16 இராபின்சன் குரூசோ இராபின்சன் குரூசோ 1. இராபின்சன் குரூசோ எனது பெயர் இராபின்சன் குரூசோ. நான் இங்கிலாந்திலே யார்க்குப் பட்டினத்தில் 1632ஆம் ஆண்டு பிறந்தேன். சிறுவனாயிருந்த போது எனக்குக் கடற்பயணம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் உண்டு. இதனை அறிந்த என் பெற்றோர் அபாயத்துக்கு ஏதுவான இவ்வெண்ணத்தை விட்டு வீட்டில் இருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சொற்படி நான் சில காலம் வீட்டிலிருந்தேன். இவ்வுலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் என்னைத் தூண்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு நாள் என் நண்பன் ஒருவன் வீட்டிற்குச் சென்றேன். அவன் அப் போது தன் தந்தையின் கப்பலில் இலண்ட னுக்குப் போகப் புறப் பட்டுக் கொண்டிருந்தான். அவன் என்னையும் தன்னுடன் வரும்படி அழைத்தான்; பயணத்துக்கு யாதும் செலவு வேண்டியதில்லையென்றும் சொன்னான். நான் என் பெற்றோருக்கு அறிவியாமலே கப்பலில் ஏறிப் பயணஞ் செய்தேன். கப்பல் பாய்விரித்துச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் கழிந்ததும் புயற்காற்று வேகமாய் அடித்தது. கடல் கொந்தளித்துப் பயங்கரமாய் மூழங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது என்னுடனிருந்தவர் பயந்து நடுங் கினர். நானும் பெரிதும் பயந்தேன்; என் தந்தையார் கூறிய புத்திமதிகளைக் கேட்டிருந்தால், நான் இவ்வகை ஆபத்துக்குள்ளாயிருக்கமாட்டேன் என்று நினைத்துக் கலங்கினேன்; இவ்வபாயத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனித் தந்தையார் சொற்படி நடந்து கொள்வேன் என்று பலவாறு எண்ணிக் கொண் டிருந்தேன். புயுல் நின்று, கடல் அமைதி அடைந்தது. என் மனத்திலிருந்த பயம் போய்ப் பயணத்தில் இன்பம் பிறந்தது. ஐந்து நாட்கள் சிறிதும் குழப்ப மின்றிக் கப்பல் ஓடிக்கொண்டிருந்தது. பின்பு மிகக் கொடிய புயல் அடித்தது. திரைகள் தட்டுகளின் மேல் நீரை இறைத்தன. கப்பலில் ஒரு வெடிப்பு உண்டாயிற்று. அது வழியாக நீர் உள்ளே வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் எங்கள் கப்பலுக்கு அருகில் நின்ற மற்றொரு கப்பலிலிருந்து படகு ஒன்று உதவிக்கு வந்தது. உடனே நாங்க ளெல்லோரும் ஓர் ஆபத்துமின்றி எங்கள் கப்பலினின்று இறங்கி, அக்கப்பலில் ஏறினோம்; அக்கப்பலிலேறித் தப்பிப் பிழைத்துக் கரையை அடைந்தோம். கரையில் கும்பலாய்க் கூடியிருந்த மக்கள், எங்களுக்கு உதவியளிக்க ஆயத்தமாயிருந்தார்கள். அவர்கள் எங்களுக்குப் பொருளுதவி செய்து நாங்கள் வந்த வழியே ஹல் நகருக்காவது இலண்டன் நகருக்காவது சொல்லலாமென்று சொன்னார்கள். அதன் பின்பு நாங்கள் ஏறி வந்த கப்பலதிகாரி, “நீங்கள் யார்? எவ்வூருக்குப் போகிறீர்கள்? உங்கள் தொழிலென்ன?” என்று ஒவ்வொரு வராகக் கேட்டு வந்தார். அவர் என்னை இவ்வாறு கேள்விகள் கேட்டபோது நான், “கடற்பயணம் எப்படிப்பட்டதென்பதை அறிந்துகொள்ளப் பயணஞ் செய்கிறேனே தவிர, எனக்குத் தொழில் இல்லை,” என்று பதில் கூறினேன். அவர் என் மீது கோபம் கொண்டார்; பெற்றோரின் அனுமதியின்றிப் பயணஞ் செய்தபடியாலேதான் புயல் உண்டாயிற்று எனக் கூறினார்; “இனி உன்னைக் கப்பலில் ஏற்ற முடியாது,” என்றும் சொன்னார். நான் திரும்பி வீடு போய்ச் சேர விரும்பாதவனாய்த் தரை வழியாக இலண்டன் நகரை வந்தடைந்தேன். நான் இலண்டனை வந்தடைந்த சில நாட்களின் பின்பு அங்கிருந்து ஆப்பிரிக்காக் கரைகளுக்குச் செல்லும் ஒரு கப்பலில் ஏறினேன். நான் ஆப்பிரிக்காவை அடைந்து, அங்குள்ள காட்டு மக்களோடு செய்த வியாபாரத்தில் சிறிது தங்கம் கிடைத்தது. நான் அதனை இலண்டனுக்குக் கொண்டு வந்து விற்றுவிட்டு, மறுபடியும் வாணிகம் செய்யும் பொருட்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். எங்களுடைய கப்பலைக் கடற் கொள்ளைக்காரரின் கப்பல் பின் தொடர்ந்தது. நாங்கள் எங்கள் பீரங்கிகளால் அதனை நோக்கிச் சுட்டோம். கடற்கொள்ளைக்காரர் எங்கள் கப்பலை உடைத்துக் கப்பலிலிருந்தவருள் சிலரைக் கொன்றார்கள்; சிலரைக் கைகளைப் பின் புறமாகக் கட்டி அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு மொராக்கோவுக்குச் சென்றார்கள். அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்களுள் யானும் ஒருவன். 2. நான் அடிமை ஆனது கொள்ளைக்காரரின் மாலுமி என்னை அடிமையாக்கிக் கொண்டார். நான் என் தலைவனிடம் இருந்து கடுமையான வேலைகளைச் செய்தேன். இந்நிலைமையிலிருந்து எப்படித் தப்பலாம் என நான் எப்போதும் ஆலோசனை செய்தேன். மீன் பிடிக்கப் போகும் போதெல்லாம் தலைவர் என்னை அழைத்துச் செல்வார். நான் மீன் பிடிப்பதில் மிகவும் கெட்டிக்காரன். இரண்டு அடிமை களை அழைத்துக்கொண்டு மீன் பிடிக்கச் செல்லும்படி ஒரு நாள் அவர் என்னிடம் கூறினார். அப்பொழுது எனக்கு மனத்தில் ஒரு வகை எழுச்சி உண்டாயிற்று. அன்றுதான் எனக்குத் தப்பி ஓடக் கூடிய வசதி இருந்தது. படகில் அதிக உணவு இருந்தது. அடிமைகள் சிறிது நேரம் மீன் பிடித்தார்கள். ஆனால், நான் ஒன்றை யும் பிடிக்கவில்லை. எனது தூண்டிலில் மீன்கள் அகப்பட்ட போது நான் அவைகளை வேண்டுமென்றே போக விட்டேன். “இங்கு மீன் அகப்படாது; நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும்,” என நான் என்னுடன் இருந்த அடிமைகளுக்குச் சொன்னேன். நாங்கள் சிறிது தூரம் படகைச் செலுத்திக்கொண்டு சென்றோம். தூரத்தே சென்றதும் நான் அடிமைகளுள் ஒருவனைப் பிடித்துத் தூக்கிக் கடலில் எறிந்து, “நீ நன்றாக நீந்திக் கரையை அடைவாய். நான் உனக்குத் தீமை செய்யமாட்டேன்,” என்று சொன்னேன். அவன் கரையை நோக்கி நீந்திச் சென்றான். பின்பு நான் சூரி என்னும் மற்ற அடிமையைப் பார்த்து, “நீ என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயா, அல்லது உன்னையும் கடலில் எறியட்டுமா?” என்று கேட்டேன். அவன், “விசுவாச மாய் இருப்பேன்,” எனக் கூறினான். என் தலைவர் எங்களைத் தேடிப் படகுகளை அனுப்பக் கூடும் எனப் பயந்து, நாங்கள் விரைவாகப் படகைச் செலுத்திக் கொண்டு சென்றோம். ஐந்து நாட்களின் பின் எங்களிடமிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது; நான் தரையை நோக்கிப் படகைத் திரும்பினேன். கரையைக் கிட்டியதும் நாங்கள் கறுப்பு நிற மக்களைக் கண்டோம். உணவு வேண்டுமென்று நான் கையினாற் சைகை காட்டினேன். அவர்களுள் இரண்டு பேர் ஓடிச் சென்று இறைச்சியும் தானிய உணவும் கொண்டு வந்தனர். என்னிடம் தண்ணீர் இல்லை என்பதை அறிவிப்பதற்கு நான் என் சாடிகளுள் ஒன்றைக் கவிழ்த்துக் காட்டினேன். அதனைக் கண்டதும் இரண்டு நீகிரோவர் பெரிய சாடியில் தண்ணீர் கொண்டு வந்தனர். நீகிரோவரை விட்டு நாங்கள் மறுபடியும் படகைச் செலுத்திக் கொண்டு சென்றோம். எங்குச் செல்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளாமல் நாங்கள் பதினொரு நாட்கள் பயணஞ் செய்தோம். ஒரு நாள் மத்தியானம் என்னுடனிருந்த அடிமை, “ஐயா! ஐயா! ஒரு மரக்கலம் பாய் விரித்துச் செல்கிறது!” என்று சத்தமிட்டுச் சொன்னான். உண்மையில் அது ஒரு மரக்கலமே. நாங்கள் மரக்கலத்திலிருந்தவர் களுக்குச் சில சைகைகளைக் காட்டி, ஒரு துப்பாக்கியால் வெடி தீர்த்துச் சத்தம் செய்தோம். அவர்கள் எங்களைக் கண்டார்கள். நாங்கள் அவர்களுக்கு அருகே செல்லும் வரையும் அவர்கள் தாமதித்து நின்றார்கள்; பின்பு மரக்கலத் தலைவன் எங்களைத் தனது மரக்கலத்தில் ஏற்றினான். நான் அவனிடம் எனது வரலாற்றைக் கூறினேன். அவன் தான் பிரேசிலுக்குப் போவதாகவும், என்னையும் உடன் அழைத்துச் செல்வதாக வும் கூறினான். நான் எனது படகையும் அதிலிருந்த எல்லாவற்றையும் அவனுக்கு உபகாரமாகக் கொடுத்தேன். “இவைகளை நான் பணமின்றிப் பெற்றுக் கொள்ளமாட்டேன்; உனக்குப் பிரேசில் நாட்டில் பணம் தேவையாயிருக்கும்,” எனக் கூறி, அவன் எனக்குப் பணம் கொடுத்தான். அவன் சூரியை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை செய்தான். நான் சில நாட்களில் பிரேசில் நாட்டை அடைந்தேன்.நான் அங்கு நான்கு ஆண்டுகள் பயிரிடுபவனாய் இருந்து செல்வனானேன். 3. மரக்கலம் உடைந்து போனது அப்பொழுது வணிகர் சிலர் என்னைச் சந்தித்தனர். அவர்கள் என்னை ஆப்பிரிக்காக் கரைக்குச் சென்று அங்கு நீகிரோவர் விரும்பும் மணிகள், கத்திகள், கத்திரிக்கோல்கள், கோடரிகள், விளையாட்டுப் பொருட்கள், கண்ணாடித் துண்டுகள் முதலியவைகளைக் கொடுத்துப் பொன்தூள், தந்தம் முதலியவைகளை வாங்கி வாணிகம் செய்யும்படிச் சொன்னார்கள். ஆகவே, ஒரு கப்பலை அமர்த்திக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். பன்னிரண்டு நாட்கள் சிறிதும் குழப்பமின்றி மரக்கலம் சென்றது. பின்பு சடுதியில் புயற்காற்றுக் கிளம்பி எங்களை எங்கெங்கோ கொண்டு சென்றது. நாங்கள் உதவியற்றவர்களாய்க் கடலில் மிதந்து கொண்டிருந்தோம். மரக்கலத்துள் நீர் வரத் தொடங்கினதும் நாங்கள் உயிர் பிழைப்பதில் நம்பிக்கையை இழந்தோம். விரைவில் மரக்கலம் மணல் மேட்டில் ஏறுண்டது. கடற்றிரை எங்களுக்கு மேலாய்ப் புரண்டது. நாங்கள் ஒரு சிறிய படகைக் கீழே இறக்கினோம். உடனே ஒரு பெரிய திரை எங்களைக் கடலுக்குள் இழுத்துக் கொண்டு போய்விட்டது. என் நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்குத் தெரியாது. பெரிய அலை ஒன்று என்னைக் கரைக்கு அடித்துக் கொண்டுபோய் விட்டது. கடைசியில் நான் கரையை அடைந்தேன். என் உயிரைப் புதுமையாகக் காப்பாற்றினதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். என் நண்பர்களைக் காணலாம் என்னும் நோக்கத்துடன் நான் இங்குமங்கும் நடந்து சென்றுப் பார்த்தேன். அவர்களின் அடையாளம் ஒன்றும் காணப்படவில்லை; மூன்று தொப்பிகளும் இரண்டு சப்பாத்துகளும் மாத்திரம் காணப்பட்டன. நான் ஒருவன் மாத்திரம் தப்பிப் பிழைத்தேன். நான் நன்றாக நனைந்து போயிருந்தேன். எனக்கு உண்பதற்கு உணவும் குடிப்பதற்கு நீரும் இல்லை. அங்குக் காட்டு விலங்குகள் உறைய லாம். அவைகளை வேட்டையாடுவதற்கு என்னிடம் ஆயுதங்கள் எவையு மில்லை. மாலை நேரம் வந்தது. நான் எவ்விடத்தில் பத்திரமாகத் தங்க முடியும்? ஒரு தழைத்த மரம் என் கண்ணுக்குத் தெரிந்தது. அம்மரத்திலேறி இருந்து இராப்பொழுதைக் கழிக்கலாம் என நினைத்தேன். முதலில் நான் ஒரு நீரோட்டத்தைக் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் நீரைக் குடித்தேன்; பின்பு மரத்தில் ஏறி விழாதபடி ஒரு நல்ல இடத்தில் இருந்து விரைவில் தூங்கி விட்டேன். நான் விழித்த போது பட்டப்பகலாயிருந்தது. எனது களை தீர்ந்து போயிற்று. புயல் ஓய்ந்து விட்டது. கடல் அமைதியாயிருந்தது. கடல் அலைகள் மரக்கலத்தைத் தரைக்குக் கிட்டக் கொண்டுவந்து விட்டிருந்தன. அது பாறைகளின் மேல் நிமிர்ந்து நிற்பது போலக் காணப்பட்டது. நான் அங்குச் செல்ல விரும்பினேன். கப்பல் தட்டுகளில் உணவும் துணியும் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். கடல் வற்றும் நேரத்தில் கப்பலிலிருந்து கால் மைல் தொலைவுக்கு நான் நடந்து போகக் கூடியதாய் இருந்தது. பின்பு எனது மேற் சட்டையையும் சப்பாத்தையும் கழற்றி விட்டு நீரில் நீந்திச் சென்றேன். ஒரு சிறிய கயிறு மரக்கலத்தின் பக்கத்தே மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பிடித்துக் கொண்டு மரக்கலத்தில் ஏறினேன். தட்டில் அதிக தண்ணீர் நின்றது; உணவு உலர்ந்து போயிருந்தது; அதிக பசியாயிருந்தமையால், நான் அதிகம் உண்டேன். அங்குள்ள பொருள்கள் சிலவற்றைக் கரைக்குக் கொண்டு செல்வதற்கு எனக்கு ஒரு படகு வேண்டியிருந்தது. படகு வேண்டுமென்று விரும்பிக் கொண்டு சோம்பியிருப்பதால் பயனில்லை. என்னால் படகு செய்ய முடியாது; எனக்குக் கட்டு மரமே போதுமானதாயிருந்தது. மரக்கலத்திலிருந்த மரப்பலகையையும் பாய்மரத் துண்டையும் கொண்டு ஒரு கட்டுமரத்தைக் கட்ட நினைத்தேன். நான் அவைகளில் கயிற்றைக் கட்டிக் கீழே விட்டேன். பின்பு நான் கீழே இறங்கி அவைகளைச் சேர்த்துக் கட்டினேன். பின்பு நான் கப்பற்காரருடைய மூன்று பெரிய மரப்பெட்டிகளைக் கட்டுமரத்தின் மீது இறக்கி வைத்தேன்; அவைகளுள் அரிசி, உரொட்டி, தயிர்க்கட்டி, இறைச்சி, துணிகள், துப்பாக்கிகள், வெடிமருந்து முதலியவை களை வைத்தேன். அங்கிருந்த ஒரு நாயையும் இரண்டு பூனைகளையும் எடுத்துப் பெட்டியில் விட்டேன். கட்டுமரத்தைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வருவது இலகுவன்று. அதிட்டவசமாகக் கடல் அமைதியா யிருந்தது. அலைகள் கரையை நோக்கி அடித்துக் கொண்டிருந்தன. நான் பழைய துடுப்பின் துணையைக் கொண்டு கரையை அடைந்தேன். எனது அடுத்த வேலை பொருள்களைப் பத்திரமாக வைப்பதற்கேற்ற இடத்தைக் கண்டுபிடிப்பது. சமீபத்தில் ஒரு செங்குத்தான குன்று இருந்தது. நான் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அக்குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றேன். அங்கு நின்று பார்த்த போது நான் ஒரு தீவில் நிற்பதை அறிந்தேன். அங்கு வீடோ ஆளோ காணப்படவில்லை, நான் கொண்டு வந்த பொருள் களை இறக்கி வைப்பதில் நான் அன்றைய பொழுதைச் செலவிட்டேன். காட்டு விலங்குகள் என்னைக் கொன்று தின்றுவிடும் என்னும் பயத்தினால் நான் வெளியே நிலத்தில் படுத்து உறங்கப் பயந்தேன். ஆகவே, நான் பெட்டிகளைச் சுற்றி அடுக்கி வைத்துப் பலகைகளைக் கொண்டும் பாய்ச் சீலைகளைக் கொண்டும் ஒரு குடிசையைக் கட்டினேன். நான் மிகவும் களைப்பு அடைந்தமையால் படுத்து நித்திரை கொண்டேன். அடுத்த நாள் மறுபடியும் நான் மரக்கலம் உடைந்த இடத்துக்கு நீந்திச் சென்று, இன்னொரு கட்டுமரத்தைச் செய்தேன். அதில் ஆணிகள், கோடரிகள், ஆடைகள், படுக்கை முதலானவைகளை வைத்து அவைகளைக் கரைக்குக் கொண்டு வந்தேன். நான் வெளியே சென்றபொழுது எனது உணவுப் பொருளை எவையேனும் உண்டுவிடுமோ எனப் பயந்தேன்; ஆனால், நான் விட்டுச் சென்றபடியே அவை எல்லாம் இருந்தன. காட்டுப் பூனை ஒன்று பெட்டிக்கு மேலே உட்கார்ந்திருந்தது. நான் கிட்டப் போனதும் அது ஓடித் தூரச் சென்று என்னைத் திரும்பிப் பார்த்தது. நான் எனது துப்பாக்கியை அதற்கு நேரே நீட்டினேன்; ஆனால், அது பயப்படவில்லை. நான் அதற்கு முன்னால் உரொட்டித் துண்டை எறிந்தேன். அது அதைத் தின்றது; பின்பு அது போய்விட்டது. நான் இப்பொழுது மிகவும் பாதுகாப்பான கூடாரத்தைச் செய்தேன்; நான் படுக்கையில் ஒன்றை நிலத்தில் விரித்துக் கொண்டு படுத்துத் தூங்கினேன். பதினோரு நாட்களாகக் கடல் பெருக்கின்றி வற்றியிருந்தது. நான் மரக்கலத்தில் ஏறி இன்னும் வேண்டிய பலவற்றைக் கொண்டு வந்தேன். ஒரு முறை எனது கட்டுமரம் புரண்டு போயிற்று. ஆனால், பெரிய தீமை ஒன்றும் நேரவில்லை. பின்பு காற்று அதிகம் அடித்தது. மரக்கலத்தைப் பார்க்க முடிய வில்லை. திரைகள் அதைச் சுக்கல் சுக்கலாக உடைத்துவிட்டன. 4. குடியில்லாத் தீவு காட்டு மனிதர் அல்லது காட்டு விலங்குகள் எனது கூடாரத்துள் நுழையக் கூடும் என நினைந்து நான் எப்பொழுதும் பயந்து கொண்டிருந் தேன். எனது கூடாரம் கடலுக்கு அருகில் இருந்தமையால், நிலம் ஈரமாய் இருந்தது. ஆகவே, நான் கடலுக்குப் பக்கத்தில் நல்ல தண்ணீருள்ள ஓர் இடத்தைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மலைக்குப் பக்கத்தில் மட்ட மான நிலம் காணப்பட்டது. அதன் பின்புறமிருந்த பாறை சிறிது குடை வுள்ளதாய் இருந்தது. அங்கு நான் எனது கூடாரத்தை அடித்தேன். மலைக்கு முன் இரண்டு வரிசையாக முளைகளை அடித்தேன். அம்முளைகளை எல்லாம் சுற்றித் தந்திக் கம்பியை வரிந்து கட்டினேன். இக்கம்பியை நான் முன்பு மரக்கலத்தினின்று கொண்டு வந்திருந்தேன். இவ்வேலையைச் செய்து முடிக்க எனக்குப் பல நாட்களாயின. வேலியால் சூழப்பட்ட இடத்திற்குச் செல்ல வாயில் இல்லை. நான் ஏணியைச் சார்த்தி வைத்து, அதன் வழியாக வேலியின் உச்சியை அடைந்து, ஏணியை எடுத்து உள்ளே வைத்தேன். ஏணி வெளியேயிருந்தால் பகைவர் எவராவது எனது கூடாரத்துள் வந்துவிடுவர் என அஞ்சினேன். நான் என் பொருள்களை எல்லாம் வேலிக்கு உள்ளே கொண்டு சென்று வைத்து மரக்கலத்தினின்றும் கொண்டு வந்த பாய்த்துணியால் ஒரு பெரிய கூடாரத்தை அமைத்தேன். பிறகு பின்புறத்திலிருந்த பாறையில் ஒரு குகையைக் குடைந்து கல்லையும் மண்ணையும் வேலிக்குள் உள்ள தரையில் பரப்பினேன். இதனால் தரை உயரமாயிற்று. குகை எனது வீட்டுக்கு ஓர் அறை போன்று இருந்தது. ஒரு நாள் புயற்காற்று வீசி இடியும் மின்னலும் உண்டாயின. இதனால் வெடி மருந்து தீப்பிடித்து வெடித்து விடுமோ எனப் பயந்தேன். புயல் தனிந்த பின்பு நான் பைகளையும் பெட்டிகளையும் செய்தேன். அவை களில் வெடிமருந்தைக் கொட்டி நிரப்பி, அவைகளைப் பாறையிலிருந்த வெடிப்புகளில் வைத்து மறைத்தேன். நான் ஒவ்வொரு நாளும் எனது நாயுடன் வெளியே சென்றேன். அங்கு ஆடுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். அவை மிகவும் விரைவாய் ஓடினமையால், நான் அவைகளைச் சுட முடியவில்லை. எத்தனை நாட்கள் கழிந்தன என்பதை அறியும் பொருட்டு நான் கடற்கரையில் ஒரு கம்பத்தை நாட்டி, அதில் வெட்டுகள் இட்டு, நாட்களைக் குறிப்பிட்டு வந்தேன். நான் அத் தீவின் கரையை 1659ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முப்பதாம் நாள் அடைந்தேன். நான் ஒவ்வொரு நாளை யும் குறிக்க ஒவ்வொரு குறுகிய வெட்டையும், ஞாயிற்றுக் கிழமையைக் குறிக்க நீண்ட வெட்டையும் வெட்டி வந்தேன். நாய் எனக்கு நம்பிக்கையுள்ள நண்பனாயிருந்தது. நாய் என்னோடு பேசாவிடினும் அது நான் சொல்லும் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டது. அது தினமும் பறவையையோ, வேறு ஏதாவது விலங்கையோ பிடித்துக்கொண்டு வந்தது. வேலி உறுதியுள்ளதாயிருந்த போதிலும், நான் மிகவும் பத்திரமா யிருக்கிறேனென்று நம்பவில்லை. நான் வேலியின்மேல் சுற்றிலும் புல்லைப் பரப்பினேன். அது வேலியைச் சுற்றித் தரையிருப்பது போன்ற தோற்றம் அளித்தது. இரண்டு ஆண்டுகள் கழிவதன் முன் நான் மரத்தினால் ஒரு கூரை செய்து, அதனைத் தழைகளால் வேய்ந்தேன். தீவில் வெயில் அதிக சூடாயிருந்தது. ஆகவே, நான் காலையில் வேலை செய்தேன்; மத்தியானத்தில் படுத்திருந்தேன்; மறுபடியும் பின்நேரத்தில் வேலை செய்தேன். ஒவ்வொரு நாட்காலையிலும் நான் எனது நாயுடனும் துப்பாக்கியுடனும் வெளியே சென்றேன். எனது தேவைக்குரிய பல பொருள்களை நானே செய்து கொண் டேன். முதலில் ஒரு மேசையையும் பின்பு ஒரு நாற்காலியையும் செய்தேன். இப்பொழுது நான் உணவை மேசையில் வைத்து நாற்காலியிலிருந்து உண்டேன். பலகைகள் ஆய்விட்டன; எனது வேலை கடுமையாயிருந்தது. நான் மரங்களை வெட்டிக் கோடரியினால் சமஞ்செய்ய வேண்டியிருந்தது. ஒரு மரத்திலிருந்து ஒரு பலகை மாத்திரமே செய்ய முடிந்தது. இவ்வாறு செய்வதற்கு அதிக காலம் தேவையாய் இருந்தது. 5. என் வேலைகள் நான் எனது குகையைப் பெரிதாக்க நினைத்தேன். அவ் வாறு செய்வதற்கு எனக்கு கட்டபாரை, பிக்காசு, கூடை முதலி யவை தேவையாயின. வயிரமான மரம் ஒன்றைத் தறித்து அதி லிருந்து கட்டபாரை யைச் செய்துகொண் டேன். நான் மூன்று வாரம் உறுதியாக வேலை செய்து, குகையைப் பெரி தாக்கினேன். ஒருமுறை குகையின் கூரையிலிருந்து மண் விழுந்தது. ஆகவே, நான் மரங்களை மேலே வைத்து அவைகளைத் தாங்க வயிரமான கழிகளைத் தூண்களாக நாட்டினேன். அவை எனது வீட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்தன. அத் தூண்களில் நான் பல பொருள்களைத் தொங்கவிட்டேன். பின்பு நான் என்னுடைய குகையின் பக்கங்களில் சில தட்டுகளை அமைத்து, அவைகளில் என் ஆயுதங்களை வைத்தேன். சுவரில் மரமுளை களை இறுக்கி, அவைகளில் துப்பாக்கிகளையும் வேறு பொருள்களையும் தொங்கவிட்டேன். வேலை முடிந்ததும் தினமும் நான் நாற்காலியிலிருந்து என் தினசரிக் குறிப்புகளை எழுதுவேன். ஒருமுறை நான் துப்பாக்கியால் ஆட்டுக்குட்டி ஒன்றை நோக்கிச் சுட்டபோது அதன் கால் முறிந்து போயிற்று. நான் அதனைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து, அதற்குத் தீனி கொடுத்தேன். நாள் செல்லச் செல்ல அது நன்றாகப் பழக்கமடைந்து, என் குகையின் அருகில் நின்று புல் மேய்ந்தது. மலையிலுள்ள வெடிப்புகளில் பறவைகளின் கூடுகள் இருப்பதை நான் பல முறைக் கண்டேன். சில சமயங்களில் நான் பறவைக் குஞ்சுகளைப் பிடித்து, அவைகளை உணவின் பொருட்டுப் பயன்படுத்தினேன். என்னிடம் விளக்கு இல்லாமையால் பொழுது போனதும் நான் படுத்துக் கொள்வேன். அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; ஆகவே, நான் ஒரு விளக்கைச் செய்யத் தொடங்கினேன். நான் களிமண்ணில் ஒரு சிறு அகல் செய்து அதை வெயிலில் காய வைத்தேன். அதில் நான் ஆட்டுக் கொழுப்பை எண்ணெயாக இட்டுக் கயிற்றுத் துண்டைத் திரியாகப் பயன் படுத்தினேன். விளக்கு நல்ல ஒளி தரவில்லை. விளக்கில்லாமல் இருப்பதைப் பார்க்க இது நன்றாயிருந்தது. ஒரு நாள் நான் வேலை செய்துகொண்டிருக்கும் போது கப்பலி லிருந்து கொண்டு வந்த ஒரு கோணி எனது கண்ணிற்பட்டது. அக் கோணி யில் முன்பு தானியமிடப்பட்டிருந்தது. அதில் அப்பொழுது உமியைத் தவிர வேறொன்றையும் நான் காணவில்லை. நான் கோணியை உதறி உமியை எனது குகைக்கு அருகில் கொட்டிவிட்டு, அதைப்பற்றி மறந்து போனேன். சில நாட்களுக்குப் பின் நான் அவ்விடத்தைப் பார்த்த போது அங்குச் சில முளைகள் கிளம்பியிருந்தன. அவை வளர்ந்த பின் கதிர்கள் விட்டன. அவை வாற் கோதுமை என்பதை அறிந்து நான் மிகவும் வியப் படைந்தேன். அவைகளுக்கருகில் நெற்கதிர்களும் காணப்பட்டன. நான் உதறிக் கொட்டியவைகளுள் சில வாற்கோதுமையும் நெல்லும் இருந்தன வென்பதும் அவைகளிலிருந்து அவை முளைத்து வளர்ந்தனவென்பதும் அப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அத்தானியங்கள் விளைந்ததும் மறுபடியும் விதைக்கும் பொருட்டு அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்தேன். 6. பூமி நடுக்கம் அப்பொழுது பயம் விளைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று. நான் எனது குகையின் வாயிலில் நின்றேன். சடுதியாக முகட்டிலிருந்தும் மலைச்சரிவிலிருந்தும் மண் கீழே விழுந்தது. குகைக்கு முட்டுக் கொடுத் திருந்த இரண்டு கழிகளும் பிளந்து போயின. நான் பயந்து ஏணியின் மூலம் சுவரின் மேல் ஏறி நின்றேன்; அப்படிச் செய்திராவிட்டால் மண்ணால் மூடப்பட்டிருப்பேன். நான் கீழே இறங்கி நின்ற போது நிலம் நடுங்கிற்று. பூமி நடுக்கம் உண்டாயிருக்கின்ற தென்பதை நான் அறிந்தேன். சிறிது தூரத்தில் பெரிய பாறை ஒன்று உரத்த சத்தத்தோடு நிலத்தில் உருண்டு விழுந்தது; கடல் பயங்கரமாக அலைகளை மோதிக் கொண்டிருந்தது. நான் பயத்தினால் இறந்தவன் போலானேன். சிறிது நேரத்தில் வான மிருண்டது; புயல் அடித்தது; கடல் அலைகள் நுரைமயமாய்த் தோன்றின; மரங்கள் பெயர்ந்து விழுந்தன. இவ்வாறு மூன்று மணி நேரம் நிகழ்ந்த பின் பெருமழை பெய்தது. அப்பொழுது நான் குகைக்குள் சென்று ஒதுங்கினேன்; குகை இடிந்து விழுந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். மலைச்சரிவு அல்லாத இன்னோர் இடத்தில் வேறொரு குடிசையைக் கட்டலாம் என்று எண்ணினேன். நான் இரண்டு நாட்களாக எனது கோடரியைக் கூராக்கிக் கொண் டிருந்தேன். மூன்றாவது நாள் நான் கடலைப் பார்த்த போது முன் உடைந்து போன மரக்கலம் கரைக்கு அருகில் மணலில் ஏறுண்டு கிடந்தது. நீர் வற்றிய காலத்தில் நான் நடந்து சென்று அதனை அடையக் கூடியதாயிருந் தது. நான் பூமி நடுக்கத்தைப் பற்றியும் வேறு குடிசை கட்டுவதைப் பற்றியும் மறந்து போனேன். நான் அப்பொழுது எனது வாள், மரவயிரக் கட்டபாரை என்பவைகளின் உதவியைக் கொண்டு மரக்கலத்தை உடைத்து, அதன் துண்டுகளைக் கரைக்குக் கொண்டு வர முயன்று கொண்டிருந்தேன். இவ்வாறு செய்தபின் என்னிடம் அதிக இரும்புகளும் பாரைகளும் இருந்தன. ஒரு நாள் நான் ஒரு கடல் ஆமையைக் கண்டேன். நான் முதன் முதலில் கண்ட கடலாமை அதுவே. அத் தீவின் மறு பக்கத்தில் மிகப்பல ஆமைகள் வாழ்வதைப் பின்பு அறிந்தேன். நான் அதன் இறைச்சியைச் சமைத்து உண்டேன். அதன் இறைச்சி மிகவும் சுவையுடையதாயிருந்தது. பின்பு எனது துன்பமான காலம் வந்தது. நான் நோயடைந்தேன். எனக்குக் குளிர் உண்டாகித் தலை வலித்துக் காய்ச்சல் வந்த போது நான் மிகவும் பலவீனமடைந்திருந்தேன். நான் தனியே இருந்தேன்; அடிக்கடி கனவுகள் கண்டு பயந்தேன். ஒரு வாரத்திற்குப் பின் காய்ச்சல் விட்டது. நான் மறுபடி யும் பலமடைந்தேன். பெட்டி ஒன்றில் பைபிள் புத்தகம் ஒன்று இருந்தது. நான் அதனை எடுத்துப் படித்துக் கடவுளை எனக்கு உதவி அளிக்கும்படி வேண்டிக் கொண்டேன். 7. தீவு முழுவதையுங் கண்டறிதல் நான் அத்தீவில் பத்து மாதகாலம் கழித்தபின் நெடுந்தூரம் நடந்து சென்று காணாத இடங்களைக் காணலாம் என நினைத்தேன். நான் ஜூலை மாதம் முதல் நாளில் புறப்பட்டேன். நான் முதலில்என் கட்டுமரத்தை கொண்டுவந்த கரைப் பக்கமாகச் சென்றேன். கரையில் இன்பமயமான பசுந்தரை காணப்பட்டது. உயரமான இடங்களில் புகையிலைச் செடிகளும் கரும்பும் வளர்ந்திருந்தன். நான் இன்னும் தொலைவிற்சென்றேன். அங்கு மரங்கள் நெருங்கிய அழகிய பள்ளத்தாக்கு ஒன்று தென்பட்டது. அங்கு கொடிமுந்திரிகள் மரக் கொம்புகளில் படர்ந்து காய்த்துப் பழுத்திருந்தன. அவைகளைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன் அப் பழங்களைப் பறித்து வெயிலில் காய வைத்து வற்றலாக்கிப் பயன்படுத்தப் பின்பு அறிந்துகொண்டேன். நான் எனது உறைவிடத்தினின்றும் அதிக தூரம் வந்துவிட்டமை யால். மீண்டும் அங்கு திரும்பி செல்ல முடியவில்லை. நான் இரவில் மரத்தில் ஏறி இருந்து. நித்திரை செய்தேன். அடுத்த நாள் காலையில் நான் இன்னும் சிறிது தூரம் சென்றேன் அவ் விடங்கள் மரங்கள் நட்டு உண்டாக்கி தோட் டங்கள் போலப் பச்சைப்பசேலென்றிருந்தன எலுமிச்சை கிச்சிலி முதலிய பழ மரங்களும் செடிகளும் பள்ளத்தாக்குகளில் வளர்ந்திருந்தன. நான் கொடி முந்திரிப் பழங்களையும் எலுமிச்சம் பழங்களையும் பறித்து நிலத்தில் கும்பலாகக் குவித்துப் பின் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன். அடுத்த நாள் நான் எலுமிச்சைக் செடிகளுள்ள இடத்துக்குச் சென்றேன் முன்பு நான் பறித்து வைத்துச் சென்ற பழங்கள் கால்களால் மிதிக் கப்பட்டுக் கிடந்தன சிலவற்றை எவையோ பிராணிகள் உண்டுவிட்டன அவை யாவை என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இம் முறை நான் கொடிமுந்திரிக் குலைகளைப் பறித்துக் காயும்படி மரங்களில் கட்டித் தொங்க விட்டுவிட்டு என்னால் எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய பழங்களை வீட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் அவ்விடத்துக்குப் பல முறை சென்று திரும்பினேன்; எனது கூடாரத்தை அவ்விடத்துக்கு மாற்றலாமோ என்று சிந்தித்தேன். அவ்விடத் துக்குச் சென்றால் நான் கடற்கரையைப் பார்க்க முடியாதென்பதும், கடற் கரையில் எப்போதாவது மரக்கலம் ஒன்று காணப்பட்டால் அது என்னை அழைத்துச் செல்லும் என்பதும் எனது நம்பிக்கை; அவை வீணாகி விடுமென்றும் நினைத்தேன். நான் அவ்விடத்தில் கோடைகாலத்தில் வசிப்பதற்கேற்ற ஒரு வீட்டைக் கட்டலாமென்று நினைத்தேன். நான் வட்டமான இரட்டை வேலியை அமைத்து, இடைவெளிகளைச் சிறிய மிலாறுகளை வைத்து மறைத்தேன். ஆகஸ்டு முதலாம் நாள் நான் கட்டித்தொங்கவிட்ட கொடி முந்திரிப் பழ வற்றல்களை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்தேன். அடுத்த நாள் மழை பெய்ய ஆரம்பித்தது. இரண்டு மாதம் வரையில் மழை அடிக்கடி பெய்தது. நான் வைத்திருந்த இறைச்சி செலவாகிவிட்டது. நான் ஓர் ஆட்டைக் கொன்றேன். இன்னொருநாள் ஒரு கடலாமையைப் பிடித்தேன். அவற்றின் இறைச்சியை உண்டு நான் மழைகாலம் முழுவதையும் கழித்தேன். அப்பொழுது என் பூனைகளில் ஒன்று காணாமற்போய்விட்டது. அது இறந்திருக்கலாமென்று நான் நினைத்தேன். ஆகஸ்டு மாத முடிவில் அது மூன்று குட்டிகளோடு வந்தது. நான் அவைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தேன். பூனை பின்னும் குட்டிகள் போட்டபோது பூனைக் குடும்பம் பெரிதாகிவிட்டது. அப்பொழுது நான் அவைகளை எனது உறைவிடத்தி னின்றும் வெளியே துரத்திவிட நேர்ந்தது. 8. பயிர் இடுதலும் இடங்களைக் கண்டுபிடித்தலும் என் தீவில் ஆண்டில் இரண்டு முறை மழை காலமும், இரண்டு முறை கோடை காலமும் உண்டு என்பதை நான் அறிந்தேன். நான் வாற்கோதுமையையும் நெல்லையும் பத்திரப்படுத்தி வைத் திருந்தேன். இரண்டு மாதகாலம் மழை பெய்த பின்பு நான் சில தானியங் களை விதைத்தேன். எனது கட்டபாரையால் நிலத்தை எவ்வளவு கிண்ட முடியுமோ, அவ்வளவுக்குக் கிண்டிய பின்பே நான் அவ்வாறு செய்தேன். நான் ஒவ்வொரு தானிய வகையிலும் ஒவ்வொரு பிடியளவு வைத்திருந் தேன். இது நன்மையாகவே முடிந்தது, நான் பருவமல்லாத காலத்தில் விதைகளை விதைத்தேன். நான்கு மாதம் மழை பெய்யாதபடியால் அடுத்த மழைகாலம் வருமுன் அவை முளைக்கவில்லை. மழைகாலம் வருவதன் முன் விதைகளை விதைக்க வேண்டும் என்னும் அனுபவம் அப்பொழுது எனக்கு உண்டாயிற்று. மழைகாலத்துக்குப் போதுமான உணவை நான் வழக்கமாகச் சேகரித்து வைத்தேன். எனக்குச் சில கூடைகள் வேண்டியிருந் தன. நான் மிலாறுகளை எடுத்துக் கூடைகளாக முடைந்தேன். எனது தீவில் முன் காணாத பகுதி களைக் காணவேண்டு மென நான் விரும்பி னேன். நான் துப்பாக்கி ஒன்றையும் கோடரியை யும் எடுத்துக் கொண்டு, எனது நாயுடன் அடுத்த கடற்கரைப் பக்கஞ் சென்றேன். அங் கிருந்து நான் தொலைவில் தரையைப் பார்த்தேன். அது அமெரிக்காகவோ அல்லது மனித இறைச்சி உண்ணும் மக்கள் வாழும் தீவுக் கூட்டங் களாகவோ இருக்கலாமென நான் நினைத்தேன். அங்குள்ள காடுகள், பூக்கள், பசுந்தரைகள் மிக அழகாயிருந்தன. கடற்கரையில் ஆமைகளும் பெங்குவின் என்னும் பறக்க மாட்டாத பறவைகளும் காணப்பட்டன; முயல், நரி, ஆடு முதலிய விலங்குகள் காடுகளில் திரிந்தன. மரங்களில் கிளிகள் உட்கார்ந்திருந்தன. நான் கிளிக்குஞ்சு ஒன்றைப் பிடித்துச் சென்று அதைப் பேசப் பழக்கினேன். நான் இன்னொரு வழியாக வீட்டுக்குச் செல்ல முயன்றேன்; நான் வழி தப்பிப் பல நாட்கள் அலைந்து திரிந்தேன். கடைசியாக நான் எனது கோடைகால வீட்டுக்கருகில் வந்து, அங்கிருந்து குகையை அடைந்தேன். வாற்கோதுமையும் நெல்லும் நன்றாய் வளர்ந்திருந்தன. காட்டு ஆடு களும் முயல்களும் பக்கத்திலிருந்த புல்லை மேய்ந்திருந்ததைப் பார்த் தேன். அவை எனது தானியப் பயிர்களையும் அழித்துவிடக் கூடுமெனப் பயந்தேன். அதைத் தடுப்பதற்காகப் பயிரைச் சுற்றி வேலி இட்டேன். இவ்வாறு செய்வதற்கு மூன்று வாரங்களாயின. அக் காலத்தில் நான் சில ஆடு களைக் கொன்றேன். நாயைத் தடி ஒன்றில் கட்டி இரவில் காவல் காக்கும்படி விட்டிருந்தேன். பறவைகள் தானியக் கதிர்களைத் தின்றன. நான் பல பறவைகளைச் சுட்டு வீழ்த்தினேன். மற்றப் பறவைகளுக்கு அச்சம் உண்டாக்கி எச்சரிப் பதற்காக அவைகளில் சிலவற்றை நீண்ட தடி ஒன்றில் கட்டிப் பக்கத்தில் தொங்கவிட்டிருந்தேன். தானியம் விளைந்தது. நான் வாள் ஒன்றினுதவியால் அறுவடை செய்தேன். அடுத்த பருவகாலம் வருவதன் முன் விதைக்கும் நிலத்தைச் சுற்றி வேலி இட்டுக் கூரிய தடியால் நிலத்தைக் கிண்டினேன்; மறுபடியும் விதைகளை விதைத்தேன். 9. இருப்பிடத்தைச் சீர்படுத்துதல் அடுத்த மழைகாலத்தில் நான் களிமண்ணால் சாடிகள் செய்தேன். முதன்முதல் நான் செய்த அழகில்லாத சாடியைப் பார்த்தால் நீங்கள் நகைப்பீர்கள். மிகவும் பிரயாசைப்பட்டு நான் இரண்டு சாடிகளைச் செய்து வெயிலிற் காய வைத்தேன். அவைகளில் நான் தானியங்களைப் போட்டு வைத்தேன். சமைப்பதற்கோ, தண்ணீர் எடுப்பதற்கோ, அவை பயனற்றவை. இறைச்சியை வைத்துச் சமைக்கக் கூடிய ஒரு பானையைச் சில நாட்களில் செய்யலாமென நினைத்தேன். அதை செய்யும் விதத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன். எனது களிமண் தட்டின் ஒரு துண்டு அடுப்புச் சாம்பலில் கிடந்தது. அது நெருப்பில் வெந்து சிவப்பாய் இருந்தது. பின்பு நான் சாடிகளைச் செய்து அவைகளைச் சுற்றி நெருப்பு மூட்டி எரித்தேன். அவை வெந்து வைரம் அடைந்தன. உரொட்டி செய்யப் போதுமான தானியம் என்னிடம் இருந்தது. நான் மரத்தைக் குடைந்து ஒரு சிறு உரல் செய்தேன். அதில் தானியத்தை இட்டுச் சிறு உலக்கையால் அதனை இடித்து மாவாக்கினேன். அதனை உரொட்டி யாகச் சுட்டேன். மூன்று ஆண்டுகள் இவ்வாறு அத் தீவில் கழிந்தன. அடுத்த கரையில் தெரிந்த தரையைப்பற்றி அறிந்துகொள்ள எனக்கு அதிக பிரியம் இருந்தது. ஆனால், என்னிடத்தில் தோணி இல்லை. மரக்கலத்திலிருந்த தோணியைப் பார்த்தேன். அது அலையால் கரைக்குக் கொண்டு வரப்பட்டுக் கீழ்மேலாய்க் கிடந்தது. நான் அதை நிமிர்த்த மிகவும் முயன்றேன். ஓர் அங்குலங்கூட அதை என்னால் நிமிர்த்த முடியவில்லை. நானே ஒரு தோணியைச் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். நான் காட்டுக்குச் சென்று பெரிய மரம் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அதைத் தறித்து வீழ்த்துவதற்கு மூன்று வாரம் சென்றது. அதன் கொம்புகளைத் தறிப்பதற்கு இரண்டு வாரம் கழிந்தன. அதைக் குடைந்து தோணியாக்குவதற்கு நான்கு மாதங்கள் வேலை செய்தேன். அது இருபத்தாறு பேரைக் கொள்ளக் கூடிய நல்ல தோணி. நான் அதைக் கடலுக்குக் கொண்டு போக வேண்டியிருந்தது. அது நான் அசைக்க முடியாத அவ்வளவு பாரமுடையதாயிருந்தது. அது தண்ணீரிலிருந்து இரு நூறு முழத் தூரத்தில் கிடந்தது. நான் எல்லா வகையான உபாயங்களையும் ஆலோசித்தேன். ஒன்றும் புலப்படவில்லை. தோணிக்கு அருகில் தண்ணீரைக் கொண்டுவர வாய்க்கால் ஒன்றை வெட்டவும் தொடங்கினேன். தோணி செல்லக்கூடிய அகலமும் ஆழமுமுடைய வாய்க்காலை வெட்டப் பத்து ஆண்டுகளாகுமனெத் தோன்றிற்று. ஆகவே, நான் அவ் வேலையைக் கைவிட்டுவிட்டேன். என்னிடத்தில் அதிக உணவும் இருப்பதற்கு வீடும் இருந்தன. அதிக காலம் கடந்தமையால் மரக்கலத்திலிருந்து கொண்டு வந்த பல பொருள்கள் மட்கிப் போயின. எனது மையும் ஆய்விட்டது; ஆடைகளும் கந்தை யாயின. நான் கொன்ற ஆடுகளின் தோலிலிருந்து புதிய உடைகளைச் செய்து கொண்டேன். ஆட்டுத் தோலினால் ஒரு குடையும் செய்தேன். விரித்துச் சுருக்கக் கூடியதாக ஒரு குடை செய்து கொள்வதன் முன் யான் பலவற்றைப் பழுதாக்கிவிட்டேன். இவ்வாறு நான் வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்புத் தேடிக்கொண்டேன். 10. எனது கடற்பயணம் நான் இன்னொரு தோணி செய்ய நினைத்தேன். நான் கடற்கரைக்கு மிகக் கிட்ட நின்ற ஒரு மரத்தைத் தறித்து, இன்னொரு தோணி செய்தேன். தோணி செய்து முடிந்ததும் கடலிலிருந்து தோணி வரைக்கும் ஒரு வெட்டு வாய்க்கால் செய்தேன். இவ்வாறு செய்வதற்கு இரண்டு ஆண்டுகளாயின. நான் பாய் மரத்தையும் பாய்ச்சீலையையும் அமைத்தேன். எனக்கு நிழல் தரும்படி எனது குடையை மேலே கட்டினேன். இத் தோணியில் நான் பல முறை கடலிற் சென்றேன்; ஆனால், தொலைவிற் செல்ல மனம் துணிய வில்லை. நான் எனது தீவைச் சுற்றிப் பயணஞ் செய்ய விரும்பி, நவம்பர் மாதம் ஆறாம் நாள் புறப்பட்டேன். தொடக்கத்தில் யாதும் குழப்பம் உண்டாக வில்லை. கரைப்பகுதியில் பாறைகள் அதிகம் இருந்தமையால், நான் தரையிலிருந்து அதிக தூரம் சென்றேன். நான் ஓர் இடத்தில் தோணியைக் கட்டி விட்டுக் கரைக்குச் சென்றேன். அங்கு ஒரு மலையில் ஏறித் தீவின் காட்சிகளைப் பார்த்தேன். தீவின் பக்கத்தே அபாயத்துக்கு இடமான நீரோட்டங்கள் இருப்பதைக் கண்டேன். காற்று ஓய்ந்திருந்த போது மறுபடியும் கடலிற் செல்லத் துணிந்தேன். கரையி லிருந்து சிறிது தூரஞ்சென்றதும் எனது தோணி வேகமான நீரோட்டத்தில் அகப்பட்டுக் கொண்டது. நான் துடுப்பினால் வலிக்க முயன்றேன். ஆனால், நீரோட்டம் என்னைக் கரையிலிருந்து அதிக தூரம் கொண்டு சென்றது. சடுதியாகக் காற்று வீசிற்று, நான் எனது தோணிப்பாயை விரித்துக் கட்டினேன். இப்பொழுது இன்னொரு நீரோட்டம் என்னைக் கரைக்குக் கொண்டு செல்வதைக் கண்டு நான் மகிழ்ந்தேன். சில மணி நேரத்தில் எனது தோணி கரையை அடைந்தது. கரையை அடைந்ததும் நான் முழங்கால் படியிட்டு என்னைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்ததற்காகக் கடவுளைத் துதித்தேன். நான் மணற்சரிவில் இரவில் தூங்கி மறுநாட் காலையில் எழுந்தேன். நான் தோணியைக் கரையில் விட்டு விட்டு நடந்து வீட்டுக்குச் செல்லலாமென நினைத்தேன். வீடு அடைந்ததும் மிகவும் களைப்பாய் இருந்தது ; உடனே நான் படுத்து நித்திரை போயினேன். சடுதியாக, “ரொபின் கூட்! ரொபின் கூட்!” எனக் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டு நான் விழித்தெழுந்தேன். நான் கனாக் காணுகின்றேனென நினைத்தேன்; பயத்தினால் துடித்தெழுந்தேன். வேலியில் இருந்து அவ்வாறு சத்தமிட்ட கிளியைக் கண்டு நான் சிரித்தேன். கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதனைக் கூப்பிட்டேன். அது எனது கையில் வந்திருந்தது. 11. அமைதியான வாழ்க்கை துணிச்சலான வேலைக்குப் பின் நான் அமைதியாய் வாழ்ந்தேன். நான் களிமண்ணால் புகை பிடிக்கும் சுங்கான் ஒன்றைச் செய்தேன். அது பார்வைக்கு அழகில்லாததா யிருந்தபோதிலும், புகையை நன்றாக இழுக்கக் கூடியதாயிருந்தது. தீவில் புகையிலை வேண்டிய அளவு இருந்தது. அப்பொழுது வெடிமருந்து குறைந்து போயிற்று. இது எனது மனத் தில் குழப்பம் விளைத்தது. வெடிமருந்து முடிந்து போனால் நான் ஆடு களைச் சுட முடியாது. ஆகவே, நான் ஆடுகளைப் பிடித்து வளர்க்க நினைத் தேன். அவை மிகவும் மூர்க்கமுடையனவாயிருந்தன. அவைகளை எப்படிப் பிடிப்பதென்பது எனக்குத் தெரியவில்லை. அவை மேயும் இடத்தில் நான் பெரிய குழி ஒன்றைத் தோண்டினேன். குழிக்குமேல் கழிகளைப் பரப்பி, அவற்றின் மீது தானியங்களைப் பரப்பினேன். ஆடுகள் அவற்றைத் தின்ன முயன்றதும் குழியில் விழுந்தன. இவ்வாறு நான் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் ஓர் ஆட்டையும் பிடித்தேன். ஆடு மிகவும் மூர்க்கமாயிருந்தது. ஆகவே, நான் அதன் அருகில் போகப் பயந்தேன். நான் அதைத் தப்பி ஓடும்படி விட்டுவிட்டு, மூன்று குட்டிகளையும் பிடித்தேன். அவைகளைக் கயிற்றாற் கட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் அவை தின்னும்படி தானியத்தை வைத்தேன். நான் புல் நிலத்தைச் சுற்றி வேலியடைத்தேன். அதனூடாக ஒரு நீருற்று ஓடிக் கொண்டிருந்தது. இங்குமங்கும் நிழல் மரங்களும் நின்றன. அங்கு நான் ஆட்டுக் குட்டிகளை விட்டு வளர்த்தேன். சில ஆண்டுகளில் அவை ஐம்பது ஆடுகளளவில் பெருகின; நான் நாளடைவில் அவைகளிலிருந்து பால் கறக்கவும். பாலிலிருந்து தயிர்கட்டி செய்யவும், அதிலிருந்து வெண்ணெய் எடுக்கவும் அறிந்து கொண்டேன். நானும் எனது குடும்பமும் உணவு நேரத்தில் இருக்கும் வகையைப் பார்த்தால், நீங்கள் சிரிப்பீர்கள். நான் தீவின் அரசன் போன்றிருந்தேன். ‘பொல்’ என்னும் கிளி எனது தோளில் வந்திருக்கும். என்னோடு பேசக் கூடியது அது ஒன்றுதான். எனது நாய் கிழமாய்ப் போய்விட்டது. அது என் இடப்பக்கத்தில் குந்தியிருக்கும். இரண்டு பூனைகள் மேசையின் பக்கங்களில் இருக்கும். ஒவ்வொன்றும் அடிக்கடி நான் போடும் உணவை எதிர் பார்த்திருக்கும். நான், முன் விட்டிருந்த தோணியைப் பார்க்க வேண்டுமென்று நினைத் தேன். நான் கடற்கரை வழியாக நடந்து சென்றேன். நான் ஒரு கையில் குடை யையும், மற்றொரு கையில் துப்பாக்கியையும் வைத்திருந்தேன். நான் இரண்டு நாட்களின் பின் ஒரு புதிய காட்சியைக் கண்டேன். அது உடனே எனக்குப் பெரிய பயத்தை உண்டாயிற்று. மணலில் மனித அடிச்சுவடுகள் காணப்பட்டன. 12. பயங்கரம் சிறிது நேரம் நான் திகைத்துப்போய் நின்றேன். நான் சுற்றிச்சுற்றி எல்லா இடங்களையும் பார்த்தேன். ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஒரு மனிதனையும் காணவில்லை. மறுபடியும் நான் காலடிகளைப் பார்த்தேன். அவை அங்கே இருந்தன. அவை அங்கு எப்படி வந்தன என்பதை என்னால் நினைத்து அறிய முடியவில்லை. நான் பயந்து உடனே வீட்டுக்குத் திரும்பி ஓடினேன். என்னை யாரோ தொடர்ந்து வருவது போல வழியிலே எதிர்ப்பட்ட புதர்கள் எல்லாம் எனக்குத் தோன்றின. என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை; நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லவுமில்லை. யாரோ ஒரு காட்டு மனிதன் என்னைப் பிடித்துவிடுவானென நான் பயந்தேன். அந்தக் கால் அடையாளங்கள் என்னுடையவையாய் இருக்கலாமோ என்பதை அறியும் பொருட்டுச் சிறிது தைரியத்துடன் நான் மறுபடியும் அங்குச் சென்றேன். நான் எனது காலடியை வைத்து அவற்றை அளந்து பார்த்தேன். எனது காலடி அவ்வளவு பெரிதாய் இருக்கவில்லை. அந்த அடிகள் ஒரு காட்டு மனிதனுடையனவா யிருக்கலாமென்றும் அவன் கரையிலே இருக்க லாம் என்றும் நான் நினைத்துப் பயந்தேன். இப்பொழுது நான் எனது வீட்டை முன்னி லும் காவலுடையதாக்க எண்ணினேன். நான் அதைச்சுற்றி இன்னும் ஒரு வேலி இட்டேன். அதில் ஆறு துப்பாக்கிகளை வைத்தேன். அவசியம் நேர்ந்தால் நான் அவைகளை எல்லாம் ஒரே முறையில் சுடக்கூடும். பின்பு நான் அந்த வேலியைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டேன். அவை நாளடைவில் பெரிய மரங்களாய் வளர்ந்தன. என் ஆடுகளை எவராவது திருடிக் கொண்டு போகலாம் எனவும் எனக்கு அச்சம் இருந்தது. நான் பல இடங்களைச் சுற்றி வேலி அடைத்தேன்; ஒவ்வொன்றிலும் சில ஆடுகளை விட்டேன். என்றைக்கேனும் ஒரு நாள் என் எதிரி ஒருவனைச் சந்திக்க நேரும் என்னும் பயத்தினாலேயே நான் இவைகளை எல்லாம் செய்தேன். நான் அத் தீவில் பதினெட்டு ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினேன். அத்தீவிற்கு எதிரே உள்ள இடத்தைக் குறித்து நான் மிகவும் பயந் தேன். அதற்குக் காரணம், நான் ஒரு நாள் கடற்கரையில் நெருப்பெரிக்கப் பட்டிருந்ததையும், பக்கத்தே மனித எலும்புகள் இருந்ததையும் கண்டதே யாகும். அவைகளைப் பார்த்தவுடன் மனித இறைச்சியை உண்பவர் அங்கு மனிதரை உண்டு விருந்து கொண்டாடினர் என்பது எனக்கு நன்றாய் விளங்கி விட்டது. அப்பொழுது எனக்கு மண்ணில் காணப்பட்ட அடிச்சுவடுகளைப் பற்றியும் விளங்கிவிட்டது. காட்டு மனிதர் தோணிகள் மூலம் அங்கு வந்து விருந்து கொண்டாடிய பின்பு போயிருக்கலாம் என்று நான் துணிந்தேன். பின்பு நான் அவ்விடத்தில் சிறிது நேரமும் நிற்க விரும்பவில்லை. நான் விரைவாகக் கூடாரத்துக்குச் சென்றேன். நான் முன்னிலும் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தேன். நான் துப்பாக்கியைப் பயன்படுத்தவில்லை; ஒரு போது காட்டு மனிதர் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுவிடுவர் எனப் பயந்தேன். ஆகையால், நான் துப்பாக்கியும் வாளும் இல்லாமல் வெளியே போவதில்லை. நான் நெருப்பை மூட்டி எரிக்கவும் இல்லை. நெருப்பை மூட்டி எரித்தால், புகை மேலே கிளம்பும் என்னும் பயம் எனக்கு இருந்தது. நான் மரத்தைக் கரியாக எரித்து வைத்துக் கொண்டு, அதை மூட்டி எரித்துச் சமையல் செய்தேன். கரியிலிருந்து புகை கிளம்பமாட்டாது. கடற்கரைக்குப் பக்கத்தே உள்ள மரத்தில் இரண்டு துப்பாக்கிகளை வைத்துக் கட்டியிருந் தேன். அம் மரம் நான் எலும்புகளைக் கண்ட இடத்துக்கு அருகிலுள்ளது. மனித இறைச்சியை உண்ணும் கொடியவர்களுட் சிலரைக் கொல்ல வேண்டு மென்பது எனது விருப்பம். நான் ஒவ்வொரு நாட்காலையிலும் மலை உச்சிக்குச் சென்று, கடலை நோக்கினேன். அங்குத் தோணிகளையோ, காட்டு மனிதரையோ நான் பார்க்கவில்லை. நான் ஒரு நாள் புதர்களை வெட்டிக் கொண்டு போகும் போது ஒரு குகையை அடைந்தேன். நான் அதனுள் புகுந்து, இங்குமங்குஞ் சென்று, ஆராய்ந்து பார்த்தேன். குகையில் இரண்டு வெளிச்சமான கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. நான் உடனே வெளியில் வந்தேன். நான் அதிகம் பயந்து விட்டேன். மறுபடியும் நான் தைரியம் அடைந் தேன். ஒரு பெரிய கொள்ளியை எடுத்துக்கொண்டு குகைக்குள் நுழைந் தேன். அங்கு மிகுதியாய் அழும் சத்தம் கேட்டது கொள்ளியைத் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு சென்றேன். அங்கு உதவியற்று ஓர் ஆடு சாகுந்தறு வாயில் கிடந்தது. என் துயரம் மறைந்து போயிற்று. அது இன்னும் அதிக நேரம் உயிர்பிழைத்திராது என்று அறிந்ததும் நான் குகையின் மறு இடங் களை ஆராயத் தொடங்கினேன். தாழ்வான ஓர் இடத்தை அடைந்ததும் நான் தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. அப்பால் குகையின் முகடு உயர மாய் இருந்தது. அப்பொழுது புதுமையான ஒரு காட்சி எனது கண்ணிற் பட்டது. வைரக்கற்களின் ஒளியைப் போன்ற ஒளி எல்லா இடங்களிலும் காணப்பட்டது. அது ஒரு மாய வித்தை உள்ள குகை போலக் காணப் பட்டது. நான் அக் குகையைக் கண்டுபிடித்ததைப் பற்றி மகிழ்ந்தேன். நான் மறைந்திருப்பதற்கும், என்னுடைய பொருள்களைப் பத்திரமாக வைப்பதற் கும் அது நல்ல இடம். அடுத்த நாள் நான் வெடிமருந்தையும் சில பொருள் களையும் கொண்டுவந்து அங்கு வைத்தேன். ஆடு இறந்து போயிற்று. நான் அதை அயலிலே ஓர் இடத்தில் புதைத்துவிட்டேன். 13. காட்டு மனிதர் அப்பொழுது நான் எனது இருபத்து மூன்றாவது ஆண்டு வாழ்க்கையை அத் தீவில் கழித்துவிட்டேன். காட்டு மனிதரைப் பற்றிய பய மில்லாவிட்டால், எனது வாழ்க்கை மிகவும் இன்பமானதாய் இருந்திருக்கும். எனது நாய் வயது வந்து இறந்து போயிற்று. எனது கிளி அதிகம் பேசிக் கொண்டிருந்தது. என்னிடம் பல பழகின ஆடுகள் இருந்தன. நான் அவை களுக்கு என் கையினால் தீனி கொடுப்பேன். என்னிடம் வேறு சில கிளி களும் இருந்தன. ஆனால், அவை ‘பொல்’ என்னும் கிளியைப் போல நன்றாகப் பேச மாட்டா. சில பழகிய கோழிகளும் எனது வீட்டுக்கு அருகேயிருந்த சிறிய மரங்களில் வாழ்ந்தன. எனது வீட்டுக்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள கடற்கரையில் நெருப் பெரிவதை ஒரு நாள் நான் பார்த்து, ஆச்சரியமடைந்தேன். நான் பயத்தி னால் சிறிது தாமதித்து நின்று, பின்பு வீட்டுக்கு ஓடி, வெளியே இருந்த ஏணியை உள்ளே எடுத்து வைத்துவிட்டேன். இரண்டு மணி நேரம் நான் அசையவில்லை. நெடுநேரம் அங்குத் தங்கியிருக்கவும் என்னால் முடிய வில்லை. நான் வேலியைக் கடந்து கீழே இறங்கி, எனது தொலைவு நோக்கி ஆடி மூலம் பார்த்தேன். அங்கு ஒன்பது காட்டு மனிதர் நெருப்பைச் சுற்றி யிருந்து தம் கைதிகளின் இறைச்சியை உண்டு கொண்டிருந்தார்கள். அவர் களின் தோணிகள் கரையிலே கிடந்தன. மனித இறைச்சியை உண்பவர் தமது உணவை முடித்துக் கொண்டு மறுபடியும் தம் தோணிகளில் சென்றனர். அடுத்த முறை அவர்கள் வந்தால் அவர்கள் கைதிகளுள் ஒருவனை மீட்க வேண்டுமென்றும், அவனுடைய உதவியைக் கொண்டு நான் அத் தீவை விட்டுப் போக வேண்டுமென்றும் நினைத்தேன். மே மாதத்தின் நடுப்பகுதியில் பெரிய புயல் அடித்தது; பெரிய இடி முழக்கமும் உண்டாயிற்று. நான் எனது கூடாரத்திலிருந்து படித்துக் கொண் டிருக்கும் போது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நான் துடிதுடித்து எழுந்து மலை உச்சிக்குச் சென்றேன். அப்போது இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. அது எனது தோணி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இடத்தி லிருந்து வந்ததென்பது எனக்குத் தெரிந்தது. மரக்கலம் ஒன்று ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டது என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் உலர்ந்த விறகைக் குவித்து மலை உச்சியில் நெருப்பெரித்தேன். உடனே பெரிய வெளிச்சம் உண்டாயிற்று. மரக்கலத்திலிருந்தவர்கள் எனது வெளிச்சத்தைப் பார்த்திருத்தல் கூடும். பல வெடிச்சத்தங்கள் கேட்டன. நான் இரவு முழுவதும் விறகை எரித்துக் கொண்டிருந்தேன். விடியும் வரையும் மரக்கலத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. காலையில் அது பாறையில் மோதி உடைந்து போயிருப்பதைக் கண்டேன். அந்த மரக்கலத் திலிருந்தவர் எல்லாரும் கடலுள் ஆழ்ந்திருப்பர் என்று நினைத்தேன். கடல் அடங்கியிருந்தது. நான் எனது தோணியில் மரக்கலம் உடைந்த இடத்திற்குச் சென்றேன். ஒரு நாய் என்னை அடைவதற்கு நீந்தி வந்தது. அது நான் கொடுத்த உணவை உண்டு தோணிக்குள் படுத்துக்கொண்டது. மரக்கலத்திலிருந்த எல்லாப் பொருள்களும் கடல் நீரால் பழுதடைந் திருந்தன. நான் சில ‘உணவின்’ பீப்பாக்களையும், இனிப்பு வகைகளையும் வேறு சில பொருள்களையும் எடுத்துக்கொண்டு நாயுடன் கூடாரத்துக்குத் திரும்பி வந்தேன். 14. அடிமையைத் தப்ப வைத்தல் பதினெட்டு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் ஐந்து தோணிகள் கடற்கரை மணலில் கிடப்பதைக் கண்டு, நான் திடுக்கிட்டேன். ஒவ்வொரு தோணியிலும் நாலு அல்லது ஐந்து பேர் வந்திருப்பர் என்பது எனக்குத் தெரியும். தனிமையாக அவர்களை எல்லாம் தாக்க நான் துணியவில்லை. அவர்கள் வந்தால், போர் செய்வதற்குத் தயாராக நான் எனது கூடாரத்தி லிருந்தேன். ஒருவரும் வரவில்லை. நான் மிகவும் எச்சரிக்கையோடு மலை உச்சிக்குச் சென்றேன். நெருப்பைச் சுற்றி முப்பது காட்டு மனிதர்கள் துள்ளிக் கூத்தாடுவதைப் பார்த்தேன், பின்பு அவர்கள் இரண்டு மனிதர்களைத் தோணியிலிருந்து இழுத்து வந்தார்கள்; ஒருவனை உடனே கொன்றுவிட் டார்கள். அவர்கள் ஒருவனைக் கொல்லும்போது மற்றவன் தப்பியோட முயன்று எனது கூடாரத்தை நோக்கி விரைவாக ஓடி வந்தான். எல்லாரும் அவனைப் பின் தொடர்வர் என்று நினைத்து, நான் பயந்தேன்; இரண்டு பேர் மாத்திரம் அவனைப் பின் தொடர்ந்தனர். நான் அவனைத் தப்ப வைக்க வேண்டுமென விரும்பினேன். நான் இரண்டு துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு குறுக்கு வழியாகத் துரத்துகின்றவர்களுக்கும் ஓடி வருகின்றவனுக்கும் இடையில் சென்றேன். நான் காட்டு மனிதருக்கு நேரே ஓடி, ஒருவனைத் துப்பாக்கியால் அடித்து வீழ்த்தினேன். மற்றொரு காட்டு மனிதன் என்மேல் எய்வதற்காக வில்லில் அம்பைத் தொடுத்தான். நான் உடனே அவனைச் சுட்டேன். அவன் காயம் பட்டு விழுந்தான். ஓடி வந்தவன் என் துப்பாக்கியிலிருந்து புகை வருவதைக் கண்டு பயந்தான். அவன், முன் ஒரு போதும் துப்பாக்கியைக் காணாதவன், அவன் அசையாது நின்றான். நான் அவனைக்கிட்ட வரும்படி அழைத்தேன். அவன் கிட்ட வந்து முழங்கால் இட்டு நிலத்தை முத்தமிட்டுத் தனது தலையை என் பாதங்களில் வைத்தான். இதனால், தான் எனக்கு அடிமையாய் இருப் பான் என்பதை அவன் குறிப்பிட்டான். நான் அவனை எழும்படி சொன்னேன். அவன் எழுந்து என்னுடன் பேசினான். அவன் பேசியது எனக்கு விளங்கவில்லை. இறந்து போன காட்டு மனிதரை மற்றவர்கள் காணாதபடி மணலில் புதைப்பது நல்லது என்பதை அவன் சைகையால் தெரிவித்தான். அவர்களைப் புதைத்தபின் முன்பு நான் ஆட்டைக் கண்ட குகைக்கு அவனை அழைத்துச் சென்றேன். நான் அவனுக்கு உண்ண உரொட்டியும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தேன்; படுப்ப தற்கு வைக்கோலினால் ஒரு படுக்கையைச் செய்து கொடுத்தேன். அவன் நித்திரை செய்யும் போது நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 15. ‘வெள்ளிக்கிழமை’ அவன் இருபத்தாறு வயதுடைய அழகிய வாலிபன். அவனுடைய முகம் பெருந்தன்மையைக் காட்டுவதாயும். மயிர் நீளமாயும் இருந்தன. அவன் நீகிரோவனல்லன். அவனது தோல் நல்ல கறுப்புடையது அன்று. அவனது மூக்குச் சிறியது; இதழ்கள் மெல்லியவை; பற்கள் தந்தம் போல வெண்மையானவை. அவன் எழுந்தபோது நான் ஆடுகளைக் கறந்து கொண்டிருந்தேன். அவன் என்னிடம் வந்து, தான் எனக்கு அடிமையாய் இருப்பதாகச் சைகையால் தெரிவித்தான். அவன் வெள்ளிக்கிழமையன்று காப்பாற்றப்பட்டபடியால், இனி அவன் பெயர் ‘வெள்ளிக்கிழமை’ என்பதை அவன் விளங்கிக் கொள்ளும்படி செய்தேன். நான் அவனைச் சிறிது சிறிதாகச் சில சொற்களைப் பேசப் பயிற்றி னேன். அவன் பாலைக் குடிக்கலாமென்றும், ஒரு போதும் மனித இறைச் சியை உண்ணுதல் கூடாதென்றும், அப்படிச் செய்தால் நான் அவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேனென்றும் அவன் விளங்கிக் கொள்ளும்படி செய்தேன். அவனுக்கு என்னுடைய உடையைப் போன்ற ஓர் உடையைச் செய்து கொடுத்தேன். அவன் அதற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான். தொடக்கத்தில் அவன் சுவருக்கு வெளியே படுத்து உறங்கினான். பின்பு நான் அவனிடத்தில் சந்தேகம் கொள்ளாமையால் அவன் என் அருகில் படுத்து உறங்கினான். நான் நாளுக்கு நாள் அவனைக் குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். அவன் விரைவில் பேசக் கற்றக்கொண்டான். அப்பொழுது எனது வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாயிருந்தது. நான் ஆடு ஒன்றைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை முதல் முறையாகப் பார்த்தபோது அவன் நடுங்கினான். நான் அவனைப் பயப் படாமல் இருக்கும்படி சொல்லித் துப்பாக்கி வேலை செய்யும் வகையை அவனுக்குக் காட்டினேன். ஆட்டிறைச்சியைச் சமைப்பதற்கு அவன் பழகிக்கொண்டான். மாலை நேரங்களில் நான் மற்றைய நாடுகளைப் பற்றிய செய்திகளை அவனுடன் பேசுவேன். ஒரு நாள் நாங்கள் கடற்கரை ஓரமாய் நடந்து வந்தோம். அப் பொழுது நான் ஏறி வந்த போது உடைந்து போன மரக்கலத் துண்டுகளை அவனுக்குக் காட்டினேன். அப்போது ‘வெள்ளிக்கிழமை’ என்னைப் பார்த்து, “எனது நாட்டில் இதைப் போல இரண்டு மரக்கலங்கள் இருக்கின் றன. அவைகளில் தாடியையுடைய வெள்ளை மனிதர்கள் பயணம் செய்து வந்தார்கள். அவர்களை என் நாட்டு மக்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்றான். அவர்களுள் பதினேழு பேர் பாறையில் மோதி உடைந்த மரக்கலத் திலிருந்து படகேறிச் சென்றவராயிருக்கலாமென நான் சந்தேகித்தேன். அவ் வெள்ளை மனிதரை எப்படிப் பார்க்க முடியுமென நான் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். ஒரு படகைச் செய்துகொண்டு அவனோடு ஐரோப்பாத் தேசத்துக்குச் செல்ல நான் எண்ணியிருப்பதாக அவனுக்குச் சொன்னேன். இதைக் கேட்டதும் அவன் கவலை அடைந்தான். அவன் சிறிது நேரம் என்னோடு பேசவில்லை. பின்பு, “நீ ஏன் என்னோடு பேசவில்லை” என நான் அவனைக் கேட்டேன். அவன், “எனக்கு ஐரோப்பாத் தேசம் போக விருப்பம் இல்லை; நாம் இருவரும் எங்கள் தேசம் போகலாம்” எனக் கூறினான். காட்டு மக்கள் வாழும் இடத்துக்கு எப்படிப் போவது என்று நான் நினைத்தேன். நான் ஆலோசிப்பதைக் கண்ட அவன், “நீங்கள் எங்கள் தேசத்துக்கு வரலாம். அங்குத் திருத்தமின்றி வாழும் மக்களைத் திருத்தி, நல்வழிக்குக் கொண்டு வரலாம்,” என்று சொன்னான். நான் அவன் எண்ணப்படியே நடப்பதாகக் கூறினேன். இருவரும் மறுநாள் முதல் பெரிய படகு ஒன்று செய்யத் தொடங்கினோம். ‘வெள்ளிக்கிழமை’ எனக்கு மிகுந்த உதவி செய்தான். ஒரு மாதத்துக்குள் பெரிய படகு ஒன்றைச் செய்து முடித்தேன். பின்பு மிக்க வருத்தத்தோடு கால்வாய் வழியாக அதனைக் கடலுக்குக் கொண்டு போனேன். அதற்குப் பாய்மரம், துடுப்பு, திசையறி கருவி முதலியவைகளை எல்லாம் அமைத்தேன். 16. மேலும் காட்டு மனிதர் வருகையும் கைதிகளைத் தப்ப வைத்தலும் மழை காலம் கழிந்ததும் நான் ‘வெள்ளிக்கிழமை’ யின் தேசத்துக்குச் செல்வதற்காகப் படகில் உணவுகளைப் பத்திரஞ் செய்தேன். ஒரு நாள் காலை நேரத்தில் நான் மிகவும் வேலையாயிருந்தேன். நான் ஆமை ஒன்றைப் பிடித்து வரும்படி அவனிடம் சொன்னேன். சிறிது நேரத்தில் அவன், ‘எசமானரே, இது என்ன துக்கம்! நாம் இதற்கு என்ன செய்வது?’ என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான். மனித இறைச்சி தின்பவர்கள் தன்னைப் பிடித்துத் தின்ன வந்திருக்கிறார்கள் என நினைத்து, அவன் மிகவும் பயமடைந்தான். நாம் இருவரும் அவர்களை எதிர்த்துப் போர் செய்வோம்’ என்று நான் அவனுக்குச் சொன்னேன். அவன் துப்பாக்கிகளுக்கு மருந்து இட்டான். நான் கைத் துப்பாக்கி, வாள், கோடரிகளை ஆயத்தம் செய்தேன். பின்பு இருவரும் புறப்பட்டோம். அங்கு இருபத்தொரு காட்டு மனிதரும் மூன்று கைதிகளும் காணப்பட்ட னர். கைதிகளுள் ஒருவன் வெள்ளையனாயிருந்தான். சுற்றுப்பாதை வழியாக நாங்கள் கடற்கரைக்கு அருகில் வந்தோம். நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் காட்டு மனிதர் கூட்டத்தை நோக்கிச் சுட்டோம். அவர்கள் காயம் படாமலும், இறந்து போகாமலும் எந்த வழியாக ஓடுவது என்று அறியாமல் துள்ளிப் பாய்ந்தார்கள். பின்னும் ஒரு முறை நாங்கள் சுட்டுச் சிலரைக் கொன்றோம்; சிலரைக் காயப்படுத்தினோம். பின்பு நாங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடினோம். ‘வெள்ளிக்கிழமை’ துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு நின்றான்; நான் வெள்ளை மனிதன் கட்டுகளை அறுத்து அவனை விடுதலை செய்தேன். விரைவாக நான் அவன் கையில் ஒரு வாளையும், ஒரு துப்பாக்கியையும் கொடுத்தேன். தப்பிப்பிழைத்த காட்டு மனிதர்கள் தங்கள் தோணிகளில் ஏறிக் துடுப்புகளை வலித்துக் கொண்டு சென்றார்கள். காட்டு மனிதர் கரையில் விட்டுச் சென்ற தோணி ஒன்றினால் அவர்களைத் துரத்தும்படி ‘வெள்ளிக்கிழமை’ என்னிடம் கூறினான். நான் எனக்கு அருகே கிடந்த தோணி ஒன்றில் பாய்ந்து ஏறினேன். அங்கு ஒரு கிழவன் கையும் காலும் கட்டுண்டபடி அரை உயிருடன் இருப்பதைக் கண்டு, நான் மிகவும் வியப்படைந்தேன்; உடனே அவனுடைய கட்டுகளை அறுத்துவிட்டேன். அவன் எழுந்திருக்கப் பலமற்றவனாய் இருந்தான். அவன் கறுப்பு மனிதன். ஆபத்து ஒன்றுமில்லை என்பதை அவனுக்குக் கூறும்படி ‘வெள்ளிக்கிழமை’க்குக் கட்டளை இட்டேன். அவனுக்குச் சிறிது உணவும் கொடுத்தேன். ‘வெள்ளிக்கிழமை’ அருகே வந்து கிழவன் முகத்தைப் பார்த்தான். உடனே அவன் சத்தமிட்டான்; கிழவனை முத்தமிட்டுக் கட்டித் தழுவினான்; துள்ளிக் குதித்தான். அக் கைதி ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையாய் இருந்ததே அதற்குக் காரணம். ‘வெள்ளிக்கிழமை’ வீட்டுக்கு ஓடி, ஒரு சாடியில் தண்ணீர் கொண்டு வந்தான். இரு கைதிகளும் தண்ணீர் குடித்துச் சிறிது களை தெளிந்தார்கள். வெள்ளை மனிதன் இஸ்பானியா நாட்டவன் என்பதை நான் அறிய லானேன். இருவரும் நடக்க முடியாதவராயிருந்தனர். ‘வெள்ளிக்கிழமை’ அவர்களைத் தூக்கித் தோணியில் ஏற்றி, எங்கள் கூடாரத்துக்கருகே கொண்டு வந்தான். பின்பு நாங்கள் சென்றோம். அவர்களை வேலிக்கு மேல் தூக்கிச் செல்ல எங்களால் முடியவில்லை; ஆகவே, நாங்கள் வெளியில் ஒரு கூடாரத்தை அடித்தோம்; அங்கு வைக்கோலினால் படுக்கை செய்து, அவர் களுக்கு கம்பளியும் கொடுத்தோம். அவர்கள் அங்கு ஆறுதலாக நித்திரை செய்தார்கள். இஸ்பானியா தேசத்தவன் நன்கு குணமடைந்த பின், “நான் உடைந்து போன மரக் கலத்தில் இருந்தவர்களுள் ஒருவன்,” எனச் சொன்னான். மனித இறைச்சி உண்ணும் மக்கள் வாழும் தேசத்திற்குப் படகு சென்ற போது அவனும் வேறு பதினேழு பேரும் சிக்கிக் கொண்டனர். நான் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமென்றும், அவர்கள் எங்களுடைய தீவுக்கு வந்தால் எங்கள் நாட்டுக்குச் செல்லக்கூடிய பெரிய மரக்கலம் ஒன்றைக் கட்டலாம் என்றும் கூறினேன். ஆகவே, நாங்கள் மற்ற வர்களையும் பார்த்து அழைத்து வரும்படி இஸ்பானியனையும், ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையையும் அனுப்ப உத்தேசித்தோம். அவர்கள் வந்தால், அவர்கள் உண்பதற்குப் போதிய உணவு எங்களிடம் இருத்தல் வேண்டும். ஆகவே, நாங்கள் அதிக தானியத்தை விதைத்தோம். இஸ்பானியனும் ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையும் அறுவடை முடிந்தவுடன் உணவையும் துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு பயணப்பட்டார்கள். 17. ஆங்கிலேயரின் மரக்கலம் அவர்களின் வருகையை எட்டு நாட்கள் எதிர்பார்த்தோம். அப் பொழுது வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது: நான் ஒரு நாள் நல்ல நித்திரையில் இருந்தேன். அப்பொழுது ‘வெள்ளிக்கிழமை’, “எசமான், எசமான், அவர்கள் வந்துவிட்டார்கள்!” எனச் சத்தமிட்டான். நான் துள்ளி எழுந்து கடலை நோக்கின போது கரைக்குச் சமீபத்தில் ஒரு படகு தெரிந்தது. கவனமாகப் பார்த்ததும் நாங்கள் எதிர்பார்த்திருப்ப வர்கள் அவர்களல்லர் என்பதை அறிந்தோம். நான் ‘வெள்ளிக்கிழமை’ யை அழைத்து, அவர்கள் நண்பர்களா அல்லது பகைவர்களா என்பதை அறியும் வரையில் மறைந்திருக்கும்படி சொன்னேன். நாங்கள் மலை உச்சியில் ஏறித் தொலைவு நோக்கி ஆடியால் பார்த்தோம். தொலைவில் ஓர் ஆங்கில மரக்கலம் நின்றது. அம் மரக்கலத்தி னின்று ஒரு படகு எங்கள் தீவை நோக்கி வந்தது. அதிலிருந்தவர்கள் தரையில் இறங்கினார்கள். மொத்தம் பதினொருவர் இருந்தனர். மூன்று பேர் கைதிகள் போலக் கட்டப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் உயிரை மன்னித்துவிடும்படி மன்றாடுபவர்கள் போலக் காணப்பட்டார்கள். கைதிகள் கரையில் கிடந்தார்கள் ; மற்றவர்கள் உள் நோக்கிச் சென்றார்கள். அது எவ்வகையான இடமென்பதை அறிவதற்கு அவர்கள் சென்றார்கள் போலத் தெரிந்தது. சிறிது நேரத்திற்குப்பின் அவர்கள் களைத்துப் போய்ப் படுத்து நித்திரை செய்தார்கள். பின்பு ‘வெள்ளிக்கிழமை’யும் நானும் மூன்று கைதிகளுக்கும் உதவியளிக்கத் துணிந்தோம். நான் அவர்களருகில் சென்று, அவர்களை, “நீங்களேன் இப்படிக் கிடக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் எனது குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். எனது வினோதமான உடையைக் கண்டதும் அவர்கள் இன்னும் பதின்மடங்கு பயம் அடைந்தார்கள். “பயப்படாதீர்கள்! நான் உங்கள் நண்பன். நீங்கள் ஏன் இப்படிக் கட்டப்பட்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். அவர்களுள் ஒருவன், “நான் இம் மரக் கலத்தின் தலைவன். என் னுடைய வேலையாட்கள் எனக்குக் கீழ்ப்படியாமல் கப்பலைப் பறித்துக் கொண்டார்கள். இத் தீவில் விட்டுச் செல்லும் பொருட்டு அவர்கள் எங்களை இங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள் இவ்விடத்திலேயே இறந்து விடுவோம் என அஞ்சுகின்றோம்! எங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை!” என்றான். அவன் இவ்வாறு சொன்னதும், “நான் உங்களைக் காப்பாற்றினால் நீங்கள் எனது சொற்படி நடந்து என்னையும் என் வேலையாளையும் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்வீர்களோ?” எனக் கேட்டேன். “நான் இதை மிக்க மகிழ்ச்சியுடன் செய்வேன்!” என மரக்கலத் தலைவன் கூறினான். நான் உடனே மூன்று பேர்களின் கட்டுகளையும் அறுத்துவிட்டு, ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு துப்பாக்கியைக் கொடுத்தேன். அப்பொழுது நித்திரை செய்தவர்களுட் சிலர் விழித்தெழுந் தனர். நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம்; இருவர் இறந்தனர்; மற்றவர்கள் இரக்கம் காட்டும்படி மன்றாடினார்கள். “எங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிவ தாக உறுதி கூறினால், நாங்கள் உங்களை உயிருடன் விட்டு வைப்போம்,” என்று கூறினோம். அதற்கு அவர்கள் உடன்பட்டார்கள். நாங்கள் அவர் களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. நாங்கள் அவர்களைக் கட்டி வைத்து விட்டுப் படகுக்குச் சென்று, அதிலுள்ளவைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, அவர்கள் படகில் ஏறித் தப்பி ஓடிவிடாதபடி அதில் ஒரு தொளை செய்தோம். நான் மரக்கலத் தலைவனையும் மற்றும் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு நல்ல உணவு அளித்து, நான் செய்து வைத்திருந்தவைகளை எல்லாம் அவர்களுக்குக் காட்டினேன். எனது விநோதமான வரலாற்றைக் கேட்டு அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள். மரக்கலத்தில் இன்னும் இருபத்தாறு பேர் இருந்தனர். அவர்கள் ஒரு முறை துப்பாக்கியைச் சுட்டு வெடி தீர்த்துக் கரையிலுள்ளவர்களைத் திரும்பி வரும்படி கொடியைக்காட்டினார்கள். அவர்களை எப்படி வெல்லலாம் என்று நானும் மரக்கலத் தலைவனும் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ஒருவரும் மரக்கலத்துக்குத் திரும்பிப் போகவில்லை. பலமுறை துப்பாக்கி யால் வெடி தீர்த்த பின் அவர்களுள் பத்துப்பேர் படகு ஒன்றில் ஏறிக்கரையை நோக்கி வந்தார்கள். அவர்கள் இறங்கி மற்றப் படகுக்குச் சென்றார்கள். அது பழுது பட்டிருப்பதைக் கண்டு, அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களைக் கூப்பிட்டார்கள். நான் ‘வெள்ளிக்கிழமை’யையும் மற்றவர்களையும் அவர்களுக்கு மறுமொழியாகச் சத்தமிடும்படிச் சொன் னேன். அவர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கித் தங்கள் நண்பர்களைக் காணும் பொருட்டுச் சென்றார்கள். ‘வெள்ளிக்கிழமை’யும் மற்றவர்களும் மலையிலுள்ள காடுகளில் சத்தம் இட்டுக் கொண்டு சென்றார்கள். படகிலிருந்து வந்தவர்கள் இனி இரவில் தங்கள் படகுக்குத் திரும்ப முடியாதபடி களைப்படைந்தபோது அவர்கள் சத்தமிடுதலை நிறுத்தினார்கள். நாங்கள் விரைவில் அவர்களை எல்லாம் பிடித்துக் கட்டி எங்கள் குகைக்குக் கொண்டு போனோம். 18. தீவை விட்டுப் புறப்படுதல் அடுத்த நாள் நாங்கள் படகைப் பழுது பார்த்தோம்; மரக்கலத்தில் இருப்பவர்களையும் மரக்கலத்தையும் பிடித்துக் கொள்வதற்கு வழி வகைளை ஆலோசித்தோம். நாங்கள் பிடித்து வைத்திருந்தவர்கள் பெரிய குற்றம் செய்தவர்களென்றும், மரக்கலத்தையும் மரக்கலத்திலுள்ளவர் களையும் பிடிப்பதற்கு உதவி புரிந்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்க ளென்றும் மரக்கலத் தலைவன் சொன்னான். அவர்கள் அவ்வாறு செய்ய இசைந்து, ஒரு படகில் ஏறிப் புறப்பட் டார்கள். நானும் ‘வெள்ளிக்கிழமை’யும் கடற்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். மரக்கலத் தலைவன் இரவு நேரத்தில் மரக்கலத்தை அடைந்தான். சிறிது போராட்டத்தின் பின் மரக்கலத் தலைவன் மரக்கலத்திலிருந்தவர் களை வென்று, மரக்கலத்தைக் கைப்பற்றினான்; தனது அனுகூலத்தின் அறிகுறியாக ஏழு வெடி வெடிக்கும்படி சொன்னான். நான் பார்த்துக்கொண்டு நின்று களைத்துப் போனமையால், அயர்ந்து தூங்கிவிட்டேன். “கவர்னர், கவர்னர்” என்று மரக்கலத் தலைவன் கூப்பிட்ட சத்தத்தைக் கேட்ட பொழுது நான் எழுந்திருந்தேன். நான் எழுந்ததும், “அதோ நிற்கிற மரக்கலம் உம்முடையதே; நாங்களும் அப்படியே,” என்று அவன் சொன்னான். அவன் மரக்கலத்தைக் கரைக்கு அருகில் கொண்டு வந்துவிட்டான். எனது பிறந்த நாட்டுக்குச் செல்வதற்கு மரக்கலம் கிடைத்துவிட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியில் மூழ்கினேன். மரக்கலத் தலைவன் செய்தவைகளுக்காக நான் அவனுக்கு நன்றி கூறினேன்; எனக்கு உதவி அளித்த கடவுளைத் துதித்தேன். மரக்கலத் தலைவன் இறைச்சி, சர்க்கரை, உரொட்டி, கொடிமுந்திரி இரசம் முதலிய பலவற்றைக் கொண்டு வந்திருந்தான். நாங்கள் கரையிலிருந்து நல்விருந்து உண்டோம். அவன் அழகிய உடைகளைத் தந்தான். அவைகளை உடுத்து, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ‘வெள்ளிக்கிழமை’யும் மரக்கலத் தலைவனும், நானும் கப்பலுக்குச் செல்வதற்கு ஆயத்தம் செய்தோம். நான் எனது பணம், தொப்பி, குடை, கிளி முதலியவைகளை எடுத்துக் கொண்டேன். எங்களுடன் இருந்தவருள் ஐந்து பேர் நம்பத் தகுந்தவரல்லர் என நினைத்தபடியால் நாங்கள் அவர்களை அத் தீவிலேயே விட்டுச் சென்றோம். புறப்படுமுன் நான் எனது வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அவர்களுக்கு நானிருந்த கூடாரம் முதலியவைகளையும் காட்டினேன். நான் எவ்வாறு சமைத்தேன், தானியம் விதைத்தேன், கொடி முந்திரிப் பழங்களை உலர்த்தினேன், என்பவற்றை எல்லாம் அவர்கள் அறிந்தார்கள். ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையும் இஸ்பானியரும் எப்போதாவது திரும்பி வந்தால், எங்கள் பயணத்தைப் பற்றி அறிவிக்கும்படி அவர் களிடம் சொன்னேன். பின்பு நாங்கள் மரக்கலத்தில் ஏறி, விரைவில் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டோம். நாங்கள் ஆறு மாதம் பயணஞ்செய்தோம். பல ஆண்டுகளுக்குப் பின் நான் மறுபடியும் எனது நாட்டைப் பார்த்தேன். ‘வெள்ளிக்கிழமை’ என் வேலைக்காரனாகவும் நண்பனாகவும் எப்பொழுதும் என்னோடு இருந்தான். நான் என் தந்தையாரைக் காணும் பொருட்டு யார்க்ஷயருக்குச் சென்றேன். என் இரண்டு சகோதரிகளைத்தவிர என் மற்றைய உறவினர் எல்லாரும் இறந்துவிட்டனர். நான் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு ஆயிரம் தங்க நாணயம் வரையிலிருந்தது. பிரேசிலிலுள்ள கரும்புப் பண்ணையிலிருந்து பெருந் தொகை எனக்கு வந்தது. அப்பொழுது நான் செல்வனாய் விளங்கினேன். நான் இன்னும் பல துணிச்சலான காரியங்கள் செய்த போதும் நான் தனிமை யாய்த் தீவில் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவில்லை.  கலிவர் யாத்திரைகள் கலிவர் யாத்திரைகள் 1. லில்லிபுத் யாத்திரை எனது இளமைக்காலமும் கல்வியும் நான் எனது பெற்றோரின் ஐந்தாவது குமாரன், யான் பதினான்கு வயதாயிருக்கும்போது எனது தந்தை என்னைக் கேம்பிரிட்ஜ் கலாசாலை யில் கல்வி பயில வைத்தார். அங்கு நான் மிக ஊக்கத்தோடு கல்வி பயின்று வந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு மேல் அங்கு கல்வி கற்பிக்க எனது தந்தையின் பொருளாதார நிலை இடம் தரவில்லை. அடுத்த நான்கு ஆண்டுகள் நான் பேர்ஸ் என்பவரின்கீழ் மருத்துவக் கல்வி பயின்றேன். என்றாவது ஒருநாள் தூரதேசங்களுக்குப் பயணஞ் செய்ய நேரும் எனக் கருதினமையால் நான் பயணக்காரன் ஒருவன் அறிந்துகொள்ள வேண்டிய வைகளைப் பழகுவதில் சிறிது பணத்தைச் செலவிட்டேன். பேர்ஸ் என்பவரின் கீழ் மருத்துவக் கல்வி கற்று முடிந்ததும், நான் ஒல்லாந்து தேசத்திலுள்ள லைதின் கலாசாலையில் மருத்துவக் கல்வி பயிலும் பொருட்டு எனது தந்தையும் சுற்றத்தாரும் எனக்குப் போதிய பணம் உதவினார்கள். லைதினிலிருந்து திரும்பியபின் நான் சுவாலோ என்னும் கப்பலில் பலமுறை பயணஞ் செய்தேன். பின்பு, நான் இலண்டன் நகரில் தங்கி மருத்துவத் தொழில் நடத்தி வந்தேன். அங்கு நான் ஒரு வீட்டின் பகுதியைக் குடிக்கூலிக்கு அமர்த்திக் குடியிருந்து அங்கு திருமணஞ் செய்துகொண்டேன். இரண்டு ஆண்டுகள் கழிந்தன. எனது ஆசிரியராயிருந்த பேர்ஸ் என்பவர் மரணமானார். எனக்கு நண்பர் மிகச் சிலரே இருந்தனர். ஆதலின், எனது தொழில் அதிக வருவாயளிக்கவில்லை. ஆகவே, நான் மறுபடியும் கடற்பயணஞ் செய்ய எண்ணினேன். ஆறு மாத காலம் நான் மருத்துவ னாகக் கடமையாற்றியபோது நான் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் கிழக் கிந்தியத் தீவுகளுக்கு மிடையில் பயணஞ் செய்தேன். ஓய்வு நேரங்களில் பழையனவும் புதியனவும் ஆகிய நூல்களைப் பயின்றேன். கரையை அடையும்போது அங்குள்ளவர்களின் மொழிகளைப் பயின்றேன். 2. எங்கள் கப்பல் சேதமடைந்தது கடற்பயணஞ் செய்வதில் எனக்கு வெறுப்புண்டாயிற்று. மூன்று ஆண்டுகள் நான் எனது தொழிலைச் செய்துகொண்டு மனைவி மக்களோடு வாழ்ந்தேன். எனது தொழில் போதிய வருவாயளிக்கவில்லை. ஆகவே, நான் அன்டிலோப் என்னும் கப்பலில் மருத்துவ வேலையில் அமர்ந்தேன். அன்டிலோப் கப்பல் பிரிஸ்டல் துறைமுகத்தை விட்டு 1699-ஆம் ஆண்டு மே மாதம் நாலாம் தேதி தென் கடல் தீவுகளை நோக்கிப் புறப்பட்டது. அவ்வாண்டுக் கடைசியில் புயல் காற்று எங்கள் கப்பலை ஆஸ்தி ரேலியாவுக்கு வட மேற்குப் பக்கமாகக் கொண்டு போய் விட்டது. கப்பலில் வேலை செய்தவர்களில் பன்னிருவர் அதிக வேலை செய்தமையாலும் உணவின்மையாலும் இறந்தனர். நவம்பர் மாதம் ஏழாந் தேதி பனிப் புகார் இருந்தது. கப்பலுக்கு அண்மையில் ஒரு பாறையும் காணப்பட்டது. காற்று வேகமாக அடித்தமை யால் எங்கள் கப்பல் பாறையில் மோதி உடைந்தது. நானும் இன்னும் ஐந்து கப்பற்காரரும் படகு ஒன்றில் இறங்கிக் கப்பலுக்கும் பாறைக்கும் அப்பாற் செல்லும் பொருட்டு முயன்று கொண்டிருந்தோம். நாங்கள் தண்டுகளால் ஆனமட்டும் வலித்தோம்; அரை மணிநேரத்தில் பெரிய அலைகள் கிளம்பிப் படகைக் கவிழ்த்துவிட்டன. எனது நண்பர்களின் கதி என்ன ஆயிற்றென்று எனக்குத் தெரியாது. அவர்கள் எல்லோரும் இறந்து போயிருக்கலாம். நான் என்னால் இயன்ற அளவு நீந்திச் சென்றேன். கரையை நோக்கி வீசிக் கொண்டிருந்த திரைகள் என்னைக் கரைப் பக்கம் தள்ளிக் கொண்டு சென்றன. நான் இடையிடையே காலைக் கீழேவிட்டுக் கால் நிலத்தை தொடுகின்றதோ என்று பார்த்தேன். இனி நீந்த வேண்டியதில்லை என்னும் நிலையை அடைந்தபோது நான் கரையை அடைந்தேன். நான் கரையை அடைந்த நேரம் காலை எட்டு மணி. 3. நான் லில்லிபுத்தில் பெற்ற வரவேற்பு நான் அரை மணி நேரம் கரைப் பக்கங்களில் அலைந்து திரிந்தேன். அங்கு வீடுகளோ மக்களோ காணப்படவில்லை. அங்கு அடர்ந்து வளர்ந் திருந்த புல்லின் மேல் படுத்து, எப்பொழுதுமில்லாத கடும் உறக்கம் கொண் டேன். தூக்கம் கலைந்து நான் விழித்தபோது நேரம் பகலாக இருந்தது. எழும்ப முயன்றேன்; என்னால் எழும்ப முடியவில்லை. எனது கால்களும் கைகளும் நிலத்தோடு கட்டப்பட்டிருந்தன. எனது நீண்ட தலை மயிர்களும் அவ்வாறே கட்டப்பட்டிருந்தன. எனது கால்களும் கைகளும் கயிறுகள் மாட்டிக் கட்டப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன். என்னால் மேலே பார்க்க மாத்திரம் முடிந்தது. வெய்யிலின் வெப்பம் அதிகரித்தது; என்னால் கண் களை விழித்துப் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிப் புதுமையான ஆரவாரம் கேட்டது. நான் மேலே பார்த்துக் கொண்டிருந்தமையால் என்னால் வானத்தை அல்லாமல் வேறொன்றையும் பார்க்க முடியவில்லை. சிறிது நேரம் கழிந்தது; உயிருள்ளது யாதோ ஒன்று எனது கால்களில் அசைந்து செல்வதை உணர்ந்தேன். அது எனது உடலின் மீது நடந்து வந்து எனது தொண்டைக்குக் கிட்ட வந்தது. நான் எனது கண்களை வளைத்துப் பார்த்தேன். அது ஆறு அங்குல உயரமுள்ள ஒரு மனிதனாயிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். அம் மனிதன் கையில் அம்பையும் வில்லையும் முதுகில் அம்பறாத் தூணியையும் வைத்திருந்தான். அவனைப் பின் தொடர்ந்து நாற்பது பேர் வரையில் வந்தார்கள். நான் அவர்களைக் கண்ட ஆச்சரியத்தினால் பெருஞ் சத்தமிட்டேன். அவர்கள் பயந்து, பின் வாங்கி ஓடினார்கள். எனது உடலிலிருந்து தவறிக் கீழே விழுந்தமையால் பலர் காயமடைந்தார்கள் என்பதைப் பின்பு அறிந்தேன். அவர்கள் மறுபடியும் திரும்பி வந்தார்கள்; கிட்டவந்து எனது முகம் முழுவதையும் பார்த்த துணிவுடைய ஒருவன் வியப்பினால் கையை உயர்த்திக் கண்ணை விழித்தான்; அதிசயத்தால் “கெக்குணா டெகுல்” என்று சத்தமிட்டான். மற்றவர்களும் அதே சொல்லைப் பலமுறை ஒலித்தார்கள். அவர்கள் யாது கருதி அவ்வாறு சொன்னார்கள் என்று எனக்கு விளங்க வில்லை. நான் இவ்வளவுக் கும் பெரும் வேதனை யோடு கிடந்தேன். இறுதி யில் நான் விடுதலை யடைய விரும்பி ஒரு கையைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கயிறு கொடுக்கப்பட் டிருந்த முளைகளையும் பிடுங்கினேன்; எனது தலைமயிரை இழுத்துக் கட்டியிருந்த கயிற்றையும் தளர்த்தினேன். இப்பொழுது நான் எனது தலையை இரண்டு அங்குலம் மேலே உயர்த்தக் கூடியதாக விருந்தது, எனக்குக் கிட்ட நின்ற பிராணிகளைப் பிடிக்க முயன்றேன்; பிடிப்பதற்கு முன் அவை ஓடிச் சென்றுவிட்டன. இவ்வாறு நிகழ்ந்ததும் பெரிய ஆரவாரமுண்டாயிற்று. ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்களில் ஒருவன் “தல் கோபொனாக்” எனச் சத்தமிட்டுக் கட்டளையிட்டான். நூறு அம்புகள் பறந்து வந்து எனது இடது கையிற் பாய்ந்தன; அவை பாய்ந்தது பல குண்டூசிகள் பாய்ந்தது போல இருந்தது. சில எனக்கு மேலாகச் சென்றன; சில எனது முகத்திற்பட்டன; நான் முகத்தை எனது இடக்கையினால் பொத்திக் கொண்டேன். எனக்கு அதிக நோவுண்டாயிற்று. ஆகவே, நான் விடுதலையடைய முயன்றேன். அவர்கள் ஈட்டிகளாலும் அம்புகளாலும் என்னைத் தாக்கினார்கள். நான் தோலினால் செய்யப்பட்ட சட்டை தரித்திருந்தேன்; ஆகவே, அம்புகளாலும், ஈட்டிகளாலும் என்னைக் காயப்படுத்த அவர்களால் முடியவில்லை, விடுதலை அடையும் வரையும் அமைதியாக விருப்பது நன்று என்று எனக்குத் தோன்றிற்று. நான் கண்ட மனிதர் எல்லோரும் முன் நான் பார்த்தவர்கள் போன்ற சிறியவர்களாயிருந்தார்கள். அவர்கள் பெரிய படை ஒன்றைக் கொண்டு வந்தாலும் என்னால் எதிர்க்க முடியும் எனத் தோன்றிற்று. நான் அமைதியாகக் கிடந்ததும் அவர்கள் என்னைத் தாக்குவதை நிறுத்திவிட்டார்கள். அவ்விடத்திற் கேட்ட ஓசையைக் கொண்டு அங்குள்ளவர்களின் எண் அதிகரித்து விட்டதெனத்தெரிந்ததும் எனது காதுக்கு நேரே பன்னிரண்டடி தூரத்தில் ஏதோ வேலை செய்வது போன்ற சத்தம் கேட்டது. கயிறுகள் இடங்கொடுக்கக் கூடிய அளவுக்கு நான் எனது தலையைத் திருப்பிப் பார்த்தேன். அங்கு ஒன்றரை அடி உயரத்தில் ஒரு மேடை கட்டப்படுவதை நான் கண்டேன். அங்கு நான்கு பேர் நின்றனர். அவர்கள் ஏணி வழியாக அதன்மீது ஏறினார்கள். அரசினர் அலுவலாளன் போன்ற ஒருவன் அதன் மீது நின்று நீண்ட நேரம் பேசினான். அவன் பேசியவை ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. அவன் தனது பேச்சை ஆரம்பிப்பதற்கு முன் எனது தலையின் பக்கங்களிற் கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்துவிடும்படி கட்டளையிட் டான். இதனால் அவன் யாவனென்று அறிந்துகொண்டேன். பக்கத்தே நின்ற மூவரிலும் பார்க்க அவன் உயரமானவன். அவனது நெடுமை எனது நடு விரலினும் பார்க்கச் சற்று பெரியது. அவன் சொற்பொழிவாளரைப் போல் பேசினான். சில சமையங்களில் அவன் கோபமாகவும், சில சமையங்களில் சாந்தமாகவும் பேசினான். அவர்கள் என்ன சொன்னாலும் நான் கேட்டு நடப்பதாக நான் சைகைகளால் அறிவித்தேன். எனக்கு அதிகம் பசித்தது. நான் விரலை வாய்க்குள் அடிக்கடி வைத்து எனக்கு உணவு வேண்டும் எனச் சைகை செய்தேன். நான் சொன்னதை அவர்கள் தலைவன் விளங்கிக் கொண்டான். அவன் மேடையை விட்டு இறங்கினான்; எனது பக்கங்களில் பல ஏணிகளைச் சார்த்தி வைக்கும்படி சொன்னான். ஏறக்குறைய நூறு பேர் எனது வாய்க்கு நேராக ஏறி வந்தார்கள். அவர்கள் வைத்திருந்த கூடைகளில் இறைச்சியிருந்தது. அது விலங்குகளின் பின்னங்கால்களும் முன்னங்கால் களுமாயிருந்தது. அவை பறவைகளின் இறக்கைகளிலும் பார்க்கச் சிறியவை. நான் இரண்டு அல்லது மூன்று கூடை இறைச்சியை ஒரே முறை யில் உண்டேன். சிறிய மனிதர் வேகமாக உணவை எனது வாய்க்குள் கொட்டிக் கொண்டிருந்தார்கள். எனது பருமையையும், பசியின் அளவையும் கண்டு அவர்கள் மிக வியப்புக் கொண்டார்கள். தண்ணீர் வேண்டுமென்று இன்னொரு வகையாகச் சைகை செய்தேன். நான் உண்டதைப் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் எனக்குச் சிறிது நீர் பற்றாது என அறிந்தார்கள். அவர்கள் பெரிய பீப்பா ஒன்றை எனது வாய்க்கு நேராக உருட்டிக் கொண்டு வந்து அதன் வாயைத் திறந்து விட்டார்கள். நான் அதனின்று பெருகிய நீரைக் குடித்தேன். அது அரைப்புட்டி நீர் அளவு தானும் இல்லை அது முந்திரிகை இரசத்திலும் பார்க்கச் சுவையுடையதா யிருந்தது. பின்பு அவர்கள் இன்னொரு பீப்பாவைக் கொண்டு வந்தார்கள். நான் அதிலுள்ளதையும் குடித்து விட்டு இன்னும் வேண்டுமென்று சைகை செய்தேன். எனக்குக் கொடுப்பதற்கு அவர்களிடம் வேறு இருக்கவில்லை. இவ்வியப்புக்குரிய செயல்களை நான் புரிந்த பின் அவர்கள் மகிழ்ச்சியினால் ‘கெக்குனாடெகுல்’ என்று பேரொலி செய்து எனது உடல் மீது நின்று கூத்தாடினார்கள். அவர்கள் எனக்கு மேலால் முன்னும் பின்னும் போய்க்கொண்டிருக்கும்போது அவர்களில் நாற்பது அல்லது ஐம்பது பேரை ஒரே முறையில் பிடித்து நிலத்தில் எறியலாமோ என்று நினைத்தேன். நான் முன் செய்து கொண்ட வாக்குறுதியைப் பற்றியவும், அம்பு தைப்பத னால் உண்டாகிய நோவைப் பற்றியவும் ஞாபகங்கள் உடனே எனக்கு உண்டாயிற்று. 4. லில்லிபுத் சக்கரவர்த்தியின் செய்தி சிறிது நேரத்திற்குப்பின் சக்கரவர்த்தியின் அதிகாரி ஒருவன் எனக்கு முன்னால் வந்தான். அவன் பன்னிரண்டு போர் வீரர்களுடன் எனது காலில் ஏறி முகத்துக்கு நடந்து வந்தான். அவன் அரசன் எழுதி அளித்த கட்டளையை எனது கண்களுக்குக் கிட்டக் கொண்டு வந்து காட்டினான். பின்பு அவன் கோபக்குறியில்லாமல் பத்து நிமிடங்கள் வரையில் பேசி னான். பேசும் பொழுது அவன் முன்புறமாக விரலைப் பல முறைகள் சுட்டிக் காட்டினான். அவன் சுட்டிக்காட்டியது தலைநகரம் இருந்த திசையை என்று பின்பு நான் அறிந்துகொண்டேன். என்னைத் தலைநகருக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று அரசன் தீர்மானித்துவிட்டான். கட்டியிருப்பதி னின்றும் நான் விடுதலையடைய வேண்டுமெனச் சைகை காட்டினேன். அதனை அவ்வதிகாரி விளங்கிக் கொண்டான். ஒரு மறியற்காரனைப் போல் என்னைக் கொண்டுசெல்ல வேண்டுமென அவன் சொன்னான். எனக்கு அதிகம் உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டுமென்றும் எனக்கு அதிக அன்பு காட்டப்படுதல் வேண்டுமெனவும் அவன் வேறு சைகைகள் செய்து சொன்னான். எனது கட்டுகளை அறுத்துவிடலாமோ என்று இன்னும் ஒருமுறை நினைத்தேன். அப்பொழுது அம்புகளால் முன் நேர்ந்த நோவைப் பற்றிய ஞாபகம் வந்தது. ஆகவே விரும்பியபடி அவர்கள் செய்யலாமென்று அவர்கள் அறியும்படி சைகைகளால் அறிவித்தேன். உடனே அதிகாரியும் அவனுடன் வந்தவர்களும் பின்னேச் சென் றார்கள். அங்கு நின்ற மனிதர் “பொலம் செலன்” என்று செய்த சத்தம் எனது காதுகளில் விழுந்தது. எனது வலப்புறத்தில் கட்டியிருந்த கட்டுகளைப் பலர் தளர்த்தினார்கள். நான் இப்பொழுது திரும்பக் கூடியதாக விருந்தது. நான் திரும்புவதன் முன் அவர்கள் எனது முகத்திலும் கைகளிலும் வாசனை யுள்ள ஒருவகைத் தைலம் பூசினார்கள். அது அம்பு தைத்ததினால் உண்டான நோவை மாற்றிவிட்டது. இப்பொழுது நான் வசதியாகக் கிடந்து, எட்டு மணி நேரம் நித்திரை கொண்டேன். அரசன் முந்திரிகை இரசத்தில் நித்திரை கொள்ளும் மருந்து கலந்து கொடுக்கும்படி கட்டளையிட்டிருந்தமையே, இதற்குக் காரணம். தலைநகருக்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு வண்டியைச் செய்யும்படி சக்கரவர்த்தி ஐந்நூறு தச்சருக்குக் கட்டளை யிட்டிருந்தனர். அவர்கள் செய்த வண்டி நிலத்திலிருந்து மூன்றரை அங்குல உயரமும், ஏழு அடி நீளமும், நான்கு அடி அகலமும், இருபத்து நான்கு சக்கரங்களும் உடையது. நான் நித்திரை கொண்டிருந்தபோது அது எனக்கு எதிரே கொண்டு வரப்பட்டது. என்னைத் தூக்கி வண்டி மீது வைப்பதுதான் கடினமாக யிருந்தது. இதற்காக ஒரு அடி உயரமுள்ள எண்பது தூண்கள் பயன்படுத்தப்பட்டன. கித்தான் போன்று தடிப்புடைய வடங்களைக் கொளுக்கிகளாற் கொளுவிய துணி களை வேலையாட்கள் எனது கழுத்து, கைகள், உடல், கால்களைச் சுற்றி எடுத்தார்கள். தூண்களில் மாட்டப்பட்ட கப்பிகளிலுள்ள கயிறுகளைத் தொளாயிரம் பேர் இழுத்தனர். இவ்வாறு மூன்று மணி நேரத்தில் நான் வண்டியில் தூக்கி வைக்கப் பட்டுக் கட்டப்பட்டேன். நான் இவ்வாறு தூக்கப்பட்டேனென்று பிற்பாடு அறிந்தேன். இவ்வாறு தூக்கும்போது நான் நித்திரையாக விருந்தேன். அரை மைல் தொலைவிலுள்ள தலைநகருக்கு என்னை இழுத்துச் செல்வதற்கு நாலரை அங்குல உயரமுள்ள பதினையாயிரம் குதிரைகள் பயன்படுத்தப் பட்டன. பிரயாணம் தொடங்கி நான்கு மணிநேரத்தில் நான் விழித்தேன். அன்று முழுவதும் பிரயாணம் நடைபெற்றது. எனது இருபக்கங்களிலும் பக்கத்துக்கு ஐந்நூறு பேர் காவல் காத்துச் சென்றனர். பாதிப்பேர் வெளிச்சம் பிடித்துச் சென்றனர். பாதிப்பேர் நான் அசைந்தால் தாக்குவதற்கு ஆயத்த மாக அம்பும் வில்லும் பிடித்துச் சென்றனர். நாங்கள் அடுத்த நாள் மத்தி யானம் தலைநகரின் வாயிலை அடைந்தோம். அரசனும் அவனுடைய பெருமக்களும் எங்களைச் சந்திக்க வந்தார்கள். அரசன் எனது உடல்மீது ஏறுவதால் உண்டாகக்கூடிய ஆபத்தை நினைத்து அவனுடைய அதி காரிகள் அவனை என்மீது ஏற்றிப் பார்க்கவில்லை. 5. எனது வீடு வண்டி வந்து நின்ற இடத்தில் பழங்காலக் கோயில் ஒன்று இருந்தது. இப்பொழுது அது பயன்படுத்தப்படவில்லை. நான் அக் கோயிலில் தங்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. வடக்கு நோக்கியிருந்த அதன் வாயிற் கதவு நாலடி உயரமும் இரண்டடி அகலமுள்ளது. நான் இலகுவாக அதனூடாகச் செல்ல முடியும். சக்கரவர்த்தியின் வேலையாட்கள் சன்னலுக் கூடாகத் தொண்ணூற்றாறு சங்கிலிகளைக் கொண்டு வந்தார்கள். அவை ஒரு கடிகாரச் சங்கிலியளவு பருமையுடையன. அவர்கள் நான் தப்பி ஓட முடியாதபடி அவைகளால் எனது காலைச் சுற்றிக் கட்டினார்கள். ஒரு இலட்சம் பேர் வரையில் என்னைப் பார்ப்பதற்கு வந்து கூடி னார்கள். பத்தாயிரம் பேர் வரையில் காவற்காரரைத் தள்ளிவிட்டு ஏணி வழி யாக ஓட முடியாதென்று கண்டதும் வேலையாட்கள் எல்லாக் கயிறுகளை யும் அறுத்துவிட்டார்கள். நான் உடனே எழுந்து நின்றேன். நான் எழுந்து நடப்பதைக் கண்ட மக்கள் ஒருபோதுமில்லாத ஆச்சரியமடைந்தார்கள். எனது இடதுகாலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சங்கிலியின் நீளம் இரண்டடி. நான் முன்னும் பின்னும் அரைவட்டமாகச் சுழன்று கோயிலுட் சென்று நீட்டி நிமிர்ந்து படுக்கமாத்திரம் முடிந்தது. நான் அங்கு விடப்பட்டிருந்தேன். எனக்குக் கிட்டே வரமுயன்று கொண்டிருந்த மக்களைக் காவலாட்கள் பின்னே தள்ளிக் கொண்டிருந் தார்கள். கூட்டத்தில் நின்ற சிலர் என்மேல் அம்பெய்தினர். அம்புகளில் ஒன்று எனது இடது கண்ணைத் தடவிக்கொண்டு சென்றது. காவலாளியின் தலைவன் அம்பு எய்த ஆறுபேரைப் பிடித்துக் கட்டும்படி கட்டளை யிட்டான். என்னிடம் தண்டனை பெறும்படி அவர்கள் எனக்கு அருகில் தள்ளப்பட்டார்கள். நான் அவர்களை எனது வலக்கையால் எடுத்து ஐந்து பேரைச் சட்டைப்பைக்குள் போட்டேன்; மற்றவனைத் தின்னப் போவதாகப் பாசாங்கு செய்தேன். அவன் கடுமையாகக் கத்தினான். நான் எனது பேனாக்கத்தியை எடுத்ததும், அதிகாரிகள் மிகவும் பயந்தார்கள். நான் மறுபடியும் அம் மனிதனைச் சாந்தமாக நோக்கிக் கட்டுகளை அறுத்து அவனை நிலத்தில் விட்டேன். அவன் அப்பால் ஓடிச் சென்றான். மற்றவர்களையும் நான் இப்படியே செய்தேன். போர் வீரரும் மக்களும் எனது செய்கையைக் கண்டு மகிழ்ந்தார்கள். 6. எனது படுக்கையும் உணவும் இரவானதும் நான் சிறிது இளைப்பாற எனது வீட்டிற்குள் நுழைந்து நிலத்தில் படுத்தேன். அடுத்த இரண்டு வாரங்களில் சக்கரவர்த்தி எனக்கு ஓர் படுக்கையை ஆயத்தஞ் செய்து தந்தார். அறுநூறு சாதாரண படுக்கைகள் வண்டிகளிலேற்றி, எனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. அப் படுக்கைகள் நிலத்திற் பரப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் எனக்குப் போர்வைகளும், துப்பட்டிகளும் செய்தார்கள். பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஒவ்வொரு காலையிலும் நாற்பது ஆடுமாடுகளும் மற்றும் உணவுப் பொருள்களும் கொடுக்க வேண்டியிருந்தன; போதுமான உரொட்டி, முந்திரிகை இரசம் முதலியனவும் தரப்பட்டன. சக்கரவர்த்தி இவைகளின் விலையைக் கொடுத்தார். எனக்குப் பணிவிடை செய்வதற்கு அறுநூறு வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கியிருப்பதற்கு வசதியான கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அந் நாட்டவர் அணியும் உடை மாதிரியான உடுப்புகளை எனக்குத் தைப்பதற்கு முந்நூறு தையற்காரர் நியமிக்கப்பட்டனர். சச்சரவர்த்தியின் மிகவும் திறமையான ஆறு ஆசிரியர்கள் எனக்கு அவர்களின் மொழியைக் கற்பிக்கும்படி நியமிக்கப் பட்டார்கள். 7. சக்கரவர்த்தியோடு அளவளாவுதல் நான் சக்கரவர்த்தியோடு பேச ஆரம்பித்தேன். என்னை விடுதலை செய்யும்படி நான் அவரைப் பலமுறை வேண்டினேன். “சிறிது காலத்தில் விடுதலை கிடைக்கும். நீ பொறுமையுடன் இருந்து எனதும், எனது பிரஜை களதும் நல்லெண்ணத்தைப் பெறவேண்டும். என்னுடைய அதிகாரிகள் உனது சட்டைப் பைகளைப் பரிசோதனை செய்ய நீ அனுமதிக்க வேண்டும். உன்னிடம் எனது பிரஜைகளுக்கு அபாயம் விளைக்கக்கூடிய பொருள்கள் இருத்தல் கூடும்,” என்று அவர் கூறினார். “எனது சட்டைப் பைகளை உங்களுக்குக் காட்ட ஆயத்தமாயிருக்கிறேன்,” என்று நான் மறுமொழி கூறினேன். இந்நாட்டுச் சட்டப்படி தனது இரு அதிகாரிகள் என்னைப் பரிசோதிக்க வேண்டுமென்றும், என்னிடமிருந்து அவர்கள் எடுக்கும் பொருள்களை இந்நாட்டை விட்டு நான் செல்லும்போது தருவதாகத் தான் வாக்குறுதி செய்வதாகவும் அவர் கூறினார். 8. பரிசோதனை நான் இரண்டு அதிகாரிகளையும் கையால் தூக்கி, எனது சட்டைப் பைகளுக்குள் விட்டேன். இரண்டு சட்டைப் பைகளுக்குள் மாத்திரம் நான் அவர்களை விடவில்லை. அவைகளை அவர்கள் பரிசோதிப்பதை நான் விரும்பவில்லை. அவைகளுள் மற்றவர்களுக்குத் தேவைப்படாத சில பொருள்களை நான் வைத்திருந்தேன். இரண்டு மனிதர் பேனாவும், மைக் கூடும் வைத்திருந்து, எனது சட்டைப் பைகளுக்குள் கண்ட பொருள்களை எல்லாம் குறித்தார்கள். இவ் வட்டவணை சக்கரவர்த்தியிடம் காட்டப்பட்ட போது அவைகளிற் சிலவற்றைத் தம்மிடம் கொடுக்கும்படி அவர் கேட்டார். அவர் முதலில் எனது உடைவாளைத் தரும்படி சொன்னார். அது கடல் நீர் பட்டுத் துரு ஏறி இருந்தபோதும் அதன் பகுதிகள் மின்னிக் கொண்டிருந்தன. நான் அதை உறையினின்றும் எடுத்து வெய்யிலில் அங்குமிங்கும் வீசினேன். அதன் ஒளி போர்வீரரின் கண்களைக் கூசச் செய்தது; அவர்கள் ஆச்சரியத்தினாலும், பயத்தினாலும் அலறினார்கள். தைரியமுள்ள சச்சரவர்த்தி அவர்களைப் போலப் பயமடையவில்லை; வாளை உறையில் இட்டு நிலத்தில் எறியும்படி உத்தரவிட்டார். அவர் அடுத்தபடியாக எனது கைத் துப்பாக்கியைத் தரும்படி சொன்னார். நான் அதனை வெளியே எடுத்து, அதனைப் பயன்படுத்தும் வகையை விளங்கப்படுத்தினேன். நான் அதற்கு வெடிமருந்து மாத்திரம் இட்டுச் சக்கரவர்த்தியைப் பயமடைய வேண்டாமென்று சொல்லி, வானத்தை நோக்கிச் சுட்டேன். எனது வாளைக் கண்டதிலும் பார்க்க அவர்கள் பேராச்சரியமுற்றார்கள். நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தாற்போல் நிலத்தில் விழுந்தார்கள். சக்கரவர்த்தி தானும் சிறிது நேரம் பேசமுடி யாது அசைவற்று நின் றார். நான் எனது கைத் துப்பாக்கியையும், கடி காரத்தையும் சக்கர வர்த்திமுன் வைத்தேன். அவர் இரண்டு போர் வீரர்களைப் பார்த்துக் கடிகாரத்தை ஒரு காவு தடியிலிட்டுத் தூக்கி வரும்படி சொன்னார். அவர் கடிகாரம் செய்யும் சத்தத்தைக் கேட்டு வியப்படைந்தார். அவர் தனது அறிஞர்களை அழைத்துக் கடிகாரத்தைப்பற்றி அவர்கள் கருத்துக்களை வினாவினார். அவர்கள் கூறியவை உண்மைக்கு மாறுபட்டவை. எனது வாள், கைத்துப் பாக்கி, வெடிமருந்து, துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவை அரசனது களஞ் சியத்துக்குக் கொண்டு போகப்பட்டன. மற்றப் பொருள்கள் என்னிடமே விடப்பட்டன. 9. எனது விடுதலை எனது நன்னடத்தையைக் கண்டு சக்கரவர்த்தியும், அதிகாரிகளும், பிரஜைகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் விரைவில் விடுதலை அடைவதை எதிர்பார்த்திருந்தேன். நான் எனது விடுதலையைப்பற்றிச் சக்கரவர்த்தியிடம் பலமுறை வேண்டியிருந்தேன். இறுதியில் அரசன் எனது வேண்டுகோளைத் தனது மந்திரிமாரிடம் கூறினான். ஒருவன் மாத்திரம் எனது வேண்டுகோளை எதிர்த்து நின்றான் மற்றவர்கள் எல்லோரும் எனது விடுதலைக்குச் சாதகமாக வாக்களித்தனர். பாதகமாக நின்றவர் சில நிபந்தனைகளின் பேரில் நான் விடுதலையடைய வேண்டும் என மொழிந்தனர். அவர்களது நிபந்தனைகளாவன:- 1. இம் மனித மலை எங்கள் அனுமதியின்றி எங்கள் நாட்டைவிட்டுச் செல்லுதலாகாது. 2. அவர் எங்கள் உத்தரவின்றி நகருக்குள் வருதலாகாது; வருங் காலங் களில், இரண்டு மணிநேரம் முன்னதாக அறிவித்தல் வேண்டும். வருகையை அறிவிப்பின், மக்கள் தத்தம் வீடுகளில் தங்கியிருப் பார்கள். 3. அவர் நடக்கும்போது மக்கள் மீதாவது குதிரை அல்லது வண்டிகள் மீதாவது உழக்குதல் கூடாது. அவைகளை உத்தரவின்றிக் கையில் எடுக்கவும் கூடாது. 4. மனித மலை பெரிய வீதிகளில் மாத்திரம் நடத்தல் வேண்டும் அவர் பயிர்களின்மீது படுத்தல் கூடாது. 5. அவர் அவசியமான செய்திகளைத் தொலைவிடங்களுக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும். 6. அவர் பிளவிஸ்குத் தீவிலுள்ள எங்கள் எதிரிகளுக்கு மாறாக எங் களுக்கு உதவி அளித்து, அவர்கள் கட்டிவரும் போர்க் கப்பல்களை எங்களிடம் அளித்தல் வேண்டும். 7. சக்கரவர்த்திக்காகக் கட்டப்படும் கட்டடங்களில் வைக்க வேண்டிய பெரிய கற்களை இம் மனித மலை தூக்கி வைக்க வேண்டும். 8. இம் மனித மலை இரண்டு மாதத்துக்குள் எங்கள் இராஜ்யத்தைச் சுற்றி அளந்து, தனது காலால் எத்தனை அடி என்று சொல்லுதல் வேண்டும். இந் நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் இம் மனிதமலைக்கு தங்கள் 1,728 பிரஜைகளுக்குப் போதுமான உணவு நாள்தோறும் கொடுக்கப்படும் நான் இக் கட்டுப்பாடுகளுக்குச் சம்மதமளித்தேன். உடனே எனது கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. நான் விடுதலையடைந்தேன். எனக்கு ஏன் 1,728 பிரஜைகளின் உணவு அளிக்கப்படவேண்டும்? என ஒரு நண்பனைக் கேட்டேன். “நீ எங்களைப்போலப் பன்னிரண்டு பங்கு உயரமுடையவன். ஆகவே உனது உடல் எங்களைப் போன்ற (12x12x12அல்லது) 1,728 பேரின் உடலுக்குச் சரி என்று எங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்,” என்று அவன் சொன்னான். 10. லில்லிபுத்துக்கும் அயல்நாட்டுக்கும் பகை இரண்டு வாரங் கழித்து ஒரு காலையில் ரெல்ரெசன் என்னும் ஒரு அதிகாரி எனது வீட்டுக்கு வந்தான். அவன் வீட்டுக்குத் தொலைவில் காத்து நிற்கும்படி வண்டியை நிறுத்தி விட்டு, தன்னோடு ஒரு மணி நேரம் செல விட முடியுமோ என்று என்னைக் கேட்டான். நான் அதற்கு இசைந்து, “நான் படுத்திருக்கிறேன்; நீ வேண்டியவரை எனது காதுக்குள் கூறலாம்,” என்று சொன்னேன். “அப்படி வேண்டியதில்லை. நீ என்னைக் கையில் தூக்கிப் பிடித்தால் போதும். அந்நியருக்கு இந்நாடு சமாதானமுடையது போலத் தோன்றலாம். பிளிவிஸ்கு என்னும் மக்கள் இந் நாட்டைத் தாக்குவார்கள் என்னும் பயம் இருந்து வருகின்றது. நாம் முட்டைகளைத் தலைப்பக்கத்தால் உடைத்துத் திறப்பது வழக்கம். எங்கள் சக்கரவர்த்தியின் பாட்டன் சிறுவனா யிருந்த போது அவ்வாறு செய்து கையை வெட்டிக் கொண்டார். இக் காரணம் பற்றி முட்டைகள் வாற்பக்கத்தால் திறக்கப்பட வேண்டுமென்று சக்கரவர்த்தியின் தந்தை கட்டளை பிறப்பித்தார். இது காரணமாக, மக்க ளிடையே பல குழப்பங்களும் சண்டைகளும் இருந்து வந்தன. பலர் பிளி விஸ்குத் தீவுக்குச் சென்றனர். அங்கு அந் நாட்டுச் சக்கரவர்த்தி அவர் களுக்கு ஆதரவளித்தார்.” “பின்பு இரு நாடுகளுக்கிடையில் சண்டைமூண்டு, மூன்று ஆண்டுகள் நடைபெற்றது. நாங்கள் நாற்பது பெரிய கப்பல்களையும், பல சிறியவற்றையும், முப்பதினாயிரம் வீரரையும் இழந்தோம். பகைவரின் நட்டம் இதற்கு அதிகமாக இருக்கலாம். இப்பொழுது அவர்கள் எங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்குப் பெரிய கடற்படை ஒன்றை ஆயத்தஞ் செய்துள்ளார்கள். உனது வலிமையையும், துணிச்சலையும் அறிந்த எங்கள் சக்கரவர்த்தி இவ்வரலாற்றை உன்னிடம் கூறும்படி என்னை விடுத்தார்,” என்று சொன்னான். விரோதிகளின் செயல்களில் அன்னியன் ஒருவன் தலையிடுதல் முறையாகாது. அவனுக்கும், நாட்டுக்கும் ஆபத்து வரும்போது நான் தற்காப்பின் பொருட்டுப் போரிட ஆயத்தமாக இருக்கிறேன் என்று அரசனிடம் கூறு,”என்று நான் சொன்னேன். பிளிவிஸ்குச் சக்கராதிபத்திய மென்பது ஒரு தீவு. எண்ணூறு அடி அகலமும், மத்தியில் ஆறடி ஆழமுமுள்ள ஒரு கடல் லில்லிபுத்தையும் பிளிவிஸ்கையும் பிரிக்கின்றது. பகைவரின் போர்க் கப்பல்கள் எல்லாவற்றையும் கொண்டுவருவ தற்கு நான் எண்ணியிருந்த உபாயத்தைப்பற்றிச் சக்கரவர்த்திக்கு அறிவித் தேன். நான் பிளிவிஸ்குக்கு எதிரேயுள்ள வடகிழக்குக் கரைக்கு நடந்து சென்றேன்; அங்குள்ள சிறிய குன்று ஒன்றின் பின்புறத்தில் படுத்திருந்து எனது தொலைவு நோக்கியால் பகைவரின் கப்பல்களைப் பார்த்தேன். அங்கு ஐம்பது போர்க் கப்பல்களும், போர் வீரரைக் கொண்டு செல்லும் வேறு பல கப்பல்களும் இருந்தன. நான் பின்பு வீட்டுக்குத் திரும்பிச்சென்று, மிக நீளமான தந்திக் கம்பிகளையும் இரும்புச் சலாகைகளையும் கொண்டுவரும்படி கட்டளை யிட்டேன். தந்திக் கம்பியின் தடிப்பு ஒரு பின்னல் நூலளவும், சலாகைகளின் நீளமும் தடிப்பும் ஒரு பின்னலூசியளவுமாக விருந்தன. நான் மூன்று இரும்புச் சலாகைகளை ஒன்றாக வைத்து மூன்றாக மடித்த கம்பியால் சுற்றினேன். பின்பு நான் இரும்புச் சலாகைகளின் முனைகளை வளைத்துக் கட்டினேன். இவ்வாறு ஐம்பது கொளுவிகளைச் செய்துகொண்டு, நான் வடகிழக்குக் கரைக்குச் சென்றேன். நான் எனது சட்டை, சப்பாத்து, கால் மேசுகளைக் களைந்துவிட்டு, கடல் பெருகுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன் கடலுக்கு ஊடாக நடந்து சென்றேன். நான் நடக்கக் கூடிய அளவு கெதியாக நடந்து சென்று, நடுவில் அறுபதடி தூரம் நீந்திச் சென்றேன். நான் கப்பல்கள் நிற்கும் இடத்தை அரைமணி நேரத்துக்குள் அடைந்தேன். 11. நான் பகைவரின் கப்பல்களைக் கொண்டு வந்தேன் என்னைக் கண் டதும் பகைவர் பெரும் அச்சம் அடைந்தார் கள். அவர்கள் கப்பல் களினின்றும் நீரில் குதித்துக் கரைக்கு நீந்திச் சென்றனர். அவ் வாறு சென்றவர்களின் எண்ணிக்கை முப்பதி னாயிரத்துக்குக் குறை யாது. நான் எனது கொளுவிகளை எடுத்து ஒவ்வொரு கப்பலின் முன்புறத்திலும் கொளுவிக் கம்பிகளையெல்லாம் ஒன்று சேர்த்து முடிந்தேன். நான் இவ்வாறு செய்து கொண்டிருந்தபோது பகைவர் பல ஆயிரம் அம்புகளை எய்தனர். அவைகளிற் பல எனது கைகளிலும், முகத்திலும் தைத்தன. அவை எனக்கு நோவை உண்டாக்கியது மல்லாமல், எனது வேலையையும் தாமதப்படுத்தின. நான் எனது கண்களைப் பற்றி மிகவும் பயமடைந்தேன். எனது தோற்சட்டைகக்குள் இருந்த மூக்குக் கண்ணாடியைப்பற்றிய நினைவு எனக்குச் சடுதியாக வந்தது. உடனே நான் அதனை எடுத்து மூக்கில் வைத்துக் காதுகளில் மாட்டிக்கொண்டேன். அம்புகளைச் சட்டை பண்ணாது எனது வேலையைச் செய்துகொண்டிருந்தேன். பல அம்புகள் எனது மூக்குக் கண்ணாடியிற் பட்டன; ஆனால், அதனைச் சிறிது ஆடச் செய்தனவன்றி வேறொன்றும் செய்யவில்லை. நான் எல்லாக் கொளுவிகளையும் கட்டியிருந்த கம்பிகளை முடிச் சாக முடிந்துகொண்டு, இழுக்கத் தொடங்கினேன். ஒரு கப்பலாவது அசைய வில்லை. அவை நங்கூரமிடப்பட்டிருந்தமையே அதற்குக் காரணம். இப் பொழுது நான் செய்ய வேண்டிய துணிச்சலான வேலை எஞ்சியிருந்தது. நான் முடிச்சை விட்டுவிட்டுக் கத்தியினால் நங்கூரக் கயிறுகளை வெட்டிப் பகைவரின் கப்பல்களை இழுத்துச் சென்றேன். பிளிவிஸ்கு மக்கள் யான் செய்வது என்ன என்று முதலில் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆச்சரியத்தால் பேசாதிருந்தார்கள். நான் நங்கூரக் கம்பிகளை அறுப்பதைக் கண்ட போது நான் கப்பல்களை விட்டுச் செல்லப் போவதாக எண்ணினார்கள். எல்லாக் கப்பல்களும் நகர்ந்து செல் வதையும் நான் இழுத்துச் செல்வதையும் கண்டபோது அவர்கள் அச்சத் தாலும், கோபத்தாலும் பெரும் ஆராவாரஞ் செய்தார்கள். நான் அபாயத்தி னின்றும் வெளியேறிய பின், நின்று எனது முகத்திலும் கைகளிலும் தைத் திருந்த அம்புகளைப் பிடுங்கிக் காயங்களில் தைலம் பூசினேன். பின்பு நான் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி விட்டுக் கடல் வற்றுவதை நோக்கி ஒரு மணி நின்றேன். பின்பு நான் கப்பல்களுடன் லில்லிபுத்துத் துறைமுகத்தை அடைந்தேன். 12. சக்கரவர்த்தி என்னை வரவேற்றார் சக்கரவர்த்தியும் அதிகாரிகளும் எனது வருகையை நோக்கிக் கடற் கரையில் நின்றார்கள். சிறிது நேரத்தில் நான் கூப்பிடு தொலைவில் வந்தேன். அப்பொழுது நான் கப்பல்கள் கட்டப்பட்டிருந்த தந்திக்கம்பி களைப் பிடித்துக்கொண்டு, “லில்லிபுத் சக்கரவர்த்தி வாழ்க!” என்று சொல்லிச் சத்தமிட்டேன். சக்கரவர்த்தி என்னை வரவேற்று எனக்கு ‘நார்டாக்’ என்னும் பட்டம் அளித்தார். நார்டாக் என்பது எல்லாப் பட்டங்களிலும் உயர்வானது. நான் பகைவரின் எல்லாக் கப்பல்களையும் கொண்டுவர வேண்டு மென்று சக்கரவர்த்தி விரும்பினார். அவர் பிளிவிஸ்கு மக்கள் எல்லோரை யும் தன்னாணைக்குட்படுத்த வேண்டுமென்றும், எல்லோரையும் முட்டை களை வாற் பக்கத்தால் உடைக்கச் செய்து, தான் உலக சக்கரவர்த்தியா யிருக்க வேண்டுமென்றும் விரும்பினார். நான் அவர் கருத்தோடு மாறுபட்டேன். மந்திரிமாரிற் பலரும் எனது கருத்துடையவர்களாயிருந்தனர். சக்கரவர்த்தியின் எண்ணத்தை நான் நிறைவேற்ற உடன்படாதபடியால், நான் செய்த வேலைகளுக்குப் பெரிய மதிப்பு உண்டாகவில்லை. மூன்று வாரங்களுக்குப்பின் பிளிவெஸ்குச் சக்கரவர்த்தியிடமிருந்து சமாதானம் கேட்டுத் தூது வந்தது. வேலையின் முக்கியத்தையும், தலை வரின் பெருமையையும் காட்டும் பொருட்டு, ஆறு அதிகாரிகளும், ஐந்நூறு பேரும் வந்திருந்தார்கள். நான் லில்லிபுத் அரசனோடு சமாதான உடன் படிக்கை செய்வதற்கு அவர்களுக்கு உதவி புரிந்தேன். ஆகவே, அவர்கள் சக்கரவர்த்தியின் பெயரால் என்னை பிளி வெஸ்குவுக்கு அழைத்தார்கள். நான் செல்வதற்கு லில்லிபுத் சக்கரவர்த்தியிடம் உத்தரவு கேட்ட போது அவர் மனமின்றி விடை கொடுத்தார். இதற்கு நான் காரணமறிய முடியவில்லை. பிளிவெஸ்கு மக்களோடு பழகியது இராச விசுவாசமின்மை எனக் கருதப்பட்டதெனப் பின்பு அறிந்தேன். பொக்கிஷ அதிகாரி எனது வகையில் பத்துலட்ச தங்க நாணயங்கள் செலவாகியுள்ளன என்றும், என்னைக் கூடியளவு விரைவில் வெளியே அனுப்பிவிட வேண்டுமென் றும் சக்கரவர்த்தியிடம் கூறினார். 13. அதிகாரியின் சந்திப்பு நான் பிளிவெஸ்குச் சக்கரவர்த்தியைச் சந்திக்க ஆயந்தஞ் செய்து கொண்டிருக்கும்போது என்னுடன் நட்புள்ள ஒரு அதிகாரி இரா வேலை யில் மூடிய பல்லக்கில் எனது வீட்டிற்கு வந்தான். பல்லக்குத் தூக்கி வந்தவர் களை அவன் தூர அனுப்பிவிட்டான். நான் பல்லக்கோடு அவனை தூக்கி எனது சட்டைப்பைக்குள் வைத்தேன். நான் எனது வீட்டுக் கதவை தாழ்ப் பாளிட்டபின் பல்லக்கை மேஜை மீது வைத்து, அதற்குப் பக்கத்தில் இருந் தேன். அவன் சொன்னதாவது “உன்னை என்ன செய்யவேண்டுமென்று சக்கரவர்த்தி தமது மந்திரிமாரோடு ஆலோசனை செய்து, இரண்டு நாட் களுக்கு முன் ஒரு முடிவுக்கு வந்தார். பொல்கோலம் என்பவன் உனது எதிரி. அவனும் மற்ற அதிகாரிகளும் உன்னை இராச விசுவாசமில்லாமைக்காகக் குற்றஞ்சாட்டினார்கள். உனது வீட்டிற்கு நெருப்பு வைக்க வேண்டுமென்றும், உனது முகத்திலும், கைகளிலும் இருபதினாயிரம் வீரரை அம்பு எய்யும்படி செய்து, உனது உடலை கிழித்துக் கொல்ல வேண்டுமென்றும், பொக்கிஷ அதிகாரியும் கடற்படை அதிகாரியும் கூறினார்கள். சக்கரவர்த்தி உன்னைக் கொல்லுதல் ஆகாது என்று தீர்மானஞ் செய்தார். அப்பொழுது கடற்படை அதிகாரி உனது கண்களை எடுத்துவிட வேண்டுமென்றும், கண்களை எடுத்துவிட்டால் பலம் குறைந்துவிடும் என்றும், அதனால் நீ சக்கரவர்த் திக்குப் பயனாக மேலும் இருப்பாய் யென்றும் கூறினான். பின்பு பொக்கிஷ அதிகாரி பேசினான். உணவைக் குறைத்து வந்தால் இறுதியில் நீ பலவீனத் தால் இறந்துவிடுவாய் என அவன் கூறினான். இவ்வாலோசனை ஒப்புக் கொள்ளப்படவில்லை. உன்னைச் சக்கரவர்த்தி உயிர் தப்ப வைத்த செய்தியைச் சொல்லுவதற்குக் கடற்படை அதிகாரி உன்னிடம் மூன்று நாட் களுள் வருவான். அவ்வாறு அரசன் செய்ததற்குப் பதில் இருபது போர் வீரர் உனது கண்களுள் அம்பை எய்து, கண்களைப் பிடுங்குவதற்கு நீ நிலத் தில் படுத்திருக்கவேண்டுமென்றும் கேட்பான். என்ன செய்ய வேண்டுமென் பதை நீயே ஆலோசித்து முடிவு செய்தல் வேண்டும் நான் வந்தது போல இரகசியமாக செல்லுதல் வேண்டும்” இவ்வாறு சொன்னதும் அவன் சென்று விட்டான். சக்கரவர்த்தியின் செய்கையில் ஏதும் நலம் உள்ளதோ என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் விடுதலையடைந்திருக் கும் போது லில்லிபுத்தர் எல்லோரும் திரண்ட போதும் என்னை வெல்லுதல் முடியாது; நான் அவர்களுடைய நகரைக் கற்களை எறிந்து நொறுக்கிவிட முடியும். சக்கரவர்த்தி செய்து கொடுத்த வாக்குறுதியை நினைத்து அவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. நான் அவரிடமிருந்து நார்டாக் என்னும் உயர்ந்த பட்டத்தைப் பெற்றதையும் நான் மறக்கவில்லை. சக்கரவர்த்தி பிளிவிஸ்குக்குச் செல்ல அளித்த அனுமதியை வாய்ப் பாகக் கொண்டு நான் எங்கள் கப்பல்கள் கிடந்த பக்கமாகச் சென்றேன். நான் ஒரு பெரிய போர்க் கப்பலில் தந்திக் கப்பல் ஒன்றைக் கட்டினேன்; நங்கூ ரத்தை உயர்த்திய பின் எனது உடைகளை அதனுள் போட்டேன். நான் அதனை இழுத்துக் கொண்டு நடந்தும் நீந்தியும் பிளிவிஸ்குத் துறை முகத்தை அடைந்தேன். என்னை எதிர்பார்த்திருந்த மக்கள் தலைநக ருக்குச் செல்வதற்கு இரண்டு வழிகாட்டிகளை அனுப்பினார். 14. நான் தப்பிச் சென்றமை பிளிவிஸ்க்கை அடைந்து மூன்று நாட்களுக்குப் பின் வடகிழக்குக் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது கடலில் ஒரு மைல் தூரத்தில் கவிழ்ந்து கிடக்கும் படகைப் போன்ற ஒன்று தெரிந்தது. நான் எனது சப்பாத் தையும் கால் மேசுகளையும் கலைந்து விட்டு, நானூறு முழம் நடந்து சென் றேன். அது உண்மையாகவே ஒரு படகாயிருப்பதைக் கண்டேன். அது ஒருபோது கப்பலிலிருந்து புயலால் அடித்துக் கொண்டு வரப்பட்டிருக்க லாம். அது திரைகளின் வேகத்தினால் கிட்டக்கிட்ட வந்துகொண்டிருந்தது. நான் உடனே பட்டினத்திற்குத் திரும்பி வந்து இருபது பெரிய கப்பல் களையும், மூவாயிரம் கப்பற்காரரையும் தரும்படி சக்கரவர்த்தியிடம் கேட் டேன். கப்பல்கள் வந்தன. படகுக்கு நூறு மார் தூரமிருக்கும் மட்டும் நான் நடந்து சென்றேன். பின்பு நான் நீந்திச் சென்று படகை அடைந்தேன். பின்பு கப்பற்காரர் தந்திக் கம்பியை என்னிடம் எறிந்தார்கள். நான் அதன் முனையைப் படகில் கட்டினேன். அதன் மற்ற முனை கப்பல் ஒன்றில் கட்டப் பட்டது. நான் படகிற்குப் பின்னால் நீந்திக் கொண்டும் படகை முன்னால் தள்ளிக் கொண்டும் நிலம் காலுக்கு எட்டுமட்டும் சென்றேன். இப்பொழுது கடினமான வேலை முடிந்தது. நான் பின்பு வேறு கம்பிகளை எடுத்து வேறு ஒன்பது கப்பல்களோடு படகை தொடுத்தேன். இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும் கரையை அடைந்தோம். அங்கு வந்ததும் நான் படகில் ஏறி இரண்டாயிரம் மனிதரின் உதவியோடு அதனைப் புரட்டினேன். அது அதிகம் பழுதடையவில்லை. சக்கரவர்த்தியைப் பார்த்து நான் எனது தாய் நாட்டுக்குச் செல்வதற்கு என்னை படகிலேற்றி ஓரிடத்தில் விடும்படியும் படகில் வேண்டிய பொருள்களை நிரப்பிவிடும்படியும் கேட்டேன். “நான் உன்னை இழந்து போவதைப் பற்றி துயர் அடைகின்றேன். ஆனால் நான் உனது விருப்பத்தை மறுத்தல் முடியாது,” என்று சக்கரவர்த்தி பதிலளித்தார். 15. லில்லிபுத் சக்கரவர்த்தியின் கவலை நான் நீண்ட காலம் திரும்பி வாராததைக் குறித்து லில்லிபுத் சக்கர வர்த்தி கவலையடைந்தார். அவர் தமது அதிகாரி ஒருவர் மூலம் பிளி வெஸ்குச் சக்கரவர்த்திக்கு செய்தி அனுப்பியிருந்தார். அவன் கூறியதாவது, “எனது சக்கரவர்த்தி இவனுடைய கண்களை பிடுங்கி விடுவது அளவில் திருப்தி அடைவார். இவன் நியாயத்தினின்று தப்பி விட்டான். தண்டிப்ப தற்கு நீங்கள் இவனை மறியற்காரனாக அனுப்பி வைக்கவேண்டும். ” பிளிவெஸ்குச் சக்கரவர்த்தி இச் செய்தியை மூன்று நாட்களாக ஆலோசித்தார். பின்பு அவர் கூறியது வருமாறு: “எனது நண்பனாகிய லில்லிபுத் சக்கரவர்த்தி மனித மலையை மறியல் பிடிப்பது முடியாத காரியம். அவன் பெரிய படகு ஒன்றைக் கண்டு அதனை வைத்திருக்கின் றான். அது அவனைக் கடலிற் கொண்டு செல்லத்தக்கது. சில நாட்களில் இரு நாடுகளும் அபாயமான இவ்வகை விருந்தாளியினின்று விடுதலை யடையும் என்று நம்புகிறேன்.” எனது கப்பலுக்குப் பாய்ச் சீலை அமைப்பதற்கு ஐந்நூறு கப்பற்காரர் வேலை செய்தார்கள். பாய்ச்சீலை கட்டுவதற்கு அவர்களின் கயிறுகளில் இருபது அல்லது முப்பதை ஒன்றாகத் திரித்தேன். ஒரு பெரிய கல் நங்கூரமாகப் பயன்பட்டது. துடுப்புகளும் பாய்மரமும் செய்வதற்குப் பெரிய மரங்களை வெட்டச் சக்கரவர்த்தியின் தச்சர் உதவி புரிந்தார்கள். 16. நான் தாய்நாடு திரும்பியது ஒரு மாதத்தில் எல்லாம் ஆயத்தமாகிவிட்டன. சக்கரவர்த்தி இருபது பொன் முடிப்புகளையும் தமது உருவப் படத்தையும் தந்தார். நான் படகில் நூறு மாடுகளதும் முந்நூறு ஆடுகளதும் இறைச்சியையும், போதிய ரொட்டி யையும், தண்ணீரையும் ஏற்றினேன். நான் எனது நாட்டுக்குக் கொண்டு செல்ல நினைத்து ஆறு பசுக்களையும் இரண்டு எருதுகளையும் பல ஆடு களையும் படகில் ஏற்றினேன். நான் மக்களில் பன்னிருவரைக் கொண்டு செல்ல விரும்பினேன்; சக்கரவர்த்தி அதற்கு உடன்படவில்லை. நான் 1701ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி காலை ஆறு மணிக்குப் புறப்பட்டேன். மூன்றாவது நாள் தென்கிழக்குத் திசையில் ஒரு கப்பல் போய்க்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். நான் உறத்துச் சத்தமிட்டேன்; மறுமொழி கிடைக்கவில்லை. அரைமணி பொறுத்துக் கப்பல் கொடி தெரிந்தது. வெடி கேட்டது. நான் அப்பொழுது அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. கப்பல் பாய்களைத் தாழ்த்தி நின்றது. நான் கப்பலை மாலை ஐந்து மணிக்கும் ஆறு மணிக்கும் இடையில் அடைந்தேன். கப்பலின் கொடி ஆங்கிலக் கொடியாயிருந்தது கண்டு நான் மகிழ்ந்தேன். நான் ஆடுகளையும் மாடுகளையும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு படகிலிருந்த சிறிது உணவோடு கப்பலில் ஏறினேன். அங்கு ஐம்பது பேர் இருந்தார்கள். அவர்களுள் பீற்றர் வில்லியம் என்பவர் எனக்கு முன் அறிமுகமானவர். அவர் என்னைப்பற்றிக் காப்டனிடம் சொன்னார். அவர் என்னிடம் மிக அன்பாயிருந்தார்; நான் எங்கிருந்து வருகின்றே னெனத் தான் அறிய விரும்புவதாகக் கூறினார். நான் எனது வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன். நான் பைத்தியங்கொண்டிருக்கிறேனென அவர் நினைத்தார். அதனை அறிந்ததும் நான் பிளிவெஸ்குச் சக்கரவர்த்தி யின் பொன் முடிப்புகளையும் உருவப்படத்தையும் அந் நாட்டின் புதுமை யான பொருள்களையும் காண்பித்தேன். நான் அவரிடம் இரண்டு பொன் முடிப்புகளைக் கொடுத்து, இங்கிலாந்தை அடைந்ததும் ஒரு பசுவைத் தருவதாகச் சொன்னேன். 1702ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நான் இங்கிலாந்தை அடைந்தேன். கப்பலில் எலி ஒன்று எனது ஆடுகளில் ஒன்றைக் கொண்டு போய்விட்டது. எனது ஆடு மாடுகளை நான் கரைக்குக்கொண்டு சென்று மக்களுக்குக் காட்டினேன். நான் இரண்டாவது பயணத்தைத் தொடங்கு வதன் முன் அவற்றை அறுநூறு பவுனுக்கு விற்றேன். நான் எனது மனைவி மக்களுடன் இரண்டு மாதங்கள் நின்றேன். அன்னிய நாடுகளைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பம் என்னை நீண்ட காலம் தங்கவிடவில்லை. 17. பிரப்டிநாக் யாத்திரை நான் எனது தாய் நாட்டை 1702ஆம் ஆண்டு சூன் மாதம் 20ஆம் தேதிவிட்டு இந்தியாவிலுள்ள சூரத் பட்டினத்திற்குப் பயணமானேன். நன்னம்பிக்கை முனையை அடையும் வரையும் காற்று சாதகமாயிருந்தது. அங்கு நல்ல தண்ணீர் எடுப்பதற்காக நாங்கள் தாமதித்தோம். நாங்கள் மட காசிகர் நீரணையைத் தாண்டினதும் பலத்த காற்று கிளம்பி எங்களை இருபது நாட்களாக மொலுக்காத் தீவுகளுக்குக் கிழக்கே கொண்டு சென்றது. பின்பு காற்று அமர்ந்தது. அப்பொழுது நான் மகிழ்ச்சியடைந்தேன். அக் கடலில் பயணஞ்செய்து பழகிய கப்பல் மாலுமி வரவிருக்கும் புயல் காற்றைச் சமாளிப்பதற்கு ஆயத்தமாகும்படி சொன்னார். அவர் கூறிய படியே அடுத்த நாள் புயல்காற்று கிளம்பிற்று. இப் புயல் காற்றினால் நாங்கள் கிழக்கே ஆயிரத்து நூறு மைல் தூரம் கொண்டு செல்லப்பட்டோம். ஆகவே, அங்கிருந்த மிக அனுபவம் வாய்ந்த மாலுமிகளாலும் நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கூற முடியவில்லை. 18. நான் தீவில் இறங்கியது 1703ஆம் ஆண்டு சூன் மாதம் 17ஆம் தேதி நாங்கள் ஒரு பெரிய தீவைக் கண்டோம். எங்கள் மாலுமி தமது ஆட்களில் பன்னிருவரைத் தண்ணீர் கொண்டுவரும்படி பீப்பாக்களுடன் அங்குப் போக்கினார். நானும் அவர்களோடு செல்லலாமோ என்று கேட்டேன். நாங்கள் தரையை அடைந்த போது அங்கு ஆறோ ஊற்றுக்களோ காணப்படவில்லை. என்னுடன் வந்த வர்கள் கடற்கரையில் எங்காவது நல்ல தண்ணீர் கிடைக்குமோ என்று அறிய அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள். நான் எதிர்ப்புறமாக ஒரு மைல் தூரம் நடந்து சென்றேன். அங்கு மரஞ்செடிகள் காணப்படவில்லை; பாறைகள் கிடந்தன. நான் இப்பொழுது களைப்படையத் தொடங்கியமையால் திரும்பி னேன். கடல் நன்றாகத் தெரிந்தது. என்னுடன் கூட வந்தவர்கள் படகில் ஏறி உயிர் தப்புவதற்காகக் கப்பலுக்கு விரைவாகச் சென்று கொண்டிருந்தார்கள். நான் சத்தமிட்டு அவர்களை அழைக்கலாமென்று நினைத்தபோது அவர் களைப் பின்தொடர்ந்து கூடியளவு வேகமாகச் செல்லும் ஒரு பிராணியை நான் கண்டேன். கடலில் செல்லமுடியாதபடி பாறைகள் இருந்தபடியால் இப் பிராணி யால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை என நான் பின்பு அறிந்தேன். நான் அவ்விடத்தில் நிற்கப் பயந்து, வந்த வழியே ஓடினேன். பின்பு நான் ஒரு உயர்ந்த குன்றில் ஏறினேன். அங்கு நின்று, அவ்விடத்தின் காட்சி களைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. அவ்விடங்கள் பயிரிடப்பட் டிருந்தன. புற்கள் இருபது அடி உயரம் வரையில் இருப்பதைக்கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். நான் பெரும்பாதை என்று நினைத்து ஒரு இடத்துக்கு வந்தேன். அது வயல்களுக்கூடாகச் செல்லும் கால்பாதை. இப் பாதை வழியாக நான் சிறிது தூரம் நடந்து சென்றேன். நான் இருபுறங்களிலும் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. இப்பொழுது அங்கு அறுவடைக் காலம். தானியப் பயிர்கள் நாற்பதடி வளர்ந்திருந்தன. ஒரு மணி நேரம் நடந்து நான் வயலின் அந்தத்தை அடைந்தேன். நான் வேலியில் ஒரு வெளியைப் பார்க்கலாமென்று முயன்றேன். அப்பொழுது எங்கள் படகுக்குப் பின்னால் ஓடிய மிகப் பெரிய பிராணியைப் போன்ற ஒரு மனிதன் அடுத்த வயலில் நிற்பதை நான் கண்டேன். அவன் ஒரு தேவாலயத்தின் உச்சியளவு உயரமுடையவனா யிருந்தான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பத்தடி தூரத்தைத் தாண்டினான். எனக்கு மிக வியப்பும் பயமும் உண்டாயின. நான் பயிர்களுள் மறையலாமென்று ஓடிச் சென்றேன். அவன் அங்கு நின்று கூப்பிட்ட சத்தம் இடி ஓசைபோல் இருந்தது. பின்பு அவனைப் போன்ற பிரம்மாண்டமான எட்டுப் பேர் தானியம் அறுக்கும் அறிவாள்களுடன் வந்தனர். இவர்கள் முன் குறிப்பிட்டவனைப் போல நன்றாக உடுத்திருக்கவில்லை. இவர்கள் அவனது வேலையாட்கள் போல் காணப்பட்டார்கள். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இவர்கள் நான் மறைந்திருந்த பக்கத்தே தானியத் தாள்களை அறுத்தார்கள். நான் என்னால் கூடியளவு அவர்களுக்குத் தொலைவில் சென்றேன். தானியத் தாள்கள் ஒன்றிலிருந்து ஒன்று ஒரு அடிக்குக் குறையாத தூரத்தில் இருந்தமையால் நான் நடந்து செல்வது மிக்க கடினமாக விருந்தது. அருவி வெட்டும் ஒருவன் எனக்கு இருபதடி தூரத்தில் வந்து விட்டான். அவன் அடுத்த அடி எடுத்து வைத்தால் நான் அவனுடைய காலின் கீழ் அகப்பட்டு நசித்து விடுவேன் அல்லது அரிவாளினால் இரண்டு துண்டுகளாக அரியப் படுவேன் எனப் பயந்தேன். அவன் அடுத்த அடி எடுத்து வைக்குமுன் நான் என்னால் கூடியளவு உரக்கச் சத்தமிட்டேன். அப் பெரிய பிராணி தன்னைச் சுற்றிச் சிறிது நேரம் பார்த்தபின் நான் நிலத்திற்கிடப்பதைக் கண்டது. அவன் அபாயம் விளைக்கும் ஒரு பிராணியைப் பிடிக்கப் பார்ப்பது போல என்னைப் பிடிக்கப் பார்த்தான். பின்பு எனது முதுகைப் பிடித்துத் தூக்கி என்னை நன்றாகப் பார்ப்பதற்காகத் தனது கண்களுக்கு ஆறடி தூரம் கிட்டக் கொண்டு வந்தான். நான் அவனது எண்ணத்தை அறிந்து கொண் டேன். நான் இப் பொழுது அறுபது அடி உயரத்தில் இருந்தேன். அங்கு நின்று விழுந் தால் இறந்து விடுவேன் என்னும் அச்சத்தினால் நான் அசையவில்லை. நான் கண்ணை நிமிர்த்திச் சூரியனைப் பார்த்துக் கைகளைப் பொத்தி னேன். பூச்சி ஒன்றை நாம் நிலத்தில் எறிவது போல் அவன் என்னை நிலத்தில் எறிந்துவிடுவானோ என்று நான் பயந்துகொண்டிருந்தேன். எனது தோற்றம் அவனை மகிழ்வித்தமையால் அவன் என்னை எறியவில்லை. வயற்காரன் என்னைத் தனது மனைவியிடம் காட்டினான். என்னைப் பற்றி வேலையாள் சொன்னதைக் கேட்ட வயற்காரன் ஒரு கைப் பிரம்பு அளவுள்ள வைக்கோலினால் எனது மேற்சட்டையின் பின்புறத்தை உயர்த்திப் பார்த்தான். அவன் எனது முகத்தை நன்றாகப் பார்க்கும் பொருட்டு எனது தலை மயிரை ஒதுக்கினான். அவன் வேலைக்காரரை அழைத்து அவர்கள் எப்போதாவது இவ் வகைப் பிராணியைக் கண்டதுண்டா எனக் கேட்டான். என்னை நன்றாகப் பார்க்கும் பொருட்டு அவர்கள் எல்லோரும் என்னைச் சுற்றி வட்டமாக இருந்தார்கள். நான் எனது தொப்பியைக் கழற்றி வயற்காரனுக்குக் குனிந்து வணக்கஞ் செய்தேன். நான் முழங்கால்களில் நின்று கைகளை உயர்த்தி என்னாலான மட்டும் உரத்துப் பல வார்த்தைகளைப் பேசினேன். வயற்காரன் இப்பொழுது நான் ஒரு பிராணியாக இருக்கலாமெனத் துணிந்தான். அவன் பலமுறை என்னுடன் பேசினான். அவனுடைய சத்தம் எனது காதுகளை அடைக்கச் செய்தது. நான் பல மொழிகளில் உரக்கப் பேசினேன்; ஒருவர் பேசியது ஒருவருக்கு விளங்கவில்லை. பின்பு அவன் தனது மனைவியை அழைத்து என்னை அவளுக்குக் காட்டினான். தவளை அல்லது சிலந்திப் பூச்சியைப் பார்த்தவர் செய்வது போல அவள் பயந்து சத்தமிட்டாள். எனது நடத்தைகளையும் நான் அவள் கணவனுக்குக் கீழ்ப்படிவதையும் கண்டு அவள் என்னை விரும்பினாள். 19. உணவு நேரம் அப்பொழுது மத்தியான நேரம். வேலையாள் ஒருவன் உணவு கொண்டு வந்தான். இருபத்து நான்கு அடி அகலமுள்ள தட்டில் இறைச்சி உணவு இருந்தது. அங்கு வயற்காரனும் அவன் மனைவியும் மூன்று குழந்தைகளும் ஒரு கிழவியும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இருக்கையில் வயற்காரன் முப்பதடி உயரமுள்ள மேசையில் ஒரு புறத்தில் என்னை விட்டான். நான் பயமண்டிக் கரைக்குச் செல்லாது கூடியளவு உட்பக்கமாக இருந்தேன். வயற்காரனது மனைவி ஒரு சிறு அப்பத் துண்டை வெட்டிச் சிறிது இறைச்சியுடன் அதை எனக்கு முன்னால் வைத்தாள். நான் குனிந்து வணங்கி எனது கத்தியையும் முள்ளையும் எடுத்து உண்ணத் தொடங்கினேன். இது அவர்களுக்கு மிக வியப்பளித்தது. மனைவி, மூன்று கலம் கொள்ளக்கூடிய ஒரு சிறு கிண்ணத்தை எடுத்து அது நிறைய குடிவகையை ஊற்றித் தந்தாள். நான் பிரயாசையுடன் அதனை இரண்டு கைகளாலும் எடுத்து மரியாதையுடன் அவளின் சுகத்தைக் கோரிக் குடித்தேன். இதனைக்கண்டு அவர்கள் எல்லோரும் கொல்லென்று நகைத்தார்கள். இச் சத்தம் எனது காதுகளைச் செவிடுபடுத்திவிட்டது. இக் குடிவகை ஆப்பிள் பழத்திலிருந்து இறக்கும் சிடார்போல் இருந்தது. சாப்பாட்டு நேரத்தில் பூனை ஒன்று மனைவியின் கைகளுள் பாய்ந்தது. எனக்குப் பின்னால் ஒருவகை உருமும் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது அங்கு ஒரு பூனை இருந்தது. அது ஒரு எருமை மாட்டிலும் மூன்று மடங்கு பருமையுடையது. நான் மேசையின் ஒரு புறத்தில் ஐம்பது அடி தூரத்தில் நின்றபோதும் பூனையின் தோற்றம் எனக்கு அச்சம் விளைத்தது. பூனை என்மீது கவனஞ் செலுத்தவில்லை. எனது தலைவர் என்னைக் தூக்கி அதற்கு ஆறடி தூரத்தில் விட்டார். நான் நாய்களுக்குப் பயப்படவில்லை. அங்கு மூன்று அல்லது நான்கு நாய்கள் நின்றன. அவைகளில் ஒன்றின் பருமை நான்கு யானையின் அளவு. உணவு முடிந்ததும் என் தலைவர் என்னைப் பத்திரமாக வைத் திருக்கும்படி தம் மனைவியிடம் கூறினார். நான் மிகவும் களைத்து இருந் தேன். எனது தலைவி என்னைத் தனது படுக்கைமீது விட்டாள். இரண்டு மணிநேரம் நித்திரைகொண்டு நான் வீட்டில் எனது மனைவி மக்களோடு இருப்பதாகக் கனவு கண்டேன். இது எனது கவலையை அதிகப்படுத்தியது. நான் படுத்து உறங்கிய - அறையின் அகலம் இருநூறு அல்லது முந்நூறு அடி; உயரம் இருநூறு அடி; படுக்கை இருபதடி அகலம், எட்டு அடி உயர முள்ளது. 20. இரு எலிகள் என்னைத் தாக்கின இரண்டு எலிகள் எனது படுக்கையின் மீது ஏறி மணம் பார்த்து அங்குமிங்கும் ஓடித்திரிந்தன. அவைகளுள் ஒன்று எனது முகத்துக்குக் கிட்டவந்தது. உடனே நான் எழுந்து என்னைக் காத்துக்கொள்வதற்கு எனது கத்தியை எடுத்தேன். பயங்கரமான அப் பிராணிகள் என்னை இருபக்கங் களிலும் தாக்கின. ஒன்று எனது கழுத்தைக் கடித்தது. அது எனக்குத் தீங்கு இழைப்பதற்குமுன் நான் அதனை வெட்டி வீழ்த்தினேன். அது எனது காலடியில் விழுந்தது. அதற்கு என்ன நிகழ்ந்தது என்று அறிந்து மற்றது தப்பி ஓடிவிட்டது. உடனே எனது தலைவி எனது அறைக்குள் வந்தாள். என்மீது இரத்தம் தோய்ந்திருப்பதைக் கண்ட அவள் ஓடிவந்து என்னைத் தூக்கி னாள். நான் காயமடையவில்லை என்று காட்டும் பொருட்டுப் புன் சிரிப்புச் சிரித்துக்கொண்டு எலியைச் சுட்டிக் காட்டினேன். நான் காயமடையாததைக் கண்டு அவள் மகிழ்ச்சியடைந்து தனது வேலைக்காரியை அழைத்து இறந்த எலியை சன்னலுக்கு வெளியே எறியும்படி சொன்னாள். 21. எனது தாதி எனது தலைவிக்குக் குளும்டாகிளிச் என்னும் மகள் ஒருத்தி இருந்தாள். அவள் தையல் செய்வதில் திறமையுடையவள். அவள் பாவைப் பிள்ளையின் தொட்டிலில் எனக்கு ஒரு படுக்கை செய்தாள். இது ஒரு பெட்டியில் அறைக்குள் வைத்து உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டது. அவர்களோடு இருந்த காலங்களிலெல்லாம் இதுவே எனது படுக்கை. சிறுமி எனக்கு வேண்டிய உடைகளைத் தைத்துத் தந்தாள். அவளே அவைகளைத் தனது கைகளால் தோய்த்தாள். அவள் எனக்கு அவர்கள் மொழியைக் கற்பித்தாள். நான் ஒரு பொருளைச் சுட்டிக்காட்டும்போது அவள் அதன் பெயரைச் சொன்னாள். இவ்வாறு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் நான் அறிந்துகொண்டேன். நான் அவளைக் குளும்டாகிளிச் என அழைத் தேன். குளும்டாகிளிச் என்பதற்குச் சிறிய தாதி என்பது பொருள். 22. என்னைக் கண்காட்சி காட்டினார்கள் எனது தலைவர் நண்பர் ஒருவரது புத்திமதியைக்கேட்டு, அடுத்த சந்தை முறையில் என்னைப் பெட்டி ஒன்றில் வைத்துக் கிட்டிய சந்தைக்குக் கொண்டுபோனார். அவருடைய மகளாகிய தாதியும் கூட வந்தாள். பெட்டி நான்கு புறமும் மூடப்பட்டிருந்தது. நான் வெளியே வந்து உள்ளே செல்ல ஒரு கதவும், காற்று நுழைவதற்குப் பல துவாரங்களும் இருந்தன. நான் உள்ளே படுப்பதற்கு மெதுவான ஒரு துணியைச் சிறுமி போட்டிருந்தாள். அரைமணி நேரம் பிரயாணம் செய்யப்பட்டதாயினும், நான் குலுக்கமடைந் ததால் குழப்பமடைந்தேன். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் குதிரை நாற்பது அடி சென்றது. எனது தலைவர் ஒரு உணவு விடுதியில் தங்கினார். அங்கு அவர் பெரிய அறையின் மத்தியில் ஒரு மேசையின்மீது என்னை வைத்தார். அவர் ஒரே முறையில் முப்பது பேரை மாத்திரம் என்னைப் பார்க்கும்படி அனுமதித்தார். சிறுமி சொல்லியவாறெல்லாம் நான் பல தடவை நடந்து காட்டினேன். அவள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் இயன்ற அளவில் உரத்த குரலில் விடையளித்தேன். இன்னும் பல காரியங்களைச் செய்தேன். நான் அன்று பன்னிரண்டு கூட்டம் மக்களுக்குக் காட்டப்பட்டேன். ஒருகாற் செய்தவைகளையே மறுபடியும் மறுபடியும் செய்து காட்டும்படி கட்டளையிடப்பட்டேன். களையினால் எனது பாதி உயிர் போய்விட்டது. எனது தலைவர் இனி அடுத்த சந்தைமுறையில் என்னைக்காட்ட வரு வதாக அறிவித்தல் செய்து, வசதியான இன்னொரு பெட் டியை எனக்குச் செய்தார். முதற் பயணத்தின் பின் நான் எழும்பி நிற்கவோ பேசவோ முடியாத படிகளை அடைந் திருந்தேன். நான் மறுபடியும் உடல் நலம் பெற மூன்று நாட்களாயின. நான் அதிக வருவாய் அளிக்கக்கூடியவன் எனக் கண்டதும் எனது தலைவர் என்னைப் பட்டினங்கள் தோறும் கொண்டுசெல்லத் தீர்மானித்தார். நாங்கள் நாள்தோறும் இலகுவில் நூற்றைம்பது மைல் தூரம் பயணஞ் செய்தோம். தாதி எனது விருப்பத்தின்படி எனக்கு காற்றுப்படவும், நான் நாட்டு வளங்களைப் பார்க்கவும் என்னை அடிக்கடி வெளியே எடுத்தாள். பத்து வாரங்கள் நாங்கள் பயணஞ் செய்தோம். நான் பதினெட்டுப் பெரிய பட்டினங்களில் காட்டப்பட்டேன். 23. நான் இராணிக்கு விற்கப்பட்டேன் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிக பிரயாசங்களால் எனக்கு நோயுண் டாயிற்று. நான் இறந்து விடுவேனென்று எனது தலைவர் நினைத்தார்; ஆகவே, என்னை விற்றுவிடவேண்டுமென்று தீர்மானித்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அதிகாரி ஒருவன் வந்து, என்னை இராணி பார்க்க கொண்டு வரும்படி கட்டளையிட்டான். இராணியும், அவளோடு நின்றவர்களும் எனது நடத்தையைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அவள் எனது நாட்டைப்பற்றியும் எனது பயணங்களைப் பற்றியும் கேள்வி கேட்டாள். நான் இயன்றவரையில் விடையளித்தேன். அரண்மனையில் இருக்க எனக்கு விருப்பம் உண்டோ என அவள் கேட்டாள். குனிந்து வணங்கி நான் ஒருவருடைய வேலையாளனென்றும், விடுதலையடைந்தால் நான் எனது காலத்தை அங்குக் கழிப்பதில் பெருமை அடைவேனென்றும் சொன்னேன். பின்பு அவள் எனது தலைவரைப் பார்த்து என்னை விற்க அவருக்கு விருப்பமோ என்று கேட்டாள். நான் இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேனென அவர் நினைத்து, என்னை ஆயிரம் பொன்னுக்கு விற்று விட்டார். நான் இராணியை நோக்கி, என்னை அன்பாகப் பார்த்து வந்த தாதியும் இங்கு இருந்தால் நலமாகுமென்று கூறினேன். அவள் எனது வேண்டுகோளுக்கிணங்கித் தாதியையும் அரண்மனையில் இருக்கும்படிச் செய்தாள். அப் பெண் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தாள். இராணி என்னைத் தனது கையில் ஏந்தி அரசனிடம் கொண்டு சென்றாள். அரசன் முதலில் எனது வடிவத்தைக் கவனியாது “இந்த வயற் பிராணியோடு நீ எவ்வளவு காலம் பழகுகிறாய்?” என்று கேட்டான். இராணி என்னை அரசன்முன் மேஜை மீது நிற்க வைத்து, எனது வரலாறுகளைச் சொல்லும்படி சொன்னாள். எனது தாதியும் அதே வரலாற்றைக் கூறினாள். எனது குரலைக் கேட்டதும், அரசன் தனது வியப்பை மறைக்க முடியவில்லை. அவன் பல கேள்விகள் கேட்டான். என்னைப்பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும், தாதி என்னைப் பார்த்துவர வேண்டு மென்றும் அவன் அரசியிடம் கூறினான். தாதிக்கு வசதியான ஒரு அறையும் விடப்பட்டது. எனக்குப் படுக்கையறையாகப் பயன்படுவதற்கு இரண்டு சன்னல்கள், ஒரு கதவு, ஒரு படுக்கை, இரண்டு மேஜையும் கதிரை1களுமுள்ள ஒரு பெட்டியைச் செய்யும்படி இராணி தச்சனுக்குக் கட்டளையிட்டாள். பெரிய பெட்டியையல்லாமல் பயணம் செய்யும்போது கொண்டு செல்லக்கூடிய இன்னொரு பெட்டியையும் செய்யும்படி அவள் சொன்னாள். அதன் பருமை பன்னிரண்டடிச் சதுரமும், பத்து அடி உயரமும். அதன் மூன்று பக்கங்களிலும் சன்னல்கள் இருந்தன. சன்னல் இல்லாத பக்கத்தில் இரண்டு வளையங்கள் மாட்டப்பட்டிருந்தன. நான் குதிரை மீது பயணஞ் செய்த போது என்னைக் கொண்டு செல்பவன் வளையங்களுக்கூடாக நாடாவைக் கோத்துப் பெட்டியை அறையிற் கட்டியிருந்தான். பெட்டியுள் ஒரு படுக்கை யும், இரண்டு நாற்காலிகளும், ஒரு மேசையும் தரைப் பலகையோடு இறுக்கப் பட்டிருந்தன. நான் கடற் பயணத்தில் அதிகம் பழகியிருந்தபடியால், குதிரை யின் அல்லது வண்டியின் குலுக்கம் என்னைப் பாதிக்கவில்லை. கடற் பயணங்களைப்பற்றி அடிக்கடி என்னிடமிருந்து கேட்ட அரசி, “உனக்குப் படகு ஒட்டத் தெரியுமோ? இவ்வகையான உடற் பயிற்சி உனக்கு மகிழ்ச்சியைத் தருமோ?” என்று கேட்டாள். “எனக்குப் படகோட்ட நன்றாகத் தெரியும், இவ்வகையான உடற் பயிற்சியை இந்த நாட்டில் நான் செய்வது எப்படி? உங்கள் மிகச் சிறிய படகு எங்கள் பெரிய போர்க் கப்பல் அளவு; நான் ஓட்டக் கூடிய சிறிய படகு உங்கள் பெரிய ஆறுகளில் கவிழ்ந்து விடும்,” என்று நான் கூறினேன். “நீ எவ்வகையான படகு வேண்டுமெனச் சொன்னால் நான் எனது தச்சனை அவ்வாறு செய்து தரும்படி சொல்வேன்,” என்று கூறினாள். திறமையுள்ள தச்சன் பத்து நாட்களில் ஐவர் இருந்து பயணஞ் செய்யக்கூடிய ஒரு படகைச் செய்தான். பின்பு அவன் முந்நூறடி நீளம், ஐம்பதடி அகலம், எட்டடி ஆழமுள்ள தண்ணீர் பிடிக்கக்கூடிய ஒரு தொட்டியையும் அமைத்தான். இங்கு நான், அரசியும் அவள் தோழிமாரும் பார்த்து மகிழும்படி படகை ஒட்டி வந்தேன். சில சமயங்களில் நான் பாய்ச்சீலையைக் கட்டிக் கப்பலை ஓடச் செய்வேன். பெண்கள் விசிறியை வீசிக் காற்றை உண்டாக்குவார்கள். படகோட்டி முடிந்ததும், தாதி படகை அறைக்குள் கொண்டு சென்று அது காயும்படி சுவரில் மாட்டுவாள். 24. குரங்கினால் நேர்ந்த ஆபத்து எனக்கு இந் நாட்டில் நேர்ந்த பெரிய ஆபத்து ஒரு வேலையாளின் குரங்கினாலாகும். தாதி என்னை அறைக்குள் வைத்து மூடி விட்டு உலாவச் சென்றுவிட்டாள். வெய்யில் அதிகமாக இருந்தமையால், அறையின் சன்னலும், எனது பெட்டியின் சன்னலும் திறந்து விடப்பட்டிருந்தன. நான் மேசையிலிருந்து ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போது வெளியி லிருந்து தாதியின் அறைக்குள் யாதோ பாயும் சத்தம் கேட்டு நான் பய மடைந்தேன். குரங்கு ஒன்று துள்ளிப்பாய்ந்து விளையாடிக் கொண்டு, எனது பெட்டிக்கு அருகே வந்தது. நான் பெட்டியின் மற்றப் பக்கத்துக்குச் சென்றேன். அது சுற்றிவரப் பார்த்தபின் என்னைக் கண்டது. அது கதவு வழியாகக் கையை விட்டுச் சட்டையைப் பிடித்து என்னை வெளியே இழுத்தது. நான் திமிறியபோது அது என்னை இறுக்கிப் பிடித்தது. ஆகவே, நான் அமைதியாகக் கிடந்தேன். பின்பு அது என்னோடு அமைதியாக விளையாடினது. சடுதியாக யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும், அது பயமடைந்தது. உடனே அது சன்னலில் பாய்ந்து, என்னை ஒரு கையில் தூக்கிக்கொண்டு கூரைக்குச் சென்றது. அது என்னை வெளியே கொண்டு செல்வதைக் கண்ட தாதி பெரிய சத்தமிட்டாள். அவள் மிகவும் பயமடைந்தாள். உடனே அங்கு பெரிய இரைச்சல் உண்டாயிற்று. வேலையாட்கள் ஏணியை எடுத்துவர ஓடிச் சென் றார்கள். என்னை ஒரு குழந்தையைப் போலக் கையில் வைத்துக்கொண்டு, குரங்கு கூரையில் இருப்பதை நூற்றுக்கணக்கானோர் பார்த்தார்கள். இது என்னைத் தவிர பார்ப்பவர்களுக்கெல்லாம் சிரிப்பாக விருந்தது. சிலர் கல்லெறித்தார்கள். பல் எனது மண்டையை உடைத்து விடும் என்னும் அச்சத்தால் கல்லெறிதல் தவிர்க்கப்பட்டது. ஏணிகள் வழியாக மனிதர் ஏறி வருவதைக் கண்ட குரங்கு என்னைக் கூரையில் விட்டுத் தப்பி ஓடிவிட்டது. அறுநூறு அடி உயரத்திலிருந்து காற்று என்னைக் கீழே தள்ளிவிடுமோ என்று நான் பயந்தேன். ஒரு வேலையாள் மேலே ஏறி, என்னைத் தனது காற் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு கீழே இறங்கினான். நான் என்றைக்காவது ஒருநாள் விடுதலை அடைந்து, எனது தாய் நாட்டுக்குச் செல்வேன் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். விடுதலை எப்படிக் கிடைக்கும் என்பது எனக்குப் புலப்படவில்லை. எல்லோரும் என்னிடம் அன்பாக இருந்தார்கள். நான் விட்டுவந்த குடும்பத்தாரைப்பற்றி நினையாமல் இருக்க என்னால் முடியவில்லை. நான் எனக்குச் சமமானவர் களிடையே பேசவும், அளவளாவவும் விரும்பினேன்; தெருக்களில் தவளை போல் அல்லது நாய்க்குட்டி போல் கால்களின் கீழ் அகப்பட்டு மடிய விரும்பவில்லை. நான் இரண்டு ஆண்டுகள் இந் நாட்டில் வாழ்ந்தேன். ஆண்டின் தொடக்கத்தில் அரசனோடும், அரசியோடும், தாதியோடும் நான் எனது பெட்டியில் தென் கடற்கரைக்குச் சென்றேன். வெய்யிற் காலங்களில் காற்று வருவதற்காக எனது பெட்டியின் மேற்புறத்தில் ஒரு துவாரம் செய்யும்படி நான் தச்சனிடம் சொன்னேன். வேண்டியபோது நான் ஒரு பலகையால் அத் துவாரத்தை அடைத்து விடுவேன். எங்கள் பயணம் முடிந்ததும், தாதியும் நானும் நன்கு களைத்துப் போனோம். “எனக்குக் களைப்பும் வருத்தமுமா யிருக்கிறது. கடலைப் பார்த்தால் ஒருபோது நன்றாயிருக்கும். ஒரு வேலை யாளை அவ்வாறு செய்யும்படி அனுமதிப்பாயா?” என்று நான் சொன்னேன். “உனக்கு உடல் நலம் வருவதுதான் எனது விருப்பம்; ஆனால், உனக்கு ஏதும் தீமை நேரக்கூடும் என்று அஞ்சுகிறேன்,” என்று சொல்லி, ஒரு வேலை யாளைப் பார்த்து, என்னை அழைத்துக்கொண்டு சென்று கவனிக்கும்படி தாதி சொன்னாள். வேலையாள் என்னைக் கடற்கரைக்கு அருகேயுள்ள குன்றுக்கு நேராக எடுத்துச் சென்றான். நான் அவனைச் சிறிது நேரம் படுத்து நித்திரை கொள்ளும்படி சொன்னேன். நானும் சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். ஆபத்து ஒன்றும் இல்லை என்று நினைத்த வேலையாள் பறவை முட்டை களைப் பார்க்கச் சொன்றான் என நினைக்கிறேன். 25. என்னைக் கழுகு தூக்கிச் சென்றது பெட்டியின் மேல் அறையப்பட்டிருந்த வளையத்தை யாதோ இழுப்பதை உணர்ந்து நான் சடுதியாக விழித்தெழிந்தேன். நான் உயர்த்தப் பட்டு முன்பக்கமாகக் கொண்டு செல்லப்படுவதை உணர்ந்தேன். பல முறை உரத்துக் கூப்பிட்டேன் ; பயனில்லை. நான் சன்னல் வழியாகப் பார்த்தேன்; முகில்களையும் வானத்தையுமன்றி வேறொன்றும் தெரியவில்லை. எனது தலைக்கு மேல் இறக்கை அடிப்பது போன்ற சத்தம் கேட்டது ; நான் எனது நிலையை உணர்ந்தேன். கழுகு ஒன்று வளையத்தைப் பிடித்துத் தூக்கிச்செல்வதாகவும், பின்பு அது பெட்டியைப் பாறைமீது விழும்படி விட்டு என்னை எடுத்துத் தின்னும் என்றும் நான் யூகித்தேன். நான் விழும் வேகத்தால் ஒரு நிமிடத்துக்குள் நான் மயக்கமடைந்தேன். பெட்டி நீர்வீழ்ச்சி போன்ற சத்தத்தோடு விழுந்தது. ஒரு நிமிடம் நான் இருளில் இருந்தேன். பின்பு பெட்டி மேலே எழுந்தது. நான் சன்னல்களின் மேற்பக்கத்தால் வெளிச்சத்தைக் காணக்கூடியதாக விருந்தது. இப்பொழுது நான் கடலுள் விழுந்திருக்கிறேன் எனத் தெரிந்தது. வேறு இரண்டு அல்லது மூன்று கழுகுகளால் தாக்கப்பட்டமையால், அக்கழுகு என்னை நழுவவிட்டு விட்டதென நினைக்கிறேன். எனது பெட்டி நன்றாகச் செய்யப்பட்டிருந்தமையால், தண்ணீர் உள்ளே வரவில்லை. காற்று வேண்டியிருந்தமையால், மேலேயிருந்த பலகையை இழுத்துவிட்டேன். நான் எனது தாதியோடு இருத்தலை பலமுறை விரும்பினேன். தாதி எவ்வளவு துயரடைந்திருப்பாளென்றும், இராணியின் கோபத்துக்காளாகி யிருப்பாளென்பதையும் நினைத்து நான் துயரடைந்தேன். எந்த நிமிடத்தி லாவது எனது பெட்டி உடைந்துவிடுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பெட்டி உடையா விட்டாலும் நான் இரண்டொரு நாட்களில் குளிராலும் பசியாலும் இறந்து விடுவேனென நினைத்தேன். 26. நான் காப்பாற்றப்பட்டேன் நான்கு மணி நேரத்துக்குப்பின் எனது பெட்டிக்குப் பக்கத்தில் உரைஞ்சும் சத்தம் ஒன்று கேட்டது. பெட்டி கடல் வழியாக இழுக்கப்பட்டுச் செல்வதை விரைவில் உணர்ந்தேன். என்ன நிகழ்கின்றது என்று எனக்குத் தெரியாவிட்டாலும் இது எனக்குச் சிறிது நம்பிக்கை தந்தது. நான் நாற்காலி யில் ஏறி நின்று, துவாரத்துக்கு அருகில் வாயை வைத்து உதவி வேண்டும் என்று சத்தமிட்டேன். பின்பு நான் ஒரு தடியில் துணியைக்கட்டித் துவாரத் தின் வழியாக அதனை வெளியே தள்ளினேன். ஒரு தந்திக் கம்பி, வளையங் களுக்கு ஊடாகச் செல்வதுபோன்ற ஒரு சத்தம் எனக்குத் தெளிவாய்க் கேட்டது. பின்பு நான் சிறிது சிறிதாக மூன்றடி தடியை வெளியே தள்ளி உதவிக்காகச் சத்தமிட்டேன். அதற்கு மறுமொழியாக பெரிய ஆரவாரம் கேட்டது. அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது. “கீழே யாராவது இருந்தால் பேசட்டும்,” என்னும் ஒரு சத்தம் ஆங்கில மொழியில் வந்தது, “நான் ஒரு ஆங்கிலன். மிகவும் மோசமான ஆபத்து நிலையில் இருக்கிறேன். இந்த மறியலிலிருந்து என்னை விடுதலை செய்யும்படி வேண்டுகிறேன்,” என்று நான் மறுமொழி கூறினேன். “நீ பத்திரமாக இருக்கிறாய். உனது பெட்டி எங்கள் கப்பலோடு கட்டப்பட்டிருக்கிறது, எங்கள் தச்சன் வந்து நீ வெளியே வரக்கூடிய ஒரு துவாரத்தைப் பெட்டியில் அரிந்து விடுவான்,” என்று அச் சத்தம் மறு மொழியாகச் சொன்னது. “அப்படிச் செய்வது அவசியமில்லை. அதற்கு அதிக நேரமாகும். கப்பற்காரரில், ஒருவன் தனது விரலை வளையத்துள் கொளுவி, பெட்டியைத் தூக்கிக் கப்பலுக்குள் வைக்கட்டும்,” என்று நான் சொன்னேன். நான் இவ்வாறு சொன்னதைக் கேட்ட சிலர் நான் பைத்தியம் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தார்கள் ; மற்றவர்கள் சிரித்தார்கள். இப்பொழுது நான் என்னை ஒத்த பருமனையுடைய மக்களிடையே இருக்கிறனென்பது எனது ஞாபகத் தில் வரவில்லை. தச்சன் வந்தான்; சிறிது நேரத்தில் நான் பலவீனமான நிலையில் கப்பலுக்குள் தூக்கி வைக்கப்பட்டேன். கப்பற்காரர் ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டார்கள். நான் அவைகளுக்கெல்லாம் மறுமொழி கூற விரும்பவில்லை. கப்பலின் மாலுமி நான் பலவீனமடைந்திருப்பதைக் கண்டு, என்னைத் தனது அறைக்குள் அழைத்துச் சென்று, குடிப்பதற்குச் சிறிது கொடுத்துத் தனது படுக்கையில் படுத்து இளைப்பாறும்படி செய்தான். பெட்டியிலிருக்கும் விலை உயர்ந்த பொருள்களைக் கப்பற்காரரிலொருவன் கொண்டுவர முடியாதோ என்று நான் படுப்பதன் முன் சொன்னேன். நான் சில மணிநேரம் நித்திரை கொண்டதும் களை தெளிந்தேன். எனக்கு உணவு கொடுக்கும்படி மாலுமி கட்டளையிட்டான். நாங்கள் தனிமையா யிருக்கும்போது எனது பயணங்களின் வரலாற்றையும் நான் எப்படி இந்த மரப்பெட்டியில் வந்தேனென்பதையும் கூறும்படி மாலுமி கேட்டான். பொறுமையுடன் இருந்து எனது வரலாறுகளைக் கேட்கும்படி நான் மாலுமியை வேண்டினேன். நான் இங்கிலாந்தை விட்டது முதல் அவன் என்னைக் கண்டது வரையிலுள்ள வரலாறுகளைச் சொன்னேன். நேர்மையும் சிறிது கல்வியுமுள்ள இந்த மாலுமி நான் கூறிய வரலாற்றின் உண்மைகளை அறிந்து கொண்டான். நான் சொன்னவற்றின் உண்மையை மெய்ப்பிப்ப தற்கு எனது மரப்பெட்டியைக் கொண்டு வரும்படி கூறினேன். அதனைத் திறந்து நான் சேகரித்து வைத்திருந்த அபூர்வமான பொருள்களை எடுத்துக் காட்டினேன். அவை ஒரு முழ நீளமுள்ள ஊசியும், குண்டூசியும், இராணியின் தலைமயிர்களிற் சில அவள் எனக்குத் தந்ததும், எனது தலைக்கு மேலால் வளையம் போலப் போடக்கூடியதுமான பொன் மோதிரம் என்பன. எனக்குச் செய்த உதவிக்குப் பதிலாக அப்பொன் மோதிரத்தை வைத்துக் கொள்ளும்படி நான் மாலுமியிடம் சொன்னேன். அவன் அதைக் கண்டிப்பாக மறுத்தான். பின்பு அவன் எலித்தோலில் செய்யப்பட்ட எனது காற்சட்டைகளைப் பார்வையிட்டான். நான் உரத்துப்பேசுவது தனக்கு வியப்பாயிருக்கிறது என்று மாலுமி கூறினான். அந்நாட்டில் இராணியும் அரசனும் சற்று செவிடர்களோ என்று அவன் கேட்டான். சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் இவ்வாறு பேசி வருகிறேனென்று அவனும் மற்றக் கப்பற்காரரும் மெதுவாகப் பேசிய போதும் நான் அவற்றைத் தெளிவாகக் கேட்கிறேனென்றும் சொன்னேன். நாங்கள் ஒரு நாள் இரவு உணவு செய்து கொண்டிருக்கும்போது மாலுமி என்னை நோக்கி, “நீ எல்லாவற்றையும் அதிசயத்துடன் நோக்கிச் சிரிக்கப் போகின்றவன்போல் தெரிகின்றது,” என்று கூறினான். அது உண்மை தான். உனது தட்டுகள் ஒரு நாணயமளவும், உனது தட்டிலுள்ள இறைச்சி ஒரு வாய்க்குப் பற்றாததும், கிண்ணங்கள் ஒரு தானியக் கோதளவுமாயிருப் பதைப் பார்க்க எனக்குச் சிரிப்பு உண்டாகிறது,” என்று நான் கூறினேன். மாலுமி நான் கூறியதன் விகடத்தை நன்கு விளக்கிக் கொண்டான். “உனது பெட்டியைக் கழுகு தூக்கிச் செல்வதையும் அது அதிக உயரத்தி லிருந்து கடலுள் விழுவதையும் பார்த்திருந்தால் நான் நூறு பொன் தந்திருப் பேன்,” என்று அவன் சொன்னான். நாங்கள் இங்கிலாந்தை 1706ஆம் ஆண்டு சூன் மாதம் மூன்றாம் தேதி அடைந்தோம். மாலுமி என்னிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ள மறுத்து விட்டான். இருவரும் அன்பாக ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துப் பிரிந்தோம். எனது வீட்டில் என்னைக் காணுமாறு அவனிடம் கேட்டுக் கொண்டேன். நான் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள வீடுகள், மரங்கள், ஆடுமாடுகள் மனிதர்களைக் கண்டதும், நான் லில்லிபுத்தில் இருப்பதாக எண்ணினேன். நான் வீட்டுக்குச் சென்றதும், எனது தலை கூரையில் முட்டுமெனப் பயந்து குனிந்து சென்றேன். என்னை வரவேற்க எனது மனைவி ஓடி வந்தாள்; அவள் என்னைக் கிட்டமுடியாது என நினைத்து, அவளின் முழங்கால்களுக்கும் கீழே குனிந் தேன். எனது ஆசீர்வாதத்தைப் பெறும்பொருட்டு எனது மகள் முழங்கால் களில் நின்றாள் ; அவள் எழுந்து நிற்கும் வரையில் நான் அவளைக் காண வில்லை. நான் இவ்வளவு காலமும் எனது தலையை நிமிர்த்திக் கண்களை மேலே பார்த்துக் கொண்டு நிற்கப்பழகியிருந்தமையே இதற்குக் காரணம். எனது நடத்தைகள் வினோதமாயிருந்தமையால், நான் பைத்தியம் கொண்டிருக்கிறேன் என்று எல்லோரும் நினைத்தார்கள். சில நாட்களில் சிறிது நேரத்தில் எனது குடும்பத்தினரும், நண்பரும் என்னைப்பற்றி நன்றாய் அறிந்து கொண்டார்கள். நான் இனி ஒரு போதும் கடற் பயணஞ் செய்யக் கூடாதென எனது மனைவி வேண்டிக்கொண்டாள். இதோடு எனது இரண்டாவது பயணம் முடிவடைந்தது.  அகத்தியர் முன்னுரை இன்று அகத்தியர் வரலாறு என வழங்குவன கற்பனைகளாகத் தோன் றும் சில பழங்கதைகளே. இவைதான் அகத்தியரின் உண்மை வரலாறுகள் என்று கூற எவரும் துணியமாட்டார். கற்பனைகள் போன்ற பழங்கதை களும் காலந்தோறும் வளர்ச்சியடைகின்றன. சாத்தன் உவாந்தி எடுத்தான். அதனைப் பார்த்திருந்த ஒருவன் சாத்தன் கறுப்பாக உவாந்தி எடுத்தான் என ஒருவனிடம் கூறினான்; அவன், “சாத்தன் காகம்போல் கறுப்பாக உவாந்தி எடுத்தான்” என்று மற்றொருவனுக்குக் கூறினான். அவன் “சாத்தன் காகம் உவாந்தி எடுத்தான்” என்று இன்னொருவனிடம் கூறினான். இச் செய்தி ஊர் எங்கும்பரவிற்று. பலர் இவ்வியப்பைக் காணச் சென்றனர். இதன் உண்மையை ஆராய்ந்தபோது சாத்தன் உவாந்தி எடுத்தான் என்பதே உண்மையாயிற்று; மற்றவை எல்லாம் பொய். இன்று பழங்கதை வடிவில் வழங்கும் வரலாறுகள் பல சாத்தன் காகம் உவாந்தி எடுத்த கதை போன்ற னவே; ஆயினும் பயனற்றனவென்று பழங் கதைகளைத் தள்ளிவிடுமாறும் இல்லை. அவை தம்முள் சிறிய உண்மைகள் இருத்தலும் கூடும். அகத்தியரைப் பற்றிய வரலாறும் இவ்வகையினதே. அகத்தியர் வரலாற்றைக் குறித்துப் பலர் ஆராய்ந்திருக்கின்றனர். சிலர் அகத்தியர் தமிழ்நாட்டில் இருந்தவரல்லர் எனக் கூறினர். சிலர் அவர் வடநாட்டினின்று வந்து தென் னாட்டை ஆரிய மயமாக்கியவர் எனக் கூறினர். வேறு சிலர் வேறு பலவாறு கூறினர். அவை தம்மையெல்லாம் கருத்திற் கொண்டு ஆராய்ந்து இந் நூல் அமைவதாயிற்று. புராணக் கதைகளைத் தனித்தனி விரிக்கின், அதில் அளவு கடந்து விரியுமென அஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம். சென்னை பிப். 1948 ந.சி. கந்தையா அகத்தியர் தோற்றுவாய் தமிழ் ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் அகத்தியரைப்பற்றிய வரலாற்றை ஆராயவேண்டியிருக்கின்றது. தமிழ் மொழிக்கு முதன் முதல் இலக்கணம் செய்தவர்1 அகத்தியர் என்றும், அவருடைய மாணவர்களுள் ஒருவர் தொல்காப்பியர் என்றும் கூறும் பழங்கதைகள் வழங்குகின்றன. தமிழ் ஆராய்ச்சி செய்வோர் பலர் அகத்தியரும் தொல்காப்பியரும் வடநாட்டவ ரென்றும், அவர்கள் வடநாட்டு வழக்குகள் பலவற்றைத் தமது நூல்கள் மூலம் தமிழ் நாட்டிற் புகுத்தினர் என்றும் கூறிவருகின்றனர். டாக்டர் போப் தமிழில் இலக்கணம் செய்தாரென்றால் அவர் ஆங்கில வழக்குகளைத் தமிழிற் புகுத்தினார் என நாம் கூறமுடியாது. இதனை ஒப்பவே அகத்திய ரும் தொல்காப்பியரும் ஆரியராயினும் அவர்கள் தமது நூல்கள் மூலம் ஆரிய வழக்குகளைத் தமிழ் நாட்டில் நிலை நாட்ட முடியாது. அகத்தியர் என்பார் யார்? அவர் ஆரியரா? தமிழரா? அவரைக்குறித்து வழங்கும் பழங் கதைகள் நம்பத்தகுந்தனவா? நம்பத்தகாதனவா? என்பவை போன்ற வற்றைத் தமிழ் மாணவரும் பிறரும் ஆராய்ந்து தெளிதல் வேண்டும். அவ்வகையில் ஆராய்வதே இச்சிறிய நூலின் இலக்காகும். அகத்தியர் உருவச்சிலைகளை ஆராய்ச்சி செய்வதில் வல்லவராகிய காங்குலி1 என்பார் அகத்தியரைப்பற்றி ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரை ஒன்றின் சுருக்கத்தை ஈண்டு தருகின்றோம். ஆரிய வர்த்தத்தினின்றும் தென் தேசத்தை ஆரிய மயமாக்கும் பொருட்டு விந்திய மலையைக் கடந்து சென்றவர்களுள் கும்பத்தில் பிறந்தவராகிய அகத்தியர் முதன்மையுடையவர். ஆரியர் குடியேறு வதற்குப் புதிய வயல்களையும் மேய்ச்சல் நிலங்களையும் பெறுவதற்கு வழி காட்டியவர் இவரேயாவர். புராணங்களில் சொல்லப்படும் பழங்கதைகளைக் கொண்டு ஆரியரின் நாகரிகம் ஆரியவர்த்தத்துக்கு வெளியே எவ்வாறு பரவிற்று என நாம் உய்த்து அறிதல் கூடும். அகத்தியர் சிவ வழிபாட்டினர். காசி அவருடைய பிறப்பிடமும் இருப்பிடமுமாகும். அவர் தினமும் கங்கையாற்றில் நீராடுவதற்குச் செல்வார் என்றும் அப்போது அவர் நிலத்தில் கோடாங் கற்கள்போன்று கிடக்கும் சிவலிங்கங்களை மிதிக்காது விலகி மிதியடி தரித்துச் செல்வாரென்றும் புராணங்கள் கூறுகின்றன. அவர், வடிவழகில் ஒப்பில்லாத உலோபா முத்திரை என்னும் விதர்ப்ப அரசனின் மகளைத் திருமணஞ் செய்துகொண்டார். அவர் வடக்கே நீண்ட காலம் வாழவில்லை. அவர் தென் திசைக்குப் போகவேண்டியிருந்தது. இவரது முன்னோர் பலர் இவரைப்போலவே மீண்டு வராதிருக்கும் தென் தேச யாத்திரை செய்தார்கள். போய் மறுபடியும் திரும்பிவராத யாத்திரைக்கு ‘அகத்திய யாத்திரை’ என்னும் பெயர் வழங்குகின்றது. அகத்தியர் தெற்கே யுள்ள காட்டை அழித்து நாடாக்கினார். இராமாயணம் இதைக்குறித்துத் தெளிவாகக் கூறியுள்ளது. “(அகத்தியர்) தனது புண்ணிய கருமங்களால் கொலைத் தொழி லுடைய அசுரரைத் தொலைத்துத் தென்பூமியை மக்கள் உறைதற்கேற்ற இடமாக மாற்றினார்” - (ஆரணிய காண்டம். சருக்கம் 11, சுலோகம் 81). இராமர் இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வந்த செயல் அகத்தியர் மக்கள் நுழைய முடியாத தென் தேசத்தை வென்றதோடு உவமிக்கப்பட்டுள்ளது. (இலங்க காண்டம் 117-வது சருக்கம், 13-14 சுலோகம்). அவர் தென் தேசத்தில் திரிந்து தங்கிய இடங்கள் ஆசிரமங்கள் எனப்பட்டன. தண்டகாரணியத்துக்குச் சில மைல் தூரத்திலுள்ள நாசிக் என்னும் இடத்தில் அவர் தங்கியிருந்தாரென இராமாயணம் கூறுகின்றது. ஆனால் அவர் அவ்விடத்தில் அமைதியுற்றிருக்க முடியவில்லை. அங்கு மிங்கும் குடியேறியிருந்த ஆரியரை அரக்கர் தாக்கினார்கள். அவர்களை அழிக்கும்பொருட்டு அகத்தியர் தனது தவவலியைப் பயன்படுத்தினார். அரக்கர், இராக்கதர், அசுரர் என்பன ஆரியக் கொள்கைகளை எதிர்த்து நின்ற வர்களுக்கு இடப்பட்ட பெயர்கள், வில்வலன், வாதாபி என்போர் இராக்கதத் தலைவருட் சிலராவர். வடக்கே தண்டகாரணியத்தில் வாழ்ந்த ஆரியருக்கு இவர்கள் காலன் போன்றிருந்தனர். இவர்களைப் பாதாமியிலிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள மலைகூடம் அல்லது தென்காசியில் உறைந்த அகத்தியர் அடக்கினார். கி.பி.150 வரையில் வாழ்ந்த தாலமி, பாதாமி என்னும் இடத்தைக் குறிப்பிட்டுள்ளார். வாதாபி என்பதே பிற்காலத்தில் பாதாமி எனப்பட்டது. இது இந்திய ஆட்சியில் அரசியல் முதன்மை பெற்று விளங்கிற்று. வாதாபியிலிருந்து ஆட்சி நடத்திய சிம்மவிஷ்ணுவிட மிருந்தே முதலாம் புலிகேசி என்னும் சாளுக்கிய அரசன் பாதாமியை கி.பி.ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைப்பற்றினான். அய்கோலி, பாதாமி என்னும் இடங்களில் பழைய இந்திய கோவில்கள் காணப்படு கின்றன. அகத்தியர் அவ்விடங்களிலுள்ள குறுநில மன்னர்களிடையே பிராமண மதத்தைப் பரவச்செய்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் தமது மதத்தைப் பரப்பும் பொருட்டு மாணாக்கரைச் சேர்த்துச் சபைகளைக் கூட்டியும் இருக்கலாம். செவிவழக்கிலும், பழங்கதை மூலமும் வந்த செய்திகள் பட்டையங்களிற் காணப்படுகின்றன. அகத்தியர் அரசர் பலருக்கு, சிறப்பாகப் பாண்டியருக்குக் குரு அல்லது புரோகிதராகவும் இருந்தார். சின்னமண்ணூர் பட்டையத்தில் அகத்தியர் அரசரின் ஆசிரிய ராயினாரென்றும் சுந்தரபாண்டியன் அகத்தியர் மாணாக்கன் என்றும் காணப்படுகின்றன. அகத்தியர் அரசர் பலருக்குக் குரு, அல்லது புரோகித ராக இருந்தார் எனப்பல பழங்கதைகள் உள்ளன. °கந்தபுராணம் அவரை வச்சிராங்கதன் என்னும் பாண்டிய அரசனோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றது. அகத்தியர் சோணே°வரர் என்னும் சிவலிங்கக் கடவுளுக்கு காணிக்கைகளைக் கொடுக்கும்படி அவனைப் பணித்தார். அவன் தனது செல்வம் முழுவதையும் அக்கடவுளுக்குக் கொடுத்து அகத்தியரதும் அவர் மனைவி உலோபா முத்திரையதும் அருளைப் பெற்றான். அகத்தியர் தென்னாட்டை ஆரிய மயமாக்கும் தொழிலைத் தனியே செய்திருக்க முடியாது. அகத்தியர் கோத்திரம் ஒன்று தொடங்கி அக் கோத்திரத்திற் பலர் பெருகினார்கள். அகத்தியர் கோத்திரம் இன்றும் உள்ளது. அவரிடமிருந்து தோன்றிய புதல்வர்கள் பலரைப் பற்றி மச்சபுராணங் கூறுகின்றது. தமிழ் மொழியை ஆரம்பித்து அதற்கு இலக்கணஞ் செய்தவர் அகத்தியரென்று இன்றும் பழைய பண்டிதர்கள் நம்பிவருகின்றார்கள். அவர் செய்த இலக்கணம் அகத்தியம் எனப்படுகின்றது. அவர் தமிழ்ச் சங்கத் துக்குத் தலைவராயிருந்தார். கடவுள் உருவங்கள் அமைக்கும் விதிகூறும் அகத்திய சகலாதிகா என்னும் நூலின் ஆசிரியரும் அவராவர். அவருக்குப் பன்னிரண்டு மாணாக்கர் இருந்தார்கள். அவருள் தலைமையுடையவர் தொல்காப்பியர். அவருக்கு அமைக்கப்பட்ட பல கோவில்கள் உண்டு. அவர் பொதியமலையோடு சம்பந்தப்பட்டவர். இம்மலை கன்னியா குமரிக்கு அண்டையில் திருநெல்வேலி மாகாணத்திலுள்ளது. அகத்தியர் அங்கு மக்களின் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வருகிறார் எனப் பலர் நம்பி வருகின்றார்கள். அவர் தெற்கே வானத்தில் அகத்திய நட்சத்திரமாக விளங்குகின்றார்; அவர் தென்னிந்தியாவை அடைந்தபின் இடை யிடையே சிலகாலம் சடுதியில் மறைந்து விடுவாரென்றும், அவர் எங்குச் சென்றா ரென்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும் என்றும் பழங்கதைகள் உண்டு. அவர் பிராமண மதத்தலைவராகவும், சைவ சமயத்தைப்பற்றிப் போதிப்ப வராகவும், தென்னிந்திய அரசர் பலரின் புரோகிதர் அல்லது குருவாகவும் இருந்தமையால் அகத்தியர் வழிபாடு தொடங்கியது. பல ஆலயங்களில் அகத்தியர் வடிவங்கள் வழிபாட்டின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன. அகத்தியரை வணங்கவேண்டிய முறை °கந்த புராணத்திலும் அக்கினி புராணத்திலும் காணப்படுகின்றன. அகத்தியர் வழிபாட்டுக்குப் பேர் போனவை இரண்டு கோவில்கள்: ஒன்று வட ஆர்க்காட்டில் புத்தூர் புகை வண்டி நிலையத்துக்கு அயலேயுள்ள அகத்தீசுவர சுவாமி கோவில்; மற்றது வேதாரணியம். அகத்தியர் வழிபாடு தென்னாட்டில் இருந்தது போலவே வடநாட்டில் வசிட்டர் வழிபாடு இருந்தது. நேப்பாலில் கிடைத்த பட்டையத் தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர் திரைமோதும் கடலைப்பற்றி அஞ்சவில்லை. அவர் தனது சித்தியினால் கடற் கடவுளரைப் பணியவைத் தார். அகத்தியர் கடலைக் குடித்தார் என்று புலவர்கள் இச் செயலை வருணித்துக் கூறுவாராயினர். கம்போதியாவில் அகத்தியர் அகத்தியர் தென்னிந்தியாவில் சிவன் கோவில்களைக் கட்டித் தமது குடும்பத்தவர்களை அவற்றில் நிலை நாட்டுவதிலும் முயன்று வந்தார். அவர் தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகளில் சிவன் கோவில்களை அமைத்துத் தாம் அவ்விடங்களில் இருந்தமையைச் சான்றுபடுத்தியு முள்ளார். அவர் சிலகாலம் கம்போதியாவில் இருந்தார். கம்போதியாவில் அங்கோவாற்றில் காணப்பட்ட பட்டையமொன்று இதற்குச் சான்று பகர்கின் றது. “ஆரிய பூமியிற் பிறந்த பிராமணராகிய அகத்தியர் சிவ வணக்கத்தில் சிறந்தவர். அவர் தனது சித்தியினால் கம்போதியாவிலுள்ள சிறீபட்டிரே°வர என்னும் சிவலிங்கத்தை வணங்கும்பொருட்டு வந்தார். அவர் நீண்ட காலம் அச் சிவலிங்கத்தை வணங்கிய பின் முத்தியடைந்தார். இம் முனிவர் சிவனை வணங்குவதில் மாத்திரம் நின்றுவிடவில்லை, இவர் யசோமதி என்னும் அழகிய பெண்ணை மணந்து ஒரு அரச பரம்பரையையும் தோற்றுவித்தார். சக ஆண்டு 811இல் வெட்டப்பட்ட பட்டையத்தில் அகத்திர் யசோவர்மன் என்னும் அரசனின் சந்ததிக்கு முன்னோர் என்று காணப்படுகின்றது. கல்வெட்டில் சொல்லப்படுவது பின் வருமாறு: “வேதங்களில் வல்லவரும் பிராமணருமாகிய அகத்தியர் ஆரிய பூமியிலிருந்து வந்து மகிஷிடவமிசத் திலுள்ள யசோமதியை மணந்து ஒரு மகனைப் பெற்றார். அவன் நரேந்திர வர்மன் எனப்படுவான்.” இவ்வரச வழி வேறு பாட்டையங்களிலும் கூறப்பட்டுள்ளது. அகத்தியர் தென்னிந்திய முறையைப் பின்பற்றிக் கம்போதியாவிலுள்ள சிவாலயத்தை எடுத்திருக்கலாம். அகத்தியரிலிருந்து தோன்றிய அரச பரம்பரையினர் அதனை நன்னிலையில் வைத்திருந்தார்களாகலாம். தென்னிந்தியாவில் காணப்பட்டவை போன்ற ஐந்து உலோகத்தினாற் செய்யப்பட்ட திருவுருவங்கள் கம்போதியா, சீயம்1 முதலிய இடங்களில் காணப்படுகின்றன. சிலவற்றில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இத் திருவடிவங்கள் தென்னிந்திய தமிழ்ச் சிற்பிகளால் செய்யப்பட்டவை என்று வெளிப்படையாகத் தெரிகின்றது. அவை தென்னிந்தியாவிற் செய்து சீயத்துக்கும் கம்போதியாவுக்கும் கொண்டு போகப்பட்டவை. அகத்தி யருக்கு நெடுங்காலத்துக்கு முன் தென்னிந்தியாவுக்கும் அந் நாடுகளுக்கு மிடையில் போக்குவரத்தும் கருத்துக்களின் கலப்பும் உண்டாயிருக்கலாம். அகத்தியர் மீகாங்2 ஆற்றங்கரையில் முதல் ஆரிய குடியேற்றத்தைத் தொடங்கியிருக்கலாம். அவ்விடங்களில் காணப்படும் திருவுருவங்கள் தென்னிந்தியருக்கும் அந் நாடுகளுக்கும் கடல் வழியாகப் போக்குவரத்து இருந்ததென்பதை உறுதியாக வலியுறுத்துகின்றன. சோணமலையில் சிவன் கோயிலை அமைத்தானென்று °கந்த புராணத்தில் கூறப்படும் பாண்டியன் கம்போதிய குதிரைமீது சென்றான். இவ்வாறு குறிக்கப்பட்டிருத்தலும் இரு நாடுகளுக்கிடையிலிருந்த தொடர்பை வெளிப்படுத்துகின்றது. தென்னிந் தியரே இந்திய நாகரிகத்தை கம்போதியாவில் பரப்பியவர்கள் ஆகலாம். கம்போதியா, சீயம் முதலிய நாடுகளின் கலையிலும் நாகரிகத்திலும் இந்தியச் சார்புகள் காணப்படுகின்றன. மலாய தீவுகளில்3 அகத்தியர் அகத்தியர் போர்னியோ, சந்தாத்தீவுகள்4, மலாய தீவுகளுக்கும். சாவகம்5 முதலிய தீவுகளுக்கும் சென்றார் என வாயுபுராணம் கூறுகின்றது; அவர் மலாய தீவில் மலைய பர்வதத்தில் இருப்பவராகவும் குறிப்பிடுகின் றது. மலைய பர்வதம் என்பது தென்னிந்தியாவிலுள்ளதன்று; வேறானது. இன்றும் மலையம் என வழங்கும் முக்கிய மலை ஒன்று சாவகத்திலுள்ளது. போர்னியோவிலும் சாவகத்திலும் பழைய சமக்கிருத பட்டையங்கள் கிடைத்தன. அப் பட்டையங்கள் பிராமண சமயத்தையும் புத்த சமயத்தை யும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. அத் தீவுக் கூட்டங்களின் பழைய நாகரிகம் பிராமண மதம் சம்பந்தப்பட் டது. அகத்தியர் சந்தாத் தீவுக்குச் சென்றார் என்னும் பழங்கதை பிராமண நாகரிகம் அங்குச் சென்றதைக் குறிப்பிட லாம். பிராமணர் குடியேறியதற்குப் பின்னரே புத்த மதம் சம்பந்தமான பட்டையங்கள் காணப்படுகின்றன. இந்தியரின் ஆட்சி கம்போதியாவில் கி.பி.137இல் ஆரம்பித்ததெனச் சீன வரலாறு கூறுகின்றது. இது இந்துச் சீனாவில்1 மலையில் பொறிக்கப்பட்ட பட்டையத்தால் நன்கு உறுதிப்படு கின்றது. அப் பட்டையம் கி.பி.2வது அல்லது 3வது நூற்றாண்டில் எழுதப்பட்டது. அது சிறீமாறன் என்னும் அரசனைக் குறிப்பிடுகின்றது. இந்துச் சீனாவில் கி.மு.400இல் பொறிக்கப்பட்ட இரண்டு பட்டையங்களும் கவனத்துக்குரியன. முதல் பட்டையம் தரும மகாராசா பத்மவர்மன் செய்த யாகத்தைக் குறிப்பிடுகின்றது. இரண்டாவது பட்டையம் மகாதேவ வட்ரேசுவர சுவாமிக்குத் துதியாகவமைந்தது. இவைகளுக்குப்பின் ஒன்றன் பின் ஒன்றாகப் பல பட்டையங்கள் காணப்படுகின்றன. அவை சிவன் கோவில்கள் பழுதுபார்க்கப்பட்டமையையும் அவைகளுக்குக் கொடுக்கப் பட்ட காணிக்கைகளையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. சத்திரிய அரசன் ஒருவன் போர்னியோவில் யாகம் செய்ததைப்பற்றி ஒரு பட்டையம் கூறுகின்றது. இந்தியாவில் கி.பி.102இல் நாட்டப்பட்ட யூபக்கல்லில் பொறிக்கப்பட்டிருப்பதுபோல் போர்னியோவில் காணப்பட்ட கல்லிலும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. அக் கல்லில் எழுதப்பட்டிருப்பது வருமாறு: பேரோங்கிய மூலவர்மன் என்னும் அரசர்க்கரசன் பசுவர்ணக யாகத்தை முடித்தான். அந்த யாகத்தில் இருபிறப்பாளருள் தலைவர் இக் கல்லை நிறுத்தினார். இக் கல் கிழக்கு போர்னியோவிலுள்ள கோஎற்றி என்னுமிடத்தில் கிடைத்தது. இது கி.பி.400இல் உள்ளது என்று கருதப்படு கின்றது. இன்னொரு பட்டையம் மேற்குச் சாவகத்திலுள்ள பூரணவர்மன் என்பவனைப்பற்றிக் கூறுகின்றது. இது கி.பி.5ஆம் நூற்றாண்டில் பொறிக் கப்பட்டது. அப் பட்டையத்தில் கூறப்படுவது வருமாறு : “இவ்வுலகத்தின் வலிய வேந்தனாகிய பூரணவர்மன் தரும பட்டினத்தின் அரசன். அவனுடைய இரண்டு பாதங்களின் சுவடுகள் இவை. இவை விஷ்ணுவின் பாதச்சுவடு களை ஒப்பப் பெருமை யுடையன.” இங்குக் காட்டப்பட்ட மூன்று பட்டை யங்களும் பிராமண மதம் சம்பந்தமானவை; புத்த சமயம் சம்பந்தப்பட்ட வையல்ல. பிராமண நாகரிகத்தில் இரண்டு பட்டையங்களைக் காணலாம். ஒன்று வேத சம்பந்தம்; மற்றது புராண சம்பந்தம். பசிபி க்கடல் ஓரங்களி லுள்ளவை சிவன் கோயில்கள் எனக் காட்டியுள்ளோம். கி.பி. 732இல் வெட்டப்பட்ட பட்டையம் ஒன்று திசாங்கல்1 என்னும் இடத்தில் கிடைத்தது. இது மத்திய சாவகத்தில் குடியேறிய சன்யாய என்னும் அரசனைக் குறிப் பிடுகின்றது. குஞ்சர குஞ்ச என்னும் கூட்டத்தினரிலிருந்து இவர்களுக்குக் கைமாறிய சிவன் கோயில் ஒன்றைப் பற்றியும் அப் பட்டையம் குறிப்பிடு கின்றது. அது வருமாறு: “சாவகம் என்னும் பெயருடைய தீவு, தீவுகளுள் சிறந்தது. அங்கு ஒப்பிடமுடியாத தானியக் களஞ்சியங்களும் பொன் சுரங்கங்களும் உண்டு. இத் தீவில் புதுமை மிக்க சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. குஞ்சர குஞ்ச தேசத்திலுள்ள மக்களைச் சேர்ந்தவர்களால் அது கையளிக்கப்பட்டது.” குஞ்சர குஞ்ச எனக் கூறப்பட்ட இடம் தென்னிந்தியா விலுள்ள தென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. விசயநகர காலத்தில் குஞ்சர கோண என்னும் பெயர் காணப்படுகின்றது. இது ஆணிகண்டி என்னும் கன்னடப்பெயரின் சமக்கிருத மொழிபெயர்ப்பு. இது ஹம்பிக்கு எதிரே துங்கபத்திரை ஆற்றங்கரையிலுள்ளது. அரிவம்சம் என்னும் புராணம் குஞ்சர மலையில் அகத்தியர் ஆச்சிரமம் இருந்ததெனக் கூறுகின்றது. இப் பகுதியிலிருந்து சென்ற மக்களே சாவகத் தீவில் கோயிலமைத்திருக்கலாம். சாவகத்திலே முதல் முதலாகக் கட்டப்பட்ட சிவன் கோயில் குஞ்சரகோணம் என டாக்டர் கேண் என்பார் கூறியுள்ளார். இன்னொரு பட்டையம் சிவன் கோயில் ஒன்று அகத்தியரால் கட்டப்பட்டதெனக் கூறுகின்றது. அச் சாசனத் தில் கூறியிருப்பது வருமாறு : “எல்லா மக்களும் தாம் விரும்பியவற்றைப் பெறுமாறு அகத்தியர் வரதலோக என்னும் கோவில் திருப்பணியைச் செய்தார்.” அகத்தியரின் பிற் சந்ததியினர் சிலர் அகத்தியர் கோத்திரத்தினர் என்று நமக்குத் தெரிகின்றது. அவர்கள் சைவ சமயத்தினர். அவர்களுள் ஒரு பிரிவினர் சாவகத்தில் குடியேறி யிருந்தார்கள். ஆ°வலாயன கிரிகிய சூத்திரத்தில் சொல்லப்படும் 49 பிராமண கோத்திரங்களுள் அகத்திய கோத்திரம் காணப்படுகின்றது. சாவகத்திற் போலவே தென்னிந்தியாவிலும் அகத்தியர் பிராமண நாகரிகத்துக்குரியவராகவிருந்தார். கி.பி.1524இல் பொறிக்கப்பட்ட ஒரு பட்டையத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டுவித்த அயிலபட்டர், தான் அகத்திய கோத்திரத்தவர் எனக் கூறியுள்ளார். அகத்தியர் ஜாவானிய குடும்பங்களுக்குத் தலைவரும், கோயில்களைக்கட்டியவருமாய் மாத்திரம் இருந்தாரல்லர். அவர் இந்தியாவிலும் சாவகத்திலும் வழிபடவும்பட்டார். போலிநீசிய மொழியில் அகத்தியர் என்னும் பெயர் வாலிங் என மொழி பெயர்த்து வழங்கப்படும். சாவகத்திலும் பாலியிலும் சத்தியம் செய்வதற்கு உரிய வாசகங்களுள் அகத்தியரின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அது வருமாறு: “சூரியர் சந்திரர் உள்ளளவும், உலகம் கடலால் சூழப்பட்டு உள் ளளவும், காற்று உள்ளளவும், வாலிங்கின் பெயர் நிலைபெறும்.” காவீ(Kawi) தீவு மக்கள் அகத்தியர் என்னும் பெயரை அரிச்சந்திரானா என வழங்குவர். கி.பி.760இல் வெட்டப்பட்ட பட்டையமொன்று கிழக்கு சாவகத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இது சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியரின் திரு வுருவத்தைப்பற்றிக் கூறுகின்றது. அச் சாசனம் கூறுவது வருமாறு: “தனது முன்னோரால் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியர் திருவடிவம் விழுந்தபோது கல்வி அறிவுள்ள அரசன் கருங்கல்லில் அவ்வடிவத்தை அமைக்கும்படி சிற்பிக்குக் கட்டளையிட்டான்; அரசன் கும்பயோனியாகிய அகத்தியர் திருவுருவத்தைக் குருமார், வேதம் அறிந்த முனிவர்கள் முதலியவர்களால் பிரதிட்டை செய்வித்தான்.” சாவகத்தில் ஊன்றிய அகத்திய வழிபாடு ஏழாம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியாவினின்று சென்றிருக்க வேண்டுமெனக் கூறினோம். இந்தியா விற் காணப்படும் அகத்தியர் திருவுருவங்களின் சாயலாகவே இந்தியக் குடியேற்றத் தீவுகளிலும் அவர் உருவங்கள் காணப்படுகின்றன. சாவகத்தில் இருபதுக்கு மேற்பட்ட அகத்தியர் உருவங்கள் காணப்படுகின்றன. அவர் சடை, உருத்திராக்கம், கரகம் முதலியன உடையவராகக் காணப்படுகின் றனர். அவர் காசியிலேயே சிவ வழிபாட்டிற் சிறந்தவராக விளங்கினார். அகத்திய குண்டத்திலே உள்ள அகத்திய சிவன் அகத்தியரின் ஞாபகமாக விளங்குகின்றார். அவரின் அடையாளமாக அங்குச் சூலம் உள்ளது. சாவகத்திற் காணப்படும் அகத்திய விக்கிரகத்தின் உடை, இந்தியாவி லும் இலங்கையிலும் காணப்படும் விக்கிரகங்களின் உடையை ஒத்தது. அகத்திய உருவங்களை சாவக மக்கள் சிவ குரு, பாரத குரு என வழங்கி னார்கள். அவருக்கு எப்பெயர்கள் வழங்கிய போதும் அவை அகத்தி யரையே குறிக்கின்றன என்பது தெளிவு. அவர் சிவ சமயத்தைப் போதித் தமையால் சிவ குரு எனப்பட்டிருக்கலாம். கலசய, கும்பயோனி, சர்வஞ்ஞ, மித்திரவர்ணமுத்திர என்பவர் இவரேயென சாவக மக்கள் வழங்கும் பெயர்களைக் கொண்டு நன்கு அறியலாம். தென் சாவகத்தில் கெடோயிலே தஞ்சிபெனன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை முதன்மையுடை யது . இது கி.பி. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அகத்தியரின் வடிவம் எவ்வாறிருந்தது என்பதை அத் தீவிலுள்ளவர்கள் எவ்வாறு கற்பனை செய்தார்கள் என இவ்வடிவைக் கொண்டு அறிகின் றோம். பிற்காலங்களில் அகத்தியர் உருவங்கள் பலவாறு செய்யப்பட்ட போதும் கமண்டலம், உருத்திராக்கம், சடை என்பன விடுபடவில்லை. சாவகத்தில் காணப்பட்ட அகத்தியர் உருவத்தைப் பலர் சிவன் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். சிவன் வடிவம் ஒருபோதும் தொந்தி வயிறும் தாடியுமுடையவராக எங்கும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அகத்தி யருக்கு பகையாயிருந்தவர் திரணபிந்து என்றும் அவர் சமதக்கினி புதல்வர் என்றும் ஒரு பழங்கதை உளது. வாயு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் சமதக்கினி துவாபரயுகத்தில் இருபத்து மூன்றாவது வியாசர் எனக் கூறப்படுகின்றார். திரணபிந்து சைவராயிருந்தார். இவருக்கு நேர்ந்த குட்டநோயைச் சிவபெருமானே கலசத்தில் தோன்றி ஆற்றினார். இவருக்கு அக த்தியரே குருவாகவிருந்தார். அகத்தியர் தெற்கே வந்தபோது அவரை யும் அழைத்துச் சென்றார். தெற்கே அவர் திரணதூமாக்கினி எனப்பட்டார். அவர் தொல்காப்பியர் எனவும் தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்டார். அவர் தமிழ் இலக்கணத்தை ஒழுங்குபடுத்தி அமைக்க அகத்தியருக்கு உதவி புரிந்தார். திரணபிந்துவால் செய்யப்பட்ட தொல்காப்பிய மென்னும் இலக்கணம் தமிழ் இலக்கணங்களுள் முதன்மையுடையது. அகத்தியரோடு இவருக்குள்ள தொடர்பைக் குறித்த வியப்பான கதை ஒன்று கூறப்படுகின் றது. வடக்கேயிருந்து தனது மனைவியாகிய உலோபாமுத்திரையை அழைத்து வரும்படி அகத்தியர் திரண பிந்துவுக்குக் கட்டளையிட்டார். வருமிடத்து உலோபாமுத்திரைக்கும் திரணபிந்துவுக்குமிடையில் ஒரு கோல் தூரம் இருக்கவேண்டுமென அவர் கட்டளையிட்டார். அவர் வையை ஆற்றைக் கடக்கும்போது உலோபாமுத்திரை ஆற்றில் மூழ்கி உதவி வேண்டிச் ச த்தமிட்டார். ஆசிரியரின் ஆணையை மறந்து திரணபிந்து உலோபாமுத்திரையின் கையைப்பிடித்து அவரைக் காப்பாற்றினார். அகத்தியர் இந் நிகழ்ச்சியைக் கேட்டவுடன் கோபங்கொண்டு திரணபிந்து வுக்குச் சுவர்க்கத்தின் கதவு அடைபட வேண்டுமெனச் சாபமிட்டார். திரண பிந்து அகத்தியருக்கும் சுவர்க்கக்கதவு அடைபட வேண்டுமென மறு சாப மிட்டார். இவ்வாறு குரு மாணாக்கருக்குப் பகை நேர்ந்தது. அகத்தியர் திரண பிந்துவின் இலக்கணம் பிழையுடையதெனக் கூறினார். ஆனால் தொல் காப்பியம் பிழையில்லாத இலக்கணம் எனத் திரணபிந்துவால் நாட்டப் பட்டது. திரணபிந்துவுக்கு விசாலன், சூனியபந்து, தும்பிரபந்து என்னும் மூன்று குமாரரும் இலிபிளை என்னும் ஒரு புதல்வியும் இருந்தனர். இவர் காசியப்பாவுக்குப் பெண் கொடுத்த மாமனும் புலத்தியரின் தாய்மாமனு மாவர். சாவகத்தில் பகவான் திரணபிந்து என எழுதப்பட்ட பல கல் உருவங்கள் காணப்படுகின்றன. அகத்தியரோடு சம்பந்தப்பட்ட மரீசி என்னும் ஒரு முனிவரின் சிற்பமும் அங்கு காணப்படுகின்றன. மரீசி என்னும் பெயர் தேவநாகரியில் எழுதப்பட்டுள்ளது. மத்திய சாவகத்தில் இந்திய பிராமணர் குடியேறியிருந்ததற்கு அடை யாளம் காணப்படுகின்றது. அங்குத் துர்க்கை, விநாயகர் திருவுருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சஞ்சயப் பட்டையத்தால், அகத்தியர் அல்லது அகத்தியர் கோத்திரத்திலுள்ள ஒருவரால் தென்னிந்திய கோவில்களைப் போன்ற ஒன்று சாவகத்தில் எடுக்கப்பட்டதெனத் தெரிகின்றது. பிரம்பனம் (Prambanam) என்னும் அழிபாடுகளில் சிவலிங்கங்களும், சிவன், விஷ்ணு, பிரமா, திரிமூர்த்தி முதலிய கடவுளரின் திருவுருவங்களும் காணப்படு கின்றன. இவை பத்துப் பதினோராவது நூற்றாண்டைய தென்னிந்திய சிற்பங் களை ஒத்துள்ளவை. மலாய தீவுகளில் காணப்பட்ட சமக்கிருத பட்டை யங்கள் இந்திய பட்டையங்களின் மாதிரியில் வெட்டப்பட்டவை என்று நன்கு அறியப்படுகின்றன. தென்னிந்திய பட்டையங்களிலும் மலாய தீவு களின் பட்டையங்களிலும் வெட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் ஒரே வகை யின. சாவகத்தின் பழைய நாகரிகம் கலிங்க தேசத்திலும் பார்க்கத் தமிழ் நாட்டின் வடகரையோடு சம்பந்தப்பட்டதென டாக்டர் பர்நெல் (Dr.Burnell) கூறியுள்ளார். சிவன், விஷ்ணு, பிரமா முதலிய உருவங்களின் ஆபரணங்கள், நிலை, முத்திரை, ஆசனம், தாமரைப்பீடம் போன்றவைகளைக் கவனித்தால் இவை இந்திய சிற்பங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டவை என்று நன்கு தெளிவாகும். சாவகக் கோவில்களின் வாயில் காவலர் தென்னிந்திய கோவில்களின் துவாரபாலகரைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பாலித்தீவில் இன்றும் இந்தியக் கடவுளரின் வழிபாடுகள் காணப்படுகின்றன. பாரத குரு, பாரத பிரமா, பாரத விஷ்ணு, பாரத சிவன் முதலிய கடவுளர் அங்கு வழிபடப்படுகின்றனர். மகாதேவர் என்னும் பெயர் அவர்களின் சமய நூல்களில் காணப்படுகின்றது. அகத்தியர் சாவகம், பாலி முதலிய இடங்களில் மேலான கடவுளாக வழிபடப்பட்டார். சாவகத்தில் வழங்கும் பழங்கதைகளில் கலிங்க நாட்டினின்றும் மிகப் பல குடும்பங்களும், அரசரும், ஒருவர் பின் ஒருவராக அங்குச் சென்றார்கள் எனக் கூறப் படுகின்றது. குறிப்பு : கான்குலி புராண சம்பந்தமாக வழங்கிய வரலாறுகளையும் பிற்காலத்தில் தென்னிந்தியாவினின்றும் மலாய தீவுகள், கம்போதியா முதலிய நாடுகளில் சென்றிருந்த அகத்தியர் வழிபாடு முதலியவைகளை யும் கூறியுள்ளார். கிறித்துவம், புத்தம், சைனம், என்னும் மதங்களைப் போலப் பிராமண மதமும் வடநாட்டினின்றும் தென்னாடுவந்த தொன் றாகும். சீனாவில் சீன மக்களின் பழைய கொன்பியூச°1 மதமும், புத்த மதமும் பின்னி ஒன்றுபட்டது போலத் தென்னாட்டிலும் பிராமண மதமும் தமிழர் மதமும் பின்னி ஒன்றுபடலாயின.2 பிராமண மதம் பரவிய பிற்காலத் திலேயே அகத்தியர் வழிபாடு கம்போதியா, மலாய்த் தீவுகளிற் பரவுவ தாயிற்று. * * * அகத்தியர் பலர் *அகத்தியரைப்பற்றிய பழங்கதைகள் பல்வேறு வகையாக வளர்ந்து ஒன்று சேர்ந்து அகத்தியர் வரலாறாக இன்று வழங்குகின்றன. 1உலாபாமுத்திரையின் கணவர் சமக்கிருதத்தில் இரண்டு அல்லது மூன்று அகத்தியர் பெயர்கள் காணப்படுகின்றன. வான்மீகருக்கு முற்பட்டவரும் வேத காலத்தவருமாகிய அகத்தியர் ஒருவர் இருந்தார். இவர் கங்கைக்கரையில் வாழ்ந்த ஆரியக் கூட்டத்தினரின் தலைவரும் உலோபாமுத்திரையின் கணவருமாவர். வேறு இரண்டு அல்லது மூன்று அகத்தியர்களைப் பற்றி இதிகாசங்கள் கூறுகின்றன. முதல் அகத்தியர் சுதர்சன இருடியின் அண்ணனாவார். இராமர் காலத்து அகத்தியர் இவர் விந்தத்துக்குத் தெற்கே குடியேறச் சென்ற ஆரியக் கூட்டத்தி னரின் தலைவராவார். இவர் பஞ்சவடிக்குத் தெற்கே அல்லது நருமதை ஆற்றின் வட மேற்குப் பள்ளத்தாக்கில் உள்ள நாசிக்கில் ஆரியரல்லாத அநாகரிக மக்களிடையே போர் தொடுத்துக் கொண்டிருந்தார். இவர் இராமரை வரவேற்று அவரைத் தமது பகைவராகிய இராக்கதரோடு போர் செய்வதற்கு உடன்படும்படி செய்தார். வான்மீகர் ஆரியக் கொள்கைகளை நாட்டும் பொருட்டு அன்னிய நாட்டில் போர் செய்துகொண்டிருந்த முனிவரைக் குறித்துப் புகழ்ந்துள்ளார். மலையமலை யிலுறைந்த அகத்தியர் கிட்கிந்தா காண்டத்தில் இன்னொரு அகத்தியரைக் குறித்து வான்மீகியும் கம்பனும் கூறியுள்ளார்கள். இங்கு அகத்தியர் தென்கடலுக்கு அண்மையிலுள்ள மலையத்திலுறையும் சாந்தமான முனிவராகக் கூறப்பட்டுள்ளார். கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையைத் தேடி வரும்படி வானர வீரர்களை ஏவும்போது தென் பக்கமாகச் செல்லுதற்குரியாரை நோக்கிச் சொல்லியதாக வான்மீகி கூறியவை அடியில் வருமாறு: “........... பின் பூந்தாதுக்கள் நிறைந்தும், விசித்திரமான சிகரங்களுடையதும், பலவர்ண மான பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும், சந்தன வனங்கள் செறிந்ததுமான பெரிய அயோமுக மலையைத் தேடுங்கள்; அதன்பின் தேவ அரம்பையர் வந்து நீராடுகின்ற திவ்வியமான தெளிந்த நீரையுடைய அழகிய காவேரி நதியை அங்கே காண்பீர்கள்; அந்த மலையமலையின் சிகரத்தில் ஆதித்தனுக்குச் சமானமான மிகுந்த ஒளியுடைய முனிவர்களுள் சிறந்தவரான அகத்தியரைக் காண்பீர்கள். பின்பு அம் முனிவரிடம் ஆணை பெற்றுச்சென்று முதலைகள் நிரம்பிய பெரிய தாமிரபர்ணியைத் தாண்டுங்கள். அந் நதி அழகிய சந்தனச் சோலைகளால் மூடப்பெற்ற திட்டுக் களையுடையதாய், கணவனிடத்து அன்புள்ள யுவதியானவள் புக்ககம் புகுமாறு போலக் கடலுள் சென்றுவிழும். பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடையதாயும் முத்து மயமான மணிகளால் அலங்கரிக்கப் பெற்றதாயும் பாண்டியர்க் குரியதுமாகிய கவாடத்தைப் பார்க்கக்கடவீர்” “தென்றமிழ் நாட்டகன் பொதியிற் றிரு முனிவன் தமிழ்ச் சங்கஞ் சேர்கிற்பீரேல் என்று மவனுறை விடமா மாதலினாலம் மலையை யிடத்திட் டேகி” - கம்பன் பஞ்சவடி அகத்தியரும் பொதிய மலை அகத்தியரும் வெவ்வேறினர் பஞ்சவடியிலிருந்த அகத்தியரே இவர் என்று எண்ணுதற்காவது சந்தேகிப்பதற்காவது இடமில்லை. ஆரணிய காண்டத்தின் பலவிடங்களில் வேதக்கிரியைகளை இயற்றிக் கொண்டு வடக்கேயுள்ள காடுகளில் வாழ்ந்த அகத்தியரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. தெற்கிலே பாண்டி நாட்டில் அகத்தியர் இருந்ததைப் பற்றிக் கிட்கிந்தா காண்டம் கூறுகின்றது. புலவரின் வாக்குக்களே இவ்விரு அகத்தியர்களும் வெவ்வேறினர் என்பதை விளக்குகின்றன. மலையத்தில் இருந்த அகத்தியர் வேதக்கிரியைகளைச் செய்து கொண்டிருந்தார் என்று யாண்டும் கூறப்படவில்லை. பொதியமலை, அகத்தியருக்கு நிலையானது எனக் கம்பரும் வான்மீகியும் கூறியுள்ளார்கள். ஒரு முனிவர் பஞ்சவடியில், ஆரியரல்லாத மக்களோடு பகைமை கொண் டிருந்தார். மற்ற அகத்தியர் பொதிய மலையில் அமைதியுடன் வாழ்ந்தார். இவர்கள் எண்ணூறு மைல் தூரத்துக்குமேல் இடைத்தொலைவுள்ள இரு இடங்களிலும் வாழ்ந்தவர்கள் என்பதை வான்மீகர் நன்கு உணரவைத் துள்ளார் என்பது நன்கு தெளிவாகின்றது. தெற்கே வாழ்ந்த அகத்தியர் ஆரிய முனிவரா அல்லது ஆரிய அகத்திய கோத்திரத்தினரா? வான்மீகர் புகழும் அகத்தியர் வடநாட்டிலும் தனது புகழைப் பரவச் செய்த தமிழ் அறிவரா1? என்பன போன்றவை ஆராய்ச்சிக்குரியன. சங்க நூல்களில் அகத்தியர் பெயர் இல்லை சங்க நூல்கள் ஒன்றிலும் அகத்தியரைப் பற்றிய பெயர் காணப்பட வில்லை. பரிபாடலின் பதினோராம் செய்யுளில் அகத்தியன் என்னும் பெயர் வந்துள்ளது. அது விண்மீன் ஒன்றைக் குறிக்கின்றது. இப் பாடலைச் செய்தவர் கலித்தொகையில் நெய்தற் கலியைச் செய்தவராகிய நல்லந்து வனார். அவர் காலம் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன். அகத் தியரைப் பற்றிய வரலாறு அக் காலத்தில் பழங்கதையாக மாறியுள்ளதெனத் தெரிகின்றது. இம் முனிவர் பொதிய மலையில் இருந்தார் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. இலக்கிய காலத்துக்கு முன்னும் அறியப்பட்ட அகத்தியர் ஒருவரைப் பற்றிய நினைவு சங்ககாலத்தும் இருந்ததெனத் தெரிகின்றது. இவருடைய புகழ் மிகப் பரவியிருந்தமையால் இவர் பெயர் தமிழ்நாட்டில் மறக்கப்படாமல் இருந்தது. இல்லையாயின் இவர் பெயர் பரி பாடலில் தோன்றியிருக்க மாட்டாது. பெதுருங்கேரியரின் படம் என்னும் உரோமர் வரலாற்றுக் குறிப்பில் அகத்தியர் கோயில்1 ஒன்று தென்னாட்டில் இருந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. பெதுருங்கேரியர் படத்தின் காலம் கி.பி. 100 வரையில், இதனாலும் அகத்தியர் புகழ் சங்ககாலத்தும் மிகப் பரவி யிருந்ததென விளங்கும். அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியரல்லர் தொல்காப்பியம் என்பது இன்று தமிழில் காணப்படும் பழைய இலக் கணம். தொல்காப்பிய இலக்கணம் செய்தவராகிய தொல்காப்பியர் அகத்தி யரின் மாணவர் என்னும் பழங்கதை வழங்குகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. தொல்காப்பியத்துக்கு முன் பல இலக்கணங்களும் பல இலக்கியங்களும் இருந்தனவென்று தொல்காப் பியமே கூறுகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைக் குறித்து யாண்டும் கூறாமையால் அவர் அகத்தியரின் மாணவரல்லர் என்பது எளிதில் விளங் கும். இவர் அகத்தியர் மாணவராயின், மிகப் புகழ் படைத்த தனது ஆசிரி யரைக் கூறாது மறைக்கும் நன்றியில்லாக் குணத்தை இச் சிறந்த ஆசிரியர் மீது ஏற்ற நேரும். அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் பகை உண்டா யிருந்ததெனவும் ஓர் பழங்கதை உளது. அது உண்மையாயின் தொல்காப் பியத்துக்குச் சிறப்புப்பாயிரஞ் செய்த பனம்பாரனார் தொல்காப்பியரின் குற்றத்தை நியாய முடையதாகக் கொண்டு தனது ஆசிரியரின் புகழை மறைக்க வேண்டிய காரணமுமில்லை. அகத்தியர், அவர்களின் ஆசிரிய ராக இருந்தாராயின், அவர்கள் அவர் புகழை எடுத்து உலகுக்கு நன்கு விளக்கியிருப்பார்களன்றோ? தமிழ் ஆசிரியராகிய அகத்தியர் தமிழரே ஆரியர் விந்தத்தைத் தாண்டித் தெற்கே வரத் தொடங்கியது கி.மு. 1000 வரையில் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதற்கு முற்பட்ட பழைய காலத்தில் ஆரியவர்த்தத்தில் வாழ்ந்த ஆரியரொருவர் தெற்கே இருண்டு அடர்ந்து கிடந்த காட்டைக் கடந்து தன்னந்தனியே பொதிய மலையில் தங்கியிருந்தார் என்பது நம்பத்தகாதது. அவர் வேடரும் கொடிய விலங்குகளும் வாழும் காட்டைக் கடந்து தெற்கே வந்து அங்கு வழங்கிய மொழியையும் இலக்கியத்தையும் கண்டு அவைகளில் விருப்பங் கொண்டு அவற்றைக் கற்று இலக்கண ஆசிரியராய் விளங்கினாராயின் அவர் நாகரிகத்துக்கு இருப்பிடமாகிய நகரில் வாழாது விலங்குகள் வாழும் மரஞ்செடிகள் அடர்ந்த இடத்தைத் தமக்கு உறைவிடமாகக் கொண்டிருக்க மாட்டார். இருக்குவேத காலம் முதல் ஆரியருக்கும் தமிழருக்கும் (தேவருக்கும் அசுரருக்கும்) போராட்டம் மலிந்திருந்தன. அதனால் தமிழ் நாட்டவர் ஆரியரை1 மிலேச்சர் என வழங்கி வந்தனர் என்றும், அவர்மீது பகை கொண்டிருந்தனரென்பதும் நன்கு விளங்குகின்றன. தமிழை இகழ்ந்த வடநாட்டரசர்மீது சீற்றங்கொண்டு சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்ற வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். இதனால் மிகமிகத் தொன்மையே தமிழ் அறிவு சான்றிருந்த தமிழ்ப் புலவர்கள் ஆரியர் ஒருவரைத் தமது தலைவராக ஒப்புக்கொண்டார்கள் எனக் கூறுவது இயலாத காரியம். அகத்தியர் தமிழாசிரியராயிருந்தனராயின் அவர் தமிழ் மக்களிடையே மதிப்புப் பெற்று விளங்கிய தமிழர் ஒருவராதல் வேண்டும். அவர் புகழ், மறந்துபோக முடியாத அவ்வளவு பெரிதாயிருந்தமையில் அவர் பெயரைச் சுற்றிப் பல கற்பனைக் கதைகள் வந்தடைந்தன. இக் கற்பனைப் போர்வையை ஊடுருவி நோக்கி அவருடைய உண்மை வரலாற்றை அறிந்து கொள்வது கடினமாகின்றது. நாம் அவர் வரலாற்றைக் குறித்துப் பின்வருமாறு உய்த்துக் கூறலாம்: ஆரியர் வருகைக்கு முன் அகத்தியர் என்னும் பெயருடைய தமிழ் அறிஞர் ஒருவர் தமிழ் நாட்டில் விளங்கினார். இவர் சமக்கிருதத்தோடு தொடர்பு பெற்ற அகத்தியரில் வேறானவர். அவர் தமிழர் மதிப்பு அளித்த அறிஞர் களுள் ஒருவர். தொல்காப்பியருக்குப் பிற்பட்ட மக்கள் ஆரிய சம்பந்தமான பல கற்பனைகளை அகத்தியரோடு சம்பந்தப்படுத்திக் கட்டி வைத்தார்கள். தமிழ்ப் பெயர்களை ஆரியர் தம்முடையவைகளாகத் தமது பழங்கதை களில் எடுத்து வழங்குவது இயல்பு. தமிழ் முருகன் சுப்பிரமணியராகவும், தமிழ் மால் விஷ்ணுவாகவும் வழங்கப்படுகின்றமையை நாம் அறிவோம். தமிழ்க் கருத்துக்களை ஆரியமாக்குமிடத்துத் தமிழ்க் கடவுளர் ஆரியராக மாறினர். தமிழ்நாட்டிலுள்ள இடங்கள், ஆறுகள், மக்களுக்கு ஆரியப் பெயர்கள் இடப்பட்டன. வெண்காடு சுவேதாரணியமாகவும், தண்பொருநை தாம்பிரபர்ணியாகவும் மாறின. ‘பண்டை’ என்னும் அடியாத்தோன்றிய பாண்டிய பரம்பரைப் பெயர் பாண்டவ அல்லது பாண்டு வமிசமாக மாறிற்று. இவ்வாறே தமிழ் அகத்தியர் சமக்கிருத அகத்தியராக மாறியிருத்தல் வேண்டும். தமிழ் நாட்டில் வழங்கும் அகத்தியர் வரலாற்றுக்கு அடிப்படை பொதிய மலையில் இருந்த ஒருவராதல் வேண்டும்; இல்லையேல் அகத்தியரைப் பற்றிய பழங்கதைகள் அந்தரத்தில் எடுத்த கோட்டையாக மாறிவிடும். தமிழ்ப் புலவர்கள் ஆரியரொருவரைத் தமிழ்க் கல்விக்குத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதினாலும் அகத்தியர் தமிழராவர் என்பது வலியுறுகின்றது. புராண காலத்தில் அகத்தியரைப் பற்றி ஆரியப் போக்கான கற்பனைக் கதைகள் வளரத் தொடங்கின. அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயர் அகத்திய என்னும் ஆரியப் பெயரோடு ஒற்றுமை காணப்பட்டமை கொண்டு அவர் ஆரியராக்கப்பட்டனர். முத்தூர் அகத்தியன் அவர்கள் இவரைப் பஞ்சவடியில் இருந்த அகத்தியராகக் கொண்ட தோடு அமையாது அவரைக் குறித்த பல கற்பனைக் கதைகளையும் எழுதி வைத்தனர். தமிழ் மக்களும் ஆராய்வின்றி அக்கட்டுக் கதைகளை நம்பத் தலைப்பட்டனர். இவர் பஞ்சவடியிலிருந்த அகத்தியர் ஆக்கப்பட்டதல்லா மல் இருக்கு வேத காலத்தவரும் உலோபா முத்திரையின் கணவருமாகிய அகத்தியருமாக ஆக்கப்பட்டார். அகத்தியரைப்பற்றி இன்று வழங்கும் பழங்கதைகள் இன்று ஆராய்ச்சிக்கு நிற்கவில்லை. செங்கோன் தரைச் செலவில் முத்தூர் அகத்தியர் என்னும் தமிழ்ப்புலவர் ஒருவர் பெயர் காணப் படுகின்றது. அவரை ஒப்ப மதிப்பைப் பெற்றிருந்த ஒருவரே அகத்திய ராவர். முத்தூர் கன்னியாகுமரிக்குத் தெற்கேயிருந்து மறைந்துபோன பாண்டி நாட்டின் பகுதியில் உள்ளது. இதனால் ஆரியர் தென்னாடு வருவ தன் முன் அகத்தியர் என்னும் தமிழர் ஒருவர் இருந்தாரென்பது செங்கோன் தரைச் செலவு என்னும் நூலால் தெரியவருகின்றது. தமிழ் நாட்டில் அகத்தி யர் என்னும் பெயருடன் பலர் விளங்கியிருத்தல் கூடும். அவர்களுள் ஒருவnர மிகப் புகழ் படைத்தவர். இவருடைய பெயரைச் சுற்றி அவர் புகழை விளக்கும் பல கதைகள் வந்து திரண்டன. இவ்வாறே ஆரிய அகத்தியரைக் குறித்த கதைகளும் அவர் பெயரைச் சுற்றித் திரண்டன. சங்க காலத்துக்குப்பின் ஆரியக் கதைகளும் தென்னாட்டு அகத்தியர் கதைகளோடு வந்து கலந்தன. நச்சினார்க்கினியர் அகத்தியரைக் குறித்துக் கூறும் பழங்கதை நச்சினார்க்கினியர் அகத்தியரைக் குறித்துக் கூறியுள்ள கதையே இதற்குச் சான்று. அவர் கூறியிருப்பது வருமாறு:..... “அவரும் (அகத்தியரும்) தென்திசைக்கண் போதுகின்றவர், கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர், யமதக்கினியாருழைச் சென்று அவர் மாணாக்கர் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியாருழைச் சென்று அவ ருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்கோடி வேளிருள்ளிட் டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிற் கண்ணிருந்து இராவணனை கந்தருவத்தால் பிணித்து இராக்க தரை ஆண்டு இயங்காமல் விலக்கி..........” அகத்தியர் இராவணன் காலத்தவரும் கண்ணன் காலத்தவருமாதல் முடியாது இவ்வகைப் பழங்கதைகள், வடநாட்டு அகத்தியரை தமிழ் இலக்கியங் களின் தந்தை ஆக்குவதல்லாமல், அவர், கிருஷ்ணனின் துவாரகையி லிருந்து யாதவர் கூட்டத்தினர் பலரைத் தெற்கே கொண்டு வந்து குடியேற்றி னவராகவும் கூறுகின்றன. மத்தியகால உரையாசிரியர்களுள் ஒருவராகிய நச்சினார்க்கினியர் அகத்தியர் இராவணனை இசையில் வென்றார் எனவும் கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் உரைகள் ஒன்றை ஒன்று மறுப்பனவாயுள்ளன. அகத்தியர் இராவணன் காலத்தவராயின் அவர் இரண்டாவது திரேத உகத் தில் வாழ்ந்தவராவர். ஆகவே அவர் துவாரகைக்குப் போயிருக்க முடியாது. துவாரகை கண்ணனால் மூன்றாவது துவாபர உகத்தில் அமைக்கப்பட்டது. அவர் துவாரகையிலிருந்து மக்களை அழைத்து வந்தவராயின் அவருக்கும் இராமரின் பகைவனாகிய இராவணனுக்கும் யாதும் தொடர்பு இருக்க முடியாது. இவ் வில்லங்கத்தைத் தடுப்பதற்கு வேளிர் வரலாறு எழுதியவர் அகத்தியரால் இசையில் வெல்லப்பட்டது. இராவணன் இராமரின் பகைவ னாகிய இராவணனல்லன் என்றும், அவன் இராவணப் பெயர் தாங்கிய இன்னொருவனென்றும் கூறுவாராயினர். இந்நியாயம் நிலைபெறுமாறில்லை. அகத்தியரோடு இராவணன் நிகழ்த்திய இசைப்போரைப் பற்றிக் கூறும் பிற வரலாறுகள் வான்மீகி கூறும் இராவணனையே குறிக்கின்றன. அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் நச்சினார்கினியர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியரின் மாணாக்கனாகிய தொல்காப்பியர் சமதக்கினியின் புதல்வனும் பரசு இராமனின் உடன் பிறந்தானுமாகிய திரண தூமாக்கினி எனவும் அவர் கூறியுள்ளார். பரசு இராமர் இராமருக்கு முன்பட்டரென்பது வால்மீகியின் கூற்றால் விளங்குகின்றது. திரணதூமாக்கினியும் வால்மீகி கூறும் இராமரும் பரசு இராமர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இதனால் திரணதூமாக்கி னியின் ஆசிரியராகிய அகத்தியர் இராமரின் பகைவனாகிய இராவணனைச் சந்திக்க முடியுமெனத் தெரிகிறது. இக் காரணத்தினாலும் அகத்தியர் தமிழரின் முன்னோராகிய வேளிரைத் துவாரகையிலிருந்து அழைத்துவர முடியாதெனத் தெரிகின்றது. இக் கதைகள் இவ்வாறு ஒன்றோடு ஒன்று மாறுபடுவனவாயிருக்கின்றன. இராமருக்கும் கிருட்டிணனுக்கும் இடையி லுள்ள காலம் ஒரு இலட்சம் ஆண்டுகள் வரையில். இராமாயணத்துக்கும் பாரதப் போருக்கும் இடைப்பட்ட இவ்வளவு நீண்டகாலம் யாரும் வாழ முடியாது. இதனால் அகத்தியரைப் பற்றிய கதைகள் சங்ககாலத்திற்குப் பின் ஆராய்வின்றிக் கட்டப்பட்டவை எனத் தெரிகின்றது. நெடுமுடி அண்ணல் நிலந்தருதிருவில் நெடியோன் (தொல்காப்பியம் கி.மு. மூன்றாம், அல்லது நாலாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட நூல் என இற்றை ஞான்றை ஆராய்ச்சியாளர் முடிவு செய் கின்றனர். அவ்வாறாயின் இராமர் காலத்திலோ, கண்ணன் காலத்திலோ தொல்காப்பியர் இருந்தார் எனக்கொள்வது சிறிதும் பொருத்தமற்றதாகும்.) நச்சினார்க்கினியார் கூறும் சில சொற்றொடர்கள் அகத்தியர் பொதிய மலையின் தெற்கிலிருந்து வேளிர்களுடன் வந்தாரென்பதை விளக்குவன. நச்சினார்க்கினியர் நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் என்னும் பெயரால் கண்ணனைச் சுட்டுகின்றார். கண்ணனின் தலைநகரைத் துவாரகை எனவும் கூறியுள்ளார். மதுரைக் காஞ்சியில் வரும் நெடுமுடி அண்ணல் என்பதற் கும் அவர் கண்ணன் எனப் பிழையான பொருள் கூறியுள்ளார். மதுரைக் காஞ்சி ஆசிரியர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை அல்லது புலவர் குழுவை ஆதரித்த பாண்டியனைக் குறிக்க நிலந்தருதிருவில் நெடியோன் என்னும் பெயரை ஆண்டுள்ளார். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது நிலந்தரு திருவிற் பாண்டியன வையில். துவரை என்னும் பெயருடைய பல இடங்கள் தமிழ் நாட்டில் இருந்தன. கடல்கொண்ட நாட்டில் அவ்வகை இடங்கள் இருந்தன. பாண்டியரின் தலை நகராயிருந்த கபாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது. துவாரபதி என்பதே கபாடபுரமென வடமொழிப் படுத்தப்பட்டிருத்தல் கூடும். பாண்டி நாட்டுக்குத் தெற்கே கிடந்த நிலத்தைக் கடல் கொண்டபோது மக்கள் வடக்கு நோக்கிச் சென்று (தமிழ் நாட்டில்) குடியேறினார்கள் எனக் கலித்தொகை கூறுகின்றது. ஆகவே அகத்தியர் தெற்கே கடல்கொண்ட பாண்டி நாட்டினின்றும் வந்தவராகலாம். தெற்கிலிருந்து வந்த பாண்டியர் அவையிலிருந்த வேளிர் தமது அரசனை நெடுமுடி அண்ணல் எனக் கூறினாராகலாம். நெடியோன், நெடுமுடி அண்ணல் என்பன பாண்டியப் பேரரசனைக் குறிப்பன. அகத்தி யர், வேளிர்கள் சிலரோடு பொருநை ஊற்றெடுக்கும் இடத்தில் தங்கினாராதல் வேண்டும். இவரே தமிழ்க் கல்வியிற் புகழ்பெற்று விளங்கினார். அகத்திய ருடன் சென்ற வேளிர் அயலேயுள்ள மலைநாடுகளில் இராச்சியங்களை உண்டாக்கிக் குறுநில மன்னராயினர். ஆய், ஆவி முதலிய குறுநில மன்னர் பலர் வேளிர் மரபினர் எனப்படுகின்றனர். அகத்தியர் நிலந்தருதிருவிற் பாண்டியன் அல்லது நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் காலத்தவராயின் தொல்காப்பியரும் அகத்தியரும் ஒரே காலத்தவராகலாம். நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையிலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. அகத்தியரும் தொல்காப்பியரும் ஒரே காலத்தவர்களாயினும் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்பதற்குப் பழைய சான்றுகள் யாதும் காணப்படவில்லை. சிற்றகத்தியமும் பேரகத்தியமும் அகத்தியர் சிற்றகத்தியம், பேரகத்தியம் என்னும் இரு இலக்கண நூல்கள் செய்தாரென்னும் கதை செவிவழக்கில் உள்ளது. அகத்தியம் என்னும் பெயருடன் மத்தியகால உரையாசிரியர்கள் எடுத்தாண்ட சில சூத்திரங் களும் உள. இச் சூத்திரங்கள் இன்று வழங்கும் அகத்தியர் வாகடங்கள் போன்றவையே யாகும். தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலில் கூறப்படுவது வருமாறு: 1“அண்மையில் பேரகத்தியத்திரட்டு என்னும் சிறு நூல் ஒன்று வெளி யாயிற்று. அது அகத்தியம் என்னும் இலக்கணச் சூத்திரங்களின் திரட்டு எனக் கூறப்பட்டுள்ளது. அகத்தியருடையன என்பனவல்லாத வேறு சில சூத்திரங்களும் அந்நூலிற் காணப்படுகின்றன. அவை கழாரம்பர் என்னும் அவர் மாணவரால் செய்யப்பட்டன என்று தமிழ்ப் பண்டிதருள் ஒரு சாரார் நம்பி வருகின்றனர். இவ்விருவகைச் சூத்திரங்களும் எவராலோ செய்யப்பட்ட போலிகள் எனக் கொள்வதற்குப் பல நியாங்கள் உள.” 1. அச் சூத்திரங்களின் நடை மிகச் சமீப காலத்தது. அவைகளில் பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியச் சூத்திரங்களை யும் இவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இது நன்கு தெளிவா கின்றது. 2. அகத்தியர் காலத்தில் தமிழில் சமக்கிருதச் சொற்கள் அருகி வழங்கியிருத்தல் வேண்டும். புத்தமித்திரன் பவணந்தி காலங்களிற் போல வடசொற்களை தமிழில் ஆள்வதற்குரிய விதிகள் அக் காலத்தில் தோன்றி யிருக்க மாட்டா. தொல்காப்பியர் வடசொற்கள் தமிழில் வழங்குவதற்கு ‘சிதைந்தன வரினுமியைந்தன வரையார்’ எனப் பொது வகையால் விதி கூறினாரேயன்றிச் சிறப்பு வகையில் விதிகள் கூறிற்றிலர். பேரகத்தியத் திரட்டில் இருபத்தினான்கு சூத்திரங்கள் வடமொழிச் சந்தி, சொல்லாக்கங்களைப் பற்றிக் கூறுகின்றன... பேரகத்தியம் என்னும் நூல் கி.பி.1,250க்குப்பின் பெருவழக்கிலிருந்து நன்னூலுக்குப் பதில் சைவ மாணவர்கள் பயிலும்படி திருநெல்வேலி அல்லது தஞ்சாவூர்ப் பகுதிகளில் இருந்த யாரோ மாடதிபதி ஒருவரால் செய்யப்பட்டிருந்தல் வேண்டுமெனத் தெரிகிறது. தொல்காப்பியர் எங்காவது அகத்தியத்தையோ அகத்தியரைப் பற்றியோ ஒரு வார்த்தை தானும் கூறவில்லை. தொல்காப்பியப் பாயிரம் கூறுவது வருமாறு: “...தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிருமுதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோன்.” என்பதாகும். இப் பாயிரத்தினால் தொல்காப்பியருக்கு முன் அகத்தியம் என்னும் இலக்கணம் ஒன்று இருந்ததோ என்பது சந்தேகத்துக்கு இடனாகின்றது. அகத்தியரைத் தமிழ் மொழியோடு சம்பந்தப்படுத்திக் கூறும் கற்பனைக் கதைகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் முளைத்திருத்தல் வேண்டுமென நான் கருதுகின்றேன். பி.தி. ஸ்ரீனிவாச ஐயங்காரவர்கள் அகத்தியரைப் பற்றிக் கூறியுள்ள குறிப்புக்கள் வருமாறு: சமக்கிருத நூல்களில் இஷ்வாகு காலம் முதல் கிருஷ்ணன் காலம் வரையில் கூறப்படும் அகத்தியர்கள், வசிட்டர்கள் ஒரு தனி அகத்தியர், விசுவாமித்திரர், வசிட்டர்களைக் குறிப்பனவல்ல. அவை குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கிய பெயர்களாகும். அப்பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்ல1. * * * முதல் அகத்தியர் விதர்ப்ப அரசன் புதல்வியாகிய உலோபாமுத்திரை யின் கணவன். இவர் இராமருக்கு இருபது தலைமுறைகளின் முன்வாழ்ந்த சவர்க்கன் என்னும் காசி அரசன் காலத்தவர். ஆதி அகத்தியர் விந்தியத் துக்குத் தெற்கே வாழ்ந்தார். அவர் விந்தத்தை அடக்கினார் என வழங்கும் பழங்கதையின் பொருள், அவர் விந்தத்தைக் கடந்து தெற்கே சென்றார் என்பது ஆகலாம். அவருடைய ஆச்சிரமம் சாத்பூராமலைத் தொடரின் மேற்குப் பகுதியிலுள்ள வைடூரிய மலையிலுள்ளது. அவர் தமது தவத்தின் மகிமையால் தென் தேசத்துக்குத் தீமை நேராதபடி காத்தார். பஞ்சவடிக்கு இரண்டு யோசனை தூரத்தில் இராமர் சந்தித்த அகத்தியர் முதல் அகத்திய ராயிருந்தல் முடியாது; அவர் பிற்கால அகத்தியர்களுள் ஒருவராயிருத்தல் வேண்டும். இராமர் காலத்து அகத்தியர் கோதாவரிக்கு அண்மையில் வாழ்ந் தார். அவர் தெற்கு நோக்கிப் பயணஞ் செய்தபோது அகத்தியர் அவ்விடத்தி லேயே தங்கினார். இராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் திரும்பி வந்தபோதும் அகத்தியர் ஆச்சிரமம் அவ்விடத்திலேயே இருந்தது. இராமர் அலைந்து திரிந்தகாலம் முழுமையிலும் அகத்தியர் ஆச்சிரமம் பஞ்சவடியி லிருந்து இரண்டு யோசனை தூரத்தில் இருந்ததெனத் தெரிகின்றது. சுக்கிரீ வன் வானர வீரரை நோக்கிக் கூறியதாக வரும் பகுதியில் காவேரி ஆறு ஊற் றெடுக்கும் மலையமலையில் அகத்தியர் ஆச்சிரமம் உள்ளதாகக் கூறப்பட் டுள்ளது. சீதையை இராவணன் மாயமாகத் தூக்கிச் சென்றதுபோல இராமா யணஞ் செய்த புலவரும் அகத்தியரைப் பஞ்சவடியிலிருந்து மலையமலைக்கு மாயமாகக் கொண்டுபோய் விடுகின்றார். அகத்தியர் மலையமலையில் இருந்தார் எனவரும் பகுதியைப் பிற்காலப் புலவர் எவரோ எழுதினாராகலாம்1. * * * கி.பி. முதல் ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் எவற்றிலாவது அகத்தியர் கடவுளிடமிருந்து தமிழைக் கற்றாரென்றாவது, அவர் தமிழைத் தோற்றுவித்தாரென்றாவது கூறப்படவில்லை. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் செய்தாரென்றும், அவர் சிவபெருமானிடத்தும் சுப்பிரமணியக் கடவுளிடத்துமிருந்து தமிழைக் கற்றாரென்றும் வழங்கும் கதைகள் கி.பி. 1,000க்குப் பின் தோன்றின வாதல் வேண்டும்.2 * * * அகத்தியரென்னும் பிராமண முனிவர் பொதிய மலையில் சென்று தங்கித் தமிழ் இலக்கியங்களைச் செய்தார் என்னும் வரலாறு பிராமணரின் அதிகாரம் தென்னாட்டில் ஊன்றிய பிற்காலத்தில் தோன்றியிருத்தல் கூடும். இக் கதைக்கு ஆதாரம் சமக்கிருத நூல்கள் ஆகலாம்.3 * * * சின்ன ஆசியாவில் அகத்தியர் இந்தியநாட்டில் மாத்திரம் அகத்தியர்கள் இருக்கவில்லை. மேற்குத் தேசங்களிலும் அகத்தியர்கள் விளங்கினார்கள். சின்ன ஆசியாவில் அகத்தியா° (Agathias) என்னும் ஒருவர் விளங்கினார். இவர் சரித்திர ஆசிரியரும் புலவருமாகிய கிரேக்கர், இவர் கி.பி.530-ல் பிறந்தார்.4 5சித்திய மக்களிடையே (உள்ள) ஒரு குழுவினர் அகத்திரிசிகள் (Agathias) எனப்பட்டார்கள் என எரதோதசு (Heradotus p.K.480) என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். இவர்கள் தமது சட்டங்களை ஒரு வகைப் பாடல் மூலம் வாய்ப்பாடஞ் செய்து காப்பாற்றிவந்தனர். அரி° டோட்டில் காலம் வரையில் இவ்வழக்கு இருந்தது. அகத்திரிசி என்னும் இடப்பெயரும் ஐரோப்பாவில் உள்ளது6. வடநாட்டு இருஷிகள் எனப்பட்டோர் பலர் திராவிட இரத்தக் கலப்புடையராயிருந்தனரென்றும் வசிட்டர், அகத்தியர், விசுவாமித்திரர் முதலியோர் அவ்வகையினரென்றும் இரங்காச்சாரியர் அவர்கள் கூறுவர்.1 பழைய தமிழ் நூல்களில் அகத்தியரைத் தமிழோடு தொடர்பு படுத்திக் கூறும் பகுதிகள் “வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழுக்கு விளக்காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப்பெருமை அகத்திய னென்னும் அருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்” - பன்னிருபடலப் பாயிரச் சூத்திரம் மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்கால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் - புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் பூமலி நாவன் மாமலைச் சென்னி ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகட லடக்கி மலையத் திருந்த இருந்தவன் றன்பா லியற்றமி ழுணர்ந்த புலவர்பன் னிருவருட் டலைவனாகிய தொல்காப் பியன். - அகப்பொருள் விளக்கப்பாயிரம் மதிவெயில் விரிக்குங் கதிரெதிர் வழங்கா துயர்வரை புடவியின் சமமாக்கிக் குடங்கையி னெடுங்கட லடங்கலும் வாங்கி யாசமித் துயர்பொதி நேசமுற்றிருந்த மகத்துவ முடைய வகத்திய மாமுனி தன்பாலருந்தமி ழின்பா லுணர்ந்த வாறிரு புலவரின் வீறுறு தலைமை யொல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி.” - இலக்கணக்கொத்துரைச் சிறப்புப் பாயிரம். இவற்றுட் பன்னிரு படலமென்பது தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் தனித்தனி ஒவ்வோர் படலமாகச் செய்து சேர்க்கப்பட்ட நூல் எனப்படுகின் றது. இது தொல்காப்பியர் முதலியோர் செய்ததாகாதென இளம்பூரணர் தமது உரையில் காட்டியுள்ளார். அதனால் பன்னிரு படலமென்பது பிற்காலத்தா ரெவரோ தொல்காப்பியர் முதலியோர் பெயரால் புனைந்த நூலெனத் துணிய லாம். தொல்காப்பியப் பாயிரத்திற் காணப்படாத அகத்தியர் வரலாறு இந் நூலிற் காணப்படுதலும் ஆராயத்தக்கது. நூல்களுக்குப் பாயிரம் செய்யும் விதி தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. இறையனாரகப் பொரு ளுக்குப் பாயிரமில்லை. இறையனாரகப் பொருளுரையில் நூலுக்குப்பாயிர மின்றிமையாததெனக் கூறப்பட்டுள்ளது. இக் கருத்து வலிபெற்ற காலத்தி லேயே தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் என்னும் ஒருவரால் பாயிரம் செய்யப்பட்டதெனக் கருதக்கிடக்கின்றது. தொல்காப்பியத்துக்குப் பாயிரம் செய்யும் காலத்தில் தொல்காப்பியர் அகத்தியரிடம் தமிழ் பயின்றவர் என்னும் கதை தோன்றவில்லை எனத் தெரிகின்றது. ஐந்திரம் கற்றவரெனத் தொல்காப்பியரைச் சிறப்பித்த பனம்பாரனார், இவர் அகத்தியரின் மாணவராயின் அதனை ஒருபோதும் கூற மறந்திருக்கமாட்டார். புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. ஏழாம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்டது. இதனை ஒட்டிச் சிறிது முன் பன்னிருப்படலம் செய்யப் பட்டதாகலாம். அக் காலத்தில் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்னும் வரலாறு தோன்றி வழங்கியிருத்தல் வேண்டும். திருமூலர் கி.பி.5-ம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவராவர். இவர், நடுவுநில் லாதிவ்வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன வீசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென்றானே. எனத் திருமந்திரத்துள் கூறியுள்ளார். அகத்தியர் தமிழோடு சம்பந்தப் பட்டதை அவர் கூறவில்லை. கி.பி.5-ம் நூற்றாண்டுக்கும் கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குமிடையில் அகத்தியரைத் தமிழோடு சம்பந்தப்படுத்தும் கதைகள் எழுந்தன எனக்கூறுதல் பிழையாகாது. மணிமேகலை என்னும் சங்ககாலத்துக்கு அண்மையிலுள்ள இலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிக் கூறப்படும் இடங்கள் சில உள. “உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்ப் பலர் புகழ் மூதூர்ப் பண்புமே படீஇய ஒங்குயர் மலையத் தருந்தவ னுடிரப்பத் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்” “மன்மருங்கறுத்த மழுவா ணெடியோன் றன்முன் றோன்ற றகாதொளி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் அமர முனிவ னகத்தியன் றனாது துயர்நீங்கு கிளவியின் யாறோன் றறவும்.” “செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளங்கும் கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட அமரமுனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்ந்த காவிரிப் பாவை செங்குணக் கொழுதிய சம்பாதி.” - மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் காலத்தில் அகத்தியரைப் பற்றிய வரலாறு மிகப் பழங்கதையாக வழங்கிற்றேயன்றி அகத்தியர் தமிழோடு தொடர்பு பெற வில்லை. அக் காலத்தில் அகத்தியர் பொதியமலையில் இருந்தாரென்றும் வரலாறு வழங்கிற்று. அகத்தியர்1 குடத்தில் பிறத்தல், பிரமதேவருக்கு ஊர்வசி யிடம் பிறத்தல் போன்ற கதைகளை ஆராய்தல் மணல் சோற்றில் கல் ஆராய்தல் போலாகுமெனக் கருதி அவற்றை ஈண்டு ஆராய்ந்திலேம். எஎஎஎ 1 2 15 14 எனது துப்பாக்கியுடனும் நாயுடனும் அடுத்த கடற்கரைப் பக்கம் சென்றேன் எனக்கு கடற்பயணம் செய்ய விருப்பமுண்டு 4 13 12 5 6 11 10 ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு போதல் 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 அடிமை எனத் தெரிவித்தல் குடித்தது உடுத்தது 24 25 குடித்தது உடுத்தது 48 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 16 இராபின்சன் குரூசோ இராபின்சன் குரூசோ 1. இராபின்சன் குரூசோ எனது பெயர் இராபின்சன் குரூசோ. நான் இங்கிலாந்திலே யார்க்குப் பட்டினத்தில் 1632ஆம் ஆண்டு பிறந்தேன். சிறுவனாயிருந்த போது எனக்குக் கடற்பயணம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் உண்டு. இதனை அறிந்த என் பெற்றோர் அபாயத்துக்கு ஏதுவான இவ்வெண்ணத்தை விட்டு வீட்டில் இருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சொற்படி நான் சில காலம் வீட்டிலிருந்தேன். இவ்வுலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் என்னைத் தூண்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு நாள் என் நண்பன் ஒருவன் வீட்டிற்குச் சென்றேன். அவன் அப் போது தன் தந்தையின் கப்பலில் இலண்ட னுக்குப் போகப் புறப் பட்டுக் கொண்டிருந்தான். அவன் என்னையும் தன்னுடன் வரும்படி அழைத்தான்; பயணத்துக்கு யாதும் செலவு வேண்டியதில்லையென்றும் சொன்னான். நான் என் பெற்றோருக்கு அறிவியாமலே கப்பலில் ஏறிப் பயணஞ் செய்தேன். கப்பல் பாய்விரித்துச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரம் கழிந்ததும் புயற்காற்று வேகமாய் அடித்தது. கடல் கொந்தளித்துப் பயங்கரமாய் மூழங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது என்னுடனிருந்தவர் பயந்து நடுங் கினர். நானும் பெரிதும் பயந்தேன்; என் தந்தையார் கூறிய புத்திமதிகளைக் கேட்டிருந்தால், நான் இவ்வகை ஆபத்துக்குள்ளாயிருக்கமாட்டேன் என்று நினைத்துக் கலங்கினேன்; இவ்வபாயத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனித் தந்தையார் சொற்படி நடந்து கொள்வேன் என்று பலவாறு எண்ணிக் கொண் டிருந்தேன். புயுல் நின்று, கடல் அமைதி அடைந்தது. என் மனத்திலிருந்த பயம் போய்ப் பயணத்தில் இன்பம் பிறந்தது. ஐந்து நாட்கள் சிறிதும் குழப்ப மின்றிக் கப்பல் ஓடிக்கொண்டிருந்தது. பின்பு மிகக் கொடிய புயல் அடித்தது. திரைகள் தட்டுகளின் மேல் நீரை இறைத்தன. கப்பலில் ஒரு வெடிப்பு உண்டாயிற்று. அது வழியாக நீர் உள்ளே வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் எங்கள் கப்பலுக்கு அருகில் நின்ற மற்றொரு கப்பலிலிருந்து படகு ஒன்று உதவிக்கு வந்தது. உடனே நாங்க ளெல்லோரும் ஓர் ஆபத்துமின்றி எங்கள் கப்பலினின்று இறங்கி, அக்கப்பலில் ஏறினோம்; அக்கப்பலிலேறித் தப்பிப் பிழைத்துக் கரையை அடைந்தோம். கரையில் கும்பலாய்க் கூடியிருந்த மக்கள், எங்களுக்கு உதவியளிக்க ஆயத்தமாயிருந்தார்கள். அவர்கள் எங்களுக்குப் பொருளுதவி செய்து நாங்கள் வந்த வழியே ஹல் நகருக்காவது இலண்டன் நகருக்காவது சொல்லலாமென்று சொன்னார்கள். அதன் பின்பு நாங்கள் ஏறி வந்த கப்பலதிகாரி, “நீங்கள் யார்? எவ்வூருக்குப் போகிறீர்கள்? உங்கள் தொழிலென்ன?” என்று ஒவ்வொரு வராகக் கேட்டு வந்தார். அவர் என்னை இவ்வாறு கேள்விகள் கேட்டபோது நான், “கடற்பயணம் எப்படிப்பட்டதென்பதை அறிந்துகொள்ளப் பயணஞ் செய்கிறேனே தவிர, எனக்குத் தொழில் இல்லை,” என்று பதில் கூறினேன். அவர் என் மீது கோபம் கொண்டார்; பெற்றோரின் அனுமதியின்றிப் பயணஞ் செய்தபடியாலேதான் புயல் உண்டாயிற்று எனக் கூறினார்; “இனி உன்னைக் கப்பலில் ஏற்ற முடியாது,” என்றும் சொன்னார். நான் திரும்பி வீடு போய்ச் சேர விரும்பாதவனாய்த் தரை வழியாக இலண்டன் நகரை வந்தடைந்தேன். நான் இலண்டனை வந்தடைந்த சில நாட்களின் பின்பு அங்கிருந்து ஆப்பிரிக்காக் கரைகளுக்குச் செல்லும் ஒரு கப்பலில் ஏறினேன். நான் ஆப்பிரிக்காவை அடைந்து, அங்குள்ள காட்டு மக்களோடு செய்த வியாபாரத்தில் சிறிது தங்கம் கிடைத்தது. நான் அதனை இலண்டனுக்குக் கொண்டு வந்து விற்றுவிட்டு, மறுபடியும் வாணிகம் செய்யும் பொருட்டு ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். எங்களுடைய கப்பலைக் கடற் கொள்ளைக்காரரின் கப்பல் பின் தொடர்ந்தது. நாங்கள் எங்கள் பீரங்கிகளால் அதனை நோக்கிச் சுட்டோம். கடற்கொள்ளைக்காரர் எங்கள் கப்பலை உடைத்துக் கப்பலிலிருந்தவருள் சிலரைக் கொன்றார்கள்; சிலரைக் கைகளைப் பின் புறமாகக் கட்டி அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு மொராக்கோவுக்குச் சென்றார்கள். அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்களுள் யானும் ஒருவன். 2. நான் அடிமை ஆனது கொள்ளைக்காரரின் மாலுமி என்னை அடிமையாக்கிக் கொண்டார். நான் என் தலைவனிடம் இருந்து கடுமையான வேலைகளைச் செய்தேன். இந்நிலைமையிலிருந்து எப்படித் தப்பலாம் என நான் எப்போதும் ஆலோசனை செய்தேன். மீன் பிடிக்கப் போகும் போதெல்லாம் தலைவர் என்னை அழைத்துச் செல்வார். நான் மீன் பிடிப்பதில் மிகவும் கெட்டிக்காரன். இரண்டு அடிமை களை அழைத்துக்கொண்டு மீன் பிடிக்கச் செல்லும்படி ஒரு நாள் அவர் என்னிடம் கூறினார். அப்பொழுது எனக்கு மனத்தில் ஒரு வகை எழுச்சி உண்டாயிற்று. அன்றுதான் எனக்குத் தப்பி ஓடக் கூடிய வசதி இருந்தது. படகில் அதிக உணவு இருந்தது. அடிமைகள் சிறிது நேரம் மீன் பிடித்தார்கள். ஆனால், நான் ஒன்றை யும் பிடிக்கவில்லை. எனது தூண்டிலில் மீன்கள் அகப்பட்ட போது நான் அவைகளை வேண்டுமென்றே போக விட்டேன். “இங்கு மீன் அகப்படாது; நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும்,” என நான் என்னுடன் இருந்த அடிமைகளுக்குச் சொன்னேன். நாங்கள் சிறிது தூரம் படகைச் செலுத்திக்கொண்டு சென்றோம். தூரத்தே சென்றதும் நான் அடிமைகளுள் ஒருவனைப் பிடித்துத் தூக்கிக் கடலில் எறிந்து, “நீ நன்றாக நீந்திக் கரையை அடைவாய். நான் உனக்குத் தீமை செய்யமாட்டேன்,” என்று சொன்னேன். அவன் கரையை நோக்கி நீந்திச் சென்றான். பின்பு நான் சூரி என்னும் மற்ற அடிமையைப் பார்த்து, “நீ என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயா, அல்லது உன்னையும் கடலில் எறியட்டுமா?” என்று கேட்டேன். அவன், “விசுவாச மாய் இருப்பேன்,” எனக் கூறினான். என் தலைவர் எங்களைத் தேடிப் படகுகளை அனுப்பக் கூடும் எனப் பயந்து, நாங்கள் விரைவாகப் படகைச் செலுத்திக் கொண்டு சென்றோம். ஐந்து நாட்களின் பின் எங்களிடமிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது; நான் தரையை நோக்கிப் படகைத் திரும்பினேன். கரையைக் கிட்டியதும் நாங்கள் கறுப்பு நிற மக்களைக் கண்டோம். உணவு வேண்டுமென்று நான் கையினாற் சைகை காட்டினேன். அவர்களுள் இரண்டு பேர் ஓடிச் சென்று இறைச்சியும் தானிய உணவும் கொண்டு வந்தனர். என்னிடம் தண்ணீர் இல்லை என்பதை அறிவிப்பதற்கு நான் என் சாடிகளுள் ஒன்றைக் கவிழ்த்துக் காட்டினேன். அதனைக் கண்டதும் இரண்டு நீகிரோவர் பெரிய சாடியில் தண்ணீர் கொண்டு வந்தனர். நீகிரோவரை விட்டு நாங்கள் மறுபடியும் படகைச் செலுத்திக் கொண்டு சென்றோம். எங்குச் செல்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளாமல் நாங்கள் பதினொரு நாட்கள் பயணஞ் செய்தோம். ஒரு நாள் மத்தியானம் என்னுடனிருந்த அடிமை, “ஐயா! ஐயா! ஒரு மரக்கலம் பாய் விரித்துச் செல்கிறது!” என்று சத்தமிட்டுச் சொன்னான். உண்மையில் அது ஒரு மரக்கலமே. நாங்கள் மரக்கலத்திலிருந்தவர் களுக்குச் சில சைகைகளைக் காட்டி, ஒரு துப்பாக்கியால் வெடி தீர்த்துச் சத்தம் செய்தோம். அவர்கள் எங்களைக் கண்டார்கள். நாங்கள் அவர்களுக்கு அருகே செல்லும் வரையும் அவர்கள் தாமதித்து நின்றார்கள்; பின்பு மரக்கலத் தலைவன் எங்களைத் தனது மரக்கலத்தில் ஏற்றினான். நான் அவனிடம் எனது வரலாற்றைக் கூறினேன். அவன் தான் பிரேசிலுக்குப் போவதாகவும், என்னையும் உடன் அழைத்துச் செல்வதாக வும் கூறினான். நான் எனது படகையும் அதிலிருந்த எல்லாவற்றையும் அவனுக்கு உபகாரமாகக் கொடுத்தேன். “இவைகளை நான் பணமின்றிப் பெற்றுக் கொள்ளமாட்டேன்; உனக்குப் பிரேசில் நாட்டில் பணம் தேவையாயிருக்கும்,” எனக் கூறி, அவன் எனக்குப் பணம் கொடுத்தான். அவன் சூரியை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை செய்தான். நான் சில நாட்களில் பிரேசில் நாட்டை அடைந்தேன்.நான் அங்கு நான்கு ஆண்டுகள் பயிரிடுபவனாய் இருந்து செல்வனானேன். 3. மரக்கலம் உடைந்து போனது அப்பொழுது வணிகர் சிலர் என்னைச் சந்தித்தனர். அவர்கள் என்னை ஆப்பிரிக்காக் கரைக்குச் சென்று அங்கு நீகிரோவர் விரும்பும் மணிகள், கத்திகள், கத்திரிக்கோல்கள், கோடரிகள், விளையாட்டுப் பொருட்கள், கண்ணாடித் துண்டுகள் முதலியவைகளைக் கொடுத்துப் பொன்தூள், தந்தம் முதலியவைகளை வாங்கி வாணிகம் செய்யும்படிச் சொன்னார்கள். ஆகவே, ஒரு கப்பலை அமர்த்திக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். பன்னிரண்டு நாட்கள் சிறிதும் குழப்பமின்றி மரக்கலம் சென்றது. பின்பு சடுதியில் புயற்காற்றுக் கிளம்பி எங்களை எங்கெங்கோ கொண்டு சென்றது. நாங்கள் உதவியற்றவர்களாய்க் கடலில் மிதந்து கொண்டிருந்தோம். மரக்கலத்துள் நீர் வரத் தொடங்கினதும் நாங்கள் உயிர் பிழைப்பதில் நம்பிக்கையை இழந்தோம். விரைவில் மரக்கலம் மணல் மேட்டில் ஏறுண்டது. கடற்றிரை எங்களுக்கு மேலாய்ப் புரண்டது. நாங்கள் ஒரு சிறிய படகைக் கீழே இறக்கினோம். உடனே ஒரு பெரிய திரை எங்களைக் கடலுக்குள் இழுத்துக் கொண்டு போய்விட்டது. என் நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்குத் தெரியாது. பெரிய அலை ஒன்று என்னைக் கரைக்கு அடித்துக் கொண்டுபோய் விட்டது. கடைசியில் நான் கரையை அடைந்தேன். என் உயிரைப் புதுமையாகக் காப்பாற்றினதற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். என் நண்பர்களைக் காணலாம் என்னும் நோக்கத்துடன் நான் இங்குமங்கும் நடந்து சென்றுப் பார்த்தேன். அவர்களின் அடையாளம் ஒன்றும் காணப்படவில்லை; மூன்று தொப்பிகளும் இரண்டு சப்பாத்துகளும் மாத்திரம் காணப்பட்டன. நான் ஒருவன் மாத்திரம் தப்பிப் பிழைத்தேன். நான் நன்றாக நனைந்து போயிருந்தேன். எனக்கு உண்பதற்கு உணவும் குடிப்பதற்கு நீரும் இல்லை. அங்குக் காட்டு விலங்குகள் உறைய லாம். அவைகளை வேட்டையாடுவதற்கு என்னிடம் ஆயுதங்கள் எவையு மில்லை. மாலை நேரம் வந்தது. நான் எவ்விடத்தில் பத்திரமாகத் தங்க முடியும்? ஒரு தழைத்த மரம் என் கண்ணுக்குத் தெரிந்தது. அம்மரத்திலேறி இருந்து இராப்பொழுதைக் கழிக்கலாம் என நினைத்தேன். முதலில் நான் ஒரு நீரோட்டத்தைக் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் நீரைக் குடித்தேன்; பின்பு மரத்தில் ஏறி விழாதபடி ஒரு நல்ல இடத்தில் இருந்து விரைவில் தூங்கி விட்டேன். நான் விழித்த போது பட்டப்பகலாயிருந்தது. எனது களை தீர்ந்து போயிற்று. புயல் ஓய்ந்து விட்டது. கடல் அமைதியாயிருந்தது. கடல் அலைகள் மரக்கலத்தைத் தரைக்குக் கிட்டக் கொண்டுவந்து விட்டிருந்தன. அது பாறைகளின் மேல் நிமிர்ந்து நிற்பது போலக் காணப்பட்டது. நான் அங்குச் செல்ல விரும்பினேன். கப்பல் தட்டுகளில் உணவும் துணியும் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். கடல் வற்றும் நேரத்தில் கப்பலிலிருந்து கால் மைல் தொலைவுக்கு நான் நடந்து போகக் கூடியதாய் இருந்தது. பின்பு எனது மேற் சட்டையையும் சப்பாத்தையும் கழற்றி விட்டு நீரில் நீந்திச் சென்றேன். ஒரு சிறிய கயிறு மரக்கலத்தின் பக்கத்தே மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதைப் பிடித்துக் கொண்டு மரக்கலத்தில் ஏறினேன். தட்டில் அதிக தண்ணீர் நின்றது; உணவு உலர்ந்து போயிருந்தது; அதிக பசியாயிருந்தமையால், நான் அதிகம் உண்டேன். அங்குள்ள பொருள்கள் சிலவற்றைக் கரைக்குக் கொண்டு செல்வதற்கு எனக்கு ஒரு படகு வேண்டியிருந்தது. படகு வேண்டுமென்று விரும்பிக் கொண்டு சோம்பியிருப்பதால் பயனில்லை. என்னால் படகு செய்ய முடியாது; எனக்குக் கட்டு மரமே போதுமானதாயிருந்தது. மரக்கலத்திலிருந்த மரப்பலகையையும் பாய்மரத் துண்டையும் கொண்டு ஒரு கட்டுமரத்தைக் கட்ட நினைத்தேன். நான் அவைகளில் கயிற்றைக் கட்டிக் கீழே விட்டேன். பின்பு நான் கீழே இறங்கி அவைகளைச் சேர்த்துக் கட்டினேன். பின்பு நான் கப்பற்காரருடைய மூன்று பெரிய மரப்பெட்டிகளைக் கட்டுமரத்தின் மீது இறக்கி வைத்தேன்; அவைகளுள் அரிசி, உரொட்டி, தயிர்க்கட்டி, இறைச்சி, துணிகள், துப்பாக்கிகள், வெடிமருந்து முதலியவை களை வைத்தேன். அங்கிருந்த ஒரு நாயையும் இரண்டு பூனைகளையும் எடுத்துப் பெட்டியில் விட்டேன். கட்டுமரத்தைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வருவது இலகுவன்று. அதிட்டவசமாகக் கடல் அமைதியா யிருந்தது. அலைகள் கரையை நோக்கி அடித்துக் கொண்டிருந்தன. நான் பழைய துடுப்பின் துணையைக் கொண்டு கரையை அடைந்தேன். எனது அடுத்த வேலை பொருள்களைப் பத்திரமாக வைப்பதற்கேற்ற இடத்தைக் கண்டுபிடிப்பது. சமீபத்தில் ஒரு செங்குத்தான குன்று இருந்தது. நான் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அக்குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றேன். அங்கு நின்று பார்த்த போது நான் ஒரு தீவில் நிற்பதை அறிந்தேன். அங்கு வீடோ ஆளோ காணப்படவில்லை, நான் கொண்டு வந்த பொருள் களை இறக்கி வைப்பதில் நான் அன்றைய பொழுதைச் செலவிட்டேன். காட்டு விலங்குகள் என்னைக் கொன்று தின்றுவிடும் என்னும் பயத்தினால் நான் வெளியே நிலத்தில் படுத்து உறங்கப் பயந்தேன். ஆகவே, நான் பெட்டிகளைச் சுற்றி அடுக்கி வைத்துப் பலகைகளைக் கொண்டும் பாய்ச் சீலைகளைக் கொண்டும் ஒரு குடிசையைக் கட்டினேன். நான் மிகவும் களைப்பு அடைந்தமையால் படுத்து நித்திரை கொண்டேன். அடுத்த நாள் மறுபடியும் நான் மரக்கலம் உடைந்த இடத்துக்கு நீந்திச் சென்று, இன்னொரு கட்டுமரத்தைச் செய்தேன். அதில் ஆணிகள், கோடரிகள், ஆடைகள், படுக்கை முதலானவைகளை வைத்து அவைகளைக் கரைக்குக் கொண்டு வந்தேன். நான் வெளியே சென்றபொழுது எனது உணவுப் பொருளை எவையேனும் உண்டுவிடுமோ எனப் பயந்தேன்; ஆனால், நான் விட்டுச் சென்றபடியே அவை எல்லாம் இருந்தன. காட்டுப் பூனை ஒன்று பெட்டிக்கு மேலே உட்கார்ந்திருந்தது. நான் கிட்டப் போனதும் அது ஓடித் தூரச் சென்று என்னைத் திரும்பிப் பார்த்தது. நான் எனது துப்பாக்கியை அதற்கு நேரே நீட்டினேன்; ஆனால், அது பயப்படவில்லை. நான் அதற்கு முன்னால் உரொட்டித் துண்டை எறிந்தேன். அது அதைத் தின்றது; பின்பு அது போய்விட்டது. நான் இப்பொழுது மிகவும் பாதுகாப்பான கூடாரத்தைச் செய்தேன்; நான் படுக்கையில் ஒன்றை நிலத்தில் விரித்துக் கொண்டு படுத்துத் தூங்கினேன். பதினோரு நாட்களாகக் கடல் பெருக்கின்றி வற்றியிருந்தது. நான் மரக்கலத்தில் ஏறி இன்னும் வேண்டிய பலவற்றைக் கொண்டு வந்தேன். ஒரு முறை எனது கட்டுமரம் புரண்டு போயிற்று. ஆனால், பெரிய தீமை ஒன்றும் நேரவில்லை. பின்பு காற்று அதிகம் அடித்தது. மரக்கலத்தைப் பார்க்க முடிய வில்லை. திரைகள் அதைச் சுக்கல் சுக்கலாக உடைத்துவிட்டன. 4. குடியில்லாத் தீவு காட்டு மனிதர் அல்லது காட்டு விலங்குகள் எனது கூடாரத்துள் நுழையக் கூடும் என நினைந்து நான் எப்பொழுதும் பயந்து கொண்டிருந் தேன். எனது கூடாரம் கடலுக்கு அருகில் இருந்தமையால், நிலம் ஈரமாய் இருந்தது. ஆகவே, நான் கடலுக்குப் பக்கத்தில் நல்ல தண்ணீருள்ள ஓர் இடத்தைத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மலைக்குப் பக்கத்தில் மட்ட மான நிலம் காணப்பட்டது. அதன் பின்புறமிருந்த பாறை சிறிது குடை வுள்ளதாய் இருந்தது. அங்கு நான் எனது கூடாரத்தை அடித்தேன். மலைக்கு முன் இரண்டு வரிசையாக முளைகளை அடித்தேன். அம்முளைகளை எல்லாம் சுற்றித் தந்திக் கம்பியை வரிந்து கட்டினேன். இக்கம்பியை நான் முன்பு மரக்கலத்தினின்று கொண்டு வந்திருந்தேன். இவ்வேலையைச் செய்து முடிக்க எனக்குப் பல நாட்களாயின. வேலியால் சூழப்பட்ட இடத்திற்குச் செல்ல வாயில் இல்லை. நான் ஏணியைச் சார்த்தி வைத்து, அதன் வழியாக வேலியின் உச்சியை அடைந்து, ஏணியை எடுத்து உள்ளே வைத்தேன். ஏணி வெளியேயிருந்தால் பகைவர் எவராவது எனது கூடாரத்துள் வந்துவிடுவர் என அஞ்சினேன். நான் என் பொருள்களை எல்லாம் வேலிக்கு உள்ளே கொண்டு சென்று வைத்து மரக்கலத்தினின்றும் கொண்டு வந்த பாய்த்துணியால் ஒரு பெரிய கூடாரத்தை அமைத்தேன். பிறகு பின்புறத்திலிருந்த பாறையில் ஒரு குகையைக் குடைந்து கல்லையும் மண்ணையும் வேலிக்குள் உள்ள தரையில் பரப்பினேன். இதனால் தரை உயரமாயிற்று. குகை எனது வீட்டுக்கு ஓர் அறை போன்று இருந்தது. ஒரு நாள் புயற்காற்று வீசி இடியும் மின்னலும் உண்டாயின. இதனால் வெடி மருந்து தீப்பிடித்து வெடித்து விடுமோ எனப் பயந்தேன். புயல் தனிந்த பின்பு நான் பைகளையும் பெட்டிகளையும் செய்தேன். அவை களில் வெடிமருந்தைக் கொட்டி நிரப்பி, அவைகளைப் பாறையிலிருந்த வெடிப்புகளில் வைத்து மறைத்தேன். நான் ஒவ்வொரு நாளும் எனது நாயுடன் வெளியே சென்றேன். அங்கு ஆடுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். அவை மிகவும் விரைவாய் ஓடினமையால், நான் அவைகளைச் சுட முடியவில்லை. எத்தனை நாட்கள் கழிந்தன என்பதை அறியும் பொருட்டு நான் கடற்கரையில் ஒரு கம்பத்தை நாட்டி, அதில் வெட்டுகள் இட்டு, நாட்களைக் குறிப்பிட்டு வந்தேன். நான் அத் தீவின் கரையை 1659ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முப்பதாம் நாள் அடைந்தேன். நான் ஒவ்வொரு நாளை யும் குறிக்க ஒவ்வொரு குறுகிய வெட்டையும், ஞாயிற்றுக் கிழமையைக் குறிக்க நீண்ட வெட்டையும் வெட்டி வந்தேன். நாய் எனக்கு நம்பிக்கையுள்ள நண்பனாயிருந்தது. நாய் என்னோடு பேசாவிடினும் அது நான் சொல்லும் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டது. அது தினமும் பறவையையோ, வேறு ஏதாவது விலங்கையோ பிடித்துக்கொண்டு வந்தது. வேலி உறுதியுள்ளதாயிருந்த போதிலும், நான் மிகவும் பத்திரமா யிருக்கிறேனென்று நம்பவில்லை. நான் வேலியின்மேல் சுற்றிலும் புல்லைப் பரப்பினேன். அது வேலியைச் சுற்றித் தரையிருப்பது போன்ற தோற்றம் அளித்தது. இரண்டு ஆண்டுகள் கழிவதன் முன் நான் மரத்தினால் ஒரு கூரை செய்து, அதனைத் தழைகளால் வேய்ந்தேன். தீவில் வெயில் அதிக சூடாயிருந்தது. ஆகவே, நான் காலையில் வேலை செய்தேன்; மத்தியானத்தில் படுத்திருந்தேன்; மறுபடியும் பின்நேரத்தில் வேலை செய்தேன். ஒவ்வொரு நாட்காலையிலும் நான் எனது நாயுடனும் துப்பாக்கியுடனும் வெளியே சென்றேன். எனது தேவைக்குரிய பல பொருள்களை நானே செய்து கொண் டேன். முதலில் ஒரு மேசையையும் பின்பு ஒரு நாற்காலியையும் செய்தேன். இப்பொழுது நான் உணவை மேசையில் வைத்து நாற்காலியிலிருந்து உண்டேன். பலகைகள் ஆய்விட்டன; எனது வேலை கடுமையாயிருந்தது. நான் மரங்களை வெட்டிக் கோடரியினால் சமஞ்செய்ய வேண்டியிருந்தது. ஒரு மரத்திலிருந்து ஒரு பலகை மாத்திரமே செய்ய முடிந்தது. இவ்வாறு செய்வதற்கு அதிக காலம் தேவையாய் இருந்தது. 5. என் வேலைகள் நான் எனது குகையைப் பெரிதாக்க நினைத்தேன். அவ் வாறு செய்வதற்கு எனக்கு கட்டபாரை, பிக்காசு, கூடை முதலி யவை தேவையாயின. வயிரமான மரம் ஒன்றைத் தறித்து அதி லிருந்து கட்டபாரை யைச் செய்துகொண் டேன். நான் மூன்று வாரம் உறுதியாக வேலை செய்து, குகையைப் பெரி தாக்கினேன். ஒருமுறை குகையின் கூரையிலிருந்து மண் விழுந்தது. ஆகவே, நான் மரங்களை மேலே வைத்து அவைகளைத் தாங்க வயிரமான கழிகளைத் தூண்களாக நாட்டினேன். அவை எனது வீட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்தன. அத் தூண்களில் நான் பல பொருள்களைத் தொங்கவிட்டேன். பின்பு நான் என்னுடைய குகையின் பக்கங்களில் சில தட்டுகளை அமைத்து, அவைகளில் என் ஆயுதங்களை வைத்தேன். சுவரில் மரமுளை களை இறுக்கி, அவைகளில் துப்பாக்கிகளையும் வேறு பொருள்களையும் தொங்கவிட்டேன். வேலை முடிந்ததும் தினமும் நான் நாற்காலியிலிருந்து என் தினசரிக் குறிப்புகளை எழுதுவேன். ஒருமுறை நான் துப்பாக்கியால் ஆட்டுக்குட்டி ஒன்றை நோக்கிச் சுட்டபோது அதன் கால் முறிந்து போயிற்று. நான் அதனைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து, அதற்குத் தீனி கொடுத்தேன். நாள் செல்லச் செல்ல அது நன்றாகப் பழக்கமடைந்து, என் குகையின் அருகில் நின்று புல் மேய்ந்தது. மலையிலுள்ள வெடிப்புகளில் பறவைகளின் கூடுகள் இருப்பதை நான் பல முறைக் கண்டேன். சில சமயங்களில் நான் பறவைக் குஞ்சுகளைப் பிடித்து, அவைகளை உணவின் பொருட்டுப் பயன்படுத்தினேன். என்னிடம் விளக்கு இல்லாமையால் பொழுது போனதும் நான் படுத்துக் கொள்வேன். அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை; ஆகவே, நான் ஒரு விளக்கைச் செய்யத் தொடங்கினேன். நான் களிமண்ணில் ஒரு சிறு அகல் செய்து அதை வெயிலில் காய வைத்தேன். அதில் நான் ஆட்டுக் கொழுப்பை எண்ணெயாக இட்டுக் கயிற்றுத் துண்டைத் திரியாகப் பயன் படுத்தினேன். விளக்கு நல்ல ஒளி தரவில்லை. விளக்கில்லாமல் இருப்பதைப் பார்க்க இது நன்றாயிருந்தது. ஒரு நாள் நான் வேலை செய்துகொண்டிருக்கும் போது கப்பலி லிருந்து கொண்டு வந்த ஒரு கோணி எனது கண்ணிற்பட்டது. அக் கோணி யில் முன்பு தானியமிடப்பட்டிருந்தது. அதில் அப்பொழுது உமியைத் தவிர வேறொன்றையும் நான் காணவில்லை. நான் கோணியை உதறி உமியை எனது குகைக்கு அருகில் கொட்டிவிட்டு, அதைப்பற்றி மறந்து போனேன். சில நாட்களுக்குப் பின் நான் அவ்விடத்தைப் பார்த்த போது அங்குச் சில முளைகள் கிளம்பியிருந்தன. அவை வளர்ந்த பின் கதிர்கள் விட்டன. அவை வாற் கோதுமை என்பதை அறிந்து நான் மிகவும் வியப் படைந்தேன். அவைகளுக்கருகில் நெற்கதிர்களும் காணப்பட்டன. நான் உதறிக் கொட்டியவைகளுள் சில வாற்கோதுமையும் நெல்லும் இருந்தன வென்பதும் அவைகளிலிருந்து அவை முளைத்து வளர்ந்தனவென்பதும் அப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அத்தானியங்கள் விளைந்ததும் மறுபடியும் விதைக்கும் பொருட்டு அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்தேன். 6. பூமி நடுக்கம் அப்பொழுது பயம் விளைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று. நான் எனது குகையின் வாயிலில் நின்றேன். சடுதியாக முகட்டிலிருந்தும் மலைச்சரிவிலிருந்தும் மண் கீழே விழுந்தது. குகைக்கு முட்டுக் கொடுத் திருந்த இரண்டு கழிகளும் பிளந்து போயின. நான் பயந்து ஏணியின் மூலம் சுவரின் மேல் ஏறி நின்றேன்; அப்படிச் செய்திராவிட்டால் மண்ணால் மூடப்பட்டிருப்பேன். நான் கீழே இறங்கி நின்ற போது நிலம் நடுங்கிற்று. பூமி நடுக்கம் உண்டாயிருக்கின்ற தென்பதை நான் அறிந்தேன். சிறிது தூரத்தில் பெரிய பாறை ஒன்று உரத்த சத்தத்தோடு நிலத்தில் உருண்டு விழுந்தது; கடல் பயங்கரமாக அலைகளை மோதிக் கொண்டிருந்தது. நான் பயத்தினால் இறந்தவன் போலானேன். சிறிது நேரத்தில் வான மிருண்டது; புயல் அடித்தது; கடல் அலைகள் நுரைமயமாய்த் தோன்றின; மரங்கள் பெயர்ந்து விழுந்தன. இவ்வாறு மூன்று மணி நேரம் நிகழ்ந்த பின் பெருமழை பெய்தது. அப்பொழுது நான் குகைக்குள் சென்று ஒதுங்கினேன்; குகை இடிந்து விழுந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். மலைச்சரிவு அல்லாத இன்னோர் இடத்தில் வேறொரு குடிசையைக் கட்டலாம் என்று எண்ணினேன். நான் இரண்டு நாட்களாக எனது கோடரியைக் கூராக்கிக் கொண் டிருந்தேன். மூன்றாவது நாள் நான் கடலைப் பார்த்த போது முன் உடைந்து போன மரக்கலம் கரைக்கு அருகில் மணலில் ஏறுண்டு கிடந்தது. நீர் வற்றிய காலத்தில் நான் நடந்து சென்று அதனை அடையக் கூடியதாயிருந் தது. நான் பூமி நடுக்கத்தைப் பற்றியும் வேறு குடிசை கட்டுவதைப் பற்றியும் மறந்து போனேன். நான் அப்பொழுது எனது வாள், மரவயிரக் கட்டபாரை என்பவைகளின் உதவியைக் கொண்டு மரக்கலத்தை உடைத்து, அதன் துண்டுகளைக் கரைக்குக் கொண்டு வர முயன்று கொண்டிருந்தேன். இவ்வாறு செய்தபின் என்னிடம் அதிக இரும்புகளும் பாரைகளும் இருந்தன. ஒரு நாள் நான் ஒரு கடல் ஆமையைக் கண்டேன். நான் முதன் முதலில் கண்ட கடலாமை அதுவே. அத் தீவின் மறு பக்கத்தில் மிகப்பல ஆமைகள் வாழ்வதைப் பின்பு அறிந்தேன். நான் அதன் இறைச்சியைச் சமைத்து உண்டேன். அதன் இறைச்சி மிகவும் சுவையுடையதாயிருந்தது. பின்பு எனது துன்பமான காலம் வந்தது. நான் நோயடைந்தேன். எனக்குக் குளிர் உண்டாகித் தலை வலித்துக் காய்ச்சல் வந்த போது நான் மிகவும் பலவீனமடைந்திருந்தேன். நான் தனியே இருந்தேன்; அடிக்கடி கனவுகள் கண்டு பயந்தேன். ஒரு வாரத்திற்குப் பின் காய்ச்சல் விட்டது. நான் மறுபடி யும் பலமடைந்தேன். பெட்டி ஒன்றில் பைபிள் புத்தகம் ஒன்று இருந்தது. நான் அதனை எடுத்துப் படித்துக் கடவுளை எனக்கு உதவி அளிக்கும்படி வேண்டிக் கொண்டேன். 7. தீவு முழுவதையுங் கண்டறிதல் நான் அத்தீவில் பத்து மாதகாலம் கழித்தபின் நெடுந்தூரம் நடந்து சென்று காணாத இடங்களைக் காணலாம் என நினைத்தேன். நான் ஜூலை மாதம் முதல் நாளில் புறப்பட்டேன். நான் முதலில்என் கட்டுமரத்தை கொண்டுவந்த கரைப் பக்கமாகச் சென்றேன். கரையில் இன்பமயமான பசுந்தரை காணப்பட்டது. உயரமான இடங்களில் புகையிலைச் செடிகளும் கரும்பும் வளர்ந்திருந்தன். நான் இன்னும் தொலைவிற்சென்றேன். அங்கு மரங்கள் நெருங்கிய அழகிய பள்ளத்தாக்கு ஒன்று தென்பட்டது. அங்கு கொடிமுந்திரிகள் மரக் கொம்புகளில் படர்ந்து காய்த்துப் பழுத்திருந்தன. அவைகளைக் கண்டு நான் மிகவும் மகிழ்ந்தேன் அப் பழங்களைப் பறித்து வெயிலில் காய வைத்து வற்றலாக்கிப் பயன்படுத்தப் பின்பு அறிந்துகொண்டேன். நான் எனது உறைவிடத்தினின்றும் அதிக தூரம் வந்துவிட்டமை யால். மீண்டும் அங்கு திரும்பி செல்ல முடியவில்லை. நான் இரவில் மரத்தில் ஏறி இருந்து. நித்திரை செய்தேன். அடுத்த நாள் காலையில் நான் இன்னும் சிறிது தூரம் சென்றேன் அவ் விடங்கள் மரங்கள் நட்டு உண்டாக்கி தோட் டங்கள் போலப் பச்சைப்பசேலென்றிருந்தன எலுமிச்சை கிச்சிலி முதலிய பழ மரங்களும் செடிகளும் பள்ளத்தாக்குகளில் வளர்ந்திருந்தன. நான் கொடி முந்திரிப் பழங்களையும் எலுமிச்சம் பழங்களையும் பறித்து நிலத்தில் கும்பலாகக் குவித்துப் பின் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன். அடுத்த நாள் நான் எலுமிச்சைக் செடிகளுள்ள இடத்துக்குச் சென்றேன் முன்பு நான் பறித்து வைத்துச் சென்ற பழங்கள் கால்களால் மிதிக் கப்பட்டுக் கிடந்தன சிலவற்றை எவையோ பிராணிகள் உண்டுவிட்டன அவை யாவை என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இம் முறை நான் கொடிமுந்திரிக் குலைகளைப் பறித்துக் காயும்படி மரங்களில் கட்டித் தொங்க விட்டுவிட்டு என்னால் எடுத்துக்கொண்டு செல்லக்கூடிய பழங்களை வீட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் அவ்விடத்துக்குப் பல முறை சென்று திரும்பினேன்; எனது கூடாரத்தை அவ்விடத்துக்கு மாற்றலாமோ என்று சிந்தித்தேன். அவ்விடத் துக்குச் சென்றால் நான் கடற்கரையைப் பார்க்க முடியாதென்பதும், கடற் கரையில் எப்போதாவது மரக்கலம் ஒன்று காணப்பட்டால் அது என்னை அழைத்துச் செல்லும் என்பதும் எனது நம்பிக்கை; அவை வீணாகி விடுமென்றும் நினைத்தேன். நான் அவ்விடத்தில் கோடைகாலத்தில் வசிப்பதற்கேற்ற ஒரு வீட்டைக் கட்டலாமென்று நினைத்தேன். நான் வட்டமான இரட்டை வேலியை அமைத்து, இடைவெளிகளைச் சிறிய மிலாறுகளை வைத்து மறைத்தேன். ஆகஸ்டு முதலாம் நாள் நான் கட்டித்தொங்கவிட்ட கொடி முந்திரிப் பழ வற்றல்களை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்தேன். அடுத்த நாள் மழை பெய்ய ஆரம்பித்தது. இரண்டு மாதம் வரையில் மழை அடிக்கடி பெய்தது. நான் வைத்திருந்த இறைச்சி செலவாகிவிட்டது. நான் ஓர் ஆட்டைக் கொன்றேன். இன்னொருநாள் ஒரு கடலாமையைப் பிடித்தேன். அவற்றின் இறைச்சியை உண்டு நான் மழைகாலம் முழுவதையும் கழித்தேன். அப்பொழுது என் பூனைகளில் ஒன்று காணாமற்போய்விட்டது. அது இறந்திருக்கலாமென்று நான் நினைத்தேன். ஆகஸ்டு மாத முடிவில் அது மூன்று குட்டிகளோடு வந்தது. நான் அவைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தேன். பூனை பின்னும் குட்டிகள் போட்டபோது பூனைக் குடும்பம் பெரிதாகிவிட்டது. அப்பொழுது நான் அவைகளை எனது உறைவிடத்தி னின்றும் வெளியே துரத்திவிட நேர்ந்தது. 8. பயிர் இடுதலும் இடங்களைக் கண்டுபிடித்தலும் என் தீவில் ஆண்டில் இரண்டு முறை மழை காலமும், இரண்டு முறை கோடை காலமும் உண்டு என்பதை நான் அறிந்தேன். நான் வாற்கோதுமையையும் நெல்லையும் பத்திரப்படுத்தி வைத் திருந்தேன். இரண்டு மாதகாலம் மழை பெய்த பின்பு நான் சில தானியங் களை விதைத்தேன். எனது கட்டபாரையால் நிலத்தை எவ்வளவு கிண்ட முடியுமோ, அவ்வளவுக்குக் கிண்டிய பின்பே நான் அவ்வாறு செய்தேன். நான் ஒவ்வொரு தானிய வகையிலும் ஒவ்வொரு பிடியளவு வைத்திருந் தேன். இது நன்மையாகவே முடிந்தது, நான் பருவமல்லாத காலத்தில் விதைகளை விதைத்தேன். நான்கு மாதம் மழை பெய்யாதபடியால் அடுத்த மழைகாலம் வருமுன் அவை முளைக்கவில்லை. மழைகாலம் வருவதன் முன் விதைகளை விதைக்க வேண்டும் என்னும் அனுபவம் அப்பொழுது எனக்கு உண்டாயிற்று. மழைகாலத்துக்குப் போதுமான உணவை நான் வழக்கமாகச் சேகரித்து வைத்தேன். எனக்குச் சில கூடைகள் வேண்டியிருந் தன. நான் மிலாறுகளை எடுத்துக் கூடைகளாக முடைந்தேன். எனது தீவில் முன் காணாத பகுதி களைக் காணவேண்டு மென நான் விரும்பி னேன். நான் துப்பாக்கி ஒன்றையும் கோடரியை யும் எடுத்துக் கொண்டு, எனது நாயுடன் அடுத்த கடற்கரைப் பக்கஞ் சென்றேன். அங் கிருந்து நான் தொலைவில் தரையைப் பார்த்தேன். அது அமெரிக்காகவோ அல்லது மனித இறைச்சி உண்ணும் மக்கள் வாழும் தீவுக் கூட்டங் களாகவோ இருக்கலாமென நான் நினைத்தேன். அங்குள்ள காடுகள், பூக்கள், பசுந்தரைகள் மிக அழகாயிருந்தன. கடற்கரையில் ஆமைகளும் பெங்குவின் என்னும் பறக்க மாட்டாத பறவைகளும் காணப்பட்டன; முயல், நரி, ஆடு முதலிய விலங்குகள் காடுகளில் திரிந்தன. மரங்களில் கிளிகள் உட்கார்ந்திருந்தன. நான் கிளிக்குஞ்சு ஒன்றைப் பிடித்துச் சென்று அதைப் பேசப் பழக்கினேன். நான் இன்னொரு வழியாக வீட்டுக்குச் செல்ல முயன்றேன்; நான் வழி தப்பிப் பல நாட்கள் அலைந்து திரிந்தேன். கடைசியாக நான் எனது கோடைகால வீட்டுக்கருகில் வந்து, அங்கிருந்து குகையை அடைந்தேன். வாற்கோதுமையும் நெல்லும் நன்றாய் வளர்ந்திருந்தன. காட்டு ஆடு களும் முயல்களும் பக்கத்திலிருந்த புல்லை மேய்ந்திருந்ததைப் பார்த் தேன். அவை எனது தானியப் பயிர்களையும் அழித்துவிடக் கூடுமெனப் பயந்தேன். அதைத் தடுப்பதற்காகப் பயிரைச் சுற்றி வேலி இட்டேன். இவ்வாறு செய்வதற்கு மூன்று வாரங்களாயின. அக் காலத்தில் நான் சில ஆடு களைக் கொன்றேன். நாயைத் தடி ஒன்றில் கட்டி இரவில் காவல் காக்கும்படி விட்டிருந்தேன். பறவைகள் தானியக் கதிர்களைத் தின்றன. நான் பல பறவைகளைச் சுட்டு வீழ்த்தினேன். மற்றப் பறவைகளுக்கு அச்சம் உண்டாக்கி எச்சரிப் பதற்காக அவைகளில் சிலவற்றை நீண்ட தடி ஒன்றில் கட்டிப் பக்கத்தில் தொங்கவிட்டிருந்தேன். தானியம் விளைந்தது. நான் வாள் ஒன்றினுதவியால் அறுவடை செய்தேன். அடுத்த பருவகாலம் வருவதன் முன் விதைக்கும் நிலத்தைச் சுற்றி வேலி இட்டுக் கூரிய தடியால் நிலத்தைக் கிண்டினேன்; மறுபடியும் விதைகளை விதைத்தேன். 9. இருப்பிடத்தைச் சீர்படுத்துதல் அடுத்த மழைகாலத்தில் நான் களிமண்ணால் சாடிகள் செய்தேன். முதன்முதல் நான் செய்த அழகில்லாத சாடியைப் பார்த்தால் நீங்கள் நகைப்பீர்கள். மிகவும் பிரயாசைப்பட்டு நான் இரண்டு சாடிகளைச் செய்து வெயிலிற் காய வைத்தேன். அவைகளில் நான் தானியங்களைப் போட்டு வைத்தேன். சமைப்பதற்கோ, தண்ணீர் எடுப்பதற்கோ, அவை பயனற்றவை. இறைச்சியை வைத்துச் சமைக்கக் கூடிய ஒரு பானையைச் சில நாட்களில் செய்யலாமென நினைத்தேன். அதை செய்யும் விதத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன். எனது களிமண் தட்டின் ஒரு துண்டு அடுப்புச் சாம்பலில் கிடந்தது. அது நெருப்பில் வெந்து சிவப்பாய் இருந்தது. பின்பு நான் சாடிகளைச் செய்து அவைகளைச் சுற்றி நெருப்பு மூட்டி எரித்தேன். அவை வெந்து வைரம் அடைந்தன. உரொட்டி செய்யப் போதுமான தானியம் என்னிடம் இருந்தது. நான் மரத்தைக் குடைந்து ஒரு சிறு உரல் செய்தேன். அதில் தானியத்தை இட்டுச் சிறு உலக்கையால் அதனை இடித்து மாவாக்கினேன். அதனை உரொட்டி யாகச் சுட்டேன். மூன்று ஆண்டுகள் இவ்வாறு அத் தீவில் கழிந்தன. அடுத்த கரையில் தெரிந்த தரையைப்பற்றி அறிந்துகொள்ள எனக்கு அதிக பிரியம் இருந்தது. ஆனால், என்னிடத்தில் தோணி இல்லை. மரக்கலத்திலிருந்த தோணியைப் பார்த்தேன். அது அலையால் கரைக்குக் கொண்டு வரப்பட்டுக் கீழ்மேலாய்க் கிடந்தது. நான் அதை நிமிர்த்த மிகவும் முயன்றேன். ஓர் அங்குலங்கூட அதை என்னால் நிமிர்த்த முடியவில்லை. நானே ஒரு தோணியைச் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். நான் காட்டுக்குச் சென்று பெரிய மரம் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அதைத் தறித்து வீழ்த்துவதற்கு மூன்று வாரம் சென்றது. அதன் கொம்புகளைத் தறிப்பதற்கு இரண்டு வாரம் கழிந்தன. அதைக் குடைந்து தோணியாக்குவதற்கு நான்கு மாதங்கள் வேலை செய்தேன். அது இருபத்தாறு பேரைக் கொள்ளக் கூடிய நல்ல தோணி. நான் அதைக் கடலுக்குக் கொண்டு போக வேண்டியிருந்தது. அது நான் அசைக்க முடியாத அவ்வளவு பாரமுடையதாயிருந்தது. அது தண்ணீரிலிருந்து இரு நூறு முழத் தூரத்தில் கிடந்தது. நான் எல்லா வகையான உபாயங்களையும் ஆலோசித்தேன். ஒன்றும் புலப்படவில்லை. தோணிக்கு அருகில் தண்ணீரைக் கொண்டுவர வாய்க்கால் ஒன்றை வெட்டவும் தொடங்கினேன். தோணி செல்லக்கூடிய அகலமும் ஆழமுமுடைய வாய்க்காலை வெட்டப் பத்து ஆண்டுகளாகுமனெத் தோன்றிற்று. ஆகவே, நான் அவ் வேலையைக் கைவிட்டுவிட்டேன். என்னிடத்தில் அதிக உணவும் இருப்பதற்கு வீடும் இருந்தன. அதிக காலம் கடந்தமையால் மரக்கலத்திலிருந்து கொண்டு வந்த பல பொருள்கள் மட்கிப் போயின. எனது மையும் ஆய்விட்டது; ஆடைகளும் கந்தை யாயின. நான் கொன்ற ஆடுகளின் தோலிலிருந்து புதிய உடைகளைச் செய்து கொண்டேன். ஆட்டுத் தோலினால் ஒரு குடையும் செய்தேன். விரித்துச் சுருக்கக் கூடியதாக ஒரு குடை செய்து கொள்வதன் முன் யான் பலவற்றைப் பழுதாக்கிவிட்டேன். இவ்வாறு நான் வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்புத் தேடிக்கொண்டேன். 10. எனது கடற்பயணம் நான் இன்னொரு தோணி செய்ய நினைத்தேன். நான் கடற்கரைக்கு மிகக் கிட்ட நின்ற ஒரு மரத்தைத் தறித்து, இன்னொரு தோணி செய்தேன். தோணி செய்து முடிந்ததும் கடலிலிருந்து தோணி வரைக்கும் ஒரு வெட்டு வாய்க்கால் செய்தேன். இவ்வாறு செய்வதற்கு இரண்டு ஆண்டுகளாயின. நான் பாய் மரத்தையும் பாய்ச்சீலையையும் அமைத்தேன். எனக்கு நிழல் தரும்படி எனது குடையை மேலே கட்டினேன். இத் தோணியில் நான் பல முறை கடலிற் சென்றேன்; ஆனால், தொலைவிற் செல்ல மனம் துணிய வில்லை. நான் எனது தீவைச் சுற்றிப் பயணஞ் செய்ய விரும்பி, நவம்பர் மாதம் ஆறாம் நாள் புறப்பட்டேன். தொடக்கத்தில் யாதும் குழப்பம் உண்டாக வில்லை. கரைப்பகுதியில் பாறைகள் அதிகம் இருந்தமையால், நான் தரையிலிருந்து அதிக தூரம் சென்றேன். நான் ஓர் இடத்தில் தோணியைக் கட்டி விட்டுக் கரைக்குச் சென்றேன். அங்கு ஒரு மலையில் ஏறித் தீவின் காட்சிகளைப் பார்த்தேன். தீவின் பக்கத்தே அபாயத்துக்கு இடமான நீரோட்டங்கள் இருப்பதைக் கண்டேன். காற்று ஓய்ந்திருந்த போது மறுபடியும் கடலிற் செல்லத் துணிந்தேன். கரையி லிருந்து சிறிது தூரஞ்சென்றதும் எனது தோணி வேகமான நீரோட்டத்தில் அகப்பட்டுக் கொண்டது. நான் துடுப்பினால் வலிக்க முயன்றேன். ஆனால், நீரோட்டம் என்னைக் கரையிலிருந்து அதிக தூரம் கொண்டு சென்றது. சடுதியாகக் காற்று வீசிற்று, நான் எனது தோணிப்பாயை விரித்துக் கட்டினேன். இப்பொழுது இன்னொரு நீரோட்டம் என்னைக் கரைக்குக் கொண்டு செல்வதைக் கண்டு நான் மகிழ்ந்தேன். சில மணி நேரத்தில் எனது தோணி கரையை அடைந்தது. கரையை அடைந்ததும் நான் முழங்கால் படியிட்டு என்னைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்ததற்காகக் கடவுளைத் துதித்தேன். நான் மணற்சரிவில் இரவில் தூங்கி மறுநாட் காலையில் எழுந்தேன். நான் தோணியைக் கரையில் விட்டு விட்டு நடந்து வீட்டுக்குச் செல்லலாமென நினைத்தேன். வீடு அடைந்ததும் மிகவும் களைப்பாய் இருந்தது ; உடனே நான் படுத்து நித்திரை போயினேன். சடுதியாக, “ரொபின் கூட்! ரொபின் கூட்!” எனக் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டு நான் விழித்தெழுந்தேன். நான் கனாக் காணுகின்றேனென நினைத்தேன்; பயத்தினால் துடித்தெழுந்தேன். வேலியில் இருந்து அவ்வாறு சத்தமிட்ட கிளியைக் கண்டு நான் சிரித்தேன். கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதனைக் கூப்பிட்டேன். அது எனது கையில் வந்திருந்தது. 11. அமைதியான வாழ்க்கை துணிச்சலான வேலைக்குப் பின் நான் அமைதியாய் வாழ்ந்தேன். நான் களிமண்ணால் புகை பிடிக்கும் சுங்கான் ஒன்றைச் செய்தேன். அது பார்வைக்கு அழகில்லாததா யிருந்தபோதிலும், புகையை நன்றாக இழுக்கக் கூடியதாயிருந்தது. தீவில் புகையிலை வேண்டிய அளவு இருந்தது. அப்பொழுது வெடிமருந்து குறைந்து போயிற்று. இது எனது மனத் தில் குழப்பம் விளைத்தது. வெடிமருந்து முடிந்து போனால் நான் ஆடு களைச் சுட முடியாது. ஆகவே, நான் ஆடுகளைப் பிடித்து வளர்க்க நினைத் தேன். அவை மிகவும் மூர்க்கமுடையனவாயிருந்தன. அவைகளை எப்படிப் பிடிப்பதென்பது எனக்குத் தெரியவில்லை. அவை மேயும் இடத்தில் நான் பெரிய குழி ஒன்றைத் தோண்டினேன். குழிக்குமேல் கழிகளைப் பரப்பி, அவற்றின் மீது தானியங்களைப் பரப்பினேன். ஆடுகள் அவற்றைத் தின்ன முயன்றதும் குழியில் விழுந்தன. இவ்வாறு நான் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் ஓர் ஆட்டையும் பிடித்தேன். ஆடு மிகவும் மூர்க்கமாயிருந்தது. ஆகவே, நான் அதன் அருகில் போகப் பயந்தேன். நான் அதைத் தப்பி ஓடும்படி விட்டுவிட்டு, மூன்று குட்டிகளையும் பிடித்தேன். அவைகளைக் கயிற்றாற் கட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் அவை தின்னும்படி தானியத்தை வைத்தேன். நான் புல் நிலத்தைச் சுற்றி வேலியடைத்தேன். அதனூடாக ஒரு நீருற்று ஓடிக் கொண்டிருந்தது. இங்குமங்கும் நிழல் மரங்களும் நின்றன. அங்கு நான் ஆட்டுக் குட்டிகளை விட்டு வளர்த்தேன். சில ஆண்டுகளில் அவை ஐம்பது ஆடுகளளவில் பெருகின; நான் நாளடைவில் அவைகளிலிருந்து பால் கறக்கவும். பாலிலிருந்து தயிர்கட்டி செய்யவும், அதிலிருந்து வெண்ணெய் எடுக்கவும் அறிந்து கொண்டேன். நானும் எனது குடும்பமும் உணவு நேரத்தில் இருக்கும் வகையைப் பார்த்தால், நீங்கள் சிரிப்பீர்கள். நான் தீவின் அரசன் போன்றிருந்தேன். ‘பொல்’ என்னும் கிளி எனது தோளில் வந்திருக்கும். என்னோடு பேசக் கூடியது அது ஒன்றுதான். எனது நாய் கிழமாய்ப் போய்விட்டது. அது என் இடப்பக்கத்தில் குந்தியிருக்கும். இரண்டு பூனைகள் மேசையின் பக்கங்களில் இருக்கும். ஒவ்வொன்றும் அடிக்கடி நான் போடும் உணவை எதிர் பார்த்திருக்கும். நான், முன் விட்டிருந்த தோணியைப் பார்க்க வேண்டுமென்று நினைத் தேன். நான் கடற்கரை வழியாக நடந்து சென்றேன். நான் ஒரு கையில் குடை யையும், மற்றொரு கையில் துப்பாக்கியையும் வைத்திருந்தேன். நான் இரண்டு நாட்களின் பின் ஒரு புதிய காட்சியைக் கண்டேன். அது உடனே எனக்குப் பெரிய பயத்தை உண்டாயிற்று. மணலில் மனித அடிச்சுவடுகள் காணப்பட்டன. 12. பயங்கரம் சிறிது நேரம் நான் திகைத்துப்போய் நின்றேன். நான் சுற்றிச்சுற்றி எல்லா இடங்களையும் பார்த்தேன். ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஒரு மனிதனையும் காணவில்லை. மறுபடியும் நான் காலடிகளைப் பார்த்தேன். அவை அங்கே இருந்தன. அவை அங்கு எப்படி வந்தன என்பதை என்னால் நினைத்து அறிய முடியவில்லை. நான் பயந்து உடனே வீட்டுக்குத் திரும்பி ஓடினேன். என்னை யாரோ தொடர்ந்து வருவது போல வழியிலே எதிர்ப்பட்ட புதர்கள் எல்லாம் எனக்குத் தோன்றின. என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை; நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லவுமில்லை. யாரோ ஒரு காட்டு மனிதன் என்னைப் பிடித்துவிடுவானென நான் பயந்தேன். அந்தக் கால் அடையாளங்கள் என்னுடையவையாய் இருக்கலாமோ என்பதை அறியும் பொருட்டுச் சிறிது தைரியத்துடன் நான் மறுபடியும் அங்குச் சென்றேன். நான் எனது காலடியை வைத்து அவற்றை அளந்து பார்த்தேன். எனது காலடி அவ்வளவு பெரிதாய் இருக்கவில்லை. அந்த அடிகள் ஒரு காட்டு மனிதனுடையனவா யிருக்கலாமென்றும் அவன் கரையிலே இருக்க லாம் என்றும் நான் நினைத்துப் பயந்தேன். இப்பொழுது நான் எனது வீட்டை முன்னி லும் காவலுடையதாக்க எண்ணினேன். நான் அதைச்சுற்றி இன்னும் ஒரு வேலி இட்டேன். அதில் ஆறு துப்பாக்கிகளை வைத்தேன். அவசியம் நேர்ந்தால் நான் அவைகளை எல்லாம் ஒரே முறையில் சுடக்கூடும். பின்பு நான் அந்த வேலியைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டேன். அவை நாளடைவில் பெரிய மரங்களாய் வளர்ந்தன. என் ஆடுகளை எவராவது திருடிக் கொண்டு போகலாம் எனவும் எனக்கு அச்சம் இருந்தது. நான் பல இடங்களைச் சுற்றி வேலி அடைத்தேன்; ஒவ்வொன்றிலும் சில ஆடுகளை விட்டேன். என்றைக்கேனும் ஒரு நாள் என் எதிரி ஒருவனைச் சந்திக்க நேரும் என்னும் பயத்தினாலேயே நான் இவைகளை எல்லாம் செய்தேன். நான் அத் தீவில் பதினெட்டு ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினேன். அத்தீவிற்கு எதிரே உள்ள இடத்தைக் குறித்து நான் மிகவும் பயந் தேன். அதற்குக் காரணம், நான் ஒரு நாள் கடற்கரையில் நெருப்பெரிக்கப் பட்டிருந்ததையும், பக்கத்தே மனித எலும்புகள் இருந்ததையும் கண்டதே யாகும். அவைகளைப் பார்த்தவுடன் மனித இறைச்சியை உண்பவர் அங்கு மனிதரை உண்டு விருந்து கொண்டாடினர் என்பது எனக்கு நன்றாய் விளங்கி விட்டது. அப்பொழுது எனக்கு மண்ணில் காணப்பட்ட அடிச்சுவடுகளைப் பற்றியும் விளங்கிவிட்டது. காட்டு மனிதர் தோணிகள் மூலம் அங்கு வந்து விருந்து கொண்டாடிய பின்பு போயிருக்கலாம் என்று நான் துணிந்தேன். பின்பு நான் அவ்விடத்தில் சிறிது நேரமும் நிற்க விரும்பவில்லை. நான் விரைவாகக் கூடாரத்துக்குச் சென்றேன். நான் முன்னிலும் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தேன். நான் துப்பாக்கியைப் பயன்படுத்தவில்லை; ஒரு போது காட்டு மனிதர் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுவிடுவர் எனப் பயந்தேன். ஆகையால், நான் துப்பாக்கியும் வாளும் இல்லாமல் வெளியே போவதில்லை. நான் நெருப்பை மூட்டி எரிக்கவும் இல்லை. நெருப்பை மூட்டி எரித்தால், புகை மேலே கிளம்பும் என்னும் பயம் எனக்கு இருந்தது. நான் மரத்தைக் கரியாக எரித்து வைத்துக் கொண்டு, அதை மூட்டி எரித்துச் சமையல் செய்தேன். கரியிலிருந்து புகை கிளம்பமாட்டாது. கடற்கரைக்குப் பக்கத்தே உள்ள மரத்தில் இரண்டு துப்பாக்கிகளை வைத்துக் கட்டியிருந் தேன். அம் மரம் நான் எலும்புகளைக் கண்ட இடத்துக்கு அருகிலுள்ளது. மனித இறைச்சியை உண்ணும் கொடியவர்களுட் சிலரைக் கொல்ல வேண்டு மென்பது எனது விருப்பம். நான் ஒவ்வொரு நாட்காலையிலும் மலை உச்சிக்குச் சென்று, கடலை நோக்கினேன். அங்குத் தோணிகளையோ, காட்டு மனிதரையோ நான் பார்க்கவில்லை. நான் ஒரு நாள் புதர்களை வெட்டிக் கொண்டு போகும் போது ஒரு குகையை அடைந்தேன். நான் அதனுள் புகுந்து, இங்குமங்குஞ் சென்று, ஆராய்ந்து பார்த்தேன். குகையில் இரண்டு வெளிச்சமான கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. நான் உடனே வெளியில் வந்தேன். நான் அதிகம் பயந்து விட்டேன். மறுபடியும் நான் தைரியம் அடைந் தேன். ஒரு பெரிய கொள்ளியை எடுத்துக்கொண்டு குகைக்குள் நுழைந் தேன். அங்கு மிகுதியாய் அழும் சத்தம் கேட்டது கொள்ளியைத் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு சென்றேன். அங்கு உதவியற்று ஓர் ஆடு சாகுந்தறு வாயில் கிடந்தது. என் துயரம் மறைந்து போயிற்று. அது இன்னும் அதிக நேரம் உயிர்பிழைத்திராது என்று அறிந்ததும் நான் குகையின் மறு இடங் களை ஆராயத் தொடங்கினேன். தாழ்வான ஓர் இடத்தை அடைந்ததும் நான் தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. அப்பால் குகையின் முகடு உயர மாய் இருந்தது. அப்பொழுது புதுமையான ஒரு காட்சி எனது கண்ணிற் பட்டது. வைரக்கற்களின் ஒளியைப் போன்ற ஒளி எல்லா இடங்களிலும் காணப்பட்டது. அது ஒரு மாய வித்தை உள்ள குகை போலக் காணப் பட்டது. நான் அக் குகையைக் கண்டுபிடித்ததைப் பற்றி மகிழ்ந்தேன். நான் மறைந்திருப்பதற்கும், என்னுடைய பொருள்களைப் பத்திரமாக வைப்பதற் கும் அது நல்ல இடம். அடுத்த நாள் நான் வெடிமருந்தையும் சில பொருள் களையும் கொண்டுவந்து அங்கு வைத்தேன். ஆடு இறந்து போயிற்று. நான் அதை அயலிலே ஓர் இடத்தில் புதைத்துவிட்டேன். 13. காட்டு மனிதர் அப்பொழுது நான் எனது இருபத்து மூன்றாவது ஆண்டு வாழ்க்கையை அத் தீவில் கழித்துவிட்டேன். காட்டு மனிதரைப் பற்றிய பய மில்லாவிட்டால், எனது வாழ்க்கை மிகவும் இன்பமானதாய் இருந்திருக்கும். எனது நாய் வயது வந்து இறந்து போயிற்று. எனது கிளி அதிகம் பேசிக் கொண்டிருந்தது. என்னிடம் பல பழகின ஆடுகள் இருந்தன. நான் அவை களுக்கு என் கையினால் தீனி கொடுப்பேன். என்னிடம் வேறு சில கிளி களும் இருந்தன. ஆனால், அவை ‘பொல்’ என்னும் கிளியைப் போல நன்றாகப் பேச மாட்டா. சில பழகிய கோழிகளும் எனது வீட்டுக்கு அருகேயிருந்த சிறிய மரங்களில் வாழ்ந்தன. எனது வீட்டுக்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள கடற்கரையில் நெருப் பெரிவதை ஒரு நாள் நான் பார்த்து, ஆச்சரியமடைந்தேன். நான் பயத்தி னால் சிறிது தாமதித்து நின்று, பின்பு வீட்டுக்கு ஓடி, வெளியே இருந்த ஏணியை உள்ளே எடுத்து வைத்துவிட்டேன். இரண்டு மணி நேரம் நான் அசையவில்லை. நெடுநேரம் அங்குத் தங்கியிருக்கவும் என்னால் முடிய வில்லை. நான் வேலியைக் கடந்து கீழே இறங்கி, எனது தொலைவு நோக்கி ஆடி மூலம் பார்த்தேன். அங்கு ஒன்பது காட்டு மனிதர் நெருப்பைச் சுற்றி யிருந்து தம் கைதிகளின் இறைச்சியை உண்டு கொண்டிருந்தார்கள். அவர் களின் தோணிகள் கரையிலே கிடந்தன. மனித இறைச்சியை உண்பவர் தமது உணவை முடித்துக் கொண்டு மறுபடியும் தம் தோணிகளில் சென்றனர். அடுத்த முறை அவர்கள் வந்தால் அவர்கள் கைதிகளுள் ஒருவனை மீட்க வேண்டுமென்றும், அவனுடைய உதவியைக் கொண்டு நான் அத் தீவை விட்டுப் போக வேண்டுமென்றும் நினைத்தேன். மே மாதத்தின் நடுப்பகுதியில் பெரிய புயல் அடித்தது; பெரிய இடி முழக்கமும் உண்டாயிற்று. நான் எனது கூடாரத்திலிருந்து படித்துக் கொண் டிருக்கும் போது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நான் துடிதுடித்து எழுந்து மலை உச்சிக்குச் சென்றேன். அப்போது இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. அது எனது தோணி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இடத்தி லிருந்து வந்ததென்பது எனக்குத் தெரிந்தது. மரக்கலம் ஒன்று ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டது என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் உலர்ந்த விறகைக் குவித்து மலை உச்சியில் நெருப்பெரித்தேன். உடனே பெரிய வெளிச்சம் உண்டாயிற்று. மரக்கலத்திலிருந்தவர்கள் எனது வெளிச்சத்தைப் பார்த்திருத்தல் கூடும். பல வெடிச்சத்தங்கள் கேட்டன. நான் இரவு முழுவதும் விறகை எரித்துக் கொண்டிருந்தேன். விடியும் வரையும் மரக்கலத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. காலையில் அது பாறையில் மோதி உடைந்து போயிருப்பதைக் கண்டேன். அந்த மரக்கலத் திலிருந்தவர் எல்லாரும் கடலுள் ஆழ்ந்திருப்பர் என்று நினைத்தேன். கடல் அடங்கியிருந்தது. நான் எனது தோணியில் மரக்கலம் உடைந்த இடத்திற்குச் சென்றேன். ஒரு நாய் என்னை அடைவதற்கு நீந்தி வந்தது. அது நான் கொடுத்த உணவை உண்டு தோணிக்குள் படுத்துக்கொண்டது. மரக்கலத்திலிருந்த எல்லாப் பொருள்களும் கடல் நீரால் பழுதடைந் திருந்தன. நான் சில ‘உணவின்’ பீப்பாக்களையும், இனிப்பு வகைகளையும் வேறு சில பொருள்களையும் எடுத்துக்கொண்டு நாயுடன் கூடாரத்துக்குத் திரும்பி வந்தேன். 14. அடிமையைத் தப்ப வைத்தல் பதினெட்டு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் ஐந்து தோணிகள் கடற்கரை மணலில் கிடப்பதைக் கண்டு, நான் திடுக்கிட்டேன். ஒவ்வொரு தோணியிலும் நாலு அல்லது ஐந்து பேர் வந்திருப்பர் என்பது எனக்குத் தெரியும். தனிமையாக அவர்களை எல்லாம் தாக்க நான் துணியவில்லை. அவர்கள் வந்தால், போர் செய்வதற்குத் தயாராக நான் எனது கூடாரத்தி லிருந்தேன். ஒருவரும் வரவில்லை. நான் மிகவும் எச்சரிக்கையோடு மலை உச்சிக்குச் சென்றேன். நெருப்பைச் சுற்றி முப்பது காட்டு மனிதர்கள் துள்ளிக் கூத்தாடுவதைப் பார்த்தேன், பின்பு அவர்கள் இரண்டு மனிதர்களைத் தோணியிலிருந்து இழுத்து வந்தார்கள்; ஒருவனை உடனே கொன்றுவிட் டார்கள். அவர்கள் ஒருவனைக் கொல்லும்போது மற்றவன் தப்பியோட முயன்று எனது கூடாரத்தை நோக்கி விரைவாக ஓடி வந்தான். எல்லாரும் அவனைப் பின் தொடர்வர் என்று நினைத்து, நான் பயந்தேன்; இரண்டு பேர் மாத்திரம் அவனைப் பின் தொடர்ந்தனர். நான் அவனைத் தப்ப வைக்க வேண்டுமென விரும்பினேன். நான் இரண்டு துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு குறுக்கு வழியாகத் துரத்துகின்றவர்களுக்கும் ஓடி வருகின்றவனுக்கும் இடையில் சென்றேன். நான் காட்டு மனிதருக்கு நேரே ஓடி, ஒருவனைத் துப்பாக்கியால் அடித்து வீழ்த்தினேன். மற்றொரு காட்டு மனிதன் என்மேல் எய்வதற்காக வில்லில் அம்பைத் தொடுத்தான். நான் உடனே அவனைச் சுட்டேன். அவன் காயம் பட்டு விழுந்தான். ஓடி வந்தவன் என் துப்பாக்கியிலிருந்து புகை வருவதைக் கண்டு பயந்தான். அவன், முன் ஒரு போதும் துப்பாக்கியைக் காணாதவன், அவன் அசையாது நின்றான். நான் அவனைக்கிட்ட வரும்படி அழைத்தேன். அவன் கிட்ட வந்து முழங்கால் இட்டு நிலத்தை முத்தமிட்டுத் தனது தலையை என் பாதங்களில் வைத்தான். இதனால், தான் எனக்கு அடிமையாய் இருப் பான் என்பதை அவன் குறிப்பிட்டான். நான் அவனை எழும்படி சொன்னேன். அவன் எழுந்து என்னுடன் பேசினான். அவன் பேசியது எனக்கு விளங்கவில்லை. இறந்து போன காட்டு மனிதரை மற்றவர்கள் காணாதபடி மணலில் புதைப்பது நல்லது என்பதை அவன் சைகையால் தெரிவித்தான். அவர்களைப் புதைத்தபின் முன்பு நான் ஆட்டைக் கண்ட குகைக்கு அவனை அழைத்துச் சென்றேன். நான் அவனுக்கு உண்ண உரொட்டியும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தேன்; படுப்ப தற்கு வைக்கோலினால் ஒரு படுக்கையைச் செய்து கொடுத்தேன். அவன் நித்திரை செய்யும் போது நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 15. ‘வெள்ளிக்கிழமை’ அவன் இருபத்தாறு வயதுடைய அழகிய வாலிபன். அவனுடைய முகம் பெருந்தன்மையைக் காட்டுவதாயும். மயிர் நீளமாயும் இருந்தன. அவன் நீகிரோவனல்லன். அவனது தோல் நல்ல கறுப்புடையது அன்று. அவனது மூக்குச் சிறியது; இதழ்கள் மெல்லியவை; பற்கள் தந்தம் போல வெண்மையானவை. அவன் எழுந்தபோது நான் ஆடுகளைக் கறந்து கொண்டிருந்தேன். அவன் என்னிடம் வந்து, தான் எனக்கு அடிமையாய் இருப்பதாகச் சைகையால் தெரிவித்தான். அவன் வெள்ளிக்கிழமையன்று காப்பாற்றப்பட்டபடியால், இனி அவன் பெயர் ‘வெள்ளிக்கிழமை’ என்பதை அவன் விளங்கிக் கொள்ளும்படி செய்தேன். நான் அவனைச் சிறிது சிறிதாகச் சில சொற்களைப் பேசப் பயிற்றி னேன். அவன் பாலைக் குடிக்கலாமென்றும், ஒரு போதும் மனித இறைச் சியை உண்ணுதல் கூடாதென்றும், அப்படிச் செய்தால் நான் அவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேனென்றும் அவன் விளங்கிக் கொள்ளும்படி செய்தேன். அவனுக்கு என்னுடைய உடையைப் போன்ற ஓர் உடையைச் செய்து கொடுத்தேன். அவன் அதற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான். தொடக்கத்தில் அவன் சுவருக்கு வெளியே படுத்து உறங்கினான். பின்பு நான் அவனிடத்தில் சந்தேகம் கொள்ளாமையால் அவன் என் அருகில் படுத்து உறங்கினான். நான் நாளுக்கு நாள் அவனைக் குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். அவன் விரைவில் பேசக் கற்றக்கொண்டான். அப்பொழுது எனது வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாயிருந்தது. நான் ஆடு ஒன்றைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை முதல் முறையாகப் பார்த்தபோது அவன் நடுங்கினான். நான் அவனைப் பயப் படாமல் இருக்கும்படி சொல்லித் துப்பாக்கி வேலை செய்யும் வகையை அவனுக்குக் காட்டினேன். ஆட்டிறைச்சியைச் சமைப்பதற்கு அவன் பழகிக்கொண்டான். மாலை நேரங்களில் நான் மற்றைய நாடுகளைப் பற்றிய செய்திகளை அவனுடன் பேசுவேன். ஒரு நாள் நாங்கள் கடற்கரை ஓரமாய் நடந்து வந்தோம். அப் பொழுது நான் ஏறி வந்த போது உடைந்து போன மரக்கலத் துண்டுகளை அவனுக்குக் காட்டினேன். அப்போது ‘வெள்ளிக்கிழமை’ என்னைப் பார்த்து, “எனது நாட்டில் இதைப் போல இரண்டு மரக்கலங்கள் இருக்கின் றன. அவைகளில் தாடியையுடைய வெள்ளை மனிதர்கள் பயணம் செய்து வந்தார்கள். அவர்களை என் நாட்டு மக்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்றான். அவர்களுள் பதினேழு பேர் பாறையில் மோதி உடைந்த மரக்கலத் திலிருந்து படகேறிச் சென்றவராயிருக்கலாமென நான் சந்தேகித்தேன். அவ் வெள்ளை மனிதரை எப்படிப் பார்க்க முடியுமென நான் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். ஒரு படகைச் செய்துகொண்டு அவனோடு ஐரோப்பாத் தேசத்துக்குச் செல்ல நான் எண்ணியிருப்பதாக அவனுக்குச் சொன்னேன். இதைக் கேட்டதும் அவன் கவலை அடைந்தான். அவன் சிறிது நேரம் என்னோடு பேசவில்லை. பின்பு, “நீ ஏன் என்னோடு பேசவில்லை” என நான் அவனைக் கேட்டேன். அவன், “எனக்கு ஐரோப்பாத் தேசம் போக விருப்பம் இல்லை; நாம் இருவரும் எங்கள் தேசம் போகலாம்” எனக் கூறினான். காட்டு மக்கள் வாழும் இடத்துக்கு எப்படிப் போவது என்று நான் நினைத்தேன். நான் ஆலோசிப்பதைக் கண்ட அவன், “நீங்கள் எங்கள் தேசத்துக்கு வரலாம். அங்குத் திருத்தமின்றி வாழும் மக்களைத் திருத்தி, நல்வழிக்குக் கொண்டு வரலாம்,” என்று சொன்னான். நான் அவன் எண்ணப்படியே நடப்பதாகக் கூறினேன். இருவரும் மறுநாள் முதல் பெரிய படகு ஒன்று செய்யத் தொடங்கினோம். ‘வெள்ளிக்கிழமை’ எனக்கு மிகுந்த உதவி செய்தான். ஒரு மாதத்துக்குள் பெரிய படகு ஒன்றைச் செய்து முடித்தேன். பின்பு மிக்க வருத்தத்தோடு கால்வாய் வழியாக அதனைக் கடலுக்குக் கொண்டு போனேன். அதற்குப் பாய்மரம், துடுப்பு, திசையறி கருவி முதலியவைகளை எல்லாம் அமைத்தேன். 16. மேலும் காட்டு மனிதர் வருகையும் கைதிகளைத் தப்ப வைத்தலும் மழை காலம் கழிந்ததும் நான் ‘வெள்ளிக்கிழமை’ யின் தேசத்துக்குச் செல்வதற்காகப் படகில் உணவுகளைப் பத்திரஞ் செய்தேன். ஒரு நாள் காலை நேரத்தில் நான் மிகவும் வேலையாயிருந்தேன். நான் ஆமை ஒன்றைப் பிடித்து வரும்படி அவனிடம் சொன்னேன். சிறிது நேரத்தில் அவன், ‘எசமானரே, இது என்ன துக்கம்! நாம் இதற்கு என்ன செய்வது?’ என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான். மனித இறைச்சி தின்பவர்கள் தன்னைப் பிடித்துத் தின்ன வந்திருக்கிறார்கள் என நினைத்து, அவன் மிகவும் பயமடைந்தான். நாம் இருவரும் அவர்களை எதிர்த்துப் போர் செய்வோம்’ என்று நான் அவனுக்குச் சொன்னேன். அவன் துப்பாக்கிகளுக்கு மருந்து இட்டான். நான் கைத் துப்பாக்கி, வாள், கோடரிகளை ஆயத்தம் செய்தேன். பின்பு இருவரும் புறப்பட்டோம். அங்கு இருபத்தொரு காட்டு மனிதரும் மூன்று கைதிகளும் காணப்பட்ட னர். கைதிகளுள் ஒருவன் வெள்ளையனாயிருந்தான். சுற்றுப்பாதை வழியாக நாங்கள் கடற்கரைக்கு அருகில் வந்தோம். நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் காட்டு மனிதர் கூட்டத்தை நோக்கிச் சுட்டோம். அவர்கள் காயம் படாமலும், இறந்து போகாமலும் எந்த வழியாக ஓடுவது என்று அறியாமல் துள்ளிப் பாய்ந்தார்கள். பின்னும் ஒரு முறை நாங்கள் சுட்டுச் சிலரைக் கொன்றோம்; சிலரைக் காயப்படுத்தினோம். பின்பு நாங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடினோம். ‘வெள்ளிக்கிழமை’ துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு நின்றான்; நான் வெள்ளை மனிதன் கட்டுகளை அறுத்து அவனை விடுதலை செய்தேன். விரைவாக நான் அவன் கையில் ஒரு வாளையும், ஒரு துப்பாக்கியையும் கொடுத்தேன். தப்பிப்பிழைத்த காட்டு மனிதர்கள் தங்கள் தோணிகளில் ஏறிக் துடுப்புகளை வலித்துக் கொண்டு சென்றார்கள். காட்டு மனிதர் கரையில் விட்டுச் சென்ற தோணி ஒன்றினால் அவர்களைத் துரத்தும்படி ‘வெள்ளிக்கிழமை’ என்னிடம் கூறினான். நான் எனக்கு அருகே கிடந்த தோணி ஒன்றில் பாய்ந்து ஏறினேன். அங்கு ஒரு கிழவன் கையும் காலும் கட்டுண்டபடி அரை உயிருடன் இருப்பதைக் கண்டு, நான் மிகவும் வியப்படைந்தேன்; உடனே அவனுடைய கட்டுகளை அறுத்துவிட்டேன். அவன் எழுந்திருக்கப் பலமற்றவனாய் இருந்தான். அவன் கறுப்பு மனிதன். ஆபத்து ஒன்றுமில்லை என்பதை அவனுக்குக் கூறும்படி ‘வெள்ளிக்கிழமை’க்குக் கட்டளை இட்டேன். அவனுக்குச் சிறிது உணவும் கொடுத்தேன். ‘வெள்ளிக்கிழமை’ அருகே வந்து கிழவன் முகத்தைப் பார்த்தான். உடனே அவன் சத்தமிட்டான்; கிழவனை முத்தமிட்டுக் கட்டித் தழுவினான்; துள்ளிக் குதித்தான். அக் கைதி ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையாய் இருந்ததே அதற்குக் காரணம். ‘வெள்ளிக்கிழமை’ வீட்டுக்கு ஓடி, ஒரு சாடியில் தண்ணீர் கொண்டு வந்தான். இரு கைதிகளும் தண்ணீர் குடித்துச் சிறிது களை தெளிந்தார்கள். வெள்ளை மனிதன் இஸ்பானியா நாட்டவன் என்பதை நான் அறிய லானேன். இருவரும் நடக்க முடியாதவராயிருந்தனர். ‘வெள்ளிக்கிழமை’ அவர்களைத் தூக்கித் தோணியில் ஏற்றி, எங்கள் கூடாரத்துக்கருகே கொண்டு வந்தான். பின்பு நாங்கள் சென்றோம். அவர்களை வேலிக்கு மேல் தூக்கிச் செல்ல எங்களால் முடியவில்லை; ஆகவே, நாங்கள் வெளியில் ஒரு கூடாரத்தை அடித்தோம்; அங்கு வைக்கோலினால் படுக்கை செய்து, அவர் களுக்கு கம்பளியும் கொடுத்தோம். அவர்கள் அங்கு ஆறுதலாக நித்திரை செய்தார்கள். இஸ்பானியா தேசத்தவன் நன்கு குணமடைந்த பின், “நான் உடைந்து போன மரக் கலத்தில் இருந்தவர்களுள் ஒருவன்,” எனச் சொன்னான். மனித இறைச்சி உண்ணும் மக்கள் வாழும் தேசத்திற்குப் படகு சென்ற போது அவனும் வேறு பதினேழு பேரும் சிக்கிக் கொண்டனர். நான் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமென்றும், அவர்கள் எங்களுடைய தீவுக்கு வந்தால் எங்கள் நாட்டுக்குச் செல்லக்கூடிய பெரிய மரக்கலம் ஒன்றைக் கட்டலாம் என்றும் கூறினேன். ஆகவே, நாங்கள் மற்ற வர்களையும் பார்த்து அழைத்து வரும்படி இஸ்பானியனையும், ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையையும் அனுப்ப உத்தேசித்தோம். அவர்கள் வந்தால், அவர்கள் உண்பதற்குப் போதிய உணவு எங்களிடம் இருத்தல் வேண்டும். ஆகவே, நாங்கள் அதிக தானியத்தை விதைத்தோம். இஸ்பானியனும் ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையும் அறுவடை முடிந்தவுடன் உணவையும் துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு பயணப்பட்டார்கள். 17. ஆங்கிலேயரின் மரக்கலம் அவர்களின் வருகையை எட்டு நாட்கள் எதிர்பார்த்தோம். அப் பொழுது வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது: நான் ஒரு நாள் நல்ல நித்திரையில் இருந்தேன். அப்பொழுது ‘வெள்ளிக்கிழமை’, “எசமான், எசமான், அவர்கள் வந்துவிட்டார்கள்!” எனச் சத்தமிட்டான். நான் துள்ளி எழுந்து கடலை நோக்கின போது கரைக்குச் சமீபத்தில் ஒரு படகு தெரிந்தது. கவனமாகப் பார்த்ததும் நாங்கள் எதிர்பார்த்திருப்ப வர்கள் அவர்களல்லர் என்பதை அறிந்தோம். நான் ‘வெள்ளிக்கிழமை’ யை அழைத்து, அவர்கள் நண்பர்களா அல்லது பகைவர்களா என்பதை அறியும் வரையில் மறைந்திருக்கும்படி சொன்னேன். நாங்கள் மலை உச்சியில் ஏறித் தொலைவு நோக்கி ஆடியால் பார்த்தோம். தொலைவில் ஓர் ஆங்கில மரக்கலம் நின்றது. அம் மரக்கலத்தி னின்று ஒரு படகு எங்கள் தீவை நோக்கி வந்தது. அதிலிருந்தவர்கள் தரையில் இறங்கினார்கள். மொத்தம் பதினொருவர் இருந்தனர். மூன்று பேர் கைதிகள் போலக் கட்டப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் உயிரை மன்னித்துவிடும்படி மன்றாடுபவர்கள் போலக் காணப்பட்டார்கள். கைதிகள் கரையில் கிடந்தார்கள் ; மற்றவர்கள் உள் நோக்கிச் சென்றார்கள். அது எவ்வகையான இடமென்பதை அறிவதற்கு அவர்கள் சென்றார்கள் போலத் தெரிந்தது. சிறிது நேரத்திற்குப்பின் அவர்கள் களைத்துப் போய்ப் படுத்து நித்திரை செய்தார்கள். பின்பு ‘வெள்ளிக்கிழமை’யும் நானும் மூன்று கைதிகளுக்கும் உதவியளிக்கத் துணிந்தோம். நான் அவர்களருகில் சென்று, அவர்களை, “நீங்களேன் இப்படிக் கிடக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் எனது குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். எனது வினோதமான உடையைக் கண்டதும் அவர்கள் இன்னும் பதின்மடங்கு பயம் அடைந்தார்கள். “பயப்படாதீர்கள்! நான் உங்கள் நண்பன். நீங்கள் ஏன் இப்படிக் கட்டப்பட்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். அவர்களுள் ஒருவன், “நான் இம் மரக் கலத்தின் தலைவன். என் னுடைய வேலையாட்கள் எனக்குக் கீழ்ப்படியாமல் கப்பலைப் பறித்துக் கொண்டார்கள். இத் தீவில் விட்டுச் செல்லும் பொருட்டு அவர்கள் எங்களை இங்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள் இவ்விடத்திலேயே இறந்து விடுவோம் என அஞ்சுகின்றோம்! எங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை!” என்றான். அவன் இவ்வாறு சொன்னதும், “நான் உங்களைக் காப்பாற்றினால் நீங்கள் எனது சொற்படி நடந்து என்னையும் என் வேலையாளையும் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்வீர்களோ?” எனக் கேட்டேன். “நான் இதை மிக்க மகிழ்ச்சியுடன் செய்வேன்!” என மரக்கலத் தலைவன் கூறினான். நான் உடனே மூன்று பேர்களின் கட்டுகளையும் அறுத்துவிட்டு, ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு துப்பாக்கியைக் கொடுத்தேன். அப்பொழுது நித்திரை செய்தவர்களுட் சிலர் விழித்தெழுந் தனர். நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம்; இருவர் இறந்தனர்; மற்றவர்கள் இரக்கம் காட்டும்படி மன்றாடினார்கள். “எங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிவ தாக உறுதி கூறினால், நாங்கள் உங்களை உயிருடன் விட்டு வைப்போம்,” என்று கூறினோம். அதற்கு அவர்கள் உடன்பட்டார்கள். நாங்கள் அவர் களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. நாங்கள் அவர்களைக் கட்டி வைத்து விட்டுப் படகுக்குச் சென்று, அதிலுள்ளவைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, அவர்கள் படகில் ஏறித் தப்பி ஓடிவிடாதபடி அதில் ஒரு தொளை செய்தோம். நான் மரக்கலத் தலைவனையும் மற்றும் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு நல்ல உணவு அளித்து, நான் செய்து வைத்திருந்தவைகளை எல்லாம் அவர்களுக்குக் காட்டினேன். எனது விநோதமான வரலாற்றைக் கேட்டு அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள். மரக்கலத்தில் இன்னும் இருபத்தாறு பேர் இருந்தனர். அவர்கள் ஒரு முறை துப்பாக்கியைச் சுட்டு வெடி தீர்த்துக் கரையிலுள்ளவர்களைத் திரும்பி வரும்படி கொடியைக்காட்டினார்கள். அவர்களை எப்படி வெல்லலாம் என்று நானும் மரக்கலத் தலைவனும் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ஒருவரும் மரக்கலத்துக்குத் திரும்பிப் போகவில்லை. பலமுறை துப்பாக்கி யால் வெடி தீர்த்த பின் அவர்களுள் பத்துப்பேர் படகு ஒன்றில் ஏறிக்கரையை நோக்கி வந்தார்கள். அவர்கள் இறங்கி மற்றப் படகுக்குச் சென்றார்கள். அது பழுது பட்டிருப்பதைக் கண்டு, அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களைக் கூப்பிட்டார்கள். நான் ‘வெள்ளிக்கிழமை’யையும் மற்றவர்களையும் அவர்களுக்கு மறுமொழியாகச் சத்தமிடும்படிச் சொன் னேன். அவர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கித் தங்கள் நண்பர்களைக் காணும் பொருட்டுச் சென்றார்கள். ‘வெள்ளிக்கிழமை’யும் மற்றவர்களும் மலையிலுள்ள காடுகளில் சத்தம் இட்டுக் கொண்டு சென்றார்கள். படகிலிருந்து வந்தவர்கள் இனி இரவில் தங்கள் படகுக்குத் திரும்ப முடியாதபடி களைப்படைந்தபோது அவர்கள் சத்தமிடுதலை நிறுத்தினார்கள். நாங்கள் விரைவில் அவர்களை எல்லாம் பிடித்துக் கட்டி எங்கள் குகைக்குக் கொண்டு போனோம். 18. தீவை விட்டுப் புறப்படுதல் அடுத்த நாள் நாங்கள் படகைப் பழுது பார்த்தோம்; மரக்கலத்தில் இருப்பவர்களையும் மரக்கலத்தையும் பிடித்துக் கொள்வதற்கு வழி வகைளை ஆலோசித்தோம். நாங்கள் பிடித்து வைத்திருந்தவர்கள் பெரிய குற்றம் செய்தவர்களென்றும், மரக்கலத்தையும் மரக்கலத்திலுள்ளவர் களையும் பிடிப்பதற்கு உதவி புரிந்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்க ளென்றும் மரக்கலத் தலைவன் சொன்னான். அவர்கள் அவ்வாறு செய்ய இசைந்து, ஒரு படகில் ஏறிப் புறப்பட் டார்கள். நானும் ‘வெள்ளிக்கிழமை’யும் கடற்கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். மரக்கலத் தலைவன் இரவு நேரத்தில் மரக்கலத்தை அடைந்தான். சிறிது போராட்டத்தின் பின் மரக்கலத் தலைவன் மரக்கலத்திலிருந்தவர் களை வென்று, மரக்கலத்தைக் கைப்பற்றினான்; தனது அனுகூலத்தின் அறிகுறியாக ஏழு வெடி வெடிக்கும்படி சொன்னான். நான் பார்த்துக்கொண்டு நின்று களைத்துப் போனமையால், அயர்ந்து தூங்கிவிட்டேன். “கவர்னர், கவர்னர்” என்று மரக்கலத் தலைவன் கூப்பிட்ட சத்தத்தைக் கேட்ட பொழுது நான் எழுந்திருந்தேன். நான் எழுந்ததும், “அதோ நிற்கிற மரக்கலம் உம்முடையதே; நாங்களும் அப்படியே,” என்று அவன் சொன்னான். அவன் மரக்கலத்தைக் கரைக்கு அருகில் கொண்டு வந்துவிட்டான். எனது பிறந்த நாட்டுக்குச் செல்வதற்கு மரக்கலம் கிடைத்துவிட்டது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியில் மூழ்கினேன். மரக்கலத் தலைவன் செய்தவைகளுக்காக நான் அவனுக்கு நன்றி கூறினேன்; எனக்கு உதவி அளித்த கடவுளைத் துதித்தேன். மரக்கலத் தலைவன் இறைச்சி, சர்க்கரை, உரொட்டி, கொடிமுந்திரி இரசம் முதலிய பலவற்றைக் கொண்டு வந்திருந்தான். நாங்கள் கரையிலிருந்து நல்விருந்து உண்டோம். அவன் அழகிய உடைகளைத் தந்தான். அவைகளை உடுத்து, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ‘வெள்ளிக்கிழமை’யும் மரக்கலத் தலைவனும், நானும் கப்பலுக்குச் செல்வதற்கு ஆயத்தம் செய்தோம். நான் எனது பணம், தொப்பி, குடை, கிளி முதலியவைகளை எடுத்துக் கொண்டேன். எங்களுடன் இருந்தவருள் ஐந்து பேர் நம்பத் தகுந்தவரல்லர் என நினைத்தபடியால் நாங்கள் அவர்களை அத் தீவிலேயே விட்டுச் சென்றோம். புறப்படுமுன் நான் எனது வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அவர்களுக்கு நானிருந்த கூடாரம் முதலியவைகளையும் காட்டினேன். நான் எவ்வாறு சமைத்தேன், தானியம் விதைத்தேன், கொடி முந்திரிப் பழங்களை உலர்த்தினேன், என்பவற்றை எல்லாம் அவர்கள் அறிந்தார்கள். ‘வெள்ளிக்கிழமை’யின் தந்தையும் இஸ்பானியரும் எப்போதாவது திரும்பி வந்தால், எங்கள் பயணத்தைப் பற்றி அறிவிக்கும்படி அவர் களிடம் சொன்னேன். பின்பு நாங்கள் மரக்கலத்தில் ஏறி, விரைவில் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டோம். நாங்கள் ஆறு மாதம் பயணஞ்செய்தோம். பல ஆண்டுகளுக்குப் பின் நான் மறுபடியும் எனது நாட்டைப் பார்த்தேன். ‘வெள்ளிக்கிழமை’ என் வேலைக்காரனாகவும் நண்பனாகவும் எப்பொழுதும் என்னோடு இருந்தான். நான் என் தந்தையாரைக் காணும் பொருட்டு யார்க்ஷயருக்குச் சென்றேன். என் இரண்டு சகோதரிகளைத்தவிர என் மற்றைய உறவினர் எல்லாரும் இறந்துவிட்டனர். நான் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு ஆயிரம் தங்க நாணயம் வரையிலிருந்தது. பிரேசிலிலுள்ள கரும்புப் பண்ணையிலிருந்து பெருந் தொகை எனக்கு வந்தது. அப்பொழுது நான் செல்வனாய் விளங்கினேன். நான் இன்னும் பல துணிச்சலான காரியங்கள் செய்த போதும் நான் தனிமை யாய்த் தீவில் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவில்லை.  கலிவர் யாத்திரைகள் கலிவர் யாத்திரைகள் 1. லில்லிபுத் யாத்திரை எனது இளமைக்காலமும் கல்வியும் நான் எனது பெற்றோரின் ஐந்தாவது குமாரன், யான் பதினான்கு வயதாயிருக்கும்போது எனது தந்தை என்னைக் கேம்பிரிட்ஜ் கலாசாலை யில் கல்வி பயில வைத்தார். அங்கு நான் மிக ஊக்கத்தோடு கல்வி பயின்று வந்தேன். மூன்று ஆண்டுகளுக்கு மேல் அங்கு கல்வி கற்பிக்க எனது தந்தையின் பொருளாதார நிலை இடம் தரவில்லை. அடுத்த நான்கு ஆண்டுகள் நான் பேர்ஸ் என்பவரின்கீழ் மருத்துவக் கல்வி பயின்றேன். என்றாவது ஒருநாள் தூரதேசங்களுக்குப் பயணஞ் செய்ய நேரும் எனக் கருதினமையால் நான் பயணக்காரன் ஒருவன் அறிந்துகொள்ள வேண்டிய வைகளைப் பழகுவதில் சிறிது பணத்தைச் செலவிட்டேன். பேர்ஸ் என்பவரின் கீழ் மருத்துவக் கல்வி கற்று முடிந்ததும், நான் ஒல்லாந்து தேசத்திலுள்ள லைதின் கலாசாலையில் மருத்துவக் கல்வி பயிலும் பொருட்டு எனது தந்தையும் சுற்றத்தாரும் எனக்குப் போதிய பணம் உதவினார்கள். லைதினிலிருந்து திரும்பியபின் நான் சுவாலோ என்னும் கப்பலில் பலமுறை பயணஞ் செய்தேன். பின்பு, நான் இலண்டன் நகரில் தங்கி மருத்துவத் தொழில் நடத்தி வந்தேன். அங்கு நான் ஒரு வீட்டின் பகுதியைக் குடிக்கூலிக்கு அமர்த்திக் குடியிருந்து அங்கு திருமணஞ் செய்துகொண்டேன். இரண்டு ஆண்டுகள் கழிந்தன. எனது ஆசிரியராயிருந்த பேர்ஸ் என்பவர் மரணமானார். எனக்கு நண்பர் மிகச் சிலரே இருந்தனர். ஆதலின், எனது தொழில் அதிக வருவாயளிக்கவில்லை. ஆகவே, நான் மறுபடியும் கடற்பயணஞ் செய்ய எண்ணினேன். ஆறு மாத காலம் நான் மருத்துவ னாகக் கடமையாற்றியபோது நான் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் கிழக் கிந்தியத் தீவுகளுக்கு மிடையில் பயணஞ் செய்தேன். ஓய்வு நேரங்களில் பழையனவும் புதியனவும் ஆகிய நூல்களைப் பயின்றேன். கரையை அடையும்போது அங்குள்ளவர்களின் மொழிகளைப் பயின்றேன். 2. எங்கள் கப்பல் சேதமடைந்தது கடற்பயணஞ் செய்வதில் எனக்கு வெறுப்புண்டாயிற்று. மூன்று ஆண்டுகள் நான் எனது தொழிலைச் செய்துகொண்டு மனைவி மக்களோடு வாழ்ந்தேன். எனது தொழில் போதிய வருவாயளிக்கவில்லை. ஆகவே, நான் அன்டிலோப் என்னும் கப்பலில் மருத்துவ வேலையில் அமர்ந்தேன். அன்டிலோப் கப்பல் பிரிஸ்டல் துறைமுகத்தை விட்டு 1699-ஆம் ஆண்டு மே மாதம் நாலாம் தேதி தென் கடல் தீவுகளை நோக்கிப் புறப்பட்டது. அவ்வாண்டுக் கடைசியில் புயல் காற்று எங்கள் கப்பலை ஆஸ்தி ரேலியாவுக்கு வட மேற்குப் பக்கமாகக் கொண்டு போய் விட்டது. கப்பலில் வேலை செய்தவர்களில் பன்னிருவர் அதிக வேலை செய்தமையாலும் உணவின்மையாலும் இறந்தனர். நவம்பர் மாதம் ஏழாந் தேதி பனிப் புகார் இருந்தது. கப்பலுக்கு அண்மையில் ஒரு பாறையும் காணப்பட்டது. காற்று வேகமாக அடித்தமை யால் எங்கள் கப்பல் பாறையில் மோதி உடைந்தது. நானும் இன்னும் ஐந்து கப்பற்காரரும் படகு ஒன்றில் இறங்கிக் கப்பலுக்கும் பாறைக்கும் அப்பாற் செல்லும் பொருட்டு முயன்று கொண்டிருந்தோம். நாங்கள் தண்டுகளால் ஆனமட்டும் வலித்தோம்; அரை மணிநேரத்தில் பெரிய அலைகள் கிளம்பிப் படகைக் கவிழ்த்துவிட்டன. எனது நண்பர்களின் கதி என்ன ஆயிற்றென்று எனக்குத் தெரியாது. அவர்கள் எல்லோரும் இறந்து போயிருக்கலாம். நான் என்னால் இயன்ற அளவு நீந்திச் சென்றேன். கரையை நோக்கி வீசிக் கொண்டிருந்த திரைகள் என்னைக் கரைப் பக்கம் தள்ளிக் கொண்டு சென்றன. நான் இடையிடையே காலைக் கீழேவிட்டுக் கால் நிலத்தை தொடுகின்றதோ என்று பார்த்தேன். இனி நீந்த வேண்டியதில்லை என்னும் நிலையை அடைந்தபோது நான் கரையை அடைந்தேன். நான் கரையை அடைந்த நேரம் காலை எட்டு மணி. 3. நான் லில்லிபுத்தில் பெற்ற வரவேற்பு நான் அரை மணி நேரம் கரைப் பக்கங்களில் அலைந்து திரிந்தேன். அங்கு வீடுகளோ மக்களோ காணப்படவில்லை. அங்கு அடர்ந்து வளர்ந் திருந்த புல்லின் மேல் படுத்து, எப்பொழுதுமில்லாத கடும் உறக்கம் கொண் டேன். தூக்கம் கலைந்து நான் விழித்தபோது நேரம் பகலாக இருந்தது. எழும்ப முயன்றேன்; என்னால் எழும்ப முடியவில்லை. எனது கால்களும் கைகளும் நிலத்தோடு கட்டப்பட்டிருந்தன. எனது நீண்ட தலை மயிர்களும் அவ்வாறே கட்டப்பட்டிருந்தன. எனது கால்களும் கைகளும் கயிறுகள் மாட்டிக் கட்டப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன். என்னால் மேலே பார்க்க மாத்திரம் முடிந்தது. வெய்யிலின் வெப்பம் அதிகரித்தது; என்னால் கண் களை விழித்துப் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிப் புதுமையான ஆரவாரம் கேட்டது. நான் மேலே பார்த்துக் கொண்டிருந்தமையால் என்னால் வானத்தை அல்லாமல் வேறொன்றையும் பார்க்க முடியவில்லை. சிறிது நேரம் கழிந்தது; உயிருள்ளது யாதோ ஒன்று எனது கால்களில் அசைந்து செல்வதை உணர்ந்தேன். அது எனது உடலின் மீது நடந்து வந்து எனது தொண்டைக்குக் கிட்ட வந்தது. நான் எனது கண்களை வளைத்துப் பார்த்தேன். அது ஆறு அங்குல உயரமுள்ள ஒரு மனிதனாயிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். அம் மனிதன் கையில் அம்பையும் வில்லையும் முதுகில் அம்பறாத் தூணியையும் வைத்திருந்தான். அவனைப் பின் தொடர்ந்து நாற்பது பேர் வரையில் வந்தார்கள். நான் அவர்களைக் கண்ட ஆச்சரியத்தினால் பெருஞ் சத்தமிட்டேன். அவர்கள் பயந்து, பின் வாங்கி ஓடினார்கள். எனது உடலிலிருந்து தவறிக் கீழே விழுந்தமையால் பலர் காயமடைந்தார்கள் என்பதைப் பின்பு அறிந்தேன். அவர்கள் மறுபடியும் திரும்பி வந்தார்கள்; கிட்டவந்து எனது முகம் முழுவதையும் பார்த்த துணிவுடைய ஒருவன் வியப்பினால் கையை உயர்த்திக் கண்ணை விழித்தான்; அதிசயத்தால் “கெக்குணா டெகுல்” என்று சத்தமிட்டான். மற்றவர்களும் அதே சொல்லைப் பலமுறை ஒலித்தார்கள். அவர்கள் யாது கருதி அவ்வாறு சொன்னார்கள் என்று எனக்கு விளங்க வில்லை. நான் இவ்வளவுக் கும் பெரும் வேதனை யோடு கிடந்தேன். இறுதி யில் நான் விடுதலை யடைய விரும்பி ஒரு கையைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கயிறு கொடுக்கப்பட் டிருந்த முளைகளையும் பிடுங்கினேன்; எனது தலைமயிரை இழுத்துக் கட்டியிருந்த கயிற்றையும் தளர்த்தினேன். இப்பொழுது நான் எனது தலையை இரண்டு அங்குலம் மேலே உயர்த்தக் கூடியதாக விருந்தது, எனக்குக் கிட்ட நின்ற பிராணிகளைப் பிடிக்க முயன்றேன்; பிடிப்பதற்கு முன் அவை ஓடிச் சென்றுவிட்டன. இவ்வாறு நிகழ்ந்ததும் பெரிய ஆரவாரமுண்டாயிற்று. ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்களில் ஒருவன் “தல் கோபொனாக்” எனச் சத்தமிட்டுக் கட்டளையிட்டான். நூறு அம்புகள் பறந்து வந்து எனது இடது கையிற் பாய்ந்தன; அவை பாய்ந்தது பல குண்டூசிகள் பாய்ந்தது போல இருந்தது. சில எனக்கு மேலாகச் சென்றன; சில எனது முகத்திற்பட்டன; நான் முகத்தை எனது இடக்கையினால் பொத்திக் கொண்டேன். எனக்கு அதிக நோவுண்டாயிற்று. ஆகவே, நான் விடுதலையடைய முயன்றேன். அவர்கள் ஈட்டிகளாலும் அம்புகளாலும் என்னைத் தாக்கினார்கள். நான் தோலினால் செய்யப்பட்ட சட்டை தரித்திருந்தேன்; ஆகவே, அம்புகளாலும், ஈட்டிகளாலும் என்னைக் காயப்படுத்த அவர்களால் முடியவில்லை, விடுதலை அடையும் வரையும் அமைதியாக விருப்பது நன்று என்று எனக்குத் தோன்றிற்று. நான் கண்ட மனிதர் எல்லோரும் முன் நான் பார்த்தவர்கள் போன்ற சிறியவர்களாயிருந்தார்கள். அவர்கள் பெரிய படை ஒன்றைக் கொண்டு வந்தாலும் என்னால் எதிர்க்க முடியும் எனத் தோன்றிற்று. நான் அமைதியாகக் கிடந்ததும் அவர்கள் என்னைத் தாக்குவதை நிறுத்திவிட்டார்கள். அவ்விடத்திற் கேட்ட ஓசையைக் கொண்டு அங்குள்ளவர்களின் எண் அதிகரித்து விட்டதெனத்தெரிந்ததும் எனது காதுக்கு நேரே பன்னிரண்டடி தூரத்தில் ஏதோ வேலை செய்வது போன்ற சத்தம் கேட்டது. கயிறுகள் இடங்கொடுக்கக் கூடிய அளவுக்கு நான் எனது தலையைத் திருப்பிப் பார்த்தேன். அங்கு ஒன்றரை அடி உயரத்தில் ஒரு மேடை கட்டப்படுவதை நான் கண்டேன். அங்கு நான்கு பேர் நின்றனர். அவர்கள் ஏணி வழியாக அதன்மீது ஏறினார்கள். அரசினர் அலுவலாளன் போன்ற ஒருவன் அதன் மீது நின்று நீண்ட நேரம் பேசினான். அவன் பேசியவை ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. அவன் தனது பேச்சை ஆரம்பிப்பதற்கு முன் எனது தலையின் பக்கங்களிற் கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்துவிடும்படி கட்டளையிட் டான். இதனால் அவன் யாவனென்று அறிந்துகொண்டேன். பக்கத்தே நின்ற மூவரிலும் பார்க்க அவன் உயரமானவன். அவனது நெடுமை எனது நடு விரலினும் பார்க்கச் சற்று பெரியது. அவன் சொற்பொழிவாளரைப் போல் பேசினான். சில சமையங்களில் அவன் கோபமாகவும், சில சமையங்களில் சாந்தமாகவும் பேசினான். அவர்கள் என்ன சொன்னாலும் நான் கேட்டு நடப்பதாக நான் சைகைகளால் அறிவித்தேன். எனக்கு அதிகம் பசித்தது. நான் விரலை வாய்க்குள் அடிக்கடி வைத்து எனக்கு உணவு வேண்டும் எனச் சைகை செய்தேன். நான் சொன்னதை அவர்கள் தலைவன் விளங்கிக் கொண்டான். அவன் மேடையை விட்டு இறங்கினான்; எனது பக்கங்களில் பல ஏணிகளைச் சார்த்தி வைக்கும்படி சொன்னான். ஏறக்குறைய நூறு பேர் எனது வாய்க்கு நேராக ஏறி வந்தார்கள். அவர்கள் வைத்திருந்த கூடைகளில் இறைச்சியிருந்தது. அது விலங்குகளின் பின்னங்கால்களும் முன்னங்கால் களுமாயிருந்தது. அவை பறவைகளின் இறக்கைகளிலும் பார்க்கச் சிறியவை. நான் இரண்டு அல்லது மூன்று கூடை இறைச்சியை ஒரே முறை யில் உண்டேன். சிறிய மனிதர் வேகமாக உணவை எனது வாய்க்குள் கொட்டிக் கொண்டிருந்தார்கள். எனது பருமையையும், பசியின் அளவையும் கண்டு அவர்கள் மிக வியப்புக் கொண்டார்கள். தண்ணீர் வேண்டுமென்று இன்னொரு வகையாகச் சைகை செய்தேன். நான் உண்டதைப் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் எனக்குச் சிறிது நீர் பற்றாது என அறிந்தார்கள். அவர்கள் பெரிய பீப்பா ஒன்றை எனது வாய்க்கு நேராக உருட்டிக் கொண்டு வந்து அதன் வாயைத் திறந்து விட்டார்கள். நான் அதனின்று பெருகிய நீரைக் குடித்தேன். அது அரைப்புட்டி நீர் அளவு தானும் இல்லை அது முந்திரிகை இரசத்திலும் பார்க்கச் சுவையுடையதா யிருந்தது. பின்பு அவர்கள் இன்னொரு பீப்பாவைக் கொண்டு வந்தார்கள். நான் அதிலுள்ளதையும் குடித்து விட்டு இன்னும் வேண்டுமென்று சைகை செய்தேன். எனக்குக் கொடுப்பதற்கு அவர்களிடம் வேறு இருக்கவில்லை. இவ்வியப்புக்குரிய செயல்களை நான் புரிந்த பின் அவர்கள் மகிழ்ச்சியினால் ‘கெக்குனாடெகுல்’ என்று பேரொலி செய்து எனது உடல் மீது நின்று கூத்தாடினார்கள். அவர்கள் எனக்கு மேலால் முன்னும் பின்னும் போய்க்கொண்டிருக்கும்போது அவர்களில் நாற்பது அல்லது ஐம்பது பேரை ஒரே முறையில் பிடித்து நிலத்தில் எறியலாமோ என்று நினைத்தேன். நான் முன் செய்து கொண்ட வாக்குறுதியைப் பற்றியவும், அம்பு தைப்பத னால் உண்டாகிய நோவைப் பற்றியவும் ஞாபகங்கள் உடனே எனக்கு உண்டாயிற்று. 4. லில்லிபுத் சக்கரவர்த்தியின் செய்தி சிறிது நேரத்திற்குப்பின் சக்கரவர்த்தியின் அதிகாரி ஒருவன் எனக்கு முன்னால் வந்தான். அவன் பன்னிரண்டு போர் வீரர்களுடன் எனது காலில் ஏறி முகத்துக்கு நடந்து வந்தான். அவன் அரசன் எழுதி அளித்த கட்டளையை எனது கண்களுக்குக் கிட்டக் கொண்டு வந்து காட்டினான். பின்பு அவன் கோபக்குறியில்லாமல் பத்து நிமிடங்கள் வரையில் பேசி னான். பேசும் பொழுது அவன் முன்புறமாக விரலைப் பல முறைகள் சுட்டிக் காட்டினான். அவன் சுட்டிக்காட்டியது தலைநகரம் இருந்த திசையை என்று பின்பு நான் அறிந்துகொண்டேன். என்னைத் தலைநகருக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று அரசன் தீர்மானித்துவிட்டான். கட்டியிருப்பதி னின்றும் நான் விடுதலையடைய வேண்டுமெனச் சைகை காட்டினேன். அதனை அவ்வதிகாரி விளங்கிக் கொண்டான். ஒரு மறியற்காரனைப் போல் என்னைக் கொண்டுசெல்ல வேண்டுமென அவன் சொன்னான். எனக்கு அதிகம் உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டுமென்றும் எனக்கு அதிக அன்பு காட்டப்படுதல் வேண்டுமெனவும் அவன் வேறு சைகைகள் செய்து சொன்னான். எனது கட்டுகளை அறுத்துவிடலாமோ என்று இன்னும் ஒருமுறை நினைத்தேன். அப்பொழுது அம்புகளால் முன் நேர்ந்த நோவைப் பற்றிய ஞாபகம் வந்தது. ஆகவே விரும்பியபடி அவர்கள் செய்யலாமென்று அவர்கள் அறியும்படி சைகைகளால் அறிவித்தேன். உடனே அதிகாரியும் அவனுடன் வந்தவர்களும் பின்னேச் சென் றார்கள். அங்கு நின்ற மனிதர் “பொலம் செலன்” என்று செய்த சத்தம் எனது காதுகளில் விழுந்தது. எனது வலப்புறத்தில் கட்டியிருந்த கட்டுகளைப் பலர் தளர்த்தினார்கள். நான் இப்பொழுது திரும்பக் கூடியதாக விருந்தது. நான் திரும்புவதன் முன் அவர்கள் எனது முகத்திலும் கைகளிலும் வாசனை யுள்ள ஒருவகைத் தைலம் பூசினார்கள். அது அம்பு தைத்ததினால் உண்டான நோவை மாற்றிவிட்டது. இப்பொழுது நான் வசதியாகக் கிடந்து, எட்டு மணி நேரம் நித்திரை கொண்டேன். அரசன் முந்திரிகை இரசத்தில் நித்திரை கொள்ளும் மருந்து கலந்து கொடுக்கும்படி கட்டளையிட்டிருந்தமையே, இதற்குக் காரணம். தலைநகருக்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு வண்டியைச் செய்யும்படி சக்கரவர்த்தி ஐந்நூறு தச்சருக்குக் கட்டளை யிட்டிருந்தனர். அவர்கள் செய்த வண்டி நிலத்திலிருந்து மூன்றரை அங்குல உயரமும், ஏழு அடி நீளமும், நான்கு அடி அகலமும், இருபத்து நான்கு சக்கரங்களும் உடையது. நான் நித்திரை கொண்டிருந்தபோது அது எனக்கு எதிரே கொண்டு வரப்பட்டது. என்னைத் தூக்கி வண்டி மீது வைப்பதுதான் கடினமாக யிருந்தது. இதற்காக ஒரு அடி உயரமுள்ள எண்பது தூண்கள் பயன்படுத்தப்பட்டன. கித்தான் போன்று தடிப்புடைய வடங்களைக் கொளுக்கிகளாற் கொளுவிய துணி களை வேலையாட்கள் எனது கழுத்து, கைகள், உடல், கால்களைச் சுற்றி எடுத்தார்கள். தூண்களில் மாட்டப்பட்ட கப்பிகளிலுள்ள கயிறுகளைத் தொளாயிரம் பேர் இழுத்தனர். இவ்வாறு மூன்று மணி நேரத்தில் நான் வண்டியில் தூக்கி வைக்கப் பட்டுக் கட்டப்பட்டேன். நான் இவ்வாறு தூக்கப்பட்டேனென்று பிற்பாடு அறிந்தேன். இவ்வாறு தூக்கும்போது நான் நித்திரையாக விருந்தேன். அரை மைல் தொலைவிலுள்ள தலைநகருக்கு என்னை இழுத்துச் செல்வதற்கு நாலரை அங்குல உயரமுள்ள பதினையாயிரம் குதிரைகள் பயன்படுத்தப் பட்டன. பிரயாணம் தொடங்கி நான்கு மணிநேரத்தில் நான் விழித்தேன். அன்று முழுவதும் பிரயாணம் நடைபெற்றது. எனது இருபக்கங்களிலும் பக்கத்துக்கு ஐந்நூறு பேர் காவல் காத்துச் சென்றனர். பாதிப்பேர் வெளிச்சம் பிடித்துச் சென்றனர். பாதிப்பேர் நான் அசைந்தால் தாக்குவதற்கு ஆயத்த மாக அம்பும் வில்லும் பிடித்துச் சென்றனர். நாங்கள் அடுத்த நாள் மத்தி யானம் தலைநகரின் வாயிலை அடைந்தோம். அரசனும் அவனுடைய பெருமக்களும் எங்களைச் சந்திக்க வந்தார்கள். அரசன் எனது உடல்மீது ஏறுவதால் உண்டாகக்கூடிய ஆபத்தை நினைத்து அவனுடைய அதி காரிகள் அவனை என்மீது ஏற்றிப் பார்க்கவில்லை. 5. எனது வீடு வண்டி வந்து நின்ற இடத்தில் பழங்காலக் கோயில் ஒன்று இருந்தது. இப்பொழுது அது பயன்படுத்தப்படவில்லை. நான் அக் கோயிலில் தங்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. வடக்கு நோக்கியிருந்த அதன் வாயிற் கதவு நாலடி உயரமும் இரண்டடி அகலமுள்ளது. நான் இலகுவாக அதனூடாகச் செல்ல முடியும். சக்கரவர்த்தியின் வேலையாட்கள் சன்னலுக் கூடாகத் தொண்ணூற்றாறு சங்கிலிகளைக் கொண்டு வந்தார்கள். அவை ஒரு கடிகாரச் சங்கிலியளவு பருமையுடையன. அவர்கள் நான் தப்பி ஓட முடியாதபடி அவைகளால் எனது காலைச் சுற்றிக் கட்டினார்கள். ஒரு இலட்சம் பேர் வரையில் என்னைப் பார்ப்பதற்கு வந்து கூடி னார்கள். பத்தாயிரம் பேர் வரையில் காவற்காரரைத் தள்ளிவிட்டு ஏணி வழி யாக ஓட முடியாதென்று கண்டதும் வேலையாட்கள் எல்லாக் கயிறுகளை யும் அறுத்துவிட்டார்கள். நான் உடனே எழுந்து நின்றேன். நான் எழுந்து நடப்பதைக் கண்ட மக்கள் ஒருபோதுமில்லாத ஆச்சரியமடைந்தார்கள். எனது இடதுகாலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சங்கிலியின் நீளம் இரண்டடி. நான் முன்னும் பின்னும் அரைவட்டமாகச் சுழன்று கோயிலுட் சென்று நீட்டி நிமிர்ந்து படுக்கமாத்திரம் முடிந்தது. நான் அங்கு விடப்பட்டிருந்தேன். எனக்குக் கிட்டே வரமுயன்று கொண்டிருந்த மக்களைக் காவலாட்கள் பின்னே தள்ளிக் கொண்டிருந் தார்கள். கூட்டத்தில் நின்ற சிலர் என்மேல் அம்பெய்தினர். அம்புகளில் ஒன்று எனது இடது கண்ணைத் தடவிக்கொண்டு சென்றது. காவலாளியின் தலைவன் அம்பு எய்த ஆறுபேரைப் பிடித்துக் கட்டும்படி கட்டளை யிட்டான். என்னிடம் தண்டனை பெறும்படி அவர்கள் எனக்கு அருகில் தள்ளப்பட்டார்கள். நான் அவர்களை எனது வலக்கையால் எடுத்து ஐந்து பேரைச் சட்டைப்பைக்குள் போட்டேன்; மற்றவனைத் தின்னப் போவதாகப் பாசாங்கு செய்தேன். அவன் கடுமையாகக் கத்தினான். நான் எனது பேனாக்கத்தியை எடுத்ததும், அதிகாரிகள் மிகவும் பயந்தார்கள். நான் மறுபடியும் அம் மனிதனைச் சாந்தமாக நோக்கிக் கட்டுகளை அறுத்து அவனை நிலத்தில் விட்டேன். அவன் அப்பால் ஓடிச் சென்றான். மற்றவர்களையும் நான் இப்படியே செய்தேன். போர் வீரரும் மக்களும் எனது செய்கையைக் கண்டு மகிழ்ந்தார்கள். 6. எனது படுக்கையும் உணவும் இரவானதும் நான் சிறிது இளைப்பாற எனது வீட்டிற்குள் நுழைந்து நிலத்தில் படுத்தேன். அடுத்த இரண்டு வாரங்களில் சக்கரவர்த்தி எனக்கு ஓர் படுக்கையை ஆயத்தஞ் செய்து தந்தார். அறுநூறு சாதாரண படுக்கைகள் வண்டிகளிலேற்றி, எனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. அப் படுக்கைகள் நிலத்திற் பரப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் எனக்குப் போர்வைகளும், துப்பட்டிகளும் செய்தார்கள். பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஒவ்வொரு காலையிலும் நாற்பது ஆடுமாடுகளும் மற்றும் உணவுப் பொருள்களும் கொடுக்க வேண்டியிருந்தன; போதுமான உரொட்டி, முந்திரிகை இரசம் முதலியனவும் தரப்பட்டன. சக்கரவர்த்தி இவைகளின் விலையைக் கொடுத்தார். எனக்குப் பணிவிடை செய்வதற்கு அறுநூறு வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தங்கியிருப்பதற்கு வசதியான கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அந் நாட்டவர் அணியும் உடை மாதிரியான உடுப்புகளை எனக்குத் தைப்பதற்கு முந்நூறு தையற்காரர் நியமிக்கப்பட்டனர். சச்சரவர்த்தியின் மிகவும் திறமையான ஆறு ஆசிரியர்கள் எனக்கு அவர்களின் மொழியைக் கற்பிக்கும்படி நியமிக்கப் பட்டார்கள். 7. சக்கரவர்த்தியோடு அளவளாவுதல் நான் சக்கரவர்த்தியோடு பேச ஆரம்பித்தேன். என்னை விடுதலை செய்யும்படி நான் அவரைப் பலமுறை வேண்டினேன். “சிறிது காலத்தில் விடுதலை கிடைக்கும். நீ பொறுமையுடன் இருந்து எனதும், எனது பிரஜை களதும் நல்லெண்ணத்தைப் பெறவேண்டும். என்னுடைய அதிகாரிகள் உனது சட்டைப் பைகளைப் பரிசோதனை செய்ய நீ அனுமதிக்க வேண்டும். உன்னிடம் எனது பிரஜைகளுக்கு அபாயம் விளைக்கக்கூடிய பொருள்கள் இருத்தல் கூடும்,” என்று அவர் கூறினார். “எனது சட்டைப் பைகளை உங்களுக்குக் காட்ட ஆயத்தமாயிருக்கிறேன்,” என்று நான் மறுமொழி கூறினேன். இந்நாட்டுச் சட்டப்படி தனது இரு அதிகாரிகள் என்னைப் பரிசோதிக்க வேண்டுமென்றும், என்னிடமிருந்து அவர்கள் எடுக்கும் பொருள்களை இந்நாட்டை விட்டு நான் செல்லும்போது தருவதாகத் தான் வாக்குறுதி செய்வதாகவும் அவர் கூறினார். 8. பரிசோதனை நான் இரண்டு அதிகாரிகளையும் கையால் தூக்கி, எனது சட்டைப் பைகளுக்குள் விட்டேன். இரண்டு சட்டைப் பைகளுக்குள் மாத்திரம் நான் அவர்களை விடவில்லை. அவைகளை அவர்கள் பரிசோதிப்பதை நான் விரும்பவில்லை. அவைகளுள் மற்றவர்களுக்குத் தேவைப்படாத சில பொருள்களை நான் வைத்திருந்தேன். இரண்டு மனிதர் பேனாவும், மைக் கூடும் வைத்திருந்து, எனது சட்டைப் பைகளுக்குள் கண்ட பொருள்களை எல்லாம் குறித்தார்கள். இவ் வட்டவணை சக்கரவர்த்தியிடம் காட்டப்பட்ட போது அவைகளிற் சிலவற்றைத் தம்மிடம் கொடுக்கும்படி அவர் கேட்டார். அவர் முதலில் எனது உடைவாளைத் தரும்படி சொன்னார். அது கடல் நீர் பட்டுத் துரு ஏறி இருந்தபோதும் அதன் பகுதிகள் மின்னிக் கொண்டிருந்தன. நான் அதை உறையினின்றும் எடுத்து வெய்யிலில் அங்குமிங்கும் வீசினேன். அதன் ஒளி போர்வீரரின் கண்களைக் கூசச் செய்தது; அவர்கள் ஆச்சரியத்தினாலும், பயத்தினாலும் அலறினார்கள். தைரியமுள்ள சச்சரவர்த்தி அவர்களைப் போலப் பயமடையவில்லை; வாளை உறையில் இட்டு நிலத்தில் எறியும்படி உத்தரவிட்டார். அவர் அடுத்தபடியாக எனது கைத் துப்பாக்கியைத் தரும்படி சொன்னார். நான் அதனை வெளியே எடுத்து, அதனைப் பயன்படுத்தும் வகையை விளங்கப்படுத்தினேன். நான் அதற்கு வெடிமருந்து மாத்திரம் இட்டுச் சக்கரவர்த்தியைப் பயமடைய வேண்டாமென்று சொல்லி, வானத்தை நோக்கிச் சுட்டேன். எனது வாளைக் கண்டதிலும் பார்க்க அவர்கள் பேராச்சரியமுற்றார்கள். நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தாற்போல் நிலத்தில் விழுந்தார்கள். சக்கரவர்த்தி தானும் சிறிது நேரம் பேசமுடி யாது அசைவற்று நின் றார். நான் எனது கைத் துப்பாக்கியையும், கடி காரத்தையும் சக்கர வர்த்திமுன் வைத்தேன். அவர் இரண்டு போர் வீரர்களைப் பார்த்துக் கடிகாரத்தை ஒரு காவு தடியிலிட்டுத் தூக்கி வரும்படி சொன்னார். அவர் கடிகாரம் செய்யும் சத்தத்தைக் கேட்டு வியப்படைந்தார். அவர் தனது அறிஞர்களை அழைத்துக் கடிகாரத்தைப்பற்றி அவர்கள் கருத்துக்களை வினாவினார். அவர்கள் கூறியவை உண்மைக்கு மாறுபட்டவை. எனது வாள், கைத்துப் பாக்கி, வெடிமருந்து, துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவை அரசனது களஞ் சியத்துக்குக் கொண்டு போகப்பட்டன. மற்றப் பொருள்கள் என்னிடமே விடப்பட்டன. 9. எனது விடுதலை எனது நன்னடத்தையைக் கண்டு சக்கரவர்த்தியும், அதிகாரிகளும், பிரஜைகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் விரைவில் விடுதலை அடைவதை எதிர்பார்த்திருந்தேன். நான் எனது விடுதலையைப்பற்றிச் சக்கரவர்த்தியிடம் பலமுறை வேண்டியிருந்தேன். இறுதியில் அரசன் எனது வேண்டுகோளைத் தனது மந்திரிமாரிடம் கூறினான். ஒருவன் மாத்திரம் எனது வேண்டுகோளை எதிர்த்து நின்றான் மற்றவர்கள் எல்லோரும் எனது விடுதலைக்குச் சாதகமாக வாக்களித்தனர். பாதகமாக நின்றவர் சில நிபந்தனைகளின் பேரில் நான் விடுதலையடைய வேண்டும் என மொழிந்தனர். அவர்களது நிபந்தனைகளாவன:- 1. இம் மனித மலை எங்கள் அனுமதியின்றி எங்கள் நாட்டைவிட்டுச் செல்லுதலாகாது. 2. அவர் எங்கள் உத்தரவின்றி நகருக்குள் வருதலாகாது; வருங் காலங் களில், இரண்டு மணிநேரம் முன்னதாக அறிவித்தல் வேண்டும். வருகையை அறிவிப்பின், மக்கள் தத்தம் வீடுகளில் தங்கியிருப் பார்கள். 3. அவர் நடக்கும்போது மக்கள் மீதாவது குதிரை அல்லது வண்டிகள் மீதாவது உழக்குதல் கூடாது. அவைகளை உத்தரவின்றிக் கையில் எடுக்கவும் கூடாது. 4. மனித மலை பெரிய வீதிகளில் மாத்திரம் நடத்தல் வேண்டும் அவர் பயிர்களின்மீது படுத்தல் கூடாது. 5. அவர் அவசியமான செய்திகளைத் தொலைவிடங்களுக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும். 6. அவர் பிளவிஸ்குத் தீவிலுள்ள எங்கள் எதிரிகளுக்கு மாறாக எங் களுக்கு உதவி அளித்து, அவர்கள் கட்டிவரும் போர்க் கப்பல்களை எங்களிடம் அளித்தல் வேண்டும். 7. சக்கரவர்த்திக்காகக் கட்டப்படும் கட்டடங்களில் வைக்க வேண்டிய பெரிய கற்களை இம் மனித மலை தூக்கி வைக்க வேண்டும். 8. இம் மனித மலை இரண்டு மாதத்துக்குள் எங்கள் இராஜ்யத்தைச் சுற்றி அளந்து, தனது காலால் எத்தனை அடி என்று சொல்லுதல் வேண்டும். இந் நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் இம் மனிதமலைக்கு தங்கள் 1,728 பிரஜைகளுக்குப் போதுமான உணவு நாள்தோறும் கொடுக்கப்படும் நான் இக் கட்டுப்பாடுகளுக்குச் சம்மதமளித்தேன். உடனே எனது கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. நான் விடுதலையடைந்தேன். எனக்கு ஏன் 1,728 பிரஜைகளின் உணவு அளிக்கப்படவேண்டும்? என ஒரு நண்பனைக் கேட்டேன். “நீ எங்களைப்போலப் பன்னிரண்டு பங்கு உயரமுடையவன். ஆகவே உனது உடல் எங்களைப் போன்ற (12x12x12அல்லது) 1,728 பேரின் உடலுக்குச் சரி என்று எங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்,” என்று அவன் சொன்னான். 10. லில்லிபுத்துக்கும் அயல்நாட்டுக்கும் பகை இரண்டு வாரங் கழித்து ஒரு காலையில் ரெல்ரெசன் என்னும் ஒரு அதிகாரி எனது வீட்டுக்கு வந்தான். அவன் வீட்டுக்குத் தொலைவில் காத்து நிற்கும்படி வண்டியை நிறுத்தி விட்டு, தன்னோடு ஒரு மணி நேரம் செல விட முடியுமோ என்று என்னைக் கேட்டான். நான் அதற்கு இசைந்து, “நான் படுத்திருக்கிறேன்; நீ வேண்டியவரை எனது காதுக்குள் கூறலாம்,” என்று சொன்னேன். “அப்படி வேண்டியதில்லை. நீ என்னைக் கையில் தூக்கிப் பிடித்தால் போதும். அந்நியருக்கு இந்நாடு சமாதானமுடையது போலத் தோன்றலாம். பிளிவிஸ்கு என்னும் மக்கள் இந் நாட்டைத் தாக்குவார்கள் என்னும் பயம் இருந்து வருகின்றது. நாம் முட்டைகளைத் தலைப்பக்கத்தால் உடைத்துத் திறப்பது வழக்கம். எங்கள் சக்கரவர்த்தியின் பாட்டன் சிறுவனா யிருந்த போது அவ்வாறு செய்து கையை வெட்டிக் கொண்டார். இக் காரணம் பற்றி முட்டைகள் வாற்பக்கத்தால் திறக்கப்பட வேண்டுமென்று சக்கரவர்த்தியின் தந்தை கட்டளை பிறப்பித்தார். இது காரணமாக, மக்க ளிடையே பல குழப்பங்களும் சண்டைகளும் இருந்து வந்தன. பலர் பிளி விஸ்குத் தீவுக்குச் சென்றனர். அங்கு அந் நாட்டுச் சக்கரவர்த்தி அவர் களுக்கு ஆதரவளித்தார்.” “பின்பு இரு நாடுகளுக்கிடையில் சண்டைமூண்டு, மூன்று ஆண்டுகள் நடைபெற்றது. நாங்கள் நாற்பது பெரிய கப்பல்களையும், பல சிறியவற்றையும், முப்பதினாயிரம் வீரரையும் இழந்தோம். பகைவரின் நட்டம் இதற்கு அதிகமாக இருக்கலாம். இப்பொழுது அவர்கள் எங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்குப் பெரிய கடற்படை ஒன்றை ஆயத்தஞ் செய்துள்ளார்கள். உனது வலிமையையும், துணிச்சலையும் அறிந்த எங்கள் சக்கரவர்த்தி இவ்வரலாற்றை உன்னிடம் கூறும்படி என்னை விடுத்தார்,” என்று சொன்னான். விரோதிகளின் செயல்களில் அன்னியன் ஒருவன் தலையிடுதல் முறையாகாது. அவனுக்கும், நாட்டுக்கும் ஆபத்து வரும்போது நான் தற்காப்பின் பொருட்டுப் போரிட ஆயத்தமாக இருக்கிறேன் என்று அரசனிடம் கூறு,”என்று நான் சொன்னேன். பிளிவிஸ்குச் சக்கராதிபத்திய மென்பது ஒரு தீவு. எண்ணூறு அடி அகலமும், மத்தியில் ஆறடி ஆழமுமுள்ள ஒரு கடல் லில்லிபுத்தையும் பிளிவிஸ்கையும் பிரிக்கின்றது. பகைவரின் போர்க் கப்பல்கள் எல்லாவற்றையும் கொண்டுவருவ தற்கு நான் எண்ணியிருந்த உபாயத்தைப்பற்றிச் சக்கரவர்த்திக்கு அறிவித் தேன். நான் பிளிவிஸ்குக்கு எதிரேயுள்ள வடகிழக்குக் கரைக்கு நடந்து சென்றேன்; அங்குள்ள சிறிய குன்று ஒன்றின் பின்புறத்தில் படுத்திருந்து எனது தொலைவு நோக்கியால் பகைவரின் கப்பல்களைப் பார்த்தேன். அங்கு ஐம்பது போர்க் கப்பல்களும், போர் வீரரைக் கொண்டு செல்லும் வேறு பல கப்பல்களும் இருந்தன. நான் பின்பு வீட்டுக்குத் திரும்பிச்சென்று, மிக நீளமான தந்திக் கம்பிகளையும் இரும்புச் சலாகைகளையும் கொண்டுவரும்படி கட்டளை யிட்டேன். தந்திக் கம்பியின் தடிப்பு ஒரு பின்னல் நூலளவும், சலாகைகளின் நீளமும் தடிப்பும் ஒரு பின்னலூசியளவுமாக விருந்தன. நான் மூன்று இரும்புச் சலாகைகளை ஒன்றாக வைத்து மூன்றாக மடித்த கம்பியால் சுற்றினேன். பின்பு நான் இரும்புச் சலாகைகளின் முனைகளை வளைத்துக் கட்டினேன். இவ்வாறு ஐம்பது கொளுவிகளைச் செய்துகொண்டு, நான் வடகிழக்குக் கரைக்குச் சென்றேன். நான் எனது சட்டை, சப்பாத்து, கால் மேசுகளைக் களைந்துவிட்டு, கடல் பெருகுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன் கடலுக்கு ஊடாக நடந்து சென்றேன். நான் நடக்கக் கூடிய அளவு கெதியாக நடந்து சென்று, நடுவில் அறுபதடி தூரம் நீந்திச் சென்றேன். நான் கப்பல்கள் நிற்கும் இடத்தை அரைமணி நேரத்துக்குள் அடைந்தேன். 11. நான் பகைவரின் கப்பல்களைக் கொண்டு வந்தேன் என்னைக் கண் டதும் பகைவர் பெரும் அச்சம் அடைந்தார் கள். அவர்கள் கப்பல் களினின்றும் நீரில் குதித்துக் கரைக்கு நீந்திச் சென்றனர். அவ் வாறு சென்றவர்களின் எண்ணிக்கை முப்பதி னாயிரத்துக்குக் குறை யாது. நான் எனது கொளுவிகளை எடுத்து ஒவ்வொரு கப்பலின் முன்புறத்திலும் கொளுவிக் கம்பிகளையெல்லாம் ஒன்று சேர்த்து முடிந்தேன். நான் இவ்வாறு செய்து கொண்டிருந்தபோது பகைவர் பல ஆயிரம் அம்புகளை எய்தனர். அவைகளிற் பல எனது கைகளிலும், முகத்திலும் தைத்தன. அவை எனக்கு நோவை உண்டாக்கியது மல்லாமல், எனது வேலையையும் தாமதப்படுத்தின. நான் எனது கண்களைப் பற்றி மிகவும் பயமடைந்தேன். எனது தோற்சட்டைகக்குள் இருந்த மூக்குக் கண்ணாடியைப்பற்றிய நினைவு எனக்குச் சடுதியாக வந்தது. உடனே நான் அதனை எடுத்து மூக்கில் வைத்துக் காதுகளில் மாட்டிக்கொண்டேன். அம்புகளைச் சட்டை பண்ணாது எனது வேலையைச் செய்துகொண்டிருந்தேன். பல அம்புகள் எனது மூக்குக் கண்ணாடியிற் பட்டன; ஆனால், அதனைச் சிறிது ஆடச் செய்தனவன்றி வேறொன்றும் செய்யவில்லை. நான் எல்லாக் கொளுவிகளையும் கட்டியிருந்த கம்பிகளை முடிச் சாக முடிந்துகொண்டு, இழுக்கத் தொடங்கினேன். ஒரு கப்பலாவது அசைய வில்லை. அவை நங்கூரமிடப்பட்டிருந்தமையே அதற்குக் காரணம். இப் பொழுது நான் செய்ய வேண்டிய துணிச்சலான வேலை எஞ்சியிருந்தது. நான் முடிச்சை விட்டுவிட்டுக் கத்தியினால் நங்கூரக் கயிறுகளை வெட்டிப் பகைவரின் கப்பல்களை இழுத்துச் சென்றேன். பிளிவிஸ்கு மக்கள் யான் செய்வது என்ன என்று முதலில் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆச்சரியத்தால் பேசாதிருந்தார்கள். நான் நங்கூரக் கம்பிகளை அறுப்பதைக் கண்ட போது நான் கப்பல்களை விட்டுச் செல்லப் போவதாக எண்ணினார்கள். எல்லாக் கப்பல்களும் நகர்ந்து செல் வதையும் நான் இழுத்துச் செல்வதையும் கண்டபோது அவர்கள் அச்சத் தாலும், கோபத்தாலும் பெரும் ஆராவாரஞ் செய்தார்கள். நான் அபாயத்தி னின்றும் வெளியேறிய பின், நின்று எனது முகத்திலும் கைகளிலும் தைத் திருந்த அம்புகளைப் பிடுங்கிக் காயங்களில் தைலம் பூசினேன். பின்பு நான் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி விட்டுக் கடல் வற்றுவதை நோக்கி ஒரு மணி நின்றேன். பின்பு நான் கப்பல்களுடன் லில்லிபுத்துத் துறைமுகத்தை அடைந்தேன். 12. சக்கரவர்த்தி என்னை வரவேற்றார் சக்கரவர்த்தியும் அதிகாரிகளும் எனது வருகையை நோக்கிக் கடற் கரையில் நின்றார்கள். சிறிது நேரத்தில் நான் கூப்பிடு தொலைவில் வந்தேன். அப்பொழுது நான் கப்பல்கள் கட்டப்பட்டிருந்த தந்திக்கம்பி களைப் பிடித்துக்கொண்டு, “லில்லிபுத் சக்கரவர்த்தி வாழ்க!” என்று சொல்லிச் சத்தமிட்டேன். சக்கரவர்த்தி என்னை வரவேற்று எனக்கு ‘நார்டாக்’ என்னும் பட்டம் அளித்தார். நார்டாக் என்பது எல்லாப் பட்டங்களிலும் உயர்வானது. நான் பகைவரின் எல்லாக் கப்பல்களையும் கொண்டுவர வேண்டு மென்று சக்கரவர்த்தி விரும்பினார். அவர் பிளிவிஸ்கு மக்கள் எல்லோரை யும் தன்னாணைக்குட்படுத்த வேண்டுமென்றும், எல்லோரையும் முட்டை களை வாற் பக்கத்தால் உடைக்கச் செய்து, தான் உலக சக்கரவர்த்தியா யிருக்க வேண்டுமென்றும் விரும்பினார். நான் அவர் கருத்தோடு மாறுபட்டேன். மந்திரிமாரிற் பலரும் எனது கருத்துடையவர்களாயிருந்தனர். சக்கரவர்த்தியின் எண்ணத்தை நான் நிறைவேற்ற உடன்படாதபடியால், நான் செய்த வேலைகளுக்குப் பெரிய மதிப்பு உண்டாகவில்லை. மூன்று வாரங்களுக்குப்பின் பிளிவெஸ்குச் சக்கரவர்த்தியிடமிருந்து சமாதானம் கேட்டுத் தூது வந்தது. வேலையின் முக்கியத்தையும், தலை வரின் பெருமையையும் காட்டும் பொருட்டு, ஆறு அதிகாரிகளும், ஐந்நூறு பேரும் வந்திருந்தார்கள். நான் லில்லிபுத் அரசனோடு சமாதான உடன் படிக்கை செய்வதற்கு அவர்களுக்கு உதவி புரிந்தேன். ஆகவே, அவர்கள் சக்கரவர்த்தியின் பெயரால் என்னை பிளி வெஸ்குவுக்கு அழைத்தார்கள். நான் செல்வதற்கு லில்லிபுத் சக்கரவர்த்தியிடம் உத்தரவு கேட்ட போது அவர் மனமின்றி விடை கொடுத்தார். இதற்கு நான் காரணமறிய முடியவில்லை. பிளிவெஸ்கு மக்களோடு பழகியது இராச விசுவாசமின்மை எனக் கருதப்பட்டதெனப் பின்பு அறிந்தேன். பொக்கிஷ அதிகாரி எனது வகையில் பத்துலட்ச தங்க நாணயங்கள் செலவாகியுள்ளன என்றும், என்னைக் கூடியளவு விரைவில் வெளியே அனுப்பிவிட வேண்டுமென் றும் சக்கரவர்த்தியிடம் கூறினார். 13. அதிகாரியின் சந்திப்பு நான் பிளிவெஸ்குச் சக்கரவர்த்தியைச் சந்திக்க ஆயந்தஞ் செய்து கொண்டிருக்கும்போது என்னுடன் நட்புள்ள ஒரு அதிகாரி இரா வேலை யில் மூடிய பல்லக்கில் எனது வீட்டிற்கு வந்தான். பல்லக்குத் தூக்கி வந்தவர் களை அவன் தூர அனுப்பிவிட்டான். நான் பல்லக்கோடு அவனை தூக்கி எனது சட்டைப்பைக்குள் வைத்தேன். நான் எனது வீட்டுக் கதவை தாழ்ப் பாளிட்டபின் பல்லக்கை மேஜை மீது வைத்து, அதற்குப் பக்கத்தில் இருந் தேன். அவன் சொன்னதாவது “உன்னை என்ன செய்யவேண்டுமென்று சக்கரவர்த்தி தமது மந்திரிமாரோடு ஆலோசனை செய்து, இரண்டு நாட் களுக்கு முன் ஒரு முடிவுக்கு வந்தார். பொல்கோலம் என்பவன் உனது எதிரி. அவனும் மற்ற அதிகாரிகளும் உன்னை இராச விசுவாசமில்லாமைக்காகக் குற்றஞ்சாட்டினார்கள். உனது வீட்டிற்கு நெருப்பு வைக்க வேண்டுமென்றும், உனது முகத்திலும், கைகளிலும் இருபதினாயிரம் வீரரை அம்பு எய்யும்படி செய்து, உனது உடலை கிழித்துக் கொல்ல வேண்டுமென்றும், பொக்கிஷ அதிகாரியும் கடற்படை அதிகாரியும் கூறினார்கள். சக்கரவர்த்தி உன்னைக் கொல்லுதல் ஆகாது என்று தீர்மானஞ் செய்தார். அப்பொழுது கடற்படை அதிகாரி உனது கண்களை எடுத்துவிட வேண்டுமென்றும், கண்களை எடுத்துவிட்டால் பலம் குறைந்துவிடும் என்றும், அதனால் நீ சக்கரவர்த் திக்குப் பயனாக மேலும் இருப்பாய் யென்றும் கூறினான். பின்பு பொக்கிஷ அதிகாரி பேசினான். உணவைக் குறைத்து வந்தால் இறுதியில் நீ பலவீனத் தால் இறந்துவிடுவாய் என அவன் கூறினான். இவ்வாலோசனை ஒப்புக் கொள்ளப்படவில்லை. உன்னைச் சக்கரவர்த்தி உயிர் தப்ப வைத்த செய்தியைச் சொல்லுவதற்குக் கடற்படை அதிகாரி உன்னிடம் மூன்று நாட் களுள் வருவான். அவ்வாறு அரசன் செய்ததற்குப் பதில் இருபது போர் வீரர் உனது கண்களுள் அம்பை எய்து, கண்களைப் பிடுங்குவதற்கு நீ நிலத் தில் படுத்திருக்கவேண்டுமென்றும் கேட்பான். என்ன செய்ய வேண்டுமென் பதை நீயே ஆலோசித்து முடிவு செய்தல் வேண்டும் நான் வந்தது போல இரகசியமாக செல்லுதல் வேண்டும்” இவ்வாறு சொன்னதும் அவன் சென்று விட்டான். சக்கரவர்த்தியின் செய்கையில் ஏதும் நலம் உள்ளதோ என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் விடுதலையடைந்திருக் கும் போது லில்லிபுத்தர் எல்லோரும் திரண்ட போதும் என்னை வெல்லுதல் முடியாது; நான் அவர்களுடைய நகரைக் கற்களை எறிந்து நொறுக்கிவிட முடியும். சக்கரவர்த்தி செய்து கொடுத்த வாக்குறுதியை நினைத்து அவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. நான் அவரிடமிருந்து நார்டாக் என்னும் உயர்ந்த பட்டத்தைப் பெற்றதையும் நான் மறக்கவில்லை. சக்கரவர்த்தி பிளிவிஸ்குக்குச் செல்ல அளித்த அனுமதியை வாய்ப் பாகக் கொண்டு நான் எங்கள் கப்பல்கள் கிடந்த பக்கமாகச் சென்றேன். நான் ஒரு பெரிய போர்க் கப்பலில் தந்திக் கப்பல் ஒன்றைக் கட்டினேன்; நங்கூ ரத்தை உயர்த்திய பின் எனது உடைகளை அதனுள் போட்டேன். நான் அதனை இழுத்துக் கொண்டு நடந்தும் நீந்தியும் பிளிவிஸ்குத் துறை முகத்தை அடைந்தேன். என்னை எதிர்பார்த்திருந்த மக்கள் தலைநக ருக்குச் செல்வதற்கு இரண்டு வழிகாட்டிகளை அனுப்பினார். 14. நான் தப்பிச் சென்றமை பிளிவிஸ்க்கை அடைந்து மூன்று நாட்களுக்குப் பின் வடகிழக்குக் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது கடலில் ஒரு மைல் தூரத்தில் கவிழ்ந்து கிடக்கும் படகைப் போன்ற ஒன்று தெரிந்தது. நான் எனது சப்பாத் தையும் கால் மேசுகளையும் கலைந்து விட்டு, நானூறு முழம் நடந்து சென் றேன். அது உண்மையாகவே ஒரு படகாயிருப்பதைக் கண்டேன். அது ஒருபோது கப்பலிலிருந்து புயலால் அடித்துக் கொண்டு வரப்பட்டிருக்க லாம். அது திரைகளின் வேகத்தினால் கிட்டக்கிட்ட வந்துகொண்டிருந்தது. நான் உடனே பட்டினத்திற்குத் திரும்பி வந்து இருபது பெரிய கப்பல் களையும், மூவாயிரம் கப்பற்காரரையும் தரும்படி சக்கரவர்த்தியிடம் கேட் டேன். கப்பல்கள் வந்தன. படகுக்கு நூறு மார் தூரமிருக்கும் மட்டும் நான் நடந்து சென்றேன். பின்பு நான் நீந்திச் சென்று படகை அடைந்தேன். பின்பு கப்பற்காரர் தந்திக் கம்பியை என்னிடம் எறிந்தார்கள். நான் அதன் முனையைப் படகில் கட்டினேன். அதன் மற்ற முனை கப்பல் ஒன்றில் கட்டப் பட்டது. நான் படகிற்குப் பின்னால் நீந்திக் கொண்டும் படகை முன்னால் தள்ளிக் கொண்டும் நிலம் காலுக்கு எட்டுமட்டும் சென்றேன். இப்பொழுது கடினமான வேலை முடிந்தது. நான் பின்பு வேறு கம்பிகளை எடுத்து வேறு ஒன்பது கப்பல்களோடு படகை தொடுத்தேன். இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும் கரையை அடைந்தோம். அங்கு வந்ததும் நான் படகில் ஏறி இரண்டாயிரம் மனிதரின் உதவியோடு அதனைப் புரட்டினேன். அது அதிகம் பழுதடையவில்லை. சக்கரவர்த்தியைப் பார்த்து நான் எனது தாய் நாட்டுக்குச் செல்வதற்கு என்னை படகிலேற்றி ஓரிடத்தில் விடும்படியும் படகில் வேண்டிய பொருள்களை நிரப்பிவிடும்படியும் கேட்டேன். “நான் உன்னை இழந்து போவதைப் பற்றி துயர் அடைகின்றேன். ஆனால் நான் உனது விருப்பத்தை மறுத்தல் முடியாது,” என்று சக்கரவர்த்தி பதிலளித்தார். 15. லில்லிபுத் சக்கரவர்த்தியின் கவலை நான் நீண்ட காலம் திரும்பி வாராததைக் குறித்து லில்லிபுத் சக்கர வர்த்தி கவலையடைந்தார். அவர் தமது அதிகாரி ஒருவர் மூலம் பிளி வெஸ்குச் சக்கரவர்த்திக்கு செய்தி அனுப்பியிருந்தார். அவன் கூறியதாவது, “எனது சக்கரவர்த்தி இவனுடைய கண்களை பிடுங்கி விடுவது அளவில் திருப்தி அடைவார். இவன் நியாயத்தினின்று தப்பி விட்டான். தண்டிப்ப தற்கு நீங்கள் இவனை மறியற்காரனாக அனுப்பி வைக்கவேண்டும். ” பிளிவெஸ்குச் சக்கரவர்த்தி இச் செய்தியை மூன்று நாட்களாக ஆலோசித்தார். பின்பு அவர் கூறியது வருமாறு: “எனது நண்பனாகிய லில்லிபுத் சக்கரவர்த்தி மனித மலையை மறியல் பிடிப்பது முடியாத காரியம். அவன் பெரிய படகு ஒன்றைக் கண்டு அதனை வைத்திருக்கின் றான். அது அவனைக் கடலிற் கொண்டு செல்லத்தக்கது. சில நாட்களில் இரு நாடுகளும் அபாயமான இவ்வகை விருந்தாளியினின்று விடுதலை யடையும் என்று நம்புகிறேன்.” எனது கப்பலுக்குப் பாய்ச் சீலை அமைப்பதற்கு ஐந்நூறு கப்பற்காரர் வேலை செய்தார்கள். பாய்ச்சீலை கட்டுவதற்கு அவர்களின் கயிறுகளில் இருபது அல்லது முப்பதை ஒன்றாகத் திரித்தேன். ஒரு பெரிய கல் நங்கூரமாகப் பயன்பட்டது. துடுப்புகளும் பாய்மரமும் செய்வதற்குப் பெரிய மரங்களை வெட்டச் சக்கரவர்த்தியின் தச்சர் உதவி புரிந்தார்கள். 16. நான் தாய்நாடு திரும்பியது ஒரு மாதத்தில் எல்லாம் ஆயத்தமாகிவிட்டன. சக்கரவர்த்தி இருபது பொன் முடிப்புகளையும் தமது உருவப் படத்தையும் தந்தார். நான் படகில் நூறு மாடுகளதும் முந்நூறு ஆடுகளதும் இறைச்சியையும், போதிய ரொட்டி யையும், தண்ணீரையும் ஏற்றினேன். நான் எனது நாட்டுக்குக் கொண்டு செல்ல நினைத்து ஆறு பசுக்களையும் இரண்டு எருதுகளையும் பல ஆடு களையும் படகில் ஏற்றினேன். நான் மக்களில் பன்னிருவரைக் கொண்டு செல்ல விரும்பினேன்; சக்கரவர்த்தி அதற்கு உடன்படவில்லை. நான் 1701ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி காலை ஆறு மணிக்குப் புறப்பட்டேன். மூன்றாவது நாள் தென்கிழக்குத் திசையில் ஒரு கப்பல் போய்க்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். நான் உறத்துச் சத்தமிட்டேன்; மறுமொழி கிடைக்கவில்லை. அரைமணி பொறுத்துக் கப்பல் கொடி தெரிந்தது. வெடி கேட்டது. நான் அப்பொழுது அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல முடியாது. கப்பல் பாய்களைத் தாழ்த்தி நின்றது. நான் கப்பலை மாலை ஐந்து மணிக்கும் ஆறு மணிக்கும் இடையில் அடைந்தேன். கப்பலின் கொடி ஆங்கிலக் கொடியாயிருந்தது கண்டு நான் மகிழ்ந்தேன். நான் ஆடுகளையும் மாடுகளையும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு படகிலிருந்த சிறிது உணவோடு கப்பலில் ஏறினேன். அங்கு ஐம்பது பேர் இருந்தார்கள். அவர்களுள் பீற்றர் வில்லியம் என்பவர் எனக்கு முன் அறிமுகமானவர். அவர் என்னைப்பற்றிக் காப்டனிடம் சொன்னார். அவர் என்னிடம் மிக அன்பாயிருந்தார்; நான் எங்கிருந்து வருகின்றே னெனத் தான் அறிய விரும்புவதாகக் கூறினார். நான் எனது வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன். நான் பைத்தியங்கொண்டிருக்கிறேனென அவர் நினைத்தார். அதனை அறிந்ததும் நான் பிளிவெஸ்குச் சக்கரவர்த்தி யின் பொன் முடிப்புகளையும் உருவப்படத்தையும் அந் நாட்டின் புதுமை யான பொருள்களையும் காண்பித்தேன். நான் அவரிடம் இரண்டு பொன் முடிப்புகளைக் கொடுத்து, இங்கிலாந்தை அடைந்ததும் ஒரு பசுவைத் தருவதாகச் சொன்னேன். 1702ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நான் இங்கிலாந்தை அடைந்தேன். கப்பலில் எலி ஒன்று எனது ஆடுகளில் ஒன்றைக் கொண்டு போய்விட்டது. எனது ஆடு மாடுகளை நான் கரைக்குக்கொண்டு சென்று மக்களுக்குக் காட்டினேன். நான் இரண்டாவது பயணத்தைத் தொடங்கு வதன் முன் அவற்றை அறுநூறு பவுனுக்கு விற்றேன். நான் எனது மனைவி மக்களுடன் இரண்டு மாதங்கள் நின்றேன். அன்னிய நாடுகளைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பம் என்னை நீண்ட காலம் தங்கவிடவில்லை. 17. பிரப்டிநாக் யாத்திரை நான் எனது தாய் நாட்டை 1702ஆம் ஆண்டு சூன் மாதம் 20ஆம் தேதிவிட்டு இந்தியாவிலுள்ள சூரத் பட்டினத்திற்குப் பயணமானேன். நன்னம்பிக்கை முனையை அடையும் வரையும் காற்று சாதகமாயிருந்தது. அங்கு நல்ல தண்ணீர் எடுப்பதற்காக நாங்கள் தாமதித்தோம். நாங்கள் மட காசிகர் நீரணையைத் தாண்டினதும் பலத்த காற்று கிளம்பி எங்களை இருபது நாட்களாக மொலுக்காத் தீவுகளுக்குக் கிழக்கே கொண்டு சென்றது. பின்பு காற்று அமர்ந்தது. அப்பொழுது நான் மகிழ்ச்சியடைந்தேன். அக் கடலில் பயணஞ்செய்து பழகிய கப்பல் மாலுமி வரவிருக்கும் புயல் காற்றைச் சமாளிப்பதற்கு ஆயத்தமாகும்படி சொன்னார். அவர் கூறிய படியே அடுத்த நாள் புயல்காற்று கிளம்பிற்று. இப் புயல் காற்றினால் நாங்கள் கிழக்கே ஆயிரத்து நூறு மைல் தூரம் கொண்டு செல்லப்பட்டோம். ஆகவே, அங்கிருந்த மிக அனுபவம் வாய்ந்த மாலுமிகளாலும் நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கூற முடியவில்லை. 18. நான் தீவில் இறங்கியது 1703ஆம் ஆண்டு சூன் மாதம் 17ஆம் தேதி நாங்கள் ஒரு பெரிய தீவைக் கண்டோம். எங்கள் மாலுமி தமது ஆட்களில் பன்னிருவரைத் தண்ணீர் கொண்டுவரும்படி பீப்பாக்களுடன் அங்குப் போக்கினார். நானும் அவர்களோடு செல்லலாமோ என்று கேட்டேன். நாங்கள் தரையை அடைந்த போது அங்கு ஆறோ ஊற்றுக்களோ காணப்படவில்லை. என்னுடன் வந்த வர்கள் கடற்கரையில் எங்காவது நல்ல தண்ணீர் கிடைக்குமோ என்று அறிய அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள். நான் எதிர்ப்புறமாக ஒரு மைல் தூரம் நடந்து சென்றேன். அங்கு மரஞ்செடிகள் காணப்படவில்லை; பாறைகள் கிடந்தன. நான் இப்பொழுது களைப்படையத் தொடங்கியமையால் திரும்பி னேன். கடல் நன்றாகத் தெரிந்தது. என்னுடன் கூட வந்தவர்கள் படகில் ஏறி உயிர் தப்புவதற்காகக் கப்பலுக்கு விரைவாகச் சென்று கொண்டிருந்தார்கள். நான் சத்தமிட்டு அவர்களை அழைக்கலாமென்று நினைத்தபோது அவர் களைப் பின்தொடர்ந்து கூடியளவு வேகமாகச் செல்லும் ஒரு பிராணியை நான் கண்டேன். கடலில் செல்லமுடியாதபடி பாறைகள் இருந்தபடியால் இப் பிராணி யால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை என நான் பின்பு அறிந்தேன். நான் அவ்விடத்தில் நிற்கப் பயந்து, வந்த வழியே ஓடினேன். பின்பு நான் ஒரு உயர்ந்த குன்றில் ஏறினேன். அங்கு நின்று, அவ்விடத்தின் காட்சி களைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. அவ்விடங்கள் பயிரிடப்பட் டிருந்தன. புற்கள் இருபது அடி உயரம் வரையில் இருப்பதைக்கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன். நான் பெரும்பாதை என்று நினைத்து ஒரு இடத்துக்கு வந்தேன். அது வயல்களுக்கூடாகச் செல்லும் கால்பாதை. இப் பாதை வழியாக நான் சிறிது தூரம் நடந்து சென்றேன். நான் இருபுறங்களிலும் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. இப்பொழுது அங்கு அறுவடைக் காலம். தானியப் பயிர்கள் நாற்பதடி வளர்ந்திருந்தன. ஒரு மணி நேரம் நடந்து நான் வயலின் அந்தத்தை அடைந்தேன். நான் வேலியில் ஒரு வெளியைப் பார்க்கலாமென்று முயன்றேன். அப்பொழுது எங்கள் படகுக்குப் பின்னால் ஓடிய மிகப் பெரிய பிராணியைப் போன்ற ஒரு மனிதன் அடுத்த வயலில் நிற்பதை நான் கண்டேன். அவன் ஒரு தேவாலயத்தின் உச்சியளவு உயரமுடையவனா யிருந்தான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பத்தடி தூரத்தைத் தாண்டினான். எனக்கு மிக வியப்பும் பயமும் உண்டாயின. நான் பயிர்களுள் மறையலாமென்று ஓடிச் சென்றேன். அவன் அங்கு நின்று கூப்பிட்ட சத்தம் இடி ஓசைபோல் இருந்தது. பின்பு அவனைப் போன்ற பிரம்மாண்டமான எட்டுப் பேர் தானியம் அறுக்கும் அறிவாள்களுடன் வந்தனர். இவர்கள் முன் குறிப்பிட்டவனைப் போல நன்றாக உடுத்திருக்கவில்லை. இவர்கள் அவனது வேலையாட்கள் போல் காணப்பட்டார்கள். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இவர்கள் நான் மறைந்திருந்த பக்கத்தே தானியத் தாள்களை அறுத்தார்கள். நான் என்னால் கூடியளவு அவர்களுக்குத் தொலைவில் சென்றேன். தானியத் தாள்கள் ஒன்றிலிருந்து ஒன்று ஒரு அடிக்குக் குறையாத தூரத்தில் இருந்தமையால் நான் நடந்து செல்வது மிக்க கடினமாக விருந்தது. அருவி வெட்டும் ஒருவன் எனக்கு இருபதடி தூரத்தில் வந்து விட்டான். அவன் அடுத்த அடி எடுத்து வைத்தால் நான் அவனுடைய காலின் கீழ் அகப்பட்டு நசித்து விடுவேன் அல்லது அரிவாளினால் இரண்டு துண்டுகளாக அரியப் படுவேன் எனப் பயந்தேன். அவன் அடுத்த அடி எடுத்து வைக்குமுன் நான் என்னால் கூடியளவு உரக்கச் சத்தமிட்டேன். அப் பெரிய பிராணி தன்னைச் சுற்றிச் சிறிது நேரம் பார்த்தபின் நான் நிலத்திற்கிடப்பதைக் கண்டது. அவன் அபாயம் விளைக்கும் ஒரு பிராணியைப் பிடிக்கப் பார்ப்பது போல என்னைப் பிடிக்கப் பார்த்தான். பின்பு எனது முதுகைப் பிடித்துத் தூக்கி என்னை நன்றாகப் பார்ப்பதற்காகத் தனது கண்களுக்கு ஆறடி தூரம் கிட்டக் கொண்டு வந்தான். நான் அவனது எண்ணத்தை அறிந்து கொண் டேன். நான் இப் பொழுது அறுபது அடி உயரத்தில் இருந்தேன். அங்கு நின்று விழுந் தால் இறந்து விடுவேன் என்னும் அச்சத்தினால் நான் அசையவில்லை. நான் கண்ணை நிமிர்த்திச் சூரியனைப் பார்த்துக் கைகளைப் பொத்தி னேன். பூச்சி ஒன்றை நாம் நிலத்தில் எறிவது போல் அவன் என்னை நிலத்தில் எறிந்துவிடுவானோ என்று நான் பயந்துகொண்டிருந்தேன். எனது தோற்றம் அவனை மகிழ்வித்தமையால் அவன் என்னை எறியவில்லை. வயற்காரன் என்னைத் தனது மனைவியிடம் காட்டினான். என்னைப் பற்றி வேலையாள் சொன்னதைக் கேட்ட வயற்காரன் ஒரு கைப் பிரம்பு அளவுள்ள வைக்கோலினால் எனது மேற்சட்டையின் பின்புறத்தை உயர்த்திப் பார்த்தான். அவன் எனது முகத்தை நன்றாகப் பார்க்கும் பொருட்டு எனது தலை மயிரை ஒதுக்கினான். அவன் வேலைக்காரரை அழைத்து அவர்கள் எப்போதாவது இவ் வகைப் பிராணியைக் கண்டதுண்டா எனக் கேட்டான். என்னை நன்றாகப் பார்க்கும் பொருட்டு அவர்கள் எல்லோரும் என்னைச் சுற்றி வட்டமாக இருந்தார்கள். நான் எனது தொப்பியைக் கழற்றி வயற்காரனுக்குக் குனிந்து வணக்கஞ் செய்தேன். நான் முழங்கால்களில் நின்று கைகளை உயர்த்தி என்னாலான மட்டும் உரத்துப் பல வார்த்தைகளைப் பேசினேன். வயற்காரன் இப்பொழுது நான் ஒரு பிராணியாக இருக்கலாமெனத் துணிந்தான். அவன் பலமுறை என்னுடன் பேசினான். அவனுடைய சத்தம் எனது காதுகளை அடைக்கச் செய்தது. நான் பல மொழிகளில் உரக்கப் பேசினேன்; ஒருவர் பேசியது ஒருவருக்கு விளங்கவில்லை. பின்பு அவன் தனது மனைவியை அழைத்து என்னை அவளுக்குக் காட்டினான். தவளை அல்லது சிலந்திப் பூச்சியைப் பார்த்தவர் செய்வது போல அவள் பயந்து சத்தமிட்டாள். எனது நடத்தைகளையும் நான் அவள் கணவனுக்குக் கீழ்ப்படிவதையும் கண்டு அவள் என்னை விரும்பினாள். 19. உணவு நேரம் அப்பொழுது மத்தியான நேரம். வேலையாள் ஒருவன் உணவு கொண்டு வந்தான். இருபத்து நான்கு அடி அகலமுள்ள தட்டில் இறைச்சி உணவு இருந்தது. அங்கு வயற்காரனும் அவன் மனைவியும் மூன்று குழந்தைகளும் ஒரு கிழவியும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இருக்கையில் வயற்காரன் முப்பதடி உயரமுள்ள மேசையில் ஒரு புறத்தில் என்னை விட்டான். நான் பயமண்டிக் கரைக்குச் செல்லாது கூடியளவு உட்பக்கமாக இருந்தேன். வயற்காரனது மனைவி ஒரு சிறு அப்பத் துண்டை வெட்டிச் சிறிது இறைச்சியுடன் அதை எனக்கு முன்னால் வைத்தாள். நான் குனிந்து வணங்கி எனது கத்தியையும் முள்ளையும் எடுத்து உண்ணத் தொடங்கினேன். இது அவர்களுக்கு மிக வியப்பளித்தது. மனைவி, மூன்று கலம் கொள்ளக்கூடிய ஒரு சிறு கிண்ணத்தை எடுத்து அது நிறைய குடிவகையை ஊற்றித் தந்தாள். நான் பிரயாசையுடன் அதனை இரண்டு கைகளாலும் எடுத்து மரியாதையுடன் அவளின் சுகத்தைக் கோரிக் குடித்தேன். இதனைக்கண்டு அவர்கள் எல்லோரும் கொல்லென்று நகைத்தார்கள். இச் சத்தம் எனது காதுகளைச் செவிடுபடுத்திவிட்டது. இக் குடிவகை ஆப்பிள் பழத்திலிருந்து இறக்கும் சிடார்போல் இருந்தது. சாப்பாட்டு நேரத்தில் பூனை ஒன்று மனைவியின் கைகளுள் பாய்ந்தது. எனக்குப் பின்னால் ஒருவகை உருமும் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது அங்கு ஒரு பூனை இருந்தது. அது ஒரு எருமை மாட்டிலும் மூன்று மடங்கு பருமையுடையது. நான் மேசையின் ஒரு புறத்தில் ஐம்பது அடி தூரத்தில் நின்றபோதும் பூனையின் தோற்றம் எனக்கு அச்சம் விளைத்தது. பூனை என்மீது கவனஞ் செலுத்தவில்லை. எனது தலைவர் என்னைக் தூக்கி அதற்கு ஆறடி தூரத்தில் விட்டார். நான் நாய்களுக்குப் பயப்படவில்லை. அங்கு மூன்று அல்லது நான்கு நாய்கள் நின்றன. அவைகளில் ஒன்றின் பருமை நான்கு யானையின் அளவு. உணவு முடிந்ததும் என் தலைவர் என்னைப் பத்திரமாக வைத் திருக்கும்படி தம் மனைவியிடம் கூறினார். நான் மிகவும் களைத்து இருந் தேன். எனது தலைவி என்னைத் தனது படுக்கைமீது விட்டாள். இரண்டு மணிநேரம் நித்திரைகொண்டு நான் வீட்டில் எனது மனைவி மக்களோடு இருப்பதாகக் கனவு கண்டேன். இது எனது கவலையை அதிகப்படுத்தியது. நான் படுத்து உறங்கிய - அறையின் அகலம் இருநூறு அல்லது முந்நூறு அடி; உயரம் இருநூறு அடி; படுக்கை இருபதடி அகலம், எட்டு அடி உயர முள்ளது. 20. இரு எலிகள் என்னைத் தாக்கின இரண்டு எலிகள் எனது படுக்கையின் மீது ஏறி மணம் பார்த்து அங்குமிங்கும் ஓடித்திரிந்தன. அவைகளுள் ஒன்று எனது முகத்துக்குக் கிட்டவந்தது. உடனே நான் எழுந்து என்னைக் காத்துக்கொள்வதற்கு எனது கத்தியை எடுத்தேன். பயங்கரமான அப் பிராணிகள் என்னை இருபக்கங் களிலும் தாக்கின. ஒன்று எனது கழுத்தைக் கடித்தது. அது எனக்குத் தீங்கு இழைப்பதற்குமுன் நான் அதனை வெட்டி வீழ்த்தினேன். அது எனது காலடியில் விழுந்தது. அதற்கு என்ன நிகழ்ந்தது என்று அறிந்து மற்றது தப்பி ஓடிவிட்டது. உடனே எனது தலைவி எனது அறைக்குள் வந்தாள். என்மீது இரத்தம் தோய்ந்திருப்பதைக் கண்ட அவள் ஓடிவந்து என்னைத் தூக்கி னாள். நான் காயமடையவில்லை என்று காட்டும் பொருட்டுப் புன் சிரிப்புச் சிரித்துக்கொண்டு எலியைச் சுட்டிக் காட்டினேன். நான் காயமடையாததைக் கண்டு அவள் மகிழ்ச்சியடைந்து தனது வேலைக்காரியை அழைத்து இறந்த எலியை சன்னலுக்கு வெளியே எறியும்படி சொன்னாள். 21. எனது தாதி எனது தலைவிக்குக் குளும்டாகிளிச் என்னும் மகள் ஒருத்தி இருந்தாள். அவள் தையல் செய்வதில் திறமையுடையவள். அவள் பாவைப் பிள்ளையின் தொட்டிலில் எனக்கு ஒரு படுக்கை செய்தாள். இது ஒரு பெட்டியில் அறைக்குள் வைத்து உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டது. அவர்களோடு இருந்த காலங்களிலெல்லாம் இதுவே எனது படுக்கை. சிறுமி எனக்கு வேண்டிய உடைகளைத் தைத்துத் தந்தாள். அவளே அவைகளைத் தனது கைகளால் தோய்த்தாள். அவள் எனக்கு அவர்கள் மொழியைக் கற்பித்தாள். நான் ஒரு பொருளைச் சுட்டிக்காட்டும்போது அவள் அதன் பெயரைச் சொன்னாள். இவ்வாறு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் நான் அறிந்துகொண்டேன். நான் அவளைக் குளும்டாகிளிச் என அழைத் தேன். குளும்டாகிளிச் என்பதற்குச் சிறிய தாதி என்பது பொருள். 22. என்னைக் கண்காட்சி காட்டினார்கள் எனது தலைவர் நண்பர் ஒருவரது புத்திமதியைக்கேட்டு, அடுத்த சந்தை முறையில் என்னைப் பெட்டி ஒன்றில் வைத்துக் கிட்டிய சந்தைக்குக் கொண்டுபோனார். அவருடைய மகளாகிய தாதியும் கூட வந்தாள். பெட்டி நான்கு புறமும் மூடப்பட்டிருந்தது. நான் வெளியே வந்து உள்ளே செல்ல ஒரு கதவும், காற்று நுழைவதற்குப் பல துவாரங்களும் இருந்தன. நான் உள்ளே படுப்பதற்கு மெதுவான ஒரு துணியைச் சிறுமி போட்டிருந்தாள். அரைமணி நேரம் பிரயாணம் செய்யப்பட்டதாயினும், நான் குலுக்கமடைந் ததால் குழப்பமடைந்தேன். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் குதிரை நாற்பது அடி சென்றது. எனது தலைவர் ஒரு உணவு விடுதியில் தங்கினார். அங்கு அவர் பெரிய அறையின் மத்தியில் ஒரு மேசையின்மீது என்னை வைத்தார். அவர் ஒரே முறையில் முப்பது பேரை மாத்திரம் என்னைப் பார்க்கும்படி அனுமதித்தார். சிறுமி சொல்லியவாறெல்லாம் நான் பல தடவை நடந்து காட்டினேன். அவள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் இயன்ற அளவில் உரத்த குரலில் விடையளித்தேன். இன்னும் பல காரியங்களைச் செய்தேன். நான் அன்று பன்னிரண்டு கூட்டம் மக்களுக்குக் காட்டப்பட்டேன். ஒருகாற் செய்தவைகளையே மறுபடியும் மறுபடியும் செய்து காட்டும்படி கட்டளையிடப்பட்டேன். களையினால் எனது பாதி உயிர் போய்விட்டது. எனது தலைவர் இனி அடுத்த சந்தைமுறையில் என்னைக்காட்ட வரு வதாக அறிவித்தல் செய்து, வசதியான இன்னொரு பெட் டியை எனக்குச் செய்தார். முதற் பயணத்தின் பின் நான் எழும்பி நிற்கவோ பேசவோ முடியாத படிகளை அடைந் திருந்தேன். நான் மறுபடியும் உடல் நலம் பெற மூன்று நாட்களாயின. நான் அதிக வருவாய் அளிக்கக்கூடியவன் எனக் கண்டதும் எனது தலைவர் என்னைப் பட்டினங்கள் தோறும் கொண்டுசெல்லத் தீர்மானித்தார். நாங்கள் நாள்தோறும் இலகுவில் நூற்றைம்பது மைல் தூரம் பயணஞ் செய்தோம். தாதி எனது விருப்பத்தின்படி எனக்கு காற்றுப்படவும், நான் நாட்டு வளங்களைப் பார்க்கவும் என்னை அடிக்கடி வெளியே எடுத்தாள். பத்து வாரங்கள் நாங்கள் பயணஞ் செய்தோம். நான் பதினெட்டுப் பெரிய பட்டினங்களில் காட்டப்பட்டேன். 23. நான் இராணிக்கு விற்கப்பட்டேன் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிக பிரயாசங்களால் எனக்கு நோயுண் டாயிற்று. நான் இறந்து விடுவேனென்று எனது தலைவர் நினைத்தார்; ஆகவே, என்னை விற்றுவிடவேண்டுமென்று தீர்மானித்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அதிகாரி ஒருவன் வந்து, என்னை இராணி பார்க்க கொண்டு வரும்படி கட்டளையிட்டான். இராணியும், அவளோடு நின்றவர்களும் எனது நடத்தையைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அவள் எனது நாட்டைப்பற்றியும் எனது பயணங்களைப் பற்றியும் கேள்வி கேட்டாள். நான் இயன்றவரையில் விடையளித்தேன். அரண்மனையில் இருக்க எனக்கு விருப்பம் உண்டோ என அவள் கேட்டாள். குனிந்து வணங்கி நான் ஒருவருடைய வேலையாளனென்றும், விடுதலையடைந்தால் நான் எனது காலத்தை அங்குக் கழிப்பதில் பெருமை அடைவேனென்றும் சொன்னேன். பின்பு அவள் எனது தலைவரைப் பார்த்து என்னை விற்க அவருக்கு விருப்பமோ என்று கேட்டாள். நான் இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேனென அவர் நினைத்து, என்னை ஆயிரம் பொன்னுக்கு விற்று விட்டார். நான் இராணியை நோக்கி, என்னை அன்பாகப் பார்த்து வந்த தாதியும் இங்கு இருந்தால் நலமாகுமென்று கூறினேன். அவள் எனது வேண்டுகோளுக்கிணங்கித் தாதியையும் அரண்மனையில் இருக்கும்படிச் செய்தாள். அப் பெண் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தாள். இராணி என்னைத் தனது கையில் ஏந்தி அரசனிடம் கொண்டு சென்றாள். அரசன் முதலில் எனது வடிவத்தைக் கவனியாது “இந்த வயற் பிராணியோடு நீ எவ்வளவு காலம் பழகுகிறாய்?” என்று கேட்டான். இராணி என்னை அரசன்முன் மேஜை மீது நிற்க வைத்து, எனது வரலாறுகளைச் சொல்லும்படி சொன்னாள். எனது தாதியும் அதே வரலாற்றைக் கூறினாள். எனது குரலைக் கேட்டதும், அரசன் தனது வியப்பை மறைக்க முடியவில்லை. அவன் பல கேள்விகள் கேட்டான். என்னைப்பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும், தாதி என்னைப் பார்த்துவர வேண்டு மென்றும் அவன் அரசியிடம் கூறினான். தாதிக்கு வசதியான ஒரு அறையும் விடப்பட்டது. எனக்குப் படுக்கையறையாகப் பயன்படுவதற்கு இரண்டு சன்னல்கள், ஒரு கதவு, ஒரு படுக்கை, இரண்டு மேஜையும் கதிரை1களுமுள்ள ஒரு பெட்டியைச் செய்யும்படி இராணி தச்சனுக்குக் கட்டளையிட்டாள். பெரிய பெட்டியையல்லாமல் பயணம் செய்யும்போது கொண்டு செல்லக்கூடிய இன்னொரு பெட்டியையும் செய்யும்படி அவள் சொன்னாள். அதன் பருமை பன்னிரண்டடிச் சதுரமும், பத்து அடி உயரமும். அதன் மூன்று பக்கங்களிலும் சன்னல்கள் இருந்தன. சன்னல் இல்லாத பக்கத்தில் இரண்டு வளையங்கள் மாட்டப்பட்டிருந்தன. நான் குதிரை மீது பயணஞ் செய்த போது என்னைக் கொண்டு செல்பவன் வளையங்களுக்கூடாக நாடாவைக் கோத்துப் பெட்டியை அறையிற் கட்டியிருந்தான். பெட்டியுள் ஒரு படுக்கை யும், இரண்டு நாற்காலிகளும், ஒரு மேசையும் தரைப் பலகையோடு இறுக்கப் பட்டிருந்தன. நான் கடற் பயணத்தில் அதிகம் பழகியிருந்தபடியால், குதிரை யின் அல்லது வண்டியின் குலுக்கம் என்னைப் பாதிக்கவில்லை. கடற் பயணங்களைப்பற்றி அடிக்கடி என்னிடமிருந்து கேட்ட அரசி, “உனக்குப் படகு ஒட்டத் தெரியுமோ? இவ்வகையான உடற் பயிற்சி உனக்கு மகிழ்ச்சியைத் தருமோ?” என்று கேட்டாள். “எனக்குப் படகோட்ட நன்றாகத் தெரியும், இவ்வகையான உடற் பயிற்சியை இந்த நாட்டில் நான் செய்வது எப்படி? உங்கள் மிகச் சிறிய படகு எங்கள் பெரிய போர்க் கப்பல் அளவு; நான் ஓட்டக் கூடிய சிறிய படகு உங்கள் பெரிய ஆறுகளில் கவிழ்ந்து விடும்,” என்று நான் கூறினேன். “நீ எவ்வகையான படகு வேண்டுமெனச் சொன்னால் நான் எனது தச்சனை அவ்வாறு செய்து தரும்படி சொல்வேன்,” என்று கூறினாள். திறமையுள்ள தச்சன் பத்து நாட்களில் ஐவர் இருந்து பயணஞ் செய்யக்கூடிய ஒரு படகைச் செய்தான். பின்பு அவன் முந்நூறடி நீளம், ஐம்பதடி அகலம், எட்டடி ஆழமுள்ள தண்ணீர் பிடிக்கக்கூடிய ஒரு தொட்டியையும் அமைத்தான். இங்கு நான், அரசியும் அவள் தோழிமாரும் பார்த்து மகிழும்படி படகை ஒட்டி வந்தேன். சில சமயங்களில் நான் பாய்ச்சீலையைக் கட்டிக் கப்பலை ஓடச் செய்வேன். பெண்கள் விசிறியை வீசிக் காற்றை உண்டாக்குவார்கள். படகோட்டி முடிந்ததும், தாதி படகை அறைக்குள் கொண்டு சென்று அது காயும்படி சுவரில் மாட்டுவாள். 24. குரங்கினால் நேர்ந்த ஆபத்து எனக்கு இந் நாட்டில் நேர்ந்த பெரிய ஆபத்து ஒரு வேலையாளின் குரங்கினாலாகும். தாதி என்னை அறைக்குள் வைத்து மூடி விட்டு உலாவச் சென்றுவிட்டாள். வெய்யில் அதிகமாக இருந்தமையால், அறையின் சன்னலும், எனது பெட்டியின் சன்னலும் திறந்து விடப்பட்டிருந்தன. நான் மேசையிலிருந்து ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போது வெளியி லிருந்து தாதியின் அறைக்குள் யாதோ பாயும் சத்தம் கேட்டு நான் பய மடைந்தேன். குரங்கு ஒன்று துள்ளிப்பாய்ந்து விளையாடிக் கொண்டு, எனது பெட்டிக்கு அருகே வந்தது. நான் பெட்டியின் மற்றப் பக்கத்துக்குச் சென்றேன். அது சுற்றிவரப் பார்த்தபின் என்னைக் கண்டது. அது கதவு வழியாகக் கையை விட்டுச் சட்டையைப் பிடித்து என்னை வெளியே இழுத்தது. நான் திமிறியபோது அது என்னை இறுக்கிப் பிடித்தது. ஆகவே, நான் அமைதியாகக் கிடந்தேன். பின்பு அது என்னோடு அமைதியாக விளையாடினது. சடுதியாக யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும், அது பயமடைந்தது. உடனே அது சன்னலில் பாய்ந்து, என்னை ஒரு கையில் தூக்கிக்கொண்டு கூரைக்குச் சென்றது. அது என்னை வெளியே கொண்டு செல்வதைக் கண்ட தாதி பெரிய சத்தமிட்டாள். அவள் மிகவும் பயமடைந்தாள். உடனே அங்கு பெரிய இரைச்சல் உண்டாயிற்று. வேலையாட்கள் ஏணியை எடுத்துவர ஓடிச் சென் றார்கள். என்னை ஒரு குழந்தையைப் போலக் கையில் வைத்துக்கொண்டு, குரங்கு கூரையில் இருப்பதை நூற்றுக்கணக்கானோர் பார்த்தார்கள். இது என்னைத் தவிர பார்ப்பவர்களுக்கெல்லாம் சிரிப்பாக விருந்தது. சிலர் கல்லெறித்தார்கள். பல் எனது மண்டையை உடைத்து விடும் என்னும் அச்சத்தால் கல்லெறிதல் தவிர்க்கப்பட்டது. ஏணிகள் வழியாக மனிதர் ஏறி வருவதைக் கண்ட குரங்கு என்னைக் கூரையில் விட்டுத் தப்பி ஓடிவிட்டது. அறுநூறு அடி உயரத்திலிருந்து காற்று என்னைக் கீழே தள்ளிவிடுமோ என்று நான் பயந்தேன். ஒரு வேலையாள் மேலே ஏறி, என்னைத் தனது காற் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு கீழே இறங்கினான். நான் என்றைக்காவது ஒருநாள் விடுதலை அடைந்து, எனது தாய் நாட்டுக்குச் செல்வேன் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். விடுதலை எப்படிக் கிடைக்கும் என்பது எனக்குப் புலப்படவில்லை. எல்லோரும் என்னிடம் அன்பாக இருந்தார்கள். நான் விட்டுவந்த குடும்பத்தாரைப்பற்றி நினையாமல் இருக்க என்னால் முடியவில்லை. நான் எனக்குச் சமமானவர் களிடையே பேசவும், அளவளாவவும் விரும்பினேன்; தெருக்களில் தவளை போல் அல்லது நாய்க்குட்டி போல் கால்களின் கீழ் அகப்பட்டு மடிய விரும்பவில்லை. நான் இரண்டு ஆண்டுகள் இந் நாட்டில் வாழ்ந்தேன். ஆண்டின் தொடக்கத்தில் அரசனோடும், அரசியோடும், தாதியோடும் நான் எனது பெட்டியில் தென் கடற்கரைக்குச் சென்றேன். வெய்யிற் காலங்களில் காற்று வருவதற்காக எனது பெட்டியின் மேற்புறத்தில் ஒரு துவாரம் செய்யும்படி நான் தச்சனிடம் சொன்னேன். வேண்டியபோது நான் ஒரு பலகையால் அத் துவாரத்தை அடைத்து விடுவேன். எங்கள் பயணம் முடிந்ததும், தாதியும் நானும் நன்கு களைத்துப் போனோம். “எனக்குக் களைப்பும் வருத்தமுமா யிருக்கிறது. கடலைப் பார்த்தால் ஒருபோது நன்றாயிருக்கும். ஒரு வேலை யாளை அவ்வாறு செய்யும்படி அனுமதிப்பாயா?” என்று நான் சொன்னேன். “உனக்கு உடல் நலம் வருவதுதான் எனது விருப்பம்; ஆனால், உனக்கு ஏதும் தீமை நேரக்கூடும் என்று அஞ்சுகிறேன்,” என்று சொல்லி, ஒரு வேலை யாளைப் பார்த்து, என்னை அழைத்துக்கொண்டு சென்று கவனிக்கும்படி தாதி சொன்னாள். வேலையாள் என்னைக் கடற்கரைக்கு அருகேயுள்ள குன்றுக்கு நேராக எடுத்துச் சென்றான். நான் அவனைச் சிறிது நேரம் படுத்து நித்திரை கொள்ளும்படி சொன்னேன். நானும் சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். ஆபத்து ஒன்றும் இல்லை என்று நினைத்த வேலையாள் பறவை முட்டை களைப் பார்க்கச் சொன்றான் என நினைக்கிறேன். 25. என்னைக் கழுகு தூக்கிச் சென்றது பெட்டியின் மேல் அறையப்பட்டிருந்த வளையத்தை யாதோ இழுப்பதை உணர்ந்து நான் சடுதியாக விழித்தெழிந்தேன். நான் உயர்த்தப் பட்டு முன்பக்கமாகக் கொண்டு செல்லப்படுவதை உணர்ந்தேன். பல முறை உரத்துக் கூப்பிட்டேன் ; பயனில்லை. நான் சன்னல் வழியாகப் பார்த்தேன்; முகில்களையும் வானத்தையுமன்றி வேறொன்றும் தெரியவில்லை. எனது தலைக்கு மேல் இறக்கை அடிப்பது போன்ற சத்தம் கேட்டது ; நான் எனது நிலையை உணர்ந்தேன். கழுகு ஒன்று வளையத்தைப் பிடித்துத் தூக்கிச்செல்வதாகவும், பின்பு அது பெட்டியைப் பாறைமீது விழும்படி விட்டு என்னை எடுத்துத் தின்னும் என்றும் நான் யூகித்தேன். நான் விழும் வேகத்தால் ஒரு நிமிடத்துக்குள் நான் மயக்கமடைந்தேன். பெட்டி நீர்வீழ்ச்சி போன்ற சத்தத்தோடு விழுந்தது. ஒரு நிமிடம் நான் இருளில் இருந்தேன். பின்பு பெட்டி மேலே எழுந்தது. நான் சன்னல்களின் மேற்பக்கத்தால் வெளிச்சத்தைக் காணக்கூடியதாக விருந்தது. இப்பொழுது நான் கடலுள் விழுந்திருக்கிறேன் எனத் தெரிந்தது. வேறு இரண்டு அல்லது மூன்று கழுகுகளால் தாக்கப்பட்டமையால், அக்கழுகு என்னை நழுவவிட்டு விட்டதென நினைக்கிறேன். எனது பெட்டி நன்றாகச் செய்யப்பட்டிருந்தமையால், தண்ணீர் உள்ளே வரவில்லை. காற்று வேண்டியிருந்தமையால், மேலேயிருந்த பலகையை இழுத்துவிட்டேன். நான் எனது தாதியோடு இருத்தலை பலமுறை விரும்பினேன். தாதி எவ்வளவு துயரடைந்திருப்பாளென்றும், இராணியின் கோபத்துக்காளாகி யிருப்பாளென்பதையும் நினைத்து நான் துயரடைந்தேன். எந்த நிமிடத்தி லாவது எனது பெட்டி உடைந்துவிடுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பெட்டி உடையா விட்டாலும் நான் இரண்டொரு நாட்களில் குளிராலும் பசியாலும் இறந்து விடுவேனென நினைத்தேன். 26. நான் காப்பாற்றப்பட்டேன் நான்கு மணி நேரத்துக்குப்பின் எனது பெட்டிக்குப் பக்கத்தில் உரைஞ்சும் சத்தம் ஒன்று கேட்டது. பெட்டி கடல் வழியாக இழுக்கப்பட்டுச் செல்வதை விரைவில் உணர்ந்தேன். என்ன நிகழ்கின்றது என்று எனக்குத் தெரியாவிட்டாலும் இது எனக்குச் சிறிது நம்பிக்கை தந்தது. நான் நாற்காலி யில் ஏறி நின்று, துவாரத்துக்கு அருகில் வாயை வைத்து உதவி வேண்டும் என்று சத்தமிட்டேன். பின்பு நான் ஒரு தடியில் துணியைக்கட்டித் துவாரத் தின் வழியாக அதனை வெளியே தள்ளினேன். ஒரு தந்திக் கம்பி, வளையங் களுக்கு ஊடாகச் செல்வதுபோன்ற ஒரு சத்தம் எனக்குத் தெளிவாய்க் கேட்டது. பின்பு நான் சிறிது சிறிதாக மூன்றடி தடியை வெளியே தள்ளி உதவிக்காகச் சத்தமிட்டேன். அதற்கு மறுமொழியாக பெரிய ஆரவாரம் கேட்டது. அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது. “கீழே யாராவது இருந்தால் பேசட்டும்,” என்னும் ஒரு சத்தம் ஆங்கில மொழியில் வந்தது, “நான் ஒரு ஆங்கிலன். மிகவும் மோசமான ஆபத்து நிலையில் இருக்கிறேன். இந்த மறியலிலிருந்து என்னை விடுதலை செய்யும்படி வேண்டுகிறேன்,” என்று நான் மறுமொழி கூறினேன். “நீ பத்திரமாக இருக்கிறாய். உனது பெட்டி எங்கள் கப்பலோடு கட்டப்பட்டிருக்கிறது, எங்கள் தச்சன் வந்து நீ வெளியே வரக்கூடிய ஒரு துவாரத்தைப் பெட்டியில் அரிந்து விடுவான்,” என்று அச் சத்தம் மறு மொழியாகச் சொன்னது. “அப்படிச் செய்வது அவசியமில்லை. அதற்கு அதிக நேரமாகும். கப்பற்காரரில், ஒருவன் தனது விரலை வளையத்துள் கொளுவி, பெட்டியைத் தூக்கிக் கப்பலுக்குள் வைக்கட்டும்,” என்று நான் சொன்னேன். நான் இவ்வாறு சொன்னதைக் கேட்ட சிலர் நான் பைத்தியம் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தார்கள் ; மற்றவர்கள் சிரித்தார்கள். இப்பொழுது நான் என்னை ஒத்த பருமனையுடைய மக்களிடையே இருக்கிறனென்பது எனது ஞாபகத் தில் வரவில்லை. தச்சன் வந்தான்; சிறிது நேரத்தில் நான் பலவீனமான நிலையில் கப்பலுக்குள் தூக்கி வைக்கப்பட்டேன். கப்பற்காரர் ஆயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டார்கள். நான் அவைகளுக்கெல்லாம் மறுமொழி கூற விரும்பவில்லை. கப்பலின் மாலுமி நான் பலவீனமடைந்திருப்பதைக் கண்டு, என்னைத் தனது அறைக்குள் அழைத்துச் சென்று, குடிப்பதற்குச் சிறிது கொடுத்துத் தனது படுக்கையில் படுத்து இளைப்பாறும்படி செய்தான். பெட்டியிலிருக்கும் விலை உயர்ந்த பொருள்களைக் கப்பற்காரரிலொருவன் கொண்டுவர முடியாதோ என்று நான் படுப்பதன் முன் சொன்னேன். நான் சில மணிநேரம் நித்திரை கொண்டதும் களை தெளிந்தேன். எனக்கு உணவு கொடுக்கும்படி மாலுமி கட்டளையிட்டான். நாங்கள் தனிமையா யிருக்கும்போது எனது பயணங்களின் வரலாற்றையும் நான் எப்படி இந்த மரப்பெட்டியில் வந்தேனென்பதையும் கூறும்படி மாலுமி கேட்டான். பொறுமையுடன் இருந்து எனது வரலாறுகளைக் கேட்கும்படி நான் மாலுமியை வேண்டினேன். நான் இங்கிலாந்தை விட்டது முதல் அவன் என்னைக் கண்டது வரையிலுள்ள வரலாறுகளைச் சொன்னேன். நேர்மையும் சிறிது கல்வியுமுள்ள இந்த மாலுமி நான் கூறிய வரலாற்றின் உண்மைகளை அறிந்து கொண்டான். நான் சொன்னவற்றின் உண்மையை மெய்ப்பிப்ப தற்கு எனது மரப்பெட்டியைக் கொண்டு வரும்படி கூறினேன். அதனைத் திறந்து நான் சேகரித்து வைத்திருந்த அபூர்வமான பொருள்களை எடுத்துக் காட்டினேன். அவை ஒரு முழ நீளமுள்ள ஊசியும், குண்டூசியும், இராணியின் தலைமயிர்களிற் சில அவள் எனக்குத் தந்ததும், எனது தலைக்கு மேலால் வளையம் போலப் போடக்கூடியதுமான பொன் மோதிரம் என்பன. எனக்குச் செய்த உதவிக்குப் பதிலாக அப்பொன் மோதிரத்தை வைத்துக் கொள்ளும்படி நான் மாலுமியிடம் சொன்னேன். அவன் அதைக் கண்டிப்பாக மறுத்தான். பின்பு அவன் எலித்தோலில் செய்யப்பட்ட எனது காற்சட்டைகளைப் பார்வையிட்டான். நான் உரத்துப்பேசுவது தனக்கு வியப்பாயிருக்கிறது என்று மாலுமி கூறினான். அந்நாட்டில் இராணியும் அரசனும் சற்று செவிடர்களோ என்று அவன் கேட்டான். சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் இவ்வாறு பேசி வருகிறேனென்று அவனும் மற்றக் கப்பற்காரரும் மெதுவாகப் பேசிய போதும் நான் அவற்றைத் தெளிவாகக் கேட்கிறேனென்றும் சொன்னேன். நாங்கள் ஒரு நாள் இரவு உணவு செய்து கொண்டிருக்கும்போது மாலுமி என்னை நோக்கி, “நீ எல்லாவற்றையும் அதிசயத்துடன் நோக்கிச் சிரிக்கப் போகின்றவன்போல் தெரிகின்றது,” என்று கூறினான். அது உண்மை தான். உனது தட்டுகள் ஒரு நாணயமளவும், உனது தட்டிலுள்ள இறைச்சி ஒரு வாய்க்குப் பற்றாததும், கிண்ணங்கள் ஒரு தானியக் கோதளவுமாயிருப் பதைப் பார்க்க எனக்குச் சிரிப்பு உண்டாகிறது,” என்று நான் கூறினேன். மாலுமி நான் கூறியதன் விகடத்தை நன்கு விளக்கிக் கொண்டான். “உனது பெட்டியைக் கழுகு தூக்கிச் செல்வதையும் அது அதிக உயரத்தி லிருந்து கடலுள் விழுவதையும் பார்த்திருந்தால் நான் நூறு பொன் தந்திருப் பேன்,” என்று அவன் சொன்னான். நாங்கள் இங்கிலாந்தை 1706ஆம் ஆண்டு சூன் மாதம் மூன்றாம் தேதி அடைந்தோம். மாலுமி என்னிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ள மறுத்து விட்டான். இருவரும் அன்பாக ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துப் பிரிந்தோம். எனது வீட்டில் என்னைக் காணுமாறு அவனிடம் கேட்டுக் கொண்டேன். நான் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள வீடுகள், மரங்கள், ஆடுமாடுகள் மனிதர்களைக் கண்டதும், நான் லில்லிபுத்தில் இருப்பதாக எண்ணினேன். நான் வீட்டுக்குச் சென்றதும், எனது தலை கூரையில் முட்டுமெனப் பயந்து குனிந்து சென்றேன். என்னை வரவேற்க எனது மனைவி ஓடி வந்தாள்; அவள் என்னைக் கிட்டமுடியாது என நினைத்து, அவளின் முழங்கால்களுக்கும் கீழே குனிந் தேன். எனது ஆசீர்வாதத்தைப் பெறும்பொருட்டு எனது மகள் முழங்கால் களில் நின்றாள் ; அவள் எழுந்து நிற்கும் வரையில் நான் அவளைக் காண வில்லை. நான் இவ்வளவு காலமும் எனது தலையை நிமிர்த்திக் கண்களை மேலே பார்த்துக் கொண்டு நிற்கப்பழகியிருந்தமையே இதற்குக் காரணம். எனது நடத்தைகள் வினோதமாயிருந்தமையால், நான் பைத்தியம் கொண்டிருக்கிறேன் என்று எல்லோரும் நினைத்தார்கள். சில நாட்களில் சிறிது நேரத்தில் எனது குடும்பத்தினரும், நண்பரும் என்னைப்பற்றி நன்றாய் அறிந்து கொண்டார்கள். நான் இனி ஒரு போதும் கடற் பயணஞ் செய்யக் கூடாதென எனது மனைவி வேண்டிக்கொண்டாள். இதோடு எனது இரண்டாவது பயணம் முடிவடைந்தது.  அகத்தியர் முன்னுரை இன்று அகத்தியர் வரலாறு என வழங்குவன கற்பனைகளாகத் தோன் றும் சில பழங்கதைகளே. இவைதான் அகத்தியரின் உண்மை வரலாறுகள் என்று கூற எவரும் துணியமாட்டார். கற்பனைகள் போன்ற பழங்கதை களும் காலந்தோறும் வளர்ச்சியடைகின்றன. சாத்தன் உவாந்தி எடுத்தான். அதனைப் பார்த்திருந்த ஒருவன் சாத்தன் கறுப்பாக உவாந்தி எடுத்தான் என ஒருவனிடம் கூறினான்; அவன், “சாத்தன் காகம்போல் கறுப்பாக உவாந்தி எடுத்தான்” என்று மற்றொருவனுக்குக் கூறினான். அவன் “சாத்தன் காகம் உவாந்தி எடுத்தான்” என்று இன்னொருவனிடம் கூறினான். இச் செய்தி ஊர் எங்கும்பரவிற்று. பலர் இவ்வியப்பைக் காணச் சென்றனர். இதன் உண்மையை ஆராய்ந்தபோது சாத்தன் உவாந்தி எடுத்தான் என்பதே உண்மையாயிற்று; மற்றவை எல்லாம் பொய். இன்று பழங்கதை வடிவில் வழங்கும் வரலாறுகள் பல சாத்தன் காகம் உவாந்தி எடுத்த கதை போன்ற னவே; ஆயினும் பயனற்றனவென்று பழங் கதைகளைத் தள்ளிவிடுமாறும் இல்லை. அவை தம்முள் சிறிய உண்மைகள் இருத்தலும் கூடும். அகத்தியரைப் பற்றிய வரலாறும் இவ்வகையினதே. அகத்தியர் வரலாற்றைக் குறித்துப் பலர் ஆராய்ந்திருக்கின்றனர். சிலர் அகத்தியர் தமிழ்நாட்டில் இருந்தவரல்லர் எனக் கூறினர். சிலர் அவர் வடநாட்டினின்று வந்து தென் னாட்டை ஆரிய மயமாக்கியவர் எனக் கூறினர். வேறு சிலர் வேறு பலவாறு கூறினர். அவை தம்மையெல்லாம் கருத்திற் கொண்டு ஆராய்ந்து இந் நூல் அமைவதாயிற்று. புராணக் கதைகளைத் தனித்தனி விரிக்கின், அதில் அளவு கடந்து விரியுமென அஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம். சென்னை பிப். 1948 ந.சி. கந்தையா அகத்தியர் தோற்றுவாய் தமிழ் ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் அகத்தியரைப்பற்றிய வரலாற்றை ஆராயவேண்டியிருக்கின்றது. தமிழ் மொழிக்கு முதன் முதல் இலக்கணம் செய்தவர்1 அகத்தியர் என்றும், அவருடைய மாணவர்களுள் ஒருவர் தொல்காப்பியர் என்றும் கூறும் பழங்கதைகள் வழங்குகின்றன. தமிழ் ஆராய்ச்சி செய்வோர் பலர் அகத்தியரும் தொல்காப்பியரும் வடநாட்டவ ரென்றும், அவர்கள் வடநாட்டு வழக்குகள் பலவற்றைத் தமது நூல்கள் மூலம் தமிழ் நாட்டிற் புகுத்தினர் என்றும் கூறிவருகின்றனர். டாக்டர் போப் தமிழில் இலக்கணம் செய்தாரென்றால் அவர் ஆங்கில வழக்குகளைத் தமிழிற் புகுத்தினார் என நாம் கூறமுடியாது. இதனை ஒப்பவே அகத்திய ரும் தொல்காப்பியரும் ஆரியராயினும் அவர்கள் தமது நூல்கள் மூலம் ஆரிய வழக்குகளைத் தமிழ் நாட்டில் நிலை நாட்ட முடியாது. அகத்தியர் என்பார் யார்? அவர் ஆரியரா? தமிழரா? அவரைக்குறித்து வழங்கும் பழங் கதைகள் நம்பத்தகுந்தனவா? நம்பத்தகாதனவா? என்பவை போன்ற வற்றைத் தமிழ் மாணவரும் பிறரும் ஆராய்ந்து தெளிதல் வேண்டும். அவ்வகையில் ஆராய்வதே இச்சிறிய நூலின் இலக்காகும். அகத்தியர் உருவச்சிலைகளை ஆராய்ச்சி செய்வதில் வல்லவராகிய காங்குலி1 என்பார் அகத்தியரைப்பற்றி ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரை ஒன்றின் சுருக்கத்தை ஈண்டு தருகின்றோம். ஆரிய வர்த்தத்தினின்றும் தென் தேசத்தை ஆரிய மயமாக்கும் பொருட்டு விந்திய மலையைக் கடந்து சென்றவர்களுள் கும்பத்தில் பிறந்தவராகிய அகத்தியர் முதன்மையுடையவர். ஆரியர் குடியேறு வதற்குப் புதிய வயல்களையும் மேய்ச்சல் நிலங்களையும் பெறுவதற்கு வழி காட்டியவர் இவரேயாவர். புராணங்களில் சொல்லப்படும் பழங்கதைகளைக் கொண்டு ஆரியரின் நாகரிகம் ஆரியவர்த்தத்துக்கு வெளியே எவ்வாறு பரவிற்று என நாம் உய்த்து அறிதல் கூடும். அகத்தியர் சிவ வழிபாட்டினர். காசி அவருடைய பிறப்பிடமும் இருப்பிடமுமாகும். அவர் தினமும் கங்கையாற்றில் நீராடுவதற்குச் செல்வார் என்றும் அப்போது அவர் நிலத்தில் கோடாங் கற்கள்போன்று கிடக்கும் சிவலிங்கங்களை மிதிக்காது விலகி மிதியடி தரித்துச் செல்வாரென்றும் புராணங்கள் கூறுகின்றன. அவர், வடிவழகில் ஒப்பில்லாத உலோபா முத்திரை என்னும் விதர்ப்ப அரசனின் மகளைத் திருமணஞ் செய்துகொண்டார். அவர் வடக்கே நீண்ட காலம் வாழவில்லை. அவர் தென் திசைக்குப் போகவேண்டியிருந்தது. இவரது முன்னோர் பலர் இவரைப்போலவே மீண்டு வராதிருக்கும் தென் தேச யாத்திரை செய்தார்கள். போய் மறுபடியும் திரும்பிவராத யாத்திரைக்கு ‘அகத்திய யாத்திரை’ என்னும் பெயர் வழங்குகின்றது. அகத்தியர் தெற்கே யுள்ள காட்டை அழித்து நாடாக்கினார். இராமாயணம் இதைக்குறித்துத் தெளிவாகக் கூறியுள்ளது. “(அகத்தியர்) தனது புண்ணிய கருமங்களால் கொலைத் தொழி லுடைய அசுரரைத் தொலைத்துத் தென்பூமியை மக்கள் உறைதற்கேற்ற இடமாக மாற்றினார்” - (ஆரணிய காண்டம். சருக்கம் 11, சுலோகம் 81). இராமர் இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வந்த செயல் அகத்தியர் மக்கள் நுழைய முடியாத தென் தேசத்தை வென்றதோடு உவமிக்கப்பட்டுள்ளது. (இலங்க காண்டம் 117-வது சருக்கம், 13-14 சுலோகம்). அவர் தென் தேசத்தில் திரிந்து தங்கிய இடங்கள் ஆசிரமங்கள் எனப்பட்டன. தண்டகாரணியத்துக்குச் சில மைல் தூரத்திலுள்ள நாசிக் என்னும் இடத்தில் அவர் தங்கியிருந்தாரென இராமாயணம் கூறுகின்றது. ஆனால் அவர் அவ்விடத்தில் அமைதியுற்றிருக்க முடியவில்லை. அங்கு மிங்கும் குடியேறியிருந்த ஆரியரை அரக்கர் தாக்கினார்கள். அவர்களை அழிக்கும்பொருட்டு அகத்தியர் தனது தவவலியைப் பயன்படுத்தினார். அரக்கர், இராக்கதர், அசுரர் என்பன ஆரியக் கொள்கைகளை எதிர்த்து நின்ற வர்களுக்கு இடப்பட்ட பெயர்கள், வில்வலன், வாதாபி என்போர் இராக்கதத் தலைவருட் சிலராவர். வடக்கே தண்டகாரணியத்தில் வாழ்ந்த ஆரியருக்கு இவர்கள் காலன் போன்றிருந்தனர். இவர்களைப் பாதாமியிலிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள மலைகூடம் அல்லது தென்காசியில் உறைந்த அகத்தியர் அடக்கினார். கி.பி.150 வரையில் வாழ்ந்த தாலமி, பாதாமி என்னும் இடத்தைக் குறிப்பிட்டுள்ளார். வாதாபி என்பதே பிற்காலத்தில் பாதாமி எனப்பட்டது. இது இந்திய ஆட்சியில் அரசியல் முதன்மை பெற்று விளங்கிற்று. வாதாபியிலிருந்து ஆட்சி நடத்திய சிம்மவிஷ்ணுவிட மிருந்தே முதலாம் புலிகேசி என்னும் சாளுக்கிய அரசன் பாதாமியை கி.பி.ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கைப்பற்றினான். அய்கோலி, பாதாமி என்னும் இடங்களில் பழைய இந்திய கோவில்கள் காணப்படு கின்றன. அகத்தியர் அவ்விடங்களிலுள்ள குறுநில மன்னர்களிடையே பிராமண மதத்தைப் பரவச்செய்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் தமது மதத்தைப் பரப்பும் பொருட்டு மாணாக்கரைச் சேர்த்துச் சபைகளைக் கூட்டியும் இருக்கலாம். செவிவழக்கிலும், பழங்கதை மூலமும் வந்த செய்திகள் பட்டையங்களிற் காணப்படுகின்றன. அகத்தியர் அரசர் பலருக்கு, சிறப்பாகப் பாண்டியருக்குக் குரு அல்லது புரோகிதராகவும் இருந்தார். சின்னமண்ணூர் பட்டையத்தில் அகத்தியர் அரசரின் ஆசிரிய ராயினாரென்றும் சுந்தரபாண்டியன் அகத்தியர் மாணாக்கன் என்றும் காணப்படுகின்றன. அகத்தியர் அரசர் பலருக்குக் குரு, அல்லது புரோகித ராக இருந்தார் எனப்பல பழங்கதைகள் உள்ளன. °கந்தபுராணம் அவரை வச்சிராங்கதன் என்னும் பாண்டிய அரசனோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றது. அகத்தியர் சோணே°வரர் என்னும் சிவலிங்கக் கடவுளுக்கு காணிக்கைகளைக் கொடுக்கும்படி அவனைப் பணித்தார். அவன் தனது செல்வம் முழுவதையும் அக்கடவுளுக்குக் கொடுத்து அகத்தியரதும் அவர் மனைவி உலோபா முத்திரையதும் அருளைப் பெற்றான். அகத்தியர் தென்னாட்டை ஆரிய மயமாக்கும் தொழிலைத் தனியே செய்திருக்க முடியாது. அகத்தியர் கோத்திரம் ஒன்று தொடங்கி அக் கோத்திரத்திற் பலர் பெருகினார்கள். அகத்தியர் கோத்திரம் இன்றும் உள்ளது. அவரிடமிருந்து தோன்றிய புதல்வர்கள் பலரைப் பற்றி மச்சபுராணங் கூறுகின்றது. தமிழ் மொழியை ஆரம்பித்து அதற்கு இலக்கணஞ் செய்தவர் அகத்தியரென்று இன்றும் பழைய பண்டிதர்கள் நம்பிவருகின்றார்கள். அவர் செய்த இலக்கணம் அகத்தியம் எனப்படுகின்றது. அவர் தமிழ்ச் சங்கத் துக்குத் தலைவராயிருந்தார். கடவுள் உருவங்கள் அமைக்கும் விதிகூறும் அகத்திய சகலாதிகா என்னும் நூலின் ஆசிரியரும் அவராவர். அவருக்குப் பன்னிரண்டு மாணாக்கர் இருந்தார்கள். அவருள் தலைமையுடையவர் தொல்காப்பியர். அவருக்கு அமைக்கப்பட்ட பல கோவில்கள் உண்டு. அவர் பொதியமலையோடு சம்பந்தப்பட்டவர். இம்மலை கன்னியா குமரிக்கு அண்டையில் திருநெல்வேலி மாகாணத்திலுள்ளது. அகத்தியர் அங்கு மக்களின் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வருகிறார் எனப் பலர் நம்பி வருகின்றார்கள். அவர் தெற்கே வானத்தில் அகத்திய நட்சத்திரமாக விளங்குகின்றார்; அவர் தென்னிந்தியாவை அடைந்தபின் இடை யிடையே சிலகாலம் சடுதியில் மறைந்து விடுவாரென்றும், அவர் எங்குச் சென்றா ரென்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும் என்றும் பழங்கதைகள் உண்டு. அவர் பிராமண மதத்தலைவராகவும், சைவ சமயத்தைப்பற்றிப் போதிப்ப வராகவும், தென்னிந்திய அரசர் பலரின் புரோகிதர் அல்லது குருவாகவும் இருந்தமையால் அகத்தியர் வழிபாடு தொடங்கியது. பல ஆலயங்களில் அகத்தியர் வடிவங்கள் வழிபாட்டின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன. அகத்தியரை வணங்கவேண்டிய முறை °கந்த புராணத்திலும் அக்கினி புராணத்திலும் காணப்படுகின்றன. அகத்தியர் வழிபாட்டுக்குப் பேர் போனவை இரண்டு கோவில்கள்: ஒன்று வட ஆர்க்காட்டில் புத்தூர் புகை வண்டி நிலையத்துக்கு அயலேயுள்ள அகத்தீசுவர சுவாமி கோவில்; மற்றது வேதாரணியம். அகத்தியர் வழிபாடு தென்னாட்டில் இருந்தது போலவே வடநாட்டில் வசிட்டர் வழிபாடு இருந்தது. நேப்பாலில் கிடைத்த பட்டையத் தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர் திரைமோதும் கடலைப்பற்றி அஞ்சவில்லை. அவர் தனது சித்தியினால் கடற் கடவுளரைப் பணியவைத் தார். அகத்தியர் கடலைக் குடித்தார் என்று புலவர்கள் இச் செயலை வருணித்துக் கூறுவாராயினர். கம்போதியாவில் அகத்தியர் அகத்தியர் தென்னிந்தியாவில் சிவன் கோவில்களைக் கட்டித் தமது குடும்பத்தவர்களை அவற்றில் நிலை நாட்டுவதிலும் முயன்று வந்தார். அவர் தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகளில் சிவன் கோவில்களை அமைத்துத் தாம் அவ்விடங்களில் இருந்தமையைச் சான்றுபடுத்தியு முள்ளார். அவர் சிலகாலம் கம்போதியாவில் இருந்தார். கம்போதியாவில் அங்கோவாற்றில் காணப்பட்ட பட்டையமொன்று இதற்குச் சான்று பகர்கின் றது. “ஆரிய பூமியிற் பிறந்த பிராமணராகிய அகத்தியர் சிவ வணக்கத்தில் சிறந்தவர். அவர் தனது சித்தியினால் கம்போதியாவிலுள்ள சிறீபட்டிரே°வர என்னும் சிவலிங்கத்தை வணங்கும்பொருட்டு வந்தார். அவர் நீண்ட காலம் அச் சிவலிங்கத்தை வணங்கிய பின் முத்தியடைந்தார். இம் முனிவர் சிவனை வணங்குவதில் மாத்திரம் நின்றுவிடவில்லை, இவர் யசோமதி என்னும் அழகிய பெண்ணை மணந்து ஒரு அரச பரம்பரையையும் தோற்றுவித்தார். சக ஆண்டு 811இல் வெட்டப்பட்ட பட்டையத்தில் அகத்திர் யசோவர்மன் என்னும் அரசனின் சந்ததிக்கு முன்னோர் என்று காணப்படுகின்றது. கல்வெட்டில் சொல்லப்படுவது பின் வருமாறு: “வேதங்களில் வல்லவரும் பிராமணருமாகிய அகத்தியர் ஆரிய பூமியிலிருந்து வந்து மகிஷிடவமிசத் திலுள்ள யசோமதியை மணந்து ஒரு மகனைப் பெற்றார். அவன் நரேந்திர வர்மன் எனப்படுவான்.” இவ்வரச வழி வேறு பாட்டையங்களிலும் கூறப்பட்டுள்ளது. அகத்தியர் தென்னிந்திய முறையைப் பின்பற்றிக் கம்போதியாவிலுள்ள சிவாலயத்தை எடுத்திருக்கலாம். அகத்தியரிலிருந்து தோன்றிய அரச பரம்பரையினர் அதனை நன்னிலையில் வைத்திருந்தார்களாகலாம். தென்னிந்தியாவில் காணப்பட்டவை போன்ற ஐந்து உலோகத்தினாற் செய்யப்பட்ட திருவுருவங்கள் கம்போதியா, சீயம்1 முதலிய இடங்களில் காணப்படுகின்றன. சிலவற்றில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இத் திருவடிவங்கள் தென்னிந்திய தமிழ்ச் சிற்பிகளால் செய்யப்பட்டவை என்று வெளிப்படையாகத் தெரிகின்றது. அவை தென்னிந்தியாவிற் செய்து சீயத்துக்கும் கம்போதியாவுக்கும் கொண்டு போகப்பட்டவை. அகத்தி யருக்கு நெடுங்காலத்துக்கு முன் தென்னிந்தியாவுக்கும் அந் நாடுகளுக்கு மிடையில் போக்குவரத்தும் கருத்துக்களின் கலப்பும் உண்டாயிருக்கலாம். அகத்தியர் மீகாங்2 ஆற்றங்கரையில் முதல் ஆரிய குடியேற்றத்தைத் தொடங்கியிருக்கலாம். அவ்விடங்களில் காணப்படும் திருவுருவங்கள் தென்னிந்தியருக்கும் அந் நாடுகளுக்கும் கடல் வழியாகப் போக்குவரத்து இருந்ததென்பதை உறுதியாக வலியுறுத்துகின்றன. சோணமலையில் சிவன் கோயிலை அமைத்தானென்று °கந்த புராணத்தில் கூறப்படும் பாண்டியன் கம்போதிய குதிரைமீது சென்றான். இவ்வாறு குறிக்கப்பட்டிருத்தலும் இரு நாடுகளுக்கிடையிலிருந்த தொடர்பை வெளிப்படுத்துகின்றது. தென்னிந் தியரே இந்திய நாகரிகத்தை கம்போதியாவில் பரப்பியவர்கள் ஆகலாம். கம்போதியா, சீயம் முதலிய நாடுகளின் கலையிலும் நாகரிகத்திலும் இந்தியச் சார்புகள் காணப்படுகின்றன. மலாய தீவுகளில்3 அகத்தியர் அகத்தியர் போர்னியோ, சந்தாத்தீவுகள்4, மலாய தீவுகளுக்கும். சாவகம்5 முதலிய தீவுகளுக்கும் சென்றார் என வாயுபுராணம் கூறுகின்றது; அவர் மலாய தீவில் மலைய பர்வதத்தில் இருப்பவராகவும் குறிப்பிடுகின் றது. மலைய பர்வதம் என்பது தென்னிந்தியாவிலுள்ளதன்று; வேறானது. இன்றும் மலையம் என வழங்கும் முக்கிய மலை ஒன்று சாவகத்திலுள்ளது. போர்னியோவிலும் சாவகத்திலும் பழைய சமக்கிருத பட்டையங்கள் கிடைத்தன. அப் பட்டையங்கள் பிராமண சமயத்தையும் புத்த சமயத்தை யும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. அத் தீவுக் கூட்டங்களின் பழைய நாகரிகம் பிராமண மதம் சம்பந்தப்பட் டது. அகத்தியர் சந்தாத் தீவுக்குச் சென்றார் என்னும் பழங்கதை பிராமண நாகரிகம் அங்குச் சென்றதைக் குறிப்பிட லாம். பிராமணர் குடியேறியதற்குப் பின்னரே புத்த மதம் சம்பந்தமான பட்டையங்கள் காணப்படுகின்றன. இந்தியரின் ஆட்சி கம்போதியாவில் கி.பி.137இல் ஆரம்பித்ததெனச் சீன வரலாறு கூறுகின்றது. இது இந்துச் சீனாவில்1 மலையில் பொறிக்கப்பட்ட பட்டையத்தால் நன்கு உறுதிப்படு கின்றது. அப் பட்டையம் கி.பி.2வது அல்லது 3வது நூற்றாண்டில் எழுதப்பட்டது. அது சிறீமாறன் என்னும் அரசனைக் குறிப்பிடுகின்றது. இந்துச் சீனாவில் கி.மு.400இல் பொறிக்கப்பட்ட இரண்டு பட்டையங்களும் கவனத்துக்குரியன. முதல் பட்டையம் தரும மகாராசா பத்மவர்மன் செய்த யாகத்தைக் குறிப்பிடுகின்றது. இரண்டாவது பட்டையம் மகாதேவ வட்ரேசுவர சுவாமிக்குத் துதியாகவமைந்தது. இவைகளுக்குப்பின் ஒன்றன் பின் ஒன்றாகப் பல பட்டையங்கள் காணப்படுகின்றன. அவை சிவன் கோவில்கள் பழுதுபார்க்கப்பட்டமையையும் அவைகளுக்குக் கொடுக்கப் பட்ட காணிக்கைகளையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. சத்திரிய அரசன் ஒருவன் போர்னியோவில் யாகம் செய்ததைப்பற்றி ஒரு பட்டையம் கூறுகின்றது. இந்தியாவில் கி.பி.102இல் நாட்டப்பட்ட யூபக்கல்லில் பொறிக்கப்பட்டிருப்பதுபோல் போர்னியோவில் காணப்பட்ட கல்லிலும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. அக் கல்லில் எழுதப்பட்டிருப்பது வருமாறு: பேரோங்கிய மூலவர்மன் என்னும் அரசர்க்கரசன் பசுவர்ணக யாகத்தை முடித்தான். அந்த யாகத்தில் இருபிறப்பாளருள் தலைவர் இக் கல்லை நிறுத்தினார். இக் கல் கிழக்கு போர்னியோவிலுள்ள கோஎற்றி என்னுமிடத்தில் கிடைத்தது. இது கி.பி.400இல் உள்ளது என்று கருதப்படு கின்றது. இன்னொரு பட்டையம் மேற்குச் சாவகத்திலுள்ள பூரணவர்மன் என்பவனைப்பற்றிக் கூறுகின்றது. இது கி.பி.5ஆம் நூற்றாண்டில் பொறிக் கப்பட்டது. அப் பட்டையத்தில் கூறப்படுவது வருமாறு : “இவ்வுலகத்தின் வலிய வேந்தனாகிய பூரணவர்மன் தரும பட்டினத்தின் அரசன். அவனுடைய இரண்டு பாதங்களின் சுவடுகள் இவை. இவை விஷ்ணுவின் பாதச்சுவடு களை ஒப்பப் பெருமை யுடையன.” இங்குக் காட்டப்பட்ட மூன்று பட்டை யங்களும் பிராமண மதம் சம்பந்தமானவை; புத்த சமயம் சம்பந்தப்பட்ட வையல்ல. பிராமண நாகரிகத்தில் இரண்டு பட்டையங்களைக் காணலாம். ஒன்று வேத சம்பந்தம்; மற்றது புராண சம்பந்தம். பசிபி க்கடல் ஓரங்களி லுள்ளவை சிவன் கோயில்கள் எனக் காட்டியுள்ளோம். கி.பி. 732இல் வெட்டப்பட்ட பட்டையம் ஒன்று திசாங்கல்1 என்னும் இடத்தில் கிடைத்தது. இது மத்திய சாவகத்தில் குடியேறிய சன்யாய என்னும் அரசனைக் குறிப் பிடுகின்றது. குஞ்சர குஞ்ச என்னும் கூட்டத்தினரிலிருந்து இவர்களுக்குக் கைமாறிய சிவன் கோயில் ஒன்றைப் பற்றியும் அப் பட்டையம் குறிப்பிடு கின்றது. அது வருமாறு: “சாவகம் என்னும் பெயருடைய தீவு, தீவுகளுள் சிறந்தது. அங்கு ஒப்பிடமுடியாத தானியக் களஞ்சியங்களும் பொன் சுரங்கங்களும் உண்டு. இத் தீவில் புதுமை மிக்க சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. குஞ்சர குஞ்ச தேசத்திலுள்ள மக்களைச் சேர்ந்தவர்களால் அது கையளிக்கப்பட்டது.” குஞ்சர குஞ்ச எனக் கூறப்பட்ட இடம் தென்னிந்தியா விலுள்ள தென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. விசயநகர காலத்தில் குஞ்சர கோண என்னும் பெயர் காணப்படுகின்றது. இது ஆணிகண்டி என்னும் கன்னடப்பெயரின் சமக்கிருத மொழிபெயர்ப்பு. இது ஹம்பிக்கு எதிரே துங்கபத்திரை ஆற்றங்கரையிலுள்ளது. அரிவம்சம் என்னும் புராணம் குஞ்சர மலையில் அகத்தியர் ஆச்சிரமம் இருந்ததெனக் கூறுகின்றது. இப் பகுதியிலிருந்து சென்ற மக்களே சாவகத் தீவில் கோயிலமைத்திருக்கலாம். சாவகத்திலே முதல் முதலாகக் கட்டப்பட்ட சிவன் கோயில் குஞ்சரகோணம் என டாக்டர் கேண் என்பார் கூறியுள்ளார். இன்னொரு பட்டையம் சிவன் கோயில் ஒன்று அகத்தியரால் கட்டப்பட்டதெனக் கூறுகின்றது. அச் சாசனத் தில் கூறியிருப்பது வருமாறு : “எல்லா மக்களும் தாம் விரும்பியவற்றைப் பெறுமாறு அகத்தியர் வரதலோக என்னும் கோவில் திருப்பணியைச் செய்தார்.” அகத்தியரின் பிற் சந்ததியினர் சிலர் அகத்தியர் கோத்திரத்தினர் என்று நமக்குத் தெரிகின்றது. அவர்கள் சைவ சமயத்தினர். அவர்களுள் ஒரு பிரிவினர் சாவகத்தில் குடியேறி யிருந்தார்கள். ஆ°வலாயன கிரிகிய சூத்திரத்தில் சொல்லப்படும் 49 பிராமண கோத்திரங்களுள் அகத்திய கோத்திரம் காணப்படுகின்றது. சாவகத்திற் போலவே தென்னிந்தியாவிலும் அகத்தியர் பிராமண நாகரிகத்துக்குரியவராகவிருந்தார். கி.பி.1524இல் பொறிக்கப்பட்ட ஒரு பட்டையத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டுவித்த அயிலபட்டர், தான் அகத்திய கோத்திரத்தவர் எனக் கூறியுள்ளார். அகத்தியர் ஜாவானிய குடும்பங்களுக்குத் தலைவரும், கோயில்களைக்கட்டியவருமாய் மாத்திரம் இருந்தாரல்லர். அவர் இந்தியாவிலும் சாவகத்திலும் வழிபடவும்பட்டார். போலிநீசிய மொழியில் அகத்தியர் என்னும் பெயர் வாலிங் என மொழி பெயர்த்து வழங்கப்படும். சாவகத்திலும் பாலியிலும் சத்தியம் செய்வதற்கு உரிய வாசகங்களுள் அகத்தியரின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. அது வருமாறு: “சூரியர் சந்திரர் உள்ளளவும், உலகம் கடலால் சூழப்பட்டு உள் ளளவும், காற்று உள்ளளவும், வாலிங்கின் பெயர் நிலைபெறும்.” காவீ(Kawi) தீவு மக்கள் அகத்தியர் என்னும் பெயரை அரிச்சந்திரானா என வழங்குவர். கி.பி.760இல் வெட்டப்பட்ட பட்டையமொன்று கிழக்கு சாவகத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இது சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியரின் திரு வுருவத்தைப்பற்றிக் கூறுகின்றது. அச் சாசனம் கூறுவது வருமாறு: “தனது முன்னோரால் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியர் திருவடிவம் விழுந்தபோது கல்வி அறிவுள்ள அரசன் கருங்கல்லில் அவ்வடிவத்தை அமைக்கும்படி சிற்பிக்குக் கட்டளையிட்டான்; அரசன் கும்பயோனியாகிய அகத்தியர் திருவுருவத்தைக் குருமார், வேதம் அறிந்த முனிவர்கள் முதலியவர்களால் பிரதிட்டை செய்வித்தான்.” சாவகத்தில் ஊன்றிய அகத்திய வழிபாடு ஏழாம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியாவினின்று சென்றிருக்க வேண்டுமெனக் கூறினோம். இந்தியா விற் காணப்படும் அகத்தியர் திருவுருவங்களின் சாயலாகவே இந்தியக் குடியேற்றத் தீவுகளிலும் அவர் உருவங்கள் காணப்படுகின்றன. சாவகத்தில் இருபதுக்கு மேற்பட்ட அகத்தியர் உருவங்கள் காணப்படுகின்றன. அவர் சடை, உருத்திராக்கம், கரகம் முதலியன உடையவராகக் காணப்படுகின் றனர். அவர் காசியிலேயே சிவ வழிபாட்டிற் சிறந்தவராக விளங்கினார். அகத்திய குண்டத்திலே உள்ள அகத்திய சிவன் அகத்தியரின் ஞாபகமாக விளங்குகின்றார். அவரின் அடையாளமாக அங்குச் சூலம் உள்ளது. சாவகத்திற் காணப்படும் அகத்திய விக்கிரகத்தின் உடை, இந்தியாவி லும் இலங்கையிலும் காணப்படும் விக்கிரகங்களின் உடையை ஒத்தது. அகத்திய உருவங்களை சாவக மக்கள் சிவ குரு, பாரத குரு என வழங்கி னார்கள். அவருக்கு எப்பெயர்கள் வழங்கிய போதும் அவை அகத்தி யரையே குறிக்கின்றன என்பது தெளிவு. அவர் சிவ சமயத்தைப் போதித் தமையால் சிவ குரு எனப்பட்டிருக்கலாம். கலசய, கும்பயோனி, சர்வஞ்ஞ, மித்திரவர்ணமுத்திர என்பவர் இவரேயென சாவக மக்கள் வழங்கும் பெயர்களைக் கொண்டு நன்கு அறியலாம். தென் சாவகத்தில் கெடோயிலே தஞ்சிபெனன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை முதன்மையுடை யது . இது கி.பி. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அகத்தியரின் வடிவம் எவ்வாறிருந்தது என்பதை அத் தீவிலுள்ளவர்கள் எவ்வாறு கற்பனை செய்தார்கள் என இவ்வடிவைக் கொண்டு அறிகின் றோம். பிற்காலங்களில் அகத்தியர் உருவங்கள் பலவாறு செய்யப்பட்ட போதும் கமண்டலம், உருத்திராக்கம், சடை என்பன விடுபடவில்லை. சாவகத்தில் காணப்பட்ட அகத்தியர் உருவத்தைப் பலர் சிவன் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். சிவன் வடிவம் ஒருபோதும் தொந்தி வயிறும் தாடியுமுடையவராக எங்கும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அகத்தி யருக்கு பகையாயிருந்தவர் திரணபிந்து என்றும் அவர் சமதக்கினி புதல்வர் என்றும் ஒரு பழங்கதை உளது. வாயு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் சமதக்கினி துவாபரயுகத்தில் இருபத்து மூன்றாவது வியாசர் எனக் கூறப்படுகின்றார். திரணபிந்து சைவராயிருந்தார். இவருக்கு நேர்ந்த குட்டநோயைச் சிவபெருமானே கலசத்தில் தோன்றி ஆற்றினார். இவருக்கு அக த்தியரே குருவாகவிருந்தார். அகத்தியர் தெற்கே வந்தபோது அவரை யும் அழைத்துச் சென்றார். தெற்கே அவர் திரணதூமாக்கினி எனப்பட்டார். அவர் தொல்காப்பியர் எனவும் தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்டார். அவர் தமிழ் இலக்கணத்தை ஒழுங்குபடுத்தி அமைக்க அகத்தியருக்கு உதவி புரிந்தார். திரணபிந்துவால் செய்யப்பட்ட தொல்காப்பிய மென்னும் இலக்கணம் தமிழ் இலக்கணங்களுள் முதன்மையுடையது. அகத்தியரோடு இவருக்குள்ள தொடர்பைக் குறித்த வியப்பான கதை ஒன்று கூறப்படுகின் றது. வடக்கேயிருந்து தனது மனைவியாகிய உலோபாமுத்திரையை அழைத்து வரும்படி அகத்தியர் திரண பிந்துவுக்குக் கட்டளையிட்டார். வருமிடத்து உலோபாமுத்திரைக்கும் திரணபிந்துவுக்குமிடையில் ஒரு கோல் தூரம் இருக்கவேண்டுமென அவர் கட்டளையிட்டார். அவர் வையை ஆற்றைக் கடக்கும்போது உலோபாமுத்திரை ஆற்றில் மூழ்கி உதவி வேண்டிச் ச த்தமிட்டார். ஆசிரியரின் ஆணையை மறந்து திரணபிந்து உலோபாமுத்திரையின் கையைப்பிடித்து அவரைக் காப்பாற்றினார். அகத்தியர் இந் நிகழ்ச்சியைக் கேட்டவுடன் கோபங்கொண்டு திரணபிந்து வுக்குச் சுவர்க்கத்தின் கதவு அடைபட வேண்டுமெனச் சாபமிட்டார். திரண பிந்து அகத்தியருக்கும் சுவர்க்கக்கதவு அடைபட வேண்டுமென மறு சாப மிட்டார். இவ்வாறு குரு மாணாக்கருக்குப் பகை நேர்ந்தது. அகத்தியர் திரண பிந்துவின் இலக்கணம் பிழையுடையதெனக் கூறினார். ஆனால் தொல் காப்பியம் பிழையில்லாத இலக்கணம் எனத் திரணபிந்துவால் நாட்டப் பட்டது. திரணபிந்துவுக்கு விசாலன், சூனியபந்து, தும்பிரபந்து என்னும் மூன்று குமாரரும் இலிபிளை என்னும் ஒரு புதல்வியும் இருந்தனர். இவர் காசியப்பாவுக்குப் பெண் கொடுத்த மாமனும் புலத்தியரின் தாய்மாமனு மாவர். சாவகத்தில் பகவான் திரணபிந்து என எழுதப்பட்ட பல கல் உருவங்கள் காணப்படுகின்றன. அகத்தியரோடு சம்பந்தப்பட்ட மரீசி என்னும் ஒரு முனிவரின் சிற்பமும் அங்கு காணப்படுகின்றன. மரீசி என்னும் பெயர் தேவநாகரியில் எழுதப்பட்டுள்ளது. மத்திய சாவகத்தில் இந்திய பிராமணர் குடியேறியிருந்ததற்கு அடை யாளம் காணப்படுகின்றது. அங்குத் துர்க்கை, விநாயகர் திருவுருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சஞ்சயப் பட்டையத்தால், அகத்தியர் அல்லது அகத்தியர் கோத்திரத்திலுள்ள ஒருவரால் தென்னிந்திய கோவில்களைப் போன்ற ஒன்று சாவகத்தில் எடுக்கப்பட்டதெனத் தெரிகின்றது. பிரம்பனம் (Prambanam) என்னும் அழிபாடுகளில் சிவலிங்கங்களும், சிவன், விஷ்ணு, பிரமா, திரிமூர்த்தி முதலிய கடவுளரின் திருவுருவங்களும் காணப்படு கின்றன. இவை பத்துப் பதினோராவது நூற்றாண்டைய தென்னிந்திய சிற்பங் களை ஒத்துள்ளவை. மலாய தீவுகளில் காணப்பட்ட சமக்கிருத பட்டை யங்கள் இந்திய பட்டையங்களின் மாதிரியில் வெட்டப்பட்டவை என்று நன்கு அறியப்படுகின்றன. தென்னிந்திய பட்டையங்களிலும் மலாய தீவு களின் பட்டையங்களிலும் வெட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் ஒரே வகை யின. சாவகத்தின் பழைய நாகரிகம் கலிங்க தேசத்திலும் பார்க்கத் தமிழ் நாட்டின் வடகரையோடு சம்பந்தப்பட்டதென டாக்டர் பர்நெல் (Dr.Burnell) கூறியுள்ளார். சிவன், விஷ்ணு, பிரமா முதலிய உருவங்களின் ஆபரணங்கள், நிலை, முத்திரை, ஆசனம், தாமரைப்பீடம் போன்றவைகளைக் கவனித்தால் இவை இந்திய சிற்பங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டவை என்று நன்கு தெளிவாகும். சாவகக் கோவில்களின் வாயில் காவலர் தென்னிந்திய கோவில்களின் துவாரபாலகரைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பாலித்தீவில் இன்றும் இந்தியக் கடவுளரின் வழிபாடுகள் காணப்படுகின்றன. பாரத குரு, பாரத பிரமா, பாரத விஷ்ணு, பாரத சிவன் முதலிய கடவுளர் அங்கு வழிபடப்படுகின்றனர். மகாதேவர் என்னும் பெயர் அவர்களின் சமய நூல்களில் காணப்படுகின்றது. அகத்தியர் சாவகம், பாலி முதலிய இடங்களில் மேலான கடவுளாக வழிபடப்பட்டார். சாவகத்தில் வழங்கும் பழங்கதைகளில் கலிங்க நாட்டினின்றும் மிகப் பல குடும்பங்களும், அரசரும், ஒருவர் பின் ஒருவராக அங்குச் சென்றார்கள் எனக் கூறப் படுகின்றது. குறிப்பு : கான்குலி புராண சம்பந்தமாக வழங்கிய வரலாறுகளையும் பிற்காலத்தில் தென்னிந்தியாவினின்றும் மலாய தீவுகள், கம்போதியா முதலிய நாடுகளில் சென்றிருந்த அகத்தியர் வழிபாடு முதலியவைகளை யும் கூறியுள்ளார். கிறித்துவம், புத்தம், சைனம், என்னும் மதங்களைப் போலப் பிராமண மதமும் வடநாட்டினின்றும் தென்னாடுவந்த தொன் றாகும். சீனாவில் சீன மக்களின் பழைய கொன்பியூச°1 மதமும், புத்த மதமும் பின்னி ஒன்றுபட்டது போலத் தென்னாட்டிலும் பிராமண மதமும் தமிழர் மதமும் பின்னி ஒன்றுபடலாயின.2 பிராமண மதம் பரவிய பிற்காலத் திலேயே அகத்தியர் வழிபாடு கம்போதியா, மலாய்த் தீவுகளிற் பரவுவ தாயிற்று. * * * அகத்தியர் பலர் *அகத்தியரைப்பற்றிய பழங்கதைகள் பல்வேறு வகையாக வளர்ந்து ஒன்று சேர்ந்து அகத்தியர் வரலாறாக இன்று வழங்குகின்றன. 1உலாபாமுத்திரையின் கணவர் சமக்கிருதத்தில் இரண்டு அல்லது மூன்று அகத்தியர் பெயர்கள் காணப்படுகின்றன. வான்மீகருக்கு முற்பட்டவரும் வேத காலத்தவருமாகிய அகத்தியர் ஒருவர் இருந்தார். இவர் கங்கைக்கரையில் வாழ்ந்த ஆரியக் கூட்டத்தினரின் தலைவரும் உலோபாமுத்திரையின் கணவருமாவர். வேறு இரண்டு அல்லது மூன்று அகத்தியர்களைப் பற்றி இதிகாசங்கள் கூறுகின்றன. முதல் அகத்தியர் சுதர்சன இருடியின் அண்ணனாவார். இராமர் காலத்து அகத்தியர் இவர் விந்தத்துக்குத் தெற்கே குடியேறச் சென்ற ஆரியக் கூட்டத்தி னரின் தலைவராவார். இவர் பஞ்சவடிக்குத் தெற்கே அல்லது நருமதை ஆற்றின் வட மேற்குப் பள்ளத்தாக்கில் உள்ள நாசிக்கில் ஆரியரல்லாத அநாகரிக மக்களிடையே போர் தொடுத்துக் கொண்டிருந்தார். இவர் இராமரை வரவேற்று அவரைத் தமது பகைவராகிய இராக்கதரோடு போர் செய்வதற்கு உடன்படும்படி செய்தார். வான்மீகர் ஆரியக் கொள்கைகளை நாட்டும் பொருட்டு அன்னிய நாட்டில் போர் செய்துகொண்டிருந்த முனிவரைக் குறித்துப் புகழ்ந்துள்ளார். மலையமலை யிலுறைந்த அகத்தியர் கிட்கிந்தா காண்டத்தில் இன்னொரு அகத்தியரைக் குறித்து வான்மீகியும் கம்பனும் கூறியுள்ளார்கள். இங்கு அகத்தியர் தென்கடலுக்கு அண்மையிலுள்ள மலையத்திலுறையும் சாந்தமான முனிவராகக் கூறப்பட்டுள்ளார். கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையைத் தேடி வரும்படி வானர வீரர்களை ஏவும்போது தென் பக்கமாகச் செல்லுதற்குரியாரை நோக்கிச் சொல்லியதாக வான்மீகி கூறியவை அடியில் வருமாறு: “........... பின் பூந்தாதுக்கள் நிறைந்தும், விசித்திரமான சிகரங்களுடையதும், பலவர்ண மான பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும், சந்தன வனங்கள் செறிந்ததுமான பெரிய அயோமுக மலையைத் தேடுங்கள்; அதன்பின் தேவ அரம்பையர் வந்து நீராடுகின்ற திவ்வியமான தெளிந்த நீரையுடைய அழகிய காவேரி நதியை அங்கே காண்பீர்கள்; அந்த மலையமலையின் சிகரத்தில் ஆதித்தனுக்குச் சமானமான மிகுந்த ஒளியுடைய முனிவர்களுள் சிறந்தவரான அகத்தியரைக் காண்பீர்கள். பின்பு அம் முனிவரிடம் ஆணை பெற்றுச்சென்று முதலைகள் நிரம்பிய பெரிய தாமிரபர்ணியைத் தாண்டுங்கள். அந் நதி அழகிய சந்தனச் சோலைகளால் மூடப்பெற்ற திட்டுக் களையுடையதாய், கணவனிடத்து அன்புள்ள யுவதியானவள் புக்ககம் புகுமாறு போலக் கடலுள் சென்றுவிழும். பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடையதாயும் முத்து மயமான மணிகளால் அலங்கரிக்கப் பெற்றதாயும் பாண்டியர்க் குரியதுமாகிய கவாடத்தைப் பார்க்கக்கடவீர்” “தென்றமிழ் நாட்டகன் பொதியிற் றிரு முனிவன் தமிழ்ச் சங்கஞ் சேர்கிற்பீரேல் என்று மவனுறை விடமா மாதலினாலம் மலையை யிடத்திட் டேகி” - கம்பன் பஞ்சவடி அகத்தியரும் பொதிய மலை அகத்தியரும் வெவ்வேறினர் பஞ்சவடியிலிருந்த அகத்தியரே இவர் என்று எண்ணுதற்காவது சந்தேகிப்பதற்காவது இடமில்லை. ஆரணிய காண்டத்தின் பலவிடங்களில் வேதக்கிரியைகளை இயற்றிக் கொண்டு வடக்கேயுள்ள காடுகளில் வாழ்ந்த அகத்தியரைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. தெற்கிலே பாண்டி நாட்டில் அகத்தியர் இருந்ததைப் பற்றிக் கிட்கிந்தா காண்டம் கூறுகின்றது. புலவரின் வாக்குக்களே இவ்விரு அகத்தியர்களும் வெவ்வேறினர் என்பதை விளக்குகின்றன. மலையத்தில் இருந்த அகத்தியர் வேதக்கிரியைகளைச் செய்து கொண்டிருந்தார் என்று யாண்டும் கூறப்படவில்லை. பொதியமலை, அகத்தியருக்கு நிலையானது எனக் கம்பரும் வான்மீகியும் கூறியுள்ளார்கள். ஒரு முனிவர் பஞ்சவடியில், ஆரியரல்லாத மக்களோடு பகைமை கொண் டிருந்தார். மற்ற அகத்தியர் பொதிய மலையில் அமைதியுடன் வாழ்ந்தார். இவர்கள் எண்ணூறு மைல் தூரத்துக்குமேல் இடைத்தொலைவுள்ள இரு இடங்களிலும் வாழ்ந்தவர்கள் என்பதை வான்மீகர் நன்கு உணரவைத் துள்ளார் என்பது நன்கு தெளிவாகின்றது. தெற்கே வாழ்ந்த அகத்தியர் ஆரிய முனிவரா அல்லது ஆரிய அகத்திய கோத்திரத்தினரா? வான்மீகர் புகழும் அகத்தியர் வடநாட்டிலும் தனது புகழைப் பரவச் செய்த தமிழ் அறிவரா1? என்பன போன்றவை ஆராய்ச்சிக்குரியன. சங்க நூல்களில் அகத்தியர் பெயர் இல்லை சங்க நூல்கள் ஒன்றிலும் அகத்தியரைப் பற்றிய பெயர் காணப்பட வில்லை. பரிபாடலின் பதினோராம் செய்யுளில் அகத்தியன் என்னும் பெயர் வந்துள்ளது. அது விண்மீன் ஒன்றைக் குறிக்கின்றது. இப் பாடலைச் செய்தவர் கலித்தொகையில் நெய்தற் கலியைச் செய்தவராகிய நல்லந்து வனார். அவர் காலம் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன். அகத் தியரைப் பற்றிய வரலாறு அக் காலத்தில் பழங்கதையாக மாறியுள்ளதெனத் தெரிகின்றது. இம் முனிவர் பொதிய மலையில் இருந்தார் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. இலக்கிய காலத்துக்கு முன்னும் அறியப்பட்ட அகத்தியர் ஒருவரைப் பற்றிய நினைவு சங்ககாலத்தும் இருந்ததெனத் தெரிகின்றது. இவருடைய புகழ் மிகப் பரவியிருந்தமையால் இவர் பெயர் தமிழ்நாட்டில் மறக்கப்படாமல் இருந்தது. இல்லையாயின் இவர் பெயர் பரி பாடலில் தோன்றியிருக்க மாட்டாது. பெதுருங்கேரியரின் படம் என்னும் உரோமர் வரலாற்றுக் குறிப்பில் அகத்தியர் கோயில்1 ஒன்று தென்னாட்டில் இருந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. பெதுருங்கேரியர் படத்தின் காலம் கி.பி. 100 வரையில், இதனாலும் அகத்தியர் புகழ் சங்ககாலத்தும் மிகப் பரவி யிருந்ததென விளங்கும். அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியரல்லர் தொல்காப்பியம் என்பது இன்று தமிழில் காணப்படும் பழைய இலக் கணம். தொல்காப்பிய இலக்கணம் செய்தவராகிய தொல்காப்பியர் அகத்தி யரின் மாணவர் என்னும் பழங்கதை வழங்குகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. தொல்காப்பியத்துக்கு முன் பல இலக்கணங்களும் பல இலக்கியங்களும் இருந்தனவென்று தொல்காப் பியமே கூறுகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைக் குறித்து யாண்டும் கூறாமையால் அவர் அகத்தியரின் மாணவரல்லர் என்பது எளிதில் விளங் கும். இவர் அகத்தியர் மாணவராயின், மிகப் புகழ் படைத்த தனது ஆசிரி யரைக் கூறாது மறைக்கும் நன்றியில்லாக் குணத்தை இச் சிறந்த ஆசிரியர் மீது ஏற்ற நேரும். அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் பகை உண்டா யிருந்ததெனவும் ஓர் பழங்கதை உளது. அது உண்மையாயின் தொல்காப் பியத்துக்குச் சிறப்புப்பாயிரஞ் செய்த பனம்பாரனார் தொல்காப்பியரின் குற்றத்தை நியாய முடையதாகக் கொண்டு தனது ஆசிரியரின் புகழை மறைக்க வேண்டிய காரணமுமில்லை. அகத்தியர், அவர்களின் ஆசிரிய ராக இருந்தாராயின், அவர்கள் அவர் புகழை எடுத்து உலகுக்கு நன்கு விளக்கியிருப்பார்களன்றோ? தமிழ் ஆசிரியராகிய அகத்தியர் தமிழரே ஆரியர் விந்தத்தைத் தாண்டித் தெற்கே வரத் தொடங்கியது கி.மு. 1000 வரையில் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இதற்கு முற்பட்ட பழைய காலத்தில் ஆரியவர்த்தத்தில் வாழ்ந்த ஆரியரொருவர் தெற்கே இருண்டு அடர்ந்து கிடந்த காட்டைக் கடந்து தன்னந்தனியே பொதிய மலையில் தங்கியிருந்தார் என்பது நம்பத்தகாதது. அவர் வேடரும் கொடிய விலங்குகளும் வாழும் காட்டைக் கடந்து தெற்கே வந்து அங்கு வழங்கிய மொழியையும் இலக்கியத்தையும் கண்டு அவைகளில் விருப்பங் கொண்டு அவற்றைக் கற்று இலக்கண ஆசிரியராய் விளங்கினாராயின் அவர் நாகரிகத்துக்கு இருப்பிடமாகிய நகரில் வாழாது விலங்குகள் வாழும் மரஞ்செடிகள் அடர்ந்த இடத்தைத் தமக்கு உறைவிடமாகக் கொண்டிருக்க மாட்டார். இருக்குவேத காலம் முதல் ஆரியருக்கும் தமிழருக்கும் (தேவருக்கும் அசுரருக்கும்) போராட்டம் மலிந்திருந்தன. அதனால் தமிழ் நாட்டவர் ஆரியரை1 மிலேச்சர் என வழங்கி வந்தனர் என்றும், அவர்மீது பகை கொண்டிருந்தனரென்பதும் நன்கு விளங்குகின்றன. தமிழை இகழ்ந்த வடநாட்டரசர்மீது சீற்றங்கொண்டு சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்ற வரலாறு இதற்கு ஒரு சான்றாகும். இதனால் மிகமிகத் தொன்மையே தமிழ் அறிவு சான்றிருந்த தமிழ்ப் புலவர்கள் ஆரியர் ஒருவரைத் தமது தலைவராக ஒப்புக்கொண்டார்கள் எனக் கூறுவது இயலாத காரியம். அகத்தியர் தமிழாசிரியராயிருந்தனராயின் அவர் தமிழ் மக்களிடையே மதிப்புப் பெற்று விளங்கிய தமிழர் ஒருவராதல் வேண்டும். அவர் புகழ், மறந்துபோக முடியாத அவ்வளவு பெரிதாயிருந்தமையில் அவர் பெயரைச் சுற்றிப் பல கற்பனைக் கதைகள் வந்தடைந்தன. இக் கற்பனைப் போர்வையை ஊடுருவி நோக்கி அவருடைய உண்மை வரலாற்றை அறிந்து கொள்வது கடினமாகின்றது. நாம் அவர் வரலாற்றைக் குறித்துப் பின்வருமாறு உய்த்துக் கூறலாம்: ஆரியர் வருகைக்கு முன் அகத்தியர் என்னும் பெயருடைய தமிழ் அறிஞர் ஒருவர் தமிழ் நாட்டில் விளங்கினார். இவர் சமக்கிருதத்தோடு தொடர்பு பெற்ற அகத்தியரில் வேறானவர். அவர் தமிழர் மதிப்பு அளித்த அறிஞர் களுள் ஒருவர். தொல்காப்பியருக்குப் பிற்பட்ட மக்கள் ஆரிய சம்பந்தமான பல கற்பனைகளை அகத்தியரோடு சம்பந்தப்படுத்திக் கட்டி வைத்தார்கள். தமிழ்ப் பெயர்களை ஆரியர் தம்முடையவைகளாகத் தமது பழங்கதை களில் எடுத்து வழங்குவது இயல்பு. தமிழ் முருகன் சுப்பிரமணியராகவும், தமிழ் மால் விஷ்ணுவாகவும் வழங்கப்படுகின்றமையை நாம் அறிவோம். தமிழ்க் கருத்துக்களை ஆரியமாக்குமிடத்துத் தமிழ்க் கடவுளர் ஆரியராக மாறினர். தமிழ்நாட்டிலுள்ள இடங்கள், ஆறுகள், மக்களுக்கு ஆரியப் பெயர்கள் இடப்பட்டன. வெண்காடு சுவேதாரணியமாகவும், தண்பொருநை தாம்பிரபர்ணியாகவும் மாறின. ‘பண்டை’ என்னும் அடியாத்தோன்றிய பாண்டிய பரம்பரைப் பெயர் பாண்டவ அல்லது பாண்டு வமிசமாக மாறிற்று. இவ்வாறே தமிழ் அகத்தியர் சமக்கிருத அகத்தியராக மாறியிருத்தல் வேண்டும். தமிழ் நாட்டில் வழங்கும் அகத்தியர் வரலாற்றுக்கு அடிப்படை பொதிய மலையில் இருந்த ஒருவராதல் வேண்டும்; இல்லையேல் அகத்தியரைப் பற்றிய பழங்கதைகள் அந்தரத்தில் எடுத்த கோட்டையாக மாறிவிடும். தமிழ்ப் புலவர்கள் ஆரியரொருவரைத் தமிழ்க் கல்விக்குத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதினாலும் அகத்தியர் தமிழராவர் என்பது வலியுறுகின்றது. புராண காலத்தில் அகத்தியரைப் பற்றி ஆரியப் போக்கான கற்பனைக் கதைகள் வளரத் தொடங்கின. அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயர் அகத்திய என்னும் ஆரியப் பெயரோடு ஒற்றுமை காணப்பட்டமை கொண்டு அவர் ஆரியராக்கப்பட்டனர். முத்தூர் அகத்தியன் அவர்கள் இவரைப் பஞ்சவடியில் இருந்த அகத்தியராகக் கொண்ட தோடு அமையாது அவரைக் குறித்த பல கற்பனைக் கதைகளையும் எழுதி வைத்தனர். தமிழ் மக்களும் ஆராய்வின்றி அக்கட்டுக் கதைகளை நம்பத் தலைப்பட்டனர். இவர் பஞ்சவடியிலிருந்த அகத்தியர் ஆக்கப்பட்டதல்லா மல் இருக்கு வேத காலத்தவரும் உலோபா முத்திரையின் கணவருமாகிய அகத்தியருமாக ஆக்கப்பட்டார். அகத்தியரைப்பற்றி இன்று வழங்கும் பழங்கதைகள் இன்று ஆராய்ச்சிக்கு நிற்கவில்லை. செங்கோன் தரைச் செலவில் முத்தூர் அகத்தியர் என்னும் தமிழ்ப்புலவர் ஒருவர் பெயர் காணப் படுகின்றது. அவரை ஒப்ப மதிப்பைப் பெற்றிருந்த ஒருவரே அகத்திய ராவர். முத்தூர் கன்னியாகுமரிக்குத் தெற்கேயிருந்து மறைந்துபோன பாண்டி நாட்டின் பகுதியில் உள்ளது. இதனால் ஆரியர் தென்னாடு வருவ தன் முன் அகத்தியர் என்னும் தமிழர் ஒருவர் இருந்தாரென்பது செங்கோன் தரைச் செலவு என்னும் நூலால் தெரியவருகின்றது. தமிழ் நாட்டில் அகத்தி யர் என்னும் பெயருடன் பலர் விளங்கியிருத்தல் கூடும். அவர்களுள் ஒருவnர மிகப் புகழ் படைத்தவர். இவருடைய பெயரைச் சுற்றி அவர் புகழை விளக்கும் பல கதைகள் வந்து திரண்டன. இவ்வாறே ஆரிய அகத்தியரைக் குறித்த கதைகளும் அவர் பெயரைச் சுற்றித் திரண்டன. சங்க காலத்துக்குப்பின் ஆரியக் கதைகளும் தென்னாட்டு அகத்தியர் கதைகளோடு வந்து கலந்தன. நச்சினார்க்கினியர் அகத்தியரைக் குறித்துக் கூறும் பழங்கதை நச்சினார்க்கினியர் அகத்தியரைக் குறித்துக் கூறியுள்ள கதையே இதற்குச் சான்று. அவர் கூறியிருப்பது வருமாறு:..... “அவரும் (அகத்தியரும்) தென்திசைக்கண் போதுகின்றவர், கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர், யமதக்கினியாருழைச் சென்று அவர் மாணாக்கர் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியாருழைச் சென்று அவ ருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்கோடி வேளிருள்ளிட் டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிற் கண்ணிருந்து இராவணனை கந்தருவத்தால் பிணித்து இராக்க தரை ஆண்டு இயங்காமல் விலக்கி..........” அகத்தியர் இராவணன் காலத்தவரும் கண்ணன் காலத்தவருமாதல் முடியாது இவ்வகைப் பழங்கதைகள், வடநாட்டு அகத்தியரை தமிழ் இலக்கியங் களின் தந்தை ஆக்குவதல்லாமல், அவர், கிருஷ்ணனின் துவாரகையி லிருந்து யாதவர் கூட்டத்தினர் பலரைத் தெற்கே கொண்டு வந்து குடியேற்றி னவராகவும் கூறுகின்றன. மத்தியகால உரையாசிரியர்களுள் ஒருவராகிய நச்சினார்க்கினியர் அகத்தியர் இராவணனை இசையில் வென்றார் எனவும் கூறியுள்ளார். நச்சினார்க்கினியர் உரைகள் ஒன்றை ஒன்று மறுப்பனவாயுள்ளன. அகத்தியர் இராவணன் காலத்தவராயின் அவர் இரண்டாவது திரேத உகத் தில் வாழ்ந்தவராவர். ஆகவே அவர் துவாரகைக்குப் போயிருக்க முடியாது. துவாரகை கண்ணனால் மூன்றாவது துவாபர உகத்தில் அமைக்கப்பட்டது. அவர் துவாரகையிலிருந்து மக்களை அழைத்து வந்தவராயின் அவருக்கும் இராமரின் பகைவனாகிய இராவணனுக்கும் யாதும் தொடர்பு இருக்க முடியாது. இவ் வில்லங்கத்தைத் தடுப்பதற்கு வேளிர் வரலாறு எழுதியவர் அகத்தியரால் இசையில் வெல்லப்பட்டது. இராவணன் இராமரின் பகைவ னாகிய இராவணனல்லன் என்றும், அவன் இராவணப் பெயர் தாங்கிய இன்னொருவனென்றும் கூறுவாராயினர். இந்நியாயம் நிலைபெறுமாறில்லை. அகத்தியரோடு இராவணன் நிகழ்த்திய இசைப்போரைப் பற்றிக் கூறும் பிற வரலாறுகள் வான்மீகி கூறும் இராவணனையே குறிக்கின்றன. அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் நச்சினார்கினியர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியரின் மாணாக்கனாகிய தொல்காப்பியர் சமதக்கினியின் புதல்வனும் பரசு இராமனின் உடன் பிறந்தானுமாகிய திரண தூமாக்கினி எனவும் அவர் கூறியுள்ளார். பரசு இராமர் இராமருக்கு முன்பட்டரென்பது வால்மீகியின் கூற்றால் விளங்குகின்றது. திரணதூமாக்கினியும் வால்மீகி கூறும் இராமரும் பரசு இராமர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இதனால் திரணதூமாக்கி னியின் ஆசிரியராகிய அகத்தியர் இராமரின் பகைவனாகிய இராவணனைச் சந்திக்க முடியுமெனத் தெரிகிறது. இக் காரணத்தினாலும் அகத்தியர் தமிழரின் முன்னோராகிய வேளிரைத் துவாரகையிலிருந்து அழைத்துவர முடியாதெனத் தெரிகின்றது. இக் கதைகள் இவ்வாறு ஒன்றோடு ஒன்று மாறுபடுவனவாயிருக்கின்றன. இராமருக்கும் கிருட்டிணனுக்கும் இடையி லுள்ள காலம் ஒரு இலட்சம் ஆண்டுகள் வரையில். இராமாயணத்துக்கும் பாரதப் போருக்கும் இடைப்பட்ட இவ்வளவு நீண்டகாலம் யாரும் வாழ முடியாது. இதனால் அகத்தியரைப் பற்றிய கதைகள் சங்ககாலத்திற்குப் பின் ஆராய்வின்றிக் கட்டப்பட்டவை எனத் தெரிகின்றது. நெடுமுடி அண்ணல் நிலந்தருதிருவில் நெடியோன் (தொல்காப்பியம் கி.மு. மூன்றாம், அல்லது நாலாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட நூல் என இற்றை ஞான்றை ஆராய்ச்சியாளர் முடிவு செய் கின்றனர். அவ்வாறாயின் இராமர் காலத்திலோ, கண்ணன் காலத்திலோ தொல்காப்பியர் இருந்தார் எனக்கொள்வது சிறிதும் பொருத்தமற்றதாகும்.) நச்சினார்க்கினியார் கூறும் சில சொற்றொடர்கள் அகத்தியர் பொதிய மலையின் தெற்கிலிருந்து வேளிர்களுடன் வந்தாரென்பதை விளக்குவன. நச்சினார்க்கினியர் நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் என்னும் பெயரால் கண்ணனைச் சுட்டுகின்றார். கண்ணனின் தலைநகரைத் துவாரகை எனவும் கூறியுள்ளார். மதுரைக் காஞ்சியில் வரும் நெடுமுடி அண்ணல் என்பதற் கும் அவர் கண்ணன் எனப் பிழையான பொருள் கூறியுள்ளார். மதுரைக் காஞ்சி ஆசிரியர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை அல்லது புலவர் குழுவை ஆதரித்த பாண்டியனைக் குறிக்க நிலந்தருதிருவில் நெடியோன் என்னும் பெயரை ஆண்டுள்ளார். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது நிலந்தரு திருவிற் பாண்டியன வையில். துவரை என்னும் பெயருடைய பல இடங்கள் தமிழ் நாட்டில் இருந்தன. கடல்கொண்ட நாட்டில் அவ்வகை இடங்கள் இருந்தன. பாண்டியரின் தலை நகராயிருந்த கபாடபுரம் கடலாற் கொள்ளப்பட்டது. துவாரபதி என்பதே கபாடபுரமென வடமொழிப் படுத்தப்பட்டிருத்தல் கூடும். பாண்டி நாட்டுக்குத் தெற்கே கிடந்த நிலத்தைக் கடல் கொண்டபோது மக்கள் வடக்கு நோக்கிச் சென்று (தமிழ் நாட்டில்) குடியேறினார்கள் எனக் கலித்தொகை கூறுகின்றது. ஆகவே அகத்தியர் தெற்கே கடல்கொண்ட பாண்டி நாட்டினின்றும் வந்தவராகலாம். தெற்கிலிருந்து வந்த பாண்டியர் அவையிலிருந்த வேளிர் தமது அரசனை நெடுமுடி அண்ணல் எனக் கூறினாராகலாம். நெடியோன், நெடுமுடி அண்ணல் என்பன பாண்டியப் பேரரசனைக் குறிப்பன. அகத்தி யர், வேளிர்கள் சிலரோடு பொருநை ஊற்றெடுக்கும் இடத்தில் தங்கினாராதல் வேண்டும். இவரே தமிழ்க் கல்வியிற் புகழ்பெற்று விளங்கினார். அகத்திய ருடன் சென்ற வேளிர் அயலேயுள்ள மலைநாடுகளில் இராச்சியங்களை உண்டாக்கிக் குறுநில மன்னராயினர். ஆய், ஆவி முதலிய குறுநில மன்னர் பலர் வேளிர் மரபினர் எனப்படுகின்றனர். அகத்தியர் நிலந்தருதிருவிற் பாண்டியன் அல்லது நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் காலத்தவராயின் தொல்காப்பியரும் அகத்தியரும் ஒரே காலத்தவராகலாம். நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையிலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. அகத்தியரும் தொல்காப்பியரும் ஒரே காலத்தவர்களாயினும் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்பதற்குப் பழைய சான்றுகள் யாதும் காணப்படவில்லை. சிற்றகத்தியமும் பேரகத்தியமும் அகத்தியர் சிற்றகத்தியம், பேரகத்தியம் என்னும் இரு இலக்கண நூல்கள் செய்தாரென்னும் கதை செவிவழக்கில் உள்ளது. அகத்தியம் என்னும் பெயருடன் மத்தியகால உரையாசிரியர்கள் எடுத்தாண்ட சில சூத்திரங் களும் உள. இச் சூத்திரங்கள் இன்று வழங்கும் அகத்தியர் வாகடங்கள் போன்றவையே யாகும். தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலில் கூறப்படுவது வருமாறு: 1“அண்மையில் பேரகத்தியத்திரட்டு என்னும் சிறு நூல் ஒன்று வெளி யாயிற்று. அது அகத்தியம் என்னும் இலக்கணச் சூத்திரங்களின் திரட்டு எனக் கூறப்பட்டுள்ளது. அகத்தியருடையன என்பனவல்லாத வேறு சில சூத்திரங்களும் அந்நூலிற் காணப்படுகின்றன. அவை கழாரம்பர் என்னும் அவர் மாணவரால் செய்யப்பட்டன என்று தமிழ்ப் பண்டிதருள் ஒரு சாரார் நம்பி வருகின்றனர். இவ்விருவகைச் சூத்திரங்களும் எவராலோ செய்யப்பட்ட போலிகள் எனக் கொள்வதற்குப் பல நியாங்கள் உள.” 1. அச் சூத்திரங்களின் நடை மிகச் சமீப காலத்தது. அவைகளில் பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியச் சூத்திரங்களை யும் இவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இது நன்கு தெளிவா கின்றது. 2. அகத்தியர் காலத்தில் தமிழில் சமக்கிருதச் சொற்கள் அருகி வழங்கியிருத்தல் வேண்டும். புத்தமித்திரன் பவணந்தி காலங்களிற் போல வடசொற்களை தமிழில் ஆள்வதற்குரிய விதிகள் அக் காலத்தில் தோன்றி யிருக்க மாட்டா. தொல்காப்பியர் வடசொற்கள் தமிழில் வழங்குவதற்கு ‘சிதைந்தன வரினுமியைந்தன வரையார்’ எனப் பொது வகையால் விதி கூறினாரேயன்றிச் சிறப்பு வகையில் விதிகள் கூறிற்றிலர். பேரகத்தியத் திரட்டில் இருபத்தினான்கு சூத்திரங்கள் வடமொழிச் சந்தி, சொல்லாக்கங்களைப் பற்றிக் கூறுகின்றன... பேரகத்தியம் என்னும் நூல் கி.பி.1,250க்குப்பின் பெருவழக்கிலிருந்து நன்னூலுக்குப் பதில் சைவ மாணவர்கள் பயிலும்படி திருநெல்வேலி அல்லது தஞ்சாவூர்ப் பகுதிகளில் இருந்த யாரோ மாடதிபதி ஒருவரால் செய்யப்பட்டிருந்தல் வேண்டுமெனத் தெரிகிறது. தொல்காப்பியர் எங்காவது அகத்தியத்தையோ அகத்தியரைப் பற்றியோ ஒரு வார்த்தை தானும் கூறவில்லை. தொல்காப்பியப் பாயிரம் கூறுவது வருமாறு: “...தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிருமுதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோன்.” என்பதாகும். இப் பாயிரத்தினால் தொல்காப்பியருக்கு முன் அகத்தியம் என்னும் இலக்கணம் ஒன்று இருந்ததோ என்பது சந்தேகத்துக்கு இடனாகின்றது. அகத்தியரைத் தமிழ் மொழியோடு சம்பந்தப்படுத்திக் கூறும் கற்பனைக் கதைகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் முளைத்திருத்தல் வேண்டுமென நான் கருதுகின்றேன். பி.தி. ஸ்ரீனிவாச ஐயங்காரவர்கள் அகத்தியரைப் பற்றிக் கூறியுள்ள குறிப்புக்கள் வருமாறு: சமக்கிருத நூல்களில் இஷ்வாகு காலம் முதல் கிருஷ்ணன் காலம் வரையில் கூறப்படும் அகத்தியர்கள், வசிட்டர்கள் ஒரு தனி அகத்தியர், விசுவாமித்திரர், வசிட்டர்களைக் குறிப்பனவல்ல. அவை குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கிய பெயர்களாகும். அப்பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்ல1. * * * முதல் அகத்தியர் விதர்ப்ப அரசன் புதல்வியாகிய உலோபாமுத்திரை யின் கணவன். இவர் இராமருக்கு இருபது தலைமுறைகளின் முன்வாழ்ந்த சவர்க்கன் என்னும் காசி அரசன் காலத்தவர். ஆதி அகத்தியர் விந்தியத் துக்குத் தெற்கே வாழ்ந்தார். அவர் விந்தத்தை அடக்கினார் என வழங்கும் பழங்கதையின் பொருள், அவர் விந்தத்தைக் கடந்து தெற்கே சென்றார் என்பது ஆகலாம். அவருடைய ஆச்சிரமம் சாத்பூராமலைத் தொடரின் மேற்குப் பகுதியிலுள்ள வைடூரிய மலையிலுள்ளது. அவர் தமது தவத்தின் மகிமையால் தென் தேசத்துக்குத் தீமை நேராதபடி காத்தார். பஞ்சவடிக்கு இரண்டு யோசனை தூரத்தில் இராமர் சந்தித்த அகத்தியர் முதல் அகத்திய ராயிருந்தல் முடியாது; அவர் பிற்கால அகத்தியர்களுள் ஒருவராயிருத்தல் வேண்டும். இராமர் காலத்து அகத்தியர் கோதாவரிக்கு அண்மையில் வாழ்ந் தார். அவர் தெற்கு நோக்கிப் பயணஞ் செய்தபோது அகத்தியர் அவ்விடத்தி லேயே தங்கினார். இராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் திரும்பி வந்தபோதும் அகத்தியர் ஆச்சிரமம் அவ்விடத்திலேயே இருந்தது. இராமர் அலைந்து திரிந்தகாலம் முழுமையிலும் அகத்தியர் ஆச்சிரமம் பஞ்சவடியி லிருந்து இரண்டு யோசனை தூரத்தில் இருந்ததெனத் தெரிகின்றது. சுக்கிரீ வன் வானர வீரரை நோக்கிக் கூறியதாக வரும் பகுதியில் காவேரி ஆறு ஊற் றெடுக்கும் மலையமலையில் அகத்தியர் ஆச்சிரமம் உள்ளதாகக் கூறப்பட் டுள்ளது. சீதையை இராவணன் மாயமாகத் தூக்கிச் சென்றதுபோல இராமா யணஞ் செய்த புலவரும் அகத்தியரைப் பஞ்சவடியிலிருந்து மலையமலைக்கு மாயமாகக் கொண்டுபோய் விடுகின்றார். அகத்தியர் மலையமலையில் இருந்தார் எனவரும் பகுதியைப் பிற்காலப் புலவர் எவரோ எழுதினாராகலாம்1. * * * கி.பி. முதல் ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் எவற்றிலாவது அகத்தியர் கடவுளிடமிருந்து தமிழைக் கற்றாரென்றாவது, அவர் தமிழைத் தோற்றுவித்தாரென்றாவது கூறப்படவில்லை. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் செய்தாரென்றும், அவர் சிவபெருமானிடத்தும் சுப்பிரமணியக் கடவுளிடத்துமிருந்து தமிழைக் கற்றாரென்றும் வழங்கும் கதைகள் கி.பி. 1,000க்குப் பின் தோன்றின வாதல் வேண்டும்.2 * * * அகத்தியரென்னும் பிராமண முனிவர் பொதிய மலையில் சென்று தங்கித் தமிழ் இலக்கியங்களைச் செய்தார் என்னும் வரலாறு பிராமணரின் அதிகாரம் தென்னாட்டில் ஊன்றிய பிற்காலத்தில் தோன்றியிருத்தல் கூடும். இக் கதைக்கு ஆதாரம் சமக்கிருத நூல்கள் ஆகலாம்.3 * * * சின்ன ஆசியாவில் அகத்தியர் இந்தியநாட்டில் மாத்திரம் அகத்தியர்கள் இருக்கவில்லை. மேற்குத் தேசங்களிலும் அகத்தியர்கள் விளங்கினார்கள். சின்ன ஆசியாவில் அகத்தியா° (Agathias) என்னும் ஒருவர் விளங்கினார். இவர் சரித்திர ஆசிரியரும் புலவருமாகிய கிரேக்கர், இவர் கி.பி.530-ல் பிறந்தார்.4 5சித்திய மக்களிடையே (உள்ள) ஒரு குழுவினர் அகத்திரிசிகள் (Agathias) எனப்பட்டார்கள் என எரதோதசு (Heradotus p.K.480) என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். இவர்கள் தமது சட்டங்களை ஒரு வகைப் பாடல் மூலம் வாய்ப்பாடஞ் செய்து காப்பாற்றிவந்தனர். அரி° டோட்டில் காலம் வரையில் இவ்வழக்கு இருந்தது. அகத்திரிசி என்னும் இடப்பெயரும் ஐரோப்பாவில் உள்ளது6. வடநாட்டு இருஷிகள் எனப்பட்டோர் பலர் திராவிட இரத்தக் கலப்புடையராயிருந்தனரென்றும் வசிட்டர், அகத்தியர், விசுவாமித்திரர் முதலியோர் அவ்வகையினரென்றும் இரங்காச்சாரியர் அவர்கள் கூறுவர்.1 பழைய தமிழ் நூல்களில் அகத்தியரைத் தமிழோடு தொடர்பு படுத்திக் கூறும் பகுதிகள் “வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழுக்கு விளக்காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப்பெருமை அகத்திய னென்னும் அருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்” - பன்னிருபடலப் பாயிரச் சூத்திரம் மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்கால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் - புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் பூமலி நாவன் மாமலைச் சென்னி ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகட லடக்கி மலையத் திருந்த இருந்தவன் றன்பா லியற்றமி ழுணர்ந்த புலவர்பன் னிருவருட் டலைவனாகிய தொல்காப் பியன். - அகப்பொருள் விளக்கப்பாயிரம் மதிவெயில் விரிக்குங் கதிரெதிர் வழங்கா துயர்வரை புடவியின் சமமாக்கிக் குடங்கையி னெடுங்கட லடங்கலும் வாங்கி யாசமித் துயர்பொதி நேசமுற்றிருந்த மகத்துவ முடைய வகத்திய மாமுனி தன்பாலருந்தமி ழின்பா லுணர்ந்த வாறிரு புலவரின் வீறுறு தலைமை யொல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி.” - இலக்கணக்கொத்துரைச் சிறப்புப் பாயிரம். இவற்றுட் பன்னிரு படலமென்பது தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் தனித்தனி ஒவ்வோர் படலமாகச் செய்து சேர்க்கப்பட்ட நூல் எனப்படுகின் றது. இது தொல்காப்பியர் முதலியோர் செய்ததாகாதென இளம்பூரணர் தமது உரையில் காட்டியுள்ளார். அதனால் பன்னிரு படலமென்பது பிற்காலத்தா ரெவரோ தொல்காப்பியர் முதலியோர் பெயரால் புனைந்த நூலெனத் துணிய லாம். தொல்காப்பியப் பாயிரத்திற் காணப்படாத அகத்தியர் வரலாறு இந் நூலிற் காணப்படுதலும் ஆராயத்தக்கது. நூல்களுக்குப் பாயிரம் செய்யும் விதி தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. இறையனாரகப் பொரு ளுக்குப் பாயிரமில்லை. இறையனாரகப் பொருளுரையில் நூலுக்குப்பாயிர மின்றிமையாததெனக் கூறப்பட்டுள்ளது. இக் கருத்து வலிபெற்ற காலத்தி லேயே தொல்காப்பியத்துக்குப் பனம்பாரனார் என்னும் ஒருவரால் பாயிரம் செய்யப்பட்டதெனக் கருதக்கிடக்கின்றது. தொல்காப்பியத்துக்குப் பாயிரம் செய்யும் காலத்தில் தொல்காப்பியர் அகத்தியரிடம் தமிழ் பயின்றவர் என்னும் கதை தோன்றவில்லை எனத் தெரிகின்றது. ஐந்திரம் கற்றவரெனத் தொல்காப்பியரைச் சிறப்பித்த பனம்பாரனார், இவர் அகத்தியரின் மாணவராயின் அதனை ஒருபோதும் கூற மறந்திருக்கமாட்டார். புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. ஏழாம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்டது. இதனை ஒட்டிச் சிறிது முன் பன்னிருப்படலம் செய்யப் பட்டதாகலாம். அக் காலத்தில் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்னும் வரலாறு தோன்றி வழங்கியிருத்தல் வேண்டும். திருமூலர் கி.பி.5-ம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவராவர். இவர், நடுவுநில் லாதிவ்வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன வீசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென்றானே. எனத் திருமந்திரத்துள் கூறியுள்ளார். அகத்தியர் தமிழோடு சம்பந்தப் பட்டதை அவர் கூறவில்லை. கி.பி.5-ம் நூற்றாண்டுக்கும் கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்குமிடையில் அகத்தியரைத் தமிழோடு சம்பந்தப்படுத்தும் கதைகள் எழுந்தன எனக்கூறுதல் பிழையாகாது. மணிமேகலை என்னும் சங்ககாலத்துக்கு அண்மையிலுள்ள இலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிக் கூறப்படும் இடங்கள் சில உள. “உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்ப் பலர் புகழ் மூதூர்ப் பண்புமே படீஇய ஒங்குயர் மலையத் தருந்தவ னுடிரப்பத் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்” “மன்மருங்கறுத்த மழுவா ணெடியோன் றன்முன் றோன்ற றகாதொளி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் அமர முனிவ னகத்தியன் றனாது துயர்நீங்கு கிளவியின் யாறோன் றறவும்.” “செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளங்கும் கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட அமரமுனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்ந்த காவிரிப் பாவை செங்குணக் கொழுதிய சம்பாதி.” - மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் காலத்தில் அகத்தியரைப் பற்றிய வரலாறு மிகப் பழங்கதையாக வழங்கிற்றேயன்றி அகத்தியர் தமிழோடு தொடர்பு பெற வில்லை. அக் காலத்தில் அகத்தியர் பொதியமலையில் இருந்தாரென்றும் வரலாறு வழங்கிற்று. அகத்தியர்1 குடத்தில் பிறத்தல், பிரமதேவருக்கு ஊர்வசி யிடம் பிறத்தல் போன்ற கதைகளை ஆராய்தல் மணல் சோற்றில் கல் ஆராய்தல் போலாகுமெனக் கருதி அவற்றை ஈண்டு ஆராய்ந்திலேம். எஎஎஎ 1 2 15 14 எனது துப்பாக்கியுடனும் நாயுடனும் அடுத்த கடற்கரைப் பக்கம் சென்றேன் எனக்கு கடற்பயணம் செய்ய விருப்பமுண்டு 4 13 12 5 6 11 10 ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு போதல் 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 அடிமை எனத் தெரிவித்தல் குடித்தது உடுத்தது 24 25 குடித்தது உடுத்தது 48 33 34 47 46 35 36 45 44 37 38 43 42 39 40 41 64 49 50 63 62 51 1. தானியத்தாள் 52 61 60 53 54 59 58 55 1. நாற்காலி 56 57 80 65 1 “தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன்” “என்றுமுள தென்றமி ழியம்பி யிசைகொண்டான்” “நீண்டதமிழ் வாரி நிலமேனிமிர விட்டான்” “உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும் வழக்கினு மதிக்க வினினும் மரபினாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட் டழற்புரை சுடர்க்கடவு டந்ததமிழ் தந்தான்”. - கம்பன் தேனார் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத்தெண்ணீரருவிக் கானார் மலயத் தகுந்தவன் சொன்னகன் னித்தமிழ். - அமிர்தசாகரர் ஓங்க விடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஓங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது தன்னே ரிலாத தமிழ். - பழம்பாடல் தமிழ் பொதிய மலையில் தோன்றியதெனப் பொருள்பட வரும் இப்பழம் பாடலும் தமிழ் பொதிய மலையிடத் திருந்த அகத்திய முனிவரிடத்திற் பிறந்த தென்பதையே குறிப்பாக உணர்த்தி நிற்கின்றது. 1. O.C.Gangoly. 1. Siam. 2. Mikong. 3. Malay Archipelago. 4. Sunda Islands. 5. Java. 1. Tysangal 1. Confucius. 2. When the Aryans passed the Afghan passes, India was inhabited by a dark and short statured but civilized race called the Dravidians. These Dravidians had extensive commercial relations with Babylon, Phoenicia and the countries beyond the Arabian Sea. Their trade consisted of such articles of luxury as Indian cidar, muslin, precious stones, pea-cocks, aloes etc. The fact that a piece of Malabar teak was found in the palace of the king of Chaldea 3,000 B.C. and the similarity between the Hebrew word for peacock viz. Toki and the modern Tamil and Malayalam word viz. Tuki and such glaring similarity between many an Indian and a Greek or a Hebrew word is too striking to be over-looked as a mere matter of coincidence ..... During this long period, the Aryans, in their long struggle with the aboriginal tribes, had adopted the policy of give and take. Outline of Economic History of India. pp.8 & 12-M. P.Lohana. 1. இது தமிழ்ப்பெரும் புலவர் சோமசுந்தர பாரதியாரவர்கள் ஆங்கிலத்தில் வரைந்த ஓர் கட்டுரையின் சுருக்கம். 1. முக்காலமும் அறியும் அறிஞர். 1. அகத்தியர் என்பதே அக°த° எனத் தப்பாக வாசிக்கப்பட்டதென யோவுதுபிரில் என்பார் நன்கு எடுத்து விளக்கியுள்ளார். The Mythic Society Journal : XIX P.180 1. பழைய ஐரோப்பிய மக்கள் அன்னியரை பார்பேரியர் (Barbarians) என வழங்கினார். அவ் வகை வழக்கையே மிலேச்சர் என்னும் சொல்லும் குறிக்கும். 1. Tamil Studies, P.397. 1. One of the most illuminating suggestions of his (Partigers) is that the Agastyas, Vasisthas, and Viswamitras mentioned in the Sanskrit works were not each one man who baffles the reader by appearing and reappearing in every age from that of Iksvaku to that of Sri Krishna. (History of the Tamil - P. liv-P.T.S. Iyengar). 1. Ibid - pp.54, 55. 2. Ibid p.224. 3. Cambridge History of India. p.596-L D.Barnett. 4. Encylopaedia Britannica. 5. Seythians, Agathyrse, a people of Thracian origin, who in the earliest historical times occupied the plain of Maris (Maros) in the region now known as Transylvania. Like the Gallic Druids they recited their laws in a kind of sing-song to prevent their being forgotton, a practice still in existence in the days of Aristole-E. Britannica. 6. Atlas of Ancient and Classical Geography - Index p.6, map1. Everyman’s Library, Edited by Ernest Rhys.3. 1. God Varuna himself was an Asura (Dravidian - Vedic Kings and Rishis came to have Astra blood in them as is indicated by the colour. Sages like Vashistha, Agastya and Viswamitra were given the same father Mitra Varuna - History of Pre-Musalman, India - p.172. 1. அகத்தியர் குடகு மலையிலிருந்து பின் பொதிய மலைக்கு வந்தாராதலின் அவர் குடமுனி யெனப்பட்டாரென்றும் இவ்வரலாற்றை மறந்த பிற்கால மக்கள் ‘குடகு’ என்பதைக் குடம் எனக்கொண்டு பொருந்தாத பல கற்பனைக் கதைகளை அவர் பிறப்போடு சம்பந்தப் படுத்திக் கட்டி வழங்கினார்கள் என்றும் பண்டிதர் சவரிராயனவர்கள் கூறியுள்ளார். 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 88 குறிப்புகள் 81 82 87 86 83 84 85 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii பதிப்புரை . . . xi நூல் 1. இராபின்சன் குரூசோ . . . 1 2. கலிவர் யாத்திரைகள் . . . 31 3. அகத்தியர் . . . 63 இராபின்சன் குரூசோ ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன். எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : இராபின்சன் குரூசோ ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 88 = 104 படிகள் : 1000 விலை : உரு. 45 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix