தமிழரின் தோற்றமும் பரவலும் அறிஞர் வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் தமிழாக்கம் பி. இராமநாதன் க.மு : ச.இ தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு மொழி முகப்பு தமிழரின் தாயகம் பற்றிய அரிய நூல் வரலாற்றறிஞர். வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த ஆங்கில நூல் : Origin and Spread of the Tamils. இதனை அறிஞர் பி. இராமநாதன் 'தமிழரின் தோற்றமும் பரவலும்' என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார். மொழிஞாயிறு பாவாணர் போற்றிய தமிழ்நாட்டு வர லாற்றுப் பேரறிஞர்களுள் பி. தி. சீநிவாச ஐயங்கார், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், கிருட்டினசாமி ஐயங்கார், சேசையங் கார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் பற்றிப் பாவாணர், 'தமிழர், தென்னாட்டுப் பழங்குடி மக்களேயென்றும், தமிழரே மேலையாசிய நாடுகட்கும் நண்ணிலக் கடற்கரை நாடுகட்கும் சென்று தமிழ் நாகரிகத்தைப் பரப்பினர் என்றும் உண்மையான வரலாற்றை சீநிவாச ஐயங்காருக்குப் பின் விரிவாக வெளியிட்டவர் சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த இராமச்சந்திர தீட்சிதரே என்பார். (தமிழ் வரலாறு II. பக், 122-123) தமிழ், தமிழர் வரலாறு பற்றிப் பலர் நூல்கள் எழுதி யுள்ளனர். ஆயின், மேற்சொன்ன வரலாற்றிஞர்கள் வழியில் மறைமலையடிகள், பாவாணர் வழியில் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் மிகக் குறைவு. தமிழ், தமிழரின் சரியான வரலாற்றை உலகம் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. தமிழர், தமிழைத் தமிழ்நாட்டில் தென் தமிழ் நாட்டில் தோற்றி வளர்த்த தொல் குடிகள் என்பது முழு உண்மை . மூவாயிரம் ஆண்டுகட்கும் மேலாக மொழியாலும் இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு நம்முடையது. மீளமுடியா அடிமை வரலாறே நம் காலத்திலும் தொடர்கின்றபடியால் தீட்சிதர், ஐயங்கார், பாவாணர் என யாவர் உண்மை விளக்கினாலும் நாம் இன்னும் எழ முடியாதவர் களாக உள்ளோம். 'தமிழரின் தோற்றமும் பரவலும்' என்னும் தலைப்பில் தீட்சிதர் நூலைத் தமிழாக்கம் செய்த அறிஞர் பி. இராமநாதன் ஆழமான முன்னுரையையும் இந்நூலுக்கு வழங்கியுள்ளார். மாந்தர் இனத்தோற்றம், பரவல் பற்றியும் ஞாலமுதன் மொழிக் கொள்கை பற்றியும் மிக உழைத்து இன்று எழுதி வரும் தமிழ்நாட்டு ஆய்வாளர்களுள் பி. இராமநாதன் முன்னவர். அவரின் பரந்த நூற்புலமை அஃகி அகன்ற பேரறிவு ஆகியன தமிழ் - தமிழரின் தொன்னிலை அறிவோர்க்குக் கலங்கரை விளக்கம். உலகமொழிகளை மொழி நூலறிஞர் துரேனியம், ஆரியம், சேமியம் என்ற முப்பெருங் குடும்பத்தில் அடக்குவர். துரேனியம் சித்தியம் எனவும், ஆரியம், இந்தோ -ஐரோப்பியம் எனவும் சொல்லப் பெறும். தமிழ், துரேனியக் குடும்பத்தையும் ஆங்கிலம், ஆரியக் குடும்பத்தையும் சார்ந்தவை. துரேனியம் சார்ந்த தமிழை ஏனை இரு குடும்ப மொழிகளோடும் ஒப்பிட்டு உறவுபடுத்தி முதற்கண் ஆய்ந்தவர் கால்டுவெல். கால்டுவெல் பெருந்தகையின் வழியில், தமிழையும் உலக மொழிகளையும் இன்று இணைத்து ஆய்வாளர் பலர் ஆய்ந்து வருகின்றனர். அறிஞர் பி. இராமநாதன் இது தொடர்பான விளக்கப் பட்டியலை இந்நூலிற்கு வரைந்த முன்னுரையில் தொகுத்துரைத் துள்ளார். ஆரியம் அல்லது இந்தோ - ஐரோப்பியம் என்னும் குடும்ப மொழிகளுடன் தமிழை இணைத்துப் பேரளவில் ஆய்வு நிகழ்த்தி யவர் பாவாணர். பாவாணரின் ஆய்வை இயக்க வழிகாட்டியாய் இருந்தவர் கால்டுவெல். ஆயினும் அதற்கு மேலாகத் தமிழைத் தமிழ்நாட்டின் மூலமொழி என்றும், அது நண்ணிலக் கடல் பகுதியிலிருந்து இந்தோ-ஆரியம் போல் தமிழ்நாட்டிற்கு வந்தேறிய மொழி அன்று என்றும் பாவாணர் தெளிவுபடுத்தினார். கால்டுவெல் கருத்திலிருந்து பாவாணர் அடிப்படையில் வேறுபட்ட இடம் இதுவாகும். உலகமுதல் மொழி தமிழ்; உலகமுதலினம் தமிழினம் என்னும் கருத்தில் ஊன்றி நிற்பவர் பாவாணர். தமிழே ஆரிய மாக, தமிழரே ஆரியராக மாறிய வரலாற்றை - பாவாணர் கண்ட தெளிவை, அறிஞர் இராமநாதன் பின்வருமாறு முன்னுரைப் பகுதியில் சுருக்கி வரைந்துள்ளார். "ஞானப் பிரகாசர் - தேவேநேயன் கோட்பாட்டின்படி கி.மு. 10,000க்கு முன்னரே தொல் இந்தோ - ஐரோப்பியம் பேசுநர் தொல். திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்துவிட்டனர். மைய ஆசிய ஸ்டெப்பீஸ் புல் வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர். அவர்களில் சில குழுவினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவிற்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கீரிக், இலத்தீன், கெல்டிக், ஜெர்மானிக், ஸ்லாவய மொழிக் குடும்பங்களாகும். வேறு சில கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும். அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10,000க்கு முன்னர்த் தொல் திராவிட மொழிக் கூறுகளோடு சேர்த்து, வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழி பேசுநர்களிடமிருந்து (இரண்டாவது கட்டமாக) புதிதாக மேலும் பல திராவிட மொழிச் சொற்கள் சேர்க்கப்படலாயின. தமிழ், உலகமுதன் மொழியாக இருக்குமேல் அது தமிழக்குப் பெருமைதான். ஆயின் அதற்காக அக்கருத்தை நாம் வலிந்தெழுதி நிறுவிவிட முடியாது. தமிழ், உலகமுதன்மொழி என்பதை நிறுவப் பெரிதும் வாய்ப்புள்ளது. இஃது ஓர் உண்மை என்பதை இக் கருத்துக்களை நோக்கி நகரும் ஒவ்வொரு நகர்விலும் நம்மால் காண முடிகின்றது. உண்மையை எழுதுகிறோம் என்ற நம்பிக்கையிலும் மகிழ்விலும் இப்பணியைச் செய்ய மேலும் ஆர்வம் கொள்கின் றோம். இந்த ஆய்வினால் தமிழுக்கு விளக்கம் கிடைப்பதினும், தமிழிலிருந்து பிரிந்து - சிதைந்து - வேரற்று - உயிரற்று உயிருள்ளன போல் ஒலிக்கப்படும் ஞாலமொழிகளுக்கே கூடுதல் விளக்கம் கிடைக்கிறது. தமிழைத் தமிழாலேயே விளங்கிக் கொள்ள முடியும். தமிழ் தவிர்த்த மொழிகள் தத்தம் வரலாற்றைத் தமிழை முன்நிறுத்தி மட்டுமே சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் இந்த ஆய்வானது உலகமொழியாய்வாளர்களுக்கெல்லாம் தேவைப்படுகின்ற ஒன்றாகும். மொழிகளின் சொற்கட்கு அகராதிப் பொருளும், வேர்ப் பொருளும் ஆக இரண்டுண்டு. அகராதிப் பொருளை, மொழியை மேலோட்டமாகக் கற்கும் எவரும் அறிவர். ஒரு சொல்லின் வேர்ப் பொருளை வேர்ச்சொல்லாய்வாளர் மட்டும் அறிவர். ஒரு சொல்லின் வேர்ப் பொருளை அறியும் வேர்ச்சொல்லாய்வாளரும் அச்சொல்லிற்கான வேர், அவர்தம் மொழியில் முழுதாக இருக்கும் போது மட்டுமே அகராதிப் பொருள் அறிநரைவிட நுண்பொருள் கண்ட சிறப்பைப் பெறுவர். அல்லாக்கால் அகராதிப் பொருள் அறிநருக்கும், வேர்ப் பொருள் அறிநருக்கும் பெரிய வேறுபாடிராது. Bird என்னும் ஆங்கிலச்சொல் பறவையைக் குறிக்கும் என்பது ஆங்கில அகராதிவழி பொருளறியும் எவரும் அறிவர். ஆங்கில வேர்ச்சொல் அகராதிவழி வேர்ப்பொருள் அறிபவர் அது கிபி. 1300 வரை பெண்பறவையை மட்டும் குறித்ததென்று நுண்பொருள் அறிவர். இந்த அளவோடு ஆங்கில சொற்பொருள் அகராதி, வேர்ச்சொல் அகராதி ஆகியன கொண்டு அறிவதில் சொற்பொருள் விளக்கம் நின்று விடுகின்றது. ஆக்சுபோர்டு ஆங்கிலச் சிற்றகராதி (C.O.D) bird சொல் பற்றிக் கூறியதின் சுருக்கம் வருமாறு. bird / ba: d/n.l.a feathered vertebrate of the class Aves with a beak, two wings and two feet, egg - laying and usually able to fly. 2. a game bird3. Brit slang a young woman (Old English bird, of unknown origin.) இதே Bird என்பதற்கு சான் அயிற்றோ (John Ayto) அகராதி கூறும் வேர்ப்பொருள் விளக்கம் வருமாறு. Bird (O.E) bird is something of a mystery word. In Old English bird meant Specifically 'young bird' nestling ........ Its source is quite unknown; it has no obvious relatives in the Germanic languages, or in any other Indo - European language. As early as 1300, bird was used for,'girl', but this was probably owing to confusion with another similar Middle English word. burde, which also meant young women. மேற்காட்டிய ஈரகராதிகளும் 'bird' சொல்லிற்குரிய முழு விளக்கத்தினைச் சொல்ல முயன்று முடங்கி இருப்பதைக் காண் கின்றோம். இதன் காரணமாக 'bird' சொல்லிற்குச் சொற்பொருள் விளக்க அகராதிகளும் வேர்ச்சொற்பொருள் விளக்க அகராதிகளும் தெரிவிக்கும் பொருள்களில் மாற்றம் பெரிதும் இல்லை. தமிழில் பெண்பறவைக்குரிய பெயர்களைத் தொல்காப்பிய மரபியல் கூறுகிறது. பெட்டை , பேடை, பெடை (தொல். மரபு. 3) என்பன அவை. 'உள்ளூர் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழை இயர்” (குறள் 85, 2-3) என்ற குறுந்தொகையில் பெண்பறவை 'பேடை' எனப்பட்டது காண்க. தொல்காப்பியம் கூறும் இச்சொற்களோடு இன்னும் உறவுடையன 'பெண்' 'பெண்டு' என்பன. இந்த ஐந்து சொற்களும் 'பெட்பு' என்னும் வேரில் பிறந்துள்ளன. ''பெட்பு விருப் பாகும்" என்பது தொல்காப்பியம். ஆணினத்தால் விரும்பப் படும் இனமாகப் பெண்ணினம் இருப்பது கருதி இப்பெட்பு, விருப்பு வழியாகப் பெடை, பெட்டை, பெண், பெண்டு, பேடை என்ற சொற்கள் பிறந்தன. 'பெட்பு' என்னும் சொல் தானும் பெள்-பு = பெட்பு என்பதாகப் பிறந்தது. இப் பெள்' என்னும் மூலமும், பிள்' என்னும் முன் மூலத்திருந்துப் பிறந்தது. பிள் - பிண் - பிணா , பிணை என்ற சொற்களும் பெண் இனத்தைக் குறிப்பது காண்க. ''நளியென் கிளவி செறிவுமாகும்" என்பது தொல் உரி நூற்பா. இந்த நளியின் அடி 'நள்' என்பது. இந்த 'நள்' என்பதும், 'நல்' வழியது. இந்த 'நல்' வழியாக நல் - நற் - நர் - 'நார்' என்ற சொல் பிறந்தது. தேங்காய், பனங்காய் போன்றவற்றில் அதன் ஓட்டுடன் ஒட்டிச் செறிந்து பிணைந்திருக்கும் பகுதி 'நார்' எனப்படும். இந்த 'நார்' மாந்தர் ஒருவர் ஒருவருடன் செறிந்து நிறைந்திருக்கும் அன்புணர்ச்சியைச் சுட்டும் சொல்லாகவும் பிறகு வளர்ந்தது. 'நார்' அன்பு குறிப்பதை 'நாணாமை நாடாமை நாரின்மை (833) என்ற குறளால் அறிக. 'நார்' என்னும் இவ்வன்புச் சொல் ஆடவரால் அன்பு பாராட்டப்படும் பெண்டிரைக் குறிக்க 'நாரியர்' என்பதாக மலர்ந்த வரலாற்றைத் தமிழில் காணலாம். 'நார்' என்பதற்கு வேரான 'நல்' வழி வந்த 'நள்' என்பதிலிருந்து நள்பு - நட்பு, நண்பு என்ற பாசச் சொற்கள் பிறந்ததை இங்கெண்ணலாம். "bird' சொல் பறவையைக் குறிப்பதென்னும் அகராதிப் பொருளுக்கு அப்பால் பெண் பறவையைச் சிறப்பாகக் குறித்த தென்ற உண்மையை ஆங்கில நூல்கள் வழி அறியும் மொழியாய்வு உலகம் ஆண் உயிரினத்தால் விரும்பப்படும் இனமாக இருப்பது கருதிப் பெண்ணினம், பெண், பெண்டு, பேடு, பெடை, பெட்டை, பேடை என்றெல்லாம் பெள்' என்னும் விருப்பப் பொருள் குறிக்கும் வேர்வழிப் பிறந்த உண்மையை அறிய வேண்டுமல்லவா? நிலைத் திணைகளில் பல , தத்தம் வித்துக்களால் தத்தம் இனத்தைத் தத்தம் அடியில் தோற்றி வளர்க்கின்றன. ஒவ்வொரு நிலைத்திணையின் காலிலும் (அடியிலும் அதனதன் அடுத்த இனம் முளைத்து வளர்வதால் அந்த இனத்தைக் 'கால் முளை' என்று தமிழ் இயம்பும். விதைகள் வழி இல்லாமல் வாழை போன்றவை இளம் கன்றுகளாக முளைத்து அடுத்த தலைமுறையைத் தரும். 'வாழையடி வாழை' என்று கூறுவது இதைத்தான். சில மரங்களில் கிளைகளை வெட்டிச் சென்று வேறிடத்து ஊன்றி வளர்க்கலாம். இவ்வாறாக எந்த வகையில் இந்த நிலைத்திணைகள் பரவினாலும் அவ்வாறு பரவும் ஒவ்வொரு இளம் நிலைத்திணையிலும் அஃதஸ்து தோன்ற மூலமாயிருந்த தாயின் மூலப்பண்பு - உயிர்ப்பண்பு பிரிக்கமுடியாத படி சேர்ந்தே இருக்கும். மரபணுக்கள் வழி முந்தையோர் சூழல் பலவும் வழிவழித் தலைமுறையினரைப் பற்றியிருக்கும் உண்மையை மரபணுவியல் வழி நன்குணர்கிறோம். இதேவகையில் மூல மொழி ஒன்று எவ்வளவு தொலைவு சென்று எவ்வளவு வேறுபாடுகட்கு ஆளாகிச் சிதைந்து திரிந்து - கரைந்து - உருமாறி வழங்கப் பெற்றிருந்தாலும் அந்தச் சிதைவில் - திரிவில் - கரைவில் - உருமாற்றத்தில் அதற்கு மூலமாக விருந்த மொழி முதலின் உயிர்ப்பை - ஒளியை ஆய்வினால் கண்டுபிடித்துவிடலாம். ஆரியத்தில் தமிழிருக்கின்ற உண்மையை முதற்கண் கண்டு காட்டியவர் கால்டுவெல் பெருமகனார். பார்வை உறுப்பாகிய 'கண்' என்னும் சொல், மேலையாரியத்திலும் மேலை ஆரியத்தி லிருந்து ஒரு காலத்தில் சேர்ந்திருந்த கீழையாரியத்திலும் (சமற் கிருதம்) எவ்வெவ்வாறு திரிந்து வழங்குகின்ற தென்று கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணப் பெரு நூலில் விளக்கி னார். பாவாணர், கால்டுவெல்லார் வழியில் இப்பகுதியை மேலும் விரிவாக எழுதினார். தமிழ் பழைய இலத்தீன் கிரேக் - வேத ஆரியம் ஆங் கண் - கான், கன், கென் க்னோ (G) க்னோ (G) ஜ்ஞான் என்று தமிழின் 'கண்' திரிபைப் பட்டியலிடுவார் பாவாணர். மேலை மொழிகளில் திரிந்துகிடக்கும் இச்சொற்களைத் திரிபு முறையில் கீற்று பின்வருமாறு நிரல்படுத்தியிருப்பதாகப் பாவாணர் எழுதுகிறார். 'காண் என்னும் சொல் ஆங்கிலத்திலும் அதன் இன மொழிகளிலும் கன் (Cun), கான் (Con) கென் (ken), கெ அன் (can) கீன் (Keen) என்று திரிந்துள்ளதாகவும் கீற்று (Skeat) கூற்றினின்று தெரிகின்றது.' ஆரிய மொழிகளில் தமிழின் கண், உறுப்புப் பொருளைத் தாண்டி அதன் வினைப் பொருளாகிய காணுதல் பொருளைச் சிறப்பாய் பெற்று வளர்ந்திருக்கிறது. 'காணுதல் என்னும் சொல், தமிழில், புறக்கண்ணால் காணுதலையும் அகக்கண்ணால் காணுதலையும் குறிக்கும். முன்னது பார்த்தல், பின்னது அறிதல், தியூத்தானிய மொழிகளில் 'காண்' என்பதன் திரிசொற்களெல்லாம் பின்னதையே உணர்த்துகின்றன' (தேவநேயம் 4. ப.146). பெரிய அளவில் தமிழின் கண், காண் சொற்களின் விரிவு களைக் கால்டுவெல்வழி விளக்கும் பாவாணர். கால்டுவெல் போலவே 'know' என்ற ஆங்கிலச் சொல்லையும் அதனோடு இணைப்பார். 'முதற்கண், 'கான்' (Con, kon) என்னும் தியூத்தானியச் சொல் முதலெழுத்துயிர் முன்பின்னாகமுறை மாறி 'க்னா' (cha,kma) என்றும் 'க்னோ' என்றும் திரிந்தது என்பார். A.S.Chawan, Ice. Kna, ON.Kna, M.E. Knowen, E. Know, OHG chinaan, Cnahan. 'குழந்தைகட்கும் புரியும் வண்ணம் சொற்றிரிபு உண்மைகளை விளக்கவல்லவர் பாவாணர் என்பதனை இவ்விடத்தும் காணலாம். Know என்னும் அறிதற் பொருள் சொல்லுடன் leche என்னும் கான்டினேவிய மொழியின் பின்னொட்டுச் சேர்ந்து உருவான சொல்லே 'Knowledge' என்னும் அறிவைக் குறிக்கும் சொல். (காண்க Skeat p. 234) தமிழின் கண், புறம் - அகம் ஆகிய இருவழியும் காணுதல் குறிக்கப் பொருள் விரிவு பெற்றதன் வழியேதான் 'காண்' என்ற வடிவம் Know எனவும் ‘Knowledge' எனவும் அறிதலை - அறிவை குறிக்க மேலை உலகில் வளர்ந்தது. Know, Knowledge என்ற சொல்லைத் தமிழின் கண்வழி விளங்கிக் கொள்ளும் நாம், wise என்னும் அறிவைக் குறிக்கும் பிறிதொரு சொல்லையும் தமிழின் விழிவழி கண்டு வியக்க உள்ளோம். 'விழி என்னும் சொல் வரலாற்றையும் அது பெறும் பொருள் ஒழுங்கிணை யும் பாவாணர் பின்வருமாறு விளக்குகிறார். விழி - வித் (d) விள்ளுதல் - விரிதல், திறத்தல், விள் - விழி . விழித்தல் - 1. கண்திறத்தல் 2. தூக்கம் தெளிதல் 3. காணுதல். 4. எச்சரிக்கையாய் இருத்தல், முற்காப்பாய் இருத்தல் 5. கவனித்து நோக்குதல் 6. விளங்குதல், ஒளிர்தல் 7. அறிதல். தமிழில் ழகரம், டகரமாதல் உண்டு. புழல் - புடல் என்பது அதற்குப் பாவாணர் காட்டும் காட்டு. அவ்வழியேதான் தமிழின் விழி - விடி என மேலை ஆரியத்தில் திரிந்தது என்பார் பாவாணர். விழி - L. Vide, E.Vide, Skt Vid- to know. (வ. மொவ ப92 - II) அறிஞர் கீற்று ‘wise' சொல் பற்றி விளக்குகையில் wise-knowing; see wit என்று கூறுவார். wit இன் சொல் விளக்கமாக wit - to know L.videre - to see Skt. vid - to see (wid) என்பார். சான் அயிற்றோ தன் வேர்ச்சொல் அகராதியில் 'wise' என்பதற்கு wise - The Indo European base woid, weid, wid - This denoted 'see' and hence know', and it also produced English idea, vision and wit. என்றெழுதுவார். 'advice' advise என்ற சொற்களிலிருக்கும் vice, vise என்பனவும், 'wise' சொல்வழி வந்த சொல்லாகவே தெரிகிறது. advice, advise: sec vision என்னும் கீற்று, பின்ன ர் advice - L.ad, according to; visum, that which has seemed good to one, see orig. neut of visus pp of videre, to see. என்று விளக்கமளிப்பார். விதர்ப்ப நாடு - வைதருப்ப நாடு எனவும் விதேகி - வைதேகி எனவும் ஆனதைப் போல்தான் vice-wise ஆனது. vise - vision - visit - wit - evident போன்ற சொற்களில் தமிழின் பார்வை விழி' இருப்பதை மேலையகராதி அறிஞர்கள் வழியில் நம்மால் பார்த்துவிட முடிகின்றது. இச் சொற்கள் எல்லாம் பார்க்கப்படுவது என்ற பொருளில் விழியின் வழிப் பிறந்தவையே கண் - Knowledge ஆனதும் விழி wise ஆனதும் ஆன ஒன்றின் உண்மையையும் இவற்றிடையே தமிழ் இழையோடிப் பொலிகின்ற தென்னும் நுண்மையையும் மட்டும் இவ்விடத்து விளக்கினேன். 'கல்' என்னுமோர் வேர், கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை என்னும் ஆறு பொருள்களைக் கொண்ட தென் பதையும் அவ் ஆறு பொருள்களும், 'கல்' வேர்வழி உலகெங்கும் விரிந்து பரந்திருப்பதையும் ஆயிரம் பக்கங்களில் நான்கு பகுதிகளில் எழுதினேன். நூல் வெளியான பிறகு மேலும் சில நூறு பக்கச் செய்திகள் அதே 'கல்' வேர்களில் சேர்க்க வேண்டியிருப்பதைத் தொடர்ந்து கண்டு வருகின்றேன் . excellent, cell ஆகிய இரு சொற்களில் 'கல்' இருப்பதை மட்டும் ஆங்கில அகராதி அறிஞர்கள் வழி அறிந்ததைச் சுருக்கமாக இங்குக் குறிப்பது பொருத்தமென நினைக்கிறேன். excellent - The underlying notion of excellent is of physically ‘rising above' others. It comes via Old French from the present participle of Latin excellere. This was a compound verb formed from the prefix ex-out and a hypothetical verbal element cellere, which evidently meant something like rise, be high: It derived ultimately from an Indo European base kol - kel - which also produced English column, culminate and hill. மலையைக் குறிக்கும் 'கல்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லே மலையினும் மாணப் பெரிது, குன்றின் மேல் விளக்கு என்ற தமிழ் வழக்கினை ஒப்ப மேற்கே சென்று சு- ச திரிபில் 'cel' என்று திரிந்து காட்சியளிக்கின்றது. கருமை நிறங் காரணமாகக் கருமைப்பொருள் 'கல்', மலையைக் குறித்ததைக் 'கல்' முதல் பகுதியில் விளக்கினேன். அவ்வகையில் கல்லின் ஆறு பொருள்களில் மலை, கருமைப் பொருளாகிய முதற்பொருள்வழித் தோன்றியதாகும். அந்தக் 'கல்' மலையே excellent இல் 'செல்' ஆக உள்ளது. 'cell' என்னும் ஆங்கிலச் சொல்லும் க - ச திரிபில் துளைப் பொருள் காட்டும் 'கல்' வழிப் பிறந்ததாகும். 'கல்' என்னும் வினை, துளைப் பொருளது. இளமையில் கல்', 'மலையைக் கல்' என்ற வழக்குகளிலும் கல் - கலம், கல் - கன், கன்னம் போலப் பல சொற் களிலும் 'கல்' துளைப் பொருளாயிருப்பதை "உலகம் பரவிய தமிழின் வேர் - கல் நான்காம் பகுதியில் விளக்கியுள்ளேன். 'cell' ஆங்கிலத்தில் பல பொருள் குறிக்கும் ஒரு சொல். இதன் பல்பொருள்களையும் அப்பொருள்களை அது பெறுவதற்கான வேர்ப் பொருளையும் சான் அயிற்றோ அகராதி வழிச் சுருக்கமாக காணலாம். cell - cell has branched out a lot over the centuries, but its original meaning seems to be small secluded room, for it comes ultimately from our Indo European base kel - which is also the source of English Conceal, Clandestine and occult. It came into English cither via old French cello or directly from Latin cella small room, store room, inner room of a temple and at first was used mainly in the sense. Stiall subsidiary monastery. It is not until the 14th Century that we find it being used for small individual apartments within a monastic building, and the development from this to room in a prison came as late as the 18th contury. In medicval biology the tern was applied metaphorically to bodily cavities, and from the 17th century onwards it hegan to be uscd in the more modern sense smallest structural unit of an organism. தமிழினம், உலகமுதலினம் என்பதற்கான வரலாற்றுத் தடங்களை இன்னும் முழுமையாகக் வரலாற்றாசிரியர்கள் ஆய வில்லை. f/56 அன்று இந்து நாளிதழில் வெளிவந்த சிந்துவெளி கால எழுத்துடன் கூடிய கற்கோடரிபற்றிய செய்தியைச் சிந்து வெளி ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் விளக்கி இருந்தார். தமிழர் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டுகளில் அரிய கண்டுபிடிப்பு இக்கற்கோடரி என்று அவர் அதன் பெருமை பேசியிருந்தார். சிந்துவெளி காலத்தில் தமிழ்நாட்டிலும் மொகஞ்சதாரோ அரப்பா விலும் பேசப்பட்ட மொழி, ஒரே மொழி என்றும் அது தமிழே என்றும், இந்தோ ஆரியம் அன்று என்றும் அவர் கூறியது உலகம் கணக்கில் எடுத்துக் காணவேண்டிய செய்தி. இன்னும் வரலாற்றுத் தடயங்கள் கிடைத்து வரலாற்றுத் தடயங்கள் தேடித் தமிழ் - தமிழர் வரலாற்றை எதிர்காலம் துலக்கும் என்பது நமக்கு நம்பிக்கையாய் உள்ளது. தமிழரின் வரலாற்றை அறிய நமக்கிருக்கும் சான்றுகளில் முதன்மையானதாகத் தமிழே உள்ளதென்பது பாவாணர் கருத்து. தமிழ் உலக முதன்மொழி - அது ஆரியத்திற்கும் மூலம் என்னும் உண்மையைப் பாவாணர் அளவிற்கு எவரும் இதுவரை விளக்கியதில்லை. பாவாணரை மொழிஞாயிறு என்று புகழ்வது தன்மையணி சார்ந்தது. அறிஞர் ஒருவரின் கருதுகோள் சரியானது என்பதை அவரைப் பின்பற்றுவோரால் அறிய முடியும். முந்தைய வழிகாட்டியின் தடத்தில் தொடர்ந்து பின்வருவோர் கால்பதிக்கும் பொழுது அவர்க்கும் அத்தடத்தில் ஒளி கிடைக்கும். இங்கு வழிகாட்டி மேலும் பெருமைக்குரியவராகிறார். தமிழ், ஆரிய மூலமாய் இருப்பதைத் 'தாகம்' என்னும் ஓர் தமிழ்ச்சொல் வரலாற்றை விரிப்பதன் வழி உணர்த்த விரும்புகின்றேன். பாவாணர், 'தாகம்', தமிழ் என்று விளக்கியுள்ளார். தக தகம் = எரிவு, சூடு க - தகு - தகை = தாகம் தகம், தங்கம் = விளங்கும் பொன் (தேவநேயம் 6 - 223) கூட்டக்கருத்தில் வெப்பக்கருத்து பிறக்கும் நுண்மையை உலகம் பரவிய தமிழின் வேர் - கல் பகுதி மூன்றில் விளக்கி யுள்ளேன். அவ்வகையில் 'தகு' என்னும் கூட்டப் பொருள் வேர், இந்தத் 'தாகம்' என்னும் வெப்பச் சொல்லை என்றிருக்கின்றது. தகு தகனம்; தகு - தகி என்பனவெல்லாம் இத் 'தகு வழி வந்த வெப்பச் சொற்களே. தகு - தக - தாக - தாகம் என்ற வெப்பச் சொல் மேலை யாரியத்துள் சென்று திரிந்த வரலாற்றைக் காணுமுன் 'சரக்கு' என்னும் பிறிதொரு வெப்பச் சொல் பற்றிப் பாவாணர் கூறிய விளக்கத்தை இவண் காணவேண்டியுள்ளது. சரக்கு -1 காய்ந்த பொருள் (பண்டம்) காயவைத்ததெல்லாம் சரக்காகி விட்டதா (உவ) 2. காய்ந்த வணிகப் பண்டம் 3. வணிகப் பண்டம் 4. மருந்துப் பண்ட ம் (எ.டு) பலசரக்கு 5. கல்வியறிவு. அவரிடத்தில் நிரம்பச் சரக்கிருக்கிறது. (உவ) வேக. 213. 'சரக்கு' என்னும் சொல், காய்ந்த பொருளைக் குறிக்கும் என்ற கருத்தையும் அது மருந்துப் பண்டத்தையும் குறிக்கும் என்ற செய்தியையும் நாம் நன்கு மனங்கொள்ள வேண்டும். மருந்துப் பொருள்கள் எப்பொழுதெல்லாம் தேவைப் படும் என்று கூறமுடியாது. அவ்வாறே நினைத்த பொழுதெல்லாம் அவை கிடைத்து விடும் என்றும் கூறமுடியாது. இலை, பூ, பட்டை, காய் என்ற நிலைத்திணைப் பொருள்கள் பழங்காலத்தில் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டன. 'மரஞ்சா அளவும் கொள்ளார் மாந்தர் " (புறநானூறு) 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்" (திருக். 217) என்னும் பழந்தமிழாட்சிகளில் நிலைத்திணைப் பொருள்கள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட உண்மையைக் காண்கிறோம். ''ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை மருத்துவன்'' என்னும் பழமொழியிலும் மருந்திற்கு வேர் பயன்பட்டது காணலாம். சரக்கு, மருந்தென்றும் அது, காய்ந்த நிலைத்திணைப் பொருள்களைக் குறிக்குமென்றும் தமிழ்வழிப் பெறப்பட்ட இவ் வுண்மையை மனங்கொண்டு 'Drug' என்னும் ஆங்கில சொல்லிற்கு ஆங்கில வேர்ச்சொல்லறிஞர் கீற்று அளிக்கும் விளக்கம் பாருங்கள். Drug E.Du. M.E. drogge. drugge - OF drogue, a drug. Du Droog, dry; the pl.drogen, lit.dried roots, was used in the special sense of drugs'; see dry. தமிழின் வெப்பப் பொருள் சொல்லான தாகம், மேலை யாரியத்தில் தாக் - த்ராக் என்று திரிந்து தமிழின் சரக்கு குறிக்கும் அதே மருந்துப் பொருட்களை - காய்ந்த நிலைத்திணைப் பொருள் களைக் குறிப்பதைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் drug சொல் வரலாறு தமிழின் தாகம் சொல்லினை முன் நிறுத்தி இணைத்துக் கொள்ளாமல் முழுமை பெறுமா? அறிஞர் கீற்றிற்குப் பிறகு வேர்ச் சொல் அகராதி தொகுத்த அறிஞர் சான் அயிற்றோ 'drug' சொல்லின் மூலம் தேடி அலைந்து மருந்தில்லாமல் களைத்துப் போனதை அவரின் விளக்கம் வழியே அறியுங்கள். Drug - Drug is one of the mystery words of the language. It is clear that English acquired it from Old French drogue, but no one is certain where the French word came from. Onc suggesion is that it originated in Arabic durawa 'Chaffo; another, rather more likely, is that its source was Dutch droog, dry via either the phrase droge ware dry goods* or droge vate *dry barrels a common expression for goods packed in barrels. It has spread to many other European languages, including Italian and Spanish droga, Germän droge, and Swedish drog. தமிழின் தாகச் சொல் வரலாறு மேலை அறிஞர்க்குத் தெரிந்திருக்குமேல் அவரின் உண்மை காணும் தாக நெருப்பு எவ்வளவு எளிதாகத் தணிந்திருக்கும் மேலை உலகின் தாகம் தணிக்கும் தகுதி பெற்றிருக்கும் நாம் மேலை மொழிகளின் மேல் கொண்டிருக்கும் தாகத்தை இவ்விடத்து நினைக்காமல் இருக்க முடியாது. 'drug' என்னும் வெப்பப்பொருட் சொல்லுடன் உறவுடைய தாகக் கீற்றினால் அடையாளம் காட்டப்பட்ட பிறிதொரு ஆங்கிலச் சொல் 'dry' என்னும் வெப்பப் பொருட் சொல். "dry" சொல் பற்றி சான் ஆயிற்றோ கூறுவதாவது dry (O.E) Dry comes ultimately from prehistoric Germanic draugiz, a derivative of the base draug-drug, which also produced English drought and drain. Its other Germanic relatives are Dutch droog and German trocken, and some have Connected it with Old Norse, drjugr lasting, strong', Old Prussian druktai - 'firmly' and Lithuanian dialect druktas "thick, strong' - the theory being that strength and endurance are linked with drying out.', தமிழ்நாட்டில் வேனிற்காலம் வறட்சி மிக்கதாய் நீர்வற்றி வெப்பம் மிகுந்து இருக்கும். 'வறட்சி' யாகிய இவ்வெப்பம் மேலை உலகில் 'தாகம்' ஆகிய வெப்பத் தமிழ் வழி 'drought' என்று சொல்லப்படுகிறது. drought - (0.E) - Etymologically drought means simply "dryness'. The prehistoric Germanic base that produced English dry (and indeed drain) was draug-drug. - John Ayto. நீர் முதலியவற்றைக் குழாய் வழியாக வடிப்பது drain' எனவும் இவ்வாறு வடிக்கப்பெறும் சாய்க்கடை நீர் Drainage' எனவும்படும். இந்த 'drain' என்னும் சொல்லும் நாநிலையை வற்றச் செய்வது என்னும் பொருளில் தாகம் வழி பிறந்த drug, dry, drought போன்றவற்றோடு உறவுடையதே. drain (O.E). "The underlying meaning of drain seems to be making dry. It comes ultimately from draug the same prehistoric Germanic base as produced Eng lish drought and dry and in Old English it meant *strain through a cloth or similar porous medium. There then follows a curious gap in the history of the word: There is no written record of its use between about 1000 AD and the end of the 14th century, and when it re-emerged, it began to give the first evidence of its main modern meaning *draw offa liquid'. - John Ayto அரிய கற்று ஆசற்றார் கண்ணும் அறியாமை இருக்கும் என்பார் திருவள்ளுவர் 503 பொதுவில் கண்ணால் காண்பதையும் இயன்றவரை மனக்கண்ணால் (அறிவால்) காண்பதையும் உண்மை என நம்புவது மாந்த இயல்பு. தாம் கண்டதற்கு மேல் சிந்தித்திற்கு மேல் உண்மை இருக்குமென்று எண்ணுபவர் உலகில் நிலரே. இந்த மெய்ம்மத்தை நாமறிவோம். எனினும் மேலையாரியத்தில் மேலை யறிஞர்கள் காட்டிய சொற்களுக்கான விளக்கங்கள் சிலவற்றுக்கு நம் தமிழை முன்வைத்து ஆய்வது சரியாக இருக்குமெனவே கருதுகிறோம். மேலையாரியம் என்னும் பன்மொழிக் கட்டத்தில் நாம் ஓரளவிற்கு அறிந்த மொழி ஆங்கிலமாகவே உள்ளது. செருமானிக்கு (Germanic) இந்தோ ஈரானியன் (Indo - Manim) ஆர்மேனியன் (Armenian) அல்பேனியன் (Albanian) தாக்காரியன் (cெharyam) பால்டிக்கு Baltic) எவனிக்கு (alienic) இத்தாலிக்கு (Italid) சிலாவானிக்கு (Siavா) செல்திக்கு (citic) எனப்பல குடும்பங்களும் அவற்றின் வழிவந்த பலப்பல மொழிகளுமாய் மேலை ஆரியம் விரிந்துள்ளது. இவ்வளைத்து மொழிகளையும் உட்கொண்டு வளர்ந்திருக்கும் ஓர் கலவை மொழியே ஆங்கிலம். இவ்வகையில் ஆங்கிலம் ஆரிய மொழிகளுள் ஓர் குறுமொழி. இந்த ஆங்கிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ், ஆரிய மூலமாய் இருப்பதை உலகிற்கு நாம் பேரளவில் விளக்கிவிட முடியாது. மொழிஞாயிறு பாவாணர் இயன்மொழிச் சொற்களுக்கு மட்டுமே வேர்காணமுடியும் என்றும் திரிமொழிச் சொற்களுக்கு வேர் காண்பது கடினம் என்றும் கூறிய உண்மையை நாம் கருத்தில் கொண்டுள்ளோம். புடவியின் அகவை (பிரபஞ்சத்தின் அகவை ) சுமார் 1200 கோடியிலிருந்து 100 கோடி ஆண்டுகளாக இருக்கலாம். உலகம் உட்பட ஞாயிற்றுக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் ஆகும். உலகில் முதன்முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகட்கு முன்னர்தான், முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிகளே. இன்றுள்ள அனைத்துச் செடி கொடிகளும் விலங்கு பறவை களும் ஒரே முலத்தில் தோன்றியவையேயாகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (species) கண்டுபிடிக்கப் பட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.' "இன்று உலகெங்கும் உள்ள 650 கோடி மாந்தர்களுமே (அதாவது திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் (Home Sapiens sapiens or Anatomically Modem Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள்' என இந்நூல் முன்னுரையாளர் இன்றைய அறிவியலறிஞர்கள் புடவி, உலகம், உயிரினம் பற்றிக் கண்டுபிடித்த உண்மைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். உயிர் எத்தன்மைத்து என்னும் வினாவிற்கு அது, அறிதல் தன்மைத்து என்று விடைகூறும் கொண்முடிவு (சித்தாந்த நூல்கள். அறியும் ஆற்றல் பெற்ற உயிரினங்களில் மாந்தன் தலைமையானவன். அவன் சிற்றறிவினன் என்றுரைப்பதும் கொண்முடிபு நூற் கொள்கை தான். என்றாலும் உண்மைகாண அவன் அவாவும் அவர் பெரிது; மிகப் பெரிது. அந்த வகையில் மொழி மூலத்தைக் காண்பதிலும் அவன் முன்னேறியே செல்கிறான். அறிஞர் பி. இராமநாதன் திராவிட மொழிகளுக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான உறவுகளை ஆய்ந்த. ஆயும் ஆய்வாளர்களின் பட்டியலில் என் பெயரையும் இணைத் துள்ளார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் எமக்குத் தமிழில் ஒரு சிறு சுவடு மட்டுமே தெரிந்திருக்க முடியும். நம்மி லிருந்து கி.மு. பத்தாயிரம் - அதாவது இன்றைக்குப் பன்னீராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொல் திராவிட மொழியிலிருந்து கிளைத்த மொழிக்குடும்பம் இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பது ஞானப்பிரகாசர், பாவாணர் கருத்து. இவ்வளவு நெடுங்காலத்திற்கு முன் நம்மிலிருந்து பிரிந்து திரிந்து வழங்கும் ஆரிய மொழிகளை நாம் ஒருவாறாகதான் அறிந்து கொள்ளமுடியும். ஆயினும் முயற்சி திருவினை ஆக்கும்' என்றபடி மொழியாய்வில் முந்துவது தவறாகாது. அறிந்தோம் என்பதுதான் பெருமை என்று நினைக்கக் கூடாது; அறியும் தடத்தில் நிற்கிறோம் என்பதுகூட நமக்குப் பெருமைதான். தமிழ், கீழை உலகில் தனித்துத் தோன்றிய இயன்மொழி என்பதையும் அது ஆரியம் தழைக்கவும் மூலமாய் விளங்கிய மொழி என்பதையும், இந்த "மொழி முகப்பில் " ஓர் தினையளவு நிறுவ முயன்றுள்ளேன். இந்த முகப்புரையின் விரிவு, நூறாண்டிற்கும் மேலாக உழைத்து விரித்தெழுதப் பட வேண்டிய பல்லாயிரம் பக்க நாலளவிற்குரியது. ஆயினும் ஞானப்பிரகாசரும், பாவாணரும் கண்டு உணர்த்திய தமிழின் முதன்மை உண்மையை இந்த முகப்புரை யிலும் காண முடிகின்றதென்று நம்புவதற்கு இங்குரைத்தவை பொதுவானவை என்று கருதுகின்றேன். ‘English’ என்ற சொல் கூட தமிழின் ‘அங்கு’ என்னும் வளைவுப் பொருள் வேரிலிருந்து பிறந்ததை எனது தமிழ்க்கப்பல் நூலில் பக் 132 133) விளக்கியுள்ளேன். இந்த முகப்புரையை Turope' என்னும் சொல் பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன் நான் கண்டு - கருதிய செய்தியைக் கூறி முடிக்க விழைகின்றேன். 'இறு' இறுத்தல்' என்பதற்குத் தங்குதல் என்பது மூலப் பொருள். எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் நீக்கமறத் தங்கியிருக்கின்றதென்றதன் அடிப்படையில் கடவுள் 'இறை' எனப்பட்டது. சிறிய எலும்பில் நிறைந்த ஊன் தங்கியிருப்பதால் புலால், இறைச்சி' எனப்பட்டது. பாடலில் உள்ளுறை போல் பிறிதொரு பொருள் இறைச்சி எனப்பட்டதும் இந்தத் தங்குதல் பொருளிலேயேயாகும். தேனீக்கள் திரட்டிய தேன் தங்கியிருக்கும் தேனடை இறால்' எனப்பட்டதிலும் இந்தத் தங்குதல் இறுவே உள்ளது. தேன் அடைந்திருக்கும் காரணத்தால் அது அடை எனப்பட்டதையும் இறால் என்பதோடு இணைத்தெண்ணலாம். நாட்டினைக் காக்கும் அரசர் 'இறை' எனப்பட்டதும் அவனிடத்து நாடாளும் அணைகள் தங்கியிருப்பதனாலேயேயாகும். அரசனது மாட்சியை வள்ளுவம் இறைமாட்சி என்றே கூறும். 'இறை' என்று மன்னனைக் குறிக்கும் இந்தத் தமிழ் வரலாற்றினை 'Europe' என்ற சொல் பற்றி இலத்தின் அகராதி தரும் விளக்கத்தோடு இணைத்தெண்ணிப் பாருங்கள். பெறa - and Euram - (1) myth, daughter of Ageno, king of lioenida, mother of Sarpedon and Minos by Jupiter, who in the form of a bull carried her off to GCE (2) geograph, the continento Europiame alieuropa. - Cassell's Latin Dic. உருவம் என்னும் தமிழ்ச்சொல் உருவ உருப் என்று இழை ஆரியமாகிய சமற்கிருதத்தில் திரிந்தவாறுதான் அரசனைக் குறிக்கும் இறைவன்' என்னும் தமிழ்ச் சொல் மேலை ஆரியத்தில் இறைவ. இறு- இறுப இராப - இரோம் எனத் திரிந்திருப்பதாக உணரமுடி கின்றது. சிந்துவெளித் தமிழர்கள் கடவுளை 'இறுவன் என்ற சொல்லால் அழைத்தனர் என்று திருத்தந்தை ஈராகப் பெருமகன் (பக்32) தன் Too Indo Mediterranean Culture (1954) நாவில் எழுதி யிருப்பதையும் நாம் இங்கு எண்ணினால் தெற்கே தோன்றிய தமிழ் வடக்கே சென்று பின் வடமேற்காக இந்தியாவைத் தாண்டிச் சென்று ஆரியமாகத் திரிந்ததென்னும் பாவாணர் கருத்தை விளங்கிக் கொள்ளமுடியும். தமிழ் வணிகர்கள் வடவிந்தியாவில் 'பனியா' எனப்படுவர். வங்கம் - பங்கம் என்ற வ - ப மாற்றமே இது. இன்றைய Spain தேசம் பண்டு Hispania என்று அழைக்கப்பட்டது. தமிழ் வணிகர்கள் குடியேறி அமைத்துக்கொண்ட நாடாக அது அன்று உருவானது. (காண்க. தமிழ்க்கப்பல் ப. 129) அவர்கள்தான் பொனீசியர்கள் (Phoenician) என வரலாற்றாசிரியர்களால் எழுதப்படுபவர்கள். அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆய்வையும் முன்னால் வெளியிட்டுள்ளோம். (காண்க. தமிழ்க்கப்பல் பக் - 130-32) மிகமிக நீண்டதான இந்த வரலாற்றுப் பின்புலத்துடன் Europe சொல்லினைத் தமிழின் அரசனைக் குறிக்கும் 'இறைவன்' சொல்லுடன் நாம் எண்ண வேண்டியுள்ளது. தமிழினத்தின் தோற்றத்தையும் பரவலையும் பற்றி வரலாற்றுப் பேரறிஞர் வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த நூல் தமிழர் வரலாற்றறிஞர்களுக்கு ஓர் கையேடு. அந்த நூலைப் பாவாணர் ஏற்றுப் போற்றி உரைத்தது அந்நூலின் நுண்மாண் நுழைபுலத் தகுதியாலேயேயாகும். தமிழின் முழு வரலாற்றையும் அறிந்துரைத்த பாவாணருக்குத் தீட்சிதரின் வரலாற்று நூல் பக்கத்துணையாக விளங்கியது. பாவாணர் நூல்களைச் செம்பதிப்பாக்கித் தமிழுல கிற்கு வழங்கிய மொழிப்போர் மறவர் கோ. இளவழகன், தமிழும் - தமிழினமும் மீளும் வகைக்குத் துணை செய்யும் நூல்களையே தொடர்ந்து வெளியிட்டுத் தமிழ்ப் பணியாற்றி வரலாறு படைத்து வருகின்றார். நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. என்னும் திருக்குறளுக்கு இலக்கணமாய் நம்மிடம் வாழ்ந்து வருபவர் அறிஞர் பி. இராமநாதன். உண்மையான தூய நெஞ்சுடன் எம் போன்றோரை அவர் ஊக்கித்துணை புரிந்து வருகின்றார். திரு. கோ. இளவழகன் ஐயா, திரு. இராமநாதன் அவர்களுடைய அறிவையும் உழைப்பையும் பயன்படுத்திக் கொள்ளும் பாங்கு எமக்கு ஆறுதலளிக்கின்றது. மாட்சிமை மிக்க தீட்சிதரின் ஆங்கில நூலை அறிஞர் இராமநாதன் மிக அருமையாக மொழிபெயர்த்துத் தமிழர் உய்ய வழங்கியுள்ளார். அத்துடன் தீட்சிதரின் கருத்தினை அரண்செய்யும் பாங்கில் இன்றைய ஆய்வுலகம் பல்வேறு அறிவுத் துறைகளிலும் கண்ட பல செய்திகளையும் உள்ளடக்கித் தமிழினத் தின் உலக முதல் தன்மையை வாசகர்கள் அறிய முன்னுரை ஒன்றை யும் எழுதியளித்துள்ளார். திரு. கோ. இளவழகன் என்னை ஓர் முகப்புரை வரைந்து தருமாறு கேட்டபோது திரு. இராமநாதன் அவர்களின் முன்னுரையையும் தீட்சிதரின் நூலையும் பலமுறை படித்துப் பார்த்த பிறகு என்ன எழுதுவதென்று எண்ணிப் பார்த்தேன். மொழிஞாயிற்றின் முன் ஓர் அகல்விளக்காய் மொழி யாய்விற்குள் ஒளிரும் என் தமிழ் மனம் தமிழின் மொழி முதன்மையை யும், குறிப்பாகத் தமிழ், ஆரியத்துக்கு மூலமாயிருப்பதையும் விளக்கி எழுதினால் அது தமிழ் உள்ளங்கட்குத் தெம்பாக இருக்குமென்று முடிவு செய்தேன். அந்த முடிவின் தீர்ப்பே இம் மொழி முகப்பு. தமிழர் களே தமிழொளியை உணர்ந்து பெருமை பெறுங்கள். தமிழர்களே ! வரலாற்றில் நிமிர்ந்து உலகுக்கு வழிகாட்டுங்கள். நமக்கு இந்தத் தகுதி உண்டு. இந்த முகப்புரையை வரைய வாய்ப்பளித்த திரு. கோ. இளவழகனாருக்கு நன்றி கூறி இம் மொழி முகப்பு என்னும் முன்னுரையை முடிக்கின்றேன். முனைவர் கு. அரசேந்திரன் பதிப்புரை ''உலக முதற்றாய் மொழி தமிழே' என்று வலுவாக நிறுவியவர் மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்கள் . மாந்த நாகரிக வரலாறு தெற்கிலிருந்து தொடங்கியிருக்கிறது என்று அவர் கூறுவார். அவர் போற்றிய வரலாற்று அறிஞர்களுள் ஒருவர் வி. ஆர். இராமசந்திர தீட்சிதர். தமிழரின் தோற்றம், பரவல், நாகரிகம் பற்றி போலியான ஆதாரங்களைக் காட்டியோ காழ்ப்புணர்வுடனனோ சில வரலாற் றறிஞர்கள் வம்படி வழக்காடல்கள் செய்தனர்; செய்து வருகின்றனர். ஆனால் அன்றைக்கும், இன்றைக்கும் இத்தகைய பொய்யுரைகளைத் தோலுரித்துக் காட்டும் மெய்யான முயற்சிகளும் நடந்து வருகின்றன. அவ்வகையில் அறிஞர் வி. ஆர். இராமச்சந்திரனார் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி அது ஆங்கிலத்திலேயே The origin and Spread of the Tamils என்று நூலாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதை நம் காலத்தில் வாழும் வரலாற்று ஆய்வாளர் பாவாணர் வழியிலே ஆய்வு நடைபோடும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அருமையாகத் தமிழாக்கம் செய்துள்ளார். அதுவே உங்கள் கையில் தவழ்ந்து கொண்டிருக்கும் இச்சிறு நூல். அறிஞர் வி. ஆர். இராமச்சந்திரனார் "தமிழர் தென்னிந்தியாவின் தொல்குடிகளே; அவர்கள் மெசபதோமியாப் பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுவது தவறு; தொல்தமிழரே பழங்காலத்தில் தென்னிந்தியாவில் லிருந்து உலகெங்கும் பரவினர், சிந்துவெளி எலாம், சுமேரியா, எகிப்து போன்ற பண்டைய நாகரிகங்களை எல்லாம் உருவாக்கியவர்கள் இங்கிருந்து அங்குப் பரவிய தமிழர்களே!'' என்ற உண்மைகளை ஆணித் தரமான சான்றுகளுடன் இச்சிறு நூலில் நிறுவுகிறார். சொற்பொழிவு என்பதால் நூல் நாற்பது பக்கங்களில் சுருங்கியுள்ளது. ஆனாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் முறையில் 59 கருத்துகளாக நூலினுள் தரப்பட்டுள்ளது. இன்றைக்கு இங்குள்ள அரசியல், இனவியல் தாக்கங்களினால் உண்மையான முழு அளவிலான ஆய்வுகள், அகழ்வாய்வுகள் நடத்தப்படவில்லை; தொன்மத்தில் கூறப்படும் சரசுவதி ஆறு இதுதான் - என்று அகழ்வாய்வு செய்து போலியாகக் காட்டப் பட்ட நிலையை சில ஆண்டுகளுக்கு முன் கண்டோம். கிடைத்திருக்கிற சில ஆதாரங்களே இருளைக் கிழித்துக் கொண்டு கதிரொளி வெளி கிளம்புவது போல் தமிழர் தோற்றம், பரவல், நாகரிகப் பெண் பாட்டுக்கு அச்சாரமும், ஆணிவேருமாக நிற்கின்றன. இன்னும் உண்மையான அகழ்வாய்வுகள் முழு அளவிலான அகழ்வாய்வுகள் தரையிலும், கடலிலும் இங்கு நடத்தப்படும் பொழுது பொய்மையாளரும், எதிரிகளும், இரண்டடிகர்களும் தங்கள் தாவலின் முனையை முறித்துத் தூக்கிப் போட்டுவிட்டு வாயைப் பொத்திக் கொண்டு தலைதெறிக்க ஓடும் நிலை கட்டாயம் ஏற்படும். மூன்று மாதங்களுக்கு முன் மயிலாடுதுறை செம்பியன் கண்டியூரில் திரு. வி. சண்முகநாதன் அவர்கள் கண்டெடுத்த புதுக்கற்காலக் கருவியில் இருந்த சிந்துவெளி, எழுத்துக்களை அறிஞர் ஐ. மகா தேவன் அவர்கள் முருகு அன் முருகன் என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு. 2000 - 500 ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். சிந்துவெளி மக்களும், புதுகற்காலத் தமிழ் மக்களும் ஒரே மொழியையே (தமிழ் பேசினார் என்பதை இக்கண்டு பிடிப்பு நிறுவுவதாகவும் தெரிவித்துள்ளார். 15 2006 இந்த நாளிதழ் மேலும் அறிஞர் வி. ஆர். இராமச்சந்திரனார் அவர்கள் இந்நூலில் சில வியப்பான செய்திகளையும் தருகிறார். எடுத்துக்காட்டாக கி.மு. 5ஆம் நூற் றாண்டிலேயே கிரேக்கர்கள் இங்கிருந்து மயில்களை இறக்குமதி செய்தனர் என்ற செய்தியைக் கூறலாம். மயிலாடுதுறை என்றும், மயிலம் என்றும் மயில் ஆர்க்கும் ஊர்; (மயிலாப்பூர்) என்றும் அழைக்கப்படும் ஊர்களில் கூட இன்று மயில் இல்லை என்றே கூறலாம். ஆனால் மயில்கள் ஏற்றுமதிச் செய்தியை நம்பக்கூடிய சான்றாக 'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் " என்னும் குறள் அமைகிறது. இன்னும் சொல்வ தென்றால் திரு வள்ளுவர் இக்குறளில் 'மயில் இறகை ஏற்றிய வண்டி' என்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன் உவமையாகக் கூறப்பட்ட இந்த வரலாற்றுச் செய்தியும் இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கதாகும். உதிர்ந்த மயிலிறகுகளே இந்த அளவு என்றால் மயில்கள் ஏற்றுமதி என்பதை நம்பாமலிருப்பதோ? சூயஸ் கால்வாய் செய்தியும், சீனாவின் 'சென்' மதம் தோன்றக் காரணம் காஞ்சிபுரத்திலிருந்து அங்குச் சென்ற ஓர் அரசக்குமரன் என்ற செய்தியும் இன்னும் இது போன்ற செய்திகள் நூலினுள்ளே நன்முத்து களாகக் கோக்கப்பட்டுள்ளன. தமிழ்நாகரிகத்தின் அடிப்படை ஒருமைப்பாட்டைத் தெளிவாக நிறுவும், பல்வேறு செய்திகள் நூலினுள் புதைந்து கிடக்கின்றன. கலைகள், கைத்தொழில்கள், சமயம் முதலிய துறை களில் பண்டைய உலகிற்கு நாகரிகக் கொடை நல்கியது நம் பழந்தமிழ் இனமே என்பதை நிலை நிறுத்தும் நூலிஃது. தென்னிந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்து கடல் கொண்ட தென்னாடுதான் தமிழரின் தாயகம் என்றுரைக்கும் அறிஞர் விஆர். இராமச்சந்திர னார், ஓமர் எழுதிய இவியது பாவியத்னத இடையறாது தன் மனத்தில் கொண்டிருந்த டாக்டர் சிலிமன் தன் அகழ்வாய்வுகளால்ட்ராய், மிசினே, டிரன் முதலிய நாகரிகச் சின்னங்களை வெளிக்கொணர்ந்ததை விடவும் வியப்பை விளைவிக்கும் சின்னங்கள் தமிழகப் பகுதிகளில் விரிவான அகழ்வாய்வில் கிடைக்கும் என்ற தன் தணியாத தாகத்தை வெளியிடுகிறார். அவரது ஏக்கத்தைத் தீர்க்கும் திசை நோக்கி நாம் செல்ல வேண்டிய குறிக்கோள் நம்மிடம் குடி கொள்ள வேண்டும் என்று பெருவிருப்பத்துடன் இந்நூலை வெளியிடுகிறோம். இருள் விலகட்டும்! உண்மைகள் வெளிவரட்டும். தமிழர் வாழ்வு சிறக்கட்டும்! இந்நூலினைத் தமிழாக்கமாய்த் தந்திருக்கும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் மூலநூலின் கருத்து சிதையாமல் சூடும் சுவையும் குன்றாமல் அதைச் செய்திருக்கிறார். அது மட்டுமின்றி 41 பக்க நூலுக்கு 27 பக்கங்களில் முன்னுரையும் தந்துள்ளார். அறிஞர் வி. ஆர். இராமசந்திரனாரின் முடிவுகளை அவர் காலத்துக்குப் பின்னர் நிகழ்ந்த மாந்தனின் தோற்றமும் பரவலும் பற்றிய இன்றைய அறிவியல் முடிவுகளும், அண்மையில் நடந்த அகழ்வாய்வுகள் சிந்துவெளி எழுத்துகள் தொல்தமிழே' என்ற இன்றைய வல்லுநர் முடிவுகளும் ஆதரிப்பதை அழகுபடத் தொகுத்து ஆணித்தரமாக நம் முன் வைத்துள்ளார். இம் முன்னுரையை அரிதின் முயன்று மிகவும் பாடுபட்டு மேலாய்வு ஆராய்ச்சி யுரையாக எழுதியிருக்கிறார் என்பதை முன்னுரையில் உள்ள செய்திகளும் புள்ளி விளத்தங்களும் நமக்குப் புரிய வைக்கின்றன. மேலும், முன்னுரைக்கான ஆதார நூற்பட்டியலே மூன்று பக்கங்கள் வருமளவுக்கு உள்ளதைக் காணும்போது முன்னுரையின் சிறப்பு, தெள்ளிதின் புலப்படும். அன்னார்க்கு எம் நனி நன்றி மிகவும் உரித்தாகுக! 'மொழி முகப்பு எனும் தலைப்பில் சொல்லாக்க அறிஞர் முனைவர் கு. அரசேந்திரன் மிகச் சிறந்த ஆய்வு முகப்புரையை இந்நூலுக்கு வழங்கிப் பெருமை சேர்த் துள்ளார். இவர் தென்மொழி மரபினர். பாவலரேறு பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு பாவாணர் வழி சிந்திக்கும் தனித்தமிழறிஞர், மொழி, இன மேன்மைக்கு உழைத்துவரும் இவ்வறிஞரின் ஆய்வுரையைப் பதிவு செய்வதில் பெருமைப்படுகிறோம். இவருக்கு எம் நன்றி. பதிப்பாளர் பொருளடக்கம் முன்னுரை தமிழக வரலாற்றாசிரியர்களில் தலைசிறந்த சிலருள் ஒருவர் வி. ஆர். இராமசந்திர தீட்சிதர் 1896 - 1953. அவர் 1940 நவம்பர் மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சங்கரா - பார்வதி அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் இரண்டும் பின்னர் 1947இல் தமிழரின் தோற்றமும் பரவலும் The Origin and Spread of the Tamils என்னும் பெயரில் நூலாக வெளிவந்தன. பின்னர் 1950-இல் அவர் நிகழ்த்திய சர் வில்லியம் மெயர் (Mesm) அறக்கட்டளைச் சொற்பொழிவு வரலாற்றுக்கு முந்திய தென்னிந்தியா (Pistoric South India) என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. இரண்டு நூல்களிலுமே தீட்சிதர் வலியுறுத்தும் முடிவுகள் - தமிழர் தென்னாட்டின் தொல் குடிகளே; தமிழர் திராவிட மொழி பேகநர்) பழங்காலத்தில் மெசொபொதாமியா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்து தென்னாட்டில் குடியேறிய வந்தேறிகள் என்பது தவறு; மாறாகத் தொல்தமிழரே தொல் திராவிடரே) பழங்காலத்தில் தென்னிந் தியாவிலிருந்து வடக்கு, வடமேற்காகப் பரவி சிந்துவெளி நாகரிகம், எலாம், கமேரியா, எகிப்து போன்ற பண்டைய நாகரிகங்களை யெல்லாம் உருவாக்கினர் என்பனவாகும். 2. திராவிட மொழி பேசுநர் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் பரவியது எத்திசையிலிருந்து வடக்கிலிருந்து இந்தியாவிற்குள் இறங்கினரா? அல்லது (2) தெற்கிலிருந்து இந்தியாவிற்குள்ளும் அப்பாலும் பரவினரா? என்பது பற்றி கடந்த ஒன்றரை நூற்றாண்டு களாகக் கருத்து வேற்றுமை இருந்து வந்துள்ளது. இரண்டாவது கோட்பாட்டைப் பல்வேறு அறிவியல் புலங்களில் 1940 - 50 இல் இருந்த வளர்ச்சிநிலை அடிப்படையில் தீட்சிதர் மேற்சொன்ன நூல்களில் நிறுவியுள்ளார். 3. எனினும் இன்றும் பல நாடுகளிலுள்ள பல்துறை அறிஞர் களும் பொதுவாக ஏற்றுக் கைக்கொண்டுள்ள தவறான கருது கோளின்படித் தொல் திராவிட மொழிபோநர் தாயகம் வடகிழக்கு ஈரான் பகுதியாகும். அங்கிருந்து சுமார் கி.மு 3000ஐ ஒட்டி அவர்கள் இந்தியா, தென்னிந்தியா, இலங்கையை நோக்கி அதாவது தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர். செல்லும் வழியில் பேருந்து வரும்பொழுது ஆங்காங்கு சிலர் இறக்கி விடப்படுவது போல், திராவிட மொழி பேசும் குழுக்கள் சில ஆங்காங்கு விட்டு வரப் பட்டன. [கே. வி. சுவலெபில் 1972) : "திராவிடர்கள் இறக்கம்" - The descent of the Dravidians; திராவிட மொழியல் பற்றிய பன்னாட்டு ஆய்விதழ் (I J DL) தொகுதி 2; பக். 57-63.) பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தில் திராவிட மொழிகள் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையிலும் இக்கருத்தையே கூறுகிறார். தமது தென்னிந்திய வரலாறு (IVம் பதிப்பு, 1976 நூலில் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் இது "நடந்திருக்கக் கூடாதது அல்ல" (not unlikly) என்கிறார். திராவிடர் இறக்கம் அல்லது ஏற்றம் என்ற இரண்டு கோட்பாடு களிலும் எதை ஏற்பது என்பது பற்றி இப்பொழுது முடிவுகூற இயலாது என்பவர்கள் சுவிரா ஜெய்ஸ்வால் 1974) ஜே. ஆர். மார் (1975), பர்டன் ஸ்டெய்ன் (1998) ஆகியோராவர். 4. திராவிட மொழி பேசுநாவடக்கு நோக்கிப் பரவினர் என்னும் 'திராவிடர் ஏற்றம் (Davidian ascent from South) கொள்கையை ஏற்று வலியுறுத்தியுள்ள அறிஞர்கள் ஹெச். ஆர். ஹால், ஹராஸ் பாதிரியார், பிதிநிவாச ஐயங்கார், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் கா. சுப்பிரமணிய பிள்ளை , மறைமலையடிகள், யு. ஆர். எஹ்ரென் பெல்ஸ், சேவியர். தனிநாயகம் அடிகளார், ஞா. தேவநேயப் பாவாணர், கே.கே.பிள்ளை போன்றோர் ஆவர். 5 திராவிடர் ஏற்றம்" (Dravidian Ascent) கொள்கையை அன்றே வலியுறுத்திய தீட்சிதர் முடிவை அவர் காலத்துக்குப்பின் நிகழ்ந்த (1) மாந்தனின் தோற்றமும் பரவலும் பற்றிய இன்றைய அறிவியல் முடிவுகள் (2) மொழியின் தோற்றமும் பரவலும் பற்றிய நம் கால அறிவியல் முடிவுகள் (3) அகழ்வாய்வுகள் (சிந்துவெளி மற்றும் கொற்கை, கொடுமணல், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அண்மையில் நடந்த அகழ்வாய்வுகள் (4) சிந்து வெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் தொல்தமிழே என்ற நம் காலத்திய வல்லுநர் முடிவுகள் ஆகியவையும் ஆதரிப்பதை நிரலே காண்போம். க. மாந்த இனத்தோற்றமும் பரவலும் 6. புடவியின் அகவை (பிரபஞ்சத்தின் வயது சுமார் 1200 கோடியிலிருந்து 1500 கோடி ஆண்டு வரை இருக்கலாம். உலகம் உட் படம் ஞாயிற்றுக் குடும்பத்தின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டு கள் ஆகும். உலகில் முதன் முதலில் உயிர்கள் தோன்றியது ஏறத்தாழ 300 கோடி ஆண்டுகட்கு முன்னர்தான். முதலில் தோன்றியவை பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிகளே இன்றுள்ள அனைத்துச் செடி கொடிகளும் விலங்கும் பறவைகளும் ஒரே மூலத்தில் தோன்றிய வையே ஆகும். இவ்வுயிரின வகைகளில் 15 இலட்சம் தனி இனங்கள் (Spees) கண்டுபிடிக்கப்பட்டுப் பெயர் சூட்டப் பட்டுள்ளன. இன்னும் இனம் கண்டு பிடிக்கப்படாதவையும், பெயர் சூட்டப் படாதவையும் (குறிப்பாக தாவரங்கள், நுண்ணுயிர்கள், சிற்றுயிர்கள்) மும்மடங்கு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இன்றைக்கு 24 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவையும் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு தடவையும் பேரழிவுகள் ஏற்பட்டு அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த உயிரினங் களுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மிகப் பெரிய விண் கொள்ளிகள் (Microors) உலகில் விழுந்ததால் அப்பேரழிவுகள் ஏற்பட்ட டிருக்கலாம் என்கின்றனர். இப்பொழுது உள்ள பாலூட்டிகள் (Mammals) அனைத்துமே 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஒரு சிறிய எலி போன்ற பருமனுடைய) விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவையே. குரங்குகளுக்கும் மனிதனுக்கும் மூதாதை யான லெமூர் (Lemur) விலங்கு (சுமார் 250 கிராம் எடை உருவான காலம் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். பூச்சிகள் தோன்றி கோடி ஆண்டும் எறும்புகள், தேனீக்கள் தோன்றி 10 கோடி ஆண்டும், கரையான் தோன்றி 20 கோடி ஆண்டும் ஆகின்றன. 7. மாந்தன் எப்படித் தோன்றினான் மாந்தக்குரங்கினத்துக்கும் (சிம்பன்சி , கொரில்லா) மாந்தனுக்கும் பொதுவான வேறு ஓர் உயிரினம் இன்றைக்கு ஏறத்தாழ 50 இலட்சம் ஆண்டுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் முடிவு. அந்தப் பொது உயிரினத்தின் பாசில் படிவுகள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை . Time: 1712000) இன்று உலகெங்கும் உள்ள 60 கோடி மாந்தர்களுமே அதாவது திராவிடர் இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியார், அமெரிக்க இந்தியர் ஆகிய அனை வருமே ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் (Home Sapiens Sapiens Anatomically Modern Humans) என்னும் ஒரே இனத்தைச் சார்ந்த வர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை இலக்கம் அல்லது ஓர் இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் இருந்து தோன்றியது என்பது இன்றைய அறிவியலாளர் அனைவரும் ஏற்ற முடிவு. எனினும் ஏறத்தாழ மாந்தனையொத்த முன்மாந்தHo. mid)" இனங்கள் கடந்த 48 இலட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல இலட்சம் ஆண்டு வாழ்ந்து பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்து விட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டஸ் என்ற இனமும் அடங்கும். அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும் பரவியிருந்தது. குரோமக்னான் மனிதன், பீகிங் மனிதன், ஹடல்பர்க் மனிதன், காவக மனிதன், அத்திரம்பாக்கம் பாசில் மனிதன் ஆகியவர்கள் சுமார் 3 இலட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள் இந்த ஹோமோ எரக்ட்ஸ் வகையைச் சார்ந்தவர்களே. ஐரோப்பாவில் 4000 ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிக்கப்பட்டுவிட்ட நியான்டர்தல் (Neandarthal) இனமும் முன்மாந்த இனமே). 8. இப்பொழுதுள்ள மாந்தர்களாகிய AMH வகையைச் சார்ந்த நம் மாந்த இனம் கடந்த ஒன்று அல்லது ஒன்றரை இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பின்வருமாறு பரவியது; அதாவது, சைபீரியாவுக்கு இன்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னரும் ஐரோப்பாவுக்கு 40,000 வட/தென் அமெரிக்காவுக்கு 30,000 - 12,000 ஆஸ்திரேலியாவுக்கு 50,000 ஜப்பானுக்கு 30,000 நியூகினி தீவுக்கு 32,000 பசிபிக் தீவுகளுக்கு 4000 – 1000 (மைக்ரோனிசியா, பாலினீசியா) பரவினர் என்பது வல்லுநர் கருத்து ஆகும். கண்டங்கள் நகர்வுக் கொள்கையின் படி (Continental drift) கண்டங்கள் கடந்த 25 கோடி. ஆண்டுகளாகப் பிரிந்து நகர்ந்துள்ளன. எனினும் உலகில் இன்று உள்ள கண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ இப்போதுள்ள உருளை சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்துவிட்டன. அதற்குப் பின்ன ர், கண்ட ம் அளவுக்கு Continental proportions) பெரு நிலப்பகுதி எதுவும் கடலுக்குள் மூழ்கவில்லை . ஆயினும் பனியூழி முடிவில் கி.மு 300 வாக்கில் பனிக்கட்டி உருகி கடல் மட்டம் சுமார் 300 அடி உயர்ந்ததால் உலகெங்கும் கடலோரப்பகுதி ஸேtinentalhell) சுமார் - இருநூறு மைல் அளவுக்கு கடலுள் மூழ்கியது. அவ்வாறு அக்கால கட்டத்தில் தமிழகத்தைச் சுற்றியும் தென் திசை உட்பட) சில நூறு மைல் கடலுள் மூழ்கியிருக்கலாம். அவ்வாறு மூழ்கிய நிலப்பகுதியையே சங்க இலக்கியங்களும் களவியல் உரையும் கட்டு கின்றன என்பதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாகும். ஆப்பிரிக்காவிலிருந்து மனிதன் சுமார் 5000 ஆண்டுகட்கு முன்னர் ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா போன்ற பகுதிகளுக்குச் சென்றது தென்னிந்தியா வழியாக இருக்கலாம், அக்காலகட்டத்தில் இப் பொழுது உள்ளது போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன வெனினும் நிலப்பகுதி சில நூறுமைல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக்கரைசார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கடலோர நிலப்பகுதியில் (Continental Shell) ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இதுபற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் பிளெமிங் (2004). இன்றைய மனிதனிடம் உள்ளவை 23x2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. ஒன்றரை விழுக்காடே மரபணு நிலை யில் சிம்பன்சியிலிருந்து மனிதன் வேறுபட்டவன் என்றாலும் மனிதன் எவ்வளவு மாபெரும் கொடூரமான உயிரியாக மாறி விட்டான்!). 9. கண்டங்கள் நகர்வுக் கொள்கை, மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப் படையில் சங்க நூற்களிற் காணும் கடல்கோள் செய்திகளைத் தற்கால அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்குத் தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்தியைக் கலித்தொகை 104உம் சிலப்பதிகாரம் காடுகாண் காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய (கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளம்பூரணரும் இதைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச் செய்தியை மேலும் விரிவுபடுத்தி, சற்று மிகைப்படுத்திக் கூறுகின் றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும் இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு: i) ச. சோமசுந்தர பாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV ii) வி. ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு தமிழியன் ஆண்டிகுவாரி II - 1 iii) மறைமலையடிகள் (1930) : மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் iv) ஏ. எஸ். வைத்யநாத ஐயர் (1929) : ''கீழைநாடுகளின் பிரளய தொன்மங்கள்'' : பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II - 1 v) ஜே. பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI vi) ஹீராஸ் பாதிரியார் (1954) தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக். 411-439 சதபத பிராமணம் 1, 8 முதலியவற்றில் கூறப்படும் "மனு பிரளயம் " திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) உம் (iv) உம் கூறுகின்றன. சுமேரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (1) உம் (vi) உம் கருதுகின்றன. 10. இந்திய மாக்கடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும் கருதி அதற்கு "லெமூரியா' என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவியலறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன கண்டம் அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு எதுவும் எந்தக்காலத்திலும் கடலுள் மூழ்கிடவில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். தற்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and late tohtami யாகும். ஆயினும் கி.மு. 8000ஐ ஒட்டி ஊர்ம் (WURM) பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு - முந்நூறு மைல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கிவிட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தியாவையும் இணைத்தவால் போன்ற நிலப்பகுதிகளும் சில பின்னர் மூழ்கி விட்டவை) இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. (வால்டர் பேர் சர்வீஸ் ; The Roots of Ancient India 1971) லெமூரியாக் கண்டம் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூடச் க. சோமசுந்திரபாரதி, மயிலை சீனி வேங்கடசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவினதன்று; சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர். கா. அப்பாத்துரையாரும் 'கடல் கொண்ட தென்னாடு என்று குறிப்பிட்டதை உணர்க. இப்பொழுது லெமூரியாக் கண்டம் கொள்கை ஆதாரமற்றது என்று நிறுவப்பட்டு விட்டதைச் சாக்காக வைத்துக் கொண்டு சுமதி இராமசாமி தனது கற்பனைப் புவியியலாளர்களும், பேரழிவு வரலாறுகளும்; முழ்கிவிட்ட லெமுரியா : Tabulous geographers catastrophicistoric The Lost Lemuria (2004: பெர்மனென்ட் பிளாக், டெல்லி) என்னும் நூலில் ''கடல் கொண்ட தென்னாடு '' பற்றி எழுதிய தமிழறிஞர்கள் அனைவரையும் தாக்கி ஏளனம் செய்துள்ளார். 1950களுக்குப் பின் "லெமூரியாக் கண்டக்" கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். ஆனால் சுமதி இராமசாமி ஒன்றைக் குறிப்பிட மறுக்கிறார். அது என்ன? கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழ் அரசு 1972 இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு - தொல் பழங் காலம் போன்ற நூல்கள் குறிப்பிடுவதை அவர் கண்டு கொள்ள வில்லை. அன்றைய நாடு என்பது "இந்தியா" தமிழ்நாடு போன்ற பெருநிலப் பகுதியன்று இன்றைய வட்டத் தாலுகாந்திற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்து கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டி யதேயில்லை . முன் பாதியில் சுகூறியது போல கிமு. 8000 ஐ ஒட்டி கண்டத்திட்டுப் பகுதி கடலில் மூழ்கியதையே சங்க நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் கழக (சங்க இலக்கிய கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றம். (காண்க பி. இராமநாதன் 1998, 2003, 2004) 11. இவ்வாறு தமிழ் தமிழரைத் தாக்கி எழுதுவது இல் வாசிரியருக்கு வழக்கமானதே. தி இந்தியன் எகனாமிக் அண்ட் சோசியல் ஹிஸ்டரி ரிவியூ 38 -2 ஏப்ரல் - சூன் 2011 இதழில் சுமதி ராமசாமி இனங்களின் எச்சங்கள் : தொல்லியல் தமிழ்த் தேசிய உணர்வு, சிந்துவெளி நாகரிகத்தின்பால் ஈர்ப்பு என்று ஒரு கட்டுரை எழுதினார். சிந்துவெளி நாகரிகமும் அந்நாகரிக முத்திரை எழுத்துகளும் திராவிடம் தொல்தமிழ் சார்ந்தவையே என்று சிறந்த ஆய்வாளர்கள் கமில் சுவெலபில் 1990 : திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம், இயல்: திராவிட மொழிகளும் ஹரப்பா மொழி யும்) அஸ்கோ பர்போலா (ப்ரண்ட்லைன் அக் 24, 2000) கருதுவதை யெல்லாம் அக்கட்டுரையில் சுமதி ராமசாமி கண்டு கொள்ள வில்லை. சிந்துவெளி நாகரிகத்தின் தமிழ்ச் சார்பை வலியுறுத்தும் தமிழறிஞர்களையெல்லாம் (பர்போலா, பார்சர்ஸ், கவலெபில் போன்றவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதுபவர்கள் உட்பட), அவர் எள்ளி நகையாடியுள்ளார்.) உ. மொழியின் தோற்றமும் பரவலும் 12. இன்று பின்வரும் விவரப்படி ஏறத்தாழ 6000 மொழிகள் உலகில் பேசப்பட்டு வருகின்றன: ஒவ்வொரு மொழிகள் (2)இல் கண்ட மொழியையும் எண்ணிக்கை மொழிகளைப் பேசுநர் பேசுவோர் தொகை எண்ணிக்கை (கோடியில்) (1) (2) (3) (1) 10 கோடிக்கு மேல் 8 மொழிகள் (சீனம், ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி, வங்காளி, போர்ச்சுகீசு, ரசியன், சப்பானியம் 240 கோடி (ii) - 10 கோடி 72 (இந்த 72 மொழிகளையும் (6 கோடி பேர் பேசும் மற்றும் அடுத்த நிலை 239 தமிழ் இப்பிரிவில் மொழிகளில் பேசுவோர் அடங்கும்) எண்ணிக்கை ' அடிப்படையில் முதல் 162 மொழிகளையும் சேர்த்து மொத்தம் 234(72+162) மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை) 336 கோடி (iii) 10 இலட்சம்.1கோடி 239 (iv)1 இலட்ச ம் 10 இலட்சம் 795 ii) இல் எஞ்சிய 77 10000 -1 இலட்சம் 1605 (239-12) மொழிகளையும் 2400 (IV) (v) இல் குறித்த 5740 மொழிகளையும் பேசுவோர் எண்ணிக்கை 24 கோடி (v) பத்தாயிரம் பேருக்கு குறைவு 1000 - 9999 1782 100 – 999 1075 10 - 99 302 1- 9 181 3340 3340 6059 மொழிகள் - 600 கோடி மக்கள் (இந்தி, மைதிலி, ராஜஸ்தானி முதலியவற்றை ஒரே இந்தி மொழியாகக் கொள்வதா? தனித்தனி மொழிகளாகக் கொள்வதா? இது பற்றி எல்லாம் மொழியிலாளரிடம் கருத்து வேறுபாடு உண்டு. 6000 அல்லது 6059 என்பதெல்லாம் ஒரு குத்துமதிப்பேயாகும். இந்த 059 மொழிகளில் 4 சதவிகிதம் ஆகிய 242 (8+72+162) மொழிகளைப் பேசுவோர் எண்ணிக்கையான 576 கோடியானது மொத்தம் 600 கோடி மக்களுள் 95 சதவீதம் ஆகும், மீதி 95 சதவீதம் ஆகிய 587 மொழிகளைப் பேசுவோர் வெறும் 24 கோடி மக்களேயாவர் (அறுநூறு கோடியில் அவர்கள் வெறும் நான்கு விழுக்காட்டின ரேயாவர்) 13. இன்று உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் ஒரே முதன் மொழியிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்ற கொள்கை 19 ஆம் நூற்றாண்டின் மாக்ஸ்முல்லருக்கும் இசைவானதே. 20 ஆம் நூற்றாண்டில் ஞால முதன் மொழி ஆய்வில் ஈடுபட்ட மேனாட் டறிஞர்கள் பெதர்சன், திராம் பெத்தி, சுவாதெசு, கிரீன்பெர்க், மெரிட் ரூலன், இல்லிச் சுவிதிச், தால் கோபால்ஸ்கி, செவரோஸ்கின், ஸ்தாரோஸ்தின், பாம் ஹார்டு மற்றும் கெர்ன்ஸ் போன்ற பலராவர். பல்வேறு மொழிக் குடும்பங்களையும் பின்வருமாறு ஒரு சில பெருங் குடும்பங்களாக (Super families) வகைப்படுத்தலாம் என்பது அவர்கள் கண்டுள்ள உண்மையாகும். i) நாஸ்திராடிக் (இந்தோ - ஐரோப்பியன், திராவிட மொழிகள், உராலிக், அல் தாய்க், கார்த்வெல்லியன், ஆப்ரோ - ஏசியாடிக் - அதாவது செமித்திய - ஹாமித்தியக் குடும்பம், ஆகிய மொழிக் குடும் பங்கள் இதில் அடங்கும்). கிரீன்பெர்க் வகுத்துள்ள யூரேசியாடிக் பெருங்குடும்பத்துக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை. யூரேசியாடிக் - கில் அடங்கியவை எத்ருஸ்கன், இந்தோ - ஐரோப் பியன், உராலிக் - யூகாகீர், அல் தாய்க், கொரியன் - சப்பானியம் - ஐனு, கில்யாக், சுகோதியன், எஸ்கிமோ - அல்யூத் ஆகிய மொழிக்குடும்பங் களாகும். 2000 அக்டோபரில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பத்ரி ராஜ கிருஷ்ணமூர்த்தியை கிரீன் பெர்கு சந்தித்த பொழுது, "திராவிட மொழி யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் சகோதரியாக இருக்கலாம். மகளாக இருக்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளார். (Bh. Krishnamurthi. The Dravidian Languages; 2003, பக். 46). இதிலிருந்து ஸ்லாவ், இரானியன், வேதமொழி சமஸ்கிருதம், கிரீக், இலத்தீன், கெல்திக், செருமானியம் போன்ற மொழிக் குடும்பங்களுக் கெல்லாம் தாயான இந்தோ ஐரோப்பியத்தை விடத் தொன்மை வாய்ந்தது திராவிட மொழிக்குடும்பம், அதாவது பழந்தமிழ் என்று உணரலாம். ii. சீன - காகேசியன் iii. ஆஸ்திரிக் (முண்டா போன்றவை) iv. அமெரிக்க இந்திய மொழிகள் v இந்தோ - பசிபிக் vi. கொய்சான் vii. காங்கோ - சகாரா 14. மொழிக்குடும்பங்களை இணைத்து அவற்றுக்கு மூலமான மொழிப் பெருங்குடும்பங்களை நிர்ணயிக்கும் ஆய்வாளர்களுள் சிலர் அதற்கும் மேலே போய் ஞால முதன்மொழி . (மாந்தனின் முதல் தாய்மொழி) ஆய்வுக்கும் சென்றுள்ளனர். மெரிட் ரூலன் தனது மொழிகளின் தோற்றம் - மொழிகளின் கொடிவழி ஆய்வு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், 1994) நூலின் பக்கம் 277 இல் கூறுவது வருமாறு: ''பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளாவிடினும் அல்லது ஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்று இறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ள மொழிகள் உட்பட) ஒரே ஞாலமுதன் மொழியிலிருந்துதான் தோன்றின என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது'' அந்நூலின் பக்கங்கள் 277 - 366 இல் 27 முக்கிய மான கருத்துகளுக்கு பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் உள்ள சொற்கள் "Global Etymologies" தரப்பட்டுள்ளன. அக்கருத்துக்களுக்கு ஞால முதன் மொழியில் என்ன வேர்ச்சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடியாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்கு) தமிழ்ச் சொற்களே பொருள் பொதிந்தனவாகவும் ஞாலமுதன்மொழியின் வேர்ச்சொல் வடிவை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. 15. இராபர்ட் கால்டுவெல் 1856இல் தனது திராவிட அதாவது தென் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் மாபெரும் நூலை வெளியிட்டார். (திருந்திய விரிவான இரண்டாம் பதிப்பு 1875) ஒருபுறம் திராவிட மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள் எலாமைட் மொழி சித்திய (இப்பொழுது "உரால் - அல்டாய்க்') மொழிகள் சப்பானிய மொழி ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள், சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி ஏராளமான தகவல்களை அவர் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன்மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியை ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கிய திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளில் லிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை அச் செய்திகள் வலுவாக நிறுவின. கால்டுவெல் கோடிட்டுக் காட்டியதை மேலும் நுணுகி ஆராய்ந்து "மாந்த இனமுதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும்; மிகத் தொன்மை வாய்ந்த தொல்தமிழே (தொல் திராவிடம் என அழைக்க விரும்புவார் அவ்வாறே அழைக்கலாம், மறுப்பில்லை. அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் (இந்தோ - ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப் படவேண்டும்" என்ற கோட்பாட்டை மேலும் ஆழமாக விரிவாக நிறுவியவர்கள் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும் ஞா. தேவநேயப் பாவாணரும் ஆவர். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப மொழி களின் (ஏன் பிறமொழிக் குடும்ப மொழிகளுக்கும் தான்) அடிப்படைச் சொற்கள் பலவற்றுக்கு ஞானப் பிரகாசரும் பாவாணரும் நூற்றுக்கணக்கான பொருத்தமான தொல் - திராவிட வேர்ச் சொற் களை இனம் காட்டியுள்ளனர். 1953 இல் ஞானப்பிரகாசர் தெரிவித்த கருத்து வருமாறு: ''இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வேர்கள்' என உன்னிக்கப் படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறியீடுகள்தாம். திராவிட மொழி வேர்களோ வெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளையும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்டமுள்ள முளைக்கரு போலத் தோன்றும்; எந்தக் கருத்தோட்டத்தில் பல்வேறு சொற்கள் உருவாயின என்பதைத் தெற்றென அவை காட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்தன்மை அவற்றுக்கு இல்லாததால் இந்தோ ஐரோப்பிய "வேர்கள்" இருள் மண்டிய பொருளற்ற வெறும் ஒலிக் குவியல்களாகவே தோன்றும். அவற்றுக்கும் தெளிவு தந்து ஒளி காட்டி உயிரூட்டம் தரக்கூடியவை திராவிட மொழி வேர்கள் தாம்". பிறமொழி வேர்களுக்கும் இக் கருத்து பெரும் அளவுக்குப் பொருந்துவதாகும். சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் (1929) ஞானப் பிரகாசர் "மொழியின் தோற்றம்" என்ற கட்டுரையில் ''இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன்மொழியின் தோற்றத்திற்கான ஆதாரங்கள் தமிழில்தான் கிட்டும்" என முழங்கியிருந்தார். (Tamil Supplies this long looked for clue to finding the true origin of the proto - Indo - European language) 16. திராவிட மொழிகளுக்கும் பிற மொழிகளுக்கும் இடையே யுள்ள உறவுகள் குறித்து இதுவரை பின்வரும் ஆய்வுகள் நிகழ்ந் துள்ளன: நாஸ்திராடிக் / யூரேசியாடிக் பெருங்குடும்பம் 1.திராவிடமும் இந்தோ ஐரோப்பிய கால்டுவெல், போப், ஞானப்பிரகாசர், மொழிகளும் தேவநேயன், இளங்குமரன், மதிவாணன், இலியிச் - சுவிதிச், அருளி, அரசேந்திரன்; ஸ்டேபான் ஹில்யர்லெவிட். (பாவாணர் தமது ஆய்வு நூல்களில் கண்டு நிறுவியுள்ள தமிழ் - இந்தோ ஐரோப்பிய / ஆரிய ஒப்புமைச் சொற்களில் நூற்றுக் கணக்கானவை ஏற்கத்தக்கவை (reasonable and perceptive) என்று டாக்டர் ஸ்டெபான் ஹில்யர் லெவிட் அண்மையில் இந்தோ ஐரோப்பிய (மொழியியல் ஆய்விதழில் (மடலம் 28:3-4; 2000 சூன் - திசம்பர் பக்கம் 407 - 438 இல் ) வெளியிட்ட தம் கட்டுரையில் ஏற்றுள்ளார். மேலும் 2000 இல் வெளியான "இந்தோ ஐரோப்பிய மொழிகளும் அவற்றொடு நெருங்கிய உறவுடையனவும் : யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம்: மடலம் இலக்கணம்" என்னும் நூலில் கிரீன்பெர்க் யூரேசியாடிக் பெருங்குடும்பத்தின் முக்கியமான இலக்கண ஒப்புமைகள் 72 - ஐக் குறிப்பிட்டுள்ளார். அந்த 72 இனங்களில் 20-க்கு மேற்பட்டவற்றுக்குத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் பொருந்தி வருகின்றன.) 2. திராவிடமும் உரால் - அல் - கால்டுவெல், பரோ, மெங்கெஸ், டாக்ய மொழிக்குடும்பம் டைலர் , அந்திரனாவ், வாசக், ஹெச்.பி.ஏ. ஹகோலா, சாலெக் 3. திராவிடமும் எலாம் மொழியும் (கி.மு. 3000க்கு முன்னர் மெசபொதாமியா விற்குக் கிழக்கே எலாம் நாட்டில் பேசப்பட்டது) மக் - அல்பின், கே. வி. சுவலெபில் 4. திராவிடமும் சப்பானியமும் சுசுமு ஓனோ; பொன். கோதண்டராமன்; ஹெச்பிஏ ஹகோலா, சுவெலபில் 5. திராவிடமும் கொரிய மொழியும் ஹுல்பர்ட்; பவுண்துரை 6. திராவிடமும் எத்ருஸ்கன் ஸ்டென் கோனோ; மொழியும் (கி.மு1000 - 300 இரா. மதிவாணன் அளவில் இத்தாலியில் பேசப்பட்டது) (கமில் சுவெலபில் 1990 இல் வெளியிட்ட "திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம்" என்னும் நூலின் பக்கங்கள் 99 - 122 இல் மேலே குறித்த 2-4 தொடர்புகள் பற்றி விரிவாக ஆராய்கிறார்; தொல் திராவிட மொழி, எலாமைட், தொல் உரால் - அல்டாய்க் மொழி, சப்பானிய மொழி ஆகியவை சுமார் கி.மு. 10000க்கு முன்னர் ஒன்றாக இருந்து பிரிந்தவையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.) மொழிப் பெருங்குடும்பங்களில் ஏனையவை 7. திராவிடமும் சுமேரியா ஹீராஸ், ஏ சதாசிவன், மொழியும் (கி.மு. 3000க்கு ஜே. வி. கின்னியர் வில்சன்; முன்னர் பேசப்பட்டது) ஹெச்.பி.ஏ. ஹகோலா 8. திராவிடமும் மின்னியும் ஜி.டபுள்யூ. பிரவுன் (1930) (கி.மு. 1500க்கு முன்னர் வடக்கு சிரியாவில் பேசப்பட்டது) 9. திராவிடமும் பாஸ்கு ஹீராஸ், லாகோவரி ; மொழியும் (ஸ்பெயின்) பெனான்ஸ் பிக்னு சாலெக். 10. திராவிடமும் ஆஸ்தி நாரிஸ், பிரிச்சார்டு, ரேலியப் பழங்குடி மக்கள் ஆர். எம்.டபுள்யூ. டிக்சன், மொழிகளும் (இப்பழங்குடி மக்கள் கடந்த 8000 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் வேறெந்த மக்களுடனும் தொடர்பின்றி வாழ்பவர்கள்) பி. இராமநாதன் (1984) 11. திராவிடமும் கொஷவா டாக்டர் சீனிவாசன்; மொழியும் (தென் அமெரிக்க சாமன்லால், ஹெச்.பி. ஏ. பெருநாடு) ஹகோலா (புத்தக இறுதியிலுள்ள நிலப்படம் இம் மொழிகள் பேசப்படும் இடங்களைக் காட்டும்) திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையிலுள்ள மிக நெருங்கிய ஒப்புமையை பி. இராமநாதன் (குப்பம்) திராவிடப் பல்கலைக்கழகத்தின் திராவிடி யன் ஸ்டடீஸ் I-3; ஏப்ரல் - சூன் 2003 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரை விரிவாக நிறுவுகிறது. தொல் திராவிட மொழி பேசுநர் தென் இந்தியாவில் கண்டிப்பாக 10000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இருக்க வேண்டும் என்பதையும் இங்கிருந்து அதற்கு முன்னரே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தொல் தமிழ் மக்களிடம் மிருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும் என்பதையும் அக்கட்டுரை நிறுவுகிறது. ங. தொல் திராவிட மொழி பேசுநர் பரவியது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியே யாகும்; தமிழர் இந்தியாவின் தொல்குடிகள். 17. திராவிட மொழி பேசுநர் கி.மு 3000 -ஐ ஒட்டி இந்தியாவுக் குள் நுழைந்தனர் என்ற சுவெலபில் கோட்பாடு முன் பத்திகளிற் சொன்னவற்றோடு பொருந்தி வருகிறதா? மொழிப் பெருங் குடும்பங் களுக்கிடையேயுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர் பலர் இத்தவறான கோட்பாட்டினை ஒட்பம் இன்றிப் பின்பற்றி வருகின்றனர். எடுத்துக்காட்டாக ஆர். பிரெஞ்ச் எம். ஸ்பிரிக்ஸ் 1997இல் தொகுத்து வெளியிட்ட தொல் லியலும் மொழியும் : (1) கோட்பாட்டு ஆய்வு நெறிக் கருத் தோட்டங்கள் என்னும் நூலில் ரென்புரூ பின்வரும் முடிவைக் கூறுகிறார்: '' (மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து வேளாண்மைத் தொழில் மக்கள் பண்டு பரவத் தொடங்கியது பற்றிய) தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தொல் இந்தோ ஐரோப்பியன், தொல் ஆப்ரோ - ஏசியாடிக், தொல் எலாமைட், திராவிடம், தொல் அல்டாய்க் மொழிகள் ஆகிய மொழிகளைப் பேசியோர் அனை வரும் மிகச் சுருங்கிய மையக் கிழக்கு நிலப்பகுதியில் (சுமேரியா, எலாம், இன்றைய துருக்கி) உடன் உறைந்து இருக்க வேண்டும். இம் மொழிகள் எல்லாம் (நாஸ்திராடிக் மொழியியலாளர் கூறுவது போல) தொடர்புடையவையாக இருப்பது உண்மையானால் அவர்களெல்லாம் அப் பகுதியை விட்டுப் பிரிந்து விலகிய கி.மு. 8000 - 6000 காலக்கட்டத்துக்கு முன்னர் ஒருசில ஆயிரம் ஆண்டுகள் இம்மொழிகள் அனைத்திற்கும் மூலமான நாஸ்திராடிக் மொழி அந் நிலப்பகுதியில் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் ஒத்து வரும் வாதமாகும்.'' இவ்வாறு தொல் - நாஸ்திராடிக் பேசியவர்கள் அனைவரும் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கே மையக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்ற இந்தக் கோட்பாட்டையும் (அதன் தொடர்பான "இந்தியாவுக்குள் அங்கிருந்து திராவிடர்கள் இறங் கியது சுமார் கி.மு. 3000ஐ ஒட்டித்தான்' என்ற கோட்பாட்டையும் ) பொய்ப்பிப்பது திராவிட மொழிகளுக்கும் ஆஸ்ரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய பிணைப்பு ஆகும். இது பற்றி காலின் பி. மாசிகா 1999 இல் கூறியது குறிப்பிடத் தக்கது. "தென் ஆசியாவில் கழிபழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்த இனம் (சுமார் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத் தொடங்கிய கால கட்டமே தொல் திராவிட மொழியின் தொடக்க காலம் ஆகலாம்" (It may be a question of a very ancient common substratum in south Asia, Pre-Dravidian going back even to the original peopling of the world; The Year Book of South Asian Languages and Linguistics, 2001 New Delhi). 18. ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தற்கால மாந்த இனம் அல்லது Anatomically Modern Humans ஆப்பிரிக்காவில் தோன்றியது என்று கண்டோம். முதல் தாய்மொழி ஏறத்தாழ 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது எனக் கருதப்படுகிறது. இன்றைக்கு ஒரு இலட்சம் - 50000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தென்னிந்தியா வழியாகவே உலகின் பல பகுதிகளுக்கும் இக் (தற்கால மாந்த இனம் பரவியது என்க. இவ்வாறு வடக்கு வடகிழக்கு நோக்கிய மாந்த இனப் பரவலில் திராவிட மொழி பேசுநருக்கு மையமான பங்கு இருந்திருக்க வேண்டும். திராவிடர் ஏற்றம் Dravidian ascent பற்றிய இந்தக் கோட்பாட்டை "ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு" என அழைக்கலாம். (திராவிட மொழிகளுக்கு ஆஸ்தி ரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும் (மொழிக்குடும்பங்கள் பிறவற்றுடன் உள்ள நெருங்கிய தொடர்பையும்) விளக்க வல்லது இக் கோட்பாடே யாகும். தென்னிந்தியாவிலிருந்து வடக்கே சென்ற திராவிட மொழி பேசுநர் உருவாக்கியதே சிந்துவெளி நாகரிகமாகும். (ஹீராஸ் 1953; மதிவாணன் 1995 ; இராமநாதன் 1999 ; பூரண சந்திரஜீவா 2004) அவர்களுக்கு எலாம், சுமேரியா, எகிப்து முதலிய நாகரிகங்களை உருவாக்கியதிலும் பங்கு இருந்திருக்க வேண்டும். சுவெலபில் (1990) ''சுமார் கி.மு. 10000க்கு முன்னர் திராவிடம், உரால் - அல்டாய்க், சப்பானியம் மொழி பேசுநர்களிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும்" என்று கருதுவதைக் கண்டோம். அத்தகைய தொடர்பையும் "திராவிடர் ஏற்றம் கோட்பாடு" விளக்கவல்லது. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி கி.மு. 10000 க்கு முன்னரே தொல் இந்தோ - ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்து விட்டனர்; மைய ஆசிய ஸ்டெப்பீஸ் புல்வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர்; அவர்களில் சில குழுவினர் கி.மு. 4000 - 3000 அளவில் மேற்கு நோக்கி ஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக், இலத்தீன், கெல்டிக், ஜெர்மானிக், ஸ்லாவிய மொழிக் குடும்பங்க ளாகும்.); வேறு சில குழுக்கள் கிழக்கு - தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும்; அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவது கி.மு. 10000க்கு முன்னர் தொல் திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்த காலத்தில்) உடன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக்கூறுகளோடு சேர்த்து, வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்து வந்த திராவிட மொழி பேசுநர்களிடம் இருந்து ( இரண்டாவது கட்டமாக) புதிதாக மேலும் பல திராவிட மொழிக் கூறுகள் சேர்க்கப்படலாயின. திராவிட மொழி பேசுநர் ஏற்றம் (Dravidan ascent) பற்றிய இக் கோட்பாடானது தொல்மாந்தர் மொழியியல் முடிவுகளை மேலும் சீர்மை பெறச் செய்ய வல்லது; நாளடைவில் மாந்த இனத் (Homo sapiens sapiens) தோற்றமும் பரவலும்; மொழிப் பெருங்குடும்பங்கள் உருவாக்கமும் பரவலும்; வரலாற்றுக்கு முந்திய தொல்லியல் ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்தையும் விளக்கத்தக்க ஒருங் கிணைந்த ஒரு பெருங் கோட்பாடு (Grand synthesis) உருவாக்க வழி வகுக்கவும் வல்லது. ச. திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப்பகுதி 19. மாந்தர் இன (AMH) பரவல், மொழியின் தோற்றமும் பரவலும் ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப்பகுதி என்று கொள்வதற் கான ஆதாரங்களை இதுவரை கண்டோம். அந்நாகரிகம் திராவிடச் சார்புடையது என்பதற்கு உள்ள மேலும் பல வலுவான ஆதாரங்களில் சில வருமாறு: 1) மொகஞ்சோதாரோ - ஹரப்பா இடிபாடுகளில் திராவிடக் கட்டுமானக் கலையைக் காணலாம். வீடுகளில் பயன்பட்ட பொருள்கள், நகை (ஆபரணங்கள், பருத்தி ஆடைகள் அனைத்தும் திராவிடச் சார்புடையவை. ii) தமிழரின் சிற்றிலக்க முறையையே சிந்துவெளி நாகரிக எடை அளவுகளில் காண்கிறோம் என்பதைச் செங்கம் கு. வேங்கடா சலம் நிறுவியுள்ளார். iii) இன்றைய இந்து மதத்தின் முதன்மைக் கூறுகள் அனைத்தும் திராவிட - தமிழ் - சிந்துவெளி நாகரிகக் கூறுகளே ஆகும். சமண, பெளத்த மதங்களின் தோற்றத்திற்கும் சிந்துவெளி மற்றும் வட நாட்டில் பண்டு இருந்த திராவிட - தமிழ் ஞானிகளே காரணமாவர். iv) இன்றைய இசைக்கலை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே (ஓ. கோஸ்வாமி "இந்திய இசை வரலாறு', 1957). இவற்றின் விரிவை பி. இராமநாதன் : சிந்து வெளித் தொல் தமிழ நாகரிகம் 1999 இயல்கள் 3-6 மற்றும் 8 இல் காண்க). 20. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த திராவிடர்' என்று தன்னை அழைத்துக் கொண்ட எஸ். ஹீராஸ் பாதிரியார் (11.9.1888 - 14.12. 1955) தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Proto - Indo Mediterranean Culture 1953) என்னும் நூலில் சிந்து வெளி நாகரிகம் திராவிடருடையது; அவர்கள் மொழி திராவிட மொழி என்பதை நிறுவியுள்ளார். மிகப் பழங்காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது என்பது ஹீராஸ் கொள்கை (அவர் வாதத்துக்கு ஆதாரமாகக் கொண்ட செய்திகள் சில இப்பொழுது தவறாகத் தோன்றலாம்; சிந்துவெளி முத்திரைகளை அவர் திராவிட மொழி சார்ந்தவை என்று கொண்ட முடிவு சரியென்றாலும் அவர் முத்திரைகளில் படித்துக் கண்ட வாசகங்கள் இன்று ஏற்கத்தக்கனவாக இல்லை. இருந்தாலும் அவர் கண்ட அடிப்படை உண்மை இன்றும் வலுவுடையதாகவே உள்ளது.) 21. என் லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்ற மும் மேலை நாடுகளும் (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்த மொழியியல் மெய்மைகளை உணர்த்துவதாகும். 'திராவிடர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துவெளியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரைப் பரவினர்" என்ற அபத்தக் கொள்கையை அவர் விவரம் புரியாமல் பின்பற்றியிருந்த போதிலும் அவர் நிறுவிய பின்வரும் மெய்மைகள் முக்கியமானவை : i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட் லாண்டிக் கடல் வரை ஒரே மாதிரியான "பல சொல் பிணிப்பு ஒட்டு நிலை' (Polysynthetic Suffixal) மொழிகள் இடையீடு இன்றிப் பரவி யிருந்தன. அவற்றின் சொற் களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்டி , ஹட்டி போன்றவை ஒரே மொழி யமைப்புக் கொண்டு ஒன்றுக்கொண்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர் போல அமைந்திருந்தன. ii) இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் (கி.மு. 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா ) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப் பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழி களுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழி களுடனும் உறவுடையது. iii) இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய்மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 22. சிந்துவெளி நாகரிகம் இந்தோ ஆரிய மொழி பேசுநர் உருவாக்கியதாக இருக்கலாம் என இன்றைய இந்திய அறிஞர் (குறிப்பாக வட நாட்டறிஞர்) சிலர் வாதிடுகின்றனர். இது வலுவுள்ள வாதமன்று என்பதைச் சற்றே விளக்குவோம். வேதமொழியாகிய இந்தோ ஐரோப்பிய மொழி இந்தியாவில் உருவாகியிருக்கலாம். என்று வேத சமஸ்கிருதப்பற்றாளர் கூறுவது அபத்தம் இதுவறு: கிமு. 1000க்கு முன்னர் தொல் திராவிட மொழியிலிருந்து கிளைத்து மொழிக்குடும்பங்களுள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பமும் ஒன்று என்றஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாடு வேறு!) கிமு. 1700 - 1500 காலகட்டத்தில் இந்தியாவிற்குள் வடமேற்கிலிருந்து நுழைந்தவர்கள் வேதமொழி (Vedic Language) ஆகிய இந்தோ ஆரிய மொழி பேசுநர் ஆவர். இவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களோடு ஒப்பிடும்போது சிறு எண்ணிக்கையினராகவே இருந்திருக்க வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிப்பெருங் குடும்பத்தில் அடங்கியவை இந்தோ ஆரிய மொழியாகிய வேதமொழி தவிர இரானியன் (அவெஸ்தன்), அனடோலியன் (ஹிட்டைட்), அர்மீனியன், டோக்காரியன், அல்பேனியன், கிரீக்கு , இத்தாலிக் (இலத்தீன் முதலியவை) கெல்டிக் (ஐரிஷ், வெல்ஷ் உட்பட), ஜெர்மானிக் (இங்கிலிஷ் உட்பட) பால்டிக் (லட்வியன், லித்து வேனியன்), ஸ்லாவ் (ரஷ்யன் முதலியவை) ஆகியவையாகும். இந்தப் பல்வேறு இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் ஒருங்கு சேர்ந்து கி.மு. 4000 - 3000 கால அளவில் கருங்கடல் - காஸ்பியன் கடல் பகுதிக்கு வடக்கில் மத்திய ஆசிய - ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளி களில் வசித்து வந்த நாடோடிகள் (nomads) ஆவர். அக் காலக்கட்டத் தில் அவர்கள் இந்தோ ஐரோப்பியத் தொன்மொழியைப் பேசி வந்தனர். கி.மு. 3000 - 2000 கால அளவில் அவர்களின் சில குழுக்கள் மேற்காகவும், சில குழுக்கள் கிழக்கு - தென் கிழக்காகவும் நகரலாயினர். மேற்கில் சென்ற நாடோடிக் குழுவினருள் ஒன்றான கிரீக்கு மொழி பேசுநர் நுழைந்த பகுதியில் (திராவிடச் சார்பான) அப்பகுதிப் பழங்குடி மக்களுடன் கலந்து கிரிக்கு மொழி பேசுநர் உடனடியாக நாகரிகம் பெற்றனர். கிழக்கு தென்கிழக்காகப் பெயர்ந்த நாடோடிக் குழுவினருள் இந்தோ ஆரிய மொழி பேசும் குழுவும் ஒன்று. கி.மு. 1700 - 1500 இல் அவர்கள் இந்தியாவுக்குள் இரானிலிருந்து நுழைந்த பொழுது அவர்களும் சிந்துவெளித் தொல் தமிழ நாகரிகத்தினரிடமிருந்து விரைவில் நாகரிகம் பெற்றனர். சிந்துவெளித் திராவிட அறிஞர்கள் (அவர்களில் சிலர் ரிஷிகளாகவும் ஏற்கப்பட்டனர்) படைப்புகளும் நேரடியாகவோ மொழிபெயர்க்கப் பட்டோ ரிக் வேதத்திலேயே ஏறியுள்ளன என்பது மறைமலை யடிகள், வால்பர்ட் போன்றோர் கருத்தாகும். முதற்கண் இந்தோ ஆரிய மொழி பேசுநருக்கும் சிந்துவெளி நாகரிகத் தமிழருக்கும் திராவிடருக்கும் இடையே வன்முறை ஏற்பட்ட போதிலும் விரைவில் இருவகையாரும் கலந்துவிட்டனர். ஆரியரால் நகரங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். இந்திரனின் பெயரே புரந்தரன் (நகரங்களை அழிப்பவன்) தானே! நகரங்களின் வீழ்ச்சிக்கு கி.மு. 1700 ஐ ஒட்டி நிகழ்ந்த இயற்கை, சுற்றுப்புறச் சூழ்நிலைக் காரணங்களும் ஓரளவு காரணமாயிருந்திருக்கலாம் என்று ஆல்சின் (1995) கூறுகிறார். ஆனால் சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த கிராமப்புறப் பரப் பளவில் (சிறு எண்ணிக்கையில் நுழைந்த ஆரியரால் பெருந் தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆகவேதான் சுநீதிகுமார் சாட்டர்ஜி, வால்டர் பேர் சர்வீஸ், எஸ். ஏ. டைலர் போன்றோர் கூறுவது போல இன்றைய இந்திய நாகரிகம், பண்பாடு, இந்துமதம் ஆகியவற்றின் அடித்தளம் (ரூபாய்க்கு 12 அணா அளவுக்கு என்பார் சாட்டர்ஜி) திராவிட (தமிழ் மொழி, பண்பாடு ஆகியவையே. இந்தோ ஆரிய மொழி பேசுநர் பரவல் பற்றிய வரலாற்றிலிருந்தே அவர்கள் கி.மு. 1700க்கு முந்திய சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கியிருக்க இயலாது என்பது தெரியும். சிந்து வெளி நாகரிகச் சின்னங்களில் ஆரியருக்கு நெருக்கமான குதிரை கிடையாது என்பதும் முக்கிய மானது. 23. இந்தோ ஆரிய மொழியின் ரிக்வேத நிலையிலேயே நுழைந் துள்ள திராவிடச் சொற்களாக சுமார் நாற்பது - ஐம்பது சொற்களை பரோ, எமனோ போன்றவர்கள் ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளனர். திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் (1990) நூலில் இதைக் குறிப்பிடும் சுவெலபில், ரிக்வேதக் காலத்திலிருந்தே இந்தோ ஆரிய மொழி கடன் பெற்றுள்ள ஏறத்தாழ 10 மொழியியற் கூறு களையும் பட்டியலிட்டுள்ளார். (இவையெல்லாம் வேத சமஸ்கிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் என்ற அளவில்தான் இவர்கள் ஆய்வுகள் உள்ளன. ஆனால் ஞானப் பிரகாசரும் பாவாணரும் கண்ட முடிவுகள் இவற்றைவிட மிக விஞ்சியவை. அவ்விருவரும் "இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை வேர்ச்சொற்கள் பலவும் தொல் - திராவிட மொழியிலிருந்து பெற்றவையே என்ற கருத்துடையவர். 24. சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றும் அந் நாகரிகமுத்திரை எழுத்துக்கள் தொல் தமிழே என்றும் தகுதி வாய்ந்த அறிஞர் அனைவரும் ஏற்கின்றனர். தமது Indus Script Dravidian (1995) நூலில் இரா. மதிவாணன், சிந்து வெளியில் முந்து தமிழ் (2004) நூலில் பூர்ண சந்திர ஜீவா ஆகியோர் அவ்வெழுத்துக்களைத் தொல்தமிழாகப் படிக்கும் பொழுது தொல்காப்பியத்தி லிருந்து கிட்டும் மொழியியல் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். புற நானூறு 201,202 இல் குறிப்பிடப்படும் இருங்கோவேளின் முன்னோர் சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடையவர்களாகக் கபிலரால் கருதப்பட்டனர். புறநானூறு 202 குறிப்பிடும் அரையம் ரிக்வேதம் 6275இல் சுட்டப்படும் ஹரியூபியா தான் என்பது பி. எல். சாமி கருத்து (செந்தமிழ்ச் செல்வி சனவரி 1994). அரையம் = அரசமரம். அரைய + அகப்பா = அரையகப்பா = ஹரப்பா என்று பெயர் மாறியது என்கிறார் அவர். இருங்கோவேளின் முன்னோர் 49 தலைமுறைகளுக்கு முன்னர் (= அதாவது தொல் பழங்காலத்தில்) புகழ்பெற்ற துவரை என்னும் கோட்டை நகரை ஆண்டு வந்தனர் என்று புறம் 201 கூறுகிறது. தமது தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் வேளிர் துவாரபதி (= துவாரகையிலிருந்து வந்தவர்கள் என்கிறார். அரையம் ஹரப்பாவைத் தான் குறிப்பதாகக் கொண்டால் ஹரப்பா பற்றியும் துவாரகை பற்றியும் கபிலர் காலத்தில் வழங்கிய (ஒரு நகருக்குரியதை மற்றதற்குரியதாக மாற்றி வழங்கிய தொன்மக் கருத்தை புறம் 201 202 பாடல்கள் கூறுகின்றன என்க. இதனை ஜீவா மேலும் ஆய்வு செய்கிறார். வேள் - வேட் - பேட் (bet) - பேட் துவாரகா என்று துவாரகையின் பெயர் வரலாற்றை அவர் தருகிறார். 25. சுமேரிய நாகரிக முத்திரைகளில் சிங்கங்கள் இரண்டைக் கொல்லும் கில்காமெஷ் உருவம் காணப்படுகிறது. கில்காமேஷ் பற்றிய தொன்மக் கதையும் சுமேரியக் கல்வெட்டுகளில் தரப்படும் கிறது. சிந்துவெளி முத்திரைகள் இரண்டில் (கில்காமேஷ் சிங்கங் களைத் தாக்குவது போலவே) இந்திய வீரன் ஒருவன் புலிகள் இரண்டை கைக்கு ஒன்றாகக் கொல்வது போல் சித்திரிக்கப் பட்டுள் ளான். புறம் 201 இருங்கோவேளைப் 'புலி கடிமால்' என்று அழைக் கிறது. இருங்கோவேளின் முன்னோர் காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என ஐ. மகாதேவன் Journal of Tamil Studies மே 1970 இதழில் உன்னித்திருந்தார். ஆயினும் 2002 சனவரியில் அவர் கருத்து அந்த உன்னிப்பிற்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதாகும். 26. ரிக்வேதம் ஐ . 133, 1&3இன் ஆங்கில வடிவம் வருமாறு: "ஓ மகவான்! அழிந்துபட்ட வைலஸ்தானக நகரத்திலும், அழிந்துபட்ட மகாவைலஸ்த நகரத்திலும் உள்ள சூனியக் காரிகள் கும்பல்களை அழித்து ஒழிப்பாயாக" ''நான் மேலுலகத்தையும் பூமியையும் சத்தியத்தினால் தூய்மைப் படுத்துகிறேன். வைலஸ்தான நகரில் இந்திரனால் தோற்கடிக்கப்பட்டு கொலையுண்டு கிடக்கும் இந்திரனை எதிர்த்த ஆற்றல் மிக்க துஷ்ட பிசாசுகளை நான் எரித்து ஒழிக்கிறேன்" ஆரியர்களால் நாசமாக்கப்பட்ட நகரத்தின் பெயரான 'வைலஸ்தானம்' என்பது ஆரிய மொழியல்லாத பிறமொழிச் சொல்லாக இருக்க வேண்டும் என்பது டாக்டர் பரோ கருத்து ஆகும். (ஜர்னல் ஆப் இந்தியன் ஹிஸ்டரி XII -1 ஏப்ரல் 1963, ஒருக்கால் 'வைலஸ்தானம்' என்பது வேளிருடைய ஊர் / நகரைக் குறித்திருக்கலாம். 27. சிந்து முதலிய ஆறுகளில் சிந்துவெளித் திராவிடர்கள் கட்டியிருந்த அணைகளை ஆரியர் உடைத்து நாட்டை வெள்ளக் காடாக்கி அழித்திருக்கலாம் என்பர் தாமோதர் தர்மானந்த் கோசாம்பி (The Culture and Civilisation of Ancient India in historical outline 1974), மதுரைக்காஞ்சி 72 ஆம் அடியிலும் அகநானூறு 346 ஆம் பாடலிலும் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளைக் குறிக்க கற்சிறை' என்னும் சொல் பயன் படுத்தப்படுகிறது. ரிக் வேதத்தில் அணையைக் குறிப்பிடும் சிரா (Sira) என்னும் சொல் கற்றையின் சிதைவே என்பர் பி. எல். சாமி (செந்தமிழ்ச் செல்வி : 1994 நவம்பர்) ரு. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் திராவிட மொழியாகப் படிக்கத்தக்கவையே என்பதும் தமிழ் வரி வடிவம் சிந்துவெளி வரிவடித்திலிருந்தே உருவாயிருக்கலாம் என்பதும் 28. சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துக்கள் என்பவை மூவாயிரத்துக்கு மேற்பட்ட "ஸ்வயாடைட்" சவர்க்காரக்கல் அதாவது மாக்கல் முத்திரைகளிலும் சில செப்புத் தகடுகள் போன்ற வற்றிலும் உள்ளவை, ஒவ்வொரு முத்திரையும் சுமார் 20 மிமீ x 30 மிமீ அளவுள்ளது. சில சதுரமானவை. பெரும்பாலான வற்றில் ஒரு விலங்கின் உருவமும் அதன் மேல் பக்கத்தில் ஒன்றிலிருந்து பத்துப் பன்னிரெண்டு (சராசரி 5) குறியீடுகளும் உள்ளன. மிக நீண்ட தொடர் 26 குறியீடுகள் கொண்டது. சிந்துவெளியிலிருந்து பருத்தித் துணி போன்றவற்றை சுமேரியா போன்ற மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது சிப்பங்கள் கட்டி. அவற்றின் மேல் பொருளுக்குரியவர் பெயரை களிமண்ணில் முத்திரையிட இம் முத்திரைகளுள் பெரும்பாலானவை பயன்பட்டிருக்கலாம் என்பதே சிறந்த ஆய்வறிஞர்கள் கருத்து. வலர், ஹண்டர், காட் (Gadd), கோசம்பி, கோ (or) ஆகியோர் இந்த அடிப்படையில்தான் முத்திரைக் குறியீடுகளில் உள்ளவை தனி ஆட்களின் பெயர்களாகத் தான் (சில நேர்வுகளில் பட்டங்களுடன்) இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சிப்பத்தைக் கட்டிய கயிறு பாய் இவற்றின் சுவடுகள் சில களிமண் கட்டிகளில் காணப்படுகின்றன. சில கட்டிகள் ஒரோவழி நெருப்பின் வாய்ப்பட்டு சுடப்பட்டதால் அவை மட்டுமே இன்று கிடைக்கின்றன. அவற்றில்தான் இவ்வடை யாளங்கள் தெரிகின்றன. ஆக, ஆல்சின் (1988) கூறுவது போல் "இம் முத்திரைகளின் பயன்பாடு (அல்லது பயன்பாடுகளில் ஒன்று) வாணிக நடவடிக்கைகள் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்ப தில் ஐயமில்லை " (There can be little doubt that the Harappan seals were - atleast as one of their functions - necessary elements in the mechanism of trade. p. 185) சில முத்திரைகள் தாயத்துக்களாகவும் நேர்த்திக் கடன் வில்லைகளாகவும் அடையாள இலச்சினைகளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். 29. பல் முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு தெரியும் எருது ஒன்றின் முன்னர் என்ற வடிவம் உள்ளது. மகாதேவன் கருத்து (1985, 984) இவ்வடிவம் சோமச்சாறுவடிக்கப்பட்ட ஏனம், பின்னர் சோமச்சாறு ஆரியர்களாலும் முக்கியமானதாக ஏற்கப்பட்டது என்பதாகும். பிற்காலத்தில் இவ்வடிவம் இந்திரத் வஜம் ஆனது, அளக்கும் சீத்தாராமன் கரூரில் கண்டெடுத்த செப்பு முத்திரையிலும் இந்த வடிவம் உள்ளது என்பது மகாதேவன் கருத்து ஆகும். 30. சிந்துவெளி எழுத்து குறியீடுகள் சுமார் 400 அளவில் உள்ளன (பர்போலா 385, மகாதேவன் 417) 2906 முத்திரை வாசகங்களில் கண்ட குறியீடுகளை மகாதேவன் பின்வருமாறு வகைப்படுத்துகிறார். குறியீடு ஒவ்வொன்றும் . மொத்தம் மொத்தத்தில் எத்தனை அவை விழுக்காடு தடவை எத்தனை வருகிறது தடவை வருகின்றன 1 100மும் மேலும் 1935 10. 43 1 67 999 – 500 649 4.85 31 499 – 100 6,344 47.44 34 99 – 50 2,381 17. 81 86 49 – 10 1, 833 13. 71 152 9 – 2 658 4.92 112 ஒரே தடவை 112 0.84 417 13, 372 100.00 80 விழுக்காடு தடவைக்கு மேல் வரும் குறியீடுகள் 67 மட்டுமே யாகும் (பாதிக்கு மேற்பட்ட குறியீடுகள் ஒவ்வொன்றும் பத்து தடவைக்கும் குறைவாகவே வருகின்றன. அவற்றுள்ளும் 112 ஒவ்வொன்றும் ஒரு தடவையே வருகிறது). ஆக, இந்த 67 குறியீடுகளுக்கும் முதன்மை தந்து வாசிக்க முற்படுவது நல்லது என்கிறார் மகாதேவன். மொத்தம் சுமார் 400 குறியீடுகளில் அடிப்படைக் குறியீடுகள் 200 என்பது பர்போலா கருத்து. 31. சிந்துவெளி முத்திரை எழுத்துக்கள் பழந்தமிழே (பழந் திராவிடமே) என்பதை இத்துறை வல்லுநர் அனைவரும் ஏற்கின்ற னர். இவற்றைப் படித்துள்ள அறிஞர்கள் ஒவ்வொருவரும் (பர்போலா, மகாதேவன், மதிவாணன், பூர்ணா சந்திர ஜீவா, பேர் சர்வீஸ் முதலி யோர்) ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக வாசித்துள்ளனர். முத்திரையைக் குத்தியபின் கிடைக்கும் முத்திரைப் பதிவில் உள்ள வாசகங்களை Impressions) வலமிருந்து இடமாகவே பெரும்பாலோர் படிக்கின்றனர். மதிவாணன் மட்டும் இடமிருந்து வலமாகப் படித் துள்ளார். எனினும் இம் முத்திரை எழுத்துக்கள், திராவிட மொழியைச் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பது பற்றி மடடும் அறிஞர்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது. பின்வருவன வற்றைக் காண்க : ஸ்டான்லி வார்பர்ட் : இந்தியாவுக்கு ஓர் அறிமுகம் ''பல வகையான ஆதாரங்களிலிருந்தும் நாம் கருதுவது அவர்கள் தொல் திராவிடர்கள் என்பதும், தமிழுக்குப் பாட்டன் முறையாகக் கூடிய ஒரு மொழி அவர்கள் மொழியாக இருந்திருக்கலாம் என்பதும் ஆகும்.'' “We assume from various shreds of evidence that they were proto Dravidian, possibly using a language that was a grandfather of modern Tamil" (Stanley Wolpert: An Introduction to India, University of California Press 1991) ஜே. எம். ராபர்ட்ஸ் : பெங்குயின் உலக வரலாறு "தென் னிந்தியாவில் இன்றும் வழங்கிவரும் திராவிட மொழிகளோடு இயைபுடைய ஒரு மொழியைச் சார்ந்தவையாக சிந்துவெளி முத்திரைச் சொற்கள் இருக்கலாமெனத் தோன்றுகிறது. It now seems at least likely that they are part of a language akin to the Dravidian tongues still used in southern India (J. M. Roberts History of the World Pelican 1992) கமில் சுவெலபில் : திராவிட மொழியியல் - ஓர் அறிமுகம் "சிந்து வெளி எழுத்துக்களின் மொழி என்ன என்று இறுதியாக நிறுவப்படும் பொழுது அது திராவிட மொழி சார்ந்ததாக அமை வதற்கே வாய்ப்பு மிக அதிகம்.'' The most probable candidate is and remains some form of Dravidian" (Dravidian Liguistics - An Introduction. Pondicherry 1990; Chap VI : Dravidian and Harapan) 32. சிந்து வெளி முத்திரை எழுத்துக்களிலிருந்தே சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் உருவாயின என்பது மதிவாணன் கருத்து. ஏறத்தாழ கி.மு. 700க்கு முன்னமே தமிழுக்கு ஒரு எழுத்து வரி வடிவம் இருந்தது. அதைப் பின்பற்றியே அசோக பிரமி எழுத்து உருவாக்கப்பட்டது எனக் கொள்வதற்கான ஆதாரங்கள் அண்மையில் கிட்டியுள்ளன. 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடு துறை - செம்பியன் கண்டியூரில் வி. சண்முகநாதன் கண்டெடுத்த புதுக்கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள் நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் "முருகு அன்று முருகன் என்று படித்துள்ளார். அக் கருவியின் காலம் கி.மு. 2000-1500 ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். புதுக்கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரே மொழியையே பேசினார் என்றும் அம்மொழி திராவிட மொழியோ என்றும் இக் கண்டுபிடிப்பு நிறுவுகிறது என்பதும் அவர் கருத்து . "The Neolithic people of Tamilnadu and the Indus Valley people shared the same language which can only be Dravidian and not IndoAryan ) 15 2005நாளிட்ட இந்து நாளிதழில் வெளிவந்த இச்செய்தி நாலின் இறுதியின் தரப்பட்டுள்ளது. 33. பொதுவாக சங்க இலக்கியங்களாக ஏற்கப்படும் நூல் களும் அவற்றின் காலவரம்பம் (பெரும்பாலான பன்னாட்டு அறிஞர்களும் ஏற்பது) வருமாறு: நூல்கள் - அளவு காலம் தொல்காப்பியம் 1610 நூற்பா கி.மு. 300 அல்லது (4018 அடி) அதற்கு முன்னர் எட்டுத்தொகையும் 2381 பாடல்கள் இவற்றுள் அடங்கிய பத்துப்பாட்டும் (473 புலவர்கள் தனித்தனிப் பாடல்கள் (இவை தொகுக்கப் இயற்றியவை) எழுதப்பட்ட காலம் பட்ட காலம் கி.பி. 3ஆம் கி.மு. 300 - கி.பி.300 நூற்றாண்டு அல்லது (கலித்தொகையும், அதையொட்டி ) பரிபாடலும் கி.பி. 300 அளவில் எழுதப்பட்டவை) திருக்குறள் 1330 குறள் வெண்பா கி.மு. முதல் நூற்றாண்டு சிலப்பதிகாரம் ஒவ்வொன்றும் 30 கி.பி. 300ஐ ஒட்டி (கமில் மணிமேகலை காதைகள் சுவவெலபில் தமது 1995 நூலில் இவற்றின் காலம் கி.பி. 350-450 என்கிறார். சேவியர் எள் தனிநாயகம் தனது இயற்கையும் தமிழ்ச் செய்யுளும்" என்னும் நூலில் வெளியிட்டுள்ள பின்வரும் கருத்து மிக முக்கியமானது. "தமிழ்ச் சங்கம் செய்யுள் தமிழகத்திலேயே கருக்கொண்டு வளர்ந்தது என்பதற்கான அனைத்துச் சான்றுகளையும் கொண் டுள்ளது. தமிழ் பேசுநர் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு குடி யேறியவர்கள் என்றோ , வரும்பொழுதே வளர்ச்சியடைந்த தமிழ் மொழி, இலக்கியத்தை உடன் கொண்டு வந்தனர் என்றோ கூறுவ தற்குச் சங்க இலக்கியம் இடம் தரவில்லை என்பதே இதன் பொருள்' 34. மிகப் பழைய சங்க நூல்களிலேயே (தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களில் அடங்கிய பாடல்களில் தொன்மை சான்றவை) தமிழ் வரிவடிவம், எழுத்துமுறை குறித்தும் பண்பட்ட இலக்கியம் குறித்தும் தெளிவாக, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐ. மகாதேவன் (2003) கருத்து அசோகனுடைய தமிழ் - பிராமி எழுத்துக் களிலிருந்து தமிழ் வரிவடிவம் உருவாக்கப்பட்டது என்பதாகும். இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. காரணம் மேற்சொன்ன கி.மு. 300 சார்ந்த தமிழ் நூல்கள், பாடல்கள் உருப்பெறுவதற்கு சில பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வரிவடிவமும் இலக்கியங் களும் தோன்றத் தொடங்கியிருக்க வேண்டும். கொற்கையில் 1970இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானைஓட்டில் உள்ள தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 700 என அப்பொழுதே நிர்ணயிக்கப் பட்டது. கொடுமணலில் அண்மையில் அகழ்ந்த பானை ஓட்டு எழுத்துக்களின் காலமும் கி.மு. 500க்கு முந்தியதாக இருக்கவேண்டும் என ராஜன் (2004) நிறுவியுள்ளார். ஆதிச்சநல்லூரில் 2004இல் நடந்த அகழ்வாய்வில் கண்ட பானை ஓட்டுப் பொறிப்பின் காலமும் கார்பன் கணிப்பின்படி கி.மு. 700ஐ ஒட்டியதாக அமையலாம் எனச் செய்தி வந்துள்ளது. இவற்றையும் பிற ஆதாரங்களையும் சுட்டி. ராஜன் (2004) நடனகாசிநாதன் (2004) ஆகியோர் தமிழுக்கு கிமு. 300ஐ ஒட்டியே ஒரு தனி வரிவடிவம் இருந்திருக்கவேண்டும். அதனைப் பின்பற்றியே அசோக தமிழ் பிராமி லிபி கிமு 300இல் உருவாக்கப்பட்டிருக்கும்' என்பதற்கான வலுவான வாதங்களை முன் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்த கிமு 1000) - கிமு. 300 சார்ந்த பெருங்கற்கால நாகரிகத்தின் தொடர்ச்சியே சங்க இலக்கியம் காலம் அந்நாகரிகக் கூறுகளிற் பெரும்பாலானவை சங்க இலக்கியத் தில் காணப்படுகின்றன என்பதும் இவர்கள் வாதத்தின் அடுத்த முடிவாகும். ஆக இவ்வாராய்ச்சிகள் மேலும் முன்னேறும் பொழுது தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 300க்கும் சில நூற்றாண்டுகள் முற்பட்டது என அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. 35. இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். கி.மு. 300க்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் எவையுமே நமக்குக் கிடைக்கவில்லை . கி.மு. 300 - கிபி 300 காலகட்டத்தைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை . கிபி 300ஐ ஒட்டிச் சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் எவ்வெவற்றையும் விட்டு வைக்கலாம் என்று கருதினார்களோ அவற்றை மட்டும் தொகுத்து விட்டு மற்றவற்றை நீக்கிவிட்டனர். தொகுத்தவற்றிலும் மாற்றங்கள் செய்திருக்கலாம். நுண்ணறிவுடையவர்கள் இதுபற்றி 1871 லிருந்து தெரிவித்துள்ளவற்றைக் காண்போம். சார்லஸ்ஈ கோவர்: தென்னிந்திய நாட்டார் பாடல்கள் (The Folk songs of Southern India) 1871: திட்ட மிட்டு சிதைக்கப்படாத அல்லது மாற்றியெழுதப்படாத தொல்பழங்காலத் தமிழரால் எதையும் இன்று காண்பது அரிது. தமிழ் மக்கள் - திராவிட (பழந்தமிழ்) இலக்கியத்தைக் கைவிட்டு புராணக்கதைகளை நம்பினால்தான் தங்களுக்குப் பிழைப்பு உண்டு என்று உணர்ந்தவர்களே இவ்வாறு பழந்தமிழ் இலக்கியத்தைச் சிதைத்தவர்கள் ஆவர். (தனித் தமிழ்ச் செய்யுள் நூல்கள் பகல் மதிப்பிழந்து ஒழியும்படி அவர்கள் செய்தனர். அறவே ஒழிக்கமுடியாத நேர்வுகளில் அந்நூல்களை அயோக்கியத் தளமாகச் சிதைத்து உருமாற்றி உலவவிட்டு மூலநூலின் கருத்தை உணர முடியாதவாறு செய்துவிட்டனர். ஹயூநெவில் : தி தப்ரொபேனியன் (The Taprobanian) சூன் 1896: ''மதுரைத் தமிழ்ச் சங்கமும் அதன் நூலகமும் அழிக்கப்பட்ட பொழுது பழந்தமிழ் நூல்கள் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டன. (அவற்றுள் சமணக் கொள்கை வாடை இருக்கலாம் என்ற கருத்தில். ஈழத்தில் மகாவம்சம் இருந்ததுபோல் பாண்டியர்கள் வரலாற்றைக் கூறும் ஒரு நூல் மதுரைச் சங்க நூல்களில் ஒன்றாக இருந்து அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக திருவிளையாடற் புராணம் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அழிக்கப்பட்ட வரலாற்று நூலின் சிதைவுகளுடன், ஐங்கமர்கள் (பார்ப்பனிய சிவ மதத்தவர்கள்) எண்ணம், சமயம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான புனைகதை களுடன் பின்னிப் பிணைந்து அப்புராணம் உருவாக்கப்பட்டது''. ஜான் ஸ்பியர்ஸ் "ஞானம் தோன்றிய இடத்திலிருந்து வால் யூஸ் Values II - 10 சூலை 1957 : சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் நூற்றுக்கணக்கான (தொல் தமிழ்) வாசகங்கள் உள்ளன. கடல் கொண்ட அழிந்துபோன பண்டைய நூல்களைப் பற்றித் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும் புத்தர் காலமாகிய கி.மு. 500க்கு முந்திய நூல்கள் ஒன்றுகூட கிடைக்காததற்கான காரணத்தை நாம் உணர முடிகிறது. (தொல்தமிழர்) பண்டைய ஆவணங்களை ஆரியர்கள் ஒன்றுவிடாமல் அழித்துவிட்டனர் என்பதே அது. தெ.பொ. மீனாட்சி சுந்தரன் : கல்லாடர் சொல்லதிகார உரை (1971) : ''தொல்காப்பியத்தை அதன் ஆசிரியர் எந்த உருவத்தில் விட்டுச் சென்றாரோ அந்த வடிவத்தில் அது நமக்கு வந்து சேரவில்லை " (தொல்காப்பியம் : சொல்லதிகாரம் மரபியலில் பல இடைச்செருகல்கள் உள்ளன என்பது தொல்காப்பிய அறிஞர்கள் சோமசுந்தர பாரதி, வெள்ளைவாரணன் இலக்குவனார், கமில் சுவெலபில், இரா. இளங்குமரன் செ.வை. சண்முகம் போன்றவர்கள் ஏற்றுள்ளதாகும். 36. வரலாற்றிஞர் வி. ஆர். இராமசந்திர தீட்சிதர் தமது சிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்ட பொழுது பல்வேறு அறிவியல் துறைகளில் அந்தக் காலகட்டத்தில் 1940 - 30) இருந்த நிலைகளின் அடிப்படையில் (1) தமிழர் இந்நாட்டின் தொல்குடிகள் என்பதையும், (ii) அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தென்னாட்டி லிருந்துதான் வடக்கு, வடமேற்காக சென்று தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகத்தை உலகெங்கும் பரப்பினர் என்பதையும் நிறுவினார். அவ்வறிவியல் துறைகளில் கடந்த ஐம்பதாண்டுகளில் நிகழ்ந்துள்ள மாபெரும் வளர்ச்சிகளை உட்கொண்ட இன்றைய நிலையிலும் அவர் நிறுவிய அடிப்படைக் கருதுகோளுக்கு வலு கூடியுள்ளதே யொழியக் குறையவில்லை என்பதை இம்முன்னுரையிலிருந்து அறியலாம். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் பாராட்டப் பெற்ற அறிஞர்களுள் இருவர் பி.டி. சீனிவாச ஐயங்காரும், வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதரும் ஆவர் அவ்விருவர் புகழும் ஓங்குக - பி. இராமநாதன் தமிழரின் தோற்றமும் பரவலும் பொழிவு -1 பழந்தமிழ் நாகரிகத்தை உருவாக்கியவர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முந்திய செய்திகளையும் நிலவியல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். தென்னிந்தியாவும் இலங்கையும் உலகில் முதன் முதல் தரைப்பகுதி தோன்றிய காலத்திலேயே உருவானவை என்று நிலவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் கருத்துப்படி மிகப் பழங்காலத்தில் தென்னிந்தியா, ஆத்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய கோண்டுவானா என்னும் கண்டம் ஒன்று இருந்தது. பின்னர் மெசொசோயிக் கால் இறுதியில் கொண்டுவானா கண்டம் உடைந்து அதன் பெரும்பகுதி கடலுள் மூழ்கியது. ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிற்கு இடையே இருந்த தொடர்பு அறுபட்டது. எனினும் அதன் பின்னரும் கூட இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் வால் போன்ற நிலப்பகுதி இணைத்திருக்கலாம் என்று கருதப்பட்டு அந்த இணைப்பு நிலப் பகுதிக்கு வெளியா' என்னும் பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஜூராசிக்காலத்தில் தென்னிந்தியாவுக்கு கிழக்கிலிருந்த நிலப்பகுதியும் கடலுள் மூழ்கி வங்காள விரிகுடா உருவாகியது. கடைசிப் பணிாைழி இறுதியில் பெருமளவு பனிக்கட்டி உருகியதால், கடல் மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் கடலுள் மூழ்கின. இக்காலக் கட்டத்தில் சுமத்திரா, ஜாவா, போர்னியோ போன்ற தீவுகளை அதுவரை இணைத்திருந்த தாழ்வான நிலப்பகுதிகள் கடலுள் முழ்கவே அவையெல்லாம் தனித்தனித் தீவுகள் ஆயின. வேத, இதிகாச, புராணங்களில் இந்நிகழ்வு *மகா பிரளயம் என்று வண்ணிக்கப்படுகிறது. அப்பிரளயத்தில் தப்பிப் பிழைத்த மனு, மாந்த இனத்தின் தந்தையாக ஆனார். 2. பாகவத புராணத்தின்படி மலைய பருவதத்தைச் சுற்றி யிருந்த திராவிட தேசத்தின் ஒரு பகுதி இப்பிரளயத்தில் மூழ்காமல் தப்பியது. திருமாலின் (விஷ்ணு ) முதல் அவதாரமாகக் கருதப்படும் மீன், மனுவுக்கு ஒரு கப்பலைக் காட்டிப் பிரளயத்தில் அழிந்து விடாமல் தப்பிப் பிழைக்க உதவியது. பாண்டிய மன்னர்களின் இலச்சினை மீன் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பிரளயக் கதைகள் நம் நாட்டுக்கு மட்டும் சொந்த மானவையல்ல. எபிரேய பைபிளிலும், பாபிலோனிய, சுமேரிய படைப்புகளிலும், வேறு பல நாடுகளிலும் பிரளயக் கதைகள் உள்ளன. இவையனைத்தும் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட முடியாது. மேற்சொன்ன நிலவியல் செய்திகளைக் கருத்தில் கொண்டால் இக்கதைகளும் சில வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தவையே எனலாம் எனது ''மத்சயபுராணம் - ஓர் ஆய்வு என்னும் நூலில் நான் பாபிலோனிய மற்றும் இந்திய பிரளயக் கதைகளிடையே உள்ள ஒற்றுமைகளைக் கட்டியுள்ளேன். பிரளயம் பற்றிய மெசொபொதாமிய கதையில், மன், நீர் என்னும் இரண்டு தமிழ்ச் சொற்கள் இருப்பது வியப்புக் குரியது. 193இந்தியா சென்சஸ் அறிக்கை : பக். 30 3.நிலவியல் சான்றுகளின்படி தக்காண பீடபூமியிலும் அதற்கு தெற்கிலுள்ள பகுதியிலும் உள்ள கற்பாறைகளின் காலத்தை ஆய்வு செய்தவர்கள் உலகின் மிகப் பழைய நிலப் பகுதிகளில் ஒன்று தென்னாடு என்று நிறுவியுள்ளனர். நீலகிரிமலை, பழனிமலை, ஆனைமலை ஆகியவை எல்லாம் மிகப் பழங்காலத்தவை. தென் னிந்தியாவில் கற்கால மனிதன் காடுகளில் வசிக்கவில்லை, மலையை ஒட்டிய பீடபூமிகளில் தான் வசித்தான் என்பது வல்லுநர்கள் கருத்து. ஏனைய நாடுகளில் உள்ள பழங்கற்கால மனிதனைப் போலன்றி தென்னிந்தியாவில் வசித்த பழங்கற்கால மாந்தன் காட்டு விலங்காண்டியல்ல. எனவே தென்னிந்தியாவில் உள்ள பழங்கற்கால மக்களும் அவர்களுக்கு முந்தியவர்களும் அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். தமிழர்களிடையே தாங்கள் வேறு எங்கிருந்தும் இங்கு வந்தேறியவர்கள் என்று கூறும் ஒரு சிறு புராணம், கட்டுக்கதை கூட இல்லை; எனவே அப் பழங்கற்கால மாந்தர்கள் தாம் பழந் தமிழர்களின் மூதாதையர் கள் என்பதைப் பின்னர் நான் நிறுவ இருக்கிறேன். 4. தென்னிந்திய மக்களுக்கும், நண்ணிலக்கரை நாடுகளின் மக்களுக்கும் இடையே உள்ள இனம் மற்றும் பண்பாட்டு ஒருமைப் பாட்டுக்கு என்ன காரணம்? நண்ணிலக்கரை நாட்டுப் பண்டை மக்களும், ஐரோப்பா - ஆசியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களும் தொல்பழங்காலத்தில் தென்னிந்தியாவி லிருந்தே பயணப் பட்டுச் சென்றனர் என்பதுதான் காரணம் டாக்டர் இமாலின் வட அமெரிக்க இந்தியர்களும் தொல்பழங்கால எகிப்தியர்களும் தாங்கள் தத்தம் நாடுகளுக்குப் பிறபகுதிகளிலிருந்து வந்து குடி. யேறியதாகவே கருதுகின்றனர். எகிப்தியர் மண்டை போட்டு வடிவ அடிப்படையில் அவர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்களாக இருக்கலாம் என்று ஹீராஸ் கருதினார். எகிப்தியர்களின் பண்டைய நாடாகிய பண்ட் என்பது ஒருவேளை பாண்டிய நாடாக இருக்க லாமோ என்ற கருத்தும் உண்டு. தற்பொழுது கொல்லும் வரை உள்ள கேரளப் பகுதியும் பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டின் பகுதி யாகத்தான் இருந்தது. ஆனால் இதுபற்றி முடிவுகூற மேலும் சான்றுகள் தேவைப்படுகின்றன. 5. பண்டைத் தமிழரின் தோற்றம் பற்றி இப்பொழுது பல கொள்கைகள் வழங்கி வருகின்றன. அவற்றுள் முதன்மையான சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். திராவிடர்கள் தென்னிந்தியா விற்குள் வந்தேறிகளாக நுழைந்து குடியேறியவர்கள் என்ற கோட்பாடு இன்றைய நிலையில் சற்று வலுவாக வழங்குகிறது. அதையே நிறுவப்பட்ட உண்மையாகவும் சிலர் கருதுகின்றனர். தென்னிந்தியாவிலுள்ள பிராமணரல்லாத சாதியினரும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி போன்ற மொழி களைப் பேசுபவர்களும், அவ்வாறு தென்னாட்டுக்கு வந்து குடியேறிய திராவிடர்களின் பரம்பரையினர் என்றும் கூறப்படுகிறது. அடிப்படையில் பிராமணர்கள் ஆரிய இனத்தவர் எனக் கருதப் படுகின்றனர். அரிசனங்கள் என இப்பொழுது அழைக்கப்படும் பஞ்சமர்கள் ஆதிதிராவிடர்கள் எனப்படுகின்றனர். இக் கோட் பாட்டின் அடிப்படை திராவிடர்கள் தென்னிந்தியாவிற்குள் நுழைந்து பெரும் எண்ணிக்கையில் குடியேறுமுன்னர் நாகரிக மற்றும் வனப்பகுதிகளில் இங்கு இருந்தவர்களான பழங்குடி மக்களைத் திராவிடர்கள் ஒடுக்கி ஆதி திராவிடர்கள் ஆக ஆக்கி விட்டனர் என்பதாகும். இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்த வரை ஆரியர் எப்படி வந்தேறிகளோ அப்படித் திராவிடர்களும் வந்தேறிகளே என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆரியர் களுக்கும் நெடுங்காலம் முன்னரே வந்து குடியேறியவர்கள் திரா விடர்கள் என்கிறார்கள். இதற்கு ஆதாரமாகவேதங்களில் குறிப்பாக ரிக் வேத சம்ஹிதையில் தஸ்ய, தாசர் எனப்படுபவர்கள் ஆரியர் களால் வெல்லப்பட்டு, அடிமையாக்கப்பட்ட திராவிடர்களே என்று கூறுகின்றனர். இது பற்றிப் பின்னர் பார்ப்போம். மேற் சொன்னதருக்கங்கள் எவையும் ஏற்கத்தக்கவை அல்ல என்பதே என் முடிவாகும். காரணம், இவற்றுக்கான ஓரிரு சான்றுகளும் மிக வலுவற்றவை. 6. அடுத்து நாம் பார்க்கவேண்டியது திராவிடர்கள் யார்? என்பது. இதுகுறித்தும் அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. இப்பொழுது பரவலாக வழங்கும் கொள்கைப்படி. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபொழுது மிக வளர்ச்சி அடைந்த திராவிட நாகரிகம் ஒன்று இருந்தது திராவிடர்கள் நண்ணிலக்கரை நாகரிக இனத்தின் ஒரு பிரிவினரே என்பதாகும். ஆக திராவிட நாகரிகம் இந்தியாவிற்கு வெளியிலிருந்து தோன்றியது என்றும், எகிப்து மெசொபொதாமிய நாகரிகங்களோடு உறவுடை யது என்றும் கூறப்படுகிறது. 7. இனங்களைக் குறிப்பதற்கு உடலியற் கூறுகள் பயன்படுத்தப் படுகின்றன. ஆதிச்சநல்லூர், பலுசிஸ்தானில் நால் (Nal), சிந்துவெளி மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப் பட்ட மண்டையோடுகள் ஆய்வு செய்யப்பட்டன. மொகஞ்சதரோ மண்டையோடுகள் தொல் ஆத்திரேலியப் பழங்குடியினர் வகையைச் சார்ந்தது என்றும் அவை சிஷ், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அகழப்பட்ட மண்டையோடுகள், நம் காலத்து இலங்கை வெட்ட டார்கள் மண்டையோடுகள் ஆகியவற்றைப் போன்றவையே என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் மண்டையோடு அசல் தொல் எகிப்திய மண்டையோடு போலவே இருக்கிறது என்பார் எலியட் ஸ்மித், தென்னிந்தியாவின் ஆதிக்குடிகள் நிகராயிரு இனத்தவர் என்றும் தென்னகக் காடுகளிலுள்ள தாடர்கள், ஊராளிகள் ஆகியோரைப் போன்றவர்கள் என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது. அவர்களுடைய அடையாளங்கள் வில் - அம்பு மற்றும் அரசமர வழிபாடு (மக்கட் பெருக்கத்திற்காக) ஆகும். அந்த நீக்ராயிடு இன மக்களைப் புறந்தள்ளியவர்கள் தொல் ஆத்திரேலியா இனத்தவர். அவர்கள் மண்பானை, தாழிகளைப் பயன்படுத்தினர். பூமராங் (வளைதடிடர், புலோகன் (Diaw in) வகை துமுக்கி, மரபுச் சின்ன வழிபாடு ஆகியவை அவர்களின் அடையாளங்களாகும். அடுத்து வந்தவர்கள் நண்ணிலக்கரை இனத்தவர். இப்பொழுது இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் உள்ள மக்களுள் பெரும்பாலோருடைய உடல் அமைப்பு இவர்களுடைய உடலமைப் பாகவே உள்ளது. இவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டை மேம் படுத்தினர். வேளாண்மை, கடல் போக்குவரத்து ஆகியவற்றை இவர்கள் கொண்டு வந்தனர். இவர்கள் வந்தது நண்ணிலக்கரை கிழக்குப் பகுதியிலிருந்து அப்பகுதியில் இருந்த அர்மீனிய இன மக்களுக்கும், அவர்களுக்கும் அங்கேயே கலப்பு ஏற்பட்டிருக்கும். தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் மடலம் 1 இல் தர்பைடன் கூறுவது அர்மீனிய மண்டையோடு தென்னிந்திய மாந்தனின் மண்டையோட்டைப் போலவே உள்ளது என்பதாகும். நண்ணிலக் கரையர், அர்மினியர் உடலமைப்புகளின் கலந்த வடிவைத் தமிழர் களிடையே நன்கு காணலாம். அண்மைக்கால ஆய்வாளர் முனைவர் குஹா கருத்துப்படி தெலுங்கர்கள் தூய நண்ணிலக்கரை இனத்தவர், அகல் மண்டையோட்டினர் (Bachycephalic) குடியேற்றம் பெரு மளவுக்கு தமிழ்நாட்டில் நடந்துள்ள போதிலும் அந்திர தேசத்தில் அவர்கள் பரவவில்லை . 8. மேற்சொன்ன கோட்பாடும் அதுபோன்ற வேறு சிலவும் மேம்போக்காகப் பார்த்தால் ஏற்கத்தக்கனவாகத் தோன்றலாம். ஆனால், அகழ்வாய்வாளர்கள் அண்மையில் வெளிக் கொணர்ந் துள்ள சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்புக்கள் இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டன. அவ்வகழ்வாய்வு எச்சங்களைக் கவனமாக ஆய்வு செய்தனர்ஜான்மார்சல் சிந்துவெளி நாகரிகஎச்சங்கள் திராவிட நாகரிகம் சார்ந்தவையே என்று தெளிவாகக் கூறுகிறார், சிந்துவெளி நாகரிகம் எந்த இனச் சார்புடையது என்பது பற்றி மூன்று கருத்துகள் உள்ளன. முதல் கருத்து மார்சல் அறுதியிட்டுள்ளது போல் அது திராவிடர் நாகரிகம் என்பதாகும். இரண்டாவதாக சிலர் சிந்துவெளி நாகரிகத்தை ஆரியத்தன்மை வாய்ந்தது என்று கருதுகின்றனர். மூன்றாவது கருத்து: இந்நாகரிகம் திராவிடருடையதுமல்ல ஆரியருடையதுமல்ல; இப்பொழுது நம்மிடமுள்ள செய்திகள் அடிப்படையில் அது எந்த இனத்தைச் சார்ந்தது என்று கூற இயலாது என்பதாகும். சிந்துவெளி நாகரிகம் 'வேத காலத்துக்குப் பிற்பட்டது என்றோ தமிழர் நாகரிக மென்றோ நிறுவுவதில் மொழியியல் சிக்கல் உள்ளது. இவ் வகையில் அருட்தந்தை ஹீராஸ் ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. பஞ்சாபிலிருந்து பாரசீக வளைகுடா வரையிலுள்ள நிலப்பகுதி முழுவதும் சிந்துவெளி நாகரிகம் வழங்கிய பகுதி என்றும், அங்கிருந்து அந்நாகரிகம் மேற்கு நோக்கி சுமேரியா, பாபிலோன், எகிப்து போன்ற நாடுகளுக்குப் பரவியது என்றும் கருதும் ஹீராஸ் கோட்பாடு இப்பொழுது வலுப்பெற்று வருகிறது. இச்செய்தி மிகக் கவனமாக ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் முடிவு செய்ய வேண்டிய தாகும். இப்பொழுது அத்தகைய ஆய்வில் நுழைய இயலாது. 9. சுமேரியாவில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள், புடைப் போவியங்கள் ஆகியவற்றிலிருந்து சுமேரிய மக்களின் இனம் தென் னிந்தியரைப் போன்றதே என்று அறியலாம். சிந்துவெளி நாகரி கத்தை அகழ்வாய்வில் கண்டுபிடித்ததற்கு முன்னரே எச் ஆர். ஹால் இது பற்றித் தெரிவித்த கருத்து இப்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்டாக வேண்டிய உண்மையாகிவிட்டது. சுமேரியரும் சிந்துவெளி நாகரிகத்தினரும் ஒரே இனத்தவரே என்பது பற்றி அறிஞர் களிடையே கருத்தொற்றுமை உள்ளது. சிந்துவெளியினர் நிலம் வழியாகவும், கடல் வழியாகவும் பாரசீகத்தைத் தாண்டி யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கிற்குச் சென்று குடியேறினர். வழியில் தங்கள் நாகரிகத்தின் விதையை எலாம் நாட்டில் விட்டு விட்டுச் சென்றனர். சுமேரியரும் சிந்துவெளி நாகரிக மக்களும் தென்னிந்தியரைப் போன்ற இனத்தவர் என்பதை மறுக்க முடியாது, என்பதால் சிந்துவெளியிலிருந்து திராவிடத்திற்குமோ அல்லது திராவிடத்திலிருந்து சிந்துவெளிக்கோ மக்கள் பெயர்ச்சி அந்த வழியில் இருந்திருக்க வேண்டும் என்று ஆகிறது. இதற்கு எதிர்பாராத சான்று ஒன்று திட்டியுள்ளது. சுமேரியக் கதைகளில் வரும் ஓயானிஸ் என்னும் மீன் மாந்தன் பாராக வளைகுடாவை நீந்திக் கடந்து எரிது போன்ற சுமேரிய நகரங்களுக்கு நாகரிகக் கலைகளைக் கொண்டு வந்தான் என்னும் கூற்று இதற்கு வலுவான சான்றாகும். ஆக பஞ்சாயிலிருந்து பண்டை சுமேரியாவுக்கு மேற்கு நோக்கி நாகரிகம் பரவியது என்று கூறும் பொழுது திராவிட நண்ணிலக்கரை இனம் என்ற கருதுகோளுக்கு ஆதாரம் இன்றிப்போகிறது. 10. இரண்டாவதாக மாந்தவியலாளர் திராவிடர் தோற்றம் பற்றி கருதுவதைப் பார்ப்போம். திராவிடர்கள் குறைந்த உயர முடையவர்கள் கருநிறத்தவர், நீண்ட தலை, அகல் மூக்கு, நீண்... முழங்கை ஆகியவற்றைக் கொண்டவர்கள். என்பது எச். ரிஸ்வியின் கருத்தாகும். பின்னர் அவர்கள் ஆரியர், சாகர், சிரியர், மங்கோலியர் ஆகிய இளங்களோடு ஆங்காங்கு கலந்து இந்தியாவில் மொத்தம் நான்கு கலப்பினங்கள் உருவாகியுள்ளன என்று தனது இந்திய மக்கள் என்னும் நூலில் (பக். 46 ரிஸ்லி கூறுகிறார். ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் - திராவிடர் ஆடறவு, சிதியர் திராவிடர் உறவு பற்றி யெல்லாம் சாறப்பட்ட கருத்துக்களும் திராவிடர்கள் இமய மலைக்கு அப்பாலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த மங்கோலியர் கள் என்ற கருத்தும் இப்பொழுது ஆதாரமற்றவை என அறிஞர்கள் ளால் ஒதுக்கப்பட்டுவிட்டன. திராவிடர்கள் ஆப்பிரிக்கா கண்டத்தி லிருந்து வந்தவர்கள் என்று டபிள் குருக் கூறுவதும் ஆதாரமற்றது. கரட் மக்களின் ஒரு பிரிவினரும், ஆசியா மைனரில் இருந்தவர்களும் ஆன லிசியர்கள் தங்களை திறம்மிலை என்று அழைத்துக் கொண்டதாக அவர்களுடைய கல்லறைப் பொறிப்புக்களிலிருந்து தெரிய வருகிறது. இந்த (வலுவற்றதும் தற்செயலாக வாய்த்ததுமான) சொல் லொப்புமையை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு நண்ணிலக்கரையில் இருந்து ஈஜியன் (Aegan) இனத்தின் ஒரு பிரிவினரே திராவிடராயினர் என்ற தருக்கமும் எழுந்துள்ளது. ஈஜிய நாகரிகம் சுமார் கிமு 2500இல்தான் தோன்றியது. ஆனால் தமிழர் நாகரிகம் அகழ்வாய்வுச் சான்றுகளின்படி அக்காலக்கட்டத்துக்கும் முந்தியதாகும். லிசியர்கள், கிரேக்கர்களல்ல என்றும், கிரேக்க இனக் குழுக்களுக்குப் புறம்பானவர்கள் என்றும் அனைவரும் ஏற்கின்றனர். ஒருவேளை அவர்கள் ட்ராய் மக்களோடு தொடர்புடையவர்களாய் இருந்திருக்கலாம். அப்படியானால் மேற்கே சென்ற தமிழ் மக்களின் ஒரு பிரிவினர்தாம் தங்கள் பயணத்தில் ஆசியா மைனரில் குடியேறி திரடிமிலை என்று அழைக்கப் பட்டாளர் என்று கூறுவது பொருத்தமானதாகும். இப்பொழுது தென்னாப்பிரிக்கா, பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் தமிழர் குடியேற்றங்கள் இருப்பது போன்று அக்காலத்தில் ஆசியா மைனரில் ஏற்பட்டிருக்கலாம், 11. மாந்தவியலறிஞர் கருத்துகள் பலவிதமாக இருக்கின்றன. அகழ்வாய்வு மற்றும் வரலாற்றுச் சான்றுகளின்பட தென்னிந்தியாவில் பழங்கற் காலத்திலிருந்து இன்றுவரை நாகரிகம் தொடர்ச்சி யாக வளர்ந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. மாந்தவியலாளர் கோட்பாடுகளுள் ஒன்று. முதலில் தொல் திராவிடர்கள் உருவாக் கியதுதான் பழங்கற்கால நாகரிகம் என்பதும், அதன்பின் புதுக்கற் கால் இறுதியில் திராவிடர்கள் வந்தேறிகளாக நுழைந்தனர் என்பதும் ஆகும். காடு, மலைப் பகுதிகளில் வாழும் குறும்பர், இருளர், தொதவர், இலங்கைவாழ் வெட்டர்கள் போன்றவர்களைத் தொல் திராவிடர் என்கின்றனர். தென்னிந்திய இனக்குழுவினருள் நீக்ரோ அல்லது நெரித்தோ (Negrito) கூறுகள் உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். இந்த நெரித்தோ சுகூறுகள் ஆப்ரிக்க – ஆஸ்திரேலியச்சார்புள்ளவையல்வமலேசியச்சார்புள்ளது என்றும் கருதப்படு கிறது. மலேயாவிலுள்ள சகய் (Sukais) இனக் குழுவினருக் கும் தென்னிந்திய இனக்குழுவினருக்கும் ஒப்புமைகளைத் தர்ஸ்டன் கட்டியுள்ளார். தொல் பழங்காலத்திலிருந்தே தென்னிந்தியா, மலேசியா, பசிபிக் தீவுகள் ஆகிய வற்றிற்கிடையே வணிகத் தொடர்பு இருந்துள்ளமையால் மலேசிய மற்றும் பசிபிக் தீவு மக்கள் சிலர் தென்னிந்தியாவிலும் குடியேறித் தென்னிந்தியருடன் கலந் திருக்க வேண்டும். மலேசிய மொழியில் இந்திய குறிப்பாக தென் னிந்தியச் சொற்கள் நிறைய உள்ளன. ஆனால் திராவிட மொழிகளில் உள்ளமலேசியச் சொற்கள் மிகச் சிலவே. இதிலிருந்து மலேசியாவில் பழங்காலத்தில் குடியேறிய தமிழர் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்றும் தென்னிந்தியாவில் குடியேறிய மலேசிய இனக்குழுவினர் மிகச் சிலரே என்றும் தெரிய வருகிறது. 12. மற்றொரு கோட்பாடு திராவிட மொழிகளைப் பேசிய இனக் குழுவினரும் முண்டா மொழிகளைப் பேசிய இனக் குழுவினரும் பெரு மளவுக்குக் கலந்துவிட்டனர் என்பதாகும். முண்டா மொழிகளைப் பேசியவர்கள் எவரும் தமிழகத்தில் எக்காலத்திலும் வாழ்ந்ததாகக் கூற ஆதாரமில்லை கோதாவரி ஆற்றின் எல்லை வரை முண்டா மொழிகளின் தாக்கம் உள்ளது. எனினும் அதற்குத் தெற்கே அத்தாக்கம் இல்லை. சிறுசிறு இனக்குழுவினர் பேசும் மொழிகளை யெல்லாம் துல்லியமாகக் கணக்கெடுத்தப் பின்னரே இதுபற்றி இறுதியாகக் கூறமுடியும். இப்பொழுது பாகிஸ்தானிலுள்ள) பலுசிஸ்தானில் வாழும் பிராகூயி மக்கள் பேசும் மொழியானது திராவிட மொழி என ஏற்கப்பட்டுள்ளது. திராவிடர்கள் இந்தியா வுக்குள் வட மேற்குக் கணவாய்கள் வழியாக நுழைந்தனர் என்னும் தருக்கத்திற்கு இது ஒரு சான்றாகக் கூறப்படுகிறது. காலத் பகுதியின் கான் (சிற்றரசன் ஆளுகையில் உள்ள இடங்களிலேயே பெருமளவுக்குப் பிராகூயி மக்கள் வாழ்கின்றனர். என்றாலும் பலுசிஸ்தானின் பிற பகுதிகளிலும் அவர்கள் ஓரளவிற்குக் காணப்படு கின்றனர். தாங்கள் அலெப்போவிலிருந்து இங்கு வந்து குடியேறியதாக அவர்கள் கருதுகின்றனர். உடல் தோற்றத்தில் அவர்கள் பட்டாணியர், பலுச்சி மக்கள் ஆகியோரிடமிருந்து வேறுபட்டுள்ள னர். அவர்கள் பெரும்பாலும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். பிராகூயி மொழியில் இந்தோ-ஆரிய மொழிகளில் இருந்து கடன் பெற்ற சொற்கள் மிகப்பல் இருந்தபோதிலும் அடிப்படையில் அது இந்தோ-ஆரிய மொழி அல்ல தென்னிந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகளைப் போன்றதேயாகும். அது ஒட்டுநிலை மொழி. பிராகூயி மொழியில் உள்ள பெயர்ச்சொல், அடை பெயர் போன்ற இலக்கணக் கூறுகளெல்லாம் பெருமளவுக்கு திராவிட மொழி களைப் போன்றவை. இதுவும் திராவிடர்கள் இந்தியாவிற்குள் பலுசிஸ்தான் வழியாக நுழைந்தனர் என்பதற்கு ஆதாரமாகக் கூறப்படுகிறது. பிராகூயி மொழி திராவிட மொழியாக இருந்த போதிலும் அதனைப் பேசும் மக்கள் (தென்னாட்டு ) திராவிட இனத்தவர்கள் அல்லர் என்றும் துருக்கிய - இரானிய இனத்தவர்களே என்றும் மாந்தவியலாளர் கருதுகின்றனர். பழங்காலத்திலேயே திராவிட மொழி பேசுதர்தாக்கம் அப்பகுதியில் இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டால் தெற்கிலிருந்து வடக்கு வடமேற்கு நோக்கி சென்ற திராவிடர்கள் பலுசிஸ்தானில் குடியேறினர் என்று ஏன் கருதக்கூடாது? இராஜபுதனத்திலும் நாடு இந்தியாவிலும் வில்லி மொழி, சந்தாலி மொழி போன்ற திராவிட மொழிகள் பேசப்படும், அடிப்படையில் அப்பகுதிகளிலெல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் திராவிட மொழி பேசுநர் பரவினர் என்பது உறுதியா கிறது. மொகஞ்சொதரோ முத்திரை எழுத்துக்களும் அநேகமாக திராவிட மொழி சார்ந்ததாகவே கருதப்பட வேண்டும். யூப்ரடீஸ் ஆறு தெற்காக வளையுமிடத்தில் (மிதன்னி) பேசப்படும் காரியன் (Kharian) அல்லது ஹரியன் (Hurrian) மொழியும் ஒலியனியல், இலக்கணம், சொல்வளம் ஆகியவற்றின் அடிப்படையில் திராவிட மொழிகளைச் சார்ந்ததாகவே இருக்கிறது. கி.மு. 1500ஐ ஒட்டி மிதன்னி அரசரும் எகிப்திய அரசரும் தம்முள் போரிட்டுக் கொண் டனர். அவர்களுக்குள் திருமண உறவும் இருந்தது. அதுபோலவே எலாம் மொழியும் பிராகூயி மொழியும் உறவுள்ளவை. மிதன்னியில் பேசப்பட்ட மொழியும், எலாம் மொழியும் மெசொபதாமியாப் பகுதியில்தான் இருந்தன. சுமேரிய மொழியும் ஒட்டுநிலை மொழியே. மெசொபதாமியாவிலும் ஈரானிலும் உள்ள பல இடப்பெயர்கள் திராவிட மொழிப் பெயர்களைப் போன்றே உள்ளன என்பதை அண்மையில் ஷோனர் கண்டுபிடித்துள்ளார் (அமெரிக்க கீழை யியல் ஆய்வுக் கழக இதழ், JAOS, 1930இல் பிரவுன் எழுதிய கட்டுரையைக் காண்க.) 13. இந்தியர் குடியேற்ற எச்சங்கள் எகிப்தில் மெம்பிஸ் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'ஊர்' என்னும் பெயரே தூய தமிழ்ச் சொல் தமிழிலக்கியத்தில் வளர் தென்னாட்டில் உள்ள சிற்றூர் அல்லது நகரத்தைக் குறிக்க வழங்கி வருகிறது. மெம்பிஸ் அகழாய்வில் மிக ஆழமான அடுக்கு ஒன்றில் நவகிரி மலையில் லிருந்து போன அமெசானைட் மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கும் திராவிடர் தோற்றத்திற்கும் என்ன தொடர்பு? திராவிட மொழி பேசுநர்களுடன் அம்மொழியும் சென்றுள்ளது என்பதே இதிலிருந்து திராவிடர்கள் மேற்காசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தேறியவர்கள் என்று நாம் மேம்போக்காக கருதி விடலாமா? இல்லை. உண்மை இதற்கு நேர்மாறானது, 14. 'வேதங்களில் அநாச எனக் குறிப்பிடப்படும் தாசர்களும் தஸ்யுக்களும் திராவிடர்களா என்பதும் ஒரு புதிராகவே உள்ளது. அநாச என்பதற்கு வேறுபட்ட பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இது திராவிட இனக்குழு மக்களுள் சப்பை மூக்கினராக இருந்தவர் களைச் சுட்டுவதற்காக மூக்கில்லாதவன்' என்ற பொருளில் வழங் கியது என்பர் சிலர். அச்சொல்லுக்கு ஆஸ்யராஹித அதாவது பேச்சற்றவர்கள் என்ற பொருளைச் சயனர் தருகிறார். பேச்சற்றவர் கள் என்றால் ஊமையர் என்று பொருளல்ல. பண்பட்ட சமற்கிருதம் போன்று அல்லாமல் புரியாத மொழியைப் பேசியவர்கள் என்ற பொருளைத்தான் கொள்ள வேண்டும். தஸ்யுக்களின் இனச்சார்பு குறித்து மனம் போனவாறு பல கருத்துகள் உள்ளன. அவர்கள் இரானியர்கள் என்பதும் ஒரு கருத்து. ஆனால் தஸ்யுக்கள் முல்லை, பாலை நிலங்களில் வசித்துவந்த பண்படாத இனக்குழுவினர், தெளிவான மொழியோ சமயக் கூறுகளோ இல்லாதவர்கள் ஆகியோரைச் சுட்டுகிறது என்பதே பொருத்தமாகும். அத்தரே பிராமணத்தில் விசுவாமித்திர முனிவரின் மகன்கள் தஸ்யுக்கள் என்றழைக்கப்படுகின்றனர். ரிக்வேத சம்ஹிதையின் மூன்றாம் மண்டலத்தில் விசுவாமித்திரரின் பெயர் வருகிறது. சில அறிஞர்கள் கூறுவது போல் திராவிடர்கள் தஸ்யுக்கள் என்றால் விசுவா மித்திரரும் திராவிடராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் உண்மை யில் தஸ்யுக்களை ஆரியரல்லாதவர்கள் எனக் கூற இயலாது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிக் காலத்தில் பஞ்சாப் - கங்கைச் சமவெளிப் பகுதியில் வசித்த தஸ்யு - திராவிடர்கள் தோல்வியுற்று தென்னிந்தியா சென்று குடியேறினர் என்னும் வாதம் ஆதாரமற்றது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் மக்கள் குடியேற்றம் இல்லாதிருந்து பின்னர் முதலில் வந்தேறிகளாக திராவிடர்களும் அதன்பின்னர் ஆரியர்களும் நுழைந்தனர் என்ற கோட்பாடுகள் ஆதாரமற்றவை. அகழ்வாய்வில் கிட்டியுள்ள சிறந்த சான்றுகளே உண்மைநிலையைத் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் கிடைத்த அகழ்வாய்வுச் சான்றுகள் அப்பகுதியில் நாகரிகம் படிப்படியாக பழங்கற்காலத்திலிருந்து புதுக்கற் காலத்திற்கும் புதுக்கற்காலத்தில் லிருந்து பெருங்கற்காலத்திற்கும், பெருங்கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்திற்கும் முறையாக வளர்ந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கின்றன. தென்னிந்தியாவுக்குள் வந்தேறிய திராவிடர்கள் இந்நாகரிகத்தை அழித்ததாகக் கருத இயலாது. இந்த இக்கட்டை எதிர்கொள்ளத் 'தொல் திராவிடர்' என்னும் கோட்பாடு முன்வைக்கப் படுகிறது. திராவிடர் வந்தேறிக் கொள்கை எவ்வளவு ஆதாரமற்றதோ அவ்வளவுக்கு தொல் திராவிடர் கோட்பாடும் ஆதாரமற்றதே ஆகும் பழந் தமிழர்களே தொன்றுதொட்டு பழங்கற்காலத்திலிருந்து இன்றுவரை தென்னிந்தி யாவில் நிலைத்து வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பது எனது உறுதியான கருத்து ஆகும். 15.அடுத்து மொழியியல் சான்றுகளைக் காண்போம் இனத்தைப் பண்பாட்டின் அடிப்படையில் முடிவு கட்ட முடியாதது போல், மொழியின் அடிப்படையிலும் முடிவு கட்ட இயலாது. தர்ம என்னும் வடமொழிச் சொல்லைப் போன்று இனம் Race) என்னும் மாந்தவியல் சொல்லும் மொழிபெயர்க்க கடினமானது. இவ்விரு சொற்களும் மனம் போனபடி குழப்பமாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாந்தர்களைப் பல்வேறு தனி இனங்களாகப் பகுப்பது அறிவியல் ஆதாரமற்றப் போலிக் கருத்து, தீங்கான கருத்து என்று அண்மைக் தால் அறிவியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். (ஜாலியன் ஹக்ஸ்லி எழுதிய ஐரோப்பிய இனங்கள் - ஆக்ஸ்போர்டு சிறு வெளியீடு - 5 1939) மாந்தர்களிடையே உள்ள வேறுபாடுகளை இனத்தின் அடிப்படையில் அல்லாமல் பண்பாட்டின் அடிப் படையிலேயே காண்பதுதான் அறிவியல் சார்ந்த அணுகுமுறையாக மாந்த வியலாளர்களால் தற்பொழுது கருதப்படுகிறது. இப்பொழுது நாம் ஐரோப்பாவில் இலத்தின் பண்பாடு என்று கூறுகிறோம்; இலத்தின் இனம் என்று கூறுவதில்லை. அதுபோல் ஆங்கிலோசாக்சன் பண்பாடு என்கிறோம் ஆங்கிலேசாக்பன் இளம் என்று அல்ல. அதே போன்று இந்தியாவிலும் நாம் ஆரியப் பண்பாடு திராவிடப் பண்பாடு என்றுதான் குறிப்பிட வேண்டும். சமற்கிருத அறிஞர் மாக்ஸ்முல்லா அவர்களால் 1833இல் ஆரிய இனம்பற்றிய கருத்து ஆங்கில மொழியில் புகுத்தப்பட்டது வருந்துதற்குரியது. ஆரிய இன மொழிகளைப் பேசியவர்களைக் குறிக்க ஆரியர் என்னும் சொல்லை சர். வில்லியம் ஜோன்ஸ் பயன்படுத்தியது போன்று மாக்ஸ்முல்லரும் பயன்படுத்தியதுடன் நின்றிருந்தால் உலகின் அமைதிக்கு அவர் உதவியிருப்பார். ஆனால் மாக்ஸ்முல்லர் ஆரிய இனம்' என்பது பற்றியும் குறிப்பிட்டது வருந்துதற்குரியது. தவறான கருத்துகள் எப்பொழுதும் விரைந்து பரவுகின்றன. அப்படியே ஆரிய இனம் பற்றிய கருத்தும் ஐரோப்பா முழுவதும் சடுதியில் பரவியது. இந்த விளைவைக் கண்ட மாக்ஸ்முல்லர் பின்காலத்தில் 1888 இல் வெளியிட்ட சொற்களின் பிறப்பு வரலாறும் ஆரியர்களின் பூர்வீக ' நிலமும் என்னும் தம் நூலின் 120 ஆம் பக்கத்தில் பின்வருமாறு விளக்கினார். ''ஆரியன் என்று நான் கூறும் பொழுது இரத்தம், எலும்பு, மயிர், மண்டையோடு போன்றவற்றின் அடிப்படையில் கூறவில்லை. ஆரிய மொழியைப் பேசியவன் என்பதே என் கருத்து. இதை நான் அடிக்கடி கூறியுள்ளேன். ஒரு மொழியியல் அறிஞர் ' நீள் மண்டையர் அகராதி என்றோ 'அகல மண்டையர் இலக்கணம்' என்றோ குறிப்பிடுவது எவ்வளவு தவறோ அவ்வளவு (தவறு) ஆரிய இனம், ஆரிய இரத்தம், ஆரியக்கண், ஆரிய மயிர் என்று மாந்தவியலாலர் குறிப்பிடுவது மாகும். ஆனால் இந்த விளக்கத்தை அவர் தருவதற்கு முன்னர் ஆரிய இனக் கோட்பாடு வேரூன்றி பலர் அதனைக் மும்முரமாகப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இன்று செருமானிய முற்றதிகாரி இட்லர் ஆட்சியில் யூதர்கள் கொடுமைப் படுத்தப் படுவதும் ஆரிய இனக் கொள்கையின் வேண்டாத விளைவுகளில் ஒன்றுதான். எது எப்படி இருந்தபோதிலும் உண்மையை நாடுவோரும் அறிவியல் அறிஞர்களும் ஆரிய இனக் கொள்கை என்பதை முழு அபத்தம் என்றே கருதுகின்றனர். 16. திராவிட இனக் கோட்பாட்டையும் இந்நோக்கில் தான் காண வேண்டும். ஆரிய இனக்கொள்கை போலியானது. திராவிட இனக் கொள்கை அதைவிடப் போலியானது. தென்னிந்தியாவில் வழங்கிய தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி களைப் பேசியவர்களைக் கட்டுவதற்காக திராவிடம் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மொழிகளுக்குள் மிகப் பழையது தமிழ் என்பது வெளிப்படை. தமிழிலிருந்துதான் ஏனைய திராவிட மொழிகள் தோன்றின என்பது என் கருத்து. அண்மையில் சிலர் கன்னட மொழியின் தொன்மையை மிகைப்படுத்திக் கூறியுள்ளனர். இருப்பினும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் பண்பட்ட தனித்தனி மொழிகள் ஆயின என்பதும் அந்தக் காலக்கட்டத்தில் தென்னிந்தி யாவில் சமற்கிருத மொழி ஆளுமை பெருகியிருந்ததே அதற்குக் காரணம் என்பதுமே ஏற்கத்தக்கதாகும். ஆதியில் தமிழ் மொழி யையும் அதிலிருந்து உருவான மொழிகளையும் சுட்டுவதற்குத்தான் திராவிடம் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. தொல் பழங்காலத்தில் இனக்குழுவினர் ஆங்காங்குக் குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் வாழ்ந்த பொழுது பண்பாட்டுப் பரவல் ஒரே சீராக இருந்ததில்லை. அந்தந்த இனக்குழுவின் சூழ்நிலைக்கேற்ப ஒழுக்கம், மனநிலை, உடலமைப்பு ஆகியவற்றில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டன. உணவு, பருகுதல், உடை ஆகியவற்றிலும் ஒழுக்க நடை முறைகளிலும் தனி மாற்றங்கள் ஏற்பட்டன. அகமண முறை உருவாகியது. ஓர் இனக்குழுவின் வாழ்க்கைச் சூழ்நிலை, மனநிலை ஆகியவற்றிற்கேற்ப கட்டமைப்புக்கள் உருவாகி தலைவர்களும் தோன்றினர். இனக்குழு உறவுமுறையிலிருந்து அந்தந்தக் குழுவை அடையாளங் காட்டும் வாழ்க்கை முறையும், மன உணர்வுகளும் உருவாயின என்பது பண்டைய இந்திய வரலாற்றிலிருந்தும், குறிப்பாகத் தென்னிந்திய வரலாற்றிலிருந்தும் நாம் காண்பதாகும். இத்தகைய குழுக்கள் இனக் குழுவாகவோ, சாதியாகவோ, தொழிற் குழுவாகவோ இருக்கலாம். எத்தகைய குழுவாயினும் சரி இக் குழுக்கள் குடிநாயக முறையில் அரசும், குமுகாயமும் முன்னேற வகைசெய்தன. திராவிட மொழிகள் பேசும் தென்னாட்டில் இருந்த மக்கள் பன்முகம் கொண்ட, ஆனால் அதே நேரத்தில் தென்னிந்தியப் பண்பாடு அல்லது தமிழ்ப் பண்பாடு என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடும் அளவுக்குப் பொதுமைப் பண்புகள் நிறைந்த ஒரு நாகரிகத்தை உருவாக்கினர். 17. ஓரிடத்தில் பல நூறு ஆண்டுகள் மக்கட் குழுவினர் குறிப் பிட்ட வாழ்க்கை முறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வரும் பொழுது அந்தந்தப் பகுதியின் தட்பவெட்ப நிலைகள் போன்ற காரணங்களால் மாந்த உடற்கூறு மாறுதலடைகிறது. இவ்வாறு உடற்கூறு மாறுதலடைந்த குழுக்களைத் தனித்தனி இனம் (Race) என்று குறிப்பிடுவது அறிவியலுக்கு ஒவ்வாது. தோலின் நிறம், மூக்கின் வடிவம் ஆகியவையெல்லாம் தட்பவெப்பம், புவியியல் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்தவையே. இன்று தமிழர்களை விட மலையாளிகள் சிவப்பாக உள்ளனர்; அவர்களை விட மங்களூர் மக்கள் மேலும் சிவப்பாக உள்ளனர். ஆர்ய என்னும் சொல் பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் ஒன்று அது ஆர்யவர்த்தம் ஆகிய வடஇந்தியாவில் வசிப்பவனைக் குறிக்கிறது; அல்லது மேலோன் என்ற பொருளில் வருகிறது. பண்டைய இந்தியர்களின் புவியியல் கோட்பாட்டின்படி இந்தியாவானது ஆர்யவர்த்தம், மத்யதேசம், தக்ஷிண பதம் (திராவிடம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆர்யவர்த்தம் அல்லது ஆரிய நாட்டில் தண்டகாரணியமும் அடங்கியிருந்ததாக பதிற்றுப் பத்து கூறுகிறது. திராவிட தேசத்தில் வசித்து, திராவிட மொழி பேசியவன் திராவிடன் எனப்பட்டான். இந்திய இலக்கியம் எதுவும் ஆர்ய இனத்தான், திராவிட இனத்தான் என்று யாரையும் பிரித்துக் கூறுவது இல்லை . பண்டையத் தமிழர்களின் இருப்பிடம் திரா விடம் ஆகும். அங்கம், வங்கம், மகதம் போல் திராவிடமும் ஒரு நாட்டுப் பெயரே. தமிழ் என்னும் சொல்லில் இருந்துதான் தமிழ் - தமில் - தமிழ் - த்ரமில - த்ரமிட - திராவிட என்றவாறு திராவிட என்னும் சொல் உருவானதாகத் தெரிகிறது. 18. இன்று நாம் திராவிடர் என்னும் பொழுது, தமிழ், மலை யாளம் பேசும் மக்களையே குறிக்கிறோம். இதுகுறித்து தமிழிலக் கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் உள்ள செய்திகளைக் காண்போம். தமிழிலக்கியத்தின்படி வேங்கட மலைக்குத் தெற்கி லுள்ள நிலப்பகுதி முழுவதும் தமிழகம் ஆகும். ஆந்திர தேசமும், மைசூர் - கன்னடப் பகுதிகளும் தமிழ்நாட்டிற்குள் அடங்கியவை யல்ல. தென்னிந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகக் குறிப்பிடத்தக்கவை திணைப் பாகுபாடு (ஐந்து திணைகள்); தண்மையை விரும்புதலும்; வெம்மையை வெறுத்தலும், ஆசியாவின் பிற பகுதிகளில் உள்ளது போன்ற பீடபூமிகள் இன்மை ; சுமேரிய - கால்தியா பகுதிக்கு உரிய திராட்சை, அத்திபழம் போன்றவை இன்மை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அகழ்வாய்வுச் சான்றுகள் 19. பண்டைய நாகரிகத்தையும் வரலாற்றையும் தெளிவாக விளக்கத்தக்க, தடயங்கள் கிடைக்கக்கூடியப் பல இடங்கள் தென் னிந்தியாவில் இருந்த போதிலும் தொல்பொருள் ஆய்வுத்துறை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு, அவ்விடங்களில் அகழ்வாய்வு செய்யாமல் இருப்பது வருந்துதற் குரியது. இத்துறையில் முன்னோடியாகச் செயல்பட்டுச் சிறந்த பணிசெய்த புரூஸ் புட் பெயர் நினைவிற்கொள்ளத்தக்கது. நீலகிரி மலைப் பகுதியின் தொன்மை வரலாற்றை அகழ்வாய்வு அடிப்படையில் ஆய்வு செய்த பீரீக்ஸ் - இன் பெயரும், ஆதிச்சநல்லூரில் அகழ்வு செய்த அலெக் ஸாண்டர் ரியா பெயரும் குறிப்பிடத்தக்கவை. தென்னிந்திய அகழ்வாய்வின் முன்னோடிகளாகிய இவர்கள் கண்டெடுத்தத் தொல்பொருள் எச்சங்களின் அடிப்படையில் நான் எனது தருக் கத்தைத் தொடர்கிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிர பரணி ஆற்றின் தென்கரையில் தொல்பழங்காலத்தில் இடுகாடாக இருந்த 114 ஏக்கர் நிலப்பகுதியில் அகழ்வாய்வு செய்தவர் ரியா ஆவார். தென்னிந்தியாவில் புதுக்கற்காலத்திற்குப் பின் வந்த இரும்புக்காலத் தொடக்க நிலைக் காலக் கட்டத்தைச் சார்ந்தவை ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளாகும். இத்தாழி களையே, போன்றவை புதுக்கோட்டை சமத்தானம் அன்னவாசல் ; பழனி, ஆனைமலைப் பகுதிகள்: நீலமலை(கிரி) , கோயம்புத்தூர், சேலம், வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, அணந்தப்பூர், பெல்லாரி, கருநூல் ஆகிய மாவட்டங்கள் இவற்றிலெல்லாம் கிடைத்துள்ளன. 20. இதுவரை பழங்கற்கால மனிதன் குடியிருப்பு எச்சங்கள் கிடைக்க வில்லை. எனினும் அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான கற் கருவிகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. பிற நாடுகளில் இருந்த பழங்கற்கால மாந்தனைப் போல் அல்லாமல், தென்னிந்தியப் பழங்கற்கால மாந்தன் அவ்வளவு காட்டுவிலங் காண்டித்தனம் வாய்ந்தவனல்ல என்று நான் சொன்னதற்கு இக் கருவிகளே ஆதாரமாகும். தென்னிந்தியாவில் தாராளமாகக் கிடைக்கும் குவார்ட்சைட் (Quartzite) கல்லிலிருந்து உருவாக்கப் பட்டவை இக்கருவிகள். தக்காணப் பீடபூமியின் மையத்தில் பெல்லாரிக்கு அருகிலும் மைசூர் சமத்தானப் பகுதிகளிலும் கிடைத் துள்ள கருவிகள் அங்குத் தாராளமாகக் கிடைக்கும் இரும்புக் கனிமம் குவார்ட்சைட்டால் ஆனவை. பழங்கற்காலக் கருவிகள் பயன்பாட்டு அடிப்படையில் பத்து இனங்களாக வகைப் படுத்தப் பட்டுள்ளன. புரூஸ் புட் நூலின் படம் I - இல் கண்டுள்ளபடி பெரும்பாலான கருவிகள் நீள்வட்ட வடிவில் இருந்தன. கோடாரி, குறும் ஈட்டி, குத்துக்கோல், சப்பைக்கல், மழு, கத்தி, சுரண்டி, கல்லுருண்டை, சுத்தியற் கல், ஆகியவையே மேற்சொன்ன பத்து வகைக் கருவிகளாகும். அந்தப் படத்தில் 2204-7 எண்ணுள்ள கருவிகள் வளைந்த சுரண்டுமுனை கொண்டவை யாகும். 'பசிபிக் பெருங்கடல் தென்பகுதித் தீவுகளில் பெரிய மரக்கட்டைகளின் நடுவில் நெருப்பு வைத்துக் கொளுத்தி பின்னர் கருகிய பாகத்தை குடைந்து எறிந்து கெனோ என்னும் படகை தயாரித்து வந்தனர். அவ்வாறு தயாரிக்கும் பொழுது சுரண்டி எடுக்க இக்கருவி மிக பொருத்தமாக இருந்திருக்கும். வேட்டையாடிக் கொன்ற விலங்கு களின் தோலை உரிக்கவும் சுரண்டி , பயன் பட்டிருக்கும். புதுக் கற்கால மக்களும் இவற்றைப் பயன்படுத்தினர். பழங்கற் கால மக்களுக்கு நெருப்பின் பயன் தெரிந்திருக்கும்; எனினும் நெருப்பின் தடயமோ சுட்ட மண்கலத் தடயமோ கிடைக்கவில்லை. இக்கருவி களின் நேர்த்தியைக் கண்ட புரூஸ்புட் இவற்றை உருவாக்கியவர்கள் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். பல இடங்களிலும் இப்பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள போதிலும் முக்கியமான இடம் அலிசூர் மலையே ஆகும். 21. தக்காணத்தில் தாராளமாகக் கிடைக்கும் கருங்கற் பாறைகளைக் கொண்டு (Black Trap Rocks) புதுக்கற்கால மக்கள் கருவிகளைச் செய்தனர். சிவப்பு நிறமுடைய குவார்ட்சைட் பாறைகளை அவர்கள் விரும்பவில்லை. காரணம் அவற்றைவிட கருங்கல் வலுவானது; நீடித்து உழைப்பது. புரூஸ் புட் தொகுத்த வற்றுள் புதுக்கற்காலக் கருவிகள் 1000க்கு மேல் உள்ளன. அவற்றை அவர் 78 வகைகளாப் பிரித்துள்ளார். வழவழப்பாக்கப் பட்டவை 41 வகைகள்; மீதி 37ம் வழவழப்பாக்கப்படாதவை. (புரூஸ் நூலின் படம் 3). புதுக்கற்காலத்தில் வண்ணம் ஊட்டப்பட்ட மண்கலங் களும், பச்சைநிற அமெசான் கல், ஃபெல்ஸ்ப ர்(Tolspa) போன்ற இரத்தினக் கற்களும் பயன்படுத்தப்பட்டன. நண்ணிலக் கடலில் க்ரீட் தீவு, கிரேக்க நாடு போன்ற சில மேல்நாடுளிற் போல் தென் னிந்தியாவிலும் புதுக்கற்காலத்தை அடுத்து உடனடியாக இரும்புக் காலம் தொடங்கிவிட்டது. புதுக்கற்கால மக்கள் இரும்பின் பயன் பாட்டை அறிந்ததும் அது கருங்கல்லை விட வலுவானதும் நீடித் துழைப்பதும் ஆகையால் அதைப் பயன்படுத்தினர். புதுக்கற் காலக் குடியிருப்பு இடங்களில் இரும்புக்காலத்தைச் சார்ந்த சுடுமண் கலங்கள் கிடைத்துள்ளன. அதே காலக்கட்டத்தில் சிந்து வெளிப் பகுதிகளில் இருந்த மக்கள் செப்புக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி வந்த போதிலும் தென்னிந்தியாவில் செம்பு அல்லது வெண்கலக் கருவிகள் பயன் படுத்தப்படாமல் இரும்புக் கருவிகள் தாம் பயன்படுத்தப்பட்டன. செம்பு மற்றும் வெண்கலத்தைப் பயன்படுத்திய மக்களோடு கொண்ட தொடர்பால் இரும்புக்காலப் பிற்பகுதியில் கலப்பு மாழைகள் செய்யவும் கற்றுக்கொண்டனர். இரும்புக்காலத் தொடக்கம் கி.மு. நான்காயிரத்துக்கு முன்னர் இருந்திருக்க வேண்டும். படம் - 42 இல் காணப்படும் சங்கு வளையல்கள் இரும்புக் காலத் தொடக்கத்தைச் சார்ந்தவை. ஜப்பான் தீவுகளில் அகழ்வாய்வு செய்தவரும் மாழைத் தொழில் அறிஞரும் ஆன பேராசிரியர் கௌலாந்து (Gowland) கருதுவது: தற்செயலாக இரும்புக்கனிமத்தை உருக்கினால் இரும்பு கிடைப்பது தென்னிந்தி யாவில் கண்டு பிடிக்கப்பட்டு அதன்பின் அத்திறன் மேம் படுத்தப் பட்டு ஏராளமான இரும்புக் கருவிகள் உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்; எனவேதான் நிறைய இரும்புக்கருவி எச்சங்கள் கிடைத் துள்ளன; ஐரோப்பாவில் இரும்புக் கருவிக் காலம் தொடங்குவதற்கு முன்னரே தென்னிந்தியாவில் அது தொடங்கி விட்டதென்பதாகும். அப்படியானால் க்ரீட் தீவு மக்கள் எப்படிப் புதுக்கற்காலத் திலிருந்து நேரடியாக இரும்புக்காலத்திற்கு முன்னேறினர்? க்ரீட் தொல் வரலாற்று ஆய்வாளர்கள்தான் இதற்கு விடை கூறவேண்டும். கற்கால மக்கள் காட்டுப்பகுதிகளுக்குள் வாழ்ந்தவர்களாகத் தெரிய வில்லை. அவர்கள் குடியிருந்த இடங்கள் குன்று சார்ந்த சமவெளிப் பகுதிகளேயாகும். இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு, இரும்புக் கருவிகள் உருவாக்கப்பட்ட பின்னர்தான் வனப்பகுதிகளுக்குள் மாந்தன் குடியேறியிருக்க வேண்டும். இரும்புக் கருவிகள் இல்லாமல் எப்படி மரங்களை வெட்டி காட்டுப்பகுதிக்குள் குடியிருப்பிடம் அமைத்திருக்க இயலும்? 22 இரும்புக்காலப் பிற்பகுதியில் நாகரிகம் வளர்ந்தது. வெண் கலம் போன்ற மாழைக்கலவைகள் செய்யத் தொடங்கினர். இரும்புக் கருவிகளோடு தங்கம், வெண்கலம், செம்பு ஆகியவற்றாலும் பொருள்கள், கருவிகள், கலங்கள் செய்யப்பட்டன. சுடுமண்கலம் உருவாக்கம் மிக முன்னேறியது என்பதை இடுகாடு களிலும் பெருங்கற்காலக் கல்லறைகளிலும் இருந்து கிடைத்த எச்சங்களிலிருந்தும் அறிகிறோம். இந்தக் காலக்கட்டத்தில் தான் திராவிடர்கள் தென்னாட்டிற்கு வந்து குடியேறினர் என்று சிலர் கருதுகின்றனர். தென்னாட்டில் பழங்கற்காலப் பண்பாடு, புதுக்கற் காலப் பண்பாடு ஆகிய வற்றோடு பின்னிப் பிணைந்தவாறு இரும்புக் கால நாகரிகம் அமைந்துள்ளது என்பதை மறந்துவிட்டு இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். சில கோட்பாடுகளை அறிஞர் சிலர் ஒருவர் பின் ஒருவராகக் கூறி, அவர்களைப் பின்பற்றுவோரும் நுண்ணறிவின்றி கிளிப்பிள்ளை போல அவற்றையே கூறிவருவதால் தவறானவை யானாலும் நிலைத்துவிடுகின்றன. எடுத்துக் காட்டாக, அசோகர் புத்த மதத்தைப் பின்பற்றியவர் என்பது அப்படிப்பட்ட ஒரு கோட் பாடாகும். (அசோகர் காலத்தில் புத்தருடைய அறவுரைகள் ஒரு மதமாக உருவெடுத்திருந்ததாக மெய்ப்பிக்கவே இயலாது) காலப் போக்கில் ஆதாரமற்ற ஒரு கருதுகோளும் வலுவானதாக ஏற்கப் பட்டு விடுகிறது. திராவிடர்கள் நண்ணிலக் கடல் பகுதி யிலிருந்து குடியேறிய இனத்தினர் என்னும் கோட்பாடும் அத்தகையதேயாகும். இந்தத் தவறான கொள்கையை மறுக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. 23. திராவிடர்கள் வந்தேறிகள் என்னும் கருதுகோளை உடை யவர்கள்கூட ஒன்றை மறுக்கமுடியாது. அது என்ன? தென் னிந்தியாவில் பழங்கற்காலத்திலிருந்து இன்றுவரை இடையீடின்றி நிலைப் பெற்றுள்ள பண்பாட்டு வழிமுறை ஒற்றுமையே அது. குறிப்பாக மட்கலங்கள், ஈமச் சின்னங்கள் ஆகிய இரண்டிலும் இத்தகைய ஒருமைப்பாடு காணப்படுகிறது. முதலில் மட்கலங்கள். கற்காலத்திலிருந்து தென்னிந்தியக் கைத் தொழில்களில் சிறந்து விளங்குவது மட்கலம் வனைதல் ஆகும். மட்கல உருவாக்கத்தில் நான்கு காலக்கட்டங்களைக் காணலாம். புதுக்கற்காலம் ; அக் காலத் திற்கும் இரும்புக் காலத்திற்கும் இடைப்பட்ட பகுதி, இரும்புக் காலம், இரும்புக்காலத்திற்குப் பிற்பட்ட அதாவது வரலாற்றுக்குச் சற்று முந்திய (புரோடோ ஹிஸ்டாரிக்) காலம் ஆகிய நான்குமே அவை. புதுக்கற்கால மட்கலம் மங்கிய நிறத்திலும் கரடு முரடாகவும் அமைந்தது. இரும்புக்கால மட்கலம் பளிச்சென்னும் நிறத்துடன் மழமழப்பானது ; வடிவமைப்பும் கலைத்திறன் வாய்ந்தது. தென் னிந்திய மட்கலங்களிலும் மண்சாடிகளிலும் மாந்த உருவங்கள் - தீட்டப்படாதது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும் நீலமலையில் கிடைத்த மட்கலங்களில் மாந்த உருவங்களும் விலங்கு உருவங்களும் தீட்டப் பட்டுள்ளன. நீலமலைக் கல்லறைகளில் கிட்டிய மட்கலங்கள் குயவன் சக்கரத்தில் செய்யப்பட்டவை; அடிப்பக்கம் கூராகவோ, கோள வடிவமாகவோ உள்ளது; கோடுகளும் விளிம்புகளும் கையால் உருவாக்கப்பட்டுள்ளன. தக் காணத்தில், இலைச் சித்திர வேலைப்பாட்டுடன் கூடிய பானைகள்; அரைக் கோள கும்பா; பூ வேலைப்பாடுகள் அமைந்த கலங்கள் ஆகியவை கிடைத் துள்ளன. வேலைப்பாடற்ற கலங்களுடன் அழகு வேலை நிறைந்த கலங்களும் கிடைத்துள்ளன. பெரும்பாலானவை கையால் செய்யப் பட்டவை. ஒரு சில குயவன் சக்கரத்தில் உருவாகியவை. சமசுகிருதப் பண்பாடு தென்னிந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னரே மட் கலங்கள் கவின் வேலைப்பாடு, உருவமைப்பு ஆகியவற்றில் நேர்த்தியடைந்து விட்டன. அத்தகைய அழகிய சாடிகள் (Vases) எகிப்து, கிரேக்கம், எத்ரூஸ்கன் ஆகிய நாடுகளின் மட்கலங்களை மிகவும் ஒத்துள்ளன. ட்ராய் நகரத்தில் கண்டெடுத்த கலங்களைப் போல, பல கால்கள் அமைந்த ஏராளமான புதுக் கற்கால மட்கலங் களும் கிடைத்துள்ளன. பல்லாவரத்தில் கிடைத்த , பிணம் புதைப் பதற்கான மட்கலம், பாக்தாத் நகருக்கு அருகில் கிடைத்த அத்தகைய கல்லறைக் கலங்களையும், எத்ரூஸ்கன் நாட்டுக் கலங்களையும் ஒத்துள்ளது. 24. மட்கலங்களோடு தொடர்புடையவை தென்னிந்தியாவின் ஈமச் சின்னங்களாகும். இந்த ஈமச்சின்னங்களிலும் தலைமுறை பண்பாட்டு ஒருமைப்பாடு தொடர்ந்து வந்துள்ளது. ஐந்து வகை யான ஈமச் சின்னங்கள் தெரியவருகின்றன; - (1) கேரளத்தில் வயநாட்டிலும், தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரிலும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஈமத்தாழிகள் பெருங்குடுவை அல்லது (சாடிகள் : மட்கலங்கள் பெரும் எண்ணிக்கையில் பிணங்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட டுள்ளன. உடல் முழுவதையும் கொள்ளக்கூடிய பெரிய ஈமத் தாழிகளும் சில உள்ளன. பிணங்களை எரியூட்டியதற்கான தடயங்கள் இல்லை. மண்டையோடுகள் பெரும்பாலும் நீள் மண்டை இனத்தவ ருடையதாக இருந்தன. ஆதிச்சநல்லூர்த் தாழிகளின் மேற்பகுதியானது கலயங்கள் மற்றும் பிற பொருள்களால் நிரப்பப் பட்டிருந்தது. வயநாட்டுத் தாழிகளில் இரண்டு மூன்று கலயங்கள் மட்டும் இருந்தன; வேறு பொருள்கள் இல்லை. சங்க காலத்திய புநானூற் றில் நான்கு பாடல்களில் ஈமத்தாழிகள் பற்றி வருவது குறிப்பிடத் தக்கது (புறம் 228-12; 238-1; 256; 364-10). (2) கால் வைத்த தாழிகள்: இத்தகைய ஈமக்கலங்கள் பல்வேறு உருவங்களில் கிடைத்துள்ளன. சென்னை நகரில் கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில் பான்டினாய் என்னும் வீட்டில் இத்தகைய கலங்கள் பெரியவையும் சிறியவையும் அகழ்ந்தெடுக்கப் பட்டன. பெரியவை நீள் சதுர வடிவில், ஆறு அல்லது எட்டுக் கால்களை உடையவையாக இருந்தன. சிறிய கலங்கள் சதுரமாக நான்கு கால்களுடன் இருந்தன. இவை ஒவ்வொன்றுக்கும் சுட்ட மண்ணால் ஆன மூடியும் இருந்தது. மூன்று கால் அல்லது நான்கு கால் கொண்ட ஈமத் தாழிகள், பல இடங்களில் கிடைத்துள்ளன. வட ஆர்க்காடு மாவட்டத்தில் மூன்று கால் தாழிகள் கிடைத் துள்ளன. (3) பாறையில் தோண்டிய கல்லறைகள்: இவை கூடக்கல்லு அல்லது குடைக்கல் கல்லறைகள் என்று அழைக்கப்படுபவை (லோகன் 'மலபார் மானுவல்' படம் 9). 6-8 அடி விட்டத்தில் பாறையில் செங்குத்தாக நாலடி ஆழம் தோண்டப்பட்டிருந்தது. வட்டமான கல்பாளம் ஒன்று மூடியாக பயன்படுத்தப்பட்டது. இவற்றைப் பாறைக் கல்லறைகள் (Dolmen) என்பர். இவையும் பெரிய ஈமத் தாழிகளைப் போன்றவையே. (4) மலபார் மாவட்டத்தில் உள்ள தொளை' கல்லறைகள் : (லோகன் 'மலபார் மானுவல்' பக். 182) இவை கற்பாறையில் நீளவாட்டத்தில் குடையப் பட்டுள்ளன. உச்சியில் ஒரு துளை விடப்பட்டு, அத்துளை கற்பாளத்தால் மூடப்பட்டுள்ளது. க்ரீட் தீவில் பழங்காலத்தில் இத்தகைய கல்லறைக்குத் 'தொளை' என்றே பெயர் வழங்கப்பட்டது வியத்தக்கதாகும். அங்குக் கற்பாறைத் தளத்தின் மேல் செங்கல்லால் தேன் கூடு வடிவத்தில் இக்கல்லறைகள் கட்டப்பட்டன. தொடக்கக் கால மினோவன் நாகரிகம் சார்ந்த முத்திரைகள், பலவண்ண ஓவியம் வரைந்த சாடிகள், வாள்கள் போன்றவை அந்த கிரீட் கல்லறைகளில் கிடைத்துள்ளதாக ஜி. குலோட்ஸ் (G. Glotz) குறிப்பிடுகிறார். தொளை = துளை. இந்தப் பெயரில் அமைந்த கிரீட் தீவுக் கல்லறைகளில் ஒரே குடும்பத்தினர் அனைவரும் அருகருகே அவரவர் பயன்படுத்திய பொருட்களுடன் அடக்கம் செய்யப்பட்டனர். (ஈஜிய நாகரிகம் , பக். 133-7) (5) வட்டக் கற்கள் சூழ, நடுவில் பாறையில் தோண்டிய ஈம அறை (தென்னிந்தியாவை விட தக்காணத்தில் மிகப் பல) : ஐதராபாத் நாட்டில் மௌலா அலி என்னும் இடத்தில் இத்தகைய அறை ஒன்று, 20க்கு மேல் ஆட்கள் நிற்கக் கூடிய அளவுக்குப் பெரிய தாக இருந்தது. 25. இத்தகைய பல்வேறு ஈமச் சின்னங்களுக்கும் பொதுவான ஒரு தன்மை, எவற்றிலும் பிணங்களை எரியூட்டியதற்கான தடயமே இல்லை என்பதாகும். இந்தியன் ஆண்டிகுவாரி VI. பக். 279-80) கிபி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த மணிமேகலைப் பாவிய நூல் இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்களின் ஐந்து வகைகளை குறிப்பிடுகிறது. ஒன்று 'சுடுவோர்'. அடுத்தது 'இடுவோர்' (அதாவது பிணத்தை ஊர்ப் புறத்தில் எறிந்துவிடுவோர்). இவ்விரண்டும் ஆரியப் பண்பாடு சார்ந்தவை என்று எண்ணுகிறேன். ஏனைய மூன்றும் தென் னிந்தியாவிற்கு உரியவை; தொடுகுழிப் படுப்போர்' (ஆழ்ந்த குழிகளில் புதைத்தல்), 'தாழ்வயின்டைப்போர்' (ஈமத் தாழிகளில் அடக்கம் செய்தல்); தாழியிற்கவிப்போர்' (மட்பாண்டக் கல்லறைகளில் - கால் வைத்தவை சில - புதைத்தல்) ஆகியவையே அம்மூன்றுமாகும். இதில் லிருந்து தொன்று தொட்டு வந்த இறுதிச் சடங்குகளோடு, கிறித்துவ ஆண்டு தொடக்கத்திற்குப் பின் வந்த புதுவகைச் சடங்குகள் இரண்டும் இங்கு நுழைந்தன என்று அறிகிறோம். 26. நீலகிரி மாவட்டத்திலுள்ள நீள்கல் ஈம் அறைகளை (Bar - row) ஏற்கெனவே குறித்துள்ளோம். அவற்றுடன் பாண்டுக் குழிகள் என்னும் வகைக் கல்லறைகளும் கிடைத்துள்ளன. அவற்றை மலபார் 'தொளை' கல்லறைகளுடன் ஒப்பிடலாம். மேலும் குறும்பர், இருளர் ஆகியோரால் வீரக்கல்லு என்று அழைக்கப்படும் கற் சின்னங்களும் (Cromlech) உள்ளன. இவை கல்லறை மேல் அமைக்கப் பட்டவை அல்ல. போரில் இறந்துபட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களே. குடகு நாட்டில் இவற்றை கொலைக்கல் என்றழைப்பர். இவற்றை வீரக்கல், மாஸ்திக்கல், மகா சதிக்கல் என்றும் அழைப்பர். (மகா சதிக்கல் எதுவும் பழங்காலத்த தல்ல.) கல்லறைகளில் அந்தந்தக் காலத்திற்குரிய பழம்பொருள்கள் கிடைத்துள்ளன. ஈட்டி, வேல் கம்பு, அம்பு முனை, கத்தி, அரிவாள், குத்தீட்டி, மண்வெட்டி போன்றவை (கல்லாலானவையும் இரும் பாலானவையும்) கிடைத்துள்ளன. சிலவற்றுக்கு மரப்பிடிகள் இருந்தன. மட்கலங்களைப் பற்றி மேலே கண்டோம். மண்டை யோடுகளைப் பற்றியும் குறித்துள்ளோம். இந்தத் தாழிகளிலும் கல்லறைகளிலும் வெண்கல அணிகலன்கள், கருவிகள், மணிகள், மைக்கா தகடுகள், நெல் உமி, கலயங்களில் சிறு தானியங்கள், சில தங்க நகை (ஆபரணங்கள் (ஆதிச்ச நல்லூரில் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டை) போன்றவை கிடைத்துள்ளன. (தென்னிந்திய தொல்பொருள் ஆய்வறிக்கை 1902 -3 பக். 111 - 140). நீலமலை (கிரிக் கல்லறைகளில் விலங்குப் பதுமை (பொம்மைகள், மண்ணா லானவை, கிடைத்துள்ளன. அத்தகைய வெண்கலப் பதுமை ஆதிச்ச நல்லூரிலும் கிடைத்துள்ளன. வீட்டு விலங்குகளில், எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல் ஆகியவையும் காட்டு விலங்கு களில் புலி, யானை, மான் ஆகியவையும் இப் பதுமைகளில் உள்ளன. ஆதிச்ச நல்லூர் எச்சங்களிலிருந்து (இரும்பு மண்வெட்டி கள், அரிவாள்கள், நெல் உமி , சிறு தவசங் (தானியங்கள் அம் மக்களுக்கு வேளாண்மை தெரிந்திருந்ததென்றும், துணித் துகள்களிலிருந்து அவர்களுக்கு நெசவு தெரிந்திருந்தது என்றும் அறிகிறோம். களி மண்ணிலிருந்து நேர்த்தியாக வனைந்து சுடப்பட்ட மட்கலங்களும் மாழைகளால் செய்த பல்வேறு உருவங்களும் (பெரும்பாலும் இரும்பு ; சில வெண்கலம், செம்பு) கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து வளர்ந்த பண்பாட்டு நிலையை ஆதிச்சநல்லூர் சின்னங்கள் காட்டு வதை உணரலாம். 27. பின் காலத்தவையான சில குகைகளில் கண்டெடுத்த வற்றுள் பிற்காலப் பொருள்களும் கலந்துள்ளன. கிருட்டிஷ்ணா மாவட்டத்தில் கி.பி. 100 -200ஐ சார்ந்த நாணயங்களோடு நீலக் கற்களும் கிடைத்துள்ளன. கோயம்புத்தூர் அருகே சூலூரில் பெருங் கற்காலக் கல்லறை ஒன்றில் பாரசீக நாட்டு கி.மு. 200-300 நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாங்கல் ஊரிலுள்ள கல்லறையில் இரும்பாலான மீன் பிடி தூண்டில், அழகிய மட்பாண்டங்கள், மூக்குத்தி, கம்மல், கண்ணாடி வளையல் கிபி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால் துளை நாணயங்கள் ஆகியவையெல்லாம் கிடைத்துள்ளன. திருநெல் வேலியில் கழுகுமலையில் ஒரு தாழியில் களிமண் குழாய்கள், இரும்புக் கருவிகள், சோழர் கால நாணயங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து தொன்றுதொட்டு வந்த இறுதிச் சடங்கு முறை, ஈமச் சின்னப் பண்பாடு ஆகியவை சோழர் காலம் வரை இடைவிடாது புழக்கத்தில் இருந்தது தெரிகிறது. பண்டைய கிரீட் தீவுகளிலிலிருந்தது போல இக் கல்லறைகளில் பல, குடும்பக் கல்லறைகளாக இருந்திருக்க வேண்டும். காலம் காலமாக அந்தக் குடும்பத்தில் இறந்தவர்களை அருகருகே அவரவர் விரும்பிய பொருள்க ளோடு புதைத்துள்ளனர். இன்றும் மலையாளத்தில் இல்லங்களின் தென் பகுதியில் குடும்பம் சுடுகாடு உள்ளது. அங்கு தான் இறந்தவர்கள் அனைவரையும் எரியூட்டுகின்றனர். புதுக்கற் காலத்திலிருந்து சோழர் காலம் வரை சமச்சடங்குமச் சின்னங்கள் சார்ந்த தொல் பண்பாடு தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்ததற்கு இது சான்றாகும். 28. கி.மு. 4000த்தில் புதுக்கற்கால எகிப்தில் கல் மட்டுமே பயன் படுத்தப்பட்டது. மாழைகளைப் பற்றித் தெரியாது. தென்னிந்திய யாவில் கிடைத்துள்ள புதுக்கற்கால மட்கலங்கள் எகிப்தில் ஆண்ட பல்வேறு அரச பரம்பரைகளுக்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந் தவை, (Profilvaniasticypt), தென்னிந்தியாவிற்கும் எகிப்திற்கும் அக் காலத்திலேயே தொடர்பு இருந்திருக்கவேண்டும். புது கற்கால எகிப்திலிருந்துதான் நண்ணிலக்கரையில் நஜியன் பகுதிக்கு நாகரிகம் பரவியிருக்க வேண்டும் என்பார் டாக்டர் ஹால் ஈழியன் நாகரிகத்தி லிருந்து தான் கிரீட் தீவின் மினோவன் நாகரிகம் வளர்ந்தது. இவையெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று கடன் பெற்று வளர்ந்தவை. ஆனால் பண்டைக்கால் கிரேக்க நாகரிகமோ பண்டை எகிப்து நாகரிகமோ உண்மையில் யாரிடமிருந்து பெற்றவை என்பதை நாம் அகழ்பொருள் ஆய்விலிருந்தோ, ஹெரோடோடஸ் எழுதிய வரலாற்று நூலிலிருந்தோ சரியாக அறிய முடிவதில்லை. கிரேக்க, எகிப்திய நாகரிகங்களை உருவாக்கியவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் ஆரிய மொழி பேசுபவர்கள் அல்ல என்றுமே பண்டைய கருத்து உள்ளது. இதிலிருந்து திராவிடப் பண்பாட்டிலிருந்துதான் அவை உருவாயின என்று ஊகிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். புதுக்கற்கால நாகரிகத்தி லிருந்து (வெண் கலம் / செம்புக் கால நாகரிக நிலைக்குப் போகாமல் ) நேரடியாக இரும்புக் கால நாகரிகம் கிரீட் தீவில் உருவாகியது. தென்னிந்தி யாவில் நடந்ததும் அதுவே. தென்னிந்தியாவிலும் வெண்கலக் காலம் என்று ஒன்று இல்லை. இவற்றையெல்லாம் கூர்ந்து ஆய்வு செய்தால் என்ன முடிவுக்கு வரலாம்? தென்னிந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்களான திராவிட மொழி பேசுநரே நண்ணிலக் கரைப் பகுதி நாடுகளின் தொன்மை நாகரிகங்களை உருவாக்கி யவர்கள் என்பதே முடிவு. மொழியும் சென்றது ; மொழி பேசுநரும் சென்றனர். ஆக, மனித நாகரிகத் தோற்றம் நண்ணிலக் கரையில் நிகழ்ந்ததல்ல. இந்திய தீபகற்பத்தில், காவிரி, தாமிரபரணி, பெரியாறு, அமராவதி ஆகிய ஆறுகளின் கரையில் தான் (ஏன், கிருஷ்ணா , கோதாவரி, நர்மதை ஆகியவற்றின் கரைகளிலும்) நிகழ்ந்தது என்பதே நான் பணிவுடன் சமர்ப்பிக்கும் கருதுகோள். முடிவுரை 29. தென்னிந்தியாவில் இன்றும் நம்மிடையே உள்ள மலை, காட்டுப் பகுதிகளில் வாழும் இனக் குழு மக்களுள் நீக்ராய்டு பண்பாட்டுக்கூறு ஓரளவுக்கு இருப்பதை நான் ஒத்துக் கொள் கிறேன். பழங்கற்கால மாந்தன் வாழ்வும் பண்பாடும் கல்லையே சார்ந் திருந்தது; அதன் எச்சமே அப் பண்பாட்டுக் கூறாகும். ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, மலேசியா, ஆசியா மைனர், ஈஜியன் கரைப் பகுதி ஆகியவற்றிலிருந்து கழிபழங்காலத்தில் இங்கு மக்கள் பெருந் திரளாக வந்து குடியேறினர் என்ற கருத்து சரியானதல்ல. ஓரிடத்தி லிருந்து வேறிடத்திற்குப் பழங்காலத்திலிருந்தே பண்பாடும் நாகரிகமும் பரவின என்று நான் கருதுகிறேன். பண்பாட்டுப் பரவலுடன் ஒரு சிலரும் அப் பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடும் என்றாலும் நாளடைவில் அவர்கள் தென்னிந்திய மக்களோடு முற்றிலும் கலந்து விட்டனர். இவ்வாறு அப் பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய ஒரு சிலரை மனத்தில் கொண்டு 'திராவிடர்கள்' தென்னிந்தியாவுக்கு வந்தேறிகளாகக் குடியேறினர் என்று கூறுவது தவறு. திராவிடர்கள், முந்தைய - திராவிடர்கள் (Proto-Dravidians), பழந் - திராவிடர்கள் (Pre - Dravidians) என்றெல்லாம் பகுப்பது 20 ஆம் நூற்றாண்டின் கற்பனையே. பழங்காலத்தில் பல்வேறு காலகட்டங் களில் வேறுபட்ட நாகரி கங்களைக் கொண்ட மக்கள் பெருந் திரளாக தென்னிந்தியாவிற்கு வந்து குடி யேறியதாக அகழ்வாய் வாளர்களோ, வரலாற்றாசிரியர்களோ ஆதாரம் எதையும் காட்ட முடியாது. மாறாக பழங்கற்காலம் - புதுக்கற்காலம் - இரும்புக் காலம் என்று படிப்படியாக, அமைதியாக தென்னிந்தியாவில் நாகரிகம் வளர்ந் துள்ளதைத்தான் அகழ்வாய்வுச் சான்றுகள் காட்டு கின்றன. தென்னிந்தியாவில் நாம் திராவிடர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறோமோ அவர்களிடமிருந்து மலை, காடு, வாழ் பழங்குடி மக்கள், இனத்தால் வேறுபட்டவர்கள் என்று கூறுவது தவறு. தென்னிந்தியாவில் மக்களின் வரலாற்றாய்வாளர்கள் புதுக்கற்கால தொடக்கத்திலிருந்து ஐந்து வகையான நாகரிகங்கள் இங்கு இருந்ததை குறிப்பிடுகின்றனர். மிகப் பழைய பழங்கற்காலக் காலத்தில் வேட்டையாடுதலும் மீன் பிடித்தலுமே இருந்தன. அப் பழங்கற்கால மக்கள் பல்வேறு பகுதிகளில் (காடுகள், கரையோரப் பகுதிகள் போன்றவை நெடுங்காலம் தொடர்ந்து வசித்து வந்ததால் அவர்கள் வாழ்க்கை முறைகளும் மன நிலைகளும் வேறுபட்டன. தட்பவெப்ப நிலை, செய்யும் தொழில், போன்ற வற்றால் மாந்தர் களின் நிறமும் மாறுபடக்கூடியதேயாகும். வேளாண்மை உருவாகிப் பரவியது என்பதாலேயே அதற்கு முந்திய வாழ்க்கை முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டு விட்டன என்று கருதக் கூடாது. வெவ்வேறு சூழ்நிலைகளில் உள்ளவர்கள் அவரவருக்கு பழக்கமான பழைய வாழ்க்கை முறைகளையே பின்பற்றி வந்திருக்கலாம். வேளாளரும், காராளரும் வேளாண்மைக் குடிகள்; ஆயர்கள் ஆடுமாடுகளை வளர்த்து வந்த முல்லை நில மக்கள் ; தமிழகத்தில் பாலை என்று தனிநிலம் இல்லை; எனவே பாலை மக்கள் பண் பாடும், குறிஞ்சிப் பண்பாடும் (வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்றவை ) ஒன்றாயின. குறிஞ்சி, முல்லை மக்களைப் பழந் திராவிடர் என்று கூறுவது சரியல்ல. நண்ணிலக்கரை / அர்மீனிய இனத்தோற்ற முள்ளவர்கள் முந்தைய திராவிடர்கள்' என்று கூறுவதும் சரியல்ல. ஆக நாம் பின்வரும் முடிவுக்கு வருகிறோம்: தென்னிந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் இணைத் ததும், சிந்து கங்கைச் சமவெளி உருவாவதற்கு முன் இருந்ததுமான கடல் கொண்ட தென்னாடுதான் திராவிடரின் தாயகம் ; அக்கடல் கொண்ட தென்னாட்டின் பகுதியாகிய தென்னிந்தியாவில் தான் நண்ணிலக்கரை இனம் என்று அழைக்கப்படும் இனம் உருவாகியது என்பதே அம்முடிவு. திராவிடப் பண்பாட்டின் கூறுகள் இந்தியப் பண்பாட்டில் மட்டும் தான் காணப்படுகின்றன என்று கூறமுடியாது; பெரு மளவுக்குத் திராவிடப் பண்பாட்டைக் கிரீட், ஈஜியன் பகுதி, சுமேரியா, பாபிலோனியா, எகிப்து, பசிபிக் தீவுகள் போன்ற பண்டை உலகின் பல்வேறு நாகரிங்களிலும் காணலாம். இதனை வலுவாக நிறுவ வேண்டுமாயின் தென்னிந்தியாவில் விரிவான அகழ்வாய்வுகள் செய்யவேண்டும். ஹோமர் எழுதிய இலியது பாவியத்தை இடையறாது தன் மனத்தில் கொண்டிருந்த டாக்டர் ஷிலிமன் தனது அகழ்வாய்வுகளால் ட்ராய், மிசினே (Mycenae), டிரன்ஸ் (Tiryns) ஆகிய நாகரிகச் சின்னங்களை வெளிக் கொணர்ந்தார். அச்சின்னங்களை விடவும் வியப்பை விளைவிக்கும் சின்னங்கள் தென்னிந்தியாவிலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொழிவு - 2 அயல்நாடுகளில் தமிழர் நாகரிகத்தின் பரவல் 30. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தென்னிந்தியா விலிருந்து பிற பகுதிகளுக்கும், பிற பகுதிகளிலிருந்து தென்னிந்தியா விற்கும் நிகழ்ந்த பண்பாட்டுப் பரவல்களைப் பற்றியது இன்றைய பொழிவு. அதற்கு முன், பண்டைய உலகின் நில (புவியியல் பற்றிச் சில கூறவேண்டும் - குறிப்பாகப் பழந்தமிழர்களுக்குத் தெரிந்திருந்த பண்டைய உலகம் பற்றியும் அவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பண்டைய நாடுகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். மேற்கில் நண்ணிலக்கரை நாடுகள், ஆப்பிரிக்கா - எகிப்து, பண்டைய பாபிலோனியா - சுமேரியா, பாரசீகம் ஆகிய பகுதிகளும், கிழக்கில் சீனா - பர்மா ஆகியவையும் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தன. இந்தோனேசிய தீவுகள், ஆத்திரேலியா, பசிபிக் பெருங்கடல் தீவுகள் ஆகியவை பற்றியும் தெரியும். வட இந்தியாவும் இலங்கையும் அவர் களுக்கு மிக நன்கு தெரிந்திருந்தன. 31. இப்பொழுது நண்ணிலக்கரை இனம் என்று கூறப்படும் இனத்தின் மூலத் தாயகம் தென்னிந்தியாதான் என்ற கோட்பாட்டை நான் நேற்றைய பொழிவில் வலியுறுத்தினேன். அது ஏற்கப்பட்டால் சுமேரியம் முதலிய மேற்காசிய நாகரிகமும், ஏன் எகிப்திய நாகரிகமும் கூட கிழக்கே பிறந்தவை என்றாகும். (டி. மார்கன், 'எகிப்து மற்றும் மேற்காசியாவின் பண்டைய வரலாறுகள்' Journale Asiatique; 1923 பக். 117-159; La Prehistorie Orientalia தொகுதி 1,2 பாரிஸ் 1925 - 6. வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளைத் திட்ட வட்டமாக வரையறுக்க முடியாது. ஆயினும் சில செய்திகளைக் கூறலாம். தென்னிந்தியாவுக்கும் மெசொபொதாமியாவுக்கும் கடல் வழியாகவும், நில வழியாகவும் தொடர்புகள் இருந்தன. தொடக்க காலக் கடற்பயணங்கள் கரையொட்டியே நிகழ்ந்தன. பழங்காலத் தென்னிந்திய திராவிடர்கள் வீரமும் ஆற்றலும் மிக்கவர்கள். தட்சிணபாத வழியாக அவர்கள் இந்தியா முழுவதும் பரவி யிருந்தனர். சிந்துப்பகுதிக்கு அவர்கள் கடல் மூலமாகவும் சென் றிருக்கக் கூடும். அவர்கள் நாடு பிடிப்பதற்காகச் சென்றதாகத் தெரிய வில்லை; வணிகத்திற்காகவே சென்றுள்ளனர். அவர்களுடைய வணிகப் பொருள்களை உலகின் பல பகுதி மக்களும் விரும்பினர்; எனவே, அவை உலகின் பல பகுதிகளுக்கும் உய்க்கப்பட்டன. ஆங்காங்கே முக்கியமான நகரங்களில் அவர்கள் குடியேற்றங்களை அமைத்துத் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பரப்பினர். அரபிக்கடல் வழியாக எகிப்து, ஆசியா மைனர், நண்ணிலக் கடற்கரை கிழக்குப் பகுதி ஆகியவற்றிற்கு திராவிடர்கள் வாணிகப் பாதை ஒன்று சென்றது. இன்னொரு வாணிகப் பாதை பாரசீக வளைகுடா மூலம் சுமேரியாவுக்குச் சென்றது. ஓயன்னஸ் என்னும் மீன் - மாந்தன் நாகரிகத்தையும் கலைகளையும் எடுத்துக்கொண்டு பாரசீக வளைகுடா மூலம் நீந்திக் கரையேறினான் என்ற தொன்ம (புராணக் கதையை பெரோசஸ் குறிப்பிட்டுள்ளார். நாகரிகத் தொட்டிலான இந்தியாவிலிருந்து பண்டைய சுமேரியாவுக்கு கடல் வழியாக நாகரிகம் பரவியது என்னும் நமது கோட்பாட்டை இக் கதை ஆதரிக்கிறது. மேலும் அக்காலத்தில் இந்தியாவி லிருந்து பாரசீகம் வழியாக சுமேரியாவுக்கு அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்கள் மட்டுமன்றி ஆடம்பரப் பொருள்களையும் விலை யுயர்ந்த பொருள்களையும் விற்பனைக்காக வணிகச் சாத்துகள் பல கொண்டு சென்றிருக்க வேண்டும். 32. கி. மு. பத்தாம் நூற்றாண்டுக்கு வரும்பொழுது நமக்கு வரலாற்றுச் சான்றுகளும் கிடைக்கின்றன. அக்காலக் கட்டத்தில் அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் சபா (பைபிளில் ஷீபா என்று அழைக்கப்படுவது ஒரு பன்னாட்டுச் சந்தையாக இருந்தது. அங்கு இந்திய வணிகர்கள் தாங்கள் கொண்டு சென்ற பொருள்களை இறக்கினர். அங்கு வந்த எகிப்திய, பினீசிய வணிகர்கள் தங்கள் சரக்குகளை இந்தியப் பொருள்களுக்குப் பண்டமாற்றுச் செய்து கொண்டனர். சபா பகுதி வணிகர்கள் இவ்வாறு இடைத் தரகர் களாகச் செயல்பட்டு இவ்வணிகத்தில் வரும் ஆதாயத்தில் ஒரு பகுதியைப் பெற்றனர். எபிரேயப் பெரு மன்னன் சாலமன் (ஒட்பம் மிக்கவன் என்று புகழப்படுபவன்) இந்த இடைத் தரகர்களை நீக்கிவிட்டு இந்திய வணிகர்களோடு நேரடித் தொடர்பு கொண் டான். சாலமனுடைய நேரடித் தொடர்பு அவன் நாட்டை யொட்டிய டயர் (Tyre) துறைமுகத்திலும் இருந்தது; இந்தியாவிலுள்ள ஓபிர் (Ophir) நகரிலும் இருந்தது. இதன் காரணமாக இந்திய வணிகத்தின் அளவு பெருகியிருக்க வேண்டும். எலாம் நாட்டின் தலைநகரில் (பாரசீக மன்னர் காலத்தில் அது சூசா என்றழைக்கப்பட்டது) கிடைத்த அகழ்வாய்வு எச்சங்களி லிருந்து தென்னிந்தியாவிற்கும் பாரசீகக் கரை மற்றும் ஏடன் பகுதிகளுக்கும் வாணிகம் நடந்ததை அறிய முடிகிறது: மதுக் கிண்ணங்களும், இந்தியச் சங்கு வளையல் களும் அவ்வெச்சங்களுள் உள்ளன. ஊர் போன்ற சுமேரிய நகர அகழ்வாய்வு எச்சங்களில் இந்தியத் தேக்கு மரமும் கிடைத்துள்ளது. தெல்லோவிலும் (அதாவது பண்டைய லகாஷ்) சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன. இந்த வணிகத்தில் சாலமனை மிஞ்சிவிட்டான் பாரசீக சக்ரவர்த்தி தேரியஸ் (Darius) . இந்தியாவோடு தரைவழியாக வாணிகம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளை அவன் உணர்ந்தான். எனவே நெக்கோ என்னும் எகிப்திய பாரோவா மன்னன் தொடங்கி முடிக்காமல் விட்டிருந்த சூயஸ் கால்வாயைத் தேரியஸ் தோண்டி முடித்தான்; அதன் மூலம் நண்ணிலக்கரை - இந்திய வணிகப் பாதையின் தொலைவு சுருங்கியது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்கள் இந்தியாவிலிருந்து மயில்களை இறக்குமதி செய்தனர். கடல் வழியாக இந்தியாவிற்கும் பாபிலோனுக்கும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வாணிகம் நடந்து வந்ததை பாவே ஜாதகம் குறிப்பிடுகிறது. (பாவேரு என்பது பாபிலோன் ஆகும்). 33. தென்னிந்தியாவுக்கும் பண்டைய எகிப்து, உரோம் நாடு களுக்கும் நடந்த வாணிகத்தைப் பற்றிப் பார்ப்போம். உரோம் நாட்டு மக்கள் தென்னிந்தியாவிலிருந்து வாசனை நீர்மங்கள், அகில், மிளகு, முத்து, அருங்கற்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து அதற்கு விலையாக பெருந் தொகைகளைக் கொடுத்தனர் என்று பிளினி கூறுகிறார். தென்னிந்தியாவில் பல மாவட்டங்களில் உரோம் நாணயங்கள் நிறையக் கிடைத்துள்ளன. ஆண்டுதோறும் உரோம் நாட்டிலிருந்து இந்தியா இந்த வாணிகத்தின் மூலம் சுமார் ஐந்து இலக்கம் பவுன் தொகையைக் கறந்து வந்தது என்று பிளினி வருந்து கிறார். செங்கடல் வழியாக தென்னிந்தியாவுக்கும் எகிப்துக்கும் நடந்த வாணிகம் கி.மு. 63லிருந்து கி.பி. 23 முடிய உள்ள காலக் கட்டத்தில் மிக அதிகரித்ததாக ஸ்டிராபோ கூறுகிறார். இவ்வாணி கத்தில் பண்டைச் சேரர் துறைமுகமும் தலைநகரமுமான முசிறி, மங்களூர், குசராத் ஆகியவை முக்கிய பங்கு வகித்தன என்று பெரிப்ளஸ் நூலும், பிளினி , தாலமி ஆகியோரும் கூறுகின்றனர். குசராத் கப்பல்களும் எகிப்திய கப்பல்களும் முசிறியில் காணப் பட்டன. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் உரோம் பேரரசு வீழ்ச்சிக்குப் பின் இந்த வாணிகத்தில் தளர்வு ஏற்பட்டது. அதன்பின் இவ் வாணிகம் அராபியர்கள் கைக்குச் சென்றது. மார்கோபோலோ காலம் வரைக்கும், ஏன் போர்ச்சுக்கீசியர் கி.பி. 1498 இல் இந்தி யாவுக்கு வரும் வரைக்கும் இவ்வாணிகம் பெரும்பாலும் அராபிய வாணிகர்கள் கையிலேயே இருந்தது. 34. மேற்குக் கரை வாணிகம் பற்றிப் பார்த்தோம். தென்னிந்தி யாவின் கிழக்குக் கரையிலிருந்தும் இந்தோனேசியத் தீவுகள், மலேசியா, பசிபிக் கடல் தீவுகள் ஆகியவற்றோடு பெருமளவில் வாணிகம் நடந்து வந்தது. தொடக்கக் காலத்தில் அவ் வாணிகம் இலங்கை வழியாகச் சென்றிருக்கலாம்; ஆனால் பின்னர் தென் னிந்தியக் கிழக்குக் கரைத் துறைமுகங்களிலிருந்து நேரடியாகவும் நடந்தது. இத்தொடர்பு வாணிகம் மட்டுமன்றி பண்பாடு, நாகரிகம் சார்ந்ததுமாகும். ஆசியாவின் பிற நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றோடு இருந்த வாணிகத் தொடர்பும் இதுபோன்றதே யாகும். (பி.டி. சீனிவாச ஐயங்கார் ; இந்தியாவில் கற்காலம் ; 1924; பக் 43) 35. கிழக்குக் கரையைப் பொறுத்தவரை கழிபழங்காலத்தி லிருந்தே வாணிக - நாகரிகத் தொடர்புகள் இருந்துவந்தன. பசிபிக் கடலிலுள்ள பாலினீசியத் தீவுகளின் மக்கள் பயன்படுத்திய படகுகளின் இரண்டு பக்கமும் மிதவைக் கட்டைகள் இருந்தன. (Double out rigger boats) ஆனால் தென்னிந்தியா, இலங்கை , அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்றவற்றில் ஒரு பக்கம் மட்டுமே மிதவைக் கட்டைகள் இருந்தன. (Single out rigger) பண்டைய ஆந்திர நாணயங்கள், குறும்பர் நாணயங்கள் ஆகியவற்றில் இரண்டு பாய்மரம் உள்ள கப்பல்களைக் காண்கிறோம்; ஆனால் அவற்றில் மிதவைக் கட்டைகள் இணைக்கப்படவில்லை. வெளிநாட்டு வாணிகம் நடந்ததை அந்நாணயங்கள் சுட்டுகின்றன. தென்னிந்திய யாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலும் வாணிகத் தொடர்பு இருந்தது. இத்தகைய தொடர்புகளின் மூலமாகத்தான் (பசிபிக் தீவுகளில் முதலில் தோன்றிய) தென்னை மரம் இந்தியாவிற்கு வந்தது என்றும், கள் இறக்குதல், வெற்றிலை போடுதல் போன்ற பழக்கங்கள் இங்கு வந்தன என்றும் தெரிகிறது. இது எப்படி இருப்பினும், கழக (சங்க இலக்கியம் இவற்றைப் பற்றிக் கூறுகிறது ; கள்ளே சிறந்த மது பானம் பாலினீசியத் தீவு மக்கள் பிணங்களை உட்கார்ந்த நிலையில் புதைத்து வந்தனர். தென்னிந்தியாவிலும் அவ்வாறே புதைக்கும் வழக்கம் தேவாங்க நெசவாளர், விசுவகர்மர், கோவை ஒக்கிலியர், திருவாங்கூர் பிஷாரோடி , நீலமலை (கிரி) இருளர் ஆகியோரிடம் காணப் படுகிறது. தென்னிந்திய செதுக்குக் கருவிகள் போன்றவை பாலினீசியத் தீவுகளிலும், இந்தோனேசியத் தீவுகளிலும் காணப் படுகின்றன. மிகப் பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட பூமராங் வளைதடி ஆத்திரேலியாவில் தோன்றி இங்குக் கொண்டு வரப் பட்டது என்று கருதப்படுகிறது. மதுரை மாவட்ட மறவர்கள் பிறை வடிவுள்ளதும் ஒரு பக்கம் குமிழ் உள்ளதும் ஆன வளைதடியைப் பயன்படுத்துகின்றனர்; மைய இந்தியப் பகுதியில் பீல் (Bhils) மக்களும் வளைதடிகளைப் பயன்படுத்துகின்றனர். நைல் பள்ளத்தாக்கிலும் வளைதடி பயன்படுத்தப்பட்டது வியக்கத்தக்கது. தென்னிந்தியாவின் லிருந்து அல்லாமல் எகிப்துக்கு எப்படி வளைதடி போயிருக்கும்? கற்காலத்திலிருந்தே தென்னிந்தியாவுக்கும் எகிப்துக் கும் தொடர்பு இருந்ததை இது காட்டுகிறது. எகிப்திய அரச தலைமுறையினர் (பரம்பரைகள்) காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே, தென்னிந்திய மட்பாண்டங்கள் போன்றவை எகிப்தில் கிடைத் துள்ளதைக் கண்டோம். அயல் பண்பாட்டுப் பொருள்களைத் தங்களுக்குத் தேவையான பொழுதெல்லாம் தென்னிந்திய மக்கள் ஏற்றுப் பயன் படுத்தினர் என்பதை இது காட்டுகிறது. தென்னிந்தியா உலகின் பிற பகுதிகளுக்குக் கொடையாகக் கொடுத்தவை பல ; அதே நேரத்தில் அப்பகுதிகளிலிருந்து கொடையாகப் பெற்றவையும் சில. 36. இந்தோனேசியத் தீவுகள் இந்திய, குறிப்பாகத் தென்னிந்திய பண்பாட்டுத் தாக்கத்திற்குப் பெருமளவு உள்ளாயின. சுமத்ரா, ஜாவா, பாலி, போர்னியோ ஆகிய தீவுகள், மலேயா, சயாம், சம்பா, கம்போடியா போன்ற வற்றுக்கும் தென்னிந்தியாவுக்கும் இருந்த தொடர்புகள் பற்றி நம் காலத்தில் விரிவான ஆய்வுகள் நடக்கின்றன. கிறித்தவ ஊழித் தொடக்கத்திற்கு முன்னர் இருந்தே இப்பகுதி களுக்கு இந்துக்கள் சென்று குடியேறி வந்தனர். வட அமெரிக்காவில் இருந்த மயா நாகரிகம் இந்தோனேசியத் தீவு நாகரிகத் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது சரியாக இருக்கலாம் எனினும் சாமன்லால் தனது இந்து அமெரிக்கா நூலில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொல்பழங்காலத்திலிருந்தே நேரடித் தொடர்பு இருந்து வந்துள்ளது என்றும், இந்திய குமுக சமயக் கோட்பாடுகள் இன்றும் வட அமெரிக்க மெக்சிகோ நாட்டில் நிறையக் காணப்படுகின்றன என்றும் விவரிக்கிறார். 37. இந்தியாவுக்குக் கிழக்கே உள்ள தங்க நிலம் (சுவர்ண பூமி) என்னும் நாட்டைப் புத்த சா (ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன. மலேயா தீபகற்பத்தில் தென்னிந்தியர் வாணிகம் செய்ததைப் பெரிப்ளஸ் கூறுகிறது. புகார் என்னும் காவேரிப் பட்டினத்தில் பெருமளவுக்குக் கடல் வாணிகம் நடந்து வந்தது. பட்டினப்பாலை குறிப்பிடும் காழகம் என்பது தென்கிழக்குச் சுமத்ரா தீவில் இருந்த கடாரம் என்னும் நகரம்தான் எனக் கருதப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியும் ஒரு முக்கியமான துறைமுகமாகும். ஜாவா தீவில் பல்லவ கிரந்த எழுத்து பயன்படுத்தப்பட்டு வந்தது. கிபி. 11 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஜாவாவில் தலைநகர் அமைத்திருந்த சைலேந்திர அரசுடன் சோழப் பேரரசர்கள் தூதுத் தொடர்பு கொண்டிருந்தனர். சயாம் நாட்டில் (தற்பொழுது தாய்லாந்து) கிபி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது; அதில் தென்னிந்திய வாணிகச்சாத்து குறிப்பிடப்படுகிறது. இந்தோ னேசியாவில் பூனான் (Funan) பகுதிக்கு கிபி. முதல் நூற்றாண்டிலேயே தென்னிந்தியர் சென்றிருந்தனர்; கௌண்டின்யன் என்னும் தென் னிந்திய பிராமணன் தான் அந்நாட்டின் முதல் அரசன். கம்போடி யாவின் தலைநகர் அருகே அங்கோர் வாட் என்னுமிடத்தில் உள்ள விஷ்ணு ஆலயம் திராவிட கோயிற் கட்டடக் கலைப்படி அமைந்த தாகும். சம்பா நாட்டின் முதல் அரசத் தலை முறை (பரம்பரை) கியி . இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியர்களால் நிறுவப் பட்டது என்று கருதப்படுகிறது. முதலில் ஏற்பட்ட வாணிகத் தொடர்பைப் பின்பற்றி அரசியல் ஆளுமையும் ஏற்பட்டிருக்க வேண்டும். என்று கருத வேண்டியுள்ளது. சீனா 38. பழங்காலத்திலிருந்தே தென்னிந்தியாவிலிருந்து சீனாவு டனும் வாணிகம் நடந்து வந்திருக்க வேண்டும்; தொடக்கக் கால வாணிகம் பற்றிய சான்றுகள் அவ்வளவாக இல்லை; கிபி. நான்காம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள்ளன. கிபி. 4--14 நூற்றாண்டுகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முறையான கடல் வாணிகம் பெருமளவுக்கு நடந்து வந்தது. (யூல் எழுதிய Cathay and the Way thereto). கோழிக்கோடு, கொல்லம், நாகப்பட்டினம், மாமல்லபுரம் போன்ற பெரும் துறைமுகங்களுக்குச் சீனக் கப்பல்கள் வந்து சென்றன. சீன வணிகர்களும் துறவிகளும் வழிபடுவதற்காகப் பல்லவ நரசிம்ம வர்மன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தில் சீனா கோபுரம்' என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றைக் கட்டினான். தென்னிந்திய அரசர் களின் சமயப் பொறையை இது காட்டுகிறது. கிறித்தவ ஊழித் தொடக்கத்தி லிருந்தே சீனா வுக்குச் சென்று அங்குப் புத்த மதத்தைப் பரப்பி வந்த தென் னிந்தியப் புத்தத் துறவிகளின் பணி குறிப்பிடத்தக்கதாகும். சீனாவிலிருந்தும் பயணிகள் பலர் அவ்வப்பொழுது தென்னிந்தியா வந்துள்ளனர். - யுவான் சுவாங் உட்பட இன்னொரு சீனப் பயணி இட்சிங் தன் காலத்தில் இந்தியா வந்த வேறு சீனப் பயணிகளையும் குறிப்பிடுகிறார். கி.பி. ஆறாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் காஞ்சி புரத்திலிருந்து சீனா சென்ற அரசக் குமரன் ஒருவர் அங்கு போதி தர்மர் என்னும் துறவுப் பெயர் பூண்டு தியான மெய்ம் (தத்துவத்தை பரப்பினார்; அதுதான் சீனாவில் இன்று செ(ஜன் (Zen) என்று அழைக்கப்படும் தத்துவமாகும். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் கூட, விசய நகர அரசர் முதலாவது புக்கர் சீனப் பேரரசருக்கு ஒரு தூதுக் குழுவை 1374இல் அனுப்பியுள்ளார். ஆகத் தென்னிந்தியாவுக்கும் சீனாவுக்கும் வணிகத் தொடர்பும் நாகரிகத் தொடர்பும் இடை விடாது இருந்து வந்துள்ளன. இலங்கையும் தென்னிந்தியாவும் 39, தென்கண்டம் கடலுள் மூழ்குவதற்கு முன்னரும் பின்னரும் தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைவிடாது நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இலங்கையிலிருந்த இராட்சசர்கள்' அதிகாரம் தென்னிந்தியா, தக்காணம் முழுவதும் இருந்தது மட்டுமன்றி அயோத்தியை ஆண்ட தசரதன் அரசெல்லைவரையும் இருந்தது; எனவேதான் விசுவாமித்திரர் இராமனைத் (அரக்கர்களிடம் மிருந்து ஏனையோரைக் காப்பதற்காக) தன்னுடன் அனுப்புமாறு தசரதனை வேண்டினார் ; இக்கதையிலிருந்து வரலாற்றுக்கு முற் பட்ட காலத்திலிருந்தே இலங்கையர் தொடர்பு இருந்து வந்ததை அறிகிறோம். இலங்கை மீது இராமன் படையெடுத்து வென்றதையும் அதன் விளைவுகளையும் நாம் அறிவோம். கி.மு. 300ஐ ஒட்டி விசயன் இலங்கைத் தீவுக்குக் கடல் வழியாக வந்து இறங்கிய பொழுது அந்த 'இராட்சச ' இனக் குழுவினரின் வழிவந்தோரைக் கண்டு அவர்களை யக்சர் என்று அழைத்தான். இன்று இலங்கையில் காணப்படும் வெட்டர்கள் (Veddahs) அந்த யட்சர்களின் வழிவந்தவர்களாக இருக்கலாம். கிறித்தவ ஊழித் தொடக்கத்தில் இலங்கையிலிருந்து தென்னிந்தியாவிற்குப் புத்தமதம் பரவியதாகக் கருதப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்திலிருந்து இரு நாடுகளிடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. நூற்றுக் கணக்கான இலங்கைத் தொழிலாளர்களைச் சோழ மன்னன் கரிகாலன் அணை கட்டுவ தற்குப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற் றாண்டில் சேரன் செங்குட்டுவன் தலைநகரில் நடந்த பத்தினிக் கோட்ட விழாவிற்கு இலங்கை மன்னன் கஜபாகு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை தொடர்புகள் அமைதியாக இருந்தன. அதன்பின் எட்டாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் இலங்கைக்குச் சில முறை படையெடுத்து வென்றனர். பின்னர் பாண்டியர்களும் படை யெடுத்து, முதல் சேனன் காலத்தில் இலங்கைத் தலைநகரைக் கைப்பற்றினர்; ஆனால் பழிக்குப் பழியாக இரண்டாம் சேனன் படையெடுத்து வந்து பாண்டியர்களின் தலைநகரமான மதுரையைச் சூறையாடினான். பராந்தகச் சோழன் மதுரையை வென்றபோது பாண்டியன் இராசசிம்மன் இலங் கைக்குச் சென்று அடைக்கலம் பெற்றான். அப்பொழுது இலங்கை மீது சோழர் படையெடுத்த போதிலும் வெற்றி பெறவில்லை. வட இலங்கையை வென்று சோழ நாட்டோடு சேர்த்தவன் முதலாம் இராசராசன். இலங்கையில் சோழர் ஆட்சியை நிலைநாட்டியவன் முதலாம் இராசேந்திரன். ஆனால் முதலாம் குலோத்துங்கள் ஆட்சி தொடங்கியதும் தென்னிந்திய அரசியலில் பல குழப்பங்கள் நிகழ்ந்த காலக்கட்டத்தில், இலங்கை அரசன் விச (ஜயபாகு கி.பி. 1070 இல் சோழராட்சியிலிருந்து இலங்கையை விடுவித்துக் கொண்டான். தென்னிந்திய அரசர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆள மேற் கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை யெனினும், தென் னிந்தியப் பண்பாட்டுத் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு இலங் கையில் ஏற்பட்டது. காலம் காலமாக தென்னிந்தியக் கலை, கட்டடக்கலை, இலக்கியம் ஆகியவற்றையே இலங்கை பின்பற்றி யுள்ளது. இலங்கையில் பல இடங்களிலும் காணப்படும் பத்தினி தேவி வழிபாடும் ஏனைய சிறு தெய்வங்கள் வழிபாடும் தென்னிந்திய தாக்கத்தைக் காட்டுகின்றன. சைவ மதமும் நாயன்மார்கள் வழி பாடும் இலங்கையில் வேரூன்றி உள்ளன. கி.பி. ஒன்பதாம் நூற் றாண்டில் மாணிக்க வாசகர் காலத்தில் இலங்கையை ஆண்ட புத்த மன்னன் சிதம்பரத்துக்கு வந்ததாகவும் அங்கு அவன் சைவ மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் ஒரு கதை உள்ளது. வட இலங்கைப் பகுதியில் தமிழராட்சி உருவாகி வளரத் தொடங்கியதை இது குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். கி.பி. 1344 இல் இலங்கைக்கு வந்த இபின் பதூதா இலங்கையில் இருந்த தமிழ் மன்னனுக்குப் பாரசீக மொழி தெரிந்திருந்ததாக கூறுகிறான். பின்னர் வட இலங்கையில் இருந்த தமிழரசு விச (ஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது. அக்காலத்திலிருந்து அது தமிழர் பகுதியாகவே உள்ளது. இன்றும் யாழ்ப்பாணமும் அதையொட்டிய இலங்கை வட பகுதியும் முழுமையான தமிழ்ப் பகுதியாக உள்ளன. (தென் இலங்கைப் பகுதியில் தோட்டங்களில் குடியேறிய தமிழ்த் தொழிலாளர்களும் உண்டு) 40. மெசபொதாமியாவிலுள்ள எலாம் என்னும் நாட்டின் பெயர் ஒருவேளை இலங்கையிலிருந்து அங்குச் சென்று குடியேறி அந்நாகரிகத்தை வளர்த்த மக்கள் தந்ததாக இருக்கலாம். காரணம், பண்டைய இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் இலங்கையின் பெயர் ஈழம் என்றுதான் காணப்படுகிறது. எலாம் நாட்டு மக்கள் செமித்திய இனத்தவரல்லர்; அவர்கள் நாகரிகம் சுமேரிய நாகரிகத் தோடு பிணைந்தது. அவர்கள் மொழி ஒட்டுநிலை மொழியாகும்; எனினும் அது சுமேரிய மொழி சார்ந்திருந்த அக்காதியன் மொழித் தொகுதியைச் சார்ந்ததல்ல. லிசியாவை ஒட்டி இருந்த காரியா (Caria) என்னும் பகுதியின் பெயர் அநேகமாக பண்டு கேரளப் பகுதியில் லிருந்து சென்றவர்கள் வைத்த சேர என்ற பெயராகவே இருக்கலாம். சோமாலி மொழியும் தமிழ் மொழியும் மிக நெருங்கிய தொடர் புள்ளவை. பண்டைத் திராவிடர்கள் உலக நாகரிகத்துக்குத் தந்த சிறந்த கொடை திராவிட மொழிகளாகும். ஏறத்தாழ ஒட்டுநிலை மொழிகள் அனைத்துமே பண்டைத் தமிழ் மொழியிலிருந்தே உருவானவை. மொழியில்லாத மக்களுக் கெல்லாம் மொழியைக் கொடையாகத் தந்தவர்கள் திராவிடர்கள் என்றே கூறலாம். 41. பண்டைக் காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த நாகரிகங்களைக் , தென்னிந்திய நாகரிகத்துடன் ஒப்பு நோக்கினால் முன்ன வற்றுக்கும், தென்னிந்திய நாகரிகத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பலவாகும். அந்நாகரிகங்களுக்கும் தென்னிந்திய நாகரித்துக்கும் பல வகை களிலும் அடிக்கடி தொடர்பு இருந்ததால் இவ்வொப்புமைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். காலம் காலமாக அயல் நாகரிகங்களின் தொடர்பு பண்டையத் தென்னிந்திய நாகரித்துக்கு இருந்ததன் காரணமாக பிற நாகரிகங்களின் கூறுகள் சில தென்னிந்திய நாகரிகத்தில் கலந்திருந்தபோதிலும் அதன் தனித்தன்மை அப்படியே இருக்கிறது. இன்றும் சென்னை 'மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் பிழைப்புக்காகச் சென்று குடியேறுபவர்களிடையேயும் அத்தனித்தன்மையைக் காணலாம். 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்சஸ் அறிக்கையின்படி 25இலக்கம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறி வாழ்கின்றனர்; அவர்களுள் பெரும்பாலோர் இலங்கை, மலேயா, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளனர். சென்னை யிலிருந்து அயல்நாடுகளுக்குக் குடியேறுபவர்களைப் பற்றி அந்த அறிக்கை கூறுவது (பக். 72) வருமாறு:- "சென்னை மாகாணத்திலிருந்து குடியேறுபவர்கள் பெரும்பாலும் குடும்பமாகச் செல்கின்றனர்; அயல்நாட்டுக்குச் சென்றாலும் தாயகத்துடனும் தாய் மண்ணுடனும் நெடுநாள் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர்............... வெளிநாடு சென்றாலும் அவர்கள் மதம் மாறுவதில்லை. பெரும்பாலும் குழுக் களாக இவர்கள் அயல்நாடு செல்வதால், குடியேற்ற நாட்டிலும் தாய்நாட்டு மதச் சடங்குகளைத் தொடர்ந்து பின்பற்ற இசையும் வகையில், குழுக்களாகவே அவர்கள் வசிக்கின்றனர்................. சாதிக் கட்டுப்பாடுகள் தளர்வடைகின்றன; எனினும் சாதி ஆசார மாற்றங்கள் எல்லாச் சாதியினரிடையிலும் ஒரே மாதிரியே ஏற்படு கின்றன. மேலும் சென்னையிலிருந்து அயல் நாட்டுக்குக் குடியேறிய யாரும் தன்னுடைய தாய்மண்ணுடன் தொடர்பை விட்டுவதில்லை; அயல் நாட்டிலிருந்து திரும்பி வந்ததும் தனது குமுயாயத்துடன் ஒன்றி முன்னைப் போலவே வாழத் தலைபடுகின்றனர்................. அயல்நாடு சென்று வந்த பின்னரும் வாழ்க்கைத் தொழிலில் மாற்றம் அவ்வளவாக இருப்பதில்லை. இவர்களுள் பெரும்பாலோர் தமது தலைமுறை (பரம்பரை) வேளாண்மைத் தொழில்களையே குடியேற்ற நாட்டிலும் செய்கின்றனர். இந்தியாவில் வீட்டுவேலை செய்யும் இனங்களைச் சார்ந்தவர்கள் அயல்நாடுகளிலும் அவ்வாறு வேலை செய்கின்றனர். இந்தியாவில் வாணிகம் செய்யும் சாதியினர் அயல்நாடுகளிலும் வாணிகம் செய்கின்றனர்................ சென்னையில் லிருந்து அயல் நாட்டுக்குக் குடியேறுபவன் தனக்குப் பழக்கமான உலகத்தை (சுற்றுச்சூழலை) அப்படியே அயல் நாட்டுக்கும் கொண்டு சென்று அங்கும் நிலைப்படுத்தி விடுகிறான்.'' 42. தென்னிந்தியாவுக்கேயுரிய பல தன்மைகளைச் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, கிரீட் தீவு ஆகியவற்றின் கைத்தொழில், கலை, சமய குமுகாய அமைப்புகள் போன்றவற்றில் காணலாம். (ஏன் வேறு பல பண்டைய நாடுகளிலும் தான்.) அவற்றில் சிலவற்றை மற்றும் குறிப்பிடுகிறேன் : தென்னிந்தியாவில் முதன்முதலில் தோன்றிய கைத்தொழில்களில் கட்டுமரம், படகு ஆகியவை கட்டுதல் ஒன்றாகும். மீன் பிடிப்பதற்குப் பெருமளவுக்குக் கட்டுமரங்கள் பயன் பட்டன. நீளமான இரண்டு மூன்றுக் கட்டைகளை கயிற்றால் கட்டி கட்டுமரம் செய்யப்பட்டது; துடுப்புகள் மூங்கிலால் ஆனவை. பலகைகளைக் கயிற்றால் இணைத்துக் கட்டிய படகுகளும் இருந்தன. வணிகம் பெருகப் பெருக படகுக் கட்டும் தொழில் விரி வடைந்தது. படகு வடிவமைப்புகள் பல ; அவை இடத்துக்கு இடம் மாறுபட்டன. மலையாளத்தில் பெரிய மரக்கட்டையை உட்புறமாக செதுக்கிய படகு, நீண்ட பாம்புப் படகுகள் போன்றவை, கோடிக் கரை, கள்ளத்தோணி ஆகியவை தோணி வகைகளாகும். பழங் காலத்தில் மேலும் பல வகைப் படகுகள் இருந்திருக்கலாம். பல்வேறு அளவு , உருவம் கொண்ட படகு வகைகளை சிலப்பதி காரம் குறிப்பிடுகிறது: (13 ஆம் காதை, 175 - 180வரிகளில் பரிமுக அம்பி, கரிமுக அம்பி, அரிமுக அம்பி ஆகியவை குறிப்பிடப்படு கின்றன.) 43. கள்ளத்தோணியில் இருமுனையிலும் கண் உருவம் செதுக்கப்படுகிறது; தாய்த்தெய்வ உருவமும், நற்பேற்றுக்காக (அதிர்ஷ்ட த்திற்காக) 'உ' குறியும், புரவி வடிவமும் அமைக்கப் படுகின்றன. கண்ணேறு படாமல் தடுப்பதற்காக இவ்வாறு செய்யப் படுகிறது. பண்டைய எகிப்தியர், கிரேக்கர், உரோமர் ஆகியோரும் இத்தகைய குறியீடுகளைப் பயன்படுத்தினர். இன்றும் சீனா இந்தோ - சீனா ஆகிய நாட்டுக் கப்பல்கள் படகுகளில் இவற்றைக் காணலாம் காவிரி ஆற்றில் நாம் காணும் தோலால் மூடப்பட்ட பரிசல் போன்றதே மெசயொதாமியாவில் தைதிரிஸ் யூப்ரடிஸ் ஆறுகளைக் கடக்கவும் பயன்படுத்தப்பட்டது. 44. உலகில் முதன்முதலில் வேளாண்மைக்கு நீர்ப்பாசனம் பயன்படுத்தப்படத் தொடங்கியது தென்னிந்தியாவில்தான் எனலாம். தென்னிந்திய நெல் நாகரிகம் தென் சீனாவிலும் இந்தோனேசி யாவிலும் இருந்த நெல் நாகரிகங்களோடு ஒப்பிடத்தக்கது. கோதுமை நாகரிகத்தின் மையம் சிந்துவெளி ; அங்கிருந்து அது மெசசொதாமியாவுக்கும், நைல் பள்ளத்தாக்குக்கும் பரவியது. மக்காச்சோள வேளாண்மை முதலில் நடு அமெரிக்கப் பகுதியில் தொடங்கி பின்னர் வாணிகம் மூலமாக இந்தியாவுக்கு வந்திருக்க லாம். ஆயினும் பல்வேறு நாடுகளிலும் ஆற்றோரப் பகுதிகளில் ஆங்காங்குத் தனித்தனியாக நீர்ப்பாசன உதவியுடன் வேளாண்மை செய்வது தொடங்கியிருத்தலும் கூடும். ஒரே நாட்டில் அல்லது இடத்தில்தான் நீர்ப்பாசனம் கண்டுபிடிக்கப் பட்டது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆயினும் அகழ்வாய்வின் மூலம் கிடைத்துள்ள வேளாண்மைக் கருவிகள், கற்காலத் தொடக்கத்தில் இருந்து தென்னிந்தியாவில் வேளாண்மை நடந்ததற்குச் சான்றாகும்; தென்னிந்திய அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள கல்லாலான 'உழு கருவிகள் இதற்குச் சான்றாகும். பண்டைய சுமேரிய, எகிப்து பகுதி களிலும் இத்தகைய உழு கருவிகள் கிடைத்துள்ளன. ஆனால், சிந்து வெளியில் கிடைத்துள்ள கருவிகள் செம்பாலானவை கற்கருவிகள் அல்ல; காரணம் மொகஞ்சொதரோ நாகரிகம் புதுக்கற்கால நாகரிகம் அல்லது செப்புக் கால நாகரிகமாகும் என்பதே. 45. மழைக்கால நாகரிகத்தைப் பார்ப்போம், சிந்துவெளியில் கிடைத்த தங்கத்தாலான பொருட்களை வேதியியல் ஆய்வு செய்ததில் அவை மைசூரிலுள்ள கோலார் பகுதியில் மட்டுமே கிடைக்கும் உயர்ந்த வகைப் பொன்னால் செய்யப்பட்டவை என்றும், அங்குக் கிடைத்த அமேசான் கற்கள் நீலகிரி மலையில் மட்டுமே கிடைக்கும் சிறந்தவகைக் கற்கள் என்றும் தெரியவருகிறது, மைசூரில் மட்டுமே கிடைக்கும் மிகச் சிறந்த பச்சை நிற இரத்தினக் கல்லிலிருந்து செய்யப்பட்ட அழகிய நீலநிறக் கிண்ணம் ஒன்றும் மொகஞ்சொதரோ வில் கிடைத்துள்ளது. இவற்றிலிருந்து செப்புக் காலத்தில் தென்னிந்தியாவுக்கும் சிந்துவெளிப் பகுதிக்கும் நெருங்கியத் தொடர்பு இருந்தது தெரியவருகிறது. கமேரிய பண்டைய நகரான ஊர் - இல் மிகப் பழைய அடுக்கு ஒன்றில் நீலகிரி) அமேசான் கல் கிடைத்ததை முதல் பொழிவில் குறிப் பிட்டேன். எகிப்திலும் மிகப் பழங்காலத்திலேயே பச்சை நிற பெல்ஸ்பார் (Telspar) கல் கிடைத்துள்ளது. வளர் நகரில் இடைத் துள்ள கிமு. 1500 சார்ந்த வைடூரிய கற்களை, தோற்றத்திலும் அமைப்பிலும் ஒத்திருக்கும் வைடுரியக் கற்கள் ஐதராபாத்தில் ராய்கிர் பெருங்கல் கல்லறையிலும் கிடைத்துள்ளன. அதே ராய்கரில் கிடைத்துள்ள முக்கோண குவார்ட்ஸ் கற்களை யொத்தவை பழைய எகிப்து நாகரிகத்திலும் கிடைத்துள்ளன. குவார்ட்ஸ் ஆல் ஆன கிமு 1000 கார்ந்த சதுரக் கல் ஒன்று சிரீட் தீவிலும், குவார்ட்ஸ் - ஆல் அறுகோண சிலிண்டர் வடிவப் பொருள் ஒன்று உளர் கல்லறையிலும் இவையெல்லாம் ஆங்காங்கு தனித் தனியாகவாத் தோன்றின? மிகப் பழங்காலத்திலேயே தென்னிந்தி யாவுக்கும் சிரீட், பாபிலோன் போன்ற பகுதிகளுக்கும் நெருங்கிய வாணிக உறவு இருந்திருக்க வேண்டும் என்று இவை நிறுவ வில்லையா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மலேயாவில் குவாலா செலிங்சிங் என்னுமிடத்தில் கிடைத்துள்ள வேலைப் பாடமைந்த கர்னீலியன் கற்கள் பிற்காலத்தில் கி.பி.9-10 நூற் றாண்டுகளில் இந்திய வாணிகத்தின் மூலம் அங்குச் சென்றிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 46. ஆதிச்சநல்லூர் எமக்கலங்களில் மெல்லிய நீண்ட நீள வட்ட வடிவ தங்கத்தகடுகள் கிடைத்துள்ளன. இறந்தவர்கள் நெற்றியில் அவை கட்டப்பட்டிருக்கவேண்டும். மதுரையைச் சுற்றி யுள்ள சில சாதியினரிடையே பட்டயம் கட்டுவது என்னும் இப் பழக்கம் இன்னும் இருக்கிறது. கிரேக்க நாட்டு மெசினேவிலும் இதேபோன்ற தங்கப்பட்டயங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. (தென்னிந்திய அகழ்வாய்வு அறிக்கை 1902 -3; பக். 120) எகிப்தில் 17 ஆவது அரச பரம்பரைக் கல்லறை ஒன்றில் கிடைத்துள்ள தங்கக் கழுத்தணி (நெக்லேஸ்), ஒட்டியாணம் ஆகியவை வெளி நாட்டு நகைகள் (ஆபரணங்கள்) என்று கருதப்படுவதும் குறிப் பிடத்தக்கது. இசைதரும் வில் இந்தியாவாலிருந்து பெற்றது என்று கூறப்படுகிறது. அங்கும் நமது சிறுமிகளும், பெண்களும் அணிவது போன்ற சிலம்புகள் அங்கும் அணியப்பட்டன. மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள சில களிமண் பதுமை (பொம்மைகள்), ஒரு செப்புச் சிலை ஆகியவற்றிலிருந்து அங்குச் சிலம்பு அணியப்பட்டது தெரிகிறது. கிரீட் தீவில் நாசாஸ் (Knossos) சுவரோவியம் ஒன்றிலும் சிலம்பு அணிந்த உருவம் காணப்படுகிறது. சிலப்பதிகாரப் பாவியமும் சிலம்பு பற்றியதுதானே! 47. மெசொபதாமியாவுடன் தென்னிந்தியா எந்தக் காலக் கட்டத்தில் தொடர்பு கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரம் சுமேரியா நகரங்களான கஷ், சூசா ஆகியவற்றில் அகழ்ந்து எடுத்துள்ள கி.மு. 5000 - 3000 சார்ந்த சின்னங்களில் உள்ளது. அங்குப் பின்வரும் இந்தியப் பொருள்கள் அல்லது இந்தியப் பொருள் களைப் போன்றவை கிடைத்துள்ளன. 1) ஈமக்கலன்கள் (மண்ணாலானவை) 2) நீள் சதுர பானையோட்டு ஈமக்கலன்கள் (சிறு கால்கள் உடையவை) 3) கார்னிலியன் மணிகள், சிவப்பின் மேல் வெள்ளைக் கோடுகள் இட்டவை (இந்தியாவில் இன்றும் காண்பது போல்) இம்மணிகள் கீஷ் நகரிலும், கிரீக் தீவிலும் கிடைத்துள்ளன. 4) இந்தியாவில் இன்றும் பயன்படுத்தப்படும் பரிசல். 5) கீஷ் நகரில் கிடைத்துள்ள சிந்துவெளி முத்திரைப் போன்ற (அதே வகை எழுத்தும் (லிபியும், காளை உருவமும் உள்ளது) 6) சூசாவில் கிடைத்துள்ள சங்கு இன்று தெல்லோ என்று அழைக்கப்படும் பண்டைய லாக நகரச் சங்கு நாணயங்கள். இந்தியாவில் மிகப் பழங்காலத்திலிருந்து கோயில் வழிபாடு, ஈமச்சடங்குகள், போர் ஆகியவற்றில் சங்கு ஊதப்பட்டுவந்தது. சங்கு வளையல்கள் பயன்படுத்தப்பட்டன. தென்னிந்தியாவில் சங்கறுக்க இரும்பு, அரம் பயன்பட்டிருக்கவேண்டும். 7. நிம்ராத் மற்றும் ஊர் நகர இடிபாடுகளில் கிடைத்துள்ள இந்தியத் தேக்கு, தேவதாரு மரத்துண்டுகள் 48. பண்டை உலகின் சமய, குமுகாய அமைப்புகளில் தென் னிந்தியாவின் பங்களிப்பைக் காண்போம். தாய்த் தெய்வ வழிபாடு உலகெங்கும் பரவியிருந்ததை முதற்கண் குறிப்பிட வேண்டும். அம்மா என்பதே தாய்த் தெய்வத்தைக் குறிப்பிடுவதை காண்கிறோம். எகிப்தில் அம்மனுக்குக் (Ammon) கோயில் இருந்தது. கிரீட் தீவில் கிடைத்துள்ள தாய்த் தெய்வ மண் பொம்மைகள் மொகஞ்சத ரோவில் கிடைத்துள்ளவற்றைப் போன்றவையாகும். தென்னிந்தியப் பழங்குடிகளின் தெய்வங்களில் ஐயையும் ஒன்றாகும். அத்தெய்வமே இன்றைய காளி, அல்லது பத்திரகாளி அல்லது கேரள பகவதி ஆகும். தொடக்கக்கால் கோயில் வழிபாட்டுன் சிறுமியரைக் கோயிலுக்கு ஒப்படைப்பதும் இருந்தது. இன்று நம் நாட்டில் அவர்களைத் தேவரடியாள் என்று அழைக்கிறோம். கழக (சங்க இலக்கியத்தில் பரத்தையர் பற்றிக் கூறப்பட்டுள்ள போதிலும் தேவரடியார்கள் பற்றிக் கூறப்படவில்லை . வட ஆப்பிரிக்கக் கரையில் சிக்கா (Sica) என்னும் இடத்தில் இருந்த பினிசியக் குடியிருப்பு, சிரியா நாட்டில் பெலியபாலிஸ், அமினியநாடு, லிதியா, கிரேக்க நாட்டில் காரிந் ஆகிய இடங்களில் கோயிலுக்குப் பெண்களை ஒப்படைக்கும் பழக்கம் இருந்தது. இன்றையத் துருக்கி (அன்றைய ஆசிய மைனர்) பகுதியில் இவ்வழக்கம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. தென்னிந்தியக் கோயில்களில் இருந்தது போலப் பெண்களைக் கோயில் கடவுளுக்குப் பொட்டுக்கட்டி மணம் முடிக்கும் வழக்கமும் மெசபதோமியாவில் இருந்தது. மெசபதோபியாவிலும் இப்பழக்கம் கோயில் பரத்தைமைக்கு விபச்சாரத் திற்கும் வழி வகுத்தது. மெசபதோமியா கடவுளர்களான மார்துக், சூரியக் கடவுள் சாமஷ் ஆகியோர்க்குப் பெண்கள் மணமுடிக்கப்பட்ட போதிலும் அப் பெண்கள் மாந்தர்களுக்கு குழந்தைகள் பெற்றனர். 49. தலைமுடிப் படையல் (காணிக்கை) வழக்கத்தையும் குறிப்பிடலாம். பினீசியாவில் பைபிளஸ் (Byblus) என்னும் ஊரில் லிருந்த கோயிலில் பெண்கள் தலையை மொட்டையடித்து முடியைக் கடவுளுக்கு ஒப்படைத்தனர் என்று லூசியன் குறிப்பிடு கிறார். அக்கோயிற் கடவுளின் சிலை இடுப்புக்குக் கீழ் மீன் போல இருந்தது; கோயிலை ஒட்டித் திருத்தன்மை (புனிதமான) மீன் குளமும் இருந்தது. இந்தியாவில் உள்ள மீன் தோற்றரவு மச்சவதாரம்) கதையை இது நினைவூட்டுகிறது. மெசொபதாமியா பிரளயக் கதையிலும் மீன் என்ற சொல் வருவதைக் கண்டோம். ஏற்கனவே சுமேரிய ஒயன்னஸ் (Oannes) கதை பார்த்தோம். இவையெல்லாம் பண்டைய உலகின் சமயக் கோட்பாடுகளில் இந்தியாவின் தாக்கத்தைக் காட்டுவனவாகும். ஒரு காலத்தில் இந்தியாவில் மீனை வழிபட்டனர். அயல் நாடுகளுக்குச் சென்ற இந்தியர் மீன் வழிபாட்டைத் தம்முடன் கொண்டு சென்றனர். கிரேக்க நாட்டில் ஆர்கைவ் (Argive) பகுதியில் பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் தலை மயிரை அத்தேனா கடவுளுக்குப் படையலாகக் கொடுத்தனர். தென் னிந்தியாவில் கோயில்களில் கடவுளுக்குத் தலைமுடிப் படையல் தர வேண்டிக் கொள்வது இன்றும், திருப்பதி, சுவாமிமலை, வைத்தீசு வரன் கோயில் போன்ற இடங்களில் இருப்பதைக் காணலாம். இந்தி யாவில் சிறுமியர், திருமணமான பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் ஆகிய அனைவரும் அவ்வாறு நேர்ந்துக் கொண்டு தலைமுடிப் படையல் செலுத்தி வருகின்றனர். 50. அடுத்து நாம் குறிப்பிட வேண்டியது திரெளபதி அம்மன் கோயில்கள் முதலியவற்றில் நடைபெறும் தீ மிதித் திருவிழா ஆகும். அதே போன்ற சடங்கு கப்படோசியாவில் அர்த்தெமிஸ் (Artemis) என்னும் பெண் தெய்வ வழிபாட்டிலும் காணப்பட்டது. 51. அடுத்து, பாம்பு வழிபாட்டுக்கு வருவோம். பண்டை நாகர் இனக்குழுவினரின் இனமரபுச் சின்னம் (Totem) பாம்பாகும். சிவன், கந்தன் ஆகியோரிடம் பாம்பு பிணைந்துள்ளது இப் பழையத் தொடர்பைக் காட்டுகிறது. தென்னிந்தியாவில் நாகக்கல் வழிபாடு இன்றும் உள்ளது. சில கற்களில் ஒரே பாம்பு நின்று கொண் டிருக்கிறது. வேறு சில கற்களில் இரண்டு பாம்புகள் இணைந் துள்ளன. கோயில்களிலும் திரு (புனித) மரங்கள் அடியிலும் (அரசமரம், வேப்பமரம்) பல பாம்புக் கற்கள் நிறுவப்பட்டுள்ளன. தென்னிந்தியா விலும் மலையாளத்தில் தான் இவ்வழிபாடு அதிகம். இவ்வழிபாடு மகப்பேற்றுடன் தொடர்புடையது. பாம்பை வழிபட்டால் மலட்டுப் பெண்ணும் கருவுறுவாள் என்பது இன்றும் உள்ள நம்பிக்கை ஆகும். சிந்துவெளி நாகரிகப் பானை ஓடுகள், முத்திரைகள், மண் தாயத்துகள் போன்றவற்றில் பாம்பு வடிவத்தைக் காணலாம். பண்டைய கிரீக் தீவின் வழிபாட்டு முறைகளில் பாம்பு வழிபாடும் ஒன்றாகும். அங்கு வழிபடப் பட்ட பாம்பு உருவத்துடன் இரட்டைக் கோடரி வடிவமும் இணைக்கப் பட்டுள்ளது. 52. பண்டைத் தென்னிந்தியாவில் இருந்தது போன்ற திங்கள் வழிபாடு ஆசிய மைனரிலும், நண்ணிலக்கரை கிழக்குப் பகுதியிலும் பெரும் அளவு பரவியிருந்தது. ரிக் வேதத்தில் நாம் காண்பது இயற்கை வழிபாடே எனினும் அங்குத் திங்கள் வழிபாட்டுக்கு முகாமை தரப்படவில்லை. தென்னிந்தியாவின் நிலை வேறு. பண்டைக் கழக இலக்கியங்களில் நிலவு வழிபாட்டைக் காண் கிறோம். சிலப்பதிகாரத்தின் தொடக்க வரிகளே திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை போன்றிவ் வங்கண்உல களித்தலான் என்பவைதாம். பண்டைத் தமிழ் மன்னர்களின் தலைநகரில் திங்களுக்கு என்று நிலாக்கோட்டம் என்னும் கோயில் இருந்தது. காருவாவு (அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாள் பிறையைக் காண்பது உடல் நலத்தையும் செல்வத்தையும் தரும் என்று நம்மிடையே இன்றும் உள்ள நம்பிக்கை பழய வழிபாட்டின் தொடர்ச்சியே ஆகும். வானியல் மற்றும் கணியம் (சோதிட வியல், கணிதம் எல்லாம் இன்று நாம் சந்திர மானம் என்று அழைக்கும் திங்கள் அடிப் படையான கணிதத்தின்படியே அமைந்துள்ளது. நிலவைக் குறிக்கும் திங்கள் என்னும் பெயரே தமிழில் மாதத்தையும் குறிக்கிறது. பண்டைத் தமிழர்கள் திங்களைக் கடவுளாக வழிபட்ட போதிலும் அவர்களுக்குத் திங்கள் மறைப்பு (சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்று தெரியாது. (எகிப்தியர்களுக்குத் தெரிந்து இருந்தது) சமற் கிருத பண்பாட்டோடு தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் தமிழ் நாட்டில் திங்கள் மறைப்பு நாள் 'புனிதமாகக் கருதப்பட்டது. பாபிலோனிய நாகரிகத்தில் ஞாயிற்றை விட திங்களுக்கே முதன்மை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பாபிலோனிய ஆண்டும் நிலா அடிப்படையில் அமைந்தது. பாபிலோனிய ஆப்பு எழுத்து களில் (Cuneiform) 30ஐ குறிக்கும் வடிவமே நிலாவையும் குறித்தது. தென் னிந்தியாவைப் போன்றே பாபிலோனியாவிலும் இஸ்தார் (Ishtar) என்னும் காளை வழிபாடு, கற்புக்கரசியரை மதித்தல், கோயில் களுக்குப் பெண்களை ஒப்படைத்தல் ஆகிய பழக்கங்கள் காணப் பட்டன. எபிரேயர்களின் சமய நூல்களிலும் இவற்றைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. பாபிலோனியப் பண்பாடு எபிரேரியனின் கானான் நாட்டிற்கு சென்றிருக்கலாம்; அல்லது சுமேரிய ஊர்ப் பகுதியிலிருந்து கானான் நாட்டிற்குக் கரான் வழியாக மக்கள் சென்றிருக்கலாம். கிரேக்கக் கடவுளர்களைப் பற்றிய புராணங் களிலும் இத்தகைய குறிப்புகள் உள்ளன. இவை ஆசிய மைனரி லிருந்து கிரேக்கத் திற்கு சென்றிருக்கலாம். ஆக, இந்தியாவிலிருந்து பாபிலோனியாவுக்கும், பாபி லோனியாவிலிருந்து கிரேக்க நாட்டிற்கும், கானான் நாட்டிற்கும் இப்பண்பாடு பரவியிருக்கலாம். இங்கு இப்பண்பாட்டின் தோற்றம் தென்னிந்தியாவில்தான் என்பதையும் அப்பண்பாடு இன்றும் நம்மிடம் உள்ளது என்ப தையும் வலியுறுத்துகிறேன். தென்னிந்தியப் பண்பாடு அன்று தொட்டு இன்றுவரை உயிரூட்டத்துடன் உள்ளதை இது காட்டு கிறது. 53. தென்னிந்திய சமயத்திலும், பிற நாடு சமயங்களிலும் காளை வழிபாடு புகழ்பெற்றதாக இருந்தது. காளை, சிவபெருமானின் ஊர்தி யாக (வாகனமாக வழிபடப்பட்டது. இன்றும் ரிசப வாகனத் திருவிழா முகாமையதாகும். சமயத்திருவிழாக்களில் காளை உருவம் கொண்டுசெல்லப் படுவதை மொகஞ்சதரோ தாயத்துகள் இரண்டு காட்டுகின்றன. பண்டைய எகிப்து சமய ஊர்வலங் களிலும், விலங்குகள் பங்கேற்றன. காளை, பொதுமக்களால் வழிபடப் பட்டதால் திருவிழாக்களிலும் காளைக்குப் பங்கு அளிக்கப் பட்டது. எருதைப் பிடித்து அடக்கும் திருவிழாவும் இவற்றில் ஒன்று. ஆயர்குல மகளிர் எருதை வென்று அடக்கும் இளைஞனையே மணமகனாகக் கொள்வர் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கிரீட் தீவில் கிடைத்துள்ள குடுவை (சாடிகளில் இளைஞர்கள் காளைமீது தாண்டும் காட்சிகள் சித்திரிக்கப் பட்டுள்ளன. இவ்வகை யில் கிரீட் தீவின் வழக்கங்களும், தென்னிந்திய வழக்கங்களும் மிக நெருங்கியவை. தென்னிந்தியாவின் தாக்கம் தான் கிரீட் தீவில் காணப்படுகிறது. தென்னிந்திய கிராட இன மக்களே கிரீட் தீவுக்குச் சென்று அத்தீவு நாகரிகத்தை உருவாகியிருக்கலாம் என்று நான் வேறு ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவ்வின மக்களின் பேரில் லிருந்தே கிரீட் என்னும் பெயரும் உருவாகியிருக்கலாம். 54. காளை வழிபாட்டோடு நெருங்கிய தொடர்புடையது எகிப்திய நாகரிகத்தில் இருந்த 'லிங்கா' விழிபாடாகும். நண்ணிலக் கரை மக்கள் பலரும் 'லிங்க வழிபாடு செய்தனர். (ரிக்வேதம் , VII 21-5; X 99 - 3 சிஸ்னதேவா). சிந்துவெளி அகழ்வாய்வில் ஆவுடை யாருடன் கூடிய லிங்கங்கள் பல கிடைத்துள்ளன. கிரீட் தீவில் முகாமையான வழிபாடு குத்துக்கல்லையோ அல்லது மரத்தடியில் பதித்த கொம்பையோ தூண்போலக் கருதி வழிபடுவதாகும். இது கிரீட் தீவு அரச வழிபாடாகும். பண்டைத் தமிழ்க் கடவுளாகக் கல்தூண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா வெங்கும் ஒரு காலத்தில் தூண் வழிபாடு இருந்தது. எனவேதான் கழிபழங்காலத்திலிருந்து நாடெங்கும் ஆங்காங்கு வழிப்படப்பட்டிருந்த தூண்களில் அசோகன் தன் சாசனங்களைச் செதுக்கினான். புத்தர் தாதுக்களின் மேல் கட்டப்பட்ட 'ஸ்தூபங்களும் இத்தகையத் தூண் வழிபாட் டுடன் தொடர்புடையவையே. 'லிங்கா' உருவத்தைக் கல் வடிவமாக மாற்றிய பொழுது கோயிலுக்கு முன் தமிழர்கள் கொடிக் கம்பங் களை அமைத்தனர். பழங்காலத்தில் தூணை வழிபட்டதை நினை வூட்டும் வகையில் இன்றும் திருவிழா தொடக்கத்திலும் திருமணச் சடங்கு தொடக்கத்திலும் மூங்கில் அல்லது வேறு மரக் கொம்பு ஒன்றை முதலில் நட்டு வழிபட்ட பின்னர்தான், திருவிழாக்களும், சடங்குகளும் தொடங்குகின்றன. கொம்பு வழிபாடே காளை வழி பாட்டின் அடையாளமாகும். கிரீட் தீவின் வழிபாட்டு முறை தென்னிந்தியக் கோயில்களில் உள்ளது போலவே அமைந்துள்ளது. நறுமணப் (சாம்பிராணி புகை காட்டப்பட்டது; சங்கு ஒலிக்கப் பட்டது; யாழும், குழலும் இசைக்கப்பட்டன; மணிகள் கையில் வைத்து ஆட்டப்பட்டன; கைத்தாளம் ஒலிக்கப்பட்டது; தேவரடி யார்கள் நடனமாடினர். 55. பண்டை நாகரிக மக்கள் தாய்த் தெய்வத்தை வழிபட்ட துடன், தாய் வழித் தாயமுறையையும் பின்பற்றினர். இன்றும் இந்தி யாவின் பிற பகுதிகளில் மக்கள் தாயம் இருந்தாலும் மலையாளத் தில் மருமகள் தாயம் இருந்தது. தாய்வழித் தாயமுறை ஒரு காலத்தில் தென்னிந்தியா, ஐரோப்பாவின் தென்பகுதி , ஆசியமைனர், மெசொப தாமியா, எகிப்து ஆகிய பல்வேறு பகுதிகளிலும் நடைமுறையில் இருந்தன. தென்னிந்தியாவைப் பண்டைய உலகின் பிற பகுதிக ளோடு தொடர்புப் படுத்தியது தாய்வழித் தாயமுறையாகும். எகிப்து கிரீட் தீவு ஆகியவற்றிலும் தாய்வழி உறவு முறையே பின்பற்றப் பட்டது. 56. உடையிலும் நாம் பல நெருங்கிய ஒப்புமையைக் காண லாம். கிரீட் தீவு, எகிப்து ஆகியவற்றில் ஆடவர் இடுப்பு வரை அணியும் வேட்டியை அணிந்தனர்; செருப்புகளையும் அணிந்தனர். தலைமயிர் நீளமாக முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது. பழந்தமிழ் வீரத்தாய் ஒருத்தி தன் ஒரே மகனைப் போருக்கு அணியப்படுத்தி அனுப்பும் பொழுது பாறு மயிர்க்குடுமியில் எண்ணெய் நீவி அதை முடித்து அனுப்புகிறாள் என்று புறநானூற்றுப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் குறிப்பிடுகிறார். மொகஞ்சதரோ நாகரிக மக்கள் தங்கள் தலைமயிரை பல்வேறு வகைகளில் அமைத்திருந்த போதிலும் நீள் மயிர் தொங்குவதே பெரும்பாலும் காணப்பட்டது. இன்று நகைப்புக்கு உட்படும் குடுமியானது பண்டையத் தமிழகத் தில் வழக்கத்தில் இருந்ததைப் புறநானூறு காட்டுகிறது. அதே வழக்கம் பண்டைய கிரீட், எகிப்திலும் இருந்தது. 57. ஏனைய பழக்கங்கள், பொழுது போக்குகள் போன்ற வற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம். முருகன் கொடியாக கொண் டுள்ள சேவல் முதல் முதலில் மனிதன் பழக்கிய விலங்குகள், பறவை களில் ஒன்றாகும். கிரேக்கக் கடவுள் அப்போலோவின் சின்னமும் சேவலாகும். அப்போலோவும், கந்தனும் ஒன்றாக இருக்கலாமோ? தென்னிந்திய அறிஞர் அவ்வாறு கருத முற்படுவர். கடல் கொண்ட தென்னாடு மூழ்கிய காலக் கட்டத்திலேயே கிழக்கு ஆப்பிரிக் காவிலும், மடகாஸ் தீவிலும் சேவல் மக்களால் பழக்கப்பட்டு விட்டதாகவும் தமிழில் உள்ள முருகனோடு இணைந்த வேலன் கதை இதற்கு ஆதாரம் என்றும் வி. சொக்கலிங்கம் பிள்ளை தமது The Origin of the Indo - European races (1935) என்னும் நூலில் குறிப்பிடுகிறார். 58. தென்னிந்தியப் பொழுது போக்குகளில் குறிப்பிடத்தக்கது கோழிச் சண்டையாகும். மொகஞ்சதரோ முத்திரைகளில் ஒன்றில் காட்டுக் கோழிகள் இரண்டு சண்டை போடுவது சித்திரிக்கப் பட்டுள்ளது. சிந்துவெளி மக்களின் பொழுதுபோக்குகளுள் ஒன்றாக கோழிச் சண்டை இருந்திருக்கலாம் என்று அறிஞர் மக்கே கூறுகிறார். 59. இதுகாறும் பண்பாட்டுப் பரவல் பற்றி நான் தந்துள்ள பல்வேறு செய்திகளும் தென்னிந்திய நாகரிகத்தின் அடிப்படை ஒருமைப்பாட்டைத் தெளிவாக நிறுவுவனவாகும். பண்டைக் காலம் தொட்டு இப்பண்பாடு இடையறுவுறாது வந்துள்ளது. பிற பண்பாடுகளிலிருந்து சிறந்த சில கூறுகளை அது உள்வாங்கி உள்ள பொழுதும் அது இன்றும் உயிரூட்டத்துடன் உள்ளது. பண்டைக் காலத்திலும் சரி, இடைக்காலத்திலும் சரி, நம் காலத் திலும் சரி உலக நாகரிகத்தில் தென்னிந்திய நாகரிகத்தின் பண்பு குறிப்பிடத்தக்கதாகும். கலைகள், கைத்தொழில்கள், சமயம் ஆகிய துறைகளி லெல்லாம் பண்டைய உலகத்துக்கு நாகரிகத்தை பரப்பியது தென்னிந்தியா வாகும். இடைக்காலத்தில் பண்பாட்டைப் பரப்பியதுடன் தென்னிந்தியக் கடல்கடந்த பகுதிகள் சிலவற்றைக் கைபற்றவும் செய்தது. இன்றும் சென்னை மாகாணத்தவன் உழைப்பாளனாகவோ, அதிகாரியாகவோ உலகில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பணியாற்றி வருகிறான். மாந்தர் குலத்தின் வளர்ச்சிக்குத்தான் சிறந்த பங்கை அளிக்கிறான். இன்றும் நன்னிலையில் உள்ள இப்பழம் பண்பாடு மேலும் மேலும் வளர்வதாக! பொழிவுகளுக்கான அடிக்குறிப்புகள் 1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி. ஆர். இராச்சந்திர தீட்சிதர் ''தமிழரின் தோற்றமும் பரவலும்" பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகளும் 1947ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழரின் தாயகம் தென்னாடே; இங்கிருந்தே பழந்தமிழ் திராவிட நாகரிகம் சிந்துவெளி, சுமேரியம், எகிப்து ஆகிய பகுதிகளுக்குப் பரவியது என்பது அப் பொழிவுகளின் முடிவு. இப்பொழிவுகளுக்கான அடிக்குறிப்புக்கள் 47 பக்கங்களில் தரப்பட்டன. 1940களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த பல்துறை நூல்களிலிருந்து அப் பொழிவுகளின் முடிவுக்கான விரிவான ஆதாரங்களை அக்குறிப்புக்கள் தந்தன. 2. தீட்சிதரின் முடிவுகள் 1940 - 2006 கால அளவில் வேறு துறைகளில் ஏவப்பட்டுள்ள வளர்ச்சி நிலைகளின் படி எவ்வாறு மேலும் வலுப் படுத்தப்பட்டுள்ளன என்பதை முன்னுரையில் கண்டோம். அம்முன்னுரைக் கருத்துக்களுக்கான ஆதார நூல்கள், கட்டுரைகளின் விவரப்பட்டியல் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளன. மேற்கொண்டு ஆய்வு செய்ய விழைபவர் களுக்கு இன்றை நிலையில் அப்பட்டியலே பயன்படுவதாகும். 1940களில் வி. ஆர். இராமசந்திரனார் அவர்கள் தம் அடிக்குறிப்புகளிற் சுட்டிய ஆதாரங்கள் வரலாற்று வரைவியலில் (Histriography) அவருடைய நிலை பற்றி ஆய்வு மேற்கொள்ள விரும்புவார்க்குப் பயன்படுவனவேயன்றி பொதுநிலை வாசகர்களுக்குப் பயன்படுவன அல்ல. 3. மேற்சொன்ன நிலையில் மூலநூலில் கண்ட அடிக்குறிப்புக்கள் இங்கு அப்படியே முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. இன்றை நிலையிலும் பொதுநிலை வாசகர்களுக்குப் பயன் படத்தக்க செய்திகள் மட்டும் அவருடைய அடிக்குறிப்புக்களிலிருந்து எடுத்து பொழிவுகளின் பாகி வாரியாகத் தரப்பட்டுள்ளன. பாகி 2. பிரளயம் பற்றிய பல்வேறு நாட்டுப் புராணக் கதைகள் குறித்து ஜே.சி. பிரேசர் தனது Man, God and Unmortality நூலின் 50வது பக்கத்தில் கூறுவது வருமாறு:- பழங்கதைகளைக் குறித்தும் வன்மையான கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு சாரார் ஒன்று கூறுவர்; மறுசாரார் நேர் எதிரான கருத்தை வலியுறுத்துவர். உண்மை என்பது பெரும்பாலும் எதிர் - எதிர்முனையில் இல்லாமல் மையத்தில் இருக்க வாய்ப்புள்ளது. பாகி 4. 1940இல் சாமன்லால் வெளியிட்ட 'இந்து அமெரிக்கா'' (HinduAmerica) நூலில் பண்டைய வட அமெரிக்க மெக்சிகோ நாகரிகம், தென் அமெரிக்கப் பெருநாட்டு இங்காநாகரிகம் அவற்றில் இந்திய (குறிப்பாக தென்னிந்திய திராவிட நாகரிகக் கூறுகள் இருந்தமையை விளக்குகிறார். பாகி 10. ஆசிய மைனர் பகுதியில் வசித்த மிகப் பழைய மக்களில் லிசியர்களும் ஓர் இனத்தவர். ஹெரடோடஸ் காலத்துக்கும் முன்னர் இவர்கள் திரமிளை Toman) என்று அழைக்கப் பட்டதாக அவர் கூறியுள்ளார். விசியம் தாய்வழியாக உறவுமுறைகளை நிர்ணயித்தவர்கள் ஆவர். பாகி 12. பிராகூய் மொழியின் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளை ஒத்தது. அடிப்படைச்சொற்கள் பலவும் திராவிட மொழிச் சொற்களே. பாகி14. பீகார் - ஒரிசா ஆய்வுக்கழக இதழ் மடலம் 24-ல் எழுதிய கட்டுரைகளில் பிடி. சீனிவாச ஐயங்கார் தென்னிந்தியாவில் நாகரிகம் படிப்படியாக இடையீடின்றி வளர்ந்துவந்துள்ளதை அகழ்வாய்வுச் சான்றுகள் நிறுவுவதை வலியுறுத்துகிறார். புதுக் கற்காலத்தில் வட இந்திய மக்கள் பேசிய மொழிகள் அனைத்தும் திராவிட மொழிகளுக்கு இனமானவையாகவே இருந்திக்க வேண்டும் என்பதும் அவர் முடிவாகும். பாகி 19.1863இல் பல்லாவரத்தில் இந்திய நிலவியல் அளவைசர்வே அதிகாரி புரூஸ்புட் என்பவரும் அதே ஆண்டில் அத்திரம்பாக்கத்தில் அவரும் இன்னொரு அதிகாரி வில்லியம் சிங் என்பவரும் கற்காலத் கருவிகளைக் கண்பிடித்தனர். பாகி 25. பத்தாவது அனைத்திந்திய கீழைக்கலையியல் ஈரோட்டு ஆய்வுமலரில் வி ஆர் ஆர். தீட்சிதர் "இறந்தோரை அடக்கம் செய்தல் : பழைய தென்னிந்தியப் பழக்கங்களே'' பற்றிய கட்டுரையைக் காண்க. (பக். 530-533) பாகி 35. Memories of Asiatic Society of Bengal VII பக்கங்க ள் 152 - 190 மற்றும் 216 - 227இல் ஹெர்னல் கட்டுரையைக் காண்க. பூமராங் கருவியும் வளைதடியும். தர்ஸ்ட ன் எழுதிய தென்னிந்திய சாதிகளும் குடிகளும் முதல் மடலம் முன்னுரையக் 28 29 ஐயும் அவர் எழுதிய தென்னிந்திய மாந்தவியற்குறிப்புகள் பக்க ஜேயும் காண்க. பாகி 48. வி ஆர் ஆர். தீட்சிதர் எழுதியலலிதா வழிபாடு The Lalitha cult (சென்னைப் பல்கலைக்கழகம்) நூலைக் காண்க. பாகி 51. J. Ph. Vogel1926ல் எழுதிய Indian Serpent Lore என்னும் நூலைக் காண்க. பாகி 57. வி. சொக்கலிங்கம் பிள்ளை (புதுமைப்பித்தனின் தந்தை) 193இல் எழுதி வெளியிட்ட The origin of Indo European races and People என்னும் நூலில் வேலன் வழிபாடு போன்றவை பற்றிக் குறிப்பிடுகிறார். எனினும் அந்நாளில் அவர் தெரிவித்துள்ள பெரும்பாலான கருத்துக்கள் ஆதாரமற்ற கற்பனைகளாகவே உள்ளன. முன்னுரைக்கான ஆதார நூற்பட்டியல் Allchin, Bridget and Raymond (1988) THE BIRTH OF CIVILISATION IN INDIA AND PAKISTAN: Cambridge Uty Press Arasendiran, K. (19971 2000) Ulagam Paraviya Tamilin Var - Kal (Fourvolumes) Onriya Tamilar Tholamail; Australiya Aruli, P (1985) Moliyiyal Uraikal (5 Vols) Arivan Pathipagam, Tamilur, Puducheri. Caldwell, Rev Robert (1875). A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH INDIAN FAMILY OF LANGUAGES;II Edn London (I Edn 1856) Carstairs - McCarthy, Andrews (2001) The origins of language at pp 1- 18 of Mark Aronoff and another THE HANDBOOK OF LINGUISTICS Blachwell; London. Cavalli - sforza, L.Lucas, Paolo Menozzi and Alberto Piazzo (1994). THE HISTORY AND GEOGRPHY OF HUMAN GENES; Princeton University Press; New Jersey Cirrampalam, Ci.Ka (1999 Revised) : Pandaya Tamilagam; Kumaran ; Chennai – 26 Crystal, David (1997) The Cambridge Encyclo paedia of Linguistics; see section 49: The origins of language (pp 290-3) Dani, A.H; M. Hohen and others (Eds) (1996) HISTORY OF HUMANITY: vol II : FROM THE III MILLENNIUM TO THE 7th c. B.C; Routledge / UNESCO (see pp. 246 - 265 : The Indus Valley (3000 - 1000 BC) by B. K. Thapar and M. Rafiq Mugal) De Laet, S. J and Others (Eds) (1994) HISTORY OF HUMANITY: vol I:Prehistory;Routledge / UNESCO Devaneyan, G (1966) THE PRIMARY CLASSICAL LANGUAGE OF THE WORLD; Katpadi (For complete list of his works see Ramanathan, 2003) Dixon, R.M.W (1980) THE LANGUAGES OF AUSTRALIA; Cambridge Uty Press Dixon, R.M.W (1997) THE RISE AND FALL OF LANGUAGES Cambridge Uty Press Ehrenfels, U. R.(1952). ‘Ancient South India and her cultural contacts.'JOURNAL OF ANNAMALAI UNIVERSITY, 17 (1952) Fairservis, Walter .A (1971) THE ROOTS OF ANCIENT, INDIA Flemming, N.C. (2004). Submarine prehistoric archaeology of the Indian Continental shelf: A potential resource. CURRENT SCIENCE 86 - 9 PP 1225 - 1230 101h May 2004. Gnanaprakasar, S. (1929) The origin of language, a new theory THE MADRAS CHRISTIAN COLLEGE MAGAZINE - IX-4. Gnanaprakasar, S (1938-48) AN ETYMOLOGICAL AND COMPARATIVE LEXICAN OF THE TAMIL LANGUAGE ;Jaffna. Gnanaprakasar, S (1953) Linguistic evidence for the common origin of the Dravidians and Indo - Europeans ; TAMIL CULTURE II-1. Greenberg, Joseph H: INDO - EUROPEAN AND ITS CLOSEST RELATIVES - THE EURASIATIC LANGUAGE FAMILY : Vol I - Grammer and II- Lexicon Stanford University Press;Califomia. Hakola, H.P.A (2000): 1000 DURALJAN ETYMA - AN EXTENDED STUDY IN LEXICAL SIMILARITIES IN THE MAJOR AGGLUTINA. TIVE LANGUAGES; Kuopio, Finland. Hakola, H.P.A and Hodijat Assadian (2003) SUMERIAN AND PROTODURALJAN: Kuopio, Finland Hegdcus, Iren;; etal (1997):Indo - European, Nostratic and beyond (Fest schrift for Vitaly V. Shvoroshkin) Washington; Institute for the study of man Heras, Rev H. (1953): Studies in Proto - Indo -Mediterranean culture: Bombay Jaiswal, Suvira (1974) Studies in the social structure of the early Tamils. in INDIAN SOCIETY: HISTORICAL PROBINGS IN MEMORY OF D.D.KOSAMBI;PPH, New Delhi Jeeva, Purna Chandra (2004) CINTU VELIYIL MUNTU TAMIL, Taiyal Patippakam, Ponneri Krishnamurti, Bhadriraju (2003):THE DRAVIDIAN LANGUAGES ;Cambridge University Press;pp xxvii; 545 Lahovary, N(1963) :Dravidian origins and the West; Madras; Orient Longmans Levitt, Stephan Hillyer (1998): Is there a genctic relationship between IndoEuropean and Dravidian? THE JOURNAL OF INDO-EUROPEAN STUDIES 26;pp 131 - 159 Levitt, (2000) Some more possible relationships between Indo-European and Dravidian; THE JOURNAL OF INDO - EUROPEAN STUDIES ;28pp 407-438 Madhivanan, R. (1995) Indus script - Dravidian; Madras; Tamil CanrorPeravai (1995) Indus script among Dravidian Speakers;Madras Mahadevan, (1977). THE INDUS SCRIPT, TEXTS, CONCORDANCE AND TABLES;; ASI, New Delhi Mallory, J. P. (1996); The Indo - European Phenomenon: Linguistics and Archaelogy (at pp 80-91 of Dani. A.H and others :HISTORY OF HUMANITY: vol II : FROM THE III MILLENNIUM TO THE 7th c. B.C; Marr, J.R. (1975) 'The early Dravidians' in A CULTURAL HISTORY OF INDIA; Ed. A.L. Basham Masica, Colin P (2000) article in THE YEAR BOOK OF SOUTH ASIAN LANGUAGES AND LINGUISTICS, 2001;; New Delhi: Sage Publications Natana Kasinathan (2004): Date of early Tamil epigraphs, in JOURNAL OF TAMIL STUDIES;IITS; June 2004. Nichols, Johanna (1998) paper in THE ORIGIN AND DIVERSIFICATION OF LANGUAGE Ed by Nina G Jablonski, California Academy of Sciences Nilakanta Sastri, K, A. (1972) SANGAM LITERATURE - ITS CULTS AND CULTURE; Madras Nilakanta Sastri, K.A. (1974) LIFE AND CULTURE OF THE INDIAN PEOPLE - AHISTORICAL SURVEY; II Edn; Allied publisher : New Delhi Nilakanta Sastri, K.A. (1976 IV Edn): A HISTORY OF SOUTH INDIA Oxford Uty press Parpola, Asko (1994) DECIPHERING THE INDUS SCRIPT; Cambridge Uty Press Possehl, Gregory (2002). THE INDUS CIVILISATION - A CONTEMPORARY PERSPECTIVE;; Altamira Press; Maryland USA (2003 reprint by Dn of sage Publications; New Delhi-17) Prichard, James Cowles (1847); Researches into physical history of mankind, world civilisation, races, tribes and cultures; - Vol V Oceania and America;Londen; Sherwood, Gilbert and Piper Rajan, K. (2004) TOLLIYAL NOKKIL TAMILAKAM; Intruational Institute of Tamil Studies Chennai Ramachandran, K. (2004) ULAGA MOLIKALIL TAMIL C-CORKAL;; Chennai; SISSW Publishing Society Ramachandra Dikshitar, V.R.(1947) THE ORIGIN AND SPREAD OF THE TAMILS Ramanathan, P. (1984) : Astraliappalankudimakkal molikalum Tamilum; CENTAMIL CELVI, Madras, May 1984. (1991):Diravidar Uravumurai ; Tamil Polil; Thanjavur; May - June 1991 (1998) A new Account of the History and culture of the Tamils;Sissw (1999):Cintu velittol Tamila Nagarikam; Sissw; Chennai (2003) Direction of movement of Dravidian speakers in prehistoric times; DRAVIDIAN STUDIES 1-3 April-June 2003 (2004) Nostratics, the light from Tamil aecording to Devanayan Sissw Stein, Burton (1998) A HISTORY OF INDIA;Blackwell Oxford (2001 reprint by OUP India) Subrahmanian, N (1997) TAMIL SOCIAL HISTORY ; Vol I Institute of Asian Studies; Chennai 119 Swisher III. Carl C and two others (2000) JAVA MAN - how two geologists' dramatic discoveries changed our understanding of the evolutionarypath of Modern Humans; Scribner USA Sykes, Bryan. (1999) THE HUMAN INHERITANCE: Genes, Language and Evolution; O.U.P see pp 1-32; Colin Renfrew; Reflections on the Archaelogy of Linguistic diversity. Thaninayagam, Xavier. S (1953) NATURE IN ANCIENT TAMIL POETRY Thirunavukkarasu, Ka. Tha (1975) 'Inamarapu' at pp 51-136 of TAMIL NATTU VARALARU - TOLPALANKALAM;Govt of TamilNadu Trautmann, Thomas R. (1981) DRAVIDIAN. KINSHIP ;Cambridge Uty Press Zvelebil, Kamil V (1972) The descent of Dravidians. INTERNATIONAL JOURNAL OF DRAVIDIAN LINGUSTICS; Thiruvananthapuram;Kerala vol 2 pp 57-63 (1990) DRAVIDIAN LANGUAGES - AN INTRODUCTION Pondicherry Institute of Linguistics and Culture. இந்நூலின் முன்னுரையில் குறித்தவற்றுள் முதன்மையான செய்திகளை விளக்கும் படங்கள் நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.