தமிழர் வரலாறு இன்றைய நோக்கில் (பண்டு முதல் இன்று வரை) பி. இராமநாதன் க.மு; ச.இ. தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழர் வரலாறு இன்றைய நோக்கில்(பண்டு முதல் இன்று வரை) ஆசிரியர் : பி.இராமநாதன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2014 தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14 + 290 = 304 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 190 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் வடபழனி, சென்னை - 26 வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நூலாசிரியரின் முன்னுரை தமிழ், தமிழரின் தொன்மை, முன்மை, தென்மை ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான மறுக்கொணாத சான்றுகள் கடந்த இருபது-முப்பது ஆண்டுகளில் மாந்தஇனத் தோற்றமும் பரவலும் சார்ந்த ஆய்வுகள், மாந்தமரபணுவியல்; நாஸ்திராதிக் / யூரேசியாடிக் மற்றும் ஞால முதன்மொழி ஆய்வுகள், தொல்லியல் அகழாய்வுகள் போன்ற பல துறைகளிலும் கிடைத்துள்ளன. அவற்றை யெல்லாம் உட்கொண்டு எழுதப்பட்ட தமிழர், தமிழக வரலாற்று நூல் இது. இந்நூலின் முதல் மூன்று இயல்களில் இவ்விவரங்களைக் காணலாம். ஆங்காங்கு தேவையான நிலப்படங்களும் விவரப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2. இயல் 1இல் “வரலாறு என்பது என்ன?” என்னும் இரண்டாம் பகுதியில் தொகுத்துள்ள பேரறிஞர் பலரின் கருத்துகள் இந்நூலை மட்டுமல்ல, எந்த வரலாற்று நூலைப் படிப்பவர்களும் மனதிற் கொள்ள வேண்டியவை ஆகும். 3. சங்க காலம் தொடங்கி இன்று வரை உள்ள காலத்தின் வரலாறு பற்றியவை இயல்கள் 4-10 ஆகும். அவற்றிலும் புதிய செய்திகளையும் கருத்துகளையும் காணலாம். 4. ஆய்வாளர்கள், அறிஞர்கள் கருத்துகள் ஆங்காங்கே அவர்கள் சொன்னவாறே தரப்பட்டுள்ளன. - - படிப்பவர் நன்மை கருதி. முதன்மையான கருத்துகளின் ஆங்கில மூலமும் தரப்பட்டுள்ளது (எ.கா: தமிழின் செம்மொழிச் சிறப்பு பற்றிய அறிஞர் கூற்றுகள்; அவை பிறமொழியாளருக்கும் தெரிவிக்க வேண்டியவையாகலின். எளிதில் ஓரிடத்தில் கிட்டாத ஆங்கில மூலங்களைத் தேடாமல், இப்புத்தகத்திலிருந்தே எடுத்துத் தர வகை செய்துள்ளது நல்லது தானே). முதன்மையான பார்வை நூல்கள், கட்டுரைகளின் பட்டியல் அந்தந்த இயலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. அந்நூல்கள் கட்டுரைகளின் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களுடைய அறிவாற்றலும் உழைப்பும் இன்றேல் இந்நூல் ஏது? 5. (i) ஏற்கெனவே எனது பின்வரும் வரலாற்று நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது: 1998. A new account of the history and culture of the Tamils 1999. சிந்துவெளித் தொல்தமிழ நாகரிகம் தமிழ், தமிழர் வரலாறு பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆய்விதழ்களில் 1969இல் இருந்து வெளியிட்டு வந்துள்ளேன். 1977-81இல் தேவநேயப் பாவாணர் செந்தமிழ்ச்செல்வி இதழில் வெளியிட்ட “தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள்” என்னும் கட்டுரைத் தொடரின் (140 பக்க) ஆங்கில மொழிபெயர்ப்பை Nostratics - the light from Tamil according to Devaneyan எனது (60 பக்க) முன்னுரையுடன் கழகம் 2004இல் வெளியிட்டது. இவ்வகையில் என்னை ஊக்குவித்த கழக ஆட்சியாளர் இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கு நன்றி. (ii) தமிழர் வரலாறு சார்ந்த பின்வரும் நூல்களின் எனது தமிழாக்கத்தை (இன்றைய நிலையைக் காட்டும் எனது முன்னுரைகளுடன் updating forward) தமிழ்மண் பதிப்பகத்தார் வெளியிட்டு எனக்கு ஊக்கம் அளித்தனர். 1. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் 1947. The origin and spead of the Tamils (தமிழரின் தோற்றமும் பரவலும் 2006). 2. அலெக்சாந்தர் காந்திரதாவ் 1974 The riddles of the three occans நூலின் இரண்டாம் பகுதி (இந்து மாக்கடல்) மட்டும் (தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும். 2006) 3. பி.டி. சீனிவாச ஐயங்கார் 1929. History of the Tamils from the earliest times to 600 AD (தமிழர் வரலாறு - கி.பி. 600 வரை. 2007) “தொன்மைச் செம்மொழி தமிழ்” என்னும் எனது நூலையும் தமிழ்மண் பதிப்பகமே 2007-இல் வெளியிட்டது. இப்பொழுது இந்தப் புத்தகத்தையும் எழுதி வெளியிட முடிந்தது தமிழ்மண் பதிப்பக கோ. இளவழகனார் அவர்கள் என்னை இடைவிடாது ஊக்குவித்து வந்ததனால்தான். அவருக்கு என்றும் நன்றியுடையேன். பதிப்புரை தமிழரின் வரலாறு தனிச்சிறப்புள்ளது; மாந்தர் வரலாற்றொடும் மொழி வரலாற்றொடும் இந்திய வரலாற்றொடும் தொடர்புடையது. பல்வேறு துறைகளிலும் (புவியியல், மாந்தவியல், மாந்த மரபணுவியல், மொழியியல், குமூகவியல், தொல்லியல், தொல்லெழுத்தியல், வரலாறு, வரலாற்று வரைவியல், அரசியல், பொருளாதாரம், இலக்கியத் திறனாய்வு போன்றவை) இன்று பன்னாட்டு நல்லறிஞர் பொதுவாக ஏற்றுள்ள கருத்தோட்டங்களை – ஏராளமான பல்துறைக்கருவி நூல்கள், கட்டுரைகளைச் செவ்வனே உள்வாங்கி -- எழுதப்பட்டுள்ள இந்நூலின் பாங்கை அதை மேம்போக்காகப் பார்ப்பவர்களும் உணர்வர். தேவையான இடங்களில் எல்லாம் சான்றுகள் அந்தந்தத் துறையின் இன்றைய அறிஞர் கூறியவாறே தரப்பட்டுள்ளன. இயல்களின் இறுதியில் ஆதார நூற்பட்டியல்கள் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. 2. இதுவரை இத்தகைய பிற நூல்களில் காணப்பெறாத கருத்துகளைப் பொறுத்தவரை ஆங்கில மூலங்களும் தரப்பட்டுள்ளன-- படிப்போர் நன்மை கருதியும், தமிழறியாதாரிடம் தேவைப்பட்டால் அக்கருத்துக்களைச் சாற்றிட ஏந்தாகவும். ஆங்கில மொழி மரபு வேறு; தமிழ்மொழி மரபு வேறு; முன்னதிலிருந்து பின்னதற்கு மொழி பெயர்க்கும் பொழுது அதனதன் மரபு வழக்கு, மொழியியல் தன்மை, நுணுக்கங்கள், (idiom, genius and nuances) ஆகியவற்றை உணர்ந்து, பொருள் மாறாமல், இயல்பான தமிழில் - சொல்லுக்குச் சொல் என்று இல்லாமல் - திறம்படமொழிமாற்றம் செய்வதற்கு இத்தகைய இருமொழி வாசகங்கள் எடுத்துக்காட்டாக அமைவதைக் காணலாம். 3. இந்நூலிற் கண்டனவற்றுள் சில பற்றிச் சுருக்கமாக இப்பதிப்புரையில் கூறுவது பொருத்தமாகும்:- இயல். 1 :- தமிழர் தமிழகத்தின் (ஏன் தென்னிந்தியாவின், இந்தியாவின்) தொல்குடிகள்; அவர்களின் தொன்மை தென்னாட்டிலும் இந்தியாவிலும் இற்றைக்கு 50000 ஆண்டுகட்கு முன்னர்ச் செல்கிறது என்பது மாந்த மரபணு அறிவியலின் தேற்றமான , உறுதியான இன்றைய முடிவு ஆகும். ஞால முதன்மொழிக்கு மிக நெருங்கியதாகிய தமிழின் தொன்மைகி.மு. 10000க்கும் முன்னர்ப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம் (வேத மொழியும், சமற்கிருதமும் இக்குடும்பக் குழந்தைகள்), உரால்-அல்தாயிக் மொழிக் குடும்பம் (சப்பானியம், கொரியம் உட்பட), ஆத்திரேலியப் பழங்குடி மொழிக் குடும்பம் [50000 ஆண்டுகளாக ஆத்திரேலியாவில் உள்ளவை; கடந்த 10000 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளுடன் யாதொரு தொடர்பும் அற்றவை; ஆயினும் இன்றும் தமிழோடு வியத்தகு ஒற்றுமையுடையவை.] ஐரோப்பாவில் இந்தோ ஐரோப்பிய மொழிகள் பரவுவதற்கு முன்னர் அங்கு வழங்கிய பாஸ்கு-- ஆகிய மொழிக்குடும்பங்களுக்கெல்லாம் தாயாக இன்றைய பன்னாட்டு மொழியியலறிஞர் உன்னித்துள்ள நாசுதிராதிக் /யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பத்தை (Macro family) ஒத்த அல்லது விஞ்சிய தொன்மையுடையது தமிழ். அம்மொழிக் குடும்பங்களிடையே உள்ள தொடர்புகளை வேர்சொல்லாய்வுகள், மொழியமைப்பு, இலக்கணத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விளக்க வேண்டுமாயின் தமிழுக்குத்தான் வந்தாக வேண்டும்; இது அன்றே கால்டுவெல் பெருமகனாரும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும் நிறுவியதுதான். (ஹால், ஹீராஸ், ஞானப்பிரகாசர், மறைமலையடிகள், இல்லிச் சுவிதிச், கீரின்பெர்கு, மெரிட்ரூலன், தால்கோ பாஸ்கி, அந்திரனாவ், சுவெலபில், வாக்லாவ் பிலாசக், ஜான் பெங்ட்சன், லெவிட், ஹகோலா) இயல் 2: சிந்து நாகரிகம் தொடக்கம்: கிமு.7000; உயர்நிலை : கி.மு.3000- 1500 அந்நாகரிக மொழி, எழுத்து வடிவம் ஆகியவை தமிழியம் சார்ந்தவை என்பதை இன்று பன்னாட்டு நல்லறிஞர் திட்டவட்டமாக ஏற்றுள்ளனர். (மார்ஷல், வீலர், ஹீராஸ், காந்திரதாவ், பர்போலா, மகாதேவன், மதிவாணன், பூர்ணசந்திர ஜீவா, குருவிக்கரம்பை வேலு). தமிழிய மொழியும் நாகரிகமும் தென்னிந்தியாவில் இருந்து வடக்கு நோக்கிப் பரவியபொழுது முதலில்தோன்றியது சிந்து நாகரிகம். இயல்கள் 3, 4: இன்று நமக்குக் கிட்டியுள்ள (கி.மு.500 - - கி.பி.300 சார்ந்த) சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட காலத்திய தமிழ் நூல்கள் பல இருந்து அவை (வேண்டு மென்றே) தொகுக்கப்படாமல் அழியவிடப்பட்டிருக்கலாம். (கோவர், நெவில், ஸ்பியர்ஸ்) இலங்கையில் கிடைத்துள்ள கி.மு.700-ஐ ஒட்டிய தமிழிப் பொறிப்புகளையும் (முனைவர் தெரனியாகல), ஆதிச்சநல்லூர், கொற்கைத் (கி.மு.1000-800 சார்ந்த) தமிழிப் பொறிப்புகளையும் கணக்கிற் கொண்டால் - இரா.மதிவாணன் உன்னிப்பதுபோல் -- கி.மு.1500க்குப் பின்னர் சிந்து எழுத்துக்களில் இருந்து, இடையீடின்றித் தென்னாட்டில் தமிழி எழுத்துருவம் (லிபி) உருவாக்கப் பட்டிருக்கலாம். சங்க இலக்கியங்கள் எத்தகைய சிறந்த செம்மொழிக் கருவூலங்களாக உள்ளன என்று பன்னாட்டுறிஞர் பகர்ந்துள்ளவற்றை இயல் 4லின் ஆறாம் பகுதியில் காண்க. (தமிழின், தமிழரின் பொற்காலம் சங்க காலமே ஆகையால் இந்நூலில் பாதி கி.பி.300 வரையுள்ள காலம் பற்றியதாகவே உள்ளது பொருத்தமே.) இயல்கள் 5-8: இவற்றில் களப்பிரர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் முடிய (கி.பி.300-1350) வுள்ள காலம் சார்ந்த வரலாறுசுருக்கமாகத் தரப்படுகிறது; வெறும் அரசர் பட்டியல்கள், ஆட்சிக் காலங்கள், தமிழ் அரசர்களே ஒருவரையொருவர் தாக்கிப் பெற்ற வெற்றிகள் போன்றவற்றை விடக் குமுகாய, பண்பாட்டுச் செய்திகளுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. தமிழ்நாடும் (ஏன், இந்தியாவும்) கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வீழ்ச்சிப்பாதையிலேயே இருந்த தற்குக் காரணம், ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ் செல்வம் உற்றக் கடை. என்னும் குறள் கூறுவதேயாம் என்று பொருள்பட நுண்மாணுழைபுலமிக்க ஸ்டான்லி வால்பர்ட் (1991) விளம்புவதை, இயல் 8இன் இறுதியில் காண்க; உண்மைத் தமிழர் உளங் கொள்க; உய்க. இயல்கள் 9-10 ; பிற்காலப்பாண்டியர் ஆட்சி முடிந்து. ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியது வரையுள்ள காலமாகிய கி.பி. 1350 - 1750 பற்றியது இயல் 9; 1750 லிருந்து இன்றுவரை உள்ள காலம் பற்றியது இயல் 10. 1991-லிருந்து தமிழ் நாட்டுக்கும் நம் இந்திய நாட்டுக்கும் (ஏனைய ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைப் போல) பெருங்கேடாக வந்துள்ள வெள்ளைக்கும்பினியர் பொருளாதாரக் காலனி ஆதிக்கம் (1947க்கு முந்தைய) அரசியல் காலனி ஆதிக்கத்தை விடக் கொடுமையானது; அந்நாடுகளின் மக்களில் முக்கால் பகுதியினரான ஏழைகளை முற்றாக ஒழிப்பது; என்பதை இயல் 10 விளக்குகிறது. தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளின் பாதுகாப்பும் இந்த புதுக்காலனி ஆதிக்கத்தி லிருந்து நம்நாடு உய்வதில்தான் உள்ளது என்பதும் தெளிவாக்கப்படுகிறது. 4. இந்நூலைப் படிக்கும்பொழுது, அவ்வப்பொழுது இயல் 1, இரண்டாம் பகுதியில் வரலாறு என்பது என்ன ? என்ற பகுதியில் வரும் பேரறிஞர் கூற்றுகளைப் பார்த்தால் பல வரலாற்று நிகழ்ச்சிகள் சார்ந்த, ஏன்?, எப்படி?, யாருக்காக? என்ற வினாக்களுக்கான விடைகளைப் படிப்பவர்களே உணரமுடியும். 5. நூல் இறுதியில் 20 பக்கங்களில் உள்ள பட்டியலில் கி.மு 15000லிருந்து இன்றுவரை தமிழர் வரலாற்றில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின்சமகாலத்தில் இந்தியாவிலும், உலகின் பிறபகுதிகளிலும் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்; மற்றும் கலை, அறிவியல் சார் நிகழ்ச்சிகளின் பட்டியல்கள் தரப்பட்டுள்ளன. இப்பட்டியல்களிலிருந்து ஒரு பரந்த, முழுமையான வரலாற்று கண்ணோட்டம் கிட்டும். 6. இந்நூலை உருவாக்கித் தந்த பி. இராமநாதன் அவர்கள் ஆங்கிலம் - தமிழ் இருமொழிகளிலும் வல்லவர். வரலாற்றாய்விலும், மொழியாய்விலும் ஆழங்கால் பட்டவர். மொழிநூல் கதிரவன் தேவநேயரின் வழிநிலை ஆய்வாளர். தமிழ்ப்புலங்களில் தம் பங்களிப்பை இடைவிடாது செய்து வருபவர். ஆழ்ந்த அறிவும், எளிமையும், பண்பும் உடைய இவருடைய நூல்களை கடந்த காலங்களில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்கியதைப் போல இந்நூலையும் வெளியிட்டு எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்கிறோம். இது ஒரு கருவி நூல்; ஒரு ஆய்வு நூல். சிறப்புமிக்க இவ்வரலாற்று நூலை வாங்கி எம் தமிழ்ப் பணிக்கு ஊக்கம் தர வேண்டுகிறோம். பதிப்பாளர் பொருளடக்கம் நூலாசிரியர் முன்னுரை ....................................................................................................iii பதிப்புரை ........................................................................................................................iv 1. தோற்றுவாய் ................................................................................................................1 தமிழக வரலாற்றின் தனித்தன்மை ....................................................................................1 வரலாறு என்பது என்ன? ..................................................................................................3 மாந்த இனத்தோற்றமும் பரவலும் ..................................................................................13 மொழியின் தோற்றமும் பரவலும் ...................................................................................27 தொல் திராவிட மொழி பேசுநர் பரவியது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே யாகும்; தமிழர் இந்தியாவின் தொல்குடிகள் .................................................36 2. சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம் ...........................................................................48 திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியில் உருவாகிய சிந்துவெளி நாகரிகம் ...................................................................48 சிந்துவெளி நாகரிக எழுத்துகள் தமிழிய மொழியாகப் படித்தவையே என்பதும்; தமிழ்வரிவடிவம் சிந்துவெளி வரிவடித்திலிருந்தே உருவாகியிருக்கலாம் என்பதும் ......................................................56 3. வரலாற்றுக் காலத்துக்கு (சங்க காலத்துக்கு) முந்தைய Protohistoric காலத் தமிழக வரலாறு (கி.மு. 1000 - கி.மு. 300) ................................................................................................61 4. சங்ககாலம் .................................................................................................................65 சங்க காலத்தில் தமிழக மொத்த மக்கள் தொகை மதிப்பீடு ..............................................65 சங்ககாலத் தமிழக வரலாறு (கி.மு. 300 - கி.பி. 300) .......................................................68 சங்ககாலத் தமிழர் வாணிகம் ..........................................................................................89 சமுதாயமும் பண்பாடும் ..................................................................................................96 சமயம், மெய்யியல் .......................................................................................................110 சங்க இலக்கியங்கள் .....................................................................................................123 5. களப்பிரர் காலத் தமிழகம் (கி.பி. 300-600) ...............................................................162 6. பாண்டியர் - பல்லவர் ஆட்சி கி.பி.7-9 நூற்றாண்டுகள்..............................................172 7. பிற்காலச் சோழர் வரலாறு கி.பி. 10-12 நூற்றாண்டுகள்...........................................186 8. பிற்காலப் பாண்டியர் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) ....................................................210 9. பாண்டியர் ஆட்சி முடிந்தபின் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கும்வரை (1350-1750)………………………………………………………………216 10. ஆங்கிலேயர் ஆட்சியும் பின்னரும் (1750லிருந்து இன்றுவரை)..................................................................................................................233 முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளின் அட்டவணை: தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும்...............................................................................268 தமிழர் வரலாறு இன்றைய நோக்கில் (பண்டு முதல் இன்று வரை) இயல் 1 தோற்றுவாய் க. தமிழக வரலாற்றின் தனித் தன்மை தமிழர்கள் உலகில் இன்றுள்ள மற்ற எந்த மொழி, பண்பாட்டையும் விட அதிகத் தொன்மையானதும் இடையீடு இல்லாததும் ஆன மொழி, பண்பாட்டின் பிறங்கடைகள் ஆவர். மாந்த இன நாகரிக வளர்ச்சியின் மிகச் சிறந்த இயல்களில் ஒன்று தமிழர் மரபுச் செல்வம் ஆகும். இன்றுள்ள மொழிகளில் மாந்தன் தொன்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ் மட்டுமே. “முதல் தாய்மொழி” ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்கு ஒளி தரவல்லதும் தமிழே. ஒரு சிறு நிலப்பரப்பின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள இப்படி மாந்த இனத்தின் ஒட்டுமொத்த இன, மொழி வரலாறுகளுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ள (தமிழகம் போன்ற) பகுதிகள் உலகில் மிகச் சிலவே; தமிழ் தனித் தன்மை வாய்ந்தது. எஸ்.ஏ.டைலர் கூறியுள்ளது போல் இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி – பண்பாடு ஆகியவையே (S.A. Tyler. “India, an Anthropological perspective (1973) “All of Indian civilization is built on an underlying base of Dravidian language and culture”) “இந்திய வரலாற்று ஆய்வு களுக்கும் தமிழ் சார்ந்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. 2. தமிழ் என்னும் சொல்லின் திரிபே திராவிடம் (தமிழ், தமிள, த்ரமிள, த்ராமிட, த்ராவிட). திராவிட மொழிக் குடும்பம் என அழைப்பது தமிழிய மொழிக் குடும்பத்தையே. தொல் திராவிடம் (Proto-Dravidian)என்று வண்ணனை மொழி நூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றன என்பதும், பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்பட வேண்டும் என்பதும், பாவாணர் கொள்கை. தமிழின் திரிபுகளே பிற திராவிட மொழிகள். பழந் தமிழினின்றும் வேறுபட்ட “தொல் திராவிடம்” என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே இந்நூலுள் திராவிடம், தொல் திராவிடம் எனக் குறிப்பிடப்படுவனவெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாகக் கொள்க. 3. மொழியியலில் தமிழிய (Tamulian) மொழிக்குடும்பம் என்றே கால்டுவெல் காலம் வரை வழங்கிய பெயரை அவர் தான் “திராவிட” மொழிக் குடும்பம் என மாற்றி வழங்கினார். தமிழ் என்பதன் கொச்சைத் திரிபு வடிவமே திராவிடம் என்பதாகும். மகாவம்சத்தில் “தமிள”, தண்டின் எழுதிய அவந்தி சுந்தரிகதையில்“த்ரமிள’ என்ற சொல்லும் வருகின்றன. இக்ஷ்வாகு பரம்பரையினரின் பிராகிருதக் கல்வெட்டிலும் ‘தமிள’ தான் வருகிறது. பின்னர் குமாரிலபட்டரின் தந்திர வார்த்திகத்தில் “தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ” (அப்படி திராவிட (=தமிழ்) மற்றும் பிறமொழிகளில்) என்னும் இடத்தில் தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-த்ராவிட என்று மாறிவிட்டது. ஏ.சி.பர்னெல் 1872 இந்தியன் ஆன்டிகுவாரி முதல் தொகுதியில் மேற்கண்ட தந்திர வார்த்திகப் பகுதியை அச்சிட்டபொழுது அபத்தமாக “ஆந்த்ர த்ராவிட பாஷாயம் ஏவ” என்று அச்சிட்டார் (மேலும் பற்பல பிழைகளுடன்). இந்தத் தவறான வாசகத்தை கால்டுவெல் (1875) ஸ்டென் கோனோ [Linguistic Survey of India:1906] போன்றோர் பின்பற்றினர். இத்தவறை பி.டி. சீனிவாசஐயங்கார் இந்தியன் ஆன்டிகுவாரி 42ம் தொகுதியில் (1913) தெள்ளத் தெளிவாக நிறுவியுள்ளார். குஞ்ஞஜுண்ணிராஜா Annals of Oriental Researchதொகுதி 28 (1979) கட்டுரையில் குறித்துள்ளது போல பர்னெல் உடைய தவறான வாசகத்தைத் தமிழறிஞர் பலரும் இன்றும் பின்பற்றி “தமிழையும், தெலுங்கையும் ஒருசேரக் குமாரிலபட்டர் குறித்தார்” என்று தவறாக எழுதிவருகின்றனர்! 4. தமிழ், தமிழர் வரலாற்றைச் செவ்வனே அறிய மாந்தர் இனத் தோற்றமும் பரவலும்; மொழியின் தோற்றமும் பரவலும் பற்றி இன்றைய பன்னாட்டுப் பல்துறை அறிஞர் ஏற்றுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. (முதலில் “வரலாறு” பற்றி அறிஞர் பலர் கருத்துக்களைத் தந்த பின்னர் அச்செய்திகளைக் காணலாம்.) உ. வரலாறு என்பது என்ன? வரலாறு பற்றிய அறிஞர்களின் சிறந்த கருத்துகளைப் பொதுவாக அனைவருமே தெரிந்திருப்பது நன்று. அவற்றுள் முதன்மையான சிலவற்றைக் காண்க. “முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப் பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தன் ஒருவன் தனது மனத்தில் உருவாக்கிக் கொள்ளும் எண்ணமே வரலாறு ஆகும். எழுதுபவனுடைய அறிவுநிலை, மனநிலை, அவனுடைய சமுதாயப் பார்வை, அவனுக்குக் கிட்டும் ஆதாரங்கள் ஆகியவற்றுக்கேற்பவே ஒரு காலத்தைப்பற்றி அல்லது ஒரு பொருளைப்பற்றி ஒருவன் வரலாறு எழுதுகிறான். எனவே ஒவ்வொரு காலம், பொருள் பற்றி பல்வேறு வரலாறுகள் இருக்கக் கூடியதே.” “வரலாற்றாசிரியன் பட்டறிவு, பற்பல விஷயங்களைப் பற்றிய அவனுடைய கண்ணோட்டம் ஆகியவற்றால் உருவான அவனுடைய மனம்தான் அவன் எப்படி வரலாற்றை எழுது கிறான் என்பதை நிர்ணயிக்கிறது; விருப்பு வெறுப்பற்ற வரலாற்றாசிரியன் முயற்கொம்புதான். எனவே எந்த வர லாற்று நூலும் முழுமையான அப்பட்டமான உண்மையைக் கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் நிர்ணயித்து விட்டதாக எண்ணிவிடக் கூடாது.” - காரி பெக்மான். “வரலாற்றாசிரியன் அல்லது அவனைப் பயன்படுத்து பவர்கள் உள்ளத்தில் வெளிப்படையாகவோ (அல்லது அவர் களுக்கே தெரியாமல் ஆழ்மனத்திலோ) உள்ள குறிக்கோள் களுடன்தான் வரலாறு எழுதப்படுகிறது. அக்குறிக்கோள்கள் பிற இனங்களை, குழுக்களைக் கட்டுப்படுத்துதலும் வசப்படுத்துதலும்; சமுதாயத்திற்கு இலக்குகளைக் காட்டி ஊக்கு வித் த ல் ; குழுக் கள், வ ர் க் கங் களுக் கு உணர் ச் சி யூட்டு தல் , அதிகாரத்தை ஏற்கெனவே கையிற் கொண்டுள்ளவர்களுக்கு வலுவூட்டுதல்; அதிகாரமில்லாதவர்களிடையே இப்பொழுதுள்ள நிலைமையே சரி என்னும் பொந்திகை மனநிலையை ஏற்படுத்துதல் போன்றனவாம்.” - ஜே.எச். பிளம்ப் மாந்த இனம் செய்த கொடுமைகள், அதன் மூடத்தனங்கள், அதற்கு ஏற்பட்ட தீயூழ் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் பதிவே வரலாறு. - சர் எட்வர்ட் கிப்பன் (எப்பொழுதும் தீமையே ஓங்கியிருப்பதான) இந்த உலகில் நடப்பவை நியாயமானவை என எந்த மூடனும் நம்பமாட்டான். - டாக்டர் ஜான்சன் “வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை; மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று” - வில் & ஏரியல் டுரான்ட் “ஆளுபவர்கள், அரசுகள் சார்பாக எழுதப்படும் வரலாறுகளை நம்புவது கொலைகாரன் சொல்வதை அப்படியே நம்புவது போல.” - சைமன் வைல் “செவிவழிச் செய்தி பொய்யாக இருக்கும் அளவுக்கு, எழுதியவையும் கல்வெட்டு போன்றவற்றில் செதுக்கியவையும் புளுகாக இருக்கலாம்” “பாசில் படிவங்கள் உயிரின வரலாறுகளைத் தெரிவிக் கின்றன. அதுபோல் ஒரு இனத்தின் மொழியில் உள்ள சொற்களும் அவ்வினத்தின் வரலாற்றை (குறிப்பாக அம்மொழி பேசுநர் பண்டைக் காலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் அவ்வப்பொழுது வசித்து வந்தனர் என்பதை) தெரிவிக்கவல்லது. - ஜான் பிரேசர் 1879 “வருங்காலத்தில் என்ன நடக்கும் எனக் கூறத் தேவையான அறிவை விட, பண்டு என்ன நடந்திருக்கும் என உன்னிக்கத் தேவையான அறிவு மிக நுட்பமானது” அனதோல் பிரான்சு. “தெருவில் கம்பத்தின் உச்சியில் விளக்கு இருக்கிறது - அனைவரும் ஒளி பெறுவதற்காக. ஆயினும் குடிகாரன் செய்வது என்ன? கம்பத்தைப் பிடித்துக் கொண்டு, தான் தரையில் விழுந்து புரளாமல் பார்த்துக் கொள்கிறான். வரலாற்று ஆசிரியர்கள் புள்ளி விவரங்களைப் பயன்படுத்துவது குடிகாரன் செயல் போல் இருக்கக் கூடாது.” “வரலாறு எழுதுவதற்கான சான்றுகள் மிகக் குறைவாக இருக்கும் பொழுது நாம் மனதிற்கொள்ள வேண்டியது என்ன? வரலாற்று நிகழ்ச்சியை விளக்கப்போவது திட்டவட்டமான சட்டவிதி ஒன்றின் கீழ்த் தீர்ப்பு வழங்குவது போன்றது அல்ல. வரலாற்று நிகழ்ச்சி எதுவாயினும் அப்பட்டமாக இதுதான் நடந்தது என்று நிறுவிட யாராலும் இயலாது. எனவே கிடைத்த சான்றுகளுடன், நியாயமான உன்னிப்புக்கும் இடமளித்துத் தான் வரலாற்று நிகழ்ச்சியைப் பற்றி எழுத இயலும். -W.W. ஹைடு “வரலாற்று நிகழ்வு ஒன்று குறித்து இன்றுவரை நெடுநாளாக ஒரு பொதுவான முடிவு கோலோச்சி வரலாம். எனினும் அம்முடிவில் உள்ள தவறுகளை நிறுவ ஆதாரம் இருக்குமானால் அவ்வாதாரங்களை வலியுறுத்த அஞ்சக் கூடாது, பழைய முடிவை மாற்றி (பொந்திகை தரக்கூடிய) புதுமுடிவை உருவாக்க உடனடியாக இயலாது என்றால் கூட. “உண்மையைச் சொன்னால் பகையும் கேடும் வரலாம் என்றாலும் உண்மையை மறைக்காதிருப்பதே நல்லது” -செயின்ட் ஜெரோம் “சொன்னால் விரோதமது ஆகினும் சொல்லுவன்” -நம்மாழ்வார் “சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்து இன்றுள்ள கருது கோள்களில் புதிய ஒளி காட்ட விழையும் வரலாற்றாசிரியன் தன் செயல்முறையை மாற்ற வேண்டும் என்கிறேன் நான். ஏராளமான தரவுகளிடையே நெடுநாள் உழன்று கொண்டிருந்து பின்னர் அவற்றிலிருந்து ஒரு கருதுகோளை உருவாக்க முயல்வதை விட ஒரு எண்ணத்துக்கு ஆதாரமுள்ளது என தனது நுண்ணறி வுக்குத் தோன்றினால் அவ்வெண்ணத்தை (தான் எண்ணிய வாறோ அல்லது ஆய்வில் உருவாக்கும் செம்மைப்பாடு களுடனோ) நிறுவிடத் தரவுகள் உள்ளனவா என்று தேடுவதே பயன்தரும் நடைமுறையாகும். -பெர்நாட் எஸ் கான் (“A moment of insight is worth a month of dead pull”) ஒரு கால கட்டத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளை விளக்கவல்ல அடிப்படைக் கோட்பாட்டை ஆழமாகச் சிந்தித்து உருவாக்காமல், கொன்னே அந்நிகழ்ச்சிகளை மட்டும் கூறுவது திசைகாட்டும் கருவியின்றிக் கப்பற்பயணம் மேற்கொள்வதாகும். கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தனது எண்ணங்களை உரசிப்பார்க்காமல், தன் விருப்பம்போல கோட்பாடுகளை உருவாக்குவதோ மணல் வீடு கட்டுவது போன்றதேயாகும். - நொபுரு கராஷிமா (2001) “இன்றுள்ள அரசாங்கங்கள் எவையும் பொதுமக்கள் நலன் குறித்தவை அல்ல. பொது மக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் நலனுக்காக செய்வதாகப் புளுகிக் கொண்டே தங்கள் நலனையும் மேம்பாட்டையும் நிலைப் படுத்திக் கொள்ள பணக்காரர்கள் செயல்படுத்தும் சதித் திட்டமே ‘அரசாங்கம்’ ஆகும்.” - சர் தாமஸ் மூர் “இதுவரை உலகில் இருந்த எந்த அரசை எடுத்துக் கொண்டாலும் அதில் நாட்டாண்மை வகித்தவர்கள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்பவர்களும், மூடர்களுமே; இனி வருங்காலத்திலும் என்றைக்கும் இதே நிலை தான் நீடிக்கும்.” - ஜான் டிரைடன் “மாந்தரினத்தை அடிமைப்படுத்தும் பல்வேறு எசமானர் களுடைய அக்கிரமமான கோட்பாடாகிய ‘எல்லாம் தமக்கே; பிறர் எக்கேடு கெட்டால் என்ன’ என்பதையே பணக்காரர்கள் பின்பற்றுகின்றனர்.” -ஆதம் ஸ்மித் “மனிதன் ஒரு கோணல்மாணல் கொம்பு; அதைக் கொண்டு நேரானது எதையும் செய்ய இயலாது.” -இம்மானுவேல் கான்ட் ‘ஒரு குடும்பத்தை நடத்தும் பொறுப்பைத் தொட்டில் குழந்தைகளிடம் ஒப்படைப்பது போன்றதே, “வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை” அடிப்படையில் அமையும் ஜன நாயகம் ஆகும். - ஆட்டோ வான் பிஸ்மார்க் “(சுயநலத்துக்காக) தங்களால் இயன்ற அளவுக்குப் (பிறருக்கும் பிற உயிர்களுக்கும்) கேடு செய்ய முயல்வதும்; தங்களைக் காத்துக் கொள்ளச் செய்தாக வேண்டிய அக்கிரமங்களைச் செய்து முடிப்பதும் மாந்த இனத்தின் இயற்கை” -பெர்ட்ராண்ட் ரசல் “நாகரிகம் என்ற சொல் கொலைகாரச் சொல் - “சுதந்திரம்” “ஜனநாயகம்” முதலிய சொற்களைப் போல. நகரங்களில் நிலையாக வாழும் மக்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பதற்கு மட்டுமே அதை பயன்படுத்துகிறேனே யொழிய அது உயர்ந்தது, சிறந்தது என்ற பொருளில் அல்ல; உண்மையில் அச்சொல்லுக்கு நான் சுட்டும் பொருள் மட்டுமே சரி. அது ‘உயர்ந்த / சிறந்த’ வாழ்க்கை நெறி என்று பொதுவாகப் பலரும் எண்ணுவது முழுமூடத்தனம். “நாகரிக” மக்கள் செயற்பாடு களுக்கு எடுத்துக்காட்டுகள் சில: பண்டைக் காலத்தில் ரோம் பேரரசு ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான அடிமை களையும் பிறநாட்டுக் கைதிகளையும் சர்க்கஸ் அரங்கில் விலங்குகளோடு சண்டையிட்டுச் சாகடித்தது; ஒருவருக்கொருவர் கொடூரமாக சண்டையிட்டு மடியவைத்தது. இடைக்காலத்தில் மெக்சிகோ நாட்டு சிவப்பிந்திய அஸ்தெக் மன்னர்கள் ஆட்சியில் தங்கள் ரத்தவெறிபிடித்த கடவுள் Huitzalopochtli-க்கு ஆண்டுதோறும் ஏறத்தாழ 50000 அண்டை நாட்டுக்கைதிகளைக் கொன்றனர் - உயிரோடு இருக்கும் பொழுதே நெஞ்சாங்குலைகளைக் கத்தியால் குத்தி எடுத்து நரபலி கொடுத்தனர். ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க கிறித்தவ “இங்குயிசிசன் Inquisition கொடுமை தடைமுறைப்படுத்தப் பட்ட 1480-1800 இல் ஆண்டுதோறும் அம்மதக்கோட்பாடுகளை மீறியதாகக் கருதப்பட்ட சில இலட்சம் பேர் சித்திரவதைக் காளாயினர்; உயிரோடு கொளுத்தப்பட்டனர். செருமானிய இட்லர் 1939-45 கால அளவில் 60 லட்சம் யூதர்களை அக்கிரமமாகக் கொடுமைப்படுத்திக் கொலைசெய்தான், பல வழிகளில் - - நூற்றுக்கணக்கானவர்களை அறையில் அடைத்து விஷவாயு செலுத்திக் கொன்றது உட்பட. “நாகரிக” மக்கள் செய்த இம்மாபெரும் கொடுமைகளை விட மோசமான கொடுமைகளை “நாகரிகமடையாத” மக்கள் எவரும் செய்த தில்லை. [கொடுமை நிகழ்ச்சிகளின் பெயர்களை மட்டுமே மூலம் குறிப்பிடுகிறது. மொழி பெயர்ப்பில் விவரங்களும் விளக்கப் பட்டுள்ளன. - ரோனால்டு ரைட் 1992. “சில ஆண்டுகளுக்கொருமுறை வாக்குச் சாவடிக்குச் சென்று மக்கள் ஓட்டுப்போடும் போலிச் சடங்குதான் ஜன நாயகம்; வறுமையில் உழலும் பெரும்பான்மையினர் நிலையை உயர்த்தக்கூடிய கொள்கைகளை எந்த நாட்டு அரசும் ஒரு பொழுதும் செயல்படுத்தாது.” -நோவாம் சாமஸ்கி 1994 “முன்னேற்றம் (வளர்ச்சி) என்ற மோசடி வார்த்தை உண்மையில் எதைக் குறிக்கிறது என்பது பற்றி நாகரிக உலகம் உடனடியாகச் சிந்திக்க வேண்டிய ஆபத்தான கட்டம் இது. பிரெஞ்சு ஞானி டக்வில் அவ்வார்த்தையை வெறுத்தவர். வெறுக்காதவன் இட்லர்!” -ஜான் லூகாக்ஸ் 1999 முந்தைய வரலாறு இன்றைய நிலைமைக்கான பின் புலத்தை விளக்கி ஒளி தருகிறது. உனது நாட்டின் வரலாற்றைப் பற்றிக் கொஞ்சமாவது தெரியாமல் இன்றைய நிலைமையைப் புரியவே முடியாது. பிறநாடுகளைப் பற்றியும் அவ்வாறே. தமிழன் [மூலத்தில் டிரெவல்யான் ‘ஆங்கிலேயன்’ என்பார்] என்ற நிலையில் உன் இனத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாவிட்டால் பல விஷயங்களைப் பற்றிய எண்ண வோட்டங்கள், ஆதாரமற்ற சில நினைப்புகள் (prejudices); நிகழ்கால நிகழ்ச்சிகளை நீநோக்கும்பாங்கு (மகிழ்ச்சி, துயரம், வெறுப்பு போன்றவை) ஆகியவற்றைக் கூட நீ விளங்கிக் கொள்ள இயலாது. -ஜி.எம். டிரெவெல்யான் (பரபரப்பான) தற்கால வரலாறு நாயின் வால் போன்றது. வால் நாயின் உடம்பில் இறுதியில் இருப்பினும் மிகப் பரபரப்பாக ஆடும் உறுப்பு அதுதான். ஆயினும் நாயின் உடம்பில் முக்கியமான உறுப்புகள் எல்லாம் அந்த வாலிற்கு முன்னர் உள்ளவையே! -ஈ.ஹெச். டான்ஸ் “ஒரு நாட்டு மக்கள் எந்த அளவுக்குத் தமது மொழியைப் பற்றி அறிந்துள்ளனர் என்று நீ சொல். அந்த நாடு தனது தனித்தன்மையை பற்றி எந்த அளவுக்குக் கவலைப்படுகிறது? அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுமா? என்பதை நான் உடனே சொல்லி விடுவேன்.” -ஜான் சியார்டி 1978 “‘வளர்ச்சி’ என்பது (எல்லாவற்றையும்) மாற்றி கொண்டே இருப்பது அல்ல; நல்லனவற்றைக் கைவிடாமல் இருப்பதே வளர்ச்சி... வரலாற்றை மறப்பவர்கள் தாங்கள் பட்ட இன்னல்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பெறுவர் -ஜார்ஜ் சந்தயானா “இன்று நிகழ்வனவும், அன்று நிகழ்ந்தனவும் இரண்டுமே வருங்காலத்தை நிருணயிக்கலாம்; வருங்காலம் என்பதே இறந்த பி. இராமநாதன் 9 காலத்திலிருந்து வருவதுதான்”...... “உண்மை சுடும், உண்மையை நாம் தாங்கிக் கொள்ள இயலாது.” -டி.எஸ். எலியட் “மெய்யான நாணயத்துடன் போலி நாணயமும் புழங்கும் பொழுது பின்னதுதான் விரைந்து கைமாறிப் பெரும்புழக்கத்தில் இருக்கும்; அதேபோல் பண்பட்ட ஒழுக்கத்தைப் போலிக் கலாசாரம் விரட்டிவிடும்” -வில்லியம் கோல்டிங் ‘வரலாறு எழுதும் நாம் நம்காலத்தவர் சார்பில் மாந்த இனத்தில் முந்தைய நடவடிக்கைகளைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம். வரலாற்றாய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு பொழுது போக்குபவர் முந்தை வரலாற்று நடவடிக்கைகளைக் குறித்து இது அறிவுடையது, அது மூடத்தனமானது; இது மதுகையுடையது, அது கோழைத்தனம்; இச்செயல் நன்று, அச்செயல் தீது; என்றவாறு மதிப்பிட்டுக் கூறும் பொறுப்பைத் தட்டிக் கழித்தல் ஒல்லாது. காயடித்த வரலாற்றாசிரியன் நமக்குத் தேவையில்லை.” -ஆர்.ஜி. காலிங்வுட் 2. வரலாற்று வரைவியல் (Historiography)மாணவர் நலன் கருதி மேற்கண்ட கூற்றுகளின் ஆங்கில மூலங்கள் கீழே தரப்படு கின்றன. History is a reconstruction of elements of the past in the mind of a human being of a later generation...... In principle there will be multiple histories of any given period, each congruent to the mental world, social purposes, and sources available to the person who creates it. Since the recreation of the past takes place in the mind of the individual historian which has been shaped by his personal experience and world view, the unbiased historian is an unattainable ideal. By the very nature of the historical discourse there can be no final truth - Gary Beckman “The limits of credulity” Journal of American Oriental Society 125.3 (2005) (“History”) is always a created ideology with a purpose, designed to control individuals or motivate societies, or inspire classes...... to strengthen the purpose of those who possessed power..... and reconcile those who lacked it. - J.H. Plumb (1969) The death of the past (quoted by Beckman) “History is indeed little more than the register of the crimes follies and misfortunes of mankind” - Sir Edward Gibbon “Most history is guessing and the rest is prejudice. - Will and Ariel Durant Official history is believing the murderers at their word. - Simone weil “The pen is at least as great a liar as the tongue” “Words may also be fossil history, the history of a nation’s wanderings” -John Fraser 1879. Etruscans; were they celts?” Edinburgh. It needs a rarer genius to restore the past than to foretell the future. -Anatole France “(Statistics should not be used) as a drunken man uses lamp posts, for support rather than information” “Where the evidence is meagre, it is well to remember that what is at issue is not a point of exact law but an event of history, a field in which absolute truth is unattainable and interpretation must ordinarily resort to a certain amunt of surmise” (W.W. Hyde: Ancient Greek Mariners, N.Y. 1974) “It is appropriate to challenge conventional wisdom even where there may be no equally comprehensive wisdom to substitute in its place” “If an offence come out of the truth, better is it that the offence come than that the truth be concealed” (St Jerome) If the historian is to make breakthrough to new views of social change and to contribute to the development of social theory, I have argued that his mode of work must change. He has to start not with data but with ideas and then ask what data are available or could be found to test and refine his ideas.” - Bernard S. Cohn. Oct 1970. “Society and social change under the Raj” South Asian Review 4-1. “Studying history devoid of applicable theory is to set to sea without a compass, while postulating theory, free of factual examination is to build a castle on quicksand. - Noboru Karashima, in his preface to Karashima Omnibus 2001. “The modern state is not a commonwealth... (it is) nothing but a certain conspiracy of rich men procuring their own comforts under the name and title of the commonwealth” - Sir Thomas More No government has ever been, or can ever be, wherein time - servers and block heads will not be uppermost. - John Dryden (rich men follow) “the vile maxim of the masters of mankind - all for themselves and nothing for other people” -Adam Smith “Universal suffrage is the government of a house by its nursery -Otto Von Bismark “Men do as much evil as they can and as much as they must” -Bertrand Russell “Civilization” like “freedom” and “democracy” is a word that kills. I use it in its literal sense, as shorthand for a settled life in towns and cities. If the word means anything at all, it means only this: The moral values commonly attached to it are nonsense. Civilized people have practised the Roman circus, the Aztec sarifice, the Spanish Inquisition, the gassing of jews. Uncivilized ones have behaved no worse. - Ronald Wright 1992. Stolen Continents - the Indian story. John Murray; pp 424. see p 98 Democracy is nothing more than formal voting, while Government policies do not attend to the necessities of the most impoverished” -Noam Chomsky.. 1994. World Order Old and New “the grave task before civilisation now is a necessary rethinking of the entire meaning of progress (a term that Tocqueville abhorred, but Hitler did not) - John Lukacs. 1999 History throws light on the present. you cannot understand your own country, still less any other, unless you know something of its history. You cannot even understand your own personal opinions. prejudices and emotional reactions unless you know what is your heritage as an Englishman” -G.M. Trevelyan Contemporary history is like the tail of a dog; it looks more conspicuousley agitated than the rest, but all the most important parts have preceded it” -E.H. Dance “Tell me how much a nation knows about its own language and I will tell you how much that nation cares about its own identity” John Ciardi (Chicago Tribune: 27.8.78). Progress, far from consisting of change depends on retentiveness.... Those who disregard the past are bound to repeat it. - George Santayana. “Time present and time past are both perhaps present in time future” “We cannot stand much reality” - T.S. Eliott “Just as bad money drives out good, so inferior culture drives out superior” - William Golding. “We are the present of man, passing judgement on his own corporate past. What we cannot do, is to continue playing with historical research and yet shirk the responsibility of judging the actions we narrate; saying this is wise, that foolish; this courageous, that cowardly; this well done, that ill” - R.G. Colingwood (1999 posthumous: Ed by W.H. Dray and another) The Principles of history and other writings in philosophy of History. Oxford; OUP. ங. மாந்த இனத்தோற்றமும் பரவலும் 1. புடவியின் (பிரபஞ்சத்தின்) அகவை சுமார் 1400 கோடி ஆண்டுவரை இருக்கலாம். உலகம் உட்பட ஞாயிற்றுக் குடும் பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகட்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை ‘பாக் டீரியா’ போன்ற ஓரணு உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடிகொடிகளும் விலங்கு - பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றியவையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (Species) கண்டுபிடிக்கப்பட்டுப் பெயர் சூட்டப் பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டுபிடிக்கப்படாதவையும், பெயர் சூட்டப்படாதவையும் (குறிப்பாக நிலைத்திணை, நுண் ணுயிர்கள், சிற்றுயிர்கள்) மும்மடங்கு இருக்கும் என்று அறிவிய லார்கள் கருதுகின்றனர். இன்றைக்கு 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும்/, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங்களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. (மிகப் பெரிய விண் கொள்ளிகள் (Meteors) உலகில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்). இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய (எலி போன்ற பருமனுடைய) விலங்கிலிருந்து படிமலர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மாந்தனுக்கும் மூதாதை யான இலெமூர் (Lemur) விலங்கு (ஏறத்தாழ 250 கிராம் எடை) உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். (பூச்சிகள் தோன்றி 50 கோடி ஆண்டும் எறும்புகள் தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டும், கரையான் தோன்றி 28 கோடி ஆண்டும் ஆகின்றன) இப்பக்கத்திற்கும் முன் பக்கத்துக்கும் இடையில் ஒட்டியுள்ள “புடவியின் தோற்றத்திலிருந்து இக்கால மாந்தன் வரை” என்ற விவரப் படத்தை காண்க. 2. மாந்தன் எப்படித் தோன்றினான்? மாந்தக் குரங்கினத் துக்கும் (சிம்பன்சி, கொரில்லா) மாந்தனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 இலக்கம் ஆண் டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மாந்தர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் அல்லது தற்கால மாந்தர் என்ற (Home Sapiens Sapiens or Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலார் அனைவரும் ஏற்ற முடிவு (Cavalli Sforza and others: The history and geography of Human genes, 1994). ஏறத்தாழ மாந்தனையொத்த “முன்மாந்த (Hominid)” இனங்கள் கடந்த 48 இலட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல இலட்சம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன், பீகிங் மாந்தன், சாவக மாந்தன், அத்தி ரம்பாக்கம் பாசில் மாந்தன் ஆகியவர்கள் (ஏறத்தாழ 3 இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சார்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் (Neandarthal) இனமும் முன்மாந்த இனமே. இந்த “முன்மாந்த இனங்கள்” எவற் றிடையேயும் “மொழி” உருவாகவே இல்லை (None of them had the faculty of speech) 3. இப்பொழுதுள்ள மாந்தர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மாந்த இனம், கடந்த ஒன்றரை இலட்சம் ஆண்டு களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின் வருமாறு பரவியது - அதாவது, சைபீரியாவுக்கு இன்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னரும் ஐரோப்பாவுக்கு ” 40,000 ” வட/தென் அமெரிக்காவுக்கு ” 30,000 - 12,000 ” ஆத்திரேலியாவுக்கு ” 50,000 ” சப்பானுக்கு ” 30,000 ” நியூகினி தீவுக்கு ” 32,000 ” பசிபிக் தீவுகளுக்கு ” 4000 - 1000 ” (மைக்ரோனிசியா, பாலினீசியா) பரவினர் என்பது வல்லுநர் கருத்து ஆகும். இதை விளக்கும் நிலப்படங்கள் அடுத்த இரண்டு பக்கங்களில் உள்ளன. கண்டங்கள் நகர்வுக் கொள்கையின் படி (Continental drift) கண்டங்கள் கடந்த 25 கோடி ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ இப்போதுள்ள உருவை ஏறத்தாழ ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்னர், கண்டம் அளவுக்கு (Continental proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை. ஆயினும் பனியூழி முடிவில் கி.மு. 8000 வாக்கில் (பனிக்கட்டி உருகி கடல் மட்டம் சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப் பகுதியாகிய கண்டத்திட்டு (Continental shelf) ஏறத்தாழ - இருநூறு கல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்காலக் கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும் (தென் திசை உட்பட) சில நூறு கல் (மைல்) தொலைவும் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே கழக இலக்கியங்களும் களவியல் உரையும் சுட்டுகின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவ தாகும். ஆப்பிரிக்காவிலிருந்து தற்கால மாந்தன் ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் ஆத்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு புலம் யர்ந்து சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம். ஜியாகிராபிகல் மாகசீன் செப்டெம்பர் 2006 இதழில் தற்காலமாந்தர் ஆப்பிரிக்காவை விட்டுத் தென்னிந்தியாவையொட்டிய கண்டத்திட்டு வழியாகப் புலம்பெயர்ந்து சென்ற பாதையைக் காட்டும் நிலப்படம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் இப்பொழுது உள்ளது போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன வெனினும் நிலப்பகுதி சில நூறுமைல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் (Continental shelf)ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் பிளெமிங் (2004). இன்றைய மாந்தனிடம் உள்ளவை 23x2 ‘குரோமோசோம்’கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. (ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மாந்தன் வேறுபட்டவன் என்றாலும் மாந்தன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான்!). Images from page nos 16 & 17 4. கண்டங்கள் நகர்வுக்கொள்கை, மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் கழக நூல்களிற் காணும் கடல்கோள் செய்தி களை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்குத் தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்தியைக் கலித்தொகை 104ம் சிலப்பதிகாரம் காடு காண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய (கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) இளம்பூரணரும் இதைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின் னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுபடுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு: ச.சோமசுந்தரபாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங் களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV வி.ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு, தமிழியன் ஆண்டிகுவாரி II – 1 மறைமலையடிகள் (1930) : மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் ஏ.எஸ். வைத்தியநாத ஐயர் (1929) : “கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள்” : பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II – 1 ஜே. பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI ஹீராஸ் பாதிரியார் (1954) தொல் இந்தோ நண்ணிலக் கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக். 411-439 சதபதபிராமணம் 1,8 முதலியவற்றில் கூறப்படும் “மனு பிரளயம்” திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) உம் iv) உம் கூறுகின்றன. சுமெரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (i) ம் vi)ம் கருதுகின்றன. 5. இந்தியமாக்கடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும் கருதி அதற்கு “லெமூரியா” என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவிய லறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன? கண்டம் அளவுக்குப் பெரிய நிலப் பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும் கடலுள் மூழ்கிட வில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். காந்திர தாவ் தமது “முக்கடற்புதிர்கள்” நூலில் இதை 1974லேயே சுட்டியுள்ளார். எனினும் இதை யாரும் கண்டுகொள்வதில்லை! “தொன்மை நாகரிகங்களைப் படைத்த மாந்த இனங்களைக் கொண்டிருந்த (கண்டம் போன்ற) பெரு நிலப்பரப்புகள் எவையும் எந்தக் காலத்திலும் இந்திய, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம்”. “It is highly improbable that big land masses, inhabited by large numbers of people who created ancient civilizations ever existed in the Indian, Pacific or Atlantic Oceans”. (p267) இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and Plate techtonics)யாகும். இதனை விளக்கும் உலகப் படங்கள் இரண்டை அடுத்தபக்கங்களில் காண்க. ஆயினும் கி.மு. 8,000ஐ ஒட்டி உர்ம் (WURM) பனியூழி இறுதியில் கடல்மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு, முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கிவிட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தியாவையும் இணைத்த வால் போன்ற நிலப்பகுதிகளும் சில (பின்னர் மூழ்கி விட்டவை) இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. (வால்டர் பேர்சர்வீஸ்; The Roots of Ancient India, 1971). 6. இலெமூரியாக் கண்டக் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூட ச. சோமசுந்தரபாரதி, மயிலை சீனி வேங்கடசாமி, எம்.ஆரோக்கியசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவின தன்று; சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டுள் ளனர். கா.அப்பாத்துரையாரும் ‘கடல் கொண்ட தென்னாடு’ என்று குறிப்பிட்டதை உணர்க. இப்பொழுது இலெமூரியாக் கண்டக் கொள்கை ஆதாரமற்றது என்று நிறுவப்பட்டு விட்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சுமதி இராமசாமி தனது கற்பனைப் புவியியலாளர்களும், பேரழிவு வரலாறு களும்; மூழ்கிவிட்ட இலெமூரியா : Fabulous geographers, catastrophic Histories : The Lost Lemuria (2004 : பெர்மனென்ட் பிளாக், டெல்லி) என்னும் நூலில் “கடல்கொண்ட தென்னாடு” பற்றி எழுதிய தமிழறிஞர்கள் அனைவரையும் தாக்கி ஏளனம் செய்துள்ளார். 1950களுக்குப் பின் “லெமூரியாக் கண்டக்” கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் சுமதி இராமசாமி ஒன்றைக் குறிப்பிட மறுக்கிறார். அது என்ன? கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழக அரசு 1972இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு – தொல் பழங்காலம் போன்ற நூல்கள் குறிப்பிடுவதை அவர் கண்டு கொள்ளவில்லை. அன்றைய ‘நாடு’ என்பது ‘இந்தியா’ ‘தமிழ் நாடு’ போன்ற பெருநிலப் பகுதியன்று. இன்றைய வட்ட (தாலுகா) அளவிற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்து கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டியதேயில்லை. முன் பத்தியில் கூறியது போல கி.மு. 8,000ஐ ஒட்டி கண்டத்திட்டுப்பகுதி கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் கழக (சங்க) இலக்கியக் கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றம். (காண்க பி.இராமநாதன் 1998,2003,2004). Images from page nos 20 & 21 7. இவ்வாறு தமிழ், தமிழர் செய்திகளைக் கொச்சைப் படுத்தி எழுதுவது இவ்வாசிரியருக்கு வழக்கமானதே. தி இந்தியன் எகனாமிக் அண்ட் சோசியல் ஹிஸ்டரி ரிவியூ 38-2 ஏப்ரல் - சூன் 2001 இதழில் சுமதி இராமசாமி “இனங்களின் எச்சங்கள் : தொல்லியல் (தமிழ்த்) தேசிய உணர்வு, சிந்துவெளி நாகரிகத்தின்பால் ஈர்ப்பு” என்று ஒரு கட்டுரை எழுதினார். சிந்து வெளி நாகரிகமும் அந்நாகரிக முத்திரை எழுத்துகளும் திராவிடம் (தொல்தமிழ்) சார்ந்தவையே என்று சிறந்த ஆய்வாளர்கள் கமில் சுவெலபில் (1990: திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம், இயல் 6 : திராவிட மொழிகளும் ஹாரப்பா மொழியும்) அஸ்கோ பர்போலா (ப்ரண்ட் லைன் அக் 24,2000) கருதுவதையெல்லாம் அக் கட்டுரையில் சுமதி இராமசாமி கண்டு கொள்ளவில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் தமிழச் சார்பை வலியுறுத்தும் தமிழறிஞர்களை யெல்லாம் (பர்போலா, பார்சர்வீஸ், சுவலெபில் போன்றவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதுபவர்கள் உட்பட), அவர் எள்ளி நகையாடியுள்ளார். 8. இப்பகுதியில் இறுதியாக அறிவியல் சார்ந்த இரண்டு செய்திகளைத் தருவது பொருத்தமாகும். அவை தமிழர் வரலாறு பற்றியவையல்ல. எனினும் மாந்தன் ஒவ்வொருவனும் தெரிந்து கொள்ள வேண்டியவை. ஒரு செய்தி அண்டத்தைப் பற்றியது. மற்றது பிண்டத்தைப் பற்றியது. 9. முதலாவது பிரபஞ்சத்தோற்றத்தைப் பற்றியது. அதனை ஆனந்த விகடன் 10.9.2006 இதழில் அறிஞர் சுஜாதா விளக்கியது போல் தெளிவாக யாராலும் விளக்க இயலாது. அதனைக் கீழே காண்க: “விகடன் 6.8.06 இதழில், ‘பிரபஞ்சத்தில் அணுக்களுக்கு அழிவில்லை’ என்னும் பில் ப்ரைசனின் கருத்தைக் குறிப்பிட்டோம். ப்ரைசன், பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தை விவரித்து எழுதியிருக்கிறார். Big bang என்று அவர் சொல்லும் ஆரம்ப வெடித் தத்துவம் இப்போது அறிவியலாளர்களால் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஒரு புரோட்டான் என்பது எத்தனை சிறியது? அதன் ‘ட்’டன்னாவின் புள்ளியின் பரிமாணத்தில் 500,000,000,000 புரோட்டான்களை அடக்க முடியும். அல்லது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு எத்தனை செகண்டுகள் உள்ளனவோ, ஏறத்தாழ அத்தனை புரோட்டான்களை அடக்க முடியும். இந்த புரோட்டானை 100 கோடி பாகமாக்கினால் ஏற்படும் அவ்வளவு சிறிய இடைவெளியில், ஒரு அவுன்ஸ் மேட்டர் என்னும் பருப்பொருளை அடைத்து பாருங்கள்... நீங்கள் ஒரு பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கத் தயார்! பரிமாணமற்ற அத்தனை சிறிய இடத்தில் பிரபஞ்சத்தின் அத்தனை பருப்பொருள்களின் சாத்தியங்களும் அடர்ந்திருந்த அந்த ஆரம்ப கணத்தை ‘ஒருமித்த கணம்’ (சிங்குலாரிட்டி - singularity) என்கிறார்கள். அதிலிருந்து, காரணமின்றி திடீரென அத்தனை சக்தியும் வெடித்துச் சிதறிப் பரவியது. இதைத் தள்ளி நின்று யாரும் பார்த்திருக்க முடியாது. காரணம், தள்ளி நிற்க இடம் எதுவும் இருந்திருக்காது. ‘ஸ்பேஸ்’ என்னும் விண்வெளியே அந்தச் சிதறலின்போது உண்டானது தான். அந்தக் கணத்துக்கு முன் என்ன இருந்தது என்றும் சொல்ல முடியாது. காரணமும், காலமும் அப்போதுதான் துவங்கியது! மனசில் எண்ணிப் பார்க்கக் கஷ்டமாக இருக்கிறதல்லவா? நம்மாழ்வார் முயற்சி செய்திருக்கிறார். ‘ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று...’ பிரபஞ்சம் அப்படித் தான் ஆரம்பித்தது என்கிறது காஸ்மாலஜி. ‘ஒன்றும் இல்லை’யில் இருந்து ‘எல்லாம் உண்டு’ என்கிற மாறுதல் நிகழ்ந்த ஒரு மந்திர உபஉபஉப கணத்தின் பிரிவில்தான் ஈர்ப்பு விசைகள் தோன்றின. இயற்பியல் விதிகள் தோன்றின. முதல் நிமிஷத்தில் பிரபஞ்சம் பல கோடி நூறாயிரம் மைல்கள் பரவிவிட்டது. இன்றுவரை விரிவடைந்துகொண்டே இருக்கிறது. அந்த பில்லியன் டிகிரி உஷ்ணத்தில், முதலில் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற எளிய தனிமங்கள் தோன்றின. ஆரம்பித்த மூன்று நிமிடங்களில் மற்ற அத்தனை தனிமங்களும் உண்டாகிவிட்டன. இவை தான் பிரபஞ்சத்தில் இன்றும் புழக்கத்தில் உள்ளன. எதற்கும் அழிவே கிடையாது. ஒன்று மற்றொன்றாக மாறுவதுதான், பருப்பொருள் சக்தியாக, சக்தி பருப்பொருளாக... இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடித் தார்கள்? பக்கத்தில் இருந்து பார்த்தது போலச் சொல் கிறார்களே, எப்படி? அந்த ஆரம்ப கணத்தில் இன்றைய விளைவுகள், விண் வெளியில் எங்கு நோக்கினும் ஒரு காஸ்மிக் மைக்ரோவேவ் பின்புல வெளிச்சமாகத் தெரிகிறது. நட்சத்திரங்கள் அனைத்தும் விலகி விலகிச் செல்வதற்கு அத்தாட்சியாக விண்வெளியில் தூரத்து நட்சத்திரங்களின் ஒளியை ஸ்பெக்ட்ராஸ்கோப் மூலம் பார்க்கும்போது, ரெட் ஷிஃப்ட் என்ற நிற மாலையின் சிவப்பு நிற இடமாற்றம் இருப்பது தெரிகிறது. இதிலிருந்து ஆரம்ப கணத்தைக் கணக்கிட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு ஏறத்தாழ 13.7 பில்லியன் (200 மில்லியன் முன்னே பின்னே இருக்கலாம்) ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாம். (பில்லியன் என்பது 100 கோடி; மில்லியன் 10 லட்சம்)” 10. (i) இன்று உலகில் உள்ள 600 கோடி மாந்தர் அனைவருமே ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு பெற்றோர் அல்லது குழுவினரிடமிருந்து தான் உருவாகியுள்ளனர் என்பதை இன்று விஞ்ஞானிகள் எப்படி நிறுவியுள்ளனர்? ஒவ்வொரு மனிதனின் உடலில் உள்ள திசு (செல்)கள் எண்ணிக்கை 100 டிரில்லியன் (= 1 கோடி கோடிகள் = 1014). இவற்றுள் இரத்தச் சிவப்பணுக் களாகிய செல்கள் தவிரப் பிற ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு மையக்கூறு nucleus உள்ளது. அக்கூறு ஒவ்வொன்றுக்குள்ளும் DNA என்று அழைக்கப்படும் 23 இணை குரோமொசோம்கள் உள்ளன. அவற்றுள் 22 இணைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. 23வது இணை பெண்ணுக்கு X, X என்றும் ஆணுக்கு x, y என்றும் இருக்கும். y குரோமோசோம் ஆண் வழியாகவே வரும். ஒவ்வொரு செல்லுக்குள்ளும் (அதற்குள் இரத்தத்தின் மூலம் வந்துசேரும் குளுகோஸ், உயிர்வளி, போன்றவற்றைப் பயன்படுத்தி) வேதியியல் செயல்பாடுகளை நிகழ்த்தும் - energy metabolism - மைடகாண்டிரியா (mitochondria) என்னும் மீச்சிறு அமைப்புகளும் பல உள்ளன. மைடகான்டிரி யாவுக்கு ‘செல்லின் DNA’ விலிருந்து மாறுபட்ட தனி DNA உண்டு. ஆண் விந்தணுவும் பெண் கரு முட்டையும் சேர்ந்து மாந்தக் கரு உருவாகும்பொழுது பெண் கருவிலிருந்து மட்டுமே மைடகான்டிரியாக்கள் வருகின்றன. பெண்கரு முட்டையைவிட மிக நுண்ணியதான ஆண் விந்தணுவில் மைடகாண்டிரியா இருப்பதற்கு இடமேயில்லை. எனவே தாய்வழியாகவே மைடகாடிரியாகளை அவள் மகள்களும் மகன்களும் பெறுவர். ஆனால் மகள்களிடமிருந்து தான் அடுத்த தலைமுறைக்கு மைடகான்டிரியா செல்ல இயலும். தலைமுறை தலைமுறையாக மைடகாண்டிரியாக்கள் தாய் - மகள் என்றவாறு இறங்கி வரும்பொழுது ஒவ்வொரு தலைமுறையிலும் மைடகான்டிரியா DNA அமைப்பு எத்தனை விழுக்காடு மாறுதல் அடையும் என்பதை அறிவியல் கண்டுபிடித்துவிட்டது. ஆயிரம் ஆண்டு களுக்கு எந்த அளவு மை DNA மாற்றமடையும் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அக்கணக்கின்படி பின்னோக்கிச் சென்று விஞ்ஞானிகள் இன்று திட்டவட்டமாக கண்டுபிடித்து நிறுவியுள்ளது என்ன? இன்று உலகில் உள்ள அனைத்து மாந்தர்களுமே சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்துவந்த ஒரு இணையர் அல்லது ஒரு குழுவினரின் பிறங் கடைகள் என்பதே அது. “எல்லோரும் ஓரினம்”. [செல்லில் உள்ள DNA வில் 23வது குரோமோசோமில் ஆண்களாயின் உள்ள ல குரோமோசோம் மாற்றம் அடையும் விகிதத்தைக் கண்டுபிடித்து அம்மாற்ற விகிதத்தைப் பின்னோக்கிக் கணக்கிட்டுச் சென்ற பொழுது கிடைத்த முடிவும் மைடகான்டிரியா DNA அடிப்படையில் கிடைத்த முடிவைச் சரியென்று மெய்ப்பித்துள்ளது] (ii) மேற்குறித்து ஆய்வுகளிலிருந்து விஞ்ஞானிகள் மேலும் நிறுவியுள்ளது: இன்றைக்கு 70,000-50000 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் ஆப்பிரிக்காவை விட்டு தற்கால மாந்த இனம் புலம்பெயர்ந்து உலகின் பிற கண்டங்களுக்குப் பரவியது என்பதாகும். அவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு பெயர்ந்து பரவிய மாந்தப் பிரிவினரில் முக்கியமான ஒரு பிரிவு தென்னிந்தியா வழியாகச் (தென்னிந்தியா என்பது அக்கால கட்டத்தில் கடலோர நிலப்பகுதியாக இருந்த கண்டத்திட்டு Continental shelf பகுதியும் சேர்ந்தது) சென்று சிலர் அங்கேயே நிலைத்திட வேறு சிலர் ஆஸ்திரேலியா வரை கடலோர நிலப்பகுதி வழியாக மெது மெதுவாக அதாவது ஒரு தலைமுறைக்கு ஒன்றிரண்டு மைல் தொலைவு வீதம்) பயணித்து சென்றனர். (அக்கண்டத்தில்) ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் எச்சங்கள் கி.மு. 50000 முதல் உள்ளன. (iii) இன்றைய தமிழ்நாட்டு மக்களுள் அவ்வாறு இன்றைக்கு 70000-50000 ஆண்டு முன்னர் ஆப்பிரிக்காவை விட்டு நீங்கி ஆஸ்திரேலியாவரைச் சென்றடைந்த மாந்தரின் பிறங்கடைகள் பெருமளவில் உள்ளனர் என்பதை மை DNA ஆய்வின் மூலம் நிறுவியுள்ளவர் மதுரை காமராசர் கலைக் கழக அறிவியலறிஞர் டாக்டர் இராமசாமி பிச்சப்பன் ஆவார். 23.8.2007, 16.4.2008 தேதிகளில் அவர் செய்தித்தாள்களுக்கு நேர்காணல்களில் தெரிவித்த செய்திகள் வருமாறு “ஆப்பிரிக்காவை விட்டு இன்றைக்கு 70000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய ஒரு குழுவினரிடம் மை DNA அடையாளக் குறியீடு M130 தோன்றியது. இன்றுள்ள ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள் தொகையினருள் இரண்டில் ஒருவரிடம் இந்த M130 உள்ளது. “மதுரைப் பகுதியில் உள்ள மக்கள் பலர் மை DNA வை ஆய்வு செய்ததில் அவர்களில் 5ரூலிருந்து 7% நபர்களிடம் இந்த M130 உள்ளது என்று தெரிய வந்தது. அன்றைய கடற்கரைப் பகுதி வழியாக மாந்த இனத்தின் ஒரு பிரிவு ஆப்பிரிக்காவி லிருந்து கிழக்கு நோக்கிப் புலம் பெயர்ந்தது என்பதை இந்த ஆய்வு மெய்ப்பித்தது (Proceedings of the National Academy of Sciences; USA; 2001) பிரிட்டன் நாட்டு மரபணுவியலறிஞர் சர் வால்டர் பாட்மர் சொன்னது போல். “நாம் அனைவரும் ஆப்பிரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் பிறங்கடைகளே” (இந்த M130 ஐ பிச்சப்பன் முதலில் கண்டு பிடித்தது உசிலம்பட்டி அருகே ஜோதி மாணிக்கம் கிராமம் ஆண்டித் தேவர் மகன் திரு விருமாண்டி அவர்களிடம் தான்) “இந்திய மக்களிடையே காணப்படும் மை DNA அடையாளக் குறியீடுகளில் மிகத் தொன்மை வாய்ந்தது M130 தான். அதைவிடப் பழைமையான மை DNA குறியீடுகள் இந்தியாவில் எவரிடமும் இல்லை. விருமாண்டியிடமும் வேறு சிலரிடம் கண்ட இந்த M130 குறியீடு நிறுவியுள்ளது என்ன? ஆப்பிரிக்காவில் இக்கால மாந்த இனம் AMH உருவாகிய பின்னர் அக்கண்டத்தை விட்டு முதலில் புலம் பெயர்ந்து இந்தியாவில் முதலில் குடியேறியவர்களின் பிறங்கடைகள் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதே அது.” ச. மொழியின் தோற்றமும் பரவலும் முன்மாந்த இனங்கள் அனைத்தும் பேச்சாற்றல் அற் றவை. அவர்களிடையே மொழி உருவாகவில்லை, ஏறத்தாழ 11/2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தற்கால மாந்த இனத்திடையே (AMH) மட்டுமே ஏறத்தாழ 50000 ஆண்டுகட்கு முன்னர் மொழி உருவாகியது என்பது இன்றைய பலதுறை அறிவியலாளரின் ஒருமித்த முடிவாகும். இன்று பின்வரும் விவரப்படி ஏறத்தாழ 6000 மொழிகள் உலகில் பேசப்பட்டு வருகின்றன: ஒவ்வொரு மொழிகள் (2)இல் கண்ட மொழியையும் எண்ணிக்கை மொழிகளைப் பேசுநர் பேசுவோர் எண்ணிக்கை தொகை (கோடியில்) (1) (2) (3) (i) 10 கோடிக்கு மேல் 8 மொழிகள் (சீனம், ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி, வங்காளி, 240 கோடி போர்ச்சுகீசு, ரசியன், சப்பானியம்) (ii) 1-10 கோடி 72 (இந்த 72 மொழி (6 கோடி பேர் பேசும் களையும் மற்றும் தமிழ் இப்பிரிவில் அடுத்த நிலை (iii) 239 அடங்கும்) மொழிகளில் ‘பேசுவோர் எண்ணிக்கை’ 336 கோடி அடிப்படையில் முதல் 162 மொழிகளையும் சேர்த்து மொத்தம் 234(72+162) மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை) (iii) 10 இலட்சம்- 1 கோடி 239 (iv) 1 இலட்சம் - 10 இலட்சம் 795 iii) இல் எஞ்சிய 77 10,000-1இலட்சம் 1,605 (239-162) மொழி களையும் (iஎ) (எ) இல் குறித்த 5740 மொழிகளையும் பேசுவோர் எண்ணிக்கை 24 கோடி (v) பத்தாயிரம் பேருக்குக் குறைவு 1000-9999 1782 100-999 1075 10-99 302 1-9 181 3340 6059 மொழிகள் 600 கோடி மக்கள் (இந்தி, மைதிலி, ராஜஸ்தானி முதலியவற்றை ஒரே இந்தி மொழியாகக் கொள்வதா? தனித்தனி மொழிகளாகக் கொள்வதா? இது பற்றி எல்லாம் மொழியியலாளரிடம் கருத்து வேறுபாடு உண்டு. 6000 அல்லது 6059 என்பதெல்லாம் ஒரு குத்துமதிப்பேயாகும்.) இந்த 6059 மொழிகளில் 4 விழுக்காடு ஆகிய 242(8+72+162) மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கை யான 576 கோடியானது மொத்தம் 600 கோடி மக்களுள் 95 விழுக்காடு ஆகும். மீதி 96 விழுக்காடு ஆகிய 5817 மொழிகளைப் பேசுவோர் வெறும் 24 கோடி மக்களேயாவர் (அறுநூறு கோடியில் அவர்கள் வெறும் நான்கு விழுக்காட்டினரேயாவர்). 2. இன்று உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் ஒரே முதன் மொழியிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் மாக்ஸ்முல்லருக்கும் இசை வானதே. 20 ஆம் நூற்றாண்டில் ஞால முதன் மொழி ஆய்வில் ஈடுபட்ட மேனாட்டறிஞர்கள் பெதர்சன், திராம்பெத்தி, சுவா தெசு, கிரீன்பெர்க், மெரிட் ரூலன், இல்லிச் சுவிதிச், தால் கோபால்ஸ்கி, செவரோஸ்கின், ஸ்தாரோஸ்தின், பாம்ஹார்டு மற்றும் கெர்ன்ஸ், ஜான் பெங்ட்சன், வாக்லாவ் பிலாசக் போன்ற பலராவர். பல்வேறு மொழிக் குடும்பங்களையும் பின்வருமாறு ஒரு சில பெருங்குடும்பங்களுக்குள் (Super families) அடக்கலாம் என்பது அவர்கள் கண்டுள்ள உண்மையாகும். i) நாஸ்திராடிக் (இந்தோ-ஐரோப்பியன், திராவிட மொழிகள், உராலிக், அல்தாய்க், கார்த்வெல்லியன், ஆப்ரோ- ஏசியாடிக்-அதாவது செமித்திய-ஹாமித்தியக் குடும்பம், ஆகிய மொழிக் குடும்பங்கள் இதில் அடங்கும்). கிரீன்பெர்க் வகுத்துள்ள யூரேசியாடிக் பெருங்குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. யூரேசியாடிக்-கில் அடங்கியவை எத்ருஸ் கன், இந்தோ-ஐரோப்பியன், உராலிக்-யூகாகீர், அல்தாய்க், கொரியன்-சப்பானியம்-ஐனு, கில்யாக், சுகோதியன், எஸ்கிமோஅல்யூத் ஆகிய மொழிக்குடும்பங்களாகும். (2000 அக்டோபரில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பத்ரி ராஜூ கிருஷ்ணமூர்த்தியை கிரீன்பெர்க் சந்தித்த பொழுது, “திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் சகோதரி யாக இருக்கலாம். மகளாக இருக்க முடியாது” எனத் தெரிவித் துள்ளார் (Bh. Krishnamurthi. The Dravidian Languages; 2003, பக்.46). இதிலிருந்து ஸ்லாவ், இரானியன், வேதமொழி/ சமஸ் கிருதம், கிரீக், இலத்தீன், கெல்திக், செருமானியம் போன்ற மொழிக் குடும்பங்களுக்கெல்லாம் தாயான இந்தோ ஐரோப் பியத்தை விடத் தொன்மை வாய்ந்தது திராவிட மொழிக் குடும்பம், அதாவது பழந்தமிழ் என்று உணரலாம்.) ii. சீன-காகேசியன் iii. ஆஸ்திரிக் (முண்டா போன்றவை) iv. அமெரிக்க இந்திய மொழிகள் v. இந்தோ-பசிபிக் vi. கோய்சான் vii. காங்கோ-சகாரா பல்வேறு மொழிக்குடும்பங்களை இணைத்து அவற்றுக்கு மூலமான மொழிப் பெருங்குடும்பங்களைக் காணும் ஆய்வாளர் களுள் சிலர் அதற்கும் மேலே போய் ஞால முதன்மொழி (மாந்தனின் முதல் தாய்மொழி) ஆய்வுக்கும் சென்றுள்ளனர். மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம்-மொழிகளின் கொடிவழி ஆய்வு (ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994) நூலின் பக்கம் 277 இல் கூறுவது வருமாறு: “பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக்கொள்ளாவிடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞால முதன் மொழியிலிருந்து தான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது” அந்நூலின் பக்கங்கள் 277-366இல் 27 முக்கியமான கருத்துகளுக்குப் பல்வேறு மொழிக்குடும்பங் களிலும் உள்ள சொற்கள் “Global Etymologies” தரப்பட்டுள்ளன. அக்கருத்துக்களுக்கு ஞால முதன் மொழியில் என்ன வேர்ச் சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடி யாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்கு)த் தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தனவாகவும் ஞாலமுதன் மொழியின் வேர்ச்சொல் வடிவை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. 3. இராபர்ட் கால்டுவெல் 1856இல் தனது திராவிட அதாவது தென் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் மாபெரும் நூலை வெளியிட்டார். (திருந்திய விரிவான இரண்டாம் பதிப்பு 1875) ஒரு புறம் திராவிட மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள் எலாமைட் மொழி சித்திய (இப்பொழுது ‘உரால்-அல்டாய்க்’) மொழிகள் சப்பானிய மொழி ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள், சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி ஏராளமான செய்தி களை அவர் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன் மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியை ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கிய திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிலிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை அச்செய்திகள் வலுவாக நிறுவின. கால்டுவெல் கோடிட்டுக் காட்டியதை மேலும் நுணுகி ஆராய்ந்து “மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்; மிகத் தொன்மை வாய்ந்த தொல்தமிழே (தொல்திராவிடம் என அழைக்க விரும்புவார் அவ்வாறே அழைக்கலாம், மறுப்பில்லை) அனைத்து மொழிக்குடும்பங்களுக்கும் (இந்தோ-ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும்” என்ற கோட்பாட்டை மேலும் ஆழமாக விரிவாக நிறுவியவர்கள் நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசரும் ஞா. தேவநேயப் பாவாணரும் ஆவர். இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளின் (ஏன் பிறமொழிக்குடும்ப மொழிகளுக்கும் தான்) அடிப்படைச் சொற்கள் பலவற்றுக்கு ஞானப்பிரகாசரும் பாவாணரும் நூற்றுக்கணக்கான பொருத்தமான தொல்-திராவிட வேர்ச் சொற்களை இனம் காட்டியுள்ளனர். 1953இல் ஞானப்பிரகாசர் தெரிவித்த கருத்து வருமாறு:- “இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ‘வேர் கள்’ என உன்னிக்கப்படுபவை பொருள் தொடர் பற்ற வெறும் குறியீடுகள் தாம். திராவிட மொழி வேர்களோவெனில் ஐயத்திற்கிட மின்றிப் பொருளை யும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்ட முள்ள முளைக்கரு போலத் தோன்றும்; எந்தக் கருத்தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின என்பதைத் தெற்றென அவை காட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல் லாததால் இந்தோ ஐரோப்பிய “வேர்கள்” இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக் குவியல்களா கவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளி காட்டி உயிரூட்டம் தரக்கூடியவை திராவிடமொழி வேர்கள்தாம்.” பிறமொழி வேர்களுக்கும் இக்கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும். சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி இதழில் (1929) ஞானப்பிரகாசர் “மொழியின் தோற்றம்” என்ற கட்டுரை யில் “இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன் மொழியின் தோற்றத்திற்கான ஆதாரங்கள் தமிழில் தான் கிட்டும்” என முழங்கியிருந்தார். (Tamil supplies this long looked for clue to finding the true origin of the proto Indo – European language) 4. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்து இதுவரை பின்வரும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன: நாஸ்திராடிக்/யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1. திராவிடமும் கால்டுவெல், போப், இந்தோ ஐரோப்பிய ஞானப்பிரகாசர், தேவநேயன், மொழிகளும் இளங்குமரன், மதிவாணன், இலியிச் - சுவிதிச், அருளி, அரசேந்திரன், ஸ்டெபான் ஹில்யர் லெவிட். (பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ்-இந்தோ ஐரோப்பிய / ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக்கணக்கானவை (reasonable and perceptive) என்று முனைவர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் இந்தோ ஐரோப்பிய (மொழியியல்) ஆய்விதழில் (மடலம் 28:3-4;2000 சூன் - திசம்பர் பக்கம் 407-438இல்) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். மேலும் 2000இல் வெளியான “இந்தோ ஐரோப்பிய மொழிகளும் அவற்றொடு நெருங்கிய உறவுடையனவும்: யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம்: மடலம் I இலக்கணம்” என்னும் நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72-ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20க்கு மேற்பட்டவற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன.) 2. திராவிடமும் உரால் - அல்- கால்டுவெல், பரோ, மெங்கெஸ், டாயக் மொழிக்குடும்பமும் டைலர், அந்திரனாவ், வாசக், ஹெச்.பி.ஏ.ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மொழியும் (கி.மு.3000க்கு முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் மக் - அல்பின், நாட்டில் பேசப்பட்டது) கே.வி. சுவலெபில் 4. திராவிடமும் சுசுமு ஓனோ; சப்பானியமும் பொன். கோதண்டராமன்; ஹெச்.பி.ஏ.ஹகோலா; சுவெலபில் 5. திராவிடமும் கொரிய மொழியும் ஹுல்பர்ட்; பவுண்துரை 6. திராவிடமும் எத்ருஸ்கன் ஸ்டென் கோனோ; மொழியும் (கி.மு.1000-300 இரா. மதிவாணன் அளவில் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990இல் வெளியிட்ட “திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம்” என்னும் நூலின் பக்கங்கள் 99- 122இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிடமொழி, எலாமைட், தொல் உரால் - அல்டாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு. 10,000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரியா ஹீராஸ், ஏ.சதாசிவன், மொழியும் (கி.மு. 3000க்கு ஜே.வி.கின்னியர் வில்சன், முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ.ஹகோலா 8. திராவிடமும் மிதன்னியும் ஜி. டபுள்யூ. பிரவுன் (1930) (கி.மு. 1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி, மொழியும் (ஸ்பெயின்) பெனான் ஸ்பிக்னு சாலெக். 10. திராவிடமும் ஆஸ்தி நாரிஸ், பிரிச்சார்டு, ரேலியப்பழங்குடிமக்கள் ஆர்.எம்.டபுள்யூ. டிக்சன், மொழிகளும் (இப்பழங்குடி பி.இராமநாதன் (1984) மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள்) 11. திராவிடமும் கொஷூவா டாக்டர் சீனிவாசன்: மொழியும் (தென் அமெரிக்க சாமன்லால், ஹெச்.பி.ஏ. பெருநாடு) ஹகோலா இப்பக்கத்தின் எதிரில் ஒட்டியுள்ள உலகப்படம் இம் மொழிகள் பேசப்படும் நாடுகளையும் இடங்களையும் காட்டும். 5. திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையிலுள்ள மிக நெருங்கிய ஒப்புமையை பி.இராமநாதன் (குப்பம்) திராவிடப் பல்கலைக் கழகத்தின் திராவிடியன் ஸ்டடீஸ் 1-3; ஏப்ரல் - சூன் 2003 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை விரிவாக நிறுவுகிறது. தொல் திராவிட மொழி பேசுநர் தென்இந்தியாவில் கண்டிப்பாக 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இருக்க வேண்டும் என்பதையும் இங்கிருந்து அதற்கு முன்னரே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தொல் தமிழ் மக்களிடமிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும் என்பதையும் அக்கட்டுரை நிறுவுகிறது. கால்டுவெல் பெருமகனார் மறைமலையடிகள் மொழிஞாயிறு பாவலரேறு ஞா. தேவநேயப்பாவாணர் பெருஞ்சித்திரனார் டாக்டர் எமேனோ டாக்டர் கே.வி. சுவெலெபில் அமெரிக்கா செக் குடியரசு டாக்டர் ஹார்ட் டாக்டர் ஆஷர் அமெரிக்கா ஸ்காட்லாந்து டாக்டர் ஹகோலா டாக்டர் லெவிட் பின்லாந்து அமெரிக்கா ரு. தொல் திராவிட மொழி பேசுநர் பரவியது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே யாகும்; தமிழர் இந்தியாவின் தொல்குடிகள் 1. இப்பொழுது பல நாடுகளிலுமுள்ள பல்துறை அறிஞர் களும் பொதுவாக ஏற்றுக் கைக்கொண்டுள்ள (தவறான) கருது கோளின்படி தொல்திராவிட மொழி பேசுநர் தாயகம் வட கிழக்கு ஈரான் பகுதியாகும்; அங்கிருந்து சுமார் கி.மு. 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர்; செல்லும் வழியில், பேருந்து வரும்பொழுது ஆங்காங்கு சிலர் இறக்கி விடப்படுவது போல, திராவிட மொழிபேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டு வரப்பட்டன. (கே.வி. சுவலெபில் (1972): “திராவிடர்கள் இறக்கம்” The descent of the Dravidians; திராவிட மொழியியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (IJDL) தொகுதி 2; பக். 57-63. பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் அவர் இக் கருத்தையே கூறுகிறார். தமது தென்னிந்திய வரலாறு (4ம் பதிப்பு 1976) நூலில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் இது “நடந் திருக்கக் கூடாதது அல்ல” (not unlikely) என்கிறார். 2. இதற்கு நேர்மாறான கொள்கை திராவிட மொழி பேசுநர் வடக்கு நோக்கிப் பரவினர் என்னும் “திராவிடர் ஏற்றம்” கொள்கையாகும்: DRAVIDIAN ASCENT (from south). இப்பொழுது அது பழைய பாணிக் கொள்கையாகக் கருதப் படினும் அதனை வலியுறுத்தியுள்ள அறிஞர்களுள் ஹெர். ஆர். ஹால்; ஹீராஸ் பாதிரியார், பி.தி.சீநிவாச ஐயங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், மறைமலை அடிகள், யு.ஆர்.எஹரென் பெல்ஸ், சேவியர்.எஸ் தனிநாயக அடிகளார், க.த.திருநாவுக் கரசு, தேவநேயப்பாவாணர், பிரிட்ஜெட் மற்றும் ரேமாண்ட் ஆல்சின் (1988), கே.கே.பிள்ளை ஆகியோரும் அடங்குவர். சுவிரா ஜெய்ஸ்வால் (1974); ஜே.ஆர்.மார் (1975); பர்டன் ஸ்டெய்ன் (1998) ஆகியோர் ‘திராவிடர் ஏற்றம்’ என்ற கொள்கையை ஏற்கா விடினும் “திராவிடர் இறக்கக்” என்ற கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.) 3. திராவிட மொழி பேசுநர் கி.மு. 3000ஐ ஒட்டி இந்தியா வுக்குள் நுழைந்தனர் என்ற கோட்பாடு மேலே பிரிவுகள் (ங), ஆகியவற்றில் சொன்னவற்றோடு பொருந்தி வருகிறதா? மொழிப் பெருங் குடும்பங்களுக்கிடையேயுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர் பலர் இத்தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர்.பிளெஞ்ச் எம்.ஸ்பிரிக்ஸ் 1997இல் தொகுத்து வெளியிட்ட தொல்லியலும் மொழியும்: (1) கோட்பாட்டு ஆய்வுநெறிக் கருத்தோட்டங்கள் என்னும் நூலில் ரென்புரூ பின்வரும் முடிவைக் கூறுகிறார்:- “(மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் செய்த மக்கள் பண்டு பரவத் தொடங்கியது பற்றிய) தொல்லியல் சான்று களின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப் பியன், தொல் ஆப்ரோ - ஏசியாடிக், தொல் எலாமைட், திராவிடம், தொல் அல்டாய்க் மொழி கள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனைவரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப்பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம்மொழிகள் எல்லாம் (நாஸ்திராடிக் மொழியியலாளர் கூறுவது போல) தொடர்புடையவையாக இருப்பது உண்மை யானால் அவர்களெல்லாம் அப்பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு. 8000-6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒருசில ஆயிரம் ஆண்டுகள் இம்மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராதிக் மொழி அந் நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் ஒத்து வரும் தருக்கமாகும்.” இவ்வாறு தொல் - நாஸ்திராதிக் பேசியவர்கள் அனை வரும் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே நடு கிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டையும் (அதன் தொடர்பான “இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர்கள் இறங்கியது ஏறத்தாழ கி.மு. 3000ஐ ஒட்டித்தான்” என்ற கோட்பாட்டையும்) பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும். இதுபற்றி காலின்பி. மாசிகா 1999 இல் கூறியது குறிப்பிடத் தக்கது. “தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண் டும். தற்போதைய மாந்த இனம் (ஏறத்தாழ ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல் திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம்” (It may be a question of a very ancient common substratum in South Asia, Pre-Dravidian going back even to the original peopling of the world; The year Book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi). 4. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன் னர்த் தற்கால மாந்த இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது; முதல் தாய்மொழி ஏறத்தாழ 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது; இன்றைக்கு ஓர் இலட்சம் - 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தென்னிந்தியா வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் தற்கால மாந்த இனம் பரவியது என்றும் மேலே கண்டோம். இவ்வாறு வடக்கு, வடகிழக்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் திராவிட மொழி பேசுநருக்கு முகாமையான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இந்தக் கோட்பாட்டை “ஞானப்பிரகாசர் – தேவ நேயன் கோட்பாடு” என அழைக்கலாம். (திராவிட மொழி களுக்கு ஆத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் (மொழிக்குடும்பங்கள் பிற வற்றுடன் உள்ள நெங்கிய தொடர்பையும்) விளக்க வல்லது இக் கோட்பாடேயாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிக மாகும். (ஹீராஸ் 1953; மதிவாணன் 1995; இராமநாதன் 1999; பூரண சந்திரஜீவா 2004) அவர்களுக்கு எலாம், சுமேரியா, எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். 5. சுவெலபில் (1990) “ஏறத்தாழ கி.மு. 10000க்கு முன்னர் திராவிடம், உரால் - அல்டாய்க், சப்பானியம் மொழி பேசுநர் களிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்” என்று கருதுவதைக் கண்டோம். அத்தகைய தொடர்பையும் “திராவிடர் ஏற்றம்” என்னும் கோட்பாடே விளக்கவல்லது. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி கி.மு. 10,000க்கு முன்னரே தொல் இந்தோ-ஐரோப்பியம் பேசுநர் தொல்-திராவிடம் பேசு நரிடமிருந்து பிரிந்து விட்டனர்; மைய ஆசிய ஸ்டெப்பி புல் வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர்; அவர்களில் சில குழு வினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக், இலத்தீன், கெல்டிக், ஜெர்மானிக், ஸ்லாவிய மொழிக் குடும்பங் களாகும்); வேறு சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும்; அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10000க்கு முன்னர் தொல் திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்த காலத் தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக் கூறு களோடு சேர்த்து, வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழிபேசுநர்களிடம் இருந்து (இரண் டாவது கட்டமாக) புதிதாக மேலும் பல திராவிட மொழிக் கூறுகள் சேர்க்கப்படலாயின. திராவிட மொழி பேசுநர் ஏற்றம் (Dravidian ascent) பற்றிய இக் கோட்பாடானது தொல் மாந்தர் மொழியியல் முடிவுகளை மேலும் சீர்மை பெறச் செய்ய வல்லது; நாளடைவில் மாந்த இனத் (AMH) தோற்றமும் பரவலும்; மொழிப் பெருங்குடும்பங்கள் உருவாக்கமும் பரவலும்; வரலாற்றுக்கு முந்திய தொல்லியல் ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்தையும் விளக்கத்தக்க ஒருங்கிணைந்த ஒரு பெருங் கோட்பாடு (Grand synthesis) உருவாக்க வழி கோலக் கூடியது ஆகும். 6. தமது IJDL சூன் 2007 கட்டுரையில் ஸ்டெபான் லெவிட் பின்வருமாறு “திராவிடர் ஏற்றம்” கொள்கையை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. “கடல் மட்டம் இப்பொழுதுள்ளதை விட மிகக் குறைவாக இருந்த பனியூழிக் காலத்தில் ஆப்பிரிக்கா - தென்னிந்தியாவை இணைத்த வால் போன்ற நில இணைப்புகள் / தீவுகள் வழியாக ஆப் பிரிக்காவிலிருந்து தென் ஆசியாவிற்கு திராவிட மொழி பேசுநர் வந்திருக்கலாமென்னும் கோட் பாட்டை பி.இராமநாதன் வலியுறுத்துகிறார். அக் கோட்பாட்டை நானும் ஆதரிக்கிறேன். ஆஸ்தி 40 தமிழர் வரலாறு ரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வுசெய்த அறிஞர் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழி களுடன் மட்டுமே தொடர்புள்ளவை எனக் கண் டுள்ளனர். உறவுமுறை (Kinship) பூமராங் (வளைதடி) பயன்பாடு ஆகியவையும் அம்மக்களுக்கும் திரா விடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு. 6000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டனர் ஆஸ்திரேலியப்பழங் குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியா விலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 40,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்ற னர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 40,000 ஆண்டுகட்கு முன்னரே திராவிடர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்த (“திராவிடர் ஏற்றம்”) கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத் திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உரா லிக், அல்தாயிக், இந்தோ-ஐரோப்பியம் ஆகிய மொழிக்குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக் கூற இயலாது.” இன்றைய மரபணு ஆய்வு “தொல் தமிழிய (திராவிட) - தொல் ஆஸ்திரேலிய மொழி” பேசுநர் தென்னிந்தியாவிற்கு இன்றைக்கு 50000 ஆண்டு அளவிலேயே வந்துவிட்டனர் என்பதை மேலே 1-ங-10இல் கண்டோம். அத்துடன் நிறுவுவதை ஒப்பன் ஹைமர் (2003) The Real Eve : Modern Man’s Journey out of Af r i ca நூலின்படி ம ர பணு ஆய் வு ம் (காகசஸ் இனத்தைச் சுட்டும் ஆ 17) தொல் திராவிட மொழி பேசுநர் இந்தியாவிலிருந்து வடக்கு வடமேற்காக ஏறத்தாழ 40000 ஆண்டுக்கு முன்னர் மைய கிழக்கு - மைய ஆசியா – ஐரோப்பா என்றவாறு படிப்படியாகப் பரவியிருக்கலாம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இல்லை என்பதும் சுட்டத்தக்கது. ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தவர் இயல் 1க்கான நூற்பட்டியல் அ. மாந்த இனத் தோற்றமும்; மொழியின் தோற்றமும் பரவலும் பற்றியவை Steve Jones. 1993: The Language of the Genes: Harper Collins. Caalli Sforza et al. 1994. The History and Geography of Human genes. New Jersey; Princeton University Press. Christianson, M.H. (Ed). 2003. Language Evolution (See Davidson I : The Archaeological Evidence of language origins). London. Flemming, M.C. 2004. Submarine prehistoric archaeology of the Indian Continental Shelf - a potential resource.Current Science 86:9 pp 1225-30 Levin, Roger. 2005: V Edn. Human Evolution, an illustrated introduction. London, Blackwell. Oppenheimer, Stephen. 2003. The real Eve-Modern man’s Journey out of Africa London. Constable. Sahoo, Sanghamitra et al 2006. A prehistory of Indian Y Chromosomes: Evaluating demic diffusion scenarios. Proceedings of the National Academy of Sciences, USA. 193-4;) Steve-Jones, et al. (1992) The Cambridge Encyclopedia of Human Population. Sykes, Bryan, 1999. The human inheritance - Genes, Language and Evolution. OUP. Noble, W and I. Davidson. 1996. Human evolution. Language and mind. Cambridge University. ஆ. “ஞால முதன்மொழிக்குத் தமிழ் மிக நெருங்கியது” என்பது பற்றியவை Andronov, M. 1968 - Dravidian and Uralian; A peep into the Prehistory of language families; Two lectures on the historicity of language Families, Annamalai University. Arasendiran, K. 1997/2000. Ulagam Paraviya Tamilin Ver: kal (four Volumes), Onriya Tamilar Tholamai; Australia. Aruli, P. 1985. Moliyiyal Uraikal. (5 vols) Arivan Pathippagam; Tamilur, Pondicherry. Bellwood, Peter and Colin Renfrew. 2002. Examining the farming / language dispersal hypothesis; Cambridge. Blazek, Vaclav. 1999. Elam:a bridge between ancient Near East and Dravidian India. In Blench, Roger and Mathew springs (Edrs): Archaeology and Language: Vol IV: Language change and Cultural transformation. (One World Archaeology: 35); London, Routledge. Brown G.W. 1930. The possibility of a connection between Mitanni and the Dravidian languages. Journal of the American Oriental Society; 50; pp 273-305. Burrow, (1945) “Some Dravidian words in Sanskrit” Transactions of Philological Society; pp 79-120 (1946) “ Loan words in Sanskrit” Trans Phil Soc; pp 1-30 (1948) “Dravidan Studies VII: Further Dravidian words in Sanskrit” Bulletin of the School of Criental and African Studies; University of London Vold 12;365-96 Caldwell, Rev Robert. 1856. A comparative grammar of the Dravidian or the South Indian family of language. (II Edn 1875) Carstairs Mc. Carthy, Andrews. (2001. The origins of language; at Pp 1-18 of Mark Aronoff and another: The handbook of Linguistics; Blackwell. London. Capell A 1971. History of Research in Australian and Tasmanian languages (in Sebeok, Thoms A, 1971) See pp 661-720. Chamanlal, 1040. Hindu America Comrie, Bernard. et al 2003. The Atlas of languages - The origin and development of languages throughout the world, New York. Crystal, Dravid. 1997. The Cambridge Encyclopaedia of Linguistics. 50 Dani, A.H. and others (Edrs). 1996. History of Humanity: vol II From The III millennium to the 3rd century B.C. Routledge / UNESCO; see pp 246-265: “The Indus valley (3000-1000 B.C.)” By B.K. Thapar and M. Rafiq Mugal. David, H.S. (1996) Suggestions for Research scholars and lexicographers in Tamil and Dravidology Tamil Culture XII 1, 2-3 Devaneyan 1950. Derivation of words from the Deictic source. Centamil Celvi 24-7 1967. Tamil Varalaru. 1996. The Primary Classical Language of the world. For complete list of his works see: Devaneyan. 2004) 2004. Nostratics – the light from Tamil, according to Devaneyan. South India Saiva Siddhanta Works Publishing Society limited; Chennai – 18. Dixon, R.M.W., 1980. The Languages of Australia; Cambridge University Press. 1997. The rise and fall of languages; Cambrige. Dolgopolsky, Aharon. The Nostratic Macro family and Linguistic Palaeontology; Cambridge – The Macdonald Institute for Archaeological Research. Ellis, Francis white, 1816. “Note to the Introduction” in A grammar of the Teloogoo Language by A.D. Campbell. Madras: Press of college of Fort St George. Emeneau, Murray Barnson, 1954. “Linguistic Prehistory of India” Proceeding of American Philosophical Society 98; 282-92. 1955 India and Linguistics Journal of Americal Oriental Society 75: 145-53 1956 India as a linguistic area Language Vol 32: pp3-16 1974. “The Indian linguistic area revisited” International Journal of Dravidian Linguistics; Thiruvananthapuram; III-1; pp 92-134 1971. “Dravidian and Indo-Aryan - The Indian linguistic area in Symposium on Dravidian Civilisation (ed. A.F. Sjoberg Austin and New York; see pp. 33-68 1980. Language and Linguistic Area. Stanford. Contains all previous papers. 1994.Dravidian Studies - Selected Papers. New Delhi; Motilal Banarsidass. Ehrenfels, U.R. (1952. “Ancient South India and her cultural contacts” Journal of the Annamalai University; Vol 17. Fairservis, Walter A. 1971. The roots of Ancient India Farme, Hannah. 1980. Sumerian Dravidian interconnections – the linguistic, archaeological and textual evidence; I.J.D.L. Flemming, N.C. 2004. “Submarine prehistoric archaeology of the Indian Continental shelf: a potential resource. Current Science 86-9; pp 1225-30; 10th May 2004. Gamble, Clive (1995) Timewalkers, the prehistory of global colonizations; Penguin. Gnanagiri Nadar, K.C.A. 1972. Tamil: Its contribution to European languages. Penguin. Gnanaprakasar, S. 1927 Tamil Amaippurra Varalaru 1929. “The origin of language, a new theory” The Madras Christian College Magazine: IX-4 1938-48. An Etymological and comparative Lexicon of the Tamil language; Jaffna. (reprinted by ITTS, 1999) 1953. Linguistic evidence for the common origin of the Dravidians and Indo-Europeans. Tamil Culture; II-1. Grenberg, J.H. 2000. Indo-European and its closest relatives- The Eurasiatic Language family. Vol I. Grammar; and II. Lexicon.; Stanford University Press, California. Grierson, G.A. 1906 Linguistic Survey of India; Vol IV: Munda and Dravidian Languages, by Sten Konow; Calcutta. Part II – pp 277-681 Dravidian. Hakola, Hannu Pannu, 2000. “1000 DURALJAN Etyma- an extended study in lexical similarities in the major agglutinative languages. Kuopio, Finland. (2003) with co-author Hoddjat assadian: Sumerian and Proto- Duraljan; Kuopio, Finland. Haspelmath, Martin and others 2003. The World Atlas of Language Structures. OUP. Hegdeus. Iron. et al. 1997. Indo-European, Nostratic and beyond. (Festschrift for Vitaly S. Shvoroshkin; Washington, Institute for the study of Man.52 Heras, Re H. (1953) Sudies in proto-Indo-Mediterranean culture. Bombay. Hevitt, J.F. 1888. “Notes on the early history of Northern India” Journal of the Royal Asiatic Society; Vol xx. Hulbert, Homer B. 1905. A comparative grammar of the Korean language and the Dravidian languages of India. Seoul. The Methodist Publishing House. Janda, Richard.D and Brian Joseph 2003. The Hand Book of Historical Linguistics London; Blackwell. Khaire Vishvanath 2003. Visnu in the Veda ABORI, Pune, LXXIV Kothandaraman, P(1994) A comparative study of Tamil and Japanese. Krishnamnthi, Bhadriraju, 2003, The Dravidian Languages, Cambridge University Press. Kuiper. F.B.J. 1955 “Rig Vedic Loan Words” Studia Indologica: Festschrift for Willibald kirfel. Bonn; see pp 137-85; Reprintdin I.J.D.L. XXI-2; June 19922. 1967. “The genesis of a linguistic area” Indo Iramian Journal: (2-3; pp 81-102. Lahovary, N. 1963. Dravidian origins and the west. Orient Longmans. Madras. Levitt, Stephan Hillyer. 1998. “Is there a genetic relationship between Indo-European and Dravidian” The Journal of Indo-European studies Vol 26; pp 131-159. 2000. Some more possible relationships between Indo-European and Dravidian. JIES. 28; pp 407-438. 2007. A word for horse in Chinese and Dravidian. IJDL xxxvi-2 2008 Dravidian and Indo European. Chemmozhi II-1 Maclean, C.D. 1885. Manual of the Administration of the Madras Presidency. Mallory, J.P. 1996. “The Indo-European phenomenon: Linguistics and Archaeology” at pp 80-91 of Dani AH and others: History of Humanity: Vol II. Marr, J.R. 1975. “The Early Dravidians” in A.L. Basham: A Cultural History of India. Marshall, Sir John, 1934. Mohenjodaro and The Indus Civilisation. Masica, Colin P. 1992. The Indo-European Languages; Cambridge University Press. 2001. Paper in The Year Book of South Asian Languages and Linguistics. (presented at Dec 1999 Tokyo seminar on South Asian languages, contact, convergence and typology); New Delhi; Sage Publications. O’Grady, Geofrey N 1971 Lexicographical research in Aboriginal Australia. (In Sebeok, Thoms A. 1971) see pp 779-803. Possehl, Gregory. 2002. The Indus civilizations, a contemporary Perspective. (Reprint by Sage Publications; New Delhi) Prichard, James Cowles. 1847. Researches into the physical history of Mankind, world civilizations, races, tribes and culture; Vol V: Oceania and America. London: Sherwood, Gilbert and Piper. Ramanathan, P. (See under chapter 4) Sebeok Thomas A. 1971. Current Trends in Linguistics; Vol I Linguistics in Oceania. Part II. Mouton, The Hague; see pp 661-803. Steever, Sanford 1998. The Dravidian Languages, London, Routledge. Turner R.L. (1989 reprint) A comparative dictionary of the Indo- Aryan Languages. Tyler. S.A. 1973. India, an Anthropological perspective. Wurm Stephen A. 1971. Classification of Australian languages including Tasmanian. In Sebeok, Thoms A. 1971) see pp 721-773. இயல் 2 சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம் க. திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Accent) குடியேறிய பகுதியில் உருவாகிய சிந்துவெளி நாகரிகம் 1. சிந்துவெளி நாகரிகம் 1947க்கு முந்திய இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் சேர்ந்த இந்தியாவின் பரப்பளவில் கால் பகுதிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரு நிலப் பகுதியில் வடமேற்கு இந்தியாவில் பரவி இருந்தது. அதாவது சுமார் 5 லட்சம் சதுரமைல் பரப்பளவில் வழங்கியது. பண்டைய மெசபொதாமிய, எகிப்திய நாகரிகங்களின் பரப்பைவிட அதிக மான பரப்பில் சிந்துவெளி நாகரிகம் வழங்கியது. அந் நாகரிகம் வழங்கிய பகுதியில் கி.மு. 2000 வாக்கில் மொத்தம் ஐந்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது பொஸெல், பர் போலா போன்றவர்கள் கருத்து ஆகும் (அப்பொழுது உலகில் இருந்த மொத்த மக்கள் தொகையே 9 கோடிக்கும் குறைவு). சிந்து வெளி நாகரிகச் சின்னங்கள் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. அவற்றில் சுமார் 20 இடங்களில் மட்டுமே - மொகெஞ்சோதரோ, ஹரப்பா உட்பட - அகழ்வாய்வுகள் நடந் துள்ளன. சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் கி.மு. 7000 லிருந்து என்பதை மெஹர்கார் அகழ்வாய்வு நிறுவியுள்ளது. அந் நாக ரிகத்தின் சிறப்புற்ற நிலை கி.மு. 3200-1800 கால அளவைச் சார்ந்தது. மொகஞ்சோதரோ நகர மக்கள் தொகை 40,000 என்றும் ஹரப்பா நகர மக்கள் தொகை 25000 என்றும் மதிப் பிடப்பட்டுள்ளது. 2. மாந்தர் இன (A M H) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent)குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப் பகுதி என்று கொள்வதற்கான ஆதாரங்களை மேலே கண் டோம். அந்நாகரிகம் திராவிடச் சார்புடையது என்பதற்கு உள்ள மேலும் பல வலுவான ஆதாரங்களில் சில வருமாறு:- i) மொகஞ்சோதாரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிடக் கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள், நகை (ஆபரணங்)கள், பருத்தி ஆடைகள் அனைத்தும் திராவிடச் சார்புடையவை. ii) தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடாசலம் நிறுவியுள்ளார். iii) இன்றைய இந்து மதத்தின் முதன்மைக் கூறுகள் அனைத்தும் திராவிட - தமிழ் - சிந்துவெளி நாகரிகக் கூறுகளே ஆகும். சமண, - புத்த மதங்களின் தோற்றத்துக்கும் சிந்துவெளி மற்றும் வடநாட்டில் பண்டு இருந்த தமிழ் (திராவிட) ஞானிகளே காரணமாவர். இக்கருத்தை டைலர் (1973) பின்வருமாறு கூறுவார்; இன்றைய வேத மதக் கருத்துக்கள் – அவற்றிற்கு எதிரான சமண புத்தம் முதலிய கருத்துக்கள் இவற்றிற்கு இடையே முதலில் உறழ்வு, பின்னர் இணைப்பு என்றவாறு இந்துமதம் உருவானது என்று கருதுவது அவ்வளவு சரியானதல்ல. சிந்து வெளி நாகரிகம் சார்ந்த, பண்டைய தொல்லிந்திய (தமிழிய) நாகரிகத்தின் புத்துயிர்ப்பே, மறு மலர்ச்சியே இன்றைய இந்துமதம் ஆகும். (The Hindu synthesis was less the dialectical reduction of orthodoxy and heterodoxy than the resurgence of the ancient aboriginal Indus civilisation) மறைமலையடிகளும் (1903,1923,1930) பி.டி.சீனிவாச ஐயங்காரும் இக்கருத்தினரே. iv) இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ. கோஸ்வாமி “இந்திய இசைவரலாறு”, 1957.) சிந்துவெளி அகழ்வாய்வுகளுக்கு நெடுங்காலம் முன்னரே ஹெவிட் (1888). மறைமலையடிகள் (1903) போன்ற நுண் மாணுழை புலமிக்க அறிஞர் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் வாழ்ந்து வந்த நாகரிகமிக்க தமிழிய மக்களிடமிருந்தே ஆரியர் நாகரிகம் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாகக் கூறியிருந்தனர். இவற்றின் விரிவை பி. இராமநாதன் : சிந்து வெளித் தொல் தமிழ நாகரிகம் 1999 இயல்கள் 3-6 மற்றும் 8 இல் காண்க). 3. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர் என்று தன்னை அழைத்துக் கொண்ட எஸ். ஹீராஸ் பாதிரியார் (11.9.1888 - 14. 12. 1955) தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Proto - Indo Mediterranean Culture 1953) என்னும் நூலில் சிந்து வெளி நாகரிகம் திராவிடருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி என்பதை நிறுவியுள்ளார். மிகப் பழங் காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஹீராஸ் கொள்கை (அவர் வாதத் துக்கு ஆதாரமாகக் கொண்ட செய்திகள் சில இப்பொழுது தவறாகத் தோன்றலாம்; சிந்துவெளி முத்திரைகளை அவர் திராவிட மொழி சார்ந்தவை என்று கொண்ட முடிவு சரி யென்றாலும் அவர் முத்திரைகளில் படித்துக் கண்ட வாசகங்கள் இன்று ஏற்கத்தக்கனவாக இல்லை. இருந்தாலும் அவர் கண்ட அடிப்படை உண்மை இன்றும் வலுவுடையதாகவே உள்ளது.) 4. என் லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்றமும் மேல் நாடுகளும் (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்ம்மைகளை உணர்த்து வதாகும். “திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரை பரவினர்” என்ற அபத்தக்கொள் கையை அவர் (விவரம் புரியாமல்) பின்பற்றியிருந்த போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்ம்மைகள் முக்கியமானவை: i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை ஒரே மாதிரியான “பல சொல் பிணிப்பு ஒட்டுநிலை” (Polysynthetic Suffixal) மொழிகள் இடையீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற் களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்டி, போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii) இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் (கி.மு 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமன்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன் மொழிகளுடனும் உறவுடையது. iii) இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; அவை பொதுவான ஒரே தாய் மொழி யின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 5. சிந்துவெளி நாகரிகம் இந்தோ ஆரிய மொழி பேசுநர் உருவாக்கியதாக இருக்கலாம் என இன்றைய இந்திய அறிஞர் (குறிப்பாக வடநாட்டறிஞர்) சிலர் கூறுகின்றனர். இது தவறு என்பதைச் சற்றே விளக்குவோம். வேத மொழியாகிய இந்தோ ஐரோப்பிய மொழி இந்தியாவில் உருவாகியிருக்கலாம் என்று வேத, சமஸ்கிருதப்பற்றாளர் கூறுவது அபத்தம் [இதுவேறு; கி.மு. 10000க்கு முன்னர் தொல்திராவிடமொழியிலிருந்து கிளைத்த மொழிக்குடும்பங்களுள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பமும் ஒன்று என்ற ஞானப்பிரகாசர் – தேவநேயன் கோட்பாடு வேறு!] கி.மு. 1700 - 1500 காலகட்டத்தில் இந்தியா விற்குள் வடமேற்கிலிருந்து நுழைந்தவர்கள் வேதமொழி (Vedic Language)ஆகிய இந்தோ ஆரிய மொழி பேசுநர் ஆவர். இவர் கள் சிந்துவெளி நாகரிக மக்களோடு ஒப்பிடும் போது சிறு எண்ணிக்கையினராகவே இருந்திருக்க வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிப் பெருங்குடும்பத்தில் அடங்கியவை இந்தோ ஆரிய மொழியாகிய வேதமொழி தவிர இரானியன் (அவெஸ்தன்), அனடோலியன் (ஹிட்டைட்), அர்மீனியன், டோக்காரியன், அல்பேனியன், கிரீக்கு, இத்தாலிக் (இலத்தீன் முதலியவை), கெல்டிக் (ஐரிஷ், வெல்ஷ் உட்பட), ஜெர்மானிக் (ஆங்கிலம் உட்பட), பால்டிக் (லட்வியன், லித்துவேனியன்), ஸ்லாவ் (ரஷ்யன்முதலியவை) ஆகியவையாகும். இந்தப் பல் வேறு இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் ஒருங்கு சேர்ந்து கி.மு. 4000 - 3000 கால அளவில் கருங்கடல் - காஸ்பியன் கடல் பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய - ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளிகளில் வசித்து வந்த நாடோடிகள் (nomads)ஆவர். அக் காலக்கட்டத்தில் அவர்கள் இந்தோ ஐரோப்பியத் தொன் மொழியைப் பேசிவந்தனர். கி. மு. 3000 - 2000 கால அளவில் தென் கிழக்காகவும் நகரலாயினர். மேற்கில் சென்ற நாடோடிக் குழுவினருள் ஒன்றான கிரீக்குமொழி பேசுநர் நுழைந்த பகுதி யில் (திராவிடச் சார்பான) அப்பகுதிப் பழங்குடி மக்களுடன் கலந்து கிரீக்கு மொழி பேசுநர் உடனடியாக நாகரிகம் பெற்றனர். கிழக்கு தென்கிழக்காகப் பெயர்ந்த நாடோடிக் குழுவினருள் இந்தோ ஆரிய மொழி பேசும் குழுவும் ஒன்று. கி.மு. 1700 - 1500இல் அவர்கள் இந்தியாவுக்குள் இரானிலிருந்து நுழைந்த பொழுது அவர்களும் சிந்துவெளித் தொல் நாகரிகத்தினரிட மிருந்து விரைவில் நாகரிகம் பெற்றனர். சிந்துவெளித் திராவிட அறிஞர்கள் (அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் ஏற்கப்பட்டனர்) படைப்புகளும் நேரடியாகவோ மொழி பெயர்க்கப்பட்டோ ரிக் வேதத்திலேயே ஏறியுள்ளன என்பது மறைமலையடிகள் (1903, 1923, 1930), வால்பர்ட் போன்றோர் கருத்தாகும். 6. தங்களுடைய The rise of civilisation in India and Pakistan (1988)நூலில் பிரிட்ஜட் மற்றும் ரேமாண்ட் ஆல்சின் தம்பதியர். கருத்தும் இதுவே : (The earliest Indo-Aryan text, the compiled Rg Veda, shows several influences of a non-Indo-Aryan, Dravidian element, in the form of phonetic changes, introduction of loan words and names etc.These presuppose the coexistence of the Vedic and Dravidian speaking peoples in a cultural contact situation for a period, perhaps of centuries, before the compilation of the Rg Veda (circa 1500- 1300BC) முதற்கண் இந்தோ ஆரிய மொழி பேசுநருக்கும் சிந்து வெளி நாகரிகத் தமிழருக்கும் (திராவிடருக்கும்) இடையே வன் முறை ஏற்பட்ட போதிலும் விரைவில் இருவகையாரும் கலந்து விட்டனர். ஆரியரால் நகரங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். இந்திர னின் பெயரே புரந்தரன் (நகரங்களை அழிப்பவன்) தானே! நகரங்களின் வீழ்ச்சிக்கு கி.மு. 1700ஐ ஒட்டி நிகழ்ந்த இயற்கை, சுற்றுப் புறச் சூழ்நிலைக் காரணங்களும் ஓரளவு காரணமாயிருந் திருக்கலாம் என்று ஆல்சின் (1995) கூறுகிறார். ஆனால் சிந்து வெளி நாகரிகம் பரவியிருந்த சிற்றூர்ப்புறப் பெருநிலப் பரப்பில் (சிறு எண்ணிக்கையில் நுழைந்த) ஆரியரால் பெருந்தாக் கம் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆகவேதான் சுநீதிகுமார் சாட்டர்ஜி, வால்டர் பேர்சர்வீஸ், எஸ்.ஏ.டைலர் போன்றோர் கூறுவதுபோல இன்றைய நாகரிகம், பண்பாடு, இந்துமதம் ஆகியவற்றின் அடித்தளம் (ரூபாய்க்கு 12 அணா அளவுக்கு என்பார் சட்டர்ஜி) திராவிட (தமிழ்) மொழி, பண்பாடு ஆகி யவையே. இந்தோ ஆரிய மொழி பேசுநர் பரவல் பற்றிய வரலாற்றிலிருந்தே அவர்கள் கி.மு. 1700க்கு முந்திய சிந்து நாகரிகத்தை உருவாக்கியிருக்க இயலாது என்பது தெரியும். சிந்து வெளி நாகரிகச் சின்னங்களில் ஆரியருக்கு நெருக்கமான குதிரை கிடையாது என்பதும் முக்கியமானது. 7. இந்தோ ஆரிய மொழியின் ரிக்வேத நிலையிலேயே நுழைந்துள்ள திராவிடச் சொற்களாக சுமார் நாற்பது – ஐம்பது சொற்களை பரோ, எமனோ போன்றவர்கள் ஏற்கெனவே அடை யாளம் கண்டுள்ளனர். திராவிட மொழியியல் - ஓர் அறி முகம் (1990) நூலில் இதைக் குறிப்பிடும் சுவெலபில், ரிக் வேதக் காலத்திலிருந்தே இந்தோ ஆரிய மொழி கடன் பெற்றுள்ள ஏறத்தாழ 10 மொழியியற் கூறுகளையும் பட்டியலிட்டுள்ளார். [இவையெல்லாம் வேத சமற்கிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் என்ற அளவில்தான் இவர்கள் ஆய்வுகள் உள்ளன. ஆனால் ஞானப் பிரகாசரும் பாவாணரும் கண்ட முடிவுகள் இவற்றைவிட மிக விஞ்சியவை. அவ்விருவரும் “இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை வேர்ச் சொற்கள் பலவும் தொல் - திராவிட மொழியிலிருந்து பெற்றவையே” என்ற கருத்துடையவர்கள்.] 8. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் அந் நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே என்றும் தகுதி வாய்ந்த அறிஞர் அனைவரும் ஏற்கின்றனர். Indus Script Dravidian (1995) நூலில் இரா. மதிவாணன், சிந்து வெளியில் முந்து தமிழ் (2004) நூலில் பூர்ண சந்திர ஜீவா ஆகியோர் அவ் வெழுத்துக்களைத் தொல்தமிழாகப் படிக்கும் பொழுது தொல் காப்பியத்திலிருந்து கிட்டும் மொழியியல் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். புறநானூறு 201, 202இல் குறிப்பிடப்படும் இருங்கோவேளின் முன்னோர் சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடையவர்களாகக் கபிலரால் கருதப்பட்டனர். புறநானூறு 202 குறிப்பிடும் அரையம் ரிக்வேதம் 6.27. 5இல் சுட்டப்படும் ஹரியூபியா தான் என்பது பி.எல். சாமி கருத்து (செந்தமிழ்ச் செல்வி சனவரி 1994). அரையம் = அரசமரம். அரைய + அகப்பா = அரையகப்பா = ஹரப்பா என்று பெயர் மாறியது என்கிறார் அவர். இருங்கோவேளின் முன்னோர் 49 தலைமுறைகளுக்கு முன்னர் (அதாவது தொல் பழங்காலத்தில்) புகழ்பெற்ற துவரை என்னும் கோட்டை நகரை ஆண்டு வந்தனர் என்று புறம் 201 கூறுகிறது. தமது தொல்காப்பியப் பாயிர வுரையில் நச்சினார்க்கினியர் வேளிர் துவாரபதி (துவாரகை)யிலிருந்து வந்தவர்கள் என்கின்றார். அரையம் ஹரப்பாவைத்தான் குறிப்பதாகக் கொண்டால் ஹரப்பா பற்றியும் துவாரகை பற்றியும் கபிலர் காலத்தில் வழங்கிய (ஒரு நகருக்குரியதை மற்றதற்குரியதாக மாற்றி வழங்கிய) தொன்மக் கருத்தைப் புறம் 201, 202 பாடல்கள் கூறுகின்றன என்க. இதனை ஜீவா மேலும் ஆய்வு செய்கிறார். வேள்-வேட்-பேட் (Bet) - பேட் துவாரகா என்று துவாரகையின் பெயர் வரலாற்றை அவர் தருகிறார். 9. சுமேரிய நாகரிக முத்திரைகளில் சிங்கங்கள் இரண்டைக் கொல்லும் கில்காமெஷ் உருவம் காணப்படுகிறது. கில்காமெஷ் பற்றிய தொன்மக் கதையும் சுமேரியப் பொறிப்புகளில் தரப் படுகிறது. சிந்துவெளி முத்திரைகள் இரண்டில் (கில்காமேஷ் சிங்கங்களைத் தாக்குவது போலவே) இந்திய வீரன் ஒருவன் புலிகள் இரண்டை கைக்கு ஒன்றாகக் கொல்வது போல் சித்திரிக்கப்பட்டுள்ளான். புறம் 201 இருங்கோவேளைப் ‘புலி கடிமால்’ என்று அழைக்கிறது. இருங்கோவேளின் முன்னோர் காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தொடங்கி யிருக்கலாம் என ஐ. மகாதேவன் Journal of Tamil Studies மே 1970 இதழில் உன்னித்திருந்தார். ஆயினும் 2002 சனவரியில் அவர் கருத்து அந்த உன்னிப்பிற்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதாகும். 10. ரிக்வேதம் ஐ. 133, 1 & 3இன் ஆங்கில வடிவம் வருமாறு; “ஓ மகவான்! அழிந்துபட்ட வைலஸ்தானக நகரத்திலும், அழிந்துபட்ட மகாவைலஸ்த நகரத்திலும் உள்ள சூனியக் காரிகள் கும்பல்களை அழித்து ஓழிப்பாயாக” “நான் மேலுலகத்தையும் பூமியையும் சத்தியத்தினால் தூய்மைப்படுத்துகிறேன். வைலஸ்தான நகரில் இந்திரனால் தோற்கடிக்கப்பட்டு கொலையுண்டு கிடக்கும் (இந்திரனை எரித்த) ஆற்றல் மிக்க துஷ்டப் பிசாசுகளை நான் எரித்து ஒழிக்கிறேன்” ஆரியர்களால் நாசமாக்கப்பட்ட நகரத்தின் பெயரான ‘வைலஸ் தானம்’ என்பது ஆரியமொழியல்லாத பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பது டாக்டர் பரோ கருத்து ஆகும். (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிஸ்டரி XII - 1 ஏப்ரல் 1963,) ஒருக்கால் ‘வைலஸ்தானம்’ என்பது வேளிருடைய ஊர்/நகரைக் குறித்திருக்கலாம். 11. சிந்து முதலிய ஆறுகளில் சிந்துவெளித் திராவிடர்கள் கட்டியிருந்த அணைகளை ஆரியர் உடைத்து நாட்டை வெள்ளக் காடாக்கி அழித்திருக்கலாம் என்பர் தாமோதர் தர்மானந்த் கோசம்பி (The culture and Civilisation of Ancient India in historical outline 1974). மதுரைக் காஞ்சி 725ஆம் அடியிலும் அக நானூறு 346ஆம் பாடலிலும் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளைக் குறிக்க ‘கற்சிறை’ என்னும் சொல் பயன்படுகிறது. ரிக் வேதத்தில் அணையைக் குறிப்பிடும் சிரா (Sira) என்னும் சொல் ‘கற்சிறையின்’ சிதைவே என்பர் பி.எல். சாமி (செந்தமிழ்ச் செல்வி : 1994 நவம்பர்). அகழ்வாய்வில் கிடைத்துள்ள முக்கியமான சிந்துவெளி நாகரிகத் தலங்கள் உ. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் தமிழிய மொழியாகப் படிக்கத்தக்கவையே என்பதும் தமிழ் வரி வடிவம் சிந்துவெளி வரிவடிவத்திலிருந்தே உருவாகியிருக்கலாம் என்பதும் 1. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் என்பவை மூவாயிரத்துக்கு மேற்பட்ட “ஸ்டீயட்டைட்” (சவர்க்காரக்கல், அதாவது மாக்கல்) முத்திரைகளிலும் சில செப்புத் தகடுகள் போன்றவற்றிலும் உள்ளவை. ஒவ்வொரு முத்திரையும் சுமார் 20 மி.மீ. x 30 மி.மீ. அளவுள்ளது. சில சதுரமானவை. பெரும் பாலனவற்றில் ஒரு விலங்கின் உருவமும் அதன் மேல் பக்கத்தில் ஒன்றிலிருந்து பத்துப் பன்னிரண்டு (சராசரி 5) குறியீடுகளும் உள்ளன. மிக நீண்ட தொடர் 26 குறியீடுகள் கொண்டது. சிந்து வெளியிலிருந்து பருத்தித் துணி போன்றவற்றை சுமேரியா போன்ற மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்பொழுது சிப்பங்கள் கட்டி அவற்றின்மேல் பொருளுக்குரியவர் பெயரைக் களிமண்ணில் முத்திரையிட இம் முத்திரைகளுள் பெரும் பாலானவை பயன்பட்டிருக்கலாம் என்பதே சிறந்த ஆய்வறிஞர் கள் கருத்து. வீலர், ஹண்டர், காட் (Gadd), கோசம்பி, கோ (Coe) ஆகியோர் இந்த அடிப்படையில்தான் முத்திரைக் குறியீடுகளில் உள்ளவை தனி ஆட்களின் பெயர்களாகத் தான் (சில நேர்வு களில் பட்டங்களுடன்) இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சிப்பத்தைக் கட்டிய கயிறு, பாய் இவற்றின் சுவடுகள் சில களிமண் கட்டிகளில் காணப்படுகின்றன. (சில கட்டிகள் ஒரோ வழி நெருப்பின் வாய்ப்பாட்டு சுடப்பட்டதால் அவை மட்டுமே இன்று கிடைக்கின்றன. அவற்றில்தான் இவ் வடையாளங்கள் தெரிகின்றன) ஆக, ஆல்சின் (1988) கூறுவது போல் “இம் முத்திரைகளின் பயன்பாடு (அல்லது பயன்பாடு களில் ஒன்று) வாணிக நடவடிக்கைகள் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை” (There can be little doubt that the Harappan seals were - atleast as one of their functions – necessary elements in the mechanism of trade. p. 185.)சில முத்திரைகள் தாயத் துக்களாகவும் நேர்த்திக் கடன் வில்லைகளாகவும் அடையாள இலச்சினைகளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். 2. பல முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு தெரியும் எருது ஒன்றின் முன்னர் என்ற வடிவம் உள்ளது. மகாதேவன் கருத்து (1985, 1984) இவ்வடிவம் சோமச்சாறு வடிக்கப்பட்ட ஏனம்; பின்னர் சோமச்சாறு ஆரியர்களாலும் முக்கியமானதாக ஏற்கப்பட்டது என்பதாகும். பிற்காலத்தில் இவ்வடிவம் இந்திரத் வஜம் ஆனது. அளக்குடி சீத்தாராமன் கரூரில் கண்டெடுத்த செப்பு முத்திரையிலும் இந்த வடிவம் உள்ளது என்பது மகா தேவன் கருத்து ஆகும். 3. சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் ஏறத்தாழ 400 அளவில் உள்ளன. (பர்போலா 385, மகாதேவன் 417). 2906 முத்திரை வாசகங்களில் கண்ட குறியீடுகளை மகாதேவன் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்: குறியீடு ஒவ்வொன்றும் மொத்தம் மொத்தத்தில் எத்தனை அவை விழுக்காடு தடவை எத்தனை தடவை வருகின்றன 1 100ம் அதற்கு மேலும் 1395 10.43 1 999 - 500 649 4.85 31 67 499 - 100 6,344 47.44 34 99 - 50 2,381 17.81 86 49 - 10 1,833 13.71 152 9 - 2 658 4.92 112 ஒரே தடவை 112 0.84 417 13,372 100.00 80 விழுக்காடு தடவைக்கு மேல் வரும் குறியீடுகள் 67 மட்டுமே யாகும். (பாதிக்கு மேற்பட்ட குறியிடுகள் ஒவ்வொன்றும் பத்து தடவைக்கும் குறைவாகவே வருகின்றன. அவற்றுள்ளும் 112 ஒவ்வொன்றும் ஒரு தடவையே வருகிறது). ஆக, இந்த 67 குறியீடு களுக்கும் முதன்மை தந்து வாசிக்க முற்படுவது நல்லது என்கிறார் மகாதேவன். மொத்தம் சுமார் 400 குறியீடுகளில் அடிப்படைக் குறியீடுகள் 200 என்பது பர்போலா கருத்து. 4. சிந்துவெளி முத்திரை எழுத்துக்கள் பழந்தமிழே (பழந் திராவிடமே) என்பதை இத்துறை வல்லுநர் அனைவரும் ஏற்கின்றனர். இவற்றைப் படித்துள்ள அறிஞர்கள் (பர்போலா, மகா தேவன், மதிவாணன், பூர்ண சந்திர ஜீவா, பேர் சர்வீஸ் முதலியோர்) ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக வாசித்துள்ளனர். முத்திரையைக் குத்தியபின் கிடைக்கும் முத்திரைப் பதிவில் உள்ள வாசகங்களை (Impressions) வலமிருந்து இடமாகவே பெரும்பாலோர் படிக்கின்றனர். (மதிவாணன் மட்டும் இடமிருந்து வலமாகப் படித்துள்ளார்) எனினும் இம் முத்திரை எழுத்துக்கள், திராவிட மொழியைச் சார்ந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது; பின்வருவனவற்றைக் காண்க:- ஸ்டான்லி வால்பர்ட் : இந்தியாவுக்கு ஓர் அறிமுகம் “பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல்திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக் கலாம் என்பதும் ஆகும்.” ‘We assume from various shreds of evidence that they were proto Dravidian, possibly using a language that was a grandfather of modern Tamil” (Stanley Wolpert: An Introduction to India,University of California Press 1991) ஜே.எம். ராபர்ட்ஸ் : பெங்குயின் உலக வரலாறு “தென்னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக (சிந்துவெளி முத்திரைச் சொற்கள்) இருக்கலாமெனத் தோன்றுகிறது.” It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used in southern India (J.M. Roberts History of the World Pelican 1992). கமில் சுவெலபில் : திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் “சிந்து வெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும்பொழுது அது திராவிட மொழி சார்ந்ததாக அமைவதற்கே வாய்ப்பு மிக அதிகம்.” The most probable candidate is and remains some form of Dravidian” (Dravidian Liguistics - An Introduction. Pondicherry 1990; Chap VI : Dravidian and Harapan) 5. சிந்து வெளி முத்திரை எழுத்துக்களிலிருந்தே சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் உருவாயின என்பது மதிவாணன் கருத்து. ஏறத்தாழ கி.மு. 700க்கு முன்னமே தமிழுக்கு ஓர் எழுத்து வரி வடிவம் இருந்தது; அதைப் பின்பற்றியே அசோக பிராமி எழுத்து உருவாக்கப்பட்டது; எனக் கொள்வதற்கான ஆதாரங்கள் உண்டு. 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம்பியன் கண்டியூரில் வி. சண்முகநாதன் கண்டெடுத்த புதுக் கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் “முருகு அன்” (முருகன்) என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு. 2000-1500ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். புதுக்கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினர் என்றும் அம்மொழி திராவிட மொழியே என்றும் இக் கண்டுபிடிப்பு நிறுவுகிறது என்பது அவர் கருத்து. (“The Neolithic people of Tamilnadu and the Indus Valley people shared the same language which can only be Dravidian and not Indo-Aryan”);1.5.2006. இந்து நாளிதழ். 6. பல்வேறு அறிஞர்கள் சிந்துவெளி எழுத்தைப் படித்துள்ள மாதிரிகளை அடுத்துக் காண்க. இயல் 2க்கான நூற்பட்டியலை பின்வருவனற்றில் காணலாம். 1. பி. இராமநாதன் 1999: சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம்; சைசி நூபக சென்னை - 18. 2. P. Ramanathan 2008. Hypothesis of the proto-Dravidian provenance of Indus civilisation - An update in the light of current progress in various disciplines [with elaborate bibiliography] Arimaa Nokku 2:2; July 2008. இயல் 3 வரலாற்றுக் காலத்துக்கு (சங்க காலத்துக்கு) முந்தைய ஞசடிவடிhளைவடிசiஉ காலத் தமிழக வரலாறு (கி.மு. 1000 - கி.மு. 300) 1. தமிழக வரலாற்றில் வரலாற்றுக் காலத் தொடக்கம் என பொதுவாக இன்று ஏற்கப்படும் சங்க காலம் கிமு. 300 - கி.பி. 300 சார்ந்தது. அதற்கு முந்திய “வரலாற்றுக்கு முந்திய காலம்” ஆகிய கி.மு. 1000-300 பற்றிய செய்திகளைத் திறம்படத் தருவது ராஜன் (2004) தொல்லியல் நோக்கில் சங்ககாலம் ஆகும். ஆதிச்சநல்லூரில் உள்ள கி.மு. 1000 காலத்திய இடுகாடு 114 ஏக்கர் பரப்புள்ளது. அதில் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. கொடுமணலில் (சங்ககாலக் கொடு மணம்) 50 ஏக்கர் பரப்புள்ள பழைய வாழ்விடத்திலும் 1 விழுக்காடு மட்டுமே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு விழுக் காடு அகழ்வாய்வுகளில் கிடைத்த எச்சங்களிலிருந்தே கிமு 1000 முதல் தமிழகத்தில் வாழ்ந்த மக்களே, இடையீடின்றி, சங்க இலக்கியம் விவரிக்கும் தமிழர் சமுதாய மக்களாயினர் என்று நிறுவ இயன்றுள்ளது. மகாதேவன் (2003) Early Tamil Epigraphy நூலில் தமிழிக் கல்வெட்டுகள் எவற்றையும் கி.மு. 200க்கு முந்தியதாகக் கருதவில்லை. ஆனால் அவற்றை (குறிப்பாக கொடுமணல் பானை ஓட்டுத் தமிழிப் பொறிப்புகளை) கி.மு 4 அல்லது 5 நூற்றாண்டினவாகத் தான் கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை ராஜன் தந்துள்ளார். 2. கிமு 1000 - கிமு. 300 காலகட்டமே தமிழகத்தின் இரும்புக்காலம் அல்லது பெருங்கற்படைச் சின்னக் (Megalithic) காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அக்கால கட்டத்தில் இறந்த வர்கள் தாழியில் புதைக்கப்பட்டனர். கற்பதுக்கைகளில் அடக்கம் செய்யப்பட்டனர். பெருங்கற்படைச் சின்னங்கள் சில விடங்களில் இருந்தன; சில விடங்களில் இல்லை; எனினும் இக்காலம் “பெருங்கற்படைச் சின்னக்காலம்” என்றே பொது வாக குறிப்பிடப்படுகிறது. 3. கி.மு. 1000 அளவில் மக்கள் பெருமளவுக்கு ஆடுமாடு வளர்ப்பவர்களாகவே இருந்தனர். வேளாண்மை தொடக்க நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது அகழ்வாய்வுகளின் முடிவாகும். கொடுமணல், தாண்டிக் குடி பானை ஓட்டுத் தமிழின் பொறிப்புக் காலம் கி.மு. 5 அல்லது 4 ஆம் நூற்றாண்டாகத்தான் இருக்க வேண்டும் என ராஜன் நிறுவியுள்ளார். அப்பொழுதே எழுத்தறிவு பெற்ற சமுதாயம் தமிழகத்தில் இருந்தது. எனவே வர லாற்றுக் காலமே தமிழகத்தில் கி.மு. 500லிருந்து தொடங்கி யதாகக் கொள்ள இடமுண்டு என்பார் ராஜன். 4. தமிழிய மொழி பேசுநர் கிமு 2000க்கு முன்னர் இருந்தே தமிழகத்திலும் தென்னாட்டிலும் இடைவிடாது வசித்துவந்த மண்ணின்மைந்தரே என்பதையே தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன என்பதை ஆல்சின் தம்பதியர் 1988 தம் நூலில் பின்வருமாறு கூறுவர். “தென்னிந்தியா இன்று திராவிடமொழிகள் வழங்கும் பகுதி. அம்மொழிகளைப் பேசுவோர் பூர்வீகம் என்னவாக இருந்திருக்கலாம்? அவர்கள் (வடமேற்கிலிருந்து) தென்னிந்தியா விற்கு வந்து குடியேறும்போது தம்முடன் இரும்பையும் பெருங் கற்படை நாகரிகத்தையும் கொணர்ந்தனர் என (வலுவான ஆதாரமின்றிக்) கூறப்படுகிறது. தொல்லியல் சான்றுகளின்படி இப்படி நடந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. இரும்புப் பயன் பாட்டிற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கருநாடகத்தில் (தென் இந்தியாவில் பிற பகுதிகளிலும் கூட இருக்கலாம்). பெருங்கற்படை நாகரிகக் குடியிருப்புகள் இருந்துள்ளன; அவை இடையீடு இன்றி தொடர்ந்து இருந்து வந்துள்ளன; வியக்கத் தக்க பண்பாட்டுத் தொடர்ச்சியுடன் இன்றும் உள்ள பண் பாட்டுக் கூறுகள் பல அந்தப் பழைய நாகரிகக் கூறுகளின் தொடர்ச்சியாகவே தோன்றுகின்றன. உடற்கூறு அமைப்பிலும் அந்தப் பழைய நாகரிக மக்களும் இன்றைய மக்களும் பெரும் அளவுக்கு ஒன்று போலவே உள்ளனர். எனவே தென் னிந்தியாவில் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே) புதுக்கற்கால நாகரிகம் படைத்த மக்களிடையே உருவானவையே திராவிடமொழிகள் என்பதை மறுப்பது கடினமாக உள்ளது. தென்னிந்தியாவில் பற்பல பகுதிகளில் இருந்த புதுக்கற்கால நாகரிக மக்களிடையே தொடர்பு இருந்திருக்கும்; பொதுவான திராவிட மொழியும் இருந்திருக்கும். கி.மு. 3000 - 1000 கால அளவில் தென்னிந்தியாவில் இருந்த புதுக் கற்கால குடியிருப்பு களில் இருந்து பிறந்தவையே வரலாற்றுக் காலத் தொடக் கத்தைச் சார்ந்த குடியிருப்புகளும் எனலாம்.” The southern part of the peninsula is today the homeland of the Dravidian language, and we may well enquire what - speaking in broadest terms - is likely to have been their history. It has been claimed, though not on very solid grounds, that the earliest speakers of these languages brought with them into Peninsular India both iron and the custom of making megalithic graves. In the light of archaeological evidence this appears to be extremely improbable. We now know that at least for a millennium prior to the arrival of iron, there were established settlements in Karnataka, and probably also in other parts of the peninsula, and these settlements show evidence of a remarkable continuity of culture. Many modern culture traits appear to derive from them, and a substantial part of the populations shows physical affiliation to the Neolithic people. In the light of all this it is difficult to believe that the Dravidian languages do not owe their origin to the same people who produced the Neolithic culture there. xxxxx the several regional cultures .... had throughout a degree of interaction and probably originally a common language family, Dravidian. xxxx the settlements of the third - second millennia appear to be ancestral to those which we encounter there from the beginnings of history onwards. (p. 353) 5. பெருங்கற்படை நாகரிகம் தமிழ்நாட்டிலிருந்தே வடக்கே தக்காணத்திற்குப் பரவியது என்று தொல்லியலறிஞர் ஏ.சத்தியமூர்த்தி 26.5.2007 இந்து நாளிதழில் தெரிவித்துள்ளார். இயல் 4 சங்ககாலம் க. சங்க காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை மதிப்பீடு: 1. கி.பி. 2001ல் உலக மொத்த மக்கள் தொகை 600 கோடி. (இந்தியா 100 கோடி உட்பட). இந்தியர் 100 கோடியினரில் தமிழ் நாட்டினர் 6 கோடி. சங்ககாலத்திலும் அதன் பின்னர் வந்த காலங்களிலும் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் அவரவர் சார்ந்துள்ள கொள்கையை ஒட்டிப் பல்வேறு நிலைமைகளை தம் விருப்பு வெறுப்புக்கேற்ப உன்னித்து எழுதும்பொழுது முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை என்ன? இந்த நெடிய கால அளவில் தமிழகத்திலும் (இந்தியாவிலும், உலகிலும்) மக்கள் தொகை இன்று உள்ள அளவில் அன்றி பின்வருமாறு மிகக் குறைவாகவே இருந்திருக்கும்; மக்கள் தொகையும் 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிக மந்தமாகவே வளர்ந்து வந்தது; என்பவையே அவை. வருடம் இன்றைய இந்தியா உலகம் தமிழகம் (கோடிகளில்) (கோடிகளில்) கி.மு. 500 30 லட்சம் 1 10 கிறித்துவுக்குப் பின்னர் 1 40 லட்சம் 2 20 300 50 லட்சம் 2.50 22 1000 50 லட்சம் முதல் 5 27 1300 80 லட்சம் வரை 6 40 1600 80 லட்சம் 15 65 1800 1 கோடி 18 100 1871 (முதல் இந்திய சென்செஸ் 1.47 கோடி 21 120 2001 6 கோடி 100 600 [உலக மக்கள் தொகை விவரங்கள் பல்வேறு நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. கி.மு. 500, கி.பி. 1, கி.பி. 1600 ஆகிய ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை விவரங்கள் ரோமிலா தாபர் எழுதிய பண்டைய இந்தியாவின் பெங்குயின் வரலாறு (2002) புத்தகத்திற் கண்டவை. தமிழகப் பகுதியின் சங்க கால மக்கள் தொகை மதிப்பீடு அடுத்த பத்தியிற் காணும் ஆய்விலிருந்து எடுக்கப்பட்டது ஆகும்.] 3. கோலாம்பூரில் 1966 ஏப்ரலில் நடந்த முதல் உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு 1969, கட்டுரைகளில் ஒன்று எம்.ஈ. மாணிக்கவாசகம் பிள்ளை எழுதிய ‘சங்க காலத்தில் தமிழக மக்கள் தொகை’ என்பதாகும். தற்போதைய கேரளம் சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியே. 1911 சென்சஸ்படி தற்போதைய தமிழ்நாடு + கேரளம் மொத்த மக்கள் தொகை 2.80 கோடியாக (2.01 + 0.79) இருந்தது. (கி.பி. 1ல் மொத்த உலக மக்கள் தொகையை 20 கோடியாகக் கொண்டு) 1911 தமிழ்நாடு + கேரளா மக்கள் தொகை 2.80 கோடியைப் படிப்படியாகக் குறைத்துக் கணக்கிட்டு (சங்ககால) தமிழக மக்கள் தொகையைப் பின்வருமாறு கணக்கிட்டுள்ளார் மாணிக்கவாசகம்: கி.பி. 1 36 லட்சம் கி.பி. 300 50 லட்சம் கி.மு. 300இல் தமிழக மக்கள் தொகை 36 லட்சத்துக்கும் குறைவாக இருந்திருக்கும். ஆக கி.மு. 300 முதல் கி.பி. 300 முடிய அறுநூறு ஆண்டுகளுமே. அன்றைய தமிழக (வேங்கடத்திற்கு தெற்கே தென்னிந்தியா) மக்கள் தொகை எந்தக் கால கட்டத்திலும் சுமார் 25 லட்சத்துக்கும் 50 லட்சத்துக்கும் இடைப்பட்ட ஒரு எண்ணிக்கையில் தான் இருந்திருக்கும். (அதாவது இன்றைய சென்னை நகர மக்கள் தொகை 40 லட்சத்துக்கு கொஞ்சம் கூடக் குறைய இருந்திருக்கும்.) இன்றைய தமிழகப் பரப்பின் அன்றைய மக்கள் தொகை 30 லட்சம் என்க. மொத்தமக்கள் தொகை சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் மிகக் குறைந்ததாக இருந்ததுடன் போக்குவரத்து வசதிகளும் மிக மிகக் குறைவாக இருந்திருக்கும். பண்டைக் கால நிலைமைகள் குறித்து இன்று எஞ்சியுள்ள ஆதாரங்களும் மிகக் குறைபாடுடையனவே. 4. எனவே வரலாற்று ஆசிரியர்கள் எச்சரிக்கையுடன் பண்டைக்கால சமூக மற்றும் பிறநிலைமைகளைப் பற்றி எண்ணிப்பார்த்து எழுதுதல் நலம். 1992ல் தனது உலகவரலாறு (பெலிகன் வெளியீடு) நூலில் ஜே.எம். ராபர்ட்ஸ் விடுத்த எச்சரிக்கை “பழங்காலத்தில் இருந்த ஐரோப்பிய மக்கள் அன்றாட வாழ்க்கை சமூக உறவுகள் பற்றியெல்லாம் பொதுவான ஆனால் அபத்தமான கருத்தோட்டங்களைக் கூறுவது எளிது” என்பதாகும். அது சங்ககாலத் தமிழர்க்கும் பொருந்துவதாகும். காரணம் வில் & ஏரியல் டுராண்ட் கூறியதுபோல “வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை, மீதி விருப்பு வெறுப்பின் படியான கூற்று” ஆகும். “இடதுசாரி” / “வலது சாரி” / “நடுநிலை” போன்ற பல்வேறு போர்வைகளில் வரலாறு எழுதுபவர்கள் பலர் (“Committed historians”) தத்தம் பற்று காரணமாக ஒரு கோணத்தில், ஒரு நிலையில், ஒரு தொலைவிலிருந்து (காமாலைப்பார்வை போன்று) ஒரே நோக்கில் பார்த்து ‘தாம் எழுதுவதே வரலாறு; ஏனையோர் எழுதும் வரலாறுகள் சட்டவிரோதம், நேர்மையற்றது, தவறு’ என்று கருதும் போக்கு தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். இவ்வியலில் அடுத்துவரும் பகுதிகளைப் படிக்கும்பொழுதும் சரி, பிற்றை இயல்களைப் படிக்கும்பொழுதும் சரி இதனைக் கருத்தில் கொள்ளுதல் நலமாகும். உ. சங்ககாலத் தமிழக வரலாறு (கி.மு. 300 - கி.பி. 300) 1. தமிழக வரலாற்றில் சங்க காலம் பொதுவாக கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை எனப் பெரும்பாலான வரலாற்றறிஞர் இன்று ஏற்கின்றனர். எட்டுத்தொகை – பத்துப்பாட்டு நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களும் இந்த அறுநூறு ஆண்டுகால அளவுக்குள் பல்வேறு காலங்களைச் சார்ந்தவை. கி.மு. 300க்கு முற்பட்டதான தொல்காப்பியம் தமிழக மூவேந்தரைப் பற்றிக் கூறுவது வருமாறு: “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” “போந்தை வேம்பே ஆர் என உரூஉம் மாபெரும் தானையர் மலைந்த பூவும்” சேரசோழபாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் ஆட்சியின் தென் எல்லை குமரி முனை; வட எல்லை மேற்குக் கடலிலிருந்து கிழக்குக் கடல் வரை வேங்கட மலையை அடுத்து வடபால் சென்றது எனலாம். 2. சந்திர குப்த மௌரியர் (கிமு. 324-300) காலத்தில் கிரேக்க செல்யூகஸ் நிகேடர் தூதனாக இருந்த மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டை ஹெராக்லஸ் (=சிவன்?) மகள் “பாண்டைய” ஆண்டு வந்தாள் என்று கூறுகிறார். பாண்டி நாட்டு ஊர்கள் 365 என்றும், ஒவ்வொரு நாளும் அரண்மனைத் தேவைகளை ஓர் ஊர் நிறைவேற்றியதாகவும் மெகஸ்தனிஸ் இன்னொரு செய் தியைக் கூறுகிறார். 1500 ஆண்டு கழித்து பெரும்பற்றப் புலியூர் நம்பி கி.பி. 12 நூற்றாண்டில் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் பாண்டியன் மகள் தடாதகை சிவனை மணந்த கதை வருகிறது. இதுபோன்ற ஒரு தொன்மக்கதை 1500 ஆண்டுகளாக வழங்கி வந்த தென்க. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சி மாதரி “பாண்டியன் கோயிலில் நெய் முறை நமக்கு இன்று ஆம்” என்று கூறுவது மெகஸ்தனிஸ் சொன்ன இரண்டாவது செய்தியை நினைவூட்டுகிறது. 3. இலங்கையை கி.மு. 483-445ல் ஆண்ட மன்னன் விஜயன் பாண்டி அரச குமாரியை மணந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அனுராதபுரத்தில் கி.மு. 307-247ல் சிங்கள மன்னன் முட்ட சிவன் ஆண்டபொழுது தென்கிழக்கு இலங்கைப் பகுதியான உரோ கண நாட்டில் மகமத்தை தலைநகராகக் கொண்டு “மஜ்ஜி மராஜன்” (மச்ச மகாராஜன்) என்றழைக்கப்பட்ட பாண்டிய குலத்தவர் சிலர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. 4. அசோகன் (கி.மு. 273-236) செதுக்கிய 2வது, 13வது பாறைக் கல்வெட்டுகளில் தமிழ் வேந்தர் குறிக்கப்படுகின்றனர். “யே ச அந்த சோட, பாண்டிய, சதியபுத, கேரளபுதோ, தாம்ப பன்னி, அந்தியோகோ நாம யோன ராஜா” “சதியபுதோ” என்றது சங்க கால அதியமான் பரம்பரைக் குறுநிலை மன்னரைக் குறித்தது. திருக்கோயிலூர் அருகே 15 கல் தொலைவில் ஐம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின் வாசகம் : ‘சதியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி ஈத்த பாளி” என்பதாகும். மாமூலனார் எட்டுத்தொகைப் பாடல்கள் மோரியரையும் நந்தரையும் சுட்டுகின்றன. மோகூர் மீது படையெடுத்த மோரியர் தங்கள் தேர்களைச் செலுத்த மலைப் பாறைகளை வெட்டி நீக்கி பாதை ஏற்படுத்தியதை மாமூலனார் அகநானூற்றுப் பாடல்கள் 251, 281 மற்றும் ஏனைய புலவர் பாடல்கள் அகம் 69, புறம் 175 குறிப்பிடுகின்றன. இந்நிகழ்ச்சி பிந்துசாரன் (கிமு 298-273) காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர் கே.கே. பிள்ளையும் சி.ஈ. இராமச்சந்திரனும். அகம் 265 மாமூலனார் பாடலில், பல்புகழ் நிறைந்த வெல்போர்நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇ, கங்கை நீர்முதல் கரந்த நிதியத்தை தேடித் தலைவன் சென்றுள்ளானோ எனப் பிரிவிடை வேறு பட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழியிடம் சொல்கிறாள். 5. கி.மு. 2ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த கலிங்க மன்னன் காரவேலனின் ஹாதிகும்பா (யானைக்குகை) கல் வெட்டில் கலிங்கநாட்டுக்கு ஊறுவிளைத்த, 113 ஆண்டுகள் செயல்பட்டுவந்த திரமிர (=தமிழ) (வாணிகக்) கூட்டமைப்பை அவன் வென்றதாகக் கூறுகிறது. 6. கி.மு. 4-3ம் நூற்றாண்டுகள் சார்ந்த தமிழிக் கல் வெட்டுகளில் அக்காலத்தில் இருந்த பண்டைத் தமிழ் மன்னர், அவர்களுடைய சிற்றரசர் / அதிகாரிகள் ஏனையோர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. (i) மாங்குளம் (அரிட்டாபட்டி) மதுரை மீனாட்சிபுரம் அருகே ARE 460/1906 “கணிநந்தி ஆசிரியர்க்கு அங்கே ஏமம் ஈத்த நெடுஞ்செழியன் பனவன் கடலன் வழுதி கொடுபித்த பள்ளி” (ii) ஆறுநாட்டார்மலை (புகளூர் அருகே), வேலாயுதம் பாளையும் கரூர்தாலுகா ARE 341 முதலியவை / 1927-28 (ஆசீவக / சமண முனிவன்) “செங்காயபன் உறைய கோ அதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்” இங்குக் குறித்த சேர மன்னர் மூவரும் பதிற்றுப்பத்து 7,8,9 பத்துக்களின் தலைவர்கள் என்று ஐ. மகாதேவன் கருதுகிறார். எனினும் மயிலை சீனிவேங்கடசாமி இக்கல்வெட்டு குறிப்பிடுவது “பாலைபாடிய பெருங்கடுங்கோ” வையும் “மருதம் பாடிய இளங்கடுங்கோ”வையுமே என்பர். புருஷோத்தம் (கீழே பத்தி 8) கருத்தும் அதுவே. (iii) எடக்கல், வயனாடு மாவட்டம், கேரளா; இங்கு ஒரு குகையில் 1996 பெப்ரவரியில் ஐ மகாதேவன் படித்த கல்வெட்டு (முதலில் 1887ல் லோகன் எழுதிய “மலபார் மானுவல்” -இல் இக்கல்வெட்டுப் பற்றி கூறப்பட்டு இருந்தது) ‘கடும்மி புத சேர” = கடும்மான் சேரன் ‘கோவாதான்” = கோ அதன் (தினமணி 9.2.97) (iv) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் வைகை யாற்றின் தென் கரையில் புலிமான் கோம்பையில் 2006 மார்ச் மாதம் கண்டு பிடித்த கி.மு. 300க்கு முந்தைய மூன்று நடு கற்களில் உள்ள கல்வெட்டுகள் (கே. ராஜன்: 2007):- கல்பேடுதீயன் அந்தவன் கூடல் ஊர்ஆகோள் அன் ஊர் அதன் ன் அன் கல் வேள் ஊர் அவ்வன் பதவன் இதே தமிழி போன்ற எழுத்துப் பானைப் பொறிப்புகள் பல, கி.மு. 600 - 500 சார்ந்தவை, இலங்கை அனுராதபுரத்திலும் கிடைத்துள்ளன. (தெரனியாகல, எஸ்.யூ: 2004) 7. சங்ககாலப் பாண்டிய, சோழ, சேர மன்னர் வெளியிட்ட காசுகள் பற்றிய விவரங்களை காசு இயல் ஆய்வறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தமது சங்ககாலக் காசுகள் (1997) நூலில் இருந்து அறியலாம். கி.மு. 200லிருந்து இம்மூவரும் வெளியிட்ட முத்திரைக் காசுகளும், முத்திரைக்காசுப் பாணியைப் பின்பற்றி வெளியிட்டனவும் கிடைத்துள்ளன. ‘பெருவழுதி’ பெயர் பொறித்த பாண்டிய மன்னர் காசுகள் கி.மு. 200 சார்ந்தவை. சேர மன்னர்கள் மாக்கோதை, குட்டுவன் கோதை பெயர் பொறித்த காசுகளும் கிடைத்துள்ளன. 8. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மூவேந்தர்கள் கி.மு. 300 முதல் நான்கைந்து நூற்றாண்டுகளில் ஆண்டவர்கள் ஆவர். (அவர்கள் கால வரிசையை சங்க இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் நிர்ணயிக்க கே.என். சிவராசபிள்ளை (1932) முதலில் முயன்றார். அவர் வழியில் மேலும் கடுமையாக ஆழமாக (1932க்குப் பின்னர் கிட்டிய செய்திகளையும் பயன்படுத்தி) வி.பி. புருஷோத்தம் 1989இல் சங்ககால மன்னர் காலநிலை வரலாறு என்னும் நூலை வெளியிட்டார். அம் மன்னர்களை கிமு 375 முதல் கி.மு. 25 வரை அவர் வரிசைப் படுத்தியுள்ளார். அவ்வரிசைகளை இப்பகுதியில் கீழே காண்க. சங்கப்பாடல்களின் காலவரையறை பற்றிய எவா வில்தன் (2002) கட்டுரையும் படிக்கத்தக்கதாகும். இத்துறையில் அறிஞர் தொடர்ந்து முயன்றால் நாளடைவில் மேலும் தெளிவு கிடைக்கலாம். 9. சங்க கால சேர சோழ பாண்டிய நாடு ஒவ்வொன்றிலும் ஒரு வேந்தன் மட்டுமே என்ற நிலை இன்றி வெவ்வேறு பகுதி களுக்கு அவ்வேந்தன் தலைமைக்கு (முழுமையாகவோ, ஓரளவுக்கோ, பெயரளவுக்கோ) கட்டுப்பட்டு அவ்வேந்தன் உடன் பிறப்பு, உறவினர் ஆகிய “சிறுவேந்தரும்” ஒரே சமயத்தில் ஆண்டு வந்திருக்க வேண்டும்; எனவேதான் சங்க இலக்கியப் பாடல்கள் ஏராளமான வேந்தர் பெயர்களைக் குறிப்பிடுகின்றன என்று நீலகண்ட சாத்திரி, என்.சுப்பிரமணியன் ஆகியோர் கருது கின்றனர். சாத்திரி தமது 1976 நூலில் “The Chera (as well as Chola and Pandya, kingdoms must have been a sort of family estate in which all the grown up males had a share and interest” என்று கூறுகிறார். பாண்டிய வேந்தர் 10. உலகில் மிக நீண்ட காலம் அரசாண்ட அரச பரம்பரையினருள் பாண்டியரும் சோழரும் அடங்குவர். கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைப் பாண்டியப் பரம்பரையினர் ஆண்டு வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. சில நூற்றாண்டுகள் ஒடுங்கியும் (வரலாற்றுப் பதிவில்லாத) குறு நிலப்பகுதிகளின் 72 தமிழர் வரலாறு சிற்றரசர்களாகவும் இருந்த போதிலும், மொத்தத்தில் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறுடையது பாண்டிய அரசர் பரம்பரை. தமிழகத்தில் அரசாண்ட பல்வேறு அரச பரம்பரையினர் ஆட்சிக் கால வரம்பைப் பின்வரும் படம் தோராயமாகக் காட்டுகிறது. (இப்படம் பின்வரும் இயல் களுக்கும் பயன்படுவதாகும்.) 11. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் முன்னர் பாண்டிய அரச பரம்பரையிடமிருந்து கிளைத்தவர்களே சேரரும் சோழரும் என்ற தொன்மக் கருத்துக்களும் உள்ளன. அவ்விரு வரும் பாண்டியர் குடியினரே என்பார் தேவநேயப்பாவாணர். (தமிழர் வரலாறு 1972. பக். 72) பாண்டியன் என்ற பெயர் வரலாறு பற்றிய பாவாணர் கருத்து: பண்டி = வண்டி (சக்கரம், சகடம்) பண்டி - பாண்டி = வட்டமான விளையாட்டு அதைக் கொண்டு விளையாடும் வட்டாட்டு, மாட்டுவண்டி (உருண்டு திரண்ட) எருது (பரிபாடல் 20;17 குறிப்பு) ஓநோ. குண்டு - குண்டை – எருது பாண்டி - பாண்டியம் = எருது (“செஞ்சுவற்பாண்டியம்” பெருங்கதை உஞ்சைக் காண்டம் 38:32) பாண்டி - பாண்டில் = வட்டம் காளை மறம் விஞ்சியது; கடைப் பிடியுடையது. எனவே போர்மறவன் “காளை” எனப்பட்டான். (“மடுத்தவாயெல்லாம் பகடு அன்னான் - குறள் 624. “பெருமிதப்பகடு” - புறம் 90 ஒளவை பாடல்). அரசன் போர் மறமும் ஆட்சித்திறனும் ஒருங்கே யுடையவன் என்பதை உணர்த்தற்காக, முதல் தமிழ் வேந்தன் “பாண்டியன்” எனக் குடிப்பெயர் பெற்றான். (பண்டு (=பழமை) - பாண்டியன் எனத் திரிப்பதைப் பாவாணர் ஏற்றிலர். “பாண்டியன் நமக்குப் பழைமையானவனே யன்றித் தோன்றிய பொழுது ஒருவருக்கும் பழமையானவன் அல்லன்” என்பார் பாவாணர். எனினும் பண்டு – பாண்டியன் என்னும் (காரணப்) பெயரானது வழக்குக்கு வந்த பின், அதற்கு முன்னர் வழங்கிய வேறு பெயர் மறைந்தும் இருக்கலாம். நம் காலத்திலேயே பல தலைவர்களுக்குப் பட்டப் பெயரே பெருக வழங்கி, இயற்பெயர் ஏறத்தாழ மறக்கப்படும் நிலையைக் காணலாம். 12. சங்க இலக்கியத்தில் வரும் சில பாண்டிய மன்னர்கள் வருமாறு: 1. நிலம் தரு திருவின் குமரியை ஒட்டித் தெற்கிலிருந்த நெடியோன் பாண்டி நாட்டின் ஒரு பகுதியைக் கடல் கொள்ளவே அதற்குப் பகரமாகச் சோழ நாட்டெல்லையில் முத்தூற்றுக் கூற்றத்தையும், சேரமான் நாட்டுக் குண்டூர்க் கூற்றத்தையும் இவன் பெற்று ஆண்டான் என சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறது. 2. கீழே வரும் 4ம் சாவகத்தீவை (“சாலித்தீவை”) வேந்தனின் முன்னோன் இவன் படையெடுத்து வென்றதையே ஒருவன் மதுரைக்காஞ்சி: 75-88 குறிக்கின்றன என்பர் பாவாணர் (தமிழர் வரலாறு: 152) 3. பல சாலை நெடுஞ்சடையன் பராந்தகன் முதுகுடுமிப் (கிபி 765-790) “வேள்விக்குடிச் செப்பேடு” பெருவழுதி இவனைக் குறிப்பிடுகிறது. 4. தலையானங்கானத்துச் ஆலங்கானப் போரில் மாந்தரஞ் செரு வென்ற சேரலிரும் பொறையையும் தித்தன், நெடுஞ்செழியன் எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான் பொருநன் ஆகிய ஐவரையும் வென்றான். (அகம் 36). ஆலங்கானப் போர் உவமை அகம் 165, 175, 209லும் வருகிறது. மதுரைக் காஞ்சியும் நெடுநல்வாடையும் இவன் மேற்பாடியவை. 5. ஆரியப்படை கடந்த இவன் தொடக்ககாலப் பல்லவர்களை நெடுஞ்செழியன் வென்றதையே சிலப்பதிகார “ஆரியப்படை நிகழ்ச்சிக் காலத்தவன் கடந்த” சுட்டுகிறது என்பர் ம.சீ. வேங்கடசாமி 13. பாண்டியர் தலைநகர் ஆக முதலில் கொற்கையே இருந்தது. கொற்கை வரலாற்றை விரிவாக சாத்தான் குளம் அ. இராகவன் (1968): “கோநகர் கொற்கை”யில் காண்க. பாண்டியன் நெடுந்தேர்ச் செழியனே முதலில் கூடலை வென்று அதைத் தலைநகராக்கினான் என்பதை அகம் 296 லிருந்து அறியலாம். (கூடல் தலைநர் ஆன பின்னரும் பாண்டிய அரசின் இளவரசிருக்கை ஆகக் கொற்கை இருந்துவந்தது) பின்னர் கூடலின் பெயர் மதுரை என மாறியது. பிற கூடல்களிலிருந்து பிரித்துக் காட்டத் “தமிழ்கெழு கூடல்” (தமிழ்ச்சங்கம் இருந்த கூடல்) என்று அழைக்கப்பட்டது. 14. சங்க காலப் பாண்டியர்களை புருஷோத்தம் (1989) பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளார். தலை காலம் பாண்டியர் முறை கி.மு I 350-325 1. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் II 325-300 2. நெடியோன் III 300-275 3. பசும்பூண் பாண்டியன் IV 275-250 4. கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி V 250-225 5. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 6. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி VI 225-200 7. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் VII 200-175 8. அறிவுடை நம்பி VIII 175-150 9. த.செ. நெடுஞ்செழியன் IX 150-125 10. இ.ப.து 11. கூடகாரத்துத் நன்மாறன் துஞ்சிய மாறன் வழுதி X 125-100 12. கானப்பேரெயில் 13. வெள்ளி கடந்த உக்கிரப் அம்பலத்துத் பெருவழுதி துஞ்சிய பெருவழுதி XI 100-75 சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் சோழ வேந்தர் 15. சங்க காலச் சோழ வேந்தர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் வருமாறு: செம்பியன் (சிபி) இவனைப் பற்றிய செய்திகள் தொன்மக் கதைகள் போல் உள்ளன. புறம் 37, 43 ஆகியவை செம்பியனை “புள்ளுறு புன்கண் தீர்த்தவன்” “......... பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத் தன்னகம் புக்க குறுநடைப்புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க”வன் என்றும் புகழ்கின்றன. சமஸ்கிருதப் புராணங்களில் வரும் சிபி இவனே என்பர் பாவாணர் (இராமன் பிறந்த சூரியகுலமே பண்டு வடநாட்டிற் சென்று வதிந்த சோழ அரசக் குலத்தின் கிளையாக இருக்கலாம் என்பர் பாவாணர்) மனு இவன் மகனுடைய தேர்க்காலில் சிக்கி கன்று இறந்ததற்தாக மகனுக்கு கொலை ஒறுப்பு செய்தான் என்பது தொன்மம் (இலங்கையை கி.மு 145-101ல் ஆண்ட தமிழ் மன்னன் எலாரா பற்றியும் இது போன்ற கதையை மகாவம்சம் கூறுகிறது. எலாராவை கிமு 101ல் சிங்கள மன்னன் துத்தகமனு வென்று கொன்றான்) ஒருவேளை எலாரா சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்திருக் கலாம்; மனுச்சோழன் கதையை அவனுக்கும் ஒட்ட வைத்திருக்கலாம். கரிகாலனுடைய இவனை “நளியிரு முந்தீர் நாவாய் ஓட்டி முன்னோனாக புறம் வளிதொழிலாண்ட உரவோன்” எனப் 66இல் வெண்ணிக் புலவர் புகழ்கிறார். குயத்தியார் குறிப்பிடுவன் சோழன் செருப்பாழி “தென்பரதவர் (பாண்டியர்) மிடல் எறிந்த சாய வடவடுகர் வாள் ஓட்டியவன்” - இளஞ்சேட்சென்னி புறம் 378 கரிகாலன் (கி.பி முதல் சங்க காலச் சோழவேந்தருள் முதன்மை நூற்றாண்டின் முற்பகுதி வாய்ந்தவன். (தஞ்சைக்குக் கிழக்கே என்பர் ம.சீ.வே.) 15 மைலில் உள்ள (கோவில் வெண்ணி பட்டினப்பாலை என இன்று வழங்கும்) வெண்ணியில் இவனைத் திருமாவளவன் சேரபாண்டிய வேந்தரையும், பதினொரு என அழைக்கிறது. வேளிரையும் வென்றான் (பரணரின் அகம் 246). இவன் பட்டினப்பாலைக்கும் பொருநராற்றுப் படைக்கும் பாட்டுத் தலைவன் ஆவான். இவன் பின்வருபவர்களை, அதாவது தென்னவன் (பாண்டியன்) (கொடும்பாளூர்) இருங்கோவேள் சோழ பல்லவ நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆண்ட ஒளியர், அருவாளர், வடவர் (காஞ்சியை ஆண்ட பல்லவர்) குடவர் (குடநாட்டார்) பொதுவர் (குரும்பர்) ஆகியோரை வென்றான் எனப் பட்டினப்பாலை கூறகிறது. [பிற்காலச் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் இவன் காவிரிக்குக் கரை அமைத்ததாகக் கூறுகின்றன; இலங்கையின் பிற்காலப் புராணக் கதைகள் இவன் இலங்கையை வென்று 12000 சிங்களவரைக் கொண்டு வந்துகாவிரிக்குக் கரை அமைத்தான் எனக் கூறுகின்றன. இவையெல்லாம் நம்பத்தக்கனவல்ல என்பர் பி.டி. சீனிவாச ஐயங்கார்.] நலங்கிள்ளியும் இவர்கள் தமக்குள் போரிட்டனர். நெடுங்கிள்ளியும் அவர்களைச் சந்து செய்ய கோவூர் கிழார் முயன்றார் (புறம் 44) குளமுற்றத்துத் துஞ்சிய தன் நாட்டு சிறுகுடி கிழான் பண்ணன் கிள்ளிவளவன் வள்ளண்மையைப் பாராட்டி “யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய” என்று பாராட்டியவன். (புறம் 173). எனினும் இவனே மலையமான் திருமுடிக் காரியின் இளஞ்சிறாரான மக்களை யானைக் காலில் இட்டுக் கொல்ல முயன்ற போது கோவூர்கிழார் தடுத்துப் பாடியது புறம் 46 ஆகும். கோப்பெருஞ் சோழன் தன்னுடைய மக்களுடன் போரிட (பெருங்கோக்கிள்ளி) நேர்ந்த பொழுது மனம் நொந்து வடக்கிருந்தான். இவன் உயிர் நண்பர் பாண்டிய நாட்டில் பிசிர் என்னும் ஊரைச் சார்ந்த ஆந்தையார். இரு நண்பரும் ஒருவரையொருவர் பார்த்திராமலே உழுவலன்பு பூண்டிருந்தனர். தான் வடக்கிருக்கும் போது சோழன் தன் நண்பர் பிசிராந்தையாருக்கும் இடம் ஒதுக்கச் சொன்னான். அவரும் பின்னர் தவறாது வந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்தினான். 16. சங்க காலச் சோழர்களை புருஷோத்தம் (1989) பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளார். எண் தலைவர் காலம் (கி.மு.) பாடல் 1 தித்தன் புறம். 80, 320 - வீரைவேள்மான் 352, 395, வெளியன்தித்தன் 325-300 அகம். 6, 122, 188 நற். 58 2. சோழன் புறம். 80-86; போரவைக்கோப் அகம். 152, 208 பெருநற்கிள்ளி 300-275 226; -தித்தன் வெளியன் பதிற். பதிகம் 2 -வெளியன் வேள்மான் 3 சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி 275-250 புறம். 13 4 பெரும்பூண்சென்னி 300-275 அகம். 44 5 சோழன் கரிகாற் புறம். 65, 66 பெருவளத்தான் –I 275-250 அகம். 55, 141, 125, 246, 376 6 சோழன் வேல்பல்தடக்கைப் பெருநற்கிள்ளி 250-225 புறம். 62, 63, 368 7 சோழன் உருப்பல்தேர் புறம். 4, 10, 203, இளஞ்சேட்சென்னி 266, 370, 378; -நெய்தலங்கானல் அகம். 375 இளஞ்சேட்சென்னி பொருநர். 130 -இளம்பெருஞ்சென்னி 250-225 8 சோழன் கரிகாற் புறம். 7, 224; பெருவளத்தான் – II 225-200 பொருநர்; பட்டினப். 9 கோப்பெருஞ்சோழன் புறம், 67, 212-223 -பெருங்கோக்கிள்ளி 225-200 குறு. 20, 58, 129, 147 பதிற். பதிகம் 9 10 சோழன் நலங்கிள்ளி புறம். 27-33, 45, -செட்சென்னி, நலங்கிள்ளி 200-175 68, 225, 382, 400 11 சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் 200-175 புறம். 14 12 காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி 200-175 புறம். 44, 45, 47 13 சோழன் குளமுற்றத்துத் 175-150 புறம். 34-42, 46- துஞ்சிய கிள்ளிவளவன் 69, 70, 173, 226, 228, 373, 386, 393, 397, 399; அகம். 205, 346 14 சோழன் இராசசூயம் புறம். 16, 125, 367 வேட்ட பெருநற்கிள்ளி 150-125 377; நற். 141, 390 15 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா புறம். 58, 60, 174, வளவன் 150-125 197 16 சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங் கிள்ளி சேட் சென்னி 150-125 புறம். 61 17 சோழன் நல்லுருத்திரன் 125-100 புறம். 190 18 சோழன் செங்கணான் 100-75 புறம். 74 சேர வேந்தர் 17. பதிற்றுப்பத்து சேர மன்னர்களை மட்டுமே பாடுவது. அதில் 2-9 பத்துகள் மட்டுமே கிடைத்துள்ளன. சிலப்பதிகாரம் 30ஆம் கதையின் இறுதி அடிகள் “வஞ்சிநகரில் பத்தினிக் கடவுளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி வழிபட்ட பொழுது கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் “உடன் இருந்தான்” எனக் கூறுகிறது. ஆனால் சிலம்பின் முகப்பில் உள்ள உரைபெறுகட்டுரையோ (செங்குட்டுவனும், பாண்டியரும் கோசரும் பத்தினி விழா நடத்திய பின்னரே) “அதுகேட்டுக் கயவாகு வேந்தன் (முதலாம் கயவாகு கி.பி. 171-193) பத்தினிக் கோட்டம் எடுத்து விழாக் கொண்டாடினான்” என்கிறது. உரைபெறு கட்டுரையோடு முரணும் சிலம்பின் இறுதி 47 அடிகள் இளங்கோவடிகள் எழுதியவையன்று, பிற்சேர்க்கை என்று கூறியும், வேறு சில காரணங்களை முன் வைத்தும் புருஷோத்தம் (1989), சேர வேந்தர் அனைவர் காலங்களையும் (பாண்டிய, சோழரைப் போல) பின்வருமாறு கிமு 300-25 ஆக நிர்ணயிக்கிறார். தலை காலம் எண் அந்துவன் வழியினர் எண் உதியன் முறை வழியினர் I கி.மு. 1 கருவூர் ஏறிய ஒள்வாள் 300- கோப்பெருஞ்சேரல் இரும்பொறை 275 II 275- 2 அந்துவஞ் 3 பெருஞ்சோற்று 250 சேரல் இரும்பொறை உதியஞ் சேரலாதன் (எ) பெருஞ் சேரலாதன் III 250 4 செல்வக் 7 குடக்கோ நெடுஞ் 225 கடுங்கோ வாழியாதன் சேரலாதன் 5 பாலை 8 பல்யானைச் பாடிய செல் கெழு பெருங் கடுங்கோ குட்டுவன் 6 மருதம் பாடிய இளங்கடுங்கோ IV 225- 9 தகடூர் 10 களங்காய்க் 200 எறிந்த பெருஞ் கண்ணி சேரல் நார்முடிச் சேரல் இரும்பொறை 11 செங்குட்டுவன் V 200- 12 இளஞ்சேரல் 13 ஆடுகோட் 175 இரும்பொறை பாட்டுச் சேரலாதன் VI 175- 14 யானைக்கண் சேய் 15 கோக்கோதை 150 மாந்தரஞ்சேரல் மார்பன் இரும்பொறை VII 150- 16 மாரி வெண்கோ 17 குட்டுவன் 125 கோதை VIII 125- - - 18 கோட்டம்பலத்துத் 100 துஞ்சிய மாக்கோதை IX 100- 19 கணைக்கால் - - 75 இரும்பொறை - - X 50-25 20 வஞ்சன் - - 18. ஆயினும் பெரும்பாலான வரலாற்றாசிரியர் சிலப்பதிகாரம் கூறும் ‘செங்குட்டுவன் - கஜபாகு I சமகாலக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டு சேர வேந்தர் அனைவர் காலமும் கி.பி. 1-3 நூற்றாண்டுகள் என்பர். எடுத்துக் காட்டாக என். சுப்ரமணியம் நிர்ணயிப்பது வருமாறு வரிசை பதிற்றுப்பத்தில் கிபி எண் ........ம் பத்து உதியஞ்சேரல் பரம்பரை 1 I உதியஞ்சேரல் -27 2 II குடக்கோ நெடுஞ்சேரலாதன் (1ன் மகன்) 27-85 3 III பல்யானை செல்கெழுகுட்டுவன் (2ன் தம்பி) 85-110 4 IV களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் (2ன் மகன்) 110-135 5 V கடல்பிற கோட்டிய செங்குட்டுவன் (2ன் மகன்) 135-190 6 VI ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (4ன் தம்பி) 190-220 பொறையன் பரம்பரை (கொங்கு நாடு) 7 VII செல்வக் கடுங்கோவாழியாதன் (அந்துவஞ் சேரலிரும்பொறை மகன்) 175-200 8 VIII (தகடூர்வென்ற) பெருஞ்சேரல் இரும்பொறை 200-217 9 IX இளஞ்சேரல் இரும்பொறை 217-233 19. ம.சீ. வேங்கடசாமி தமது கொங்குநாட்டு வரலாற்றில் அந்துவன் பொறை யன் (மேலே 7ன் த ந்தை) முதல் கணைக்காலிரும் பொறை முடிய (மேலே 9க்குப்பின் வந்தவன்) முடிய கொங்குச் சேரர் ஆட்சிக் காலத்தை கிபி 92-212 என நிர்ணயிக்கிறார். கிடைத்துள்ள பதிற்றுப்பத்து ஏடு நூல் குறித்து ஜே.ஆர். மார் தமது Eight Anthologies நூலில், கிடைக்காத இரண்டு பத்துகளில் ஒன்று செல்வக் கடுங்கோ வாழியாதன் தந்தை அந்துவனைப் பற்றியதாக இருந்திருக்கும்; எனவே 7ம் பத்தை (1ம் பத்துபோல) இழந்துவிட்ட பத்தாகக் கருதினால் தற்போதைய 7, 8, 9ஐ 8, 9, 10 பத்துகளாக எண்ண வேண்டும் என்பார். 20. சேர வேந்தர் முதலில் மேலைக் கடற்கரையில் வஞ்சியைத் (கிராங்கனூர் அருகே தற்பொழுது திருவஞ்சைச் களம் என்று அழைக்கப்படுவது) தலைநகராகவும் முசிறியைத் துறைமுகமாகவும் கொண்டு ஆண்டு வந்ததாகத் தோன்றுகிறது. (அவ்வஞ்சியைக் கருவூர் என்றும் அழைத்தனர்). பின்னர் சேரவேந்தர் கொங்குநாட்டின் தென்பகுதியைக் கைப்பற்றிய பொழுது கோவைக்குக் கிழக்கே அமராவதியாற்றின் கரையில் கருவூர் என்ற பெயரில் இன்னொரு தலைநகரையும் ஏற்படுத்தினர், அக்கருவூரும் வஞ்சி என்று அழைக்கப்பட்டது. சேரவேந்தரின் இளைய பரம்பரையினர் அங்கிருந்து ஆண்டு வந்தனர் என்ற தெரிகிறது (மேலே பதிற்றுப்பத்துப் பட்டியலில் மன்னர்கள் 7, 8, 9 எனக் குறித்தவர்கள் கொங்குக் கருவூரில் ஆண்டவர்கள்). இக்கருத்தைக் கொண்ட வரலாற்றாசிரியர்கள் வி. கனகசபைப் பிள்ளை, கே.ஜி. சேஷய்யர், எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், எம். ஆரோக்கியசாமி, ஒளவை துரைசாமிப் பிள்ளை, ம.சீ.வேங்கடசாமி, கா. அப்பாதுரை முதலியவர்கள் ஆவர். மாறாக அமராவதியாற்றின் கரைக் கருவூரில் இருந்தே முதலில் சேரர் ஆண்டு வந்தனர் என்றும் பின்னரே மேலக் கரைப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் துணைத் தலைநகராக மேலைக் கடற்கரையில் ஒரு வஞ்சியை (கரூர்) உருவாக்கினர் என்று கருதுபவர்கள் மு. இராகவையங்கார்; இரா. இராகவை யங்கார், க.அ. நீலகண்ட சாத்திரி, இரா. நாகசாமி, ஞா. தேவ நேயன், பி.எல். சாமி, என். சுப்பிரமணியன் முதலியவர்கள் ஆவர். முந்தைய குழுவினர் கருத்தே வலுவானதாகத் தோன்றுகிறது. பெருஞ் சோற்று உதியஞ் சேரல் 21. சேர மன்னர்களில் முதன் முதலில் இவனைப் பற்றியே சற்று விரிவான செய்திகள் தெரியவருகின்றன. மாமூலனார் அகம் 65-ல்; இவனை “நாடு கண்ணகற்றிய உதியஞ்சேரல்” என்கிறார். இவன் போர்க்கள வெற்றியில் இயவர் ஊதிய “ஆம்பலங்குழல்” இசையை நற்றிணை 113 குறிக்கிறது. முறஞ்சியூர் முடிநாதராயருடைய புறப்பாடல் “வான வரம்பனை நீயோ பெரும அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என்று இவனை விளிக்கிறது. “களத்து ஒழிய” என்பது பல பொருளுக்கு இடம் தருகிறது: 1) ஒழிந்த காரணத்தால் (இதுவே பொருத்தமானது) 2) அ) ஒழிந்த அதே வேளையில் (பழங்காலத்திலிருந்து தமிழ் உரைகாரர் இந்தப்பொருளையே கொண்டுள்ளனர்) ஆ) ஒழிந்து சில/பல காலம் கழித்து புனைகதைகள் நிறைந்த சிலப்பதிகாரம் 29 ஊசல்வரி கூறுவது: ஓரைவர் ஈரைம்பதின்மரொடு உடன்று எழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த சேரன் பொறையன் மலையன்” என்பதாகும். இதனையொட்டி புறநானூற்றுப் பழைய உரை காரர் “அவர்கள் ஒழியும் துணையும், உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்” என்றார். கோதுமை உணவுத் துரியோதன - பாண்டவர் படைகளுக்கு இந்தியாவின் தென் கோடி மூலையில் இருந்த அரசன் அரிசியும் வெஞ்சனங்களும் கொண்டு சென்று தலைமைச் சமையற்காரன் (பட்லர் - இன் - சீப் ) போல அதுவும் இருதரப்பினருக்கும் உணவளித்தான் எனக் கூறுவதன் புரைமையை உரைகாரர் உணர்ந்தாரிலர் என்பர் பி.டி. சீனிவாச ஐயங்கார்! பாரதக்கதை நாடகம் ஒன்றின் (பிற்காலக் கதகளி போன்றது) இறுதியில் சேரன் உணவளித்தான் என்பதே புறப்பாடலின் கருத்து ஆகும்; அல்லது பாரதப்போரில் இறந்தோர் நினைவு (சிரார்த்த) உணவளிப்பாகவும் இருந்திருக் கலாம் என்பர் ஐயங்கார். அகம் 168 குழுமூர் என்னும் ஊரில் கொடைக்கடன் ஏற்ற ஊதியன் அட்டில் ஆரவார ஒலியைக் குறிக்கிறது. அகம் 233 இறந்த முதியர் நினைவாக உதியஞ்சேரல் பெருஞ்சோறு கொடுத்த பொழுது கூளிப்பேய்கள் குழுமி யிருந்ததைக் குறிக்கிறது. 22. முன்பத்தியிற் கண்ட செய்தி பற்றிய பிற்காலத்தார் உன்னிப்புகள் வருமாறு: தமிழ்ப் பொழில் 36 (1960-61) ஞா. தேவநேயன்: “பாரதப் போரில் தான் பெருஞ்சோறு வழங்கினான்; சீ. வேங்கடசாமி: “ஐவர் பாண்டியர். தனது (சேரர்) படைவீரர்களுக்கு உதியன் பெருஞ்சோறு அளித்தான்” Journal of Indian History XLI (1963) என் சுப்பிரமண்யம்: “ஐவர்” என்பது ஐம்பெருவேளிரையும் “ஈரைம்பதின்மர்” என்பது சதகர்ணியரையும் குறிக்கும். முதல் உலகத்தமிழ் மாநாடு (கோலாலம்பூர்: 1966) கட்டுரைத் தொகுப்புநூலில் : பி.அருணாசலம்: தொல் காப்பியம் வெட்சித்திணையின் துறை ஒன்று “பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை” என்பதாகும். தன்னைப் பாண்டவ - கௌரவ வழியினன் ஆகக் காட்டிக் கொள்ள உதியஞ்சேரல் சிரார்த்தம் கொடுத்தான். அதே நூலில் மொ. அ. துரை அரங்கசாமி: இறந்துபட்ட பாண்டவ கௌரவர் பொருட்டு தர்ப்பணம் செய்து பெருஞ்சோறு கொடுத்தான் உதியஞ் சேரல். அவன் பாரதகாலத்தவன் அல்லன். சிலப்பதிகார வாசகமும், “ஓரைவர் ஈரைம் பதின்மரொடு உடன்றழிய/ உடன்றொழியப் பொருவில் (=ஒப்பற்ற) பெருஞ்சோறு போற் றாது தான் அளித்த” என்று தான் இருந்திருக்க வேண்டும். புருஷோத்தம் (1989) கருத்தும் இதுவேயாம். 23. இயமவரம்பன் நெடுஞ்சேரலாதன் (பெருஞ்சோற்று தியன் மகன்) கடம்பர் என்னும் கடற்கொள்ளைக்காரர்களை வென்று அடக்கினான். இவன் மகன் செங்குட்டுவன் சிலப்பதிகார நிகழ்ச்சிகளின் காலத்தவன் (அக்காவியம் எழுதப்பட்டது கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னரே யாகும்) சோழ வேந்தர்களுக்கு எதிராகக் கலகம் செய்த 9 சோழ இளவரசர்களை நேரிவாயில் போரில் வென்றான். இவன் நண்பர்கள் ஆக சிலம்பு குறிக்கும். நூற்றுவர் கன்னர்கள் ஆந்திர சாதவாகன மன்னர்களே. செல்வக்கடுங்கோ தகடூரைவென்று அதியமானைக் கொன்றான். கணைக்காலிரும்பொறை வடகொங்கில் கொல்லிமலையைக் கைப்பற்றினான். 24. சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பாராட்டும் அளவுக்கு, ஏன் அதற்கு மேலாகவே, குறுநில மன்னர்களையும் தலைவர்களையும் பாராட்டுகின்றன. வள்ளல்கள் என அவை பாராட்டும் எழுவர், மேற்சொன்ன அதியமான், கொல்லிமலை “வல்வில்” ஓரி, திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி, தோட்டிமலை கண்டீரக்கோப் பெருநள்ளி, ஆவியர் தலைவன் பேகன் (இந்த ஐவரும் கொங்குநாட்டவர்), பொதியில் மலைப் பகுதியை ஆண்ட அய் அண்டிரன், பறம்புமலைப் பாரி ஆகியோராவர். பாரி - கபிலர்; அதியமான் – ஒளவையார் என்றவாறு இவ்வள்ளல்களுள் சிலர் பெரும்புலவருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தனர். 25. குறுநில மன்னருள் பலர் வேளிர் குலத்தவர் ஆவர். வேளிர் குலத்துப் பெண்களையும் மணந்து கொள்வது மூவேந்தர் வழக்கம். வேளிரை (கிமு 3200-1800 காலம் சார்ந்த) சிந்துவெளி நாகரிக மக்களுடன் மறைமலையடிகள் தொடர்பு படுத்துகிறார். [இவருக்கு முன்னர் தொல்காப்பியப் பொருளதி காரப் பாயிர உரையில் நச்சினார்க்கினியரும், பின்னர் மு. இராகவையங்காரும் (1905இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் நான்கா மாண்டுக் கூட்ட உரை; “வேளிர் வரலாறு” இரண்டாம் பதிப்பு 1916) வேளிரையும் வடநாட்டையும் தொடர்பு படுத்தியவர்கள் ஆவர்] தமிழ நாகரிகமான சிந்துவெளி நாகரிக முடிவுக்குப் பின் தென்னாடு திரும்பிய தமிழக மரபினரே வேளிர் என்பார் அவர். மேலே இயல் 2; பகுதி க; பத்திகள் 8-9ஐக் காண்க தமது Sangam Polity (1980) நூலின் பக்கம் 266இல் என். சுப்ரமணியமும் இக்கருத்தைக் குறிப்பிடுகிறார். 26. சங்க காலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கேயிருந்த தென்னாட்டுப் பகுதி முழுவதுமே தமிழகம் தான். அக்காலத்தின் எந்தக் கட்டத்திலும் அப்பகுதியின் மொத்த மக்கள் தொகையே ஏறத்தாழ 25 இலட்சம் - 50 இலட்சம் அளவில்தான் இருந்திருக்கும் என்பதை மேலே கண்டோம். போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவே. 20ஆம் நூற்றாண்டில் இடைப்பகுதி வரைக்கூட இந்திய கிராமங்களில் அரசுத்துறைகளின், அரசதிகாரிகளின் தாக்கம் மிகக் குறைவு என்பது அனைவர்க்கும் தெரிந்ததேயாகும். எனவே சங்க காலத்திலும் பெருமளவுக்கு ஊர்கள் “அரசின்” தாக்கம் இல்லாமல்தான் இருந்திருக்கும். அதாவது கி.பி. 600க்கு பின்னர் இருந்ததாக நமக்குத் தெரியவரும் அளவுக்குக்கூட முழுமையான ஆட்சியமைப்பு State formation இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அரசன், குறுநில மன்னர்கள் அதிகாரம் ஓரளவுக்கு உறவினர், அமைச்சர் போன்றோருடன் கலந்துதான் செயற்பட்டிருக்கும். பிற்காலத்தில் இத்தகைய அமைப்புகளாக “ஐம்பெருங்குழு” ‘எண்பேராயம்” ஆகியவை சுட்டப்படுகின்றன புறம் 18இல் குடபுலவியனார் “உழவுத் தொழில் செழிக்க இன்றியமையாத நீர் வளத்தைப் பெருக்கிட நீர் நிலைகள் ஏரி குளங்களை உருவாக்குக” என்று பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்துகிறார். 27. ஊர் தோறும் பெரும்பாலும் மரத்தடியில் இருந்த “பொதியில்” என்ற ஊர் மன்றங்கள் இருந்தன. பிற்காலத்தில் ஊர்ச் சபையினர் குடவோலை மூலம் தெரிந்தெடுக்கப்பட்டனர். இக்குடவோலை முறையை மருதனிள நாகனார் அகம் 77லேயே குறிப்பிடுகிறார். பாலை நிலத்தில் போரில் இறந்த மறவர் பிணங்களைத் தின்னவரும் கழுகுகள் கச்சு, கவசம் கட்டப்பட்ட பிணத்தின் உடற்பகுதியில் தாம் குடைதற்கியலும் இடங்களை ஆராய்ந்து கண்டு அங்கு குத்திக் குடைந்து குடல்களை இழுத்து உண்பதற்கு, “கயிறு பிணிக்குழிசி ஓலைகொண்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்” செயலை உவமையாகக் கூறுகிறார். ஆவணமாக்களின் செயல் என்ன? ஊர்த் தலைவரைத் தெரிந்தெடுக்க மக்கள் தாம்தாம் விரும்பிய நபர் பெயரை ஓலையில் எழுதிக் குடத்தில் இடுவர். நடுவர் குடத்தை மூடிக் கயிறால் வரிந்துகட்டி இலச்சினையிடுவர். பின்னர் ஆவணமாக்கள் (அரசு அதிகாரிகள்) இலட்சினையை ஆராய்ந்து (உடைத்து) குடத்திற்குள்ளிலிருந்து ஓலைகளை வெளியில் எடுப்பர். இச்செயல் மறவர் பிணத்தின் குடலைக் கழுகு உருவியதுபோல இருந்ததாம். பெருநகரங்களில் (புகார், மதுரை), காவலர், இரவுக் காவலர், சுங்கவரி பெறுவோர் போன்ற ஆட்சிப்பணியாளர்கள் இருந்தனர். 28. பெருமளவுக்கு அரசுரிமை தந்தை - மகன் என்றவாறு சென்றது. மேலே 9ம் பத்தியையும் காண்க. வாரிசுரிமைப் போர்களும் கலகங்களும் நடந்தன (கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தது; நலங்கிள்ளி - நெடுங்கிள்ளி போர்; நேரிவாயில் போர்) “இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப” அடிக்கடி வேந்தர்களும் பிறரும் தம்முள் போரிட்டுக் கொண்டனர் - உலகெங்கிலும் அனைத்து நாடுகளிலும் என்றும் உள்ளது போல! எனினும் மூவேந்தர்களும் ஒருவரை ஒருவர் வென்றாலும் வென்ற நாட்டைத் தம் நாட்டுடன் சேர்த்து நேரடியாக ஆளும் (பேரரசு ஆக்கும்) வழக்கம் இல்லை. திறை பெறுவதோடு சரி. (குறுநில மன்னர்களும் சிறு தலைவர்களும் ஆண்ட பகுதிகள் சில நேர்வுகளில் வென்றவர்கள் நேரடி ஆட்சிக்குட்பட்டன) பி.டி. சீனிவாச ஐயங்கார் (1929) நூலின் இயல் 11இன் இறுதியில் கூறுவது மனதிற் கொள்ளத்தக்கது. “தற்கால வரலாற்றாசிரியர் “மௌரியப் பேரரசு”, “குப்தப் பேரரசு” என்று எல்லாம் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். பண்டை இந்தியாவில் இருந்த பல நாடுகளை/ பகுதிகளை ஆண்டுவந்த மன்னர்கள், தலைவர்கள் முதலியோரோடு எவ்வகையான உறவு இருந்ததோ அந்த உண்மையை வெளிப்படுத்தாமல் “பேரரசு” என்னும் சொல் அனைவரிடமும் தவறான கருத்தாக்கங்களைத் தான் உண்டாக்குகிறது. “உரோமர் பேரரசு” என்றால் அப்பேரரசின் அதிகாரம் வலிமையுடன் பேரரசு முழுவதும் நேரடியாகச் செலுத்தப்பட்டது; படிப்படியாகப் பல்வேறு பகுதி யினரும் உரோமக் குடி மக்களாக்கப் பட்டனர்; உரோமர் சட்டம், அவர்கள் லத்தீன் மொழி இவை பேரரசு முழுவதும் ஆதிக்கம் செலுத்தின. “ஆங்கிலப் பேரரசு” என்றால் இந்திய நாடு முழுவதும் ஆங்கில அரசு நிர்வகிக்கும் சட்டம் - ஒழுங்கு; ஆட்சி நடப்பது ஆங்கிலத்தில்; பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலேயர் கல்வி முறை; கிறித்துவ சமயப் பரப்புரை அனுமதி; ஆங்கில நாட்டைப் பின் பற்றி அனைத்துச் சாதி மத மக்களையும் சமமாகக் கருதும் மக்களாட்சி முறையை மெதுவாகப் புகுத்தல்; இவையெல்லாம் சேர்ந்தது என்று பொருள். இப்படிப்பட்ட (உரோம / ஆங்கிலப் பேரரசு போன்ற) பேரரசு பண்டைய இந்தியாவில் எங்கும் என்றும் நடைபெற்றதேயில்லை. இந்தியாவில் இருந்த அனைத்து நாடு / பகுதிகளிலும் அடிப்படை அறநூல் (தரும சாத்திரக்) கருத்துக்களின் படியான ஆட்சி முறையே இருந்தது. ஆற்றல் வாய்ந்த ஒரு வேந்தன் தன்னை “ஆழிவேந்தன்” “ஒரு குடைக் கீழ் உலகாண்டவன்” என்றெல்லாம் கூறிக் கொண்டான் என்றால் என்ன பொருள்? தான் வென்ற நாடுகளின் ஆட்சி முறைகளை மாற்றினான்; அந்தந்த நாட்டு அதிகாரிகளை மாற்றித் தன் ஆட்களை நியமித்தான்; ஆங்காங்குள்ள நிலங்களில் தன் படையினைக் குடியேற்றினான்; தோற்ற நாட்டு மக்களை அடக்கி மிரட்டத் தன் படையினரை ஆங்காங்கே இருக்கச் செய்தான்; என்றெல்லாம் எண்ணிவிடக் கூடாது. அப்பேரரசன் வெற்றியைப் பிற மன்னர் ஏற்றுக் கொண்டு ஆண்டுதோறுமோ, அவ்வப் பொழுதோ திறை தந்துவந்தனர் என்பது மட்டுமே பொருள். இவ்வாறு தனது அதிகாரத்தை நிலை நாட்டிப் பேரரசனாகக் கருதப்பட விரும்பிய சிலர் அசுவ மேத யாகம் செய்வர். யாகக் குதிரையை எதிர்க்கும் மன்னனோடு போர் செய்து தோற்கடித்துத் திறை தருமாறு செய்வது மட்டுமே நடந்தது. அந்தந்தப் பேரரசன் தனிப்பட்ட வீரம், மனநிலை ஆகியவற்றைப் பொருத்ததே “பேரரசு.” ஒரு அரச பரம் பரையினர் அனைவருமே ஒருவர் விடாமல் பேரரசர் களாக இருந்தனர் என்று கருதமுடியாது. எனவேதான் “இந்தியப் பேரரசுகள் பொதுவாக நீடித்து இருக்க வில்லை” என்று கூறுவது அபத்தம் ஆகும். 29. சங்ககாலப் போர்முறை கொடுமை நிறைந்ததாகவே இருந்ததை மன்னர்கள் போர் வெற்றியைப் புகழும் ஏராளமான பாடல்களிலிருந்து அறியலாம். மதுரைக்காஞ்சி 126 “நாடு கெட எரிபரப்பி” புறநானூறு 7 : “பகைவர் ஊர் சுடு விளக்கத்து அழுவிளிக்கம்பலை கொள்ளை மேவலை, ஆகலின், நல்ல இல்ல ஆகுபவால்................ பிறர் அகன்தலைநாடே” (கரிகாலன் பற்றி கருங்குழல் ஆதனார்) புறம்40. வென்ற மன்னரைக் கொன்று அவர் முடிப் பொன்னால் கழல் செய்து காலில் அணிந்தவன் கிள்ளிவளவன். நற் 14. குட்டுவனுடைய அகப்பா என்னும் கோட்டையை நூறிய செம்பியன் பட்டப் பகலில் பகைவன் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினான். நற் 18. தொண்டிப் பொருநன் இரும்பொறை, மூவன் என்னும் சிற்றரசனை வென்று அவனுடைய பற்களைப் பிடுங்கித் தன் கோட்டைக் கதவில் பதித்தான். 30. மன்னர்களும் பிறரும், நேரடியாக (சுற்றமும் அமைச்சரும் உதவ) வழக்குகளைக் கேட்டுத் தீர்த்தனர். சிறுவழக்குகள் ஊர் மன்றத்தோடு முடிந்திருக்கும். பல நாடுகளிலும் முன்னர் இருந்தது போல், சூடு வைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொடவைத்தல்; பாம்புக் குடத்துக்குள் கைவிடச் செய்தல், முதலிய மூடத்தனமான விசாரணைகளும் (Trial by Ordeal) இருந்தன. (இன்றும் சில பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் சூடு வைக்கும் செய்திகள் வருகின்றனவே!) ஒறுப்புகளும், கழுவேற்றுதல், சிறுதிருட்டுக் காகக்கூட கை கால்களை வெட்டுதல், சித்திரவதை போன்று கொடுமையானவையாக இருந்தன. (பல நாடுகளில் இன்றும் அத்தகைய ஒறுப்புகள் உள்ளன). காவல் மரத்தின் பசுங்காய் விழுந்து நீரில் வந்ததைத் தின்ற சிறுமிக்குக் கொலைத் தண்டனை விதித்த பெண் கொலைபுரிந்த நன்னனைச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது; புலவர் அவனைத் தூற்றியுள்ளனர். ங. சங்ககாலத் தமிழர் வாணிகம் இதுபற்றிப் “பழங்காலத் தமிழர் வாணிகம்” என 1974இல் மயிலை சீனி வேங்கடசாமி அருமையான 160 பக்க நூலை எழுதியுள்ளார். அந்நூற் செய்திகளையும் அண்மைக்கால பிற ஆதாரங்கள் சிலவற்றையும் கொண்டு எழுதியது இப்பகுதி. “நம் நாட்டுக் கப்பற்கலை” என்ற சாத்தான்குளம் அ. இராகவன் (1968) நூலும் படிக்கத்தக்கது. 2. சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தமிழகத்துக்கும் சுமேரிய எகிப்து நாகரிகங்களுக்கும் வாணிகக் தொடர்பு இருந்து வந்ததை முதல் இயலில் காண்டோம். சுமேரியாவுடன் வணிகம் 3. சேஸ் (Sayce) உடைய ஹிப்பர்ட் பேருரையில் இரண்டு செய்திகள் உள்ளன. கி.மு. 4000த்தில் சுமேரிய மன்னர் தலைநகராக இருந்த “ஊர்” நகர அழிவுகளில் இந்திய தேக்குக் கட்டை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாபிலோனில் கிடைத்த துணிப்பட்டியல் பொறிப்பில் சிந்து(மஸ்லின்) என்னும் துணி குறிக்கப்பட்டுள்ளது. இந்தத் துணி தரைவழியாக சிந்து வெளியிலிருந்து பாரசீகத்தைத் தாண்டிச் சென்றிருக்குமாயின் “சிந்து” (பாரசீக மொழித்தாக்கத்தால்) ஹிந்து என மாறியிருக்கும்! எனவே அத்துணி நேரடியாக கப்பல் வழியாகத் தமிழகத்தி லிருந்து பாரசீக வளைகுடா வழியாக சுமேரியா சென்றிருக்க வேண்டும். துளு, கன்னட மொழிகளில் இன்றும் “சிந்தி” துணியைக் குறிக்கிறது. தமிழில் சிந்து என்றால் கொடி. எனவே துணியைக் குறித்த பாபிலோனிய “சிந்து” பழந்தமிழ்ச் சொல்லே யாகும் என்பர் பி.டி. சீனிவாச ஐயங்கார். எகிப்துடன் வணிகம் 4. எகிப்தின் 18வது அரசபம்பரை கிமு 1570-1339ல் ஆண்டது. அப்பரம்பரை அரசி ஹசேப் சத் Hatshepsut கி.மு 1490இல் தெர்-எல்-பஹ்ரியில் ஒரு பள்ளிப் படைக்கோயில் கட்டினாள். தொலைவிலுள்ள பந்த் Punt நாட்டுக்கு ஒரு குழுவினரைத் அனுப்பியதையும் அக்குழுவினர் அங்கிருந்து கொண்டுவந்த தங்கம், யானைத்தந்தம், சாதிக்காய், சாம்பிராணி, குரங்கு, சிறுத்தை, பறவை, மரம் ஆகியவற்றையும் காட்டும் படங் களையும் படவெழுத்துப் பொறிப்பையும் அக்கோயில் சுவர்களில் அவள் பதிவு செய்துள்ளாள் (Pwn- punt; என்பது அயல் நாட்டைக் குறிக்கும் சொல் இறுதியில் சேர்க்கும் சொல் ஈறு usual feminine ending for a foreign country) கேம்பிரிட்ஜ் பழங்காலவரலாறு (III பதிப்பு 1971; ஐ-2) இதுபற்றிக் கூறுவது. ‘பந்த்’ என்பது எந்நாடு என்பது தெரியவில்லை. சில இடங்களில் அது தெய்வபூமி என்றும் அழைக்கப் ப டு கி ற து . எ ல்லாரு ம் பொதுவாகக் கூ று வ து “செங்கடற்கரையில் எங்கோ இருந்திருக்கலாம்” என்பதே. “வாணிக ஊர்” என்று பொதுப்பொருள் தருவதே ‘பந்த்’ என நான் எண்ணுவது சரியாக இருப்பின், செங்கடல் மட்டும் அல்ல; இந்துப் பெருங்கடல் கரையில் இருந்த எல்லாத் துறைமுகங்களையும் அதுகுறித்திருக்கலாம். அப்படிக் குறித்ததாயின் ‘பந்த் மக்கள்’ என அக்கோயில் சுவர்ப் படங்களில் வருபவர்கள் பல்வேறு உடைகளில் இருப்பதும், “பந்த்” இலிருந்து வந்தனவாக பல்வேறு பொருள்கள் குறிப்பிடப்படுவதும் வியப்புக்குரியதல்ல. அப்படங்கள் ‘பந்த் மக்கள்’ எனச் சித்தரிப்பவர்கள் தோற்றம் ஆசிய இனமக்களாகவே தோன்றுகிறது. ஆப்பிரிக்க இனமக்கள் அல்ல. நறுமணமரங்களும் வாணிகப் பொருள்களாகக் குறிப்பிடப்படுவதிலிருந்து அவர்கள் இந்தியர்கள் எனவே கருதலாம். அக் காலத்திலேயே இந்தியாவுக்கும் எகிப்துக்கும் கடற்பயணம் நடைபெற்றிருக்கக் கூடியது தான்” Memoirs of Asiatic Society of Bengal (1920) ல் “இந்திய படகு (கப்பல்)களின் உருவமைப்பு வகைகளின் தோற்றமும் அவற்றிலிருந்து அவற்றைப் படைத்தவர்களின் இனம் பற்றிய செய்திகளும்” என்ற கட்டுரையில் ஹார்னல் (J. Hornell) ‘பந்த்’ என்பது பாண்டிய நாட்டைக் குறித்தது எனக் கூறுவது ஆதாரமற்றது என ஒதுக்கத் தக்கதன்று. 5. தமிழக - எகிப்து வாணிகத் தொடர்பு பற்றி அண்மைக் காலத்தில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. (i) எகிப்திய ஆக்சிரிஞ்சஸ் பேபிரஸ் தொகுதியில் கிடைத்த (கி.பி. 1ம் நூற்) கிரேக்க நாடகம் ஒன்றில் உள்ள திராவிட மொழிப் பகுதிகள் தமிழே என இரா. மதிவாணன் நிறுவி யுள்ளார் (கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் : 1978) (ii) எகிப்தில் குவெசிர்-அல்-காதிம் என்னும் இடத்தில் 1979- 80ல் கிடைத்த கி.பி. 2ம் நூற்றாண்டைச் சார்ந்த பானை ஓடுகளில் தமிழி எழுத்துகளில்: கணன் (=கண்ணன்), சாதன் (=சாத்தன்) JAOS (1991)111-4 அதே இடத்தில் 2007இல் பானைஉறி (பனை ஓரி?) எனப் பொறித்த ஓடு ஒன்று கிடைத்துள்ளது (இந்து 21.11.07); பெர்னிகே துறைமுகத்தில் கிடைத்த கி.பி. 40 சார்ந்த பானை ஓட்டில் “கோற்பூமான்’ என்ற பொறிப்பு. (iii) பேரியாறு கடலில் கலக்கும் இடத்திலுள்ள முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகனும் நைல் ஆறு கடலில் கலக்கும் அலெக் சாந்திரியா நகர கிரேக்க வணிகனும், கி.பி.150ல் செய்த வணிக ஒப்பந்தம் ஒன்று (பேபிரசில் கிரீக் மொழியில் எழுதியது) வியன்னா அருங்காட்சியகத்தில் 1985இல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. (iv) கேரள எர்ணாகுளம் மாவட்டத்தில் பேரியாற்றின் தென்கரையில் பட்டனம் என இன்று அழைக்கப்படும் இடத்தில் பண்டைய முசிறியின் தடயங்கள், தமிழிப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள், ரோம் நாட்டு ஆம்போரா (மதுச் சாடிகள்) சங்க காலச் சேரர் நாணயம் போன்றவை 2005 அகழ் வாய்வில் கிட்டியுள்ளன. (வி.செல்வகுமார் கட்டுரை: IJDL XXXV 2, சூன் 2006) 6. விவிலியம் பழைய ஏற்பாடு “ராசாக்கள் III” “வரலாறுகள் II” ஆகிய புத்தகங்களில் ஒபிர்-இலிருந்து சாலமன் மன்னனும் அவன் நட்பரசன் ஹீராம் என்பவனும் கிமு 1000ஐ ஒட்டித் தங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு வந்தனவாகக் கூறும் பொருள்களின் பெயர்கள் அவற்றுக்குரிய தமிழ்ப் பெயர்களின் திரிபுகளாகவே இருப்பதைக் காண்க. தமிழ்ச்சொல் எபிரேய மொழியில் அதன் வடிவம் ஒருமை பன்மை தோகை (மயில்) துகி துகிம் கவி koph kophim அகில் (மரம்) almug/algum almuggim/algummim ஒபிர் என்பது கொற்கை அருகில் உள்ள உவரியே என்பர் சவரிராயன் (Tamilian Antiquary). எனினும் சிந்துப்பகுதி சார்ந்த சோபாரா sopara தான் ஓபிர் என்பர் பி. ஜோசப் (Tamil culture: சூலை-செப் 1963) 7. தமிழகத்துக்கும் எகிப்து, கிரீஸ், உரோம் ஆகிய மேலை நாடுகளுக்கும் கிமு 6ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே நடந்து வந்த கப்பல் வாணிகத்தைப் பற்றிச் சங்க இலக்கியங் களிலும், வெளிநாட்டவர் நூல்களிலும் பல செய்திகள் உள்ளன: மேல் நாட்டவர்கள் சிலர் நூற்களிற் கண்ட குறிப்புகள் வருமாறு: ஸ்திராபோ: கிமு 29இல் ரோம்பேராசன் அகஸ்தஸ் சீசருக்குப் பாண்டியன் அனுப்பிய தூதரைக் குறிப்பிடுகிறார். பிளினி, மூத்தவர் (கிபி 75) குறிப்பிடும் துறைமுகங்கள்; கொட்ட நரா (குட்ட நாடு) மிளகு வாணிக மையம்; மதுரா (மதுரை); முசிறி உரோமப் பேரரசர் டாமிஷியன் (கி.பி 81-96) காலத்தில் “பெரிப்ளஸ் மேரை எரித்ராய்” (செங்கடல் (= இன்றைய அரபிக்கடல்) செலவு) என்று நூலை எழுதிய அலெக்சாந்திரிய வணிகன்: Naura - மங்களூருக்குத் தெற்கே துளு நாட்டு நறவு Tyndis - மலையாளக் கரையில் தொண்டி Camara - (தாலமி இதை Khabaris என்பார்) காவேரிப் பூம்பட்டினம் Poduca - புதுச்சேரி அருகே Comari - குமரி Colchis - கொற்கை சோபத்மா – மரக்காணம் தாலமி Ptolemy (கிபி 130) தென்னாட்டுத் துறைமுகங்களோடு கிழக்கிந்தியத் தீவுகளின் துறைமுகங்களையும் குறிப்பிடுகிறார். 8. கிரேக்கர், உரோமர் போன்ற மேலை வணிகர் அனைவருமே ‘யவனர்’ என்று பொதுவாக அழைக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பொருள்கள் மிளகு (கறி), முத்து, சங்கு, யானைத் தந்தம், பருத்தித் துணி, நீலக்கல், மயில்கள் முதலியனவாம். தாயங்கண்ணானார் அகம் 149இல் மிளகு ஏற்றுமதி பற்றிக் கூறுவது: “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரைகலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழுமுசிரி” யவனர் தமிழ் நாட்டிற்குள் இறக்குமதி செய்த திராட்சை மதுவை (wine) தமிழ வேந்தரும் செல்வரும் அருந்தி மகிழ்ந்தனர் (மதுரைக் காஞ்சி 779-81; புறம் 56, 24, 367) அரிக்கமேடு போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுகளின் யவனர் மதுச்சாடிகளாகிய அம்பொரே (amphorae)) கிடைத்துள்ளன. 9. சங்க காலத் தமிழகத் துறைமுகங்களிலும் பிற இடங்களிலும் யவனர் குடியேறி வாழ்ந்த சேரிகள் இருந்தன. யவனத் தச்சரை மணிமேகலை (19:108) குறிப்பிடுகிறது. யவனர் பாவைவிளக்கையும், ஓதிம விளக்கையும் நெடுநல்வாடையும் பெரும்பாணாற்றுப் படையும் குறிப்பிடுகின்றன. அரசரின் மெய்க் காவலராக “வலி புணர் யாக்கை வன் கண் யவனர் (முல்லைப்பாட்டு; 61) இருந்தனர். கிரேக்க நகர அரசுகளில் அடிமைகள் இருந்தனர். அடிமைகளில் சிலர் கோயில் அடிமைகளாக விடப்பட்டனர். யவனருடைய இந்த வழக்கத்தைப் பார்த்துத்தான் பின்னாளில் தமிழகக் கோயில் அடிமைகளாக ஆண்களையும் பெண்களையும் (தேவ தாசிகள்) வைக்கும் முறை உருவாக்கியிருக்கலாம் என்பர் எம். ஆரோக்கியசாமி (Yavanar in Tamil Litrature” INDICA; Vol 3 (1966) 10. கிமு 200 - கிபி 200 கால அளவில் தமிழ்நாட்டு வேந்தர்கள் செல்வநிலை உயர்ந்ததற்கும் தமிழ்நாட்டில் நகர நாகரிகம் பரவியதற்கும் அயல் நாடுகளுடன் நடந்த கடல் வாணிக ஆதாயமும் சுங்கவரி வருமானமும் காரணமாக இருக்கலாமென்பர் கிளாரன்ஸ் மாலொனி (1970) 11. காழகத்து (=கடாரம்) ஆக்கம் புகாரில் விற்கப்பட்டது என்று பட்டினப்பாலை கூறும். இன்றைய இந்தோனேசியத் தீவுகள், இந்தோசீனா ஆகியவற்றுக்கும் (ஏன் சீனாவுக்கும்) தமிழகத்துக்கம் வாணிக, கலைத் தொடர்புகள் கிறித்து பிறப்புக்குச் சில நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே இருந்திருக்க வேண்டும். கிமு 2ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு (Houang-tche) ஒரு சீனத் தூதுக்குழு அனுப்பப்பட்டதாகச் சீன ஆவணம் உள்ளது. 12. தாய்லாந்து நாட்டில் மேலைக்கரையின் தென் பகுதியில் ஒரு துறைமுகத்தில் 1992-93இல் (கராஷிமா, பி. சண்முகம் முதலியோர் கண்டுபிடித்த) ஒரு சாணைக் கல்லில் “பெரும்பத்தன் கல்” என்று கி.பி. 3ஆம் நூற்றாண்டு சார்ந்த தமிழிப் பொறிப்பு உள்ளது. “து ற ஒ” (= துற வோன்) என்ற கி.பி. 2ஆம் நூற்றாண்டு சார்ந்த தமிழிப் பொறிப்பு கொண்ட பானை ஓடு ஒன்றும் தாய்லாந்தில் கிடைத்துள்ளது. (இந்து: 16.7.2007) 13. உள்நாட்டு வாணிகத்தைப் பொறுத்தவரையில் (உலகெங்கும் பழங்காலத்தில் இருந்தது போல) தமிழகத்திலும் பண்டமாற்று முறையே பெருமளவுக்கு நடைபெற்று வந்தது: ‘பாலொடு வந்து கூழொடு பெயரும் இடையன்” -குறு. 221 “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும் (பானை) நிறைய ஏரில் வாழ்நர் பேரில் அரிவையர் குளக் கீழ் விளைந்த களக் கொல் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப உவந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நன்னாடு” - புறம் 33 ‘நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோவெனச் சேரி தொறும் நுவலும்” - அகம் 390 14. சங்க காலத் தமிழக வாணிகச் செய்திகளைத் தரும் பிளினி, பெரிப்ளஸ், தாலமி ஆகிய நூல்களின் ஆங்கிலப் பெயர்ப்புகளை செம்மையாகத் தமிழாக்கம் செய்து வி.எஸ்.வி. இராகவன் 1960-1978 காலகட்டத்தில் வெளியிட்டுள்ளார். பல்வேறு துறைமுகங்கள், நகரங்கள் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் வரும் செய்திகளையும் ஒப்புநோக்கி அவர் தந்துள்ள குறிப்புகள் சிறப்பானவை. கணன் (ச) ஆதன் = சாத்தன் பண்டைத் தமிழகம்-மேலைநாடுகள் வணிகத் தொடர்பு பானை உறி (பனை ஓரி?) ச. சமுதாயமும் பண்பாடும் சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலப்பகுதிகளிலும் (முல்லையும் குறிஞ்சியும் திரிந்து உருவாகிய) பாலையிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக் குழுவினராகவே (tribes) இருந்திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக் குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. அக்காலத்தில் சாதியோ வர்ணாசிரமமோ இருந்திருக்காது. (இன்றும் திராவிட மொழி பேசும் இனக் குழுவினரான ஒரிசா மாநிலக் கந்தர் (Khonds), ஒரவோன் போன்றவரிடம் சாதி இல்லை) நால் வருணம் பற்றிக் கூறும் தொல்காப்பியப் பொருளதிகார மரபியல் சூத்திரங்கள் 71-85 இடைச்செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர். திருக்குறளும் யாண்டும் ‘ஒரு குலத்துக் கொருநீதி” கூறவில்லை. ஆரியத் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலிருந்தே மெதுவாகத் தொடங்கியிருக்கும் என்பர் கே.கே. பிள்ளை (1968). சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத்தாக்கம் இருந்திருக்கும் என்கிறார் அவர். கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் இத்தாக்கம் மேலும் வலுப்பெற்றது என்க. பிராமணர் தமது வருணாசிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன் விரகாகப் பயன்படுத்தி திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்து, சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர் என்பர் ஸ்லேடர் (1924). “The Aryans found a system resembling caste, already in force among the Dravidian inhabitants and they adapted and modified it to suit their own purposes”. சாதிமுறை போன்ற ஒன்று ஆரியர் வருகைக்கு முன்னரே திராவிடரிடமும் பழங்குடிகளிடமும் இருந்திருக்கலாம் என்பர் ஜான் கே (1973). 2. ஏ.எல். பஷாம் 1954) கருத்தும் இதுவே. “பழந் தமிழிலக்கியத்தில் சாதிமுறை பற்றிய குறிப்புகள் இல்லை. எனினும் நாளடைவில் ஆரியத் தாக்கத்தினாலும், அரசியல் - பொருளாதாரத் துறை மாற்றங்களால் சமூக அமைப்பின் கூறுபாடுகள் பல்கியதாலும் சாதிமுறை தென்னிந்தியாவில் உருவாகியது (சிலவகையில் வட இந்தியச் சாதி அமைப்பை விடக் கடுமை வாய்ந்ததாக)”. என். சுப்ரமணியன் கருத்தும் அதுவே. ஆர்.சி. மஜும்தார் 1952இல் எழுதிய Ancient India நூலின் மதிப்புரையிலும் (Journal of Royal Asiatic Society அக்டோபர்1955) பஷாம் “சாதிமுறையினால் தான் அயல் நாட்டுப்படையெடுப்பாளர்கள் இந்தியாவை வென்று ஆள முடிந்தது என்று மஜும்தார் போன்றவர்கள் கூறுவது சரியல்ல; இந்து மன்னர்கள் இடையே ஒற்றுமையில்லாமையே காரணம்” என்று விளக்குகிறார். “இன்றைய நிலைமையில் சாதியினால் பயன் இல்லையெனத் தோன்றினும் ஏனைய மதங்கள் சார்ந்த பரதேசிப் படையெடுப்பாளர்களின் ஆதிக்கம் கடுமையாக 750 ஆண்டுகள் இருந்தபோதிலும் இந்து சமுதாயம் இன்றுவரை அழிந்து படாமல் இருப்பதற்குச் சாதிமுறையும் இந்துக் குடும்ப அமைப்புமே காரணம்” என்பார் பஷாம். 3. சாதிமுறையின் விரும்பத்தகாத கூறுகள் அனைவருக்கும் தெரிந்ததே. கே.கே. பிள்ளை 1977இல் அவற்றை விரிவாகக் கூறியுள்ளார். 1952லிருந்து வயது வந்தோருக்கு வாக்குரிமை வந்த பின்னர் தொடர்ந்து அரசியல் ஆதாயங்களுக்காக அனைத்து அரசியல் கட்சிகளுமே சாதிமுறையைப் பின்பற்றி வந்த போதிலும் அவையும் சாதி ஒழிய வேண்டும் எனப் போலியாக முழங்குவதில் தவறுவதில்லை! இது பற்றிப் பின்வரும் இயலில் மீண்டும் கூறப்படும். 4. இந்து மன்னர்கள் ஆட்சிக்காலம் முடியும்வரை இந்து சமூகத்தில் ‘சாதி’க்குப் பெரும் ஆற்றல் இருந்ததில்லை என்பது கான் (Cohn 1987), டர்க்ஸ்( Dirks 1992)) இந்தென் (Inden 1990) ஆகியோர் கருத்து ஆகும். இந்தென் (1986) கூறுவது: இப்போதுள்ளது போன்ற சாதிமுறை இந்து மன்னர்கள் ஆட்சிகள் முடிந்த பின்னர்த்தான் ஏற்பட்டது, இன்றுள்ளது போன்ற சாதிமுறையால் இந்து அரசுகள் பலவீனமடைந்து வீழவில்லை; அவ்வரசுகள் வீழ்ந்தமையால்தான் இன்றுள்ளது போன்ற சாதிமுறை உருவாகியது. (“Castes are not the cause of the weakness and collapse of Hindu kingship; but the effect of it”) 5. சங்க காலத்தில் தீண்டாமை இருந்ததா? இல்லை என்பதை கே.ஆர். ஹனுமந்தன் (1979/1996-7) விளக்கியுள்ளார். பிற்காலச் சோழர் காலத்தில் இருந்துதான் அது உருவாகி, வரவர அதன் கொடுமை அதிகரித்ததைப் பின்வரும் இயலில் காணலாம். 6. தமிழகத்தில் அடிமை முறை இருந்ததா? இதுபற்றி எஸ். மாணிக்கம் (1993) கூறுவது: பண்டைத் தமிழகத்திலும் அடிமை முறையின் தன்மை வாய்ந்த ஒன்று ஓரளவுக்கு இருந்திருக்கும்; ஆனால் அக்காலகட்டத்தில் சாதிமுறை வலுவடையாததாலும் வலுப்பெற்ற அரசு ஆட்சியமைப்பும் இல்லாததாலும் பண்டைத் தமிழகத்தில் அது நீக்குப்போக்கானதாகத் தான் இருந்திருக்கும். (In the ancient Tamilagam there existed a milder form of hereditary slavery, but the absence of a powerful caste oligarchy and well entrenched State system were the prime cause for its relatively humane nature.) 7. இந்தியாவில் சாதி பற்றிய தமது அரிய (1999) நூலில் சூசன் பேலி எழுதியுள்ள பின்வரும் கருத்துக்களும் மனதிற் கொள்ளத்தக்கன: “இந்தியாவில் சாதி பற்றி வெளிவந்துள்ள பல்லாயிரக் கணக்கான நூல்களையும் கட்டுரைகளையும் முழுமையாகப் படிப்பது இயலாத செயல். அதன் தோற்றம், நீண்ட ஆயுள், இன்றும் அதற்குள்ள வன்மை ஆகியவை பற்றி வெவ்வேறு காரண காரிய விளக்கங்களை ஆய்வறிஞர்கள் பலர் கடந்த இருநூறு ஆண்டுகளாக அளித்து வந்துள்ளனர். அவற்றுள் எதுவும் சாதி பற்றி முழுமையாக (இந்தியாவின் எல்லாப்பகுதி களுக்கும், எல்லாச் சாதியினருக்கும், பல்வேறு காலகட்டங்கள் அனைத்துக்கும்) பொருந்தக் கூடியது அல்ல. எனினும் அவ்வறிஞர்கள் பலரின் கோட்பாடுகளில் சிற்சில அம்சங்கள் சில கால கட்டங்களுக்கு சில பகுதிகளில் சில சாதிகளைப் பொறுத்தவரைப் பொருந்துவனவாகும். “கடந்த இருநூறு ஆண்டுகளாக இருந்து வருவதும் இன்றைக்கு நாம் இந்தியாவில் காண்பதும் ஆன ‘சாதிக்குச் சாதி வன்மம்’ மிகுந்த “சாதிமுறை” ஆங்கில ஆட்சி தொடங்கு வதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்த்தான் உருவானது. “In these new post - Mughal realms, parvenu ruling elites took bold initiatives in the attempt to assert their power and legitimacy, turning to the symbols and language of caste as a prop of their statecraft, and especially to versions of these which emphasize power and beneficence”. “Far then from reflecting continuities from an ancient Hindu past, the caste-centered India that we see represented anthropologically in the work of Louis Dumont and other social scientists, was largely a creation of this period (1700-1830 AD) though many of its features were further consolidated under British rule”. சூசன்பேலியின் முடிவுரை வருமாறு: “சாதிச் சமுதாயம் என்று மட்டுமே விவரிக்கத்தக்க சமுதாயமாக (Monolithic “Caste society”) இந்தியா என்றுமே இருந் த தில்லை . இன்றும் இல்லை இந்தியர்கள் சாதி, வர்ணக் கோட்பாடுகளையும் ஆசாரங்களையும் பொருட்படுத்தாத காலம் ஒன்றுகூட இனி வரலாம். எனினும் இந்தியாவின் கடந்த கால வரலாறு, இன்றைய பண்பாடு, அரசியல் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது சாதி ‘கண்டு கொள்ளாமல்’ விடக்கூடியது அல்ல. அதன் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் இதுவரை அது பேராற்றலுடன் நெடுங்காலம் நிலவி வந்துள்ளது”. திராவிடர் உறவுமுறை 8. திராவிடரின் தொன்மையையும் தென்மையையும் நிலைநாட்ட “வரலாற்று மொழியியல்” ஆய்வு உதவுவதைப் போல அவர்கள் உறவுமுறை ஆய்வும் உதவுவதை தாமஸ் ஆர். டிராமன் 1981இல் வெளியிட்ட “திராவிடர் உறவுமுறை” என்ற நூலில் காணலாம். 9. திராவிடர் உறவுமுறையின் அடித்தளம் (தாயின் உடன்பிறந்த) மாமன் மகளை / மகனையும்; (தந்தையின் உடன் பிறந்த) அத்தை மகளை / மகனையும் மணக்கத்தக்க முறைப் பெண் / மாப்பிள்ளையாகக் கருதும் நியதியாகும். இதை மானுடவியலார் cross cousin marriage - (மச்சான் மச்சினி மண விதி) என்று அழைப்பர். இங்கு இதை “ம-ம” விதி என இனிக் குறிப்போம். திருமணங்கள் இவ்வாறு நெருங்கிய உறவினருக் கிடையில் நடைபெறுவதற்கே முன்னுரிமை தரப்படுவதால் திருமண உறவு ஒன்றையே சுட்டும் ஆங்கில Father-in-law, son-inlaw போன்ற உறவுப் பெயர்கள் தனியாக திராவிடர் உறவு முறையில் இல்லை. திராவிடர் உறவு முறையில் – தாயின் உடன் தந்தையின் கணவன் / பிறந்தோன் உடன் பிறந்தாள் மனைவியின் கணவன் தந்தை (தா. உ-ன்) = த. உ-ள். க) = (க / ம த) MB FzH SF “மாமன்” இல் மாமன் முறையில் உள்ளவர்களும், “அத்தை”யில் அத்தை முறையில் உள்ளவர்களும் அடக்கம். மாமன் மகள் அத்தை மகள் இருவருமே முறைப்பெண் என்பது திராவிடர் உறவு முறையின் பண்டைய அடித்தளம் என்றாலும், பின்னர் இவர்களுள் ஒருவரை மட்டுமே முறைப்பெண் எனக்கொள்ளும் வரன்முறையை ஏற்படுத்திக்கொண்ட சமூகங்களும் உண்டு. 10. திராவிட இனங்கள் சிலவற்றில் அக்காள் மகளை மணக்கும் பழக்கமும் உண்டு. அவ்வாறு மணப்பவனுக்கு மகன் இருந்திருந்தால் அவளை மணக்க அம்மகனுக்கு ம-ம விதிப்படி உரிமை உண்டு அல்லவா? இல்லாத மகனுடைய உரிமையை தந்தை பயன்படுத்திக் கொள்வதாகக் கொள்ள வேண்டும் என்பது டிராட்மன் கருத்து. 11. தாயின் உடன்பிறந்த பெண்பாலர் (பெரியம்மை, சித்தி) மகள், மகனையும் தந்தை உடன்பிறந்த ஆண்பாலர் (பெரியப்பா, சித்தப்பா) மகள் மகனையும் தத்தம் தாய் வயிற்றிற் பிறந்த உடன் பிறப்புக்களையொப்ப அண்ணன்/தம்பி, அக்காள்/தங்கை என்றே அவரவர் வயது ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அழைப்பது திராவிடர் உறவு முறையின் மற்றொரு நியதியாகும். சகோதரன், சகோதரி என்ற இந்தோ ஆரியச் சொற்களையொத்த “உடன் பிறந்தான்”, உடன் பிறந்தாள்” என்பவை நாட்டுப் புறப்பகுதிகளில் உறவை விளக்கும் சொற்றொடர்களாகப் பயன்படுகின்றன எனினும் அண்ணனையும் தம்பியையும் ஒருசேரச் சுட்டவல்ல brother போன்ற உறவுச் சொல் திராவிடர் உறவு முறையில் இல்லை. அக்காள் / தங்கைக்கும் அப்படியே. தன்னுடன் பிறந்தவர்களை அழைக்கும் அதே உறவுப்பெயர்களைக் கொண்டு பெரியப்பா / சித்தப்பா; பெரியம்மா / சித்தி ஆகியோர் குழந்தைகளையும் அழைப்பதும் திராவிடர் உறவுமுறை விதி. இவர்களை Parallel Cousins என மானுடவியலாளர் அழைப்பர். 12. ஆர்க்காடு - வேலூர் பகுதியில் கிறிஸ்துவ சமயப் பணியாற்ற வந்த ஹென்றிஸ்கடர் 1859ஆம் ஆண்டு விடுப்பில் அமெரிக்கா சென்றபொழுது அமெரிக்க மானுடவியலறிஞர் லெவிஸ் ஹென்றி மார்கன் - இடம் மேற்சொன்ன திராவிடர் உறவுமுறை விவரங்களைத் தெரிவித்தார். அமெரிக்க இந்தியர் களான (செவ்வித்தியர்கள்) இரோகோ (Iroquois) இனத்தவர்கள் தாய் வழிக்கிளைகள் உடையவர்கள; திராவிடர் உறவுப் பெயர்களைப் போலவே அவர்கள் உறவுப் பெயர்கள் அமைந்திருந்ததை மார்கன் கண்டார். வேறு பல அமெரிக்க இந்திய இனத்தவரிடையேயும் (தென் அமெரிக்காவில் பொலிவியாவில் “சிரியனோ” இனத்தவர் போன்றோர்) இவை நிலவின. இவற்றையெல்லாம் ஒருங்கு நோக்கி ஆய்வு செய்து 1870இல் மார்கன் ஒரு நூல் வெளியிட்டார். அமெரிக்க இந்தியர்கள் பண்டு ஆசியாவிலிருந்து சென்றவர்கள் என்ற தன் கருத்தை மார்கன் அந்நூலில் வெளியிட்டார். 13. டிராட்மன் தன்நூலின் 3ஆம் இயலில் திராவிடர் உறவு முறையானது இன்றும் விந்தியமலைக்குத் தெற்கில் இந்தியா வெங்கும் வழக்கிலுள்ளதையும், வடக்கில் கூட குஜராத்தில் அது வழக்கிலுள்ளதையும் விரிவாக விளக்கியுள்ளார். இம்முறையைப் பின்பற்றுகிறவர்கள் தென் மாநிலங்களில் வாழும் பல்வகைச் சாதியினர் - பிராமணர் உட்பட. மகாராஷ்டிரத்தில் பெரும் பாலான சாதியினரும், குஜராத்தில் மேர் (Mer) சாதியினரும், பீகாரில் மால்டோ மொழி பேசும் மாலெர் (Maler) இனத் தவரும், மத்திய இந்தியாவில் கந்தர், பைகா, குருக் ஆகிய பழங்குடியினரும் இம்முறையையே பின்பற்றுகின்றனர். நீலகிரி வாழ் தொதுவரின் உறவுமுறையும் திராவிட முறையே. திராவிட உறவுப்பெயர் முறை ஒரு இனத்தவரிடம் இன்று இருந்து ம-ம விதி மட்டும் இன்று அவர்களிடம் வழக்கில் இல்லா விட்டாலும் (எடுத்துக்காட்டு: முள்ளுக்குரும்பர்) முன்காலத்தில் அவர்களிடம் அவ்விதி கண்டிப்பாக இருந்திருக்கும் என்று கொள்ளலாம். பலூசித்தானத்தில் இன்றும் பிராஹுய் என்னும் திராவிட மொழியைப் பேசிவரும் இனத்தவரிடம் முற்காலத்தில் ம-ம விதி பின்பற்றப்பட்டு, அவர்கள் அனை வரும் இசுலாமியரானபின் அது மறைந்திருக்க வேண்டும். சிரிலங்காவில் தமிழரிடையே மட்டுமன்றி, சிங்களவரிடமும் திராவிட உறவுமுறையே இன்றும் அமுலிலுள்ளது. இதிலிருந்து வ ட இ ந் தியாவிலிரு ந் து ஈ ழ த் தி ல் கு டி யேறி ய ம க் க ள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்திருக்க வேண்டும் என்றும்; முன்னரே அங்கிருந்த பெருந்தொகையினரான தமிழ் பேசும் தொல்குடிகளோடு கலந்து உருவான காரணத்தினால்தான் சிங்கள இனத்தினர் இன்றும் திராவிடர் உறவு முறையையே பின்ப ற் றி வ ரு கின்றனர் என்றும் ; டிராட்மன் சுட்டிக் காட்டுகிறார். 14. நூலின் ஆறாம் இயலில் தென்னாட்டு, திராவிட அரசு குலங்களிடையே ம-ம விதி தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வந்தது விவரிக்கப்படுகிறது. அவ்வாறு பின்பற்றி வந்தவர்களுள் ஆந்திர சதவாகனர்; இக்ஷ்வாகுகள் (தங்களை இக்ஷ்வாகு குலத்தவர்கள் எனக் கற்பனை செய்து கூறிக்கொண்ட போதிலும் இவர்கள் திராவிட இனத்தவரே); ராஷ்டிரகூடர்கள் (காலசூரிகளுடன் ம-ம உறவு); சோழர்கள் (கீழைச் சாளுக்யர்கள்; ராஷ்டிரகூடர்கள், கொடும்பாளூர் வேளிர்; போன்றோரிடம் ம-ம உறவு) சிங்கள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 15. நான்காம் இயலில் இந்தோ ஆரிய உறவுமுறையை விளக்கி அது திராவிடர் உறவு முறையிலிருந்து எவ்வாறு மாறுபட்டது என்று காட்டுகிறார். இந்து தர்ம சூத்திரங்களில் கௌதமன்; பௌதாயனன்; ஆபஸ்தம்பன் வசிஷ்டன் ஆகியோர் எழுதியவை கி.மு. 600 முதல் கி.மு. 100 வரை இயற்றப்பட்டவை. மனுதர்மசாத்திரம் கி.மு. 200 - கி.பி. 200 கால கட்டத்திலும் யாக்ஞவல் கியம் கிமு 100- கிபி 300 கால கட்டத்திலும் இயற்றப்பட்டவை - இச்சாத்திரங்கள் அனைத்தும் தந்தை வழியில் மட்டுமன்றித் தாய் வழியிலும் சில தலை முறைகள் வரை “சபிண்டர்கள்” மணம் செய்யக்கூடாது என்று விதிப்பதால் ம-ம விதி ஆரியருக்கு தடைசெய்யப்பட்டதும் முற்றிலும் சாஸ்திர விரோதமானதும் ஆகிவிடுகிறது. பின் எவ்வாறு தென் இந்தியாவில் பிராமணர்களும் ம-ம வை கடைப்பிடிக்கின்றனர்?! சிறு எண்ணிக்கையிலேயே ஆரியர் அவ்வப்பொழுது தென்னாட்டுக்கு வந்து இங்குள்ள திராவிட சாதியினரோடு கலப்புற்ற போதிலும் அவர்கள் சந்ததியினர் தங்களை “பிராமணர்கள்” என்றே அடையாளம் காட்டிக் கொண்டமையால் இது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. தர்ம சூத்திரங்களில் சில தென்னாட்டுப் பிராமணர்கள் ம-ம வைப் பின்பற்றுவதை “தேசவழக்கம்” என்ற அளவில் அனுமதிக்கின்றன. மாதவர் (கி.பி. 14ம் நூ) மட்டும் சூத்திரங்களுக்கு வலிந்து பொருள் கொண்டு ம-மவும் அவற்றுக்கு ஏற்புடையதென்று வாதிடுகிறார். எனினும் வடநாட்டு பிராமணர் அதை ஏற்பதில்லை. ம-ம சாஸ்திர சம்மதம் எனக்காட்ட ரிக்வேதம் 7.55 இன் உப பாடலாக (Khila) ஒட்ட வைக்கப்பட்டுள்ள ஒரு பாடலில் மாமன் மகளையும் அத்தை மகனையும் மணஞ் செய்தற்கு உரியவர்களாகச் சொல்லப்பட்டுள்ளதை மாதவர் காட்டுவார். இப்பாடலைத் தென்னிந்திய பிராமணர்கள் பின் காலத்தில் இயற்றிச் செருகியிருக்க வேண்டும் என்பது டிராட்மன் கருத்து. அதுபோல சதபதபிராமணம் 1.8.3.6இல் ம-ம விதி சொல்லப்படுவதாக மாதவரும் ஹரிஸ்வாமியும் வாதிடுவதும் உள்நோக்கோடு வலிந்து பொருள் கொள்வதேயாகும். 16. ஆனால் பாளி, ஜைன நூல்களிலும் பாகவதம் போன்றவற்றிலும் புராண கால, வரலாற்றுக் கால வடநாட்டு மன்னர்களிடையே ம-ம பின்பற்றப்பட்டு வந்ததாகக் காண் கிறோமே? பாகவதம் தென்னாட்டில் எழுதப்பட்டது. மகாவம்சம் போன்ற பாளி நூல்கள் திராவிடர் உறவு முறையைப் பின்பற்றிய சிங்களரால் எழுதப்பட்டவை. இவ்வாறு எழுதியவர்கள் எல்லாம் தம் சமூகம் பின்பற்றி வந்த ம-ம விதியை அவ்வடநாட்டு மன்னர்களுக்கேற்றி எழுதிவிட்டதே இந் நிலைக்குக் காரணம் என்பர் டிராட்மன். உண்மையில் அம்மன்னர்கள் ம-ம வைப் பின்பற்றியவர்களல்லர். 17. இந்தோ ஆரிய உறவுமுறையில் தந்தை வழிக்கே முதன்மை. பெண் தருவோர் தரம் குறைவாகவும் பெண் எடுப்போர் தரம் உயர்வாகவும் கருதப்பட்டது. திருமணத் தினால் ஏற்படும் மாமன் முதலிய உறவுகளுக்குத் தனிப்பெயர் உண்டு. எடுத்துக்காட்டாக இந்தியில் (மனைவியின் தந்தை யாகிய) மாமனுக்கு (Fatherinlaw) சசுர் என்ற தனிப்பெயர் உண்டு. மாமா என்னும் இந்திச் சொல்லுக்கு தாயின் உடன் பிறந்தான் என்பதுமட்டுமே பொருள். மாமன்மகளை மணந்தால் அவர் சசுர் ஆகிவிடுவார். அத்தையின் கணவனை திராவிடர் உறவு முறை (தாய் உடன்பிறந்த) மாமனுக்குச் சமமாகக் கருதி மாமன் என்றே அழைக்கிறது. இந்தியில் அவனுக்குப் புப்பா (Phupha) என்று பெயர். பொதுவாக இந்தோ ஆரியமுறையில் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். தமிழ் “மாமன்” லிருந்து தான் சமஸ்கிருத “மாம(க)”வும், இந்தி “மாமா”வும் வந்திருக்க வேண்டும். ஆனால் தமிழில் உள்ள உறவுமுறைளைவிடச் சுருங்கிய உறவு முறையையே அவை அம்மொழிகளில் குறிப்பிடு கின்றன. “மாதுல” என்னும் சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து “மாமன்” வந்தது என்பது புரட்டானது என்பது மார்கனே சொன்னது. “மைதுன” விலிருந்து “மச்சினன்” வந்தது என்று வடமொழியாளர் மருட்டுவது ஏற்கத்தக்கதல்ல; இது இந்தோ ஆரியச் சொல்லாக இருக்கவே முடியாது என்பர் டிராட்மன் (ப: 151) 18. இவ்வாறு இந்தோ ஆரிய முறையிலிருந்து வேறு பட்டதும் தனித்தன்மை வாய்ந்ததுமான திராவிட உறவு முறையைப் போன்றதே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் உறவுமுறையுமாகும். இது எவ்வாறு ஏற்பட்டது? ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் திராவிடர்களிடமிருந்து பிரிந்தவர்களாகவோ அல்லது உறவு கொண்டவர்களாகவோ இருந்திருந்தால் அல்லவா இது ஏற்பட்டிருக்க இயலும்? இந்தப் புதிரைச் சுட்டிக்காட்டும் டிராட்மன் “இப்போதுள்ள (1991) ஆய்வுகள் அடிப்படையில் இதனைத் தீர்க்கமுடியாது” என தனது நூலின் 88-89. பக்கங்களில் சொல்லி அமைந்தார். அண்மைக்கால மரபணுவியல் ஆய்வும் வரலாற்று மொழியியல் ஆய்வுகளும் கடந்து இருபது ஆண்டுகளில் அத்தகைய நெருங்கிய உறவு கிமு 40000க்கும் அதிகமான மிகு தொன்மை வாய்ந்தது என்பதை தெளிவாக நிறுவிவிட்டதை மேலே முதல் இயலில் கண்டுள்ளோம். அந்தணர் 19. சங்க இலக்கியங்களில் “அந்தணர்” எனச் சிலர் சுமார் 20 இடங்களில் சுட்டப்படுகின்றனர் - புறம் 2, 15, 122, 166, 361, 397 உட்பட. அவர்கள் அனைவரும் ஆரியப் பிராமணர் அல்லர். வேள்வி பற்றிய செய்திகளும் சில விடங்களில் வந்த போதிலும் அவற்றைச் செய்த அனைவரும் வடநாட்டிலிருந்து வந்த ஆரியர் என்று கருத இடமில்லை; அக்காலத்திலும் சரி பிற்காலத்திலும் சரி தமிழ் மக்கள் சிலரும் பூணூல் அணிந்தும் வேதச் சடங்குகளை கடைப்பிடித்தும் பிராமணராக மாறியிருப்பர் என்பர் என். சுப்ரமணியம் (1998). (The other groups which go by the local names were in all probability groups of Tamil wise men and religious folk who became converts to Brahminism by sporting the thread and assuming Brahminical ways) ரிக் வேதகாலத்திலேயே சிந்துவெளித்தமிழநாகரிக அறிஞர் பிராமணர்களாக, ரிஷிகளாக ஆரியருடன் கலந்து விட்டனர் என்பதை மேலே கண்டோம். மகளிர் 20. பண்டைத் தமிழர்களிடையே இருந்த திருமணச் சடங்குகளை அகநானூற்றுப் பாடல்கள் 86-ம் “உழுந்து தலைப் பெய்த” 136ம் “மைப்புறப் புழுக்கின்” விவரிக்கின்றன. இப் பாடல்கள் எந்த ஆரியச் சடங்குகளையும் குறிப்பிடவில்லை. நெருப்பு வளர்க்கப்படவில்லை; தீ வலம் வருதல் இல்லை. புரோகிதரோ பூசாரியோ இல்லை. கவின்மிகு பந்தலில் நல்ல நாளில் ‘புதல்வர்ப் பயந்த மகளிர்’ நால்வர் (தமர்) மணமேளம் முழங்க மலரும் நெல்லும் சொரிந்து “கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் (கணவன்) பெட்கும் பிணையை ஆக” என வாழ்த்தித் தமர்தர மணம் முடித்தனர். மேற்சொன்ன அகப்பாடல்களில் வரும் “வாலிழை” என்பதும் “வெண்ணூல்” என்பதும் பிற்காலத் தாலியின் முன்னோடியாக இருந்திருக் கலாம் என்பர் க.த. திருநாவுக்கரசு. பரத்தைமையும் அரசர்கள், தலைவர்கள்,செல்வர்களிடம் இருந்ததைப் பல பாடல்கள் குறிக்கின்றன. (குறு: 80; நற்றினை 50, 170, 350, 370, 380; புறம் 152) வேந்தர்கள் ஆளுக்கு ஒன்றிரண்டு பட்டத்தரசிகளுடன், பல அந்தப்புரப் பெண்களையும் வைத்திருந்தனர் என அறிகிறோம். “பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு” கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறியதாக புறம் 246 கூறியது. இன்றையத் தமிழக மக்கள் தொகையில் பாதிப்பேரின் சாதி வழக்கங்களில் தொன்றுதொட்டு இன்றுவரை மணவிலக்கும், கைம் பெண் மறுமணமும் இருந்து வந்துள்ளன என்பதை தர்ஸ்டன் (1909) இலிருந்து அறியலாம். இவ்விரு வழக்கங்களும் திடீரென்று தோன்றியனவல்ல. சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் இவ்வழக்கங்கள் இருந்திருக்க வேண்டும். இலக்கிய வழக்கில் இவ்வழக்கங்கள் குறிப்பிடப்படவில்லை; அம்மட்டே. புறநானூற்று மூதின் முல்லைத் துறைப் பாடல்கள் மறக்குடி மகளிரின் வீரஉணர்வைக் காட்டுகின்றன. 21. சங்க கால நகரங்களைப் பற்றிய சிறந்த நூல் டி.கே. வெங்கட சுப்பிரமணியம் (1988) ஆகும். அக்கால நகரங்கள் கிராமங்களின் மறுவடிவமாகவே இருந்தன; எனினும் உழைத்து உணவு படைக்கும் உழவர்களைப் போல் நேரடி உழைப்பின்றிப் பிழைத்தவர்களாகிய வணிகர்கள், கைத் தொழிலாளர், கலைஞர்கள், புலவர்கள் போன்றோர் நகரங்களில் பெரும் பான்மையாக இருந்தனர். நகரமே இல்லாத நாடுகளிலும் அரசு இருக்கலாம்; ஆனால் அரசு இல்லாத நகரம் இல்லை. மேலைநாட்டு நகரங்கள் போலத் தனி அமைப்பு, தன்னரசு, தனிச்சட்டம் வாய்ந்த நகரங்கள் தமிழ்நாட்டில் இல்லை. மருதம், நெய்தல் திணைகளின் விளைச்சல்களும் ஆக்கங்களுமே நகரங்கள் உருவாகக் காரணமாக இருந்தன. 22. தமிழக அரசு வரலாற்றிஞர் குழுவைக் கொண்டு எழுதுவித்து 1983ல் வெளியிட்ட சங்ககாலம் II: வாழ்வியல் நூலின் பின்வரும் பகுதிகள் சங்க இலக்கியச் செய்திகளிலிருந்து அறியலாகும் அக்கால சமுதாயம், பண்பாடு பற்றி மிக விரிவாகக் கூறுகின்றன. சமுதாயம் (பக் 1-145) - கா. மீனாட்சி சுந்தரம் நாரிகமும் பண்பாடும் (177-242) - க.த. திருநாவுக்கரசு எழுத்தறிவுப் பரவல் 23. பழங்கால (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து) தமிழ் - பிராமி (தமிழி)க் கல்வெட்டுக்கள் 89ஐயும் தொடக்ககால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் 21ஐயும் தமது “தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்கள்: ஆதி முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு முடிய (2003) நூலில் செம்மையாகப் பதிப்பித்த அறிஞர் ஐ. மகாதேவன் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இக்கால கட்டத்தைச் சார்ந்த கல்வெட்டுக்கள், ஏராளமான பானை ஓட்டுப் பொறிப்புகள், காசுகள், முத்திரைகள் ஆகியவையெல்லாம் தமிழில் உள்ளன. தமிழகப் பொதுமக்களிடம் பரவலாக எழுத்தறிவு இருந்ததற்கு இது சான்று என்கிறார் அவர். (தமிழ்நாட்டுக்கு வடக்கில் உள்ள தென்னிந்தியப் பகுதியிலோ வென்றால் அவை அப்பகுதிப் பொது மக்கள் பேசிய தெலுங்கு / கன்னட மொழிகளில் அல்லாமல் அப்பகுதி மேட்டுக்குடி யினருக்கு மட்டும் தெரிந்த பிராகிருத மொழியில் உள்ளன. அப்பகுதிப் பொதுமக்கள் எழுத்தறிவு பெற்றிலர் என்பதுதான் காரணம்.) அவ்வட பகுதிகளில் ஆட்சி நடத்திய மௌரியர், சாதவாகனர், இக்ஷ்வாகுகள், கடம்பர், சாலங்காயனர், விஷ்ணுகுண்டின், பல்லவர் ஆகியோர் மக்கள் மொழிகளிலன்றி பிராகிருதத்தில் ஆட்சி நடத்தினார். தமிழக மன்னரோவெனில் தமிழில் ஆட்சி நடத்தினர். அதனால்தான் தமிழக மக்களிடம் சங்க காலத்தில் எழுத்தறிவு சிறந்திருந்தது. சங்க இலக்கியப் புலவர் 473 பேர்களுள் 30 பேர் பெண்டிர் (குறமகள், குயத்தியர் உட்பட). தமிழர் இசை 24. சங்க காலத்திலேயே இசை, நடனம், ஓவியம் ஆகிய கலைகள் சிறந்து விளங்கின. இன்றைய இந்திய இசை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே என்ற கோஸ்வாமி (1957) கருத்தை மேலே குறித்தோம். அவர் கூற்றில் ஒருபகுதி பின்வருமாறு: “இசையறிவை ஆரியரல்லாதவர்களிடம் ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே, சாம வேதத்திலிருந்து இந்திய இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர். “By this fiction that Saman is the source of all Indian music alone it was possible to forget conveniently the debt the Aryans owed to the non - Aryans for their musical knowledge and practice”. ஏழிசை எழுத்தின் பெயருக்கு சேந்தன் திவாகரம் நிகண்டில் இரண்டு நூற்பாக்கள் உள. ‘சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை ஏழும் அவற்றின் எழுத்தே யாகும்” “ஆஈ ஊஏ ஐஓ ஒள என்னும் இவ்வேழ் எழுத்தும் ஏழிசைக்குரிய” இதில் முதலாவது நூற்பா பிற்கால இடைச் செருகல் (அதுவும் அளவையியல் நியதி தெரியாமல் இரண்டாவதற்கு முன்னர்ச் செருகியுள்ளனர்!) என்பர் இரா. இளங்குமரனார் (1993). இன்று கருநாடக இசை எனப்பெயர் கொண்டு உலவுவது தமிழிசையே. முகமதியர் 1565க்குப் பின்னர் தென்னாட்டிற் புகுந்தபோது (விசய நகரக்) கருநாடக மன்னர் தலைமையாயிருந்ததாலும் தமிழ்நாட்டிலும் கருநட மன்னர் தலைமையே இருந்ததாலும் கருநாடகச் சங்கீதம் என்று அழைத்தனர். 25. ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட் தமது “பழந்தமிழ்ச் செய்யுள் கள்: அவை தோன்றிய சூழலும், அவற்றை அடியொற்றிய சம்ஸ்கிருதப் படைப்புகளும்” (1975)-நூலில் கூறுவது, வருமாறு: “பாணர் தமிழரிடையே தொன்று தொட்டு இருந்து வருபவர்; சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவர்; எனவே பண் அடிப்படையில் அமைந்த தென்னிந்தியத் தொன்மை இசை வடவரிடமிருந்து கடன் பெற்றதாக இருக்க இயலவே இயலாது. “பண்” என்னும் சொல்லிலிருந்து “பாணன்” என்னும் சொல் தோன்றியது. மாறாகப் பிற்கால இந்திய இசையின் ராகங்கள் (அவை பண்களின் உருமாற்றங்களே) தென்னிந்தியத் தொல் இசையிலிருந்து உருவாயின என்பதே சரி. தக்காணப் பெருங்கற்கால நாகரிகம் சார்ந்த வாய்மொழி இலக்கியமானது பாணர்கள் மற்றும் எழுத்தறிவு பெறாத நாட்டுப்புறப் பாடகர் களிடையே உருவாகிக் கி.பி. முதல் நூற்றாண்டை ஒட்டி மகா ராஷ்டிரப் பிராகிருதத்தில் பரவி, அங்கிருந்து இவ்விலக் கியத்தின் தாக்கம் சமஸ்கிருதக் கவிஞர்களிடம் ஏற்பட்டதன் காரணத்தால்தான் சமஸ்கிருதத்தில் தரமான காவியச் செய் யுளிலக்கியம் தோன்றியது என்பதை இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் காணலாம். இக்கால கட்டத்தில் அல்லது இதற்குச் சற்று முன்னர்த் தென் இந்திய இசைக்கலையும் வட இந்தியாவில் பரவியிருக்க வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இது பற்றி விரிவான, ஆழ்ந்த ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லையாகையால் இதைத் திட்டவட்டமான முடிவு என்று இன்றைய நிலையில் கூற இயலாது. இக்கருத்தின் அடிப்படையில் வியக்கத்தக்கதும் மனநிறைவு தருவதுமான ஒரு செய்தி வெளிவருகிறது. அதாவது தென் இந்தியச் சாதியினரில் தாழ் நிலையில் இருந்த பாணரிடையே இருந்துதான் இந்தியா வின் இசையும் பாடல்களும் பெருமளவு உருவாயின என்னும் செய்தியே அது.” 26. சீர் - சீரை - சீர்மை; சீரன் - கீரன்; சீர்த்தி - கீர்த்தனை; ஆக தமிழ்ச் சீர்த்தனை கீர்த்தனையாகியது. இக் கீர்த்தனை வடிவம் (அதாவது பல்லவி, அனுபல்லவி, சரணம்) சங்க காலத்திலே உருவானதே யென்பதையும் அது பிற்காலத்து புரந்தரதாசரோ, தாள்ளபாக்கம் அன்னமாசார்யரோ உருவாக் கினரென்பது பிழையென்றும் மு. அருணாசலம் (1980) நிறுவி யுள்ளார். நடனம் – கூத்து 27. இசையொடு (ஆடலும் நடனமும்) கூத்தும் சங்க காலத்திலேயே சிறந்து விளங்கின. அக்காலத்தையொட்டி வந்த சிலப்பதிகாரத்தில் அக்கலைகளின் உச்சநிலையைக் காண லாம்; அடியார்க்குநல்லார் உரை அக்கலை நுட்பங்களை விளக்குகிறது. தமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம் / சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி “பரத நாட்டியம்” எனப் புதுப்பெயரிட்டவர் ஈ. கிருஷ்ண ஐயர். தமிழ் ஆடற்கலை “பரதர்” பெயரில் வழங்கும் நாட்ய சாஸ்திரத்தில் இருந்து பிறந்தது எனக் கூறுவது பிதற்றல் என்பதை புரட்சிதாசன் தம் நூல்கள் பலவற்றில் நிறுவியுள்ளார். கட்டடக் கலை 28. சங்க நூல்களில் காணும் கட்டடக்கலை சிந்துவெளி நாகரிகக் கட்டடக்கலையின் தொடர்ச்சியே. எடை அளவுகள்; சிற்றிலக்க முறை; 4 செ.மீ. (= 3 அங்குலம்) கோல்; 2 ¾ x 4 = 11 ஆகும். 11, 22, 33 என்றவாறு 11ன் மடங்காக வரும் அளவு கள், போன்றவை யெல்லாம் சிந்துவெளிக் காலத்திலிருந்து தொடர்ந்து வருபவையே (கொடுமுடி எஸ். சண்முகம் 1980; கு. வேங்கடாசலம் 1983, தெய்வ நாயகம் 2002). வட இந்தியத் தொல் தமிழ சிந்து வெளி மக்களிடமிருந்தே ஆரியர் பிற கலைகளைப் போல கட்டடக் கலையையும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அம்மக்களுடைய கோட்டைகளையும் நகரங்களையும் பற்றி ரிக் வேதத்தில் குறிப்புகள் பல. பிற்கால மகாபாரதமும் யுதிஷ் டிரனுக்கு சிறந்த அரண்மனையை ஒரு தானவனே (அசுரனே) கட்டிக் கொடுத்ததாகக் கூறுகிறது. ஓவியக்கலையும் சிறந்து இருந்ததைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. மணிமேகலை “ஓவியச் செந்நூல்” பற்றிக் குறிப்பிடுகிறது. சங்க காலக் கட்டடக்கலை, நகர அமைப்பு பற்றி சங்ககாலம் II: வாழ்வியல் (1983) பக்கங்கள் 420-469இல் கொடுமுடி சண்முகம் விரிவாக எழுதியுள்ளார். ரு. சமயம், மெய்யியல் 1. தொல்காப்பியம் கூறும் ஐந்திணைக் கடவுளர் முல்லைக்கு மாயோன், குறிஞ்சிக்கு சேயோன், மருதத்துக்கு வேந்தன், நெய்தலுக்கு வருணன் ஆவர். வேந்தனுக்கும் வருண னுக்கும் பழந்தமிழ்ப் பெயர்கள் சேணோன், கடலோன் என்று இருந்திருக்கலாம் என்பர் பி.டி. சீனிவாச ஐயங்கார். (சென்னைப் பகுதி மீனவர் கடலம்மையை வழிபடுகின்றனர்; மலையாளக் கரையிலும் கடலம்மா வணக்கம் உண்டு. எனவே கடலோன் என்னும் பெயர் வருணன் என்று மாற்றப்பட்டிருக்கலாம் என்பர் சுவெலெபிலும்). மாயோன் பிற்காலத்தில் மால் (அதாவது விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன்) ஆகக் கருதப்பட்டான். வட இந்தியத் தமிழியக் கடவுள் ஒன்று விண் ->  விஷ்ணு என்று மாற்றப்பட்டிருக்கலாம் என்பர் சீனிவாசர், பிரிஸ்லஸ்கி (Przluzki), எல்.வி. இராமசாமி ஐயர் போன்றவர்கள். சங்க இலக்கியம் 67-69 இடங்களில் முருகனைச் சுட்டுகிறது; 27 இடங்களில் வேலனைச் (வேலை உடையவன் = முருகன்) சுட்டுகிறது. தமிழக் கடவுள் ஒன்றின் இருவேறு வடிவங்களே முருகனும் சிவனும் என்பர் மறைமலையடிகள். பின்னர் சிவன் என அழைக்கப்பட்ட ரிக் வேத ருத்ரன் ஆரியரல்லாதாருடைய கடவுளே என்று சிந்துவெளி அகழ்வாய்வுக்கு முன்னரே அறிஞர் முடிவு செய்து விட்டனர். அவ்வகழ்வாய்வில் கிட்டிய பசுபதி முத்திரை, ‘யோகி’ உருவச்சிற்பம் மேலும் பல சான்றுகளைக் கண்ட சர் ஜான்மார்ஷல் உலகில் மிகத் தொன்மையானதும் இன்றும் நிலவிவருவதுமான வழிபாடு சிவன் வழிபாடே என்பார். (தண்டேகரும் 1979 நூலில் இக்கருத்தினரே) சங்க இலக்கியப் பாடல்கள் “சிவன்” பெயரைக் குறிப்பிட்டில; அவனைவிளக்கும் தொடர்கள் மட்டுமே (“ஆலமர் செல்வன்”; “முக்கட்செல்வன்” (புறம் 6, 166; அகம் 181) போன்றவை) உள்ளன. ஜே.என். ராபர்ட்ஸ் (1992) கூறுவது “உலகில் இன்றுள்ள அனைத்துச் சமயங்களிலும் தொன்மை வாய்ந்தது சிவன் வழிபாடு என உன்னிக்க ஆதாரங்கள் உள்ளன.” 2. சிந்துவெளி நாகரிகத்திலிருந்து இன்று வரைத் தாய்த் தெய்வ வழிபாடும் திராவிடரிடம் சிறப்பாக உள்ளது கொற்றவை, பழையோள் (சேயோனின் தாய் – பெரும்பாணாற்றுப் படை; 458) கானமர் செல்வி, காடுகிழாள், கடல்கெழுசெல்வி, எல்லம்மன் / எல்லையம்மன் (பின்னர் ரேணுகா என சமஸ் கிருதப் பெயர் பெற்றாள்) எனப் பல பெயர்களில் தாய்த் தெய்வம் வழிபடப்படுகிறது. (பி.எல். சாமி 1975). 3. சமண, புத்த, ஆசீவக சமயங்களும் ஆரியருக்கும் முந்திய வடநாட்டுத் தமிழிய மெய்யியலின் வெளிப்பாடுகளே. (அடுத்த பத்தி காண்க.) ஆசீவக சமயம் தமிழகத்திலேயே தோன்றிய தென்பர் க. நெடுஞ்செழியன் (2006). மதுரை நக்கீரர் புறம் 396ல் குறிப்பிடும் “அறப் பெயர்ச் சாத்தன்” மற்கலி கோசாலர் ஆன மாசாத்தனைச் சுட்டுவதே என்பர். ஆசீவக சமய எச்சங்கள் பல பரவலாகத் தமிழகத்தில் இன்றும் உள்ளதை அவர் விளக்கு கிறார். 4. இன்றைய இந்து சமயக் கடவுளரும் வழிபாட்டு முறைகளும் முற்றிலும் தமிழியச் (திராவிட) சார்புடையவையே; ஆரியரிடமிருந்து பெற்றவை அல்ல என்று சீனிவாச ஐயங்கார் உறுதியாக நிறுவியுள்ளார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள் போன்றோரும் சிறந்த மேனாட்ட றிஞரும் சீனிவாசர் கருத்தையே கொண்டுள்ளனர். ஜே.எம். நல்லசாமி பிள்ளைக்கு சுந்தரம்பிள்ளை, 19-12-1896இல் எழுதிய கடிதத்தில் “அறியாமை காரணமாக ‘ஆரிய’ மெய்யியல், நாகரிகம் என்று அழைக்கப்படுவது, அடிப்படையில் திராவிடர் அல்லது தமிழருடையது என்பதே உண்மை. Most of what is ignorantly called Aryan philosophy and civilisation is literally Dravidian or Tamilian at bottom.” Siddhantha Deepika, II-5; Oct 1898 P.113). இந்து சமயக் கோட்பாடுகளில் அடிப்படையாகவும் சிறந்தனவாகவும் உள்ளவையெல்லாம் வடநாட்டில் பரவலாக 3000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழ் மேன்மக்களிடமிருந்து பெறப்பட்டவை என்பதையும், அவற்றை ஆரியருடையவை யாகக் கொள்வது அறியாமை என்பதையும், மறைமலை அடிகள் தமது 1903, 1923, 1930, 1941 நூல்களில் நிறுவியுள்ளார். கா. சுப்பிரமணிய பிள்ளை (“தமிழர் சமயம் 1940), தேவநேயப் பாவாணர் (“தமிழர் மதம்” 1972) ஆகியோருக்கும் அடிகள் கருத்து உடன்பாடேயாகும். ஆரிய வேதங்களிலிருந்து மாறு பட்ட, அவற்றுக்கு முந்திய ‘தமிழ் நான்மறைகள்’ இருந்தன வென்னும் கோட்பாட்டையும் கா. சுப்பிரமணியர் (1927) முதலியோர் கொண்டிருந்தனர். ரிக் வேத காலத்திலிருந்தே (கி.மு. 1000) “குடி கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறு தெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச் செய்த தமிழ்ச் சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே; முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு, ஏசுர், சாம, அதர்வண வேதப்பதிகங்கள் சில பலவும்; உண்மை வழா உபநிடதங்களும், சாங்கிய , யோக, வைசேடிக, நையாயிக, வேதாந்த சூத்திரங்களும்; மற்சம், வாயு முதலான சில புராணங்களும் பௌட்கரம், மிருகேந்திரம் முதலான சில சிவாகமங்களும் பிறவுமாம்” என்பது அடிகள் (1930) முடிவு. இம் முடிவுக்கான எடுத்துக் காட்டுகளாக அடிகள் தந்துள்ள பலவற்றுள் முதன்மையான சில வருமாறு. “இருக்கு வேதத்திற் “பரதர்” முதலிய பெயர் களால் வழங்கப்பட்ட பண்டைத் தமிழ் நன்மக்களே ஞாயிறு, திங்கள், தீ என்னும் முத்தீ வடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவ பிரானை வழிபடும் நுட்ப முறையைக் கண்டோராவர்” (1930). “விசுவாமித்திரர் என்னும் தமிழரச முனி வரால் செய்து சேர்க்கப்பட்ட இருக்கு வேத மூன் றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திர மானது ஞாயிற்று மண்டிலத்தின் கண் முளைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவ பிரான் மேற்றாய் விளங்குகிறது” (1923). “கொல்லா அறத்தை முதன் முதற் கண்டறிந்து அதற்கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தி னவர்கள் தமிழரில் மேன் மக்களாய் இருந்த ஒரு பெரும்பகுதியாரே.... மற்றை மக்கட்பிரிவினரி லுள்ள எந்த மேலோரும் இவ்வரு மருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர்... வடக்கிருந்த சமணர், சாக்கியர், சாங்கியர், யோகர் முதலாயினா ருங்கொல்லா வறத்தினை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினரல்லரோ வெனில்; சமண சாக்கியர் முதலான அவரெல்லாம் ஆரியர் வரு தற்கு முன்னமே இமயமலை வரையிற் பரவி நாக ரிகத்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத் தமிழ் மேன் மக்களின் மரபில் வந்தவரே” (1940). சமண, புத்தக் கருத்துக்கள் ஆரியருக்கு முற்பட்ட வட நாட்டுத் திராவிட மெய்யியலில் பிற்கால வளர்ச்சிகளே என்பர் சர் ஜான் மார்ஷலும் (1934). தமிழிய (திராவிட) மதங்களான சமண பௌத்த மதங்கள் தவிர ஏனைய மதங்கள் எவற்றிலும் கொல்லாமை அறம் இல்லை என்பதையும் அச்சமயங்கள் தங்கள் புனித நூல்களிலேயே “கடவுள் விலங்குகளையும் பிற உயிர்களையும் படைத்தது மனிதன் கொன்று தின்பதற்கும் கடவுளுக்குப் பலி கொடுப்பதற்கும்தான்’ என்று எழுதி வைத்துக் கொண்டுள்ளன வென்பதையும் பல அறிஞர் சுட்டியுள்ளனர். 5. அடிகளின் மேற்சொன்ன ஆய்வுக் கருத்துக்களின் கருவைப் பின்வருமாறு கா. அப்பாத்துரையார் 1956இல் (“1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்” தமிழாக்கத்தின் அடிக் குறிப்பில்) சுருங்கக் குறித்தார்: “தமிழர் பண்டையச் சமய வாழ்வு இன்றைய பல சமயங் களின் உருவாகா மூலக் கரு முதலைத் தன்னிடமாகக் கொண்ட வாழ்வேயாகும். அதில் எல்லாச் சமயமூலமும் காணலாம்... புத்த, சமண, சைவ, வைணவக் கருத்துக்கள் உருவாகுமுன், அச் சமயப் பெயர்கள் வேறுவேறாகத் தமிழர் நெறியினின்று பிரியுமுன், ஆரியம் இடை நின்று தமிழரின் ஒரு நெறியைப் பலவாறு பிரிக்குமுன், அவ்வெல்லா நெறிகளுக்கும் வழிகாட்டிய மிக முற்பட்ட காலத் தமிழ் அறிவர் மரபு சார்ந்த அறிஞருள் ஒருவரே திருவள்ளுவர் என்பது உய்த்துணரத் தக்க உண்மை யாகும்.” 6. இப்பொருள் குறித்து மேலும் சில மேனாட்டறிஞர் கூற்றுக்களும் மனத்திற் கொள்ளத்தக்கன. பிராக்கிங்டன் (1981) : இந்தியாவில் சமய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது ஒன்று உண்டு. உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் என்பது புத்த மதத்தின் முக்கிய கொள்கை. புத்தமதம் தோன்றிய காலத்தில் தோன்றிய சமணமும் ஆசீ வகமும் அக்கொள்கையுடையவையே. பிறவித் தளையிலிருந்து விடுபடுவது சமயத்தின் குறிக்கோள் என்பது அம் மதங்களின் கொள்கை. பழைய உபநிடதங்களில் மறுபிறவிக் கொள்கை புதுமை யானதாகவும் சிலருக்கு மட்டும் தெரிந்த மறைபொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்தும் பின்னர் அக் கொள்கை புத்த சமண சமயங்கள் வழியாக விரைந்து அனைவராலும் பின்பற்றப்பட்டது எவ்வாறு? எந்த மக்கள், சமூகத்தினரிடம் இருந்து புத்தர் தோன்றினாரோ, அவர்களிடையே அக் கொள்கை இருந்து இருக்க வேண்டும். எனவே தான் அது விரைவில் அனைத்து மக்களின் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஹென்ரிச் சிம்மர் (Heinrich Zimmer) (1951): ‘வட மேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்களால் மகதம் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமை யாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன்மக்கள் குடும்பங்கள் பல தொடர்ந்து இருந்தன. ஆரிய ஆளும் குடும்பங்கள் வலு விழந்து வீழத் தொடங்கிய பின் முந்தைய உள்ளூர் ஆளும் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றனர். எடுத்துக்காட்டாக சந்திரகுப்த மௌரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே. லெவின் (1986) : இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியர் அல்லாதார் வழிபாட்டு முறைகளில் இருந்தே பிராமணீயத்துக்கு வந்தது. வால்பர்ட் (1982) : மொகஞ்சோதரோ முத்திரையில் காணப்படுபவர் போன்ற (ஆரியர்களுக்கு முந்தைய இந்திய) யோகிகள் வந்தேறிகள் மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக் கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கி விட்ட னரோ? வால்பர்ட் (1991) : ஆரிய நாடோடிகளின் முரட்டுப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய கடுமையான பெரும்போர் கள் ஆகியவற்றுக்கும் அஹிம்சைக்கும் (உயிர்களுக்கு ஊறு செய்யாமை) நெடுந்தொலைவு ஆகையால், யோகம், தாய்த் தெய்வ வழிபாடு போன்றவற்றைப் போல அஹிம்சையும் ஆரியர் களுக்கும் முற்பட்ட (சிந்து வெளித் தமிழ்) மக்களிடமிருந்தே அவர்கள் பெற்றதாக நாம் கருத வேண்டியுள்ளது. சிவன் வழிபாடு வடஇந்தியாவை விட தென்னாட்டில் தான் மக்களிடம் முதன்மை பெற்றுள்ளது. தென்னாட்டுத் திராவிட மக்கள் ஆரியர்களுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அங்கு நிலைபெற்று இருந்தமையை இது காட்டுவதாகலாம். தாய்த் தெய்வ வழிபாடும் தென்னாட்டில்தான் மிகுந்து காணப் படுகிறது. 7. இன்றைய ‘வாழும் இந்து மதத்தின்’ வழிபாட்டு முறையாகிய ஆகம வழிபாட்டுமுறை தமிழிய (திராவிட) முறையே என பி.டி. சீனிவாச ஐயங்கார் தமது தமிழர் வரலாறு 1929 இயல் 8இல் தெளிவாக நிறுவியுள்ளார். அவ்வியல் இப்பகுதியின் இறுதியில் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. 8. மேற்கண்ட பல்வேறு சமயங்கள், அவற்றின் மெய்யியல் போன்றவை பற்றிய உணர்வெல்லாம் பொது மக்களில் பத்து விழுக்காட்டுக்கும் குறைவானவர்களிடையே தான் ஓரளவுக்கு இருந்திருக்கும். ஏனைய 90 விழுக்காட்டினர் நிலை வேறு. இவ்வுண்மையை கனகசபைப்பிள்ளை (1904) அன்றே கூறினார். ‘எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் (பண்டும் இன்றும்) உள்ளது போல் தமிழரிடையேயும் இத்தகைய சமயக் கோட்பாடுகளுக்கும் வெகுமக்கள் நடைமுறையில் கடைப் பிடிக்கும் சமய நம்பிக்கைகள், சடங்குகளுக்கும் பெருத்த வேறு பாடு உண்டு (As usual among all nations, ancient and modern, the philosophic doctrines of the Tamils were far apart from the popular beliefs and ceremonies). இதே கருத்தை ஹெச். ஆர் பேட் தமது திருநெல்வேலி கெசட்டியரில் (1917) பின் வருமாறு கூறியுள்ளார்: “ஊர் தோறும் பொதுமக்கள் மனப்பூர்வமாக ஊக்கத் துடன் வழிபடும் ஏராளமான உள்ளூர்த் தெய்வங்களைப் பற்றி அடுத்து விளக்கப்படுகிறது. மிகப்பெரும்பான்மையான மக் களைப் பொருத்தவரைத் தங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்ச் சிகளை நிர்ணயிப்பவர்களும், (மாந்தன் தெய்வமாக ஆனால் எப்படி நடப்பானோ அப்படி) சினம் ஏற்பட்டால் கேடு விளைக்கக் கூடியவர்களும், பொந்திகை ஏற்பட்டால் கேடு வராமல் தடுத்தும், வந்தால் நீக்கியும் நலம் செய்யக் கூடியவர் களும் ஆக அவர்கள் நம்புவது சிவன், திருமாலை அல்ல; பல்வேறு உருவங்களில் வழிபடப்படும் தாய்த் தெய்மாகிய காளி, மற்றும் உள்ளூர்த் தெய்வங்களான சுடலைமாடன் மற்றும் அதுபோன்ற “துடியான” தெய்வங்களையே” “The accounts which will shortly be given of the hosts of lesser deities and of the enthusiasm with which they are worshipped may serve to show that the gods who for the mass of the people rule and direct their daily lives, who bring evil and can if willing remove it, who are intelligible beings - men on the grand scale are not Siva and Vishnu but Kali in her various forms, and (local gods like) Sudalaimadan “and his horrid crew” ஆகமங்களின் தோற்றம் பி.டி. சீனிவாச ஐயங்கார் இன்றைய இந்து சமயம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங்களை அடிப்படையா கக் கொண்டது; வேதங் களைக் கொஞ்சம் கூட அடிப்படையா கக் கொண்டது அல்ல. இதை நான் முப் பது ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது 1899) எனது “இந்திய மெய்யியல் சுருக்கம்” நூலில் குறித்துள்ளேன். மாபாரதப் போருக்குப் பின்னர் வேத முறை வழிபாடு மறையத் தொடங்கியது. இன்று ஏறத்தாழ முற்றிலும் ஒழிந்துவிட்டது. “ஸ்ரௌத கர்மம்” பெரும்பகுதி போய் விட்டது. சிற்சிலர் ஆங் காங்கு சி ல நேரங்களில் அக்னி ஆதானம், எளிய வாஜபேயம், கருட சாயனம், சோமயாகம் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர். ஸ்மார்த்த கருமமும் விரைவாக மறைந்து வருகிறது. மூன்று தலைமுறைகளாக அக்னிவழிபாடு செய்யாத பிராமணக் குடும்பம் பிராமணத் தன்மை இழந்துவிடும் என்பது சாத்திரவிதி. அதன்படி பார்த்தால் இந்தியாவில் இன்று உண்மையான பிராமணக் குடும்பங்கள் ஒரு சிலவே இருக்கக்கூடும்! சமயத்தில் ஊறியது இந்தியா. ஆனால் அந்தச் சமயம் ஆகமச் சமயமே யொழிய வேத சமயம் அன்று. 2. ‘ஆகமத்தின்’ வேர்ச் சொற்பொருள் “தொன்று தொட்டு வந்தது” என்பதாகும். ஆகமம் என்பதற்கு ஆப்தவசனம் - அதாவது மெய் யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது; ஆப்த வசனங்களில் தலைமை சான்ற வேதத்தையும் சில நேரங்களில் ஆகமம் என்று அழைப்பர். எனினும் சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரை வழிபடும் தந்திர நூல்களையே “ஆகமம்” பொதுவாகக் குறிக்கிறது. (புத்த, சமண சமய நூல்களும் ஆகமம் எனப்பட்டன) அனைத்து ஆக மங்களும் தொடக்கத்திலிருந்தே வேதங்களுக்கு அதாவது கர்ம காண்டத்துக்கு எதிராக உருவானவை. சைவ ஆகமங்கள் மகேஸ்வரம், பாசுபதம் எனப்பட்டன. வைணவ ஆகமங்கள் பாகவதம் (பகவானைப் பற்றியவை), சா த்தவாதம் (சாத்த வாத அரச பரம்பரையினர் ஆதரித் தது? ), பாஞ்சராத்திர என அழைக்கப்பட்டன. (பாஞ்சராத்திர என்றால் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புச் சடங்கு என்றும் பொருள் உண்டு. அது வைகானச = கானகத்தில் வாழும் துறவிகள் சார்ந்தது) சடங்கிலிருந்து மாறுபட்டது. 3. வேதச்சடங்குகளும் ஆகமச் சடங்குகளும் ஒன்றுக் கொன்று போட்டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந் தது. ஆனால் பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து விட்ட நிலையில், அவை வேறுபட்டவை என்பது இன்று மறந்து விட்டது. “ஆகமங்கள் வேதங்களிலிருந்து பெறப்பட்டவை. தற்காலத்திற் கேற்ப வேதக் கருத்துக்களை விரிவாக்கி அல்லது மாற்றி உருவாக்கப் பட்டவை” என்று கூடச் சிலர் கருதுகின்றனர். வேதமந்திரங்கள் இயற்றப்பட்ட காலம் முடிந்ததும் அவை அபௌருஷேயம் – அதாவது கா லம், இடம் இவற்றையெல்லாம் கடந்தவை, அநாதி எனக் கருதப்பட்டன; யாரும் உருவாக்கியவையல்ல, ‘புருஷன்’ ஆன ஈஸ்வரன் கூட வேதங்களை உருவாக்கியவன் அல்லன். ஆனால் ஆகமங்கள் சிவன், விஷ்ணு வெளியிட்டவையாகையால் அவை பௌருஷேயம் தான். வேதசம்ஹிதை மந்திரங்களை வேதச் சடங்குகளில் ஓத வேண்டும். ஆனால் சிவன், விஷ்ணு வழிபாட்டில் பின்பற்ற வேண்டிய சடங்குகள், யோகக் கோட்பாடுகள், மெய்யியல் கருத்துக் கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டவை ஆகமங்கள். வேதங்களின் (வேதமந்திரங்களும் சரி, பிராமணங்களும் சரி) கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகியவற்றுக்கு மீமாம்சம் தேவை. ஆனால் சடங்குத் தொகுப்பு தூல்களான ஆகமங்களுக்கு உரைவிளக்கம் மட்டுமே தேவை. வேத மந்திரங்கள் “சந்தஸ்” மொழியில் உள்ளன. ஆகமங்கள் “பாஷையில்” (அதாவது கிமு 1000க்குப் பின்னர் இருந்த வடமொழியில்) உள்ளன. 4. சடங்குகளைப் பொருத்தவரை வேதச் (வைதீக) சடங்குகள் அக்னிச் சடங்குகள். ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங்களுக்குச் செல்கின்றன. ஆகமவழிபாட்டில், அக்னிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத்துக் காட்டிவிட்டு எடுத்துவிடலாம். தெய்வம் சூக்குமமானவற்றையே ஏற்கும்; தூலமானவற்றையல்ல; ஆகையால் வழி படுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன்படுத்தலாம், பிறருக்கும் தரலாம். அக்னிச் சடங்கில் பல்வேறு கா ரியங் களுக்கும் தனித் தனிப் பொறுப்பு வகிக்கும் பல்வேறு தெய்வங்களுக்கும் வழிபாடு உண்டு. ஆகம வழிபாட்டில் அனைத்துக்கும் பொறுப்பேற்ற ஒரே தெய்வத்திற்கே வழிபாடு நடைபெறுகிறது. (அதாவது யெகோவாவை வழிபடுவது போல). வேதச் சடங்குகளில் ஒவ்வொரு செயல் செய்யும் பொழுதும் அதற்கென்று ஒரு மந்திரம் சொல்லப் படுகிறது. சோமம் கொண்டுவர வண்டியில் காளையைப் பூட்டுதல்; அக்காளையை ஓட்டக் குச்சி வெட்டுதல்; ஒரு பொருளைக் கையால் பிடித்தல், பால்காய்ச்சுதல்; மோர்கடைதல், ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உள்ளது. ஆகம வழிபாட்டில் மந்திரச் சடங்குகளுக்கு இடம் இல்லை. ஆகம வழிபாட்டில் ஆங்காங்கு ஓரிரு மந்திரங்கள் ஓதுகிறார்கள், ஆனால் மடத்தனமாக தூ (dhu) எனத் தொடங்கும் மந்திரத்தை (வண்டியின் நுகத்தடியைத் தூக்கும் பொழுது சொல்ல வேண்டியது!) சாம்பிராணி காட்டும் பொழுது ஓதுகிறார்கள். ஆகம வழி பாட்டில் பெரும் ப ங்கு வகி ப்பது, வழிபடு ம் கடவுளின் பெயர் களைச் சொல்லி நமஹ (நான் வணங்குகிறேன்) என்று சொல் வது தான். வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப்பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்புவது; ஆனால் ஆகம வழிபாடு உபசாரமே - அதாவது நீராட்டி, அலங்கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தினனாக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வது போல. வேதச்சடங்கில் கடவுள் உருவாரம் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. எல்லாக் கடவுள்களுக்கும் நெருப்புதான் முகவர். ஆகம வழிபாடானது எந்தக் கடவுளை வழிபடுகிறோமோ அதன் படிமம் அல்லது அதனை நினை வூட்டுவதும் கட்பு லனாவதுமான ஒரு பொருளுக்கு முன்னர்த் தான் செய்யப்பட வேண்டும். அக்கடவுளைக் குறிக்கும் தாயத்து, கருவி (வேல், தடி), உயிருள்ள மரம்/மரக்கட்டை, கல், ஆறு/ஓடை, லிங்கம், சாளகிராமக்கல் என்று எதை வேண்டுமானாலும் வழிபடலாம். குறிப்பாக வழிபடுபவர் அக் கடவுளுக்கு என்ன உருவத்தைக் கற்பித்துக் கொள்கி றார் களோ அந்த வடிவம் வரைந்த ஓவியம், அல்லது அவ்வடிவத்தில் அமைந்த உருவாரம் (செங்கல் - சுண்ணாம்பு, கல் = சமஸ் கிருதத்தில் சிலை, மாழை எதில் வேண்டுமானாலும் செய்யப்பட்டது) இவையே வழிபடப்படுகின்றன. வேதாந்தம் 5. வேதத்தின் இறுதிப்பயன் வேதாந்தம். வைதீக கர்மத்தின் பயன் ஞானம். ஞானத்தின் மூலமாகவே சாகாநிலை, முக்தி, எய்தலாம். தம் ஏவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்யாஹ் பந்தா அயனாய வித்யதே (அவனை அறிந்தால் சாகா நிலை அடையலாம்; அவனை அடைய வேறு வழி இல்லை.) ஆகம வழிபாட்டின் பயன் பக்தி; இடைவிடாது அவனை நினைத்து வந்தால் சாகா நிலை அடையலாம். கிருஷ்ணன் இதனை “ஏகபக்தி” என்கிறான். இவ்வாறு முக்தி அடைய வேண்டுமானால் உப நிஷத்துக்கள் கூறும் 32 வித்யை (முறை) களில் சிலவற்றைக் கைக்கொண்டு ஒழுக வேண்டும். ஆகமங்களின் சரியா, கிரியா (முதல், இரண்டாவது) புத்தகங்கள் சிவன்/விஷ்ணுவை வழிபடும் முறைகளைத் தருகின்றன. பக்தியுடன் சிலருக்கு யோகமும் (ஓகமும்) தேவை யென்பதால் எந்த ஆகமத்திலும் மூன்றாம் பகுதி யோகம் பற்றியது. நான்காம் பகுதி ஞானம் பற்றியது. ஆகமங்களின் “ஞானம்” மேற்சொன்ன வேதாந்த ஞானம் அன்று; ஆகமக் கோட்பாடுகளின் படியமைந்த மெய்யியல் கொள்கைகளுக்கிசைந்த ஞானமே. வேதாந்தத்தின்படி புடவியில் (பிரபஞ்சத்தில்) உள்ளே ஒரே ஒரு மெய்மை பிரம்மம் மட்டுமே. ஆகமக் கொள்கையோ தத்துவதிரயம் ஆகும்: அதாவது ஈசுவரன், சீவாத்மா, பிரகிருதி ஆகிய மூன்று மெய்மைகள் உள்ளன. ஒவ்வொரு ஆகமத்திலும் யோகம், ஞானம் பற்றிய பகுதிகள் உள்ளன வாயினும் ஆகமங்களே பக்திமார்க்கத்தின் ஆதாரமான புனித நூல் களாகும் (வேதாந்த ஞானமார்க்கத்தின் ஆதாரமான புனித நூல்களாகிய உபநிஷத்துக்கள் போல). ஆகமங்கள் மக்கள் அனைவருக்குமானவை, எளியவை. உ பநிஷத்துக் கள் மிகச் சிலருக்கே பொருந்துபவை; அவை காட்டும் வழி கடினமானது. கீதையில் கிருஷ்ணன் சொல்வது “வெளிப்படையாகத் தெரியாத பிரமத்தைத் தேடுபவன் அடைவது பெருந்துன்பம். அதனைத் தேடும் மார்க்கம் உயிரிகளுக்குத் தருவது துயரமே” 6. வேத சமயப்படி வருணங்கள் நான்கு; நான்காவது சூத்திரவருணத்தினர் வேதம் - வேதாந்தம் பயிலக் கூடாது. இதனால் வருணாசி ரமமுறை உருவானது. ஒவ்வொரு வருணத்துக்கும் விதிக்கப்பட்ட நடைமுறை வேறு. சன்னியாசம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சன்யாசத்தின் பின்னரே முக்தி கிட்டும்; ஆக பிராமணருக்கு மட்டுமே முக்தி. ஆகமக் கொள்கை இதற்கு மாறானது. யாரும், சண்டாளன் உட்பட, விஷ்ணு, சிவன் உருவாரத்தை வைத்துப் பூசை செய்யலாம். (காள ஹஸ்தி) சிவனுக்கு ஊன் படைத்து முக்தி பெற்றான் வேடன் கண்ணப்பன்; பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ஆன கிபி 8ம் நூற்றாண்டுத் திருப்பாணாழ்வார் திருவரங்கம் கோயிலுக்குள் நுழைந்தாலே தீட்டு உண்டாக்கும் சாதியினர்) ஆகமங்கள் நான்கு வருணப்பாகுபாட்டை ஏற்கவில்லை. வேதங்களின் பகுதியான வேதாந் தமோ சூத்திரர்களுக்குரியதல்ல. பதராயணன் வேதாந்த சூத்ரம் I (iii) 35 - 38ல் ‘சூத்திரனுக்கு சம்ஸ்காரங்கள் உரியவையல்ல; எனவே வேதம் படிக்கவும் கூடாது, கேட்கவும் கூடாது’ என்கிறான். ஆகமங்களோ அனைத்து மக்களுக்கும் உரியவை. இன்றும் சிவதீக்கை பெற்ற பறையன் பிராமணனுக்கு தீக்கை கொடுத்து அவனுக்கு குரு ஆகலாம். ஆகம சமயத்தார் அனைத்துச் சாதியினரிடமும் சன்யாசமும் பரவியது. (வைணவத் துறவி ஏகாந்தி; சைவத் துறவி சிவயோகி). ஆகமக் கோட் பாட்டின்படி முக்தி பெற சன்யாசியாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை; பக்தி அனைத்துச் சாதியினருக்கும் பொது. இல்லறத்தானும் பக்தி செலுத்தியே முக்தி பெறலாம். சில பக்தர் துறவிகளானது ஏன்? ஆகமங்களின் படி, யோக மார்க்கமும் முக்திக்கு ஒரு வழியாகும். துறவி வாழ்க்கை யோக மார்க்கத்துக்கு உகந்தது; எனவே யோகமார்க்கத்தின் மூலம் முக்தி பெற விரும்பிய பக்தர்களும் துறவிகளாயினர். வைதீகர்களுக்கும் ஆகமவாதிகளுக்குமிடையே போட்டி : 7. பழங்காலத்தில் வைதீகர் களுக்கும் ஆகமவாதிகளுக்கும் இடையே பெரும் அளவுக்குப் பகை இருந்து வந்தது. ஆகம வாதிகள் தெய்வத்தின் பெயரால் யாகங்களில் ரத்தம் சிந்துவது, ஊனுண்ணல் (குறிப்பா க மாடுகளின் ஊனை உண்ணல்) ஆகிய வற்றை எதிர் த்தனர். அவர் கள் எதிர்ப்பை மாபா ரதமும் குறிப் பிடு கிறது. பிற்கா லத்தில் வைதீக - ஆக ம நெறிகளுக்கு இடைப் பட்ட ஒரு வழிமுறை உருவா க்கி யா கங்களில் உயிருள்ள ஆடு மாடுகளுக்குப் பதிலாக மாவால் செய்த ‘பிஷ்டபசுக்கள்’ பயன் படுத்தப் படலாயின. ஆகமவாதிகளின் ஒரு பிரிவினரான பாகவதர்களின் புனிதநூலே பகவத் கீதை ஆகும். பாகவதர்களின் பக்தி, வேதாந்த ஞானம், சாங்கியர்களின் நுண்ணிய மெய்யியல் இவையனைத்தையும் இணைத்து ஒரே மெய்ம்மையின் தனித்தனி வடிவங்களே இம்மூன்றும் என்றவாறு அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான் கண்ணன். எனினும் ஆகமக் கொள்கையின் காரத்தைவிடாமல் வேத கர்ம காண்டத்தை கீதை கடுமை யாகக் கண்டிக்கிறது:- “ஞானமற்றவர்கள் வேதாந்த அடிப்படையில் ஏட்டுச் சுரைக்காயாக “கர்ம காண்டம் ஒன்றே வழி” என்பர். எனினும் அவர்கள் நெஞ்சில் உள்ளது ஆசை. கரும பலனாக சுவர்க்க போகத்தையும் மறுபிறவியையும் இச்சித்து எண்ணற்ற சடங்காசாரங்களைப் பின்பற்று கின்றனர். போகமும் அதிகாரமும் அவர்கள் நெஞ்சை ஆட்டிப் படைப்பதால் அவர்கள் புத்தி சாந்தமான சிந்தனையையும் ஞானத்தையும் நாடுவதில்லை. முக்குண வசப்பட்டவற்றையே வேதம் விளம்புகிறது. அர்ச்சுனனே நீ முக்குணவச ப்பட்டவற்றுக்கு மேலானவற்றையே நாடுவாயாக.” வைதீகர்கள் ஆகமவாதிகளை மிக இழிவாகக் கருதினர். மந்திரம் ஓதாதவரும் “ம்ருத்ரவாச”ரும் ஆன தஸ்யூக்களை ஆரியர் இழிவாகக் கருதினர் அன்றோ. அதன் தொடர்ச்சியே இது. யமுனாசார்யர் காலத்திலிருந்தே வைதீக, ஆகம மார்க்கங்கள் இணைந்து விட்ட போதிலும் பழைய உணர்வு இன்றும் உள்ளது. சிவன்/விஷ்ணு கோயில் பூசை செய்பவர்களை வேதாந்திகள் இன்றும் தங்களை விடக் கீழ்ச் சாதியினராகவே கருதுகின்றனர். எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்கு முன்வரை (அதாவது 1880ல்) அத்வைத வேதாந்தக் கொள்கையினர் எந்தக் கோயிலுக்குள்ளும் செல்லார் . வேதாந்த க் கொள்கையே ஆகம வழிபாட்டைக் கண்டித்தது. பதராயணன் பாசுபதம், பாஞ்சராத்திரம் இரண்டையும் கண்டித்துள்ளான். ஆகமங்கள் எப்பொழுது தோன்றின 8. முத ல் உ லகப் போரில் (19 14 - 1 8) சிலகோடி மக் கள் செ த்தபின்னர் இன்று உ லகில் பல்துறை மா ற்றங் களைக் காண் கிறோம். அதுபோலல பாரதப் போரில் ஏற்பட்ட பெரும் உயி ரிழப்புக்குப் பின்னர் இந்திய மக்கள் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ரிஷிகள் காலம் போயே போய்விட்டது. வேத கர்ம காண்டம் இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் கிடைக்குமெனக் கூறிய கருமபலனாகி ய பு லனுக ர்ச்சியின் மீது மக் களிடம் வெறுப் புத் தோன்றியது. மாறும் பிருகிருதி நடுவே மாறாது நிலையாக உள்ள பரபிரம்மம் மீது சிந்தனை செலுத்திய ஞானிகள். உபநிஷத்துக்களில் 32 வழிகளை (வித்யா) உருவாக்கினர். உபநிஷத்துக்கள் கர்ம காண்டத்தில் பிறந்தவை; எனவே அக்காண்ட வாசனை சாந்தோக்ய, பிரஹதாரண்ய உபநிஷத்துக்கள் கூறும் “வழிகளில்” உள்ளன. மக்களுள் பெரும்பாலோர் எளிமையானவர்; உபநிஷத்துக்கள் கூறும் மிதமிஞ்சிய தத்துவக் கருத்துக்களும், வழிமுறைகளும் அவர்கள் கைக்கொள்ளக் கூடியன அல்ல. அவர்களுக்காகவே ஆகமக் கருத்துக்களும் வழிமுறைகளும் உருவாக்கப்பட்டன - சாதாரண உலகியல் வாழ்க்கையிலிருந்து. ஆசானையும் அரசனையும் போற்றும், வழிபடு ம் முறையைப் பின்பற்றிக் கடவுள் வழிபாட்டுமுறைகளும் ஆகமங்களில் உருவாயின. பாரதப்போர் முடிந்த காலகட்டத்தில் உபநிஷத்துக்களும் தோன்றின; ஆகமங்களில் முதன்மையானவையும் தோன்றின. ஆகமங்கள் எதிலிருந்து தோன்றின? 9. இத ற்கு விடை தருவது சற்றுக் கடினம். ஆகம வழி பாட்டில் அக்னிக்கு இடமில்லை; வேதமந்திரமும் இல்லை. எனவே அது தஸ்யூக்களிடமிருந்து உருவாகியிருக்க வேண்டும்; ஆரிய வழிபாட்டு முறை உருவாவதற்கு முன்னர் தஸ்யூக்கள் வழிபாட்டு முறைதான் இருந்திருக்கும். வேதங்களும் அவற்றிலிருந்து உருவான மாபெரும் வேதாங்க சாத்திரங்களும் நம் கண்முன் மலைபோல் நிற்பதால் வேத காலத்தில் தஸ்யூ வழிபாட்டு முறையின் நிலை என்ன என்று நாம் நினைப்பதில்லை. (ஐரோப்பிய அறிஞர்களும் ஆரியர் – தஸ்யூக்கள் சச்சரவு பற்றியும், முன்னவர் பின்னவரோடு எப்படிக் கலந்திருப்பர் என்று உன்னிப்பது பற்றியுமே கவனம் செலுத்துகின்றனர்!) வேத வழிபாடு சார்ந்த ஸ்ரௌத யக்ஞங்கள் என்றும் பெரும்பான்மை மக்கள் வழிபாட்டு முறையாக இருந்ததில்லை. பிராமண ரித்விக்குகள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். அந்த யக்ஞங்களை நடத்தும் செலவை அரசர்களும் வணிக ர்களும் ஏ ற்ற போதிலும் அவர்கள் யக்ஞம் நடத்துவதில் பங்கேற்க இயலாது. இல்லத்தில் நடத்தும் அக்னிச் சடங்கு மந்திரங்களை அதர்வண வேதம் தந்தபோதிலும் அவற்றை மக்களுள் பெரும்பான்மையினர் பின் ப ற்றியதற்கு ஆதாரமில்லை . வேத காலத்திலும் பொதுமக்கள் தஸ்யூவழிபாட்டு முறையையே பின்பற்றி வந்திருக்க வேண்டும். அவ்வழிபாட்டு முறை எப்படியிருந்திருக்கும்? தமிழ் நாட்டின் தொன்மைச் சமய வழிபாடு பற்றி ஏற்கெனவே கூறியுள் ளோம். அது போன்றுதான் வட இந்தியாவிலும் தஸ்யூக்கள் வழிபாட்டு முறை இருந்திருக்க வேண்டும். பாட்டு, கூத்துச் சடங்குகளுடன் இன்றும் தம் தெய்வத்துக்கு உணவு படைத்து வணங்கும் வழிபாட்டு முறை போன்றே தஸ்யூ வழிபாட்டு முறை இருந்திருக்கும். சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்டபொழுது நடந்த சமயச் சடங்குகளை வால்மீகி வருணிப்பது தஸ்யூக்கள் வழிபாட்டு முறைதான். 10. மாபாரதப் போர் முடிந்த பின்னர் அக்னிச் சடங்குகள் குறைந்து கொண்டே வந்தன; அதனால் தொழில் இழந்த பிராமணர் அக்னி சாராத ஆகம வழிபாட்டு முறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். நுண்ணிய ஏட்டுச் சுரைக்க hய் மெய்ம்மைகளையே கைக்கொண்டு வாழும் உயர்ந்த மனநிலையுடையோர் எப்பொழுதும் ஒரு சிலரே. எளிய உருக்கமான மனநிலை கொண்டோரே பெரும் பாலோர். அவர்களை பக்தி மார்க்கம் கவர்ந்தது. இதுவும் பிராமணர் பக்தி மார்க்கத்திற்குள் புகுந்ததற்கு ஒரு காரணமாகலாம். புகுந்த பின்னர் திரி மூர்த்திக் கோட்பாட்டை உருவாக்கினர் (பிரகிருதி யின் முக்குணம் பற்றிக் கூறிய சாங்கியக் கோட்பாட்டைப் போன்று) விஷ்ணுவின் அவதாரங்கள் பல (பாகவத புராணப் படி 22) என்று கூறினர்; சிவன் அவ்வப்பொழுது தற்காலிகமாக மனித உருவம் எடுப்பான் என்றனர். வைணவ ஆகமங்கள் 108, சைவ ஆகமங்கள்; (பின்னர் எழுந்த) சாக்த ஆகமங்கள் 77, ஆகியவற்றை உருவாக்கினர். படைப்பதுடன் பிரமன் வேலை முடிகிறது; அவன் முக்தி தருபவன் அல்லன். எனவே பிரமனை வழிபட ஆகமங்கள் ஏற்பட்டில. சிவன் / கிருஷ்ண வழிபாட்டைப் பாணினியே குறிப்பிட்டுள்ளார். 11. மெதுவாக, படிப்படியாக வேதாந்தக் கோட்பாடும் ஆகமக் கோட்பாடும் ஒன்றை ஒன்று நெருங்கின. புராணங்களில் அவை இரண்டும் காணப்படுகின்றன; ஆனால் ஒன்றாக இணையவில்லை. கிபி 8ம் நூற்றாண்டு சார்ந்த சங்கராச்சாரியின் காலத்தில் கூட அவை ஒன்றாகவில்லை; பதராயணன் வேதாந்திர சூத்திரத்திற்கு உரை எழுதும் அவர் பதராயணனைப் போலவே கூறுகிறார் – பாசுபதமும் பாஞ்சராத்திரமும் பதித சமயங்கள் என்று. எனினும் அவருடைய பிரபஞ்சஹ்ருதயம் ஆகம வழிபாட்டு நூலே என்பதுடன் அவரை சண்மதஸ்தாபனாச்சார்யர் என்று அழைப்பதையும் கருதுக. விஷ்ணு, சிவன், சக்தி, கணபதி, சுப்ரஹ்மண்யன், சூர்யன் இவர்கள் அறுவரின் வழிபாட்டு முறைகளை அவர் ஒழுங்குபடுத்தி தாம் தொடங்கிய மடங்களிலும் அம்முறைகளை நிலைபெறவைத்தார். அவர் வேதாந்த வழிபாட்டையும் ஆகம வழிபாட்டையும் தனித்தனியாகவே வைத்தார். விசிஷ்டாத்வைதம் எனப்படும் வைஷ்ணவ வேதாந்தத்தை நிறுவிய யமுனாசாரியர்தான் முதன்முதலாக வைஷ்ணவ (சாத்விக) ஆகமங்களும் வேதங்களையொத்த பிரமாணங்கள் தாம் என்று வாதிட்டவர்; அவரைத் தொடர்ந்த ராமானுஜாச்சாரியார் இரு வழிபாட்டு முறைகளையும் முதன் முதலில் ஒன்றாக இணைத்தவர். ஆயினும் தென் இந்தியாவிற்குள் ஆகம வழிபாட்டு முறை பரவி வெகுகாலம் கழித்தே இது நடந்தது; எப்படிப் பரவியது என்பதைப் பின்னர்க் காண்போம். 12. ஆகம வழிபாட்டுமுறை வடநாட்டில் தொடங்கியதை இதுவரை விரிவாக க் கண்டோம். (ஆரியருக்கு முந்தி இந்தியாவில் வழங்கிய வழிபாட்டு முறைகளிலிருந்து தழைத்த) அம்முறை பின்னர் தென்னாட்டு மக்கள் மனதையும் கைப்பற்றியது; அது மட்டுமல்ல வேதாந்தக் கலப்புடன் அது வடநாட்டிலும் பின்னர் பரவி கடந்த 1000 ஆண்டுகளாக இந்தியாமுழுவதுமே “வாழும் இந்து மதத்தின்” வழிபாட்டு முறையாக ஆகம வழிபாடே விளங்கி வருகிறது. ச. சங்க இலக்கியங்கள் முச்சங்கங்கள் பற்றிய பின்வருவனவற்றை முதன் முதலில் கி.பி. 10ம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளுக்கு உரை யெழுதிய (பிற்கால) நக்கீரரும், அவருக்குப் பின்னர் சிலப்பதி காரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லாரும், குறிப்பிடு கின்றனர்: தமிழ்ச்சங்கம் ஆண்ட பாண்டிய சங்கப்புலவர் பாடிய புலவர் சங்கம் மன்னர் எண்ணிக்கை எண்ணிக்கை செயல்பட்ட எண்ணிக்கை ஆண்டுகள் தலைச்சங்கம் 89 549 4,449 4,440 (தென்மதுரை) இடைச்சங்கம் 59 59 3,700 3,700 (கபாடபுரம்) கடைச்சங்கம் 49 49 449 1,800 (மதுரை=கூடல்) 197 657 8,598 9,940 இவற்றுள் முன்னிரண்டு சங்கங்கள் பற்றியவற்றை வரலாற் றாசிரியர், வரலாற்றுணர்வு உடையவர்கள் ஏற்பதில்லை. 2. பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் பிறதுறை அறிஞர்களும் கிறித்துவ ஊழித் தொடக்கத்துக்குச் சில நூற் றாண்டுகள் முன்னும் பின்னும் மதுரையில் தமிழ்ச் சங்கம்/ அதையொத்த இலக்கிய பீடம் இருந்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். “மதுரையில் பாண்டியவேந்தர் ஆதரவில் சிலகாலம் தமிழ்ப்புலவர் அமைப்பு (சங்கம்) ஒன்று செயல்பட்டு வந்தது உண்மையான செய்தியாக இருக்கலாம்” - க.அ. நீலகண்ட சாத்திரி. “தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. (இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்கும் இல்லை.)தமிழ்ச் செவ்விலக்கிய (“சங்க”) காலத்தில் இலக் கியங்களை வளர்த்து, தரம் கண்டு ஊக்குவித்த ஒரு அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது” - சேவியர் எஸ். தனிநாயகம். “சங்க இலக்கியப் பாடல்களில் தனிப்பாடல் களாயினும் அவற்றிடையே நடை, சொற்றொகை, யாப்பு, பாடுபொருள் போன்றவற்றில் ஒற்றுமை காணப்படுகிறது. இலக்கிய அமைப்பு சார்ந்த தன்மை” “academism” என இதைக் கூறலாம். அகாதெமி போன்ற இலக்கிய அமைப்பு இல்லாமல் அத்தகைய ஒற்றுமை ஏற்பட்டிருக்காது. கி.பி. 1ஐ ஒட்டி மதுரையில் அத்தகைய அகாதெமி, அதாவது சங்கம் இருந்தது என முடிவு செய்வதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. - கே.வி.. சுவெலபில் amil literature (1974) Otto Harrassovitz. Wiesbaden “சங்கம் என்ற சொல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் சமண பௌத்தர்கள் பழக்கத்திற் கொண்டு வந்தது. அதற்கு முன்னர் மதுரைத் தமிழ்ப்புலவர் அமைப்பு அவை, கூடல், மன்றம் போன்ற பெயர்களால் சுட்டப்பட்டிருக் கலாம். - கே.கே.பிள்ளை (1975) இக்கருத்தை மேலும் அரண் செய்வன மதுரையில் (கூடலில்) சங்கம் இருந்ததையோ அல்லது அச்சங்கத்தின் செயல் பாட்டையோ குறிக்கும் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ஆகும். அவை வருமாறு. “தமிழ் கெழு கூடல்’ -புறம் 58:13 “தொல்ஆணை நல்ஆசிரியர் புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலம் திரு திருவின் நெடியோன்” - மதுரை க. 761-3 “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மருகின் மதுரை” - சிறுபாண். 66-7 “தமிழ் வையை” - பரிபாடல் 6:63 “தமிழ் வேலி” (மதுரையைக் குறித்தது) - பரிபாடல் 6:63 நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி - திருநாவுக்கரசர் அந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும் - திருஞானசம்பந்தர் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ - மாணிக்கவாசகர் திருக்கோவையர் 20 தென்மதுராபுரம் செய்தும் அங்கதனில் அருந்தமிழ்நற் சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் - தளவாய்புரம் செப்பேடு (பராந்தக வீரநாராயணன் கி.பி. 9ம் நூ) “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்”`- பெரிய சின்னமனூர்ச் செப்பேடு (பராந்தக வீர நாராயணன் மகன் இராச சிம்மன்) “தமிழ் கெழுகூடல் சங்கப் பலகையில் “அமர்ந்திருந்த புலவர் பரம்பரையைச் சார்ந்த எட்டிச்சாத்தனைப் பற்றிய குறிப்பு. 9ம்நூற்றாண்டுக் கல்வெட்டு ARE 334/1929-30) எருக்கங்குடி, சாத்தூர் வட்டம். 3. பொதுவாக சங்க இலக்கியங்களாக ஏற்கப்படும் நூல்களும் அவற்றின் காலவரம்பும் (பெரும்பாலான பன்னாட்டுப் பல்துறை அறிஞர்களும் இன்று ஏற்பது) வருமாறு: நூல்கள் அளவு காலம் தொல்காப்பியம் 1610 நூற்பா கி.மு. 300 (4018 அடி) அல்லது அதற்கு முன்னர் எட்டுத்தொகையும், 2381 பாடல்கள் இவற்றுள் அடங்கிய பத்துப்பாட்டும் (473 புலவர் தனித்தனிப் பாடல்கள் (இவை எழுதியவை) எழுதப்பட்ட காலம் தொகுக்கப்பட்ட கி.மு. 300 கி.பி. 300 காலம் கி.பி. 3 - ஆம் (கலித்தொகையும் நூற்றாண்டு பரிபாடலும் கி.பி.300 அல்லது வாக்கில் அதையொட்டி) எழுதப்பட்டவை) இதற்கான மொழியியற் சான்றுகளை எஸ். அகத்தியலிங்கம் மொழியியல் (1983 சன - மார்ச்) இதழில் தந்துள்ளார் திருக்குறள் 1330 குறள் கி.பி. முதல் வெண்பா நூற்றாண்டுத் தொடக்கம் சிலப்பதிகாரம், ஒவ்வொன்றும் கி.பி. 300ஐ ஒட்டி மணி மேகலை 30 காதைகள் (கமில் சுவெலபில் தமது 1995 நூலில் இவற்றின் காலம் கி.பி. 350-450 என்கிறார்) 4. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஒவ்வொன்றிலும் அடங்கிய செய்யுள் விவரம் வருமாறு: எட்டுத்தொகை நூல்கள் பாடல்கள் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து நூலின் (பின்னர்ச் சேர்த்தது) பாடல்கள் அகநானூறு (நெடுந்தொகை) 1 400 குறுந்தொகை 1 400 நற்றினை 1 400 புறநானூறு 1 வரிசை எண்கள் 2-400 ஐங்குறுநூறு 1 500 பதிற்றுப்பத்து (சேரமன்னர் எண்மரைப் பாடிய புறப்பாடல்கள்) 1 80 கலித்தொகை 1 வரிசை எண்கள் 2-150 பரிபாடல் - 22 + 2 பத்துப்பாட்டு வரிகள் அகப்பொருள் முல்லைப்பாட்டு 103 நெடுநெல்வாடை 188 குறிஞ்சிப்பாட்டு 261 பட்டினப்பாலை 301 புறப்பொருள் பொருநராற்றுப்படை 248 சிறுபாணாற்றுப்படை 269 பெரும்பாணாற்றுப்படை 500 கூத்தராற்றுப்படை (என்ற) மலைபடுகடாம் 583 மதுரைக்காஞ்சி 782 திருமுருகாற்றுப்படை 317 (காலத்தால் பிற்பட்டது; சங்க காலத்துக்குப் பின்னர் இயற்றியதாயினும் பத்துப்பாட்டில் முதற்பாட்டாகச் சேர்க்கப்பட்டது என்பர் சிலர்) 5. சேவியர் எஸ் தனிநாயகம் தனது ‘இயற்கையும் தமிழ்ச் செய்யுளும்” (1966) என்னும் நூலில் வெளியிட்டுள்ள பின்வரும் கருத்து மிக முக்கியமானது. “தமிழ்ச் (சங்க) செய்யுள் தமிழகத்திலேயே கருக்கொண்டு வளர்ந்தது என்பதற்கான அனைத்துச் சான்றுகளையும் கொண்டுள்ளது. தமிழ் பேசுநர் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்றோ, வரும்பொழுதே வளர்ச்சியடைந்த தமிழ் மொழி, இலக்கியத்தை உடன் கொண்டு வந்தனர் என்றோ கூறுவதற்குச் சங்க இலக்கியம் இடம் தரவில்லை என்பதே இதன் பொருள்.” 6. மிகப் பழைய சங்க நூல்களிலேயே (தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களில் அடங்கிய பாடல்களில் தொன்மை சான்றவை) தமிழ் வரிவடிவம், எழுத்துமுறை குறித்தும் பண் பட்ட இலக்கியம் குறித்தும் தெளிவாக, விரிவாகக் கூறப் பட்டுள்ளது. ஐ. மகாதேவன் (2003) கருத்து, அசோகனுடைய தமிழ் - பிராமி எழுத்துக்களிலிருந்து தமிழ் வரிவடிவம் உருவாக்கப்பட்டது என்பதாகும். இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. காரணம் மேற்சொன்ன கி.மு. 300 சார்ந்த தமிழ் நூல்கள், பாடல்கள் உருப்பெறுவதற்கு சில பல நூறு ஆண்டு களுக்கு முன்னரே தமிழ் வரிவடிவமும் இலக்கியங்களும் தோன்றத் தொடங்கியிருக்க வேண்டும். கொற்கையில் 1970இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானைஓட்டில் உள்ள தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 700 என அப்பொழுதே உறுதியாக்கப் பட்டது. கொடுமணலில் அண்மையில் அகழ்ந்த பானை ஓட்டு எழுத்துக்களின் காலமும் கி.மு. 500க்கு முந்தியதாக இருக்க வேண்டும் என இராஜன் (2004) நிறுவியுள்ளார். ஆதிச்சநல்லூரில் 2004இல் நடந்த அகழ்வாய்வில் கண்ட பானை ஓட்டுப் பொறிப்பின் காலமும் கரிமக் கணிப்பின்படி கி.மு. 700ஐ ஒட்டியதாக அமைய லாம் எனச் செய்தி வந்துள்ளது. இவற்றையும் பிற ஆதாரங்களையும் சுட்டி இராஜன் (2004), நடனகாசிநாதன் (2004) ஆகியோர் “தமிழுக்கு கி.மு. 800ஐ ஒட்டியே ஒரு தனி வரி வடிவம் இருந்திருக்கவேண்டும். அதனைப் பின்பற்றியே அசோக தமிழ் - பிராமி வரிவடிவம் (லிபி) கி.மு. 300இல் உருவாக்கப் பட்டிருக்கும்” என்பதற்கான வலுவான காரணங்களை முன் வைத்துள்ளனர். சிந்துவெளி நாகரிக லிபி திராவிடமொழி சார்ந்தது ஆனபடியால் பிராமி லிபியும் அதிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்பர் ஹீராஸ் (New Review; சூலை 1936). தனது பண்டைத் தமிழ் எழுத்துக்கள் 1938 நூலில் தி.நா. சுப்பிரமணியன் கூறியதையும் நினைவு கொள்ள வேண்டும். “பிராமி லிபி முதலில் வடமொழிக்காக ஏற்படவில்லையென்றும் உயிர் எழுத்துக்களுள் அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் அதிகச் சிறப்பையளிப்பதும், மெய்யெழுத்துக்களுள் வர்க்க எழுத்துக்களைக் கொள்ளாததுமான ஒரு பாஷைக்கென அமைக் கப்பட்டுப் பின்னால் வடமொழிக்கு உபயோகப்படும் படி புதிய குறிகள் உண்டாக்கப்பட்டனவென்றும் எண்ண வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுள் இவ்விதம் உள்ளது தமிழ் ஒன்றுதான். அங்ஙனமாயின் பிராமி முதலில் தமிழுக்கென அமைந்த லிபியாக இருத்தல் கூடுமா? இஃது ஆராய் தற்குரியது”. வடநாட்டு வரலாற்றறிஞர் எஸ்.ஆர். கோயல் (1979) கருத்தும் அசோக பிராமி எழுத்து படிப்படியாக (வடநாட்டில்) உருவான தல்ல; அது ஒரு காலகட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 300 எனக் கூறலாம்) புதிதாக உருவாக்கப்பட்டது என்பதாகும். 7. தமிழ்நாட்டில் இருந்த கி.மு. 1900 - கி.மு. 300 சார்ந்த பெருங்கற்கால நாகரிகத்தின் தொடர்ச்சியே கழக இலக்கிய காலம்; அந்நாகரிகக் கூறுகளிற் பெரும்பாலானவை கழக இலக்கியத்தில் காணப்படுகின்றன என்பதும் ராஜன் போன்றவர் களுடைய அடுத்த முடிவாகும். ஆக இவ்வாராய்ச்சிகள் மேலும் முன்னேறும் பொழுது தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 300க்கும் சில நூற்றாண்டுகள் முற்பட்டது என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 8. இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். கி.மு. 300க்கு முற்பட்ட கழக இலக்கியங்கள் எவையுமே நமக்குக் கிடைக்கவில்லை. கி.மு. 300 - கி.பி. 300 காலகட்டத்தைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி. 300ஐ ஒட்டிக் கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் எவ்வெவற்றை விட்டு வைக்கலாம் என்று கருதினார்களோ அவற்றை மட்டும் தொகுத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிட்டனர். தொகுத்தவற்றிலும் மாற்றங்கள் செய்திருக்கலாம். நுண்ணறி வுடையவர்கள் இதுபற்றி 1871-லிருந்து தெரிவித்துள்ளவற்றைக் காண்போம்:- சார்லஸ் ஈ கோவர் : தென்னிந்திய நாட்டார் பாடல் கள் (The Folk songs of Southern India) 1871: திட்டமிட்டுச் சிதைக்கப்படாத அல்லது மாற்றியெழுதப்படாத தொல்பழங் காலத் தமிழ்நூல் எதையும் இன்று காண்பது அரிது. தமிழ் மக்கள் - திராவிட (பழந்தமிழ்) இலக்கியத்தைக் கைவிட்டு புராணக்கதைகளை நம்பினால்தான் தங்களுக்குப் பிழைப்பு உண்டு என்று உணர்ந்தவர்களே இவ்வாறு பழந்தமிழ் இலக்கியத்தைச் சிதைத்தவர்கள் ஆவர். (தனித்) தமிழ்ச் செய்யுள் நூல்கள் பல மதிப்பிழந்து ஒழியும்படி அவர்கள் செய்தனர். அறவே ஒழிக்க முடியாத நேர்வுகளிலும் அந்நூல்களை அயோக் கியத் தனமாகச் சிதைத்து உருமாற்றி உலவவிட்டு மூலநூல்களின் கருத்தை உணர முடியாதவாறு செய்துவிட்டனர். சிவத்தம்பி (1986)யும் இக்கருத்தினரே. ஹயூநெவில் : தி தப்ரொபேனியன் (The Taprobanian) சூன் 1896 “மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் நூலகமும் அழிக்கப் பட்டபொழுது பழந்தமிழ் நூல்கள் சகட்டுமேனிக்கு அழிக்கப் பட்டன. (அவற்றுள் சமணக் கொள்கை வாடை இருக்கலாம் என்ற கருத்தில்). ஈழத்தில் மகாவம்சம் இருந்ததுபோல் பாண்டி யர்கள் வரலாற்றைக் கூறும் ஒரு நூல் மதுரைச் சங்க நூல்களில் ஒன்றாக இருந்த அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக திருவிளை யாடற் புராணம் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அழிக்கப் பட்ட வரலாற்று நூலின் சிதைவுகளுடன், ஐங்கமர்கள் (பார்ப் பனிய சிவ மதத்தவர்கள்) எண்ணம், சமயம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான புனை கதைகளுடன் பின்னிப் பிணைந்து அப்புராணம் உருவாக்கப்பட்டது”. ஜான் ஸ்பியர்ஸ் “ஞானம் தோன்றிய இடத்திலிருந்து” வால்யூஸ் Values II - 10 சூலை 1957 : “சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் நூற்றுக்கணக்கான (தொல்தமிழ்) வாசகங்கள் உள்ளன. கடல் கொண்ட (அழிந்துபோன) பண்டை நூல்களைப் பற்றித் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் புத்தர் காலமாகிய கி.மு. 600க்கு முந்திய நூல்களுள் ஒன்றுகூட கிடைக் காததற்கான காரணத்தை நாம் உணர முடிகிறது. (தொல் தமிழருடைய) பண்டைய ஆவணங்களை ஆரியர்கள் ஒன்று விடாமல் அழித்துவிட்டனர் என்பதே அது”. தெ.பொ. மீனாட்சி சுந்தரன் : தொல்காப்பியம் - சொல்லதிகாரம்: கல்லாடர் உரை (1971) : “தொல் காப்பியத்தை அதன் ஆசிரியர் எந்த உருவத்தில் விட்டுச் சென்றாரோ அந்த வடிவத்தில் அது நமக்கு வந்து சேரவில்லை” (தொல்காப்பியம் : பொருளதிகாரம் மரபியலில் பல இடைச் செருகல்கள் உள்ளன என்பது தொல்காப்பிய அறிஞர்கள் தி. சவரிராயன், கா.சுப்பிரமணியபிள்ளை, சோமசுந்தர பாரதி, வெள்ளை வாரணன், இலக்குவனார், கமில் சுவெலபில், இரா.இளங்குமரன், செ.வை. சண்முகம் போன்றவர் ஏற் றுள்ளதாகும். குறிப்பாக நால்வருணம் பற்றிக் கூறும் மரபியல் சூத்திரங்கள் 71-85 இடைச் செருகல் என்பது இவ்வறிஞர்களும் (ஏன் நடுநிலையாளர் அனைவரும்) ஏற்பதாகும். 9. சங்க இலக்கியச் சிறப்பின் காரணமாகவே தமிழைச் செம்மொழியாக ஏற்றுள்ளனர். மேலை நாடுகளில் பண்டைக் காலத்திலேயே (இப்போதைய ஐரோப்பிய மொழிகளில் இலக்கியங்கள் எவையும் தோன்றுவதற்கு முன்னரே) சிறந்த இலக்கியங்களாக விளங்கிய கிரேக்க, இலத்தீன் மொழி இலக்கியங்களைக் “செல்விலக்கியம்” Classical Literature என ஐரோப்பியர் அழைத்தனர்; அவ்விரு மொழிகளையும் “செம்மொழிகள்” Classical languages என்றனர் Classical என்பதன் அடிப்படைப் பொருள் “முதல் தரமான / செவ்விய / செம்மையான” என்பதே யாகும். அவ்விரு மொழிகளின் (கி.மு. 500 - கி.பி. 300 சார்ந்த) சிறந்த பல்துறை இலக்கியங்களும் அந்தந்த மொழியிலேயே தாமாக உருவானவை; பிறமொழித் தாக்கத்தினால் அல்ல. அவ்விலக்கியங்களும் அவற்றின் கருத்துக்களுமே பிற்றை ஐரோப்பிய மொழிகளுக்கு (ஆங்கிலம், பிரெஞ்சு, செருமானியம், ஸ்பானியம், உருசியன் முதலியவற்றுக்கு) முன்மாதிரியாக அமைந்தன. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து உலகின் பிறபகுதிகளில் இருந்த இத்தகைய மொழிகளையும் செம்மொழிகள் என ஐரோப்பிய மொழியியலறிஞரும் இலக்கிய அறிஞரும் ஏற்கலாயினர்; அழைக்கலாயினர். சீனம், சமற்கிருதம், பாரசீகம், அரபு முதலியவை 1800 தொடக்கத்தில் இருந்தே இவ்வாறு கருதப்பட்டு வருகின்றன. தமிழ் தொன்மையான மொழி என 1816-லிருந்துதான் (பிரான்சிஸ் வைட் எல்லிஸ்) உணரப்பட்டது; 1856-லிருந்துதான் (கால்டுவெல்) ஏற்கப்பட்டது. ஆனால் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட கழக (சங்க) இலக்கியங்கள், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவை – அச்சிட்டு வெளிவந்த காலம் கி.பி. 1870-1900 ஆண்டுகளேயாகும். கிரேக்க, இலத்தீன், சமற்கிருத தொல் இலக்கியங்களுக்குச் சமமான – சில கூறுகளில் விஞ்சிய - பண்டைத் தமிழ் இலக்கியம் உள்ளதை உணர்ந்ததும் தமிழைச் செம்மொழி என மேனாட்டறிஞர் 1920களிலிருந்தே நடைமுறையில் ஒத்துக் கொண்டுள்ளனர். இந்திய அரசு 1800லிருந்தே சமற்கிருதம், பாரசீகம், அரபு ஆகியவற்றைச் செம்மொழிகளாக “ஆளுமை நடைமுறைப்படி” (Executive action) ஏற்றுக்கொண்டு அவற்றை அரசு நிதியிலிருந்து செலவு செய்து ஊக்குவித்து வந்தது. 2004 அக்தோபரில் இந்திய நடுவணரசு தமிழைச் “செம்மொழி”யாக ஏற்பளித்தது. 2005 சூலையிலிருந்து தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் கீழ்ப் பல நற்பணிகளை மைய அரசின் செம்மொழித் தமிழ் நிறுவனம் செய்து வருகிறது. 10. செம்மொழித் தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் பற்றிய சில விரிவான செய்திகளைத் தமிழர் அனைவரும் அறிந்து கொள்வது நலம். தொல்காப்பியம் 11. தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் 3ஆம் நூற்றாண்டு வரை என்பதைப் பெரும்பாலான நடுநிலை அறிஞர் ஏற்கின்றனர். சம்ஸ்கிருதத்துக்கு (பாஷைக்கு) இலக்கணம் வரைந்த பாணினியின் காலம் கி.மு. 5ஆம் நூற் றாண்டு. பாணினிக்கு முந்திய சம்ஸ்கிருத இலக்கணங்களும் உண்டு. வட இந்தியாவிற்குள் நாகரிகமற்ற ஆரியர் நுழைந்த கி.மு.1500க்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவெங்கும் தமிழிய மொழிகள் இருந்தன. இவற்றுக்கு லிபியும் இருந்தது. இலக்கிய வடிவங்களும் இருந்து அவற்றின் வடிவங்களும் கருத்துகளும் ரிக் வேதத்திலும் ஏறியுள்ளன என்பது உண்மை. எனவே தொல் காப்பியமோ அல்லது அதற்கு முந்திய தமிழ் இலக்கணங்களோ (“என்ப”. “என்மனார் புலவர்” போன்றவை இவற்றைச் சுட்டு கின்றன) பாணினிக்கு முற்பட்டவையாக இருந்திருக்கலாம் எனச் சில தமிழறிஞர் கருதுவது ஆதாரமற்றகூற்று அல்ல. “தொல் காப்பியர்” எழுதியதனால் “தொல்காப்பியம்” எனப் பெயர் பெற்றது என்பது பண்டு தொட்டு வரும் மரபு. ஆயினும் தொல் காப்பியம் வல்ல அறிஞர்கள், இலக்குவனார், ச.வே. சுப்பிர மணியன், பொற்கோ, சுலெவபில் போன்றவர்கள் “தொல் + காப்பு + இயம்” = தொல்காப்பியம், அதாவது தொன் மரபைக் காக்கும் நூல் எனக் காரணப் பெயர் பெற்றது என்பதும் பொருத்தமாகவே உள்ளது. தொல்காப்பிய எழுத்து, சொல் அதிகாரங்களிலும் பொருள் அதிகார அகத்திணை, புறத்திணை இயல்களிலும் சில மாற்றங்கள் / இடைச் செருகல்கள் பிற்காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் பொருளதி காரத்தின் இறுதி ஏழு இயல்களிலும் மாற்றங்கள் / இடைச் செருகல் மிகப்பல என்பதும் சுவெலபில், மார் போன்றோர் கருத்து. பிராமணிய ஆதிக்கம் மிகுந்த காலத்தில் தொல் காப்பியம் முழுமையாக அழித்தொழிக்கப்படாமல் பாதுகாப் பதற்கென்றே தமிழ், தமிழர் பால் பற்றுள்ளவர்களும் சில இடைச்செருகல்களை விரகாகச் செய்திருக்கலாம் என்பர் பாவாணர். (எனினும் தொல்காப்பிய முதலுரைகாரர் இளம் பூரணர் காலமாகிய கி.பி. 11ம் நூற்றாண்டுக்கு முன்னர்ச் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும்) தொல்காப்பியம் “மாந்தன் அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்ச நிலை எய்தக்கூடும் என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று” One of the finest monuments of human intelligence என்பர் சுவெலபில். இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழி களிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல் பொருள். செய்யுளியல் கூறுவதை சுவெலபில் (1991) கட்டுரை விளக்கு கிறது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் கடை ஆறு இயல் களும் புணர்ச்சி பற்றியன. “தமிழில் புணர்ச்சி பற்றிய இலக்கணம் தனித்தன்மைகொண்டது. ஒட்டுநிலை விட்டுத் தளராது, இன் றளவும் “கன்னித் தமிழாக” விளங்குவது, இப்புணர்ச்சி பற்றிய அறிவியல் அணுகு முறைகளினாலேயாம்” (தமிழண்ணல், 2004) 12. தொல்காப்பிய செய்யுளியல் கோட்பாட்டுச் சிறப்பு பற்றி சுவெலெபில் (1974) கூறியுள்ளது வருமாறு: தொல்காப்பியம் அடிப்படை நூலாக இருப்பது இலக்கண இலக்கிய ஆய்வுகளுக்கு மட்டுமன்று. மாந்த இனப் பரவல் சார்ந்த புவியியல், குமுதாய மாந்தவியல், பண்பாடு, சூழ்நிலையியல், உளவியல் ஆகிய புலங்கள் சார்ந்த அரிய செய்திகள் அந்நூலில் உள்ளன; எனவே தமிழர் நாகரிகம்- பண்பாடு சார்ந்த (ஏன் பொதுவான மாந்த இன நாகரிகம்- பண்பாடு சார்ந்த) ஆய்வுகளுக்குத் தொல்காப்பியம் மிக முக்கியமானது. எனினும் இலக்கியம் கூறுவதெல்லாம் (அக்காலத்தில் நிலவிய) உண்மைச் சமுதாய நிலையை நேரடியாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் அபத்தம்; உண்மை நிலையை விருப்புவெறுப்பின்றி அறிவியல் பூர்வமாகக் காட்டுகிறது என்று எண்ணுதல் மேலும் அபத்தமாகும். அக்கால ஆண் பெண்மக்களின் அகம், புற வாழ்க்கையை உள்ளது உள்ளபடி தத்ருபமாக சங்கப் புலவர்களுடைய பாடல்கள் காட்டுவதாக சமூக வரலாற்றாசிரியர் சிலர் முன்னர்க் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன? செய்யுள் ‘உண்மை வாழ்க்கை” நிகழ்ச்சிகளை அந்தந்த நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்ற இலக்கியமரபு உள்ளதோ அந்த மரபுக்குக் கட்டுப்பட்டே சித்தரிக்கிறது. அதாவது மரபுக்கேற்ற மாற்றங் களுடன் தான் சித்தரிக்கிறது. “உண்மை வாழ்க்கை” வேறு; அதை இலக்கியத்தில் காட்டும் மரபு வேறு; என்பதைப் புலவர்களும் பொருளிலக்கண வாசிரியரும் உணர்ந்திருந்தனர். உணர்ந்திருந்ததனால்தான் உண்மை வாழ்க்கையின் கூற்றுகள் செய்கைகளை ‘உலகியல் வழக்கு” என்றும் இலக்கியத்தில் (செய்யுளில்) வாழ்க்கையைச் சித்தரிக்கும் மரபைச் செய்யுள் வழக்கு “புலனெறி வழக்கு” என்றும் குறித்தனர். சில நிகழ்ச்சிகள், செய்திகளை இப்படி இப்படித்தான் காட்ட வேண்டும் என்று இலக்கியப்படைப்பாளர்களும் வாசகர்களும் தமக்குள் இசைந்து உருவாக்கும் மேல்வரிச் சட்டமாகிய மரபே இலக்கிய மரபாகும். (எ.கா. ஒவ்வொரு திணைக்கும் உரிய முதல், கரு, உரிப்பொருள்கள்). நிகழ்ச்சி/ செய்தி வாசகருக்குத் தெரிந்தது தான்; அதனை ஒரு புதிய பார்வையில், கோணத்தில் (மரபை அடிப்படையில் மீறாமல்) காட்டும் பொழுது வாசகர் அந்த நயத்தை நன்கு உணர்ந்து பாராட்ட இயல்கிறது. [இதனை பி.மருதநாயகம் தமது Poetics of the lyric in classical languages” (Chemmozhi I - 2 Jan - March 2007) கட்டுரையில் மேலும் தெளிவாக்குகிறார்] அகப்பாடல் எதுவும் ஒருதடவை கூட தலைவன், தலைவி பெயரைச் சுட்டுவதில்லை. தலைவனும் தலைவியும் எப்பொழுதும் இன்னார் என்று குறிப்பாக அடையாளம் காட்ட முடியாதவர்களே. எனவே அகப் பாடல்கள் சித்தரிக்கும் உணர்வுகள் (டபிள்பு. எச். ஹட்சன் தனது “இலக்கியப் பயிற்சிக்கான முன்னுரை” 1946 நூல்பக்கம் 97ல் சொல்வது போல “பொதுவாக எந்த ஆடவனுக்கும் பெண்ணுக்கும் பொருந்துவதாக இருக்குமேயன்றி இவனுக்குத் தான்/இவளுக்குத்தான் பொருந்தும் என்று இருக்காது. (உள்ள உணர்வுகளை விவரிக்காது”) வெளியுலகை விவரிக்கும் புறப்பாடல்களில் சில பொதுவாக அனைவரும் நோக்கும் பார்வையில் இருக்கும்; சில அந்தந்தப் புலவருடைய தனி நோக்கில் அமைந்ததாக இருக்கும். பின்னவற்றுக்கு எடுத்துக் காட்டு கையறு நிலைப்பாடல்கள். வள்ளல்கள், நண்பர்கள் இறந்தால் புலவர்கள் தம் நெஞ்சின் ஆழத்திலிருந்து உணர்வு களைக் கொட்டிப் பாடும் துயரப் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை; சாதாரண கிராமிய ஒப்பாரிகளின் வாலாயப் படிமங்களைக் கொண்டவையல்ல”. 13. தமிழ்ச்செம்மொழி இலக்கியத்தின் முகாமை நூல் களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றின் (வேறு எந்தச் செம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத) சிறப்புகளாக கமில் சுவெலபில், ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட், ஏகே. ராமானுஜன் பி. மருத நாயகம் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சில வருமாறு. (இந்நால்வருமே சங்க இலக்கியத்தை ஆழ்ந்து பயின்றவர்கள்; பிறசெம்மொழி இலக்கியங்களைப் பற்றியும் தெரிந்தவர்கள்; நுண்மாணுழைபுல மிக்கவர்கள்): “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் (மொத்தம் 2300 பாடல்கள்) அச்சிட்டு உலகின் பார்வைக்கு முதலில் வந்தது 1880 - 1910 கால அளவில் ஆகும். அவை வெளிவந்த அக்கணமே (அதுவரை சாமானியப் பிற்கால இந்திய மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது மாறி உலகின் சிறந்து செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது. பிரெஞ்சு ஆசியவியலறிஞர் பியர் மெய்ல் “கிரேக்க உணர்ச்சிக் கவிதைகளில் தலை சிறந்த நவமணிகளுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல் கள்; இந்தியாவில், ஏன் உலகில், இலக்கியப் படைப்புகளின் சிகரங்களில் ஒன்று இப்பாடல்கள்” என்று செய்துள்ள மதிப்பீட்டை சங்கஇலக்கியப் பாடல்களை ஆழ்ந்து பயின்றுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர்.” - சுவெலபில் (1960) “உலகின் நாகரிகம் - பண்பாட்டுக்கு திராவிடர்கள், குறிப் பாகத் தமிழர்கள் செய்துள்ள சிறந்த பங்களிப்புகள் பல்லவ, சோழர் கால கோயிற் கட்டடக்கலை; சோழர் கால செப்புப் படிமங்கள்; பரத நாட்டியம் என அழைக்கப்படும் தமிழர் நடனக் கலை; கருநாடக இசை என அழைக்கப்படும் தமிழ் இசை முதலிய பலவாம்; அவற்றுள்ளும் தலைமை சான்ற சிறப்பு வாய்ந்தது (சங்க காலச் செம்மொழித் தமிழ்) இலக்கியம். பிறமொழி, பிற நாட்டு அறிஞர் இதை உணர்ந்து இவ்விலக்கி யத்தைப் பயின்று உலக மாந்த இனத்தின் இன்றியமையாத உன்னதமான மரபுச் செல்வமாக மகிழ்ந்து போற்ற வேண்டும். உச்சநிலைக்கு முழுத் தகுதியுடைய அவ்விலக்கியத்திற்கு இது வரை அந்நிலை தரப்படவில்லை.” - சுவெலபில் (1973) “இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டது என்பது மட்டு மன்றிப் பண்டைத் தமிழ் (சங்க) இலக்கியம் உன்னதமான இலக்கிய நயமும் வாய்ந்தது. உலகின் சிறந்த செம்மொழிகள் வரிசையில் தமிழுக்குரிய இடத்தை சங்க இலக்கியத்தின் 26350 வரிகள் கொண்ட பாடல்கள் பெற்றுத் தந்துவிட்டன. அவ் விலக்கியத்தின் சிறப்பை இப்பொழுது தான் உலகு உணரத் தொடங்கியுள்ளது.” “அசை, சீர், தளை அடிப்படையிலான யாப்பியல், அகம் புறக் கோட்பாடு; உவமவியல், ஆகிய அனைத்திலும் தனித் தன்மை வாய்ந்த சிறந்த இலக்கியக் கொள்கை கொண்ட சங்க நூல்களை உருவாக்கிய பெருமை தமிழ்ப் பண்பாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும். “இந்தியாவில் தோன்றி வளர்ந்த செவ்வியல் இலக்கியம் - செவ்வியல் மொழிப் பெரும் பண்பாடுகள் இரண்டு – ஒன்று சமற்கிருதம்; மற்றது தமிழ்; அவை ஒன்றை ஒன்று சார்ந்தவை யல்ல - சுதந்தரமானவை. “இந்திய மொழி இலக்கியங்களிலேயே தமிழிலக்கியம் தான் செவ்விலக்கியமாகவும், நிகழ்கால இயக்கமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்தது; அது சமற்கிருதச் செவ்வியல் இலக்கியம் அளவு தொன்மை வாய்ந்தது; பண்டை கிரேக்க மொழிக் கவிதைகளை எப்படிச் செவ்விலக்கியம் என உலகு கருதுகிறதோ அதே தன்மை வாய்ந்தது தமிழ்ச் சங்க இலக்கியம். உயிர்த் துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் உள்ளது. “தமிழ்ச் செவ்விலக்கியம் (சங்க இலக்கியம்) மக்களைப் பற்றிய இலக்கியம்; மக்கள் உருவாக்கியது - ஆனால் “நாட்டுப் புற” இலக்கியமன்று” - சுவெலபில் (1973) “வாழ்க்கை இனியது; மகிழ்ச்சி தருவது. சாவு எல் லோருக்கும் வருவது. இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற முயற்சியெல்லாம் இல்லை. வள்ளண்மை யும் நயன்மையும் இயல்பாக அமைகின்றன - ஆன்மீக நலனுக் காகவோ பரிகாரமாகவோ அல்ல. இறந்தபின்னர் வீரரும் சான்றோரும் துறக்கத்தில் நிலையாக வாழ்வர்; தீயோர் மீளாநிரயம் எய்துவர் எனக் கருதினர். நில உலகில் புகழை நிறீஇச் சென்றவர் துறக்கத்தில் இனியவாழ்வு என்னும் வெகுமதி பெறுவர்: காதல், புணர்ச்சி, திருமணம், மக்கட்பேறு இவை மாந்த வாழ்வில் நிறைவு பெறுவதற்கான வழிமுறைகள் எனக் கருதப்பட்டன. வள்ளண்மை, வீரச்செயல், பிறர்க்குரியாளனாக வாழ்தல் - இவற்றில் ஒருவன் செலவிட்ட நாட்களை நினைத்துப் புலவரும் பிறரும் கூறும் புகழ் மொழிகள் மட்டுமே ஒருவன் சாவுக்குப் பின்னர் நிலைநிற்பவையாகும்.” - சுவெலபில் (1974) “எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள், விழுமங்கள் ஆகியவற்றை சங்க இலக்கியங்கள் நிரம்பக் கொண் டவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்த அவ்விலக்கியங்கள் பிற்காலத்தில் (அதாவது நவீனகாலத் திறனாய்வாளர்) வகுத்துள்ள இலக்கிய நயக்கோட்பாடுகளின் படியும் உன்னதமாக ஏற்கப்படுவனவாக உள்ளன. “சங்க இலக்கியத்தைப் பயிலும் ஒரு சமுதாயமே (தனிநபர் மட்டுமல்ல) அவ்விலக்கிய விழுமங்களை எய்த இயலும் வகையில், எய்த விழையும் வகையில் அவ்விலக்கியம் அமைந்துள்ளது. எனவே தான் தற்கால இலக்கியத் திறனாய்வாளரும் போற்றும் வகையில் உலக மாந்தர் அனைவரும் மதிக்கத் தக்க “என்று முள” சிரஞ்சீவித்தன்மை கொண்டுள்ளது சங்க இலக்கியம்” - சுவெலபில் (1974) “பழந்தமிழ் இலக்கியமும் பண்பாடும் படைத்த அகம் - புறக்கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தவை. சில கூறுகளில் தமிழிலக்கியத்துக்கும் சமற்கிருத இலக்கியத்துக்கும் ஒப்புமை காணப்படலாம். பட்டால் என்ன? சமற்கிருத இலக்கியத்திலிருந்து தான் தமிழ் இலக்கியம் கடன் பெற்றிருக்கும் என ஏன் கருத வேண்டும்? (நேர்மாறாகவும் நிகழ்ந்திருக்கலாம் அன்றோ?)” - சுவெலபில் (1975) “பொதுவான செய்தியை, தெளிவாக, முழுமையான நுண்ணிய பார்வையில் நோக்கி, எளிய ஆனால் வைரம் போன்ற சொற்களில், ஆழ்ந்த பொருளுடன் தருவதே சிறந்த கவிதை எனத் தற்காலத்தில் கருதப்படுகிறது. வெளிப்படையான ஒரே செய்தியைத் தருவதைவிட அடுக்கடுக்கான பல பொருளைத் தரவல்லதான சொற்செட்டுமிக்க பாடலே சிறந்த கவிதைத் தன்மையுடையதாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியம் நோக்கு, பயன், எச்சம் (சொல்லெச்சம், குறிப்பெச்சம்) உள்ளுறை, இறைச்சி என்று கூறுவதெல்லாம் இது தான்; - பி. மருதநாயகம் (2007) “முதலாவதாக, தமிழின் தொன்மை குறிப்பிடத்தக்கது. தற்காலத்திய பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ். தமிழின்ஆதி நூல் ஆகிய தொல்காப்பியத்தின் பகுதிகள் கி.மு. 200ஐ ஒட்டியவை என்பது மிகப் பழைய [தமிழிக்] கல் வெட்டுகளிலிருந்து தெரிகிறது. பழந்தமிழ்ப் பெருநூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலியவை கி.பி ஒன்று - இரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவை. இந்தியாவின் மிகு தொன்மை வாய்ந்த, சமயம் சாராத (secular) பாடல்கள் அவையே; காளிதாசன் காவியங்களுக்கு இருநூறு ஆண்டு முற்பட்டவை.” “இரண்டாவதாக, தமிழ் இலக்கியமரபு மட்டும் தான் (சம்ஸ்கிருதத்திலிருந்து பெறப்படாத) இந்திய மண்ணுக்குரிய இலக்கிய மரபு ஆகும். தென்னாட்டில் சமற்கிருத தாக்கம் வலுப்படுவதற்கு முன்னரே முகிழ்த்தது அது. சமற்கிருத/பிற இந்திய மொழி இலக்கியங்களிலிருந்து மாறுபட்ட தன்மை யுடையது அது. தமிழ் தனக்கென்று தனி இலக்கியக் கொள்கை, இலக்கணமரபு, முருகியல் (aesthetics) உடையது; இவற்றின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் செம்மொழி இலக்கியம் வேறு எம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்தது (unique). சம்ஸ்கிருதத்திலோ வேறு இந்திய மொழிகளிலோ காணவியலாத நயமான உணர்வை (sensibility – இந்திய மண்ணுக்கே உரிய உணர்வைப் பழந்தமிழ் இலக்கியத்தில் காணலாம்; தமிழ்ப்புலவர்கள் பன்னெடுங்காலம் வளர்த் தெடுத்த செழுமையான உணர்வுப் பாரம்பரியம் அது. “மூன்றாவதாக, சம்ஸ்கிருதம் - இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியம் நுண்மாணுழைபுலமிக்கது; பல்வேறு பாடுபொருள் கொண்டது (முற்கால இந்திய இலக்கியங்களில் சாமானியர்களைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே); மாந்த இனத்துக்குப் பொதுமையான விழுமியங் களைக் கூறியது. எனவே பிற செவ்வியல் மொழிகளின் மரபு களுடனும் இலக்கியங்களுடனும் சமமாக நிற்கும் உரன் வாய்ந் தது அது. உலகின் தலைசிறந்த அறநூல்களில் ஒன்று திருக்குறள். தமிழ்ச்செவ்வியல் இலக்கியத்தில் அது போன்று பல துறைகளிலும் சிறந்த நூல்கள் உண்டு. அவ்விலக்கியம் பாடித் துலக்கம் தராத மாந்த இன அனுபவம் ஒன்றும் இல்லை. “இறுதியாகத் தற்கால இந்தியப் பண்பாட்டையும் மரபையும் உணர்வதற்குப் பயிலவேண்டிய இலக்கியங்களில் தமிழிலக்கியம் முதன்மை வாய்ந்தது. சம்ஸ்கிருதக் காவியங் களில் தென்னக மரபுத் தாக்கம் உள்ளது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். சங்ககாலம் தொடங்கி தமிழிலில் பாடப்பட்ட சிறந்த இந்து சமய பக்தி இலக்கிய நூல்கள் தாம் தற்போதைய இந்து சமயத்துக்கு அடித்தளமாக இருக்கின்றன. தமிழ் பக்தி இலக்கியக் கருத்துகள் பாகவத புராணத்திலும் பிற (தெலுங்கு/ கன்னட/சம்ஸ்கிருத) பக்தி நூல்களிலும் ஏற்றப்பட்டு இந்தியா முழுவதும் பரவின. வேதத்துக்குச் சமமாகக் கருதப்படும் தமிழ் [திவ்யபிரபந்த] பக்தி இலக்கியப் பாடல்கள் தென்னிந்தியாவில் பெரிய வைணவக்கோவில்களில் (திருப்பதி போன்றவை) வேதத்தோடு சேர்த்து ஓதப்படுகின்றன. தற்கால இந்தோ ஆரிய மொழிகளுக்கு சம்ஸ்கிருதமே மூலமொழி; அதுபோல தற்காலத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் செவ்வியல் தமிழே மூல மொழியாகும். “உலகத்தின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது இத்துறையில் வல்ல அறிஞருக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரிந்த உண்மையாகும்” - ஜார்ஜ் எல். ஹார்ட் (2003) “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு உடைய மிகச்சில உலக மொழிகளில் தமிழ் ஒன்று. உலகின் பாரிய மொழிக் குடும்பங்கள் ஒன்றில் அதுதான், மைய இடம் வகிக்கின்றது. திராவிட மொழிக் குடும்பம் சார்ந்த எம்மொழி ஆய்வாளருக்கும் தொடக்கத்திலிருந்தே தமிழ், தமிழ் வரலாறு தமிழின் பண்டை இலக்கணம் ஆகியவறைத் தெரிய வேண்டியது இன்றியமையாதது. தமிழ் இலக்கியச் செல்வத்தை விஞ்சும் இலக்கியம் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. எனவே தமிழ் இலக்கியச் சிறப்பை உலகெங்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வகை செய்யும் மொழிபெயர்ப்புப் பணிகள் தேவை.” - ஆர்.ஈ. ஆஷர் சங்க கால அகப்பொருள் நூல்கள் 14. சங்க இலக்கிய அகப்பொருள் பாடல்களின் தனிச் சிறப்பை ஏ.கே. ராமானுசன் (1969) பாராட்டியுள்ளது வருமாறு:- “தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங்கும் இந்த (சங்க இலக்கிய) அகப் பாடல் களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறியிலும், விவரிக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக் கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன: காதலோடு கனிவும் பண்பாடும்; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ளுறை, இறைச்சி, அங்கதம் ஆகியவையும்; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற நுண்ணிய வருணனை; அடிகள் சில; அவை சுட்டும் பொருளோ பெரிது. தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ் வகப்பாடல்கள்; அது மட்டுமல்ல கடந்த இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை.” 15. அகப் பாடல்களின் அமைப்பு பற்றி சுவெலபில் (1986) விளக்கமும் கருத்திற்கொள்ளத் தக்கது. “அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு கூற்று: தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலிய சிலருள் ஒருவர், நாடக மாந்தர் போல், கூறுவதாக அது அமையும். அவர்கள் ஒருவருக் கொருவரோ, தனக்குத் தானாகவோ, நிலவை நோக்கியோ கூறுவதை வாசகர்களாகிய நாம் கேட்கிறோம்; அவ்வளவே. நாடகக் காட்சி ஒன்றை முழுமையாக அகப்பாடல் ஒன்றில் உள்ள கூற்று விவரித்துவிடும். இவை நாட்டுப்பாடல்கள் போல் விரைந்து பாடியவை அல்ல; ஒரு நிகழ்ச்சியைக் கண்ட அல்லது எண்ணிப்பார்த்த ஒரு கவிஞர் அது பற்றிய தமது எண்ணங்களை நேராகவோ உருமாற்றியோ வெளிப்படுத்திய பாடல்களும் அல்ல. இவை அரசவைப்பாடல்களின் நளினம் உடையவை; “வைகலும் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் போல்” நுண்ணிய புலமைத்திறனுடன் யாக்கப் பட்டவை. 16. மேற்கண்ட இருவர் கூற்றுக்களின் ஆங்கில மூலங்கள் வருமாறு: “In their antiquity and in their contemporaniety, there is not much else in any Indian literature equal to these quiet and dramatic Tamil poems. In their values and stances they represent a mature classical poetry : passion is balanced by courtesy, transparency by ironies and nuances of design, impersonality by vivid detail, leanness of line by richness of implication. These poems are not just the earliest evidence of the Tamil genius. The Tamils in all their 2000 years of literary effort wrote nothing better”. - A.K. Ramanujan. An Aham poem is always a “Kurru”, an utterance by one of the limited number of dramatis personae, (hero, heroine, heroine’s girl-friend, foster mother ete). The reader only overhears what the characters say to each other, to themselves, or to the moon. A poem in this tradition implies, evokes, enacts a drama in a monologue. The poems are not the result of rapid composition like oral epics or as lyrical expessions or sublimations of the poet’s own feelings triggered by some romantic event. They are the result of skillful and subtle care, the sophistication of court poetry, “like a chariot wheel made thoughtfully over a month by a carpenter who tosses off eight chariots in a day.” - K.V. Zvelebil. புறப்பாடல்கள் : புறநானூறு 17. புறநானூற்றில் இன்று கிட்டியுள்ள 368 பாடல்களின் வகைப்பாடு வருமாறு : சேரர்-22; சோழர்-61; பாண்டியர்-31; குறுநில மன்னர் -134; பிற-120. ஹார்ட் (1999) “ஆரியருக்கு முற்பட்ட தென்னிந்தியாவை, ஏன் பெருமளவுக்கு ஆரியருக்கு முந்திய இந்தியாவையே விவரிக்கும் ஆவணம் புறநானூறு என்பர்” - a testament of pre-Aryan South India and, to a significant extent, of pre Aryan India..” அவரும் ஹாங்க் ஹைபெட்ஸ்-ம் சேர்ந்து 1999-ல் புறநானூறு முழுவதையும் ஆங்கிலத்தில் பாடல்களாக கவிநயத்துடன் மொழிபெயர்த்துள்ளனர்:- The four hundred songs of war and wisdom” (Columbia university Press; New york). பதிற்றுப்பத்து 18. பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் இறுதிப்பத்தும் தவிர எட்டுப்பத்துகளை சார்ந்த 80 பாடல்களே இன்று கிட்டி யுள்ளன. ஒவ்வொரு பத்துக்கும் ஒரு பதிகம் உள்ளது. அவை பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்டவை. பாடல்களில் கூறப்படாத செய்திகளையும் தொன்மக் கதைகளையும் பதிகங்கள் கூறுகின்றன. வரலாற்றுச் செய்திகள் பல இருப்பினும் சேர மன்னரைப் புகழ்வதற்கென்றே எழுதிய இப்பாடல்கள் புறநானூற்றில் உள்ள சிறந்த கவிநயம் வாய்ந்த பாடல்களின் தரம் உடையனவாக இல்லை. பதிற்றுப்பத்து முழுவதையும் ஆங்கிலத்தில் உரை நடையில் பெயர்த்துள்ளவர் ஏ.வி.சுப்பிரமணியன் (1980). திருக்குறள் 19. “அறிதோரறியாமை கண்டற்றால்” என்பது திருக் குறளுக்கும் பொருந்துவதாகும். குறளின் சிறப்புக்களைப் பாராட்டிப் பலமொழி, பல நாட்டு அறிஞர்கள் கூறியவற்றைத் தொகுத்தால் அதுவே ஒரு பெரிய நூலாகிவிடும்! உலகப் பெரியார்களில் ஒருவரான ஆல்பெர்ட் சுவைட்சர் 1936இல் வெளியிட்ட “இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்” (Indian Thought and its Development; Hodder and Stoughton; London; PP. 272) என்னும் நூலின் 200-205 பக்கங்களில் இந்தியத் தத்துவஞானிகளில் திருவள்ளுவர் தலைசிறந்து விளங்குவதைப் பாராட்டியுள்ளார். சில பகுதிகள் வருமாறு: “இந்திய மக்களிடையே பண்டைக் காலத்திலிருந்தே பிற உயிர்கள் அனைத்துக்கும் அன்புகாட்டி உதவும் அறக்கொள்கை ((the idea of active love) இருந்து வந்ததை, இந்தியப் பண்டை இலக்கியங்களில் காணும் கதைகளில் இருந்து அறிகிறோம். அத்துடன் குறிப்பாகத் திருக்குறள் என்னும் நூலில் காணும் அறவுரைச் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம்”. “(உலகில் பிற உயிர்களிடத்து அன்பு காட்டிச் செயல் படுவதை (life Affirmation) அவ்வளவாக வலியுறுத்தாத மனு தர்ம சாத்திரம் போன்றவற்றிலிருந்து மாறுபடும்) குறளில் உலகையும் வாழ்க்கையையும் வெறுத்து ஒதுக்கும் (world and life negation) பரவலாகக் காணப்படுவது அல்ல. எங்கோ ஓரிரு இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம். “பிரமணீயம், புத்தமதம், பகவத்கீதை போன்றவற்றைப் போல் இம்மை மறுமைப் பயன் கருதியே அறநெறியில் நிற்றல் வேண்டும் என்ற வாணிகக் கொள்கையைக் குறள் வலியுறுத்து வது இல்லை. நல்லது செய்வதே தக்கது என்ற உணர்வினா லேயே நல்லது (அறம்) செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது (குறள்கள் 222, 211). பகவத்கீதையோ கருமம் செய்து கொண் டிருப்பது பிரபஞ்சநியதி என்று வறட்டுத்தனமாக வலிந்து கூறுகிறது. ஆனால், என்ன வியப்பு, குறளோ மனிதன் உழைப் பதும் ஈட்டுவதும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் அவன் நன்மை செய்வதற்காகத்தான் என்று சாற்றுகிறது. (குறள்கள் 81, 212.) பகவத் கீதைப்படி கடமை ஜாதிக்குத் தக்கபடி வேறுபடும் குறளோ மக்கள் அனைவரும் ‘நல்லவை செய்தொழுகக்” கூறுகிறது.” “ஏனை இந்திய தர்மசாஸ்திரக்காரர் உழைப்பதில், முயற்சி செய்வதில் மகிழ்வோடு ஈடுபடு என்று கூறவில்லை. குறள்கள் 619, 630, போன்றவையே உலகியலிலும், வாழ்க்கையிலும், ஆர்வத் துடன் ஈடுபடும்படி அறிவுறுத்துகின்றன. “(பௌத்தமும் கீதையும் போலப் பற்றின்மை, வெறுப் பின்மை, கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றையும் குறள் வலியுறுத்தினாலும் கூட அதே சமயத்தில்) குறள் அதிகமாக வலியுறுத்துவது அன்பும் அருளுமே யாம் (the living ethic of love). காண்க குறள்கள் 72, 78, 79, 103, 226, 241. “அறநெறிசார் உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம் படச் சுட்டுகிறது குறள். மனிதனின் தனி வாழ்க்கை, பிற உயிர் களோடும் உலகத்தோடும் உறழும் அவன் வாழ்க்கை ஆகிய வற்றில் கைக்கொள்ள வேண்டிய நெறிகளைக் குறள் வியத்தகு பண்புடனும் சால்புடனும் நடைமுறைக்குகந்த வகையில் வகுத் துள்ளது. (Characterised by nobility and good sense). உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த ஒளிமயமான அறவுரை வாசகங்களை வழங்கும் நூலைக் காண இயலாது.: (குறள்கள் 92, 105, 108, 121, 159, 162, 216, 298, 319, 578, 594, 628, 757, 782, 874, 931, 973, 999, 1007, 1024, 1032)”. “ஆக கிறித்துவ ஊழித் தொடக்கக் காலத்திலேயே இந்திய மக்களிடையே உலகவாழ்க்கையிடமும் உயிர்களிடமும் பண்பும் அன்பும் காட்டும் ஒரு தன்மை இயல்பாக இருந்து வந்துள்ளதைக் குறளிலிருந்து அறிகிறோம். பிராமணியம், பௌத்தம், பகவத்கீதை சார் இந்துமதம் ஆகியவற்றின் கோட் பாடுகளில் இல்லாதது அது. ஆனால் கீழ்சாதியினரிடமும், சாதாரண மக்களிடமும் தோன்றி மக்களோடு மக்களாக வாழ்ந்த சிறந்த சமயப் போதகர்கள் மூலமாக அத்தன்மை மெதுமெதுவாக நாளடைவில் இந்து மதத்தில் இடம் பெற லாயிற்று”. 20. கிராலின் திருக்குறள் செருமன் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத்தான் ஆல்பர்ட் சுவைட்சர் 1936 மேற்கண்ட வாறு வியந்து பாராட்டினார் “Free Hindusthan” என்ற பெயரில் தாரகநாத் தாஸ் (1884-1958) அமெரிக்காவில் நடத்திய இதழுக்கு தால்ஸ்தாயிடம் ஒரு கட்டுரை கேட்டார். தாசுக்கு 14-12-1908 அன்று தால்ஸ்தாய் ஒரு கட்டுரை அனுப்பினார்; “மாந்தர் வாழ்க்கைக்குத் தேவையான ஒரே விதி அன்புடைமை; அன் புடைமைக்குக் கட்டளைக்கல் தீயவை செய்தார்க்கும் இன்னா செய்யாமையேயாகும்” [Great religious teachers have laid down] one invariable condition of love, namely the enduring of injuries, insults and violence of all kinds without resisting evil by evil. என்று அக்கட்டுரையில் எழுதியிருந்தார் மேலும் தன் கருத்துக்கான பல ஆதாரங்களில் ஒன்றாகத் திருக்குறளிலிலிருந்து “இன்னா செய்தார்க்கும்...” “அஃகி அகன்ற...... “பிறர்க்கு இன்னா...... முதலிய நாலைந்து குறள்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் தந்திருந்தார். மேலும் அதே கட்டுரையில் தால்ஸ்தாய் “மறு பிறவி” உட்பட பல மூட நம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும் என்றும் எழுதினார் [“If only people freed themselves from their beliefs in all kinds of Ormuzds, Bhramas and their incarnation as Krishnas and Christs, from belief in paradise and hell, in reincarnations and resurrections, interference of gods in external affairs and infallibility of Veda, Bible, Koran etc”] ‘பிரீ இந்துஸ்தான்’” இதழில் வந்த இக்கட்டுரையைப் படித்த மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து தால்ஸ்தாய்க்கு 1- 10 1909 அன்று கடிதம் எழுதினார் தால்ஸ்தாயின் 14 - 12 - 1908 கடிதத்தை அச்சிட்டுப் பரப்ப அனுமதி கேட்டு. [இந்தியர் பலரும் மறுபிறவியை (reincarnation) நம்புவதால் மேற்கண்ட வாசகத்தில் reincarnation ஐ நீக்கிவிட தால்ஸ்தாயிடம் அனுமதி கேட்டார் காந்தி; “நீக்கவேண்டாம், என்பது என்கருத்து எனினும் தாங்கள் விரும்பினால் நீக்கிக்கொள்க” என்று தால்ஸ்தாய் மறு மொழிவிடுத்தார் 7-10-1909 அன்று] அனுமதி வந்தவுடன் தால்ஸ்தாயின் 14-12-1908 கடிதத்தை காந்தியடிகள் அச்சிட்டு ஆயிரக்கணக்கில் பரப்பினார். இச்செய்தியின் விரிவைப் பின்வரும் நூலில்காணலாம்: Christian Bartolf (Ed) 1997: “Letter to a Hindoo: Tarakanath Das, LeoTolstoy and Mahatma Gandhi” Gandhi – Information Zentrum; Berlin; Selbs tverlag; pp. 80 21. திருக்குறள் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருப்பினும் 19-20ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தமிழ், தமிழர் மறுமலர்ச்சிக்கு முன்னர் எந்தத் தமிழ் மன்னனும் அரசும் குறளைப் பின்பற்றியதாக எந்தக் கல்வெட்டும், செப்பேடும் குறிப்பிட்டதில்லை’ மாறாக வேத நெறி வழுவாதும் “ஒரு குலத்துக்கொரு நீதி” கூறும் மனுஸ்ம்ருதி போன்றவற்றைப் பின்பற்றியும் ஆண்டதாகவே கல்வெட்டுகள் போன்றவற்றில் தமிழ் மன்னர்கள் பீற்றிக் கொண்டனர்! சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 22. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சாதாரண மக்களைக் காவியத் தலைவியராகக் கொண்டவை; தனித் தன்மை வாய்ந்தவை. இவ்விரு காவியங்களின் காலம் கி.பி. 350- 450 ஆகலாம் என்பர் சுவெலபில் (1995). காஞ்சிபுரத்தில் கி.பி. 5ம் நூற்றாண்டில் வசித்த திக்ஞானர் சம்ஸ்கிருதத்தில் நியாயப் பிரவேச என்னும் அளவை நூலை எழுதினார். அந்நூலுக்கும் மணிமேகலையின் சில பகுதிகளுக்கும் நெருங்கிய ஒப்புமை இருப்பதால் மணிமேகலையின் காலத்தை கி.பி 5ம் நூற்றாண் டுக்குப் பின் தள்ளுகிறார் வையாபுரி. ஆனால் மணிமேகலையை ஆங்கிலத்தில் பெயர்த்த ஆலன் தானியலோ (Alain Danielou) இக்கருத்தை மறுத்து தமிழர் அளவை நூற்கருத்துக்களையே மணிமேகலை ஆசிரியரும், திக்ஞானரும் பயன்படுத்தியிருக் கலாம் என்றும் மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின தாக இருக்கலாம் என்றும் கருதுகிறார். 23. சங்க இலக்கியம் பற்றி விரிவாக இவ்வியலிலும் பிற்கால இலக்கியங்களில் சிறந்தவை பற்றிச் சுருக்கமாகப் பின் இயல்களிலும் தந்துள்ளதற்குக் காரணம் உண்டு. ஷெல்டன் போலக் (2003) கூறுவது போல் ஒரு நாட்டின் (அல்லது ஒரு நிலப்பரப்பின்) தனித்தன்மையையே அதன் மொழியும் அம்மொழியின் இலக்கியமும்தான் நிர்ணயிக்கின்றன என்பதே அது. அவர் கூற்று வருமாறு: தென் ஆசியா / இந்தியா / வங்காளம் ஆகியவை முறையே தென் ஆசிய / இந்திய / வங்காளி இலக்கியத்தை உருவாக்கின என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை: அந்தந்த இலக்கியங்களே அந்தந்த நிலப்பகுதிகளை ஆகியவற்றை உருவாக்கின” என்பதும் ஆகும். ஒரு நிலப்பகுதியின் உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டிப் பரப்புவதன் மூலம் அப்பகுதியின் தனித்தன்மையை இலக்கியமே உருவாக்குகிறது; ஒரு நிலப்பகுதியின் தன்மை, அப்பகுதி மக்களின் நிதர்சன வாழ்க்கை ஆகியவையும் அப்பகுதியில் உருவாகும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று தாக்கம் விளைவிப்பவையாகும். Literature may have produced Bengal and India and South Asia as much as South Asia and India and Bengal have produced literature; that literary representation can conceptually organise space; and the dissemination of literary texts can turn that space into a lived reality, as much as space and lived realities condition conceptual organization and dissemination. p 27 of Pollock. 24. மேலே உள்ள பத்திகளில் குறித்த அறிஞர்களின் தொல் காப்பியம் / சங்க இலக்கியச் செவ்வியல் தன்மைச்சிறப்பு பற்றிய ஆங்கில மூலங்கள் வருமாறு; பிறமொழியாளருக்கு இக்கருத்துக் களை ஆங்கிலத்தில் தெரிவிக்க வசதியாக ஈண்டு ஒரே இடத்தில் தரப்படுகின்றன:- As a source book not only of grammatical and literary study but also of human goography, social anthropology, culture, ecology and psychology, Tholkappiam contains very valuable data, and its importance for the study of Tamil culture, and of cultures in general, can hardly be exaggerated. However one must beware of taking the literary conventions as a kind of direct report, or even worse, as an objective explicit and ‘scientific’ treatment of ‘real life’. In some works it was assumed that the bardic court-poetry reflected directly and with utmost fidelity and realism the conduct of men and women of that age in love and war. But the poetry, based on conventions, reflects ‘real life’ only obliquely, since a literary convention was a pattern of fictional (or ‘ideal’) behaviour. The poets and the theoreticians had a clear understanding of the relationship between ‘Real life’ and its reflection in literature, since they clearly differentiated between the two: ulakiyal valakku denoted things said and done in ‘real life’: Ceyyul valakku (or pulaneri valakku) denoted the practice in poetry of reflecting it. A literary convention is an agreement between writer and reader that certain themes will be represented in a certain way. The reader is thus truly able to appreciate the poet’s skill in handling a familiar theme by means of improvisation. The poetry of the ‘interior’ the subjective akam poetry is totally anonymous in the sense that akam poems never mention the hero or heroine by name, not in a single stanza. Hence they “embody what is typically human rather than what is merely individual and particular W.H.Hudson. An introduction to the study of literature, London. 1946.p97). The ‘objective’ external Puram poetry is partly impersonal. partly personal. Thus, e.g. the elegies are highly personal tributes to dead patrons and friends, genuine and spontaneous, expressing intimate and personal grief, “free from any conventional bucolic machinery” - K.V. Zvelebil (1974) Tamil Literature (in series: A History of Indian literature) Otto Harrassowitz. Wiesbaden. pp 35-36 “The discovery of this body of roughly 2300 verse (of Ettuthogai and Pathuppattu during 1880-1910) raised the Tamil language at one stroke from an insignificant neo-Indian Language to the standing of one of the great classical languages of the world. Whoever has made a more intimate acquaintance with this ancient poetry will readily subscribe to the assessment of the French Indologist Pierre Meille, when he states that this poetry is comparable with the choicest gems of old Greek lytical poetry, and that this ‘cycle of Sangam poetry’ represents one of the summits of literary creation in India and the whole world’ - K.V.Zvelebil (1960) NEW ORIENT (bi-monthly) 5, 1960pp 3. reprinted in Tamil Culture x-2: April-June 1963. “The Dravidians, and in particular, the Tamils have contributed a great deal to the cultural richness of the world: Pallava and Chola temple architecture, Chola bronze sculpture, the dance form known as Bharatanatyam the so called Carnatic system of music. But proba bly the most significant contribution is that of Tamil literature. which still remains to be “discovered” and enjoyed by the non-Tamilians and adopted an an essential and remarkable part of universal heri tage” - K.V. Zvelebil (1973) The smile of Murugan--on Tamil literature of South India; Leiden: E.J.Brill. Preface “The early Tamil poetry was rather unique not only by virtue of the fact that some of its features were so unlike everything else in India, but by virtue of its literary excellence, those 26350 lines of poetry promote Tamil to the rank of one of the great classical languages of the world--though the world at large only just about begins to realise it. “it is only the Tamil culture that has produced - uniquely so in India, an independent indigenous literary theory of a very high standard, including metrics and prosody, poetics and rhetoric” “there exist in India only two great specific and independent classical and historically attested cultures--the Sanskrit culture and the Tamil culture.” “Tamil literature is the only Indian literature which is both classical and modern; while it shares antiquity with much of Sanskrit literature, and is as classical, in the best sense of the word as for example the ancient Greek poetry, it continues to be vigorously living modern writing of our days. “Classical Tamil literature is literature is about and of people. but not a Volksliterature” - K.V. Zvelebil (1973) The smile of Murugan; pp 1, 4 “Life is condidered pleasent and joyful, death an inevitable end. There is no attempt to obtain release from life. Liberality and goodness are indulged in without motives of penance or recompense. About old age thereis a note of nostalgic resignation. “Life after death is represented as an abode of permanent happiness for the brave and good. and permanent suffering for the wicked. The happiness of future life is a reward of those who by their bravery and altruism established their glory (pukal) in this world. Love and courtship, marriage and children are considered necessary modes of personal perfection. If at all anything remains after death, it is the glory and honour, the praise due the memory of the days passed in heroism and in the service of fellow men.” - K.V.Z. (1974) Tamil literature otto Harrassovitz, p.44. “Ancient Tamil poetry is multivalent: it is so rich and comprehensive that it includes aesthetic structures and values which give high satisfaction to later ages and periods. It is conceived so that rather a community than a single individual could and can realize all its strata and systems. That is why it has survived generational tastes, and has acquired a permanent and universal position” - K.V.Z (1974) ibid pp 35-36 In the depth and width of erotic experience and in the conceptual framework of the entire phenomenal world, perceived as akam and puram, Tamil culture is unique andoriginal. And as. for the parallels between Tamil and Sanskrit literature-why must it always be presumed that it was the Tamil works that borrowed from Aryan?” - K.V. Zvelebil (1975) TAMIL LITERATURE (annals of Tamil literature, abstaining from value judgements) Leiden: E.J.Brill. p107 The ideal modern poem is expected to be objective, precise, organically complex and as well written as prose. Free from clichés an straddled adjectives, it should have the prose virtues of simplicity and hardness in a language charged with meaning to the utmost possible degree. xxxx A poem of indirection, yielding more than one layer of meaning, is a product of excellent craftsmanship. Tolka-- ppiyar’s insistence on the three aspects nokku, payan and eccam, is clearly indicative of his predilection for a poetry that works subtly, indirectly and sugge stively. Nokku demands every syllable, every word and every line to be in harmony with the poem as a whole. By payan is meant the implicit statement on the purpose of an object. Though eccam which is pf two types--colleccam and kurippeccam - interpreted in diverse ways by the commentators, it is used to avoid explicit complete statements and to exploit the suggestive potential of the minimum number of words employed in the poem. The concept of poetry as expressed in Tolhappiyar’s Porulathikaram and the practice of Sangam poets as evidenced in the still cherished anthologies would reveal that the ancient Tamils had a poetics of the lyric which Elder Olson was looking for but could not find in the well known languages of the world. (Elder Olson:1962 “Sailing to Byzantium; Prolegomena to a poetics of the lyric” in Willbur Scot (ed) FIVE APPROACHES OF LITERARY CRITICISM; London-Macmillan.) - P. Marudanayagam; CHEMMOZHI I - 2 Jan-Mar 2007 “First, Tamil is of considerable antiquity. It predates the literature of other modern Indian languages by more than a thousand years. Its oldest work, the Tolkappiyam, contains parts that, judging from the earliest Tamil inscriptions, date back to about 200 BCE. The greatest works of ancient Tamil, the Sangam anthologies and the Pattupattu, date to the first two centuries of the current era. They are the first great secular body of poetry written in India, predating Kalidasa’s works by two hundred years. “Second, Tamil constitutes the only literary tradition indigenous to India that is not derived from Sanskrit. Indeed, its literature arose before the influence of Sanskrit in the South became strong and so is qualitatively different from anything we have in Sanskrit or other Indian languages. It has its own poetic theory, its own grammatical tradition, its own esthetics, and, above all, a large body of literature that is quite unique. It shows a sort of Indian sensibility that is quite different from anything in Sanskrit or other Indian languages, and it contains its own extremely rich and intellectual tradition. “Third, the quality of classical Tamil literature is such that it is fit to stand beside the great literatures of Sanskrit, Greek, Latin, Chinese, Persian and Arabic. The subtlety and profundity of its works, their varied scope (Tamil is the only premodern Indian literature to treat the subaltern extensively), and their universality qualify Tamil to stand as one of the great classical traditions and literatures of the world. Everyone knows the Tirukkural, one of the world’s greatest works on ethics; but this is merely one of a myriad of major and extremely varied works that comprise the Tamil classical tradition. There is not a facet of human existence that is not explored and illuminated by this great literature. “Finally, Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition. I have written extensively on the influence of a Southern tradition on the Sanskrit poetic tradition. But equally important, the great sacred works of Tamil Hinduism, beginning with the Sangam Anthologies, have undergirded the development of modern Hinduis. Their ideas were taken into the Bhagavata Purana and other texts (in Telugu and Kannada as well as Sanskrit), whence they spread all over India. Tamil has its own works that are considered to be as sacred as the Vedas and that are recited alongside Vedic mantras in the great Vaishnava temples of South India (such as Tirupati). And just as Sanskrit is the source of the modern Indo- Aryan languages, classical Tamil is the source language of modern Tamil and Malayalam. “The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to any one who knows the subjects” - George L. Hart (April 11, 2000) “Tamil is one of only a tiny number of languages in the world with a recorded history of more than two millennia. It has a central position in one of the world’s largest language familites, and no matter from where one enters on the study of comparative Dravidian, early acquaintance with Tamil, its history and its early grammars is imperative. It has a literary heritage which is unsurpassed the world over and fully deserving of the efforts of translation to make it widely known” -R.E. Asher South Indian Horizons: Gros 70th Birth day Felicitation Volume 2004. இயல் 4க்கான நூற்பட்டியல் (இவற்றுள் பலவற்றில் கிபி 300க்குப் பிந்திய காலச் செய்திகளும் உள்ளன. அந்நூல்களை பின் இயல்களின் நூற்பட்டியலில் சேர்க்கவில்லை) Allchin, Bridget and Raymond. 1998 The birth of civilization in India and Pakistan; Cambridge University Press. Appadurai, K. 1983. Kongu Tamilaka Varalaru. Arokiaswami M. 1967. The Classical age of the Tamils. University of Madras. Arunachalam, M. 1974. A introduction to the history of Tamil Literature. 1980. Later evidence on Music in the Cankam period Journal of Tamil Studies. 17: June 1980; International Institute of Tamil Studies; Chennai. 1989. Musical Tradition of TamilNadu. Basham, A.L. 1951. The History and doctrines of the Ajivakas; London. 1954. The Wonder that was India; London. 1975. A Cultural History of India; London. Bayly, Susan (1999) Caste, Society and Politics in India from the 18th Century to the Modern Age (The New Cambridge History of India Vol IV-3) pp 421. Brockington, J.L. 1981. The Secred thread – Hinduism in its continuity and diversity. Bryant, Edwin F and Laurie Patton (Eds) 2005 The Indo Aryan Controversy : evidence and inference in Indian History: London: Routledge Caldwell, Rev Robert. 1881. A political and general history of Tinnevelly district. Champakalakshmi, K. 1996. Trade, ideology and Urbanization: South India, 300 B.C. to Ad 1300. Chelliah J.V. (1946) Pathupattu - Ten Tamil Idylls pp.370; Tamil University Reprint 1985. Chellam, V.T. 1998 (Revised). Tamilaka Varalarum Panppadum; Chennai Manivasagar pathippagam. Chitrampalam, Ci.Ka. 1999. (Revised) Pandaiya Tamilagam; Kumaran; Chennai-26. Cohn, Bernard, 1987. An Anthropologist among the historians: CUP Delhi. Dandekar, R.N. 1979 Vedic Mythological tracts. Danielou, Alain (1965) The Ankle Bracelet; New york Dhanda, R.C.2001. Hariappan origin of Hinduism. Dhandapani Desikar, Sa 1965.Canka Ilakkiya corkalanjiam (uyir eluttukal) pp 250; Thiruvavaduthurai Adheenam. Dani, A.H. and other (Edrs). 1996. - see under ch-1. Deivanayagam, K(2002) Tamilar Kattidakkalai; I.I.T.S. Devaneyan, G. 1972. Tamilar Varalaru De Laet, S.J. and others (Edrs) History of Humanity: vol I Routledge UNESCO Deraniyagala, S.U. (2004) A bridge to India; Frontline: 18.6.2004 Devasiruatham 1977/2000 Muvendhar Yaar Thanjavur. Dirks, Nicholas. 1972 “Castes of mind” Representations, 37; Winter 1992. Dorai Rangaswamy. 1948 MOL thesis. The surnames of the Sangam age, literary and tribal. (published only in 1968; University of Madras.) Dube, Ishita Banerji 2008 Themes in Indian History; Caste in History; OUP Dubois, Abbe J.A. 1806. Hindu Manners, customs and ceremories. Ellis, F.W (1819 or so) Tirukural: Ellis commentary (1955 reprint Ed R. P. Sethu pillai) Elmore. 1915. Dravidian Gods in Modern Hinduism; Hamilton, New York. Ehrenfels, U.R. (1952. “Ancient South India and her cultural contacts” Journal of the Annamalai University; Vol 17. Fairservis, Walter A. 1971. The roots of Ancient India. Garrat, G.T. (1937) The Legacy of India; Gazeteer Unit, Ministry of Education. 1965. Vol I. The Country and the pople; pp 652. Goswami, G. 1957. The story of Indian music - its growth and synthesis; Asia Publishing House.. Hanumanthan, K.R. 1979. Untouchability a historical study upto 1550 A.D. with special reference to TamilNadu; Madurai. (Article in The Indian Historical Review XX III 1-2 July 1996-June 1997. Hart, George L (1975) The poems of ancient Tamil: their milieu and their Sanskrit counterparts. (1999) with co-author Hank Heifetz) The Four hundred poems of war and wisdom; New York. Columbia ppxxxvii; 397 Hellman-Rajanayagam, Dagmar. (1995). “Is there a Tamil race” in Peter Robb (Ed). The concept of race in South Asia. Hutton, J.H. 1961. Caste in India. Ilankumaran, R. 1993. Tamilisai Iyakkam; Manivasagar Pathip pagam, Chennai. Inden, Ronald. 1986. Orientalist constructions of India.Modern Asian Studies; 20-3; pp 401-46. Jaiswal, Suvira. 1974. “Studies in the social structure of the early Tamils” in R.S. Sharma(Ed) Indian Society: Historical Probings in memory of D.D. Kosambi; New Delhi. Jayalakshmi, Salem S. 2003. The history of Tamil Music; University of Madras. Kailasapathy, K. 1978. Tamil Heroic poetry. Kanakasabhai Pillai, K. 1904. The Tamils 1800 years ago. (K. Appadorai’s Tamil translation – 1956, SISSW-updates it to 1956) Kannan, M and Carlos Mena 2006. Negotiations with the past. classical Tamil in contemporary Tamil Pondichery. Kasinathan, Natana (1996) Mutharayar. (2006) Date of Early Tamil Epigraphs; JTS June 2004. Keay, John. 1973. Into India; London. 1981/2001. India discovered, the recovery of a lost civilisation. 2000. India, a History; Harper Collins; London. Kosambi, D.D. 1956. An introduction to the study of Indian history. 1965. Ancient India, a history of its culture and civilization. Krishnamurthy R. 1987. Pandiar Peruvaluthi Nanayangal. Krishnan, P. 1984. Tamil Noolkalil Tamil moli, Tamil inam, Tamil Nadu Krishnaswamy Iyengar, S. 1918. Beginnings of South Indian History. Lehman, Thomas and Thomas Malten. 1993. A word Index for Sankam Literature - Institute of Asian Studies, Chemmancheri. Levin, G.M. Bongard, 1986. A Complex study of Ancient India, Mahadevan, I. 2003. Early Tamil Epigraphy, from the earliest times to the 6th century A.D. Harvard University. Majumdar, R.C. (Ed) 1951. The Vedic Age (Vol I of the 10 Vol . History and Culture of the Indian people. Bharatiya Vidya Bhavan. Maloney, Clarence. 1970. The beginnings of civilisation in South India pp 603-16 of The Journal of Asian Studies Vol 29. 1975. “Archaeology in South India: accomplishments and prospects in Burton Stein. Essays on South India. Hawai. Manickam, Va Suba (1962) Concept of love in Sangam literature. Manickam, S. 1993 (II Edn) Slavery in the Tamil county. C.L.S. Madras. Manickavasagam Pillai 1966. “Population of Tamilaham during the Sangam age” in Proceedings of the First International Conference – Seminar of Tamil Studies, Kualalumpur (published in April 1969) Marr, J.R. 1985. The eight anthologies” (1958 Ph.D. thesis). 1975. “The Early Dravidians” in A.L. Baham: A Cultural History of India. Marshall, Sir John, 1934. Monhenjodaro and The Indus Civilisation. Maraimalaiyadigal. 1903. Mullaipattu Araychiyurai; Madras. (He was then called N. Vedachalam Pillai.) 1923. Tamilar Nagarikam allatu Velalar Nagarikam. 1930. Manickavasagr Varalarum Kalamum. 1941. Tamilar Madham. Murugan, (2000) Tolkappiyam in English xxiii, 688, Institute of Asian Studies Narayanan M.G.S. 1994. Foundations of South Indian society and culture Delhi. Nedunchezhian, K. 2000. Tamilar Iyankiyal. 2006. Sanga kala Tamilar Samayam. 2006. Tamilarin Adyalangal. Nelson J.H. 1878. The Madura country, a manual Nilakanta Sastri, K.A. 1929. The Pandyan Kingdom. 1955. (II Edn). The Colas. 1972. Sangam literature – its cults and culture. 1976. (IV Edition) A history of South India. Oliver, Georges. 1961. Anthropology des Tamoules du sud inde; Paris. Parthasarathy, R, (1993) The Cilappathikaram of Ilanko - an epic of South India (New York: Columbia) Pate, H.R. 1917. The Tinnevelly Gazeteer. Pearson, Michael. 2003. The Indian Ocean; Routledge. Piggott, Stuart, 1950. Prehistoric India down to 1000 B.C. Pillai K.K. 1955. Narrinai in its historical setting. 1996. Aryan influence in Tamilakam during the Sangam epoch. Tamil Culture XII 2-3 1969. A Social history of the Tamils. 1975. (II Edn). South India and Srilanka. 1977. The caste system in Tamil Nadu. Journal of Madras University XLIX-2 pp 43-139. Pollock, Sheldon, 2003. Literary cultures in History - reconstructions from South Asia; OUP Ponniah, S.M. (1997) Tamil poetry through the ages: Vol I The Eight Anthologies; Institute of Asian Studies Pope, George Uglow (1886) The sacred Kural of Thiruvalluva Nayanar Purnalingam Pillai, M.S. 1926. Tamil India. Purushotham, V.P. 1989. Sanga Kala mannar Kala Nilai Varalaru. Rabin, Chain 1968. Loan word evidence in Bibilical Hebrew for trade between TamilNadu and Palestine in first millennium B.C.; Proceedings of first International Conference - Seminar of Tamil Studies 1966. Ramachandran, C.E. 1972. Akananuru in its historical setting. University of Madras. Ramachandran, K. 2004. Ulaga Molikalil Tamil Chorkal: SISSW Rajamanicham M 1963. Tamil Moli Ilakkiya Varalaru. Rajan, K. 2004. Tolliyal nokkil Tamilakam, IITS; Chennai. 2005. The emergence of Early historic period in Tamil Nadu.Proceedings of Tamil Nadu History Congress; 12th Session, Mayiladuthurai. 2007. The earliest hero-stones of India. I.J.D.L., Thiruvananthapuram, XXXVI-1 Jan 2007. Ramachandra Dikshitar, V.R. 1930. Studies in Tamil Literature and history. 1947. The origin and spread of the Tamils [Tamil version, with introductory update by P. Ramanathan: 2006; Tamil Mann Pathippagam] Raman, K.V. 1977. Pandiyar Varalaru. Tamil Nadu Text Book Society Ramanathan, P. 1967. Irunkovel and Kottai Velalar, the possible origins of a closed community. Bulletin of the School of Oriental and African Studies, University of London, xxxii-2; June 1969. 1984. Australia Palangudi makkalin molikalum Tamilum, Centamil Celvi; May 1984 1994. Dravidar Uravu murai; Tamil Polil, Thanjavur May- June 1991. 1998. A new account of the History and culture of the Tamils; Chennai SISSW Publishing society. 1999. Cintu veli tol Tamila Nagarikam 2002. Situating Indus Valley civilization in the prehistory of India. PILC Journal of Dravidic Studies; 12: 1-2; Pondicherry. 2003. Direction of movement of Dravidian speakers in prehistoric times, Dravidian Studies (Kuppam) 1-3 April – June 2003. 2004. Original home of Dravidian speakers in prehistoric times and the history of their spread: new light from linguistics and from recent findings on the origin and spread of Homo Sapiens Sapiens Proceedings of 11th session of Tamilnadu History Congress; Kanchipuram. 2004. Introduction to Devaneyan (2004): Nostratics the light from Tamil according to Devaneyan. SISSW, Chennai. 2006 Sangam literature in its historical setting: Certain aspects from a contemporary perspective Indian Historical Studies II-2; April 2006 (Paper read at Tamil Nadu History Congress 12th session, Mayiladuthurai 2005). 2007. Thonmai Chemmozhi Tamil; Tamil Mann, Chennai-17. 2008 Nostratics - Gnana Mutal moli Aayvugalukku Pavanar tharum oli; IITS; chennai. Ramanujan, A.K. 1969. The Interior Landscape. 1985. Poems of love and war. Rapson, E.J. 1992, Cambridge History of India; Vol I Rhys-Davids, T.W. 1903, Buddhist India. Samy, P.L. 1975. Tamil Ilakkiathil Thaai Theiva Valipadu; NCBH. Sarangapani R (1986) Canka Ilakkia Porulkalanjiam (7 Vols) Tamil Universtiy. Schwartzberg. J.E. (1992 II) A historical Atlas of South Aisa; New york. Shanmugam, Kodumudi S. 1980. Kol (a basic unit 84 cm/33 inches) of the linear measurement of the ancient Tamils Journal of Tamil Studies: IITS; No 17; June 1980. Shanmugam, Pa. 2003. Sanga Kala Kasugal; IITS; Chennai. Shanmugam pillai M. 1998. Sanga Tamilar Valviyal Sesha Iyengar 1925. The ancient Dravidians. Sesha Iyer, 1937. Chera Kings of the Sangam Age; London, Luzac. Shantisudhana 2001. Varalarru Murai Tamil ilakkiya perakarathi (7 vols); chennai - 28. Singaravelu S. 1966. Social life of the Tamils. Singh, K.S. (2000) People of India vol I Introduction; Vol XL: Tamil Nadu. (Anthropological Survey of India). Sivaraja Pillai, K.N. 1930. Agastya in the Tamil land. 1932. The Chronology of the early Tamils. Swathambi, Kartigesu (1986). Literary History in Tamil; a historiographical Analysis. Thanjavur. Sjoberg, Ms Andree F. (1990) The Dravidian contribution to the development of Indian civilisation: a call for reassessment Comparative Civilizations Review; Vol 23; pp 40-74. Slater, Gilbert 1924, The Dravidian element in Indian culture. Smith, Vincent 1958 (III Edition edited by Percival Spear) The Oxford History of India. Part I: Ancient and Hindu India, revised / rewritten by Sir Mortimer Wheeler and A.L. Basham; Oxford University Press; IV Edn 1981. Srinivasa Iyengar, M. 1913; Tamil Studies. Srinivasa Iyengar, P.T. 1913. The myth of the Aryan Invasion of India, Indian Antiquary, 42, pp 77-88. 1913, July: Note on a reading in Kumarila Bhatta’s Tantra Varttika (correcting as “Tadyatha dravidadibhashayam eva” the blundering reading “Andhradravidabhasayam” given by A.C. Burnell in Indian Antiquary Vol I, 1872) Indian Antiquary 42, pp 200-1. 1912. Life in Ancient India in the Age of the Mantras. 1924. The past in the present. 1927. The Stone age in India. 1929. History of the Tamils from the earliest times to 600 AD. (Tamil translation with updating forward by P. Ramanathan published in 2007 by Tamil Mann Pathippagam). 1942. Advanced history of India - Hindu Period till 900 A.D. (2007 reprint) Stein, Burton, 1998. A History of India; Blackwell, Oxford. Subrahmanian, N 1966/1980. Sangam Polity. 1966. Pre-Pallavan Tamil Index 1989. The Brahmin in the Tamil country. 1997. Tamil Social history Vol I. 1998. (VI Edn) History of TamilNadu to AD 1565 Subramanian, T.N. 1938. Pandai Tamil Eluttukal. Subramania Pillai, Ka. 1927 Ancient Tamil scriptures. The Madras Christian College Magazine (Quarterly Series) Vol. VII Jan 1927 pp 7-12. (later expanded in Centamil Celvi, 1929. and reprinted in 1989 as “Thirunanmarai Vilakkam” by “Tamil Ka. Su Memorial Literary Assn” Kulittalai. 1939 Moli Nool Kolkaiyum Tamil moli amaippum. 1940. Thamilar Samayam. Suriyanarayanan, L. 1998. Tamil Nattu Varalarril Ilakkiya Adharangal, ITTS. Tamilannal. 1985. Puthiya Nokkil Tamil Ilakkiya Varalaru. 2004. Ulagat Tamil Ilakkiya Varalaru – thonmai mutal ki.p. 500 varai; IITS. Tamilaha Arasu Varalarru Kuzhu 1972. Tamil Naattu Varalaru – Tolpalankalam. 1983. Tamil Nattu Varalaru – Sanga Kalam, Araciyal and Vaalviyal (two vols). Thangavelu, K. 2002. Thaai Nila Varalaru; Tamil Mann Pathippagam. Thangamani; Rajasekara 1978. Pandiar Varalaru pp. 712; T.Nadu Text Book Society. ThaniNayagam, Xavier S 1953/1966 Nature in ancient Tamil poetry, reprinted in 1997 as Landscape and poetry. (I.I.T.S) 1964. Tamil culture and civilization – Readings. Thapar, Romila. 2002. Early India from the origins to AD 1300. University of California Press / Penguin. Thirunavukkaracu, Ka. Tha. 1972. “Inamarapu” at pp 51-136 of Tamil Nattu Varalaru – Tolpalankalam. 1987. Thenkilakku Asia nadukalil Tamil Panpadu; IITS. Thurston, Edgar 1909. Castes and Tribes of Southern India. Trautmann, Thomas R 1981 Dravidian Kinship; Cambridge University Press. Tyler. S.A. 1973. India, an Anthropological perspective. Upinder Singh 2007. A history of ancient and early medieval India, Delhi: Pearson - Longman. Vaiyapuri Pillai 1956. History of Tamil language and literature. Varadarajan, Mu. 1972. Tamil Ilakkiya Varalaru. Venkatasubramaniyan, T.K. 1988. Environment and urbanisation in early Tamilagam; Tamil University, Thanjavur. Venkataswami, Mayilai Seeni 1940. Bauddhamum Tamilum. (Third revised edition 1957) 1954. Samanamum Tamilum. 1956. Tamilar Valartha Alagu Kalaigal. 1970. Sanga kala varalarril cila ceythigal. 1974. Palankala Tamilar Vanigam; NCBH. 1974. Kalappirar Atchiyil Tamilagam. 1981. Sanga Kalathiya Brahmi kalvettugal. Vijayalakshmi, R. 1988. Tamilagathil Ajivakarkal; IITS, Chennai. Vithiananthan, Cu. 1971. Tamilar Caalpu. Warmington, E.H. 1928. Commerce between the Roman Empire and India. Whitehead. 1916. The village Gods of South India; OUP. Wilden. Eva. 2002. Towards an internal chronology of old Sangam literature OR how to trace the laws of a poetic universe. Wienn Zeitschrfit Morganlandish Gescelschaft. (Vienna Journal of Oriental Studies) Austria. 2006 Literary techniques in old Tamil Cankam poetry: The Kuruntokai Wiesbaden, Harassovitz Verlag pp. 447 2008 Narrinai - a critical edition and an annotated translation (3 vols) Tamil Mann Pathippagam; Chennai-17. and EFEO Pondichery. Wolpert, Stanley. 1982. A new history of India. 1991. An introduction to India. Zimmer, Herinrich (1951) Philosophies of India. Zvelebil, Kamil. V. 1972. “The descent of Dravidians International Journal of Dravidian Linguistics. I-1 pp 57-63. 1973. The smile of Murugan, On Tamil literature of South India E.J. Brill, Leyden. 1974. Tamil literature, Otto Harassowitz, Weisbaden. 1975. Tamil Literature, E.J. Brill, Leyden. 1986. Literary conventions of Akam poetry, Institue of Asian Studies, Chemmancheri. 1990. Dravidian linguistics – an introduction. 1991 Tamil traditions on Subrahmanya Murugan; Madras; Institute of Asian Studies. 1991. Comments on the Tholkappiyam theory of literature, Archiv Orientalni, 59; 345-359. 1992. Companion Studies to History of Tamil Literature. E.J. Brill. 1995. A Lexicon of Tamil literature.E.J.Brill. இயல் 5 களப்பிரர் கால தமிழகம் (கி.பி. 300-600) நம் நாட்டு வரலாற்றிலும் சரி பிறநாட்டு வரலாறுகளிலும் சரி சில நிலப்பகுதிகளின் சில கால வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்து ஓரளவுக்காவது தெளிவாக விரிவாகக் கூறுவதற்கான சான்றுகள் கூடக் கிடைப்பதில்லை. அக்காலங்களைச் சிலர் இருண்ட காலங்கள் என்பர். சில எடுத்துக்காட்டுகள் வருமாறு: i) கி.மு. 1700க்குப் பின் சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகம் ஏன் முற்றிலும் அழிந்தது? எப்படி? ii) சீனாவில் சௌ பரம்பரையினர் ஆண்ட கி.மு. 900- 300 காலத்தில் சிற்றரசர் மிகப்பலர் ஆண்டனர். ஆனால் விவரங்கள் தெரியவில்லை. iii) வடஅமெரிக்காவில் மெச்சிகோவில் கி.பி. 3-9 நூற்றாண்டுகளில் சிறந்து விளங்கிய மயா நாகரிகம் அதன் பின் அடியோடு அழிவுற்றமை. தமிழக வரலாற்றில் கி.பி. 300-600 காலத்தையும் அத்தகைய இருண்ட காலமாகப் பலரும் கருதுகின்றனர். களப்பிரர் காலத் தமிழக வரலாற்றைப் பற்றி விரிவான நூல் எழுதியுள்ளவர்கள் இரா. பன்னீர் செல்வம் (1973); மயிலை சீனி வேங்கடசாமி (1975); மு. அருணாசலம் (1979); நடனகாசிநாதன் (1981) ஆகியோர் ஆவர். 2. சங்க இலக்கியங்கள் குறித்துள்ள பாண்டிய சோழ சேர மன்னருள் மிகப் பிற்பட்டவர்கள் காலம் கி.பி. 250-300 அளவில் முடிவுற்றது. பிற்காலப் பாண்டியர் ஆட்சி கி.பி. 560-590இல் ஆண்ட கடுங்கோன் காலம் முதல் தொடங்கியது. பிற்காலச் சோழர் ஆட்சி விசயாலயன் (கி.பி. 848-881) முதல் தொடங்கியது. பல்லவ, பாண்டிய மன்னர்கள் ஆளுகையில் சோழநாடு கி.பி. 848 வரைத் தொடர்ந்ததால்தான் சோழ பரம்பரை கி.பி. 600 லிருந்தே பாண்டியரைப் போல மீண்டும் உயிர் பெற இயலவில்லை. 3. சங்க காலச் சேரசோழ பாண்டிய மன்னர்கள் தம்மிடையே இடைவிடாது போரிட்டு வலுவிழந்த நிலையில் கன்னட நாட்டவராகிய சிரவண பௌகொள வட்டாரத்து களிப்பு நாட்டுக் களப்பிரர் (=களப்பாளர்) ஏறத்தாழ கி.பி. 250ல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் வந்தேறிகளாக வந்து தமிழகத்தைக் கைப்பற்றி பாண்டிய சோழ சேர நாடுகளை கி.பி. 575 வரை ஆண்டனர் என்பர் ம.சீ. வெங்கடசாமி. கே.ஆர். வேங்கடராமன் (1956-57); க.அ. நீலகண்ட சாத்திரி, ந. சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், காசிநாதன், அருணாசலம் ஆகியோரும் இக்கருத்தினரே. பாண்டிய நாடு முழுவதையுமோ சோழநாடு முழுவதையுமோ களப்பிரர் முழுமையாகத் தம் ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகக் கூற இயலாது என்பர் அருணாசலம். களப்பிரர் கன்னடர் என்பதற்குச் சான்றுகள் வருமாறு. ‘கானக் கடிசூழ்வடுகக் கருநாடர் மன்னன்’ - திருத்தொண்டர் புராணம் மூர்த்தி நாயனார். “மதுரை வவ்விய கருநடர் வேந்தன்” - கல்லாடம் 4. பி.ஜி.எல். சுவாமி (1976) கருத்து “களப்பிரர் படை யெடுப்பு” என்பது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் (கன்னடிய) கங்க அரசர்களுடைய ஒருபடை திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் இடைப்பட்டதான பாண்டிய நாட்டின் ஒரு சிறு நிலப் பகுதியைக் கைப்பற்றி ஒரு சில ஆண்டுகள் ஆண்டதைக் குறிப்பதுதான் என்பதாகும்! அக்கருத்தை அருணாசலம் மறுத்துள்ளார். களப்பிரர் தமிழரே என்று கருதிய எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், மு. இராகவையங்கார் (1930); பி.டி. சீனிவாச ஐயங்கார் (1929) க.ப. அறவாணன் (1974) முதலியவர்கள் கருத்தும் இன்று ஏற்கப்படுவதில்லை. 5. களப்பிரர் அரச குலத்தவர் அல்லர்; கொள்ளை தேடி வந்த இனக்குழுவினரே (merely a sort of marauding tribe)என்பர் அருணாசலம். கன்னட நாட்டிலிருந்து வந்த களப்பிரருள் சாமானியர் பேசியது பழங்கன்னடமாக இருந்திருக்கும் (அதுவும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த - அக்காலத் தமிழிலிருந்து அதிக வேறுபாடு இல்லாத பழங்கன்னடமாக இருந்திருக்கும்). களப்பிரருள் ஆளும் வர்க்கத்தினர் சமணர். சமணத்துறவிகளும் படித்தவர்களும் அர்த்தமாகதி மொழியைப் பயன்படுத்திய தாகத் தெரிகிறது. எனவேதான் ஞான சம்பந்தர் தேவாரத்தில் (3:39:4) “மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என்று சமணரைப் பழிக்கிறார். 6. தமிழகத்தில் களப்பிரர் கை ஓங்கி இருந்த காலத்தில் பழைய சேர, சோழ, பாண்டிய வேந்தர் பரம்பரையினர் அவர்களுக்குக் கீழ் அடங்கிச் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும் என்பர் வேங்கடசாமி. களப்பிர மன்னர்கள் பெயர்கள் தெரியவில்லை. கி.பி. 10ஆம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் வெண்பா ஒன்று களப்பாளன் போர் வெற்றியைப் புகழ்கிறது. அதே விருத்தி யுரையானது அச்சுத களப்பாள அரசன் சேர சோழ பாண்டியவேந்தர்களைத் தளையிட்டபோது அவனைப் பாடியனவாக நான்கு வெண்பாக்களையும் தருகிறது. களப்பிர மன்னர் அனைவரும் அச்சுதன் என்னும் பொதுப் பெயர் தரித்தனர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டுப் பூதமங்கலத்தில் பௌத்த விகாரையில் தங்கியிருந்த பொழுது புத்த தத்த தேரர் வினய விநிச்சயம் நூலை எழுதினார். அந்நூலும் “களப்ப (களப்பிர) குலத்திற் பிறந்த அச்சுத விக்கந்தனைக்” குறிக்கிறது. களப்பிர அரசர் அனைவருமே வைணவப் பெயரான அச்சுதன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தனர் என்றும் ம.சீ.வே. கருதுகிறார். எனினும் களப்பிர அரசர் பலர் சமணராகவும் இருந்துள்ளனர். 7. அக்காலத்தில் இலங்கைச் சிங்கள வேந்தர் அரசில் நிலையற்ற தன்மை இருந்தது என்பதை சூலவம்சம் காட்டுகிறது. கி.பி. 436-463 ஆண்டுகளில் இலங்கை அரசைப் பாண்டியர் பரம்பரையில் வந்த பாண்டு (= பாண்டியன்) 436-441 என்பவன் கைப்பற்றி அவனும் அவன் மகன்கள் இருவரும் (441-460) ஆண்டனர் என சூலவம்சம் கூறுகிறது. களப்பிரருக்கு அடங்கியிருந்த பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்த ஒருவனே அந்த பாண்டு ஆக இருக்கலாம் என்பர் ம.சீ. வே (அந்நூல் இயல் 3). கி.பி 494-515இல் ஆண்ட சிங்கள மன்னன் மொக்கல்லாநன் I. அவனுக்கு முன்னர் ஆண்ட கஸ்ஸபன் I அவனைத் துரத்திய தனால் மொக்கல்லாநன் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்ததாகவும் அப்பொழுது நிகந்தர்கள் (=சமணர்) உடன் தொடர்பு கொண்டு இலங்கை சென்று கஸ்ஸபனை வென்ற தாகவும் சூலவம்சம் கூறுகிறது. அந்த நிகந்தர்கள் தமிழகக் களப்பிர அரசராக இருக்க வேண்டும் என்பர் ம.சீ.வே. 8. அச்சுத விக்கந்தன் காலத்தில் உறையூரில் இருந்து சோழநாட்டின் ஒரு சிறுபகுதியை ஆண்டு வந்த சோழன் செங்கணான் (இவன் புறநானூற்றில் வரும் செங்கணான் அல்லன்; பிந்நாளில் அப்பெயர் கொண்டு ஆண்டவன் “எண்தோளீசர்க்கு எழில்மாடம் எழுபது செய்தான்” என்பர் அருணாசலம்.) இவனைத் திருமங்கையாழ்வார் பாராட்டுகிறார். களப்பிரர் ஆதிக்க காலத்தில் சோழ அரச குலத்தினர் சிலர் ஆந்திர நாட்டுக்குச் சென்று இந்நாள் கடப்பை கர்நூல் பகுதிகளில் “இரேனாட்டுச் சோழர்” என்ற பெயரில் பல நூற்றாண்டுகள் ஆண்டு வந்தனர். தெலுங்கில் “சோழர்” என்பது “சோடர்” என மாறிவிட்டது. இது வேங்கடசாமி, அருணாசலம் இருவர் கருத்தும் ஆகும். 9. சுந்தரர் திருத்தொண்டத் தொகை யில் “கூற்றன் களந்தைக்கோன்” என்று அழைக்கும் மன்னனை நம்பி யாண்டார் நம்பி திருத்தொண்டர் அந்தாதி யில் ‘களப்பாளன் ஆகிய கூற்றுவன்’ என அழைக்கிறார்; (களந்தை இன்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள களப்பால் ஆகும்.) வேங்கடசாமி போன்றோர் கூற்றுவநாயனாரைக் களப்பாளர் குலத்தவர் என்று சொல்வதற்கு ஆதாரமில்லை. களந்தையை ‘களப்பு’ எனத் திரிந்து ‘களப்பாளன்’ = களந்தையை ஆண்டவன் என்று உன்னித்துக் கூறினர். கூற்றுவர் களப்பாள குலத்தவர் என சுந்தரரும் கூறவில்லை; நம்பியும் கூறவில்லை. ஆகவே கூற்றுவ நாயனார் களப்பிரர் அல்லர், என்பர் அருணாசலம். 1 0 . பி ற்கால த் தி ல் தமிழக வ ரலாற்றி ல் வரு ம் களப்பாளராயர், நெற்குன்றம் கிழார், அச்சுத களப்பாளராயர் (சிவஞானபோதம் எழுதிய மெய்கண்டார் தந்தை) 13ஆம் நூற்றாண்டு சார்ந்த சில களப்பாளராயர்கள் ஆகியோரும் களப்பாளர் குலத்தவர் அல்லர். களப்பிரர் / களப்பாளரை கி.பி. 575க்குப் பின் அடக்க உதவிய “தமிழ்ச் சாதியினரே” களப்பாளராயர் எனப்பட்டவராவர் என்பது அருணாசலம் கருத்து. 11. கி.பி. 575ஐ ஒட்டி களப்பிரரிமிடருந்து பாண்டிய நாட்டைப் பாண்டியன் கடுங்கோன் மீண்டும் கைப்பற்றினான். “அளவரிய ஆதிராஜரை அகலநீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக்கொண்டதனை இறக்கியபின் .............. கடுங்கோனென்னுங் கதிர்வேற்றென்னன்” - பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 756-815) உடைய கேள்விக்குடி செப்பேடு. “களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோள் மாக்கடுங் கோன்” - பராந்தக வீரநாராயணன் (860-905) தளவாய்புரம் செப்பேடு. தங்களைக் களப்பிரர் தோற்கடித்த வெறுப்பில் பாண்டியர் அன்னாரைக் கலியரைசர் (தீய அரசர்) என இக்கல்வெட்டில் பழித்தனர் போலும்; மேலும் களப்பிரருக்கு சமண - புத்தர்களோடு இருந்த தொடர்புகளைத் தமிழக வரலாற்றாசிரியர் மிகைப்படுத்திக்கூறுகின்றனர். எனவேதான் களப்பிரர் “தீய அரசர்” ஆக்கப்பட்டுவிட்டனர் என்பர் பர்டன் ஸ்டெய்ன். சமணமத உந்துதலால் தான் பண்டைத் தமிழ். வேந்தரைக் களப்பிரர் வென்றனர்; பிராமணிய நிறுவனங்களுக்கு இக்கட்டு ஏற்பட்டது என்று நீலகண்ட சாத்திரி கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்பர் ஸ்டெய்ன். ‘All the Kings’s Mana: perspectives on medieval South India’ July 1974 Seminar paper published in J.F. Richard (Kingship and authority in South Asia; University of Wisconsin; Madison 1978.) கி.பி. 575ஐ ஒட்டி களப்பிரரிடமிருந்து சோழ நாட்டைப் பல்லவ சிம்மவிஷ்ணு கைப்பற்றிக் கொண்டான். 12. பிற்காலத்தில் முத்தரையர் என்று வழங்கிய குறுநில மன்னரும் களப்பிரரும் பொதுவான ஒரு குடியிலிருந்து பிரிந்து வளர்ந்தவர் என்பார் நடன காசிநாதன் (1976) களப்பிரர் சமயம் 13. களப்பிரர் சமயம் பெரும்பாலும் சமணம்; சோழ நாட்டைக் கைப்பற்றியவர்கள் மட்டும் பௌத்தம் என வேங்கடசாமியும் அருணாசலமும் காட்டும் ஆதாரங்கள் மறுக்கக் கூடியவையாகத் தோன்றவில்லை. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் - குறிப்பாக முன்னவர் – சமண பௌத்த சமயங்களைத் தம் தேவாரப் பதிகங்களில் கடுமையான வசவு மொழிகளால் தாக்குவதும், சமணரைக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் கழுவேற்றிய செய்திகளை சேக்கிழாரும் பிறரும் சாதனையாக மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதும் முக்கியமான ஆதாரமாகும். 14. பர்டன் ஸ்டெய்ன், 1978 ஆய்வுக்கட்டுரையில் கூறும் மற்றொரு கருத்து; ‘களப்பிரர் ஆதிக்கம் முடிந்தவுடன் தமிழ்நாட்டில் சமண மதத்தின் கதை முடிந்து விட்டது போல தமிழ்நாட்டினரான வரலாற்றாசிரியர் சுளுவாகக் கருதி விடுகின்றனர், மகேந்திரவர்மன் பாண்டிய வேந்தன் ஆகிய பெருமன்னர்களுடைய மதமாக இருந்த அதனை அவ்வளவு விரைவாக ஒழித்துக் கட்டியிருக்க முடியாது; அரசவைகளில் செல்வாக்கு போய்விட்டாலும் வேறு பல துறைகளிலும் (பண்பாடு இலக்கியம் உட்பட) தமிழ்நாட்டில் சமணச் செல்வாக்கு மேலும் சில நூற்றாண்டுகள் வலுவாக இருந்திருக்க வேண்டும்... ஆந்திர, கருநாடகப் பகுதிகளில் அச்செல்வாக்கு மேலும் சில நூற்றாண்டுகள் நீடித்தது’ என்பதாகும். தொண்டை நாட்டில் பல்லவர் 15. கி.பி. 300-600 கால அளவில் தமிழகத்தில் தொண்டை நாடு பல்லவர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தக் கால அளவில் அவர்கள் முதலில் (ஆந்திர சாதவாகனரைப்போல) பிராகிருதத்திலும் பின்னர் சம்ஸ்கிருதத்திலும் சில செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர். அக்காலப் பல்லவ அரசர்கள் வரலாற்றை எழுதப்போதுமான சான்றுகள் அச்செப்பேடுகளில் இல்லை. பல்லவ அரச பரம்பரை தோற்றம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன: சாகர் அல்லது பஹ்லவர் - பி.டி. சீனிவாச ஐயங்கார் இந்தியர் - கே.பி. ஐயஸ்வால், நீலகண்ட சாத்திரி நாகர் - எம். சீனிவாச ஐயங்கார் ஆந்திரப் பகுதியினர் - ஆர். கோபாலன்; சி. மீனாட்சி, டி.வி. மகாலிங்கம், ஒய். சுப்பராயலு. தமிழர் [(குரும்பர்/திரையர் (தொண்டையர்)] - இரா. ராகவையங்கார், ராச நாயகம், ஆர். சத்திய நாதையர்; என். சுப்பிரமணியன் (இவர்கள் கருத்துப்படி திரையர் என்னும் தமிழ மரபினர் வேங்கடத்துக்கு அப்பால் ஆட்சி நிறுவி, ஆந்திர சாதவாகனருக்குக் கீழ் சில காலம் ஆட்சி செய்து விட்டு, பின்னர் மீண்டும் தங்கள் தொன்மையகமான தொண்டை நாட்டுக்கு வந்து விட்டனர் என்பதாகும்.) சமுத்திர குப்தன் தனது அலகபாத் தூண் கல்வெட்டில் (கி.பி. 350இல்) கிருஷ்ணா ஆற்றங்கரையில் தான் போரில் வென்ற மன்னர்களில் ஒருவனாக “காஞ்சி விஷ்ணு கோபனை”க் குறிப்பிடுகிறான். பல்லவர் செப்பேடுகள் குறிப்பிடும் பல்லவ மன்னர்களில் விஷ்ணுகோபனும் ஒருவன். (கி.பி 600-900 கால அளவில் பல்லவர் ஆட்சி குறித்து அடுத்த இயலில் காண்க.) களப்பிரர் காலத்தில் தமிழ் இலக்கியம், கலைகள் 16. களப்பிரர் காலத்தில் சமணமும் பௌத்தமும் அரசின் ஆதரவுடன் வளர்ந்திருக்க வேண்டும். எனவே கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இவ்விரு சமயங்களை ஒழிக்க ஞான சம்பந்தர், நாவுக்கரசர் போன்றோர் பல கொடுமைகளைச் செய்ய வேண்டியதாயிற்று. களப்பிரர் கன்னடர் ஆகையால் அவர்கள் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆக்கம் அளித்ததாகத் தெரியவில்லை; எனினும் அவர்கள் ஆட்சிக் காலத்திலும் தமிழர் மொழியையும், இலக்கியத்தையும் நல்ல முறையில் வளர்த் தார்கள் என்று ம.சீ.வே. கருதுகிறார். அக்காலத்தில் எழுந்த முதன்மையான தமிழ் நூல்கள் என அவர் கூறுவது: கி.பி. நூற்றாண்டு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் (கி.பி. 250க்கு முற்பட்ட திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக் காஞ்சி 3-6 ஆகிய மூன்றும் நாலடியாரும் தவிர ஏனைய 14ம்) நாலடியார் 7 அவிநயம், காக்கை பாடினியம் 3-6 சீவக சிந்தாமணி 5-6 கொங்குவேள் பைசாச மொழியிலிருந்து பெயர்த்து எழுதிய பெருங்கதை 5-6 காரைக்காலம்மையார் நூல்கள் ” இறையனார் களவியல் ” முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இக்காலத்தனவே என்பர் பண்டாரத்தார். “பார்ப்பனர் தமது மேம்பாட்டை இழந்தனர் என்பதால்தான் (களப்பிரர்) காலத்தை இருண்டகாலம் என்று சொல்கின்றனர்” என்று மு.ரா. பெருமாள் முதலியார் (1985) கட்டுரையில் கூறுகிறார். 17. கி.பி. 600க்குப் பின்னர் சைவ வைணவ சமயங்கள் தழைத்த பொழுது களப்பிரர் காலத்திய சமண, புத்த சமயம் சார்ந்த தமிழ் நூல்கள் பல அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பர் வேங்கடசாமி. திருஞான சம்பந்தர் சமணருடன் நிகழ்த்திய அனல்வாத, புனல்வாதச் செய்திகள் இதைக் குறிப்பனவேயென்க. ஏற்கெனவே இதுபற்றி சார்லஸ் ஈ.கோவர் முதலியவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை சங்க இலக்கியம் பற்றிய பகுதியில் கண்டோம். 18. களப்பிரர் காலத்தில் புறப்பொருள் சார்ந்தும் அகப்பொருள் சார்ந்தும் சங்க காலத்திலிருந்து மாறுபட்ட புதிய கருத்துகள் உருவாயின. போரில் பகைவரைக் கொன்று பெறும் வெற்றியை விட ஐம்புலன்கள், காமம், வெகுளி முதலிய அகப்பகைகளை (அருகர், புத்தர் போல) வெல்வதே சிறந்த வெற்றி என்று புதுக் கருத்து சமண பௌத்த சமயங்களால் உருவாயிற்று. சைவ வைணவர்களோ மாந்தர் அகவொழுக் கத்தைவிட பக்தர்கள் ‘நாயகி - நாயக பாவத்தில்’ கடவுளை வழிபட மேற்கொள்ளும் தெய்வீகக் காதலே சிறந்தது என்ற புதுக்கருத்தை உருவாக்கினர். இதற்கு வகை செய்யவே இறையனார் அகப்பொருள் / களவியல் என்னும் புது இலக்கண நூலை எழுதினர். அக்களவியல் பற்றியும் அதற்கு சங்க காலத்துக்குப் பிந்திய இரண்டாம் நக்கீரர் உருவாக்கிய உரை பற்றியும் கதைகள் உருவாக்கப்பட்டன. இக்களவியலும் அதன் உரையும் இப்புதிய கருத்தை உருவாக்கிய பின்னர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் அப்பர், சம்பந்தர், ஆழ்வார்கள் போன்றோர் அகப்பொருள் துறையமைந்த பக்திப்பாடல்களை இயற்றினர். இது ம.சீ.வே. முடிவு ஆகும். 19. களப்பிரர் காலத்தில் தமிழ் மொழியும் இலக்கியமும் தாக்குண்டன; பின்னர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சைவ சமயத்தின் கை ஓங்கிய பின்னரே தமிழ் பழைய நிலையைப் பெற்றது என்பது அருணாசலத்தின் நிலை ஆகும்! அவருக்கு முன்னர் இது பற்றி எழுதிய சதாசிவ பண்டாரத்தார், ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றவர்கள் கருத்தும் இதுவே. பொதுவாக வரலாறு பற்றிய அறிஞர்களின் கருத்துகளைக் (மேலே இயல் 1) காண்பவர்களுக்கு இவ்விரு வகையினரின் முரண்பட்ட நிலை வியப்பைத் தராது. இசை, நாடகம், முதலியன வாழ்ந்தன, வளர்ந்தன என்பார் வேங்கடசாமி; வீழ்ந்தன என்பார் அருணாசலம்! 20. களப்பிரர் ஆட்சி நல்லதா, கெட்டதா என்ற வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறவில்லையே எனக் கருதலாம்! இத்தகைய சிக்கலான பொருண்மைகளில் அப்படிக் கூற இயலாது; கூறுவதும் சரியல்ல என்பதே சிறந்த வரலாற்றறிஞர் கருத்து ஆகும். இலட்சக்கணக்கான ஆவணங்களும் பல ஆயிரக்கணக்கான ஆதார நூல்களும் 1789 பிரெஞ்சுப் புரட்சி பற்றி இருக்கின்றன. இருந்தும் அப்புரட்சியின் தோற்றம், விளைவுகளைப் பற்றி இன்றைய நிலையிலும் கூடக் கறாரான முடிவுகளைக் கூற இயலாது என்பர் வரலாற்றறிஞர் ஜி.எம். டிரெவெல்யன். “இத்தகைய மிக முக்கியமான கடுஞ்சிக்கலான விஷயங்களைப் பற்றி “இது தான் வரலாற்றின் தீர்ப்பு” என்று எந்தக் காலத்திலும் கறாராகக் கூறிவிட இயலாது” “இத்தகைய விஷயங்களில் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அவரவர் தமக்குத் தாமே சிந்தித்து ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வர இயலும். அப்படிச் சிந்தித்து முடிவுக்கு வர முயல்வது நமது சிந்தனையாற்றலுக்குச் சிறந்த பயிற்சியாகும்; நம் அனைவருக்கும் இன்றியமையாத பயிற்சியும் கூட.” “வரலாற்றைப் பயில்வதன் மூலம் மாந்த இனத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் அகன்ற நுண்ணிய பார்வையுடனும் அமைதியாகவும் சிந்தித்து முடிவு செய்யும் திறனும் வழக்கமும் நமக்கு வரும். பண்டைய வரலாற்றுச் செய்திகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் அமைதியாக எண்ணிப் பார்த்து எடை போடும் பொழுது, மனம் நமது அன்றாடப் பிரச்சினைகளைக் கூர்ந்த நுண்ணறிவுடன் புரிந்து கொள்ளும் திறனை எய்தும். மாந்த இனத்தின் இடியாப்பச் சிக்கல்களைச் செய்தித்தாள், திரைப்படம் [இப்பொழுது, இவற்றையும் விட மிக மோசமான தொல்லைக் காட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்] ஆகிய புல்லறிவாண்மைமிக்க ஊடகங்கள் அரைவேக்காட்டுத் தனமாக (ஏன் 1/100) வேக்காட்டுத் தனமாகக் கூட) “எளிமைப்படுத்தி” பரப்புரை செய்து தகிடுதத்தம் பண்ணுவதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள அத்திறன் உதவும்.” “On such great and complex issues, there can never be a final verdict of history. But at least it is possible to have an opinion of some value. And the attempt to form such opinion in all the historical light now available, is an education to the mind, the sort of education we all most terribly need.” ‘But, if we calmly study the past from as many angles as possible, we shall all of us gain in wisdom and understanding. We shall acquire a mentality which, when we return to our own problems, will be less at the mercy of newspapers and films. trying to make us take short cuts to truth and to oversimplify the tangled skein of human affairs.” - G.M. Trevelyan: An autobiography and other essays. ஆதார நூல்கள் சங்கரன் கே.ஜி. 1920: வேள்விக்குடிச் செப்பேடு; செந்தமிழ்: 20 பக். 205-216. சங்கரன் கே.ஜி.1919/20: The Velvikkudi plates of Sadayan Parantakan; Quarterly Journal of the Mythic Society 10; 175-185 சங்கரன் கே.ஜி. 1920/1 Kalabhras and the Cangam age Q.J.M.S.; II: 81-83 Ragahava Iyengar M 1930 The Kalabhras in South India Journal of Indian History, 8: 74-80 and 294-296. Venkataraman K.R. 1956 A note on the Kalabhras Journal of Indian History XXXIV-II பன்னீர்செல்வம் ஆர் 1973 தமிழ்நாடும் களப்பிரரும் அறவாணன், க.ப. 1974. சைனரின் தமிழிலக்கண நன்கொடை வேங்கடசாமி, மயிலை சீனி 1975. களப்பிரர் ஆட்சியில் தமிழர் Swamy B.G.L. 1976: Kalabhra Interregnum a retrospect and prospect Bulletin of the Institute of Traditional cultures; Madras. Arunachalam M, 1979 The Kalabhras in the Pandya country and their impact on the life and letters there; Journal of the University of Madras, LI-1: 1-168 காசிநாதன், நடன (1976) முத்தரையர் (1981) களப்பிரர் பெருமாள் முதலியார் மு.ரா. (1985) ஏட்டளவில் நின்று விட்ட குறள் நெறி செந்தமிழ்ச் செல்வி 59:5 சனவரி 1985;. கிருஷ்ணசாமி, அ. 1990 தமிழ்நாட்டு வரலாறு பல்லவர், பாண்டியர் காலம் (கி.பி. 500-900) என்னும் நூலில் களப்பிரர் பற்றிய பகுதி; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி இயக்ககம். இயல் 6 பாண்டியர் - பல்லவர் ஆட்சி கி.பி.7-9 நூற்றாண்டுகள் “களப்பாளரைக் களைகட்ட” (தளவாய்புரம் செப்பேடு) கடுங்கோன் பாண்டிய அரசை மீண்டும் நிறுவி கி.பி. 570-590 ஆண்டுகளில் கோலோச்சினான். இவன் வழித் தோன்றல்களாக கி.பி. 7-9 நூற்றாண்டுகளில் ஆண்ட பாண்டியர்கள் கொடிவழி பற்றியும் ஆட்சியாண்டுகள் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. அவர்கள் கொடிவழியை கே.வி. இராமன் (1977) பின்வருமாறு தந்துள்ளார். (அது பண்டாரத்தார் (1956) கொடிவழியிலிருந்து சற்றே மாறுபடுகிறது.) கடுங்கோன் (575-600) மாறவர்மன் அவனிசூளாமணி (600-620) செழியன் சேந்தன் (620-642) (இவன் திருநெல்வேலி மாவட்டம் மலையடிக் குறிச்சி குகைக் கோயிலை அமைத்தவன்) மாறவர்மன் அரிகேசரி (642-700) (திருஞானசம்பந்தர் காலம்) கோச்சடையன் ரணதீரன் (700-768) (சுந்தரர் காலம்) மாறவர்மன் அரிகேசரி ராசசிம்மன் I (நம்மாழ்வார் காலம்) நெடுஞ்சடையன் பராந்தகன் (வரகுணன் I) 768-815 (சங்கராச்சாரியார் காலம்) (வேள்விக்குடி, சீவரமங்கலம், சின்னமனூர் (சிறியது) செப்பேடுகள் நெடுஞ்சடையன் காலத்தவை. நெடுஞ்சடையன் பராந்தகன் வேறு; வரகுணன் I வேறு என்பார் பண்டாரத்தார். பராந்தகனுக்கும் சிரிவல்லபனுக்கும் இடையில் இராசசிம்மன் II, (வரகுணன் I என இருவர் ஆண்டிருக்க வேண்டும் என்பார் பண்டாரத்தார்.) ஸ்ரீமாறன் சிரிவல்லபன் 815-862 (தெள்ளாறு போரில் பல்லவன் நந்திவர்மன் III இடம் தோற்றான்.) வரகுணன் II 862-885 பராந்தக வீரநாராயணன் 862-905 (திருப்புறம்பயம் போரில் சோழன் தளவாய்புரம் செப்பேடு ஆதித்தன் I இடம் தோற்றான்.) ராச சிம்மன் II - 900-920 (பண்டாரத்தார் கருத்துப்படி இராசசிம்மன் III) 2. முதலாம் வரகுணனின் (768-815) தளவாய்புரம் செப்பேட்டிலிருந்து ஆசி நாட்டுத் திருமங்கலத்தைக் கடுங்கோன் பிரமதாயமாகக் கொடுத்தான் என்று அறிகிறோம். அரிகேசரி மாறவர்மன் (642-700) ஹிரணயகர்பமும் துலாபாரமும் செய்தான். இறையனார் அகப்பொருள் உரையில் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டுள்ள பாண்டிக்கோவை நூலின் பாட்டுடைத் தலைவன் இவனே என்பர். மாறவர்மன் இராச சிம்மன் ஐ சோழ நாட்டின் பெரும்பகுதியையும் ஆண்டதாகத் தெரிகிறது. பராந்தக நெடுஞ்சடையன் (768-815) உடைய வேள்விக்குடிச் செப்பேட்டைப் பற்றி முன் இயலில் கண்டோம். வேலங்குடி என்னும் ஊரைப் பண்டைத்தன் பழம்பெயர் நீக்கி ஸ்ரீவரமங்கலம் எனப் பெயரிட்டு பிரமதாய கிராமமாக்கி சுஜ்ஜாத பட்டனுக்குத் தானம் கொடுத்தவனும் இவனே. இவ்வாறு பிராமணர்களுக்கு பிரமதாயமாக நிலம் கொடுத்த பாண்டியர் செப்பேடுகளின் சம்ஸ்கிருதப் பகுதிகளில் பின்வரும் வாசகங்கள் உள்ளன: “பிராமணர்களுக்குத் தானம் செய்ததைக் காப்பதைக் காட்டிலும் புண்ணியத்திற்குக் காரணமானது வேறெதுவும் இப்பூமியில் இல்லை. அதை அபகரிப்பதைக் காட்டிலும் பாவத்திற்குக் காரணமானது இப்பூவுலகில் எதுவும் இல்லை. ******* “விஷம் என்று சொல்லப்படுவது விஷம் அல்ல. பிராமணன் சொத்துத்தான் விஷம். விஷம் ஒருவனைக் கொல்லும். பிராமணன் சொத்து (அபகரிப்பவனுடைய) புத்திர பௌத்திரர்களை அழிக்கும்.” “பிராமணர்க்குத் தான் அளித்ததும் பிறர் அளித்ததுமான பூமியை அபகரிப்பவன் 60,000 ஆண்டுகள் மலப்புழுவாகப் பிறந்து உழல்வான்” -சின்மைனூர்ச் சிறிய செப்பேடு 3. ஸ்ரீமாற சிரிவல்லபன் (815-862) இலங்கை மீது ஒரு தடவை படை எடுத்து வென்றான். இவன் காலத்தில் வடக்கில் பல்லவர்களுடன் மோதி, தெள்ளாற்றில் பல்லவ நந்திவர்மன் III இடம் தோற்றான். அடுத்து வந்த வரகுணன் II (862-885) திருப்புறம்பியத்தில் பல்லவன் அபராஜிதன், கங்கன் பிருதிவிபதி I, சோழன் ஆதித்தன் I (விசயாலயன் மகன்) ஆகியோரிடம் தோற்றதனால் சோழ நாட்டின் தென்பகுதியில் அதுவரை இருந்து வந்த பாண்டியராட்சி அப்பகுதியில் முடிவுக்கு வந்தது. அவன் தம்பி பராந்தக வீரநாராயணன் தந்ததே தளவாய்புரம் செப்பேடு. “மதுரை கொண்ட” சோழன் பராந்தகன் ஐ (905-955) பாண்டியன் இராசசிம்மன் II (900-920)யை வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான். இராசசிம்மனுக்கு இலங்கை அரசன் படை அனுப்பி உதவியும் பயன் இல்லை. கி.பி. 920லிருந்து பாண்டியநாடு சோழன் பராந்தகன் I ஆட்சியின் கீழ்வந்து விட்டது. கடுங்கோன் பரம்பரை இத்துடன் வீழ்ந்த பின்னர் பாண்டிய அரச பரம்பரை மீண்டும் துளிர்த்து வலுப்பெற்று 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பெரும் பகுதியைக் கடைசியாகக் குறுகிய காலம் ஆண்டு அத்துடன் முடிவுற்றது (இயல் 8) 4. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து சைவ நாயன்மார்கள், வைஷ்ணவ ஆழ்வார்கள் தலைமையில் பிராமணிய மதம் வலுப்பெற்றது. நாயன்மார்களில் முதலிடம் வகிக்கும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இக்கால கட்டத்தைச் சார்ந்தவர்கள். மாறவர்மன் அரிகேசரி (642-700) காலத்தில் ஞானசம்பந்தன் சமண முனிவர்களை அனல்வாதம், புனல்வாதம் முதலிய “அற்புதங்கள்” செய்து வென்று அவர்களைக் கழுவேற்றினான் என்று பெரிய புராணம் முதலியன கூறுகின்றன. அதன்பின் பாண்டிய நாட்டில் பெருமளவில் இருந்த சமணர்கள், அவர்கள் கோயில்கள், பாழிகள் ஆகியவற்றைச் சம்பந்தன் அழித்ததைப் பின்வருமாறு பெரியபுராணம் கொண்டாடுகிறது :- பூழியன் மதுரை உள்ளார் புறத்துளார் அமணர் சேரும் பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் கீழுறப் பறித்துப் போக்கிக் கிளரொளித் தூய்மை செய்தே” சம்பந்தன் பதிகங்கள் 383 உள்ளன, ஒவ்வொன்றிலும் 11 பாடல்களுடன். ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாம் பாடலில் சமண பௌத்தர் மீது கடுமையான வசவு மொழிகள் வீசப்படுகின்றன - காரண காரிய விளக்கமோ, தருக்கவாதமோ இன்றி. இவற்றை அறிஞர் வ.சு. செங்கல்வராயபிள்ளை (1946), தமதுதேவார ஒளிநெறி: சம்பந்தர் - ஆராய்ச்சிப் பகுதி பக்கங்கள் 189-230 இல் தொகுத்து தந்துள்ளார். சில சொற்றொடர்கள் வருமாறு: “அறிவிலாத வன் சமணர்”, “குண்டராம் அமணர்”, “புத்தர் சமணுரைத்த பொய்தனை உத்தமம் எனக் கொளாது”. வேத நெறியைச் சமண பௌத்தர் கடைப்பிடிக்காததைக் கடுமையாகத் தாக்குகிறார். வேட்டு வேள்வி செய்யாத அமண்கை (315. 1) வேதநெறி அறிகிலாதார் (331.10) வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில் அமணொடு (366.1) 5. நீலகண்ட சாத்திரி 1929இல் எழுதிய பாண்டியர் வரலாற்றுக்கு B.S.O.A.S (1930-2) இதழில் மதிப்புரை எழுதிய ஜே. சார்பென்டியர், சாத்திரி தமது நூலில் சமணப் படுகொலையைப் பூசி மெழுகுவதைப் பின்வருமாறு கண்டித்தார். “தமிழகத்தில் அக்காலத்தில் பெருமளவுக்கு பிறசமய வெறுப்பும் பிறசமயத்தினர் ஒறுப்பும் நிகழ்ந்ததை சாத்திரியார் கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறார். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் சமணர் கொடுமையாக ஒறுக்கப்பட்டனர் என்பதில் ஐயமில்லை”. தமது தென்னிந்திய வரலாறு (IV Edn 1976) நூலிலும் சாத்திரி சமணர் கழுவேற்றப் பட்டதை நம்பத்தக்கதன்று, புனைகதை என்று ஒதுக்குகிறார். சாத்திரியின் இச்செயலை சுவிரா ஜெய்ஸ்வால் (1974)ம் பர்டன் ஸ்டெய்ன் - உம் கண்டித்துள்ளனர். ஸ்டெயின் தமது இந்திய வரலாறு, 1998இல் சமணரைக் கழுவேற்றியதற்கு சம்பந்தனே காரணம் என்ற செப்பியுள்ளார். (“Sambandhar may even have convinced the king to complete his conversion by impaling the heads of 8000 Jaina teachers, an event long celebrated at the major Siva temple of Madura” p. 134) 8000 சமணரைக் கொன்றதை சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி, ஒட்டக்கூத்தன் போன்றோர் புகழ்ந்துள்ளனர். சமணரைக் கழுவேற்றியதைக் காட்டும் சிற்பங்கள் சில கோயில்களில் இன்றும் உள்ளதை ம.சீ.வே. தமது சமணமும் தமிழும், 1954 நூலில் குறிப்பிட்டு வேறு பல ஆதாரங்களையும் தந்துள்ளார். பொருளாதாரத்தில் கிரஷாம் விதி கூறுவது “நல்ல நாணயத்துடன் திருட்டு நாணயம் புழக்கத்தில் விடப்படும்பொழுது திருட்டுக்காசே விரைந்து பரவலாகச் செலாவணியாகும்; நல்ல நாணயம் ஒதுங்கிவிடும் Bad money drives out good money” என்பதாகும். சமூகம் – பண்பாடு இவை பற்றிய மாந்தவியல் மற்றும் வரலாற்றிலிருந்து நாம் “இது போன்ற கிரஷரம் விதி சமயங்கள் விஷயத்திலும் (ஏன் சமயங்களுக்கு பதிலியாகச் சில நாடுகளில் இருபதாம் நூற் றாண்டில் கோலோச்சிய, இன்றும் கோலோச்சிவரும் இசங்களுக்கும்) பொருந்தும் என்று அறியலாம். “தம்தம் கடவுளே கடவுள், ஏனையோர் கடவுள்கள் பிசாசுகள்.” தம் கடவுளை வழிபடுவோர் மட்டுமே நிரந்தர மோட்சம் செல்வர்; ஏனையோர் மீளா நிரயத்தில் எரிவர்” என்ற நச்சுக் கொள்கை களுடன், வன்முறைவெறியுடன் செயல்படும் சமயங்கள் அத்தகைய கோட்பாடுகள் அற்ற சமயங்களை அழித்து ஒழித்து வந்துள்ளதை உலக வரலாறு காட்டுகிறது. 6. பல்லவ அரசன் மகேந்திரவர்மன் I ஐ சைவத்திலிருந்து சமண சமயத்துக்கு மதம் மாற்றியவர் “மருள்நீக்கியார்” என்ற பெயரில் சமணராக இருந்து பின்னர் திருநாவுக்கரசர் என்ற பெயரில் சைவராக மாறிய நாயனார். நாயன்மார் 63 பேருள் தலைமையான மூவர் முதலிகள் எழுதிய திருமுறைப் பாடல்கள் பின்வருனவற்றை சோழ மன்னன் இராசராசன் I காலத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்:- பதிகங்கள் பாடல்கள் திருஞானசம்பந்தர் 384 4158 திருநாவுக்கரர் (அப்பர்) 307 3066 நம்பிஆரூரர் (சுந்தரர்) 100 1026 791 8250 இவற்றைத் ‘தேவாரம்’ என வழங்கும் மரபு கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் உருவாகியது. தமிழிலக்கிய வரலாறு (1929) நூலில் எம்.எஸ். பூர்ணலிங்கம் ‘ஞான சம்பந்தர் பாடல்கள் (பிற சமயங்களுக்கு எதிரான) கடுமையான வசவுகளைக் கொண்டவை; தமது சாதியினர் மேம்பாடு, நலம் ஆகியவையே அவற்றின் குறிக்கோள். அப்பர் பாடல்களோ பண்பட்ட மெய்யியலுணர்வும் மாந்தநேயமும் கொண்டவை; மனிதர்களுக்குள் சாதி முதலிய பேதம் பாராட்டாதவை’ என்று கூறியுள்ளார். தமிழிலுள்ள பக்தி நூல்களில் (ஏன் உலக மொழிகள் அனைத்திலும் உள்ளவற்றிலேயே) மிகச் சிறந்தது கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் ஆகும். அதனை 1900இல் ஆங்கில ஆக்கம் செய்த ஜார்ஜ் அக்லோ போப் “ஆங்கிலத்தில் Pilgrim’s progress நூலுக்கு ஒப்பானது திருவாசகம்; பக்தியும் தெய்வீக உணர்வும் கொண்ட ஞானியின் அனுபவத்தில் மலர்ந்தது” என்று பாராட்டியுள்ளார். ஆன்மீகத்தையும் பக்தியையும் “தத்துவஞானிகள் குழாமிட மிருந்து” பொதுமக்களிடம் கொண்டு சென்றது திருவாசகம். உபநிஷத்துகள் ‘வாழும் வழி a way of life ’ என்பர் இராதா கிருஷ்ணன். திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பாளருள் ஒருவரான ஜி. வன்மீகநாதன் “மாந்த வாழ்வே திருவாசகம்தான்” Thiruvasagam is the life itself” என்பார். தமிழ் “அன்பு” சம்ஸ்கிருத priyah என்பதைவிட நயமான சொல். பகவத் கீதை 12.14-20: “sa me priyah” க்கு “he is dear to me, who” என்பதுதான் சரியான ஆங்கில ஆக்கம். ஆயினும் Zaehner முதலியவர்கள் ‘I love the man who...” என மொழிபெயர்த்துள்ளார். மாந்தனுக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள உறவைக் குறிக்கும் “அன்பு” போன்ற அருமையான சொல் கீதையில் இல்லை என்பர் ஏ.கே. ராமானுசன் (Hymns for the drowning 1981: நம்மாழ்வார் பாடல்களில் 85ன் நயமான ஆங்கிலப் பெயர்ப்பு) Nowhere does anything corresponding to the Tamil anpu (“love”) appear in the Sanskrit Gita as a possible relation between man and God. 7. பக்தி இயக்கம் பற்றிய செம்பகலட்சுமியின் 1996 கட்டுரைக் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கன. கி.பி. 600க்கு முன்னர் தமிழக அரசரவைகளிலும் நகரங்களிலும் (எ.கா. காஞ்சி, மதுரை) சமண பௌத்த சமயங்களின் கை ஓங்கி இருந்தது. அச்சமயங்களை எதிர்த்து சைவ வைணவ சமயங்கள் தம் கடவுளர் பால் பக்தியைப் பரப்பிப் போராடிய சூழ்நிலையில் எழுந்தவை பக்திப்பாடல்கள். புறச் சமயங்கள் இரண்டும் வீடுபேற்றுக்குப் பிறப்பும் சாதியும் தடையல்ல என்றவை; அவற்றின் கோட்பாட்டைத் தழுவி சாதி, வருண வேறுபாடின்றி அனைவரும் வீடு பேறு அடையலாம் என்று பக்தி இயக்கமும் வழிவகுத்தமை அப்புறச்சமயங்களை வீழ்த்த உதவியிருக்கலாம். (The hymnists were propagating bhakti in a situation of conflict and rivalry with non-orthodex sects like the Jains and Buddhists whose influence and dominance in royal and urban centres had been established in the pre 7th centruy period. xxxxx Presumbaly, bhakti, by throwing open the path of salvation to all irrespective of caste and social hierarchy, imbibed the ideals of the non-orthodox creeds, namely birth and caste as no obstacles to salvation, and thereby succeeded in rooting out ‘herctical’ sects.) 8. இதே காலகட்டத்தில் மலர்ந்தவையே வைணவ பக்தி இலக்கியமும் ஆகும். ஆழ்வார்கள் 12 பேரில் பெரும்பாலோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் - இன்றைய தூத்துக்குடி மாவட்டம் குருகூரில் 8ஆம் நூற்றாண்டில் பிறந்த மாறன் என்னும் நம்மாழ்வார் (880-930) உட்பட. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள 4000 பாடல்களில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி 1120 பாடல்களும், திருமங்கையாழ்வார் பாடிய 1110 பாடல்களும் அடங்கும். ராமானுசன் தமது 1981 நூலில் பக்தி இலக்கியத்தின் பின்புலமாக பின்வரும் கூறுகள் அமைந்தன என்கிறார் வேத, உபநிஷதக் கருத்தகள் ii. புத்த, சமணக் கருத்துகள் (சரணம் - பிரபத்தி; சங்கம் – அடியார் குழாம்; குரு - சீடர் நெருக்கம்) புராணக் கற்பனைகள் தமிழ் அகப்பொருள், புறப்பொருள் மரபுகள் பகவத்கீதை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை முதலியவற்றின் கருத்துகள் நாட்டார் (folk) சமயம் / மெட்டுகள் / கற்பனைகள் / கருத்துகள். ஆழ்வார்கள் பாடல்களை அடித்தளமாகக் கொண்டு 10ஆம் நூற்றாண்டு நாதமுனி, அவர்பேரன் யமுனாச்சாரியார் (10-11 நூற்றாண்டு) இராமானுஜாசாரியார் (1050-1137) ஆகியோர் உருவாக்கியது விசிஷ்டாத்வைதம் (qualified monism) என்னும் வைணவக் கொள்கை. சங்கரர் உடைய வரட்டு அத்வைதம் strict monism கொள்கையைவிட அது நயமானது. கடவுளாகிய நாராயணனிடம் பக்தி செலுத்துவது உபநிஷத்துக்களின் வேதாந்தத்துக்கு எதிரானது அன்று என்பதை இராமானுஜர் நிறுவினார். வைணவ ஈடுகள் (ஆழ்வார் பாசுரங்களுக்கு விரிவுரைகள்) மணிப்பிரவாள நடையில் இருப்பினும் சிறந்த மெய்யியல் நூல்களாகும். 9. சங்க இலக்கிய இறுதிக் காலத்திலேயே பக்திப் பாடல்களும் தோன்றிவிட்டன (பரிபாடல்; திருமுருகாற்றுப் படை ) அடுத்து களப்பிரர் காலத்தில் 4-5 நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்காலம்மையாரும் பொய்கையார், பேயார், பூதத்தார் ஆகிய முதன் மூன்று ஆழ்வார்களும் பக்திப்பாடல்களைப் பாடினர். கி.பி. 6-9 நூற்றாண்டுகளில் சைவ-வைணவ பக்தி இலக்கியம் பெரும் அளவில் வளர்ந்தது. பக்தி தோன்றியது தமிழகத்தில் (“திராவிடத்தில்”) என பத்மபுராணமும் பாகவத மகாத்மியமும் குறிப்பிடுகின்றன. பாகவதம் கூறுவது உத்பந்நா திராவிடே ஸாஹம் வ்ர்த்திம் கர்நாடகே கதா க்வசின் க்வசின் மகாராஷ்ட்ரே கூர்ஜரே ஜிர்ணதாம் கதா (நான் பிறந்தது திராவிடத்தில்; வளர்ந்தது கர்நாடகத்தில்; மஹாராஷ்டிரத்தில் எப்படியோ நிலைத்தேன்; கூர்ஜரத்தில் என் வலிமை குறைந்தது) பக்தி இயக்கம் ஓரளவுக்கு மனிதம் சார்ந்ததாகவும், கீழ்ச் சாதியினருட்பட அனைவரிடமும் பொதுமையையும் ஒற்றுமையையும் வளர்ப்பதாகவும் அமைந்தது. கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அவ்வியக்கம் வடநாட்டுக்கும் பரவிய பொழுது முகமதியப் பரப்பாளர்களின் தாக்குதலிலிருந்து இந்து மதத்தைப் பாதுகாத்திட ஓரளவுக்கு உதவியது. 10. உலகச் செவ்விலக்கியங்களில் தமிழ்ச் செவ்விலக்கியங் களான சங்க கால இலக்கியங்கள் தனித்தன்மையான சிறப்பு வாய்ந்தவை என்பதை மேலே கண்டோம். உலக மொழிகளின் பக்தி இலக்கியங்கள் அனைத்திலும் கி.பி. 400-900 சார்ந்த தமிழ் பக்தி இலக்கியங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை என்பதையும் நல்லறிஞர் ஏற்றுள்ளனர். 11. தமிழகத்தைப் பொறுத்தவரை சங்க கால சமுதாய - இலக்கியப் பார்வையிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய பக்தி இலக்கிய கால சமுதாய இலக்கியப் பார்வை மாறுபட்டதாக வளர்ந்தது என்பதை பின்வருமாறு சுவெலபில் கூறுகிறார். (Tamil Traditions on Subrahmanya - Murugan; 1991) “தமிழகத்தில் தொடக்க காலப் பக்தி இயக்கம் மெய்யான ஆர்வமும் உயிரும் உள்ளதாக இருந்தது; நாயன்மார்கள் ஆழ்வார்களுள் சிறந்த சிலர் உணர்வுபூர்வமான உன்னத பக்திப் பாடல்களை ஆயிரக் கணக்கில் பாடினர். ஆயினும் நாளடைவில் அது படிப்படியாக உள்ளீடின்றித் தரம் தாழ ஆரம்பித்தது. உணர்வற்ற சொற்கட்டுகள், கூறியது கூறல்; சரக்கின்மை, நகல்கள் போல அமைந்த ஏராளமான பாட்டுகள்; குயுக்தியான, கிறுக்குத் தனமான கற்பனைகள்; அருவருக்கத்தக்க வகையில் மிகையான உணர்ச்சி வெளிப்பாடுகள்; உண்மைக்குத் தொடர்பில்லாத காட்சி வருணனைகள்; இவையெல்லாம் நாளடைவில் பக்திப் பாடல்களில் அதிகரித்துக் கொண்டே வந்து கடைசியில் நம் காலத்தில் ‘பக்தி’ என்பது இன்னும் தரம் தாழ்ந்ததாக ஆகிவிட்டது. கவிதை, புதினம், சிறுகதை, திரைப் படம், பாடல்கள், நாடகங்கள், சிற்பக்கலை முதலிய அனைத்துத் துறைகளிலும். பாமரத்தனமான கழிசடை சினிமாக்களே (காட்டுத்தனமான ஒலிபெருக்கிக் கூச்சல்கள்; நயமற்ற மின் விளக்கு அலங்காரங்கள் ஆகியவற்றுடன்) பக்திக்கு உருவம் தருவனவாக அமைந்துவிட்டன” “மன நிலையைப் பொறுத்த வரையிலும் சரி, அறிவு பூர்வமாகவும் சரி பக்தியின் இத்தகைய பரிணாம வளர்ச்சியும் அதன் விளைவுகளும் தமிழர் பண்பாட்டுக்குக் கேடாக அமைந்து விட்டன என்று கருதாமலிருக்க இயலவில்லை. பிற பகுதிகள், நாடுகளின் பண்பாடுகளில் பக்தி என்பது பல கூறுகளில் ஒன்றாக மட்டுமே அமைந்தது. மாறாகத் தமிழகத்திலோ கி.பி. 700/900லிருந்து 1900 வரை பக்தி, பக்தி, பக்தியைத் தவிர வேறு எதுவும் குறிப்பிடத்தக்கதாக இல்லை. இலக்கியத்தில் மட்டும் (பொதுவாக புலவருலகம் ஏற்ற இலக்கியங்கள் வரிசையில் சேர்க்கப்படாமல் ஒதுக்கி வைத்தவையான) நாட்டுப் பாடல்கள், காதல் பாடல்கள், பள்ளுகள், குறவஞ்சிகள் சில, ஆகியவை பக்தியல்லாத பொருண்மை சார்ந்த சில படைப்புகளாக உருவாயின.” 12. இந்தியா முழுவதும் சமயத்திலும், மெய்யியலிலும், பெருந்தாக்கம் விளைவித்த ஆதிசங்கராசாரியார் (788-820) அன்றைய தமிழகத்தின் மேலைக் கடற்பகுதியில் (இன்றைய கேரளத்தில்) காலடி என்னும் ஊரில் பிறந்த பிராமணர் ஆவார்; அத்வைதக் கொள்கையினர். அவர் கருநாடகத்தில் மைசூரிலும், கத்தியவாரில் துவாரகையிலும், ஒரிசாவில் பூரியிலும் இமய மலைச்சாரலில் பத்ரிநாத்திலும் நிறுவிய நான்கு மடங்கள் அவருக்குப் பின்னர் அக்கொள்கையைப் பரப்பின. விஜயநகர ஆட்சிக் காலத்தில் கும்பகோணத்தில் நிறுவப்பட்டுப் பின்னர் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்ட சங்கரமடம் முதன் முதலில் சிருங்கேரி மடத்தின் கிளையாகத் தோன்றியதே என்பது பல அறிஞர்களின் கருத்து ஆகும். (ஆர். கிருஷ்ணசாமி ஐயர் (1959) ஸ்ரீ கும்பகோண மடம் - ஒரு விமர்சனம் . ஜே.வி. ராஜ கோபால சர்மா 1963 ஜகத்குரு சங்கர மட விமர்ஸ (இந்தியில்); 1987: Kanchi Kamakoti math, a myth; ஆர். கிருஷ்ணசாமி ஐயர் & கே. ஆர். வேங்கடராமன் 1965The truth about the Kumbhakonam mutt) 13. சோழ நாட்டின் பெரும்பகுதி கி.பி. 7-9 நூற்றாண்டுகளில் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. தெற்கில் பாண்டிய நாட்டை ஒட்டியிருந்த சோழ நாட்டின் சிறுபகுதியோ பாண்டியர் ஆட்சியின் கீழ் இருந்தது. எனவே சோழநாட்டைப் பற்றித் தனியாக இவ்வியலில் குறிப்பிடவில்லை. 14. சங்க காலத்திற்கு பின்னர் சேரநாடு சிதறுண்டு பலசிறு அரசர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அச்சிற்றரசுகள் சில காலங்களில் சுதந்தரமாகவும் சில காலங்களில் பாண்டிய, சோழ மன்னர்களைப் பேரரசராக ஏற்றும் செயல்பட்டுவந்தன. பண்டைய சேர நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட கடைசிச் சேர மன்னர் சேரமான் பெருமான் (நாயனார்). அவர் சுந்தரர் நண்பன் கி.பி. 825இல் அவர் தன் நாட்டைத்தன் உறவினர்களிடமும் சிற்றரசர்களிடமும் பிரித்துக் கொடுத்து விட்டுச் சுந்தரருடன் கைலாசத்திற்குப் போய்விட்டதாகக் கதை உள்ளது. இந்நிகழ்ச்சியிலிருந்து (கி.பி. 825) தொடங்கியதே கொல்லம் ஆண்டு எனக் கருதுகின்றனர். 15. இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டின் வடபகுதியை ஆண்டுவந்த பல்லவர்களின் தோற்றத்தைப் பற்றிய வேறுபட்ட கருத்துகளை முன் இயலில் கண்டோம். நீலகண்ட சாத்திரி தரும் பல்லவர் கொடிவழி வருமாறு: சிம்ஹவர்மன் கிபி 550-60 சிம்ஹவிஷ்னு 555-90 பீமவர்மன் மகேந்திரன் I 590-630 புத்தவர்மன் நரசிம்மன் I 630-68 ஆதித்யவர்மன் (புலிகேசி IIயை வென்றான்) மகேந்திரன் II 660-70 கோவிந்தவர்மன் பரமேஸ்வரன் I 670-700 ஹிரண்யவர்மன் ராஜசிம்மன் 695-728 நந்திவர்மன் II 731 -96 மகேந்திரன் III பரமேஸ்வரன் II தந்திவர்மன் 720-8 728-31 796-847 (தெள்ளாறு எறிந்த) நந்திவர்மன் III 846-69 நிருபாதுங்கன் அபராஜிதன் கம்பவர்மன் 859-99 885-903 870-912 16. முதல் மகேந்திரவர்மன் காலம் முதல் பரமேசுவரன் II காலம்வரை ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பல்லவர்களும் (இன்றைய மகாராட்டிர, கர்னாடகப் பகுதியினை ஆண்ட) வாதாபிச் சாளுக்யரும் ஒருவரோடு ஒருவர் போரிட்டு வந்தனர். சாளுக்யர் அவ்வப்பொழுது தமிழகத்துக்குக் கொள்ளை யடித்துச் செல்வதற்காகப் படையெடுப்பது வழக்கம். மகேந்திரன் I காலத்தில் புலிகேசி II காஞ்சிவரைப் படையெடுத்தான்; மகேந்திரன் புல்லலூரின் அவனைவென்று திரும்பிப் போகச் செய்தான். நரசிம்மன் I வாதாபிக்குப் படை கொண்டு சென்று அப்புலிகேசியை 642-3இல் தோற்கடித்தான். இவன் காலத்தில் 639-40இல் காஞ்சிக்கும் வந்தான் சீனப்பயணி ஹியூன் சாங். பல்லவருள் இளைய காலவழியைச் சார்ந்த நந்திவர்மன் II 731இல் அரியணை ஏறினான். காஞ்சியில் அவன் கட்டிய வைகுண்டப் பெருமாள் கோயில் கல்வெட்டு அவன் அரியணை ஏறக் காஞ்சிக்கு வரும்பொழுது காடுமலைகளைத் தாண்டியும் கடலைத்தாண்டியும் வந்ததாகக் கூறுகிறது. அவன் முன்னோ ராகிய பல்லவக் கால் வழியினர் கம்பூச்சியா (இன்றைய கம்போடியா) வில் ஆண்டு வந்தவர் என்று உன்னிப்பர் அறிஞர் தி.நா. சுப்பிரமணியம். தாய்லாந்தில் தகுவா பா Takua Pa என்னும் இடத்தில் உள்ள கி.பி. 9ஆம் நூற்றாண்டு சார்ந்த கல்வெட்டு தமிழ வாணிகச் சாத்தினர் அங்கிருந்த விஷ்ணு கோயிலுக்காக அவனி நாரணப் பேரேரி வெட்டு வித்ததாகக் குறிப்பிடுகிறது. நந்தி வர்மன் III பட்டப் பெயர் களுள் ஒன்று அவனி நாராணன்; எனவே அக்கல்வெட்டு அவனைக் குறித்தது எனலாம். தெள்ளாற்றுப் போரில் பாண்டியனை அவன் வென்றதால் பாண்டிய அரசின் அதிகாரம் பாண்டிய நாட்டிற்குள் அடங்கியது. விஜயாலய சோழன் மகன் ஆதித்தன் I கிபி 890இல் அபராஜிதனை வென்றதுடன் தமிழகத்தில் பல்லவர் ஆட்சி முடிவுற்றது எனலாம். 17. இக்காலப் பல்லவர் - பாண்டியர் வரலாற்றைப் பற்றிய விரிவான செய்திகளை தமிழக அரசின் “வரலாற்றுக் குழு’ 1990இல் வெளியிட்டள்ள “பல்லவர் – பாண்டியர்கள் காலம்: கிபி 500-900) நூலின் இருமடலங்களில் காணலாம். முதல் மடலம் 434 பக்கம் கொண்டது (பல்லவர் பற்றி ஆர் கோபாலனும் பாண்டியர் பற்றி கே.வி. இராமனும் எழுதி யுள்ளனர்.) இரண்டாம் மடலம் 538 பக்கங்கள் கொண்டது; சமுதாயம், பொருளியல், சமயம் இலக்கியம், கலைகள் பற்றிப் பலர் எழுதியவற்றைக் கொண்டது. இசை பற்றி வீ.ப.க. சுந்தரம் பக்கங்கள் 481-537இல் எழுதியுள்ளார். 18. தமிழகக் கோயிற்கட்டடக்கலை சிற்பக்கலை வளர்ச்சியில் பல்லவ மன்னர் பங்களிப்பு முக்கியமானதாகும். மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோயில்கள் (திருச்சிராப் பள்ளி, மகேந்திரவாடி, மாமண்டூர், விழுப்புரம் அருகே மண்டகப்பட்டு) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். மாமல்லபுரத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற குடைவரைக் கோயில்கள் நரசிம்மன் I (மாமல்லன்) காலத்திலிருந்து அமைக்கப்பட்டவையாகும். கற்றளிகளை எழுப்பியதிலும் பல்லவர் முன்னோடிகள்; இவற்றுள் மிகச் சிறந்தவை மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் (இரண்டும் ராசசிம்மன் கட்டியவை) காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில் (நந்திவர்மன் II கட்டியது) ஆகியவையாம். தென் இந்திய வாணிகத்தில் அக்காலத்தில் தலைசிறந்து விளங்கிய துறைமுகங்களில் மாமல்லபுரமும் ஒன்று என்பர் நீலகண்ட சாத்திரி. இந்தோனேசியா (ஜாவாதீவு) இந்தோ சீனா (கம்போடியா) நாடுகளில் இந்திய கோயிற் கட்டட, சிற்பக் கலையை பின்பற்றி எழுந்த மாபெரும் கோயில்களான போரோபுதூர்; அங்கோர் வாட் போன்றவை எழுவதற்கான பண்பாட்டுத் தாக்கமும், தொழில் நுட்பமும் இங்கிருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பார் அவர். அயல் நாடுகளில் கட்டிய அக்கோயில்கள் தாய்த் தமிழ்நாட்டுக் கோயில்களையும் விஞ்சிய சிறப்புடையவையாக அமைந்தன. மாமல்லபுரத்தில் “பகீரதன் தவம்” என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பத்தை பின்வருமாறு கிரொஸ் (Grousset) பாராட்டியுள்ளார். “கல்லிலே வரைந்த பிரமாண்டமான சுதை ஓவியம்தான் இப்புடைச் சிற்பம். எடுத்துக்கொண்ட விஷயத்துக்கேற்ப ஏராளமான உருவங்கள் நயமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. உலக நலனுக்காக இறங்கிவருகிற (கங்கை) நீரைச் சூழநிற்கும் உயிர்கள் அனைத்தும் காட்டும் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது; இயற்கையை ஆழ்ந்த கவர்ச்சியுடன் காட்டுகிறது இச்சிற்பம்.” பகீரதன் தவம் பற்றிய கதை இந்து, சமண சமயங்கள் இரண்டுக்கும் பொதுவானது. சமணருடைய இரண்டாம் தீர்த்தங்கரர் அஜிதநாதர். அஜிதநாத புராணத்தில் உள்ள சகர - சாகரர் கதையையே மாமல்லபுரம் சிற்பம் காட்டுகிறது என்பார் ம.சீ. வேங்கடசாமி. பல்லவர் காலத்தில் புடைப்புச் சிற்பக்கலை அடைந்த மிக உன்னதமான நிலையை இது காட்டுகிறது. இயல் 6ன் நூற்பட்டியல் சதாசிவ பண்டாரத்தார், தி.வை. (1940 / ஐஐஐ 1956) பாண்டியர் வரலாறு தமிழ் வரலாற்றுக் கழகம் 1967. பாண்டியர் செப்பேடு பத்து Ramana Ayyar A.S. Edr (1962) - South Indian inscriptions: Vol XIV - Pandya inscriptions pp vi; 166 xxv - (267 inscriptions copied between 1904-1935: Early Pandyas 130; Chola - Pandya Viceroys 67; Jatavarman Srivallabha 70). Raman, K.V. 1973 Some aspects of Pandyan history in the light of recent discoveries Journal of Madras University XLV-1 Jan 1973. தமிழக அரசு வரலாற்றறிஞர் குழு (1990): தமிழ்நாட்டு வரலாறு : பல்லவர் - பாண்டியர் காலம் (கி.பி. 500-900) பகுதி I பக். 434. (வரலாறு; ஆட்சிமுறை) பகுதி II பக். 538 (சமுதாயம், பொருளியல், சமயம், இலக்கியம், கலைகள், கட்டடம், ஓவியம், செப்புத் திருமேனிகள், சிற்பம், ஆடல், இசை) Balambal V 1979 Some common features in six Pandya copper plates Journal of Tamil Studies; 16, Dec 1979 Shulman, David Dean 1980. Tamil Temple myths: Sacrifice and divine marriage in the South Indian Saiva tradition; Princeton. Sundararajan, S 1988 Political geography of the Pandyan country 600 AD - 1300 AD Journal of the Madras University LX-2 July 1988 Peterson, India V. 1989. Poems to Siva; the Hymns of the Tamil saints Champakalakshmi R. 1996. From devotion and dissent to dominance - the Bhakti of the Tamil Alvars and Nayanars (pp 135-63 of Tradition, Dissent and ideology: Essays in honour of Romila Thapar; Delhi 1996. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இயல் 7 பிற்காலச் சோழர் வரலாறு கி.பி. 10-12 நூற்றாண்டுகள் இந்திய வரலாற்றிலேயே நெடுங்காலம் (ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு மேலாக) தொடர்ந்து ஆட்சி செய்து வந்த ஓரிரு அரச பரம்பரையினருள் சோழரும் ஒருவர். சில நூற்றாண்டுகள் (கி.பி. 300 - கி.பி. 850) சோழர் சிற்றரர்களாகவோ, மிகச்சிறு நிலப் பகுதிகளை ஆண்டவர்களாகவோ ஒடுங்கியிருந்தனர். அவற்றையும் சேர்த்துத்தான் இந்தக் கணக்கு. இன்றையத் தமிழகம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வந்த கி.பி. 1800க்கு முன்னர், எப்பொழுதாவது இந்தநிலை இருந்தது என்றால் அது பிற்காலச்சோழர் ஆட்சிக்காலத்தில் அடங்கிய கி.பி. 900-1200 ஆகிய முந்நூறு ஆண்டுகளில்தான். (அந்த முந்நூறு ஆண்டு களில் சேர நாட்டுப் பகுதியும் கூடச் சோழரின் கீழ்த்தான் இருந்தது). பிற்காலச் சோழர் (விசயாலயன் பரம்பரை) ஆண்ட கி.பி. 846-1279 கால அளவின் உச்சகட்டத்தில் சோழப் பேரரசர் ஆட்சி வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணா ஆறுகள் வரை நடந்தது; 11ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பெரும்பகுதியும் அவ்வாட்சியின் கீழ் இருந்தது. “மொழிபெயர் தேயத்தின் வடக்கே” சங்க காலத் தமிழ்வேந்தர் ஒரோ வழிப் படையெடுத்து வென்றதாகக் கூறப்படுகிறதேயொழிய, நிலையான ஆட்சி நடத்தியதாகவோ தொடர்ந்து பிற அரசுகளிடம் கப்பம் பெற்று வந்ததாகவோ கூறப்படவில்லை. தமிழ் நாட்டிற்குள்ளும், பிற்காலச் சோழர் ஆட்சிக்கு முன்னர், பாண்டியர் - சோழரிடையே போர்கள் நடந்தன; ஆயினும் வென்ற நாட்டைத் தாமே (பரம்பரை அரசரை நீக்கிவிட்டு) தமது அரசப்பிரதிநிதி மூலம் ஆண்டதாகத் தெரியவில்லை – பிற்காலச் சோழர் பாண்டிய நாட்டில் செய்ததுபோல். பிற்காலச்சோழர் அகலக்கால் வைத்து தமிழகத்துக்குள்ளும் வெளியிலும் நிகழ்த்திய போர் நடவடிக்கைகளும் ஓரளவுக்கு தமிழகமும் தென்னிந்தியாவும் 1300க்குப் பிறகு வீழ்ச்சியடையக் காரணமாக இருந்தனவோ என்பதும் ஆய்வதற்குரியது. 2. பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறியக் கல்வெட்டுச் சான்றுகள் மிகப் பலவாகும். 1887 முதல் இன்று வரைத் தென்னாட்டில் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஏறத்தாழ 50000க்கும் மேற்பட்டவை (சுமார் 2000 செப்பேடுகள்; 3000 நாணயங்கள், முத்திரைகள் உட்பட). இந்தக் கல்வெட்டுக் களில் 26000 கல்வெட்டுகள் இன்றையத் தமிழகப் பகுதியில் கண்டவை; ஏறத்தாழ அனைத்தும் தமிழ்க் கல்வெட்டுகள். இந்த 26000இல் 35 விழுக்காடு ஆகிய 9000 கல்வெட்டுக்கள் பிற்காலச் சோழரைச் (கி.பி. 850-1250 கால அளவு) சார்ந்தவை என்பார் சுப்புராயலு. ( தமிழ்க் கல்வெட்டுகளில் பாண்டியருடையவை 18%. விசய நகர மன்னருடையவை 16%) ஏராளமான இக் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு சமுதாய, வணிக, பண்பாட்டு வரலாறுகளுக்கு உதவுவனவாயினும் அரசியல் வரலாற்றை அறிய உதவுவன சிலவே. இக்கல்வெட்டுச் சான்றுகளையும், இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், அகழ்வாய்விற் கண்ட எச்சங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி முதன்முதலில் ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் விரிவாக, சிறப்பாகப் பிற்காலச்சோழர் வரலாற்றை ஆங்கிலத்தில் 850 பக்கங்களில் 1935-37இல் வெளியிட்டவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர் சிலருள் ஒருவரான க.அ. நீலகண்ட சாத்திரியார்; திருத்திய இரண்டாம் பதிப்பு 1955இல் வெளிவந்தது. (பாண்டியர் வரலாற்றை முதலில் 1929இல் எழுதியவரும் அவரே) 3. வரலாற்றுத் துறையில் தடம்பதித்த தமிழறிஞர்களுள் சிலருள் ஒருவர் சதாசிவப் பண்டாரத்தார். (1892-1961) தமிழில் “பிற்காலச் சோழர் வரலாறு” நூலை அவர் எழுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் மூன்று பகுதிகளாக 1949-1961இல் வெளியிட்டார். கல்வெட்டுப் புத்தகங்கள், அறிக்கைகள்; சாத்திரியாரின் ஆங்கில நூல், சில தமிழ் நூல்கள், சில ஊர்களுக்கு பண்டாரத்தாரே சென்று நேரில் படித்து அறிந்து வந்தபுதிய செய்திகள் ஆகிய ஆதாரங்களின் அடிப் படையில் இவ்வரலாற்றை எழுதினார் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் தமது 1949 முன்னுரையில் குறிப்பிடுவது போல (அதுவரைத் தமிழில் வெளிவந்த வரலாற்று நூல்கள் போல் “பாடபுத்தகமாக” இல்லாமல், சிந்தித்து ஆய்வு செய்து தமிழில் மூலநூலாக எழுதிய முதல் வரலாற்று நூல் அது. “the first original work of this kind in Tamil, distinguished from mere text books”. 4. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட அரசர் தமிழகத்துக்கு வடக்கே வலுவான ஆட்சி நடத்தி வந்தனர். கடுங்கோன் பரம்பரையினரான பாண்டிய மன்னர் ஆட்சியும் வடக்கில் பல்லவர் ஆட்சியும் வலுவிழந்து வந்தன. அக்கால கட்டத்தில் சோழமன்னர் பரம்பரையில் வந்ததாகக் கூறிக் கொண்ட விஜயாலயன் படை பலம் சேர்த்துக் கொண்டு சோழ நாட்டுப் பகுதிச் சிற்றரசர்களோடு போர் செய்து வெற்றிகள் பெற்றான். (“there is no certain relationship between the ancient Cholas and the resurgent lineage என்பார் ஹீட்ஸ்மன் 1997) அவன் நெஞ்சில் பட்ட வீரவடுக்கள் 96 என்று புகழப்பெற்றான். கொடும்பாளூர் இருக்குவேளிர், பழுவேட்டரையர்கள் போன்ற வர்களுடன் இணைந்தும் (முத்தரையர்கள், அவர்களுடைய நட்பாளர்கள் முதலியவர்களை எதிர்த்தும்) தஞ்சாவூரை கி.பி 850ஐ ஒட்டி விஜயாலயன் முததரையரிடமிருந்து கைப்பற்றி அங்கு பிற்காலச் சோழர் ஆட்சியை நிறுவினான். அவ்வாட்சி கி.பி 1279இல் ராசேந்திரன் III உடன் முடிவுக்கு வந்தது. (சோழ மன்னர் இராஜகேசரி, பரகேசரி என்ற பட்டங்களை வைத்துக் கொள்வர். பல கல்வெட்டுகளில் பெயர்கள் இன்றி இந்தப் பட்டங்களே இருக்கும். இவர்கள் கால்வழி அட்டவணை: விஜயாலயன் 850-71 AD ஆதித்தன் I 871-907 (திருப்புறம்பியத்தில் பல்லவ அபராஜிதனோடு சேர்ந்து பாண்டியனை வென்றான்) மதுரை கொண்ட பராந்தகன் ஐ 907-55 இராசாதித்தியன் கண்டராதித்தன் அரிஞ்சயன் (தக்கோலம் போரில் 949-ல் (949-57) (956-57) ராட்டிரகூட கிருஷ்ணன் II இவனைக் கொன்றான்) மதுராந்தக உத்தம சோழன் பராந்தகன் II 970-85 சுந்தர சோழன் 957-73 ஆதித்தன் II (கரிகாலன் இராசராசன் 969இல் கொலை 985-1012 இராசேந்திரன் ஐ 1012-44 குந்தவை (விமலாதித்தனை மணந்தாள்) இராசாதிராசன் இராசேந்திரன் வீர ராசேந்திரன் 1018-54 1052-63 1063-70 அம்மங்கா தேவி (கொப்பம் போரில் சாளுக்கிய சோமேசுரன் ராசராசநரேந்திரன் கொன்றான்) அம்மங்கா தேவியை மணந்தான் இராசமகேந்திரன் மதுராந்தகி அதிராசேந்திரன் குலோத்துங்கன் I 1068இல் சாவு (குலோ. I மணந்தாள்) 1070 1070-1122 இராசராசன் மும்முடிச்சோழன் வீரசோழன் விக்கிரமசோழன் 1118-35 குலோத்துங்கன் II 1133-50 இராசராசன் II 1146-63 இராசாதிராசன் II 1163-1178 குலோத்துங்கன் III (பெரியபுராணச் சேக்கிழார் காலம்) 1178-1218 இராசராசன் II 1216-1256 (இவனைக் கோப்பெருஞ்சிங்கன் வென்று சேந்தமங்கலத்தில் சிறை வைத்தான்) இராசேந்திரன் III 1246-1279 (இவனை சடாவர்மன் சுந்தர பாண்டியன் வென்றான்) 5. பல்லவ மன்னன் அபராஜிதனை வென்ற ஆதித்தன் I பல்லவ நாட்டைத் தன் கீழ் கொணர்ந்தான். அவன் மகன் பராந்தகன் I பாணடியனை வென்றான். பாண்டிய மன்னன் ராஜசிம்மன் பாண்டிய அரச சின்னங்களுடன் இலங்கைக்கு ஓடிவிட்டான். (எனினும் பாண்டியர் அரச பரம்பரையினர் இராசராசன் காலம் வரை போர் தொடுத்துக் கொண்டே இருந்தனர். இராசராசன் காலத்தில்தான் பாண்டியநாடு சோழர் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது) கி.பி. 949இல் ராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் III படையெடுத்து வந்து சோழனை (அரக்கோணம் அருகே) தக்கோலம் போரில் வென்று பட்டத்து இளவரசன் ராஜாதித்யனையும் கொன்றான்; சோழ இராச்சியத்தின் பரப்பு மீண்டும் சுருங்கியது. இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சி சுந்தர சோழன் (957-73) ஆட்சியில் தொடங்கியது; அவன் மூத்தமகன் பட்டத்தரசன் ஆதித்தன் II (கரிகாலன்) வீரபாண்டியனைப் போரில் தோற்கடித்துக் கொன்றான். கி.பி. 969இல் ஆதித்தனே கொல்லப்பட்டான். இராஜராஜன் ஐ காலத்திய உடையார்குடிக் கல்வெட்டு (1920ஆம் ஆண்டு படி எடுத்த 577ஆம் கல்வெட்டு = எபிகிராபியா இண்டிகா XXI பக் 165) வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் (அரசன் ஆணைப்படி) பாண்டியன் தலைக் கொண்ட கரிகால சோழனைக் கொலை செய்த ராஜதுரோகிகன் ஆன சோமன் ‘பஞ்சவன் பிரமாதிராஜன்” ரவிதாசன் “இருமுடிச்சோழ பிரமாதிராஜன்” பரமேசுவரன் (மலையனூர்) ரெவதாச கிரமவித்தன் ஆகிய பிராமணர் நால்வரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்றுவிட்டது பற்றிக் கூறுகிறது. ஆதித்தனைக் கொல்வித்தது யார்? நீலகண்ட சாத்திரியும் மா. இராச மாணிக்கமும் உத்தமசோழன் என்கின்றனர். பண்டாரத்தாரும் என். சுப்ரமணியமும் உத்தம சோழன் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் கொலை செய்வித்தது யாரென உன்னிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் பகர்கின்றனர். உத்தம சோழன் ஆட்சிக்கு வருமுன்னரே தொண்டை மண்டலம் மீண்டும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டு இருந்தது. 6. கிபி 973 இல்ராஷ்டிரகூடப் பேரரசு சிற்றரசர்களால் தோற்கடிக்கப்பட்டுச் சிதைந்தது. அச்சிற்றரசர்கள் ஆதரவுடன் பிற்காலச் சாளுக்கியர் ஆட்சி தொங்கியது. அவ்வாட்சி முன்னைச் சாளுக்கியர் போலவோ ராஷ்டிரகூடர் போலவோ வலுவான ஆட்சியாக அமைய இயலவில்லை. மத்திய இந்தியாவிலும் தக்காணத்திலும் ஏற்பட்ட “வலுவான ஆட்சியற்ற இந்த நிலைமை power vacuum” தென் ஆசியாவில் பெருமாற்றங்களுக்கு வழிவகுத்தது என்பர் ஹீட்ஸ்மன் (1997). கிபி 1008லிருந்து மகமது கஜினியும் ஏனைய துருக்கிய – ஆப்கன் அந்நியப் படையெடுப்பாளர்களும் இந்தியாவைத தாக்கி வெகுவிரைவில் 1192 அளவில் அவர்கள் ஆட்சியை நிலையாக டெல்லியில் நிறுவிட இது வழிவகுத்தது என்பதை அவர் விளக்குகிறார். 7. பிற்காலச் சோழ மன்னர்களுள் தலை சிறந்த இராசராசன் I(985-1012) பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினான். சேர நாட்டையும் வென்றான். இலங்கையின் வடபகுதியை வென்று அநுராதபுரத்தை அழித்து வட இலங்கையை (பொலன்னருவையைத் தலைநகராகக் கொண்ட) சோழ மாகாணமாக அமைத்தான். மேலைச் சாளுக்கியன் சத்யாஸ்ரயனை வென்றதும் சோழ இராச்சியம் துங்கபத்திரை ஆறுவரை வடக்கில் பரவியது. வேங்கியிலிருந்த கீழைச் சாளுக்கிய அரசு சோழ அரசுக்கு அடங்கியதாக மாறியது. தன் கடற்படையால் இராசராசன் மாலத் தீவுகளையும் வென்றான். 8. இராசராசன் ஆட்சியின் ஒரு பெரும் சாதனையாகத் தஞ்சையில் இராசராசேசுவரன் கோயிலை கி.பி. 1004-1010இல் கட்டினான். கட்டிய சிற்பியின் பெயர் “வீரசோழன் குஞ்சர ம ல் லன் ஆன இராஜராஜப் பெருந்தச்சன்” என்பது. இப்பொழுது பி ர க தீஸ்வ ர ர் கோயில் என அழை க் க ப் படுகிறது. அக்கோயிலின் விமானத்தை பெர்சிபிரவுன் திராவிடக் கட்டக்கலையின் தலைசிறந்த படைப்பு; இந்தியக் கட்டக் கலையின் சிறப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனப் புகழ்கிறார். கோயிலின் கட்டுமான உயரம் 50 அடி; அதற்குமேல் 99 அடி சதுரப் பரப்பளவை அடித்தளமாகக் கொண்டு, 150 அடி உயரம் உள்ளது விமானம் - உச்சியில் கவிழ்த்த தேங்காய்மூடி போன்ற 15 அடி உயரம் உள்ள (80 டன் எடையுள்ள) கருங்கல் அமைப்புச் சிகரம் உட்பட. [கருவறையின் மேல் கட்டுவது விமானம்; நுழைவாயிலில் கட்டுவது கோபுரம்] சிகரக்கல் ஒரே கல்லால் கட்டப்பட்டது என வழங்குவது பொய்க்கதை; பலகற்களைச் செதுக்கி அடுக்கிக் கட்டியதே அது. இக் கோயிலுக்கு தேவதானமாக 35 ஊர்களை வழங்கினான் இராசராசன். கோயிலில் நாட்டியப் பணி செய்ய கோயிலைச் சுற்றித் தேவரடியாள்கள் வாழத் தெருக்கள் அமைத்து 400 பேரைக் குடியேற்றினான். அவர்களுக்குப் பரம்பரை உரிமையும் தந்தான். இக்கோயிலுக்கு இராசராசன் வழங்கிய ஏராளமான பொன்னும் பிறவும் பாண்டிய, சேர, சாளுக்ய நாடுகளின்மீது படையெடுத்துப் போரிட்டுக் கொள்ளையடித்தவற்றிலிருந்து வழங்கியதாக அக்கோயில் கல்வெட்டுகளே கூறுகின்றன. (இராசராசன் கல்வெட்டுகள் 64, இராசேந்திரன் I கல்வெட்டுகள் 29, பிற்றையோர் கல்வெட்டுகள் சில இக்கோயிலில் உள்ளன.) இவனுக்குப் பின்னர் நூறாண்டு காலம் சாளுக்யர் – சோழர் போர்களில் சோழர் கை ஓங்கியிருந்தது. 9. இராசேந்திரன் I (1012-44) தந்தை இராசராசன் ஆட்சிக் காலத்திலேயே 26 ஆண்டுகள் இணையரசனாக இருந்தான். பிற்காலச் சோழ அரசின் உச்ச கட்டம் இவன் ஆட்சிக் காலம்தான். இலங்கையை முற்றிலும் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொணர்ந்தான். தன் மகன் இரண்டாமவனை (பின்னர் சோழன் இராசேந்திரன் II ) “ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்” என்ற பெயரில் பாண்டிய நாட்டுக்கு அரசப்பிரதிநிதியாக ஆக்கினான். (விரகான இந்த ஏற்பாடு குலோத்துங்கன் I காலம் வரை நீடித்தது; அவன் பாண்டியர் பரம்பரையினரையே கீழரசர்களாக ஆள அனுமதித்தான்). தன் படைத்தலைவன் ஒருவன் மூலம் கீழைக்கரை (கலிங்கம், ஒட்டராச்சியம்) வழியாக பால அரசர்கள் ஆண்ட வங்காளம் வரைப் படை அனுப்பிக் கங்கை நீரைக் கொண்டுவரச் செய்து அப்புனித நீரை, தான் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக அமைத்த கங்கை கொண்ட சோழபுரம் என்னும் தலைநகரத்தில் அமைத்த சோழ கங்கம் ஏரியில் சேர்த்து விழா எடுத்தான். வரலாற்றுக் காலத்தில் தமிழ் வேந்தர் எவரும் செய்யாத சாதனை ஒன்றை இராசேந்திரன் செய்தான்: அப்பொழுது சுமத்ரா தீவில் பாலெம்பாங் என்னும் தலைநகரில் இருந்து கொண்டு (இந்தோனேசிய தீவுகளிலும் மலாய தீபகற்பத்திலும்) ஆண்டு வந்த ஸ்ரீவிஜய மன்னன் சங்க ராம விஜயோத்துங்க வர்மனுக்கு எதிராகக் கடற்படையை அனுப்பி வெற்றி கொண்டதே அச்சாதனையாகும். பண்ணை, மலையூர், மாயிரிடங்கம், இலங்காசோகம், மாப்பப்பாளம், வளைப்பாண்டூரு, தலைத்தக்கோலம், மாடமலிங்கம், இலாமுரிதேசம், கடாரம் ஆகிய (மலாயா, சுமத்ரா, அண்டைய பகுதிகளில் உள்ள) ஊர்களையும் மாநக்கவாரத்தையும் (நிக்கோபார் தீவுகள்) அவன் வென்றதாகக் கல்வெட்டுகளில் கூறிக்கொள்கிறான். சாத்திரியார் கருத்து ‘ஸ்ரீவிஜய மன்னர் இராசேந்திரனை மேலரசனாக ஒப்புக்கு ஏற்றுக் கொண்டதைத் தவிர இப்படையெடுப்பால் நிலையான மாற்றம் எதுவும் ஏற்பட வில்லை’ என்பதாகும். ஸ்ரீ விஜயம் உண்மையில் கடற் பேரரசு Maritime empire ஆக இருந்ததா? அண்மைக்கால ஆய்வுகளின்படி அப்படி ஒருபெரிய நிலையான பேரரசு இருந்ததாகக் கூறவே இயலாது என்றும் அவ்வப்பொழுது ஸ்ரீவிஜய மன்னனைத் தலைவனாக நிலைமைக்கு ஏற்ப விரகாக ஏற்றுக்கொண்ட ஊர்களைக் கொண்ட இந்தோனேசிய - மலாய்ப் பகுதியாகவே kaleidoscopic configuration of settlements ஆகவே அதைக் கருத வேண்டும் என்பது G.W. ஸ்பென்சர் (1983) கருத்து ஆகும். 10. முதலாம் ராஜேந்திரனுக்குப் பின் வந்த சோழ மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவன் குலோத்துங்கள் I (1070-1122) தந்தை வழியில் அவன் வேங்கி கீழைச் சாளுக்ய அரச பரம்பரையைச் சார்ந்தவன்; அவனைச் சாளுக்கிய – சோழன் என்றே அழைக்கலாம். அவன் இராச தந்திரத்துடன் செயல் பட்டு போரில் வென்று அடிமைப்படுத்தி (அந்தந்த நாட்டு மக்கள் விழைவுக்கு எதிராகக் கட்டாயப்படுத்திச்) சோழ ஆட்சியின் கீழ் வைத்திருந்த இலங்கை, கங்கவாடிப் பகுதிகளைக் கைவிட்டுவிட்டான். சாத்திரியார் அவனைப் பற்றிக் கூறவது வருமாறு: குலோத்துங்கன் காலத்துக்கு முன் இருந்த ‘எப்பொழுதும் படையெடுப்பு, போர்’, என்ற நிலை இவன் காலத்தில் மாறியது. நாட்டின் வளமும் ஆற்றலும் அனுமதிக்கும் அளவுக்குத் தன் ஆட்சிப் பகுதி வரம்புகளை வைத்துக் கொண்டான். தனது வீரப் பிரதாபங்களை விட நாட்டு மக்கள் நலனே உயர்ந்தது என உணர்ந்த ‘அரசியல் நயத்திறம்’ Statesmanship வாய்ந்தவன். நாட்டு மக்களுக்கு அமைதியும் நல்லாட்சியும் தந்தான். 11. பாண்டிய பரம்பரையினர் தம் நாட்டைக் கைப்பற்றிய சோழப் படையெடுப்பாளர்களை எதிர்க்கும் வலுவை மெது மெதுவாகப் பெறலாயினர் கொரில்லாப் போர் முறைகளையும் கையாண்டனர்; இலங்கையிலிருந்தும் உதவி பெற்றனர். பாண்டிய அரியணைக்குப் போரிட்ட இருவரிடையே நடந்த போர் ஒன்றில் இராஜாதிராஜன் II தலையிட்டான். 1205இல் குலோத்துங்கன் III ஜடாவர்மன் குலகேசரன் காலத்தில் மதுரை மீது படையெடுத்துச் சூறையாடினான். பழிக்குப் பழியாக மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1216இல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வென்று சோழ மன்னன் நாட்டை விட்டு ஓடுமாறு செய்தான். ஹொய்சள மன்னன் வல்லாளன் II தலையிட்டதன் பேரில் பாண்டியன் (பொன்னமராவதியில் குலோத்துங்கன் III, அவன் மகன் இராஜராஜன் III ஆகிய இருவரும் பாண்டியன் தலைமையின் கீழ் ஆளுவதாக இசைவு காட்டவே) சோழனிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைத்தான். பாண்டிய மன்னர் அதிகாரம் நாளடைவில் வலுப்பெற்றது. சோழ நாட்டுக் குறுநில மன்னர்கள் அரசனுக்குக் கீழ்ப் படியாமல் எதிர்க்கலாயினர். இந்நிலையில் சோழ நாட்டில் காவிரிப் படுகையில் சிற்சில பகுதிகளை (ஹொய் சள மன்னனின் கைப் பொம்மைகளாக) இராசராசன் III (1216-56)-ம், இராசேந்திரன் III (1246-1279)-ம் ஒப்புக்கு ஆண்டு வந்தனர். பின்னவனை ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் 1279இல் வென்றதுடன் விஜயாலய சோழன் பரம்பரையினர் ஆட்சி முடிந்தது. பிற்காலச் சோழர் ஆட்சி முறை 12. இராஜராஜனும் பின்வந்தவர்களும் நன்கு கட்டமைக் கப்பட்ட ஆற்றல் வாய்ந்த நிருவாக அதிகாரிகள் அமைப்பைக் கொண்டு ஆற்றல் வாய்ந்த அரசாட்சி நடத்தி வந்தனர்; அரண்மனைகள் தஞ்சை, பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பல இடங்களில் இருந்தன; பரந்த பேரரசின் வளங்களையெல்லாம் ஈட்டி, நாடு முழுவதையும் நுணுக்கமாகத் திறம்பட நிருவகிக்கத் திறம்படைத்த நிருவாக அமைப்பைப் கொண்ட ‘பைசாந்தியப் பேரரசு Byzantine empire ‘போன்ற சர்வ வல்லமை பெற்ற ஆட்சியை அவர்கள் நடத்தினர். இது சாத்திரியார் கருத்து. 13. பர்டன் ஸ்டெய்ன் 1960களிலிருந்து சாத்திரியார் கருத்து சரியல்ல என்று வாதிட்டுள்ளார். பிற்காலச் சோழர் காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி எந்தப் பேரரசன் கீழ் இருந்த தென்இந்திய மக்கள் சமுதாயமும் முற்றிலும் ஒரே அரசு ஆக இருந்தது இல்லை; சடங்கு அளவில் தான் அரசு ‘‘state only ritually’ சோழர் கல்வெட்டுகள் குறிப்பிடும் “நாடு” [தொன்று தொட்டு வந்தவை; பெரும்பாலும் ஒன்றிரண்டு இனமக்கள் கட்டுப்பாட்டில் இருந்தவை] என்னும் பகுதிகள் அரசியலுக்குத் தனித்தனி பிரதேசங்களாக segment இருந்தன. அந்தப் பிரதேசங்களின் மக்கள் வாழ்வியலில் மைய அரசு தலை யிட்டதில்லை. சோழர் ஆட்சியில் சாத்திரி கூறியது போன்ற வலுவான நிருவாக இயந்திரம் இல்லை, மைய அரசு செய்த தாகக் கூறப்படும் பல்வேறு காரியங்களைச் செய்வதற்கான அமைப்பும் இல்லை என்பர் ஸ்டெய்ன். தனது “பல் கூறுகளாக அதிகாரம் பிளவுண்டு நிலவிய அரசு segmented state” இன் தன்மையை அவர் பின்வருமாறு விளக்குகிறார்: “இடைக்கால அரசுகள் - பிற்காலச் சோழர் உட்பட – தம் கீழ் உள்ள பகுதிகளைக் கண்காணித்து தம் கட்டுக்குள் வைத்திருந்தவையே; அப்பகுதிகளை நேரடியாக நிருவகித்தவை அல்ல. அவை கப்பம் பெற்று வந்தவை; வரி வசூலைக் கொண்டு நடந்தவை அல்ல; பேரரசில் அடங்கிய பல்வேறு வகைச் சமூகங்களும் பெருமளவுக்கு ஊரா ர் , நாட்டா ர் , பி ர மதேயத்தார் ,கோயி ல் நிருவாகத்தார், வணிகர் அமைப்புகள் போன்ற தனித்தனி அமைப்புகளாகவே செயல்பட்டன. “The South Indian medieval states were custodial rather than managerial, tribute - receiving, rather than tax-based; and the society itself was organised into relatively isolated, locally oriented networks of relations among corporate groups and associations. 14. ஸ்டெய்னுக்குப் பின்னர் இது குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த வரலாற்றறிஞர் கருத்துகள் வருமாறு i. நொபுரு கராசிமா, ஒய். சுப்பராயலு, பி.சண்முகம் இவர்கள் ஆய்வின் முடிவு: ஸ்டெயின் கருத்து ஆதார மற்றது என்பதாகும். இராசராசன் காலத்திலிருந்து விளை நிலங்கள் அளக்கப்பட்டன; நாடு, அதைவிப் பெரிய வளநாடு, அதற்கும் மேல் மண்டலம் இவை இருந்தன; பிரமராயன், மூவேந்தவேளான் முதலிய அதிகாரிகள் பெயர்கள் கல்வெட்டுகளில் வருகின்றன. ஒருமைப்பட்ட வலுவான ஆட்சியமைப்பை உருவாக்கும் முயற்சியே இவையெல்லாம். தஞ்சைப் பெரிய கோவிலுக்குத் தேவதானமாகத் தரப்பட்ட ஊர் ஒவ்வொன்றின் நிலவரித் தொகை குறிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்த சில ஊர்களும் இவற்றில் அடங்கும். எனவே பிற்காலச் சோழச் சோழர் ஆட்சியில் (குறிப்பாக சோழர் பூர்விக ஆட்சிப் பகுதியிலும் அதையொட்டிய பகுதிகளிலும்) பல துறைகளிலும் நேரடியாக முழு அதிகாரம் செலுத்திய ஆட்சிமுறை (Centralized Administration) இருந்திருக்கத்தான் வேண்டும். பிற்காலச் சோழர் ஆட்சி “முழு அதிகார அரசின் தொடக்கநிலை” Early State என்பார் சுப்பராயுலு. (பிற்காலச் சோழர் ஆட்சிமுறையைப் பற்றிய பல்வேறு கருத்தோட்டங்களைச் சுருக்கமாக, தெளிவாக பி.சண்முகம், தமிழ்நாட்டு அரசு வரலாற்றுக் குழு 1998இல் வெளியிட்ட நூலின் முதல் தொகுதி பக்கங்கள் 405-475இல் தந்துள்ளார்) ii. கைலாசபதி, கேசவன், எம்.ஜி.எஸ். நாராயணன் இவர்கள் பிற்காலச் சோழ அரசு நிலமானிய அரசு (Feudal State) என்பர். iii. கென்னத் ஆர் ஹால் (2001) “அக்காலத் தென்னிந்திய அரசுகளை “நிலமானிய அரசு” என்ற முத்திரை குத்துவது; அல்லது வேறுநாட்டு வரலாறுகள் சார்ந்து உருவாகிய கோட்பாடுகளின் பெயரை தென்னிந்திய அரசுகளின் நெற்றியில் ஒட்டுவது; இரண்டுமே எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஸ்டெய்ன் கருத்துக்கும், கரோசிமா கருத்துக்கும் இடைப்பட்ட நிலையே என்னுடையது ஆகும்.” I am less than comfortable in applying the “feudal” label or other externally - derived vocabulary to early South India and find myself somewhere between Karoshima’s “Unitary State” and Stein’s ‘Segmentary state’ in my sense of early South Indian History. 15. அரசர்கள் இறந்தால் அவர்கள் தெய்வமாகக் கருதப்பட்டு பள்ளிப்படைக் கோயில்கள் அமைக்கப்பட்டன. “மந்திரிசபை” என ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. “உடன் கூட்டம்” என்ற ஒன்றைப் பற்றி அறிகிறோம். அரசன் சில நேரங்களில் சிலவற்றைப் பற்றி அவர்களிடம் ஆலோசனை கேட்டு தன் விருப்பப்படி ஓரளவுக்கு அவர்கள் ஆலோசனையைப் பின்பற்றியிருக்கலாம். குறைந்த எண்ணிக்கையில் இருந்த நிருவாக “அதிகாரிகள்” நிலவரி, பிறவரிகள் வசூல்; காவல்; பல்வேறு சாதியினர் இனத்தவர் இடையே சச்சரவின்மை போன்றவற்றைக் கவனித்திருப்பர். பிராமணிய வர்ணாசிரம முறையைப் பின்பற்றிக் காலகாலமாக மேம்போக்காக அரசன் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தி வந்திருப்பான். எனினும் ஊர்ப்புறங்களில் இன்னின்ன சாதிகள் முதன்மை, அவற்றிற்கிடையே உறவு போன்றவையெல்லாம் அக்காலத்தில் நீக்குப் போக்காகவே இருந்திருக்கும்; அக்காலத்தில் படிப்படியாக தீண்டாமைக்குச் சில சாதியினரை உட்படுத்திய கொடுமையும் தொடங்கியது. அரசனுக்கு மனைவியர் பலர்; அந்தப்புரக் காதற்கிழத்தியரும் மிகப்பலர். பகையரசர் நாடுகளில் இருந்து சிறைப்படுத்தி வேளத்தில் குடியேற்றி வைத்திருந்த பெண்கள் உட்பட. 16. சோழநாடு உட்பட தென்னிந்தியாவிற்கு வந்து சென்ற சௌ ஜு Chou Ju-Kua என்னும் சீனன் கிபி. 1225இல் சோழ அரசவை பற்றிப் பின்வருமாறு தெரிவித்தது சீன ஆவணங்களில் உள்ளது. ‘சோழ அரசர் உண்டாட்டுப் பெருவிருந்துகளில் அரசனும் அமைச்சர்கள் நால்வரும் கலந்து கொள்கின்றனர். சிம்மாசனத்தை வணங்கியபின்னர் அவையிலுள்ள எல்லோரும் இசை, பாட்டு, நடனம் என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். அரசன் மது அருந்துவ தில்லை; ஆயினும் ஊன் உண்கிறான். அந்நாட்டு வழக்கபடி பருத்தி ஆடைகள் அணிகிறான். (தானிய) மாவினால் செய்த பல பலகாரங்களை உண்கிறான். அவனுக்குப் பரிவாரமாக நடன மாதர்கள் ஆயிரக்கணக்கானவரை வைத்திருக்கிறான். முறைபோட்டு ஒருநாளைக்கு 3000 பேர் நடனமாதர் அரசவையில் பங்கேற்கின்றனர்.’ 17. அரசனுக்கு மெய்க்காப்பாளர்களாக அவன் உயிரைக் காத்திடத் தாம் சாவதற்குச் சூளுரைத்துக் கொண்ட ‘வேளைக் காரப்படைகள்’ சோழர்களிடமும் இருந்தன. பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சியில் அவர்களும் இத்தகைய படைகளை “தென்னவன் ஆபத்துதவிகள்” என்ற பெயரில் வைத்திருந்தனர். அதற்கும் பிற்காலத்தில் சேரநாட்டுக் கோழிக்கோடு சாமுத்திரிகள் போன்றவர்களிடம் இத்தகைய வீரர்கள் “சாவர்” என்ற பெயரில் இருந்தனர். 18. அக்காலத்தில் உலகெங்கிலும் (இந்தியாவிலும்) போர்கள் எப்படி நடந்தனவோ அப்படித்தான் சோழர் போர்களும் படையெடுப்புகளும் கொடுமை வாய்ந்தனவாக (கொலை, கொள்ளை, அப்பாவிகளுக்குப் பாதுகாப்பின்மை; ஊர்களைக் கொளுத்திச் சூறையாடுதல்; பெண்கள் உட்பட அடிமைகளாகப் பிடித்தல் ) இருந்தன. நடைமுறையில் நேர்மையான போர்முறை கையாளப்படவில்லை. கைதிகளாகப் பிடித்த எதிரி நாட்டுப் பெண்கள் அரசனுடைய காமக்கிழத்திய ராகவோ வேளப் பெண்களாகவோ ஆக்கப்பட்டனர்; உறுப் பறைக்கும் ஆளாயினர். உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் நிலத்தோடு இணைந்த அடிமைகளாக Praedial slaves ஆகும் நிலை இக்காலத்தில் தொடங்கியது; அது மட்டுமன்று போரில் பிடிபட்டவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். பஞ்சம், பசி காரணமாகவும் கடனைத் திருப்பித்தர இயலாததாலும் தம்மை அடிமைகளாக கோயிலுக்கும், ஏனையோருக்கும் விற்றுக் கொண்டனர். இந்தியாவில் பிற்காலச் சோழர்களும் பிறரும் இடைவிடாது போரில் ஈடுபட்டதற்கான காரணங்களைப் பின்வருமாறு ஸ்பென்சர் (1983) கூறுகிறார். “பிற்காலச் சோழர்களும் சரி, அவர்கள் காலத்திய பிற அரச பரம்பரையினரும் சரி அடிக்கடி நடத்திய படையெடுப்புகளும் போர்களும் - குறிப்பாக நெடுந் தொலைவிலுள்ள நாடுகளின்மேற் படையெடுப்புகள் - எதற்காக மேற்கொண்டனர்? அக்கால அரசதந்திரம் அவ்வாறு செய்வதுதான் அவர்கள் கடமையெனப் போதித்தது. போர்களின் மூலம் நாட்டுக் கருவூலம் நிரம்பியது ஒரு முக்கியமான காரணம் ஆனால் அது மட்டுமன்றி அரசர்களும் வீரர்களும் தாங்கள் மாவீரர்கள் எனக் காட்ட விரும்பினர். சிற்றரசர்களும் தலைவர்களும் நாட்டிற்குள் இருந்து குறும்பு செய்வதைத் தடுக்க நெடுந்தூரப் படையெடுப்புகளில் அனுப்பப்பட்டனர் (அதில்வரும் கொள்ளையில் அவர்களுக்கும் பங்கு உண்டு அன்றோ!). அரசனும் சரி, அவனுக்குக் கீழ்ப்பட்டவர் களும் சரி கொள்ளை வருமானத்தில் பெரும் ஆர்வம் கொண்டனர். எஸ்.என். எய்சன்ஸ்டாட் இந்தக் கொள்ளையை “free floating resources” என்பார்! 19. பிற்காலச் சோழர் காலத்தில்தான் பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் தமிழ்நாட்டில் ஏராளமான நிலங்களை அரசர்கள் பிரமதேயம் ஆகவும் தேவதானம் ஆகவும் தானமாக வழங்கினர். [21ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியாவின் மைய அரசும் அனைத்துக் கட்சி மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு வெள்ளையர், சப்பானியர் கொரியர் மற்றும் அவர்களோடு இணைந்த இந்திய முதலாளிகள் ஆகியோருடைய கும்பினிகளுக்காக இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழை இந்தியர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கி ஏறக்குறைய தானம் ஆகவே ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத்” தருவது போன்ற செயல்பாடுதான் அன்று நடந்ததும்] பிரமதேயம் என்பது பெரும்பாலும் நிலம் அல்லது ஊரின் மேல் காணியாட்சி உரிமை; தேவதானம் என்பது நிலம் / ஊரிலிருந்து தண்டலாகும் நிலவரியைப் பெறும் உரிமை. ஒரு நிலப் பகுதியையோ ஊரையோ பிரமதேயமாக தேவதானமாகத் தரும்பொழுது எந்த நாட்டின் (சில சதுர மைல் பரப்பு உள்ளதுதான்; country அல்ல!) பகுதியாக அது இருந்ததோ அதிலிருந்து பிரித்து தனி ஊர்களாக (சதுர்வேதி மங்கலம் போல்) உருவாக்கித் தந்தனர். பிரமதேய ஊர்களில் பிராமணர் அல்லாதாருக்கு இருந்த காணிகளை அவர்கள் பிரமதேயத்திற்கு விற்று விடவேண்டும் என்று 1001ல் இராசராசன் பொது ஆணை வெளியிட்டான் (நாவிதர், தச்சர் போன்ற தொழிலாளர்கள் வைத்திருந்த காணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு தந்தான்) பொதுவாக இச்செயல்கள் பற்றி ஸ்டெயின் 1980இல் கூறியது வருமாறு: “இராசராசன் பிராமணியக் கடவுளர் கோயில்களுக்குத் தந்த பெரும் (நிலம் முதலிய) கொடைகள் மூலம் தென்னிந்தியாவில் சோழ அதிகாரம் நிலவிய பெரும் நிலப்பரப்பில் பிராமணர்களின் மதிப்பையும் சமூக அதிகாரத்தையும் உச்ச நிலைக்குக் கொணர்ந்தான். வட இந்தியாவில் (குப்தர் ஆட்சி போன்றவற்றில்) ஸ்ரௌத வேள்விகளும் சடங்குகளையும் அரசுகள் நடத்திய காலங்களில் இருந்த அளவுக்கு சோழர் ஆட்சிக் காலத்தில் பிராமணர்கள் அரசின் செல்லப் பிள்ளைகளாயினர். நிலச் சொந்தக்காரர் என்ற வகையில் பிராமணர் ஒவ்வொரு வட்டாரத்திலும் தென்னிந்தியாவில் பெற்ற அதிகாரம் வேறு எங்கும் காணாதது. இக்காலத்தில் சோழ நாட்டிலும் அதனை ஒட்டி மேற்கிலும் வடக்கிலும் இருந்த மேட்டுப்பகுதிகளிலும் (கருநாடகம், ஆந்திரா) இருந்த அளவுக்கு இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலும் சாங்கோபாங்கமான பிரமதேய கிராமங்கள் உருவாக வில்லை.” மைசூர் தொல்லியல் அறிக்கை 1936 (பக் 84) கல்வெட்டு 19 கருநாடகத்தில் ஹாலுத்தூர் கிராம கௌடர்கள் ஹொய்சள நரசிம்மன் III கிபி 1230இல் அவ்வூரை அக்ரகாரமாக்கி பிராமணர்களுக்கு மாற்ற ஆணையிட்டதை எதிர்த்ததற்காக ஒறுக்கப்பட்டதைக் கூறுகிறது. (குப்புராம் 1979). 20. எல்லா பிராமணர்களுமே பிரமதேயங்களில் வசிக்கவில்லை. பத்தில் ஒன்பது பிராமணர் பிற ஊர்களில் தான் வசித்தனர். கல்வெட்டுகளைப் படித்தால் ஒரே பிரமதேய / தேவதான மயமாக (!) இருந்த போதிலும் பிரமதேயம் / தேவதானம் அல்லாத ஊர்களின் எண்ணிக்கையை விட அவற்றின் எண்ணிக்கை குறைவுதான். பிற்காலத்தில் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ‘மிராசி’ உரிமைகள் சோழ, பாண்டிய பிரமதேய நிலம் / ஊர் தானங்களில் இருந்து உருவானவை என பேடன் பாவல் கருதினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் சேலம் கோயம்புத்தூர் போன்ற புன்செய்ப் பகுதிகளில் மிராசி கிராமங்களே இருந் திருக்க வாய்ப்பில்லை என்றார் அவர். 21. கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் பிற்காலச் சோழபாண்டியர் வாரிவழங்கிய நிலக்கொடைகளைப் பற்றி எம்.ஜி.எஸ். நாராயணன் (1994) தெரிவித்துள்ள கருத்துகள் சில காண்க: “கோயிலை சமயம், பண்பாடு பற்றிய இயல்களுக்கு ஒதுக்கிவிடக்கூடாது! கோயிலே சமூக வாழ்வின் மையமாகவும் ஆளும் (சுரண்டல்) வர்க்கத்தின் நோக்கத்தைச் செயல்படுத்தும் கருவியாகவும் அமைந்தது. ஊர்ப்புற மேட்டுக் குடிகள் தம் அரசியல் அதிகாரத்தை கோயில் மூலமே செலுத்தி வகை வகையான நிலஉரிமைச் சூது முறைகள் மூலம் நிலத்தில் வேர்வை சிந்தப்பாடுபட்ட உழவர் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தனர். நாம் கல்வெட்டுகளிலும் பனுவல்களிலும் படிக்கும் அன்ன தானங்கள், கல்லூரிகள், மருத்துவ சாலைகள் இவைகள் எல்லாம் மேற்சாதியினராகிய ஒரு சிறு விழுக்காட்டி னருக்கே பயன்பட்டன” (On the materialist approach to history) “தென் இந்தியா ஆரியமயமாக்கப்பட்டது’ என்று கூறுவது எதைக் குறிக்கிறது? வேத சமயம், பண்பாட்டைப் பரப்புவது போன்ற போர்வையில் ஆரிய மயமாக்க வந்த பிராமணக் குழுக்கள் தங்கள் நலனுக்காகச் செய்த நிலப்பறிப்பு முயற்சிகளின் விளைவே “the product of a land grab movement organised by the Vedic Aryanising groups though heavily disguised as a movement of religion and culture” (Land grants in South India). “நிலத்தொடு பிணைத்த கொத்தடிமை உழவர்கள் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கும் எந்த சமூகமும் சர்ச் / கோயில் மூலம் அனைவரையும் கட்டப்படுத்தும் வலுவான ஒரு சமயக் கோட்பாட்டைக் கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.” (The temple of South India). இதே போன்ற கருத்தை வரலாற்றறிஞர் செம்பகலட்சுமி அம்மையாரும் உபேந்தர்சிங் (2007) நூலின் மதிப்புரையாக 14.10.08 இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் தெரிவித் துள்ளார். “பல்வேறு இடங்களிலும் காலங்களிலும் குறிப்பிட்ட ஒரு வகையான சமூக அமைப்பை அனைவரும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளச் செய்யவும், ஒற்றுமைக்கான ஏந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாட்டின் கருவியாகச் சமயம் இருந்து வந்துள்ளது. (One of the ways in which religion has made its impact is in the realm of ideology, which is essentially used as a legitimising and integrative force in various contexts.) 22. நாட்டின் அச்சாணியான வேளாண்மையில் நிலஉரிமை வகைகளில் அடித்தட்டில் இருந்தவர்கள் ‘குடி’ அல்லது ‘உள்குடி’கள்; சில நேர்வுகளில் அவர்களே காணியாளன் ஆகவும் இருந்தனர்; அப்படியில்லாத நேர்வுகளில் (காணியாடசி உரிமை பெற்ற) காணியாளனுக்கு அக்குடிகள் விளைச்சலில் மூன்றில் ஒருபங்கோ, இரண்டு பங்கோ கொடுக்க வேண்டி யிருந்தது. அலெயேவ் (1981) கட்டுரையின்படி அரசுக்கு காணி யாட்சி உரிமையாளன் (பிரமதேய நிலத்தைப் பொறுத்தவரை பிராமணர்; பிற நிலங்களைப் பொறுத்தவரை ஏனையோர்) பின்வருமாறு நிலவரி செலுத்த வேண்டியிருந்தது. மொத்த விளைச்சலில் பங்கு குடிகள் காணியாளன் காணியாளனிடம் தந்தவாரம் கட்டிய நிலவரி எஞ்சியது 1/3-2/3 2/15-6/15 4/15-6/15 (அதாவது குடிகள் (அதாவது மொத்த தந்த வாரத்தில் விளைச்சலில் 1/5-2/15) 27% - 40% 23. சராசரியாக ஒருவேலி (6.6 ஏக்கர்) நன்செய் நிலத்துக்கு நிலவரி 100 கலமாக இருந்தது. காராண்மை உரிமையுடைய வர்கள் சிலர் தாங்களே பயிரிட்டனர்; சிலர்குடிகளுக்கு குத்தகைக்கு விட்டு வாரம் பெற்றனர். தேவதான நிலங்கள் பெரும்பாலும் முற்றிலுமோ பெருமளவுக்கோ இறையிலி (நிலவரி கட்டத் தேவையில்லாத) நிலங்களாக இருந்தன. பிரமதேய நிலங்களில் சிலவற்றுக்கும் நிலவரி விகிதத்தில் சலுகை தரப்பட்டது. 24. காவிரி முதலிய ஆற்றுப்படுகை நன்செய் நிலங்களைப் பொறுத்தவரையில் வயலை உழுதல், விதைத்தல், களை யெடுத்தல், நீர்பாய்ச்சுதல், நெல்அறுவடை ஆகிய அனைத்து உடலுழைப்பும் பெருமளவுக்கு நிலத்தோடு பிணைந்த கொத்தடிமை போன்ற நிலையில் வைத்திருந்த சாதியாரால் செய்விக்கப்பட்டது; மேல் சாதிக்கயவர்கள் அவர்களை தீண்டத் தகாதவர்களாகவும் கருதினர். நிலம் விற்கும் பொழுது அவர்களையும் சேர்த்தே விற்றனர். இந்தக் கொடுமையான அடிமைமுறை 1843இல் ஆங்கில அரசு ‘அடிமை முறை ஒழிப்புச் சட்டத்தை’ இந்தியாவில் செயல்படுத்திய காலம் வரை சட்டபூர்வமாக இருந்தது. சங்க காலச் சமுதாயம் பற்றிய பகுதியில் குறித்த கே.ஆர். ஹனுமந்தன், எஸ். மாணிக்கம் ஆகியோர் ஆய்வுகள் கூறுவது என்ன? இவ்வடிமை முறையும் தீண்டாமையும் சங்ககாலத்தில் இல்லையெனினும், கிபி 6-9 நூற்றாண்டுகளில் முளைவிட்டு பிற்காலச் சோழர் காலம் ஆகிய 10ஆம் நூற்றாண்டில் விரிவு பெற்றுப் பின்னர் படிப்படியாக வலுப்பெற்றுவந்தன என்றும், 1300க்குப் பின்னரும் விசயநகர /நாயக்கர் ஆட்சிக் காலங்களிலும் அது மேலும் கொடுமை வாய்ந்ததாக மாறியதுடன் மேலும் பலருக்கும் விரிவாக்கப் பட்டது என்றும் கூறுகின்றன. திருவாங்கூர் கல்வெட்டுகள் III எண் 40இல் கிபி 922-23 கல்வெட்டு ஒன்று புலையர் ஒருவரை நிலத்தோடு விற்றதைக் குறிக்கிறது. இராசராசன் I கல்வெட்டுகளில் தென்னிந்தியக் கல்வெட்டுகள் II - 4-5) தீண்டாச்சேரி குறிக்கப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணமும் தீண்டாமையைப் பற்றி திருநாளைப் போவார் (நந்தனார்) வரலாற்றிலும் பிற இடங்களிலும் குறிப்பிடுகிறது. எப்படி இவர்கள் தீண்டத்தகாதவர்களாக, அடிமைகளாக ஆயினர்? அவர்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு இக்கொடுமைக்கு அவர்களை “மேல்சாதியினர்” ஆட்படுத்தினர் என்பர் காத்லீன் கோ Cathleen Gough அம்மையார் (1980). (It seems probable that most of them were descended from conquered tribes who had earlier possessed the land out of which the Irrigation state was carved) எம்.ஜி.எஸ். நாராயணன் (1994)உம் அவர்கள் நிலங்கள் பிடுங்கப்பட்டு இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றே கருதுகிறார். (The Pulayar, Parayar, Cherumar ete who are listed as Scheduled Castes and who were traditional agricultural workers having the status of agrestic slaves or serfs in medieval society must be the descendants of the early peasants who lost their lands.) மண்ணின் மைந்தர்களாகிய இவர்களுக்கு இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை எம். சீனிவாச ஐயங்கார் Tamil Studes (1914) லேயே உணர்ந்து கூறியுள்ளார். “தமிழரசர்கள் உழவுப் பறையர்களின் நிலத்தைப் பிடுங்கி பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் கொடுத்த பின்னர் பண்டு தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலங்களில் அப்பறையர் அடிமையூழியம் செய்ய நேரிட்டதுடன் நிலத்துடன் இணைத்து விற்கவும் வாங்கவும் படும் அக்கிரமத்துக்காளாயினர். நிலத்தோடு சேர்த்து அடிமை உழவரும் விற்கப்பட்டனர் [செங்கல்பட்டில் இந்நிலைமை இருந்ததை 1882லும் கலெக்டர் டிரெமன்ஹீர் குறித்துள்ளார்.] இப்படிப்பல நூற்றாண்டுகளாக இருந்த நிலஅடிமை முறை Praedial slavery நல்ல காலமாக ஆங்கிலேயர் ஆட்சி வந்த பின்னர் ஒழிக்கப்பட்டது” ஐயங்காருக்கு முன்னர் “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” இரண்டாம் பதிப்பு 1875இன் இணைப்பு IV ல் கால்டுவெல்லும் ‘வன்முறையினால்தான் இவர்களுக்கு இந்நிலைமை உண்டாக்கியிருக்க வேண்டும் என்றும் சாதாரண குமுதாய, சமய தத்துவ, பண்பாட்டுக் காரணங்களால் உண்டாகியிருக்கவே இயலாது’ என்பதை நன்கு உணர்ந்து குறித்துள்ளார் (it is more natural to suppose, that they were reduced to servile condition by conquest than to suppose that entire tribes were enslaved by the operation of ordinary social causes). 25. முன்பத்தியிற் கண்ட நிலைமை “சோழர்” அல்லாத வேறு ஒரு அரச பரம்பரையினர் ஆண்டிருந்தாலும் ஏற்பட்டுத் தான் இருந்திருக்கும்! இதைத்தான் ஜே.என். ராபர்ட்ஸ் தன் உலக வரலாற்றில் (1992) தெளிவாக்கியுள்ளார். “உழவர் உழைப்பின் பலனைச் சுரண்டிக் கொழுக்கும் கொள்ளைக்கார ஆளும் வர்க்கத்தினர் தேசமாகவே இந்தியா என்றும் இருந்து வந்துள்ளது. அச்சுரண்டல் கும்பல்களை ‘அரசுகள்’ என்று கருதிக்கொண்டால் உழைப்பவர் விளைப்பதைக் பிடுங்கி உலுத்தராகிய ஒட்டுண்ணிகளுக்கு ஊட்டுவதற்காகவே இந்தியாவில் “அரசுகள்” இருந்துள்ளன (India remained a continent of exploiting ruling elites and producing peasants upon whom they battened. The “states” if the term can be used, were only machinery for transfering resources from producers to parasites). ஆயினும் கவனமாகப் பார்ப்பவர்களுக்கு இந்நிலைமை எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் எந்த இசங்கள் இருந்தபோதிலும் வெவ்வேறு அளவுக்கு இருந்து வந்ததுதான் என்பது தெரியவரும்! இதைத்தான் புனித அகஸ்தினும் (கிபி 354-430) “அரசா? அது கொள்ளைக் கூட்டங்களில் மிகப் பெரியது” என்று கூறியிருந்தார். 26. சர் சார்லஸ் மெட்கால்ப் 1830இல் கவர்னர் ஜெனரலுக்கு குறிப்பு (minute) எழுதும்பொழுது இந்திய ஊர்கள் தன்னிறைவும் சுதந்திரமும் பெற்றவை என்ற ஒரு (மாயைக்) கருத்தை முன் வைத்தார். “கிராம சமுதாயங்கள் சிறுசிறு குடியரசுகள்; அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஊரில் உள்ளன; பிற தொடர்பு தேவையில்லை. எல்லாம் மாறும், ஆனால் கிராமங்கள் மாறுவதில்லை அரசபரம்பரைகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன; மாற்றத்திற்குப் பின் மாற்றம் ஏற்படுகிறது; ஆனால் கிராம சமுதாயம் அப்படியே நீடிக்கிறது” இந்தியா என்றும் மாறாது தேக்க நிலையில் இருப்பதற்கு இந்திய கிராமங்கள்தான் காரணம் என்று கார்ல் மார்க்ஸ், சர் ஹென்றிமெய்ன் ஆகியோர் கருதினர். அவர்கள் கருத்துகளுக்கு அடிப்படை பின்வரும் உன்னிப்புகளாகும். கிராமத்து நிலம் கிராமத்தார் அனைவருக்கும் பொதுவாக சொந்தமானது (தனி நபருக்கு என்று நில உரிமை இல்லை.) கிராமம் தன்னிறைவு பெற்றது (தேவையான பல்வேறு தொழில்களுக்கான சாதியினரும் அங்கே இருந்தனர்.) முதல் உன்னிப்பை பேடன் பாவல் மறுத்தார்; பண்டு தொட்டு தனிநபர் நிலஉரிமை இருந்ததையும் அது வரலாற்றில் முக்கியத்துவம் வகித்ததையும் நிறுவினார். சமூகவியல் - மாந்தவியலாளர் பின்னதும் தவறு என்பதையும், சாத்திரியாரின் ‘சுய நிறைவுள்ள கிராம சமுதாய’ கோட்பாடு உன்னிப்பது போல) கிராமங்கள் சுதந்திரம் உடையவை அல்ல என்பதையும் நிறுவியுள்ளனர். தனி கிராமத்தை விட பரவலான நிலப் பகுதியில் - சில நேர்வுகளில் சோழர் கால “நாடு” அளவில் - சமுதாயச் செயல்பாடு இருந்திருக்கும் என்பது கராஷிமா கருத்து. பிரமதேய கிராமங்களின் சபைகளின் அமைப்பையும் செயல்பாட்டையும் விளக்கும் கல்வெட்டுகள் பல இருப்பது (எ.கா. பராந்தகன் I உடைய உத்தரமேரூர் கல்வெட்டு) உண்மை தான். ஆனால் இதனைப் பொதுவாக எல்லாக் கிராமங்களிலும் இருந்த நிலைமை என்று கருதிவிடக் கூடாது. பிரமதேயங்கள் அல்லாத வெள்ளாண் வகை (nongrant Vellan vagai) கிராமங்களே பெரும்பான்மை, அவற்றில் பிரமதேய கிராம சபைக் கல்வெட்டுகள் கூறும் நிலைமை இருந்ததாகக் தவறாகக் கருதிக்கொண்டு “சோழர் காலக் கிராமங்களில் ஊர்மக்கள் ஜனநாயகம் இருந்தது” என்று கருதுவது தவறு என்பதே பல வரலாற்றறிஞர் கருத்து ஆகும். ஜி. குப்புராம் (1979) கட்டுரை இதை நன்கு விளக்குகிறது. 27. பிற்காலச் சோழர் காலத்திலும் (அதற்கு முன்னரும், பின்னரும் இருந்ததுபோல) தமிழ் நாட்டுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் முக்கியமாக வாணிபத் தொடர்பும் வேறுவகைத் தொடர்புகளும் இருந்து வந்தன. இராசேந்திரன் “கடாரம் கொண்டது” இத்தொடர்பில் ஒரு நிகழ்ச்சியே. சோழ அரியணை ஏறுமுன்னர் குலோத்துங்கன் சில ஆண்டுகள் பூர்வ தேசத்தில் (தென்கிழக்கு ஆசியாவில்) படைத் தொழில், வாணிகத் தொழில் ஈடுபட்டுவந்திருக்கலாம் என்பர் தி.நா. சுப்பிரமணியம். சுமத்ரா தீவில் லொபோ தோவா Loboe Toewa வில் உள்ள கிபி 1088 கல்வெட்டு அங்கிருந்த ‘திசையாயிரத்து ஐந்நூற்றுவர்’ என்னும் தமிழ் வாணிகக் குழுவின் குடியிருப்பைக் குறிப்பிடுகிறது. சீனா, பார்மோசா ஆகிய இடங்களிலும் அக்காலத் தமிழக வணிகர் கல்வெட்டுகள் உள்ளன. பண்பாட்டு, அரசியல் புலங்களிலும் சோழத்தாக்கத்தை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணலாம்; அக்கால கிமெர் khmer அரசர்கள் கல்வெட்டுகள் அமைப்பு, வாசகம், நோக்கம் ஆகியவற்றில் சோழர் கல்வெட்டுகளைப் போன்றே உள்ளன. கிபி 15ஆம் நூற்றாண்டு வரை மலாக்கா அரசர்கள் தாங்கள் ‘சோழ வம்சத்தினர்’ என்றே கூறிக் கொண்டனர் (குவாரிச் வேல்ஸ்) 28. கோயில் கட்டடக்கலையிலும் சிற்பக் கலையிலும் திராவிடப் பாணி சோழர் காலத்தில் உச்சநிலை எய்தியது. அதன் சிறப்பை பாலசுப்பிரமணியன் 1971/1975/1979இல் வெளியிட்ட தொடக்ககால / இடைக்கால / பிற்கால சோழர் கோயில்கள் என்னும் மூன்று அருமையான மடலங்களில் காணலாம். அதற்குப் பிற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவிலும் பிறவிடங்களிலும் சோழர் கட்டடக்கலையின் தாக்கம் பெரியது. கோயில் சூழலில் தமிழர் இசை, நடனம், சிற்பம் ஆகியவை முழுவளர்ச்சி அடைந்தன. சோழர் காலச் செப்புப் படிமங்களில் ஆடவல்லானின் (நடராசன்) படிமம் கலைச்சிறப்பு வாய்ந்தது. 29. பிற்காலச் சோழர் காலத்தில் தமிழிலக்கியத்தின் சிறந்த படைப்புகள் சில தோன்றின. ஒன்று 10ஆம் நூற்றாண்டில் சமணமுனிவர் திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணி (3150 விருத்தப்பாக்கள்); அடுத்து சைவ நாயன்மாரைப் பற்றி 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் (4286 விருத்தங்கள்), இவற்றைவிடச் சிறப்பு வாய்ந்ததும் (திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய வற்றுடன் வைத்து எண்ணத் தக்கதுமான) தமிழின் தலைசிறந்த காவியமாகிய இராமவதாரத்தை (கம்பராமாயணத்தை – 10500 விருத்தங்கள்) 12ஆம் நூற்றாண்டில்தான் கம்பர் எழுதினார். கம்பனுக்கு முன்னரே தமிழின் பன்முக பல்துறை இலக்கிய ஆற்றலை நிலைநாட்டும் நூல்கள் எண்ணிறந்தவை. எனினும் எம்மொழிப் பெருங் காவியத்துக்கும் இணையெனக் கூறத் தக்கதும் கவித்துவநயம் கொழிப்பதுமான பெருங்காப்பி யத்தைத் தமிழுக்குத் தந்தவன் கம்பன் என்பது பன்மொழியறிஞர் வ.வெ.சு. ஐயர் (1950) முடிவாகும். 30. இக்காலத்தில் சமண அறிஞர் படைத்த இலக்கண நூல்கள் குலோத்துங்கன் III காலத்திய பவணந்தி முனிவர் நன்னூலும் அமிதசாகரர் உடைய யாப்பருங்கலமும் ஆகும். 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சைவ சித்தாந்தத் தலைமை நூலாகிய (12 சூத்திரங்கள் கொண்ட) சிவஞான போதத்தை மெய்கண்டார் எழுதினார். செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி யும் நிகண்டுகள் பிங்கலந்தை, சூடாமணி ஆகியவையும் இக்காலத்தவையே. மாபெரும் உரையாசிரியர் களாகிய இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், முதலியவர்களும் 10ஆம் நூற்றாண்டிலிருந்து அடுத்தடுத்து வாழ்ந்தவர்களே யாவர். நூற்பட்டியல் Aiyar, V.V.S; 1950. Kambaramayana, a study; Delhi Alayev, L.B. 1981 The system of land rights in Southern India: 900- 1300AD. Proceedings Fifth Int Confce of Tamil studies Madurai. Ali, Daud (2007): The service retinues of the Chola Court: a study of the term Velam in Tamil inscriptions; BSOAS 70:3 pp 487-509 Appadurai A. 1936. Economic conditions in Southern India 900- 1300 AD; University of Madras. அப்பாத்துரை, கா. 1971. தென்னாட்டுப் போர்க்களங்கள் பாலசுப்பிரமணியம் மா, 1979. சோழர்களின் அரசியல் வரலாறு Balasubramanian S.R. 1971, 1975, 1979. Early Chola temples; Middle Chola temples; Later Chola temples; Delhi. Champakalakshmi R. (1993): State and Economy: South India circa AD 400-1300 pp 266-308 of Thapar: 1993 Gough, Cathleen (1980) ‘Modes of production in Southern India’ Economic and Political Weekly Annual Number. Hall, Kenneth R. 1980. Trade and State Craft in the Age of the Cholas; New Delhi. (2001) “Introductory essay” at 1-27; and “Merchants, rules and priests in an early South Indian sacred centre: Chidambaram” at pp 85-116 of his Structure and Society in early South India. - Essays in Honour of Noboru Karashima; OUP New Delhi. Heetzman, James (2001) Urbanization and Political Economy in early South India. see pp 117-156 of K.R. Hall: 2001.This is based on 584 inscriptions of AD 900-1300 (1997) Gifts of power-Lordship in an Early Indian State: OUP pp 277. கைலாசபதி, க. (1966) பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பார்க்க. (பக். 145-197 பேரரசும் பெருந் தத்துவமும்.) Karashima, Noboru (1984) South Indian History and Society: Study from Inscriptions AD 850-1800; OUP pp 217. (2001) Whispering of Inscriptions. see pp 45-58 of K.R. Hall 2001. Karashima N and Y. Subbarayalu (1978) A concordance of the Names in the Cola Inscriptions (Three vols); Sarvodaya Ilakkiya Pannai; Madurai. Kesavan, Veluthat (1993) The Political structure of Early medieval South India; New Delhi. Kulke, Hermann (Ed) 1995. The state in India 1000-1700 Delhi: OUP Kuppuram G. 1979 Role of the village communities in the Cola period. Journal of Tamil Studies: 16 Narayanan, M.G.S. (1994) History and Society in South India pp 271-91 of Foundations of South Indian History and Culture; Bharathiya Book Corporation, Delhi. Nilakanta Sastri K.A. (1935/37) (1955 Revised II Edn.) The Colas; University of Madras. 1955; IV Edn. 1976. A History of South India from prehistory to the fall of Vijayanagara Orr, Leslie C (2001) Women in the temple, the palace and the family: the construction of women’s identities in Precolonial Tamil Nadu. see pp 198-234 of K.R. Hall: 2001 இராசமாணிக்கனார், மா. 1944. பெரியபுராண ஆராய்ச்சி (1947) சோழர் வரலாறு சைசிநூபக Ramaswamy, Vijaya (1985) Textiles and weavers in Medieval south India. OUP Richards J.F. (1998) Kingship and authority in South Asia. OUP, Delhi. சதாசிவப் பண்டாரத்தார் டி.வி. (1949; III 1958) பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி I (846-1070) (1951; II 1954) பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி II (1070- 1279) (1961) பகுதி III சோழர் அரசியல் Seshadri, A.K. (1999) Sri Brihadesvara; The great temple of Thanjavur; Nile Books. Shanmugam P (1987) The Revenue systems of the Cholas 850- 1279 Madras; New Era Publications. Spencer, George W (2001) “In search of change; reflections on the scholarship of N.Karashima” see pp 28-43 of K.R. Hall: 2001 Stein, Burton (1980) Peasant state and society in Medieval South India, OUP p 533 (1998) All the King’s mana : Perspectives on Kingship in medieval South India (pp. 133-188 of J.F. Richards 1998) originally published in 1978) Subbarayalu, Y. (1973) Political geography of the Chola country. State dept of Archaedogy 2001. Studies in Chola history; Chennai; Surabhi pathippagam Subrahmanian, N (1999) Tamil Social History Vol II: AD 600-1800 Thapar, Romila (1993) Recent perspectives of Early Indian History; Bombay. தமிழக அரசு வரலாற்றுக் குழு (1998) சோழப் பெருவேந்தர் காலம் கி.பி. 900-1300; முதல் தொகுதி - அரசியல் (பக். 500); இரண்டாகும் பகுதி (சமுதாயம், பொருளியல், சமயம், இலக்கியம், கலைகள்) பக். 810 Thirunavukkarasu, க.த. 1977. முதலாம் இராசராசன் Thirumalai R. 1987. Land grants and Agrarian reactions in Cola and Pandya times; University of Madras. Vanamamalai N (1974) The accumulation of gold in Thanjavur temple - an enquiry into its sources Journal of Tamil Studies: 6 (Dec. 1974) வேங்கடசாமி நாட்டார், ந.மு. (1928) சோழர் சரித்திரம் Yasushi, Ogura (1998) The Changing concept of Kingship in the Chola period; Royal temple construction circa AD 850-1279 Acta Asiatica (Tokyo) 74: March 1998 (see pp. 39-58) தஞ்சைப் பெரிய கோயில் இயல் 8 பிற்காலப் பாண்டியர் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) தமிழக அரச பரம்பரையினர் அனைவரினும் தொன்மை வாய்ந்த பாண்டியர் பரம்பரையே பண்டைய அரசர் பரம்பரை யினருள் கடைசியாக (கி.பி. 17ஆம் நூற்றாண்டு) மறைவுற்றதும் ஆகும். அணையப் போகும் தீயானது அதிக ஒளியுடன் எரியும்; அதுபோல பாண்டியர் ஆட்சி முதன்மையுடன் வழங்கிய மூன்று கால அளவுகளில் கடைசியான கி.பி. 1200-1311இல் தான் தமிழகத்தின் தலைமை அரசாக விளங்கியது. அக்கால அரசர்களுள் முதன்மை வாய்ந்தவர்கள் வருமாறு: சடையவர்மன் குலசேகரன் (-1216) மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238) [1218இல் சோழன் மூன்றாம் இராசராசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி தஞ்சையையும் உறையூரையும் சூறையாடினான்; சோழர் பாண்டியர்க்கு அடிபணிந்து ஆண்டனர்.] மாறவர்மன் சுந்தரபாண்டியன் II (1238-1251) சடையவர்மன் சுந்தரபாண்டியன் I (1251-1268) (இவன் அதிகாரம் வடக்கே நெல்லூர் வரைச் சென்றது) மாறவர்மன் குலசேகரன் (1269-1308) [மார்க்கோ போலோ 1296இல் பாண்டிய நாட்டுக்கு வந்தான். வழக்கம் போல இவன் காலத்திலும் இவனுக்கு அடங்கிய பாண்டிய குல அரசர்கள் நாட்டின் பகுதிகளை ஆண்டு வந்ததை போலோ குறிப்பிடுகிறான்.] சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் (இவனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த போரில் தனக்கு உதவ அலாவுதீன் தளபதி மாலிக்காபூரை 1311 ஏப்ரல் மாதம் மதுரைக்கு அழைத்து வந்தான்.) 2. கிபி 1200லிருந்து நடைமுறையில் பாண்டிய வேந்தர்கள் சுதந்தரமாக பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர். எனினும் 1218இல் சோழநாட்டின் மீது படையெடுத்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் I சோழ மன்னனைத் தோற்கடிக்கும் வரைப் பெயரளவுக்குச் சோழரை மேலரசராக பாண்டியர் கொண்டிருந்தனர். 1218லிருந்து பாண்டியர் அரசு சட்டபூர்வத் தனி அரசானது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் II (1238-1251) காலத்தில் ஹொய்சள அரசர் தலையீடு காரணமாகப் பாண்டியர் சோழ நாட்டைத் தம் நேரடி ஆட்சிக் கீழ் கொணராமல், தம் கீழரசாகச் சோழ மன்னரை ஆளவிட்டனர் எனக் கண்டோம். ஹொய்சளர் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் (இன்றைய சமயபுரத்தில்) கண்ணனூர் - கொப்பம் என்னும் தங்கள் இரண்டாம் தலைநகரை அமைத்தனர். கடைசிச் சோழ மன்னன் இராசேந்திரன் IIIபாண்டிய நாட்டின்மீது படை யெடுத்த பொழுது ஹொய்சளர் பாண்டியன் பக்கமே நின்றனர். 3. சடாவர்மன் சுந்தரபாண்டியன் (1251-68) காலமே கடைசிப் பாண்டிய அரசின் உச்சகட்டம் ஆகும்; சோழ நாட்டைத் தன் கீழ் கொணர்ந்தான்; தெலுங்குச் சோழர்களையும் வென்று கீழரசர்களாக ஆக்கி நெல்லூர்வரைப் பாண்டிய அரசின் ஆதிக்கத்தை விரிவாக்கினான். இலங்கை மீது இருமுறை படையெடுத்துச் சென்று இலங்கை வடபகுதி அரசர்கள் சுதந்தரமாக ஆள வகை செய்தான். (அடுத்த பாண்டிய வேந்தன் ஆட்சிக்காலத்தில் 20 ஆண்டுகள் இலங்கை மன்னன் பாண்டியனை மேலரசனாக ஏற்றுக் கொண்டான்) சடாவர்மன் சுந்தரன் தனது போர் வெற்றிகளில் கிடைத்த பொருளைக் கொண்டு சிதம்பரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்குப் பெருங் கொடைகள் தந்தான். இவன் காலத்தில் பாண்டிய நாட்டின் சில பகுதிகளில் சடாவர்மன் வீரபாண்டியன் (1253-74) இணை யரசனாக இருந்திருக்கிறான்; வேறு சில இணையரசர்களும் இருந்திருக்கலாம். 4. மாறவர்மன் குலசேகரன் (1268-1308) காலத்தில் தமிழ் நாடு வந்த இத்தாலி நாட்டு வெனீஸ் நகர வாணிகன் மார்கோபோலோ பாண்டிய நாட்டுக்கு வந்து அந்நாட்டுச் செய்திகளைப் பற்றி எழுதியுள்ளான். இவன் காலத்திலும் பாண்டிய குலத்தைச் சார்ந்த அரச குமாரர்கள் இணையரசராக இருந்ததை போலோ குறித்துள்ளான் (இம்முறை முன்னரும் இருந்தது: குலோத்துங்கன் பாண்டியர் ஐவரை வென்றதாகக் குறிப்பிடடுள்ளான்.) 5. பாண்டிய நாட்டுக்குக் கடல் வழியே வருமுன்னர் மார்கோ போலோ 17 ஆண்டுகள் சீனப் பேரரசன் குப்ளாய் கான் அவையில் இருந்தவன். சீனாவிலிருந்து திரும்பி இத்தாலி செல்லும் வழியில் கிபி 1269இல் பாண்டிய நாடு வந்து சில மாதங்கள் தங்கியிருந்தான். அந்தக் காலத்தில் சேர நாட்டுக் கொல்லம் தொடங்கி ஆந்திர நெல்லூர் வரையுள்ள தென்னிந்தியக் கடற்கரைப் பகுதி முழுவதையும் – உள்நாட்டுப் பகுதிகளையும் சேர்த்து - மாபர் Ma’bar என்று அராபிய வணிகர் அழைத்து வந்தனர். தென்கிழக்கு ஆசியா, தென்னிந்தியா, எகிப்து, ஐரோப்பா கடல் வாணிகத்தில் அக்காலத்தில் அராபியர்களே பெரும்பங்கு வகித்துவந்தனர். எனவே தமிழ்நாட்டையும் மாபர் என்றே அழைத்தனர். பாண்டிய நாட்டையும் மாபர் என்றே அழைத்தனர். பாண்டிய நாட்டில் நடந்த முத்துக்குளிப்பு, அந்த நாட்டுத் துறைமுகம் காயல் ஆகியவற்றைப் பற்றி போலோ விரிவாக எழுதியுள்ளான். அராபிய முதலிய நாடுகளின் மூலமாக குதிரைகளை (போர்ப் படைக்காக) இறக்குமதி செய்வதில் தென்னிந்திய அரசர் பெரும்பணத்தை வீணாக்கியதை அவர் குறித்துள்ளார். இந்நாட்டின் வெயில் காரணமாகவும் குதிரைகளைச் சரிவரப் பேணாததாலும் இறக்குமதியான குதிரைகள் பெருமளவில் செத்ததால் ஆண்டுதோறும் புதிய குதிரைகளை இறக்குமதி செய்தனராம். தமிழ்நாட்டு மக்களின் உடையாகிய வேட்டி, புடவை பற்றிக் குறிப்பிடுகிறார். அரசன் உடையும் எளிமை யானதே; ஆயினும் பல இலட்சம் மதிப்புள்ள முத்துக்களையும் இரத்தினங்களையும் அணிந்திருந்தான். அரசன் அந்தப்புரத்தில் மனைவியரும் காமக் கிழக்கியருமாக 1000 பெண்கள் இருந்தனர். தமிழக மக்களின் பின்வரும் பழக்க வழக்கங்களை போலோ குறிப்பிட்டுள்ளான்: இல்லங்களில் சாணி மெழுகுதல்; அடிக்கடி நீராடுதல்; வலக்கையால் மட்டும் உண்ணுதல்; நீரை அண்ணாந்து குடித்தல்; சகுனம், ஜோசியம், மந்திரம், அங்கலட்சணம் ஆகியவற்றில் நம்பிக்கை வெற்றிலை, பாக்கை அனைவரும் பயன்படுத்தியது; கோயில்களில் தேவரடியாள்கள்; கடன்வாங்கியவனைச் சுற்றித் தரையில் வட்டக் கோடு போட்டு, கடனைத் தீர்க்க வகை செய்யாமல் அவன் அக்கோட்டைத் தாண்டக் கூடாது எனல்; 6. மாறவர்மன் குலசேகரன் மகன்களில் பட்டத்தரசி மகன் சுந்தரபாண்டியன் இருந்தபோதிலும் மன்னன் அவனை விட்டுவிட்டுத் தன் காமக்கிழத்தி மகன் வீரபாண்டியனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்தான். சுந்தரன் தந்தையை 1308இல் கொலை செய்தான். அவனுக்கும் வீரபாண்டியனுக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கி நாடு கலவரத்துக்குள்ளாகியது தோற்ற சுந்தரன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் உதவி கோரினான். அலாவுதீன் தளபதி மாலிக் காபூர் அப்பொழுது ஹொய்சளர் தலைநகரமான துவாரசமுத்ரத்தில் இருந்தான் - தேவகிரி யாதவ மன்னனையும் வாரங்கல் காத தீயமன்னனையும் தோற்கடித்துவிட்டு, 1311 மார்ச் மாதம் மாலிக்காபூர் ஹொய்சள மன்னன் வல்லாளன் III (1291-1342) உதவிய படைகளுடன் தமிழ்நாட்டுக்குள் புகுந்து காஞ்சி, சிதம்பரம், ஸ்ரீரங்கம் கோயில்களைச் சூறையாடிக் கொண்டு சென்று ஏப்ரல் மாதம் மதுரைக்குள் புகுந்தான். வீரபாண்டின் ஓடி விட்டான். மாலிக்காபூர் மதுரையைச் சூறையாடிக் கொளுத்தி மீனாட்சி கோயிலையும் அழித்தான். பின்னர் இராமேசுவரம் கோயிலையும் கொள்ளையடித்து விட்டு தென்னிந்தியக் கோயில்களிலிருந்தும் அரசுக் கருவூலங்களி லிருந்தும் கொள்ளையடித்த 612 யானைகள் 96000 மணங்கு தங்கம் பெட்டி பெட்டியாக இரத்தினங்கள், முத்துகள் 2000 குதிரைகள் ஆகியவற்றுடன் டெல்லி திரும்பியதாக பரானி கூறுகிறார். 7. மாலிக் காபூர் போனபின்னர் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் தம் உள்நாட்டுப்போரை மீண்டும் தொடங்கினர். தென் திருவாங்கூரில் ஆண்ட ரவிவர்மன் குலசேகரன் வீரபாண்டியனுடன் சேர்ந்து கொண்டான். ஆயினும் சுந்தரனுக்கு உதவிய காகதீயன் பிரதாபருத்ரதேவன் II அனுப்பிய படை வீரபாண்டியனையும் குலசேகரனையும் வென்றது. அலாவுதீன் கில்ஜி இறந்தபின் சுல்தான் ஆன முபாரக்ஷா அனுப்பிய குஷ்ரூ கான் 1319இல் தமிழகத்தை மீண்டும் கொள்ளையடித்தான். அதன்பின்னர் பாண்டியர் ஆட்சி மதுரையிலிருந்து மறைந்தது. 1323லிருந்து தொடங்கிய முகமதியர் ஆட்சி மதுரைப் பகுதியில் 1371 வரை நடந்தது. இது பற்றி அடுத்த இயலில் காண்க. பாண்டிய அரசபரம்பரையினர் மட்டும் திருநெல்வேலிப் பகுதியில் குறுநில மன்னர்களாக 16ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர் - - 1371இல தொடங்கிய விசயநகர ஆதிக்கத்துக்கும் 1529இல் தொடங்கிய மதுரை நாய்க்கர் ஆதிக்கத்துக்கும் கட்டுப்பட்டவர்களாக. பிற்காலப் பாண்டியருள் பெயர் பெற்றவன் வெற்றி வேற்கை யும் நைடதமும் எழுதிய தென்காசி அதிவீரராம பாண்டியன் (1563-1605). 8. கி.மு. 10-13 ஆம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சோழன் தலைக் கொண்ட பாண்டியன்; பாண்டியன் தலைக் கொண்ட சோழன்; பாண்டியன் தலைக் கொண்டு அவன் மடக்கொடியை வேழம் ஏற்றிய சோழன்; மதுரையை எரித்து அழித்துச் சூறையாடிய சோழன்; சோழர் தலைநகரை அழித்துச் சூறையாடிய பாண்டியன் ஆகிய சாதனை வீரர் பலரை காண்கிறோம். இறுதி முடிவு என்ன? கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பண்டைத் தமிழரசக்கால் வழியினர் அனைவரும் அழிந்து பல்வேறு அயலார் ஆட்சிக்குத்தமிழகம் தொடர்ந்து அடிப்பட்டது. இதுபோன்ற நிலைதான் இந்தியாவெங்கும். இதைத்தான் அறிஞர் ஸ்டான்லி வால்பர்ட் பின்வருமாறு விவரித்தார்: “இந்தியா தனது நெடிய வரலாற்றில் தொடர்ந்து அயலாரிடம் தோற்று அவர்களால் ஆளப்பட்டு வரும் அவலநிலையிலேயே இருந்து வந்துள்ளது. இதற்கு ஒரு காரணம் இந்நாடோ அதன் பெரும்பகுதிகளோ ஒரே ஆட்சியின் கீழ் / ஒரு சில ஆட்சிகளின் கீழ் இருப்பது நாட்டுமக்கள் அனைவர் நலனுக்கும் பாதுகாப் பிற்கும் உகந்தது என்ற உணர்வின்மையேயாம். அதைவிட அடிப்படையான காரணம் இந்தியருடைய ஒரு வகை மனநிலை; அது என்ன? தங்களுக்கு மிக நெருங்கிய சொந்தங்களாக, உறவுடையவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பாமல் சந்தேகத்துடனும் அவநம்பிக்கை யுடனுமே பார்க்கும் பார்வைதான்! (முற்றிலும் அயலாரிடம் பழகும்போது இந்தப் பார்வையை இந்தியர் மேற்கொள்வதில்லை!!) “Indian disinterest in unification or perhaps it is rather Indian “suspicion” and “mistrust” of neighbouring strangers, no matter how close they may actually be, compared to other foreigners, has left India vulnerable to conquest throughout her long history. An Introduction to India: 1991. வால்பர்ட் கூற்றின் உட்கருத்து “ஏதிலார் ஆரத்தமர் பசிப்பர் பேதை பெருஞ் செல்வம் உற்றக்கடை” என்ற குறளின் கருத்தேயாகும். வரலாற்றை மறப்பவர் தாங்கள் பட்ட இன்னல்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பெறுவர் என்று ஜார்ஜ் சந்தயானா கூறியது இந்தியர் அனைவரும் என்றும் உளம் கொள்ளத்து தக்கது ஆகும். இயல் 8க்கான நூற்பட்டியல் (முன் இயலுக்கான பட்டியலில் குறித்த நூல்கள் பலவும் இவ்வியலுக்கும் தொடர்புடையவை) தமிழ்நாட்டு அரசு வரலாற்றுக் குழு 2000: பாண்டியப் பெருவேந்தர் காலம் 1190-1310) பக். 327 (அரசியல் ஆட்சிமுறை, சமுதாயம், பொருளியல், சமயம், இலக்கியம், கலைகள்.) Yule and Cordier (1921) The Book of Ser Marco Polo; 3 மடலம்) தமிழ்நாடு சார்ந்தவற்றை “தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமது பிறந்தது எப்படியோ (1951) நூலில் தமிழாக்கித் தந்துள்ளார். Ramakrishna Aiyar 1952: The life and times of Ativirarama Pandya Journal of the Annamalai University vol XVII July 1952; pp 1-43 இயல் 9 பாண்டியர் ஆட்சி முடிந்தபின் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கும்வரை (1350-1750) மாலிக் காபூர் 1311லும் குஸ்ரூகான் 1319லும் தென்னாட்டைச் சூறையாடி விட்டுச் சென்ற பின்னர் மதுரைப்பகுதியை உலூக் கான் (பின்னர் இவன் மகமது பின் துக்ளக் என்னும் பெயரில் டெல்லி சுல்தான் ஆனவன்) கைப்பற்றி ஜலாலுதீன் அசன் ஷாவை தனது ஆளுநகராக நியமித்தாள். 1334இல் அசன்சா தன்னையே சுல்தானாக ஆக்கிக் கொண்டான். மதுரை சுல்தான் பரம்பரை 1334 முதல் 1371 வரை அப்பகுதியை ஆண்டது. 1336ல் ஆந்திர - கர்நாடகப் பகுதியில் விசயநகரப் பேரரசு நிறுவப் பட்டது. மதுரைக்கு வடக்கிலுள்ள தமிழ் நாட்டுப் பகுதியில் பல குறுநில மன்னர்கள் ஆண்டனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் வட ஆர்க்காடு மாவட்டம் படைவீட்டில் இருந்து ஆண்டுவந்த சம்புவராயர் மன்னர்கள் ஆவர் (சம்புவராயர்கள் கி.பி. 1279 வரை சோழ / பாண்டிய மன்னர்களுக்கு அடங்கி யிருந்தவர்கள்). கொங்கு நாடு கன்னட ஹொய்சள மன்னன் ஆட்சியில் இருந்தது. மதுரைக்குத் தெற்கே திருநெல்வேலிச் சீமையைப் பாண்டியர் பரம்பரையினரான சிற்றரசர் ஆண்டு வந்தனர். மதுரை திருச்சிப் பகுதி மட்டுமே சுல்தான்கள் ஆட்சியில் இருந்தது. கடைசி ஹொய்சள மன்னன் வீர பல்லாளன் III சுல்தானுடைய திருச்சிக் கோட்டையைத் தாக்கித் தோற்றான். அம்மன்னனைக் கொன்று தோலில் வைக்கோல் அடைத்து மதுரைக் கோட்டை மதிலில் உடல் தொங்கவிடப் பட்டது. அது தொங்குவதை கி.பி. 1342இல் மதுரைக்கு வந்த இபின் பதூதா பார்த்து அதுபற்றி எழுதியுள்ளான். 2. விசய நகர மன்னர் புக்கன் I ன் மகன் குமார கம்பணன் 1371இல் மதுரை சுல்தானைத் தோற்கடித்து மதுரை – திருச்சிப் பகுதியை விசயநகர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். (அதற்கு முன்னரே தொண்டை நாட்டை ஆண்டுவந்த சம்புவராயர் களையும், சோழ / கொங்கு நாட்டு சிற்றரசர்களையும் வென்று விசயநகர அரசின் கீழ் கொண்டு வந்திருந்தான்.) கம்பணன் மனைவி கங்காதேவி தான் எழுதிய மதுராவிஜயம் நூலில் மதுரை சுல்தான் ஆட்சியின் கொடுமைகளைக் கம்பணன் வெற்றி நீக்கியதை விளக்கியுள்ளார். மாலிக் காபூர் படை யெடுத்த 1311லிருந்து அதுவரை மூடப்பட்டுக் கிடந்த சிதம்பரம், திருவரங்கம், மதுரைக் கோயில்களில் மீண்டும் வழிபாடு நடக்கச் செய்தவன் கம்பணன் என்று அந்நூல் கூறுகிறது. விசயநகர அரசின் நேரடித்தாக்கம் கிபி 1450க்குப் பின்னர்த்தான் தமிழ்நாட்டில் காவிரிக்குத் தெற்கில் ஏற்பட்டது. 3. கிபி 1370லிருந்து ஏறத்தாழ 200 ஆண்டுகள் வரை பாமினி சுல்தான்கள் தாக்குதலிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றும் அரணாக விஜயநகரப் பேரரசு அமைந்தது. வித்யாரண்யர் யோசனையின் பேரில் அவ்வரசை ஹரிஹர - புக்கர் அமைத்தனர் என்ற கதை கி.பி. 16ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிருங்கேரி மடத்தினர் கட்டியதாகலாம் என்பர் ஹீராஸ். கி.பி. 1565இல் ரக்ஷாஸ் - தங்கடி (தலைக்கோட்டை) போரில் விசயநகரப் பேரரசு பாமினி சுல்தான்களிடம் தோற்று வீழ்ச்சியடைந்த போதிலும் விசயநகர ராமராயனின் பி ற ங் கடைகள் பெனுகொண்டா போன்ற ஊர்களில் இருந்து (கடைசியாக வேலூரில் இருந்து) ஆண்டுவந்ததுடன் (பாமினி அரசு உடைந்த பின்னர் உருவான) பிஜபூர், கோல் கொண்டா சுல்தான்கள் ஆட்சியானது சென்னைக்குத் தெற்கே பரவ இயலாதவாறு தடுத்தும் வந்தனர். பிஜபூர் அரசு கிபி. 1650இல்தான் (கொள்ளிடம் வரைக்கும்) தொண்டை நாட்டைக் கைப்பற்றவும் மதுரை, தஞ்சை அரசர்களைத் தமக்கு அடங்கியவர்களாக ஆக்கவும் இயன்றது. அதே நேரத்தில் வடக்கிலிருந்து தாக்கிய மொகலாயப் பேரரசின் படைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் பிஜபூர் - கொல்கொண்டா சுல்தான்கள் கொள்ளிடத்துக்குத் தெற்கில் உள்ள தமிழ்நாட்டுப் பகுதியைத் தமது ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவர இயலவில்லை. கிபி 1300 முதல் 1750 முடிய ஏறத்தாழ 450 ஆண்டுக்காலமும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவிதியை தமிழ்நாட்டுக்கு வடக்கே ஆந்திர - கர்நாடக நாடுகளில் அப்பகுதிகளைக் கைப்பற்ற அங்கு நடந்த போர்களின் வெற்றி தோல்வியே நிர்ணயித்து வந்தது. தமிழ்நாட்டுப் பகுதிகள் அடிக்கடி கொள்ளையடிக்கப்பட்டன; தென் இந்தியாவின் வடபகுதிப் பேரரசுகளின் படைகளுக்கு உதவத் தமிழ்நாட்டுப் படைவீரர்களைத் (தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்களும், நாயக்க அரசர்களும்) அனுப்பினர். தமிழ்நாடு இப்போர்களில் நேரடிப் பங்கு பெறவில்லை. எனினும் வட தமிழ்நாட்டின் வழி தென்னாட்டு, வடநாட்டு அரசர்கள் அடிக்கடை படை நடத்திச் சென்றனர் - அவ்வாறு 1640களில் கோல்கொண்டா படைகளும், மராத்தியர் படைகள் 1660களிலும் முகலாய தளகர்த்தர்கள் படைகள் 1690-1700 கால அளவிலும் வடதமிழ்நாட்டில் சென்று வந்தன. கி.பி. 16 நூற்றாண்டில் இந்தியாவின் (இன்றைய இந்தியா + பாகித்தான் + பங்காள தேசம்) மக்கள் தொகை 15 கோடி என்றும் இன்றைய தமிழகப் பரப்பின் மக்கள் தொகை அதில் 1 கோடி என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது. 4. இந்தியாவில் அரசர்களாயினும் சரி பேரரசர்களாயினும் சரி அவர்களுடைய நேரடி ஆட்சி தத்தம் பூர்விகப் பகுதியிலும் அதைச் சூழ்ந்த பகுதியிலுமே நடந்தது. விஜயநகரப் பேரரசர் ஆட்சியும் அப்படியே. அவர்களுடைய நேரடி ஆட்சி விசய நகரத்தையும் அதைச் சூழ்ந்த பகுதியாகிய பேரரசின் இதயப் பகுதியிலேயே நடைபெற்றது. அந்த இதயப் பகுதியில் அவர்களுடைய ஆட்சியின் திறனும் செல்வ வளமும் வலுவாக இருந்தன எனினும் பிறபகுதிகளை ஆண்டுவந்த ஆளுநர்கள் / சிற்றரசர்கள் பேரரசருக்குப் பணிந்து நடந்துகொண்டு அவ்வப் பொழுது திறை (கப்பம்) செலுத்தி வந்தால் போதுமென்ற நிலை இருந்தது. இது ஸ்டெய்ன் (1990) கருத்து. விஜயநகரப் பேரரசு “அதிகாரம் கூறுபட்டு நிலவிய அரசு (Segmented State)” தான் என்பர் அவர். அந்தக் கால கட்டத்தில் இருந்த விசயநகர, பிஜபூர், போர்ச்சுகல் முதலிய அனைத்து அரசுகளுமே (எல்லாவற்றிலும் தலையிடும்) நவீன அரசுகளாக இல்லை; “நவீனமடையாத” Premodern அரசுகளாகவே இருந்தன; தம் குடிமக்கள் அன்றாட வாழ்வில் மிகக் மிகக் குறைவாகவே தலையிட்டன; அரசு கட்டிலில் எவர் ஏறினாலும் பொதுமக்கள் வாழ்வைப் பொறுத்தவரைப் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டதில்லை என்பர் எம்.என். பியர்சன் (1987). விஜயநகரப் பேரரசர்கள் தங்களுக்குக் கீழ்ப்பட்ட மதுரை, தஞ்சை, செஞ்சி போன்ற நாயக்க அரசர்களிடமிருந்து பேரராசின் தேவைக்கேற்ப அவ்வப்பொழுது (திறையாக) நிதி பெற்றதுடன் முக்கியமாகப் பேரரசின் போர்களில் பங்குபெற ஆயுதம் தாங்கிய போர் வீரர்கள், குதிரைப்படையினர் ஆகியவற்றையும் எதிர்பார்த்தனர். தெலுங்குப் போர்வீரர் தலைமைகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க பிராமணர்களின் சேவையை விசயநகர மன்னர் பயன்படுததினர். கிருஷ்ணதேவராயன் (1509- 29) பேரரசின் முக்கியமான கோட்டைகளுக்கு துர்க தண்ட நாயகராகப் பிராமணர்களை நியமித்து அவர்கள் தலைமையில் அக்கோட்டைகளில் வீரமிக்க படையினரைப் பராமரித்து வரச்செய்து அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்திப் பாதுகாத்துக் கொண்டான். 5. கிபி 15ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தின் மீது படையெடுத்துச் சூறையாடியவர்கள் இருவர். முதலாமவன் 1404இல் படையெடுத்த ஒட்டர் (ஒரிசா) அரசன் கபிலேசுவர கஜபதி. அடுத்தவன் 1478இல் படையெடுத்த பாமினி சுல்தான் முகமது III. விசய நகர அரசை ஆண்ட அரச பரம்பரைகள் வருமாறு: 1. சங்கமர் குலம் ஹரிகரன் I (1336-57) முதல் 1336-1485 விருபாட்சன் II (1465-85) முடிய (கடைசி அரசன் ஆட்சியில், உண்மை அதிகாரம் சாளுவநரசிம்மன் போன்ற ஆளுநர்களிடமே இருந்தது.) 2. சாளுவ குலம் சாளுவ நரசிம்மன் (1486-91) 1486-1505 பெயரளவில் அவன் மகன்கள் இருவர் (1491-1505); ஆனால் உண்மை அதிகாரம் துளுவ குல நரச நாயக்கனிடமே இருந்து. 3. துளுவ குலம் (வீரநரசிம்மன் 1505-1542) 1505-09; கிருஷ்ணதேவராயன் 1509-29; அச்சுத தேவராயன் 1529-42; (துளுவ குல சதாசிவன் (1542-76) வரைப் பெயருக்கு மன்னனாக இருந்த போதிலும் ராமராயனுடைய கைப்பொம்மையாகவே இருந்தான்) 4. அரவீடு குலம் 1542-1614 ராமராயன் (1542-65) முதல் சிரீரங்கன் III (1642-9) முடிய துளுவகுல நரச நாயக்கன் 1496இல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கன்னியாகுமரி வரைச் சென்றான். அவன் மகன் கிருஷ்ண தேவராயன் கிபி 1512இல் தமிழ்நாட்டுப் பகுதிக்கு மீண்டும் படைகொண்டு சென்று மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய இடங்களில் விசயநகர அரசின் பிரதிநிதிகளாக (கர்த்தாக்கள்) நாயக்கர்களை நியமித்தான். அவர்கள ஆளுகை பற்றி பின்வரும் பத்திகளில் காண்போம். 6. 16ஆம் நூற்றாண்டில்தான் தமிழ்நாட்டுக் கடற்கரைப் பகுதியில் ஐரோப்பிய வெள்ளையர் ஆதிக்கம் தலை நீட்டியது. போர்ச்சுகல் நாட்டை (அப்போதைய மக்கள் தொகை 10 லட்சம்) சேர்ந்த வாஸ்கோடகாமா ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு கப்பலில் வந்து 1498இல் கோழிக் கோட்டில் இறங்கினான். விரைவில் அரபிக்கடல் வாணிகம் அராபிய, கேரளமாப்பிள்ளை வாணிகர்களிடம் இருந்து போர்த்துகீசியர் ஆதிக்கத்தின் கீழ்வந்தது. இந்தியாவில் இருந்த இந்துச் சாதியினரில் வங்கப் பெருங்கடல் வணிகத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தமிழ்நாட்டுச் செட்டிகளே. தமிழகக் கிழக்குக்கரை - - மலாக்கா வாணிகத்தில் அவர்கள் முக்கியபங்கு வகித்தனர். சங்க இலக்கிய காலத்திலேயே பாண்டிய, சோழ, வேந்தர்களுக்கு அடுத்து முக்கியமானவர்களாகக் குறிக்கப்படுபவர்கள் பரதவர்கள். தொன்றுதொட்டு முத்து, சங்கு வாணிபம் அவர்கள் கைகளிலே இருந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்குப்பின் பாண்டியர் ஆட்சியதிகாரம் பரதவர் பகுதிகளிலும் வலு இழந்தது. இச்சூழலில் பாண்டி நாட்டுக்கடற்கரையிற் பலநூற்றாண்டு களாகக் குடியேறியிருந்த அராபியரும் அவர்கள் வழி வந்த வருமான முசுலீம்களுக்கும் பரதவர்களுக்கும் 1532இல் ஏற்பட்ட சச்சரவில் தங்கள் உயிரையும் உடைமைகளையும் காத்துக் கொள்வதற்காக பரதவர்கள் தங்கள் தலைவர்களாகிய பட்டங் கட்டிகளை அனுப்பிக் கொச்சியிலிருந்த போர்த்துகீசியரிடம் உதவி நாடினர். தென்பாண்டிக் கடற்கரைப்பரதவர் அனைவரும் கத்தோலிக்க கிறித்துவர் ஆயினர்; போர்த்துக்கீசியரும் தமது படையைத் தூத்துக்குடிக்கு அனுப்பி பரதவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். 1534இல் அப்பகுதிக்கு வந்த பிரான்சிஸ் சேவியர் பாதிரியார் (1506-1552) பரதவர்களிடையே கிறித்துவ மதம் முறையாகவேரூன்றச் செய்தார். சேவியருடைய கடிதங்களின் ஆங்கிலப் பெயர்ப்பை 488 பக்கங்கள் கொண்ட நூலாக காஸ்தெலோ (Costelloe) 1992இல் வெளியிட்டுள்ளார். அதில் அரிய செய்திகள் உள்ளன. சேவியருக்குப் பின்னர் பரதவர் கடற்கரைப் பகுதிக்கு வந்த பாதிரிகளுள் முக்கியமானவர் ஹென்றி ஹென்றிக்ஸ். கிபி 1600 அளவில் அப்பகுதியில் 1,35,000 பரதவக் கத்தோலிக்க கிறித்தவர்கள் இருந்தனர். தென்தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழின் அடிப்படையில் ஹென்றிக்ஸ் தமிழ் இலக்கணம் ஒன்றை எழுதினார்; (அதன் கையெழுத்துப் படியை தனிநாயகம் அடிகள் 1954இல் லிஸ்பன் நூலகத்தில் கண்டெடுத்தார். அது 1982இல் வெளியிடப்பட்டது. Vermeer hans, J. “The first European Tamil grammar” English trans by Angelica Morath. Heidelberg; Julius Groos Verlag) 1578இல் ஹென்றிக்ஸ் தமிழில் அச்சிட்டு வெளியிட்ட தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) தான் இந்திய மொழிகள் அனைத்திலும் முதன்முதலில் வெளிவந்த அச்சிட்ட புத்தக மாகும். 7. முதலில் விசய நகரப் பேரரசுக்கு கீழ்ப்பட்ட நாயக்கர் ஆட்சியாக உருவாகி நாளடைவில் ஏறத்தாழ சுதந்தரமான அரசுகளாக உருவான அரசுகள் மதுரை நாயக்கர்களும் (1529- 1739) தஞ்சை நாயக்கர்களும் (1532-1674), செஞ்சி நாயக்கர்களும் (1530-1649) ஆவர். 1565 தலைக்கோட்டைப் போருக்குப் பின் மதுரை, தஞ்சை நாயக்கர்கள் படிப்படியாக விசய நகர அரவீடு வம்சப் பேரரசருக்கு அடங்காது போய் 1600 அளவில் சுதந்தரமான அரசுகள் போன்று ஆயினர். 1650 அளவில் இரண்டு நாயக்கர்களுமே பீஜபூர் / கோலகொண்டா சுல்தானுக்கு பெயரளவுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆயினர்; பின்னர் முகலாயப் பேரரசருக்கும் பெயரளவுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆயினர். 8. மதுரை நாயக்கர் (பலிஜா) பரம்பரையை நிறுவியவன் விசுவநாதன். இவர்கள்ஆட்சியின் கீழ் ஆங்கிலேயர் ஆட்சிக்கால மாவட்டங்களான திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகியவை இருந்தன. (சிலகாலம் சேலம் கோயம்புத்தூர் மாவட்டங்களும் மதுரை நாயக்கரின் கீழ் இருந்தன. ஆயினும் 1670இல் அவற்றை மைசூர் உடையார்கள் கைப்பற்றினர்; திப்புசுல்தானிடம் இருந்து சேலத்தை 1792லும் கோயம்புத்தூரை 1799லும் கைப்பற்றும் வரை அவை மைசூர் இராச்சியத்தின் பகுதியாக இருந்தன). கல்குளத்திலிருந்த வேணாட்டு (தமிழ்) அரசும் மார்த்தாண்டவர்மன் (1729-58) காலம் வரை மதுரை நாயக்கருக்குக் கப்பம் கட்டிவந்தது; மார்த்தாண்டவர்மன்தான் கொச்சிவரை கேரளக் கரையிலிருந்த சிறுசிறு பகுதிகளை வென்று திருவாங்கூர் இராச்சியத்தை நிறுவித் தலைநகரை கல்குளம் (பதமநாபபுரம்) ஊரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றிக் கொண்டான். 9. விசுவநாத நாயக்கனும் (1529-64) அவனுடைய தளவாயாக இருந்த அரிய நாயமுதலியும் சேர்ந்து பாளையப்பட்டு முறையை உருவாக்கினர். அந்தந்தப் பகுதி மக்களை கண் காணித்து வர 72 பாளையங்கள் அமைக்கப்பட்டன; அவை பெரும்பாலும் திருநெல்வேலி, திண்டுக்கல் சீமைகளில் உருவாக் கப்பட்டன. பெரும்பாலான பாளையக்காரர்கள் தெலுங்கர்கள்; பாண்டியர் பரம்பரையில் வந்தவர்களான தென்காசிப் பாண்டியர் போன்றவர்களும் (அதுவரை விசய நகரப் பேரர சுக்குப் பெயரளவுக்கு மட்டுமே கீழ்ப்பட்டிருந்தவர்கள்) ஏனைய பாளயக்காரரைப் போல மதுரை நாயக்கனுக்குக் கட்டுப் பட்டவர் ஆயினர். எப்பொழுதும் 72 பாளையம் இருந்தது என்று எண்ணத் தேவையில்லை. அவ்வப்பொழுது எண்ணிக்கை கூடக் குறைய இருந்திருக்கும். 10. பிற்காலத்தில் ஆங்கிலேயர் மாவட்டமாக அமைந்த வரண்ட பகுதிகளைக் கொண்ட ராமநாதபுரத்திலும், புதுக்கோட்டைச் சீமையிலும் வசித்து வந்த கள்ளர் மறவர் பெயரளவுக்கு நாயக்க மன்னர்களின் கீழ் இருந்தபோதிலும் அவர்களை அடக்க நாயக்கர்கள் முயலாமல் அவர்கள் போக்கில் விட்டு விட்டனர். முத்துகிருஷ்ணப்ப நாயக்கன் (1601- 9) போகளூர் சடைக்கத் தேவனை மறவர் சீமைத் தலைவனாக நியமிப்பது உசிதமெனக் கருதி அவ்வாறே செய்தான். சடைக்கத் தேவன் பரம்பரையினரே சேதுபதி மன்னர் ஆவர். திருமலை நாயக்கன் (1623-59) தன் பிராமணத் தளவாய் ராமப்பையன் தலைமையில் மறவர் சீமை மீது படையெடுத்தான். வீரமிக்க மறவரைப் படாதபாடு பட்டு வென்றான். இப்போரில் மதுரை நாயக்கன் ஆக்கிரமிப்புப் படையிடமிருந்து தம் நாட்டைக் காக்க மறவர்கள் காட்டிய அளவு உண்மையான தேசபக்திநிறைந்த நெஞ்சுரம் 17, 18 நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் எந்தப் பகுதி மக்கள் நெஞ்சிலும் இருந்தது இல்லை” என்று தமது மதுரை நாட்டுக் கையேடு நூலில் நெல்சன் கூறுகிறார் (“a spirit of true patriotism such as in the 17th and 18th centuries stirred the hearts of few, if any of the nations located in South India”.) பின்னர் ஆர்க்காட்டு நவாபு சார்பாக பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற தண்டல்கார முகவர்களான ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினிப் படையை எதிர்த்து 1800ஐ ஒட்டிக் கடும் போரிட்டு வீரமரணம் அடைந்த சிவகங்கைத் தலைவர்கள் பெரியமருது, சின்னமருது, உடன்பிறப்புகளும் அதே போன்ற நெஞ்சுரமிக்க தேசபக்தியுடன் செயல்பட்டனர். 11. மதுரை நாயக்க மன்னர்களில் குறிப்பிடத்தக்க இருவர் திருமலை நாயக்கன் (1623-59); இராணி மங்கம்மாள் (குழந்தைப் பருவப் பேரர்களின் காப்பாளியாக 1682-1706 ஆண்டுகளில் நாட்டை ஆண்டவள்) ஆகியோராவர். மதுரையில் திருமலை கட்டிய மகாலும், புது மண்டபமும் நாயக்கர் காலக் கட்டடக் கலையின் சிறப்பை உணர்த்துபவை. விசய நகரப் பேரரசின் கடைசி வேந்தன் சிரீரங்கன் III இடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, விரகாக கோல்கொண்டா சுல்தானை வடக்கிலிருந்து சிரீரங்கன் நாட்டின் மீது படையெடுக்கும்படி திருமலை தூண்டினான். மைசூர் மன்னன் கண்டீரவ நரசநாயக்கனுடன் திருமலை காலத்தில்தான் மூக்கறையன் போர் நடந்தது. எதிரிப் படைகளைக் கைது செய்தால் அவர்கள் மூக்கை மேலுதடு உடன் சேர்த்து வெட்டிவிடுவது மைசூர்ப் படையின் வழக்கம். இப்போரில் முதலில் மதுரையரசின் படையினர் தோற்று மூக்கறுபடவே திருமலை தன் படையினரை (பெரும்பகுதி சேதுபதி அனுப்பிய மறவர்கள்) மைசூருக்கு எதிராக அனுப்பி அவர்கள் படையினர் பலரைக் கைது செய்து மூக்கறுத்துப் பழி தீர்த்தான். திருமலை 16.2.1659 அன்று இறந்தபொழுது பிராமணச் சதியொன்றின் காரணமாக அவன் கொலையுண்டதாக ஒரு வதந்தி மதுரையில் நிலவியதாக பிரோயன்ஸா (Proenza) என்ற ஏசுசபைப் பாதிரியார் அப்பொழுது ரோம் நகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார். திருமலை சாவு பற்றி எம்.எஸ். சுப்பிரமணிய ஐயரும் தமது கன்னியர் வீரம் (தினமணி காரியாலயம் 1956) நூலின் ‘பட்டர் புதல்வி’ என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். இத்தாலியரான ராபர்ட் தே நொபிலி என்னும் ஏசு சபைப் பாதிரியார் இந்தியாவில் இருந்த 52 ஆண்டுகளில் (1605-57) பெரும்பகுதியைத் திருமலை காலத்தில் மதுரையில் கழித்தார். அவர் பிராமணத்துறவி போன்றே உணவு, உடை பழக்க வழக்கங்களை மேற்கொண்டு பிராமணர்கள் உட்பட பல சாதியினரையும் கத்தோலிக்க மதத்தில் சேரும்படி செய்தார். தே நோபிலி போன்ற பாதிரியார்களுக்குத் திருமலை பாதுகாப்பு அளித்தான். 12. திருமலையின் மகன் முத்துவீரப்பன் II 1659இல் பட்டத்துக்கு வந்து அதே ஆண்டில் இறந்துவிட்டான்.அவன் மகன் சொக்கநாதன் ஆட்சிக்காலம் 1659-82. சொக்கநாதன் மனைவி மங்கம்மாள். பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்கள் உட்பட தமிழ்நாட்டில் மன்னர்கள் இறந்தால் உடன்கட்டை யேறும் வழக்கம் (சதி) பரவலாக இல்லை. ஆயினும் நாயக்கர் பரம்பரையினர் ஆட்சிக்காலத்தில் அரசன் இறந்தால். அவன் பிணத்துடன் பட்டத்து மனைவியரையும் உயிருடன் வைத்துக் கொளுத்தும் “சதி” நடைமுறைக்கு வந்தது. தஞ்சை அச்சுதப்ப நாயக்கன் 1600இல் இறந்த பொழுது அவன் மனைவியர் 370 பேரும்; மதுரை முத்துகிருஷ்ணப்பன் (1601-9) இறந்தபொழுது அவன் மனைவியர் 400 பேரும் உயிரோடு கொளுத்திக் கொல்லப்பட்டனர். திருமலை பிணத்துடன் 1659இல் ஐம்பதுக்கு மேற்பட்ட மனைவியர் கொளுத்தப்பட்டனர். மறவர் சீமையிலும் இக்கொடுமை பின்பற்றப்பட்டு “கிழவன் சேதுபதி”யாகிய ரகுநாதன் இறந்தபொழுது 1701இல் 47 மனைவியர் கொளுத்தப் பட்டனர். சொக்கநாதன் 1682இல் இறந்த பொழுது மங்கம்மாள் சூலுற்றிருந்தபடியால் அவனோடு எரிக்கப்படாமல் தப்பினாள். அப்பொழுது 15 வயதாயிருந்த அவள் மூத்த மகன் முத்து வீரப்பன் III 1682இல் அரசனாகி 1689இல் பெரியம்மையில் மாண்டான். 1682இல் தன் குழந்தை (பிற்கால விஜயரங்க சொக்கநாதன்) பிறந்த பின்னரும் வீராங்கணை மங்கம்மாள் உயிரோடு எரித்துக் கொல்லும் கொடுமைக்கு ஆளாகாமல் தன்னைக் காத்துக் கொண்டு அக்குழந்தையின் காப்பாளர் ஆகத் தொடர்ந்து 1706 வரை ஆண்டாள். [ஆயினும் முத்து வீரப்பன் III 1689இல் இறந்தபோது சூலுற்றிருந்த அவன் மனைவியை, குழந்தை பிறந்த பின்னர் அந்தோ எரித்துக் கொன்று விட்டனர்] மங்கம்மாள் விரகாக அப்போதைய முகலாயப் பேரரசன் அவுரங்கசிபை (ஒப்புக்கு மேலரசனாக ஏற்றுக் கொண்டாள். இன்றும் பாண்டிய நாட்டில் உள்ள “மங்கம்மாள் சாலைகள், சத்திரங்கள், கிணறுகள்” போன்றவை அவள் நற்செயல்களை நினைவூட்டி நிற்கின்றன. 13. மங்கம்மாள் பேரன் விஜயரங்க சொக்க நாதன் (1706-1731) குழந்தையின்றி இறந்தான் அவன் விதவை மீனாட்சி தன் பெயரிலேயே இராணியாக (யாருக்கும் காப்பாளியாக அல்ல) 1731-39இல் ஆண்டாள். அவள் ஒரு குழந்தையைத் தத்து எடுத்ததில் தன் தாயாதியருடன் ஏற்பட்ட போரில் ஆர்க்காடு நவாபு தோஸ்து அலியின் மருமகன் சந்தாசாகிபை மூடத் தனமாக நம்பி உள்நாட்டுப் போரில் அவனைத் தன்பக்கம் சேர்த்துக் கொண்டாள். முதலில் அவன் அவள் தாயாதியரைத் தோற்கடித்துவிட்டுப் பின்னர் மீனாட்சிக்கே பகைவனானான். அவள் நஞ்சுண்டு இறந்தாள் அல்லது கொலையுண்டாள் எனக் கருதப்படுகிறது. மீனாட்சியுடன் மதுரைநாயக்கர் ஆட்சி முடிவுற்றது. 14. மதுரை நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தின் சில செய்திகளை அக்காலத்தில் நேரடி சாட்சிகளான ஏசு சபைப் பாதிரியார்கள் கடிதங்கள், மற்றும் ஏனைய மேனாட்டுக் கும் பினியர்கள் ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து எடுத்துத் தருவது பொருத்தமாகும். மதுரையில் கொண்டாடப்பட்ட மிகச் சிறந்த திருநாள் பொங்கல் ஆகும். அரண்மனைப் பணியாளர் அனைவருமே பெண்கள். நாயக்க மன்னர்கள் (பெயரளவில் விசய நகரப் பேரரசின் “கர்த்தாக்கள்” தாம் எனினும் நடைமுறையில் மன்னர்கள்) தமது ஓய்வு நேரங்களை பாடல் ஓர்ந்தும் நடனம், நாடகம் நயந்தும் கழித்தனர். புண்ணியத்திற்காக ஆயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்யும்பொழுது அவர்களுக்குப் படைக்கும் உணவு வகைகளை சூத்திரன் ஆன அரசன் பார்க்கக் கூடாது. (தயாராகும் விருந்து உணவுகளின் மாதிரிகள் கொஞ்சம் கொஞ்சத்தைக் கொண்டு வந்து அரசனிடம் காட்டிவிட்டு பின்னர் அம்மாதிரிகள் தீட்டாகி விட்டதால் நாய்களும், கீழ்ச் சாதியினரும் தின்னும் வகையில் அவை குப்பையில் எறியப்படும்) கி.பி. 1622ஐ ஒட்டி மதுரைப் பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பிணங்களைப் புதைக்கக் கூட ஆள் இல்லை. 1660-ல் பிஜபூர் சுல்தான் படையெடுத்தபொழுது ஏற்பட்ட அழிவில் கடும்பஞ்சம் ஏற்பட்டு பசிக் கொடுமையால் வாடியபலர் தம்மை ஆளுக்கு 10 ஷில்லிங்கிற்கு அடிமையாக விற்றுக் கொண்டனர்; டச்சு கும்பினியார் அவர்களை விலைக்கு வாங்கி ஜாவா தீவில் படாவியா, கொழும்பு போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்று இலாபத்திற்கு விற்றனர். (பல்தேயஸ் Baldeus) (பழைய) திருநெல்வேலி மாவட்டத்தின் 1802ஆம் ஆண்டிற்கான ஐமாபந்தி அறிக்கை “தாமிரபரணி ஆற்றின் கரையில் செழிப்பான நன்செய்ப் பகுதிக் கிராமங் களில் பயிர்த்தொழில் செய்தவர்களில் பெரும்பகுதியரை ஒரு காலத்தில் விரட்டி விட்டு அங்கு பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்ம தேயங்கள் உருவாக்கப்பட்டன” என்று கூறுகிறது. திருநெல்வேலி மாவட்டக் கையேடு (1879) எழுதிய ஏ.ஜே. ஸ்டுவார்ட் இச்செய்தியைப் பின் வருமாறு மேலும் விளக்கமாக்குகிறார். “தாமிரபரணி ஆற்று நீர் பாய்ந்து செழிப்பான நன்செய் நிலக் கிராமங்கள் மதுரையிலிருந்த நாயக்கர் அரசர்களின் நேரடிப் பார்வையில் நிருவகிக்கப்பட்டன; பிற கிராமங்களைப்போல ஜமீன்தார்களுக்குக் குத்தகைக்கு விடப்படவில்லை. அவ்வரசர்கள் செய்த ஒரு காரியம் இப்பகுதியின் பிற்றை வரலாற்றையே மாற்றியது; அதாவது தாமிரபரணி ஆற்று நீரால் வளம்பெற்ற சிறந்த நன்செய்ப்பகுதிகளை உழுது பயிரிட்டவர்களை அவர்கள் விரட்டிவிட்டு வடக்கிலிருந்து தாம் கொணர்ந்த பிராமணர்களைக் குடியேற்றி அக்கிரகாரங்கள் ஆக்கி விட்டனர். அவர்களே திருநெல்வேலியின் சிறந்த நன்செய்ப்பகுதி நிலங்களின் உடைமையாளர்களாக இன்றும் உள்ளனர்.” மதுரையில் நாய்க்கர் அரசு 10,000க்கு மேற்பட்ட பிராமணர்களுக்கு வேதம், சம்ஸ்கிருதக் கல்வியை அனைத்து உணவு உடை உறைவிட வசதிகளுடன் அரசின் செலவில் அளித்து வந்தது (தே நோபிலி) இந்தியாவில் (ஏன் உலகெங்கிலுமே 19ஆம் நூற்றாண்டு வரையிலும்; சில ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் கூட) தொன்றுதொட்டு இருந்து வந்த கழுவேற்றுதல், சித்திரவதை, கை, கால்களை வெட்டுதல் போன்ற கொடூரமான ஒறுப்புகள் மதுரை அரசிலும் இருந்தன. கி ழவன் சேதுபதியின் ஆணைப் படி ஏசு சபை ப் பாதிரியார் ஜான். டி.பிரிட்டோவை கிறித்துவ மதத்தைப் பரப்பியதற்காக பலவகைச் சித்திரவதைக்கு ஆளாக்கிய பின்னரே அவர் தலையை 4.2.1693 அன்று வெட்டினர். பெரிய கட்டுமானப் பணிகள் (ஏரிகள் அமைத்தல், அணை கட்டுதல், அரண்மனை கட்டுதல்) தொடங்கும்பொழுது வாலாயமாக நரபலி கொடுத்து வந்தனர். 15. மதுரை நாயக்கர்கள் ஆட்சியைப் பற்றி கால்டுவெல் மதிப்பீடு வருமாறு: ‘தற்போது [19ஆம் நூற்றாண்டு இறுதி] ஐரோப்பிய நாடுகளில் உள்ள வளர்ச்சியடைந்த நியாய அநியாயக் கோட்பாடுகளின்படி பார்க்காமல்) இந்து / முகமதிய தரும சாத்திரங்கள் குறித்துள்ள பழைய கோட்பாடுகளின்படி பார்த்தால்கூட நாயக்கர் மன்னர்கள் தங்கள் அரசக் கடமையிலிருந்து வழுவியவர்களாகத்தான் கருதப்பட வேண்டும். அவர்கள் ஆட்சிக் காலம் முழுவதுமே மகளிரோடு சல்லாபம், துரோகங்கள், கொள்ளைகள், கொடூரங்கள், கொலைகள், கலவரங்கள் ஆகிய அக்கிரமங்களே இடையறாது காணப்படுகின்றன. இவற்றுக்கிடையேதான கோயில்கள், சுவாமி சிலைகள், பூசாரிகள் ஆகியோருக்கு ஆடம்பரமாக நிலங்களையும் அரசுக் கருவூலத்திலிருந்து செல்வங்களையும் படாடோ பமாக வாரி வழங்கிய கேலிக் கூத்தும் நடந்தது. “அவ்வாறு வழங்கியதன் மூலம் தங்களைப் பற்றி பிராமணர்களும் (சம்ஸ்கிருத, தெலுங்குப்) புலவர்களும் புகழ் மாலைகள் இயற்றச் செய்து கொண்டனர். நாட்டுக் குடிமக்களில் பெரும்பான்மையான சாதாரண மக்களோ மேற்சொன்ன அக்கிரமங்களுக்கு அஞ்சிப் பொறுமை காத்தனர்.” கால்டுவெல் மதிப்பீடு சற்றுக் கடுமையாகவே தோன்று கிறது. நாயக்கர் ஆட்சிக்கால நாட்டு நிலைமை பற்றி கிபி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர் பலர், பாதிரியார்கள் உட்பட, இங்கு வந்து தாம் கண்டவற்றை ஒருதலைச் சார்பின்றி எழுதியிருப்பதால் உண்மை நிலைமை ஓரளவுக்குத் தெரிய வந்துள்ளது. [அந்தக் கால கட்டத்தில் அதாவது 1750 வரை வெள்ளையர்நாடு எதுவும் இந்தியாவை ஆண்டதும் இல்லை; ஆளும் என்று யாரும் எதிர்பார்க்கவுமில்லை. எனவே தான் “ஒரு தலைச் சார்பின்றி’ என்று குறிப்பிடப்பட்டது.] அதற்கு முந்திய கால ஆட்சிகளிலும் சாதாரணப் பொது மக்கள் வாழ்க்கை கடுமையாகத்தான் இருந்ததாகத் தெரியவரும் – சான்றுகள் மட்டும் கிடைத்திருந்தால்! இருபதாம் நூற்றாண்டில் எழுபது / நாற்பது ஆண்டுகள் பொதுவுடைமையர் ஆண்ட நாடுகளின் நிலையும் அதுவே. இப்பொழுதும் 1947க்குப் பின்னர் ஏழை களுக்காகவே இடைவிடாது பாடுபடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் வாதிகள் இந்தியா முழுவதும் அறுபது ஆண்டுகாலமாக இரவு பகலாக ‘வளர்ச்சிப் பணிகளில்’ ஈடுபட்டு வந்தும் ஏழை மக்கள் நிலை எப்படி இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 16. (i) தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி சேவப்ப நாயக்ன் ஆட்சியுடன் 1532இல் தொடங்கியது. 1659-62 ஆண்டுகளில் பிஜபூர் படைகள் (சிவாஜி தந்தை) ஷாஜி, முல்லா முகமது தலைமையில் தஞ்சை மீது படையெடுத்துச் சூறையாடி (பல்தேயஸ் குறிப்பிட்ட) பஞ்சத்தை ஏற்படுத்தின. அடுத்து எப்படியும் தஞ்சையை பிஜபூர் கைப்பற்றியிருக்கும். தஞ்சையின் முடிவை விரைவுபடுத்தினான் வெங்கண்ணா. முதலில் தஞ்சை நாயக்கன் விஜயராகவனுக்கும் (1633-1673) பின்னர் (விஜய ராகவனைக் கொன்றுவிட்டு) மதுரைச் சொக்க நாத நாயக்கன் தஞ்சை அரசனாக நியமித்த அழகிரி நாயக்கனுக்கும் ராயசமாக இருந்தவன் வெங்கண்ணா. செத்த விஜயராகவன் மகன் செங்கமலதாசனை அர சனா க் க வெங் கண்ணா பி ஜபூ ர் சுல்தானிடம் சென்று வேண்டி பிஜப்பூர் படையை வெங்காஜி தலைமையில் தஞ்சையைக் கைப்பற்ற அனுப்பச் செய்தான் (வெங்காஜிக்கு எகோஜி என்ற பெயரும் உண்டு. அவன் ஷாஜிமகன் மராட்டிய மாவீரன் சிவாஜி தம்பி) அழகிரியை வெங்காஜி வென்று செங்கமலதாசனை அரசனாக்கி சில நாளில் வெங்கண்ணா செங்கமலதாசனுக்கும் எதிராக மாறி அவனையும் விரட்டிவிட்டு வெங்காஜியையே தஞ்சை மன்னன் ஆக்கினான். வெங்காஜியும் அவன் கால்வழி மராட்டியரும் 1675- 1799 கால அளவில் தஞ்சையை ஆண்டனர் அவர்கள். இக்கால அளவில் பெரும்பகுதியில் முகலாய பேரரசர்களுக்குப் பின்னர் ஆர்க்காடு நவாபுக்கும் பெயரளவுக்காவது கீழ்ப்பட்ட அரசர்களாகவே இருந்தனராயினும் அவ்வப்பொழுது சிலகாலம் அடங்காமலும் இருந்துவந்தனர். 1799இல் சரபோஜி II ஆட்சியை ஆங்கிலக் கும்பினியிடம் ஒப்படைத்துவிட்டு வெறும் ராஜா பட்டத்துடன் இருந்தான். அந்தப் பட்டமும் 1855இல் ஒழிந்தது. (ii) தஞ்சை ராச்சியத்தில் அடங்கிய நாகப்பட்டினம் முதலில் போர்ச்சுகீசியர் குடியிருப்பு ஆக இருந்தது; 1658இல் அதை டச்சுக் கும்பினி கைப்பற்றியது. தரங்கம்பாடியில் டென்மார்க் குடியிருப்பு 1620-1845 கால அளவில் இருந்தது. தரங்கம்பாடி புராடஸ்டண்டு கிறித்துவ பாதிரிகளாக வந்த பர்த்தலொமியூ சீகன்பால்குவும் பிறரும் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றினர். பெப்ரிசியஸ் தமிழ் ஆங்கிலம்; ஆங்கிலம் தமிழ் அகரமுதலிகளை 177/86இல் வெளியிட்டார். கார்ல் கிரால் 1854ல் திருக்குறளை செருமன் மொழியில் பெயத்தார். iii. மராட்டிய மன்னர்கள் தஞ்சைப் பகுதியை நிருவகிக்க மராட்ட தேசஸ்த பிராமணர்கள் பலரைக் கொண்டு வந்தனர். 1799க்குப் பின்னர் அவர்கள் ஆங்கிலக் கும்பினி நிருவாகத்திலும் பெரும்பங்கு பெற்றனர். 17. கடைசி விசயநகர மன்னன் சிரீரங்கன் III தோற்றோடிய பின்னர் தொண்டை மண்டலம் கிபி 1650ஐ ஒட்டி பிஜபூர் சுல்தான் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்பகுதி கிராமங்களில் தமிழ் வேளாளர் அதுவரை “நாட்டான்” ஆக பணி செய்தனர். அவர்கள் முக்கியத்துவத்தைக் குறைத்து தேசாயி என்னும் போட்டிப் பதவி ஒன்றை ஏற்படுத்தி அதற்கு தெலுங்கர் நியமிக்கப்பட்டனர். 18. பதினேழாம் நூற்றாண்டுப் பகுதியில் மதுரை நாயக்கர்களும் தஞ்சை மராட்டியரும் முகலாயப் பேரரசர் களுக்குக் கீழ்ப்பட்டே ஆண்டு வந்தனர். மேலும் அவ்வப் பொழுது முகமதியப் படைத் தலைவர்கள் வந்து கொள்ளை யடித்துப் போவதும் வழக்கம். 1707இல் அவுரங்கசீப் இறந்தான். அப்பொழுது ஆர்க்காட்டில் பௌஜ்தார் அல்லது நவாபு ஆக சதத்துல்லா கான் 1732 வரை செங்கல்பட்டு, வடஆர்க்காடு, தென்ஆர்க்காடு மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளியின் வடபகுதியையும் ஆண்டு வந்தான். அவன்மகன் தோஸ்து அலி. தோஸ்து அலியின் மகன் சப்தர் அலி; மருமகன் (முன்னர்க் குறிப்பிட்ட) சந்தாசாகிப். திருச்சியைத் தலைநகரமாகக் கொண்ட மதுரை நாயக்கர்சீமை ஆட்சியை சந்தாசாகிப் மீனாட்சியிடமிருந்து சதி செய்து கைப்பற்றி ஆர்க்காட்டு நவாபின் கீழ் திருச்சி நகரை ஆண்டுவந்தான். மராட்டிய பீஷ்வாக்களின் படையினர் 1740இல் தாமல்செரு சண்டையில் தோஸ்து அலியைத் தோற்கடித்துக் கொன்றனர்; அடுத்த ஆண்டு திருச்சியைக் கைப்பற்றி சந்தாசாகிபைப் கைதியாக்கி சதாரா கொண்டு சென்றனர். ஆற்காடு நவாபுக்குப் பெயரளவில் உயரதிகாரம் கொண்ட ஹைதராபாத் சுபேதார் (ஆளுநர்) ஆன நிஜாம் உல்-முல்க் 1743இல் தெற்கே வந்து அதுவரை சிகாகோல் பௌஜ்தார் ஆக இருந்த அன்வாருதீனை ஆர்க்காடு நவாப் ஆக்கினான் (தோஸ்த் அலி பரம்பரையை நீக்கிவிட்டு). அன்வாருதீன் மகன் முகமது அலி ஆர்க்காடு நவாபின் ஆளுநராகத் திருச்சிக்குச் சென்றான். 19. பழைய நவாபு தோஸ்து அலிபரம்பரையினன் ஆன சந்தாசாகிப்புக்கும் அன்வாருதீன் பரம்பரையினருக்கும் இடையே இறுதிச் சண்டை 1748-52இல் நடைபெற்றது. அது ஆங்கிலக் கிழக்கியக் கம்பெனிக்கும் பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் நடந்த ‘முதல் கருநாடகப் போரின்’ ஒரு அங்கமாகவே நடந்தது. ஆங்கிலேயர் 1748இல் இறந்த நிஜாம் உல்முல்க் வாரிசுகளுள் ஒருவனுக்கு ஹைதராபாத் இராச்சியத்தை உரிமையாக்கவும், ஆர்க்காடு இராச்சியத்தை அன்வாருதுன் மக்களுக்கு உரிமையாக்கவும் போரிட்டனர். பிரஞ்சுக்காரர்கள் ஹைதராபாத் இராச்சியத்தை நிஜாமின் வேறொரு வாரிசுக்கு உரிமையாக்கவும் ஆர்க்காட்டை சந்தாசாகிபுக்கு உரிமையாக்கவும் போரிட்டனர். (சந்தாசாகிபு மராட்டியரிடம் பெருந்தொகை தந்து பிணையக் கைதி நிலையி லிருந்து விடுபட்டு ஆர்க்காட்டுக்கு அதற்குள் திரும்பிவந்து விட்டான்.) 1949இல் ஆம்பூர் சண்டையில் அன்வாருதீனை சந்தா சாகிப் கொன்றான்; பின்னர் திருச்சிக் கோட்டையில் இருந்த முகமது அலியை முற்றுகையிட்டான். ஆங்கிலக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் விரகாக ஆர்க்காடு நவாபின் தலைநகர் ஆன ஆர்க்காட்டைக் கைப்பற்றவே திருச்சி முற்றுகையிலிருந்த தன் படைகளின் பகுதியை சந்தாசாகிப் ஆர்க்காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. இறுதியாக ஆங்கிலக் கம்பெனிப் படைகள் முகமது அலிக்கு வெற்றி தேடித் தந்தன; சந்தாசாகிப் 1752இல் கொல்லப் பட்டான். பெயரளவுக்கு முகமது அலி 1749-1795இல் “ஆர்க்காடு நவாபு” என்று இருந்து வந்த போதிலும் உண்மையில் முழு அதிகாரமும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிடமே இருந்தது. 1763இல் அவன் செங்கல்பட்டு (ஜாகீர்) மாவட்டத்தை கம்பெனியின் நேரடி ஆட்சிக்குக் கொடுத்துவிட்டான். படிப் படியாக பிறமாவட்டங்களிலும் வரிவசூல் செய்யும் அதிகாரம் நவாபிடமிருந்து கம்பெனிக்கு மாற்றப்பட்டது. வட, தென் ஆர்க்காடுகளில் 1781லும்; திருச்சியில் 1781-92லும் இம்மாற்றம் நிகழ்ந்தது. ஆர்க்காடு நவாபுக்குக் கீழ்ப்படிய மறுத்த பாளையக் காரர்களை நவாபின் சார்பிலும் பெயரிலும் கும்பினிப் படைத் தளபதிகள் போரிட்டு அடக்கிய பின்னர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள் 1801ல் ஆங்கிலேயர் நேரடி ஆட்சியின் கீழ் வந்தன (பாளையக்காரர்கள் ஆட்சியை ஒழித்துவிட்டு). முகமது அலியின் மகன் ஒம்தாத்-உல்ஒ ம்ரா (1795-1801). அவனுடைய வாரிசு அஜிம்-உத்-தௌலாவிடம் இருந்து 1801இல் கம்பெனியார் (அதுவரை வரிவசூல் உரிமை மட்டும் பெற்றிருந்த) வடமாவட்டங்களிலும் முழுமையான நேரடி சிவில், மிலிடரி ஆட்சி அதிகாரத்தை வெளிப்படையாக கம்பெனி எடுத்துக் கொண்டது. 1752லிருந்தே முகமது அலிக்கும் கம்பெனிக்கும் நட்பாகச் செயல்பட்ட புதுக்கோட்டைத் தொண்டைமான் நேரடியாகக் கம்பெனிக்குக் கீழ்பட்ட அரசன் என்னும் அந்தஸ்தை அன்று முதல் பெற்றுவிட்டான். 1799இல் தஞ்சைப் பகுதி மராட்டியரிடம் இருந்து கம்பெனிக்குச் சென்றது. மைசூர் திப்பு சுல்தானிடம் இருந்து பாரமகால என்று அழைக்கப்பட்ட சேலம் மாவட்டம் 1792இலும் கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டங்கள் 1799லும் கம்பெனியின் கைக்கு வந்தன. ஆக 1801 அளவில் இன்றைய தமிழ்நாட்டுப் பகுதி முழுமை யாக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மதராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. (திருவாங்கூர் அரசின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரிப் பகுதி மாநிலங்கள் சீரமைப்பில் 1.11.1956 முதல் தமிழ்நாட்டுடன் இணைந்தது.) 20. தமிழ்நாட்டின் ‘சட்டபூர்வ’ ஆட்சியாளராக ஆங்கிலக் கம்பெனி 1801இல் தான் ஆனது என்றாலும் நடைமுறையில் ஆட்சி அதிகாரம் முழுமையாக 1752லிருந்தே ஆங்கிலக் கம்பெனியார் கையில் தான் இருந்தது. 1752-1800 கால அளவில் பல நடவடிக்கைகளை ஒப்புக்காக நவாபு பெயரில் கம்பெனி எடுத்த போதிலும் உண்மையில் அவைகள் கம்பெனியார் நடவடிக்கைகளேயாம். எனவே ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் பற்றிய அடுத்த இயலில் முதற்கண் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் நிகழ்ந்தவை விவரிக்கப்படும். 1750-1801 கால அளவில் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி பரவல் தமிழ்நாடு பழைய சென்னை மாகாணம் ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாணம் இயல் 10 ஆங்கிலேயர் ஆட்சி (1750லிருந்து)யும் பின்னரும் தமிழகம் முழுமையும் சட்டபூர்வமாக ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த காலம் 1801-1947 ஆகும். எனினும் முன் இயலில் கண்டபடி ஆங்கிலக் கம்பெனி ஆர்க்காடு நவாபு ஆகத் தாங்களே உருவாக்கி வைத்த முகமது அலியின் பெயரிலும் போர்வையிலும் செயல்பட்டு தமிழகப் பகுதிகளைப் படிப் படியாகத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்ததை முன் இயலில் கண்டோம். மதுரை நாயக்கர் பரம்பரையிடமிருந்து வாரிசுரிமை பெற்றது போன்ற ஆதாரமற்ற மாயத்தோற்றத்தை ஆர்க்காடு நவாபு உருவாக்கிக் கொள்வது ஆங்கிலக் கம்பெனிக்கும் ஆதாயமாக இருந்தது. ஆயினும் உண்மை என்ன? சி.ஏ. பேலி விளக்குவது போல விசயநகர / மதுரை நாயக்கர் ஆட்சிகள் நீங்கிய உடன் அவைகளுக்கு இருந்த அரசாட்சியுரிமை sovereignty முழுமையாக அந்தந்தப் பகுதிப் பாளையக்காரர், சிற்றரசர்களுக்கு வந்துவிட்டது என்பது தான் நியாயமான சட்டபூர்வ நிலையாகும். மதுரை - திருநெல்வேலி மறவர் பாளையக்காரர்கள் 1700லிருந்தே மதுரை நாயக்கர் அதிகாரத்தி லிருந்து விடுபட்டு முழுமையான Defacto தன்னரசு நாடுகளாகவே இருந்தன. அவற்றைக் கைப்பற்றி ஆளஆர்க்காடு நவாபு சார்பாக கிழக்கிந்திய கம்பெனி நடாத்திய படையெடுப்புகளை எதிர்த்துப் போரிட ஊர்தோறும் குடிமக்கள் மனமுவந்து வீரத்துடன் முன்வந்தனர். கடைசியாக 1799-1801இல் சிவகெங்கை மருது சகோதரர்கள் மீது கம்பெனி போரிட்டு வென்ற கால கட்டத்திலும், நிலைமை இதுதான். நவாபு பெயரைச் சொல்லி நாடு பிடிக்க கம்பெனி முயன்றபோது முதலில் வீரத்துடன் எதிர்த்தவர் நெற்கட்டாஞ் செவல் பூலித்தேவர். அவருக் கெதிராக முதல் படையெடுப்பை 1755இல் நடத்தியவன் கர்னல். ஹிரான் (முகமது யூசுப்கான் உடன்). திருநெல்வேலிச் சீமை கீழ்படாகைப் பாளையக்காரர்கள் அனைவரும் ஹீரானுக்குப் பணிந்து விட்டனர். ஆனால் மேல் படாகையில் பூலித்தேவர் எதிர்த்தார். அவரை ஹீரான் படை வெல்ல முடியவில்லை. (பின்னர் நவாபுக்கும் கம்பெனிக்கும் எதிரியாக மாறிவிட்ட யூசப்கானை கம்பெனியார் தோற்கடித்து 1764இல் தூக்கில் இட்டனர்; அதற்கு முன்) யூசப் கான் 1759-61இல் தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்க மீண்டும் ஒருமுறை கம்பெனிப் படையை நடத்திச் சென்று அவர்களை வென்றதுடன் பூலித்தேவர் கோட்டைகளையும் கைப்பற்றி விட்டான். தேவர் மட்டும் மேலைமலைப்பகுதிக்குத் தப்பிச் சென்று விட்டு விரைவில் தனது நாட்டை மீண்டும் கைப்பற்றிக் கொண்டார். பின்னர் 1767இல் தான் காம்ப் பெல் அவரைத் தோற்கடித்தான்; அச்சண்டையில் தேவர் இறந்ததாகத் தெரிகிறது. கங்கைச் சமவெளியில் பல்வேறு குழுவினரும் வெவ்வேறு காரணங்களுக்காக வெள்ளைக் கம்பெனிக்கு எதிராக எழுந்த கலகம் “முதல் சுதந்திரப்போர்” என்று அழைக்கப்படத் தகுதியுடையதாயின், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூலித்தேவர் தொடங்கி இறுதியாக 1799-1801இல் வெள்ளையரை எதிர்த்து வீரமரணமடைந்த மருது சகோதரர்கள் ஈறாக தமிழ்ப் பாளையக்காரர்கள் தாய் மண்ணைக் காக்கவென்றே நடத்திய வீரமிகு போரும் சுதந்தரப்போராகவே எண்ணத்தக்கது - 1857 நிகழ்ச்சியை விட மிக வலுவான காரணங்களுக்காக (கே. இராசய்யன், 1971: South Indian Rebellion) 2. கிழக்கிந்தியக் கம்பெனி தென்பாண்டிச் சீமைப் பாளையக்காரர்களை 1801 வரை அடக்காமல் விட்டுவைத்த தற்குக் காரணம் உண்டு. மைசூர் உடையார் அரசனிடமிருந்து ஆட்சியை 1730ஐ ஒட்டிக் கைப்பற்றி ஆண்டவன் அமைச்சன் நஞ்சராஜ். அமைச்சனிடமிருந்து ஆட்சியை 1761இல் ஹைதர் அலி கைப்பற்றித் தானே நடைமுறையில் மைசூர் சுல்தான் போலவே 1782 வரை ஆண்டான்; அவனுக்குப் பின்னர் அவன் மகன் திப்பு சுல்தான் 1782-1799இல் ஆண்டான். மைசூர் உடையார் அரச குடும்பத்துச் சிறுவன் யாராவது ஒருவனை 1795 வரை பொம்மை அரசாக வைத்திருந்தனர். 1795இல் திப்பு தானே சுல்தான் ஆகிவிட்டான். ஹைதருடனும் திப்புவுடனும் கம்பெனியார் மைசூர் போர்கள் நான்கை நடத்தினர். அப்போர்களிலேயே கம்பெனிப்படைகள் முழுக்கவனம் செலுத்தியதால்தான் தெற்கத்திப் பாளையக்காரர்களை கம்பெனியார் 1801 வரை விட்டு வைத்திருந்தனர். வட தமிழ் நாட்டின் மீது (தஞ்சாவூர் உட்பட) முதல் மைசூர் போரிலும் (1767-69) இரண்டாம் மைசூர் போரிலும் (1780-84) கன்னட சுல்தான் ஹைதர் அலி படையெடுத்து நாட்டைச் சூறை யாடினான். ஆயிரக்கணக்கான தமிழர் ஆடவரும் பெண்களும் கொலையுண்டனர். அல்லது கைதியாகக் கருநாடகம் கொண்டு செல்லப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர். அல்லது முகமதிய மதத்துக்கு மாற்றப்பட்டனர். தஞ்சையில் நடந்த இக்கொடுமைகளை நேரில் கண்ட செருமானிய சுவார்ட்சு பாதிரியார் விவரிப்பது வருமாறு. “அவர்களுடைய சாமி சிலைகளை அப்புறப்படுத்து கிறார்கள்; வீடுகளைக் கொளுத்துகிறார்கள்; ஆடுமாடுகளை ஓட்டிச் சென்று விடுகிறார்கள்; இவற்றைவிட ஆயிரக் கணக்கான பெற்றோர் கதறியது தங்களுடைய சிறுவர் சிறுமியரைப் பறித்து மைசூருக்குக் கொண்டு சென்று முகமதியராக்கியதற்குத்தான்.... (1782இல்) கருநாடகப் படையினர் மாயவரம், சீர்காழிப் பகுதிகளைச் சூறையாடினர். கும்ப கோணத்தைக் கொள்ளையிட்டு பாழாக்கினர். ஏராளமான தஞ்சைமக்களைத் தாக்கிக் காயப்படுத்தினர் ஏராளமான பெண்களைக் கைப்பற்றிச் சென்றுவிட்டனர். தஞ்சைப் பகுதி முழுவதும் நடந்த இந்த அழிவு அக்கிரமச் செயல்களைச் சொற்களால் விவரிக்க இயலாது” 3. விசயநகரப் பேரரசின் கடைசி மன்னன் சீரங்கன் III க்குப் பெயரளவில் சிற்றரசனாக இருந்த சென்னப்ப நாயக்கன் என்பவனிடம் இப்பொழுது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் பகுதியை 1630இல் விலைக்கு வாங்கி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதலில் தமிழ்நாட்டில் கால் வைத்தது. 1750-1800 ஆண்டுகளில் அக்கம்பெனி தமிழ் நாட்டையே தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்துவிட்டது. கொலம்பஸ் அமெரிக்கக் கண்டங்களை 1492இல் கண்டுபிடித்தான். வாஸ்கோடகாமா ஜரோப்பாவிலிருந்து கடல்வழியாக ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா வரும் கடல்வழியைக் கண்டு பிடித்தான். இவ்விரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் ஐரோப்பிய வெள்ளையர் அமெரிக்கக் கண்டங்கள், ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள், பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா என உலகெங்கும் பரவலாயினர் அவர்களில் இந்த முதற்கட்ட உலகமயமாக்கலில் தமிழ் நாடும் பாதிக்கப்பட்டது - உலகெங்கும உள்ள பிற (ஐரோப்பியரல்லாத மக்கள் வாழ்ந்த) நாடுகளைப் போல. இக்கண்டுபிடிப்புகளால் வட அமெரிக்க தென் அமெரிக்க கண்ட மக்கள்1500லிருந்து பெரும்படுகொலைக்கு ஆளாயினர்; அடிமை வாழ்வுக்குட்பட்டனர். வட அமெரிக்க மெக்சிகோ நாட்டுப் பேரரசை ஸ்பெயின் நாட்டு கார்டெஸ் - உம் தென் அமெரிக்கப் பெரு நாட்டு இங்காபேரரசை ஸ்பெயின் நாட்டு பிசாரோ-வும் மோசடி, துரோகம், படுகொலைகள் மூலம் கைப்பற்றிய கண்ணீர்க் கதையை பிரெஸ்காட் எழுதியுள்ள The conquest of Mexico, The conquest of Peru நூல்களில் படித்துப் பார்க்கலாம். 1492இல் வெள்ளையர் அமெரிக்காவில் காலடி எடுத்து வைக்குமுன்னர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பிறகண்டத்து மக்கள் அமெரிக்கக் கண்டத்துக்குள் நுழைய வில்லையாகையால் ஆசியாவில் உருவான பெரியம்மை, பிளேக் போன்ற நோய்கள் அதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இல்லை. இந்நோய்களை 1492இல் வெள்ளையர் அங்கு கொண்டு சென்று பரப்பிவிட்டதால் அக்கண்ட மக்கள் அவற்றுக்கு எதிர்ப்புச் சக்தியின்றி மந்தை மந்தையாக மாண்டார்கள். தனது “திருடிய கண்டங்கள்’ புத்தகத்தில் ராபர்ட் ரைட் (Robert Wright; 1992 Stolen continents) கணக்கின்படி இரு அமெரிக்கக் கண்டங்களில் 1500ல் மொத்தம் வாழ்ந்த 10 கோடி மக்களில் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் 9 கோடி பேர் பெரியம்மை போன்று ஐரோப்பியர் கொண்டு சென்ற நோய்களால் செத்தொழிந்தனர். [பெரியம்மை போன்றவை ஐரோப்பாவில் இருந்தது போல ஆசியாவிலும் தொன்று தொட்டு உள்ளமையால் இத்தகைய நிலை 1498க்குப் பின் வெள்ளையர் ஆயிரக்கணக்கில் இங்கு வந்த போதிலும் இந்தியாவில் ஏற்படவில்லை.] ஆஸ்திரேலியாவிலும் தாஸ் மேனியாவிலும் குடியேறிய ஆங்கிலேயர்கள் பழங்குடி மக்களைக் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது போல கொடுமைகளுக்குள்ளாக்கினர். தாஸ்மேனியப் பழங்குடி மக்களின் கடைசி நபர் வெள்ளையர் நுழைந்த 75 ஆண்டு களுக்குள் செத்தார். ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் குடியேறிய 1800இல் அக்கண்டப் பழங்குடி மக்கள் சுமார் 10 லட்சம் பேர்கள் இருந்தனர். வெள்ளையர் கொடுமையால் மிக வேகமாக அவர்கள் எண்ணிக்கை குறைந்து 1960இல் 60,000 பேர் மட்டுமே இருந்தனர். (இப்பொழுது அவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியுள்ளது). இத்தகைய இனப்படுகொலைகளை ஆசிய நாடுகளுக்கு வந்த ஐரோப்பிய காலனி ஆதிக்கக்காரர்கள் செய்யவில்லை; செய்யவும் இயலாது போயிற்று. ஆயினும் ஐரோப்பியரின் உலகலாவிய முதலாளித்துவக் கொள்ளைக்கு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த ஐரோப்பியக் காலனிகள் இரையாயின. இந்தியாவின் வளத்தைச் சுரண்டியதாலேயே இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. 1920-40 கால அளவில் மட்டும் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சுரண்டிய வளம் ஆண்டுக்கு 15 கோடி பவுன் என்று மதிப்பிடப் பட்டது.உலகில் முழுவதும் கேடே பயப்பதும் ஒன்றும் இல்லை; முழுவதும் நன்மையே பயப்பதும் ஒன்றும் இல்லை. தமிழ் நாட்டில் 1800-1947 கால அளவில் நூற்றைம்பது ஆண்டு காலம் நடந்த ஆங்கில அரசில் விளைந்த முக்கியமான நன்மை தீமை களைச் சுருங்கக் காண்போம். 4. பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில்வளர்ச்சி நிலை, தொழில்நுட்பம் போன்றவற்றில் இந்தியா ஏறத்தாழ இங்கிலாந்துக்குச் சமமான நிலையிலேயே இருந்தது. சொல்லப் போனால் நூல் நூற்பு, துணி நெசவுத்துறையில் இந்தியா முன்னணியில் இருந்ததனால் (இங்கிலாந்தின் நலனுக்காக) அத்துறையை இந்தியாவில் ஆங்கில அரசு வேண்டுமென்றே நாசமாக்கியது; வேளாண் பொருள்களையும் கச்சாப் பொருள் களையும் உற்பத்தி செய்து இங்கிலாந்துக்கும் வெள்ளையர் நாடுகளுக்கும் மலிவுவிலையில் ஏற்றுமதி செய்யும் நாடாகவே இந்தியா அழுத்தி வைக்கப்பட்டது. மேலும் இலங்கை, மாரிசீயஸ், ரீயுனியன், தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளை அனுப்பும் நாடாகவும் இந்தியா ஆக்கப் பட்டது. பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலோ அந்தக் காலகட்டத்தில் இந்தியாதான் இங்கிலாந்தை விடச் சிறந்து இருந்தது என்பது சர் தாமஸ் மன்றோ (1761-1827) போன்றவர்கள் கருத்தாகும்: இந்தியா, இங்கிலாந்து இரண்டு நாடுகளுக்கிடையே “நாகரிகம்” வாணிகப் பொருளாக ஆகும் நிலை வந்ததால் அதனை இங்கிலாந்து, இறக்குமதி செய்துதான் தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது முடிவு” (If civilisation is to become an article of trade between the two countries, I am convinced that (Britain) will gain by the import cargo). 5. பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதிக் காலப் பகுதியில் இந்தியாவை ஆங்கிலேயர் ஆள்வதற்கான நிருவாக முறையை உருவாக்கும் சட்ட திட்டங்கள் ஒழுங்கு முறைச்சட்டம் 1778; பிட் இந்தியச் சட்டம் 1784; கிழக்கிந்தியக் கம்பெனி சார்டர் சட்டம் 1893 போன்றவற்றை ஆங்கிலப் பாராளுமன்றம் செய்தது. அந்த நிருவாக முறையை இந்தியாவில் (தமிழ்நாட்டிலும்தான்) ஆங்கிலேய அரசு 1947 ஆகஸ்டு வரைப் பின்பற்றியது. வங்காளத்தில் (1757ல் தொடங்கி நெடுங்காலம் பீகார், ஒரிசா, உத்தரப்பிரதேசம், அசாம் ஆகியவையும் வங்காளத்தில் அடங்கியவையே) ஜமீன்தாரி நிலவரி முறையான சாசுவத நிலவரித் திட்டம் செயலாக்கப்பட்டது. ஆனால் நல்ல காலமாக தமிழ்நாட்டில் இருந்த வெள்ளை அதிகாரிகள் முனைப்பினால் ரயத்வாரி நிலவரி முறை (குடியானவன் நேரடியாகத்தானே அரசுக்கு நிலவரி கட்டும்முறை செயலாக்கப்பட்டது. முதலில் இந்த ரயத்துவாரி முறையை சேலத்தில் ரீட் (Reade), மன்றோ ஆகியோர் புகுத்தினர்; பின்னர் தற்போதைய தமிழ்நாட்டின் பிறபகுதிகளுக்கும் அம்முறை விரிவாக்கப்பட்டது. தஞ்சை திருநெல்வேலி மாவட்டங்களில் செழிப்பான நன்செய் நிலங்கள் பலவற்றில் அதுவரை ஜமீன்தார் (வரிவசூல் செய்யும் முகவர்) ஆக மட்டும் இருந்த சிலர் ரயத்வாரி முறை 1820-1840 கால அளவில் அம்மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்ட பொழுது ரயத்வாரி முறைக்கெதிராக எதிர்ப்பு இருப்பது போல வஞ்சகமாக விரகாக காட்டி அம்மாவட்டங்களில் அந்நன்செய் நிலங்களைத் தாங்களே தொன்றுதொட்டு மண்ணின் மைந்தர்களாக நேரடியாக வேளாண்மை செய்து வருவதாக கும்பினி அரசு ஏற்றுக் கொள்ளச் செய்து ரயத்வாரி பட்டாக்களை பெற்றுக்கொண்டு விட்டனர். 6. ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளாக (1300-1800) தமிழகத்தில் பெரும் பகுதியில் இடைவிடாது நடந்து வந்த அயலார் படையெடுப்புகள், உள்நாட்டரசர் போர்கள், போர்ப்படைகள் கொள்ளையிடுதல் / சூறையாடுதல், போன்றவற்றால் ஊர்களும் விளை நிலங்களும் இடையறாது நாசமாகும் ஆபத்திலேயே இருந்து வந்தன. தமிழகம் முழுவதும் 1800லிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபின்னர்த்தான் இந்நிலை மாறி குடியானவர்கள் கொள்ளையிலிருநதும் சூறையாடுதலிலிருந்தும் விடுபட்டனர். நிலவரியும் ஆங்கில ஆட்சிக்காலத்தில் அதற்கு முன்பிருந்தது போல் அன்றி, நியாயமானதாக, திட்டவட்டமாக வரையறுக்கப் பட்டதாக ஆனது. குடியானவன் இந்த நிலவரியை அரசுக்குத் தவறாமல் செலுத்திவரும் வரை அவன் அந்நிலத்திற்கு முழு உரிமையுடையவன் ஆனான். 1912 அளவில் நிலத்தின் மொத்த விளைச்சலின் விலையில் 1/10 பகுதி மட்டுமே நிலவரியாக அரசுக்குச் சென்றது. 1843இல் அடிமை முறை ஒழிப்புச் சட்டத்தை ஆங்கில அரசு இந்தியாவில் செயல்படுத்திய பின்னர் நிலத்தொடு பிணைந்த அடிமை முறை யபசநளவiஉ ளநசகனடிஅ பெருமளவுக்கு ஒழிந்தது. தீண்டத்தகாத சாதியினருக்கு நில உரிமை கிடையாது என்ற நிலை இருந்த இடங்களில் அக்கொடுமையை அரசு ஒழித்தது. 19ஆம் நூற்றாண்டு இறுதியில் செங்கல்பட்டு சப்கலெக்டர் மல்லாலி, கலெக்டர் ஜே.எச்.ஏ. டிரெமன்ஹீர் போன்ற மாந்தப்பண்பு மிக்க அதிகாரிகள் தீண்டத்தகாதவர் நிலையை உயர்த்தும் நோக்குடன் அவர்களுக்கு பஞ்சமர் நிலம் என்ற பெயரில் புறம்போக்கு நிலங்களையும் வீட்டு மனை களையும் ஒதுக்கி பட்டா தந்தனர். இந்தியாவெங்கிலும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முதலாக வர்ணம், சாதி, மதவேறுபாடு இன்றி அனைவரையும் சமம் எனக் கருதி அனைவருக்கும் ஒரே சிவில் சட்டமும் ஒரே கிரிமினல் சட்டமும் செயல்படுத்தப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளங்கையில் நெருப்பு வைப்பது, கொதிக்கும் எண்ணையில் கையை முக்கச் சொல்வது போன்ற கொடூரமான விசாரணை முறைகளும், கைகால்களை வெட்டுதல், கண்ணைத் தோண்டுதல், கழுவேற்றுதல் போன்ற பயங்கரமான ஒறுப்புகளும் ஒழிந்தன. கிழக்கிந்திய கம்பெனியின் உரிமையை 1833இல் புதுப்பித்து ஆங்கிலப் பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தில் வர்ண, சாதி, மத பேதமின்றி எல்லோருக்கும அரசுப்பணியில் சேர உரிமை தரப்பட்டது; பொது இடங்களைப் பயன்படுத்த தாழ்த்தப் பட்டோர் உட்பட அனைவருக்கும் சட்டபூர்வ உரிமை தரப்பட்டது. [ஆனால் இவ்வுரிமை இன்றும் ஆங்காங்கே பல இடங்களில் நடைமுறையில் மறுக்கப்படுவது தெரிந்ததே. அரசின் தொடர்வண்டி நிலையங்களில் இருந்த சிற்றுண்டி விடுதிகளில் 1942 வரை பிராமணர்கள் உண்ணத் தனி இடமும் சூத்திரர் (அதாவது பிராமணர் தவிர ஏனையோர் அனைவரும்) உண்ணத் தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தன.] அனைத்துச் சாதியாருக்கும் தம் விருப்பம்போல் உடையணிய சட்டபூர்வ உரிமையை ஆங்கில அரசு 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் தந்தது. (ஆயினும் திருவாங்கூர் போன்ற இந்திய மன்னர் ஆட்சிப்பகுதிகளில் நாடார் போன்ற சாதிப் பெண்கள் மேலாடை அணியும் உரிமையைப் பெற பல போராட்டங்களை நடத்தவும், தாக்கிய நாயர்களுடைய வன்முறைறைய எதிர்கொள்ளவும் நேர்ந்தது. அதுவும் கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததாலும் ஆங்கில அரசு திருவாங்கூர் அரசைக் கடுமையாக எச்சரித்ததாலுமே அவ்வுரிமை தரப்பெற்றது. ஆங்கில அரசு இந்தியாவெங்கும் இவ்வாறு சட்டபூர்வமாக மனித உரிமைகளை அனைவருக்கும் (அனைத்துக் கீழ்ச் சாதியினரும், தீண்டத்தகாதோரும் அதாவது 26.1.50 முதல் பட்டியல் சாதியினரும்உட்பட) வழங்கியும் பல பகுதிகளில் நெடுநாள் வரை அவர்கள் இவ்வுரிமைகளை நடைமுறையில் அனுபவிக்க முடியவில்லை; வயிறு பிழைக்க மாந்த நேயமற்ற மேல்சாதிக் கயவர்களை சார்ந்தே வாழ வேண்டியிருந்த வறுமை நிலைதான் இதற்குக் காரணம். 1950 சனவரி 26லிருந்து தீண்டாமை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டு, தீண்டாமைக் கொடுமைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை தர சட்டம் வகை செய்தபோதிலும் அவற்றைப் பல இடங்களிலும் - குறிப்பாகக் கிராமப்பகுதிகளில் – நடைமுறைப் படுத்த இயல்வதில்லை. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ வெண்மணியில் 25.12.1968 அன்று சாதி இந்து மிராசுதார்கள் தாக்குதலுக்கு அஞ்சி ஒரு குடிசைக்குள் ஓடிப் பதுங்கிய பட்டியல் சாதி உழவுத் தொழிலாளர் 44 பேரை (பெண்கள் 19, குழந்தைகள் 20 பேர் உட்பட) சாதி இந்து கொலைவெறியர்கள் உயிரோடு கொளுத்திக் கொன்றனர். கொலை செய்யத் தூண்டியவர்கள் கொலை செய்தவர்கள் ஆகியோருள் எவரையும் அரசு இயந்திரம் (கட்சிகள், நிருவாகம், கட்சிகள், காவல்துறை, நீதிமன்றங்கள் அனைவரும் சேர்ந்து) தண்டிக்க இயலவில்லை. அனைத்துக் கொலைகாரர்களும் விடுதலை பெற்றுவிட்டனர். இன்றும் இத்தகைய நிலை தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பல இடங்களிலும் உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. 7. வரலாற்றுக் காலத் தொடக்கத்திலிருந்தே பஞ்சமும் இருந்து வருகிறது - - பழைய காலங்களில் மக்கள் தொகை மிகக் குறைவாகவே இருந்திருக்கும் என்ற போதிலும். 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹைதர்அலி-திப்புசுல்தான் மைசூர்ப் படைகள் வடதமிழகத்தை அடிக்கடி சூறையாடியதனால் ஏற்பட்ட கொடும் பஞ்சங்களை மேலே கண்டோம். அதன் பின்னரும் பருவமழை பொய்த்ததனால் அவ்வப்பொழுது பஞ்சங்கள் உண்டாயின. அவற்றுள் மிகக் கொடுமையானது 1876-78இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சம்; அப்பஞ்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 20 லட்சம் பேர் செத்தனர். அதன் பின்னரும் 1947 வரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்காங்கு சிறுபஞ்சங்கள் ஏற்பட்டு பஞ்சச் சாவுகளும் நிகழ்ந்தே வந்தன. 1947க்குப் பின்னர் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் இக்கொடுமை பெருமளவுக்குக் குறைந்துள்ளது. 1871ஆம் ஆண்டில் முதல் சென்சஸில் தமிழக மக்கள் தொகை 1.47 கோடி (இந்தியா 22 கோடி) அத்தொகை 1901இல் 1.55 கோடி; 1951ல் 3.01 கோடி (இந்தியா 36 கோடி); 1991ல் 5.56 கோடி; 2001இல் 6 கோடி (இந்தியா 100 கோடி) என்றவாறு வளர்ந்து வந்துள்ளது. இந்தியாவில் 1 ½ நிமிடத்துக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. (நாளைக்கு 55000 பேர் வீதம் மக்கள்தொகை அதிகரிக்கிறது.) உலக மக்கள் தொகையில் 14% நபர்களைக் கொண்டது. இந்தியா; உலகின் பரப்பில் 2.5ரூ பகுதியில் இந்தியர் வாழ்ந்து, உலக மக்களின் ஆண்டு வருமானத்தில் 1.5% விழுக்காட்டில் காலங் கழிக்கின்றனர். 50% இந்தியர் வருமானம் இன்று தலைக்கு ஒரு நாளைக்கு ரூ 20க்கு குறைவு. (தமிழகத்தில் தலைக்கு ஒரு நாளைக்கு ரூ 11க்கு குறைந்த வருவாயுடன் வாழ்பவர் ½ கோடிபேர்.) இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி Gross Domestic Product ஆண்டுக்கு 10% வீதம் வளர்ந்து வருகிறது என்பதெல்லாம் கோடீஸ்வரர்களாகிய சிலநூறு முதலாளிகள் (அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன்) மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது. GDP யில் 30 விழுக்காடுக்கு மேல் 53 பண முதலைகளின் செல்வமேயாகும். கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டுவந்த அனைவரும் இடைவிடாது “வளர்ச்சிப் பணிகளில்” ஈடுபட்டதனால் இந்நிலை வந்துள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் திருட்டுக் கணக்குகளில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் மொத்தம் ரூ. 50 லட்சம் கோடியாகும். 8. உலக மக்கள் தொகையில் 7% ஆக உள்ள வட அமெரிக்கர் உலக வளத்தில் 50% ஐத் துய்க்கின்றனர். இன்னொரு கோணத்தில் சொன்னால் உலக மக்களில் 20% பேர் உலக மொத்த வருமானத்தில் 83% ஐப் பெறுகின்றனர்; மிக ஏழைகள் ஆகிய 40% பேர் பெறுவது 5% மட்டுமேயாகும். ரசியா உடைந்து அமெரிக்காவின் கை 1990லிருந்து ஓங்கிய பின்னர் உலகெங்கும் (உலகமயமாக்கல் என்ற பெயரில்) கோலோச்சி வரும் பொருளாதாரக் காலனி ஆதிக்கமானது 1947க்கு முன்னர் வெள்ளையர் நேரடியாக ஆசிய-ஆப்பிரிக்க கருப்பர் நாடுகளை ஆண்ட காலனி ஆதிக்கத்தைவிடக கொடூரமாகவும் அந்நாடுகளின் ஏழைகளான 3/4 பகுதி பேர்களை சர்வ நாசமாக்குவதாகவும் உள்ளது. அந்நாடுகளுக்கெதிரான இந்தப் பயங்கரவாதமானது ‘உலகமயமாக்குதல்’ ‘தாராளமாய மாக்குதல்’, ‘தனியார் மயமாக்குதல், உலகப் பொருளாதாரம்’ ‘அறிவியல் - தொழில்நுட்பவியல் சாதனை’, ‘தகவல் பரப்புப் புரட்சி’ போன்ற மோசடியான மாய்மால லேபல்கள் மூலம் அக்கருப்பர் நாடுகளின் சிறுவிழுக்காடு ஒட்டுண்ணிக் கூட்டத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. (பழைய காலனி ஆதிக்கத்திலும் அப்படித்தான்). இதுபற்றி ஆசிய ஆப்பிரிக்க நாட்டு மக்கள் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். தமிழர்களாகிய ஆறு கோடி மக்கள் வரலாற்றிலும் இது தேவைதான். காரணம் மேலை நாடுகள் சுயநலத்துக்காக பரப்பி வரும் உலக மயமாக்கச் சதி உலக மக்கள் அனைவரையும் நாசமாக்குவதாக இருப்பதாலும், மாநில / தேச அளவில் எடுக்கும் எந்த முயற்சியும் (ஆசிய – ஆப்பிரிக்க நாட்டுமக்கள் அனைவரிடமும் பொதுவான விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் ஒன்றுபட்டு காந்திய வழியில் செயல் பட்டால் அன்றிப்) பயன்படாது என்பதாலும். எனவே அடுத்த பத்திகளில் இதுபற்றிச் சற்று விரிவாகக் காண்போம். 9. அறிவியல் (சயன்ஸ்) என்னும் சொல்லுக்கு அகரமுதலி தரும் முதன்மையான பொருள்: “இயற்கைப் பொருட்களின் அமைப்பு, செயல்பாடு பற்றி முறையாக விருப்பு வெறுப்பின்றி புலன்களால் ஆய்வு செய்தும் பரிசோதனைகள் செய்தும் கண்டறியப் பட்டுள்ள அறிவுப் புலம்” என்பதாகும். இயற்கையுலகை ஆய்வு செய்யும் இயற்பியல், வேதியியல், நிலவியல் (ஜியாலஜி), உயிரியல், நிலைத் திணையியல் ஆகியவை ‘இயற்கை அறிவியல்’ புலங்கள் (Natural Science)எனப்படும். இப்புலங்களில் ஏற்படும் வளர்ச்சிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் தொழில் நுட்பங்கள் ‘தொழில் நுட்பவியல்’ (டெக்னாலஜி) எனப்படுகின்றன. அடுத்து ‘அறிவியல்’ எனவரும் இடங்களில் எல்லாம் “தொழில் நுட்பவியலும்” சுட்டப்படுகிறது எனக் கொள்க. [ஒரு துறை அல்லது பொருள், அறிவியல் பரிசோதனைக்குட்பட வியலாததாக இருப்பினும், அது பற்றி உருக்கொள்ளும் கட்டுக்கோப்பான செய்திப்புலத்தையும் உபசார வழக்காக அறிவியல் என்பர்: எ.கா. அரசியல் பற்றிய அறிவியல் (பொலிடிகல் சயன்ஸ்); மொழிகள் சார் அறிவியல் (சயன்ஸ் ஆப் ஃபைலாலஜி). மாந்தவியல், சமூகவியல், பொருளியல் (எகனாமிக்ஸ்), உளவியல் போன்றவற்றையும் அறிவியல் என அழைப்பதும் உபசார வழக்கேயாம்.] 10. அறிவியல் வளர்ச்சியில் கடந்த 500 ஆண்டுகளில் மாந்த இனம் அடைந்துள்ள பயன்கள் வியக்கத்தக்கவை. கி.பி. 1600ல் உலக மக்கள் தொகை 50 கோடி மட்டுமே (இந்தியாவில் 8 கோடி உட்பட. அந்த 8 கோடியில் தற்போதைய தமிழகப் பகுதியில் 50 லட்சம் மக்களும் அடங்குவர்). இன்று உலக மக்கள் தொகை 600 கோடியைத் தாண்டிவிட்டது. அறிவியல் வளர்ச்சி காரணமாக பெரியம்மை, கழிச்சல், பிளேக் போன்ற கொள்ளை நோய்கள் அழிந்தமை; போக்குவரத்து வசதிகள் பெருகியதால் வற்கட காலங்களில் உணவுப்பொருட்களை விரைந்து உய்க்க இயன்றமை; போன்றவை இதற்குக் காரணமாகும். எளிய மக்களுக்கும் (குறிப்பாக, பணக்கார மேலை நாடுகளில்) பல அடிப்படை ஏந்துகளும் கிடைத்திருப்பதற்கும் அறிவியல் காரணமாகும். எனினும் முற்றிலும் நன்மையே தரும் என்றோ, முற்றிலும் தீமையே தரும் என்றோ எந்தப்பொருளும் இல்லை. அறிவியலும் அவ்வாறே. 11. அறிவியலால் மாந்தருக்கு விளைந்துள்ள முதன்மையான கேடுகளில் சிலவற்றைக் காணலாம்:- 1. கொலம்பஸ் 1492இல் அமெரிக்காவையும், வாசுகோ-தகாமா 1498இல் இந்தியாவையும் கண்டுபிடித்ததால் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தர் 1500க்குப் பின்னர் கோடிக்கணக்கில் இனப்படு கொலைக்கு ஆளாயினர். வட-தென் அமெரிக்காக்களில் மட்டும் 1500-1550 கால அளவில் அங்கிருந்த செவ்விந்தியர் 10 கோடி பேர்களுள் 9 கோடி பேர் செத்தனர். அவ்விரு கண்டங்களுமே செவ்விந்தியரிடமிருந்து வெள்ளையருக்கு மாறின. 2. அ) 1500-1840 கால அளவில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெள்ளையர்களால் மொத்தம் ஏறத்தாழ 3 ½ கோடி கறுப்பர்கள் அடிமைகளாக கப்பலில் விலங்குகளை விடக் கேவலமாகக் கொண்டுபோகப்பட்டு வட அமெரிக்கா விலும் கரீபியன் தீவுகளிலும் கரும்பு, பருத்தித் தோட்டங்களில் அடிமைகளாக்கப்பட்டனர். [ஆயினும் அவர்களில் பெரும் பாலோர் தம் இனக் கறுப்பர்களாலேயே வெள்ளையர்களுக்கு விற்கப்பட்டவர்தாம். இப்பொழுதும் 1990க்குப் பின் உலக மயமாக்கச் சுரண்டல் மசானக் கொள்ளையில் ஆசிய ஆப்பிரிக்கக் கறுப்பரில், பணம், அரசியல் அதிகாரம், பதவி பெற்ற ஒரு சில விழுக்காட்டினரான கயவர்கள் “அச்சுரண்டலால் பாதிக்கப்படும் 90 விழுக்காட்டினரான ஏழைகளும் பாமரரும் எக் கேடு கெட்டால் என்ன” வென்று நினைத்து வெள்ளையர் கொள்ளைக்கு அரசபாட்டை வகுக்கும் அக்கிரமமான சட்டங்களை நாளைக்கு ஒன்றாகக் கொண்டு வருவதைக் காண்கிறோம் அன்றோ! அப்படித்தான் அன்று ஆப்பிரிக்க கறுப்பரும் செயல்பட்டனர்.] ஆ) ஆசிய ஆப்பிரிக்கக் கறுப்பர் நாடுகளில் 1750-1947/60 கால அளவில் ஐரோப்பிய வெள்ளை நாடுகள் காலனி ஆதிக்கக் கடும் சுரண்டலில் ஈடுபட்டன. அமெரிக்கக் கண்டங்கள் இரண்டிலும், ஆஸ்திரேலியாவிலும் பழங்குடிகள் ஏறத்தாழ பெரும் பகுதி அழித்தொழிக்கப்பட்டு விட்டபடியால் அதாவது எல்லாமே வெள்ளையர் நாடுகள் ஆகிவிட்டபடியால் – அம் மூன்று கண்டங்களையும் காலனியாக்கத் தேவைப்படவில்லை! 3. 1500க்குப் பின்னர் கொடுமையான போர்க்கருவிகளை அறிவியல் விரைந்து உருவாக்கி வந்தமையால் இடைவிடாத போர்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொலை யுண்டனர். பெரும்பாலான போர்களுக்குக் காரணம் காலனி ஆதிக்க நாடுகளை வெள்ளை நாடுகள் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறுதான்! (1914-18 முதல் உலகப் போரில் 21/2 கோடி பேரும், 1939-45ல் இரண்டாம் உலகப் போரில் 51/2 கோடி பேரும் கொலையுண்டனர். இட்லர் 1942-45இல் 60 லட்சம் யூதர்களை கச்சிதமாகக் படுகொலை செய்யவும் அவனுக்கு அறிவியல் உதவியது. (20ம் நூற்றாண்டின் ஏனைய, அவனையும் விஞ்சிய இனப்படுகொலைகாரர்களுக்கும் அவ்வாறே). மாந்த இனத்தின் தலை மேல், மயிரிழையில் தொங்கும் கூர்வாள்களாக உள்ள அணுக்குண்டுகளும் அணு மின்நிலையங்களும் அறிவியலின் சாதனைகளே! இன்று ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு சாக, அந்நாடுகளுக்கு ஆண்டு தோறும் பல பில்லியன் டாலர்களுக்கு “அறிவியலில் முன்னேறிய” ஆயுதங்களை விற்று ஆதாயம் அடைவது மேலை வெள்ளையர் நாடுகளே ஆகும். 4. 1990க்குப் பின்னர் உலக வணிக ஒப்பந்தத்தை உருவாக்கி ‘உலகமயமாக்கல்’ என்ற பெயரில் மேற்கத்திய வெள்ளை முதலாளித்துவ நாடுகள் (அதாவது அந்நாடுகளின் முதலாளித்துவ கம்பெனிகள்) ஆசிய ஆப்பிரிக்க கறுப்பர் நாடுகளில் உள்ள மேல் தட்டு ஒட்டுண்ணி இனங்களைக் கூட்டுக் கொள்ளையர்களாகச் சேர்த்துக் கொண்டு நடாத்திவரும் உலகமயப் பெருங்கொள்ளையானது (வி.ஆர். கிருஷ்ண ஐயர் கருத்துப்படி ‘Global Pillage’)இன்று மாந்த இனத்தின் அழிவுக்கு முதற் காரணமாகும். உலகின் மொத்த பொருளாதார உற்பத்தி GDP யில் மூன்றில் இரண்டு பங்கு. உலக மக்கள் தொகையில் ½ % நபர்களிடம் உள்ளது. இன்று உலகின் மாபெரும் பொருளாதார அமைப்புகள் 100ஐ எடுத்துக் கொண்டால் அவற்றுள் 51 கும்பினிகளே; 49 மட்டுமே தேசங்கள்! இக்கும்பினிகளும் அவை தேசத்துக்குத் தேசம் நொடிக்கு நொடி மாற்றும் பங்குச்சந்தை சூதாட்ட முதலீடு மாற்றுதலும் தேச அரசாங்கங் களையே அடிமைகளாக்கி விடுகின்றன. பங்கு மார்கட் சூதாட்ட அமெரிக்க கும்பினிகளால் 2008ல் ஏற்பட்ட பொருளாதார அழிவு அனைத்து தேசங்களையுமே பாதித்துள்ளது. பன்னாட்டுக் வெள்ளைக் கும்பினிக் கொள்ளையின் கூறுகளில் சில வருமாறு. (1) சுற்றுப்புறச் சூழ்நிலையை நிரந்தரமாகக் கெடுக்கும் தொழில்மய, இயந்திரமயச் செயல்பாடுகள்; பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான மக்களை வேலை இழக்கச் செய்தல். (2) ஆபத்தான நச்சுத் தொழில்களையும், (தங்கள் நாட்டின் இயற்கைக் சூழலை நாசமாக்குபவையும் அதிக கூலி / நஷ்டஈடு கொடுக்க வேண்டுவனவாகவும் உள்ள) வேதிப் பொருள், உந்து வண்டி, தகவல் தொழில்நுட்பம்; வணிகக் கணக்குக் கணினித் தொழில்; போன்றவற்றையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் தொடங்குதல்; (கப்பல் உடைத்தல், அணுமின் உலைக் கழிவையும் நச்சுக்கழிவையும் அந்நாடுகளுக்கு அனுப்பிப் புதைத்தல், அந்நாட்டு மக்கள் சிகரெட் புகைத்து ஒழிய விளம்பரம் செய்தல்). அவைகள் போபால் பெருநாசம்; விவசாய நில, நீர்வளத்தை அழித்தல் போன்ற கேடுகளைச் செய்பவை. இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை பொதுவுடைமையரும் ஆதரிக்கின்றனர். போக்குவரத்து ஏந்துகளிலேயே மகா மோசமானதான உந்துவண்டிக் கொள்ளைநோய் மாந்தர்களை அடிமையாக்கி (14வது நூற்றாண்டு பிளேக் நோய்போல்) ஒவ்வொரு மனிதனும் தான் போகுமிடமெல்லாம் எரிபொருளை வீணாக்கி ஒரு டன் உலோகத்தை உடன்கொண்டு சென்று உலகின் சுற்றுச் சூழலை நாசமாக்குவதை நல்லறிஞர் சுட்டியுள்ளனர். (ஏ.ஜே.பி. டேலர் 1984 “No more perverse, unsound means of transport has ever been devised, and the least effective unto the bargain. A mass of metal is laboriously transported from one place to another”; காம்ப்டன் மக்கென்சி: “the plague of motor cars which is sweeping the world like the Black death of the middle ages!” (man’s) “Complete subjugation to the motor car” (3) வெள்ளையர் நாடுகளில் கோடிகோடியான அரசு மானியத்துடன் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களை மலிவு விலையில் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளைக் கட்டாயமாக இறக்குமதி செய்யச் செய்து (உழவுத்தொழிலையே நம்பி வாழும் மக்களை 70 விழுக்காடு கொண்ட) இந்தியா போன்ற நாடுகளில் உழவுத் தொழிலை நாசமாக்கி மக்கள் தொகையில் முக்கால் பகுதியினரை அன்னக்காவடி பஞ்சம் பரதேசி மக்களாக ஆக்குதல், மேலும் மரபணு மாற்றப்பட்ட கோதுமை, பருத்தி போன்ற நச்சுப் பயிர்களை அந்நாடுகளில் பரப்பி, அந்நாட்டு மக்களுக்கு கூண்டோடு நாசம் விளைவித்தல். (4) கடவுளைப் பற்றியோ, ஆன்மாவைப் பற்றியோ, மனிதனைப் பற்றியோ, பிற உயிர்களைப் பற்றியோ கொஞ்ச நஞ்சம் மக்களிடம் உள்ள உணர்வுகளையும் சாகடிக்கும் நுகர்வோர் கலாச்சார (Consumerism) நோயைப் பரப்புதல். தனது “கொள்ளையுணர்வுச் சமூகம்” என்னும் நூலில் 1921லேயே ஆர்.எச். தானி இது பற்றி விளக்கியுள்ளார். “பொருளியல் (எகனாமிக்ஸ்)” என்பது அறிவியல் துறையே அல்ல. அது ஏமாற்றுதலும் உருட்டும் புரட்டும் கலந்த கலவையே” என்பார் அவர். (5) மாந்த இனத்தின் ஒட்டுமொத்த மூளைச் சலவைக்காக உருவாகியுள்ள தொல்லைக் காட்சி நோய்க்கு அனைவரையும் அடிமையாக்குதல். கிராஸ் (1992) தொல்லைக் காட்சியை “பண்பாட்டைக் கொல்லும் விஷவாயு” Cultural Nerve Gas என்பர். தனது “சூனியப் பார்வை”. என்னும் நூலில் பிளேபார் என்பவர் (The Evil Eye (1990) by G.L. Playfair) தொல்லைக் காட்சியானது எவ்வாறு சிந்தனை ஆற்றலையும், காரண காரியங்களை யோசித்து முடிவு செய்யும் ஆற்றலையும், மரக்கச் செய்து மூளையை அழுக வைத்துவிடுகிறது என்பதையும் தொல்லைக்காட்சிக்கு அடிமையானவர்கள் சுய இயல்பு, பண்பாட்டை இழந்து, குடும்பம், அண்டை அயலார் பற்றி எண்ணவே நேரமின்றி உதவாக்கரைப் பரபரப்பு, பாலுணர்வு நாட்டம், வன்முறை ஈடுபாடு அல்லது முட்டாள் பெட்டியைத் தவிர அனைத்தையும் மறந்து விடும் அரைப்பைத்திய நிலை, முதலியவற்றுக்கு அடிமையாகின்றனர் என்பதை விளக்கி யுள்ளார். “Making viewers alienated, disoriented, restless and violent or apathetic zombies”.தமிழ் விரைவாகத் தமிங்கிலம் ஆகிவருவது தொல்லைக் காட்சியினால் தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததேயாகும். (6) ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில் (ஆங்கிலம் தவிர்த்த பிற) மொழிகளை விரைந்து அரித்து அழிக்கும் பெருங்கேடு. 12. புகை மூட்டங்களை எழுப்பி அவற்றின் மறைவில் கயவர் கொள்ளையடிப்பது போல, ஆதிக்கக்காரர்களும் அடாவடிக் கொள்ளையர்களும் தங்கள் நன்மையொன்றையே குறிக்கோளாகக் கொண்டு உலகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஏழை எளியவர்களை ஏமாற்றி ஒழிப்பதற்கு அந்தந்த இடம், காலத்துக்குத் தக்கபடி தொன்று தொட்டுப் பயன்படுத்தி வரும் ஏமாற்று வாசகங்களுள் (லேபில்கள்) ஒன்றாக ஊர், நாடு, தேசம், சாதி, மதம், நாத்திகம், மதச்சார்பின்மை, பொது வுடைமை, ஜனநாயகம், தேர்தல்கள், தேசப்பற்று, திட்டமிடுதல், தேசவளர்ச்சி, நாட்டுநலன், அந்தயிசம், இந்தயிசம், ஏமாற்றிசம் போன்றவற்றுடன் “அறிவியலும்” சேர்க்கப்பட்டு நூறாண்டு களுக்கு மேலாகிறது. சான்றோர்களான பேரறிஞர்கள் கூற்றுக்கள்:- காந்தியடிகள் (1928) “மேலை நாடுகளின் தொழில் மயமாக்கல் வழியில் இந்தியாவும் சென்றுவிடாதவாறு கடவுள் காப்பாராக. இங்கிலாந்து என்னும் ஒரு சிறிய தீவு நாட்டின் ‘பொருளியல் சார் சர்வாதிகாரம்’ இன்று உலகை அடிமைச்சங்கிலியில் கட்டிவைத்துள்ளது. (இந்தியா போன்ற) 30 கோடி மக்கள் கொண்ட ஒருநாடு இத்தகைய சுரண்டலில் ஈடுபடுமாயின் வெட்டுக் கிளிகள் தாக்கிய வயல் முற்றாக அழிவதைப் போல உலகமே நாசமாகிவிடும்” [அமெரிக்காவைப் போன்ற (குடும்பத்துக்கு ஒன்றிரண்டு கார்கள், போன்ற) வாழ்க்கை முறையை ஐரோப்பிய நாடுகள் இன்று மேற்கொள்ள வேண்டு மென்றால் அதற்கு இந்த பூமியைப் போல இரண்டு மூன்று பூமிகள் வேண்டும் என்றும்; அனைத்து நாடுகளும் மேற் கொள்ள வேண்டுமாயின் பத்துக்கு மேற்பட்ட பூமிகள் வேண்டு மென்றும் கணக்கிட்டுள்ளனர்.] சவகர்லால் நேரு முதலாளித்துவம் ஒரு கல் - அதனை எவ்வளவு காலம் சமைத்தாலும் அதிலிருந்து உணவு கிடைக்காது. அல்பர்ட் ஜன்ஸ்டைன் சமய உணர்வு இல்லாத அறிவியல் நொண்டி; அறிவியல் சாராத சமய உணர்வு குருடு (அவர் “சமய உணர்வு” என்றது மனிதப் பண்பையும், பிற உயிர்கள், சுற்றுச் சூழல் பற்றிய ஆன்மிக உணர்வையும்) எச்.ஜே. எய்செங்க் ‘அறிவியலறிஞர்’ என்பவர் அவரவர் ஈடுபட்டுள்ள குறுகிய புலத்தை விட்டு வெளி வந்து பிற பொருள்களைப் பற்றிக் கருத்துக் கூறும் பொழுது, சாதாரணப் பொதுமக்களைப் போலவே பேதையர்களாகவும் “முயலுக்கு மூன்று கால்” என்னும் மூடர்களாகவுமே உள்ளனர், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு அறிவியலாளர் வல்லுநர் ஆக இருப்பதால் பிற விஷயங்களிலும் அவர் வல்லவராக இருப்பார் எனப் பலர் கருதிவிடுவதால் அறிவியலாளர்களுடைய பேதைமைக் கருத்துக்கள் மிகக் கேடுவிளைவிப்பவை. ஜான் டேலர் (1993) அறிவியலாளர் விந்தையான பிறவிகள்; அறிவோ மனச்சாட்சியோ இல்லாதவர்கள். அடிக் குறிப்புகள் நிரம்பிய ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டுள்ள ஒரு உன்னிப்பைச் சோதிக்க பிரபஞ்சத்தையே நொறுக்கிப் பார்க்கலாமே என மகிழ்ச்சியுடன் கூறக் கூடியவர்கள். ஜோனதான் பாரிட் (2000) வளர்ச்சி, முன்னேற்றம் என்ற மோசடிப் பெயர்களில் உலகத்தை, மாந்த இனத்தை இன்று அழிவுக்குக் கொண்டு செல்வதில் பெரும்பங்கு அறிவியலுக்கு உண்டு. இன்றைய (வெள்ளையர் மேல் நாட்டு) வாழ்க்கை முறை தொடர்வதோ விரிவடைவதோ நெடுநாளைக்கு நடைபெறாது......... மேலை வெள்ளைப் பன்னாட்டுக் கம்பெனிகளின் கூலிக்கார அடிமை களாவே இன்று பெரும்பாலான அறிவியலாளர்கள் உள்ளனர். 13. முன்பத்தியிற் கண்டவற்றுக்கான ஆங்கில மூலங் களைத் தந்தாக வேண்டும்; அவை வருமாறு. Science 1. a branch of knowledge conducted on objective principles involving the systematized observation of and experiment with phenomena, especially concerned with the material and functions of the physical universe. 2. a. systematic and formulated knowledge,especially of a specified type or on a specified subject (political Science); b. the pursuit of principles of this. 3. an organized body of knowledge on a subject (the science of philology) - Concise Oxford Dictionary Mahatma Gandhi 1928: “God forbid that India should ever take to industrialism after the manner of the west. The Economic imperialism of a single tiny island kingdom (England) is today keeping the world in chains. If an entire nation of 300 million took to similar economic exploitation, it would strip the world bare like locusts” J. Nehru: “Capitalism is like a stone, you can never get food out of it, however long you may cook it” Albert Enistein: “Science without religion is lame; religion without science is blind” H.J. Eysenck: “Scientists, especially, when they leave the particular field in which they have specialised, are just as ordinary, pig-headed, and unreasonable as anybody else, and their unusually high intelligence only makes their prejudices all the more dangerous” John Taylor (1993): “Scientists really are strange birds. They have no conscience and would cheerfully blow up the universe, to prove the point in an essay consisting largely of footnotes” Jonathan Parritt (2000): “Modern science is at the very heart of an inherently destructive model of progress “.........” Our current way of life is wholly unsustainable” (i.e. will become extinct).....” paymasters of science today are the world’s multinational companies”. R.H. Tawny (1921) The Acquistive Society: “There is no such thing as a science of Economics, nor ever will be. It is just cant” (Bernard Hollowood said in 1975: “Economists are dismal jimmies unable to agree with each other and spouting platitudes with jargon”) 14. மேற் சொன்னவற்றில் இருந்து நாம் அறிவது என்ன? “அறிவியல்” பெயரால் மக்களை ஏமாற்றுதல், Blinding People with science என்பது குறித்து விழிப்புணர்வு தேவை. குறிப்பாக உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆகிய ஏழைகளிடம் (இந்தியாவில் மட்டும் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்கள் 30 கோடி) விழிப்புணர்வு தேவை, ‘அறிவியல்’, ‘பொருளாதாரம்’, ‘வளர்ச்சி’, ‘முன்னேற்றம்’ என்ற பெயரில் பல்வேறு மோசடிக் கோரிக்கைகளை யார் முன்வைத்தாலும் சொல்வது யார்? எந்தக் கயவர்களின் நன்மைக்காகச் சொல்கிறார்கள்? இத்தகைய கோரிக்கைகளால், பிற நாடுகளை கடந்த 400 ஆண்டுகளில் வெள்ளை நாடுகள் சுரண்டியது எவ்வளவு? நம்காலத்தில் உலகின் பிற நாடுகள் இவற்றால் எப்படிச் சீரழிந்தன? இவைகளால் ஏழைகள் எத்தனை கோடி பேர் நிலம், வாழ்வு, உயிர் ஆகியவற்றை இழப்பர்? என்பதை யெல்லாம் கேட்டு ஆராய்ந்து உணர்ந்து எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. என்ற குறளை மறக்காமல் ரஸ்கின், தோரோ, லியோ தால்ஸ்தாய், காந்தியடிகள் போன்றோர் 1900-1930களிடையே தொலைநோக்குடன் காட்டிய வழி ஒன்றே மாந்தகுலம் இந்தியர்கள், தமிழர் உட்பட அழிவிலிருந்து உய்யும் வழியாகும். 15. இந்திய விடுதலை இயக்கத்திற்கு 1919 முதல் மகாத்மா காந்தி தலைமை வாய்த்தது நல் ஊழாகும். இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் பேராயக் கட்சியின் துவக்கம் உலகின் பெரும் இயக்கங்கள் அனைத்தின் துவக்கத்தைப்போல் மிகச் சாதாரணமானதுதான்: வெள்ளையருக்கும் ஆளும் வர்க்கத் தினருக்கும் விடுமுறையான கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விடுமுறையில் ஆண்டுதோறும் இந்திய வக்கீல்கள், அதிகாரிகள், படித்த மேட்டுக் குடியினர் சென்னை, பம்பாய், கல்கத்தா பெருநகரங்களில் கூடிக் கலந்துரையாடிப் பொழுது போக்குவர். 19ஆம் நூற்றாண்டுப் பகுதியின் இடைப்பகுதியிலிருந்தே இதுவாலாயம். 1884ல் சென்னையில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் தியாசபிகல் சங்க சார்பில் கூடிய கூட்டத்தில் அனைத்திந்திய அளவில் ஆண்டுதோறும் கூடலாமே என்ற எண்ணம் எழுந்தது. அவ்வெண்ணம் செயலாக்கப்பட்டு பம்பாயில் முதல் காங்கிரஸ் (= பெருங்கூட்டம், மாநாடு, பேராயம்) ஆக 1887இல் 72 பேர் கூடினா (பெரும்பான்மையினர் வக்கீல்கள், பத்திரிகை யாளர்கள்) 1886 கல்கத்தாவிலும் 1887ல் சென்னையிலும் பேராயம் கூடியது. 1899 வரை பேராயத்துக்கு விதிகளோ முறையான அமைப்போ இல்லை. 1906 வரை ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற ஐ.சி.எஸ். வெள்ளையரே பேராயக் கட்சியின் பொதுச்செயலாளர்; பேராயக் கூட்டக் காரியங் களைக் கவனித்து வந்த முழுநேரப் பணியாளரும் அவர் ஒருவரே (ஆண்டுதோறும். சில கலை மன்றங்கள் வருடாந்திரக் கூட்டங்களில் கூடி ஓரிருநாள் உரையாடி விட்டுக் கலைந்து விடுவது போலத்தான் முதல் 20 வருடங்கள் பேராய ஆண்டுக் கூட்டங்கள் நடந்து வந்தன!) 1905-ல் கவர்னர்ஜெனரல் கர்சன் பிரபு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரித்ததுதான் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பரவலான எதிர்ப்பு உணர்ச்சியை வங்காளத்துப் படித்த மேட்டுக் குடியினரிடமும் அவர்கள் மூலமாக சாதாரண மக்களிடமும் ஏற்படுத்தி அடுத்து அவ் வெதிர்ப்புணர்ச்சி ஏனைய மாகாணங்களிலும் பரவத் தொடங்கியது. பேராயக் கட்சியில் சேர்ந்து காந்தி யுகத்துக்கு முன்னர்த் தமிழகத்தில் பாடுபட்டு நாட்டுக்காக ஈகம் செய்த தேசபக்தர்கள் சுப்பிரமணிய பாரதி, வ.உ. சிதம்பரம்பிள்ளை, வ.வெ. சுப்பிரமணிய ஐயர், சுப்பிரமணிய சிவா போன்ற பெரியோர்களாவர். காந்தியடிகள் பேராயக் கட்சித் தலைமையேற்ற பின்னர் தமிழகத்தில் ஆயிரக் கணக்கான நாட்டுப்பற்றுமிக்க தமிழர்கள் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கம் (Non - cooperation), சட்டமறுப்பு இயக்கம் (Civil disobedience)போன்ற அகிம்சைப் போர்களில் ஈடுபட்டு நாட்டு விடுதலைக்கு உழைத்தனர். அவர்களுள் தலைமையும் முதன்மையும் வாய்ந்த சில பெருந்தகைகள் சி. இராசகோபாலாச்சாரி (இராஜாஜி), ஈ.வே. இராமசாமி நாயக்கர் (பெரியார்), திரு வி. கல்யாண சுந்தர முதலியார் போன்றோர் அவர். 16. இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய விவகாரங் களைக் கவனிப்பதற்கான அமைச்சராக அப்பொழுது இருந்த மாண்டேகு பிரபுவும் அன்றைய அரசப் பிரதிநிதி (வைஸ்ராய்) செம்ஸ்போர்டு பிரபுவும் சேர்ந்து பலரையும் கலந்து உருவாக்கிய இந்திய ஆட்சிமுறைச்சட்டம் 1919 (மாண்ட்போர்டு சட்டம்) மாகாணங்களில் இரட்டையாட்சி முறையை அனுமதித்து, சில துறைகளை (சட்டசபை உறுப்பினர்களாக மக்கள் தேர்ந் தெடுத்த நபர்களின் நம்பிக்கையைப் பெற்ற) அமைச்சர்கள் சுயமாக நிருவகிக்கும் அதிகாரத்தை வழங்கியது. இச்சட்டத்தின் கீழ் மாகாண சட்டமன்றங்களுக்கு 1920ல் தேர்தல்கள் நடந்தன. அப்பொழுதெல்லாம் வயதுவந்தோருக்கு ஓட்டுரிமை இல்லை. [மக்கள் நாயகத் தொட்டில் ஆகிய இங்கிலாந்தில் வயது வந்தோரில் - அதுவும் ஆண்களில் மட்டும், பத்து விழுக்காட்டிற் குறைவானவர்களுக்கே 1832 வரை வாக்குரிமை இருந்தது. அந்நிலைமை படிப்படியாகத்தான் தாராளமாக்கப்பட்டது. 21 வயது வந்த ஆண்களுக்கெல்லாம் வாக்குரிமை வர 1918 வரை ஆனது. பெண்கள் யாருக்கும் 1918 வரை வாக்குரிமை இல்லை. 1918லிருந்து இங்கிலாந்தில் பெண்களில் 30 வயது முடிந்த வர்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை தரப்பட்டு, 1928லிருந்து பெண்கள் வாக்குரிமைக்கான வயது வரம்பு 21ஆக (ஆண்களைப் போலவே) நிர்ணயிக்கப்பட்டது] 1919ஆம் ஆண்டுச் சட்டப்படி தமிழகம் உள்ளிட்ட சென்னை மாகாண மக்கள் தொகை 4 கோடியில் 3% பேருக்கு மட்டுமே (சொத்து, படிப்பு, வருமானம் அடிப்படையில்) வாக்குரிமை இருந்தது. காந்தியாரின் ஒத்துழையாமைக் கோட்பாட்டைக் கடைப்பிடித்த காங்கிரஸ் கட்சி தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. எனவே சட்ட மன்றத்தில் (தேர்ந்தெடுக்கப்பட்டோருக்குரிய) 98 இடங்களில் 63 இடங்களை நீதிக்கட்சிபெற்றது. (சட்டமன்ற உறுப்பினர் மொத்த எண்ணிக்கை 127 –தேர்ந்தெடுக்கப்பட்டோரும் வெள்ளையர் அரசு நியமித்தோரும் சேர்த்து). கடலூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் 1920 டிசம்பரில் முதலாவது முதலமைச்சர் ஆனார். உடல்நலக் குறைவால் அவர் 1921 ஏப்ரலில் பதவி விலகவே, பானகல் அரசல் பி. இராமராய நிங்கவாரு முதல்வர் ஆனார். (உள்ளாட்சி நிறுவனத் துறைப் பொறுப்புடன்); ஏனைய அமைச்சர்கள் கூர்மாவேங்கட ரெட்டி (வளர்ச்சிப் பணிகள்); ஏ.பி. பாத்ரோ (*கல்வி). 17. அரசுப் பணியிலும் சட்டமன்றம் முதலிய அரசியல் மன்றங்களிலும் பிராமணர் அல்லாதோருக்கு உரிய இடங் களைப் பெறும் நோக்கத்துடன் சர் பிட்டி தியாகராய செட்டி, டாக்டர் தரவத்து மாதவன் நாயர், சி நடேச முதலியார் ஆகியோர் 20.11.1916 அன்று தொடங்கியதுதான் நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் (South Indian Liberal Federation)ஆகும். அக்கட்சி நடத்திய நீதி (Justice) என்ற நாளிதழின் பெயரால் அது நீதிக் கட்சி என்றே அழைக்கப் பட்டது. அன்று உயர்பதவிகளை அதிகமாகப் பிராமணர்களே வகித்தனர்:- 1918இல் சென்னைமாகாண அரசுத்துறைப் பதவிகள் அவற்றுள் பதவிகளில் உயர்பதவிகள் மொத்தம் பிராமணர் கல்வி 390 310 நீதிமன்றங்கள் 171 118 வருவாய்த்துறை 679 394 நீதிக்கட்சியினர் கோரிக்கையின் அடிப்படையிலும் ஆளுநரின் ஆலோசகர் அலெக்சாண்டர் கார்டுயூ ஆதரவிலும் 1919 சட்டத்தின் கீழ் மாகாண சட்டசபை உறுப்பினர்களில் பிராமணர் அல்லாதாருக்கு தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. இதை எதிர்க்க காங்கிரசுக் கட்சியும் (1907-1923இல் அன்னி பெசன்ட் தலைமையில் இயங்கியதும் பெரும்பாலும் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தியதுமான) சென்னை தியாசபிகல் சங்கமும் திரு வி. கல்யாணசுந்தர முதலியார், ஈ.வே.ராமசாமி நாயக்கர், கேசவ பிள்ளை முதலிய சூத்திரத் தலைவர்களைக் கொண்டு நீதிக்கட்சிக்கு எதிராகச் செயல் வடுவதற்காக சென்னை புரவின்சியல் ஆசோசியேஷன் என ஒன்றை 1917இல் தொடங்கினர். முதல் இருவரும் பின்னர் காங்கிரசில் சேர்ந்தனர். முதலியார் காங்கிரசை விட்டு விலகவில்லை. நாயக்கர் வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்காக காங்கிரசுக் கட்சிக்குள் பாடுபட்டு அது வெற்றி பெறாததால் காங்கிரசைவிட்டு 1925இல் வெளிவந்து விட்டார். கேசவபிள்ளை பின்னர் நீதிக்கட்சியில் சேர்ந்தார். 18 காந்தியார் சட்டசபை நுழைவுக்கு எதிராக இருந்த போதிலும் நீதிக் கட்சியை எதிர்க்க விரும்பிய காங்கிரஸ் காரர்கள் சுயராஜ்யக் கட்சி என ஒன்றைத் தொடங்கி 1926லிருது சென்னை மகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட லாயினர்; அதன் காணமாக நீதிக்கட்சி பெரும்பான்மை இழந்தது. எனினும் சுயேச்சைகள் ஆதரவிலோ அல்லது (சுப்பராயன் போன்ற) சுயேச்சைகள் தலைமையிலோ 1936 முடிய நீதிக் கட்சி (1919 சட்டம் அனுமதித்த துறைகளில் மட்டும்) ஆட்சிசெய்துவந்தது. நீதிக்கட்சியின் சாதனைகள் சில வருமாறு:- 1921 கட்டாய தொடக்கக் கல்விச் சட்டம் ” பெண்களுக்கும் வாக்குரிமை (பிற தகுதிகளுக்குட் பட்டு) 1925 இந்து சமய அறநிலையச் சட்டம் 1929 தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் 1928 அரசாணை: மாகாண அரசுப பணியிடங்களில் இடஒதுக்கீடு பிராமணர் அல்லாதார் 5; பிராமணர் 2; முகமதியர் 2, கிறித்தவர் 2; பிறர் 1. [இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை 1950 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் இனக்குழுவினருக்கும் செயல் படுத்தப்பட்டது (அரசுப் பணியிடங்களிலும், கல்வி நிறுவனங் களில் மாணவர் நுழைவிலும்); அச்சட்டத்தின் முதல் திருத்தம் (1951) இதைப் பிற்பட்டோருக்கும் அனுமதித்தது. ஆனால் பிற்பட்டோருக்கு மைய அரசைப் பொறுத்தவரையில் பணியிட ஒதுக்கீட்டில் 1990லிருந்தும் (வி.பி. சிங்) கல்வி நிறுவன நுழைவில் 2007லிருந்தும் (மன்மோகன் சிங்) தான்கிடைத்தன] 19. இந்தி ஆட்சி முறைச்சட்டம் 1935 வந்த பின்னர் நீதிக்கட்சித் தலைவர்கள் பலர் பதவியாசை காரணமாகக் காங்கிரசுக்குத் தாவினர். அச்சட்டத்தின் கீழ் வாக்குரிமை பெறத்தகுதி பெற்ற சிலர் மட்டுமே வாக்களித்து, சென்னை மாகாணச் சட்டசபை உறுப்பினர்கள் ஆன 215 பேரில் 159 காங்கிரசுக் கட்சியினர்; 21 பேர் நீதிக்கட்சி. 1937-39 சென்னை மாகாண காங்கிரஸ் பிரதமர் இராஜாஜி சாதனைகள் சில. சேலம் மாவட்டத்தில் மது ஒழிப்பு, இந்துக் கோயில்களில் நுழைய தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை தரும் சட்டம், விவசாயிகளுக்குக் கடன் நிவாரணம், ஆகியவையாகும். சுதந்திர இந்தியாவில் இந்திதான் ஆட்சிமொழியாகும்; எனவே தமிழர்கள் இப்பொழுதே இந்தி படிக்க வேண்டும் எனக் கூறி அவர் சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியையும் ஒரு மொழிப்பாடமாகப் பயில வேண்டும் என ஆணையிட்டார். இதனை மறைமலையடிகள், சோமசுந்தரபாரதி போன்ற தமிழறிஞர் மட்டுமன்றி, பெரியார் ஈவேரா, நீதிக்க ட்சியினர் (சர். ஏ.டி. பன்னீர்செல்வம் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலியவர்கள்) ஆகியோரும் கடுமையாக எதிர்த்தனர். சென்னை இந்து தியாலஜிகல் பள்ளி எதிரே நடந்த மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றவர்களுள் தாளமுத்தும் நடராசனும் சிறையில் மாண்டனர். காங்கிரஸ் 1939ல் ஆட்சியை விட்டு விலகிய பின்னர் ஆங்கில கவர்னர் கட்டாய இந்தியைப் பள்ளிகளில் இருந்து நீக்கினார். (மைய அரசு ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கியதை 1960க்குப் பின்னர் இந்தியல்லாத மாநிலங்கள் எதிர்த்தபொழுது இராஜாஜியும் முன்னணியில் நின்று எதிர்த்தார்! மாநிலங்களுக் கிடையே பாரபட்சம் இல்லாமலிருக்க மைய அரசு ஆட்சி மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.) இறுதியாக அறிஞர் அண்ணா 1967ல் முதல்வரான பின்னர் 23.1.68 அன்று இந்தியைத் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் 1-11 (பின்னர் 1-10) வகுப்புகளின் பாடத்திட்டத்தி லிருந்து நீக்கிப் பின்வரும் இருமொழிப் பாடத் திட்டத்தைக் கொணர்ந்தார். 1. தமிழ் (அல்லது மாணவன் / மாணவியின் தாய் மொழி தமிழ் அல்லாததாக இருந்தால் அம்மொழி) 2. ஆங்கிலம் 20. காங்கிரசு இந்தியா முழுவதும் ஆட்சிக்கு வரும் அளவுக்கு வளர வளர அக்கட்சியில் பலரும் சேர்ந்தனர். தமிழ்நாடு காங்கிரசு உறுப்பினர் எண்ணிக்கை 1929ல் 3135; 1936ல் 65, 105; 1938ல் 2,60,000. இந்நாட்டிலும் சரி எந்நாட்டிலும் சரி எந்தக் கட்சியும் வளர்வது அதன் கொள்கையின்பால் உள்ள ஈடுபாடு மட்டும் காரணமாக அன்று; (கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொறுத்தவரை மட்டும் அவற்றின் தொடக்க நிலைகளில் அத்தகைய ஈடுபாடு காரணமாக இருக்கலாம்) நீதிக் கட்சியின் மூலம் பயனடையக் கருதியோர் அக்கட்சியில் சேர்ந்தது போல 1930க்குப் பின்னர் காங்கிரசின் மூலம் பயனடையக் கருதியோரும் பெரும் எண்ணிக்கையில் காங்கிரசில் சேர்ந்தனர் - வெறும் தேசபக்தி மட்டும் காரணம் இல்லை. (ஹெச். டிரெவெல்யன் 1972). 1957ல் தஞ்சாவூருக்கும் மதுரைக்கும் தாம் எழுதிய மாவட்ட கெசட்டியர் களில் கே.எஸ். பாலிகாவும் கூறுவது “காங்கிரசும் அன்னிபெசண்ட் ஹோம் ரூல் இயக்கமும் எந்த அளவுக்கு நாட்டு விடுதலை குறித்த தேசிய உணர்வு கொண்டிருந்தனரோ அந்த அளவுக்கு நீதிக்கட்சியினரும் கொண்டிருந்தனர். ஒரே வேறுபாடு அவர்கள் மிதவாதிகள்; சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் நியாயம் கோரிய வர்கள்; போராட்டமில்லாத அரசியற் செயல்பாடுகளே போதும் என்று கருதியவர்கள்” என்பதாகும். 21. இந்திய சுதந்தரத்துக்கு முன்னர்த் தமிழ்நாட்டு அரசியலில் காந்தியடிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை ஒத்த முக்கியவத்தைத் தமிழ் நாட்டு அரசியலில் 1947லிருந்து பெற்றவர் ஈ.வே.ராமசாமி. 1925ல் காங்கிரவை விட்டு அவர் விலகிய பின்னர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி (நீதிக் கட்சியின் நோக்கங்களுக்கும் இசைவாக) இந்து மதத்திலும் சமூகத்திலும் இருந்த கேடுகளைச் சீராக்கப்பாடுபட்டார். 1939ல் நீதிக்கட்சி அவரையே தலைவராக ஏற்றுக்கொண்டது. 1944ல் அக்கட்சியின் பெயரை அவர் திராவிடர்கழகம் என மாற்றினார் (எனினும் நீதிக்கட்சியினர் சிலர் பழைய பெயரிலேயே சில ஆண்டுகள் அக்கட்சியைத் தொடர்ந்து நடத்தினர்.) திராவிடர் கழக உறுப்பினர் எண்ணிக்கை 1944ல் 1369; 1946ல் 49574, 1949ல் 75000. 1949ல் திராவிடர் கழகத்தில் 3/4 பகுதியினர் அறிஞர் சி.என். அண்ணாதுரை தலைமையில் பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் கண்டனர். ஒரு இயக்கம் அரசியல் கட்சியாக வளர வேண்டுமானால் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குப் பகுத்தறிவு, சமயம், சமுக சீர்திருத்தம் ஆகியவை சார்ந்த நடவடிக்கைகளில் தேவையான மாற்றங்களை திமுக செய்து கொண்டு செயல்பட்டு 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அவ்வெற்றியில் பெரியாருக்கும் பங்கு உண்டு எனலாம். எகனாமிஸ்டு 8.6.67 “எத்தனையோ நூற்றாண்டு களுக்குப் பிறகு சென்னை (தமிழ்நாடு) மாநிலத்தவரான சாதிப்படியமைப்பில் கீழ்நிலையிலிருந்த கறுப்பர்கள் ஆட்சி பீடத்தைப் படித்துள்ளனர் “the dark-skinned low caste people of Madras... snatched the seat of power என்று பாராட்டியது. 1967லிருந்து தி.மு.க.வினரோ அதிலிருந்து பிரிந்தவர்களோ தான் இன்றுவரை ஆட்சியில் உள்ளனர். இந்திய சீர்திருத்தவாதிகளில் இந்து சமயம், அதன் அமைப்பு, அதன் கொள்கைகள் ஆகிய வற்றை ஒட்டு மொத்தமாகக் கடைசிவரை மனப்பூர்வமாக முழுமூச்சுடனும் நியாயத்தின் அடிப்படையில் ஏற்பட்ட நெஞ்சுரத்துடனும் எதிர்த்தவர் ஈவேரா ஒருவரே என்பர் பஷாம் (1982). “A great man who compels admiration of his burning sincerity and intense moral courage, whatever we may think of his policy” இந்நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். 1940க்கு முன்னர்த் தொல்லைக்காட்சி வந்திருந்தால் பெரியார் அண்ணா இயக்கங்கள் போன்றவை பரவியிருக்கவே முடியாது; 1900 லிருந்து வந்திருந்தால் காந்தியார் காங்கிரசு இயக்கமும் அவ்வாறே; மற்ற நாடுகளிலும் இதே நிலைதான்! 22. இருபதாம் நூற்றாண்டில் (அரசியல்) காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளிலெல்லாம் அரசியலே பிழைப்பாதாரமாகக் கொண்ட அரசியல்வாதிகள் பல்வேறு கட்சிகளின் பெயரால் ஆட்சியைப் பிடித்து நாட்டை நாசமாக்கும் அவலம் இருப்பதை “the great human scourge of the 20th century, the professional politician’ அறிஞர் சுட்டியுள்ளனர். நல்லவேளையாக ஏனைய ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைப் போலன்றி இந்தியாவில் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, ஜெயபிரகாஷ் நாராயண் முதலிய வர்களும் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பல நேர்மையான தலைவர்களும் (பிற மாநிலங்களிலும் பல நேர்மையாளர்களும்) இருந்தமையால் நம்நாடு இந்த அளவுக்கு இதுவரை உய்ந்தது. 1990லிருந்து வலுப்பட்டு வரும் பொருளாதார காலனி ஆதிக்கத்திலிருந்து (மேலே காண்க) தப்பி உய்வதற்கும் இந்தியத் தலைவர்கள் வழிவகுப்பர் என நம்பலாம். “மன்னன் (இப்பொழுது “ஆள்பவர்” என்க) உயிர்த்தே மலர்தலை உலகம்” என்றது புறநானூறு, சான்றோர் ஆளும் அரசே அரசு (It is men, high minded men that constitute a state)என்றார் சர்வில்லியம் ஜோன்ஸ். 23. இப்புத்தகம் தமிழைப் பற்றிய செய்திகளுடன் தொடங்கியது. இறுதியிலும், தமிழைப் பற்றியதான தொலை நோக்குடன் முடிப்பது பொருத்தமாகும். 24.செம்மொழிகளில் லத்தீன், கிரீக், எபிரேயம் போன்றவை சுமார் 500 - 1000 ஆயிரம் ஆண்டுகள் வழக்கிலிருந்து பின் வழக்கிழந்து விட்டன. (பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் முதலியவை லத்தீனின் வழிமொழிகள்.) 1900க்குப் பின்னர் கிரீக்மொழியும் 1940 க்குப்பின்னர் எபிரேயமும் முறையே கிரீசு நாட்டிலும் இசுரேலிலும் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வழக்குக்கு வந்துள்ளன). சம்ஸ்கிருதம் என்றுமே உலகில் வழக்கில் இருந்த தில்லை. அது ஒரு இலக்கிய மொழியாகவே இருந்தது. இவை யனைத்துக்கும் மாறாக தமிழ் மட்டுமே கடந்த 2500 ஆண்டுகளுக்குக் குறையாமல் (ஏறத்தாழ அடிப்படையில் இன்றுள்ளது. போலவே) வழங்கி வந்துள்ளது தனிச்சிறப்பாகும். தமிழ் இயன்மொழி (அதாவது ஞாலமுதன்மொழிக்கு மிக நெருங்கியது) ஆதலின் இது இயன்றது. தமிழ் சிந்துவெளி நாகரிக காலத்தில் (கி.மு. 3000 - 1500) இந்தியாவெங்கும் வழங்கியது. கி.மு. 1500ஐ ஒட்டி, இந்தோ ஆரிய மொழி பேசுநர் இந்தியாவிற்குள் நுழைந்த பின்னர் அக்காரணத்தாலும், மேலும் எம்மொழியிலும் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் தமிழ் வழங்கிய நிலப்பரப்பு படிப்படியாகச் சுருங்கியது. இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் இலக்கண அமைப்பில் தமிழ் (திராவிடத்) தன்மை வாய்ந்தனவாயினும் சொல்வளத்தில் சமஸ்கிருதச் சார்பு மிகுந்து இன்று அவை இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாகிவிட்டன. தென்னாட்டில் தமிழ் திரிந்து, தெலுங்கு கி.பி. 100 ஐ ஒட்டியும், கன்னடம் கி.பி. 500 ஐ ஒட்டியும், மலையாளம் கி.பி. 1500ஐ ஒட்டியும் தனித்தனி மொழிகளாக உருவாகி விட்டன. தமிழையும் மலையாளம் போன்ற “அரைச் சமஸ்கிருத” கலவை மொழியாக்குவதற்கான நச்சு முயற்சிகள் 13ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. மணிப்பிரவாள நடைஉரைகள் போன்றவை அவை. அத்தகைய நச்சு முயற்சிகள் வெற்றி பெறும் காலம் நெருங்கும்பொழுது (தமிழர் நல்வாய்ப்பாலும் தமிழ்ப் பகைவர் தீயூழாலும்) கி.பி. 1800க்குப் பின் நிலைமை மாறியது. 1800லிருந்து தமிழகம் முழுமையும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ்வந்தது. தமிழ் போன்ற அந்தந்த நாட்டு மக்கள் மொழிகளைத் தாழ்வாகக் கருதும் போக்கை அரசு கைவிட்டது. கால்டுவெல், ஒப்பிலக்கணம் (1856) ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்நூலின் மூலம் கால்டுவெல் தமிழின் தொன்மை, முன்மை, தென்மை, இனிமை, ஆற்றல் ஆகியவற்றை நிலைநாட்டித் தமிழர் அனைவருக்கும் புத்துணர்வு தந்தார். தமிழை அறிஞர்கள் 1900லிருந்தே நடைமுறையில் செம்மொழியாக ஏற்றுள்ளனர். 2004லிருந்து தமிழைச் செம்மொழியாக மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மைய அரசும் அறிவித்தது. அதற்குக் காரணமான கலைஞர் மு. கருணாநிதியும் பாராட்டிற்குரியர். 25. இவ்வாறு தமிழ்ப் பாதுகாப்புக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் கால்டுவெல் இட்ட வித்து, பின்னர் மனோன்மணியம் சுந்தரனார், பண்டித சவரிராயர், மாகறல் கார்த்திகேய முதலியார், மறைமலையடிகள், கா. சுப்பிரமணியபிள்ளை, நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசர், ஞா. தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்கள் பணிகளால் ஆலமரமாக உருக்கொண்டது. 1930களிலிருந்து தமிழக அரசியல் - சமுதாயத்துறை இயக்கங்களின் பாது காப்பும் கிட்டியதால் இன்று தமிழ் இந்நிலையிலாவது நிற்க இயன்றுள்ளது. 26. இனிவரும் நூற்றாண்டுகளில் நாளடைவில் ஆங்கிலம் தவிர பிற எல்லா மொழிகளுக்கும் உலகமயமாக்கச் சுரண்டலில் ஸவிவரங்கள் மேலே]. பன்னாட்டு முதலாளித்துவக் கம்பெனிகள் தம் ஆயுதங்களில் ஒன்றாகப் பயன்படுத்தும் “கொலைகார மொழி”, (“Killer Language”)ஆகிய ஆங்கிலத்தால் பேராபத்து வரும் என மொழியியலறிஞர் விளக்கியுள்ளனர். (“Economics may be the single strongest force influencing the fate of endangered languages”: Grenoble 1998). சிறுஎண்ணிக்கையோர் (ஒரு லட்சத்துக்கு குறைவானவர்) பேசும் மொழிகள் முழுவதுமாக ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்குள் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. ஒரு மொழி சிலநூறு ஆண்டுகளாவது நின்று நிலவிட வேண்டுமானால் குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது அதைப் பேச வேண்டும் என்கின்றனர் மொழி நூலறிஞர். (குறிப்பாக குழந்தைகளிடம் பெற்றோர் பேசும் வீட்டுமொழியாகவும் அது இருந்தாக வேண்டும் என்பது மற்றோர் நிபந்தனை). மீச்சிறு எண்ணிக்கையினர் பேசும் மொழிகளைப் பொறுத்தவரையில், பத்தாயிரம் பேருக்குக் குறைவாகப் பேசப்பட்டுவரும் 3340ல் மூவாயிரம் மொழிகள் கி.பி. 2100க்குள் அழிந்துவிடும் என அஞ்சுகின்றனர். (அவற்றுள் கால்பகுதி மொழிகள் ஆஸ்திரேலியாவுக்கு வடக்கிலுள்ள நியூ கினி தீவில் உள்ளன) அவ்வாறு அழியும் வேகம் வாரத்திற்கு இரண்டு மொழியாக இருக்கும். அழியும் ஆபத்தில் உள்ள மொழிகள் பற்றி யூனெஸ்கோ அமைத்துள்ள ஆய்வுக்குழுவினர் கருத்தும் அஃதே. “அழிவுறும் நிலை மொழிகள்” பட்டியலில் தமிழும் உள்ளதாக நம்மவர் சிலர் கூறித்திரிவது மூடத்தனம் ஆகும். (அழிவுறும் நிலை மொழிகள் பட்டியலில் உள்ள மொழிகளைப் பொறுத்தும் கூட அவ்வாறு சொல்லிக் கொண்டிருப்பதே சீக்கிரம் அழிவைக் கொண்டுவரும் என்பார் கிரிஸ்டல்! (negative attitudes are easily reinforced through repeated casual references to a language’s endangered state..) “உள்ளற்க உள்ளம் சிறுகுவ” என்றார் வள்ளுவரும்.) 27. சிலகோடி மக்கள் பேசும் மொழிகளும் ஆங்கிலத்தால் அழிவை எதிர்நோக்கியுள்ளன. தமிழுக்குமட்டுமா ஆபத்து? தெலுங்கு, கன்னடம், மலையாளம், மகாராஷ்டிரம், ஒரியா, இந்தி போன்ற நமது சகோதர மொழிகள் அனைத்துக்கும் ஆபத்துதான். ஏன், இவற்றையெல்லாம் விட அறிவியல் புலங்களில் பன்மடங்கு சிறந்த டச்சு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற (சில, பல கோடிமக்கள் பேசுபவை) மொழிகளும் அஞ்சுகின்றன. ஹாலந்து, பெல்ஜியம் நாடுகளில் இன்று 2 கோடி மக்கள் பேசுவது டச்சுமொழி. அதைப் பாதுகாக்க அவ்விருநாட்டு அரசுகளும் ஒரு அமைப்பை நிறுவியுள்ளனர். அவ்வமைப்பின் தலைவர் வான் ஹுர்ட் (Van Hoorde) 1998ல் விடுத்துள்ள எச்சரிக்கையை மனதிற் கொள்ள வேண்டும். “வருங்காலத்தில் உடனடியாகவோ அல்லது சிலநூறு ஆண்டுகளிலோ டச்சுமொழி அழிந்து போகும் ஆபத்து இல்லை. ஆனால் அது பயன்பட்டுவரும் புலங்களின் (domain) எண்ணிக்கை குறையும். இறுதியில் அது வெறும் பேச்சுமொழியாகத் தேய்ந்து விடலாம். வீட்டிற்குள், குடும்பத்திற்குள் பேசுவதற்கும் துயரம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டவும் மட்டுமே பயன்படு வதற்கும் ஆன மொழியாக அது ஆகிவிடும் ஆபத்து உள்ளது. உலகியலிலும் வாழ்விலும் முக்கியமான அம்சங்களாக அரசு, கம்பெனிகள், நிறுவனங்களின் செயல் பாட்டு மொழியாகவோ, வணிகம், பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பவியல், ஆகியவற்றுக்கான மொழியாகவோ டச்சுமொழி பயன்படுத்தப்படாத நிலை வந்துவிடும்”. 28. தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் பயன்பாட்டுப் புலங்கள் (domains)ஏற்கெனவே குறைவு. தற்காப்பு முயற்சி களை (குறிப்பாக பள்ளிகளிலாவது 1-12 வகுப்புகளில் தமிழை மட்டுமே பயிற்று மொழியாக ஆக்குதல்; திரைப்படம், வானொலி - தொல்லைக்காட்சிகளால் தமிழ் சீரழிக்கப்படு வதைத் தடுத்தல்; உலகமயமாக்கப் பெருங்கேட்டை தடுத்தல்; மகாத்மா காந்தியடிகளின் சுதேசியப் பொருளாதாரக் கொள்கையை மேற்கொள்ளுதல், போன்றவை) விரைந்து மேற்கொள்ளாவிட்டால் டச்சுமொழிக்காரர்கள் அஞ்சும் கேடு தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் ஏற்பட்டு விடும். தமிழுக்கு ஆங்கிலத்தால் ஏற்பட்டுள்ள ஏதங்கள் பிற இந்திய மொழிகளுக்கும் உள்ளவைதான். எடுத்துக்காட்டாக “தமிங்கலம்” போன்றே “இந்திலிஷ்” (Hindlish) மொழியும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதை இன்றைய உத்தரப்பிரதேசத்தின் 1911ம் ஆண்டு சென்சஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளதைக் காண்க. அதாவது ஒரு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் I would give incontrovertible proof of this position and it is my opinion that the argument of the defence cannot hold water”)என்று சொல்லவிரும்பி அதை நீதிமன்றத்தில் பின்வருமாறு இந்திலிஷ் மொழியில் விளம்பினார் என அவ்வறிக்கை நகைச்சுவைபடக் கூறியுள்ளது. is position ke incontrovertible proof de sakta hu, aur mera opinion yeh hai ki defence ka argument water hold nahi kar sakta hai”. 29. இந்தியாவில் பிற மொழிகளுக்கு இல்லாமல் தமிழுக்கு மட்டும் உள்ள சில உட்பகைகளையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. (i) தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைக் கலப்பதை வேண்டுமென்றே ஆதரிக்கும் தமிழ்ப்பகைவர் செயல்: மற்றும் கொச்சை, இழிவழக்குகளை எழுத்துமொழியில் புகுத்துதல். (ii) எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்குள்ள சிறந்த வரி வடிவத்தை சிதைத்து தமிழை அழிக்கத் துடிக்கும் முழுமக்கள் செயல். (இந்தியாவில் உள்ள பிறமொழிகளின் வரிவடிவங்கள் தமிழை விட பெரும் எண்ணிக்கையில் உள்ள தோடு, அவ்வடிவங்களின் அமைப்பும் தமிழ்வரி வடிவத்தை விட மிகக் குறைபாடு உள்ளவை. எனினும் அம் மொழிகளில் எல்லாம் “எழுத்துசீர்திருத்த (அதாவது சிதைப்பு)” மூடர்கள் பேச்சைக் கேட்பார் இலர்) நுண்ணறிவு வாய்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் பாவாணர், சோமசுந்தர பாரதியார், “தமிழாய்ந்த” தமிழர் தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர், மற்றும் கி. ஆ. பெ. விசுவநாதம், இ. மு. சுப்பிரமணியபிள்ளை, வ.சுப.மாணிக்கம் ஆகியோர் கருத்துக்களை -- குறிப்பாகப் பின்வருவனவற்றை எழுத்துச் சீரழிப்பாளர் உணர்ந்து தம்முடைய புன்மைச் செயலைக் கைவிடுவாராக. இ.மு.. சுப்பிரமணியபிள்ளை: தமிழ்த்தாய்க் கொலை(செந்தமிழ்ச்செல்வி - தொகுதி 26: 1951 பாவாணர்: தமிழ் எழுத்து மாற்றம் (செந்தமிழ்ச்செல்வி -தொகுதி 26: 1951 மற்றும் 54/1980 வ.சு.ப. மாணிக்கம்: எழுத்துச் “சீர்திருத்தம்” (தென்மொழி: 24: 12: 1989) 5000 எழுத்துருவங்களைக் கொண்ட சப்பானிய மொழி யறிஞர்களே இன்றுள்ள நிலைமையில் அவர்கள் லிபியில் மாற்றம் செய்வது கேடுவிளைவிக்கும் என உணர்ந்து அம்முயற்சியை அறவே கைவிட்டு விட்டனர். (Journal of Asian Studies) 53:4 Nov 1994 Nanette Gottlieb: The reversal of postwar script reform policy in Japan.. (iii) முழுமக்கள் சிலர் தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றில் கை வைத்து மூலபாடத்தைச் சிதைத்தும் மூலநூல் அமைப்பை மாற்றியும் வெளியிடும் நச்சுப்போக்கு 30. உலகமயமாக்கச் சுரண்டலின் ஒரு கூறாகவே பொருளா தாரம், பண்பாடு ஆகியவற்றோடு சேர்த்து மொழிகளும் ஆங்கிலத்தால் ஒழிக்கப்பட்டு வருகின்றனவென்பதை மேலே கண்டோம். மொழியளவில் மட்டும் முயற்சிகளை மேற் கொள்வது நிழலுடன் போரிடுவதுதான். நமது சகோதர இந்திய மொழிகள் அனைத்தும் சேர்ந்து காந்தியப் பொருளா தாரத்தை ஆதரிப்பதும் உலகமயமாக்கலின் பல்வேறு நாசகார அம்சங்களை எதிர்ப்பதும் தான் உண்மையான தொலை நோக்குப் பரிகாரங்களாக அமையும். பொதுமக்கள் விழிப் புணர்வுதான் இதற்கு வழி. ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளின் கட்சி களும் அரசாங்கங்களும் இதுபற்றி ஒன்றும் செய்ய இயலாத வகையில் மேல்நாட்டு - முதலாளித்துவக் கம்பெனிகள் அவற்றைத் தமக்கு அடிமைகளாக்கி விட்டபடியால் கட்சி களையும், அரசாங்கங்களையும் நம்பிப் பயன் இல்லை. அந் தந்த மொழியின் பாதுகாப்புக்கு அந்தந்த மாநில மக்கள் போராடுவதுடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மகா ராட்டிரம், ஒரியா, இந்தி, வங்காளி போன்ற மொழிபேசுந ருடனும், தமிழ்ப் பாதுகாப்பாளர் கலந்து செயல்பட்டு உலக மயமாக்கத்தாலும், ஆங்கிலத்தாலும் இந்திய மொழிகள் அனைத்துமே ஆபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முயல்வதே தக்க விடிவாகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றார் பாரதியாரும். “கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க” என்றார் பாரதிதாசன். தமிழின் நலத்தோடு தமிழர் நலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் இயல்கள் 9-10க்கான நூற்பட்டியல் Arasaratnam, S 1986 Merchants, Companies and commerce on the Coromandel coast 1650-1740; New Delhi. 1996. Maritime Commerce and English power:South East India 1750-1800; New Delhi Arnold, David (1986): Police Powers and Colonial Rule: Madras 1859-1947 OUP Arunachalam, S. 1949. The history of Pearl fishing of TamilNadu; Annamalai University. Baker C.J. and Washbrook. D.A. (1975) South India : political institutions and political change: Macmillan; pp 238 Baker C.J. (19176): The politics of South India; 1920-37; Cambridge. Baker, C.J. 1984. An Indian rural economy: 1880-1950 The Tamilnadu countryside: Delhi Barnette, Marguerite Ross, 1976. The polities of cultural nationalisam in South India; Princeton; pp 368 Bayly, Susan, 1999. Caste, society and politics in India from the 19th century to the modern age. The new Cambridge history of India IV-3 pp 421 (reviewed in Mallar malar Coimbatore xx 9:8 Aug 2003) 1989. Saints, goddesses and kings, Muslims and Christians in South Indian society 1700-1900 Cambridge. Gopley, A.R.H. 1978. The political career of C. Rajagopalachari 1937-1954 Macmillan. Costello, M.J. 1922. The letters and instructions of Francis Xavier (1506-1552); St Louis, Missouri. Delige, Robert, 1997. The world of the untouchables - Pariayars of Tamilnadu [of Valkiramanickam near Devakottai] Dickey, Sara, 1993. Cinema-and the urban poor in South India (an ethnography of cinema-going in Madurai 1985-87) Cambridge; pp 212. Dirks, Nicholas B. 1987. The hollow Crown; Ethnohistory of an Indian kingdom; Combridge. Fuller, C.J. (1974): Servants of the goddess the priests of a South Indian goddess (Minakshi of Madurai): Cambridge. Dumont, Louis, 1970 Homo Hierarchicus, the caste system and its implications; University of Chicago 1990. A Caste in South India. Gandhi Rajmohan (1978): The Rajaji story vol I (1878-1937) pp 341 (1984) The Rajaji story vol II (1937-1972); pp 420 Geetha V and S.V. Rajadurai 1999. Towards a non-Brahman millennium; From Iyothee Thass to Periar Hardgrave, Robert L 1965. The Dravidian movement Irsehick, Eugene F (1969): Politics and social conflict in South India: the non-brahmin movement and Tamil separatism 1916-1929: University of California; p.p, 414. (1986): Tamil Revivalism in the 1930 s; Crea; Madras; p.p 372 (1994): Dialogue and history: constructing South India 1795-1895; OUP Joshi, A.P. and others 2003. Religious demography of India; Chennai pp 358. Kamalah, K.C. 1975. Anatomy of Ramappaiyan Ammanai; Journal of Tamil Studies. 7, June 1975; pp 29-49 Karashima, Noboru, 1992. Towards a new social formation: South Indian society under Vijayanagar rule: OUP 2002. A concordance of Nayakas: The Vijayanagar inscriptions of South India: CUP Krishnaswamy Iyengar, S. 1922. South India and her Mohammadan invaders. Ludden, David (1985): Peasant History in South India: Tirunelveli. Agrarian history 1800-1900; Princeton; pp 310 (1999): An agrarian history of South Asia; Cambridge. pp 261 Manoharan, M 1994. Marudu Sahodararkal; Akaram; Sivaganga; pp 720 Michell, George 1995. Architecture and art of Southern india The new Cambridge history of India; see “Historical framework” of Vijayanagara and its successors)” pp 1-24. Moffat M. 1979. An untouchable community in south india; structure and consensus. (Endavur, Chengalpatu district) Princeton University press; Berkeley Mukherji, Nilamani 1962. Ryotwari system in Madras 1792-1827 Narayana Rao, Velucheru; David Shulman and Sanjay Subrahmanian 1992. Symbols of substance: court and state in Nayaka period in Tamilnadu. Pearson, M.N. 1987. The Portuguese in India. The new Cambridge history of India; I-1 Price, pamela G. 1996. Kingship and political practice in colonial India (on Sethupathys); Camridge; pp 220 Radhakrishna Iyer, S. 1914. A general history of the Pudukottai state Ramachandra Dikshitar, V.R. (Ed) 1952. Karnataka Rajakkal Savistara Charithram Madras Government oriental series Rajayyan, K. (1971): South Indian rebellion - the first war of independence 1800-1801; Mysore; pp 315 (1974): History of Madurai 1736-1801; Madurai University. Sathianatha Aiyer, R. (1924) History of the Nayaks of Madurai; OUP; pp 403. (1956) Tamilaham in the 17th centruy; Madras University Srinivasachari, C.S. 1943. The history of Gingee and its rulers Srinivasaraghavaiengar, S. 1893. Memorandum on the progress of the Madras presidency during the last 40 years of the British administration. Srinivasan, C.K. 1945; Mahratta rule in Carnatic Stein, Burton (1990) The history of Vijayanagar, Cambridge University Press. Stephen, S. Jayaseela (1998) Portuguese in the Tamil coast: historical explorations in commerce and culture 1507-1749; Navajothi; Pondicherry; p 437. Subrahmanian, N (1994) Social and cultural history of Tamilnadu AD 1336--1984; VI Edn. (2000) Tamil social history; Vol III (1800-1940) pp 620. Subramanian, P. (1996) Social History of Tamils; 1707-1947; New Delhi. Subrahmanyam, Sanjay, 1990 The political economy of commerce: Southern India 1500-1660; Combridge. 1990 ‘Recovering Babel; polyglot histories form the 18th century Tamil country’ at pp 280-321 of Daud Ali: Invoking the past - the uses of history in South India. (Cenji and Desingh) 2001. Penumbral visions - making politics in early modern South India (17-18th centries); OUP; pp 295 Sunderalingam, R. (1974); Politics and national awakening in South India, 1852-1891; University of Arizona pp 396 Trevelyan, Humphrey, 1972. The India we left. Visswanathan. Dr. E.Sa. 91983): The political career of E.V. Ramaswami naicker: a study in the politics of Tamilnadu 1920-49 Madras; pp 420. Vriddhagirisan; V. (1942) The Nayakas of Tanjore, Annamalai; p.p 230 Washbrook, D.A. (1977); The emergence of provincial politics; the Madras presidency 1870-1920; Vikas; N. Delhi pp 358 Books on globalization, science and technology: and language survival Compbell, Duncan, 1985. ‘Science, technology and the changing world’ at pp 154-171: Living inthe future (Ed Isaac Asimov); London New English Library. Crystal, David (2000) : Language Death; Cambridge University Press; pp 198 Dalby, Andrew (2000) : Language In Danger; Penguin; London; pp 328 Ellwood, Wayne (2001) The no nonsense guide to globalization: New internationalist publications; Oxford. Fagin, Dan and Marianne Lavelle (1996) Toxic Deception - How the chemical Industry manipulates Science, bends the law and endangers your health: London. Grenoble, Lenore A and Lindsay I Whaley (Eds) 1998 “Endangered Languages: current issues and future prospects; Cambridge University Press”. Greenberg. S (2001) Science money and politics; Political triumph and ethical erosion ; University of Chicage Press. Kitcher. Philip (2001) Science, truth and democracy OUP; pp 240 Krauss, Michael (1992) : The world’s languages in crisis; Language Vol 68; PP 4 - 10 Matsumura, Kazuto (1998) : Studies in Endangered Languages (1995 November Seminar); Tokyo; Hituzi Syobo Mufwene, Salikoko S (University of Chicago) 2002 : Colonization, globalization and the plight of weak languages; Journal of Linguistics; Cambridge University Press; Vol 38; pp 375 - 395 Nettle. Daniel and Suzanne Romaine (2001) : Vanishing Voices: The extinction of the world’s languages; OUP; pp 241 Pereira. Winin and Jeremy Seabrook (194/1999) Global parasites - Five hundred years of western culture; Earthcare books; Mumbai-50. Parrit, Jonathan (2000) Playing safe: Science and the environment Thames and Hudson. Radhakrishnan, G “Other side of Nanotech” In The Hindu 18th March 2007. Sharma, Direndra (1983); India’s Nuclear estate; Lancer Publishers; New Delhi. Shivaji Rao (1989) Nuclear plants-the silent killers; Hyderabad. Taylor. John (1993) When the clock struck zero-Science’s ultimate limits London. Pieador. Worldwatch Intitute (2006) Vital Signs;  முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளின் அட்டவணை : தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் கி.மு. தமிழகம் இந்தியாவின் பிறபகுதிகள் ஆசியா (பிறநாடுகள்), கலை, பண்பாடு முதலியவை ஐரோப்பா, ஆப்பிரிக்கா முதலியவை [தமிழிய “(முந்து தமிழ் / திராவிட மொழி பேசுநரும் (ஏனைய மொழி பேசுநரும் அதாவது இந்தோ ஐரோப்பியம், உரால் - அல்தாய்க், ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகள் ஆகியவற்றைப் பேசுநரும்) உடனுறைந்த காலம் கிமு 15000 அல்லது 10000க்கு முன்னர்.] [சிந்துவெளித் தமிழ நாகரிகத் தொடக்க கால எச்சுங்கள் கிட்டியுள்ள மெகர்கார் காலம் கி.மு. 7000] சிந்துவெளி (அரப்பா - மொகஞ்சொதரோ) 3500 - 1700 நாகரிககாலம் [யூப்ரடீஸ் தொடக்க கால நாதுபியன் Natufian எச்சங்கள் காலம் கிமு 10000] மெசபொதாமிய (சுமேரிய) நகரம் ஊர்தோற்றம் 4500 (நகரம்)உபைத் தோற்றம் 4300 எலாம் நாகரிக நகரம் 4200 சூசா Susa தோற்றம் இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுநர் உட 4000- னுறைந்த காலம் -3000 (உடனுறைந்த இடம் மைய ஆசிய ஸ்டெப்பி/தென் ஐரோப்பா/ அனடோலியா எனப்பல கருத்து உண்டு) எகிப்தில்(மதிலுடன்நகர்கள்)3500 எகிப்தை முப்பது அரச பரம் பரைகள் தொடர்ந்து ஆண்டு வந்த காலம் (ஏறத்தாழ 3200- மூவாயிரம் ஆண்டுகள்) -343 சிந்துவெளிப் படவெழுத்து 3500 சுமேரிய படவெழுத்து 3500 எகிப்திய படவெழுத்து 3000 எகிப்து-முதல் பிரமிட் 2550 15000 4000 3000 2000 1000 பெருங்கற்கால (Megalithic) அல்லது இரும்புக்காலம் சார்ந்த அகழ்வாய்வு எச்சங்களின் காலம் : சாயர்புரம் தேரிகள் கி.மு.3000/ ஆதிச்சநல்லூர் 2000/ பையம்பள்ளி 1000க்கு முன்னர் தமிழகத்தில் வரலாற்றுக்கு முந்தைய (proto - historic) period 1000-300 அகழ்வாய்வுப்பானை ஓட்டுத் தமிழிப் பொறிப்புகள் 700 கொற்கை, ஆதிச்சநல்லூர். சுமேரிய புராணக்கதைத் 2700 தலைவன் கில்காமெஷ்காலம் அக்காடியர் பேரரசு 2334 இங்கிலாந்தில் ஸ்டோன் ஹெஞ்பெருங்கற்படைச் 2100- சின்ன மக்கள் -1500 (இந்தோஐரோப்பிய) கிரேக்கமொழி பேசுநர் கிரீஸ் பகுதியில் நுழைவு 2000 எகிப்து-ஹதேப்சத் அரசி 1470 ஹித்தைட் மக்கள் மிதன்னி 1350 நாட்டைவெல்லல் பாரோவா துதங்கமன் சாவு 1323 இசுரேல் தோற்றம் 1100 இத்தாலியில் எத்ருஸ்கர் 1100- ஆட்சி -900 இஸ்ரேல் : சாலமன் 962-922 இத்தாலி : ரோம் தோற்றம் 753 ஏதென்ஸ் - சோலான் 594 குனேபாரம் (ஆப்பெழுத்து)2700 எகிப்திய Hieratie 2000 வரிவடிவம் கில்காமேஷ் புராணம் எழுதப்பட்டது 1900 ஹமுராபி சட்டம் 1780 மைசினே லினியர் Bவரிவடிவம் 1400 மெசபதொமியா, எகிப்து ஐரோப்பாவில்1200- இரும்புக் கருவிகள் -1100 பினீசியர் அல்பபெட் 1000 Demotic வரிவடிவம் “ இலியதம் (காவியம்) 750 கன்பூசியஸ் பிறப்பு 551 சோராஸ்திரிய சமயம் 550 சிந்துவெளி நாகரிகம் உச்சநிலை 2800-1700 முதன்முதலில் சிந்துவெளி நகரக் கட்டுமானத்தில் சுட்ட செங்கல் பயன்பாடு 2600 இந்தோஆரியம் (வேத மொழி) பேசுநர் இந்தியாவுக்குள் வருதல் 1500 ரிக்வேதகாலம் 1200 கொடுமணல், தாண்டிக்குடி 500 கி.பி.க்கு முற்பட்ட பாண்டிய,சோழ, சேர மன்னர்கள் கி.மு. 300-1 (பெயர் தெரியா தவர்கள்) (புருஷோத்தமன் (1989) கீழே கி.பி. 1-3 மூன்றாண்டு எனக் குறித்த மூவேந்தரை கிமு 1-3 நூ என்பர். பாண்டியமன்னர்கள்நெடுந்தேர்ச் செழியன் கி.பி (தலைநகரைக் 1-3 கொற்கையிலிருந்து நூற் கூடலுக்கு மாற்றியவன்) றாண்டு முதல் உக்கிரப் பெரு கள் வழுதி முடிய எருசலேம் அழிவு 586 பாரசீகர் ஆசியாமைனர் பகுதிக் 541 கிரேக்கரை வெல்லல் கிரீஸ் நாட்டில் பெலபொனீசியப் 461-404 போர் (ஏதென்ஸ் ஸ்பார்டா விடம் தோல்வி) மெக்சிகோ மயாநாகரிகம் 300 750 கார்த்தேஜ் ஹனிபால் ரோம் நாட்டுப் படை யெடுப்பு 216 ஸ்பார்டகஸ் தலைமையில் அடிமைகள் புரட்சி 73 எகிப்தில் ரோமர் ஆட்சி 30 பாண்டியன் தூது - 25 அகஸ்தசுக்கு ஏசுநாதர் பிறப்பு 4 ரோம் மக்கள் தொகை 10 லட்சம் ரோமப் பேரரசர் வரிசை (கிமு 27ல் தொடங்கியது) ஆட்சிசெய்த காலம்: கிபி 1-4 நூற்றாண்டுகள் கிறித்துவமதம் ரோமப்பேரரசின் மதமானது 324 500 கி.மு 1 கி.பி 1 நந்த அரசர்(மகத) ஆட்சி 362-322 அலெக்சாண்டர் படையெடுப்பு 326-325 மௌரியர் ஆட்சி 322-185 அசோகன் 273-232 சுங்கர்-கண்வர் ஆட்சி 185- 28 கலிங்ககாரவேலன் கல்வெட்டு 150 (கி.மு. 50 என்பர் பஷாம்) சாதவாகனர் ஆட்சி வடமேற்கு தக்கணத்தில் தோற்றம் கி.மு 50 குஷானர் வடமேற்கு இந்தியா வுக்குள் நுழைவு கி.பி 50 சாகர் மேற்குத் தக்காணத்தைக் கைப்பற்றல் 80 கனிஷ்கர் ஆட்சி (வடமேற்கு இந்தியாவில்) 120-162 லா - ஓட்சே சாவு 531 பிதாகரஸ் பிறப்பு 530 இலங்கையில் வடஇந்தியா விலிருந்து (கலிங்கம்) விஜயன் அரச குலம் இலங்கை வருதல் 500 தொல்காப்பியம் கிமு 5-3நூ ஹெரதோதஸ் காலம் 425 சாக்ரடீஸ் பிறப்பு 399 பாண்டிய அரசன் மகளை மணந்த மகிந்தன் இலங்கையில் சாவு 204 சங்க இலக்கிய காலம் 300- கி.பி.300 பதஞ்சலி மகாபாஷ்யம் 200 எகிப்து மும்மொழிப் பொறிப்புக்கல் (ரொசெட்டா) 196 பகவத் கீதை 120 திருவள்ளுவர் 30 மகாயானபுத்தம் தொடக்கம் 100 சாக வருடக்கணக்கு தொடக்கம் கிபி 78 சீனாவில் பேப்பர் 105 சிலம்பு, மணிமேகலை கிபி 300 கௌதம புத்தர் 563-483 மகாவீரர் 540-468 சிசுநாகர் பரம்பரை 522-362 (மகத அரசர்) சோழமன்னர் கரிகாலன் முதல் இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி முடிய -- கி.பி. 1-3 நூற்றாண்டுகள் சேரமன்னர் (பதிற்றுப்பத்து) முதல் ஆறுபத்துகளின் கி.பி தலைவர்கள் உதியஞ் 1-200 சேரல் (முதல் பத்து?) முதல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முடிய பிற்றை மூன்று பத்து (7,8,9) 175-233 சேரர் பல்லவர் தோற்றம் 300 களப்பிரர் காலம் 300-600 கி.பி. 600-1000:- இரண்டாம் பாண்டிய அரசு 575-85 வேள்விக்குடி செப்பேட்டுப் பராந்தகன் 756-875 பல்லவர் சிம்ஹவிஷ்ணுஅபாரஜிதன 555-903 ஆந்திர சாதகர்ணி ஆட்சி (மகாராட்டிரப் பகுதி மட்டும் அன்றி கிழக்கில் 126-200 ஆந்திரப்பகுதியும் சேர்த்து) ஓங்கியிருந்த காலம் குப்தப் பேரரசர்கள் 320-499 (சமுத்ரகுப்தன் 330-; சந்திரகுப்தன் ஐஐ 380-) சீனப்பயணி பா-ஹ்யான் 405-411 ஹுணர் ஆட்சி 500-528 ஹர்ஷன் 606-647 வாதாபிச்சாளுக்யர்காலம் 544-735 ராஷ்டிரகூடர் காலம் 755-973 712 முகமதியர் சிந்து மாகாணத்தை வென்று ஆட்சி தொடக்கம் 750-1199 வங்காளத்தில் பால அரசர்கள் தாய்லாந்தில் “துறவு (=துறவன்)” 200 எனப்பொறித்த, பானை ஓடு எகிப்தில் கிட்டிய பானை ஓடுகள் (கண்ணன், 200 சாத்தன் தமிழிலிபியில் “பெரும்பத்தன்” 400 சாணைக்கல்லின் காலம் இந்தோனேசியர் மடகாஸ்கரில் குடியேற்றம் 400 ஹுணன் அட்டிலா படையெடுப்புக்குப் 493 பின்னர் ரோம் பேரரசு அழிவு (பைசாண்டியம் = கான்ஸ் டான்டி நோபிளில் ஆண்ட கீழைரோம அரசர்கள் கி.பி 1453 வரை ஆண்டனர்) சப்பானில் புத்தமதம் பரவல் 550 நபிகள் நாயகம் முகமது (570 - 632) பிறப்பு 570 ஹவாயில் பாலிநீசியர் குடியேற்றம் 600 ஹிஜ்ரா ஆண்டுக்கணக்கு தொடக்கம் 622 நாளந்தாபல்லைக் கழகம் தொடக்கம் 400 அப்பர், ஞானசம்பந்தன் 7ம்நூ சுந்தரர்-நம்மாழ்வார் 8ம்நூ 1017-29 இலங்கை முழுவதும் சோழர் மேலாட்சியில் கி.பி 1000-ல் மக்கள்தொகை (தமிழ்நாடு) 50 லட்சம் 1001-1300 :- 1012-44 சோழன் இராசேந்திரன் 1023: வங்க மகிபாலன் மீது வெற்றி; கங்கைகொண்ட சோழபுரம் நிறுவல் 1025 மலாயா-சுமத்ரா சிரீவிஜய அரசின்மீது கப்பற்படை அனுப்பி வெற்றி 1044-54 இராசாதிராசன் I 1054 சாளுக்யனிடம் கொப்பம் போரில்தோற்று சாவு 1070-1122 குலோத்துங்கன் II 1178 குலோத்துங்கன் III பாண்டியனிடம் தோல்வி இந்திய மக்கள்தொகை 5 கோடி (தமிழகம் உட்பட) 1001-27 கஜினிமுகமது ஆட்சி (ஆப்கானிஸ்தானில்) 991-1030 இந்தியாமீது 17 முறை படையெடுப்பு; கோயில்கள் கொள்ளை (1018: வடமதுரை கிருஷ்ணன்; 1026 குசராத் சோமநாதபுரம்) 1076-1126 (கல்யாணிச் சாளுக்யவிரமாதித்தன்) 1173-1206 கோரிமுகமது (ஆப்கன்) 1191 தரைன்போர் I (பிருதிவிராசனிடம் தோல்வி), 1192 தரைன்போர் ஐஐ பிருதிவி தோல்வி 1193 குதுப்மினார் கட்டுதல் உலக மக்கள்தொகை (இந்தியா உட்பட) 27 கோடி 1066 (பிரெஞ்சு) நார்மன்டிப்பகுதி வில்லியம் I இங்கிலாந்து மீது படையெடுத்து ஹேஸ்டிங்ஸ் போரில் வெற்றி நார்மன் அரச பரம்பரையை நிறுவல் 1096 முதல் சிலுவைப்போர் (போப் அர்பன் II தொடங்குதல்) பாலஸ்தீனத்தை மீட்க. 1181-1218 கம்பூஜா (கம்போடியா) வில் ஜெயவர்மன் VII (அங்கோர் வாட்கோயில் - உலகிலேயே மிகப்பெரியது) 9-15 நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்கா இந்துக்கடல் அடிமை வாணிகத்தில் 2 கோடி பேர் பாதிப்பு 973-1048 கஜினி அவைக்கள அறிஞர் அல்பெரூனி (இந்தியா பற்றிய நூல்) 10ம்நூ திருத்தக்கதேவர் -சீவகசிந்தாமணி தொல்காப்பிய உரை: இளம்பூரணர் 1048-1131 பாரசீகர் உமார் கயாம் (ஷாநாமா காவியம்) 11ம்நூ (கல்யாணி) விஞ்ஞானேஸ்வரர் “மிதாக்க்ஷரா” 1088 ஐரோப்பாவில் முதல் பல்கலைக் கழகம் (இத்தாலி - போலோன்) 1167 ஆக்ஸ்பர்டு பல்கலைக் கழகம் நிறுவல் 1200-1311 பிற்காலப் பாண்டியர் அரசு 1218 பாண்டியனிடம் சோழன் இராசராசன் III இறுதித்தோல்வி 1251-68 சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி (ஆந்திர நெல்லூர்வரை) 1279 பிற்காலச் சோழர் முடிவு 1294 மார்கோபோலோ (வெனீஸ்) வருகை 1301-1700 :- 1300 மக்கள்தொகை 80 லட்சம் 1308 சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் வாரிசுப்போர் 1311 மாலிக்காபூர் படையெடுப்பு, கொள்ளை, காஞ்சி, சீரங்கம், சிதம்பரம் கோயில்கள் அழிவு பாண்டியர் ஆட்சி முடிவு (1296க்குள் வட இந்தியா (வங்காளம் உட்பட) பெரும்பகுதி முகமதியர் ஆட்சி) 1206-1290 வட இந்தியாவில் அடிமைக்கும் சுல்தான்கள் ஆட்சி (குத்பூதீன்-கைக்குபாத்) 1250-1320 தக்காணத்தில் வடக்கில் தேவகிரியில் யாதவர்; (கடைசி ஹரபாலன் 1318ல் உயிரோடு தோலுரித்துக் கொலை) தெற்கிலதுவார சமுத்ரத்தில் ஹொய்சளர் 1290-6 ஜலாலுதீன் கில்ஜி 1300ல் மக்கள்தொகை 4.6 கோடி 1219-1316 அலாவுதீன் கில்ஜி 1307-11 மாலிக்காபூர் தென்னாட்டுப் படையெடுப்பு (தேவகிரி யாதவன்; வாரங்கல் காகதீயன் துவாரசமுத்திர ஹொயசளன்; மதுரைப்பாண்டியன்; அனைவரும் தோல்வி) 1200 - 1533 (தென்அமெரிக்கா) பெருவில் இங்கா பரம்பரை ஆட்சி 1204 நாலாவது சிலுவைப்போர் (இத்தாலிய வெனிஸ் சார்பில் கத்தோலிக்கப் படைகள் கீழைக் கிறித்தவ கான்ஸ் தாண்டி நோபிலை சூறையாடல்) 1206-27 தெமுஜின் (செங்கிஸ்கான்) ஆசியா வடபகுதி முழுவதிலும் மங்கோலியப் பேரரசு நிறுவல். 1300 துருக்கி (ஆசியாமைனர்) உஸ்மான் பேரரசு தொடக்கம் (1921 வரை நீடித்தது.) உலக மக்கள் தொகை 40 கோடி 1325 அஸ்தெக் இனத்தவர் தெனொக்தித்லான் (இன்றைய மெக்சிகோ) நகரில் ஆட்சி நிறுவல் 12ம்நூ சேக்கிழார் பெரியபுராணம் கம்பர் இராமவதாரம் பவணத்தி நன்னூல் இராமானுஜாசாரியார் கல்ஹண “ராஜ தரங்கிணி 13ம்நூ மெய்கண்டதேவன்: சிவஞானபோதம் 1220 வெடிகுண்டு, ராக்கெட் (சீனர் பயன்படுத்தல் மங்கோலியருக்கு எதிராக) 1300 - முதல் மூக்குக் கண்ணாடி (இத்தாலி) 1300 பசிபிக் கடல் நடுவில் குட்டித் தீவு ஈஸ்டரில் 40 அடி உயரக் கற்சிலைகள் (சிலநூறு) பாலிநீசியர் நிறுவுதல். 1319 கில்ஜி தளபதி குஸ்ரூகான் சூறையாடல் 1324 மகமதுபின் துக்ளக் (இளவரசு) மதுரையைப் பிடித்து ஜலாலுதீன் அசன் ஷாவை ஆளுநர் ஆக்குதல் 1334-1371 மதுரைச்சூழ்ந்த பகுதிகளில் சுல்தான்கள் ஆட்சி(1334 முதல் அசன்ஷா சுதந்திர சுல்தான்; பின் 1371 வரை அவன் வழியினர்) 1346 இபின் பதூதா (1304-68) மதுரை வருகை 1371-1565 குமார கம்பணன் 1371ல் தமிழக முழுவதையும் வென்றபின் 1565 வரை தமிழக மன்னர் அனைவரும் விஜயநகரப் பேரரசரின் கீழ். 1529-1739 மதுரை நாயக்கர் ஆட்சி: 1320-1398 துக்ளக் குல ஆட்சி 1325-51 மகமதுபின் துக்ளக் 1336 விஜயநகர அரசு நிறுவல் (ஹரிகரன் ஐ) 1347: தேவகிரியில் (பாரசீக) பாமன்ஷா பாமினிகுல அரசை நிறுவல் 1378-9 (மங்கோலிய துருக்கிய) தைமூர் டெல்லியைச் சூறையாடல். 1405-33 சீன மாலுமி செங்ஹோ ஏழுமுறை இந்து மாக்கடலுக்கு வருகை 1518 பாமினி சுல்தான் இராச்சியம் ஐந்தாக உடைதல் 1526 பாபர் பானிபட் ஐ போர் வெற்றி; முகலாயர் ஆட்சி நிறுவல் 1509-29 கிருஷ்ணதேவராயர் 1540-50 ஷெர்ஷா 1556 II பானிபட்போர் - அக்பர் வெற்றி: ஆட்சி 1556-1605 1565 தலைக்கோட்டை (ராக்க்ஷச தங்டி) போரில் ராமராயன் தக்காண சுல்தான்களிடம் தோல்வி 1335 சீனாவில் பிளேக் நோய் (1347-50) ஐரோப்பாவுக்கும் பரவி 25ரூ மக்கள் ஐரோப்பாவில் சாவு (பிளாக் டெத்) 1429 ஜோன் ஆப் ஆர்க் பிரெஞ்சுப் படைத்தலைவி - ஆங்கிலர் தோல்வி 1492 கொலம்பஸ் அமெரிக்காவில் 1498 வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் 1400-1500: ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே கோட்டை அரசு 1453 கான்ஸ்டாண்டி நோபிள் துருக்கியர் கைப்பற்றல் 1517 லூதர் பிரொஸ்டென்ட் பிரகடனம் 1519 ஸ்பெயின் நாட்டு கார்டெஸ் மெக்சிகோ நாட்டை வெற்றி 1533 பிசாரோ தென் அமெரிக்க பெருநாட்டை வெற்றி. 1534 ஆங்கில ஹென்றி VIII பிராஸ்டண்ட் ஆனான். 1619 யாழ்ப்பாணத் தமிழ் அரசை போர்ச்சுக்கீசியர் கைப்பற்றினர். 1380: சாசர்-காண்டர்பரி கதைகள் 1440-58 கபீர் 1469-1539 குருநானக் 1445 கூடன் பெர்க் அச்சுப்பொறி (ஒவ்வொரு எழுத்துக்கும் தனி அச்சு) 1510 காப்பர் நிகஸ் “உலக உருண்டை ஞாயிறைச் சுற்றுவது” 1500-1800: ஆப்ரிகா விலிருந்து அமெரிக்காவுக்கு கருப்பர் 4 கோடி பேர் அடிமைகளாக உய்க்கப்பட்டனர் வெள்ளையர் கப்பல்களில் 1559 கத்தோலிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட புத்தகப் பட்டியல் தொடக்கம் (வாத்திகனில்) 1564-1616 சேக்ஷ்பியர் 1564-1642 கலிலியோ 1582 போப் கிரிகரி காலண்டர் சீர்திருத்தம் (இங்கிலாந்து ஏற்றது 1752; ரசியா 1917ல்) 1532-1674 தஞ்சை நாயக்கர் ஆட்சி 1640 ஆங்கிலக் கம்பெனி சென்னையில் பாக்டரி 1665 பிஜபூர் படையெடுப்பால் கடும் பஞ்சம் 1674 புதுச்சேரியில் பிரெஞ்சு கம்பெனி பாக்டரி 1674-1799 தஞ்சை மராட்டியர் சாம்பாஜி பரம்பரை) 1700-1900 1730 மதுரை நாயக்க கடைசி அரசி மீனாட்சியிடமிருந்து ஆட்சியை சந்தாகிப் கைப்பற்றல்; மீனாட்சி சாவு 1746 முதல் கர்நாடகப்போர் 1749-54 இரண்டாவது கர்நாடகப்போர் 1605-27 ஜஹாங்கீர் 1627 -59 ஷாஜகான் 1659 - 1707 அவுரங்கசீப் 1665 - 1680 சிவாஜி தன்னரசு 1669 இந்துக்கள் மீது ஜஸியா தலைவரி - 1583ல் அக்பர் நீக்கியது - மீண்டும் விதிப்பு 1708 சீக்கிய குருகோவிந்த சிங் 1700 - 1900 கொலை 1739: பாரசீக நாதர்ஷா டெல்லியைச் சூறையாடித் திரும்பல் 1757 பிளாசிப்போர் வெற்றி; வங்காளம்-பீஹாரில் ஆங்கிலக் கம்பெனி ஆட்சி நிறுவல் 1761 பானிபட்போர் III அகமதுஷாவிடம் பீஷவா தோல்வி 1649 ஆங்கில மன்னன் முதல் சார்லஸ் (162-9) தலையை வெட்டல் 1625-55 கத்தோலிக்கருக்கும், புராடெஸ்டண்டுகளுக்கும் முப்பதாண்டுப் போர் 1638-1715 பிரான்சில் 14ம் லூயி 1672-1725 ரசியாவில் மகாபீட்டர் 1702-13 ஸ்பானிய வாரிசு உரிமைப்போர்; 1740-8 இங்கிலாந்து-பிரென்சு இடையே “ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்” 1753-63 ஏழாண்டுப்போர் 1777 அமெரிக்க ஐக்கிய நாடுகள் தோற்றம் (13 மாநிலம்; 40 லட்சம் பேர்) 1623 (ராமசரிதமனஸ்) துளசிதாஸ் சாவு 1632-52 தாஜ்மகால் 1642-1727 சுர் ஐசக் நியூட்டன் 1667 மில்டன் துறக்க நீக்கம் 1680 லியூவென்ஹாக் நுண்ணோக்கி 1710 லண்டன் - பரி பால் தேவாலயம் 1719 ராபின்சன் குருசோ (புதினம்) 1754-63 மூன்றாம் ” 1759 திசம்பர்4: பூலித்தேவரிடம் கம்மந்தான் யூசப்கான் தோல்வி 1767-69 முதல் மைசூர் போர் 1780-84 இரண்டாம் மைசூர் போர்; 1782 பஞ்சம் 1789-93 மூன்றாவது மைசூர்போர் 1799 நான்காவது மைசூர்போர் திப்பு வீழ்ச்சி (1800 லிருந்து அடுத்த நிரலில் இந்தியா பற்றியவை பல உள்ள தமிழகத்துக்கும் சார்ந்தவை 1801 ஆற்காடு நவாப் பெயரில் கம்பெனி நிருவகித்து வந்த (தமிழக) மாவட்டங்கள் அனைத்து சென்னை மாகாணத்துடன் சேர்ப்பு. 1797-1801 பாளையக்காரர்கள் போர்(ஆற்க்காடு நவாப், கும்பினியார் இவர்களை எதிர்த்து) 1770: வங்கப்பஞ்சம் (பல லட்சம்பேர் சாவு) 1773 ஒழுங்குபடுத்தும் சட்டம்; வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் கவர்னர் ஜெனரல்; 1784 பிட் இந்தியச் சட்டம் 1792 சாசுவத நிலவரிச்சட்டம் வங்காளம் - பீகாரில் நடைமுறை (காரன்வாலிஸ்) 1796 இலங்கை (கண்டி இராஜ்யம் தவிர) டச்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர் கைப்பற்றல் 1802-39 பஞ்சாபில் ரஞ்சித்சிங் ஆட்சி 1813 கிழக்கிந்தியக் கம்பெனி வணிக ஏகபோக (monopoly) நீக்கம் (சீனாவுக்குள் கப்பல் கப்பலாய் இந்திய அபினியை அனுப்பவும், அங்கிருந்து தேயிலையை ஐரோப்பாவுக்கு உய்க்கவும் உரிமை தொடர்ச்சி) 1789 பிரெஞ்சுப்புரட்சி (2 1/2 கோடி மக்களின் உழைப்பை 3 லட்சம் பிரபுக்கள், பாதிரிகள் உண்டு கொழுத்தனர். உழவர் களுக்குக் கொடுமை விளைச்சலில் 20ரூ கூட அவர்களுக்கில்லை) 1796 அயர்லாந்து கிளர்ச்சி (இங்கிலாந்துக்கு எதிராக) 30,000 பேர் சாவு 1815 இந்தோனேசிய சும்பவா தீவில் எரிமலை வெடிப்பு (60,000 அணுகுண்டு சக்தி); 1 லட்சர் பேர் சாவு 1841-2 சீனாவுக்குள் அபினியை கப்பல் கப்பலாக திணிக்கும் உரிமையை நிலை நாட்டும் போரில் இங்கிலாந்து வெற்றி 1846 அயர்லாந்து பஞ்சம் (40 லட்சம் பேரில் பாதி சாவு - உருளைக்கிழங்குப் பயிரில் பூஞ்சாளம்) 1726 ஸ்விப்ட - ‘கல்லிவர் பயணங்கள்’ 1735 லின்னேயஸ் - உயிரினப் பாகுபாட்டு முறை 1769 ஜேம்ஸ் வாட் - நீராவி எஞ்சின்; ஆர்க்ரைட் - நூற்பு யந்திரம் 1800 உலக மொத்த மக்கள் தொகையில் 2/3 அடிமைகள், கொத்தடிமைகள், நிலத்தோடு விற்கப்படும் அடிமைகள் ஆகியோராக இருந்தனர். 1807 ஆங்கிலப் பேரரசில் அடிமைகள் வாணிகத் தடைச்சட்டம் 1813 சட்டப்படி பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் கிறித்துவ மதப் பரப்பாளர் வர அனுமதி 1818 சமாசார் தர்ப்பன் (முதல் வங்காளி நாளிதழ்) 1828 ராஜாராம் மோகன்ராய் பிரமசமாஜம் 1851 கலெக்டர் அரசுப்பணியிடங்களை எல்லா சாதியினருக்கும் நியாயமாகப் பங்கிட வேண்டும் என வருவாய்வாரிய ஆணை. 1857 சென்னைப் பல்கலைப் கழகம். 1877-78 தென்னிந்தியாவில் பஞ்சம் 55 லட்சம்பேர் சாவு 1882 சென்னையில் தியாகசபிகல் சங்கம் (பிளாவட்ஸ்கி-ஆல்காட்) (அன்னிபெசண்ட் காலம் 1907-1933) 1895 பெரியாறு அணை 1830 “ஆப்பிரிக்காவைச் சுற்றி 6 மாதப் பயணம் மாறி செங்கடல் பயணம் - சூயஸ்தரை வழி - மீண்டும் கப்பல் என இங்கிலாந்துப் பயணம் 1 மாதம் ஆதல் 1834 இங்கிலாந்து ஆலைத்துணி 5 1/2 கோடி மீட்டர் ஆண்டுதோறும் இந்தியாவிற்குள் இறக்குமதி (“பாதிக்கப்பட்டுச் செத்த இந்திய நெசவாளர் எலும்புகள் இந்தியாவெங்கும்” - பெண்டிங்பிரபு) 1849 சீக்கியரை வென்று பஞ்சாப் ஆங்கிலேயரிடம் 1857 சிப்பாய்க்கலகம்; வங்காள மாகாணப்படையில் (1,28000 பேர்)இல் பாதிப்பேர் கலகம்; 1/4 பகுதி விலகிவிட்டனர். (அடக்க 13 மாதம்) 1857 விக்டோரிய மகாராணி இந்திய ஆட்சியை மேற்கொண்டார் (கம்பெனியிடமிருந்து) 1866 கிழக்குக் கடற்கரை பகுதி பஞ்சம் (ஒரிசா; 10லட்சம் சாவு) 1878 வனச்சட்டம் Forest Act மலைவாழ் மக்கள் நிலங்களை யெல்லாம் தடாலடியாக அரசுடைமையாக்கி அவர்களை நாசமாக்கியது. 1850-64 சீனாவில் தாய் பிங் கலகம் (3 கோடி சாவு) 1861 ரசியா பண்ணை அடிமை முறை (serfs) நீக்கம் (9 கோடி ரசியர்களில் பாதி அன்று பண்ணை அடிமைகள்) 1893 அமெரிக்கா சிகாகோ நகரில் உலக மத மாநாட்டில் விவேகானந்தர் பேச்சு (செப் 11) 1894-6 துருக்கியில் லட்சக் கணக்கான கிறித்தவ அர்மீனியர் இனப்படுகொலை 1898 ஸ்பெயினிடம் இருந்து அமெரிக்கா பிலிப்பைன்ஸ், ஹவாய் தீவுகளை கைப்பற்றியது 1829 பென்டிங் பிரபு: சதி தடைச்சட்டம் (அன்று வங்காளத்தில் ஆண்டுதோறும் கொளுத்தப் பட்ட விதவைகள் 500-850) 1835 ஐரோப்பிய அறிவியல் சார் கல்வியை இந்தியாவில் அரசு புகட்ட மக்காலே யோசனை 1837 (அரசுக்கு மட்டும் இருந்த) அஞ்சல் வசதி பொது மக்களுக்கும் விரிவு 1840-1897 வடஇந்தியா நடுவே 2300 மைல் நீளம் (வளைந்து வளைந்து) முள் மரவேலி - உப்பு கடத்தலைத் தடுக்க 1848 மார்க்ஸ் - கம்யூனிஸ்டு பிரகடனம் 1853 முதல் ரயில்பாதை பம்பாய் - தாணா 1859 டாரவின் உயிர்களின் தோற்றம் (பரிணாம வளர்ச்சி) 1865 மெண்டல்: தலைமுறை தோறும் உயிரிகள் மாறுதல் அடையும் விதி முறை (heredity) 1920 டிசம்பர் மாண்ட்போர்டு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாண சட்டசபையும், அமைச்சர்களும் முதல் முதலமைச்சர் ஏ. சுப்பராயலு ரெட்டி 1921 ஏப்ரல்: பானகல் அரசர் முதலமைச்சர் கே.வி. ரெட்டி, ஏ.பி.பத்ரோ 1923 காங்கிரசின் கிளையான சுயராஜ்ய கட்சி மாகாணத் தேர்தலில் பங்கேற்பு 1926 டிசம்பர்-1930 அக- பி. சுப்பராயன் 1928 காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 3135 (1936- 65,100; 1938-2,60,000) 1919 மாண்ட்போர்டு சட்டம்: மாகாணங்களில் சில துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களிடம் 1919 ரவுலட் அடக்குமுறை சட்டம் (பிற்கால மிசா, தடா, போடா போன்றது) எதிர்த்த ஜாலியன் வாலாபாக் கூட்டத்தில் 13-4-19 அன்று டையர் சுட்டு 530 பேர் படுகொலை 1921 காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் (ரவுலட் சட்டத்தை எதிர்த்து; கிலாபாத் இயக்கத்தை ஆதரித்து) (1922ல் அவரைத் தாகூர் ‘மகாத்மா’ என அழைத்தார்) 1921: வேல்ஸ் இளவரசர் (பிற்கால எட்வர்ட் VIII) வருகை: காங்கிரஸ் புறக்கணிப்பு 1928 இந்திய அரசியலமைப்பு சீரமைப்பு யோசனைக்கான சைமன் குழு வருகை 1930 உப்பு சத்தியாகிரகம் 1930 லாகூரில் காங்கிரஸ் மாநாடு: பூர்ண சுயராஜ்ய தீர்மானம் 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் 1917 மார்ச் ரஷ்யப் புரடசி கெரன்ஸ்கி பிரதமர் அக்டோபர் (உண்மையில் நவம்பர்) லெனின் கம்யூனிச ஆட்சி 1918 ரசிய அரசியலமைப்பு சபை களைப்பு; கம்யூனிச ஆட்சி ரசியாவில் 1918-1990 1921 சீனா: சன்யாட் சென் (1866-1925) ஆட்சி 1924 -5 ரசியாவில் ஸ்டாலின் கம்யூனிச ஆட்சி 1925 சீனாவில் சியாங்கே ஷேக் (கோமின்டாங்) ஆட்சி 1928-ரசியாவில் கட்டாயக் கூட்டுப் பண்ணைத் திட்டம் (32-33ல் பஞ்சத்தில் 1 கோடி சாவு) 1930 ஸ்டாலின உழவர் நிலங்கள் அரசுப் பண்ணைகளாக மாற்றம் 1932 சவுதிஅரேபியா அரசு துவக்கம் 1932-1945 அமெரிக்கா - ரூஸ்வெல்ட் 1912 டைடானிக் மூழ்கியது 1913 தாகூருக்கு நோபல்பரிசு (கீதாஞ்சலிக்கு; 1909ல் எழுதியது) 1919-1927 அமெரிக்காவில் மதுவிலக்கு 1920 லீக் ஆபநேஷன்ஸ் உருவாக்கம் 1920 ஹபில்: பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது 1922 ஜேம்ஸ் ஜாய்ஸ் ‘உலிசஸ்’ புதினம் 1927 முதல் பேசும் சினிமா 1929 அமெரிக்க பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலக பொருளாதார (Great Depression 29-10 -1929 செவ்வாய் முதல் 1933-45 ஜெர்மனியில் ஹிட்லர் (நேஷனல் சோசிலிசநாஜி ஆட்சி) 1929 அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1930 அக்-1932 நவ பி.முனுசாமி நாயுடு 1931 வேதாரண்யம் உப்பு அறப்போர்-இராஜாஜி தலைமையில் 1932 மேட்டூர்அணை 1932 நவ-36 ஏப்ரல் ரங்காராவ் (பொப்பிலி அரசர்) 1936 ஏப்ரல்-ஆக: சுப்பராயன் 1936 ஆக-37 ஏப்: ரங்காராவ் 1937 ஏப்ரல்- சூலை: கே.வி. ரெட்டி 14-7-37- அக் 39 சென்னை மாகாணம்: சி.ராஜகோபாலாச்சாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி 38-39 கட்டாய இந்திக்கு எதிரான (ஈ.வே.ரா) கிளர்ச்சி 1939 ஈ.வே.ரா. நீதிக்கட்சித் தலைவராகத் தேர்வு 1939-46 மார்ச்: ஆளுநர் ஆட்சி 1944: நீதிக்கட்சியின் பெயரை ஈவேரா “திராவிடர் கழகம்” என மாற்றினார். 1931 முதல் வட்டமேசை மாநாடு 1932 காங்கிரசுக்கு அரசு தடை(காந்தி-அம்பேர்கார் பூனா ஒப்பந்தம். அட்டவணைச்சாதியினருக்கு இடஒதுக்கீடு உண்டு, எனினும் அனைவரும் சேர்ந்து வாக்களிக்கும் முறை) 1935 இந்திய அரசாங்க அமைப்புச்சட்டம் 21 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 1/6 பகுதியான 3 1/2 கோடி பேருக்கே வாக்குரிமை (1919 சட்டத்தின் கீழ் வாக்குரிமை 70 லட்சம் பேருக்கு மட்டுமே) 1936 எட்வர்ட்VIII; ஜார்ஜ் VI 1937 ஏழு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி 1939-45 இரண்டாம் உலகப்போர் (தொடக்கத்தில் இந்தியவீரர் 1,75,000 இறுதியில் 20 லட்சம்) 1933-45 ஜெர்மனியில் ஹிட்லர் (நேஷனல் சோசிலிச= நாஜி ஆட்சி) 33-37 ரசியாவில் ஸ்டாலினுக்கு எதிராகக் கருதப்பட்டவர்கள் அனைவரும் ஒழிப்பு 1934 மாசே துங் (1893-1976) நீண்ட பயணம் (9000 படைவீரரின் 6000 மைல்) 1935 பர்மா தனி நாடு ஆனது 1936-37 ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் (முறைமுகமாக இட்லர் - ஸ்டாலின் ஈடுபாடு) 1939-45 இரண்டாம் உலகப் போரில் (மொத்தம் 51/2 கோடி சாவு) 1932 நியூட்ரான் கண்டுபிடிப்பு (சாட்விக்) 1935 சார்லஸ் ரிக்டர் (நிலநடுக்க கணக்கீட்டு அளவை) 1937 நைலான் இழை 1938 பால்பாயிண்ட் பேனா 1938 கட்டாய இந்தியை எதிர்த்துச் சிறையில் தாளமுத்து நடராசன் சாவு 1939 அணுச்சிதைவு (ஆட்டோ ஹான்) 1939 டி.டி.டி. கண்டு பிடிப்பு 1941-5 மான்ஹட்டன் அணுகுண்டு 1946 ஏப்ரல்-47 மார்ச் தி. பிரகாசம் முதல்வர் 1949 ஏப்-52 ஏப் பி.எஸ்.குமாரசாமி ராசா 1948-72 தமிழ்நாட்டில் மதுவிலக்கு 1947-70 1949 செப் 15 திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவல் (அறிஞர் அண்ணா 1909-69) 1942: கிரிப்ஸ் தூதுக்குழு 1942 ஆகஸ்டு போராட்டம் “வெள்ளையனே வெளியெறு” 60,000 பேர் கைது; 1000பேர் சாவு `943 வங்கப் பஞ்சம் ஓராண்டு முழுவதும் (35 லட்சம்பேர் சாவு) 1945 ஐக்கிய நாடுகள் சபை (50 முதல் உறுப்புனர்களில் இந்தியாவும் ஒன்று.) 1946: பம்பாய் கப்பற்படையினர் கலகம் 1946 அட்லி அரசு காபினட் தூதுக்குழு 1946 ஆகஸ்ட் 16: ஜின்னா ‘நோடி நடவடிக்கை” கல்கத்தா கலவரம்: 3500 பேர் கொலை 1946 முடியுமுன்னர்: வேவல் இடைக்கால அரசில் காங்கிரசும், லீகும் சேர்ந்தன (நேரு, படேல், லியாகத் அலி, அம்பேத்கார்) 1947ஆகஸ்ட் 15: இந்தியா விடுதலை; பாகிஸ்தான் தனிநாடு; மதக்கலவரங்களில் 5லட்சம் பேர் கொலை; இந்தியாவிலிருந்து 50லட்சம் பேரும், அங்கிருந்து இங்கு 60லட்சம்பேரும் ஏதிலிகளாக வரவு (இடம் பெயராதவர் 1940 டிராட்சிகாலை (மெக்சிகோவில்) 1941 அட்லாண்டிக் பிரகடனம் (சர்ச்சில் - ரூஸ்வெல்ட்) 1943-45 இந்திய தேசிய ராணுவம் (நேதாஜி சிங்கப்பூரில் ஜப்பானியர்களிடம் சரணடைந்திருந்த 25000 சிப்பாய்களைக் கொண்டு இ.தே.ரா உருவாக்கம்) 1945 நியுரெம்பர்க் நீதிமன்றம் போர் அக்ரமங்களுக்காக செருமனியத்தலைவர்களுக்கு தண்டனை 47-51 மார்ஷல் திட்டம் (மேற்கு ஐரோப்பாவுக்கு அமெரிக்க உதவி) 48 பர்மா, இலங்கை சுதந்தரம் 48 இஸ்ரேல் உருவாக்கம் 1944 பிரெட்டன் வுட்ஸ் மாநாடு (உலக வங்கி தொடக்கம்) 1945 ஜார்ஜ் ஆர்வெல் “விலங்குகள் பண்ணை” 1945 ஐ.நா. சங்கம் தொடக்கம் 1946 ரேடியோ கரிமக் (காலக் கணக்கீடு) 1947 டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பு 1948 ஐநா ‘மனித உரிமை” பிரகடனம் 1950 செப் 15 மறைமலையடிகள் (1876-1950) மறைவு 1951 தமிழக மக்கள்தொகை 4 கோடி 1952-54 ஏப்: காங்கிரஸ் ஆட்சி முதல்வர் இராஜாஜி 1953 அக்1 சென்னையிலிருந்து பிரிந்து தனிமாநிலம் தெலுங்கருக்கு (ஹைதராபாத் தெலுங்கு பகுதிகளோடு சேர்ந்து 1-11-56 முதல் பெரிய ஆந்திரப் பிரதேசம்) 1954 ஏப்ரல்-57 முதல்வர் கு.காமராஜ் 1956 தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1957 தேர்தல் இந்தியாவில் 4கோடி முகமதியரும், பாகிஸ்தானில் 1கோடி இந்துக்களும்) நேரு ஆட்சி 1947-67 1948: சனவரி 30, காந்தியடிகள் கொலை மே: மவுண்ட் பேட்டன் போய் இராஜாஜி கவர்னர் ஜெனரல்; ஐதராபாத்: நிஜாமிடமிருந்து கைப்பற்றல் 50 சனவரி26: இந்தியக்குடியரசு 51 இந்திய மக்கள்தொகை 36 கோடி 52 லோக் சபையில் காங்கிரசுக்கு 75% இடங்கள் 1957ல் இடங்கள் 371/494 1967இல் இடங்கள் 281/ 1971ல் இடங்கள் 351/520 56 மொழிவாரி மாநிலச் சீரமைப்புச் சட்டம் நவம்பர் 1 முதல் நடைமுறை (மலபார் - கேரளா தென்கன்னடம் - கர்நாடகம் 1949 சீனாவில் கம்யூனிச ஆட்சி (மாவோ) 1949 நேடோ Nato ஒப்பந்தம் 1950-53 கொரியா போர் 1952- எலிசபெத் II 1952- அமெரிக்கா ஹைட்ரஜன் குண்டு 1953 ‘டியென்-பிலன்-பூ’ போர் வியத்நாமின் பிரெஞ்சு தோல்வி 1954-69 தென் வியட்நாம் உடன் அமெரிக்க போர் 1956-ஹங்கேரி (ரசிய எதிர்ப்புப் புரட்சி தோல்வி) 1956 கியூபாவில் காஸ்ட்ரோ (56- 2008) 1951 முதல் கம்பியூடர் விற்பனைக்கு 1952 ஹைட்ரஜன் குண்டு 1952 அல்பர்ட் சுவைட்சர் (1887-1965) நோபல் பரிசு 1953 உயிர்களின் மரபணு வேதிப்பொருள் DNA அமைப்பு ‘டபுள் ஹீலிக்ஸ்’ என வாட்சன், கிரிக் கண்டுபிடிப்பு 1956 இருதயத்தில் பேஸ்மேக்கர் 1956 அம்பேத்கர் மறைவு 57-62 மார்ச் முதல்வர்: கு.காமராஜ் 58 ஜில்லா போர்டுகள் ஒழிந்து ஊராட்சி ஒன்றியங்கள் 373 60 ஈ.வே.கி. சம்பத்- தமிழ் தேசியக்கட்சி 1962-63 அக்: காமராஜ் முதல்வர் 1963 அக் - 1967 மார்ச் முதல்வர் மு. பக்தவத்சலம்) (1963-69 காமராஜ் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர்) 1963 திமுக திராவிடநாடு கோரிக்கையை கைவிடல் 1965 ஜனவரி தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப்போர்(1968 சனவரி 23; பள்ளிப் பாடத்திலிருந்து இந்தி நீக்கம் 1967-69 பிப்ரவரி 3 திமுக அரசு 1968 சன உலகத் தமிழ்மாநாடு II 69-பிப்ரவரி- 1976 சன 31: திமுக அரசு முதல்வர் மு.கருணாநிதி கன்னியாகுமரி - சென்னை) 26 மாவட்டம் கொண்ட பெரிய சென்னை மாநிலத்துக்குப் பதிலாக 13 மாவட்டம் கொண்ட தமிழ்ச்சென்னை. 61-62 அமெரிக்க கோதுமை இறக்குமதி 2540 கோடி டன் 62அக் - திச: சீன-இந்தியப்போர் 63 இந்தியா அமெரிக்காவிடம் கடன் டாலர் 232 கோடி (செலவாணியில் இருந்த இந்திய நாணய மதிப்பில் பாதி; 1973ல் இது 320 கோடியாக உயர்ந்தது. அதில் 220 கோடியை 1973ல் நிக்சன தள்ளுபடி) 63 மைய அரசு ஆட்சிமொழி (இந்தி) சட்டம் 64-65 லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் 65 செப்: இந்தியா -பாக்போர் 66 சன: தாஷ் கண்டு ஒப்பந்தம் 66-77 & 80-87 இந்திரா காந்தி பிரதமர் 66: IMF கோரியடி இந்திய ரூபாயின் மதிப்பு 58% குறைப்பு 58-62 சீனாவில் கிரேட் லீப் பார்வாட் (2 கோடி பேர் சாவு) 58 இலங்கை சிங்களவர் கலவரம், நெருக்கடி நிலை 60 காங்கோ (zaire) சுதந்தரம் உள்நாட்டுப் போர்; 60-63 அமெரிக்கா (ஜான் கென்னடி) 63-65 மலேசியா - சிங்கப்பூருடன் இணைவு. 65 சிங்கப்பூர் தனிநாடு 66-69 சீனா: கலாசாரப்புரட்சி (4 கோடி பேர் சாவு) 65-97 காங்கோவில் மொபுது ஆட்சி: மக்கள் தொகை 2 கோடியிலிருந்து 80 லட்சமாகக் குறைவு (உள்நாட்டுப் போர், பஞ்சம்) 1968 செக்கோசுலோவாகியா (டூப்செக்) ரசிய எதிர்ப்பு புரட்சி தோல்வி 68-74 அமெரிக்கா(நிக்சன்) 68-86 பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ் ஆட்சி 1957 ஸ்புட்னிக் செயற்கைக் கோள் 1961 ரசிய ககாரின் செயற்கைக் கோளில் பூமியைச் சுற்றல் 1966 போப் இங்குசிஷனை ஒழிக்கிறார் 1966 உலகத் தமிழ்மாநாடு I 1967 கியூபாவில் இருந்து பொலிவியாவில் புரட்சிக்காக சென்ற செகுவாரா சாவு 68 கீழவெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட உழவர் உயிருடன் கொளுத்திக் கொலை 69 பிப் 3 அறிஞர் அண்ணா மறைவு 69 நிலவில் அமெரிக்க ஆர்ம்ஸ்ராங் 69 DDT பூச்சிக் கொல்லிக்கு அமெரிக்காவில் தடை 1971-90:- 76பிப்1- 77மார்ச்: குடியரசுத் தலைவர் ஆட்சி (நெருக்கடி நிலை) 77 ஏப்ரல்-சூலை: கு.த. ஆட்சி 77 சூலை-80பிப் அதிமுக: எம்.ஜி.ஆர் ஆட்சி 80 பிப்-சூன்: கு.த. ஆட்சி 81 சனவரி : 87 திச: எம்.ஜி.ஆர். 81 சனவரி : உலகத்தமிழ்நாடு V மதுரை 82 பள்ளிகளில் விரிவான சத்துணவுத் திட்டம். 87 உலகத்தமிழ் மாநாடு VI கோலாலம்பூர் 88 சனவரி ஜானகி ராமச்சந்திரன் 69 காங்கிரஸ் உடைவு: கிண்டிகேட்/ இந்தியா 70 பெரிய வங்கிகள் அரசுடைமை 71 ஆக: இந்தியா - சோவியத் நட்பு ஒப்பந்தம்; பாக் பிரிந்து வங்காளதேசம் (இந்தியப்படை உதவியுடன்); இந்தியா - பாக் சிம்லா ஒப்பந்தம் (இந்தியா -பூட்டோ) 74 அணுகுண்டு வெடிப்பு (பொகாரன்) (98ல் ஹைடிரஜன் குண்டு) 75 சூன் - 77மார்ச்: இந்தியாவில் நெருக்கடி நிலை (1,25,000 பேர் சிறையில்) 77 - 79 ஜனதா ஆட்சி (மொரார்ஜி தேசாய்; சரண்சிங்) 80-89 காங்கிரஸ் (இந்திரா 80-84; ராஜீவ் 84-89) 90 சன - 91 மே: காங்கிரஸ் அல்லாத ஆட்சி: வி.பி. சிங்; சந்திரசேகர் 90 மைய அரசுப்பணியில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 69- லிபியா (கடாபி) 71 ஐநாவில் சீனா 71-79 உகாண்டாவில் இடி அமீன் ஆட்சி (3 லட்சம் சாவு) 75-80 தென் ஆப்பிரிக்காவில் கருப்பர் கொரில்லா போர் 40000 சாவு 74 அமெரிக்கா நிக்சன் பதவி விலகல் (வாடர்கேட் முறைகேடு) 75-79 கம்போடியா போல் பாட் ஆட்சி 77-93 சீனா: டெங் ஜியோபிங் ஆட்சி 79-2003 ஈராக்: சதாம் உசேன் ஆட்சி 79-88 ஆப்கானிஸ்தான் ரசியா தலையிட்டுத் தோல்வி 80-88 ஈரான்-ஈராக் போர் (10 லட்சம் பேர் சாவு) 87-89 இந்திய அரசின் அiதிப் படை இலங்கையில் 1970 உலகத் தமிழ் மாநாடு III பாரிஸ் 72 டிச 25 ராஜாஜி மறைவு 73 டிச 25 பெரியார் மறைவு 74 உலகத் தமிழ் மாநாடு IV யாழ்ப்பாணம் 75 அக் 2 காமராஜ் மறைவு 78 பெரியம்மை உலகை விட்டு ஒழிப்பு 78 கயானா: ஜிம்ஜோன்ஸ் போதகரும் 908 அமெரிக்க சீடரும் தற்கொலை 81 ஞா. தேவநேயன் (1901-81) மறைவு 81 எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு 84 செல்போன் 86 (உக்ரெய்ன்) செர்னோபில் அணுமின் உலை வெடிப்பு) 88 பிப்- 89 கு.த. ஆட்சி 89 சன-91 சன 31: திமுக: மு. கருணாநிதி 1991-2008:- 91-96 அதிமுக (ஜெ. ஜெயலலிதா) 95 உலகத்தமிழ் மாநாடு VII 96 மே-2001மே: தி.மு.க: மு. கருணாநிதி 2001மே-01மே: அதிமுக ஜெ. ஜெயலலிதா 01 மே - 02 பிப்: ஓ. பன்னீர்செல்வம். 02 மார்ச் - 06 மே: ஜெ.ஜெயலலிதா 04 நவ: தமிழைச் செம்மொழியாக இந்திய அரசு அறிவித்தது 2006 மே 13 - தி.மு.க. மு. கருணாநிதி 91-96: பி.வி. நரசிம்மராவ் 1991 உலகவர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் 96 - 98 காங்கிரஸ் அல்லாத ஆட்சி; தேவ கௌடா; ஜ.கே. குஜ்ரால் 98 - 2004 பா.ஜ.க. அடல் பிகாரி வாஜ்பாய் 99 இந்தியா - பாக் மோதல் (கார்கில்) 2003 டிசம்பர் அப்துல்கலாம் குடியரசுத்தலைவர் சூனாமி தாக்கம் தமிழ்நாடு, ஆந்திரம், அந்தமான் 2004 பிரதமர் மன்மோகன்சிங் 89 பெய்ஜிங் தியநான்மன் மைதானம் - மாணவக் கிளர்ச்சியாளர் படுகொலை 90 ரசியப் பேரரசு (28 கோடி மக்கள்; 86 லட்சம் ச. மைல்) உடைவு 90லிருந்து சீனாவில் கூட்டுப்பண்ணை கம்யூன்கள் ஒழிப்பு 91 குவைத் மீது இராக் படையெடுப்பு; ஈராக் மீது அமெரிக்கா போர் 93-2001 அமெரிக்க கு.த பில் கிளிண்டன் 93லிருந்து சீனா -ஜியாங் ஜெமின் 94-97 நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிகாகு.த 97 ஹாங்காங்: சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைப்பு 2001-08 ஜார்ஜ்புஷ் 2001 செப் 11: அமெரிக்காவின் மீது ஆல் கொய்தா தாக்குதல் 1990-2003: (இன்று உலகில் உள்ள அனைத்து மாந்தரும் 11/2 லட்சம் ஆண்டுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்த ஒருசிறு குழுவினரிடமிருந்து தோன்றியவர்களே என DNA ஆய்வு நிறுவியது. 94 உலகளாயிவ வலை world wide web 94 ருவாண்டாவில் டூத்சி மக்கள் 10 லட்சம் பேர் ஹுது மக்களால் இனப்படுகொலை 97 சாதாரண திசுவிலிருந்து ஆடு (டாலி) உருவாக்கம் - செயற்கையாக 2008 செப்: அமெரிக்காவுடன் அணுமின்சக்தி ஒப்பந்தம் 2003 சூனாமி: இந்தோனேசியா இலங்கை, தாய்லாந்து பெரும் சேதம் 01-04 ஆப்கானிஸ்தான் தாலிபான் மீது அமெரிக்கா போர் 04 - ஈராக் மீது அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் போர் 2008 அக்: அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி (பங்குச் சந்தை சூதாட்டத்தால்) உலகளாவிய பாதிப்பு குறிப்புகள் குறிப்புகள் ப்புகள் 290 தமிழர் வரலாறு குறிப்புகள்