தமிழர் வரலாறு (கி.பி.600 வரை ) பி.டி. சீனிவாச ஐயங்கார் தமிழாக்கம் முன்னுரையுடன்) : பி. இராமநாதன் க.மு, ச.இ. பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண்பதிப்பகம் நூற் குறிப்பு பொருளடக்கம் மூலநூல் பி.டி. சீனிவாச ஐயங்கார் அணிந்துரை இருளைக் கிழித்தெழுந்த தமிழ் ஒளிக் கற்றைகள்! 'தமிழர் வரலாறு' - எனும் பெயரிய இந்நூல் பன்மொழி அறிஞர் பி.டி. சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம் ஆகும். சில இடங்களில், ஆங்கிலப் பகுதிகளை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்த்தும், வேறு சில இயல்கள், பகுதிகளைச் சுருக்கித் தந்தும், அறிஞர் பி. இராமநாதன், இப் பெருநூலைத் தமிழர்கள் எளிதில் படிக்குமாறு அறிமுகம் செய்துள்ளார். இந்நூல் ஆங்கிலத்தில் இருப்பதனால், தமிழ் ஆய்வாளர்கள் தாம் ஆய்வு செய்யும் போது, இத்தகைய நூல்களையும் கற்றறிந்து, தக்க சான்று களுடன் எழுதாமல், தவிர்த்து விடுகின்றனர். இக் குறையைப் போக்கும் வகையில், தக்கார் ஒருவரைக் கொண்டு, தமிழ்மண் பதிப்பகவழி கோ. இளவழகன், இந் நூலை வெளியிட்டுள்ளார். தமிழ் மறுமலர்ச்சி பெறும் வகையில், அப்பெரு நோக்கு ஒன்றையே, தன் நோக்காகக் கொண்டு, தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவரும், 'மறுமலர்ச்சிப் பதிப்புக் குரிசில்' கோ. இளவழகன், வருங் கால வரலாற்றில் இடம் பெறும் வகையில் செயற்பட்டு வரு கின்றார். அதற்குச் சான்றாகும் வகையில் இந்நூல் வெளி வந்துள்ளது. சீனிவாசரின் முதற்பதிப்பே என்னிடம் உளது; அது சிதில மான நிலையில், அதன் 'ஏசியன்' (1995) புதிய பதிப்பும் ஒன்று வாங்கினேன். இதைக் குறிப்பதற்குக் கரணியம், அந்நூலின்பால் எனக்கிருந்த ஈடுபாடே. அதன் முன்னுரை, முதல் இயல், இராமாயணம் பற்றிய பகுதியில், இன்றிருக்கும் பிராமணியம் 'பிரஹ்ம ராட்சத ' இனமென்று குறித்திருக்கும் இடங்கள் (பக். 48-58 ஆங்கில நூல்), ஆகமங்களும் எதிரான வேதங்களும் (The agamas VS the vedas) என்ற எட்டாம் இயல் போல்வனவாகும். முன்னைய அந்தணியமும் இன்றைய பிராமணியமும் முன்னையவர்களில் பாவாணரே பாராட்டுமளவு , தமிழ் ஈடுபாட்டுடன் எழுதியவர்களும் தம்மைத் தமிழரென்றே கருதியவர்களும் பலராவர். பி.டி. சீனிவாச ஐயங்கார், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், கிருட்டினசாமி ஐயங்கார், டி ஆர். சேசையங்கார், ரா. இராகவ ஐயங்கார் என இப்பட்டியல் நீளும். இவர்கள் பலரும் 'ஐயங்கார்களாக இருப்பதும் உன்னிப்பாகக் கருதற்பாலது. இவர்கள் பெரும்பாலோர் சமற்கிருதத்தை நன்கு கற்றவர்கள், ஆங்கிலத்தில் எழுதியவர்கள். இன்றைய 'பிராமணியம்' தமிழையும் தமிழரையும் அயன்மைப்படுத்தியே நோக்கி, சூழ்ச்சித் திறம்பட இயங்கு கின்றது. திருக்குறளையும் சங்க நூல்களையும் சிலப்பதி காரத்தையும் அண்மையில் இவர்கள், மிகவும் கொச்சைப் படுத்தியும் ஏளனப் படுத்தியும் எழுதியவை தாங்கொணா வருத்தம் தருவன. அதே முறையில் கீதை, வேதம், இராமாயணம், பாரதம் பற்றி நாம் எழுத முற்பட்டால், மானமுள்ளவர்கள், வருந்தி அழுது துடிக்க நேரிடும். இவர்கள் எல்லோரும் இன்று ஏன் தமிழில் இதழ் வெளியிட்டும் நூல்கள் எழுதியும் பிழைக்கின்றார்கள் என்றால் வேறு வழியில்லை . சமற்கிருதம் வழக்கிலிருந்து, அதில் எழுதவும் விற்கவும் வாங்கவும் கூடிய சூழல் இருந்தால், அதில் மூழ்கிக் கிடப்பார்கள். அதற்கு வழியில்லாததா லேயே தமிழிலேயே எழுதி, தமிழையும் தமிழனையும் சிதைத்து, சிறிது சிறிதாக நஞ்சைப் புகுத்தி வருகிறார்கள். குமரிக் கண்டம் பற்றி, அது தமிழ்ப் புலவர்களின் 'பொய்ம்மைப் புனைகதைகள்' என்று (Fabulous history), தில்லியில் போய் இருந்து கொண்டு ஓர் அம்மையார் நூல் எழுதுகிறார். தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழ்நீர் பருகிய அப்பெண்மணியின் 'நன்றியறிதல்', தமிழ்ப் புலவர்கள் மீது பாய்கிறது. நல்ல வேளையாக அவர் அண்மை யில் நடந்த 'சுனாமியில் அகப்படாமல் தப்பிப் போனார். இச் சுனாமி பற்றியும், இது தமிழ் அறிஞர்களின் புனைகதையே, பகற்கனவே என எழுதி நிலைநிறுத்த வல்லவர் அவர். ஏனெனில், இங்குள்ள ஆங்கில நாளிதழ் ஒன்று, இதே வேலையாக, யார் தமிழுக்கும் தமிழனுக்கும் எதிராக எழுதவும் செயற்படவும் முனைவார்கள் என்று தேடி, அவர்களுக்கு ஆதரவு தந்து, விளம்பரப்படுத்த முந்துகிறது. 'தமிழர்கள்' எனச் சொல்லிக்கொள்வோரே, அவர்களை விடக் கூடுதலாகத் தாமும் தமிழுக்கு இழிவு தேடிவரும் பொழுது யாரைக் குறை கூறுவது? அது கிடக்கட்டும். இருளும் ஒளியும் சமற்கிருதத்தை உலகறியச் செய்த மாக்சுமுல்லர் முதலான பலரும் சமற்கிருத இலக்கிய வரலாறெழுதிய மாக்டோனல், கெய்த் போல் வாரும் தமிழையோ, தமிழிலக்கியத்தையோ அறிந்தவர்கள் அல்லர். மேலே சுட்டியவாறு, ஆங்கிலத்தில் எழுதிய நம் நாட்டு அந்தணப் பார்ப்பனப் பெரியோர்களும், தொல்காப்பியம் தொட்டுத் தமிழிலக்கியத்தை முற்ற முடியப் பழுதறக் கற்றவர்கள் அல்லர். தமிழறிஞர்களிலும் முற்காலத்தவர்கள் சிலர் தமிழுடன், சமற்கிருதமும் கற்றிருந்தனர், ஆங்கிலப் புலமையும் இருந்தது. மறைமலையடிகள், சிவராச பிள்ளை , கனகசபைப் பிள்ளை , பாவாணர் என விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்களிலும் ஆங்கிலத்திலேயே நூல்கள் எழுத முற்பட்டவர்கள் மிகச் சிலரே. சமற்கிருத மொழி மிகக் கடினமானது. அதனால் இன்று 'ஆசைபற்றி அதைப் படித்திருப்பதாகச் சொல்பவர்கள், மனப்பாடம் செய்த சிலவற்றை மட்டும் திரும்பத் திரும்ப ஒப்பிப்பவர்கள். அதில் பட்டப்படிப்புப் படிப்பதும் கற்பிப்பதும் ஆங்கில வழியிலேயே நடைபெறுவதால், அவர்கள் ஆங்கிலத் தில் எதையும் எப்படியும் எழுத அஃது ஒரு துணைக் கருவி போலானது. ஒளிக் கீற்றுக்களிடையே இடைவெளிகளில் பரவிக்கிடக்கும் இருளும் உள் நேர்மையான கருத்துக்களைத் தந்த அதே ஆங்கில நூல்களில், நமக்குக் கிடைக்கும் ஒளிக்கீற்றுக்களை வைத்துக் கொண்டு, மொழி ஞாயிறு பாவாணர் வழியில், நாம் புதிய ஒளியை - புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்த வேண்டும். பிடி . சீனிவாசரே எழுதுவனவற்றைக் கூர்ந்து இந்நூலில் படியுங்கள். * சங்க காலத்தை மிகப் பிற்பட்ட காலத்தது என்று கூறுகிறார். * வட மொழி வாக்கிய அமைப்பு உட்பட யாவும் தமிழ் வழிப் பட்டனவே என முதலில் தொடங்கும் இவர், அகத்தியர் என்ற பிராமண முனிவர்தான் தமிழுக்கு முதன் முதல் இலக்கணம் எழுதினார்; சமற்கிருதத்தின் எட்டு வேற்றுமைக் கருத்தை, தமிழில் புகுத்தினார், இந்த அகத்தியர் என எழுதுகின்றார். * பாணினியைப் பின்பற்றித் தமிழுக்கும் ஏழு வேற்றுமை களை அகத்தியர் கற்பனையாக உருவாக்கினார்; அகத்தியர் சீடர் தொல்காப்பியரோ ஐந்திரத்தைப் பின்பற்றி வேற்றுமைகளை எட்டாக்கி விட்டார் என்று குறிப்பிடுகின்றார். * அகத்தியர் எழுதிய இலக்கணமான அகத்தியம் இன்று இல்லை . அவர் சீடர் - ஜமதக்கினி மகன் திரண தூமாக்கினி என்ற இயற்பெயருடைய - தொல்காப்பியர் அகத்தியத்தின் அடிப்படையில் எழுதிய தொல்காப்பியம் மட்டும் உள்ளது. தமிழ்ச் செய்யுள் நூல்கள் சமற்கிருதச் செய்யுள் நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்ததைக் கண்ட இந்தப் பிராமண இலக்கண ஆசிரியர் செய்யுளின் பாடுபொருள் - தமிழ் அகம், புறம் - பற்றி பொருளதிகாரம் என ஒன்றையும் எழுதினார்... என விளக்குகின்றார். (பக். 169-172) பொருளதிகாரத்தில் ஆரியக் கருத்துகள் உள்ளன என இவர் எழுதுவன பல. இவை யாவும் நச்சினார்க்கினியர் போலும், பிராமண உரையாசிரியர்களால் வந்த வினை. இவ்வாறு, முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை, இதனோடொத்த அனைத்து ஆங்கில நூல்களிலும் காணலாம். அதனால்தான் இவற்றிலுள்ள ஒளியுள்ள - உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கொண்டு, மேலும் ஆராய்ந்து நிலை நாட்ட வேண்டிய கடமை நம்மிடம் உளது. இவற்றை அவர்கள் மீது குற்றமாகச் சுமத்து வதைவிட, அவர்கள் கால நிலையில், உரைகள் வழியும் செவி வழிச் செய்திகளாகவும் இத்தகைய கருத்துக்களே பலரிடமும் பரவி இருந்தன என்பதை நினைவு கொள்ள வேண்டும். மற்றொரு செய்தி, குறிப்பிடற்பாலது. சமற்கிருத நூல்கள், வருணாசிரமம்' எனும் பெயரால் மற்றவர்க்கு மறைக்கப் பட்டன. 'மறை என மொழிதல் மறையோர் ஆறே' என்ற தொல்காப்பியப்படி, இதனை நேர் பொருளாக மறைத்து வைப்பவர்களின் மறைத்து வைக்கப்பட்ட நூல்கள் எனக் கூறலாம். பாரதமே, மூன்று கால கட்டங்களில் வெவ்வேறாக எழுதப்பட்டதென்று வடமொழி இலக்கிய வரலாறு கூறும். வால்மீகி இராமாயணத்தில், தமிழுக்கு ஏற்ற பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்துக் காட்டுகிறார்கள். இராம கதையிலுள்ள வேறுபாடுகள் நூற்றுக்கு மேலிருக்கும். தமிழ் ஆகமங்கள் முதலான பலவும் களப்பிர , பல்லவர் காலத்தில், ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளில், அழிக்கப்பட்டு தமிழர் மெய்ம்மையியல், கலைகள், இறைவன் இறைவி பெயர்கள் உட்பட அனைத்தும் சமற்கிருத மயமாக்கப்பட்டன. வட மொழியாளர்க்கு ஓர் இயல்பு உண்டு. திரண தூமாக்கினி யார் என்ற பார்ப்பனரே, தொல்காப்பியர் என்று எழுதி வைத்து விடுவார்கள். தமிழரின் சிவனியம், மாலியம், கொற்றவையியம் (சக்தி வழிபாடு) மூன்றனையும், தமக்குச் சிறிதும் தொடர் பற்றவை - எதிரானவை - முரண்பட்டவை எனினும் அவற்றிற்கும் மூலம் சமற்கிருதமே என எழுதி வைத்துவிடுவார்கள். இன்றைய ஆங்கில மோகம் போல, களப்பிர பல்லவ காலத்தில் தென் னாடே சமற்கிருத மொழி வளர்ச்சிக் களமாக இருந்தது; வடமொழி வாணர்களே மதிக்கப்பட்டனர்; வடமொழி கற்போர்க்கே உதவிகள் வழங்கப்பட்டன. இதனால் நல்ல தமிழர்களே வடமொழியை உயர்த்திப் பிடித்து, வாழ வழி தேடலாயினர். இன்று ஆங்கிலேயனா, ஆங்கிலத்தைப் பிடித்து உயர்த்துகின்றான். அன்றும் வாழ வேண்டுமேல் சமற்கிருதமே துணை என்றாயிற்று. தமிழ் நூல்கள் அனைத்திற்குமே, வட மொழி நூல்களே 'மூலம்' எனக் காட்டினர். திருவிளையாடற் புராணம் மதுரையைச் சுற்றி வழங்கிய வரலாறு, பழங்கதை, கற்பனைக் கதைகளின் தொகுப்பு அதை ஹாலாஸ்யமகாத்மியம் என்பதன் மொழி பெயர்ப்பு என்றார்களே? இன்னும் பல இதுபோற் காட்டலாம். வேறு ஒன்றும் கருதற் பாலது. தமது நூல்களை மறைத்த இவர்களுக்குக் காலந்தோறும், வசதிக்கேற்ப இடைச் செருகல் களைச் சேர்க்க வாய்ப்பாகிப் போனது. எந்த ஒரு நூலும் - வேதம் உட்படக் கட்டமைப்புடையன அல்ல; எவையும் முழுமை யாகவும் கிடைக்கப் பெறா. எதற்கு வேண்டுமானாலும் சாய்த்துக் கொள்ளலாம். தங்களுக்கு நேர் எதிரானதற்கும், ஏற்புடைய ஒன்று தங்களிடமே இருப்பதாக, ஒரு 'சுலோகத்தைச் சொல்வார்கள். சிவனியம் வேத வைதிக வருணாசிரம் பிராயச் சித்த வேள்வி முறை அனைத்திற்கும் நேர் முரண்பட்டதாக இருக்கவும், நம் சைவ சித்தாந்திகளே அச் சீரிய கோட்பாட்டை, வடமொழி வழி வந்ததெனக் காட்டுவதைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? சிவனையும் சிவனியத்தையும் அவற்றை வேரறுக்க முயன்ற, அத்துவைதிகளிடமே முழுமையாய் ஒப்படைத்து விட்டு, அவர்களின் கால்களில் விழுந்து பாத பூசை' செய்யும் நம் மாபெரும் மடஅதிபதிகளை என்னென்று சொல்வது? விரல்விட்டு எண்ணக் கூடிய வெளிநாட்டவர்கள், தமிழின் சீர்மை பற்றியும் திராவிட மொழிக் குடும்பம் பற்றியும் எழுதியவற்றை நாம் மேற்கோள் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிடி. சீனிவாசர், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், வி.கோ.சூ. எனச் சிலர் பார்ப்பனராகப் பிறந்தும், தமிழின் தொன்மை, செவ்வியல் தன்மை பற்றி விளக்கியுள்ளனரே எனக் கண்டு நம்மை மறந்து மெய் சிலிர்க்கின்றோம். மற்றொரு புறம் தமிழைப் பழிப்பவர், அழிப்பவர், இழிப்பவர் பலரையும் கண்டு, மனம் நைகின்றோம். இவை எல்லாம் தீரவேண்டுமேல் நாமல்லவா உள் நுழைந்து கற்று, நம் நுண்மாண் நுழைபுலத்தால், செவ்வியல் தமிழின் தொன்மை, வன்மை, வளமை, சீர்மை, தனித்தன்மை யாவற்றையும் உலகம் ஏற்கும்படி சொல்ல வேண்டும். மேலே கூறிய அந்தணப் பெரியோர்களின் நற்கருத்துக் களைத் தொகுத்துக் கொண்டு, அவற்றிற்கும் மேற்பட நம் ஆய்வை உயர்த்த வேண்டும். தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், இரட்டைக் காப்பியம் போன்றவற்றையோ, பக்தி இயக்கக் காலத்துப் பாடல்களையோ நாம் இன்னமும் முழுமைபெற உள்நுழைந்து கற்று, அதன் சாரத்தை வெளிக்கொணர்ந்ததாக என்னால் கணிக்க முடியவில்லை. இவை யாவுமே இருளிடையே தோன்றி எழும் ஒளிக்கற்றைகளாகத்தான் தோற்றுகின்றன. இவற்றால் ஒளி விலகிற்று என்றோ , தமிழின் பெருமைகளை உலகறியச் செய்துவிட்டோம் என்றோ கூற முடியவில்லை. நம் அறங்கூறு அவையங்கள் - நீதி மன்றங்களில் இருப்பவர் கள், முற்றறிவுடைய கடவுளர்கள் அல்லர். அவர்களில் பல ருக்குத் தமிழின் சிறப்போ, செவ்வியல் இலக்கியச் சீர்மைகளோ, காலந்தோறும் ஏற்பட்ட தமிழ் வழிபாடு, தமிழர் சமய மேன்மைகள் பற்றிய வரலாற்றறிவோ சிறிதளவு மில்லை. கல்வி உளவியல் கூட அறியாதவர்களும்கூட, பரிந்துரைகளின் பேரில் நீதிபதிகளாகி விடுகின்றனர். அதனால் பல சமயங்களில், ஒருவர் சொன்ன தீர்ப்பை மற்றொருவர் அடியோடு மறுக்கின்றார். ஒருவரை ஒருவர் மறுப்பது, நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? உலகிலுள்ள எல்லாமே அறிந்தவர், மறுத்தற்கியலாதவர்; தாய்மொழியையும் நீதியையும் கூடச் சிதைப்பதற்கு அவருக்கு உரிமையுண்டு என்றெல்லாம் கற்பனையில் மிதக்கவிட்டதால், ஆணவமலம் தலைக்கேறி விடுகிறது. எவனும் அவனவன் சொந்த வீட்டிற்கூடத் தாய்மொழியில் வழிபாடோ, சடங்கோ செய்யக் கூடாதெனத் தடை விதிப்பவர் , எவ்வாறு, மக்களாட்சி யுள்ள நாட்டில் நீதிபதியாக இருக்க முடியும்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிராகத் 'தனிமனித உரிமையைப் பறிக்க ' இவருக்கு அதிகாரம்' கொடுத்தது யார்? வேறு நாடாக இருந்தால், இந்நேரம் இத்தகையவரைப் பதவியை விட்டுக் கீழே இறக்கி, உட்கார வைத்திருப்பார்கள்! இச் சூழ்நிலையில், இத் 'தமிழர் வரலாறு போன்ற நூல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இத்தகைய தவறான தீர்ப்புக்களை 'உண்மைதான்' என்று எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்களே? இந் நூல், இயல் 8இல் ஆகமங்கள் பற்றி வருவனவற்றை எல்லோரும் படித்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக, இன்றைய சூழ்நிலையில், இந்நூலில் வரும் இரண்டு பகுதிகள் நம் முறைமன்றத் தலைவர்களுக்கும் திருமடங்களின் அதிபர் களுக்கும் அறிவிக்கப்பட்டுப் பாடமாகச் சொல்லித்தரப்பட வேண்டும் மூலநூலில் தலைப்பு என்ன தெரியுமா? The Rise of the Agamas - The Agamas vs the Vedas. (pp. 103 - 115 of English original) (தமிழாக்கநூலில் பக்கங்கள் 131-139 வரை ). இதன் மூலம் வேதம் வேறு, ஆகமம் வேறு என்பதை நிறுவு கின்றார், சீனிவாசர். இன்று வேதாகமம் என்று சேர்த்துப் பேசிக் குழப்புபவர்கட்கும், ஆகமப்படி வடமொழியை வழிபாட்டுச் சடங்கு மொழி எனச் சாதிப்பவர்களுக்கும் முகத்தில் பலமுறை அறைந்தாற் போன்ற விடைகள் இதிலுள்ளன. ஆகமச் சடங்குகளில் வேதமந்திரங்களுக்குத் தொடர்பில்லை; இவை 'தஸ்யூக்கள் ' உடையவை; ஆரிய வேத வேள்விகள் வேறு; ஆகம வழிபாட்டு முறைகள் வேறு; கோயிலையும் உருவ வழி பாட்டையும் அத்துவைத வேத வைதிகர்கள் வெறுத்த காலமுண்டு; வேள்விகள் குறையக் குறைய, இவ் வேதாந்திகள் வருமானம் கருதியே கோயில்களில் நுழைய முற்பட்டனர் என்பன போன்ற, தெளிவான கருத்துக்கள் இதிலுள். இதனையும் சைவ ஆகமங்கள் பற்றி மு. அருணாசலம் எழுதிய ஆங்கில நூலையும் மதிப்பிற்குரிய தரும்புர, திருப்பனந் தாள் ஆதீனங்கட்கும் தமிழ்வழி அருச்சனை, வழிபாடு, சடங்குகட்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், வழக்குரைஞர்கள், முறைமன்ற நடுவர்களுக்கும் அனுப்ப வேண்டும். ஒருவேளை இவற்றைப் படிக்க நேர்ந்தால், அவர்கள் திருந்த மறுத்தாலும், அவர்களின் உள்ளத்துள் இருக்கும் மனச்சான் றாவது, உயிர்ப்புப் பெறும். தருமபுர அதிபர், முதலில் தமிழில் கேட்பது முட்டாள்தனம், அபத்தம் என்றார்; அவரே மீண்டும் வடமொழியை வேண்டாமென்பது 'பாஷை துவேஷம்' என அருளுரை பகர்ந்துள்ளார். தமிழை மறுப்பது பாஷை துவேஷம் ஆகாது போலும். அவர் வழிபடுவதாக நம்பும் சிவனுக்கே இது வெளிச்சம். இந்நூலில் வரும் பிறிதொரு பகுதியையும் இத் திறனு ரையில் குறிப்பிடுவது, இன்றியமையாதது. இயல் 13, தமிழ் மக்கள் வாழ்க்கை நிலை பற்றியது. அதில் ஊராட்சி மற்றும் ஊர் வாழ்க்கை பற்றி ஒன்றரைப் பக்கம் ஓர் ஆய்வுரை உளது (இந்நூல். பக். 165 166). அதில் ஊர்ப் பொது இடம் பொதியில், பொதுவில் , மன்றம் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புத் தரப்படுகிறது. ''அங்கு ஒரு மரக்கிளை (கந்து, கந்தம் ) நட்டு அக் கந்தில் உறைந்த கடவுளை முரசு அடித்து வழிபட்டனர்." ''மன்றத்தில் ஆலமரம் முதலிய வற்றின் அடியிலும் கந்தத்திலும் உறைந்த கடவுள் யார்? புதுக்கற்காலத் திலேயே கல்லாற் செய்த லிங்கம் வழிபடப்பட்டது. உலோக காலம் தொடங்கிய பின்னர் (வட இந்தியாவில் செப்புக் காலம்; தென் இந்தியாவில் இரும்புக் காலம்) லிங்கம் தொடர்ந்து வழிபடப்பட்டது. ஹரப்பா, மொகஞ்சதா ரோவில் கிட்டிய சில கல் உருவங்கள் லிங்கம் - யோனிகளாக இருக்கலாம் என்றும், ஆரியர் இந்தியாவில் நுழைவதற்கு நெடுங்காலம் முன்னரே சிவனை லிங்கமாக வழிபடும் வழக்கம் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுவர் சர் ஜான் மார்ஷல் (இந்தியத் தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1925-26). மேலும் இப் பகுதியில் வடவர் 'ருத்ரனை வழிபட்டதையும் திராவிடர் சிவனை - லிங்கமாக அதற்கு முன்னரிருந்தே வழிபட்டதையும் குறிக்கும் சீனிவாசர், "முதலில் இருந்த கம்பங்களும் லிங்கங்களையே குறித்தன என்க. கம்பங்கள் இருவகையில் புனிதமாகக் கருதப் பட்டிருக்கும் : மரமும் புனிதம் ; லிங்கத்தைக் குறித்ததும் புனிதம்.'' இவ்வாறு வரும் இப்பகுதி கீழே விரிவாக விளக்கப்படுகிறது. தம்மில் தம் மக்கள் அறிவுடைமை' என்றார் நம் திருவள்ளுவர். இதுவரை வந்த இத்தகைய ஆய்வுகளில் கொள்ளத் தக்கனவும் உள; தள்ளத் தக்கனவுமுள். ஐயப்பாட்டிற்குரியனவுமுள; மேலும் தெளிவுபடத் தக்கனவு முள. நாம்தான் ஆழ்ந்து கற்று, மேன் மேலும் உலகிற்கு உண்மைகளை உணர்த்த வேண்டும். சுருக்கமாகச் சிலவற்றை இங்கு நினைப்பூட்டுவோம். 1. வடவர்க்கு, வேத வைதிக , அத்துவைத வேதாந்திகளுக்கு உருவ வழிபாடே இல்லை; உருவ வழிபாட்டை வெறுத்தவர்கள், பழித்தவர்கள் அவர்கள். 2. சிவனைப் பற்றிய குறிப்போ , தமிழர்களின் தெய்வங்கள் பற்றிய எவ்விதக் குறிப்போ வேதங்களில் இல்லை. 3. ருத்ர' - என அவர்கள் குறிப்பிடும் கடவுள் வேறு. மேலும் பிரஜாபதி, ருத்ரன், விஷ்ணு, இந்திரன் என வேதங்களில் அறை கூவி, அழுது புலம்பித் தங்களைக் காப்பாற்றுமாறு அழைத்த அவர்களின் கடவுளர்கள் எல்லோரும் மேலுலகத்தவர்கள். அவர்களுக்கு அக்கினி மூலம், உணவு முதல் உடைவரை மக்களிடமுள்ள, மக்களுக்குப் பயன்படும் பழவகை முதலான அனைத்தையும், மேலும் பசு, ஆடு, முயல், மான், ஆமை என உயிரினம் அனைத்தையும் வேள்வியில் போட்டு அனுப்புவதே அவர்கள் வழிபாடு. அருச்சனை, நமது வீட்டுச் சடங்குகள் யாவும் நம்முடையவை. தொடர்பற்றவற்றில் நுழைந்து கொண்டவர்கள், இன்று நம்மையும் நம் மொழியையும் நுழைய விடாது தடுக் கின்றனர். வரலாற்றுப்படி பார்த்தால் இதற்கு இரட்டை ஆயுள் தண்டனை கூடப் போதாது; மரண தண்டனை விதித்துப் பிறகு கருணை காட்டிக் குறைக்கலாம். தமிழர்கள் ஐந்து நிலத் தெய்வங்களை வழிபட்டனர். அவை இயற்கை வழிபாடு. அவற்றுள் நெய்தல் நில வழிபாடு, சுறா மீனின் எலும்பை நட்டு வழிபடுவது போன்று, சிறுசிறு வழிபாடுகளுடன் நின்று போனது. மருதநில வழிபாடு, இந்திர வழிபாடாகப் பொங்கல், மஞ்சுவிரட்டு போன்ற வற்றுடன் நிறைவுற்றது. குறிஞ்சி நில முருகன் - செவ்வேள் வழிபாடு, சிவவழிபாடு ஆனது. முல்லை நில மாயோன் வழிபாடு, திருமால் - கண்ணன் வழிபாடாக வளர்ச்சி கண்டது. கொற்றவை வழிபாடு - அம்மன் வழிபாடாகிச் 'சக்தி' வழிபாடானது. 5. இவை தவிர, நடுகல் வழிபாடு முன்னோர் வழிபாடாகிக் குல தெய்வ வழிபாடாக உருப்பெற்றது. 6. ஊர் நடுவே மன்றம், பொதியில், அம்பலம் அமைத்து, அதுவே ஊராட்சி செய்யவும் முறைமன்றமாய் வழக்கு களைத் தீர்க்கவும் பயன்பட்டதுடன், ஊரார் கூடி வழிபடும் இடமாகவும் ஆனது. அங்கு ஆல் போலும் மரம் நட்டு, அதன் நிழலில் கூடியதுடன், அம் மரங் களையே கடவுள் என வழிபட்டனர். காலப்போக்கில் மரத்தறியை - கந்து என நட்டு அதை வழிபட்டனர். அக்கந்து, அசையாமலிருக்கச் சுற்றிலும் மேடை கட்டினர். இக் கடவுளைப் பற்றி, நூற்றுக் கணக்கான இடங்களில் சங்கப் பாடல் குறிக்கின்றது. கடவுள், இயவுள், முதுமுதல்வன், தென்முகக் கடவுள் என்றும் தொல்முது கடவுள், ஆலமர் செல்வன் என்றும் வருவன மிகப்பல. சேயோன் - சிவந்த நிறமுடைய சிவனுமாம். சேய் - குழந்தை, முருகனுமாம். இவை ஒருபாற்பட்டன. மாயோன், மாயோள் - கொற்றவை என மாலியமும் கொற்றவை யியமும் ஒரு பாற்பட்டன. 'பலர் தொழ. வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் ' (பட்டினப்பாலை 249) 'கடவுள் போகிய கருத்தாட் கந்தத்து ' (அகம். 307) 'மாத்தாள் கந்தின் ' அகம். 287) 'மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்' திருமுருகு. 226 கந்து, மரத்தறி அசையாமலிருக்கவே, "மாத்தாள் - பெரிய அகன்ற அடிப்பாகம் அமைக்கப்பட்டது. இந்த ஆதீண்டு 'தறி' போன்று இருந்ததற்கே, 'ஆவுடையார்' என அடிப்பாகம் அமைக்கப்பட்டது. அப்பரும் 'கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே' என்று பாடுகின்றார். இதனையே, பிற்காலத்தில் கோயிலாக்கி, பல்வேறு இறைத்திருமேனிகளாக வடிவமைத்து, அரண்மனை அனைய கோயில் வரை படிப்படியாக வளர்த்து, அரசனுக் குரிய அத்தனை 'உபசாரங்களையும்' - பேணிப் போற்றும் முறைகளனைத்தையும் இறைவனுக்குச் செய்தனர். இதனால் கோயில், இறைவன் ஆகிய இரு சொற்களும் அரசனுக்கும் ஆண்டவனுக்கும் பொருந்தியது. இவை வடவர் அறியாதவை; வடமொழி நூல்களிற் காணாதவை. 8. இந்த ஆரியர்களிடம் குரூரமான, கொடிய, தீய பழக்கம் ஒன்று உண்டு. தமிழர்களிடமிருந்த அனைத்துக் கலை, கருத்து, தொழில், வழிபாடனைய செல்வக் கருவூலங் களை, சமற்கிருதப் படுத்தி விடுவது. இவற்றைக் கண்ட றிந்து, மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். மாமல்லபுரம் - மகாபலிபுரம், மயிலாடுதுறை - மாயூரம் ; அஞ்சொலாள் - அபயாம்பிகை ; பெருவுடையார் - பிருகதீஸ்வரர் ; அண்ணாமலையார் - அருணாசலேஸ்வரர், தாயுமானவர் - மாத்ருபூதம்; வாடா மலர்மங்கை - அசோக குஸ் மாம்பாள் - இப்படி ஆயிரம் இறைவன் இறைவி பெயர்களை, ஒரு பெரும் அகர முதலியாகத் தொகுக்கலாம். ஆகமம் முதலாக அனைத்தையும் சமற்கிருதமாக்கினர் என்பதற்கு இஃது ஓர் அடிப்படைச் சான்று. இதன் கொடுமை முன்பே தொடங்கியது. தமிழர் வணங்கிய கந்து - தறி - ஆகிய இது அருவமும் உருவமுமாய் அமைந்த கடவுள் அடையாளமானது. ஆனால் இதைக் கேவலப்படுத் தவோ, அறியாமையாலோ, வடவர் 'லிங்கம்' எனச் சமற் கிருதப் படுத்தினர். அஞ்சொலாள் என்பதன் பொருள் அறியாத புல்லர்கள் 'அபயாம்பிகை' (அஞ்சாதவள் - பயமற்றவள்) என மொழிபெயர்த்த கதைதான் அது. தமிழ்ப் பேரகராதி தரும் பொருள் காண்க: இலிங்கம் - அடையாளம், ஆண்குறி (புல்லிங்கம், ஸ்திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம் ) இலிங்க சூலை - ஆண்குறியைப் பற்றி வரும் ஒரு நோய். இலிங்கவிரணம் - ஆண்குறி நோய்வகை. தமிழர் வழிபட்டதனை 'ஆண்குறி' என்றும் அதைத் தாங்கும் பீடமாம் ஆவுடையாரைப் பெண்குறி என்றும் கூறி, தமிழர்கள், உலக உற்பத்திக்குக் காரணமானவற்றை, உருவ வழிபாடாக்கினர் எனக் கற்பனைக் கதைகட்டி விட்டனர். பின்னர் இதனையே அனைத்து நூல்களிலும் எழுதி, மேனாட்டாரும் இதைப் பின்பற்றியே பல ஆய்வுரைகள் எழுதிக் குவித்துள்ளனர். இன்று சொக்கலிங்கம், இராமலிங்கம், சிவலிங்கமென ஆயிரமாய்க் கிளைத்துவிட்ட இதனை எழுதவே 'கூச்சமாக வுளது. சிவ வழிபாட்டைச் சூத்திரர்களின் வழிபாடென்றும் மிகவும் இழிவானதென்றும் வடவர்கள் கருதிப் பழித்தனர். அவர்கள் செய்த வேள்விகளில், சிவனை அழைப்பதைத் தவிர்த்தனர். பின்னர், தம் வாழ்வு கருதி, சிவவேள்வி என்றும் சிவருத்ரன் என்றும் மாற்றிக் கூறிக் கொண்டனர். இவற்றுக்கான சான்றாதாரங்கள் மிகப்பலவுள. அறிஞர் பி. இராமநாதன் எழுதியுள்ள ஆய்வு முன்னுரை பல்வேறு அறிஞர்களின் இன்றைய கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறது. நம் இளைய ஆய்வாளர்களை , இத்துறையில் அது ஆற்றுப்படுத்தும் என நம்பலாம். தமிழ் கற்கும் நம் பிள்ளைகள், இத்துறைகளில் புகுந்து உழைக்கும் காலமே தமிழின் பொற்காலமாக மலரும். பரிசும் பட்டமும் பதவியும் தேடி வரட்டும். அவற்றிற்கென்றே 'அலைவது பயன் தராது. இந்நூலைப் படிப்பவர்களுக்கு, பல ஆய்வுக் களங்களுக் கான மூலக்கூறுகள் நிரம்பக் கிடைக்கும். அவற்றைப் பற்றிக்கொண்டு, தமது தன் முயற்சியால், இவற்றை மேலும் விளக்குவதும் அவற்றை உலகறியச் செய்வதும் தமிழராகப் பிறந்த அனைவரின் கடமையாகும். முனைவர் தமிழண்ண ல் ஏரகம், சதாசிவநகர், மதுரை - 625 020. பதிப்புரை இவ்வுலகில் தமிழனைப்போல் முன்பு உயர்ந்தவனும் இல்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை. முதன்முதல் நாகரிக விளக்கேற்றி நானிலம் முழுதும் அகவொளி பரப்பியவன் தமிழனே!" என்பதைத் தாம் எழுதிய தமிழர் வரலாறு நூல் முகவுரையில் மொழி நூல் மூதறிஞர் பாவாணர் பதிவு செய்துள்ளார். மொழி - இன - நாட்டு வரலாறு என்பது வீட்டிற்கு எழுதப்படும் ஆவணம் போன்றதே. இவ் ஆவணம் உண்மை வரலாறாக இருக்க வேண்டும். History of the Tamils from the earliest times to 600 AD என்னும் உண்மை வரலாற்றை தமிழறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் 1929 இல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் தமிழாக்கம் செய்து தமிழர் வரலாறு எனும் தலைப்பில் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையில் வழங்கியுள்ளார். இந்நூலை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், பிடி சீனிவாச ஐயங்கார் ஆகிய பெருமக்கள் பாவாணரால் போற்றப்பட்டவர்கள். முன்ன வர் எழுதிய Origin and Spread of the Tamils என்னும் ஆங்கில நூலை அறிஞர் பி. இராமநாதன் தமிழாக்கம் செய்து தமிழரின் தோற்றமும் பரவலும் எனும் தலைப்பில் முன்னரே நூலாக வெளியிட்டுள்ளோம். நூலாசிரியர் பி. டி. சீனிவாச ஐயங்கார் பி.டி. சீனிவாச ஐயங்கார் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அருகிலுள்ள புள்ளை பூதங்குடி என்னும் ஊரில் 1863 இல் பிறந்தார். மும்மொழி வல்லுநர். தமிழர் வரலாற்றை சங்க இலக்கியச் செய்திகள் அடிப்படையில் விரிவாக ஆராய்ந்து எழுதிய வரலாற்று அறிஞர்களுள் குறிப் பிடத்தக்கவர். தமிழர், தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்பதை வலியுறுத்தியவர். ஆரிய நாகரிக வருகைக்கு முன்னரே தமிழர் நாகரிகம் பெற்ற மூத்த குடியினர் என்பதை உலகறியக் கூறியவர். தாய் மொழியே தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதும் அன்றே அவர் கருத்தாகும். தமிழர்கள் மூத்த குடியினர் என்பதையும் இந்த மண்ணுக்குரிய மக்களே என்பதையும் நடுநிலை நின்று கூறிய உயர்தமிழறிஞர். தமிழக வரலாறு தொடர்பாக பல நூல்கள் வெளி வந்துள்ளன. இருப்பினும் இவர் ஆங்கிலத்தில் எழுதிய History of the Tamils (தமிழர் வரலாறு) என்னும் இந்நூல் தனிச்சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன்பு இந்நூலுக்கு புலவர் கா.கோவிந்தன் அவர்கள் செய்த தமிழாக்கம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வழி வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் பி. இராமநாதன் பாவாணர் வழிநிலை அறிஞர். ஆங்கிலம் , தமிழ் இருமொழிகளிலும் வல்லவர். பரந்த படிப்பும், ஆழ்ந்த கல்வியும் கொண்டவர் என்பதை அவர் நூல்களில் காணலாம். தம் நூல்களிலும் மாநாட்டுக் கட்டுரைகளிலும் அறிவுலகத்தின் பல்வேறு புலங்களில் (வரலாறு, தொல்லியல், நிலப் பரப்பியல், மொழியியல், மாந்த இனத் தோற்றம், மரபணுவியல், நாஸ்தி ராதிக் / யூரேசியாடிக் / மாந்த முதன் மொழி ஆய்வுகள்) இன்று பன்னாட்டு அறிஞர்கள் ஏற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ், தமிழர், தமிழகம் சார்ந்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். அளப்பரிய தமிழ் ஆற்றலுக்கு இவர்தம் நூல்களே சான்றாக நின்று நிலவுகின்றன. இவர் இந்த நூலை ஆழ்ந்த தமிழ் - ஆங்கிலப் புலமையோடு ஆங்கில மூலத்தின் பொருள் தமிழில் தெளிவாக முழுமையாக வரும் வகையில் தமிழாக்கம் செய்துள்ளார். மூலநூலில் புறநானூற்றுப் பாடல்கள் பலவும், பிற சங்க இலக்கியப் பாடல்கள் சிலவும், தமிழிலும் ஆங்கிலப் பெயர்ப்பிலும் தரப்பட்டிருந்தன. அவற்றை அவ்வாறே தருவது இந்நூலைக் கற்போருக்குப் பெரும் பயன் தராது. எனவே அக்கருத்துக்களைச் செவ்வனே நிரல் படுத்தித் தந்துள்ளார். மூல நூலின் கருத்துக்கள் எவற்றையும் விடவில்லை. சில இயல்களுக்குச் சுருக்க மொழி பெயர்ப்பு தரப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளரின் நீண்ட முன்னுரை பல துறை இன்றைய அறிஞர் கருத்துக்களைத் தருகிறது. அது தமிழகப் பண்டை வரலாற்றை அறியச் சிறந்த அறிமுகமாகும். சாதியாலும் மதத்தாலும் கட்சியாலும் பிளவுண்டு ஒற்றுமையின்றி நிலை குலைந்து நிற்கிறது தமிழ்க்குலம். தமிழினம் ஆற்றல் மிக்க இனமாகவும் , வலிமை மிக்க இனமாகவும் உலக அரங்கில் தலைநிமிர வேண்டுமென்றால் உணர்வுடைய தமிழர்கள் நெருங்கினால்தான் தமிழர்க்கு விடிவு காலம் ஏற்படும். "உலகெங்கும் சிதறியடிக்கப்பட்ட யூதர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின், இழந்த தம் தேசத்தை மீட்டுக்கொண்டு, புதிய வலிமை பெற்று வருவது நமக்கு முன்னோடி ''இரண்டாம் உலகப்போரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட சப்பானியர், இன்று மாபெரும் வணிக வல்லரசை உருவாக்கி, உலகத்தையே தம் தயாரிப்பு களால் மூழ்கடித்து வரும் சாதனை நமக்கு முன்னோடி "கிரேக்க, ரோமானிய வரலாறுகளைச் சொல்லிக் காட்டியே ஐரோப்பிய வெள்ளை இனம் உயர்ந்தது. சப்பானியரைச் சுட்டிக் காட்டியே சீன மக்கள் ஒருங்கு கூடிப் புதுநாட்டை உருவாக்கினர். அரேபியரைக் காட்டியே யூத இனம் வலுவைத் திரட்டியது. ஆங்கிலேய இன முன்னணியைக் காட்டியே செருமானிய இன மேன்மை வளர்க்கப் பட்ட து.'' - கறுப்புத்தமிழனே , கலங்காதே (இ.ஜே. சுந்தர் 1996 பக். 41. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். அறிவு வழியில் அனைத்தையும் தீர்மானிக்கும் புதிய தமிழ்த் தலைமுறை நம்பிக்கையுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது. முன்னோரின் ஆற்றல் மிகு வரலாற்றை இளந்தலைமுறையினர் தெரிந்து கொண்டு மானத்தோடு வாழ்வதற்கு உயிர்த்தெழ வேண்டும். வளர்ச்சியடைந்த இனங்களைப் பார்த்து இளம் தமிழர்கள் முன்னேற வேண்டும். கன்னடருக்குள்ள மொழி - இன - நாட்டுணர்ச்சியும், ஒற்றுமையும், மறமும், மானமும் இற்றைத் தமிழருக்கு வரவேண்டும். வந்தால்தான் தமிழ்த் தேசிய இனத்தை வலிமை வாய்ந்த இனமாகக் கட்டியமைக்க முடியும். அத்தன்மைகள் தமிழரிடையே வளர இந்நூல் பயன்படும் என்று நம்புகிறேன். இந்நூலுக்குத் தக்க மதிப்புரை வழங்கிப் பெருமைப் படுத்திய பெருந்தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இந்நூலைக் குறுகிய காலத்தில் கணினி செய்து உதவிய 'குட்வில்' செல்விக்குப் பாராட்டு. பொன்னிலும் மண்ணிலும் பெண்ணிலும் நெஞ்சைப் புகுத்தல்லால் தன்னல நீக்கிப் பெரியார் நெறிநின்று தாய்நிலத்தை முன்னுற மீட்டுத் தமிழ், கலை, வாழ்க்கை முறை தழைக்கத் தன்மானம் காக்க வேண் டாமோ அருமைத் தமிழர்களே? என்ற பாவேந்தர் உணர்வுகளின் ஏக்கத்தை என்று நாம் நிறைவு செய்வோம். இந்நூல் புத்தம் புது முத்தெழுத்துக்களைத் தாங்கிப் புதிய பொலிவோடு வெளிவருகின்றது. கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் தமிழர் வரலாறு (கி.பி.600 வரை ) முன்னுரை (இன்றைய பார்வையில் தமிழர் வரலாறு கி.பி 800 வரை பி. இராமநாதன் க.மு, ச.இ. க. வரலாற்றறிஞர் பி.டி சீனிவாச ஐயங்கார் ஞா. தேவநேயப் பாவாணர் 1967ல் எழுதிய "தமிழ் வர லாறு" நூலில் கிளர்நிலைப்படலம்' என்னும் இயலில் கிமு 100 முதல் இன்று வரை தமிழ் - தமிழர் நலனுக்கு உழைத்த நாற் பதின்மரைப் பாராட்டியுள்ளார். அவர்களுள் "தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்று மறுக்கொணாத சான்று காட்டி ஆங்கிலத்திற் சிறுநூலும் பெருநூலும் முதன் முதலாக வரைந்தவர் " ஆன பி.டி. சீனிவாச ஐயங்காரும் (1868-1931) ஒருவர். தமது 1913 கட்டுரையில் "திராவிடன் ஆகிய நான்" (Being myself a Dravidian) என்று தம்மை அழைத்துக் கொண்டவர் சீனிவாசர். தமிழண்ணல் (2004) அவரை, "தமிழ், வடமொழி ஆங்கிலம் மூன்றிலும் முழு ஆளுமையுள்ள புலமை உடையவர்' ''சமற்கிருத மொழியைப் பழுதறக் கற்ற முழுதுணர் பேரறிவாளர்” "தெளிந்த சிந்தனையுடன் நடுநிலை பிறழாது பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். தொடர்ந்து எழுதுவார்க்கு இன்றும் இனியும் அவை வழிகாட்டுவன" எனப் பாராட்டியுள்ளது மிகையன்று. சீனிவாசர் எழுதிய பெரு நூல்கள் வருமாறு: 1912. Life in Ancient India in the age of the Mantras. 1920. Pre-Aryan Tamil culture 1924. The past in the present 1927. The Stone age in India. 1929. History of the Tamils - from the earliest times to 600.A.D. pplviii; 634. (முந்தைய நூல்கள், கட்டுரைகளின் அடிப்படைக் கருத்துக்கள் இந்நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.) 1942. Advanced History of india - Hindu period (Till 600 A.D.) Ed by gurty Venkata rao (Reprunted 2007) நான்காவது நூலின் சுருங்கிய தமிழாக்கமே இந்நூல். சீனி வாசரே தமது முன்னுரையில் குறித்துள்ளவாறு அவர் நூலில் மூன்றில் ஒரு பகுதியில் ஏராளமான சங்க நூற் பாடல்கள் முழுமையாகத் தமிழிலும் ஆங்கில மொழியில் பெயர்த்தும் தரப் பட்டுள்ளன. (தமிழறியாத வரலாற்றறிஞர் நலன் கருதி அப்படித் தரப்பட்டன). இம்மொழிபெயர்ப்பில் அப்பாடல்களின் தமிழ் வடிவமும் ஆங்கிலப் பெயர்ப்பும் முழுமையாகத் தரப்பட வில்லை; தேவையுமில்லை; பாடல்களின் முதன்மையான கருத்துக்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. மூலநூலின் 634 பக்கங் கள் தமிழாக்கத்தில் 200 பக்கங்களாகச் சுருங்கியதற்கு முக்கிய காரணம் இதுவே. மூல நூலின் கருத்துக்கள் எவையும் விடப்பட வில்லை. தொல்காப்பியம் உட்பட்ட சங்க நூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதலில் தமிழக வரலாறு எழுதியவர் சீனிவாசரேயாவார். அவர் பயன்படுத்திய வடமொழி, பிறமொழி நூல்கள் முதலியவற்றின் விவரங்களை அவருடைய அறிமுக உரையில் காண்க. 2. தமிழர் தென்னாட்டுப் பழங்குடிகள், பழங்காலத்தில் இந்தியா முழுவதும் தமிழிய மொழிகளே வழங்கின; தமிழ நாகரிகம் வடக்கு நோக்கிப் பரவிய பொழுது உருவானதே சிந்து வெளி நாகரிகம் , காலங்காலமாக இந்தியாவின், இந்திய நாகரிகத் தின் பண்பாட்டின் இதயமாகத் தென்னிந்தியாவே இருந்து வந்துள்ளது - இவையெல்லாம் 1929ல் சீனிவாசர் முடிவுகள். கடந்த 77 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நிகழ்ந்துள்ள வளர்ச்சிகள் அம்முடிவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. எவ்வெத் துறைகள்? தொல்லியல் (சிந்துவெளி நாகரிக அக ழாய்வு உட்பட); கல்வெட்டாய்வு (கிமு 500லிருந்து தமிழ்க் கல்வெட்டுகள், பொறிப்புகள் உட்பட) பூமியின் மேற்பரப்பு வரலாறு குறித்து அறிவியல் இன்று உறுதியாக இறுதியாக ஏற்றுள்ள கண்ட நகர்வு மற்றும் பூமிப் பாளங்கள் Continents in Motion, Plate Techtonics கோட்பாடுகள்; மாந்த இனத்தோற்றம் - பரவல் பற்றிய ஆய்வுகள் (கடந்த 20 ஆண்டுகளில் மாந்த மர பணு அறிவியல் தந்துள்ள எவரும் மறுக்கொணாத சான்றுகள் உட்பட); முதல் தாய் மொழி மற்றும் நாஸ்திராதிக் மொழிப் பெருங்குடும்பம் சார்ந்த மொழியியல் ஆய்வுகள் வரலாறு: சங்க இலக்கிய ஆய்வு ; வடமொழி ஆய்வுகள் முதலிய துறைகளே அவை. அத்துறைகளின் இன்றைய வளர்ச்சி நிலை அடிப்படை யில் தமிழ், தமிழர், தமிழக வரலாற்றை மொழிபெயர்ப் பாளனுடைய இம்முன்னுரை சுருக்கமாகத் தருகிறது. (அத் தகைய முன்னுரையின்றி 1929ல் எழுதியதன் தமிழாக்கத்தை மட்டும் தருவது வரலாற்று வரைவியல் (Historiography) ஆய்வு மாணவர் ஒரு சிலருக்கு உதவலாமேயன்றித் தமிழக வரலாறு பற்றி இன்று அறிஞருலகம் என்ன கருதுகிறது என்பதை அறிய விரும்பும் பொதுமக்களுக்குப் பயன்படாது). பல்வேறு துறை களின் இன்றைய வளர்ச்சி நிலையில் 1929ல் சீனிவாசர் வெளி யிட்ட மூலநூற் கருத்துக்கள் சில இன்று ஏற்கத்தக்கனவல்ல. எனவே நூலின் தமிழாக்கத்தைப் படிக்கும் பொழுது இம் முன்னுரையிற் கண்டுள்ள இன்றைய நிலைமையையே பொது வாக அறிவுலகம் ஏற்றுள்ளது என்பதை நினைவிற் கொள்க. 3. வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந் திருக்கலாம் என்பதைப் பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தன் ஒருவன் தனது மனத்தில் உருவாக்கிக் கொள்ளும் எண்ணமே அது. எழுதுபவனுடைய அறிவுநிலை, மனநிலை, அவனுடைய சமுதாயப் பார்வை, அவனுக்குக் கிட்டும் ஆதாரங் கள் ஆகியவற்றுக்கேற்பவே ஒரு காலத்தைப்பற்றி அல்லது ஒரு பொருளைப்பற்றி ஒருவன் வரலாறு எழுதுகிறான். எனவே ஒவ்வொரு காலம், பொருள் பற்றி பல்வேறு வரலாறுகள் இருக்கக் கூடியதே. வரலாற்றாசிரியன் பட்டறிவு, பற்பல விஷயங் களைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவான அவனுடைய மனம்தான் அவன் எப்படி வரலாற்றை எழுதுகிறான் என்பதை நிர்ணயிக்கிறது; விருப்பு வெறுப் பற்ற வரலாற்றாசிரியன் முயற்கொம்புதான். எனவே எந்த வர லாற்று நூலும் முழுமையான அப்பட்டமான உண்மையைக் கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் நிர்ணயித்து விட்டதாக எண்ணிவிடக் கூடாது. வரலாற்றாசிரியன் அல்லது அவனைப் பயன்படுத்துபவர்கள் உள்ளத்தில் வெளிப்படையாகவோ (அல்லது அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனத்திலோ) உள்ள குறிக்கோள்களுடன் தான் வரலாறு எழுதப்படுகிறது. அக்குறிக் கோள்கள் பிற இனங்களை, குழுக்களைக் கட்டுப்படுத்துதலும் வசப்படுத்துதலும்; சமுதாயத்திற்கு இலக்குகளைக் காட்டி ஊக்குவித்தல் ; குழுக்கள், வர்க்கங்களுக்கு உணர்ச்சியூட்டுதல், அதிகாரத்தை ஏற்கெனவே கையிற் கொண்டுள்ளவர்களுக்கு வலுவூட்டுதல், அதிகாரமில்லாதவர்களிடையே இப்பொழு துள்ள நிலைமையே சரி என்னும் பொந்திகை மனநிலையை ஏற்படுத்துதல் போன்றனவாம். வரலாற்றை மறப்பவர்கள் தாங்கள் பட்ட இன்னல்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பெறுவர். இப்பத்திக்கான சில ஆங்கில மூலங்கள் வருமாறு: History is a reconstruction of elements of the past in the mind of a human being of a later generation..... In principle there will be multiple histories of any given period, each congruent to the mental world, social purposes, and sources available to the person who creates it.. . Since the recreation of the past takes place in the mind of the individual historian which has been shaped by his personal experience and world view the unbiased historian is an unattainable ideal...... By the very nature of the historical discourse there can be no final truth - Gary Bechman “The Limits of Credulity" Journal of American Oriental Society 1253 (2005) ("History") is always a created ideology with a purpose, designed to control individuals or motivate societies, or inspire classes...... to strengthan the purpose of those who possessded power... and reconcile those who lacked it. - J.H. Plumb (1969) The death of the past (quoted by Beckman) Those who disregard the past are bound to repeat it - George Santayana 4. தமிழர்கள் உலகில் இன்றுள்ள மற்ற எந்த மொழி, பண் பாட்டையும் விட அதிகத் தொன்மையானதும் இடையீடு இல்லாததும் ஆன மொழி, பண்பாட்டின் பிறங்கடைகள் ஆவர். மாந்த இன நாகரிக வளர்ச்சியின் மிகச் சிறந்த இயல்களில் ஒன்று தமிழர் மரபுச் செல்வம் ஆகும். இன்றுள்ள மொழிகளில் மாந்தன் தொன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் மட்டுமே. ''முதல் தாய் மொழி ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்கு ஒளி தரவல்லதும் தமிழே. ஒரு சிறு நிலப்பரப்பின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இப்படி மாந்த இனத்தின் ஒட்டுமொத்த இன, மொழி வரலாறு களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ள (தமிழகம் போன்ற பகுதிகள் உலகில் மிகச் சிலவே; தமிழ் தனித் தன்மை வாய்ந்தது. எஸ் ஏ டைலர் கூறியுள்ளது போல் இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி – பண்பாடு ஆகியவையே (S.A. Tyler. "India, mAnthropological perspective (1973) "All of Indian civilization is built on an underlying base of Dravidian language and culture') இந்திய வரலாற்று ஆய்வு களுக்கும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. தமிழ் என்னும் சொல்லின் திரிபே திராவிடம் (தமிழ், தமிள, த்ரமிள், த்ராமிட த்ராவிட). திராவிட மொழிக் குடும்பம் என அழைப்பது தமிழிய மொழிக் குடும்பத்தையே. தொல் திராவிடம் (Proto-Dravidian) என்று வண்ண னை மொழி நூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றன என்பதும், பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்பட வேண்டும் என்பதும், பாவாணர் கொள்கை . தமிழின் திரிபுகளே பிற திராவிட மொழிகள். பழந் தமிழினின்றும் வேறுபட்ட ''தொல் திராவிடம்'' என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே இம்முன்னுரையில் திராவிடம், தொல் திராவிடம் எனக் குறிப்பிடப்படுவன வெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாகக் கொள்க. தமிழ், தமிழர் வரலாற்றைச் செவ்வனே அறிய மாந்தர் இனத் தோற்றமும் பரவலும்; மொழியின் தோற்றமும் பரவலும் பற்றி இன்றைய பன்னாட்டு அறிஞர் ஏற்றுள்ள கருத்துக்களைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. அவற்றை அடுத்து வரும் பகுதிகளில் காண்போம். உ . மாந்த இனத்தோற்றமும் பரவலும் 5 புடவியின் (பிரபஞ்சத்தின்) அகவை சுமார் 1400 கோடி ஆண்டு வரை இருக்கலாம். உலகம் உட்பட ஞாயிற்றுக் குடும் பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகட்கு முன்னர் தான். முதலில் தோன்றியவை 'பாக் டீரியா' போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடி கொடிகளும் விலங்கு - பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலக்கம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டுப் பெயர் சூட்டப் பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப்படாதவையும், பெயர் சூட்டப்படாதவையும் (குறிப்பாக நிலைத்திணை, நுண் ணுயிர்கள், சிற்றுயிர்கள்) மும்மடங்கு இருக்கும் என்று அறிவிய லார்கள் கருதுகின்றனர். இன்றைக்கு 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும், ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. (மிகப் பெரிய விண் கொள்ளிகள் (Meteors) உலகில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய எலி போன்ற பருமனுடைய) விலங்கிலிருந்து படிமலர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மாந்தனுக்கும் மூதாதை யான இலெமூர் (Lemur) விலங்கு (ஏறத்தாழ 250 கிராம் எடை உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். (பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள் தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டும், கரையான் தோன்றி 28 கோடி ஆண்டும் ஆகின்றன) பக்கங்கள் 6-7 க்கு நடுவே ஒட்டியுள்ள 'புவியின் தோற்றத்திலிருந்து இக்கால மாந்தன் வரை" என்ற விவரப் படத்தை காண்க. 6. மாந்தன் எப்படித் தோன்றினான்? மாந்தக் குரங்கினத் துக்கும் (சிம்பன்சி , கொரில்லா) மாந்தனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 இலக்கம் ஆண் டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மாந்தர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப் பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே ) ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் அல்லது தற்கால மாந்தர் என்ற (Home Sapiens Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார் அனைவரும் ஏற்ற முடிவு (Cavalli Sforza and others: The history and geography of Human genes, 1994). ஏறத்தாழ மாந்தனையொத்த "முன்மாந்த (Hominid)" இனங்கள் கடந்த 48 இலக்கம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல இலக்கம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன், பீகிங் மாந்தன், சாவக மாந்தன், அத்தி ரம்பாக்கம் பாசில் மாந்தன் ஆகியவர்கள் (ஏறத்தாழ 3 இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சார்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் (Neandarthal) இனமும் முன்மாந்த இனமே. இந்த "முன்மாந்த இனங்கள் " எவற் ரிடையேயும் "மொழி" உருவாகவே இல்லை (None of them had the faculty of speech) 7. இப்பொழுதுள்ள மாந்தர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மாந்த இனம், கடந்த ஒன்றரை இலக்கம் ஆண்டு களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின் வருமாறு பரவியது - அதாவது, சைபீரியாவுக்கு இன்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னரும் ஐரோப்பாவுக்கு '' 40000 வட தென் அமெரிக்காவுக்கு 30000 - 12,000 ஆத்திரேலியாவுக்கு 50,000 சப்பானுக்கு 30,000 நியூகினி தீவுக்கு 32,000 பசிபிக் தீவுகளுக்கு 4000 - 1000 (மைக்ரோனிசியா, பாலினீசியா) பரவினர் என்பது வல்லுநர் கருத்து ஆகும். இதை விளக்கும் நிலப்படம் 8 ஆம் பக்கத்தில் உள்ளது. கண்டங்கள் நகர்வுக் கொள்கையின் படி (Continental drift) கண்ட ங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ இப்போ துள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர், கண்டம் அளவுக்கு (Continental proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை . ஆயினும் பனியூழி முடிவில் கி.மு. 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம் சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதியாகிய கண்ட த்திட்டு (Continental shelf) ஏறத்தாழ - இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும் (தென் திசை உட்பட) சில நூறு கல் (மைல்) தொலைவும் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். ஆப்பிரிக்காவில் லிருந்து தற்கால மாந்தன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் ஆத்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம். ஜியாகிராபிகல் மாகசீன் செப்டெம்பர் 2006 இதழில் தற்கால மாந்தர் ஆப்பிரிக்காவை விட்டு தென்னிந்தியாவை யொட்டிய கண்டத்திட்டு வழியாகப் புலம் பெயர்ந்து சென்ற பாதையைக் காட்டும் நிலப்படம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் இப்பொழுது உள்ளது போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன வெனினும் நிலப்பகுதி சில நூறுமைல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் (Continental Shelf) ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் பிளெமிங் (2004). இன்றைய மாந்தனிடம் உள்ளவை 23x2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மாந்தன் வேறுபட்டவன் என்றாலும் மாந்தன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான்!). 8. கண்டங்கள் நகர்வுக் கொள்கை, மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் கழக நூல்களிற் காணும் கடல்கோள் செய்தி களை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்குத் தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்தியைக் கலித்தொகை 104ம் சிலப்பதிகாரம் காடு காண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய (கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) இளம்பூரணரும் இதைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுபடுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல் கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு: 1) ச. சோமசுந்தர பாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV ii) வி.ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு, தமிழியன் ஆண்டிகுவாரி II – 1 iii) மறைமலையடிகள் (1930) : மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் iv).. ஏ. எஸ். வைத்தியநாத ஐயர் (1929) : "கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள்": பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்ன ல் II -1 v) ஜே. பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூXI vi) ஹீராஸ் பாதிரியார் (1954) தொல் இந்தோ நண்ணிலக் கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக். 411-439 சதபத பிராமணம் 1, 8 முதலியவற்றில் கூறப்படும் "மனு பிரளயம் திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) உம் iv) உம் கூறுகின்றன. சுமேரியப் பிரளயக் கதைகூடப் பழந் தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (1) ம் (vi)ம் கருதுகின்றன. 9. இந்திய மாக்கடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும் கருதி அதற்கு "லெமூரியா" என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவிய லறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன? கண்டம் அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும் கடலுள் மூழ்கிட வில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். காந்திர தாவ் தமது "முக்கடற்புதிர்கள்" நூலில் இதை 1974லேயே சுட்டியுள்ளார். எனினும் இதை யாரும் கண்டுகொள்வதில்லை! ''தொன்மை நாகரிகங்களைப் படைத்த மாந்த இனங் களைக் கொண்டிருந்த (கண்டம் போன்ற பெருநிலப்பரப்புகள் எவையும் எந்தக் காலத்திலும் இந்தியா, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம்". “It is highly improbable that big land masses, inhabited by large numbers of people who created ancient civilisations ever existed in the Indian, Pacific or Atlantic Oceans". (p267) இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and Plate techtonics)யாகும். இதனை விளக்கும் உலகப் படங்கள் - இரண்டை , பக்கங்கள் 11 - 12 இல் காண்க. அடுத்த பக்கங்களில். ஆயினும் கி.மு. 8000ஐ ஒட்டி உரம் (WURM) பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு, முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கி விட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தி யாவையும் இணைத்த வால் போன்ற நிலப்பகுதிகளும் சில (பின்னர் மூழ்கி விட்டவை) இருந்திருக்கலாம் எனவும் கூறப் படுகிறது. (வால்ட ர் பேர் சர்வீ ஸ் ; The Roots of Ancient India, 1971). இலெமூரியாக் கண்டம் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூட ச. சோமசுந்தர பாரதி, மயிலை சீனி வேங்கடசாமி, எம். ஆரோக்கியசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவின தன்று; சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டுள் ளனர். கா. அப்பாத்துரையாரும் 'கடல் கொண்ட தென்னாடு' என்று குறிப்பிட்டதை உணர்க. இப்பொழுது இலெமூரியாக் கண்டக் கொள்கை ஆதாரமற்றது என்று நிறுவப்பட்டு விட்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சுமதி இராமசாமி தனது கற்பனைப் புவியியலாளர்களும், பேரழிவு வரலாறு களும்; மூழ்கிவிட்ட இலெமூரியா : Fabulous geographers, catastrophic Histories : The Lost Lemuria (2004: பெர்மனென்ட் பிளாக், டெல்லி) என்னும் நூலில் கடல் கொண்ட தென்னாடு' பற்றி எழுதிய தமிழறிஞர்கள் அனைவரையும் தாக்கி ஏளனம் செய்துள்ளார். 1950களுக்குப் பின் "லெமூரியாக் கண்டக்" கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் சுமதி இராமசாமி ஒன்றைக் குறிப்பிட மறுக்கிறார். அது என்ன? கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழக அரசு 1972 இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு - தொல் பழங்காலம் போன்ற நூல்கள் குறிப்பிடுவதை அவர் கண்டு கொள்ளவில்லை. அன்றைய 'நாடு' என்பது 'இந்தியா' 'தமிழ் நாடு போன்ற பெருநிலப் பகுதியன்று. இன்றைய வட்ட (தாலுகா) அளவிற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்து கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டியதேயில்லை. முன் பத்தியில் கூறியது போல கி.மு. 8,000ஐ ஒட்டி கண்டத்திட்டுப்பகுதி கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் கழக (சங்க) இலக்கியக் கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றம். (காண்க பி. இராமநாதன் 1998, 2003 2004). 10. இவ்வாறு தமிழ், தமிழர் செய்திகளைக் கொச்சைப் படுத்தி எழுதுவது இவ்வாசிரியருக்கு வழக்கமானதே. தி இந்தியன் எகனாமிக் அண்ட் சோசியல் ஹிஸ்டரி ரிவியூ 38 - 2 ஏப்ரல் - சூன் 2001 இதழில் சுமதி இராமசாமி "இனங்களின் எச்சங்கள் : தொல்லியல் (தமிழ்த் தேசிய உணர்வு, சிந்துவெளி நாகரிகத்தின்பால் ஈர்ப்பு என்று ஒரு கட்டுரை எழுதினார். சிந்து வெளி நாகரிகமும் அந்நாகரிகமுத்திரை எழுத்துகளும் திராவிடம் (தொல் தமிழ் சார்ந்தவையே என்று சிறந்த ஆய்வாளர்கள் கமில் சுவெலபில் (1990: திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம், இயல் 6: திராவிட மொழிகளும் ஹாரப்பா மொழியும்) அஸ்கோ பர்போலா (ப்ரண்ட் லைன் அக் 24 2000) கருதுவதை யெல்லாம் அக் கட்டுரையில் சுமதி இராமசாமி கண்டு கொள்ளவில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் தமிழச் சார்பை வலியுறுத்தும் தமிழறிஞர்களை யெல்லாம் (பர்போலா, பார் சர்வீஸ், சுவலெபில் போன்றவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதுபவர்கள் உட்பட), அவர் எள்ளி நகையாடியுள்ளார். ங. மொழியின் தோற்றமும் பரவலும் 11. முன்மாந்த இனங்கள் அனைத்தும் பேச்சாற்றல் அற் றவை, அவர்களிடையே மொழி உருவாகவில்லை, ஏறத்தாழ 1% இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தற்கால மாந்த இனத்திடையே (AMH) மட்டுமே ஏறத்தாழ 50000 ஆண்டுகட்கு முன்னர் மொழி உருவாகியது என்பது இன்றைய பலதுறை அறிவியலாளரின் ஒருமித்த முடிவாகும். 12. இன்று பின்வரும் விவரப்படி ஏறத்தாழ 6000 மொழிகள் உலகில் பேசப்பட்டு வருகின்றன: ஒவ்வொரு மொழிகள் (2)இல் கண்ட மொழியையும் எண்ணிக்கை மொழிகளைப் பேசுநர் பேசுவோர் தொகை எண்ணிக்கை (கோடியில்) (1) (2) (3) (1) 10 கோடிக்கு மேல் 8 மொழிகள் (சீனம், ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி, வங்காளி, போர்ச்சுகீசு, ரசியன், சப்பானியம் 240 கோடி (ii) - 10 கோடி 72 (இந்த 72 மொழிகளையும் (6 கோடி பேர் பேசும் மற்றும் அடுத்த நிலை 239 தமிழ் இப்பிரிவில் மொழிகளில் பேசுவோர் அடங்கும்) எண்ணிக்கை ' அடிப்படையில் முதல் 162 மொழிகளையும் சேர்த்து மொத்தம் 234(72+162) மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை) 336 கோடி (iii) 10 இலட்சம்.1கோடி 239 (iv)1 இலட்ச ம் 10 இலட்சம் 795 ii) இல் எஞ்சிய 77 10000 -1 இலட்சம் 1605 (239-12) மொழிகளையும் 2400 (IV) (v) இல் குறித்த 5740 மொழிகளையும் பேசுவோர் எண்ணிக்கை 24 கோடி (v) பத்தாயிரம் பேருக்கு குறைவு 1000 - 9999 1782 100 – 999 1075 10 - 99 302 1- 9 181 3340 3340 6059 மொழிகள் - 600 கோடி மக்கள் (இந்தி, மைதிலி, ராஜஸ்தானி முதலியவற்றை ஒரே இந்தி மொழியாகக் கொள்வதா? இது பற்றி எல்லாம் மொழியியலாளரிடம் கருத்து வேறுபாடு உண்டு. 6000 அல்லது 6059 என்பதெல்லாம் ஒரு குத்துமதிப்பேயாகும்.) இந்த 6059 மொழிகளில் 4 விழுக்காடு ஆகிய 242(8+72+162) மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கை யான 576 கோடியானது மொத்தம் 600 கோடி மக்களுள் 95 விழுக்காடு ஆகும். மீதி 96 விழுக்காடு ஆகிய 5817 மொழிகளைப் பேசுவோர் வெறும் 24 கோடி மக்களேயாவர் (அறுநூறு கோடியில் அவர்கள் வெறும் நான்கு விழுக்காட்டினரேயாவர்). 13. இன்று உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் ஒரே முதன் மொழியிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் மாக்ஸ்முல்லருக்கும் இசை வானதே. 20 ஆம் நூற்றாண்டில் ஞால முதன் மொழி ஆய்வில் ஈடுபட்ட மேனாட்டறிஞர்கள் பெதர்சன், திராம் பெத்தி, சுவா தெசு, கிரீன்பெர்க், மெரிட் ரூலன், இல்லிச் சுவிதிச் , தால் கோபால்ஸ்கி, செவரோஸ்கின், ஸ்தாரோஸ்தின், பாம் ஹார்டு மற்றும் கெர்ன்ஸ் ஜான், பெங்ட்சன், வாக்லாவ் பிலாசக் போன்ற பலராவர். பல்வேறு மொழிக் குடும்பங்களையும் பின்வருமாறு ஒரு சில பெருங்குடும்பங்களுக்குள் (Super families) அடக்கலாம் என்பது அவர்கள் கண்டுள்ள உண்மையாகும். i) நாஸ்திராடிக் (இந்தோ - ஐரோப்பியன், திராவிட மொழிகள், உராலிக், அல் தாய்க், கார்த்வெல்லியன், ஆப்ரோ - ஏசியாடிக் - அதாவது செமித்திய - ஹாமித்தியக் குடும்பம், ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும்). கிரீன் பெர்க் வகுத்துள்ள யூரேசியாடிக் பெருங்குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. யூரேசியாடிக் - கில் அடங்கியவை எத்ருஸ் கன், இந்தோ - ஐரோப்பியன், உராலிக் - யூகாகீர், அல் தாய்க், கொரியன் - சப்பானியம் - ஐனு, கில்யாக், சுகோதியன், எஸ்கிமோ - அல்யூத் ஆகிய மொழிக் குடும்பங்களாகும். (2000 அக்டோபரில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பத்ரி ராஜூ கிருஷ்ணமூர்த்தியை கிரீன்பெர்க் சந்தித்த பொழுது, ''திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் சகோதரி யாக இருக்கலாம். மகளாக இருக்க முடியாது'' எனத் தெரிவித் துள்ளார். (Bh. Krishnamurthi. The Dravidian Languages; 2003, பக்.46). இதிலிருந்து ஸ்லாவ், இரானியன், வேதமொழி சமஸ் கிருதம், கிரீக், இலத்தீன், கெல்திக், செருமானியம் போன்ற மொழிக் குடும்பங்களுக்கெல்லாம் தாயான இந்தோ ஐரோப் பியத்தை விடத் தொன்மை வாய்ந்தது திராவிட மொழிக் குடும்பம், அதாவது பழந்தமிழ் என்று உணரலாம்.) ii. சீன - காகேசியன் iii. ஆஸ்திரிக் (முண்டா போன்றவை) iv. அமெரிக்க இந்திய மொழிகள் | V. இந்தோ - பசிபிக் vi. கோய்சான் vii. காங்கோ - சகாரா பல்வேறு மொழிக்குடும்பங்களை இணைத்து அவற்றுக்கு மூலமான மொழிப் பெருங்குடும்பங்களைக் காணும் ஆய்வாளர் களுள் சிலர் அதற்கும் மேலே போய் ஞால முதன்மொழி (மாந்தனின் முதல் தாய்மொழி) ஆய்வுக்கும் சென்றுள்ளனர். மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடிவழி ஆய்வு (ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994) நூலின் பக்கம் 277 இல் கூறுவது வருமாறு: ''பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளா விடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன் மொழியி லிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது" அந்நூலின் பக்கங்கள் 277-366 இல் 27 முக்கியமான கருத்துகளுக்குப் பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் உள்ள சொற்கள் "Global Etymologies" தரப்பட்டுள்ளன. அக்கருத்துக்களுக்கு ஞால முதன் மொழியில் என்ன வேர்ச் சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடி யாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்குத் தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தன வாகவும் ஞாலமுதன் மொழியின் வேர்ச்சொல் வடிவை விளக்குவனவாகவும் அமைந் துள்ளன. 14. இராபர்ட் கால்டுவெல் 1856இல் தனது திராவிட அதாவது தென் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என் னும் மாபெரும் நூலை வெளியிட்டார். (திருந்திய விரிவான இரண்டாம் பதிப்பு 1875) ஒரு புறம் திராவிட மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள் எலாமைட் மொழி சித்திய (இப்பொழுது 'உரால் - அல்டாய்க்') மொழிகள் சப்பானிய மொழி ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள், சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி ஏராளமான செய்தி களை அவர் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன் மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியை ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கிய திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிலிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை அச்செய்திகள் வலுவாக நிறுவின. கால்டுவெல் கோடிட்டுக் காட்டியதை மேலும் நுணுகி ஆராய்ந்து "மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்; மிகத் தான்மை வாய்ந்த தொல்தமிழே (தொல் திராவிடம் என அழைக்க விரும்பு வார் அவ்வாறே அழைக்கலாம், மறுப்பில்லை. அனைத்து மொழிக்குடும்பங்களுக்கும் (இந்தோ-ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும்" என்ற கோட் பாட்டை மேலும் ஆழமாக விரிவாக நிறுவியவர்கள் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும் ஞா. தேவநேயப் பாவாணரும் ஆவர். இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளின் (ஏன் பிறமொழிக்குடும்ப மொழிகளுக்கும் தான்) அடிப்படைச் சொற்கள் பலவற்றுக்கு ஞானப்பிரகாசரும் பாவாணரும் நூற்றுக்கணக்கான பொருத்தமான தொல் - திராவிட வேர்ச் சொற்களை இனம் காட்டியுள்ளனர். 1953இல் ஞானப்பிரகாசர் தெரிவித்த கருத்து வருமாறு: "இந்தோ ஐரோப்பிய மொழிகளில் 'வேர் கள்' என உன்னிக்கப்படுபவை பொருள் தொடர் பற்ற வெறும் குறியீடுகள் தாம். திராவிட மொழி வேர்களோவெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளை யும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்ட முள்ள முளைக்கரு போலத் தோன்றும்; எந்தக் கருத்தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின. என்பதைத் தெற்றென அவை காட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல் லாததால் இந்தோ ஐரோப்பிய "வேர்கள் " இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக் குவியல்களா கவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளி காட்டி உயிரூட்டம் தரக்கூடியவை திராவிட மொழி வேர்கள் தாம்.'' பிறமொழி வேர்களுக்கும் இக்கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும். சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி இதழில் (1929) ஞானப்பிரகாசர் "மொழியின் தோற்றம்" என்ற கட்டுரை யில் "இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன் மொழியின் தோற்றத்திற்கான ஆதாரங்கள் தமிழில்தான் கிட்டும்" என முழங்கியிருந்தார். (Tamil supplies this long looked for clue to finding the true origin of the proto Indo-European language) 15. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் இடையே யுள்ள உறவுகள் குறித்து இதுவரை பின்வரும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன: நாஸ்திராடிக்யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1.திராவிடமும் கால்டுவெல், போப், இந்தோ ஐரோப்பிய ஞானப்பிரகாசர், தேவநேயன், மொழிகளும் இளங்குமரன், மதிவாணன், இலியிச் - சுவிதிச், அருளி, அரசேந்திரன்; ஸ்டேபான் ஹில்யர்லெவிட். (பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ் - இந்தோ ஐரோப்பிய ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக்கணக்கானவை (reasonable and perceptive) என்று முனைவர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் இந்தோ ஐரோப்பிய (மொழியியல் ஆய்விதழில் (மடலம் 28:3-4;2000 சூன் - திசம்பர் பக்கம் 407-438இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். மேலும் 2000 இல் வெளியான "இந்தோ ஐரோப்பிய மொழி களும் அவற்றொடு நெருங்கிய உறவுடையனவும் : யூரேசி யாடிக் மொழிப் பெருங்குடும்பம்: மடலம் I இலக் கணம்" என்னும் நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங் குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72 - ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20க்கு மேற்பட்ட வற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன.) 2. திராவிடமும் உரால் - அல் - கால்டுவெல், பரோ, மெங்கெஸ், டாக்ய மொழிக்குடும்பம் டைலர் , அந்திரனாவ், வாசக், ஹெச்.பி.ஏ. ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மொழியும் (கி.மு. 3000க்கு முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் நாட்டில் பேசப்பட்டது) மக் - அல்பின், கே. வி. சுவலெபில் 4. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓனோ; பொன். கோதண்டராமன்; ஹெச்பிஏ ஹகோலா, சுவெலபில் 5. திராவிடமும் கொரிய மொழியும் ஹுல்பர்ட்; பவுண்துரை 6. திராவிடமும் எத்ருஸ்கன் ஸ்டென் கோனோ; மொழியும் (கி.மு1000 - 300 இரா. மதிவாணன் அளவில் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990இல் வெளியிட்ட "திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் என்னும் நூலின் பக்கங்கள் 99122 இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிட மொழி, எலாமைட் , தொல் உரால் - அல்டாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு. 10,000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரியா ஹீராஸ், ஏ சதாசிவன், மொழியும் (கி.மு. 3000க்கு ஜே. வி. கின்னியர் வில்சன்; முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ. ஹகோலா 8. திராவிடமும் மின்னியும் ஜி.டபுள்யூ. பிரவுன் (1930) (கி.மு. 1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி ; மொழியும் (ஸ்பெயின்) பெனான்ஸ் பிக்னு சாலெக். 10. திராவிடமும் ஆஸ்தி நாரிஸ், பிரிச்சார்டு, ரேலியப் பழங்குடி மக்கள் ஆர். எம்.டபுள்யூ. டிக்சன், மொழிகளும் (இப்பழங்குடி மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள்) பி. இராமநாதன் (1984) 11. திராவிடமும் கொஷவா டாக்டர் சீனிவாசன்; மொழியும் (தென் அமெரிக்க சாமன்லால், ஹெச்.பி. ஏ. பெருநாடு) ஹகோலா இப்பக்கத்தின் எதிரில் ஒட்டியுள்ள உலகப்படம் இம் மொழிகள் பேசப்படும் நாடுகளையும் இடங்களையும் காட்டும். 16. திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையிலுள்ள மிக நெருங்கிய ஒப்புமையை பி. இராமநாதன் (குப்பம்) திராவிடப் பல்கலைக் கழகத்தின் திராவிடியன் ஸ்டடீஸ் 1-3; ஏப்ரல் - சூன் 2003 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை விரிவாக நிறுவுகிறது. தொல் திராவிட மொழி பேசுநர் தென் இந்தியாவில் கண்டிப்பாக 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இருக்க வேண்டும் என் பதையும் இங்கிருந்து அதற்கு முன்னரே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தொல் தமிழ் மக்களிடமிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும் என்பதையும் அக்கட்டுரை நிறுவுகிறது. ச. தொல் திராவிட மொழி பேசுநர் பரவியது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே யாகும்; தமிழர் இந்தியாவின் தொல்குடிகள். இப்பொழுது பல நாடுகளிலுமுள்ள பல்துறை அறிஞர் களும் பொதுவாக ஏற்றுக் கைக்கொண்டுள்ள (தவறான) கருது கோளின்படி தொல் திராவிட மொழி பேசுநர் தாயகம் வட கிழக்கு ஈரான் பகுதியாகும் ; அங்கிருந்து சுமார் கி.மு. 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர்; செல் லும் வழியில், பேருந்து வரும் பொழுது ஆங்காங்கு சிலர் இறக்கி விடப்படுவது போல், திராவிட மொழி பேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டு வரப்பட்டன. (கே.வி. சுவலெபில் (1972) : ''திராவிடர்கள் இறக்கம்" The descent of the Dravidians ; திராவிட மொழியியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (IJDL) தொகுதி 2; பக். 57-63. பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் அவர் இக் கருத்தையே கூறுகிறார். தமது தென்னிந்திய வரலாறு (4ம் பதிப்பு 1976 நூலில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும் இது நடந் திருக்கக் கூடாதது அல்ல " (not unlikely) என்கிறார். 18. இதற்கு நேர்மாறான கொள்கை திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் "திராவிடர் ஏற்றம்" கொள்கையாகும் : DRAVIDIAN ASCENT (from South) இப்பொழுது அது பழைய பாணிக் கொள்கையாகக் கருதப் படினும் அதனை வலியுறுத்தியுள்ள அறிஞர்களுள் ஹெர். ஆர். ஹால்; ஹீராஸ் பாதிரியார், பி. தி. சீநிவாச ஐயங்கார், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், மறைமலை அடிகள், யு ஆர்எஹரென் பெல்ஸ், சேவியர் எஸ் தனிநாயக அடிகளார், க.த.திருநாவுக் கரசு, தேவநேயப்பாவாணர், பிரிட்ஜெட் மற்றும் ரேமாண்ட் ஆல்சின் (1988), கே.கேபிள்ளை ஆகியோரும் அடங்குவர். சுவிரா ஜெய்ஸ்வால் (1974); ஜே ஆர்மார் (1975); பர்டன் ஸ்டெய்ன் (1998) ஆகியோர் 'திராவிடர் ஏற்றம்' என்ற கொள்கையை ஏற்கா விடினும் "திராவிடர் இறக்கக்" என்ற கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.) 19. திராவிட மொழி பேசுநர் கி.மு. 3000ஐ ஒட்டி இந்தியா வுக்குள் நுழைந்தனர் என்ற கோட்பாடு மேலே பிரிவுகள் (உ) (ங்) ஆகியவற்றில் சொன்னவற்றோடு பொருந்தி வருகிறதா? மொழிப் பெருங் குடும்பங்களுக் கிடையேயுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர் பலர் இத்தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர்.பிரெஞ்ச் எம்.ஸ்பிரிக்ஸ் 1997 இல் தொகுத்து வெளியிட்ட தொல்லியலும் மொழியும் : (1) கோட்பாட்டு ஆய்வு நெறிக் கருத்தோட்டங்கள் என்னும் நூலில் ரென்பு பின்வரும் முடிவைக் கூறுகிறார்: "(மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் செய்த மக்கள் பண்டு பரவத் தொடங்கியது பற்றிய) தொல்லியல் சான்று களின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப் பியன், தொல் ஆப்ரோ - ஏசியாடிக், தொல் எலாமைட், திராவிடம், தொல் அல்டாய்க் மொழி கள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனைவரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப்பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம்மொழிகள் - எல்லாம் (நாஸ்திராடிக் மொழியியலாளர் கூறுவது போல) தொடர்புடையவையாக இருப்பது உண்மை யானால் அவர்களெல்லாம் அப்பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு. 8000 - 6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒருசில ஆயிரம் ஆண்டுகள் இம்மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராடிக் மொழி அந் நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் ஒத்து வரும் தருக்கமாகும்.'' இவ்வாறு தொல் - நாஸ்திராடிக் பேசியவர்கள் அனை வரும் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே நடு கிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டையும் (அதன் தொடர்பான "இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர்கள் இறங்கியது ஏறத்தாழ கி.மு. 3000ஐ ஒட்டித்தான்" என்ற கோட்பாட்டையும் பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும். இதுபற்றி காலின் பி. மாசிகா 1999 இல் கூறியது குறிப்பிடத் தக்கது. "தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (ஏறத்தாழ ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல் திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம்" (It may be a question of a very ancient common substratum in south Asia, Pre-Dravidian going back even to the original peopling of the world; The year Book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi). 20. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன் னர்த் தற்கால மாந்த இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது; முதல் தாய்மொழி ஏறத்தாழ 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உரு வானது; இன்றைக்கு ஓர் இலட்சம் - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தென்னிந்தியா வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் தற்கால மாந்த இனம் பரவியது என்றும் மேலே கண்டோம். இவ்வாறு வடக்கு, வடகிழக்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் திராவிட மொழி பேசுநருக்கு முகாமையான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இந்தக் கோட்பாட்டை "ஞானப்பிரகாசர் - தேவ நேயன் கோட்பாடு" என அழைக்கலாம். (திராவிட மொழிகளுக்கு ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் (மொழிக்குடும்பங்கள் பிறவற்றுடன் உள்ள நெங்கிய தொடர்பையும் விளக்க வல்லது இக் கோட்பாடேயாகும். தென்னிந்தியாவி லிருந்து வடக்கே சென்ற தமிழர் வரலாறு திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிக மாகும். (ஹீராஸ் 1953; மதிவாணன் 1995 ; இராமநாதன் 1999; பூரண சந்திரஜீவா 2004) அவர்களுக்கு எலாம், சுமேரியா, எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். 21. சுவெலபில் (1990) "ஏறத்தாழ கி.மு. 10000க்கு முன்ன ர் திராவிடம், உரால் - அல்டாய்க், சப்பானியம் மொழி பேசுநர்களிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்" என்று கருதுவதைக் கண்டோம். அத்தகைய தொடர்பையும் "திராவிடர் ஏற்றம்" என்னும் கோட்பாடே விளக்கவல்லது. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி கி.மு. 10,000க்கு முன்னரே தொல் இந்தோ - ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசு நரிடமிருந்து பிரிந்து விட்டனர்; மைய ஆசிய ஸ்டெப்பி புல் வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர்; அவர்களில் சில குழுவினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக், இலத்தீன், கெல்டிக், ஜெர்மானிக், ஸ்லாவிய மொழிக் குடும்பங் களாகும்); வேறு சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும்; அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10000க்கு முன்னர் தொல் திராவிட மொழியினரிட மிருந்து பிரிந்த காலத்தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக் கூறுகளோடு சேர்த்து, வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழிபேசுநர்களிடம் இருந்து (இரண்டாவது கட்டமாக) புதிதாக மேலும் பல திராவிட மொழிக் கூறுகள் சேர்க்கப்பட லாயின. திராவிட மொழி பேசுநர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இக் கோட்பாடானது தொல் மாந்தர் மொழியியல் முடிவுகளை மேலும் சீர்மை பெறச் செய்ய வல்லது; நாளடைவில் மாந்த இனத் (AMH) தோற்றமும் பரவலும்; மொழிப் பெருங்குடும்பங்கள் உருவாக்கமும் பரவலும்; வரலாற்றுக்கு முந்திய தொல்லியல் ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்தையும் விளக்கத்தக்க ஒருங்கிணைந்த ஒரு பெருங் கோட்பாடு (Grand synthesis) உருவாக்க வழி கோலக் கூடியது ஆகும். 21. தமது IUDLசூன் 2007 கட்டுரையில் ஸ்டெபான் லெவிட் பின்வருமாறு "திராவிடர் ஏற்றம் கொள்கையை ஆதரித் துள்ளது குறிப்பிடத்தக்கது. "கடல் மட்டம் இப்பொழுதுள்ளதை விட மிகக் குறைவாக இருந்த பனியூழிக் காலத்தில் ஆப்பிரிக்கா - தென்னிந்தியாவை இணைத்த வால் போன்ற நில இணைப்புகள் / தீவுகள் வழியாக ஆப் பிரிக்காவிலிருந்து தென் ஆசியாவிற்கு திராவிட மொழி பேசுநர் வந்திருக்கலாமென்னும் கோட் பாட்டை பி. இராமநாதன் வலியுறுத்துகிறார். அக் கோட்பாட்டை நானும் ஆதரிக்கிறேன். ஆஸ்தி ரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளவை எனக் கண்டுள்ளனர். உறவுமுறை (Kinship) பூமராங் (வளைதடி பயன்பாடு ஆகியவையும் அம்மக்களுக்கும் திரா விடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி. மு. 6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டனர் ஆஸ்திரேலியப் பழங் குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 40,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்ற னர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 40,000 ஆண்டுகட்கு முன்னரே திராவிடர் இந்தியா வில் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்த ('திராவிடர் ஏற்றம்') கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத் திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்தி லிருந்து பிரிந்து உரா லிக், அல் தாயிக், இந்தோ - ஐரோப்பியம் ஆகிய மொழிக்குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக் கூற இயலாது. ஒப்பன் ஹைமர் (2003) The Real Eve : Modern Man: Journey out of Africa நூலின் படி மரபணு ஆய்வும் (காகசஸ் இனத்தைச் சுட்டும் M17) தொல் திராவிட மொழி பேசுநர் இந்தியாவிலிருந்து வடக்கு வடமேற்காக ஏறத்தாழ 40000 ஆண்டுக்கு முன்னர் மைய கிழக்கு - மைய ஆசியா - ஐரோப்பா என்றவாறு படிப் படியாகப் பரவியிருக்கலாம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இல்லை என்பதைக் காணலாம் (டாக்டர் லெவிட் - தகவல் ). ரு. திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Accent) குடியேறிய பகுதியில் உருவாகிய சிந்துவெளி நாகரிகம். 22. சிந்துவெளி நாகரிகம் 1947க்கு முந்திய இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் சேர்ந்த இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரு நிலப் பகுதியில் வடமேற்கு இந்தியாவில் பரவி இருந்தது. அதாவது சுமார் 5 லட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. பண்டைய மெசபொதாமிய, எகிப்திய நாகரிகங்களின் பரப்பைவிட அதிக மான பரப்பில் சிந்துவெளி நாகரிகம் வழங்கியது. அந் நாகரிகம் வழங்கிய பகுதியில் கி.மு. 2000 வாக்கில் மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது பொஸெல், பர் போலா போன்றவர்கள் கருத்து ஆகும் (அப்பொழுது உலகில் இருந்த மொத்த மக்கள் தொகையே 9 கோடிக்கும் குறைவு. சிந்து வெளி நாகரிகச் சின்னங்கள் 1500க்கும் மேற்பட்ட இடங் களில் உள்ளன. அவற்றில் சுமார் 20 இடங்களில் மட்டுமே - மொகெஞ்சோதரோ, ஹரப்பா உட்பட - அகழ்வாய்வுகள் நடந் துள்ளன. சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் கி.மு. 7000 லிருந்து என்பதை மெஹர்கார் அகழ்வாய்வு நிறுவியுள்ளது. அந் நாக ரிகத்தின் சிறப்புற்ற நிலை கி.மு. 3200 - 1800 கால அளவைச் சார்ந்தது. மொகஞ் சோதரோ நகர மக்கள் தொகை 40,000 என்றும் ஹரப்பா நகர மக்கள் தொகை 25000 என்றும் மதிப் பிடப்பட்டுள்ளன. 23. மாந்தர் இன (A MH) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப் பகுதி என்று கொள்வதற்கான ஆதாரங்களை இதுவரை கண் டோம். அந்நாகரிகம் திராவிடச் சார்புடையது என்பதற்கு உள்ள மேலும் பல வலுவான ஆதாரங்களில் சில வருமாறு: i) மொகஞ்சோதாரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிடக் கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள், நகை (ஆபரணங்கள், பருத்தி ஆடைகள் அனைத் தும் திராவிடச் சார்புடையவை. ii) தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடாசலம் நிறுவியுள்ளார். iii) இன்றைய இந்து மதத்தின் முதன்மைக் கூறுகள் அனைத் தும் திராவிட - தமிழ் - சிந்துவெளி நாகரிகக் கூறுகளே ஆகும். சமண , - புத்த மதங்களின் தோற்றத்துக்கும் சிந்துவெளி மற்றும் வடநாட்டில் பண்டு இருந்த தமிழ் (திராவிட) ஞானிகளே காரணமாவர். இக்கருத்தை டைலர் (1973) பின்வருமாறு கூறுவார்; இன்றைய வேத மதக் கருத்துக்கள் - அவற்றிற்கு எதிரான சமண புத்தம் முதலிய கருத்துக்கள் இவற் றிற்கு இடையே முதலில் உறழ்வு, பின்னர் இணைப்பு என்றவாறு இந்துமதம் உருவானது என்று கருதுவது அவ்வளவு சரியானதல்ல. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த, பண்டைய தொல்லிந்திய (தமிழிய) நாகரிகத்தின் புத்துயிர்ப்பே, மறுமலர்ச்சியே இன்றைய இந்துமதம் ஆகும். (The Hindu synthesis was less the dialectical reductinn of orthodoxy and heterodoxy than the resurgence of the ancient aboriginal Indus civilisation) மறைமலையடிகளும் (1903,1923,1930) இக்கருத்தினரே, சீனிவாச ரும் இக்கருத்தை இந்நூலில் விரிவாக வலியுறுத்தி யுள்ளதைக் காணலாம். iv) இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ. கோஸ்வாமி "இந்திய இசை வரலாறு", 1957.) சிந்துவெளி அகழ்வாய்வுகளுக்கு நெடுங்காலம் முன்னரே ஹெவிட் (1888). மறைமலையடிகள் (1903) போன்ற நுண் மாணுழை புலமிக்க அறிஞர் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் வாழ்ந்து வந்த நாகரிக மிக்க தமிழிய மக்களிடமிருந்தே ஆரியர் நாகரிகம் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாகக் கூறியிருந்தனர். இவற்றின் விரிவை பி. இராமநாதன் : சிந்து வெளித் தொல் தமிழ நாகரிகம் 1999 இயல்கள் 3-6 மற்றும் 8 இல் காண்க). 24. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர் என்று தன்னை அழைத்துக் கொண்ட எஸ். ஹீராஸ் பாதிரியார் (191888 - 14.12. 1955) தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Prolo - Indo Mediterranean Culture 1953) என்னும் நூலில் சிந்து வெளி நாகரிகம் திராவிடருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி என்பதை நிறுவியுள்ளார். மிகப் பழங் காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஹீராஸ் கொள்கை (அவர் வாதத் துக்கு ஆதாரமாகக் கொண்ட செய்திகள் சில இப்பொழுது தவறாகத் தோன்றலாம்; சிந்துவெளி முத்திரைகளை அவர் திராவிட மொழி சார்ந்தவை என்று கொண்ட முடிவு சரி யென்றாலும் அவர் முத்திரைகளில் படித்துக் கண்ட வாசகங்கள் இன்று ஏற்கத்தக்கனவாக இல்லை. இருந்தாலும் அவர் கண்ட அடிப்படை உண்மை இன்றும் வலுவுடையதாகவே உள்ளது.) 25. என் லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்றமும் மேல் நாடுகளும் (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்ம்மைகளை உணர்த்து வதாகும். 'திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரை பரவினர்" என்ற அபத்தக் கொள் கையை அவர் (விவரம் புரியாமல்) பின்பற்றியிருந்த போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்ம்மைகள் முக்கியமானவை : i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை ஒரே மாதிரியான "பல சொல் பிணிப்பு ஒட்டுநிலை" (Polysynthetic Suffixal) மொழிகள் இடையீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற் களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்டி , போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல் அமைந்திருந்தன. ii) இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் (கி.மு 2000ஐ ஒட்டி ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமன்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழிகளுடனும் உறவுடையது. iii) இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங் கிய தொடர்புள்ளவை; அவை பொதுவான ஒரே தாய் மொழி யின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 26. சிந்துவெளி நாகரிகம் இந்தோ ஆரிய மொழி பேசுநர் உருவாக்கியதாக இருக்கலாம் என இன்றைய இந்திய அறிஞர் (குறிப்பாக வடநாட்டறிஞர்) சிலர் கூறுகின்றனர். இது தவறு என்பதைச் சற்றே விளக்குவோம். வேத மொழியாகிய இந்தோ ஐரோப்பிய மொழி இந்தியாவில் உருவாகியிருக்கலாம் என்று வேத சமஸ்கிருதப்பற்றாளர் கூறுவது அபத்தம் (இது வேறு; கி.மு. 10000க்கு முன்னர் தொல் திராவிட மொழியிலிருந்து கிளைத்த மொழிக்குடும்பங்களுள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பமும் ஒன்று என்ற ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு வேறு) கிமு. 1700 -1500 காலகட்டத்தில் இந்தியா விற்குள் வடமேற்கிலிருந்து நுழைந்தவர்கள் வேதமொழி (Vedic Language) ஆகிய இந்தோ ஆரிய மொழி பேசுநர் ஆவர். இவர் கள் சிந்துவெளி நாகரிக மக்களோடு ஒப்பிடும் போது சிறு எண்ணிக்கை யினராகவே இருந்திருக்க வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிப் பெருங்குடும்பத்தில் அடங்கியவை இந்தோ ஆரிய மொழியாகிய வேதமொழி தவிர இரானியன் (அவெஸ்தன்), அனடோலியன் (ஹிட்டைட்), அர்மீனியன், டோக்காரியன், அல்பேனியன், கிரீக்கு , இத்தாலிக் (இலத்தீன் முதலியவை), கெல்டிக் (ஐரிஷ், வெல்ஷ் உட்பட), ஜெர்மானிக் (ஆங்கிலம் உட்பட), பால்டிக் (லட்வியன், லித்துவேனியன்), ஸ்லாவ் (ரஷ்யன் முதலியவை) ஆகியவையாகும். இந்தப் பல் வேறு இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் ஒருங்கு சேர்ந்து கி.மு. 4000 - 3000 கால அளவில் கருங்கடல் - காஸ்பியன் கடல் பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய - ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளிகளில் வசித்து வந்த நாடோடிகள் (nomads) ஆவர். அக் காலக் கட்டத்தில் அவர்கள் இந்தோ ஐரோப்பியத் தொன் மொழியைப் பேசிவந்தனர். கி.மு. 3000 - 2000 கால அளவில் தென் கிழக்காகவும் நகரலாயினர். மேற்கில் சென்ற நாடோடிக் குழுவினருள் ஒன்றான கிரீக்கு மொழி பேசுநர் நுழைந்த பகுதியில் (திராவிடச் சார்பான) அப்பகுதிப் பழங்குடி மக்களுடன் கலந்து கிரீக்கு மொழி பேசுநர் உடனடியாக நாகரிகம் பெற்றனர். கிழக்கு தென்கிழக்காகப் பெயர்ந்த நாடோடிக் குழுவினருள் இந்தோ ஆரிய மொழி பேசும் குழுவும் ஒன்று. கி.மு. 1700 -1500இல் அவர்கள் இந்தியாவுக்குள் இரானிலிருந்து நுழைந்த பொழுது அவர்களும் சிந்துவெளித் தொல் நாகரிகத்தினரிடமிருந்து விரைவில் நாகரிகம் பெற்றனர். (சீனிவாசர் இந்நூலின் இயல்5 முதலியவற்றில் கூறும் இரண்டு கருத்துக்களை - அதாவது இந்தோ ஆரிய மொழி பேசுநர் (ஆரியர்) இந்தியாவுக்குள் புதுவரவாக நுழையவே இல்லை என்பதையும், வேதங்கள் இந்திய மக்களிடையே ஒரு புதிய தீவழிபாட்டு முறையாக) கி.மு. 4000 அளவில் தோன்றியது என்பதையும்; இன்றைய வரலாற்றறிஞர் எவரும் ஏற்பதில்லை .) சிந்துவெளித் திராவிட அறிஞர்கள் (அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் ஏற்கப்பட்டனர்) படைப்புகளும் நேரடியாகவோ மொழி பெயர்க்கப்பட்டோ ரிக் வேதத்திலேயே ஏறியுள்ளன என்பது மறைமலையடிகள் (1903, 1923, 1930), வால்பர்ட் போன்றோர் கருத்தாகும். தங்களுடைய The Rise of Civilisation in India and Pakistan (1988)நூலில் பிரிட்ஜட் மற்றும் ரேமாண்ட் ஆல்சின் தம்பதியர். கருத்தும் இதுவே : (The earliest Indo-Aryan text, the compiled Rg Veda, shows several influences of a non-Indo-Aryan, Dravidian element, in the form of phonetic changes, introduction of loan words and names etc. These presuppose the coexistence of the Vedic and Dravidian speaking peoples in a cultural contact situation for a period, perhaps of centuries, before the Compilation of the Rg Veda (circa 15001300BC) 27. முதற்கண் இந்தோ ஆரிய மொழி பேசுநருக்கும் சிந்து வெளி நாகரிகத் தமிழருக்கும் (திராவிடருக்கும் இடையே வன் முறை ஏற்பட்ட போதிலும் விரைவில் இருவகையாரும் கலந்து விட்டனர். ஆரியரால் நகரங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். இந்திர னின் பெயரே புரந்தரன் (நகரங்களை அழிப்பவன்) தானே! நகரங் களின் வீழ்ச்சிக்கு கி.மு. 1700ஐ ஒட்டி நிகழ்ந்த இயற்கை, சுற்றுப் புறச் சூழ்நிலைக் காரணங்களும் ஓரளவு காரணமாயிருந் திருக்கலாம் என்று ஆல்சின் (1995) கூறுகிறார். ஆனால் சிந்து வெளி நாகரிகம் பரவியிருந்த சிற்றூர்ப்புறப் பெருநிலப் பரப்பில் (சிறு எண்ணிக்கையில் நுழைந்த) ஆரியரால் பெருந்தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆகவேதான் சுநீதிகுமார் சாட்டர்ஜி, வால்டர் பேர் சர்வீஸ், எஸ் ஏ டைலர் போன்றோர் கூறுவது போல இன்றைய நாகரிகம், பண்பாடு, இந்துமதம் ஆகியவற்றின் அடித்தளம் (ரூபாய்க்கு 12 அணா அளவுக்கு என்பார் சட்டர்ஜி) திராவிட (தமிழ்) மொழி, பண்பாடு ஆகி யவையே. இந்தோ ஆரிய மொழி பேசுநர் பரவல் பற்றிய வரலாற்றிலிருந்தே அவர்கள் கி.மு. 1700க்கு முந்திய சிந்து நாகரிகத்தை உருவாக்கியிருக்க இயலாது என்பது தெரியும். சிந்து வெளி நாகரிகச் சின்னங்களில் ஆரியருக்கு நெருக்கமான குதிரை கிடையாது என்பதும் முக்கியமானது. 28. இந்தோ ஆரிய மொழியின் ரிக்வேத நிலையிலேயே நுழைந்துள்ள திராவிடச் சொற்களாக சுமார் நாற்பது - ஐம்பது சொற்களை பரோ, எமனோ போன்றவர்கள் ஏற்கெனவே அடை யாளம் கண்டுள்ளனர். திராவிட மொழியியல் - ஓர் அறி முகம் (1990) நூலில் இதைக் குறிப்பிடும் சுவெலபில், ரிக் வேதக் காலத்திலிருந்தே இந்தோ ஆரிய மொழி கடன் பெற்றுள்ள ஏறத்தாழ 10 மொழியியற் கூறுகளையும் பட்டியலிட்டுள்ளார் (இவை யெல்லாம் வேத சமற்கிருத மொழியில் திராவிட மொழி யின் தாக்கம் என்ற அளவில்தான் இவர்கள் ஆய்வுகள் உள்ளன ஆனால் ஞானப் பிரகாசரும் பாவாணரும் கண்ட முடிவுகள் இவற்றைவிட மிக விஞ்சியவை. அவ் விருவரும் "இந்தோ ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை வேர்ச் சொற்கள் பலவும் தொல் - திராவிட மொழியிலிருந்து பெற்றவையே" என்ற கருத்துடையவர். 29. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் அ நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே என்றும் தகுதி வாய்ந்த அறிஞர் அனைவரும் ஏற்கின்றனர். தமது Indus Scrip Dravidian (1995) நூலில் இரா. மதிவாணன், சிந்து வெளியில் முந்து தமிழ் (2004) நூலில் பூர்ண சந்திர ஜீவா ஆகியோர் அவ வெழுத்துக்களைத் தொல்தமிழாகப் படிக்கும் பொழுது தொன் காப்பியத்தி லிருந்து கிட்டும் மொழியியல் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். புறநானூறு 201 202 இல் குறிப்பிடப்படும் இருங்கோவேளின் முன்னோர் சிந்துவெளி நாகரிகத்தோ தொடர்புடையவர்களாகக் கபிலரால் கருதப்பட்டன. புறநானூறு 202 குறிப்பிடும் அரையம் ரிக்வேதம் 627. 5இ சுட்டப்படும் ஹரியூபியா தான் என்பது பி.எல். சாமி கருத். (செந்தமிழ்ச் செல்வி சனவரி 1994). அரையம் = அரசமர அரைய + அகப்பா = அரையகப்பா = ஹரப்பா என்று பெயர் மாறியது என்கிறார் அவர். இருங்கோவேளின் முன்னோர் 49 தலைமுறைகளுக்கு முன்னர் (அதாவது தொல் பழங்காலத்தில்) புகழ்பெற்ற துவரை என்னும் கோட்டை நகரை ஆண்டு வந்தனர் என்று புறம் 201 கூறுகிறது. தமது தொல்காப்பியப் பாயிர வுரையில் நச்சினார்க்கினியர் வேளிர் துவாரபதி (துவாரகையிலிருந்து வந்தவர்கள் என்கின்றார். அரையம் ஹரப்பாவைத் தான் குறிப்பதாகக் கொண்டால் ஹரப்பா பற்றியும் துவாரகை பற்றியும் கபிலர் காலத்தில் வழங்கிய (ஒரு நகருக்குரியதை மற்றதற் குரியதாக மாற்றி வழங்கிய) தொன்மக் கருத்தைப் புறம் 201,202 பாடல்கள் கூறுகின்றன என்க. இதனை ஜீவா மேலும் ஆய்வு செய்கிறார். வேள் - வேட் பேட் (Bet) - பேட் துவாரகா என்று துவாரகையின் பெயர் வரலாற்றை அவர் தருகிறார். 30. சுமேரிய நாகரிகமுத்திரைகளில் சிங்கங்கள் இரண்டைக் கொல்லும் கில்காமெஷ் உருவம் காணப்படுகிறது. கில் காமெஷ் பற்றிய தொன்மக் கதையும் சுமேரியப் பொறிப்புகளில் தரப் படுகிறது. சிந்துவெளி முத்திரைகள் இரண்டில் (கில்காமேஷ் சிங்கங்களைத் தாக்குவது போலவே இந்திய வீரன் ஒருவன் புலிகள் இரண்டை கைக்கு ஒன்றாகக் கொல்வது போல் சித் திரிக்கப்பட்டுள்ளான். புறம் 201 இருங்கோவேளைப் 'புலி கடிமால்' என்று அழைக்கிறது. இருங்கோவேளின் முன்னோர் காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தொடங்கி யிருக்கலாம் என ஐ. மகாதேவன் Journal of Tamil Studies மே 1970 இதழில் உன்னித்திருந்தார். ஆயினும் 2002 சனவரியில் அவர் கருத்து அந்த உன்னிப்பிற்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதாகும். 31. ரிக்வேதம் ஐ . 133,1& 3இன் ஆங்கில வடிவம் வருமாறு; "ஓ மகவான்! அழிந்துபட்ட வைலஸ்தானக நகரத்திலும், அழிந்துபட்ட மகாவைலஸ்த நகரத்திலும் உள்ள சூனியக் காரிகள் கும்பல்களை அழித்து ஒழிப்பாயாக" "நான் மேலுலகத்தையும் பூமியையும் சத்தியத்தினால் தூய்மைப் படுத்துகிறேன். வைலஸ்தான நகரில் இந்திரனால் தோற்கடிக்கப்பட்டு கொலையுண்டு கிடக்கும் இந்திரனை எரித்து ஆற்றல் மிக்க துஷ்டப் பிசாசுகளை நான் எரித்து ஒழிக்கிறேன்" ஆரியர்களால் நாசமாக்கப்பட்ட நகரத்தின் பெயரான 'வைலஸ் தானம்' என்பது ஆரிய மொழியல்லாத பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பது டாக்டர் பரோ கருத்து ஆகும். (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிஸ்டரி XII - 1 ஏப்ரல் 1963) ஒருக்கால் 'வைலஸ்தானம்' என்பது வேளிருடைய ஊர் நகரைக் குறித்திருக்கலாம். 32. சிந்து முதலிய ஆறுகளில் சிந்துவெளித் திராவிடர்கள் கட்டியிருந்த அணைகளை ஆரியர் உடைத்து நாட்டை வெள்ளக் காடாக்கி அழித்திருக்கலாம் என்பர் தாமோதர் தர்மானந்த் கோசம்பி (The culture and Civilisation of Ancient India in historical Outline 1974). மதுரைக் காஞ்சி 725 ஆம் அடியிலும் அக நானூறு 346 ஆம் பாடலிலும் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளைக் குறிக்க 'கற்சிறை' என்னும் சொல் பயன்படுகிறது. ரிக் வேதத்தில் அணையைக் குறிப்பிடும் சிரா (Sira) என்னும் சொல் கற்சிறையின்' சிதைவே என்பர் பி.எல். சாமி (செந்தமிழ்ச் செல்வி : 1994 நவம்பர்). சா. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் தமிழிய மொழியாகப் படிக்கத்தக்கவையே என்பதும் தமிழ் வரி வடிவம் சிந்து வெளி வரிவடிவத்திலிருந்தே உருவாகி யிருக்கலாம் என்பதும் 33. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் என்பவை மூவாயிரத்துக்கு மேற்பட்ட "ஸ்டீயட்டைட்" (சவர்க்காரக்கல், அதாவது மாக்கல்) முத்திரைகளிலும் சில செப்புத் தகடுகள் போன்றவற்றிலும் உள்ளவை. ஒவ்வொரு முத்திரையும் சுமார் 20 மி.மீ. x 30 மி.மீ. அளவுள்ளது. சில சதுரமானவை. பெரும் பாலனவற்றில் ஒரு விலங்கின் உருவமும் அதன் மேல் பக்கத்தில் ஒன்றிலிருந்து பத்துப் பன்னிரண்டு (சராசரி 5) குறியீடுகளும் உள்ளன. மிக நீண்ட தொடர் 26 குறியீடுகள் கொண்டது. சிந்து வெளியி லிருந்து பருத்தித் துணி போன்றவற்றை சுமேரியா போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது சிப்பங்கள் கட்டி அவற்றின் மேல் பொருளுக்குரியவர் பெயரைக் களிமண்ணில் முத்திரையிட இம் முத்திரைகளுள் பெரும்பாலானவை பயன்பட்டிருக்கலாம் என்பதே சிறந்த ஆய்வறிஞர் கள் கருத்து. வீலர், ஹண்டர், காட்(Gadd), கோசம்பி, கோ (Coe) ஆகியோர் இந்த அடிப்படையில்தான் முத்திரைக் குறியீடுகளில் உள்ளவை தனி ஆட்களின் பெயர்களாகத் தான் (சில நேர்வு களில் பட்டங்களுடன்) இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சிப்பத்தைக் கட்டிய கயிறு, பாய் இவற்றின் சுவடுகள் சில களிமண் கட்டிகளில் காணப்படுகின்றன. (சில கட்டிகள் ஒரோ வழி நெருப்பின் வாய்ப்பாட்டு சுடப்பட்டதால் அவை மட்டுமே இன்று கிடைக்கின்றன. அவற்றில்தான் இவ்வடையாளங்கள் தெரிகின்றன. ஆக, ஆல்சின் (1998) கூறுவது போல் "இம் முத்திரைகளின் பயன்பாடு (அல்லது பயன்பாடு களில் ஒன்று) வாணிக நடவடிக்கைகள் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை ' (There can be little doubt that the Harappan seals were-atleast as one of their functions - necessary elements in the mechanism of trade. p. 185.) சில முத்திரைகள் தாயத் துக்களாகவும் நேர்த்திக் கடன் வில்லைகளாகவும் அடையாள இலச்சினைகளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். 34. பல முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு தெரியும் எருது ஒன்றின் முன்னர் வடிவம் உள்ளது. மகாதேவன் கருத்து (1985, 1984) இவ்வடிவம் சோமச்சாறு வடிக்கப்பட்ட ஏனம்; பின்னர் சோமச்சாறு ஆரியர்களாலும் முக்கியமானதாக ஏற்கப்பட்டது என்பதாகும். பிற்காலத்தில் இவ்வடிவம் இந்திரத் வஜம் ஆனது. அளக்குடி சீத்தாராமன் கரூரில் கண்டெடுத்த செப்பு முத்திரையிலும் இந்த வடிவம் உள்ளது என்பது மகாதேவன் கருத்து ஆகும். 35. சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் ஏறத்தாழ 400 அளவில் உள்ளன. (பர்போலா 385, மகாதேவன் 417). 2906 முத்திரை வாசகங்களில் கண்ட குறியீடுகளை மகாதேவன் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்: குறியீடு ஒவ்வொன்றும் . மொத்தம் மொத்தத்தில் எத்தனை அவை விழுக்காடு தடவை எத்தனை வருகிறது தடவை வருகின்றன 1 100மும் மேலும் 1935 10. 43 1 67 999 – 500 649 4.85 31 499 – 100 6,344 47.44 34 99 – 50 2,381 17. 81 86 49 – 10 1, 833 13. 71 152 9 – 2 658 4.92 112 ஒரே தடவை 112 0.84 417 13, 372 100.00 80 விழுக்காடு தடவைக்கு மேல் வரும் குறியீடுகள் 67 மட்டுமே யாகும். (பாதிக்கு மேற்பட்ட குறியீடுகள் ஒவ்வொன்றும் பத்து தடவைக்கும் குறைவாகவே வருகின்றன. அவற்றுள்ளும் 112 ஒவ்வொன்றும் ஒரு தடவையே வருகிறது. ஆக, இந்த 7 குறியீடு களுக்கும் முதன்மை தந்து வாசிக்க முற்படுவது நல்லது என்கிறார் மகாதேவன். மொத்தம் சுமார் 400 குறியீடுகளில் அடிப்படைக் குறியீடுகள் 200 என்பது பர்போலா கருத்து. 36. சிந்துவெளி முத்திரை எழுத்துக்கள் பழந்தமிழே (பழந் திராவிடமே என்பதை இத்துறை வல்லுநர் அனைவரும் ஏற் கின்றனர். இவற்றைப் படித்துள்ள அறிஞர்கள் (பர்போலா, மகா தேவன், மதிவாணன், பூர்ண சந்திர ஜீவா, பேர் சர்வீஸ் முதலி யோர்) ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக வாசித் துள்ளனர். முத்திரையைக் குத்திய பின் கிடைக்கும் முத்திரைப் பதிவில் உள்ள வாசகங்களை (Impressions) வலமிருந்து இடமாகவே பெரும்பாலோர் படிக்கின்றனர். (மதிவாணன் மட்டும் இடமிருந்து வலமாகப் படித்துள்ளார். எனினும் இம் முத்திரை எழுத்துக்கள், திராவிட மொழியைச் சார்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது; பின்வருவனவற்றைக் காண்க: ஸ்டான்லி வார்பர்ட் : இந்தியாவுக்கு ஓர் அறிமுகம் என்ற நூலில் உள்ள "பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பதும் ஆகும்." “We assume from various shreds of evidence that they are were proto Dravidian, possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert: An Introduction to India, University of California Press 1991) ஜே.எம். ராபர்ட்ஸ் : பெங்குயின் உலக வரலாறு "தென் னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்துவெளி முத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது.'' It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used in southern India (J.M. Roberts History of the World Pelican 1992). கமில் சுவெலபில் : திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் ( "சிந்து வெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும் பொழுது அது திராவிட மொழி சார்ந்ததாக அமைவதற்கே வாய்ப்பு மிக அதிகம்.'' The most probable candidate is and remains some form of Dravidian” (Dravidian Linguistics - An Introduction. Pondicherry 1990; Chap VI : Dravidian and Harappan) 37. சிந்து வெளி முத்திரை எழுத்துக்களிலிருந்தே சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் உருவாயின என்பது மதிவாணன் கருத்து. ஏறத்தாழ கி.மு. 700க்கு முன்னமே தமிழுக்கு ஓர் எழுத்து வரி வடிவம் இருந்தது; அதைப் பின்பற்றியே அசோக பிராமி எழுத்து உருவாக்கப்பட்டது; எனக் கொள்வதற் கான ஆதாரங் கள் உண்டு. 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம் பியன் கண்டியூரில் வி. சண்முகநாதன் கண்டெடுத்த புதுக் கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் "முருகு அன்" (முருகன்) என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு. 2000 -1500 ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். புதுக்கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினார் என்றும் அம்மொழி திராவிட மொழியே என்றும் இக் கண்டுபிடிப்பு நிறுவுகிறது என்பதும் அவர் கருத்து . ('The Neolithic people of Tamilnadu and the Indus Valley people shared the same language which can only be Dravidian and not Indo-Aryan"); 15 2006. இந்து நாளிதழ். எ. வரலாற்றுக் காலத்துக்கு சங்க காலத்துக்கு முந்தைய (Proto Historic) கால தமிழக வரலாறு (கி.மு. 1000 - கி.மு. 300) 38. சீனிவாசர் தம் நூலின் முதல் ஆறு இயல்களில் கி.மு. 4000 - கி.மு. 1000 கால அளவில் தமிழக நாகரிகம் எவ்வாறு வளர்ந் திருக்கும் என்ற தனது உன்னிப்பை விரிவாகத் தந்துள்ளார். அவ்வாறே வளர்ந்திருக்கலாம். அவர் கருத்து இன்றைய நிலை யில் பொதுவாக வரலாற்றறிஞர் - மாந்தவியலாளர் ஏற்றுள்ள கருத்து அல்ல. எனினும் குறிஞ்சி - முல்லை - நெய்தல் - மருதம் என்ற முறைப்படிதான் தமிழகத்தில் (ஏன் உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்பார் சீனிவாசர்) உருவாகியிருக்கும் என்ற கோட்பாடு ஒரேயடியாக ஒதுக்கிவிடக் கூடியதன்று; மேலும் சிந்திக்கத்தக்கதேயென்க. இயல்கள் 4லிலும் லுேம் இராமாயண பாரத இதிகாசக் கதைகளை வரலாற்று நிகழ்வுகளாக சீனி வாசர் கொண்டுள்ளதையும் இன்று யாரும் ஏற்பதில்லை. இது குறித்து சுவிரா ஜெய்ஸ்வால் (1974) கூறுவது வருமாறு. "மிகப் பெரும்பான்மை திராவிடர்களைக் கொண்ட தென்னாட்டுச் சமூகத்தில் தாங்கள் 'அய லகத்தார்' என்று கூறப்பட்டதை ஏற்றுக் கொள்ள தென்னிந்திய பிராமண வரலாற்றறிஞர் இணங்க வில்லை. (அவர்கள் விரும்பியவாறு) தென்னிந்திய வரலாற்றை உருவாக்கிட அவர்கள் ராமாயண - பாரத இதிகாசப் புனைகதைகளையும் புராணக் கற்பனைகளையும், குருட்டுத்தனமாகவும் ஆய்வுக் கண்ணோட்டம் இன்றியும் ஆதாரமாகக் கொண்ட னர். இந்தக் குறைபாடுகள் பி.டி. சீனிவாச ஐயங் காருடைய "தமிழர் வரலாற்றில் அதிகம்." "South Indian Brahmans were not prepared to accept at its face value the contention that they constituted "a foreign element” in an overwhelmingly Dravidian population" XXXXX a great deal of blind and uncritical reliance was placed on epic myths and Puranic stories for the reconstruction of the history of the south. P.T. Srinivasa Iyengars's History of the Tamils suffers heavily from Such defects". 39. தமிழக வரலாற்றில் வரலாற்றுக் காலத் தொடக்கம் என பொதுவாக இன்று ஏற்கப்படும் சங்க காலம் கிமு. 300 - கிபி. 300 சார்ந்தது. அதற்கு முந்திய வரலாற்றுக்கு முந்திய காலம்" ஆகிய கி.மு. 1000 - 300 பற்றிய செய்திகளைத் திறம்படத் தருவது ராஜன் (2004) தொல்லியல் நோக்கில் சங்ககாலம் ஆகும். ஆதிச்சநல்லூரில் உள்ள கி.மு. 1000 காலத்திய இடுகாடு 114 ஏக்கர் பரப்புள்ளது. அதில் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. கொடுமணலில் (சங்ககாலக் கொடுமணம் ) 50 ஏக்கர் பரப்புள்ள பழைய வாழ்விடத்திலும் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு விழுக் காடு அகழ்வாய்வுகளில் கிடைத்த எச்சங்களிலிருந்தே கிமு 1000 முதல் தமிழகத்தில் வாழ்ந்த மக்களே, இடையீடின்றி, சங்க இலக்கியம் விவரிக்கும் தமிழர் சமுதாய மக்களாயினர் என்று நிறுவ இயன்றுள்ள து. மகாதேவன் (2003) Early Tamil Epigraphy நூலில் தமிழிக் கல்வெட்டுகள் எவற்றையும் கி.மு. 200க்கு முந்தியதாகக் கருதவில்லை. ஆனால் அவற்றை (குறிப்பாக கொடுமணல் பானை ஓட்டுத் தமிழ்ப் பொறிப்புகளை) கிமு 4 அல்லது 5 நூற்றாண்டினவாகத் தான் கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை ராஜன் தந்துள்ளார். மேலே பகுதி ஆறையும் கீழே பத்தி 42 யையும் காண்க. 40. கிமு 1000 - கிமு. 300 காலகட்டமே தமிழகத்தின் இரும்புக்காலம் அல்லது பெருங்கற்படைச் சின்னக் (Megalithic) காலம் என்று குறிப்பிடப் படுகிறது. அக்கால கட்டத்தில் இறந்த வர்கள் தாழியில் புதைக்கப்பட்டனர். கற்பதுக்கைகளில் அடக் கம் செய்யப்பட்டனர். பெருங்கற்படைச் சின்னங்கள் சில விடங்களில் இருந்தன; சில விடங்களில் இல்லை ; எனினும் இக்காலம் "பெருங்கற்படைச் சின்னக்காலம்" என்றே பொது வாக குறிப்பிடப்படுகிறது. 41. கி.மு. 1000 அளவில் மக்கள் பெருமளவுக்கு ஆடுமாடு வளர்ப்பவர்களாகவே இருந்தனர். வேளாண்மை தொடக்க நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது அகழ்வாய்வுகளின் முடிவாகும். கொடுமணல், தாண்டிக்குடி பானை ஓட்டுத் தமிழின் பொறிப்புக் காலம் கி.மு. 5 அல்லது 4 ஆம் நூற்றாண்டாகத்தான் இருக்க வேண்டும் என ராஜன் நிறுவியுள்ளார். அப்பொழுதே எழுத்தறிவு பெற்ற சமுதாயம் தமிழகத்தில் இருந்தது. எனவே வரலாற்றுக் காலமே தமிழகத்தில் கி.மு. 500லிருந்து தொடங்கி யதாகக் கொள்ள இடமுண்டு என்பார் ராஜன். 42. தமிழிய மொழி பேசுநர் கிமு 2000க்கு முன்னர் இருந்தே தமிழகத்திலும் தென்னாட்டிலும் இடைவிடாது வசித்துவந்த மண்ணின் மைந்தரே என்பதையே தொல்லியல் ஆய்வுகள் - காட்டுகின்றன என்பதை ஆல்சின் தம்பதியர் 1988 தம் நூலில் பின்வருமாறு கூறுவர். "தென்னிந்தியா இன்று திராவிட மொழிகள் வழங்கும் பகுதி. அம்மொழிகளைப் பேசுவோர் பூர்வீகம் என்னவாக இருந்திருக்கலாம்? அவர்கள் (வடமேற்கிலிருந்து) தென்னிந்தியா விற்கு வந்து குடியேறும்போது தம்முடன் இரும்பையும் பெருங் கற்படை நாகரிகத்தையும் கொணர்ந்தனர் என (வலுவான ஆதாரமின்றிக்) கூறப்படுகிறது. தொல்லியல் சான்றுகளின்படி இப்படி நடந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரும்புப் பயன் பாட்டிற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கருநாடகத் தில் (தென் இந்தியாவில் பிற பகுதிகளிலும் கூட இருக்கலாம்). பெருங்கற்படை நாகரிகக் குடியிருப்புகள் இருந்துள்ளன; அவை இடையீடு இன்றி தொடர்ந்து இருந்து வந்துள்ளன ; வியக்கத் தக்க பண்பாட்டுத் தொடர்ச்சியுடன் இன்றும் உள்ள பண் பாட்டுக் கூறுகள் பல அந்தப் பழைய நாகரிகக் கூறுகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகின்றன. உடற்கூறு அமைப்பிலும் அந்தப் பழைய நாகரிக மக்களும் இன்றைய மக்களும் பெரும் அளவுக்கு ஒன்று போலவே உள்ளனர். எனவே தென் னிந்தியாவில் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே) புதுக்கற்கால நாகரிகம் படைத்த மக்களிடையே உருவானவையே திராவிட மொழிகள் என்பதை மறுப்பது கடினமாக உள்ளது. தென்னிந்தியாவில் பற்பல பகுதிகளில் இருந்த புதுக்கற்கால நாகரிக மக்களிடையே தொடர்பு இருந்திருக்கும், பொதுவான திராவிட மொழியும் இருந்திருக்கும். கி.மு. 3000 - 1000 கால அளவில் தென்னிந்தியாவில் இருந்த புதுக் கற்கால குடியிருப்பு களில் இருந்து பிறந்தவையே வரலாற்றுக் காலத் தொடக் கத்தைச் சார்ந்த குடியிருப்புகளும் எனலாம்." The southern part of the peninsula is today the homeland of the Dravidian language, and we may well enquire what - speaking in broadest terms - is likely to have been their history. It has been claimed, though not on very solid grounds, that the earliest speakers of these languages brought with them into Peninsular India both iron and the custom of making megalithic graves. In the light of archaeological evidence this appears to be extremely improbable. We now know that at least for a millennium prior to the arrival of iron, there were established settlements in Karnataka, and probably also in other parts of the peninsula, and these settlements show evidence of a remarkable continuity of culture. Many modern culture traits appear to derive from them, and a substantial part of the populations shows physical affiliation to the Neolithic people. In the light of all this it is difficult to believe that the Dravidian languages do not owe their origin to the same people who produced the Neolithic culture there....... the several regional cultures ... had throughout a degree of interaction and probably originally a common language family, Dravidian...... the settlements of the third - second millennia appear to be ancestral to those which we encounter there from the beginnings of history onwards. (p. 353) 43. பெருங்கற்படை நாகரிகம் தமிழ்நாட்டிலிருந்தே வடக்கே தக்காணத்திற்குப் பரவியது என்று தொல்லியலறிஞர் A. சத்தியமூர்த்தி 2652007 இந்து நாளிதழில் தெரிவித்துள்ளார். (அ) சங்ககாலத் தமிழக வரலாறு (கி.மு. 300 - கி.பி. 300) 43. தமிழக வரலாற்றில் சங்க காலம் பொதுவாக கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை எனப் பெரும்பாலான வரலாற்றறிஞர் இன்று ஏற்கின்றனர் (சீனிவாசர் சங்க இலக்கிய காலமாக நிர்ண யித்த கிபி.1 - 600 கால வரம்பு இன்று ஏற்கப்படுவது இல்லை ) எட்டுத்தொகை - பத்துப்பாட்டு நூல்களில் காலமும் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் இந்த அறுநூறு ஆண்டுகால அளவுக்குள் பல்வேறு காலங்களைச் சார்ந்தவை. கி.மு. 300க்கு முற்பட்டதான தொல்காப்பியம் தமிழக மூவேந்தரைப் பற்றிக் கூறுவது: "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” "போந்தை வேம்பே ஆர் என உரூஉம் மாபெரும் தானையர் மலைந்த பூவும்" சேரசோழபாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் ஆட்சியின் தென் எல்லை குமரி முனை; வட எல்லை மேற்குக் கடலிலிருந்து கிழக்குக் கடல் வரை வேங்கட மலையை அடுத்து வடபால் சென்றது எனலாம். 44. சந்திர குப்த மெளரியர் (கிமு. 324 - 300) காலத்தில் கிரேக்க செல்யூகஸ் நிகேடர் தூதனாக இருந்த மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டை ஹெராக்லஸ் (= சிவன்?) மகள் ''பாண்டைய'' ஆண்டு வந்தாள் என்று கூறுகிறார். பாண்டி நாட்டு ஊர்கள் 365 என்றும், ஒவ்வொரு நாளும் அரண்மனைத் தேவைகளை ஓர் ஊர் நிறைவேற்றியதாகவும் மெகஸ்தனிஸ் இன்னொரு செய் தியைக் கூறுகிறார். 1500 ஆண்டு கழித்து பெரும்பற்றப் புலியூர் நம்பி கிபி. 12 நூற்றாண்டில் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் பாண்டியன் மகள் தடாதகை சிவனை மணந்த கதை வருகிறது. இதுபோன்ற ஒரு தொன்மக்கதை 1500 ஆண்டு களாக வழங்கி வந்த தென்க. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத் தில் ஆய்ச்சி மாதரி "பாண்டியன் கோயிலில் நெய் முறை நமக்கு இன்று ஆம் என்று கூறுவது மெகஸ்தனிஸ் சொன்ன இரண் டாவது செய்தியை நினைவூட்டுகிறது. 45. இலங்கையை கி.மு. 483-445ல் ஆண்ட மன்னன் விஜயன் பாண்டி அரச குமாரியை மணந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அனுராதபுரத்தில் கி.மு. 307-247ல் சிங்கள மன்னன் முட்ட சிவன் ஆண்ட பொழுது தென்கிழக்கு இலங்கைப் பகுதியான உரோ கண நாட்டில் மகமத்தை தலைநகராகக் கொண்டு "மஜ்ஜி மராஜன்' (மச்ச மகாராஜன்) என்றழைக்கப்பட்ட பாண்டிய குலத்தவர் சிலர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. 46. அசோகன் (கி.மு. 273-236) செதுக்கிய 2வது, 13வது பாறைக் கல்வெட்டுகளில் தமிழ் வேந்தர் குறிக்கப்படுகின்றனர். ''யே ச அந்த சோட, பாண்டிய, சதியபுத, கேரளபு தோ, தாம்ப பன்னி, அந்தியோகோ நாம யோன ராஜா" ''சதியபுதோ" என்றது சங்க கால அதியமான் பரம்பரைக் குறுநில மன்னரைக் குறித்தது. திருக்கோயிலூர் அருகே 15 கல் தொலைவில் ஐம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின் வாசகம் : 'சதியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி ஈத்த பாளி" என்பதாகும். மாமூலனார் எட்டுத்தொகைப் பாடல்கள் மோரியரையும் நந்தரையும் சுட்டுகின்றன. மோகூர் மீது படையெடுத்த மோரியர் தங்கள் தேர்களைச் செலுத்த மலைப் பாறைகளை வெட்டி நீக்கி பாதை ஏற்படுத்தியதை மாமூலனார் அகநானூற்றுப் பாடல்கள் 251,281 மற்றும் ஏனைய புலவர் பாடல்கள் அகம் 69, புறம் 175 குறிப்பிடுகின்றன. இந்நிகழ்ச்சி பிந்துசாரன் (கிமு 298 - 273) காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர் கே.கே. பிள்ளையும் சி. இராமச்சந்திரனும். (ஈண்டு குறிக்கப்பட்ட மோரியர் ''பிற்கால மோரியரே' என்ற சீனிவாசர் கருத்து ஏற்கப்படுவதில்லை ) அகம் 265 மாமூலனார் பாடலில், பல்புகழ் நிறைந்த வெல்போர்நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇ, கங்கை நீர்முதல் கரந்த நிதியத்தை தேடித் தலைவன் சென்றுள்ளானோ எனப் பிரிவிடை வேறு பட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழியிடம் சொல் கிறாள். 47. கி.மு. 2ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த கலிங்க மன்னன் காரவேலனின் ஹாதிகும்பா (யானைக்குகை) கல் வெட்டில் கலிங்க நாட்டுக்கு ஊறுவிளைத்த, 13 ஆண்டுகள் செயல்பட்டு வந்த திரமிர ( தமிழ் ) (வாணிகக்) கூட்டமைப்பை அவன் வென்றதாகக் கூறுகிறது. 48. கி.மு. 4-3ம் நூற்றாண்டுகள் சார்ந்த தமிழிக் கல் வெட்டுகளில் அக்காலத்தில் இருந்த பண்டைத் தமிழ் மன்னர், அவர்களுடைய சிற்றரசர் / அதிகாரிகள் ஏனையோர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. (i) மாங்குளம் (அரிட்டாபட்டி மதுரை மீனாட்சிபுரம் அருகே ARE 460/1906"கணிநந்தி ஆசிரியர்க்கு அங்கே ஏமம் ஈத்த நெடுஞ்செழியன் பனவன் கடலன் வழுதி கொடுபித்த பள்ளி' (ii) ஆறுநாட்டார்மலை (புகளூர் அருகே), வேலாயுதம் பாளையும் கரூர் தாலுகா ARE 34 முதலியவை / 1927-28 (ஆசீவக/சமண முனிவன்) "செங்காயபன் உறைய கோ அதன் சேரலிரும் பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல் இங்குக் குறித்த சேர மன்னர் மூவரும் பதிற்றுப்பத்து 7,8,9 பத்துக்களின் தலைவர்கள் என்று ஐ. மகாதேவன் கருதுகிறார். (iii) எடக்கல், வயனாடு மாவட்டம், கேரளா ; இங்கு ஒரு குகையில் 1996 பெப்ரவரியில் ஐ மகாதேவன் படித்த கல்வெட்டு (முதலில் 1887ல் லோகன் எழுதிய "மலபார் மானுவல்" - இல் இக்கல்வெட்டுப் பற்றி கூறப்பட்டு இருந்தது) 'கடும்மி புத சேர" = கடும் மான் சேரன் 'கோவாதான்'' = கோ அதன் (iv) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் வைகை யாற்றின் தென் கரையில் புலிமான் கோம்பையில் 2006 மார்ச் மாதம் கண்டு பிடித்த கி.மு. 300க்கு முந்தைய மூன்று நடுகற்களில் உள்ள கல்வெட்டுகள் (கே. ராஜன்: 2007) கல்பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர்ஆகோள் அன் ஊர் அதன் ன் அன் கல் வேள் ஊர் அவ்வன் பதவன் இதே தமிழி போன்ற எழுத்துப் பானைப் பொறிப்புகள் பல, கி.மு. 600 - 500 சார்ந்தவை, இலங்கை அனுராதபுரத்திலும் கிடைத்துள்ளன. (தெரனியாகல, எஸ்.யூ. 2004) 49. சங்ககாலப் பாண்டிய, சோழ, சேர மன்னர் வெளியிட்ட காசுகள் பற்றி விவரங்களை காசு இயல் ஆய்வறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தமது சங்ககாலக் காசுகள் (1997) நூலில் இருந்து அறியலாம். கி.மு. 200லிருந்து இம் மூவரும் வெளியிட்ட முத்திரைக் காசுகளும், முத்திரைக்காசுப் பாணியைப் பின்பற்றி வெளியிட்டனவும் கிடைத்துள்ளன. 'பெருவழுதி' பெயர் பொறித்த பாண்டிய மன்னர் காசுகள் கி.மு. 200 சார்ந்தவை. சேர மன்னர்கள் மாக்கோதை, குட்டுவன் கோதை பெயர் பொறித்த காசுகளும் கிடைத்துள்ளன. 50. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மூவேந்தர்கள் கி.மு. 300 முதல் நான்கைந்து நூற்றாண்டுகளில் ஆண்டவர்கள். (அவர்கள் அனைவரும் கி.பி. 3-4 நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவர்கள் என்ற சீனிவாசர் முடிவு இன்று ஏற்கப்படுவதில்லை எனினும், அவர்களைப் பற்றிய செய்திகள் இந்நூல் இயல்கள் 20-23, 25-26ல் தரப்பட்டுள்ளன. (அவர்கள் கால வரிசையை சங்க இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் நிர்ணயிக்க கே.என். சிவராசபிள்ளை (1932) முதலில் முயன்றார். அவர் வழியில் மேலும் கடுமையாக ஆழமாக (1932க்குப் பின்னர் கிட்டிய செய்திகளையும் பயன்படுத்தி ) வி.பி. புருஷோத்தம் 1989 இல் சங்ககால மன்னர் காலநிலை வரலாறு என்னும் நூலை வெளியிட்டார். அம் மன்னர்கள் கிமு 375 முதல் கி.மு. 25 வரை அவர் வரிசைப்படுத்தியுள்ளார். சங்கப்பாடல்களின் கால வரையறை பற்றிய எவா வில்லன் (2002) கட்டுரையும் படிக்கத் தக்கதாகும். இத்துறையில் அறிஞர் மேலும் முயன்றால் நாளடை வில் மேலும் தெளிவு கிடைக்கலாம். 51. சங்க கால சேர சோழ பாண்டிய நாடு ஒவ்வொன்றிலும் ஒரு வேந்தன் மட்டுமே என்ற நிலை இன்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அவ் வேந்தன் தலைமைக்கு (முழுமையாகவோ, ஓரளவுக்கோ, பெயரளவுக்கோ) கட்டுப்பட்டு அவ்வேந்தன் உடன் பிறப்பு, உறவினர் ஆகிய "சிறுவேந்தரும் ஆண்டு வந்திருக்க வேண்டும்; எனவேதான் சங்க இலக்கியப் பாடல்கள் ஏராள மான வேந்தர் பெயர்களைக் குறிப்பிடுகின்றன என்று நீலகண்ட சாஸ்திரி, என். சுப்பிரமணியன் ஆகியோர் கருதுகின்றனர். கூ தமிழர் வாணிகம் 52. இந்நூலின் இயல்கள் 3,7,10,14,18 ஆகிய ஐந்தில் கி.மு 4000லிருந்து கிபி. 500 முடியவுள்ள தமிழக அயல் நாட்டு வணிகம் சார்ந்த பல செய்திகளையும் சீனிவாசர் மிக விரிவாகத் தந் துள்ளார். அண்மைக் காலச் செய்திகள் சிலவற்றைக் குறிப்பிட்டால் போதும் : (i) எகிப்திய ஆசிரிஞ்சஸ் பேபிரஸ் தொகுதியில் கிடைத்த (கிபி. 1ம் நூற்) கிரேக்க நாடகம் ஒன்றில் உள்ள திராவிட மொழிப் பகுதிகள் தமிழே என இரா. மதிவாணன் நிறுவியுள்ளார் (கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் : 1978) (ii) எகிப்தில் குவெசிர் - அல் - காதிம் என்னும் இடத்தில் 1979. 80ல் கிடைத்த கி.பி. 2ம் நூற்றாண்டைச் சார்ந்த பானை ஓடுகளில் தமிழி எழுத்துகளில் : கணன் (= கண்ண ன்) ; சாதன் (= சாத்தன், பெர்னிகே துறைமுகத்தில் கிடைத்த கிபி. 40 சார்ந்த பானை ஓட்டில் "கோற்பூமான்' என்ற பொறிப்பு. (iii) பேரியாறு கடலில் கலக்கும் இடத்திலுள்ள முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகனும் நைல் ஆறு கடலில் கலக்கும் அலெக் சாந்திரியா நகர கிரேக்க வணிகனும், கிபி150ல் செய்த வணிக ஒப்பந்தம் ஒன்று (பேபிரசில் கிரீக் மொழியில் எழுதியது) வியன்னா அருங்காட்சியகத்தில் 1985 இல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. (iv) கேரள எர்ணாகுளம் மாவட்டத்தில் பேரியாற்றின் தென்கரையில் பட்டனம் என இன்று அழைக்கப்படும் இடத் தில் பண்டைய முசிறியின் தடயங்கள், தமிழ்ப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள், ரோம் நாட்டு ஆம்போரா (மதுச் சாடிகள்) சங்க காலச் சேரர் நாணயம் போன்றவை 2005 அகழ் வாய்வில் கிட்டியுள்ளன. (வி.செல்வகுமார் கட்டுரை: IUDL XXXV2, சூன் 2006) (v) தாய்லாந்து நாட்டில் மேலைக்கரையின் தென் பகுதி யில் ஒரு துறைமுகத்தில் 1992 - 93ல் கிடைத்த ஒரு சாணைக் கல்லில் "பெரும்பத்தன் கல்" என்று கிபி. 3ம் நூற்றாண்டு சார்ந்த தமிழிப் பொறிப்பு உள்ளது. ''துற ஒ" (= துறவோன்) என்ற கிபி. 2ஆம் நூற்றாண்டு சார்ந்த தமிழ்ப் பொறிப்பு கொண்ட பானை ஓடு ஒன்று தாய்லாந்தில் கிடைத்துள்ளது. (இந்து: 1672007) க0. சங்க காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை மதிப்பீடு : 53. கிபி. 2001ல் உலக மொத்த மக்கள் தொகை 00 கோடி (இந்தியா 100 கோடி உட்பட). இந்தியர் 100 கோடியினரில் தமிழ் நாட்டினர் 6 கோடி. சங்ககால அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் அவரவர் சார்ந்துள்ள கொள்கையை ஒட்டிப் பல்வேறு நிலைமைகளை தம் விருப்பு வெறுப்புக்கேற்ப உன்னித்து எழுதும்பொழுது முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என்ன? அந்தக் காலக் கட்டத்தில், தமிழக மொத்த மக்கள் தொகையே சில பல லட்சம் அளவி லேயே இருந்திருக்கும் என்பதே அதுவாகும். பண்டை இந்தியாவின் பெங் குயின் வரலாறு (2002) என்னும் நூலில் பாகிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட 1947க்கு முந்திய இந்தியப் பரப்பின் மொத்த மக்கள் தொகையைப் பின்வருமாறு ரோமிலா தபார் மதிப் பிட்டுள்ளார். இந்திய உலக மக்கள் தொகை (1947க்கு முன்னர் (பிற அறிஞர்கள் இருந்த பரப்பு) கணிப்பின் படி மக்கள் தொகை கி.மு. 500 1 கோடி 10 கோடி கிபி1 2 கோடி 20 கோடி கிபி. 1600 15 கோடி 65 கோடி கிபி. 1881 25 கோடி 140 கோடி 54. கோலாம்பூரில் 1966 ஏப்ரலில் நடந்த முதல் உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டுக்கு கட்டுரைத் தொகுப்பு 1969 ஏப்பிரலில் வெளிவந்தது. அக்கட்டுரையில் ஒன்று எம்ஈ. மாணிக்கவாசகம் பிள்ளை எழுதிய 'சங்க காலத்தில் தமிழக மக்கள் தொகை' என்பதாகும். தற்போதைய கேரளம் சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியே. 191 சென்சஸ்படி தற் போதைய தமிழ்நாடு + கேரளம் மொத்த மக்கள் தொகை 2.80 கோடியாக (2.01 + 079) இருந்தது. (கிபி 1ல் மொத்த உலக மக்கள் தொகையை 20 கோடியாகக் கொண்டு) 1911 தமிழ்நாடு + கேரளா மக்கள் தொகை 2.80 கோடியைப் படிப்படி யாகக் குறைத்துக் கணக்கிட்டு (சங்ககால ) தமிழக மக்கள் தொகையைப் பின் வருமாறு கணக்கிட்டுள்ளார் மாணிக்கவாசகம் : கிபி.1 36 லட்சம் கி.பி. 300 50 லட்ச ம் கி.மு. 300 இல் தமிழக மக்கள் தொகை 36 லட்சத்துக்கும் குறைவாக இருந்திருக்கும். ஆக கி.மு. 300 முதல் கி.பி. 300 முடிய அறுநூறு ஆண்டுகளுமே. அன்றைய தமிழக (வேங்கடத்திற்கு தெற்கே தென்னிந்தியா) மக்கள் தொகை எந்தக் கால கட்டத் திலும் சுமார் 25 லட்சத்துக்கும் 50 லட்சத்துக்கும் இடைப்பட்ட ஒரு எண்ணிக்கையில் தான் இருந்திருக்கும். அதாவது இன்றைய சென்னை நகர மக்கள் தொகை 40 லட்சத்துக்கு கொஞ்சம் கூடக் குறைய இருக்கும். இன்றைய தமிழகப் பரப்பின் அன்றைய மக்கள் தொகை 30 லட்சம் என்க. மொத்த மக்கள் தொகை சங்ககாலத்தில் அவ்வாறு மிகக் குறைந்ததாக இருந்த துடன் போக்குவரத்து வசதிகளும் மிக மிகக் குறைவாக இருந் திருக்கும். 55. எனவே வரலாற்று ஆசிரியர்கள் எச்சரிக்கையுடன் அக்கால சமூக மற்றும் பிற நிலைமைகளைப் பற்றி எண்ணிப் பார்த்து எழுதுதல் நலம். 1992ல் தனது உலகவரலாறு (பெலி கன் வெளியீடு ) நூலில் ஜே.எம். ராபர்ட்ஸ் விடுத்த எச்சரிக்கை ''பழங்காலத்தில் இருந்த ஐரோப்பிய மக்கள் அன்றாட வாழ்க்கை சமூக உறவுகள் பற்றியெல்லாம் பொதுவான ஆனால் அபத்த மான கருத்தோட்டங்களைக் கூறுவது எளிது என்பதாகும். அது சங்ககாலத் தமிழர்க்கும் பொருந்துவதாகும். காரணம் வில் & ஏரியல் டுராண்ட் கூறியது போல "வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை, மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று ('most history is guessing and the rest is prejudice) "இடதுசாரி " / ''வலது சாரி' / ''நடுநிலை" போன்ற பல்வேறு போர்வைகளில் வரலாறு எழுதுபவர்கள் பலர் ("Committed historians") தத்தம் பற்று காரணமாக ஒரு கோணத்தில், ஒரு நிலையில், ஒரு தொலைவிலிருந்து (காமாலைப் பார்வை போன்று ஒரே நோக்கில் பார்த்து தாம் எழுதுவதே வரலாறு ; ஏனையோர் எழுதும் வரலாறுகள் சட்டவிரோதம், நேர்மையற்றது, தவறு என்று கருதும் போக்கு தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். முன் இரண்டு பகுதிகளையும் (89) அடுத்துவரும் இரண்டு பகுதிகளை யும் படிக்கும் பொழுது இதனைக் கருத்தில் கொள்ளுதல் நலமாகும். கக. சமுதாயமும் பண்பாடும் 56. இன்றையத் தமிழ் நாட்டுப் பரப்பின் சங்ககால மக்கள் தொகை 30 லட்சத்துக்கு மேல் இருந்திருக்காது என்று கண் டோம். நாட்டின் பெரும்பகுதி கானகமாக இருந்திருக்கும்; போக்குவரத்து வசதிகள் மிகமிகக் குறைவு. ஐந்திணைகளிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக் குழுவினராகவே இருந் திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக் குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. ஐந்திணை ஒழுக்கம் பற்றி இந்நூல் இயல்கள் 1, 5ல் சீனிவாசர் விளக்கி யுள்ளார். அக்காலத்தில் சாதியோ வர்ணா சிரமோ இருந்திருக் காது. (இன்றும் திராவிட மொழி பேசும் இனக் குழுவினரான கந்தர், ஒரவோன் போன்றவரிடம் சாதி இல்லை ) நால் வருணம் பற்றிக் கூறும் தொல் பொருள், மரபியல் சூத்திரங்கள் 71 - 85 இடைச்செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர். ஆரியத் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ம் நூற்றாண்டை ஒட்டியே மெதுவாகத் தொடங்கி யிருக்கும் என்பர் கே.கே.பிள்ளை (1968) சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத் தாக்கம் இருந்திருக்கும் என்கிறார். பிராமணர் தமது வருணா சிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன் விரகாகப் பயன் படுத்தி திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்து, சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர் என்பர் ஸ்லே டர் (1924) "The Aryans found a system resembling caste already in force among the Dravidian inhabitants and they adapted and modified it to suit their Own purposes" தமிழகத்தில் இவ்வ கையில் ஆரியத் தாக்கம் ஏற்பட்ட காலம் கி.பி. 600க்குப் பின்னர்த்தான் இருக்க வேண்டும். திருக்குறளும் யாண்டும் "ஒரு குலத்துக்கொரு நீதி" கூறவில்லை . 57. சங்க இலக்கியங்களில் "அந்தணர்' எனச் சுட்டப்படு வோர் அனைவரும் ஆரியப் பிராமணர் அல்ல. வேள்வி பற்றிய செய்திகளும் சில விடங்களில் வந்த போதிலும் அவற்றைச் செய்த அனைவரும் வடநாட்டிலிருந்து வந்த ஆரியர் என்று கருத இடமில்லை ; அக்காலத்திலும் சரி பிற்காலத்திலும் சரி தமிழ் மக்கள் சிலரும் பூணூல் அணிந்தும் வேதச் சடங்குகளை கடைப்பிடித்தும் பிராமணராக மாறியிருப்பர் என்பர் என். சுப்ரமணியம் (1998). The other groups which go by the local names were in all probability groups of Tamil wise men and religious folk who become converts to Brahminism by sporting the thread and assuming Brahminical ways). ரிக் வேத காலத்திலேயே சிந்து வெளித் தமிழ் நாகரிக அறிஞர் பிராமணர்களாக, ரிஷிகளாக ஆரியருடன் கலந்து விட்டனர் என்பதை மேலே கண்டோம். 58. பழங்கால (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தொடக் கத்திலிருந்து தமிழ் - பிராமி (தமிழிக் கல்வெட்டுக்கள் 89ஐயும் தொடக்ககால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் 21ஐயும் தமது "தொடக்ககால தமிழ்க் கல்வெட்டுக்கள் ஆதி முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு முடிய (2003) ஆம் ஆண்டைய நூலில் செம்மை யாகப் பதிப்பித்த அறிஞர் ஐ.மகாதேவன் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இக்கால கட்டத்தைச் சார்ந்த கல்வெட்டுக்கள், ஏராளமான பானை ஓட்டுப் பொறிப்புகள், காசுகள், முத்திரைகள் ஆகியவை யெல்லாம் தமிழில் உள்ளன. தமிழகப் பொது மக்களிடம் பரவலாக எழுத்தறிவு இருந்ததற்கு இது சான்று என்கிறார் அவர். (தமிழ்நாட்டுக்கு வடக்கில் உள்ள தென்னிந்தியப் பகுதி யிலோ வென்றால் அவை அப்பகுதிப் பொது மக்கள் பேசிய தெலுங்கு / கன்னட மொழிகளில் அல்லாமல் அப்பகுதி மேட்டுக்குடியினருக்கு மட்டும் தெரிந்த பிராகிருத மொழியில் உள்ளன. அப்பகுதிப் பொதுமக்கள் எழுத்தறிவு பெற்றிலர் என்பதுதான் காரணம்.) அவ்வட பகுதிகளில் ஆட்சி நடத்திய மெளரியர், சாதவாகனர், இக்ஷ்வாகுகள், கடம்பர், சாலங் காயனர், விஷ்ணுகுண்டின், பல்லவர் ஆகியோர் மக்கள் மொழி களிலன்றி பிராகிருதத்தில் ஆட்சி நடத்தினார். தமிழக மன்னரோ வெனில் தமிழில் ஆட்சி நடத்தினர். அதனால்தான் தமிழக மக்களிடம் சங்க காலத்தில் எழுத்தறிவு சிறந்திருந்தது. சங்க இலக்கியப் புலவர் 473 பேர்களுள் 30 பேர் பெண்டிர் (குறமகள், குயத்தியர் உட்பட). 59. சங்க காலத்திலேயே இசை, நடனம், ஓவியம் ஆகிய கலைகள் சிறந்து விளங்கின. இன்றைய இந்திய இசை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே என்ற கோஸ்வாமி (1957, கருத்தை மேலே 23ம் பகுதியில் குறித்தோம். அவர் கூற்றில் ஒருபகுதி பின்வருமாறு : "இசையறிவை ஆரியரல்லாதவர்களிடம் ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே, சாம வேதத்திலிருந்து இந்திய இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர். "By this fiction that Saman is the source of all Indian music alone it was possible to forget conveniently the debt the Aryans owed to the non - Aryans for their musical knowledge and practice".ஏழிசை எழுத்தின் பெயருக்கு சேந்தன் திவாகரம் நிகண்டில் இரண்டு நூற்பாக்கள் உள். 'சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே யாகும் 'ஆ ஈ ஊ ஏ ஐஓ ஓள என்னும் இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக்குரிய" இதில் முதலாவது நூற்பா பிற்கால இடைச் செருகல் (அதுவும் அளவை யியல் நியதி தெரியாமல் இரண்டாவதற்கு முன்னர்ச் செருகியுள்ளனர்!) என்பர் இரா. இளங்குமரனார் (1993). இன்று கருநாடக இசை எனப்பெயர் கொண்டு உலவுவது தமிழிசையே. முகமதியர் 1565க்குப் பின்னர் தென்னாட்டிற் புகுந்த போது (விசய நகரக்) கருநாடக மன்னர் தலைமையா யிருந்ததாலும் தமிழ்நாட்டிலும் கருநட மன்னர் தலைமை இருந்ததாலும் கருநாடகச் சங்கீதம் என்றும் அழைத்தனர். 60. ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட் தமது "பழந்தமிழ்ச் செய்யுள் கள்: அவை தோன்றிய சூழலும், அவற்றை அடியொற்றிய சம்ஸ்கிருதப் படைப்புகளும்" (1975) - நூலில் கூறுவது, வருமாறு: ''பாணர் தமிழரிடையே தொன்று தொட்டு இருந்து வருபவர்; சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவர்; எனவே பண் அடிப்படையில் அமைந்த தென்னிந்தியத் தொன்மை இசை வடவரிடமிருந்து கடன் பெற்றதாக இருக்க இயலவே இயலாது. ''பண்" என்னும் சொல்லிலிருந்து "பாணன்" என்னும் சொல் தோன்றியது. மாறாகப் பிற்கால இந்திய இசையின் ராகங்கள் (அவை பண்களின் உருமாற்றங்களே) தென்னிந்தியத் தொல் இசை யிலிருந்து உருவாயின என்பதே சரி. தக்காணப் பெருங்கற்கால நாகரிகம் சார்ந்த வாய்மொழி இலக்கியமானது பாணர்கள் மற்றும் எழுத்தறிவு பெறாத நாட்டுப்புறப் பாடகர் களிடையே உருவாகிக் கி.பி. முதல் நூற்றாண்டை ஒட்டி மகாராஷ்டிரப் பிராகிருதத்தில் பரவி, அங்கிருந்து இவ்விலக் கியத்தின் தாக்கம் சமஸ்கிருதக் கவிஞர்களிடம் ஏற்பட்டதன் காரணத்தால்தான் சமஸ்கிருதத்தில் தரமான காவியச் செய் யுளிலக்கியம் தோன்றியது என்பதை இப்புத்தகத்தின் இரண் டாம் பகுதியில் காணலாம். இக்கால கட்டத்தில் அல்லது இதற்குச் சற்று முன்னர்த் தென் இந்திய இசைக்கலையும் வட இந்தியாவில் பரவியிருக்க வேண்டும் என எனக்குத் தோன்று கிறது. இது பற்றி விரிவான , ஆழ்ந்த ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லையாகை யால் இதைத் திட்டவட்டமான முடிவு என்று இன்றைய நிலையில் கூற இயலாது. இக்கருத்தின் அடிப்படையில் வியக்கத்தக்கதும் மனநிறைவு தருவதுமான ஒரு செய்தி வெளிவருகிறது. அதாவது தென் இந்தியச் சாதியினரில் தாழ்நிலையில் இருந்த பாணரிடையே இருந்துதான் இந்தியா வின் இசையும் பாடல்களும் பெருமளவு உருவாயின என்னும் செய்தியே அது.'' 61. சீர் - சீரை - சீர்மை ; சீரன் - கீரன்; சீர்த்தி - கீர்த்தனை ; ஆக தமிழ்ச் சீர்த்தனை கீர்த்தனையாகியது. இக் கீர்த்தனை வடிவம் (அதாவது பல்லவி, அனுபல்லவி, சரணம்) சங்க காலத்திலே உருவானதே யென்பதையும் அது பிற்காலத்து புரந்தரதாசரோ, தாள்ளபாக்கம் அன்னமாசார்யரோ உருவாக் கினரென்பது பிழையென்றும் மு. அருணாசலம் (1980) நிறுவி யுள்ளார். 62. இசையொடு (ஆடலும் நடனமும்) கூத்தும் சங்க காலத்திலேயே சிறந்து விளங்கின. அக்காலத்தையொட்டி வந்த சிலப்பதிகாரத்தில் அக்கலைகளின் உச்சநிலையைக் காண லாம்; அடியார்க்கு நல்லார் உரை அக்கலை நுட்பங்களை விளக்குகிறது. தமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம் / சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ''பரத நாட்டியம்' எனப் புதுப் பெயரிட்டவர் ஈ. கிருஷ்ண ஐயர். தமிழ் ஆடற்கலை ''பரதர் பெயரில் வழங்கும் நாட்ய சாஸ்திரத்தில் இருந்து பிறந்தது எனக் கூறுவது பிதற்றல் என்பதை புரட்சிதாசன் தம் நூல்கள் பலவற்றில் நிறுவியுள்ளார். 63. சங்க நூல்களில் காணும் கட்டடக்கலை சிந்துவெளி நாகரிகக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே. எடை அளவுகள், சிற்றிலக்க முறை ; 4 செமீ. (= 3 அங்குலம்) கோல் ; 2 % X4 = 17 ஆகும். 11, 22, 33 என்றவாறு 11ன் மடங்காக வரும் அளவு கள், போன்றவை யெல்லாம் சிந்துவெளிக் காலத்திலிருந்து தொடர்ந்து வருபவையே (எஸ். சண்முகம் 1980 ; கு. வேங்கடாசலம் 1983, தெய்வ நாயகம் 2002). வட இந்தியத் தொல் தமிழ சிந்து வெளி மக்களிடமிருந்தே ஆரியர் பிற கலைகளைப் போல கட்டடக் கலை யையும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அம் மக்களுடைய கோட்டை களையும் நகரங்களையும் பற்றி ரிக் வேதத்தில் குறிப்புகள் பல. பிற்கால மகாபாரதமும் யுதிஷ் டிரனுக்கு சிறந்த அரண்மனையை ஒரு தானவனே (அசுரனே) கட்டிக் கொடுத்ததாகக் கூறுகிறது. ஓவியக்கலையும் சிறந்து இருந்ததைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. மணிமேகலை "ஓவியச் செந்நூல்" பற்றிக் குறிப்பிடுகிறது. கஉ சமயம், மெய்யியல் 64. தொல்காப்பியம் கூறும் ஐந்திணைக் கடவுளர் முல்லைக்கு மாயோன், குறிஞ்சிக்கு சேயோன், மருதத்துக்கு வேந்தன், நெய்தலுக்கு வருணன் ஆவர். வேந்தனுக்கும் வருண னுக்கும் பழந்தமிழ்ப் பெயர்கள் சேணோன், கடலோன் என்று இருந்திருக்கலாம் என்பர் சீனிவாசர். (சென்னைப் பகுதி மீனவர் கடலம்மையை வழிபடுகின்றனர்; மலையாளக் கரையிலும் கட லம்மா வணக்கம் உண்டு. எனவே கடலோன் என்னும் பெயர் வருணன் என்று மாற்றப்பட்டிருக்கலாம் என்பர் சுவெலெபிலும்) மாயோன் பிற்காலத்தில் மால் (அதாவது விஷ்ணுவின் அவதார மான கிருஷ்ணன்) ஆகக் கருதப்பட்டான். வட இந்தியத் தமிழியக் கடவுள் ஒன்று விண் - விஷ்ணு என்று மாற்றப் பட்டிருக்கலாம் என்பர் சீனிவாசர், பிரிஸ்லஸ்கி (Przluzki), எல்.வி. இராமசாமி ஐயர் போன்றவர்கள். சங்க இலக்கியம் 67 - 69 இடங்களில் முருகனைச் சுட்டுகிறது; 27 இடங்களில் வேலனைச் (வேலை உடையவன் = முருகன்) சுட்டுகிறது. தமிழக் கடவுள் ஒன்றின் இருவேறு வடிவங்களே முருகனும் சிவனும் என்பர் மறைமலையடிகள். பின்னர் சிவன் என அழைக்கப்பட்ட ரிக் வேத ருத்ரன் ஆரியரல்லாதாருடைய கடவுளே என்று சிந்து வெளி அகழ் வாய்வுக்கு முன்னரே அறிஞர் முடிவு செய்து விட்டனர். அவ்வகழ்வாய்வில் கிட்டிய பசுபதி முத்திரை, 'யோகி' உருவச்சிற்பம் மேலும் பல சான்றுகளைக் கண்ட சர் ஜான் மார்ஷல் உலகில் மிகத் தொன்மையானதும் இன்றும் நிலவிவருவதுமான வழிபாடு சிவன் வழிபாடே என்பார். (தண்டேகரும் 1979 நூலில் இக்கருத்தினரே) சங்க இலக்கியப் பாடல்கள் "சிவன் " பெயரைக் குறிப்பிட்டில ; அவனை விளக்கும் தொடர்கள் மட்டுமே 'ஆலமர் செல்வன்"; "முக்கட் செல்வன்'' போன்றவை உள்ளன. 65. சிந்துவெளி நாகரிகத்திலிருந்து இன்று வரைத் தாய்த் தெய்வ வழிபாடும் திராவிடரிடம் சிறப்பாக உள்ளது கொற் றவை, பழையோள் (சேயோனின் தாய் - பெரும்பாணாற்றுப் படை ; 458) கானமர் செல்வி, காடுகிழாள், கடல்கெழு செல்வி, எல்லம்மன்/எல்லையம்மன் (பின்னர் ரேணுகா என சமஸ் கிருதப் பெயர் பெற்றாள் ) எனப் பல பெயர்களில் தாய்த் தெய்வம் வழிபடப்படுகிறது. (பிஎல். சாமி 1975). 66. சமண, புத்த, ஆசீவக சமயங்களும் ஆரியருக்கும் முந்திய வடநாட்டுத் தமிழிய மெய்யியலின் வெளிப்பாடுகளே. (அடுத்த பத்தி காண்க.) ஆசீவக சமயம் தமிழகத்திலேயே தோன்றிய தென்பர் க. நெடுஞ்செழியன் (2006). மதுரை நக்கீரர் புறம் 396ல் குறிப்பிடும் "அறப் பெயர்ச் சாத்தன் மற்கலி கோசாலர் ஆன மாசாத்தனைச் சுட்டுவதே என்பர். ஆசீவக சமய எச்சங்கள் பல பரவலாகத் தமிழகத்தில் இன்றும் உள்ளதை அவர் விளக்கு கிறார். 67. இன்றைய இந்து சமயக் கடவுளரும் வழிபாட்டு முறைகளும் முற்றிலும் தமிழிய (திராவிட) சார்புடையவையே; ஆரியரிடமிருந்து பெற்றவை அல்ல என்பதை சீனிவாசர் இயல் 8 முதலியவற்றில் நிறுவி யுள்ளார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள் போன்றோரும் சிறந்த மேனாட்ட றிஞரும் சீனிவாசர் கருத்தையே கொண்டுள்ளனர். ஜே. எம். நல்லசாமி பிள்ளைக்கு சுந்தரம்பிள்ளை , 19-12-1896இல் எழுதிய கடிதத்தில் ''அறியாமை காரணமாக 'ஆரிய' மெய்யியல், நாகரிகம் என்று அழைக்கப்படுவது, அடிப்படையில் திராவிடர் அல்லது தமிழருடையது என்பதே உண்மை .'' Most of what is ignorantly called Aryan philosophy and civilisation is literally Dravidian or Tamilian at bottom." Siddhantha Deepika , II - 5; Oct 1898 P.113) இந்து சமயக் கோட்பாடுகளில் அடிப்படையாகவும் சிறந்தன வாகவும் உள்ளவையெல்லாம் வடநாட்டில் பரவலாக 3000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழ் மேன்மக்களிடமிருந்து பெறப்பட்டவை என்பதையும், அவற்றை ஆரியருடையவை யாகக் கொள்வது அறியாமை என்பதையும், மறைமலை அடிகள் தமது 1903, 1923, 1930, 1941 நூல்களில் நிறுவியுள்ளார். கா. சுப்பிரமணிய பிள்ளை ("தமிழர் சமயம் 1940), தேவநேயப் பாவாணர் ("தமிழர் மதம்" "1972) ஆகியோருக்கும் அடிகள் கருத்து உடன்பாடேயாகும். ஆரிய வேதங்களிலிருந்து மாறு பட்ட, அவற்றுக்கு முந்திய 'தமிழ் நான்மறைகள் இருந்தன வென்னும் கோட்பாட்டையும் கா. சுப்பிரமணியர் (1927) முதலியோர் கொண்டிருந்தனர். ரிக் வேத காலத்திலிருந்தே (கி.மு. 1000) "குடி கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறு தெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச் செய்த தமிழ்ச் சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே; முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு, ஏசுர், சாம, அதர்வண வேதப்பதிகங்கள் சில பலவும்; உண்மை வழா உபநிடதங்களும், சாங்கிய , யோக, வைசேடிக, நையாயிக, வேதாந்த சூத்திரங் களும்; மற்சம் , வாயு முதலான சில புராணங்களும் பெளட்கரம், மிருகேந்திரம் முதலான சில சிவாகமங்களும் பிறவுமாம்" என்பது அடிகள் (1930) முடிவு. இம் முடிவுக்கான எடுத்துக் காட்டுகளாக அடிகள் தந்துள்ள பலவற்றுள் முதன்மையான சில வருமாறு. "இருக்கு வேதத்திற் "பரதர்" முதலிய பெயர் களால் வழங்கப்பட்ட பண்டைத் தமிழ் நன்மக்களே ஞாயிறு, திங்கள், தீ என்னும் முத்தீ வடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவ பிரானை வழிபடும் நுட்ப முறையைக் கண்டோராவர்" (1930). "விசுவாமித்திரர் என்னும் தமிழரச முனி வரால் செய்து சேர்க்கப்பட்ட இருக்கு வேத மூன் றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திர மானது ஞாயிற்று மண்டிலத்தின் கண் முளைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவ பிரான் மேற்றாய் விளங்குகிறது" (1923). ''கொல்லா அறத்தை முதன் முதற் கண்டறிந்து அதற்கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தி னவர்கள் தமிழரில் மேன் மக்களாய் இருந்த ஒரு பெரும்பகுதியாரே ... மற்றை மக்கட்பிரிவினரின் லுள்ள எந்த மேலோரும் இவ்வரு மருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர்... வடக் கிருந்த சமணர், சாக்கியர், சாங்கியர், யோகர் முதலாயினா ருங்கொல்லா வறத்தினை விடாப்பிடியாய்க் கொண்டு ஒழுகினரல்லரோ வெனில்; சமண சாக்கியர் முதலான அவரெல்லாம் ஆரியர் வரு தற்கு முன்னமே இமயமலை வரையிற் பரவி நாக ரிகத்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத் தமிழ்மேன் மக்களின் மரபில் வந்தவரே" (1940). சமண, புத்தக் கருத்துக்கள் ஆரியருக்கு முற்பட்ட வட நாட்டுத் திராவிட மெய்யியலில் பிற்கால வளர்ச்சிகளே என்பர் சர் ஜான் மார்ஷலும் (1934). 68. அடிகளின் மேற்சொன்ன ஆய்வுக் கருத்துக்களின் கருவைப் பின்வருமாறு கா. அப்பாத்துரையார் 1956இல் ("1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்" தமிழாக்கத்தின் அடிக் குறிப்பில் சுருங்கக் குறித்தார்: "தமிழர் பண்டையச் சமய வாழ்வு இன்றைய பல சமயங் களின் உருவாகா மூலக் கரு முதலைத் தன்னிடமாகக் கொண்ட வாழ்வேயாகும். அதில் எல்லாச் சமய மூலமும் காணலாம். புத்த, சமண, சைவ, வைணவக் கருத்துக்கள் உருவாகுமுன், அச் சமயப் பெயர்கள் வேறுவேறாகத் தமிழர் நெறியினின்று பிரியுமுன், ஆரியம் இடை நின்று தமிழரின் ஒரு நெறியைப் பலவாறு பிரிக்குமுன், அவ்வெல்லா நெறிகளுக்கும் வழிகாட்டிய மிக முற்பட்ட காலத் தமிழ் அறிவர் மரபு சார்ந்த அறிஞருள் ஒருவரே திருவள்ளுவர் என்பது உய்த்துணரத் தக்க உண்மை யாகும். 69. இப்பொருள் குறித்து மேலும் சில மேனாட்டறிஞர் கூற்றுக்களும் மனத்திற் கொள்ளத்தக்கன. பிராக்கிங்டன் (1981) : இந்தியாவில் சமய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் என்பது புத்த மதத்தின் முக்கிய கொள்கை. புத்தமதம் தோன்றிய காலத்தில் தோன்றிய சமணமும் ஆசீ வகமும் அக்கொள்கையுடையவையே. பிறவித் தளையி லிருந்து விடுபடுவது சமயத்தின் குறிக்கோள் என்பது அம் மதங்களின் கொள்கை. பழைய உபநிடதங்களில் மறுபிறவிக் கொள்கை புதுமை யானதாகவும் சிலருக்கு மட்டும் தெரிந்த மறைபொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்தும் பின்னர் அக் கொள்கை புத்த சமண சமயங்கள் வழியாக விரைந்து அனைவராலும் பின்பற்றப்பட்டது எவ்வாறு? எந்த மக்கள், சமூகத்தின ரிடம் இருந்து புத்தர் தோன்றினாரோ, அவர்களிடையே அக் கொள்கையாக அவ்வேதங்கள் இருந்து இருக்க வேண்டும். எனவே தான் அது விரைவில் அனைத்து மக்களின் கோட் பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஹென்ரிச் சிம்மர் (Heinrich Zimmer) (1951) : வட மேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்களால் மகதம் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமை யாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன்மக்கள் குடும்பங்கள் பல தொடர்ந்து இருந்தன. ஆரிய ஆளும் குடும்பங்கள் வலு விழந்து வீழத் தொடங்கிய பின் முந்தைய உள்ளூர் ஆளும் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றனர். எடுத்துக்காட்டாக சந்திரகுப்த மெளரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே. லெவின் (1986) : இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியர் அல்லாதார் வழிபாட்டு முறைகளில் இருந்தே பிராமணீயத்துக்கு வந்தது. வால்பர்ட் (1982) : மொகஞ்சொதரோ முத்திரையில் காணப்படுபவர் போன்ற (ஆரியர்களுக்கு முந்தைய இந்திய) யோகிகள் வந்தேறிகள் மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக் கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கி விட்ட னரோ ? வால்பர்ட் (1991) : ஆரிய நாடோடிகளின் முரட்டுப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய கடுமையான பெரும் போர் கள் ஆகியவற்றுக்கும் அஹிம்சைக்கும் (உயிர்களுக்கு ஊறு செய்யாமை ) நெடுந்தொலைவு ஆகையால், யோகம், தாய்த் தெய்வ வழிபாடு போன்றவற்றைப் போல அஹிம்சையும் ஆரியர் களுக்கும் முற்பட்ட (சிந்து வெளித் தமிழ் மக்களிடமிருந்தே அவர்கள் பெற்றதாக நாம் கருத வேண்டியுள்ளது. சிவன் வழிபாடு வட இந்தியாவை விட தென்னாட்டில் தான் மக்களிடம் முதன்மை பெற்றுள்ளது. தென்னாட்டுத் திராவிட மக்கள் ஆரியர்களுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அங்கு நிலைபெற்று இருந்தமையை இது காட்டுவதாகலாம். தாய்த் தெய்வ வழிபாடும் தென்னாட்டில் தான் மிகுந்து காணப் படுகிறது. 70. மேற்கண்ட பல்வேறு சமயங்கள், அவற்றின் மெய்யியல் போன்றவை பற்றிய உணர்வெல்லாம் பொது மக்களில் பத்து விழுக் காட்டுக்கும் குறைவானவர்களிடையே தான் ஓரளவுக்கு இருந்திருக்கும். ஏனைய 90 விழுக்காட்டினர் நிலை வேறு. இவ்வுண்மையை கனகசபைப் பிள்ளை (1904) அன்றே கூறினார். எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் (பண்டும் இன்றும் உள்ளது போல் தமிழரிடையேயும் இத்தகைய சமயக் கோட்பாடுகளுக்கும் வெகுமக்கள் நடைமுறையில் கடைப் பிடிக்கும் சமய நம்பிக்கைகள், சடங்குகளுக்கும் பெருத்த வேறு பாடு உண்டு (As usual among all nations, ancient and modern, the philosophic doctrines of the Tamils were far apart from the popular beliefs and ceremonies). இதே கருத்தை ஹெச்.ஆர் பேட் தமது திருநெல்வேலி கெசட்டியரில் (1917) பின் வருமாறு கூறியுள்ளார்: ''ஊர் தோறும் பொதுமக்கள் மனப்பூர்வமாக ஊக்கத் துடன் வழிபடும் ஏராளமான உள்ளுர்த் தெய்வங்களைப் பற்றி அடுத்து விளக்கப்படுகிறது. மிகப் பெரும்பான்மையான மக் களைப் பொருத்தவரைத் தங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிர்ணயிப்பவர்களும், (மாந்தன் தெய்வமாக ஆனால் எப்படி நடப்பானோ அப்படி) சினம் ஏற்பட்டால் கேடு விளைக்கக் கூடியவர்களும், பொந்திகை ஏற்பட்டால் கேடு வராமல் தடுத்தும், வந்தால் நீக்கியும் நலம் செய்யக் கூடியவர்களும் ஆக அவர்கள் நம்புவது சிவன், திருமாலை அல்ல; பல்வேறு உருவங்களில் வழிபடப்படும் தாய்த் தெய்மாகிய காளி, மற்றும் உள்ளுர்த் தெய்வங்களான சுடலைமாடன் மற்றும் அதுபோன்ற "துடியான தெய்வங்களையே" “The accounts which will shortly be given of the hosts of lesser deities and of the enthusiasm with which they are worshipped may serve to show that the gods who for the mass of the people rule and direct their daily lives, who bring evil and can if willing remove it, who are intelligible beings - men on the grand scale are not Siva and Vishnu but Kali in her various forms, and (local gods like) Sudalaimadan "and his horrid crew" கங. சங்க இலக்கியங்கள் முச்சங்கங்கள் பற்றிய பின்வருவனவற்றை முதன் முதலில் கிபி. 10ம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளுக்கு உரை யெழுதிய (பிற்கால) நக்கீரரும், அவருக்குப் பின்னர் சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லாரும், குறிப்பிடுகின்றனர் : தமிழ்ச்சங்கம் ஆண்ட பாண்டிய சங்கப் புலவர் பாடிய புலவர் சங்கம் மன்னர் எண்ணிக்கை எண்ணிக்கை செயல்பட்ட எண்ணிக்கை ஆண்டுகள் தலைச்சங்கம் 89 549 4449 4440 (தென்மதுரை) இடைச்சங்கம் 59 59 3700 3700 (கபாடபுரம்) கடைச்சங்கம் 49 49 449 1800 (மதுரை = கூடல் ) 197 657 8598 9940 இவற்றுள் முன்னிரண்டு சங்கங்கள் பற்றியவற்றை வரலாற் றாசிரியர், வரலாற்றுணர்வு உடையவர்கள் ஏற்பதில்லை . (சீனிவாசர் இயல் 16இல் மூன்று சங்கங்களைப் பற்றிய செய்தி களுமே ஆதாரமற்ற கற்பனைகள் (absurd inventions) என்பார். ''மூன்றாம் சங்கத்தைப் பொருத்தவரை அவர் கூற்று சரியல்ல. கீழே காண்க.) 72. பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் பிறதுறை அறிஞர்களும் கிறித்துவ ஊழித் தொடக்கத்துக்குச் சில நூற் றாண்டுகள் முன்னும் பின்னும் மதுரையில் தமிழ்ச் சங்கம் அதையொத்த இலக்கிய பீடம் இருந்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ''மதுரையில் பாண்டிய வேந்தர் ஆதரவில் சில காலம் தமிழ்ப்புலவர் அமைப்பு சங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது உண்மையான செய்தியாக இருக்கலாம்" - க. அ. நீலகண்ட சாத்திரி. ''தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. (இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்கும் இல்லை.) தமிழ்ச் செவ்விலக்கிய (''சங்க") காலத்தில் இலக்கியங்களை வளர்த்து, தரம் கண்டு ஊக்குவித்த ஒரு அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது" - சேவியர் எஸ். தனிநாயகம். "சங்க இலக்கியப் பாடல்களில் தனிப்பாடல் களாயினும் அவற்றிடையே நடை, சொற் றொகை, யாப்பு, பாடுபொருள் போன்றவற்றில் ஒற்றுமை காணப்படுகிறது. இலக்கிய அமைப்பு சார்ந்த தன்மை " "academism" என இதைக் கூறலாம். அகாதெமி போன்ற இலக்கிய அமைப்பு இல்லாமல் அத்தகைய ஒற்றுமை ஏற்பட்டிருக்காது. கி.பி. 1ஐ ஒட்டி மதுரையில் அத்தகைய அகாதெமி , அதா வது சங்கம் இருந்தது என முடிவு செய்வதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. - கே. வி. சுவெலபில் Tamil literature (1974) Otto HarrassOvitz. Wiesbaden. இக்கருத்தை மேலும் அரண் செய்வன மதுரையில் (கூடலில்) சங்கம் இருந்ததையோ அல்லது அச்சங்கத்தின் செயல் பாட்டையோ குறிக்கும் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ஆகும். அவை வருமாறு. "தமிழ் கெழு கூடல்' - புறம் 58:13 "தொல் ஆணை நல் ஆசிரியர் புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலம் திரு திருவின் நெடியோன்" - மதுரை க. 761-3 "தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மருகின் மதுரை" - சிறுபாண். 66 - 7 "தமிழ் வையை - பரிபாடல் 663 "தமிழ் வேலி" மதுரையைக் குறித்தது) - பரிபாடல் 663 நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி - திருநாவுக்கரசர் அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும் - திருஞானசம்பந்தர் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ - மாணிக்கவாசகர் திருக்கோவையார் 20 தென்மதுராபுரம் செய்தும் அங்கதனில் அருந்தமிழ் நற் சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும் - தளவாய்புரம் செப்பேடு (பராந்தக வீரநாராயணன் கி.பி. 9ம் நூ) "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்த தும்" - பெரிய சின்னமனூர்ச் செப்பேடு (பராந்தக வீர நாராயணன் மகன் இராச சிம்மன்) ' 'தமிழ் கெழு கூடல் சங்கப் பலகையில் '' அமர்ந்திருந்த புலவர் பரம்பரையைச் சார்ந்த எட்டிச்சாத்தனைப் பற்றிய குறிப்பு. 9ம் நூற்றாண்டு கல்வெட்டு (ARE 334/1929-30) எருக்கங்குடி, சாத்தூர் வட்டம். 73. பொதுவாக சங்க இலக்கியங்களாக ஏற்கப்படும் நூல்களும் அவற்றின் காலவரம்பும் (பெரும்பாலான பன்னாட்டுப் பல்துறை அறிஞர்களும் இன்று ஏற்பது) வருமாறு: நூல்கள் அளவு காலம் தொல்காப்பியம் 1610 நூற்பா கி.மு. 300 (4018 அடி) அல்லது அதற்கு முன்னர் எட்டுத்தொகையும், 2381 பாடல்கள் இவற்றுள் அடங்கிய பத்துப்பாட்டும் (473 புலவர் தனித்தனிப் பாடல்கள் (இவை எழுதியவை) எழுதப்பட்ட காலம் தொகுக்கப்பட்ட கி.மு. 300 கிபி. 300 காலம் கி.பி. 3- ஆம் (கலித்தொகையும் நூற்றாண்டு பரிபாடலும் கிபி 300 அல்லது வாக்கில் அதையொட்டி ) எழுதப்பட்டவை) திருக்குறள் 1330 குறள் கிபி. முதல் வெண்பா நூற்றாண்டுத் தொடக்கம் சிலப்பதிகாரம், ஒவ்வொன்றும் கிபி. 300ஐ ஒட்டி மணி மேகலை 30 காதைகள் (கமில் சுவெலபில் தமது 1995 நூலில் இவற்றின் காலம் கிபி. 350 450 என்கிறார்) [மேற்கண்ட அனைத்து நூல்களுமே கி.பி. 1ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்று சீனிவாசர் இந்நூலில் கூறு வதை இன்று யாரும் ஏற்பதில்லை) சேவியர் எஸ் தனிநாயகம் தனது 'இயற்கையும் தமிழ்ச் செய்யுளும்" (1996) என்னும் நூலில் வெளியிட்டுள்ள பின்வரும் கருத்து மிக முக்கியமானது. "தமிழ்ச் சங்கம் செய்யுள் தமிழகத்திலேயே கருக்கொண்டு வளர்ந்தது என்பதற்கான அனைத்துச் சான்றுகளையும் கொண் டுள்ளது. தமிழ் பேசுநர் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்றோ, வரும்பொழுதே வளர்ச்சியடைந்த தமிழ் மொழி, இலக்கியத்தை உடன் கொண்டு வந்தனர் என்றோ கூறுவதற்குச் சங்க இலக்கியம் இடம் தரவில்லை என்பதே இதன் பொருள்." 74. மிகப் பழைய கழக நூல்களிலேயே (தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களில் அடங்கிய பாடல்களில் தொன்மை சான்றவை) தமிழ் வரிவடிவம், எழுத்துமுறை குறித்தும் பண்பட்ட இலக்கியம் குறித்தும் தெளிவாக, விரிவாகக் கூறப் பட்டுள்ளது. ஐ. மகாதேவன் (2003) கருத்து, அசோகனுடைய தமிழ் - பிராமி எழுத்துக்களிலிருந்து தமிழ் வரிவடிவம் உரு வாக்கப்பட்டது என்பதாகும். இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை . காரணம் மேற்சொன்ன கி.மு. 300 சார்ந்த தமிழ் நூல்கள், பாடல்கள் உருப்பெறுவதற்கு சில பல நூறு ஆண்டு களுக்கு முன்னரே தமிழ் வரிவடிவமும் இலக்கியங்களும் தோன்றத் தொடங்கியிருக்க வேண்டும். கொற்கையில் 1970இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானை ஓட்டில் உள்ள தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 700 என அப்பொழுதே உறுதியாக்கப் பட்டது. கொடுமணலில் அண்மையில் அகழ்ந்த பானை ஓட்டு எழுத்துக் களின் காலமும் கி.மு. 500க்கு முந்தியதாக இருக்க வேண்டும் என இராஜன் (2004) நிறுவியுள்ளார். ஆதிச்சநல்லூரில் 2004இல் நடந்த அகழ் வாய்வில் கண்ட பானை ஓட்டுப் பொறிப்பின் காலமும் கரிமக் கணிப்பின்படி கி.மு. 700ஐ ஒட்டியதாக அமைய லாம் எனச் செய்தி வந்துள்ளது. இவற்றையும் பிற ஆதாரங் களையும் சுட்டி இராஜன் (2004), நடன காசிநாதன் (2004) ஆகியோர் ''தமிழுக்கு கி. மு. 800ஐ ஒட்டியே ஒரு தனி வரி வடிவம் இருந்திருக்கவேண்டும். அதனைப் பின்பற்றியே அசோக தமிழ் - பிராமி வரிவடிவம் (லிபி) கி.மு. 300இல் உருவாக்கப் பட்டிருக்கும்'' என்பதற்கான வலுவான காரணங்களை முன் வைத்துள்ளனர். சிந்துவெளி நாகரிக லிபி திராவிட மொழி சார்ந்தது ஆனபடியால் பிராமி லிபியும் அதிலிருந்தே உரு வாகியிருக்க வேண்டும் என்பர் ஹீராஸ் (New Review; சூலை 1936). தனது பண்டைத் தமிழ் எழுத்துக்கள் 1938 நூலில் தி.நா. சுப்பிரமணியன் கூறியதையும் நினைவு கொள்ள வேண்டும். ''பிராமி லிபி முதலில் வடமொழிக்காக ஏற் படவில்லையென்றும் உயிர் எழுத்துக்களுள் அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் அதிகச் சிறப்பையளிப்பதும், மெய்யெழுத்துக்களும் வர்க்க எழுத்துக்களைக் கொள்ளாததுமான ஒரு பாஷைக்கென அமைக் கப்பட்டுப் பின்னால் வடமொழிக்கு உபயோகப்படும் படி புதிய குறிகள் உண்டாக்கப்பட்டனவென்றும் எண்ண வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுள் இவ்விதம் உள்ளது தமிழ் ஒன்றுதான். அங்ஙனமாயின் பிராமி முதலில் தமிழுக்கென அமைந்த லிபியாக இருத்தல் கூடுமா? இஃது ஆராய்தற்குரியது". வடநாட்டு வரலாற்றறிஞர் எஸ். ஆர். கோயல் (1979) கருத்தும் அசோக பிராமி எழுத்து படிப்படியாக (வடநாட்டில் உருவான தல்ல; அது ஒரு காலகட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 300 எனக் கூறலாம். புதிதாக உருவாக்கப்பட்டது என்பதாகும். 75. தமிழ்நாட்டில் இருந்த கி.மு. 1900 - கி.மு. 300 சார்ந்த பெருங்கற்கால நாகரிகத்தின் தொடர்ச்சியே கழக இலக்கிய காலம்; அந்நாகரிகக் கூறுகளிற் பெரும்பாலானவை கழக இலக்கியத்தில் காணப்படுகின்றன என்பதும் ராஜன் போன்றவர் களுடைய அடுத்த முடிவாகும். ஆக இவ்வாராய்ச்சிகள் மேலும் முன்னேறும் பொழுது தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 300க்கும் சில நூற்றாண்டுகள் முற்பட்டது என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 76. இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். கி.மு. 300க்கு முற்பட்ட கழக இலக்கியங்கள் எவையுமே நமக்குக் கிடைக்கவில்லை . கி.மு. 300 - கிபி. 300 காலகட்டத்தைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி. 300ஐ ஒட்டிக் கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் எவ்வெவற்றை விட்டு வைக்கலாம் என்று கருதினார்களோ அவற்றை மட்டும் தொகுத்து விட்டு மற்றவற்றை நீக்கிவிட்டனர். தொகுத்தவற்றிலும் மாற்றங்கள் செய்திருக்கலாம். நுண்ணறி வுடையவர்கள் இதுபற்றி 1877-லிருந்து தெரிவித்துள்ளவற்றைக் காண்போம் : - சார்லஸ் ஈ கோவர் : தென்னிந்திய நாட்டார் பாடல் கள் (The Folk Songs of Southern India) 1871: திட்ட மிட்டுச் சிதைக்கப்படாத அல்லது மாற்றி யெழுதப்படாத தொல்பழங் காலத் தமிழ் நூல் எதையும் இன்று காண்பது அரிது. தமிழ் மக்கள் - திராவிட (பழந்தமிழ் இலக்கியத்தைக் கைவிட்டு புராணக்கதைகளை நம்பினால்தான் தங்களுக்குப் பிழைப்பு உண்டு என்று உணர்ந்தவர்களே இவ்வாறு பழந்தமிழ் இலக் கியத்தைச் சிதைத்தவர்கள் ஆவர். (தனித் தமிழ்ச் செய்யுள் நூல்கள் பல மதிப்பிழந்து ஒழியும்படி அவர்கள் செய்தனர். அறவே ஒழிக்க முடியாத நேர்வுகளிலும் அந்நூல்களை அயோக் கியத் தனமாகச் சிதைத்து உருமாற்றி உலவவிட்டு மூல நூல் களின் கருத்தை உணர முடியாதவாறு செய்துவிட்டனர். சிவத்தம்பி (1986யும் இக்கருத்தினரே. ஹயூநெவில் : தி தப்ரொபேனியன் (The Taprobaniam) சூன் 1896 "மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் நூலகமும் அழிக்கப் பட்ட பொழுது பழந்தமிழ் நூல்கள் சகட்டுமேனிக்கு அழிக்கப் பட்டன. (அவற்றுள் சமணக் கொள்கை வாடை இருக்கலாம் என்ற கருத்தில்). ஈழத்தில் மகாவம்சம் இருந்ததுபோல் பாண்டி யர்கள் வரலாற்றைக் கூறும் ஒரு நூல் மதுரைச் சங்க நூல்களில் ஒன்றாக இருந்த அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக திருவிளை யாடற் புராணம் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் அழிக்கப் பட்ட வரலாற்று நூலின் சிதைவுகளுடன், ஐங்கமர்கள் (பார்ப் பனிய சிவ மதத்தவர்கள் ) எண்ணம், சமயம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான புனை கதைகளுடன் பின்னிப் பிணைந்து அப் புராணம் உருவாக்கப்பட்டது. ஜான் ஸ்பியர்ஸ் "ஞானம் தோன்றிய இடத்திலிருந்து " வால்யூஸ் Values II - 10 சூலை 1957 : "சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் நூற்றுக்கணக்கான (தொல் தமிழ் வாசகங்கள் உள்ளன. கடல் கொண்ட (அழிந்து போன) பண்டை நூல்களைப் பற்றித் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் புத்தர் காலமாகிய கி.மு. 600க்கு முந்திய நூல்களுள் ஒன்று கூட கிடைக் காததற்கான காரணத்தை நாம் உணர முடிகிறது. (தொல் தமிழருடைய) பண்டைய ஆவணங்களை ஆரியர்கள் ஒன்று விடாமல் அழித்துவிட்டனர் என்பதே அது. தெ.பொ. மீனாட்சி சுந்தரன் : தொல்காப்பியம் - சொல்லதிகாரம் : கல்லாடர் உரை (1971) : ''தொல் காப்பியத்தை அதன் ஆசிரியர் எந்த உருவத்தில் விட்டுச் சென் றாரோ அந்த வடிவத்தில் அது நமக்கு வந்து சேரவில்லை'' (தொல்காப்பியம் : பொருளதிகாரம் மரபியலில் பல இடைச் செருகல்கள் உள்ளன என்பது தொல்காப்பிய அறிஞர்கள் தி. சவரிராயன், கா.சுப்பிரமணிய பிள்ளை , சோமசுந்தர பாரதி, வெள்ளை வாரணன், இலக்குவனார், கமில் சுவெலபில், இரா. இளங்குமரன், செ.வை. சண்முகம் போன்றவர் ஏற் றுள்ளதாகும். குறிப்பாக நால்வருணம் பற்றிக் கூறும் மரபியல் சூத்திரங்கள் 71 - 85 இடைச் செருகல் என்பது இவ்வறிஞர்களும் (ஏன் நடுநிலையாளர் அனைவரும் ஏற்பதாகும். தொல்காப்பியம் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் 3ஆம் நூற்றாண்டு வரை என்பதைப் பெரும்பாலான நடுநிலை அறிஞர் ஏற்கின்றனர். சம்ஸ்கிருதத்துக்கு (பாஷைக்கு இலக்கணம் வரைந்த பாணினியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு. பாணினிக்கு முந்திய சம்ஸ்கிருத இலக்கணங் களும் உண்டு. வட இந்தியாவிற்குள் நாகரிகமற்ற ஆரியர் நுழைந்த கி.மு 1500க்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவெங்கும் தமிழிய மொழிகள் இருந்தன. இவற்றுக்கு லிபியும் இருந்தது. இலக்கிய வடிவங்களும் இருந்து அவற்றின் வடிவங்களும் கருத்துக்களும் ரிக் வேதத்திலும் ஏறியுள்ளன என்பது உண்மை. எனவே தொல் காப்பியமோ அல்லது அதற்கு முந்திய தமிழ் இலக்கணங்களோ ("என்ப". " என்மனார் புலவர்" போன்றவை இவற்றைச் சுட்டுகின்றன) பாணினிக்கு முற்பட்டவையாக இருந்திருக்கலாம் எனச் சில தமிழறிஞர் கருதுவது ஆதாரமற்ற கூற்று அல்ல. "தொல்காப்பியர்' எழுதியதனால் "தொல்காப்பியம்" எனப் பெயர் பெற்றது என்பது பண்டு தொட்டு வரும் மரபு. ஆயினும் தொல்காப்பியம் வல்ல அறிஞர்கள், இலக்குவனார், ச. வே. சுப்பிர மணியன், பொற்கோ, சுலெவபில் போன்றவர்கள் "தொல் + காப்பு + இயம்" - தொல்காப்பியம், அதாவது தொன் மரபைக் காக்கும் நூல் எனக் காரணப் பெயர் பெற்றது என்பதும் பொருத்தமாகவே உள்ளது. தொல்காப்பிய எழுத்து, சொல் அதிகாரங்களிலும் பொருள் அதிகார அகத்திணை, புறத்திணை இயல்களிலும் சில மாற்றங்கள் / இடைச் செருகல்கள் பிற் காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் பொருளதிகாரத்தின் இறுதி ஏழு இயல்களிலும் மாற்றங்கள் / இடைச் செருகல் மிகப்பல என்பதும் சுவெலபில், மார் போன்றோர் கருத்து. பிராமணிய ஆதிக்கம் மிகுந்த காலத்தில் தொல் காப்பியம் முழுமையாக அழித்தொழிக்கப்படாமல் பாதுகாப் பதற்கென்றே தமிழ், தமிழர் பால் பற்றுள்ளவர்களும் சில இடைச்செருகல்களை விரகாகச் செய்திருக்கலாம் என்பர் பாவாணர். (எனினும் தொல்காப்பிய முதலுரைகாரர் இளம் பூரணர் காலமாகிய கிபி. 17ம் நூற்றாண்டுக்கு முன்னர்ச் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தொல்காப்பியம் "மாந்தன் அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்ச நிலை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று' One of the finest monuments of human intelligence என்பர் சுவெலபில். இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழி களிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல் பொருள். செய்யுளியல் கூறுவதை சுவெலபில் (1991) கட்டுரை விளக்கு கிறது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் கடை ஆறு இயல் களும் புணர்ச்சி பற்றியன. "தமிழில் புணர்ச்சி பற்றிய இலக்கணம் தனித்தன்மை கொண்டது. ஒட்டுநிலை விட்டுத் தளராது, இன் றளவும் கன்னித் தமிழாக" விளங்குவது, இப்புணர்ச்சி பற்றிய அறிவியல் அணுகு முறைகளினாலேயாம்" (தமிழண்ணல், 2004) சங்க கால அகப்பொருள் நூல்கள் சங்க இலக்கிய அகப்பொருள் பாடல்களில் சிறப்பை ஏ.கே. ராமானுசன் (1969) பாராட்டியுள்ளார். தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங்கும் இந்த (சங்க இலக்கிய) அகப் பாடல் களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறியிலும், விவரிக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக் கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன. காதலோடு கனி வும் பண்பாடும் ; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ளுறை, இறைச்சி, அங்கதம் ஆகியவையும்; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற நுண்ணிய வருணனை அடிகள் சில அவை சுட்டும் பொருளோ பெரிது. தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ் வகப்பாடல்கள் ; அது மட்டுமல்ல கடந்த இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை : அகப் பாடல்களின் அமைப்பு பற்றி சுவெலபில் (1986) விளக்கமும் கருத்திற் கொள்ளத் தக்கது. அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு கூற்று : தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலிய சிலருள் ஒருவர், நாடக மாந்தர் போல், கூறுவதாக அது அமையும். அவர்கள் ஒருவருக் கொருவரோ, தனக்குத் தானாகவோ, நிலவை நோக்கியோ கூறுவதை வாசகர்களாகிய நாம் கேட்கிறோம்; அவ்வளவே. நாடகக் காட்சி ஒன்றை முழுமையாக அகப்பாடல் ஒன்றில் உள்ள கூற்று விவரித்துவிடும். இவை நாட்டுப் பாடல்கள் போல் விரைந்து பாடியவை அல்ல; ஒரு நிகழ்ச்சியைக் கண்ட அல்லது எண்ணிப்பார்த்த ஒரு கவிஞர் அது பற்றிய தமது எண்ணங்களை நேராகவோ உருமாற்றியோ வெளிப் படுத்திய பாடல்களும் அல்ல. இவை அரசவைப்பாடல்களின் நளினம் உடையவை; "வைகலும் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் போல் நுண்ணிய புலமைத்திறனுடன் யாக்கப் பட்டவை. மேற்கண்ட இருவர் கூற்றுக்களின் ஆங்கில மூலங்கள் வருமாறு : “In their antiquity and in their contemporaniety, there is not much else in any Indian literature equal to these quiet and dramatic Tamil poems. In their values and stances they represent a mature classical poetry : passion is balanced by courtesy, transparency by ironies and nuances of design, impersonality by vivid detail, leanness of line by richness of implication. These poems are not just the earliest evidence of the Tamil genius. The Tamils in all their 2000 years of literary effort wrote nothing better". - A.K. Ramanujan. An Aham poem is always a “Kurru”, an utterance by one of the limited number of dramatis personale, (hero, heroine, heroine's girl-friend, foster mother ete). The reader only overhears what the characters say to each other, to themselves, or to the moon. A poem in this tradition implies, evokes, enacts a drama in a monologue. The poems are not the result of rapid composition like oral epics or as lyrical expessions or sublimations of the poet's own feelings triggered by some romantic event. They are the result of skillful and subtle care, the sophistication of court poetry, "like a chariot wheel made thoughtfully over a month by a carpenter who tossess off eight chariots in a day." K.V. Zvelebil. புறநானூறு புறநானூற்றில் இன்று கிட்டியுள்ள 368 பாடல்களின் வகைப்பாடு வருமாறு : சேரர் - 22; சோழர் - 61; பாண்டியர் - 31; குறுநில மன்னர் 134; பிற - 120. சீனிவாசர் தம் நூலில் சங்க கால வரலாற்றை எழுத இந்நூற் செய்திகளைத் திறம்படப் பயன் படுத்தியுள்ளார். (பதிற்றுப்பத்துச் செய்திகளையும், அகப் பொருள் பற்றிய சங்க நூல்களில் வரும் செய்திகளையும் சேர்த்துத் தான்). ஹார்ட் (1999) "ஆரியருக்கு முற்பட்ட தென் னிந்தியாவை , ஏன் பெருமளவுக்கு ஆரியருக்கு முந்திய இந்தி யாவையே விவரிக்கும் ஆவணம் புறநானூறு என்பர்" - a testament of pre-Aryan south India and, to a significant extent, of pre Aryan India.'' திருக்குறள் 80. தமிழிலக்கியத்தின் தலைசிறந்த நூல் ஆகிய திருக் குறளின் சிறப்பை சீனிவாசர் பாராட்டியுள்ளதைக் காண்க. அறத்துப்பாலிலும் பொருட் பாலிலும் உள்ள கருத்துக்கள் பலவற்றை சம்ஸ்கிருத சாத்திரங்களிலிருந்து வள்ளுவர் எடுத்துக் கையாண்டுள்ளார் என்ற சீனிவாசர் கருத்து இன்று ஏற்கப் படுவதில்லை. ஒரு சில ஒருமைப்பாடுகள் குறளுக்கும் வடமொழி அறநூல்களுக்கும் இடையே காணப்படுமாயினும் இந்தியா வெங்கும் பண்டு விளங்கிய தமிழியச் சிந்தனைகளையே இரு மொழி நூல்களும் கையாண்டன வென்பதே பொருந்தும். 81. "அறிதோரறியாமை கண்டற்றால் " என்பது திருக் குறளுக்கும் பொருந்துவதாகும். குறளின் சிறப்புக்களைப் பாராட்டிப் பல மொழி, பல நாட்டு அறிஞர்கள் கூறியவற்றைத் தொகுத்தால் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும்! உலகப் பெரியார்களில் ஒருவரான ஆல்பெர்ட் சுவைட்சர் 1936இல் வெளியிட்ட "இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்" (Indian Thought and its Development; Hodder and Stoughton; London; PP. 272) என்னும் நூலின் 200 - 205 பக்கங்களில் இந்தியத் தத் துவஞானிகளில் திருவள்ளுவர் தலைசிறந்து விளங்குவதைப் பாராட்டியுள்ளார். சில பகுதிகள் வருமாறு: "இந்திய மக்களிடையே பண்டைக் காலத்திலிருந்தே பிற உயிர்கள் அனைத்துக்கும் அன்பு காட்டி உதவும் அறக்கொள்கை (the idea of active love) இருந்து வந்ததை, இந்தியப் பண்டை இலக்கியங்களில் காணும் கதைகளில் இருந்து அறிகிறோம். அத்துடன் குறிப்பாகத் திருக்குறள் என்னும் நூலில் காணும் அறவுரைச் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம். "(உலகில் பிற உயிர்களிடத்து அன்பு காட்டிச் செயல் படுவதை (life Affirmation) அவ்வளவாக வலியுறுத்தாத மனு தர்ம சாத்திரம் போன்றவற்றி லிருந்து மாறுபடும்) குறளில் உலகையும் வாழ்க்கையையும் வெறுத்து ஒதுக்கும் போக்கு (World and life negation) பரவலாகக் காணப்படுவது அல்ல. எங்கோ ஓரிரு இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம். ''பிரமணீயம், புத்தமதம், பகவத்கீதை போன்றவற்றைப் போல் இம்மை மறுமைப் பயன் கருதியே அறநெறியில் நிற்றல் வேண்டும் என்ற வாணிகக் கொள்கையைக் குறள் வலியுறுத்து வது இல்லை. நல்லது செய்வதே தக்கது என்ற உணர்வினா லேயே நல்லது (அறம் செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது (குறள்கள் 222, 211). பகவத்கீதையோ கருமம் செய்து கொண் டிருப்பது பிரபஞ்சநியதி என்று வறட்டுத்தனமாக வலிந்து கூறுகிறது. ஆனால், என்ன வியப்பு, குறளோ மனிதன் உழைப் பதும் ஈட்டுவதும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் அவன் நன்மை செய்வதற்காகத்தான் என்று சாற்றுகிறது. (குறள்கள் 81,212) பகவத் கீதைப்படி கடமை ஜாதிக்குத் தக்கபடி வேறுபடும் குறளோ மக்கள் அனைவரும் நல்லவை செய்தொழுகக்" கூறுகிறது.'' ''ஏனை இந்திய தர்ம சாஸ்திரக்காரர் உழைப்பதில், முயற்சி செய்வதில் மகிழ்வோடு ஈடுபாடு என்று கூறவில்லை . குறள்கள் 619, 630, போன்றவையே உலகியலிலும், வாழ்க்கையிலும், ஆர்வத்துடன் ஈடுபடும்படி அறிவுறுத்து கின்றன. ''(பெளத்தமும் கீதையும் போலப் பற்றின்மை , வெறுப் பின்மை, கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றையும் குறள் வலியுறுத்தினாலும் கூட அதே சமயத்தில்) குறள் அதிகமாக வலியுறுத்துவது அன்பும் அருளுமேயாம் (the living ethic of love). காண்க குறள்கள் 72, 78, 79, 103, 226, 241. ''அறநெறிசார் உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம் படச் சுட்டுகிறது குறள். மனிதனின் தனி வாழ்க்கை , பிற உயிர் களோடும் உலகத்தோடும் உறழும் அவன் வாழ்க்கை ஆகிய வற்றில் கைக்கொள்ள வேண்டிய நெறிகளைக் குறள் வியத்தகு பண்புடனும் சால்புடனும் நடைமுறைக்குகந்த வகையில் வகுத்துள்ளது. (Characterised by nobility and good sense). உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த ஒளிமயமான அறவுரை வாசகங்களை வழங்கும் நூலைக் காண இயலாது. (குறள்க ள் 92, 105, 108, 121,159, 162, 216,298,319,578,594,628,757, 782,874,931,973, 999, 1007, 1024,1032)". ''ஆக கிறித்துவ ஊழித் தொடக்கக் காலத்திலேயே இந்திய மக்களிடையே உலக வாழ்க்கையிடமும் உயிர்களிடமும் பண்பும் அன்பும் காட்டும் ஒரு தன்மை இயல்பாக இருந்து வந்துள்ளதைக் குறளிலிருந்து அறிகிறோம். பிராமணியம், பெளத்தம், பகவத்கீதை சார் இந்துமதம் ஆகிய வற்றின் கோட் பாடுகளில் இல்லாதது அது. ஆனால் கீழ்சாதியினரிடமும், சாதாரண மக்களிடமும் தோன்றி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிறந்த சமயப் போதகர்கள் மூலமாக அத்தன்மை மெது மெதுவாக நாளடைவில் இந்து மதத்தில் இடம் பெற லாயிற்று. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 82. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சாதாரண மக் களைக் காவியத் தலைவியராகக் கொண்டவை; தனித்தன்மை வாய்ந்தவை. வஞ்சிக் காண்டத்தை மற்றொரு புலவர் எழுதிச் சேர்த்திருக்கலாம் என்ற சீனிவாசர் கருத்தை மு. அருணாசலமும் (1974) ஆதரிக்கிறார். ஆனால் சுவலெபில் (1975) மறுக்கிறார். இவ்விரு காவியங்களின் காலம் கி.பி. 350-450 ஆகலாம் என்பர் சுவெலபில் (1995). காஞ்சிபுரத்தில் கி.பி. 5ம் நூற்றாண்டில் வசித்த திக்ஞானர் சம்ஸ்கிருதத்தில் நியாயப்பிரவேச என்னும் அளவை நூலை எழுதினார். அந்நூலுக்கும் மணிமேகலையின் சில பகுதிகளுக்கும் நெருங்கிய ஒப்புமை இருப்பதால் மணி மேகலையின் காலத்தை கிபி 5ம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளு கிறார் வையாபுரி. ஆனால் மணிமேகலையை ஆங்கிலத்தில் பெயர்த்த ஆலன் தானியலோ (Alain Danielou) இக்கருத்தை மறுத்து தமிழர் அளவை நூற்கருத்துக்களையே மணிமேகலை ஆசிரியரும், திக்ஞானரும் பயன்படுத்தி யிருக்கலாம் என்றும் மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்றும் கருதுகிறார். கச . களப்பிரர் காலம் கி.பி 300 - 575) 83. சங்க இலக்கியங்கள் குறித்துள்ள பாண்டிய சோழ சேர மன்னருள் மிகப் பிற்பட்டவர்கள் காலம் கி.பி. 3ம் நூற் றாண்டின் இறுதிப் பகுதியில் முடிவுற்றது. பிற்காலப் பாண்டியர் ஆட்சி கிபி. 560 - 590 முதல் ஆண்ட கடுங்கோன் காலம் முதல் தொடங்கியது. பிற்காலச் சோழர் ஆட்சி விசயாலயன் (கிபி. 848881 முதல் தொடங்கியது. (பல்லவ, பாண்டிய மன்னர்கள் ஆளுகையில் சோழநாடு கிபி 848வரைத் தொடர்ந்ததால்தான் சோழ பரம்பரை கி.பி. 600 ஐ ஒட்டி பாண்டியரைப் போல மீண்டும் உயிர் பெற இயலவில்லை . 84. கன்னட நாட்டவராகிய சிரவணபெளகொள வட் டாரத்து களிப்பு நாட்டுக் களப்பிரர் (= களப்பாளர்) ஏறத்தாழ கிபி. 250ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்தைக் கைப்பற்றி பாண்டிய சோழ சேர நாடுகளை கி.பி. 575 வரை ஆண்டனர் என்பர் ம.சீ . வெங்கடசாமி. அவர்கள் கன்னடர் என்பதற்குச் சான்றுகள் வருமாறு. 'கானக் கடிசூழ்வடுகக் கருநாடர் மன்னன்" - திருத்தொண்டர் புராணம், மூர்த்தி நாயனார் புராணம். "மதுரை வவ்விய கருநாடர் வேந்தன்" - கல்லாடம் களப்பிரர் தமிழரே என்ற சீனிவாசர் கருத்து தவறென்பார் வேங்கடசாமி. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் கி.பி. 450 - 550ல் மட்டுமே இருந்தது என்னும் முன்னவர் கருத்தையும் பின்னவர் ஏற்றிலர். சோழ நாட்டை ஆண்ட அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மன்னனைப் பற்றி சீனிவாசர் விரிவாக எழுதியுள்ளார். 85. கி.பி. 575ஐ ஒட்டி களப்பிரரிடமிருந்து பாண்டிய நாட்டைப் பாண்டியன் கடுங்கோன் மீண்டும் கைப்பற்றினான். 'அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக் கொண்டதனை இறக்கியபின் ... கடுங்கோனென்னும் கதிர்வேற்றென்னன்" - பராந்தக நெடுஞ்சடையன் (கிபி 756 - 815) உடைய வேள்விக்குடி செப்பேடு. களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோள் மாக்கடுங் கோன் - பரந்த வீரநாராயணன் (860-905) தளவாய்புரம் செப்பேடு. அதே கிபி 575ஐ ஒட்டி களப்பிரரிடமிருந்து சோழநாட்டை பல்லவ சிம்மவிஷ்ணு கைப்பற்றிக் கொண்டான். பிற்காலத்தில் முத்தரையர் என்று வழங்கிய குறுநில மன்னரும் களப்பிரரும் பொதுவான ஒரு குடியிலிருந்து பிரிந்து வளர்ந்தவர் என்பார் நடன காசிநாதன். (1996) 86. சீனிவாசர் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் அனைத் தும் கி.பி 500 - 800 காலத்தவை என்பர். ஆயினும் வேங்கடசாமி தரும் காலவரையறை வருமாறு: திருக்குறள், களவழி நாற்பது, - கி.பி. 250க்கு முற்பட்ட முதுமொழிக் காஞ்சி சங்க கால நூல்கள். நாலடியார் கி.பி.7ம் நூற்றாண்டு ஏனைய 14 நூல்களும் - கிபி 3-6 நூற்றாண்டுகள் பொதுவாகக் களப்பிரர் ஆட்சியில் சமண, புத்த சமயங் கள் சிறப்படைந்திருந்தன. எனவே கிபி. 600க்குப் பின்னர் சைவ வைணவ சமயங்கள் தழைத்த பொழுது களப்பிரர் காலத்திய சமண, புத்த சமயம் சார்ந்த தமிழ்கள் பல அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பர் வேங்கடசாமி. திருஞான சம்பந்தர் சமண ருடன் நிகழ்த்திய அனல் வாத, புனல்வாதச் செய்திகள் இதைக் குறிப்பனவேயாம். (கரு) முடிவுரை 87. இம்முன்னுரைக்கான ஆதார நூற்பட்டியலை நூல் இறுதியில் காணலாம். பழந்தமிழர், தமிழக வரலாற்றை நன்கறிய இன்றியமையாத நூல்களில் பெரும்பாலானவை அப் பட்டியலில் உள்ளன. அண்மை ஆண்டுகளில் நான் எழுதி வெளியிட்ட நூல்கள் மூன்று : வி ஆர். இராமச்சந்திர தீட்சிதரின் தமிழரின் தோற்றமும் பரவலும் (தமிழாக்கம்), காந்திராவ் எழுதிய ''தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்" (தமி ழாக்க ம்);Nostratics the light from Tamil according to Devaneyan. இவை மூன்றும் எழுதி வெளிவர முதற்காரணர் தமிழ்மண் பதிப்பக இளவழகனாரே ஆவார். இந்த நூலையும் எழுது எழுது என ஊக்குவித்து எழுத வைத்தவரும் அவரே. அவருக்கு என்றும் நன்றியுடையேன். 88. தொடக்க காலம் முதல் கி.பி 600 வரைத் தமிழகம், இந்தியா, உலகின் பிற பகுதிகள் சார்ந்த வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றுக் கால, நிகழ்வுகளில் முதன்மையானவை கால வரிசைப்படி நூல் இறுதியில் தரப்பட்டுள்ளன. முன்னுரை கல்வி ஆண்டு 1928-29ல் (சென்னைப் பல்கலைக் கழகத்தில்) இந்திய வரலாற்று ஆய்வறிஞர் (Reader) ஆக இருந்து நிகழ்த்திய ஆய்வில் உருவாகியது இப்புத்தகம். இவ்வாண்டு சூலைத்திங்களில் இந்நூல் நுதலிய பொருளின் ஒரு பகுதி பற்றி பல் கலைக்கழகப் பேருரை நிகழ்த்தி யுள்ளேன். பொருட் குறிப்பகராதியைத் தொகுக்க உதவிய ஏ. அப்பாதுரை ஐயருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். ஆசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் அறிமுகம் 'வரலாறு' என்பது எது? 1. வீரத்தின் பெயரால் போர்க்களத்தில் ஏராளமான மாந்தர் படுகொலைக் காளாகி அதன் காரணமாக அரசபரம்பரை களில் ஒன்று ஒழிந்து இன்னொன்று ஆட்சிக்கு வருகிறது; கடுமையாக உழைத்து அமைதியான பிற பகுதி மக்கள் ஈட்டி வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையிடும் ஆர்வத்துடன் பெரும் இனக்குழுக்கள் (tribes) புலம்பெயர்ந்து உலகப் படத் தையே மாற்றுகின்றன; அரசகுலக் கன்னியர் வன்புணர்ச்சிக் காளாகின்றனர்; அக்கொடுமைக்குப் பழிக்குப் பழியாக நடக்கும் போரில் (அப்பாவிகள் உட்பட) பலர் இரத்தம் சிந்துகிறது; இவற்றையெல்லாம் கூறுவதுதான் வரலாறு என்றால் கிபி 600 வரை "வரலாறே " இல்லாத இனிய நாடாக தமிழ் இந்தியா (தமிழகம்) இருந்தது எனலாம். 2. மாறாக, புவியியற் சூழல் காரணமாக ஒரு மக்களின் சமுதாய, சமயவாழ்வு அச்சூழலுக்கேற்ப படிப்படியாக வளர்ச்சி யடைகிறது; அவ்வாறு வளரும் பொழுது வேறு வகையான பண்பாட்டுடன் வளர்ந்துள்ளவர்கள் தாக்கமும் ஏற்படுகிறது; அம்மக்கள் உணவு, உடை, பொழுதுபோக்கு, காதல் வாழ்வு, பாட்டு, கூத்து, அவர்கள் அரசரையும் கடவுளரையும் வழுத்திய வகை, இவை எல்லாம் மெதுவாக மாறுகின்றன; அவர்கள் உள் நாட்டு வணிகம் செய்வதுடன் அண்டை அயல் நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொள்கின்றனர்; எளிய முறையில் உருவாகும் அவர்கள் இலக்கியப் படைப்புகள் நாளடைவில் நுண்ணிய, ஆழ்ந்த இலக்கிய மரபு கொண்டவை யாகச் சிறக் கின்றன; இவற்றையெல்லாம் கூறுவதுதான் வரலாறு என்றால் தமிழர் வரலாற்றை ஆதிமுதல் கி.பி. 600 வரை ஆய்வு செய்து எழுதுவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்நூலில் இத்தகைய வரலாற்றை எழுதவே முற்பட்டுள்ளேன். 3. மாந்த நாகரிகத்தின் பழங்கற்கால, புதுக் கற்காலங்களில் பல்வேறு நிலைகள் சார்ந்த கற்கருவிகளைப் பல அறிஞர்கள் அவரவர் வாய்ப்புக் கேற்பச் சேகரித்து, அவை இந்திய அருங்காட்சியகங்களில் உள்ளன. இவற்றின் அடிப்படையில் அக்காலத் தமிழர் வாழ்வியல் பற்றி எனது "இந்தியாவில் கற்காலம்" Stone Age in India (1926) நூலில் எழுதியுள்ளேன். தமிழருடைய தொடக்கநிலை இரும்புக் கால நாகரிகக் கருவி களிலிருந்து அறியக் கூடிய சில செய்திகள், மற்றும் வட இந்திய ஆரிய நாகரிகத்தின் தாக்கம் ஏற்படுமுன்னரே தமிழில் உருவாகி யிருந்த சொற்கள் சார்ந்த வேர்ச் சொல் ஆய்வால் தெரியும் பல செய்திகள், இவற்றின் அடிப்படையில் ஆரியருக்கு முந்திய தமிழ நாகரிகம் Pre Aryan Tamil Culture (1929) நூலையும் எழுதி யுள்ளேன். காலவெள்ளத்தில் அழியாது எஞ்சி இன்று நமக்குக் கிட்டியுள்ள பழந்தமிழ் இலக்கியம், மற்றும் தமிழர் களைப்பற்றி சம்ஸ்கிருத, பாளி , கிரேக்கம், இலத்தீன் முதலிய மொழி இலக்கியங்கள், பிற வகை நூல்கள் ஆகியவற்றில் உள்ள குறிப்புக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றில் கிட்டிய வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் தமிழர் வரலாறு பற்றிய இந்நூலை எழுதியுள்ளேன். இவ்வரலாற்றுக்கான சான்றுகள் 4. வேத மந்திரங்களையும் பிராமணங்களையும் சேர்த்து வேத இலக்கியம் என்பர். அவ்வேத இலக்கியத்திலும் மற்றும் ஆரியர்களின் தொடக்க கால தனிநபர் , மற்றும் சமூக வாழ்க்கை விதிகளைக் கூறும் சூத்திரங்கள், இதிகாசங்கள் (இராமாயணம், மகாபாரதம்) புராணங்கள், தொடக்கக்கால பாளி (புத்த, அர்த்த மாகதி (சமண) இலக்கியங்கள் ஆகிய அனைத்திலும் உள்ள தமிழர் வரலாறு (ஆரியர்களுக்கும் தமிழருக்கும் இடை யிலான தொடர்பு சார்ந்த குறிப்புகளை நுணுகிப் பார்த்து அறிந்த செய்திகள் இந்நூலில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றை அதுவும் புராணச் செய்திகளைப் பயன்படுத்தும் பொழுது பர்ஜிதரு (Pargiter) டைய ஆய்வுக் கண்ணோட்டத்தையும் அவர் முடிவுகளையும் நான் ஏறத்தாழ முழுமை யாகப் பின்பற்றியுள்ளேன். அகஸ்தியர்கள், வசிஷ்டர்கள், விஸ்வா மித்திரர்கள் ஆகியோர் இக்ஷ்வாகு மன்னன் காலத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணன் காலம் வரை எத்தனையோ நிகழ்வுகளில் வந்து வந்து போகின்றனரே, இது என்ன குழப்பம் எனப் பலரும் வியந் துள்ளோம். இதற்கு பர்ஜிதர் (Ancient Historical Traditions 1922) அளித்துள்ள விளக்கம் - அதாவது இவை மூன்றும் பரம் பரையான குடும்பப் பெயர்கள், தனிநபர் பெயர் அல்ல என்பது - தெளிவு தந்துள்ளது. வட இந்திய அரசப் பரம்பரையினர் பட்டியலை பர்ஜிதர் ஏறத்தாழ பொருத்தமாக நிர்ணயித் துள்ளார். அதையே நான் பெருமளவுக்குப் பின்பற்றி, வேத காலத்தில் ஆரியச் சடங்கும் பண்பாடும் படிப்படியாகத் தென் னிந்தியாவில் பரவிய கால வரம்பையும் முறையையும் நிர்ண யித்துள்ளேன். 5. அயல் நாட்டுச் சான்றுகளாகிய மெசொபதாமியா , எகிப்து பொறிப்புகள், கல்வெட்டுக்களும் கிரேக்க, லத்தீன் நூல்களும் மேலை நாடுகளுடன் இந்தியாவின் பண்டைய வணிகத் தொடர்புகளைப் பற்றி மட்டுமே விளக்குகின்றன. "செங்கடற் செலவின்" (Periplus of the Erythraen sea) ஆங்கிலப் பெயர்ப்பை வெளியிட்ட ஸ்காப் (Scoff) நூலையும், வார் மிங்டன் எழுதிய உரோமப்பேரரசு - இந்திய வணிகம் (Commerce between the Roman Empire and India) நூலையும் நான் ஆழ்ந்து படித்துப் பல்வேறு கால கட்டங்கள் சார்ந்து அந் நூல்கள் தரும் செய்திகளை இந்தியச் செய்திகளோடு இணைத்துப் பயன்படுத்தியுள்ளேன். 6. ஆயினும் இந்நூலுக்கு எனது தலையான ஆதாரம் கிபி 600க்கு முற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களை ஆய்வு செய்து நான் தொகுத்துள்ளவை பல் துறைச் செய்திகளேயாம். அவற்றுள் மிகத் தொன்மை வாய்ந்தது தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகும். தொல்காப்பிய காலத்துக்கு (கி.பி அல்லது 2ம் நூ) முற்பட்ட சில நூற்றாண்டு சார்ந்த நூல்களில் கண்ட இலக்கிய மரபுகளின் அடிப்படையிலேயே பொருளதி காரம் எழுதப் பட்டுள்ளது எனினும், அம்மரபுகள் காட்டும் தமிழர் வாழ்விய லானது தொல்காப்பியத்திற்கு ஒராயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழரிடையே நடை முறையில் இருந்த பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் காட்டுவதாக நான் கொண்டுள்ளேன். அப்பொருளதிகாரத்தை விட மேலும் நேரடியான சான்றுகள் (கிபி. 1-6 நூற்றாண்டுகள் சார்ந்தவை யான) தொகை நூல்களில் (எட்டுத்தொகை, பத்துப் பாட்டு உள்ளன. பழங்காலத் தமிழிலக்கியக் கடலின் ஒரு சிறு விழுக்காடே, அதுவும் அத்தொகை நூல்களில் சேர்க்கப் பட்டமையால் இன்று நமக்குக் கிட்டியுள்ளன. ஏற்கெனவே அறிஞர் இருவர் இத்தொகை நூல்களைப் பயன்படுத்தி யுள்ளனர். முதலாமவர் "1800 ஆண்டுக்கு முற்பட்ட தமிழர்" என்னும் நூலை 1904 இல் எழுதிய வே. கனகசபைப்பிள்ளை . பழந்தமிழ் மன்னர்களைப் பற்றிய பல செய்திகளும் மக்கள் வாழ்வியலைப் பற்றிய சில செய்திகளும் அதில் உள்ளன. அவர் காலத்தில் தொகை நூற்களில் சில அச்சில் வரவில்லை யாகையால் சிறந்த தமிழறிஞராக அவர் இருந்த போதிலும் அவர் நூலில் பல பிழைகள் நுழைந்து அதன் காரணமாக ஆதாரமற்ற செய்திகள் சிலவும் வரலாற்றுச் செய்திகளாக உலவும் நிலை ஏற் பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழக "இந்திய வரலாறு - தொல்லியல்" பேராசிரியர் மூதறிஞர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் பழந்தமிழிலக்கியத்தில் உள்ள அரசர்கள், தலைவர்கள் சார்ந்த குறிப்புக்களையெல்லாம் திரட்டித் தம் நூல்கள் - பலவற்றில் விளக்கியுள்ளார்; ஆயினும் பண்டைக் காலத் தமிழர் வாழ் வியலைப் பற்றியோ, அவ்வாழ்வியலின் படி முறை வளர்ச் சியைப் பற்றியோ அவர் எழுதவில்லை - அவ்விலக்கியத்தில் இது பற்றிய செய்திகள் ஏராளமாக இருந்த போதிலும். பழந்தமிழ் இலக்கியத்தில் காணும் தமிழர் வாழ்வியல் பற்றிய செய்தி வளத்தில் நான் இந்நூலில் பயன்படுத்தியுள்ளது நான்கில் ஒரு பங்கு கூட இருக்காது. நான் வெளிக் கொணர்ந்துள்ள செய்திகளுள் பெரும்பாலானவை இது வரை வரலாற்றறிஞர் பார்வைக்கு வராதவையாகலின் பெரும்பாலான இயல்களில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பங்கு பழந்தமிழ்ப் பாடல்களும் அவற்றின் ஆங்கில ஆக்கமுமாகவே உள்ளது. இவ்வளவு விரி வாக ஆதாரங்களை முந்தைய வரலாற்றறிஞர் தந்திலர். தமிழ் தெரியாதவர்களுக்கு அது மிகையாகத் தோன்றினும் வர லாற்றியல் வளர்ச்சி கருதி இம்முறை பின்பற்றப்பட்டுள்ளது. 7. நான் ஆங்கிலத்தில் தந்துள்ள பழந்தமிழ்ப் பாடல்களில் வழக்கிறந்தவையான பல சொற்களும், இலக்கணக் கூறுகளும் உள்ளன. அவற்றுக்குப் பொருள் கூறுவதில் இடைக்கால உரையாசிரியர்களே சிற்சில விடங்களில் தவறு செய்துள்ளனர் ஆகலின் அத்தகைய இடங்களில் அவர்களிடமிருந்து துணிந்து மாறுபட்டுள்ளேன். மொழியமைப்பிலும் இலக்கண அமைப் பிலும் தமிழும் ஆங்கிலமும் முற்றிலும் வேறானவை. மேலும் இப்பாடல்கள் அடை மேல் அடை கொண்டவை; சொற் றொடர்கள் சிக்கலான முறையில் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே செய்யுள் அடிகளைக் கிடந்தவாறே ஆங்கில ஆக்கம் செய்வது மிகக் கடினம். வரவாற்றுப் பயன் கருதியே இந்த ஆங்கில ஆக்கம் என்பதால் கூடுமானவரை நேர் பொருள் (literal translation) கொள்ளவே முயன்றுள்ளேன் – ஆங்கிலத்திற் குரிய மரபுச் சொல் வரம்பை சில இடங்களில் மீற நேரிட்ட போதிலும். எனினும் எனது ஆங்கில ஆக்கத்தின் பொருள் எளிதாக விளங் கும் என நம்புகிறேன். எனது மொழிபெயர்ப்பில் தவறுகள் இருந்தால் தமிழறிஞர்கள் எனக்குத் தெரிவிப்பார்களாக. எனினும் மூலப்பாடல்களின் கருத்தை யாண்டும் நான் தவறாகக் கூறியுள்ளதாகக் கருதவில்லை . காலக் கணிப்பு 8. ''வரலாற்றுக்குக் கண் காலக் கணிப்பு என்ற கூற்றின்படி பார்த்தால் பண்டை இந்திய வரலாறு என்றும் குருடாகவே இருக்க வேண்டியதுதான். எனினும் ஒரு மக்களின் வாழ்வியலின் பரிணாம வளர்ச்சிப் படிமுறைகளை விளக்கும் பொழுது குறிப்பாக இன்னின்ன ஆண்டு என்று கூற இயலாது; தேவையு மில்லை. பண்டை இந்திய வரலாற்று நிகழ்ச்சிகளின் கால வரம்புகள் இன்றுள்ளது போல வருங்காலத்திலும் தெளிவான வரையறை இல்லாமல் தான் இருக்கப் போகின்றன. "தேசபக்தி '' சார்ந்த ஆதாரமற்ற புகழுரைகளுக்கும், சிறுமை மனம் சார்ந்த இகழுரைகளுக்கும் அது இடம் தந்து தான் வரும். வேதகாலத் தொடக்கம் கி.மு. 1200 என்று மேலை நாட்டு அறிஞர் எப் பொழுது கருதினர்? இவ்வுலகத்தையே கர்த்தர் கி.மு. 4004ல் தான் படைத்தார் என்ற (ஆர்ச் பிஷப் உஷர்) கோட்பாடு நிலவிய பொழுது! இப்பொழுதோ அறிவியலாளர் மாந்த இனத் தோற்றம் குறைந்த அளவு ஒரு லட்சம் ஆண்டுக்கு முன்னர் இருக்க வேண்டும் என நிறுவியுள்ளனர். அண்மையில் அரப்பா, மொகெஞ்சொதரோ அகழ்வாய்வு வெளிக் கொணர்ந் துள்ள சிந்து வெளி நாகரிக எச்சங்கள் கி.மு. 3000த்துக்கு முந்தியவை; அவற்றிலேயே ஆரியக் கருத்துக்களின் தாக்கம் புலப்படாமல் இல்லை. ஆனாலும் இன்றும் ஐரோப்பிய அறிஞர்கள், கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கி இன்றும் கண் மூடித் தனமாகப் பின்பற்றி வரும் முடிவான "வேதகாலத் தொடக்கம் கி.மு. 1200" என்பதனை மறு ஆய்வு செய்ய அவர்கள் இசைவ தில்லை. பர்ஜிதர் தரும் பண்டைக் கால இந்திய அரசர் பட்டிய லின் படி மகாபாரதப் போருக்கு முன்னர் அரசர்கள் 90 தலை முறை ஆண்டுள்ளனர். அப்போர் கி.மு. 15ம் நூற்றாண்டில் நடந்ததாகக் கருத ஆதாரம் உள்ளது. ஆக வேதகாலத் தொடக் கம் கண்டிப்பாக கி.மு. 3000க்கு முன்னர் இருக்க வேண்டும். வேத கால முத் தீ வழிபாடு உருவாகுமுன்னர் இருந்த ஒற்றைத் தீ வழிபாடு நெடுங்காலம் இருந்திருக்க வேண்டும். ஆக ஆரியர் தீ வழிபாடு கி.மு. 3000லாவது உருவாகியிருக்க வேண்டும். இது பற்றி விரிவாக ஆய்வு செய்ய இங்கு இயலாது. எனினும் நான் பின்வரும் அடிப்படையை மேற் கொண்டுள்ளேன். அதாவது வேத காலம் ஏறத்தாழ கி.மு. 3000-1500 எனக் கொண்டுள்ளேன். ஒவ்வொன்றும் 500 ஆண்டு கொண்ட மூன்று யுகங்களாக அந்த ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளையும் பிரிக்கலாம். இரண்டாவது யுகக் கடைசியில் அதாவது கி.மு. 2000ல் ராமச்சந்திரன் - வாழ்ந்தான். அவன் பிறந்த பொழுது ஐந்து உடுக்கள் ஏறு முகத்தில் இருந்தன என்ற பரம்பரைச் செய்தியும் இதை உறுதி செய்கிறது. ஸ்ரீ ராமன் காலத்துக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் காலத் துக்கும் இடையே 500 ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். கிருஷ்ணன் சாவுடன் கலியுகம் பிறக்கிறது. (வேத மந்திர ரிஷி களின் பரம்பரைகளும் அத்துடன் முடிவுற்று வேத காலமும் முடிகிறது எனலாம். பாரதப் போருக்குப் பின்னர் இந்திய வரலாற்றில் காலக் கணிப்பு சற்று எளிதாகிறது, எனினும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டவட்டமான காலக் கணிப்பு இப்பொழுதும் இல்லை. எனினும் நிகழ்ச்சிகளின் கால வரிசையே நமக்குத் தேவையாகலின் உறுதியான ஆண்டு வரம்பு தேவையில்லை (நிர்ணயிப்பதும் இயல்வதல்ல). 9. தென் இந்தியாவைப் பொருத்த வரையில் மேற்கண்ட மேம்போக்கான தெளிவற்ற காலக் கணிப்பு வரம்புகளைக் கூட நிர்ணயிக்க இயலவில்லை. சில அரசர்களின் கால வரம்பை நம்பகமாக நிர்ணயித்து விடலாம் என கனகசபை நினைத்தார்; ஆனால் அது மாயை ஆகிவிட்டது. கி.பி. 600 வரை நிகழ்ச்சி களின் கால வரிசையைப் பற்றி மட்டுமே நாம் அறிய இயல்கிறது. அதற்குப் பிந்தைய காலத்துக்கு சில கல்வெட்டுக்கள் அடிப் படையில் காலக் கணிப்புக்களை ஓரளவுக்குச் செய்ய இயல் கிறது. இயல் 1 தமிழரின் பண்டைய நாகரிகம், பண்பாட்டிற்கான புவியியல் அடிப்படை தமிழர் தென் இந்தியாவின் தொல்குடிகள் 1. ஒரு மக்கள் வாழும் நிலப்பகுதிக்கு இயைந்ததாக அவர் கள் பண்பாடு அமைந்திருக்கிறது; அவர்கள் பிற மக்களோடு தொடர்பு கொள்ளுமுன்னரே அந்த நிலப் பகுதியிலேயே அப்பண்பாடு உருவானதற்கான சான்றுகளும் உள்ளன; இப் படியிருந்தால் என்ன பொருள்? அந்நிலப் பகுதியின் புவியியல் அடிப்படைதான் அவர்கள் பண்பாட்டை உருவாக்கியுள்ளது என்பதே பொருள். இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப உருவாகிய பண்பாட்டுக்கு அடிப்படைக் காரணம் புவியியல் தான்; படை யெடுப்பு, வணிகம், போன்ற காரணங்களால் அப் பண்பாட்டுடன் தொடர்பு கொண்ட பிற மக்கள் சார்ந்த வரலாற்றுக் காரணம் அல்ல. தமிழகத்தில் பண்டைக் காலத்திலிருந்து மாந்தன் பண்பாடும் நாகரிகமும், புவியியற் சூழ்நிலைக் கேற்ப படிப்படியாக உருவானதை நாம் நிறுவ இயல்கிறது. இந்திய மண் மாழை வளம் கொண்டது; அளவிறந்த உயிரின, நிலைத் திணை வளமுடையது; அதன் தட்ப வெப்பநிலை சில பகுதிகளில் தீவுகளில் உள்ளது போலும், சில பகுதிகளில் பெருங் கண்ட உட்பகுதிகளில் உள்ளது போலும், இருப்பது மாந்த இனம் பல துறையிலும் வளர்ச்சியடையத்தக்கதாக உள்ளது. இவ்வளவும் இருந்தும் இந்திய வரலாற்றாசிரியர் பலர் இந்தியாவுக்கு அப்பால் உள்ள வளம் குறைந்த நாடுகளிலிருந்து தான் மக்கள் இங்கு வந்து குடியேறியிருக்க வேண்டும்; அவ்வாறு வந்தேறிகள் தான் இந்தியாவில் பல்வேறு பண்பாடு, நாகரிகங் களை உருவாக்கியிருக்க வேண்டும் என்பதைத் தமது கோட் பாடாகக் கொண்டுள்ளனர்! பண்டைத் "திராவிடர்கள்'' வட மேற்கு இந்திய, வடகிழக்கு இந்திய, மலைக் கணவாய்கள் வழியாக ஏற்கெனவே அயல் நாடுகளில் உருவாகியிருந்த பண் பாட்டுடன் இந்தியாவிற்குள் புகுந்து தெற்கே காவிரி, வைகைப் பகுதி வரை வந்து குடியேறியதாக இவ்வரலாற்றாசிரி யர் செப்புகின்றனர். (பயண வசதியுள்ள நம் காலத்தில் சுற்றுலா வழி காட்டி நூல் ஒன்று, நாடு விட்டு நாடு பயணம் செய்ய எளிய வழி காட்டுவது போல, இவர்கள் 'திராவிடர்'' களைச் சுளுவாக எங்கிருந்தோ இந்தியாவுக்கு வட மேற்கு, வட கிழக்கிலிருந்து வந்த வந்தேறிகளாகத் தமிழகத்திற்குள் குடியேற்றுகின்றனர்!) வடமேற்கு இந்தியாவில் (பலுசிஸ் தானத்தில் பேசப்படும் பிராஹய் மொழியில் தமிழோடு இயைபுடைய சில சொற்கள் இருப்பதையே ஆதாரமாகக் கொள்கிறார்கள் இவர்கள். அந்த இயைபுக்கு உண்மையான காரணம் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதும் (வட மேற்குப் பகுதி உட்பட) தமிழோ அதையொத்த வேறு மொழியோ வழங்கி வந்தது தான். இன்று சம்ஸ்கிருதக் குடும்ப மொழிகளாகக் கருதப்படும் இந்தி முதலிய வட இந்திய மொழிகள் திராவிட மொழிகளின் அடிப்படை இலக்கணக் கூறுகளையும் சொல்லமைப்பையும் கொண்டவை தாம் ; வட இந்திய மொழி வாக்கியம் ஒன்றைப் பொருள் சிதையாமல் திராவிட மொழிக்கு மாற்ற வேண்டுமானால் சொற்களை மட்டும் மாற்றினால் போதும். தமிழிய மொழிகள் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தன என்பதைத் தான் இது நிறுவுகிறது; இந்தியாவுக்குள் திராவிடர்கள் வந்தேறி களாக வடக்கிலிருந்து நுழைந்தவர்கள் என்ற கோட்பாட்டை இது பொய் யாக்குகிறது. இந்தியா முழுவதும் பண்டு பரவி வாழ்ந்து வந்த (தமிழிய) மக்களை இந்தியாவின் பழங்குடிகள் அல்ல என்று கொள்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 2. பழங்கற்காலத்திலிருந்து மாழைக் காலம் வரையுள்ள நாகரிகங்கள் சார்ந்த தென்னிந்திய தொல்லியல் கண்டுபிடிப்பு களும் இங்கு நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி இடைவிடாது படிப்படியாக நிகழ்ந்துள்ளது என்றும் (அயல் நாகரிக நுழைவு காரணமாக ஏற்பட்ட இடையீடு இல்லை என்றும் காட்டு கின்றன. இந்த நெடுங்காலம் முழுவதுமே தமிழ் மொழியும் தென்னிந்தியாவில் இருந்து வந்துள்ளது. படிப்படியான நாகரிக வளர்ச்சியில் ஒவ்வொரு படி முறை வளர்ச்சியையும் காட்டத் தேவையான சொற்கள் பழைய (சங்க இலக்கியத்தில் உள்ளன. அப்பண்டைக்கால பழக்க வழக்கங்களை (பாசில் வடிவங்கள் போல) அத்தமிழிலக்கியத்தில் இன்றும் காணலாம். ஆக தமிழர்கள் தென்னிந்தியாவின் பழங்குடிகள் என உறுதியாகக் கூறலாம். ஐந்திணைகள் 3. புவியின் மேற்பரப்பில் மனிதர் வாழக் கூடிய பகுதிகளை ஐந்து வகையாகப் பகுக்கலாம் எனக் கண்ட பண்டைத் தமிழர் அவ்வாறே பகுத்து ஒவ்வொன்றையும் ஒரு திணை என்றனர். திண்/ திட்= நிலப்பகுதி - திணை. அவர்கள் பகுத்த ஐந்து திணைகள் : குறிஞ்சி, மலைப் பகுதி ; பாலை (நீரற்ற பாலை); முல்லை (மலைப்பகுதிக்கும் சமவெளிப்பகுதிக்கும் இடைப் பட்ட கானகப் பகுதி); மருதம் (ஆறுகள் பாயும் சமவெளி); நெய்தல் (கடற்கரை) ஆகியவையாம். திணை என்னும் சொல் சில விடங்களில் புவி என்ற பொருளிலும் வழங்குகிறது. ஒவ்வொரு திணையிலும் உள்ள சூழலுக்கு ஏற்ப அங்கு வாழும் மனிதர் வாழ்வியலும் அமைகிறது என்பதைப் பண்டையத் தமிழர் கண்டனர். தமிழகத்தில் சிறிய அளவில் ஐந்து திணைகளும் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன. பண்டைத் தென்னிந்தியன் ஒரு திணையி லிருந்து மற்ற திணைக்குப் பரவிய பொழுது அந்தந்தத் திணைக் கேற்றவாறு அவன் வாழ்வியல் மாறியது. 4. மாந்த இன நாகரிக வளர்ச்சியில் நண்ணிலக் கடற்கரை நாடுகள், ஆல்ப்ஸ் மலைப்பகுதி, நார்திக் (ஐரோப்பிய - ஆசியக் கண்டங்களின் வட பகுதி) ஆகிய மூன்று பகுதிகளில் ஒவ் வொன்றிலும் மாந்த இன வாழ்வியல் வேறுபட்டுள்ளதை மாந்தவியலாளர் கண்டுள்ளனர். நண்ணிலக் கடல் சூழ் பகுதி நாகரிகங்களை ஆய்வு செய்து முதற் பகுதியைப் பற்றி அறிந்தனர். பின்னர் அவ்வாறே பின்னிரண்டு பகுதிகளைப் பற்றியும் ஆய்வு செய்து அவற்றைப் பற்றி அறிந்தனர். தமிழகத்திணைப் பகுப்பின் அடிப்படையில் இவை மூன்றையும் முறையே நெய்தல், குறிஞ்சி, முல்லை எனலாம். (பண்டைக் காலத்தில் ஐரோப்பாவிலும் ஆற்றுச் சமவெளிகளில் மருதத்தை யொத்த திணை வாழ்வியல் இருந்தது. ஆயினும் 19வது நூற்றாண்டிலேயே அக்கண் டம் முற்றிலும் தொழில் மயமாக ஆகிவிட்டதால் பண்டைய ஐரோப்பிய மருத நிலப் பண்பாடு இன்று நேரடியாகத் தெரிந்து கொள்ள முடியாத படி ஒளிந்துள்ளது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ளது போல ஐரோப்பியாவில் பாலை வனம் இல்லை. பாலைவன நாடோடிகளாகிய பெரீயின்கள் போன்றவர்கள் வாழ்வியலைப் பற்றியும் மாந்தவியல் ஆய்வுகள் குறைவே. ஆக மாந்த இன நாகரிகமும் பண்பாடும் ஐந்து நிலங்களைத் தாண்டி வளர்ந்துள்ளது : குறிஞ்சி - வேடர் , பாலை - நாடோடி, முல்லை - ஆயர், நெய்தல் - கடல் சார் வாழ்வியல்; மருதம் - வேளாண்மை (அண்மைக் காலத் தொழில் வளர்ச்சி உட்பட). அந்தந்தத் திணைச் சூழலுக்கு ஏற்ப அப்பகுதியின் நாகரிக வளர்ச்சி அமைந்தது. வேடர் 5. தென் இந்தியாவில் மனிதன் முதலில் குடியேறிய பகுதி குறிஞ்சி தக்காண பீடபூமி. ஆண்டு தோறும் பருவக்காற்றுப் பெரும் மழையால் கரைந்து தேய்ந்து உருவான (அதிக உயர மில்லாத) மலைகளைக் கொண்ட பகுதி அது. அப்பகுதிக்கு சற்றுத் தாழ்வாக தண்டகாரணியம் (அரசன் தண்டகன் பெயர் கொண்டது) என்னும் அடர்ந்த வெப்பநிலக்காடுகள் கொண்ட பகுதி இருந்தது. அக்காட்டில் மனிதனுக்குப் போட்டி யாக சிங்கம், புலி, யானை, காட்டெருமை மலைப்பாம்பு போன்றவையும் அவற்றை விட மனிதனைக் கடுமையாகப் பாதித்த சிற்றுயிர்களும் (மலேரியாக் கொசு போன்றவை) இருந்தன. விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள குறிஞ்சிப் பகுதியில் உள்ள இயற்கையான குகைகளையும் பெரும் பாறைகளையும் ஆதி மனிதன் நாடினான். அப்பொழுது நீர் சேர்த்து வைக்க மண் பானை கிடையாது; மலைப்பகுதியில் உள்ள குழிகள், பள்ளங்களில் உள்ள நீரைப் பருகினான். காலுக்கடியில் கிடந்த கற்களே அவனுடைய முதல் படைக்கலன் ஆகும். பல்வேறு வகைக் கற்களை (கற்களையே கருவியாகக் கொண்டு உடைத்தும் சிதைத்தும் கூராக்கியும் கோடாலி முனை, வேல் முனை, வாள்முனை, சுரண்டி ஆகியவற்றை உருவாக்கக் கற்றுக் கொண்டான். குறிஞ்சியில் இவ்வாறு ''பழங்கற்கால நாகரிகம்" உருவாயிற்று. இக்காலம் சார்ந்த கல் ஆயுதங்கள் கடப்பை, நெல்லூர், வடஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டக் குறிஞ்சிப் பகுதியில் கிடைக்கின்றன. 6. குறிஞ்சிநில மாந்தன் முதலில் பழம், கொட்டை , கிழங்கு ஆகியவற்றை உண்டான். இவை சில காலங்களில் முழுமையாகக் கிடைக்காமையின் விலங்குகளின் ஊனையும் உண்ணத் தொடங்கினான். பிற விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்வதை விட, உணவுக்கு ஊன் பெறுவதற்காகவே மாந்தன் முதலில் சிறந்த வேட்டைக்காரன் ஆனான். மனிதனின் முதல் தொழில் வேட்டை யாடுவது. உலகெங்கிலும் உள்ள பழங்கற்காலக் கருவிகள் ஒன்று போல் உள்ளன. தொடக்க கால வேட்டைக்காரன் நிலையிலேயே மாந்தன் உலகெங்கும் பரவிவிட்டான் என்பதை இது காட்டுகிறது. 7. குறிஞ்சியின் சூழல் காரணமாகவே வேட்டைத் தொழிற் கால மாந்தனுடைய இரு பெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன: ஒன்று வில் - அம்பு; மற்றது தீயுண்டாக்கும் முறை. தென்னிந்தியக் கானகப் பகுதியில் ஏராளமாக வளர்வது மூங்கில் குறிஞ்சி மக்களாகிய குறவர் மூங்கிலும் அதன் பாதைகளும் வளைந்து நிமிரும் தன்மை கொண்டிருத்தலைக் கண்டு அவற்றை வளைத்து, காட்டுக் கொடிகளால் முனைகளைக் கட்டி, வில் உருவாக்கி அதிலிருந்து ஈரான நெடுமுள், குச்சிகளை அம்பாக விடுக்கக் கற்றுக் கொண்டனர். இப்படி உருவான வில் - அம்புப் படைக்கலனில் இந்திய வீரரே விற்பன்னர்கள் : பாரசீக அரசர்கள் டேரியஸ், சொர்க்சஸ் போர்ப் படைகளின் ஒரு பிரிவாக இந்தியா வில் வீரர் படையும் பெருமையுடன் பங்கேற்றது. இன்றும் ஒரே அம்பில் புலியைக் கொல்லும் ஆற்றல் பெற்ற இந்திய வேட்டைக்காரர் உள்ளனர். 8. தொடக்க காலக் குறவருடைய மற்றைய கண்டுபிடிப்பு தீ யுண்டாக்கும் முறை. குறிஞ்சிப் பகுதிகளில் கடுங்காற்றில் ஒன்றோடொன்று உரசி மூங்கில் தீ பிடிப்பதைக் கண்ட குறிஞ்சி மக்கள் இரு கட்டைகளை உரசித் தீ உண்டாக்கக் கற்றுக் கொண்டனர். வேட்டையாடிய விலங்கின் ஊனைச் சுட்டுத் தின்ன முதலில் தீ பயன்பட்டது. குறிஞ்சி நிலப் பெண்கள் 9. குறிஞ்சி நில ஆண்கள் வேட்டையாடச் சென்ற நிலை யில் பெண்கள் பழம் பொறுக்கினர்; கிழங்கு தோண்டினர்; தங்கள் குடியிருப்பைச் சுற்றித் தாமாகவே முளைத்த காட்டரிசி, மூங்கிலரிசி, திணை ஆகிய கூலங்களைச் சேகரித்தனர். 10. பெண்களின் மற்றைய வேலை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது. இக்கட்டத்தில் மாந்தர் வீடு கட்டக் கற்றிலர்; அதற்குத் தேவையும் இல்லை; தென்னிந்தியத் தட்ப வெப்பநிலையில் மரங்கள், பாறைகள், குகைகள் தரும் மறைப்பே வெயில் மழைக்குப் போதுமானதாக இருந்தது (ஆதியில் மாந்தன் வீடு கட்டியது தங்குவதற்காக மட்டுமல்ல; அதை விட முக்கியமாக தான் சேகரித்த உணவுப் பொருள்களாகிய உடைமைச் செல்வத்தைப் பாதுகாத்து வைக்கவே; பழங் கற்காலத் தொடக்கத்தில் உணவுப் பொருள்களைச் சேர்த்து வைக்கும் தேவை ஆதி மனிதனுக்கு ஏற்படவில்லை). நிலையான குடியிருப்பு இல்லை; அடிக்கடி இடமாற்றம்; எனவே ஆட வரிடையே குடும்ப உணர்வு முதலில் தோன்றவில்லை. இனக் குழு மாந்தரிடையே தாய்வழிக் குடும்ப முறை (Matriarchal family) உருவானதற்கு இதுவே காரணம். 11. தாய்வழிக் குடும்ப முறைக்கு மற்றொரு காரணம் . திருமணச் சடங்குகளும், திருமண முறைக் கட்டுப்பாடும் ஆதி மாந்தரிடம் கடுமை யானவையாக இல்லை என்பதாம். கண்டதும் காதல் ; உடனடிப் புணர்ச்சி, திருமணத்திற்கு முன்னரோ பின்னரோ குழுவினருக்கு விருந்து ; இவற்றுக்கு மேல் விரிவான சடங்குகள் இல்லை. திருமண இணைப்பும் நிலையாக நீடித் திருக்காது எனக் கருதலாம். தனி நபர் சொத்து இன்மை , நிலையான குடியிருப்பு இன்மை, இவற்றோடு திருமணம் பற்றிய இந்த நிலைமையும் தாய்வழிச் சமுதாயம் நெடுநாள் இருந்ததற்கு ஒரு காரணமாகும். 12. மாந்தருக்கு, அதுவும் மகளிருக்குத் தம்மை அழகு படுத்துவதில் தணியாத ஆர்வம் உண்டு. குறவர் இனப் பெண்கள் ஓய்வு நேரத்தில் சோழிகள், மணிகளைக் கோத்து அணிந்து கொண்டனர். ஆடவர் தாம் கொன்ற புலியின் பல்லைக் கொணர்ந்து கொடுக்க அதனையும் மாலையில் கோத்துக் கொண்டனர். பிற்காலத்தில் தென்னிந்திய மகளிர் திருமண மானதற்கு அடையாளமாக (கணவன் இருக்கும் வரை) அணியும் தாலிக்கு முன்னோடி இது. மகளிர் இடுப்பில் அணிந்த தழை யுடை இன்னொரு அலங்காரம். தென்னிந்தியப் பழங்குடி களில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளவர்கள் இன்றும் தழையுடை அணிகின்றனர். பாலை நில மக்கள் 13. பாலைப் பகுதியான வெம்மையான மணற் பகுதி புவியில் மக்கள் நிலையாக வாழும் இடமாகப் பெருமளவுக்கு இல்லை. காட்டு விலங்குகளை வேட்டையாடித் துரத்திச் செல்லும் வேடன் சில வேளைகளில் பாலைப் பகுதியில் சில நாள் தங்க நேரும். ஆயினும் உடல் வலுவும் நெஞ்சுரமும், உள்ள ஆடவரும் நாடு காணும் ஆவலில் பாலைப் பகுதிக்குச் சென்று தங்கியிருக்கலாம். பாலைப் பகுதிக்குச் சென்று சில நாளோ நிலையாகவோ வாழ்ந்த மக்கள் மறவரும் கள்வரும் (மறம் - மறவர் ; கள் = வலிமை - களிறு - ஆண் யானை / சுறாமீன் ; கள் = (வலிமை தரும் ) மது ; களம் - போர்க்களம் ) . பாலை வள மற்றதாகலின் அந்நில மக்களாகிய படைப்பயிற்சி மிக்க மறவரும் கள்ளரும் பிற்காலத்தில் போர்வீரர்களாயினர்; பிற திணையில் வாழ்ந்த போர்க்குணம் குறைந்த செல்வர்களைச் சூறையாடினர்; எனவே "மறம்" கொடுமையையும் ''கள்வர்" திருடரையும் குறிக்கலாயிற்று. ஆனால் ஆதி காலத்தில் புது நிலம் காணுதலிலும் வீரம் காட்டுதலிலும் ஆர்வமிக்க ஆடவர்களே பாலையிற் குடியேறினர். பாலை நில ஆடவர் மறச் செயல்களிலும் போரில் லும் ஈடுபட்டிருக்கும் காலங்களில், பெண்களும் குழந்தை களுமே தனித்திருப்பராதலின் பாலை நில மக்களிடமும் தாய் வழிச் சமுக முறையே தழைத்தது. ஆயர் 14. குறிஞ்சியில் மக்கள் தொகை பெருகியது; உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது; மாந்தர் அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லைக்குச் சென்றனர். இதற்குள்ளாக இன்னொரு நாகரிக வளர்ச்சியையும் மாந்தன் அடைந் திருந்தான். அது தான் விலங்குகளைப் பழக்கி வளர்த்தல் வேட்டைக்குப் பேருதவியான நாய், குறவர் நிலையிலேயே பழக்கப்பட்டிருக்கும். ஏனைய எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு போன்றவை பின்னர்ப் பழக்கப் பட்டிருக்கும். மாந்த இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையாகிய ஆயர் நிலை இவ்வாறு எய்தப் பட்டது. ஆடுமாடுகள் விரைந்து பெருகும், அதுவும் முல்லை நிலத்தில். அதனால் தனி நபர் சொத்துரிமை ஏற்பட்டது. இனக் குழுக்கள், தனித்தனிக் குடும்பங்கள் உருவாயின. 15. காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி அல்லது தழையுடை தவிர); இத்தன்மைகளைக் கொண்டதும் ''களவு எனப் பழந்தமிழ் இலக்கியம் குறிப்பதுமான "இயற்கை மண முறை முல்லை நிலத்தில் மெது மெதுவாக மாறிக் கற்பு மணம் ஏற்பட்டது. முல்லை நிலக் குடியிருப்பு பந்தல். அப் பந்தலைப் பூ, இலைகளால் அலங்கரித்து உறவினர் உற்றாருக்கு விருந்தளிப்பதே கற்பு மணச் சடங்காக இருந்தது; சடங்கு முடிந்ததுமே, உடன் கூட்டம் நிகழ்ந்தது. கற்பு மணம், தனிநபர் சொத்துரிமை இவற்றின் தொடக்கம் தந்தை வழிச் சமுதாய முறை உருவாக வழிவகுத்தது. காரணம் ஏராளமான ஆடு மாடுகளைத் தன் சொத்தாக உடைய குடும்பத் தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும் ஆதிக்கமும் பெற்றான். மேய்ச்சல் நிலத்தைத் துண்டு துண்டாகப் பிரித்தால் மந்தை களை நன்கு பேண முடியாது; இக்காரணத்தாலும் வீண் போட்டியைத் தவிர்த்து அனைவரும் நலம் பெறும் நோக்கு டனும் கூட்டுக் குடும்ப முறை உருவாகியது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் அரசன் ஆனான். தமிழகத்தில் அரசன் இவ்வாறு உருவானான் என்பதைக் காட்டும் சொல் "கோன்" ஆகும். - (இடையன்) கோல் - கோன் ; கோன் = இடையன் அரசன்; ஆய்ச்சி = இடைச்சி அரசி; ஆடு மாடு மேய்க்க உதவும் கோலே அரசன் செங்கோல் ஆயிற்று. 16. தென் இந்திய இடையர் முல்லை நில வாழ்க்கை யிலிருந்து இரண்டு வகைகளில் மாறுபட்டது மைய ஆசிய ஸ்டெப்பி புல்வெளி வாழ்நர் வாழ்க்கை முறை: ஒன்று கூடார வாழ்க்கை ; இரண்டாவது மேய்ச்சல் நிலம் தேடி அடிக்கடி இடம் பெயரும் நாடோடி நிலை. தென்னிந்தியத் தட்ப வெப்ப நிலையில் கூடாரம் தேவைப்படவில்லை. மூங்கில் தூண் நட்டு, சில கொம்புகளை சட்டமாகக் கட்டிப் பனை ஓலைகளை வேய்ந்து வட்டமாக இருந்தால் உச்சியில் பானையைக் கவிழ்த் தால்) இடையனுக்கும் கன்று களுக்கும் இருப்பிடம் ஆயத்தமாகி விடும். செழிப்பான மண், தவறாத பருவ மழை இவை காரண மாக ஒரே பகுதியில் இடைவிடாது ஆண்டாண்டு காலமாக மேய்ச்சலுக்கான புல் இங்கு கிடைத்தது. ஸ்டெப்பி நிலத்திற் போல ஓரிடத்தில் உள்ள புல்லை ஆடு மாடுகள் மேய்ந்த வுடனோ, அல்லது வெயிலில் காய்ந்து கருகியவுடனோ, கூடா ரத்தைத் தூக்கிக் கொண்டு புலம் பெயர வேண்டிய நிலை இங்கில்லை. அதாவது தென்னிந்திய ஆயரின் வாழ்வு நாடோடி வாழ்வல்ல; நாகரிகம் உருவாகத் தக்க நிலையான வாழ்க்கை முறை சார்ந்தது 17. கானகத்தில் கடும் உழைப்பின்றி ஆடு மாடு மேய்த்து வாழ்ந்தவர் குழலை உருவாக்கினர். குழல் மூங்கிலின் தண்டில் சில துளைகளை இட்டு உருவாக்கிய புல்லாங் குழலின் இன் னிசையில் மாடு மேய்க்கும் இடையர் மனச் சோர்வின்றிப் பொழுது போக்கினர். 18. குறும்பாடு என்னும் குறுகிய காலும் நிரம்பிய மயிர் வளர்ச்சியும் கொண்ட ஆட்டினத்தை வளர்த்த இடையர் குறும்பர் எனப்பட்டனர். அவர்கள் ஆட்டு மயிரிலிருந்து கம்பளி நெய்யக் கற்றனர். இன்றும் சென்னை மாகாண முல்லைப் பகுதியில் அவர்கள் கம்பளி நெய்கின்றனர் - இயந்திரத்தறி அவர்கள் பிழைப்பை விரைந்து கெடுத்து வந்த போதிலும். (பிற கைத் தொழிலாளரையும் இது போன்ற இயந்திரங்கள் கெடுத்து அவர்கள் பல்லாயிரம் ஆண்டு செய்து வந்த தொழிலை ஒழித்து அவர்கள் வாயில் மண்ணைப் போடுகின்றன) மீனவர் 19. முல்லையை அடுத்து மாந்தர் குடியேறியது நெய்தல் உடல் வலிமையும் உள்ளத் திடனும் கொண்ட வீர உணர்வு கொண்ட ஆடவர் கடற்செலவின் இன்னல்களுக்கு அஞ்சாமல் கடலில் கலம் செலுத்தி (வரம் பில்லாது கிட்டும், சுவையான) மீன்களைப் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டனர். முதலில் கட லோரத்தில் மீன் பிடிக்கத் தொடங்கியவர்கள் விரைவில் ஆழ்கடலுக்கும் செல்லலாயினர். சூழ்நிலை காரணமாகக் கடலோரம் வாழ்ந்த பரதவர் படகு கட்டுவோராகவும் மீன வராகவும் ஆயினர். முதல் படகு கட்டு மரம் தான் ; பின்னர் தோணி வந்தது. நெய்தலில் விளைந்த மீனையும் உப்பையும் உள்நாட்டுக்குக் கொண்டு சென்று வேறு உணவுப் பொருள் களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலிருந்த பரதவர் வணிகர் ஆயினர். (இன்றும் பலிஜர் செய்வது போல) பரதவர் பொதி மாடுகளின் மீது இரண்டு பைகளில் தங்கள் பொருட் களை வைத்துக் கொண்டு மருதநிலம் சென்று வணிகம் செய் தனர். பரதவ இனப் பண்டை மாலுமிகளே இந்தியப் பொருட் களைத் தங்கள் கப்பல்களில் ஏற்றி மேற்கே ஆப்பிரிக்கா, அரேபியாவிற்கும் கிழக்கே , மலாயா, சீனாவிற்கும் கொண்டு சென்றனர். உழவர் 20. ஐந்திணை நிலங்களில் மக்கள் இறுதியாகக் குடி யேறியது மருதம் - அதாவது முல்லைக்கும் நெய்தலுக்கும் இடைப் பட்ட தாழ்நிலம். இது நிகழ்ந்தது பழங்கற்காலக் கடைசியில். புதுக் கற்காலம் தொடங்கிய பின்னர் தற்கால நாகரிகமும் உருவாகியது. முல்லை நிலக் குடியிருப்பு நிலை யிலேயே பயிர் களை மாந்தரே வளர்த்துப் பயன் கொள்ளும் முறை தொடங் கியது; நெல், வாழை, கரும்பு, மா ஆகியவை இவ்வாறு ஓரளவு பயிரா யிருக்கலாம். இது பின்னர் மருத நிலத்தில் முழுமையுற்றது. மருத நில மண் எளிதில் உழக்கூடிய தாயிருந்ததால் மருத நிலத்தவர் நிலத்தை உழுது கூலங்களைப் பயிரிடலாயினர். ஆற்றோர நிலங்களின் மட்டம் படிப்படியாகத் தாழ்ந்து சென் றதைக் கண்ட வெள்ளாளர் ஆற்று நீரை வயல்களில் பாய்ச்ச வழி கண்டனர். ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் காராளர் - "மேகங்களை ஆண்டவர் வாழ்ந்தனர் மழை நீரை ஏரி குளங்களில் சேகரித்துப் பாய்ச்சினர். கால்வாய் வெட்டி ஆற்று நீரைக் கொண்டு சென்றனர்; அல்லது கிணறு, ஊற்றுக் களிலிருந்து ஏற்றம் மூலம் பயிருக்கு நீர் பாய்ச்சினர். பண்டைத் தென்னிந்திய உழவரின் வேளாண் நுண்ணறிவு செம்மையாக இருந்தது. (தற்கால அறிவியலும் அவ்வறிவை வெல்லு மாறில்லை. ஆற்றுப் படுகைகளுக்கு அப்பால் கரிசல் மண் நிலம் இருந்தது. அது மேலைத் தொடர்ச்சி மலையிலிருந்து மழை அரிப்பால் கரைந்து வந்த மண்ணும், தண்டகாரண்ய கானகத் திற்குரிய இலைமக்கிய மண்ணும் கலந்தது ஆகும். பருத்திச் செடியின் பிறப்பிடம் இது தான். புதுக்கற்கால மாந்தன் இங்கு தான் பருத்தி நூலை நூற்கவும், நெய்த நூலைக் கொண்டு பருத்தி ஆடை தயாரிக்கவும் கற்றான். 21. இக்கட்டத்தில் உபரி உணவு தானியங்களையும், பருத்தித் துணியையும் சேமித்து வைக்க மாந்தர் மரவீடுகளைக் கட்டத் தொடங்கினர். மருத நிலத்தில் எளிதிற் கிட்டாத பொருள்களில் பண்ட மாற்று வணிகம் தொடங்கியது. பரதவரிடமிருந்து உப்பு மீன் முதலியவையும்; இடையரிட மிருந்து பால் தயிர் நெய் முதலியனவும்; குறவரிடமிருந்து கற்கள், கற் கருவிகள் (இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்) இரும்புக் கருவிகள் முதலியனவும் பண்டமாற்றாகப் பெறப்பட்டன. பண்டங்களை உய்க்க சகடங் கள் உருவாயின. நாகரிக முன்னேற்றப் பரிணாம வளர்ச்சி முழுமை யடைந்தது. மருத நிலத்தில் புதுக்கற்கால நாகரிகம் செம்மையுற்றது; கலைகளும் தொழில்களும் வளர்ந்தன. இது மனித வரலாற்றில் முக்கியமான வளர்ச்சி நிலை. ஏனெனில் புதுக் கற்காலத்துக்குப் பின்னர் உணவுப்பயிரோ, உடலை மூடு வதற்கான துணி நெய்யும் புதிய முறையோ எதுவும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு மாழைகள் (அன்றைய இரும்பிலிருந்து இன்றைய அலுமினியம் முடிய), நீராவி , பெட்ரோல் இயங்கிகள், மின்சார இயந்திரங்கள் முதலிய புதிய கண்டுபிடிப்புக்கள் காரணமாக பழைய வேளாண்மை, தொழில் முறைகளை எளிமையாகவும் விரைந்தும் செய்ய முடிகிறது; போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டன என்பதெல்லாம் உண்மை யெனினும், உணவுப் பொருள் எவையும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை; வெயில், மழையிலிருந்து பாதுகாப் பதற்கான புது முறைகளும் உலகின் தட்பவெப்ப நிலையினை மாற்றுவதற்கான முறைகளும் எவையும் கண்டுபிடிக்கப் படவில்லை . இந்தப் பரிணாம வளர்ச்சி எங்கு முதலில் நிகழ்ந்தது 22. இப்புவியுலகின் மேற்பரப்பில் ஒரு சிறு பகுதியில் அதாவது இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பகுதியில் மட்டுமே ஐந்திணை நிலங்களும் ஒன்றையொன்று ஒட்டியுள்ளன. அங்கு தான் மக்கள் தொகைப் பெருக்கம், இயற்கை உணவுப் பொருள் பற்றாக்குறை இவை காரணமாக ஒரு திணையிலிருந்து மற்ற திணைக்குப் பரவிப், படிப்படியாக பண்பாடு நாகரிகம் வளர்ச்சி பெற்றதைக் கண்கூடாகக் காண இயல்கிறது. - வேடர், பாலை வாழ்நர், ஆயர், மீனவர், உழவர் என்றவாறு. உலகின் இச்சிறு பகுதியில் மனிதன் வாழ்வியல் பெற்ற பரிணாம வளர்ச்சியிலிருந்து மனித நாகரிகம் புவியியல் சூழ்நிலைகளைப் பொருத்த்து என்பதை உணரலாம். 23. இந்தியாவிற்கு வெளியே இது போன்ற திணைகளை வரையறுக்க முயன்றால் அவை மாபெரும் நிலப் பகுதிகளாக முடிகின்றன: முல்லை - கார்பேதியன் மலையிலிருந்து அல்தாய் மலை அடிவாரம் வரையுள்ள பரந்த ஸ்டெப்பி புல்வெளி குறிஞ்சி - (பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் நடுவில் உள்ள) பிரனீஸ் மலை தொடங்கி இமயமலை உள்ளிட்டு பசிபிக் கரைவரை - புவியன்னையின் மேகலை போல் காணப்படும். நெய்தல் - நண்ணிலக் கடற்கரை, இந்திய, அட்லாண்டிக் பெருங்கடல் கரைகள் பாலை - ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனமும் அதன் தொடர்ச்சியாக அராபிய, பாரசீக, மங்கோலிய பாலை வனங்கள். ஒரு திணையிலிருந்து இன்னொரு திணை யென்ற நாகரிகப் பரிணாம வளர்ச்சி முதலில் தென் இந்தியா என்ற சிறு பகுதியில் ஏற்பட்டுப் பின்னர் உலகெங்கும் பரவியதா? அல்லது அதற்கு நேர்மாறாக நடந்ததா? இவ் வினாவுக்கு இப்பொழுது விடை காண்பது இயல்வதல்ல. ஒரு திணையி லிருந்து மற்றொரு திணைக்கு மக்கள் பரவி, பண்பாடும் நாகரிகமும் படிப் படியாக வளர்ச்சியுறுவதென்பது சிறு பகுதியில் நடைபெறுவதே எளியது. (காரணம் மக்கள் இடம் பெயர்தல் சிறு பகுதியில் மிக எளிது; பெரு நிலப்பகுதியில் இது கடினம்) புவியியல் சூழ் நிலைக்கேற்ப நிகழ்ந்த மாந்தர் நாகரிகப் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சி முதன் முதலில் இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள தட்சிண பாரதத்தில் தான் ஏற்பட்டது - ஒரு சோதனைக் கூடத்திற் போல - (யூரேசியா, ஆப்பிரிக்கா பெரு நிலப் பகுதியில் அல்ல) என நாம் கருதுவது மாந்த இனத் தொல் வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும். இச்சிறு பகுதியில் (சிறு அளவில் நடந்த ஒவ்வொரு வளர்ச்சிப் படி நிலையும் இங்கிருந்து அந்தந்தக் கட்டத்தில் இந்தியாவிற்கு வெளியிலும் பரவி, பெரும் அளவில் உருப்பெற்றன எனக் கருதுவது பொருத் தம். மாறாக இத்தகைய படிநிலை வளர்ச்சிகள் இந்தியாவுக்கு வெளியே பெருநிலப்பரப்புகளில் ஏற்பட்டு, அதன் பின்னரே ஒவ்வொரு படி நிலையிலும் அதன் குறள் வடிவம் தென்னிந்தி யாவுக்குள் புகுந்தது - ஒரு 'மாந்த இன வரலாற்று அருங்காட்சி யகத்தை அங்கு அமைப்பது போல, என்று கருதுவது ஒவ்வாது. (எனினும் இது வெறும் உன்னிப்புத் தான். ஏன், இத்தகைய படி முறை வளர்ச்சிகள் புவியியல் சூழலுக்கேற்ப வேறு சில பகுதிகளிலும், தான்தோன்றியாக ஏற்பட்டிருந்து அது பற்றிய உண்மைகள் பின்னர் நிறுவப் படலாம்) தொடக்க காலத் தமிழ்ச் செய்யுள் 24. சமைத்துண்ணல், உடையுடுத்தல் ஆகியவற்றுக்கு அடுத்து மாந்தன் கண்டுபிடித்தவற்றுள் முதன்மையானது பேச்சு (மொழி) பேச்சு இசைபடவும் இருக்கலாம்; அஃதில்லா மலும் இருக்கலாம். பாட்டுக்கு முன்னரே உரை நடை தான் முதலில் தோன்றியதென்பர் பலர். இசைத்தன்மை ஓரளவு மட்டும் இருந்த பேச்சு நடையிலிருந்து நாளடைவில் சிறு மாற்றங் களுடன் பாட்டும் உரையும் உருப்பெற்றன என வேறு சிலர் கூறுவது ஏற்கத்தக்கதாக உள்ளது. எனினும் இதில் இறுதி முடிவு கூறுவது கடினம். எனினும் இலக்கிய வளர்ச்சியில் உரைநடை தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே பாட்டு (செய்யுள்) தோன்றியதென்பது உறுதி, பண் - பாண்; பாடு - பாட்டு என்னும் சொற்கள் தமிழில் ஆதியிலிருந்தே உள்ளன. பாடுதல் தமிழரின் ஆதிகாலப் பொழுது போக்கு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பாணர் முதலில் சாதாரணமான பாடுநர் ஆக இருந்தனர்; முல்லைத் திணைக் காலத்தில் அரசன் உருவான பின்னர் அரசவைப் பாணர்களும், புலவர்களும் ஆக உயர்வடைந்த அவர்கள் தமிழரிடையே ஆதியிலிருந்து மதிக்கப் பட்டனர் - பெற்ற வெகுமானங்கள் குறைவாயிருப்பினும். தூய தமிழ்ப் பண்பாடு துலங்கிய நீண்ட நெடுங்காலத்தில் பாணர் அரசன் நண்பர்களாகவும் அறிவுரை கூறுநராகவும் இருந்தனர். பிற் காலத்தில் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியப் பண்பாடு தென்னிந்தியப் பண்பாட்டுடன் கலந்த பின்னர், அதாவது வரலாற்றுக் காலத்தில், பாணர் தென்னிந்தியாவில் மிகத் தாழ்த்தப் பட்ட தீண்டாத சாதியாக சமூகத்தில் தாழ்நிலை அடைந்தனர் (அவர்கள் ஊன் உணவு - குறிப்பாக ஆவின் ஊன் உண்பது - மித மிஞ்சிய மதுக்குடி ஆகியவற்றை விடாது தொடர்ந்து கைக் கொண்டு வந்தமையால் ) 25. இப்படித் தொல்பழங்காலத் தமிழர் வரலாறு" இன்றியே வளர்ச்சி யடைந்தனர். அவர்களுடைய தமிழ் மொழியிலிருந்தும் (வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலம் பற்றிய) தொல்லியலாளர் ஆய்வுகளிலிருந்தும் அவர்கள் படிப் படியாக நாகரிகம், பண்பாட்டு நிலைகளில் வளர்ந்து வந்ததை அறியலாம். உலகின் மிகப் பழைய வரலாற்று ஆவணங்களான மெசபொதாமியப் பொறிப்புகள் தமிழர்கள் வட இந்தியாவுடனும் அதற்கப்பாலும் வணிகம் செய்து வந்ததைக் குறிப்பிடுகின்றன. இந்தக் கால கட்டத்தில் தான் ''வரலாற்றில் '' பழந்தமிழர் நுழைகின்றனர். இயல் 2 கி.மு 3000-2000 அளவில் வட இந்தியாவுடன் தொடர்பு "தென் இந்தியா தொடர்பின்றியிருந்தது" என்ற கொள்கை தவறு 1. வின்சென்டு ஸ்மித் தனது ஆக்ஸ்போர்டு இந்திய வர லாற்றில் இந்தோ ஆரியர் தென்னிந்தியாவுடன் மிகப் பழங் காலத்தில் கொண்டிருந்த தொடர்பு குறைவானதே என்றும், அத்தொடர்பும் கீழைக்கரை வழியாகவே இருந்திருக்கும் என் றும் கூறுகிறார். ஆனால் டி. ஆர். பந்தார்க்கர் தன்னுடைய கார்மிக்கேல் உரையில் (1918) இதை மறுக்கிறார். ஆரியர் மேற்கு இந்தியாவில் அவந்தி நாட்டிற்குத் தெற்கில் நர்மதை ஆற்றைத் தாண்டியும் தென்னாட்டுக்குச் சென்றிருக்கலாம் என்பார் அவர். சிந்துப் பகுதியிலிருந்து ஆரியர் கத்தியவார் - பாருகச்சா - சுப்பாரகா (பம்பாய் மாகாணத்தில் தாணா மாவட்டம் சோபாரா) இன்னொரு பாதை என்கிறார். 2. ரிக் வேதம் x 61.3 "சரத்பாதா ந் தட்சிணா பராவர்ண் ந தா நு மே பர் சந்யோ ஜகர்ப்ரே " என்பதில் வரும் 'தட்சிணா' தென்னாட்டையே குறித்ததாக மக்டானல், கீத் ஆகியோர் கூறுவதே சரி. (தட்சிணா = கொடை என சயனர் கூறுவது சரியல்ல) அய்த்த ரேய பிராமணத்தில் VII.18 தனது 50 மகன் களையும் விசுவாமித்திரர் (கி.மு. 2500) சபிக்கும் பொழுது அவர்கள் வாரிசுகள் (ஆர்யவர்த்த) எல்லைக் கப்பால் வசிக்கும் ஆந்திர, புண்டர், சபர், புலிந்த இனத்தாராக அதாவது அனாரிய தஸ்யுக்களாக பிறப்பார்கள் எனச் சபிப்பதாக சயனர் கூறுவது சரி. பிற்கால மனுஸ்ம்ருதியும் (II 22, 24) இமயமலைக்கும், விந்திய மலைக்கும் நடுவில் உள்ளதும் கருநிறமான மானின் வாழ் விடமும் ஆன பகுதியே "ஆர்யாவர்த்தம் என்கிறது. தட்சிண பாதா, தக்ஷிண எனச் சுருங்கியது. பிராகிருதத்தில் தக்கிண. பண்டைக்காலத்தில் 'தட்சிண' என்பது தமிழ் நாடு உட்பட தென்னிந்தியா முழுவதையும் குறித்தது. பிற்கால முகமதியர் களும், அவர்களைப் பின்பற்றி ஆங்கிலேயர்களும் தான், தக் கணம் என்பதை தக்கண பீடபூமியை மட்டும் (தமிழகம் நீங்க லாக) குறிக்கப் பயன்படுத்தினர். முத்து 3. ரிஷிகள் சமயக் காரியங்களுக்காக "ஆரியவர்த்தத்தில் உள்ளவரே ஆரியர்" எனக் கூறினும் தொடக்க காலத்தி லிருந்தே ஆரியவர்த்தத்திற்கும் தட்சிண பாதத்திற்கும் மிகுந்த வாணிகத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். ரிக் வேதம் முதலியவற்றிலேயே முத்து பற்றி வருகிறது: ரிக் வேதம் 1.33.4 அபீவர்த்தம் கர்ஷ்நார் விஸ்வரூபம். ரதம் (= சபீதாவின் ரதம் பல வகை முத்துக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது , அரசர் கள் ரதம் முத்துக்கள் பதித்து இருந்திருக்கும். அது தெய்வத்துக்கும் ஏற்றப்பட்டது! x. 68.11; 1.126.4; Vii. 18. 23 : குதிரைகளும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அதர்வவேதம் IV.10.1(சங்க மணி சூக்தம்); xix.30.5 "மின்னல் ஒளியால் கடலுள் உருவாகிய முத்து" எனக் குறிப்பிடப்படுகிறது. முத்துச்சிப்பி களுள் முத்தம் உருவாகிறது ("முதிர் வார் இப்பி முத்தம் புறம் 53) என்ற உண்மையை அக்காலத்தில் வட நாட்டினர் அறிந்திலர் ! அக்காலத்தில் கங்கையாற்றிலும் தரம் குறைந்த முத்துகள் ஒரு சில கிடைத்திருக்கலாம். ஆனால் முத்து ஏராளமாகப் பயன்படுத்தப்பட்ட குறிப்புகளைக் காணும் பொழுது, பாண்டிய நாட்டிலிருந்தும் முத்துகள் பெருமளவில் சென்றிருக்க வேண் டும். கர்ஷ் = உருகு ; கர்ஷ் கிர்ஷண = முத்து. ஏனைய இரத்தி னங்களைப் போலன்றி நெடுங்காலம் காற்றுப் பட வைத் திருந்தால் முத்து நாளடைவில் தேய்ந்து விடும்; எனவே இப் பெயரிட்டனர் போலும் - நெடுநாள் பட்டறிவின் அடிப் படையில், விமுக்தா (= சுரந்தது); முக்தா (=விடுவிக்கப் பட்டது) போன்ற சமஸ்கிருதச் சொற்களை முத்தம் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு வேராக மானியர் வில்லியம்ஸ் குறித்துள்ளது தவறு. தமிழ் "முத்து என்பதை "முக்த" என வடவர் மாற்றி வழங்கினர் என்பதே என் கருத்து. தங்கமும் வைரமும் 4. முத்து மட்டுமின்றி அக்காலத்திய தென்னிந்திய வட இந்திய வணிகத்தில் தங்கமும், வைரமும் இடம் பெற்றிருக்க வேண்டும். தங்கமும் வேத காலத்தில் பெரும் அளவுக்குப் பயன் படுத்தப் பட்டது தெரிகிறது. சிந்து ஆற்றுப் பகுதி மணலை அரித்து வட நாட்டினர் பெற்ற தங்கம் சிறு அளவினதாகவே இருந்திருக்கும். (அத் தங்கம் சிற்றெறும்பு போல் இருந்திருக்கும் எனவே "பிப்பிலிகா'' என்றனர்; மகாபாரதம் ii 1860; இப் பெயரைக் கேட்ட மெகஸ்தனிஸ் "ஓநாய் அளவு பெரியனவும் தங்கம் தோண்டி எடுப்பனவும் ஆன எறும்புகள் பற்றி ஒரு கதை கட்டியுள்ளார்!) எனவே அக்காலத்தில் பெருமளவு தங்கம் கிட்டிவந்த தென்னிந்தியா விலிருந்து ஆரிய வர்த்தத்திற்குச் சென்றிருக்க வேண்டும். மெளரியர் ஆட்சிக்காலத்தில் தட்சிண பாதத்திலிருந்து வாணிபம் மூலம் வட புலத்துக்கு முத்து, இரத்தினம், தங்கம் முதலியவை சென்றாக நாம் அர்த்த சாத்திரத்தி லிருந்து அறிகிறோம். அதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே இருந்து வந்த நிலையின் தொடர்ச்சியே இது என நாம் கருத வேண்டியுள்ளது. பிற பொருள்கள் 5. ரிக் வேதம் 1.191.14 குறிக்கும் மயூர (மயில்) தென் னாட்டிலிருந்து சென்றிருக்க வேண்டும். வேதங்கள் அடிக்கடி குறிப்பிடும் யானை விந்திய மலைப் பகுதியிலிருந்து கிட்டி யிருக்கலாம்; தென்னாட்டிலிருந்தும் வணிகர் மூலம் பெற்றிருக் கலாம். (கி.மு. 2ம் நூற்றாண்டில் கலிங்கக் கார வேலனுக்கு பாண்டிய நாட்டிலிருந்து யானைகள் சென்றுள்ளன; அதற்கு நெடுங்காலம் முன்னர் இருந்தே யானைகளை வடவர் தென் னாட்டிலிருந்து பெற்று வந்திருக்க வேண்டும்). யானைத் தந்தங்களைச் செதுக்கிப் பொருள் செய்ததாக வேதங்களில் குறிப்பு இல்லை . பின்னர் சிலவநாக ஜாதகம் வாரணாசியில் இத்தொழில் இருந்ததாகக் கூறுகிறது; முன்னரே அத் தொழில் இருந்திருக்க வேண்டும். தென்னாட்டிலிருந்து வணிகர் யானைத் தந்தத்தையும் வட புலத்துக்கு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். "பாணி"கள் 6. ரிக் வேதம் குறிப்பிடும் ''பாணிகள் மேற் சொன்ன பொருள்களை ஆரியருக்கு உய்த்த வணிகர் என எனது முந்தைய நூல்களில் கூறியதன் அடிப்படை கிரிபித்து, மக்கானல் போன்ற ஐரோப்பிய ஆய்வாளர் கூற்றுக்களைச் சரி என அப்போது நான் கருதியது தான். ''பாணி களைக் குறிப்பிடும் வேத மந்திரங்களை மீண்டும் ஆழ்ந்து படித்த பின்னர் இக்கருத்து தவறு என்று இப்பொழுது உணருகிறேன். பாணிகள் (ஐரோப்பிய ஆய் வாளர் கூறியது போல) மேகத்தைத் திருடி வைத்து மழை பெய்யாமல் தடுத்த வான் மண்டலப் பிசாசுகளும் அல்ல; வணிகரும் அல்ல. ஆடு மாடுகள், குதிரைகளை நிறையச் சேர்த்து செல்வமாக வைத்திருந்தவர்களே பாணிகள். பசுக்களைக் குகைகளில் வைத்திருந்தனர். ஆநிரைகளைக் கவர்வது (தொல் காப்பியப் பொருளதிகார வெட்சித் திணை ஒழுக்கமாகக் கூறப்படும் போர் முறை தான்.) அப்போர் முறை மிகப் பழங் காலத்தில் இருந்தே ஆரிய, திராவிடப் பண்பாடுகள் இரண்டிலும் இருந்தது தான். பாணிகள் தஸ்யூக்களில் ஒரு பிரிவினரே. எனவே தான் ரிக் வேதம் 1. 93.4; X 67.6 ஆகிய இடங்கள் குறிப்பிடுவது போல அக்னியும் சோமனும் (அதாவது அக் கடவுளை வழிபட்ட ஆரியர் என்க!) மற்றும் இந்திரன் (அல்லது அவன் சார்பில் பிரஹஸ்பதி) ஆகியோர் பாணிகளின் ஆநிரை களைக் கவர்ந்தனர். அது "வெளி நாட்டிலிருந்து வந்த படை யெடுப்பு அல்ல. வேத காலத்தில் தென் இந்திய வட இந்திய வணிகம் "பரதர்" கையில் இருந்திருக்க வேண்டும் (பெரும் பாணாற்றுப் படை 323-4 வணிகராகிய பரதரின் மாடங்கள் நிறைந்த தெருக்களைக் குறிக்கிறது) சேர நாட்டில் ஆரியர் 7. ரிக் வேதம் vii,101.14 "ப்ரஜா ஹதீஸ்ரோ அத்யாயம் ஈயுஹ்" (= மூன்று ஜனங்கள் (அக்நி வழிபாட்டைத் தொடர்ந்து நடத்தாது) மீறினார்கள் என்கிறது. அவ்வாறு மீறிய மூவர் யார்? தைத்திரிய ஆரண்யகம் தந்த பட்டியலும் அப்பட்டியலில் கண்டவர் யார் என்பது பற்றி பிற்காலத்தார் கருத்தும் வருமாறு: தைத்திரிய ஆரண்யகம் :வாயாஸர்; வங்கா வாகதர், சேரபாதர் சயன பாஷ்ய உரை : பறவைகள், மரஞ்செடி கொடி, பாம்புகள் கீத் (Keith) : பறவையை இனக்குறியாகக் (totem) கொண்ட இனத்தார், வங்கரும் மகதரும்; சேரரும் கீத் கருத்தே சரி என நான் நினைக்கிறேன். பரசுராமன் காலத்தி லேயே ஆரியப் பண்பாடு சேர நாட்டை அடைந்திருக்க வேண்டும். விந்திய மலைக்குத் தெற்கில் ஆரிய அரசர் 8. வேத காலத் தொடக்கத்திலேயே ஆரிய அரசர் ஆட்சி யதிகாரம் விந்தியத்திற்குத் தெற்கிலும் பரவியது பற்றிக் காண்போம். வேத காலத்தில் 1/3 பங்கு முடிந்த நிலையில் வாழ்ந்த வன் அர்ஜூன் கார்த்த வீரியன் (அரிச்சந்திரன் பாட்டன் திரைய்யாருநன் காலத்தவன்). சூரிய வம்சத்தில் 30 தலைமுறை கழிந்த பின்னரும், ராமச்சந்திரனுக்கு 30 தலைமுறை முன்னரும், வாழ்ந்தவன்; அவன். சாம்ராட், சக்கரவர்த்தி என்று அழைக்கப் பட்டவன். நீண்ட ஆட்சியில் அவன் வெற்றிகள் வருமாறு: 1) ஹைஹயர் பரம்பரையினர் அதிகாரத்தை உச்ச நிலைக்குக் கொணர்ந்தான். 2) ஆதி விசுவாமித்திரருக்கு நூறு ஆண்டு முன்னர் தட் சிண பாதத்தில் வாழ்ந்தவன் மாஹிஸ்மான். அவன் கட்டிய நகரம் மாஹிஷ்மதி. அந்நகரத்தை கார்க்கோடக நாகர்களிடம் இருந்து வென்று கார்த்தவீரியன் தன் தலைநகரமாக்கிக் கொண் டான். 3) இலங்கை மன்னன் இராவணன் (அயோத்தி மன்னன் அநாரண்ய னோடு பொருத இராவணன் இவனுக்கு முந்தியவன்) ஒருவனை வென்று மாஹிஷ்மதியில் சிறையிட்டான். (இராமன் கொன்ற இராவணன் இதற்கு 500 ஆண்டு கழித்து வாழ்ந்தவன். எனவே கார்த்த வீரியன் கொன்ற இராவணன் இடைப் பட்டவன். இறைவன் என்ற தமிழ்ச் சொல் இராவண் என சமஸ் கிருதத்தில் திருத்தி வழங்கப்பட்டது என்பார் ஸ்டென்கோனோ (IRAS : 1914, பக் 285 ) அப்படியானால் இம்மூன்று இராவணர் உண்மைப் பெயர்கள் என்ன வென்று நமக்குத் தெரியவில்லை எனலாம்) 9. கார்த்த வீரியனும் அவன் மகன்களும் பார்கவ ரிஷி ஐமதக்னியின் பர்ண சாலையைத் தாக்கி அவரது பசுவைக் கொண்டு சென்றனர். ஜமதக்னி மகன் இராமன் (தாசரதி அதாவது தசரதன் மகன் இராமனிடமிருந்து பிரித்தறிய, இவனைப் பின்னர் பரசுராமன் என்றனர். போர் செய்து கார்த்தவீரியன் கும்பலையும் ஹைஹயர்களையும் கொன் றான். (அவனுக்கு பார்கவர்களும் அயோத்யா , கன்யா குப்ஜ மன்னர்களும் உதவியாக இருந்தனர். வெற்றிக்குப் பின்னர் பரசுராமன் மேலைக் கரைக்குச் சென்றான் ; கடல் சில மைல் தூரம் பின் வாங்கி அவனுக்குக் கொஞ்சம் (கொங்கணம், மலையாளம்), நிலம் தந்தது. ஒரு வேளை அவன் சென்ற நேரம் மேலைக் கடல் இயற்கையாகவே பின் வாங்கி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கில் சில மைல் தூரம் நிலம் புதிதாக உருவாகி யிருக்கலாம். இந்நிகழ்ச்சியை பரசுராமன் கடலிலிருந்து கொங் கணத்தையும் மலையாளத்தையும் மீட்டான் என்று புராணக் கதையாகக் கட்டியிருக்கலாம். தென்னிந்தியாவுக்கு வேத முறை அக்நி வழிபாட்டைக் கொண்டு சென்ற முதல் ரிஷி பரசுராமனாக இருக்கலாம். 10. கன்யாகுப்ஜ விசுவாமித்ரனுடைய சமகாலத்தவன் பரசு ராமன். முந்தையவன் தன் மகன்கள் ஐம்பது பேரை விந்தியத் திற்குத் தெற்கே உய்த்தான் என்ற கதையை மேலே கண்டோம். அம்மகன்கள் தட்சிண பாதத்தில் ஆரியச் சடங்குகளைப் பரப் பினர். தென்னகப் பழங்குடி மக்களோடு கலந்து அவர்கள் ஆரியப் பண்பாட்டைப் பரப்பினர் என டி. ஆர். பந்தார்கர் கூறி யுள்ளது தவறு. அவர்கள் தஸ்யூ பெண்களை மணந்திருக்கலாம். ஆரியருக்கு முந்திய இந்தியாவில் இந்தியர் நல்ல நாகரிக மடைந்திருந்தனர் என்பது புதுக்கற்கால எச்சங்கள், பழந் தமிழ்ச் சொற்கள், பழந்தமிழ் இலக்கியம் முதலியவற்றிலிருந்து தெரிகிறது; தஸ்யூகள் கோட்டைகள், செல்வம், தங்க ஆபர ணங்கள் உட்பட்ட உயர்ந்த நாகரிகமுடையவர் என்பதை வேதக் கூற்றுக்களும் காட்டுகின்றன. காழ்ப்பு காரணமாக வேத மந்திரங்களை உருவாக்கிய ரிஷிகள் தஸ்யூக்களை இழிவாகவும் தீயவர்களாகவும் சுட்டியுள்ளனர். வட இந்தியாவிலிருந்து தட்சிண பாதம் வந்த ஆரியக்குழுக்களும் ஓரிரு புலம் பெயர்ந்த ஆரியர்களும் தான் தஸ்யூக்களுக்கு நாகரிகம் கற்றுத் தர வேண் டும் என்ற நிலை இல்லை ! 11. ஆரிய வர்த்தம் மட்டுமே புனிதமாகக் கருதப்பட்ட டது என்பதை வைத்துக் கொண்டு கி.மு. 3000-1400 அளவில் (இக்ஷ்வாகு காலம் முதல் பாரதப் போர் முடியும் வரை) ஆரிய மன்னர் ஆர்ய வர்த்தத்தைத் தாண்ட வில்லை என்றும் தட்சிண பாதம் வட இந்தியாவிலிருந்தது தனிமைப் பட்டிருந்தது என்றும் கருதுவது தவறு. அய்த்தரேய பிராமணம் விதர்ப்ப மன்னன் வைதர்ப்பனைக் குறிப்பிடுகிறது. இதைக் கொண்டு டி. ஆர். பந்தார்கர், பிராமணர்கள் காலத்தில் தான் ஆரியர் முதன் முதலில் விந்திய மலைக்குத் தெற்கே பரவினர் என்று கூறுவதற்கு ஆராய்ச்சி முறை வழுவே காரணம். இக்ஷ்வாகு சூரிய வம்சத்தையும், புரூரவஸ் சந்திர வம்சத்தையும் நிறுவி 90 - 100 தலை முறைகள் ஆகிவிட்ட பின் எழுந்த பிராமணங்களில் பழைய நிகழ்ச்சிகள் எல்லாம் குறிக்கப்பட்டன. மகாபாரத கால வேத வியாசர் நான்கு வேத சம்ஹிதைகளை இறுதி செய்த பின்னர் உருவானவையே பெரும் பாலான பிராமணங்கள் - அய்த்த ரேயம் உட்பட. விதர்ப்ப மன்னன் பீமன் என்ற பீமரதன் (இராமனுக்கு 15 தலை முறைகளும் மகாபாரத கால பிர்ஹத் பாலனுக்கு 40 தலைமுறைகளும் முந்திய) அயோத்ய மன்னன் அயுதாயுஸ் காலத்தவன். பிராமணங்களுக்கு 1000 ஆண்டு முற்பட்டவன். அவனுக்கு பத்துத் தலைமுறை முன்னரே விந்தி யத்தை ஆரியர் தாண்டி விதர்ப்பத்தை நிறுவிவிட்டனர். யாதவ அரசுகுமாரன் ஜ்யாமகன் தன் அண்ணனால் துரத்தப் பட்டு நர்மதை ஆற்றை ஒட்டிய மலைப் பகுதிக்கு (நாகர்களும் தஸ்யூக்களும் வசித்த பகுதிக்கு வந்து சில காலம் வசித்துப் பின்னர், மேலும் தெற்கே அவனோ அவன் மகன் விதர்ப்பனோ சென்று தப்தி ஆற்றின் கரையில் நாடும் நகரமும் நிறுவினான். அவை விதர்ப்பம் எனப்பட்டன. அதற்குப் பின்னர் வந்தவன் பீமரதன் . ஆக , பந்தார்க்கர் கூற்று தவறு. 12. விதர்ப்பம் மட்டுமல்ல. விந்திய மலைக்குத் தெற்கே வேத கால் நடுவிலேயே தட்சிண கோசல, சேடிதஷாரந, நிஷாத ராச்சியங்களும் நிறுவப்பட்டு விட்டன. ரிக் வேதம் vii.5.37 சேடி மன்னன் காசுவைக் குறிக்கிறது. மகாபாரத நளோபாக்யானம் இந்நாட்டு மன்னர்களையெல்லாம் குறிப்பிடுகின்றது. முத்கலன் மனைவி இந்திர சேனா (தேரோட்டுவதில் வல்ல நளன் மகள்) தஸ்யூக்களோடு முத்கலன் போரிட்ட போது அவன் தேரை ஓட்டினாள் (ரிக் வேதம் X.102.2). நளன் நண்பன் ரிதுபர்ணன் தட்சிண கோசல மன்னன். விதர்ப்பம் அண்டை நாடு. எனவே தட்சிண பாதத்தின் ஒரு பகுதியை இராமன் காலத்துக்கு முன்னரே ஆரிய அரசர் கைப்பற்றி விட்டனர். இக்காலங்களில் எல்லாம் தமிழர் தத்தம் பகுதிகளில், முன் இயலில் விளக்கிய வாறு, வாழ்ந்து வந்தனர்; வடவரோடு வாணிபம் செய்து வந்தனர். ஆனால் தஸ்யு என்று அழைக்கப்பட்ட அவர்கள் நாகரிகத்தில் ஆர்யவர்த்த அக்னிச் சடங்குகளின் தாக்கம் கொஞ்சமும் ஏற்படவில்லை - விந்தியத்திற்குத் தெற்கே குடியேறியிருந்த ஆரியர்கள் மூலமாக அது மெதுவாக தெற்கிலும் இக்கால கட்டத்தில் நுழைந்து விட்ட போதிலும், இயல் 3 தொடக்க கால அயல் நாட்டு வணிகம் தென்னிந்தியாவும் சுமேரியாவும் நெய்தல் நிலமாகிய கடற்கரைப் பகுதியில் தான் முதலில் வணிகம் தோன்றியிருக்க வேண்டும் என இயல் ஒன்றில் கண் டோம். தமிழகத்தில் கடற்கரைப்பகுதி பெருமளவுக்கு உள்ளது; அப்பகுதிகளில் வாழ்வோர் பரதவர் என்னும் கடலோடிகள். தென் இந்தியப் பரதவர்கள் பருவக் காற்றுக் காலங்களைக் கண்டு அக்காற்றுக்கேற்பக் கலம் செலுத்தலாம் என்பதை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் தான் வியப்பாகும்! எனவே அவர்கள் இதனை நெடுங்காலத்திற்கு முன்னரே கண்டு பிடித்துப் பருவக்காற்றைப் பயன்படுத்திக் கடல் பயணம் மேற் கொண்டிருக்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதுடன் கரையோர மாகக் கலம் செலுத்தியே பாரசீகம் வரைக் கடற்பயணம் செய்திருத்தலும் வேண்டும். இவ்வாறு கடல் வழியாகவும் மற்றும் தரைமார்க்கமாகவும்) சென்று மெசபொதாமியச் சமவெளியில் குடியேறிய தமிழரே சுமேரிய நாகரிகத்தை உருவாக்கியிருக்கலாம் என்பது Ancient History of the Near East (1913) என்னும் நூலில் ஹெச். ஆர். ஹால் கருத்தாகும் : 1. "சுமேரிய உருவச்சிலைகள், புடைப்புச் சிற்பங்களைப் பார்க்கும் பொழுது பண்டைச் சுமேரியர் உடலமைப்புத் தோற் றம் அவர்களைச் சூழ இருந்த செமித்தியர், ஆரியர் போன்ற வர்களிடமிருந்து மாறுபட்டு இருந்தது - செமித்திய, ஆரிய மொழிகளிலிருந்து சுமேரிய மொழியும் மாறுபட்டு இருந்தது போல. சுமேரியர் உடலமைப்புத் தோற்றம் இந்தியர் போன்றே இருந்தது. இன்றும் சராசரி இந்தியன் தோற்றம் ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுடைய அவனுடைய திராவிட முன்னோருடைய தோற்றம் தான்; (இந்தியாவிற்குள் வந்தேறிய) ஆரியர் உடலமைப்புத் தோற்றம் எப்பொழுதோ மறைந்து விட்டது. (இது போலவே ஐரோப்பாவிலும் கிரீஸ், இத்தாலிய நாட்டு மக்களின் பொதுவான உடலமைப்புத் தோற்றம் அந்நாடுகளில் குடியேறிய ஆரியர்களுடையதைப் போன்று இல்லாமல், அவர்களுக்கு முந்தைய ஐரோப்பிய ஆரியரல்லாத - பழங்குடிகளின் தோற்றம் ஆகவே உள்ளது). ஆகவே தென் இந்தியாவில் இன்று வசித்துக் கொண்டு திராவிட மொழி பேசி வரும், திராவிடன் உடலமைப்புத் தோற்றம் தான் சுமேரியன் தோற்றமும். இந்தியாவிலிருந்து தரை வழியாகவும் (கடல் வழியாகவும்?) பாரசீகம் வழியாக மெசொபொ தாமியா சென்று குடியேறிய (திராவிட) இனத்தவரே சுமேரியர் எனக் கருத இடமுள்ளது. இன்றும் பலூசிஸ்தானத்தில் திராவிட மொழியான பிராஹய் பேசும் மக்கள் உள்ளனர்; பாரசீகத் தென் பகுதியில் திராவிடர் போன்ற உடலமைப்புள்ள மக்கள் வசிக்கின்றனர். பாரசீகத்தில் பண்டு வாழ்ந்ததாக கிரேக்கர் கூறும் "அனாரியகோ'' (Anariakoi) மக்களும் (இந்தியாவிற்கும் பாபி லோனுக்கும் இடைப்பட்ட பகுதியில் பண்டு தங்கி விட்ட) திராவிடர்களாக இருக்கலாம். பண்டை சுமேரியா நகரங்க ளான எரிந்து போன்றவற்றுக்கு முதன் முதலில் நாகரிகத்தை கிழக்கிலிருந்து பாரசீக வளைகுடா வழியாக வந்த ஒயானஸ் என்னும் மீன் - மனிதன் கொண்டு வந்ததாக (கி.மு. 5ம் நூ சார்ந்த பெரோசஸ் கதையின் உட்கருத்து என்ன? சுமேரியாவுக்கு கடல் வழியாகவும் (திராவிட நாகரிகம் சென்றிருக்கலாம் என்பதே அது. இந்தியாவில் தான் (சிந்து வெளியில் 7) திராவிட நாகரிகம் முதலில் வளர்ந்திருக்க வேண்டும். அங்கு தான் எழுத்துக்கு வரிவடிவம் (script) முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, முதலில் படவெழுத்தாக இருந்து பின்னர் திருந்திய எளிய வரி வடிவம் உருவாக்கப்பட்டு, சுமேரியாவுக்கும் பரவி அங்கு நாளடைவில் குனே பார்ம் ஆப்பெழுத்து உருப் பெற்றிருக்க வேண்டும். சுமேரியா செல்லும் வழியில் திராவிடர் எலாம் பகுதியிலும் தங்கள் நாகரிகத்தை விட்டுச் சென்றிருக்க வேண்டும். எனவே சுமேரியாவுக்கு நாகரிகத்தைப் பரப்பியதாகக் கூறப்படும் (செமித் தியரும் அல்லாத, ஆரியரும் அல்லாத புதியவர்கள் இந்தியாவின் லிருந்து அங்குச் சென்ற திராவிடராக இருக்கலாம். ஆனால் இதற்கு நேரடி ஆதாரம் இல்லை. எனவே இதை ஒரு முற்றான முடிவாக அல்ல; ஒரு கருத்து கோளாக நான் முன் வைக்கிறேன்'' மொகஞ்சொதரோ 2. ஹால் சுட்டிய நேரடி ஆதாரம் அவர் எழுதி 12 ஆண்டுகள் செல்வதற்குள் மொகஞ்சொதரோ, ஹரப்பா அகழ்வாய்வுகளில் கிடைத் துள்ளன. ''இருக்கலாம் என்பதை ''இருக்க வேண்டும் என்று கூறும் நிலை இன்று வந்துவிட்டது. வரி வடிவ முத்திரைகள் பல கிட்டியுள்ளன. அடுக் கடுக்கான பண்டைய நாகரிகச் சான்றுகள் வெளி வந்துள்ளன. சில மாந்த உருவப் படிமங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள் சிலவற்றுக்கு (தொடக்க கால மெசொபதாமியாவில் போலவே) மூக்கு நீளமாக உள்ளது; கண்ணுக்கு களி மண் வில்லைகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. மொகஞ்சொதரோ முத்திரைப் பொறிப்புகள் இறுதியாகப் படிக்கப்பட்டதும் ஹால் கருது கோளுக்கு அசைக்க முடியாத ஆதாரம் கிட்டும். பாபிலோனியாவுடன் பழங்கால வணிகம் 3. சிந்து வெளிக்கும் சுமேரியாவுக்கும் தொடர்பு இருந் திருக்க வேண்டும் என்றோம். அப்படியானால் அவ்விரண்டு பகுதிகளுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே மேலும் அதிகமான தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதற்கான ஆதாரமாக சேஸ் (Sayce) உடைய ஹிப்பர்ட் பேருரையில் இரண்டு செய்திகள் உள்ளன. கி.மு. 4ம் நூற்றாண்டில் சுமேரிய மன்னர் தலைநகராக இருந்த "ஊர்' நகர அழிவுகளில் இந்திய தேக்குக் கட்டை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாபிலோனில் கிடைத்த துணிப்பட்டியல் பொறிப்பில் சிந்து (மஸ்லின்) என்னும் துணி குறிக்கப்பட்டுள்ளது. இந்தத் துணி தரைவழியாக சிந்து வெளியில் லிருந்து பாரசீகத்தைத் தாண்டிச் சென்றிருக்குமாயின் "சிந்து" (பாரசீக மொழித்தாக்கத்தால்) ஹிந்து என மாறியிருக்கும்! எனவே அத்துணி நேரடியாக கப்பல் வழியாகத் தமிழகத்தி லிருந்து பாரசீக வளைகுடா வழியாக சுமேரியா சென்றிருக்க வேண்டும். துளு, கன்னட மொழிகளில் இன்றும் "சிந்தி'' துணியைக் குறிக்கிறது. தமிழில் சிந்து என்றால் கொடி . எனவே துணியைக் குறித்த பாபிலோனிய "சிந்து" பழந்தமிழ்ச் சொல்லே யாகும். எகிப்துடன் பழங்கால வாணிகம் 4. பெரிப்ளஸ் மொழி பெயர்ப்பாளர் ஸ்காப் கூறுவது: "காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர் முன்னேறி நாகரிக மடைந்ததற்குச் சில ஆயிரம் ஆண்டு முன்னரே எகிப்தும் பண்டைய இந்தியாவும் நாகரிக மடைந்து அவர்களுக்கிடையே பண்ட மாற்று வாணிகமும் (பாரசீக வளை குடாவை மைய மாகக் கொண்டு) தொடங்கிவிட்டது. அராபிய இனக் குழு வினரும் (tribes) பினீசியர்களின் முன்னோர்களும் இவ் வாணிகத்தில் பங்கேற்றனர், அல்லது இடைத் தரகராக இருந் தனர். இந்திய நாகரிக வளர்ச்சியின் காரணமாக மெசபொ தாமியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து கப்பல் வாணிகம் பண்டைக் காலத்தில் லேயே தொடங்கி விட்டது. இந்திய வாணிகர் ஆப்பிரிக்கக் கீழைக்கரைப் பகுதியில் வாணிகம் செய்வதில் அராபியர் குறுக்கிடவில்லை. ஆனால் செங்கடல் பகுதி வாணிகம் அரா பியர் கையில் இருந்தது. எகிப்தியக் கடவுளர் வழிபாட்டுக்கு மேலும் மேலும் தேவைப்பட்ட இரத்தினங்கள், மிளகு, லவங்கம், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றையும் இந்தியத் துணிகளையும் பாராவோக்கள் ஆண்ட எகிப்துக்கு உய்க்கும் வாணிகத்தில் பிறரை நுழைய விடாமல் தங்கள் கையில் அராபியர் வைத்துக் கொண்டனர். இப்பொருட்களை இந்தியாவி லிருந்து ஏடன் வளைகுடா இருகரையிலும் உள்ள துறை முகங்களுக்கு அரா பியர் தாங்களே கடல் வழிக் கொணர்ந்தனர்; அல்லது அத் துறைமுகங் களுக்குக் கொண்டு சென்ற இந்திய வணிகர்களிடம் மிருந்து பெற்றனர். இப்பொருட்களை சூடான் பகுதியில் ஓடிய நைல் ஆறு வரை தரை வழிக் கொண்டு சென்று பின் அவ் வாற்றின் வழியாக எகிப்திற்கு உய்த்திருக்கலாம்; அல்லது செங்கடல் வழியாக மரக்கலங்களில் கொண்டு சென்று மேற் காகப் பாலைவனத்தைத் தாண்டி தீப்ஸ், மெம்பிஸ் நகரங்களுக்கு உய்த்திருக்கலாம். இவ்வாணிகப் பொருட்கள் அனைத்தும் தென்னிந்தியப் பொருள்கள் என்பதும், இந்தியாவிலிருந்து தம் மரக்கலங்களில் அவற்றை ஏடன் முதலிய பகுதிகளுக்கு உய்த் தவர் பரதவர்களே என்பதும் குறிப்பிட வேண்டியன வாகும். 5. எகிப்திய எம் பரம்பரை (கி.மு. 2600) மன்னர் மெர்னர் காலத்தில் பிரபு ஒருவன் கல் வெட்டு ஒன்றில், ''தெற்கு நூபியா வில் உள்ள யாம் நாட்டில் இருந்து 300 கழுதைகளின் மேல் ஏற்றி சாம்பிராணி, கருங்காலி, கூலம், சிறுத்தை, எறிகொம்பு (throw stick) போன்ற சிறந்த பொருள்களைக் கொணர்ந்தேன்" என் கிறான். அந்தக் கருங்காலி ஆப்பிரிக்கக் கருங்காலி யாகவே இருக்கலாம். ஆயினும் இந்தியக் கருங்காலியாகவும் இருந்திட வாய்ப்புண்டு. என்னை? பிற்காலத்தில் கி.மு. 1500க்குப் பின்னர் (ஆப்பிரிக்கக் கருங்காலியைவிடச் சிறந்த இந்தியக் கருங்காலி இங்கிருந்து பாரசீக வளைகுடாவுக்குச் சென்றது. அங்கிருந்து அராபியர் அதனை ஆப்பிரிக்கக் கீழைக் கரைக்கு உய்த்துப் பிறகு தரை வழியாக நைல் ஆற்றுக்கரைக்குக் கொண்டு சென்று பின்னர் மீண்டும் கலங்கள் மூலம் நைல் ஆறு வழியாக எகிப்துக்குக் கொண்டு சென்றனர். கி.மு. 4ம் நூற்றாண்டைச் சார்ந்த தியோ பிராஸ்டஸ் கருங்காலி இந்திய மரம் என்கிறார். வர்ஜிலும் அவ்வாறே (ஜார்ஜிக்ஸ் ii. 116.7). கூலங்களும் சிறுத்தைகளும் ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து பிற்காலத்தில் ஏற்றுமதியானதை கீழ்வரும் இன்னொரு இயலில் காண இருக்கிறோம். அவ்விரண்டும் இவ்வியலில் குறித்த பண்டைக் காலத்திலும் ஏற்றுமதியாகியிருக்கலாம். 6. எகிப்திய எம் பரம்பரை மன்னர் இரண்டாம் பெபியின் அதிகாரி ஒருவன் அரசனுக்கு ஆப்பிரிக்கப் பகுதியிலிருந்து சாம்பிராணி, துணிகள் (பருத்தித் துணியாகத்தான் இருந்திருக்க வேண்டும்), யானைத் தந்தம், தோல் ஆகியவற்றை அனுப்பிய தாகக் கூறுகிறான். அக்கால கட்டத்தில் உலகில் பருத்தித்துணி நெய்யப் பட்டு வந்தது தென்னிந்தியாவில் மட்டும் தான். யானைத் தந்தம் கூட இந்தியப் பொருளாக இருந்திருக்கலாம். காரணம் ஆப்பிரிக்க யானைத் தந்தத்தை விட இந்திய யானைத் தந்தம் நயமானது ; அடர்ந்ததும் நோய்கள் நிறைந்ததுமான ஆப்பிரிக்கக் காடுகளில் வேட்டை யாடுவதை விட இந்தியாவில் யானை வேட்டை எளிது; (ஆப்பிரிக்காவில் அபிசீனியா, சோமாலி பகுதியில் யானை வேட்டைக்குப் பயன்படுத்திய இரும்புக் கோடாலிகள், வாள்கள் அந்தக் கால கட்டத்தில் இந்தியாவிலிருந்து மட்டும் தான் சென்றிருக்க இயலும். பிற் காலத்தில் இந்தியாவிலிருந்து இரும்பு ஏற்றுமதியானதற்குச் சான்று உண்டு; இவ்வியலில் குறித்த முற்காலத்திலும் இரும்பு சென்றிருக்கும்) வேத காலத்தில் இந்தியாவில் பரவலாகப் பயன்பட்ட ஆப்பிரிக்க சாம்பிராணி, இனிய மணம் தரும் பிசின்கள் (incense and sweet smelling gums) ஆகியவை ஆப்பிரிக்கக் கீழைக் கரையிலிருந்து சென்றிருக்கலாம். 7. பொருள்களைப் பண்ட மாற்றுச் செய்ய தொலை தூர நாடுகளுக்குச் சென்றமை ; வணிகர் செல்வம் நாடிக் கடலில் மரக்கலம் உய்த்தமை; "நூறு துடுப்புகள் கொண்ட கப்பல்களில் வணிகர் சென்றமை ஆகியவற்றை வேத மந்திரங்கள் குறிப்பிடு கின்ற ன. (அதர்வ ணம் iii, 15.4 ; 1.483; 1.56.2 ; 1.116.5) இது தமிழர்கள் வாணிகத் தொடர்பு பற்றியதல்ல தான் எனினும், தொன்று தொட்டுப் பரவலாக கடல் வாணிகத்தில் தலைப் பட்டிருந்த தென்னக மாலுமிகளிடம் கற்றுத்தான் (தொடக்க காலத்தில் மாலுமித் தொழில் அறிந்திராத) வட நாட்டு ஆரியர் பிற நாடுகளுக்கு கடல் வாணிகம் மேற் கொண்டிருக்க வேண்டும். பண்டைய இந்திய வாணிகம் பற்றிய கென்னடி கூற்று 8. கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் எகிப்து, அசீரியா வுடன் இந்தியர் வாணிகத் தொடர்பு கொள்ளவேயில்லை. என்ற தன் கருத்தை நிறுவத் தனது 1898 (J.R.AS) கட்டுரையில் கென்னடி வலிந்து முயன்றுள்ளார். மேற்சொன்ன ரிக், அதர்வண வேதச் சான்றுகளை அவர் கண்டு கொள்ளவே யில்லை . இந்தியக் கடலோர மக்கள் கடற் செலவு தெரிந்தவர்கள் என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். இந்தியாவில் இருந்து மட்டுமே அன்று சென்றிருக்கக் கூடிய மிளகு - இலவங்கப் பொருள்கள், முத்து, இரத்தினங்கள், பருத்தித் துணி, தேக்கு, அகில், சந்தன மரம் முதலியவை எகிப்திலும் சுமேரியாவிலும் கடவுள் வழிபாட்டிலும் பிற காரியங்களுக்கும் பயன்படுத்தப் பட்டதை அவர் மறுக்க முடியாது. சம்ஸ்கிருதம், தமிழ்மொழி களிடமிருந்து கடனாகப் பெற்ற சொற்களே இப்பொருட்கள் பலவற்றுக்கு சுமேரிய, எபிரேய, அராபிய மொழிகளில் வழங்கி வருவது ஒரு சிறந்த சான்று. இச்சான்றையும் ஏனைய பிற சான்றுகளையும் (வேதச் சான்றுகள் உட்பட) குறைத்து மதிப் பிடும் கென்னடி, அக்கால கட்டத்தில் அத்தகைய விரிவான (பண்டமாற்று வகை) கடல் வாணிகம் நடைபெறுவதற்கு இருந் திருக்கக்கூடிய இன்னல்களை மிகைப்படுத்தி அத்தகைய வாணிகத்திற்கு - " நம்பத் தகுந்த ஆதாரம் இல்லை" என்று முடித்துவிடுகிறார். அக்கூற்றுக்கு பெரிப்ளஸ் நூலை மொழிபெயர்த்த அமெரிக்கர் ஸ்காப் மறுப்பு: 9. கென்னடியின் வாதங்களைப் பின்வருமாறு முழுமையாக ஸ்காப் மறுத்துள்ளார், ''பழங்கால வாணிகம் பற்றி பண்டை எகிப்தியச் சான்றுகள் கூறுவனவெல்லாம் உள்நாட்டு, அண்டை நாட்டு வணிகம் சார்ந்தவை என்று ஒதுக்கி விடுவது பொருந்தாது. எபிரேய பழைய ஏற்பாடு புத்தகங்களை எஸ்ரா திருத்தி எழுதியபோது அப்புத்தகங்களில் உள்ள (இந்தியப் பொருள்கள் வாணிகம் பற்றிய செய்திகள் புகுந்திருக்க வேண் டும் என்பதும் கென்னடி கருத்து. அப்படியே நடந்திருந்தாலும் எஸ்ரா காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிலிருந்து சோமாலிக்கரை, நைல் நதி வழியாக எகிப்துக்கு வந்து சேர்ந்த இந்தியப் பொருள்களாக அந்தக் கால கட்டத்தைச் சார்ந்த எகிப்துப் பொறிப்புகளிற் சுட்டியுள்ள பொருள்கள் தாம் எபிரேய புத்தகங்களிலும் குறிப்பிடப் படுகின்றன என்பது முக்கியமானது. பழங்கால வணிகத்தில் பொருள்கள் ஒரு துறை முகத்திலிருந்து அடுத்த துறைமுகம்; ஒரு இனக்குழுவிலிருந்து அடுத்த இனக்குழு என்றவாறு பல கைகள் மாறியே சென்று வந்தன. ஒரு இடத்தில் மரக்கலத்தில் ஏற்றிய பண்டம் அப்படியே அப்பண்டம் சென்று சேர வேண்டிய ஊர் வரை நேராக உய்க்கப்பட்டது என்று தவறான உன்னிப்பின் மேல் உருவானவையே கென்னடி போன்றோர் வாதங்களாகும். (எனவே அவை சரியன்று) இயல் 4 இராமனும் தென் இந்தியாவும் ஏறத்தாழ கி.மு. 2000) 1. வேத மந்திரங்களின் காலத்தில் பண்டை இந்தியாவில் வாழ்க்கை நிலை Life in Ancient India in the Age of the Mantras (Indian Historical Quarterly I. 1912) என்னும் கட்டுரையில் வேதங்கள் பற்றி சீனிவாசர் கூறியுள்ளதன் சுருக்கத்தை இவ்வியலில் தருவது பொருத்தமாகும். ஒவ்வொரு வேதத்திலும் முன்பகுதி மந்திரம் சம்ஹிதை என்னும் தொகுப்பு, கிலா khila என்னும் உதிரிகள் உட்பட ; பின்பகுதி பிராமணம் (ஆரண்யகம் உபநிஷத் உட்பட) சம்ஹிதைக்கு பாடங்கள் (rescensions) பல இருப்பினும் வேறுபாடுகள் மிக மிகக்குறைவு. ஆனால் ஒரு பாடத்துடன் இணைக்கப்பட்ட பிராமணம் ஏனைய பாடங் களுடன் இணைக்கப்பட்டுள்ள பிராமணங்களில் இருந்து வேறுபட்டது. "வேதம்" என்பது பிராமணங்களையும் உள்ளடக் கியது; எனவே மந்திரங்களை மட்டும் குறிப்பிட "மந்திரங்களின் காலம் என்பதே பொருத்தம். ரிக்வேதம்: ஹோதர்கள் ஓத வேண்டியிருந்த நீண்ட மந்திரப் பகுதிகள் (இவை ரிக் வேத மண்டலங்களை எழுதியதாகக் கருதப்படுகிறவர்கள் தொகுத்த வாறே உள்ளன; குறிப்பிட்ட யக்ஞத்துக்கு என்று ஒழுங்கு படுத்தப் படவில்லை. யஜுர் : வேதச் சடங்குகளைக் கையால் செய்த அத்வர்யுக்கள் யக்ஞங்களில் ஓதிய முறைப்படி தொகுக்கப்பட்ட உரைநடைப் பகுதி, மந்திரங்கள், மந்திரப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டது. சாமம்: உத்காதர் என்னும் பூசாரிகள் சோமயக்ஞத்தில் பாடிய மந்திரங்கள். அதர்வணம் (வீட்டுச் சடங்குகளுக்கு மட்டும்) வேதமந்திரங்கள் உருவாகியது கி.மு. 2000 - 1000 எனலாம்; தொகுக்கப்பட்டது கி.மு. 1000ஐ ஒட்டி எனலாம்) 2. ரிக் வேதம் x.93. 14ல் இராமன் ஒருவன் குறிப்பிடப் படுகிறான். அவன் ஒரு மகவான்' அதாவது வேள்விகள் செய்து தட்சிணை கொடுத்தவன். வால்மீகி இராமாயண இராமன் வேத காலத்தின் நடுப்பகுதியில் வாழ்ந்தவன். வேத வழிபாட்டில் கடவுள்கள் அவதாரம் எடுப்பதாகக் கருதப்பட்டதில்லை வேத வழிபாட்டுக்கு முரணாக எழுந்த ஆகம வழிபாட்டு முறையில் தான் கடவுள்கள் அவதாரம் எடுப்பதாகக் கருதப்பட்டது. வால்மீகி இராமாயணத்தை வேத மொழியாகிய "சந்தஸ்" இலோ பிராகிருதத்திலே எழுதியிருக்க வேண்டும். சந்தஸ் மகாபாரதப் போர் முடிந்த காலத்தில் மறைந்துவிட்டது. அதற்குப் பின் பிராமண - ஆரண்ய காலங்களில் வழங்கிய மொழி சந்தஸ்க்கும், (சமஸ்கிருத) பாஷைக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். வால்மீகி ராமாயணம் என இன்று வழங்குவதோ பாணினி " பாஷா'' என வழங்கிய மொழியில் (சமஸ்கிருதத்தில்) உள்ளது. "பாஷா" வின் காலம் கி.மு. 1000க்குப் பின்னர்த்தான். மகாபாரதக்கால முடிவிற்குப் பின் வட இந்தியாவில் ஏற்பட்ட ஆகமங்களில் தான் ராமன் விஷ்ணுவின் அவதாரம் எனக் குறிக்கப்பட்டான். இப்பொழுதுள்ள வால்மீகி ராமாயணத்தில் இராமன் அவதாரமாக சிற்சிலப் பகுதிகளில் குறிப்பிடப்படுகிறான் (அப்பகுதிகள் எல்லாம் இடைச் செரு கல்கள் என்பது லாசன் Lassen கருத்து ஆகும். எனவே இப்பொழுதுள்ள இராமாயணம் பிற்கால வால்மீகி ஒருவரால் கி.மு 700ஐ ஒட்டி சந்தஸ் - இல் இருந்து சம்ஸ்கிருதத்துக்குப் பெயர்த்து இடைச் செருகல்களுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். (தென் இந்தியாவில் இருந்த வரிவடிவத்தில் வழங்கும் பெளதாயன தர்ம சூத்திரத்தில் வால்மீகி , பாணினி ஆகிய இருவருமே "கோத்திரங்களை நிறுவியவர்" பட்டியலில் குறிப்பிடப் படு கின்றனர்). 3. அந்தக் காலத்தில் பல்வேறு வடிவங்களில் இராம கதைகள் வழங்கியுள்ளன. புத்த ஜாதகக்கதை 461 வது தசரத ஜாதகம் ஆகும். அதில் வாரணாசி மன்னன் தசரதனுக்கு 16000 மனைவிகள். அவனுடைய தலைமைப் பட்டத்தரசிக்கு ராம் பண்டிதன் (அறிஞன் ராமன்), லக்கணகுமாரன், சீதாதேவி ஆகிய மூவர் பிறக்கின்றனர். அப்பட்டத்தரசி இறந்த பின் இன்னொரு மனைவியை அவ்விடத்தில் வைக்கிறான். அவள் தன் மகன் பரதனுக்கு அரசாட்சியைத் தரக்கோருகிறாள். தசரதன் மறுக் கிறான். அவன் 12 ஆண்டு கழித்துச் சாவான் என நிமித்திகன் கூறியிருந்ததால், தான் சாவதற்குள் பரதன் அன்னை ராமன், லக்கணன், சீதாதேவி ஆகியோரைக் கொன்றுவிடுவாள் என அஞ்சி அம்மூவரையும், காட்டுக்குச் சென்று 12 ஆண்டு வசிக்கு மாறு கூறிவிடுகிறான். மூவரும் இமய மலையில் ஒரு தவச் சாலையில் வசிக்கின்றனர். கவலையால் தசரதன் 9 ஆண்டில் இறந்துவிடுகிறான். பரதன் காட்டுக்குச் சென்று ராமனை நாடு திரும்பி அரசனாகும்படி வேண்டுகின்றான். ராமனோ "12 ஆண்டுகள் முடியுமுன்னர் வர முடியாது" என்று மறுக்கிறான். ராமன் பாதுகைகளை (காலணிகளை) எடுத்துக் கொண்டு பரதன், லக்கணன், சீதாதேவி மூவரும் நாடு திரும்புகின்றனர். மேலும் மூன்று ஆண்டுகள் முடிவுற்றதும் ராமன் வாரணாசி சென்று அரசனாகி 16000 ஆண்டு தரும் ஆட்சி செய்து துறக்கம் எய்துகிறான். இப்படி ஒரு ராம் கதையும் பொது மக்கள் ளிடையே வழங்கியிருந்திருக்க வேண்டும். அதை புத்த சமயத் தினர் எடுத்துக் கொண்டு அந்த இராமன் கதையைக் கூறி அவனை போதி சத்துவர்களுள் (புத்தரின் முன்பிறவிகள் ஒருவர் னாக்கி ஜாதகத்தை எழுதி யிருக்க வேண்டும். அழகிய எளிய சம்ஸ்கிருதத்தில் (பிற்கால , அதாவது பாணினிகால) வால்மீகி எழுதிய ராமாயணம், விஷ்ணுவின் அவதாரமாக இராமனைக் குறிக்கிறது. கி.மு. 700க்குப் பின்னர் (வட நாட்டில் பக்தி இயக்க வழிபாட்டு முறைகள் பிரபலமான பின்) அந்நூல் நாடெங்கும் பிரபலமாக ஆகியிருக்க வேண்டும். தென் இந்தியா பற்றி உள்ள வால்மீகி இராமாயணக் குறிப்புகள். 4. (கி.மு. 1000 சார்ந்த பிற்கால வால்மீகி செய்த மாற்றங் களை விட்டுவிட்டு ஆதிவால்மீகி கிமு 2000ல் எழுதிய பொழுதே கூறிய தென்னாட்டுச் செய்திகளாக நாம் கொள்ளத்தக்கவை வருமாறு: i) கோதாவரி ஆற்றுக்கு வடக்கே பல ஆரிய அரசுகள் நிறுவப்பட்டு இருந்தன. (கோதாவரி ஆற்றங்கரை வரை இராமன் காலத்தில் ரிஷிகளும் வசித்து வந்தனர். ஆயினும் யக்ஷர்களும் இராட்சசர்களும் விந்திய மலையைத் தாண்டி வருவதை அவ் வாரிய அரசுகள் தடுக்க முடியவில்லை. (ஆகையினால் தான், விசுவாமித்ரர் யாகத்தைக் காக்க இப்பகுதியில் இராமன் வரும் பொழுது யட்சிணி தாடகை, அவள் மகன் இராட்சசன் மாரீசன், சுபாகு ஆகிய மூவரையும் விந்திய மலைக்கு வடக்கில் உள்ள நிலப்பகுதியிலேயே தாக்க வேண்டியிருந்தது) ii) கோதாவரி ஆற்றங்கரையானது இராவணனது இராச்சியத்தின் வட வெல்லையை ஒட்டி இருந்தது. எனவே இராவணன் பாதுகாப்பை நம்பி அவ் வெல்லைக்கு வடக்கிலும் இராட்சசர்கள் உலவினர். இந்த இராட்சச ''அநாரியர்" யாகம் செய்யும் பொழுது குறும்பு செய்ததாகவும் அக்னிக்கு ஆகுதி செய்யும் வேளையில் யாகப்பானைகளை உடைத்தும் யாகத் தீயை நீர் ஊற்றி அணைத்தும், யாகபாத்திரங்களைச் சிதறடித் தும் கேடு செய்ததாக இராமாயணம் 2. 116.15-17 கூறுகிறது. ஆரியர் வேதச் சடங்குகளை இராமன் காலத்திலேயே அநாரியர் வெறுத்ததை இது காட்டுகிறது. ரிக் வேதம் அநாரியரை ''ம்ருத்ரவாச" (கேடான பேச்சினர்), அநாச (வாயற்றவர், நல்ல பேச்சு இல்லாதவர் என்று பொருள். அநாச என்பதை மூக்கற்றவர், சப்பை மூக்கினர் என்று ஐரோப்பியர் பொருள் கொண்டது தவறு என்று அழைக்கிறது. "அநாச" என்பதி லிருந்து இராட்சசர் மொழி ஆரியர் மொழியிலிருந்து வேறுபட்டது என அறியலாம். இராட்சச இல்வலன் தன்னை பிராமணனாக மாற்றிக் கொண்டு தனது தாய் மொழி அல் லாத) சமஸ்கிருதத்தைப் பேசினான் என்று இராமாயணம் கூறுவதிலிருந்தும் "அநாச'வின் உண்மைப் பொருளை அறியலாம். iii) ஆரிய அக்நி வழிபாடு தோன்றும் வரை செத்தவரைப் புதைப்பதே உலகெங்கும் வழக்கம் (சிற்சில இடங்களில் மட்டும் பிணத்தை அழுகி, காய்ந்து சிதிலமாகும் படி எறிந்து விடுவ தாகிய அதற்கும் முந்திய வழக்கம் இருந்தது. அக்நி வழிபாடு வந்த பின்னர் பிணத்தைத் தீயிலிட்டு கடவுளருக்கு அர்ப் பணிக்கும் வழக்கம் தோன்றியது. இந்தியாவிலும் சரி, பிற நாடுகளிலும் சரி பிணத்தை எரியூட்டும் பழக்கம் இருந்தால் அது ஆரியச் சடங்கின் தாக்கம் என்று உணரலாம். அநாரியரான இராட்சதர் தங்களின் பிணங்களைப் புதைத்தனர். இராமன் விராடனைக் கொல்லும் பொழுது இராமனிடம் "இராட்சதர் வழக்கப்படி என்னைப் புதைத்துவிடு" என்கிறான். iv) இராமன் காலத்திலேயே சில ஆரியப் பழக்கங்கள் கோதாவரிக்குத் தெற்கிலே பரவத் தொடங்கிவிட்டதை இது காட்டுகிறது. ஆரியத் தாக்கத்தால் சில இராட்சசர் சம்ஸ்கிருதம் பயின்றனர். அநாரியரில் வில்வலன் மட்டுமல்ல இராவணனும் சமஸ்கிருதம் வல்லவன் (எனவேதான் சீதையிடம் என்ன மொழியில் பேசலாம் எனத் தனக்குள் நினைக்கும் பொழுது சம்ஸ் கிருதம் பேசினால் தன்னை இராட்சசன் என நினைத்துக் கொள்வாள் என்கிறான் அநுமன். (சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியருள் எட்டாவதாகக் கருதப்படும் அனுமான் பிற் காலத்தவன்). வேதம் பயின்று வல்லுநராகித் தவம் செய்த பல இராட்சசர் பிராமணர் ஆகி பிரம்மராட்சசர் எனப்பட்டனர். (அகஸ்திய, விஸ்வாமித்திர பரம்பரையினர் போல) புலஸ்திய பரம்பரை யினரும் (இராவணன் உட்பட), நையிர்த்தரும் கூட பிரம்மராட்சசரே . 5. இராமனைப் பின்பற்றி பரதன் சென்ற பொழுது (இராமனை அயோத்திக்குத் திரும்ப அழைத்திட) தன் படை யினர் கருப்புக் கேடயங்கள் அணிந்து தலையில் "தாட்சிணாத் யர்களைப் போல பூ அணிந்திருந்தனர்'' என்கிறான். பண்டைக் காலத் தென்னிந்தியர் தலை முடியை முழுமையாக வளர்த்து வந்தனர். மயிர்வினைஞர் தொழில் செய்தவர் அவர்களிடம் இல்லை. அத்தொழிலாளருக்குரிய சொல் எதுவும் தமிழில் இல்லை. நாவிதர் முதலிய சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றவை. ; அல்லது பிற்காலக் காரணப் பெயர்கள். திணைக் கொரு பூ, அகம், புறச் செயல்பாடுகள் ஒவ்வொன் றுக்கும் ஒரு பூ என்று மலர் அடிப்படையிலான பண்பாடு தமிழரிடையே மிக வளர்ந்திருந்தது. இது அக்கால ஆரியருக்குத் தெரிந்திருக்கத் தான் செய்யும். தென்னாடு பற்றி பிற்காலத்தில் செருகப்பட்ட செய்திகள் 5. பின்வரும் செய்திகள் கிமு 1000 ஐ ஒட்டி இராமாயணம் புதுக்கப்பட்ட போது இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் : - i). சீதையைத் தேடித் தென் திசையில் சென்ற குரங்குக் குழுவிடம் தென்னாட்டு அரசுகளைக் கூறும் பொழுது ஆந்திர, புண்டர், சோழ, பாண்டிய, கேரள மன்னர்களைப் பற்றி சுக்ரீவன் கூறுகிறான். மேற்கில் சென்ற குழுவிடம் முரசிப் பட்டினம் (மேலைக்கரை முசிறி?) பற்றிக் கூறுகிறான். ii). தென்திசை செல்லும் குழுவிடம் கடலின் கரையில் பாண்டிய மன்னரின் முத்தும் வைரமும் பதித்த தங்கக் கதவு களைக் காணுமாறு சுக்ரீவன் கூறுகிறான். இராமாயண உரை காரரான தென்னாட்டவர் கோவிந்தராஜர் "கவாடம் பாண்ட்ய நாம்'' என்னும் தொடர் கபாடபுர நகரத்தைக் குறித்தது என் கிறார். பாண்டியரின் பழந்தலை நகரம் கபாடபுரம் என்று தனக்குத் தெரிந்ததை நுழைத்திருக்கலாம். (பாண்டியர் தலை நகரம் கபாடபுரம் பற்றிப் பிற்காலத் தமிழ் நூல்கள் தாம் கூறுகின்றன. கோவிந்தராஜர் உரையின் அடிப்படையில் கட்டி விட்ட கதையோ அது!) 6. மேற்கண்ட இரு செய்திகளும் இடைச் செருகல் தாம் என்பதை விளக்குவோம். இராமாயணக் கதையின் பொதுவான அடிப்படை கோதாவரிக்குத் தெற்கே தென்னிந்தியா முழுவதும் (தண்டகாரண்யத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வானரத் தலைவர்களின் கீழ் இருந்த சில பகுதிகள் நீங்கலாக) இராவணன் ஆளுகையில் இருந்தது என்பதே. தன் தலைநகருக்கு மிக அருகில் பாண்டியரை இராவணன் விட்டு வைத்திருக்க மாட்டான். அக்காலத்தில் பாண்டியர் இருந்திருந்தால் இராம - இராவணப் போரில் ஏதாவது ஒரு பக்கத்தில் சேராமலா இருந்திருப்பார்கள்? இராமன் இலங்கை நோக்கித் தென்னாட்டில் சென்ற பாதையை விளக்கும் பொழுது பாண்டிய நாடு உட்பட எந்த நாட்டுப் பகுதியும் குறிப்பிடப் படவில்லை . இராமன் இலங்கைக்குப் பாலம் அமைத்தது பாண்டிய நாட்டில் இருந்து தான். அப் பகுதியில் பாண்டியர் ஆட்சி இருந்திருந்தால் அது கூறப் பட்டிருக்கும். இராமாயண காலத்துக்குப் பின், இராவணன் ஆட்சி தென்னாட்டில் இருந்து ஒழிக்கப் பட்ட பின்னர் உரு வானவையே சோழ, சேர, பாண்டிய அரசுகள் என்பது என் கருத்து, எனவே இம்மூவரைப் பற்றியும் இராமாயணத்தில் உள்ள குறிப்புகள் கி.மு. 1000- இல் நிகழ்ந்த இடைச் செருகல்களே. அகஸ்தியர் 7. இராமன் சந்தித்த அகஸ்தியர் ஆதி அகஸ்தியர் அல்ல. விதர்ப்ப மன்னன் மகள் லோபாமுத்திரையை மணந்த ஆதி அகத்தியர் இராமனுக்கு 20 தலை முறை முன்னர் வாழ்ந்த காசி மன்னன் அலார்க்கன் காலத்தவர். அவர் விந்திய மலையை ஒட்டி அதன் தெற்கே வாழ்ந்து வந்தார் (அவர் விந்தியத்தை அமுக்கி, தான் தெற்கிலிருந்து திரும்பி வரும் வரை அப்படியே கிடக்கச் சொன்னதாகக் கட்டிய கதையின் உட்கருத்து இதுவே). சாத்பூரா மலைகளின் மேற்குப் பகுதியில் வைடூரிய மலையில் இருந்தது அவர் ஆசிரமம். தம் தவத்தினால் அவர் அப்பகுதியை ராட்சசர்களிடமிருந்து பாதுகாத்தார். 8. இராமன் கோதாவரி அருகே பஞ்சவடிக்கு இரண்டு யோசனை தாண்டி இருந்த ஆஸ்ரமத்தில் சந்தித்த அகஸ்தியர் (இராமனுக்கு 400 ஆண்டு முன்னர் வாழ்ந்த) ஆதி அகஸ்தியர் அல்ல; அவர் பரம்பரையில் வந்த பிற்கால அகஸ்தியர்; பின்னர் சீதையுடன் புட்பக விமானத்தில் அயோத்தி திரும்பும் பொழு தும் அகஸ்தியர் ஆசிரமம் அந்த இடத்தில் தான் இருந்தது. 9. எனினும் சீதையைத் தேடி தென் திசை சென்ற வானரக் குழுவிடம் சுக்ரீவன் ''உங்கள் பாதையில் புனிதமான காவேரி ஆற்றின் தூய நீரைக் காண்பீர்; பின்னர் மலயமலை உச்சியில் உத்தமரிஷி அகஸ்தியர் ஒளிவீசிக் கொண்டு அமர்ந்திருப்பதைக் காண்பீர்" என்று வருவது பிற்கால (கி.மு1000) இடைச்செருகல் (இராமன் காலத்தில் கோதாவரிக் கரையில் இருந்த அகஸ்தியர் பரம்பரையினர் மலய மலைக்கு கி.மு. 1000க்கு முன் சென்றிருக்க வேண்டும்.) தென் இந்தியாவில் ஆரியச் சடங்குகள் பரவல் 10. இராமன் வெற்றியால் தென் இந்தியாவில் இராவணன் ஆட்சி ஒழிந்த பின்னர் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இராமன் காலத்துக்கு முன்னரே ஜனஸ்தானம் வரைப் பரவி யிருந்த ஆரியர் அதற்கும் தெற்கே பெரும் எண்ணிக்கையில் பரவினர். அதாவது பிரம்மராக்ஷசர் எண்ணிக்கை பெருகியது. இவர்கள் பற்றிப் பிற்காலத்தில் மூடத்தனமான கதைகள் உரு வாயின. ஆனால் பிரம்மராக்ஷசர் என தஸ்யூக்கள் / இராட்ச சருடன் கலந்துவிட்ட பின்வருவோரே அழைக்கப்பட்டனர் : - 1. பார்கவர்களும் அவர்கள் சீடர்களும் 2. விசுவாமித்திரரின் பரம்பரையினர் : விசுவாமித்திரர், கௌசிகர் 3. அகத்தியர் சீடரும் அவர் கோத்திரத்துடன் இணைந்த வரும். இவர்கள் தான் தென் இந்தியப் பிராமணர்களின் ஆதி பரம்பரையினர் ஆவர். தென் இந்தியப் பிராமணர்கள் வேதச் சடங்குகள் சிலவற்றைத் தொடர்ந்து கடைப் பிடிப்பினும் ஆரிய வர்த்தத்தில் இல்லாத தென்னிந்தியப் பழக்கவழக்கங்களை யும் பின்பற்றினர். ஆரியப் பழக்கவழக்கங்களாவன: பண்டை வாசிஷ்டர் களைப் போல தலையை மழித்துவிட்டு சிறு குடுமி மட்டும் ; கீழாடை மேலாடை இரண்டே உடைகள், கூடுமான வரை தைத்த துணிகள் அணி யாமை முதலியனவாம் (தைத்த துணிகள் அணியாமலிருத்தலில் ஆடவரை விடப் பெண்கள் அதிக கவனமுள்ளவர்கள்). தென்னிந்திய வழக்கங்கள் வருமாறு: i), திருமணச் சடங்கில் தாலிகட்டுதல் : (கழுத்தில் மஞ்சள் கயிறு) கிர்ஹ்ய சூத்திரங்களில் தாலி இல்லை. கைபிடித்தலும் (பாணி கிரஹணம்) ஏழடி வைத்தலும் (சப்தபதி) மட்டுமே திருமணத்திற்கு இன்றியமையாதவை. தாலி கட்டுதல் தமிழர் வழக்கமே) ii). பெண் வீட்டுக்காரர் திருமணப் பந்தலுக்கு வரும் மாப்பிள்ளையின் காலைக் கழுவி வரவேற்றல் ; திருமணத்தில் செந்நிற அரிசியைத் தூவுதல் (அகம், 86: நிரை நாள் தண் பெரும் பந்தர் ; திருமுருகாற்றுப் படை (233-4) "குருதியொடு விரைய தூவெள் அரிசி சில்பலி செய்து முருகனை வழிபட்டது கூறப் படுகிறது. பிராமணர்கள் இரத்தம் கலந்த அரிசிக்குப் பகரமாக செந்நிற அரிசியைப் பயன்படுத்தினர்) தொடக்ககால பிராமணர் மணந்த தஸ்யூப் பெண்களே இவ்வழக்கங்களைத் தென்னாட்டுப் பிராமணரிடம் புகுத்தியிருக்க வேண்டும். ஆபஸ்தம்ப தர்ம சூத்ரமும் 'பெண்கள், சூத்திரர்கள் ஆகியோருக்குத் தெரிந் தவைகளையும் அறிவதே முழுமையான கல்வி ஆகும் என்கிறது; ''சானிஷ்டா யா வித்யா ஸ்த்ரீ சு சூத்ரேசுச" தென்னிந்திய பிராமணப் பெண்களிடம் வட இந்தியப் பிராமணப் பெண் களிடம் இல்லாத ஒரு வழக்கம் உண்டு. அது புடவையை கச்சமாக (இரண்டு கால்களுக்கும் இடையே செலுத்தி) அணி வது. இது தஸ்யூ வழக்கமேயல்ல. சூத்திரப் பெண்கள் இப்படி அணிவதேயில்லை. பிராமண ஆண்கள் கச்சம் அணிவதைப் போல தாங்களும் அணிந்து சூத்திரப் பெண்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி தனித்தன்மையோடு காட்டிக் கொள்ளவே இவர்கள் இவ்வாறு செய்தனர் போலும். இராவணன் இனத்தவர் பண்டைத் திராவிடரே என்பதற்கு (விசாகப்பட்டணம்) ஜெய்பூர் ஜி. ராமதாஸ் பந்துலு தரும் ஆதாரங்கள். 11. (இன்றைய சட்டிஸ்கார் - ஒரிசா மாநிலங்களில் வாழும் கூய் மொழி பேசும் கந்தர் (khond) களிடம் ஏனைய திராவிட மொழி பேசுநர் (நாகரிகம் அடைந்த பின்) கை விட்டுவிட்ட பழைய பழக்கங்கள் பல இன்றும் உள்ளன; அவற்றுள் பின் வருவனவற்றை இராவணன் இனத்தவர் பண்டைத் திராவிடரே என்பதற்கான ஆதாரங்களாகக் கொள்ளலாமென்று பந்துலு, எனக்குத் தெரிவித்துள்ளார்: 1. கூய் ஊர் ஒவ்வொன்றின் நுழை வாயிலிலும் ஒரு மரத் தடியில் 6-9 அங்குல உயரத்தில் குழவிக்கல் போன்ற "நிசான் பெண்ணு' உருவாரம் வைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கேடு வந்தால் ஊர் சீரழியும் என்று நம்புகின்றனர். (பாதுகாப்பிற்காக அதைச்சூழ கற்குவியல் உள்ளது. திருவிழாக்களில் ஊரார் கோழி, ஆடு, மாடு, எருமை, பன்றி இவற்றைப் பலியிடுகின்றனர். அனுமன் இலங்காபுரிக் காவல் தெய்வத்தைத் தோற் கடித்ததும் அவள் அனுமனிடம் "என்னைக் குரங்கு வெல்லும் நாள் முதல் இராட்ச்சருக்கு அழிவுக் காலம் எனத் தெய்வம் கூறியுள்ளது'' என்கிறாள். தென்னாடு முழுவதும் ஊர் தோறும் பாமரமக்கள் இன்றும் எல்லையம்மனை வழிபடுகின்றனர்; மேல் சாதியினர் அப்பெண் தெய்வத்தை துர்க்கையின் ஒரு வடிவமாகக் கொண்டுள்ளனர். 2. கூய் மக்கள் ஊர்கள் தோறும் மழைக்காலத்தில் விற காகப் பயன்படுத்த விறகுக் கட்டைகள் கோடையிலேயே சேர்க்கப்பட்டு (வைக்கோல் போர் போல்) அமைக்கப் படுகின்றன. இராவணன் நகருள் இத்தகைய தாருபர்வதங்களை அனுமன் காண்கிறான். கூய் மொழியிலும் தாரு = விறகு 3. கூய் மக்கள் போர்க்களத்தில் பகைவர்களை மருட்டு வதற்காக புலித்தலை , மாடு, மான் கொம்புகள் போன்றவற்றை அணிந்து வந்தனர்; இப்பொழுதும் நடனங்களில் அணி கின்றனர். இராவணன் போருக்குச் சென்றபோது புலி, குதிரை, ஒட்டகம், மான், தலைகளையுடைய பூதங்களும் பின் சென்ற தாக இராமாயணம் கூறுகிறது. (அந்தத் தலைகளை அணிந்த இராட்சசர்களே அவர்கள் எனக் கொள்ளலாம்). ஆரியரோடு பண்டு போரிட்ட வட நாட்டு தஸ்யூக்களும் அப்படியே செய்து மாயாஜாலக்காரர் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும்; ரிக் வேதம் iv. 169: ''மாயவாந் அப்பிரஹ்ம தஸ்யூ ரிக் வே V. 317 ''சுஷ்ணஸ்ய மாயா" (தஸ்யூ சுஷ்ணனின் மாய வேலை) 4. இராவணன் பத்துத் தலையுடையவன் என வால்மீகி எங்கும் கூறவில்லை . கூய் மொழியில் தச கிவ = இன்னல் செய் யும்; வேபவ = கொல்லும், தாக்கும்; ஒபகிவ = எடுக்கும்; பண்டி கிவ = ஏமாற்றும். கூய் தசகிவ என்பது சம்ஸ்கிருதத்தில் "தச கிரீவ" என மாறியிருக்கும். அச்சொல்லைப் பிற்காலத்தார் பத்துத் தலையன் எனப் பிறழ உணர்ந்தனர். இயல் 5 கி.மு. 2000 - 1000 கால அளவில் தமிழர் பண்பாடு (வாழ்வியல்) இலக்கிய மரபும் மக்கள் வாழ்வியலும் 1. அக்காலத் தமிழர் வாழ்வியலைப் பற்றி இராமா யணத்திலிருந்து அறியக் கூடியது மிக மிகக் குறைவு. (பகை வர்களான "இராட்சசர்களைப் பற்றி குரூரமானவர்கள் கொடுமைக்காரர்கள் என்று கூறாமல் என்ன கூறுவார்கள்!) ஆனால் இது குறித்து அறிய மிகப் பழைய அதாவது கி.பி. 600 க்கு முந்திய (சங்க கால ) தமிழ் இலக்கியத்தைப் பார்க்க வேண் டும். தமிழக இயற்கைச் சூழல் காரணமாக மிகு பழங்காலத்தில் வெவ்வேறு திணை நிலங்களிலும் இருந்த நிலைமைகளைச் சுட்டிக் காட்டும் மரபுகளை அவ் விலக்கியத்தில் காணலாம். மிக மிகப்பழங்காலத்தில் பகைவர் ஆடு மாடுகளைக் கவர்வதே போரின் துவக்கமாக இருந்திருக்கும். ஆனால் பிற்காலத்தில் வேறு பல காரணங்களுக்காக போர்கள் உருவான போதும் போர் பற்றிப் பாடிய புலவர் 'ஆநிரை கவர்தலையே' போர்த் துவக்கமாகப் பாடுவது இலக்கிய மரபு ஆகிவிட்டது. பண்டைக் கால மக்கள் வாழ்வியல் இன்று போல் விரைந்த மாற்றங்களைக் கொண்டதல்ல. பிற்கால மரபுகளைக் கூர்ந்து ஆய்வு செய்வதன் மூலம் தென்னிந்தியர் வாழ்வியல் கி.மு. 2000த்தில் (அல்லது அதற்கும் முன்னர்) எப்படி இருந்திருக்கும் என உன்னிக்கலாம். வெவ்வேறு திணைமக்கள் வாழ்வியலில் இருந்தே அகப் பொருள் இலக்கிய மரபுகள் தோன்றின. 2. தமிழகத்தில் மனித இனம் முதலில் வாழத் தொடங்கியது குறிஞ்சி நிலம் என்றும், பின்னர் படிப்படியாக அது பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற பிற திணைகளுக்கும் பரவியது என்றும், இயல் ஒன்றில் கண்டோம். மனித இன வளர்ச்சி ஒரு திணையிலிருந்து மறு திணைக்குப் பரவ நெடுநாள் ஆகியிருக்கும். பிற திணை வாழ்க்கை தொடங்கிய பின்னரும் முந்தைய திணை மக்கள் தங்கள் திணைக்குரிய ஒழுக்கத்தைக் கை விட்டுவிடாமல் பாதுகாத்தனர் என்றும் கண்டோம். ஓரளவு வளர்ச்சி பெற்ற மனித வாழ்க்கை முதற்கண் குறிஞ்சியில் தோன்றியது. அங்குக் காதல், புணர்ச்சி, அதன் பின்னரே திருமணம் என்ற நிலை இருந்தது. தழையுடை , புலிப்பல் தாலி முதலியவையும் குறிஞ்சி மக்களுடையவை. பின் காலத்தில் இவை யெல்லாம் மாறிய பின்னரும், பழமையை மறவாமல் குறிஞ்சியில் "களவு ஒழுக்கம் " கூறுவது அகப்பொருள் மரபாகி விட்டது. குறிஞ்சி ஒழுக்கமே களவு என இலக்கியம் கொண்டது. 3. குறிஞ்சித் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடம் பாலை - தலைவன் நெடுநாள் பிரிந்து சென்ற பொழுது தலை வியின் பிரிவுத் துயரைப் பாடும் பாடல்களே தமிழில் துன்பியல் (tragic) பாடல்கள் எனக் கூறக் கூடியவை. குறிஞ்சி மலைப் பகுதியை அடுத்திருந்த முல்லை (கானகப்) பகுதியில் தலைவி பிரிவு ஆற்றியிருப்பாள், பிரிவின் காலம் குறுகிய தாயிருப்பின். ஆகவே இலக்கிய மரபில் முல்லை " பிரிவு ஆற்றி இருத்தலைக்'' குறித்தது. பிரிவு சற்று நீட்டித்த விடத்து தலைவி இரங்குவது நெய்தல் திணைக்காயிற்று. மருத நிலம் வளம் மிக்கது. உழவும் அறுவடையும் முடிந்த பின்னர் மருத நிலத் தலைவன் பரத் தமை யொழுக்கத்திலும் பிற காரணங்களாலும் தலைவி அவ னிடம் ஊடல் கொள்வதை மருதத் திணைக்கு உரியதாக்கினர். திணை நிலங்களின் அமைப்புக் கேற்ற போர் முறைகளும் புறத்திணைகளும். 4. அந்தந்தத் திணை நிலம், சூழலுக்கு இசைந்தவாறு பின்வரும் போர்முறைகள் புறத்திணைகளாக்கப்பட்டன. போர்ச் செயல் புறத்திணைப் பெயர் குறிஞ்சி ஆநிரை கவர்தல்/மீட்டல் வெட்சி, கரந்தை முல்லை (காவற் ) காட்டைக் கவரப் போர் வஞ்சி மருதம் அரண் (கோட்டை ) கைப்பற்றுதல் உழிஞை நெய்தல் நேர் நின்று பொருதல் தும்பை பாலை வெற்றி வாகை 5. திணைப் பெயர்கள் எல்லாம் மலர்ப் பெயர்களாய் அமைந்தது காண்க. போர்ச் செயல்களில் மறவர் அந்தந்தப் புறத்திணைக்குரிய மலர்களை அணிந்தனர். வாழ்விலும் இலக்கியத்திலும் தங்கள் எண்ணத்தை மலர்கள் மூலம் வெளி யிடுவது தமிழர் பண்பாடாகும். அகம்/ புறப் பொருள் இலக்கிய மரபுகள் தோன்றிய முறை 6. தொல்காப்பியப் பொருளதிகாரம் காட்டும் தமிழர் வாழ்வியல் பற்றி நான் அண்மையில் வெளியிடவிருக்கும் புத்தகத்தில் தமிழ் இலக்கிய மரபுகள் பற்றி விரிவாக விளக்க விருக்கிறேன். அம்மரபுகள் பின்வருமாறு படிப்படியாக உருவாகியிருக்க வேண்டும் என்பதை மட்டும் இங்குக் கூறுகிறேன். (1) முதல் படிநிலை : ஐந்திணைகளில் கூறப்படும் ஐந்து படிநிலை வாழ்வியல் மெது மெதுவாக, மிக நெடுங்காலமாக, உருவாகியிருக்க வேண்டும். கி.மு. ஒன்றுக்கு சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் இருந்தே இது தொடங்கியிருக்கும். (2) இரண்டாவது : அந்தந்தத் திணைக்குரிய வாழ்வியலை (இயற்கைப் பொருள்கள், பழக்க வழக்கங்கள்) புலவர்கள் பாடத் தொடங்கிய காலம். இந்தக் கால கட்டத்தில் ஒவ்வொரு திணைக்கும் உரியவை வெறும் "இலக்கிய மரபு" அல்ல. புலவர் நேரில் கண்டதைப் பாவில் கூறினர். (இக்கால கட்டத்தில் "பிரிவு அந்தந்தத் திணைப் பகுதிக்குள்ளாகவே நிகழ்ந் திருக்கும். இந்நிலையின் காலம் கி.மு. 1000 - 500 எனலாம். (3) மூன்றாவது : புலவர்கள் அவரவர் இயல்பாக (ஒவ்வொரு திணையில் நேரடியாகக் கண்டதைப்) பாடியது இலக்கிய வரம்பாக உருமாறியது. நால்வகைத் திணைப் பகுதியில் எதில் ஒரு நிகழ்ச்சி (களவு, பிரிவு, ஊடல் அல்லது ஆநிரை கவர்தல், போரிடுதல்) நடந்தாலும் அந்நிகழ்ச்சியை அதற்குரிய திணையில் நடந்ததாக அதற்கேற்ற வருணனை, கற்பனையுடன் தான் பாட வேண்டும் என்ற கட்டுப் பாடு உருவாகியது. இக்கால கட்டத்தில் "திணை"க்கு இரண்டு அர்த்தங்கள் உருவாயின : ஒன்று நிலப்பகுதி; மற்றது அத்திணை ஒழுக்கம். இந்நிலையின் காலம் கி.மு. 500 - கி.பி 1 இக்கால முடிவின் பின்னர் (கி.பி 1 அல்லது 2ம் நூற்றாண்டில்) உருவாகியதே தொல்காப்பியம். 7. தொல்காப்பியம் அதற்கு முந்திய பொருள் இலக்கண நூல்களையும் குறிப்பிடுகிறது. அதற்கு முன்னர் வழங்கி ஒழிந்து போன எண்ணிறந்த செய்யுள் நூல்களில் பாடு பொருளை அலசி ஆய்வு செய்து தான் தொல்காப்பியர் ஒவ்வொரு திணைக்கும் துறை வகுத்திருக்க வேண்டும். (இதற்கு மாறாக இந்த அகப்பொருள், புறப் பொருள் பிரிவில் இன்னின்ன நிகழ்ச்சிகளெல்லாம் இருந்தாக வேண்டும் என்று தொல் காப்பியர் தாமே எண்ணிப் பார்த்துத் துறை வகுத்தார்; அதன் படி புலவர் பாடினர் என எண்ணுவது அறியாமை). இன்று நமக்குக் கிட்டியுள்ள (சங்க இலக்கியங்களில் மிகப் பழைமை யானவை கூட தொல்காப்பியத்திற்குப் பிந்தியவை. அவற்றில் லிருந்து தொல்காப்பியர் சூத்திரங்களுக்கு எடுத்துக் காட்டுக் களை வலிந்து கண்டுபிடித்து பிற்கால உரையாசிரியர் இடர்ப் பட்டுள்ளனர் : சில எடுத்துக் காட்டுக்கள் பொருத்தமற்றவை; சில சூத்திரங்களுக்கு எடுத்துக் காட்டுக்கள் தர இயலாமையால் ''வருவுழிக்காண்க'' என்றனர். தலைவனாக இனக் குழுத் தலைவன் 8. தொடக்க காலத்தில் பாணரும் புலவரும் பரிசில் கருதியே பாடினர். பாடல் தலைவர்கள் இனக் குழுத் தலைவர் கள் (tribal chiefs). அத்தலைவர்களே போரிட்டனர். சாதாரண மக்கள் சிறந்த வீரச் செயல் செய்ய வாய்ப்புகள் குறைவு. எந்தப் போரின் சிறப்பு வெற்றியும் தலைவன் மேல் ஏற்றிப் பாடப் பட்டது. அகப்பொருட் பாடல் தலைவனும் (பெயர் சுட்டப் படாத) இனக்குழுத் தலைவனே. தொல்காப்பியம் முல்லை மக்கள் ஆயர், குறிஞ்சி மக்கள் வேடுவர் என்று குறிப் பிடுகிறது. இனக்குழுக்கள் குறவர், பரதவர்,இடையர், வெள் ளாளர் போன்றவை இன்று சாதி ஆகிவிட்டன. இதற்குக் காரணம் அந்தந்தப் பகுதி மக்களுக்கிடையே அகமணமுறை இருந்தமையும் பழக்க வழக்கங்களைப் பெண்டிர் கைவிடாது ஒழுகினமையுமே ஆகும். இனக் குழுத்தலைவர்கள், மன்னர்கள் அதிகாரம் காரணமாக அந்தந்தக்குழுவும் தனித்தனியான மாறாத பழக்கங்களைக் கொண்டதாகிவிட்டது. அக்கால 'மன்னர்' அதிகாரம் மிகக் குறைவு : வளர்ச்சியடைந்த ஆட்சி முறை அன்று இல்லை; அரசியல் அறிவும் (எண்ணவோட்டத் திலோ, நடைமுறையிலோ) அன்று இல்லை. திணைவாரியாகக் கருப்பொருள் 9. ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியே சிறப்பான தெய் வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழ், திணை நில மக்கட் பெயர் உண்டு என்கிறது தொல். பொருள் . 1- 18. அவற்றின் பெயர்களைத் தொல்காப்பியர் கூறவில்லை யெனினும் உரையாசிரியர் தந்துள்ளனர். அவற்றைக் காணும் பொழுது அக்காலத் தமிழர் இயற்கையை எவ்வளவு நுணுகி நோக்கியுள்ளனர் என்று அறியலாம். பின்வரும் இயல்களில் மேற்கோளாகத் தரப்படும் பாடல்களில் இக்கருப்பொருள் கள் பயின்று வரும் நயத்தைக் காணலாம். சமயம் 10. விலங்குகளில் கருவிகள் செய்து பயன் படுத்தும், சமைத்து உண்ணும், ஆடை உடுத்தும், பேசும், ஒரே விலங்கு மனிதனே. அவற்றோடு சமயமும் மனிதனின் தனி அடையாளம். தன்னை மிரட்டும் மெய்யான அல்லது கற்பனைக் கேடு களிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாக எண்ணி அவற்றை வணங்கியோ அல்லது (மந்திர வேலை களால்) நிர்ப்பந்தித்தோ, தான் விரும்புவதைப் பெறுவதற்கான வழிகளை மனிதன் கண்டுபிடித்தான். சமய - மந்திரச் சடங்குகளே அவ்வழிகள். புகழ்ந்தும் பொருட்களை அர்ப்பணித்தும் வழி படுவது வணங்குதல் முறை; சடங்குகள் முதலியவற்றின் மூலம் தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு அச்சக்திகளை நிர்ப் பந்திப்பது மந்திர முறை (காட்டு மிராண்டிக் கால "அறி வியல்". புனிதப் படையலை உண்ணுதல் (சில நேரங்களில் உண்ணா நோன்பிற்குப் பின்னர்), பாடி (தனியாக, குழுவாக அல்லது ஆடி வழிபடுதல் ஆகியவை வழிபாட்டு முறை களாயின. பின்னர் நெடுநாள் கழித்து உணவு, ஆடல், பாடல், நாடகம் ஆகியவை சமயத்திலிருந்து பிரிக்கப்பட்டும் நடைபெற லாயின - வெறும் களிப்பு ஒன்றையே கருதி. மனிதன் தோன்றிய சில காலத்திலிருந்தே மனிதன் கடவுளை / கடவுளர்களை வழிபட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் இனக் குறி (totem) உடைய குழுக்களாக மக்கள் வாழ்ந்தனர். இருளர், வன்னியர் போன்ற இனக்குழுவினர் பெயர்களில் இனக் குறிப் பெயர் எச்சங்களைக் காணலாம். சம்ஸ்கிருத இலக்கியத்தில் காணும் இனக்குறிப் பெயர்கள் வானரர் (இனக்குறி : வானரம்), அஜஸ் (ஆடு), கருட (கருடப்பறவை), மத்ஸ்ய (மீன்), வர்ஷிணி (செம்மறி யாடு), நாகர் முதலியனவாம். வரலாற்றுக் காலத்திலும் இந்தியா வின் வட கிழக்கு, வட மேற்கு, மைய, தென் இந்தியப் பகுதியில் நாம் நாகர்களைக் காண்கிறோம். குறிஞ்சிப் பகுதியில் குகை வாழ்நரிடம் நாக வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும். இனக்குறிக் கடவுளோடு மக்கள் வழிபட்ட வேறு தெய்வங்கள் மரம், ஆறு, மலைவாழ் ஆவிகள், பேய்கள் உள்ளுர்த் தெய்வங் கள், ஊர்க் காவல் தெய்வம் எல்லையம்மன், பெரியம்மை போன்ற நோய்த் தெய்வங்கள் முதலியவை. இந்தப் பழந்தெய்வ வழிபாட்டு முறை இன்றும் பாமர மக்களிடம் இருந்து வருகிறது. தமக்கு இன்னல் வந்து விட்டால் மேல் சாதியினரும் மேட்டுக் குடியினரும் இப்பேய்த் தெய்வங்களை வழிபடுகின்றனர். சற்று நாகரிகமடைந்த கடவுள்களோடு பிற்காலத்தில் இப் பேய்த் தெய்வங்கள் இணைக்கப் பட்டன. நாக வழிபாடு முருக வழி பாட்டுடன் இணைக்கப்பட்டுப் பின்னர் அம்முருகனும் ஆரிய சுப்ரஹ் மண்யனுடன் இணைந்தான். (இன்றும் தன்னை வழி படுவோர் முன் சுப்பிரமணியன் பாம்பாகத்தான் உருக் கொண்டு வருகிறான்; பாம்பு கண்ணில் பட்டால் வேண்டுதலை முருகன் ஏற்றுக் கொண்டான் எனக் கொள்கின்றனர்) மர வழிபாடு சிவன் வழிபாட்டுடன் இணைந்தது. தலைசிறந்த சிவன் கோயில்கள் ஒவ்வொன்றிலும் புனித மரம் ஒன்று வழிபடப் படுகிறது. உடல் நலம் தரும் துளசி திருமால் வழிபாட்டில் பங்கு பெற்றுவிட்டது. நாகவழி பாட்டிலிருந்து சிவன் தான் அணியும் பாம்புகளைப் பெற்றான் ; திருமால் தனது ஆயிரந்தலைநாகப் பள்ளியைப் பெற்றான். புத்தரே நாகம் ஆனார்; புத்த, சமணப் புனிதர்களுக்கு ஐந்து பாம்புத்தலை உண்டு. 11. மேற்சொன்ன ஆகம (சிவன், மால்) வழிபாட்டு முறைகள் எழுவதற்கு முன்னர் உள்ளூர்ப் பேய்த் தெய்வங்கள், மரம், ஆறு, மலை சார்ந்த குட்டித் தெய்வங்கள் இவற்றுக்கும் சற்று உயர்ந்த நிலையில் ஒவ்வொரு திணையின் இயல்புக் கேற்ப திணைத் தெய்வம் ஒன்றும் உருவா யிற்று. குறிஞ்சித் தெய்வம் சேயோன் (செந்நிறத்தோன்) என்ற முருகன் ; களவு ஒழுக்கத்திற்கான தெய்வம். ஆட்டை வெட்டி அந்தக் குருதியில் அரிசி கலந்து முருகனுக்குப் படைத்தனர். முருகன் ஓர் வேடன்; அவனை வேலன் என்றனர்; முருக வழிபாடு செய்யும் பூசாரியையும் வேலன் என்றனர். முருகன் இளம் பெண்களிடம் மயக்கத்தை ஏற்படுத்தினான்; அதனைச் சீராக்க 'வேலன் வெறியாட்டு' நிகழ்த்தினர்; அவ்வெறியாட்டில் முருகன் வேலன் மீது இறங்கு வது வழக்கம். பெண்களும் முருகனுக்குப் பூசாரியாயினர் முருகன் ஏறிய பூசாரிகள் ஆடினர், பாடினர்; அது மட்டுமன்றி முன்னை நிகழ்ச்சிகளை உரைத்தனர். வருங்காலம் பற்றிக் குறி சொன்னார்கள், என்ன நோய், எந்தப் பேயால் வந்த நோய் என்று கண்டுபிடித்துக் கூறினர்; உடல் நோய், மனநோய் அனைத்தையும் குணப்படுத்தினர். குணப்படுத்தியது மந்திர ஆற்றலால் மட்டும் அல்ல; குறிஞ்சியில் கிட்டும் மூலிகைகள் மருந்துகளையும் பயன்படுத்தித்தான். ஆக தொடக்ககால பூசாரி மருத்துவ னாகவும் இருந்தான். சில ஆயிரம் ஆண்டு கழித்து, மெய் யியல் வளர்ந்துவிட்ட இன்றும் கூட குறவர் இனப் பூசாரி - மருத்துவனை சமூகத்தின் மேட்டுக் குடியினரும், கமுக்கமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 12. முல்லைத் திணைக் கடவுள் மாயோன். இவன் ஆடு மேய்ப்பவன். ஆடு மாடுகள், இடைக்குலப் பெண்கள் ஆகி யோருக்கு நெருக்கமானவன். அவனுடைய குழலின் இன்னிசை இயற்கையை ஆண்டது. குழல் இசைப்பது மட்டுமன்றி ஆடவும் செய்வான். இடைக்குலப் பெண்களுடன் அவனோ அவன் பூசாரியோ நுணுக்கமான நடனங்களை ஆடுவான் - இன்றும் இடையர் செய்வது போல. மாயோனுக்குப் பால், தயிர், வெண் ணெய், நெய் ஆகியவற்றை, சில நேரம் சோற்றுப் பொங்கலுடன் சேர்த்துப் படைத்தனர். குறிஞ்சி வேட்டுவன் தொழிலைவிட முல்லை ஆயன் தொழிலில் காதல் களியாட்டத்துக்கு வாய்ப்பு கள் அதிகம்; சில காலம் காதலரிடையே பிரிவு ஏற்படுவதற்கு முல்லையில் வாய்ப்பு உண்டு. (பிரிவுக்குப் பின் மீண்டும் கூடுதல் இன்பம் தருவது. வேடன் வாழ்க்கையை விட, இன்னல் மிக்க கடலில் சென்று மீன் பிடிக்கும் பரதவனை விட, முல்லைப் பகுதியில் ஆடுமாடு மேய்க்கும் இடையன் வேலையே மகிழ்ச்சி தருவது. எனவே, இடையர் கடவுள் ஆகிய 'கருநிறக் கடவுள்' மாயோனே இந்தியக் கடவுளர்கள் அனைவரிலும் களிப்பில் மிகுந்தவன். 13. நெய்தல் திணைக் கடவுள் வருணன். சுறாமீனின் எலும்பைக் கடற்கரையில் நட்டு கரு நிறமான மீனவ ஆடவரும் மகளிரும் மீன், கருவாடு, ஊன் ஆகியவற்றைப் படைத்து வழி பட்டனர். மீனவ ஆடவர் கடல்மேற் சென்ற பின்னர் நெய் தலை ஒட்டிய ஊர்த் தலைவர்கள் தம் வண்டிகளிலும் தேர்களிலும் சென்று தமது காமக் கிழத்தியரான (மீன் மணக்கும் கருநிற) மீனவ மகளிர் இல்லங்களுக்கு வந்ததைப் பிற்கால (சங்கப் பாடல்கள் கூறுகின்றன. ஏனைத் திணைப் பகுதிகளை விடச் செழிப்பானதும் நாகரிகமடைந்ததும் மருதத்திணை. களவு முடிந்து 'கற்பு ஒழுக்கத்துக்கு 'மருதம் நிலைக்களன் ஆயிற்று. ஆரியப் பழக்கங்கள் ஊடுருவுவதன் முன்னர் தமிழர்களிடையே இருந்த திருமணச் சடங்குகளை அகநானூற்றுப் பாடல்கள் 86ம் ''உழுந்து தலைப் பெய்த... 136ம் "மையப்புறப் புழுக்கின் ...'' விவரிக்கின்றன. அவை கிபி. முதல் நூற்றாண்டுக்குப் பிந்தியவை தாம் எனினும் கி.மு. 1500க்கு முந்தியும் அப்பாடல்களில் கண்ட திருமண முறைதான். இருந்திருக்கும் எனலாம்.) கவின்மிகு பந்தலில் நல்ல நாளில் புதல்வர்ப்பயந்த மகளிர் நால்வர் (தமர்) மணமேளம் முழங்க மலரும் நெல்லும் சொரிந்து “கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் கணவன் பெட்கும் பிணையை ஆகு” என வாழ்த்தி "தமர்தர " மணம் முடித்ததை இப்பாடல்கள் ( விளக்குகின்றன. திருமணத்தில் பெருவிருந்து உறவினர்க்கும் உற்றார்க்கும் படைத்தனர். மணமக்கள் மேல் மலரும் நெல்லும் தூவினர். இப்பாடல்கள் எந்த ஆரியச் சடங்கையும் குறிப் பிடவில்லை என்பதைக் காண்க: நெருப்பு வளர்க்கப்பட வில்லை; தீ வலம் வருதல் இல்லை; புரோகிதரோ பூசாரியோ இல்லை. திருமண நாளன்று இரவே மணமக்கள் கூட்டப் பெற்றார். 14. இவ்வாறு சிறப்பாக நன்னிமித்தங்களுடன் திருமண வாழ்வு தொடங்கிய போதிலும் மருத நிலத்தலைவர் மணவாழ்வு இன்பத்தில் பரத்தையர் குறுக்கிட்டனர். நெற்பயிர் முற்றும் வரையிலான ஓரிரு திங்களும், அறுவடைக்குப் பின்னர் பல மாதங்களும், மருத நிலத்தில் உழைப்புத் தேவைப்படாத ஓய்வு நாட்களாகும். பொழுது போகாதவர்களிடை யே சாத்தான் குடிபுகுவது இயற்கையன்றோ !. (மருத நிலத் தெய்வம் வேந்தன் ஆகிய இந்திரன் தன் இடியால் மேகங்களைத் தாக்கி மழை வர வைப்பவன்; பெண்பித்தனாகிய அவனைச் சுற்றி தெய்வீக அரம்பையர்கள் - அவனை வழிபடும் மருதநிலத் தலைவர் களைச் சுற்றிப் பரத்தையர்கள் போல ) அறுவடைத் திரு நாளாகிய பொங்கல் நாளில் மருதநில மக்கள் பொங்கல் இட்டு வேந்தனை வழிபட்டனர். 15. இறுதியாகப் பாலை நிலம் ; துன்பியல் சார்ந்தது. தலைவியை விட்டுப் பொருள் வயிற் பிரிந்த தலைவன் நெடுங் காலம் பிரிந்து சென்றதைக் கூறுவது. அவன் சென்ற வழியானது இறந்த மனிதர், விலங்குகளின் எலும்புகள் கிடக்கும் நீரற்ற வெம்மையான நிலம் ; ஆறலைக் கள்வர் வாழுமிடம். அருகிலிருந்த குறிஞ்சியிற் போலவே இங்கும் நெடுங் காலம் தாய்வழிச் சமூகம் நிலைபெற்றிருந்தது. பாலைத் தெய்வம் கொற்றவை; மக்கள் மறவர் ; கொற்றவைக்கு விலங்குகளையும் மனிதரையும் பலியிட்டு மதுவுடன் வழிபட்டுக் கூத்தாடினர். 16. பழந்தமிழருடைய திணைக் கடவுளரை ஆரியக் கடவுளரோடு இணைத்து தொல்காப்பியர் : முல்லைக்கு மாயோன் குறிஞ்சிக்கு சேயோன் மருதத்துக்கு வேந்தன் - (ஆரியர் துறக்க வேந்தன் இந்திரன்) நெய்தலுக்கு வருணன் - (இது சமஸ்கிருதப் பெயர்) என்றவாறு குறிப்பிடுகிறார். பின் இரு கடவுளரின் தமிழ்ப் பெயர்களை அறிய இயலவில்லை. ஒருவேளை சேணோன், கடலோன் இன்று இருந்திருக்கலாம். பாலைக்குத் தனி நிலம் இன்மையின் தொல்காப்பியர் பாலைத் தெய்வம் கொற்ற வையைக் குறித்திலர். வட இந்தியாவிலும் ஐந்திணை மக்கள் பண்டு இருந்திருப்பர். 17. வேதங்களுக்கு முன்னர் அதாவது ஆரியர் வழிபாட்டிற் காக வேத மந்திரங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர், வட இந்தியாவிலும் ஐந்திணை ஒழுக்கம் இருந்திருக்க வேண்டும்; தென் இந்தியா தஸ்யூக்களைப் போலவே வட இந்திய தஸ்யூக் களும் திணை அடிப்படையில் ஐந்து இனக்குழுக்களாக (tribes) இருந்திருப்பர். தென்னிந்தியா போலவே வட இந்தியப் பரப்பும் திணை அடிப்படையில் ஐந்தாகப் பகுக்கத்தக்கதே; வடக்கில் ஒவ்வொரு திணையின் பரப்பளவு அதிகம் என்பது மட்டுமே வேறுபாடு. தென்னிந்தியாவில் இருந்த புவியியல் சூழல் எவ்வாறு ஐந்து இனக்குழுக்களை உருவாக்கியதோ அவ்வாறு தான் வடக்கிலும் நடந்திருக்கும். ஆக ஆரியத்துக்கு முந்திய வட இந்திய வாழ்வியல் தென் இந்தியாவிற் போலத் தான் இருந் திருக்கும். 18. ஆயினும் ஏறத்தாழ கி.மு. 4000ல் வட இந்தியாவில் தீ வழிபாட்டுச் சடங்கு தோன்றியது. நெருப்பே தெய்வங்களின் வாய்; எனவே தெய்வங்களுக்குப் படைப்பதை நெருப்பில் போட்டால் போதும் என்ற அடிப்படையில் ஆரியச் சடங்கு (Aryan cult) என்று அழைக்கப் பட்ட சமயம் உருவாகியது. நெருப்பு சாராத பழைய வழிபாட்டு முறையைப் பின்பற்றியோர் தஸ்யூக்கள் எனப்பட்டனர். ரிஷிகள் என்னும் கவி - ஞானிகள் சம்ஸ்கிருதத்தில் யாத்த (வேதி) மந்திரங்களை ஓதிக் கொண்டே நெருப்பில் தங்கள் படையல் களைப் போடும் முறையைக் கைக் கொண்டனர். 'சம்ஸ்கிருதம் எப்படி, எங்கிருந்து வந்தது? ரிஷிகள் யார்? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது. மேற்கு ஆசியா, ஐரோப்பா ஆகிய வற்றின் பெரும் பகுதியில் பரவியுள்ள மொழிகளைப் போன்ற சொல் தொகுப்பும் அமைப்பும் கொண்டது சமஸ்கிருதம் என்பது மட்டும் தெரியும். இதனைச் சாக்காகக் கொண்டு ''உலகில் பல பாகங்களுக்கும் ஆரியர் படையெடுத்தனர்" என்ற கோட்பாடு உருவாகியுள்ளது - இனம் வேறு, மொழி வேறு என்பதை மூடத் தனமாக மறந்து விட்டு. மாந்தவியல் இக் கோட்பாட்டை ஆதரிக்கவில்லை. அது கிடக்க. இவ்விடத்தில் ஆரிய நெருப்புச் சடங்கு உருவாவதற்கு முன்னர் இருந்த இந்திய மக்கள் வாழ்வியலை அச்சடங்கின் தோற்றம் எப்படி மாற்றியது என்பதே நாம் இங்குக் கருத வேண்டியதாகும். (தென்னிந்திய) தமிழ் உடன்பிறப்புகளைப் போலவே கி.மு. 4000க்கு முன்னர் வட இந்திய தஸ்யூக்களும் திணைக் கடவுளரையே வணங்கி வந்திருக்க வேண்டும். ஆரிய தீச் சடங்கும் இந்தத் திணைக் கடவுளரையே ஏற்றுக் கொண்டு அவர்களைப் புதிய வழியில் வழிபடத் தொடங்கியதோ? (எனது இந்தியாவின் கற்காலம் (1927) பக் 28-29 காண்க) இதை விரிவாகக் கருத இங்கு இட மில்லை. ஆயிரம் ஆண்டு கழித்து ஆரியச் சடங்கு தென் இந்தியா விற்குள் பரவிய போது தென்னிந்தியத் திணைக் கடவுளர் அவரவரைப் போன்ற ஆரியக் கடவுளாகக் கருதப்பட்டு ஒன்றாக்கப்பட்டனர். செங்கடவுள் சேயோன் - சுப்ரஹ்மண்யன்; மாயோன் விஷ்ணு - கிருஷ்ணன் ; கடற் கடவுள் - வருணன்; பாலைக்கடவுள் - துருக்கை; என்றவாறு பொருத்தப்பட்டனர். இந்த ஐந்து இணையரில் ஆரியக் கடவுள்கள் ஐவரும் பண்டு வட இந்தியாவில் வழங்கப்பட்ட தமிழ் (தஸ்யூக் கடவுளரின் மறு வடிவங்கள் தாமோ? அவருள்ளும் இந்திரன் தலைவனாகக் கருதப்பட்டது ஏனைத் திணை மக்களை வட நாட்டு மருத நில மக்கள் வென்றதன் காரணமாக இருக்கலாமோ? இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் இடம் இது வன்று. 19. வேதத்தில் வரும் "பஞ்ச ஐநாஹ்" என்பதைப் பண்டை யோர், நம் காலத்தவர் யாராலும் பொந்திகையாக விளக்க முடியவில்லை. பண்டு வட இந்திய மக்களும் ஐந்திணை இனக் குழுக்களாகப் பிரிந்திருந்ததை இச்சொல் நினைவூட்டுகிறது. எனவே ஆரியச் சடங்கு தோன்றுவதற்கு முற்பட்டு வட இந்தியா வில் இருந்த ஐந்திணை இனக்குழுக்களை அது குறித்திருக்கலாம் என்று உன்னிக்கிறேன். ஆயினும் தமிழ் இலக்கிய அறிவற்ற வர்களும் "ஆரியத்துக்கு முந்திய இந்தியாவுக்கும் ஆரிய இந்தியா வுக்கும் இடையீடற்ற வரலாற்றுத் தொடர்பு இருந்திருக்க வேண்டும்" என்பதை உணர மறுப்பவர்களும் எனது கருத்தை ஏற்க இயலாதவர்களாயுள்ளனர். (20. மேலே 18ம் பத்தியில் ஆரியர் (அதாவது ஆரிய மொழி பேசுநர்) என்ற அயலார் இந்தியாவிற்குள் நுழையவே யில்லை என்ற கருத்து உள்ளதன்றோ; இதே கருத்தை சீனிவாசர் ''இந்தியாவிற்குள் ஆரியர் படையெடுப்பு என்ற கட்டுக்கதை" (The Myth of the Aryan Invasion of India) என்ற கட்டுரையில் (இந்தியன் ஆன்டிகுவாரி 42:1913 மார்ச், பக் 77-88 இதழில்) வெளியிட்டுள்ளார் அதன் சுருக்கம் வருமாறு: வேதங்களில் ஆரியர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்ததாக எங்கும் குறிப் பிடப்படவில்லை . கி.மு. 2500ஐ ஒட்டி இந்தோ செருமானிய (ஐரோப்பிய மொழி பேசுநர்களுள் பாக்ட்ரியா பகுதியில் தங்கி யிருந்த சிலர் தீ வணக்கத்தையும் சோமச் சாறு (=bhang (hemp) வகைச் சாறு) பருகுவதையும் புதிதாகக் கைக்கொண்டனர். அவர்களிடமிருந்து இந்தப் புதிய தீ வழிபாட்டு முறை fire cult இந்தியாவிற் குள்ளும் பரவியது. அவ்வழிபாட்டு முறையுடன் இந்தோ செருமானிய மொழிக் குடும்பத்தின் சாயல் கொண்ட ஒரு மொழியும் வழிபாட்டு மொழியாக, இந்தியாவிற்குள் பரவியது. அம் மொழி இங்கு மாற்றமடைந்து வேத மொழியாக ஒலியனியலிலும் பிறவற்றிலும் ஏனைய இந்தோ செருமானிய மொழிகளிலிருந்து மாறுபட்டதாகப் பரவியது. வேதங்களில் உள்ள கடவுளர்களுள் பெரும்பாலோர் செண்டு அவெஸ் தாவிலுள்ள கடவுளர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அக்னி, வருணன், ருத்ரன், விஷ்ணு, அதிதி, மாருத், அஸ்வின், உஷா இவர்களெல்லாம் இந்தியாவில் உருவாகிய வர்களே (அக்னி என்னும் பெயரே இந்தியச் சொல் ) . மித்ரா மட்டுமே வேதங் களும் அவெஸ்தாவும் குறிப்பிடும் பொதுவான கடவுள். "ஆரியருக்கும்" தஸ்யூகளுக்கும் இருந்த ஒரே வேறுபாடு முன்ன வரிடையே தீ வழிபாட்டு முறை இருந்தது; பின்னவரிடம் அது இல்லை என்பதே.) இயல் - 6 பாரதப் போர் தமிழரசர் பரம்பரைகள் தோற்றம் : இராமன் தென்னிந்தியாவை வென்றதன் விளைவாக சோழ, சேர, பாண்டிய வேந்தர் தோன்றியிருக்கலாம். இவர்கள் பெயர்கள் இராமாயணத்தில் வருகின்றன. புராணங்கள் குறித் துள்ள இராவணர்கள் மூவர் ஆட்சிக் காலத்தில் சோழ சேர பாண்டியர் இனக் குழுவினராகவே(Tribes) இருந்திருப்பர்; வேந்தர்களாக அல்ல. "படைப்புக் காலந் தொட்டு " இம் மூவேந்தரும் இருந்தனர் எனும் பிற்காலக் கூற்றின் பொருள் "இவர்கள் தோற்றக் காலம் தெரியாது" அல்லது "இவர்கள் தோற்றம் பற்றிய செய்திகள் கிட்டவில்லை" என்பதேயாகும். இம் மூவேந்தரும் வட இந்தியாவிற்கும் தென் இந்தியா விற்கும் இடையேயிருந்த உறவைத் தொடர்ந்தனர். இராமன் இறந்தபின் ஆர்யவர்த்தத்தில் அயோத்தியின் முதன்மை நீங்கியது. ராமன் காலத்துக்கு 15 தலைமுறை கழிந்த பின்னர் குருவம்சத் தினரிடையே மாபாரதப் போர் நிகழ்ந்தது. இக் கால கட்டத்தில் சோழ, சேர, பாண்டியர் வடநாட்டு மன்னர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை மகாபாரதமே கூறுகிறது. மகாபாரதம் உருவானது எப்படி மாபாரதத்தில் பல கூறுகள் உள்ளன. முக்கியமானதும் முதலாவதும் ஏறத்தாழ கிமு 1400ல் நடந்த பாரதப் போரில் கலந்து கொண்ட வீரர்கள் அரசர்கள் பற்றிய நாட்டுப் பாடல்கள் ஆகும். இரண்டாவது கூறு அப்போர் நடந்து நெடுங் காலம் கழித்து நுழைக்கப்பட்ட பழைய புராணக்கதைகள் : (அப்புராணக் கதைகள் பெரும் பகுதி கற்பனையேயாயினும் ஒரு சில வரலாற்றுண்மைகளும் அவற்றுள் உள்ளன என பர்ஜிதர் முதலியோர் நிறுவி யுள்ளனர். மூன்றாவது கூறு விஷ்ணு, சிவன் பற்றியனவும் வேதங்களில் காணப்படாதனவுமான கதைகள், (இக்கதைகள் ஆகமக் காரர்கள் உருவாக்கியவை. கிமு 1000க்குப் பின்னர் இவை மாபாரதத்தில் ஏற்றப்பட்டன). நான்காவது கூறு அர்த்த தர்ம மோட்ச சாத்திர நூல்களும் மாபாரதத்தில் செருகப்பட்டன. பல்வேறு மெய்யியல் நூல்கள் ஐந்தாவது கூறு. (இவற்றுள் தலையாயது பகவத் கீதை. அந்நூலின் உலகின் தலைசிறந்த ஆசாரியன் வேதாந்தம், சாங்கியம் முதலான மெய்யியல் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு அவை யனைத்தையும் விஞ்சிய கருத்துக்களைப் போதிக்கிறான்). கடைசிக்கூறு இந்தியாவில் உள்ள புனிதத் தலங்கள் பற்றிய புவியியல் செய்திகள். பிந்தைய கூறுகள் எல்லாம் கிமு 1000 - கிமு 500 காலகட்டத்தில் மாபாரதத்தில் ஏறின. தென் இந்தியாவும் பாரதப் போரும் 3 மாபாரதத்தில் பல இடங்களில் திராவிடர், சோழர், கேரளர், பாண்டியர் குறிப்பிடப் படுகின்றனர். (எ . கா : திரெளபதி சுயம்வரத்தில் பாண்டியன் ; யூதிஷ்டிரன் ராஜ சூயத்தில் சோழர், திராவிடர், பாண்டியர் பங்கேற்பு ; பாரதப் போரில் பாண்டவர் சார்பில் சோழ, சேர, பாண்டியர் போர்; அருச்சுனன் தீர்த்த யாத்திரையில் நாகர் குலப் பெண் உலூபியையும். பாண்டியன் மகள் சித்ராங்கதையையும் மணத்தல்) நாகர்கள் பாதாளத்தில் வாழ்பவர் என்று புராணங்கள் கூறும். ஆர்யவர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாக நாடு என்றன புராணங்கள். கடித்தவுடன் கொல்லும் பாம்பு (நாகம்) உலகெங்கும் கடவுளாக வழிபடப் பட்டது. சிவன், விஷ்ணு வழிபாடுகள் உருவான பின்னரும் நாக வழிபாட்டினராகவே இருந்தவர் நாகர் என்று அழைக்கப் பட்டனர். கிபி 250க்குப் பிற்பட்ட பெரும்பாணாற்றுப் பாடையில் ''அந்தீர்த் திரைதருமரபின்' என்பது சோழமன்னன் நாகநாட்டு இளவரசியை மணந்து பெற்ற மகனைக் குறிக்கிறது. மணிமேகலையிலும் இது போன்ற கதை வருகிறது. மணி மேகலையில் வரும் சாதுவன் நாகர் பாடையை மயக்கறு மரபில் கற்றவன். நாக வழிபாடு இன்றும் பெருமளவில் உள்ள கேரளம் ''தென்னிந்திய நாக நாடு" ஆக இருந்திருக்கலாம். (நாகர் - நாயர்?). நாயர்கள் தலைமுடியை (பாம்புத்தலைபோல்) தலை யுச்சியில் கொண்டை கட்டுதல் நாகவழிபாட்டின் எச்சமாக இருக்கலாம். பரசுராமன் பிறங்கடைகளிடமிருந்தோ அவன் சீடர்களிடமிருந்தோ ஆரியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்ட முதல் நாக இனத்தவர் நம்பூதிரிகள் என நான் கருதுகிறேன். கே. ராமவர்மா ராஜாவும் அப்படியே கருதினார். (JRAS : 1910). அருச்சுனன் மணந்த நாகப் பெண் உலூபி கேரளப் பெண்ணாக இருந்திருக்கலாம். அகத்தியர்கள் 4 மாபாரதக் காலத்துக்கு முன்னமே அகத்தியர்கள் கன்னியாகுமரி வரை பரவியிருக்க வேண்டும். பல்வேறு இடங் களில், காலங்களில் இருந்த அனைத்து அகத்தியர்களையும் ஒன்றாக்கி புராணங்களைப் போல, மாபாரதமும் ஒரே அகத்திய முனியாக்கிவிட்டது! மகாபாரதத்தில் வரும் அகத்தியர் பஞ்ச வடி, பாண்டிய நாடு போன்ற பல இடங்களிலும் இருந்திருந்த தாகக் குறிப்பிடப்படுகிறார். 5 மேற்கண்ட செய்திகளிலிருந்து மாபாரதக் காலத்தில் வட ஆரியருக்கும் தமிழருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என அறியலாம். இயல் 7 கிமு 2000 - 1000 கால அளவில் தமிழகத்தின் அயல் நாட்டு வாணிகம் 1. மாபாரதம் கூறுவது போல் இந்தியாவுக்கு வெளி யிலிருந்து வந்த இனமக்களாகிய சீனர், யவனர் போன்றோர் அப்போரில் கலந்து கொண்டனர் என்பதை அபத்தம் என்று கருத முடியாது. அது உண்மையோ பொய்யோ, தென் இந்தியா விற்கும் பாபிலோன் , அராபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கும் வேத காலத்திலேயே இருந்த தொடர்பு கிமு 2000 - 1000 கால் கட்டத்திலும் தொடர்ந்தது என்பதற்கு ஆதாரம் உண்டு. பிற ஆய்வாளர் கருதுவதற்கு மாறாக, நான் கொண்டுள்ள முடிவு மைய ஆசிய ஸ்டெப்பி புல் வெளியில் இருந்த நார்திக் (Nordic) இனத்தினருக்கும் இந்திய ஆரியருக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதேயாகும். ஆயினும் அந்த நார்திக் இனத்தினர் கிமு 2000ஐ ஒட்டி கோட்டான் - கீழை நண்ணிலக் கரை பண்டைய வாணிகப் பாதையை மூடிவிட்டனர். அந்தப் பாதை அடைபடவே, இந்திய, குறிப்பாகத் தென்னிந்தியக் கடல் வாணிகம் வளர்ந்தது. எகிப்துடன் வாணிகம் 2. எகிப்தில் கிமு 1580 - 1350ல் ஆண்ட 17 வது அரச பரம்பரையினர் கப்பமாகவும் வாணிகம் மூலமும் தாங்கள் யானைத் தந்தத்தையும் தந்தத்தாலாகிய நாற்காலி, மேசை, பேழை, சிலை, முதலிய பொருள்களை யும் பெற்றதைக் குறித்துள்ளனர் - அவை அன்று பண்ட் (Punt) என்றழைக்கப்பட்ட இன்றைய சோமாலியப் பகுதியிலிருந்தும் பிற இடங்களி லிருந்தும் சென்றன. கிமு 2000 க்கு முன்னர் நடந்தது போலப் பின்னரும் யானைத் தந்தம் தென்னிந்திய மேலைக்கரையிலிருந்து எகிப்துக்குச் சென்றிருக்க வேண்டும். 3. எகிப்தின் 18ம் அரச பரம்பரையின் காலத்தில் பண்ட், சிரியா, பாபிலோன் போன்ற இடங்களிலிருந்து விலையுயர்ந்த பொருள்கள் எகிப்துக்குச் சென்றன. 20ம் பரம்பரை அரசன் ரா மேசஸ் III (கிமு 1198 - 1167) அம்மோன் கடவுளுக்கு அர்ப்பணித்த பலபொருள்களில் கருங்காலி மரம் ஒன்று. அது தென்னிந்தியாவிலிருந்து சென்றிருக்கலாம். (பின் காலத்தில் இந்தியாவிலிருந்து சென்ற நீலக்கல் Lapis lazuli, இக்காலத்திலும் சென் றிருக்கலாம். எகிப்தில் லினன் துணிகளே உற்பத்தியாயின; எனவே எகிப்திய மன்னர்கள் உடுத்திய உயர் ரக பருத்திமஸ்லின் துணி இந்தியாவிலிருந்தே கிமு 2000 - 1000 காலகட்டத்திலும் எகிப்துக்குச் சென்றிருக்க வேண்டும். எகிப்திய அரசி காலத்திய (கிமு 15ம் நூற்றாண்டு) பொறிப்பு இலவங்கப் பட்டை பண்ட் நாட்டுப் பொருள் என்று கூறுகிறது. உண்மையில் சேரநாட்டுப் பகுதியிலிருந்தும் சீனாவிலிருந்தும் அராபியர் இலவங்கத்தை எகிப்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் பண்ட் நாட்டிலிருந்து பெற்றதாகக் கதை கட்டியிருக்க வேண்டும்; இக்கதையை அன் றைய எகிப்தியரும் பிற்காலத்திய பிளினி போன்றவரும் நம்பியிருக்க வேண்டும் என்றும் வார்மிங்டன் கூறுகிறார். அவ்வரசி காலத்தில் பண்ட் நாட்டுப் பொருள் எனத் தவறாகக் கருதப் பட்ட எள் நெய் எண்ணெய், கருங்காலி முதலியனவும் உண்மை யில் சேர நாட்டிலிருந்துதான் சென்றிருக்க வேண்டும். பாலஸ்தீனத்துடன் வாணிகம் 4 கிமு 1000க்குச் சில காலம் முன்னர் எகிப்தை விட்டு நீங்கி எபிரேயர் பாலஸ்தீனத்தில் குடியேறினர். எபிரேய குருமார் பயன்படுத்திய திரு முழுக்குத் தைலத்துக்கு மணம் தர, இந்திய இலவங்கமும் பயன்படுத்தப் பட்டது. இந்தியாவிலிருந்து எகிப்துக்குச் சென்ற பொருள்களெல்லாம் பாலஸ்தீனத்துக்கும் சென்றிருக்க வேண்டும். சீனாவுடன் வாணிகம் 5. சீனத்தில் விளைந்த இலவங்கமும் மேலை நாடுகளுக்குத் தென் இந்தியத் துறைமுகங்கள் வழியாக அராபிய வாணிகர் மூலம் சென்றதைக் கண்டோம். எனவே அப்பொழுதே சீனாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் வாணிகம் நடந்திருக்க வேண்டும். இதை நிலை நாட்டுவதற்கான வரலாற்றுச் சான்றுகள் மிகச் சிலவே. சீனப்பட்டுத்துணியையும் யுதிஷ்டிரன் கப்பமாகப் பெற்றான் என்கிறது மாபாரதம். சீனாவிலிருந்து மலாக்காவுடன் கிமு 1200 லிருந்தே வாணிகம் நடந்ததாகச் சீன ஆவணங்கள் கூறுகின்றன. வெற்றிலை தமிழ்நாட்டில் தொன்று தொட்டு விளைந்தது அல்ல; மலேயா அல்லது பிற கீழைத் தீவு களிலிருந்து இங்கு வந்து புகுந்தது. வெற்றிலை என்பதே காரணப் பெயர்; முதன் முதலில் சிலப்பதிகாரத்தில் தான் வெற்றிலை குறிப்பிடப் படுகிறது. கண்ணகி கோவலனுக்கு "அம்மென் திரையலொடு அடைகாய் ஈந்ததாக சிலம்பு புகல்கிறது. வெற்றிலை, பாக்கு, சுண்ணம் இவற்றை வைக்கும் பையையும் "தமனிய அடைப்பை " என சிலம்பு16:128 குறிக்கிறது. அரசருக்கு வெற்றிலை தந்த அடைப்பைக்காரர் என்ற "பாசவர்' எண் பேராயத்தில் ஒருவர் ஆவர். 6. பட்டும், சர்க்கரையும் முதன்முதலில் சீனத்தில் உற் பத்தியாகிப் பின்னர் இந்தியாவுக்கு இறக்குமதியானவை. பட்டு = மடிப்பு ; மடிப்பாக பட்டுத்துண்டு போடப்பட்டதால் பட்டு என்பது ஆகுபெயராக உருவானது. சமஸ்கிருதத்தில் சீனம் = மணல் . மணல் மணலாக இருந்த சர்க்கரைக்கும் அது ஆகு பெயராயிற்று. 'அக்காரம் முதலில் கரும்பைக் குறித்துப் பின்னர் ஆகுபெயராகச் சர்க்கரைக்கும் வெல்லத்துக்கும் ஆயிற்று; சீனத்தின் பெயரால் சீனி என்றும் அழைக்கப் பட்டது . பட்டுக் கும் சீனத்துக்கும் பகரமாக இங்கிருந்து பவளம், மிளகு முதலில் யவை சீனாவுக்கு ஏற்றுமதியாயின. சீனத்திலிருந்து மேலை நாடுகளுக்குச் சென்ற பட்டு, சர்க்கரை முதலியன (மைய ஆசியத் தரைப்பாதை வழியாக மட்டுமன்றி) தென்னிந்தியத் துறை முகங்கள் வழியாகவும் மேலை நாடுகளுக்குச் சென்றன. இந்த வணிகத்தில் தென்னாட்டு வணிகரும் ஈடுபட்டிருந்தனர். இயல் 8 ஆகமங்களின் தோற்றம் இன்றைய இந்து சமயம் ஏறத்தாழமுற்றிலும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது; வேதங்களைக் கொஞ்சம் கூட அடிப்படையாகக் கொண்டது அல்ல. இதை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது 1899) எனது இந்திய மெய்யியல் சுருக்கம் நூலில் குறித்துள்ளேன். மாபாரதப் போருக்குப் பின்னர் வேத முறை வழிபாடு மறையத் தொடங் கியது. இன்று ஏறத்தாழ முற்றிலும் ஒழிந்துவிட்டது. "ஸ்ரௌத கர்மம்" பெரும்பகுதி போய் விட்டது. சிற்சிலர் ஆங்காங்கு சில நேரங்களில் அக்னி ஆதானம், எளிய வாஜபேயம், கருட சாயனம், சோமயாகம் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர். ஸ்மார்த்த கருமமும் விரைவாக மறைந்து வருகிறது. மூன்று தலைமுறைகளாக அக்னிவழிபாடு செய்யாத பிராமணக் குடும்பம் பிராமணத் தன்மை இழந்துவிடும் என்பது சாத்திர விதி. அதன்படி பார்த்தால் இந்தியாவில் இன்று உண்மையான பிராமணக் குடும்பங்கள் ஒரு சிலவே இருக்கக்கூடும்! சமயத்தில் ஊறியது இந்தியா. ஆனால் அந்தச் சமயம் ஆகமச் சமயமே யொழிய வேத சமயம் அன்று. 2. 'ஆகமத்தின் வேர்ச் சொற்பொருள் "தொன்று தொட்டு வந்தது" என்பதாகும். ஆகமம் என்பதற்கு ஆப்த வசனம் - அதாவது மெய்யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது; ஆப்த வசனங்களில் தலைமை சான்ற வேதத்தையும் சில நேரங்களில் ஆகமம் என்று அழைப்பர். எனினும் சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரை வழிபடும் தந்திர நூல்களையே "ஆகமம் " பொதுவாகக் குறிக்கிறது. (புத்த, சமண சமய நூல்களும் ஆகமம் எனப்பட்டன) அனைத்து ஆகமங்களும் தொடக்கத்திலிருந்தே வேதங்களுக்கு அதாவது கர்ம காண்டத்துக்கு எதிராக உரு வானவை. சைவ ஆகமங்கள் மகேஸ்வரம், பாசுபதம் எனப்பட்டன. வைணவ ஆகமங்கள் பாகவதம் (பகவானைப் பற்றி யவை), சாத்தவாதம் (சாத்தவாத அரச பரம்பரையினர் ஆத ரித்தது?), பாஞ்ச ராத்திர என அழைக்கப்பட்டன. (பாஞ்ச ராத்திர என்றால் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புச் சடங்கு என்றும் பொருள் உண்டு. அது வைகானச = கானகத்தில் வாழும் துறவிகள் சார்ந்தது) சடங்கிலிருந்து மாறுபட்டது. 3. வேதச்சடங்குகளும் ஆகமச் சடங்குகளும் ஒன்றுக் கொன்று போட்டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்து விட்ட நிலையில், அவை வேறுபட்டவை என்பது இன்று மறந்து விட்டது. ''ஆகமங்கள் வேதங்களி லிருந்து பெறப்பட்டவை. தற்காலத்திற் கேற்ப வேதக் கருத்துக்களை விரிவாக்கி அல்லது மாற்றி உருவாக்கப்பட்டவை என்று கூடச் சிலர் கருதுகின்றனர். வேதமந்திரங்கள் இயற்றப்பட்ட காலம் முடிந்ததும் அவை அபௌருஷேயம் - அதாவது காலம், இடம் இவற்றை யெல்லாம் கடந்தவை, அநாதி எனக் கருதப்பட்டன; யாரும் உருவாக்கியவையல்ல, புருஷன்' ஆன ஈஸ்வரன் கூட வேதங்களை உருவாக்கியவன் அல்லன். ஆனால் ஆகமங்கள் சிவன், விஷ்ணு வெளியிட்டவையாகையால் அவை பெளரு ஷேயம் தான். வேதசம்ஹிதை மந்திரங்களை வேதச் சடங்கு களில் ஓத வேண்டும். ஆனால் சிவன், விஷ்ணு வழிபாட்டில் பின்பற்ற வேண்டிய சடங்குகள், யோகக் கோட்பாடுகள், மெய்யியல் கருத்துக்கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டவை ஆகமங்கள். வேதங்களின் (வேதமந்திரங்களும் சரி, பிராமணங் களும் சரி) கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகியவற்றுக்கு மீமாம்சம் தேவை. ஆனால் சடங்குத் தொகுப்பு நூல்களான ஆகமங்களுக்கு உரைவிளக்கம் மட்டுமே தேவை. வேதமந்திரங் கள் "சந்தஸ்" மொழியில் உள்ளன. ஆகமங்கள் "பாஷையில் '' (அதாவது கிமு 1000க்குப் பின்னர் இருந்த வடமொழியில்) உள்ளன. 4. சடங்குகளைப் பொருத்தவரை வேதச் (வைதீக) சடங்கு சுள் அக்னிச் சடங்குகள். ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண் டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங்களுக்குச் செல்கின்றன. ஆகம வழிபாட்டில், அக்னிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத்துக் காட்டிவிட்டு எடுத்துவிடலாம். தெய்வம் சூக்கும் மானவற்றையே ஏற்கும்; தூலமானவற்றையல்ல; ஆகையால் வழி படுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன்படுத்தலாம், பிறருக்கும் தரலாம். அக்னிச் சடங்கில் பல்வேறு காரியங்களுக்கும் தனித் தனிப் பொறுப்பு வகிக்கும் பல்வேறு தெய்வங்களுக்கும் வழிபாடு உண்டு. ஆகம வழி பாட்டில் அனைத்துக்கும் பொறுப்பேற்ற ஒரே தெய்வத்திற்கே வழிபாடு நடை பெறுகிறது. (அதாவது யெகோவாவை வழி படுவது போல). வேதச் சடங்குகளில் ஒவ்வொரு செயல் செய்யும் பொழுதும் அதற்கென்று ஒரு மந்திரம் சொல்லப் படுகிறது. சோமம் கொண்டுவர வண்டியில் காளையைப் பூட்டுதல்; அக்காளையை ஓட்டக் குச்சி வெட்டுதல், ஒரு பொருளைக் கையால் பிடித்தல், பால் காய்ச்சுதல் ; மோர்கடைதல், ஒவ் வொன்றுக்கும் ஒரு மந்திரம் உள்ளது. ஆகம வழிபாட்டில் மந்திரச் சடங்குகளுக்கு இடம் இல்லை . ஆகம வழிபாட்டில் ஆங்காங்கு ஓரிரு மந்திரங்கள் ஓதுகிறார்கள், ஆனால் மடத்தனமாக தூ (dhu) எனத் தொடங்கும் மந்திரத்தை வண்டியின் நுகத்தடியைத் தூக்கும் பொழுது சொல்ல வேண்டியது!) சாம்பிராணி காட்டும் பொழுது ஓதுகிறார்கள். ஆகம வழி பாட்டில் பெரும் பங்கு வகிப்பது, வழிபடும் கடவுளின் பெயர் களைச் சொல்லி நமஹ (நான் வணங்குகிறேன்) என்று சொல் வது தான். வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப்பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்புவது; ஆனால் ஆகம வழிபாடு உபசாரமே - அதாவது நீராட்டி, அலங்கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தினனாக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வது போல. வேதச்சடங்கில் கடவுள் உருவாரம் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. எல்லாக் கடவுள் களுக்கும் நெருப்பு தான் முகவர். ஆகம வழிபாடானது எந்தக் கடவுளை வழிபடுகிறோமோ அதன் படிமம் அல்லது அதனை நினை வூட்டுவதும் கட்புலனாவதுமான ஒரு பொருளுக்கு முன்னர்த் தான் செய்யப்பட வேண்டும். அக்கடவுளைக் குறிக்கும் தாயத்து, கருவி (வேல், தடி), உயிருள்ள மரம் மரக்கட்டை, கல், ஆறு ஓடை, லிங்கம், சாளகிராமக்கல் என்று எதை வேண்டு மானாலும் வழிபடலாம். குறிப்பாக வழிபடுபவர் அக் கட் வுளுக்கு என்ன உருவத்தைக் கற்பித்துக் கொள்கிறார்களோ அந்த வடிவம் வரைந்த ஓவியம், அல்லது அவ்வடிவத்தில் அமைந்த உரு வாரம் (செங்கல் - சுண்ணாம்பு, கல் = சமஸ் கிருதத்தில் சிலை, மாழை எதில் வேண்டுமானாலும் செய்யப் பட்டது) இவையே வழிபடப்படுகின்றன. வேதாந்தம் 5. வேதத்தின் இறுதிப்பயன் வேதாந்தம். வைதீக கர்மத்தின் பயன் ஞானம். ஞானத்தின் மூலமாகவே சாகாநிலை, முக்தி, எய்தலாம். தம் ஏவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்யாஹ் பந்தா அயனாய வித்யதே (அவனை அறிந்தால் சாகா நிலை அடையலாம்; அவனை அடைய வேறு வழி இல்லை .) ஆகம வழிபாட்டின் பயன் பக்தி ; இடைவிடாது அவனை நினைத்து வந்தால் சாகா நிலை அடைய லாம். கிருஷ்ணன் இதனை 'ஏகபக்தி" என்கிறான். இவ்வாறு முக்தி அடைய வேண்டுமானால் உபநிஷத்துக்கள் கூறும் 32 வித்யை (முறைகளில் சிலவற்றைக் கைக் கொண்டு ஒழுக வேண்டும். ஆகமங்களின் சரியா, கிரியா (முதல், இரண்டாவது) புத்தகங்கள் சிவன் விஷ்ணுவை வழிபடும் முறைகளைத் தரும் கின்றன. பக்தியுடன் சிலருக்கு யோகமும் (ஓகமும்) தேவை யென்பதால் எந்த ஆகமத்திலும் மூன்றாம் பகுதி யோகம் பற்றியது. நான்காம் பகுதி ஞானம் பற்றியது. ஆகமங்களின் ''ஞானம்' மேற்சொன்ன வேதாந்த ஞானம் அன்று; ஆகமக் கோட்பாடுகளின் படியமைந்த மெய்யியல் கொள்கைகளுக் கிசைந்த ஞானமே. வேதாந்தத்தின்படி புடவியில் (பிரபஞ்சத் தில்) உள்ளே ஒரே ஒரு மெய்மை பிரம்மம் மட்டுமே. ஆகமக் கொள்கையோ தத்துவதிரயம் ஆகும். அதாவது ஈசுவரன், சீவாத்மா, பிரகிருதி ஆகிய மூன்று மெய்மைகள் உள்ளன. ஒவ்வொரு ஆகமத்திலும் யோகம், ஞானம் பற்றிய பகுதிகள் உள்ளன வாயினும் ஆகமங்களே பக்திமார்க்கத்தின் ஆதாரமான புனித நூல்களாகும் (வேதாந்த ஞானமார்க்கத்தின் ஆதாரமான புனித நூல்களாகிய உபநிஷத்துக்கள் போல). ஆகமங்கள் மக்கள் அனைவருக்குமானவை, எளியவை. உபநிஷத்துக்கள் மிகச் சிலருக்கே பொருந்துபவை; அவை காட்டும் வழி கடினமானது. கீதையில் கிருஷ்ணன் சொல்வது "வெளிப்படையாகத் தெரிய யாத பிரமத்தைத் தேடுபவன் அடைவது பெருந்துன்பம். அதனைத் தேடும் மார்க்கம் உயிரிகளுக்குத் தருவது துயரமே" 6. வேத சமயப்படி வருணங்கள் நான்கு ; நான்காவது சூத்திர வருணத்தினர் வேதம் - வேதாந்தம் பயிலக் கூடாது. இதனால் வருணாசிரம முறை உருவானது. ஒவ்வொரு வருணத்துக்கும் விதிக்கப்பட்ட நடைமுறை வேறு. சன்னியாசம் பிரா மணர்களுக்கு மட்டுமே உரியது. சன்யாசத்தின் பின்னரே முக்தி கிட்டும்; ஆக பிராமணருக்கு மட்டுமே முக்தி. ஆகமக் கொள்கை இதற்கு மாறானது. யாரும், சண்டாளன் உட்பட, விஷ்ணு, சிவன் உருவாரத்தை வைத்துப் பூசை செய்யலாம். (காளஹஸ்தி) சிவனுக்கு ஊன் படைத்து முக்தி பெற்றான் வேடன் கண்ணப் பன்; பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ஆன கிபி 8ம் நூற்றாண்டுத் திருப்பாணாழ்வார் திருவரங்கம் கோயிலுக்குள் நுழைந்தாலே தீட்டு உண்டாக்கும் சாதியினர்) ஆகமங்கள் நான்கு வருணப் பாகுபாட்டை ஏற்கவில்லை. வேதங்களின் பகுதியான வேதாந் தமோ சூத்திரர்களுக்குரியதல்ல. பதராயணன் வேதாந்த சூத்ரம் (iii) 35 - 38ல் 'சூத்திரனுக்கு சம்ஸ்காரங்கள் உரியவையல்ல ; எனவே வேதம் படிக்கவும் கூடாது, கேட்கவும் கூடாது என் கிறான். ஆகமங்களோ அனைத்து மக்களுக்கும் உரியவை இன்றும் சிவதீக்கை பெற்ற பறையன் பிராமணனுக்கு தீக்கை கொடுத்து அவனுக்கு குரு ஆகலாம். ஆகம் சமயத்தார் அனைத்துச் சாதியினரிடமும் சன்யாசமும் பரவியது. (வைணவத் துறவி ஏகாந்தி; சைவத் துறவி சிவயோகி). ஆகமக் கோட் பாட்டின்படி முக்தி பெற சன்யாசியாக வேண்டுமென்ற கட் டாயம் இல்லை; பக்தி அனைத்துச் சாதியினருக்கும் பொது. இல்லறத்தானும் பக்தி செலுத்தியே முக்தி பெறலாம். சில பக்தர் துறவிகளானது ஏன்? ஆகமங்களின் படி, யோக மார்க்கமும் முக்திக்கு ஒரு வழியாகும். துறவி வாழ்க்கை யோக மார்க்கத்துக்கு உகந்தது; எனவே யோகமார்க்கத்தின் மூலம் முக்தி பெற விரும்பிய பக்தர்களும் துறவிகளாயினர். வைதீகர்களுக்கும் ஆகமவாதிகளுக்குமிடையே போட்டி : 7. பழங்காலத்தில் வைதீகர்களுக்கும் ஆகமவாதிகளுக்கும் இடையே பெரும் அளவுக்குப் பகை இருந்து வந்தது. ஆகம வாதிகள் தெய்வத்தின் பெயரால் யாகங்களில் ரத்தம் சிந்துவது, ஊனுண்ணல் (குறிப்பாக மாடுகளின் ஊனை உண்ணல் ஆகிய வற்றை எதிர்த்தனர். அவர்கள் எதிர்ப்பை மாபாரதமும் குறிப் பிடுகிறது. பிற்காலத்தில் வைதீக - ஆகம நெறிகளுக்கு இடைப் பட்ட ஒரு வழிமுறை உருவாக்கி யாகங்களில் உயிருள்ள ஆடு மாடுகளுக்குப் பதிலாக மாவால் செய்த 'பிஷ்டபசுக்கள் பயன் படுத்தப் படலாயின. ஆகமவாதிகளின் ஒரு பிரிவினரான பாகவதர்களின் புனித நூலே பகவத் கீதை ஆகும். பாகவதர்களின் பக்தி, வேதாந்த ஞானம், சாங்கியர்களின் நுண்ணிய மெய்யியல் இவையனைத்தையும் இணைத்து ஒரே மெய்ம் மையின் தனித் தனி வடிவங்களே இம்மூன்றும் என்றவாறு அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான் கண்ணன். எனினும் ஆகமக் கொள்கை யின் காரத்தை விடாமல் வேத கர்ம காண்டத்தை கீதை கடுமை யாகக் கண்டிக்கிறது: - "ஞானமற்றவர்கள் வேதாந்த அடிப்படையில் ஏட்டுச் சுரைக்காயாக "கர்ம காண்டம் ஒன்றே வழி' என்பர். எனினும் அவர்கள் நெஞ்சில் உள்ளது ஆசை. கரும் பலனாக சுவர்க்க போகத்தையும் மறுபிறவியையும் இச்சித்து எண்ணற்ற சடங்கா சாரங்களைப் பின்பற்றுகின்றனர். போகமும் அதி காரமும் அவர்கள் நெஞ்சை ஆட்டிப் படைப்ப தால் அவர்கள் புத்தி சாந்தமான சிந்தனையையும் ஞானத்தையும் நாடுவதில்லை. முக்குண வசப்பட்ட வற்றையே வேதம் விளம்புகிறது. அர்ச்சுனனே நீ முக்குண வசப்பட்டவற்றுக்கு மேலானவற்றையே நாடுவாயாக.'' வைதீகர்கள் ஆகமவாதிகளை மிக இழிவாகக் கருதினர். மந்திரம் ஓதாதவரும் " ம்ருத்ரவாசரும் ஆன தஸ்யூக்களை ஆரியர் இழிவாகக் கருதினர் அன்றோ . அதன் தொடர்ச்சியே இது. யமுனாசார்யர் காலத்திலிருந்தே வைதீக, ஆகம மார்க்கங்கள் இணைந்து விட்ட போதிலும் பழைய உணர்வு இன்றும் உள்ளது. சிவன் விஷ்ணு கோயில் பூசை செய்பவர்களை வேதாந்திகள் இன்றும் தங்களை விடக் கீழ்ச் சாதியினராகவே கருதுகின்றனர். எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்கு முன்வரை (அதாவது 1880ல்) அத்வைத வேதாந்தக் கொள்கை யினர் எந்தக் கோயிலுக்குள்ளும் செல்லார். வேதாந்தக் கொள்கையே ஆகம வழிபாட்டைக் கண்டித்தது. பதராயணன் பாசுபதம், பாஞ்ச ராத்திரம் இரண்டையும் கண்டித்துள்ளான். ஆகமங்கள் எப்பொழுது தோன்றின 8. முதல் உலகப் போரில் (1914 - 18) சில கோடி மக்கள் செத்தபின்னர் இன்று உலகில் பல் துறை மாற்றங்களைக் காண் கிறோம். அது போல பாரதப் போரில் ஏற்பட்ட பெரும் உயி ரிழப்புக்குப் பின்னர் இந்திய மக்கள் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ரிஷிகள் காலம் போயே போய்விட்டது. வேத கர்ம காண்டம் இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் கிடைக்கு மெனக் கூறிய கரும்பலனாகிய புலனுகர்ச்சியின் மீது மக்களிடம் வெறுப்புத் தோன்றியது. மாறும் பிருகிருதி நடுவே மாறாது நிலையாக உள்ள பரபிரம்மம் மீது சிந்தனை செலுத்திய ஞானி கள். உபநிஷத்துக்களில் 32 வழிகளை (வித்யா) உருவாக்கினர். உபநிஷத்துக்கள் கர்ம காண்டத்தில் பிறந்தவை; எனவே அக் காண்ட வாசனை சாந்தோக்ய, பிரஹதாரண்ய உபநிஷத்துக் கள் கூறும் "வழிகளில் உள்ளன. மக்களுள் பெரும்பாலோர் எளிமையானவர்; உபநிஷத்துக்கள் கூறும் மிதமிஞ்சிய தத்துவக் கருத்துக்களும், வழி முறைகளும் அவர்கள் கைக்கொள்ளக் கூடியன் அல்ல. அவர்களுக்காகவே ஆகமக் கருத்துக்களும் வழிமுறைகளும் உருவாக்கப்பட்டன - சாதாரண உலகியல் வாழ்க்கையிலிருந்து . ஆசானையும் அரசனையும் போற்றும், வழிபடும் முறையைப் பின்பற்றிக் கடவுள் வழிபாட்டு முறைகளும் ஆகமங்களில் உருவாயின. பாரதப்போர் முடிந்த காலகட்டத்தில் உபநிஷத்துக்களும் தோன்றின; ஆகமங்களில் முதன்மையானவையும் தோன்றின. ஆகமங்கள் எதிலிருந்து தோன்றின? 9. இதற்கு விடை தருவது சற்றுக் கடினம். ஆகம வழி பாட்டில் அக்னிக்கு இடமில்லை; வேதமந்திரமும் இல்லை. எனவே அது தஸ்யூக்களிட மிருந்து உருவாகியிருக்க வேண்டும்; ஆரிய வழிபாட்டு முறை உருவாவதற்கு முன்னர் தஸ்யூக்கள் வழிபாட்டு முறைதான் இருந்திருக்கும். வேதங்களும் அவற்றிலிருந்து உருவான மாபெரும் வேதாங்க சாத்திரங்களும் நம் கண்முன் மலைபோல் நிற்பதால் வேத காலத்தில் தஸ்யூ வழி பாட்டு முறையின் நிலை என்ன என்று நாம் நினைப்பதில்லை. (ஐரோப்பிய அறிஞர்களும் ஆரியர் - தஸ்யூக்கள் சச்சரவு பற்றியும், முன்னவர் பின்னவரோடு எப்படிக் கலந்திருப்பர் என்று உன்னிப்பது பற்றியுமே கவனம் செலுத்துகின்றனர்!) வேத வழிபாடு சார்ந்த ஸ்ரெளத யக்ஞங்கள் என்றும் பெரும்பான்மை மக்கள் வழிபாட்டு முறையாக இருந்ததில்லை. பிராமண ரித் விக்குகள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். அந்த யக்ஞங்களை நடத்தும் செலவை அரசர்களும் வணிகர்களும் ஏற்ற போதிலும் அவர்கள் யக்ஞம் நடத்துவதில் பங்கேற்க இயலாது. இல்லத்தில் நடத்தும் அக்னிச் சடங்கு மந்திரங்களை அதர்வண வேதம் தந்த போதிலும் அவற்றை மக்களுள் பெரும்பான்மையினர் பின் பற்றியதற்கு ஆதாரமில்லை. வேதகாலத்திலும் பொதுமக்கள் தஸ்யூவழிபாட்டு முறையையே பின்பற்றி வந்திருக்க வேண் டும். அவ்வழிபாட்டு முறை எப்படியிருந்திருக்கும்? தமிழ் நாட் டின் தொன்மைச் சமய வழிபாடு பற்றி ஏற்கெனவே கூறியுள் ளோம். அது போன்றுதான் வட இந்தியாவிலும் தஸ்யூக்கள் வழிபாட்டு முறை இருந்திருக்க வேண்டும். பாட்டு, கூத்துச் சடங்குகளுடன் இன்றும் தம் தெய்வத்துக்கு உணவு படைத்து வணங்கும் வழிபாட்டு முறை போன்றே தஸ்யூ வழிபாட்டு முறை இருந்திருக்கும். சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்ட பொழுது நடந்த சமயச் சடங்குகளை வால்மீகி வருணிப்பது தஸ்யூக்கள் வழி பாட்டு முறைதான். 10. மாபாரதப் போர் முடிந்த பின்னர் அக்னிச் சடங்குகள் குறைந்து கொண்டே வந்தன; அதனால் தொழில் இழந்த பிராமணர் அக்னி சாராத ஆகம வழிபாட்டு முறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். நுண்ணிய ஏட்டுச் சுரைக்காய் மெய்ம்மைகளையே கைக்கொண்டு வாழும் உயர்ந்த மனநிலையுடையோர் எப்பொழுதும் ஒரு சிலரே. எளிய உருக்கமான மனநிலை கொண்டோரே பெரும்பாலோர். அவர்களை பக்தி மார்க்கம் கவர்ந்தது. இதுவும் பிராமணர் பக்தி மார்க்கத்திற்குள் புகுந்ததற்கு ஒரு காரணமாகலாம். புகுந்த பின்னர் திரி மூர்த்திக் கோட்பாட்டை உருவாக்கினர் (பிரகிருதியின் முக்குணம் பற்றிக் கூறிய சாங்கியக் கோட்பாட்டைப் போன்று) விஷ்ணுவின் அவதாரங்கள் பல (பாகவத புராணப் படி 22) என்று கூறினர்; சிவன் அவ்வப்பொழுது தற்காலிகமாக மனித உருவம் எடுப்பான் என்றனர். வைணவ ஆகமங்கள் 108, சைவ ஆகமங்கள்; (பின்னர் எழுந்த) சாக்த ஆகமங்கள் 77, ஆகியவற்றை உருவாக்கினர். படைப்பதுடன் பிரமன் வேலை முடிகிறது; அவன் முக்தி தருபவன் அல்லன். எனவே பிரமனை வழிபட ஆகமங்கள் ஏற்பட்டில. சிவன் கிருஷ்ண வழிபாட்டைப் பாணினியே குறிப்பிட்டுள்ளார். 11. மெதுவாக, படிப்படியாக வேதாந்தக் கோட்பாடும் ஆகமக் கோட்பாடும் ஒன்றை ஒன்று நெருங்கின. புராணங் களில் அவை இரண்டும் காணப்படுகின்றன; ஆனால் ஒன்றாக இணையவில்லை. கிபி 8ம் நூற்றாண்டு சார்ந்த சங்கராச் சாரியின் காலத்தில் கூட அவை ஒன்றாகவில்லை; பதராயணன் வேதாந்திர சூத்திரத்திற்கு உரை எழுதும் அவர் பதராய ணனைப் போலவே கூறுகிறார் - பாசுபதமும் பாஞ்சராத்திரமும் பதித சமயங்கள் என்று. எனினும் அவருடைய பிரபஞ்ச ஹ்ருதயம் ஆகம வழிபாட்டு நூலே என்பதுடன் அவரை சண்மதஸ்த பனாச்சார்யர் என்று அழைப்பதையும் கருதுக. விஷ்ணு, சிவன், சக்தி, கணபதி, சுப்ரஹ்மண்யன், சூர்யன் இவர்கள் அறுவரின் வழிபாட்டு முறைகளை அவர் ஒழுங்கு படுத்தி தாம் தொடங்கிய மடங்களிலும் அம்முறைகளை நிலைபெறவைத்தார். அவர் வேதாந்த வழிபாட்டையும் ஆகம வழிபாட்டையும் தனித்தனியாகவே வைத்தார். விசிஷ்டாத்வை தம் எனப்படும் வைஷ்ணவ வேதாந்தத்தை நிறுவிய யமுனா சாரியர்தான் முதன்முதலாகவைஷ்ணவ (சாத்விக ஆகமங்களும் வேதங்களை யொத்த பிரமாணங்கள் தாம் என்று வாதிட்டவர்; அவரைத் தொடர்ந்த ராமானுஜாச்சாரியார் இரு வழிபாட்டு முறைகளையும் முதன் முதலில் ஒன்றாக இணைத்தவர். ஆயினும் தென் இந்தியாவிற்குள் ஆகம வழிபாட்டு முறை பரவி வெகு காலம் கழித்தே இது நடந்தது; எப்படிப் பரவியது என்பதைப் பின்னர்க் காண்போம். 12. ஆகம வழிபாட்டுமுறை வடநாட்டில் தொடங்கியதை இதுவரை விரிவாகக் கண்டோம். (ஆரியருக்கு முந்தி இந்தியா வில் வழங்கிய வழிபாட்டு முறைகளிலிருந்து தழைத்த அம்முறை கிபி 5 - 6 நூற்றாண்டுகளில் தென்னாட்டு மக்கள் மனதையும் கைப்பற்றியது; அது மட்டுமல்ல பின்னர் வேதாந்தக் கலப்புடன் அது வடநாட்டிலும் பரவி கடந்த 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதுமே "வாழும் இந்து மதத்தின் வழிபாட்டு முறையாக ஆகம வழிபாடே விளங்கி வருகிறது. இயல் 9 வட இந்தியாவும் தென்னிந்தியாவும் கிமு 1000 - கிமு 500 ஆபஸ்தம்பரும் பௌதாயனரும் 1. சூத்ரகாரர்களில் ஏறத்தாழ இறுதியானவர் ஆன ஆபஸ் தம்பா கோதாவரிப் பள்ளத்தாக்கின் மேலைப் பகுதியில் வாழ்ந்த (யஜுர் வேதம் சார்ந்த) தட்சிணாத்ய பிராமணருக்காக தர்ம சாஸ்திரம் வரைந்தார். பியூலர் கருத்துப்படி அவர்காலம் கி.மு. 5ம் நூற்றாண்டுக்குப் பிந்தியிருக்க முடியாது. பாரதப் போருக்குப் பின் ஐந்தாவது தலைமுறை அரசனும், கிமு 13 ம் நூற்றாண்டு சார்ந்தவனும் ஆன சுவேதகேதுவை ஆபஸ்தம்பர் அவர (அண்மைகாலத்தவன்) என்கிறார். ஆபஸ்தம்பர் பாணினி இலக்கணத்தைப் பின்பற்றவில்லை என்றும் அவருக்கு அவ்விலக் கணம் தெரிந்ததாகத் தோன்றவில்லை என்றும் பியூலர் கூறு வதால் ஆபஸ்தம்பர் பாணினிக்கு முந்தியவர் எனலாம். பாணினி கி.மு நாலாம் நூற்றாண்டவர் என்ற தங்கள் ஆதாரமற்ற முடி வையே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர் கொண்டுள்ள போதிலும் கோல்டு ஸ்டக்கர், ஆர். ஜி. பந்தார்கர் ஆகிய இருவருமே அம் முடிவுக்கான ஆதாரங்களை வலுவற்றவை எனக் காட்டி பாணினி காலம் கிமு 7ம் நூற்றாண்டு தான் என நிறுவியுள்ளனர். பாணினிக்கு ஆபஸ்தம்பர் முந்தியவர் என்றால் நான் மேலே சொன்ன காலத்திற்கும் அவர் முந்தியவர் ஆகலாம். பௌதாயனர் ஆபஸ்தம்பருக்கும் இரண்டு நூற்றாண்டு முந்தி யவர். இவ்விரு சூத்ரகாரருமே கிருஷ்ண (கருப்பு) யஜுர் வேதத் தின் தைத்திரிய சாகா (சானகரவைச் சார்ந்தவர்கள். (தித்திரி - தைத்திரியம் ; பாரதப் போரில் பாண்டவர் பக்கம் போரிட்ட வர்களுள் தென்னாட்டவரான தித்திரிகளும் ஒரு குழுவினர். அவர்கள் சாகையே தைத்திரியம் எனப்பட்டது. எனக் கருது கிறேன்; தித்திரி பறவைப் பெயர், என்ற அடிப்படையில் கட்டப் பட்ட கதை போலி) இந்த சாகையினர் பெரும்பாலும் விந்திய மலைக்குத் தெற்கே யுள்ளவர்களே. வட இந்திய பிராமணர்களுள் இந்தச் சாகையை சார்ந்தவர்கள் கடந்த 1000 ஆண்டுகளுக்குள் தெற்கிலிருந்து வட இந்தியா சென்று குடியேறியவர்களா யிருக்க வேண்டும். பாரதப் போர் காலத்திலிருந்து (அதாவது வியாசர் சீடன் வைசம்பாயன் காலத்திலிருந்து) தைத்திரிய சாகை தொடக்கம் முதலே தென்னிந்தியர் சாகையே. என்னை? ஒரு சாகையினர் அனைவரும் வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக குடியேறியிருக்க முடியாது; அப்படி எந்தப் புராணமோ செவிவழிச் செய்தியோ கூறவில்லை. ஆக கிமு 14 - 13 நூற்றாண்டுகளிலேயே தென் இந்தியா விற்கும் வட இந்தியாவிற்கும் நல்ல தொடர்பு இருந்ததனால் தான் தக்ஷிண பிராமணர்கள் கிருஷ்ணயஜுர் வேத தைத்திரிய சாகை யினர் ஆக முடிந்தது. பௌதாயனர் காலம் கிமு 900 எனலாம். (இராமன் காலத்திற்கு முன்னரே கோதாவரி ஆற்றங்கரையில் ஆரியர் வாழ்ந்தனர் ; இராமனின் தென்னாட்டு வெற்றிகள் ஆரியர் அங்கு மேலும் வலுப்பெற உதவியிருக்கும்; வேத வியாசர் - வைசம்பாயனர் காலத்திலேயே கிருஷ்ணயஜுர் வேத சாகை யினர் கோதாவரிப் பகுதியில் வாழ்ந்தனர்; இவை பௌதாயனர் காலம் கிமு 900 என நான் கருதுவதை ஆதரிக்கின்றன. ஆனால் இன்று பௌதாயன சூத்ரம் என வழங்கும் நூல் அக் காலத்தைச் சார்ந்தது எனக் கூற இயலாது. பிற்காலத்தில் அந்நூலில் ஏறிய மாற்றங்களும் இடைச் செருகல்களும் மிகப் பல. சில சடங்குகளின் விரிவான விவரங்களே அவை இடைச் செருகல் என நிறுவுகின்றன. வாரத்து நாட்களின் பெயர் வரிசைப்படி கோள்களின் பட்டியல் தரப்படுவது கண்டிப்பாக இடைச்செருகலே. தென்னாட்டு ஆரியர் வழக்கங்களும் வடநாட்டு ஆரியர் வழக்கங்களும். 2. ஆரியச் சடங்குகளை மேற்கொண்ட பின்னரும் தக்ஷிண பிராமணர் விடாமல் கைக்கொண்டு ஒழுகிய பழைய தஸ்யூ பழக்கங்கள் ஐந்தை பௌதாயனர் குறிப்பிடுகின்றார்: 1) உபநயனம் பெறாதவருடன் உடன் இருந்து உண்ணுதல் 2) பெண்களுடன் இருந்து உண்ணுதல் 3) பழைய சோறு உண்ணுதல் (தவிடு நீக்காத புழுங்க லரிசிப் 'பழையது சத்துள்ள உணவே. மாற்ற இயலாததை இன்றைய இட்லி தோசை, காபி நாகரிகம் மாற்றி விட்டது) 4 & 5 தாய் மாமன் மகன் / அத்தை மகளுடன் கேலி பேசுதல், (indulgence in love passages) பௌதாயனத்தை பியூலர் ''மாமன் மகளை / அத்தை மகளை மணத்தல்" என்று தவறாக மொழி பெயர்த்துள்ளார். தென்னிந்தியர் அனைவரிடமும் அந்த மணமுறை வழக்கிலிருந்த முறையே. தென்னிந்திய பிராமணர் பல பிரிவினரிடமும் அம்முறை கட்டாயம் ஆகும். (தெலுங்கு சூத்திரர் அக்காள் மகளையும் மணப்பர், தென்னிந்திய பிரா மணருள் சில பிரிவினரும் அவ்வாறே. தெலுங்கு சூத்திரர் பேச்சு வழக்கில் கோடிலு = மருமகள் மனைவி) தமிழில் அத்தான் = மனைவியின் அண்ணன் சகோதரி கணவன்; முறைப் பெண் மாப்பிள்ளையை மணக்காத நேர்வுகளிலும் அவர் களிடம் கேலி பேசுவதை தென்னாட்டுப் பிராமணர் தேசவழக்க மாக அனுமதித்தனர் என்கிறார் பௌதாயனர். தொடக்ககாலப் பிராமணர் ஊன் உணவு 3. இந்தக் கால கட்டத்தில் தென்னிந்திய பிராமணரும் வட இந்திய பிராமணரைப் போல ஊன் உண்டனர். பௌதாயன சூத்ரம் உண்ணக்கூடிய விலங்குகள் பறவைகளின் நீண்ட பட்டி யலைத் தருகிறது. ஆபஸ்தம்பரும் ஏறத்தாழ அவ்வாறே கூறு கிறார். ஆபஸ்தம்பர் சூத்திரம் 1.5.17.30 பசு, காளைகளை உண்ணலாம் என்று தெளிவாகக் கூறுகிறது. (சதபத பிராமணம் III, 1.2.21 ல் யாக்ஞ வல்கியர் கூறுவது: (பசு, காளை ஊன்) மெதுவாக இருந்தால் நான் உண்பேன் என்பதாகும்) ஆபஸ் தம்பர் மாட்டு ஊன் பிதிர்களை ஒரு மாதம் திருப்திப் படுத்து கிறது என்றும், எருமை ஊன், காண்டாமிருக ஊன் போன்றவை இன்னும் அதிக நாட்களுக்கு திருப்திப் படுத்துகிறது என்றும் கூறுகிறார். தமிழ் நாட்டுப் பிராமணர் எப்பொழுது ஊன் உண்பதைக் கைவிட்டனர்? புறம் 14, 113 பாடல்கள் (கிபி 5ம் நூற்றாண்டுப் பிராமணர் ஆகிய கபிலர் ஊன் உண்டதாகக் கூறுகின்றன. கிபி 5 - 6 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டுக்குள் நுழைந்த ஆகம வழிபாட்டு சிவன் - திருமால் பக்தி இயக்க பிராமணர்கள் ஊன் உண்ணாமையை வலியுறுத்திய சமணத்தை வீழ்த்துவதற்காகவே ஊன், மது மறுப்பை முதன் முதலில் தம் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டனர் எனலாம். வர்ணங்கள் 4. மேற்சொன்ன தென்னிந்திய சூத்ரகாரர்கள் எழுதியவை கோதாவரிப் பள்ளத்தாக்கு மேலைப் பகுதியில் இருந்த பிராமணர்களுக்காகத்தான். (அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த பிராமணர் மிகச் சிலரே) நான்கு வருணங்கள், பல வகையான கலப்படச் சாதியினர் பற்றியெல்லாம் அவை குறிப்பிட்டாலும் அதுவெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருந்திருக்கும். உண்மையில் அவர்களுடைய விதிகள் பிராமணருக்கு மட்டுமே. ஆரிய நால்வருணம் ஆர்யவர்த்தத்தில், அதுவும் வேத காலத்தில் மட்டுமே இருந்தது. மகாபாரதப் போர் முடிந்த பின்னர் (அர்ச்சுனன் எதிர்பார்த்திருந்தபடி) வர்ண சங்கரம் - சாதிகள் வரம்பு மீறிக் கலத்தல் - ஏற்பட்டது. தென் னிந்தியாவில் நால்வருணம் சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருந்ததே யொழிய நடைமுறையில் இல்லை. கிபி 5ம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டுப் பிராமணர் தமிழர்களிடமிருந்து முற்றிலும் தனித்தே வாழ்ந்தனர். தமிழகத்திற்குள் ஆரிய அமைப்புகள் நுழைவதற்கு நெடுங்காலம் முன்னர் இருந்தே தமிழக மக்கள் ஐந்து திணைமக்களாகப் பிரிந்து தனித்தனிப் பண்பாடுகளுடன் (அனைத்தும் ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டவை) வாழ்ந்தனர். அந்தத் தமிழ் பண்பாட்டுப் பேராற்றோடு சேர்ந்த ஆரியக் கோட்பாட்டுச் சிற்றோடையால் ஆற்றின் தன்மையை மாற்ற இயலவில்லை. பிரயாகையில் கங்கையும் யமுனையும் இணைந்த போதிலும் பல மைல் தூரம் இரண்டு ஆறுகளின் நீரும் தனித்தனியாக (இரண்டறக் கலக்காமல்) செல்கின்ற னவே அதுபோல, பல நூற்றாண்டுகள் தமிழ்ப் பிராமணர்கள் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பொதுமையில் கலக்காமல் தனியாகவே வாழ்ந்து வந்தனர்; தமிழ் இலக்கியத்திலும் அவர் தாக்கம் இல்லை. பாணினியும் தென் இந்தியாவும் 5. பாரதப் போர் முடிந்த பின்னர் நந்தர் ஆட்சிவரை வட இந்திய மன்னர்களோடு தமிழக மன்னர்களுக்குத் தொடர்பு ஏதும் இல்லை . எனவே தான் கிமு 1000 - 500 கால அளவில் தென்னாட்டவரைப் பற்றி பாணினி முதலியவர்கள் குறிப்பிட வில்லை. கி.மு. 7ம் நூற்றாண்டு சார்ந்த பாணினி நர்மதை யாற்றுக்குத் தெற்கிலுள்ள எந்தப் பகுதியையும் (அஸ்மகவைத் தவிர) குறிப்பிடவில்லை . பாண்டிய, சோழ, கேரள என்னும் மூன்று சொற்களைப் பற்றியும் பாணினி குறிப்பிடவில்லை யாகையால் அவருக்கு அம் மூவேந்தர்களைப் பற்றித் தெரியாது; ஏன் கிமு. 7ம் நூற்றாண்டில் வட நாட்டில் இருந்த ஆரியருக்குத் தெரியாது என்பர் டி - ஆர். பந்தார்கர் - இது சரியல்ல பாணி னிக்கு இச்சொற்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் அம் மூன்று தமிழ்ச் சொற்களும் சமஸ்கிருதம் அல்ல ஆகையால் விட்டிருக்கலாம். பாணினி தம் இலக்கணத்தில் குறிப்பிடாத நாடுகளின், இடங்களின் பெயர்கள் அவருக்கும் தெரியாது, ஆரியருக்கும் தெரியாது என்பது சரியான வாதமன்னு. (ரிக் வேதம் ஆல மரம், உப்பு, போன்ற வற்றையும் ஆரவல்லிமலை, விந்தியமலை ஆகியவற்றையும் குறிப்பிட வில்லையாகையால் ரிக் வேத மந்திரங்களை எழுதிய பொழுது இந்தியாவில் இவை யெல்லாம் இல்லை என்று கொள்ள முடியுமா என்பார் பர் ஜிதர்!) பாணினிக்கு முந்திய ஆபஸ்தம்பரும் பாணினி காலத்திய பௌதாயனரும் தென்னாட்டில் வாழ்ந்து வந்த ஆரியரே. எல்லாவற்றையும் பாணினி சொல்லியிருந்தால் காத்யாயனர் வார்த்திகத்தையும் பதஞ்சலி மகா பாஷ்யத்தையும் எழுதவே தேவைப்பட்டிருக்காது அன்றோ! ஜாதகக் கதைகளும் தென் இந்தியாவும் 6. போதி சத்தர் கோதமர் பின்னர் புத்தர் ஆனார். அவர் முன் பிறவிகளைப் பற்றியவை ஜாதகக் கதைகள். அக் கதைகளெல்லாம் புத்த சமயத்துக்கு இசையுமாறு கிமு 4ம் நூற்றாண்டில் மாற்றி எழுதப்பட்ட மிகப் பழைய வட இந்திய நாட்டுப்புறக் கதைகள். வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக் கும் (அக்கால கட்டத்திற்கு முன்னரும் இருந்தது போல்) அக்கால கட்டத்திலும் நெருங்கிய தொடர்பு இருந்ததைச் சில கதைகள் காட்டுகின்றன:- தம்ப பண்ணித் தீவில் இருந்த யக்கினி கள் (பழைய ராமாயணக் கதைகளின் தாக்கத்தால் பழங் குடிகளை யக்கினி என்றனர்) கலங்கவிழ் மாக்களுக்கு உண வளித்து ; திருமணம் செய்து பின்னர் அம்மாலுமிகளையே தின்று வந்தனர்; இருப்பினும் சிலர் இலங்கை சென்று துறவி களாயினர்; வில் வீரனாகப் பிறந்த போதிசத்தர் தக்க சீலத்தில் பயின்று ஆந்திரம் சென்று அனுபவம் பெற்றார்; சேரி (சேரர்?) நாட்டில் பானை சட்டி விற்பவராகப் பிறந்து ஆந்தபுரம் (ஆந்திரம்) சென்றார். பிராமண மகாசாலா ஒருவன் மகனாகப் பிறந்த இன்னொரு போதி சத்தர் தனது தங்கை யசதவதீயுடன் துறவியாகி வாரணாசி சென்று, பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு சென்று காவேரப் பட்டணம் அருகே ஒரு உய்யானத்தில் வசித் தார். அங்கும் சீடர்கள் தொந்தரவு செய்யவே தம்பபண்ணி (இலங்கை ) அருகே கார தீவு (அகிதீவு) = நாகதீபம் அதாவது கேரளக்கரை) சென்று அங்கே ஞானம் பெற்றார் (சிலர் அழுத்தி தான் அகத்தியர் என ஆதாரமின்றிக் கூறுகின்றனர்) சீகபாகு 7. புத்தர் பரிநிப்பாணம் அடைந்த (இறந்த) அதே நாளில் கிழக்கு வங்காள லால நாட்டிலிருந்து தீய செயல்களுக்காக தன் தந்தை சீக பாகுவால் கப்பலில் நாடு கடத்தப்பட்ட விஜயன் முதலில் மும்பாய் அருகே சுப்பாரக (சோபாரா ) அருகில் கரையிறங்குகிறான். வங்காளத்திலிருந்து இலங்கை செல்லும் கப்பல் எப்படி சுப்பாரகா போயிற்று? கிழக்குக்கரையில் இருந் ததும் பெரிப்ளஸ் குறிப்பிடுவதும் ஆன சோபத்மாவை தவறாக சுப்பாரகா என மகாவம்சம் குறித்திருக்கலாம். பின்னர் மீண்டும் கப்பலேறி வட இலங்கை தாம்பபண்ணியில் இறங்கினான் விஜயன். அங்கிருந்த யக்கர்களை வென்று அழித்து குடியேறுகிறான். தக்கிண மதுரைப் பாண்டவ (பதஞ்சலி 'பாண்டு - பாண்டிய' என்றது போல பாளி மகாவம்சமும் ''பாண்டவ - பாண்டிய" என்று கருதியது என்க.] மன்னனிடம் தனக்கும் பிறருக்கும் பெண் கேட்டு அனுப்புகிறான். அங்கிருந்து தமிழ்ப் பெண்கள் அணிகலன்கள், யானை, குதிரை, ரதங் களுடன் இலங்கை செல்கின்றனர். இது வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் நெருக்கம் தொடர்ந்து இருந்ததைக் காட்டுகிறது. விஜயன் பாண்டியரிடம் பெண் கேட்டு அனுப்பும் அளவுக்குப் பாண்டியரும் வட இந்தியரும் தெரிந்தவர்களாக இருந்ததையும் காட்டுகிறது. பாரத காலத்தில் அருச்சுனன் சித்திராங்கதையை மணந்தான்; நாக கன்னி உலூபி யோடு (விஜயன் யக்கினி குவண்ணாவை மணந்தது போல) தற் காலிக மணமும் செய்தான் என்று கண்டோம். பாண்டிய அரச குமாரியை விஜயன் தன் அரசியாகவே திருமணம் செய்து கொண்டான். இயல் 10 அயல் நாட்டு வணிகம் கிமு 1000 - 500 பாலஸ்தீனமும் இந்தியாவும் 1. கி.மு 10ம் நூற்றாண்டில் ஷீபா அரசி சாலமனுக்குக் கொடுத்த இரத்தினக் கற்களும், மிளகு, லவங்கம், போன்ற வையும் இந்தியாவிலிருந்து இந்தியர் கப்பல்களில் சென்று பின் ஆப்பிரிக்கா / அராபியா வழியாக பாலஸ்தீனம் சென்றிருக்க வேண்டும். சாலமனுக்காக ஓபிர் - லிருந்து ஹீராம் உடைய கப்பல்கள் கொண்டுவந்த அல்முக் (almug) மரம் அதாவது சந் தன மரம், பொன் ஆகியவையும் இந்தியாவிலிருந்து தான் போயிருக்க வேண்டும். சாலமனுக்காக வெள்ளி, யானைத் தந்தம், கருங்காலி, குரங்கு, மயில் போன்றவை தார்சீஷ் கப்பல்கள் கொண்டு வந்ததாக பைபிள் பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்பொருள்களும் இந்தியா, தென்னிந்தியாவிலிருந்தே சென் றிருக்க வேண்டும். இவற்றில் சில பொருட்களுக்கான ஹீபுரூ பெயர்கள் தமிழ் / இந்தியப் பெயர்களிலிருந்து உருவான வையே : தோகை (மயில்) - துக்கி அகில் - அகல் – இப் (சமஸ்கிருதம் யானை - ஹபின் ; ஷென் ஹபின் (யானைத் தந்தம்) சிந்து (துணி) - சதின் பிற்கால ஆவணங்களில் இவையெல்லாம் தென்னிந்தியா விலிருந்து மேலை நாடுகளுக்குச் சென்றதாகக் குறிக்கப் பட்டுள்ளது. கிமு 1000 - 500 காலத்திலும் அவ்வணிகம் நடந்திருக்கும். இந்தியாவும் அசீரியாவும் 2. சல்மனசர் II (கிமு 860) கல்தூணில் குரங்குகள், இந்திய யானை ஆகியவற்றின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தைகிலாத்பிலேசர் III கல்வெட்டில் அவனுக்குக் கப்பமாக வந்த பொன், இரத்தினக் கற்கள், துணி, வாசனைத் திரவியங்கள் முதலியவை குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல தென்னிந்தியாவிலிருந்து தான் சென்றிருக்க வேண்டும். தைரஸ் (Tyrus) சந்தையில் இந்தியாவிலிருந்து சென்ற உருக்கு, பொன் போன்றவை விற்கப்பட்டன. நினவே நகரை சொன்ன கரீப் (கிமு 704 - 681) விரிவாக்கிய பொழுது கம்பளிமயிர் மரம் !) - அதாவது பருத்திச் செடி - நட்டானாம். 3. கிபி 1ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து மேலை நாடுகளுக்கு மாடு, புலி போன்றவையும் புலி, சிங்கம் போன்ற வற்றின் தோலும் ஏற்றுமதியானதாக வார்மிங்டன் கூறுகிறார். இது போன்ற வணிகம் கிமு 1000 - 500லும் நடந்திருக்க வேண்டும். பிற பொருள்கள் : 4. பிற்காலத்திற் போல் மிளகு, இலவங்கம் போன்றவையும் அவரிச் சாயம் போன்ற சாயங்களும் கூட இந்தியாவிலிருந்து கிமு 1000 - 500 கால அளவில் மேலை நாடுகளுக்குச் சென்றிருக் கும் (ஆனால் அக்கால கட்டத்தைச் சார்ந்த ஆதாரங்கள் இல்லை). அக்கால கட்டத்தில் அவ்வணிகம் சோமாலியா, சோகோத்ரா தீவு, அராபியாவின் ஏடன் பகுதி வழியாக நடந்திருக்கும். 5. சோழ மண்டல, சேர நாட்டுக் கரைத் துறைமுகங் களிலிருந்து சீனாவுடன் இலவங்கம் போன்ற பொருள்கள் வணிகமும் நடந்து வந்திருக்கும் என நாம் உன்னிக்கலாம். இயல் 11 வடஇந்தியாவும் தென்னிந்தியாவும்: கிமு 500 -1 காத்யாயனரும் பதஞ்சலியும் 1 கிமு 4ம் நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்த காத்யாயனர் (இயற்பெயர் வரருசி ) பாணினியின் அஷ்டாத்யாயிக்கு வார்த் திகம் என்னும் விரிவாக்கத்தை வரைந்தார். காத்யாயன ருக்குப் பின்னர் பாணினிக்கு மகாபாஷ்யம் எழுதினார். பதஞ் சலி. காத்யாயனர் குறித்து, "ப்ரியதத்தித தாக்ஷிணாத்யாஹ்" (தென்னாட்டவர்களுக்கு தத்திதாந்த வடிவப் பெயர்கள் பிடிக்கும்) எ.கா.: "லோக வேதச"க்கு பதிலாக "லெளகீகவைதிகேசு'' என்று கூறுவார். காந்தாரப் பகுதி சார்ந்த பாணினி எழுதிய அஷ்டாத்யாயிக்கு வார்த்திகம் எழுதக் கூடிய அளவுக்கு சமஸ்கிருத இலக்கண ஆசிரியப் பரம்பரை அக்காலத்திலேயே தென்னாட்டில் இருந்தது என்பதை இது காட்டுகிறது. 2. பாண்ட்ய, சோட (சோழ , கேரள ஆகிய மூன்று அரச பரம்பரையினர் பெயர்களை சமஸ்கிருதத்தில் உருவாக்கு வதற்கான விதியை தென்னாட்டவரான காத்யாயனர் தான் தருகிறார். (பாணினி தரவில்லை ). சோட, கேரள ஆகியவற்றை நாட்டுப் பெயர்களிலிருந்து வருவிக்கிறார். ஆனால் பாண்டியன் என்னும் தமிழ்ப் பெயரை அறியாமை காரணமாக பாண்டு என்னும் சத்திரிய இனத்தினரின் பெயரிலிருந்து வருவிக்கிறார். இது தெரியாமல் டி. ஆர். பந்தார்கர் (கார்மிக்கேல் உரை 1918) வட நாட்டிலிருந்து தென்னாடு சென்ற பாண்டு என்னும் சத்திரிய இனத்திலிருந்தே பாண்டியர் மரபு தோன்றியது என்று முடிவு செய்துவிடுகிறார்! (போதாக்குறைக்கு, இந்தத் தவறான உன்னிப்புக்கு ஆதரவாக மெகஸ்தனிஸ் கற்பனைக் கதை ஒன்றை யும் சுட்டுகிறார். அக்கதையில் ஹெராக்லஸ் இந்தியாவுக்குச் சென்று பாண்டைய என்னும் மகளைப் பெற்று அவளுக்கு இந்தியாவின் தென் கோடிப் பகுதியை அளித்தான் என்று வருகிறது). ஹெராக்லஸ் தான் கிருஷ்ணன் என பந்தார்கள் கூறுவதும் அபத்தமே. (பந்தார்கள் மட்டுமல்ல வேறுபலரும் இன்ன கிரேக்கக் கடவுளும் இன்ன இந்தியக் கடவுளும் ஒன்று என்று ஆதாரமின்றி மனம் போன போக்கில் உன்னிப்பது வியப்புக்குரியது) 3. சோழ, சேர, பாண்டியர் குடி "படைப்புக்காலம் தொட்டு மேம்பட்டு வரும் குடி" என்று தமிழ் மரபு கூறுவதன் பொருள் 'அவர்கள் தோன்றிய காலம் இன்னவென்று அறிய வியலாத பழைமை யுடையது' என்பதேயாகும். (பிற்கால பிராமணர் மூவேந்தரையும் சூரிய சந்திர வம்சத்தினர் எனக் கதை கட்டினர்!). மூவேந்தர் குடிப்பெயர்கள் உண்மையில் இனக் குழுவினர் (Tribes) பெயர்களே. சோழர் காவிரிப்படுகையில் வாழ்ந்து உழவுத் தொழில் செய்த வேளாளர், ஆத்திமாலை அடையாளத்தினர். மேற்குக் கரைக் குறிஞ்சிப் பகுதியை ஆண்ட சேரர் குறவர்; பனம் பூ அடையாளத்தினர்; பாண்டியர் பரதவர் ''தென் பரதவர் மிடல் சாய" புறம் 378; "தென் பரதவர் பேரேறே மதுரைக்காஞ்சி 144 (பரதவர் மீன்பிடி தொழிலினர்); வேப்பம் பூ அடையாளத்தினர். மூவரும் அந்தந்தத் திணைக்குரிய இனக் குழுவினரிடமிருந்து உருவான ஆளும் பரம்பரையே. அயலிடங் களிலிருந்து அவர்கள் தமிழ் நாடு வந்தனர் என்பது அறியாமையே. மகதப் பேரரசு 4. கிமு 400ல் மகாபத்மநந்தன் என்னும் சூத்திரன் மகத் மன்னன் ஆனான். (சத்திரியர் அனைவரையும் அழித்தான். அவனுக்குப் பின்னர் சூத்திரரே அரசராயினர்) அவனுடைய ஆட்சி அதிகாரத்தை தமிழகம் நீங்கலாக இந்தியா முழுவதும் ஏற்றது. கலிங்கத்திலும் மகதர் ஆட்சியே. அங்கு நந்தர் கால்வாய் ஒன்று வெட்டினர். (அக்காலத்தில் தமிழ் மக்களிடையே ஆரியப் பண்பாடு பரவியிருக்கவில்லை. அசோகன் காலம் வரை இந்தியாவில் மகத ஆட்சி அதிகாரத்துக்கு எதிர்ப்பு இல்லை. கலிங்கத்தில் மகத ஆட்சிக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியை அடக்கவே அசோகன் படை எடுத்திருக்க வேண்டும். அசோ கனுடைய பாலி மொழிக் கல்வெட்டுகள் தென்னாட்டில் பல விடங்களிலும் செதுக்கப்பட்டன. (தமிழ் நாடு தவிர). தென் இந்தியாவின் பிற பகுதிகளில், அதாவது பெண்ணையாற்றுக்கு வடபால், வட இந்தியப் பாலி மொழி எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கு இது சான்று. அக்கல் வெட்டுக்கள் பொது மக்களுக்காகச் செதுக்கியவை. (படித்தவர்களுக்கென்றால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரே அசோக லிபியை கிமு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பயன்படுத்தினர், வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் ஏற்கெனவே இருந்த நெருங்கிய தொடர்பு ஏக சக்ராதிபதி ஆகிய மகாபத்மநந்தன் காலம் முதல் மேலும் அதிகம் ஆகியது. மெளரியர் காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது. மகதத்துடன் வணிகம் 5. கி.மு 400ல் தென்னாட்டிலிருந்து மதத்துக்கு சங்கு , இரத்தினம், நீலக்கல், பொன் முதலியவை வந்ததாக கெளட லியர் கூறுகிறார். இன்னொரு இடத்தில் மகத அரசின் கரு வூலத்துக்கு வந்த பொருள்களாக அவர் குறிப்பிடுவன : தாம்ர பரணி, பாண்டிய காவட, சூர்னா (கேரள முசிறிப்பக்கத்து ஆறு) ஆகிய இடங்களிலிருந்து இரத்தினக் கற்கள், வைடூரியம், மதுரையிலிருந்து பருத்தித் துணி முதலியவை. சந்திர குப்தனும் தென் இந்தியாவும் 6 கிமு நான்காம் நூற்றாண்டு இறுதியில் (25 ஆண்டு ஆட்சிக்குப் பின்னர்) திடுமென சந்திர குப்தன் ஆட்சியைக் கைவிட்டுத் துறவியாக பத்ரபாகுவின் 12000 சீடர்களுள் ஒருவன் ஆனான். பத்ரபாகுவும் அவன் சீடரும் கருநாடக ஹாசன் மாவட்டத்தில் உள்ள சிராவண பெளகொள வந்தனர். சந்திர குப்தன் குருவுக்கு 12 ஆண்டு பணி செய்தபின் குரு இறந்தார். பின்னர் சந்திர குப்தன் சல்லேக்கணம் செய்து உயிர் துறந்தான். இன்றும் புனித தலங்களுக்குச் செல்பவர்கள் செய்வது போல பல்லாயிரம் (சமணத் துறவிகள், சாதுக்கள் ) சர்வ சாதாரணமாக தென்னாட்டுக்கு அக்காலத்திலேயே, வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வந்த சமணத்துறவிகள் இயற்கைக் குகைகளில் வாழ்ந்ததுடன் கல்வெட்டுக்களும் விட்டுச் சென்றுள்ளனர் அக்கல்வெட்டுகள் இலக்கிய வரலாறு எழுத உதவுகின்றன. புத்தத் துறவிகள் வரவு 7. சமணர்களைப் போல புத்த சமயத்தினரும் தென் னாட்டுக்கு வந்து குகைகளில் வாழ்ந்தனர்; கல்வெட்டுக்கள் பொறித்தனர். (பல குகைகளைப் பொருத்தவரை அங்குச் சமணர் வாழ்ந்தனரா, புத்தர் வாழ்ந்தனரா என்று கூறுவது கடினம்) சேர, பாண்டிய நாடுகளில் இத்தகைய குகைகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இக்குகைகளில் வாழ்ந்த துறவிகள் அரசியல் காரணமாகவோ அல்லது சமயப் பரப்பு நோக்குடனோ வந்த வர்கள் அல்லர். (இவர்கள் காலத்துக்கு முந்திய ரிஷிகளும் அவ்வாறே) இந்த கிமு 5-4 நூற்றாண்டு பிக்குகள் நோக்கம் தங்கள் ஆன்மீக மேம்பாடு மட்டுமே கருதி தனியே ஒதுக்குப் புறங்களில் வாழ்ந்து யோகம் முதலியவற்றின் மூலம் மனப் பக்குவம் எய்துவதே. (சமணர்களைப் பொறுத்தவரை கடைசிக் காலத்தில் சல்லேக்கணம் செய்து அமைதியாகச் சாகவும் விரும்பினர்) பிற சமயத்தினரைத் தம் சமயத்தின் பால் ஈர்ப்ப தல்ல அவர்கள் நோக்கம். மகாவீரரும் புத்தரும் மக்களைத் தாம் கற்பித்த "கடவுளர் பால் ஈர்த்து மொத்தமாக மோட்சத்துக்கு அனுப்பும் சமயங்களை நிறுவியவர்கள் அல்லர். அவரவர் , குறிப்பாகத் துறவுப் பக்குவம் எய்திவர்கள் தத்தம் ஆன்மீக நிலையை உயர்த்திக் கொண்டு பிறவிப் பெருங்கடல் நீந்து வதற்கான மனவளப் பயிற்சியையே அவர்கள் கற்பித்தனர். வறட்டுச் சடங்குகளையல்ல, உணர்வூட்டும் அறிவுரைகளையே போதித்தனர். அவர்கள் நிறுவியவை மதக் கட்டமைப்புகள் அல்ல; (துறவிகள் வாழும்) மடங்களே. மகாவீரரும், புத்தரும் அருளிய இந்த உயர் கொள்கைகள் நாளடைவில் இந்த உயர் நோக்கங்களை இழந்து, தரம் தாழ்ந்து கேவலம் மேலும் இரண்டு சமயங்களாக மாறிவிட்டன. அம்மாற்றம் இந்திய மக்களின் நன்மைக்கானதல்ல. அம்மாற்றத்தின் வெளிப்பாடே புத்த சமயத் துறவிகளின் சம்மேளனங்கள், அவற்றின் முடிவுகளுக்கேற்ப புத்த மதத்தைப் பரப்பும் (அதாவது பிற சமயத்தினரைப் பழிப்பதும் மக்களுக்கு தம் மதத்தின் மூலம் தான் உய்வு கிட்டும் என்று பரப்புரை செய்வதும்) பணியில் பிக்குகள் ஈடுபட்டனர். அதற்கு மகத அரசின் ஆதிக்கத்தையும் தமது சாய்காலாகப் பயன்படுத்திக் கொண்டனர். அசோகனும் தமிழகமும் 8. அசோகன் காலத்திலும் தமிழகம் மகதத்தின் ஆதிக் கத்தின் கீழ் இல்லை. அவர் கல்வெட்டு II சோட, பாண்டிய சதியபுதோ, கேரளபுதோ மன்னர்களை அண்டை நாட்டா ராகவே குறிக்கிறது. கல்வெட்டு XIIIல் இந்நாடுகளில் அசோகன் தர்ம விஜயம் அடைந்ததாக மட்டுமே கூறிக் கொள்கிறான். பிராமண, சமண, புத்தம் ஆகிய மதங்களுக்கும் பொதுவான அறக்கருத்துக்களைப் போதிப்பதுதான் அவன் அனுப்பிய தர்ம போதகர்கள் பணி. முன்னைய மற்றும் இன்றைய ஆய்வாளர் பலரும் அசோகன் புத்த சமயப் பரப்புநரை அனுப்பினான் எனத் தவறாகக் கூறுகின்றனர். தன் அறக்கருத்துக்களை "புத்த சத் யானி" என்று கூறியதே இல்லை . ''தர்மம்" என்று தான் கூறி னான். அசோகன் உச்சையினியில் அரசப் பிரதிநிதியாக இருந்த போது மணந்த தேவியின் மகன் மகிந்தனை இலங்கைக்கு புத்த மதம் பரப்ப அனுப்பினான் என்று மகாவம்சம் தான் கூறுகிறது. புத்த மதம் பரப்புவதுதான் தன் பணி என உலகுக்குப் பறை சாற்றுவதாயிருந்தால் இச் செய்தியைக் கல்வெட்டுகளில் கூறியிருப்பான்; கூறவில்லையே. மூன்றாவது புத்த சம்மேளனம் தான் பல பகுதிகளுக்கும் சமயப் பரப்புநரை அனுப்பியது. அசோகன் அனுப்பியது தர்ம விஜய தூதர்களை மட்டுமே. இது குறித்து புத்த துறவியர் உருவாக்கிய மகாவம்சக் கூற்று நம்பத் தகுந்த தன்று. அசோகன் காலத்தில் அவனுக்கு முன்னர் இருந்தது போல தென் இந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் நீடித்தன என்பதைக் காட்டுவன அசோகன் கல்வெட்டுகள் என்று மட்டும் கூறிவிட்டு மேற்செல்வோம். 9. தற்கால வரலாற்றாசிரியர் "மௌரியப் பேரரசு", "குப்தப் பேரரசு என்று எல்லாம் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். பண்டை இந்தியாவில் இருந்த பல நாடுகளை/பகுதிகளை ஆண்டுவந்த மன்னர்கள், தலைவர்கள் முதலியோரோடு எவ் வகையான உறவு இருந்ததோ அந்த உண்மையை வெளிப் படுத்தாமல் "பேரரசு" என்னும் சொல் அனைவரிடமும் தவ றான கருத்தாக்கங்களைத் தான் உண்டாக்குகிறது. ''உரோமர் பேரரசு" என்றால் அப்பேரரசின் அதிகாரம் வலிமையுடன் பேரரசு முழுவதும் நேரடியாகச் செலுத்தப்பட்டது; படிப் படியாகப் பல்வேறு பகுதியினரும் உரோமக் குடி மக்களாக்கப் பட்டனர்; உரோமர் சட்டம், அவர்கள் லத்தீன் மொழி இவை பேரரசு முழுவதும் ஆதிக்கம் செலுத்தின. "ஆங்கிலப் பேரரசு' என்றால் இந்திய நாடு முழுவதும் ஆங்கில அரசு நிர்வகிக்கும் சட்டம் - ஒழுங்கு, ஆட்சி நடப்பது ஆங்கிலத்தில், பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலேயர் கல்வி முறை; கிறித்துவ சமயப் பரப்புரை அனுமதி; ஆங்கில நாட்டைப் பின் பற்றி அனைத்துச் சாதி மத மக்களையும் சமமாகக் கருதும் மக்களாட்சி முறையை மெதுவாகப் புகுத்தல்; இவையெல்லாம் சேர்ந்தது என்று பொருள். இப்படிப்பட்ட (உரோம / ஆங்கிலப் பேரரசு போன்ற ) பேரரசு பண்டைய இந்தியாவில் எங்கும் என்றும் நடை பெற்றதேயில்லை. இந்தியாவில் இருந்த அனைத்து நாடு / பகுதிகளிலும் (பிராமண நூலாசிரியர் அவ்வப்பொழுது போதித்து வந்த) தரும சாத்திரக் கருத்துக்களின் படியான ஆட்சி முறையே இருந்தது. ஆற்றல் வாய்ந்த ஒரு வேந்தன் தன்னை "ஆழிவேந்தன்" "ஒரு குடைக் கீழ் உலகாண்டவன்" என் றெல்லாம் கூறிக் கொண்டான் என்றால் என்ன பொருள்? தான் வென்ற நாடுகளின் ஆட்சி முறைகளை மாற்றினான்; அந்தந்த நாட்டு அதிகாரிகளை மாற்றித் தன் ஆட்களை நியமித்தான் ; ஆங்காங்குள்ள நிலங்களில் தன் படையினைக் குடியேற்றினான், தோற்ற நாட்டு மக்களை அடக்கி மிரட்ட தன் படையினரை ஆங்காங்கே இருக்கச் செய்தான்; என்றெல்லாம் எண்ணிவிடக் கூடாது. அப்பேரரசன் வெற்றியைப் பிற மன்னர் ஏற்றுக் கொண்டு ஆண்டுதோறுமோ, அவ்வப் பொழுதோ திறை தந்து வந்தனர் என்பது மட்டுமே பொருள். இவ்வாறு தனது அதிகாரத்தை நிலை நாட்டிப் பேரரசனாகக் கருதப்பட விரும்பி யவன் பெரும்பாலும் அசுவமேத யாகம் செய்வான்; அவன் யாகக் குதிரையை எதிர்க்கும் மன்னனோடு போர் செய்து தோற்கடித்துத் திறை தருமாறு செய்வது மட்டுமே நடந்தது. அந்தந்தப் பேரரசன் தனிப்பட்ட வீரம், மனநிலை ஆகியவற்றைப் பொருத்ததே "பேரரசு." ஒரு அரச பரம்பரையினர் அனை வருமே ஒருவர் விடாமல் பேரரசர்களாக இருந்தனர் என்று கருதமுடியாது. எனவேதான் இந்தியப் பேரரசுகள் பொதுவாக நீடித்து இருக்கவில்லை ' என்று கூறுவது அபத்தம் ஆகும். கலிங்கமும் தென் இந்தியாவும் 10. அசோகன் "தரும் விஜயத்தின் காரணமாக அவன் இறந்தவுடன் அவன் "பேரரசு" உடைந்தது என்பது விதியின் விளையாட்டுத்தான். பிற பகுதிகளோடு கலிங்கமும் தன்னரசு ஆயிற்று. கலிங்கமன்னன் காரவேலன் புகழ் பாண்டிய நாடு வரைப் பரவியது; பாண்டிய நாட்டிலிருந்து அவன் கப்பலில் யானை, குதிரை, மாணிக்கம் முத்து, நீலக்கல், முதலிய வெகுமதிப் பொருள்களைப் பெற்றான் என ஹாதி கும்பா (யானைக் குகை) கல்வெட்டு கூறுகிறது. இயல் 12 கிடைத்துள்ள தமிழ்ச் செய்யுள் நூல்களில் மிகப் பழையவை 1. கடவுளையும், அரசர்களையும் புகழ முதலில் கவிதை பயன்பட்டது. சமயச் செய்யுள் ஆகிய வேதங்கள் பற்றிய நிலை வேறு. சமய மல்லாத காரணங்களுக்கான பாடல்கள் மன்னர் களின் வீரச் செயல்களைப் புகழ்வன வாகவே தொடங்குகின்றன. பாணர்கள் எப்பொழுதும் தம் வறுமையைப் போக்கிட மன்னர் கள், தலைவர்களின் வீரத்தையும், காதலையும் புகழ்ந்து பாடுவது வழக்கம். தமிழ்ப் பாடல்களும் இப்படிப் பிறந்தவையே. 2. மொழி பண்படாத நிலையில் பாடிய தொடக்கக் கால தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் ஒழிந்துவிட்டன. (வேத மந்திரங் களும் சமஸ்கிருத (செம்மைப் படுத்திய இலக்கியங்களும் உருவாவதற்கு முன்னர் வடநாட்டில் உருவான தொடக்கக் காலப் பாடல்களும் இப்படித்தான் ஒழிந்து விட்டன) மாந்த குல மனநிலை குழந்தைத் தனமாக இருந்தபோது உருவான மழலையே வேத மந்திரங்கள் என்ற மாக்ஸ்முல்லர் கூற்று தடாலடிக் கூற்று. "சமூகத்தின் உயர் வகுப்பினர் உருவாக்கிய இலக்கிய மொழியில் உருவானவையே வேதமந்திரங்கள்";" யாகம் நடத்துநர் தலைமுறை தலைமுறையாகத் தமக்குள் பேணிவந்தனவும் தொன்மைச் சொற்கள், இலக்கண அமைப்புக் கொண்ட வழக்கிழந்த பழைய மொழி நடையி லமைந்தனவும் ஆனவையே அம்மந்திரங்கள்'' என்று மக்டானல் கூறுவது தான் சரி. அதாவது யாக குரு முதல் பறையன் முடிய பேசிய சாதாரணப் பேச்சு வழக்கு அல்ல வேத மொழி. அது தேவ பாஷை. அதே போன்றவைதான் நமக்குக் கிட்டியுள்ள பழந் தமிழ் இலக்கியப் பாடல்களுள் மிகப் பழையவை. அவற்றின் நடை அன்று வழங்கிய பேச்சு வழக்கு நடை அன்று. செழுமை யும், நயமும், ஆக்கிய தரப்படுத்திய மொழி நடை கொண் டவை அவை; யாப்பு விதிகளின் படி எழுதியவை, அத்தோடு நுணுக்கமான சிக்கலான (அகம், புறம் ) இலக்கிய மரபின் படி பாடியவை. இலக்கிய மொழித் தமிழ் (செந்தமிழ்) 3. தென் இந்தியாவை இராமன் வென்ற பின்னர் தமிழ் மூவேந்தர் பரம்பரைகளும் எழுந்தன என்பது என் கருத்து. சோழ நாடு முழுவதுமே பெரும்பாலும் மருதம் ; சேரநாடு குறிஞ்சி, பாண்டிய நாடு மட்டுமே ஐந்திணைகளையும் கொண் டது. அங்குதான் ஐவகை அகம், ஐவகை புறத் திணைப் பாடல் களும் தோன்ற முடியும். எனவே மதுரைப் பகுதியில் இலக்கியத் தமிழ் (செந்தமிழ்) தோன்றியதும் தமிழ் இலக்கியம் உரு வானதும் வியப்பல்ல. "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்" அதாவது பாண்டிய நாட்டைச் சூழ இருந்தனவும் செந்தமிழில் லிருந்து சற்றே மாறுபட்ட வழக்குகளைக் கொண்டவையுமான நிலங்களைக் குறிப்பிடுகிறது. ஒரு பழம் பாடலின் படி அவை, தென் பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேள், பூழி, பன்றி, அருவா , அருவா வட தலை, சீதம், மலாடு, புனல் நாடு (சோழ நாடு என்பவை. சேனாவரையர் பட்டியலின் படி அவை பொங்கர், ஒளி, தென்பாண்டி, குட்டம், குடம், பன்றி, கற்கா, சீதம், பூழி , மலை, அருவா, அருவா வடதலை (பிற்காலத்தில் அருவாவடதலை தொண்டை நாடு எனப்பட்டது; வடவர் அதைத் திராவிடர் நாடு என்றனர்). 4. பாண்டிய நாட்டுத் தமிழ் பிற 12 பகுதிகளின் தமிழைவிட உயர்ந்தது என்பதல்ல பொருள். பாண்டி உட்பட எந்தப் பகுதியின் வட்டார வழக்கும் மற்ற எதற்கும் உயர்ந்ததுமல்ல, தாழ்ந்ததுமல்ல. இலக்கியம் புனைய முதற்கண் பயன்படுத்திய வட்டார வழக்கு பாண்டி நாட்டு வழக்கு; பிற பகுதிகளில் பாடல் புனையும் பொழுது அவ்வழக்கோடு தேவைக்கேற்ப, அந்தந்த வட்டார வழக்குச் சொற்களையும் சேர்த்துக் கொண்டனர் என்பதே பொருள். தொடக்ககாலப் பாடல்கள் முற்றாக ஒழிந்துவிட்டன 5. அகம் புற மரபுகள் உருவாவதற்கு முன்னர் எவ்வளவோ பழம் பாடல்கள் இருந்திருக்க வேண்டும். (அவை ஐந்திணைக் கும் பொதுவான மரபு கொண்டு இருந்திருக்கும். பின்னர் நாளடைவில் அந்தந்தத் திணை மக்கள் வாழ்வியல் பிற திணை மக்களிடமிருந்து மாறுபட்ட பின்னர் அந்தந்தத் திணைக் கென்று சிறப்பியல்புகள் இலக்கியத்தில் புகுத்தப்பட்டு இருக்க வேண்டும்) அப்பழம் பாடல்கள் முற்றாக ஒழிந்து விட்டன. இப்பொழுதுள்ள (சங்க இலக்கியப் பாடல்களுள் மிகப் பழை யன கூட கி.பி 1க்கு முற்பட்டவை அல்ல. அதற்கு முந்திய பாடல்கள் ஏன் ஒழிந்தன? அண்மையில் ஹரப்பா, மொகெஞ்சொதரோ அகழ்வுகளில் இருந்து கிமு 4000 - 3000 அளவிலேயே இந்தியர்களிடம் எழுத்து வரிவடிவம் (லிபி) இருந்தது எனத் தெரிகிறது. ஆயினும் முதற்கண் எழுத்து வடிவம் வீர அரசர் புகழ் பாட மட்டும் பயன்படுத்தப்பட்டது என்பது வாதல் (Waddel) சிந்து வெளிமுத்திரை எழுத்து வாசகங்களைப் பற்றிக் கூறுவதி லிருந்து தெரிகிறது. வேதங்களின் புனித மந்திரங்களை ஆரிய வர்த்த ஆரியர்கள் எழுதிட அனுமதிக்கவில்லை. அவை இடை விடாது ஓதப்பட்டு மனனத்தில் இருந்தன. திறனாய்வாளன் தோன்றி இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றிக் கூறிய பின்னரே ஏனைய பாடல்கள் மறந்தொழிந்து விடாமல் இருக்க எழுதப்பட்டன எனலாம். தொல்காப்பியம் போன்ற திறனாய்வு நூல் இன்றேல் நாம் பழந்தமிழர் வாழ்வியல் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியாது. தொடக்க காலத் தமிழ் நாட்டுப் புலவர்கள் குயில்கள் போல் பாடின பாடல் எல்லாம் ஒன்றும் நமக்குக் கிட்டவில்லை. ஆனால் ஆரியர் தென் னாட்டில் குடியேறித் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் படித்து அம்மொழிக்கு இலக்கணமும் யாப்பு விதிகளும் வகுத்த பின்னரே தமிழ் இலக்கியம் எழுத்து வடிவம் பெறத் தொடங்கி யது. அவ்வாறு எழுத்து வடிவம் பெற்ற இலக்கியமே இன்று உள்ளது. 6. மேற்சொன்னவாறு நமக்குக் கிட்டாது முற்றாக அழிந்து விட்ட தொடக்க காலத் தமிழ் இலக்கியம் எப்படி இருந் திருக்கும்? அவை ஒரு சில வரிகள் கொண்ட பாடல்கள் ஆக இருந்திருக்கும். (பிற்காலத்தவை ஆன எட்டுத் தொகை நூற் பாடல்கள் கூட 4லிருந்து 20 - 30 வரிகள் தாமே கொண்டுள்ளன.) சில நூறு வரிகள் கொண்ட பத்துப் பாட்டுப் பாடல்கள் கிபி 5ம் நூற்றாண்டில் தான் தோன்றின. ஆரிய இலக்கியங்களைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் அறியத் தொடங்கிய பின்னரே காவியங்கள் உருவாயின. ஆனால் தொகை நூற்பாடல்களில் பழையனவற்றில் கொஞ்சம் கூட ஆரியத் தாக்கம் இல்லை : இந்நிலை சில நூற்றாண்டுகள் வரை (கிபி 5ம் நூற்றாண்டு வரை) நீடித்தது. பரசுராமன் காலம் முதல் தென்னாட்டார் சிலர் ஆரியச் சடங்குகளைப் பின்பற்றியதால் "பிரம்ம ராட்சசர் " என அழைக்கப்பட்டனர். இராவணனை இராமன் வென்ற பின்னர் ஆரியச் சடங்கினைப் பின்பற்றிய தென்னாட்டார் எண்ணிக்கை பெருகியது. மாபாரதப் போர் முடிந்த பின்னர் மேலும் கொஞ் சம் பெருகியது. அவ்வளவுதான். (வேதகாலத்தில்) வடநாட்டு ஆரியரும் வடநாட்டு தஸ்யூக்களும் தத்தம் பண்பாடே உயர்ந் தது எனக் கருதி அவரவர் பண்பாட்டை விட்டு மாறாமல் இருந்தனர் அன்றோ; அது போலத்தான் தென்னாட்டு ஆரிய ரும் தமிழரும் (தென்னாட்டுத் தஸ்யுக்களும் இருந்தனர். கிபி 5ம் நூற்றாண்டு வரை ஆரிய, தமிழப் பண்பாடுகள் தமிழ் நாட்டில் பெருமளவுக்குக் கலக்காததற்கும் ஆரியச் சடங்கு பெருமள வுக்குப் பரவாமைக்கும் இதுவே காரணம். தொடக்க கால தமிழ்ப் பாடலில் சமஸ்கிருதத் தாக்கம் இல்லை 7. மேற்கண்டவாறு சில நூற்றாண்டுகள் வரை ஆரியத் தாக்கமின்றி தன் போக்கில் இருந்தது தமிழர் வாழ்வியல். தமிழரின் உலக நோக்கிற் கேற்பக் கூற வேண்டியவற்றை யெல்லாம் கூறுவதற்கேற்ற சொல்வளம் தமிழில் இருந்தமை யால் தொடக்க காலத் தமிழ்ப் பாடல்களில் உள்ள சமஸ்கிருதச் சொற்கள் மிகமிகச் சிலவே. தமிழர்களில் பெரும்பாலோர் தமது தொன்மை வழிகளிலேயே வாழ்ந்தனர். ஆரியச் சடங்குகள் ஆரிய ஆன்மீகக் கொள்கைகளின் தாக்கம் இன்றி, தமிழகத்தில் தமிழர் வாழ்க்கை நெறி வேறாகவும், தென்னக ஆரியர் வாழ்க்கை நெறி வேறாகவும் கலப்பின்றி இருந்தன. உலகை நோக்கும் நெறியில் அவ்வாரியரிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் தமிழர். இணைவிழைச்சும் போர் வெற்றியுமே (அதாவது காதலும், பகைவரைத் தொலைக்கும் வீரமும்) அகம் புறம் என்ற பெயரில் அவர்களுக்குப் பாடு பொருள் ஆக அமைந்தன. ஆரியரோ, அதுவும் பேரழிவு பயந்த பாரதப் போருக்குப் பின்னர், உலகியற் காதல், மேலுலகத்தின் மீதான காதல், போரின் மீதான காதல் அனைத்துமே வீண் என்று மனம் நொந்தனர். காதல் இன்பம் கண நேர இன்பம், என்றும் போர் வெற்றியில் தேடும் ''இன்பக்" கனி வாயில் இட்டால் கைக்கும் கனி என்றும், உணர்ந்தனர். பிறவிச் சுழலைப் பற்றி ஆழ நினைந்து அதனின்றும் மீள வேண்டுமென்னும் வைராக்ய (= பற்றின்மை உணர்வு எய்தினர். இந்த மனநிலை வைதீகர், வைணவ / சைவ ஆகமவாதிகள், புத்த சமணர் ஆகியோரிடம் துறவற மனப்பான்மையைத் தோற்று வித்தது. இவ்வுலக இன்பமாகிய நீர்க்குமிழியை விட்டுக் காலமும் இடமும் கடந்த நிலையான மறுவுலக ஆனந்த வாழ்வை நாடி னர். தொடக்க காலத் தமிழ்ப் பாவலருக்கு இவ்வுலகம் சார்ந்த " பார்வையே இருந்தது. கண்கூடாகக் காணும் உலக வாழ்க் கையைத் திறம் படக் காட்டும் கவிஞர்களாகவே அவர்கள் திகழ்ந்தனர். வேத காலத்துக்குப் பிற்பட்ட ஆரியர்களோ புற உலகைப் பற்றியே எண்ணும் மனத்திற்கு அடங்காமல், பறந்து விடும் பஞ்சு போன்ற நுண்கருத்துக்களில் நாட்டம் செலுத்தினர். அவர்கள் சிந்தனை ஞாயிறு, திங்கள், உடுக்கள் ஒளிவீசும் இந் நிலவுலகைத் தாண்டி எங்கோ சென்றுவிட்டது. தமிழர் உள்ளம் கண்கூடான உலகையும் உலக இன்பத்தையும் நன்மை தருவதாகப் பார்த்தது. (optimistic); ஆரியர் உள்ளம் தீமை தருவதாகப் பார்த்தது (pessimistic). தமிழரிடையே அக்காலத்தில் கடுமையான சாதிப்பாகுபாடுகள் இல்லை; ஆரியர் நான்கு வருணமாகப் பிரிந்திருந்தனர். சமஸ்கிருதக் கவிஞர் கோட்பாடு களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அக்காலத் தமிழ்ப் பாவலர் கோட்பாடுகள். எனவே தமிழரில் பெரும்பாலோரும், தென்னக ஆரியரும் ஒருவர் பண்பாட்டின் மீது மற்றவர் தாக்க மின்றித் தனித் தனி வாழ்வு நடத்தினர். மிகு தொன்மைக் காலத் தமிழ்ச் செய்யுள் நூல்கள் முற்றிலும் ஒழிந்துவிட்டனவெனினும், கிட்டியுள்ளவற்றில் பழையனவற்றைக் கொண்டு பார்க்கும் பொழுது, கிபி 1க்குப் பின் சில காலம் வரையில் கூட தமிழ்ப் புலவர் உள்ளத்தில் சமஸ்கிருதப் பண்பாட்டுத் தாக்கம் சற்றும் இல்லை என்பது தெரிகிறது. தொகை நூல்கள் ("சங்க இலக்கியம்) 8. கி.பி 5ம் நூற்றாண்டிலும் பின்னரும் தமிழ்ப் பழஞ் செய்யுள் நூல்களில் அன்று எஞ்சியிருந்தவற்றைத் தொகுத்துத் தொகை நூல்கள் உருவாயின. போர், வீரம், ஆகியவற்றோடு நேரடியாக அல்லது மறைமுக மாகத் தொடர்புடைய நானூறு பாடல்கள் புறநானூறு எனத் தொகுக்கப் பட்டன. அகப் பொருள் பாடல்கள் மூன்று தொகைகளாயின. அடியளவால் குறைந்த பாடல்கள் குறுந்தொகை; இடைப்பட்டவை நற் றிணை ; நீண்டவை (நெடுந்தொகை என்னும்) அகநானூறு. எப்படி ஒவ்வொரு தொகையும் சரியாக 400 பாக்கள் கொண்டவையாயின? தொகுத்தோர் சிலவற்றை ஒதுக்கி யிருக்கலாம்; சிலவற்றைத் தாமே புனைந்து செருகியிருக்கலாம் ஆனால் திட்டவட்டமாக இவை பற்றி எதுவும் கூற முடியாது. இந்தத் தொகை நூற் பாடல்கள் சம காலத்தவை அன்று, சொல் அடைவு, பாடு பொருள், படிமங்கள், செய்திகள் அடிப் படையில் எவை முந்தியவை, எவை பிந்தியவை எனப் பாகு படுத்திக் காணுதல் அரிதன்று. பழம் பாடல்களில் சமஸ் கிருதச் சொல் எதுவும் இருக்காது; ஐந்திணை ஒழுக்கமும், ஐந்திணை நிலைத்திணையும் விலங்குகளும், மட்டுமே பாடப் பட்டிருக்கும். மூட நம்பிக்கை வந்தால் அது தமிழ் மூட நம் பிக்கையாக இருக்கும். ஆரிய மூட நம்பிக்கையோ ஆரியக் கவிப்படிமங்களோ ஒன்றும் இருக்காது. முதன்மை யாக, பாடியோர் (பாணர்) எவரும் பிராமணர் அல்லர். பிராமணர் தமிழ்ப் பாடல் புனையத் தொடங்கியது ஏறத்தாழ கிபி 400ஐ ஒட்டியே ஆகும்; அவர்களும் தமிழ் மரபின் படியே பாடினர். எனினும் ஆரியக் கருத்துக்கள், சமயம், மூடநம்பிக்கை, பழக்க வழக்கங்களைத் தம் பாடல்களில் நுழைக்காமல் பாடமுடியவில்லை. இத்தொகை நூற்பாட்டுகள் 1600ஐயும் அகச் சான்று கள் அடிப்படையில் நுணுகி ஆராய்ந்து அவற்றில் முந்திய வற்றையும் பிந்தியவற்றையும் பிரித்துக் காணும் பணியை சென்னைப் பல்கலைக்கழக ஆய்வாளர் யாராவது செய்தல் நன்று. எனினும் அத்தகைய நுணுக்கமான ஆய்வின்றியே இப் பாடல்களைக் கவனமாகப் படிப்போர் எவரும் அவை ஏறத்தாழ 500 ஆண்டு கால அளவில் பல்வேறு காலகட்டங்களில் பாடப் பட்டவை எனத் தெள்ளிதின் உணர்வர் என்பதே என் கருத்து. அகநானூறு 9. இப்பாடல்கள் நானூற்றைத்தான் முதலில் தொகுத்தனர் எனலாம். என்னை? உக்கிரப் பெருவழுதி ஆணையின் படி உருத்திரசன்மன் (இறையனார் அகப்பொருள் உரையாசிரி யர் கூற்றுப்படி அந்நூல் அரங்கேற்றத்தில் தலைமையேற்ற மூங்கைப் புலவர்) தொகுத்தானாகலின். நானூறு பாடலும் (வரி வரம்பு 13 - 31) களவியல் - கற்பியல் அகப்பாடல்கள் ; களவியலே மிகுதி. பாடினோர் 142 பேர்களும், மூன்று பாடல்களைப் பாடிய பெயர் தெரியாதோரும். பாடல்களுள் சில பழையவை. மீதி கிபி 300 - 500 சார்ந்தவை. வரலாற்றுக்குறிப்புகள் சில இவற்றுள் உள்ளன. தமிழர் வாழ்வியல் செய்திகள் பல. ஐந்திணைப் பாடல்களை இத்தொகையில் 1,3,5,399 பாலை, 4, 14, 24. 394 முல்லை ; 6, 16, 26. 396மருதம் ; 2, 8, 12, 18, 22, 28. குறிஞ்சி; 10, 20, 30, 40. நெய்தல் என்றவாறு தொகுத்துள்ளனர். குறுந்தொகையும் நற்றிணையும் 10. 4 - 8 வரி அகப்பாடல்களை (பூரிக்கோ ஆணைப்படி) குறுந்தொகையிலும், 9 - 12 வரிப்பாடல்களை பன்னாடு தந்த மாறன் வழுதி ஆணைப்படி நற்றிணையிலும் கிபி 6ம் நூற் றாண்டில் தொகுத்துள்ளனர். அகநானூற்றிலும் இவ்விரு தொகைகளிலும் உள்ள பாடல்கள் அனைத்தும் ஒரே பாடு பொருளைப் பற்றியவையே. அனைத்தும் களவியல், கற்பியல் சார்ந்த அகப்பாடல்கள், வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றில் உள்ளன. அனைத்தும் தமிழர் வாழ்வியலை விளக்குவன. ஆரியக் கடவுளர்கள், சமயம் பற்றிய செய்திகள் மிகக் குறைவு. புறநானூறு : 11. இந்நானூறு புறப்பாடல்களைத் தொகுத்தவர், தொகுப் பித்தவர் பெயர் தெரியவில்லை. பிற தொகைகளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடுகள் பல : முதலாவது, இப்பாடல்கள் மன்னர் கள், தலைவர்களின் வீரம், வள்ளண்மை பற்றியவை. இரண் டாவது, இறந்த மன்னர்கள், தலைவர்கள் பற்றிய இரங்கற் பாடல்களும் பல உள்ளன. (முதல் வகைப்பாடல்கள் முதல் 200 பாடல்கள்; அடுத்த 100 பாடல்கள் இரண்டாவது வகை ; கடைசி நூறு பாடல்களும் கலவை - ஏனையவற்றைத் தொகுத்த பின்னர் கிடைத்தவை பொருட் பாகுபாடு கருதாமல் சேர்க்கப்பட்டவை) மூன்றாவது : இப்பாடல்களின் கொழுக்கள் தொகுத்தவர் காலத்துக்குப் பிற்பட்டவை; பாடல் கருத்தை உட்கொண்டும் மரபுச் செய்திகளின் அடிப்படையிலும் கொழுக்கள் எழுதப் பட்டன. தெள்ளாறு எறிந்த பல்லவன் நந்திவருமன் (கி பி 830 - 854) காலத்தவரான பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவனை வழுத்துப் பாடிய பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல் ஆகும். கிபி 6 - 9 நூற்றாண்டுகளில் ஆகமக் கருத்துகள் பரவிய பின்னர் சிவனுக்குக் கற்பித்த தன்மைகளை இப்பாடல் கூறுகிறது. இதே பெருந்தேவனார் சிவனை வாழ்த்தி அக நானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றுக்கும், முருகனை வாழ்த்தி குறுந்தொகைக்கும் திருமாலை வழுத்தி (அப்பாடல் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்லோகத் தமிழாக்கம்) நற்றிணைக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் தந்துள்ளார். இத்தொகுப்புக்களில் இவர் பெரும் பங்கு வகித்தார் போலும். பிற்காலத்திய பாடல்கள் கொண்ட ஏனைய நான்கு தொகை நூல்கள்: 12. ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித் தொகை ஆகிய நான்கும் தனிப் பாடல்களின் தொகுப்புகள் அல்ல. ஒவ்வொரு திணைக்கும் நூறு அகப்பொருள் பாடல் வீதம் ஐந்து புலவர்கள் எழுதியது ஐங்குறுநூறு ஆகும். கலித் தொகையில் கலிப்பாவில் திணைக்கு 30 வீதம் 150 அகப் பாடல்கள் உள்ளன. பரிபாடலில் வையை, திருமால், முருகன் பற்றிப் பாடிய பாடல்கள் உள்ளன. பதிற்றுப்பத்தில் சேர மன்னரைப் புகழ்ந்து பாடிய புறப் பாடல்கள் உள்ளன. இந் நான்கும் குறிப்பிட்ட நோக்குடன் உருவானவை. (தனிப் பாடல் தொகுப்புகள் அல்ல). தொல்காப்பியம் பொருளதிகாரத் திற்கேற்ப இவை பிற்காலத்தில் உருவாக்கப் பட்டிருக்கும். புறம், அகம், குறுந்தொகை, நற்றிணை இவற்றில் அடங்கிய பாடல்களுள் பழமையானவை சில, ஆரியப் பண்பாடு தமிழ் ரிடைப் பரவுவதற்கு முற்பட்ட காலத்தவை, மாறாக இப்பிற்றை நான்கு தொகை நூல்களோவெனில் முற்றிலும் ஆரியப் பண்பாடு தமிழகத்தில் பரவிய பின் எழுந்தவை தமிழ்ச் செய்யுள் மரபில் எழுதியவையே ஆயினும் வைணவ சமயக் கருத்துக்களும் ஆகமவழிபாட்டு முறைகளும் அவற்றில் ஏறியுள்ளன. பிற் காலத்தில் எட்டுத்தொகை எனப் பெயரிட்டவர்கள் இந்தப் பிற்றை நான்கு நூற்பாடல்களையும் முந்தைய நான்கு நூற்பாடல் கள் போன்ற பழமை வாய்ந்தன என்று தவறாகக் கருதி அனைத் துக்கும் சேர்த்து எட்டுத் தொகை என்று பெயரிட்டு விட்டனர் பத்துப்பாட்டு : 13. பத்துப்பாட்டில் 103 அடி முதல் 782 அடி முடிய உள்ள பத்துப்பாட்டுகள் உள்ளன. கரிகாலன் ஆட்சியின் முற் பகுதியைப் பாடும் பொருநராற்றுப்படை கிபி. 400க்கு சற்று முன்னர்ப்பாடப்பட்டிருக்க வேண்டும். "திருமுருகாற்றுப்படை கிபி6ம் நூற்றாண்டு இறுதியைச் சார்ந்தது. பத்துப் பாட்டுப் பாடல்களில் சமஸ்கிருதச் சொற்கள் படிப்படியாக அதிகரித் துள்ளன ; ஆரியப் பண்பாட்டுத் தாக்கமும் அதிகமாகக் காணப்படுகிறது. இவற்றின் அடிப்படையிலும் அவற்றில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையிலும் இப்பாட்டுகளின் காலம் வரம்பு பிற்பட்டதே என உணரலாம். புறம், அகம், குறுந் தொகை, நற்றிணை இவற்றில் உள்ள தனிப்பாடல்களை விட மிக அதிகமான வரிகள் கொண்டவையாக பத்துப்பாட்டுப் பாடல்கள் இருப்பினும் செய்யுள் நடையிலும் இலக்கிய மர பிலும் - கிபி - 4 - 6ம் நூற்றாண்டுத் தமிழர், வாழ்வியலை அறியப் பத்துப்பாட்டு இன்றியமையாதது. பதினெண் கீழ்க்கணக்கு : 14. இந்நூல்களில் உள்ள பாடல்கள் 2-5 வரிகள் கொண்டவை. பழைய அகம், புறமரபுகளின் படி இயற்றியவை சில. ஏனையவை, அதுவும் குறிப்பாக இவற்றுள் தலையான திருக்குறள், அது வரைத் தமிழிலக்கியத்தில் இல்லாததான அற நூல் வகை சார்ந்தவை. அவை எட்டுத்தொகை நூல்களில் முற்பட்ட நான்கு, பத்துப்பாட்டு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறு பட்டவை. சமஸ்கிருத தர்ம, அர்த்த சாத்திரங்களைப் பின்பற்றி சூத்திர நடையில் எழுதப்பட்டவை. அறக்கருத்துக்கள் இருப் பினும் கவித்துவம் இல்லாதவை. கவிநயம் அற்றவையும் அறங் களைப் பற்றிக் கூறுவனவுமான வறட்டுச் செய்யுட்களைக் கொண்டவை. இவற்றின் காலம் ஏறத்தாழ கிபி 500 - 800 ஆகும். 19-20ம் நூற்றாண்டு மனிதனைப் பொறுத்தவரை இவை "பழம்" பாடல்கள் தான்; ஆனால் எட்டுத் தொகை - பத்துப்பாட்டு அளவுக்குப் பழமை வாய்ந்தவை அல்ல. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, கீழ்க்கணக்கு அனைத்தை யும் ஒரே காலத்தனவாகக் கருதி (அதுவும் ஒரு நூற்றாண்டு கால அளவுக்குள் அடக்கி) வரலாற்று உணர்வின்றிப், பல ஆதாரமற்ற ஆய்வு முடிவுகளைக் கூறும்போக்கு இப்பொழுது பலரிடமும் உள் ளது. தமிழிலக்கியம் உருவாகி வளர்ந்த உண்மை வரலாற்றை அறிய இந்தப் போக்கு உதவாது. இயல் 13 தமிழ் மக்கள் வாழ்க்கை நிலை கிமு 500 - கிமு 1 1. கிமு 500 - கிமு இந்த ஐந்நூறு ஆண்டுகளில் தமிழ் இலக்கியப் படைப்புகள் மிகப்பல உருவாகியிருக்கும். (அவற்றின் அடிப்படையிலேயே அகத்தியரும் தொல்காப்பியரும் இலக் கணம் இயற்றியிருத்தல் வேண்டும்) அவையனைத்தும் அழிந்து விட்டன. எனினும் எட்டுத் தொகைப் பாடல்களுள் சில அந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என எண்ணுகிறேன். அவற்றில் சமஸ்கிருதச் சொற்கள் இல்லை, கருத்துகளும் இல்லை. இவற்றுள் சிலவற்றை ஆக்கியோர் பெயர்கள் மறைந்து விட்டன. 2. அத்தகைய பாடல்களில் ஒவ்வொரு திணைக்கும் ஒன்றிரண்டு எனச் சில பாடல் செய்திகளைத் தருகிறேன் (கிமு 500க்கு முந்திய காலத்தைச் சார்ந்த செய்திகள், கிமு 7க்குப் பிற்பட்ட காலச் செய்திகள் ஆகியவற்றுக்கும் இக்கால கட்டச் செய்திகளுக்கும் வேறுபாடுகள் மிகக்குறைவே) அகத்திணையொழுக்கம் : குறிஞ்சி தானாக அரும்பும் காதல் : குறுந்தொகை 40: "யாயும் ஞாயும் யாராகியரோ ..." பிரிவின் கண் தலைவி வருத்தம் : குறு 54 : "யானே ஈண்டையேனே.'' அலர் பற்றித் தலைவிக்குத் தோழி : குறு 321 : "மலைச்சேர் அஞ்செந்சாந்தின் ஆரமார்பினன்" தலைவியை விரைவில் மணந்து கொள்ள வேண்டித் தலைவனுக்குத் தோழி கூற்று நற் 396 "பெய்து போகு எழிலி வைகுமலை சேரத்.'' முல்லை போர் முடித்து வரும் தலைவன் தலைவி நிலை எண்ணிப் பாகனிடம் கூறுவது நற் 161 "இறையும் அருந்தொழில் முடித் தெனப் பொறையை' பிரிவு ஆற்றாத தலைவி தோழியிடம் கூறுவது குறு 387 ''. கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே." நெய்தல் தலைவிபிரிவாற்றாது இரங்கல் குறு 381 "தொல்கவின் தொலைந்து தோள் நலம் சாஅய்." தலைவியைத் தோழி தேற்றுதல் நற் 111 “ அத்த இருப்பைப் பூவின் அன்ன ..'' பாலை சுரம் கடந்து சென்ற தலைவனின் பிரிவாற்றாமை நற் 84 "கண்ணும் தோளும் தண் நறுங்கதுப்பும்" மகள் காதலனுடன் உடன்போக்கிற் செல்ல செவிலி கூற்று நற் 271"இரும்புனிற்று எருமைப்பெருஞ்செவிக் குழவி'' மடலேறுதல் குறு 17 : "மாவென மடலும் ஊர்ப பூவெனக் " குறு 182 : ''விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்.'' நற் 220 : "சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக் '' சாதாரண மக்கள் வாழ்க்கை : குறிஞ்சி தலைவன் விரைவில் வதுவை செய்ய வேண்டுமென்று விழையும் தலைவி நற் 125". இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை " தலைவன் வரும் வழியிலுள்ள இடுக்கண்களைப் பற்றித் தலைவி கூற்று நற் 255... ''கழுத்து கால் கிளற ஊர் மடிந்தன்றே " தினை முற்றியதும் தலைவி இற்செறிக்கப்பட்டமை பற்றி நற் 259. "யாங்கு செய்வாங் கொல் தோழி பொன்வீ' பாலை சுரத்திடைத் தலைவன் படும் இடுக்கண் பற்றித்தலைவி அச்சம் நற் 33 ''படு சுடர் அடைந்த பகுவாய் நெடுவரை'. பாலையில் விளாங்கனியே உணவு நற் 24 "பார் பக வீழ்ந்த வேருடை விழுக்காட்டு...'' முல்லை இடைமகன் குரவின் பூ அணிந்து கொண்டு ஆடு மேய்த் தல் நற் 266 "கொல்லைக் கோவலன் குறும்புனஞ்சேர்ந்த .'' கணவனுடன் இனிய மணவாழ்க்கை குறு 167 "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் ..' காதலன் மணந்த நினைவு குறு 193 "மட்டம் பெய்த மணிக்கலத்தன்ன"... முல்லை நிலச் சிறு குடிவருணனை நற் 169, 80 நெய்தல் நெய்தல் நிலச்சிறுமியர் விளையாட்டு நற் 123; ''உரையாய் வாழி தோழி இருங்கழி..." செல்வச் சிறுமியர் விளையாட்டு : நற் 110 ''பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் ..'' மருதம் உழவர் வாழ்க்கை : நற் 60'' மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பில்,'' நற் 120 "தட மருப்பு எருமை மட நடைக் குழவி.." ஊராட்சி மற்றும் ஊர் வாழ்க்கை 3. பண்டைத் தமிழர் வாழ்க்கை பெரும்பாலும் சிற்றூர் களிலேயே நடைபெற்றது. ஊர்கள் பெருமளவுக்குத் தன்னிறைவு பெற்றவை. ஊர் ஆட்சியும் எளிமையாக நடந்தது. ஊர்ப் பொது மனைப்பகுதி மன்றம் எனப்பட்டது. மாடுகள், ஆடுகள் மன்றத் தில் சேர்க்கப்பட்டன. (கன்று பயிர் குரல மன்று நிறைபுகுதரு - அகம் 14 ; குறிஞ்சி 218, மன்று நிறையு நிரை - புறம் 24 ; கொல்லேறு திரிதரு மன்றம் - புறம் 309) ஊர்சார்ந்த விசயங் களை பொதியில் பொதியம் பொதுவில் என்று அழைக்கப் பட்ட ஊர்ப் பொதுவில், மரத்தின் அடியில் கூடி ஊர் முதியோர் முடிவு செய்தனர், இப்பொதுவிடமும் மன்று மன்றம் எனப் பட்டது. மன்றுகளில் குரவை ஆடப்பட்டது (மன்று தொறு நின்ற குரவை - மதுரைக், 1ெ5) மன்றில் வேம்பு, ஆல் இரத்தி, அலந்தலை, விளா, புன்னை முதலிய மரங்கள் இருந்தன. பிற் காலத்தில் நகரங்கள் எழுந்த பொழுது மன்றம் பொதுக் குடில், பொதுக்கட்டடம் என்றவாறு மாறியது. அங்கு ஒரு மரக்கிளை (கந்து, கந்தம் நட்டு அக்கந்தில் உறைந்த கடவுளை முரசு அடித்து வழிபட்டனர். ஆரியர்களிடம் இருந்தது போலவே சூதாட்டமும் வழக்கில் இருந்தது. பொதியிலில் முதியோர் சூதாடப்பயன் படுத்திய சிறுகுழிகளைப் புறம் 52 குறிப்பிடுகிறது. முருங்கை நெற்றுப் போன்ற விரலுடைய பேய் மன்றத்தில் இடப்பட்ட ஊன்பலியை உண்ண மாலை நேரத்தில் அங்குச் செல்லும் என்கிறது நற்றிணை 73. நகரங்கள் பெரிதான பின் மன்றக் கட்டடத்தில் புலவர் முதலானோர் தங்கினர் ("பல்காற் பொதியில் ஒரு சிறை பள்ளியாக" புறம் 375; "மன்று படு பரிசிலர்" புறம் 135). பிற்காலத்தில் மன்றம், பொதியில் ஆகிய வற்றில் நகர்வலம் செல்லும் கடவுட் படிமங்கள் தங்கிச்சென்றன (முருகு226) 4. மன்றத்தில் ஆலமரம் முதலியவற்றின் அடியிலும் கந்தத் திலும் உறைந்த கடவுள் யார்? புதுக்கற்காலத்திலேயே கல்லாற் செய்த லிங்கம் வழிபடப்பட்டது. அக்காலம் தொடங்கிய பின்னர் (வட இந்தியாவில் செப்புக் காலம் ; தென் இந்தியா வில் இரும்புக் காலம்) லிங்கம் தொடர்ந்து வழிபடப்பட்டது. ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கிட்டிய சில கல் உருவங்கள் - லிங்கம் - யோனிகளாக இருக்கலாம் என்றும், ஆரியர் இந்தியா வில் நுழைவதற்கு நெடுங்காலம் முன்னரே சிவனை லிங்கமாக வழிபடும் வழக்கம் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுவர் சர் ஜான் மார்ஷல் (இந்தியத் தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1925 - 26). கிபி 1 - 5 நூற்றாண்டு சார்ந்தவையான சங்கப்பாடல் கள் சிவனைக் குறிப்பிடுகின்றன (புறம் 199: "கடவுள் ஆலம்" ; சிறுபாண் 97: "ஆலமர் செல்வன்''). இப்பாடல்கள் ஆரியத் தாக்கம் தமிழ் நூல்களில் ஏற்பட்ட பின்னர் எழுதியவை யாயினும், கந்தில் வாழ்ந்த கடவுளும் ஆலமர் செல்வனும் ஒன்றே என நாம் கருதலாம். தொடக்க காலத்தில் சிவன் எந்தத் திணைக்கும் உரிய கடவுள் அல்லர்; சிறு தெய்வமே ; பின்னர் அவன் முருகனுக்கு தந்தையாக்கப்பட்டு கிபி 5-6 நூற்றாண்டு களில் சைவ ஆகமவழிபாடு தமிழகத்தில் பரவிய பொழுது முழுமுதற்கடவுள் ஆக்கப்பட்டான். வட இந்திய ருத்ரனும் தொடக்கத்தில் மலைப்பகுதிக் கடவுள் ; மலையரசன் மகளை மணந்தவன். மலையில் வாழ்ந்து தவம் செய்த யோகிகளுக்கும் அவன் கடவுள் ஆனான். ருத்ரன் தென் இந்தியா வருமுன் சிவனும் பெருங்கடவுள் ஆகிவிட்டிருந்தான். ஆலமரம் முதலிய மரங்களின் அடியில் லிங்கமும் வைக்கப்பட்டிருக்கும். இல்லை யேல் சிவனை ஏன் 'ஆலமர் செல்வன்' என்று கூறியிருப்பர்? முதலில் கந்து (கம்ப) உருவில் வழிபட்ட சிவனுக்கு கிபி 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆங்காங்கு கோயில்கள் கட்டினர். அவற்றுள் சில இன்று முதன்மை பெற்றுள்ளன. முதலில் இருந்த கம்பங்களும் லிங்கங்களையே குறித்தன என்க. கம்பங்கள் இரு வகையில் புனிதமாகக் கருதப்பட்டிருக்கும் : மரமும் புனிதம் ; லிங்கத்தைக் குறித்ததும் புனிதம். நகரங்கள் உருவாக்கம் 5. ஒரு திணைப்பகுதியின் ஆக்கத்தை வேறொரு திணைப் பகுதிக்குப் பண்டமாற்று மூலம் உய்க்கும் வணிகம் தொடங்கிய பொழுது நகரங்கள் உருவாயின. நெய்தல் நில உப்பை வணிகர் பிற நிலங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர். இது பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் பல ''உப்பு ஒய் உமணர் ஒழுகை" (அகம் 310) ''உமணர் உப்பு ஒய் ஒழுகை (புறம் 116) உப்புச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் . உரன் உடை நோன் பகடு அன்ன எங்கோன் (புறம்) உமணர் கீழ் மரத்து யாத்த சேம் அச்சு (புறம்102) (அவ்வச்சுபோன்று சேர்ந்தவரைக் காப்பவன் பொகுட்டு எழினி) நெய்தல் நிலஉப்பு மட்டுமின்றி மருதத்திலிருந்து நெல், பருத்தித் துணி; முல்லையிலிருந்து பருப்பு வகை, நெய், மோர், குறிஞ்சி யிலிருந்து தினை, தேன் முதலியனவும் பண்ட மாற்று மூலம் வணிகம் செய்யப்பட்டிருக்கும். அவ்வணிகம் பெருமளவில் நடந்த இடங்களில், நகரங்கள் உருவாயின. புன்செயும் நன்செயும் சேரும் இடங்களில் அதாவது ஆறுகள் சமவெளிப் பகுதியில் செல்லத் தொடங்கிய இடங்களில் உறையூர், கரூர், மதுரை ஆகிய நகரங்கள் தோன்றின. அவ்விடங்களுக்குப் பருத்தியைக் கொண்டு சென்று அங்கே நெய்து உருவான துணி பிறவிடங்களுக்குச் சென்றிருக்கும். கிபி 1க்கு முந்திய இந்த நகரங்களின் விவரங்கள் சங்கப் பாடலில் இல்லை . முக்கியத் துறைமுகங்கள் 6. இக்காலகட்டத்தில் உருவான துறைமுகங்களை கிபிரம் நூற்றாண்டுக்குப் பிந்திய பெரிப்ளஸ், தாலமி யின் நூல் ஆகி யவை விவரிக்கின்றன. புகார் கிமு "முதலாயிரத்திலேயே " (first millennium BC) பெருந்துறைமுகமாகவும் சோழர் இரண்டா வது தலைநகரமாகவும் இருந்தது. முத்து வணிகத்தில் சிறந்த கொற்கைத் துறைமுகம் (சமஸ்கிருத நூலார் 'பாண்டிய காவாட' என்பர்) பாண்டியர் தலைநகரமாக இருந்தது. தலை நகரம் கொற்கையிலிருந்து மதுரைக்குச் சில ஆண்டுகள் முன்னர் தான் மாற்றப்பட்டதாக தாலமி கூறுகிறார். சேரர் துறைமுகங்களான முசிறி, தொண்டியிலிருந்து மிளகு முதலியவை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. மன்னர்கள் 7. அக்காலத்தில் மன்னர்களுக்கு ஆட்சிப்பணி என்று ஒன் றும் அவ்வளவாக இல்லை, ஊர் மக்களே பொதியிலில் கூடி தங்கள் காரியங்களைக் கவனித்துக் கொண்டனர். சேர சோழ பாண்டியர் அடிக்கடி தமக்குள் பொருந்தனர். அப்போர்கள் . வீரத்தைக் காட்டவும், பிற மன்னரை விடத்தாம் உயர்ந்தவர், என்று நிலை நாட்டவுமே நடந்தன. பிற மன்னர் நாட்டை வென்று தன் நாட்டுடன் சேர்க்க அல்ல. மூவேந்தர் எல்லைகள் காலா காலமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தன; வெற்றி தோல்வி களால் அவை மாற்றப்பட வில்லை. அமராவதியாறு காவிரியில் சேரும் இடத்தில் மூவேந்தர் எல்லைகளும் சந்தித்தன. அங்குள்ள செல்லாயி கோயிலில் மூவேந்தரும் வழிபட்டனர். அங்கு காவிரியில் சேரும் கரை போட்டானாறு சேர, சோழர் நாடு களைப் பிரித்தது. காவிரியின் மறுகரையில் செயற்கையாய் அமைத்த மேடு ஒன்று (எச்சங்கள் இன்றும் உள) சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையைச் சுட்டியது. இவ்விடத்தி லிருந்து காவிரியின் கிழக்கே உள்ள உறையூர் சோழருக்கும், மேற்கில் உள்ள கரூர் சேரருக்கும், தலைநகரமாயின. பாண்டியர் தலை நகரம் தெற்கிலுள்ள மதுரை. 8. வேந்தருடைய முக்கியப் பணியானது ஆநிரை கவர வரும் பகை மன்னர், குறுநிலத் தலைவர், மறவர் முதலில் யோரிடமிருந்து தம் நாட்டவரைக் காத்தல் ஆகும். போரில் சோழன் ஆத்திப் பூமாலையும் பாண்டியன் வேம்பையும், சேரன் பனம் பூமாலையும் அணிந்ததோடு அந்தந்த நிலைப் போருக் குரிய பூக்களையும் (வெட்சி, கரந்தை முதலியவை) அணிவர். மற் றொரு பணி புலவர், பாணர் முதலியோருக்கு உணவும் பரிசும் வழங்குதல் ஆகும். வேந்தரின் இரண்டு கடமைகளாகக் குள் முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய புறம் 42 இவற்றையே குறிப்பிடுகிறது. இயல் 14 தமிழரின் அயல் நாட்டு வாணிகம் கிமு 600 - கிபி 14 தேரியஸ் காலத்தில்: 1. கிமு 1க்கு முந்தைய 600 ஆண்டுகளில் இந்திய - ஐரோப்பிய வணிகத்தில் பெரும் பங்கு வகித்தவர் கிரேக்கர்கள். அக்கால கிரேக்க நூல்களில் (அரிசி 9) அரிசா ; (கருவா) கர்பியன்; (இஞ்சிவேர்) ஜிஞ்சிபேராஸ்; (பிப்பிலி 5) பெப்பெரி; (வைடூரியம் -) பெரிலோஸ் முதலிய தமிழக இறக்குமதிப் பொருள்களின் தமிழ்ப் பெயர்கள் ஏறியுள்ளன. கிமு 200க்குப் பின் இந்தியாவிலிருந்து சென்ற ஆடம்பரப் பொருள்கள் ஓரளவுக்கு உரோம் நாட்டுக்கும் சென்றன. உரோமப் பேரரசுத் தொடக்க காலம் 2. உரோமப் பேரரசன் அகஸ்தசு காலத்தில் இந்தியாவுடன் ஆன வாணிகம் மிகப் பெருகியது. இங்கிருந்து சென்ற பொருட் கள் வருமாறு: இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான விலங்குகள் 3. புலி, சிங்கம், காண்டாமிருகம், யானை ஆகியவை இந்தியாவிலிருந்து கிரேக்கத்துக்கும், உரோம் நாட்டுக்கும் ஏற்றுமதியாயின. இந்திய வேட்டை நாய்களை பாரசீக நாட்ட வர் வளர்த்ததாக ஹெரதோதஸ் கூறுகிறார். வேட்டைக்குப் பெயர் பெற்ற தென்னிந்திய நாய்களும் ("கதநாய்" புறம் 33, 205;) உய்க்கப்பட்டிருக்கலாம். கிளி, மயில், பாம்பு முதலியவையும் ஏற்றுமதியாயின. விலங்கு சார் பொருட்கள் 4. யானைத் தந்தம், முத்து, முதலிய விலையுயர்ந்த பொருட் கள் இங்கிருந்து ஏற்றுமதியாயின. நிலைத்திணைப்பொருட்கள் . இந்தியாவிலிருந்து பல்வகைப் பருத்தித் துணிகள் ஏற்று மதியாயின. மிளகை கிமு 5ம் நூற்றாண்டிலேயே கிரேக்க மருத்துவர் ஹிப்போகிராடிஸ் மருந்தாகப் பயன் படுத்தினார். இஞ்சி, நல்லெண்ணெய், தேங்காய், கருங்காலி, தேக்கு முதலிய வையும் ஏற்றுமதியாயின. அர்மீனியாவில் கிருஷ்ண, பலதேவ வழிபாடு 6. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் அர்மீனியாவில் (மேற்கு யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில்) இந்தியர் இருவர் சனி (கிருஷ்ணன்) தெம்டெர் (பலதேவன்) ஆகிய கடவுள்களுக்குக் கோயில் அமைத்தனர் (JRAS 1904: பக் 309 - 14). புராணங்களில் கிருஷ்ணனும் பலதேவனும் விஷ்ணுவின் அவதாரங்களாகக் கூறப்படினும் தமிழ்நாட்டில் தான் நீலக் (கருமை) கண்ணனும் வெள்ளை நிறப் பலதேவனும் ஒரு சேர வழிபடப்பட்டனர் (புறம் 56, 58; நற் 32; சிலம்பு 5;9 பரிபாடல் 15). வட நாட்டில் பல தேவனுக்குக் கோயில் இல்லை. இவ்விருவர் வழிபாடும் தென் னாட்டிலேயே தான் தோன்றியிருக்க வேண்டும் - அதுவும் விஷ்ணுவின் அவதாரங்களாக அல்ல (காரணம் இராமனைத் தவிர பிற அவதாரங்களைச் சங்கப்பாடல்கள் குறிப்பிடவில்லை) பலராமன் கொடி பனைக்கொடி; அக்கொடி உடைய கடவுள் தென்னாட்டில்தான் உருவாகியிருக்க வேண்டும். வெள்ளையன், வெள்ளை யம்மாள் என்று இன்றும் வழங்கும் பெயர்கள் பல இராமனைக் குறித்தவை யேயாம். அர்மீனியா சென்ற இவ்வழி பாடு வடநாட்டிலிருந்து சென்றதா யினும் ஆகுக; தென்னாட் டில் இருந்து சென்றதாயினும் ஆகுக. கிபி 4ம் நூற்றாண்டில் செயிண்ட் கிரிகரி அங்கு படையெடுத்துச் சென்று அவ்வழி பாட்டை வன்முறையில் ஒழித்தார்; ஐயாயிரம் பேரை கிறித்துவர் ஆக்கினார்; 438 பேரின் தலையை மழித்து நாடு கடத்தினார். 7. தென் இந்தியாவிலிருந்து மலாயா, இந்தோனேசியா, இந்தோசீனப் பகுதிகளுடன் வாணிகம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. அவ்வாணிகத்தில் தமிழர் களுக்கும் பங்கு இருந்தது. சீனாவிலிருந்து பட்டு மைய ஆசியா வழியாக ஏற்றுமதியானது; அத்துடன் கடல் வழியாகவும் - தமிழ்நாட்டு வணிகர் கப்பல்களைத் தமிழகத்திலிருந்து எகிப்து வரைச் செலவுக்குப் பயன்படுத்தி - சீனப்பட்டு ஐரோப்பா சென்றது. மிளகு தமிழகத்திலிருந்து சீனாவுக்கும் ஏற்றுமதி யானது. இயல் 15 தமிழ் இலக்கியத்தில் சமஸ்கிருதப் பண்பாட்டின் முதல் கட்ட நுழைவு அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் எழுதிய பொழுது தமிழ் இலக்கியத்தில் சம்ஸ்கிருதப் பண்பாட்டுத் தாக்கம் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் பொதியில் மலையில் பல காலம் இருந்த அகஸ்தியர்கள் ஆசிரமத்தில் மிகப் பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு அகஸ்தியர் எழுதியது அந்த இலக்கணம். பற்பல அகத்தியர் களை இந்த அகத்தியரோடு ஒன்றாகப் பிணைத்து அகத்திய முனி என்று தொன்மக் கதை கட்டப்பட்டது. சமஸ்கிருத இலக்கணக் கூறுகள் எல்லாம் தமிழிலும் இருந்தாக வேண்டும் என்ற மொழியியலுக்கு மாறான எண்ணத்தில் சமஸ்கிருதத்தின் 7 (அல்லது) வேற்றுமைக் கருத்தையும் தம் இலக்கணத்தில் புகுத்தினார் அகத்தியர். சமஸ்கிருதம் உட்பிணைப்பு நிலை மொழி; தமிழோ "ஓட்டு நிலை மொழி"; ஓட்டுகள் இந்த வரிசை யில் தான் வரவேண்டும் என வரன்முறை உள்ளது. சமஸ் கிருதத்தில் அவ்வாறு அல்ல. வேரும் அதிலிருந்து வரும் அடிச் சொல்லும் வினைச்சொல் புடைபெயர்ச்சியில் மட்டுமன்றி பொருள் வேறுபாடு எய்துவதற்காகவும், வரம்பில்லாத மாற்றம் எய்தும் : சமஸ்கிருதம் (அடிச்சொல்) tad தத் - tesam தேசாம் (வேர்) han ஹன் - Jaghana ஜஹான duh துஹ் -- addok அத்தொக் தமிழ் அவ்வாறல்ல 1. தனிச்சொற்களே வேற்றுமையுருபுகளாக வரும் : ஒடு, பொருத்து, அது, உடைய, இடை, தலை, திசை, ஏழாம் வேற்றுமையின் பல "உருபுகள்" இவற்றையெல்லாம் தமிழ் இலக்கணிகள் "சொல்லுருபு' என்பர் 2. சொல் சற்றே தேய்ந்து உருவான வேற்றுமையுருபுகள் ஒடு, இல், அது, அ (ஆறாம் வேற்றுமைப்பன்மை , அவை - அ) 3. முற்றிலும் தேய்ந்தவை (எச்சொல் தேய்ந்து இவை உருவாயின என அறிய இயலவில்லை . ஐகு, இவையும் பண்டு தனிச்சொற்களாக இருந்து தேய்ந் தவையே : என்னை? பெயர் அடிக்கும் உருபுக்கும் நடுவே பன்மை யுருபு வருவதால் ('' அவர்களுக்கு) சமஸ்கிருதத்தில் இப்படியல்ல. பாணினியைப் பின்பற்றி தமிழுக்கும் ஏழு வேற்றுமைகளை அகத்தியர் கற்பனையாக உருவாக்கினார். அகத்தியர் சீடர் தொல்காப்பியரோ ஐந்திரத்தைப் பின் பற்றி வேற்றுமைகளை எட்டாக ஆக்கிவிட்டார். "காதலி" பின் என்பதை "காதலி" யின் ஏழாம் வேற்றுமை வடிவம் என்றால் "காதலியெதிர்" என் பதையும் ஏன் வேற்றுமை வடிவாக கருதக் கூடாது? (நன்னூல் மயிலை நாதருரை) ஆகுபெயர்களுடன் அடை சேர்ந்து வரும் ஒவ்வொரு வடிவத்தையும் தனித்தனி வேற்றுமையாகக் கருத வேண்டும்! 2. சமஸ்கிருதத்தில் செயப்பாட்டு வினை பரவலாக உண்டு. செயப்பாட்டு வினையைத் தமிழிலிலக்கணத்தில் புகுத்தியவரும் அகத்தியரே. சமஸ்கிருத தாத 3யதே " அடிக்கப்பட்டான்" என்பது எடுத்துக் காட்டு, அடிக்கப்பட்டான் என்பதைப் பின்வருமாறு கருதலாம். 1) அடிக்க - ஒருவன் (சாத்தன்) அடிக்கிறான் 2) பட்டான் - இன்னொருவன் (முருகன்) அந்த அடியைப் படுகிறான். 1க்கு எழுவாய் வேறு ; 2 ஆவதற்கு எழுவாய் வேறு. இப்படி உருவாகும் அடிக்கப்படுதல்" என்னும் வினைச்சொல் ஏரணத்துக் கும் ஏரண முறைப்படி அமைந்த தமிழ் இலக்கணத்துக்கும் எதிரானது (தமிழ் மரபுப்படி அடியுண் அடிபடு என்பதே சரி) இப்படி அகத்தியர் கற்பித்த செயப்பாட்டுவினை சமஸ் கிருதத்தில் எண்ணித் தமிழில் எழுதுபவர்களுக்குப் பயன் பட்டது. அகத்தியர் சீடர் தொல்காப்பியர் தன் இலக்கணத்தை இத்தகைய போலிப் பிற வினையுடன் தொடங்குகிறார்: "எழுத் தெனப்படும். ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர்களும் இன்று இப்படியே செயல்படுகின்றனர். விவிலியத் தமிழாக் கத்தில் இந்தப் போலிப்பிறவினை " படு" வைப் பக்கம் தோறும் காணலாம்! 3. பின்னர் படிப்படியாக சமஸ்கிருதச் சொற்கள், கருத்து கள், உவமை உருவகங்கள், கதைகள், புராணங்கள் மூட நம்பிக்கைகள், சமயக்கருத்துகள், அறிவியல், அறம், யாப்பு, பாவகை போன்றவையும் தமிழ் இலக்கியத்திற்குள் பெருமளவுக் குப் புகுத்தப்பட்டன. சங்க இலக்கியத்தைப் பிற்காலத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டால் தூய தமிழ்ச் சொற்களும், இயற்கைக் கற்பனை வளமும் நிறைந்த சங்க இலக்கியம் ஏதோ அயல் இலக்கியம் போலத் தோன்றும். 4. அகத்தியர் எழுதிய இலக்கணமான அகத்தியம் இன்று இல்லை . அவர் சீடர் (ஜமதக்னி மகன் திரணதூமாக்கினி என்ற இயற்பெயருடைய) தொல்காப்பியர் அகத்தியத்தின் அடிப் படையில் எழுதிய தொல்காப்பியம் மட்டும் உள்ளது. தமிழ்ச் செய்யுள் நூல்கள் சமஸ்கிருதச் செய்யுள் நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்ததைக் கண்ட இந்த பிராமண இலக்கண ஆசிரியர் செய்யுளின் பாடுபொருள் (தமிழ் அகம், புறம்) பற்றி பொருளதிகாரம் என ஒன்றையும் எழுதினார் - எழுத்து, சொல், யாப்பு ஆகியவற்றோடு நில்லாமல். ஆரியர் தொடர்புக்கு முந்தைய தமிழர் வாழ்வியல் பற்றியும் சமஸ்கிருத இலக்கியத்துக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் தொல்காப்பியர் பொருளதிகாரத்திலிருந்து அறிந்து கொள்ள லாம். எனது ''ஆரியருக்கு முந்திய தமிழர் பண்பாடு' (1929) நூலில் உள்ள செய்திகளோடு தொல்காப்பியப் பொருளதி காரச் செய்திகளையும் சேர்த்துக் கொள்க (அச்செய்தி களைப் பற்றி தனி நூல் ஒன்றை எழுதவிருக்கிறேன்) பொருளதிகாரத்தில் ஆரியக்கருத்துக்கள் 5. தொல்காப்பியர் தம் காலத்தில் தமக்குக் கிட்டிய தமிழ் நூல்களின் அடிப்படையில் பொருளதிகாரம் எழுதியுள்ளார். எனினும் தமது சமஸ்கிருத இலக்கியப் புலமையை மறக்க இயலவில்லை . ஆரியர் சமூக அரசியல் சமயக்கருத்துகளே தெய்வத்தன்மை வாய்ந்தவை என்ற அவர் எண்ணத்தையும் மறந்திலர். நான்கு வருணங்களில் முதல் மூன்று வருணத்தவரே அகப்பாடல் தலைவராக வல்லவர் என்று கருதியவர் அவர். எனினும் நூல்களில் வேட்டுவர், மீனவர் போன்ற கீழ்ச்சாதி யினரும் அகப்பாடல் தலைவராக உள்ளதையும் மறைக்க இயலவில்லை; எப்படியோ இச்சிக்கலை ஒருவழியாகத் தீர்க்க அவர் முயல்கிறார்; ஆனால் முயற்சி வெற்றியடையவில்லை. ஆரியர் எண்வகை மணத்தையும் தமிழர் களவு, கற்புக் கோட் பாட்டையும் இணைக்க முயன்று தோல்வியுற்றார். தமிழ் அகம், புறம் கோட்பாட்டை ஆரியர் தர்ம, அர்த்த,காம, மோட்சங் களுடன் ஒட்டவைக்க முயல்வது மற்றொரு தோல்வி. வடவர் காமத்தை விட பண்பட்டது தமிழர் அகம்; தர்ம, அர்த்த மோட் சங்களை புறத்துக்குள் திணிப்பதும் தவறு. (பிற்றை நாள் உரையாசிரியர்களும் இவ்வாறு திணிக்க முயன்றுள்ளனர்). தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் மட்டும் இருந்த இலக்கிய வடிவங்களுக்கும், அதாவது தமிழிலக்கியம் சாராதவற்றுக்கும், பொருளதிகாரத்தில் இலக்கணம் வகுக்கிறார். இவற்றுக் கெல்லாம் தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்துக் காட்டுகள் தர உரையாசிரியர்களால் இயலவில்லை . தமிழில் சமஸ்கிருதச் சொல் நுழைப்பு 6. அகத்தியரும் தொல்காப்பியரும் ஒரு சில தத்பவங்களை மட்டுமே பயன்படுத்தினர். பிற்கால உரையாசிரியர்கள் "அகத் தியம்'' எனக் கூறும் சூத்திரங்களிலும் தொல்காப்பியத் திலும் இவற்றைக் காணலாம். ஆயினும் அகத்தியர் இலக்கணக் கருத்துக்களைச் சுட்ட பொருத்தமான தமிழ்க் கலைச் சொற் களையே பயன்படுத்தினார். சங்க இலக்கியங்களின் தொடக்க காலப் பாடல்களில் சமஸ்கிருதச் சொற்கள் இல்லை அல்லது மிகக்குறைவு; ஆனால் காலம் செல்லச் செல்ல அவை மிகு கின்றன. சமஸ்கிருதச் சொல் குறைவாக இருந்தால் முற்காலத்தது என்றும் மிகுதியாக இருந்தால் பிற்காலத்தது என்றும் கூறலாம். இவ்வாறு வடசொல் பயன்பாடு மிகினும் , கிபி 6ம் நூற்றாண்டு வரை தொல்: பொருளதிகாரக் கோட்பாடுகள் பெருமளவுக்குக் கடைப்பிடிக்கப்பட்டன. அகத்தியர் காலம் (கி.பி. 1ம் நூ) 7. தொல்காப்பியர் " என்ப'' ''என்மனார் " என்று கூறும் இடத்தில் எல்லாம் அகத்தியர் நூலைக் குறிக்கிறார் என்று கொள்ளலாம். "எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" என்பதில் 'என்ப'' அகத்தியரையே குறிக்கும் எனலாம். தமிழில் 'எழுத்து' என்பது ஒலியையும் குறிக்கும், வரி வடிவத்தையும் குறிக்கும். ஆங்கிலத்தில் இதற்கு நிகரான சொல் இல்லை. (சமஸ்கிருதத்தில் ''அக்சரம்" இவ்விரு பொருளையும் குறிக்கும். ஆனால் 'எழுத்து' அக்சரத்தின் தமிழாக்கம் அல்ல; ஆகாச ஒலி அசைவால் என்றும் நிலை பெற்றுள்ள சப்தம் காதுக்குப் புலனாகும் பொழுது அக்சரம் எனப்படும் என்பது மீமாம்சக, வையாகர்ணிக தத்துவமாகும்) 8. பிராமி என்று (நம் காலத்தில்) பெயர் தரப்பட்டுள்ள அசோகன் கல்வெட்டு வரிவடிவத்திலிருந்து தான் இந்தியா விலுள்ள அனைத்து லிபிகளும் உருவாயின. (உருது மட்டும் அராபிய லிபியைக் கொண்டுள்ளது). கிமு 250 - 150 சார்ந்த கல்வெட்டுகளில் தமிழரல்லாத சமண, புத்த முனிவர்கள் எழுதுவித்த கல்வெட்டுக்களின் லிபியே தமிழை எழுதப்பயன் படுத்திய முதல் லிபியாகும். (அந்த லிபியில் மெய்க்கும் அகர மேறிய மெய்க்கும் (க்க) வேறுபாடில்லை; அதாவது மெய்க்குப் புள்ளியிடும் வழக்கம் வரவில்லை. எனினும் ழ ற ன உள்ளன) அதற்கு முன் தமிழுக்கு வரிவடிவம் இல்லை ; எனவே தான் கிமு 1க்கு முந்திய எண்ணிறந்த தமிழ் நூல்கள் அறவே மாய்ந்து விட்டன. லிபி பொதுவாக பழக்கத்துக்கு வந்த கிமு 100க்கு முன்னர் அகத்தியர் வாழ்ந்திருக்க இயலாது. அகத்தியரும் அவர் மாணவர் தொல்காப்பியரும் அதன்பின் நூறு ஆண்டுகளுக்கு மேல் கழிந்த பின்னர் தான் வாழ்ந்திருக்க வேண்டும். தொல் பொருள். களவியல் : "மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்" என்ற தொடரில் வரும் ஓரை என்பது நல்ல நேரத்தைக் குறிக் கிறது. கிரேக்க 'ஹோரா' கிமு 5ம் நூற்றாண்டில் பருவத்தைக் குறித்தது ; கிமு 2ம் நூற்றாண்டில் ஒரு நாளின் 1/24 பகுதியைக் குறிக்கத் தொடங்கியது. இந்த சோதிடக் கருத்து 'ஹோரா' காந்தார நாட்டு கிரேக்கர்கள் வழி சமஸ்கிருதத்தில் புகுந்து பின்னர் தமிழிலும் ஏறியது. ஓரை (ஹோரா) தமிழில் கிபி 1ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஏறியிருக்க இயலாது. எனவே தொல் காப்பியர் காலம் கிபி 1ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதல்ல. தொல்காப்பியர் ஓரை பற்றி அறிந்திருக்க வேண்டும். கோள்கள் பெயரில் நாட்களை அழைக்கும் முறையும் தமிழ் நூல்களில் கிபி. 500க்கு முன்னர் இல்லை , 9. தொல்காப்பியர் தலைவனின் பாங்கருள் பார்ப் பனரையும் (பிராமணரை) குறிக்கிறார். சம்ஸ்கிருத நாடகத்தில் தான் பிராமணன் தலைவனின் காதல் தூது ஆக வருவான். அக, புறப்பாடல்களில் இதற்குச் சான்றே இல்லை. எனவே தொல்காப்பியர் சொன்னது நாடக வழக்கையே யன்றி உலகியல் வழக்கை அல்ல என்க. புறம் 34,43,367, 9 ஆகியவற்றில் அதாவது நான்கு முறை மட்டுமே "பார்ப்பார்" வருகிறது - எங்கும் காதல் தூதுவனைச் சுட்டி அல்ல; பத்து இடங்களில் "அந்தணர் " வருகிறது, அதுவும் அப்படியே. இங்கெல்லாம் பிராமண ருடைய வேதஞானம், வழிபாடு, தானம் பெறுதல் ஆகியவையே குறிப்பிடப்படுகின்றன. அகம் 24,337, மற்றும் குறுந்தொகை 156 இல் வரும் பார்ப்பனரும் பாங்கர்கள் அல்ல. சம்ஸ்கிருதத் தில் முதல் நாடக ஆசிரியர் பாஸர் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தியதல்ல. அவர் காலத்திற்குச் சில நூற்றாண் டுக்குப் பின்னர் தொல்காப்பியர் வாழ்ந்திருந்தால் தான் அவர் பார்ப்பானைத் தலைவனின் பாங்கனாகக் குறித்திருக்க இயலும். 10. அகத்தியரின் (தமிழ் எழுத்து, சொல், பொருள்) முதல் இலக்கணம் தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் உத வியது. ஆனால் பிற்காலத்தில் உயர்வு நவிற்சியாக அகத்தியர் சிவன் அல்லது சுப்பிரமணியனிடம் கற்றுப் பின் தமிழருக்கு மொழி கற்பித்தார் எனக் கதை கட்டப்பட்டது. (அதுவரை தமிழர் ஊமையாக இருந்தனரோ!) டி. ஆர். பந்தார்கர் 1918 கார்மிகேல் பொழிவு ; டி. ஆர். ராமகிருஷ்ண சாஸ்திரி (1924 : மூன்றாவது அனைத்திந்திய கீழ்த் திசையியல் மாநாடு) ஆகி யோர் திராவிடரையும் தமிழரையும் நாகரிகம் எய்தச் செய்தவர் அகத்தியர் என்று கூறுவது ஆதாரமற்ற கற்பனை. ஏற் கெனவே முழுவளர்ச்சி பெற்றிருந்த, தனித்தன்மை வாய்ந்த தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கண்ட அகத்தியர் அவற்றை விளக்கி இலக்கணம் வரைந்தார் என்க. 11. அகத்தியருக்கு முன்னர் எண்ணிறந்த தமிழ்ப்புலவர் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் எழுந்த அகம், புறப் பாடல் வளர்ச்சியின் வலிமை தான் அகத்தியர் காலத்திற்குப் பின்னர் 500 ஆண்டுகள் வரை புறப்பாடல்கள் தோன்ற வழிவகுத் திருக்க வேண்டும். சமஸ்கிருதத் தாக்கத்தால் சங்க இலக்கிய மரபு பிற்காலத்தில் பெரிதும் கைவிடப்பட்டது. அகத்தியர் தமிழ் தந்தார் என்ற பிற்காலக் கதையில் ஓரளவு உண்மை உள்ளது, என்னை ? தம் இலக்கணத்தின் மூலம் ஆரியக் கருத்துக்களைப் புகுத்தியதன் பின் விளைவே பிற்காலத் தமிழ் இலக்கியத்தின் (ஆரியம் சார்ந்த வடிவம் என்ற அளவுக்கு அது உண்மை . எனினும் சங்கப்பாடல்களில் அகத்தியர் பற்றிய குறிப்புக்கள் மிகச் சிலவே: சிலப்பதிகாரம் 15 ("மாதவமுனிவன் மலை'' = பொதியமலை ) மணிமேகலை பதிகம் ("அகத்தியன் தனது கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை"); மற்றும் காதைகள் 122. யாண்டும் அகத்தியன் தமிழைப் படைத்ததாகவோ (கடவுளிடம் இருந்து) கற்றதாகவோ குறிப்பு இல்லை. கிபி 10ம் நூற்றாண்டி லிருந்து உரையாசிரியர்கள் காலத்தில் தான் இக்கதைகள் படைக்கப் பட்டிருக்க வேண்டும். அகத்தியர், அவர் மனைவி லோபாமுத்திரை, தொல்காப்பியர் ஆகிய மூவரையும் இணைத்து நச்சினார்க்கினியர் புனைந்துள்ள கதை அனைத்தையும் விஞ்சி விட்டது! இயல் 16 தமிழ்ச் சங்கங்கள் மூன்று இவ்வியலின் இறுதியில் தமது முடிவாக ஆசிரியர் கூறும் கருத்துக்கள் பின்வருவன. 1. தமிழ்ச் செய்யுள் கி.மு 1000ஐ ஒட்டியோ அதற்கு முன்னரோ தோன்றியது ஆகும். அனைத்தும் அகம் அல்லது புறம் பற்றிய தனிப்பாடல்களாகவே இருந்தன என்பது உறுதி ; அவையனைத்தும் அழிந்துவிட்டன. அகத்தியர், தொல்காப்பி யர், பிற இலக்கண வாசிரியர்கள் ஆகியோர் தங்கள் நூல்களிற் சொன்ன இலக்கணத்திற்கு ஆதார இலக்கியமாக அமைந்த பாடல்களும் அவற்றுள் (அதாவது அவ்வாறு அழிந்து பட்டன வற்றுள்) இருந்திருக்கலாம். 2. அப்பாடல்களை இயற்றினார் பாண்டிய வேந்தர் மட்டுமின்றி சோழ, சேர வேந்தர் அவைக்களங்களிலும் இருந் தனர். அப்புலவர்களுக்கும் அவர் சுற்றத்தினர்க்கும் மூவேந்தர் கள் ஊனும் மதுவும் வரையாது வழங்கினர். 3. பாண்டியர் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று நகரங்களைத் தலைநகரமாகக் கொண்டனர் - முதலில் தென் மதுரை , அடுத்து கொற்கை (அதனை சமஸ்கிருத நூல்கள் பாண்டிய காவடம் என்றன) அடுத்து தற்போதைய (கூடல் என்னும் மதுரை. (இறையனார் அகப் பொருளுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் கூறும் முச்சங்கங்கள் செய்தி குறிப்பிடும் கடல் கோள் களுள் முதலாவதில் தென் மதுரை கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வுரைகள் கூறும் கடல் கோள்கள் இரண்டிலுமே கடலுள் மூழ்கியது ஒரு சிறு நிலப்பகுதியாகவே இருந்திருக்க வேண்டும். அப்பகுதி பண்டைக் காலத்தில் (ஏன் கிபி. 1300 வரையில் கூட) பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாதல் வேண்டும். குமரியாறும் பஃறுளியாறும் அப்பகுதி யில் ஓடிய சிற்றாறுகள். எழுநூற்றுக் காவதம் (ஆயிரம் மைல்) நிலப்பகுதி கடல் கொண்டது என அடியார்க்கு நல்லார் கூறியது ஏற்கவே முடியாத மிகைக் கூற்று ஆகும்.) கொற்கையிலிருந்து தலைநகர் மதுரைக்கு மாறியதைப் பிளினி குறிப்பிட்டுள்ளார். பாண்டிய ருடைய மூன்று தலைநகரங்களிலும் அவைக்களப் புலவர் இருந்திருப்பர். பிற்காலத்தில் மூன்று சங்கங்கள்" என்று குறிப்பிட இது காரணமாயிற்று. 4. மூன்று "சங்கங்கள் இருந்த ஆண்டுக் கணக்குகள் - அவை ஒவ்வொன்றிலுமிருந்த புலவர் பெயர்கள் ஆகியவை யெல்லாம் ஆதாரமற்ற கற்பனைகள் (absurd inventions) 5. கி.பி 470ல் சமணர் வஜ்ரநந்தி மதுரையில் சமண ''சங்கத்தை நிறுவினார். அதனைப் பார்த்து அக்காலத்தவரும் சிவனைப் பற்றிப் பாடியவர்களுமான புலவர் சிலர் "தமிழ்ச் சங்கம் சார்ந்தவர் என்று குறிப்பிடப்படலாயினர், அத்தமிழ்ச் சங்கத்தில் அவ்வப்பொழுது சிவனையும் உறுப்பினனாக்கி கதை புனையப் பட்டது. 6. கி.பி எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின் னர்த்தான் அக்காலத்துக்குப் பல நூறு ஆண்டுகாலம் முன்னர் (கி.பி. முதல் நூற்றாண்டை ஒட்டி இருந்த தமிழ் வேந்தர் அவைக்களப்புலவர் குழுவைச் சுட்ட "சங்கம்" என்ற பெயர் பயன்படுத்தப் பட்டது. 7. கிபி. முதல் நூற்றாண்டளவில் சேர சோழ மன்னர்களுக் கும் அவைக்களப் புலவர் குழுவினர் இருந்திருக்க வேண்டும். ஆயினும் கி.பி. 5-9 நூற்றாண்டுகளில் சேர சோழ வேந்தர் பரம்பரையினர் வீழ்ந்துபட்டு இருந்தனர், ஆட்சியில் இல்லை. எனவே சேரர், சோழர் தலைநகரங்களில் சங்கங்கள் இருந்தனவாகவோ அவற்றில் சிவனும் உறுப்பினராக இருந்த தாகவோ கதை புனையப்படவில்லை. 8. ஆக, ஆசிரியர் - சீடன் பரம்பரையாக வரன் முறையாக வந்த மரபுச் செய்தியல்ல முச்சங்கங்கள் பற்றியது. அரசவைக் குழுவினர் பற்றிய குழப்பமான நினைவுகள், இலக்கியத்தில் வரும் சில கூற்றுக்களின் அடிப்படையில் கற்பனை ; சிவன் திரு விளையாடல் அற்புதக் கதைகள் இவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு அவியல் புனை கதையே அது. (The legend of three Sangams is not a genuine tradition handed down from one generation of scholars to another but a hotchpotch of vague memories of royal assemblies, surmises with regard to allusions in poems, and legends of Sivan's miracles) (மூல நூல் பக்கங்கள் 225-252ல் முடிவுரை மட்டும் தரப்படுகிறது.) இயல் 17 கி.பி. 1-500 : மக்கள் வாழ்வியல் 1. கி.பி.1 - 500 கால அளவில் பிராமணர் தமிழகத்தில் இருந் தனர். அதற்கு முன்னரே அகத்தியரும் தொல்காப்பியரும் ஆரியக் கூறுகளைத் தமிழகத்தில் திணிக்க முயன்று இருந்தனர். எனினும் தமிழக மக்கள் பெரும்பாலோர் வாழ்வியல் அதற்கு முன்னர் இருந்தது போலத் தான் தொடர்ந்தது. (கிபி. 600-700 க்குப் பின்னர்தான் இயற்கை நலம் வாய்ந்த பாக்களையே புனையும் பழந்தமிழ்ப் பண்பு மாறி, சமஸ்கிருதத்தில் உள்ளவை போன்ற செயற்கைக் கவி நடைப் பாக்கள் எழுந்தன). அக்கால மக்கள் வாழ்வியலை விளக்கும் சான்றுகள் தரப்படுகின்றன. குறிஞ்சிப் பகுதி 2. புறம் 120 வரிகள் - 14இல் 'வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டு" குறிஞ்சிப் பகுதியில் (பறம்பு மலையில்) உழுது பயிரிட்டு விளை யும் சாமை, வரகு, தினை, அவரை முதலியன குறிப்பிடப் படுகின்றன. (இங்குக் கடலை என்பது கொத்துக் கடலை. ''வேர்க் கடலை groundnut '' என்று சீனிவாசர் குறித்துள்ளது தவறு. காரணம் அது கி.பி. 1500க்குப் பின்னர் போர்த்துகீசியர் மணிலாவிலிருந்து கொணர்ந்தது - காண்க பிஎல்சாமி : செந் தமிழ்ச் செல்வி 26:5 சனவரி 1952] புறம் 109 வரிகள் 3-8 'உழவருழாதன நான்கு பயனுடைத்தே உழாமலே கிட்டும் மூங்கில் நெல், பலாப்பழம், வள்ளிக் கிழங்கு (அதாவது கவலைக் கிழங்கு, தேன் ஆகியவை பாரியின் பறம்பு மலையில் இயற்கை யில் கிடைத்தன. [வள்ளிக் கிழங்கை சீனி வாசர் சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று குறித்துள்ளார். அக்கிழங்கு கிபி 1500க்குப் பின்னர் தென் அமெரிக்காவி லிருந்து வந்தது.) நற்றிணை 336 தினைப்புனங்கவர்ந்த ஆண்பன்றியை அம்பெய்து கொன்று கொணர்கிறான் கானவன். அவன் மனைவி அப்பன்றியின் ஊனை உறவினர்க்குப் பங்கிட்டுத் தருகிறாள். மருதப் பகுதி 3. புறம் 209: நெல் அறுக்கும் தொழுவர் (உழவர்) ஆம்பல் இலைக் குடையில் அரியல் (அரித்தெடுக்குங்கள்ளை) உண்டு கடல் அலையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்து ஆடு கின்றனர். அகம் 116: செந்நெல் அறுக்கச் செல்லும் வினைஞர் தம்முடன் சாகாட்டில் (வண்டியில் கள் கொண்டு செல்கின்றனர். வண்டி சேற்றுப் பகுதிக்கு வந்தால் மீட்க, உருள்கள் சேற்றில் சிக்காமல் தடுக்க, கரும்புகளை வெட்டிச் சேற்றில் அடுக்கி சேற்றுப் பகுதியைத் தாண்டுகின்றனர். (இத்தகைய வளமிக்க ஊரன் பரத்தை மகள் ஒருத்தியுடன் புனல் ஆடியதால் எழுந்த அலர் கூடற்பரந்தலையில் செழியன் இரு பெருவேந்தரைப் புறம் கண்ட பொழுது எழுந்த ஆரவாரத்தை விடப் பெரிது என்று கூறி தோழி தலைமகனுக்கு வாயில் மறுக்கிறாள் என்று கூறும் இப்பாடல் பரணர் பாடியது ) நெய்தற்பகுதி 4. நற் 215 : பகற்குறிக்கு வந்து செல்லும் தலைவனிடம் தோழி "எம் இல் ஆடவர் இரவெல்லாம் சுறாமீன் பிடிக்க கடல் மேற்சென்றுள்ளனர். இன்று இரவிலும் நீ எம்மொடு இப் பாக்கத்தில் தங்கினால் என்ன?'' எனக் கூறுகிறாள். புறம் 24: எவ்வியின் மிழலைக் கூற்றத்து நெய்தற் பகுதியில் வன்பரதவர் வெப்புடைய மட்டு (மது) உண்டு மகளிரொடு குரவைக் கூத்து ஆடுகின்றனர். மகளிர் பனநுங்கின் சாறு, கருப்பஞ்சாறு, இளநீர் மூன்றையும் கலந்து பருகி கடல் நீரில் பாய்ந்து ஆடி மகிழ்கின்றனர். ("முந்நீர் உண்டு முந்நீரில் பாய் கின்றனர்") அகம் 120 : தோழி தலைவனிடம் "உனது ஊர்தியாகிய அத்திரியை (கோவேறு கழுதை நெய்தல் நில உப்பங்கழி யில் உள்ள சுறாமீன் தன் கோட்டால் தாக்கியதால் காயம் பட்டுள்ளது. எனவே உன் வல்வில் இளையரோடு இன்றே திரும்பிச் செல்லாது, பெரிய கழி சூழ்ந்த எங்கள் ஊரில் இன்றிரவு தங்கிச் சென்றால் உனக்குக் கேடு ஒன்றும் வராதன்றோ ?" எனக் கூறுகிறாள். பாலைப் பகுதி 5. நற் 43: பாலையிற் செல்வோர்க்கு உணவு எது? ஓநாய் மானைக் கொன்று தின்று மிச்சிலாக விட்டுச் சென்ற ஊன் மட்டுமேயாகும். அகம் 119: பாலை வழிச் செல்லும் மக்கள் அறுத்த பிரண்டைக் கொடியானது இடிதாக்கி இறந்த பச்சைப் பாம்பின் உடம்பு போல் தொங்குகிறது; உமண்சாத்தினர் (உப்பு வாணிகக் குழுவினர் ) விட்டுச் சென்ற கல் அடுப்பில் மழவ வீரர் ஊன் சோறு ஆக்கி உண்கின்றனர். முல்லைப் பகுதி : 6. நற் 142: பால் விற்கும் இடையன் கையில் உறியில் உள்ளது பால் குடம். அவன் முதுகில் ஞெலிகோலும் பிற கலங்களும் (கருவிகளும் கொண்ட தோல்பையும்; மழைத் தடுப்பான ஓலைப் பாயும் (கொங்காணி) உள்ளன. அவனுடைய மடிவிளி (சீழ்க்கை ஒலி) ஆடுகளை அசையாமல் ஓரிடத்தில் நிறுத்துகிறது. இத்தகைய புறவில் உறைபவள் உன் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள். நற் 242 : கார் காலக் காலையில் பிடவம், தளவம், கொன்றை, காயா ஆகிய பூக்கள் மலர்கின்றன. தன் குட்டி களோடு மேயச் சென்ற மடமானைத் தேடி ஆண்மான் செல் கிறது. அகம் 94: முல்லை நிலத்தில் நள்ளிரவு ; மலைப் பகுதியில் பூத்த முசுண்டை வெண் பூக்கள் விண்மீன்கள் போலத் தோன்று கின்றன. ஆட்டுக் குட்டிகளைத் தன் அருகில் வைத்துள்ளான் இடையன். அவன் முதுகில் ஓலைப் பாய்; கையில் கொள்ளிக் கட்டை; குறுநரிகளை ஓட்ட அவன் எழுப்பும் நெடிய சீழ்க்கை யானது தினைப்புனங்காவலர் பன்றிக் கூட்டத்தை ஓட்ட ஊதும் பெரிய கொம்பின் ஓசையொடு கலந்து ஒலிக்கின்றது. நற் 367: முல்லை நில மனைகள் குறுங்கால்கள் நட்டு அவற்றின் மேல் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் முன், பலியாகப் படைக்கப் படும் சோற்றையும் கருணைக்கிழங்குக் கறியையும் குஞ்சுகளுடைய காக்கை அதன் கிளையினைப் பயிர்ந்து அழைத்து உண்கிறது. புறம் 164 : தன் குடும்பத்தின் கொடிய வறுமையைப் பற்றிப் பெருந்தலைச் சாத்தனார் குமணன் முன்னர்ப் பாடியது இப் பாடல். வளம்மிக்க வாழ்வைக் காட்டிய மேற்கண்ட பாடல்களுடன் இதுவும் இறுதியாகக் குறிப்பிடத்தக்கது. சிறு தொழில்கள் : 7. பாடல் உவமைகள் சில அக்காலத் தொழிலாளர்களை யும் தொழில்களையும் குறிப்பிடுகின்றன. புறம் 120 : 'இரும்பு பயன்படுக்கும் கருங்கைக் கொல்லன் '' அகம் 96 : கொல்லன் ஊது உலையில் விசை வாங்கு தோல் புடைத்தலும் நெகிழ்தலும் புறம் 125 : பருத்திப் பெண்டிர் நூற்பதற்குப் பயன்படுத்தும் பனுவல் (பஞ்சு) புறம் 215 : அவரை கொய்யுநர் மாந்துவது வரகையும் வேளைப் பூவையும்; தயிரில் சமைத்த புளிங்கூழ் புறம் 82: கட்டில் நிணக்கும் பின்னும் இழிசினன் மாலை யில் பணி முடித்து விரைந்து இல்லம் செல்ல விரும்பித் தன் ஊசியால் வாரை விரைவாகச் செலுத்துகின்றான். நற் 220 : சாறு (திருவிழா நிகழ்ச்சியைக் குயவர் ஊரெங்கும் அறிவித்தனர் (இன்றும் சிறுவர்க்கு அக்கிப் புண் வந்தால் புண்ணைச் சுற்றிக் குயவனைக் கொண்டு செம்மண் குழம்பால் யாழி வரைகின்றனர்!) நற் 90: புலத்தி (சலவை செய்யும் பெண்) துணியில் கஞ்சி போடுதல் குறு 335 : மகளிர் பாறையில் செந்தினை (இராகி) பரப்புதல் புறம் 276: ஆய்மகள் குடப்பாலில் உறை (தயிர்த் திவலை) தெறித்துத் தயிராக்குதல் புறம் 160,127 : குய்க்கொள் (தாளித்த) துவையல் ; குய் யுடை அடிசில் (தாளித்த சோறு) பல பாடல்கள் : தச்சன் செய்த சிறுமா ஊர்தி; கடற் கரையில் சிறுமியர் இழைத்த சிறுமனை ; மகளிர் உலக்கை கொண்டு நெல் அவல் இடித்தல்; மகளிர் அருவியாடல், ஊஞ்சலாடுதல் ; சிறுவர் நெல்லிக்காய் கொண்டு பாண்டில் ஆடுதல், சிறுமியர் கழங்கு ஆடுதல் : பஞ்சாய்க் கோரையால் செய்த பாவை கொண்டு மகளிர் விளையாடு ஆயமொடு ஓரையாடுதல். மூட நம்பிக்கைகள்: 8. குறுந் 210 : விருந்து வரக் கரைந்த காக்கை புறம் 204 : புள்ளும் பொழுதும் பழித்தல் புறம் 238: பேய்கள் வழங்கும் காடு புறம் 62,359 : போர்க்களத்தில் புண்ணைத் தோண்டி குருதியை எடுத்துக் கூந்தலில் தீட்டும் பேய் மகளிர் ; பேய்கள் பிண ஊன் தின்னுதல். புறம் 259: முருகு ஏறிய புலைத்தி குதித்தாடுதல் புறம் 98,281: பேய்க்கெதிராக ஐயவி புகைத்தல்; மனையில் இரவமும் வேம்பும் செருகுதல் குறு 263: ஆட்டுமறியின் கழுத்தை அறுத்துத் தினை யொடு (பெண் மேல் ஏறிய) பேய்க்குப் படைத்தல் சமயச் சடங்குகள் 9. கி.மு. 2000-1000 கால அளவில் தமிழகத்தில் வழங்கிய வழிபாட்டு முறைகளைப் பற்றி மேலே ஐந்தாம் இயலில் கண் டோம். முழு நிலவையும் தமிழர் வழிபட்டனர் (புறம் 60) மகளிர் காக்கைக்கு உணவு இட்டனர் (நற் 298). மலைப் பகுதியில் சிறு குடிப் பாக்கத்தில் ஆடவர் வேங்கைப் பூ அணிந்து மகளிரொடு தொண்டகப் பறை ஒலித்துக் கொண்டு தெருக்களில் ஆடி முருகை வழிபட்டனர் (அகம் 118). குரவர் மகளிரொடு குரவையாடுதல் (அகம் 232). கோசர் குரவையாடினர் (புறம் 396) யானைக் கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை பாசறை யில் மறவர் ஆடிய வெறிக் குரவை கடல் ஒலி போல் கேட் கும் (புறம் 22) 10. தமிழரின் பண்டைய இசையும் நடனமும் கிபி. 5ம் நூற்றாண்டில் ஆரியப் பண்பாடு புகுந்ததும் பெருமாற்றம் அடைந்தன. முதலில் வெட்ட வெளி மன்றில் ஆடிய நடனம் ஆடுகளத்துக்கு மாறியது. இம்மாற்றம் நகரங்களில் மட்டுமே; ஊர்களில் அல்ல. காதலையும் வீரத்தையும் உறுப்புக்களின் அசைவை மட்டும் கொண்டு விளக்கிய எளிய நடனங்கள் தாம் முதலில் இருந்தன. பின்னர் அவை பல நுட்பங்களுடையனவாக வகைப் படுத்தப் பட்டன. பண்டைத் தமிழிசையும் செயற்கை யான விரிவான ஆரியப் பண்களாக மாறியது. ஆரியப் பண்பாடு புகுந்த பின் வளர்ந்த பல்வேறு இசை, நடனங்களுக்கு இலக் கணங்கள் புனையப் பட்டன. அவையனைத்தும் இன்று அழிந்துவிட்டன. சிலப்பதிகாரத்தில் இசை, நடனக் கலைஞர் கலை நுணுக்கம் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. அதன் உரையில் மேலும் விரிவான செய்திகள் உள்ளன. நகரங்கள் 11. உரோம நாட்டுடன் வாணிகம் பெருகியமையால் தமிழக நகரங்கள் வளம் பெற்றன. நக்கீரர் பாடிய அகம் 93ல் வினை முடித்து மீளும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்வது "சோழர் உறந்தை (உறையூர்) போன்ற கிடைத்தற்கரிய நன் கலனோடு (ஆபரணங்கள்), வழுதி கூடல் (மதுரை) நாளங்காடி போல் நறுமணங்கமழும் நுதலையுடைய தலைவியிடம் சென்று, கருவூர் முன் துறையில் தண்ணிய ஆன் பொருநையாற்றின் மணலிலும் பல முறை அவளொடு முயங்குவேனாக" என்ப தாகும். 12. இக்காலப் பாடல்களிலிருந்து போர்கள் வீரத்தைக் காட்டுவதற்கு மட்டுமின்றி அண்டை நாடுகளை வென்று அவற்றைத் தம் கீழ்ப்படுத்துவதற் காகவும் நடைபெற்றன என்று அறிகிறோம். காரியை நப்பசலையார் பாடிய புறம் 126 இத் தகையது. போர் முரசில் போர் அணங்கு உறைவதாகவும் முரசு குருதிவேட்கையுடையதாகவும் கருதப்பட்டது (புறம் 50 மோசி கீரனார் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடி யது). இக்கால கட்டத்தின் பின் பகுதியில் வேத வேள்விகளையும் வேந்தர் செய்தனர். ஆயினும் போர்க் களத்தில் வென்றவன் பேய்களுக்குச் செய்த களவேள்வியும் தொடர்ந்தது. தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மாங்குடி கிழார் பாடிய புறம் 26 அவ்வரசன் தோற்ற அரசர் முடித் தலைகளை அடுப்பாகக் கொண்டு, தோற்றவர் உடற் குருதியை உலையாகக் கொண்டு பகைவர் சதையால் கூழ் சமைத்துப் பேய்களுக்குப் படைத்து மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறது. நகரங்களில் பரத்தைமை 13. நகர வாழ்க்கையில் நாகரிகம் வளருகிறது; விரும் பத்தகாத பரத்தைமையும் அங்கு கால் கொள்ளுகிறது. குறுந் தொகை 80ல் பரத்தை "யாம் நீர் விளையாடச் செல்வோம்; தலைவன் தானே எம்வயப் பட்டு வருவான்; அவனை எம்மிடம் வாராமற் காக்கும் வன்மை தலைவி பால் உளதாயின் அவள் தன் கொழுநனைக் காத்துக் கொள்வாளாக'' என்று தோழியிடமே அறை கூவல் விடுக்கின்றாள் ! விழவில் தலைவனுக்குரிய இள மகள் அவனைக் கண்டால் அவன் அவளை வரைந்து கொள்வான். எனவே , நானே சென்று அவனைக் கைக் கொள்வேன் என நற்றிணை 390ல் பரத்தை கூறுகிறாள். பரத்தை பால் தலைவனை உய்க்க வல்ல ஒரு விறலியிடமிருந்து கொழுநனைக் காப்போம் என ஒரு தோழி நற் 170ல் கூறுகிறாள். விழாவில்லாத காலத்திலேயே ஊரே ஆரவாரம் செய்யுமாறு பரத்தை ஒருத்தி தெருவில் செல்ல மகளிர், எல்லாம் தத்தம் கொழுநரைப் பாதுகாத்ததால் பிழைத்தனர் என்பது நற்றிணை 320. நற்றிணை 350ல் பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் ஊடிய தலைவி என்னிடம் வராதே எனக் கூறி ஊடல் கொள்கிறாள். நற்றிணை 370 ஊடல் நீடிக்க ஆற்றானாகிய தலைவன் பாணனிடம் கூறியது ஆகும். நற்றிணை 380ல் தலைவி (பரத்தையராகிய) "வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தலைவனைக் கூடும் தகுதியுடையேம் அல்லேம்." என்று பாணனிடம் கூறி வாயில் மறுக்கிறாள். பரத்தையிற் பிரிவின் கண் தலைவன் பரத்தையரோடு துணங்கையாடியதைக் கூறித் தோழி பாணற்கு வாயில் மறுத்தது நற்றிணை 50. (நிணந்தின்னும் பேய் மகளிரும் துணங்கையாடினர்: திருமுருகாற்றுப் படை வரி 51 - 56) பாணர், கூத்தர், கூத்தியர், ஆகியோரோடு பரத்தையராகிய விறலியரும் ஒரு குழுமமாய் இருந்தனர் என்பதையும் அவர்களுக்கு வேந்தரும் பிறரும் பொன், மணி, ஊன், மது எனப் பல வகைப் பரிசிலும் நல்கினர் என்றும் புறம் 152 விளக்குகிறது. துறைமுகங்கள் 14. கிறித்துவ ஊழித் தொடக்கத்திலிருந்தே உரோம் நாட்டுடன் வணிகம் வளர்ந்தமையில் துறைமுகங்கள் பல முதன்மை பெற்றதைச் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சில. மாவிலங்கை (பின்னர் மல்லை, மிகப் பிற் காலத்தில் மகாபலிபுரம்) - புறம் 176; சிறுபாண் 16 -19 புகார் (புறம் 30; அகம் 181; 205) பொறையாறு (புறந்தை) நற்றிணை 131 (முத்து விளையும் கொற்கை (நற் 23 அகம் 27, 130, 201,296,350) (சேரர் துறை) முசிறி (அகம் 149, புறம் 343) கடலில் மரக்கலம் கவிழ்ந்ததால் மிதக்கும் பல கையைப் பலரும் பற்றிக் கொண்டு உய்ய முயல்வர். அப் பலகை போலத் தலைவனைப் பரத்தையர் பலரும் பற்றி இழுத்தனர் என்ற உவமை நற்றிணை 30ல் வருகிறது. 15. இந்தியக் கவிதைகளின் அடிப்படைப் பண்பு ஒன்றை இவ்வியலில் குறிப்பிட்ட சங்கப் பாடல்களில் காணலாம். கவிதை, ஓவியம், சிற்பம் முதலியவற்றில் இந்தியக் கலை 'இயற்கையை உள்ளது உள்ளவாறே காட்டக்' கருதவில்லை. இயற்கையை அழகுறப் புனைந்து காட்டவே முயன்றது. எனவே பாடல்களில் ஒவ்வொரு பெயருக்கும், பொருளுக்கும் ஒரு அடை தரப்படுகிறது ; (அவ்வடை ஒரு சொற்றொடர் ஆக அமையும் மாயின் அச்சொற்றொடரில் உள்ள பெயர் முதலியவற்றுக்கும் அடைதரப்படுகிறது. ஆகவே எண்ணிறந்த உருவாரங்களைக் கொண்ட கோயில் நுழைவாயில் கோபுரம் போல ஆகி விடுகிறது பாடல். கிரேக்கக் கலையுணர்வில் பயின்றார் இதைப் புரிந்து கொள்வது அருமை ; ஆங்கிலத்தில் மொழி பெயர்ப் பதும் அருமை. வெப்ப நாட்டுக் காடுகளில் மரஞ்செடி கொடி கள் இலையும் பூவும் செறிந்து வளரும். இச்சூழ்நிலையில் பரம்பரையாக வளர்ந்த இந்தியக் கவிஞர் தங்கள் பாடல்களிலும் அடைகளைக் கொத்துக் கொத்தாகப் புகுத்துவதை மேற் கொண்டனர் எனலாம். தென் இந்தியக் கவிஞர்களும் அவ் வாறே. [மூலம் 253-300-ன் சுருக்கம்) இயல் 18 கி.பி. 1-500: அயல் நாட்டு வாணிகம் 1. உரோமப் பேரரசர் அகஸ்தசு ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் இந்திய வணிகம் பெருகியது. கீழை நாடுகளுக்கும் மேல் நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தில் முக்கிய பங்கு வகித்தது எகிப்தின் தலைநகரமான அலெக்சாந்திரியா, எகிப்தில் உரோமர் ஆட்சி நிறுவப்பட்டதன் காரணமாக உரோம் நாட் டுடன் இந்திய வணிகமும் பெருகியது. உரோமர், ஆண் களும் பெண்களும், கீழை நாட்டு ஆடம்பரப் பொருள்கள் மீது மோகம் கொண்டு அவற்றின் மீது பெருஞ்செலவு செய்ய லாயினர். 2. விலங்குகளும் அவற்றின் உறுப்புகளும் : இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட விலங்குகள் யானை, குரங்கு, எருமை, புலி, சிறுத்தை , பாம்பு முதலியவை யும், பறவைகள் கிளி, மயில், வண்ணக் கோழி முதலியவையும். விலங்குகளிடமிருந்து கிட்டும் நெய், யானைத் தந்தம், ஆமை ஓடு முதலியவையும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மன்னார் வளை குடா முத்துச் சிப்பிகளிடமிருந்து எடுத்த முத்து மிக விலை மதிப்பற்ற ஏற்றுமதியாகும். கிபி.70ல் எழுதிய பிளினி இந்தியாவில் லிருந்து உரோமுக்குச் சென்ற ஆடம்பரப் பொருள்களுக்காக ஆண்டுக்கு பத்து லட்சம் பவுன் மதிப்புள்ள தங்கத்தை ரோம் நாடு இழந்து வந்ததாக வருந்துகிறார். (தென்னிந்தியாவிலும் தமிழகத்திலும் புதையல்களாக ஏராளமான உரோம நாணயங் கள் கிடைத்துள்ளன) 3. நிலைத் திணைப் பொருள்கள் : ஏற்றுமதியான இவ் வகைப் பொருள்களில் மிக முக்கியமானது மிளகு. ஏனையவை இஞ்சி, ஏலக்காய், கருவாப் பட்டை , சாதிக்காய், சாதிப்பத்திரி, நல்லெண்ணெய், வெல்லம், பருத்தித்துணி, தேக்கு, கருங்காலி, சந்தனம், அகில் முதலியவை. உறையூரை பெரிப்ளஸ் நூல் அர்கரு எனக் குறித்தது; அங்கிருந்து மேலை நாடு சென்ற துணியும் அர்கரு எனப்பட்டது. 4. மாழைப் பொருள்கள் முதலியவை : முசிறியிலிருந்து வைரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. மாணிக்கம், வைடூரியம், மரகதம் (பச்சைக்கல்) முதலியனவும் ஏற்றுமதியாயின. இந்திய இரும்பு, உருக்கு ஆகியவும் ஏற்றுமதியாயின. இந்தியாவின் லிருந்து சென்ற உருக்கைக் கொண்டு (சிரியாவில்) டமாஸ்கசில் செய்யப்பட்ட வாள்கள் முதலியவை உரோமுக்குச் சென்றன. 5. உரோம நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியானவை : மிளகு முதலியவற்றுக்கு விலையாக இறக்குமதியான பொன் ('யவனர் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி " - அகம் 149) மற்றும் மது, முதலியவையே முக்கியமான இறக்குமதிப் பொருள்கள் ஆகும். பெருமளவு உரோம் நாட்டுப் பொன் ஆடம்பரப் பொருள்களுக்காக ஏற்று மதியானதால் தான் உரோம் நாட்டு நாணயம் நாளடைவில் தரக் குறைவாகி தங்க நாணயத்துக்குப் பகரமாக வெள்ளி, (வெள்ளி - செம்பு, செம்பு நாணயங்களை அந்நாடு அச்சிடலானது என் கிறார் பெரிப்ளஸ் நூலை அச்சிட்ட ஸ்காப் உரோம் பேரரசு வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என்பார் அவர். 6. செங்கடற் செலவு வழிகாட்டி எனப் பொருள்படும் "பெரிப்ளஸ் ஆப் தி எரித்ரேயன் சீ" நூல் கிபி 60ல் எழுதப் பட்டது. "செங்கடல்' என்பது அன்று; இந்நாள் அரபிக் கடலையும் இந்து மாக்கடலையும் சேர்த்தே அந்நாளில் குறித்தது. அந்நூல் குறிப்பிடும் தமிழகத் துறைமுகங்களும் ஊர்களும் தொண்டி, முசிறி, குமரி, கொற்கை, அர்கரு (உறையூர்) முதலியவை. குமரியில் ஆடவர் பெண் துறவிகள் இருந்தனர் என்றும், கொற்கையில் சிறைக்கைதிகளைக் கொண்டு முத்து எடுக்கப்பட்டது என்றும் அந்நூல் கூறுகிறது. 7. தமிழகத்தில் பல இடங்களில் உரோமர் குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும். முதலில் கிரேக்கரைக் குறித்த 'யவனர்'' என்னும் சொல் இக்காலத்தில் பெரும்பாலும் உரோமரையே குறித்தது. மதுரையிலும் அருகிலும் ஏராளமான உரோமர் செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. மதுரை அருகில் உரோமர் குடியிருப்பு இருந்து அவர்கள் தமக்குள் செலாவணிக்காக அச்செப்பு நாணயங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். (அச்செப்பு நாணயங்கள் இந்தியர்களிடையே புழக்கத்தில் விடவோ, உருக்கி மாழை யாக்கவோ இறக்குமதி செய்யப் பட்டிரா). கி.பி 150ல் புவியியல் நூல் எழுதிய தாலமி இந்தியா வில் தங்கியிருந்த உரோமரிடம் இருந்தும் தாம் செய்திகளைப் பெற்றதாகக் கூறுகிறார். தமிழ் அரசர் தமக்கு மெய்க்காவலர் ஆகப் பயன்படுத்திய "வலிபுணர்யாக்கை வன் கண் யவனர்'' * (முல்லைப் பாட்டு 59 - 1) ''கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல் வாள் யவனர்'' (சிலம்பு : 14) பற்றிச் சங்க இலக் கியமும் கூறுகிறது. 8. மதுரை நகர மதில் அரணைக் காத்த பொறிகளின் பட்டியலை சிலம்பு: 15 (207 - 216ல் காணலாம் (இது போன்ற இன்னொரு பட்டியலைப் பிற்கால சீவக சிந்தாமணியும் தருகிறது. தொல்காப்பிய பொருளதிகார உழிஞைத் திணை பற்றிய நூற்பா மதிற் காவல் பற்றிக் கூறுகிறது; யவனர் பொறிகள் மதில் அரணைக் காக்கப் பயன்பட்டன என நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. 9. யவனக் கைவினைஞர் இயற்றிய வினைமாண் பாவை (விளக்கேந்தி நிற்பது ) ; யவனத் தச்சர், யவனர் மகரவீணை, யவனப் பேழை, யவனச் சேரி முதலியவற்றை மணிமேகலை, பெருங் கதை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. 10. தமிழ் நாட்டைப் பற்றி பெரிப்ளஸ் தந்த விவரங்களை விட விளக்கமான செய்திகளை கி.பி. 150ல் தாலமி தனது புவியியல் நூலில் தருகிறார். அக்காலத்தில் மூவேந்தரும் ஏறத் தாழ சமமான ஆற்றலுடன் இருந்தனர்; குறுநில மன்னரும் பலர்; தமிழகம் முழுவதற்கும் மூவேந்தருள் எவரும் தலைமை பூண்டி லர்; என்ற செய்திகளை தாலமி நூலில் இருந்து அறியலாம். வட இந்திய நாடுகளைக் குறிப்பிடும் பொழுது அரச பரம் பரைகளைக் குறிப்பிடும் தாலமி தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆய நாட்டவர், கரையர், பாண்டியர், சோழர், பதோய் (பரதர்), அருவாளர், பசர் நாகர் (பல்லவர்?) முதலிய இனக்குழு மக்கள் பெயரையே குறிப்பிடுகிறார். இதிலிருந்து கரிகாலன், நெடுஞ்செழியன் முதலிய பெருவேந்தர் காலத்துக்கு முந்திய நிலையையே தாலமி விவரிக்கிறார் எனக் கருத வேண்டும். செங்கடலிலிருந்து தென்னிந்தியாவுக்குக் கப்பலில் வரும் பொழுது மங்களுருக்குத் தெற்கே வந்தவுடன் காணும் நாடு Lymyrice / Dymirike என பெரிப்ளசும் தாலமி நூலும் குறிப் பிடுவது சேர நாட்டைத்தான் (இச்சொல் தமிழகம் முழு வதையும் சுட்டியதாகக் கருதுவது தவறு). தமிழ் பேசும் சேரநாடு வந்ததுமே அப்பகுதியை "தமிழகம்' எனப் பொருள்படும் பெயரால் அழைத்தனர் என்பதே சரி. தமிழகத் துறைமுகங் கள் பலவற்றையும் உள்ளூர்கள் சிலவற்றையும் பெரியாறு, பொருநை, காவிரி, பெண்ணாறு முதலிய ஆறுகளையும் தாலமி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 11. நீரோ இறந்தபின்னர் ரோமப் பேரரசில் அவ்வப் பொழுது வாரிசுரிமைப் போர்கள் நடந்தன. முத்து, இரத்தினக் கற்கள், போன்ற விலை மிகுந்த பொருள்கள் வாணிகம் படிப் படியாகக் குறைந்தது எனினும் கான்ஸ்ட ன்டைன் காலம் (கி.பி. 4ம் நூற்றாண்டு வரை ஓரளவுக்குத் தமிழ்நாட்டுடன் (மிளகு, பருத்தித் துணிகள் போன்றவற்றில்) உரோமர் வாணிகம் தொடர்ந்து நடந்து வந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரா பியர் எகிப்து, சிரியா, பாரசீகம் ஆகிய நாடுகளைக் கைப் பற்றினர்; இந்தியாவுடன் ஆன கடல் வாணிகமும் அராபியர் கைக்குச் சென்றது. நாளடையில் 'யவனர்'' என்னும் சொல் அராபியரையும் குறிக்கலாயிற்று. மெகஸ்தனிஸ், பிளினி , தாலமி ஆகியோர் நூல்கள், பெரிப்ளஸ் ஆகியவற்றின் இந்தியா சார்ந்த பகுதிகளைச் சிறந்த ஆய்வுக் குறிப்புகளுடன் தமிழாக்கம் செய்து 1960க்குப் பின்னர் வி. எஸ். வி. இராகவன் வெளியிட்டுள்ளார்) எகிப்து சென்ற தமிழ் வாணிகர் பயன்படுத்திய (கிமு 1 ஆம் நூ கிபி1 ஆம் நூ சார்ந்த மட்கலங்களின் எச்சமாகிய பானை ஓடுகளில் கண்ட 'தமிழி' எழுத்துப் பொறிப்புகள். (இவை செங்கடற்கரையில் குவெபர் - அல் - காதிம் என்னுமிடத்தில் 1979 - 80லும், 2007லும் கண்டெடுக்கப்பட்டன. நிழற்படத்தில் உள்ள ஓட்டில் காணும் வாசகம் "பானை உறி" என்பதாகும். நன்றி : இந்து நாளிதழ் 2 நவ. 2007) இயல் 19 காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிப் பகுதி) பாணினி இலக்கணத்தின் மீது கிமு 200ல் மகாபாஷ்யம் என்னும் உரை வரைந்த வடநாட்டவர் பதஞ்சலி "காஞ்சீபுர" என்னும் ஊர்ப் பெயரிலிருந்து அவ்வூர்க்காரனைச் சுட்டும் ''காஞ்சீபுரம்' என்னும் சொல் உருவாவது பற்றி இலக்கண விதியைத் தந்தார். உறையூர் - உரகபுரக; மதுரை - மதுராபுரக என்னும் சொற்களை அவர் தந்திலர். காரணம் என்ன? காஞ்சி புரத்து அறிஞர்கள் பற்றி வடவர் அறிந்திருந்தனர். காஞ்சீபுரம் என்பது சமஸ்கிருதப் பெயர், தமிழ்ப் பெயர் அல்ல. காஞ்சி என்னும் பெயரைத் தமிழில் கச்சி எனத் தமிழில் சுருக்கி வழங்கி னர். கச்சி என்னும் பெயர் முதல் முதலில் பெரும் பாணாற்றுப் படை (420யில் வருகிறது. (அகம் 96 குறுந் 10 ஆகியவற்றில் வரும் காஞ்சியூர், காஞ்சியூரன் என்பது காஞ்சி நகரத்தைக் குறித்தவை அல்ல; காஞ்சி மரத்தையுடைய ஊரனையே குறித்தன) காஞ்சி நகரம் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தது. அது இருந்த பகுதிக்கு அப்பொழுது அருவா வடதலை என்று பெயர். அருவா நாடு என்பது தென் ஆர்க்காடு மாவட்டம். பல்லவர் காஞ்சியை ஆளத் தொடங்கிச் சில நூற்றாண்டு கழித்தே காஞ்சிப் பகுதி தமிழ்ப் பண்பாட்டு மையமாக ஆகியது. அப்பொழுது தொண்டையர் ஆண்டது' என்ற பொருளில் தொண்டை மண்டலம் எனப் பெயர் பெற்றது. ஆந்திரர் 2. விந்திய மலைக்குத் தெற்கிலிருந்த தஸ்யூக்களில் ஆரியப் பண்பாட்டை முதலில் கைக்கொண்டவர்கள் ஆந்திரர். இது கி. மு 1000ஐ ஒட்டிச் சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும்; காரணம் தரும் நூல்கள் எழுதிய போதாயனர், ஆபஸ்தம்பர் ஆகிய ரிஷிகள் அவர்களிடையே தாம் தோன்றினர்; அரசர் ஆதரவின்றி இத்தகைய தருமநூல் ஆசிரியர் தோன்றியிருக்க மாட்டார்கள். ஆந்திரர் தன் ஆளுமையின் கீழ் இருந்தது போன்ற குறிப்பு அசோகன் கல்வெட்டுகளில் உள்ளது. கி.மு. 4 - 3ம் நூற்றாண்டுகளில் மகாபதுமநந்தன் காலத்திலிருந்தே ஆந்திரர் மகத மன்னரைத் தம்மினும் வலியோராக ஏற்று அவ்வப்பொழுது திறையாகப் பரிசு வழங்கி வந்தனர் என் பதுதான் இதன் பொருளேயொழிய ஆந்திரம் மகதப் பேரரசின் பகுதி என்பது அல்ல பொருள். (மெகஸ்தனீஸ் நூலின் அடிப் படையில்?) பிளினி ஆந்திரரிடம் மதில் சூழ்ந்த 30 நகரங்கள், ஒரு லட்சம் காலாட்படை, 2000 குதிரைவீரர், 1000 யானை வீரர் இருந்தனர் என்கிறார். இது உண்மையாயின் மெளரியர் காலத்தில் ஆந்திரர் வலுமிக்க அரசை ஆண்டனர் எனலாம். அசோகன் காலத்தில் ஆந்திர அரசர் பெருமளவுக்கு தன் னாட்சியே நடத்தி வந்திருக்க வேண்டும் என்பார் வின்சென்ட் சுமித். 3. ஆந்திர அரசர்களில் முதல்வன் சீமுகன் (கி.மு 3ம் நூ) என்று புராணங்கள் கூறும். அவனுக்கு முன் மெகஸ்தனிஸ் காலத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்னர் இருந்தே ஆந்திரர் அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பிய அரசர்களையே கலியுக மன்னர்களாக புராணங்கள் குறிப்பிட்டன. சீமுகன் காலத்திலிருந்து ஆந்திர அரசனைப்பற்றி ஆரியவர்த்த மக்கள் அறியத் தொடங்கினர்; ஆகையால் அவனையே முதல் ஆந்திர அரசன் என்றன புராணங்கள். காஞ்சிபுரத்தில் ஆரியர் தாக்கம் : 4. ஆந்திர அரசின் தென்கோடியை ஒட்டி இருந்த காஞ்சி யில் கி.மு. 1000க்குப் பின் சில நூற்றாண்டுகளில் இருந்தே ஆரியத்தாக்கம் இருந்திருக்க வேண்டும். அர்த்த சாத்திரம் எழுதிய சாணக்யன் காஞ்சியைச் சார்ந்த திராவிடன் என மகாவம்சம் கூறுகிறது. சாணக்யனின் மறுபெயர்களாக வாத்ஸ் யாயன, மல்லநாக, குடில, த்ரமிள், பக்ஷலசுவாமி, விஷ்ணுகுப்த , அங்குல ஆகியவற்றை ஹேமச்சந்திரர் குறிப்பிட்டுள்ளார். தமது சிரீ பாஷ்யத்தில் திரமிளாசார்ய என்று இராமனுஜர் குறிப் பிடுவதும் சாணக்யனையே ஆகலாம். பொருள் நூல் பற்றி மட்டும் அன்றி அறம், இன்பம், நியாயம் பற்றியும் இவர் பல நூல்கள் எழுதியிருக்கக்கூடும் (காம சூத்திரம் உட்பட) என்னை ? கி.பி 14ம் நூற்றாண்டில் விசயநகர அரசரின் அமைச்சர் சாயனர் வேதங்களுக்கான பாஷ்யம் உட்பட பல்வேறு துறை நூல் களையும் எழுதியது போல என்க. பண்டைக்காலத்தில் இந்தியா வில் நூல்கள் (தற்பொழுது நடைபெறுவது போல) "வெளி யிடப்படுவது இல்லை. ஒரு நூல் அவ்வாசிரியருடைய சீடர் பரம்பரையிலேயே பல தலைமுறைகள் வழங்கும். பின் தலை முறையினரான சீடர் தம் காலத்திற்கேற்ற (எடுத்துக்காட்டுகள் போன்ற) இடைச் செருகல்களை மூல நூல்களிலேயே புகுத்தி வருவது அக் காலத்தில் வாலாய நடைமுறை. எனவே பிற்காலச் செய்திகள் சில பழைய சமஸ்கிருத நூல் ஒன்றில் காணப்பட்ட அளவானே அந்நூல் பழைய நூலன்று என்று முடிவு செய்து விடக் கூடாது. சாணக்யனைப் போலவே பிற்காலத்தில் இந்தியா முழுவதும் அறிவுலக மேதைகளாக விளங்கிய நாகர் ஜுந , திந்நாக, புத்ததத்த, தர்மபால, சங்கர, இராமனுஜ, ஆனந்த தீர்த்தம், மாதவ, சாயன போன்றவர்களும் தென்னிந்தியர்களே. ஆட்சி காரணமாக இந்தியா 56 நாடுகள் கொண்டதாகக் கூறப்பட்டாலும் இந்தியப் பண்பாடு ஒன்றாகவே இருந்த தற்கும், அப் பண்பாடு இடையறாது வழங்கி வந்ததற்கும் இதுவும் ஒரு சான்றாகும். 5. திராவிட மன்னன் சத்யவிரதன் தான் மனுவின் மகன் விவஸ்வான் என்கிறது பாகவத புராணம். காஞ்சியின் பெயர் களுள் ஒன்று சத்யவிரத சேத்திரம் ஆகும். காஞ்சியை ஆண்ட முதல் ஆரிய அல்லது "ஆரியனாக்கப் பட்ட " மன்னர் களுள் சத்யவிரதனும் ஒருவன் எனலாம். 'ஆரியனாக்கப் பட்ட " மன்னர்களின் முன்னோர்களை புராணக் கடவுள்கள் வீரர்கள் ஆக்கி பிராமணர்கள் இந்திய வரலாற்றில் கதை கட்டிவிடுவது இடைவிடாது நடந்து வந்ததே யாகும். காஞ்சியைப் பல்லவர் காலத்துக்கு முன்னர் ஆண்டவர்கள் சத்யவிரதன் வழி வந்த (அசோகன் கல்வெட்டு சுட்டிய) சதியபுதர்களாக இருந் திருக்கலாமோ என்றும் கருத இடமுள்ளது. சத்யவிரதர்கள் ஆந்திரருடைய சிற்றரசர்களாக இருந்திருக்கலாமோ என்பது குறித்து முடிவு செய்ய ஆதாரம் இல்லை. எனினும் ஆந்திர நாடு ஆரியமயமான பின்னர் ஆரியப் பண்பாட்டின் தென்கோடி மையமாக காஞ்சீபுரம் ஆனது என்பதும் அது அக்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையமாக இல்லை என்பதும் உறுதி. 6. வடவர் "தமிழ்" என்னும் சொல்லைத் திராவிட எனத் திரித்தனர். எனினும் "திராவிடர்' என்னும் சொல்லை அவர்கள் காஞ்சிப் பகுதி மக்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தினர். சோழ, சேர, பாண்டிய நாட்டு மக்களை அல்ல. யுதிட்டிரன் இராசசூய யாகத்தில் கலந்து கொண்ட மன்னர்களில் சோழ, சேர, பாண்டியன் மன்னர்களுடன் "திராவிட" மன்னரும் கலந்து கொண்டனர் என்கிறது மகாபாரதம். கி.பி 7ம் நூற்றாண்டில் யுவான் சுவாங் - உம் காஞ்சிப் பகுதியை த - லோ - பி - லா என்று தான் அழைக்கிறார். (சீன மொழியில் "திராவிடம் " தான் அப்படி மாறிவிட்டது!) காஞ்சியில் ஆகம வழிபாடு 7. கி.மு 1க்கு முன்னரே இந்தியா வெங்கும் ஆகம வழிபாடும் பரவி இருந்தது. சிவனை ஆகம முறைப்படி வழிபடும் ஏழுமையங்கள் அயோத்தி , மதுரா, மாயா, காசி, காஞ்சீ, அவந்திகா, பூரி, துவாரவதி ஆகும். அவற்றில் காஞ்சியும் ஒன்றாக இருந்தது ஆரியப் பண்பாட்டு மையமாக காஞ்சி பண்டு தொட்டே இருந்ததைக் காட்டும். (வேத முறைப்படியான வழிபாடு எப்பொழு தோ மறைந்துவிட்டது - காஞ்சியிலும் சரி ஏனை ஆறு நகரங்களிலும் சரி). 8. ஆந்திரர் ஆட்சிக் காலத்தில் பல புத்த மடங்கள் அமைக் கப்பட்டன - அழகிய அமராவதி ஸ்தூபி உட்பட. காஞ்சியில் சிவன், விஷ்ணு வழிபாடுகளுடன் புத்த, சமண சமயங்களும் பரவியிருந்தன. எனவே புத்த, சமணச் சிற்பங்கள் பல அங்கு கிடைத்துள்ளன. 9. கிபி 1-3 நூற்றாண்டுகளில் ஆந்திரர் ஆட்சிப்பகுதிகளை சாக - பல்லவர்கள் படிப்படியாகக் கைப்பற்றினர் - சௌராஷ்டிரம், மாளவம், தான கேடக, காஞ்சிபுரம் என்றவாறு. சாக பல்லவர் கள் டேரியஸ் ஹிஸ்டாஸ் பெஸ் காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டு இனக்குழுவினர் (tribes) நுழைந்த பின் சிவ, வைணவ, புத்த, சமண சமயங்களைத் தழுவிக் கொண்டனர். ஆட்சி மொழியாக பிராகிருதங்களுள் யாதானும் ஒன்றையும், பண்பாட்டு மொழியாக சமஸ்கிருதத்தையும் கொண்டனர். நாளடைவில் தமது தொன்மைப் பெயர்களைக் கைவிட்டு சமஸ்கிருத , பிராகிருதப் பெயர்களை மேற்கொண்டனர். ஆந்திரர்கள் ஆட்சியை இறுதியாக ஒழித்து தனகேடகத்தை ஆளத் தொடங்கியவர்கள் பல்லவர்கள். (பல்லவ என்ற பிரா கிருதச் சொல்லின் சமஸ்கிருத வடிவம் பஹ்லவ என்பது ). ஐரோப்பிய மொழிகளில் பார்த்தியர் என அழைக்கப்பட்ட வர்கள் இந்தியாவில் பார்த்தவபஹ்லவ / பல்லவ என்று அழைக்கப்பட்டனர். பிற பஹ்லவர்களிடமிருந்து காஞ்சிப் பல்லவரைப் பிரித்து அவர்களைத் தமிழராகக் காட்டச் சிலர் முயல்வது ஏற்கத் தக்கதல்ல. சீனிவாசர் தமிழில் பல்லவர் பற்றி எழுதிய நூலிலும் இதையே கூறுகிறார். காஞ்சியை ஆண்ட தொடக்க காலப் பல்லவர். 10. காஞ்சியை ஆண்ட முதல் பல்லவன் பப்பா (Bappa) அவன் பல வேள்விகளைச் செய்தவன்; பிராமணருக்கு வாரி வழங்கியவன். அவன் காலத்திற்கு முன்னமே காஞ்சி ஆரிய மயமாக ஆகியிருக்க வேண்டும். சிவஸ்கந்தவர்ம பல்லவன் பிராகிருதச் செப்பேடுகளிலிருந்து அவன் ஆட்சி முறை ஆரியர் முறைப்படி (அர்த்த சாஸ்திரப்படி அமைந்திருந்தது என்றும், காஞ்சிபுரம் பகுதியில் பிராமணர் அக்ரகாரங்களில் குடி யேற்றப்பட்டிருந்தனர் என்றும், அவர்கள் அரசிலும் பங்கு வகித் தனர் என்றும் அறிகிறோம். காஞ்சிப் பகுதிக்குத் தெற்கிலுள்ள தமிழகத்தில் இவையெல்லாம் கிபி. ஆறாம் நூற்றாண்டு வரை காணப்படாதவை. காஞ்சிப்பகுதியில் பல்லவர் செப்பேட்டுப் பிராகிருதம் நெடுங்காலம் வழங்கியிருக்க வேண்டும்; அப்பகுதி மக்களின் மொழியாகிய தமிழின் தாக்கத்தை அப்பிரா கிருதத்தில் காண்கிறோம் (எ.கா. சொற்களுக்கு ஆண்பால் / பெண்பால் / அலிப்பால் இல்லை. தமிழிலும் இல்லாதது போல்). 11. இந்தியாவின் முதல் சமஸ்கிருதக் கல்வெட்டு மாளவ மன்னன் ருத்ரதாமன் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் செதுக் கியதாகும். அதன்பின் கல்வெட்டுக்கள் பிராகிருதத்திலிருந்து விரைந்து சமஸ்கிருதத்துக்கு மாறின. சிவஸ்கந்தவர்மன் காலம் கி.பி 200க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். வனவாசிக் கடம்ப குல முதல்வன் மயூரசர்மன் கிபி 4ம் நூற்றாண்டில் காஞ்சியில் கடிகா என்னும் கல்லூரியில் படித்ததாக அவன் பூட்டன் காகுத்தவர்மனின் தாள குண்டா கல்வெட்டு கூறுகிறது. 12. காஞ்சி நகரம் தமிழக எல்லைக்குள் இருந்த போதிலும் பல நூற்றாண்டுகள் அது சமஸ்கிருதப் பண்பாட்டு மைய மாகவே இருந்தது. எனவே அந்நகரமும் சரி, தொடக்க காலப் பல்லவரும் சரி சங்க இலக்கிய பாடல் எதிலும் குறிப்பிடப் படவில்லை . கிபி 400ஐ ஒட்டி காஞ்சிப் பகுதி தற்காலிகமாகத் தமிழரசர் ஆளுகைக்குள் வந்தது. அதன் விளைவுகள் இரண்டு : ஒன்று, தமிழர் தனித்தன்மை ஆரியப் பண்பாட்டால் தாக் குண்டது; இரண்டாவது தமிழ் இலக்கிய வளர்ச்சியில் காஞ்சிப் பகுதியும் பங்கேற்றது. இயல் 20 கரிகால் 1. பழந்தமிழ்ப் பாடல்களில் பெயரிட்டுக் குறிப்பிடப்படும் முதல் தமிழ்ப்பெரு வேந்தன் இவன். இவனைப் பற்றி வரும் செய்திகள் : ''உருவப் பல்தேர் இளையோன்" மகன் கரிகாலன். தாய் வயிற்றுள் இருக்கும் பொழுதே அரசுரிமை எய்தினான். வெண்ணிப்பறந்தலைப் போரில் இவன் இருபெரு வேந்தரை வென்றான். தோற்றவருள் ஒருவனான சேரலாதன் (அகம் 55:10 - 12) புறப்புண்ணுக்கு நாணி, வாள் வடக்கிருந்து (தன்னுயிரை மாய்த்துக் கொண்டு) மாண்டான் (புறம் 66; பொரு143 - 8; புறம் 65). இறந்த மன்னன் பெயரை புறம் 65ன் கொளு "பெருஞ் சேரலாதன் " எனக்கூறும். வெண்ணி வெற்றிக்குப் பின்னர் சேர பாண்டியர்கள் தனக்குப் பணிந்த அளவில் விட்டுவிட்டான்; அவர்கள் நாடுகளைக் கைப்பற்றி ஆளவில்லை. (பொரு நராற்றுப்படை) கடைசிவரியும் கரிகாலனை "காவிரி புரக்கும் நாடு கிழவோனே'' என்றுதான் அழைக்கிறது. வெண்ணிப் போருக்குப் பிற்பட்ட காலத்தவரான பரணர் அப்போரில் கரிகாலனிடம் சேர பாண்டியர் மட்டுமன்றி பதினொரு வேளி ரும் தோற்றனர் என்கிறார் (அகம் 246). பொருநராற்றுப் படை எழுதப்பட்ட காலத்தில் இவன் தலைநகர் உறையூர். பட்டினப் பாலை இவனைத் திருமாவளவன் என அழைக்கிறது. அந்நூல் எழுதுங்காலத்திற்குள் புகாருக்குத் (முட்டாச் சிறப்பிற் பட்டி னம்) தலைநகரை மாற்றினான். கரிகாலனால் வெல்லப்பட்ட வர்கள் தென்னவன் (பாண்டியன்), (கொடும் பாளூர்) இருங் கோவேள், சோழ நாட்டுக்கும் பல்லவ நாட்டிற்கும் இடைப் பட்ட பகுதியை ஆண்ட ஒளியரும், அருவாளரும், வடவர் (காஞ்சியை ஆண்ட பல்லவர்). குடவர் (குடநாட்டார்), பொதுவர் (குரும்பர்) ஆகியோர் எனப் பட்டினப்பாலை கூறுகிறது. அவன் 'காடுகொடுத்து நாடாக்கியது '' இன்றைய ஆந்திர மாநில கடப்பை, கர்நூல் பகுதியில் எனலாம். இப் பகுதியில் இருந்த தெலுங்கச் சோழர்கள் நாட்டை கிபி 640ல் யுவான் சுவாங் சூ - ளி - யே எனக் குறிப்பிடுகிறான். கிபி 12 - 13ம் நூற்றாண்டு வரை தெலுங்குச் சோட (சோழ அரசர்கள் இருந்துள்ளனர். 2. பிராமண மதச்சடங்குகள் பூம்புகாரில் பரவியிருந்தன என்பதைப் பின்வரும் அடிகள் காட்டுகின்றன. அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல்லானொடு பகடு ஓம்பியும் , நான் மறையோர் புகழ் பரப்பியும் : பொருந் 200 - 02 கரிகாலன் வேத வேள்வி செய்ததைப் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. பருதி உருவிற் பல் படைப்புரிசை எருவை நுகர்ச்சியூப் நெடுந்தூண் வேத வேள்வித் தொழில் முடித்ததூ உம் : புறம் 224 கரிகாலனுக்குப் பின்னர் வந்த ஒரு சோழன் '' இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி' என்று அழைக்கப்பட்டான். 3. கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்தது பற்றி இரா . சேந்திர சோழன் என் திருவாலங்காட்டுச் செப்பேடும் தெலுங்கு சோட அரசர்கள் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. இலங்கை யின் பிற்காலப் புராணக் கதைகள் முதலியவையே கரிகாலன் இலங்கை மீது படையெடுத்து வந்த தாகவும் அங்கு சிறைப் படுத்திய 12000 சிங்களவரைக்கொண்டு காவிரிக்குக் கரையமைத்ததாகவும் குறிப்பிடுகின்றன. இவை நம்பத்தகுந்த ஆதா ரங்கள் அல்ல. கரிகாலன் காலத்தில் இருந்ததாக தெலுங்கு சோடக் கல்வெட்டுகள் கூறும் திரிலோசன பல்லவன் என்ப வனிடம் இருந்து காஞ்சிப் பகுதியைக் கரிகாலன் கைப்பற்றி யிருக்கலாம். 4. சிலப்பதிகாரம் காதை 5 வரிகள் 89 - 110ல் திருமாவளவன் இமயத்திற் புலிக்கொடி பொறித்தான் எனக்கூறுகிறது. இது புனைகதை. பட்டினப்பாலை கூறாதது; தெலுங்குச் சோழக் கல்வெட்டுக்கள் கரிகாலன் சாதனைகளைப் பட்டியலிடும் பொழுதும் கூறப்படாதது. பிற்காலத்தில் சோழ அரசர் சூரியன் வழிப் பிறந்தோர் எனக் கதைகட்டிய காலத்தில் புனையப்பட்ட புனைகதை யாகும். தென்னிந்தியாவிலிருந்து இமயமலை உச்சி வரை படை கொண்டு சென்றதெல்லாம் எந்தக் கால கட்டத்திலும் நடந்திருக்கக் கூடியதல்ல (an inconceivably difficult feat). 5. கரிகாலன் மகளே செங்குட்டுவன் தாய் என கனகசபைப் பிள்ளையும் வேறு சிலரும் கூறுவது ஆதாரமற்றது. சிலப்பதி காரம் சமஸ்கிருதச் சொற்கள் மிகுந்தது; ஆரியப் பண்பாட்டுக் கருத்துகள் பல கொண்டது. எனவே ஆரியப் பண்பாடு தமிழ்நாட்டிற் புகு முன்னர் வாழ்ந்த கரிகாலன் காலத்தில் எழுதப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டுப் பாடல்களுக்கு மிகப் பிற்பட்டது. சிலப்பதிகாரக் கூற்றுக்களையோ இளங்கோவடி கட்கு ஆயிரம் ஆண்டு பிற்பட்ட அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையோ மட்டுமே அடிப்படை யாகக் கொண்டு கரிகாலன் மற்றும் அவனையடுத்து வந்த சோழ மன்னர்களைப் பற்றி உறுதியான செய்திகளாக எதையும் கூறுவது தவறாகும். மகா வம்சம் கூறும் கயவாகு (கஜபாகு (கிபி. 113 - 135 புத்த சமய ஆர்வலன்; அவன் பத்தினி வழிபாட்டை இலங்கையில் புகுத்தி னான் என மகாவம்சம் கூறவில்லை . சிலம்பு 30 : வரி 160ல் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்' என்பதற்கு '... காவல் வேந்தனும்" என்னும் பாடபேதமும் உண்டு. உரைபெறு கட்டு ரையோ கயவாகு வந்திருந்ததாகக் கூறவில்லை . ''அது கேட்டுக் கடல் சூழ் இலங்கை கயவாகு " என்றுதான் கூறுகிறது. எனவே செங்குட்டுவனும் கயவாகுவும் சமகாலத்தவர் என்று கருத ஆதாரமில்லை . கிபி 350ல் சமுத்திர குப்தன் கல்வெட்டு காஞ்சியை விஷ்ணுகோபன் (பல்லவன்) ஆண்டதாகக் கூறுகிறது. அதற்குப் பின்னர்த்தான் காஞ்சியைக் கரிகாலன் கைப்பற்றி திரிலோசன பல்லவனைத் தனக்குக் கீழ்ப்பட்ட அரசனாக ஆக்கியிருக்க வேண்டும். கரிகாலன் காலம் கிபி 4ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து கிபி 5ம் நூற்றாண்டு தொடக்கம் வரை எனக் கொள்வதே பொருத்தமாகும். கிபி 400ஐ கரிகாலன் ஆட்சியின் மையக் கட்டமாகக் கொள்ளலாம். [மூலம் பக்கங்கள் 335-387இன் சுருக்கம்) இயல் 21 இளந்திரையன் 1. கரிகாலன் (திருமாவளவன்) மீது பட்டினப் பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரே "திரைதரு மரபின் உரவோன்'' (பெரும்பாண் : வரி 31) "பல்வேற்றிரையன்" (வரி : 37) "தொண்டையோர் மருகன்" (வரி : 454) ஆகிய இளந்திரையன் மீது பெரும்பாணாற்றுப்படையையும் பாடி யுள்ளார். கரிகாலன் காஞ்சியை வென்ற பின் அவன் அப் பகுதியை இளந்திரையனின் ஆளுகையில் விட்டிருக்க வேண்டும். பின்வரும் அகநானுற்றுக் குறிப்பு களையும் காண்க. வென்றிவேல் திரையன் வேங்கட நெடுவரை அகம் 85:9 காட்டூர்க் கண்ணனார். வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றிரு நெடுங்கோட்டு ஓங்கு வெள்ளருவி வேங்கடம் அகம் 213;1-3 எருக்காட்டூர் தாயங் கண்ணனார் 2 "திரைதரு மரபின் உரவோன்' என்பது பற்றி நச்சினார்க் கினியர் கூறும் புராணக் கதையும், மணிமேகலையில் வரும் இது போன்ற மற்றொரு புராணக் கதையும் கட்டுக் கதைகளேயாம். செங்கல்பட்டு, வட ஆர்க்காடு பகுதிகளில் திரையர் என்னும் இனக்குழுவினரைச் சார்ந்தவனே இளந்திரையன் என்க. அவர் கள் அடையாளச் சின்னம் தொண்டைக் கொடி (Coccinea Indica) யாக இருந்ததால் "தொண்டையர்' என அழைக்கப் பட்டனர் என்க. பெரும்பாணாற்றுப் படை இளந்திரையனைக் கரிகாலன் வழியினனாகக் கூறுவதால் கரிகாலன் தொண்டையர் இனப் பெண்ணை மணந்திருக்கலாம். இளந்திரையன் பாடியவையாக புறம் 185, நற்றிணை 94,99,106 ஆகிய பாடல்கள் எட்டுத் தொகை நூல்களில் உள்ளன. கி.பி. 55 ஐ ஒட்டி பல்லவர் மீண்டும் காஞ்சியைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவிய பொழுது அவர்கள் தமிழரோடு ஒன்றினர்; ஆகவே கி.பி 550க்குப் பின்னர் பல்லவரும் தொண்டையர் கோன், தொண்டை மன்னவன், தொண்டைமான் என சுந்தரர், திருமங்கை ஆழ்வார் போன்றோரால் அழைக்கப்பட்டனர் (சமஸ்கிருதத்தில் பல்லவ என்பது கொழுந்து, கொடி (sprout, twig, tender leaf). பல்லவ என்பதன் தமிழாக்கமே தொண்டையர் என்று சொல்வது தவறு. கொடி என்ற பொதுப் பெயரை தொண்டை என்னும் ஒரு குறிப்பிட்ட கொடிக்கு இடார். பல்லவர் அரச குடும்பத்தினர் ஆரியப் பண்பாட்டினர்; கி.பி 400 வரை காஞ்சியை ஆண்ட பொழுதும் தமிழ் அரசப் பரம்பரையினராக அவர்கள் ஆளவில்லை. எனவே தொண்டையர் என்னும் தமிழ் இனக்குழுவின் பெயர் "பல்லவர்' என்பதிலிருந்து வந்தது என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. கிபி 550ல் குமார் விஷ்ணு காலத்தில் காஞ்சியை மீண்டும் கைக்கொண்டு தமிழரசர் போல் ஆளத் தொடங்கினர் பல்லவர். இக்கால கட்டத்தில் பல்லவர் போத்தரையர் (போத்து = கொளுந்து) என்றும் அழைக்கப் படலாயினர். இயல் 22 கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழமன்னர் 1. எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களில் இருந்து அக்காலத் தமிழ் நாட்டு மன்னர்களைப் பற்றித் தொடர்ச்சியான முழுமையான வரலாறு எழுதுவ தற்குத் தேவையான விவரங்கள் அவற்றில் இல்லை; சில போர்கள், போர்க் களங்கள், தோற்ற அரசர்கள் விவரங்களே தரப்படுகின்றன. (ஆனால் சிலப்பதி காரம், மற்றும் ஏனைய பிற்கால நூல்களைப் போல் மிகையான புகழ்ச்சி இல்லை) 2. குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப் பாடிய கோனாட்டு எறிச்சலூர் மதுரைக்குமரனார் புறம் 197ம் பாட்டில் "சீறூர் மன்னராயினும் வள்ளண்மையுடை யோரையே புலவர் மதிப்பர். பாடறிந் தொழுகும் பண்பிலா தோர் பெருவேந்தர் ஆயினும் மதியோம்" என்று கூறுகிறார். தம்முள் பொருத்து நின்ற சோழமன்னர் நலங்கிள்ளி, நெடுங் கிள்ளியைச் சந்து செய்விக்க கோவூர் கிழார் புறம் 45ஐ "இரும் பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்.) பாடினார். கிபி 5-6 ம் நூற்றாண்டுகளில் அகம், நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய நான்கும் தொகுக்கப்பட்ட பொழுது ஏனைய மூன்றைப் போல புறப்பாடல்களுக்கும் பாடினோர் பெயரும் திணையும் (அல்லது திணை /துறையும்) மட்டுமே இருந்திருக்க வேண்டும். புறநானூற்றின் கொளுக்களும் பழைய உரையும் மிகப் பிற்பட்ட காலத்தில், கிபி 1100 - 1500 க்கு இடைப்பட்ட காலத்தில், தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். எனவே அக் கொளுக்களில் கண்ட செய்திகளை அப்படியே வரலாற்றுச் செய்தியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு ஆதாரமற்ற செய்திகளைக் கொண்ட கொளுக்கள் சிலவருமாறு. (1) தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனைப் பாடியவை புறம் 76ம் 77ம் ஆகும். இரண்டையும் இடைக் குன்றூர்க் கிழார் இயற்றியதாகக் காண்கிறோம். முன்னது புலவருக்குத் தெரிந்த (நெடுஞ்செழியனைப் பற்றியது. பின்னதில் வயதில் மிக இளைய பாண்டிய மன்னன் ஒருவனுடைய போர் வெற்றி கூறப்படுகிறது. இரு மன்னரையும் ஒருவராகக் கருத இயலவில்லை . புறம் 77ன் கொளு வெறும் உன்னிப்புத்தான்; அதுவும் தவறான உன்னிப்பு. ' (2.) புறம் 74 (குழவியிருப்பினும் ...) என்னும் பாடலின் கொளு சேரன் இரும்பொறை தன்னை மாய்த்துக் கொண்ட தாகக் கூறுகிறது. கிபி 16ம் நூற்றாண்டுக்கு முன்னர் தொகுக்கப் பட்ட தமிழ் நாவலர் சரிதையின் 158ம் பாடலில் பொய்கை யாரின் களவழி நாற்பது நூலைக் கேட்ட சோழன் செங்கணான் சேரனை சிறைவிடுப்புச் செய்தான் எனக் கூறுகிறது. எது சரி? (3) புறம் 74 (வள்ளியோர்ப்படர்ந்து என்னும் கோவூர் கிழார் பாடலின் கொளு அது புலவர் இளந்தத்தனை ஒற்றன் எனக் கருதிக் கொல்லவிருந்த நெடுங்கிள்ளி முன்னர்ப் பாடிய தாகக் கூறுகிறது. இப்பாடலின் பொருளில் அத்தகைய கருத் துக்கு ஆதாரமாக எதுவும் இல்லை . (4.) புறம் 173 (யான் வாழுநாளும் பண்ண ன் வாழிய ...) என்னும் பாடலை குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடியதாகக் கொளு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. 3. மேற்கண்டவை போன்ற பல ஆதாரமற்ற கொளுக்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அப்படியே வரலாற்றாதாரங் களாகக் கொண்டு, பலரும் சங்ககால மன்னர் கொடிவழியையும் அக்கால மன்னர்கள் வரலாற்றையும் எழுதி வருகின்றனர். ஒவ்வொருவர் முடிவும் ஒவ்வொருவிதமாக அமைந்துவிடுகிறது! இவர்கள் எழுதும் வரலாறுகள் எல்லாம் சங்கப் பாடல்களில் குறித்த மன்னர்கள் அனைவரையும் நூறு நூற்றைம்பது ஆண்டு களுக்குள் அடக்கிவிடுவது அபத்தமாகும் (absurd) தமிழ் இலக்கியம் திடுமெனச் சிறந்த செவ்விலக்கியமாகத் தோன்றி, 150 ஆண்டுகளுக்குள் அதன் வாழ்வு முடிந்து பின்னர் சில பல நூற்றாண்டுகள் சிறந்த இலக்கியங்களே தோன்றவில்லை என்று கூறுவது இயற்கை நியதிக்கு எதிராகும். (நானும் சில ஆண்டுகள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுப் பின்னர்தான் சங்கத் தொகை நூற்செய்யுள்களிலும் அவற்றின் கொளுக்களில் உள்ள வற்றையும் கொண்டு கட்டுக்கோப்பான வரலாற்றை எழுதுவது இயலாது - அவற்றில் செய்தியும் புனைவும், மரபுக் கதைகளும் உன்னிப்புகளும் யாவும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத அளவுக்கு கலந்திருப்பதால், என்பதை உணர்ந்தேன். சில மன்னர் களைப் பற்றிய சில செய்திகளை மட்டுமே இப்பாடல் களிலிருந்து அறிய இயலும்.) 4. கரிகாலனுக்குப் பின்னரே நாடுப் பகுதியைத் தெலுங்குச் சோட (சோழ மன்னர்கள் தாமே ஆளத் தொடங்கினர். தெலுங்கு இதற்குப்பின்னர் எழுத்து மொழியாகிக் கல்வெட்டுக்களிலும் பயன்படுத்தப்படத் தொடங்கியது. சில நூற்றாண்டுகளில் இலக்கிய மொழியாகவும் ஆனது. 5. கரிகாலனுக்குப் பின் வந்த நலங்கிள்ளிக்கு பாண்டிய, சேர அரசுகள் கட்டுப்பட்டிருக்கவில்லை. நலங்கிள்ளி காவிரிப் பூம்பட்டினத்தில் ஆண்டான். உறையூரை நெடுங்கிள்ளி கைப் பற்றிக் கொள்ள, நலங்கிள்ளி அவனுடன் போரிட்டு உறையூரை முற்றுகையிட்டான். கோவூர் கிழாரின் புறம் 31ம் பாட்டின் (சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும் ...) உட்பொருள் நலங்கிள்ளி தனது ஆட்சிக் கால முழுவதும் பிற மன்னர்களிடம் போரிட்டுக் கொண்டிருக்க வேண்டி நேரிட்டது என்பதே. இப் பாடல் ஆரியக் கருத்துக்களைக் கொண்டது. "சேர பாண்டியர் குடைகளுக்கு முன்னர் சோழன் குடை செல்வது பொருளுக் கும் இன்பத்துக்கும் முதன்மையானதாக அறம் விளங்குவது போன்றது" எனக் கூறப்படுகிறது. இப்படிப் பாடு பொருட் களுக்குக் கருத்துக்களை உவமையாகக் கூறுவது கரிகாலன் காலத்துக்கு முந்தைய பாடல்களில் காண இயலாதது. இதே நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறம் 27ல் நிலையாமையைக் கூறும் துயரமான எண்ண வோட்டம் உள்ளது. 6. சோழமன்னர்களில் மிகப் பல பாடல்கள் பெற்றவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆவான். இவனைப் பாடிய கோவூர் கிழாரும் ஆவூர் மூலங்கிழாரும் நலங் கிள்ளியையும் பாடியுள்ளனர். எனவே நலங்கிள்ளியும் கிள்ளி வளவனும் நெருங்கிய உறவினராக (உடன் பிறப்புகளாக?) இருந்திருக்க வேண்டும். கிள்ளிவளவன் சேரன் வஞ்சியை முற்றுகையிட்டு வென்றதை ஆலத்தூர் கிழார் (புறம் 36; மாறோக்கத்து நப்பசலையார் (புறம் 39) ஆகிய இருவரும் பாடியுள்ளனர். புறம் 39ல் ஆரியக் கருத்துக்களின் தாக்கத்தால் இரண்டு புனைகதைகள் கூறப்படுகின்றன; ஒன்று சோழமன்னன் ஒருவன் தூங்கு எயில் தொங்கும் கோட்டை) வென்றது; மற்றது புறாவின் அல்லல் களையச் சோழமன்னன் ஒருவன் துலாக்கோல் புக்கது ஆகும். (இதனை புறப்பாடல்கள் 37, 43, 46 ஆகியவையும் குறிப்பிடுகின்றன.) பிற்காலத்தில் சோழர் சூரியன் பரம்பரை யெனப் பட்டனர்; ஆனால் புறநானூற்றுப் பாடல் எதிலும் இச்செய்தி இல்லை. இவனைக் கோவூர் கிழார் பாடிய புறம் 70ல் “தைஇத் திங்கள் தண்கயம் போல'' என்ற அடிவருகிறது. (நற்றிணை 80 "தைஇத் திங்கள் தண்கயம் படியும்'; குறு 194 ''தைஇத்திங்கள் தண்ணிய ") ஆரியர் மாதக் கணக்கும், பெயர் களும் தமிழகத்தில் ஏற்கப்பட்டபின் இது எழுதப் பட்டிருக்க வேண்டும். எனவே இது கிபி 5ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருத்தல் இயலாது. புறம் 229ல் பிற்பட்ட சேர மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் கூடலூர்க் கிழார் பாடிய ''ஆடு இயல் அழல் குட்டத்து'' என்னும் புறம் 229 பாடல் சுட்டுகின்ற எரிகொள்ளிவீழ்ச்சி கி.பி. 5ம் நூற்றாண்டு முடிவுக்கு முன்னர் நடந்திருக்க வாய்ப்பில்லை. கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடிய புறம் 34ல் வரும் ''பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்" என்பது பிராமணரையும் "அறம் பாடிற்றே" என்பது தரும் சாத்திரங்களையும் குறிக்கும். இப்பாடலில் ஆரியத்தாக்கம் இருப்பினும் இவன் இறந்த பொழுது புதைக்கப் பட்டான்; எரிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது (புறம் 228). 7. சிலப்பதிகாரம் காதை 28 - செங்குட்டுவன் மைத்துனன் ''வளவன் கிள்ளி " சார்பாக நேரிவாயில் செருவில் ஒன்பது சோழ இளவரசரைச் செங் குட்டுவன் வென்றதாகக் கூறுகிறது. ''வளவன் கிள்ளி'' வேறு, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் வேறு. மணிமேகலை காதை 25 ல் நாகபுரத்தரசன் புண்ணிய ராசன் நண்பனாகச் சுட்டப்படும் (புகாரை ஆண்டு வந்த) கிள்ளி வளவன் உறையூரை ஆண்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அல்லன். 8. அக்கால கட்டத்தில் தோற்ற மன்னர்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமைகளைப் பற்றிய செய்திகள் சில: புறம் 40. வென்ற மன்னரைக் கொன்று அவர் முடிப் பொன்னால் கழல் செய்து காலில் அணிந்தவன் கிள்ளிவளவன். நற் 14. குட்டுவனுடைய அகப்பா என்னும் கோட்டையை நூறிய செம்பியன் பட்டப் பகலில் பகைவன் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினான். நற் 18. தொண்டிப் பொருநன் இரும்பொறை, மூவன் என்னும் சிற்றரசனை வென்று அவனுடைய பற்களைப் பிடுங்கித் தன் கோட்டைக் கதவில் பதித்தான். 9. சங்ககாலச் சோழ மன்னர்களில் குறிப்பிடத் தக்கவர் களில் கடைசி மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. இவன் வீரப் போர்களை புறம் 16 செப்புகிறது. இவனும் இவன் சமகாலத்தரசர் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெரு வழுதி, சேரன் மாரிவெண்கோ ஆகிய மூவரும் ஒருங்கிருக்க அவரைப் பாராட்டி ஒளவையார் பாடியது புறம் 367. அவர்களிடம், "ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரி" யும்படி ஒளவையார் வேண்டுகிறார். அவர்கள் மூவரையும் ''ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீ புரைய காண் தக இருந்த வேந்தர்களே" என்று அழைக்கிறார். அக்கால ஆரியத்தாக்க மிகுதியை இவ்வடிகளும் "இராசசூயம் வேட்ட" என்னும் அடையும் காட்டுகின்றன. இம்மூவரசர் காலத்துக்குச் சற்றுப் பின்னர்தான் புறநானூறு தொகுக்கப்பட்டு இருக்க வேண்டும். 10. சங்க நூல்களில் மேற்சொன்ன சோழ மன்னர்கள் மட்டும் மின்றி பிற சோழர் பன்னிருவரும் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு வரும் சோழ நாடு முழுவதையும் ஆண்ட தாகக் கருத இயலாது. "வளவன் கிள்ளியை ஒன்பது (சோழ மன்னர் எதிர்த்த செய்தியைக் கண்டோம். எனவே அரசு கட்டில் ஏறாத சோழர்களையும் புறப்பாடல்கள் சுட்டுகின்றன என்றே கொள்ள வேண்டும். [மூலப் பக்கங்கள் 406 - 435 இன் சுருக்கம்) இயல் 23 பாண்டிய வேந்தர் முதுகுடுமிப் பெருவழுதி சங்கப்பாடல்களில் இருந்து தெரியவரும் பாண்டிய வேந்தர்களில் முதலாமவன் முதுகுடுமிப் பெருவழுதி, பிராமணர்கள் நடத்திய வேள்வி களுக்கு (யக்ஞம்) ஆதரவு தந்தமையால் அவனுக்குப் "பல்யாக சாலை" என்னும் அடை தரப்பட்டது. இப்பாண்டியனே வேள்வி செய்தான் எனக் கொள்ள வேண்டிய தில்லை. (காரணம் : வேள்வி செய்ய வேண்டுமெனின் ஒரு மன்னன் சத்திரிய கோத்திரம் ஒன்றைச் சேர்ந்தவனாக்கப் படவேண்டும். அவ்வாறு அக்காலப் பாண்டியர் எவரும் செய்யப் பட்டதாகத் தெரியவில்லை) புறம் 15ல், வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப நட்ட வியன் களம் குறிக்கப்படுகிறது. பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக் குடிச் செப்பேட்டில் அவன் முன்னோன் பாண்டியாதிராஜன் பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி, கொற்கைக் கிழான் நற் கொற்றன் என்னும் பிராமணன் தொடங்கிய வேள்வியை முற்றுவிக்க பாகனூர்க் கூற்றத்து வேள்விக் குடியை நிலக் கொடையாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. (அக்கொடை நிலத்தை களப்ரன் என்னும் கலி அரசன் பிடுங்கிக் கொண்டான்; நற்கொற்றன் பிறங்கடை கொற்கை கிழான் காமக்காணி நற் சிங்கன் முறையிட்டதன் பேரில் அவனுக்குப் பாண்டியன் நெடுஞ்சடையன் இந்நிலத்தை மீண்டும் கொடுத்தான். வேள்விக் குடிச் செப்பேட்டில் நெடுஞ்சடையனுக்கு ஏறத்தாழ 300 ஆண்டு களுக்கு முன்னர்த்தான் முதுகுடுமி இருந்திருக்க வேண்டும். 2. முதுகுடுமி காலத்தில் ஆரியத் தாக்கம் இருந்ததை புறம் என் வரிகள். "இறைஞ்சுக பெரும் நின் சென்னி சிறந்த நான் மறை முனிவர் ஏந்துகை எதிரே காட்டுகின்றன. அதே புறப்பாட்டின் "பணியியர் அத்தை நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே" என்னும் வரிகளில் தான் தமிழிலக்கியத்தில் முதன் முதலாக முக்கட் செல்வன் குறிப்பிடப்படுகிறான். (அடுத்துப் பரணர் அகநானூற்றுப் பாடல் 181ல் 'நான் மறைமுது நூல் முக்கட் செல்வன்') புறம் 6ல் முதுகுடுமியின் புகழ் மூவுலகும் பரவுவதாக வருவதும் ஆரியத்தாக்கமே. இதே புறப்பாட்டில்தான் முதன் முதலாக தமிழிலக்கியத்தில் இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரு நாடு என்னும் கருத்து வருகிறது. (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பற்றிய புறம் 17ல் ''தென் குமரி, வட பெருங்கடல்"; பெருங்கோக்கிள்ளி கோப்பெருஞ்சோழன் பற்றிய புறம் 67ல் "குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை ஆயின்", புறம் 67 கிபி 6ம் நூற்றாண்டு எனலாம்") முதுகுடுமி பெரும் போர்களில் ஈடுபட்டுப் பெரு வெற்றிகள் பெற்றதைக் கூறும் பாடல்கள் இல்லை; எனினும் புறம் 15 அவன் பகைவர்களை வென்று அவர்கள் நாட்டில் கழுதைகளைப் பூட்டி உழுது பாழ் செய்ததைக் கூறுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 3. அக்காலப் பாண்டிய மன்னர்களில் புகழ் வாய்ந்தவன் இவன். புறப்பாடல்கள் பத்து (24, 25, 26, 78 முதலியவை) மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை(?) ஆகியவை இவனைப் பற்றியவை. மேலும் அகப்பாடல்கள் ஒன்பதிலும் இவனைப் பற்றிய செய்திகள் வருகின்றன. இவன் அரசனானதும் மதுரை மேல் படையெடுத்த சேர, சோழ மன்னர்களைத் தலையாலங் கானத்துப் போரில் வென்றான். சேர, சோழ வேந்தரொடு திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியவரையும் நெடுஞ் செழியன் அப்போரில் வென்றதாக அகம் 36ல் வரும் உவமை கூறுகிறது. இன்ன சேரன், இன்ன சோழன் என்ற குறிப்பு இல்லை. ஆலங்கானப் போர் அகம் 116, 175,209 ஆகியவற்றின் உவமை கூறுகிறது. நெடுஞ்செழியன், எவ்வியின் மிழலை, தொன் முதிர் வேளிரின் முத்தூறு ஆகிய வற்றையும் வென்றதை புறம் 24 கூறுகிறது. அவனுடைய பிற வெற்றிகளாக மதுரைக் காஞ்சி குறிப்பிடுவன. "சீர்சான்ற உயர் நெல்லின் ஊர்" (இன்று ஆந்திர நெல்லூர்), (சேரநாட்டுப்) பல் குட்டுவர்; முது வெள்ளிலை (நகர்) ; அழும்பில் ஆகியவையாகும். இவன் பாடிய புறம் 72ல் புலவர் தலைவனாக மாங்குடி மருதனாரையே குறிப்பிடுகிறான். நக்கீரர் சிவனைப் பற்றிப் பாடியுள்ளதால் பிற்காலத்தில் சைவ சமயத்தினர் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தலைவன் நக்கீரன் எனக் கதை கட்டினர். அது புனை கதையே. எனினும் நெடுஞ்செழியன் கூற்றையும் ஒதுக்கிவிட்டுத் தற்காலத்தார் சிலர் நக்கீரர்தான் கடைச் சங்கத் தலைவர் என்கின்றனர்! மதுரையில் ஆகம சமயம் பரவல்: 4. மதுரைக்காஞ்சி 453 - 67 அடிகள் "மழுவாள் நெடி யோன்' ஆகிய சிவனுக்கும் காக்கும் கடவுள் விஷ்ணு வுக்கும் வழிபாடு நடந்ததை விவரிக்கின்றன. இது ஆகம முறை வழிபாடே. ஆனால் பிற்கால ஆகம வழிபாட்டு முறைகள் போல் அக்கால முறை நன்கு உருப்பெறவில்லை. அதே நூலின் 468 - 87 அடிகள் அந்தணர் (பிராமணர்) வேதமுறை வழிபாடு, சமண - பௌத்த வழிபாடுகள் ஆகியவற்றை விவரிக்கின்றன. இந்நான்கு வடவர் சமயங்களும் இக்காலகட்டத்தில் பழந்தமிழ் வழிபாட்டுமுறைகளை வெற்றி கொள்ளவும் இல்லை; அவ் வழிபாட்டு முறைகளைத் தம்வயமாக்கவும் இல்லை. அவற்றுக்கு அரசன் ஆதரவும் இல்லை; எனவே அவை நான்கும் பின்னால் கிபி 6 - 9 நூற்றாண்டுகளில் நடந்தது போல், தம்முள் ஒன்றோ பொன்று கடும் போர் செய்த நிலை சங்ககாலத்தில் இல்லை. மதுரை நகர்க் காட்சிகள் 5. சென்னை கிறித்தவக் கல்லூரி இதழ் (1901) பக்கங்கள் 120-4ல் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை மதுரைக் காஞ்சி தரும் மதுரை நகரக் காட்சிகளை ஆங்கிலத்தில் தந்துள்ளார். சங்க காலப் பாண்டிய வேந்தரில் இறுதியானவன் உக்கிரப் பெருவழுதி, 6. சங்ககாலப் பாண்டிய மன்னருள் இவன் ஒருவன் பெய ரில் மட்டுமே சமஸ்கிருத அடை (உக்கிர) உள்ளது. வேங்கை மார்பன் என்னும் குறுநில மன்னனின் கானப் பேரெயிலைக் கைப்பற்றியது ஒன்றே இவன் வீரச் செயல் (புறம் 21). இவனையும் சமகாலச் சோழ, சேர மன்னரையும் ஒரு சேர ஒளவையார் புறம் 367ல் பாடியுள்ளார் என்பதைக் கண்டோம். இம் மூவேந்தர்கள் பெயர்களும் 367ம் பாடலில் கொளுவில் தான் உள்ளன. எனினும் இந்தக் கொளுவின் செய்தி நம்பத் தகுந்தது என நான் எண்ணு கிறேன். அகநானூற்றுப் பாடல்களை இவன் தொகுப்பித்தான் எனக் கூறப்படுகிறது. நானூறு பாடலுமே உக்கிரப் பெரு வழுதியின் காலத்துக்கு முந்தியவை எனக் கருத வேண்டியது இல்லை. தொகுப்பிக்கும் பணியை இவ்வேந்தன் தொடங்கிய பின்னர் எழுதப்பட்ட சில பாடல்களையும் சேர்த்து 400 பாடல்களாக ஆக்கியிருக்கலாம். 7. மேற்சொன்ன பாண்டியர் தவிர புற நானூற்றுக் கொளுக்கள் செழியன், பஞ்சவன், தென்னவன், வழுதி, மாறன், மீனவன், கவுரியன் என்ற பட்டப் பெயர்களில் பாண்டிய மன்னர்கள் வேறு சிலரையும் சுட்டுகின்றன. பாண்டிய வேந்தன் ஆக ஒருவன் தலைநகரில் ஆள், ஏனையோர் அவனுக்கு அடங் கிய குறுநிலத்தலைவர்களாக ஆண்டிருக்கலாம். பின்னர் ஆரியத்தாக்கத்தால் பாண்டியர் சந்திர பரம்பரை என்றும் பாண்டிய அரசகுமாரி சித்ராங்கதைக்கு அருச்சுனனிடம் பிறந்த மகன்கள் பாண்டிய அரியணை ஏறினர் என்றும் தொன்மங்கள் புனையப்பட்ட பின் பாண்டியர் பாண்டவர் போல் ஐவர்' எனக் கருதப் பட்டனர். எனவே புறம் 58ல் காரிக் கண்ணனார் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியை ''பஞ்சவர் ஏறு'' என விளிக்கிறார். பிற்காலத்தில் (கிபி 13ம் நூ) பாண்டவர் பரம்பரை என்ற பொய்க் கதையை மெய்ப்பிக்க வேண்டுமென்று பாண்டியர் ஐவர் ஒரே நேரத்தில் ஆண்ட தாகக் கொள்ளப்பட்டது என்க. [மூலப் பக்கங்கள் 436 - 462இன் சுருக்கம்) இயல் 24 அகம், புறப்பாடல்களில் ஆரியக் கருத்துக்கள் கடவுளர் 1. கி.பி 4 - 5ம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட பிற்காலப் பாடல்களும் எட்டுத்தொகை நூல்களில் சில உள்ளன. அவற் றில் தான் மெள்ள மெள்ள வடவர் (ஆரியர்) கருத்துக்கள், சமயங்கள், மூட நம்பிக்கைகள், ஆகியவை புகுத்தப்பட்டன. ஆனால் தமிழருக்கே உரிய கருத்துக்கள், சமய நம்பிக்கை களோடு ஒப்பிடும் பொழுது புகுத்தப்பட்டவை மிகச்சிலவே. அவ்வாறு புகுத்தப்பட்ட ஆரியக் கருத்துக்களை நான் எட்டுத் தொகை நூல்களிலிருந்து தொகுத்துள்ளேன். அவை வருமாறு 2. சிவனை "நான் மறைமுது நூல் முக்கட் செல்வன்" என்கிறது அகம் 181. புறப்பாடல்கள் ஐந்திலும் சிவன் வரு கிறான். மூன்று எயில்களை (கோட்டைகளை அழித்து அவன் தேவர்க்கு வெற்றி தருகிறான். (புறம் 55). புறம் அவனை "முக்கட் செல்வர்' என்றும் புறம் 166 "நீள நிமிர் சடை முக்கட் செல்வர்'' என்றும் அழைக்கின்றன. புறம் 91 அவன் பிறை நுதலையும் நீல மணி மிடற்றையும் சுட்டுகிறது. கடவுளரைச் சுட்டும் வேறு பாடல்கள். புறம் 56 : சிவன், பலராமன், கிருஷ்ண ன், சுப்பிரமணியன் புறம் 58 : பலராமன், கிருஷ்ணன் (சோழ, பாண்டியருக்கு உவமை ) புறம் 57 : கிருஷ்ணன் (போன்று புகழுடைய பாண்டியன்) புறம் 174 : அவுணர் ஞாயிறை ஒளித்துவிட்ட போது அதை மீட்டு வந்து ஞாலத்தைக் காத்த கிருஷ்ணன் அகம் 59: இடைக் குலமகளிர் தமக்கு தழை யுடை தைத்துக் கொள்ள வகை செய்து மரக் கிளையை அவர்களுக்காக வளைத்துக் கொடுத்த மால். இக்கதை எந்த சமஸ்கிருத நூலிலும் இல்லை. மாயோனைப்பற்றித் தமிழகத்தில் உருவான கதை இது. அம்மகளிர் புடவைகளைக் கிருஷ்ணன் திருடிக் கொண்டதாகக் கூறுவது பிற்காலக் கதை. அகம் 175: நேமியஞ் செல்வன் புறம் 378 : சீதையை அரக்கன் வான் வழி வெளவிய பொழுது அவள் எறிந்து விட்ட அணி களைப் பொறுக்கி குரங்குகள் தாறுமாறாக அணிந்து கொண்டமை அகம் 70: கவுரியர்க்கு = பாண்டியர்க்கு (கெளரி என்னும் மீனாட்சியை வழிபட்டதால் இப்பெயர் இடப் பட்டதோ?) உரிய பழைய கோடி (தனுக்கோடியில் கடற்கரையில் ஆலமரத்தின் அடியில் இராமன் ஆலோசனை செய்வதற்கு இடையூறின்றி அம்மரப் பறவைகள் ஒலி அடங்கின. (சமஸ்கிருதத்தில் இக்கதை இல்லை) துறக்கம் 3. பின் வரும் செய்திகள் சங்கப் பாடல்களில் உள்ளன. தேவர் நாட்டில் பொற்பூக்களைக் கொண்ட பூங்காக்கள் உள்ளன்புறம் 38). பிற புறப்பாடல்கள் : புத்தேளுலகம் (22), அரி செலுலகு (260), உயர்ந்தோர் உலகம் (176), தேவருலகம் (228) மேலோருலகம் (229,240) என்று துறக்கத்தை அழைக்கின்றன. ஆனிலையுலகம் (கோலோகம் தான் மூவுலகில் மேலே உள்ளது (புறம் .ெ அங்கு வாடாப்பூக்களும் இமையா நாட்டத்து நாற்ற உணவின் தேவரும் உள்ளனர். (புறம் 62) வினை (கர்மம்) 4. "ஈண்டுச் செய் நல்வினை யாண்டுச் சென்று உண் இயர்?'' என்கிறது புறம் 214. அது வடக்கிருந்த கோப்பெருஞ் சோழன் பாடியது. செய்வினையால் மேலுலகம் எய்தினும் எய்துக; அல்லது இவ்வுலகில் மறுபிறவி எய்தினும் எய்துக; எவ் வாறாயினும் ஒருவன் தன் புகழை நிலைபெறுத்தி மாய்தலே தலைமையானது என்கிறான் அவன். புறம் 236ல் வரும் ''இம்மை போலக் காட்டி உம்மை இடையில் காட்சி நின்றோர் உடனுறைவு ஆக்குக உயர்ந்த பாலே" என்னும் வரிகளில் பிற்கால நூல்களில் சமஸ்கிருதச் சொற்கள் வருவது போல் அன்றி இம்மை, உம்மை , பால் வினைப் பயன் ) என்னும் தமிழ்ச் சொற்களே வருவதைக் காண்க. வேத வேள்விகள் 5. கிபி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ் வேந்தர் யக்ஞங்கள் (வேள்வி செய்வித்ததை முன் இரு இயல்களில் கண்டோம். புறப் பாடல் 400 நலங்கிள்ளி நாட்டில் யூபங்களைக் குறிப்பிடுகிறது. வேறு சில பாடல்கள் புறம் 122: (காரி நாட்டில் ) அழல் புறந்தரூஉம் அந்தணர்' புறம் 367: "இரு பிறப்பாளர் முத்தீப் புரையா" இருந்த கொற்ற வெண்குடை இவ்வாறு வேள்வி செய்வித்ததைக் கூறும் பாடல்களே தமிழ் மரபுப் படி புகழுக்குரியன எவையோ அவற்றையும் அவ்வேந்தர் செய்ததைக் கூறுவது குறிப்பிடத்தக்கது : புறம் 15: முதுகுடுமிப் பெருவழுதி பகை நாட்டைக் கழுதை ஏர் பூட்டி உழுது பாழ் செய்தமை புறம் 224: கரிகாலன் பல கோட்டைகளை வென்று சுற்றத் தோடு பானை பானையாக மதுவுண்டமை. அகநானூறு 220ம் பாடலில் “மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்' ஆகிய பரசுராமன் (மணிமேகலை 22: வரி 25ம் அவனை இவ்வாறே சுட்டுகிறது) வேள்வியில் நட்ட யூப நெடுந் தூணைக் குறிப்பிடுகிறது. பிராமணர்கள் 6. ஆகம வழிபாட்டு முறைகள் தோன்றிய பிறகு தமது வர்ணத்திற்குரிய தொழில்களை விட்டு வேறு தொழில்களைச் செய்யும் பிராமணர் பலராயினர். அத்தகைய பிராமணனை முதன் முதல் அகம் 24 ''வேளாப் பார்ப்பான்' (யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான்) எனக் குறிப்பிடுகிறது. வேள்வி செய்யும் பிராமணர் பெரிதும் மதிக்கப்பட்டதை புறம் 166 பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனைப் புகழுவதிலிருந்து அறியலாம். எப்பொழுதும் நான்கு வேதங்களையும் ஓதிக் கொண்டிருப்பான் என்கிறது அப்பாடல். சங்க இலக்கியத்தில் இவ்வொரு இடமே இவர்களைச் சுட்டுகிறது. அதே பாடல் "இகல் கண்டோர்" எனச் சாடுவது அக்காலகட்டத்தில் காடு களில் குகைகளில் வசித்து வந்த புத்த சமணரையே. (பின்னே கி.பி. 6-7 நூற்றாண்டுகளில் அவ்விரு மதத்தவரும் மன்னர் ஆதரவு பெற்ற பின் அவர்களுக்கும் சைவ வைணவர்களுக்கும் கடும் சண்டைகள் நடை பெற்றன). வேள்விகள் பற்றிக் கூறும் இத் தகைய பாடல்கள் சங்ககால இறுதியில் வாழ்ந்த மன்னர்கள் காலத்தில் தான் இயற்றப் பட்டிருக்க வேண்டும். காரணம் தமிழ் வேந்தர் வேள்வி செய்வதைத் தொல்காப்பியம் குறிப்பிட வில்லை - (ஆரிய தரும சாத்திரங்கள் கூறும் பிராமணர் அறு தொழில், அரசர் வினைகள் ஐந்து ஆகியவற்றையெல்லாம் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ள போதிலும்) தொல்காப்பியர் காலத்தில் அவருக்குக் கிட்டிய தமிழ்ப் பாடல்களில் (முற்கால வேந்தர் வேள்வி செய்யாததால்) வேள்வி பற்றிய குறிப்புகள் இருந்திருக்காது என்பதே இதற்குக் காரணமாகும். இறந்தோரை எரியூட்டுதல் 7. வட நாட்டில் வேதமுறை வேள்வித் தீ வழிபாடு தோன் றிய பின்னர் இறந்தோர் உடலை எரித்து விடும் பழக்கமும் தோன்றியது. தேவர்களின் முகம் (வாய்) அக்னி. தீயில் போடும் விலங்குகள் தேவர்களுக்கு ஆகுதியானது போல மாந்தர் பிணங்களும் ஆகுதியாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னர் பிணங்கள் தொலைவில் எறியப்பட்டன. முழுமை யாகவோ துண்டுகளாக்கப்பட்டோ - பறவைகள் தின்னட்டும் என; அல்லது தரையில் புதைக்கப்பட்டன; அல்லது பெரும்பாலும் தாழியில் புதைக்கப்பட்டன. தீ வழிபாட்டை ஏற்ற தென்னாட்டவர் பிணங்களை எரிக்கலாயினர். (அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தீ வழிபாட்டின் கொச்சை வடிவம் ஒன்று பண்டை கிரேக்க, ரோம் நாடுகளுக்கும் பரவிய படியால் அந்நாடுகளிலும் பிணங்களை எரிக்கும் பழக்கம் பரவியது) சங்கப் பாடல்களில் பிணங்களை எரியூட்டும் குறிப்புகளைப் பின்வரும் பாடல்கள் மட்டுமே தருகின்றன: புறம் 231 : கரிபுற விறகின் ஈம ஒள் அழல் புறம் 240: (கூகை) ''சுட்டுக் குவி'' எனச் செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை ஒரு சிறை அல்கி ஒள்ளி எரி நைப்ப உடம்பு மாய்ந்தது. புறம் 245: (ஈமத்து) ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி புறம் 246: பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் புறம் 363: சுடுபிணக்காடு பதியாகப் போகி இறந்தோரைப் புதைத்தல் 8. பிணங்களைச் சுடுவதோடு புதைக்கும் வழக்கமும் தொடர்ந்தது. சுடுவது குறித்து வந்த மேற்கண்ட பாடல்கள் மன்னர், குறுநிலத்தலைவர் பற்றியவையே. ஏனைய பொது மக்களில் ஏழையர் மண்ணிலும், ஏந்துகள் பெற்றோர் தாழி களிலும் புதைக்கப்பட்டனர் (புறம் 256). குள் முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் புதைக்க வேண்டுமாயின் அத்தாழியை இரு நிலத்தை (horizon?) திகிரியாகவும் பெருமலையை (மேரு) மண்ணாகவும் கொண்டே வனைதல் வேண்டும் என புறம் 228ல் ஆவூர் மூலங்கிழார் குயவனிடம் கூறுகிறார். புறநானூற்றில் பல இடங்களில் (225,238, 356,359) காடு என வருவதையெல்லாம் (பிணங்களைச் சுடும் வழக்கம் பரவிவிட்ட பிற்கால) உரை காரர்கள் சுடுகாடு எனக் கூறிவிட்டது பிழையாகும். ''காடு'' இருக்கும் இடத்தை அப்பாடல் வரிகள் விவரிப்பதைக் கூர்ந்து பார்த்தால் இடு காட்டையே புலவர்கள் குறித்தனர் என உணர லாம். பிணங்களை எரியூட்டியதைக் கூறும் புறப்பாடல் கள் மிகச் சிலவே. 9. பிணங்களைப் புதைத்தல் சார்ந்து நடந்த சில சடங்கு களில் ஆரியத் தாக்கங்கள் இருந்ததாகத் தெரியவில்லை - உரைகாரர்கள் தவறாக விளக்கங்கள் தந்துள்ள போதிலும் : புறம் 359: இறந்த வேள் எவ்வியின் மனைவி, யானைப் பாதம் அளவுள்ள இடத்தை மெழுகி புல் மேல் "இன் சிறு பண்டம் (சோற்றுருண்டை)" வைக்கிறாள். "புல்லை தருப்பைப் புல் என்றது பிழை. (ஆரிய திவசச் சடங்கில் மகன் தான் பிண்டம் வைப்பான் ; விதவை அல்ல!) புறம் 360: புல் மேல் அமர்ந்து (புலையன் ஏவலின் படி நடந்த சடங்கில்) விதவை கள்ளும் சிறிது சோறும் தருகிறாள் (பிணத்தை எரியூட்டு முன்னர்) புறம் 249: விதவை அழுது கொண்டே (உணவுப் பிண்டம் படைப்பதற்காக) சுளகு அளவு இடத்தை மாட்டுச் சாணியால் மெழுகுகிறாள் புறம் 363: (இறுதிச் சடங்கில் கடைசியாக) உப்பில்லாச் சோற்றுப் பிண்டத்தை "இழிபிறப்பினோன் " ஈதல். ஆரியப் பழக்கமாகப் பிணங்களை எரியூட்டும் முறை வந்த பின்னரும் ஏனைய சடங்குகள் எல்லாம் தமிழர் தொன்மைச் சடங்கு களாகவே தொடர்ந்தன - உரைகாரர்கள் தவறாக உரை கூறியிருப்பினும் என்க. ஒரு வியப்பான சடங்கு: 10. ஒளவையார் அதியமானைப் பாடியது புறம் 93. புற முதுகு இட்டு ஓடிய மன்னன் பின்னர் இயற்கையாய் இறந்தால் அவன் உடலை 'அறம் புரி கொள்கை நான் மறை முதல்வர்' (பிராமணர்) திறம் புரி பசும் புல் மேற்பரப்பி வாளால் பிளந்த பின்னரே புதைப்பது வழக்கம் என அப்பாடல் கூறுகிறது. இவ்வழக்கத்தை மணிமேகலை 23ம் காதையும் சுட்டுகிறது. அவ்வையார் பசும்புல் என்றதை சாத்தனார் "தருப்பை" எனக் கூறுகிறார். (ஆரியத் தாக்கம் மிகுந்த பிற்காலத்தில் தோன்றியது மணிமேகலை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.) வாளால் பிணத்தைப் பிளக்கும் இவ்வழக்கம் வடவருடையதா அன்றித் தமிழருடையதா என்று தெரியவில்லை . (தமிழருடையதாக இருந்திருப்பினும் பிராமணர் வரவுக்குப்பின்னர் அவர்களை இச்சடங்கு செய்ய அழைத்திருக்கலாம்) இதிகாச, புராண, தர்ம சூத்திரங்களை நுணுகிப் பார்த்து அவற்றுள் எவற்றிலாவது இது குறிப்பிடப்பட்டுள்ளதா எனக் காண்பது சாலும். வானியலும் சோதிடமும் 11. வேத வேள்விகள், இதிகாச புராணச் செய்திகள் எல் லாம் மிக மிகச் சிறு அளவே சங்க நூல்களில் கூறப்படு கின்றன. அவற்றோடு வானியல் அறிவும் சோதிட மூட நம்பிக்கை களும் கூட மெதுவாக தென்னிந்தியா விற்குப் பரவின. வேதங்கள் திங்கள், ஞாயிறு; அவை விண்ணில் செல்லும் பாதையை 27 உடுக்களோடு இணைத்துக் கூறுதல் ஆகியவை மட்டுமே வேதங்கள் கூறுவது. கோள்கள் தன்மையும் வான்வெளியில் அவற்றின் பாதைகளும் பற்றிய அறிவு வேதங்களிலோ வேதாங் கங்களிலோ இல்லை. அவை பற்றிய அறிவும் அவற்றோடு பிணைந்த சோதிடக் கருத்துக்களும் காந்தாரம், சிந்துப் பகுதிகளில் யவன (இந்தோ கிரேக்கர்) அரசுகள் அமைந்த காலத்தில் அவர்களிடம் இருந்து கி.மு. 200 - கிபி 400 கால கட்டத்தில் வட இந்தியாவில் பரவின. பின்னர் கி.பி 5ம் நூற்றாண்டில் தென் இந்தியாவிற்கும் பரவினதாகத் தோன்றுகிறது. புறம் 229ல் கூடலூர் கிழார் வானில் எரிகொள்ளி ஒன்று வீழ்ந்ததைக் கண்டதாகவும் அது யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறை சாவுக்கு முன் வந்ததாகவும் கூறுகிறார். இப்பாடலில் உடுக்களின் சமஸ்கிருதப் பெயர்களைச் சுட்ட தமிழ்ச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறார் . எ . கா : அனுராதா - முடப்பனை; புனர்வசு – கடைக்குளம். இவை போன்ற உடுக்களுக்குத் தமிழர் தாமாகவேயும் பெயர் கொடுத்திருக்கலாம். ஆனால் கார்த்தி கையை அழற்குட்டம் என்றது சமஸ்கிருத "அக்நி நட்சத்திரம்' என்பதன் மொழி பெயர்ப்பே (அதை அகம் 141 அறு மீன் என்கிறது. மலைபடுகடாம் 100வது வரி ஆல் (= தீ) என்கிறது.) உரோகிணியை அகம் 136 சகடம் என்கிறது. புறம் 60 செவ்வாயை ''செம்மீன்'' என்கிறது. மதியை அரவு நுங்குவதாக (விழுங்குவ தாக) புறம் 260, அகம் 114,313 கூறுகின்றன. ஆரியக் கருத்துக்கள் மிகச் சிலவே 12. அகநானூறு, புறநானூற்றுப் பாடல்களை விட குறுந் தொகை, நற்றிணைப் பாடல்களில் பெரும்பாலானவை பழை யவை. புறநானூற்றை விட அகநானூறு பெருமளவில் பழைய பாடல்கள் கொண்டுள்ளது. குறுந் தொகை, நற்றிணை அக நானூற்றில் ஆரியக் கருத்துக்கள் குறிப்பிடத் தக்கவையா ஒரு சில கூட இல்லாததற்கு அது ஒரு காரணம். மற்றொரு காரணம் அவை அகப் பொருள் பற்றியவையாகையால் தமிழ் மரபைப் பின்பற்ற வேண்டியதாயிற்று. இந்நான்கில் பிற்காலப் பாடல் களைப் பெரும் எண்ணிக்கையில் கொண்டுள்ளது புறநானூறே (கிபி 5ம் நூற்றாண்டு பாடல்கள் பல ; கிபி 6ம் நூ பாடல்கள் சில வாகும். மேலும் அகப்பாடல்கள் என்றும் இளமையாக இருக்கும். புறப்பாடல்களோவெனில் கரிகாலனுக்கு முன்னர் இருந்த வேந்தர்கள், குறுநில மன்னர்களைப் பற்றிய முற் காலத்தில் பாடப்பட்டவை மறக்கப்பட்டிருக்கலாம். எனவே புறத்தில் உள்ள 400 பாடல்களில் பல பிற்காலத்தவையாயும் ஆரியத் தாக்கத்தைக் காட்டுபவை யாகவும் உள்ளன. அகப் பாடல் தொகுப்புகளில் ஏராளமாக உள்ள செய்திகளில் ஆரியத் தாக்கம் மிக, மிகக் குறைவே. ஆரியக் கலப்பற்ற பழந்தமிழ்ப் பண்பாட்டைக் காட்டும் அச்செய்திகளைத் தொகுத்துக் கூற ஒரு பெரிய தனிப்புத்தகம் தேவைப்படும். பிராமணர்களுடைய ஆரியப் பண்பாட்டுக் கூறுகளை ஒரோவழி பின்பற்றுவதாக காட்டிக் கொண்டாலும் நாட்டு மக்களும், புலவர்களுள் பெரும் பாலோரும் ஆரியப் பண்பாட்டை எளிதில் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதே நிலைமை. மன்னர்களில் சிலர் தம் தனிப் பட்ட வாழ்க்கையில் தமிழர் மரபுகளையே பின்பற்றினும் ஆரியச் சடங்குக ளோடும் தம் பெயர்கள் இணைக்கப்படுவதில் மகிழ்ந் தனர். எனவே யாகம் செய்வதை ஆதரித்தனர்; வட இந்திய சத்திரிய அரசர் பரம்பரையினராகக் கருதப்பட விரும்பி னர். வேண்டப் பட்ட பிராமணர்கள் அம்மன்னர்களைச் சூரிய, சந்திர பரம்பரைகளோடும் ஆரிய கோத்திரங்களோடும் இணைத்துக் கதைகட்டி உதவினர். 13. தொகை நூல்களில் முதலாவது அச்சிடப்பட்டது புறநானூறு (1894). அது பழைய உரையுடன் அச்சிடப்பட்டது. (குறுந்தொகை, நற்றிணை, அகநானூற்றுக்குப் பழைய உரைகள் இல்லை .) புறநானூற்றின் முதல் பாடலான கடவுள் வாழ்த்தை சமஸ்கிருதப் பாடல்களைப் போன்ற நடையில் பிற்காலப் புலவர் பெருந்தேவனார் பாடினார். புறம் இரண் டாவது பாட்டு ஆரியக் கருத்துக்கள் நிறைந்தது. அதற்கடுத்து வரும் மேலும் சில பாடல்களும் பிற்காலத்தவை (ஆரியத் தாக்கம் உள்ளவை). புறநானூற்றில் முதலில் வரும் இப்பாடல்களைப் படிக்கும் பலரும் அப்படிப்பை இத்தோடு நிறுத்திக் கொண்டு (புறநானூற்றில் இவற்றின் பின்வரும் பாடல்களையோ, குறுந் தொகை, நற்றிணை அகநானூற்றுப் பாடல்களையோ, அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரத்தையோ படிக்காமல்) சமஸ் கிருதக் கவிதை தென்னாட்டிற் பரவிய பின்னர்தான் தமிழ்ச் செய்யுள்கள் எழுதப்பட்டன என்ற தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர்! இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, சமஸ் கிருதக் கவிதை பெற்றெடுத்ததே தமிழ்ப் பாடல் என்று நம்பி விடுகின்றனர். இயல் 25 சேரவேந்தர் பெருஞ்சேரல் ஆதன் வெண்ணிப் போரில் தோற்று நாணி உயிர் நீத்த இவன் கிபி 400க்கு முன்னர் (அதாவது கரிகாலன் தனது ஆட்சியைச் சோழநாட்டுக்கப்பாலும் விரிவாக்குவதற்கு முன்னர்) வாழ்ந் திருக்க வேண்டும். இவனைப்பற்றி வரும் பாடல்கள் ஒரு சிலவே. புறம் 65 மன்னன் ஒருவன் புறப்புண் நாணி வடக்கிருந்ததைக் குறிப்பிடுகிறது. கொளு அம்மன்னனை பெருஞ்சேரலாதன் எனச் சுட்டுகிறது. இச்செய்தி மாமூலரின் அகம் 55லும் வருகிறது. அதில் மன்னன் பெயர் சேரலாதன் என வருகிறது. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் 2. சேர மன்னர்களில் முதன் முதலில் இவனைப் பற்றியே சற்று விரிவான செய்திகள் தெரியவருகின்றன. மாமூலனார் அகம் 65-ல்; இவனை "நாடு கண்ணகற்றிய உதியஞ்சேரல் என்கிறார். இவன் போர்க்கள் வெற்றியில் இயவர் ஊதிய "ஆம்பலங்குழல் இசையை நற்றிணை 113 குறிக்கிறது. முறஞ்சி யூர் முடிநாதராயருடைய புறப்பாடல் "வான வரம்பனை நீயோ பெரும அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என்று இவனை விளிக்கிறது. 'களத்து ஒழிய' என்பது பல பொருளுக்கு இடம் தருகிறது: 1) ஒழிந்த காரணத்தால் (இதுவே பொருத்தமானது) 2) ஒழிந்த அதே வேளையில் (பழங்காலத்திலிருந்து தமிழ் உரைகாரர் இந்தப் பொருளையே கொண்டுள்ளனர்) ஆ ஒழிந்து சில பல காலம் கழித்து புனைகதைகள் நிறைந்த சிலப்பதிகாரம் 29 ஊசல்வரி கூறு வது: ஓரைவர் ஈரைம்பதின்மரொடு உடன்று எழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன் மலையன்" என்பதாகும். இதனையொட்டி புறநானூற்றுப் பழைய உரை காரர் ''அவர்கள் ஒழியும் துணையும், உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்" என்றார். கோதுமை உணவுத் துரியோதன - பாண்டியர் படைகளுக்கு இந்தியாவின் தென் கோடி மூலையில் இருந்த அரசன் அரிசியும் வெஞ்சனங்களும் கொண்டு சென்று தலைமைச் சமையற்காரன் (பட்லர் - இன் - சீப்) போல அதுவும் இருதரப்பினருக்கும் உணவளித்தான் எனக் கூறுவதன் புரைமையை உரைகாரர் உணர்ந்தாரிலர் ! பாரதக் கதை நாடகம் ஒன்றின் (பிற்காலக் கதகளி போன்றது) இறுதியில் சேரன் உணவளித்தான் என்பதே புறப்பாடலின் கருத்து ஆகும். அல்லது பாரதப்போரில் இறந்தோர் நினைவு (சிரார்த்த) உணவளிப்பாகவும் இருந்திருக்கலாம். அகம் 168 குழுமூர் என்னும் ஊரில் கொடைக்கடன் ஏற்ற ஊதியன் அட்டில் ஆரவார ஒலியைக் குறிக்கிறது. அகம் 233ல் இறந்த முதியர் நினைவாக உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த பொழுது கூளிப் பேய்கள் குழுமியிருந்ததைக் குறிக்கிறது. புறம் 2ன் முதல், ஆறு அடிகள் அதாவது, மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும், என்றாங்கு, ஐம்பெரும் பூதத்து இயற்கை என்பவை சாங்க்ய மெய்யியலின் ''ஐம்பெரும் பூதக் கருத்து தனக்கும் தெரியும் எனக் காட்டுவது போல (pedantic) கூறியவையாகும். (இத்தகைய ஆரியக்கருத்துக்கள் தமிழகத்தில் வலுப்பெற்ற) கிபி 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். [மொழி பெயர்த்தோன் குறிப்பு : புறம் 2ல் வரும் செய்தியைப் பற்றி அறிஞர் பலர் பிற்காலத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு : தமிழ்ப்பொழில் 36 (1960 - 1) : தேவநேயப் பாவாணர் : ''பாரதப் போரில் தான் சேரன் பெருஞ்சோறு வழங்கினான்; ம. சீ. வேங்கடசாமி : ''ஐவர் பாண்டியர். தனது (சேரர்) படை வீரர்களுக்கு உதியன் பெருஞ்சோறு அளித்தான்" Journal of Indian History XLI (1963) என் சுப்பிரமண்ய ம் : ''ஐவர்" என்பது ஐம்பெருவேளிரையும் 'ஈரைம்பதின்மர் " என்பது சதகர்ணியரையும் குறிக்கும். முதல் உலகத்தமிழ் மாநாடு (கோலாலம்பூர் : 1966) கட்டுரைத் தொகுப்பு நூல் : பி. அருணாசலம் : தொல் காப்பியம் வெட்சித்திணையின் துறை ஒன்று 'பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை" என்பதாகும். தன்னை பாண்டவ - கெளரவ வழியினன் ஆகக் காட்டிக் கொள்ள உதியஞ்சேரல் சிரார்த்தம் கொடுத்தான். அதே நூலில் மொ. அ. துரை அரங்கசாமி : இறந்துபட்ட பாண்டவ கெளரவர் பொருட்டு தர்ப்பணம் செய்து பெருஞ்சோறு கொடுத்தான் உதியஞ் சேரல். அவன் பாரதகாலத்தவன் அல்லன். சிலப்பதிகார வாசகமும், "ஓரைவர் ஈரைம் பதின்மரொடு உடன்றழியா உடன்றொழியப் பொருவில் (= ஒப்பற்ற பெருஞ்சோறு போற்றி றாது தான் அளித்த " என்று தான் இருந்திருக்க வேண்டும்.) பதிற்றுப் பத்து 3. பதிற்றுப்பத்தில் முதற் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்க வில்லை. கிடைத்துள்ள 2 - 9 ஒவ்வொன்றும் ஒரு சேர மன் னனைப் பற்றியது. பத்துக்களின் இறுதியில் உள்ள பதிகங் கள் பாடல்களுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எழுதப் பட்டவை. பழைய உரை உள்ள படிகளில் மட்டுமே பதிகங்கள் உள்ளன. பாடல்களில் கூறப்படாத செய்திகளை யும் தொன்மக் கதைகளையும் பதிகங்கள் கூறுகின்றன. பாடல்களில் சிறிதள வாவது ஆதாரம் இருந்தாலொழிய பதிகக் கூற்றுக்களை உண்மையெனக் கருதவியலாது. இவ்வெச்சரிக்கையை மு. இராகவையங்கார் தனது "சேரன் செங்குட்டுவன்" நூலில் கடைப்பிடிக்கவில்லை. பதிற்றுப்பத்தின் பத்துகளை எழுதியவர் கள் கிபி 5-ம் நூற்றாண்டுப் பிராமணர்கள். எனவே சங்க நூல்கள் ஏனையவற்றில் காணப்படாத ஆரியக் கருத்துகளும் ஆகம முறைகளும் இப்பத்துகளில் வருகின்றன: பதிற் 21 : ''சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்றைந்து' : அரசர் துணையாகக் கொள்ளவேண்டிய இவ் வைந்தும் முறையே இலக்கணம், அர்த்த சாத்திரம், சோதிடம், ஸ்ருதி, தூய நெஞ்சம் என்ற வடநூற் கருத்தை ஒட்டியன. பதிற் 14 : கல்ப காலத் தொடக்கத்தில் ஞாயிறு, திங்கள், கோள்கள், கனையழல் ஆகியவை வானில் ஒரே இடத்தில் இருக்கும் என்னும் தொன்மக் கருத்து வருகிறது. பதிற் 24 : அந்தணர் அறுதொழிலைக் குறிக்கிறது பதிற் 15: 'காடே கடவுள் மேன" = "பெருங்காடான இடங்கள் எல்லாம் கோயில்கள் ஆயின " மேயின -> மேன் பதிற் 31 : விஷ்ணு ஆகம முறைப்படி வழிபடப்பட்டதைக் குறிக்கிறது. 4. இவ்வாறு ஆரியக்கருத்துகள் பழக்கங்கள் பதிற்றுப் பத்தில் குறிக்கப்பட்டிருந்தும் பண்டைய தமிழ் மக்கள் ஒழுக லாறுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்ததையும் காணலாம்: பதிற் 45 , 13, 52, 52, 77. பிணங்கள் நிறைந்த போர்க்களத்தில் மன்னன் துணைங்கைக் கூத்து ஆடுதல் பதிற் 73 : "குரவை அயரும் புகார்" பதிற் 56 : போர்க்களத்தில் ஆடும் போர்க்கூத்து பதிற் 44 : இறந்த மன்னரைக் கவித்த தாழிகள் விளங்கிய இடுகாடு பதிற் 30 : முரசுறை கடவுளை மந்திரத்துடன் வழிபட் டதைக் கூறுகிறது (இம்மந்திரம் ஆரியப்பற்றாளரான மன்னருக் காக போலியாக உருவாக்கப் பட்டதே! பதிற் 66: "கடவுள் வாகை வெற்றிமடந்தையாகிய கடவுள் வாகை மரத்தில் வாழ்வதாகச் சுட்டுகிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரல் ஆதன் 5. குமட்டூர்க் கண்ணனார் பதிற்றுப்பத்து 11 இவன் பகை வருடைய கடம்ப மரத்தை அறுத்து அதிலிருந்து முரசு செய் ததைக் கூறுகிறது. (இதனை அகம் 347ம் கூறுகிறது. அதே பதிற்றுப்பற்று 11ம் பாடல் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியொடு ஆயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே” என்றும் கூறுகிறது. (இமயமலையை "ஆரியர் மலை" என அகம் 398ம் குறித்தது.) ஆரியரை இவன் வென்றான் என்று மட்டும் பதிற் 11 கூறுவதை மிகைப்படுத்தி அகம் 398 ல் பரணர் ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்கு விற்பொறித்து வெஞ்சினவேந்தரைப் பிணித்தோன் எனப்பாடியுள்ளார் (சேரலாதன் இமயத்தில் வில் பொறித்த தாக அகம் 127ல் மாமூலனாரும் பாடுகிறார்). சேரநாட்டை அடுத்து வடக்கில் இருந்த கொண்கானத்துக் கடம்பர் நாட்டை இவன் வென்றதையே "இமயம் வரை நாடு வென்றான்; இமயத்தில் வில்லைப் பொறித்தான். என்று புலவர் மிகைப் படுத்திப் பாடியுள்ளனர். கி.பி 5ம் நூற்றாண்டில் ஆரியக்கருத்துகள் தமிழகத்தில் பரவிய பின்னர் 'ஹிமாவத் சேதுபர்யந்தம்' என்னும் சம்ஸ்கிருதச் சொற்றொடரைக் கண்ட தமிழ்ப்புலவர் தமிழ் மன்னரும் இமயம் வரை நாடுகளை வென்றதாகக் கதை கட்டிப் பாடலாயினர். (தமிழ்நாட்டை ஒட்டி வடபக்கம் சிற்சில பகுதிகளைக் கைப்பற்றினாலும் "இமயம் வரை நாடுகளை வென்றதாக புகழ்ந்தனர். அத்துடன் தம் இலச்சினையை இமயத்தில் பொறித்ததாகவும் கூறலாயினர்! முதலில் இச் சாதனை கரிகால் சோழன் மேல் ஏற்றப்பட்டது. பின்னர் நெடுஞ் சேரலுக்கும், பாண்டிய மன்னன் ஒருவனுக்கும் (சிலம்பு :17) இச்சாதனை ஏற்றப்பட்டது) நெடுஞ்சேரலுக்குப் புலவர் சூட்டிய புகழ் மாலை என்னும் பனிக்கட்டி பதிற்றுப்பத்தின் இரண் டாம் பத்து பதிகத்தில் பின்வருமாறு மேலும் ஊதிப் போய் விடுகிறது! ''பேரிசை மரபின் ஆரியர் வணக்கி நயன் இல்வன் சொல்வளர்ப் பிணித்து நெய்தலைப் பெய்து கை பிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு " (புறம், 62, 63,368 ஆகியவற்றின் கொளுக்கள் குறிப்பிடும் ''குடக்கோ " நெடுஞ்சேரலாதன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் அல்லன்; வேறு மன்னன் எனத் தோன்றுகிறது. தமிழ் அரசர்கள் "ஆரியருடன்" போர் (இடைப்பிறவரல்) 6. தமிழ் அரசர்கள் ''ஆரியர்களுடன் செய்த போரைப் பற்றிய பிற்காலப் பாடல்களில் வரும் வேறு சில குறிப்புகள் வருமாறு: நற் 170: முள்ளுர்ப்போரில் மலையனின் (காரி) வேற் படைக்குத் தோற்று ஆரியர் ஓடினர். (காஞ்சிப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர் காஞ்சிக்குத் தெற்கே தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயன்ற பல்லவரையே இங்கு "ஆரியர்' என அழைத்தார் புலவர்) அகம் 336: தஞ்சை அருகே வல்லத்தில் புறமிளைக் காட்டில் ஆரியர் படை சோழ வில்வீரரிடம் தோற்று ஓடியது. இங்கு குறித்த ''ஆரியரும்" பல்லவரேயாதல் வேண்டும். புறம் 183: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது: ''உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ................. வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட்டுமே தமிழகத்தின் அரசர், மக்கள் அனைவர் மனத்திலும் ஆரியப் பண்பாடு குடிபுகுந்த பின்னர் இவ்வரசன் இருந்திருக்க வேண் டும். கீழ்ப்பால் ஒருவனாகிய தமிழ்ப்புலவனிடம் மேற்பால் ஒருவனாகிய பிராமணன் தமிழ் இலக்கியம் கற்றதை இப்பாடல் சுட்டுகிறது எனக் கொள்ளலாம். புறம் 52: பாண்டியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ''வடபுல மன்னர் வாட் அடல் குறித்து இன்னாவெம்போர்" செய்ததாக மருதன் இளநாகனார் பாடுகிறார். ஆரியக் கருத்து கள் நிறைந்த மருதக்கலி பாடியவர் இப்புலவர் ஆகையால் இப்பாடல் மிகப்பிற்காலத்தது. எந்த ''வட புல மன்னர் வாட்” எந்தப் போர்களில் இப்பாண்டியன் வென்றான் எனக்கூறப்பட வில்லை . இது வெற்றுப் புகழுரையேயாகும். இவற்றையெல்லாம் விளக்கியதற்குக் காரணம் இத்தகைய போலி ஆதாரங்களின் பேரில் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் தமது "தென்னிந்தி யாவின் தொடக்ககால வரலாறு (1918) நூல் மெளரியர் காலத்திலும், ஆந்திரர் காலத்திலும் தொடர்ச்சி யாக ஆரியப் படையெடுப்புக்கள் பல நிகழ்ந்ததாக கூறுவது தான்! (ஆரியர் தென்னிந்தியாவிற்கு அவ்வப்பொழுது இடம் பெயர்ந்து குடியேறியது வேறு; படையெடுப்பு வேறு) கடல் ஓட்டிய வேல்கெழு குட்டுவன் 7. பதிற்றுப்பத்து 5ம் பத்தின் பதிகம் இவன் "குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்" என்று கூறுகிறது. ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மனைவியாகி மகன் ஈன்று தருதல் இயலாது ஆகையால், இப்பதிகம் உள்ள சுவடியின் வாசகம் அபத்தமாக சிதைக்கப் பட்டுள்ளது என்பது வெளிப்படை. எம். சீனிவாச ஐயங்கார் தமது தமிழ் ஆய்வுகள் (1914) நூலில் துணிந்து மணக்கிள்ளியை நெடுஞ்சேர லாதனின் சகோதரி கணவனாக ஆக்கி, அக்கால கட்டத்திலேயே மருமக்கள் தாயத்தைச் சேர நாட்டில் புகுத்தி விடுகிறார்! அற்றைச் சேரமன்னர் முழுமையான தமிழர், கிபி 10ம் நூற்றாண்டுக்குப் பிந்திய கேரளக் குறுநில மன்னர்களிடம் தான் மருமக்கள் தாயம் புகுத்தப்பட்டது. 8. மன்னனைப் புகழும் புலவர் அவன் தந்தையும் பிற முன்னோரும் செய்த சாதனைகளையும் அவன் மேல் ஏற்றுவது வழக்கம். இக்குட்டுவன் வேல் எறிந்து “படுகடல் ஓட்டியதாக" பதிற்றுப்பத்து 14, 45, 46, 48 ஆகியவை கூறுகின்றன. அகம் 212ல் பரணர் இக்குட்டுவனுடைய "பௌவம் நீங்க ஓட்டிய நீர் மாண் எஃகம்" பற்றிக் கூறுகிறார். நெடுஞ்சேரலாதன் காலத்தில் ஆரியத்தாக்கம் சேர நாட்டில் பரவியதன் காரணமாக, பரசு ராமன் கதையில் வருவது போல வேலை வீசிக் கடலைப் பின் வாங்கச் செய்ததாக ஒரு கதை கட்டியிருக்கக்கூடும். (புறம் 9ல் ''முந்நீர் விழவின் நெடியோன்" என்று மட்டும் சுட்டப் பட்ட பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியும் கடல் மீது வேல் எறிந்ததாக சிலம்பு 11ம் காதையும் பிற்கால நூல்களும் கதை கட்டி அவனை "ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியன்' ஆக்கி யதை மேலே 16ம் இயலில் கண்டோம்) குட்டுவனும் மோகூரும் 9. குட்டுவனுடைய நண்பன் அறுகை என்பானை அவன் நாட்டை விட்டு ஓட்டிய மோகூர் மன்னனை (அவனுக்குத் துணையாக வந்த வேந்தர் வேளிரொடு சேர்த்து) குட்டுவன் வென்றதை பதிற் 44, 49, பாராட்டுகின்றன. மோகூர் மன்னன் காவல் மரம் வேம்பு ஆகும். பரணரின் புறம் 369 ம் குட்டுவன் வீரம் பற்றியதே, குட்டுவன் பற்றிய சில கதைகள் 10. பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்தின் பதிகம் அப்பத்து கூறாத பல செய்திகளைக் கூறி குட்டுவனைப் புகழ்கிறது. அச்செய்திகள் - சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கற்கோள் வேண்டி வட நாடு சென்ற வெற்றி, சிலம்பு கூறும் வியலூர், கொடுகூர் வெற்றி களும், சோழர் குடியினர் ஒன்பதின்மரை வென்றதும் ஆகும். இவன் மோகூர் மன்னன் பழையனை வென்ற செய்திகள் மீது இப்பதிகம் மேலும் கதை கட்டி ''பழையன் காவல் மரமாகிய வேம்பை வெட்டிய குட்டுவன், பழையன் பெண்டிர் தலை மயிரை வெட்டிக் கயிறாக்கி அக்கயிறு கொண்டு அம்மரத்தைக் கட்டி யானையால் இழுத்துச் சென்றான்' என்பதாகும். பழைய செய்திகளுக்கு காது மூக்கு வைத்துப்பிற்காலத்தார் கட்டிய இத்தகைய பதிகச் செய்திகளை "பழம் செய்தி எனப் பயன் படுத்தும் இந்நாள் ஆராய்ச்சியாளரும் உளர்! மூலப்பாடலே பெண்கள் தலை மயிர்க்கயிறு பற்றிக் கூறியிருந்தாலாவது கவிக்கூற்று என்ற அளவில் விட்டு விடலாம். பல நூற்றாண்டு கழித்துப் பதிகம் எழுதியவர் இப்படிக் கதை விடுவது அவரது வரம்பிகந்த கற்பனையையே காட்டும். தமிழகத்தின் மீது மெளரியர் படையெடுப்பு (இடைப்பிறவரல்) 11. தமது "தென்னிந்தியாவின் தொடக்க கால வர லாறு" நூலில் கிருஷ்ணசாமி ஐயங்கார் சந்திர குப்தன் காலத் திலோ பிந்துசாரன் காலத்திலோ மெளரியர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தனர் என்றதும் கூற்றுக்கு ஆதாரமாகக் கொள் வன பின்வருவனவாகும். "கோசர் (தொன் மூதாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின் பகை தலைவந்த மாகெழுதானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள்ளருவிய அறைவாய்" - அகம் 25 (பொதியில் என்பது பொது மன்றம். இதனைப் பொதியில் மலை எனக் கொண்ட கிருஷ்ணசாமி மெளரியர் படை மதுரை, பொதியமலைவரைச் சென்றதாகக் கொள்கிறார்! கோசர் துளு நாட்டவர் (அகம் 15); குறுந்தொகை 73ம் பாடல் நன்னன் (அவன் நாடு கொண்கானம் : நற் 391) காவல் மரமாகிய மாவை வெட்டியதைக் கூறுகிறது: 'நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய போகிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டும்." "நறுமாகொன்று" என்பதை ''பட்டத்து யானையைக் கொன்று '' எனப் பிறழப் பொருள் கொண்டு கிருஷ்ணசாமி "நன்னன் நாடாகிய கொண்கானம் அல்லது துளுவில், கோசர் புகுந்து அவனை வென்றனர்; அவன் பட்டத்து யானையையும் இழந் தான்'' என்கிறார்! "விண்பொருநெடுவரை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை" - அகம் 69 (ii) முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென் திசை முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனிஇரும் குன்றத்து ஒண்கதிர் உருளிய குறைத்த அறை - அகம் 281 (மாமூலனார் (தமிழகத்துக்கு வடக்கிலிருந்தவர் அனைவரையும் "வடுகர்" என்பது வழக்கு.) இங்கு வடுகர் என்பது கோசரைக் குறித்தது. மாமூலனார் கரிகாலன் காலத்தவர். கிபி. முதல் நூற்றாண்டினர் என்பர் கிருஷ்ணசாமி. இது சரியன்று. கிபி 5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பழந்தமிழ் வேந்தர் மரபுகள் அழிந்த பின்னர்த் தோன் றிய பல குறுநில மன்னரின் சம காலத்தவர் என்றே அவர் பாடல்களிலிருந்து தோன்றுகிறது. iv) கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாய் - புறம் 175 12. இப்பாடல்களில் எல்லாம் வரும் மோரியர் "மெளரியப்" பேரரசர் அல்லர். கோசர் துளுநாட்டுக்கு வடக்கில் பிற்காலத் தில் இருந்தவரும் (ஒருவேளை பாடலிபுத்திர மெளரியர் கிளை ஒன்றில் வந்தவரும் ஆன) மெளரியப் பெயர் கொண்ட சிற் றரசரே . அவர்கள் சாளுக்ய கீர்த்திவர்மன் (கிபி 566 - 597) உடைய பகைவர் (பம்பாய் கெசட்டியர் Iii பக் 287). இந்தப் பிற்கால மெளரியரே கோசருடன் இணைந்து தமிழகத்துக்குள் படையெடுத்திருக்க வேண்டும் (துளுநாட்டிருந்த கோசர் அடிக்கடி கொங்கு நாட்டின் மீதும் படையெடுத்தனர்; அங்கு பின்னர் கோயம்புத்தூரை நிறுவினர். (கோசர்புத்தூர் - கோயம் புத்தூர்) மதுரைக்காஞ்சி 508 - 9: ''பழையன் மோகூர் அவையகம் விளங்க" என வரும் இடத்தில் ''நாற்கோசர் மொழி தோன்றி யன்ன = நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழி யாலே விளங்கினாற் போன்ற " என்ற நச்சினார்க்கினியர் உரை பொருத்தமல்ல. "நான்மொழி" = நான்கு மொழிகள் என்றே கொள்ளலாம்; (துளு, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகி யவையே கோசரின் நான்கு மொழிகள் ) சேரர் குடியினர் வேறு சிலர் 13. பதிற்றுப்பத்தும் புறநானூறும் சேரர்குடியைச் சார்ந்த , ஆனால் அரசர் அல்லாத பலரைக் குறிப்பிடுகின்றன. அவர்கள் பொறையன், மலையன், வானவன், இமயவரம்பன், குட்டுவன், கோதை, வில்லன் போன்ற பட்டங்களுடன் விளங்கினர். அவர்கள் பற்றி ஈண்டுக் குறிப்பிடத் தேவையில்லை. [மூலத்தின் பக்கங்கள் 487-527இன் சுருக்கம்) இயல் 26 பண்டைய வேந்தர் மரபுகள் அழிவு பாண்டிய, சோழமன்னர்களில் கடைசிவேந்தர் 1. கடைச்சங்கக் கடைசி மன்னன் உக்கிரப் பெருவழுதி என் கிறது இறையனார் அகப்பொருள். பழமைவாய்ந்த பாண்டிய மரபுக்கு ஏதோ கேடு நேரிட்டது என இதிலிருந்து உணரலாம். புறம் 367ன் கொளுவின் படி உக்கிரப் பெருவழுதியின் நண்பன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. அக்கிள்ளியோடு சோழர் மரபும் முடிந்தது போலும். இவர்கள் காலத்துக்குப் பின்னர் வந்த புலவர்கள், சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் போன்றவர் கள், பாண்டிய, சோழவேந்தர்களைப் பற்றி பாடவில்லை; பின்னர் வந்த குறுநிலத் தலைவர்களையே பாடுகின்றனர். கலித்தொகை ஆசிரியர்கள் போன்றோர் சோழன், பாண்டியன் எனப் பொதுவாக குறிப்பிடுகின்றனரேயன்றி எந்த மன்னனின் பெயரையும் சுட்டுவதில்லை. எனவே இவ்விரு வேந்தர் கால முடிவில் பழந்தமிழ் வேந்தர் ஆட்சியை அழித்த பெருங்கேடு ஒன்று நிகழ்ந்தது என நாம் கருதலாம். சமண, புத்த சமயங்கள் பரவல் : 2. நெடுஞ்செழியன் காலத்தில் இயல் 23 காண்க) மதுரைப் புறநகரில் ஆரிய சமயங்கள், குறிப்பாக புத்தமும் சமணமும் வழங்கின என மதுரைக் காஞ்சி கூறுகிறது. அரசன் ஆதரித் தவை பண்டைத்தமிழர் வழிபாடுகளே. கிபி 470 ல் மதுரையில் சமண சங்கம் ஒன்று நிறுவப்பட்டதை மேலே இயல் 16ல் கண்டோம். இது தான் தமிழகத்தில் அரசன் ஆதரவு பெற்ற முதல் ஆரியச் சமய நிறுவனம் எனக் கருதலாம். 3. அதே காலகட்டத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் புத்த சமயம் அத்தகைய உயர்நிலை அடைந்ததையும் குறிப்பிடலாம். கி.பி 475 - 500 அளவில் புத்தகோசரைவிட சற்று மூத்த புத்த தத்தர் சோழநாட்டில் புத்த சமய நூல்களை எழுதியதாக அபிதம்மாவதாரம் (சுலோ 1409 - 1413) கூறுகிறது. அந்நூலின் கொளு: "உரகபுர உறையூர் வாழ்நரான பாதாந்த புத்ததத்த ஆசிரியர் எழுதியது இந்த அபிதம்மாவதாரம்' என்பதாகும். தமது வினயவிநிச்சய இறுதியில் ''சோழநாட்டு பூதமங்கலத்தில் களப (Kalabha) குல அச்சுதவிக்கந்தன் காலத்தில் தொடங்கி எழுதி முடிக்கப்பட்டது" என்று கூறுகிறார். முறையே 1915, 1928ல் சிங்களவர் ஏ.பி புத்ததத்தர் இவ்விரு நூல்களையும் அச்சிட் டுள்ளார். அவர் கள் பகுல என்பதை 'களம்பகுல ' என அச்சிட்டுள்ளது தவறு எனத் தோன்றுகிறது. புத்ததத்தர் கூற்றுகளிலிருந்து தெரியவருபவை 4. புத்ததத்தர் தம் இரு நூல்களிலும் கூறுவதிலிருந்து கிபி 475 - 500 காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் வளமான நகரமாக இருந்ததை அறிகிறோம். அந்நகரைக் கடல் கொண்டதாகவும் மக்கள் அங்கிருந்து தப்பிப் பிழைத்த தாகவும் மணிமேகலை (25ம் காதை) கூறுவது ஒன்றால் கற்பனையாக இருக்க வேண்டும்; அன்றால் அது கிபி 500க்குப் பின்னர் நடந்திருக்க வேண்டும். கரிகாலன் காலத்துக்குப்பின்னர் புத்தமதம் விரைந்து பரவி யிருந்தால் தான் கண் ஹதாசன் கட்டிய மாபெரும் புத்த மடாலயம் புத்ததத்தன் காலத்தில் உருவாகியிருக்கும். புத்த மடாலயங்கள் பூதமங்கலம் (திருச்சி அருகே பூதலூர் என்கிறார் விஜயநகரம் கே. ஆர். சுப்பிரமணிய ஐயர்) போன்ற இடங்களில் அமைந்திருந்தன. தஞ்சை - நாமக்கல் சாலையில் பூதலூர் அருகே புத்த சமணச் சின்னங்கள் பல அகழ்வாய்வில் கிடைத் துள்ளன. சோழரை வென்ற அச்சுதவிக்கந்தன் ஆழ்ந்த புத்த சமயப் பற்றுள்ளனவாக இருந்திருக்க வேண்டும். 5. தமிழ் இலக்கியத்தில் களப்பாளர் (களப்பர்) என் னும் குல அரசரைப் பற்றிக் குறிப்பு உள்ளது. அக்குடியினர் அண்மைக்காலம் வரை இருந்தனர். கி.பி. 13ம் நூற்றாண்டு சிவ ஞான போத ஆசிரியர் மெய்கண்டார் தந்தை அச்சுத் களப்பாளர். புத்ததத்தர் குறித்த அச்சுத களபனும் இத்தமிழ்க் குடியைச் சார்ந்தவனாகவே இருந்திருக்க வேண்டும். தமிழ் நாவலர் சரிதையில் அச்சுத களப்பாளனால் சிறையிடப்பட்ட சோழ, பாண்டிய மன்னர் தில்லையில் பாடியதாக நான்கு பாடல்கள் உள்ளன. (சேரன், சோழன், பாண்டியன் 2) ஆரியப் பண்பாட்டைக் கடைப்பிடித்த பின் சோழமன்னர் தில்லையில் முடிசூட்டினர். இப்பழக்கத்தை அச்சுதன் தொடங்கியிருக்கலாம். 6. புத்த தத்தரின் அச்சுத களபன் இந்த அச்சுத களப் பாளன் ஆகத்தான் இருக்கவேண்டும். கிபி 6ம் நூற்றாண்டு இறுதியில் பாண்டியர் மீண்டும் அரசெய்தினர். அந் நூற் றாண்டின் இடைப்பகுதியில் பல்லவர் காஞ்சியை மீண்டும் கைப் பற்றினர். ஆக தமிழகம் முழுவதற்கும் தலைமையேற்ற ஒரு களப்பாள மன்னன் ஆண்டிருக்க வேண்டும். அவன் சைவ, புத்த, சமண சமயங்களை ஆதரித்ததிலும், தில்லையில் முடி சூட்டிக் கொண்டதிலும், சோழநாட்டில் புத்த விகாரைகளையும் மதுரையில் திராவிட சைன சங்கத்தையும் ஆதரித்ததிலும் முரண்பாடு ஒன்றும் இல்லை. தென்னிந்தி யாவில் இந்த ஆரிய சமயங்கள் பரவிய தொடக்க நாட்களில் அவற்றிடையே பகை இல்லை. ஜினர், சிவன், விஷ்ணு, திரி மூர்த்தி ஆகியோருக்கு மகேந்திரவர்ம பல்லவன் கற்றளி கட்டினான். கி.பி. 600க்குப் பின்னர்த்தான் வைணவர் சிவனையும், சைவர்கள் திருமாலையும் பழிக்கத் தொடங்கினர். எனவே அச்சுத களப்பாளனும் அச்சுத களபனும் ஒருவனே எனலாம். 7. வேள்விக்குடி செப்பேடு '' அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி, அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரசன்" கைக் கொண்டதாகக் கூறுகிறது (இயல் 23). பாளி 'களபம்' சம்ஸ்கிரு தத்தில் 'களப்ர' ஆகும். எனவே வேள்விக் குடிச் செப்பேட்டு களப்ர அரசன், அச்சுத களபன், அச்சுத களப்பாளன் மூவரும் ஒருவரே. தமிழ் நாடு முழுவதும் அச்சுத களபன் அதிகாரம் செலுத்தினும் பழைய மூவேந்தர் மரபினர் ஒழிக்கப்படவில்லை . கிபி 600க்குப் பின்னர் கடுங்கோன் தலைமையில் பாண்டியர் அரசுரிமை பெற்று உயர்ந்தனர். அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் முதலில் பல்லவர்களுக்கும், பின்னர் சாளுக்கியருக்கும் பகைவராக சோழ, சேர, பாண்டிய, களப்பிரர் ஆகிய நால் மரபு மன்னர்களும் குறிப்பிடப்படுகின்றனர். 8. தமிழ் மூவேந்தரும் அச்சுத களப்பாளனைத் தமிழ்ப் பாவால் பாராட்டினர் என்பதிலிருந்து களப்பாளர் தமிழ்க் குடியினரே என்று உணரலாம். களப்பாளர் ஆரியச்சடங்குகளை ஆதரித்து முற்றிலும் ஆரியமயமாயினர். அச்சுதனிடம் பண்டை மூவேந்தர்களும் தோற்றதனால் பல நூற்றாண்டு களாகத் தமிழக எல்லைக்கு வடக்கே குடிகொண்டு தமிழகத்தை முற்றுகை யிட்டிருந்த ஆரியச்சடங்குகள் தமிழரிடையே விரைவில் பரவ லாயின. களப்பிரர் கள்ளரா? 9. சங்க இலக்கியத்தில் கள்வர் எனப்பட்டவர் இன்றைய கள்ளரே. ஒற்று இடாமல் எழுதும் அன்றைய வழக்கினால் அன்று "களவர் " என்று எழுதினால் கள்வர் என்றும் கள்வர் என்றும் படிக்கலாம். கள்வர் களபர், களபர், களப்பிரர் Kalabha (சமஸ்கிருதத்தில்) என மாறியது என்பர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார். பாளி நூலில் களப் (Kalabha) என்னும் வடிவம் வருவதைக் கண்டோம். மேலும் கள்வர் அக்காலத்தில் சிறு தலைவர்களாகத் தான் இருந்தனர். எனவே கிருஷ்ணசாமி உன்னிப்பு ஆதாரமற்றது. களப்பாளர் பற்றிய குறிப்பு 10. தமிழ் இலக்கியத்தில் வரும் களப்பாளர் வேறு சிலர் வருமாறு: களப்பாளராசன் நெற்குன்றம் கிழான் (செந்தமிழ்: 12 பக் 268 ); 63 நாயன்மார்களுள் ஒருவனாக நம்பியாண்டார் நம்பி. கிபி. 10ம் நூற்றாண்டுத் திருத்தொண்டர் திருவந்தாதி யில் குறிக்கும் "களப்பாளன் கூற்றுவ நாயனார்" இக்கூற்றுவ நாயனாரை 11ம் நூற்றாண்டுச் சேக்கிழார் " களந்தை முதல்வ னார்' என்றும் "களந்தை வேந்தர் " என்றும் பெரியபுராணத்தில் அழைக்கிறார். உமாபதிசிவத்தின் திருத்தொண்டர் புராண சாரமும் களந்தையைக் குறிப்பிடுகிறது. எனவே தஞ்சை மாவட் டத்திலுள்ள களந்தை என்னும் சிவத்தலத்தைச் சார்ந்தவர்களே களப்பாளர் எனலாம். அந்தணர் (= பிராமணர்) என்னும் சொல் ''அந்தணாளர்'' ஆனது போல் 'களப்பர்' என்பது 'களப்பாளர் ஆனது. அதுவும் பாளி Kalabha, தென்னாட்டு சமஸ்கிருத Kalabhra இவையும் ஒன்றே . இயல் 27 பத்துப்பாட்டில் சேர்ந்த பிற்காலப் பாட்டுகள் ஆறு 1. பத்துப்பாட்டில் நான்கு பற்றி ஏற்கெனவே பார்த்துள் ளோம் (பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக்காஞ்சி, பட்டினப் பாலை). ஏனைய ஆறும் பிற் காலத்தவை (கிபி6ம் நூ). அவற்றில் வரும் ஆரியக் கருத்துக்கள் போகிற போக்கில் சொல்லியவை அல்ல; தமிழர் வாழ்வியலில் ஊடுருவித் தமிழ் மரபுகளை மாற்றியவையாக உள்ளன. பாடப் பட்டோரும் பெருவேந்தர் அல்ல (குறுநில மன்னர், முருகன் போன்றோரே). அவையும் புலவரின் இயற்கைக் கற்பனையில் தோன்றியவையாக இல்லாமல் தொல்காப்பிய பொரு ளதிகாரத்திற்கேற்பச் செயற்கையாக எழுதப் பட்டவை போல் உள்ளன. (ஹோமர் காவியங்களையும் கிரேக்க நாடகங் களையும் பார்த்து அரிஸ்தாதில் காவிய நாடக இலக்கணம் எழுதினார். ஆனால் கிபி 17ம் நூற்றாண்டு பிரெஞ்சு நாடகங்கள் அரிதாஸ்தாதில் இலக்கணத்தைப் பார்த்து எழுதப் பட்டன! அது போலத் தான் இந்த ஆறு பாடல்களும் பழைய தமிழ்க் கவிதை ஒளி இவற்றிலும் இருக்கிறது; எனினும் பொருளதிகார விதிகளுக்கு முழுமையாக அடங்கி நடக்கிறது. நெடுநல் வாடை (நக்கீரர் பாடியது) 2. இதனை நக்கீரர், நெடுஞ்செழியன் மேற்பாடியதாக தடாலடியாக நச்சினார்கினியார் கூறினும் பாடலில் வேந்தன் பெயர் குறிப்பிடப்படவே யில்லை . வரி 175ல் நாற்பது என்னும் எண் "தசநான்கு" என அரைச் சம்ஸ்ருதத்தில் குறிப்பிடப் படுகிறது. மேஷம் ஆடு என்றும் ரோகிணி "உரோகிணி" என்றும் வருகின்றன. ஆரியர் சில்ப சாத்திரக்குறிப்புகள் உள் ளன. கர்ப்ப கிரஹத்தைத் தமிழாக்கி "கருவொடு பெயரிய இல்'' என்கிறார். போர் முனையிலிருந்து அரசன் விரைந்து வருமாறு அரசி வேண்டுவது தமிழ்த் தெய்வமாகிய கொற்றவையையே எனினும் இப்பாட்டில் ஆழ்ந்த ஆரியப் பண்பாட்டுத் தாக்கங்கள் பல உள்ளன. முல்லைப்பாட்டு (நப்பூதனார் பாடியது ; தலைவன் பெயர் இல்லை) 3. இப்பாட்டில் உள்ள ஆரியப் பண்பாட்டுத் தாக்கங்கள் திருமாலின் வாமன அவதாரம் ; படிவப் பார்ப்பான் முக்கோல், முதலியவையாம். இயற்கையைக் கவினுறக் காட்டும் பா நலம் மிக்கது இப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு (கபிலர் பாடியது) 4. இதுகாறும் பார்த்த பாட்டுக்கள் எல்லாம் ஒரு தலை வனைப் புகழவென்று பாடப்பட்டன. (அவ்வாறு பாடும் பொழுது பொருளிலக்கணக் கூறுகள் பொருந்தி வந்தனர். ஆனால் இப் பாடலோ தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை விளக்கவென்றே பாடியது. ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் (அகப்பொருள்) அறிவுறுத்தப் பாடியது என்று நச்சினார்க்கினியார் கூறுவது இக்கருத்திலேதான். இது கி.பி. 6ம் நூற்றாண்டு இறுதியைச் சார்ந்திருக்கலாம். ஆரியக் கருத்துக்கள் பல உள்ளன; "ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என " (24) "அந்தி அந்தணர் அயர" (அந்திச்சடங்கு) 235 இந்நூலில் வரும் நூறு மலர்களின் பட்டியல் கவிநயமற்றது. ஆனால் அருமையான இயற்கை வருணனைப் பகுதிகளும் உள்ளன. மலைபடுகடாம் (நன்னனைப் பெருங்கௌசிகனார் பாடியது) 5. இது பத்துப்பாட்டுத் தொகையில் அடங்கிய பத்திலும் முதன்மையான நயம் வாய்ந்தது. இப்பாடலில் வரும் குறிஞ்சி வருணனைச் சிறப்பை மிஞ்சுதல் அரிது. மறக்க முடியாத உவமை களும் பல உள்ளன: ''கோளி ஆலத்துக் கூடியத்து (பல இசைக்கருவிகளின் கூட்டு ஒலி, orchestra , choir) அன்ன குரல் புணர்புள் " துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் (மலைப்பாம்பு) சிறுபாணாற்றுப்படை (நத்தத்தனார் நல்லியக் கோடனைப் பாடியது) 6. நல்லியக்கோடன் மூவேந்தருக்கும் வள்ளல்கள் எழு வருக்கும் பின்னர் வள்ளண்மையிற் சிறந்தவன் எனப் புலவர் அவனைப் புகழ்கிறார். திருமுருகாற்றுப்படை 7. தமிழ்ப்பண்பாடு முற்றாக ஆரியத்தைப் பின்பற்றிய காலம் சார்ந்தது இப்பாடல். தமிழர் தொன்று தொட்டு முருகனை வழிபட்டமுறை நலிந்து "ஆரிய" சண்முக வழிபாட்டு முறையோடு கலந்து விடுகிறது. திருச்சீரலைவாய் பற்றிய பகுதி யில் வரும் சண்முகனின் ஆறு முகங்களும் பன்னிரு கைகளும் பற்றிய வருணனை கிபி. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்திய எந்தத் தமிழ் இலக்கியத்திலும் காண முடியாதது ஆகும். திருவேரக வழிபாட்டு முறை முழுமையான ஆரிய வழிபாட்டு முறை . ஆரியப் புராணக்கதையின் படி குமாரக்கடவுள் பிறப்பு வரலாறு தரப்படுகிறது. இக்கால கட்டத்திலிருந்து ஏறத்தாழ 300 ஆண்டு களுக்குத் தமிழிலக்கியத்தில் முருக வழிபாடு மறைந்து சிவன் - விஷ்ணு வழிபாடே ஓங்கி நின்றது. (மூலப் பக்கங்கள் 537-564இன் சுருக்கம்) இயல் 28 கலித்தொகை பண்டைத் தமிழிலக்கிய மரபின் கடைசிப் படைப்பான கலித்தொகைப் பாடல்கள் யாவும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு சார்ந்தவை. (இந் நூற்றாண்டுக்குப் பின்னர் பழைய அகப் பொருள் மரபு சார்ந்தவையான தலைவன் - தலைவி காதலைப் பாடும், இயற்கை நயம் வாய்ந்த பாடல்கள் எவையும் இயற்றப் பட்டில். கடவுளரைத் தலைவனாகக் கொண்டு பாடும் கோவை முதலிய கவிநயமற்ற செயற்கைப் பாடல்களே பாடப் பெற்றன) 2. கலிப்பாவில் இயற்றிய 150 பாடல்கள் கலித்தொகையில் உள்ளன. தொல்காப்பியம் ஒவ்வொரு திணைக்கும் வகுத் துள்ள இலக்கணத்திற்கு ஏற்ப எழுதப்பட்டவை இப்பாடல்கள். பல பாடல்களில் ஒரே வகையான சலிப்புத் தட்டும் காட்சிகளும் கற்பனைகளும் கூறியது கூறலாக' வருகின்றன. பல உவமைகள் ஆரியப் புராணங்களிலிருந்து சில அறநூற் கருத்துக்களிலிருந்தும் எடுக்கப் பட்டவை. இருப்பினும் பழந்தமிழ்ப் பாடற்சுவையை இத்தொகை யிலும் காணலாம். 3. கலித்தொகைப் பாடல்கள் மூன்றில் கொற்கை, மதுரை பற்றிய குறிப்புகளும், இயற்பெயர் சுட்டப் படாத பாண்டிய மன்னர் பற்றிய குறிப்பும் உள்ளன. (அக்காலத்தில் களப்பாளரும் பாண்டியரும் யார் வலியரென்று நிறுவத் தம்முள் பொருத்திருக் கலாம்). கிபி. ஆறாம் நூற்றாண்டில் ஆரிய வழக்கங்கள், சமயம், மூட நம்பிக்கை முதலியவை தமிழருடையனவற்றோடு நெருங்கிக் கலந்துவிட்டதையும், ஆரியப் பண்பாட்டின் கை ஓங்கியதையும் கலித்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. [மூலப் பக்கங்கள் 565 - 582ன் சுருக்கம்) இயல் 29 கி.பி. 600க்கு முந்தைய ஏனைய இலக்கியங்கள் ஐங்குறுநூறு - 1. ஐங்குறுநூற்றுப் பாடல்கள் தொல்காப்பிய இலக்கணத் திற்கு ஏற்ற இலக்கியமாகப் பாடப் பட்டவை. கவிநயம் குறைந் தவை. எதுவும் கிபி 5ம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றியது அல்ல. பரிபாடல் 2. எழுபது பரிபாடல்களில் 22ம், சில பாடல்களின் சில வரிகளுமே கிடைத்துள்ளன. அனைத்தும் மதுரை சார்ந்தவை. 22 பாடல்களில், விஷ்ணுவையும், 8 முருகனையும், 8 வையையும் பற்றியவை. புலவர்கள் அனைவரும் கி.பி. 6ம் நூற்றாண்டினர் என்பது அளவிறந்த ஆரியக் கருத்துகள், சம்ஸ்கிருதச் சொற்கள் ஆகியவற்றிலிருந்து தெரிகிறது. இப்பாடல்களுக்கு இசை அமைத்தனர். பிற்காலத்தினர். பரிபாடல் 11ல் உள்ள சில வானியற் குறிப்புகளைக் கொண்டு அப்பாடலின் காலத்தைக் கணிக்க நடந்த முயற்சி பயன் தரவில்லை . பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் 3. இவை கி.பி. 6-8 நூற்றாண்டுகள் சார்ந்தவை. கி.பி. 8ம் நூற்றாண்டு சார்ந்த முத்தரையரை நாலடியார் பாடல்கள் இரண்டு குறிப்பிடுகின்றன. களவழி நாற்பது, சோழன் செங்கணான் மீது பாடிய புறப் பாடல். ஐந்து நூல்கள் அகப் பொருள் சார்ந்தவை. களவழி நாற்பதும், இவ்வைந்து நூல் களும் பழைய புறம், அகப்பாடல் மரபின் தேய்ந்து போன கடைசிப் படைப்புகள். 12 நூல்கள் அறநூல்களாகும்; இவை அக்காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த சமஸ் கிருத நீதி நூல் பார்த்துப் பாடப் பட்டவை; தென் இந்தியாவில் ஆரியப் பண்பாடு நிலை பெற்று விட்டதைக் காட்டுகின்றன. இந்நூல்களில் பெரும்பாலானவை யாப்பில் உள்ளனவே யொழிய கவிநயம் அற்றவை. ஆனால் அறக் கருத்துக்களை நினைவிற் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்ய எளி தானவை. உயர்ந்த ஒழுக்கத்தைப் புகட்டும் இவ்வறக் கருத்துக்களை விஞ்சியவை வேறு எந்த நாட்டின் படைப்பிலும் இல்லை. திருக்குறள் 4. திருக்குறளை இலத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் ஐரோப்பியக் கிறித்துவக் குருமார் மொழி பெயர்த்துள்ளனர்; இந்நூலின் அறக்கருத்துக்களை மிக உயர்வாகப் பாராட்டி யுள்ளனர். சமஸ்கிருத சூத்திரங்களின் நடையை மாதிரியாகக் கொண்டு திறம்பட உருவாக்கப் பட்டது குறள் வெண்பா வடிவம். குறள் வெண்பா சூத்திரத்தைவிடச் சிறந்தது; காரணம் முந்தையது செய்யுள் ; பிந்தையது உரை நடை. பொதுவாக அறநூல்கள் இலக்கியமாக ஏற்கப்படுவதில்லை. எனினும் கவிநயமும் சொல் நயமும் நிறைந்தவை திருக்குறள் பாக்கள். அறக்கருத்துக்களை விளக்க உயர்ந்த பாநயம் மின்னும் உவமை களும் உருவகங்களும் பயன்படுத்தப் படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் திருக்குறளும் ஒரு சிறந்த இலக்கியமே. எடுத்துக் காட்டுக்கள் : ''உரன் என்னும் தோட்டியான் 24 ''பொருள் அற்றார் 248 "சுடச் சுடரும் 267 ''குடம்பை தனித் தொழியப் 338 ''வருமுன்னர்க் காவாதான் 435 ''வானோக்கி 542 "இணர் ஊழ்த்தும் 650 ''இன்பம் கடல் 1166 5. அறத்துப் பாலிலும் பொருட்பாலிலும் உள்ள கருத்துக் கள் பலவற்றை சமஸ்கிருத சாத்திரங்களிலிருந்து வள்ளுவர் எடுத்துள்ளார். (அவர் காலத்துக்கு முன்னர் தமிழில் அத்தகைய அறநூல்கள் எவையும் இல. காதலன் பால் காதலி மாறாத அன்பு செலுத்துதல், கற்பு போன்ற அறக்கருத்துகள் மட்டுமே மறை முகமாகக் கூறப்பட்டன. பொருள் நூற் கருத்துக்கள் எவையும் இல்லை). காமத்துப் பாலை தொல்காப்பிய பொருட்பால் கருத்துக்களின் அடிப்படையிலேயே வள்ளுவர் இயற்றியுள்ளார். சமஸ்கிருதக் கருத்துக் களைப் பின்பற்றிய விடத்தும் சரி, தமிழ் மரபையொட்டி எழுதிய பொழுதும் சரி திருவள்ளுவர் எந்தப் பொருளையும் வேறு எவரும் பார்க்காத கோணத்தில் பார்த்து, நெஞ்சில் நிலைபெறும் வகையில் செப்புவதிலும், கருத்துக்களைத் தமக்கே உரிய வகையில் நிரல் பெற உரைப்ப திலும் அவருக்கு உள்ள திறமையால் திருக்குறள் தலை சிறந்த நூலாக உள்ளது. 6. ஆரியக் கருத்துக்கள் பல ; சமஸ்கிருதச் சொற்களும் பல ; எனவே குறளின் காலம் கி.பி. 6ம் நூற்றாண்டுக்கு முன்னது எனக் கூற இயலாது. வள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்ததாகக் கதை உள்ளது. இருக்கலாம். காஞ்சிப் பகுதிக்குத் தெற்கிலுள்ள தமிழகத்தில் ஆரியப் பண்பாடு கால் கொண்டது வள்ளுவர் காலத்துக்குச் சற்று முன்னர் தான். ஆனால் வள்ளுவர் காலத் துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆரியப் பண்பாடு நிலை பெற்று இருந்த காஞ்சிப் பகுதியில் அவர் பிறந்த தனால்தான் வள்ளுவர் குறள் ஆரியப் பண்பாட்டைப் பெருமளவுக்குப் பின்பற்றுவதாக அமைந்தது. கி.பி. ஆறாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழகத்தில் பரவலாக நுழைந்து, பழைய தமிழ்ப் பண்பாட்டின் மீது தாக்கம் விளைத்த ஆரிய சமயங்களான வைணவ, சைவ, புத்த, சமண சமயங்களிடையே அக்கால கட்டத்தில் போராட்டம் இல்லை. ஓர் ஆரிய சமயத் துக்கு மட்டுமே அரசனுடைய ஆதரவு என்ற நிலையும் இல்லை. எனவே தான், அற நூல் ஆசிரியர்களான திருவள்ளுவரும் பதினெண்கீழ்க் கணக்கில் உள்ள ஏனைய அற நூல் ஆசிரியர் களும் ஒரு குறிப்பிட்ட ஆரிய சமயம் சார்ந்த அறக் கருத்துக் களைக் கூறாமல், பொதுவான அறவிதிகளைக் கூற இயன்றது. எனவே தான் எச்சமயச்சார்பையும் காட்டாத திருவள்ளுவர் உலகில் அறம் உரைத்த அனைவரிலும் மிக உயர்ந்தவராக ஒளிவிட்டு நிற்கிறார். பிராமணரிலிருந்து பறையர் முடிய, அனைத்துச் சாதியினரும், வைதீக அவைதிக சமயங்கள் அனைத்தும், தத்தம் சாதி, சமயத்தைச் சார்ந்தவர் என திருவள்ளுவரைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இவ்வளவு காலமும் இவர்கள் எவருடைய வகைப் பாட்டிலும் அடங்காமல் தனித் தன்மையுடன் விளங்குகிறார் வள்ளுவர். 7. திருவள்ளுவரைப் பற்றிக் கட்டிவிடப்பட்டுள்ள அபத்த மான கற்பனைக் கதைகள் பல. மூன்றாம் சங்கப் புலவர்கள் முதலில் குறளை ஏற்க மறுத்து பின்னர்ச் சங்கப் பலகையிலிருந்து குளத்தில் வீழ்ந்து, அறிவு வந்து குறளைப் பாராட்டி அவர்கள் பாடியதாக உருவாக்கப் பட்டுள்ள திருவள்ளுவ மாலைப் பாடல்களைப் பல்வேறு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர்களும், (சமஸ்கிருதப் பெயர் உடையவர்களும் தமிழ்ப் பெயர் உடைய வர்களும்) பாடியதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் வடபால் ஆரியமயமாக்கப் பட்ட பல்லவ நாட்டில் தோன்றிய வள்ளுவர் தமிழ் இலக்கியத்தில் இத்தகைய அறநூலை ஒரு புதிய முயற்சி யாக எழுதியது கண்டு, தமிழ் மரபுப் புலவர் பொறாமை கொண்டனர் என்பதைக் குறிப்பதாக மட்டும் "திருவள்ளுவ மாலைக் கதையைக் கொள்ளலாம். திருக்குறள் கருத்துக்கள் பலவும் சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்து பெற்றவை 8. திருவள்ளுவர் சமஸ்கிருதம் வல்லவர். சமஸ்கிருத நீதி, அர்த்த சாஸ்திர நூல்களை நன்கு பயின்றவர். அறத்துப் பாலில் மநு தர்ம சாஸ்திரத்தையும் பொருட்பாலில் கெளடலியரின் அர்த்த சாஸ்திரத்தையுமே பெருமளவுக்குப் பின் பற்றுகிறார். பஞ்சதந்திரம், ஹிதோபதேசம், பர்த்ருஹரி சதகம், இராமா யணம், மகாபாரதம் போன்றவற்றையும் திருவள்ளுவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். இது வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் கருத்து ஆகும். எந்தெந்த சமஸ்கிருத நூல்களிலிருந்து குறள் கருத்துக்கள் பல பெறப்பட்டவை என்பவை பற்றி அவர் விரிவாக விளக்கித் தனி நூல் ஒன்று எழுதவிருக்கிறார். (எழுதியுள்ளார் : தீட்சிதர் (1930) சிலப்பதிகாரம் 9. தமிழில் முதல் காவியம் இதுவே. காவிய வடிவம் சமஸ்கிருத இலக்கியத்திலிருந்து கடன் பெற்றது. ஆனால் பாடு பொருள் முழுமையாகத் தமிழ், தமிழர் சார்ந்தது. புற நானூற்றுப் பாடல் 183 ஐப் பாடியவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். கோவலனைக் கொல்வித்த பாண்டியன் பெயர் சிலப்பதிகார நூலில் இல்லை. மதுரைக் காண்ட இறுதி யில் உள்ள கட்டுரை தான் "வட ஆரியர் படை கடந்தவன்" அப்பாண்டியன் என்கிறது. கும்பகோணத்தருகே ஆரியப்படை என்று ஒரு பண்டைப் போர்க்களம் உள்ளது. புறம் 183 சுட்டும் பாண்டியன் பெயரில் வரும் "ஆரியப் படை" அக்களத்தைக் குறித்ததாகவும் இருக்கலாம். "கட்டுரை எழுதியவர் அதைப் பிறழ உணர்ந்து "வட ஆரியர் படை கடந்து எனக் குறித்திருக்கலாம். முதல் இரு காண்டங்கள் 10. இவ்விரு காண்டங்கள் அளவிலேயே சிலப்பதிகாரக் கதை முழுமையடைந்து விடுகிறது. உலகின் தலை சிறந்த காவியங் களில் ஒன்றாக இவ்விரண்டு காண்டங்களும் அமைகின்றன. இயற்கை எழில், காவிய மாந்தர், மற்றும் ஏனையோர் செய்கை கள், வாழ்வியல் ஆகியவை மிகச் சிறப்பாக வருணிக்கப் படு கின்றன. சிற்சில புராண நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ள போதிலும் இக் காவியம் சாதாரண மாந்தர்களையே தலைவர்களாகக் கொண்டது. காவிய நிகழ்ச்சிகளை கூறிச் செல்லும் முறையோ வியக்கத் தக்கது. சமஸ்கிருத காவியங்களில் இயற்கையை விஞ்சிய நிகழ்ச்சிகள் பெருமளவுக்கு வருவது போல இந்நூலில் இல்லை, பழந்தமிழ் இலக்கிய மரபின் நயம் போற்றப்படுகிறது. சில வகைகளில் இராமாயணம், இலியதம், ஈனியத், சுவர்க்க நீக்கம் ஆகிய காவியங்களை விட சிலப்பதிகாரம் சிறந்தது எனலாம். மூன்றாம் காண்டம் 11. கண்ணகிக்குப் படிவம் அமைக்க கல் கொண்டு வர சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று வந்தான் என்ற ஒரே இணைப்பே இக்காண்டத்துக்கும் முந்திய இரண்டிற்கும் இடையே உள்ளது. இக் காண்டம் "சிலப்பதிகாரம்" என்ற பெயரிலேயே அடங்காது. முதலிரண்டு காண்டங் களுடன் முழுமை யெய்திய தனது சிறந்த காவியத்தை முடித்த பின்னர் காவியக் கதையின் நயத்தைச் சிதைக்கும் வகையில் (செங்குட்டு வன் புகழைக் கூறவென்றே) மூன்றாம் காண்டத்தை எழுதி யிருப்பாரா என்பது ஆய்வுக்குரியது. பெருங்கவிஞர் எவரும் அவ்வாறு செய்து தம் காவியத்தின் நயத்தைக் கெடுத்திருப்பார் என நான் எண்ணவில்லை. முதலிரண்டு காண்டங்களில் இயற் கையை விஞ்சிய நிகழ்ச்சிகள் மிகச் சிலவே; அவையும் மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டன; மூன்றாம் காண்டத்திலே அவற் றுக்குத்தான் முதன்மையான பங்கு - புத்த சமயத்தினர் விரும் பிய முன் பிறவிக் கதைகள் உட்பட. புகார் - மதுரைச் செலவில் கோவலன், கண்ணகி கண்ட காட்சிகளை எவ்வளவு அருமை யாக வருணிக்கிறார் ஆசிரியர். செங்குட்டுவன் படை நீல மலையிலிருந்து கங்கைக் கரைவரைச் சென்று வருகிறதே அந்தச் செலவுக் காட்சிகளை எவ்வளவு இனிமையாக தந்திருக்கலாம், ஒன்று கூட இல்லையே! எனவே யாப்பு, சொற் பயன்பாடு, வருணனை உத்திகள் ஆகிய வற்றின் பயன்பாட்டில் முதலிரண்டு காண்டங்களுக்கும் மூன்றாவதற்கும் உள்ள வேறுபாடுகளைத் தமிழறிஞர் ஆராய்ந்து மூன்றாம் காண்டத்தை எழுதியவர் முதலிரண்டை எழுதியவர் தாமா? என முடிவு செய்வார்களாக. செங்குட்டுவன் 12. பதிற்றுப்பத்துப் பரணர் பாடிய ஐந்தாம்பத்தின் தலைவன் கடல் பிறக் கோட்டிய வேல்கெழுகுட்டுவன் தான் மூன்றாம் காண்டத் தலைவன் செங்குட்டுவன் எனக் கொண்டு முன்னவன் சாதனைகளாக பதிற்றுப்பத்துப் பதிகம் கூறுவன எல்லாம் இக்காண்டத்தில் செங்குட்டுவன் மேல் ஏற்றப் படு கின்றன. சங்க கால மன்னர்களின் பெயர்களில் உள்ள அடை மொழிகளின் அடிப்படையிலேயே ஒருவர் மற்றவரிடமிருந்து பிரித்தறியப் பட்டனர். கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவனும் செங்குட்டுவனும் ஒருவனே என்றால் (அந்தக் கால கட்டத்தில் எங்கும் காணாத வகையில் ஒரு மன்னவன் இரண்டு பெயர்களால் அழைக்கப்பட்டான் என்று ஆகும்! நீலமலை யிலிருந்து யாதொரு எதிர்ப்பும் இன்றிக் கங்கை வரைச் செல் கிறான் செங்குட்டுவன்! (பிற்காலத்தில் சோழன் இராசேந்திரன் படை கங்கைக்குச் செல்கிறது என்றால் அவன் ஆட்சி மகாநதி வரை ஏற்கெனவே நடந்து வந்தது; மாலிக்காபூர் கிபி 1311ல் மதுரை - இராமேசுவரம் வரைப் படை யெடுத்தான் என்றால் அவனுடைய சுல்தான் அலாவுதீன் ஆட்சி அதிகாரம் ஏற் கெனவே தெலுங்கானா, வாரங்கல் நாடு முடியப் பரவியிருந்தது. செங்குட்டுவன் 'படையெடுப்பு' அப்படியல்ல) நூற்றுவர் கன்னர் என்பது சாதகணி' என்பதன் அபத்தமான தமிழாக்கமே. சாதகணிகள் ஆட்சி கங்கை வரை இருந்தது கி.பி. 77வரை மட்டுமே; அதன் பின்னர் அவர்கள் ஆட்சி எல்லைகள் மிகச் சுருங்கி விட்டன. கங்கையாற்றுக்கு அப்பாலும் சில மன்னரைச் செங்குட்டுவன் படை வென்றதாகப் புகார்க் காண்டம் கூறிய போதிலும் அதற்கு எந்த இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகளும் இல்லை. இந்தியாவின் புவியியல் அமைப்புப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர்தான் கங்கைப் பகுதி மன்னரைப் போரில் வெல்லும் அளவுக்கு பெரும்படையுடன் தமிழகத்திலிருந்து அக் காலத்தில் சென்று வந்ததாகக் கற்பனைக் கதை கட்டியிருக்க வேண்டும். இந்திய வரலாற்றை அறியாதவர்கள் தாம் அக் கதையை நம்புவர். எனவேதான் மூன்றாம் காண்டம் முதலிரு காண்டங் களுடன் எழுதியது ஆயினும் ஆகுக , பின்னர் எழுதிச் சேர்த்தது ஆயினும் ஆகுக; தென் இந்தியாவின் பண்டை வரலாற்றுக்கான நம்பகமான ஆதாரமாகக் கொள்ளத் தக்கது அன்று. கண்ணகி வழிபாடு 13. செங்குட்டுவன் தொடங்கி, மாளவ , உறையூர், இலங்கை வேந்தர்களும் பின் பற்றியதாக புகார்க் காண்டம் கூறும் பத்தினி வழிபாட்டு எச்சங்கள் எவையும் இந்தியாவில் எங்கும் இல்லை. இலங்கையில் மட்டும் புத்த சமயத்தோடு இணைந்து ஓரளவுக்கு இருக்கிறது. தென் இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் பத்தினி வழிபாடு என்பது (காளியின் அம்சமாகக் கொள்ளப்பட்டு வரும்) தமிழ் மக்களின் தாய்த் தெய்வ வழி பாட்டுடன் ஒட்டவைக்கப்பட்ட (5 கணவர்களையுடையவள் ஆயினும்) அழியாத பத்தினி திரெளபதி வழிபாடேயாகும். திரெளபதி வழிபாட்டுக்குப் போட்டியாக கண்ணகி வழி பாட்டைப் புகுத்தும் முயற்சியாகப் புனையப்பட்டதே புகார்க் காண்டம் என்றும், அம்முயற்சி தோற்றது என்றும் கருத இட முண்டு. மேலும் ஆய்வு தேவை 14. பிற்காலத்தில் சிலப்பதிகார நூலில் இணைக்கப்பட்ட பதிகம், உரைபெறு கட்டுரை, ஓவ்வொரு காண்ட இறுதியில் உள்ள கட்டுரை, நூல் கட்டுரை ஆகியவை உட்பட அந்நூல் கூறுவன எல்லாம் வேதவாக்காகக் கருதுபவர்களுக்கு நான் மேலே கூறுவதெல்லாம் விதண்டாவாதமாகத் தோன்றலாம். மேற்சொன்ன என் கருத்துக்களே இறுதி முடிவு என நான் கூறாவிட்டாலும், அக்கருத்துக்களின் அடிப்படையில் தற்காலத் திறனாய்வு முறைகளின்படி இச்செய்திகளை மறு ஆய்வு செய் வதற்காவது முன் வருவார்கள் என்று எண்ணுகிறேன். சிலப் பதிகாரச் (பதிகம் முதலியவை உட்பட்ட) செய்திகளோடு மணிமேகலையிலும் அதன் பதிகத்திலும் வரும் செய்திகளையும் சேர்த்துக் குழப்பி உருவான ஒரு கருத்து நிலவுகிறது. அது என்ன? மதுரையைக் கண்ணகி கொளுத்திய போது ஆங்கிருந்தவரும் மணிமேகலை ஆசிரியரும் ஆன சாத்தனாரிடம் செய்திகளைக் கேட்டு செங்குட்டுவன் தம்பி (சமணத்துறவி) இளங்கோ வடிகள் சிலப்பதிகாரம் எழுதினார் என்பதே அக்கருத்து. இது ஏற்கத்தக்கதல்ல. ஆரியக் கருத்துக்கள், நடைமுறைகள் தமிழ் கருத்துகள், நடைமுறைகளோடு கலக்கத் தொடங்கி யிருந்த போதிலும் தமிழ் சார்ந்தவைக்கும் ஆரியம் சார்ந்தவைக்கும் சம் முக்கியத்துவம் இருந்து வந்த காலமாகிய கிபி 6ம் நூற்றாண்டில் எழுந்தது சிலப்பதிகாரம், மணிமேகலை அப்படியல்ல. பழந் தமிழ்ச் சமயங்களை விட புத்த சமயம் வலுப்பெற்றுவிட்ட காலத்தில் எழுதியது அது. ஆரியப் பண்பாட்டுத் தாக்கத்தினால் மணிமேகலைக் காவிய மாந்தர் பெயர்கள் எல்லாமே சமஸ் கிருதம் ஆகிவிட்டன. அந்நூலின் அளவை, மெய்யியல் கருத்து களை கிபி.7ம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதியிருக்க இயலாது. ''மாதவி மகள் மணிமேகலை" என்று மணிமேகலைக் காவியம் - கூறிக்கொள்கிற போதிலும், அது சமணக் காவியமான சீவக சிந்தாமணிக்குப் போட்டியாகப் புத்த சமயத்தினர் எழுதிய தாகும். சிலப்பதிகாரத்தில் வரும் கொற்றவை வழிபாடு, வேட் டுவவரி, ஆய்ச்சியர் குரவை போன்றவை யெல்லாம் அக்கால கட்டத்தில் தமிழ், ஆரியத் தெய்வங்களை இணைத்த வழிபாட்டு முறைகள் உருவானதைக் காட்டுகின்றன. எட்டுத் தொகை நூல்களில் சேர்ந்த அகநானூறு போன்றவற்றுக்குப் பிற்பட்டது சிலப்பதிகாரம். அகநானூற்றுப் பாடல்கள் வேங்கடம் திரை யாருக்கும் கள்வருக்கும் உரியது எனக் கூறுகின்றன. அக்காலத்தில் அம்மலையில் திருமாலுக்குக் கோயில் இல்லை. சிலப்பதி காரமோ, திருவரங்கத்தில் கிடந்த வண்ணமும், வேங்கடத்தில் நின்ற வண்ணமும் திருமால் காட்சியளித்ததைக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தின் 8வது காதை "நெடியோன் குன்றம்" என்றே வேங்கடத்தைச் சுட்டுகிறது. பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துக் குரிய கடல் பிறக்கோட்டிய வேல்கெழுகுட்டுவனே செங்குட்டு வன் ஆயின், அப் பத்தைப் பாடிய பரணர் தமது பாடல்களில் ஒன்றிலும் வேங்கடமலையில் உள்ள மாலைக் குறிப்பிடாது விட்டிரார். எனவே அந்தப் பரணருக்கும் மிகப்பிற்பட்டவரே சிலப்பதிகார ஆசிரியர். சிலப்பதிகார நடையும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்களை விட எளியது. அதைவிட எளியதும் வடசொல் மிக்கதும் மணிமேகலை. 15. என் கருதுகோள் ஒன்றை அறிஞர் ஆய்வுக்கு வைத்து இவ்வியலை முடிக்கிறேன். சிலப்பதிகாரத்தில் முதலிரண்டு காண்டங்கள் சிறந்த காவிய மாகும். அவற்றை எழுதியவர் வேறு; ஒரு கற்பனைத் தலைவனின் சாதனை களைக் கூறும் மூன்றாம் காண்டத்தை எழுதியவர் வேறு. சேக்ஸ்பியரின் வேனிற்கால இரவுக் கனவு (Midsummer Nights Dream) நாடகத்தை வரலாற்று நூலாகக் கருதுவதும் அந்நாடகத்தில் வரும் பொகெமியா நாட்டின் புவியியலுக்கு சேக்ஸ்பியர் கூற்றுக்களை ஆதாரமாகக் கொள்வதும் எப்படியோ, அப்படித்தான் இருக்கும் சிலப் பதிகாரச் செய்திகளை வரலாற்று ஆதாரமாகக் கொள் வதும். நம் காலத்து இலக்கிய, வரலாற்றுத் திறனாய்வுக் கோட்பாடுகளைப் பற்றித் தெரிந்த தமிழறிஞர்கள் இது பற்றி மேலும் ஆய்வு செய்து என் கருதுகோள் பற்றி முடிவு கூறிட வேண்டு கிறேன். பதிகம், உரைபெறு கட்டுரை, கட்டுரைகள் எல்லாம் பிற்கால இடைச் செருகல்கள் ஆகையால் அவை இந்தச் சிக்கலைத் தீர்க்கப் பயன் படமாட்டா. (மேலே 9 -15 பத்திகளில் சிலப்பதிகாரம் சார்ந்த சீனிவாசர் கருத்துக்களைக் காணலாம்; சிலம்பின் காலம், அக்காவிய நிகழ்ச்சிகளில் உண்மை/புனைவுப்பகுதிகள்; மூன்று காண்டங்களையும் எழுதியவர் ஒருவரா? என்பது பற்றியெல்லாம் இன்றும் கருத்து வேற்றுமைகள் உள்ளன. எனினும் பெரும்பாலான அறிஞர் (நீலகண்ட சாத்திரி, கே.கே. பிள்ளை , என். சுப்பிரமணியன், கமில் சுவலெபில் போன்றவர்கள்) புகார்க்காண்டச்சேரன் செங்குட்டுவனை கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்" காலமாகிய கிபி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவனாகவே கொள்கின்றனர். மொழி பெயர்ப் பாளன் முன்னுரையில் சங்ககால மன்னர் வரலாறு பற்றிய பகுதியில், கண்ட செய்திகளும் இவ்வறிஞர்கள் கருத்துக்கு எதிராக இல்லை ) இயல் 30 பழையன், புதியன இணைப்பு கல்வெட்டாய்வாளர்கள் புகுத்திய "களப்பிரர் இடையீடு" (Kalabhra interregnum) என்னும் சொல் கி.பி 6ம் நூற்றாண்டு இறுதியில் கடுங்கோன் பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவும் வரைச் சில நூற்றாண்டுகள் பாண்டியர் ஆட்சி ஒழிந்திருந்தது எனக் கருத இடம் தருகிறது. அக்கருத்து தவறு. அக்காலத்திலும் பாண்டியர் குறுநில மன்னர்களாக ஆண்டிருக்க வேண்டும். பிற்காலப் புலவர் பாடிப் புறநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டியர் எழுவர் கி.பி 6ம் நூற்றாண்டில் இருந்தவர்களாக வேண்டும். கலித்தொகை போன்றவற்றில் இயற்பெயர் இன்றிப் பாண்டியர் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் தம்தம் ஊரையும் சுற்றுப் பகுதியையும் ஆண்டவர்களான பாண்டியர் பரம்பரை யினராதல் வேண்டும். எனவேதான் கி.மு 600க்குச் சற்று முன்னர் மதுரைப் பகுதியிலிருந்து களப்பிரரை விரட்டி அங்கு மீண்டும் பாண்டியர் தம் ஆட்சியை நிறுவ முடிந்தது. கி.பி ஆறாம் நூற்றாண்டில் பாமர மக்கள் ஆதரவைப் பெற சமண, சைவ, வைணவர் போட்டி போட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் சிவ வழிபாடு வலுப் பெற்று சிவனின் திரு விளையாடல்கள் (தமிழ்ச் சங்கம் நிறுவியது உட்பட) பற்றிய கதைகள் புனையப் பட்டிருக்கும். திருநாவுக்கரசரும் "நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தரு மிக்கு அருளினான் காண்'' என்கிறார். கருனாடக மன்னனின் கொடுமைக்குள்ளான மூர்த்தி நாயனார் அம்மன்னனை வீழ்த்தி மதுரை அரசனாகி அங்கு வழிபாட்டை மீண்டும் நிறுவியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. கி.பி 6ம் நூற்றாண்டில் சோழநாடு 2. சோழ நாட்டில் இக்கால அளவில் சமண, சைவ, வைணவ சமயங்கள் பரவின. சிலப்பதிகார காலத்துக்கு முன் னரே திருவரங்கத் திருமால் கோயில் பிரபலமாகியிருக்க வேண்டும். (கடவுளரால் கட்டப்பட்டு?) காவிரி மண்ணில் புதைத்திருந்த திருவரங்கக் கோயிலைச் சோழ மன்னன் தோண்டி எடுத்தான்; உறையூர்ச் சோழன் மகள் ஒருத்தி திரு வரங்கத்தானையே வழிபட்டு அவனை ஆரியச் சடங்குகளின் படி மணந்து அவனோடு சாயுஜ்யம் அடைந்தாள்; என்பது போன்ற கதைகளைக் கோயிலொழுகு கூறுகிறது. உறையூர்க் கோயிலில் அச்சோழ மகள் சிலை இன்றும் வழிபடப் படுகிறது. இக் கதைகளை எல்லாம் கிபி 6ம் நூற்றாண்டில்தான் புனைந் திருக்க வேண்டும். (காரணம் அந்நூற்றாண்டிற்குப் பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றிலிருந்து சோழர் அறவே மறைந்து விடுகின்றனர்) செங்கணான் 3. கிபி ஆறாம் நூற்றாண்டுச் சோழ மன்னரில் ஒருவன் செங்கணான். இவன் பொய்கையார் (இவரே முதலாழ்வார் களில் ஒருவரான பொய்கையாழ்வாராக இருக்கலாம்) எழுதிய களவழி நாற்பதின் தலைவன். கி.பி. எட்டாம் நூற்றாண்டுத் திருமங்கை ஆழ்வார் திருநறையூர்ப் பதிகத்தில் குறிப்பிடும் " எண் தோளீசற்கு எழில் மாடம் எழுபது செய்த சோழன் (திரு நறையூர்க் கோயிலில் உள்ள சிவனை வழிபட்டவன்) இவனே. திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரும் செங்கணான் சிவ னுக்குக் கோயில்கள் கட்டியதைக் குறிப்பிடுகின்றனர். சைவக் கதைகள் கிபி 9ம் நூற்றாண்டில் இறுதி வடிவம் பெற்றபோது செங்கணான் நாயன்மார் 63வரில் ஒருவனாகச் சேர்க்கப்பட்டான். ஆனால் அவன் வாழ்ந்த கிபி. ஆறாம் நூற்றாண்டானது புத்த சமண சமயங்களுக்கு எதிராக சைவமும் வைணவமுவும் இணைந்து போரிட்ட காலம்; ஆகையால் இச்சோழன் திரு மாலையும் வழிபட்டவனேயாவான். கோப்பெருஞ்சோழன் 4. சிவன் புறம் 214 பாடியவன். வினைப்பயன்படி கிட்டும் மறுபிறவி என்று இவன் அப்பாடல்களில் கூறுகிறான். மேலும் சமணர் "சல்லேக்கணம்" ஆகிய வடக்கிருத்தல் முறைப்படி உயிர் துறக்கிறான். எனவே இவன் கிபி 6ம் நூற்றாண்டினன் சேர நாட்டில் 5. கிரேக்கர் (அவர்கள் முதலில் வந்திறங்கிய தமிழகப் பகுதியாதலின்) தமிரிகே என்று அழைத்த சேர நாடுதான் தென் இந்தியாவில் முதன் முதலில் மிகுதியான ஆரியத்தாக்கத் திற்கு ஆளானது. பாண்டிய, சோழ நாடுகளை விடச் சேரநாடு மிகுதியாக ஆரிய மயம் ஆனது. இதற்கான சான்றுகளைப் புற, அகப்பாடல்களிலும் பதிற்றுப்பத்திலும் காணலாம். கோயில்கள் - 6. கிபி 4ம் நூற்றாண்டிற்கு முன்னர்த் தமிழகத்தில் ஆரியக் கடவுளர்க்கான கோயில்கள் ஒன்றுமில்லை அல்லது மிகச் சிலவே எனலாம். கி.பி. 6ம் நூற்றாண்டில் காஞ்சி, வேங்கடம், திருவரங்கம், மதுரைக் கோயில்கள் புகழ்பெற்றன. ஏழாம் நூற்றாண்டில் இருந்து பல்லவ, சோழ, பாண்டிய, சேர நாட்டுப் பகுதிகளில் பல கோயில்களின் கடவுளரைப் பற்றிச் சைவ நாயன் மாரும் வைணவ ஆழ்வாரும் பாடுகின்றனர். இக் கோயில் கள் எல்லாம் (பெரும்பாலானவை இன்றும் வழிபாட்டில் உள்ளவை) கி.பி 6ம் நூற்றாண்டில் எழுந்திருக்க வேண்டும் - செங்கணான் போன்றவர் செயற் பாடுகளால். இக்கோயில்கள் எல்லாம் அக்காலத்தில் மரமும் செங்கலும் கொண்டு கட்டியவையே (பெரும்பாலும் அடித்தளத்திற்கு மட்டுமே செங்கல்). அவற்றைக் கட்ட அக்காலத்தில் மரங்களுக்குப் பஞ்சம் இருந்திராது. இன்று திருவாங்கூரில் உள்ளது போல் அம்மரக் கோயில்கள் செப்புத் தகடுகள் வேய்ந்தவையாயிருந் திருக்கலாம் (ஒரு சில கோயில்களில் பொன் தகடுகள்). மகேந் திரவர்ம பல்லவன் (கி.பி 600 - 625) தான் முதன் முதலில் குன்றுகளைக் குடைந்து குகைக் கோயில்கள் அமைத் தான். அவன் மகன் நரசிம்மனும் இப்பணியை விரிவாகத் தொடர்ந்தான். அதன் பின்னர்தான் கட்டுமானக் கோயில்கள் உண்டாயின. சோழர் ஆட்சியில் (கி.பி. 9 - 10 நூ) அவற்றில் கருவறைகள் மட்டும் கல்லாற் கட்டப்பட்டன. கருவறை முன் ஒரு சிறு அர்த்த மண்டபம் மட்டுமே அக்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் மேலும் பல மண்டபங்கள் கட்டப்பட்டன. கடவுளர் ஊர்வலப் பாதைகளுக்குச் சுவர்கள் கட்டப்பட்டன. மேலும் மேலும் கட்டடங்கள் உருவாயின. சோழர் காலத்துக்குப் பின்னர் சில கோயில்கள் இடிக்கப்பட்டு மிகப் பெரியனவாக புதிதாகக் கட்டப்பட்டன. ஒரு கோயில் மிகப் பழமை வாய்ந்தது எனக் கூறினால் அக்கோயில் உள்ள இடமும் (ஒருக்கால் அங்கு உள்ள கல் செங்கல்/மர மூல உருவாரமும்) பழமை வாய்ந்தவை என்பது மட்டுமே பொருள் ; கட்டடங்கள் அல்ல. கடவுளர் 7. சிவன் திருமால் வழிபாடு பரவப் பரவ, பழந்தமிழ்க் கடவுளரை யாதானுமொரு வகையில் அவ்வழிபாட்டுடன் இணைத்தனர்; பழந்தமிழ்க் கடவுளர் சிலர் வழிபாடு நின்றும் போயிருக்கும். மாயோன் வழிபாடு மலையாளத்தில் கிருஷ்ண வழிபாடு ஆகியது; பிற இடங்களில் திருமால் வழிபாடு ஆகியது. சேயோன் முருகன், சுப்பிரமணியனோடு இணைக்கப் பட்டான். வேந்தனும் (இந்திரனும்) வருணனும் மறைந்தனர். காரணம் செழிப்பான மருதத்திலும், வணிகம் மிகுந்த துறைமுகப் பட்டினங்களிலும் தான் சிவன், மால் வழிபாடு வலுவானது. கந்து (கம்பரக் கடவுள்கள் சிவனாயினர். கருடன், குரங்கு, யானை, காளை, எலி, மயில், நாகம் இவையெல்லாம் பெருந்தெய்வங் களின் ஊர்தி / ஆபரணம் / உடலுறுப்பு ஆயின. வட இந்தியா வில் கூட சக்தி வழிபாடு பிற்காலத்தில் தான் பிரபலம் ஆனது; (அதுவும் புத்த சமய தாரை வழிபாட்டிற்குப் போட்டியாக) தென்னிந்தியாவில் சக்தி வழிபாடானது திருமால் மனைவி லட்சுமி வழிபாடாகவோ, சிவன் மனைவி பார்வதி வழி பாடாகவோ உருப்பெற்றது. தமிழர்களின் பண்டை வரவான எல்லைத் தெய்வங்களையும் பேய், பூதத் தெய்வங்களையும் இன்றும் பாமரர் பரவலாக வழிபடுகின்றனர்; ஆரியத் தெய்வங்களோடு இணைக்கும் அளவுக்கு அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாததால் அவற்றை இணைக்கவில்லை. பக்தி 8. தமிழர் மனம் உலகியலுக்குத் தேவையான பல பொருள்கள் மீது சென்ற அளவுக்கு வறட்டுத் தத்துவச் சிந்தனை களில் செல்லவில்லை என்பதைக் குறித்துள்ளோம். உலகில் மனிதன் பெறும் மகிழ்வுகளை, 'மகிழ்வு' என்ற மாத்திரத்தின் லேயே தீமை என்று தமிழர் கருதினர்; புலன் நுகர்ச்சிப் பொருள் களைத் துறப்பதே உயர்வு என்ற ஆரியக்கருத்தை அவர்கள் ஏற்றிலர். எனவே தமிழர் செய்யுள் இலக்கியம் உலகியலை உண்மையாகக் காட்டுவதாக அமைந்தது. திருமால், சிவன் இருவரும் அவ்வப்பொழுது அவதாரங்களாகவோ தோற்றங் களாகவோ சாதாரண மனிதர்களாக உலகில் அவதரித்து மனிதர்களுடைய உலகியல், உள்ளவியல் இன்னல்களைத் தீர்த்து அருள் செய்ததாக வரும் புராணக்கதைகளில் தமிழர் ஈடுபட்டு, அந்த அவதாரங்களின் மீது பற்றுக் கொண்டனர். எனவே மனத்துக்கு ஆறுதல் தரும் பக்தி தமிழர்களிடையே சிறப்பிடம் பெற்றது. சைவ, வைணவ சமயங்களும் நன்கு பரவின. பக்திச் சுவை சொட்டும் இலக்கியங்களையும் அச்சமயங்கள் படைத்தன. (தொடக்க காலங்களில் புத்த சமண சமயங்களிலும் பக்திக்கு இடம் இருந்ததனால் தான், அதாவது புத்தர், மகாவீரர் போன்ற உத்தம மனிதர் மீது பக்தி செலுத்த இடம் இருந்த தனால்தான், அவை முதலில் விரைந்து பரவின. நாளடைவில் வறட்டுத் தத்துவங்களும், உதவாக்கரை அளவியல் விவாதங் களுமே அவ்விரு சமயங்களின் தன்மை என்ற நிலை வந்ததனால் அவை தமிழகத்தில் வீழ்ந்தன. அவ்வீழ்ச்சிக்கு பிற சமயத்தினர் செய்த கொடுமை காரணமில்லை. சாங்கிய, வேதாந்த மெய் யியல் கருத்துக்கள் நாளடையில் சைவ, வைணவ சமயங்களிற் புகுந்தன; தமிழிலும் சைவ வைணவ மெய்யியல் நூல்கள் தோன்றின எனினும் அடிப்படையில் அவ்விரு சமயங்களும் பக்தி செலுத்தி உய்வு, அடையும் சமயங்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றன. இறைவனாகிய சிவன், மால் அருளால் அவனிடம் பக்தி செலுத்தி எளிதில் உய்வு அடையலாம் என்ற உணர்வை இச்சமயங்கள் தருவதே அவற்றின் வெற்றிக்குக் காரணம் ஆகும். 9. பக்தி உணர்வு காரணமாகவே தமிழ் நாடெங்கும் . எண்ணிறந்த கோயில்கள் உருவாகியுள்ளன. அத்துடன் பக்திப் பாடல்களைப் பாடுதல், அவற்றைப் பாடி ஆடுதல் ஆகியவையும் பக்தியின் எளிய வழி முறைகளாக ஆகியுள்ளன. மிகப் பழங்கால் பண்டைத் தமிழர் வழிபாட்டு முறையிலேயே பாட்டுக்கும் நடனத்திற்கும் முக்கிய பங்கு இருந்தது. சிவன், மால் ஆகிய கடவுளரே ஆடுநர், பாடுநர் ஆக கருதப்பட்டனர். (நடனத்தில் சிவனும், பாட்டில் கண்ணனும் வல்லவர்) 10. கிபி. 9-13ம் நூற்றாண்டுச் சோழப் பேரரசுக் காலத் தில் பாடல் ஆடலுடன் வளர்ந்த பக்தி இயக்கம் வடக்கே தெலுங்கானா, சேவுண ராச்சியம் (தேவகிரி யாதவர் அரசு ) போன்ற இடங்களுக்கும், பண்டரிபுரத்துக்கும் பரவியது. அங் கிருந்து வடநாட்டுக்கும் பரவி கபிர்பந்த் இயக்கமும், சைதன்யர் இயக்கமும் தோன்றின. (சைதன்யர் இயக்கம் மெய்யியலில் ராமானுஜ, மாத்வக் கொள்கைகளைக் கொண்டிருப்பினும் நடைமுறையில் பாடல், ஆடலுக்கு முதன்மை தரும் பக்தி இயக்கமாகவே உள்ளது) ஞான மார்க்கம் 11. தொடக்க காலத்தில் இருந்து ஆரிய மெய்யியல் சிந் தனை வளர்ச்சியில் தென் இந்திய பிராமணருக்கு முக்கிய பங்கு இருந்தது. புத்தமத மகாயானத்தை உருவாக்கிய நாகார்ச்சுனர் காஞ்சியில் பிறந்த பிராமணனே. திந் நாக , புத்ததத்தன், தர்ம கீர்த்தி ஆகியோரும் தென்னாட்டவர்களே. பூர்வ உத்தர மீமாம்சைகளின் மீது விருத்தி எழுதிய ஒரு பெளதாயனனும் தென்னாட்டவன். தனது வேதாந்த சூத்ர 1, 1, 4 உரையில் ஆதி சங்கராச்சாரியர் " ஆசாரிய சுந்தர பாண்டியன்' வார்த்திகத்தி லிருந்து எடுத்த சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (பாண்டிநாட்டு சுந்தரன் என்பதையே அவ்வார்த்திக ஆசிரியன் பெயர் குறித்தது என்க, அவன் பாண்டிய மன்னன் அல்ல) 12. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்திய தத்துவ வளர்ச்சியில் முதன்மையாக கருதப்படும் பலரும் தென்னிந்தியாவில் தோன்றலாயினர் : சங்கராச்சாரியார், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர், நீலகண்ட சிவாசார்யர் ஆகியோர் குறிப்பிடத் தக்க வர்கள். 13. தொல்பழங்காலத்திலும் சரி, கடந்த ஆயிரம் ஆண்டு களிலும் சரி எப்பொழுதும் தென்னிந்தியா தான் இந்தியாவின் இதயமாக இருந்து வந்துள்ளது. கற்காலத் தொடக்கத்தில் தென்னிந்திய ஆற்றங்கரைப் பகுதிகளி லிருந்துதான் மனிதன் வட இந்தியாவுக்குச் சென்று குடியேறினான். இரும்பை முதலில் கண்டுபிடித்துப் பயன்படுத்தியதும் தென் இந்தியாவே. கி.மு 3000 சார்ந்த சிந்துவெளி நாகரிகச் சுவடுகளும் அண்மையில் வெளிக் கொணரப் பட்டுள்ளன. சிந்து நாகரிகத்துக்குப் பின்னர் வட இந்தியாவில் ''ஆரிய' நாகரிகம் என அழைக்கப்படும் ஒரு நாகரிகம் உருவாகி இலக்கியத் தொடர்போடு வளர்ந்தது. அந்நாகரிகப் படிமுறை வளர்ச்சியில், வரலாற்றுக் காலத்தில் வடநாட்டில் பல்வேறு வகை மெய்யியல்களும், வழிபாட்டு முறைகள், ஆன்ம வளர்ச்சி முறைகளும் உருவாயின. அவ்வாரியப் பண்பாடு தமிழகத்தில் நுழைந்த பொழுது அது வரைச் சிறந்து வழங்கிய உலகியல் சார்ந்த வாழ்வியல், இலக்கியம், பாடல் - ஆடல் சார்ந்த எளிய வழிபாட்டு முறைகள், ஆகியவற்றில் பெருமாற்றம் ஏற்பட்டது. வாழ்வில் கலைத் துறையிலும் சமயத் துறையிலும் ஏற்பட்ட பெரிய புது மாற்றங்களால் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் இரண்டும் உருவாகி இன்றுவரை ஆன்மீகத் துறையில் இந்துக்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன. ஆக அன்றும் சரி இன்றும் சரி ''இந்து' என்பதற்கான இலக் கணங்களில் பெரும்பாலானவை தென்னாட்டிற் பிறந்தன வேயாம். இந்திய வரலாற்றை உருவாக்கியதில் தமிழர்களின் இடையறாத பங்கேற்பினை உணர்ந்து ஏற்றுக் கொண்டா லொழிய சரியான இந்திய வரலாற்றை எழுத இயலாது. தென்னிந்தியா இந்தியாவில் தனிப்பட்டு ஏனோதானோ வென்று ஒதுங்கிக் கிடந்தது என்ற தவறான கணிப்பைவிட்டு விட்டு, இந்திய நாட்டின் (பாரத வர்ஷத்தின்) அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் உயிரூற்று பண்டைக் காலத்தி லிருந்து இன்றுவரைத் தென் இந்தியாவில்தான் இருந்து வந்துள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும். Bibliography (for the updating Forward of translator) Andronov, M. 1968 - Dravidian and Uralian; A peep into theprehistory of language families; Two lectures on the historicity of language families. Annamalai University. Allchin, Bridget and Raymond. 1998 The birth of civilization in India and Pakistan; Cambridge University Press. Appadurai, K.K. 1983. Kongu Tamilaka Varalaru. Arasendiran, K. 1997/2000. Ulagam Paraviya Tamilin Ver:: Kal (four Volumes), Onriya Tamilar Tholamai; Australia. Arokiaswami M. 1967. The Classical age of the Tamils. University of Madras. Aruli, P. 1985. Moliyiyal Uraikal. (5 vols) Arivan Pathippagam; Tamilur, Pondicherry. Arunachalam, M. 1974. A introduction to the history of Tamil Literature, 1980. Later evidence on Music in the Cankam period Journal of Tamil Studies. 17: June 1980; International Institute of Tamil Studies; Chennai. 1989. Musical Tradition of TamilNadu. Basham, A.L. 1951. The History and doctrines of the Ajivakas; London. 1954. The Wonder that was India; London, 1975. A Cultural History of India; London. Bloch, Jules. (1946 French Orgl), 1954 The Grammatical structure of Dravidian Languages; Deccan College, Poona. Blazek, Vaclav. 1999. Elam: a bridge between ancient Near East and Dravidian India. In Blench, Roger and Mathew sprigs (Edrs): Archaeology and Language; Vol IV: Language change and Cultural transformation. (One World Archaeology: 35); London, Routledge. Brockington, J.L. 1981. The Secred thread - Hinduism in its continuity and diversity. Brown, G.W. 1930. The possibility of a connection between Mitanni and the Dravidian languages. Journal of the American Oriental Society; 50; pp 273-305. Bryant, Edwin F and Laurie Patton (Eds) 2005 The Indo Aryan Controversy : evidence and inference in Indian History: London: Routledge Caldwell, Rev Robert. 1856. A comparative grammar of the Dravidian or the South Indian family of language. (II Edn 1875) 1881. A political and General history of Tinnevelly district. Carstairs Mc-Carthy, Andrews. (2001. The origins of language; at pp 1-18 of Mark Aronoff and another: The handbook of linguistics; Blackwell. London. Cavalli-Sforza and others (1994). The history and geography of Human genes. Princeton University Press. New Jersey. Chamanlal. 1940. Hindu America. Champakalakshmi, K. 1996. Trade, ideology and Urbanization: South India, 300 B.C. to A.D. 1300. Chellam, V.T. 1998 (Revised). Tamilaka Varalarum Panppadum; Chennai Manivasagar Pathippagam. Chitrampalam, Ci.Ka. 1999 (Revised) Pandaiya Tamilagam; Kumaran, Chenni-26. Crystal, David. 1997. The Combridge Encyclopaedia of Linguistics Dandekar,R.N.1979. Vedic Mythological tracts. Dani, A.H. and other (Edrs). 1996. History of Humanity: vol II From the III millennium to the 3rd century B.C. Routledge/ UNESCO; see pp 246-265: “The Indus valley (3000-1000 B.C.)" by B.K. Thapar and M.Rafiq Mugal. David, H.S. 1966. Suggestions to Research scholars and Lexico graphers in Tamil and Dravidology. Tamil Culture. XII Deivanayagam, K(2002) Tamilar Kattidakkalai; I.I.T.S. De Laet, S.J. and others (Edrs) History of Humanity: vol I Routledge/ UNESCO Deraniyagala, S.U. (2004) A bridge to India; Frontline: 18.6.2004 Devaneyan G. 1950. Derivation of words from the deictic source. Centamil Celvi. 24 - 7; March - April 1950 1996. The Primary Classical Language of the world. (For complete list of his works see: Devaneyan. 2004) 2004. Nostratics – the light from Tamil, according to Devaneyan. South India Saiva Siddhanta Works Publishing Society limited; Chennai – 18. Dhanda, R.C., 2001. Harappan origin of Hinduism; Hyderabad Book links Corporations. Dixon, R.M.W., 1980. The Languages of Australia; Cambridge University Press. 1997. The rise and fall of languages, Cambridge. Dolgopolsky, Aharon. The Nostratic Macro family and Linguistic Palaeontology; Cambridge - The Macdonald Institute for Archaeological Research. Ellis, Francis white, 1816. “Note to the Introduction" in A grammar of the Teloogoo Language by A.D. Campbell. Madras : Press of College of Fort St George Elmore. 1915. Dravidian Gods in Modern Hinduism; Hamilton, New York. Emeneau, Murray Barnson, 1994. Dravidian Studies – Selected papers. New Delhi; Motilal Banarsidass. Ehrenfels, U.R. (1952. "Ancient South India and her cultural contacts” Journal of the Annamalai University; Vol 17. Fairservis, Walter A. 1971. The roots of Ancient India. Fanne, Hannah. 1980. Sumerian Dravidian interconnections – the linguistic, archaeological and textual evidence; I.J.D.L. XI-2, June 1980; pp 286-305. Flemming, N.C. 2004. “Submarine prehistoric archaeology of the Indian Continental shelf: a potential resource. Current Science 86-9; pp 1225-30; 10th May 2004. Gamble, Clive (1995) Timewalkers, the prehistory of global colonization; Penquion. Garrat, G.T. (1937) The Legacy of India; OUP Gnanagiri Nadar, K.C.A. 1972. Tamil: Its contribution to European language. Gnanaprakasar, S. 1929. “The origin of language, a new theory” TheMadras Christian College Magazine: IX-4. 1932. Tamil chorpirappu Araichi 1938-48. An Etymological and comparative Lexicon of the Tamil language; Jaffna. (reprinted by ITTS, 1999) 1953. Linguistic evidence for the common origin of the Dravidians and Indo-Europeans. Tamil Culture; II-1. Goyal, S.R. (1979) paper in S.P. Gupta and K.S. Ramachandran (Edrs) The origin of Brahmi script, Delhi. Goswami, O. 1957. The story of Indian music. Greenberg, J.H. 2000. Indo-European and its closest relatives The Eurasiatic Language family. Vol I. Grammar; and II. Lexicon.; Stanford University Press, California. Grierson, G.A. Linguistic Survey of India; Vol IV: Munda and Dravidian Languages, by Sten Konow; Calcutta. Part II - pp 277-681 Dravidian. Gurumurthy, S. 1999 Deciphering the Indus script from grafficti on ancient Indian pottery; University of Madras. Hakola, Hannu Pannu, 2000. “1000 DURALJAN Etyma- an extended study in lexical similarities in the major agglutinative language. Kuopio, Finland. (2003) with co-author Hoddjat assadian: Sumerian and Proto Duraljan; Kuopio, Finland. Hanumanthan, K.R. 1979. Untouchability a historical study upto 1550 A.D. with special reference to TamilNadu; Madurai. Hart. George L. 1975. The poems of ancient Tamil, their milieu and their Sanskrit counter parts; University of California. 1999. (with co-author Hank Heifetz) The four hundred songs of war and wisdom from classical Tamil poem the Purananuru; New york; Columbia University Press. Hegdeus. Iron. et al. 1997. Indo-European, Nostratic and beyond. (Festschrift for Vitaly V.S. Shvoroshkin; Washington, Institute for the study of Man. Hellman-Rajanayagam, Dagmar. (1995). “Is there a Tamil race” in Peter Robb (Ed). The concept of race in South Asia. Heras, Rev H. (1953) Sudies in proto-Indo-Mediterranean culture. Bombay Hevitt, J.F. 1888. “Notes on the early history of Northern India" Journal of the Royal Asiatic Society; Vol XX. Hulbert, Homer B. 1905. A comparative grammar of the Korean Language and the Dravidian Languages of India. Seoul. The Methodist Publishing House. Hutton, J.H. 1961. Caste in India. Ilankumaran, R. 1993. Tamilisai Iyakkam; Manivasagar Pathippagam, Chennai. Jaiswal, Suvira. 1974. “Studies in the social structure of the early Tamils” in R.S. Sharma(Ed) Indian Society: Historical Probings in memory of D.D. Kosambi; Peoples Publishing House New Delhi. Jeeva, Purnachandra (2004) Cintu Veliyil. Muntu Tamil. Thaiyal pathippagam, Ponneri. Kanakasabhai Pillai, K. 1904. The Tamils 1800 years ago. (K. Appadorai's Tamil translation - 1956, SISSW-updates it to 1956) Kailasapathy, K. 1978. Tamil Heroic poetry. Kasinathan, Natana (1996) Mutharayar. 2006) Date of Early Tamil Epigraphs; JTS June 2004. Keay, John. 2000. India, a History; Harper Collins, London. Kosambi, D.D. 1956. An introduction to the study of Indian history. 1965. Ancient India, a history of its culture and civilization. Kothandaraman, P(1994) A comparative study of Tamil and Japanese. Krishnamurthi, Bhadriraju, 2003, The Dravidian Languages, Cambridge University Press. Krishnamurthi, R. 1997. Sangam Age Tamil coins. Krishnan, P. 1984. Tamil Noolkalil Tamil moli, Tamil inam, TamilNadu Krishnaswamy Iyengar, S. 1918. Beginnings of South Indian History. Lahovary, N. 1963. Dravidian origins and the West. Orient Longmans. Madras. Lehman, Thomas and Thomas Malten. 1993. A word Index for Sankam Literature - Institute of Asian Studies, Chemmancheri. Levin, G.M. Bongard, 1986. A Complex study of Ancient India, Lewin, Roger (2005 v Edn) Human evolution - and illustrated introduction London: Blackwell Levitt, Stephan Hillyer. 1998. “Is there a genetic relationship between Indo-European and Dravidian” The Journal of Indo-European studies Vol 26; pp 131-159. 2000. Some more possible relationships between Indo-European and Dravidian. JIES. 28; pp 407-438. 2007. A word for horse in Chinese and Dravidian. IJDL XXXvi-2 Maclean, C.D. 1885. Manual of the Administration of the Madras Presidency. Madhivanan, R. 1995. Indus Script – Dravidian. Madras; Tamil Canror Peravai. 1995. Indus Script among Dravidian speakers. Mahadevan, I.1977. The Indus script: texts, concordance and tables. Archaeological Survey of India; New Delhi. 2003. Early Tamil Epigraphy, from the earliest times to the 6th century A.D. Harvard University. Majumdar, R.C. (Ed) 1951. The Vedic Age (Vol I of the 10 Vol . History and Cultural of the Indian people. Bharatiya Vidya Bhavan. Maloney, Clarence. 1975. “Archaeology in South India: accomplishments and prospects in Burton Stein. Essays on South India. Hawai. Mallory, J.P. 1996. “The Indo-European Phenomenon: Linguistics and Archaeology" at pp 80-91 of Dani AH and others: History of Humanity: Vol II. Manickam, S. 1993 (IT Edn) Slavery in the Tamil county. C.L.S. Madras. Manickavasagam Pillai 1996. “Population of Tamilaham during the Sangam age” in Proceedings of the First International Conference-Seminar of Tamil Studies, Kualalumpur (April 1969) Marr, J.R. 1985. The eight anthologies” (1958 Ph.D. thesis). 1975. “The Early Dravidians” in A.L. Baham: A Cultural History of India. Marshall, Sir John, 1934. Mohenjodaro and The Indus Civilisation. Maraimalaiyadigal. 1903. Mullaipattu Araychiyurai; Madras. (He was then called N. Vedachalam Pillai.) 1923. Tamilar Nagarikam allatu Velalar Nagarikam. 1930. Manickavasagr Varalarum Kalamum. 1941. Tamilar Madham. Masica, Colin P. 2001. Paper in The Year Book of South Asian Languages and Linguistics. (presented at Dec 1999 Tokyo seminar on South Asian language, contact, convergence and typology); New Delhi Sage Publications. Nedunchezhian, K. 2000. Tamilar Iyankiyal. 2006. Sanga kala Tamilar Samayam. 2006. Tamilarin Adyalangal. Nelson, J. H 1868. The Madura country manual Nilakanta Sastri, K.A. 1929. The Pandyan Kingdom. 1955. (II Edn). The Colas. 1972. Sangam literature - its cults and culture. 1976. (IV Edition) A history of South India. Oliver, Georges. 1961. Anthropology des Tamoules du sud inde; Paris. Oppenheimer, Stephen (2003). The real Eve: Modern Man's Journey out of Africa. New york. Carrol and Craf. Parpola, Asko 1994. Deciphering the Indus Script: Cambridge Uty Press. Pate, H.R. 1917. The Tinnevelly Gazeteer. Piggott, Stuart, 1950. Prehistoric India down to 1000 B.C. Pillai K.K. 1955. Narrinai in its historical setting. 1996. Aryan influence in Tamilakam during the Sangam epoch. Tamil Culture XII 2-3 1969. A Social history of the Tamils. 1975. (II Edn). South India and Srilanka. 1977. The caste system in Tamil Nadu. Posschl, Gregory. 2002. The Indus civilizations, a contemporary perspective. (Reprint by Sage Publications; New Delhi) Prichard, James Cowles. 1847. Researches into the physical history of Mankind, world civilizations, races, tribes and culture; Vol V: Oceania and America. London: Sherwood, Gilbert and piper. Purnalingam Pillai, M.S. 1926. Tamil India. Purushothaman, V.P. 1989. Sanga Kala mannar Kala Nilai Varalaru. Rajan, K. 2004. Tolliyal nokkil Tamilakam, IITS; Chennai. 2005. The emergence of Early historic period in Tamil Nadu.Proceedings of Tamil Nadu History Congress; 12th Session, Mayiladuthurai. 2007. The earliest hero-stones of India. I.J.D.L., Thiruvananthapuram, XXXVI-1 Jan 2007. Ramachandra Dikshitar, V.R. 1930. Studies in Tamil Literature and history. 1947. The origin and spread of the Tamils [Tamil version, with introductory update by P. Ramanathan: 2006; Tamil Mann Pathippagam] Ramachandran, C.E. 1972. Akananuru in its historical setting. University of Madras. Ramachandran, K. 2004. Ulaga Molikalil Tamil Chorkal: SISSW Ramamurthy, V. 1986. History of Kongu; Prehistoric period to 1300 AD Raman, K.V. 1977. Pandiyar Varalaru. Tamil Nadu Text Book Society Ramanathan, P. 1967. Irunkovel and Kottai Velalar, the possible origins of a closed community. Bulletin of the School of Oriental and African Studies, University of London, xxxii-2; June 1969. 1984. Australia Palangudi makkalin molikalum Tamilum, Centamil Celvi; May 1984 1994. Dravidar Uravu murai, Tamil Polil, Thanjavur MayJune 1991. 1998. A new account of the History and culture of the Tamils; Chennai SISSW Publishing society. 1999. Cintu veli tol Tamila Nagarikam 2002. Situating Indus Valley civilizations in the prehistory of India. PILC Journal of Dravidic Studies; 12: 1-2; Pondicherry. 2003. Direction of movement of Dravidian speakers in prehistoric times, Dravidian Studies (kuppam) 1-3 April – June 2003. 2004. Original home of Dravidian speakers in prehistoric times and the history of their spread: new light from linguistics and from recent findings on the origin and spread of Homo Sapiens Sapiens Proceedings of Ilth session of Tamilnadu History Congress; Kanchipuram. 2004. Introduction to Devaneyan (2004): Nostratics the light from Tamil according to Devaneyan. 2006 Sangam literature in its historical setting: Certain aspects from a contemporary perspective Indian Historical Studies II-2; April 2006 (Paper read at Tamil Nadu History Congress 12th session, Mayiladuthurai 2005). Ramanujan, A.K. 1969. The Interior Landscape. 1985. Poems of love and war. Rangaswamy, Dorai 1968. The surnames of the Sangam Age, Literary and tribal, (1948 M.O.L. thesis). Rapson, E.J. 1992, Cambridge History of India; Vol I Rhys-Davids, T.W. 1903, Buddhist India. Samy, P.L. 1975. Tamil Ilakkiathil Thaai Theiva Valipadu; NCBH. Sathasivam A. 1965. Sumerian, A Dravidian Language. Ph.D. Thesis (Not published yet); Berkeley; University of California. Shanmugam, Kodumudi S. 1980. Kol (a basic unit 84 cm/33 inches) of the linear measurement of the ancient Tamils Journal of Tamil Studies: IITS; No 17, June 1980. Shanmugam, Pa. 2003. Sanga Kala Kasugal; IITS; Chennai. Sesha Iyengar 1925. The ancient Dravidians. Sesha Iyer, 1937. Chera Kings of the Sangam Age; London, Luzac. Singaravelu S. 1966. Social life of the Tamils. Sivaraja Pillai, K.N. 1930. Agastya in the Tamil land. 1932. The Chronology of the early Tamils. Sivathambi, Kartigesu (1986). Literary History in Tamil – a historiographical Analysis. Thanjavur. Tamil university. Sjoberg, Ms Andree F. (1990) The Dravidian contribution to the development of Indian civilisation: a call for reassessment Comparative Civilizations Review; Vol 23; pp 40-74. Slater, Gilbert 1924, The Dravidian element in Indian culture. Smith, Vincent 1958 (III Edition edited by Percival Spear) The Oxford History of India. Part I: Ancient and Hindu India, revised / rewritten by Sir Mortimer Wheeler and A.L. Basham; Oxford University Press; IV Edn 1981. Srinivasa Iyengar, M. 1913; Tamil Studies. Srinivasa Iyengar, P.T. 1913. The myth of the Aryan Invasion of India, indian Antiquary, 42, pp 77-88. 1913, July: Note on a reading in Kumarila Bhatta's Tantra Varttika [correcting as “Tadyatha dravidadibhashayam eva" the blundering reading “Andhradravidabhasayam” given by A.C. Burnell in Indian Antiquary Vol I, 1872] Indian Antiquary 42, pp 200-1. 1912. Life in Ancient India in the Age of the Mantras. 1924. The past in the present. 1927. The Stone age in India. 1929. History of the Tamils form the earliest times to 600 AD. 1942. Advanced history of India - Hindu Period (till 900 A.D. 2007 reprint) Stein, Burton, 1998. A History of India; Blackwell, Oxford. Steve-Jones, et al. (1992) The Cambridge Encyclopaedia of Human population. Steever, Sanford, 1998. The Dravidian Languages, London, Routledge. Subrahmanian, N 1966/1980. Sangam Polity. 1966. Pre-Pallavan Tamil Index 1989. The Brahmin in the Tamil country. 1997. Tamil Social history Vol I. 1998. (VI Edn) History of TamilNadu to AD 1565 Subramanian, T.N. 1938. Pandai Tamil Eluttukal. Subramania Pillai, Ka. 1927 Ancient Tamil scriptures. The Madras Christian College Magazine (Quarterly Series) Vol. VII Jan 1927 pp 7-12. (later expanded in Centamil Celvi, 1929. and reprinted in 1989 as “Thirunanmarai Vilakkam" by “Tamil Ka. Su Memorial Literary Assn” Kulittalai. 1939 Moli Nool Kolkaiyum Tamil moli amaippum. 1940. Thamilar Samayam. Suriyanarayanan, L. 1998. Tamil Nattu Varalarril Ilakkiya Adharangal, ITTS. Sykes, Bryan. 1999. The Human inheritance: genes, language and evolution; OUP. See pp 1-32: Colin Renfrew-Reflections on the archeology of linguistic diversity. Tamilannal. 1985. Puthiya Nokkil Tamil Ilakkiya Varalaru. Madurai 2004. Ulagat Tamil Ilakkiya Varalaru – thonmai mutal ki.p. 500 varai; International Institute of Tamil Studies. Chennai Szalek, Benon Zbigniew. 1998. “Linguistic evidence for the prehistoric Eurasian empire of “3 races (Dravidian, Basque, Japanese) and 1 Language” Journal of Oriental Institute, Baroda; XL VII; 3-4 March-June 1998. Tamilaha Arasu Varalarru Kuzhu 1972. Tamil Naattu Varalaru - Tolpalankalam. 1983. Tamil Nattu Varalaru – Sanga Kalam, Araciyal and Vaalviyal (two vols). Thangavelu, K. 2002. Thaai Nila Varalaru; Tamil Mann Pathippagam. ThaniNayagam, Xavier S. Nature in ancient Tamil poetry, reprinted in 1996 as Landscape and poetry. 1964. Tamil culture and civilization - Readings. Thapar, Romila. 2002. Early India from the origins to AD 1300. University of California Press / Penguin. Thirunavukkaracu, Ka. Tha. 1972. “Inamarapu” at pp 51-136 of Tamil Nattu Varalaru – Tolpalankalam. 1987. Thenkilakku Asia nadukalil Tamil Panpadu; IITS. Trautmann, Thomas R. Dravidian Kinship; Cambridge University Press. Tyler. S.A. 1973. India, 'an Anthropological perspective. Upadhyaya U.P. and Susheela P. Upadhyaya. 1981. New dimensions of the Dravidian problem - Negro - Dravidian affinities. Fifth International Conference – Seiminar of Tamil Studies, Madurai, Proceedings. Vacek, Jaroslav. 2006. Dravidian and Altaic – in search of a new paradigm. Archive Orientalni. 72 (pp 382-453). Vaiyapuri Pillai 1956. History of Tamil language and literature. Varadarajan, Mu. 1972. Tamil Ilakkiya Varalaru. Venkatachalam, Chengam K. 1993. A study of the weights and measures of the Indus Valley civilizations. (Tamil University Seminar paper) Venkatasubramaniyan, T.K. 1988. Environment and urbanization in early Tamilagam; Tamil University, Thanjavur. Venkataswami, Mayilai Seeni 1940. Bauddhamum Tamilum. (Third revised edition 1957) 1954. Samanamum Tamilum. 1956. Tamilar Valartha Alagu Kalaigal. 1970. Sanga kala varalarril cila ceythigal. 1974. Palangkala Tamilar Vanigam; NCBH. 1974. Kalappirar Atchiyil Tamilagam. 1981. Sanga Kalathiya Brahmi kalvettugal. Venkataswami Nattar.N.M. 1932. Cholar Varalaru Vijayalakshmi, R. 1988. Tamilgathil Ajivakarkal; IITS, Chennai. Vithiananthan, Cu. 1971. Tamilar Caalpu. Warmington, E.H. 1928. Commerce between the Roman Empire and India. Wheeler, Sir Mortimer, 1968. The Indus Civilisation; Cambridge. Whitehead. 1916. The village Gods of South India; OUP. Wilden. Eva. 2002. Towards an internal chronology of old Sangam literature OR how to trace the laws of a poetic universe. Wienn Zeitschrfit Morganlandisch Gescelschaft. (Vienna Journal of Oriental Studies) Austria. Wolpert, Stanley. 1982. A new history of India. 1991. An introduction to India. Zimmer, Herinrich (1951) Philosophies of India. Zvelebil, Kamil. V. 1972. “The descent of Dravidians International Journal of Dravidian Linguistics. I-1 pp 57-63. 1973. The smile of Murugan, On Tamil literature of South India E.J. Brill, Leyden. 1974. Tamil literature, Otto Harassowitz, Weisbaden. 1975. Tamil Literature, E.J. Brill, Leyden. 1986. Literary conventions of Akam poetry, Institue of Asian Studies, Chemmancheri. 1990. Dravidian linguistics – an introduction. 1991. Comments on the Tholkappiyam theory of literature, Archiv Orientalni, 59; 345-359. 1992. Companion Studies to History of Tamil Literature. E.J. Brill. 1995. A Lexicon of Tamil literature.E.J.Brill. ' .