இவற்றுட் குயிலுவத் தொழில்க ளாவன:- தோற் கருவிகளைக் கொட்டலுந் துளைக் கருவிகளை யூதலுமாம். காருக வினைகளா வன:- பட்டு நூலையும் பருத்தி நூலையுங் கொண்டாடை யாக்க லுஞ் சுமத்தலு முழத்தலுமாம். தோ தோற்கருவிகள் - 31 - பேரிகை, படகம், இடக்கை உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப் பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்டுவிடு தூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை. இவை அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப் புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என வெழுவகைப்படும். தோற்றம் - 2 - சரம், அசரம்; இவற் றுட்சரம் நடையுள்ளன, அசரம் நடையில்லன. தோற்றம் - 4 - பை, முட்டை, நிலம், வியர்வை. ந நகர்படுதிரவியம் - 5 - கண்ணாடி, பித்தன், கருங் குரங்கு, யானை, வேந்தன். நட்சத்திரம் - 27 - அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகணி, மிருக சீரிடம், திருவாதிரை, புநர்பூசம், பூசம் ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்தி ராடம், திருவோணம், அவிட் டம், சதயம், பூரட்டாதி, உத்திராட்டாதி, இரேவதி, இவற்றுள் ஒவ்வொன் றும் முறையே மேட முதற் பன்னி ரண்டிராசிகளிற் பதின்மூன்று பாகமுமிருபது கலையுங் கொண்ட விடம். நதி - 7 - கங்கை, யமுனை, சரச்சு வதி, நருமதை, காவேரி, குமரி, கோதாவரி. இவையே சத்த தீர்த்த மெனப்படும். நதி - 11 - மேற்சொல்லிய வேழின் மேல்சிந்து, தாமிரபருணி, துங்க பத்திரி, கிட்டிணியென்று கூட்டுக. நரகம் - 7 - அள்ளல், இரௌவரம், கும்பி பாகம், கூடசாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி. நரகவகை - 28 - கோரம், கீழ்க் கோரம், அதிகோரம், கோர தரம், கோரரூபம், தரளதரம், பயாநகம், காளராத்திரி, பயோற் கடம், சண்டம், மகாசண்டம், சண்ட கோலாலம், சண்டதரம், சரோரு கம், சலசவதி. வீமம், வீமவீட ணம், கரளம், விகரளம், குலிசம், முக்கோணம், ஐந்து கோணம், தீர்க்கதரம், பரிவர்த்துளம், மகா ரௌரவம், அதித மமம், அதி சீதம், அதிவெப்பம். நரகவட்டம் - 7 - தமப்பிரபை, இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை, அழற்பிரபை; அவையாவன - இருள், குளிர், புகை, மணல், துயிலாமை, இரத்தம், தீ. நரம்பு - 7 - இசைகாண்க. நரம்பு - 4 - இணை, கிளை, பகை, நட்பு. இவற்றுள் இணையிரண்டு நரம்பு, கிளையைந்து நரம்பு, பகை யாறு மூன்றுமாம். நட்பு நான்கு நரம்பினை யுடைத்தாய் நிற்கு மென்ப. நற்கணப்பயன் - 4 - நிலக்கணம் பெருக்கஞ்செய்தல், சந்திரகணம் வாழ்நாள் தருதல், நீர்க்கணம் கீர்த்தியைத் தருதல், இயமானன் கணஞ் செல்வத்தைத் தருதலாம். நற்கணப்பெயர் - 4 - நிலன், நீர், மதி, இயமானன். நற்குணம் - 10 - மெய்யுரை, நல் வார்த்தை, இனியவை கூறல், பயன்படுசொல், இந்நான்கும் வாக்கினற்குணம், கோயில் வலம் வரல், தவம் புரிதல், தானஞ்செயல் இம்மூன்றுங் காயநற்குணம்; அருணினைவு, ஆசையறுத்தல், தவப்பற்று இம் மூன்றும் மன நற்குணம். நன்னாட்டமைதி - 6 - செல்வம், வினையுள், பல்வளம், செங்கோல், குறும்பின்மை, பிணியின்மை. நா நாகம் - 8 - வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க் கோடகன்; இவற்றைக் கடவுட் பாம்பென்ப. இவை முறையே கிழக்கு முதலெண்டிக்கிற் பூமியைத் தாங்குவதன்றி நடுவே யுள்ள சேடனென்னு நாகமும் பூமியைத் தாங்கா நிற்கும். இந் நாவநாகமுங் காசிபப் பிரமா வுக்கு மவன் மனைவிகள் பதின் மூவருட்கத் துருவைக்கும் பிறந் தன. நாடகத்தரம்பையார் - 4 - உருப்பசி மேனகை, அரம்பை, திலோர்த் தமை. நாடகநூலின்கூறுபாடு - 2 - வேத்தியல், பொதுவியல். நாடி - 10 - சுழிமுனை, இடை, பிங் கலை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி; அவையாவன - சுழிமுனை யாதாரமாறினு மூடுருவி நிற்பது; இடைபிங்கலை யிரண்டுங் கத்தி ரிகைக்கால் போற்பின்னி நிற்பன; காந்தாரி நாபியிற்றோன்றிச் சத்த மேழுக்கு மேழுநாடியாய்க் கண்டத் துறுவது; அத்திசிகுவை யிரண்டும் பத்து நாடியுற்றுக் கண்ணினிற்பன; அலம்புடை புருடனிரண்டுஞ் செவியினூற்றிருபது நரம்புற்றி ருப்பன; குரு நாபியுறைந்து குய்யம் பற்றி நிற்பது; சங்கினி உபத்தத்தைப்பற்றியிருப்பது. நாடுபடுதிரவியம் - 5 - செந்நெல், செவ்விளநீர், சிறுபயறு, கரும்பு, வாழை. நாட்டுக்குற்றம் - 7 - தொட்டியர், கள்வர், யானை, பன்றி, விட்டில், கிள்ளை, பெருமழை. நாட்டுக்குற்றம் - 8 - விட்டில், தன் னரசு, வேற்றரசு, யானை, மிகுமழை, மிகுகாற்று, கிள்ளை, நட்டம். நாமகளமிசமாயகடைச்சங்கப் புல வர்கள் - 51 - நக்கீரர், பரணர், கபிலர், மாமூலனார், கல்லாடர், சீத்தலைச் சாத்தனார், மருத்து வன்றாமோ தரனார், நாகன்றே வனார், அரிசிற்கிழார், பொன் முடியார், கோதமனார், நத்தத் தனார், முகையலூர்ச் சிறுதருந் தும்பியார், ஆசிரியர் நல்லந்து வனார், கீரந்தையார், சிறுமே தாவியார், நல்கூர்வேள்வியார், தொடித்தலை விழுத்தண்டினார், வெள்ளிவீதியார், மாங்குடி மருத னார், எரிச்சலூர் மலாடனார், போக்கியார், மோசிகீரனார், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார், மதுரைத் தமிழ் நாயகனார், பாரதம் பாடிய பெருந்தேவனார், உருத்திர சன்மகண்ணர், பெருஞ்சீத்தனார், நரிவெரூஉத்தலையார், மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார், மதுரையறுவை வாணிகர், இளவேட்டனார், கவிசாகரப் பெருந்தேவனார், மதுரைப் பெரு மருதனார், கோவூர்க்கிழார், உறை யூர் முதுகூற்றனார், இழிகட் பெருங் கண்ணனார், செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார், செயலூர்க் கொடுங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத் தூர்க்கிழார், நச்சுமனார், அக் காரக்கனி நச்சுமனார், நப்பாலத்த னார், குலபதி நாயனார், தேனீக் குடிக்கீரனார், கொடி ஞாழன் மாணிபூதனார், கவுணியனார், மதுரைப்பாலாசிரியனார், ஆலங் குடிவங்கனார், நாற்பத்தொன் பதின்மரே சங்கப்புலவரென்பது தொல்லோர் கருத்துந் துணிபு மாம். நி நியமம் - 10 - தவம், மனமுவந் திருத்தல், கடவு ளுண்டென்னும் விசுவாசம், பாவத்துக்குப் பயந்து தேடிய பொருளைச் சற்பாத்திர மாயுள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் மூத்தோரை வழிபடுதல், உயிர்க்குறுதி பயக்கு முண்மை நூல்களைக் கேட்டல், குலஞ் செல்வம் அதிகாரம் முதலியவை களினாலே கருவம் இன்றியடங்கி யொழுகுதல், தக்கனவுந் தகாதன வும் பகுத்தறிதல், செபம், விரதம். நியாயம் - 2 - கௌதமசூத்திரம், கணாத சூத்திரம். நிருத்தக்கை - 30 - சதுரச்சிரம், உத்து வீதம், தலமுவம், சுவத்திகம், விப்பிரகீர்ணம், அருத்தரேசிதம், அராளகடமுகம், ஆவித்த வத்திரம், சூசீமுகம், இரேசிதம், உத்தானவஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதந்தம், இலதை, கரிக்கை, பக்கவஞ்சிதம், பக்கப் பிரத்தியோகம், கருடபக்கம், தண்டபக்கம், ஊர்த்துவ மண்டலி, முட்டிகச் சுவத்திகம், நளினீபதும கோசிகம், அலபதுமம், உற்பணம், இலளிதை, வலிகை. இவை சுத்தானந்தப் பிரகாசபரத நூலிற் காணப்பட்டன. நிலம் - 4 - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். நிலம் - 5 - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல். நிலம் - 7 - ச, ரி, க, ம, ப, த, நி யென் னும் எழுவகைப்பட்ட வெழுத் தடியாகப் பிறக்கும் குரன் முதலாய வேழுமாம். நிலை - 4 - பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம்; இவை நான்கும் விற்றொடுத்தம்பினை யெய்வார்க்குரிய நிலை, இவற்றி லொருகாலினின்றொருகான் முடக்கல் பைசாசநிலை; இரு காலும் பக்கல் வளைய மண்ட லித்தலே மண்டலநிலை; வலக் கான் மண்டலித்திடக்கான் முந் துறலே யாலீடநிலை; வலக்கான் முந்துற்றிடக்கான் மண்டலித் தலே பிரத்தியாலீடநிலை. நிலை - 6 - வைணவம்; சமநிலை, வைசாதம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம். நின்றாடல் - 6 - அல்லியம், கொடி கொட்டி, குடை, குடம், பாண்ட ரங்கம், மல், என்னை? “அல்லி யங் கொட்டி குடை குடம் பாண் டரங்க - மல்லுடனின்றாட லாறு” என்றாராகலின். நீ நீர்நிலைவகை - 31 - இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, எரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாலி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வளம், நளினி, இலந்தை, மூழி, குழி குளம். நீலமணிச்சாதி - 4 - வெள்ளை, பச்சை, சிவப்பு, கருமை. நூ நூல் - 3 - முதனூல், வழிநூல், சார்புநூல். இவற்றுளொருவன் முன்கண்டுரைத்தே முதநூல்; முத னூல் வழியே விகற்பித் துரைத்த நூலே வழி நூல்; அவ்விருநூற் பொருட்கூட்டித் திரிபுவேறுடைய நூலே சார்பு நூல். நூற்பயன் - 4 - அறம், பொருள், இன்பம், வீடு. ப பகைநரம்பு - 4 - அதிர்வு, ஆரப்பு, கூடம், செம்பகை; இவற்றுள் செம்பகையாவது தாழ்ந்த விசை என்றால் இன்பமின்றி யிசைத்தல், ஆர்ப்பாவது மாத்திரை யிறந்த சுருதி என்றால் ஓங்க விசைத்தல்; அதிர்வாவது நரம்பைச் சிதற வுந்தல்; கூடமாவது இசை நிறவா தது, என்னின் தன் பகையாகிய ஆறு நரம்பினிசை யிற்குன்றித் தன்னோசை மழுங்க லெனக் கொள்க. இதனை “இன்னிசை வழியதன்றியிசைத்தல் செம்பகை யாதாகுஞ், சொன்ன மாத்திரையி னோங்க விசைத்திடுஞ் சுருதி யார்ப்பே, மன்னிய விசை வராது மழுங்குதல் கூடமாகு, நன்னுதால் சிதறவுந்த லதிர்வென நாட்டி னாரே” என்று பஞ்சபாரதீபங் கூறியதனாற் கொள்க. பக்குவர் - 3 - கருமகாண்டி, ஞான காண்டி, பத்திகாண்டி. பஞ்சபர மேட்டிகள் - 5 - அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள். பஞ்சமூலம் - 5 - செவ்வியம், சித்திர மூலம், கண்டுபரங்கி, பேரரத்தை, சுக்கு. பசாசக்கை - 3 - அகநிலைப் பசா சம், முகநிலைப்பசாசம், உகிர் நிலைப் பசாசம். பசு - 5 - நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை. படைவகுப்பு - 4 - அணி, உண்டை, ஒட்டு, யூகம். பட்சி - 5 - வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்; இவற்றிற்கு முறையே யெழுத்து அ, இ, உ, எ, ஒ, உண்டி, நடை, அரசு, தூக்கம், சாவு பிற்பக்கமாயின் உண்டி, சாவு, தூக்கம், நடை, அரசு. சாவு தூக்கமில்லாத பொழுதறிந்து செய்யுண் முதலிய செய்தனன்மை. பட்டினத்திற்குரியன - 83 - படகு நாவாய்கன் பிணிக்கும் பக்கம், இளமரக்கா, தோப்பு, படப்பை, உத்தியானம், ஏரி, அகழி, மதில், கோட்டை, அரணம், நால் வகைச் சேனைகளிருக்கை, ஆயுத சாலை, அறச்சாலை, பாகசாலை, பண்டக சாலை, பொது, தெற்றியம் பலம், நாற்குலத்தார், இருக்கை, அத் தாணிமண்டபம், பட்டிமண்டபம், மந்திரம், அந்தப்புரம், அரங்கம், பரத வரிருப்பு, நூதனப் பொருட் சாலை, கலாசாலை, நாளங்காடி, அல்லங்காடி, தேவர் கோயில், அறவோர்பள்ளி, முனிவர் உறை விடம், பசுக்கோட்டம், முரச முழக்கம், அரசனரண்மனை, உவ ராசன், பிரதாணி, அமைச்சர், புரோகிதன், சேனாபதி, தௌ வாரிகள், அந்தர்வம் சிகன், காரா காராதிக் கிருதன், அர்த்த சஞ்சயக் கிருது, காரிய நியோசகன், பிராட்டு விவாகனன், சேனாநாயகன், நகராத்தியக்கன், கருமாந்திகன், சப்பியன், தருமாத்தியக்கன், தண்டபாலன், துர்க்கபாலன், இராட்டி ராந்தபாலன், சபிகர், தூதுவர், வித்துவாம்சர், காயகர், கவிகள், பட்டர், பாரங்கதர், தீரோதீத்தன், தீரோதப்பிதன், தீரலலிதன், தீரசாந்தன், இதரப் பரிணிதர், சதுர்வித போக சங்கரர், மோக் காயிதை, விரபோக லலிதை, இலீலை, கீலகிஞ்சிதை, விசித்தை, விலாசை, விசித்தை, விப்பிரலம்பை, குட்டிமை, தயை, இலலிதை என்னும் கேளிபால லீலாசதியர், மோகமயர், கரண பரிணிதர், வித்தகர், அவத்தாத் திரய பரீக்ஷகர், அவத்தாவி சார பரர், சந்தூவிசர், அடாவிசர், குடு பாவிசரென்னும் ஆசியக்காரர் முதலினோர் இருக்கைகளுமாம். பண் - 4 - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. பண் - 103 - பன்னிரு பாலையி னுரு தொண்ணூற் றொன்றும் பன்னி ரண்டுமாய்ப் பண்கள் நூற்று மூன்றாதற்குக் காரணமாமெனக் கொள்க. பெயர்களை - வந்துழிக் காண்க. பதவி - 4 - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்; இவற்றுட் கடவுளுலகத்தில் வாழ்தலே சாலோகம். கடவுள் சமீபத்து வாழ்தலே சாமீபம். கடவு ளுருப் பெற்று வாழ்தலே சாரூபம். கடவு ளோடத்து விதமுற்று வாழ்தலே சாயுச்சியம். பரிச்சேதம் - 3 - காலபரிச்சேதம், தேயபரிச்சேதம், வத்துபரிச் சேதம்; அவையாவன :- ஒரு காலத் துண்டொரு காலத்தின் றென்பது காலபரிச்சேதம், ஒரு தேயத்துண் டொரு தேயத்தின் றென்பது தேய பரிச்சேதம், ஒரு பொருளிதுவாகு மொரு பொருளிஃதன் றென்பது வத்துபரிச் சேதம். பருவகாலம் - 6 - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதிர்வேனில்; இவையே யாவணி முதலாக விரண்டிரண்டு மாத மாக வொவ்வொன்றாம். பருவம் - 4 - பால, தருணி, பிரவிடை, விருத்தை இவை பெண்கட் குரிய பருவமாம். பருவம் - 7 - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். இவர்க்கு முறையே வயதெல்லை:- ஐந்துமுத லேழளவும் பேதை, எட்டுமுதல் பதினொன் றளவும் பெதும்பை. பன்னிரண்டு முதற் பதின்மூன் றளவு மங்கை. பதினான்கு முதற்பத்தொன்பதளவு மடந்தை. இருபத்தாறு முதன் முப்பத்தொன் றளவு தெரிவை. முப்பத்திரண்டு முதனாற்பதளவும் பேரிளம் பெண். ஆகையா லொவ்வொரு பருவங் கொண்ட வருடம், 3, 4, 2, 4, 6, 6, 6; இவை பெண்கட்குரிய பருவமாம். பலை - 3 - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய். இவையே திரிபலை யென்ப. பவளக்குணம் - 6 - நிறம், உருட்சி, சிந்தூரம், மிக்க செங்காய், முசுமுசுக்கைக் கனி, தூதுளை வழுதுணம் பழம். பவளக்குற்றம் - 3 - கருப்பத்திற் றுளைபட்டன, கல்லிடுக்கிற் புக்கு முடங்குபட்டன, திருக்கு முறுக்குண் டெழுந்தன. பழம் - 3 - பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம். பா பா - 4 - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா; மருட்பா வொன்று கூட்டியைந் தென்பாரு முளர். பா - 6 - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடற்பா. பாடை - 18 - அங்கம், அருணம், கலிங்கம், கௌசிகம், காம் போசம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திரவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம். பாடைநிலம் - 18 - திராவிடம், சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துஜவம், குடகம், கொங் கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடம், கௌடம், குசலம். பாணிவிகற்பம் - 11 - ஒன்றன் பாணி முதலாக எண் கூத்துப்பாணி யீறாக வுள்ளனவாம். பாதகம் - 5 - கொலை, பொய், களவு, கள்ளருந்தல், குரு, நிந்தை; இவையே பஞ்சமா பாதகம். பாதகம் - 3 - தூலம், சூக்குமம், அதிசூக்குமம்; இவை முறையே பாதகம், அதிபாதகம், மகா பாதக மென்றுஞ் சொல்லப்படும். பாதகம் - 7 - சித்தசமுன்னதி, அருத்த லோபம், காமம், வைடம்மியம், அசனப்பிரியம், கோபம், அநுட் டணம்; இவையே சத்த விசனம். இவை முறையே அகங் காரம், உலோபம், காமம், பகை, போசனப் பிரியம், காய்தல், சோம்பல். இவை யேழுந் தலை மையான பாதக மெனப்படும். பாயிரம் - 2 - பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம். பாலை - 7 - இசையைக் காண்க. பாலைவகை - 4 - ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப் பாலை, வட்டப் பாலை. பாலைப்பண்ணின்றிறம் - 5 - தக்கராகம், நேந்திறம், காந்தார பஞ்சமம், சோமராகம் காந்தாரம். என்னை “தக்கராக நேர்திறங் காந்தார பஞ்சமமே - துக்கழி சோமராகமே - மிக்க திறற்காந் தாரமென் றைந்தும் பாலைத்திற மென்றார் - பூந்தா ரகத்தியனார் போந்து” என்றாராகலின். பாலையாழ்திறம் - 5 - அராகம், ஆசான், உறுப்பு, குறுங்கலி, நேர்திறம். பாலை யாழ்த்திறன் வகை - 21 - அந்தாளி, தக்கராகம், பாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுங்கு, தநாசி, சோமராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந் தாரம், சிகண்டி, தேசாக்கரி, சுருதி, காந்தாரம். பால் - 14 - கைக்கிளைத்திணை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்தினை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காசி, பாடாண்டிணை. பால் - 5 - ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல. பாவபுண்ணியவழக்கம் - 3 - செய்தல், செய்வித்தல், உடன்படல். பாவனை - 3 - பிராமிபாவனை, அவ்வியத்தபாவனை, உருவ பாவனை. இவற்றின் விரிவுகளைக் கூர்ம புராண விருத்தியுரைக்கட் காண்க. பாவினம் - 3 - தாழிசை, துறை, விருத்தம். பி பிணி - 3 - வாதம், பித்தம், சிலேட் டுமம். பிரபந்தம் - 96 - அவையாவன - சாதகம், திதிநிலை, வாரநிலை, நாண்மீனிலை, யோகநிலை, கரணநிலை, ஓரைநிலை, கிரக நிலை, இவ்வேழ்வகை யுறுப்புக் கணிலையையுஞ், சோதிட நூலா னன்குணர்ந்தவற்றை யமைத்த வற்றாற்றலைவற்குறுவன கூறு வது, மற்றும் யுகாதி யாண்டு முதலியவுங் கொள்க. இப் பிரபந்தம் தொண்ணூற்றாறும் அகலக்கவி யெனவும், வித்தார கவியெனவும் பெயர் பெறும். 1 - பிள்ளைக்கவி - இதனிலக் கணத்தைத் தெளிவுறக் கூறுங் கால், ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பெண்பாற் பிள்ளைத் தமிழ் என விருவகைத்து. இவற்றுள் இரண்டா மாதத்திற் காப்புக் கூறுதலும், ஐந்தா மாதத்திற் காப்புக் கூறுத லும் ஐந்தா மாதத்திற் செங்கீரை கூறதலும், ஆறா மாதத்திற் சொற் பயில்வு கூறுதலும், ஏழாமாதத் திலமு தூட்டலும், எட்டாமாதத் திற்றாலாட்டுக் கூறலும், ஒன்பதா மாதத்திற் சப்பாணி கூறுதலும், பத்தொ டொன்றின் முத்தமொழி தலும், பன்னிரண்டா மாதத்தில் வாரானை கிளத்தலும், பதினெட் டாமாதத்திற் சந்திரனை யழைத் தலும், இரண்டாமாண்டிற் சிறு பறை கொட்டலும், மூன்றா மாண்டிற் சிற்றில் சிதைத்தலும், நான்கா மாண்டிற் சிறுதேருருட் டலும், பத்தாமாண்டிற் பூணணி தலும், பன்னிரண்டாம் ஆண்டில் கச்சினோடு உடைவாளை விரும் பத் தரித்தலு மென்று சொல்லப் பட்டவும் பிறவு முடைத்து. பெண் பாற் பிள்ளைத் தமிழாவது அம்புலி யிறுதியாய் நின்ற பருவங் களுடன் மூன்றாம் ஆண்டிற்றான் விளையாடும் பாவைக்கு மணம் பேசுதலும், ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுகாறும் மன் மதனை யொத்த புருடனைப் பெறத்தவஞ் செய்தலும், குளிர்ந்த நீராடலும், பதுமை வைத்து விளை யாடலும், அம்மனையாடலும், கழங்காடலும், பந்தாடலும், சிறு சோறடுதலும், சிற்றிலிழைத்த லும், ஊசலாடலும் என்று சொல் லப்பட்ட இவற்றுள் ஏற்பன கூறப் படுமென்க. இஃதன்றி மூன்றா மாத முதலாகவு முரைக்கப்படு மென்பர் வெண்பாப் பாட்டியற் காரர். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறு பறை, சிற்றில், சிறுதேர் இவற்றை முறையே அகவல் விருத்தத்தாற்பப்பத் தாகக் கூறுவதாண்பாற் பிள்ளைக் கவி, இவ்வுறுப்பிணுட் கடை மூன் றொழித்துக் கழங்கு அம்மனை, ஊசல் என்பவற்றைக் கூட்டி மேற்சொல்லியவாறு கூறுவது பெண்பாற்பிள்ளைக் கவியாம். இங்ஙனமே முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், திருப்போரூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ், புதுச் சந்நிதிச்சந்தர் பிள்ளைத் தமிழ், திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பிள்ளைத்தமிழ், சேக் கிழார் பிள்ளைத்தமிழ் முதலிய ஆண்பாற் பிள்ளைத் தமிழ் நூல் களினும், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அமுதாம்பி கையம்மை பிள்ளைத் தமிழ், கொடியிடைநாயகி பிள்ளைத் தமிழ், வடிவுடையம்மை பிள்ளைத் தமிழ் முதலிய பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களிலுங் கூறப்பட்டமை யறிக. 2 - பரணி - போர் முகத்தாயிரங் களிற்றியானையைக் கொன்ற வீரனைத் தலைமகனாகக்கொண்டு கடவுள் வாழ்த்துங் கடைதிறம்பும் பாலை நிலமுங் காளிகோயிலும், பேய்களோடு காளியுங் காளி யோடு பேய்களுஞ் சொல்லத் தான் சொல்லக் கருதிய தலைவன் சீர்த்தி விளங்கலுமவன் வழியாகப் புறப்பொருடோன்ற வெம்போர் வழங்க விரும்பலு மென்றிவை யெல்லா மிருசீரடி முச்சீரடி யொழித் தொழிந்த மற்றைய வடியாக வீரடிப்பஃறாழிசையாற் பாடுவது. இவற்றை யிலக்கியங் களாலமைக்கப்பட்ட கலிங்கத்துப் பரணி, மோகவதைப்பரணி, அஞ் ஞாவதைப்பரணி, அண்டத்துப் பரணி, வீரபத்திர பரணி முதலிய நூல்களாற் றெளிக. 3 - கலம்பகம் ஒரூபோகும், வெண் பாவும், கவித்துறையு முதற் கலி யுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னுமிப் பதினெட்டுறுப்புக்களு மியைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித் தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ் சித்துறை, வெண்டுறை யென்னு மிவற்றாவிடையே வெண்பா, கலித் துறை, விரவ வந்தாதித் தொடை யான் முற்றுறக் கூறுங் காற்றே வர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், வைசியர்க் கைம் பதும், சூத்திரர்க்கு முப்பதுமாகப் பாடுவது இவ்விலக்கணங்க ளமையத் தில்லைக் கலம்பகம், மறைசைக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், காசிக்கலம்பகம், அருணைக் கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், வெங்கைக் கலம்பகம், புள் ளிருக்கு வேளூர் கலம்பகம், திரு வாமாத்தூர்க் கலம்பகம் முதலிய செய்யப்பட் டிருத்தல் காண்க. 4 - அகப்பொருட்கோவை - இரு வகைப்பட்ட முதற்பொருளும் பதினான்கு வகைப்பட்டவுரிப் பொருளும் பொருந்திக் கைக் கிளை முதலுற்ற வன்புடைக் காமப் பகுதியவாங் களவொழுக்கத் தினையுங்கற் பொழுக்கத்தினை யுங் கூறுதலேயெல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றாற் றிணை முதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டகப் பாட் டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது. இது வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றா னும் வழங்கப்படும். இவற்றிற்கு காரணமாகத் திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை, வெங்கைக் கோவை, கோடீசுரக் கோவை, ஒருதுறைக் கோவை, அம்பிகாபதிக் கோவை, திரு வாரூர்க் கோவை, காழிக் கோவை முதலியனவிருத்தல் காண்க. 5 - ஐந்திணைச் செய்யுள், புணர்தன் முதலிய வைந்துரிப் பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலிய வைந் திணை யினையுங் கூறுப. 6 - வருக்கக்கோவை, அகர முத லாகிய வெழுத்து வருக்கமொழிக்கு முதலாமெழுத்து முறையே காரிகைத்துறைப் பாட்டாகப் பாடுவது. 7 - மும்மணிக்கோவை, ஆசிரியப் பாவும், வெண்பாவும், நேரசையு நிரையசைவுங் கொண்டெழுத் தெண்ணிப்பாடிக் கலித்துறையு முறையே தொகை முப்பது பெறவடுக்கி யந்தாதித் தொடை யாற்பாடுவது. சிதம்பர மும்மணிக் கோவை, திருவொற்றியூர் மும் மணிக் கோவை, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை முதலியன வமைந்திருத்த லறிக. 8 - அங்கமாலை - ஆண் மகனுக்கும் பெண் மகளுக்கு மிக்கனவெடுத்துக் கூறும் அவயவங்களை வெண்பா வாலாயினும், வெளி விருத்தத்தா லாயினும், பாதாதி கேசங்கேசாதி பாத முறை பிறழாது தொடர் புறப்பாடுவது. 9 - அட்டமங்கலம் - கடவுளைப் பாடியக் கடவுள் காக்கவென வாசிரிய விருத்தமெட்டி லந்தாதித்துக் கூறுவது. 10 - அநுராகமாலை - தலைவன் கனவின் கண் ஒருத்தியைக் கண்டு கேட்டுண்டுயிர்த்துற்றினிமை யுறப் புணர்ந்ததைத் தன்னுயிர்ப் பாங்கற் குரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவாற் கூறுவது. 11 - இரட்டைமணிமாலை - முறை யானே வெண்பாவுங் கலித்துறையு மிருபஃதந்தாதித் தொடையான் வருவது. நேரிசை வெண்பாப் பத்தும், ஆசிரிய விருத்தம் பத்து மந்தாதித் தொடையாற் பாடுவது; மூத்தநாயனார் இரட்டை மணி மாலை, மீனாட்சியம்மை யிரட்டை மணிமாலை முதலியன விலக்கிய மாயுள்ளன. 12 - இணைமணிமாலை - வெண் பாவு மகவலும், வெண்பாவுங் கலித்துறையுமாக விரண்டிரண் டாக விணைத்து வெண்பா வக வலிணை மணிமாலை, வெண் பாக் கலித்துறை யிணை மணி மாலை என நூறு நூறு அந்தாதித் தொடை நான்கானும் பாடுவது. 13 - நவமணிமாலை - வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமுமாக வொன்பது செய்யு ளந்தாதித்துப்பாடுவது. பிக்ஷhடன நவமணிமாலையிதற் கிலக்கியமா யுள்ளது. 14 - நான்மணிமாலை - வெண் பாவுங் கலித்துறையும் விருத்தமு மகவலு மந்தாதித் தொடையாக நாற்பது பாடுவது. கோயினான் மணி மாலை, நால்வர் நான்மணி மாலை, திருவாரூர் நான்மணி மாலை முதலியன விதற்கிலக் கியங்கள். 15 - நாமமாலை - அகவலடியுங் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப் பாவாலாண்மகனைப் புகழ்ந்து பாடுவது. 16 - பலசந்தமாலை - பப்பத்துச் செய்யுளொவ்வோர் சந்தமாக நூறு செய்யுட் கூறுவது. 17 - பன்மணி மாலை - மேற் சொல்லிய கலம்பகத்துள் வரு மொருபோகு மம்மானையு மூசலு மின்றியேனையுறுப்புக்களெல் லாமமைய வவ்வாறு கூறுவது. இதையே கலம்பகமாலை யென்ப. 18 - மணிமாலை - எப்பொருண் மேலும் வெண்பா விருபதுங் கலித்துறை நாற்பதும் விரவி வருவது. 19 - புகழ்ச்சிமாலை - அகவலடியுங் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவான் மாதர்களினது சீர்மையைக் கூறுவது. 20 - பெருமகிழ்ச்சிமாலை - தலைவியி னழகு குணமாக்கஞ் சிறப்பிணைக் கூறுவது. 21 - வருக்கமாலை - மொழிக்கு முதலாம் வருக்க வெழுத்தினுக் கொவ்வோர் செய்யுட் கூறுவது. 22 - மெய்க்கீர்த்தி - சொற்சீரடி யென்னுங் கட்டுரைச் செய்யுளாற் குலமுறையிற் செய்த கீர்த்தியைக் கூறுவது. 23 - காப்புமாலை - தெய்வங் காத்த லாக மூன்று செய்யுளானும். ஐந்து செய்யுளானும், ஏழு செய்யு ளானும் பாடுவது. 24 - வேனின்மாலை - இள வேனிலையு முதிர்வேனிலையுஞ் சிறப்பித்துப் பாடுவது. 25 - வசந்த மாலை - தென்றலை வருணித்துப்பாடுவது. 26 - தாரகைமாலை - அருந்ததிக் கற்பின் மகளிர்க்குள்ள வியற்கைக் குணங்களை வகுப்பாற் கூறுவது. தூசிப்படையி னணியைப் புகழ்ந்த வகுப்பென்பாரு முளர். 27 - உற்பவமாலை - திருமால் பிறப்புப் பத்தனையுமாசிரிய விருத்தத்தாற் கூறுவது. 28 - தானைமாலை - அகவலோசை யிற் பிறழாதாசிரியப் பாவான் முன்னரெடுத்துச் செல்லுங்கொடிப் படையைக் கூறுவது. 29 - மும்மணிமாலை - வெண் பாவுங் கலித்துறையு மகவலு மந்தாதித் தொடையான் முப்பது பாடுவது. 30 - தண்டகமாலை - வெண்பா வான் முந்நூறு செய்யுள் கூறுவது. இதுவெண்புணர்ச்சிமாலை யெனவும் படும். 31 - வீரவெட்சிமாலை - சுத்தவீரன், மாற்றா ரூரிற்சென்று பசுநிரை கோடற்கு வெட்சிப் பூமாலை சூடியவ்வண்ணம் போய் நிரை கவர்ந்து வரினவனுக்கு முன்பு தசாங்கம் வைத்துப் போய் வந்த வெற்றி பாடுவது. 32 - வெற்றிக்கரந்தை மஞ்சரி - பகைவர் கொண்ட தந்நிரை மீட் போர் கரந்தைப் பூமாலை சூடிப் போய் மீட்பதைக் கூறுவது. 33 - போர்க் கெழுவஞ்சி - மாற் றார், மேற்போர் குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்சிப் பூமாலை சூடிப் புறப்படும் படை யெழுச்சிச் சிறப்பை யாசிரியப் பாவாற் கூறுவது. 34 - வரலாற்றுவஞ்சி - குலமுறை பிறப்பு முதலிய மேம்பாட்டின் பல சிறப்பையுங் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறுவது. 35 - செருக்களவஞ்சி - போர்க் களத்திலே யட்ட மனிதருடலை யும் யானை குதிரை யுடலையு நாயும் பேயும் பிசாசமுங் கழுகும் பருந்துங் காசமுந் தின்று களித் தார வாரமாயிருக்க, பூதமும் பேயும் பாடியாட, விங்ஙன மிருந்த சிறப்புப் பாடுவது. இதையே பறந் தலைச் சிறப்புப் பாட்டுமென்ப. 36 - காஞ்சிமாலை - மாற்றாரூர்ப் புறத்துக் காஞ்சிப் பூமாலை சூடி யூன்றலைக் கூறுவது. 37 - நொச்சிமாலை - புறத்தூன்றிய மாற்றார்க் கோடலன்றி நொச்சிப் பூமாலை சூடித் தன் மனதில் காக்குந்திறங் கூறுவது. 38 - உழிஞைமாலை - மாற்றார தூர்ப்புறஞ் சூழ வுழிஞைப் பூமாலை சூடிப்படை வளைப் பதைக் கூறுவது. 39 - தும்பைமாலை - மாற்றா ரோடு தும்பைப்பூமாலை சூடிப் பொரு வதைக் கூறுவது. 40 - வாகைமாலை - மாற்றாரை வென்று புகழ்படைத்து வாகை மாலை சூடுவதை யாசிரியப் பாவாற் கூறுவது. 41 - வாதோரண மஞ்சரி - கொலை புரி மதயானையை வயப்படுத்தி யடக்கினவர்கட்கு மெதிர்பொரு களிற்றை வெட்டி யடக்கினவர் கட்கும், பற்றிப் பிடித்துச் சேர்ந் தவர்கட்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவாற் றொடுத் துப் பாடுவது. 42 - எண்செய்யுள் - பாட்டுடைத் தலைவன தூரினையும் பெயரி னையும் பத்து முதலாயிர மளவும் பாடியெண்ணாற் பெயர் பெறு வது. 43 - தொகைநிலைச் செய்யுள் - நெடிலடிச் செய்யுளாற் றொகுத் தது நெடுந்தொகையும், குறளடிச் செய்யுளாற் றொகுத்தது குறுந் தொகையும், கலிப்பாவாற் றொகுத்தது, கலித்தொகையும் போல்வன. 44 - ஒலியந்தாதி - பதினாறு கலை யோரடியாகவைத் திங்ஙன நாலடிக் கறுபத்து நாலுகலை வகுத்துப் பலசந்தமாக வண்ண முங்கலை வைப்புந் தவறாமலந் தாதித்து முப்பது செய்யுள் பாடுவது. சிறு பான்மை யெட்டுக் கலையானும் வரப்பெறும். அன்றியும் வெண்பா வகவல் கலித்துறையாகிய இம் மூன்றையும் பப்பத்தாக வந்தா தித்துப்பாடு வதுமாம். ஒட்டக் கூத்தரால் இவ்விலக்கணங்களும் பெயரு மமையச் செய்யப்பட்ட வந்தாதி யிதற்கு தாரணமாம். 45 - பதிற்றந்தாதி - பத்து வெண்பா பத்துக் கலித்துறைப் பொருட் டன்மை தோன்ற வந்தாதித்துப் பாடுவது. 46 - நூற்றந்தாதி - நூறு வெண் பாவினாலேனும் நூறு கலித் துறையினாலேனு மந்தாதித் தொடையாற் கூறுவது. அருண கிரி யந்தாதி, கந்தரந்தாதி, திருக் கருவை வெண்பா வந்தாதி, திருக் கருவைக் கலித்துறை யந்தாதி, பொன்வண்ணத்தந்தாதி, அற் புதத் திருவருந்தாதி, பழமலையந் தாதி, அபிராமி யந்தாதி, மறைசை யந்தாதி, கல்வளையந்தாதி, கைலைபாதி காளத்திபாதி, வெண்பாவந்தாதி, கம்பரந்தாதி, மருத்தூரந்தாதி, பந்தனந்தாதி முதலியன உதாரணங்களா யுள்ளன. 47 - உலா - இளமைப் பருவ முற்ற தலைமகனைக் குலங்குடிப் பிறப்பு மங்கலப் பரம்பரை யிவற்றி னின்னா னென்பது தோன்றத் தலைமையாய் மாதர் நெருங்கிய வீதியிடத்தவன் பவனி வரப் பேதை முதலிய வேழு பருவப் பெண்களுங் கண்டு தொழுததாக நேரிசைக் கலிவெண்பாவாற் கூறுவது. திருக்கைலை யுலா, கச்சி யேகம்பருலா, காழியுலாவைக் காண்க. 48 - உலாமடல் - கனவி லொரு பெண்ணைக் கண்டு கலவியின்ப நுகர்ந்தோன் விழித்தபின் னவள் பொருட்டு மடலூர்வே னென் பதைக் கலி வெண்பாவான் முற்று விப்பது. 49 - வளமடல் - அறம் பொரு ளின்பமாகியவம் முக் கூறுபாட் டின் பயனையெள்ளி, மங்கையர் திறத்துறுங் காமவின்பத்தினையே பயனெனக் கொண்டு பாட்டுடைத் தலைமகனியற் பெயர்க்குத் தக்கதை யெதுகையாக நாட்டி யுரைத் தவ்வெதுகை படத்தனிச் சொலின்றி யின்னிசைக் கலி வெண்பாவாற் றலைமக னிரந்து குறைபெறாது மடலேறுவதா யீரடி யெதுகை வரப்பாடுவது. 50 - ஒருபாவொருபஃது - அக வலும் வெண்பாவுங் கலித்துறையு மாய விவற்றி லொன்றனா லந்தாதித் தொடையாற் பத்துப் பாடுவது. 51 - இருபாவிருபஃது - பத்து வெண்பாவும் பத்தகவலு மந்தாதித் தொடையானிரு பதிணைந்து வருவது. சித்தாந்த சாத்திரம் பதினான்களொன் றிதற்கிலக்கிய மாவுள்ளது. 52 - ஆற்றுப்படை - அகவற்பா வால் விறவி, பாணர், கூத்தர், பொரு நரிந் நால்வருளொருவர் பரிசிற்குப் போவாரைப் பரிசு பெற்று வருவாராற்றிடைக் கண்டு தலை வன் கீர்த்தியுங் கொடையுங் கொற்றமுஞ் சொல்வது. பத்துப் பாட்டுள் முதலாவது பாட்டால் நக்கீரனாராற் சொல்லப்பட்டு முந்நூற்றுப் பதினேழடிகளை யுடையதாய் முருகவேளது படை வீடாறனையும் நிரம்பப் பாராட் டிக் கூறாநிற்குந் திருமுருகாற் றுப்படை, இரண்டாவது பாட் டாய் பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, கூத்தராற்றுப் படை, தணிகையாற்றுப் படை முதலியன விதற்கிலக்கியங்களாம். 53 - கண்படைநிலை - அரசரு மரசரைப்போல் வாருமவைக்க ணெடியது வைகியவழி மருத்து வரு மமைச்சரு முதலியோ ரவர்க்குக் கண்டுயில் கோடலைக் கருதிக் கூறுவது. 54 - துயிலெடைநிலை - தன் வலி யாற் பாசறைக் கண்ணொரு மனக் கவற்சி யின்றித் துயின்ற வரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் துயிலெழுப்புத லாகப் பாடுவது. 55 - பெயரின்னிசை - பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார, இன் னிசை வெண்பாவாற் றொண்ணூ றேனு எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது. 56 - ஊரின்னிசை - பாட்டுடைத் தலைவனூரினைச்சார வின்னிசை வெண்பாவாற் றொண்ணூறேனு மெழுபதேனுமைம்பதேனும் பாடுவது. 57 - பெயர்நேரிசை - பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார நேரிசை வெண்பாவாற் றொண் ணூறேனு மெழுபதேனு பைம்ப தேனும் பாடுவது. 58 - ஊர்நேரிசை - பாட்டுடைத் தலைவனூரினைச்சார நேரிசை வெண்பாவாற் றொண்ணூறேனு மெழுபதேனுமைம்பதேனும் பாடுவது. 59 - ஊர்வெண்பா - வெண்பாவா லூரைச் சிறப்பித்துப் பத்துச் செய்யுள் கூறுவது. 60 - விளக்குநிலை - வேலும் வேற்றலையும் விலங்கா தோங் கியவாறு போலக் கோலொடு விளக்கு மொன்றுபட்டோங்குமா றோங்குவதாகக் கூறுவது. 61 - புறநிலை - நீ வணங்குந் தெய்வ நின்னைப் பாதுகாப்ப நின்வழி வழிமிகுவதாகவெனக் கூறுவது. 62 - கடைநிலை - சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்தீர வாயில் காக்கின்ற வனுக் கென் வரவினைத் தலைவற் கிசையெனக் கடைக்க ணின்று கூறுவது. 63 - கையறுநிலை - கணவனொடு மனைவிகழிந்துழி யவர்கட்பட்ட வழிவுப் பொருளெல்லாம் பிறர்க் கறிவுறுத்தித் தாமிறந்துபடா தொழிந்த வாயத்தாரும் பரிசில் பெறும் விறலியருந்தனிப் பட ருழந்த செயலறு நிலையைக் கூறுவது. 64 - தசாங்கப்பத்து - நேரிசை வெண்பாவா லரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச் செய்யு ளாற் கூறுவது. 65 - தசாங்கத்தயல் - அரசன் றசாங்கத்தினை யாசிரிய விருத் தம் பத்தினாற் பாடுவது. 66 - அரசன்விருத்தம் - பத்துக் கலித்துறையு முப்பது விருத்தமுங் கலித்தாழிசையுமாகிய விவற்றால் மலை, கடல், நாட்டு வருணனையு நிலவருணனையும், வாண் மங்கல முந் தோண்மங்கலமும் பாடி முடிப்பது, இது முடி புனைந்த வேந்தர்க்காம். 67 - நயனப்பத்து - கண்ணினைப் பத்துச் செய்யுளாற் கூறுவது. 68 - பயோதரப்பத்து - முலை யினைப் பத்துச் செய்யுளாற் கூறுவது. 69 - பாதாதிகேசம் - கலி வெண் பாவாலடி முதன் முடியளவுங் கூறுவது. 70 - கேசாதிபாதம் - கலி வெண் பாவான் முடிமுத லடியளவுங் கூறுவது. 71 - அலங்காரபஞ்சகம் - வெண்பா, கலித்துறை, அகவல், ஆசிரிய விருத்தம், சந்தவிருத்த மிவற்றை யே மாறி மாறி நூறு செய்யுளாக வந்தாதித்துப் பாடுவது. 72 - கைக்கிளை - ஒருதலைக் காமத்தினையைந்து விருத்தத்தாற் கூறுவது. அன்றி, வெண்பா முப்பத்திரண்டாற் கூறுவதுமாம். 73 - மங்கலவள்ளை - உயர்குலத் துதித்த மடவரலை வெண்பா வொன்பானாலும் வகுப் பொன் பானாலும் பாடுவது. 74 - தூது - ஆண்பாலும் பெண் பாலுமவரவர் காதல் பாணன் முதலிய வுயர்திணையோடுங் கிள்ளை முதலியவஃறிணை யோடுஞ் சொல்லித் தூது போய் வாவெனக் கலி வெண்பாவாற் கூறுவது. நெஞ்சுவிடுதூது, கிள்ளை விடுதூது, கச்சியானந் தருத்தி ரேசர் வண்டுவிடுதூது முதலியன விலக்கியமாம். 75 - நாற்பது - காலமு மிடமும் பொருளுமாகிய விவற்று ளொன் றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது. கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னாநாற்பது, இனி யவை நாற்பது முதலிய வற்றைக் காண்க. 76 - குழமகன் - கலிவெண்பா வான் மாதர்கடங்கையிற் கண்ட விளமைத் தன்மையுடைய குழ மகனைப் புகழ்ந்து கூறுவது. 77 - தாண்டகம் - இருபத்தே ழெழுத்து முதலாக வுயர்ந்த வெழுத்தடியினவா யெழுத்துங் குருவு மிலகுவு மொத்து வந்தன அளவியற் றாண்டகமெனவும், எழுத் தொவ்வாது மெழுத்தல கொவ்வாதும் வந்தன அளவழித் தாண்டக மெனவும்படும். 78 - பதிகம் - ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுளாற் கூறுவது. 79 - சதகம் - அகப்பொரு ளொன் றன்மேலாதல் புறப்பொரு ளொன்றன் மேலாதல் கற்பித்து நூறு செய்யுள் கூறுவது. அறப் பளீசுரசதகம், குமரேசர் சதகம், வைராக்கியசதகம் முதலியன காண்க. 80 - செவியறிவுறூஉ - பொங்கு தலின்றிப் புரையோர் நாப்பண விறல் கடனென வவையடக்கியற் பொருளுற வெண்பா முதலு மாசிரிய மிறுதியுமான மருட்பா வாற் கூறுவது. 81 - வாயுறைவாழ்த்து - வேம்புங் கடுவும் போல்வனவாகிய வெஞ் சொற்கண் முன்னர்த்தாங்கக் கூடாவாயினு பின்னர்ப் பெரிதும் பயன்றருமென மெய்ப்பொரு ளுற வெண்பா முதலுமாசிரிய மிறுதியுமான மருட்பாவாற் கூறுவது. 82 - புறநிலை - வாழ்த்து - வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமோ டொருகாலைக் கொருகாற் சிறந்து பொலிவா யென வெண்பா முதலுமாசிரிய மிறுதியான மருட்பாவாற் பாடுவது. 83 - பவனிக்காதல் - உலாக் காட்சி யில், எய்திய காமமிகுதியா லவை பிறரொடு முரைத்து வருந்துவது. 84 - குறத்திப்பாட்டு - தலைவன் பவனி வரவு, மகளிர்காமுறுதல், மோகினிரவு, உலாவப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள் தென்றன் முதலியவு பாலம்பனம், பாங்கியுற்ற தென்னென் வினவல், தலைவி பாங்கி யோடுற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக்கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூது வேண்டல், தலைவி பாங்கியோடு தலைவனடையாளங் கூறல், குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலை வள முதலிய வினவல், குறத்தி மலைவள நாட்டுவள முதலிய கூறல், தலைவன் றலவளங் கிளை வள முதலிய கூறல், குறி சொல்லி வந்தமை கூறல், தலைவி குறி வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசிலுதவி விடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணி குத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத்தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி யடையாளங் கூறல், குறவன் குறத் தியைக் கண்ணுறல், குறவனணி முதலிய கண்டை யுற்று வினவலு மாண்டாண்டுக் குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும் பான்மையு மிவ்வகை யுறுப்புக்க ளால் அகவல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கழி நெடில் விருத்தம், கலிவிருத்தம், இச்செய்யு ளிடைக் கிடை கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. 85 - உழத்திப்பாட்டு - கடவுள் வணக்க முறையே மூத்தபள்ளி யிளையபள்ளி குடும்பன் வரவோ டவன் பெருமை கூறல், முறையே யவர் வரலாறு, நாட்டுவளம், குயிற்கூக் கேட்டல், மழை வேண் டிக் கடவுட்பரவல், மழைக்குறி யோர்தல், ஆற்றின் வரவு, அதன் சிறப்புக்காண்ட லிவற்றிற் கிடை யிடையகப் பொருட்டுறையுங் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகளிருவர் முறையீடு, இளையாளை யவனுரப்பல், பள் ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், அவனது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வரல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன் கிடையி லிருந்தான் போல் வரல், அவனைத் தொழுவின் மாட்டல், அவன் புலம்பல், மூத்த பள்ளியடிசில் கொடுவரல், அவனவளோடு கூறல், அவனவளை மன்னித்தல் கேட்கவேண்டல், அவள் மறுத் தல், அவன் சூளுறல், அவளவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப்பரவல், விழி முதலிய வளங்கூறல், உழவர் உழல், காளை வெருளல், அது பள்ளத்துப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவ னெழுந்துவித்தல், அதைப் பண்ணைத் தலைவர்க் கறிவித்தல் நாற்றுநடல், விளைந்தபின் செப்பஞ்செயல், நெல்லளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளு ளொருவர்க்கொருவ ரேசலென விவ்வுறுப்புக்களுறப்பாட்டுடைத் தலைவன் பெருமை யாங்காங்குத் தோன்றச் சிந்தும் விருத்தமும் விரவிவர விவற்றாற் பாடுவது. 86 - ஊசல் - ஆசிரிய விருத்தத்தா னாதல் கலிதாழிசையால்த் னாத சுற்றத் தோடும் பொலிவ தாக. ஆடிரூசல், ஆடாமோ வூசலென் றிறக் கூறுவது. 87 - எழுகூற்றிருக்கை - எழரை யாக்கக் குறுமக்கண் முன்னின் றும் புக்கும் போந்தும் விளை யாடும் பெற்றியால் வழுவாமையா லொன்று முதலாக வேழிறுதி யாக முறையானேபாடுவது. 88 - கடிகை வெண்பா - தேவ ரிடத்து மரசரிடத்தும் நிகழுங் காரியங் கடிகையளவிற்றோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவாற் கூறுவது. 89 - சின்னப்பூ - நேரிசை வெண்பா வாலரசனது சின்னமாகிய தசாங் கத்தினைச் சிறப்பித்து விரித்து நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னு மெண் படக் கூறுவது. 90 - விருத்தவிலக்கணம் - வில் வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், கொடை, இவ்வொன்பதினையும் பப்பத்து விருத்தத்தா லொன்பது வகை யாற் பாடுவது. 91 - முதுகாஞ்சி - இளமை கழிந் தறிவு மிக்கோரிளமை கழியாத தவறிவின்மாக்கட்குக் கூறுவதாம். 92 - இயன்மொழி வாழ்த்து - இக் குடிப் பிறந்தோர்க் கெல்லா மிக்குணமியல் பென்று மவற்றை நீயுமியல்பாக வுடையையென்று மின்னோர்போல் நீயுமியல்பாக வீயென்று முயர்ந்தோரவனை வாழ்த்துவதாகக் கூறுவது. 93 - பெருமங்கலம் - நாடோறுந் தான் மேற்கொள்கின்ற சிறை செய்தன் முதலிய செற்றங்களைக் கைவிட்டுச் சிறைவிடுதன் முதலிய சிறந்த தொழில்கள் பிறந்ததற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியைக் கூறுவது. 94 - பெருங்காப்பியம் - தெய்வ வணக்கமுஞ் செய்யப்படு பொருளு மிவற்றிற்கியைய வாழ்த்து முன் னுளதாய் அறம் பொருளின்பம் வீடென்னும் நாற்பொருளும் பயக்கு நெறியுடைத்தாய், நிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய், மலையுங் கடலு நாடு நகரும் பருவமு மிருசுடர்த் தோற்றமு மென்றிவற்றின் வளங்கூறுதலும் மணமும் முடிக வித்தலும் பொழில் விளையாட்டும் நீர் விளையாட்டும் உண்டாட்டும் மகப்பேறும் புலவியுங் கலவியுமென்றிவற்றைப் புகழ்தலும்; மந்திரமுந் தூதுஞ் செலவும் போரும் வென்றியு மென்றிவற்றைத் தொடர்ந்து கூறலுமாகிய விவை முறையே தொடர்வுறச் சருக்க மிலம் பகம் பரிச்சேத மென்னும் பகுதியை யுடைத்தாய், வீர முதலிய சுவையு மிவற்றை விளக்குங் கருத்து விளங்கக் கற்றோரா னியற்றப் படுவதாம். சீவக சிந்தாமணி, சிலப் பதிகாரம், மணிமேகலை, வளை யாபதி, குண்டலகேசி, சூடாமணி, கந்தபுராணம், தணிகைப்புராணம், கூர்மபுராணம் முதலியன காண்க. 95 - சிறுகாப்பியம் - அறம் பொரு ளின்பம் வீடென்று நான்கனு ளொன்றும் பலவுங் குறைந் தேனைய வுறுப்புக்கண் மேற் கூறியவா றியல்வது. உலா, மடல் முதலியனவாம். பிறப்பு - 7 - தேவர், மக்கள், விலங்கு, புள், நீர்வாழ்வன, ஊர்வன, தாவரம், இவற்றின் யோனிபேத மெண்பத்து நூறாயிரம். அவை யாவன; தேவர் பதினான்கு நூறா யிரம்; மக்களென்பது நூறாயிரம்; விலங்கு பத்து நூறாயிரம்; புள் பத்து நூறாயிரம், ஊர்வன பதி னொரு நூறாயிரம்; நீர்வாழ்வன பத்து நூறாயிரம்; தாவர மிருபது நூறாயிரம்; அன்றி, தேவர் பதி னாறு நூறாயிர மெனவுந் தாவ ரம் பதினெட்டு நூறாயிரமென வுங் கூறுப. பு புண்ணியத்தோற்றம் - 4 - தவம், ஒழுக்கம், கொடை, கல்வி. புண்ணியம் - 7 - நகங்கிருதி, தானம், விரதம், சினேகம், நயபோசனம், கமை, உற்சாகம். புண்ணியம் - 4 - தானம், கல்வி, தவம், ஒழுக்கம். புண்ணியம் - 9 - எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்துதல், தாள் கழுவல், அருச்சித்தல், தூபங் கொடுத்தல், தீபங் காட்டல், புகழ்தல், அமுதமேந்தல்; இவை துறந்தோர்க்குச் செய்வனவாம். புரம் - 3 - இருப்புமதில், வெள்ளி மதில், பொன்மதில்; இவையே முப்புரம். புராணம் - 18 - (1) பிரமம். (2) பதுமம். (3) வைணவம். (4) சைவம். (5) பாக வதம், (6) நாரதீயம். (7) மார்க் கண்டேயம். (8) ஆக்கினேயம். (9) பவிடியம் (10) பிரமகைவர்த்தம். (11) இலிங்கம். (12) வராகம். (13) காந்தம். (14) வாமனம். (15) கூர்மம். (16) மற்சம். (17) காருடம். (18) வாயவியம். இவற்றுள் சைவம், மார்க்கண் டேயம், பவிடியம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், கூர்மம், மற்சம் வாயவியம் என்னு மிப்பத்துஞ் சிவபுராணங்களாம். வைணவம், பாகவதம், நாரதீயம், காருடம் என்னுமிந் நான்கும் விஷ்ணு புராணங்களாம். பிரமம், பதுமம் என்னுமிரண்டும் பிரம புராணங்களாம். ஆக்கினேயம் என்னும் ஒன்று அக்கினி புராணம். பிரமகைவர்த்தம் என்னும் ஒன்று சூரிய புராணமாம். யோகி களுக்கு ஞானம் உபதேசிக்குஞ் சிவபெரு மான் கெளிபளிங்கு வடிவினராயும் எங்கு முறங்காது பிராமணாதிப ராயும் அருட் செய்கையுடைய ராயும் விளங்கலால் சிவபுரா ணங்கள் பத்தும் சுகஞானங் களுக்கு இடமாயதும் வெண்ணிற முடையது மாய சாத்தவிக்குண புராணங்களாம். விட்டுணு கரியரும் சேஷசயனஞ் செய்வோரும், பத்தரை மோகிப் பவரும் பிரமாதம் வஞ்சன முதலிய வுடையரும் மருட் செய்கை யுடையவருமாதலால் விட்டுணு புராணங்கள் நான்கும் உதாசீன ரூபமும், கூட கிருத்ய சமர்த்தமும், நித்திரை, சோம்பு பிரமாத வஞ்சனங்களும் கருநிற முமுடைய தாமதகுண புராணங் களாம். பிரமா செந்நிற முடைய ராய், சஞ்சல ரபியாய் விளங்க லால் பிரம புராணங்கள் இரண் டுஞ் சிவந்த நிறமுடையதும் துக்கத்துக் கிடமாயதும் சஞ்சல ரூபமுடையதுமாகிய இராசத குணபுராணங்களாம். அக்கினி தேவனுஞ் சூரியமூர்த்தியும் முக் குணவடிவினராய்த் தோன்றலால் அக்கினி புராணமுஞ் சூரிய புரா ணமும் திரிகுணயுத்தங்களாம். பிரமபுராணம் பிராமியம் எனவும் பெயர் பெறும்; பதினாயிரங் கிரந் தங்களை யுடைத்து; பதுமபுரா ணம் பாத்மம் என்றுஞ் சொல்லப் படும். ஐம்பத்தையாயிரங் கிரந்த முடையது. வைணவ புராணம், விஷ்ணு புராணம், விண்டு புராணம் எனவும் பெயர்பெறும். ஆறாயிரங் கிரந்தங்களையுடை யது. சைவ புராணம் வாயு புரா ணம் எனவும் பெயர்பெறும். இருபத்து நாலா யிரங் கிரந்தங்கள் கொண்டது. பாவதமானது: இதி காசபாக வதம், புராணபாகவதம், சங்கிதா பாகவதம், உபசங்கிதா பாகவதம், விட்டுணுரகசிய பாக வதம், விட்டுணுயாமள பாகவதம், கௌதமசங்கிதா பாகவதம், தேவி பாகவதம் என எண் பகுப்பினதா யிருருத்தலான் அவற்றுள் சுகர் பாகவதமே புராண பாகவதமாம். சிலர் தேவி பாகவதமே யஃதென் றுங் கூறுவர். அஃது பதினெண் ணாயிரங் கிரந்த முடைத்து. நார தீயபுராணம் இருபத்தையாயிரங் கிரந்த முடையது. மார்க்கண் டேய புராணம் முப்பத்தீராயிரங் கிரந்தமுடையது. ஆக்கினேய புராணம் எண்ணாயிரங் கிரந்த முடையது. பவிடிய புராணம் பவிஷ்யம் எனவும் பெயர் பெறும். முப்பத் தோராயிரங் கிரந்தமுடை யது. பிரம கைவர்த்த புராணம் பன்னீராயிரம் கிரந்த முடையது. இலிங்கபுராணம் பதினோரா யிரங் கிரந்தமுடையது. வராக புராணம் இருபத்து நாலாயிரங் கிரந்த முடையது. கந்தபுராணம் ஓரிலக்கமுடையது. வாமன புராணம் பதினாலாயிரங் கிரந்த முடையது. கூர்மபுராணம் கௌர்மம், தத்துவசாகரம் எனவும் பெயர் பெறும். ஆயிரங் கிரந்தங்களையுடையது. மற்ச புராணம் மத்ஸயம் என்றுஞ் சொல்லப்படும். பதினாலாயிரங் கிரந்தங்களை யுடையது. காருட புராணம் ஆறாயிரங் கிரந்த முடையது. வாயவியபுராணம் பிராமம், பிரமாண்டம் எனவும் பெயர் பெறும். பன்னீராயிரங் கிரந்த முடையது. இவைகள் வேதாகமங்களின் சாரங்கள் இன்னவென்று நியாயப் பிரமா ணங்களால் தேற்றி விளக்குத லால் உபாங்கம் எனவும், உபப் பிருங்க ணம் எனவும், யாவரா னுங் கொள்ளப்படுவதுடன் முதல்வ னால் அருளப்பட்டமை பற்றிச் சுத்த வித்தையெனவும், பழைய வரலாற்று முறைகளை யுணர்த் தலால் புராணங்கள் எனவும் சொல்லப்படும். புராணம் பதி னெட்டிற்குங் கிரந்தத் தொகை நாலுலக்கந் தெண்ணா யிரமாகும். இவைகளின் ஏனையவரலாற் றிலக்கணங்களை யெல்லாங் கூர்ம புராணம் இந்திரத் துய்ம்மன் முத்தியடைந்த அத்தியாயத்தில் “பிரமநற் பதுமம்” என்னுந் திரு விருத்தத்து விசேடவுரைக் கண் கண்டு தெளிக. உபபுராணங்கள் முன் காட்டப்பட்டன. புராணலக்கணம் - 5 - உலகத் தோற் றம், ஒடுக்கம், முனிவர் அரசர் மரபு அவர் சரிதம், மநுவந் தரம். புராணலக்கணம் - 10 - சர்க்கம், விசர்க்கம், விருத்தி, இரட்சை, மநுவந்தரம், வமிசம், வமிசாநு சரிதம், சங்கிதை, ஏது, ஆசிரயம். புரி - 7 - அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை. புருடார்த்தம் - 4 - அறம், பொருள், இன்பம், வீடு. புலமையோர் - 4 - கவி, கமகன், வாதி, வாக்கி. இவருள் ஆசு, மதுரம், சித்திரம், வித்தார மென்னு நாற்கவிகளைப் பாடுவோன் கவி; அரும் பொருளைச் செம்பொரு ணடையாகக் காட்டி விவகரிப் போன் கமகன்; காரணமுமேற் கோளு மெடுத்துக் காட்டி பிறன் கோண் மறுத்துத் தன்மத நிறுத் துபவன் வாதி; அறம், பொருள், இன்பம், வீடெனு நாற்றிறங் களைக் கேட்க வேட்க விரித்துக் கூறுவோன் வாக்கி. புலன் - 5 - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். புறச்சமயம் - 6 - தருக்கம்; மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம். புறத்திலக்ணம் - 2 - பதம், புணர்ச்சி, இஃது எழுத்தி லக்கண வகையி னொன்று. புறத்திலக்கணம் - 10 - விபூதி ருத்தி ராக்கம் என்னுஞ் சிவ சின்னங் களைத் தரித்தல், குருவை வழி படல், சிவபெருமானைத் தோத் திரஞ் செய்தல், சிவ நாமங் களையுச் சரித்தல், சிவபெரு மானைப் பூசை செய்தல் சிவ தருமங்களைச் செய்தல், சிவ புராணங்களைக் கேட்டல், சிவா லய தரிசனஞ் செய்தல், சிவன டியாரிடத்தன்றிப் போசனம் பண்ணாமை, சிவனடியார்களுக் குக் கொடுத்தல் என்பனவாம். உடலிலக்கணமும் பத்து. அவை யாவன:- சிவபெருமானுடைய பெருமையைப் பேசுந்தோறும் சிந்திக்குந் தோறும், கண்டம், விம்முதல், நாத்துடித்தல். உதடு துடித்தல், சரீர நடுங்குதல், உரோ மஞ் சிலிர்த்தல், குறுவேர்வை கொள்ளல், நாக்குத் தழுதழுத்தல், ஆனந்தக் கண்ணீர் சொரிதல், வாய்விட்டழுதல், பரவசமாய்த் தன்னை அயர்த்தல் என்பவை களாம். புறப்புறச்சமயம் - 6 - உலகாயதம், சௌத்திராந்திகம், யோகாசாரம், மாத்திமிகம், வைபாடிகம், ஆருகதம். புறப்பொருள்வகை - 8 - பசுக்க வர்தல், நிரைமீட்டல், பகைமேற் செல்லல், பகை முன்னெதி ரூன்றல், தன்னரண் காத்தல், பகையரண் வளைத்தல். பொருதல், போர் வெல்லல். பூ பூ - 4 - கொடிப் பூ, கோட்டுப் பூ, நீர்ப்பூ, நிலப்பூ. பூதகாரியம் - 25 - தோல் (பிருதிவி) எலும்பு, நரம்பு, தசை, மயிர்; நீர், (அப்பு) உதிரம், மச்சை, மூளை, சுக்கிலம்; ஆகாரம் (தேயு) நித் திரை, பயம், மைதுனம், சோம் பல்; ஓடல் (வாயு) நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல், குரோதம் (ஆகாசம்) லோபம், மோகம், மதம், மார்ச்சரியம். பூதம் - 5 - நிலம், நீர், தீ, காற்று, விசும்பு. பெ பெண்வகை - 8 - கடகம், சுக துண்டம், காங்கூலம், பிறைக்கை, அராளம், பக்கம், தாம்பிரகுடம், மான்றலை. பெண்வகை - 4 - பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி. பெரியோரியல்பு - 7 - அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, பொறுமை. பெருங்கலவிலக்கணம் - 7 - கோட்டி னதளவு பன்னிருசாண், வணரளவு சாண், பத்தரளவு பன்னிரு சாண், இப்பெற்றிக் கேட்ட ஆணி, திவவு, உந்தி ஆயிரங்கோற் றொடுப்பு. பெருந்தானம் - 8 - நெஞ்சு, மிடறு, நா, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலை. பெரும்பண்ணின்வகை - பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருபதுங்க ராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளர், கொல்லி, கின்னராகம், செல்வழி, மௌ சாளி, சீராகம், சந்தி. பே பேடியிலக்கணவகை - 25 - நச்சுப் பேசல், நல்லிசையோர்தல், அச்சு மாறல், ஆண்பெண்ணாதல், ஒரு கை வீசி நடத்தல், தலையிலொரு கை வைத்தல், எதிர்ந்தோரைக் கண்டு விலகல், எதிர்ந்தோர் மேற் செல்லுதல், பார்வை வேறு படுதல், பிறருக்கு நடுநடுங்கிச் சுழன்று திரிதல், பிறரைக் கண்டு நகைத்தல், நாணுதல், பலநாட கஞ் செய்தல், பக்கம் பார்த்தல், பதுங்கித் திரிதல், காரணமில்லா மற் பலவற்றைக் கோறங் கொண்டு பேசல், தன் முலையைத் தானே வருத்தல், அசக்கல், அழுதல், சோர்ந் தருவருத்தல், குறுக்கிக் கூட்டிப் பார்த்தல், இடையிலொரு கைவைத்தல், அதனை வாங்கல், இரங்கிப்பேசல், எல்லெல்லென்று பாடுதல். பேதம் - 3 - சுகதபேதம், சுசாதி பேதம், விசாதி பேதம்; அவை யாவன - மரத்துக்கிலை, யரும்பு, பூ, காய், கனிமுதலிய சுகதபேதம்; மரத்துக்குமறுமரஞ்சுகாதிபேதம், மரத்துக்குக் கல் விசாதி பேதம். பேறு - 16 - புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிபு, நோயின்மை, வாழ்நாள். பொ பொதுப்பாயிரம் - 5 - நூல் வரலாறு, ஆசிரிய னிலக்கணம், நுவலுந் திறன், கொள்வோன்றிறன், கோடன் மரபு. பொருள்கோள் - 8 - யாற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, விற் பூட்டு, தாப்பிசை, அளைமறி பாப்பு, கொண்டு கூட்டு, அடி மறிமாற்று. பொருளாராய்ச்சிவகை - 8 - திணை, பால், செய்யுள், நிலம், காலம், வழு, வழக்கு, இடம். இவற்றுன் திணை யிரண்டு, பால் பதினான்கு, செய்யுளறுவகை, நிலன் நால் வகை, காலம்பன்னிரண்டு வழு பதினான்கு, வழக்கிருவகை. பொருளின் பொதுத்தொழிற் பண்பு - 9 - தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல். பொருள் - 2 - கல்விப்பொருள், செல்வப் பொருள். பொருள் - 4 - அறம், பொருள், இன்பம் வீடு. பொருள்வகை - 4 - நாடகம், பிர கரணப் பிரகரணம், பிரகணம், அங்கம். பொழுது - 6 - மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு; இவையே யத்தமயகால முதலொவ் வொன்று பப்பத்து நாழிகையாக முறையே கொள்க. இவற்றைச் சிறுபொழுதென்பர். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னு மாறனுமாம். இவை பெரும் பொழுதாம். பொறி - 3 - மனம், வாக்கு, காயம். பொறி - 5 - மெய், வாய், கண், மூக்கு, செவி. பொறிக்காட்சி வகை - 6 - சையோகம், சையுத்தசமவாயம், சையுத்த சமவேதசமவாயம், சமவேத சமவாயம், விசேடண விசேடிய பாவம், இவற்றுள். 1 - சையோகம் ஆவது யாதொரு பொழுதுகடம் விடயமாயிருக் கிற ஞானமான துண்டாக நின்ற தப்பொழுதுகண் இந்திரியம், கடம், விடயம் இந்த விரண்டி னுடைய கூட்டுறவு. இது பிரிந் திருக்கிற வத்துக்களினுடைய சம்பந்தமாகையாலே சையோக மெனப் பெயராயிற்று. 2. சையுத்த சமவாயமாவது யாதொரு பொழுது கண்ணாலே கடத்திலே யிருக்கிற உருவமானது அறியப் படுகின்றதோ அப்பொழுதே கண் இந்திரியம் கடத்தை யடைந் திருக்கிற நீலாதிருபம் விடயம் இவைகளினுடைய சம்பந்தம் 3. சையுத்த சமவேத சமவாயமாவது யாதொருபொழுது கண்ணாலே கடத்தை யடைந்திருக்கிற உருவத் திலே யிருக்கின்ற ரூபத்துவமா னது அறியப்படுகின்றது. அப் பொழுது கண்யிந்திரியம் உருவத் துவம் விடயம் இவைகளினுடைய சம்பந்தம். 4. சமவாயமாவது - எக் காலத்திற் சோத்திரேந்திரியத்தி னாலே சத்தமானது அறியப்படு கிறதோ அப்போது சோத்திரம் இந்திரியம்; சத்தம் விடயம் இவை களினுடைய சம்பந்தமாம். 4. சம வேத சமவாயமாவது எக்காலத் தில் சோத்திரத்திலே சத்தத்தின் தன்மை காணப்படுகிறதோ அப் போது சோத்திரம் இந்திரியம், சத்தத்துவ சாமானியம் விடயம் இவைகளினுடையசம் பந்தஞ் சோத்திரத்திலே சமவே கமாயிருக் கிற சத்தத்திலே சத்தத்துவஞ் சம வாயசம்பந்தமாயிருக் கையினா லெனவறிக. 6. சேடண விசேடிய பாவமாவது எக்காலத்திற் கண் ணுடனே கூடியிருக்கிற பூமியிலே கடத்தினுடைய சுபாவ மான தறியப்படுகின்றது. அஃதா வது இந்தப் பூமியிற் கடமில்லையென் றால் அப்போது கண்ணுடனே கூடியிருக்கிற பூமி விசேடணம், பாவம் விசேடியம், கடாபாவத்தை யுடையது. பூதலம் என்றபோது கண்ணுடனே கூடின பூமிவிசே டியம். கடாபாவம் விசேடணம் இதன் விரிவையெல்லாம் பௌட் கராகமத்திற் காண்க. பொன்வகை - 4 - ஆடகம், கிளிச் சிறை, சாதரூபம், சாம்பூநதம். போ போககரணம் - 64 - ஆலிங்கனம் - 5, அதரபானம் - 11, அமிர்தநிலை - 14, நகக்குறி - 8, பற்குறி - 8, குரல் - 8, தாடனம் - 4, இதனை “ஆலிங் கன மைந்தும் மிதழ் பானம்பதி னொன்றும் மமிர்தம் பதினாறு முகி ரெழுதுஞ்குறி யெட்டுங் கோலம் புனைதந்தக் குறி எட்டுங் குரலெட்டுங் குவிதாடன மிரு நான் கொடு கூடுங் கலவிக்கே” என்னுஞ் செய்யுளா னறிக. விரி வுகள் மதனாக மத்தும், கந்த புராணம். இந்திரபுரிப் படலத் தும், பார்க்கவ புராணம் இந்திரன் சாபம் பெற்ற படலத்தும், பிறவற் றும் உரைக்கப்பட்டமை காண்க. போகபூமி - 6 - ஆதியரிவஞ்சம், நல்லரி வஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தர குருவம். போகம் - 8 - பெண், ஆடை, அணி கலன், போசனம், தாம் பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி. போதப்பிரகாரம் - 3 - உத்தேசம், இலக்கணம், பரீட்சை. அவை யாவன : தான் விவகரிக்கும் பொருளைப் பெயர்மாத்திரங் கூறலுத்தேசம். அப்பொருளில் சிறப்புத் தன்மை கூறலிலக்கணம், அப்பொருளிலில் விலக்கண முண்டோ வின்றோவெனப் பார்த்தல் பரீட்சை. ம மகளிரான் மலர் மரம் - 10 - மகிழ மரஞ் சுவைக்க, ஏழிலம் பாலை மரம் நட்புற பாதிரிமரம் நிந்திக்க முல்லைக் கொடி நகைக்க, புன்னை யாட, குரா லணைக்க, அசோகு தைக்க, குருக்கத்திபாட, மரா பார்க்க, சண்பகநிழல் படத் தளிர்த்துப் பூப்பனவாம். மங்கலச்சொல் - 22 - திரு, யானை, தேர், பரி, கடல், மலை, மணி, பூ, புகழ், சீர், மதி, நீர், எழுத்து, பொன், ஆரணம், சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி, அமிழ்தம். இவற்றின் பரியாயாயப் பெயரும் பிறவுமாம். மங்கலம் - 21 - முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க் குடம், பூமாலை, சங்கு, மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், சிங்காசனம், கடல் என்பன அரசர்க்குரிய மங்கலப் பொருள்களாம். மதம் - 7 - உடன்படல், மறுத்தல், தா அனாட்டித்தனாது நிறுப்பு, பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவு, இருவர் மாறுகோ ளொருதலை துணிவு, பிற நூற் குற்றங்காட்டல், பிறிதொடு படான் தன் மதங்கொளல். மங்கலம் - 8 - சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, கொடி, இணைக்கயல். இவையே யட்டசுப மெனவும் படும். மங்களாசரணை - 3 - வாழ்த்து, வணக்கம், செய்யப்படு பொருள். மணம் - 8 - பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்; இவற்றுட் பிரமசாரிக்குக் கன் னியைத் தீ முன்னர்க் கொடுப்பது பிரமமணம்; தலை மகனினத்தார் வேண்டத் தலைமகளினத் தாருட் பட்டவளைத் தீ முன்னர்க் கொடுப்பது பிரசாபத்திய மணம், ஒன்றிரண்டு பசுவு மெருதும் வாங்கிக் கொண்டு கன்னியைத் தீ முன்னர்க் கொடுப்ப தாரிட மணம்; வேள்வியால் வந்த கன்னி யைத் தீ முன்னர்க் கொடுப்பது தெய்வ மணம்; கொடுப்பாருங் கேட்பாருமின்றி யிருவருந் தனி யிடத் தெதிர்ப்பட்டுத் தாமே கூடுவது காந்தருவ மணம்; பெண் ணுக்குப் பொன் பூட்டிச் சுற்றத் தார்க்குப் பொன்வேண்டுவன கொடுத்துக் கொள்வதசுரமணம்; பெண்ணும் பெண்ணினத்தாரு முடன்படாமல் வலிதிற் கொள் வதி ராக்கதமணம்; துயின்றாளைச் சென்று கூடுவது பைசாச மணம். மணி - 9 - கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம். மண்டலம் - 3 - அக்கினி மண்டலம், ஆதித்த மண்டலம், சந்திர மண் டலம். மண்டலம் - 7 - வாயுமண்டலம், வருண மண்டலம், சந்திர மண்ட லம், சூரிய மண்டலம், நட்சத்திர மண்டலம், அக்கினி மண்டலம், திரிசங்கு மண்டலம். மத்திம தானவகை - 5 - ஆதுலர், அந்தகர், அவயவ மிழந்தவர், பற்றுக்கோடில்லாதவர், பெண்கள் என்பார்க்குக் கொடுத்தல். மரகதக்குணம் - 8 - நெய்த்தல், மயிற்கழுத்தொத்தல், பசுமை யாதல். பொன்மை, அதனுட் பசுத்தல், வக்கி பாய்தல், பொன் வண்டின் வயிறுபோலிருத்தல், தெளிதல். மரகதக்குற்றம் - 8 - கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பரிவு, தார், சாயை, யிறுகல். மரபு - 2 - தந்தைவழி, தாய்வழி. மருதயாழ்த் திறன்வகை - 14 - தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாகதொனி, சரதாளி, இந்தளம், தமிழ் வேளாளர் கொல்லி, காந் தாரம், கூர்ந்தபஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்கராகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம். மருத்துக்கள் - 7 - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கீழ், மேல், பல யோனி யுயிர். மருந்து - 4 - சல்லிய கரணி, சந்தான கரணி, சமணிய கரணி, மிருத சஞ்சீவினி. மலம் - 3 - ஆணவம், மாயை, கன்மம். மலை - 7 - கைலை, இமயம், மந்த ரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி. அன்றிக் கந்தமாதனங் கூட்டி யெட் டெனவும் படும். மலைபடுதிரவியம் - 5 - அகில், குங்குமம், கோட்டம், தக்கோ லம், மிளகு. மறத்துறைவகை - 7 - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை. மன்மதன்கணை - 5 - வனசம், சூதம், அசோகு, முல்லை, நீலம்; இவற் றின் பெயர் முறையே உன்மத்தம், மதனம், சம்போகம், சந்தாபம், வசிகரணம்; இவை செய்யு மவத்தை - சுப்பிரயோகம், விப் பிரயோகம், சோகம், மோகம். மரணம், அவையாவன - சுப்பிர யோகம் சொல்லு நினைவும், விப்பிரயோகம் வெய்துயிர்த் திரங்கல், சோகம் வெதுப்புந் துய்யன செவிட்டலும், மோகம் அழுங்கலு மொழிபல பிதற்றலும், மரணம் அயர்ப்பு மயக்கமும். மன்னவர்சகாயர் - 8 - கரணத்தியல் வோர், கடைகாப்போர், நகர மாக்கள், படைத்தலைவர், சுற்றத் தார், இவுளி மறவர், யானைவீரர், கருமவதிகாரர். மா மாணிக்கசாதி - 4 - பதுமம், நீலம், விந்தம், படிதம். மாதம் - 12 - சைத்திரம், வைசாகம், சேட்டம், ஆஷாடம், சிராவணம், பாத்திரபதம், ஆசுவீசம், கார்த்தி கம், மார்க்கசிரம், புசியம், மாகம், பாற்குனம். இவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி. இவற்றிற்கு முறையே யுரிய நட்சத்திரம் - சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அசு வினி, கார்த்திகை, மிருக சீரிடம், பூசம், மகம், உத்திரம். மாதர்கள் - 7 - அபிராமி, மகேச் சுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி; இவர்க்கு முறையே வாகனம் - அன்னம், இடபம், மயில், கருடன், சீயம், யானை, பேய். முறையேயாயுதம் - மறை, பிநாகம், வேல், ஆழி, கலப்பை, வச்சிரம், சூலம். மாயை - 3 - சுத்தமாயை, அசுத்த மாயை பிரகிருதிமாயை. மாயை - 5 - தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்; அவை யாவன - சீவ சைதன்னியத்தை மறைக்கை யாற்றமம்; ஜகரூப மான வந்நிதாத் தோற்றத்திற்குக் காரண மாகையான் மாயை; விப ரீதஞான முண்டாக்குகை யான் மோகம்; உணர்வழிக்கையால வித்தை; சத்துரூபத்துக்கந்நிய மாகையா லநிர்தம். மாயைக்குணம் - 7 - அஞ்ஞானம், பொய், அயர்வு, மோகம், பைசா குந்நியம், மாச்சரியம், பயம். இவற் றுள் அஞ்ஞானமாவது பொய்யை மெய்யென்று பொல்லாங்கு செய் தல், பொய்யாவது. உள்ளதை யில்லதாகவும் இல்லதை யுள்ள தாகவுஞ் சொல்லுதல், அயர் வாவது கண்டதை வழுந்தி மயங் கல், மோகமாவது காமத்தான் மூர்ச்சித்தல், பைசா சூன்னிய மாவது ஆசை யுண்டாயதனை யில்லையாக வொளித்தல், மாற் சரியமாவது பிறவுயிர்களைத் தாக்கவுங் கொல்லவு நினைத்தல் கேடு நினைத்தல், பயமாவது உயிர்க்கிறுதி வருமென்று அச்ச முற்றுத் திரிதல். மாயையிற் றோன்றுவன - 30 - காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், முதலாய வித்தியா தத்துவ ஆன்ம தத்துவங் களாம். மார்க்கம் - 4 - சன்மார்க்கம், சக மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம். மிருதி - 18 - தரும நூல் என்பதைப் பார்க்க. மீமாஞ்சை - 2 - பூர்வம், உத்தரம். மு முகம் - 14 - அஞ்சிதம், அதோமுகம், ஆகம்பிதம், பிரகம்பிதம், ஆலோ விதம், உலோலிவம், உத்துவாகி தம், சமம், சௌந்தரம், துகம், விதுதம், பரா விருத்தம், பரிவாகி தம், திரச்சீனம்; இவற்றுள் வருத் தமாற்றா திருதோண்மேற்றலை சாய்த்த லஞ்சித முகம், தலை குனிந்து பார்த்தலதோ முகம், சம்மதித்தற்கு மேல் கீழ் தலை யாட்ட லாகம்பித முகம், அதி சயத்தாற் சிறிது தலையாட்டல் பிரகம்பித முகம், ஆகையான் அலர்ந்த முகமா யொருவனை யழைத்தலா லோலித முகம், சிந்தையா லொரு தோண்மேற் றலை சாய்த்த லுலோலித முகம், தலை யண்ணாந்து பார்த்த லுத்துவாகித முகம், தியானிப்பது போலத் தலையசையா திருத்தலே சமமுகம், பூரித்த மகிழ்ச்சியான் மலர்ந்த முகங்காட்டலே சௌந் தர முகம், வேண்டா தசற்கிடம் வலந்தலையாட்டலே துதமுகம், உணவணி முதலிய வேண்டா மைக்குத் தலை நடுக்கலே விதுத முகம், வேண்டாததற்கு முகந் திருப்பலே பரா விருத்த முகம், மதத்தா லொருபுறஞ் சாய்ந்த தலையைச் சிறிதாகச் சுற்றியாட் டல் பரிவாகித முகம், நாணத் தாற்றலை யாட்டலே திரச்சீன முகம். முத்திநகரம் - 7 - புலி என்பதைப் பார்க்க. முத்திவகை - 2 - புறமுத்தி, அபர முத்தி. பரமுத்தியாவது சீவசா யுச்சியம், அபர முத்தி களாவன சிவசாரூப்பியம், சிவசாமீப்பியம், சிவசாலோக் கியம். முத்திவிக்கினம் - 3 - அறியாமை, ஐயம், திரிபு. முத்துக்குணம் - 4 - தெளிந்த வொளி, சந்திரன் போன் றிருத்தல், வெள்ளி போல் வெண்ணிற முடைமை, அங்காரகன்போற் செந்நிற முடைமை. முத்துக்குற்றம் - 4 - காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நிலை. முத்துச்சனிக்குமிடம் - 20 - மதி, மேகம், சங்கு, சிப்பி, மீன், நந்து, முதலை, உடும்பு, தாமரை, வாழை, கமுகு, கரும்பு, செந்நெல், மூங்கில், யானைக் கொம்பு, பன்றிக் கொம்பு. பசுவின் பல், நாகம், கொக்கு, நங்கையர் கழுத்து. மும்மை - 3 - உம்மை, இம்மை, மறுமை. முரசு - 3 - வீரமுரசு, கொடை முரசு, மணமுரசு. முழவு - 7 - அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, காலைமுழவு, நாண்முழவு. முனிவர் - 7 - அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், சமதக்கினி, பரத்து வாசன், வசிட்டன், விசுவா மித்திரன், அன்றியும் அகத்தியன், ஆங்கீரசன், கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க் கண்டன், வசிட்டன் என்பர். முனிவர் - 31 - அகத்தியன், அத்திரி, ஆங்கீரசன், இரணியன், மாமுனி, உரோமமாமுனி, ஏரண்ட மாமுனி, கலைக்கோட்டு முனி, காசிபன், கௌதமன், சத்தகூன் முனி, சச்சிதானந்தன், சமதத்கினி, சனகன், சனக் குமாரன், சுகன், ததிமகாமுனி, துருவாசன், நாரதன், பதஞ்சலி, பரத்து வாசன், பராசரன், பற்பமாமுனி, பிருகு மாமுனி, பினாகிமாமுனி, புலத் தியன், மார்க்கண்டன், வசிட் டன், வான்மீகன், விசுவாமித்தி ரன், வியாக்கிர பாதன், வியாசன். மூ மூர்த்தம் - 8 - பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா. மூர்த்தவதிதேவதை - 8 - பவன், சருவன், ஈசானன், பசுவதி, வீமன், மாதேவன், உக்கிரன், உருத்திரன். மூர்த்தவதிதேவதைகளின் மனைவியர் - 8 - சுவர்ச்சலை, உரோகிணி, உசை, சுகேசி, சுவாகை, திசை, சிவை, தீக்கை. மூர்த்தவதி தேவதை களின் மைந்தர் - 8 - மந்தன், புதன், சுக்கிரன், செவ் வாய், குகன், சுவர்க்கன், மனோ சிவன், சந்தானன். மூலம் - 10 - கண்டங்கத்திரி வேர், சிறு வழுதுணைவேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர் நெருஞ்சி வேல், (இவ்வைந்துஞ் சிறுபஞ்ச மூல மென்ப). வில்வவேர், பெருங் குமிழ வேர், தழுதாழை வேர், பாதிரிவேர், வாகைவேர், (இவ் வைந்தும் பெரும் பஞ்சமூல மென்ப.) மெ மெய்க்கூத்து - 3 - தேசி, வடுகு, சிங்களம். இவை மெய்த் தொழிற் கூத்தாகலின் மெய்க் கூத்தாயின. அகச்சவை பற்றி யெடுத்தலின் அகமார்க்கமெனவுங் கூறப்படு மென்னை? “குணத்தின் வழியதகக் கூத்தெனப்படுமே” எனக் குண நூலுடையாரும் “அகத்தெழு சுவையா னகமெனப்படுமே” எனச் சயந்த நூலுடையாரும் கூறினா ராகலின். மெய்ப்பரிசம் - 8 - ஊன்றல், கட்டல், குத்தல், தடவல் தட்டல், தீண்டல், பற்றல், வெட்டல் இவை மெய்ப் பொறியாற் செயப்படுந் தொழில். மெய்யெழுத்துவகை - 3 - வல்லினம், மெல்லினம், இடையினம். மே மேகம் -7 - சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலா வர்த்தம், கங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவணரும். இவை பொழிவன முறையே மணி, நீர், பொன், பூ, மண், கல், தீ. மேடவீதி - 4 - இடபம், சிங்கம், மிதுனம், கர்க்கடகம். மேலுலகம் - 7 - பூலோகம், புவலோ கம், சுவர்க்கலோகம், மகலோகம், தவலோகம், சனலோகம், சத்திய லோகம். மொ மொழி - 3 - மெய் கூறல், புகழ் கூறல், பழி கூறல். யா யாகம் - 5 - பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம். இவற்றுள் வேத மோதல் பிரம யாகம், ஓமம் வளர்த்தலே தெய்வ யாகம், பலி யீதல், பூதயாகம், தர்ப்பண முடித் தல், பிதிர் யாகம், இரப்போர்க் குணவு முதலிய வீதலே மானுட யாகம். யாகம் - 21 - அக்கினிட்டோமம், அத்தி யக்கினிட்டோமம், உத்தி யம், சோடசி, வாசபேயம், அதி ராத்திரம், அப்தோரியாமம், அக்கினியாதேயம், அக்கினி கோத்திரம், தரிச பூரணமாசம், சாதுர்மாசியம், நிரூடபசுமந்தம், ஆக்கிரயணம், சௌத்திராமணி, அட்டகை, பார்வணம், சிராத்தம், சிராவணீ, ஆக்கிரகாயணீ, சைத் திரி, ஆயுவயுசி. யாகம் - 18 - சோதிட்டோமம், அங்கிட்டோமம், உத்தியம், சோடசீ, வாசபேயம், அத்திராத் திரம், சோம யாகம், சாதுர்மா சியம், மவுத்திரமேதம், சௌந்தி ராமணி, புண்டரீகம், அங்கிசயன், இராசசூயம், அச்சுவமேதம், விச்சு வதித்து, பிரமமேதம், பிரணவ மேதம், பசுபந்தம். யாக்கைக்குறுகுற்றம் - 18 - பசி, நீர் வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த் தல், கேதம், கையறவு. யாழ்வகை - 4 - பேரியாழ், சகோட யாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ். யாழ்வகைநரம்பு - 4 - 7, 16, 17, 21 இவற்றுள் செங்கோட்டி யாழிற்கு ஏழு, சகோடயாழிற்குப் பதினாறு, மகரயாழிற்குப் பதினேழு, பேரி யாழிற்கு இருபத்தொன்று. யானை - 3 - நதிசரம், வனசரம், கிரிசரம். யு யுகம் - 4 - கிரேத யுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம். யுத்தி - 3 - ஞானம், சோதனை, பொருத்தம். யோ யோகம் - 10 - அட்டாங்க யோகம், பரியோகம், பாவயோகம், மாயோகம், பாசுபதயோகம், கருமயோகம், ஞானயோகம், சாங்கியயோகம், தியானயோகம் இவற்றின் விரிவுகளை யெல்லாம் கூர்ம புராணம், இலிங்கபுராணம், வாயுசங்கிதை முதலியவற்றிற் காண்க. யோகம் - 27 - விஷ்கம்பம், பிரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிஷ ணம், வச்சிரம், சித்தி, விதிபாதம், வரி யான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிரமம், ஐந்திரம், வைதிருதி. இவை முறையே கம்பம், பிரியம், வாழ் நாள், புண்ணியம், நலம், மாகண்டம், அறம், துணை, சூலம், கண்டம், ஆக்கம், நிலை, அரவு, எக்களிப்பு, வேல், வல்லமை, கொலை, காயம், தாழ்வு, காட்சி, திறம், புகழ், காவல், தெளிவு, பிரமா, இந்திரன், பேய். இவற்றுள் கம்பம், கண்டம், அதிகண்டம், சூலம், வியாகாதம், வச்சிரம், விதி பாதம், பரிகம், வைதிருதியென வொன்ப தன்றி மற்றவை நல்லன. இவற் றுள்ளுங் கம்பத்தின் மூன் றும், சூலத்திலைந்தும், கண்டத்திலு மதிகண்டத்திலு மாறும், வியாகா தத்தி லொன்பதுங் கழித்து நின்ற நாழிகையுமாம். யோகவகை - 4 - மரணயோகம், சித்தயோகம், அமிர்த சித்த யோகம், அமிர்தயோகம். யோகாங்கம் - 8 - இயமம், நியமம், ஆதனம், பிராணயாமம், பிரத்தி யாகரம், தாரணை, தியானம், சமாதி. யோகாசனம் - 6 - முற்கூறிய எண் வகை யாசனங்களன்றி நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல், சமயம், சுகமுமாம். யோனிவகை - 4 - உள்ளோன் றலை வனாக வுள்ளதோர் பொருண் மேற் செய்தலும், இல்லோன்றலை வனாகவுள்ளதோர் பொருண் மேற் செய்தலும், உள்ளோன் றலைவனாக வில்லதோர் பொருண் மேற்செய்தலும், இல்லோன் றலைவனாக வில்லதோர் பொருண்மேற் செய்தலுமாம். இஃது நாடகலக்கணம். ருது - 6 - வசந்தருது (சித்திரை, வைகாசி), கிரீஷ்மருது (ஆனி, ஆடி), வர்ஷருது (ஆவணி, புரட் டாதி), சரருது (ஐப்பசி, கார்த் திகை), ஹேமந்தருது (மார்கழி, தை), சிஸ்ரருது (மாசி, பங்குனி). வ வங்கியத்தின் கூறுபாடு - 5 - மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி. வங்கியப்பண் - 7 - சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம். வசனாதி - 5 - வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம். வசுக்கள் - 8 - அனலன், அனிலன், ஆபச்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூசன், பிரபாசன். வசைக்கூத்தின் வகை - 2 - வேத்தி யல், பொதுவியல். வடுகிற்குரியகால்கள் - 14 - சுற்றுதல், எறிதல், உடைத்தல், ஒட்டுதல், கட்டுதல், வெட்டுதல், போக்கல், நீக்கல், முறுக்கல், அனுக்கல், வீசல், குடுப்புக்கால், கத்தரிகைக் கால், கூட்டுதல். வணிகர்குணம் - 8 - தனிமை யாற்றல், முனிவிலனாதல், இடன றிந்தொழுகல், பொழுதொடு புணர்தல், உருவது தெரிதல், இறு வதஞ்சாமை, ஈட்டல், பகுத்தல். வண்டுவகை - 4 - சுரும்பு, தேன், ஞிமிறு, வண்டு. வண்ணக்கூறுபாடு - 4 - செம்முறை, உழற்பு, மெய்ந்நிலை, கொட்டல், நீட்டல், நிமிர்த்தல். வண்ணம் - 3 - பெருவண்ணம், வனப்பு வண்ணம், இடை வண்ணம். வண்ணம் - 5 - வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை. வரி - 8 - கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச் சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள் வரி. இவற்றுள் கண்கூடாவது பிரிய தரிசனம். அஃதாவது காட்சி. அஃது ஒருவர் கூட்டவன்றித் தானே வந்து நிற்கும் நிலைமை. ஆகவே எதிர் முகமாக நின்று நடிக்கும் நடிப்பு. காண்வரியாவது புயல் சுமந்து வருந்திக் கதிரைப் பொழியும் மதி யிடத்தே கயல்களுலாவித் திரி கின்ற செவ்வியோடே பாகை பொதிந்த பவளத் திறந்து ஒளியைத் தருகின்ற முத்தை யொத்த நகை முகத்தைக் காட்டி வருகென வந்து போவெனப் போகிய கரிய நெடிய கண்ணாள் கூத்தாம். என்னை? “காண்வரி யென்பது காணுங்காலை - வந்த பின்னர் மனமகிழ்வுறுவன - தந்து நீங்குந் தன்மையதாகும்” என்றாராகலின். உள்வரியாவது - வேற்றுருக் கொண்டு நடித்தல். “உள்வரி யென்ப துணர்த் துங்காலை - மண்டல மாக்கன் பிறிதோரு ருவங் - கொண்டுங் கொள்ளாது மாடுதற் குறித்தே” என்றதனா லறிக. ஈண்டு மண்டல மாக்கள் என்றது அரசரை பாண்டவர்கள் பிறிதுருவங் கொண்டது மிவ்வரிப்பா லதாம். புறவரியாவது - தலைவனுடனணை யாது புறத்து நின்று விளையாடு வது. இதனைப் “புறவரியென்பது புணர்க்குங்காலையிசைப்ப வந்து தலைவன் முற்படாது - புறத்து நின்றாடிவிடை பெறுவதுவே” என்ற சூத்திரத்தானறிக. கிளர்வரியாவது - நடுநின்றார் இரு வருக்குஞ் சந்து சொல்லக் கேட்டு நிற்பது. என்னை? “கிளர் வரி யென்பது கிளக்குங்காலை - யொருவருய்ப்பத் தோன்றியவர் வா - யிருபுற மொழிப்பொருள் கேட்டு நிற்பதுவே” என்றாரா கலின். தேர்ச்சிவரியாவது - நாயகன் கிளைகட்குத்தன் துன்பங்களைத் தேடித்தேடிச் சொல்லுதல். என்னை? “தேர்ச்சியென்பது தெளியுங்காலைக் - கெட்ட மாக்கள் கிளைகண்டவர் முன் - பட்டது முற்றது நினைஇ யிருந்து - தேர்ச்சி யோடுரைப்பது தேர்ச்சிவரி யாகும்” என்றாரா கலின். காட்சிவரியாவது தன்வருத் தத்தைக் காணும்படி நடித்தல். என்னை? “காட்சிவரி யென்பது கருதுங் காலைக் - கெட்டமாக்கள் கிளை கண்டவர் முன்னர்ப்பட்டது கூறிப் பரிந்து நிற்பதுவே” என்றா ராகலின். எடுத்துக்கோள் வரியாவது - தான் கையறவெய்தி வீழ்ந்தாளாக வீழ்ந்து, பிறர் எடுத்துக் கொள் ளும்படி நடித்தல். இதனை “எடுத் துக்கோளை யிசைக்குங் காலை யடுத்தடுத்தழிந்து மாழ்கிய யலவ - ரெடுத்துக் கோள்புரிந்த தெடுத் துக்கோளே” என்ற சூத்திரத்தா னறிக. வரிக்கூத்து - 93 - சிந்துப்பிழுக்கை, சந்தி, கொந்தி, கவுசி, குடப் பிழுக்கை, கந்தன் பாட்டு, ஆலங் காட்டாண்டி, பருமணனெல் லிச்சி, சூலநட்டம், தூண்டில், ஆண்டி, அமண், புனலேடு, ஆளத்தி, கோப்பாளி, பாண்டிப் பிழுக்கை, பாம்பாட்டி, ககவுட் சடை, வீரம், மாகேசம், காமன், சிந்து, வாமனம், விகடம், கொற்றி, பலகை, வாள், பப்பரப்பு, தகு ணிச்சம், சித்து, முண்டிதம், பறை, பண்டிதன், பத்தன், குரவை, பப்பறை, காவதன், பித்தன், மானி, பெருபிழுக்கை, மது விளையாட்டு, களியாடல், பறைக் குடும்பு, தோற் கூத்து, மூத்த கிழவன், கிழவி, கிள்ளுப் பிராண்டி, பள்ளி, விக்கட் டாங்கம், அம்மனை, பந்து, கழங் காடல், விண்ணக்காளி, விறற் கொந்தி, வண்டு, வாரிச்சி, பிச்சி, சடாதாரி, பிடர்நிருத்தம், தளிப் பாட்டு, சதுரங்கம், சோணாண்டி, மலை யாளி, வேதாளி, வாணி, குதிரை, வில்வேடு, செந்தலை விளக்குப் பிச்சி, மலைச்சி, இருண்முகப் பேதை, இருவன், பல்லாங்குழி, பகடி, பகவதியாள், சாழல், உந்தி, அவலிடி, ஊராளி, யோகினிச்சி, பாரன், குணலை, மாலைவிளை யாட்டு, உள்ளிப்பூ, ஐயனுக்குப் பாடும் பாட்டு, ஆடும் பள்ளி, கும்பிடு நாட்டம், குணாட் டம், குணாலை, சும்மைப்பூ, சோனகம், மஞ்சரி, உழைமை, பறைமை. இவற்றைப் பல்வரிக் கூத்தென் பாருமுளர். வருடம் - 60 - பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய (இவ்விருபது முத்தம வருடம்); சருவசித்து, சருவதாரி, விரோதி, விகிர்த்தி, கர, நந்தன, விசய, சய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ (இவ் விருப தும் மத்திம வருடம்); பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமா தீச, ஆனந்த, இராட்சத, நள, பிங்கள, களாயுத்தி, சித்தாத்திரி, இரௌத்திரி, துன்மதி, துந்துபி, உருத்திரோற்காரி, இரத்தாட்சி, குரோதன, அட்சய (இவ்விருவது மதம வருடம்). வருணம் - 4 - பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரர். இவற்றைச் சாதியென்றுங் கூறுப. வருத்தனை - 4 - அபவேட்டிதம், உபவேட்டிதம், வியாவர்த்திதம், பராவத்திதம். வர்ஷம் - 9 - பாரதம், கிம்புருஷம், ஹரி, இளாகிருதம், இரமியகம், இரண்மயம், குருபத்திராசுவம், கேதுமாலவம். வழக்கு - 2 - செய்யுள் வழக்கு, உலக வழக்கு. வழு - 14 - கைக்கிளைத்திணைவழு, முல்லைத் திணைவழு, குறிஞ்சித் திணைவழு, மருதத் திணைவழு, நெய்தற்றிணைவழு, பாலைத் திணை வழு, பெருந்திணைவழு, வெட்சிவழு, வஞ்சிவழு, உழிஞை வழு, தும்பைவழு, வாகைவழு, காஞ்சிவழு, பாடாண்டிணை வழு. வள்ளல் - 21 - வரையாது கொடுப் போன் வள்ளலென்ப. இவர் முதலிடை கடையென மூவகைப் படுவர். அவருள் முதலெழு வள்ளல் - குமணன், சகரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி; - இடை யெழுவள்ளல் - அக்குரன், அந்தி மான், அரிச் சந்திரன், கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்தவக் கிரன்; - கடையெழுவள்ளல் - எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன் ஆய். வா வாசம் - 5 - இலவங்கம், ஏலம், கருப் பூரம், சாதிக்காய், தக்கோலம். வாசவகை - 14 - அம்பரேச்சம், கத்தூரி, சவாது, சாந்து, குங்குமம், பனிநீர், புழுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நிரியாசம், தைலம். வாச்சியக்கூறுவகை - 3 - கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கம். அவற் றுள் கீதாங்கமாவது கீதத்திற்கு வாசிப்பது; நிருத்தாங்கமாவது நிருத்தத்திற்கு வாசிப்பது; உப யாங்கமாவது இரண்டிற்கும் வாசிப்பது. வாதனை - 25 - நரம்புமுதலிய பிருதிவியின் கூறு ஐந்தும், நீர் முதலிய அப்புவின் கூறு ஐந்தும், பசி முதலிய அக்கினியின் கூறு ஐந்தும், போக்கு முதலிய வாயு வின் கூறு ஐந்தும், வெகுளி முத லிய ஆகாயத்தின் கூறு ஐந்துமாம். வாயில் - 6 - கண், காது, மூக்கு, வாய், குதம், குய்யம். வாயு - 10 - பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவ தத்தன், தனஞ்சயன்; இவை யுட லினிற்பன. அவையாவன - இதயத் தியங்குவது பிராணன், உச்சர்க்கத் தலத்திடை நிற்பதபானன், கந்தரசக் குழியிற் சந்திடை நிற்பது சமானன், நாபியினிற்பது உதானன், சரீர முழுதும் வியாபித் திருப்பது வியானன், நீட்டலு முடக்கலுங் கிளக்கலுஞ் செய்வது நாகன், உரோமம் புளகித்திமைப்பது கூர்மன், முகத்திடை நின்று தும்மலுஞ் சினமும் வெம்மையும் விளைப்பது கிருகரன், ஓட்டமு மிளைப்பும் வியர்த்தலும் விளைப் பது தேவதத்தின், உயிர் போகினும் போகாதுடலினை வீக்கித் தலைகிழித்தகல் வது தனஞ்சயன். வாரச்செய்யுள் - 2 - ஓரொற்று வாரம் ஈரொற்றுவாரம். அவை தாளத்து ஒரு மாத்திரையும் இரு மாத்திரையும் பெற்றுவருவன வாம். வாரமென்பதுபற்று. வாரம் - 7 - ஞாயிறு, திங்கள், செவ் வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி. வானோர்கணம் - 9 - அக்கணத் தோராவார்; பத்திச்சுவாலகர், ஞானாதிக்கர், பத்திராசனர், நாத கிருத்தியர்; சத்துவகர், பலவத்தர், பிராதமிகர், அதிதூதர், தூதர்; இவையே நவலிலாச சபையாம்; அவையாவன பத்திச் சுவாலகர் கடவுளைக் குறித்த பத்தியினாலே சுவாலிக்கிறவர், ஞானாதிக்கர் கடவுளைக் குறித்த ஞானத்திலா திக்கம் பெற்றவர், பத்திராசனர் கடவுளெழுந்தருளி யிருக்குந் தேவ சிங்காதனத்தைப் புகழ்ந் திருப்பவர், இவர் முதலாம் அர்ச் சியப் பிரபுத்துவ முடையோராம், நாதகிருத்தியர் நாதனுடைய கிருத்தியத்தை யவனருளாற் புரி பவர், சத்துவகர் கடவுளருளாற் பற்பல வற்புதங்களைச் செய்யுஞ் சத்துவம் பெற்றவர், சத்திகரென்று மாம், பலவத்தர் கடவுட்டிரு வுளப்படி யெய்துங் கருமங்கட்கு வரு மிடையூற்றை யவனருளாற் றடுக்கும் பலாத்காரம் பெற்றவர், இவரிரண்டாமர்ச்சியப் பிரபுத் துவமுடையோராம். பிராமிகர், கடவுட் டிருவுளப் படியே யிராச்சிய சம்பந்தமான சாதாரண நன்மை களை நடத்துந் தலைமை பெற்ற வர் - அதிதூதர் பிரதானமாகிய வீசேடங்களை யுலகத்தி லறிவிக்கத் தானாபதியாக வருபவர்கள், தூதர் மனிதர் பிறந்தகண முதலாகத் தனித்தனியே யவர வரைப் பாதுகாத்து நன்னெறியினடத்தி மற்றும் பிரதான விசேடங்கட் கனுப்பப்படுபவர் : இவர் மூன் றாம் அர்ச்சியப் பிரபுத்துவ முடையோர்: அர்ச்சியப் பிரபுத் துவத்திற்கு அதீச்சுரபதவி என்பாரு முளர். இவை போப்பு மார்க்க கிறிஸ்தவர்களாற் கூறப் படுவன. வானோர்வரம் - 4 - இலகு, சூக்குமம், அட்சயம், பிரகாசம். இவை கனமின்மை, கண்டிப்பின்மை, கேடின்மை, விளக்கம் எனவும் படும். வி விகாரம் - 4 - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற் சரியம். அன்றி இடும்பை அசூயையோ டெட்டெனவுமாம். விடை - 8 - சுட்டு, எதிர்மறை, உடன் படல், ஏவுதல், எதிர் வினாதல், உற்றது ரைத்தல், உறுவதுகூறல், இனமொழி. விட்டுணுவின்குரு - 4 - சிவபெரு மான், நந்திதேவர், உபமன்னிய முனிவர், வசிட்டர். விட்டுணுவின்மனைவிமார் - 2 - பூதேவி, சீதேவி. விதூடகக்கூத்துவகை - 2 - வேத்து, பொது. வித்தியாதத்துவம் - 7 - காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை. வித்தைகள் - 14 - வேதம் - 4, வேதாங் கம் - 4, பீமாஞ்சை, தருக்கம், புராணம், தருமநூல். விநாயகமூர்த்தவகை - 12 - சிந்தா மணி, விநாயகர், விக்கினராசர், வக்கிரதுண்டர், பாலசந்திரர், கசா னனர், மல்லாரெனவந்த மயூரே சர், தூமகேது, உடுண்டி விநாய கர், துண்டிராசர், மகோற்கடர், வல்லபைகணேசர். விநாயகர்சத்திகள் - 3 - சித்தி, புத்தி, வல்லபை. விரதம் - 3 - அனுவிரதம், குண விரதம், சிக்ஷhவிரதம். விரல்வகை - 5 - அங்குட்டம், தர்ச் சனி, பேடி, அநாமிகை, கனிட்டை. அவற்றுள் அங்குட்டம் பெரு விரல், தர்ச்சனி சுட்டுவிரல், பேடி நடுவிரல், இதுமத்திமை, அலி யெனவும் பெயர் பெறும். அநா மிகை யாழிவிரல், கனிட்டை சிறுவிரல். விரை - 5 - கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம். விருத்தி - 4 - சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி. விலக்குறுப்பு - 14 - பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல் வகை, வண்ணம், வரி, சேதம். வினா - 5 - அறியான்வினாவல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக்காட்டல். வினா - 6 - அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை, ஏவல். வினை - 2 - நல்வினை, தீவினை. வினோதக்கூத்துவகை - 4 - குரவை, கலி நடம், குடம், கரணம், நோக்கு, தோற்பாவை. வீ வீடுபேறு - 1 - முத்திப்பேறு. வீணையினரம்பு - 7 - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். வீரமுழவு - 4 - முரசு - நிசாளம், துடுமை, திமிலை. வீழ்ந்தாடல் - 5 - துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை. வெ வெற்றி - 8 - பகை நிரை கவர்தல், பகைவர் கவர்ந்த தன்னிரை மீட்டல், பகைமேற் செல்லல், வரும்பகை முன்னெதி ரூன்றல், தன்னரண் காத்தல், பகையரண் வளைத்தல், பொருதல், போர் வெல்லல். இவற்றிற்கு முறையே வெற்றி மாலையாவன; வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை. வே வேதப்பிரிவு - 2 - கன்ம காண்டம், ஞானகாண்டம். வேதம் - 4 - இருக்கு, தைத்திரியம், சாமம், அதர்வணம் - அன்றியு முபவேதம், 4 - ஆயுள்வேதம், அருத்த வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம். வேதாக்கினி - 3 - ஆகவனீயம், தக்கி ணாக்கினீயம், காருக பத்தியம். வேதாங்கம் - 4 - சிiக்ஷ, வியா கரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி. இவற்றுட் சிiக்ஷயாவது வேதத்தின் உச்சா ரண லக்கணத்தை யுணர்த்துவது. வியாகரணமாவது வேதத்தின்பத லக்கணத்தை விவரிப்பது. நிருத்த மாவது வேதத்தின் பதங்களுக்கு விவரணங் கூறுவது. சோதிட மாவது இலக்கினம், திதி, வாரம் நட்சத்திரம், யோகம், கரண முதலியவற்றால் வைதிக கருமங் களைச் செய்தற்குரிய காலத்தை யறிவிப்பது. கற்பமாவது ஆசுவ லாய நீயம். போதாய நீயம், ஆபத் தம்பம் முதலிய சூத்திரங்களி னிருந்து வைதிக கருமங்களைப் பிரயோகிக்கும் முறைமை களைக் கூறுவது. சந்தோவிசிதி யாவது வேதங்களின் உக்தை முதலிய சந்தோ பேதங்களுக்கு அக்கர சங்கியைக் கற்பிப்பது. வேத புருட னுக்குச் சந்தோ விசிதி பாதமும், கற்பங் கைகளும், நிருத் தங் காது களும், சிட்சை நாசியும், சோதிடங் கண்களும், வியாகரணம் முகமு மாம். வேளாண்மை மாந்தரியல்பு - 10 - ஆணைவழிநிற்றல், அழிந்தோரை நிறுத்தல், கைக்கட னாற்றல், சிசுவகத்துண்மை, ஒக்கல் போற் றல், ஓவா முயற்சி, மன்னிறை தருதல், ஒற்றுமைகோடல், விருந்து புறந்தருதல், திருந்தியவொழுக்கம். வேற்றுமை - 8 - எழுவாய் வேற்றுமை முதல் விளி வேற்றுமையீறாகக் கொள்க. வேற்றுமையுருபுகள் - 45 - ஐ, ஆல், ஆன், ஓடு, ஒடு, கொண்டு, உடன், கு, பொருட்டு, நிமித்தம், இன், இல், நின்று, இருந்து, அது, உடைய, கண், கால், தலை, இடம், திசை, வாய், வயின், முன், பின், சார், வலம், இடம், கீழ், மேல், அத்து, கடை, புடை, முதல், பாடு, அளை, தேம், உழை, வழி, உழி, உளி, உள், அகம், புரம், இல். வை வைசியகுல அடியார்கள் - 5 - அமர்நீதி நாயனார், இயற்பகை நாயனார் கலிக்கம்ப நாயனார், காரைக்கா லம்மையார், மூர்த்தி நாயனார் என்பவர்களாம். இவர் சரித்திரங்களைத் திருத்தொண்டர் புராணத்திற் காண்க. வைசியர் - 3 - தன வைசியர், பூ வைசியர், கோ வைசியர். வைணவாகமம் - 2 - பாஞ்ச ராத்திரம், வைகா நசம். வைதிகமதம் - 3 - மிசிர வைதிக மதம்; வைதிக மதம். பரம வைதிக மதம். வைதிககருமங்கள் - 12 - கருப் பாதானம், பும்சவனம், சீமந்தம், சனனம், நாமகரணம், உபநிட் கிராமணம், அன்னப் பிராசனம், சௌளம், உபநயனம் விரதம், சந்தியா வந்தனம், போசனவிதி. வைத்தியஞ் செய்விப்போன் முறை - 4 - பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய் நிலை யுரைத் தல், வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல். வைத்தியஞ் செய்வோன்வகை - 4 - நோய் பார்த்தற் கஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு அடைந்த கல்வி நுண்ணறிவுடைமை, பல காலுந்தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் பரிசுத்த மாதல். வைத்தியமருந்தின்வகை - 4 - பல பிணிகளுக்கு மேற்றல், சுவை வீரியம். விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதிலே பெறப் படுதல், சரீர சுபாவத்தோடு பொருந்தல், இங்ஙனமே அம் மருந்தினையியற்று வோனும் நோயாளியிடத்தே யன்புடமை யும், மனமொழிமெய்கள் பரிசுத்த மாதலும், சொல்லியபடியே செய்தல் வல்லமையும் அறிவுடை மையும் பயில லுற்றவனாதல் சால்பு. வைத்தியன் செய்யும்வகை - 16 - வியாதியையறிதல், அதன் காரண மறிதல், அது நீங்கு முபாயந் தேர்தல், பிணி காலங்களினள வுணர்தல், நோயாளியள வறிதல், சரீர சுபாவ மறிதல், பருவ நாடல், வேதனைகளினள வறிதல், சாத்திய மாய்தல், அசாத்திய மோர்தல், யாப்பிய முணர்தல், மருந்து செய் தல், பழைய மருத்துவர் முறை யிற்றவறாமை, உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல். வைரரத்தினக்குணம் - 5 - எட்டுப் பலகை, ஆறுகோடி, தாரை, சுத்தி, தாரசம். வைரரத்தினக்குற்றம் - 12 - சரைமலம்; கீற்று, சம்படி, பிளத் தல், துளை, கரிவிந்து, காகபாதம், மிருத்து, கோடி யில்லன, கோடி முரிந்தன, தாரை, மழங்கல் வைர ரத்தினப் பெருங் குற்றம் - 4 - காகபாதம், களங்கம், விந்து, கீற்று இவற்றின் பயன் களாவன - காக பாதங்கொல்லும், களங்கம் நிலந் தருகிளை கெடுக்கும்; விந்து மனத் திற் சந்தாபந்தரும்; கீற்றுவர வினை யேற்றவர் மாய்வர். வைரரத்தின வருணம் - 4 - அந்தணன், அரசன், வணிகன், சூத்திரன். வைரரத்தின வருணநிரம் - 4 - அந்தணன் வெள்ளை, அரசன் சிவப்பு, வைசியன் பச்சை, வேளா ளன் கருமை. வைரரத்தின வருணப்பயன் - 4 - வெள்ளை நிறமுடைய அந்தண சாதிமணி யணிந்தக்கால் பிறவி யேழும் மறையவராகப் பிறந்து வாழ்வர், சிவப்பு நிறமுடைய அரசசாதி மணியணிந்தக்கால் பூபாலர் தற்சூழப் பூமி புரப்பர், பச்சை நிறமுடைய வணிகசாதி மணியணிந்தக்கால் மணியும் பொன்னு மலிந்து தணிவற வடைந்து தரணியில் வாழ்வர் கருநிற முடைய வேளாள சாதி மணி யணிந்தக்கால் தொகை யில்லாத கனகமு நெல்லுமலிய மன்னிவாழ்வர். எண் தொகையகராதி 1 - ஒருமை, வீடுபேறு. 2 - அகக்கூத்து, அகக்கூத்துக் கை, அகப்பாட்டுத்தலைவன், அகலக் கவிவகை, அகவற்றளை, அசுவினி தேவர், அசை, அந்தணர் மார்க்கம், அபான வாயுவின் தொழில், அரங்கின் வாயில், அருள், அறத் தொடு நிலையின் வகை, அறம், அஃறிணைப்பால், ஆத்மஞானம், ஆகமப்பிரிவு, ஆகமபேதம், ஆகம வகை, ஆசாரியர் வகை, ஆடற் பேதம், ஆண்டருளு முறை, ஆதித்தன்றேவிமார், ஆயுத வகை, ஆய்தக்குறுக்கம், ஆய்தம், ஆரபடி யிலக்கணம், ஆலயவகை, ஆன்மா, இடம், இதிகாசம், இந்திரிய வகை, இயக்கர் நகரம் இயற்கைப் புணர்ச்சி, இரவுக்குறியிடையீட்டு வகை, இரப்பு, இரவி மனைவியர், இராமன் குமாரர், இராமோபதேச மந்திரம், இருத்தலின் பகுதி, இருமை, இலக்கணவகை, இலக் கியம், இலங்கைச் சிவதலம், இறைவ னிலக்கணம், உருத்திராக்க வளவு, உவா, உழிஞையிலக்கணம், எச்சம், எழுத்திலக்கணம், எழுத்து, ஏவல் வினை, ஏவல்வினை முற்று, ஐய னார் தேவிமார், ஐயனார் வாக னம், ஒழுக்கவகை, கண், கந்தம், கருங்கை, கற்பம், கற்பிதம், காப் பியவகை, காப்பிய வமைப்பு வகை, காருகத் தொழில், கால வகை, காவிரிப் பூம்பட்டினப் பொய்கை, கிரகத்துட்சமர், கிரகத் துட் சத்திரியர், கிரகத்துட் பிராம ணர், கிரகத்துள் வேளாளர், கிரகத் துள் வைசியர், கிருகத்தர் வகை, கூத்துவகை, கொடைப் பயன், சிவசின்னம், சுடர், சுப்பிர மணியர் தேவிமார், ஞானம் தரும் வகை, திணைவகை, தோற்றம், நியாயம், பாயிரம், புறத்திலக் கணம், பொருள், மரபு, மீமாஞ்சை, முத்திவகை, முத்துக்குணம், முத்துக்குற்றம், வசைக் கூத்தின் வகை, வழக்கு, வாரச்செய்யுள், விட்டுணுவின் மனைவியர், விதூ டகக் கூத்துவகை, வினை, வேதப் பிரிவு, வைணவாகமம். 3 - அகங்காரவகை, அகச்சமயம், அகச்சுவை, அகவற் பாவினம், அக்கினி, அக்கினிதேவர் வகை, அஞ்ஞான விரோதம், அடிய வரிலக்கணம், அடியவர் சாத னம், அணுவகை, அதிகாரர், அதி சயம், அதிபாதகவகை, அந்தணர்க் குரிய பொருள், அரங்கினெழினி, அரசர், அரசர் குலம், அரசர் கொடி, அரசர் மாலை, அருகன்குடை, அருகன்மதில், அவத்தை, அவதி, அவத்தைக் காரணவகை, அவத்தைக் காரிய வகை, அறத்து வகை, அறவகை, ஆகமப் பொரு ளிலக்கணம், ஆசார வகை, ஆசார விதம், ஆசிரியர், ஆடலின் கூறு பாடு, ஆதமார்க்கீக சாத்திரம், ஆதியான்மீக சாத்திரம், ஆளத்தி, ஆன்ம சரீ ரம், ஆன்மாக்களின் வகை, ஆன்மா வகை, இசை, இசைப் பாச்சாதி யோசை, இசை பிறக் கும் வகை, இடந்தலைப் பாட் டின் வகை, இடம், இதிகாசம், இயல்பு வழக்கு, இராசி வீதி, இலக்கினவகை, ஈச்சுரன் பிரபுத் துவ சாமார்த்திய குணம், ஈச்சு ரன் வகை, ஈடணம், உடம் பிற்றோன் றும் பாவம், உடல், உடல்வகை, உண்மைப்பொருள், உயிர்த்தீ, உலகம், ஊழ்வகை, எழினி, ஏடணை, ஏது, ஏதுப்போலி வகை, ஏறு, ஒழிவு, ஒற்றர், ஒற்றெழுத்துவகை, கடன், கடுகம், கரணம், கற்ப பேதம், காங்கூலக்கை, காதயர், காரணம், காலம், கிரகவகை, கிரகத்துட் பெண், கிரகவடிவம், கிரகத்துட் குறியர், கிரகத்துளவி, கிரகத் துளாண், கீதவுரு, குணம், குற்றம், கொடைவகை, சத்தி, சந்திரன், சரீரம், சாதியோசைகள், சாத்திரம், சிந்தையுட் பட்டோன விநயம், சிவன்வகை, சீவதேகம், சீவா வத்தை, சுடர், சூரிய சந்திரர் முதலியவீதி, தகுதி வழக்கு, தமிழ், தாளம், தீ, தொழில், நூல், பக்கு வர், பசாசக்கை, பரிச்சேதம்,பலை, பவளக்குற்றம், பழம், பாதகம், பாவ புண்ணிய வழக்கம், பாவனை, பாவினம், பிணி, புரம், பேதம், பொறி, போதப்பிரகாரம், மங்களா சரணை, மண்டலம், மலம், மாயை, முத்தி விக்கினம், மும்மை, முரசு, மெய்க்கூத்து, மெய்யெழுத்து வகை, மொழி, யானை, யுத்தி, வண்ணம், வாச்சியக்கூறுவகை, விநாயகன் சத்திகள், விரதம், வேதாக்கினி, வைசியர், வைதிக மதம், வைதிக கருமங்கள். 4 - அகவற்சீர், அகவற்பாவகை, அங்கதருமம், அங்கம், அசிதாக மோக பேதம், அணிவகுப்புவகை, அதிக துன்பங் கொடுப்பன, அத்தி யாசம், அநுபந்தலக்கணம், அந்தக் கரணம், அபாவம், அரங்கின்பூதர், அரங்கின்வாயில், அரண், அருகன் வென்ற வினை, அருகன் வென்ற வுபாதி, அருவ வடிவம், அரை, அவநுதி, அவிநய நிலம், அளவு, அறத்தொடு நிற்பார்க்கு வினாநிகழு மிடம், அறத்தொடு நிற்றற் குரியார், அனுபந்தம், ஆகமபாதம், ஆசான் சாதி, ஆசாரியராதற்குரிய குலம், ஆசாரியர், ஆச்சிரமம், ஆடவர் குணம், இடத்தையச் சொல், இயக்கம், இயற்சொல், இராகத் தகுதி, இராமர், இழிச் சொல், இறைவன் றேவிமார், ஈகைவகை, உகம், உண்டி, உதயணன் மந்திரி மார், உத்தமகுலத்தார், உத்தமத் தோற்பெருங் கருவி வகை, உபவேதம், உபாங்கம், உபாயம், உம்மைத் தொகைவகை, உயிர்த் தோற்றம், உரிச்சொல், உரை, உருத்திராக்கத்தின் பெயர்கள், உருத்திராக்க வருணம், உவமைத் தொகை, ஊறுபாடு, ஒடுக்கம், கணக்குவகை, கணிகையர் கண் ணோவுற்றோ னவிநயம், கதி, கரணம், கவி, காட்சியளவை வகை, காய சாதிப் புருடர், கிரகத் துள் நெடியர், கிரியைக்கை, கீத வுறுப்பு, கேந்திரம், கேள்வி, கோவாங்கு மணிநிறம், சங்கு, சதுரகம், சத்திநிபாதம், சந்தானா சாரியம், சந்தியாவந்தனம், சமய குரவர், சம்பந்தம், சரியை வகை, சாதி, சாதிப்பெரும்பண், சாந்திக் கூத்து, சாந்துவகை, சிவபூசை யியல்பு, சிவாகம பாதம், சொல், சொற்பாகுபாடு, ஞான சதுட்ட யம், ஞானவகை, தாளப் பகுதி, திருமாலாடல், திறவகை, தீக் கணத்தின் பெயர், தீக்கணப் பயன் துறவறத்தின்றுறை, தோற்றம், நீலமணிச்சாதி, நூற் பயன், பகை நரம்பு, படைவகுப்பு, பண், பதவி, பருவம், பா, பாலை வகை, புண் ணியத் தோற்றம், புண்ணியம், புருடார்த்தம், புலமையோர், பூ, பெண்வகை, பொருள், பொருள் வகை, பொன் வகை, மருந்து, மாணிக்கச்சாதி, மார்க்கம், மேட வீதி, யாழ்வகை, யாழ்வகை நரம்பு, யுகம், யோக வகை, யோகி னிவகை, வண்டு, வருணம், வருத் தனை, வானோர் வரம், விட்டு ணுவின் குரு, விருத்தி, வீரமுழவு, வேதம், வைர ரத்தினப் பெருங் குற்றம், வைர ரத்தின வருணம், வைரரத்தின நிறம், வைர ரத் தினப் பயன், வைத்தியன் மருந்து வகை. 5 - அகதத்துவம், அகிற்கூட்டு, அக்கினி, அங்கம், அடி, அடித் தொடை, அண்டம், அதிகாரிகள், அந்நுவயலக்கண, அபாவாலங் காரம், அபாவ வேறுபாடு, அரங் குறுப்பு, அரசர் குழு, அரசர்க் குறுதிச் சுற்றம், அலங்காரப்பா, அவத்தை, ஆகமவுற்பத்தித் தானம், ஆற்றுப்படை, இசைக் கருவி, இசைக்குழற்குரியன, இடந்தலைப் பாட்டின் விரி, இந்திரன்,றருக்கள், இரவிமைந்தர், இராமன் பூசித்த விடம், இலக்கணம், இலிங்கம், இல்லறத்தார் பொதுச்சீலம், இறைவன் சத்திகள், இறைவன் றொழில், ஈச்சுரசத்தி, ஈச்சுரன் முகம், உடற் குறைவு, உணவு, உபபுராண விலக்கணம், உயிர்ப் பொருள் களின் றொழிற் பண்பு, உரை யிலக்கணம், உருத்திரம், உருத் திராக்கவகை, உலோகம், எழுத்துத் தானம், ஐம்புல நுகர்ச்சி யினிறப் பன, ஒடுக்கம், ஓடவகை, கடல் படு திரவியம், கருமேந் திரியம், கருவுள் வாதனை, கலை வகை, கன்னிகை, காவியம், காற்றின் குணம், கிரகபாடை வகை, கிருத் தியம், குதிரைக் குரற்குணம், குதிரை நடை, குரவர், குற்றம், குற்றெழுத்து, கூந்தற்பால், கேள்வி, கௌடம், கோசம், கௌவியம், சடக்குணப் பண்பு, சத்தம், சத்தி, சந்தி, சபை, சயனம், சிவதத்துவம், சூதகம், தந்தையர், தரு, தாயர், தாளம், திராவிடம், திருமாலாயுதம், துரககதி, தூபம், தேவர், தொழில், நகர்படு திரவியம், பஞ்சபரமேட்டி கள், பஞ்சமூலம், பசு, பாதகம், பாலைப் பண்ணின்றிரம், பாலை யாழின்றிரம், பால், புராண லக்கணம், புலன், பூதம், பொதுப் பாயிரம், பொறி, மத்திம தான வகை, மலைபடு திரவியம், மன்மதன் கணை, மாயை, யாகம், வங்கியத் தின் கூறுபாடு, வசனாதி, வண்ணம், வாசம், விரல்வகை, விரை, வினா, வீழ்ந்தாடல், வைசியகுல அடி யார்கள், வைர ரத்தினக்குணம். 6 - அகப்பகை, அகப்பாட்டுச் சமயம், அகப்புறச் சமயம், அக வலிறுவன, அகிற்கூட்டு, அங்கம், அசங்கதவிரி, அந்தணர் தொழில், அத்துவா, அத்தியாச்சிரமி நாமம், அரசர்க்குத்தானை, அரசர் தொழில், அரசவருண எழுத்துக் கள், அரசியல், அரசியல் வகை, அலிக்கை, ஆசமனீய திரவியங் கள், ஆட்டின்வகை, ஆணகை, ஆதாரதலம், ஆதார தேவதை கள், ஆதார தோற்றம், ஆதாரம், ஆன்மவறிவு, இசை நிறையசைச் சொல், இராமாயண வகை, இலக் கியப் பொருட்டொடர் நிலைச் செய்யுள், இலங்கைச் சுப்பிர மணிய தலம், இழிப்பினவி நயத் தன்மை, ஈச்சுரன் முக்கிய குணம், உட்சமயம், உட்பகை, உதயண காவிய காண்டம், உயிர்ப் பிறப்பு, உருத்திராக்கந் தரிக்க லாகாத காலங்கள், உவர்ப்பு, ஐந்தாம் வேற்றுமை யுருபுகள், ஐயமுற்றோ னவிநயக் குணம், ஐயவவிநயம், கந்த புராண சங்கிதை, கரும பூமிக்குரிமை, கருவுளமைப்பு, கன்மமல காரியம், காடுபடு திரவியம், காட்சி, காலம், சக்கிர வர்திகள், சமயம், சாத்திரம், சுப்பி ரமணியர் சட்குணம், சுப்பிர மணியர் திரு முகம், சுப்பிரமணி யர் பிரதான தலம், சுவை, சூத முனிவர் மாணாக்கர், தானை, தொழில், பருவகாலம், பவளக் குணம், பா, புறச்சமயம், பொ ழுது, போக பூமி, யோகாசனம், ருது, வண்ணக் கூறுபாடு, விகா ரம், வினா, வேதாங்கம். 7 - அகத்திணை, அகப்புறத் தத்து வம், அணிவகுப்புறுப்பு, அதம தானவகை, அரசர்நிலை, ஆர வகை, இசை, இசைக்குரிய சுவை, இசைக்குரிய தேவர், இசைக் குரிய மணம், இசை மாத்திரை கள், இசையெழுத்து, இசை யோசை, இடைவள்ளல், இந்திரன்மேகம், இலிங்கவகை, ஈசுவரி பேதம், ஈதி, உலோகம், ஐந்தாம் வேற்றுமைப் பொருள் கோள், கடல், கடை வள்ளல், கடைப்படு தானம், காமவவிநயக் குணம், கீழுலகம், குதிரைச் சுழி, குதிரை நிறம், குதிரையின் பிறப் பிடம், கொடை, சந்தசு, சமுத்திரம், சிரஞ் சீவியர், சீதமுற்றோன விநயம், சுரம், சூரியன்றேர்க் குதிரைகள், ஞஞ்ஞை யுற்றோனவி நயம், தராபதி நிலை, தலை வள்ளல், தாது, தாளப்பகுதி, தீவு, தூக்கு, பருவம், பாதகம், பாலை, பிறப்பு, புண்ணியம், புரி, பெரியோரியல்பு, பெருங்கல விலக்கணம், மதம், மண்டலம், மருத்துக்கள், மலை, மறத்துறை வகை, மாதர் கள், மாயைக்குணம், முத்தி நக ரம், முழவு, முனிவர், மேகம், மேலுலகம், வங்கியம், பண், வாரம், வித்தியா தத்துவம், வீணையி னரம்பு. 8 - அங்கதருமம், அங்கயோகம், அம்பர சித்திகள், அரசர்க்குத் துனைவர், அருகன் குணம், அரு கன் சிறப்பு, அருக்கிய திரவியம், அளவை, அறத்துறப்பு, அஃறிணை வினைமுற்று, ஆக மங்களின் சார்புநூல், ஆகம மார்க்கம், ஆணவமலகாரியம், ஆதித்தன் பிள்ளைகள், ஆனந்தம், இசைக் காரணம், இசைக்கிரியை, இசைக் குரியவகை, இராசதகுண வகை, இராசதகுண விருத்தி, இல்லற நிட்டாபரர்சீலம், ஈசன் வீர நிகழ்ந்த இடம், ஈசன் வீரம், ஈச்சுரன் குணம், உடற்குறை, உழிஞைத் துறை, ஊறு, எச்சம், ஐசுவரியம், கணம், கணிதம், கண்ணன் மனைவியர், களித்தோ னவிநயக் குணம், குணம், குதிரை நிறக் குற்றம், குருவிந்த மாணிக்க நிறம், குறிக்கோள், குற்றம், கூலம், சாரணர், சித்தி, சுபம், சைவாகமச் சார்புநூல், தயாவிருத்தி, தாமத குணசித்தி, திக்கு, திக்குநாகம், திக்குப் பாலகர், திக்கு யானைகள், தொகை நிலை, புறப்பொருள் வகை, பெண்கை, பெருந்தானம், பொருள் கோள், பொருளா ராய்ச்சி வகை, போகம், மங்கலம், மணம், மரகதக்குணம், மரகதக் குற்றம், மன்னவர் சகாயர், மூர்த் தம், மூர்த்தவதி தேவதை, மூர்த்த வதிதேவதைகளின் மனைவியர், மூர்த்த வதிதேவதைகளின் மைந் தர், மெய்ப்பரிசம், வசுக்கள், வணிகர் குணம், வரி, விடை, வெற்றி. 9 - அடியவருள் தொகையார், அதிசயாலங்கார வகை, அரங்கிற் காகாநிலம், அறத்தொடு நிற்குங் காலம், ஆண்கை, இகழ்ச்சிக் குறிப்புச்சொல், இசையிலக்கணம், இரதம், இரத்தினம், இரவுக் குறிவகை, இராசியுச்சக் கோள், ஈசன் பேதம், உடல்வர்த் தனை, உலோகம், கண்டம், கதிர்காமக் கடவு டிருநாமங்கள், கிரகசமித்து, கிரகதானியம், கிரக புட்பங்கள், கிரகரத்தினம், கிரகலோகம், கிரகவாணம், கிரகாங்கங்கள், கிரகாசனம், கிரகம், குதிரை வழு விலக்கணம், சித்தர் சேனாவெள்ள வகை, தாமத குணம், தாமதகுண விருத்தி, தாரணை, தாளம், தானியம், புண்ணியம், பொருளின் பொதுத்தொழிற் பண்பு, மணி, வர்ஷம், வாயில். 10 - அகத்திலக்கணம், அங்கம், அடுக்கு நிலைப்பொருள், அதிசய மொழி, அப்ப வருக்கம், அரசர்க் குரியன, அவத்தைக்காரியவிரி, அழகு, அன்மொழித் தொகைக் கூறுபாடு, ஆகமசிவபேதம், ஆண் பாற்பிள்ளைக் கவிப்பருவம், இந்திரியங்கள், இறையனாரகப் பொருளினுரையை முறை கூறின வர், இயமம், ஈழமண்டலப் பிரிவு, உருத்திராக் கந்தரிக்குந் தானங்கள், குதிரைக் சுழியளவு, குற்றம், கோடல்வகை, கௌட நெறி, சத்துவம், சாதி, சாதுரங்க மாணிக்கநிறம், சிற்பத்தொழிற் குறுப்பு, சேனைத்தொகை,சொல் வகை, தாளப்பிரமாணம், திக்கு, திருமாலவதாரம், தீக்குணம், துவர், புராணலக்கணம், புறத் திலக்கணம், மகளிரான் மலர் மரம், மூலம், யோகம், வாயு, வேளாண்மை மாந்தரியல்பு. 11 - அமுதவெழுத்துக்கள், அவசிய கருமஞ் செய்யலாகாவிடங்கள், அஃறிணைப்பெயர், இடைச் சொல், உருத்திராக்கந் தரிக்குங் காலங்கள், கரணம், காவிரிப் பூம்பட்டினப் பெயர்கள், தேவ ராடல், பாணி விகற்பம், வானோர் கணம். 12 - அகத்தியர் மாணாக்கர், அங்காகமத்தின்பகுப்பு, அஞ்சு மானுபபேதம், ஆண்பா லெழுத்து, ஆழ்வார்கள், ஆளத்திக்கு வரு மெழுத்து, இராசி, உயிர் வேதனை, கணாக்கிரகன்னியர், கதிர் காமத லத்திருநாமங்கள், கொடுந்தமிழ் நாடு, சுத்தத்திற் குரிய எழுத்து, சூரியர், திறம், மாதம், விநாயக மூர்த்தவகை, வைராத்தினக் குற்றம், வைதிக கருமங்கள். 13 - காஞ்சி புரியின் றிருநாமங்கள், தமிழ்நாடு, பெரும்பண்ணின் வகை. 14 - உரைப்பொது விலக்கணம், உலகம், கணாதிபதிமூர்த்தம், சித் தாந்த சாத்திரம், தயாவிருத்தி, தேவேந்திரர் முகம், வடுகிற்குரிய கால்கள், வழு, வாசவகை, வித்தை கள், விலக்குறுப்பு. 15 - அரிபிறப்பு, அறத்தொடு நிற்றல் விரி, இணைக்கை, இரட் டக்கை, இல்லறத்தார் சீலம், கிரக காரகம், குதிரைப் பெயர் கள், கூத்தின் விகற்பம், திதி, திருமால வதாரம். 16 - அங்கக்கிரியை, இந்திரற் குரியன், உபசாரம், கூலம், உருத் திராக்கமணி முகம், சாத்துவிக குணவிருத்தி, சைவம், பால், பேறு, மருதயாழ்த்திறன் வகை, வைத்தியன் செய்யும் வகை, உருவப்பிரமர். 17 - கூறை, விகற்பம். 18 - ஆகமவுருத்திர பேதம், இரவுக் குறியிடையீட்டுவிரி, உடற் குற்றம், உவமைப்போலி, அதிக துக்கம், அந்தண வருண வெழுத் துக்கள், உடற்குற்றம், உப புரா ணம், கணம், தருமநூல், பாடை நிலம், புராணம், மிருதி, யாகம், யாக்கைக் குற்றம். 19 - இசைப்பா. 20 - அபிடேக திரவியங்கள், உருவப் பிரமலோகம், முத்துச் சனிக்குமிடம். 21 - அகக்காழிற்குரியன, அரச சின்னம், இயற்கைப் புணர்ச்சி விரி, ஏதுப்போலி விரி, பாலை யாழ்த்திறன் வகை, மங்கலம், யாகம், வள்ளல். 22 - எச்சவிரி, மங்கலச்சொல், கமகபேதம். 23 - கால்வகை. 24 - அகத்திணை மெய்ப்பாடு, ஆன்மதத்துவம், அதிபாதகவிரி, அவிநயம், தேசிக்குரியகால். 25 - ஈச்சுரன் மூர்த்தம், தானவகை, பூதகாரியம், பேடியிலக்கணம், வாதனை. 26 - உத்தியோகத்தலைவர், சந்த பேதம், அத்திராதி முத்திரை. 27 - யோகம், கணேசுரர். 28 - அகநாடகவுரு, சிவாகமம். 29 - இடைச்சொற் பொருள்கோள். 30 - ஆயுதத்தொகை, மாயையிற் றோன்றுவன, அணிவியூகவிரி. 31 - தோற்கருவி, முனிவர், ஏகாதசி வகை. 32 - அறம், இராகம், உத்தி, உபநிட தம், உயிர்ப் பொருள் களின் குணப் பண்பு, ஓமாலிகை, குறிஞ் சியாழ்த்திறன், சிற்பநூல் வடிவம். 33 - ஒற்றைக்கை, தேவர்கை, இணையாவினைக்கை. 34 - சமயவகை. 35 - அலங்காரம், அரிட்ட தேவ தைகள், அறத்துப்பால், ஆடல் வகை, நீர்நிலை வகை. 36 - எண்ணலளவை, கோடிவகை. 37 - இரவுக்குறிவிரி. 38 - காப்பியலக்கணம், ஆசன பேதம். 42 - சந்திரன், சத்திகள். 44 - இடப்பெயர், இடப்பொரு ளிடைச் சொற்கள். 45 - வேற்றுமையுருபுகள். 47 - இலக்கணங்கள். 48 - கை. 52 - உவமையுருபு. 53 - தீர்த்தவகை. 54 - இராசர். 55 - ஒலக்கலக்கணம். 59 - தேயம். 10 - வருடம். 42 - ஆகமங்களிற் றோன்றினவர். 43 - அடியவர். 63 - அடியவர். 64 - கலைஞானம், போககரணம். 80 - உருத்திராக்க தாரணபிரீதித் தேவதைகள். 81 - அகலக்கவி. 83 - பட்டினத்திற் குரியன. 91 - சாதி. 83 - வரிக்கூத்து. 96 - தத்துவம், பிரபந்தம். 100 - அலங்காரம். 108 - உபநிடதம், உருத்திரர். 118 - இலக்கியங்கள். 141 - இருடியர். 247 - ஆகம வுபபேதம். 1008 - சிவதலங்கள். நா ன் கா வ து தொடையகராதி குறிற்கீழெதுகை தெய்வ வணக்கம் பார்முத லுலகெலாம் பணிந்தேத்தும் பரமனைப் புகழ்ந்தடி தொடையாகச் சார்முத லெழுத்தொழித் தொருங்கொன்றித் தருமருந் தொடைத்தலை யாகெதுகை நேர்முத லாகுறிற் பற்றியபின் னெடிற்றொடர் தொடைப்பதந் தொடுத்திணக்கிச் சீர்முத லொன்றொழி சிறப்பெதுகை செப்புந் தொடையக ராதியென்றே. அ அ - ஓரெழுத்து, அஃறிணைப் பன்மைப் பெயர் விகுதி, வினை முற்று விகுதி, சுட்டிடைச்சொல், அன்மை, இன்மை, மறுதலை, குறைவு, சம்மதி, சுட்டு, தடை, பிறிது, வியப்பு என்னும் நஞ்ஞிப் பொருள் காட்டுவது, ஆறாம் வேற்றுமை யுருப்பிடைச்சொல், சாரியையிடைச் சொல், பிரமன், விஷ்ணு, சுக்கு, திப்பிலி. க - ஆகாயம், பிரமன், தலை, ஓரெழுத்து, அரசன், ஆன்மா, உடல், கந்தருவ சாதி, காமன், காற்று, சூரியன், செல்வன், திருமால், தீ, தொனி, நமன், மயில், மணம், விநாயகன், ஒன்று என்னும் எண்ணைக்குறிக்கு மெழுத்து. ங - ஓரெழுத்து, குருணிக்குறி. ச - ஓரெழுத்து, கூடிய (உதாரணம் - சோமாக்கந்தர், சோமன்). த - ஓரெழுத்து, குபேரன், பிரமன். நு - இன்மை, அன்மை, எதிர்மறை : இவற்றிற்கு முறையே உதாரணங் களாவன : இன்மைப் பொருளிற்கு - அரூபம். அன்மைப் பொருளிற்கு - அத்துவிதம். எதிர்மறைப் பொரு ளிற்கு - அதன்மம். ப - இருபதிலோர் பாகத்தைக் காட்டும் ஓர் கீழ்வாய் இலக்கக் குறி, ஓரெழுத்து, காற்று, சாபம், பெருங்காற்று. ம - இயமன் இறந்தகால இடை நிலை (உ.ம்) என்மர், ஓரெழுத்து, ஒருமந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுணு. ய - இறந்தகால இடைநிலை (உ.ம்) போயது. இ - ஓரெழுத்து, ஆண்பாற்பெயர் விகுதி (உ-ம் : பிறைசூடி, மானேந்தி) பெண்பாற் பெயர் விகுதி (உ-ம் : கண்ணி, தோளி), முன்னிலை யொருமைவினை முற்று விகுதி, ஏவலொருமை வினைமுற்று விகுதி, சுட்டிடைச் சொல், செய் தென்னும் வினை யெச்ச விகுதி, சாந்தம், அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி. சி -இகழ்ச்சிக்குறிப்பு, இலக்குமி, அடக்கம், பெண், விடம், விந்து. நி - ஓரெழுத்து, செலுத்த லென்னும் பொருட்டு, நீயென்னும் முன்னி லைப் பெயர், இன்மையன்மை எதிர்மறைப் பொருட்டு, (உ-ம் : நிமலன் மற்றைய வந்தவழிக் காண்க). வி - ஓரெழுத்து, புட்பம், பறவை, நஞ்ஞீ தற்புருட சமாசபதம் (உ-ம் : விமலன் முதலியவற்றிற் காண்க.). உ - ஓரெழுத்து, சுட்டு, (உ.ம் உக் கொற்றன், உவன்), இரண்டென் னும் எண் குறி, உருக்கம், கட்டளை, கோபம், சம்மதியிவற்றைக் காட்டுமோருப சருக்கம், தன்மை யொருமை வினைவிகுதி, வினை யெச்ச விகுதி, சிவன், பிரமன். கு - நான்கனுருபு, (உ.ம், அறத்திற்குப் பொருள்) பூமி. சு - நன்மை, (உதாரணம் : சுபுத்தி) சொந்தம் (உதாரணம் - சுதேசம்) அதட்டு மோசை. து - ஓரெழுத்து, துவ்வென்னேவல், அசைத்தல், அனுபவம், இருதிணை முப்பாலொருமைத் தன்மை விகுதி, எரித்தல், கெடுத்தல், கசத்தல். ஒ - ஓரெழுத்து, ஒழிதல், ஒவ்வுதல். நொ - ஓரெழுத்து, துன்பப்படு. இவ் வோரெழுத்தொரு மொழிகள் வடமொழிப் பொருணோக்கிப் பெரும்பாலுங் கொள்ளப்பட் டன. க அகச்சுவை - உட்சுவை, நாடக வுறுப்பினொன்று. இகச்சுவை - இப்பூமியின்பம். ககச்சுவை - விண்ணுலகபோகம். தகச்சுவை - தகுயான இரசம். மகச்சுவை - வேள்விப்பயன். அகடம் - பொல்லாங்கு. அகடம் - பாய்வித்தல். சகடம் - உரோகணி, ஊர்க்குருவி, பண்டி, வட்டில். பகடம் - வெகுட்டல், பரிகாசம். விகடம் - வேறுபாடு, வேடிக்கை. அகடு - உள், நடு, பொல்லாங்கு, வயிறு, மேடு, சீர். சகடு - உரோகணி, சந்தேகம், பண்டி, ஒரு மிக்க. தகடு - அடர்பு, இலை, ஐம்மை வடிவு, கம்மாற வெற்றிலை, மண்படை. பகடு - ஆண்யானை, இடபம், எருமைக் கடா, ஓடம், தெப்பம், பெருமை, பொதியெருது, யானை. முகடு - சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம், மலையுச்சி, மலை, உச்சி. அகட்டல் - நிமிட்டல். நகட்டல் - திருகல், நகரச்செய்தல். பகட்டல் - மயக்கல், ஆடம்பரஞ் செய்தல், வெளிவேஷங் காட்டுதல், தந்திரம் பண்ணுதல். புகட்டல் - செலுத்துதல், போதித்தல், உட்புகுத்தல். அகண்டம் - எல்லாம், கண்டிக்கப் படாதது, மண்விளக்கு. சிகண்டம் - மயிற்றோகை, உச்சிச் சிகை. நிகண்டம் - உடை. விகண்டம் - வேறுபாடு, பிரிவு. அகண்டி - ஓர் வாச்சியம். சிகண்டி - ஆமணக்கு, ஓர் பண், பேடு, மயில். சகண்டை - முரசு, வாத்தியம். பகண்டை - சிவல், ஒருவாச்சியம். இகத்தல் - கடத்தல், போதல், பழித் தல், மீறுதல், விட்டுவிடுதல். உகத்தல் - உயர்தல், எழும்பல், விரும்பல், சந்தோஷித்தல். முகத்தல் - மொள்ளல், மணத்தல். அகநிலை - ஊர், உண்ணிலைமை, கடவுள். உகநிலை - இரண்டினிற்றல், தலைப் பாட்டு நிலை. சகநிலை - கூடியநிலை, யோக மார்க்கம். சுகநிலை - முத்தி. தகநிலை - தகுதியான நிலைமை. நகநிலை - மலையிடம், நகத்தினிடம். பகநிலை - யானைப் படுக்கையிடம், எருமைக் கொட்டில். மகநிலை - யாகசாலை, இந்திரபதவி. முகநிலை - முகத்திற்படுந்தரவு (சிலப் பதிகாரம் - கடலாடுகாதை). அகப்பா - மதில், மதிலுண்மேடை (பிங்கலந்தை), அகழி. குகப்பா - குயிற்பத்து, குகையிடம். அகமனம் - நடவாமை. சகமனம் - ஒற்றுமை. அகம் - இடம், உள், ஏழனுருபு (உ-ம். பல்லாரகத்து) பள்ளம், பாவம், பூமி. மரப்பொது, மனம், மனை, உடல், உயிர், விண். இகம் - இப்பிறப்பு, இம்மை, இவ் விடம். உகம் - நாள், பாம்பு, பூமி, முடிவு, இரண்டு, தலைப்பாட்டு. ககம் - அம்பு, பறவை, மணித்தக் காளி. குகம் - மலைக்குகை, மறைவு, நுட்பம், அங்கீகரித்தல். சகம் - ஒர்தேயம், சட்டம், பூமி, மார்கழி மாதம், வெள்ளாடு, பாம்புச்சட்டை. சுகம் - இன்பம், களி, தருமம், நன்மை, முலைக்கண், சுபம், சீக்கி ரம், நீர், முத்தி, வருத்த மின்மை. செகம் - பூமி. தகம் - உட்டணம், எரித்தல், நித் திரை, நீர், வேகம். ஞகம் - நகம். நகம் - உகிர், பூமி, மரம், மலை, பங்கு, நாகணம். நிகம் - ஒளி. நுகம் - சகடத்தடி, நுகத்தடி. பகம் - அவாவின்மை, ஈச்சுரத் தன்மை, சீர்த்தி, செல்வம், ஞானம், வீரியமாகியவறுகுணம், கொக்கு, பெண்குறி, அழகு, மகத்துவம், முத்தி. பிகம் - குயில். மகம் - ஓர்நாள், யாகம், இருபத் தொன்று, இன்பம், விழவு. முகம் - இடம், கழிமுகம், முகம். யுகம் - இருபொருள், ஓர் காலத் தளவு, நுகத்தடி, பூமி. விகம் - வழியீற்றுப் பசும்பால். அகரம் - பார்ப்பனச்சேரி, மருத நிலத்தூர், முதலெழுத்து, வீடு, இரசம், இறையின்மை. இகரம் - ஓரெழுத்து, சந்தம். ஓகரம் - ஓரெழுத்து, மயில். சிகரம் - உயர்ச்சி, ஓரெழுத்து, தலை, திரை, மலை, மலையுச்சி, வட்டில், வீடு, இலவங்கம், கவரிமா, சுக்கு, நீர்த்துளி, மயிர் முடி. தகரம் - ஈயம், ஓரெழுத்து, தகரம், மயிர்ச் சாந்து, வாசனைப் பண்டம். திகரம் - இளைப்பு, ஓரெழுத்து, அவா, ஈளை, சோர்வு. நகரம் - ஓரெழுத்து, மருதநிலத்தூர், மருதப்பதி, இராசமனை, பட்டி னம். நிகரம் - ஓரெழுத்து, கூட்டம், கொடை, திரவியம், மொத்தம். பகரம் - அலங்காரம், ஓரெழுத்து, சிறப்பு, மினுக்கம். மகரம் - ஒரு நிதானம், ஓரிராசி, ஓரெழுத்து, சுறாமீன், பூந்தாது, முதலை, குபேரன், நவநிதிகளி லொன்று, காமன் கொடி. விகரம் - இடுப்பின்மை, நோய், பிரிவு. சிகரி - மலை, மலைமுடி, கருநாரை, எலி, கோபுரம், புல்லுருவி. நகரி - நகரம், மலை, ஓரூர், பட்டினம். முகரி - வீட்டு முன் பத்தி, மூக்கினடி, மூரி, தாழை. அகரு - அகில். தகரு - உடைந்து போவென்னு மேவல், புன்முருக்கு. பகரு - சொல்லென்னேவல். முகரு - மணவென்னேவல். குகர் - சுப்பிரமணியக் கடவுள், மலைக் குகையில் வசிப்பவர், இரகசியப் பொருளறிந்தவர், இருடிகள் இருதயத்தில் வசிப்பவர். சுகர் - ஓர் இருடி, இன்பமனுபவிப் போர். தகர் - சுறா, செம்மறி யாட்டுக் கடா, தகரென்னேவல், துருவாட்டேறு, பராகம், பூமி, மேடவிராசி, யானையினாண். நகர் - நகரென்னேவல், மருத நிலத் தூர் வீடு, நிகர், உவமை, ஒளி, நிகரென்னேவல். நுகர் - உண்ணென்னேவல். பகர் - சொல்லென்னேவல். புகர் - கபில நிறம், குற்றம், சுக்கிரன், நிறம். முகர் - மணந்தறி யென்னேவல். தகர்தல் - நிறைதல், உடைதல், நொறுங்கல். நகர்தல் - ஊர்ந்து செல்லல். நுகர்தல் - அனுபவித்தல், புசித்தல், விழுங்கல். புகர்தல் - சொல்லல், விற்றல். அகலம் - மார்பு, விரிவு. சகலம் - எல்லாம். நிகலம் - தோண்மேல். விகலம் - குறைபாடு, கலக்கம், விகலை. அகலல் - பிரிதல், வியங்கோண்முற்று. இகலல் - பொருதல், வியங்கோண் முற்று. புகலல் - சொல்லல், வியங்கோண் முற்று. அகல் - அல்குல், தகழி, சட்டி, விசாலித்தல், நீங்கென்னுமேவல். இகல் - பகை, பொருதென் னேவல், போர், வலி. சகல் - கொதுகு. சிகல் - குறைதல், கெடுதல். தொகல் - கூடல், சுருங்கல், வியங் கோண்முற்று. நகல் - நகுதல், சிரித்தல், இணைப் பிரதி. பகல் - ஒளி, சூரியன், நடுநாள், நுகத் திலாணி, பகுத்தல், பிரிதல், பிளத் தல், மத்தியானம், மூர்த்தம், தினம், நடு. புகல் - உடல், குதிர், சொல், தஞ்சம், புகலென்னேவல், வியங்கோண் முற்று, வெற்றி. மிகல் - மிகுதி, வியங்கோண்முற்று. அகவை - உட்பட்ட பிராயம், உப்பொருள், வயசு. சுகவை - சுகதுண்டக்கை. முகவை - பொலிபாடும் பாட்டு. அகழி - நீர்க்கிடங்கு, ஓரெண், விளக்கு. சிகழி - கோத்தமாலை, தொடுத்த மாலை, மயிர்முடி. தகழி - தீபத்தகழி. பகழி - அம்பு. அகழுதல் - தோண்டுதல். இகழுதல் - நிந்தித்தல், மறத்தல். திகழுதல் - விளங்கல், பிரகாசித்தல். நிகழுதல் - நடத்தல், சம்பவித்தல், ஒளிசெய்தல். புகழுதல் - துதித்தல். அகழ் - அகழி, புகழென்னேவல். இகழ் - நிந்தனை, இருவு, இழியென் னேவல். திகழ் - ஒளி, திகழென்னேவல். புகழ் - கீர்த்தி, புகழென்னேவல். இகழ்ச்சி - ஈனம், நிந்தை, மறதி. திகழ்ச்சி - விளக்கம். நிகழ்ச்சி - நிகழ்தல். புகழ்ச்சி - துதி. அகழ்தல் - தோண்டல். இகழ்தல் - நிந்தித்தல். திகழ்தல் - விளங்கல். நிகழ்தல் - ஒளி செய்தல், நடத்தல். புகழ்தல் - துதித்தல். அகளம் - தாரு, மிடா, அருவுருவம். சகளம் - வடிவு. நிகளம் - கால்விலங்கு, சங்கிலி, யானைச் சங்கிலி. யுகளம் - இரண்டு. அகனம் - கனமில்லது. ககனம் - ஆகாயம், காடு, படை. சகனம் - ஆசனம், தொடையினுட் பக்கம். தகனம் - சுடல், எரித்தல். அகாதம் - நீந்துபுனல், வஞ்சகம், ஆழம், தொளை, பள்ளம். நிகாதம் - வஞ்சனை, சொல். விகாதம் - விரோதம், அழிவு, எதிர், தடை. அகாதி - வரவழைப்போன். உகாதி - உகத்தின் முதல், அருகன், உருத்திர பகவான், யுகாதி. யுகாதி - அருகன், கடவுள், வருஷா ரம்பம். அகாரி - கடவுள். சகாரி - ஓர் வள்ளல். முகாரி - ஓரிராகம். விகாரி - ஓராண்டு. உகார் - சொரியார், உந்தமேகம், நகார் - சிரிக்கார், நிந்திக்க மாட்டார். புகார் - போகார், காவிரிப்பூம் பட்டினம், பிரசித்தம், கபிலம், கழிமுகம், குற்றம் சுமத்தல். மகார் - பிள்ளைகள். அகி - இரும்பு, பாம்பு. சகி - சகியென்னேவல், தோழி. சிகி - கேது, தீ, மயில். சுகி - காசிபன் மனைவி, சுகபோகி, சுசியென்னேவல், சுகாநுபவம், சௌக்கியம். தகி - சுடுவென்னேவல், நெருப்பு. நகி - மலையிலிருப்பது, மலைப் பாம்பு. மகி - பூமி. முகி - முகத்தல், முடித்தல், இவ் விரண்டென்னேவல், நிலாமுகிப் புள், பாயிர நூல். வகி - தரித்துக் கொள். உகிர் - நகம். சுகிர் - உட்டுளை, சுகிரென்னேவல். துகிர் - பவளம். பகிர் - பகிரென்னேவல், பகுப்பு. வகிர் - வகிரென்னேவல், வழி, வார். அகில் - ஓர் மரம். செகில் - தோண்மேல். திகில் - திடுக்காட்டம், பயம். துகில் - சீலை, விருதுக்கொடி. நகில் - முலை. முகில் - மேகம். மகிழ் - ஓர் மரம், மகிழென்னேவல். முகிழ் - அரும்பு, கண்ணி, முகிழென் னேவல். அகுடம் - கடுகுரோகணி. சகுடம் - சேம்பு. நகுடம் - மூக்கு. மகுடம் - முடி, முடியுறுப்பு. முகுடம் - முடி. அகுதி - ஆகுதி, அதிதி. தகுதி - அறிவு, உரிமை, ஒழுக்கம், குணம், பெருமை, வினைமுற்று. தொகுதி - கூட்டம், திரட்சி, வினை முற்று. பகுதி - இயல்பு, குடியிறை, பகுத்தல், பகுபதத்தோருறுப்பு, படை. பகுதி - நுழைவாயில், வினைமுற்று. மிகுதி - அனேகம், திரட்சி, பூரிப்பு, பொலிவு, வினைமுற்று. விகுதி - பகுபத வுறுப்பினுளொன்று, வேறுபடுத்தல். இகுத்தல் - அழைத்தல், இரித்தல், ஈதல், எரிதல், குழைத்தல், கொல் லல், தாழ்த்தல், துடைத்தல், மறித் தல், வருந்துவித்தல், வீழ்த்தல். உகுத்தல் - சிந்தல், சொரிதல். சகுத்தல் - அழித்தல், குறைத்தல். செகுத்தல் - அழித்தல். தொகுத்தல் - கூட்டல். பகுத்தல் - ஈதல், தறித்தல், பங்கிடல், வெட்டல். புகுத்தல் - புகவிடல். வகுத்தல் - வகைப்படுத்தல். தொகுப்பு - தொகுத்தல். பகுப்பு - பிரதி, பங்காக்குதல், பிரிவு செய்தல். வகுப்பு - அணிவகுப்பு, வரிசை, இனம், கூட்டம், பிரிவு. தகுளம் - மகளிர் விளையாட்டு. தெகுளம் - நிறைதல், பெருகுதல். பகுளம் - கிருட்டிணபக்கம். வகுளம் - மகிழ மரம். இகுளை - தோழி, சுற்றம். விகுளை - இலைமிகுத்த மரம். அகை - அடி யென்னேவல், அறுத் தல், எழுச்சி, ஒடித்தல், செலுத்தல், முரித்தல், வருத்தல், இவற்றி னேவல். உகை - பானை. குகை - மலைமுழை, முனிவர் வாசம், சமாதியறை, கெபி. சிகை - குடுமி, சுவாலை, மயிர்முடி, உச்சி, முடி. தகை - அழகு, அன்பு, கவசம், குணம், தகை யென்னேவல், தளர்வு, பெருமை, முகடு, துண்டு, மேன்மை. திகை - திகையென்னேவல், திசை, தேமல். தொகை - கூட்டம், சுருக்கம், மொத்தம். நகை - ஆபரணம், இகழ்ச்சி, இன் பம், எயிறு, ஒளி, களிப்பு, சிரிப்பு, நகையென்னேவல், பல், பூவரும்பு, மலர்ச்சி. பகை - பகை, பகையென்னேவல், அரி, ஆரலம், இகல், இரிபு, உறழ்வு, ஊழ், சத்துருத்துவம், தெவ், முரண், வெறுப்பு. புகை - தூமம், தென்கீழ்த்திசைப் பாலன் குறி, புகையென்னேவல், யோசனை தூரம், தூபம், ஆவி, பனிப்படலம். மிகை - கேடு, துன்பம், மிகுதி, குற்றம். முகை - கூட்டம், மலரும் பருவத் தரும்பு, மிடா, முகையென்னேவல். வகை - வகுப்பு, இனம், உபாயம், முறை, கூறுபாடு. விகை - மோக்கம். அகைத்தல் - அடித்தல், அறுத்தல், எழுச்சி, ஒடித்தல், செலுத்தல், முறித்தல், வருத்துதல். இகைத்தல் - கொடுத்தல், நடத்தல். உகைத்தல் - எழுதல், செலுத்தல். சிகைத்தல் - கிளைவிட்டெழுதல், குடுமி விடுதல். தகைத்தல் - ஆணையிடல், இளைத் தல், தடுத்தல். திகைத்தல் - மயங்கல். துகைத்தல் - வருத்துதல். நகைத்தல் - சிரித்தல், நிந்தித்தல். பகைத்தல் - முரணல். புகைத்தல் - சினக்குறிப்பு, புகையச் செய்தல். முகைத்தல் - அரும்புதல். அகைந்து - அடித்து, அறுத்து, எழுந்து, ஒடிந்து, செலுத்தி, முரித்து, வருத்தி. இசைந்து - கொடுத்து, நடந்து. உகைந்து - எழுந்து, செலுத்தி. தகைந்து - ஆணையிட்டு, இணைத்து, தடுத்து. திகைந்து - மயங்கி. துகைந்து - வருந்தி. புகைந்து - கோபித்து, புகை கொண்டு. முகைந்து - அரும்பி. அக்கணம் - பொரிகாரம், வெண் காயம், அப்பொழுது. இக்கணம் - இப்போழ்து. தக்கணம் - தெற்கு, வலப்பக்கம். பக்கணம் - ஊர், வேடர்வீதி, சிற் றுண்டி. அக்கம் - கண், தயிறு. உக்கம் - ஆலவட்டம், ஏறு, கோழி, தீ, பசு, மருங்கு. கக்கம் - கக்கமாட்டேம், கைம்மூலம். குக்கம் - நாய். சிக்கம் - உறி, குடுமி, சிறைச்சாலை, சீப்பு, மெலிவு, வண்டு. சுக்கம் - சுக்காங்காய், இடக்கரடக் கல். சொக்கம் - தூய்மை, ஓர்நாடகம், அழகு, கலப்பின்மை, களவு, மணி, தூய்மை, நன்மை. திக்கம் - பிழைவிட்டுப்படித்தல், அதன்றன்மைப் பன்மை வினை முற்று, ஓரூர். துக்கம் - குற்றம், துன்பம், நரகம். பக்கம் - அருகு, இடம், இறகு, சந்திர னாள், நட்பு. பொக்கம் - பொய், பொலிவு, மிகுதி. அக்கரம் - எழுத்து, ஓர் நோய். சக்கரம் - கடல், சக்கர வாகப்புள், தேருருளை, பிறப்பு, பூமி, பெருமை, மலை, மலை மல்லிகை, வட்டம், ஓராயுதம். செக்கரம் - செவ்வானம், அதனழகு, மாலைக்காலம். துக்கரம் - அம்பு, ஒர் தேயம். அக்கர் - சங்குமணியை யுடையவர், சிவபெருமான். இக்கர் - மன்மதன், கரும்பினை யுடையவர். எக்கர் - சொரிதல், மறைத்தசொல், மேடு. சிக்கர் - கள். செக்கர் - சிவப்பு, செவ்வானம். சொக்கர் - சிவப்பு, மதுரை சோம சுந்தரக்கடவுள். பக்கர் - சுற்றத்தார். உக்கல் - பக்கம். எக்கல் - ஏறுதல், பொருதல், வியங் கோண் முற்று. ஒக்கல் - இடைப்பக்கம், உறவு, ஒத்தல், குடி, மூட்டுதல், வியங்கோண் முற்று. கக்கல் - சத்திபண்ணல், வியங் கோண்முற்று. குக்கல் - நாய், இருமல். சிக்கல் - இளைத்தல், கிடைத்தல், வியங்கோண் முற்று. சுக்கல் - அற்பம், துண்டு. சொக்கல் - மயங்கல், வியங்கோண் முற்று. தக்கல் - தக்கை. நக்கல் - நகைத்தல், நக்குதல், வியங் கோண்முற்று. நெக்கல் - உக்கல், உருகுதல், கணிதல், தள்ளல். பக்கல் - பக்கம். புக்கல் - புகுதல். முக்கல் - பேசலா லெழுமொலி, வியங்கோண்முற்று. விக்கல் - விக்குதல், வியங்கோண் முற்று. இக்கன் - மன்மதன், கரும்புடையவன். குக்கன் - நாய். கொக்கன் - குரண்டாசுரன், கொக்கி தேவன். சொக்கன் - கூத்தாடுவோன், பொன் னுடையவன், மதுரைக்கடவுள், பருத்தகபோல முடையவன். தக்கன் - அட்டநாகத் தொன்று, நவப் பிரமாவி லொருவன். துக்கன் - துக்கத்தை யுடையவன். நக்கன் - அருகன், சிவன், நிருவாணி. அக்காரம் - சருக்கரை. உக்காரம் - சத்தி பண்ணல். திக்காரம் - தள்ளல். அக்கி - கண், ஓர் நோய். இக்கி - மன்மதன். உக்கி - இறந்து, பழுதாகி. கக்கி - உமிழ்ந்து, காலுதலை யுடையது. குக்கி - வயிறு. கொக்கி - குரண்டாசுரன் மனைவி, கொச்சிதேவன், மாட்டுங்கொளுவி யுடையது. சொக்கி - பொன், ஓர் கூத்து. துக்கி - துக்க முடையவன், துக்கப்படு. ஈக்கி - இரப்பவன், உண்டு. பக்கி - பக்கியென்னேவல், பறவை. புக்கி - பிராய்மரம், வினையெச்சம். வக்கி - வக்கிபாய்தலென்னு மிரத் தினக்குற்றம். உக்கிரம் - கொடுமை, தலைக்காவல். சுக்கிரம் - ஆனிமாதம். தக்கிரம் - மோர். வக்கிரம் - கொடுமை, பொய், பொறாமை, மீளமடங்குதல், வட்டம், வளைவு. அக்கு - எருத்துத்திமில், சங்குமணி. இக்கு - கரும்பு, கள். கொக்கு - ஓர்புள், குதிரை, செந்நாய், மாமரம், மூலநாள். சக்கு - கண். சிக்கு - எண்ணெய்ப்பற்று முதலியன, கண்ணி, பிசகு, மயிர். சுக்கு - சுண்டி. செக்கு - சதயநாள், எண்ணெய் ஆட்டும் செக்கு. சொக்கு - அழகு, சொக்கென்னேவல், சோர்வு, பொன். திக்கு - திசை. தொக்கு - உடல், தோல், வினை யெச்சம். பக்கு - உடைவு, ஊத்தை, பிளவு, விட்டிசைத்தல். புக்கு - புகுந்து. பொக்கு - குற்றம். மக்கு - அடைமண், மந்தகுகணம். மிக்கு - மிகுதி. முக்கு - பிரயாசம், முடுக்கு. மொக்கு - பூ மொட்டு, மரத்தின்கணு. அக்கை - முன் பிறந்தாள். சக்கை - கோது. சக்கை - மாலை, வான்மீன். தக்கை - காதிடுந்தக்கை, தெப்பம், பம்பை வாச்சியம், பலவகைப் பறை, வினைமுற்று. துக்கை - துக்கத்தை யுடையவன். அஃகல் - குறைதல், வியங்கோண் முற்று. எஃகல் - ஏறுதல், வியங்கோண் முற்று. வெஃகல் - ஆசைப்பெருக்கம், வியங் கோண் முற்று. ங அங்கசம் - மதனவேகம். சங்கசம் - கூட்டம். பங்கசம் - தாமரை. அங்கணம் - சலதாரை, சேறு, முற்றம். கங்கணம் - கடகம், வளை. கொங்கணம் - ஓர் தேசம், பதினெண் பாடையி லொன்று. துங்கணம் - உயர்ச்சி. தெங்கணம் - ஓர் தேயம். பங்கணம் - நீசர்சேரி. அங்கதம் - தோளணி, பழிச்சொல், பாம்பு, யானை யுணவு. கங்கதம் - சீப்பு. சங்கதம் - நட்பு, பொருந்தல். பங்கதம் - தாமரை. அங்கம் - அடையாளம், அவயவம், உடல், எலும்பு, ஓர் தேயம், ஓர் பாடை, கட்டில், பாவனை, வேதாங்கம். இங்கம் - அறிவு. கங்கம் - சீப்பு, தீப்பொறி, பருந்து. கொங்கம் - ஓர்மரம், ஓர்தேசம், வாசனை. சங்கம் - ஓர் நிதி, கணைக்கால், கூடுதல், கூட்டம், சங்கு, சவை, நூறாயிரங்கோடி, நெற்றி, படை யிலோர் தொகை, புலவர். சிங்கம் - ஓரிராசி, சிங்கம். சுங்கம் - ஆயம். தங்கம் - பொன். துங்கம் - உயர்ச்சி, பரிசுத்தம், பெருமை. பங்கம் - அலை, குழை, சேறு, குளம், துண்டு, தோல்வி, பாவம், புழுதி, வேறுபாடு. பிங்கம் - பொன்மை கலந்த சிவப்பு. புங்கம் - அம்பு, அம்புக்குதை, உயர்ச்சி, சீலை. பொங்கம் - நெற்றி, பரிமளிப்பு, பொலிவு. வங்கம் - ஈயம், ஒர் தேயம், கத்தரிச் செடி, பதினெண்பாடையி லொன்று, மரக்கலம், வெள்ளி. கிங்கரர் - ஏவல் செய்வோர், ஓர் சாதி. சங்கரர் - போர்செய்வோர், உருத்திரர். அங்கர் - அங்கதேயத்தார். கங்கர் - கரையிலிருப்பவர், திருமால், கருடக் கொடியுடை யரசர். சங்கர் - சிவபெருமான், ஓர்வகைச் சாதியார், பாடியஞ்செய்தாருள் ஓர் வகை மதாசாரியார். சிங்கர் - சிங்க வாகனத்தை யுடையவர், திருமால். பங்கர் - முடவர், சிவபிரான், தாய பாக முடையவர், குற்றப்பட்டவர். புங்கர் - உயர்ந்தோர், தேவர். புங்கர் - இலவமரம், மரக்கொம்பு, மலை. பொங்கர் - இலவமரம், சோலை, மரக்கொம்பு, மலை, வாடற்பூ. வங்கர் - சண்டாளர், ஓர் தேயத்தார். பிங்கலம் - பிங்கலந்தை யென்னு நூல், பொன், பொன்மைநிறம், வடக்கு. மங்கலம் - தருமம், பொலிவு, விவாகம். கங்கல் - குறைதல். சிங்கல் - இளைத்தல், குறைதல், வியங்கோண்முற்று. செங்கல் - காவிக்கல். தங்கல் - தங்குதல், வியங்கோண் முற்று. தொங்கல் - ஆண்மயிர், ஆபரணத் திற்றொங்கணி, காதணி, தூக்கங் கள், பீலிக்குடை, பூமாலை, மயிற் றோகை, வியங்கோண்முற்று, வெண்குடை. நுங்கல் - வியங்கோண்முற்று, விழுங் கல், பருகல். பொங்கல் - உயர்ச்சி, பொலிதல், மிகுதி, வியங்கோண்முற்று. மங்கல் - கெடுதல், வியங்கோண் முற்று. மிங்கல் - பாரி யென்னு மரசன் மகள், அவை. அங்கவை - பாரியென்னு மரசன் மகள், தெய்வீகன் மனைவி. கொங்களம் - பாடையி னொன்று. சிங்களம் - ஓர் கூத்து, ஓர் தேயம், பதினெண்பாடையி லொன்று. செங்களம் - போர்க்களம். பிங்களம் - களிம்பு, பின்னிதம். மங்களம் - வாழ்த்து. வெங்களம் - போர்க்களம், கொல்லு மிடம். உங்காரம் - உம்மென்றுரப்பல். கொங்காரம் - குங்குமமரம். சங்காரம் - அழித்தல். சிங்காரம் - அலங்காரம். வங்காரம் - உலோகக் கட்டி. அங்காளம் - முழுவெலும்பு. கங்காளம் - ஓரிராகம், ஒர் தேயம். வங்காளம் - ஓர் தேயம், ஓர் பாiக்ஷ. அங்கி - கார்த்திகை நாள், சட்டை, நெருப்பு. சிங்கி - நஞ்சு, குறைந்து. துங்கி - உயர்ந்தவன், உமை. பங்கி - ஆண்மயிர், பிறமயிர். பிங்கி - வன்னிமரம். முங்கி - குரங்கு, உண்டு. வங்கி - துறடு. அங்கு - அவ்விடம். இங்கு - இவ்விடம், பெருங்காயம். உங்கு - உவ்விடம். எங்கு - எவ்விடம். கங்கு - கருந்தினை, பருந்து, வயலின் வரம்பு, வரம்பின் பக்கம், இருள். கொங்கு - ஓர் தேயம், கள், பூந்தாது, வாசனை. சங்கு - கணைக்கால், கூடுதல், கை வளை, சங்கு, நெற்றி, படைக்கலம். சுங்கு - மடிப்பு. தெங்கு - தென்ன மரம். பங்கு - சனி, பாதி, முடவன். வங்கு - அளை, கழுதைப்புலி, கற் புழை, சந்து. கங்குல் - இரா, இருள், பானாள். மங்குல் - ஆகாயம், இரவு, மேகம். அங்கை - உள்ளங்கை. கங்கை - தங்கை, ஓராறு. கொங்கை - முலை. சங்கை - அச்சம், ஐயம். செங்கை - ஆதிரநாள், கை. தங்கை - இளையாள். துங்கை - உயர்ந்தவள், தேவமகளிர். நங்கை - பெண்ணிற் சிறந்தாள். மங்கை - பதின்மூன்று வயதுப் பெண், பெண். வங்கை - பகை. அங்கையன் - அழகிய கை யுடையவன். எங்கையன் - தங்கை புருடன். கங்கையன் - சுப்பிரமணியக் கடவுள், வீடுமன், கங்கை நாட்டையுடை யவன். சங்கையன் - சந்தேகத்தையுடை யவன், சங்கைத் தரித்தவன். மங்கையன் - சிவன். ச அசடன் - களங்கமுள்ளவன், சோம் பேறி. கசடன் - குற்ற முடையவன், சந்தேக முடையவன். அசதி - சிரித்துப் பேசல், வரவி. வசதி - மருதநிலத்தூர், வீடு. அசம் - ஆடு, மூவருட நெல். எசம் - நரம்பு. கசம் - ஓரளவு, கயம், யானை. கிசம் - தளிர். குசம் - தருப்பைப்புல், நீர், மரப் பொது, முலை, வெறும்புறங்கூறல். சசம் - முயல். சுசம் - சொந்தம். தசம் - சிவிகை, பத்து. துசம் - இரு பிறப்புள்ளன, உமி, குங்குலியம், மொடி, தவிடு, பல். நிசம் - மெய். புசம் - புயம். வசம் - தனதாக்கல். அசலம் - அசையாநிலை, பூமி, மலை. கிசலம் - தளிர். குசலம் - மிக்க கல்வி, சௌக்கியம். முசலம் - இருப்புலக்கை, உலக்கை. அசலை - பூமி. கிசலை - தளிர். குசலை - குசல, தேசம். பசலை - துன்பத்தால் வேறுபட்ட நிறம். வசலை - ஓர் கொடி, பயலை. அசனம் - உணவு, சோறு, வேங்கை மரம். உசனம் - அட்டா தசவுப புராணத் தொன்று. தசனம் - பல். பிசனம் - செஞ் சந்தனம். யசனம் - யாகம். வசனம் - சொல். விசனம் - துன்பம், பேராசை, மனித ரில்லாதவிடம், விசிறி. அசி - அவமதிச்சிரிப்பு, ஆயுதப் பொது, வாள். இசி - இசியென்னேவல், இணங்குதல், சிரித்தல். உசி - கூர்மை. சசி - இந்திராணி, கர்ப்பூரம், சந்திரன். சுசி - ஆடிமாதம், சுக்கம், நெருப்பு, வெண்குடை, வெண்மை. நசி - தேயென்னேவல். நிசி - இரா, இருள், பொன், மஞ்சள். பசி - அரும்பொருள், சேறு, பொய். வசி - கூர்மை, சூலம், தழும்பு, தசியம், வசியென்னேவல், வாள். ஒசிவு - முரிவு, நுடங்கல். சசிவு - அழுகை, அன்பு, வருத்தம், வெயர்வை. வசிவு - வளைவு. அசிதம் - சிவாகமத் தொன்று. உசிதம் - தகுதி. சிசிதம் - பதித்தல், பூச்சு. நசிதம் - கூர்மை. பசிதம் - பசுமை, சாம்பர். பிசிதம் - உதாரணம், ஊர், நீர், வேம்பு. ஒசிதல் - அசைதல், ஒடிதல், முரிதல். கசிதம் - அழுதல். பொசிதல் - நீரரும்பல். ஒசித்தல் - அசைத்தல், ஒடித்தல், முரித்தல். நசித்தல் - கெடுத்தல். பசித்தல் - உதரக்கனலெழும்பல். புசித்தல் - உண்டல். முசித்தல் - மெலிதல். வசித்தல் - தங்கல், வாசகம். விசித்தல் - கட்டல். ஒசிந்து - முரிந்து, நுடங்கி. கசிந்து - இளகி, அழுது. பொசிந்து - நீரரும்பி. நசிந்து - நசுங்கி. பிசிந்து - பிசைந்து. மசிந்து - அரைபட்டு. முசிந்து - மெலிந்து. வசிந்து - தங்கி. விசிந்து - கட்டி. பிசியம் - பொய். மிசியம் - நூதனசாலை. வசியம் - வசமாக்கல். உசு - உளு. குசு - அபானவாயு. சிசு - குழந்தை. பசு - இடபவிராசி, உயிர், எருது, பசு. முசு - குரங்கு. வசு - கிரணம், நெருப்பு, பசுவின் கன்று, பொருள், பொன். அசுப்பு - அளவு. உசுப்பு - ஒலியென்னேவல். நுகப்பு - இடை. அசும்பு - கிணறு, பொல்லாநிலம், வழுக்கு நிலம். தசும்பு - குடம், கொப்பரை, பொன். விசும்பு - ஆகாயம், திசை, தேவ லோகம், மேகம். அசை - அசைநிலை, அசையென்னு மேவல், செய்யுளுறுப்பி லொன்று. இசை - இசைப்பாட்டு, இசைப்பு, இசை யென்னுமேவல், ஒலி, கூடிநிற்றல், சொல், புகழ். உசை - சூரியன் றேவி. கசை - கவசம், குதிரைச் சம்மட்டி. குசை - கடிவாளம், குதிரைகட்டுங் கயிறு, குதிரை மயிர், தருப்பை. திசை - திக்கு. நசை - ஆசை, ஒழுக்கம். பசை - ஆசை, இலாபம். பிசை - கலத்தல், சேர்த்தல், பிசை யென்னேவல். மிசை - உயர்ச்சி, சோறு, தரித்திரம், மிசையென்னேவல், மேடு, மேல். வசை - குற்றம். விசை - சீக்கிரம், விசையென்னேவல். இச்சகம் - இதம்பேசல். கச்சகம் - குரங்கு. துச்சகம் - சுகந்தம். வச்சகம் - மலைமல்லிகை. அச்சம் - அகத்தி, இலேசு, பயம். உச்சம் - உயர்ச்சி, வல்லிசை. எச்சம் - எச்சில், குறைபாடு, சேடம், மகள், மகன், யாகம். ஒச்சம் - ஒச்சை, கவனித்தல், பழுது, வெட்கம். கச்சம் - அளவு, கடன், குதிரை யங்கவடி, துணி, மரக்கால், முன் றானை, யானை கழுத்திடு கயிறு, வார். குச்சம் - வெறும்புறங்கூறல். கெச்சம் - சிறுசதங்கை, முல்லை. சச்சம் - மெய். சொச்சம் - குறை, பணவட்டி, மாசின்மை, மிச்சம். துச்சம் - கீழ்மை, கொம்மட்டி, பதர், பொய், வெறுமை. நிச்சம் - நித்தம். பிச்சம் - ஆண்மயிர், இறகு, பீலிக் குஞ்சம், வெண்குடை. புச்சம் - தேள், வால். பொச்சம் - அவா, உணவு, குற்றம், தேங்காய் மட்டை, விருப்பம். மச்சம் - அட்டாதச புராணத் தொன்று, ஓர் தேயம், மச்சம், மீனவிராசி, மீன், திருமாலவதா ரத்து ளொன்று. மிச்சம் - மிகுதி. விச்சம் - தாமரை. அச்சல் - ஆச்சல், தரம். உச்சல் - உச்சுதல். கச்சல் - ஒல்லியாள், ஒருமீன், கைப்பு, சிறுமை, பிசகு, மிகவு, இளம் பிஞ்சு, வெறுப்பு. நச்சல் - வியங்கோண்முற்று, விரும் பல். பிச்சல் - பிய்த்தல். மெச்சல் - கொண்டாடல், துதித்தல், வியங்கோண் முற்று. அச்சன் - தந்தை, கடவுள். உச்சன் - இலக்குக்கெறியும் பொருள். எச்சன் - யாகஞ் செய்வோன், விட்டுணு. கச்சன் - ஆமை. தச்சன் - மரவேலைக் கம்மாளன், சித்திரை நாள், தபதியன், சூத்திரன். துச்சன் - கீழ்மகன். பச்சன் - வேளாளன். அச்சி - ஓர் தேயம். உச்சி - ஆண்மயிர், தலை, நடுத்தலை, நடுப்பகல், நாய். கச்சி - காஞ்சீபுரம், சிரட்டைக்கையில், சீந்தில். குச்சி - துணி, துரும்பு, ஈர்க்கு. கொச்சி - ஒர் தேயம். நொச்சி - ஓர் செடி, சிற்றூர், தன் னரண் காப்பார்க்கு மாலை, மதில். பிச்சி - ஓர் கொடி. மச்சி - பூனைக்காலி, மச்சுனி. முச்சி - உச்சி, மயிர்முடி. வச்சி - காயாமரம். எச்சில் - எச்சம். துச்சில் - ஒதுக்கிடம், சூட்டு. மிச்சில் - எச்சில், ஒழி பொருள். முச்சில் - சிறுமுறம். அச்சு - அடையாளம், உயிர், பண்டி யச்சு. கச்சு - முலைக்கட்டு, இடைக்கட்டு, பிணிக்கை. கிச்சு - நெருப்பு. குச்சு - குற்றி, சிறுகுடில், பாவாற்றி, குஞ்சம், மயிர், வேர் முதலிய முடிச்சு. சச்சு - நீர்ச்சுண்டி, பறவை மூக்கு, அற்பம், சந்தடி, இளந்தது. சுச்சு - சுண்டி. தச்சு - தச்சத்தொழில், தச்சன். நச்சு - ஆசை, நச்சென்னேவல், விடம், சிறுமை, தொறுப்பு. பிச்சு - பித்து, ஊழை, மூளை. பொச்சு - தேங்காய் மட்டை, பய னில்லது. மச்சு - சுவர்க்குமேல் வெளி யடைப்பு, மேனிலை, மஞ்சு, குற்றம். விச்சு - வித்து. அச்சை - பீதிரோகம், பைத்தியம். இச்சை - அஞ்ஞானம், ஆசை, இடித் தல், பொய், விருப்பம். ஒச்சை - உற்றுக்கேட்டல். கச்சை - கயிறு, கவசம், தழும்பு, யானை கட்டுங்கயிறு, வார். குச்சை - கொய்சகம். கெச்சை - சிறு சதங்கை. கொச்சை - இளைத்தல், வெள்ளாடு. சொச்சை - காடு, சாந்தின் குழம்பு, சோடு, நீறு, வெட்சி, வெள்ளாட் டுக்கடா. பச்சை - ஒர்வகைப் புதர், தோல், பசுமை, பரிமளம், புதன், மரகதம், விட்டுணு. பிச்சை - ஐயம். பொச்சை - கரிகாடு, காடு, சிறுமலை, மலை. மச்சை - உட்சுரம், மீனம்பர், மூளை, அது சத்ததாதி னொன்று. மிச்சை - அஞ்ஞானம், தரித்திரம். முச்சை - மூன்னொன்றாய் முடிவது. மொச்சை - ஓர்வகைக்கொடி, ஒரு வகைப் பயறு, ஆட்டுமணம். விச்சை - தெரு, வித்தை. ஞ அஞ்சம் - அன்னப்புள். இஞ்சம் - வெந்தோன்றிக் கிழங்கு. உஞ்சம் - உரலருகிலும் வயலிலும் ஒவ்வொரு தானியமாய்ப் பொறுக்குதல். கஞ்சம் - அப்பவர்க்கம், கஞ்சா, கைத் தாளம், தாமரை, நீர், வஞ்சகம், வெண்கலம். கிஞ்சம் - சிறுமை, புளிமா. குஞ்சம் - ஈயோட்டி, குறள், குன்றிக் கொடி, கூன், கொத்து, கோட் சொல்லல், நாழி. கொஞ்சம் - அற்பம், எளிமை, சிறு அளவு. சஞ்சம் - சச்சு, பூணூல். சிஞ்சம் - புளியமரம், புளிமா. தஞ்சம் - எளிமை, தாழ்வு, துணை, பற்றுக்கோடு, பெருமை, அடைக் கலம். நஞ்சம் - நஞ்சு. நெஞ்சம் - மனம், மார்பு. பஞ்சம் - க்ஷhமம், வற்கடம், வறம், ஐந்து. பிஞ்சம் - இறகு, கொலை. புஞ்சம் - திரட்சி, குவியல். மஞ்சம் - கட்டில், கடல், சப்பரம். முஞ்சம் - அம்பு, பூணூற் பூண்டு. வஞ்சம் - கொடுமை, சிறுமை, பொய், வாள், கபடம். வெஞ்சம் - கோபம், பழி. குஞ்சரம் - யானை. சஞ்சரம் - உடல், கொலை, சங்கடம். பிஞ்சரம் - கருமைகலந்த சிவப்பு, அரிதாரம், பொன். மஞ்சரம் - முத்து. முஞ்சரம் - தாமரைக்கிழங்கு. பஞ்சரம் - கழி, செருந்திமரம், பறவை வளர்க்குங் கூடு, மட்கலம் வனை யுங் கூடம், கழுகு. அஞ்சல் - தோல்வி, பயப்படல், வியங்கோண் முற்று, உட்கல், கலங்கல், மருளல். இஞ்சல் - இறுகல், சுவறல். உஞ்சல் - ஊஞ்சல். எஞ்சல் - குறைதல், வியங்கோண் முற்று. கஞ்சல் - குப்பை, அழுக்கு. கிஞ்சல் - சிறுமை. கெஞ்சல் - மன்றாடல். கொஞ்சல் - கொஞ்சுதல், வியங் கோண்முற்று. துஞ்சல் - உறங்கல், சாதல், சோம்பல், நிலைபெறுதல், வியங்கோண் முற்று. மிஞ்சல் - மிகுதிப்படல். முஞ்சல் - சாதல், முற்றல், வியங் கோண்முற்று. விஞ்சல் - மிகுதி, வியங்கோண்முற்று. அஞ்சனம் - கறுப்பு, மேற்றிசை யானை, மை, ஆணவம், இருள். கஞ்சனம் - கண்ணாடி, கரிக்குருவி, கைத்தாளம், வலியன். குஞ்சனம் - வளைவு. சஞ்சனம் - பணிகளா னெழுமொலி. தஞ்சனம் - தன்னை யறிந்தவன். பஞ்சனம் - அழித்தல். பிஞ்சனம் - நூலெஃகும் வில். மஞ்சனம் - குளித்தல், நீரின் முழுகல். வஞ்சனம் - ஒருமீன். வெஞ்சனம் - சிற்றுண்டி, சுண்டற் குழம்பு. அஞ்சனை - அனுமன்றாய், வட திசையானைக்குப் பெண்யானை. கஞ்சனை - கண்ணாடி, கலசப்பானை. வஞ்சனை - தெய்வப்பெண், வஞ்சம். அஞ்சி - எஜமானன். இஞ்சி - இஞ்சி, கேடகம், மதில், வாலி, மருப்பு. உஞ்சி - நாயையேவி விடுங்குறிப்புச் சொல். ஒஞ்சி - மார்பு, முலைக்காம்பு. கஞ்சி - கஞ்சி, காஞ்சி, அன்னப்பால், காடி. கிஞ்சி - முதலை, வேம்பு. குஞ்சி - ஆண்மயிர், குஞ்சியென் னேவல், வினையெச்சம், குடுமி. கொஞ்சி - ஒருசெடி, வினையெச்சம். சிஞ்சி - ஆபரணவொலி. செஞ்சி - ஓரூர். முஞ்சி - ஒர்வகை நாணற்புல், வினை யெச்சம். பஞ்சி - தூரு, பருத்தி. மஞ்சி - பேடகம், பேழை. மிஞ்சி - காலணியினொன்று. வஞ்சி - ஓர்வகைக்கொடி, ஓர் வகைப்பா, கருவூர், தருமதேவதை, பகைவர்மேற் செல்லுஞ் சேவ கர்க்கு மாலை, பெண், வஞ்சி யென்னேவல். கஞ்சுகை - அரதனச்சிவிகை, சீலை, திரைச்சீலை. மஞ்சுகை - காதணி, குண்டலம், தாளிக்கொடி, பேழை. அஞ்சிதம் - உண்டாதல், பொருந்தல். சஞ்சிதம் - ஈட்டியது. சிஞ்சிதம் - அசையு மாபரணங்களா லெழுமொலி. பஞ்சிதம் - விண்மீன். மஞ்சிதம் - அழகுரிமை. அஞ்சு - ஐந்து, அஞ்சென்னேவல். எஞ்சு - குறை. குஞ்சு - பறவைக்குஞ்சு. சஞ்சு - பறவைமூக்கு, சாயல், ஆமணக்கு. நஞ்சு - விடம், நஞ்சுக்கொடி. நெஞ்சு - மனம், மார்பு, துணிவு. பஞ்சு - சீலை, நூற்கும்பஞ்சு, பருத்தி. பிஞ்சு - இளங்காய். மஞ்சு - அழகு, ஆபரணம், இளமை, கட்டில், பனி முகடு, மேகம், யானை, முதுகு, வலி. கஞ்சுகம் - சட்டை. கிஞ்சுகம் - கேகயப்புள், சிவப்பு, முண் முருக்கு. மஞ்சுகம் - கொக்கு. உஞ்சை - அவந்திநகர். தஞ்சை - தஞ்சாவூர். பஞ்சை - தரித்திரன். விஞ்சை - கல்லி. ட கடகடெனல், சடசடெனல், தடதடெனல், நெடநெடெனல், படபடெனல், மடமடெனல், முடமுடெனல், மொட மொடெனல், வெடவெடெனல் - ஈரடுக் கொலிக் குறிப்பு. விடவிடெனல் - நடுக்கக் குறிப்பு. கடகம் - கங்கணம், கூத்தின் விகற் பம், கெண்டிகை, கேடகம், கை வளை, மதில், மலைப்பக்கம், யானைக் கூட்டம், வட்டம். குடகம் - ஓர் தேயம். சடகம் - ஊர்க் குருவி. படகம் - கவரிமா, தம்பட்டம், திரைச் சீலை, பரண். பிடகம் - நூல், பிச்சை, புத்தனூல். வடகம் - உல்லாசம், தோல். அடக்கம் - ஒடுக்கம், அடங்கிய காரியம், ஒருவகைத் தேன், கருத்து, கருவி, மனவமைதி. தடக்கம் - தடகம், தடை. துடக்கம் - தொடக்கம். தொடக்கம் - ஆதி, செல்வம், துவக்கம். நுடக்கம் - ஆட்டம், துவளல், வளைவு. மடக்கம் - கீழ்ப்படல், அடக்கம். முடக்கம் - முடங்குதல், முடக்கு, விரலணியி லொன்று. இடக்கு - இழிசொல், எதிரிடை, ஏறுமாறு, குதர்க்கம், தடை. உடக்கு - திருகாணிச் சுரையினுட் புரி. குடக்கு - மேற்கு. சொடக்கு - கிலுகிலுப்பை, கடுகு, நெட்டி. தடக்கு - தடை. துடக்கு - ஆசூசம், சிக்கு, மகளிர் சூதகம். தொடக்கு - மகளிர் சூதகம். நுடக்கு - முடக்கு. பிடக்கு - வைத்தியன். மடக்கு - ஓர்வகைச் சித்திரகவி, மடக்கென்னேவல், பேரகல். முடக்கு - முடக் கென்னேவல், முடங்கல், விரலணி. வடக்கு - வடதிசை. விடக்கு - ஊன். அடங்கம் - கடுகுரோகணி. இடங்கம் - உளி, கொடுவாள். கடங்கம் - உடைவாள். சடங்கம் - ஆறு சாஸ்திரம், கிரியை, ஆறு தூக்குக் கொண்ட ஒருநிறை, கோலி, பூட்டு, மூட்டைப்பை. விடங்கம் - அழகு, ஆண்மை, கொடுங்கை, சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம், புறவுகட்குத் தூண் கண் மேற் செய்த கூட்டின் வரிசை, முகடு, வீதியிற் கட்டிய கொடி. இடங்கர் - குடம், நீர்ச்சால், முதலை, தூர்த்தர், சிறுவழி. குடங்கர் - குடம், குடிசை, கும்ப விராசி. விடங்கர் - சிறுவழி, தியாகராஜர். அடங்கல் - எல்லாம், சுருங்கல், வியங் கோண்முற்று, அடக்கம், குத்தகை. குடங்கல் - குடங்குதல், வளைவு. தடங்கல் - தடை, தாமதம், அடைப்பு, வறிதிருக்கை. தொடங்கல் - துவக்கல், வியங்கோண் முற்று. நுடங்கல் - ஆடல், துவளல், முடங் கல், வியங்கோண்முற்று. மடங்கல் - இடி, ஊழித்தீ, காலன், சிங்கம், நோய், மீளல், முடங்கல், யுகமுடிவு, வியங்கோண்முற்று. முடங்கல் - ஒலை, தாழை, நோய், மடங்கல், மூங்கில், வியங்கோண் முற்று. அடங்கு - அடங்குதல். உடங்கு - கூடிநிற்றல், ஒருங்கு, ஒன்றிப்பு. கிடங்கு - அகழ், குளம், சிறைச் சாலை, வியாபாரப் பொருள்கள் சேமித்து வைக்கு மிடம். சடங்கு - செய்முறை, கிரியை. தொடங்கு - காலணி, தொடங்கென் னேவல், விலங்கு. நுடங்கு - நுடக்கம், நுடங்கென் னேவல். படங்கு - கூடாரம், பெருங்கொடி, மேற்கட்டி, சலாகை, பதங்கம். பிடங்கு - ஆயுதங்களின் பிற்பக்கம், கோங்கு. மடங்கு - அளவு, மடங்கென் னேவல், வியாதி, பங்கு. முடங்கு - நோய், முடங்கென்னேவல். இடத்தல் - தோண்டல், அகலப் பண்ணுதல், கிழித்தல். கடத்தல் - செலுத்தல், தாண்டல், நடத்தல், அகறல், இகத்தல், குதித்தல், தாவுதல், நீடுதல், நீந்தல், பாய்தல், மீறுதல். கிடத்தல் - கிடக்குதல், இருந்தபடி யிருத்தல், சயனித்தல். திடத்தல் - திடப்படுதல். நடத்தல் - செலுத்தல், போகல், காரியம் பலித்து வருதல், சம்பவித்தல். உடந்தை - ஒருமை, உரித்து, கூட்டு, சேர்மானம். குடந்தை - ஓரூர், கும்பகோணம். மடந்தை - பத்தொன்பது வயதுப் பெண், பெண். வடந்தை - வடகாற்று, வாடை. விடந்தை - ஓரூர். அடப்பம் - சாமான்பை. படப்பம் - மருங்கிலூர் சூழ்பதி. மடப்பம் - ஐஞ்ஞூறு கிராமத்துத் தலைக்கிராமம். அடம் - ஈனம், சஞ்சாரம், பிடிவாதம், பொல்லாங்கு. இடம் - அகலம், ஆகாயம், இடப் பக்கம், இடம், செல்வம், பெருமை, விசாலம், வீடு, அகம், அயல், அரங்கு, இடை, களம், தலம், பால், வயின். உடம் - உடன். கடம் - அருநெறி, உடல், கயிறு, காடு, குடம், தோட்டம், நீதி, மலைப் பக்கம், யானைக் கதுப்பு, யானைக் கூட்டம், யானைமதம், வான், நண்டு, சாரல், நீதி, பாண்டம், வானம். குடம் - ஊர்ப்பொது, கும்பம், கும்ப விராசி, கைகொட்டிக் குவித்தல், சருக்கரை, பசு, பூசும், மருத நிலத் தூர், விட்டுணுகூத்து, கலசம், கொடுந்தமிழ் நாட்டினொன்று. சடம் - உடல், கொடுமை, பொய், வஞ்சமனம். சிடம் - சாதிக்காய். தடம் - ஓமகுண்டம், கரை, குளம், பெருமை, மலை, மலைப்பக்கம், வரம்பு, வழி, கண்ணி, தராசு, வளையம், விசாலம், வெளி. திடம் - மெய், வலி, உறுதி, தைரியம். நடம் - ஓர்வகை யிராகம், கூத்து, தாளவொத்தினானடிப்பது. படம் - எழுத்துப்படம், சீலை, திரைச் சீலை, பாம்பின்படம், யானை முகபடாம், விருதுக்கொடி. பிடம் - பெட்டி, மரக்கால், புடம். புடம் - இடம், புடம், புறம், கௌ பீனம், மருந்துசுத்தி, மூடி. பெடம் - மிகுதி. மடம் - அறிவின்மை, சத்திரம், முனி வர், வாசம், அறப்புறம், கோயில், துறவிகள் வாழுமிடம். முடம் - வளைவு, நொண்டி, குற்றம். வடம் - ஆலமரம், ஊர், கயிறு, நாணி, பூவரும்பு, மாலை, வட்டம். விடம் - நஞ்சு, அதிவிடையம். அடர் - தகடு, நெருங்கு, பொருதென்னு மேவல், செறிவு, நெருக்குகை. இடர் - துன்பம், ஆபத்து, இடைஞ்சல். குடர் - குடல். சடர் - மூடர். சுடர் - ஒளி, சந்திரன், சூரியன், தீ, விளக்கு, தளிர். திடர் - திட்டை, மேடு, மணற்குன்று. துடர் - தொடர். தொடர் - சங்கிலி, தொடரென் னேவல், பஞ்சிநூல், பழமை, பிசின், பூமாலை, விலங்கு, கோவை, வாசம். நடர் - நாடகர், கூத்தர். படர் - கருத்து, துன்பம், செலவு, நோய், பகை, படரென்னேவல், படைவீரர், மேடு, வழி, இழி மக்கள், ஏவல் செய்வோர். பிடர் - பிடரி, எருத்தம், சிறுபுறம், புறங்கழுத்து, தோண்மேல், பிடர்த்தலை. பெடர் - அலியர். விடர் - கமர், காடு, தூர்த்தர், மலைப் பிளப்பு, கல்லளை. அடர்தல் - நெருங்கல். சுடர்தல் - ஒளிசெய்தல். துடர்தல் - தொடர்தல். தொடர்தல் - கட்டல், தேடல், பின் செல்லல். படர்தல் - அகலம், நடத்தல், நினைத் தல், பரந்து செல்லல். அடர்பு - நெருக்கம், வினையெச்சம், செறிவு. தொடர்பு - உறவு, சினேகம், பழமை, பா, சம்பந்தம், பாட்டு, முறைமை, வினையெச்சம். அடலை - சாம்பல், பற்பம், விபூதி, போர்க்களம். இடலை - துக்கம், துன்பம். கடலை - ஒர் வகைப்பயறு. குடலை - குணற்றுக்குடலை, பூக் குடலை. சடலை - பருத்தது. சுடலை - சுடுகாடு, சவுக்காரம். தொடலை - மகளிர் விளையாட்டு, மாலை, விளையாட்டு. நடலை - துன்பம், நடுக்கம், பொய், வஞ்சனை, கபடம், நாகரீகம், மரணம். படலை - கோத்தமாலை, பூமாலை, கட்டுக் கதவு, பரந்த வடிவு. முடலை - உண்டை, நாற்றம், பெருமை, வலி. விடலை - ஆண்மகன், திண்ணியன், பாலை நிலத் தலைவன். அடல் - கொல்லுதல், சமைத்தல், பொருதல், வலி, வியங்கோண் முற்று, வெற்றி. இடல் - எறிதல், கொடுத்தல், வியங் கோண்முற்று. உடல் - உடம்பு, ஒற்றெழுத்து, பொரு தென்னேவல், பொன். கடல் - சமுத்திரம், இராசசின்னத் தொன்று, பசு. குடல் - குடர். கெடல் - கெடுதல், வியங்கோண் முற்று. சுடல் - சுடுதல், வியங்கோண்முற்று. தடல் - வாழைநார், பலாப்பழச் செதிள். திடல் - திட்டை, மேடு. தொடல் - சார்தல், தீண்டல், தோண் டல், பிடித்தல், வியங் கோண் முற்று. நடல் - நடுதல். படல் - உண்டாதல், கெடுதல், படல், படுதல், வியங்கோண்முற்று, அகப்படுத்தல், அஸ்தமித்தல். புடல் - புடோல். மடல் - ஏற்றமடல், ஒர்வகைப் பிரபந் தம், ஈந்தில் கமுகு தாழை தெங்கு பனை வாழை யிவற்றிற்குரிய வேடு, பூவிதழ், வியங்கோண் முற்று, சிறுவாய்க்கால். மிடல் - வலி. விடல் - குற்றம், சாதல், விடுதல், வியங்கோண்முற்று. கடவல் - செலுத்தல், வியங்கோண் முற்று. தடவல் - தடவல், வீணை வாசித்தல், வியங்கோண்முற்று. அடவி - காடு, சோலை. தடவி - வினையெச்சம். புடவி - பூமி. இடவை - வழி. கடவை - ஏணி, கடவுமரம், குற்றம், வினை முற்று. தடவை - எல்லை, தரம், முறை. துடவை - உழவு கொல்லை, பூந் தோட்டம். நடவை - கடவுமரம், வழி. பிடவை - புடைவை. மடவை - ஓர்வகை மீன் கடவுமரம். வடவை - ஊழித்தீ, எருமை, பெண் குதிரை, பெண்யானை. இடறு - இடரென்னேவல், தடை. கடறு - அருநெறி, காடு, வாளுறை. தடறு - ஆயுதவுறை. முடறு - கழுத்து, கீழ்வாய், தொண்டை. அடா - தோழன் முன்னிலைப் பெயர். இடா - கடா, ஆனை, போத்து. கடா - ஆடு, எருமை யானை யிவற் றின் ஆண் கடாவென் னேவல். தடா - பானை, மிடா, வினைமுற்று, வினையெச்சம். மிடா - பானை, மிடா. கடாகம் - பெருங்கொப்பரை, கிணறு. தடாகம் - கஞ்சம், வாவி. கடாரம் - ஓர்வகையூர், கருமை கலந்த பொன்மை, கொப்பரை, பசுவின் பெண் கன்று. கிடாரம் - கொப்பரை. குடாரம் - கோடாலி, தயிர்கடைதறி, தயிர்கடைதாழி. கெடாரம் - கடாரம், கடிகாரம், வாய் பெருத்த பாத்திரம். கடாரி - ஈனாவிளமாடு. குடாரி - யானைத்தோட்டி. சடாரி, சுடாரி - கவசம். தடாரி - பம்பை, பேரிகை, மத்தளம், வாச்சியப்பொது. பிடாரி - காளி. இடார் - இறைகூடை, ஒர் பொறி. எடார் - வெளிநிலம். கொடார் - ஈயாதோர். அடி - அடியென்னுமேவல், ஆதி, கால், செய்யுளுறுப்பினொன்று, ஓரளவு, கடவுள், காற்சுவடு, கீழ் மக்களை விளிக்குஞ் சொல், பூர்வம், மூலம். இடி - இடியென்னுமேவல், இந்திரன் கொடி, உறுதிச்சொல். ஒலி, சிற் றுண்டி, சுண்ணம், தகரம், தினைமா, நென்மா, அனலேறு, அசனி, உருமு, வெடி. கடி - அச்சம், இன்பம், ஒளி, கடி யென்னேவல், கரிப்பு, களிம்பு, காவல், கூர்மை, கைப்பல், சிறப்பு, சீக்கிரம், நந்தன வனம், நிதம்பம், பிசாசம், புதுமணம், புதுமை, பொழுது, வாசனை, விளக்கம். கிடி - பன்றி, மருட்பன்றி. குடி - ஊர்ப்பொது, குடியென் னேவல், குலம், கோத்திரம், மருத நிலத்தூர், உடம்பு, வீடு. கெடி - ஊர், கீர்த்தி, பயம். கொடி - காக்கை, கீழ்த்திசைப் பாலன் குறி, குமரனாடல், துகிற் கொடி, நீளம், படர்கொடி, அவிட்ட நாள், வள்ளி. சடி - சடை, துப்பட்டி. செடி - ஒளி, பதனழிவு, பாவம், புதல், அற்பம், செத்தை, பூண்டு, சிறு மரம். தடி - உடும்பு, உலக்கை, ஊன், சிறு வயல், தடியென்னேவல், தண்டு, மின், வயல், வில், அளவுகோல். துடி - அகில், உடுக்கை, உதடு, ஏலம், காலநுட்பம், குமரனாடல், குறிஞ்சி நிலப்பறை, கூதாளிச் செடி, சத்த கன்னிகைகளாடல், துடியென் னேவல், பாலை நிலப்பறை. தொடி - ஒருபலம், கங்கணம், கை வளை. நடி - கடியென்னேவல், நாடகக் கணிகை, பெருமை, மகத்தூவம். நெடி - சிள்வண்டு வெப்பம், காற்றம், மிளகாயின் காரம். நொடி - கால நுட்பம், சொல், நொடி யென்னேவல், விடுகதை, பள்ளம். படி - உரு, குணம் குதிரை யங்கவடி, சோபானம், நாழி, நூறுபலம், பகை, படியென்னேவல், பூமி, வாசிப்பு. பிடி - கைப்பிடி, பிடியென்னேவல், பெண் கவரி, பெண்ணொட்ட கம், பெண் யானை, நம்பிக்கை. பொடி - பராகம், புழுதி, பொடி யென்னேவல், அணு, மூக்குத்தூள். மடி - கேடு, சீலை, சோம்பல், தாழை, நோய், பொய், மடியென்னேவல், மூலை, மேற்றிரள், வயிறு, சோறு, தாழை விழுது. மிடி - மிடியென்னேவல், வறுமை. முடி - கிரீடம், குடுமி, தலை, துழாய் நாறு முடி, மயிரமுடி, முடியென் னேவல், மௌலி. வடி - கள், நாய், வடியென்னேவல், கயிறு, கூர்மை. விடி - திரைச்சீலை, விடியென்னேவல். வெடி - அச்சம், இடி, கள், நறும் புகை, வெடியென்னேவல், வேலி. படிகம் - கூத்து, பளிங்கு, பிச்சை. பிடிகம் - பிள்ளைக்கைவளை. கடிகை - சமயம், தாழக்கோல், துண்டம், நாழிகை. கடிகை - உச்சி, நெற்றிச்சுட்டி, மயிர் முடி முடி. அடிசில் - உண்டி. ஒடிசில் - கவண். கடிஞை - இரப்போர்கலம். குடிஞை - ஆறு, கோட்டான், பதி, பறவைப்பொது. அடிதல் - அடுபடல். இடிதல் - ஒடிதல், உடைதல், நொறுங்கல். ஒடிதல் - முறிதல், இறுதல், ஒசிதல். கடிதல் - அறுத்தல், கோபம், சினக் குறிப்பு, வெட்டல், நீக்கல். தடிதல் - அறுத்தல், தறித்தல், வெட்டல். படிதல் - கலத்தல், ஒலித்தல், அமருதல், குளித்தல், திருத்தல். பொடிதல் - கெடுதல், தூளாதல். மடிதல் - கெடுதல், சாதல். முடிதல் - கடை, சாதல், முடிச்சு முடிதல், முற்றுதல். வடிதல் - நீளம், நீளல், வடியல், வற்று தல், நீர் முதலிய பாய்தல். விடிதல் - உதயமாதல், அனுகூல மாதல். அடித்தல் - அடிக்குதல், அறைதல். இடித்தல் - இடிக்குதல், உறுதிச்சொல், ஒலித்தல். ஒடித்தல் - ஒளிசெய்தல். கடித்தல் - கௌவல், தழும்பு படுதல். குடித்தல் - பருகுதல், மாந்தல். கெடித்தல் - அஞ்சல். செடித்தல் - செடிபற்றல். சொடித்தல் - குறைத்தல். தடித்தல் - கனத்தல், தாமதித்தல், மின்னுதல். துடித்தல் - குதித்தல், மின்னல். நடித்தல் - ஆடல். நெடித்தல் - பொழுது நீட்டித்தல். நொடித்தல் - சொல்லல், நொடிக்குதல். படித்தல் - வாசித்தல், பழகுதல். பிடித்தல் - கட்டல், சார்தல். பொடித்தல் - கெடுத்தல், புழுதியாக்கல், முளைத்தல். மடித்தல் - மடிக்குதல். மிடித்தல் - வறுமையுறல். முடித்தல் - முற்றுவித்தல், அழித்தல். வடித்தல் - வடிக்குதல், வசமாக்கல், கூராக்குதல். வெடித்தல் - பிளத்தல், விள்ளுதல். அடிமை - தொழும்பு. குடிமை - குடியியல்பு. படிமை - தவவேடம். மடிமை - சோம்பல். மிடிமை - வறுமை. இடியல் - மா, தூள். ஒடியல் - பனங்கிழங்குப்பிளவு. கடியல் - மரக்கலங்களின் குறுக்கு மரம். படியல் - ஒப்பல், பொருந்தல், நீராடல். பிடியல் - சிலை, நல்லாடை, வியங் கோண்முற்று. மடியல் - மடிப்பு. முடியல் - எல்லாம், முடிதல், வியங் கோண்முற்று. வடியல் - வடிதல். விடியல் - விடியற்காலம், வியங் கோண்முற்று. குடிலம் - ஆகாயம், குராமரம், சடை, வஞ்சகம், வளைவு. கெடிலம் - ஓர் நதி. சடிலம் - குதிரை, சடை, நெருக்கம். குடில் - ஆகாயம், சிற்றில். செடில் - ஓர் கருவி. நெடில் - நீளம், நெட்டெழுத்து, மூங்கில். படிவம் - உடலுருவம், உடல், நோன்பு, வடிவு. வடிவம் - உடலுருவம், வடிவு. இடிவு - அழிவு, இழந்திருப்பது, ஒடிவு. ஒடிவு - முறிவு. கடிவு - அரை, பாவம், வருந்திரட்சி. மடிவு - சாவு. மிடிவு - மிடிமை. முடிவு - கடை. வடிவு - அல்குல், அழகு. கொடிறு - கதுப்பு, பற்றிரும்பு, பூச நாள், யானைக்கதுப்பு. படிறு - களவு, பொய், வஞ்சகம். கடினம் - கொடுமை. படினம் - வெற்றி. அடு - சமை, சேரென்னேவல். இடு - ஈயென்னேவல், சமர்ப்பி, கொடு. உடு - அகழி, அம்பினிறகு, அம்பு, அம்புத்தலை, ஆடு, ஓடக்கோல், சீக்கிரி மரம், சீலை, சுற்றென் னேவல், விண்மீன். எடு - தூக்கு, நீக்கு. ஒடு - ஒடுக்கட்டி, ஓர்மரம், மூன்ற னுருபு, (உ-ம். கொடியொடு துவக் குண்டான்) புடை கொண்ட புண். கடு - கசப்பு, கடுக்காய்மரம், கடு வென்னேவல், நஞ்சு, முள். குடு - கள். கெடு - கெடுவென்னேவல், கேடு, தவணை, தறுவாய், வாய்தா. கொடு - இடு, வளைவுதா. சடு - அழுதல், ஆறு, வயிறு. சுடு - சுடென்னேவல், வெம்மை யுறல். தடு - விலக்கென்னேவல், தடை செய். தொடு - தொடுவென்னேவல், தோட் டம், மருதநிலம், வஞ்சம், வயல். நடு - இடை, நடுவென்னேவல், நீதி, பூமி. நெடு - நீண்ட. படு - கள், குளம், கொத்து, நன்மை, படுவென்னேவல், அனுபவி, கூர்மை, சம்பத்து. மடு - ஆற்றினுட் பள்ளம், குளம், மடுவென்னேவல். வடு - இளங்காய், குற்றம், செம்பு, தழும்பு, மருதயாழ்த்திறம், வண்டு, மச்சம், வாள், வசை, வாலிபன். விடு - அகற்று, ஒழி, நீர்யானை, யானை மத்தகத்தினடு. கடுகல் - வியங்கோண்முற்று, விரைவு. முடுகல் - எதிர்த்தல், சீக்கிரம், மொய்த்தல், வலி, வியங்கோண் முற்று. அடுகளம் - போர்க்களம். படுகளம் - போர்க்களம். அடுகு - ஒடுக்கம். கடுகு - கடுகென்னேவல், எண் ணெய்க் கஷாயம், ஆயவி. கிடுகு - கேடகம், சட்டப்பலகை, தேரின் மரச்சுற்று. குடுகு - குடிக்கை. கொடுகு - ஒடுங்கு. முடுகு - அராகம், கடமைப்பெண், முடகென்னேவல். வடுகு - உபநயனம், ஓர் தேசம், ஓர் பாடை. அடுக்கம் - மலைப்பக்கம், பக்க மலை. இடுக்கம் - இடுக்கண், துன்பம், நெருக்கம், வறுமை, ஒடுக்கம். ஒடுக்கம் - அடக்கம், பதுங்கல், முடிவு, அமைவு, சுருக்கம், நெருக் கமான விடம், வழிபாடு. தொடுக்கம் - பொன். நடுக்கம் - நடுங்கல், கிறுகிறுப்பு, அதிர்ப்பு, அச்சம், விதிர்ப்பு. அடுக்கல் - ஒன்றன் மேலொன் றேற்றல், மலை, வியங்கோண் முற்று, குவித்தல், தொடுத்தல். இடுக்கல் - இடுக்குதல், மறைத்தல், நெருக்குதல். எடுக்கல் - எடுத்தல், எடுக்குதல். ஒடுக்கல் - ஒடுக்குதல். கடுக்கல் - உவமையாதல், உளை யாதல், கடுக்குதல், பசைப்படுதல். முடுக்கல் - ஓட்டல், மொய்தல், வியங்கோண்முற்று. அடுக்கு - ஒழுங்கு, சேர்மானம், பத்ததி. இடுக்கு - இடைஞ்சல், சந்து, துன்பம். உடுக்கு - சீலை, இடை, சுருங்குபறை. ஒடுக்கு - அடக்கம், இடுக்கு, ஒடுங் கினது. கிடுக்கு - ஒலிக் குறிப்பு. கொடுக்கு - கவர், கவைத்தாள். தடுக்கு - சிறுபாய், தவிசு. துடுக்கு - விரைவு, குறும்பு. நடுக்கு - நடுக்கம். நெடுக்கு - நீட்சி. பிடுக்கு - பனம்பூ, பீசம். மிடுக்கு - வலிமை. முடுக்கு - நெருக்கமானபாதை, ஒடுக்கம். வெடுக்கு - வெட்டென வுள்ளது. உடுக்கை - இடைசுருங்குபறை, சீலை, துடி. கடுக்கை - கொன்றைமரம், வினை முற்று. குடுக்கை - ஓர்வகைப் பாத்திரம், கமண்டலம். படுக்கை - அடிப்பட்டை, படுத்தல், பல்லணம், மக்கட் படுக்கை, விலங்கின் படுக்கை. ஒடுங்கல் - அடங்கல், ஒதுங்கல், பதுங்கல், வியங்கோண்முற்று, கீழ்ப்படிதல், சோரல். நடுங்கல் - நடுங்குதல், நோய், வியங் கோண்முற்று. பிடுங்கல் - பறித்தல், வியங்கோண் முற்று. அடுதல் - கொல்லல், தீயிற்பாக மாக்கல். இடுதல் - ஈதல், எறிதல், சொரிதல், அணிதல், வைத்தல். கடுதல் - திருடல், பறிதல். கெடுதல் - சாதல், பதனழிதல், சாய் தல், உடைதல், ஒடிதல், சிதைதல், முறிதல். சுடுதல் - உலோகங்களை யொட்டு தல், சூடுகாணுதல், தகித்தல், நீற்றுதல், விசனமடைதல், விசன மடைவித்தல், வேகவைத்தல். தடுதல் - இசைதல். தொடுதல் - அணிதல், இணைந் திருத்தல், உண்ணல், எய்தல், தீண்டல், தொடங்கல், தோண்டல், பிடித்தல். நடுதல் - நடல், நாட்டல். படுதல் - உண்டாதல், சாதல், பூத்தல், அஸ்தமித்தல். விடுதல் - எறிதல், நீக்கல், அனுப்புதல். அடுதத்தல் - கிட்டல், சேர்த்தல். உடுத்தல் - சீலைசுற்றல், தரித்தல். எடுத்தல் - எடுக்குதல், அங்கீகரித்தல், வாங்குதல், வீடு முதலிய கட்டல். கடுத்தல் - உவமை, ஐயம், கோபம், சினம், வேகம். கெடுத்தல் - அழித்தல். கொடுத்தல் - ஈதல். தடுத்தல் - தகைதல், விலக்கல். தொடுத்தல் - கட்டல்; பற்றல், வளைத்தல். படுத்தல் - கொலைசெய்தல், படுத்தல். மடுத்தல் - பருகல், வாய் முதலிய வற்றான் மடுத்தல். விடுத்தல் - அனுப்பல், தங்கல், நடத்தல். அடுப்பு - அச்சம், பரணிநாள், சமை யல், செய்யும் அடுப்பு, மணவை. இடுப்பு - இடை, பக்கம். உடுப்பு - சீலை, உடை, ஆடை, சொக்காய். எடுப்பு - எடுத்தல், எடுவென்னேவல், இறுமாப்பு, மேட்டிமை, உயரம். கடுப்பு - சினம், விரைவு, அகங்காரம், கொதிப்பு. கொடுப்பு - கதுவல், கதுப்பு. தடுப்பு - தடுத்தல். துடுப்பு - நெய்த்துடுப்பு முதலியன, பூங்கொத்து, அகப்பை, வலி தண்டு. தொடுப்பு - கலப்பை, தொடுத்தல், வெறும்புறங்கூறல். நெடுப்பு - நீளிப்பு. மடுப்பு - மடிப்பு. கடுமை - கொடுமை, மிகுதி. கொடுமை - கொடுங் கோன்மை, பொல்லாங்கு. நெடுமை - நீளம், பெண் மயிர். அடும்பு - அடப்பங்கொடி. இடும்பு - இடும்பை, அகந்தை, பொல் லாங்கு. உடும்பு - கோதா, இரண்டு நாக் குள்ள ஒரு ஜெந்து, முசலி. கடும்பு - உறவு, சும்மாடு, ஈன்றண் ணிய பசுவினுறை பால். குடும்பு - கொத்து, சுற்றம். கெடும்பு - அருந்தல், கேடு. தடும்பு - தழும்பு, வீக்கம். உடுவை - அகழ். குடுவை - சிறுபானை. துடுவை - நெய்த்துடுப்பு. தொடுவை - கூட்டாளி, தொடுத் திருப்பது, புதுயானையைப் பழக்கும் யானை, வைப்பாட்டி. படுவை - தெப்பம், வினைமுற்று. அடை - அடுத்தல், அப்பவர்க்கம், இலைகனம், காப்புச்செய், சேர் என்பவற்றேவல், தோசை. இடை - இடம், இடை, இடையென் னேவல், ஏழனுருபு (உ-ம்.) நல்லாரி டைப்புக்கு, நடு, நிறை, நுசுப்பு, பக்கம், பௌரணை, யானை. உடை - உடையென்னேவல், உடைமை, செல்வம், ஆடை, சீலை, செல்வம், வேலமரம். எடை - எடுத்தல், எழுப்பல், நிறை யிடல். ஒடை - ஒரு மரம். கடை - ஆவணம், ஏழனுருபு (உ-ம்.) அவன் கடைச் சென்றான், கடை யென்னேவல், கீழ், புறவாயில் பூணின் கடைப்புணர்வு, முடிவு, வழி, வாயில் அங்காடி. கிடை - உவமை, கிடை, கிடையென் னேவல், சடை, படுக்கை, வேதம் பயிலிடம். குடை - குடை, குடை யென்னேவல், குமரனாடல், பாதக்குறட்டின் குமிழ், வேலமரம், கவிகை, உட்டுளைப் பொருள். கொடை - ஈகை, அருளல், அளித்தல், தியாகம், வேளாண்மை. சடை - ஓர்வகைப்பூடு, சடை, வேர், ஆணியின் கொண்டை பின்னல். தடை - கவசம், தடுத்தல். துடை - துடையென்னேவல், விட்டம். தொடை - அம்பு, சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம், செய்யுளுறுப்பி லொன்று தொடை, நாணி, பூமாலை, மதிற்சுற்று. நடை - ஒழுக்கம், கூத்து, செல்வம், வழி, முறை. நொடை - விலை, விற்றல். படை - ஆயுதம், கலப்பை, கல்லனை, தானை, படையென்னேவல், போர். பிடை - மூசை. புடை - இடம், பக்கம், புடையென் னேவல். பெடை - பறவைப் பெண். மடை - ஆபரணக் கடைப்பூட்டு, சோறு, துவாரம், நீர்பாயுமடை, மதகு. மிடை - தூறு, மிடையென்னேவல். முடை - ஓலைக்குடை, நாற்றம், புலால், முடையென்னேவல். விடை - இடபவிராசி, எதிர்மொழி, எருது, விடுதல், பதில், அருத்தம். அடைக்கலம் - கையடை. படைக்கலம் - ஆயுதம், எழு. அடைச்சல் - பொத்துதல். கடைச்சல் - கடைதல். குடைச்சல் - வருத்தம், குடைவு. அடைச்சி - உடுத்து. இடைச்சி - முல்லை நிலப்பெண், பாற்காரி. கடைச்சி - மருதநிலப் பெண், இளைய மகள். சடைச்சி - பாசி, நெட்டி, புளியாரை. மடைச்சி - சமையற்காரி. அடைதல் - சேர்தல், கூறுதல், பெறுதல். இடைதல் - இடையல், சீலை, பின் வாங்குதல். உடைதல் - கெடுதல், சாய்தல், தளர்வு. கடைதல் - குடைதல், சிலுப்புதல், கலக்குதல். குடைதல் - கடைதல், குளித்தல், சிலுப்புதல். சடைதல் - மனமடிதல், பலவீன மாதல். மிடைதல் - நெருங்கல். முடைதல் - இளைத்தல், நிணத்தல், பின்னுதல். விடைதல் - கோபம், சினம், கொல்லு தல், பிளத்தல். அடைத்தல் - காப்புச் செய்தல், சேர்த்தல், தடுத்தல். உடைத்தல் - தகர்த்தல், சிரித்தல். கிடைத்தல் - எதிர்த்தல், பெறுதல், அடைதல். சடைத்தல் - கிளைத்து நெருங்குதல். துடைத்தல் - துடைக்குதல், நாசம் பண்ணுதல், அழித்தல். படைத்தல் - உண்டாக்கல், ஊண் பகுத்திடல். புடைத்தல் - அடித்தல், குட்டுதல், பறவைச் சிறகடித்தல், புடைக்கு தல், வீங்குதல். விடைத்தல் - சினக்குறிப்பு, பெருங் கோபம். அடைப்பம் - அம்பட்டனாயுதவுறை, வெற்றிப் பை. துடைப்பம் - வாருகோல். அடைப்பு - கதவு, வேலி. உடைப்பு - தகர்ப்பு, தளர்வு. இடையர் - முல்லைநிலமாக்கள். கடையர் - கீழ்மக்கள். மடையர் - சமையற்காரர். அடையல் - எல்லாம். இடையல் - இடைதல், நல்லாடை, பின்னிடல், மெலிதல். உடையல் - கெடல், முறியல். கடையல் - குடையல். குடையல் - குடைதல். தொடையல் - தொடுத்தமாலை, மாலை. படையல் - நிவேதனம் - அடுக்குமடி. முடையல் - பின்னல், முடைதல். இடையன் - ஆடு மாடு மேய்ப்போன், யாதவன், முல்லைநிலமகன். கிடையன் - பழங்கிடையன். குடையன் - முருகக் கடவுள். கடையன் - சிவன், வீரபத்திரன். நடையன் - உழுமாடு, ஏறுகுதிரை முதலியன, பாதக்குறடு. படையன் - அடித்தல், அடிமை, ஓர் பாம்பு. மடையன் - சமையற்காரன். சடையோன் - சிவன், வீரபத்திரன். விடையோன் - சிவன். கட்கம் - வாள். வெட்கம் - நாணம். உட்கல் - அஞ்சல், மடிதல், வியங் கோண்முற்று, வெட்கம். திட்கல் - அச்சக் குறிப்பு, வியங் கோண்முற்று. துட்கல் - அச்சக்குறிப்பு, வியங் கோண்முற்று. மட்கல் - அழுக்கேறல், ஒளி மழுங்கல், வியங்கோண்முற்று. வட்கல் - கெடுதல், வியங்கோண் முற்று வெட்கம். வெட்கல் - அச்சக்குறிப்பு, நாணுதல், வியங்கோண்முற்று. அட்சி - கண், சேரென்னுமளவை. எட்சி - துர்க்கைக்கு ஏவல் செய்யும் பெண், குபேரன் மனைவி. கட்சி - காடு, பறவைக்கூடு, மனிதர் படுக்கை, வழி. பட்சி - பறவை. விட்சி - ஒரு மரம். வெட்சி - ஓர்வகைப் பூஞ்செடி, பகை நிரை யோட்டுவார்க்கு மாலை. அட்டகம் - எட்டின் கூட்டம், வட மொழியிலோர் பிரபந்தம், வசம்பு. ஒட்டகம் - ஒட்டை, நெடுங்கழுத்தன். கட்டகம் - காந்தக்கல். கொட்டகம் - கொட்டில். சட்டகம் - உடல், மனிதர் படுக்கைப் பொது, வடிவு. செட்டகம் - அதிசத்தம். துட்டகம் - பொல்லாங்கு. பட்டகம் - பண்டக சாலை, புழுக் கொல்லிச் செடி. பிட்டகம் - பலகாரம், பல்லழுக்கு. புட்டகம் - சீலை. பெட்டகம் - பெட்டி, ஒரு நூல். உட்டணம் - வெப்பம். நட்டணம் - கூத்து. பட்டணம் - நகரம். பொட்டணம் - கொதி. வட்டணம் - பரிசை. அட்டம் - எட்டு, சாதிக்காய். இட்டம் - அன்பு, இச்சைப்படி. எட்டம் - தூரம். ஒட்டம் - ஓடு, தோண்டலளவைத் திடர், பந்தயம், இகலாட்டம், உடன்படிக்கை. கட்டம் - தாடி, துன்பம், மலம், துறை முகம். கிட்டம் - இருப்புக்கிட்ட முதலியன, சமீபம், மலம், வண்டல். குட்டம் - ஆழம், குளம், தொழு நோய். கெட்டம் - தாடி. கொட்டம் - தொழுவம், பொல் லாங்கு, மூங்கிற்கொட்டு. சட்டம் - கதவிற்பலகை, திட்டம், எழுது மோலை, பூரணம். சிட்டம் - ஒழுக்கம். தட்டம் - உண்கலம், பல், பாம்பினச் சுப்பல், மக்கட்படுக்கை, அல்குல். திட்டம் - ஒப்புரவு, நிலவரம், உறுதி. துட்டம் - தீக்குணம், பொல்லாங்கு. தொட்டம் - துண்டு நிலம். நட்டம் - கூத்து, கேடு. நெட்டம் - மிளகு. பட்டம் - ஆயுதம், கவரிமா, குளம், சீலை, நெற்றிப்படலம், பதவி, மனிதர் படுக்கை, வழி, விலங்கின் படுக்கை. பிட்டம் - கடிப்பிரதேசம், சிற்றுண்டி. புட்டம் - காக்கை, சீலை, நிறைவு. மட்டம் - அளவு, கேடகம், வாலக் குதிரை, உத்தேசம். முட்டம் - திருமால் தலங்களில் ஒன்று. வட்டம் - குளம், கேடகம், கைமணி, கொள்கலம், சக்கரம், சீலை, தாழ்வு, திரிகை, நீர்ச்சால், பரி வேடம், பீடம், பொற்காசு, முத லியவற்றின் வட்டம், வளை தடி. விட்டம் - உத்திரம். அட்டல் - அழித்தல். எட்டல் - தாவுதல், வியங்கோண் முற்று. ஒட்டல் - உடன்படல், ஒட்டுதல், வியங்கோண்முற்று. கட்டல் - தடை, திருடல், தோண்டல், பிணித்தல், மூடல், வியங்கோண் முற்று. கிட்டல் - அடுத்தல், எதிர்த்தல், வியங்கோண்முற்று. குட்டல் - தகர்த்தல், வியங்கோண் முற்று. கொட்டல் - அடித்தல், அப்புதல், கொட்டுதல், வியங்கோண்முற்று. சுட்டல் - காட்டல், குறித்தல், வியங் கோண்முற்று. சொட்டல் - அணாப்பல், இடித்தல், குட்டல். தட்டல் - ஆணையிடல், கிட்டல், தடுத்தல், தாளம்போடல், வியங் கோண்முற்று. திட்டல் - வைதல், வியங்கோண் முற்று. தெட்டல் - வஞ்சித்தல், அபகரித்தல், வியங்கோண்முற்று. தொட்டல் - தீண்டல், தோண்டல். நட்டல் - உறவாடல். புட்டல் - தலைச்சுமை. பெட்டல் - ஆசைப்பெருக்கம், விரும்பல். பொட்டல் - கரம்பு. முட்டல் - எதிர்த்தல், குறைவுறல், வியங்கோண்முற்று. மொட்டல் - அரும்பல். வெட்டல் - கொலை செய்தல், தரித்தல், வியங்கோண்முற்று. அட்டார் - சமைத்தார். இட்டார் - பெரியோர், உறவினர், கொடையாளர். ஒட்டார் - பகைவர். கெட்டார் - தாழ்ந்தார். தட்டார் - பொற்கொல்லர். நட்டார் - உறவோர். பெட்டார் - சிநேகிதர். அட்டி - அதிமதுரம், செஞ்சந்தனம், தடை. இட்டி - ஈட்டி, யாகம், விருப்பம். எட்டி - ஓர் சாதி, காஞ்சிமரம், வினை யெச்சம், செட்டி. ஒட்டி - ஒரு மீன். கட்டி - அகமகிழ்ச்சி, ஓர் வகைப் புள், கட்டி, கருப்புக்கட்டி, வினை யெச்சம். கிட்டி - கிட்டி, கைத்தாளம், தலை யீற்றுப் பசு, நாழிகை வட்டில், வினையெச்சம். இடுக்குத்தடி, பன்றி. குட்டி - ஆடு, நரி, நாய், பன்றி, புலி, மான், முயலுமன்றிக் குரங்கு முதன் மரக்கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை, வினையெச்சம், குழந்தை, சிறுபெண். கெட்டி - சாமர்த்தியம், உறுதி, உலோப குணம். கொட்டி - ஓர் வகைக் கிழங்கு, வினை யெச்சம். சட்டி - ஓர் திதி, ஓர் பாத்திரம், சட்டி யென்னேவல். சிட்டி - படைப்பு. சுட்டி - நுதலணி, வினையெச்சம். செட்டி - வாணிபன், குமரன். தட்டி - காவல், கேடகம், பலகை, வினையெச்சம். திட்டி - கண், ஞானம், பார்வை, வினையெச்சம். தொட்டி - ஓர் பாத்திரம். நட்டி - நட்டம். நெட்டி - நெட்டிச்செடி, சடை. பட்டி - இடம், ஓர்வகைச் செடி, களவு, சிற்றூர், சீலை, தெப்பம், பலகறை, பிள்ளை, விக்கிர மாதித்தன் மந்திரி, வெற்றிலைச் சுருள், வேசி. பிட்டி - சிறு கூடை. புட்டி - கொழுப்பு, திடர். பெட்டி - பேழை. மட்டி - படைக்கலம், மட்டியென் னேவல், மதிகேடன். முட்டி - எட்டிமரம், கைப்பிடி, பிச்சை, வினையெச்சம். யட்டி - ஊன்றுகோல், முத்துத்தாழ் வடம். வட்டி - பலகறை, முதற்பொருட்கு வருமூதியம், வட்டியென்னேவல். விட்டி - கோழி, கோழிக்காணம். வெட்டி - வழி, வினையெச்சம், வீண். அட்டிகை - ஓர்வகை யாபரணம். இட்டிகை - இடுக்குவழி, செங்கல். சுட்டிகை - சுட்டி. பட்டிகை - அரைநாண், சீலை, சீந்தில், தெப்பம், தோணி, முலைக்கச்சு. வட்டிகை - கூடை, கைம்மணி, சித்திரம், நால்வகைச் சாந்து. சட்டித்தல் - அழித்தல், கொல்லல். சிட்டித்தல் - பிறப்பித்தல். மட்டித்தல் - மண்டலித்தல். வட்டித்தல் - ஆணையிடல், ஊணிடு தல், தாளம்போடல். ஒட்டியம் - ஓர் தேசம். கட்டியம் - புகழ்தல். குட்டியம் - சுவர். கொட்டியம் - எருது. தொட்டியம் - ஓர்வகைக் கருநூல். மட்டியம் - ஓர்வகைக் கருநூல். மட்டியம் - ஓர்வகைத் தாளம். அட்டில் - மடைப்பள்ளி. கட்டில் - மஞ்சம். கொட்டில் - ஒதுக்கிடம், பசுக் கொட்டில். தொட்டில் - குழந்தைகளை வைத்து ஆட்டுஞ் சிறு கட்டில். புட்டில் - இறைகூடை, கூடை, படை யுறை. வட்டில் - கூடை, புட்டில், வட்டில், வழி. விட்டில் - பராய்மரம், விட்டிற்பறவை. அட்டு - பனாட்டு, வினையெச்சம். இட்டு - அசைச்சொல், (உ-ம் : நெஞ் சம் பிளந்திட்டு) வினையெச்சம், நுண்மை. எட்டு - ஆசை, எட்டென்னேவல், ஓரெண். ஒட்டு - ஒட்டென்னேவல், படை வகுப்பு, அருகு, இகலாட்டம். கட்டு - உறுதி, கட்டென்னேவல், காவல், குறி, தளைதல், மலைப் பக்கம், மிகுதி, வரம்பு, பிணி, யாப்பு. கிட்டு - சமீபித்தல், அவ்வேவல். குட்டு - குட்டுதல், குட்டென்னேவல், மானம். கெட்டு - பக்கக்கிளை. கொட்டு - கொட்டென்னேவல், மண் வெட்டி, அடி. சட்டு - ஆறு, சேதம். சிட்டு - ஒர்வகைப் புள், அற்பம். சுட்டு - குறி, சுட்டென்னேவல், வினையெச்சம், எண்ணம். செட்டு - செட்டிமை, சிக்கனம். சொட்டு - குற்றம், திவலை, துளி. தட்டு - கம்பு முதலிய சில புன்பயிர்த் தாள், குற்றம், தட்டென்னேவல், தராசுத்தட்டு, திரிகை, தேர்நடு, பரிசை, மரவட்டணை, முட்டு, முறம், வட்டம், வளைவு. திட்டு - திட்டென்னேவல், மேடு, நிந்தை, விசை. துட்டு - தீமை, காசு. தெட்டு - தெளிவு. தொட்டு - தொடங்கி. நட்டு - சரிநடு. நெட்டு - காம்பு. பட்டு - உல்லாசம், சிற்றூர், பட்டுச் சீலை, வினையெச்சம். பிட்டு - சிற்றுண்டி, தினைமா, வினை யெச்சம். பெட்டு - பொய். பொட்டு - ஓர்வகைப்புழு, தாலிப் பொட்டு, தானியப் பொட்டு, நெற்றித் திலகம், பொய், சிறுவழி. மட்டு - அவதி, அளவு, கள். முட்டு - கடிவாளம், குறைவு, முட் டென்னேவல். மெட்டு - ஆயத்துறை, சுங்கச் சாவடி. மொட்டு - இளம்பூவரும்பு. வட்டு - சூதாடுகருவி, திரட்சி. அட்டுதல் - வார்த்தல். எட்டுதல் - தாவுதல். ஒட்டுதல் - பொருந்துதல். கட்டுதல் - பிணித்தல், தழுவுதல். கிட்டுதல் - அணுகல். குட்டுதல் - புடைத்தல். கொட்டுதல் - அடித்தல், கடித்தல். சுட்டுதல் - குறித்தல், மதித்தல். சொட்டுதல் - துளி துளியாய் விழுதல். தட்டுதல் - முழக்கல். திட்டுதல் - வைதல். தெட்டுதல் - வஞ்சித்தல். நெட்டுதல் - தள்ளுதல். முட்டுதல் - மோதுதல். மொட்டுதல் - அரும்பல். வெட்டுதல் - வெட்டல். குட்டுவன் - சேரன். நட்டுவன் - ஆட்டுவிப்போன். அட்டை - அட்டை, வினைமுற்று, செருப்பினடி, நீரில் வாழும் செந்து. ஒட்டை - ஒட்டகம், வினைமுற்று. கட்டை - விறகு, வினைமுற்று, தேய்ந்தது. குட்டை - குள்ளம், சிறுகுளம், வினை முற்று, ஒரு வியாதி. தொட்டை - ஓர்வகைக்காதணி, பாதக் குறட்டின் குமிழ், மா பலா முதலி யவற்றின் கொட்டை, வினைமுற்று. சட்டை - அங்கி. செட்டை - இறகு, கைப்பட்டை. சொட்டை - கோணல். தட்டை - கிளிகடிகோல், தினைத்தாள், மூங்கில், மொட்டை, வினைமுற்று. திட்டை - உரல், திடர், திண்ணை, மேடு, வினைமுற்று. துட்டை - வசவி. நிட்டை - மனமசை வற்றிருத்தல். நெட்டை - தசைகழிந்த வெலும்பு, நெடுமை. பட்டை - மரப்பட்டை, வினைமுற்று. பிட்டை - அண்டவாதம், இளஞ்சூல். பெட்டை - ஒட்டகம், கழுதை குதிரை, சிங்கம், மரை யிவற்றின் பெண், பறவைப் பெண். பொட்டை - குருடு, கூசிய கண். மட்டை - உடற்குறை, கமுகு தெங்கு பனை யிவற்றின் மட்டை. முட்டை - அண்டம், தவிடு, வினை முற்று. மொட்டை - மழித்தல். வட்டை - வழி. விட்டை - மலம், வினைமுற்று. வெட்டை - உட்டணம், வினைமுற்று. ஒட்பம் - முதுக்குறைவு. சட்பம் - அறுகு, மயிர். தட்பம் - குளிர்ச்சி. திட்பம் - காலநுட்பம், நுண்மை. தெட்பம் - முதிர்ச்சி, தெளிவு. நுட்பம் - காலநுட்பம், நுண்மை. புட்பம் - பூ. கொட்பு - சுழற்சி, திரிவு, வளைவு. நட்பு - உறவு, சினேகம். பெட்பு - ஆசை. ண இணக்கம் - இணங்கல், உடன்பாடு, வினைமுற்று. உணக்கம் - வாட்டம், வினைமுற்று. சுணக்கம் - சோர்வு, தாமதம், பிணக்கம். நுணக்கம் - நுணங்கள். வணக்கம் - தொழுதல், வினைமுற்று. பிணக்கம் - பிணங்கல். இணக்கு - இணக்கென்னேவல், இயைவு, சம்மதி. கணக்கு - எண், எழுத்து. குணக்கு - கிழக்கு, கோணல். தணக்கு - தணக்கு, நுணவு. பிணக்கு - பிணங்கல். அணங்கல் - அஞ்சல், கொல்லுதல், விரும்புதல், வருந்துதல். இணங்கல் - உடன்படல், வியங் கோண்முற்று. உணங்கல் - வாடல், வியங்கோண் முற்று, உலர்தல். சுணங்கல் - தாமதித்தல். நுணங்கல் - துவளல், நுண்மை, முடங்கல், வியங்கோண்முற்று. பிணங்கல் - நெருங்கல், பின்னல், மாறுபடல், வியங்கோண்முற்று. மணங்கல் - பானை. முணங்கல் - அடங்குதல். வணங்கல் - தொழுதல், வளைதல், வியங்கோண் முற்று. அணங்கு - அச்சம், அணங்கென் னேவல், அழகு, ஆசை, கொலை, தெய்வப்பெண், தேவர்க்காடுங் கூத்து, நோய், வருத்தம். இணங்கு - உடன்படென்னேவல், பிசாசம். சுணங்கு - தேமல். துணங்கு - இருள். நுணங்கு - நுணங்கென்னேவல், நுண்மை. மணங்கு - ஆட்டுக்குட்டி, ஓர்வகை நிறை. முணங்கு - அடக்கம். தணத்தல் - நீங்கல், போகல். நிணத்தல் - கொழுத்தல், முடைதல், வியங்கோண் முற்று. மணத்தல் - கமழ்தல், கூடல், வாசனை விடுதல், வேட்டல். அணம் - மேல்வாய், கீழ்வாய்ப்புறம். கணம் - ஓர்வகைநோய், கால நுட்பம், கூட்டம், சிறுமை, திரட்சி, படை யிலோர் தொகை, பிசாசம், மாத் திரை, வட்டம், விலங்கின் கூட்டம், நீர்த்துளி, பதினெட் டென்னுமோரிலக்கம், விண்மீன். குணம் - குடம், சீர்மை, நாணி, நிறம், நூல், பண்பு, முக்குணம். கெணம் - சமூலம். சணம் - சணல், கடலை. செணம் - சனம். நிணம் - கொழுப்பு. பணம் - பருமை, பாம்பின்படம், பாம்பு, பொற்காசு, சூதாடு கருவி. பிணம் - பிசாசம், பிரேதம். மணம் - கலியாணம், வாசனை, கூட்டம். வணம் - பலகறை, வனம். அணரி - மேல்வாய். புணரி - கடல், கடற்றிரை. இணர் - பூங்கொத்து, பூந்தாது, பூ, மலர். துணர் - பூ, பூங்கொத்து, பூந்தாது. பிணர் - கோங்கு, சர்ச்சர வடிவு. புணர் - புணரென்னேவல், புதுமை. வணர் - வளைவு. உணர்தல் - அறிதல், ஊடறீர்தல், எண்ணல், தெளிவு. கொணர்தல் - கொண்டுவரல். புணர்தல்- கலத்தல், சார்தல். அணல் - கீழ்வாய், மிடறு. தணல் - நெருப்பு. நுணல் - தவளைப்பேதம். கணவம் - அரசமரம். பணவம் - தம்பட்டம். அணவன் - பொருந்தினவன். கணவன் - புருடன், தலைவன், நாயகன், கொண்டோன். அணவு - சாரென்னுமேவல், நடு. உணவு - உணா. நுணவு - தணக்கமரம், நுணாமரம். பிணவு - நாய் பன்றி புல்வாயிவற்றின் பெண். பணவை - கழுகு, பரண். மணவை - அடுப்பு, வினைமுற்று. அணா - பன்னிரண்டு தம்படி கொண்ட ஒரு நாணயம். உணா - அஃறிணைப் பன்மை வினை முற்று, உணவு, சோறு. கொணா - கொணாவென்னேவல். நுணா - நுணாமரம். பிணா - கவரிமா நாய் பன்றி புல்வாயி வற்றின் பெண், பெண்பொது, விலங்கின் பெண் பொது. அணி - அணியென்னுமேவல், அலங்காரம், அழகு, ஆபரணம், ஒழுங்கு, நன்மை, படைவகுப்பு, பெருமை, மாலை. இணி - எல்லை, ஏணி, கண்ணாறு. உணி - ஓர் பூச்சி, அனுபவிப்பான். கணி - ஓர்வகைச் சாதி, கணியென் னேவல், மருத நிலம், வேங்கை மரம். கிணி - கைத்தாளம். குணி - ஊமை, குணியென் னேவல், பண்பி, வில். சிணி - கெட்ட நாற்றம். திணி - திணியென்னேவல், திண்மை, நெருக்கு, துறுத்து. துணி - ஒளி, சோதிநாள், துணியென் னேவல், துண்டம், தூக்கங்கள், தெளிவு, தேரிடக்கியம். நுணி - நுதி, நுனை, முனை. பணி - ஆபரணம், ஏவல், சொல், தொழில், தோற்கருவி, பட்டுச் சீலை, பணியென்னேவல், பாம்பு. பிணி - கட்டு, துன்பம், நோய், பிணி யென்னேவல். மணி - அழகு, ஓசை, கறுப்பு, நவமணிப் பொது, முத்து. அணிகம் - சிவிகை. கணிகம் - நூறுகோடி. திணிகம் - போர். வணிகம் - செட்டு. விணிகம் - ஒலி. கணிகை - வேசி. விணிகை - கச்சு. அணிதல் - அலங்கரித்தல், பூணல், படை வகுத்தல். தணிதல் - ஆறுதல், பருத்தல், குளிர்தல், குறைதல். திணிதல் - திண்மை, நெருக்கல். துணிதல் - தெளிதல், அஞ்சாமை. பணிதல் - வணங்கல். பிணிதல் - கட்டல், பிணித்தல். கணித்தல் - எண்ணல், மதித்தல், அளவு குறித்தல். குணித்தல் - எண்பெருக்கல், மதித்தல். தணித்தல் - அறிவித்தல், இளக்குதல், ஆற்றுதல், குறைத்தல். திணித்தல் - துறத்தல். துணித்தல் - அறுத்தல், வெட்டல், திடன் கொளல். நுணித்தல் - குணம், நுணுக்கல். பணித்தல் - ஈதல், சொல்லல், ஏவுதல். பிணித்தல் - கட்டல். அணியல் - மாலை, வியங்கோண் முற்று, தளபாடம், படகின் முன் பக்கம். தணியல் - கள், தணிதல், வியங் கோண்முற்று. பணியல் - வணங்கல், வியங்கோண் முற்று. பணியல் - வணங்கல், வியங்கோண் முற்று. அணில் - அணிற்பிள்ளை. குணில் - கவண், குறுந்தடி, பறை யடிக்குங் குறுந்தடி. துணிவு - தெளிவு. பணிவு - வணக்கம். அணு - உயிர், சிறுமை, நுண்மை, இனம். கணு - மரக்கணு, கவர், மூட்டு. குணு - புழு. சுணு - அறு, கீறு. நிணு - அணி, பொருத்து. அணுகல் - கிட்டல், வியங்கோண் முற்று. நணுகல் - கிட்டல், வியங்கோண் முற்று. திணுக்கம் - திணுங்கல். துணுக்கம் - அச்சம், உள்ளோசை. நுணுக்கம் - கூர்மை, நுண்மை. திணுங்கல் - நெருங்கல், வியங்கோண் முற்று. நுணுங்கல் - நுண்மை, வியங்கோண் முற்று. அணை - கரைப்பொது, செய்கரை, புணரென்னு மேவல், மெத்தை, வரம்பு, ஆசனம், உதவி. இணை - இச்சை, இணையென்னு மேவல், உவமை, கண்ணிணை, கூந்தல், துணை, இரண்டு, சகாயம், சோடி. உணை - மெலிவு. கணை - அம்பு, திரட்சி, நிறைவு, பூரநாள், வளைதடி. கிணை - மருதப்பறை, தடாரிப் பறை. சுணை - சுரணை, தினவு. திணை - அகத்திணை, அஃறிணை, இடம், உயர்திணை, ஒழுக்கம், குடி, குலம், புறத்திணை, பூமி. துணை - அளவு, இணை, ஒப்பு, சகாயம், சல்லியம், ஆதரவு, உதவி. பணை - அரசமரம், குதிரைப்பந்தி, பணை யென்னேவல், பெருமை, பறைப்பொது, பிழைத்தல், மரக் கொம்பு, மருதநிலப்பறை, மருத நிலம், முரசு, மூங்கில், வயல், விலங்கின் படுக்கை. பிணை - ஆசை, உடன்பாடு, ஒட்ட கம், கவரி, கழுதை, குதிரை, நாய், பன்றி, புல்வாய், யானை இவற் றின் பெண், கட்டு, பிணை யென் னேவல், பூமாலை. புணை - தெப்பம், புணையென் னேவல், மூங்கில், விலங்கு. மணை - பீடம். அணைதல் - அடைதல், சேர்தல். இணைதல் - இசைதல், சேர்தல், சையோகஞ் செய்தல், பொருந்தல். பிணைதல் - இணைத்தல், கலத்தல். அணைத்தல் - தழுவல், அவித்தல். இணைத்தல் - சேர்த்தல், உவமித்தல், தொடுத்தல். சணைத்தல் - கொழுத்தல், வரிந் துண்டாதல். சுணைத்தல் - சுனைத்தல். பணைத்தல் - பருத்தல், பிழைத்தல். பிணைத்தல் - கட்டல். புணைத்தல் - கட்டல். இணைவு - கலத்தல். துணைவு - விரைவு. பிணைவு - புணர்ச்சி. அண் - வேட்டை நாயின் உருவு கயிறு, தடியில் வெட்டிய வரை. உண் - அருந்து, சாப்பாடு. எண் - எண்ணிக்கை, எண்ணென்னு மேவல், எளிமை, எள், கணக்கு, சோதிட நூல், வரையறை, வலி, விசாரம், அறிவு, ஆலோசனை. கண் - இடம், ஏழனுருபு, (உ-ம். மணிக்கணொளி) கணு, கண் ணென்னேவல், கண்ணோட்டம், பெருமை, மயிற்றோகைகண், நுங்குக்கண், மூங்கில், விழி. கிண் - கூட்டாளி, கையாள், தாயம். தண் - குளிர்ச்சி. திண் - பலம். தெண் - தெளிவு. நுண் - அணு, நுண்மை. பண் - இசைப்பாட்டு, குதிரைக் கல்லணை, நிறை, நரம்புள்ள வீணை, பண்ணென்னேவல். பிண் - ஊண், இரணம். பெண் - வனிதை, விலங்கின்பெண், கற்றாழை. மண் - ஒப்பனை, சுட்டசாந்து, பூமி, மண்ணென்னேவல், மலை, மாட் சிமை, முழவின் மார்ச்சனை. வண் - தெளிவு, மிகுதி. விண் - ஆகாயம், இளமை, மேகம். கண்டகம் - காடு, சுரிகை, முள், வாள். தண்டகம் - தண்டகாரணியம், வட மொழியிலோர் செய்யுள். தொண்டகம் - குறிஞ்சிநிலப்பறை. மண்டகம் - சருக்கரை போடாத கோதுமைப் பூரி. முண்டகம் - கள், தாமரை, தாழை, நெற்றி, முட்செடி, முள்ளிச்செடி. கண்டகர் - அசுரர், கீழ்மக்கள். பெண்டகர் - அலியர். குண்டகன் - தலைவனைப் பிழைத் தீன்ற சோரபுத்திரன். கண்டகன் - ஓர்வகையரக்கன். அண்டகம் - ஆகாயம், பீசம், முட்டை, உலகம், தலையோடு, விரை. கண்டம் - எழுத்தாணி, கண்ட சருக் கரை, கவசம், கழுத்து, கைப் பிடி வாள், சிறுவாள், திரைச் சீலை, துண்டம், நாடு, யானைக் கச்சை, வெல்லம், வஞ்சனை, அளவு வகையினொன்று, எல்லை. குண்டம் - குடுவை, குண்டம், குளம், பானை. கெண்டம் - கண்டம். கொண்டம் - குறிஞ்சா. சண்டம் - கொடுமை, சீக்கிரம், பேடு. சுண்டம் - கள், யானைத் துதிக்கை. தண்டம் - அரசன், கொடுங்கோன் மையானிறையிறுத்தல், ஊன்று கோல், ஓர்வகைப் புருடப்பிர மாணம், குடைக் காம்பு, தண் டிப்பு, நாடு, படை, பண்டாரம், பற்றுக்கோடு, யானை செல்வழி, வணங்கல். துண்டம் - சாரைப்பாம்பு, துணி, துண்டித்தல், முகம், மூக்கு, பறவை மூக்கு, யானைத்துதிக்கை. தெண்டம் - அபராதம், வணக்கம். பண்டம் - பண்ணிகாரம், பொன், மெய்யறிவு. பிண்டம் - உடல், உண்டை, கருப்பத்தி லிருக்கும் பிண்டம், கவளம், கூட்டம், சோறு, பிச்சை, இரும்பு. மண்டம் - தயிரேடு, அலங்காரம், ஆமணக்கு. முண்டம் - உடற்குறை, தலைதிரட்சி, மொட்டைத்தலை. வண்டம் - குந்தாயுதம். அண்டர் - இடையர், பகைவர், வானோர். இண்டர் - இடையர், சிநேகர், சுற்றம். கண்டர் - துருசு. பண்டர் - பாடற்கீழ்மக்கள். பெண்டர் - அலியர். மண்டர் - படைவீரர். வண்டர் - கவிகள்கற்றோர், மங்கலப் பாடகர். குண்டலம் - ஆகாயம், குழை, வட்டம். தொண்டலம் - யானைத் துதிக்கை. மண்டலம் - நாடு, பூமி, வட்டம். விண்டலம் - ஆகாயம். குண்டலி - இசங்கு, காளி, பாம்பு. மண்டலி - ஓர்வகைப் பாம்பு, கூட்டம், நாய், பூமி, பூனை. தண்டலை - ஓர்வகையூர், சோலை, பூந்தோட்டம். வெண்டலை - தலையோடு. அண்டல் - கிட்டல், வியங்கோண் முற்று. உண்டல் - புசித்தல். கண்டல் - தாழை, நீர்முள்ளி. கிண்டல் - தோண்டல், வியங்கோண் முற்று, கிளர்தல், ஆராய்தல். கொண்டல் - கீழ்காற்று, மேகம். சுண்டல் - சுண்டுதல், தெரித்தல், வியங்கோண்முற்று. தண்டல் - தண்டுதல், வியங்கோண் முற்று. நண்டல் - பொங்கல். நொண்டல் - நொண்டுதல், வியங் கோண்முற்று, விழுங்கல். மண்டல் - நெருங்கல், மிகல், வியங் கோண்முற்று. மிண்டல் - நெருங்குதல். முண்டல் - நெருங்கல், வியங் கோண் முற்று. வண்டல் - மகளிர் விளையாட்டு, வண்டல். விண்டல் - மூங்கில். பண்டனம் - போர். முண்டனம் - மழித்தல். அண்டன் - கர்த்தா, சிவன். ஒண்டன் - ஆணரி. கண்டன் - ஓர்சோழன், புருடன், நாயகன், வீரன், எசமான். சண்டன் - காலன், சிவன், சூரியன், நமன், பேடி. கிண்டன் - ஒரு புடவை. குண்டன் - குண்டுணி சொல்வோன். கெண்டன் - மிண்டன். சுண்டன் - அறிவிலி, சதயநாள், மூஞ்சூறு. தண்டன் - வணங்கல். தெண்டன் - வணக்கம். தொண்டன் - அடியான். பண்டன் - ஆண்தன்மை யில்லாதவன். மிண்டன் - திண்ணியன். முண்டன் - மொட்டைத் தலையன், நாவிதன், இராகு. மொண்டன் - ஒரு சாமை. வண்டன் - திண்ணியன், குள்ளன், துட்டன். கெண்டாயுதன் - ஐயனார். தண்டாயுதன் - ஐயனார், நமன், வீமன். அண்டி - சேர்ந்து, வாழைத்தூர். உண்டி - உண்டல், உண்பாயென்னு முற்று, பறவையுணவு, பணம் தண்டும் பெட்டி. ஒண்டி - தனிமை. கண்டி - ஆபரணப்பெட்டி, ஓரளவு, ஓர் தேசம், கண்டியென்னேவல், தோளணி, பதக்கம், வினைமுற்று. கிண்டி - ஓரூர், கிளரி. குண்டி - ஈரல், மீன்சினை, துடுப்பு. கெண்டி - கெண்டிகை. கொண்டி - கொள்ளை, வினை முற்று, கதவிற் குடுமி. சண்டி - ரோஷமற்றவன், பிடிவாதக் காரன், உபத்திரவிப்பவன். சிண்டி - அளவுபடி தலைமயிர், குடுமி. சுண்டி - கள், சுக்கு, நீர்ச்சுண்டி, வினையெச்சம். தண்டி - ஓர் புலவன், தண்டியென் னேவல், தண்டேசன், வினை யெச்சம். திண்டி - தம்பட்டம், யானை. துண்டி - வெட்டு, நறுக்கு, முகம், பறவை, மூக்கு. தெண்டி - தண்டி, வினையெச்சம். தொண்டி - ஓரூர், கள், துவாரம். நொண்டி - முடவன். பண்டி - உரோகணிநாள், பண்டி, வயிறு. பிண்டி - அசோகமரம், கூட்டம் தினைமா பிண்டி யென்னேவல், பிண்ணாக்கு, புநர்பூசம், மா. மண்டி - இருகான் முடக்கி நிற்கு நிலை, கலங்கனீர். மிண்டி - கிளப்புமோர் கருவி. முண்டி - நாவிதன், முண்டியென் னேவல், மொட்டைத்தலைவன். மொண்டி - நொண்டி. வண்டி - வயிறு, ஊர்தி. வெண்டி - விருதா. கண்டிகை - கடகம், தோளணி, பணிச் செப்பு, பதக்கம்,மாதரணி வடம். குண்டிகை - கமண்டலம். சண்டிகை - காளி, துர்க்கை. சுண்டிகை - உண்ணா. தண்டிகை - சிவிகை. மண்டிகை - அப்பவர்க்கம். கண்டிதம் - கண்டிப்பு. முண்டிதம் - மொட்டை. கண்டித்தல் - கறித்தல், வெட்டல். தண்டித்தல் - வெட்டல். துண்டித்தல் - அறுத்தல், வெட்டல். பிண்டித்தல் - பிண்டமாக்கல். முண்டித்தல் - மழித்தல். குண்டியம் - பழிச்சொல். கொண்டியம் - வெறும்புறங்கூறல். இரண்டு - ஈகைக்கொடி. கண்டு - கருப்புக்கட்டி, கழலைக்கட்டி, வினைமுற்று, வினையெச்சம். குண்டு - ஆண் குதிரை, ஆழம், உருட்டுருண்டை, தாழ்வு, திரண் டகல். செண்டு - குதிரை வையாளிவீதி, செண்டு, பந்தெறி வீதி. ஞண்டு - கர்க்கடகவிராசி, நண்டு. தண்டு - ஒந்தி, சிவிகை, சேனை, தடி, தண்டாயுதம், தண்டென்னேவல், தொளையுடைப் பொருள், நம னாயுதம், படை, பூவிதழ், மிதுன விராசி, மூங்கில், வரம்பு, வீணை. துண்டு - துண்டம். தொண்டு - அடிமை, ஒன்பது, பழமை. நண்டு - கர்க்கடகவிராசி, ஞண்டு. பண்டு - பழைமை. பெண்டு - பெண்மகள். மண்டு - விலாப்புடைக்க உண வெடுத்தல். மிண்டு - மிதத்தாற் பிழைத்தல், மிண்டென்னேவல். மொண்டு - ஏந்தி. வண்டு - அம்பு, குற்றம், கைவளை, சங்கு, பூசநாள், வண்டு. விண்டு - அட்டாதசதரும நூலி லொன்று, காற்று, திருமால், மலை, மூங்கில், மேகம், வினை யெச்சம். அண்டை - அருகிடம், வினைமுற்று. இண்டை - இண்டு, தாமரை, மாலை. உண்டை - உண்டாயென்னு முற்று, திரட்சி, படைவகுப்பு, உருண்டை. கண்டை - சீலை, பெருமணி, யானை மணி, வினைமுற்று, வீரக்கழல். குண்டை - இடபவிராசி, எருது, சட்டி. செண்டை - ஓர் மீன். கொண்டை - மயிர்முடி, வினைமுற்று. சண்டை - போர், பிணக்கு. சுண்டை - சுண்டைச்செடி, வினை முற்று, கள், கிணறு, நீர்க்குண்டு. தண்டை - காலணி, பிரப்பங் கேடம், வினைமுற்று. தெண்டை - நெருக்கிடை. தொண்டை - ஆதொண்டைச்செடி, கழுத்து, கோவைச்செடி, யானைத் துதிக்கை, இனிய குரல். பண்டை - கல்வி, ஞானம், பண்டு. மண்டை - இரப்போர் கலம், தலை யோடு, வினைமுற்று. முண்டை - விதவை, மொட்டை. திண்ணகம் - செம்மறிக்கடா, துருவாட்டேறு. வண்ணகம் - முடுகியல். அண்ணம் - உண்ணா, மேல்வாய். உண்ணம் - ஒடைமரம், மேன்மை. எண்ணம் - குறிப்பு, மதிப்பு, ஆலோ சனை, கருத்து, நம்பிக்கை, விசாரம். கிண்ணம் - சிறுவட்டில், நாழிகை வட்டில். சுண்ணம் - சுட்டசாந்து, சுண்ணப் பொடி, பராகம், புழுதி, சதயம். செண்ணம் - வடிவு. தண்ணம் - ஒரு கட்பறை, காடுகுளிர், பறைப்பொது, மழு. திண்ணம் - மெய், வலி. மண்ணம் - சுட்டசாந்து, சுண்ணாம்பு. வண்ணம் - அழகு, இராகம், குணம், சந்தம், சாந்துப்பொது, நன்மை, நிறம், வடிவு. எண்ணலர் - பகைவர். நண்ணலர் - பகைவர். அண்ணல் - அருகன், இராசா, சார் தல், தமையன், புத்தன், பெருமை யிற் சிறந்தோன், முல்லை நிலத் தலைவன். உண்ணல் - புசித்தல், அனுபவித்தல். எண்ணல் - குறித்தல், தேர்ச்சி, மதித்தல், ஆலோசித்தல், கணிதம், கவலைப்படல். ஒண்ணல் - பொருந்தல், கூடுதல். கண்ணல் - கருதல், குறித்தல், கறை. சண்ணல் - பிடுங்கல். நண்ணல் - கிட்டல், சார்தல். பண்ணல் - செய்தல். மண்ணல் - அலங்கரித்தல், கழுவல். விண்ணல் - காவட்டம்புல். எண்ணவர் - மதிப்புடையவர். திண்ணவர் - வலியர். பண்ணவர் - கடவுளர், பாடகர், முனிவர். மண்ணவர் - மனிதர். தண்ணவன் - சந்திரன். பண்ணவன் - அருகன், குரு, திண் ணியன். மண்ணவன் - அரசன். விண்ணவன் - அருகன், தேவன். அண்ணன் - தமையன். எண்ணன் - சிவன். கண்ணன் - திருமால். திண்ணன் - வலியுள்ளவன். மண்ணன் - மதிகேடன். எண்ணார் - பகைவர். நண்ணார் - பகைவர். வண்ணார் - ஏகாலியர். அண்ணி - தமையன் மனைவி. கண்ணி - அரும்பு, தாம்பு, புட் படுக்குங் கயிறு, பூங்கொத்து, பூமாலை, வினையெச்சம். கிண்ணி - கிண்ணம். திண்ணியன் - வலியுடையோன். புண்ணியன் - அரன், அருகன். தெண்ணீர் - தெளிநீர். புண்ணீர் - இரத்தம். ஒண்ணுதல் - பொருந்துதல், மகடூஉ. கண்ணுதல் - கருதுதல், சிவன். பண்ணுதல் - செய்தல். மண்ணுலகு - பூமி. விண்ணுலகு - தேவலோகம். கண்ணேறு - கண்ணூறு. விண்ணேறு - இடி. திண்ணை - வேதிகை. பண்ணை - ஓர்வகைச்செடி, குளம், மகளிர் கூட்டம், மகளிர் விளை யாட்டு, மருதநிலம், வயல், விலங் கின் படுக்கை, வினைமுற்று. பெண்ணை - அநுடநாள், ஓர்வகை யாறு, பனைமரம். மண்ணை - அறிவில்லான், இளமை, பிசாசம், வினைமுற்று. வெண்ணை - நவநீதம். மண்ணோர் - மனிதர். விண்ணோர் - தேவர். கண்படல் - உரங்கல், வியங்கோண் முற்று. பண்படல் - செவ்விதாதல், வியங் கோண்முற்று. நண்பு - நட்பு. பண்பு - குணம். அண்மை - அணிமை. உண்மை - அறிவு, மெய். எண்மை - எளிமை. ஒண்மை - அழகு, அறிவு, ஒழுங்கு, நன்மை, மிகுதி. கண்மை - கண்ணோட்டம். தண்மை - இகழத்தக்க பொருள், எளிமை, குளிர்ச்சி, தாழ்வு, புல் லறிவு. திண்மை - வலி. நுண்மை - நுணுக்கம். பெண்மை - பெண்டன்மை, மாட்சிமை. வண்மை - அழகு, ஈகை, குணம், புகழ், மெய்ம்மை, வளமை. வெண்மை - அறிவின்மை, இளமை, வெள்ளை. த அதகம் - மருந்து, சுக்கு, பெரு மருந்து, கொடி. உதகம் - நீர், பூமி, மழைத்துளி. கதகம் - தேற்றான் மரம், விதானம். சதகம் - ஓர்வகைப் பிரபந்தம், தான்றி. சிதகம் - இடியேறு, தூக்கணங் குருவி. ததகம் - வாயு, காற்று. நிதகம் - நீர்முள்ளி. பதகம் - பறவை. பிதகம் - இடி. மெதகம் - கோமேதகம், மேன்மை, மதிப்பு. வதகம் - மரணம், வியாதி. சிதகன் - சுக்கிரன், தூக்கணங்குருவி. பதகன் - பாதகன். உதக்கு - வடக்கு. பதக்கு - இரண்டுமரக்கால் கொண் டது. சிதடி - அறிவிலி, சிள்வண்டு. பதடி - பதர். உதடு - அதரம். சிதடு - பேதமை. இதணம் - பரண். உதணம் - மொட்டம்பு. பதணம் - மதிலுண்மேடை, மதில். கதத்தல் - கோபித்தல். மதத்தல் - கொழுத்தல். மிதத்தல் - மிதப்பு. விதத்தல் - மிகப்படல். அதம் - அத்திமரம், சங்கரித்தல், தாழ்வு, பள்ளம், பின்பு, பின். இதம் - உரிமைசொல், இனிமை, நன்மை. உதம் - நீர், அழைத்தல், கேட்டல். கதம் - கடந்தது, கோபம், சினம், பாம்பு, பஞ்சம், வலி. கிதம் - பூருவம். குதம் - அபானப்புழை, கிடங்கு, தருப்பை, மலவாயில், மிகுதி, வெங்காயம். சதம் - அறுபடுபயிர், இலை, இறகு, நிலைமை, நூறு, இடி, எல்லாம், நித்தியம். சிதம் - சயமுறப்படல், ஞானம், விண்மீன், வெண்மை, வறுமை, அசையப்பட்டவை. சுதம் - கேடு. ததம் - அகலம், பின்பு, பிரிவு. திதம் - அக்கினி, அசைபவை, உறுதி நிலை. துதம் - அசைவு. நதம் - மேற்கோடு மாறு, வளைவு, உச்சத்திருந்து கிரகத்துக்குள்ள தூரம். நிதம் - நித்தியம், நஞ்சு. நுதம் - தோத்திரம். பதம் - அடையாளம், அழகு, அறுகு, இடம், உண்டல், காலம், கால், சொல், சோறு, நாழிகை, பக்குவம், வரிசை, வழி. மதம் - கருத்து, சமயமதம், சம்மதம், செருக்கு, யானைமதம், வலி, அறிவு. மிதம் - அளவு, மிருகம். முதம் - உவமை. வதம் - சங்காரம், கொலை. விதம் - புட்பொது, விதம், இனம், அறியப் படுதல், மாதிரி. கதம்பம் - ஆன்கூட்டம், கடப்பமரம், வாசனைப்பொடி, வெண்கடம்பு. நிதம்பம் - கடிதடம், மலைப்பக்கம். இதயம் - மனம். உதயம் - விடியல். சதயம் - ஓர் நாள். அதரம் - கீழுதடு, உதடு. இதரம் - அந்நியம், ஈனம், அழிவு, வித்தியாசம். உதரம் - வயிறு, கருப்பை, யுத்தம். கதரம் - யானைத்தோட்டி. குதரம் - மலை. சிதரம் - உரி, மழைத்துளி. அதரிசனம் - குருடு. சுதரிசனம் - கண்ணாடி, திருமால் சக்கரம். நிதரிசனம் - திருட்டாந்தம். அதர் - ஆட்டின் கழுத்ததர், நுண் மணல், புழுதி, வழி, நீளக்கிடங்கு. குதர் - பிரிவு. சிதர் - சிதரென்னேவல், சீலைத் துணி, பராகம், பூந்தாது, மழைத் துளி, மழைத்தூவல், உரி. பதர் - பதடி, அறிவீனன், அற்பம். புதர் - புதல், புலவர், ஞானிகள், தேவர், நூறு. மதர் - களிப்பு, மதரென்னேவல், மிகுதி, செருக்கு. சிதர்த்தல் - சிந்துதல். மதர்த்தல் - களித்தல். மதர்ப்பு - மதர்வு. விதர்ப்பு - அச்சம், நெருக்கம், போர், வெற்றி. அதலம் - கீழேழுலகி னொன்று. கதலம் - வாழை. சிதலம் - பதனழிவு. சுதலம் - கீழேழுலகி னொன்று. நிதலம் - கீழேழுலகி னொன்று. பதலம் - பதனம். விதலம் - கீழேழுலகினொன்று, பெட்டி. அதலன் - சிவபெருமான். கதலி - கற்றாடி, தேற்றா மரம், வாழை, விருதுக்கொடி. முதலி - முதல்வன், வினையெச்சம். கதலிகை - துகிற் கொடி. மதலிகை - ஆபரணத் தொடக்கு வடிவு, தூக்கங்கள். நுதலுதல் - கருதல், குறித்தல். முதலுதல் - முதலாதல். இதலை - கொப்பூழ். குதலை - அறிவிலான், மழலைச் சொல். சிதலை - கறையான், சீலைத்துணி, நோய். திதலை - தேமல். பதலை - சிறுமலை, தாழி, மத்தளம், மலை, வாயகன்றபறை. மதலை - கொடுங்கை, கொன்றை மரம், தூண், மகன், மரக்கலம். மிதலை - கொப்பூழ். முதலை - நீர்வாழ் முதலை. விதலை - நடுக்கம். இதல் - கவுதாரி, சிவல். கதல் - அசைதல். ததல் - நிலை. நுதல் - நுதலென்னேவல், நெற்றி, புருவம். புதல் - புருவம், புல், பூடு, புதர். முதல் - ஆதி, ஏழனுருபு (உ.ம்). சுரன் முதல் வந்த வுரன்மாய் மாலை, முதலென்னேவல். புதல்வன் - மகன். முதல்வன் - அரசன், அரன், அருகன், கடவுள். புதல்வி - மகள். முதல்வி - தலைவி. அதவம் - அத்திமரம், பின்பு, பள்ளம். கதவம் - காவல், கதவு. கிதவம் - ஊமத்தஞ் செடி. உதவல் - ஈதல், சகாயம், வியங் கோண்முற்று. கதவல் - கோபித்தல். சிதவல் - சீரை, தேரிடக்கியம். உதவி - கொடை, சகாயம், வினை யெச்சம். பதவி - செல்வம், வழி. அதவு - அத்திமரம். இதவு - இதம். கதவு - கபாடம், காவல். புதவு - ஒர்வகைப்புல், கதவு, கோபுர வாயிலிற் கதவு விட்டுப் புகும்வழி. பதவை - வழி. மிதவை - சோறு, தெப்பம். விதவை - கைம்பெண். அதழ் - பூவிதழ். இதழ் - இலை, உதடு, கண்ணிமை, பனையேடு, பூவிதழ். கதழ் - கடுப்பு, வேகம். அதள் - தோல், பட்டை, களகம் பளம். இதள் - இரதம், சிறுதூறு. உதள் - மேடவிராசி, வெள்ளாட்டுக் கடா, ஆடு. உதறல் - உதறுதல். கதறல் - கூப்பிடல், வியங்கோண் முற்று. பதறல் - வியங்கோண்முற்று, விரை தல். அதனம் - மிகுதி. கதனம் - கடுப்பு, கலக்கம், போர், கொலை, பேச்சு. குதனம் - குதனை. சதனம் - இலை, இறகு, வீடு, உறை, நீர். சிதனம் - கோடகசாலை. சுதனம் - ஆயுதப்பொது. சொதனம் - சுத்தஞ் செய்தல், சோதித் தல், துருசு, புடமிடுகை. நிதனம் - சாவு, அழிவு, வறுமை. பதனம் - கவனம், இளக்கம். மதனம் - கடைதல், காமம், மௌனம். வதனம் - முகம். விதனம் - வேதனை, மனத்துயர். இதன் - நன்மையுள்ளவன். சிதன் - அச்சமுள்ளோன், சுக்கிரன். சுதன் - மகன். பதன் - பக்குவம். புதன் - ஓர் கிரகம், தேவன், புலவன். மதன் - அழகு, கலக்கம், காமன், மாட்சிமை, வலி, வளமை. வதன் - கொலை செய்வோன். சதா - எப்போழ்தும், மரக்கலம். ததா - அப்படி. பிதா - அருகன், கடவுள், சிவன், தந்தை, பெருநாரை. புதா - கொக்கு. உதாரம் - கொடை. சிதாரம் - தேரிடக்கியம். அதாரன் - விவாகஞ் செய்யாதவன். உதாரன் - கொடையாளி, பேச்சுக் கரான். உதானம் - கண்டத்தியங்கும் வாயு. நிதானம் - ஆதிகாரணம், கடவுண் மணிக்கும் நவமணிக்கும்பொது, நிச்சயம், படை, பொன். விதானம் - உபாயம், கூட்டம், மேற் கட்டி, விதம். அதி - மிகுதிப் பொருளைத் தரு மடை சொல், அதிதி. இதி - உறுதி, பிசாசம், இப்படி, காரணம், அத்தாட்சி. உதி - உதித்தலைச் செய்யென் னேவல், உலைத்துருத்தி, ஓர் மரம், வித்தை. எதி - சந்நியாசி, பெரியோர். ஒதி - ஒதியமரம், உதிமரம். கதி - உபாயம், கதியென்னேவல், குதிரை நடை, சரண்புகல், நாற் கதி, பரகதி, வழி, அடைக்கலம், விரைவு. கிதி - பத்துலட்சங் கோடா கோடி. குதி - காற்குதி, குதியென்னேவல். கெதி - கதி. கொதி - காய்ச்சல், வெப்பம், துக்கம். சதி - உரோகணி, கற்புடையாள், சோறு, தாளவொத்து, பார்வதி, வஞ்சனை, வட்டம். சுதி - சங்கீதசுருதி, அறிஞன். ததி - தயிர், பருவம். திதி - காசிபப் பிரமாவின் மனைவி, காத்தல், சந்திரனாள், திதியென் னேவல், நிலை, நிலைபெறுதல். துதி - துதித்தல், துதியென்னேவல். தொதி - பப்பரப் புளிமரம். நதி - கிழக்கோடுமாறு. நிதி - ஆபரணத்திற்றொங்கணி, கடவுண் மணிக்கும் நவமணிக்கும் பொது, நிறைவு, பொன். நுதி - முனை, புகழ், வணக்கம். நொதி - பெருஞ்சேறு. பதி - அரசன், இடம், ஊர், எப் பொருட்குமிறைவன், குரு, கொழுநன், நகரம், பதியென்னே வல், மருதநிலத்தூர், மூத்தோன், வீடு. பிதி - இடி. பொதி - அம்பலம், ஒலைக்குடை, கரிகாடு, பொதி, பொதியென் னேவல். மதி - அறிவு, கர்க்கடகவிராசி, சந்தி ரன், நிதானம், பதியென் னேவல், மாதம், முன்னிலை யசைச்சொல், (உ-ம்: சென்மதி பெரும). மிதி - மிதித்தல், மிதியென்னேவல். யதி - தாளப்பிரமாணம், முனிவர், மோனை, அடக்கம். வதி - சேறு, வதியென்னேவல், வழி. விதி - உண்மை, ஊழ், குணம், செய் தொழில், செல்வம், நிய மித்தல், பிரமன், மெய், விதி யென்னேவல், வேதாகம விதி. அதிகம் - இலாபம், குருக்கத்தி,படை, பொலிவு, மிகுதி, அடையாளம். பதிகம் - பத்துச் செய்யுளான் முற்றுப் பெறுவது, பாயிரம். பிதிகம் - பெருங்குரும்பை. மதிகம் - மோர். பதிதல் - பெருந்தல், எழுதல். பொதிதல் - மூடுதல். வதிதல் - தங்கல். உதித்தல் - தோன்றல், பருத்தல், அவதரித்தல், பிறத்தல். கதித்தல் - எழுச்சி, ஒலித்தல், கடத் தல், சிறத்தல், படுத்தல், போதல், மிகுத்தல். குதித்தல் - கடத்தல், பாய்தல். கொதித்தல் - கொதித்தல், சினக் குறிப்பு. சதித்தல் - சதி செய்தல். திதித்தல் - நிலை பெறுத்தல். துதித்தல் - வாழ்த்தல், ஏத்தல், புகழ் தல், மீக்கூறல், வியத்தல். நொதித்தல் - மாறல், கொப்புளித்தல், சீக்கட்டல், நுரைத்தெழும்பல். பதித்தல் - புதைத்தல். மதித்தல் - கடைதல், மதத்தல், வரை யறுத்தல், எண்ணல், குறித்தல். மிதித்தல் - குதித்தல், உழக்கல். விதித்தல் - உண்டாக்கல், செய்தல், சொல்லல். அதிபதி - அரசன், தலைவன். சதிபதி - சிவன். நதிபதி - கடல். நிதிபதி - குபேரன். அதியம் - அதிகம், ஒரு மருந்து. நிதியம் - கடவுண்மணி, பொன் முத லிய பதினான்கு வகைப் பொது. பதியம் - பாசி. பொதியம் - தென்மலை. மதியம் - சந்திரன். புதியர் - விருந்தினர். முதியர் - மூத்தோர். உதிரம் - இரத்தம். கதிரம் - அம்பு, கருங்காலி. பிதிரம் - இடி. முதிரம் - மேகம். உதிரன் - செவ்வாய். பதிரன், வதிரன் - செவிடன். அதிரிசம் - காணப்படாதது. சதிரிசம் - உவமை. அதிரேகம் - அதிசயம், அதிகம். வெதிரேகம் - எதிர்மறை. கதிரை - கதிர்காமம் என்னுந் தலம். குதிரை - புரவி. மூதிரை - அவரை, காராமணி, கொள், துவரை யிவை முதலியன. அதிர் - அதிரென்னேவல், ஒலி. எதிர் - எதிரென்னேவல், ஒப்பு, முள். கதிர் - கதிர், சூரிய கிரகணம், சூரியன், தேருட்பரப்பின் மரம், பயிர்க்கதிர். குதிர் - நென் முதலியபெய்யுங் குதிர். பிதிர் - கதை, காலநுட்பம், திவலை, நொடிபராகம், பிதிரென்னேவல், பிதிர்கள். வெதிர் - மூங்கில். அதிர்ச்சி - ஆரவாரம். முதிர்ச்சி - முதிர்வு. அதிர்தல் - நடுங்கல். எதிர்தல் - தோன்றல், மலைதல். பொதிர்தல் - மிகுதல். முதிர்தல் - காய்தல், வறத்தல். அதிர்த்தல் - அசைத்தல், அதட்டல், குமுறல், சொல்லுதல். இதிர்த்தல் - அதட்டல், சொல்லுதல். உதிர்த்தல் - உகுத்தல், பொடியாக்கல். எதிர்த்தல் - அலைத்தல், எதிர்பார்த் தல், மாறுபடுதல், சந்தித்தல். கதிர்த்தல் - இறுமாத்தல், ஒளி செய்தல். விதிர்த்தல் - நடுங்கல், அசைத்தல். வெதிர்த்தல் - சினத்தல், நடுங்குதல். கதிர்நாள் - உத்திரநாள். பிதிர்நாள் - அமாவாசியை, இறந் தோர் நாள், மகநாள். எதிர்ந்தோர் - பகைவர். முதிர்ந்தோர் - மூத்தோர். அதிர்ப்பு - அச்சம், அதிரல், ஆரவாரம், நடுக்கம். உதிர்ப்பு - உகுக்கை, உதிர்வு. எதிர்ப்பு - எதிர்த்தல், அலைப்பு, சண்டி, வாதம், வருங்காலம். பொதிர்ப்பு - அச்சம், நடுக்கம். முதிர்ப்பு - கலக்கம், முதிர்ச்சி. விதிர்ப்பு - அச்சம், நடுக்கம். வெதிர்ப்பு - கலக்கம், சினக்குறிப்பு, நடுக்கம். அதிர்வு - யாழ்நரம்பைச் சிதறவுந்தல். முதிர்வு - மூப்பு. அது - அஃது, ஆறாம் வேற்றமை யுருபு. இது - இஃது, சுட்டுச்சொல். உது - உஃது. எது - யாது. கது - வடுப்படல், வெடிப்பு, போர். சது - நான்கு. துது - எருது. பிது - இடி. பொது - சாதாரணம், சமம், நடு. மது - இருப்பைப்பூத் திராவகம், ஓரரக்கன், கள், சித்திரைமாதம், தேன், மகரந்தம், வசந்தகாலம், அசோகு. முது - பழமை. மெது - மிருது. யது - ஓரரசன். வது - மனைவி. விது - சந்திரன், விட்டுணு, கருப்பூரம், பிரம்மர். கொதுகு - கொசுகு. முதுகு - பின்புறம். அதுக்கம் - அடிப்பு, குழைவு, ஒதுக்கம். ஒதுக்கம் - நடை, மறைவு, தீட்டு. சதுக்கம் - நாற்றெருக்கூடுமிடம், சதுதரம், திண்ணை. பதுக்கம் - ஒளிப்பு, கபடம், பதுங்குந் தன்மை. பிதுக்கம் - பிதுங்கல். அதுக்கல் - அடித்தல், அடைசுதல். ஒதுக்கல் - ஒதுங்கச்செயல், வியங் கோண்முற்று, தீர்த்தல். சதுக்கல் - வழுக்கல். செதுக்கல் - செதுக்குதல். பிதுக்கல் - பிதுங்கச் செய்தல். புதுக்கல் - புதுப்பித்தல், வியங் கோண்முற்று. பொதுக்கல் - அடக்குதல். வெதுக்கல் - வெதுப்பல். அதுங்கல் - குழிதல், ஒதுங்கல். ஒதுங்கல் - நடத்தல், பதுங்கல், வியங் கோண்முற்று, ஒதுங்கச்செயல். பதுங்கல் - ஒளித்தல், வியங்கோண் முற்று. பிதுங்கல் - உள்ளடாகாமற் புறப்படல். கதுச்சந்நிதி - திருப்போரூர் என்னுஞ் சுப்பிரமணிய தலம். புதுச்சந்நிதி - யாழ்ப்பாணத்துள்ள உபயகதிர்காம மென்னுஞ் சுப்பிர மணிய தலம். நதுத்தல் - அவித்தல். நுதுத்தல் - அவித்தல். பொதுத்தல் - தொளைத்தல். கதுப்பு - கவுள், பசுக்கூட்டம், பெண் மயிர், மைந்தர், மயிர், அனு, கன்னம், கொடிறு. விதுப்பு - ஆசை, சீக்கிரம். வெதுப்பு - ஓர் நோய், வெதுப் பென் னேவல். பதுமை - இலக்குமி, காளி. புதுமை - நூதனம், மிகுதி. பொதுமை - பொதுத்தன்மை. முதுமை - பழமை, பழமொழி, மூப்பு. சிதும்பல் - தளம்பல். ததும்பல் - தளம்பல், நிறைதல், பெரு குதல், வியங்கோண்முற்று. விதும்பல் - ஆசைப்படல், வியங் கோண்முற்று. வெதும்பல் - சினக்குறிப்பு, வாடல் வியங்கோண்முற்று. சதுரன் - நகரப்பதியோன், கற்றவன், நாகரிகன், பேராசைக்காரன். விதுரன் - அறிஞன், திண்ணியன், வாழ்க்கைத் துணையிழந்தோன், விதுரன். சதுரை - சதுரங்கபட்டினம். மதுரை - கள், தென்மதுரை, வட மதுரை. பொதுவர் - இடையர். மதுவர் - மந்திரக்கிழவர், மூத்தோர். வதுவர் - குதிரைப்பாகர், யானைப் பாகர். குதுவை - அடைவு, ஈடு. புதுவை - புதுச்சேரி, புதுச்சந்நிதித் தலம். வதுவை - புதுமணம், வாசனை. இதை - கலப்பை, காராமணி, புதுக்கொல்லை, மரக்கலப்பாய். உதை - உதைத்தல், உதையென் னேவல், காலாலழுத்துகை. கதை - காரணச்சொல், சொல், சொல்லென்னேவல், தடி, தண் டாயுதம், காதை, சரிதம். குதை - பாசி, விற்குதை, பணிப் பூட்டு, முனை. சதை - தசை, இரட்டை, ஜோடி. சிதை - கீழ்மை, சிதையென்னேவல், ஈமவிறகு, பாய்மரம். சுதை - அமிழ்து, உதைகாற்பசு, சுண் ணாம்பு, சுவை, மகள், வெண்மை. சொதை - ஐசுவரியம். துதை - நெருக்கம். புதை - அம்பின்கட்டு, அம்பு, உடல், புதுமை, புதையென்னேவல், மறைவு. முதை - காடுவெட்டச் சுட்ட கொல்லை. வதை - கொலை, வதையென்னேவல். விசை - பெருமை, விதையென்னேவல், வித்து, அறிவு. ததைதல் - மிடைதல். துதைதல் - நெருங்கல். புதைதல் - தாழ்தல், மறைதல். அதைத்தல் - அசைத்தல். சதைத்தல் - சொல்லுதல், மிகப் பேசல். சதைத்தல் - தசைபிடி கொள்ளுதல், நசுக்குதல். சிதைத்தல் - கெடுத்தல். ததைத்தல் - கூடுதல், நெருக்கல். துதைத்தல் - நெருக்கல். பதைத்தல் - அச்சக்குறிப்பு. புதைத்தல் - சேமித்தல், மறைத்தல். வதைத்தல் - கொல்லல். விதைத்தல் - வித்துதல். புதையல் - நிட்சேபம், புதைதல், வியங்கோண்முற்று. முதையல் - முதுகாடு. சத்தகம் - ஏழுகூடியது, ஒருகத்தி, மரணகன்மம். சித்தகம் - தலைச்சீரா, மெழுகு. தித்தகம் - நிலவேம்பு, மலவேம்பு. துத்தகம் - துத்தம். நத்தகம் - கந்தை. புத்தகம் - எழுதுபுத்தகம், சித்திரப் படாம். மத்தகம் - தலை, நுதல், பொல்லா நிலம். முத்தகம் - கருக்குவாளிமரம், தனித் தனியே முற்றுப்பெருஞ் செய்யுள். வத்தகம் - வெட்பாலை. வித்தகம் - ஞானம். அத்தம் - அருநெறி, ஓர்நாள், கண்ணாடி, காடு, கை, சொற் பொருள், பாதி பொன், வழி, அஸ்தமிக்கை. உத்தம் - போர், பொருத்தம், கொட்டம், நிகழ்வது. தத்தம் - கதை, புயம். குத்தம் - இரட்சித்தல். கொத்தம் - எல்லை. சத்தம் - ஏழு, ஒலி, இசை, வாடகை. சித்தம் - உள்ளம். சுத்தம் - சுசி, உண்மை, கல்பமற்றது. சொத்தம் - சுகம், சௌக்கியம். தத்தம் - ஈகை, சுவீகாரம். தித்தம் - கசப்பு, அக்கினி, எண்ணெய். துத்தம் - கண்மருந்து, சமனிசை, நாய், நாவினாற்பிறக்கு மிசை, பால், யாழி, னொர் நரம்பு, வயிறு. தெத்தம் - தத்தம். நத்தம் - இராத்திரி, இருள், ஊர், சங்கு, நத்தை, புன்கமரம், வாழை. நித்தம் - எப்போழ்தும். பத்தம் - உணா, உண்மை, கட்டு, நன்றியறிகை. பித்தம் - கூத்தின் விகற்பம், மயக்கம், முப்பிணியி லொன்று. புத்தம் - ஓர் சமயம், அதிசயப்படல், உணவு. பெத்தம் - ஒடுக்கம், கட்டு, நிலைபரம். மத்தம் - உன்த்தம், ஊமத்தை, களிப்பு, மத்து, எருமைக்கடா, குயில். மித்தம் - ஆவசியம், நித்திரை. முத்தம் - உதடு, பிரியம், மருதநிலம், முத்து, கொஞ்சுதல். மொத்தம் - பொது, தொகை. யுத்தம் - உசிதம், கூடல், நியாயம், போர். வித்தல் - ஞானம், பொன், இகழ்வு, பொருள். உத்தரி - குதிரை. கத்தரி - கத்தரியென்னேவல், வழு துணை. உத்தரித்தல் - சாதித்தல். கத்தரித்தல் - அறுத்தல். அத்தர் - சிவன், முனிவர், தேவர், வனவாசர், வாசனைப் பண்டம். பத்தர் - தட்டார், தேவதொண்டர். புத்தர் - பௌத்தமதத்தார், பௌத்த மதஸ்தாபகராகிய கௌதமர். முத்தர் - பற்றற்றவர், திடர், முத்திக் குரியோர். வத்தர் - வத்திரு. எத்தல் - நறுக்குதல். ஒத்தல் - ஒத்தல், ஒப்பு, நடு, பொருந் தல், வியங்கோண்முற்று. கத்தல் - கூப்பிடல், பிதற்றல், வியங் கோண்முற்று. குத்தல் - அடித்தல், குத்துதல், நெரித் தல், பரித்தல், வியங்கோண் முற்று. கொத்தல் - கொத்துதல், வியங் கோண்முற்று. சித்தல் - சீலை. செத்தல் - சாதல். தத்தல் - தாண்டல், வியங்கோண் முற்று. துத்தல் - புசித்தல். பத்தல் - நீரிறைக்கும் பத்தல். பொத்தல் - துவாரம், துளைத்தல், மூடுதல். மொத்தல் - அடித்தல், வியங்கோண் முற்று. வித்தல் - விதைத்தல், வியங்கோண் முற்று. அத்தனை - அவ்வளவு. எத்தனை - எவ்வளவு. கொத்தனை - ஒரு மீன். அத்தன் - அருகன், கடவுள், குரு, சிவன், தகப்பன், மூத்தோன், கடுக்காய், வெள்ளீயம். எத்தன் - அணுப்புக்காரன். கத்தன் - கடவுள். சத்தன் - சிவன். தித்தன் - காலக்கணக்கன். சித்தன் - அருகன், சிவன், வைரவன், இலவமரம், காந்தக்கல். சுத்தன் - அயன், அரி, அரன், அருகன், தூயவன். தித்தன் - ஒரு சோழனின் பெயர். துத்தன் - கபடன், தப்பிலி. தொத்தன் - அடிமைக்காரன், விடாது பின்பற்றுபவன். நித்தன் - அருகன், கடவுள், அரி, சிவன். பத்தன் - அன்புடையோன். பித்தன் - கள்ளன், சிவன், பித்தன், வைரவன். புத்தன் - திருமாலவதாரத்தொன்று புத்தன். பெத்தன் - ஆன்மா. மத்தன் - மாலியகத்தினந்தன் மகன். முத்தன் - அரசன், அருகன், புத்தன், முதிபெற்றோன், வைரவன். வித்தன் - உபகாரி, பண்டிதன். கத்தா - கடவுள், வினைமுதல். பத்தா - தலைவன். அத்தி - எலும்பு, ஓர்வகை மரம், கடல், கொலை, பதிசெய்யென் னேவல், யானை, அக்காள், அத்தி னாபுரம், உண்மை. இத்தி - இறலிமரம், கல்லால், துவர்பத்தினொன்று. உத்தி - செல்வம், தந்திரவுத்தி, திரு வுறுப்பு, தூக்கங்கள், தேமல், பாம்பின் படப்பொறி, அனு மானம். கத்தி - வாள், வினையெச்சம். குத்தி - அடக்கம், மண், வினை யெச்சம். கொத்தி - மண்வெட்டி, ஓர் பேய். சத்தி - கக்கல், கைவேல், சத்தியென் னேவல், சூலம், தேரிடக்கியம், பார்வதி, வலி, விருதுக்கொடி, வெண்குடை, இந்துப்பு, உபாய வழி, சுரோணிதம். சித்தி - ஓர்வகையோகம், சித்தித்தல், சித்தியென்னேவல், மோக்கம், அறிவு. சுத்தி - ஓர்வகைக்கருவி, சங்கு, நெய்க்குத்தி முதலாயின, அரைப் பலம், இரப்போர் கலம், கிளிஞ் சில், பரிசுத்தம். சொத்தி - முடம், நொண்டி. தத்தி - கொடை, பலம். தித்தி - தித்திப்பு, தித்தியென்னேவல், தின்றற்குரியன, வேள்விக்குண்டம். துத்தி - உண்டற்குரியன, ஓர்வகைச் செடி, தேமல், பாம்பின் படப் பொறி. தொத்தி - அடிமைக்காரி, ஒருமரம். பத்தி - அன்பு, ஆராதனை, ஒழுக்கம், ஒழுங்கு, முறைமை, அடைப்பு, தூணினிடை, தொண்டு, வீட் டிறப்பு. பித்தி - சுவர், வெடிப்பு, ஒதுக்கிடம். புத்தி - அறிவு. பெத்தி - கறிமுள்ளி. பொத்தி - தவறு, பொந்து, ஆண்குறி, பெண்குறி, மூடுதல். மத்தி - நடு. முத்தி - மோக்கம், கொஞ்சுதல். மொத்தி - வாழைப்பூ, குபுடைப்பு. யுத்தி - உபாயம், யோசித்தல். வத்தி - விளக்குவர்த்தி. வித்தி - அறிவு, ஆராய்தல், சம்பா திப்பு. அத்திகை - அக்காள், அத் தன்மை யளதுகை. கத்திகை - கருக்குவாளிமரம், சிறு கொடி, துகிற்கொடி, பூமாலை. பித்திகை - அகல். பித்திகை - கருமுகை, சுவர். மத்திகை - குதிரைச்சம்மட்டி, விளக்குத் தண்டு. கத்தியம் - இலக்கணமின்றி யிலக் கணப்பாட்டுப்போற் சொல்வது, சீலை, நல்லாடை. சத்தியம் - சபதம், மெய். தத்தியம் - மெய். நித்தியம் - எப்போழ்தும். பத்தியம் - ஆந்திரச்செய்யுள், இதம், கடுமரம், மருந்திற்கிசைந்த புசிப்பு. மத்தியம் - இடை, கள், நடு. உத்தியானம் - பூந்தோட்டம். மத்தியானம் - உச்சிப்பொழுது. அத்திரம் - அம்பு, கழுதை, குதிரை, கைவிடுமாயுதப்பொது, மலை முன் விடு மம்பு, கடுக் காய்ப்பூ. உத்திரம் - உத்தரம், ஓர் நாள். குத்திரம் - சீக்கிரம், மலை, வஞ்சகம், குரூரம், சூடு, பொய். சத்திரம் - அன்னசத்திரம், கை விடாப்படை, கைவேல், பாணம், யாகம், வெண்குடை. சித்திரம் - அதிசயம், ஆமணக்கு, ஓர்கவி, சித்திரித்தல், சிறப்பு, பேரழகு, மெய்போற் பொய் கூறல். தத்திரம் - பதில். தித்திரம் - அரத்தை. நித்திரம் - கண்டங்கத்திரி. பத்திரம் - அம்பு, அழகு, இலை, இறகு, உடைவாள், மலை, முடி யுறுப்பு. மத்திரம் - ஓர் தேசம். மித்திரம் - நட்பு. முத்திரம் - மறுமை. வத்திரம் - சீலை, முகம். புத்திரம் - மகன். மித்திரன் - சிநேகிதன், சூரியன். அத்திரி - உலைத்துருத்தி, ஒட்டகம், ஓர் இருடி, கணை, கழுதை, குதிரை, மலைவிண். உத்திரி - அருச்சனை, தியானம், பருத்தி, மந்திரம். கத்திரி - ஓர் பாம்பு, ஓராயுதம், மயிரெறி கருவி. கொத்திரி - முந்திரிகைக்கொடி. சத்திரி - யானை. சித்திரி - அலங்காரம் செய்யென் னேவல். சொத்திரி - மனைவி. தித்திரி - சிச்சிலிக்குருவி. பத்திரி - அம்பு, இலை, காளி, குதிரை, பறவை. புத்திரி - மகள். முத்திரி - அடையாளம். வத்திரி - தோல்வார். கத்திரிகை - ஒர் கருவி. பத்திரிகை - இலை, ஓலை. முத்திரிகை - எழுத்துப்பொறித்த மோதிரம். சித்திரை - ஓர்மாதம், ஓர் நாள். பத்திரை - சந்திர னிரண்டாம் பக்கம், நற்பசு. மத்திரை - பாண்டு மனைவியருள் ஒருத்தி. மித்திரை - தோழி. முத்திரை - அடையாளம், எழுத்துப் பொறித்த மோதிர முதலியன, ஒன்றன்மேற் பதிக்கு முத்திரை. அத்தினி - நால்வகைப் பெண்களி லொருத்தி, பெண் யானை. சித்தினி - நால்வகைப் பெண்களிற் சித்திரிணி. பத்தினி - கற்புடையாள். அத்து - அசைச்சொல், அரைப் பட்டிகை இசைப்பு, சாரியை, (உ.ம்). மாடத்துக்கு சிவப்பு, செவ்வை, தைத்தல், எல்லை. இத்து - காவட்டம்புல். வத்து - அத்தாட்சி, தெளிவு. எத்து - வஞ்சகம். ஒத்து - தாளவொத்து, சம்மதி. கத்து - கத்தென்னேவல், சந்து, பொய். குத்து - குத்தென்னேவல், நோய். கெத்து - உபாயம். கொத்து - கொத்தென்னேவல், திரள். சத்து - உண்மை, அறிவு, பெலன். சித்து - அறிவு, மாயவித்தை, யாகம். தத்து - ஆபத்து, தத்தென்னேவல். துத்து - கம்பளி, தப்பிதம், பொய், வஞ்சனை. தெத்து - தெற்று. தொத்து - அடிமை, பழமை, பூங் கொத்து. நத்து - சங்கு, ஒருவகை மூக்கணி. நொத்து - நொப்பு. பத்து - ஓர்பெண், ஓரெண். பித்து - பித்தம். புத்து - ஒரு நகரம். மத்து - தயிர் முதலிய கடையு மத்து, ஊமத்தை. முத்து - முத்தம். மெத்து - மென்மை. மொத்து - அடி, மொத்தென்னேவல் சம்பிரதாயம். வத்து - பொருள். வித்து - விதை, வித்தென்னேவல். அத்துதல் - அடைதல், இசைத்தல், பொருத்தல். எத்துதல் - வஞ்சித்தல். ஒத்துதல் - தாளம் போடுதல். கத்துதல் - கூப்பிடுதல். குத்துதல் - குத்தல். கெத்துதல் - கண்டம்போடுதல். கொத்துதல் - தோண்டுதல், வெட்டுதல். தத்துதல் - கடத்தல், பாய்தல். நத்துதல் - விரும்புதல். பொத்துதல் - அடித்தல், மூடுதல். மொத்துதல் - அடித்தல். வித்துதல் - விதைத்தல். அத்துமம் - அரத்தை. இத்துமம் - சமித்து. அத்துவம் - சிவப்பு. சத்துவம் - வலி. சொத்துவம் - உரிமை. தத்துவம் - உண்மை. மத்துவம் - மத்துவமதம். வித்துவம் - அறிவுடைமை. அத்தை - தலைவி, முன்னிலை யசைச் சொல், (உ-ம்: சொல்லி யரத்தை நின்வெகுளி) தந்தையுடன் பிறந்தாள், அக்காள். இத்தை - முன்னிலை யசைச்சொல், (உ-ம்: நீ யொன்று பாடித்தை). கத்தை - கழுதை, தொகுதி. சத்தை - வலி, சாரம். செத்தை - உலர் சருகு முதலிய. சொத்தை - புழுத்துளைத்தல். தத்தை - கிள்ளை, முன் பிறந்தாள். நத்தை - கருநந்து. பத்தை - வகிர். பித்தை - ஆண்மயிர். பொத்தை - சிறுமலை. மித்தை - பொய். முத்தை - கவளம், திரட்சி, மிகவுந் தெரிவிலாள். மெத்தை - அமளி, மேல்வீடு. வத்தை - சோற்றி. வித்தை - கல்வி, ஞானம். ந அந்தகம் - அழிவு, குருடு. கந்தகம் - ஓர் மருந்து. குந்தகம் - தடை, கோள். கெந்தகம் - கந்தகம். சிந்தகம் - தூக்கணங்குருவி, புளிய மரம். சந்தகம் - ஆவியில் வேகும் இடி யாப்பம். கந்தகம் - விட்டுணுவின் வாள். பந்தகம் - பந்தனை, கட்டு. அந்தம் - அழகு, கடை, கத்தூரி, சாவு. கந்தம் - கருணை, கழுத்தடி, கிழங்குப் பொது, பங்கு, பஞ்சகந்தம், வாசனை. குந்தம் - கண்ணோய், குதிரை, குருந்த மரம், கைவேல், பெருஞ் சவளம். சந்தம் -அழகு, கவியின் வண்ணம், சந்தனம், நிறம், வடிவு. சிந்தம் - புளியமரம். செந்தம் - எழுத்தாணிப் பூண்டு. சொந்தம் - உரியது, சுயம். தந்தம் - பல், யானைக்கொம்பு. தொந்தம் - இரண்டு, சலஞ்சாதித்தல், அன்னியோன்னியம், தொடர்பு. நந்தம் - சங்கு. பந்தம் - அழகு, உறவு, கட்டு, கொண்ட திரட்சி, பெருந்துருத்தி, மதில், முடிப்பு, முறைமை. மந்தம் - அற்பம், ஓர்நோய், கூர்மை யின்மை, சோம்பல், மத்து, மெல் லெனல். விந்தம் - ஓர்வகையெண், மீன். அந்தரம் - அளவு, ஆகாயம், இடை, இருள், கூட்டம், தனிமை, தீமை, தேவர் கோயில், பேதம், முடிபு. உந்தரம் - வழி. கந்தரம் - கழுத்து, மலைக்குகை, மேகம். சுந்தரம் - அழகு, நிறம். சொந்தரம் - சுதந்தரம். மந்தரம் - அட்டகிரியி லொன்று, தேவலோகம், மந்த விசை. சுந்தரன் - ஓரரக்கன், சமயகுரவரு ளொருருவன். மந்தரன் - ஓர் மலைத் தெய்வம். அந்தரி - துர்க்கை, பார்வதி. கந்தரி - அழகி, இந்திராணி, துர்க்கை, பெண், மூஞ்சூறு. அந்தர் - நடு. கந்தர் - புத்தர், குமாரக்கடவுள். நந்தர் - இடையர். பந்தர் - ஒர்நகர், பந்தல். விந்தர் - இடையர். உந்தல் - உயர்ச்சி, ஏறுதல், வியங் கோண்முற்று. கந்தல் - கெடுதல், வியங்கோண் முற்று. கொந்தல் - கொந்துதல், சினக்குறிப்பு, பெருங்கோபம், வியங்கோண் முற்று. சிந்தல் - கெடுதல், விடுதல், வியங் கோண்முற்று. நந்தல் - ஆக்கம், கெடுதல், நிந்தை, வியங்கோண் முற்று. நுந்தல் - தூண்டல், துறுத்தல், வியங் கோண் முற்று. பந்தல் - பந்தர். முந்தல் - முற்படல், வியங்கோண்முற்று. அந்தளம் - கவசம். இந்தளம் - ஓர்பண், தூபக்கால். கந்தளம் - கவசம். குந்தளம் - ஓர் தேயம், பெண் மயிர், மயிர்க் குழற்சி, மயிர்ப் பொது. கொந்தளம் - கூத்தின் விகற்பம், பெண் மயிற்குழற்சி. இந்தனம் - சுவாலை, நறும்புகை, மேல், விறகு. குந்தனம் - மணி யறுத்தல். சந்தனம் - சந்தம். நந்தனம் - இந்திரன் பூந்தோட்டம், ஓராண்டு, பூந்தோட்டம். பந்தனம் - கட்டல், காவல் செய்தல். மந்தனம் - யானைமுகபடாம். வந்தனம் - அட்டாங்கமாகப் பணிதல், விநயம், வினைமுற்று. நந்தனி - மகள். மந்தனி - தயிர்கடை தாழி. சிந்தனை - சிந்தை. நிந்தனை - இகழ்ச்சி. பந்தனை - பந்தித்தல், மகள். வந்தனை - ஆராதனை, வணங்கல், வினைமுற்று. அந்தன் - குருடன், சனி. கந்தன் - அருகன், குமரன், காமன். குந்தன் - இந்திரன். சிந்தன் - குள்ளன், தூக்கணங்குருவி. நந்தன் - ஓரரசன், நந்தகோபன். மந்தன் - கூர்மையில்லான், சனி. முந்தன் - கடவுள், மூத்தோன். சந்தானம் - ஐந்தருவி லொன்று, சந்ததி. மந்தானம் - மத்து. அந்தி - பொருந் தென்னேவல், மாலைக் காலம், முத்தெருக் கூடுமிடம். இந்தி - பூனை, இலக்குமி. உந்தி - ஆறு, ஆன்கூட்டம், உயர்ச்சி, கடல், கொப்பூழ், தேருருளை, நடு, நீர்ச்சுழி, பரப்பு, மகளிர் விளை யாட்டினொன்று, யாழினுறுப்பு, வினையெச்சம். கந்தி - கமுகு, தவப்பெண், மண வென்னேவல், வினையெச்சம். குந்தி - கள், பாண்டவர் தாய், வினை யெச்சம். சந்தி - இசைப்பு, சந்தியென் னேவல், பல்தெருக் கூடுமிடம், மாலை நேரம், மூங்கில். குந்தி - கள், பாண்டவர் தாய், வினையெச்சம். சந்தி - இசைப்பு, சந்தியென்னேவல், பலதெருக் கூடுமிடம், மாலை நேரம், மூங்கில். சுந்தி - கோட்சொல்வோன். செந்தி - திருச்செந்தூர். தந்தி - ஆண்யானை, யாழ்நரம்பு. துந்தி - வயிறு. தெந்தி - நோர்வாளம். தொந்தி - தொந்தியென்னேவல், வயிறு. நந்தி - அட்டாதச வுபபுராணத் தொன்று, இடபவிராசி, எருது, ஓரரசன், சிவன், சிறுபறை, செக்கான், வினையெச்சம். நிந்தி - இகழென்னேவல். பந்தி - ஒழுங்கு, பந்தியென்னேவல். பிந்தி - பின்னால். புந்தி - அறிவு, புதன். மந்தி - கருங்குரங்கின் பெண், பெண் குரங்கு, பெண்முசு, மந்தியென் னேவல், வண்டு. முந்தி - முன்னானை, முன்னே. வந்தி - மலடி, வந்தியென்னேவல், ஏணி. அந்தித்தல் - பொருந்தல், மந்தப் படுதல். கந்தித்தல் - மணத்தல். சந்தித்தல் - காணல், கூடல், எதிர்ப் படல். சிந்தித்தல் - நினைத்தல். தொந்தித்தல் - இசைவு பிசகாதல். நிந்தித்தல் - இகழ்தல். பந்தித்தல் - பிணித்தல். மந்தித்தல் - மந்தமாதல். வந்தித்தல் - வணங்கல், புகழ்தல். அந்திமான் - இடையெழு வள்ளலி ளொருவன். சந்திமான் - இடை எழுவள்ளலி வொருவன். அந்திரம் - குடம். இந்திரம் - சிற்பநூன் முப்பத் திரண்டினொன்று, இந்திரியம். எந்திரம் - சூத்திரம், தேர், மதிலுறுப்பு. குந்திரம் - ஒரு புள். சந்திரம் - கர்ப்பூரம், பொன். செந்திரம் - சிவப்பு, நெய்தனிலம். தந்திரம் - உபாயம், நூல், படை, யாழ் நரம்பு. மந்திரம் - அரசன்மனை, ஆலோ சனை, எண்ணல், ஓர்தேயம், குதிரைப்பந்தி, தேவர் கோயில், நாப்புடை, பெயராதுச் சரித்தல், வீடு. யந்திரம் - செக்கு, திரிகை. அந்திரன் - வேடன். இந்திரன் - தேவேந்திரன், மிருக சீரிட நாள். சந்திரன் - நிலவு. இந்திரி - கிழக்கு. கந்திரி - பெரு விருந்து. தந்திரி - மந்திரி, யாழ்நரம்பி னோசை, யாழ்நரம்பு. மந்திரி - குபேரன், சுக்கிரன், தந்திரி, புதன், வருங் காரியஞ் சொல் வோன், மந்திரி யென்னேவல், வியாழம். அந்தில் - அசைச்சொல் (உ-ம்.) அந்திற் கச்சினன் கழலினன், அவ்விடம் (உ.ம்). அந்திற் கற்பகங் கொடுக்க. சந்தில் - சணி. அந்து - நெல்லந்து. இந்து - கரி, சாடி, சந்திரன். கந்து - கழுத்தடி, கெடுவென்னேவல், தூண், பண்டி, பண்டி யுள்ளிரும்பு, பற்றுக்கோடு, யாக்கையின்மூட்டு, யானை, யணைதறி. கொந்து - கொந்தென்னேவல், பூங் கொத்து. சந்து - சந்தனம், நாற்றெருக் கூடு மிடம், சீட்டு. சிந்து - ஆறு, ஓர்தேயம், ஓர் வகைப்பா, கடல், குள்ளன், சிந்தென்னேவல், நீர், பதினெண் பாடையிலென்று, முர்ச்சீரடி. செந்து - அணு, கிழநரி, சீவன். தந்து - கல்வி நூல், பஞ்சி நூல், வினையெச்சம். நந்து - சங்கு, நத்தை. பந்து - திரட்சி, சுற்றம், மட்டத் துருத்தி. பிந்து - விந்து. பொந்து - மரப்பொந்து. முந்து - முந்தென்னேவல், வெண் ணாரை. வந்து - காற்று, வினைமுற்று, வினை யெச்சம். விந்து - துளி. அந்துகம் - சங்கிலி, யானைச் சங்கிலி. கந்துகம் - குதிரை, குறுநிலமன்னர் குதிரை, பந்து. சிந்துரம் - சிவப்பு, புளியமரம், யானை. பந்துரம் - அழகு. இந்துளம் - கடப்ப மரம். கந்துளம் - பெருச்சாளி. அந்தை - ஒரு நிறை. உந்தை - உன்றந்தை. எந்தை - என்றந்தை. கந்தை - சீலை, நல்லாடை, பீறல். சந்தை - பலவூர் மனிதரோரூரி லோர் தினத்திற் கொள்ளல் விற் றல் பொருட்டுக் கூடுங் கூட்டம். சிந்தை - கருத்து, குறிப்பு, துன்பம். தந்தை - தகப்பன். நந்தை - கொத்தான்செடி, சந்திரன், முதற்பக்கம், ஏகாதசி. நிந்தை - இகழ்ச்சி. நுந்தை - உந்தை. மந்தை - ஆடுமாடுகளின் கூட்டம், அவைகள் சேர்ந்து நிற்குமிடம். முந்தை - பழமை. மொந்தை - ஓர்கட்பறை, ஓர் பாத்திரம். வந்தை - பெருமை, மலடி. விந்தை - ஆச்சரியம், துர்க்கை. வெந்தை - பிட்டு. செந்நீர் - இரத்தம். முந்நீர் - கடல். வெந்நீர் - சுடுநீர். ப அபசாரம் - துர்ச்செய்கை, தவறு, குறை. உபசாரம் - உபசரணை. விபசாரம் - வேசித்தனம். குபதம் - பாழ்வழி. சபதம் - ஆணை. விபதம் - கெடுவழி. சபதி - விரைவு. தபதி - தச்சன். அபத்தம் - பொய். உபத்தம் - பெண்குறி. அபம் - பிரிவு. இபம் - மரக்கொம்பு, யானை. கபம் - கோழை. சபம் - ஆலம்வீழ் முதலிய, மூங்கில். சுபம் - நன்மை, மங்களம். செபம் - மந்திர முச்சரித்தல். தபம் - தவம், மாசி மாதம். நபம் - ஆகாயம், ஆவணி மாதம். நிபம் - உவமை, காரணம். நுபம் - எருக்கு. விபம் - செல்வம், மேன்மை. அபயம் - அச்சமின்மை, அடைக் கலம், தயை. உபயம் - இரண்டு. அபரம் - கவசம், நகரம், பிணக்கு, பின்பக்கம், முதுகு, யானைப்பின் கால். சபரம் - கெண்டை மீன். அபலம் - பலனற்றது. உபலம் - பலனற்றது. உபலம் - கல், சிறுகல். குபலம் - ஈனபலம், நஷ்டம். சபலம் - இரதம், இலாபம், நிறை வேறல், மின்னல். விபலம் - பயனின்மை, கால நுட்பம். அபாயம் - ஆபத்து. உபாயம் - வழி, சூழ்ச்சி, சொற்பம். வபு - உடல். விபு - கருத்தா. தபோமணி - அருந்தவத்தோன். நபோமணி - சூரியன். அப்பம் - சிற்றுண்டி. ஒப்பம் - கையொப்பம். கப்பம் - அரசிறை. குப்பம் - ஊர். சிப்பம் - சிறுகட்டு. செப்பம் - செவ்வை, நடுநிலை, மார்பு, வழி, வீதி. தெப்பம் - நீந்துத் தெப்பம். வெப்பம் - ஆசை, வெம்மை. அப்பர் - திருநாவுக்கரையர், தந்தையர். இப்பர் - இடையர், உழவர், செட்டி கள், வைசியர் பொது. அப்பல் - சாந்து முதலிய வணிதல், மோதல், வியங்கோண்முற்று. உப்பல் - உப்புதல். கப்பல் - மரக்கலம். குப்பல் - குவியல், கூட்டம். சப்பல் - சப்புதல். சுப்பல் - விறகுசுள்ளி. செப்பல் - சொல்லுதல், வியங்கோண் முற்று. தப்பல் - தப்புதல், வியங்கோண் முற்று. துப்பல் - உமிழ்நீர், துப்புதல். தெப்பல் - புணை. அப்பளம் - ஒருவகைப் பணியாரம். உப்பளம் - உப்பு விளைநிலம், கழிக் கரை. அப்பி - சாத்தி, வினையெச்சம். இப்பி - சங்கு. உப்பி - பருத்து. கப்பி - தானியம். குப்பி - ஓர்வகைப்பாண்டம், மாதர் தலையணியி லொன்று, வீணை யின் முறுக்காணி. கொப்பி - கொப்பி கொட்டல். திப்பி - கோது. தொப்பி - கள். அப்பிரம் - மேகம். சுப்பிரம் - மிகுமொளி, வெண்மை. அப்பு - அப்பென்னேவல், கடல், நீர். உப்பு - அராகம், இனிமை, உப்பு தலைச் செய்யென்னேவல், உவர்த் தல், கடல், மகளிர் விளை யாட்டு. ஒப்பு - அழகு, உவமை, ஒப்பென் னேவல், பொருந்தல். கப்பு - கவர், கொம்பு. கொப்பு - மயிர்முடி, மரக்கொம்பு, மாதர் காதணியிலொன்று. செப்பு - செப்பு, செப்பென்னேவல், சொல், சிமிழ். தப்பு - குற்றம், தப்பென்னேவல், பொய், ஒரு வாத்தியம். துப்பு - அரக்கு, அறிவு, அனுபோகம், ஆயுதப்பொது, உணவு, குற்றம், சகாயம், சித்தம், சுத்தம், துணைக் காரணம், நெய், பகை, பவளம், பானம், பொலிவு, மிகுதி, வலி. நொப்பு - ஆட்டின் முலையிற் சுற்றிய ஓலை, தடை. பப்பு - பரப்பு. மப்பு - மயக்கம், கொழுப்பு. முப்பு - அகஸ்தியர் தமிழ் வாகடம். மொப்பு - வெடிநாற்றம். வப்பு - இடைவேற்று. வெப்பு - வெம்மை. அப்புதல் - சாத்தல், பூசுதல். உப்புதல் - வீங்குதல். ஒப்புதல் - சம்மதித்தல். கப்புதல் - மூடிக்கொள்ளல். சப்புதல் - குதப்புதல். செப்புதல் - சொல்லுதல். தப்புதல் - தவறுதல், சீலை துவைத்தல். துப்புதல் - உமிழ்தல். ஒப்புரவு - முறைமை. துப்புரவு - ஐம்பொறி நுகர்தல், ஒப்புரவு. அப்பை - ஒர் கொடி. உப்பை - ஒளவை முதலிய பெண் பானால் வருளொருத்தி. குப்பை - குவிவு, கூட்டம், மேடு. துப்பை - போர், வெற்றிலை. தொப்பை - தொந்தி. ம அமணர் - சமணர். உமணர் - உப்பமைப்போர். சமணர் - அமணர். அமண், சமண் - சமண்மதம். அமம் - நோய். இமம் - பனி, பொன். உமம் - இறங்குதுறை, நகரம். கமம் - நிறைதல், விளைநிலம். சமம் - உவமை, நடு, போர். சிமம் - எல்லாம். சுமம் - பூ. தமம் - இராகு, இருள். நிமம் - பிடர். யமம் - அடக்கம். வமம் - வமநம். அமயம் - சமயம், காலம். இமயம் - பார்வதி பிறந்தமலை, பொன்மலை, பனிமலை. சமயம் - காலம், சைவமுதலிய சமயம். சிமயம் - மலை, மலையுச்சி. அமரம் - ஓர் வகை நோய், வட மொழியினோர்வகை நிகண்டு. குமரம் - கொம்பிலா விலங்கு, ஒரிலக்கண நூல். சமரம் - போர். தமரம் - அரக்கு, பேரொலி, வெண் மயிர், ஈயம், சவரி. நமரம் - நம்மவர்கள். பமரம் - பேரொலி, வண்டு. அமரி - அமிழ்து, துர்க்கை, விடம். குமரி - கற்றாழை, கன்னி, காளி, சத்த மாதர்களி லொருத்தி, துர்க்கை. சமரி - துர்க்கை, பாம்பு. தமரி - துளையுடைப்பொருள். அமர் - அமரென்னேவல், போர், மதில். கமர் - நிலப்பிளப்பு. சமர் - போர், முட்பன்றி. தமர் - உறவோர். நமர் - சுற்றம். நுமர் - நும்மவர். அமலம் - அழகு, அழகின்மை, அறிவு, புனிதம். இமலம் - மரமஞ்சள். கமலம் - தாமரை, நீர். சமலம் - அழுக்கு. நிமலம் - அழுக்கின்மை. விமலம் - அழுக்கின்மை, அழகு. அமலன் - அருகன், கடவுள், சிவன். கமலன் - பிரமன். நிமலன் - கடவுள். விமலன் - கடவுள், சிவன். அமலை - ஒலி, சோறு, பரிசுத்தை, மிகுதி. கமலை - இலக்குமி. விமலை - இலக்குமி, துர்க்கை, பார்வதி. எமன் - எம்மவன், யமன். கமன் - கதி, போதல். சமன் - காலன், நடு, நமன். ஞமன் - நமன். தமன் - நம்மவன். நமன் - இயமன், நம்மவன். நுமன் - உம்மவன். யமன் - நமன். சமாலம் - பீலிக்குஞ்சம். சிமாலம் - களிப்பு. தமாலம் - இலை, பச்சிலைமரம். அமானம் - அளவின்மை. சமானம் - உவமை. துமானம் - ஆபரணப்பெட்டி. விமானம் - உரோகணி நாள், ஏழ் நிலை மேடை, தேர், தேவர் கோயில், தேவலோகம். உமி - நெல் முதலியவற்றின் தோல், உமியென்னேவல். கமி - பொறுத்துக்கொள், மிளகு. சமி - அருகன், சமியென்னேவல், வன்னி மரம். சிமி - குடுமி. தமி - தனிமை, ஒப்பின்மை, இரவு. துமி - துமியென்னேவல், மழைத் துளி முதலிய. நிமி - சூரியகுலத்தோரரசன். யமி - முனிவன். வமி - அக்கினி, தூர்த்தன், வாந்தி. சமித்தம் - ஓமமண்டபம். நிமித்தம் - அடையாளம், காரணம். கமித்தல், சமித்தல் - பொருத்தல். துமித்தல் - அறுத்தல், வெட்டல். இமிர்தல் - ஒலித்தல். ஞெமிர்தல் - ஒடித்தல், பரத்தல். திமிர்தல் - பூசுதல், வளர்தல். நிமிர்தல் - உயர்ச்சி, ஓடல், சோறு, நெருங்குதல், வளர்தல். குமிலம் - பேரொலி. சிமிலம் - மலை. திமிலம் - பேரொலி, யானைமீன். துமிலம் - முறைபிறழ்வு. இமிழ் - இனிதா கென்னுமேவல், இனிமை, ஒலி. குமிழ் - குமிழி, ஒர் மரம். சிமிழ் - சிமிழ், சிமிழென்னேவல். தமிழ் - இனிமை, ஓர் வகைப் பாடை, நீர்மை. அமிழ்தல் - ஆழ்தல். இமிழ்தல் - இனிதாதல், ஒலித்தல். உமிழ்தல் - கொப்புளித்தல், சத்தி செய்தல், சொரிதல், தெவிட்டல். அமிழ்த்தல் - தாழ்த்தல், அழுத்தல். இமிழ்த்தல் - ஒலித்தல், கட்டல், கொப்புளித்தல். சிமிழ்த்தல் - கட்டல். அமுதம் - இனிமை, தேவருணவு, நீர், பால், பெருமை, முத்தி, வேண்டல். குமுதம் - அடுப்பு, தருப்பை, தென் மேற்றிசையானை, படையிலோர் தொகை, பேரொலி, வெள்ளாம் பல். அமை - அமையென்னேவல், மூங்கில், அமாவாசி. இமை - அற்பம், இமையென் னேவல், கண்ணிமை, கரடி, மயில். உமை - பார்வதி. கமை - பொறுமை. குமை - அழிவு, குறைவு, இவற் றேவல். சமை - சமையென்னேவல், வருடம். சிமை - குடுமி. சுமை - சும்மை, பாரம். தமை - புறக்கரணத் தண்டம். நமை - ஓர்வகை மரம். நிமை - இமை. அமைத்தல் - சமைத்தல், செய்தல். இமைத்தல் - ஒளிசெய்தல், கண்ணி மைத்தல். குமைத்தல் - மிதித்தல், குழையப் பண்ணுதல். சமைத்தல் - அமைத்தல், செய்தல், ஒழிவித்தல். திமைத்தல் - கிளப்புதல். அம் - அழகு, இடைச்சொல், சாரியை, நீர், மேகம். இம் - ஒலிக்குறிப்பிடைச் சொல். உம் - இடைச்சொல், சம்மதியைக் காட்டுங் குறி. எம் - எம்முடைய. கம் - ஆகாயம், காற்று, தலை, நீர், பிரமன், மேகம், வெண்மை. சம் - அன்பு, பிறப்பு. செம் - சிவப்பு, செம்மை. சொம் - உரிமை. தம் - சாரியை (உ-ம். எல்லார் தம்மை யும்). திம் - திக்கு. தும் - துகள். நம் - சாரியை, (உ-ம். எல்லார் நம்மை யும்). நும் - சாரியை, (உ-ம். எல்லீர் நுமி மையும்). பம் - விண்மீன். பும் - ஆண்குறி, ஒலிக்குறி. அம்பகம் - எழுச்சி, கண். கம்பகம் - செண்பகம். கும்பகம் - கும்பித்தல். சம்பகம் - ஊசிக்காந்தம், சுவைத்தல். கம்பம் - அசைவு, தூண், நடுக்கம், விளக்குத்தண்டு. கும்பம் - ஓர்வகையிராசி, குடம், நெற்றி, யானை மத்தகம். சம்பம் - மரவயிரம், வச்சிராயுதம். தம்பம் - கவசம், சங்கீதம், தூண், பற்றுக்கோடு, யானைத்தறி. நிம்பம் - வேம்பு. பிம்பம் - உருவின்சாயை. விம்பம் - கோவைப்பழம், பிரதி விம்பம், வட்டம். அம்பரம் - ஆகாயம், கடல், சீலை, திசை. கம்பரம் - சஞ்சலம். சம்பரம் - எண்காற்புள், சீலை, நீர். தொம்பரம் - பந்தி, பேரில்லம். பம்பரம் - மந்தரமலை, விளையாடுங் கருவி. அம்பர் - அவ்விடம். இம்பர் - இவ்விடம். உம்பர் - ஆகாயம், உயர்ச்சி, உவ் விடம், பார்ப்பார், மேல், வானோர். எம்பர் - எவ்விடம். கம்பர் - சிவன், ஒர்புலவன், தானிய வகை. கொம்பர் - மரக்கொம்பு. சிம்பர் - துப்பாக்கியி லிடுந்தக்கை. தொம்பர் - கழாய்க்கூத்தர். நம்பர் - சிவன். அம்பலம் - சவை, சித்திரக்கூடம். கம்பலம் - கம்பளி, செவ்வாடை, மேற் கட்டி. தம்பலம் - இந்திர கோபம், தம்பலம். அம்பல் - சிலரறிந்து தம்முட்புறங் கூறல், பழமொழி, ஓர் சிவஸ்தலம். உம்பல் - ஆட்டினேறு, ஆண்யானை, எருது, எருமைக்கடா, எழுச்சி, குலம், முறைமை, யானை, வலி, விலங்கேற்றின்பொது. கும்பல் - குவிவு, கூட்டம். கெம்பல் - எழும்பல், ஆரவாரம். சிம்பல் - ஒலித்தல், வியங்கோண் முற்று. தம்பல் - தம்பலம், சேறு. தும்பல் - தும்மல். நம்பல் - ஆசைப் பெருக்கம், நம்புதல், வியங்கோண்முற்று. பம்பல் - எழுச்சி, நெருங்கல், பரவல், பொலிதல், வலி, வியங்கோண் முற்று. வம்பல் - திசை, அயலாந்தண்மை. வெம்பல் - பெருங்கோபம், வாடல், வியங்கோண்முற்று. கம்பளம் - கம்பளி, செம்மறிக்கடா, செவ்வாடை, துருவாட்டேறு. கம்பளம் - கம்பளி, செம்மறிக்கடா, செவ்வாடை, பூசினி. கும்பளம் - பூசினி. பம்பளம் - கரை, பண்டாரம், பொறாமை, வழிச்சேறற்கு வேண் டும் பொருள், வழியுணவு. கம்பன் - ஓர் பெரும்புலவன். நம்பன் - சிவன், திருமால், அருகன். அம்பால் - தோட்டம். சம்பால் - ஒருவகைப் பச்சடி. பெம்பால் - இரத்தம். அம்பி - இறைகூடை, ஓடம், தாம் பணி, தெப்பம், மரக்கலம், மிடா. உம்பி - நும்பி. எம்பி - தம்பி. கம்பி - கம்பி, கம்பியென்னேவல் காதணி. கும்பி - கும்பியென்னேவல், சேறு, நரகம், யானை. செம்பி - கருவண்டு, சிவப்பி. தம்பி - பின்பிறந்தான். தும்பி - சுரையானை, வண்டினாண் வண்டு. நம்பி - அரசமாதைப் பார்ப்பானி ராக்கத மணஞ்செய்யப் பிறந்து விட்டுணுவை யருச்சிப்பான், ஆணிற் சிறந்தவன், வினை யெச்சம். வம்பி - வசவி. அம்பிகை - காளி, தருமதேவதை, பார்வதி. விம்பிகை - கோவைக்கொடி. கம்பித்தல் - நடுங்கல். கும்பித்தல் - வாயுவடக்கல். சும்பித்தல் - முத்தமிடல். தம்பித்தல் - வாயுமுதலிய வடக்கல். கம்பீரம் - ஆழம், செருக்கு. சம்பீரம் - எலுமிச்சை. அம்பு - எலுமிச்சை, கணை, தளிர், நீர், மூங்கில், மேகம். கம்பு - ஓர்வகைப்பயிர், சங்கு, செந் தினை, மரக்கொம்பு. கும்பு - கூட்டம், குவிவு. கெம்பு - மணிவகையினொன்று. கொம்பு - ஊதிடுகொம்பு, மரக் கொம்பு, யானைக்கொம்பு, விலங் கின் கொம்பு. சம்பு - அயன், அரன், அரி, அருகன், இரவி, எலுமிச்சை, ஓர்வகைப் புல், நரி, நாவல். செம்பு - தாம்பிரம். தும்பு - ஓர்வகைக்கயிறு. நம்பு - ஆசை, நம்பென்னேவல். வம்பு - கச்சு, நிலையின்மை, புதுமை, மிடா, வாசனை. கிம்புரி - தோளணி, புண், முடியு றுப்பு, யானைக்கொம்பிற்பூண். சிம்புரி - சும்மாடு. கம்புள் - சங்கு, சம்பங்கோழி, வானம் பாடி. சிம்புள் - எண்காற்புள். அம்பை - கம்பை, ஓர்நதி, காசியரசன் மகள். கம்பை - ஓர்நதி. சம்பை - ஓர்வகைத்தாளம், மின்னல். சிம்பை - அவரை. தும்பை - ஓர்வகைச் செடி, கூட்டம், பொருதல், போர் சென்றார்க்கு மாலை, வெற்றிமாலை. பம்பை - ஓர்வகை நதி, ஓர்வகை வாத்தியம், முல்லை நிலப்பறை. சம்மதம் - கோட்பாடு. சிம்மதம் - பாம்பு. அம்மல் - மந்தம், சமியாக்குணம். கம்மல் - காதணி, குரலடைப்பு. கும்மல் - அடித்தல். செம்மல் - அரசன், எப்பொருட்கு மிறைவன், பழம்பு, புதல்வன், பெருமை, பெருமையிற் சிறந் தோன். தும்மல் - உயிர்ப்பு, தும்முதல், விடு தல், வியங்கோண்முற்று. பம்மல் - பரவிடுதல், வியங்கோண் முற்று. பொம்மல் - சோறு, பொலிவு, மிகுதி. விம்மல் - அழுதல், ஒலித்தல், வியங் கோண்முற்று. அம்மனை - அம்மானை, தாய் அக்கினி. தம்மனை - தாய். அம்மான் - தகப்பன், மாமன். செம்மான் - தோற்றுன்னர். பெம்மான் - பெருமான். அம்மி - அம்மிக்கல். இம்மி - ஓர்வகை யிலக்கம், நுண்மை, புலம், பொன்மை. கும்மி - கொம்மை விளையாட்டு. அம்மியம் - கள், காளம், சிறுசின்னம். கம்மியம் - பேறு. சிம்மு - எல்லை. தும்மு - கொசுகு, தும்மென்னேவல். அம்மெனல் - ஒலிக்குறிப்பு. இம்மெனல் - அனுகரணவோசை. உம்மெனல் - உபகாரஞ்செய்தல். கம்மெனல் - வாசனைக்குறிப்பு. கொம்மெனல் - அனுகரண வோசை ஒலிக்குறிப்பு. பொம்மெனல் - அனுகரண வோசை. வம்மெனல் - அறைகூவல், வரவழைத் தல். அம்மை - நூலினழகு, தருமதேவதை, தவப்பெண், தாய், பார்வதி, வரு பிறப்பு. இம்மை - இப்பிறப்பு. உம்மை - கழிபிறப்பு, வருபிறப்பு. எம்மை - எப்பிறப்பும். கொம்மை - அகங்கை குவித்துக் கொட்டல், அழகு, இளமை, திரட்சி, முலை, வட்டம், வலி. சும்மை - ஊர், ஒலி, ஒலித்தல், சுமை, நகர், நாடு, நெற்போர். செம்மை - சிவப்பு, செப்பம், செவ்வை, பெருமை, அழகு. தம்மை - தாய். திம்மை - சுருளை, பிரமை. தொம்மை - மிகப்பருத்தது. பம்மை - சித்திரப்பாவை. பொம்மை - விளையாட்டுப் பிரிதிமை. மும்மை - முக்காலம், மூன்று. வெம்மை - ஆசை, உட்டணம், கடுமை. ய சயகம் - பூவரும்பு. புயகம் - பாம்பு. அயக்கம் - நோயின்மை. இயக்கம் - இயங்கல், பெருமை. உயக்கம் - உபத்திரவம், வாட்டம. கயக்கம் - வாட்டம். தயக்கம் - பிரகாசம். தியக்கம் - அசைவு, கலக்கம். துயக்கம் - சோர்ச்சி. மயக்கம் - உன்மத்தம். முயக்கம் - முயங்கல், கலவி. வயக்கம் - விளக்கம். வியக்கம் - பெருமை. அயக்கல் - அசைத்தல். இயக்கல் - நடத்தல். உயக்கல் - வருத்தல். கயக்கல் - கசக்கல். மயக்கல் - மயக்குதல். இயக்கன் - இயக்கசாதியோன், நாய். நயக்கன் - நாய். கயக்கு - கசக்கென்னேவல், சோர்வு. தியக்கு - தியங்கல். குயக்கு - தளர்ச்சி. மயக்கு - மயக்கம், மயக்கென்னேவல். முயக்கு - முயக்கம். இயக்குதல் - செலுத்துதல். உயக்குதல் - வருத்தல். கயக்குதல் - நசுக்குதல். மயக்குதல் - அறிவைக்கெடுத்தல். வயக்குதல் - வசக்குதல். இயங்கம் - ஓர்செடி. புயங்கம் - பாம்பு. வியங்கம் - பிறவிமறு. இயங்கல் - உலாவல், ஒளிசெய்தல், தங்கல், நடத்தல், வியங்கோண் முற்று. உயங்கல் - வருந்தல், வியங்கோண் முற்று. கயங்கல் - வாடல், அழுக்கேறல். தயங்கல் - அசைதல், ஒளிசெய்தல், வியங்கோண்முற்று. மயங்கல் - மயங்குதல், வியங்கோண் முற்று. முயங்கல் - தழுவல், வியங்கோண் முற்று. வயங்கல் - ஒளிசெய்தல், நடத்தல், வியங்கோண்முற்று. இயங்குதல் - நடத்தல். உயங்குதல் - வாடுதல். கயங்குதல் - சோர்தல். தயங்குதல் - திகைத்தல். தியங்குதல் - தெருளுதல். துயங்குதல் - வாடுதல். மயங்குதல் - புத்திகலங்கள். முயங்குதல் - புணர்தல். அயசு - பொல்லாநிலம். பயசு - நீர், பால். நயத்தல் - ஆசைப்பெருக்கம். பயத்தல் - உண்டாதல், கிடைத்தல். வியத்தல் - அதிசயப்படல், துதித்தல். கயப்பு - கைப்பு. நயப்பு - ஆசை. பயப்பு - கிருபை, நிறம், பசப்பு. வியப்பு - அதிசயம். இயமம் - அட்டாங்கயோகத்தொன்று. நியமம் - அட்டாங்கயோகத்தொன்று, இடம், கடைவீதி, செய்கடன், தெரு, தேவர்கோயில், நிச்சயம், நெடுந்தெரு, மருதநிலத்தூர், முறைமை. அயம் - ஆடு, இரும்பு, குதிரை, குளம், சேறு, நல்வினை, நிலம், நீர், விழா. இயம் - ஈ, ஒலி, சொல், வாச்சியம். கயம் - அகழ், ஆழம், இளமை, ஓர் வகை நோய், கீழ், குளம், கேடு, தேய்வு, நீர், பெருமை, மேன்மை, யானை. குயம் - இளமை, கொடுவாள், முலை, தருப்பை. சயம் - ஆம்பல், இரவி, கூட்டம், கை, சருக்கரை, மாலை, வெற்றி. சுயம் - தான், இயல்பு, கலப்பற்றது, சொந்தம். செயம் - வெற்றி. சொயம் - தான், சுயம்பு. ஞயம் - நயம். துயம் - கொடி. நயம் - இன்பம், உபசாரம், நன்மை, நீதி. பயம் - அச்சம், குளம், சுதை, நீர், பயன், பால். புயம் - தோள். மயம் - அழகு, ஓட்டை, காரியம். வயம் - குதிரை, நீர், பறவை, வசம், வலி. வியம் - உடல், பறவை, பெருமை. சயம்பு - அருகன், கடவுள், தானாக வாதல். சுயம்பு - கடவுள், தானாகவாதல், பிரமன். பயம்பு - பள்ளம், யானைப்படுங்குழி. உயரம் - ஓங்கல், மிகுதி, மேல். துயரம் - துன்பம். அயர் - அயரென்னேவல், வருத்தம், வாட்டம். உயர் - மேற்செல்லென்னேவல். துயர் - துன்பம். பெயர் - நாமம், பெயரென்னேவல், பெருமை. மயர் - மயக்கம். அயர்தல் - செய்தல், தளர்தல். உயர்தல் - ஓங்கல், வருந்தல். பெயர்தல் - ஆடல், உரிஞ்சல், போகல், வேறுபடல். அயர்தல் - மறத்தல், தளர்தல். உயர்த்தல் - அதிகப்படுத்தல். பெயர்த்தல் - வேறுபடுத்தல். வியர்த்தல் - சினக்குறிப்பு வியர்வை. அயர்ப்பு - மறதி. வியர்ப்பு - கோபம், சினம், வியர்வை. அயர்வு - அகலம், உன்மத்தம், சோம்பு, தளர்வு, வருத்தம், வெறுப்பு. உயர்வு - உயர்தல், மேன்மை, வருத்தம். பெயர்வு - பெயர்தல். மயர்வு - மயக்கம். வியர்வு - வியர்வை. இயலல் - பொருந்தல், வியங்கோண் முற்று. முயலல் - முயற்சி, வியங்கோண்முற்று. செயலை - அசோக மரம். பெயலை - மழை. அயல் - அருகிடம், இடம். இயல் - இசை, இயற்றமிழ், ஒத்து, குணம், சாயல், நடை, பொருந் தென்னேவல். உயல் - உயிர் வாழ்தல். கயல் - கெண்டை மீன். செயல் - ஒழுக்கம், காவல், சேறு, தொழில், வியங்கோண்முற்று. துயல் - அசைதல். பயல் - பையல். புயல் - சுக்கிரன், மேகம். பெயல் - மழை, மழைத்துளி, வியங் கோண்முற்று. மயல் - உன்மத்தம், செத்தை, பிசாசம், மயக்கம். முயல் - போர், முயலென்னேவல், முயல். வயல் - கழனி, மருதநிலம், வெளி. வியல் - அகலம், காடு, பெருமை, விரிவு. குயவரி - புலி. வயவரி - புலி. அயவர் - கீழ்மக்கள், சண்டாளர், தோற் கருவியாளர். இயவர் - இடையர். உயவர் - வருந்தினர். கயவர் - கீழ்மக்கள். குயவர் - மட்கலஞ் செய்வோர். நயவர் - சிநேகிதர். வயவர் - படைவீரர். வயவன் - காதலன், திண்ணியன், வலியன். வியவன் - ஏவுவான், திண்ணியன், வழிச்செல்வோன். இயவு - ஊர், காடு, வழி. உயவு - வருத்தம். கயவு - கழுமுகம், களவு, பெருமை, மிகுதி, மேன்மை. குயவு - தேர். தயவு - அருள், அன்பு. வயவு - ஆசை. இயவை - துவரை, தோரை, நெல், வழி. உயவை - காக்கணஞ்செடி. வயவை - வழி. இயறல் - போதல், முத்தி. முயறல் - முயற்சி செய்தல். அயனம் - பிறப்பு, வருடப்பாதி, வழி, வேதம். இயனம் - மரமேறுவோர் அரையிற் கட்டும் ஓர் கருவி, பெட்டி. சயனம் - நித்திரை, நித்திரை செய்யு மிடம், படுக்கை. நயனம் - கண். வயனம் - வயணம். அயன் - அருகன், பிரமன். கயன் - ஓரசுரன். சயன் - சயந்தன். நயன் - இன்பம், நன்மை, பயன், மகிழ்ச்சி. பயன் - அகலம், இலாபம், சொல் லுரை, பால். வயன் - அரக்கர், தச்சன், கின்னரன், தச்சன், வினைஞன். வியன் - பெருமை, ஏவல். நியாசம் - வேம்பு, வைப்பு, துறத்தல். வியாசம் - நிபம், பகுத்தறிதல், விரிவு. இயாதம் - யானைத்தோட்டியின் பிடர். கியாதம் - புகழ், மேன்மை. நியாதம் - வேம்பு. வியாதம் - வேறுபாடு. கியாதி - பிருகுவின் மனை, புகழ், மேன்மை. யயாதி - குருகுலத்தரசர்களி லொரு வன். வியாதி - நோய். தயாளம் - கிருபை. வியாளம் - கெட்டயானை, பாம்பு, புலி. அயானம் - சுபாவம். கியானம் - அறிவு. தியானம் - அட்டாங்கயோகத் தொன்று, நினைவு. மயானம் - சுடுகாடு. வயானம் - பறவை. வயானன் - வலியன். வியானன் - ஓர்வகை வாயு. அயிரம் - கண்டசருக்கரை. வயிரம் - கூர்மை, சலஞ்சாதித்தல், சினம், தண்டாயுதம், திருவோணம் பூணாகக் கட்டுவது மரவயிரம், வச்சிரம், வச்சிராயுதம். கயிரவம் - செவ்வாம்பல். வயிரவம் - பயிரவமதம். அயிரை - ஓர் மீன். கயிரை - சுற்றம். தயிரை - ஓர் செடி. அயிர் - சருக்கரை, நுண்மணல், நுண்மை. உயிர் - ஆன்மா, உயிரென்னேவல், காற்று. கயிர் - தவறு. செயிர் - குற்றம், கோபம், சினம். தயிர் - ததி. பயிர் - இடும்பயிர், பயில், பரவைக் குரல். மயிர் - உரோமம். வயிர் - ஊதுகொம்பு. அயிர்த்தல் - சந்தேகித்தல். உயிர்த்தல் - வாய்விடல், விடுத்தல். செயிர்த்தல் - சினத்தல். பயிர்த்தல் - பேசலாலெழுமொலி. அயிர்ப்பு - சந்தேகம். உயிர்ப்பு - காற்று, மூச்சு. பயிர்ப்பு - அசுத்தம், அருவருப்பு. அயிலல் - உண்ணல். குயிலல் - இழைத்தல், சொல்லல், வியங்கோண்முற்று. துயிலல் - நித்திரை செய்தல், வியங் கோண்முற்று. பயிலல் - கூடுதல், சொல்லுதல், படித் தல், பழகல், பேசலா லெழு மொலி, வியங்கோண்முற்று. கயிலை - வெள்ளிமலை. மயிலை - இருவாட்சி, ஓர்நகர், மீனவிராசி, மீன். அயில் - அழகு, இரும்பு, உண்ணென் னேவல், கூர்மை, கைவேல், கோரை, நாஞ்சில். உயில் - சாசனப் பத்திரிகை. எயில் - ஊர்ப்பொது, திரிபுரம்,மதில். ஒயில் - ஒய்யாரம், சாயல். கயில் - ஆபரணக் கடைப்புணர்வு, பிடரி. குயில் - ஓர் வகைப்புள், குயிலென் னேவல், சொல், துளையுடைப் பொருள். துயில் - துயிலென்னேவல், நித்திரை. தொயில் - தொய்யில். பயில் - சைகை, சொல், பயிலென் னேவல். மயில் - மயூரம். வெயில் - ஒளி, சூரியன். அயிறல் - உண்டல். குயிறல் - அழைத்தல், செய்தல், சொல் லுதல், தொலைத்தல், நெருங்கல். துயிறல் - நித்திரை செய்தல். பயிறல் - கூடுதல், சொல்லுதல், படித்தல், பழகல், பேசலா லெழு மொலி. எயிறு - பல், யானைக்கொம்பு. கயிறு - நாண். முயிறு - எறும்பின் விசேடம். வயிறு - குக்கி. குயிற்றல் - செய்தல், பதித்தல், வியங் கோண்முற்று. அயினி - சோறு. கயினி - அத்தநாள், கைம்பெண். பயினி - கூடல். குயின் - மேகம். பயின் - உட்படு, குருத்து, பிசின். வயின் - இடம், ஏழனுருபு, (உ-ம். அவர் வயிற் செல்லாய்) வயிறு, வீடு. அயுதம் - பதினாயிரம். நியுதம் - நூறாயிரம். இயை - இசைப்பு, இயையென்னேவல். சயை - சந்திரன், மூன்றாம்பக்கம். தயை - கிருபை. ஐ - அரசன், அழகு, ஆசான், இரண்ட னுருபு (உ-ம்: அறத்தைச் செய் தான்) இருமல், ஓர்வகையெழுத்து, கடவுள், கோழை, சாரியை, (உ-ம்: ஏற்றினோ டேற்றை) சுவாமி, நுண்மை, யானையைப் பாகன தட்டு மோசை. கை - ஒப்பனை, ஒழுக்கம், ஓர்வகை யெழுத்து, கை, சிறுமை, படை வகுப்பு. சை - இகழ்ச்சி, ஓர்வகை யெழுத்து. தை - ஓர்வகை யெழுத்து, ஓர்மாதம், தையென்னேவல், பூசநாள், மகர ராசி. பை - அழகு, ஓர்வகை யெழுத்து, நிறம், பச்சை, பாம்பின் படம், பை, பையென்னேவல், மந்தம். மை - அஞ்சனம், ஓர்வகை யெழுத்து, கறுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடு, மேகம், மேடவிராசி, மையென்னேவல். வை - ஓர்வகை யெழுத்து, கூர்மை, வைக்கோல், வையென்னேவல். எய் - அம்பெய்யென்னேவல், முட் பன்றி. ஒய் - யானையைப்பாகர் திட்டும் ஆரிய மொழி. குய் - தாளத்தகறி, நறும்புகை. கெய், கொய் - ஒரு மீன். செய் - செய்யென்னேவல், வயல், சிவப்பு. துய் - அறிவின்றிரிபு, நூற்கும் பஞ்சி யிற்றொடர் நுனி. நெய் - இரத்தம், சித்திரைநாள், நிணம், நெய் நெய்யென்னேவல். நொய் - நொய்மை. பொய் - பொய், பொய்யென்னேவல், மரப்பொந்து. மெய் - உடல், உண்மை, ஒற்றெழுத்து. மொய் - கூட்டம், போர், போர்க் களம், மொய்த்தல், மொய்யென் னேவல், யானை, வண்டு. கொய்கை - அறுத்தல், பறித்தல். செய்கை - ஒழுக்கம், தொழில். பொய்கை - குளம். வைகை - மதுரையாறு, வைகுதல், வைவு. உய்தல் - உயிர் வாழ்தல், ஈடேறுதல். எய்தல் - அடைதல், அம்பெய்தல். ஒய்தல் - ஒழிதல். கொய்தல் - அறுத்தல், பறித்தல். செய்தல் - செயல், புரிதல். தைதல் - அலங்கரித்தல். தொய்தல் - இளகல், தளர்தல். நெய்தல் - ஆம்பல், ஓர் நிலம், நெய்யல். நைதல் - கெடுதல், தளர்தல். நொய்தல் - நுண்மை. பிய்தல் - வேறாதல். பெய்தல் - செறித்தல், போடுதல், மழை பொழிதல். பைதல் - துன்பம், பையல். பொய்தல் - தோழி, மகளிர் கூட்டம், மகளிர் விளையாட்டு. மைதல் - மையாதல். வைதல் - திட்டல். உய்தி - உயிர்வாதல், உயிர்வாழ்வை யென்னு முற்று. கைதி - சிறைக்காரன். செய்தி - ஒழுக்கம், செய்தி, செய்வா யென்னு முற்று. நைதெனல் - இரக்கக்குறிப்பு, மெலி வின் குறிப்பு. தொய்தெனல் - சீக்கிரக்குறிப்பு. வெய்தெனல் - விரைவுக்குறிப்பு. உய்த்தல் - செலுத்தல். எய்த்தல் - இளைத்தல். கைத்தல் - அலங்கரித்தல், அலைத்தல், கைப்பு. துய்த்தல் - புசித்தல். தைத்தல் - துன்னல். புய்த்தல் - பயத்தல், பறித்தல். பைத்தல் - கோபம், சினக்குறிப்பு, பசுத்தல், பாம்பு படம் விரித்தல். பொய்த்தல் - பொய் சொல்லல். மொய்த்தல் - நெருங்கல், மூடுதல். வைத்தல் - வைக்குதல். சைத்தியம் - சீதத்தன்மை. பைத்தியம் - பித்த நோய். வைத்தியம் - பரிகாரம். வைத்தியர் - அசுரர், பரிகாரஞ் செய்வோர். சைத்திரம் - சித்திரை மாதம். மைத்திரம் - சிநேகம். தைத்திரியம் - ஓர் வேதம். மைத்திரியம் - சிநேகம். கைத்து - பொன், வெறுப்பு. பைத்து - பச்சை. கைப்பு - கசப்பு. வைப்பு - இடம், ஊர், பெருமை, வைத்தல். தைப்பை - சட்டை, முனைமுற்று. மெய்ப்பை - சட்டை. ஐமை - அடர்பு, கூட்டம். கைமை - கைம்பெண். நொய்மை - நொய்வு. பைமை - தவப்பெண், பச்சை. பொய்மை - பொய். மெய்மை - உண்மை, கருத்து. மைமை - மலடி, மலட்டெருமை. தொய்யகம் - தலைப்பாளை. வையகம் - பூமி. ஐயம் - இரப்போர்கலம், சந்தேகம், பிச்சை. குய்யம் - பெண்குறி, மறைவு, வஞ்சம். சையம் - கல், மலை. மையம் - நடு. வையம் - உரோகணிநாள், சிவிகை, தேர், பண்டி, பாண்டில் பூண்ட வூர்தி, பூமி, வாகனம். ஐயர் - அந்தணர், முனிவர், வானோர். கையர் - கீழ்மக்கள், திருடர். சையர் - மலைவாணர், புறங்கூறு வோர். பொய்யர் - பொய் பேசுவோர். மெய்யர் - அந்தணர், முனிவர். வெய்யர் - கொடியவர். ஒய்யல் - செலுத்தல். கொய்யல் - அறுத்தல். செய்யல் - செயல், சேறு, வியங் கோண்முற்று. தையல் - அழகு, கைத்தல், பெண், வியங்கோண்முற்று. கையல் - தேங்காய் சிரட்டை. தொய்யல் - அகமகிழ்ச்சி, இன்பம், உழவு, சேறு, துன்பம், முலை யெழுதுகோலம். நொய்யல் - நெய்தல், வியங்கோண் முற்று. நையல் - இரங்கல். பையல் - பயல். மையல் - உன்மத்தம், மயக்கம், வியங் கோண்முற்று. தொய்யில் - உழுநிலம், சாந்தினா லுடலிலிடுங் கோலம். வெய்யில் - ஒளி, சூரியன். செய்யுள் - பாட்டு. பையுள் - சிறுமை, துன்பம், நோய். ஐயெனல் - விரைவின் குறிப்பு. ஒய்யெனல் - மந்தக்குறிப்பு. கொய்யெனல் - இரக்கக்குறிப்பு. நொய்யெனல் - நுண்மையின் குறிப்பு. பையெனல் - மந்தக்குறிப்பு. ஐயை - காளி, தலைவி, தவப்பெண், துர்க்கை, பார்வதி, மகள். கையை - தங்கை. வையை - ஓராறு. செய்யோன் - அருகன். துய்யோர் - சுத்த முடையவன். வெய்யோன் - கொடியோன், சூரியன், மிருக சீரிடம், விருப்புற்றோன். ர கைரவம் - குமுதம். பைரவம் - அச்சம், பயங்கரம். குரகதம் - குதிரை. துரகதம் - குதிரை. மரகதம் - பச்சை, பச்சைமணி. சரகதி - அம்புவேகம். பரகதி - முத்தி. பிரகதி - கத்திரிச்செடி. உரகம் - பாம்பு. கரகம் - ஆலாங்கட்டி, கமண்டலம், வட்டில். கிரகம் - நவக்கிரகம், வீடு. குரகம் - நாகணவாய்ப் புள், நீர்வாழ் பறவை. சரகம் - தேனீ. சிரகம் - உறைத்துளி, கரகம், தலைச் சீரா. துரசம் - குதிரை. நரகம் - பாதாளம். விரகம் - பிரிவு, காமத்துன்பம். உரகர் - சமணர், நாகர். நரகர் - பாதாள லோகத்தார். நரகு - நரகம். வரகு - ஒர்வகைப் பயிர். விரகு - அழித்தல், உணர்வு, உபாயம். இரக்கம் - மனவுருக்கம், கிருபை. உரக்கம் - வசத்தி லிருப்பு. திரக்கம் - கொன்றை. அரக்கு - அரக்கு, அரக்கென் னேவல், சிவப்பு. குரக்கு - குரங்கு. தரக்கு - புலி. அரங்கம் - ஆற்றுடைக்குறை, சத்தி ரம், சாலை, சிலம்பக்கூடம், நாடக சாலை, போர்க்களம். வரங்கம் - பாம்பு. குரங்கம் - மான், விலங்கின் பொது, எட்டிமரம். சரங்கம் - பறவை. சிரங்கம் - தலை, பிரதானம். சுரங்கம் - கீழறை, தோன்றாம லிருக்குந் துவாரம். சொரங்கம் - கச்சோலம். தரங்கம் - நீர்த்திரை, கடல். திரங்கம் - நகரம், மிளகு. துரங்கம் - குதிரை, மனம். அரங்கல் - அழுந்தல், வியங்கோண் முற்று. இரங்கல் - அழுதல், ஒலித்தல், வியங் கோண்முற்று. குரங்கல் - தாழ்தல், வியங்கோண் முற்று. திரங்கல் - திரைதல், மிளகு, வியங் கோண்முற்று. அரங்கு - இடம், ஓர் வகையில் சூதாடற்கு வகுத்தவறை. குரங்கு - குரங்கென்னேவல், வானரம், விலங்கின்பொது. சிரங்கு - புண். தரங்கு - வழி. அரசம் - சாரமில்லாதது. இரசம் - சாறு, ஒரு லோகம். சரசம் - இனிய குணம். சுரசம் - சாறு, சிறுகிழங்கு, பாதரசம். பிரசம் - கள், தேனீ, தேன், தேன்கூடு, வண்டு. முரசம் - முரசு, வாச்சியப்பொது. உரசல் - உரிஞ்சல், வியங்கோண் முற்று. பரசல் - துதித்தல், வியங்கோண்முற்று. புரசல் - ரகசியம், உட்டுளை. அரசி - தலைவி. சரசி - இனியகுணி. சுரசி - தேவப்பெண். அரசு - அரசன், இராசாங்கம், ஓர் மரம், நாடு, வியாழம். சரசு - குளம். சிரசு - தலை. பரசு - பரசென்னேவல், மழு. புரசு - ஓர் மரம். முரசு - உத்திரட்டாதிநாள், ஓர் வாச்சியம், வாச்சியப்பொது. கரடம் - காக்கை, யானைமதம், யானைமதம்பாய் சுவடு. சரடம் - ஓணான். கரடி - கரடியென்னும் விலங்கு. சுரடி - ஓர்வகை இராகம். பரடு - காற்பரடு. கரடு - நூலிழை முதலிய. சரடு - கரடு. பரடு - உள்ளடி. இரட்டல் - இசைத்தல், இரட்டித்தல், ஒலித்தல், வியங்கோண்முற்று. திரட்டல் - கூட்டல், வியங்கோண் முற்று. புரட்டல் - புரளச்செய்தல், வியங் கோண்முற்று. இரட்டு - இரட்டென்னேவல், ஒலி, ஓர் சாதி. திரட்டு - கூட்டம், திரட்டென் னேவல். இரட்டை - பாடுவிச்சி, மிதுனவிராசி. புரட்டை - பூரட்டாதி. அரணம் - கதவு, கவசம், காவற்காடு, கோட்டை, தொடுதோல், மஞ்சம், மதில், வேலி, வேல். இரணம் - உப்பளம், புண், போர், பொன். உரணம் - ஆட்டுக்கடா, முகில். கரணம் - அந்தக்கரணம், உபகரணம், எண்ணிக்கை, ஐம்பொறி, கணிதம், கல்வி, காரணம், கூத்தின் விகற்பம். கிரணம் - ஒளி, கதிர். குரணம் - முயற்சி. சரணம் - அடைக்கலம், கால், மயிற் றோகை, மருதநிலத்தூர், வீடு. தரணம் - தரித்தல், தாண்டல், அரிசி, இமயமலை, பூமி, சூரியன். திரணம் - அற்பம், புல். நிரணம் - மனுக்கூட்டம். பரணம் - கவசம், பட்டுச்சீலை. புரணம் - கடல். மரணம் - சாவு. வரணம் - ஒட்டகம், சூழ்தல். விரணம் - புண், விழல். அரணி - கவசம், தீக்கடைகோல், மதில். தரணி - சூரியன், பூமி, மலை. பரணி - அணிகலச்செப்பு, ஆயிரம் யானை, கொன்ற தலைவனைப் பாடும் பிரபந்தம், ஏரி மதகு, ஓர் நாள், கூத்து. புரணி - ஊன், தோல். அரணியம் - காடு. இரணியம் - பொன். அரண் - அழகு, காவல், காவற்காடு, கோட்டை, மதில். சரண் - அடைக்கலம், காவல். பரண் - இதண். முரண் - ஒர் தொடை, பகை, போர், முரணென்னேவல், வலி. இரண்டகம் - இருமனம், நம்பிக்கைத் துரோகம். கரண்டகம் - சுண்ண முதலிய பெய்யுஞ் செப்பு. குரண்டகம் - பச்சைப்பூ, மருதோன்றி மரம். உரண்டம் - காக்கை. கரண்டம் - கமண்டலம், நீர்க்காக்கை. குண்டம் - கொக்கு. இரதம் - அரைஞாண், இனிமை, சுவை, சூதம், தேர், புணர்ச்சி, மாமரம். சரதம் - மெய். சுரதம் - பாதரசம், புணர்ச்சி, மருந் திழி சாரம். பரதம் - ஓர்வகை யெண், கூத்து, பரத நூல். பிரதம் - ஈகை. மிரதம் - பாம்பு. வரதம் - வரங்கொடுத்தல். விரதம் - ஆணை, தவம். அரதனம் - கண்மணி, சிலம்பணி. இரதனம் - அரைஞாண், கிண்கிணி, பல். பிரதனம் - படையிலோர் தொகை. இரதன் - கண், கிளி. சரதன் - உண்மை பேசுவோன். பரதன் - இராமன் றம்பி, சந்திர குலத் தோரரசன், பரதமுணர்ந்தோன். வரதன் - அரன், அரி, அருகன். விரதன் - சிவன், நோற்பவன். அரதி - வேண்டாமை. இரதி - ஆசைப்பெருக்கம், இரதி தேவி, இலந்தை மரம், காந்தன், பித்தளை, பெண்யானை. பரதி - கூத்தாடிச்சி. பிரதி - விகிதம், பத்திரம். விரதி - துறவோன். அரத்தம் - அரக்கு, இரத்தம், கடம்பு, சிவப்பு, செங்குவளை, செம் பஞ்சு, செம்பரத்தம், செம்மை, பவளம், பொன். இரத்தம் - உதிரம், சிவப்பு, பவளம். குரத்தம் - ஆரவாரம். சிரத்தம் - அசையப்பட்டவை. துரத்தம் - அநர்த்தம். இரத்தல் - பிச்சை. உரத்தல் - வலியுறல். கரத்தல் - ஒளித்தல், கொடாமை, திருடல். சிரத்தல் - அழித்தல், பேசலாலெழு மொலி. சுரத்தல் - உண்டாதல், பயத்தல். துரத்தல் - செலுத்தல், வியங்கோண் முற்று. நிரத்தல் - நிரப்புதல். பரத்தல் - பரவுதல். பிரத்தல் - எழுத்திலாவோசை. புரத்தல் - காத்தல், கொடுத்தல். அரத்தி - செவ்வல்லி. இரத்தி - இத்திமரம், இலந்தைமரம், முன்னிலை வினைமுற்று. குரத்தி - தலைவி. பரத்தி - நெய்தனிலப்பெண். விரத்தி - துறவு, விருத்தி. இரத்துதல் - பேசலாலெழு மொலி. சிரத்துதல் - ஒலித்தல், பேசலாலெழு மொலி. துரத்துதல் - ஓட்டல். அரத்தை - ஓர்வகை மருந்து. சிரத்தை - அன்பு. பரத்தை - வேசி. சிரநதி, சுரநதி, வரநதி - கங்கை. கிரந்தம் - ஒர்வகைலிபி, சுலோகம். நரந்தம் - கத்தூரிமிருகம், காக்கை, நாரத்தை, வாசனை. நிரந்தம் - இடங்கழிமை. துரந்தரன் - பாரந்தாங்குவோன். நிரந்தரன் - கடவுள். புரந்தரன் - இந்திரன். அரந்தை - துன்பம். கரந்தை - ஓர்பூ, பகைவரோட்டின நிரைமீட்டவர்க்கு மாலை, வினை முற்று. சரபம் - எண்காற்புள், குறும்பாடு, வரையாடு. பிரபம் - தண்ணீர்ப்பந்தல். இரபு - இரத்தல். பிரபு - அதிகாரி, வல்லவன். மரபு - குணம், பழமை, முறைமை. அரப்பு - இருப்பைக்கட்டி. இரப்பு - தரித்திரம், பிச்சை. உரப்பு - உரத்தல், உரப்பென்னேவல். கரப்பு - ஒளித்தல், களவு. சுரப்பு - சுரத்தல். நிரப்பு - குறைபாடு, நிரப்பென் னேவல், நிறைவு, மடிமை. பரப்பு - அகலம், கடல், பரத்தல், பரப்பென்னேவல். பிரப்பு - ஒரு கலத்திற் பல்லுணவின் பரப்பு, பேருண்டி. வரப்பு - எல்லை. கிரமம் - முறைமை. சரமம் - முடிவு. சிரமம் - சிலம்பம், வருத்தம். பரமம் - பிரமம். பிரமம் - அட்டா தசபுராணத்தொன்று, அட்டாதசவுப புராணத்தொன்று, கடவுள், கலக்கம், தத்துவம், தவசு, நடு, மயக்கம், முத்தி, வேதம். சிரமன் - அன்புடையவன். பரமன் - கடவுள், சிவன், திருமால். பிரமன் - அயன். சிரமை - வருத்தம். பிரமை - அறிவு, மயக்கம். அரம் - ஓர்வகைக் கருவி, உதை, கதவு, குகை, பாதலம், முடுகியல். உரம் - ஊக்கம், ஞானம், மதில், மார்பு, வலி, உள்ளமிகுதி, வேகம். கரம் - எழுத்தின் சாரியை (உ-ம்.) அகரம் கழுதை, கிரணம், குடி யிறை, கை, நஞ்சு, ஓலைக் குவி யல், முழம், யானைத் துதிக்கை, அத்தம், கைத்தலம், தோள், பாணி. கிரம் - கிளி, பன்றி, விழுங்கல். குரம் - குதிரைக்குளம்பு, தருப்பை, பசு, ஒலி. சரம் - அம்பு, கொறுக்கை, நடையுள பொருள், நாணல், மணிவடம், மாலை. நீர், பாலேடு, சுவாசம், திப்பிலி. சிரம் - உயர்ச்சி, தலை, நெடுங்காலம், ஆமணக்கு, கமுகு, கூகை, நீறு, திப்பிலிமூலம். சுரம் - அருநெறி, இசை, ஓர்வகை, நோய், காடு, பாலைநிலம், வழி. தரம் - அச்சம், கூட்டம், சமானம், பக்குவம், மலை, வலி, அரக்கு, குண்டு, சங்கு, தரிக்கை, தலை. திரம் - நிலை, உரம், உறுதி, பெலன். துரம் - சுமை, பொருப்பு. நரம் - மானுடம். பரம் - உடல், கடவுள், கவசம், குதிரை, கல்லணை, பாரம், மிகுதி, பழமை, முன்பு, மோக்கம். புரம் - இராசதானி, உடல், ஊர், நகரம், மருதநிலத்தூர், முன், வீடு. மரம் - விருக்கம், தரு, தாபரம். வரம் - அநுக்கிரகம், நவநிதியி லொன்று மேன்மை, அடைக் கலாங்குருவி, ஆசீர்வாதம், விருப்பம். அரம்பு - குறும்பு, ரோதனம். உரம்பு - உங்காரஞ் செய். கரம்பு - பாழ்நிலம். குரம்பு - செய்கரை, வரம்பு. நரம்பு - இசை, நாடி, நாணி, இலை முதலியவற்றின் நரம்பு, தந்தி. பரம்பு - கழனி திருத்தும் பலகை, வரம்பு, விசாலம். பிரம்பு - தேர்முட்டி மிரம்பு, வரம்பு. முரம்பு - உப்பளம், கல்லின்மேடு, கழி, பரலடுத்துயர் நிலம், பாறை. வரம்பு - எல்லை, வழி, அணை, ஒழுங்கு, கோடு, வரை, கங்கு. அரம்பை - தெய்வப் பெண், வாழை. குரம்பை - உடல், சிறுகுடில், பறவைக் கூடு முட்டை. உரர் - அறிவர், வலியர். சுரர் - வானோர். நரர் - மனிதர். பரர் - பகைவர், அயலார். வரர் - மேலோர், வானோர். நரலல் - ஒலித்தல், பேசலாலெழு மொலி, வியங்கோண்முற்று. முரலல் - ஒலித்தல், பேசலா லெழு மொலி, வியங்கோண்முற்று. அரலை - கடல், கழலைக்கட்டி, கொட்டை மரல். இரலை - அச்சுவினிநாள், ஊதிடு கொம்பு, கலைமான், புல்வாய். நரலை - கடல். உரல் - உலூகம். குரல் - இறகு, ஒலி, திணை, பயிர்க் கதிர், பெண்மயிர், மிடறு, மிடற் றார் பிறக்குமிசை, யாழ்நரம்பி னோசை, யாழ்நரம்பு. சிரல் - சிச்சிலிக்குருவி, முடிவிடம். தரல் - தருதல், வியங்கோண்முற்று. நரல் - செத்தை, நரலென்னேவல். நிரல் - ஒழுங்கு. பரல் - பருக்கைக்கல், விதை. மரல் - அரலை. முரல் - ஒலியென்னேவல். வரல் - வருதல், வியங்கோண்முற்று. விரல் - அங்குலி. நரல்வு - உள்ளோசை. முரல்வு - உள்ளோசை. இரவணம் - ஒட்டகம். சரவணம் - கொறுக்கை, நாணல். சிரவணம் - காது, திருவோண நாள். திரவணம் - பாய்தல், போதல், வெப்பம். அரவம் - ஆயிலியம், ஒலி, சிலம்பு, பாம்பு, பேரொலி, மனக்கலக்கம். குரவம் - கோட்டம், பேரீந்து. சிரவம் - கவுதாரி, காது. திரவம் - நீர் முதலிய கசிதல். மரவம் - குங்கும மரம். இரவர் - யாசிப்பவர். உரவர் - அறிவுடையர், வலியர். கரவர் - திகுடர். குரவர் - தந்தை தாய், மந்திரிமார், மூத்தோர். பரவர் - ஓர் சாதியார். இரவலன் - இரப்போன். புரவலன் - அரசன், கொடையாளன். இரவல் - யாசித்த பொருள். பரவல் - சொல்லுதல், பரத்தல், புகழ் தல், வணங்கல், வியங்கோண் முற்று. விரவல் - கலத்தல், வியங்கோண் முற்று. கரவாளம் - வாள். பிரவாளம் - பவளம். இரவி - சூரியன், மலை. நிரவி - நிறைத்து. புரவி - அச்சுவினிநாள், குதிரை. அரவு - பாம்பு. இரவு - இரத்தல், இராத்திரி. உரவு - வலி. கரவு - ஒலித்தல், களவு, கொடாமை. குரவு - குராமரம். தரவு - கலிப்பாவினோருறுப்பு, தலைவன், கட்டளை, பிடரி, கொடுத்தல். துரவு - கிணறு. நிரவு - நிரப்பென்னேவல். பரவு - கொடை. வரவு - வருகை. விரவு - கலப்பு, விரலென்னேவல். குரவை - கடல், கூத்து, கைகோத் தாடல். சரவை - மாலை. பரவை - இலக்குமி கூத்து, கடல் பரப்பு. மரவை - மரச்செப்பு. இரவோர் - இரப்போர். உரவோர் - அறிஞர், மூத்தோர். கரவோர் - கள்வர். கரளம் - எட்டிமரம், நஞ்சு. சரளம் - ஒழுங்கு, தகுதி. தரளம் - அசைவு, திரட்சி, முத்து. விரளம் - நீக்கம். திரளல் - திரட்சி, வியங்கோண்முற்று. பிரளல் - எழுத்திலாவோசை. புரளல் - புரளுதல், வியங்கோண் முற்று. சரளி - சத்த சுரங்களையு மாரோ கணமவரோகணமாகப் பயிலல். புரளி - பொய். முரளி - மூக்கால் வாசிக்குஞ் சிறு குழல், வேய்ங்குழல். கரள் - நஞ்சு. திரள் - உண்டை, குழியம், கூட்டம், திரளென்னேவல், படை. அரற்றல் - அழுதல், ஒலித்தல், வியங் கோண்முற்று. உரற்றல் - ஒலித்தல், பேரொலி, வியங்கோண்முற்று. நரற்றல் - ஒலித்தல், வியங்கோண் முற்று. முரற்றல் - ஒலித்தல், வியங்கோண் முற்று. அரன் - எப்பொருட்கு மிறைவன், சிவன். உரன் - அறிவு, உள்ளமிகுதி. கரன் - ஓர்வகை யவுணன். நரன் - மனிதன். சுரன் - தேவன். பரன் - சிவன், திருமால், பிரமன். முரன் - ஓர்வகை யரக்கன். வரன் - சிவன், பிரமன், புருடன். அரா - அராவென்னேவல், பாம்பு. இரா - இரவு, இருத்தலைச் செய்யா வென்னு மஃறிணைப் பன்மை முற்று, வினையெச்சம். கரா - முதலை. குரா - குராமரம். சிரா - திரிசிரா. தரா - அஃறிணைப்பன்மை வினை முற்று, ஓர்வகைக் கசப்புக்கீரை, சங்கு, தரா, பூசநாள், வினை யெச்சம். அராகம் - அடங்காமை, ஓர்வகைப் பண், பாலை யாழ்த்திறம், பொன், முடுகியல் அவா, சிவப்பு, வண்கை ஒத்தாழிசைக் கலிப்பாவினோ ருறுப்பு. இராகம் - ஆசை, இன்னிசை, சிவப்பு, நிறம். கிராகம் - ஆமை. சராகம் - வண்டு. நிராகம் - உடலின்மை. பராகம் - பூந்தாதிற்றூள். வராகம் - அட்டாதசபுராணத் தொன்று, பன்றி. இராகன் - ஆசையுள்ளவன், இசைத் தமிழோன். வராகன் - திருமால், ஓர்வகைப் பொன், பணம். விராகன் - அருகன். சராசரம் - நடையுள்ளது மில்லதும். பராசரம் - அட்டாதச தரும நூலி லொன்று, அட்டாதசவுப புராணத் தொன்று. கராசனம் - புலி. சராசனம் - வில். நிராசனம் - கொலை. பராசனம் - மேலாதாரம். பிராசனம் - அங்குசம், ஊட்டல். இராசி - ஒழுங்கு, குவிதல், கூட்டம், மத்தியானம், மேட முதலிய விராசி. பிராசி - கிழக்கு. இராடம் - ஓர்வகைத்தேசம், கழுதை. கிராடம் - ஓர்வகைத் தேசம். சுராடம் - பாலைநிலம். பராடம் - பாலைநிலம். புராடம் - நகருட்சஞ்சாரம். மராடம் - பதினெண்பாடையி லொன்று, மகாராட்டிர தேயம். வராடம் - ஓர்வகைத்தேயம், பலகறை. விராடம் - ஓர் தேசம். சுராட்டு - இந்திரன். விராட்டு - பரப்பிரமம், புள்ளரசு. கிராணம் - சிறுவட்டில். புராணம் - கதை, காந்தமுதலிய புராணம், பழமை. அராதரம் - பூமி. உராதரம் - முலை. கிராதரம் - வீணை. தராதரம் - மலை, தகுதி. நிராதரம் - ஆசையின்மை ஆதர வின்மை. அராமம் - சோலை, பைங்கூழ், பூந் தோட்டம். இராமம் - அழகு, ஆசை. கிராமம் - நூறுகுடியூர், மருத நிலத் தூர், குறிச்சி, நீர்வாழ் பறவை. சிராமம் - காலம், மண்டபம், மாதம். பிராமம் - புராணத்து ளொன்று. விராமம் - ஒற்றெழுத்து. குராமரம் - ஓர்மரம். திராமரம் - பவள மல்லிகை. மராமரம் - அரசமரம், ஆச்சாமரம், கடப்ப மரம். கராம் - ஆண்முதலை, முதலை. மராம் - கடம்பு. கராரி - விண்டு. புராரி - சிவன். முராரி - திருமால். குரால் - கபில நிறம், கோட்டான், பசு. துரால் - செத்தை, துன்பம். வரால் - ஓர்வகைமீன், வினைமுற்று. இராவணம் - விளக்கு, அழுகை. சிராவணம் - ஆவணிமாதம், கல். கிராவம் - கல், மலை. சராவம் - அகல், சலாகை. சிராவம் - கேட்டல். பிராவம் - கொல்லை. விராவம் - ஒலி. கராளம் - தீக்குணம். மராளம் - அன்னம், பாம்பு, மாதளை. வராளம் - பாம்பு. கராளி - தீக்குணம். வராளி - ஓர்வகை யிசை. விராளி - விரகம். அரி - அடர்பு, அரிசி, அரித்தல், அரியென்னு மேவல், ஆயுதப் பொது, ஈர்வாள், உட்டுளைப் பொருள், ஐமை, வடிவு, ஒலி, கடல், கட்டில், கண்வரி, கள், காற்று, கிள்ளை, குதிரை, குரங்கு, குற்றம், கூர்மை, சக்கரம், சந்திரன், சிங்கம், சிங்க விராசி, சிலம்பின் பருக்கைக்கல், சிலம்பு, சூரியன், செம்மறியாட்டுக்கடா, சோலை, தவளை, தீ, தேர், தேவேந்திரன், நமன், நிறம், நெருக்கம், நெற்கதிர், பகை, பச்சை, படுக்கை, பறை, பன்றி, பாம்பு, புகை, பொன், மரகதம், மரவயிரம், மலை, மழைத்தூவல், மாலை, மூங்கில், வண்டு, வரி, வலி, விசி, விட்டுணு, வெற்றி. உரி - உரிதலைச் செய்யென்னேவல், ஓர் வகையளவு, தோல், அரைப் படி, அடுக்கு, கொத்துமல்லி, மரப்பட்டை. எரி - எரியென்னேவல், கேட்டை நாள், தீ, நரகம், புநர்பூசம், நெல்லிக்காய்க் கந்தகம். கரி - கரி, கரியென்னேவல், சாட்சி, நஞ்சு, யானை, வயிரம், இருந்தை, கந்துள், கருமை, திருஷ்டாந்தம். கிரி - பன்றி, மருட்பன்றி, மலை, பிணையாளி. சரி - ஒப்பு, கூட்டம், கைவளை, சரியென்னேவல், மலைச்சாரல் வழி, நிதானம், பசு, பிசகின்மை. சிரி - சிரியென்னேவல், நகை, வெட் டுக்கிளி, வாள், அம்பு, கொலை செய்வோன். சுரி - ஆணரி, சுரியென்னேவல், சுழற்சி ஏட்டுத்துளை, சேறு, தமர், முறுக்கு. தரி - தரிப்பு, தரியென்னேவல். திரி - திரிசீலை, திரியென்னேவல், மூன்று பெண், வத்தி, விளக்குத் திரி. துரி - எழுதுகோல், நூற்பாத் திருத் தும் படை மயிர். தெரி - அறியென்னேவல். நரி - ஓரி, இகலன், உள்ளன், ஒண் டன் ஓரோட்டம், கோணாய், கோமாயு, சம்பு, சம்பகம், சிறு காலன், சிவை, கரி, பூரிமாயு. நெரி - நெரியென்னேவல், நெரிவு, புடைவை, முரிப்பு, புரி, மடிப்பு. பரி - அச்சுவினிநாள், அன்பு, உயர்ச்சி, கறுப்பு, குதிரை, சீக்கிரம், சுமை, பரியென்னேவல், பருத்தி, பாது காத்தல், பெருமை, வருத்தம், வழி, அலங்காரம், உண்மை, உள்ளக் களிப்பு, செல்வம், துக்கம், துன்பம், பங்கு, பரப்புதல், மிகுதி, முடிவு, வணக்கம். பிரி - நீக்கென்னேவல், பிரிவு, வெருகு. புரி - ஆசை, இராசதானி, ஊர், கட்டு, கயிறு, கோட்டை, சங்கு, சுருள், புரியென்னேவல், மருத நிலத்தூர், அரசன், யாறு. பொரி - நரிக்காடு, பொரி, பொரி யென்னேவல். முரி - முறி யென்னேவல், செய்யுள் வகையினொன்று, பாலை நிலம். வரி - இசைப்பாட்டு, எழுத்து, குடி யிறை, தேமல், நீளம், நெல், வண்டு, வரியென்னேவல், வழி, விரலிறை, அக்கினி, கடல், நிறை, வடிவு. விரி - மாட்டுவிரி, விரியென்னேவல். சரிகை - சரிதல், பொன் முதலிய வற்றின் சரிகை. சுரிகை - உடைவாள். திரிகை - இடக்கை மேளம், எந்திரம், குலால சக்கரம், திரிதல். பரிகை - அகழ், பிரிவு, மதிலுண் மேடை. பிரிகை - பரிதல். கிரிசம் - இளைப்பு. பரிசம் - தொடல். அரிசனம் - மஞ்சள். எரிசனம் - நரகர். தரிசனம் - காட்சி. பரிசனம் - உறவு, ஏவல் செய்வோர். இரிசு - தேருறுப்பு ளொன்று. துரிசு - துன்பம், குற்றம். பரிசு - ஈகை, குணம். கிரிசை - பார்வதி. பரிசை - கேடகம். புரிசை - மதில். வரிசை - ஒழுங்கு, முறைமை, வெகு மானம். அரிணம் - கடல், சிவப்பு, பொன், மான், யானை, வெள்ளை. இரிணம் - உழமண், பூமி, பாழ டைந்தது. அரிதம் - திசை, பசும்புன்னிலம், பச்சை பொன்னிறம், மஞ்சள். கரிதம் - அச்சம். சரிதம் - சரித்திரம், சுபாவம், நடை, வாசம். சிரிதம் - கஷாயம். சுரிதம் - கலக்கப்பட்டது, வெட்டப் பட்டது. தரிதம் - அச்சம், பீறல். துரிதம் - கலக்கம், கேடு, சீக்கிரம், துன்பம், பாவம், ஒரு தாளம், துடி இரண்டு கொண்ட காலதசப் பிரமாணத் தொன்ற. இரிதரல் - ஓடல். சொரிதரல் - சுழலல், பொழிதல், வியங்கோண்முற்று. நெரிதரல் - ஓடல், வியங்கோண் முற்று. அரிதல் - அறுத்தல், ஈர்தல், கொய்தல், சேதித்தல். இரிதல் - அச்சல், ஓடல், கெடுதல், சாய்தல், உடைதல், நிமிர்தல். உரிதல் - கழலல், கழற்றல், முளைத்தல். எரிதல் - எரியல், அழற்றல், பிரகாசித் தல், தீச்சுவாலித்தல். கரிதல் - கருகுதல், பெருங்கோபம், காந்தல், தீதல். சரிதல் - சாய்தல், நழுவல், பின்னிடல். சுரிதல் - முறுகல், வளைதல், சுருங் கல், சுழித்துள்ளே வாங்கல். சொரிதல் - ஆய்தல், தெள்ளுதல், தேர்தல். சொரிதல் - ஈதல், சுழலல், மழை பெய்தல், உதிர்தல், மிக வீழ்தல். திரிதல் - உலாவல், கெடுதல், சுழலல், நடத்தல், அலைத்தல், மாறுதல். தெரிதல் - ஆலோசனை, காணல். நெரிதல் - சாய்தல். பரிதல் - அறுத்தல், அம்பு, அன் போடு பேசல், இரங்கல், ஒடிதல், தறித்தல், வெட்டல், பங்கிடல், ஒழுகல். பிரிதல் - அகறல், போதல், குலைதல். புரிதல் - செய்தல், விரும்பல். பொரிதல் - பொரியாதல், எரிச்சற் படுதல், தீதல். முரிதல் - ஒடிதல், கெடுதல், முறிதல் தோற்றல், பின்னப்படுதல். வரிதல் - எழுதல், கட்டல், சித்திர மெழுதல். விரிதல் - அலர்தல், ஒளிசெய்தல், பரவல், விசால மித்தல். அரிது - அரியது, பச்சை. பரிது - பரியது. பெரிது - பெரியது, குறிப்பு வினை யெச்சம். அரித்தல் - அரிப்பு, அணில் எலி முத லிய அறுத்தல், பொன் முதலிய வற்றைத் தூசு நீக்கி யெடுத்தல், மா முதலியவற்றைப் பிரித்தொ ழுக்குதல். உரித்தல் - உரிக்குதல், அழுந்துதல், களைதல். இரித்தல் - அஞ்ச வைத்தல், முறி யடித்தல். எரித்தல் - எரியச் செய்தல். கரித்தல் - உறைத்தல், எரிதல், கார்த்தல். கொரித்தல் - கரித்தல். சரித்தல் - சரியச்செய்தல். சிரித்தல் - நகைத்தல், பரிகாசம் பண்ணல். சுரித்தல் - சுழித்தல், சுருங்கல். செரித்தல் - சமித்தல், கோபத்தை யடக்கல், சீரணித்தல். தரித்தல் - சுமத்தல், தங்கல், அணிதல், சகித்தல். திரித்தல் - கயிறு திரித்தல், கெடுத் தல், சுழற்றல், மாற்றுதல். தெரித்தல் - எழுதல், சொல்லுதல், மாறுபாடு, கொழித்தல், பங்கிடு தல். நரித்தல் - நருக்குதல், நிந்தித்தல், பிரமித்தல். நெரித்தல் - நெரியச்செய்தல், குத்தல், செறித்தல், நசுக்குதல், நிமிட்டல், வருத்தல். பரித்தல் - சுமத்தல், காத்தல், தரித்தல். பிரித்தல் - நீக்கல். பொரித்தல் - பொரிக்கறி, பொரியச் செய்தல், அலத்தப்பல், குஞ்சு பிறப்பித்தல், வறுத்தல். மரித்தல் - சாதல். முரித்தல் - முறித்தல், உடைத்தல், தோல்வி செய்தல். வரித்தல் - கட்டல், பூசுதல், நிய மித்தல், மொய்த்தல். விரித்தல் - சொல்லல், பரப்பல், பூசுதல், அலர்த்தல், விளக்குதல். சரித்திரம் - ஒழுக்கம். தரித்திரம் - வறுமை. அரித்து - அரித்தலைச் செய்தென் னெச்சம், பச்சை. இரித்து - ஒட்டி, அஞ்ச வைத்து. உரித்து - உரியது, வினை யெச்சம். எரித்து - சாம்பராக்கி, நீறாக்கி. இரிபு - பகை, வினையெச்சம். திரிபு - வினையெச்சம், வேறுபாடு. அரிபுரம் - திரிமாலூர், வைகுண்டம். திரிபுரம் - முப்புரம். பரிபுரம் - காற்சிலம்பு, பாத கிண்கிணி. அரிப்பு - அரித்தல், குற்றம், தினவு. இரிப்பு - அச்சுறுத்தல், முறியடிக்கை. எரிப்பு - எரித்தல், பொருமை. கரிப்பு - அச்சம், கரித்தல். சரிப்பு - சரித்தல், சாய்ப்பு. சிரிப்பு - நகை, பகிடி, பழிப்பு. தரிப்பு - தரித்தல், இருப்பிடம், ஞாப கம். திரிப்பு - திரித்தல், முறுக்குறி, மாற்று தல். தெரிப்பு - அறிவிப்பு, ஆராய்வு. நரிப்பு - இகழ்வு, ஆச்சரியம், எழுதல், கொழிப்பு, சொல்லுதல், பிரிப்பு. நெரிப்பு - நெரிதல். பரிப்பு - சுமை. பிரிப்பு - பகுப்பு, குலைப்பு, பரித்தல். மரிப்பு - இரப்பு. விரிப்பு - விரித்தல். முரிப்பு - எருத்துத்திமில், முறித்தல். எரிப்புறம் - நரகம். சுரிப்புறம் - சங்கு, நத்தை. நரிப்புறம் - மிருகசீரிடம். வரிப்புறம் - அணில். அரிமா - சிங்கம், சிங்கவிராசி. கரிமா - அட்டபாக்கியத்தொன்று. கிரிமா - அட்டயோகத்தொன்று. தெரிமா - சிங்கம். சுரிமுகம் - சங்க, நத்தை. தெரிமுகம் - சங்கு, நத்தை. தெரிமுகம் - பாயிரம். பரிமுகம் - அச்சுவினிநாள், கணைக் கால். புரிமுகம் - கோபுரம். அரியகம் - வைகுந்தம். பரியகம் - காற்சரி, கைச்சரி, பாத கிண்கிணி. பிரியம் - கடம்பு. அரியணை - சிங்காசனம். புரியணை - புரிமணை. அரியது - அருமையானது. உரியது - உடையது, சுத்தமானது, தக்கது. அரியம் - வாச்சியம். துரியம் - சுமத்தல், நான்காமவத்தை, பொதியெருது. பிரியம் - உவகை. புரியம் - கூத்து. தரியலர் - பகைவர். தெரியலர் - அறியாதார். பிரியலர் - சினேகிதர். விரியலர் - மலர்ந்தபூ. அரியல் - அலர்தல், கள், வியங் கோண்முற்று. இரியல் - இரிதல், நல்லாடை, வியங்கோண்முற்று. எரியல் - எரிதல், வியங்கோண்முற்று. கரியல் - புழுக்கல். சரியல் - சரிந்துபோதல். சுரியல் - இளைஞர்மயிர், சுரிதல், சுழலல் நீர்ச்சுழி, பெண்மயிர், வியங்கோண்முற்று. தெரியல் - ஆராய்தல், காணல், பூ மாலை, வியங்கோண்முற்று. பரியல் - அன்பு, வியங்கோண்முற்று, வருந்துதல். பிரியல் - வேறுபடல். புரியல் - செய்தல். பொரியல் - பொறிக்கறி, பொறிதல், வியங்கோண்முற்று. மிரியல் - மிளகு. விரியல் - பரவல், மலர்தல், வியங் கோண்முற்று. கிரியை - சிவபூசை யியல்பி னொன்று, தொழில். சரியை - ஒழுக்கம், சிவபூசையியல் பினொன்று, பிச்சை. பிரியை - பெண், மனைவி. பெரியை - பெரியவள். அரில் - குற்றம், சிறுதூறு, பகை, பிணக்கு. கரில் - கார்ப்பு, குற்றம், கொடுமை. எரிவு - எரிதல். சரிவு - சாய்வு. திரிவு - சுழலல், நடை, விகாரம். தெரிவு - தெரிதல். நெரிவு - நெரிதல். பரிவு - அன்பு, இன்பம், துன்பம். பிரிவு - பிரிதல். புரிவு - அன்பு, ஆசை. முரிவு - முறிவு. விரிவு - அகலம். அரிவை - இருபத்தைந்து வயதுப் பெண் தெய்வப்பெண், பெண் பொது. உரிவை - தோல், வினைமுற்று. தெரிவை - பெண், முப்பத்தொரு வயதுப் பெண், வினைமுற்று. கிரீசம் - மலைகளிற்சிறந்தது. மரீசம் - மிளகு. கிரீடம் - முடி. சிரீடம் - வாகைமரம். புரீடம் - மலம். இரீதி - பித்தளை. பிரீதி - உவகை. கரீரம் - அகத்தி, கும்பவிராசி, மிடா, யானை, யானைக்கொம்பினடி. சரீரம் - உடல். அரு - அணு, அறிவு, கடவுள், உருவ மின்மை, மாயை, காயம். இரு - வார், இரண்டு, உட்காரு. உரு - அட்டை, உடல், உருத்தலைச் செய்யென்னேவல், உள், நிறம், நோய், வடிவு, அதிகமான, அழகு, எலுமிச்சை, கரு, கலை, கோபம், சன்னதம், செபத்தினுரு, தோற் றம், பதுமை, பருமை, பெரிய, மரக்கலம், விலை யுயர்ந்தது, வெப்பு, வைக்கோற்புரி. எரு - பயிர்க்கிடுமெரு, சாணி, வறட்டி. ஒரு - ஒன்று, என்பதன் திரிபு. கரு - கருப்பம், கருப்பொருள், நடு, முட்டை, மேடு, ஆயுதத்தின்பல், காரணம், சினை, சூல், பீள், வயா. குரு - ஆசான், இருமாத்திரை, ஒர் வகையரசன், ஓர்வகைத்தேயம், ஓர்வகை வியாதி, நிறம், பாரம், பெருமை, வியாழம், இரும்பு, செம்பு, ஈய முதலிய லோகங் களைப் பொன் வெள்ளியாகப் போதிக்குஞ் செந்தூரம், இறை வன், ஈசன், ஐயன், இலகு இரண்டு கொண்ட காலதசப் பிரமாணத் தொன்று. சரு - சோறு, தேவருணவு. சிரு - தோட்பொருத்து, போதல். செரு - போர். தரு - சிந்து, மரப்பொது, ஒருசந்தம். திரு - இலக்குமி, செல்வம், அழகு, தெய்வீகம், மங்கல மொழியி னொன்று, மேன்மை. துரு - உபாயம், களிம்பு, கறை, பொன். தெரு - வழி, வீதி. நொரு - காய்ப்பு மாறினபின்னரும்பும் பிஞ்சு, பயிரினடியில், முலைப்பது, நுரு. பரு - சிலந்தி, நோய், பருவென் னேவல், கடல், கணு, குரு, மலை. பிரு - கத்திரி. புரு - புருவம், குழந்தை, மோட்சம். மரு - ஒருவகைப் பரிமளப்புதல், மருவென்னேவல், வாசனை, குற்றம். மிரு - பாலைநிலம். அருகம் - சமணமதம், தகுதி, யோக் கியம். உருகம் - பிறப்பு. கிருகம் - வீடு, மிடறு. மிருகம் - மான், விலங்கின்பொது. விருகம் - செந்நாய். வெருகம் - வாலின் கீழிடம். அருகல் - அணைத்தல், கிட்டல், குறைதல், சாதல், சுருங்குதல், வியங்கோண்முற்று. உருகல் - உருகுதல், வியங்கோண் முற்று இரங்குதல், மனங்கரை தல். கருகல் - கரியாதல், தீதல், வியங் கோண்முற்று, மாலைநேரம். செருகல் - சொருகல், அடைசுதல், வியங்கோண்முற்று. திருகல் - முறுகல், வளைதல், வியங் கோண்முற்று, முரணல். பருகல் - உண்டல், குடித்தல், வியங் கோண்முற்று. பெருகல் - நிறைதல், மிகுதல், வியங் கோண்முற்று. மருகல் - ஓரூர். அருகன் - சங்காத்தி, சினேந்திரன், தகுதியுடையவன், பக்குவன். இருகன் - விஜயன் புத்திரன். மருகன் - மருமகன். முருகன் - இளையோன், குமரன், வெறியாட்டாளன். விருகன் - இருகன் புத்திரன். அருகி - கள், வினையெச்சம். உருகி - இளகி. மருகி - மருமகள். அருகு - அருகென்னேவல், சமீபம். குருகு - இளமை, உலைமூக்கு, குருக்கத்தி, கைவளை, கோழி, நாரை, பறவைப் பொது, மூல நாள், வெண்மை. சருகு - உலர்ந்தவிலை. திருகு - திருகென்னேவல், முறுக்கு. பருகு - பருகென்னேவல். பிருகு - ஒர்வகையிருடி, சுக்கிரன். பெருகு - தயிர், பெருகென்னேவல். பொருகு - சோறு. மருகு - மகரவாழை. முருகு - அகில், அழகு, இளமை, எழுச்சி, கள், திருவிழா, முருகன், வாசனை. விருகு - விருகந்தண்டு. வெருகு - ஆண்பூனை, பூனை. அருகுதல் - அருகல். உருகுதல் - உருகல். கருகுதல் - கரிதல். சொருகுதல் - செருகுதல். திருகுதல் - முறுகுதல், திரும்புதல். பருகுதல் - குடித்தல். பெருகுதல் - பாய்தல், அதிகரித்தல். அருக்கம் - எருக்கு, குறைவு, சூரியன், தாமிரம், திரவியம், துன்னி மித் தம், நீர்க்காக்கை, நெருப்பு, படிக்கல். உருக்கம் - உருகுதல், தொடை, அன்பு, இரக்கம். எருக்கம் - எருக்கு. ஒருக்கம் - மனவொடுக்கம், ஒரு தன்மை. சருக்கம் - இலக்கியச்செய்யுட் கூறு பாடு. சுருக்கம் - கட்டல், சுருங்கல், குறைவு, சிறுமை. தருக்கம் - நியாயம், பொருள், வாது. துருக்கம் - கத்தூரி மிருகம், கலக்கம், காடு, குங்குமமரம், மலைமேற் கொட்டை. நெருக்கம் - நெருங்கல், இடைஞ்சல், ஒடுக்கம், அடர்பு. பெருக்கம் - செல்வம், மிகுதி. மருக்கம் - காற்று, குரங்கு, சரீரம். வருக்கம் - கூட்டம், வகுப்பு, இனம், குலம். விருக்கம் - மரப்பொது. அருக்கல் - அச்சம், அருமை, வியங் கோண்முற்று, அழுக்காறடைதல், சுருக்கல். உருக்கல் - உருக்குதல், வியங்கோண் முற்று. எருக்கல் - கொல்லல், சுமத்தல், வியங்கோண்முற்று. ஒருக்கல் - அழித்தல், ஒருப்படுத்தல். கருக்கல் - இருள், கருக்குதல், வியங் கோண்முற்று, காய்ந்தபயிர், சப் பட்டை, மாலைநேரம். சருக்கல் - வழவழப்பு. சுருக்கல் - சுருக்குதல், அடக்கல், கட்டல், வியங்கோண்முற்று. செருக்கல் - மிகமகிழ்தல், வியங் கோண்முற்று. தருக்கல் - அகங்கரித்தல், களித்தல், வியங்கோண்முற்று. துருக்கல் - கீச்சுக்கிட்டம். நருக்கல் - நொருக்குதல் ஒரு வயிற்று நோவு. நெருக்கல் - நெருக்குதல், வியங் கோண்முற்று. பருக்கல் - பருக்கச்செய்தல். பெருக்கல் - துடைப்பத்தாற் பெருக் கல், நிறைத்தல், மிகல், வியங் கோண்முற்று. முருக்கல் - அழித்தல், உருக்குதல், கொல்லல், வியங்கோண்முற்று. அருக்கன் - இந்திரன், சூரியன். உருக்கன் - சடைவு, ஒருநோய். செருக்கன் - கெர்வி, ஆங்காரி. தருக்கன் - கேட்கிறவன், மன்றாட்டக் காரன். துருக்கன் - ஓரசுரன். பருக்கன் - மிருதுவற்றது. பெருக்கன் - பருக்கன். அருக்கு - அருக்கென்னேவல், அருமை, அஞ்சுகை, எருக்கு. இருக்கு - முதல்வேதம், வேதம், மந்திரம். உருக்கு - உருக்கென்னேவல், எஃகு. எருக்கு - எருக்கென்னேவல், ஓர் செடி. கருக்கு - கருக்கென்னேவல், வாட் கருக்கு, கூர், பனைமட்டை. குருக்கு - பிரமதண்டுச்செடி, வடலி முதலிய நெருங்கிய தோப்பு. சுருக்கு - சுருக்கென்னேவல், நெய்த் துடுப்பு, கண்ணி, மடிப்பு. செருக்கு - அகங்காரம், களிப்பு, செருக்கல், செருக்கென்னேவல். தருக்கு - அகங்காரம், களிப்பு, தருக் கென்னேவல். திருக்கு - கண், குற்றம். துருக்கு - மிலேச்சசாதி, துருக்க பாஷை. நருக்கு - நருக்குதல். நெருக்கு - நெருக்கம், நெருக்கென் னேவல். நொருக்கு - அடி, முரிவு. பெருக்கு - பெருக்கென்னேவல், வெள்ளம், கணக்கு பகையி னொன்று. பொருக்கு - சீக்கிரத்தின் குறிப்பு, பொருக்குமன், செதிள். முருக்கு - எலுமிச்சை, கொலை, முருக்கு, முருக்கென்னேவல். உருக்குதல் - உருகச் செய்தல். எருக்குதல் - எருக்கல், வெட்டல். கருக்குதல் - கருகப் பண்ணுதல். சுருக்குதல் - அடக்குதல், சுருங்கச் செய்தல். செருக்குதல் - அகங்கரித்தல். தருக்குதல் - அகங்கரித்தல். நருக்குதல் - நொருக்குதல். நெருக்குதல் - ஒடுக்குதல். நொருக்குதல் - அடித்தல். பருக்குதல் - பருத்தல். பெருக்குதல் - வளர்த்தல். பொருக்குதல் - ஒவ்வொன்றாய் எடுத் தல். மருக்குதல் - திருப்புதல். வெருக்குதல் - நீங்கல். அருக்கை - தமக்கை. இருக்கை - இருத்தல், ஊர்ப்பொது. திருக்கை - ஓர் மீன். பருக்கை - பருக்கைக்கல், பளிங்கு. வருக்கை - பலாமரம். சிருங்கம் - விலங்கின் கொம்பு. பிருங்கம் - வண்டு. ஒருங்கல் - அடங்கல், கேடு, வியங் கோண்முற்று. கருங்கல் - சிலை. சுருங்கல் - குறைதல், நுழை வாயில், மாலை, வியங்கோண்முற்று. நெருங்கல் - உறுதிச்சொல், கொல் லல், செறிவு, அடர்தல், மொய்த் தல், வியங்கோண்முற்று. முருங்கல் - அழிதல், வியங்கோண் முற்று. ஒருங்கு - அடக்கம், எல்லாங்கூடி நிற்றல், ஒருங்கென்னேவல். சுருங்கு - சலதாரை, சுருங்கென் னேவல். மருங்கு - இடை, பக்கம். சுருங்கை - கோட்டையிற் கள்ள வழி, நுழைவாயில், பலகணி. முருங்கை - ஓர் மரம். இருசு - செவ்வை, வண்டியுளிரும்பு. துருசு - களிம்பு, சீக்கிரம். அருச்சித்தல் - மலர் முதலியவற்றா லருச்சித்தல். வருச்சித்தல் - நீக்கல். திருடல் - களவு, வியங்கோண்முற்று. நெருடல் - இழை முதலிய நெருடல், வியங்கோண்முற்று. வருடல் - தடவல், வியங்கோண் முற்று. கருடன் - செம்பருந்து, விஷ்ணு ரதம். குருடன் - கண்ணில்லான், சுக்கிரன். திருடன் - கள்ளன். புருடன் - ஆன்மா, தலைவன், மக்க ளிலாண். மிருடன் - சிவன். முருடன் - வேடன். குருடு - அதரிசனம். முருடு - ஒர் வாச்சியம், பறைப் பொது, பெருங்குறடு, விறகு. அருட்சி - அருளுதல். இருட்சி - இருள், மயக்கம். உருட்சி - உருண்டிருத்தல். தெருட்சி - அறிவு, தெளிவு. மருட்சி - அறிவின்மை, மயக்கம். வெருட்சி - அச்சம். சிருட்டம் - சிற்பநூன் முப்பத்திரண்டி னொன்று. பிருட்டம் - பின்பக்கம். மருட்டம் - கள். வருட்டம் - வேம்பு. அருட்டல் - அருட்டுதல். இருட்டல் - இருளாதல். உருட்டல் - உருளச் செய்தல், வியங் கோண்முற்று. சுருட்டல் - சுருட்டுதல், வியங்கோண் முற்று. தெருட்டல் - தெளிவித்தல், வியங் கோண்முற்று. மருட்டல் - மயக்குவித்தல், வியங் கோண்முற்று. வருட்டல் - வற்புறுத்தல், வியங் கோண்முற்று. வெருட்டல் - அச்சமுறுத்தல், வியங் கோண்முற்று. அருட்டி - அச்சம், நடுக்கம். உருட்டி - தள்ளி. கிருட்டி - ஓரீற்றா, பன்றி, பிரண்டை, முட்பன்றி. சிருட்டி - சிருட்டியென்னேவல், படைப்பு. சுருட்டி - ஆலவட்டம், வினையெச்சம். திருட்டி - கண், அறிவு, பாம்பு, பார்வை, விஷம். பிருட்டி - கிரணம், பரிசம். மிருட்டி - சமைத்தல், சுத்தி, தெளித் தல், நெருக்கம். அருட்டி - அச்சம், அச்சுறுவிப் போன். அருட்டு - எச்சரிப்பு. இருட்டு - இருட்டென்னேவல், இருள், அறியாமை, மயக்கம். உருட்டு - வேறுபடுத்து, வெருட்டு. சுருட்டு - சுருட்டென்னேவல், சுருள். திருட்டு - களவு. பொருட்டு - காரணம். மருட்டு - பயப்படுத்து. வெருட்டு - அச்சுறுத்து. அருணம் - ஆடு, எலுமிச்சை, ஓர்தே யம், பதினெண்பாடையிலொன்று, மிகுசிவப்பு, பொன், மான், யானை, விடியல். இருணம் - உவர்த்தரை, கடன், உப்பளம். கருணம் - எலுமிச்ச மரம். தருணம் - இளமை, சமயம். திருணம் - திரணம், துரும்பு. துருணம் - கத்தி, வில். வருணம் - எழுத்து, குலம், நிறம், நீர். அருணர் - சான்மலித்தீவு அரசர். தருணர் - காளைப்பருவத்தர். அருணன் - சூரியன், சூரியன் றேர்ப் பாகன், புதன், வருணன். கருணன் - கன்னன். தருணன் - இளமையுடையவன். துருணன் - சிக்கனக்காரன். வருணன் - புனற்கரசன், சமுத்திரம். கருணி - குகை, வெற்பு. குருணி - ஓர் மரக்கா லளவுள்ளது. சுருணி - யானைத்தோட்டி. தருணி - மங்கைப் பருவத்தாள். பொருணி - கள். அருணை - அண்ணாமலை. கருணை - ஓர் கிழங்கு, கிருபை, பொறிக்கறி. சுருணை - வளையம். சொருணை - சுவரணை. வருணை - வாருணி, வருணன் மனைவி. கிருதம் - செய்யப்பட்டது, நெய். மருதம் - ஓர்மரம், மருத நிலத்தி ராகம், மருத நிலம், வயல். மிருதம் - பிணம், போர். கிருதர் - செய்பவர். நிருதர் - இராக்கதர். விருதர் - படைவீரர். கருதல் - எண்ணல், காணல், குறித்தல், புகறல், பேணல், வியங்கோண் முற்று. தருதல் - கொடுத்தல். பொருதல் - ஒப்புதல், போர்செய்தல், வியங்கோண்முற்று. வருதல் - வருகை. குருதி - இரத்தம், சிவப்பு, செவ்வாய். சுருதி - ஒலி, காது, வேகம். திருதி - துணை. நிருதி - தென்மேற்றிசைப் பாலன், முதலெழு வள்ளலிலொருவன். பருதி - சூரியன். மிருதி - தருமநூல், மரணம். இருது - பருவம், மகளிர் சூதகம். எருது - இடபவிராசி, எருது. இருது - யாகம். மருது - மருதமரம். மிருது - மேன்மை. விருது - விருது. அருத்தம் - கருத்து, சொற்பயன், பாதி பொன். இருத்தம் - பிரகாசம். உருத்தம் - தடுக்கப்பட்டது. எருத்தம் - பிடர், தரவு. குருத்தம் - முன் கோபம். திருத்தம் - திருந்தல். நிருத்தம் - கூத்து. பொருத்தம் - பொருந்தல், இணக்கம், தகுதி. வருத்தம் - உள்ளக்களிப்பு, துன்பம். விருத்தம் - பழமை, பாவினத்தொன்று, மூப்பு, வட்டம், வேறு படல். அருத்தர் - பொருளுரைப்போர். நிருத்தர் - கூத்தர். கருத்தர் - கிருத்திய முடையவர். விருத்தர் - கிழவர், மேலோர். அருத்தல் - உண்பித்தல். இருத்தல் - தங்கல், வியங்கோண் முற்ற, சீவித்தல், தாழ்தல். உருத்தல் - கோபம், சினக்குறிப்பு, தோற்றல், மிகுதி, முளைத்தல். ஒருத்தல் - எருமை, கரடி, கவரி, பன்றி, புலி, புல்வாய், மரைமான், யானையி வற்றினாண், விலங் கேற்றின் பொது. குருத்தல் - பெருங்கோபம், குருப் பித்தல். செருத்தல் - எருமைமடி, பசுவின் மடி. திருத்தல் - திருந்தச்செய்தல், வியங் கோண்முற்று. பருத்தல் - பருமையாதல். பெருத்தல் - பெருமையாதல், அதிகப் படல். பொருத்தல் - பொருந்துதல், வியங் கோண்முற்று. வருத்தல் - துன்புறுத்தல், வியங் கோண்முற்று. அருத்தன் - கடவுள். ஒருத்தன் - ஒருவன். கருத்தன் - அரன், அருகன், அரி. நிருத்தன் - நிருத்தஞ் செய்வோன். விருத்தன் - அதிகாரி, கிழவன், படித்துத் தேறினவன். அருத்தி - ஆசை, உண்பித்தென்னு மெச்சம், கூத்து, பாதம், இரந்து கேட்போன், செல்வ முடையவன், வேலைக்காரர். இருத்தி - இருத்துதலைச் செய்தென் வினையெச்சம், இருப்பா யென்னு முற்று, சித்தி, மேன்மை. கிருத்தி - தோல், அறிவு, கிருத்திகை. சருத்தி - தேரிடைக்கியம், விருதுக் கொடி. செருத்தி - விருதுக்கொடி. திருத்தி - பூரணம், மனரம்மியம். துருத்தி - ஆற்றிடைக்குறை, ஊதுந் துருத்தி. நிருத்தி - ஒரு தர்க்க நூல். பருத்தி - ஓர் செடி, வினைமுற்று. மிருத்தி - வித்தை, மரணம். வருத்தி - இரத்தினங்களின் கீழ்ப் பதிக்குந் தகடு. விருத்தி - அடிமை, ஒழுக்கம், ஒருரை, செல்வம், தொழிலி லாபம், வளர்தல். உருத்திரம் - மந்திரம், ஐருத்திரம், பொய். அருத்து - பொருள். இருத்து - உட்காரச் செய்யென்னேவல். எருத்து - பிடர். கருத்து - குறிப்பு, நினைவு, அபிப் பிராயம். குருத்து - குருத்து, வெண்மை, இளமை. திருத்து - சீராக்கு. பொருத்து - சந்து, பொருந்தென் னேவல். மருத்து - காற்று. மிருத்து - மண், மரணம். வருத்து - வரவு, வாட்டு. இருத்தை - சந்திர னான்காம்பக்கம், நாழிகை, நாழிகை வட்டில். விருத்தை - கிழவி. செருநர் - படைவீரர். பொருநர் - படைவீரர். குருநாள் - பூசநாள். திருநாள் - திருவிழா. பெருநாள் - இரேவதி நாள். அருநெறி - அருகியவழி, வாயில். கருநெறி - தீ. குருந்தம் - ஓர் மரம். பிருந்தம் - கூட்டம், துளசி. பொருந்தம் - பொருநையாறு. மருந்தம் - நஞ்சு. விருந்தம் - விலங்கின் கூட்டம். பொருந்தர் - வேதகாரர். விருந்தர் - புதியர். அருந்தலர் - உலோபிகள். திருந்தலர் - பகைவர். பொருந்தலர் - பகைவர். அருந்தல் - அருமை, உண்டல், வியங் கோண்முற்று. திருந்தல் - திருத்தமாதல், வியங் கோண்முற்று. பொருந்தல் - அடுத்தல், அமைதல், கலத்தல், வியங்கோண்முற்று. வருந்தல் - துன்புறல், வியங்கோண் முற்று. அருந்து - உன்னென்னேவல். இருந்து - அசைச் சொல் (உ-ம்.) நன வென் றெழுந்திருந்தேன், வினை யெச்சம், கரி. எருந்து - உரல், கிளிஞ்சில். குருந்து - ஓர்வகை, மரம், காட்டு நாரத்தை, காட்டெலுமிச்சை, குந் தம், குருத்து, குருந்தக்கல், குழந்தை. திருந்து - திருத்தப்படு. பருந்து - ஓர்வகைப் பறவை, உவணம். மருந்து - அமுகம், மருந்து. முருந்து - இறகி னடியிற் குருத்து, வெண்குருத்து, வெண்மை. விருந்து - புதுமை, மகமுறை, புதிதாய் வந்தவருக் குணவளித்தல். இருந்தை - கரி, முன்னிலை வினை முற்று. பிருந்தை - சலந்தரன் மனைவி, துளசி. கிருபன் - குருகுலத்திற் பஞ்சாசாரி களிலொருவன். நிருபன் - அரசன். விருபன் - வெள்ளெலி. அருப்பன் - ஊர், கள், காடு, கொலை, கோட்டை, துக்கம், நோய், பிட்டு, மருத நிலத்தூர், மா, மோர், வழுக்கு, நிலம், அரண், அரிது, உரோமக்கிளர்ச்சி, பிள்ளை, மீசை முளைக்க அரும்பல். உருப்பம் - உட்டணம், தினைமா, மிகுதி, கோபம். கருப்பம் - சினை, உள், அரண்மனை. சருப்பம் - பாம்பு. தருப்பம் - நாவிச்சட்டம், பெருமை வெப்பம். திருப்பம் - திரும்புகோடி. பருப்பம் - அளவு, பருத்தல், பருமை. பெருப்பம் - பருப்பம். விருப்பம் - ஆசை. அருப்பு - அரும்பு, தயிர், துக்கம். இருப்பு - இருக்கை, மீந்திருப்பவை. உருப்பு - மிகுதி, பூரணம், வெப்பம். கருப்பு - குறுவிலைக்காலம், அரிது. குருப்பு - பரு. செருப்பு - கழரொடுதோல். தருப்பு - ஒருகல். திருப்பு - வளைப்பு. நெருப்பு - தீ. பருப்பு - பருத்தல், வித்தின்பருப்பு. பொருப்பு - கொல்லிமலை. மருப்பு - இஞ்சி, விலங்கின் கொம்பு. விருப்பு - ஆசை. இருப்பை - இருப்பா யென்னுமுற்று, இலுப்பை மரம். கருப்பை - காரெலி. தருப்பை - நாணற்புல், பவித்திரம். அருமகன் - மன்மதன். பெருமகன் - அரசன், சிறந்தோன். மருமகன் - மருகன். உருமம் - உட்டணம், மத்தியானம். கருமம் - உட்டணம், தொழில். சருமம் - தோல், தோற்பாய். தருமம் - அறம், சீலம், சுகிர்தம், புண்ணியம். துருமம் - மரப்பொது. மருமம் - மார்பு. இருமல் - இருமுதல், வியங்கோண் முற்று. செருமல் - விலங்குக ளிருமல், வியங் கோண்முற்று. பொருமல் - அழுதல், வியங்கோண் முற்று. கருமன் - காரியக்காரன். தருமன் - உதிட்டிரன். வருமன் - அரசன். கருமா - பன்றி. பெருமா - யானை. கருமான் - கலைமான், கொல்லன், பன்றி. பெருமான் - அரசன், குரு, சிவன், சிறந்தோன், மூத்தோன், விட்டுணு. மருமான் - மகன், மருகன், வழித் தோன்றல். நிருமிதம் - நிருமாணம். பெருமிதம் - களிப்பு, மிகுதி. ஒருமித்தல் - ஒன்றுபடல். குருமித்தல் - பேசலாலெழுமொலி. நிருமித்தல் - நிருமானம். பருமித்தல் - சிரமஞ் செய்தல். அருமை - அரியதன்மை, பெருமை. இருமை - இம்மை, இருதன்மை, துக்கம், பெருமை, மறுமை. எருமை - மேதி. ஒருமை - ஒருபிறப்பு, ஒற்றுமை, தனிமை. கருமை - கறுப்பு, பெருமை, வலி. குருமை - பெருமை. பருமை - பெருமை. பெருமை - பொலிவு, மாட்சிமை, மிகுதி. அரும்பல் - முகிழ்த்தல், வியங்கோண் முற்று. திரும்பல் - மீளல், வியங்கோண் முற்று. விரும்பல் - ஆசைப்பெருக்கம், கருத்து, வியங்கோண்முற்று. அரும்பு - அரும்பென்னேவல், முகை, மெல்லியமயிர். இரும்பு - ஆயுதப்பொது, கரும்பொன். கரும்பு - கன்னல், புநர்பூசம். சுரும்பு - ஆண்வண்டு, வண்டு. துரும்பு - திரணம். கரும்புள் - வண்டு. பெரும்புள் - கூகை. இரும்பை - குடம், பாம்பு. குரும்பை - குரும்பை, புற்றாஞ்சோறு. ஒருவந்தம் - ஒற்றுமை, சம்பந்தம், தனித்திருக்குமிடம். வெருவந்தம் - அச்சம். அருவம் - உருவின்மை, அருந்தல். உருவம் - உடல், வடிவு, அழகு, காணக் கூடியது, நிறம். கருவம் - கர்வம், சினை, ஓரெண். சருவம் - எல்லாம், பானை. சுருவம் - நெய்சொரியும், பாத்திரம். துருவம் - அசையாநிலை, உபாயம், ஒடுக்க வழி, கிரகநடையின் தூரம், கூத்தின் விகற்பம், சத்த தாளத் தொன்று, சூத்திரம், துருவநட் சத்திரம், நித்தியயோகத் தொன்று, நிலைபேறு, முனை. பருவம் - அமாவாசியை, இளமை, உயர்ச்சி, கணுகாலம், பொழுது, பௌர்ணமி, வயது, பக்குவம், பருவகாலம். புருவம் - குதிரை, புருவம், வரை, விளிம்பு. அருவல் - சருவுதல், சற்றுச் சற்றாய்ப் போதல். உருவல் - தடவல், காதணியி னொன்று. ஒருவல் - ஒருவுதல், வியங்கோண் முற்று. கருவல் - கருப்பானது. சருவல் - சைகைசெய்தல், வியங் கோண்முற்று, கொஞ்சுதல். துருவல் - கடைதல், தொளைத்தல், தேடல், வியங்கோண்முற்று. நருவல் - நருங்கினது. பருவல் - பருத்தது. பெருவல் - தூக்கத்தில் பிதற்றல். மருமல் - கிட்டல், வியங்கோண் முற்று. வெருவல் - வெருவுதல், வியங்கோண் முற்று. அருவி - கழிமுகம், தினைத்தாள், மலையின் வீழாறு. இருவி - தினைத்தாள். கருவி - ஆயுதப்பொது, உபகரணம், கவசம், குதிரைக்கல்லணை, கூட் டம், தொடர்பு, நட்பு, மேகம், யாழ், வாச்சியம், வீணைக்கருவி. குருவி - பறவை, மூலநாள். தருவி - சட்டுவம். உருவிலி - மன்மதன். கருவிலி - கடவுள். திருவிலி - கைம்பெண். உருவு - அச்சம், உருவென்னேவல், வடிவு. ஒருவு - ஆடு, ஒருவென்னேவல். சருவு - சருவென்னேவல். பொருவு - உவமை, பொருவென் னேவல். வெருவு - அச்சம், வெருவென்னேவல். உருவுதல் - உறுப்பு, தழை முதலிய வுருவல், கணை வேன் முதலிய புகுந்தோடல், வாண் முதலிய கழற்றல். ஒருவுதல் - நீங்கல். துருவுதல் - கடைதல், தொளைத்தல், தேடல். பொருவுதல் - ஒப்பல். மருவுதல் - கிட்டல். வெருவுதல் - அஞ்சுதல். எருவை - உதிரம், கழுகு, கழுதை, கொறுக்கை, கோரை, செம்பு, யானை. கருவை - ஓர்வகையூர், வரகுவைக் கோல். சுருவை - நெய்துடுப்பு. துருவை - செம்மறியாடு. புருவை - ஆடு, இளமை. அருளல் - ஈதல், உத்தரவு பண்ணல், கிருபை செய்தல், வியங்கோண் முற்று. இருளல் - இருளுதல், வியங்கோண் முற்று. உருளல் - உருளுதல், வியங்கோண் முற்று. சுருளல் - சுருளுதல், மயிர்ச்சுருள், வியங்கோண்முற்று. தெருளல் - தெளிவு, இருதுவாதல், வியங்கோண்முற்று. மருளல் - அஞ்சல், எழுத்திலா வோசை, பேசலாலெழுமொலி, மயங்கல், வியங்கோண் முற்று. வெருளல் - வியங்கோண்முற்று, வெருளுதல். அருளி - சிவன், சத்தி. இருளி - பன்றி, வெட்கம். உருளி - தேருருளை, வட்டம். வெருளி - வெருட்சி. அருளுதல் - அருளல். இருளுதல் - ஒளிமழுங்கல். உருளுதல் - புரளுதல். சுருளுதல் - சுருங்கல், வளைதல். தெருளுதல் - தெருளல். மருளுதல் - மருளல். வெருளுதல் - மருளுதல், அஞ்சுதல். இருளை - நாணம். உருளை - உருள். குருளை - இளமை, நரி, நாய், பன்றி, புலி மான், முசு, முயல், யாளி யிவற்றின் குட்டி. விருளை - கடிவாளப்பூண். அருள் - ஈயென்னு மேவல், கிருபை, கொடை, சத்தி. இருள் - அல், இருளென்னுமேவல், உன்மத்தம், கறுப்பு, நரகம், யானை, நிசி, நீலம். உருள் - உருளென்னேவல், உரோ கணி நாள், தேருருளை, பண்டி, வட்டம். கருள் - இருள், கறுப்பு, நல்லாடை. குருள் - பெண்மயிர், முன் கொண்டை. சுருள் - சுருளென்னேவல், தாமரை யுட்சுருள், பாக்கிலைச்சுருள், பெண் மயிர். தெருள் - தெருளென்னேவல், தெளிவு. நெருள் - மக்கட் கூட்டம். பொருள் - சொற்பொருள், தலைமை, பணம், பலபண்டம், பிள்ளை, பொன், வாய்மை, உடமை. மருள் - உன்மத்தம், பிசாசம், மரு ளென்னேவல், உவமையுருபு, கள், மயக்கம். வெருள் - உன்மத்தம், அச்சம், வெரு ளென்னேவல். அருபம் - அருவம். உரூபம் - உருவம். குரூபம் - விகாரரூபம். சுரூபம் - நல்லுருவம். விரூபம் - விகாரரூபம், வேற்றுமை. உரூபாக்கன் - இந்திரன். விரூபாக்கன் - சிவன். குரூரம் - கொடுமை. புரூரம் - புருவம். சுரேசன் - இந்திரன், குமரன். நரேசன் - அரசன். சிரேணி - இடையர் வீதி, ஒழுங்கு. இரேணு - அணு. கரேணு - பெண்யானை. உரேந்திரன் - வீரன். சரேந்திரன் - வில்லின் வல்லோன். சுரேந்திரன் - இந்திரன். தரேந்திரன் - இமையமலை யரசன். நரேந்திரன் - அரசன். வரேந்திரன் - வரத்தின் மிக்கவன். இரேயம் - கள். பிரேயம் - கள். சரேலெனல் - ஒலிக்குறிப்பு. ஞெரேலெனல் - அச்சக்குறிப்பு, ஒலி, விரைவின் குறிப்பு. நெரேலெனல் - ஒலிக்குறிப்பு. அரை - அரையென்னு மேவல், இடை, பாதி, உடம்பின் நடுவிடம், இடுப்பு. இரை - உணவு, ஒலி, ஒலியென் னேவல், பறவை, விலங்குமுதலிய வற்றினுணவு, பேச்சு. உரை - உயர்ச்சி, உரையென்னேவல், ஒலிசொல், சொற்பயன், தேய்வு, பொன். கரை - எல்லை, கரையென்னேவல், சொல், முடிவு. குரை - அசைச்சொல், (உ.ம்). அது பெறலருங்குரைத்தே, ஒலி. சரை - நரை, ஓரரக்கி, முதிர் வயது. சிரை - குரங்கு, சிரையென்னேவல், நரம்பு. சுரை - அம்புத்தலை, உட்டுளை, கள், சுரைக்கொடி, பசு, விலங் கின் முலை, அமுதம், பூண். தரை - பூமி, ஆணித்தலை, கருப் பாசயம். திரை - ஆறு, இடுதிரை, கடல், திரைதல், திரை யென்னேவல், புனற்றிரை, அலை, வைக்கோற் புரி. துரை - அரசன், அதிகாரி, மேன்மகன். நரை - இடபவிராசி, எருது, சரை, சாமரம், நரையென்னேவல், நாரை, வெண்மை. நிரை - ஒழுங்கு, ஓரசை, நிரை யென்னேவல், பசுக்கூட்டம், பசுப்பொது, படை, முன்னணி. அரை - குமிழி, நுரை, நுரையென் னேவல், வெண்ணெய், வெள்ளை. பரை - பார்வதி, ஐந்து மரக்கால் கொண்ட ஓரளவு. பிரை - பால் முதலியவற்றையுறை விக்கும்பொருள், உறை. புரை - உட்டுளை, உயர்ச்சி, உவமை, குற்றம், புரையென்னேவல், இரக சியம், பழமை, பழுது, மடிப்பு. மரை - ஒர்வகை மிருகம், தவளை, தாமரை. முரை - நந்தன் மனைவி, சந்திர குப்தன் தாய். வரை - அளவு, கரை, சிறுவரம்பு, மலை, மூங்கில், வரையென் னேவல், விரலிறை. விரை - சாந்து, வாசனை, விரை யென்னேவல், நறும்புகை, வித்து, பூந்தேன். இரைச்சல் - ஒலித்தல். குரைச்சல் - நாய் குரைத்தல். விரைச்சல் - வினத்தல். அரைத்தல் - தேய்தல். இரைதல் - ஒலித்தல். உரைதல் - உசைதல். கரைதல் - அழைத்தல், ஆரவாரம், இரங்கல், ஒலித்தல், கரைதல், சொல்லுதல், போரொலி, அழுதல். திரைதல் - உடம்பு, சுருங்கல், பால் முதலிய கண் விடுதல். நரைதல் - மெலிதல். நிரைதல் - வரிசையாக்கல், ஒழுங்கு. புரைதல் - போலுதல், இழைத்தல், தைத்தல். வரைதல் - எழுதல், கொள்ளல், சித்திரமெழுதல், நீக்கல், மாற்றல், விவாகம். விரைதல் - விரைவு, வெயில், வேண் டல். அரைத்தல் - அழித்தல், தேய்த்தல், சரக்குதல், நசுக்குதல். இரைத்தல் - ஒலித்தல். உரைத்தல் - ஒலித்தல், சொல்லுதல், தேய்த்தல், கற்பித்தல். கரைத்தல் - எழுத்திலாவோசை, கரைக்குதல், சொல்லா லெழு மொலி, உருக்குதல். குரைத்தல் - எழுத்திலாவோசை, ஒலித்தல், குலைத்தல். சிரைத்தல் - மயிர்கழித்தல், புடவை யொதுக்கல். திரைத்தல் - திரைக்குதல். நரைத்தல் - மயிர் முதலிய வெளுத் தல். நிரைத்தல் - ஒலித்தல், நிறல்பட வைத்தல். நுரைத்தல் - நுரைக்குதல். புரைத்தல் - ஒக்கச் செய்தல், தொளை செய்தல், உட்புகுதல், வெளி வருதல். விரைத்தல் - விதைத்தல். அரைப்பு - இலுப்பைப் பிண்ணாக்கு, அரைத்தல். இரைப்பு - ஒருநோவு, வீக்கம், இரை தல். உரைப்பு - உரைக்கை, தேய்ப்பு. சிரைப்பு - சௌளம். திரைப்பு - திரைதல். வரைப்பு - எல்லை, மதில். அரையல் - துவையல், சோம்பல். உரையல் - உரைதல். கரையல் - கரைதல், கணிதல். திரையல் - திரங்கல், வெற்றிலை, கருங்கல். நரையல் - நரைமயிர். அரையன் - அரசன். திரையன் - தொண்டைமான். வரையன் - முமரன். வரைவு - அளவு, எல்லை, பிரிவு, மாறுபாடு. விரைவு - வேகம். அரோகம் - சுகம். உரோகம் - தளிர், நோய், பூவரும்பு, எழும்புதல். குரோகம் - கூப்பிடுதூரம். துரோகம் - கலக்கம், தப்பிதம், வஞ்சகம். விரோகம் - பொந்து. அரோசம் - அருவருப்பு, பசியின்மை, வெறுப்பு. குரோசம் - கூப்பிடுதூரம். சரோசம் - தாமரை. சிரோசம் - மயிர். துரோணம் - வில், கும்பம். கரோணம் - ஓர் சிவத் தலம். உரோணி - உரோகணி நாள். சுரோணி - நிதம்பம். குரோதம் - சினம். விரோதம் - பகை, வேற்றுமை. குரோதி - ஓர் யாண்டு, பகைவன். விரோதி - ஒர் யாண்டு, சத்துரு, விரோதி யென்னேவல். உரோருகம் - முலை. கரோருகம் - நகம். சரோருகம் - தாமரை. சிரோருகம் - தலைமயிர். அர்க்கம் - எருக்கு, நீர்க்காக்கை, செம்பு, பளிங்கு, தானிய விலை, பொன். சர்க்கம் - சருக்கம், சிருஷ்டிப்பு. தர்க்கம் - தருக்கம். துர்க்கம் - மலைமேற் கோட்டை, துருக்கம். சொர்க்கம் - சுவர்க்கம். பர்க்கம் - ஒளி, வீரியம். வர்க்கம் - வருக்கம். வர்த்தி - இரத்தினங்களின் கீழ்ப் பதிக்குந் தகடு, திரிசீலை, பரிமள திரவியங்களைக் கூட்டியரைத்துச் செய்தவத்தி, வர்த்தியென்னேவல். விர்த்தி - விருத்தி. அர்க்கன் - இந்திரன், அருக்கன். கர்க்கன் - யாதவர்கள் புரோகிதன். பர்க்கன் - சிவன், சூரியன், பிரமன், விட்டுணு. அர்ப்பம் - கட்டணம், ஒளி யில்லாதது, பிள்ளை, பனி, பூண்டு. கர்ப்பம் - கரு, சினை. சர்ப்பம் - பாம்பு. தர்ப்பம் - கஸ்தூரி, கர்வம். அர்ப்புதம், நிர்ப்புதம் - ஓரெண். ல அலகம் - யானைத்திப்பிலி, வேப்பலகு. இலகம் - ஊமத்தை. உலகம் - ஆகாயம், உயர்ந்தோர், உலகு. கலகம் - பேரொலி, போர். குலகம் - கருந்தும்பை, பேய்ப்புடல். சலகம் - நீராடல், சங்கு, நீருளவீடு. சிலகம் - சட்டுவம். செலகம் - மல்லிகை. தலகம் - தடாகம். திலகம் - சிந்தூரம், பொட்டு, மஞ் சாடி, மரம், கலித்துறை, சுட்டி. பலகம் - அடுக்கு, நாற்காலி, பின்சந்து. அலகரி - பெருக்கு. பிலகரி, மலகரி - ஓர்வகை இராகம். இலகல் - ஒலிசெய்தல், வியங்கோண் முற்று. விலகல் - எறிதல், நீங்கல், வியங் கோண்முற்று. அலகு - ஆயுதப்பொது, எண், துடைப்பம், நெல்லின்மணி, பயிர்க்கதிர், பலகறை, பறவை மூக்கு, மகிழம் விதை. இலகு - அகில், இலகு வெழுத்து, இலகென்னேவல், நொய்மை. உலகு - ஆகாயம், உயர்ந்தோர், திசை, நாடு, பூமி. அலகை - பிசாசம். பலகை - கேடகம், பலகை. இலக்கம் - எண், ஒளிகுறிப்பு. கலக்கம் - அச்சம், ஆரவாரம், துன்பம். துலக்கம் - விளக்கம். அலக்கல் - அசைத்தல். இலக்கல் - பிரகாசிப்பித்தல். கலக்கல் - குழப்பல், வியங்கோண் முற்று. துலக்கல் - விளக்கல் வியங்கோண் முற்று. விலக்கல் - மாற்றல், வியங்கோண் முற்று. இலக்காரம் - சீலை. வலக்காரம் - பொய். அலங்கம் - அரண், கொத்தளம், மதலினோ ருறுப்பு. இலங்கம் - எறும்பு, களரி, கூட்டம், மூடம். சிலங்கம் - விளாம்பட்டை, வெள்ளி லோத்திரம். வலங்கம் - பாரி, சமுசாரம். அலங்கல் - அசைதல், இரக்கம், ஒளி செய்தல், கலுழ்தல், தளிர், பூ மாலை, வியங்கோண்முற்று. இலங்கல் - ஒளிசெய்தல், வியங் கோண்முற்று. கலங்கல் - அஞ்சல், அழுதல், சேற்று நீர், வியங்கோண்முற்று. துலங்கல் - ஒளிசெய்தல், வியங் கோண்முற்று. நலங்கல் - அழுக்காதல். மலங்கல் - அசைதல், குளம், வியங் கோண் முற்று, கலங்கல். விலங்கல் - கலங்கனீர், மலை, வியங்கோண்முற்று, விலங்குதல். அலங்கு - ஒர்மீன், அசைதல், அசை யென்னேவல். இலங்கு - ஒளிசெய்யென்னேவல், குளம். உலங்கு - கொசுகு, திரண்டகல். சலங்கு - கட்டுப்படவு. துலங்கு - துலங்கென்னேவல், தொழு மரம். மலங்கு - ஓர்மீன், மலங்கென்னேவல். விலங்கு - காற்றளை, குறுக்கு, மிருகம், விலங்கென்னேவல். நலங்கு - கலியாணச்சடங்கு, அரைத்த குழம்பு. அலங்கை - துளசி. இலங்கை - ஈழமண்டலம். சலங்கை - சதங்கை. அலசம் - ஓதம், சோம்பு, மந்தம். கலசம் - குடம், பால். சலசம் - தாமரை. கலதி - மூதேவி. சலதி - கடல். சிலதி - தோழி. இலதை - கோற்கொடி. கலதை - கலக்கம். பலதை - ஓர்செடி. அலத்தல் - துன்புறல், எதிர்த்தல், விரித்தல், விள்ளல். உலத்தல் - கெடுதல், கெடல், சாதல். கலத்தல் - எழுத்திலாவோசை, புணர்ச்சி, அளாவல், கலாவல், பொருந்தல். நலத்தல் - நயத்தல், சிந்தித்தல். பலக்கல் - பெலத்தல். புலத்தல் - புணர்ச்சிக்கமையாதது போல முறைப்படல். பெலத்தல் - பலப்படல், மிருத்தல். வலத்தல் - சொல்லல், நினைத்தல், வளைத்தல். விலத்தல் - நீக்குதல், நீங்குதல். அலந்தை - குளம், துன்பம், வினை முற்று. இலந்தை - ஓர்மரம், குளம். கலந்தை - பெருமை, வினைமுற்று. கலபம் - கலாபம். சலபம் - விட்டிற் பறவை. அலப்பு - அலட்டு, ஆரவாரம் செய், குழம்பு. உலப்பு - கேடு, ஒழிவு, சாவு. கலப்பு - கலத்தல், உறவாகுகை, விரவு. நலப்பு - சித்தி, நன்மை. அலப்புதல் - வீண் பேச்சுப் பேசுதல். உலப்புதல் - ஆர்த்தல். அலமரல் - அச்சம், சுழலல், துன்பம். உலமரல் - அச்சக்குறிப்பு, துன்பம், வியங்கோண்முற்று. வலமரல் - பிரதிக்கிணஞ் செய்தல். அலம் - அமையு மென்றல், அலமரல், கலப்பை, சஞ்சலம், தேள், விருச் சிகராசி, செய்தல், கடக விராசி. இலம் - இல்லாமை, வீடு. உலம் - கற்றிரள், திரண்டகல். கலம் - ஆபரணம், இரேவதி, உண் கலம் ஓரளவு, மட்கலம், மரக் கலம், யாழ், ஆயுதப்பொது. கிலம் - அழிவு, சிறுமை. குலம் - அரமனை, இரேவதி, கூட்டம், சாதி, மனை, விலங்கின் கூட்டம், குடி, பருணம், ஒழுக்கம், தினை. சலம் - அசைவு, சலஞ்சாதித்தல், தணியாக்கோபம், நீர், பொய், முட்பன்றி, முள். சிலம் - இந்துப்பு. செலம் - கோரைக்கிழங்கு. தலம் - இடம், இலை, உலகின் பொது, பூமி. திலம் - எள், மஞ்சாடிமரம். துலம் - கனம், நிறை, நீர்முள்ளி. நலம் - அழகு, இன்பம், உபகாரம், கண்ணோட்டம், நன்மை, பயன், விருப்பம், விலங்கின் விதை. நிலம் - இடம், பூமி. பலம் - ஊன், காய், கிழங்கு, நிறை யளவிலொன்று, நெற்றி, படை, பயன், பழம், பொன், வலி. பிலம் - கீழறை, குகை, வளை, பாதலம். புலம் - அறிவு, இடம், ஒளிமுதலைம் புலம், திசை, வயல். பெலம் - பலம். பொலம் - அழகு, பொன், பொல் லாங்கு. மலம் - அழுக்கு. வலம் - இடம், ஏழனுருபு, (உ-ம். காழ்வரை, நில்லாக்களிறன்னான் கைவலத்தியாழ்வரைநின்றது), மேல், வலப்பக்கம், வலி, வெற்றி. விலம் - அகில், குகை, பொந்து. இலம்பகம் - அத்தியாயம், நுதலணி மாலை. கலம்பகம் - ஓர்பிரபந்தம், கலப்பு, சாந்து. சிலம்பகம் - குன்றுதோறாடல். அலம்பல் - ஒலித்தல், கழுவல், ததும் பல், வருத்தம், வீண்பேச்சுப் பேசல். உலம்பல் - முழங்குதல், வியங் கோண் முற்று. சிலம்பல் - ஒலித்தல், வியங்கோண் முற்று. புலம்பல் - ஆரவாரம், இரங்கல், ஒலித்தல், வியங்கோண்முற்று. சிலம்பன் - குறிஞ்சிநிலத் தலைவன், முருகன். புலம்பன் - நெய்தனிலத்தலைவன். சிலம்பி - சிலந்திப்பூச்சி, வினை யெச்சம். நிலம்பி - கொசுகு. அலம்பு - கழுவென்னேவல். சிலம்பு - ஒலி, காற்சிலம்பு, சிலம் பென்னேவல், மலை. புலம்பு - அச்சம், ஒலி, கலக்கம், தனிமை, துன்பம், புலம்பென் னேவல். இலயம் - கூத்தின்விகற்பம், கூத்து, சாவு. கலயம் - சிறு மண்பாத்திரம், கரகம். நிலயம் - கூத்து, தேவர் கோயில், பூமி, மருதநிலத்தூர். மலயம் - பொதியமலை. வலயம் - கடல், குளம், கைக்கடகம், சுற்று, வட்டம். அலரி - அழகு, ஒர்மரம், கண்வரி, சூரியன், தேனீ, நீராலி, பூப்பொது. புலரி - விடியல். அலர் - நீர், பலரறிந்து பழிதூற்றல், பழிச்சொல், பூமாலை, மலர் தலைச் செய் விரி, தலைச்செய் யென்னுமேவல், மலர்ந்தபூ. கலர் - கீழ்மக்கள். சிலர் - சில்லோர். பலர் - சபை, பல்லோர். புலர் - அறிவர், புலரென்னேவல். மலர் - பூமலர், மலரென்னேவல். அலர்தல் - பூமலர்தல், விரிதல். உலர்தல் - காய்தல். புலர்தல் - வாடல், விடிதல். மலர்தல் - எதிர்தல், தோன்றல், நிறைதல், விரிதல். இலவம் - ஒர்மரம், பூசை. துலவம் - பஞ்சு, ஒர்கால வளவு. அலவர் - உழுதொழிலாளர், வேளா ளர். கலவர் - படைவீரர். சலவர் - நெய்தனிலமாக்கள். சிலவர் - வேடர். புலவர் - அறிஞர். வலவர் - சமர்த்தர், தேர்ப்பாகர், வெற்றியாளர். அலவல் - அலமரல், கந்தை. கலவல் - எழுத்திலாவோசை, கலத் தல் வியங்கோண்முற்று, வினை முற்று. சுலவல் - சுழலல், வியங்கோண் முற்று. ஞலவல் - மின்மினிப் பூச்சி. நிலவல் - ஒளிசெய்தல், வியங்கோண் முற்று. அலவன் - ஆணண்டு, கர்க்கடக விராசி, சந்திரன், நண்டு, பூனை. புலவன் - அருகன், அறிஞன், கம்மா ளன் கூத்தன், தேவேந்திரன், பாடு வோன், புதன், புலவன், முருகன், வானோன். வலவன் - சமர்த்தன், தேர்ப்பாகன், வெற்றியாளன். கலவி - புணர்ச்சி. புலவி - ஊடலின் முதிர்தல். இலவு - ஓர்மரம். செலவு - செலல், வழி. நிலவு - ஒளி, சந்திரன், நிலவென் னேவல். பலவு - பலாமரம். புலவு - ஊன், நரகம். உலவை - ஊர், ஓடைக்கொடி, காற்று, குடி, குலம், தழை, மரக் கொம்பு, மரப்பொந்து, முல்லை, நிலக்கான்யாறு, வள்ளி, விலங்கின்கொம்பு. கலவை - கலப்பு, சாந்து, சேறு. வலவை - இடாகினி, காளி, காளி யேவற், பெண், வல்லவன், வல்லோன். அலறல் - ஒலித்தல், கூப்பிடல், வியங் கோண்முற்று, கதறல், அழுதல், விரிதல். உலறல் - சினக்குறிப்பு, வியங்கோண் முற்று, காய்தல். கலன் - ஆபரணம், மரக்கலம், யாழ். சலன் - கால். பலன் - இலாபம், காய், பழம். பிலன் - எறும்பு. புலன் - புலம், அறிவு. பொலன் - பொலம், பொன்மை, நிறம். வலன் - வலப்பக்கம், வெற்றி. உலா - உலாவென்னேவல், ஓர் பிர பந்தம், சாரிவருதல். துலா - ஏற்றம், நிறைகோல். நிலா - ஒளி, சந்திரன், வினைமுற்று, வினையெச்சம். பலா - பலாமரம். விலா - பழு. பலாகம், வலாகம் - கொக்கு. சலாங்கு - பொய்யாப்புள். விலாங்கு - ஓர் மீன். அலாசம் - நாப்புற்று. உலாசம் - வினோதம், பவனி. பலாசம் - இலை, பச்சை நிறம், முருக்கு. விலாசம் - ஆடவர் மகளிர் விளை யாட்டு. அலாபம் - தீமை, அடையாமை, இடையூறு, நட்டம். இலாபம் - ஆதாயம், அதிகம், ஊதியம், பயம், பேறு. கலாபம் - அரைப்பட்டிகை, சர மணிக்கோவை, பதினாறு கோவையுள மணி, பீலிக்குடை, மயிலினாண், மயிற்றோகை. விலாபம் - கனவு கண்டிரங்கல். கலாம் - கொடுமை, கோபம், சினம். சலாம் - வணங்கல். துலாம் - ஏற்றவுறுப்பு, ஓரிராசி, ஓர் நிறை. பலாரி, வலாரி - இந்திரன். உலாவல் - பொழுது கழித்து விளை யாடல், அசைதல், வியங்கோண் முற்று. கலாவல் - கலத்தல், வியங்கோண் முற்று. குலாவல் - பாராட்டல், வளைவு, வியங்கோண் முற்று. சுலாவல் - சுற்றுதல், வியங்கோண் முற்று. அலி - எமன், நறுவிலி மரம், நெருப்பு, பேடி, வயிரமில்லா மரம். எலி - சிகரி, பூரநாள், ஆகு, கள்ளி மரம், கலியம், மூடிகம். ஒலி - ஆரவாரம், இடி, ஒலியென் னேவல், ஓசை, காற்று. கலி - ஒலி, கடல், கடையுகம், கலி யென்னேவல், ஓர்பா, வறுமை, சனி, கேடு. அம்பு, போர், வஞ்சகம், வலி, துன்பம். கிலி - வெருவல், பயம். குலி - மனைவி, யாக்கை. கெலி - ஆசை, பெருவயிறு, பயம். துலி - பெண்ணாமை, ஓர் முனி. தொலி - உமி, தோல், மேற்போர் வையையெடு. நலி - நலியென்னேவல், நோய். பலி - காய்த்திருந்த மரம், சாம்பல் சோறு, நீறு, பிச்சை, பூசை, விண்ணோருணவு. புலி - சிங்கவிராசி, நால்வகைச் சாந்து, புலி. பெலி - காணிக்கை ஆடு கோழி மாடு வெட்டல். பொலி - தூற்றாநெல், பொலியென் னேவல். வலி - பற்றிரும்பு, வலியென்னேவல், வல்லமை. அலிகம் - நெற்றி. இலிகம் - எலி. கலிகம் - வன்னி, கற்பரி பாஷாணம். குலிகம் - இலுப்பைமரம், சாதி லிங்கம், சிவப்பு. தலிகம் - விறகு. பலிகம் - சுவர், நீர்க்குடம், பலிங்கு, பிச்சைப்பாத்திரம், வாயில். வெலிகம் - கற்றாழை. இலிங்கம் - அடையாளம், ஆண்குறி, இங்குலிகம், சிவலிங்கம். கலிங்கம் - ஊக்குருவி, ஓர் தேயம், சீலை, பதினெண்பாடையி லொன்று, வானம் பாடி. குலிங்கம் - ஊர்க்குருவி, ஓர்தேயம், காக்கை. புலிங்கம் - ஊர்க்குருவி, தீப்பொறி. கலிசம் - வன்னிமரம். குலிசம் - இருப்பைமரம், வச்சிரச் சோடு, வச்சிராயுதம், வன்னிமரம். கலிதம் - ஒழுகுவது, பொருத்தம். துலிதம் - அசைவு. பலிதம் - நரை, பலிப்பது. ஞெலிதல் - கடைதல், குடைதல். நலிதல் - சரிதல், மெலிதல். பொலிதல் - எழுச்சி, மிகுதி. மலிதல் - நிறைதல், பெருகல். மெலிதல் - மெலிவு. வலிதல் - தங்கல், துணிதல். அலித்தல் - களிதல், தூறல். ஒலித்தல் - ஓசை செய்தல். கலித்தல் - ஆரவாரம், எழுச்சி, ஒலித் தல், தழைத்தல், பொலிவு. கெலித்தல் - வெல்லல். சலித்தல் - இளைத்தோய்தல், ஒலித்தல், சலனமுறல். சொலித்தல் - இடந்திடல், பிரகா சித்தல். நவித்தல் - வருத்தல், மந்தமாக வுச்சரித்தல். பலித்தல் - இலாபம். வலித்தல் - உடன்படல், நிணத்தல். இலிர்த்தல் - சிலிர்தல், தளிர்தல். சிலிர்த்தல் - தளிர்த்தல். நலிவு - அழிவு, மெலிவு. பொலிவு - பொலிதல், அதிகம், உவப்பு, கலித்தல், துப்பு, துவன்றல், பம்பல், பூ, பெருமை, மங்கலம், மலர்ச்சி. மலிவு - மிகுதி. மெலிவு - இளைப்பு. வலிவு - வலிமை, விகாரப்படுதல். கலினம் - கடிவாளம். பலினம் - காய்த்திருந்த மரம். மலினம் - கருமை, மாசு. கலினி - திப்பிலி. பலினி - கோங்குமரம், ஞாழல். சிலீமுகம் - அம்பு, முலைக்கண், வண்டு. வலீமுகம் - குரங்கு. உலு - பதர், திப்பி. எலு - கரடி. கொலு - சேவை. செலு - கருவிலி மரம். வலு - கொசுகு. வெலு - இளங்காய். அலுத்தம் - ஆசையின்மை. உலுத்தம் - உலோபம், பொருளாசை. கிலுத்தம் - மணிக்கட்டு. குலுத்தம் - கொள், கணுக்கால். அலுத்தல் - அலைக்கழிவு படல், களைத்துப் போதல். உலுத்தல் - உதிர்த்தல். செலுத்தல் - அனுப்புதல், நடத்துதல். வலுத்தல் - பலத்தல். அலுத்தன் - ஆசையற்றிருப்போன். உலுத்தன் - பொருளாசைக்காரன். இலேசம் - காலவிறைவு, நொய்மை. கிலேசம் - துன்பம். அலை - அலையென்னேவல், கடல், கடற்றிரை, கருமணல், புனற்றிரை. இலை - உலோபம், தழை, தழைப்பு, அடை, இலைக்கறி, பலாசம், மடல், ஓலைதோடு. உலை - உலையென்னேவல், கொல் லனுலை முதலாயின, பாகஞ் செய்ய வைக்கும் நீருலை. கலை - அரைப்பட்டிகை, ஆண்மான், ஆண்முசு, கலையென்னேவல், கல்வி, காலநுட்பம், சந்திரன் பங்கு, சீலை, சுறாமீன், துர்க்கை வாகனம், நூல், மகர மீன், மகர விராசி, மரக்கொம்பு, மேகலை, வயிரம், விலங்கேற்றின் பொது. குலை - அம்பின்குதை, ஈந்து, கமுகு, காந்தள், தெங்கு, பனை, வாழை யிவற்றின் குலை, குலையென் னேவல், கொத்து, செய்கரை, நடுக்கம், பூங்கொத்து, விற்குதை. கொலை - கொல்லல். சிலை - ஒலி, ஓர் மரம், கல், சிலை யென்னேவல், தனுவிராசி, மலை, மூலநாள், வில். தலை - ஆகாயம், ஆதி, இடம், தலை, தலைமை, பெருமை. துலை - கனம், துலாராசி, நிறை, நீரிறைக்குந்துலை. தொலை - உவலை, தொலை யென் னேவல். நிலை - ஆபரணத்திற்றொங்கணி இடம், குணம், நிலையென் னே வல், பூமி, பொழுது, முறைமை. நொலை - அப்பவருக்கம், நொலை யல். பலை - பழம். புலை - புலால், விடக்கு. மலை - உவமை, மலை, மலையென் னேவல். முலை - கொங்கை, விலங்கின் மடி. வலை - மீன் வலை முதலாயின. விலை - விற்றல், கிரயம். அலைசல் - அலைவு, தொந்தரை. உலைசல் - உலைவு, ஒவ்வாமை, கெடுதல். உலைஞர் - கொல்லர், தட்டார், வருந்துவோர். கலைஞர் - புலவர். கொலைஞர் - சண்டாளர், வேடர். புலைஞர் - சண்டாளர். வலைஞர் - செம்படவர், வேடர். விலைஞர் - செட்டிகள். அலைதல் - சோம்பல், துன்பம், வருந்துதல். உலைதல் - அழிதல், கெடுதல், பலங்குறைதல், வருந்தல். கலைதல் - குலைதல். குலைதல் - அச்சக்குறிப்பு, குன்றல். தலைதல் - மழை பெய்தல். தொலைதல் - கெடுதல். நிலைதல் - நிலைப்படல், சம்பவித்தல். மலைதல் - அணிதல், பொருதல், மறத்தல். மிலைதல் - சூடுதல். அலைத்தல் - அலைப்பு, வருத்தல். இலைத்தல் - சாரமின்மை, வாய் அரோசித்தல். உலைத்தல் - அலைத்தல், அழித்தல், வருத்தல். கலைத்தல் - குலைத்தல், பிரித்தல். குலைத்தல் - கலையச் செய்தல். சிலைத்தல் - ஒலித்தல். தொலைத்தல் - கொல்லல், அழித்தல், சேதப்படுத்தல். நிலைத்தல் - நிலைபெறுதல். மலைத்தல் - மயங்கல், போர் செய் தல். அலைநீர் - கடல். உலைநீர் - இரும்பு தோய்க்குநீர். தலைப்படல் - எதிர்த்தல், வியங் கோண்முற்று. வலைப்படல் - சிறைப்படல், வியங் கோண்முற்று. அலைப்பு - அலைத்தல், கூத்தின்வி கற்பம். உலைப்பு - வருத்தம். மலைப்பு - கூத்தின்விகற்பம், போர், மலைவு. கலைமகள் - சரச்சுவதி. தலைமகள் - தலைவி. மலைமகள் - பார்வதி. விலைமகள் - வேசி. கலைமகன் - பிரமன், இருசிய சிருங்கமுனி. தலைமகன் - புருடன். புலைமகன் - புலையன். தலைமை - முதன்மை. நிலைமை - குணம், மெய். புலைமை - புலைத்தன்மை. புலையர் - சண்டாளர். வலையர் - நெய்தனிலமாக்கள். அலையல் - அலைதல். தலையல் - நீந்துபுனல், புதுப்புனல் வரவு, மழைபெய்து விடுதல். நொலையல் - அப்பவர்க்கம். அலைவு - அலைதல். உலைவு - அச்சம், உலைதல், நடுக்கம். தொலைவு - தோல்வி. மலைவு - உவமை, போர், மயக்கம், மாறுபாடு. உலோகம் - எழுவகை யுலோகம், பஞ்சலோகம், பூமி. சுலோகம் - ஆரியச் செய்யுள், புகழ். உலோசனம் - கண். சுலோசனம் - மூக்குக் கண்ணாடி. விலோசனம் - கண். உலோபம் - ஆசை, கொஞ்சம். சுலோபம் - எறும்பு. உலோமம் - வால். விலோமம் - முறை பிழைத்தல். அல் - அல்லென்னேவல், இடைச் சொல், (உ-ம். தொடையல்) இராத்திரி, இருள், மதில். இல் - இடம், இராசி, இல்லை யெனல், உவமவுருபு (உம் பாம் பினிற்கடிது தேள் ஏழனுருபு) (உ-ம். ஊரிலிருந்தான்). ஐந்தனு ருபு (உ-ம். மலையில் வீழருவி), சாவு, தலைவி, மனைவி, வீடு. எல் - இகழ்ச்சிக்குறிப்பு, இரவு, ஒளி, சூரியன், நாள், பகல், வெயில். ஒல் - ஒல்லெனல், முடிவிடம். கல் - ஒலிக்குறிப்பு, கல், கல்லென் னேவல், மலை. கொல் - அசைச்சொல், (உ-ம்.) வரு வர் கொல் வயங்கிழாஅய், ஐயக் கிளவி, (உ-ம்.) இவ்வுருக் குற்றி கொன் மகன் கொல், கொல் லென்னேவல். சில் - ஆரவாரம். செல் - இடி, கறையான், செல்லென் னேவல், மேகம். சொல் - எழுத்தி னோசைச்சொல், கள், செந்நெல், செந்நெற்கதிர், சொல்லென்னேவல், புகழ். தில் - ஒழியிசை, காலம், விழைவு. தெல் - அஞ்சல், கலாதி, நெருங் கிடங்கு, நெடும்பாத்தி. நல் - ஏற்ற, நல்ல, மிகுதி. நில் - நில்லென்னேவல். நெல் - ஒர்வகைத் தானியம். பல் - தந்தம், ஆயுதக்கருக்கு, இரு பிறப்பு, எயிறு, நகை, நங்கூர நாக்கு, பல்லு, முறுவல், மூரல். புல் - அனுட நாள், பனைமரம், புலி, புல், புல்லென்னேவல், புன்மை, அற்பம். பொல் - பொல்லு. மல் - கூத்தின் விகற்பம், திருமால் கூத்து, வலிமை, வளமை. மெல் - மிருது, மெல்லென்னேவல். வல் - சீக்கிரம், சூதாடு கருவி, மேடு, வலி. வில் - ஒளி, சேரன்கொடி, மூலநாள், விலவென்னேவல். வெல் - வெல்லென்னேவல். அல்கல் - இரா, குறைதல், தங்கல், தரித்திரம், நாள், வறுமை, சுருங்கல். ஒல்கல் - குழைதல், தளர்தல், துவ ளல், மெலிதல். செல்கல் - ஆலாங்கட்டி, செல்லல். நல்கல் - ஆசைப்பெருக்கம், ஈதல், இருதல், கடாட்சித்தல், வரும்பல். பல்கல் - பெருகல், வெகுநாள். பில்கல் - கொப்புளித்தல், பொசித்தல். புல்கல் - புணர்தல். மல்கல் - நிறைதல், பெருகல். மெல்கல் - இலேசாதால். அல்லகண்டம் - துன்பம். புல்லகண்டம் - சருக்கரை. அல்லகம் - கோவணம். எல்லகம் - சூரியன். கல்லகம் - மலை, கல்வீடு, கடின சித்தம். சல்லகம் - கைத்தாளம், நார். தில்லகம் - வெள்ளிலோத்திரம். பல்லகம் - கரடி. புல்லகம் - நுதலணி. மல்லகம் - சிறுவா லுளுவை. இல்லகி - அடைக்கலம். சல்லகி - ஆத்திமரம். வல்லகி - வீணை. இல்லடை - அடைக்கலம். சல்லடை - தானிய முதலியவற்றைச் சல்லுங் கருவி. பில்லடை - அப்பவர்க்கம். அல்லம் - இஞ்சி. இல்லம் - தேற்றாமரம், வீடு, இல் வாழ்க்கை, மனைவி. உல்லம் - ஓர்வகை மீன். எல்லம் - இஞ்சி. கில்லம் - கழுத்து. கொல்லம் - ஓர்வகைத் தேயம். கல்லம் - செவிடு, மஞ்சள், விந்த மலை. சல்லம் - நார், பன்றி முள். சில்லம் - தேற்றாமரம். சுல்லம் - கயிறு, தாமிரம். செல்லம் - இளக்காரம், செல்வம், வினைமுற்று. தல்லம் - நீர்க்குண்டு, குழி. தில்லம் - காடு. துல்லம் - பேரொலி. நல்லம் - கறுப்பு, மங்கல். பல்லம் - அம்பு, ஓர்வகையெண், கரடி, குதிரைக் கல்லணை. பில்லம் - ஒருகண் நோவு. புல்லம் - இடபவிராசி, எருது, புட் பம், மலர்ந்தது. பொல்லம் - தைத்தல், துண்டு. மல்லம் - தட்டம், கதுப்பு, மற்பிடி, வலிமை. வல்லம் - ஓரூர், வாழை. வில்லம் - குகை, பெருங்காயம், வில்வம். வெல்லம் - கரும்பின் கட்டி. உல்லரி - தளிர். எல்லரி - கைம்மணி. குல்லரி - இலந்தை. சல்லரி - பம்மைமேளம். மல்லரி - ஒர்வகை மேளம். வல்லரி - கொடி, தளிர், பூங்கொத்து. அல்லர் - அல்லாதவர். கொல்லர் - கம்மாளர், கருமார். சில்லர் - வேடர். புல்லர் - கீழ்மக்கள், வேடர். பொல்லர் - சக்கிலியர், செம்மார், தையற்காரர். மல்லர் - மற்போர் செய்வோர், வலியர். அல்லல் - துன்பம். இல்லல் - கடத்தல், நடத்தல், போதல். ஒல்லல் - இயலல், இசைதல், பொருந் துதல். கல்லல் - தோண்டல், கெல்லல், பெசலாலெழுமொலி. கெல்லல் - தோண்டுதல். கொல்லல் - கொல்லுதல். செல்லல் - போகுதல், துன்பம். சொல்லல் - சொல்லுதல். புல்லல் - அமைதல், கூடுதல், சார்தல், புணர்தல். மல்லல் - வலி, வளமை, மிகுதி. மெல்லல் - மெல்லுதல். வெல்லல் - வியங்கோண்முற்று, வெல்லுதல். நல்லவர் - அறிஞர், சினேகிதர். பல்லவர் - கீழ்மக்கள், தூர்த்தர், ஒரு அரச பரம்பரையினர். எல்லவன் - சூரியன். நல்லவன் - நல்லன். வல்லவன் - இடையன், பருப்புக் கறிகள், சமைப்போன், புருடன், வல்லான். வில்லவன் - சேரன். அல்லவை - பயனிலாப்பொருள், தீமைபாவம். இல்லவை - இல்லாப்பொருள், மனைப்பொருள். நல்லவை - சிறந்தவை. பல்லவை - கீழ்மை, பலபொருள். அல்லன் - அல்லாதவன், தீயன். எல்லன் - புலவரை ஆதரித்த குன்றத் தூரிலிருந்த ஒருவன். கொல்லன் - கம்மாளன், கருமான். சல்லன் - பீளைக்கண்ணன், பீளைக் கண்ணி. செல்லன் - செல்வன். நல்லன் - நல்லவன். புல்லன் - அற்பன். பொல்லன் - பொல்லாதவன், கொடி யோன். மல்லன் - திண்ணியன், வலியன். மெல்லன் - நெய்தனிலத்தலைவன். உல்லாபம் - மழலைச்சொல். சல்லாபம் - வினாவும் விடையுங் கூடிய சொல். சல்லாரி - அபாத்திரன், அலசற் சீலை, கைத்தாளம், வேஷக்காரன், ஒருமரம். இல்லாமை - தரித்திரம். ஒல்லாமை - இகழ்தல், இல்லாமை. கல்லாமை - வாசியாமை, அறியாமை. கொல்லாமை - உயிரைக் கொல்லுதல் செய்யாமை, விரதம், தவநெறி. பல்லாரி - ஓரூர். மல்லாரி - சண்டைக்காரி, பம்பை மேளம். ஒல்லார் - பகைவர். கல்லார் - கீழ்மக்கள், மூடர், கசடர். நல்லார் - அறிஞர், மாதர், உத்தமர். பல்லார் - பலர். புல்லார் - பகைவர், வினைமுற்று. பொல்லார் - தீயோர். வல்லார் - சமர்த்தர், மாட்டாதார். வில்லார் - வில்லுடையார், வேடர். இல்லாள் - தரித்திரி, தலைவி, மனைவி. நல்லாள் - பெண். அல்லி - அகவிதழ், ஆம்பல், இரா, காயா, பூந்தாது. இல்லி - பொள்ளல். எல்லி - இராத்திரி, சூரியன். கல்லி - ஆமை, ஊர்க்குருவி. குல்லி - ஓர் பூண். கொல்லி - ஓர்வகைப்பண், ஓர்மலை. சல்லி - தூக்கங்கள். சில்லி - சிள்வண்டு, சிறுகீரை, தேரு ருளை வட்டம். சுல்லி - அடுப்பு. தல்லி - தாய். துல்லி - பெருமை யுடையவன். பல்லி - கௌளி. பில்லி - பூனை. புல்லி - புறவிதழ், வினையெச்சம். மல்லி - தனியா, கொத்தமல்லி, மல்லிகை, ஓரூர், மிகப் பருத்துரத் தவள். வல்லி - அளவு, இடைச்சேரி, கால விலங்கு, நீங்கல், படர்கொடி, பிரிதல். வில்லி - மன்மதன், வீரபத்திரன். சில்லிகை - சிள்வண்டு, சீலை, நல் லாடை. மல்லிகை - இரப்போர் கலம், ஓர் வகைப் பூஞ்செடி, விளக்குத்தண்டு. வல்லிகை - காதணி, யாழ். அல்லியம் - விட்டுணு கூத்து. கல்லியம் - கள். சல்லியம் - ஆயுதநுனி, முள், எலும்பு, பாணம், சேஷ்டை. துல்லியம் - உவமை. வல்லியம் - இடையரூர், கொல்லி மலை, புலி. உல்லியர் - கூவநூலோர். புல்லியர் - கீழ்மக்கள். மெல்லியர் - மாதர். வில்லியர் - வேடர். கல்லு - வெள்ளி. பொல்லு - பதர். வல்லு - சூதாடு கருவி. இல்லுநர் - மேவுநர். ஒல்லுநர் - நூலுரையுணர்வோர், மித்திரர். புல்லுநர் - சினேகிதர். வல்லுவர் - வல்லோர். பல்லூகம் - கரடி. வல்லூகம் - ஆண்குரங்கு, கரடி, முசு. இல்லெனல் - இல்லென்றல், சாதல். ஒல்லெனல், கல்லெனல் - அநுகரண வோசை. கொல்லெனல் - ஒலிக்குறிப்பு. புல்லெனல் - பொலி வழிதல். மெல்லெனல் - மந்தக்குறிப்பு. வல்லெனல் - அநுகரணவோசை. அல்லை - அல்லாயென்னு முன்னி லைக் குறிப்பு, வினைமுற்று. இல்லை - இன்மை, சாதல். எல்லை - அளவு, கூப்பிடுதூரம், சூரியன், நாள், முடிவு, அவதி, ஏணி, கரை, வாம்பு. ஒல்லை - கடுப்பு, காலவிரை, சிறு பொழுது, பழமை. கல்லை - இலைக்கலம், பாதக் குறட் டின் குமிழ். குல்லை - கஞ்சா, துளசி, வெட்சி. கொல்லை - ஊர்ப்புறம், சோலை. சில்லை - சிள்வண்டு. தில்லை - ஓர்வகை மரம், சிதம்பரம். தொல்லை - பழமை. மல்லை - இரப்போர் கலம், வட்டம். முல்லை - இசை, கற்பு, முல்லைக் கொடி, முல்லை நிலம், வன மல்லிகை, வெற்றி. வல்லை - ஓர்வகை நோய், கடுப்பு, கால விரைவு, கோட்டை, பெருங் காடு, மேடு, வட்டம். உல்லோகம் - பெருங்கடற்றிரை. கல்லோலம் - கடற் பெருந்திரை. அல்லோன் - சந்திரன். இல்லோன் - தரித்திரன், புருடன். செல்வம் - கல்வி, சீர், சுவர்க்கம். வில்வம் - கூவிளை. கல்வி - அறிவு, கற்றல், வித்தை. செல்வி - இலக்குமி, தலைவி. வ தவ - குன்றல், மிகுதி. பவ - ஓர்வகை யாண்டு. யுவ - ஓர்வகை யாண்டு. அவசம் - பரவசம். கவசம் - சட்டை. திவசம் - நாள். துவசம் - அடையாளம், விருதுக் கொடி. விவசம் - பரவசம். கவடி - பலகறை. சுவடி - எபதியபுத்தகம். கவடு - கழுத்திடு கயிறு, மரக் கொம்பு, யானைகட்டும் கயிறு. குவடு - சிறுமலை, திரட்சி, மரக் கொம்பு, மலை, மலையுச்சி. சுவடு - தழும்பு, பக்கறை, பாதம் வைத்த சுவடு. உவட்டல் - பெருக்கு, வியங்கோண் முற்று, வெறுத்தல். கவட்டல் - மெல்லல், வியங்கோண் முற்று. சவட்டல் - அழித்தல், துவட்டல், மெல்லல், வியங்கோண்முற்று. துவட்டல் - துடைத்தல், துவட்டுதல், வியங்கோண்முற்று. அவணம் - அம்மணம், இருபதி னாயிரங்கொட்டைப்பாக்கு, நிந்தனை. இவணம் - இங்கே. உவணம் - உயர்ச்சி, கருடன், கழுகு, பருந்து. சுவணம் - பொன், கருடன், கழுகு. நுவணம் - கல்விநூல், தினைமா, நுண்மை, பஞ்சிநூல். அவணன் - திண்ணியன், தீவிணன். உவணன் - கருடன். அவணி - நன்மை. உவணி - வாள். உவணை - உவ்விட்டம், தேவலோகம். கவணை - கவண். தவணை - எல்லை, கெடுவு, வாய்தா, நீந்து வோர்க்கிடுமிதவை. நுவணை - கல்விநூல், தினைமா, நுண்மை, பஞ்சிநூல். பவணை - கழுகு. அவண் - அவ்விடம். இவண் - இவ்விடம். உவண் - உவ்விடம். எவண் - எவ்விடம். கவண் - கலணை. சவதம் - ஆணை. சிவதம் - இருக்குவேதம். அவதி - அளவு, எல்லை. யுவதி - பதினாறுவயதுப் பெண். உவதை - மலையின் வீழாறு. சிவதை - ஓர்வகைக்கொடி. உவத்தல் - மகிழ்தல். சிவத்தல் - கோபம், சிவத்தல், சினக் குறிப்பு. நிவத்தல் - உயர்தல். உவப்பு - உயரம், பொலிவு, மகிழ்ச்சி, விளையாட்டு. சிவப்பு - செம்மை, சினக்குறிப்பு. நிவப்பு - உயர்ச்சி. அவமானம் - இழிவு. உவமானம் - உவக்கும் பொருள். அவம் - பயனின்மை, வீண். கவம் - மத்து, கோழை. குவம் - ஆம்பல். சவம் - சீக்கிரம், பிசாசம், பிணம். சிவம் - குறுணி, நன்மை, முத்தி, கடவுள், உயர்வு, ஓர்குளிகை, ஓர் வாசனை, மகிழ்ச்சி, பசு, சுனைதறி, பாதரசம், வெண் காரம், வேதம், மங்கலம். சுவம் - ஐசுவரியம். தவம் - தவசு, காடு, காட்டாக்கினி. திவம் - ஆகாயம், காடு, தோற்றம், நாள், பகல், மோக்கம், விளக்கம். துவம் - அசையாநிலை, இரண்டு. தெவம் - மாமரம். நவம் - ஒன்பது, கார்காலம், கேண்மை, சிநேகம், புதுமை. பலம் - நாசம், பாவம், பிறப்பு, மேன்மை. யவம் - ஓர்வகைக் கோதுமை. அவரம் - அபரம். கவரம் - சாமரம், சினம். விவரம் - பிரகாசம். சவரம் - சாமரம், பொற்காசு, நீர், மயில். திவரம் - நாடு. துவரம் - துவர்ப்பு. விவரம் - உட்டொளை, பகுப்பு. உவரி - கடல். கவரி - எருமை, கவரிமா, சாமரை, தேர். சவரி - சாமரை. அவரை - கொள்ளு, துவரை, முதிரை முதலாயின. துவரை - ஓர்வகைப்பயறு, துவா ரகை. அவர் - உயர்திணைப்பலர்பால் படர்க்கைச் சுட்டு. உவர் - உவரென்னேவல், உவர்ப்பு. கவர் - கவரென்னேவல், மரக்கப்பு, வாழை. சுவர் - பித்திகை. தவர் - முனிவர், வில். துவர் - சிவப்பு, துவரென்னேவல், துவர்ப்பு, பகை, பவளம், விறகு. பவர் - கவர், நெருங்கல். சவர்க்கம் - கல்லுப்பு. சுவர்க்கம் - தேவலோகம், முலை. பவர்க்கம் - நரகம். இவர்தல் - ஆசை, ஆசைப் பெருக் கம், எழுச்சி, ஏறுதல், செறிவு, சேறல், நடத்தல். கவர்தல் - ஆசைப்பெருக்கம், கடை தல், கொள்ளையிடல், திருடல், வாருதல். தவர்தல் - சிந்தல், தப்புதல். துவர்தல் - திமிர்தல். நிவர்தல் - ஓங்கல். உவர்த்தல் - ஓர்வகைச்சுவை, வெறுத் தல், அரோசித்தல். கவர்த்தல் - கப்புவிடல், கவர் வைத் தல், துயரந்தோன்றக் கூறு மோர லங்காரம், கேடு, மிடி, வருத்தம். துவர்த்தல் - ஓர்வகைச் சுவை. அவலம் - நோய். கவலம் - எருமைக்கொம்பு. குவலம் - குலம், அவுலபாஷாணம் சவலம் - பேசலாலெழுமொலி, வருந்தல், வியங்கோண்முற்று, பயன். தவலம் - அவுபலபாஷாணம். கவலல் - கவலைப்படல், விதும்பல். துவலல் - தீவிரித்தல், துளிவிடுதல். நுவலல் - சொல்லல், வியங்கோண் முற்று. அவலை - கடுப்பு, காடு. உவலை - தழை, பொய். கவலை - அச்சம், ஓர்வகைக்கொடி, கவர் வழி, சந்தி, செந்தினை, துன்பம், நோய், மரக்கொம்பு. சவலை - இளமை, மெலிவுள்ளது, ஓர்பா, மெலிவு. சிவலை - செந்நிறமுள்ளோன். சுவலை - அரசமரம். தவலை - குடம். திவலை - சிதறுந்துளி, மழை, மழைத்துளி. துவலை - மழை, மழைத்தூவல். சிவலோகம் - மோக்கம். தவலோகம் - மேலேழுலகி லொன்று. அவல் - ஒரு சிற்றுணவு, குளம், சிறு பள்ளம். கவல் - துக்கம், வருத்தம். சிவல் - கவுதாரி, பகண்டை. சுவல் - குதிரைமயிர், தோண்மேல், பிடர், முதுகு, மேடு. தவல் - குறைவு, கெடுதல், ஒருவகை மத்தளம். துவல் - சீக்கிரம். நுவல் - சொல், நுலென்னேவல். இவவு - இழிவு. கவவு - அகத்திடல். குவவு - குவிதல், கூட்டம், திரட்சி, பூமி, பெருமை. சுவவு - சுவர்க்கம், பறவை, மூக்கு, மூஞ்சூறு. திவவு - வீணைவலிக்கட்டு. அவளம் - பிரயோசனமற்றது. உவளம் - சோறு, யானைக்கவளம். கவளம் - சோறு, வாயளவு கொண்ட வுணவு. சவளம் - ஈட்டி, ஒருமீன், நடுக்கம். தவளம் - வெண்மை, கருப்பூரம். பவளம் - துப்பு. உவளல் - துவளல், வியங்கோண் முற்று. திவளல் - துவளல், வியங்கோண் முற்று. துவளல் - அசைதல், திவளல், வியங் கோண்முற்று. குவளை - ஓர்வகைநீர்ப்பு, மன்மதன், கணைவிழி. தவளை - மண்டூகம். இவறல் - ஆசை, ஆசைப்பெருக்கம், மறதி, உலோபித்தல், வியங் கோண் முற்று. கவறல் - வருந்துதல். தவறல் - கடத்தல், குறைதல், சாதல், வியங்கோண்முற்று. திவறல் - சாதல். துவறல் - துவலைவிடுதல், விரைவு. நிவறல் - நுணுக்கம், மொய்த்தல். கவறு - சூதாடுகருவி. தவறு - குற்றம், தவறென்னேவல். கவற்சி - வருத்தம். நுவற்சி - சொல்லல். கவனம் - கடுப்பு, கலக்கம், காடு, குதிரை, நடை, சீக்கிரம் படை. தவனம் - தாகம். பவனம் - அரண்மனை, இராசிப் பொது, காற்று, கொழித்தல், தானியந் தூற்றல், தேவலோகம், நாகலோகம், பாவனை, பூமி, பூனை, வீடு. புவனம் - உலகப்பொது, நீர், பூமி. யவனம் - ஓர்வகைத்தேயம். கவனன் - வேகமுள்ளோன். தவனன் - சூரியன், நெருப்பு. அவனி - பூமி. உவனி - வாள். கவனி - கவனியென்னேவல். சிவனி - கழுதை. துவனி - ஒலி. பவனி - உலாப்போதல். புவனி - பூமி. எவன் - யாது, யாவன், யாவை. சிவன் - உருத்திரன். தவன் - புருடன். பவன் - சிவன். அவா - அவா வென்னேவல், ஆசை, ஆசைப்பெருக்கம், இறங்குதல். உவா - இளையோன், கடல், தம்பி, நிறைவு, பூரணை, யானை. சுவா - நாய். திவா - பகல். சுவாசம் - உயிர்ப்பு. நிவாசம் - வீடு. சுவாந்தம் - மனது. துவாந்தம் - இருள், நரகம். அவி - கெடுவென்னேவல், சோறு, தேவருணவு, நெய். கவி - கவியென்னேவல், குரங்கு, சுக்கிரன், பா, புலவன். குவி - கூட்டு. சவி - அழகு, ஒளி, சரமணிக் கோவை, செவ்வை. சுவி - இத்திமரம். செவி - காது, கேள்வி. துவி - இரண்டு. பவி - வச்சிராயுதம், இடியேறு. புவி - பூமி. வவி - வேதமுத்திரை தரியாதவன். கவிகை - ஈதல், கவிதல், குடை. சிவிகை - தண்டிகை, பாண்டில் பூண்டவூர்தி. சுவிகை - கள். செவிடு - செவிப்புலன் கெடல். தவிடு - அரிசி முதலியவற்றின் தவிடு. துவிதம் - இரண்டு. விவிதம் - பலவிதம். அவிதல் - கெடுதல். குவிதல் - உண்டை, கூடுதல், கூட் டம், திரட்சி. அவித்தல் - கெடுத்தல், அணைத்தல், தணிதல். கவித்தல் - மூடுதல், கவியப் பண் ணுதல். குவித்தல் - ஒளித்தல், கூடுதல், கூப்பல். சலித்தல் - சபித்தல். தவித்தல் - இளைத்தல், தாகப்படல். அவியம் - பொய்வடிவம், வடிவ மில்லாமை. கவியம் - கடிவாளம். நவியம் - கோடாலி, புதுமை, மழு. அவியல் - ஒரு கறி, புழுக்கம், வெப் பம், உட்டணம். குவியல் - கும்பல், கூட்டம், அம்பாரம். கவிரம் - அலரிச்செடி. செவிரம் - பாசி. நவிரம் - ஆண்மயிர், உச்சி, தலை, புன்மை, மயில், மருதயாழ்த்திறம், மலை, யாழ். கவிர் - முண்முருக்கு. நவிர் - ஆண்மயிர், மருதயாழ்த் திறம், வாள். அவிர்தல் - ஒளிசெய்தல், பீறல். தவிர்தல் - ஒழிதல். குவில் - அறுத்தல். தவில் - ஓர்வகைப்பறை. அவிழ்தல் - நெகிழ்தல், தளரல், விரி தல், கட்டவிழ்த்தல். கவிழ்தல் - அகம்புறமாதல், தலை கீழாதல். தவிழ்தல் - தவிர்தல். அவிழ்த்தல் - விரித்தல். கவிழ்த்தல் - கவிழ்வித்தல். நவிழ்த்தல் - அவிழ்த்தல். அவை - அவையென்னேவல், அவ், கூட்டம், சவை, புலவர். இவை - இவ், அஃறிணைப்பன்மை. உவை - உவ். எவை - எவ். கவை - கவர்வழி, காடு, கோட்டை, மரக்கப்பு, ஆயிலியம், எள்ளிளங் காய். குவை - குப்பை, கூட்டம், திரட்சி, மேடு. சவை - அம்பலம், கூட்டம், புலவர். சிவை - ஆணரி, உலைத்துருத்தி, உலை மூக்கு, பார்வதி, வேர். சுவை - இனிமை, சுவையென் னேவல், இரசம், உருசி, சித்திரை நாள். துவை - இறைச்சி, ஒலி, துவையென் னேவல், பருகுதற்குரியன, பிண் ணாக்கு, புளிங்கறி. நவை - இகழ்ச்சி, குற்றம். அவைத்தல் - நெரிதல், நென் முதலிய குத்தல். சுவைத்தல் - உண்டல். துவைத்தல் - ஒலித்தல், பேரொலி. அவ் - அவை. இவ் - இவை. உவ் - உவை. எவ் - எவை. தெவ் - பகை. கௌடம் - ஒருவகைக் கொடி, ஓர் தேயம். பௌடம் - தைமாதம். கௌதம் - சிச்சிலிக் குருவி. தௌதம் - வெள்ளி. சௌமன் - புதன். பௌமன் - செவ்வாய். கௌரம் - வெண்மை. சௌரம் - அட்டாதசவுபபுராணத் தொன்று, ஓர் மாதம். கௌரி - காளி, பத்தாண்டுப் பெண், பார்வதி. சௌரி - கருடன், மன்னன், சனி, நமன், விட்டுணு. கௌரியன் - பாண்டியன். சௌரியன் - கன்னன், சூரன். எவ்வம் - தனிமை, தீராதநோய், துன்பம். பௌவம் - கடல், நீர்க்குமிழி, நுரை, பூரணை. கௌவல் - பற்றல், வியங்கோண் முற்று. துவ்வல் - புசித்தல், வியங்கோண் முற்று. கௌவல் - கெடுதல், வியங்கோண் முற்று. மௌவல் - வன்மல்லிகை. வெளவல் - கொள்ளையிடல், பிடித் தல், வாருதல், வியங்கோண் முற்று. ஒவ்வாமை - பொருந்தாமை. துவ்வாமை - வெறுப்பு. அவ்வி - அழுக்காறு. உவ்வி - தலை. கவ்வி - கருடன். செவ்வி - அழகு, காலம், சித்திரை நாள், செம்மை. தவ்வி - சட்டுவம். நவ்வி - அத்தநாள், அழகு, இளமை, தோணி, மான். பவ்வி - அமேத்தியம். அவ்வியம் - அழுக்காறு. கவ்வியம் - பசுவினைந்து. சவ்வியம் - வலப்பக்கம். உவ்வு - தவம். கவ்வு - பெருமை. சவ்வு - சவ்வரிசி, தசை முதலியவற்றை மூடிய வெண்ணிறத்தோல். செவ்வு - செவ்வை. துவ்வு - அனுபவம், ஐம்பொறி நுகர்ச்சி. தெவ்வு - பகை, போர். நவ்வு - மரக்கலம். நொவ்வு - நொய்மை. அவ்வுதல் - அவாவி விழுதல், அழுந்துதல். கவ்வுதல் - கடித்துப் பிடித்தல். தவ்வுதல் - குந்தி நடத்தல், கெடுதல். ஒளவை - தவப்பெண், தாயின் தாய். கௌவை - ஆயிலியநாள், எள்ளிளங் காய், ஒலி, கள், துன்பம், பழிச் சொல். கொவ்வை - கோவைக்கொடி. செவ்வை - செப்பம். தவ்வை - அக்காள், செவிலித்தாய், மூதேவி. ழ கழகம் - கல்வி, சூது, படை, மல் இவை பயிலிடம். குழகம் - அழகு. அழகன் - சிவன், குமரன். குழகன் - சிவன், செவ்வேள். அழகு - சருக்கரை, வனப்பு. கழகு - கல்வி, ஆயுதம் பலியிடம் போர்க் களம், சூதாடுமிடம். குழகு - அழகு. பழக்கம் - படிப்பு. புழக்கம் - பயிலல். முழக்கம் - ஒலி. வழக்கம் - வழங்குதல். உழக்கல் - கலக்கல், சிலம்பல், பழ கல், வியங்கோண்முற்று. சழக்கல் - தவறல். பழக்கல் - பயிற்றல். முழக்கல் - முழக்குதல், வியங்கோண் முற்று. அழக்கு - ஆழாக்கு. உழக்கு - உழக்கென்னேவல், ஓர் வகையளக்குங்கருவி, ஓர்வகை யளவு, காற்படி. கிழக்கு - கீழ், கீழ்த்திசை. சழக்கு - குற்றம், அறியாமை பொய். முழக்கு - ஒலி. வழக்கு - விவகாரம். தழங்கல் - ஒலித்தல், வியங்கோண் முற்று. வழங்கல் - ஈதல், உலாவல், சொல்லல், நடத்தல், வியங்கோண்முற்று. கழங்கு - ஓர்வகையாடல், கழற்சிக் கொடி, வெறியாட்டாளனாடல். கிழங்கு - கந்தம். வழங்கு - ஈயென்னேவல். இழத்தல் - இழந்துபோதல். உழத்தல் - பழகல். உழத்தி - மருதநிலப்பெண். கிழத்தி - மருதத்தலைவி. இழப்பு - இழத்தல். உழப்பு - ஊக்கம், முயற்சி, வலி. கிழமை - உரிமை, குணம், மரட்சி, மூப்பு, வாரம். பழமை - தொன்மை. வழமை - வழக்கம். அழம் - பிணம். கிழம் - கிழத்தன்மை, முதுமை. தழம் - தைலம், புறஉறுப்பு. பழம் - கனி, முதிர்ந்தது. மழம் - இளமை. முழம் - இருசாண். உழம்பல் - ஒலித்தல், வியங்கோண் முற்று. குழம்பல் - கலங்கல், வியங்கோண் முற்று. குழம்பு - ஓர் தேயம், கஞ்சி, குழம்பு, குழம்பென்னேவல், குழைசேறு. பிழம்பு - திரட்சி. அழலல் - கனலுதல், வியங்கோண் முற்று. உழலல் - சுழலல், வியங்கோண் முற்று. கழலல் - வியங்கோண்முற்று, விலகல். குழலல் - குழற்சி, வியங்கோண் முற்று. சுழலல் - சுவலல், அலமரல், கலங்கல், திரிதரல், வியங்கோண்முற்று. தழலல் - அழலல், வியங்கோண் முற்று. கழலை - கழலைக்கட்டி. மழலை - நிரம்பாமெல்லிய சொல். மிழலை - மழலைச் சொல். வழலை - ஒர் பாம்பு, கோழை. அழல் - கேட்டைநாள், செவ்வாய், தீ, நரகம், வியங்கோண்முற்று, வெப் பம், வெப்புறு என்னுமேவல். உழல் - உழுதல், வியங்கோண்முற்று. எழல் - எழும்பல், வியங்கோண் முற்று. கழல் - ஆடவர் கொடைவீரத் தணி வது, கழலென்னேவல், கழற்சிக் கொடி, கால், செருப்பு, பொன் வண்டு. குழல் - இசைப்பாட்டு, ஊதிடுகுழல், குழலென்னேவல், கொண்டை, தொளையுடைப்பொருள், பெண் மயிர். சுழல் - காற்றாடி, சுழலென்னேவல், சுழல். தழல் - கவண், கார்த்திகைநாள், கிளிகடிகோல், தழலென்னேவல், தீ. தொழல் - தொழுதல், வியங்கோண் முற்று. நிழல் - அருள், ஒளி, குளிர்ச்சி, சாயை, செல்வம், நிழலென்னே வல், நோய். புழல் - ஓர் கிராமம், சலதாரை, துளையுடைப் பொருள். முழல் - கழற்சிக்கொடி. விழல் - ஓர் புல், வியங்கோண்முற்று, விழுதல். உழவர் - சூத்திரர், மருதநிலமாக்கள், வேளாளர். கிழவர் - உரியோர், மூப்புடையோர். கிழவி - தலைவி, மூப்புடையவள். குழவி - இளமை, இளம்பிறை, குழந்தை, பெருமை, கடமை, பன்றி, மான், முசு, யாளி, யானை இவற்றின் குட்டியு மன்றி மரக் கோட்டில் வாழ்விலங்கின் குட்டி யும், மரக்கன்று. இழவு - இழத்தல். உழவு - உழுதல். குழவு - இளமை. மழவு - இளமை, குழந்தை. முழவு - பறைப்பொது. விழவு - திருவிழா, மிதுனவிராசி. அழற்றல் - சுடுதல், வியங்கோண் முற்று. கழற்றல் - கழலுவித்தல். சுழற்றல் - சுற்றியாட்டல், வியங் கோண்முற்று. நிழற்றல் - நிழல்செய்தல், நுண்மை, மென்சொல், வியங்கோண்முற்று. மிழற்றல் - சொல்லல், நிரம்பாமென் சொல், பேசலாலெழுமொலி, வியங்கோண்முற்று. அழனம் - பிணம். பழனம் - மருதநிலம், வயல். கழனி - சேறு, திரைச்சீலை, மருத நிலம், வயல். துழனி - ஒலி, பறவைக்கூட்டத் தொலி. பழனி - திருவாவினன் குடி யென்னுந் திருப்பதி. அழன் - பிணம். பழன் - கனி. பிழா - சட்டுவம். முழா - முழவு, மேளம். விழா - விழவு, வினைமுற்று, வினை யெச்சம். குழாய் - துளையுடைப் பொருள். துழாய் - துளசி, வினையெச்சம். திழார் - இறைகூடை, தோட்டம், முதன்மையுடையோர். பிழார் - இறைஉடை. வழார் - கொம்பு. அழி - அழியென்னேவல், அழிவு, இரக்கம். இழி - இகழ்வு, கீழிறங்கு, கீழ்மை. உழி - ஏழனுருபு (உ-ம். அவனுழி வந்தான்), பக்கம், இடம். ஒழி - ஒழியென்னேவல். கழி - உப்பளம், கழியென்னேவல், மிகுதி. கிழி - எழுதுபடம், கிழியென் னேவல், கீற்று, நிதிப்பொதி. குழி - கிணறு, குழியென்னேவல், குளம், பள்ளம், வயிறு, ஒருகோல் நீளமும் ஒரு கோல் அகலமுங் கொண்டநிலம். சுழி - சுழியென்னேவல், நீர்ச்சுழி முதலிய. பழி - குற்றம், பழியென்னேவல், பொய். பிழி - கள், பிழியென்னேவல். முழி - விழி, கண். மொழி - சொல், மொழியென்னேவல். வழி - இடம், ஏழனுருபு (உ-ம். நின்ற தோர் நறைவேங்கை நிழல் வழி யசைந்தன்ன) காரணம், திரட்சி, நடவை, பழமை, பின், மகன், முறைமை, வழியென் னேவல். விழி - கண், விழியென்னேவல். அழிகை - கெடுகை. சுழிகை - ஒருதலம், கள், சுழிதல். அழிச்சல் - அழித்தல். கழிச்சல் - பேதி. பழிச்சல் - நீக்குதல், துதித்தல். கொழிஞ்சி - பூவாது காய்க்கு மரம். தழிஞ்சி - சார்ந்தார்மேற்படராமை. புழிஞ்சி - சிறிது. அழிதல் - கெடுதல், இரங்குதல், கலங்குதல். இழிதல் - இறங்குதல். ஒழிதல் - சாதல், தவிர்தல், ஓய்தல், விடுதல். கழிதல் - கடத்தல், சாதல், நடத்தல், மிகுதல். கிழிதல் - ஆடை முதலிய கிழிதல், பிளத்தல். குழிதல் - குழியாதல். சழிதல் - சப்பளித்தல். சுழிதல் - கலங்கல், சுழித்தல். பிழிதல் - ஒன்றன்சாரத்தைக் கைம் முதலியவற்றானெருக்கி வெளிப் படுத்தல். பொழிதல் - ஈதல், மழை பெய்தல். மொழிதல் - சொல்லல். வழிதல் - ஒழுகல். அழித்தல் - கெடுத்தல், குலைத்தல், இறைவன் முத்தொழிலி லொன்று, தேய்த்தல். இழித்தல் - இறக்குதல், கீழ்ப்படுத்தல். ஒழித்தல் - எழுச்சி, கொல்லல். கழித்தல் - நீக்கல், கணக்கு வகை யிலொன்று. கிழித்தல் - எழுச்சி, கொல்லல். குழித்தல் - தோண்டல். கொழித்தல் - வாருதல், ஒதுக்குதல். சுழித்தல் - கீறல். செழித்தல் - செழுமை, பெருகுதல். தெழித்தல் - அதட்டல், கோபம், சினக் குறிப்பு, துவைத்தல், பேரொலி. பழித்தல் - நிந்தித்தல். மழித்தல் - மொட்டையாக்கல். வழித்தல் - வழிக்குதல். விழித்தல் - கண் திறத்தல். அழிப்பு - அழிக்கை, தொலைப்பு. இழிப்பு - நிந்தனை, அபகீர்த்தி. ஒழிப்பு - தவிர்ப்பு, விலக்கு. கழிப்பு - கழித்தல், குற்றம். கிழிப்பு - பிளவு. குழிப்பு - பிரபந்த வுறுப்பினொன்று, குற்றம், கொழித்தல். கொழிப்பு - குற்றம், கொழித்தல். சுழிப்பு - சுழித்தல். செழிப்பு - வளப்பெருக்கம். பழிப்பு - நிந்தை. பொழிப்பு - பிண்டமாகப் பொரு ளுரைத்தல். விழிப்பு - சாக்கிரம். கழியர் - உப்பமைப்போர், நெய்தனில மாக்கள். பழியர் - குற்றமுடையர். பிழியர் - கள்விற்போர். எழில் - அழகு, இளமை, வண்ணம் வலி, எழுச்சி. தொழில் - செயல். பொழில் - உலகப்பொது, சோலை, நாடு, பூந்தோட்டம், பூமி, பெருமை. அழிவு - குற்றம், கேடு. இழிவு - ஈனம், குற்றம், கேடு, தாழ்வு, நிந்தை, பள்ளம். ஒழிவு - ஒழிகை. கழிவு - உள்ளது சிறத்தல், கழிதல், மிகுதி. கிழிவு - கிழிதல். குழிவு - குழிதல். அழு - அழுவென்னேவல், அழுதல். உழு - உழுவென்னேவல், பிள்ளைப் பூச்சி. எழு - எழுவென்னேவல், கம்பம், வளை, தடி. கழு - கழுவென்னேவல், சூலம். குழு - குழுவென்னேவல், கூட்டம், மகளிர்க் கூட்டம். கெழு - இடைச்சொல் (உ-ம்: வேல் கெழு தடக்கை) நிறம். கொழு - காறு, கொழுவென்னேவல். தொழு - இரேவதி நாள், தொழு மரம், தொழுவென்னேவல், பசுக் கோட்டம். பழு - ஏணிப்பழு, பழுவென்னேவல், விலா. புழு - கிருமி, புழுவென்னேவல். மழு - எரியிரும்பு, பரசாயுதம். வழு - ஈனம், கேடு, வழுவென்னேவல். அழுகல் - கெடுதல், அழுகினது. இழுகல் - ஊசுதல், இளகல். ஒழுகல் - உயர்ச்சி, ஒழுகுதல், ஒழுக்கம், நீர் முதலியவோடல், நீளம், முறையாக நடத்தல், வியங் கோண்முற்று. முழுகல் - குளித்தல், வியங்கோண் முற்று. மெழுகல் - மெழுகுதல். கழுகு - ஓர் பறவை. புழுகு - மான்மதம். மெழுகு - வள்ளியம், மெழுகென் னேவல். அழுகுதல் - பதனழிதல். இழுகுதல் - பின்போதல். ஒழுகுதல் - நீர் முதலிய வடிதல். முழுகுதல் - குளித்தல். வழுகுதல் - வழுவுதல். விழுகுதல் - வீழ்தல். அழுகை - அழுதல். உழுகை - உழுதல். எழுகை - எழுதல். ஒழுகை - பண்டி. தொழுகை - தொழுதல். விழுகை - விழுதல். அழுக்கம் - கவலை. இழுக்கம் - குறை, தப்பிதம், தளர்வு, தாமதம், பின்வாங்குதல், வசை. ஒழுக்கம் - உயர்ச்சி, எழுச்சி, குலம், நடை, பண்பு, முறைமை, வழி. சழுக்கம் - தளர்ச்சி. நழுக்கம் - ஆழமின்மை, மழுங்கல். புழுக்கம் - வெதும்பல். மழுக்கம் - கூரின்மை, மங்கல். இழுக்கல் - தளர்தல், வழுக்குநிலம், வியங்கோண்முற்று. உழுக்கல் - கழுக்குதல். ஒழுக்கல் - எழுச்சி, ஒழுகுவித்தல், வியங்கோண்முற்று. புழுக்கல் - சோறு, வியங்கோண் முற்று. வழுக்கல் - அடித்தல், இழுக்கல், மோதல், வியங்கோண்முற்று. அழுக்கு - ஆமை, மாசு, அசுத்தம், ஊத்தை. இழுக்கு - ஈனம், கேடு, தளரென் னேவல், பொய், மறதி, ஆபர ணத்தினோருறுப்பு. உழுக்கு - நோ. ஒழுக்கு - ஒழுகல், நடை, முறைமை. நழுக்கு - நழுக்கென்னேவல். புழுக்கு - அவிப்பு. முழுக்கு - முழுக்கு, முழுகல், மாத விடாய். மெழுக்கு - மெழுகு. வழுக்கு - நிணம், மறதி, வழுக்கென் னேவல். விழுக்கு - நிணம். பிழுக்கை - ஆட்டுமரம், ஓர் கூத்து. வழுக்கை - தேங்காயிளவல். அழுங்கல் - அச்சம், அலையல், அழு தல், அழுந்தல், இரங்கல், ஒலித் தல், ஒளி மழுங்கல், கெடுதல், சோம்பல், துன்பம், நோய், வருத் தம், வியங்கோண் முற்று. ஒழுங்கல் - நிறல்படல், வியங்கோண் முற்று. சழுங்கல் - தளர்ச்சி. நழுங்கல் - வழுவுதல். புழுங்கல் - சினக்குறிப்பு, புழுக்குவது, வியங்கோண்முற்று. மழுங்கல் - பொலிவழிதல், வியங் கோண்முற்று. முழுங்கல் - விழுங்கல். விழுங்கல் - வியங்கோண்முற்று, விழுங்குதல். அழுங்கு - அழுங்குதலைச் செய் யென்னேவல், ஆமை. ஒழுங்கு - ஒழுங்கென்னேவல், நிரல். அழுதல் - இரங்கல். உழுதல் - உழல். எழுதல் - எழல், எழுதுதல். கெழுதல் - கெழுதுதல். கொழுதல் - கோதல். தொழுதல் - வணங்கல். விழுதல் - விழல். தொழுதி - கூட்டம், திரட்சி, பறவைக் கூட்டத்தொலி. புழுதி - பராகம், புழுதி. வழுதி - பாண்டியன். இழுது - தித்திப்பு, நெய். கழுது - காவல், பரண், பிசாசம், வண்டு. பழுது - குற்றம், பொய். புழுது - அம்புக்குதை. பொழுது - காலம். முழுது - எல்லாம். வழுது - பொய், வைக்கோல். விழுது - ஆலமர முதலியவற்றின் விழுது, விழுதல். இழுதை - அறிவில்லான், பொய். கழுதை - வேசரி, வடமேற்றிசைப் பாலன் குறி. பழுதை - கயிறு. வழுதை - வழுதலைச்செடி. அழுத்தம் - அடக்கம், உலோ பத்த னம், உறுதி. முழுத்தம் - முகுர்த்தம். அழுத்தல் - அழுந்தச்செய்தல், வியங் கோண்முற்று, பதித்தல். இழுத்தல் - ஈர்த்தல், உரிஞ்சல், சுரம் பாடல், பின் வாங்குதல், வச மாக்கல். உழுத்தல் - உள்ளீடின்றி யிருத்தல். கழுத்தல் - பொய். கொழுத்தல் - மதர்த்தல். பழுத்தல் - முதிர்தல், கனிதல். புழுத்தல் - புழுவைத்தல். முழுத்தல் - மூழ்குவித்தல், வியங் கோண்முற்று. வழுத்தல் - துதித்தல், வியங்கோண் முற்று. விழுத்தல் - விழுத்துதல், வெஃகல். எழுத்து - அக்கரம், இலக்கணம், உடன்படிக்கைச்சீட்டு, சித்திரம், பொறி, வரி. கழுத்து - கண்டம். அழுந்து - அழுந்தென்னேவல், நீரா ழம், வெற்றிலை நடுவரம்பு. உழுந்து - ஓர்வகைப்பயறு, மாடம். கழுந்து - தேய்ந்து மழுங்கிய திரண்ட வடிவு, மரவைரம். கொழுந்து - இளந்தளிர், தீச்சுவாலை. சுழுந்து - சுளுந்து. வழுந்து - சுறண்டென்னேவல். அழுப்பு - சோறு. எழுப்பு - எழுப்பென்னேவல். கொழுப்பு - நிணம், செழுமை. தொழுப்பு - உழுதொழில், வளைப்பு. பழுப்பு - அரிதாரம், இலை முதலிய முதிர்தல். மழுப்பு - பெருகிடென்னேவல். கழுமல் - நிறைதல், பற்றுதல், மயக்கம், மிகுதி, வியங்கோண் முற்று. குழுமல் - கூடல், கூட்டம், வியங் கோண்முற்று. கெழுவல் - அமைதல், கற்றல், நிறை தல், வியங்கோண்முற்று. எழுமை - உயர்ச்சி, எழுபிறப்பு. கெழுமை - கெழுமுதல், நிறம், வளமை. கொழுமை - கொழுப்பு, நிறம், வளமை. செழுமை - அழகு, கொழுப்பு, மாட்சிமை, வளமை. முழுமை - எல்லாம். தழும்பு - காயம், வடு. தொழும்பு - அடிமை. வழும்பு - நிணம். அழுவம் - அப்பவர்க்கம், அழுக்கு நிலம், கடல், துருக்கம், நடுக்கம், நாடு, பரத்தல், பெருமை, முரசு, வழுக்குநிலம். உழுவம் - எறும்பு. தொழுவம் - ஆனிலை, கொட்டகை, மாடு கெட்டுமிடம். பழுவம் - காடு. உழுவல் - உழுவேனென்னுமுற்று, குணம், முறைமை, விடாது தொடர்ந்த அன்பு. கழுவல் - கழுவுதல், வியங்கோண் முற்று. குழுவல் - கூட்டம், வியங்கோண் முற்று. கெழுவல் - நிறைதல், வியங்கோண் முற்று. தழுவல் - தழுவுதல், வியங்கோண் முற்று. நழுவல் - நழுவுதல், வியங்கோண் முற்று. வழுவல் - சாய்தல், தப்புதல், வியங் கோண்முற்று. உழுவை - புலி, வினைமுற்று. கிழுவை - ஓர்புண், ஓர்மரம். வழுவை - யானை. அழை - கூப்பிடென்னேவல். உழை - உழையென்னேவல், ஏழனு ருபு, (உ-ம். அவனுழை வந்தான்), சிரத்தாற் பிறக்குமிசை, மான், யாழினோர் நரம்பு, இடம், வாணன்மகள், வைகறை. கழை - கரும்பு, புநர்பூசம், மூங்கில். குழை - குண்டலம், குழைசேறு, குழையென்னேவல், தளிர், தொளையுடைப் பொருள். தழை - இலை, தழையென்னேவல், தளிர், பீலிக்குடை, மயிற்றோகை. நுழை - நுண்மை, நுழையென்னேவல். நுழை - வாயில், பலகணி. பிழை - குற்றம், பிழையென்னேவல். புழை - உட்டொளை, கதவு விட்டுப் புகுவழி, தொளையுடைப் பொருள். மழை - குளிர்ச்சி, நீர், மேகம். முழை - துடுப்பு, மலையினுட்குகை. வழை - சுரபுன்னை மரம். விழை - ஆசைகொள்ளென்னேவல். அழைக்கை - கூவுகை. இழைக்கை - இழைத்தல். தழைக்கை - தழைத்தல். பிழைக்கை - பிழைத்தல். இழைதல் - கலத்தல். குழைதல் - வாடல். தழைதல் - தளிர்தல். விழைதல் - ஆசைப்பெருக்கம். அழைத்தல் - வாவெனல். இழைத்தல் - கலப்பித்தல், செய்தல். உழைத்தல் - பேசலா லெழுமொலி, மிக முயலுதல். குழைத்தல் - குழைவித்தல், தளிர்த்தல். தழைத்தல் - தளிர்த்தல். நுழைத்தல் - நுழைவித்தல். பிழைத்தல் - உய்தல், பிழை செய்தல். மழைத்தல் - மழை பெய்தல். முழைத்தல் - எழுத்திலாவோசை. அழைப்பு - அழைத்தல். உழைப்பு - சுறுசுறுப்பு, பிரயாசம், முயற்சி. பிழைப்பு - சீவனம், தப்பல். உழையர் - ஏவல் செய்வோர், மந்திரிகள். கழையர் - வேழம்பர். பழையர் - கள்விற்போர், தொல்லோர். ள களகளெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. குளகுளெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. கொளகொளெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு. சளசளெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. தளதளெனல் - ஒளிக்குறிப்பு. பளபளெனல் - ஒளிக்குறிப்பு. மளமளெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு. அளகம் - நீர், பன்றிமுள், பெண் மயிர், மயிர்க்குழற்சி, பனிச்சை. களகம் - பெருச்சாளி. குளகம் - குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள், பல பாக்கூடிப் பொருண் முடியுஞ்செய்யுள், மரக்கால், ஆழாக்கு. பளகம் - பவளம், மலை. புளகம் - கண்ணாடி, சோறு, புடைப்பு, மயிர்சிலிர்த்தல். விளகம் - சேங்கொட்டை. அளகு - கார்த்திகை நாள், கூகையுங் கோழியுமல்லாப் புள்ளின் பெண் பொது, அன்னப்பெடை. குளகு - ஒருசார் விலங்குண்ணு மிலையுணவு. சுளகு - முறம், விசாகநாள். பளகு - குற்றம். பிளகு - பிளகு. மிளகு - மிரியல், திரிகடுகத் தொன்று. இளக்கம் - கீழ்மை. துளக்கம் - அச்சம், ஒளி, சோதிநாள். விளக்கம் - சந்திரனாள், தெளிவு. அளக்கர் - உப்பளம், கடல், கார்த் திகை நாள், குழைசேறு, நீள்வழி, பூமி. களக்கர் - புலையர், வேடர். அளக்கல் - அளவிடல், மதித்தல். இளக்கல் - இளக்குதல். கிளக்கல் - சொல்லல். துளக்கல் - ஒளிசெய்தல், விளங்கச் செய்தல். விளக்கல் - மினுக்குதல். துளங்கல் - ஒளிசெய்தல், வியங் கோண்முற்று. விளங்கல் - ஒளிசெய்தல், வியங் கோண்முற்று. அளத்தல் - அளவிடல். கிளத்தல் - எழும்பல், சொல்லுதல், வியங்கோண்முற்று. பிளத்தல் - அறுத்தல், போழ்தல். அளப்பு - அலப்பு, ஊழ். களப்பு - கள்ளம், கடலிடைப் பறவைத் திடர். கிளப்பு - சொல், கிளப்பென்னேவல். பிளப்பு - வெடிப்பு. மிளப்பு - இலவுங்கம். இளமை - இளையதன்மை, உன் மத்தம். வளமை - உபகாரம், கொழுப்பு, மாட்சிமை. அளம் - உப்பளம், கூர்மை, நெருக்கம். உளம் - கருத்து, மனம், உள்ளம். களம் - இடம், களர், களர்நிலம், கறுப்பு, நெற்களம், போர்க்களம், மனைவி, மிடறு, விடம். குளம் - தடாகம், நுதல், வெல்லம். சளம் - பொய், வஞ்சனை, மூர்க்கம். தளம் - இலை, உப்பரிகை, சாடி, சாந்து, கனம், படை, பூவிதழ். நளம் - அகலம், தாமரை. புளம் - அண்ணம், குதிரை நடையி னொன்று. வளம் - அழகு, பலபண்டம், மாட்சிமை, வலி. கிளம்பல் - எழும்பல், வியங்கோண் முற்று. தளம்பல் - ததும்பல், நடுங்கல், வியங் கோண்முற்று. விளம்பல் - சொல்லல், வியங்கோண் முற்று. கிளம்பு - வெளிப்படென்னேவல். குளம்பு - விலங்குகளி னிரட்டை யாகவு மொற்றையாகவு மிருக்குங் காலடி. நுளம்பு - மின்மினி. களரி - கருமை, களர்நிலம், காடு, கூட்டம், பாழ்நிலம், போர்க்களம், மிடறு. முளரி - ஓமவிறகு, கடைக்கொள்ளி, காடு, தாமரை, நுண்மை, நெருப்பு, முட்செடி, விறகு. விளரி - இளமை, நெஞ்சாற் பிறக்கு மிசை, நெய்தனிலத்தி யாழ், மிகுதி, யாழிலோர் நரம்பு, வேட்கை. அளர் - சேற்றுநிலம். கிளர் - ஒளி, கிளரென்னேவல், பூந்தாது. விளர் - இளமை, கொழுமை, நிணம், வெண்மை. உளர்தல் - சிந்தல், தடவல். கிளர்தல் - உயர்தல், கிண்டல், நிi றதல், ஒளி செய்தல். தளர்த்தல் - தளர்ச்சி, வயது முதிர்தல். வளர்தல் - உயர்தல். களவம் - கலப்பு. தளவம் - முல்லைக்கொடி. துளவம் - துளசி. அளவர் - அளப்பவர், உப்பமைப் போர். களவர் - கள்ளர். அளவல் - எட்டுதல், கலத்தல். இளவல் - இளையோன், தம்பி. அளவன் - அளக்கிறவன். இளவன் - கோரபாஷாணம். களவன் - கற்கடகவிராசி, கள்ளன். வளவன் - சோழன். அளவி - நெருங்கி, கலந்து. கிளவி - சொல். குளவி - ஓர்வகைவண்டு, மலைப் பச்சை. அளவு - அளவை, வரை, மடங்கு, பிரமாணம், வரையறை. உளவு - இரகசியமாயறிதல். களவு - உன்மத்தம், களாச்செடி, திருட்டு. வளவு - வீட்டிறப்பு. அளவு - வரையறை. தளவு - முல்லைக்கொடி. பிளவு - பிளத்தல். முளவு - முட்பன்றி. விளவு - கமர், விளவென்னேவல், விளாமரம். அளவை - அளவு, எல்லை, நாள். புளவை - விரணம். அளறுதல் - தெறுதல், பிளத்தல். உளறுதல் - தடுமாறிப்பேசல், பிதற்றல். கிளறுதல் - கலத்தல், கிண்டல், வெளியாக்கல். குளறுதல் - உளறுதல். களன் - இடம், உன்மத்தம், ஒலி, மருத நிலம். நளன் - முதலெழு வள்ளலி லொரு வன். வளாகம் - இடம், சூழ்ந்திடல், தினைப்புனம். விளாகம் - போர்க்களம். அளாவல் - ஓங்கியிருத்தல், கலத்தல், வியங்கோண்முற்று. வளாவல் - கலத்தல், வளைத்தல், விளைவு, வியங்கோண்முற்று. விளாவல் - கலத்தல், வியங்கோண் முற்று. அளி - அளித்தலைச் செய்யென் னேவல், அன்பு, கள், காய், குளிர்ச்சி, கொடை, மது, வண்டு. இளி - இகழ்ச்சிக்குறிப்பு, இணக்கம், சிரிப்பு, நெற்றியிற் பிறக்குமிசை, யாழிலோர் நரம்பு. உளி - ஏழனுருபு (உ-ம்: அவனுளி வந்தான்), ஓர்வகைக் கருவி. ஒளி - ஒளிப்பிடம், ஒளியென்னேவல், சந்திரன், சூரியன், நெருப்பு, புகழ், விண்மீன், விளக்கு, வெயில். களி - களிப்பு, களியென்னேவல், கள், குழம்பு, செருக்கு, மயக்கம். கிளி - கிள்ளை. குளி - குளிப்பு, குளிப்பென்னேவல். சளி - கோழை, சலதோஷம், நீரேற் றம், பிசின். சுளி - புளியாரை. துளி - துளியென்னேவல், பெண் ணாமை, மழை, மழைத்துளி. தெளி - தெளித்தல், உணரென் னேவல். தொளி - சேறு. நளி - அகலம், குளிர்ச்சி, கூட்டம், செறிவு, தேள், பெருமை. நெளி - கைவிரலணி, நெளியென் னேவல். புளி - ஓர்வகைச்சுவை, புளியமரம், புளியென்னேவல். முளி - மர முதலியவற்றின் கரடு, முளியென்னேவல். வளி - காற்று, சூறைக்காற்று. விளி - எட்டாம் வேற்றுமை, விளி யென்னேவல். வெளி - ஆகாயம். களிகை - இளம்பூ வரும்பு. குளிகை - மாத்திரை. தளிகை - உண்கலம். எளிஞர் - எளியர். புளிஞர் - வேடர். களிதம் - வழுக்கல். கெளிதம் - பெருங்கல். பளிதம் - ஓர்வகையெண், கருப்பூரம். புளிதம் - ஊண். அனிதல் - கனிதல். சுளிதல் - கோபித்தல். தெளிதல் - ஆராய்தல், துளைத்தல், தெளிவு. நெளிதல் - வளைதல். விளிதல் - கெடுதல், சாதல், மறிதல். அளித்தல் - ஈதல், காத்தல், நெருங் கல், பாதீடு. இளித்தல் - இனியென்னுஞ் சுரத்தை யுண்டாக்கல், அவமதித்தல், சிரித் தல், பரிகாசஞ் செய்தல், பல்லைக் காண்பித்தல். ஒளித்தல் - பதுங்கல், கரத்தல். களித்தல் - மதர்த்தல். குளித்தல் - நீராடல். கெளித்தல் - நெளிதல். சளித்தல் - புளிப்பாதல். சுளித்தல் - கோபம், சினக்குறிப்பு. துளித்தல் - மழை பெய்தல். தெளித்தல் - ஒலித்தல், கொழித்தல், துப்புரவாக்கல், தூவல், விதைத்தல். நெளித்தல் - நெளிதல். புளித்தல் - நெருங்கல், புளிப்பு. முளித்தல் - காய்தல், வறத்தல். விளித்தல் - அழைத்தல். வெளித்தல் - தெளிதல். அளிந்தம் - கோபுரவாயிற்றிண்ணை. புளிந்தம் - ஓர்வகைத் தேயம். அளிப்பு - சிருட்டிப்பு. இளிப்பு - இழிவு, நிந்தை. ஒளிப்பு - மறைப்பு. களிப்பு - இன்பம், உள்ளக்குறிப்பு. குளிப்பு - குளித்தல். கெளிப்பு - நெளிவு. சலிப்பு - புளிப்பு சுளிப்பு - சினக்குறிப்பு. துளிப்பு - துளித்தல். தெளிப்பு - விதைப்பு, தெரிப்பு. புளிப்பு - ஓர்வகைச்சுவை. களிமம் - எலி. தளிமம் - அழகு, மக்கட்படுக்கை, மெத்தை. களிம்பு - மலினம். விளிம்பு - கண்ணிமை, கரை. உளியம் - கரடி. குளியம் - உண்டை, புலி. அளியர் - அன்புடையோர். எளியர் - தரித்திரர். குளிர் - அச்சக்குறிப்பு, கர்க்கடக விராசி, கவண், குளிர்ச்சி, சூலம், ஞண்டு, பனிக்காற்று, மழு, மீனொழுக்க, முழவு, வெற்றிலை, மூக்கரிகத்தி. ஞெளிர் - உள்ளோசை, ஒலி. தளிர் - தழை, தளிரென்னேவல். துளிர் - தளிர், துளிரென்னேவல். தெளிர் - உள்ளோசை. நளிர் - குளிர், நண்டு, பெருமை. நெளிர் - பேசலா லெழுமொலி. மிளிர் - பெருமை, மிளிரென்னேவல். ஒளிர்தல் - பிரகாசித்தல். தெளிர்தல், நெளிர்தல் - பேசலா லெழுமொலி. மிளிர்தல் - ஒளிர்தல். தளிர்த்தல் - துளிர்த்தல். துளிர்த்தல் - தளிர்த்தல். பிளிர்த்தல் - கொப்புளித்தல். சுளிவு - கோபம், சினக்குறிப்பு, சினம். தெளிவு - அறிவு, துணிவு, தெளிதல். விளிவு - கோபம், சாவு. குளிரல் - எழுத்திலாவோசை, ஒளித் தல், பேசலா லெழுமொலி, வியங்கோண்முற்று. பிளிறல் - ஒலித்தல், தீண்டல், பேச லாலெழுமொலி, வியங்கோண் முற்று. களிறு - அத்தநாள், ஆண்சுறா, ஆண் பன்றி, ஆண்யானை, விலங்கி ணான் பொது. குளிறு - ஒளி, குளிரென்னேவல். கெளிறு - கெளிற்றுமீன். பிளிறு - ஆரவாரம், எழுத்திலா வோசை, சேறு, பிளிறென்னேவல். மிளிறு - கரடி. வெளிறு - அறிவின்மை, நறுவிலி மரம், வயிரமில்லாமரம், வெண்மை. நளினம் - தாமரை. புளினம் - மணற்குன்று, மணற் றிட்டை. அளை - குழையென்னேவல், தயிர், புற்று, மலைக்குகை, மோர், வளை. இளை - இளமை, இளைத்தலைச் செய்யென்னேவல், காவற்காடு, தலைக்காவல், மேகம், வேலி. உளை - ஆண்மயிர், உளையென் னேவல், ஒலி, குதிரைக் கழுத்தி லணியும் மயிர், பிறமயிர், பேச லாலெழுமொலி, சேறு. களை - அயர்வு, அழகு, களையென் னேவல், குற்றம். கிளை - உறவு, ஓர் வகைப்பண், கிளையென்னேவல், கைக்கிளை யெனு மிசை, தளிர், மரக்கிளை, மூங்கில். கொளை - இசைப்பாட்டு. சுளை - பலா பாகற்பழ முதலிய வற்றிற் குரித்து. தளை - ஆண்மயிர், கால்விலங்கு, காற் சங்கிலி, காற்சிலம்பு, தளை யென் னேவல், யாப்புறுப்பு. திளை - தோயென்னேவல். துளை - துவாரம். தொளை - துவாரம், தொளையென் னேவல், மூங்கில், வாயில், உட்டுளை. நளை - ஏலத்தோல். நுளை - குருடு, ஈனம். நொளை - ஈனம். பளை - வளை. மிளை - காவற்காடு. முளை - அங்குரம், தண்டாயுதம், தறி, மகன், முளையென்னேவல், மூங்கில். வளை - கங்கணம், கைவளை, சக்க ரம், சங்கு, நுழை வளை, வளை யென் னேவல். விளை - கொல்லை, புன்செய், ஒரு மீன். இளைஞர் - இளையோர். களைஞர் - சண்டாளர். கிளைஞர் - தோழர், மருதநில மாக்கள். விளைஞர் - மருதநிலமாக்கள். அளைதல் - கலத்தல், குழைவு. உளைதல் - நோதல். களைதல் - களைகட்டல், கொல்லல். தளைதல் - பிணித்தல். வளைதல் - வட்டமாதல். விளைதல் - உண்டாதல். இளைத்தல் - மெலிதல். உளைத்தல் - அழைத்தல், ஒலித்தல். களைத்தல் - இளைப்புறல். கிளைத்தல் - கிண்டல், நிறைதல், நெருங்கல். திளைத்தல் - அனுபவித்தல், நிறை தல், நெருங்கல், பெருகுதல். தொளைத்தல் - தொளைக்குதல். முளைத்தல் - முளைக்குதல், தோன்றல், அரும்புதல். வளைத்தல் - கட்டல், தடுத்தல், வளைக்குதல், வாருதல். விளைத்தல் - உண்டாக்கல். அளைவு - குழைவு. வளைவு - வளைதல். விளைவு - மேகம், வயல், விளைதல். அள் - அள்ளென்னேவல், கன்னம், காது, கூர்மை, நெருக்கம், பற் றிரும்பு. உள் - உள்ளிடம், ஏழனுருபு (உ-ம். ஊருளிருந்தான்), நினையென் னேவல், மனம், உட்புறம். எள் - திலம், எள்ளென்னேவல். ஒள் - அழகு, ஒளி, நல்ல, மேன்மை. கள் - களவு, கள்ளென்னேவல், பொய், மது. கிள் - கிள்ளென்னேவல். கொள் - ஓர்வகைப்பயறு, கொள் ளென்னேவல். சுள் - அற்பம், உறைப்பு, மெல்லிது. தெள் - தெள்கு, தெள்ளென்னேவல். நள் - உச்சிப் பொழுது, திருவோ ணம், நடு, நள்ளென்னேவல். நுள் - கிள்ளு. பள் - ஒரு சாதி, ஒரு நூல். புள் - அவிட்டநாள், பறவைப் பொது, வண்டு. முள் - நுண்மை, முள். வள் - காது, கூர்மை, நெருக்கம், வலி, வளம், வார், வாளுறை, வாள். உள்கல் - நினைத்தல், வியங்கோண் முற்று. எள்கல் - நிந்தித்தல், வியங்கோண் முற்று. நொள்கல் - அச்சக்குறிப்பு, முகத்தல், வியங்கோண்முற்று. வெள்கல் - அச்சக்குறிப்பு, முகத்தல், வியங்கோண்முற்று. வெள்கல் - அச்சம், வியங்கோண் முற்று, வெட்கம். உள்ளம் - கருத்து, மனம், முயற்சி. கள்ளம் - குற்றம், பொய். குள்ளம் - குறுமை. கொள்ளம் - குழைசேறு. தொள்ளம் - சேறு, தெப்பம். பள்ளம் - ஆழம், குழி. புள்ளம் - வலி. மள்ளம் - கொடுவாள். வள்ளம் - ஒரு மரத்திற் றோன்றிய சிறுதோணி, மரக்கால், வட்டில். வெள்ளம் - ஓர்வகையெண், கடல், நீர்ப் பெருக்கு, மிகுதி. கள்ளர் - திருடர். குள்ளர் - குறுகியோர். பள்ளர் - உழவர். மள்ளர் - உழவர், குறிஞ்சிநில மாக் கள், திண்ணியர், படைவீரர். அள்ளல் - அள்ளுதல், குழைசேறு, நரகம், வியங்கோண்முற்று. உள்ளல் - உள்ளான்குருவி, நினைத் தல், வியங்கோண்முற்று. எள்ளல் - நகை, நிந்தை, வியங் கோண்முற்று. கள்ளல் - களவு, கள்ளுண்ணல், வியங்கோண்முற்று. கிள்ளல் - கிள்ளுதல், வியங்கோண் முற்று, தள்ளல், இழிவாகப்பேசல். கொள்ளல் - வாருதல், ஏற்றல் மனதிலே பிடித்தல், வாங்கல், வியங்கோண்முற்று. சள்ளல் - அபானவாயுபறிகை, சிக்கல், சேறு, சாரமற்றது. சுள்ளல் - சுள்ளி, பருமையற்றது. சொள்ளல் - குறைவு, வித்தை. ஞெள்ளல் - உடன்படல், ஒலித்தல், சீக்கிரம், சோர்வு, தெரு, பள்ளம், மிகுதி, மேன்மை, வியங்கோண் முற்று, வீதி. தள்ளல் - தள்ளுதல், வியங்கோண் முற்று. துள்ளல் - ஆடு, கலிப்பாவோசை, குதித்தல், கூத்து, கொசுகு, துளைத் தல், வியங்கோண்முற்று. தெள்ளல் - கொழித்தல், தெளிதல், வியங்கோண்முற்று. நள்ளல் - நள்ளல், வியங்கோண் முற்று. நுள்ளல் - நோன்றல், கிள்ளல். நொள்ளல் - நுளம்பு, குருகு. பிள்ளல் - பிரியல். புள்ளல் - புடையாதல். பொள்ளல் - அப்பவர்க்கம், பொலிதல், வியங்கோண்முற்று. மள்ளல் - வலி. மொள்ளல் - முகத்தல், வியங்கோண் முற்று. வள்ளல் - வரையாது கொடுப்போன், வளம். விள்ளல் - சொல்லல், தழுவல், மலர் தல், வியங்கோண்முற்று, வேறு படல். உள்ளார் - உள்ளவர், பகைவர். கொள்ளார் - பகைவர். நள்ளார் - பகைவர். அள்ளி - எடுத்து. உள்ளி - நினைத்து. எள்ளி - நகைத்து. கள்ளி - ஓர்வகைமரம், திருடி. கிள்ளி - சோழன், வினையெச்சம். கொள்ளி - நெறுப்பு, விறகு. சுள்ளி - அனிச்சம், ஆச்சாமரம், ஞாழல், மாமரம். தள்ளி - வேறாக்கி. தெள்ளி - யானை, வினையெச்சம். தொள்ளி - சேறு, குழை. நள்ளி - உறவு, கடையெழுவள்ளலி லொருவன், கர்க்கடகவிராசி, ஞண்டு. நுள்ளி - கிள்ளுதல்செய்து. பள்ளி - அறச்சாலை, ஓர்வகைச் சாதி, சிற்றூர், தேவர் கோயில், நித்திரை, மக்கட்படுக்கை, மருத நிலத்தூர், முனிவர் வாசம். புள்ளி - இலக்கப்புள்ளி, ஒற்றெ ழுத்து, ஞண்டு, பல்லி, பொறி, மதிப்பு. முள்ளி - ஓர்வகைச் செடி. வள்ளி - ஆபரணம், ஓர்வகைக் கூத்து, ஓர்வகைக் கொடி, கைவளை, படர் கொடி, பிரப்பங் கேடகம். வெள்ளி - சுக்கிரன், வெண்பொன், வெண்மை. உள்ளியோன் - விருப்பமுடையவன், மனனஞ்செய்பவன். ஒள்ளியோன் - ஒளிசெய்வோன், சுக்கிரன். தெள்ளியோன் - தெளிந்தவன், ஞானி. வள்ளியோன் - வரையாது கொடுப் போன். அள்ளு - அள்ளென்னுமேவல், கூர்மை, பற்றிரும்பு. உள்ளு - உள்ளான், விரும்பென்னேவல். கள்ளு - மது, தேன். சள்ளு - கலகம், சண்டை. பள்ளு - ஓர்வகைச் சாதி, பள்ளுப் பாட்டு. அள்ளுதல் - அள்ளல். உள்ளுதல் - நினைத்தல். எள்ளுதல் - இகழ்தல். கள்ளுதல் - திருடல். கிள்ளுதல் - துள்ளல். கொள்ளுதல் - ஏற்றல், வாங்கல். தள்ளுதல் - விட்டுவிடுதல், இடங் கொடுத்தல். துள்ளுதல் - குதித்தல். தெள்ளுதல் - கொழித்தல். தொள்ளுதல் - துளைத்தல். நள்ளுதல் - நட்புக்கொளல். நுள்ளுதல் - கிள்ளுதல். நொள்ளுதல் - விழுங்குதல். பிள்ளுதல் - போழுதல், வெடித்தல். மொள்ளுதல் - முகத்தல். விள்ளுதல் - பேசுதல். ஞெள்ளெனல், பொள்ளெனல் - அனு கரணவோசை. அள்ளை - பிசாசம். கிள்ளை - கருங்கிளி, கிளி, குதிரை, பத்திரிசாதி. கொள்ளை - ஒரு நோய், கொள்ளை யிட்டல், பொருள், கொள்ளை யிடுதல், மிகுதி. சள்ளை - அல்லல், இடுப்பு, தொந் தரவு. சுள்ளை - மட்கலஞ்சுடுசூளை, காள வாய், சூளை. சொள்ளை - சொட்டு, பழுதுபட் டது, புழுவரித்தது. தள்ளை - மாதா. தொள்ளை - தொளை, தொளை யுடைப் பொருள், மரக்கலம். நொள்ளை - குருடு, நாகரவண்டு. பள்ளை - ஆடு, வெள்ளாடு, குள்ளம், வயிறு. பிள்ளை - அன்றிற்குஞ்சு, இளமை யோன், கரிக்குருவி, குரங்காதி கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை, தெங்கின்கன்று, நாகண வாய்ப்புள், பறவைக் குஞ்சு, பன்றிக்குட்டி, பூனைக்குட்டி, மகன், மரக்கன்று, மான்குட்டி, முயற்குட்டி, வைரவன். வள்ளை - உலக்கையோச்சித் தந் தலைவன் வளங்கூறி மகளிர் பாடுவது, ஓர்வகைக் கொடி. வெள்ளை - சங்கு, பலபத்திரன், வெண்பா, வெண்மை, வெள்ளாடு, வெள்ளி. ற இறகர் - இறகு. சிறகர் - சிறகு. இறகு - சிறகு. சிறகு - இறகு. பிறகு - பின்புறம். விறகு - காட்டம். இறக்கம் - பள்ளம், தாழ்வு, இறங்கு துறை, சரிவு, சாய்வு. உறக்கம் - நித்திரை, ஒடுக்கம், மரணம். திறக்கம் - திறக்குதல். துறக்கம் - தேவலோகம். பிறக்கம் - அச்சம், மரக்கொம்பு. இறங்கல் - இழிதல், வியங்கோண் முற்று. உறங்கல் - நித்திரை செய்தல், வதங்கல், வியங்கோண்முற்று. கறங்கல் - ஒலித்தல், கழலல், பேய், வளைதடி, வியங்கோண்முற்று. பிறங்கல் - உயர்ச்சி, ஒலித்தல், சிறுமலை, நிறைதல், பெருமை, மலை, மிகுதி, வியங்கோண் முற்று. உறங்கு - துயிலல், துயிலென்னேவல். கறங்கு - கறங்கென்னேவல், காற் றாடி, கழற்சி. குறங்கு - தொடை. பிறங்கு - பிறங்கென்னேவல், விர லிறை. கறடு - சிறுகுன்று. குறடு - ஒர்வகைக் கருவி, திண்ணை, பலகை, மரத்துண்டு. சறடு - பின்னற்கொடி, ஓரணி. இறத்தல் - சாதல், நடத்தல், மிகுதி, கடத்தல், அழிதல். கறத்தல் - பால்கறக்குதல். சிறத்தல் - சிறப்பு, மேன்மை. திறத்தல் - திறக்குதல். துறத்தல் - துறவு, நீங்கல். பறத்தல் - பறக்குதல். பிறத்தல் - பிறப்பு. மறத்தல் - பொச்சாப்பு, மறதி. வறத்தல் - காய்தல், முதிர்ந்திடல், சுருங்கல். விறத்தல் - நெருங்கல், அஞ்சுதல். குறத்தி - குறிஞ்சிநிலப் பெண். பிறத்தி - அந்நியம். மறத்தி - பாலைநிலப்பெண், வினை முற்று. இறந்தோர் - சென்றோர், மரித்தோர். சிறந்தோர் - உறவோர், மேன்மை யுள்ளோர். துறந்தோர் - நீத்தோர், முனிவர், துறவிகள். இறப்பு - சாவு, போக்கு, மிகுதி, வளைவு. கறப்பு - கறத்தல். சிறப்பு - மிகுதி, விசேடம். பிறப்பு - அச்சம், உற்பத்தி, நெருக்கம். மறப்பு - மறதி. விறப்பு - அச்சம், நெருக்கம், பெருக் கம், போர், வெற்றி. அறம் - தருமம், நூற் பயனான்கி னொன்று, நல்வினை, புண்ணியம், உறுதி, ஒழுக்கம். குறம் - ஓர்வகைச் சாதி, குறி. திறம் - காரணம், குணம், குறை நரம்புள வீணை, கூறுபாடு, வலி, பக்கம். நிறம் - ஒளி, குணம், மார்பு, வண்ணம். பிறம் - அந்நியம். புறம் - ஏழனுருபு (உ-ம். செல்லு மென்னுயிர்ப் புறத்திறுத்த மருண் மாலை), பக்கம், பின்புறம், மதில், முதுகு, வீரம். மறம் - கொலை, கோபம், சினம், நமன், பாவம், பிணக்கு, வலி, வீரம். முறம் - புடைக்குமுறம், விசாகநாள். இறலி - இத்தி மரம். திறலி - வீரன். மறலி - நமன், மயக்கம். விறலி - பதினாறு வயதுப்பெண், பாடன் மகடூஉ. திறலோன் - திண்ணியன். மறலோன் - கொலைசெய்வோன். விறலோன் - அருகன், திண்ணியன். அறல் - அறுதல், கருமணல், சிறு தூறு, நீர், புனற்றிரை, வியங் கோண்முற்று. இறல் - இறுதல், கிளிஞ்சில், கேடு, வியங்கோண்முற்று. உறல் - கிட்டல், வருதல், வியங் கோண்முற்று. சறல் - விறகு. சிறல் - பகை, போர், வலி. திறல் - வலிமை. பெறல் - அடைதல், கிடைத்தல், வியங்கோண்முற்று. மறல் - எழுச்சி, ஒர்வகைக்கூத்து, காலன், குற்றம், சாதல், தரித்திரம், நமன், பகை, பிணங்கு, போர், மயக்கம், மறதி, வியங்கோண் முற்று. மிறல் - பெருமை. விறல் - பெருமை, வலி, வீரம், வெற்றி. சுறவம் - ஓர் மீன். நறவம் - அனிச்ச மரம், குங்கும மரம், ஞாழல், தேன், வாசனை. புறவம் - காடு, குறிஞ்சிநிலம், புறா, முல்லைநிலம். அறவர் - பெரியோர், முனிவர். குறவர் - குறிஞ்சிநிலமாக்கள், வேடர். துறவர் - முனிவர். மறவர் - படைவீரர், பாலைநில மாக்கள், வேடர். அறவன் - புத்தன். குறவன் - ஒரு சாதியான், வேடன். மறவன் - ஒரு சாதியான், சிலேஷ்மம். அறவி - கற்புள்ளவன், தரும தேவதை. உறவி - உயிர், உலைக்களம், உறவு, ஊற்று, எறும்பு, கிணறு. துறவி - முனிவன். பிறவி - சனனம், பிறப்பு. மறவி - ஈனன், கள், மறதி. இறவு - இறப்பு, இறால். உறவு - சுற்றம். சுறவு - சுறா, மகரராசி. திறவு - திறத்தல். துறவு - துறத்தல். நறவு - கள், தேன். புறவு - கள், குங்குமம், தேன், வாசனை. புறவு - குறிஞ்சி, நிலம், புறா, முல்லை நிலம். அறவை - அநாதப் பிணம், தருமம். இறவை - ஏணிக்கூடை. கறவை - பான்மாடு. குறவை - ஓர்வகை மான். பறவை - அவிட்டநாள், புள், புள் ளிறகு. அறவோர் - துறவோர், பார்ப்பார், முனிவர். உறவோர் - சுற்றத்தோர், நண்பர். குறவோர் - வேடர், குறிஞ்சிநில மாக்கள். துறவோர் - நீத்தோர். உறழ்தல் - உவமித்தல், எண்கூட்டிப் பெருக்கல். பிறழ்தல் - ஒளி செய்தல், சொல்லுதல், நடுக்கம், வெறுப்பு, வேறாகப் போதல். குறளை - குள்ளம், கோட்சொல்லல். பறளை - பற்றிரும்பு. அறன் - தருமம். திறன் - காரணம், குணம், கூறுபாடு. நிறன் - ஒளி, வண்ணம், மார்பு, தேசசுடையவன். புறன் - புறம், முதுகு. கறா - காடைக்குரல். சுறா - மகரமீன், மகரராசி. ஞறா - மயிற்குரல். நறா - கள், வாசனை. புறா - புறவு. இறார் - இறான்மீன், கடன் கொடா தவர். உறார் - பொருந்தார். சிறார் - சிறுவர். அறி - அறிவு, அறியென்னேவல். உறி - சிக்கம், சிதர், சிமிலி, தூக்கு, உறியென்னேவல். கறி - கறி, கறியென்னேவல், மிளகு. கிறி - பொய், வழி. குறி - அடையாளம், குறிப்பு, குறி யென்னேவல், எண்ணம். கொறி - கொறியென்னேவல், செம் மறியாடு, மேடவிராசி. செறி - செறியென்னேவல், நெருக்கம். சொறி - செறியென்னேவல், தினவு. தறி - கட்டுத்தறி, தறியென்னேவல், தூண், நெய்வார்கருவி, வெட்டு, கோடாரி. தெறி - சிதறுகை. நெறி - செவ்வை, நீதி, நெறியென் னேவல், வழி, ஒழுங்கு, கற்பு. பறி - பறியென்னேவல், பொன், மீன் படுக்குங் கருவி, மீன் பெய்யுங் கருவி. பொறி - அடையாளம், அறிவு, இலக்குமி, எழுத்து, ஐம்பொறி, செல்வம், தேமல், தோணி, புள்ளி, பொலிவு, பொறியென் னேவல், மதிலுறுப்பு, முத்திரை, விரலிறை. மறி - அழுங்கு, ஆடு, குதிரை, மானி வற்றின் குட்டி, மறியென் னேவல், மான், மேடவிராசி. முறி - இலை, எழுதுமுறி, தளிர், முறியென்னேவல். வெறி - அச்சம், ஆடு, கலக்கம், கள், சீக்கிரம், நாற்றம், பிசாசம், வெறி யென்னேவல், வேலனாடல். அறிகை - அறிதல், அறிவு. தறிகை - உளி, தறி, தறிதல். அறிஞர் - அறிவுடையோர், புலவர், முனிவர். வறிஞர் - தரித்திரர். அறிஞை - ஓடதி. அறிதல் - அறிகை, தெரிதல். உறிதல் - உறிஞ்சுதல். எறிதல் - அடித்தல், குத்தல், வெட் டல், விலக்கல், வீசுதல். செறிதல் - குளித்தல், நெருங்கல், மிகுதி. சொறிதல் - அரிதல், பிறாண்டல். தறிதல் - வெட்டல், துணிவுறல். நொறிதல் - விரைவு. பறிதல் - வெளிப்படல். பிறிதல் - நீங்குதல். பொறிதல் - சதுக்குதல். மறிதல் - மடங்கல். முறிதல் - ஒடிதல். வெறிதல் - நெருங்கல். குறிது - குறுமையுடையது. சிறிது - சிறுமையுடையது. பிறிது - வேறு. வறிது - அறியாமை, சிறுமை, பய னின்மை. வெறிது - அறிவின்மை. எறித்தல் - ஒளிவீசல். கறித்தல் - கடித்தல், புசித்தல். குறித்தல் - கருதல், மதித்தல். கொறித்தல் - கொறுக்குதல். செறித்தல் - பாதீடு, பெயர்தல். சொறித்தல் - அழித்தல், கொல்லல், நெறித்தல், பாதீடு, மூழ்கல். தறித்தல் - வெட்டல். தெறித்தல் - தெறிக்குதல். நெறித்தல் - செவ்வேநிற்றல். பறித்தல் - களைதல், கள்ளல். பிறித்தல் - பாகஞ் செய்தல். பொறித்தல் - எழுதல், சித்திரமெழுதல். மறித்தல் - தடுத்தல். முறித்தல் - ஒடித்தல். வெறித்தல் - மயக்குறல். அறிப்பு - அறிவிப்பு. எறிப்பு - ஒளிசெய்தல், கோடை, வெயிலெறிக்கை. குறிப்பு - அடையாளம், சைகை, நினைப்புக் கெழுதின கணக்கு. கொறிப்பு - கொறிக்குதல். தறிப்பு - தறித்தல். தெறிப்பு - சுண்டுகை. பொறிப்பு - பொறித்தல். மறிப்பு - தடுப்பு, திருப்பு. முறிப்பு - பத்தியந்தீர்வு. வெறிப்பு - மயக்கம். குறியர் - குள்ளர். சிறியர் - கீழ்மக்கள். பறியர் - வலைஞர். முறியர் - விற்றற்குரிய வடிமைகள். வறியர் - தரித்திரர். வெறியர் - பூதகணர், மயக்கமுடைய வர். அறியல் - அறிதல். மறியல் - சிறை, தடை. நெறியிலார், பொறியிலார் - கீழ்மக் கள். அறிவு - அறிதல், கல்வி. செறிவு - நெருக்கம், மிகுதி. முறிவு - முறிதல். உறு - உறுவென்னேவல், மிகுதி. கறு - கோபம். கிறு - நிகழ்கால இடைநிலைச் சொல். சிறு - அற்பமான. செறு - சிறுவயல், செறுவென் னேவல், வயல். துறு - துறுகல், துறுவென்னேவல். தொறு - அடிமை, கூட்டம், தொழிற் பயில்வுப் பொருள் தருமிடைச் சொல், பசுக் கூட்டம், பொலிவு. நறு - நறுமை. மறு - குற்றம், மறுவென்னேவல், மாசு. வெறு - வெறுமை. உறுகணாளர் - தரித்திரர். தறுகணாளர் - படைவீரர். உறுகண் - அச்சம், தரித்திரம், துன்பம், நோய். தறுகண் - மறம். இறுகல் - அழுந்தல், வியங்கோண் முற்று. குறுகல் - அணுகல், குறைதல், வியங் கோண்முற்று. சறுகல் - சறுக்குதல். சிறுகல் - குறைதல், வியங்கோண் முற்று. தறுகல் - தடைபடல், வியங்கோண் முற்று. துறுகல் - ஓர்வகைக்கல், சலதாரை முதலியவடைக்குங்கல். மறுகல் - கழலல், வியங்கோண் முற்று. முறுகல் - கடுப்பு, திருகல், வியங் கோண்முற்று. அறுகு - ஆண்புலி, ஓர்வகைப்புல், சிங்கம், யாளி, யானை. குறுகு - குறுகென்னேவல். மறுகு - குறுந்தெரு, நெடுந்தெரு, மறுகென்னேவல். இறுக்கல் - இறுகச் செய்தல், உடுத் தல், வியங்கோண்முற்று. உறுக்கல் - கடத்தல், குதித்தல், கோபம், சினக்குறிப்பு, வியங் கோண்முற்று. கிறுக்கல் - எழுதல், கிறுக்குதல், வியங்கோண்முற்று. குறுக்கல் - குறைத்தல், வியங்கோண் முற்று. சறுக்கல் - வழுக்கல், வியங்கோண் முற்று. சிறுக்கல் - குறைத்தல், வியங்கோண் முற்று. பொறுக்கல் - பொறுக்குதல், வியங் கோண்முற்று. மறுக்கல் - கண்டித்தல், உடன் படாமை, வியங்கோண்முற்று. முறுக்கல் - முறுக்குதல், வியங் கோண்முற்று. குறுக்கை - ஒர்தலம். அறுக்கை - காவல், அறுத்தல். கறுக்கை - கோபித்தல். கொறுக்கை - உயிர்ப்பு, கொறுக்கை. வெறுக்கை - செல்வம், பொன், விழுப்பொருள். இறுங்கு - சோளம். நொறுங்கு - நொய், நொறுங்கென் னேவல். அறுதல் - அறுகை, கைம்பெண், தோசி. இறுகல் - ஒடிதல், கெடுதல். உறுதல் - சேர்தல், வருதல், அடைதல், உண்டாதல், கிடைத்தல், கூடல், சம்பவித்தல், சேர்தல், தங்கல். குறுதல் - குத்தல், தறித்தல். செறுதல் - கொல்லல், கோபித்தல். துறுதல் - நெருங்குதல். தெறுதல் - அழித்தல், தங்கல். பிறுதல் - பீற்றல். பெறுதல் - அடைதல், பிரசவித்தல். மறுதல் - மாறுதல். அறுதி - சாவு, முடிவு, கிரயம், வினை முற்று. இறுதி - சாவு, முடிவு, வினைமுற்று. உறுதி - கல்வி, நன்மை, வலி, பத்திரம். அறுத்தல் - ஈர்தல். இறுத்தல் - இறை யிறுத்தல், ஒடித் தல், சொல்லுதல், தங்கல், வெட் டல். உறுத்தல் - ஒற்றுதல், பயத்தல், வரு வித்தல். ஒறுத்தல் - அலைத்தல், நோய், செய் தல், வெறுப்பு. கறுத்தல் - கருநிறமாதல், கோபித்தல். குறுத்தல் - குறுகுதல். சிறுத்தல் - சிறிதாதல், சினத்தல். செறுத்தல் - வெறுப்பு, கொல்லல், கோபித்தல். துறுத்தல் - துறுக்குதல், நெருக்குதல். தெறுத்தல் - நெரித்தல். நிறுத்தல் - நிலைப்படுத்தல், நிறுக் குதல். நொறுத்தல் -அழித்தல். பொறுத்தல் - சுமத்தல், பொறை. மறுத்தல் - கொடாமை, நீக்கல், வெட்கம். வறுத்தல் - வறட்டல். வெறுத்தல் - கோபம், சினம். உறுத்தை - அணில். சிறுத்தை - சிறுபுலி. செறுநர், தெருநர் - பகைவர். தொறுநர் - அடிமைக்காரர். அறுப்பு - அறுத்தல், இட்சோ பிக்கை, மங்கிலியமழித்தல். இறுப்பு - இறுத்தல், குடியிறை, ஆவண ஓலை, கடன் செலுத்துகை. உறுப்பு - அவயவம், உடல், நெருக் கம், மரக்கொம்பு, மிகுதி. ஒறுப்பு - அறுமை, அகவிலையேற் றம், கடிவு, குறைவு, தண்டிப்பு. கறுப்பு - கறை, கோபம், சினக் குறிப்பு. செறுப்பு - கொலை, செற்றல். தறுப்பு - தருப்பு. துறுப்பு - தணிக்கை. நிறுப்பு - தாமதிப்பு, நிறுத்தல், வைப்பு, தகுதி, பாரம். மறுப்பு - மறுத்தல். வெறுப்பு - அச்சம், கலக்கம், சினம், செறிவு, துன்பம், வேண்டாமை. உறுமி - ஓர்வகைப் பறை, வினை யெச்சம். சிறுமி - பெண், மகள். குறுமை - சிறுமை, பாவம். சிறுமை - அற்பம், தரித்திரம், துன்பம், நோய். நறுமை - நன்மை, வாசனை. பொறுமை - பொறை. மறுமை - வருபிறப்பு. வறுமை - தரித்திரம். வெறுமை - ஒன்றுமின்மை. எறும்பி - யானை. குறும்பி - காதழுக்கு. அறும்பு - கொடுமை, பஞ்சகாலம். இறும்பு - குறுங்காடு, சிறுமலை, தாமரைப் பூ, தூறு, மலை, வண்டு. எறும்பு - உறவி, பிபீலிகை, பிலஞ்சு லோபம். குறும்பு - அரணிருக்கை, பாலை நிலத்தூர், போர், பொல்லாங்கு. செறும்பு - சலஞ்சாதித்தல், பனை முதலியவற்றின் செறும்பு. தறும்பு - நீரனை, வரம்பு. தொறும்பு - அடிமை. உறுவர் - முனிவர். சிறுவர் - மக்கள். தொறுவர் - இடையர். உறுவர் - உறுவேனென்னுமுற்று, துன்பம். கறுவல் - சினக்குறிப்பு, வியங்கோண் முற்று. துறுவல் - புசித்தல், வியங்கோண் முற்று. நிறுவல் - நிலை பெறுத்தல், வியங் கோண்முற்று. மறுவல் - கத்தூரி மிருகம். முறுவல் - எயிறு, சிரிப்பு. உறுவன் - அருகன், முனிவன், வினை முற்று. சிறுவன் - மகன். உறுவி - தவப்பெண். சிறுவி - மகள். மறுவி - கத்தூரிமிருகம். கறுவு - கறுவென்னேவல், சினக் குறிப்பு, சினம். செறுவு - வயல். தொறுவு - அடிமை, செய்தொழில், பசுக்கூட்டம். அறுவை - சித்திரைநாள், சீலை, வினைமுற்று. உறுவை - ஒளவைமுதலிய பெண் பானால் வருளொருத்தி, வினை முற்று. அறை - அடி, சொல், பறையடி யென்னு மேவல், எழுத்தினோசைச் சொல், சிற்றில், சொல், திரை, தூக்கங்கள், பறையடித்தல், பாறை, மலையுச்சி, முழைஞ்சு, அரங்கு. இறை - அரசன், இறகு, இறை யென்னு மேவல், உயர்ச்சி, உயர்ந் தோன், ஊழித்தீ, எப் பொருட்கு மிறைவன், கடன் குடியிறை, கை யிறை, சிவன், சிறுமை, தங்கல், தலை, திருமால், பிரமன், பெருமை, மூத்தோன், வருத்தம், வீட்டிறப்பு. உறை - ஆடையழுக் ககற்றுநீர், இடம், இறை, உயர்ச்சி, உறை யென்னேவல், ஓரிலக்கணக் குறிப்பு, காரம், நீளம், படைக் கூடு, பண்டம், பெய்யுறை, பாவிடுபிறை, மருந்து, மழை, மழைத்துளி, வாழ் நாள், விலங்குணவு, வெண்கலம். கறை - உதிரம், உரல், கறுப்பு, குடி யிறை, குற்றம், நிறம், மாசு. குறை - அரசிறை, குறையென்னேவல், குற்றம், தரித்திரம். சிறை - இடம், இறகு, காவல், சிறைச் சாலை, பக்கம், மதில். சுறை - கொத்தான். தறை - தரை. திறை - அரசிறை. துறை - ஆறு, இடம், நீர்த்துறை, பாவினத்தொன்று, வழி, இறங்கு துறை, எல்லை, காரியம், தங்கு மிடம், நூல். நறை - கள், குற்றம், நறும்புகை, வாசனை, தேன். நிறை - அழிவின்மை, எடை, துலாவி ராசி, நிறையென்னேவல், நீர்ச் சால், நூற்பலம், மாட்சிமை, முறையி னிலைமை, வரையறை. பறை - இறகு, சொல், பறை யென் னேவல், வாச்சியம். பிறை - சந்திரப்பிறை. பொறை - சலதாரை முதலிய வடைக் குங்கல், சுமை, பாரம், பூமி, பொறுமை, மலை. மறை - அடைக்கலம், இரகசியம், கேடகம், சொல், மந்திரம், மறை, மறையென்னேவல், வேதம். மிறை - அச்சம், குற்றம், வருத்தம். முறை - இடைச்சொல், ஒழுக்கம், குணம், பழமை, புத்தகம், முறைமை. வறை - துவட்டற்கறி, பிண்ணாக்கு. அறைதல் - அடித்தல், சொல்லல், பறையடித்தல், போதல். இறைதல் - கூவுதல், சிதறுதல், சிந்தல். உறைதல் - தோய்தல், வாசித்தல், இருத்தல், சஞ்சரித்தல், நிலம் பால் முதலியன இறுகுதல். குறைதல் - சிறுகல், சுருங்கல், தவறல், தேய்தல். தறைதல் - ஆணி, முதலியவற்றை யிறுக்கல், சடைதல், தைத்தல். துறைதல் - நெருங்கல். நிறைதல் - நிறைவு. பறைதல் - சொல்லல். மறைதல் - மறைவு, தோன்றாமற் போதல். இறைப்பு - இறைத்தல். உறைப்பு - காரம், கொடுமை. மறைப்பு - மறைவு. இறைமை - தலைமை, தெய்வத் தன்மை. முறைமை - ஒழுக்கம். அறையல் - சொல்லல். உறையல் - பிணக்கு. வறையல் - துவட்டற்கறி, பிண்ணாக்கு. உறைவு - இருத்தல், காவல், சிறை. குறைவு - ஈனம், வறுமை. நிறைவு - மாட்சிமை. மறைவு - மறைதல். அற்கம் - அலரி, குன்றி, தும்பை, துளசி, நந்தியாவர்த்தை, முருக்கு, வன்னி, வெள்ளெருக்கு, வேம்பு, காணிக்கை, திரவியம், விலை. உற்கம் - கடைக்கொள்ளி, தீத்திரள். ஒற்கம் - வறுமை, வெட்கம், அடக்கம். கற்கம் - பலவகை கூட்டிய மருந்து. சற்கம் - சகலம். தற்கம் - தருக்கம். துற்கம் - துருக்கம். பற்கம் - பிரபை. புற்கம் - எத்து, குறை. முற்கம் - பயறு, முற்கு. வற்கம் - குதிரைக்கயிறு. கற்கறி - கரகம், தயிர்கடையுந் தாழி. சற்கரி - சங்கித்தல். வற்கரி - கரகம். புற்கு - கபில நிறம், சிறுமை. முற்கு - முற்கம். உற்கை - கடைக்கொள்ளி, விண் மீன், விண்வீழ் கொள்ளி. கொற்கை - ஓரூர். புற்கை, விற்கை - ஒர் கூத்துக்கை. சற்சலம் - கூழ், தெளிநீர். வற்சலம் - கன்றுத்தாய்ப்பசு, தயை. அற்பம் - சிறுமை, நாய். கற்பம் - ஆயிரங்கோடி, உலக முடி யுங்காலம், தேவலோகம், பிரம னாயுள். கெற்பம் - கெருப்பம். சிற்பம் - சிற்பநூல். சுற்பம் - செம்பு. சொற்பம் - அற்பம். தற்பம் - மக்கட்படுக்கை, மனைவி, மேனிலை. பற்பம் - அட்டாதசபுராணத்தொன்று, தாமரை, நீறு. பொற்பம் - அழகு. வற்பம் - ஒறுப்பு, பஞ்சம், அருமை. சிற்பரன் - கடவுள். தற்பரன் - கடவுள், சிவன், திருமால், புரமன். மற்பரன் - மகதத்துவன். அற்பர் - கீழ்மக்கள். சிற்பர் - சித்திரகாரர். வெற்பர் - குறிஞ்சி நிலமாக்கள், வேடர், வேள். உற்பவம் - பிறப்பு. தற்பவம் - வடமொழியிற் றிரிந்த சொல். கற்பு - கல்வி, மகளிர் கற்பு, மதிலுண் மேடை, மதில், முல்லைக்கொடி. பொற்பு - அழகு, ஒப்பனை, பொலிவு, மிகுதி. வற்பு - உறுதி. வெற்பு - மலை. அற்புதம் - அதிசயம், அழகு. புற்புதம் - நீர்க்குமிழி. அற்றம் - அச்சம், இல்லாமை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு. குற்றம் - நோய், பிழை. கொற்றம் - அரசியல், வலி, வெற்றி. சுற்றம் - உறவு. செற்றம் - கோபம், சலஞ்சாதித்தல், சினம். பெற்றம் - இடபவிராசி, எருது, பசுச் சாதிப் பொது. முற்றம் - முன்றில். வெற்றம் - வெற்றி. உற்றல் - பொருந்தல். எற்றல் - இடித்தல், அறுத்தல், எறி தல், குத்தல், கொல்லல், வியங் கோண் முற்று, வெட்டல். ஒற்றல் - ஒற்றுதல், வியங்கோண் முற்று. கற்றல் - படித்தல். துற்றல் - நெரித்தல், பறித்தல், வியங் கோண் முற்று, நவித்தல், துப்பல். சுற்றல் - உடுத்தல், எழுச்சி, சூழ்தல், வியங்கோண் முற்று. செற்றல் - செறிவு, செறுத்தல். சொற்றல் - சொல்லல், வியங்கோண் முற்று. துற்றல் - உண்டல், குவிதல், நிறை தல், வியங்கோண் முற்று. தெற்றல் - அலைத்தல், மாறுபாடு, வியங்கோண் முற்று. நிற்றல் - நிலை. பற்றல் - ஆசைப்பெருக்கம், குறித்தல், தொடர்தல், பிடித்தல், வியங் கோண் முற்று. பிற்றல் - பிறகிடல். முற்றல் - காழ்க்கோடல், முடிவு, மூப்பு, வளைத்தல், வியங்கோண் முற்று. வற்றல் - வறத்தல், வியங்கோண் முற்று. விற்றல் - விற்குதல். அற்றார் - தரித்திரர், முனிவர். உற்றார் - உறவோர், சிநேகர். கற்றார் - அறிஞர். செற்றார் - பகைவர். பெற்றார் - தந்தைதாயார். ஒற்றி - நிலவடைமானம், வினை யெச்சம். குற்றி - தறி, வினையெச்சம். கொற்றி - துர்க்கை, பசுவிளங்கன்று, வடுகி. சொற்றி - சோறு. தெற்றி - சித்திரகூடம், திண்ணை, வினையெச்சம். நெற்றி - நுதல், படைவகுப்பு. பெற்றி - குணம். வெற்றி - சயம். சிற்றில் - குடிசை, சீலை. முற்றில் - சிறுமுறம், விசாகநாள். வெற்றில் - வெறுவீடு. அற்று - அத்தன்மைத்து, சாரியை, (உ-ம். பலவற்றுக்கோடு), வினை யெச்சம். இற்று - இத்தன்மைத்து, சாரியை, (உ.ம், பதிற்றுப்பத்து), வினை யெச்சம். எற்று - இரக்கக்குறிப்பு, எத்தன்மைத்து, எறிதல், எற்றென்னேவல். ஒற்று - ஒற்றென்னேவல், மெய் யெழுத்து. கிற்று - அவப்பொருள், மயக்கம். கொற்று - கொற்றுதல், கொற்றென் னேவல். சற்று - அற்பம். சுற்று - சுற்றென்னேவல், மதில், மதிற்சுற்று, வட்டமாயோடல். செற்று - நெருக்கம், வினையெச்சம். துற்று - சோறு, துறுகல், துற்றென் னேவல், நெருக்கம். தெற்று - தெற்றென்னேவல், தேற்றம். தொற்று - பொருந்தல், தொடர்ச்சி. நெற்று - பழமுதிர்ச்சி. பற்று - அன்பு, ஆசை, பற்றென் னேவல். புற்று - வன்மீகம். மற்று - அசையாநிலை, (உ-ம். அதுமற்ற வலங்கொள்ளாது) பிறிது, (உ-ம். இனி மற்றொன்றுரை, வினைமாற்று) (உ-ம். மற்றறிவாம்). முற்று - முடிவு, முற்றென்னேவல். அற்றை - அன்று, வினைமுற்று. இற்றை - இன்று, வினைமுற்று. ஒற்றை - ஒன்று. கற்றை - கதிர்த்தொகுதி, மயிர்த் தொகுதி போல்வன, வினைமுற்று. பற்றை - செங்காந்தள். பிற்றை - பின்னைநாள். பொற்றை - சிறுதூறு, சிறுமலை, மலை. மற்றை - இடைச்சொல். எற்றோ - அதிசய விரக்கச்சொல், இரக்கச்சொல், எத்தன்மைத்தோ. மற்றோ - அதிசய விரக்கச்சொல். அனகம் - பாவமின்மை, மாசின்மை, கீழானது. கனகம் - பொன். சனகம் - புளியாரை. வினகம் - சேங்கொட்டை மரம். அனகன் - அருகன், கடவுள். கனகன் - இரணியன், பொன்னிற முடையோன். சனகன் - சீதையின்றகப்பன், தகப்பன். சுனகன் - நாய், நிருதி மூலை. பனசம் - பலாமரம். வனசம் - தாமரை. சினசன் - சலந்தரம். மனசன் - மன்மதன். இனம் - குலம், கூட்டம், சுற்றம், திரள், பசுக்கூட்டம், மந்திரிகள். கனம் - அகலம், கூட்டம், கோரைக் கிழங்கு, சீர்மை, செறுவு, வாரம், பொன், மேகம், வட்டம். சனம் - இனம், கூட்டம். சினம் - கோபம். சுனம் - வெள்ளுள்ளி. தனம் - பொன், முலை, சம்பத்து, தன்மை. தினம் - நாள். புனம் - கொல்லை, வயல். மனம் - உள்ளம். வனம் - அழகு, ஊர்சூழ்ந்த சோலை, காடு, சுடுகாடு, துளசி, நீர், வழி. அனலல் - எரிதல், சூடுகொள்ளுதல். கனலல் - எரிதல், காய்தல். அனலி - அக்கினி, சூரியன். கனலி - சூரியன், நெருப்பு, பன்றி. அனல் - அனலென்னேவல், நெருப்பு. எனல் - என்றல். கனல் - வெப்பம், நெருப்பு. புனல் - ஆறு, நீர். கனவு - கனா, நித்திரை, மயக்கம். தினவு - சொறி. நனவு - அகலம், களன், தெளிவு. மனவு - அக்குமணி, சங்குமணிப் பொது. சினவுதல் - சினக்குறிப்பு, பொருதல். வினவுதல் - வினாவல். கனனம் - புதைத்தல். சனனம் - பிறப்பு. மனனம் - சிந்தித்தல். அனன் - பிரமன். இனன் - அரசன், சந்திரன், சூரியன். கனன் - சிவன், வலாரி. சினன் - அருகன், புத்தன். கனா - கனவு. வினா - சொல், வினாவென்னேவல். எனாது - எனது. தனாது - தனது. தெனாது - தெற்குள்ளது. இனி - இப்பொழுது, இனியென் னேவல், பின்பு. உனி - நினைத்து, குதிரை. கனி - கனியென்னேவல், தித்திப்பு, பழம், பொன் முதலியவு மிரத்தி னங்களும் பிறக்குமிடம். கினி - பீடை. குனி - குனியென்னேவல், வில். சனி - ஓர்வகை கிரகம், சனியென் னேவல், ஓர்வாரம், கெட்டவன். சுனி - பெண்ணாய். தனி - ஒப்பின்மை, தனி, தனியென் னேவல். துனி - அச்சம், ஆறு, கோபம், சினம், துன்பம், நோய், புலவி, நீட்டம். தொனி - ஒலி, தொனியென்னேவல். நனி - இடங்கழிமை, பெருமை, மிகுதி. நுனி - நுண்மை, நுனியென்னேவல், முனை. பனி - அச்சம், குளிர், துன்பம், நடுக்கம், பனியென்னேவல். முனி - அகத்தி, தவத்தோன், புத்தன், முனியென்னேவல், யானைக் கன்று, வில். கனிட்டை - பின்பிறந்தாள். தனிட்டை - அவிட்டநாள். கனிதல் - இரங்கல், சினக்குறிப்பு, நைதல், புதைத்தல். குனிதல் - இரங்குதல், வளைதல். முனிதல் - சினக்குறிப்பு, வெறுத்தல். இனித்தல் - தித்தித்தல். கனித்தல் - கரையச் செய்தல். குனித்தல் - ஆடல், வளைத்தல். சனித்தல் - பிறத்தல். தனித்தல் - தனிமையாதல். துனித்தல் - ஊடுவித்தல். தொனித்தல் - ஒலித்தல். நுனித்தல் - கூர்மை செய்தல், ஆராய்தல். பனித்தல் - சொரிதல், நடுங்கல், வருந்துதல், விடாமழை பெய்தல். இனிப்பு - இனிமை. குனிப்பு - கூத்தின் விகற்பம். சனிப்பு - பிறப்பு. பனிப்பு - அச்சம், நடுக்கம். இனிமை - தித்திப்பு. கனிமை - கசிவு, கனிந்த தன்மை. தனிமை - உவமை யின்மை, ஏகாந்தம். இனிவு - நன்மை. கனிவு - கனிதல். முனிவு - கோபம், சினம். அனீதன் - நீதியிலான். புனீதன் - அரன், அருகன், இந்திரன், தூயன், புத்தன். வினீதன் - தண்டிக்கப்பட்டவன், விநயமுள்ளவன். அனு - கதுப்பு, தொடர்ச்சி. தனு - உடல், சிறுமை, வில். மனு - அட்டாதச தருமநூலிலொன்று, மந்திரம், மனுச்சக்கரவர்த்தி. அனுக்கு - அனுக்கென்னேவல். கனுக்கு - சந்தத்தி னசைப்பு, கனுக் கென்னேவல். சுனுக்கு - சதுரக்கள்ளி. மினுக்கு - ஒளி, மினுக்கென்னேவல். அனுசன் - தம்பி. தனுசன் - மகன். மனுசன் - மனுசந்ததியான். அனை - ஓர்வகை மீன், தாய். கனை - ஒலி, கனையென்னேவல், நிறைவு, நெருக்கம். கினை - கபசம், விளா. சினை - உறுப்பு, கருப்பம், சினை யென்னேவல், பூவரும்பு, மரக் கொம்பு, முட்டை, மூங்கில். சுனை - குளம், சுனையென்னேவல். தனை - அளவு. தினை - ஓர்வகைப் பயிர், சிறுமை. துனை - நெருக்கம், விரைவு. நனை - கள், நனையென்னேவல், பூவரும்பு, தேன். நினை - உன்னல், நினையென் னேவல். நுனை - முனை. பனை - அனுடநாள், ஓர்வகை மரம், ஓர் வகை மீன். பினை - ஒன்றோடொன்று சேரென் னேவல். புனை - கால்விலங்கு, சீலை, நீர், புதுமை, புனையென்னேவல், அலங்கரிப்பு, அழகு. மனை - மனை, மனைவி, வீடு, நிலம். முனை - நுனி, பகை, முதன்மை, முனையென்னேவல், வெறுப்பு, துணிவு. வனை -அலங்காரம், அவ்வேவல். வினை - கருத்து, தொழில், போர், விதி. இனைதல் - இரங்குதல். சுனைதல் - குழைதல், வாடல். நனைதல் - நனையல். நினைதல் - நினைத்தல். பினைதல் - தாலரசமெடுத்தல், ஒன்றோடொன்று சேர்த்துப் பிழி தல். புனைதல் - அணிதல், அலங்கரித்தல். முனைதல் - சினக்குறிப்பு. வனைதல் - அலங்கரித்தல், செய்தல். இனைத்தல் - ஒலித்தல். கனைத்தல் - ஆரவாரம், ஒலித்தல். சினைத்தல் - அரும்புதல். சுனைத்தல் - தினவு தின்னல். நனைத்தல் - ஈரமாக்கல். நினைத்தல் - நினைக்குதல். முனைத்தல் - கோபித்தல், எதிர்த்தல். அனைத்து - அவ்வளவு, எல்லாம். இனைத்து - இவ்வளவினது. எனைத்து - எவ்வளவினது. கனைப்பு - கனைத்தல். சினைப்பு - சினைத்தல், வெயர்வைக் குறி. நினைப்பு - நினைவு. புனைவர் - கம்மாளர். முனைவர் - பகைவர், முனிவர். இனைவு - துன்பம். நனைவு - நனைத்தல். நினைவு - நினைத்தல். முனைவு - கோபம், சினம், வெறுப்பு. கனோபலம் - ஆலங்கட்டி. மனோபலம் - தைரியம். அன் - சாரியை, (உ-ம். அதன்கை). இன் - ஐந்தனுருபு, (உ-ம். மலையின் வீழருவி), சாரியை (உ-ம். பூவின் மணம்), இனிமை. உன் - இழுப்பு, உனது. என் - இகழ்ச்சிக்குறிப்பு, இடைச் சொல், ஐயக்கிளவி. கன் - வெண்கலவேலை, சிறு தராசுத் தட்டு. கொன் - அச்சம் (உ-ம். கொன் முனை யிரவூர்), காலம் (உ-ம். கொன்வரல் வாடை) பயனின்மை (உ-ம். கொன்னே கழிந்தன் றிளமை), பெருமை (உ-ம். கொன் னூர்) துஞ்சினும் யாந்துஞ் சிலமே). சன் - நன்மையைக் காட்டுமோ ருபசருக்கம். சின் - அசைச்சொல் (உ-ம். கண்ணும் படுமோவென்றிசின் யானே), ஞானம். சுன் - சனி, வட்டம், வெண்மை. தன் - பரம், தனது, ஆன்மா. துன் - துர், நெருக்கம், துன்னென் னேவல். தென் - அழகு, இசை, கறுப்பு, தெற்கு, தென்னமரம். நின் - உனது. பின் - ஏழனுருபு, (உ-ம். காதலி பின் சென்றதம்ம,) கடை, காரணம், தம்பி, பெருமை, வழி. பொன் - அழகு, இலக்குமி, பஞ்ச லோகப் பொது, பொலிவு, பொன், வியாழம். மன் - அசைநிலை, (உ-ம். அதுமற் கொண்டகன்றேரே.) அரசன் ஆக்கம், (உ-ம். பண்டுகாடுமன்,) ஒழியிசை, (உ-ம். கூறியதோர் வாண்மன்), கழிவு, (உ-ம். சிறிய கட் பெறினேயெமக்கீயுமன்னே), பெருமை, மிகுதி, (உ-ம். எந்தை யெமக்கருளுமன்). மின் - ஒளி, மின்னல், மின்னென் னேவல். முன் - இனியென்பது, ஏழனுருபு, (உ-ம். கற்றார்முற்றோன்றா கழி விரக்கம்), பக்கம், பழமை, முதல், முன், முன்னென்னேவல், மேல். வென் - முதுகு. புன்கண் - துன்பம், நோய், மெலிவு. வன்கண் - கொடுமை. நன்கு - அழகு, நன்மை, மிகுதி. புன்கு - புன்முருங்கை, புன்கமரம். இன்பம் - அகமகிழ்ச்சி, இனிமை, ஆனந்தம், ஏமம், கடி, களிப்பு, சுகம், சேமம், தொய்யல், நகை, நயன், நலன், நன்னிலை, பரிவு. துன்பம் - துக்கம். பின்பனி -மாசி பங்குனியின் பருவம். முன்பனி - மார்கழி தையின் பருவம். அன்பன் - புருடன். இன்பன் - கணவன். என்பன் - சிவன். மென்பால் - மருதநிலம். வன்பால் - குறிஞ்சிநிலம், பாலை நிலம், மேடு. அன்பு - ஆசை, தயை. இன்பு - இன்பம். என்பு - எலும்பு, புல். தின்பு - தின்னல். துன்பு - துன்பம். நன்பு - நன்மை. பின்பு - பின். முன்பு - பழமை, பெருமை, முன்வலி. வன்பு - வன்மை. கன்மம் - செய்தொழில். குன்மம் - ஓர்நோய், தூறு, படைத் தொகை. சன்மம் - பிறப்பு. தன்மம் - அறம். தொன்மரம் - ஆலமரம். வன்மரம் - அகக்காழ். அன்மை - அல்லாமை. இன்மை - இல்லாமை. சின்மை - சிலவற்றின் றன்மை. தன்மை - குணம், மூவிடத்தொன்று. தொன்மை - எண்வகை வனப்பினு ளொன்று, பழமை. நன்மை - உபகாரம். பன்மை - பலவற்றின் றன்மை. புன்மை - ஈனம், மறதி. முன்மை - முதன்மை. மென்மை - மிருது. வன்மை - கருத்து, வலி. ஒன்றல் - பொருந்தல், வியங்கோண் முற்று. கன்றல் - கடுப்பு, சினக்குறிப்பு, வியங் கோண்முற்று. குன்றல் - குலைதல், குறைதல், கெடு தல், வியங்கோண்முற்று. தின்றல் - புசித்தல். துன்றல் - நெருங்கல், வியங்கோண் முற்று. தென்றல் - தென்காற்று. பின்றல் - பிறகிடல். பொன்றல் - சாதல், வியங்கோண் முற்று. மன்றல் - கலியாணம், நெடுந்தெரு, வாசனை. குன்றி - ஓர் செடி, வினையெச்சம். சொன்றி - சோறு. தென்றி - தென்காற்று. நன்றி - நன்மை. பன்றி - வராகம். வென்றி - வெற்றி. அன்றில் - ஓர்வகைப்புள். முன்றில் - முற்றம். அன்று - அசைச்சொல் (உ-ம். உயி ரெனவுலாயதன்றே) அந்நாள், வினைக்குறிப்பு முற்று. அன்று - அசைச்சொல், இப்பொழுது, வினைக்குறிப்பு முற்று. என்று - எந்நாள், சூரியன். ஒன்று - ஏகம், ஒன்றென்னேவல். கன்று - அற்பம், இளமரம், கன்றென் னேவல், கைவளை, எருமை, ஒட்டை, கடமை, கவரி, காட்டா, குதிரை, பசு, மரை, மான், யானை யிவற்றின் குட்டி. கின்று - நிகழ்கால விடைநிலை. குன்று - குன்றென்னேவல், சதய நாள், சிறுமலை, மலை. துன்று - நெருங்கு. தொன்று - பழமை. நன்று - நன்மை, பெருமை. நின்று - அசைச்சொல் (உ-ம். அழ லடைந்த மன்றத்தலந்தயரா நின்றார் நிழலடைந்தே நின்னை யென்றேத்த), வினையெச்சம். மன்று - மணம், வெளி. கொன்றை - கொன்றைமரம், வினை முற்று. பின்றை - பின்னைநாள். அன்ன - அத்தன்மைய, உவமை யுருபு, (உ-ம். மதியன்னமுகம்). இன்ன - இத்தன்மைய, உவமையுருபு. என்ன - உவமைச்சொல், எத்தன்மைய. முன்ன - முதன்மைய, நினைக்க, சமீபிக்க. கன்னகம் - கன்னக்கோல். பன்னகம் - பாம்பு. பின்னகம் - மயிர்முடி. கன்னப்பூ - காதணியிலொன்று. சின்னப்பூ - ஓர்வகைப் பிரபந்தம். சொன்னப்பூ - பொற்பூ. அன்னம் - ஓர்வகைப்புள், கவரிமா, சோறு. இன்னம் - அதிகம், மறுபடியும், மேலும். உன்னம் - அன்னப்புள், நினைவு, நீர்வாழ் பறவைப்பொது, மனம். கன்னம் - கதுப்பு, கன்னக்கோல், காது, நரம்பு, பொற்கொல்லன், யானைச்செவி. கின்னம் - கிளி, உபத்திரவம், கீழ்மை துக்கம். சன்னம் - வெடிமருந்து. சின்னம் - அடையாளம், காளம், சிறுமை, தட்டு, பராகம், பெண்குறி, முறம். சுன்னம் - வட்டம். சொன்னம் - பொன். தன்னம் - சிறுமை, பசுவின்கன்று, மான்கன்று. துன்னம் - தைத்தல், கிழிவு. பன்னம் - இலை. பின்னம் - பராகம், பிணக்கு, வேற் றுமை, கிழிவு, சிதைவு. முன்னம் - கருத்து, சீக்கிரிமரம், மனம், முன். வன்னம் - எழுத்து, சித்திரிப்பு, நிறம். வின்னம் - அறியப்பட்டது, தடை, பங்கப்பட்டது. அன்னர் - அத்தன்மையர். கன்னர் - கள்வர், ஆரிய அரசர். துன்னர் - சக்கிலியர், செம்மார், தையற்காரர். நன்னர் - நன்மை. பின்னர் - பிறகு. மன்னர் - அரசர். முன்னர் - ஆதி, இடம், நெஞ்சு, முன்று. இன்னல் - தீமை, துன்பம். உன்னல் - நினைத்தல், வியங்கோண் முற்று. கன்னல் - கரகம், கரும்பு, சருக்கரை, நாழிகை, நாழிகைவட்டில். சன்னல் - பலகணி. சொன்னல் - சோளம். துன்னல் - கிட்டல், நெருங்கல், வியங்கோண்முற்று. நன்னல் - கொதித்தல். நென்னல் - முன்னைநாள். பன்னல் - சொல்லுதல், நெருங்கல், பருத்தி, வியங்கோண்முற்று. பின்னல் - சடை, வியங்கோண்முற்று. மன்னல் - நிலை, நிலைபெறுதல், வியங்கோண்முற்று. மின்னல் - ஒளி செய்தல், வியங் கோண்முற்று. முன்னல் - நினைத்தல், வியங்கோண் முற்று. சின்னவன் - சிறியவன். தென்னவன் - பாண்டியன். பின்னவன் - தம்பி. பொன்னவன் - இரணியம், வியாழம். மன்னவன் - அரசன், உத்திரட்டாதி, எப்பொருட்கு மிறைவன். முன்னவன் - சிவன், தமையன். கன்னன் - இடையெழு வள்ளலி லொருவன். துன்னன் - இடையெழு வள்ளலி லொருவன். துன்னன் - தோற்றுண்ணன். தென்னன் - தென்னவன், பாண்டியன். மன்னன் - மன்னவன். இன்னார் - இத்தன்மையர், பகைவர். ஒன்னார் - பகைவர். கன்னார் - ஓர்வகைச் சாதியார், ஓர்வகை மருந்து. துன்னார், மன்னார் - பகைவர். உன்னி - குதிரை, வினையெச்சம். கன்னி - அத்தநாள், அழிவில்லாள், அழிவின்மை, இளமை, ஓர்வகை யாறு, ஓர்வகையிராசி, கற்றாழை, காக்கணஞ் செடி, குமரி, தவப் பெண், துர்க்கை, தெய்வப் பெண். சன்னி - சீதநோய். சின்னி - ஓர் செடி. சென்னி - அச்சுவினி நாள், சோழன், தலை, பாணன், முடி. பன்னி - மனைவி, வினையெச்சம். பொன்னி - காவேரி. வன்னி - ஓர் மரம், கிள்ளை, தீ, பிரமசாரி. அன்னியம் - அயல், குயில். சன்னியம் - போர். அன்னியர் - பிறர். இன்னியர் - பாடுவார். சென்னியர் - பாணர். சொன்னிலை - சொன்னிற்கு மாற்றல். நன்னிலை - ஒழுக்கம், சுகம், தவம். பின்னிலை - இறுதிநிலை. முன்னிலை - காரணம், மூவிடத் தொன்று. பின்னிளவல் - தம்பி. முன்னிளவல் - தமையன். தொன்னீர் - கடல். நன்னீர் - தண்ணீர். பொன்னுலகு, மன்னுலகு - தேவ லோகம். இன்னே - இப்பொழுது. என்னே - என்னோ. அன்னை - அக்காள், தாய், தோழி. என்னை - என், என்தாய். தென்னை - தெங்கமரம். பின்னை - இலக்குமி, இளையவள், இளையவன், பின்பு. புன்னை - ஓர் மரம். முன்னை - அக்காள், அண்ணன், பழமை, முன்னை மரம், மூதேவி. அன்னோ - அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல். இன்னோ - இப்பொழுதே. என்னோ - அதிசய விரக்கச்சொல், இரக்கச்சொல், ஐயக்கிளவி. மன்னோ - அசைச்சொல். அன்னோன் - அவன். இன்னோன் - இவன். பின்னோன் - தம்பி, தமையன். மன்னோன் - அரசன். முன்னோன் - கடவுள், தமையன், விநாயகன். குறிற்கீழெதுகை முற்றிற்று. ஆ ஆ - ஆச்சா மரம், ஆதலைச் செய்யென்னேவல், இச்சை, இரக்கம், ஓர்வகையெழுத்து, சொல்லிசை, பசுப்பொது, பெண் ணெருமை, பெண் பசு, பெண் மரை, வியப்பு, விலக்கின் பெண் பொது, வினா விடைச்சொல், ஆக என்பதன் குறுக்கம், வினா, அந்தம், இணைப்பு உருக்கும் குறைவு பிரிப்பு இவற்றைக் காட்டுமோருப சருக்கம். கா - அசைச்சொல் (உ-ம். இவளிவட் காண்டிகா), ஓர் வகை யெழுத்து, காத்தல், காவடி, காவென்னேவல், சோலை, துலை, பூந்தோட்டம், வருத்தம், வலி. சா - ஓர்வகை யெழுத்து, சாதல், சாவென்னேவல், பேய், மரணம். தா - ஓர்வகை யெழுத்து, கேடு, தாண்டுதல், தாவென்னேவல், பகை, வருத்தம், வலி. நா - ஓர்வகை யெழுத்து, நடு, நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நா. பா - ஓர்வகை யெழுத்து, பாவென் னேவல், வெண்பா முதலிய பா, பஞ்சு நூல், பிரபை, நெசவு பா. மா - அழகு, ஆண்குதிரை, ஆண் பன்றி, ஆண் யானை, இலக்குமி, ஓர்வகை யெழுத்து, கறுப்பு, குதிரை, சீலை, செல்வம், பெருமை, மா, மாமரம், வண்டு, வயல், வலி, வியங்கோளொடு வருமசைச் சொல் (உ-ம். உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே), விலங்கின் பொதுப்பெயர், வெறுப்பு. யா - அசைச்சொல் (உ-ம். யா பன் னிருவர் மாணாக்கரகத்தியனாற்கு), ஓர்வகையெழுத்து, ஓர் மரம், வினாப்பெயர், வினாவிடைச் சொல். வா - முன்னிலையேவல் வினைசொல். ஈ - ஈ, கள், ஓர்வகை யெழுத்து, கொடுவென்னேவல், முன்னிலை யசைச்சொல், (உ-ம். வித்தக சென்றீ யென்றார்), வண்டு, அம்பு, அரை நாள், இணை திரவல், இலக்குமி, தேனீ, குகை, கொசுகு, தாமரை யிதழ், பாம்பு, பார்வதி. கீ - ஓர்வகை யெழுத்து, கிளிக்குரல். சீ - இகழ்ச்சிக் குறிப்பு, இலக்குமி, ஓர் வகை யெழுத்து, காந்தி, சம்பத்து, சரஸ்வதி, சீயென் னேவல், பார்வதி, விடம். தீ - அறிவு, இனிமை, ஒர்வகை யெழுத்து, தீமை, தீயென்னேவல், நரகம், நெருப்பு. நீ - ஓரெழுத்து, நீக்கு, முன்னிலைப் பெயர். பீ - பவ்வீ, ஓரெழுத்து. மீ - ஆகாயம், உயர்ச்சி, ஓர்வகை யெழுத்து, மேல், மேற்புறம். வீ - ஓர்வகை யெழுத்து, சாவு, நீக்கம், பறவை, பூ வீயென்னேவல், கர்ப்பந் தரித்தல், செல்லுதல், விரும்புதல், சந்திரன், சிவன். ஊ - ஊன், ஒர்வகை யெழுத்து. கூ - ஓர்வகை யெழுத்து, கூவென் னேவல், பூமி, கூக்குரல், மலங் கழித்தல். சூ - விலங்குகளை யோட்டுங் குறிப்பு, வியப்புச் சொல். தூ - ஓர்வகை யெழுத்து, சுத்தம், தசை, தூவென்னேவல், பகை, பற்றுக் கோடு, புள்ளிறகு, வெண்மை. நூ - ஆபரணம், நூவென்னேவல். பூ - அழகு, இலை, ஓர்வகையெழுத்து, கூர்மை, பிறப்பு, பூ, பூமி, பூவென் னேவல், பொலிவு. மூ - ஓர்வகை யெழுத்து, மூப்பு, மூவென்னேவல். ஏ - இசை நிறைச்சொல், ஈற்றசைச் சொல், எண்ணின் குறிப்பு, ஓர் வகை யெழுத்து, தேற்றக் குறிப்பு, பாணம், பிரிவின் குறிப்பு, வினாக் குறிப்பு. சே - இடபவிராசி, எருது, ஓர்வகை யெழுத்து, ஓர் மரம், சிவப்பு, செவென்னேவல், விலங்கேற்றின் பொது. தே - ஓர்வகை யெழுத்து, கடவுள் கிருபை. நே - அன்பு, ஒர்வகை யெழுத்து. பே - ஓர்வகை யெழுத்து, நுரை, மேகம். வே - ஓர்வகை யெழுத்து, வேவு, வேவென்னேவல். ஓ - அதிசய விரக்கச் சொல், இரக்கச் சொல், ஓர்வகையெழுத்து, மடை யடைக்குங் கதவு, வினா விடைச் சொல் (உ-ம். சாத்தனோ). கோ - அம்பு, அரசன், ஆகாயம், ஆண் மகன், எருது, ஓர்வகை யெழுத்து, கண், கோவென் னேவல், திசை, தெய்வ லோகம், நீர், பசு, பசுப் பொது, பூமி, மலை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம். சோ - அரண், ஒர்வகை யெழுத்து, உமை, வியப்புச் சொல், வாணா சூரன் நகர். நோ - ஓர்வகை யெழுத்து, நோதல், நோவென்னேவல், துக்கம், துன்பம், பலஹீனம், வியாதி. போ - அசை நிலை (உ-ம். எரியினன்ன செந்தலையன்றில் பிரியின் வாழா தென்போ), ஓர்வகையெழுத்து, போவென் னேவல். மோ - ஒர்வகையெழுத்து, முன்னிலை யசைச்சொல் (உ-ம். கெண்மோ), மோவென்னேவல். க ஆக - ஆகட்டும், முழுதும். ஏக - செல்ல, போக. சாக - மடிய, மறைய. சாகசம் - ஓர் பட்சி, கொடுமை, திடன், பகை, மெய்ம்மை, யானை, வலாற்காரம், வீரம். யோகசம் - ஓராகமம். வாகசம் - நீர்ப்பாய்ச்சல், பெரும் பாம்பு. பாகசாலை - மடைப்பள்ளி. யாகசாலை - வேள்வியிடம். பாகதம் - எல்லா நாட்டுமொழி, வடமொழிச்சிதைவு. மாகதம் - மகத தேசத்துள்ளது. பூகதர் - புகழ்வோர். மாகதர் - அரசமாதுக்கும் வைசிய னுக்கும் பிறந்தொருவர் வீர முதலி யவற்றைப் புகழ்வோர், பாணர். ஆகத்தன் - உருவமுடையவன். ஏகத்தன் - இறைவன். கோகத்தன் - இந்திரன். சோகத்தன் - மயக்க முடையவன். நாகத்தன் - குமாரக் கடவுள், சிவன், திருமால், தேவேந்திரன். பாகத்தன் - குமரன், சிவன், மால், பகுதியுள்ளவன். காகப்புள் - அவிட்டநாள், காக்கை. மேகப்புள் - வானம்பாடி. ஆகம் - உடல், மார்பு, சுரை, பறை. ஈகம் - சந்தனம், இச்சை. ஊகம் - குரங்கு, நினைவு, புலி, ஊமத்தை, தியானம், படை வகுப்பு. ஏகம் - ஒன்று, தனிமை, உடன்பாடு, ஒப்பில்லாதது, திப்பிலி, முழு வதும். ஓகம் - அடைக்கலம், ஒரு குருவி, சமுகம், திரட்சி, புகலிடம், பெருக்கு, போதனை, வீடு. காகம் - காக்கை, வட கீழ்த்திசைப் பாலன் குறி, அவிட்டம், கீயு, அரிட்டம், உரண்டம், கரடம், கரவாகம், கரும்பிள்ளை, காரி, கேரண்டம், கொடி, துரோணம், நரந்தம், நராந்தம், பலிபுட்டம், வாயசம். கூகம் - ஆந்தை, கூகை, மறைத்த சொல். கேகம் - வீடு, மயிற்குரல். கோகம் - சக்கரவாகப் புள், செந்நாய், உலார்ந்தபூ, தவளை, பல்லி. சாகம் - ஆடு, கீரை, சிறுகீரை, தேக்க மரம், வெள்ளாட்டுக்கடா. சீகம் - தமரத்தை. சூகம் - தவழ்சாதிப் பொது, நெல் வால், அம்பு, இரக்கம், காற்று, சுனை, தாமரை, முன்மயிர். சேகம் - தெளித்தல். சோகம் - உண்டை, சோம்பல், துன் பம், தொடை, ஒட்டகம், சோர்வு. தாகம் - ஆசை, நீர்வேட்கை, எரிவு, எருது, தூண். தூகம் - காற்று. தேகம் - உடல். தோகம் - சிறுமை, சிசு, திருப்பதி, பால். நாகம் - ஆகாயம், ஒலி, கருங்குரங்கு, காரியம், குரங்கு, ஞாழல், தேவ லோகம், நற்சீலை, பாம்பு, புன்னைமரம், மலை, யானை. நீகம் - தவளை, மேகம். பாகம் - ஓர்வகையளவு, பக்குவம், பங்கு, பாதி, பிச்சை, அச்சம், ஆந்தை, சபித்தல், சமைத்தல், செய்யுள் நடை, நரைமயிர், பாத்திரம், புயம். பூகம் - கமுகு, கூந்தற்பனை, திரட்சி, இருள், உண்டை, பலா, பாக்கு, பிளப்பு. பேகம் - தவளை, மூங்கில். போகம் - அனுபோகம், செல்வம், பாம்பினுடல், பாம்பின்படம், விளைவு. மாகம் - ஆகாயம், மகநாள், மாசி மாதம். மூகம் - மௌனம், ஊமை, தரித்திரம். மேகம் - ஓர்வகை நோய், முகில், கடுக்காய், குயில். மோகம் - ஆசை, உன்மத்தம், காமம், அழுதல், உட்பகையாறினொன்று. யாகம் - வேள்வி, பலி. யூகம் - ஓர்வகைப்புல், கருங்குரங்கு, காந்தி, தருக்கம், படை, படை வகுப்பு, பெண் குரங்கு, முசு. யோகம் - அடயோக முதலிய யோ கம், அதிட்டம், உபசாரம், உபா யம், உயர்ச்சி, உற்சாகம், கூடல், கூட்டல், சாவு, தியானம், பஞ் சாங்கத்தி லொன்று. வாகம் - இடபம், எருமைக்கடா, காற்று, குதிரை, புயம், வாகனம். வீகம் - பூட்டு, மோதிரம், காற்று, பட்சி. வேகம் - கடுமை, கோபம், சினம். ஆகரம் - உறைவிடம், பொன் முத லியவு மிரத்தினங்களும் பிறக்கு மிடம், மண் வெட்டி, மேலானது, வீடு, குற்றுடைவாள். கேகரம் - கடைக்கண்பார்வை. சாகரம் - கடல், துயிலொழிதல், கோடா கோடி. சீகரம் - கடற்றிரை, கரகம், சவரி, திவலை, புனற்றிரை, மழை, மழைத்துளி, மழைத்தூவல், இலக்குமீகரம், ஒருபண். சூகரம் - பன்றி, மான். சேகரம் - சேகரித்தல், தலை, தலையின் முடிக்கப்படுவன, முடி, கூட்டம், மாமரம், முருங்கை. நாகரம் - ஓர்வகை யெழுத்து, சுக்கு. பூகரம் - நஞ்சு. மோகரம் - உக்கிரம், மயக்கம். வாகரம் - கோனாய், சாணைக்கல், தடை, நிச்சயம், வடவாமுகம். சாகரன் - ஓரரசன். பாகரன் - ஓர் சமயி. மாகரன் - பண்டிதன், வீரன். ஆகரி - ஓர்வகை யிராகம். சாகரி - ஓர்வகை யிராகம். சீகரி - திவலை. நாகரி - குருக்கத்தி. மாகரி - ஆண்யானை. சாகர் - ஒரு தேசத்தார். சீகர் - திவலை. நாகர் - தேவர், சர்ப்ப சாதியார். பாகர் - யானை, குதிரை முதலிய வற்றை நடத்துபவர். மோகர் - சித்திரகாரர், உன்மத்தர். யோகர் - சமண முனிவர், முனிவர். ஆகல் - ஆகுதல். ஏகல் - உயர்ச்சி, போகல், வியங் கோண்முற்று. தோகல் - சோனைப்புல். நாகல் - நாவன்மரம். பாகல் - பலாமரம், பாகற்கொடி. போகல் - உயர்ச்சி, செலல், நீளம், வியங்கோண்முற்று. வேகல் - வேவுதல். ஆகனம் - கன்னக்குருவி, பாரை. ஊகனம் - அனுமித்தல், நியாயஞ் சொல்லுதல். கூகனம் - மறைத்த சொல். கோகனம் - கையாந்தகரை, நிலக் கடம்பு. வாகனம் - ஏறி நடத்தப்பட்டவை, சீலை ஊர்தி, சிவிகை, வண்டி. மேகனம் - ஆண்குறி, மூத்திரம். மோகனம் - அட்டசித்தியி லொன்று. ஆகன் - விநாயகன். ஏகன் - கடவுள், சிவன், ஒருவன். சேகன் - வேலையில் சமர்த்தன். தாகன் - கொடையாளன், யாகஞ் செய்விப்போன். நாகன் - ஓர்வகை வாயு. பாகன் - தேர் முதலிய நடத்துவோன், புதன். பேகன் - கடையெழு வள்ளலி லொருவன், ஆண் தவளை. மூகன் - ஊமை, ஓரசுரன். மோகன் - மன்மதன். வாகன் - அழகன், காவாள். ஆகாசம் - வான். ஏகாசம் - உத்தரீயம், மேற்கொள், போர்வை. நீகாசம் - உவமை. ஆகாரம் - உணவு, நெய், மனைப் பொது, வடிவு. சீகாரம் - ஓர்வகைப் பெண். நீகாரம் - பனி. மேகாரம் - மயில். நீகான் - மீகாமன். ஏகி - கைம்பெண், வினையெச்சம். காகி - விளாமரம். சாகி - மரப்பொது. சோகி - பலகறை, பிடாரன், விட வைத்தியன். தேகி - சீவாத்துமா, புல்லூரி. பாசி - நாய், பக்குவன், சைவலம். பேகி - தவளைப் பெண். போகி - இந்திரன், பாம்பு, போகி யென்னேவல், வினையெச்சம், அரசன். மோகி - கஞ்சா. யூகி - யூகியென்னேவல், விவேகி. யோகி - அரன், அருகன், ஐயனார், முனிவன். வேகி - வேகமுடையோன். சாகினி - சிறுகீரை, சேம்பு. மோகினி - திருமால் கொண்ட பெண்ணுருவம். யோகினி - காளி, யோகினி. வாகினி - படை, படையிலோர் தொகை. ஆகு - எலி, கொப்புள், சாமரை, பெருச்சாளி, கள்வன், பன்றி. காகு - இசையறுப்பு. கூகு - எட்டு வயதுப் பெண். கோகு - கழுதை, புயம். சீகு - துடைப்பம், புல். சேகு - மாவாயிரம். சோகு - பிசாசம். நாகு - இளமை, இளமரம், கங்கு, நத்தை, புற்று, பெண்ணெருமை, பெண்மரை, பெண்மீன். பாகு - அசதி, கரை, குழம்பு, சருக்கரை, பங்கு, பரணிநாள், பாகன், பாக்கு. போகு - நெடுமை. யோகு - யோகாப்பியாசம். வாகு - அழகு, தோள், ஒழுங்கு. ஆகுலம் - ஆரவாரம், ஒலி, வருத்தம். கோகுலம் - ஆய்ப்பாடி, குரங்கு, தொளையுடைப்பொருள். பாகுலம் - கார்த்திகை மாதம். ஆகுளி - சிறுபறை. காகுளி - இசை, தவிசு, மந்தவிசை, மிடற்றெழுமோசை, மெத்தை. ஆகை - சம்பவிக்கை. ஈகை - இண்டங்கொடி, ஈதல், கற்பகம், பொன், மேகம். ஊகை - யூகை. ஏகை - இரேகை. கூகை - ஒர்வகைப்பட்சி, கோட்டான். கேகை - மயிற்கூவும் ஒலி. சாகை - இலை, சாதல், மரக் கொம்பு, வட்டில், வினைமுற்று, வேதம். சூகை - சூகை யெறும்பு, யானை. சோகை - ஒர்வகை நோய். தோகை - இறகு, மயிற்றோகை, முன்றானை, வால், விருதுக்கொடி. நாகை - நாகப்பட்டினம், நாகூர், வெற்றிலைக்கொடி. போகை - போதல், செல்லல். மாகை - பசு, மாகேயி. மீகை - புலிதொடக்கி. மூகை - ஊமை. யூகை - கல்லி, பேன். வாகை - அறத்தின்றுறை, ஈகை, ஒழுக்கம், ஓர்வகை மரம், தவம், மிகுதி, வெற்றி, வெற்றிமாலை. ஈக்கணம் - கண், பார்க்குதல். காக்கணம் - கருவிளை. தீக்கணம் - நேரசை நடுவும் நிரை யசை யிருபாலும் நிற்பன அதா வது புளிமாங்கனி. தூக்கணம் - உறி, தொங்கல், ஒரு குருவி. போக்கணம் - கட்டுச்சோறு. ஆக்கம் - இலக்குமி, இலாபம், எழுச்சி, கொடிப்படை, செல்வம், பொன். ஊக்கம் - உயர்ச்சி, உள்ளமிகுதி, உற்சாகம், முயற்சி, வலி, உண்மை, தாளாண்மை, யோகம், சான் றாண்மை. ஏக்கம் - ஏங்கல், மயிற்குரல், கவலை, பயம், பேராசை. ஓக்கம் - உயர்ச்சி, எழுதல். சூக்கம் - ஓர் மந்திரம், சூட்சம். தாக்கம் - அதைப்பு, வீக்கம். தூக்கம் - ஆபரணத் தொடக்கு, வடிவு, காதணி, சல்லியம், நித் திரை, அயர்ச்சி, ஏற்றம். நீக்கம் - நீங்கல், நீளம். நோக்கம் - அழகு, உயர்ச்சி, கண், பார்வை. பாக்கம் - ஊர்ப்பொது, நெய்தனி லத்தூர், மருதநிலத்தூர். பூக்கம் - ஊர், கமுகு, மருதநிலத்தூர். மோக்கம் - தீர்தல், பரகதி. வீக்கம் - வீங்கல். ஆக்கல் - செய்தல், படைத்தல், வியங் கோண்முற்று. ஊக்கல் - ஏறுதல், எழுப்பல், வியங் கோண்முற்று. சீக்கல் - வாயால் விசிலடித்தல். தாக்கல் - எதிர்த்தல், பாய்தல், வியங் கோண்முற்று. தீக்கல் - நெருப்புக் காலுதல். தூக்கல் - ஆராய்தல், தூக்குதல், வியங்கோண்முற்று. தேக்கல் - நிறைதல், வியங்கோண் முற்று. நீக்கல் - அகற்றல், கொல்லல், நீளல், மாறுபாடு, வியங்கோண்முற்று. நூக்கல் - தள்ளல், வியங்கோண் முற்று. நோக்கல் - காணல், காத்தல், வியங் கோண்முற்று. போக்கல் - செலுத்துதல், வியங் கோண்முற்று. மாக்கல் - மாவுகல்லு. மோக்கல் - மணத்தல், மொள்ளுதல். யாக்கல் - கட்டல். வீக்கல் - கட்டல், வியங்கோண் முற்று. கோக்கள் - சிறந்தோர், பசுக்கள். மாக்கள் - மனிதர். ஆக்கியம் - நாமம். சாக்கியம் - புத்தமதம். யோக்கியம் - தகுதி, நன்கு. வாக்கியம் - வினைமுதலும் பய னிலையுஞ் செயப்படு பொரு ளோடு கூடியேனுங் கூடாதேனு முடிவுபெற்று நிற்குந் தொடர் மொழி. ஆக்கு - செய்யென்னேவல். ஊக்கு - முயற்சிசெய், உற்சாகப் படுத்து. சாக்கு - கோணி, சாட்டு. சீக்கு - செத்தை. சேக்கு - முலைப்பால். தாக்கு - தாக்கென்னேவல், போர். தீக்கு - வெறுங்குகை, சவுக்காரம். தூக்கு - ஆராய்தல், உயர்ச்சி, உவமைச் சொல், உறி, காற்றுலாம், கூத்து, துலாராசி, தூக்கங்கள், தூக்கணங் குருவி, நிறை பா. தேக்கு - ஓர்வகைமரம், கமுகு, தித்திப்பு, தேக்கென்னேவல். நாக்கு - நா, கதிர், திறப்பு. நூக்கு - தள்ளு, நொய். நோக்கு - அழகு, கண், நோக்கென் னேவல். பாக்கு - எதிர்கால விடைச்சொல், (உ-ம். உண்பாக்குச் சென்றான்), துவர்க்காய். போக்கு - போகுதல், போக்கென் னேவல், வழி. மூக்கு - நாசி, பறவைமூக்கு. மேக்கு - உயர்ச்சி, மேல், மேற்கு. வாக்கு - கருமேந்திரியமைந்தி லொன்று, சொல், வாக்கென் னேவல். ஆக்கை - உடம்பு. காக்கை - அவிட்டநாள், வாயசம். சாக்கை - கருமத்தலைவன், புரோ கிதன். சேக்கை - கர்க்கடகவிராசி, ஞெண்டு, மனிதர் படுக்கை, முலை, உடற் றழும்பு. தீக்கை - விரதநியமம், தீட்சை. தோக்கை - சீலை, மேற்போர்வை. நாக்கை - நாக்குளிப்பூச்சி. யாக்கை - உடல், கட்டு. ங சாங்கம் - ஒழுங்கு, சாயல். சோங்கம் - கிச்சிலிக்கிழங்கு. பாங்கம் - பலண்டுறுவ பாஷாணம். வாங்கம் - கடல். ஞாங்கர் - இடம், இனி, கைவேல், பக்கம், முன், மேல். பாங்கர் - இடம், தோழர், பாக்கம். ஏங்கல் - அழுதல், இரங்கல், ஒலித் தல், மயிற்குரல், வியங்கோண் முற்று. ஓங்கல் - அரசன், உயர்ச்சி, எழுச்சி, சத்தி பண்ணல், மரக்கலம், மலை, மூங்கில், மேடு, யானை, வியங் கோண்முற்று. தாங்கல் - காத்தல், குளம், சுமத்தல், வியங்கோண்முற்று. தூங்கல் - ஆடல், உறங்கல், கூத்து, சோம்பல், தாழ்வு, யானை, வியங் கோண் முற்று. தேங்கல் - அச்சக்குறிப்பு, நிறைதல், வியங்கோண்முற்று. நீங்கல் - நீங்குதல், பிரிதல், போகல், மாற்றல், வியங்கோண்முற்று. வாங்கல் - அழைத்தல், கொள்ளல், வளைத்தல், வளைவு, வியங் கோண்முற்று. வீங்கல் - நித்திரைசெய்தல், வியங் கோண்முற்று. தாங்கி - பூணாகக்கட்டுவது, வினை யெச்சம், பூண். தூங்கி - இரவு. பாங்கி - தோழி. மூங்கி - சிறுபயறு. வீங்கி - சேங்கொட்டை, பேராசை யுள்ளோன். ஆங்கு - அசைச்சொல் (உ-ம். விருந் தொக்க றானென்றாங்கு), அவ் விடம், உவமைச்சொல் (உ-ம். மகற்கண்டதாய் மறந்தாங்கு), அக்காலத்தே. ஈங்கு - இண்டங்கொடி, இவ்விடம். ஊங்கு - உங்கு, உயர்ச்சி. காங்கு - ஒருநீலப் புடவை, பெரும் பானை. கோங்கு - ஓர்வகைமரம். சோங்கு - குருகு, மரக்கலம், மறத்தல். தாங்கு - ஈட்டிக்காம்பு, தாங்கி. தீங்கு - குற்றம், தீமை, கேடு. நூங்கு - பெருமை, மிகுதி. பாங்கு - அழகு, உரிமை, பக்கம். போங்கு - போக்கு. மூங்கு - சிறுபயறு. யாங்கு - இடத்தினை யுற்றசொல், எங்கு. வாங்கு - வளைவு, பிச்சுவா, ஓராசனம். ஈங்கை - இண்டங்கொடி. காங்கை - வெப்பம். மூங்கை - ஊமை. வீங்கை - அசைதல், குதிரைநடை. வேங்கை - ஒர்வகைமரம், புலி, பொன். ச கீசகம் - குரங்கு, தலைச்சீரா, மூங்கில். மேசகம் - மயிற்றோகைக்கண். யாசகம் - இரப்பு. வாசகம் - வசனம். வேசகம் - யானை நுனிவால், வால். பாசகர் - மடையர். யாசகர் - இரப்போர். ஆசந்தி - பாடை. வாசந்தி - குருக்கத்திமரம். ஆசம் - சிரிப்பு, இருக்கை, உரைகல், நெய், வில்லு. ஏசம் - வெண்கலம். ஓசம் - கீர்த்தி, கோசம், தாபரம், பிரமை, பிராணவாயு. காசம் - ஓர்வகைத்தேயம், ஓர் வகைநோய், ஈளைநோய், பொன். கீசம் - குரங்கு, குருவி, நிருவாணம். கூசம் - முலை. கேசம் - குதிரைமயிர், மயிர்ப்பொது. கோசம் - ஆண்குறி, உறை, கருகூலம், தெரு, பண்டாரம், புத்தகம், மதிலுறுப்பு, முட்டை. சீசம் - ஈயம். சூசம் - துருவாட்டேறு. தேசம் - நாடு, இடம், கூர்மை. நாசம் - நசித்தல், அழிவு. நீசம் - ஈனம், கொடுமை, மரணம். நேசம் - நேயம், அன்பு. பாசம் - அன்பு, ஊசித்தொளை, கவ சம், கயிறு, சிவனாயுதம், நமனா யுதம், பிசாசம், பிரமனா யுதம், அழகு, பற்று. பீசம் - ஆண்குறி, தாமரைப்பூச் சுருள், விதை, அண்டம், மூலம். பூசம் - ஒர்வகைநாள். போசம் - அகத்தி, ஒருதேசம். மாசம் - மாதம். மோசம் - வஞ்சனை. வாசம் - அம்பு, இருப்பிடம், இறகு, ஊர், சீலை, மருதநிலத்தூர், வாசனை, வேகம். வீசம் - ஓர்வகை யெண், நெல்லிடைப் பொன், அவசியம். கேசரம் - பூந்தாது, மகிழமரம், வண்டு. கோசரம் - அடங்கல், ஊர், விடயம். தூசரம் - சிறுவெள்ளை. வாசரம் - நாள். கேசரி - சிங்கம். கோசரி - எட்டாதவன். வேசரி - கழுதை, கோவேறுகழுதை. தூசர் - வண்ணார். நீசர் - கீழ்மக்கள். பாசலம் - காற்று, தீ, தீயிலாப்பக்கம். பேசலம் - உலக்கை, ஊமை, குயில், தகுதி, மிருது. மாசலம் - நோய், முதலை. ஈசல் - ஈசெல், ஈயல், சீழ்க்கை, சிதல். ஊசல் - அசைதல், ஊஞ்சல். ஏசல் - ஏசுதல், பழிமொழி, வியங் கோண்முற்று, ஒருவகைப் பாடல். கூசல் - அச்சக்குறிப்பு, அச்சம், நாணுதல், வியங்கோண்முற்று. பூசல் - பூசுதல், பெரிதொலித்தல், பொருதல், வியங்கோண்முற்று. பேசல் - சொல்லல், வியங்கோண் முற்று. மூசல் - சாதல், மொய்த்தல், வியங் கோண்முற்று. வீசுதல் - ஈதல், எறிதல், அடித்தல், வியங்கோண்முற்று. ஆசவம் - கள். கேசவம் - அட்டாதச தரும நூலி லொன்று, வண்டு. கேசவன் - சோழன், திருமால், நிறைமயிருள்ளோன். வாசவன் - இந்திரன். காசறை - கத்தூரிமிருகம், மணி, மயிர்ச்சாந்து. பாசறை - துன்பம், பகைமேற் சென்றோருறைவிடம். ஆசனம் - இருப்பு, பீடம். ஏசனம் - கலக்குதல். காசனம் - கொலை. கூசனம் - மறைத்தசொல். சாசனம் - அரசனாணை, ஆணை, இறையிறுக்காதவூர், தண்டனை, தானபத்திரிகை, வளையர்சேரி. சூசனம் - குறிப்பு, அறிவிப்பு, பார்வை. சேசனம் - நிலைத்தல். சோசனம் - உள்ளி. தேசனம் - திருத்தம். நாசனம் - நாசம். பாசனம் - உண்கலம், உறவு, மட்கலம். பூசனம் - பூசை. போசனம் - உணவு, புசித்தல். மாசனம் - பெரியோர், பிராமணர். மோசனம் - ஓர்வகைசொல், தீர்தல். வாசனம் - அறிவு, குரல், புடவை, வாசனை, வாசித்தல். வீசனம் - சிற்றாலவட்டம், விசிறி. வேசனம் - மருதநிலத்தூர். ஆசனன் - சுக்கிரன். காசனன் - கொலைசெய்வோன். பூசனை - பூசித்தல். யோசனை - ஒலித்தல், ஓர்வகை யெல்லை அளவு, யோசித்தல். வாசனை - மணம், அறிவீனம். ஈசன் - அயன், அரசன், அரன், அரி, எப்பொருட்கு மிறைவன், கட வுள், குரு, மூத்தோன். ஓசன் - உபாத்தியாயன். கேசன் - மால். தாசன் - அடிமையன். நாசன் - நமன். பாசன் - சீவன். போசன் - ஓர்வகையரசன், செல்வன். ஆசி - வாழ்த்து, பாம்பின்பல், ஆசி யென்னேவல். ஈசி - பார்வதி. ஊசி - இழைவாங்கி, எழுத்தாணி. ஏசி - வைது, கிளி, திட்டி, வினை யெச்சம். காசி - ஓர்நகரம், சீரகம். கூசி - எழுதுகோல், கூசிகை. கேசி - திருமால், நிறைமயிருள்ளோன். சாசி - திராய். சூசி - ஊசி, குறிப்பு, துளை. தாசி - அடிமையள், பரணிநாள், மேகவண்ணப்பூவுள மருதோன்றி மரம். தூசி - குதிரை, கொடிப்படை, படை வகுப்பு, புழுதி. தேசி - பெருங்குதிரை, கொடிப் படை, துகள், தூசு, புழுதி. நாசி - மூக்கு. நேசி - அன்புள்ளான், நேசியென் னேவல். பாசி - சடைச்சி, நீர்ப்பாசி, வருணன். பூசி - வணங்கு, ஆராதனைசெய். பேசி - தரை, நரம்பு, பூமொட்டு, உடை, வினையெச்சம். மாசி - ஓர்வகைமாதம், புதுவரம்பு, மகநாள். வாசி - அச்சுவினிநாள், இசைப் பாட்டு, குதிரை, பறவை, பாணம், மிகுதி, வாசியென்னேவல். வீசி - அலை, அற்பம், இலைப் பாற்றி. வேசி - வேசை. கோசிகம் - சாமவேதம், சீலை, பட்டுச்சீலை. தேசிகம் - அவ்வந்நாட்டுச்சொல், அழகு, ஒளி, ஓர்வகைக் கூத்து, பொன். வாசிகம் - சொல்லியனுப்பின காரியம். கேசிகன் - நிறைமயிருள்ளோன். கோசிகன் - கௌசிகன். தேசிகன் - உபாத்தியாயன், குரு, தேசாந்திரி. நாசிகை - மூக்கு. பாசிகை - ஓர்வகைக்கல். வாசிகை - கோத்தமாலை, தொடுத்த மாலை, மாலை. ஆசித்தல் - விரும்பல், இச்சித்தல். நேசித்தல் - அன்புவைத்தல், விரும் புதல். பூசித்தல் - பூசனை. மோசித்தல் - தவறுதல், மோசம் போதல். யாசித்தல் - இரத்தல். யோசித்தல் - ஆராய்தல். வாசித்தல் - படித்தல். ஆசியம் - அவமதிச்சிரிப்பு, முகம். சூசியம் - சூட்டிறைச்சி. சோசியம் - சோதிடம். தேசியம் - திசைச்சொல். ஆசினி - ஆகாயம், ஈரப்பலா, மர வயிரம், மரவுரி. காசினி - பூமி. ஆசு - அற்பம், ஓர்பாட்டு, கவசம், குற்றம், கைக்கவசம், சீக்கிரம். ஏசு - ஏசென்னேவல், குற்றம், இகழ்ச்சி. காசு - குற்றம், கோழை, மணிப் பொது, மாதரணிவடம், பொன். கூசு - ஓரறை, கூசென்னேவல். கோசு - ஓர்வகை யெல்லையளவு, தெரு. தாசு - சூதாடுகருவி, நாழிகை வட்டில். தூசு - சித்திரைநாள், சீலை, யானை கட்டுங்கயிறு. தேசு - ஒளி, பொன். பாசு - பச்சை, மூங்கில். பூசு - தூசி, போர், பூசென்னேவல். பேசு - சொல். மாசு - அழுக்கு, கருமை, குற்றம், மேகம், வாசு - திருமால், கடவுள். வீசு - எறி. ஆசுகம் - அம்பு, காற்று, பறவை. சூசுகம் - முலைக்கண். ஆசுரம் - எண்வகை மணத்தினொன்று. பாசுரம் - வசனம். ஆசை - திசை, பொன், விருப்பம், அணங்கு, ஆர்வம், இச்சை, இரா கம், எட்டை, எடை, காதல், காமம், நசை, நச்சு. ஈசை - ஏர்க்கால், கலப்பை. ஓசை - ஒலி, சீர்த்தி, வாழை. காசை - காயாநாணற்புல். தோசை - அப்பவர்க்கம். பாசை - சமைத்தல், ஓர் பூச்சி. பூசை - ஆராதனை, பூனை. மாசை - பொன். மீசை - முகமயிர். மூசை - மட்குகை. வாசை - ஆடாதோடை. வீசை - ஓர்நிறை. வேசை - வேசி. ஒச்சல் - எரிதல், ஓட்டல், செலுத்தல், வியங்கோண்முற்று. பாச்சல் - எழுச்சி, வியங்கோண் முற்று. ஆச்சியம் - நெய். வாச்சியம் - பறை. ஏச்சு - இகழ்ச்சி, உதாசினம், வைதல். கீச்சு - கீச்சழுகை, புள்ளொலி. நீச்சு - நீந்துதல். பூச்சு - பிலுக்கு, பூசுதல், வெளிக் காட்சி. பேச்சு - சொல், சொல்லல். மூச்சு - உயிர்ப்பு, ஆண்மை. வீச்சு - அடி, ஆட்டம், எறிதல். ஞ ஊஞ்சல் - ஊசல், விண்டாட்டு. நோஞ்சல் - மெலிந்தல். பீஞ்சல் - பீச்சுவிளா. பூஞ்சல் - கண்மயங்குதல். ஆஞ்சி - அலையல், ஏலம், கூத்து, சோம்பல். காஞ்சி - எண்கோவைமணி, ஓர் வகையூர், ஓர்வகைப்பண், ஓர்மரம், திரண்டுமுன்னெ திரூன்றுஞ் சேவ கர்க்கு மாலை, நிலையின்மை. நோஞ்சி - மெலிந்தவன். பூஞ்சி - பூஞ்சை. மாஞ்சி - ஓரிராகம், வாசனைப் பண்டம். மூஞ்சி - முகம். ஞாஞ்சில், நாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு. மாஞ்சில் - சடாமாஞ்சில். ட ஆடகம் - துவரை பொன். ஏடகம் - சீலை, தென்னமரம், பலகை, பனைமரம், பூவிதழ். காடகம் - சீலை. கூடகம் - வஞ்சனை. கேடகம் - பரிசை, பாசறை, மலை யாறு செறிந்தவூர். கேடகம் - குண்டிகை, குதிரை, நாற் றெருக்கூடுமிடம், புதுமை, முடி யுறுப்பு. சூடகம் - கைவளை. சேடகம் - கேடகம். தோடகம் - தாமரை. நாடகம் - கூத்து, முத்தமிழிலொன்று. பாடகம் - மாதர்காலணியி லொன்று. போடகம் - ஓர்நோய். மாடகம் - வீணை முறுக்காணி. வேடகம் - காதணி. ஆடம் - ஆமணக்கு, ஓரளவு. ஒடம் - நீர்மேலோடு மோடம், மிதவை. கீடம் - கோற்புழு, புழு, வண்டு. கூடம் - கூடம், கொல்லன் சம்மட்டி, பொய், மலையினுச்சி, மறைவு, வஞ்சம். கேடம் - கிளியாறு. கோடம் - எல்லை. சூடம் - உச்சிச்சடை, சிவன்சடை. சேடம் - எச்சில், மிச்சப்பொருள். தாடம் - உப்பட்டில், ஒலி, மலை. தோடம் - பாவம், குற்றம், தோஷம். பாடம் - இடையர்வீதி, தெரு, பாடம். பீடம் - ஆசனம், சிங்காதனம். போடம் - ஓர்தேயம். மாடம் - உழுந்து, வீடு. மூடம் - அறிவின்மை. மேடம் - மேஷம், ஆடு. வாடம் - சுவர், மதில். வேடம் - காதணி, தன்கோலம்விட்டு மற்றோர் கோலங்கொளல். கோடரம் - எட்டிமரம், குதிரை, குரங்கு, சோலை, தேர்மொட்டு, மயிர்ச்சாந்து, மரக்கொம்பு, மரப் பொது, மரப்பொந்து. பீடரம் - கோயில். சீடர் - மாணாக்கர். சேடர் - அடிமையர், ஏவல் செய்வோர், இளையோர். பேடர் - அலியர். மூடர் - அறிவில்லார், கீழ்மக்கள். வேடர் - வேடுவர். ஆடலை - பூவில்லாமரம், பூவிளா. பாடலை - ஒருமரம், துர்க்கை, பாடல், வர்ணப்பசு, பாடலிபுரம். ஆடல் - அசைதல், குளித்தல், கூத்தா டல், செய்தல், சொல்லுதல், நயச் சொல், புணர்தல், பொருதல், விளையாடல். ஊடல் - கலவியிற் பிணங்கல், விரோ தித்தல், வெறுத்தல், வியங்கோண் முற்று. ஏடல் - கருத்து. ஓடல் - அச்சக்குறிப்பு, ஓடல், வியங் கோண் முற்று. கூடல் - அடுத்தல், இயலல், கழிமுகம், கூடுதல், தேடல், புணர்தல், மதுரை, வியங்கோண் முற்று. கோடல் - கொள்ளல், முறித்தல், வளைதல், வியங்கோண் முற்று, வெண்காந்தள். சாடல் - சாடுதல், தாவுதல். சூடல் - அணிதல், வியங்கோண் முற்று. தேடல் - தேடுதல், வியங்கோண்முற்று. நாடல் - தேடல், வியங்கோண்முற்று. நீடல் - நீளல், வியங்கோண்முற்று. நேடல் - தேடல், வியங்கோண்முற்று. பாடல் - சங்கீதம், வாசித்தல், வியங் கோண்முற்று. போடல் - எறிதல், வைத்தல், வியங் கோண்முற்று. மாடல் - செய்தல். மூடல் - மூடுதல், வியங்கோண்முற்று. வாடல் - சாதல், மெலிதல், வியங் கோண்முற்று. வீடல் - சாதல், வியங்கோண்முற்று. ஆடவள் - பெண். பாடவள், ஆடவை, பாடவை - மிதுன விராசி. தாடனம் - அடித்தல். பீடனம் - பீடித்தல். ஏடன் - செவிடன், தோழன். கோடன் - குளக்கோட னென்னு மிலங்கை யரசன். சேடன் - ஏவல் செய்வோன், ஓர் வகைச் சாதியான், கட்டிளமை யோன், தோழன், பூமிதாங்கு மனந்த னென்னும் பாம்பு. நாடன் - கார்த்திகை நாள். மூடன் - அருவிலி. நீடாணம் - கறி. பாடாணம் - கல். ஆடி - உத்திராட நாள், ஒர் மாதம், கண்ணாடி, வினையெச்சம், காற்று, கூத்தாடி. ஊடி - பிணங்கி, வினையெச்சம். ஏடி - தோழி முன்னிலைப் பெயர். ஓடி - வனநெல், வினையெச்சம். காடி - ஊறுகாய், கஞ்சி, கள், காடி நெய். கூடி - சேர்ந்து, வினையெச்சம். கோடி - ஓரெண், சீலை, புதுமை, முடி யுறுப்பு, வினையெச்சம், கோணி. சாடி - ஆண் மயிர், கும்பவிராசி, சீலை, தாழி, வினையெச்சம். சூடி - சீலை, வினையெச்சம். சேடி - இடையர்வீதி, தோழி, வித்தி யாதரருலகு. சோடி - இணை, இரண்டு. தாடி - மோவாய் மயிர். தேடி - நாடி, வினையெச்சம். தோடி - ஓரிராகம். நாடி - ஆண்மயிர், உட்டொளை நரம்பு, மூக்கு, யாழ்நரம்பு, வினை யெச்சம். பாடி - ஊர், ஒரிராகம், கவசம், சேரி, நகரம், நாடு, முல்லைநிலத்தூர், வினையெச்சம். பீடி - துன்புறுத்து, கசக்கு. பேடி - அலி. போடி - நாவல்மரம். மாடி - அரண்மனை, வீட்டு மேல் தளம். மூடி - மூடப்பெண், மேன்மூடி. மோடி - காடுகாள், பிணக்கு. வாடி - வதங்கி, வினையெச்சம். வீடி - கொத்தான். காடிகம் - சீலை. கோடிகம் - அணிகலச்செப்பு, சீலை, பூந்தட்டு. மூடிகம் - எலி, பெருச்சாளி. சூடிகை - முடி. பீடிகை - அணிகலச் செப்பு, கடை வீதி, பீடம், பூந்தட்டு, முனிவ ரிருக்கும் பீடம். வீடிகை - தாம்பூலம். கோடியர் - நாடகர். சேடியர் - ஏவல்செய் பெண்கள். பேடியர் - அவியர். கோடிலம் - கோட்டம். பாடிலம் - நாடு. ஆடு - ஆடலைச் செய்யென்னே வல், ஆடு, மேடவிராசி, வெற்றி. ஈடு - உவமை, குழைதல், பெருமை, வலி. ஊடு - ஊடென்னேவல். ஏடு - கண்ணிமை, பனையேடு, பூவிதழ். ஓடு - ஓடு, ஓடென்னேவல், நீளுதல், வேற்றுமையுருபு (உ-ம். சாத்த னோடு வந்தான்). காடு - இடம், ஊர், எல்லை, சுடுகாடு, செத்தை, பரணிநாள், வனம். கூடு - கூடென்னேவல், பறவைக்கூடு. கேடு - கெடுதல். கோடு - அரணிருக்கை, ஊதிடு கொம்பு, கோடென்னேவல், சங்கு, நீர்க்கரை, மரக்கொம்பு, மலையினுச்சி, யானைக்கொம்பு, வஞ்சனை, வரம்பு, விலங்கின் கொம்பு. சாடு - சாடென்னேவல், சாதுரியம், பண்டி. சீடு - நூற்சீடு. சூடு - சூடுதல், சூடென்னேவல், நென் முதலியவற்றி னரிக்குவியல், வெப்பம். சேடு - அழகு, இளமை, திரட்சி, நன்மை, பெருமை. சோடு - கவசம், சோடு. தோடு - காதணி, கூட்டம், தாழை, தெங்கு, பனை, பூவிதழ்களினேடு. நாடு - இடம், இடனுடைமை, நாடென்னேவல், பக்கம், பூமி, பூவுலகப் பொது. நீடு - நீளல், நீளென்னேவல், நெடும் பொழுது. பாடு - இடம், ஓசை, குணம், கேடு, பக்கம், படுதல், பாடென்னேவல், பெருமை. பீடு - பெருமை, வலி. பூடு - பூண்டு. பேடு - அலி, ஊர், மன்மதன்கூத்து. போடு - அணி, இழு, ஈணு. மாடு - அகண்மணி, இடம், செல் வம், பக்கம், பொன், மாடு. மேடு - உயர்ச்சி, பெருமை, வயிறு. மோடு - உயர்ச்சி, பெருமை, வயிறு. வாடு - வதங்கு, சோர்தல். வீடு - மனை, மோக்கம், வீடென் னேவல். வேடு - மூடுசீலை, வடிகட்டுசீலை. ஆடை - சித்திரநாள், சீலை, போர்வை, வஸ்திரம். ஈடை - ஈசை, ஏர்க்கால், கலப்பை, புகழ்ச்சி. ஊடை - நூற்றார், மனைவி. ஒடை - அகழி, ஊர்கொடி, ஓர்மரம், குளம், நெற்றிப்பட்டம், மலை வழி, யானை நுதற்பட்டம். காடை - ஒர்வகைப்புள், குறும்பூழ். கூடை - கூடை, கூத்தின் விகற்பம். கோடை - காற்று, குதிரை, செங் காந்தள், மேல்காற்று, வெண்காந் தள், வெயில், வேனிற்காலம். சாடை - சமிக்கை, குறிப்பு, கோள். சீடை - ஒரு பணிகாரம். சூடை - குடுமி, வீட்டிறப்பு. சேடை - சேஷை. சோடை - சடைவு. தாடை - கன்னம். தோடை - சலாபக் குறியிலோர் குழூஉக்குறி. பாடை - ஆசந்தி, சொல். பீடை - துன்பம். பேடை - பறவைப்பெண். மாடை - பொன். மேடை - மேடு. வாடை - இடைச்சேரி, தெரு, வட காற்று, வேடர்வீதி. வேடை - செட்டித்தெரு, கப்பல், காம நோய், அபேட்சை. பூட்கை - மேற்கோள், யாளி, யானை. வேட்கை - ஆசை. ஆட்சி - ஆண்மை, உரிமை. காட்சி - அறிவு, பார்வை. நீட்சி - நீளம். பூட்சி - உடல், பூணல். மாட்சி - பெருமை. மீட்சி - மீளுதல். ஆட்டம் - அசைவு, தன்மை. ஈட்டம் - கூட்டம். ஊட்டம் - உண்டி. ஓட்டம் - உதடு, ஒடுதல், தோல்வி. காட்டம் - விறகு. கூட்டம் - கூடுதல், தொகுதி, பிண் ணாக்கு, போர். கோட்டம் - அழுக்காறு, இடம், ஓர் மருந்து, குராமரம், குளம், கூட்டம், கோணல், கோயில், சுடுகாடு, தேவ லோகம், நாடு, பசுக்கூட்டம், மருத நிலத்தூர், வயல், வளைவு, வாசனைப் பண்டம், வினை. சேட்டம் - ஆனிமாதம். தோட்டம் - கொல்லை. நாட்டம் - ஓர்வகைப்பண், கண், வாள். நீட்டம் - நீட்சி. மூட்டம் - மூடல், மூளல், கம்மாளர், கருவி, மூடியிருப்பது, விறகு. வாட்டம் - தெரு, தோட்டம், வழி, வாடல். வேட்டம் - வேட்டை. ஆட்டல் - அசைத்தல், கூத்தாட்டுதல், நடப்பித்தல், வியங்கோண்முற்று. ஈட்டல் - கூட்டல், சம்பாதித்தல், சேகரித்தல், தொகுத்தல், வியங் கோண் முற்று. ஊட்டல் - உண்பித்தல், விலங்கின் கன்றுண்ணல், வியங்கோண் முற்று. ஓட்டல் - செலுத்தல், ஓடச் செய்தல், வியங்கோண்முற்று. காட்டல் - காண்பித்தல், வியங் கோண்முற்று. கூட்டல் - சேர்தல், அதிகப்படுத்தல், வியங்கோண்முற்று. கேட்டல் - இரத்தல், செவி கொடுத்தல், வினாவல், வேண்டுதல். கோட்டல் - கோணல், எழுதல், வளைத்தல், வியங்கோண்முற்று. சாட்டல் - சாட்டுதல். சூட்டல் - அணிவித்தல், வியங்கோண் முற்று. தீட்டல் - எழுதல், சித்திரமெழுதல், ஆயுதங்களைக் கூர்மையாக்கல், வியங்கோண்முற்று. நாட்டல் - தாபித்தல், வியங்கோண் முற்று. நீட்டல் - ஈதல், நீட்டுதல், வியங் கோண்முற்று. பூட்டல் - பூட்டுதல், கொழுவுதல், தொடுத்தல், வியங்கோண்முற்று. மாட்டல் - மூட்டல், வியங்கோண் முற்று. மீட்டல் - வீணை வாசித்தல், இரட் சித்தல், மீட்டுதல், வியங் கோண் முற்று. முட்டல் - இசைத்தல், ஏவிவிடுதல், பொருத்தல், மாட்டல், கோள் மூட்டுதல், வியங்கோண்முற்று. வாட்டல் - மெலிவித்தல், வியங் கோண்முற்று. வீட்டல் - கொல்லல், வியங்கோண் முற்று. வேட்டல் - ஆசைப் பெருக்கம், வியங் கோண்முற்று, விருப்பம், விவா கம், வேள்வி செய்தல். காட்டன் - காட்டிலுள்ளவன், புத்தி யில்லாதவன். சேட்டன் - தமையன், பெருமையிற் சிறந்தவன், குறும்பு செய்பவன். நாட்டன் - நாட்டமுடையவன், குறி யுடையவன். பாட்டன் - மூதாதை. ஆட்டி - ஆட்டுவோன், தலைவி, பெண், வினையெச்சம். ஈட்டி - சவளம், குந்தம், கழுக்கடை, கழுமுள், வினையெச்சம். ஊட்டி - உணவு, பறவையுணவு, மழை, மிடறு, வினையெச்சம். ஓட்டி - ஓடப்பண்ணுவோன். கேட்டி - மிலாறு. கோட்டி - அழகு, கூட்டம், சவை, நிந்தை, பரிகாரம், வினையெச்சம். சாட்டி - சவுக்கு. சீட்டி - எழுத்துப் புடவை. சேட்டி - அக்காள், பெருமையிற் சிறந்தவள். தாட்டி - கெட்டிக்காரி, சாமர்த்தியம். தூட்டி - சீலை. தோட்டி - அழகு, கதவு, சூழ்கழி யிருக்கை, யானைக்குடாரி. பாட்டி - ஒருசார் விலங்கின் பெண் பொது, பாடுவாள், பெண்ணரி, பெண்ணாய், பெண்பன்றி, மூதாய். பேட்டி - பெரியவளது தரிசனம். போட்டி - எதிரிடை, கேலி. வாட்டி - முறை, வறட்டி. வேட்டி - வேஷ்டி, ஆடை. தோட்டிமை - ஒற்றுமை. மேட்டிமை - மேன்மை. சாட்டியம் - வஞ்சம், வருத்தம். நாட்டியம் - கருத்து, குறிப்பு, கூத்து. ஆட்டு - ஆட்டென்னேவல், கூத்து, தத்துவம், வல்லமை. ஊட்டு - ஊண்பிக்கை, கவளம். ஓட்டு - கப்பலோட்டம். காட்டு - உதாரணம், காண்பித்தல். கூட்டு - உறவு, கலப்பு, சம்பந்தம், சேர்மானம். சாட்டு - சாட்டிவிடுதல், ஒப்பிக்கை. சீட்டு - கடன் சீட்டு முதலிய பத்திரிகை. சூட்டு - சூட்டென்னேவல், நுதலணி, நுதலணிமாலை, மாலை, முடிப்பு. தீட்டு - தீட்டென்னேவல், தீண்டல், தொடக்கு, அழுக்கு, ஆசூசம், எழுது தல், கூர்மையாக்குதல், மகளிர் சூதகம். தேட்டு - தேடல். நாட்டு - நிலை நிறுத்து. நீட்டு - நீளப் பண்ணு, நீளம். பாட்டு - இசைப்பா, செய்யுள். பூட்டு - நாணி, பூட்டும் பூட்டு, பூட்டென்னேவல். மூட்டு - குதிரைக் கடிவாளம், சந்து, மூட்டென்னேவல், எழுச்சி, பொருத்து. வாட்டு - துன்புறுத்து, நன்மை, நீதி. வெட்டு - அதிர்வெடி. ஆட்டுதல் - அரைத்தல், அலையச் செய்தல். ஈட்டுதல் - சேகரித்தல், சம்பாதித்தல். ஊட்டுதல் - இன்ப துன்பங்களை யருத்தல், உண்பித்தல், விருந்திடல். ஒட்டுதல் - ஒட்டல். காட்டுதல் - நிரூபித்துல், அத்தாட்சி பண்ணுதல், காண்பித்தல். கூட்டுதல் - அதிகப்படுத்தல், பெருக் குதல், சேர்த்தல். சாட்டுதல் - அடித்தல், சாட்டி விடு தல். சூட்டுதல் - அணிதல், தரித்தல். தீட்டுதல் - எழுதுதல், கூராக்குதல், சித்திரித்தல். நாட்டுதல் - தாபித்தல், நிலை நாட்டுதல். நீட்டுதல் - நீளச் செய்தல், கால தாமதப்படுத்தல். பூட்டுதல் - மூடல். மாட்டுதல் - கடாவுதல், கட்டுதல். மீட்டுதல் - வீணை வாசித்தல். மூட்டுதல் - இழை சேர்த்தல். வாட்டுதல் - துன்புறுவித்தல். வீட்டுதல் - கொள்ளல். ஆட்டை - ஆண்டு. ஏட்டை - ஆசை, தளர்வு, துன்பம். காட்டை - எல்லை, காலம், திசை, நுனி. கோட்டை - ஓர் நாள், மூதேவி. கோட்டை - அரண். சாட்டை - சவுக்கு. சேட்டை - அக்காள், கேட்டை நாள், மூதேவி, விசாகநாள், பெருமை யிற் சிறந்தவன். சோட்டை - பேராசை. தேட்டை - தெளிந்தநீர். பாட்டை - வழி. நாட்டை - ஒர்வகைப்பண். பீட்டை - பயிரிளங்கதிர். பூட்டை - ஏற்றமரம், காராம்பி, செக்கு. பேட்டை - நகரத்தருகுஞ் சந்தை கூடலுமாகியவூர். மூட்டை - ஒரு பூச்சி, சாமான்பை. வேட்டை - துன்பம், வேட்டம். கோட்பு - கொள்ளுதல். ஞாட்பு - கூட்டம், படை, பாரம், பூசல், வலி. நாட்பு - வலி. வேட்பு - விருப்பம். ண ஆணம் - அன்பு, குழம்பு, கொள் கலம். ஊணம் - ஒர் தேயம். ஏணம் - நிலைபெறுதல், மான், மான்றோல், வலி, எலும்பு. ஓணம் - ஆறு, திருவோணம். காணம் - ஓர் வகையளவு, கொள், செக்கு, பொற்காசு, பொன். கீணம் - குறைபாடு, சிதைவு. கேணம் - செழிப்பு. கோணம் - குதிரை, முடுக்குத்தெரு, மூக்கு, யானைத்தோட்டி, வளைந்த வாள், வளைவு. சாணம் - ஆப்பி, சாணைக்கல். சீணம் - பதனழிவு. சேணம் - மெத்தை, கல்லணை. சோணம் - சிவப்பு, இரத்தம், கடல், தீ. தூணம் - அம்புக்கூடு, தூண், பகை. நாணம் - வெட்கம். பாணம் - அம்பு, மழைவண்ணக் குறிஞ்சி. மாணம் - மாட்சிமை. வாணம் - அம்பு, தீ, பாணம் மத் தாப்பு முதலியன. ஆணர் - நன்மை, பாணர், வளமை. ஊணர் - ஊணதேயத்துள்ளோர், பேருண்டியுண்போர். கீணர் - அற்பர். பாணர் - புகழ்ந்து பாடுவோர். யாணர் - அழகு, தச்சர், நன்மை, புதுமை, வளமை. காணல் - குறித்தல், நினைத்தல், வணங்கல், வியங்கோண்முற்று. கோணல் - கூன், மாறுபாடு, வளைவு, வியங்கோண்முற்று. நாணல் - நாணற்புல், நாணுதல், வியங்கோண்முற்று. பூணல் - அணிதல், வியங்கோண் முற்று. பேணல் - ஆசைப் பெருக்கம், ஓம்பல், கருத்து, குறித்தல், வியங் கோண் முற்று, விரும்பல். மாணல் - நன்மை, மாட்சிமை, வியங் கோண்முற்று. கோணன் - கூனன். வாணன் - ஓர்வகை யசுரன், கார்த் திகை நாள், வாழ்நன். ஆணி - ஆணி, எழுத்தாணி, உறுதி, கீலம். ஏணி - எல்லை, ஏணி, நாடு, மான் கன்று. காணி - உரிமை, ஒர்வகை யெண், அஃது ஒன்றிலெண்பது கொண் டது, மனையிருபத்து நான்கு கொண்ட ஒரு நில அளவு, நிலம். கேணி - அகழி, கிணறு, குளம், துறவு. கோணி - கோணி, பன்றி, வினை யெச்சம், கந்தை, சாக்கு, பை. சாணி - பசு முதலிய மிருகங்களின் மலம். சேணி - ஏணி, வித்தியாதரருலகு. தூணி - அம்புக்கூடு, ஓர்வகையளவு. தோணி - அம்பு, இரேவதிநாள், சேறு, நீர், மதிலுறுப்பு, மரக்கலம். நாணி - வில்லினாணி, வினை யெச்சம். பாணி - இசைப்பாட்டு, ஊர்சூழ் சோலை, கள், காலம், கூத்து, கை, சங்கீதம், சொல், தாமதம், நீர், பலபண்டம். பூணி - இடபவிராசி, எருது. பேணி - ஒரு பலகாரம். போணி - முதல் விக்கிரையம், ஒரு பாத்திரம். மாணி - பிரமசாரி. வாணி - கூத்து, சரச்சுவதி, சொல், சொல்லல். வேணி - ஆகாயம், ஆறு, இடையர் வீதி, சடை. சோணிதம் - இரத்தம், சிவப்பு. வாணிதம் - கள். சீணித்தல் - பதனழிதல். தாணித்தல் - தாளித்தல், துப்பாக்கி யில், மருந்திடல், பலப்படுத்தல். தூணித்தல் - பருத்தல். ஆணு - இனிமை, நன்மை. காணு - அறி, கலன், சந்தி, பார். தாணு - சிவன், தூண், நிலை பெறுதல். நாணு - வெட்கப்படு. வேணு - உட்டொளை, மூங்கில், வாள், வில், வேய்க்குழல். ஆணை - அடையாளம், ஏவல், சத்தி யம், தடுத்தல், மெய். ஏணை - ஆடு, புடவைத் தொட்டில், மஞ்சம். கோணை - அழிவின்மை, கொடுமை. சாணை - சாணைக்கல், சிறு குழந்தை களுடைய படுக்கைச் சீலை. சோணை - அருகு, அருணைமாநகர், பக்குவம், பருவம். பூணை - முல்லைநிலம். வீணை - ஓசை, யாழ். ஆண் - ஆண்மகன், ஆண்விலங்கு, தலைமை, ஆண்பாற் பொது. ஊண் - இரை, சோறு, உண்டி. ஏண் - வலி, நிலையுடைமை, பெருமை. காண் - அழகு, பார், தரிசி. கோண் - கொடுங்கோன்மை, கோணென்னேவல், வளைவு. சாண் - ஒன்பதங்குலவளவு, அரை முழம். சேண் - அகலம், ஆகாயம், உயர்ச்சி, தூரம், நீளம். ஞாண் - கயிறு. தூண் - தம்பம், பற்றுக்கோடு. நாண் - கயிறு, நாணென்னேவல், வெட்கம். பாண் - இசைப்பாட்டு, கள். பூண் - ஆபரணம், பூணென்னேவல். பேண் - பேணென்னேவல், துலாத் தாங்கி. மாண் - மாட்சிமை, மாணென் னேவல். வீண் - பயனின்மை. வேண் - ஆசைப்பெருக்கம், கொடுந் தமிழ் நாட்டிலொன்று. காண்டகம் - ஊர், காடு, கெண்டிகை, நோய். தாண்டகம் - இருபத்தாறெழுத்தின் மிக்கவடியான் வரும் பா. காண்டம் - அம்பு, ஆயுதம், எல்லை, கமண்டலம், காடு, காண்டகம், குதிரை, கோல், சமயம், சீலை, திரட்சி, திரைச் சீலை, நீர், படைக் கலம், மலை, முடிவு, வாச்சியம். கோண்டம் - குறிஞ்சா, தூக்கு, நெருஞ்சில். பாண்டம் - பாத்திரப்பொது, மட் கலம். ஈண்டல் - கூடுதல், வியங்கோண் முற்று. காண்டல் - காணுதல், தோற்று வித்தல், பெறுதல், வணங்கல். கீண்டல் - கிழித்தல், கிளைத்தல். சீண்டல் - நாறல், தொடுதல். தாண்டல் - கடத்தல், செலுத்தல், வியங்கோண்முற்று. தீண்டல் - தோடல், வியங்கோண் முற்று. தூண்டல் - எழுப்பல், செலுத்தல், வியங்கோண்முற்று. தோண்டல் - அகழ்தல், முகத்தல், வியங்கோண்முற்று. நோண்டல் - கீண்டல், தோண்டல், முகத்தல், வியங்கோண்முற்று. மாண்டல் - மாட்சிமை. வேண்டல் - ஆசை, ஆசைப் பெருக் கம், இகத்தல், வியங் கோண் முற்று. மாண்டார் - இறந்தோர், பெரியோர். வேண்டார் - பகைவர். ஆண்டி - பண்டாரம், யாசகன். தோண்டி - சிறுபானை. பாண்டி - ஒர்வகைத் தேயம், ஓர்வகைப் பண், பல்லாங்குழிப்பலகை. பூண்டி - ஊர், வினைமுற்று. தூண்டில் - மீன், பிடிக்குங்கருவியி லொன்று. பாண்டில் - அகல், இடபவிராசி, எருது, கட்டில், கைத்தாளம், நாடு, பண்டி, மூங்கில், வட்டம், வாகை மரம். ஆண்டு - அவ்விடம், வருடம். ஈண்டு - இவ்வண்ணம், இவ்விடம், ஈண்டென்னேவல், சீக்கிரம், புலிதொடக்கி. காண்டு - கூப்பிடுதூரம். கீண்டு - கிண்டு, கிழி, கீறு. கூண்டு - பறவைக்கூடு. தாண்டு - குதி, கடத்தல். தூண்டு - ஏவு, கிளப்பு, முயற்சி, விளக்குத்திரி முதலியவற்றைத் தூண் டென்னேவல். தோண்டு - நோண்டு. பாண்டு - ஓர்வகை நோய், குருகுலத் தரசருளொருவன், வெண்மை. பூண்டு - பூடு, வினையெச்சம். யாண்டு - எங்கு, வருடம். ஈண்டை - இவ்விடம். கோண்டை - இலந்தைக்கனி, கமுகு. யாண்டை - இடத்தினையுற்ற சொல். ஆண்மை - மனவூக்கம், மெய், வலி. கேண்மை - உறவு, கண்ணோட்டம், நட்பு. த காதகம் - கொலை, பிறரைப் பீடித்தல். சாதகம் - சன்னமெழுதல், துணைக் காரணம், பூதகணம், வானம் பாடி. சூதகம் - அசுத்தம், பழமை, பிறப்பு, மகளிர்தொடக்கு. சேதகம் - சிகப்பு, சேறு. சோதகம் - கழிக்குந்தொகை, சுத்தி பண்ணல். தோதகம் - வஞ்சகம், மரியாதை யின்மை. நீதகம் - நியாயம். பாதகம் - பாவம், துரோகம். பீதகம் - சாந்து, பொன், பொன்னிறம், வெட்டிவேர். பேதகம் - பேதம், வேறுபாடு. போதகம் - இளமை, சிங்கக்குட்டி, புலிக்குட்டி, மரக்கலம், மரக் கன்று, யானை, யானைக்கன்று. மேதகம் - மதிப்பு, மேன்மை. மோதகம் - அப்பவர்க்கம், தோசை. வேதகம் - தன்மையை வேறுபடுத்து வது. காதகன் - கொலையாளன். சீதகன் - சுக்கிரன். பாதகன் - கீழ்மகன். பீதகன் - வியாழம். கோதண்டம் - வில். சேதண்டம் - செக்கர்வான். மாதண்டம் - பெரும்பாதை. மூதண்டம் - ஆகாயம். வேதண்டம் - கைலை, மலை, யானை. பூதநாதன் - சிவன். யூதநாதன் - யானைக் கூட்டத்துத் தலையானை. ஆதபம் - ஒளி, வெயில். பாதபம் - மரப்பொது. யூதபம் - யானைக்கூட்டத்துத் தலை யானை. ஆதம் - ஆதரவு, கூந்தற்பனை, விருப்பு. ஊதம் - யானைக் கூட்டம், போருக் கழைத்தல். ஏதம் - குற்றம், கேடு, துன்பம். ஓதம் - கடல், கடற்றிரை, வெள்ளம், அண்டவாதம். காதம் - கள், காவதம், கொலை, நாற் சதுரத்துறவு, நாலுகூப்பிடு கொண்ட தூரம். கீதம் - இசைப்பாட்டு, வண்டு, மூங்கில். கேதம் - துன்பம். சாதம் - உண்மை, சோறு, பிறப்பு, பூதம். சீதம் - குளிர்ச்சி, நீர், மேகம். சூதம் - சூது, பவளமல்லிகை, பாத சரம், புளிமா, மாமரம், இரதம், குறிகேட்டல், வண்டு, விழுதல். சேதம் - கேடு, துண்டு. சோதம் - ஒழுகல், சுத்தநீர். தாதம் - அசையப்பட்டது, கொடை. தூதம் - அசைவு. தோதம் - பசுவின் கன்று, வியாகுலம். நாதம் - ஒசை. நீதம் - நீதி. பாதம் - கால், நாலிலொன்று, கன்மேந்திரியம் ஐந்தினொன்று, சரிதை, செய்யுட்களினடி. பீதம் - நால்வகைச்சாந்து, பொன் னிறம், மஞ்சள். பூதம் - இறந்தகாலம், உயிர், ஐம்பூதம், தூய்து, பரணிநாள், பேய். பேதம் - வேற்றுமை, ஒவ்வாமை, பகை. போதம் - அறிவு, பரணிநாள், மரக் கலம். மாதம் - மாசம், கடைதல், கொல்லல். மேதம் - கொலை. மோதம் - உவகை, வாசனை. யாதம் - பசுக்கூட்டம். யூதம் - யானைக்கூட்டம், விலங்கின் கூட்டம். வாதம் - காற்று, தருக்கம், முப்பிணியி லொன்று. வீதம் - முறை. வேதம் - முதனூல், அறிவு, மறை, துளைத்தல். ஆதரம் - ஆசை, ஊர், சிவப்பு, அன்பு, சங்கை. காதரம் - அச்சம், தீவினைத் தொடர்பு. கோதரம் - மேகம். சூதரம் - மாங்கனி. சோதரம் - சகோதரம். பூதரம் - பொன்மலை, மலை. காதரன் - அச்சமுள்ளோன். சீதரன் - அரி. சோதரன் - சகோதரன். ஆதர் - குருடர். ஏதர் - குற்றமுடையோர். சூதர் - சூதாடுவோர், தேர்ப்பாகர், பாணர், புகழ்வோர். தாதர் - அடிமைகள், தொண்டர். தூதர் - ஒற்றர், சமாதானம் பேசுவோர். பூதர் - பதினெண்கணத்தொருவர். மாதர் - அழகு, ஆசை, பெண்மகளிர். யூதர் - ஒரு சாதியார். காதலம் - ஒரு மீன். சாதலம் - திராய். தாதலம் - நோய், மனத்திட்பம். பாதலம் - பாதாளம். பீதலம் - பித்தளை. பூதலம் - பூமி. வாதலம் - அதிமதுரம், காற்று, விரைவு. காதலி - காதலி யென்னேவல், தோழி, மகள், மனைவி. மாதவி - இந்திர சாரதி. ஆதல் - ஆகுதல், கல்விநூல், கூத்து, தெரிதல், நுணுக்கம். ஈதல் - கொடுத்தல், சொரிதல். ஊதல் - ஆரவாரம், காற்று, வியங் கோண்முற்று, வீங்கல். ஓதல் - சொல்லல், படித்தல், வாசித் தல், வியங்கோண்முற்று. காதல் - ஆசை, கூறுசெய்தல், கொல் லல், தறித்தல், மகன், வியங்கோண் முற்று. கூதல் - கூதிர், கூவுதல். கேதல் - அழைத்தல். கோதல் - கோதுதல், வியங்கோண் முற்று. சாதல் - இறத்தல். நோதல் - நோயுறல். போதல் - அகலல், நீளல், போகல், வரல். மோதல் - அடித்தல், வியங்கோண் முற்று. வீதல் - கெடுதல், சாதல், வறுமை. வேதல் - வேகுதல். ஆதவம் - ஒளி, வெயில். காதவம் - ஆலமரம், வான்கோழி. சூதவம் - வண்டு. பாதவம் - கொல்லை, மரப்பொது, மலை. பூதவம் - ஆலமரம், மருதமரம். மாதவம் - கள், தவம், வசந்தகாலம், வைகாசி மாதம். ஆதவன் - சூரியன், பார்ப்பான். மாதவன் - திருமால், வசந்தன். கூதளம் - கூதாளிச் செடி. கோதளம் - பசுவின் கன்று. சீதளம் - குளிர்ச்சி. பாதளம் - பாதலம். ஆதனம் - ஆசனம், சீலை, பார்வை, விலாசம். ஏதனம் - சுவாசம்படல். ஓதனம் - உண்டி, சோறு. கூதனம் - மறைத்த சொல். கேதனம் - பெருங்கொடி, விருதுக் கொடி. கோதனம் - பசுவின் கன்று. சாதனம் - அடையாளம், இடம், உபாயம் ஊர், துணைக்காரணம், பகுதல். சீதனம் - மகட்குக் கொடுக்கும் பொருள். சூதனம் - அழித்தல். சேதனம் - அறிவு. சோதனம் - சுத்தஞ்செய்தல், சோதித் தல். தூதனம் - மூங்கில். தோதனம் - அங்குசம். நூதனம் - புதுமை. பாதனம் - துக்கத்தால் தலைசாய்தல், விழுதல். பேதனம் - பேதிப்பு. போதனம் - அறிவு. மாதனம் - கராம்பு. மோதனம் - உவாகை. யாதனம் - தெப்பம், மரக்கலம். வாதனம் - சீலை. வேதனம் - அறிவு, கூலி, சம்பளம். சேதனன் - ஆன்மா. நூதனன் - புதியோன். சாதனை - சலஞ்சாதித்தல், பொய். போதனை - போதித்தல். யாதனை - துன்பம், நரகத்திற் கொல் லாது வருத்து நோய். வேதனை - அலைத்தல், நோய், வருத்தம். ஆதன் - அருகன், அறிவில்லான், உயிர், குரு. காதன் - கொலையாளன். சீதன் - சந்திரன். சூதன் - சூதாடுவோன், தேர்ப்பாகன் பாணன், புகழ்வோன். தாதன் - அடியான். தூதன் - தூதுவன். நாதன் - அரசன், அருகன், எப் பொருட்கு மிறைவன், கடவுள், குரு, சிவன், திருமால், பிரமன், மூத்தோன். பீதன் - அச்சமுள்ளோன். பூதன் - சங்கரன், சண்முகன். போதன் - அருகன், பிரமன். மாதன் - அழகன், சூரியன். வேதன் - கடவுள், பிரமன், வியாழம். கோதா - உடும்பு, வினைமுற்று, வினையெச்சம். சேதா - செவ்விய பசு. தாதா - ஈகையாளன், தகப்பன், பிரமன். போதா - பெருநாரை, வினைமுற்று, வினையெச்சம். மாதா - இலக்குமி, சரச்சுவதி, தாய், பார்வதி. மூதா - தம்பலப்பூச்சி. வேதா - கடவுள், பிரமன். ஆதாரம் - உடல், நிலை, மழை. கேதாரம் - ஓர்வகை நகரம், ஓர் சிவஸ்தலம், மயில். சேதாரம் - தேமா, பொன்னுரை தேய்மானம், வெட்சி. பூதாரம் - பன்றி. மோதரம் - மலை. கூதாளம் - கூதாளிச்செடி. பாதாளம் - கீழுலகம், நரகம். வேதாளம் - பிசாசம். கூதாளி - கூதாளிக்கொடி. வேதாளி - காளி. ஆதி - அயன், அரன், அரி, அருகன், ஆவாயென்னு முற்று, இறைவன், எப்பொருட்கு மிறைவன், கட வுள், சூரியன், நேரோடல், பழமை, புத்தன், மண்டிலமா யோடல், முதல். ஈதி - குட்டி, பயணம். ஏதி - ஆயுதப்பொது, வாள். ஓதி - அறிவு, இடங்கழிமை, ஓந்தி, கல்வி, ஞானம், பூனை, பெண் மயிர், மலை, வினையெச்சம். காதி - ஓரரசன், கொலையாளி, வினையெச்சம். கீதி - கீதம், கீதம் பாடுவோன், கருங்காலி. கோதி - கோதுமை, வினையெச்சம். சாதி - கள், குலம், சாதியென்னே வல், சிறுசம்பகம், தேக்கமரம், பிரம்பு, மரப்பொது, வினை முற்று. சீதி - குளிர், பாவம், முற்றத்துறத்தல். சூதி - அசைவு, கதி, நடை, பிள்ளை பெற்றவள். சேதி - ஒருநாடு, சமாச்சாரம். சோதி - அருகன், ஒளி, ஓர்வகை நாள், கடவுள், சிவபெருமான், சூரியன், சோதியென்னேவல், தீ, வான்மீன், விட்டுணு. ஞாதி - தாயத்தான், சுற்றம். தாதி - அடியாள், செவிலித்தாய், தோழி. தூதி - தூதுவள். தேதி - நாள், திதி. நாதி - பங்காளி, சுற்றம், பெருங் காயம். நீதி - நியாயம், மெய். நேதி - தத்துவம். பாதி - அரை, பங்கு. பீதி - அச்சம். பூதி - கொடுமை, சாம்பல், செல்வம், துர்க்கந்தம், நரகம், புலால், புழுதி, விபூதி. பேதி - இரதம், பேதம், பேதிஎன் னேவல். போதி - அரசமரம், போதியென் னேவல், மலை, வினைமுற்று. மீதி - மிச்சம், மிகுதி. மேதி - எருமை, வினைமுற்று. யாதி - ஞாபகம். யூதி - அம்பட்டன், காட்டுமுல்லை. வாதி - நாள்கவியிலொருவன், வாதஞ் செய்வோன், வாதியென் னேவல். வீதி - ஒழுங்கு, கடைவீதி, தெரு, நேரோடல், வழி. வேதி - ஓமகுண்டம், கேட்டை, நாள், திண்ணை, மதில், வினை முற்று. ஊதிகை - முல்லைக்கொடி. போதிகை - குறுந்தறி. வேதிகை - கேடகம், திண்ணை, வேறுபாடு. சாதித்தல் - பழகல், தேய்த்தல், கொடுத்தல், சேதித்தல் - ஆராய்தல், சரிபார்த்தல். நாதித்தல் - ஒலித்தல். பாதித்தல் - கூறுசெய்தல். பேதித்தல் - பகைத்தல், வேற்றுமைப் படுத்தல். போதித்தல் - கற்பித்தல். வேதித்தல் - பிளத்தல், வேறாக்கல். ஓதிமம் - அன்னம், கவரிமா, மலை. சேதிமம் - தேவர்கோயில். ஊதியம் - இலாபம், கல்வி. பூதியம் - உடல், பூமி. மாதிரம் - ஆகாயம், திசை, பூமி, மலை, யானை. மோதிரம் - வீரலணி. பாதிரி - ஓர்வகைமரம், மூங்கில். மாதிரி - ஒப்பு. மூதிரி - எருமை. ஆதிரை - திருவாதிரை. மூதிரை - திருவாதிரை. சோதினி - செத்தை, துடைப்பம். பேதினி - வேறுபாடு செய்பவன். மேதினி - பூமி. ஆது - ஆறனுருபு, யானைப்பாகன் தட்டுமோசை, தெப்பம். ஊது - மூட்டல், பெருவென்னே வல், வாசி. ஏது - காரணம், யாது, மூலம். காது - காதென்னேவல், கொலை, செவி. கேது - அடையாளம், ஓர்வகைக் கோள், விருதுக்கொடி. கோது - குற்றம், கோதென்னேவல், சக்கை. சாது - அருகன், சற்குணத்தோன். சீது - கள், ஈயம், யானைக்கண்மதம். சூது - சூது, தாமரை, வஞ்சகம். சேது - சிவப்பு, செய்கரை, திருவணை, இராமேச்சுரம். தாது - இரதமாதியேழு, காவிக்கல், தாது மாதளை, நரம்பு, பூந்தாது, பொன்னாதியேழு, மண்ணாதி யைந்து. தீது - குற்றம், தீமை. தூது - செல்லுந் தூது, ஒரு பிரபந்தம். பாது - காவல், சூரியன், பங்கு. பேது - உன்மத்தம், மதிமயக்கம். போது - காலம், பூ, மலரும் பருவத் தரும்பு, போதென்னேவல். மாது - அசைச்சொல் (உ-ம். விளிந் தன்று மாதவர்த் தெளிந்த வென் னெஞ்சே), பெண், விருப்பம். மேது - அறிவு. மோது - இடி, தள்ளு. யாது - எது, ஐயுற்றசொல், கள், ஞாபகம். வாது - தருக்கம், சண்டை. வீது - வறுமை. வேது - ஆவிபிடித்தல், வேதல். ஓதுதல் - சொல்லுதல், வேதம் படித்தல். காதுதல் - கூறுசெய்தல், கொல்லல், தறித்தல். கோதுதல் - கோதல். மோதுதல் - வீசல், அடித்தல். மிதுரை - பல்கால் விளம்பல். மூதுரை - பழமொழி. வாதுரை - தருக்கம். ஆதுலன் - தரித்திரன். மாதுலன் - மாமன். தூதுவன் - தூதன், புதன். வாதுவன் - குதிரைப்பாகன், யானைப் பாகன். ஆதேயம் - சுமக்கப்பட்டது. பாதேயம் - கட்டுச்சோறு. சாதேவன் - பஞ்சபாண்டவரி லொருவன். மாதேவன் - சிவன், வருணன். சீதேவி - இலக்குமி. பூதேவி - பூமி. மூதேவி - இலக்குமிக்கு முன் பிறந் தாள். ஊதை - காற்று, குளிர்காற்று, வாதம். ஓதை - ஒலி, பேரொலி, மதிலுண் மேடை, மதில். காதை - கதை, கொலை, சொல், சொல்லல். கீதை - பாட்டு. கூதை - காற்று, குளிர்காற்று. கோதை - ஒழுங்கு, காற்று, கௌதம நதி, சேரன், நெற்சுமை, பூமாலை, பெண், பெண்மயிர், முன்கைத் தோற்கட்டு. சீதை - உழுபடைச்சால், சீதை, பொன்னாங்காணி, மது. தாதை - தகப்பன், பேய்க்கொம் மட்டி. தூதை - சிறுமுட்டி, சூதாடுபந்தயம். பாதை - மரக்கலம், வழி, துன்பம். பீதை - பொன்னிறப்பூவுள மரு தோன்றிமரம். பூதை - அம்பு. பேதை - அறிவில்லான், ஏழு வயதுப் பெண், கள், தரித்திரன், பேடி. போதை - மூதறிவு. மூதை - வெட்டிச்சுட்டகாடு. மேதை - அறிவு, இறைச்சி, கள், தோல், நரம்பு, நிணம், புதன், மேன்மை. மோதை - வசம்பு. வாதை - துன்பம், நோய். வேதை - துன்பம், பொன்னாக்கல். பேதையர் - கீழ்மக்கள், தரித்திரர், பாலைநிலமகளிர். மேதையர் - புலவர். ஆத்தம் - உண்மை. சாத்தம் - ஓர் மதம். சோத்தம் - தாழ்ந்தவர் செய்யும் வழிபாடு. நீத்தம் - வினைமுற்று, வெள்ளம். ஏத்தல் - துதித்தல், வியங்கோண் முற்று. காத்தல் - அளித்தல், காவல். கோத்தல் - கோவை செய்தல். சாத்தல் - அப்புதல், வியங்கோண் முற்று. சீத்தல் - செப்பம் பண்ணல், நீக்கல். சேத்தல் - சிவத்தல். தீத்தல் - கரித்தல், அப்பல். நீத்தல் - ஒழுக்கம், துறவு, நீங்கல், பிரிதல். பாத்தல் - பகுத்தல். பூத்தல் - உண்டாதல், பயத்தல், மலர்தல். மூத்தல் - முதுமையுறல். மோத்தல் - ஆக்கிராணித்தல். ஆத்தன் - அருகன், சங்காத்தி. கூத்தன் - உயிர், நடன். சாத்தன் - அருகன், ஐயனார், தண்டிப்போன், வயிரவன். ஆத்தி - ஒர் மரம். ஒத்தி - ஓந்தி. கூத்தி - நாடகக்கணிகை, வைப் பாட்டி. சாத்தி - ஓர் மதப்பெண், வராகி. சோத்தி - சுழுத்தி, நித்திரை. நாத்தி - கணவன் உடன்பிறந்தாள், தாழ்வாம், நாசம். நேத்தி - நெற்றி. பாத்தி - சிறுசெய், பங்கு, வீடு. பேத்தி - மகன் பிள்ளை, மகள் பிள்ளை. வாத்தி - ஆசிரியன். சாத்தியம் - சாதிக்கத்தக்கது. பாத்தியம் - சம்பந்தம், பெரி யோர்க் குப் பாதங் கழுவக் கொடுக்கு நீர். மேத்தியம் - சுத்தம். வாத்தியம் - கஞ்சக்கருவி, துளைக் கருவி, தோற்கருவி, நரம்புக் கருவி இந்நான்கும். ஆத்திரம் - கோபவிரைவு, அவசரம். காத்திரம் - உடல், உறுப்பு, கீரி, கோபம், சினம், பருமம், யானை முன்கால். கேத்திரம் - பூமி, தலம். கோத்திரம் - குலம், பூமி, மலை. சாத்திரம் - நூல். சீத்திரம் - சூதம். சூத்திரம் - இயந்திரம், நூல், பஞ்சியி னூல். சேத்திரம் - புண்ணியத்தலம், ஊர். சோத்திரம் - காது. தாத்திரம் - கோடாலி, கூன்வாள். தோத்திரம் - துதித்தல். நேத்திரம் - கண், பட்டுச்சீலை. பாத்திரம் - இரப்போர்கலம், உண் கலம், தகுதி, புரட்டாசி மாதம். மாத்திரம் - பிரமாணம். மூத்திரம் - சிறுநீர். வேத்திரம் - அம்பு, இலந்தை, பிரம்பு. காத்திரி - கீரி, படைக்கலம். சாத்திரி - நூலுணர்ந்தோன், சமர்த் தன், கணிதன். சூத்திரி - சூத்திரவேலை செய்பவன். தாத்திரி - பூமி, ஆடுதின்னாப்பாளை. போத்திரி - பன்றி. மாத்திரி - பாண்டுவின் இரண்டாம் மனைவி. வேத்திரி - துவாரபாலகன். காத்திரை - ஆயுதம். கோத்திரை - பூமி, மலை. மாத்திரை - அளவு, காலநுட்பம், காலவிரைவு, குளிகை. யாத்திரை - திருவிழா, பிரயாணம் போதல். ஏத்து - துதி, புகழென்னேவல். ஒத்து - ஓரினப்பொருளை யொரு வழி வைத்திருக்குமியல், வேதம். கூத்து - நடனம், விளையாட்டு, ஆடம்பரம், வேடிக்கை. சாத்து - அடி, அணி, அப்புதல். சேத்து - உவமைச்சொல், கருத்து, சிவப்பு, நெருக்கம், மிகுசிவப்பு. நீத்து - நீந்துபுனல், வினையெச்சம். பாத்து - கஞ்சி, சோறு, பங்கு, பாதி. போத்து - எருமை, காட்டுப்பசு, பசு, புலி, புல்வாய் பூனை, மயில், மரை யிவற்றினாண், செம் போத்து, நீர்ச்சாதியினாண், மரக்கன்று, விலங்கின்படுக்கை. வாத்து - பாத்து, வாஸ்து புருஷன், வீடு. ஆத்தை - அதிசய இரக்கச்சொல், ஈன்றாள். ஊத்தை - அழுக்கு, ஊன். சீத்தை - கீழ்மக்கள் பதனழிவு. சூத்தை - புழுக்குற்றல், கெடுதல். தோத்தை - சிறங்கை. பீத்தை - நாடா, கிழிசல். பேத்தை - ஒருமீன். மோத்தை - வெள்ளாட்டுக்கடா. நீத்தோர் - முனிவர். மூத்தோர் - புலவர், மந்திரிகள். ந காந்தம் - அழகு, ஊசிக்காந்தம், பதினெண் புராணத்தொன்று. சாந்தம் - குளிர்ச்சி, சந்தனம், சாணி, பொறுமை, அமைதி. தாந்தம் - குருசிட்டி. பாந்தம் - அன்பு, சுற்றம். மாந்தம் - அன்பு, சுற்றம். மாந்தம் - ஓர்நோய். ஏந்தல் - அரசன், உயர்ச்சி, ஏந்துதல், பெருமையிற் சிறந்தோன், மலை, வியங்கோண்முற்று. காந்தல் - ஒளிசெய்தல், கரிதல், சினக்குறிப்பு, முதிரவேதல், வியங் கோண் முற்று. கூந்தல் - கமுகோலை, குதிரைமயிர், கூந்தற்பனை, பனையோலை, பெண்மயிர், மயிற்றோகை. நீந்தல் - கடத்தல், நீரினீந்தல், வியங் கோண்முற்று. பாந்தல் - பதுங்கல், வியங்கோண் முற்று. பீந்தல் - தொடுத்தல். மாந்தல் - குடித்தல், புசித்தல், வியங் கோண்முற்று. காந்தள் - கார்த்திகைப்பூ. பாந்தள் - பாம்பு, பெரும்பாம்பு. காந்தன் - அரசன், எப்பொருட்கு மிறைவன், தலைவன். சாந்தன் - அருகன், புத்தன். சேந்தன் - நிகண்டு செய்வித்தோன், முருகன். பாந்தன் - வழிச்செல்வோன். மாந்தன் - ஆண்மகன், மனிதன். வேந்தன் - அரசன், இந்திரன், சந்தி ரன், சூரியன், வியாழம். ஈந்தி - நஞ்சு, கர்ச்சூரம். ஏந்தி - தாங்கி, ஏற்றுபவன், தரித்திரன். ஓந்தி - ஓணான். காந்தி - அழகு, ஒளி, வினையெச்சம். சாந்தி - கழிப்பு. பூந்தி - ஓரினிப்புப் பலகாரம். போந்தி - பருமை, வீக்கம். மாந்தி - மாமரம், வினையெச்சம். வாந்தி - சத்திபண்ணல். ஆந்திரம் - ஓர்தேயம், ஒர்பாடை. கேந்திரம் - உதய ராசிக்கு - 4 - 7 - 10 ம் இராசிகள். சாந்திரம் - நிறைவு, நெருக்கம். ஈந்து - ஈந்துமரம். சாந்து - சந்தனம், சாந்தம், பராகம். சேந்து - அசோகு, சிவப்பு, தீ, வினை யெச்சம். போந்து - அனுடநாள், பனைமரம், வினையெச்சம். வேந்து - அரசு. ஆந்தை - ஓர்வகைப்புள். காந்தை - பெண், மனைவி, காதலி. சாந்தை - கங்கை, பூமி. சேந்தை - மேற்பாடம். சோந்தை - தடை. பாந்தை - அளை, பொள்ளல். பூந்தை - ஓர்வகையூர். போந்தை - அனுடநாள், இளம் பனை, பனை. மாந்தை - ஓர்நோய், ஓர் ஊர். ப ஆபதம் - ஆபத்து. தாபதம் - முனிவரிருக்கும் வாசம், விரதம். கோபதி - இடபம், இந்திரன். சீபதி - அருகன், கடவுள், திருமால். பூபதி - அரசன், ஒருகுளிகை. ஆபம் - நீர், நீர்ச்செறிவு. கூபம் - கிணறு. கேபம் - அசைவு. கோபம் - சினம், தம்பலப்பூச்சி. சாபம் - சபித்தல், தனுவிராசி, வில். சூபம் - அம்பு, படைத்தொழில். சேபம் - இலிங்கம். சோபம் - அழகு, கள், சோம்பல், சோர்வு. தாபம் - காடு, துன்பம், வெப்பம். தீபம் - சோதிநாள், விளக்கு. தூபம் - புகை. நீபம் - உத்திரட்டாதிநாள், கடப்ப மரம், வெண்கடம்பு. நூபம் - எருது. நேபம் - நீர். பாபம் - பாவம், குற்றம். யூபம் - உடற்குறை, யாகப் பசுவைக் கட்டுந்தறி, யாகம். கூபரம் - முழங்கை. தூபரம் - கொம்பிலாவிலங்கு. வாபரம் - மதில். சாபலன் - ஆட்டுவாணிபன். மாபலன் - காற்று. காபாலர் - சிவன். கோபாலர் - இடையர். சாபாலர் - உபநிடதவழி யொழுகு வோர். பூபாலர் - வேளாளர். நேபாளம் - ஓர்தேயம். பூபாளம் - ஓர்வகையிசை. காபி - ஓர்வகை யிராகம். கோபி - ஓர் கண், சினமுள்ளோன். நாபி - ஓர்மருந்து, கொப்பூழ். பாபி - பாலி. தாபிதம் - சூடு, தாபித்தல். தூபிதம் - சூடு. கோபுரம் - நகரின்வாயில். நூபுரம் - காற்சிலம்பு, பாதகிண்கிணி. ஆப்பம் - ஒருபலகாரம். ஏப்பம் - தேக்கெறிவு. ஒப்பம் - ஒப்புதல். சோப்பம் - சோர்வு, அயர்வு. மோப்பம் - மணத்தல். கூப்பல் - கூப்புதல். சூப்பல் - சூப்புதல். ஆப்பு - மரம்பிளக்குங்கருவி. காப்பு - ஆடை, கதவு, காவல், திலக மணிதல், மதில். கோப்பு - உல்லாசம், கோத்தல். சாப்பு - ஒருதாளம். சீப்பு - சீப்பு, தாழக்கோல், வாழைக் குலைச் சீப்பு. சேப்பு - சிவப்பு. தீப்பு - எரிப்பு, கருக்குதல். தோப்பு - சோலை. நீப்பு - துறவு, பிரிவு. நூப்பு - தனிப்பு. பூப்பு - மகளிர் சூதகம், பூத்தல். மூப்பு - தலைமை, முதுமை. மோப்பு - வாசனை. யாப்பு - கட்டு, செய்யுள். ம கோமகள் - தலைவி. நாமகள், பாமகள் - சரச்சுவதி. பூமகள் - இலக்குமி, பூமிதேவி. சாமந்தம் - ஓர்வகையிராகம். சீமந்தம் - கருப்பதான முதலிய கருமம் பதினாறிலொன்று, அஃதா வது ஆறாமாதத்திலாவது எட்டா மாதத்திலாவது கருப்பத்திலிருக் கின்ற சிசுவினாயுள் விர்த்தியின் பொருட்டு மனைவியின் றலை மயிர் வகிர்தலைக் குறித்துக் கணவன் செய்வதோர் சடங்கு. ஈமம் - சுடுகாடு, விறகு. ஏமம் - இரா, இன்பம், உன்மத்தம், களிப்பு, காவல், திரைச்சீலை, புதையல், பொன், விபூதி. ஓமம் - ஓர்பூண்டு, யாகம். காமம் - அன்பு, ஆசை, ஊர், காம நோய், குடி. சாமம் - ஓர்வகை யுபாயம், கருமை, பச்சை, மூன்றாம்வேதம், யாமம். சூமம் - ஆகாயம், நீர். சேமம் - இன்பம், காவல், புதையல். சோமம் - கள். தாமம் - அணைகயிறு, இடம், உடல், ஒளி, கீர்த்தி, கொன்றை மரம், சுகம், தாமணி, பிறப்பு, பூமாலை, மணிவடம், முடியுறுப்பு, மூவாறு கோவை மணியுள்ள மாதரிடை யணி, வீடு. தூமம் - புகை, மட்கலஞ்சுடுசூளை. தேமம் - ஈரம். தோமம் - படை. நாமம் - திருமண், பெயர். நீமம் - ஒளி. நேமம் - நியமம். யாமம் - இடக்கைமேளம், இராத் திரி, சாமம், தெற்கு. வாமம் - அழகு, இடதுபக்கம், குறுமை, சிவனைம்முகத் தொன்று, தொடை. வீமம் - பயங்கரம். வேமம் - நெய்யுங்கருவியி லொன்று. ஆமயம் - நோய். கோமயம் - ஆனீர், சாணம். காமரம் - அடுப்பு, அத்தநாள், இசை, இசைப்பொது, சோலை. சாமரம் - கவரி. சேமரம் - அழிஞ்சில். தோமரம் - கைவேல், பெருஞ்சவளம். பாமரம் - அறிவின்மை. கோமளம் - இளமை, இளமைச் செல்வி, பசு. சாமளம் - பச்சை. ஊமன் - ஊமை, கூகை. ஏமன் - யமன். சீமன் - விண்டு. சாமன் - திப்பிலி, மன்மதன், வண்டு. காமன் - காமன்றம்பி, புதன். சோமன் - ஒர்வகை வள்ளல், சந்திரன், தூசு. பூமன் - செவ்வாய். மாமன் - அம்மான். வாமன் - அருகன். வீமன் - பஞ்சபாண்டவரிலொருவன். ஆமா - காட்டுமாடு. தேமா - தித்திப்புள்ள மாமரம். கோமாட்டி - தலைவி. சீமாட்டி - செல்வி. கோமாள் - தலைவி. சீமாள் - தலைவி. ஆமான் - காட்டுப்பசு. ஒமான் - ஓந்தி. கோமான் - அரசன், குரு, சிறந்தோன், பன்றி, மூத்தோன். சீமான் - அருகன், பெருஞ்செல்வன். தூமான் - பீடிகை. ஏமி - உடனிகழ்வான். ஒமி - ஓமஞ் செய்கிறவன், தீ, நீர், நெய். காமி - காமதூர்த்தன், உவர்மண். சாமி - அருகன், கடவுள், குரத்தி, குரு, தலைவன், பொன், முருகன், மூத்தோன். நேமி - கடல், சக்கரம், திருமால், தேருருளை, பூமி, மூங்கில், வட்டம். பூமி - பூவுலகு. மாமி - மாமன் மனைவி, பிதாவின் சகோதரி, மனைவியின் தாய், கணவனின் தாய். யாமி - இரா, தெற்கு, மகள், மருமகள். வாமி - சத்தி பூசை செய்பவன். காமியம் - இச்சிக்கும் பொருள். யாமியம் - தெற்கு. ஆமிரம் - மாமரம். தாமிரம் - செம்பு. தூமிரம் - கருமை மிக்க சிவப்பு. ஏமுறல் - ஏமாப்புறல், வியங்கோண் முற்று. காமுறல் - ஆசைப்படல், வியங் கோண்முற்று. ஆமை - கூர்மம். ஊமை - மூகை. ஓமை - ஓர் மரம். சாமை - ஓர்வகைப் பயிர். சீமை - எல்லை, ஒரு தேசம். சேமை - ஒரு செடி. தாமை - தாம்பு. தீமை - பொல்லாங்கு. தூமை - தூய்மை, இன்மை, மகளிர் சூதகம். பாமை - அகங்காரி, காமி, சிரங்கு. மாமை - அழகு, நிறம். யாமை - இரா, தெற்கு, பரணி. ஆம் - அமெனல், இடைச்சொல், ஈரம், நீர், உவமையுருபு. ஊம் - மவுனம். ஏம் - தன்மைப்பன்மை விகுதி. ஓம் - அரன், அயன், பிரணவம். தாம் - அசைச்சொல் (உ-ம். நீர்தாம்) தாங்கள். தீம் - இனிமை, தித்திப்பு. தேம் - ஏழனுருபு, (உ-ம். கோடாய் தேத்து) கள், தித்திப்பு, வாசனை. தோம் - குற்றம். நாம் - அச்சம், தன்மைப் பெயர். பேம் - அச்சம். போம் - அசைச்சொல், அச்சம், பெ யரெச்சம், வினைமுற்று. காம்பர் - கரம்பு. சாம்பர் - சாம்பல். சோம்பர் - தாமத குணமுடையவர். தீம்பர் - கீழ்மக்கள், தீங்கு செய்வோர். ஆம்பல் - அடைவு, அல்லி, இசைக் குழல், ஊதிடுகொம்பு, ஓரெண், கள், சந்திரன், பண், மூங்கில், யானை. ஓம்பல் - பாதுகாத்தல், வியங்கோண் முற்று, உண்டாக்கல், வளர்த்தல். கூம்பல் - ஒடுங்கல், குமிழமரம், குவிதல், வியங்கோண்முற்று. கோம்பல் - சினக்குறிப்பு, பெருங் கோபம், வியங்கோண்முற்று. சாம்பல் - ஒடுங்கல், சாம்பர், பழம்பூ, வியங்கோண்முற்று. சூம்பல் - வாடுதல், இரத்தம் முதலிய சுண்டிச் சிறுத்தல். சோம்பல் - அழுங்கல், மடிமை, வியங்கோண்முற்று. தேம்பல் - இளைத்தல், பழம்பூ, மெலிதல், வாடல், வியங்கோண் முற்று. நாம்பல் - இளைத்தல், வியங்கோண் முற்று. போம்பல் - நீர்க்கடம்பு. வாம்பல் - மூங்கில். ஆம்பி - ஒலி, காளான், இறைகூடை. காம்பி - இறைகூடை. கோம்பி - பச்சோந்தி, வினையெச்சம். ஆம்பிரம் - புளிப்பு, புளிமா, மாமரம். தாம்பிரம் - செம்பு. தூம்பிரம் - கருமை மிக்க சிவப்பு. காம்பு - பட்டுச்சீலை, பூந்தாள், மரக்கொம்பு, மூங்கில். கூம்பு - கூம்பென்னேவல், தேர்க் கொடிஞ்சி, பாய்மரம். சாம்பு - சாம்பென்னேவல், பறை. சேம்பு - சேம்பு. சோம்பு - அழுங்கல், சோம்பல், சோம்பென்னேவல். தாம்பு - கயிறு, தாமணிக்கயிறு. தூம்பு - அருநெறி, உட்டுளை, சல தாரை, மடை, மரக்கால், மூங்கில், வழி, வாயில். நாம்பு - நாம்பென்னேவல், மெல் லியது. பாம்பு - அரவு, ஆயிலிய நாள். வீம்பு - மேன்மை. வேம்பு - ஓர் மரம். ய சாயகம் - அம்பு, வாள். தீயகம் - நரகம். நாயகம் - தலைமை. மீயகம் - போக்கம். பாயசம் - பாற்சோற்றுச்செடி, பாற் சோறு. வாயசம் - காக்கை. ஆயம் - ஆதாயம், சங்கம், சூதாடு கருவி, தாய், தோழி, நாணி, நீளம், மகளிர் கூட்டம், மல்லரி. ஈயம் - பஞ்சலோகத் தொன்ற. காயம் - ஆகாயம், உடல், கார்ப்பு, பெருங்காயம், மிளகு, வெண் காயம். சாயம் - அந்திநேரம், நிறம். சீயம் - சிங்கம், சிங்கவிராசி, தென் றிசைப்பாலன் குறி. சேயம் - ஓட்டம், கரை, கூறப்பட்டது, வெற்றி. ஞாயம் - காட்சிப்பொருள். ஞேயம் - அன்பு, காட்சிப்பொருள், சிநேகம், நெய். தாயம் - உரித்து, சூதாடுகருவி, தந்தை, வழிச்சுற்றம், துன்பம். தீயம் - தித்திப்பு. தேயம் - இடம், உடல், களவு, நாடு. தோயம் - நீர். நேயம் - அன்பு, நன்மை, நெய். பாயம் - நீர். பூயம் - சீழ், முறிந்த ரத்தம். பேயம் - கஞ்சி, நீர், பால். மாயம் - அழகு, கறுப்பு, தீமை, பொய், வஞ்சம். வாயம் - நீர். ஆயர் - இடையர். தீயர் - கீழ்மக்கள், வேடர். வேயர் - வேவுகாரர். ஈயல் - ஈதல், தம்பலப்பூச்சி, வியங் கோண்முற்று. காயல் - உப்பளம், ஒரு பட்டணம், கழி, கழுமுகம், வியங்கோண்முற்று. சாயல் - அழகு, ஒப்பு, நிறம், நுண்மை, மேன்மை, வியங்கோண்முற்று. தோயல் - தயிர். பாயல் - மக்கட்படுக்கை, வியங் கோண்முற்று. வாயல் - பக்கம், வாசல். வேயல் - மூங்கில், வியங்கோண் முற்று. ஆயிரம் - ஓர்வகை யெண். பாயிரம் - முகவுரை. ஆயில் - ஆயிலிய நாள். கோயில் - அரசன்மனை, கோயில். ஞாயில் - மதிலுறுப்பு. நாயில் - மதில். வாயில் - ஐம்பொறி, கடை, காரணம், தூது, வாயில். ஆயு - வாழ்நாள். தேயு - நெருப்பு. பாயு - குதம். வாயு - காற்று. ஆயுள் - வாழ்நாள். வேயுள் - மாடம். கேயூரம் - தோளணி. மாயூரம் - ஓரூர். சாயை - சூரியன்றேவி, நிழல், நிறம். சூயை - பொறுமை. மாயை - இந்திரஜால முதலிய, இரதிதேவி, இலக்குமி, காளி, சத்த புரியில் ஒன்று, பொய், மாயா சத்தி, வஞ்சம். ஆய் - ஆய்தல், ஆராயென்னேவல், தாய், வருத்தம். காய் - காயென்னேவல், காய், கழலைக்கட்டி. கோய் - பரணி. சாய் - ஓர்வகைக்கோரை, சாயென் னேவல். சேய் - இளமை, குழந்தை, சிவப்பு, செவ்வாய், தூரம், நீளம், முருகன், மூங்கில். தாய் - மாதா. தோய் - நனை, கசக்கு, உவம வாசகம். நாய் - சுணங்கன், தென்மேற்றிசைப் பாலன்குறி. நோய் - துன்பம், வருத்தம், வியாதி. பாய் - கப்பலில் விரிக்கும் பாய், படுக்கும் பாய். பேய் - பிசாசம். மாய் - ஆச்சா. மேய் - தகுதியான. வாய் - இடம், உதடு, ஏழனுருபு, (உ-ம். குரை கடல்வா யமுதென்கோ) மெய், வாக்கு, வாயில், வாயென் னேவல், வாய்மை. வேய் - உட்டுளை, ஒற்று, மூங்கில், வேயென்னேவல். ஆய்தல் - ஆராய்தல், தேர்தல், நுண்மை. எய்தல் - ஒழிதல், தளர்தல். காய்தல் - கோபம், சினக்குறிப்பு, வெட்டல். சாய்தல் - இரிதல், நுண்மை. தேய்தல் - இளைப்பு, குறைதல். தோய்தல் - கலத்தல், குளித்தல். பாய்தல் - குதித்தல், தாண்டல், தாவல், பரவுதல். மாய்தல் - சாதல், மறைதல். மூய்தல் - மூடுதல். மேய்தல் - உண்டல், வேவுதல். வாய்தல் - வாயல். வேய்தல் - அணிதல், அலங்கரித்தல், சூடுதல், மூடுதல், வேயுள். எய்த்தல் - உவமித்தல், ஏமாற்றல். காய்த்தல் - மர முதலிய காய்த்தல். சாய்த்தல் - சாயச்செய்தல். தேய்த்தல் - அழித்தல், உரைதல், சொல்லல். தோய்த்தல் - துவைத்தல். பாய்த்தல் - பாயச் செய்தல். மாய்த்தல் - கொல்லல். மேய்த்தல் - மேயச் செய்தல். வாய்த்தல் - கிடைத்தல், பொருந்தல், மாட்சிமை. ஏய்ப்பு - ஏய்த்தல். காய்ப்பு - காய்த்தல், தழும்பு, வெறுப்பு. சாய்ப்பு - தாழ்வு. தேய்ப்பு - தேய்த்தல். மேய்ப்பு - மேய்த்தல். வாய்ப்பு - வளமை. சேய்மை - தூரம், நீளம். தூய்மை - சுத்தம். வாய்மை - சொல், மெய், வலி. ஆய்வு - அகலம், ஆராய்தல், நுட்பம், வருத்தம். ஓய்வு - சாதல், தளர்வு, முடிதல். சாய்வு - சாய்தல். தேய்வு - குறைபாடு, மெலிவு. தோய்வு - சார்தல், தோய்தல். மாய்வு - சாவு, மறைவு. ர ஆரகம் - இரத்தம். ஏரகம் - சுப்பிரமணியப் பிரதான தலமாறி லொன்று. காரகம் - வினைகொண்டு முடிவது, வெப்பம். கோரகம் - இளம்பூவரும்பு, வட்டில். சீரகம் - சீரகம். தாரகம் - உச்சவிசை, பிரணவம், வெள்ளி. பாரகம் - திரைச்சீலை, பூமி. பூரகம் - மூச்சுள்ளே வாங்கல். மாரகம் - மரணம். கோரகை - இளம்பூவரும்பு, குயில். தாரகை - விண்மீன். சாரங்கம் - ஓர்இசை, சாதகப்புள், மான், மேகம், யானை, வண்டு. சீரங்கம் - அரங்கம். தாரங்கம் - கொடிப்படை. தேரங்கம் - தேர்ப்படை. நாரங்கம் - நாரத்தை. வாரங்கம் - ஆயுதப்பிடி, புட்பொது. கோரங்கி - ஒரு பட்டணம். சாரங்கி - ஓர்வகையாழ். பீரங்கி - ஓராயுதம். கோரசம் - கவுதாரி. சாரசம் - குருகு, தாமரை, வெண் ணாரை. நீரசம் - தாமரை, வெண்ணாரை. பாரசம் - மரப்பொது, பாவின்சுவை. வாரசம் - முத்து. ஆரணம் - ஆகமம், வேதத்தின் ஞான பாகை, வேதம். ஈரணம் - களர்நிலம், வெறுநிலம். ஏரணம் - நியாயநூல், இலக்கணம். காரணம் - கருத்தாமுதற் பல காரணம். கீரணம் - விழுங்கல். கூரணம் - உத்தியோகம், கொடுமை, பொறாமை. சாரணம் - உலோகங்களைப் பஸ்ம மாக்குதல், போதல். சீரணம் - பதனழிவு. சூரணம் - கருணைக்கிழங்கு, தூள். சோரணம் - விடுதல். தாரணம் - அட்டாங்கயோகத் தொன்று, உறுதி, தரித்தல், நிலை. தோரணம் - தலைவாசலின் வாயில், தெருவிற் கட்டுந் தோரணம். பாரணம் - சோறுண்டல். பூரணம் - எல்லாம், நிறைவு, பெருகு தல். மாரணம் - கொலை. வாரணம் - கடல், கவசம், கேடகம், கோழி, சங்கு, சட்டை, தடுத்தல், யானை, விடுதல். வீரணம் - விலாமிச்சம் வேர். ஆரணன் - பரமன், பிரமன், வேத புருடன். காரணன் - அரசன். காரணன் - விட்டுணு. ஆரணி - காளி. காரணி - சிவை. சீரணி - காடு, சீரணியென்னேவல். தாரணி - பூமி. நாரணி - துர்க்கை. பூரணி - இலவமரம், சாம்பவி. தாரணை - தாரணம். பூரணை - சந்திரனைந்தாம் பக்கம், சாத்தாவின் றேவி. வாரளை - தடுத்தல். ஏரண்டம் - ஆமணக்கு. கேரண்டம் - காக்கை. கோரண்டம் - குறிஞ்சி, மருதோன்றி மரம். சாரதம் - தகணம்பூ. நாரதம் - மேகம். பாரதம் - இரதம், ஐந்தாம் வேதம், பாரத வருடம். காரதி - செய்வோன். சாரதி - தேர்ப்பாகன், புலவன். பாரதி - சரச்சுவதி, மரக்கலம். ஆரம் - ஆத்திமரம், ஆபரணம், ஒர் பாணம், கடம்பு, சந்தனமரம், நந்தனவனம், பதக்கம், பித்தளை, பூமாலை, மாதரணிவடம், முத்து, முத்துமாலை. ஈரம் - அழகு, அறிவு, அன்பு, குளிர்ச்சி, பகுதி, பண்பு. ஓரம் - பக்கவாதம், விளிம்பு. காரம் - எழுத்தின்சாரியை (உ-ம். அகாரம்), காரியம், கார்த்தல், மரவயிரம். கீரம் - கருங்கிளி, கிளி, பால். கூரம் - ஓர்வகையூர், கொடுமை, பாகல், பொறாமை. கோரம் - அச்சம், உட்டணம், குதிரை, கொடுமை, சீக்கிரம், சோழன் குதிரை, வட்டில். சாரம் - இனிமை, ஒர் மருந்து, கிரக சாரம், நடை, நிலாமுகிப்புள், மர வயிரம், மேடு. சீரம் - மரவுரி. சூரம் - அச்சம், கடலை, வீரம். சோரம் - களவு. தாரம் - அரும்பண்டம், இங்குலிகம், நா, பச்சைப் பாம்பினஞ்சு, பாத ரசம், பிரணவம், மனைவி, மூக்காற் பிறக்கு மிசை, வல்லிசை, வீணை நரம்பி லொன்று, வெண்கலம், வெள்ளி. தீரம் - கரை, சிறுவரம்பு, வலி. தூரம் - சேய்மை. நாரம் - அன்பு, கயிறு, நாரத்தை, நீர், பாசி. நீரம் - நீர். நேரம் - காலம். பாரம் - கரைப்பொது, கல்லணை, கவசம், சுமை, நிறை, பூமி, வரம்பு. பீரம் - பீர்க்கு, பூவரசு, வாகைமரம். பூரம் - ஓர்நாள், ஓர் மருந்து, பூரம். மாரம் - எதிரிடை, கோடகசாலை, மரணம். மீரம் - சமுத்திரம். வாரம் - அன்பு, உரிமை, ஏழு கிழமை, கடல், கரை, சிறுவரம்பு, திரை, பங்கு, மலைச்சாரல். வீரம் - ஒர் மருந்து, மலை, வலி, வீரியம். வேரம் - சலஞ்சாதித்தல். காரர் - அச்ச முள்ளோர். சாரர் - வேவுகாரர். சூரர் - படைவீரர். சேரர் - ஒர் தேயத்தவர். சோரர் - திருடர். தீரர் - வலியுடையோர். தேரர் - புத்தர். வீரர் - படைவீரர். சாரலர் - மலைவாணர், பகைவர். சேரலர் - சேரதேசத்தார், பகைவர். நேரலர் - பகைவர். ஆரல் - ஆரான்மீன், கார்த்திகை நாள், செவ்வாய், நெருப்பு, மதில். ஈரல் - ஈருள், வியங்கோண்முற்று. ஊரல் - உரிஞ்சல், ஊர்தல், கிளிஞ்சல், வியங்கோண்முற்று. ஏரல் - கிளிஞ்சில். காரல் - பல்லினாற் கடித்தல். கூரல் - புள்ளிறகு, பெண்மயிர், வியங் கோண்முற்று. சாரல் - கிட்டல், மருதயாழிசை, மலைப்பக்கம், வியங்கோண்முற்று. சூரல் - பிரம்பு, வியங்கோண்முற்று. சேரல் - கிட்டல், வியங்கோண்முற்று. தூரல் - துன்பம், வியங்கோண்முற்று. மூரல் - சிரிப்பு, சோறு, பல். வாரல் - அள்ளுதல், கொள்ளை யிடல், வியங்கோண்முற்று. வேரல் - மூங்கில். ஆரவாரம் - ஒலி, பேரொலி. கோரவாரம் - சந்தனம். வாரவாரம் - கவசம். ஊரன் - மருதநிலத்தலைவன். கீரன் - நக்கீரதேவன். கூரன் - நாய். சூரன் - ஓர்வகை யாசன், சூரியன், தீ, நாய், வீரன். சேரன் - சேரலன். சோரன் - ஆட்டுக்குட்டி, திருடன். தேரன் - ஆயுர்வேத முழு துணர்ந்த வோர் புலவன். மாரன் - மன்மதன். வீரன் - அருகன், திண்ணியன், வீட்டு மாசாரி. காரா - எருமை. தாரா - ஒர்வகைப்புள், குருகு, விண்மீன், வினைமுற்று, வினை யெச்சம். சீராட்டல் - சிறப்புச்செய்தல், வியங் கோண்முற்று. பாராட்டல் - கொண்டாடல், வியங் கோண்முற்று. பாராட்டல் - கொண்டாடல், வியங் கோண்முற்று. ஊராண்மை - மிக்கசெயல். ஏராண்மை - உழவு. பேராண்மை - அரியசெயல். நாராயணம் - அரசுமரம், ஓர்வகை உபநிடதம், மீன். பாராயணம் - நியமமாகப்படித்தல். சேரார் - பகைவர். தேரார் - கல்லாதார், கீழ்மக்கள், பகைவர். நேரார் - பகைவர். ஏராளர் - வேளாளர். காராளர் - சூத்திரர், வேளாளர். சீராளன் - சிறுத்தொண்டநாயனார் மகன். பேராளன் - மிருக சீரிடநாள். ஆரி - சோழன், மேன்மை, துர்க்கை, பார்ப்பனி, பார்வதி, மாலை. ஈரி - கந்தப்புடவை, கொக்கான் விளையாட்டி லிவ்விரண்டாகப் பிரிக்குந்தன்மை, பலாக்காய்த் தும்பு. ஊரி - இளமை, சங்கு, மேகம். ஏரி - குளம், புநர்பூசம், இமில். ஓரி - ஆணரி, ஆண்மயிர், ஆண்முசு, காளி வாகனம், கிழநரி, புறமயிர், விலங்கேற்றின்பொது, கடை யெழுவள்ளலிலொருவன். காரி - இந்திரன், ஐயனார், கடை யெழு வள்ளலிலொருவன், கரிக் குருவி, கருமை, களர்நிலம், காக்கை, கிளி, சனி, நஞ்சு, வயிர வன், வினைசெய்யிடம். கீரி - கீரிப்பிள்ளை, காத்திரம், காத்திரி, தீர்வை. கோரி - கிடங்கு, பிரேதக்குழியின் மேல் கட்டிய கட்டடம். சாரி - உலாப்போதல், சூதாடுகருவி, சூறைக்காற்று. சீரி - பலதேவன், புளியமரம், முக்காடு. சூரி - காடுகாள், காளி, புலவர், சைன நூலாசிரியர் கொள்ளும்பட்டப் பெயர், சூரமுள்ளவன். சேரி - ஊர், தெரு. சோரி - இரத்தம், மழை. தாரி - வழி, விலைவாசி. தூரி - ஊசல், எருது, எழுதுகோல். தேரி - மணற்றிட்டை. தோரி - சோறு. நாரி - நாணி, பன்னாடை, பார்வதி, பெண், வாசனை. நேரி - சோழதேசத்திலுள்ள ஒரு மலை. பாரி - கடையெழுவள்ளலி லொரு வன், கட்டில், நற்சீலை, பாரி யென்னேவல், பூமி, மனைவி, கள் குடிக்கும்பாத்திரம், சிங்கம், சிறங்கைநீர், கோட்டம். பூரி - ஓர்வகையிசை, கலப்புநெல், நாணி, பூரியென்னேவல், பொன், மிகுதி. பேரி - பறைபொது, முரசு. மாரி - கள், சாவு, நீர், பற்பலரிறக்கு நோய், மழை, மேகம், வடுகி. மூரி - எருது, எருமை, சோம்பல், நெரிவு, பழமை, பெருமை, வலி. யாரி - கதவு, எதிரி. வாரி - இசைக்குழல், கடவுள், கதவு, நிறை புனல், நீர் மதில், மதிற் சுற்று, யானை நிற்குங்கூடம், யானை படுக்குங் குழி, வழி, வாயில், வினை யெச்சம், வெள்ளம். வீரி - காளி, துர்க்கை. வேரி - கள், வாசனை, வெட்டிவேர். காரிகம் - காவிக்கல். பூரிகம் - அப்பவர்க்கம். காரிகை - அழகு, ஓர்வகை யாப்பு நூல், கலித்துறை, பெண். கோரிகை - அகப்பை. சாரிகை - கவசம், சங்கம், சுழல் காற்று, சூதாடுகருவி, நாகண வாய்ப்புள், வட்டமாயோடல். பூரிகை - அப்பவர்க்கம், ஊதிடும் பூரிகை. பேரிகை - ஓர்வகை வாச்சியம். பாரிசம் - பக்கம். வாரிசம் - தாமரை. ஆரிடம் - ஆகமம், ஒர்மணம், நூல், பூசை, வழுக்குநிலம். ஓரிடம் - ஏகாந்தம். பாரிடம் - பூதகணம், பூமி. பூரிதம் - நிரம்பப்பட்டது. வாரிதம் - மேகம். பாரித்தல் - உண்டாக்கல், தோற்றல், பரப்பல். பூரித்தல் - உவத்தல், நிறைதல். வாரித்தல் - ஆணையிடல், தடுத்தல். பாரிப்பு - அதிகரிப்பு, கனம், பருப் பம், வீக்கம். பூரிப்பு - பூரணம், மிகக்களிப்பு, மிகுதி. ஆரியம் - அழகு, இமயமலைக்கும் விந்த மலைக்கும் நடுத்தேயம், பண்டம், வடமொழி. காரியம் - தொழில். சீரியம் - அகமுழவு. தூரியம் - உவகைப் பறை, எருது, எழுது கோல், எறிபடைப் பொது, கைவேல், நல்லாடை, பறைப் பொது, முரசு. பூரியம் - அரசிருக்கை, ஊர், மருத நிலத்தூர், வேந்தர்வீதி. வீரியம் - சுக்கிலம், பறைப்பொது, வீரம். ஆரியம் - ஆசிரியர், புலவர், வைத்தியர். காரியர் - கருநிறமுடையவர், கரும காரர். சீரியர் - அறிஞர், புலவர். சூரியர் - புலவர். தோரியர் - ஆடிமுதிர்ந்த மகளிர். பூரியர் - கீழ்மக்கள். வீரியர் - வீரர். ஆரியன் - அறிவுடையான், ஐயனார், குரு, சூரியன், புலவன், மிலேச்சன், வைத்தியன். கூரியன் - புதன், புத்தியிற் சிறந்தோன். சூரியன் - சோழன், ஞாயிறு. நேரியன் - சோழன். பூரியன் - கீழ்மகன், பிராமணன், பூரிகொடுப்பவன். ஆரியை - காளி, துர்க்கை, பார்வதி. சாரியை - சாரியை என்னுமிடைச் சொல். பாரியை - மனைவி. ஆரு - குடம், நண்டு, பன்றி. ஊரு - அச்சம், தொடை, அட்டை. காரு - பல்லாற்கடி, செய்வோன். சாரு - கிள்ளை, அழகு. சேரு - நெருங்கு, கூடு. தாரு - மரக்கொம்பு, மரப்பொது, பித்தளை. பாரு - சூரியன், தீ. பிரு - அச்சமுள்ளோன், புருவம். பூரு - புருவம். மேரு - பொன்மலை, மலை. காருகம் - நெசவுத்தொழில். சேருகம் - நாகணவாய்ப்புள். பூருகம் - மரம். காருகன் - நெய்பவன். சாருகன் - கொலைசெய்வோன். தாருகன் - ஓர்வகை யசுரன். பீருகன் - அச்சமுள்ளோன். சீருணம் - செம்பு. தாருணம் - அச்சம், பயங்கரம். வாருணம் - அட்டாதச வுபபுராணத் தொன்று, கடல், மேற்கு. ஊருணி - ஊரடுத்தகுளம். காருணி - வானம்பாடி. வாருணி - அகத்தியமுனி, கள், சதய நாள், மேற்கு. மாருதம் - காற்று. வீருதம் - மிடைதூறு. ஆருவம் - நீர். பூருவம் - ஆதி, கிழக்கு, பழமை, முன்பு. ஈருள் - ஈரல். சீருள் - ஈயம், செம்பு, பஞ்சலோ கங்கள். ஆரூடம் - ஏறுதல். காரூடம் - பதினெண் புராணத் தொன்று. ஆரூபம் - அமையாமை, நீங்காமை. சாரூபம் - ஓர்வகைப்பதவி. ஆரை - நீருளாரை, புற்பாய், மதில். ஓரை - இராசிப்பொது, கலன்கள், சமயம், தோழி, மகளிர்கூட்டம், மாதர் விளையாடுங்களம், விளை யாட்டு. காரை - ஓர்வகைச்செடி, ஒருமீன், சீலை, சுண்ணச்சாந்து. கீரை - இலைக்கறி பொது. கூரை - சிற்றில், வீட்டின் மேற்புறம். கோரை - கோரைப்புல். சாரை - ஓர்வகைப்பாம்பு. சீரை - சீலை, மரவுரி. சூரை - ஓர்வகைச்செடி, தூதுளை. தாரை - ஒழுங்கு, கண், கண்மணி, காளம், கூர்மை, கொடிப்படை, சீலை, சுக்கிரீவன் மனைவி, திகிரி, தேவகுருவின் மனைவி, நா, நாரோடல், மழை, வலி, வழி, விண்மீன். தேரை - தவளையிலோர் பேதம். தோரை - அரைப்பட்டிகை, இரத் தம், ஓணான், ஒர்வகை நெல், கை, மூங்கிலரிசி, விரலிறை. நாரை - ஓர்வகை நீர்ப்புள். பாரை - கட்டப்பாரை, (இதனை அலவாங்கு என்ப.) ஒருமீன். வாரை - மரவுத்திரம். வீரை - ஓர்வகைமரம், கடல், துன்பம். ஆர் - ஆத்தி, ஆர்தலைச் செய் யென்னு மேவல், ஐந்துருவாணி, கூர்மை, சோதி, தேர்வண்டியக வாய், நிறைவு, பலர் பால்விகுதி, (உ-ம். திணிதோளார்) பாகு, பூமி, ஆரென்வினாப்பெயர், வினா வினைக் குறிப்புமுற்று. ஈர் - ஈர்தலைச் செய்யென்னேவல், மயிரிற்பற்றுமீர், இரண்டு, கருபம், பேன்முட்டை, முன்னிலைப் பன்மை விகுதி. ஊர் - ஊரென்னேவல், ஊர். ஏர் - அழகு, உழுமாடு, உழுபடை, கலப்பை. ஓர் - ஒன்று, ஒரென்னேவல். கார் - ஆவணி புரட்டாசியின் பரு வம், இருள், கருங்குரங்கு, கருமை, காரென்னேவல், கார் நெல், நீர், மேகம், வெள்ளாடு. கீர் - சொல், வார்த்தை, ஒலிக்குறிப்பு. கூர் - கூரென்னேவல், நுனி, மிகுதி, இலைக்காம்பு. சார் - அழகு, இடம், சாரென்னேவல். சீர் - அழகு, காற்றண்டை, சித்திரம், செய்யுளுறுப்பு, செல்வம், தண் டாயுதம், தாளவொத்து, துலா ராசி, நன்மை, பாரம், புகழ். சூர் - அச்சம், சூரென்னேவல், துன்பம், தெய்வப்பெண், தெய்வம், நோய். சேர் - ஓரளவு, நெல் போட்டு வைக்குமிடம், பிணையல். சோர் - தளர்தல், சோர்வு. தார் - கிண்கிணிமாலை, கொடிப் படை, படை, பூ, பூவரும்பு, மாலை. தூர் - தூரென்னேவல், வேர், சேறு. தேர் - இரதம், உரோகணிநாள், தேரென்னேவல். நார் - அன்பு, கயிறு. நீர் - குணம், நீர், முன்னிலைப் பெயர். நேர் - உடன்பாடு, உவமை, ஓர்வகை யசை, செவ்வை, நீளம், நுட்பம், நேரென்னேவல், பாதி. பார் - உரோகணி நாள், தேரின் பரப்பு, பாரென்னேவல், பூமி, அடுக்கு, முறை. பீர் - அச்சம், பசலை, பீர்க்கு, முலைப்பால், அச்சத்தான் வேறு பட்ட நிறம். பேர் - நாமம், பெருமை, பெயரென் னேவல். போர் - சதயநாள், நெற்போர், பொருதல், போரென்னேவல். மோர் - மச்சிகை, நீர்விட்ட தயிர். யார் - யாரென் வினாவினைக்குறிப்பு முற்று, வினாப்பெயர். வார் - கச்சு, நீர், நீளம், நேர்மை, வாரென்னேவல். வேர் - மூலம், காரணம். ஊர்கோள் - சூரியனைச் சூழத் தோன்றும் வட்டம். கார்கோள் - கடல். ஆர்க்கம் - இரத்தம். தீர்க்கம் - நிச்சயம், நீளம், நெடில். மார்க்கம் - நெடுந்தெரு, மார்கழி மாதம், வழி. மூர்க்கம் - சலஞ்சாதித்தல், நாகப் பாம்பு. ஈர்க்கு - ஈர்க்கு. பீர்க்கு - ஓர்வகைக் கொடி. ஊர்ச்சம் - கார்த்திகை மாதம். கூர்ச்சம் - தருப்பை. சார்ச்சி - சார்தல். தேர்ச்சி - எண்ணல், கல்வி, தெளிவு. ஆர்தல் - குடித்தல், தங்கல், நிறைதல், புசித்தல். ஈர்தல் - பிளத்தல். ஊர்தல் - ஊருதல், செலுத்தல், பரத்தல். ஓர்தல் - ஆராய்தல். கூர்தல் - ஆராய்தல், மிகுதல். சார்தல் - கலத்தல், கிட்டல். சேர்தல் - அடுத்தல். சோர்தல் - வாடல், விழுதல். தீர்தல் - நடத்தல், நீளல், முடித்தல், விடுதல். தேர்தல் - ஆராய்தல், சொல்லல், தெரிதல். நேர்தல் - ஈதல், உடன்படல், எதிர்த் தல், கிட்டல், பொருதல், வேண்டல். பேர்தல் - அகலல், பெயர்தல். வார்தல் - உயர்ச்சி, தெரிதல், நீளல், வாருதல். சூர்த்தம் - அச்சம். தீர்த்தம் - புண்ணிய நதி. நீர்த்தம் - திருவிழா, நீர். மூர்த்தம் - இருகடிகைப்பொழுது, உடல். ஆர்த்தர் - துயருறுவோர். தீர்த்தர் - கடவுளர். தூர்த்தர் - வஞ்சகர், விடர். ஆர்த்தல் - அணிதல், ஒலித்தல், கட்டல், பொருத்தல். ஈர்த்தல் - அறுத்தல், இழுத்தல், பிளத்தல். கார்த்தல் - காழ்த்தல். கூர்த்தல் - உவர்த்தல். சூர்த்தல் - சுழலல். சேர்த்தல் - சமைத்தல், சேர்த்திடல். தீர்த்தல் - முடித்தல், விடுத்தல். தூர்த்தல் - செறுத்தல். நீர்த்தல் - நீர்மையுள தாதல். பார்த்தல் - காணல், வணங்கல். பேர்த்தல் - பெயர்தல். போர்த்தல் - மூடுதல். வார்த்தல் - வார்க்குதல். வேர்த்தல் - கோபம், வியர்த்தல். தீர்த்தன் - அருகன், உபாத்தியாயன், குரு, சிவன். தூர்த்தன் - வஞ்சகன், விடன். பார்த்தன் - அருச்சுனன். ஆர்த்தி - ஆசை, ஆராதனை, நிறைவு. கீர்த்தி - புகழ். சீர்த்தி - மிகுபுகழ். பூர்த்தி - நிறைவு. பேர்த்தி - பெயர்த்தி. மூர்த்தி - அருகன், உடல், உருவம், புத்தன். கார்த்திகை - ஓர்வகை மாதம், துர்க்கை. கூர்த்திகை - ஆயுதப்பொது. தீர்த்திகை - ஆறு. தூர்த்தை - தூர்த்தகுண முள்ளான். வார்த்தை - வசனம். சார்ந்தார் - உறவோர். சேர்ந்தார் - சினேகிதர். ஏர்பு - எழுச்சி. சார்பு - சார்வு, வினையெச்சம். சேர்பு - வினையெச்சம், வீடு. தேர்பு - தேர்தல். நேர்பு - எழுச்சி, நீளம், வினை யெச்சம். மார்பு - அகலம், நெஞ்சு. ஆர்ப்பு - கட்டு, சிரிப்பு, பேரொலி, போர். ஈர்ப்பு - ஈர்த்தல். ஒர்ப்பு - கரும முடிக்குந் துணிவு, பொறுமை. கார்ப்பு - மிளகு முதலிய காரம். கூர்ப்பு - உள்ளது சிறத்தல், கூர்த்தல். சேர்ப்பு - கலப்பு, தொகுதி, புணர்ச்சி. தீர்ப்பு - ஆர்த்தல். பார்ப்பு - கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை, தவழ்சாதியின் பிள்ளை, பறவைக் குஞ்சு. போர்ப்பு - போர்த்தல். வார்ப்பு - வார்த்தல். ஆர்மை - கூர்மை, மதில். கூர்மை - நுண்மை. சீர்மை - சிறப்பு. நீர்மை - ஒப்புரவு, குணம். நேர்மை - நுண்மை, நேர்வழி. ஆர்வு - ஆராய்தல். சார்வு - ஆசைப்பெருக்கம், இடம், சார்வு, பற்று. சேர்வு - திரட்சி, மருதநிலத்தூர், வீடு. சோர்வு - களவு, மறதி. சேர்வை - கூட்டம். தீர்வை - இறை, கீரி. தூர்வை - அறுகு, செத்தை. பார்வை - கண், மதிப்பு. போர்வை - தோல், மூடுதல். வேர்வை - வியர்வை. ல சால - மிகுதிப்பொருளைத் தரும் வினையெச்ச வுரிச்சொல். போல - உவமைப் பொருளைத் தரும் வினையெச்ச விடைச்சொல். ஆலகண்டன் - சிவன். காலகண்டன் - காலகாலன். நீலகண்டன் - சிவன். ஆலகம் - சோம்பு, நெல்லி. காலகம் - சேங்கொட்டை. கீலகம் - கருந்தும்பை, பேய்ப்புடல். கூலகம் - கறையான் புற்று, குவியல். கோலகம் - திப்பிலி. சாலகம் - அதலலோகம், இளம்பூ வரும்பு, சலதாரை, சிவந்திப் பூச்சி, வலை, பலகணி, பறவைக் கூடு. மாலகம் - மேடு, வேப்பமரம். சேலகம் - முத்தக்காசு. தூலகம் - பருத்தி. நீலகம் - காருப்பு, துருசு. பாலகம் - எள்ளு, குருவேர், கோட்டம். பீலகம் - எறும்பு. பேலகம் - தெப்பம். மூலகம் - கிழங்கு, முள்ளங்கி. மேலகம் - மோக்கம். வாலகம் - வால். மாலதி - சிறு சண்பகம், மல்லிகை, முல்லை. வாலதி - யானைவால், வால். ஆலம் - அம்புக்கூடு, ஆலமரம், நீர், பாம்பினஞ்சு, மலர்ந்தபூ, மழை. ஏலம் - மயிர்ச்சாந்து, வாசனைப் பண்டம். ஓலம் - ஒலி, கடல், பாம்பு, அபய மிட்டழைத்தல், துக்கக் குறிப்பு. காலம் - பொழுது, விடியல், சமயம், தாளப் பிரமாணம் பத்தி னொன்று. கீலம் - ஆணி, சுவாலை, பிசின். கூலம் - கடற்கரை, கடைவீதி, கரை, காராமணி, பசு, பலபண்டம், பாகல், மந்தி, மரை, வரம்பு, விலங்கின் வால். கேலம் - மகளிர் விளையாட்டு. கோலம் - அழகு, இலந்தைக் கனி, ஒப்பனை, தெப்பம், நீரோட்டம், பல கோலம், பறவை, பன்றி, பாக்கு, பீர்க்கு மருட்பன்றி, விந்தை, நகர். சாலம் - அரண், ஆச்சாமரம், இளம்பூ வரும்பு, கூட்டம், செடி, பலகணி, மரப்பொது, மாய வித்தை, வலை, விலங்கின் கூட்டம். சீலம் - குணம், சரித்திரம், சீந்தில், தருமம், நல்லறிவு, நல்லொழுக் கம். சூலம் - இரேவதி நாள், ஓர்வகை யாயுதம். சேலம் - ஓரூர், புடைவை, பொருமை, மயிற்றோகைக்கண். ஞாலம் - பூமி. தாலம் - உண்கலம், கூந்தற்பனை, நா, பனை, பூமி, யானைச் செவி. தூலம் - பஞ்சி, பருமை, வீட்டுத் திரம், பஞ்சீகிருத பூதம். தோலம் - அசைவு, ஓர் நிறை. நீலம் - இருள், கருங்குவளை, கறுப்பு, காற்று, நஞ்சு, நீலநிறம், நீலமணி, பனைமரம். பாலம் - ஆற்றுப்பாலம், நெற்றி, பூமி, மரக்கொம்பு, மழு. பூலம் - புற்கட்டு. மாலம் - குங்கும மரம், பேய், வயல். மூலம் - ஓர்வகை நாள், ஓர்வகை நோய், காரணம், கிழங்கு, முதல், வேர். வாலம் - தலைமலர், வால். வேலம் - தோட்டம். சாலர் - நெய்தனிலமாக்கள். பாலர் - இடையர், பிள்ளைகள். மாலர் - கவசம், பார்ப்பனப் பெண் ணுக்குஞ் சூத்திரனுக்கும் பிறந் தோர், புலையர், வேடர். ஆலல் - ஆடல், ஒலித்தல், மயிற் குரல், வியங்கோண்முற்று. ஏவல் - இயலல், வியங்கோண்முற்று. காலல் - கொப்புளித்தல், சுத்தி பண்ணல், வியங்கோண்முற்று. கோலல் - சூழ்ந்திடல், வளைத்தல், வியங்கோண்முற்று. சூலல் - அறுத்தல், வியங்கோண் முற்று. நாலல் - தாழ்த்தல், தொங்கல், வியங்கோண்முற்று, விழுதல். போலல் - உவமை, வியங்கோண் முற்று. ஆலவட்டம் - தாலவிருந்தம். தாலவட்டம் - பூமி, யானைச்செவி, யானைவால். காலன் - சனி, நமன். நீலன் - சனி, வானரப்படைத் தலை வரிலொருவன். வேலன் - முருகன், வெறியாட்டாளன். ஏலாமை - கூடாமை, தகாமை. தோலாமை - தோல்வியின்மை. நோலாமை - தவமின்மை, பொறாமை. வாலாமை - அசுத்தம், மகளிர் சூதகம். ஆலாலம் - விடம், வெளவால். கீலாலம் - உதிரல், காடி, நீர். தாலாலம் - பழிமொழி. ஆலி - அமுதம், ஆலாங்கட்டி, களி யென்னேவல், கள், காற்று, மழை, மழைத்துளி. ஏலி - கள். காலி - கழிவுநாள், கள், பசுக் கூட்டம். கூலி - நாட்கூலி, சம்பளம். கேலி - இகழ்ச்சி, பரிகாசம், விகடம். கோலி - இலந்தைமரம், மயிர், வினை யெச்சம். சாலி - அருந்ததி, கவசம், கள், நெல். சீலி - நற்குண முடையாள். சூலி - கருப்பிணி, காடுகாள், காளி, சிவன், துர்க்கை. சோலி - காரியம். தாலி - மங்கலநாண். தூலி - பெருத்தவள், பெருத்தவன். நாலி - முத்து, கார்த்திகைப்பூ. நீலி - அவுரி, கறுப்பு, காளி, துர்க்கை, பார்வதி, மேகவண்ணப் பூவுளமரு தோன்றி மரம். பாலி - ஆலமரம், கள், பாலியென் னேவல், அணை, எல்லை, பானை. பீலி - ஆலவட்டம், சிறுசின்னம், பெருஞ்சவளம், பொன், மதில், மயில், மயிற்றோகை, மாதா காலணி, வாச்சியம். போலி - ஒன்று போலொன்றிருத்தல், ஒட்டகம், சாயல். மாலி - ஓர்வகை யரக்கன், கள், மாலையணிந்தவன். மூலி - மரம், மருந்து, கிழங்கு. மோலி - கிரீடம். வாலி - இந்திரன் மகனாகிய வானரன். வேலி - ஊர், ஓரளவை நிலம், காவல், மதில். சாலிகை - கவசம். தூலிகை - எழுதுகோல். பாலிகை - உதடு, படைவாளின் முட்டி, முளைதெளிக்கும் பாலிகை, வட்டம். மாலிகை - நிரல்பட நிற்குங்குழு, மாலை. மூலிகை - வேர், ஓடதி. ஆலித்தல் - களித்தல். பாலித்தல் - ஈதல், காத்தல். காலியம் - விடியல். மூலியம் - விலை. சாலினி - கள்வாணிச்சி, தேவர்க்காடு வாள். மாலினி - காளி. பாலுகம் - கருப்பூரம். மாலுகம் - வேம்பு. வாலுகம் - வெண்மணல். ஆலுதல் - அசைதல். ஏலுதல் - பொருந்தல். ஞாலுதல் - நாலல். நாலுதல் - தூங்குதல். போலுதல் - ஒத்தல். காலூரம் - தவளை. சாலூரம் - தவளை, மேன்மை. மாலூரம் - வில்வமரம். காலேகம் - நால்வகைச் சாந்து. சாலேகம் - சந்தனம், சிந்தூரம், பலகணி, பூவரும்பு. சேலேகம் - சந்தனம், சிந்தூரம். காலேயம் - கத்தூரிமஞ்சள், பசுக் கூட்டம், மோர். சாலேயம் - நெல் விளையும் நிலம். ஆலை - கரும்பாலை, கள். ஓலை - ஒலி, தென்னோலை, பனை யோலை. காலை - பொழுது, விடியற்காலம். கேலை - முழங்கையிடி. சாலை - அரசன்மனை, அறத்தின் சாலை, குதிரைப்பந்தி, சாலை. சீலை - சேலை. சூலை - ஒர்வகை நோய். சேலை - சீலை. சோலை - தோப்பு. நோலை - எள்ளுருண்டை. பாலை - ஓர்வகை நிலம், ஓர்வகை மரம், ஓர்வகைப் பாடல், கடல், புநர்பூச நாள், மிருகசீரிட நாள். மாலை - அந்திப்பொழுது, அரசன் மனை, இயல்பு, இரா, ஒழுங்கு, சொல்லாலும் பூவாலும் பொன் னாலு மணியாலுந்தொடுத்த தொடை, நோய். மூலை - கோணம். வேலை - கடல், கடற்கரை, தொழில், நிகழ்காலம். நூலோர் - அறிஞர், பார்ப்பார், மந்திரிகள். மேலோர் - அறிஞர், வானோர். ஆலோலம் - நீரொலி, புள்ளோச்சல். காலோலம் - அண்டங்காக்கை. ஆல் - அசைச்சொல் (உ-ம். நாடா மாலூராமல்), ஆமெனல், ஆல மரம், எதிர்மறை ஏவல் விகுதி, (உ-ம். மரீ இயதொரால்) ஆலென் னேவல், வேற்றுமையுருபு, (உ-ம். வாளால் வெட்டினான்). ஓல் - ஒலித்தல். கால் - அளவு, ஏழனுருபு, (உ-ம். ஊர்க்கானிவந்த பொதும்பர்) காலன், கால், காற்று, குறுந்தறி, கையூன்று கோல், தூண், தேரு ருள், பூந்தாள், பொழுது, மகன், மரக்கால், முளை, வழி, வாய்க் கால். கீல் - சந்து. கூல் - பதினெண்வகைத் தானியம். கோல் - அஞ்சனக்கோல், அம்பு, அளந்திடுகோல், இலந்தை, ஊன்று கோல், எழுதுகோல், குதிரைச் சம்மட்டி, செங்கோல், துலாம், துலாராசி, தூண்டில், தெப்பம், மரக்கொம்பு, யாழி னரம்பு. சால் - சாலென்னேவல், நீர்ச்சால், படைச்சால், மிகுதி. சூல் - கருப்பம், சூலென்னேவல். சேல் - கெண்டை மீன். தால் - பிள்ளைக்கவியிலோர் பருவம். தோல் - அழகு, எண்வகை வனப்பினி லொன்று, துருத்தி, தோலாற் செய்த கேடகம், தோலென் னேவல், தோல், யானை. நால் - தூங்குதல், நான்கு. நீல் - காற்று, நீலம். நூல் - எண்ணல், கருத்து, கல்வி நூல், நூலென்னேவல், பஞ்சிநூல். பால் - இடம், உரிமை, குணம், பக்கம், பங்கு, பாதி, பால், வெண்மை. பூல் - ஓர்வகைச் செடி. பேல் - மலங் கழித்தல், அவ்வேவல். போல் - பதர், போலென்னிடைச் சொல், மூங்கில். மால் - அருகன், இந்திரன், கருமை, காற்று, சோழன், திருமால், புதன், பெருமை, மயக்கம், மேகம், வேட்கை. மேல் - அகலம், ஆகாயம், இனி யென்பது, ஏழனுருபு (உ-ம். தன் மேற்கடுவரை நீரிற் கடுத்து வரக் கண்டும்) மேல், மேற்கு. வால் - சுத்தம், மிகுதி, வால், வெண்மை. வேல் - ஆயுதப் பொது, கைவேல், மூங்கில், வேலமரம். ஏல்பு - பொருந்தல், இயைதல். சால்பு - ஊக்கம், கல்வி, மாட்சிமை, மேன்மை. மால்பு - கண்ணேணி. கால்வாய் - வாய்க்கால். நால்வாய் - யானை, வினைமுற்று. வ சாவகச்சேரி - ஓரூர். யாவகச்சேரி - யாவகரூர். சாவகம் - பதினெண்பாடையி லொன்று. காவகம் - சோலை. சேவகம் - சேவகத்தொழில், யானை துயிலிடம், வீரம். பாவகம் - இயல்பு, கருத்து. யாவகம் - ஓர் தேயப்பாடை. சாவகர் - சமணர். சீவகர் - புத்த தவத்தோர். சேவகர் - வீரர். சாவகன் - சனி. சீவகன் - ஓரரசன். சேவகன் - வீரன். பாவகன் - தூய்மைசெய்வோன், நெருப்பு. யாவகன் - ஓர் தேயத்தான். சாவகி - சமணப்பெண், ஓர்தேயப் பெயர். தேவகி - கண்ணன்றாய். பாவகி - முருகன். ஆவணம் - அடையாளம், உரிமை, கடைத்தெரு, தேர்மொட்டுப் பொருந்திய பீடம், புநர்பூசம், முறிச்சீட்டு. காவணம் - பந்தல். கேவணம் - மணியைப்பதிக்குங் குழி. கோவணம் - கௌபீனம். சாவணம் - ஒர் கருவி. நாவணம் - உண்ணாக்கு. ஆவம் - அம்புக்கூடு, நாணி. ஏவம் - குற்றம். ஓவம் - உயரம், சித்திரம். கூவம் - ஓர் சிவஸ்தலம், கிணறு. கோவம் - கோபம், பொன். சாவம் - சப்தமொழி, விலங்கின் பிள்ளை. சீவம் - உயிர். சேவம் - உயரம், பாம்பு. தாவம் - காடு, காட்டுத்தீ, மருத நிலத்தூர். தேவம் - தெய்வத்தன்மை, அனிச்சை, குளிநாவல், மாமரம். பாவம் - கருத்து, பாபம். யாவம் - அரக்கு, செம்பஞ்சு. ஓவர் - கம்மாளர், பாடற்கீழ்மக்கள். கூவர் - கீழ்நீர்க்குறி நெறிநூலார். கோவர் - இடையர். சீவர் - ஆன்மாக்கள். தேவர் - அண்டர். ஆவலம் - கொல்லை. கேவலம் - ஒருங்கு, தனிமை, மோக்கம். சேவலம் - கோழி. ஆவலர் - காதலர், கொண்கர். காவலர் - அரசர், புருடர். கூவலர் - நூல்வல்லோர். கோவலர் - இடையர். நாவலர் - கற்றவர், புலவர். பாவலர் - கவிகள், புலவர். மாவலர் - குதிரைப்பாகர், யானைப் பாகர். மேவலர் - பகைவர். காவலன் - அரசன், தலைவன். கோவலன் - கண்ணகி கணவன். சேவலன் - கந்தக்கடவுள். ஆவல் - ஆசை, வளைவு. ஏவல் - ஆணை செலுத்தல், ஆணை, தூண்டுகை, பிசாசை ஏவி விடுகை, வியங்கோண்முற்று. ஓவல் - ஒழிதல், வருந்தல், வியங் கோண்முற்று. காவல் - அரண், காத்தல், சிறைச் சாலை, மதில், வியங்கோண்முற்று. கூவல் - அழைத்தல், கிணறு, சொல் லுதல், பள்ளம், வியங்கோண் முற்று. கோவல் - திருக்கோவலூர். சாவல் - ஆண்கோழி, சேவல். சீவல் - சீவுதல், வியங்கோண்முற்று. சேவல் - காவல், கோழி, மயிலொழிந்த பறவையாண். தாவல் - தாண்டல், பாய்தல், வியங் கோண்முற்று. தூவல் - சிந்தல், மழைபெய்தல், மழைத்துளி, மழைத்தூவல், வியங் கோண் முற்று. நாவல் - ஒர்வகைமரம், நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதோர் சொல். நீவல் - தடவல், துடைத்தல், வியங் கோண்முற்று. பாவல் - பாதக்குறடு, வியங்கோண் முற்று. பூவல் - சிவப்பு, துறவு. மேவல் - ஆசைப்பெருக்கம், உண்டல், வியங்கோண்முற்று, விரும்பல். வாவல் - தாண்டல், வியங்கோண் முற்று வெளவல். வேவல் - வெந்தழிதல், எரிதல். சீவனம் - உயிர்வாழ்தல், நீர். பாவனம் - தூய்து, தூய்மைசெய்வது. காவன் - இந்திரன். சீவன் - உயிர், வியாழம். தேவன் - அருகன், கடவுள். பாவன் - கவி. நாவாய் - இரேவதிநாள், மரக்கலம். மோவாய் - தாடி. ஆவி - உயிர், உயிர்ப்பு, குளம், கொட்டாவி விடுவென்னேவல், பிட்டு, புகை, வாசனை. காவி - கருங்குவளை, காவிக்கல். சாவி - உலர்ந்தபயிர், பதர், திறவு கோல். சேவி - வணங்கு, கும்பிடு, வேலை செய். தீவி - புலி. தூவி - அன்னத்திறகு, இறகு, மயிற் றோகை, வினையெச்சம். தேவி - காளி, துர்க்கை, பார்வதி, மனைவி. நாவி - கத்தூரிமிருகம், ஊமத்தை. நீவி - கொய்சகம், சீலை, வினை யெச்சம். பாவி - தீயோன், பாலியென்னேவல். வாவி - குளம், வினையெச்சம். ஓவியம் - சித்திரம். காவியம் - காப்பியம். நீவியம் - சீலை. ஆவியர் - வேடர், வேளாளர். ஓவியர் - சித்திரகாரர். கூவியர் - மடையர். ஆவிரம் - இடையரூர். கூவிரம் - தேரிடக்கியம், தேர், தேர்க்கொடிஞ்சி, வில்வமரம். தீவிரம் - சூரியகிரணம், நரகம், பெருங் கோபம். காவிரி - காவேரி. கூவிரி - தேர். கூவிளம், மாவிளம் - வில்வமரம். ஆவு - குன்றி. ஈவு - கொடுக்கப்பட்டது, பிரித்துக் கொண்டபேறு. ஏவு - அம்பு, செலுத்தென்னேவல், வருத்தம். காவு - பலி. சாவு - பிசாசம், மரணம். சீவு - செதுக்கு, மேல்தோலை யெடு. தாவு - குதிரைநடை, தாவென்னேவல், பகை, பற்றுக்கோடு, வருத்தம், வலி. தீவு - ஆற்றிடைக்குறை, கடலிடைக் குறை, சுவை. தூவு - ஊன் தூவென்னேவல். நூவு - எள். நோவு - நோய். பாவு - பா, பாவென்னேவல். மேவு - ஆசை, மேலென்னேவல். வீவு - சாவு. வேவு - ஒற்று, வேதல், வேனென் னேவல். தாவுதல் - தாண்டல், பரத்தல். வாவுதல் - கடத்தல். கோவெனல் - அநுகரணவோசை. மாவெனல் - அழைத்தல். வாவெனல் - அழைத்தல். கோவை - அணிவடம், ஓர்வகைக் கொடி ஓர்வகைநகர், ஓர்வகைப் பிரபந்தம், கோத்தல். சேவை - ஊழியம், வழிபடுதல், தரிசனம். சோவை - ஒருநோய், நீர்க்கோவை. தேவை - ஓரூர், அவசரம். பாவை - சித்திரப்பாவை, பெண், மதில். பூவை - காயாமரம், நாகண வாய்ப் புள், பெண். யாவை - அஃறிணைப் படர்க்கைப் பன்மைவினா. ழ ஏழகம் - செம்மறிக்கடா, துருவாட் டேறு. காழகம் - ஆடை, கடாரமென்னு மூர், கருமை. மேழகம் - கவசம், செம்மறிக்கடா, துருவாட்டேறு. ஆழம் - ஆழ்தல், அறிதற்கரியது. ஈழம் - கள், சிங்களதேசம், பொன். கூழம் - எள்ளு. சோழம் - ஒர்வகைத்தேயம். தோழம் - தொழுவம். வேழம் - கரும்பு, கொறுக்கை, மூங்கில், யானை. ஆழல் - ஆழ்தல், கறையான், வியங் கோண்முற்று. ஊழல் - நரகம், வியங்கோண்முற்று, கெட்டது, ஊத்தை, ஆகாதது. கேழல் - பன்றி. சாழல் - ஓர்வகை விளையாட்டு, கரடி. சூழல் - ஆராய்தல், இடம், கருத்து, குறிப்பு, வியங்கோண்முற்று. ஞாழல் - குங்குமமரம், கோங்குமரம், பலினி. நீழல் - ஒளி, நிழல், நோய். போழல் - பிளக்குதல். மோழல் - பன்றி. சோழன் - தமிழ் மூவேந்தரி லொருவன். தோழன் - பாங்கன், துணைவன். ஆழி - கடல், சக்கரம், தேருருளை, மோதிரம், யானைக்கைநுனி, வட்டம். ஊழி - உறைகாலம், பூமி, யுகமுடிவு. காழி - சீகாழி. கோழி - உறையூர், கோழிப்பறவை. சூழி - உச்சி, உச்சிக்கொண்டை, கடல், குளம், சுனை, யானை முக படாம். சோழி - ஓர்வகைக் கல். ஞாழி - வள்ளைக்கொடி. தாழி - குடம், சாடி, பரணிநாள். தோழி - பாங்கி. நாழி - அளக்குநாழி, உட்டுளை, பூரட்டாதி. பாழி - அகலம், உரை, ஊர், குகை, சயனம், தேவர்கோயில், பகை வரூர் பெருமை, மருதநிலத்தூர், முனிவர் வாசம், வலி. பூழி - குழைசேறு, சேற்றிலெழுங்கு மிழி, பராகம், புழுதி. மூழி - அகப்பை, துடுப்பு, மத்து. மேழி - கலப்பையிலோர் கருவி. வாழி - இடைச்சொல், வியங்கோள் வினை. வீழி - ஓர்வகைச்செடி. நாழிகை - உத்திரட்டாதி, நாழிகை. நோழிகை - நூலின்றார். காழியர் - வண்ணார். மேழியர் - மருதநிலமாக்கள், வேளா ளர். நூழில் - குவிதல், கொடிக் கொத் தான், கொலை, படர்கொடி, யானை. பூழில் - அகில். ஈழை - காசநோய், கோழை. ஏழை - அறிவில்லான், தரித்திரன், பெண். கூழை - இறகு, கடையின்மை, சேறு, நடுபடைப்பின்னணி, படைவகுப்பு, பெண்மயிர், பொன், மயிற்றோகை. கோழை - கொடுமை, கோழை. தாழை - தாழைமரம், தென்னமரம். நூழை - நுண்மை. பீழை - துன்பம். பூழை - கோபுர வாயிற் கதவு விட்டுப் புகும்வழி. பேழை - பெட்டி. மாழை - அழகு, அறிவின்மை, உலோகக்கட்டி, ஒலை, திரட்சி, புளிமா, பொன், மாமரம். மூழை - துடுப்பு, மத்து, முகவை. மோழை - கஞ்சி, கொம்பின்மை. வாழை - வாழைமரம். ஊழ் - ஊழ்தலைச் செய்யென் னேவல், குணம், பகை, பழமை, முறை, வெயில். ஏழ் - ஓர்வகையெண். காழ் - ஒளி, காழென்னேவல், பருக்கைக் கல், பளிங்கு, மணி வடம், வைரம், விதை. கீழ் - ஈனம், ஏழனுருபு (உ.ம் ஆல மரநீழலற நால்வர்க் கன்றுரைத்த) கடிவாளம், கிழக்கு, கீழென் னேவல், பள்ளம், மறதி. கூழ் - சோறு, பயிர், பொன். கேழ் - உவமை, ஒளி, நிறம். தாழ் - சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம், தாழக்கோல், தாழென்னேவல். பாழ் - பாழ்த்தல். பேழ் - பெருமை. யாழ் - அச்சுவினிநாள், திருவாதிரை நாள், மிதுனவிராசி, வீணை. வீழ் - மரவிழுது, வீழென்னேவல். மாழ்தல் - சாதல், மயக்கம், மேவல், வியங்கோண்முற்று. மூழ்கல் - முழுகல், வியங்கோண் முற்று. வாழ்க்கை - ஊர், செல்வம், மருத நிலத்தூர், மனைவி, வாழ்தல். வீழ்க்கை - சோதிநாள், வீழ்த்தல். ஆழ்தல் - அழுந்தல், தாழ்தல். கீழ்தல் - கிழித்தல், பிளத்தல். சூழ்தல் - கருதல், சூழ்ந்திடல், பிற் படை. தாழ்தல் - ஆசை, ஆசைப்பெருக்கம், தங்கல், வணங்கல். போழ்தல் - பிளத்தல். மாழ்தல் - சோம்பல், மயக்கம். வாழ்தல் - வாழ்வு. வீழ்தல் - ஆசை, ஆசைப்பெருக்கம், மேவல், விழுதல். ஆழத்தல் - கட்டல், தாழ்த்தல், வியங்கோண்முற்று. ஊழ்த்தல் - ஊன், செவிவி, நினைதல், பதனழிவு, புலால், மடித்தல். காழ்த்தல் - கார்த்தல், வயிரித்தல். தாழ்த்தல் - தாழ்த்துதல், மந்தம், வியங்கோண்முற்று. பாழ்த்தல் - பாழாதல். மூழ்த்தல் - மூழ்குவித்தல், மொய்த்தல், வியங்கோண்முற்று. வாழ்த்தல் - துதித்தல், வியங்கோண் முற்று. வீழ்த்தல் - வியங்கோண்முற்று, விழு வித்தல். கீழவாய் - தாடி. பேழ்வாய் - பெருவாய். தாழ்வு - ஈனம், பள்ளம். வாழ்வு - முறைமை, வாழ்தல். ள ஆளகம் - சுரைக்கொடி. காளகம் - காளம். கோளகம் - பட்டுச்சீலை, மண்டலிப் பாம்பு, மிளகு. தாளகம் - ஓர்வகை மருந்து. நாளகம் - இலாமிச்சு. வாளகம் - வெட்டிவேர். காளம் - எட்டிமரம், கருமை, சிறு சின்னம், சூலம், நஞ்சு, மேகம். கூளம் - குப்பை. கோளம் - திரண்டவடிவு, உண்டை, வட்டம். சாளம் - மணல். சோளம் - ஓர்வகைப்பயிர். ஞாளம் - படர்கொடி. தாளம் - ஓர்வகை வாச்சியம். நாளம் - உட்டுளை. நீளம் - தூரம். பாளம் - கட்டி, வெடிப்பு. மேளம் - பலவாச்சியக் கூட்டம். வாளம் - சக்கரவாளகிரி, சக்கர வாகப்புள், வளைவு, வாள். சாளரம் - பலகணி. வாளரம் - படையராவுமரம். ஆளல் - ஆளுதல், வியங்கோண் முற்று. கீளல் - கிழித்தல், வியங்கோண் முற்று. சூளல் - சபித்தல். நீளல் - ஓடல், தூரம், வியங்கோண் முற்று. மாளல் - சாதல், வியங்கோண்முற்று. மீளல் - திரும்பல் வியங்கோண் முற்று. மூளல் - மூளுதல், வியங்கோண் முற்று. ஏளனம் - அவமதிச்சிரிப்பு, நீக்கல். மேளனம் - கூட்டம். ஆளன் - கடவுள், தலைவன், நிரு பன், புருடன். ஊளன் - ஆணரி. கேளன் - தோழன். கோளன் - கோளுரைப்போன். தாளாண்மை - ஊக்கம், முயற்சி. தோளாண்மை - புயவலி. வாளாண்மை - படைவலி. வேளாண்மை - ஈகை, உபகாரம், மெய். தாளாளர் - வைசியர். வேளாளர் - ஈகையாளர், காராளர். ஆளி - ஆளுவோன், ஒழுங்கு, கரைப் பொது, சிங்கம், செய்கரை, யாளி. ஒளி - ஒழுங்கு, யானைக்கூடம். காளி - அட்டாதச வுபபுராணத் தொன்று, காளி, சிங்கம், பார்வதி. கீளி - ஒர்வகைமீன், திருமால். கூளி - உழவு, எருது, குற்றம், தொகுதி, பூதம், பெருங்கழுகு, பேதம், பேய், பொலியெருது. கேளி - தெங்கு, மகளிர் விளையாட்டு. கோளி - அத்திமரம், ஆலமரம், கொள்வோன். சாளி - பெருச்சாளி, சாளிப்பை. சூளி - ஆண்மயிர். சோளி - இறுங்கு, பை. ஞாளி - கள், நாய். தாளி - அனுடநாள், ஒர்வகைக் கொடி, தாளியென்னேவல், பனை மரம். தூளி - குதிரையினார்ப்பு, பராகம், புழுதி. தேளி - ஒர்வகைமீன். நாளி - கள், நாய். நீளி - நெடியவன், பதுமநாபன். பாளி - அடையாளம், பாசறை. போளி - அப்பவர்க்கம். மீளி - அரசன், திண்ணியன், பாலை நிலத்தலைவன், பெருமை, மேன் மகன், வலி. மூளி - நெருப்பு, விகாரி. யாளி - சிங்கம், சிங்கவிராசி, யாளி. வாளி - அம்பு, ஒர்வகைக்காதணி, வட்டமாயோடல். ஞாளிகம், நாளிகம் - வள்ளைச்செடி. கோளிகை - பெண்கழுதை, பெண் குதிரை. சாளிகை - சாடி, பணப்பை, வண்டு. குளிகை - யானைச்செவியடி. சோளிகை - ஓர்வகைக்கூடை. மாளிகை - அரசன்மனை, வீடு. தாளிதம் - தாளிப்பு. தூளிதம் - தொளையுடையதாகப் பண்ணப்பட்டது. பாளிதம் - கண்டசருக்கரை, கருப் பூரம், சோறு, பட்டுச்சீலை, பாற் சோறு. ஆளியூர்தி - காளி, துர்க்கை. ஞாளியூர்தி - வயிரவன். யாளியூர்தி - காளி, துர்க்கை. ஈளை - கோழை. ஊளை - நரியூளை. காளை - ஆண்மகன், இளையோன், ஏறு, கட்டிளமையோன், பாலை நிலத் தலைவன். கூளை - சிறுமை, குறுமை. சூளை - குயவன்சூளை, வேசி. நாளை - மற்றைநாள். பாளை - கமுகுதெங்கு பனை முதலிய வற்றின் பாளை. பீளை - கண்ணழுக்கு. பூளை - இலவம்பஞ்சு, ஒர்வகைப் பூடு. மூளை - தலை முதலியவற்றின் மூளை. வாளை - ஓர்வகைமீன். வேளை - ஓர்வகைப்பூடு, காலம். ஆள் - அடிமை, ஆடவர், ஆளு தலைச் செய்யென்னேவல். கேள் - உறவு, கேளென்னேவல், சிநேகம். கோள் - இடையூறு, குணம், கொலை, கொள்ளல், கோள், தீமை, நவக் கிரகம், நாள், புறங்கூறல், பொய், வலி. சூள் - ஆணை, சபதம், சத்தியம். தாள் - ஆதி, கால், முயற்சி. தூள் - புழுதி, பூந்தாது. தேள் - அனுடநாள், தேள், விரிச்சிக விராசி. தோள் - கை, புயம். நாள் - அச்சுவினி முத லிருப்பத் தேழு, காலம். நீள் - உய்hச்சி, ஒளி, நீளென்னேவல். பீள் - கருப்பம், பயிரிளங்கதிர். மாள் - இறவென்னேவல், மாட்சிமை. வாள் - ஒளி, கத்தி. வேள் - ஆண்மகன், குமரன், மன்மதன். கேள்வி - கல்வி, காது. வேள்வி - ஆராதனை, ஈகை, ஓம குண்டம், மகநாள், யாகம். ற ஆறல் - ஆறுதல், வியங்கோண் முற்று. ஊறல் - ஊறுதல், திருவூரல் என் னுஞ் சிவஸ்தலம், (இது இக்காலத் துத் தக்கோலம் என வழங்கப்படு கிறது) வியங்கோண்முற்று. ஏறல் - ஏறுதல், வியங்கோண்முற்று. காறல் - காறுதல், வியங்கோண்முற்று. கீறல் - எழுதல், கிழித்தல், வியங் கோண்முற்று. கூறல் - சொல்லுதல், வியங்கோண் முற்று, விற்றல். கோறல் - கொல்லல். சாறல் - உழக்கல். சீறல் - அதட்டல், சினக்குறிப்பு, பெருங்கோபம், வியங்கோண் முற்று. சூறல் - தோண்டல். சேறல் - எழுச்சி, நடத்தல். தூறல் - பழிச்சொல், மழைத்துளி, மழை பெய்தல், வியங்கோண் முற்று. தேறல் - கள், தங்கல், நிச்சயம், வியங்கோண்முற்று. நாறல் - தோன்றல், மணத்தல், முளைத்தல். நூறல் - அழித்தல், வியங்கோண் முற்று. பாறல் - இடபவிராசி, எருது, ஓடல், பொதி யெருது, பொருதல், வியங் கோண்முற்று. பீறல் - கிழித்தல், வியங்கோண்முற்று. போறல் - போலுதல். மாறல் - தவிர்தல், விடுதல், வியங் கோண்முற்று. வீறல் - வியங்கோண்முற்று, வீறுதல். சூறன் - மூஞ்சூறு. மாறன் - பாண்டியன், திருமா லடியா ருள் ஒருவர். ஆறு - ஆறுதலைச் செய்யென்னேவல், ஒழுக்கம், ஓர்வகை யெண், நதி, வழி. ஈறு - உப்பளம், முடிவு. ஊறு - இடையூறு, ஊறென்னேவல், கொலை, தீண்டல், தீமை. ஏறு - அச்சுவினிநாள், இடபவிராசி, இடி, எருது, எருமை, கவரி, சங்கு, சுறா, பசு பன்றி புல்வாய் மரைமா னிவற்றினாண், ஏறென்னேவல், விலங்கேற்றின் பொது. காறு - அளவு, கொழு. கீறு - எழுத்து, கீறென்னேவல், பிளப்பு. கூறு - கூறென்னேவல், பங்கு, பாதி. சாறு - கள், குலை, கொத்து, திருவிழா. சூறு - குதம், மூஞ்சூறு. சேறு - இனிமை, கள், கும்பி, தித்திப்பு, திருவிழா, வினைமுற்று. சோறு - சாதம், பரணி நாள். தாறு - அளவு, இருப்புமுள், ஈந்து கமுகு, வாழை யிவற்றின் குலை, வில்லின் குதை. தூறு - கூட்டம், சிறு செடி, தூறென் னேவல், பழிச்சொல். தேறு - தேறென்னேவல், தேற்றா மரம். தோறு - தொழிற் பயில்வையும் காலப்பொருளையும் தருமோ ரிடைச்சொல். நாறு - நாற்றுமுடி, நாறென்னேவல். நீறு - திருநீறு, நீறென்னேவல், பராகம். நூறு - ஓர்வகை யெண், நூறென் னேவல். பாறு - பருந்து, பாறென்னேவல், மரக்கலம். பீறு - உருவென்னேவல், பிளவென் னேவல். பேறு - இலாபம். மாறு - கைம்மாறு, சிறுகொம்பு, துடைப்பம், மாறென்னேவல். யாறு - ஆறு. வீறு - தனிமை, புண்ணியம், பெருமை, விளக்கம், வீறென்னேவல், வெறுப்பு. ஆறுதல் - இளைப்பாறுதல், சூடு தணிதல். ஊறுதல் - நீர் பெருகுதல், பல வழியி னும் பொருள் வந்து சேருதல். ஏறுதல் - அதிகப்படல், ஆரோகணம் செய்தல், உந்துதல். காறுதல் - காறி யுமிழ்தல். கீறுதல் - பிணக்குதல். கூறுதல் - சொல்லுதல். கோறுதல் - கொல்லுதல். சாறுதல் - வடிதல். சீறுதல் - சீறல். தூறுதல் - நிந்தித்தல், மழை தூறுதல். தேறுதல் - தெளிதல். நாறுதல் - மணத்தல். நூறுதல் - அழித்தல். பாறுதல் - ஓடுதல். பீறுதல் - கிழித்தல். மாறுதல் - மாறல். வீறுதல் - இழுத்தல். வேறு - குறிப்பு வினைமுற்று, வேற் றுமை. ஆறை - ஆற்றூர். காறை - கழுத்தணியி லொன்று. கூறை - சீலை. கோறை - பழுது. சூறை - கொள்ளை, சுழல்காற்று. தேறை - ஒரு மீன். நூறை - மலங்குமீன். பாறை - திட்டை. மோறை - மோவாய். ஊற்றம் - அசைவின்றி நிற்றல், அறி வுடைமை, ஆற்றல், பற்றுக் கோடு, புகழ். ஏற்றம் - ஏற்ற மரம், புகழ், மிகுதி. கூற்றம் - கூற்று, சொல், நமன், கொடிய சத்துரு. சீற்றம் - கோபம், சினம். தேற்றம் - கரும மூடிக்குந் துணிவு, நிச்சயம். தோற்றம் - ஏற்றமொழி, சொல், பிறப்பு, மகன், வலி. நாற்றம் - கள், வாசனை. மாற்றம் - சொல், பகை, வேற்றுமை. வீற்றம் - வேறுபாடு. ஆற்றல் - அதிகம், செய்தல், ஞானம் நிலையுடைமை, பரித்தல், பொறை, மிகுதி, முயற்சி, வலி, வியங்கோண் முற்று. ஊற்றல் - பெய்தல், வியங்கோண் முற்று. ஏற்றல் - அடுக்குதல், இரத்தல், உணர்த்தல், எதிர்த்தல், எழும்பல், கொள்ளல், வியங்கோண்முற்று. சாற்றல் - சொல்லுதல், வியங்கோண் முற்று. தீற்றல் - உண்பித்தல், மேற்பூசல். தூற்றல் - தூற்றதல், பழி கூறல், வியங் கோண்முற்று. தேற்றல் - தேற்றுதல், வியங்கோண் முற்று. தோற்றல் - தோல்வி, தோன்றல், பிறத்தல், முளைத்தல், வியங் கோண்முற்று. நூற்றல் - நூற்குதல். நோற்றல் - தவஞ் செய்தல், பொறுத் தல். போற்றல் - பாதுகாத்தல், புகழ்தல், வணங்கல், வியங்கோண்முற்று. மாற்றல் - கொடாமை, மாற்றுதல், வியங்கோண்முற்று. ஆற்றார் - தரித்திரர், வருந்தினர். போற்றார், மாற்றார் - பகைவர். ஆற்று - ஆற்றென்னுமேவல், தலைக் கடை. ஊற்று - ஊற்றென்னேவல், ஊன்று கோல், நீரூற்று. காற்று - சோதிநாள், வாயு. கீற்று - கீரல். கூற்று - காலன், சொல், நமன். வீற்று - தனிப்பாடு, வேறுபாடு. ஆற்றுவித்தல் - உறுதி செய்தல், தணிப்பித்தல், வலிதருதல். தோற்றுவித்தல் - உண்டாக்கல். ன ஆனகம் - தம்மட்டம், துந்துபி, தேவதரு, மேளம், இடி, காதினுட் சவ்வு, முகில். ஊனகம் - உடல். கானகம் - காடு, குறிஞ்சி நிலம். சானகம் - வில். சோனகம் - ஒர் தேசம், பதினெண் பாடை யிலொன்று. தானகம் - பாதவுறுப்பு ளொன்று. பானகம் - குடிப்பன. போனகம் - சோறு. வானகம் - சுவர்க்கம், வெளி. கானமா - காட்டுப் பசு, காட்டு விலங்கு. நானமா - கத்தூரி மிருகம். மானமா - கவரிமா. ஆனம் - கள். ஈனம் - இழிவு, குறைபாடு. ஊனம் - ஈனம், குறைபாடு. ஏனம் - எழுத்தின் சாரியை, ஓலைக் குடை, கருவி, பன்றி, பாவம். ஓனம் - எழுத்தின் சாரியை. கானம் - இசைப்பாட்டு, காடு, வாசனை, வானம்பாடி. கீனம் - அபாவம், இழிவு, குறை பாடு. சானம் - அம்மி, உரைகல், பெருங் காயம். சீனம் - ஓர் தேயம், பதினெண் பாடையிலொன்று. சூனம் - பூமலர், மான், பிறப்பித்தல், வீக்கம். சேனம் - பருந்து. ஞானம் - அறிவு, கல்வி, நல்லொ ழுக்கம். தானம் - இடம், கொடை, தேவ லோகம், யானை மதம், வலி. தீனம் - இட்டம், எளிமை, குரூரம், குறை, கேடு. தூனம் - அசைத்தல், வருத்தம். தேனம் - சமுத்திரம். நானம் - கத்தூரி, கவரிமா, குளித்தல், வாசனை. நூனம் - குன்றல், நிச்சயம். பானம் - கள், குடித்தல், துவை, பருகு வன. பீனம் - பருமை, பாசி. பேனம் - நுரை. மானம் - அபிமானம், அளவு, உவமை, குற்றம், பெருமை, வலி, வெட்கம். மீனம் - மீனவிராசி, மீன். மோனம் - மௌனம். யானம் - கள், சிவிகை, மரக்கலம். வானம் - ஆகாயம், உலர்ந்தமரம், மழை. ஈனர் - இழிந்தவர். ஊனர் - ஆன்மாக்கள், ஊன்றின் போர், அதுவிற்போர். கானர் - கந்தருவர், பாணர், வேடர். சீனர் - ஓர் தேயத்தார். சூனர் - ஊன்விற்போர். தீனர் - இரப்போர். தேனர் - திருடர். மோனர் - முனிவர். ஆனல் - நீங்கல். ஈனல் - ஈன்றல், கதிர், வியங்கோண் முற்று. ஏனல் - செந்தினை, தினைப்புனம், பைந்தினை. கானல் - உப்பளம், ஒளி, கடற்கரைச் சோலை, கழி, சூரியகிரணம், பேய்த்தேர். சானல் - அம்மி, உரைகல். கூனல் - கோணல், சங்கு, பிறை, வியங்கோண்முற்று. பானல் - கருங்குவளை, மருதநிலம், வயல். மானல் - ஐயம், ஒத்தல், மயக்கம், வியங்கோண்முற்று. வேனல் - கானல், வெயில். கானவர் - குறிஞ்சிநிலமாக்கள், முல்லை நிலமாக்கள், வேடர். தானவர் - அசுரர். மானவர் - படைவீரர், மனிதர், மான முடையோர். கானவன் - கானவன், குரங்கு. தானவன் - அசுரன், சந்திரன். மீனவன் - பாண்டியன். வானவன் - சேரன், பிரமன். ஆனனம் - முகம். ஈனனம் - வெள்ளி. கானனம் - காடு. ஊனன் - குறைவுள்ளோன். கீனன் - குலமில்லான். கூனன் - கூனுள்ளோன். சீனன் - ஓர் தேயத்தான். ஞானன் - பிரமன். தீனன் - தரித்திரன். வேனன் - பிருதுமன்னன் றந்தை. ஆனாமை - உத்திராடம், நீங்காமை. நோனாமை - தவஞ்செய்யாமை, பொறாமை. கோனார் - இடையர். நோனார் - தவமில்லார், பகைவர். மானார் - பகைவர், மாதர். ஆனி - ஓர் மாதம், கேடு, கேட்டை, பொருந்தநதி, வெட்டுக்குருத்து. ஊனி - அமுக்கிராக் கிழங்கு. கூனி - ஓர்மீன், கூனுள்ளான், வசலி. சானி - வேசி. சீனி - சர்க்கரை, சீனக்காரம். சூனி - வேட்டைக்காரன். ஞானி - அருகன், பிரமன். தானி - தானத்தையுடையது, இருப் பிடம். தீனி - உணவு. பானி - படை, பானஞ்செய்வோன். மானி - மானமுடையயோன். மேனி - உடலுருவம், நிறம், வடிவு. யோனி - காரணம், பெண்குறி. வானி - கூடாரம், படை, மேற்கட்டி, விருதுக்கொடி. ஆனியம் - நாள், பருவம், பொழுது, மூலநாள். சூனியம் - பாழ். தானியம் - பண்டம். பானியம் - நீர். மானியம் - அரசர்கள் சம்மானத்தால் விடுநிலம். ஆனு - இனிமை, நன்மை. சானு - மலைச்சாறல், முழங்கால். சூனு - மகன். தேனு - எருமை, களவு, குதிரை, தேவப் பசு, பசு. பானு - சூரியன். ஆனேறு - இடபம். தேனேறு - ஆண் வண்டு. மானேறு - உத்திரநாள், கலைமான். மீனேறு - மகர மீன். வானேறு - இடி. ஆனை - யானை, அத்திமரம். ஏனை - மலங்குமீன், மற்று, ஒழிந்த. கூனை - கருப்பஞ்சாறடுகூன், வேள்விக் குண்டம். சீனை - வன்னிமரம். சேனை - ஆயுதம், கடைவீதி, படை. சோனை - சொரிதல், திருவோண நாள், விடாமழை. தானை - ஆயுதப்பொது, தூசு, படை. பானை - மிடா. பூனை - பூசை. மேனை - மலையரையன்றேவி. மோனை - ஆதி, ஓர்வகைத் தொடை. யானை - வடதிசைப்பாலன்குறி, வாரணம். ஆன் - ஆண்பால்விகுதி, (உ-ம். வேளான்) சாரியை, (உ-ம். ஒரு பான்), பான் பசுப்பொது, பெண் பசு, வேற்றுமை யுருபு, (உ-ம். உரனென்னுந் தோட்டி யானோ ரைந்துங் காப்பான்). ஊன் - தசை, உடல். கான் - எழுத்தின்சாரியை, (உ-ம். ஐகான்) காடு, மணம். கூன் - ஆந்தை, கூனென்னேவல், நத்தை வளைவு. கோன் - அரசன், எப்பொருட்கு மிறைவன். சான் - சானகம். தான் - அசைச்சொல், (உ-ம். நீதான்,) படர்க்கைப் பொதுப் பெயர், முழுப் புடவை. தீன் - உணவு. தேன் - கள், பெண்வண்டு, வண்டு, வாசனை. நான் - தன்மை யொருமைப் பெயர். நோன் - வலிமை, பெருமை. பான் - எதிர்கால விடைச்சொல், (உ-ம். உண்பான் வந்தான்). பேன் - ஓருயிர். மான் - உருவம், நவ்வி, மகரமீன், மகரராசி, விலங்கின் பொது. மீன் - நெய்தற்பறை, மகரமீன், மச் சம், விண்மீன். வான் - ஆகாயம், எதிர்கால விடைச் சொல், (உ-ம். கொல் வான் கொடித்தானை கொண்டெழுந் தான்), பெருமை, மழை, மேகம். ஆன்மா - உயிர். கான்மா - பன்றி. கோன்மை - தலைமை. நோன்மை - தவம், பெருமை, பொறுமை, கலி. பான்மை - குணம். மேன்மை - பெருமை. ஆன்றல் - அகலம், மாட்சிமை, மிகுதி. ஈன்றல் - உண்டாதல், பெறுதல். ஊன்றல் - சார்தல், தள்ளல், நடல், வியங்கோண்முற்று. கான்றல் - கக்கல். கீன்றல் - கிழித்தல். சூன்றல் - தோண்டல். தோன்றல் - ஆண்மகன், இராசா, தமையன், மகன், முல்லை நிலத் தலைவன், வியங்கோண்முற்று. நான்றல் - நாலல். நோன்றல் - தள்ளல், நிலைநிறுத்தல், பொறுத்தல். மான்றல் - மயக்கம். ஆன்றவர் - புலவர். ஈன்றவர் - இருமுதுகுரவர். சான்றவர் - அறிஞர். ஊன்றி - பாம்பு, வினையெச்சம். தான்றி - தான்றிமரம். தோன்றி - இரத்தம், காந்தள், வினை யெச்சம். ஆன்று - அகன்று. ஊன்று - நிறுத்தென்னேவல். சான்று - நடுச்சொலல், சாக்ஷி, வினையெச்சம். ஞான்று - இடைச்சொல், நாள், வினையெச்சம். ஆன்றோர் - அறிவுடையோர், புலவர். ஈன்றோர் - பெற்றவர். ஏன்றோர் - சிநேகிதர். சான்றோர் - அறிஞர். நெடிற்கீழெதுகை யகராதி முற்றிற்று. ஈண்டுக்காட்டிய பற்பல தொடைப்பதமன்றி யடைமொழி யானும், பெயரெச்சத்தானும், அறுதொகையானும், முற்றுவினை யானும், வினைக் குறிப்பானும், வேற்றுமை முதலியவுருபானும் சங்கிருத முதலிய வெழுத்துத் திரிபானு மோரளவின்றிச் சிறப்புள தொடைப்பதமாக வேண்டுவன வெல்லாங் கூட்டிக்கொள்க. அங்ஙனஞ் சிந்தாமணி, கம்பராமாயணம், கந்தபுராணமுதற் பலவிலக்கியங்களில் வந்துள்ளன :- 1-வது அந்நீர்ப்பதுமம் - அழகியதாமரை. செந்நீர்ப்பவளம் - சிவந்தபவளம். முந்நீர்ப்புணரி - மூன்று நீர்மை யுடைக்கடல். பைந்நீர்க்கதலி - பசியவாழை. வெந்நீர்க்கடமா - வெம்மை பொருந்திய மதயானை என்பன பலவு மடைமொழி யானுங் குணத்தொகையானும் வந்த தொடைப்பதங்களாம். 2-வது ஆனிலையிறை (திருவானிலை யென்னுந் தலத்து வீற்றிருந் தருளுஞ் சிவபெருமான்). தேனிலைமாலை. நூனிலைமார்பன். பானிலைமொழி. வானிலைநதி (ஆகாயகங்கை). வேனிலைவிழி - என்பன பலவு மெழுத்துத்திரிபானுங் குணத் தொகை யானும் வந்த தொடைப் பதங்கள். 3-வது அரணாம்பரம் - கோட்டைமறைவு. இரணாம்பரம் - போர்க்கடல். கிரணாம்பரம் - கதிருடையாக வுடுத்தல். சரணாம்பரம் - அடைக்கலம், மறைவு, என்பனவும். மரணாம்பரம் - இறப்புச்சமுத்திரம். சிராங்கம் - தலை. பராங்கம் - தேவலோகம். தராங்கம் - மலை. வராங்கம் - முத்தியருடல், என்பனவும் வடமொழிச் சங்கிருதத் திரிபி னால் வந்த தொடைப்பதங்கள். 4 - வது சுனையநீலம். சினையசண்பகம். தினையகொல்லை. நனையநாகம். மனையசாகம். அனையயாவும் - என்பன பலவும் வினைக்குறிப்புப் பெயரெச் சத்தால் வந்த தொடைப்பதங்கள். 5 - வது காவிற்றாக - சோலைபோல. தீவிற்றாக - தீவுபோல. நாவிற்றாக - சொல்ல. கோவிற்றாக - ஆகாயத்தைப்போல. நீவிற்றாக - நீவ. பாவிற்றாக - பாவினதாக. மேவிற்றாக - மேவ என்பன பலவும் வினைக்குறிப்பினாலு முற்று வினையாலும் வந்த தொடைப் பதங்கள். 6 - வது சாலி என்பதற்கு. வாலி. காலி. கோலி. சீலி. சூலி. தாலி. தூலி. தோலி. நீலி. நூலி - பாலி, மாலி, வேலி பலவும் பகுபத விகுதியால் வந்ததொடைப் பதங்கள். 7 - வது குரவை என்பதற்கு. பரவை. அரவை. இரவை. கரவை. சரவை. புரவை - பலவும் ஐயென்னும் வேற்று மையுறுபினால் வந்த தொடைப் பதங்கள். 8 - வது செந்தினை - என்றதற்கு. அந்தினை., இந்தினை. உந்தினை. கந்தினை. சந்தினை. பந்தினை - பலவும் இன்சாரியை யோடை யெனும் வேற்றுமையுரு பினாலும். உந்தினை. சிந்தினை. நந்தினை. முந்தினை - பலவுமிறந்த காலத் தொருமை முன்னிலை முற்று வினையாலும் வந்த தொடைப் பதங்கள். 9 - வது சிந்தனை - என்றதற்கு. கந்தனை. தந்தனை. தொந்தனை. நிந்தனை. நொந்தனை. வந்தனை. வெந்தனை - பலவுமிறந்தகாலத் தொருமை முன்னிலைமுற்று வினையால் வந்த தொடைப் பதங்கள். 10 - வது சடிதி - என்றதற்கு. கடிதி. தடிதி. படிதி. மடிதி. வடிதி. முடிதி - பலவுமேவலின் மேற்கூட்டி யதி என்னும் விகுதியால்வந்த தொடைப் பதங்கள். 11 - வது புண்ணியவுடல் - என்றதற்கு. அண்ணியவருள். எண்ணியமுறை. கண்ணியபொருள். தண்ணியகலை. நண்ணியவிடம். நுண்ணியவிடை. எண்ணியகோயில் - பலவும் பெய ரெச்சத்தால் வந்த தொடைப் பதங்கள். கன்னி என்பதற்கு. சென்னி. உன்னி. சன்னி. துன்னி. பன்னி. பின்னி - எனவும். பொன்னி. முன்னி. மின்னி எனவும். அல்லி என்பதற்கு நெல்லி. இல்லி. ஒல்லி. கொல்லி. சல்லி. சில்லி. சுல்லி. சொல்லி. தல்லி. துல்லி. நல்லி. புல்லி - எனவும், பல்லி பில்லி பெல்லி மல்லி நல்லி வல்லி வில்லி - எனவும் வினையெச் சத்தானும் பகுபதவிகுதியானும் வந்த தொடைப் பதங்கள். 12 - வது. கதுச்சந்நிதி - என்பதற்கு. சதுச்சந்நிதி. புதுச்சந்நிதி என்பன இடை தொடைப்பதங்களாம். இங்ஙன மீண்டுக்கூறியவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு புத்திவழியாற் கூறாதனவு முணர்வதறிவோர் கடனே. என்னை? “எந்நூற்சூட்டினு மெத்துறைகாட்டினு மந்நூற்கெல்லா மறிவாதியெனவே.” தொடையகராதி முற்றிற்று. தமிழ்ப்பேரகராதி முற்றிற்று.