முதுமொழிக் களஞ்சியம் 5 மா முதல் - வௌ வரை ஸந்குஊயிகீகுரூபுஹங்நிகுது செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்பாசிரியன்மார் : இரா. இளங்குமரனார் பி. தமிழகன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 184= 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 முதுமொழிக் களஞ்சியம் 5 மா முதல் - வௌ வரை நூற் குறிப்பு நூற்பெயர் : முதுமொழிக் களஞ்சியம் - 3 தொகுப்பாசிரியன்மார் : இரா. இளங்குமரனார் பி. தமிழகன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 208 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 முன்னுரை கட்டொழுங்குடையது பாட்டு. அக்கட்டொழுங்கு, கற்று வல்லார்க்கே கைவரும் சிறப்பினது. ஆனால், கல்லார் வாயிலும் கட்டொழுங்கமைந்த மொழித்திறம் உண்டு என்பதைக் காட்டு வன பழமொழி, விடுகதை, புதிர், தாலாட்டு, ஒப்பாரி, நாட்டுப் பாட்டு முதலியவை. அவர்கள் சொல வடை என வழங்குவது புலவர்க்குச் சிலேடை யாயிற்று. அவர்கள் புதிர் என்பது பழநாள் பிசி யாக உள்ளது. பழமொழி யோ முன்னாள் முதுமொழி யாம். மக்கள் வழக்கில் இருந்து கிளர்ந்த மொழி, என்றும் மக்கள் வழக்காக இருக்க வேண்டும். மக்கள் வழக்கில் இருந்து அகலு மாயின், வழக்கிழந்து ஒழிந்தும் போகும். ஆதலால், தொல்காப்பியர் மக்கள் வழக்கைப் பெரிதும் போற்றினார். யாப்புக் கட்டுப்போல் அமையாமல் நீக்குப் போக்குடன் அவற்றைக் கொள்ளவும் புலமையரை ஏவினார். அடிவரையறை இல்லாதவை எனவும், அவை ஆறுவகைய எனவும் சுட்டினார் அவர். எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப என்றும், அவைதாம், நூலின் ஆன, உரையின் ஆன, நொடியொடு புணர்ந்த பிசியின் ஆன, ஏது நுதலிய முதுமொழி ஆன, மறைமொழி கிளந்த மந்திரத்து ஆன, கூற்றிடை வைத்த குறிப்பின் ஆன (தொல்.செய்யுளியல் 164, 165) என்றும் கூறுவன அவை. முன்னை முதுமொழியே, பின்னைப் பழமொழியாய்ப் பெயர் கொண்டது. முதுகுன்றம், பழமலையாய் மாறியதுடன் விருத்தாசல மாகவும் வேற்றுமொழியில் வழங்கப்படுவது ஒரு சான்று. முதுமொழியின் இலக்கணம் நுண்மையும் சுருக்கமும் ஒளிஉடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப (தொல். செய்யுளியல்:177) என்பது. இந்நூற்பாவிற்குப் பொருள், நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும் என்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக், கருதின. பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று சொல்வர் என்றவாறு என்றார் இளம்பூரணர். கூரிதாய்ச் சுருங்கி விழுமிதாய் எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்த பொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழி யென்ப புலவர் என்றவாறு என்றார் பேராசிரியர். இம்முதுமொழிக்குப் பழமொழிப் பாடல் ஒன்றனைப் பேராசிரியர் எடுத்துக் காட்டினார். அப்பாடலில் கன்றுமேயக் கழுதை காதை அறுத்தல் என்னும் பழமொழி இடம் பெற்றுள்ளது. முன்றுறையரையனார், பழமொழி நானூறு என்னும் அறநூல் இயற்றினார். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகியது. நானூறு பழமொழிகளைத் தேர்ந்து அவற்றின் வழியாக அறவுரை கூறுவதாக அமைந்தது. அந்நூல் வெண்பா யாப்பினது. அரையனார், மக்கள் வழக்கில் இருந்து பழமொழிகளை எடுத்துக் கொண்டார் எனினும், அவர் உரைநடை வகையால் பயன்படுத்தினார் அல்லர். கட்டொழுங்கு மிக்க வெண்பா யாப்பிற்குத் தகவே பயன் படுத்துதல் அவர்க்குக் கட்டாயம் ஆயிற்று. மக்கள் வழக்கு, புல மக்கள் வழக்காக மாற்றமுற்றது. எனினும், பழமொழி இருவகை வழக்குகளுக்கும் ஏற்பப் பெரிதும் அமைந்தன. தமிழ் வரலாற்றில் பழமொழித் தொகுப்பாளர் ஒருவரை முற்படுத்த வேண்டும் எனின் முந்து நிற்பார் முன்றுறையரையரே ஆவர். அவர் ஆர்வமும் தொகுப்பும் அந்நாளொடு நோக்க அருமை யுடையனவாம். தனித் தனிச் சூழலில் எழுந்த பழமொழிகளை, ஓர் ஒழுங்குற்ற துறைப் பகுப்பொடு அமைத்தல் அரிது. தனித்தனிப் பாடல் போல் அமைந்து நின்ற அவற்றைத் திருமணம், செல்வ கேசவராய முதலியார் என்பார் பெரிதும் உழைத்து, கல்வி முதலாக வீட்டு நெறி ஈறாக 34 பகுதிகளாகப் பகுத்தார். கடவுள் வணக்கமும் தற்சிறப்புப் பாயிரமும் அத் தொகுதி கொண்டே அமைத்தார். ஆனால், எடுத்துக் கொண்ட பகுதி ஒவ்வொன்றுக்கும் இவ்வளவே பாடல் என வரம்பிட வாய்ப்புக் கிட்டிற்றில்லை. கல்விக்குப் பத்துப் பாடல், கல்லார்க்கு ஆறு பாடல், அவை யறிதலுக்கு ஒன்பது பாடல் - என்பது போல் அமைத்தார். அவ்வமைப்பும் வாய்த்திராக்கால், நமக்குப் பொருள் தொடர்பு கிட்டியிராதாம். அணியெல்லாம் ஆடையின் பின் இருதலைக் கொள்ளி என்பார் இறைத்தோறும் ஊறும் கிணறு உமிக்குற்றுக் கைவருந்து மாறு ஒருவர் பொறை இருவர்நட்பு கல்தேயும் தேயாது சொல் கற்றலில் கேட்டலே நன்று குலவிச்சை கல்லாமல் பாகம்படும் தனிமரம் காடாதல் இல் திங்களை நாய் குரைத்தற்று நாய்காணிற் கற்காணா வாறு நிறைகுடம் நீர்தளும்பல் இல் பாம்பறியும் பாம்பின கால் மகனறிவு தந்தையறிவு முதலிலார்க்கு ஊதியம் இல்லை. இவை பழமொழி நானூறில் இடம் பெற்றவை. கூடிய அளவிலும் எளிதில் புலப்பாடு உடையவை இவை. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதிலுள்ள எளிமையும் விளக்கமும் ஓட்டமும் நாய்காணிற் கற்காணா வாறு என்பதில் காணமுடிய வில்லை. ஆனால், இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ள முறை பழமொழி அளவில் நின்று விடுவது இல்லையே! மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை நாய்காணின் கற்காணா வாறு என அறஞ்செய்தற்குப் பயன்படுத்துகிறார் அரையனார். நரை திரை மூப்பு என்பவை வருமுன்னே பல்வேறாம் நற்செயல் களைச் செய்துவிடல் வேண்டும்; அவ்வாறு செய்யாதவர் பின்னே படுக்கை ஒடுக்கமாகிக் கிடக்கும் நிலையில் செய்தற்கு இயலார்; இத்தகையரைக் காணின் நாயைக் கண்ட போது கல்லைக் காணாதது போல் என்னும் பழமொழி விளக்கமாம் என்பது பொருளாம். நானூறு பழமொழியைத் தொகுத்தது அருமை என்றால், அப்பழமொழி வழியே சொல்லும் அறத்தைக் கண்டு அமைவாய் உரைக்க எத்தகைய முயற்சியும் கூர்மையும் வேண்டி யிருந் திருக்கும் என்பதை உணர்த்துவதற்கே இதனைக் கூறிய தென்க. இதன் பயன், பழமொழி வெளிப்பட விளங்கினாலும் அப்பழமொழியின் உள்ளீட்டுப் பொருளை உணர்ந்து பயன் கொள்ளல் வேண்டும் என்பது தெளிவாதற்கே சுட்டியதாம். மேலும் இதன்கண் மெய்யியல் கொள்கை உள்ளமை திருமந்திர மரத்தை மறைத்தது மாமதயானை என்பதன் வழியே அறியலாம். பழமொழியின் முன்னைப் பெயர் முதுமொழி என அறிந்தோம். திருக்குறளை முதுமொழி என வழங்கும் வழக்கம் உண்டு. தொல்காப்பியர் சொல்லிய நுண்மை, சுருக்கம், ஒளியுடைமை, மென்மை முதலியவற்றையுடைய தாய்க் கருதிய பொருளைத் தெளிவொடு கூறுவதாய் அமைந்தது கொண்டு, அப்பெயரைத் திருக்குறளுக்கு இட்டனர். இதன் சான்றாக விளங்கும் நூல், முதுமொழி மேல் வைப்பு என்பது. இது வெள்ளியம்பலவாணத் தம்பிரான் இயற்றியது. சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுமொழி வெண்பா என்பனவும் திருக்குறளை முதுமொழி என்று கூறுவனவே. இவற்றை இயற்றியவர்கள் முறையே சிவஞான முனிவரும், சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளும் ஆவர். அப்பரடிகள் திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார். அப்பழமொழிகளையும் எவர்மீதோ சாற்றாமல் தம்மீதே சாற்றுகின்றார். கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆரூரானைக் கையினால் தொழாதொழிந்து கனியிருப்பப் காய்கவர்ந்த கள்வனேனே என்று முதற்பாடலில் கூறும் அவர், முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே (2) அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே (3) பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே (4) ஏதன்போர்க் காதனாய் அகப்பட் டேனே (5) இருட்டறையில் மலடுகறந் தெய்த்த வாறே (6) விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே (7) பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே (8) தவமிருக்க அவம்செய்து தருக்கி னேனே (9) கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே (10) என்கிறார். இவை, ஒரு பொருள் பற்றிய பழமொழிகளா? உவமைகளா? கட்டுமிக்க யாப்பில் கூட இவ்வாறு பழமொழி களை வைக்க முடியுமா? முடிந்ததா? இல்லையா? அப்பரடிகள் கொண்ட முதற்பழமொழியாகிய, கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே என்பது, இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்பதைப் பழமொழியாக்கி வைக்கும் சான்று அல்லவோ! படிக்காசுப் புலவரின் தண்டலையார் சதகம், முத்தப்பச் செட்டியாரின் செயங்கொண்டார் வழக்கம் என்பனவும் பழமொழி விளக்கமாக அமைந்த நூல்களே. இதோ வரும் உரைநடையைப் படியுங்கள் ஒரு கிராமத்தில் பத்தேர்ச் சமுசாரி ஒருவன் தீர்வைப் பணம் கட்ட வழியில்லாமல், தன் காணி பூமி முதலாகிய ஆதிகளை யெல்லாம் தோற்று, உடுக்க வதிரமும் இல்லாமல், பரதேசம் போய் விடலாம் என்று நினைத் திருக்கையில், பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறித் துவைத்தது போல பழமுதல் பாக்கிக்காகச் சர்க்கார் சேவகர் வருகிற செய்தியறிந்து அவர்களுக்கு என்ன உத்தரம் சொல்கிறதென்று ஏக்கமுற்று, சட்டி சுட்டது கைவிட்டது என்பது போல, அதுவே வியாஜமாகப் பெண்சாதிபிள்ளை முதலான குடும்பத்தை எல்லாம் துறந்து, கோவணாண்டியாய் வெளிப்பட்டு வருகையில், நடு வழியில் வேறொரு சேவகனைக் கண்டு, காலைச் சுற்றின பாம்பு கடியாமல் போகாது என்பதாக, இந்தச் சனியன் இங்கும் தொடர்ந்து வந்ததே! ïÅ v¥go? என்று நடுநடுங்கி, ஜைன கோயில் ஒன்றில் போய் ஒளிந்தவன், அந்தக் கோயிலில் நிர்வாணமாயிருந்த ஆள்மட்டமான ஜைன விக்கிரகத்தைப் பார்த்துத் தன்னைப் போலப் பயிரிட்டுக் கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு, ஐயோ! நான் பத்தேர் வைத்துக் கெட்டுக் கோவணத் தோடாவது தப்பி வந்தேன், அப்பா, நீ எத்தனை ஏர் வைத்துக் கெட்டாயோ? cd¡F ïªj¡ nfhtzK« ïšyhkš nghŒ É£lnj! என்று அதைக் கட்டிக் கொண்டு அழுதான் இது விநோத ரச மஞ்சரி என்னும் நூலில் பயனில் உழவு என்னும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி. இதில் வரும் பழமொழி நகைச்சுவை ஆகியவை படிப்பாரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுதல் உறுதி. இதனை எழுதியவர் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பார். கி. பி. 1876இல் முதல் பதிப்பு வெளிவந்தது. இந்நூல் முதற்பதிப்பில் 16 கட்டுரைகளையும் பின்வந்த பதிப்புகளில் 20 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. இவ்வொரு நூலில் மட்டும் ஏறத்தாழ முந்நூறு பழமொழிகள் இடம் பெற்றன என்றால் இந்நூலே பழமொழிக் களஞ்சியம் தானே! இடையே சிலச்சில பழமொழி நூல்கள் வரினும் பெருந்திரட்டாகக் கி.பி. 1912 இல் ஒன்று வெளிப்பட்டது. அது அனவரத விநாயகம் பிள்ளை என்பாரால் பரிசோதிக்கப் பட்டு, மதரா ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப் பட்டது. 12, 270 என்னும் எண்ணிக்கையுடையது. அதன் விலை ரூபா. 2. மொழிஞாயிறு பாவாணர் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றிய போது, பழமொழி பதின்மூவாயிரம் என்னும் பெயரிய தொகை செய்து அச்சகத்துக்கும் சென்று பின் அச்சிடப் படாமலும், மூலப்படி மீள வராமலும் ஒழிந்தது என்பது அவர் கடிதங்களால் அறியப்படும் செய்தி.. அந்நாளில் திருவரங்க நீலாம்பிகையார் பழமொழித் தொகுப்பு ஒன்று செய்து வந்தார் என்பதும் பாவாணர் கடித வழியாய் அறிய வாய்க்கின்றது. அது தொகையும் ஆகவில்லை; அச்சுக்குச் செல்லவும் இல்லை. அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகவும், துறை வாரியாகவும் பழமொழித் தொகைகள் வெளிப்பட்டன. கலைமகள் ஆசிரியர் கி.வா. சகநாதனார் அவர்களால் நான்கு தொகுதிகள் வெளிப்பட்டன. இருபதாயிரம் பழமொழிகளைத் தாண்டிய எண்ணிக்கையுடையன அவை. பொதுவுடைமைத் தோழர் தொண்டில் தூயர் சீவானந்தம் அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கிய நாளில் பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, சாமி பாட்டு, கும்மிப்பாட்டு, புனைகதை என்பவற்றையெல்லாம் தொகுக்கவேண்டும் என்று பேராவல் கொண்டார். நாட்டில் வட்டாரம் தோறும் வழங்கும் பழமொழிகளை யெல்லாம் ஒருங்கே திரட்டுதல் அரிது. நூல்களில் காணக் கிடைப்பனவாகிய எல்லாவற்றையும் திரட்டுதலும் அரிது. பழமொழித் தொகுதிகளில் இடம் பெற்றாலும் மரபுத் தொடர், வழக்கு மொழி, அறநூல் தொடர், விடுகதை, உவமை எனவும் உள்ளன. அவற்றை விலக்கின் ஒரு பெரும் பகுதி அகன்று விடும். இனிச் சாதிமை சார்ந்ததும் வெறுக்க வைப்பதுமாம் பழமொழிகளும் உள. அவற்றை அறவே நீக்கல் வேண்டும். அதனால், அந்நாள் மக்கள் வாழ்வியல் எண்ணப் போக்கு என்பவை அறியவாயா நிலையும் உண்டாம். 1. எவ்வாற்றானும் எவரும் வெறுத்தற்கு இடமிலாப் பழமொழி களைத் தொகுத்தல் 2. வேற்றுச் சொல் கலவாமல் தொகுத்தல் 3. கூடிய அளவும் கொச்சை வழு நீக்கித் தொகுத்தல் என மூன்று வரம்புகளைக் கொண்டு தொகுத்தால், முற்றிலும் மக்கள் வழக்கில் இருந்து தடம் மாறிப் புலமையர் வழக்காகிவிடல் உறுதி! ஆதலால் மொழிக்கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த, முயன்று தொகுத்த பழமொழித் தொகை இது. இதில் உள்ள பழமொழி எண்ணிக்கை ஏறத்தாழ இருபதாயிரம். பழமொழி அல்லது முதுமொழி என்பதன் இலக்கணம் தொல்காப்பியத்திலேயே உண்டு என்னும் போது, அதுவும் அவருக்கு முந்தை இலக்கண நூல்களிலேயே இடம் பெற்றிருந்தன என்னும் போது, பழமொழி உருவாக்கம் ஏற்படுமளவு மொழிவளம் துறையறிவு பண்பாடு முதலியவை ஏற்பட்டிருக்க வேண்டும் என்னும் போது, அவை தோன்றிய காலத்தை வரம்பிடுவது அவ்வளவு எளியது அன்றாம். மொழிப் பழமையொடு, பழமொழிப் பழமையும் ஒப்புடையதாம் என்பதே சாலும்! வாங்கும் போது உள்ள குணம் கொடுக்கும் போது இல்லை என்னும் மக்கள் மொழி, கலித்தொகையில் இடம் பெறுகிறது. உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத்தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே! கலி - 22 என்பது அது. உலகத் தொழில்களில் தலையாயது உழவே. குறிப்பாகத் தமிழகத்தின் உழவுச் சிறப்பு வள்ளுவத்தில் ஓரதிகாரம் கொண்டது. வாழ்வார் என்றால் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றது. உழவின் வழிப்பட்டதே. உலகம் என்பதைச், சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் என்றது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி என்றும் குறித்தது. கம்பரால் ஏர் எழுபது என்னும் நூலும், திருக்கை வழக்கம் என்னும் நூலும் இயற்றப்பட்டன. இவ்வாறு பாடு புகழ் பெற்ற உழவு வழிப்பட்ட பழமொழிகள் மிகப் பலவாம். வேளாண்மை என்பது உழவுத் தொழிலை மட்டும் அல்லாமல் பிறர்க்கு உதவி வாழ்வதாம் பண்பாட்டுப் பெருமையும் பெற்றது. ஆதலால், இவை தனியாய்வுக்கு உரிய வளம் உடையவை. இனி, மருத்துவம் தமிழகத்தில் சிறந்தோங்கியமை சித்த மருத்துவம் என்னும் சிறப்பால் புலப்படும். திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என அறநூற் பெயர்களே மருத்துவஞ்சார் தலைப்பின எனின், அம் மருத்துவ வழிப்பட்ட பழமொழிகளும் பெருக்க மிக்கவையேயாம். தனித்துறையாய் எடுத்து ஆயத் தக்க பெருமை யுடையது அது. இவ்வாறு பல்வேறு ஆய்வுப் பொருள்களின் வைப்பகமாக இருப்பது பழமொழித் தொகுப்பு என்பது வெளிப்படை. பழமொழி வழியாகச் சொல்லப்படும் அறநெறிகள் எண்ணற்றவை. பல்வேறு மெய்ப்பாட்டு - சுவை - விளக்கமாக அமைந்தவையும் மிக்கவை. அறிவியல், பொருளியல், இன்பியல், வழிபாடு எனப் பகுத்தாய்வு மேற்கொள்ளவும் இடம் தருவன பழமொழிகள். சில பழமொழிகள் மக்கள் வழக்கில் பெருக இருந்தாலும் பழமொழித் திரட்டுகளில் இடம் பெற்றிருந்தாலும் நூலாசிரியர் களால் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றை இத் தொகுப்பில் இடம் பெறச் செய்யவில்லை. கூடிய அளவும் இடக்கரடக்கு என்னும் அவையல் கிளவியும் இனத்துக்குப் பழிப்பாவனவும் இடம் பெறாமல் செய்யினும், பழமொழியின் உயிர்ப்பு நீங்கிப் போகுமென அவை விலக்கப்பட்டில. அவை தகவாம் வகையில் கொள்ளப்பட்டுள. கூடிய அளவிலும் கொச்சையும் வழுவும் அகற்றிச் செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன. மக்கள் உணர்வை மதித்துப் போற்றுதலால் முழுதுறு செவ்வடிவோ, அறவே அயன்மொழிச் சொல் நீக்கமோ கொண்டதாக இத்தொகை அமைந்திலது என்பதைச் சுட்டுதல் முறைமையாம். வெவ்வேறு வட்டாரங்களில் ஒரு பழமொழி வழங்குங் கால் சில மாற்று வடிவங்களையும் சில வேறு சொற்களையும் கொண்டிருத்தற்கு இடமுண்டு. அவை அடைப்புக்குள் உள்ளன. சில பழமொழிகள் முடிபு இன்றி இருக்கும். அவற்றின் முடிபு அடைப்புக் குறியுள் இடம் பெறும். குறுவட்டாரம் பெருவட்டாரம் தமிழகம் எனப் பரவலாக வழங்கும் பழமொழிகள் எல்லாமும் அமைந்த திரட்டு இஃது ஆதலால், வட்டாரப் பெயர் சுட்டிக் காட்டல் அரிதாயிற்று. இம்முயற்சியில் ஈடுபடுவார் பலராய், வட்டாரம் வட்டாரமாய் அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தினால் தமிழ் வளம் மேலும் பெருக வாய்க்கும். அதனால், வழக்கும் செய்யுளும் என்னும் மொழி உயிர் நாடிகள் இரண்டும் ஒருங்கே சிறக்க வாய்ப்பும் உண்டாம். பாவாணர் தொகுத்த பழமொழி பதின்மூவாயிரம் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும், அவர் பயன்படுத்திய பழமொழி கள் பெரிதும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தம் விருப்பாகச் செய்து இத்தொகையில் பயன்படுத்திக் கொள்ள உதவியவர் வெங்காலூர் தனித்தமிழன்பர் சி.பூ. மணி அவர்கள். பின்னர்ப் பாவாணர் தொகுத்த பழமொழியென்று சேலம் திரு.வெங்கரைமணியன் அவர்கள் வழியே ஒன்று கிடைத்தது. அதில் பாவாணர் கையெழுத்து எவ்விடத்தும் இல்லை. எனினும் இத்தொகுப்பில் சேராத சில பழமொழிகள் கிடைத்தன. அவற்றை இணைத்து அப்பயனும் வாய்க்கச் செய்தோம். மேலும், நெடிய காலமாக எம்மால் தொகுக்கப்பட்டுக் குறிப்பேட்டில் தங்கிக் கிடந்தவை, நினைவில் பதிவாகியவை ஆகியவையும் இத்தொகையில் இடம் பெற்றுள்ளன. முனைவர் தமிழகனார் கடின உழைப்பெடுத்துத் தொகுத்த தொகுப்பும், அவர் பேராசிரியப் பணியாற்றும் நாவலர் ந.மு.வே. திருவருள் கல்லூரி மாணவ மாணவியர் தொகுத்த தொகுப்பும் இதன்கண் இடம் பெற்றுள. பழமொழி, வட்டார வழக்கு என்பவை கிட்டுமென எண்ணி நூற்றுகணக்கான பக்கங்களைத் திருப்பியும் ஒன்று தானும் கிட்டாத கதை நூல்களும் உண்டு. சுவை சுவையான பழமொழிகளைத் திரட்டுப் பாகாகத் தந்த சிறுகதை நூல்களும் உண்டு. தேடி வைத்ததைத் தொகுத்தும், புதுவதாகத் தேடித் தொகுத்தும் நம் முந்தையர் வைத்துச் சென்ற வைப்புநிதி யென விளங்கும் இப்பழமொழியை ஆர்வத்தால் அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு வழங்க முந்து நின்றவர் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனரும் தமிழ்ப் போராளியாய்த் தோன்றித் தமிழ்க் காவலராகத் திகழ்பவருமாகிய திரு.கோ.இளவழகனார் அவர்கள் தேடித் தொகுத்த இத்தொகையினும் பாரிய பல் தொகுதி எனினும் துணிவுடன் வெளியிடும் அளப்பரிய ஆர்வத் தொண்டர் அவர். அவர்க்கு நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டும்! இதன் மெய்ப்பினைப் பல்கால் பார்த்து அயராமல் திருத்திய ஆர்வத் தொண்டர் முனைவர் தமிழகனார் இத்தகு பல திறப்பணிகளைச் செய்தலில் தழும்பேறியவர். அவர் தொண்டு வாழ்வதாக. இன்ப அன்புடன் இரா.இளங்குமரன் பதிப்புரை முதுமொழிக் களஞ்சியம் எனும் பெயரில் தமிழ்மண் அறக்கட்டளையின் முத்திரைப் பதிப்புகளாக ஐந்து தொகுதிகள் வெளிவருகின்றன. மொத்தம் 19336 பழமொழிகள் உள்ளன. மொழிக் கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த முயன்று தொகுத்த முதுமொழித் தொகை இது, கொச்சையும் வழுவும் அகற்றி செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன என முன்னுரைப் பகுதியில் அய்யா இளங்குமரனார் குறித்துள்ளார். இக்குறிப்புகளைக் கொண்டு இத்தொகுதி களின் அருமைப்பெருமைகள் புலப்படும். இதுவரையிலும் பழமொழிகள் எனும் தலைப்பில் வெளிவந்தனவற்றுக்கும் இவற்றுக்கும் உள்ள சிறப்புகளைக் களஞ்சியத்தின் முன்னுரையிலும், பின்னட்டைச் செய்திலும் காண்க. முந்தையர் தொகுத்து வைத்த வைப்பு நிதியைத் தமிழ் உலகு பயன் கொள்வதற்கு தமிழ்மண் அறக்கட்டளை தம் கடனைச் செய்துள்ளது. இக்களஞ்சியங்களை செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், முனைவர் பி.தமிழகன் ஆகிய பெருந்தமிழறிஞர்கள் பல்லாற்றானும் உழைத்துத் தொகுத்துத் தந்துள்ளனர். இதனைப் பிழையற்ற செம்பதிப்பாக தமிழ்கூறும் உலகிற்குத் தந்துள்ளோம். இப்பெரு மக்களின் தன்னலம் கருதாத் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறேன். பழந்தமிழ் மக்களின் கருவூலத்தை உங்களுக்குத் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்வீர். இச்செந்தமிழ்க் களஞ்சியங்கள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய அரங்க. குமரேசன், வே.தனசேகரன் , மு.ந. இராமசுப்ரமணிய ராசா, இல.தருமராசு, ரெ.விசயக்குமார், முனைவர் கி.செயக்குமார், திருமதி கீதா நல்லதம்பி, அரு.அபிராமி, புலவர் மு.இராசவேலு மற்றும் மேலட்டை அழகுற வருவதற்கு துணை யிருந்த செல்வி வ.மலர் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். பதிப்பாளர் மா 16640 மா இடித்தால் மண்டிக் கொள்கிறது; கூழ் குடித்தால் கூடிக் கொள்கிறது. (மாவு) மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவா கூழ் இருக்கிற குணம்? மா உண்டானால் பணியாரம் சுடலாம். மா ஏற மலை ஏறும். மாங்கலியக் காரிக்கு மாசம் ஒரு பூசை. மாங்கலியப் பெண்ணுக்கு மாசம் இரண்டு பூசை. மாங்காயில் பெரியதும், தேங்காயில் சிறியதும். (பெரிசும், சிறிசும்) மாங்காயும் ஒரு கறிதான்; மாமியாரும் ஒரு வீட்டுக்கு மாட்டுப் பெண்தான் மாங்காய் அழுகலும் மாப்பிள்ளையில் கிழமும் கிடையா. மாங்காய் தின்பது ஒருநாழி; பிசிர் பிடுங்குவது மூன்று நாழி. 16650 மாங்காய்க்குத் தேங்காய்; வழுக்கைக்கு இளவெந்நீர்; பூங்கதலிக்குச் சுக்கு நீர். மாங்காய்க்குப் புளியங்காய் தோற்குமா? மாசி ஈனா மரமும் இல்லை; தை ஈனாப் பூல்லும் இல்லை. மாசிக் கடாவும் மார்கழி நம்பியானும். மாசிக் கரும்பும் மகரவாழையும். மாசிச் சரடு பாசிபோல் வளரும். (படரும்) மாசி நிலவும், மதியார் முற்றமும், வேசி உறவும், வியாபாரி நேசமும். மாசிப் பனி மச்சையும் துளைக்கும். (மச்சினைத்) மாசிப் பங்குனி மண்ணெல்லாம் குளிரும். மாசிப் பிறையை மறக்காமல் பார். 16660 மாசி மகத்தழகும் மாமாங்கக் குளத்தழகும். மாசி மரம் தளிர்க்க மழை. மாசி மழை மாதுளை பூக்கும். மாசி மாதத்தில் மகம் மதியின் தெற்குக் கோடியில் தேசமும் நாடும் செழிக்கும். மாசி மா பூக்கும். மாசி மின்னல் மரம் தழைக்கும். மாடக்குளம் பெருகினால் மதுரை பாழ். மாடக்குச் சித்திரமும் மாநகருக்குக் கோபுரமும். மாடம் அழிந்தால் கூடம். (இடிந்தால்) மாடிக்கு ஏணி வைக்கலாம்; மலைக்கு ஏணி வைக்க முடியுமா? 16670 மாடி வீடானாலும் கோடி வீடு ஆகாது. மாடு அறியாதவன் மாட்டைக் கொள். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது. (இளைக்குமா?) மாடு ஒரு தனமும் இல்லை; மலையாளி ஒரு உறவும் இல்லை. மாடு கன்று படைத்தவருக்கும் மக்களைப் பெற்றவருக்கும் குற்றம் சொல்லலாமா? மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? மாடு கெட்டால் தேடலாம்; மனிதர் கெட்டால் தேடலாமா? மாடு கொழுத்தால் சினைக்கு உதவாது; மனிதன் கொழுத்தால் வேலைக்கு உதவான். மாடு தப்பினவனுக்குச் செடியெல்லாம் கண். மாடு தின்கிற மாலவாடு ஆடு தின்கிறது அரிதா? 16680 மாடு தின்பவனுக்குக் கோழி தின்னக் கசக்குமா? மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா? மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவார்களா? (கட்டலாமா?) மாடு பிடி சண்டைக்கு வலிய வராதே. மாடு போல் உழைத்து மன்னன் போல் வாழ். மாடு போனவனுக்குச் செடியெல்லாம் கனி. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும். மாடு மறுத்தாலும் கறக்கும் வாலில் கயிற்றைக் கட்டினால். மாடு முக்க முக்க, வீடு நக்க நக்க. மாடு முக்கிவர, வீடு நக்கி வர. 16690 மாடு மேயாத மட்டபுறக் கட்டையை ஆடு மேய்ந்து அதிதிருப்தியாகும். மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது. மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலமிட்ட பெண்சாதி. மாடு மேய்க்கிற பிள்ளையை நம்பி வயிற்றுப் பிள்ளையைக் கலைத்தாளாம். மாடு மேய்க்கிற பையனுக்கு மண்டலமிட்ட பெண் குமரி யாம். மாடு மேய்க்கிறவன் கூட மாமனார் வீட்டில் இருக்கமாட்டான். மாடு மேய்க்கும் குமரனுக்கு மண்டலம் எட்டும் குமரியாம். மாடு மேய்ந்த இடத்திலே; மனிதன் கொண்ட இடத்திலே. மாடு மேய்ந்த இடத்தைப் பார்க்கும்; வானம் பேய்ந்த இடத்தைப் பார்க்கும். மாடு வாங்க அறியாதவன் மாடைகொம்பு மாடுவாங்கு. (மடக்கொம்பு) 16700 மாடு வாங்குகிறதுக்கு முந்திக் கட்டுத்தறிக்கு விலை பேசுகிற கதையா. மாடு வாங்குகிற வழியைக் காணோம்; அதுக்குள்ளே அத்தை வீட்டுக்குத் தயிர் ஊத்துகிறானாம். மாடு வாங்குவதற்குமுன் கன்றை விலை பேசலாமா? மாட்டின் காலிலே நெல்; மனுசன் காலிலே பணம். மாட்டின் கொம்பு கூர்; மனிதனின் கொம்பு மயிர். மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே. மாட்டு எரு புன்செய்க்கு; தழை எரு நன்செய்க்கு. மாட்டு எரு மறுவருடம்; ஆட்டு எரு அவ்வருடம். மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுகிறானாம்; மாட்டிறைச்சி உண்பவன் நிணத்திற்கு அழுகிறானாம். மாட்டுக்கு ஓர் அடி; மனிதனுக்கு ஒரு சொல். 16710 மாட்டுக்குச் சர்வாங்கமும் வயிறு. மாட்டுக்குப் பல் உறுதி; மனிதனுக்குச் சொல் உறுதி. மாட்டுக்கு மாடு மிரளுமா? மாட்டுக்கு மேய்ப்பும், குதிரைக்குத் தேய்ப்பும். மாட்டேன் என்கிறவள் கழுத்தில் தாலி கட்டலாமா? மாட்டைத் தண்ணீரில் அடையப்போட்டு விலை பேசுகிறதா? மாட்டை நடையில் பார்; ஆட்டைக் கிடையில் பார். மாட்டைப் பார்த்தாயா என்றால், தோட்டம் தூரம் என்றானாம். மாட்டைப் பிடித்த சனியன் கொட்டகையைச் சுட்டால் போகுமா? மாட்டைப் புல் உள்ள தரையிலும் மனிதனைச் சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது. 16720 மாட்டை மேய்த்தானாம்; கோலைப் போட்டானாம். மாணிக்கக் காலுக்கு மாற்றுக்கால் இருக்கிறதா? மாணிக்கம் இருக்கிறதென்று தலையை வெட்டுகிறதா? மாணிக்கம் விற்ற ஊரில் மண்கூடை சுமக்கலாகாது. மாதம் காத வழி மானாகப் பறப்பான் (துள்ளுவான்) மாதரின் மனதை அறிவது மகாதேவனாலும் ஆகாது. மாதர்க்கு மார்பு கொடாதே. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும். மாதா செய்தது மக்களுக்கு. (மக்களைக் காக்கும்) மாதா சொல் மடிமேல். மாதா பிதா செய்தது மக்கள் தலைமேல். 16730 மாதா மனம் எரிய வாழாள் ஒருநாளும். (வாழாய்) மாதா வயிறெரிய மகேசுவரப் பூசை நடத்தினானாம். மாதா வயிறு எரிய வாழாள் ஒருநாளும் (வாழார்) மாதவுக்குச் சுகமிருந்தால் கர்ப்பத்துக்குச் சுகம். (சுரம்) மாதாவுக்கே ஆபத்து கர்ப்பத்தைப் பற்றிக் கவலையா? மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம் போல. மா பழுத்தால் கிளிக்காம்; வேம்பு பழுத்தால் காக்கைக்காம். (மாமரம்) மாபாவி பெயரைச் சொன்னால் மாணிக்கமும் கல்லாகும். மாப்பாய் இருக்கிற மட்டும் மடியில் வைத்திருந்தேன்; தோப்பான பிறகு மடியில் வைக்கலாமா? (மாம்பிள்ளை) மாப்பிள்ளை என்று துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் துள்ளும். 16740 மாப்பிள்ளைக்கு ஆக்கி வைத்த சோற்றை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம். மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கோணவாய்; அதிலும் கொட்டாவி விட்டுக் காட்டினானாம். மாப்பிள்ளைக்குத் தகுந்த மஞ்சள். மாப்பிள்ளை சமர்த்து என்றால் செம்பை வெளுக்கத் தேய்த்தானாம். மாப்பிள்ளை சிங்காரிப்பதற்குள் பெண் வண்டி ஏறிவிடும். மாப்பிள்ளை சொந்தம்; துப்பட்டி இரவல். மாப்பிள்ளை தோழனுக்குப் பெண்டு அறுதி. (உறுதி) மாப்பிள்ளை தலை போனாலும் போகிறது;மாணிக்கம் போல உள்ள விரல் போகிறது என்றாளாம். மாப்பிள்ளையையும் வேண்டிப் பெண்ணையும் வேண்டு கிறதா? மாப் புளிக்கிறதெல்லாம் பணியாரத்துக்கு நலம். 16750 மாப் பொன் இருக்க மக்களைப் பட்டினி போடுவானேன். மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா? மாமனார் மண்ணாந்தையாயிருந்தாலும் மருமகள் சுற்றி வந்து கும்பிடனும். மாமனை வைத்துக் கொண்டு மைத்துனனைச் சாகக் கொடுத்தான். (மகனைச்) மாமன் கட்டினால் பட்டம்; மச்சான் கட்டினால் தண்டம். மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது. மாமியார் மெச்சிய மருமகள் இல்லை. மாமியாருடையதைப் பிடுங்கி மருமகன் தானம் பண்ணி னானாம். (மயிரைப் பிடுங்கி) மாமியாரும் ஒருநாளைய மருமகள் தானே. மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது; கையாலும் காட்டக் கூடாது. (துணி அவிழ்ந்தால்) (சீலை விலகினால்) 16760 மாமியார் உடைத்தால் குழவிக்கல்; மருமகள் உடைத்தால் வைரக்கல். மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி. (கலம்) மாமியார் குத்துகிறாள்; மருமகள் புடைக்கிறாள். மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கைத்தவிடு தேவலை. மாமியார் கோபம் வயிற்றுக்கு மட்டம். மாமியார் சாமான் வாங்கி மச்சு நிரம்புமா? மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம். மாமியார் செய்வது மந்திரம்; மருமகள் செய்வது தந்திரம். மாமியார் தலையில் கையும் மாப்பிள்ளை மேலே சிந்தையும். மாமியார் தலையில் கையும் வேலிப் புறத்திலே கண்ணும். 16770 மாமியார் பல்லிலே விழுந்த மருமகளும், மஞ்சிக் கரடிக் கிட்டே சிக்கின மனுசனும் மசானக் கரைக்குத்தான் போகணும். மாமியார் மதிலைத் தாண்டினால் மருமகள் குதிரைத் தாண்டுவாள். மாமியார் மாகாளியிருந்தாலும் மாவிளக்கு ஏற்றி வைத்துக் கும்பிட வேண்டும். மாமியார் மெச்சின மருமகள் இல்லை; மருமகள் மெச்சின மாமியாரும் இல்லை. மாமியார் வீட்டில் முகம் தெரிந்து வா என்றாளாம்; கஞ்சி குடிக்கும் போது முகம் தெரிகிறது என்று திரும்பினானாம் மகன். மாமியார் வீடு மகா சௌக்கியம், நாலுநாள் சென்றால் நக்கலும் கக்கலும். மாமியாருக்குக் காரியம் இல்லையென்று கல்லும் நெல்லும் கலந்து வைத்தாளாம். மாமியாரைக் கட்டவில்லை என்று மருமகன் தன் அரைஞாண் கயிற்றை அறுத்துத் தாலி கட்டினானாம். மாமேருவைச் சேர்ந்த காக்கையும் பொன்நிறம் ஆகும். மாயவரத்தில் பெண் எடுக்காதே; மன்னார்குடியில் பெண் கொடுக்காதே. 16780 மாயவரம் மொட்டை; சிதம்பரம் கொட்டை. மாவாய்த் தின்றால் பணியாரம் இல்லை. மாவை வைத்துக் கொண்டு மக்களைக் கொன்றது போல். மாரடித்த கூலி மடிமேலே. மாரழகு பெரிதா? மயிரழகு பெரிதா? மாரளவு நட்பாயிருந்தாலும் மடியிலே கை வைக்க வேண்டாம். மாரி அடைக்கில் ஏரி உடைக்கும். மாரி அடைத்த வில் போட ஏரி உடைக்க மழை பெய்யும். மாரி இடியும் கோடை மின்னலும் மழைஇல்லை. மாரி இல்லையேல் காரியம் இல்லை. 16790 மாரிக்காலத்தில் பதின்கல மோரும், கோடைக்காலத்தில் ஒருபடி நீரும் சரி. மாரித் தென்றல் அடித்தால் மாட்டை விற்று ஆட்டை வாங்கு. மாரியல்லது காரியமில்லை. மாரி பொய்த்தாலும் மண் பொய்க்காது. மாரி முரண்டுக்கு மருந்து உண்டா? மாரியாத்தாளைப் பெண்டு பிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம்? மார்கழிப் பனி தலையைத் துளைக்கும். மார்கழி பிறந்தால் மழை இல்லை. (கழிந்தால்) மார்கழி பிறந்தால் மழையும் இல்லை; பாரதம் முடிந்தால் படையும் இல்லை. மார்கழி மழை மண்ணுக்கும் உதவாது. 16800 மார்கழி மாதத்து நம்பியானும் ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் சரி. மார்கழி மாதம் மச்சும் குளிரும். மார்கழி மாதம் மண் அலம்பப் போது இல்லை. மார்கழியில் மழை பெய்தால் மலைமேல் நெல் விளையும். மார்கழி வெற்றிலையை மாடுகூடத் தின்னாது. மார்க்கமான சந்தையிலே மருமகளைப் பார்த்தியா என்றதற்கு ஏண்டி அத்த எதுக்காலதானே நிற்கிறேன் என்றாளாம். மார்பிலே தைத்து முதுகிலே உருவினது போல. மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும். மார் மட்டும் உறவு இருந்தாலும் மார் மேல் கைபோடாதே. (சிநேகம்) மார் மட்டும் உறவிருந்தாலும் மடியிலே கைவைக்காதே. 16810 மாலுமி இல்லா மரக்கலம் ஓடாது. மாலை உப்பு மழை அப்புறம்; காலை உப்பு அடுத்து மழை. (உப்பு - உப்பங்காற்று) மாலைக் குளியனையும் மார்பில் மயிரனையும் நம்பாதே. மாலைக் கொசுக்கடி மழையைக் கொண்டு வரும். மாலை குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆரையும் சேர்க்காது. மாலை சுற்றி பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது. (பிறந்தால்) மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது. மாலைச் செம்மேகம் மழை அறிகுறி; காலைச் செம்மேகம் கழுதை வாடை. மாலையிட்ட பெண்சாதி காலனைப் போல் வந்தாள். மாலையில் வந்த விருந்தும் காலையில் வந்த மழையும். (விடாது) 16820 மாவடை இல்லா ஊருக்கு மணக்காச்சா வயிரம். மாவாய்த் தின்றால் என்ன? கொழுக்கட்டையாய்த் தின்றால் என்ன? மாவாய்த் தின்றால் பணியாரம் இல்லை. மாவாய்த் தின்றுவிட்ட பிறகு பணியாரத்தை எதிர்பார்க்க முடியுமா? மாவிலும் ஒட்டலாம்; மாங்காயிலும் ஒட்டலாம். (ஓட்டலாம், தேங்காயிலும்) மாவின் குணம் கூழின் குணம். மாவுக்குத் தக்க பணியாரம்; மாப்பிள்ளைக்குத் தகுந்த வீறாப்பு. மாவுக்கும் ஆசை; கூழுக்கும் ஆசை. மாவு மறந்த கூழுக்கு உப்பு ஒருகேடா? மாவும் குறையக் கூடாது; மக்கள் வயிறும் காயக் கூடாது. 16830 மாவும் மாவும் ஒன்றாகப் போயிற்று; மாவிட்ட சட்டி வேறாகப் போயிற்று. மாவுத்துக்காரனுக்கு ஆனையிலே சாவு. மாவைத் தின்றால் அப்பம் இல்லை. மாவைத் தின்றால் பணியாரம் இல்லை; பெண்டாட்டியைத் தின்றால் பிள்ளை இல்லை. மாவை வைத்துக்கொண்டு மக்களைக் கொன்றது போல. மாளாத பணத்துக்கு ஒரு மண்டி வைத்துப் பார்த்தனாம். மாளிகை கட்டி மரநாய் கட்டினது போல. மாற்றாந்தாய் மனத்தோடு செய்வாளா? மாற்றானுக்கு இடம் கொடேல். மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொண்ணாது. 16840 மாற்றான் வித்து ஏற்றது பயிருக்கு. மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா? (மாத்திலே) மாறு- விளக்குமாறு) மாற்றைக் குறைத்தான் தட்டான்; மாய்மாலம் கண்டான் செட்டி. மாற்றைக் குறைத்தான் தட்டான்; வாயிலே ஏய்த்தான் செட்டி. மானத்தின் மேலே கண்ணும் மாப்பிள்ளை மேலே சிந்தையும். (மானம் - வானம்) மானத்தை விட்டவனுக்கு மார்பு மட்டும் சோறு. மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு; வெட்கத்தை விட்டால் வேணமட்டும் சோறு. மானத்தை வில்லாய் வளைப்பான்; மணலைக் கயிறாய்த் திரிப்பான். மானம் அழிந்தபின் மரியாதை என்ன? (எதற்கு) மானம் அழிந்தபின் வாழாமை இனிதே. 16850 மானம் அழிந்தாலும் மதிகெட்டுப் போகுமா? மானம் அழிந்து வாழ்வதிலும் மரணம் அடைவது உத்தமம். மானம் அழியில் உயிர் காவலா? மானம் உள்ளவனுக்குக் கடனைக் கொடு; மழுங்கனுக்குப் பெண்ணைக் கொடு. மானம் தலைக்கு மேலே; வெட்கம் கட்கத்திலே. (மானம் - வானம்) மானம் பெரிதென்று மதித்தவர்க்கு உயிர் துரும்பு. மானம் பெரிதோ? உயிர் பெரிதோ? மானம் போனபின் உயிர் இருந்து பயன் என்ன? மானன் கெட்டான். மழுங்கன் பிழைத்தான். மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ? 16860 மானியம் வாங்கிப் பிழைப்பதிலும் வாணிகம் செய்து பிழைப்பது மேல். மானுக்கு இரண்டு புள்ளி கூடினால் என்ன? குறைந்தால் என்ன? மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன? குறைந்து என்ன? மானைக் காட்டி மானைப் பிடிப்பர். மானைத் தேடி மதம் கொள்கிறதா?  மி மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை; வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை. மிச்சத்தைக் கொண்டு மேற்கே போகாதே; கெட்டுக் கிழக்கே போகாதே. மிச்சமிருந்தால்தான் மச்சானுக்கு. மிஞ்சி இல்லா விரலும் மஞ்சள் இல்லா முகமும் பாழ். மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும். 16870 மிஞ்சும் நோயெல்லாம் வஞ்சகம் இல்லாமல் தடுக்கும் இஞ்சி. மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும். மிஞ்சின சுண்ணாம்பையும் மெலிந்த அரசனையும் விடக் கூடாது. (மீந்த) மிஞ்சினதைக் கொண்டு மேற்கே போகல் ஆகாது. மிஞ்சினால் கெஞ்சுகிறது; கெஞ்சினால் மிஞ்சுகிறது. மிஞ்சினால் மென்னி; கெஞ்சினால் கால். மிடா விழுங்கிச் சிற்றப்பனுக்கு வறட்டு ஆடு கருவாடு. மிடிமையிலும் படிமை நன்று. மிடுக்கன் ஏறிய குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது? மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும். (விலை போகும், விலை பெறும்) (முடக்கச் , முடக்கும்) 16780 மிடுக்கு மைனருக்கு எடக்கு ஏராளம். மிதிக்க மிதிக்க லாபம் உண்டு. மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா? மிதித்தாரையும் கடிக்காது; விதித்தால் கடிக்கும். மிதித்தாரையும் கடிக்காது; விதித்தால்தான் கடிக்கும் கால சர்ப்பம். மிதித்தால் கடிக்கும் பாம்பு. மிதித்துப் பிடுங்கினால் அல்லாது மயில்தன் இறகைக் கொடுக்குமா? மிதியாத பாம்பு கடியாது. மிதிபாகல் விதையோடே. மிரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய். 16790 மிருகங்களில் ஆனை பெரிது; அதிலும் சிங்கம் வலிது. மிருகம் முறை பார்க்கிறா? வேசி முறை பார்க்க. மிளகாய்ப் பழம் தின்பானேன்? நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போடுவானேன்? மிளகத்தனை பிள்ளையாருக்குக் கடுகத்தனை நைவேத்தியம். மிளகு சிறுத்தால் வீரியம் போகுமா? மிளகு சிறுத்தாலும் வீரியம் போகாது. மிளகுப் பொடியோட திருவாதிரை. மினக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம். மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு. 16800 மின்மினிப் பூச்சி வெளிச்சத்துக்கு இருள் போகுமா? மின்னல் இல்லாமல் இடி உண்டா? மின்னல் வெட்டிலே முளை நோட்டம் பார்த்தாற் போல. மின்னலிலே வெட்டு முளை நோட்டம் பார்த்தாற் போல. மின்னலைக் கண்டு விதை விதைத்தானாம். மின்னலைப் போல் பல்லை விளக்காதவனும் மினுக்கிக் கொள்வானும் பதர். மின்னாமல் இடி இடிக்குமா? (விழுமா?) மின்னினால் மழை பெய்யுமா? (பெய்யும்) மின்னிக் கெட்டது கார்; முழங்கிக் கெட்டது பிசானம். மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை. 16810 மின்னுவது எல்லாம் பொன்னல்ல; வெளுத்ததெல்லாம் பால் அல்ல. மின்னுவது எல்லாம் பொன்னாகுமோ?  மீ மீகாமன் இல்லாத மரக்கலம் ஓடாது. மீசை அடிப்பதற்காகவா அப்பன் சாக வேண்டும்? மீசை இல்லா முகமும் மேனி இல்லா அழகும் பாழ். மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. மீசையை முறுக்கி வளர்; முருங்கையை முறித்து வளர். மீதூண் விரும்பேல். மீளாக் கோபம் போராய் முடியும். மீனுக்கு வாலைக் காட்டு; பாம்புக்குத் தலையைக் காட்டு. 16820 மீனும் செத்தது; சினையும் செல்லரித்துப் போயிற்று. மீன் செத்த பின் செனப்பிருந்து என்ன பயன்? மீனை மீன் விழுங்கினாற் போல. மீன் இருக்கப் புளியங்காயைத் தின்னுமா? மீன் குஞ்சுக்கு நீச்சப் பழக்குகிறதா? (பழக்கவேணுமோ?) மீன் குழம்போ? தேன் குழம்போ? (சாறோ?) மீன் செத்த போதே சினை செத்துப் போயிற்று. மீன் செத்தால் சினையும் செத்துப் போகும். மீன் தின்னாத கொக்கும் உண்டோ? மீன் பிடிக்கிறவனுக்குத் தூண்டிலிலே கண். (தக்கையிலே) 16830 மீன் விற்ற காசு நாறுமா? மீன் விற்ற காசு பார்ப்பானுக்கு ஆகாதா?  மு முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா? முகடு முட்ட வரும் கோபம் துரும்பு குத்த வேலை. முக தரிசனம் முக்கால் மைதுனம் (கோடி) முகத் தாட்சண்யத்துக்குப் பயந்து முண்டச்சி ஆன கதை முகத் தாட்சண்யத்துக்கு முண்டச்சிக் கர்ப்பினி ஆனது போல. முகத்திலே அடித்தாலும் வயிற்றிலே அடிக்காதே. முகத்தில் அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம்; வறிற்றில் அடித்தால் படமுடியுமா? முகத்திலே இல்லாத புகழ் சூத்திலே வந்ததாம். 16840 முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும். முகத்திலே மூத்தவள் வாசம். (தேவி) முகத்திலே விழித்த தோசம் வயிற்றிலே வந்து விட்டது. முகத்துக்கு அஞ்சி முண்டச்சி ஆன கதை. முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம். முகத்துக்கு அஞ்சி மூத்திரம் குடித்தால் குலத்துக்கு ஈனம். முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனாளாம். முகத்துக்கு முகம் கண்ணாடி. முகத்துக்கு முகம் குரங்கு முகம். முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்? 16850 முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விசம். முகம் பாராதவன்தானா அகம் பார்ப்பான்? முகவுரை இன்றி முடிவுரை இல்லை. முகாந்திரம் இல்லாமல் பகைக்கிறதா? முக்காட்டின் கீழே கை காட்டுகிறது. முக்காட்டுக்குள்ளே கை காட்டுவாள். முக்காட்டுக்குள்ளே மூடு மந்திரமா? முக்காடு போட்டவளுக்குப் பல பக்கம் பார்வை. முக்காதம் சுமந்தாலும் முசல் கைத்தூக்குத்தான். முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா? 16860 முக்கால் பணத்துக்கு வாங்கிய குதிரைக்கு மூன்று பணத்திற்குத் தீனி போட முடியுமா? முக்கால் அளந்தால் கொக்காய்ப் பறக்கும். முக்கால் அறுக்குண்டவன் பொல்லாக் கனாக் கண்ட கதை. முக்கால் படி ஈருகாரி; மூனுபடி பேனுகாரி. முக்கால் பணத்துக்கு மருத்துவம் செய்யப் போய் மூன்று பணத்து நெளி போன கதை. முக்கால் பணத்துக் குதிரை மூன்றுகட்டுப் புல் தின்னும். முக்கால் பணத்துக் கோழி மூன்று பணத்துத் தவிடு தின்னும். முக்கூட்டுச் சிக்கு அறாது. முக்தி வேண்டுமானால் பக்தி வேண்டும். முடக்கடிக் காரனுக்குப் புறக்கடை தடம். 16870 முடக்கத்தான் உண்டவன் முதுமையிலும் துள்ளி விளை யாடுவான். முடக்குச் சரக்கு இருக்க விலைபோம். முடக்கு வாதத்திற்கு முடக்கத்தான். முடங்கப் பாய் இல்லாமல் போனாலும் சடங்குக்குக் குறைச்சல் இல்லை. (முடக்க, சடக்குக்கு) முடப்பிள்ளையானாலும் மூத்த பிள்ளை. முடப் புல்லும் முக்கல நீரைத் தடுக்கும். (செறுக்கும்) முடப் புல்லும் முக்குறுணியைத் தேக்கும். முடவனுக்குக் கொம்புத் தேன் கிட்டுமா? (எட்டுமா?) முடவனுக்குக் கோபம் விட்ட இடத்திலே. முடவனுக்கு நொண்டி சண்டப் பிரசண்டன். 16880 முடவனை மூர்க்கன் அடித்தால் மூர்க்கனை முனியன் அடிப்பானாம். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? (ஆசைப் பட்டால் கிட்டுமா?) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைபட்ட கதையா? முடவன் பார்வை அண்டை வீட்டுக்குக் கேடு. முடவன் யானையோடு ஆடல் உறவு. முடி இருக்கிற சீமாட்டி இடக் கொண்டையும் போடுவாள்; வலக் கொண்டையும் போடுவாள். முடிக்காதவனே படிக்காதவன். முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒருபிடி சாம்பலாய்ப் போகிறதுதான். முடிச்சு அவிழ்க்கக் கொடுத்ததுமல்லாமல் இளிச்சவாய்ப் பட்டமும் வந்ததாம். முடிச்சு அவிழ்க்கப் போனாலும் மூன்றுபேர் கூடாது. 16890 முடிச்சுப் போட்டவனுக்குத்தானே முடிச்சவிழ்க்க முடியும். முடிபொறுத்த தலைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறதா? முடியைப் பிடித்தால் அடியைப் பிடிப்பான். முடிமுடியாய் நட்டால் பிடிபிடியாய் விளையுமா? (பொதி, பொதி, கோட்டை, கோட்டை) முடியும் வகை யோசியாமல் முயற்சியை மேற்கொள்ளாதே. முட்ட நனைந்தவளுக்கு வெட்கம் இல்லை; முக்காடு இட்டவளுக்கு நாணம் இல்லை. முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும் கெட்ட வனுக்குத் துக்கம் இல்லை. முட்ட நனைந்தவனுக்கு ஈரும் இல்லை; பேனும் இல்லை. முக்காடு என்ன? முட்ட நனைந்தவனுக்கு முக்காடு என்ன? முட்ட நனைந்தார்க்கு குளிர் இல்லை. 16900 முட்டம் கோடி முப்பத்திரண்டு அணைகள். முட்டரோடு ஆடிய நட்பு, கருங்காலிக் கட்டை ஊடாடிய கால். முட்டற்ற நாரிக்கு இரட்டைப் பரியமா? முட்டாக்குப் போட்டு மூலையில் உட்கார்த்தி வைத்த பிறகும் மெச்சிக் கொள்வதற்கு எச்சில் இலை எடுத்தாளாம். முட்டாளுக்கு எட்டு ஆள். முட்டாளுக்கு என்ன சொன்னாலும் கட்டோடே கேளான். முட்டாளுக்குக் கோபம் மூக்கின் மேலே. முட்டாளுக்குத் தன் குணம் நூலினும் செம்மை. முட்டாளுக்குத் தாம்பூலம் முதலியே. முட்டாளுக்குப் பட்டால் தெரியும். 16910 முட்டாளுக்கு முழங்காலில் புத்தி. முட்டாளுக்கு முடை பொறுக்க முடியலையன்னா வெட்டு குத்தும்; புத்திசாலியோ பத்தும் சேரட்டும் பார்த்துக்கலாம் பானாம். முட்டாளுக்கு மூன்று இடத்திலே மலம். முட்டாளுக்கு மோர் அதிகம். முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன். முட்டாள் துலுக்கனும் முரட்டு நாயக்கனும் பட்டாளத்துக்கு தான் இலாயக்கு. முட்டாள் பயலுக்கு இரட்டைப் பரியம். முட்டாள் பையனுக்கு இரட்டை பெண்டாட்டி. முட்டாள் பையன் மூளை எட்டு ஊருக்கு அப்பால். முட்டி ஊட்டின குட்டி முதார் குட்டி. (கன்று) 16920 முட்டிக் கால் கழுதை பட்டவர்த்தன பரியாமா? முட்டிக்குப் போனாலும் முகராசி வேண்டும்; பிச்சைக்குப் போனாலும் பேர்ராசி வேண்டும். முட்டிக்குப் போனாலும் மூன்றுபேர் ஆகாது; முட்டி தட்டின பிள்ளை முதலுக்குக் கேடு. முட்டித்தட்டும் கழுதையும் மோளைக் கடாயும் முந்தி நின்றதாம் சண்டைக்கு. முட்டிப் புகும் பார்ப்பார். முட்டிய பிறகு குனிவதா? முட்டிவிட்டுக் குரையும் புத்தி முட்டாள் புத்தி. முட்டின கோபம் முட்டக் கெடுக்கும். முட்டினால்தான் குனிவார்கள். 16930 முட்டுக் கெட்டவளுக்கு மூன்று இடத்திலே பீ. முட்டுக்குச் சப்பானி; சீலைக்கு எழுத்தாணி. முட்டுப்பட்ட பிறகு குனிகிறது. முட்டுப்பட்ட பிறகு ஐயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன? முட்டுமுன் குனிய வேண்டும். முட்டு வீட்டில் குணங்கினால் முழுதும் குணங்கல்தான். முட்டை இட்ட கோழிக்குத் தெரியும் பொச்சரிப்பு. (சூத்து வலி) முட்டை இடுகிற கோழிக்கு எரிச்சலும் உண்டு. முட்டை இட்ட கோழிக்குச் சூத்து எரிபந்தம் உண்டு. முட்டை இடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும். 16940 முட்டை இடுவதன்முன் குஞ்சை எண்ணுவது எப்படி? முட்டைக் கண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை. (முண்டைக்) முட்டைக் குஞ்சைப் பிட்டு வளர்ப்பது. முட்டை கொண்டு எறும்பு திட்டை ஏறினால் மழை பெய்யும். முட்டையிலே கூவி முளையிலே கருகுகிறது? முட்டை வைக்கிற கோழி முட்டை வைத்தால் சும்மா இருக்கிற கோழிக்கு வயிறு வெடித்ததாம். முணுக்கு முணுக்கு என்று இருந்து கொண்டு முப்பது வீட்டுக்குத் தீ மூட்டுவாள். முணுமுணுத்த சாப்பாட்டைக் காட்டிலும் முரமுரத்த பட்டினி மேல். முண்டச்சி சம்பந்தக்காரன் முன்னுக்கு வருவானா? முண்டச்சி வளர்த்த மகன் முண்டனுக்கு இரண்டு ஆள். 16950 முண்டனுக்கு இரண்டு ஆள். முண்டுவதைவிடக் கிண்டுவது நல்லது. முண்டைக் கண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை. முண்டைக் கேற்ற முரட்டுச் சாவான். முண்டைப் பையன் செங்காளி மூன்று வீட்டுப் பங்காளி. முண்டையைப் பிடித்த கண்டமாலை முருங்கையையும் பிடித்தது. முதலியார் வீட்டு நாய்க்கு முத்துமாலையின் பெருமை தெரியுமா? KjÈah® l«g« És¡bf©bzŒ¡F¡ nfL.(I«g«) முதலில் எடுத்துச் செலவிடாதே. முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி. 16960 முதலுக்கு மோசமாக இருக்கிறபோது லாபத்துக்குச் சண்டை போடுகிறதா? முதலுக்கு மோசம்; இலாபத்துக்குப் பித்தலாட்டம். முதலே துர்ப்பலை; அதிலும் கர்ப்பிணி. முதலைக்கு இல்லை நீச்சும் நிலையும். முதலை தன் இடத்தில் மலை ஒத்த யானையையும் இழுத்துச் செல்லும். முதலை நாயின் காலைவிட்டுப் புங்க மரத்தின் வேரைப் பிடித்தது போல. (நரியின்) முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. முதலைவாய்ப் பிள்ளை மீண்டு வருமா? முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப் போல. முதல் இல்லாத பிள்ளை வட்டிக்குச் சீராடினான். 16970 முதல் இல்லாதவன் உயிர் இல்லாதவன். முதல் இல்லாத வணிகம் உண்டா? முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை. முதல் உள்ளவனுக்கு இலாபம். முதல் இல்லாவிட்டால் இலாபம் ஏது? முதல் எடுக்கும் போதே தப்பட்டைக்காரன் செத்தான். முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா? முதல் கோணல் முற்றும் கோணல். முதல் பிள்ளை மூத்திரத்துக்கு அழும்போது இரண்டாம் பிள்ளை பாலுக்கு அழுகிறதாம். முதல் பிறந்த பிள்ளை உரல் குழியை நக்குகிறதாம்; திருப்பதிக்குப் போனாளாம் திரும்ப வரம் கேட்க. 16980 முதல் பிறந்த குழந்தை உடல் குழியை நக்குகிறதாம்; மூன்றாவது பிள்ளை முந்தியை இழுக்கிறதாம். (தண்டைக்கு அழுததாம்) முதல் பிறந்த பிள்ளை உரல் பணையை நக்குகிறதாம்; தேவடியாளுக்குப் பிறந்த பிள்ளை திரட்டுப் பாலுக்கு அழுததாம். முதல் பிறந்த பிள்ளை முத்துப் பிள்ளை; பின்னே பிறந்த பிள்ளை பீப்பிள்ளை. முதல் மடைக்கு எரு போடு; கடை மடைக்கு வரப்புப் போடு. முதுகிலே புண் இருந்தால் குனியப் பயம். முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப்பயம். முதுகில் அடித்தால் ஆறும்; வயிற்றில் அடித்தால் ஆறுமா? முதுகில் அடித்தால் பொறுக்கலாம்; வயிற்றில் அடித்தால் பொறுக்கலமா? முதுகில் அடித்தாலும் வயிற்றில் அடிக்காதே. முதுகைச் சொரியச் சொன்னால் சிற்றிடையைச் சொறிகிறது. (ஏனோ?) 16990 முதுநெல் தீதாலோ இல். முதுமைக்குச் சோறும் முறத்துக்குச் சாணமும். முதுகைத் தேய் என்றால் முலை மீது கை இட்டானாம். முத்தம் கொடுப்பதற்குள் முந்நூறு தடவை குணம் மாறும். முத்தளந்த கையால் மூசப்பயறு அளக்க வந்தது. முத்தளந்த கையினாலே மோர் விற்கிறதா? முத்தால் நத்தை பெருமைப்படும்; மூடர் எத்தாலும் பெருமைப் படார். முத்திலும் சொத்தை உண்டு, பவளத்திலும் பழுது உண்டு. முத்து அளக்கிறவளும் பெண்பிள்ளைதான்; மூசப்பயறு அளக்கிறவளும் பெண்பிள்ளைதான். (மூசப்பயறு - முளைப்பயறு) முத்துக் குட்டியாம் பேரு, முசற் குட்டியாம் சீரு. 17000 முத்து குலத்தால் பெருமைப்படும்; மூடர் குலத்தால் பெருமைப் படார். முத்துச் சோளம் விதைத்தால் கருஞ்சோளமா விளையும்? முத்துத் தொழில் கச்சைத் தொழில், மற்றத் தொழில் பிச்சைத் தொழில். முத்தைத் தெளித்தாலும் கல்யாணந்தான்; மோரைத் தெளித்தாலும் கல்யாணந்தான். முந்தித் தூங்கினால் முந்தி எழலாம். முந்தியைப் பிடித்துப் போட்டு விட்டுக் குருவியைப் பிடித்து வாங்குவான். முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம். முந்தின சோறும் முனையும் குலைந்தால் பிந்தின சோறு பீயும் சோறும். முந்தின சோற்றைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும். முந்தினோர் பிந்தினோர் ஆவார்; பிந்தினோர் முந்தினோர் ஆவார். 17010 முந்நாழி கறக்கிற பசுவானாலும் முன் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது. முப்பணியிட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறையா? முப்பத்திரண்டு லட்சணங்களில் இரண்டுதான் குறைவு, தனக்காகவும் தெரியாது, சொன்னாலும் கேட்பது இல்லை. முப்பதிலே மூர்க்கம்; நாற்பதிலே நாகரிகம். முப்பதிலே வாழாதவன் மூடன்; முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன். (முரடன்) முப்பது செருப்புத் தின்றவனுக்கு மூன்று செருப்புப் பணியாரம். முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது. முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை; முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை. (வருடம்) முப்பேன் பிடிப்பது மூதேவி வாசத்துக்கு அடையாளம். முயலை எழுப்பிவிட்டு நாயைத் தேடுவதா? 17020 முயலை எழுப்பிவிட்டு நாய் பதுங்கினது போல. (பதுங்கிற்றாம்) முயலை எழுப்பிவிட்டு நாய் பேளப் போன கதையா. முயல் எத்தூரம் போனாலும் கைத் தூக்கு. முயல் ஓடும்போது நாய் விட்டை போட்டதாம். முயல் பிடிக்கிற நாய் மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா? முயல் பிடிக்கிறவன் முகத்தைப் பார்த்தால் தெரியாதா? முயல் விட்டுக் காக்கைப்பின் போனவாறு. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயற்சி திருவினை ஆக்கும். முயற்சியே முன்னேற்றம். 17030 முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. முரடனுக்கு மூங்கில் தடி. முரட்டுக்குதிரைக்கு முள்ளுக் கடிவாளம். முரட்டுத் தனத்திற்கு முதற்பாதம். முரட்டுத் தனத்திற்கு முதல் தாம்பூலம் கொடுக்க வேண்டும். முரட்டுத் துலுக்கனும் முட்டாள் நாயக்கனும் பட்டாளத் துக்குத் தான் லாயக்கு. முரட்டுப் பெண்டாட்டி, இருட்டு அறை, சுருட்டுப்பாய். முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும். முருக்கம்பூ சிவந்ததனால் முடிப்பார்களா? முருக்குப் பருத்து என்ன? தூணாகப் போகிறதா? (முருங்கை) 17040 முருகனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை; மிளகுக்கு மிஞ்சின வைத்தியமும் இல்லை. முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம். முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா? முருங்கைக் கீரை முட்டவாயு; அகத்திக் கீரை அண்ட வாயு. முருங்கைக் கீரை வெந்து கெட்டது; அகத்திக் கீரை வேகாமல் கெட்டது. முருங்கை பருத்து முட்டுக்கால் ஆகுமா? முருங்கை பெருத்தால் தூணாகுமா? முருங்கை மரத்தில் வேதாளம்; மொட்டை மரத்தில் முனி. முருங்கை மரத்தைப் பிடித்து முரிஞ்சு போவானேன்? முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும்; பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும். 17050 முலைக்குத்து வலி சவலைக் குழந்தை அறியுமா? முலை கொடுத்து வளர்த்தவள் மூதேவி; முன்றானை போட்டவள் சீதேவி. (ஊட்டி) முலையைக் கடித்தது என்று பிள்ளைத் தலையைக் கிள்ளுவாளா? முலை சரிந்தால் வயிறு தாங்கும். (விழுந்தால்) முலை சரிந்தால் வயிறல்லவோ தாங்க வேண்டும்? முழங்கால் அளவு பிள்ளை வளர்க்கக் கணைக்கால் அளவு பணம் செலவாகும். முழங்கால் பெருத்தவள் முன்னே வந்தால் ஆகாது. முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடுகிற மாதிரி. முழங்கைப் புண் போல முனை குலைந்து நிற்கிறது. முழங்கை மறைகிற அளவு நெய்யூற்றிப் போட்டாலும் கள்ளன் மோட்டு வளையத்தான் பார்ப்பானாம். 17060 முழங்கையில் இடித்த சுகம் போல இருக்கும் மூத்தாள் பெண்வாழ்வு. முழங்கையில் பட்ட சுகமும் மூத்தாள் பசங்களின் வாழ்க்கையும். முழத்துக்கு மேலே அறுக்காதே; முடியைப் போட மறக்காதே. முழத்துக்கு வெட்டினால் சாணாவது தேறும். முழம் வரால் சாண் தண்ணீரில். முழு உடும்பு; முக்காற் காடை; அரைக்கோழி; கால் ஆடு. முழுகிக் குளித்து முக்காதம் போனாலும் வக்கு கொக்கு ஆகுமா? முழுகி முப்பது நாளாச்சு, இறங்கி உப்பு அள்ளக் கூட இல்லை என்கிறாள். முழுகாத பெண்ணுக்கு மூவேழு கடுக்காய். முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? (முழுக்க முழுக்க, முழுதும்) 17070 முழுக்க முழுக்க முட்டாளும் இல்லை; முழுக்க முழுக்க அறிவாளியும் இல்லை. முழுக்கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக்கட்டி விட்டது போல. முழுச் சோம்பேறி முள் உள்ள வேலி. முழுதும் கெட்டார்க்கு வெட்கம் ஏது? முழுதும் நனைந்தவருக்கு ஈரமில்லை. முழுத்த ஆண்பிள்ளைக்கு மூன்று வெற்றிலை. முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப்பங்குக்காரன் மிண்டன். (முண்டன்) முழுப் பில்லை; முக்கால் மயிலை; அரைச்சிவலை; கால் கருப்பு. முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைப்பது போல. (சோற்றோடு) முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்க முடியுமா? (மறைக்கலாமா?) 17080 முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டுமா? (மறைத்த கதையா) முழு மயிலை; முக்கால் பில்லை; அரை வெள்ளை; கால் கருப்பு. முளைக்கையிலே உண்டானது தான் முற்ற வரும். முளைத்த மயிர் மூன்று, அதிலும் இரண்டு புழுவெட்டு. (முளைத்ததே மூன்று மயிர்) முளைத்து மூன்று இலை விடவில்லை. முளைப்பாரைப் புதைப்பார் உண்டோ? (உண்டா?) முளைப்புல் தலைத் தண்ணீரைத் தடுக்கும். முளையில் உண்டானது தான் முற்றும். முளையில் கிள்ளாததை முற்றினால் கோடாலி கொண்டு வெட்ட வேண்டும். முளையிலே நகத்தால் கிள்ளி விடுவதை முற்றவிட்டுக் கோடரி கொண்டு பிளக்க வேண்டும். 17090 முளையிலே கிள்ளி எறிய வேண்டும். முள் தைத்த துன்பத்தை முள்தான் போக்க வேண்டும். முள்மரத்தை முளையிலே கிள்ள வேண்டும். முள்ளாலே எடுக்கிறதை விட்டுவிட்டுக் கோடாலி போட்டுப் பிளந்தானாம். முள்ளாலே எடுப்பதைக் கோடரியால் எடுத்தானாம். முள்ளாலே எடுப்பதைக் கோடரியாலே இழுத்துக் கொள்ளாதே. முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும், இரும்பாலே இரும்பை அறுக்க வேண்டும். முள்ளின் மேல் சீலையைப் போட்டால் மெள்ள மெள்ளத் தான் எடுக்க வேண்டும். (வாங்க) (போட்ட சீலையை) முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை. முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா? 17100 முள்ளுமேலே சேலை போட்டாச்சுன்னா முள்ளும் முறியப் படாது; சேலையும் கிழியப்படாது. முள்ளுமேலே சேலை போட்டால் மெள்ள வாங்க வேண்டும் (எடுக்க) முள்ளை எடுக்கக் கோடாலியா வேண்டும்? முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; அதுவும் முள்தைத்த வாய்வழியே எடுக்க வேண்டும். முறத்து அடிபட்டாலும் முகத்து அடி படல் ஆகாது. முறித்து விடுவது எளிது; சேர்ப்பதுதான் கடினம். முறிந்தோடும் விமானத்திற்குப் பறந்தோடி ஓட்டுப் போடுகிறவன். முறுகின புரி அறும். முறுக்கி வளர்க்காத மீசையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் அடங்கா. (பையனும், உதவாது) 17120 முறுக்கோடு சம்பந்தி முன்றில் சாப்பிட்டாளாம். முறைமைக்கு மூப்பு இளமை இல்லை. முறையே என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினால் மறைவிலே அறுத்துப் போட்டு விடுவான். முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டுவிடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முற்றத்தில் வந்தவர் முப்பழி செய்தவர் ஆயினும் வா என்று அழைக்க வேண்டும். முற்றின மரத்தில்தான் வைரம் இருக்கும். முற்றும் நனைந்தவருக்குக் குளிர் இல்லை; முழுதும் கெட்டவர்க்குத் துக்கம் இல்லை. முற்றும் நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும் கெட்ட வனுக்குத் துக்கம் இல்லை. முற்றும் நனைந்தார்க்கு ஈரம் இல்லை; முக்காடு போட்ட வளுக்கு வெட்கம் இல்லை. 17130 முற்றும் நனைந்தார்க்கு ஈரம் இல்லை; மூக்கறுபட்ட வளுக்கு நாணம் இல்லை. முன் அளந்த நாழியே பின் அளக்கும். முன் ஏர் சரியா இருந்தால் பின் ஏர் சரியாகத்தான் இருக்கும். முன் ஏர் போன வழி பின் ஏர் போகும். முன் ஏர் மாட்டை முகத்தில் அடிக்காதே. முன் ஏர்க்கு வந்தது பின் ஏர்க்கும். முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல். முன்கை உடையார்க்குக் கொழுவே படைக்கலம். முன்கை நீண்டால் பின்கை நீளும். (நீளின்) முன்கை நீண்டால் முழங்கை நீளும். 17140 முன் கோணல் முடியக் கோணல். முன் கோபக் காரனுக்கு மூக்கிலே கோபம். முன் கோபம் பின் இரக்கம். முன் நின்றவன் மூக்கை அறுத்துக் கொடுப்பான். முன் நேரம் கப்பற்காரன்; பின் நேரம் பிச்சைக்காரன். முன் பகை செய்தால் பின் பகை விளையும். முன்பணம் கொடுத்து முதல் இழந்த மாமியார் பின்னும் கொடுத்துப் பெண்டாட்டி ஆனாள். முன்பின் பாராமல் சொல்கிறதா? முன் விட்டுப் பின் நின்று கழுத்தறுக்கலாமா? முன் வைத்த காலைப் பின் வைக்காதே. (வைக்கமாட்டேன்) 17150 முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உண்டோ? முன்னுக்குப் பின் முரண். முன்னாலே இருந்த அதிகாரியைப் பின்னாலே வருகிற அதிகாரி நல்லவனாகச் செய்கிறது. முன்னாலே பார்த்தால் சேவகன் குதிரை, பின்னாலே பார்த்தால் செட்டியார் குதிரை. முன்னால போகிற குதிரையைப் பார்த்துப் பின்னாலபோற ஒட்டகம் ஐயையோ குதிரை முதுகெல்லாம் கோண லுன்னுச்சாம். முன்னால் போகிறவன் இடறி விழுந்தால் பின்னால் போகிறவனுக்கு விளக்கு எதற்கு? முன்னால் போனவன் முட்டிக் கொண்டால் பின்னால் போனவனுக்கு வெளிச்சம் போட்ட மாதிரி. முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது. முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு வேறாய் நடக்கிறதா? முன்னுக்கு ஒன்று; பின்னுக்கு ஒன்று. 17160 முன்னுங் கொடுத்து முதலிழந்த மாப்பிள்ளைக்குப் பின்னுங் கொடுத்துப் பெண்டாயும் இருந்தாளாம். முன்னே ஆட்டைப்பிடி; பின்னே மாட்டைப்பிடி. முன்னே இருக்கிற காதைவிடப் பின்னே முளைத்த கொம்பு வலு. முன்னே ஒரு குறுணி; பின்னே ஒரு முக்குறுணி. முன்னே பார்த்தால் முதலாளியின் குதிரை; பின்னே பார்த்தால் அதிகாரியின் கழுதை. முன்னே பிறந்த காதைப் பார்க்கிலும் பின்னே பிறந்த கொம்பு பலம். முன்னே பின்னே செத்தால் சுடுகாடு தெரியும்; புதிதாய்ச் செத்த பிணத்துக்குச் சுடுகாடு எப்படித் தெரியும்? முன்னே போகிறவன் இடறி விழுந்தால் பின்னே போகிற வனுக்கு எச்சரிக்கை. முன்னே போனால் முட்டும்; பின்னே போனால் உதைக்கும். முன்னைக்குப் போ; முகட்டைக் குழப்பு. 17170 முன்னைக்குப் போர்; முசுட்டை குழகுழப்பு.  மூ மூகத்து இச்சைக்கு மூத்தார் கிட்டே போனாளாம். மூக்கறைக்கு முகுரம் காட்டினால் கோபம் வரும். (முகுரம் - கண்ணாடி) மூக்கறையானுக்குக் கண்ணாடி பகை. மூக்கறையனுக்கு வாழ்க்கைப் பட்டால் முன்னும் போக விடான்; பின்னும் போகவிடான். மூக்கணாங் கயிற்றை ஒழுங்கா போடாமல் சாட்டையைச் சொடுக்கி என்ன பயன்? மூக்கிலிக்குக் கண்ணாடி காட்டினது போல. மூக்கில் இடித்ததாம், பல்லுப் போச்சாம். மூக்கில் இருக்கிற மூக்குத்தி போனாலும் போச்சு; மூலையில் இருக்கிற குப்பை போச்சு. மூக்கில் புகுந்தது வாசமும் தெரியாது, நாற்றமும் தெரியாது. 17180 மூக்கு அறுந்த மூளி காது அறுந்த மூளியைப் பார்த்துச் சிரித்தாளாம். (பழித்தாளாம்) மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்துக்கு அஞ்சாது. மூக்கு இருக்கிறவரைக்கும் சளி இருக்கும். (மட்டும், உண்டு) மூக்கு உள்ள வரைக்கும் சளி. மூக்கு உள்ள வரையில் சளி போகாது. (வற்றாது,) (இருக்கு) மூக்குக்கு மேல் கோபம். மூக்குக்கு மேல் போனால் மூவாள்என்ன? நாலாள் என்ன? மூக்குத் தூள் போடாத முண்டத்துக்கு முப்பது பணத்தில் வெள்ளி டப்பி. மூக்குப் பிழை போனாலும் எதிரிக்குச் சகுனத்தடை ஆக வேண்டும். மூக்குப் புண் ஆறி அல்லவோ தாசரி ஆகவேண்டும். 17190 மூக்கு மயிர் பிடுங்கி ஆள் பாரம் குறையுமா? (குறைந்தது என்பது போல) மூக்கு மயிர் பிடுங்கிக் கயிறு திரிக்கலாமா? மூக்கை ஏன் பிடிப்பது? மூதேவி வாசத்து அடையாளம். மூக்கைக் கிள்ளிப் போக்கு காட்டினது போல. மூக்கைக் கிள்ளிப் போட்டு முகரக் காட்டினது போல. மூக்கைப் பிடித்தால் அண்ணாந்து பார்க்க இடம் இல்லை. (பார்க்கத் தெரியாது) மூக்கைப் பிடித்தால் சீவன் போகிறது. மூங்கில் காட்டுக்குப் போனால் மூலியும் மூலையில் உட்கார்ந்து விடுவாள். மூங்கிற் பாயும் முரட்டுப் பெண்டாட்டியும். மூச்சுப் பிடித்தால் வயிறு நிரம்புமா? 17200 மூச்சு போனால் பேச்சுப் போச்சு. மூச்சைக் கட்டினால் மூர்க்கக் குணம் குறையும். மூஞ்சூர், மூஞ்சூரைப் பார்த்து உன் மூஞ்சி என்ன நீட்டமாக இருக்கிறது என்று கேட்டதாம். மூடப்பிள்ளையானாலும் மூத்தப்பிள்ளை செல்லப் பிள்ளை தான். மூடருக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. மூடரோடு ஆடிய நட்பு கடுவழியிற் கட்டை ஊடாடியகால். (காட்டு வழியிற்) மூடர்கள் சேர்க்கையில் தப்பாமல் கெடுதி வரும். மூடர் கூட்டுறவு முழுதும் அபாயம். மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே. மூடனாயிருக்கிற பிள்ளையினாலே எப்போதும் நட்டமே. 17210 மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும். மூடனுக்குக் கோபம் மூக்கின் மேலே. மூடன் கடைசியாய்ச் சொல்வதை ஞானி முதலிலேயே சொல்லி விடுவான். மூடன் சண்டை முட்டுப் பிரிக்கும்; மோர்க்கடன் வீட்டைத் தேடும். மூடிக் கொண்டிருந்தால் கமுக்கம்; திறந்தால் வெட்ட வெளி. மூடி மூடிப் போகிறவள் ஓடி ஓடி மாப்பிள்ளை பிடிப்பாள். மூடி மூடி வைத்தாலும் முட்டைக்குள்ளே இருந்து முயலா வரப் போகுது? மூடிய முத்து உலகம் பெறும். (மூவுலகும் விலை பெறும்) மூடி வைத்த புண் ஆறாது. மூடி வைத்தாலும் முணுமுணு என்னும், தைத்து வைத்தாலும் டம்டம் என்னும். 17220 மூடின உடைமை மூன்று லோகம் பெறும்; மூடாத உடைமை முக்காற் காசும் பெறாது. மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள்தான் ஓடிஓடி மாப்பிள்ளை கொள்வாள். மூடுபனி பெய்தால் முந்நூறாம் நாள் மழை. மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே புத்தி. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா? (bfhS¤Jtjh?, இழப்பார் உண்டா?) மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்துவானேன். மூணத்தொண்ணே விழுந்தால் மூத்தவளே வருவாள். மூணு மயிருக்காரி; முக்கால்படி ஈருக்காரி, நல்லெண்ணெய் வாங்கித் தாரேன் நைனாக் கொண்டை போட்டுக்கடி. மூணும் கெட்டவளுக்கு முக்காடு எதற்கு? மூதேவிக்கு முகூர்த்தம் வைத்தால் முப்பது நாழிகையும் இராகுகாலம். 17230 மூதேவி வாழும் இடத்தில் சீதேவி வாழ்வாளா? மூத்த குமரிக்கு முதுகிலே குழந்தை. மூத்த கொழுந்தன் செத்த முப்பதாம் நாளு ஈரவெங்கத்தைக் கண்ணுல வச்சு இழிஞ்சு இழிஞ்சு அழுதாளாம். மூத்தது மோழை; இளையது காளை. மூத்த பிள்ளைக்கு உடல் வளமிருக்கும்; இளைய பிள்ளைக்கு மதிவலி மிக்கிருக்கும். மூத்தவள் போகும் போது அழகு; இளையவள் வரும்போது அழகு. மூத்தவருக்குப் பிறகு இளையவருக்கு முறையா? (மூத்தவள், இளையவள்) மூத்தவள் வாழ்வு முழங்கையில் இடித்த இடிபோல இருக்கும். (மூத்தாள்) மூத்தவள் பதிவிரதை என்றால் இளையவள் அவிசாரியா? (மூத்தாள்) மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள். 17240 மூத்தாளை விட்டு இளையாளைப் பட்டம் கட்டின கதை. மூத்தாளே வாடி முட்டிக்கொண்டு சாவோம்; இளையாளே வாடி மலையாளம் போவோம். மூத்தாள் சருகு அரிக்க, இளையாள் அநுபவிக்கிறாள். மூத்தாள் பெண்வாழ்வும் முழங்கையில் பட்ட சுகமும். மூத்திரக் குழியில் தீர்த்தம் ஆடுகிறதா? மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்த்தானாம். மூத்திரம் பெய்வதற்குள் முப்பத்தெட்டுக் குணம். (முந் நூற்றெட்டுக்) மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முதலில் துவர்க்கும்; பின்பு இனிக்கும். (முன்னேகசக்கும் பின்னே இனிக்கும்) மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம். மூத்தோர் வார்த்தையைத் தட்டுகிறதா? (தடுக்கிறதா?) 17250 மூப்பிலும் தருமம் செய்தல் முயற்சி. (செய்ய முயற்சி செய்) மூப்பு ஏன் பிடிப்பது, மூதேவி வாசத்துக்கு அடையாளம். மூப்புக்குச் சோறும் முறத்துக்குச் சாணியும். மூர்க்கமுள்ள ராஜாவும் மூட மந்திரியும் அழிவார்கள். மூர்க்கரை மூர்க்கர் முகப்பர். மூர்க்கரோடு இணங்கேல். மூர்க்கரோடு இணங்கினால் ஏற்கவேணும் அவகீர்த்தி. மூர்க்கர் அறிவரோ முல்லைப்பூ வாசனையை? மூர்க்கனான மன்னனுக்கு மூடன்தான் மந்திரியாக இருப்பான். மூர்க்கனுக்கு மூர்க்கன்தான் துணை போவான். 17260 மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. மூர்க்கனும் முதலையும் சரி. மூர்க்கனைக் கட்டினாளும் முட்டாளைக் கட்டக் கூடாது. மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான்; மூடனைச் சேர்ந்தவன் படியான். மூர்க்கன் முகத்தில் மூதேவி குடியிருப்பாள். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது. மூலக்காற்று புழு விழும். மூலதனம் இல்லாத இலாபம் மூடத்தனம் நிரம்பியவர் ஓட்டு. மூலத்து பெண் மாமியார் மூலையிலே. மூலத்தில் பிறந்தவன் காலத்தில் வாழ்வான். 17270 மூல நட்சத்திரத்து மாமியார் மூலையிலே. மூலவருக்கே மொந்தைத் தண்ணீர் இல்லை என்றால் ஆலயம் எல்லாம் அபிசேகமாம். மூலிகை அறுத்தால் மூன்று உலகமும் ஆளலாம். (அறிந்தால், வருடம்) மூலி முகூர்த்தம் செய்யப் போக அருகு அத்தமிச்ச கதை. மூலைக்கரை கூட விளைந்தால் சேலைக்கு உதவும். மூலையில் திட்டுகிறவனை முற்றத்தில் இழுத்த கதை. மூவர் போன கருமம் மூதேவி அடையும். மூவைந்து கூடினால் மூளியும் பெண்ணாவாள். மூளிச் சட்டியானாலும் கொழுக்கட்டை வேக வேண்டும். மூளி நாய்க்குப் பட்டது மிச்சம். 17280 மூளி முகூர்த்தம் இடப்போனாளாம்; அறுகம் புல்லு அறுந்து போயிற்றாம். மூளைச் சரக்கு வேலையில் தெரியும். மூன்றாம் ஈற்று மாட்டுக்கு முதுகு எல்லாம் பால். மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும். மூன்றாம் மாதத்தில் முறிகிழங்கு ஆகும்; நாலாவது மாதத்தில் நார் கிழங்கு ஆகும். மூன்றாம் மாதம் முறியல் கிழங்கு. (முறியல் - பனை) மூன்றாம் வயதில் மூலையிலே இருக்கிற வார்த்தை எல்லாம் வரும். மூன்றாவது ஈற்று(ப்பசு) முதுகெல்லாம் பால். மூன்றுக்கு ஒன்று முதலுக்கு மூன்று. (நாலு) மூன்று காசு குதிரை ஆறு காசு வைக்கோல் தின்றதாம். (தின்கிறதாம்) 17290 மூன்றுபடி மூலையில் இருக்கிறதாம்; முக்கால் படிப் பெருமைச் சபையில் இருக்கிறதாம். மூன்று படிக்கு மேலேயும் வேண்டாம்; மூக்கணாங்கயிறு போடவும் வேண்டும். மூன்று பல்லும் போனவர்க்கு முறுக்குக் கடையில் என்ன வேலை? மூன்று பேர் சேர்ந்தால் மோசம்; நாலு பேர் சேர்ந்தால் நாசம். மூன்று பேர் வழிக்குத் துணை; இரண்டு பேர் பிணையல் மாடு, ஒருவன் போனால் பரதேசி. மூன்று பொருளையும் தேடு; முதிர் வயதில் ஊன்று கோல் ஆகும். மூன்று மாதத்து ஒரு மாரி பெய்தால் ஒரு போகம் விளையும். மூன்று மாதத்துக்கு முன்னே பல் போனவளுக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை? மூன்று முடி கழுத்திலே; முப்பது இலை தெருவிலே. மூன்று முடிச்சு கழுத்தில் விழட்டும்; முப்பது இலை குப்பையில் விழட்டும். 17300 மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று. மூன்று வீட்டுக்கு முக்காலி; நாலு வீட்டுக்கு நாற்காலி. மூன்று வீட்டுக்கும் ஒன்று மூதேவியாய்ப் போனது. மூன்றே முக்கால் நாழிகை முத்து மழை பெய்தது; வாரி எடுக்கும் முன்னே மண் மாரியாய்ப் போயிற்று.  மெ மெச்சி எச்சில் இலை போட்டு மீந்ததை மடியில் கட்டுவார்களா? மெச்சிக் கொள்ளுகிறதற்கு எச்சிலை எடுக்கிறது. மெட்டி போடுவதில் என்ன இருக்கிறது; தட்டி நடப்பதில் இருக்கிறது. மெத்த அத்துப்போன பிச்சைக்காரன். மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன். மெத்தப் படித்தவருக்குச் சோறு வெல்லம். 17310 மெத்தப் படித்தவருக்குச் சித்தம் சரியில்லை. மெத்தப் படித்தவன் சுத்த பைத்தியக்காரன். மெத்தப் பரிச்சலாம்; உள்ளே எரிச்சலாம். மெத்தப் பரிவாம்; உள்ளே எரிவாம். மெத்தப் பழகப் பழகப் பித்தளையும் பீநாறும். மெத்தனப் போக்கு செத்தமைக்கு நிகர். மெத்தப் புடைவை மெத்தக் குளிர். மெத்தை நேர்த்தி; தலையணை பீற்றல். மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. மெத்தை வீட்டு இரகசியம் வெளிவராது; குச்சி வீட்டு இரகசியம் ஊர்க்கூடிப் பேசும். 17320 மெதுவாய்ச் சாப்பிட்டால் அதிகம் கொள்ளும். மெய் இருந்து விழிக்குது; பொய் இருந்து பொரிக்குது. (கொண்டு) மெய் ஒழுக்கத்தார்களுக்கு மேன்மை இல்லை ஒரு காலும். மெய்க்கும் பொய்க்கும் விரற்கடை தூரம். மெய் கிடந்து மெலியுதாம்; பொய் கிடந்து பொலியுதாம். மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை. (கெட்டவரும், வாழ்ந்தவரும்) மெய் சொல்லி வாழாதவன் பொய்ச் சொல்லி வாழ்வானா? மெய்ஞ்ஞானம் உடையாருக்கு அஞ்ஞானம் இல்லை. மெய் தவிக்கும்; பொய் புலம்பும். மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும். 17330 மெய் நின்று விழிக்கிறது; பொய் நின்று கூத்தாடுகிறது. மெய் மூன்றாம் பிறை; பொய் பூரண சந்திரன். மெய்ம்மை சாற்ற வையம் ஏற்றும். மெய்யனுக்கு ஐயம் இல்லை; பொய்யனுக்கு லாபம் இல்லை. மெய்யை பொய் அழிக்குமா? மெய் வெல்லும்; பொய் தோற்கும். மெலட்டூர் மினுக்கு, திருவாரூர் திப்பிசம். மெலிந்தவனுக்கு மெத்த பலன்; மேனி மினுக்கிட்டவளுக்கு மெத்தக் கசம். (சுகம்) மெலுக்கிலே அலைக்கழிவு. மெல்லச் சாப்பிட்டால் கொள்ளை போமா? 17340 மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப்பாயும். மெல்ல மெல்ல வந்தாளாம்; கட்டில் மெத்தை போட்டாளாம். மெல்ல இருந்துதான் தள்ள வேண்டும் பகையை. மெல்லிசு நோனா எல்லிட்டுக் கூத்தியாள். மெள்ள இருந்து தள்ள வேணும் பகையை. மெனக்கெட்ட பூதி தினைக் குத்தப் போனாளாம்.  மே மேகத்தில் பறக்கிற குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது? மேடும் சரி பள்ளமும் சரியா? மேட்டிமைகாரருக்கு எதிர்த்து நிற்க வேண்டும்; மெத்தனக் காரருக்குக் கிருபை அளிக்க வேண்டும். மேட்டில் ஏறினால் முத்தாச்சி; பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி. 17350 மேட்டிலே போனால் தங்கச்சியும், பள்ளத்திலே வந்தால் பெண்டாட்டியுமா? மேட்டுக்காகப் பயமாம்; வீதிவழியில் திகிலாம். மேட்டுக்காடு போட்டவனும் கெட்டான்; மேனி மினிக்கிய வளும் கெட்டாள். மேட்டுத் திட்டுக்கு மேலே போகுமா தண்ணீர்? மேட்டு நிலத்தை உழுதவனும் கெட்டான்; மேட்டுப் பிள்ளையைப் பெற்றவனும் கெட்டான். மேட்டு நிலத்தை உழுதவனும் கெட்டான்; மேனி மினிக்கியைக் கட்டியவனும் கெட்டான். (புன்செய்யை) மேட்டுப் பயிரை உழுதவனும் கெட்டான்; மேட்டுப் பயலைத் தொட்டவனும் கெட்டான். (பயிரைத்) மேட்டுப் பாளையத்துப் பருப்பு நீலகிரியில் வேகாது. மேயப் போகிற மாட்டுக்குக் கொம்பிலே புல் கட்ட முடியுமா? மேயப் போகிற மாட்டுக் கொம்பிலே புல்லைக் கட்டிக் கொண்டு போகிறதா? 17360 மேயப் போகிற மாட்டுக்குக் கொம்பிலே புல்லைக் கட்டியா அனுப்ப முடியும்? மேய்க்காமல் கெட்டது மாடு; பாய்ச்சாமல் கெட்டது பயிர். மேய்க்காலில் ஊட்டினால் பல்லாயில் பால் ஏது? மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம். மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்ததாம். மேய்கிற மாட்டைக் கெடுத்ததாம் மெனக் கெட்ட மாடு. மேய்கிற மாடு நக்குகிற மாட்டை இழுத்துக் கொண்டு போயிற்றாம். மேய்கிற மாடு புல்லைக் கட்டிக்கிட்டுச் செல்லாது. மேய்கிற நாளைக்குப் பால் பீச்சிக் குடித்தது லாபம். மேயப் போற மாடு கொம்புல புல்லைச் சுத்திக்கிட்டா போகும்? 17370 மேய்த்தால் கழுதையை மேய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன். (மாமியாரை, மைத்துனியை) மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன். மேய்த்துத் தெளியாத மாடு தேய்த்துத் தெளியும். மேய்ந்த காட்டிலேயே மேயும். மேய்ப்பவன் போனால் ஆடு தொழுவத்தில் இருக்குமா? மேய்ப்பான் கண்ணிலும் உடையவன் பிடரி நலம். மேய்ப்பு பாதி; தேய்ப்பு பாதி. மேருவை அடைந்த காகமும் அமிர்தம் உண்ணும். மேருவைச் சார்ந்த காகமும் பொன்நிறமாம். மேலே பார்த்தால் சிங்காரம்; உள்ளே பார்த்தால் ஓக்காளம். 17380 மேலே பார்த்தால் மினுக்குத்தான்; உள்ளே பார்த்தால் தொளுக்குத்தான். மேலைக்கு இருப்பாரும் இல்லை; கூலிக்கு அறுப்பாரும் இல்லை. மேலைக்கு உழுவார்; கூழுக்கு அழுவார். மேலைக்குத் தாலி கட்டுகிறேன் கழுத்தே கழுத்தே சுகமாயிரு என்றாற் போல. மேலைக்கே வாழ்க்கை படறேன் கழுத்தே சுகமாயிரு. மேலோர் அறிவு கீழோர்க்கு வருமா? மேல் உதடு இல்லாதவன் வேய்ங்குழலுக்கு அச்சாரம் கேட்டது போல். மேல் காணும் இனிமையால் காலுக்கு நோய், காட்டில் கலுழ்ந்தான். மேழிச் செல்வம் கோழை படாது. மேளக்காரனுக்கு ஏற்ற மத்தளக்கட்டை. 17390 மேளம் கொட்டும் மாமியாருக்கு தாளம் கொட்டும் மருமகன். மேற்குப் பார்த்த மாளிகையை விடத் தெற்குப் பார்த்த குடிசை மேல். மேற்கே மழைபெய்தால் கிழக்கே வெள்ளம் வரும். மேனா மினுக்கியைக் கொண்டவனும் கெட்டான்; மேட்டிலே பயிரிட்டவனும் கெட்டான். (கூட்டுப் பயிரை உழுதவனும்) மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு. (எலும்பே) மேனிக்குத் தின்னு; தீனிக்குத் தின்னாதே. மேனி பசபசப்பும் நோனி கசகசப்பும். மேனியெல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள். மேன்மக்கள் சொல் கேள்.  மை மை இட்ட கண் கைவிட்டு அழும். 17400 மை கரையாமல் அழுபவள் சமர்த்து. மை கரையாமல் முதுகு ஆட்டு. மைத்துனன் உண்டானால் மலை ஏறிப் பிழைக்கலாம். மைத்துனனும் மைத்துனனும் சேர்ந்தார்கள் என்றால் ஒரு மயிராண்டி தேவையில்லை. மைத்துனனை விட உறவு இல்லை, மயிரை விட கருப்பு இல்லை. மை மை சுந்தரி; கதவை ஒஞ்சரி. (மகிமை) மையலை ஊட்டும் மாதரின் மகிமை. மைவிழியார் மலர விழித்தால் மண்டலப் பத்து ராசாக்களும் பெண்டாள வருவார்கள். மை விழியாள் மனை அகல். மைவிழியாள் தன்னைக் கைவிட்டு ஒழுகு.  மொ 17410 மொச்சைக் கொட்டை தின்றாலும் பொச்செரிப்பு; மோர் விட்டுச் சாப்பிட்டாலும் பொச்செரிப்பு. மொட்டை இட்டால் கட்டை இடும். (குழந்தைக்கு) மொட்டைச்சிக்கு முழங்காலில் பிள்ளை. மொட்டைச்சி முண்டைக்குக் கல்யாணம் ஆகி அவள் திட்டுத் திடுக்கென்று தெருக்கோலம் போனாளாம். மொட்டைச் சோற்றை மோர் மறைக்கும்; குறுமட்டைப் பெண்டாட்டியைப் பிள்ளை மறைக்கும். மொட்டைத்தலை எங்கே என்றால் முழங்காலுக்குக் கீழே என்றானாம். மொட்டைத் தலைக்கு ஒரு தட்டுக்கூடை; மோழைத் தலைக்கு ஒரு தாற்றுக்கூடை. மொட்டைத் தலைக்காரி போட்டாளாம் எட்டுக்குட்டிக் கரணம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது போல. (போடுகிறதா?) மொட்டைத் தலைக்குச் சன்னதம் வந்தால் உள்ள மயிரைக் கொண்டுதான் சிலுப்ப வேண்டும். 17420 மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான். மொட்டைத் தலையன் முழு மோசக்காரன். மொட்டைத் தலையில் பட்டங்கட்டி ஆளவந்தானோ? மொட்டைத் தலையில் முடிக்கலாமோ கொண்டை? மொட்டைத் தலையில் பேய் வருமா? மொட்டைத் தலையில் பேன் சேருமா? (வருமா?) மொட்டைத் தலையைத் தட்டி முடிந்தானாம். மொட்டைத் தாதன் ஊரிலே மொட்டையனைத் தேடியது போல. மொட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தான். மொட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தால் எடுப்பார் இல்லை; பிடிப்பார் இல்லை. 17430 மொட்டை மரம் புயல் காற்றுக்கு அஞ்சாது. மொட்டை மாடும் சரி; கொம்பு மாடும் சரி. மொண்டி சுங்கக்காரன் காற்றுக்கு எழுந்திருந்தால் பொல்லாதவன். மொண்டி மாடு வந்துதான் பட்டி அடைக்க வேண்டும். மொண்டு ஆளுகிற வீட்டிற்குக் கொண்டு ஆண்டா நிறையும்? மொண்டு தின்கிற வீட்டிலே கொண்டு தின்று முடியுமா? மொந்தைக் கள்ளு முரடனுக்குப் போதுமா? மொந்தைச் சோற்றுக்கு மோளம் அடிக்கிறான். (மேளம்) மொந்தைத் தண்ணீரிலே வீடு வெந்துபோனால் மிடாத் தண்ணீருக்கு எப்படி? மொழி தப்பினவன் வழி தப்பினவன். 17440 மொழி தவறாதவன் வழி தவறாதவன். மொழிவது அறமொழி. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். மொறையோ என்றவன் கழுத்தில் லிங்கத்தைக் கட்டினானாம். (முறையோ)  மோ மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்; அதுவும் கழிந்தால் துடைப்பக் கட்டை. மோகனக் கல் ஆனாலும் பளு ஏறினால் உடையாதா? மோசம் செய்வோன் நாசம் அடைவான். மோச நாசம் கம்பளி வேசம். மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது. 17450 மோசம் போனபின் யாசகம் கேட்ட மாதிரி. மோடு போயும் முண்டைக்குப் புத்தி வரவில்லை. மோட்சத்துக்குப் போக மோட்டுவளையா வழி? மோட்டுவளைக்கு வீட்டுக்காரனும் தெரியாது; விருந்தாளியும் தெரியாது. மோட்டை போனால் கோட்டை போகும். மோதிப் பார்க்கத் துணிந்தவன் முடங்கிப் பார்க்கணும். மோதிவரும் பாறையை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியுமா? மோந்த பூவைச் சூடார்; சூடிய பூவை மோவார். மோந்தாற் போல முகத்தைக் கடிக்கிறது. மோப்பம் அறியா நாயும் ஏப்பம் இல்லா விருந்தும் பயன் இல்லை. 17460 மோப்பம் பிடித்த நாயும் தூக்கம் கெட்ட நாயும் சும்மா இரா. மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பானேன்? மோருக்குப் போகிறவருக்கு முட்டி பிறகாலேயோ? மோருக்கும் முலைப்பாலுக்கும் தோசம் இல்லை. மோரைத் தெளித்தாலும் கலியாணம்தான்; மூத்திரத்தைத் தெளித்தாலும் கலியாணம்தான். மோரும் பாலும் ஒரே நிறமானாலும் ஒரே குணமாகுமா? மோர்க்கடன் முகட்டைத் தொடும். மோர் சுடுகிறது என்று ஊதிக் குடித்தாற் போல. மோர் மோரோடே; நீர் நீரோடே. மோர் விற்ற காசு மூன்று நாள்வரும். 17470 மோனம் என்பது ஞான வரம்பு.  மௌ மௌனமாக இருப்பவன் மெல்ல மெல்லக் குடிகெடுப்பான். மௌனமாக மறுக்கிறவள் பாதி இசைகிறாள். மௌனம் உடையாருக்கு வாராது சண்டை. மௌனம் கலக நாசம். (நாதி) மௌனம் சம்மதத்துக்கு அடையாளம். (அறிகுறி) மௌனம் மலையைச் சாதிக்கும். மௌனி குடியைக் கெடுப்பாள்.  யா யாராத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும். யாராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடிப்பார்களானால் நான் பிணக்காடாக வெட்டுவேன். 17480 யாருக்கு யார் சதம்? யாவையும் பாடிக் கோவை பாடு. யானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள். யானை இளைத்தால் எலி கூட எட்டி உதைக்கும். யானை இளைத்தால் எலி வாடின்னு கூப்பிடுமாம். யானை கட்டக் கயிறு தானே எடுத்துக் கொடுக்கும். யானை கருத்தால் ஆயிரம் பொன் பெறும்; பூனை கருத்தால் என்ன பெறும்? யானை காணாமல் போனால் குண்டு சட்டியிலா தேடுவது? யானை கொழுத்தால் பாகனுக்கு அடங்காது. யானைக்கு அறுபது அடி; அருங்குள்ளனுக்கு எழுபது அடி. 17490 யானைக் கபடும் பூனை திருடும் காண முடியாது. யானைக்கு இல்லை கானலும் மழையும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். யானைக்குக் குறடாவும்; அன்னத்திற்கு மிளகாயும் இட வேண்டும். யானைக்குக் கோவணம் யாரால் கட்ட முடியும்? யானை சாய்ந்தாலும் தலை மட்டம். யானை தலைமேலே தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல. யானை தொட்டாலும் மரணம் வரும். யானை படுத்தால் குதிரை மட்டம். யானை பெருசா விட்டை போட்டா பூனை புழுக்கையாவது போடும். 17500 யானை போவது தெரியாதாம்; ஒட்டகம் போவது தெரியுமாம். யானைப் பசிக்குச் சோளப் பொரி. யானை மிதிக்கப் பிழைப்பது உண்டோ? யானை முன்னே முயல் முக்கினது போல. யானை மேல் ஏற ஆசையாயிருக்குதாம்; கால் எட்ட வில்லையாம். யானை மேல் இருப்பவன் நாயின் குரைப்புக்குப் பயப்பட மாட்டான். யானை மேல் போகிறவனைச் சுண்ணாம்பு கேட்பது போல. யானையிலே பிடித்தால் பானையிலே வந்தடங்கும். யானையின் வாலைப் பிடித்துக் கடை ஏறலாம்; பூனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறமுடியுமா? யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத் திற்கு ஏமாந்து நிற்பானேன். 17510 யானையைக் கொண்டு யானையைப் பிடிக்க வேண்டும். யானையை விற்றா பூனைக்கு வைத்தியம் செய்வது? யானையும் அடங்கும் அங்குசத்தினால். யானையை வென்றவன் பூனையை வெல்லமாட்டானா? யானை வந்தால் ஏறுவேன்; சப்பாணி வந்தால் நகருவேன். யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே. யானை வாய்க்குப் போன கரும்பு மீளாது. யானை விழுந்தால் கொம்பு; பூனை விழுந்தால் கோல். யானை விற்றால் யானை லாபம்; பானை விற்றால் பானை லாபம்.  வ வகை அறிந்து செய்தால் வாதம் பலிக்கும். 17520 வகை தொகை இல்லாத பேச்சும் புகையில்லாத பாக்கும் வழவழா கொழகொழா. வகை மடிப்பிலே மாட்டிக் கொண்டது. வகையறியாமல் வண்ணான் கூடப் போனால் விடியவிடிய வெள்ளாவிக்குத் தீ எரிக்க வேண்டும். வகையில்லாமல் வண்ணானிடம் சிக்கிக் கொண்டால் விடியவிடிய வெள்ளாவி எரிச்சுத் தானே தீரனும். வக்கணைக்காரன் புளுகு வாசற்படி மட்டும். (வங்கணக்காரன்) வக்கீலும் வைத்தியனும் வாசற்படியில் நாய்கட்டி வைத்தாற் போல. வக்குச்சிக்காய் மாட்டிக் கொள்கிறது. (வாக்குச்சாக்காய்) வங்கத்துக்கு நிகர் வங்கம்; தங்கத்துக்கு நிகர் தங்கம். வங்கம் கட்டினால் தங்கம். வங்கம் குத்தத் தங்கம் தேயுமா? 17530 வங்கம் கெட்டால் பங்கம். வங்கம் தின்றால் தங்கம்; வங்கம் கெட்டால் பங்கம். வங்கரை கொங்கரையாய் மாட்டிக் கொள்கிறது. வங்காயக்காரனுக்கு வாய்க் கொழுப்பு சீலையில் வழிகிறது. வங்காளத்து நாய் சிங்காதனம் ஏற, வண்ணாரக் குடிநாய் வெள்ளாவி ஏறிற்றாம். வங்காளம் போனாலும் வாய்ச்சொல் ஒருகாசு; ஈழம் போனாலும் துடுப்பு ஒரு காசு. வங்காளம் போனாலும் வாரியல் வாரியல்தான். வங்காளம் போனாலும் விளக்குமாறு கால் பணம். வங்கு பிடித்த நாய் வழியில் நின்றாற் போல. வங்கை வைத்தால் தன் குடிக்கு அனர்த்தம். 17540 வசனம் பண்ண உபாயம் காரணம். வசிட்டர் வாயால் பிரம்மரிசி பட்டம் வாங்கினாற் போல. வசை கேட்காவிட்டாலும் வாசப்படி கேட்குமாம். வச்சத்துக்கு மேலே வழி இல்லை; பிச்சைக்குப் போகச் சுரைக் குடுக்கை இல்லை. வச்ச நாபியிலே புழுத்த புழு. வச்ச நாபியை உப்புப் பார்க்கலாமா? வச்சிரம் அளந்த கையால் வைக்கோல் துரும்பு எடுக்கலாயிற்று. வச்சு அழுகிறதுக்குச் செத்து அழுகலாம். வஞ்சகம் நெஞ்சைப் பிளக்கும். (அடைக்கும்)(வஞ்சனை) வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும். (வஞ்சனை) 17550 வஞ்சகர் உறவை வழுவி விலகு. வஞ்சகருக்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சில் நேசம் கொள்ளார். (வாஞ்சை) வஞ்சகருக்குப் பால் ஊட்டினால் நஞ்சுதான் பதிலுக்குக் கிடைக்கும். வஞ்சகர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும். (வஞ்சகருக்கு) வஞ்சகன் நெஞ்சறிய பொய் சொல்ல அஞ்சமாட்டான். வஞ்சத்தவனை ஒரு போதும் நம்பாதே. வஞ்சித்து நெடுங்காலம் வாழ்தலினும் மரணம் அடைதலே நலம். வட காற்று அடிக்க வந்தது மழையே. வட கோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன? வளர்பிறைக்கே? வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பலாகாது? 17560 வடக்கத்தி யானையை அடித்தால் தெற்கத்தி யானைக்குப் புத்தி வரும். வடக்குப் பார்த்த மச்சு வீட்டினும் தெற்குப் பார்த்த தெருத் திண்ணை நல்லது. (திண்ணை வீடு) வடக்குப் பார்த்த மச்சு வீட்டிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது. வடக்கே கருத்தால் மழை வரும். வடக்கே பிறை சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல். வடக்கே (பிறை) சாய்ந்தால் வரப்பெல்லாம் கூடை; தெற்கே (பிறை) சாய்ந்தால் தெருவெல்லாம் கூடை. வடக்கு வாசல் மாடிவீட்டை விடத் தெற்கு வாசல் குடிசை வீடு மேல். வடமன் ஒருகுடியும்; அவரை ஒரு கொடியும் வடலியை வெட்டி ஆள்; எருமையைக் கட்டி ஆள். வடலி வளர்ந்து கள்ளைக் குடிக்கிறதா? 17570 வடவாக்கினியைக் கூடக் கடைவாயில் அடைக்கிற பிள்ளைக்கு வாழைப்பழம் தின்கிறது வருத்தமாயிருக்குமா? வடிக்கட்டின முட்டாள். வடிக்கிறது நாழி; அகப்பை பதினாறு; நீயும் பிள்ளைத் தாய்ச்சி நானும் வேலைக்காரன்; பார்த்து வட்டித்துப் பழையது மீத்தடி. வடித்த கஞ்சி கொடுக்காத சிற்றப்பன் வாய்க்கால் கரை மட்டும் வழி வந்தானாம். வடித்த கஞ்சி வார்க்காத சிற்றப்பன் வழித்துக் கொண்டானாம் பணம் இட. வடித்தால் காணுமா? பொங்கினால் காணுமா? வடிவத்திலே மன்மதன்; குணத்திலே எமதருமன். வடுகச்சி அம்மா வால் அம்மா, வாசலைப் பிடித்துக் கொண்டு தொங்கம்மா? வடுகச்சி காரியம் கடுகுச்சு, முடுகுச்சு. வடுகத்துரட்டு மகாவில்லங்கம். 17580 வடுகத்துறடும் துலுக்க முரடும். வடுக வில்லங்கமாய் வந்து வாய்த்தது. வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிரிட்ட கதை. வடுகனையும் வயிற்று வலியையும் நம்பக்கூடாது. வடுகு கொழுத்தால் வறையோட்டிற்கும் ஆகாது. வடுகு பொடுகாச்சு; வைக்கோல் போர் நெல்லாச்சு. வடையைத் தின் என்றால் பொத்தலை எண்ணுகிறான். வடையைத் தின்னச் சொன்னார்களா? துளையை எண்ணச் சொன்னார்களா? வட்டம் சுற்றியும் வழிக்கு வர வேண்டும். வட்டம் சுற்றி வழியே வா. 17590 வட்டி ஆசை முதலுக்குக் கேடு. (முதலைக் கெடுத்தது) வட்டி ஓட்டம் விழா ஓட்டத்திலும் அதிகம். (வாத) வட்டிக்கு அளந்தாயோ? வயிறெரியப் போனாயோ? வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழந்தான். வட்டிக்குக் கொடுத்த பணம் வாய்க்கரிசிக்கு உதவாது. வட்டிக்கு வட்டி எதிர்வட்டியா? வட்டிக்கு விட்டு அட்டிகை வாங்கினாளாம்; அட்டிகை விற்று வட்டி கட்டினாளாம். வட்டி குட்டி போடும். வட்டி தூங்காது. வட்டிப் பணம் இரவிலும் வளரும். 17600 வட்டியும் முதலும் கண்டால் செட்டியார் சிரிக்காரா? (சிரிப்பார்) வட்டியை நம்பி முதலை இழப்பரோ? வட்டிலுக்கு வழி வாய் வைத்த இடம். வட்டிலை வைத்து வறுக்கச் சொன்ன கதை. வட்டிற் சோற்றைப் பங்கு இட்டாலும் வாழ்வைப் பங்கிட மாட்டார்கள். வட்டுவத்திலே சொட்டு விழுந்தால் பாக்கு வெட்டிக்கு வேறே கரண்டகத்துக்கு வேறேயா? வட்டுவத்தின் மேல் சொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்திரம் படும்? வணங்கா முடியால் கேடு வரும். வணங்கின காலில் முள் தைக்காது. வணங்கின புல் பிழைக்கும். (வணங்கிய) 17610 வணங்கின முள்ளு தைக்குமா? வணங்காத புல்லு தைக்குமா? வணங்கின வில் தீங்கை விளைக்கும். வணங்கின வில் தைக்கும்; வணங்காத வில் தைக்காது. வணிகரும் வழக்கறிஞரும் பொய் சொல்லாமல் இருக்க முடியுமா? வணிகர்க்கு அழகு வாணிகம் செய்தல். வண்டப்பயலுக் கேற்ற சண்டிப் பெண்சாதி. (சண்டப்) வண்டிக்காரன் சொந்தமானால் வழியெல்லாம் சொந்தம். வண்டிக்குப் போனவனும் கண்டிக்குப் போனவனும் வந்தால் தான் நிலை. வண்டிப் பாரம் பூமியிலே. வண்டியில் ஓடம் ஏறும்; ஓடத்தில் வண்டி ஏறும். 17620 வண்டி நிறைந்தாலும் மனசு நிறையாது. வண்டிப் பானை வயிறு; வறட்டுப் பானை வீடு. வண்டி வந்தால் வழி உண்டாகும். வண்டி வந்தாலென்ன? வண்டி போனால் என்ன? கொண்டு வந்தால் தானே கொண்டாட்டம்! வண்டு ஏறாத மரமில்லை. வண்டு தூரத்திலே பூவின் வாசனை அறியும். வண்ணக் குதிரை மண்ணைத் தின்கையில் தட்டுவாணிக் குதிரை கொள்ளுக்கு அழுகிறதாம். வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான். வண்ணாத்தி மூத்திரம் ஆத்தோட. வண்ணாத்தி மூத்திரம் ஆத்தோட போனால் என்ன? குளத்தோடு போனால் என்ன? 17630 வண்ணாரச் சித்து வழியிலே; தட்டாரச்சித்து தரையிலே. வண்ணானிடத்தில் துணியைப் போட்டுக் கொக்கின் பின்னே அலைந்தாற்போல. வண்ணானுக்கு உழைத்த கழுதையும், வாணியனுக்கு உழைத்த காளையும் சரி. வண்ணானுக்கு நோவு வந்தால் கல்லோடே. வண்ணானுக்குப் போனான் வண்ணாத்திக்கு வந்தான். வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன? வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை; வண்ணாத் திக்குக் கழுதை மேல் ஆசை. வண்ணானுக்கு வந்ததும் இல்லை; செம்மானுக்குப் போனதும் இல்லை வண்ணான் காடு போடுவதும் இல்லை; கழுதை உழவுக்கு வருவதும் இல்லை. வண்ணான் கிட்ட புடவையைப் போட்டுவிட்டுக் கொக்குப் பின்னால் போனாளாம். 17640 வண்ணான் கெடுத்தது பாதி; வாதி கெடுத்தது பாதி. வண்ணான் சித்து வழியிலே. வண்ணான் துறைக் கல் என்றால் வந்தவர்கள் எல்லாம் துவைக்கத்தான் செய்வார்கள். வண்ணான் துறைக் கல்லிலே வந்தபேரெல்லாம் துவைக்கலாம். வண்ணான் துறையிலே கல் கிடந்தால் வந்தவன் போனவன் தப்புவான். வண்ணான் துவைக்கும் வேட்டி ஆற்றோடு போனால் என்ன? குளத்தோடு போனால் என்ன? வண்ணான் தோய்க்கத் தண்ணீர் பாய்ச்சினால் கல்யாணத் துக்குக் காய் பறிக்கலாம். வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று. வண்ணான் பெண்ணுக்கு அம்பட்டன் துடுப்பு கொடுத்தது போல. (துரும்பு) வண்ணான் வீட்டு நாய் வீட்டுக்கும் உதவாது; துறைக்கும் உதவாது. 17650 வண்ணான் வெள்ளாவித் துணியிலே நாய் பேண்ட மாதிரி. (ஏறின) வதை கேட்காட்டியும் வாசப்படி கேட்கும். வத்திரம் உடையான் அவைக்கு அஞ்சான்; வாகனம் உடையான் நடைக்கு அஞ்சான். வந்த அளவிலே சிறுக்கி பந்து அடித்தாள்; வர வரச் சிறுக்கிச் சோர்ந்து போனாள். வந்த அன்றைக்குப் பப்பாளி இனிக்குது; வரவர துவரம் பருப்பு துவக்குது. வந்த காசுக்கு வட்டம் இல்லை. வந்தக்கால விட்டுவிட்டுப் பந்தக்காலைப் பிடித்தானாம். வந்த காரியத்தைக் கவனிக்காமல் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நின்றானாம். வந்த கூத்து ஆடித்தானே தீர வேண்டும். வந்த சண்டையை விடக் கூடாது; வலுச் சண்டைக்குப் போகக்கூடாது. 17660 வந்த சண்டையை விடுவதும் இல்லை; வலிய சண்டைக்குப் போவதும் இல்லை. வந்த சிறுக்கியைப் பார்த்து இருந்த சிறுக்கி உச்சிக்கு ஏறிவிட்டாள். வந்தட்டிக் காக்காய் வரப்பிலே; ஊர்க்காக்காய் கரையிலே. வந்தது கப்பல்; மலர்ந்தது தொப்பை. வந்தது போய்விடும்; இருக்கிறது போகாது. வந்ததை வரவில் வை; வராததைச் செலவில் வை. வந்தது எல்லாம் கொள்ளும் மகாராசன் கப்பன். வந்தது எல்லாம் வலுப்பெற்றிடுச்சு; இருந்தது எல்லாம் ஈடேறவில்லை. வந்த பின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல். வந்த பின் காப்பவனைவிட வருமுன் காப்போன் புத்திசாலி. 17670 வந்த மாடு கட்டுவதும் இல்லை; கெட்ட மாடு தேடுவதும் இல்லை. வந்தவர் எல்லாம் சந்தையிற் குடியா? வந்தவனுக்கு இலை; வராதவனுக்கு உலை. வந்தவள் வலுத்தாள்; இருந்தவள் இளைத்தாள். (கெட்டாள்) வந்த வினை போகாது; வராவினை வராது. வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தைக் கொண்டு போனதாம். (தள்ளினது) வந்தாரை வாழ வைக்கும்; மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும். வந்த வேலையை விட்டுவிட்டுப் பந்தற்காலைப் பிடித்தானாம். வந்தால் சும்மா வரும்; வராமல் போனால் ஒன்றும் வராது. வந்தால் செலவு; வராவிட்டால் மிச்சம். 17680 வந்தால் வரவு; வராவிட்டால் செலவு. வந்தாற் போல் சிறுக்கி பந்து அடித்தாள், வர வரச் சிறுக்கி நொண்டிப் போனாள். வந்தாற் போல மாமி பந்து அடித்தாள், வர வர மாமி கழுதை மேய்க்கிறாள். வந்து பார்த்தால் தெரியும் வகிசு எல்லாம். வம்சம் வார்த்தைக்கு அஞ்சும்; புழுக்கை உதைக்கு அஞ்சும். வம்பனுக்கு வழி எங்கே? போகிறவன் தலை மேலே. வம்பான கோயிலுக்கு வரத்துக்குப் போய் ஒன்பது பிள்ளையை ஒருமிக்கக் கொடுத்தாளாம். வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு. வம்புச் சண்டைக்குப் போகாதே; வந்த சண்டையை விடாதே. வம்பி இருந்த மனை பாழ்; தும்பி இருந்த தூண் பாழ்; அறந்தாங்கித் தம்பி இருந்த தரை பாழ். 17690 வம்பி மகள் மழலை வார்த்தை கேட்டு ஆடவரைத் தம்பி என்று அழைக்கத் தலைப்பட்டாள். வம்பிலே வருகிறது; குண்டாறு பெருகிறது. வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ? வம்பும் தும்பும் வாய்க் கொழுப்பால் வரும். வம்பை விலைக்கு வாங்கினாற் போல. வயக்காடு பெருத்தவனுக்கு வரப்பு விளைச்சலுங் கூட வண்டிப்பாரம் ஏறுமாம்; வயிற்றுப் பாட்டுக் காரனுக்கு வயல் விளைச்சல் கூட வாசல் கோழிக்குப் பற்றாதாம். வயதுக்கு ஆடின தேவடியாள் வயதுசென்றபின் கழுதை மேய்ப்பாள். வயதுக்குத் தகுந்த புத்தி; வல்லமைக்குத் தகுந்த சலுகை. வயதுக்கு மூத்தவனைக் கட்டி மாரடிப்பது போல. வயதுக்கோ நரைத்தது? மயிருக்கோ நரைத்தது? 17700 வயது சென்றால் மதியும் தளர்ந்து போகுமா? வயதுப் பிள்ளை கிளுகிளுப்பு; விதத்துக்கு ஒரு நடநடப்பு. வயதுப் பெண்ணுக்குத்தான் வயதுக்காலம்; கிழத்துக்கு என்ன கேடுகாலம்? வயல் முயற்சியில் தானியம் உண்டாம். வயல் விளைந்து உண்ண வேணும்; வரப்பு விளைந்து உண்ணலாமா? வயல் விளையாமல் வரப்பா விளைந்து விடும்? வயிறு எரிந்த பார்ப்பான் கபிதலம் போனானாம்; அங்கே இரண்டு பார்ப்பான் எதிரே வந்தானாம். வயிறு கூழுக்கு அலையுதாம்; கொண்டை பூவுக்கு அலையுதாம். வயிறு நிரம்பினாலும் கண் நிரம்பாது. வயிறு நிரம்பினால் பானை மூடான். (நிறைந்தால்) 17710 வயிறு நிறைந்தால் வாழ்வு விடியும். வயிறு நிறைய சாப்பிட்டால் கண் நிறைய தூக்கம் வரும். வயிறுபசித்தால் வைத்த இடத்தைப் பார். வயிறு முட்டச் சாப்பிட்டால் வயிற்றால் தான் போகும். வயிறா வண்ணாந்தாழியா? வயிற்றில் அடிக்காமல் முதுகில் அடி. வயிற்றில் அடித்தால் எல்லாம் போகும். வயிற்றில் இருக்கிற பிள்ளையை நம்பினாலும் வல்லத்தானை நம்பக் கூடாது. வயிற்றில் இருக்கிற பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைக் கொன்றாற் போல. வயிற்றில் குழந்தை கழுத்தில் தாலி. 17720 வயிற்றில் பிறந்த பிள்ளையும் கொல்லையில் காய்ந்த கறியும் சமயத்துக்கு உதவும். வயிற்றிலே பசி; வாயிலே சிரிப்பு. வயிற்றில் பல்லுடையார் வஞ்சகர்கள். வயிற்றிலே பிறந்தால் என்ன? விலாவிலே பிறந்தால் என்ன? வயிற்றின் வெப்பம் வாழ்வைக் கெடுக்கும். வயிற்று எரிச்சல் பெண்சாதிக்கு மாலைக்கண் ஆம்புடையான். (வயிற்று வலிக்காரிக்கு) வயிற்று எரிச்சலைச் சொல்கிறேன்; வாடி புழைக்கடைக்கு என்றானாம். வயிற்றுக்குச் சோறும் இடுப்புக்குத் துணியும். (தண்ணியும்) வயிற்றுக் குடல் வாயில் வரக்குட்டுகிறதா? வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழைநார் என்கிறான். 17730 வயிற்றுச் சோற்றுக்காக வைத்தீசுவன் கோயிலில் மட்டும் நடப்பான். வயிற்றுச் சோற்றுக்காரனுக்கு மலம் போனது இலாபம் வயிற்றுச் சோற்றுக்கு வந்தவனுக்கு வாய் ஒரு கேடா? வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு. வயிற்று பிள்ளையை நம்பிக் கைப்பிள்ளையைக் கை விட்டாளாம். (ஆற்றில் விட்டாளாம்) வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடுமேய்க்கிற பிள்ளையைக் கொன்றாளாம். வயிற்றுப் புண்ணுக்கு வாழைப் பிஞ்சு. வயிற்றுவலிக்கு இடம் கொடுத்தாலும் வைஷ்ணவனுக்கு இடம் கொடுக்கல் ஆகாது. வயிற்றுவலியை விலை கொடுத்து வாங்குவார்களா? வயிற்று வலிக்குக் கட்டிலைத் திருப்பி போட்டாற் போல. 17740 வயிற்று வலியை நம்பினாலும் வடுகப்பயலை நம்பாதே. வயிற்றை அறுத்தாலும் வாகாய் அறுக்க வேண்டும். வயிற்றைக் கட்டினவளுக்கு ஆம்புடையான்; வாயைக் கட்டினவளுக்குப் பிள்ளை. வயிற்றைக் கட்டிக் கிழித்துப் பார்த்தால் வாமடை கூடக் கிடையாது. வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் கண் கட்டு வித்தை என்பார்கள். வயிற்றைப் பிடித்து நிழலில் இருந்தால் மலடிக்கு மசக்கை. வயிற்றைப் புரட்டுகிறது வரகரிசிச் சோறு; வாய் நீர் கொளுத்துகிறது கம்பங்கூழ்; பொறுக்கப் போகவில்லை புளியம்பூரசம்; என் பொன்னான பிறந்தகம் போய்வருகிறேன். வயிற்றை விட்டுக் கழிந்தாலும் வீட்டை விட்டுக் கழியவில்லை. வயிற்றோட்டம் உள்ளவனும் வட்டி கொடுத்தவனும் கெட்டான். வரகு அடித்த கம்பை வரகின் மேல் வைத்துதான் கட்டுவர், விறகு அடித்த கம்பை விறகின் மேல் வைத்துதான் கட்டுவர். 17750 வரகுச் சோற்றிலே நெய்விட்டால் வாசம் இருக்காதாம். வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும். வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோ உயரும். வரப்பு ஏறித் தாண்ட மாட்டான்; அவன் பேர் தாண்ட வராயன். வரப்பு சும்மா இருந்தாலும், வாய்க்கால் சும்மா இருக்காது. வரப்பு வழக்குக்கு வக்கீலிடம் போனால் நிலத்தை விற்றுப் பீசு கட்டச் சொன்னானாம். வரப்பு வெட்டினவன் வயல் விளைச்சல் இல்லை. வரப்பே தலையணை; வைக்கோலே பஞ்சு மெத்தை. (வாய்க்கால்) வர வரக் கொள்ளும் மகராசன் கப்பல். வர வரத் தெரியும் மெய்யும் பொய்யும். 17760 வர வர மாமியார் கழுதை போல் ஆனாள். (ஆனாளாம்) வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்; ஊர்கிட்டே வந்து ஊளையிட்டு வந்தாள். வரவிலே தீயா? செலவிலே தீயா? வரவுக்குத் தகுந்த செலவு; மாப்பிள்ளைக்குத் தகுந்த மஞ்சம். வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு. வரவுக்கு ஏற்ற செலவு; விரலுக்கு ஏற்ற வீக்கம். வரவு கொஞ்சம்; வலிப்பு மெத்த. வராத நோய் வந்தால் குடியாத மருந்தைக் குடி. வராதவரை வருந்தி அழை. வரிசை பெற்ற மாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம். 17770 வரிசையும் இல்லை; அரிசியும் இல்லை. வரி போடேல்; கேட்டைத் தேடேல். வரியோடு இருந்தால்தான் புலிக்கு அழகு; வள்ளுன்னு குரைத்தால்தான் நாய்க்கு அழகு. வரிவிழுந்த புலியைப் பார்த்து நரியும் கொள்ளிக் கட்டை எடுத்துச் சுட்டுக் கொண்டதாம். வருகிறகாலத்தில் எல்லாமே வரும்; போகிற காலத்திலே தூசி கூட மிஞ்சாது. வருகிறபோது எல்லாம் வரும்; போகிறபோது எல்லாம் போகும். வருகிறபோது எல்லாம் வலிய வரும்; வந்தபின் போகிறபோது எல்லாம் போகும். வரும் காலம் சொல்லும் கவுளி, வலியக் கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல. வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமோ? வருசம் நூறு ஆனாலும் ஆனை கறுவும். 17780 வருத்தம் இல்லாமல் இலாபம் இல்லை. வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா. வருந்தி அழைத்தால் வாராதது இல்லை. வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிற போதுதான் வரும். வருந்தினால் திருந்தும். வருந்தினால் வாராதது ஒன்றும் இல்லை. வரும் சொல் வாயிலே. வரும்முன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினது போல. வரும்போது தூண்டிற் கயிற்றின் வழியால் வந்தது; போம்போது இரும்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு போயிற்று. 17790 வரும் விதி எங்கு இருந்தாலும் வரும். வரும் விதி வந்தால் படுவது படவேண்டும். (படும்விதி) வரும் விதி வந்தால் வளைந்தாடும் பானை. வரும்வினை வழியில் நிற்காது. வருவது சொன்னேன் படுவதுபடு. வருவது தெய்வத்தால் கெடுவது கர்வத்தால். (அழிவது) வருவது வந்தே தீரும். வருவது வந்ததென்றால் படுவது படவேண்டும். வருவான் குருடன்; விழுவான் கிணற்றிலே. வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக்கூடாது. 17800 வலிமைக்கு வழக்கு இல்லை. வலிய கூப்பிட்டாள்; போடி சீக்குக்காரின்னானாம். வலிய தானம் செய்தால் வம்புதான் வந்து சேரும். வலியப் (பெண்கொடுக்கப்) போனால் குலம் என்ன? கோத்திரம் என்ன? என்பார்கள். வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா? (உதைக்கலாமா?) வலியவனுக்கு இடம் கொடுத்தாலும் வயிற்றுவலிக்கு இடம் கொடுக்கக் கூடாது. வலியவனுக்கிட்ட வழக்கு உண்டா? வலிய வந்தால் கிழவி. (கிராந்திகாரி) வலியவன் எடுத்தது வழி. 17810 வலியான் எடுத்ததே வாய்க்கால்; வலவான் ஆட்டியதே பம்பரம். (வல்லவன்) வலுசப் பயலுக்கு இல்லாத நோம்பியும், வயிற்றுக்கு இல்லாத சோறும் எதுக்காகப் போகிறது? (நோம்பு - விழா, சிறப்பு) வலுத்தால் கரும்பு; இளைத்தால் இரும்பு. வலிவிக்கப் போனால் சாதிக்கு இளப்பம். வலைக்கு முன்னே கல்லெறிந்த கதை. வலையனுக்குக் கொடுக்கிறதை வங்குலே கொட்டலாம். வலையன் பிடித்த மீனுக்கு நுளையன் இட்டதே பேர். வல்லத்திலே வம்பு கிடைக்கவில்லை என்றால் கார் ஏறிப் போய் வலங்கை மானில் வம்பு இழுப்பான். வல்லவனாக்க வல்லாரை. 17820 வல்லவனுக்கு எல்லாம் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வல்லவனுக்கும் உண்டு வழுக்குப் பாறை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. (இருப்பான்) வல்லவனையும் தட்டும் வழுக்குப் பாறை. வல்லவன் ஆட்டின பம்பரம் மணலிலும் ஆடும். வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்; சேற்றிலும் ஆடும். வல்லவன் போனது வழி. வல்லவன் வெட்டிய வாய்க்கால் வடக்கும் போகும்; தெற்கும் போகும். (வல்லான் வகுத்த) வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாது இரார்கள் சுத்த வீரர்கள். (சொல்லாதவர்களா சுத்தவீரர்கள்) 17830 வல்லான் கொல்லை வாழைப்பழம் ஆகும். (கொள்ளை) வல்லாள கண்டியை வா என்றால் வருவாள்; போ என்றால் போவாளா? வல்லாள கண்டி; வாழைக்காய் சுண்டி. வல்லாளன் சொன்னதே வழக்கு. வல்லான் வகுத்ததே வாய்க்கால். வல்விலைக் கூறையும் மெல்விளைக் காளையும் ஆகா. வவ்வுதல் செவ்வியைக் கெடுக்கும். வழக்கில் விழுந்தவனுக்கும் வழுக்கி விழுந்தவனுக்கும் கை கொடுக்கக் கூடாது. வழக்குக்குப் போனால் வக்கோடு போ. வழலை முடித்தவன் வாதம் முடித்தவன். 17840 வழவழத்த உறவைக் காட்டிலும் வைரம் பற்றிய பகை நன்று. வழி ஆச்சுது; காரியம் வெளியாச்சுது. வழிக்கி விழாத குதிரை வளமான குதிரை. வழி தெரியாமல் வண்ணானோட போனால் அவன் விடியுமட்டும் வெள்ளாவி வைக்கச் சொல்லி அடிப்பான். வழி நடை வார்த்தை வாகனம் போல. வழிப்பிள்ளையாருக்குக் கடைத் தேங்காயை எடுத்து உடைத்தாற் போல. வழிமறித்தான் பூண்டு வட்டமிட வைக்கும். வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் புரி கடிவாளம். (பழுதை) வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலின் மேல் போட்டுக்கொள்வானேன்? வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலில் போட்டுக் கொண்டு குத்துது குடையுதுன்னானாம். 17850 வழியில் போகிற சனியனை விலைக்கு வாங்கினாற் போல. (வாரத்துக்கு) வழியில் போகிறவனை அண்ணே என்றால் உன்னோடு பிறந்தேனா மல முண்டை என்பானாம். வழியில் போவதை எடுத்து மடியில் இட்டது போல. வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்? வழியே ஏகுக; வழியே மீளுக. வழியோட போகிறவனை அண்ணேண்னாளாம்; உன்னோட பொறந்தவன் யாருன்னானாம்? வழிவழியாய்ப் போகும் போது விதி என்ன செய்யும்? வழிவழியாய்ப் பேளானாலும் விதிவிதியாய் வருகிறது. வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை. வழுக்கைத் தலையனுக்குச் சீப்பு எதற்கு? 17860 வளமை கொத்தமல்லி வறுக்கப் போயிருக்கு; சீமை கொத்த மல்லி சிமிட்ட வந்திருக்கு. வளம் மிகுந்தவனும் தூங்க மாட்டான்; வறுமையாளனும் தூங்க மாட்டான். வளரும் காய் பிஞ்சிலே தெரியும்; விளையும் பயிர் முளையிலே தெரியும். வளர்க்கத் தெரியாத இடையன் ஆடுவளர்க்கப் போய் நூறு ஆடும் ஆறு ஆடு ஆச்சு. வளர்கிற வரைக்கும் அண்ணன் தம்பி; வளர்ந்தானானால் பங்காளி. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல. வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறது போல. வளர்த்த பிள்ளை சோறு போடாவிட்டாலும் வைத்த பிள்ளை சோறு போடும். வளர்த்தவனுக்கு மாடு செத்துப் போயிற்றே என்று கவலை, தின்பவனுக்குக் கொழுப்பு இல்லையே என்று கவலை. வளர்த்து விட்ட மரத்தைத் தறித்து விட்டாற் போல். 17870 வளர்ந்த உயரத்தை வாசற்படியிலே காட்டுகிறதா? வளர்ப்பு வக்கணை அறியாது. வளவன் ஆயினும் அளவறிந்து உண். வளைகின்ற வில்லே அம்பு எய்யும். வளைகின்ற முள் நுழையாது. வளைத்த சேறும் வட்டிச் சோறும் தங்காது. வளைத்துப் போனாலும் வழியிலே போக வேண்டும். வளைந்த மூங்கில் அரசன்முடி மேல்; வளையாத மூங்கில் கழைக் கூத்தாடிக் காலின் கீழ். வள்ளுவர் வாக்கு வாய்க்காமற் போகாது. வறட்டு மாடானாலும் ஒரு பீர் பால் கொடுக்காதா? 17880 வறட்டு உழவு குருட்டு உழவு. வறட்டு ஜம்பத்துக்கு வாய் என்ன? வறண்டவளே வாடி! திரண்டவளுக்கு மாவிடிக்க. வறப் போக்கி முண்டலாமா? நாலு மாவு போட்டுக் கிண்டலாமா? வறியார் இருமையும் அறியார். வறியார்க்கு அழகு வறுமையிற் செம்மை. வறுத்த நெல் முளைக்குமா? (பயறு) வறுமை உள்ளவர்க்குப் பொறுமை உண்டு. வறுமை கண்டவர் வையத்தில் அநேகர். வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும். 17890 வறுமையிலும் செம்மையாய் வாழவேண்டும். வறுமை வந்தால் பத்தும் பறந்து போம். வறை ஓட்டை நக்கினால் வாயெல்லாம் கரி. (வறு ஓட்டை) வற்றிய ஓலை கலகலக்கும். வற்றிற்றாம் கள்ளு; வறண்டாளாம் சாணாத்தி; ஊற்றிற்றாம் கள்ளு உதித்தாளாம் சாணாத்தி. வனாந்திரத்து நுழை நரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள். வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.  வா வாகனம் இல்லாமலே பரவும் வதந்தி. வாகனம் உள்ளவன் நடைக்கு அஞ்சான்; பால் உள்ளவன் பந்திக்கு அஞ்சான். வாகனம் உள்ளவன் வழிக்கு அஞ்சான்; வதிரம் உள்ளவன் சபைக்கு அஞ்சான். 17900 வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் இல்லை; வாகான தென்னம்பிள்ளை கண்டவர்கள் இல்லை. வாக்கிலே கெட்ட கழுதையைப் போக்கிலே விட்டுப்பிடி. (விட்டுத்திருப்ப வேண்டும்) வாக்கு அற்றவனுக்கு வாத்தியார் வேலை; போக்கு அற்ற வனுக்குப் போலீசு வேலை. வாக்குக்கு எட்டினது மனதுக்கு எட்டவில்லை. வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை; போக்குக் கற்றவனுக்குப் போலீசு வேலை. வாக்கும் மனதும் ஒத்து வார்த்தை சொல்ல வேண்டும். வாக்கு வாயிலே இருந்தாலும் நாக்குதான் நல்லது சொல்லணும். வாங்க வாங்கக் கடன்; கொடுக்கக் கொடுக்க வட்டி. வாங்கித் தின்றவர்களுக்கு வைத்துத் தின்னப் பிடிக்காது. வாங்கித் தின்றவன் வடக்கே போனான்; சீட்டு என்ன செய்யும்? 17910 வாங்கித் தின்னுமாம் வயிறு; விண்ணாரம் பேசுமாம் உதடு. வாங்கி வந்த வரம் அனுபவித்தே தீர வேண்டும். வாங்கி வந்த குறைக்குத் தாங்கி வந்தவன் என்ன செய்வான். வாங்கின கடன் கொடாத வல்லாளக் கண்டன். வாங்கின கடனைக் கொடுக்கிறது இல்லை; கொடுத்த கடனைக் கேட்கிறது இல்லை. வாங்கின கை எப்போதும் அலுக்காது. வாங்கின கோழியும் சரியாய் இருக்கிறது; வளர்த்த கோழியும் சரியாய் இருக்கிறது. வாங்கினது கொடான்; கொடுத்ததையும் வாங்கான். வாங்கின பேருக்கு வாய் ஏது? வீங்கின பேருக்கு வெட்கம் ஏது? வாங்கினதைப் போலக் கொடுக்க வேண்டும்; கொடுத் ததைப் போல வாங்க வேண்டும். 17920 வாங்குகிறது பிச்சை; ஏறுகிறது தந்தப் பல்லக்கு. வாங்குகிறதைப் போல் இருக்க வேண்டும் கொடுக்கிறதும். வாங்குகிற போது ஒரு பிள்ளை பெற்றது போல; கொடுக்கிற போது ஒருபிள்ளை செத்தது போல. வாங்கும் போதுள்ள குணம் கொடுக்கும் போதில்லை. வாசம் அறிந்தது வேட்டை நாய்; சுவாசம் முறிந்தது காட்டுமான். வாசலில் கட்டித் தாழ்வாரத்தில் அறுத்தது போல. வாசலைக் காக்கக் கள்ளனை நியமித்த மாதிரி. வாசற்படி தலையில்பட்ட பிறகா குனிகிறது? வாசனை அற்ற பூ வனத்தில் இருந்தென்ன பயன்? வாசி விட்டால் யோகம் போச்சு. 17930 வாடிய பூவைச் சூடினாலும் சூடிய பூவைச் சூடக்கூடாது. வாடி வலித்துத் திரங்கிக் கிடந்திடினும் புலித்தலையை நாய் மோத்தல் இல். வாட்டிய ஊமத்தை போக்கிடும் பால்கட்டை. வாணலிக்குத் தப்பி அடுப்பில் குதித்தது போல. வாணிகம் செய்யின் காணியும் குறி. வாணியக் கட்டை வைரக் கட்டை; தேயத்தேயத் துடப்பைக் கட்டை. வாணியன் ஆசை கோணியும் கொள்ளாது. வாணியன் கையில் மண்ணும் குயவன் கையில் எண்ணெயும் கொடுத்தது போல. வாணியனுக்கு ஒருகாலம் சேணியனுக்கு ஒருகாலம். வாணியனுக்குக் கொடாதவன் வைத்தியனுக்குக் கொடுப்பான். 17940 வாணியனோடும் வழக்கு; சேணியனோடும் வழக்கு. வாதங்கள் இல்லை என்றால் வசவுகள் கொலுவிருக்கும். வாதத்தில் கெட்டவன் வைத்தியத்தில் தேறுவானா வாதத்து இயல்பு இடேல். (எடேல்) வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு மருந்து உண்டா? வாத நோய்க்குப் புளிச்சக் கீரை. வாதம் இல்லை என்றால் வசவு கொலுவிருக்கும். வாதம் ஊதியறி; வேதம் ஓதியறி. வாதம் கெட்டால் வைத்தியம். வாதம் கெடுத்தது பாதி; வண்ணான் கெடுத்தது பாதி. 17950 வாதி மகன் வைத்தியன் ஆவான். வாதுக்கு ஆடின கூத்தாடி வயது சென்றால் கழுதை. வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றால் கழுதை மேய்ப்பாள். வாதுக்கு ஆடின தொம்பன் வயது சென்றால் கழுதை மேய்ப்பான். வாதுக்குக் கம்பு இடிக்கக் குதிர்க்கம்பு சேதம். வாது முற் கூறல். வாதுபாடி வண்ணம்பாடு. வாத்தியாரை மெச்சின பிள்ளை இல்லை. வாத்தியார் காசும் வைத்தியர் காசும் வைத்துக் கொள்ளக் கூடாது. வாத்தியார் நின்று கொண்டு பெய்தால் பையன் ஓடிக் கொண்டே பெய்வான். 17960 வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியன் பிள்ளை நோயாளி. வாத்தியார் பெண்சாதி மூத்தவள் பத்தினி. வாத்தியார் மெச்சின பிள்ளையும் இல்லை; மாமியார் மெச்சின மருமகளும் இல்லை. வாய்ச்சி கூரானும் கையிலும் வலு வேண்டும். வாய் பார்த்தவள் வறுத்துக் குற்றினாளாம்; பேசினவள் பச்சைகூட குற்றவில்லை. வாயாடி தான் வல்லவன். வாயாடி மாப்பிள்ளையாக இருப்பதைக் காட்டிலும் வரகூர்க் கூழைக் கடாவாக இருக்கலாம். வாயாடி வார்த்தை மட்டில்லாதவை. வாயாலே கேட்டால் வாழைப் பிஞ்சும் கொடான், தண்டித்துக் கேட்டால் தாரோட கொடுப்பான். வாயாலே சொன்னால் தாயாரை விற்றுக் கொடுக்க வேண்டும். 17970 வாயாலே தின்று வாயாலே கக்கும் வௌவாலைப் போல. வாயாலே வருவதுதான் வாழ்வும் கேடும். வாயாலே வாழ்வு; வாயாலே கேடு. வாயிருப்பதனால் தான் தாய்க்கும் மதிப்பு இருக்கிறது. வாயிலிருக்கிறது வழி (வார்த்தை). வாயில் செரியாமல் வயிற்றில் செரிக்குமா? வாயில் புண்ணிருந்தால் பால் கறக்க முடியாதா? வாயிலே உறவு மனதிலே பகை. வாயில் அடிக்கலாம்; வயிற்றில் அடிக்கப்படாது. வாயில் கலத்தைக் கட்டினால் மாடு வேளைக்குக் குறுணி கறக்கும். 17980 வாயில் மகன் மகன்; வயிற்றில் பகை பகை. வாயில் போகிறதைக் கக்கிக் கொடுக்கிறது. வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது. வாயினால் இல்லை என்கிறதைக் கையினால் இல்லை என்கிறது நலம். வாயுள்ள பிள்ளை பிழைக்கும். வாயுள்ளவன் உள்ளேயாம்; வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியேயாம். வாயைக் கட்டினவளுக்குப் பிள்ளை; வயிற்றைக் கட்டின வளுக்குப் புருசன் வாயைக் கட்டினால் நோயைக் கட்டலாம். வாயைக் கட்டினால் நோய் கட்டுப்படும். வாயைக் காத்தால் தாயைக் காக்கலாம். 17990 வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும். வாயைக் கொடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும். (கையைக்) வாயைக் கொடுத்த தெய்வம் வாழக் கொடுத்து வைக்கவில்லை. வாயைக் கொடுத்துச் சூத்தைப் புண்ணாக்கிக் கிட்டாளாம். வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக்கிட்ட மாதிரி. வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட கதையாக. வாயைக் கொண்டு போனவள் நடுவீட்டில்; வாழைப் பழத்தைக் கொண்டு போனவள் வாசலில். வாயைத் திறந்தால் நாடெங்கும் அசையும். வாயைத் தைத்து மணையில் வைத்தாலும் தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் போதவில்லை என்பாள். வாயைப் பார்த்து ஆளை ஏய்த்தேன். 18000 வாயை மூடித் தலையை வெட்டுகிறது. வாயோ கரும்பு; கையோ இரும்பு. வாய் அறியாது தின்றால் வயிறு அறியாது கழியும். வாய் இருந்தால் வங்காளம் போகலாம். வாய் இருந்தால் வாழச் சொன்னாள்; இல்லாவிட்டால் வந்துவிடச் சொன்னாள். வாய் இல்லாதவன் கழுவிலே இருப்பான். வாய் இல்லாதவன் சொத்து பாவிகளுக்குப் புண்ணியம். வாய் இல்லாதவன் வழக்குரைத்தது போல. வாய் இல்லாவிட்டால் நாய் கூடச் சட்டை செய்யாது. வாய் இல்லாவிட்டால் நாய் கொண்டு போய் விடும். 18010 வாய் உபசாரத்திலே வழி விடுகிறது. வாய் உள்ள பெட்டிக்குத் தூர் இல்லை. வாய் உள்ளவனுக்குக் கலிகாலம். வாய்க்கு அடங்காத பிடி பிடிக்காதே. வாய்க்கு உண்டா வாதம். வாய் கட்டினவளுக்குப் பிள்ளை; வயிறு கட்டினவளுக்கு ஆம்புடையான். வாய் கட்டினவளுக்குப் புருசன்; வயிற்றைக் கட்டினவளுக்குப் பிள்ளை. வாய் கரும்பு; கை இரும்பு. வாய் காய்ந்த புலி ஆள்மேல் விழுந்தது போல. வாய் கைக்கு உபசார வார்த்தை சொல்லுவானேன். 18020 வாய் கொள்ளுவதைத் தானே கொத்த முடியும்? வாய்க் கணக்கு வழக்குக்குச் செல்லாது. வாய்க்கால் வெட்டி வயல் உழு. வாய்க்குணம் கெட்ட நாயைப் போக்கில் விட்டுத் திருப்ப வேணும். (கழுதையை) வாய்க்குப் பிள்ளையும் மற்றதற்கு மாற்றானும். வாய்க் கெட்டியது வயிற்றுக்கு எட்டாது போய் விடுமோ? வாய்க்கொழுப்பு சீலையிலே வடிந்ததாம். வாய்க் கொழுப்பு சீலையில் வடிந்தாற் போல. வாய்க்குச் சுவை வயிற்றுக்குக் கேடு. (ருசி) வாய் சர்க்கரை; கை கருணைக் கிழங்கு. 18030 வாய் சர்க்கரை; கை கொக்கரை (கொக்கரை - கருணைக் கிழங்கு) வாய் சொல்லும்; பிடரி கும்பிடும். வாய் சோர்ந்தவன் சபையில் கெட்டான்; கை சோர்ந்தவன் படையில் கெட்டான். வாய் திறக்க பொய் திறக்கும். வாய்த்தவிடும் போய் அடுப்பு நெருப்பும் போனது. வாய்த்தால் கிழவியும் பாடுவாள். வாய்த்தால் நமக்கு இல்லாவிட்டால் பிள்ளையாருக்கு. வாய் தாராளம்; கை கருணைக் கிழங்கு. வாய் திறக்க பொய் திறக்கும். வாய் நல்லதானால் ஊர் நல்லது. 18040 வாய் நலமோ? ஊர் நலமோ? வாய்ப் பந்தல் நிழல் தருமா? வாய்ப் பந்தல் போட யாரால் கூடாது? வாய்ப் பதற்றம் வரிசை கெடுக்கும். வாய் பார்த்தவள் வாழ்வு இழந்தாள்; அம்பலம் பார்த்தவன் பெண்டு இழந்தான். வாய் பார்த்த வீடு நாய் கொண்டு போயிற்று. (பார்க்கும்) வாய் பார்த்த வீட்டை நாய் நக்குமாம். வாய் பார்த்த வீடு நாய் காக்கும்; வைகாசி மாதம் வறுத்துக் குத்தும். வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? வாய் புளித்த குரங்கு புளியமரத்தை விட்டே இறங்குமாம். 18050 வாய்ப் பேச்சுப் பேசுகிறவன் வளம் இழந்து போவான். வாய்ப் பேச்சைப் பிடுங்கி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறது. வாய் மதத்தால் வாழ்வை இழந்தாள். (வழக்கு) வாய் மதத்தால் வாழ்வை இழந்தான். வாய் மூடாப் பட்டினி; கண் மூடாத் தூக்கம். வாய் மூடித் தலையை வெட்டுகிறதா? வாய் வாழ்த்தாவிடினும் வயிறு வாழ்த்தும். வாய் வாழைப்பழம் கேட்குது; கை கருணைக் கிழங்கு கேட்குது. வாய் வாழைப்பழம்; கை கருணைக் கிழங்கு. வார சூலை பார்த்தா வருகிற சனியன் வரும். 18060 வாரத்தில் உழுத கலப்பையை வளவில் வைக்கப்படாது. வாராத ஞானம் வந்தபோது போகாத இடம் போய் விட்டாளே! வாராத இடத்தில் வார்க்கட்டையைச் சார்த்து. (வார்கோல் கட்டையைச்) வாராத வாழ்வு வந்தாலும் வடக்கில் தலை வைக்காதே. வாரி இறைத்தும் வளவனாகிறதும் உண்டு; இறுகப் பிடித்தும் ஏழையாகிறதும் உண்டு. வாரியல் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமா? வாரியில் கட்டை வைரக் கட்டை; தேயத் தேயத் துடைப்பக் கட்டை. வாரைக் கடித்துத் தோலைக் கடித்துத் தானே வேட்டை நாய் ஆக வேண்டும்? வார்த்தை இருந்து போம்; வழி தூர்ந்து போம். வார்த்தைக்கு வார்த்தை சிங்காரம். 18070 வார்த்தைக்கு விலை உண்டானால் மௌனத்துக்கு அதிக விலை. வார்த்தை வார்த்தையை இழுக்கும்; வடுமாங்காய் சோற்றை இழுக்கும். வால சோசியனும் விருத்த வைத்தியனும் நன்று. வாலிபத்திலே முதிர்ந்த புத்தி குறுகின வயதுக்கு அடையாளம். வாலிபத்தில் இல்லாத மங்கையை வயது சென்ற பின்ன என்ன செய்கிறது? வாலிபத்தில் கிடைக்காத மங்கை வயது சென்ற பின் கிடைத்து என்ன பயன்? வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயது சென்ற பின் தேடப் போகிறாளா? வாலிலே கலத்தைக் கட்டினால் மாடு வேளைக்குக் குறுணி கறக்கும். வாலை ஆட்டினால் நாய்க்குக் கூட ரொட்டி கிடைக்கிறது. வால் ஆட்டி நிற்கிறது இருந்தால் கால் ஆட்டிக் கூப்பிடலாம். 18080 வால் இல்லாத குரங்குக்கு வாய் எல்லாம் பல். வால் இல்லாத நாய்க்கு மனத்திலே சந்தோசம். வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடமானால் கால் நடையாய்ப் போனவர்கள் கனக தண்டி ஏறுவரே. வால் பிராணன் தலைக்கு வந்தது. வால் போனாலும் போகிறது; எனக்குத் தோல் வேண்டும். வாவல் மீனைச் சாப்பிட்டு ஆவலைப் போக்கு. வாழக் கை கொடுத்தவன் கையில் வாழ்நாள் அடைக்கலம். வாழத் தெரியாது; வாழச் சொன்னால் வாயாலும் கையாலும் வாழச் சொன்னாள். வாழப் போகிற பெண் சீப்பை எடுத்து ஒளித்த கதை. வாழ வந்த குரங்கு வையகம் புகழைத் தேடிக் கொண்டதாம். 18090 வாழ வரம் வாங்கி வந்த பிறகு முடியவில்லை என்றால் யார் விடுவார்? வாழாக் குமரி மூளா நெருப்பு. வாழாத நாய் வாழ்ந்த நாயைக் குறை சொல்லும். வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி? பொட்டு ஏண்டி? மஞ்சள் குளி ஏண்டி? வாழாத பெண்ணும் வாழைக் காய்க் குழம்பும். வாழாத பெண்ணைத் தாயார் கெடுத்தாள். வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே. வாழாது வாழ்ந்து வாழைக் கொல்லைச் சாய்ந்தாலும் வடக்கே தலைவைத்துப் படுக்காதே. வாழாப் பெண் தாயோட. (வாழாதவள்) வாழுகிற பெண்ணுக்கு வலக்கையிலே மச்சம்; ஏரோட்டும் பிள்ளைக்கு இடக்கையிலே மச்சம். (வாழுகிற தங்காளுக்கு) 18100 வாழுகிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார். வாழுகிற வீட்டில் மரநாயைக் கட்டியது போல். வாழும் குமரிக்கு வலப்புறத்தில் மச்சம்; மனையாளும் மன்னனுக்கு இடப்புறத்தில் மச்சம். வாழும் பிள்ளையை விளையாட்டில் தெரியும். வாழும் வீட்டுக்கு ஒரு கன்னிப் பெண்; வைக்கோல் படப்புக்கு ஒரு கன்றுக் குட்டி. வாழும் வீட்டுக்கு வேட்டை நாய் வேண்டாம். வாழையடி வாழையாய். வாழையடி வாழையாய் வாழைக்கு ஒரு குலை. வாழை ஆடியும் முள் ஆடியும் வாழைக்குச் சேதம். வாழை ஆடினாலும் மூங்கில் ஆடினாலும் வாழைக்குத்தான் நட்டம். 18110 வாழை இளசும் வழுதலை முற்றலும் நடு. வாழைக்காய் கறியும் வளர்த்த பிள்ளையும். வாழைக்காய் கூட்டும் வாத்தியார் பெண்ணும் விலக்கப்பட்ட பொருள். வாழைக்குக் கீழ்க்கன்று வாங்கிப் பயிர் வைக்க வேண்டும். வாழைக்குக் கொத்து; வழுதலைக்குத் தண்ணீர். வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம். வாழைக்கு வெட்டும் வழுதுணங்காய்க்குத் தண்ணீரும். வாழை சாக மேற்கு; வைத்தவன் சாக தெற்கு. வாழை நட்டால் தாழ நடு. வாழைப்பழம் கொண்டு போனவள் வாசலில் இருந்தாள். வாயைக் கொண்டு போனவள் நடுவீட்டில் இருந்தாள். 18120 வாழைப்பழத்திற்கு வளைவு எடுத்தாற் போல. வாழைப்பழத்தில் வளைவு எடுப்பான் தோட்டி. வாழைப்பழம் அறியாதவனுக்குத் தோலைப் பிதுக்கிக் காட்டுகிறதா? வாழைப்பழம் தின்னாத குரங்கு உண்டா? வாழைப்பழம் தின்னுகிறது வருத்தமாய் இருக்குமா? வாழைப்பழம் வேண்டாக் குரங்கு உண்டா? வாழைப் பூச் சேலை தாலி அறுத்துத் தறிபோட்டு வந்ததாம். வாழையில் இருக்கிறது வைப்பு. வாழையை வளர்த்தால் வளமுண்டு; வாலை வளர்த்தால் என்ன உண்டு? வாழை வடக்கு ஈனும் வான்கமுகு தெற்கு ஈனும். 18130 வாழை வடக்கு; தென்னை தெற்கு. வாழை வடக்கு; வான் கமுகு தெற்கு; சோலை கிழக்கு; துய்ய பலா மேற்கு. வாழை வற்றல்; கத்தரி முற்றல். வாழை வாட்டமும் வரகு வாட்டமும் தெரியா. (வெங்காய) வாழை வாழ வடக்கு; வைத்தவன் வாழக் கிழக்கு. வாழை வாழ வடக்கு; வைத்தவன் வாழக் கிழக்கு; நாடு வாழ மேற்கே; நாசமாய்ப் போகத் தெற்கே. வாழ்கிறதும் கெடுகிறதும் வாயிலே தான். வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்தாள். வாழ்கிறவளுக்குச் சக்களத்தி வந்து முளைத்தாள். வாழ்கிறவளை வைக்க வேண்டாம்; தாழ்ந்தவனைத் திட்ட வேண்டாம். 18140 வாழ்கிற வீட்டுக்கு ஒரு பெண்ணும்; வைக்கோற் போருக்கு ஒரு கன்றும். வாழ்கிறான் வாழ்கிறான் என்று மதுரையெல்லாம் பேராம்; ஆற்றில் இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம். வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாழ்நாள் அடைக்கலம். வாழ்க்கை படுகிறதை நம்பி அவுசாரி ஆகிறதும் கெட்டது. வாழ்க்கை படுகிற பெண்ணுக்குச் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? வாழ்த்தும் வாய்மொழியும் தப்பாது வாய்க்கும். வாழ்நாளுக்கு ஏற்ற வயிற்றெரிச்சல். வாழ்நாள் உடையான் வலுப்பட்டுச் சாகான். வாழ்ந்த மகள் வந்தால் வரவு செலவழியும்; கெட்ட மகள் வந்தால் கொட்டை முதலாகும். வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத்தடுக்கு இடு; கெட்டமகள் வந்தால் கிழிந்த தகடு இடு. 18150 வாழ்ந்தவனை வாழ்த்த வேண்டாம்; தாழ்ந்தவனைத் திட்ட வேண்டாம். வாழ்ந்தவர் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகாது; கெட்டவர் வாழ்ந்தால் கிளைப்புறு தாமரை. வாழ்ந்தவன் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான். (தாழ்ந்தால்) வாழ்ந்தவன் சிறியவன் ஆனால் தாழ்ந்தவனும் ஏசுவான். வாழ்ந்தவன் வீட்டுக்குப் போனால் வறை ஓட்டுக்காவது ஆகும். வாழ்ந்த வீடு கெட்டா வறையோடு கூட மிஞ்சாது. (வறு ஓடு) வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம். வாழ்ந்து கெட்டவன் வடக்கே போ; கெட்டு நொந்தவன் கிழக்கே போ. வாழ்பவளுக்குச் சீதேவி வாயிலே. (வாழ்வாருக்கு) வாழ்வதும் கெடுவதும் வாயால் தான். 18160 வாழ்வும் ஒரு காலம்; தாழ்வும் சில காலம். வாழ்வும் தாழ்வும் மூன்று தலைமுறைக்கு. வாழ்வு வரும்போது மதிஓடி வரும். வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளப்படாது. வாளம் இல்லாது நீளாது. வாளாடி மாப்பிள்ளையாய் இருப்பதைக் காட்டிலும் வரகூர்க் கூழைக் கடாவாக இருக்கலாம். வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மட்டாய்ச் செலவிடு. வாளெடுத்தவன் வாளாலே சாவான். வாள்போல் பகைவரும், கேள்போல் பகைவரும். வானத்தில் உள்ள அம்புலியை வா என்றால் வருமா? 18170 வானத்திற்கு அழகு சூரியன்; வீட்டிற்கு அழகு பெண். வானத்தின் கீழிருந்து மழைக்கு அஞ்சினால் தீருமா? (இடிக்கு, முடியுமா? அஞ்ச முடியுமா?) வானத்துப் புறாவை நம்பி கைப்புறாவை இழந்தது போல. வானத்தை வில்லாய் வளைப்பான், மணலைக் கயிறாய்த் திரிப்பான். வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா? வானமும் வில்லாய் வளையுமாம் வக்கற்றவன் பேச்சில். வான மழை நின்றாலும் மரமழை நில்லாது. வானம் அதிர்ந்தால் மழை பெய்யும். (மானம்) வானம் இருக்கிறது மழை பெய்ய, மகாராசன் இருக்கிறான் சோறு போட. வானம் இருக்க மழை போமா? 18180 வானம் சுருங்கில் தானம் சுருங்கும். (குணம்) வானம் கருக்கப் பிசானம் கருக்கும். வானம் சுரக்கத் தானம் சுரக்கும். வானம் பார்க்கப் போயும் இடம் இடுக்கு முடுக்கா? (இடைஞ்சலா?) வானம் பார்த்து மண்வழி நடப்பவன். வானம் பெய்கிறது வையம் விளைகிறது. வானம் பொத்தல் என்று சிற்றெறும்புத் தோலால் அடைத்தான். வானம் பேய்ந்த இடத்தைப் பார்க்கும்; மாடு மேய்ந்த இடத்தைப் பார்க்கும். (மானம்) வானம் வழங்கத் தானம் வழங்கும். வான்குருவி வாழ்வு பெற்றால் வையகம் செழிக்கும். 18190 வான்குருவி வயிற்றெரிச்சல் வழிவழி விடாது. வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்?  வி விக்க விக்கச் சோறு போட்டுக் கக்கக் கக்க வேலைவாங்க வேண்டும். விக்குகிற வாய்க்கு விளங்காய்; விழுகின்ற இடத்துக்கு அரிவாள் மனை. விசத்திற்கு மாற்று விசம். விசத்தின் மேல் விசம் விசத்தைப் போக்கும். விசத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும். விசத்தை விசத்தால்தான் முறிக்க வேண்டும். விசாகத்தில் மழை பயிர்களில் புழு. விசாரம் முற்றினால் வியாதி. 18200 விசும்பு முட்டான கோலும் துரும்பு முட்டத் தீரும். விசுவாசக் காரனுக்கு வெந்நீரும் பருக்கையும், தாட்டோட்டக் காரனுக்குத் தயிரும் சோறும். விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம். விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக் கொண்டு போகிறதாம். விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள்; நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான். விச்சுளி வலமானால் நிச்சயம் வாழ்வுண்டாம். (விச்சுளி - மீன்கொத்தி) விடக்கே ஆயினும் வடக்கு ஆகாது. விடாச் சுரத்துக்கு விஷ்ணுக் கரந்தை. விடாத மழை பெய்தால் படாதபாடு பட வேண்டும். விடாமுண்டனுக்கும் கொடாமுண்டன். 18210 விடிக்கப் போன இடத்தில் விளாம்பழம் கிடைத்தது போல். விடிகிற மட்டும் இறைத்தவனும் சாலை உடைத்தவனும் சரியா? (விடியமட்டும்) விடிந்தால் கலியாணம் பிடியடா வெற்றிலைப் பாக்கை. விடிந்தால் தீர்ந்தது வேளாளன் கலியாணம். விடிந்தால் தெரிகிறது பெண் குருடா, மாப்பிள்ளை குருடா என்று. விடிந்தால் தெரியும் மாப்பிள்ளை குருடும், பெண் குருடும். விடிந்தால் தெரியும் வெளிச்சம். விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடு ஏன்? விடியக் குடி எழுப்பி வேப்பிலையைக் காப்புக் கட்டினார்களாம். விடிய விடியக் கதைகேட்டு விடிந்ததும் சீதைக்கு இராமன் சிற்றப்பா என்றானாம். (இராமாயணம்) 18220 விடிய விடியத் தண்ணீர் எடுத்தவளும் சரியாகப் போயிற்று; விடிந்த பிறகு குடத்தை உடைத்தவளும் சரியாகப் போயிற்று. விடிய விடியத் தீபாவளி; விடிந்தெழுந்தால் கோமாளி. விடிய விடியத் தேய்த்தாலும் கருப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா? விடிய விடியப் பாடுபட்டும் விளக்குக்கு எண்ணெய் இல்லை. விடியற்கால தூக்கம் வெல்லம் போல. விடியாமல் உலைவைத்து வடியாமல் விடுவேனோ? விடியா மூஞ்சி வேலைக்குப் போனால் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது. விடியா மூஞ்சி வேலைக்குப் போனாலும் வேலை அகப் படாது; வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படாது. விடியா மூஞ்சி வேலைக்குப் போனாளாம்; வேலை கிடைத்தும் கூலி கிடைக்கலையாம். விடியும் மட்டும் இறைத்தவனும் விடிந்தபின்பு சாலை உடைத்தவனும் சரி. 18230 விடியும் மட்டும் குரைத்தாலும் வீட்டுநாய் வேட்டைநாய் ஆக முடியுமா? விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் கரையுமா? (முளைக்குமா?) (சில்) விடுமுறை என்றால் இன்பம்; வேலை என்றால் துன்பம். விட்ட இடம் பட்டணம்; விழுந்த இடம் சுடுகாடு. விட்ட குறை தொட்ட குறை விடுமா? விட்டடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்குமாம் பிச்சி. விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட. விட்டத்தில் இருக்கிற பூனை இங்கிட்டுத் தாவுகிறதோ? அங்கிட்டுத் தாவுகிறதோ? விட்டு அலைகிறதிலும் தொட்டு அலை. விட்டுக் கெட்டது காது; விடாமல் கெட்டது கண். 18240 விட்டுக் கொடுத்தவர் யாரும் கெட்டுப் போனதில்லை; கெட்டுப் போனவர் யாரும் விட்டுக் கொடுத்ததில்லை. விட்டுச் சொன்னால் குட்டுக் குலையும்; விரித்து உடுத்தினால் அழுக்குப் படியும். விட்டுவிட்டுப் பெய்கிற மழையிலும் விடாமல் பெய்கிற தூவானம் நல்லது. விட்டுவைத்த கடனும் பெற்று வைத்த பிள்ளையும் எங்கும் போகா. விண் காட்டப் போனவன் கண்காட்ட வந்தானாம். விண்டழுத பிள்ளையைக் கொண்டணைப்பார் இல்லை. விண்ணாணம் எங்கே? கிண்ணாரம் எங்கே? விண்ணு மாலைக்குக் கலியாணம், விழுந்து கொட்டடா சாம்பவா! விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது. விண் பொய்த்தால் மண் பொய்க்கும். 18250 விண் வலிதோ? மண் வலிதோ? விண் விடும் குடிக்கு விண் விடும்; என்பாவி குடிக்கு விண்விடுமா? விதி அற்ற நாய்க்கு வில்லி வீரமாம் தாய்வீடு. விதி அற்ற மாடு கதிகெட்ட புல்லைத் தின்னும். விதி அற்றவன் வேட்டகத்துக்குப் போவான். விதி உடையவன் கண்ணுக்கு விளக்காய்த் தெரிந்தது. விதி உள்ள அகமுடையானுக்கு ரதியாக இருப்பாளாம். விதி எப்படியோ? மதி அப்படி! விதி கெட்டு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே. விதி செல்லும் வழியில் மதி செல்லும். 18260 விதிச்சாக்கடிக்குமா? மிதிச்சாக் கடிக்குமா? விதிக்குப் புத்தி அனுசரணை. விதித்த விதியைவிட வேறு நடக்குமா? விதி போகிற வழியே மதி போகும். விதிப்பயனை வெல்ல முடியுமா? விதிப் பழத்தை விலை கொடுத்து வாங்குவது போல. விதிப் பழம் வந்து விற்றது வாசலிலே. விதி பார்த்து வகுத்த விபத்தை விஷ்ணுவாலும் தடுக்க முடியாது. விதி முடிந்தவனை விரியன் கடிக்கும். (முடிந்தால்) விதி மூண்டு கிடந்தால் ஏழு லோகம் தாண்டி மறைந்து கிடந்தாலும் எமன் விடமாட்டான். 18270 விதி யாரை விட்டது? விதியின் பயனே பயன். விதியின் வழியே மதி செல்லும். விதியை மதியால் தடுக்கலாமா? விதியை மதியால் தடுக்கலாம். விதியை யார் வெல்ல முடியும்? விதியை வெல்ல யாரால் முடியும்? விதியை வெல்லுவர் உண்டோ? விதி வழி வந்த நிதி சதி செய்துவிடும். விதி வீட்டைச் சுற்றுகிறதாம்; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறானாம். 18280 விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? விதை ஒன்று போட்டால் செடி ஒன்றா முளைக்கும்? விதைகள் ஆழம் புதைவது பழுதாகும். விதைக்கிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் ஆள் வேண்டாம். (ஆள் வந்தால் என்ன கிடைக்கும்) விதைக்கிற காலத்தில் விருந்துக்குப் போனால் அறுக்கிற காலத்தில் ஆள் தேவையில்லை. விதைக்கிறவனுக்கு வினையம் இல்லாவிட்டால் வேலி எல்லாம் பயிரை மேயும். விதைக்கு ஏற்ற விளைச்சல். விதைக் கூடை எடுக்கையில் பட்டி மாடு தொடர்ந்த கதை. விதைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டலாமா? விதைத்தும் குறுணி; விளைந்ததும் குறுணி. 18290 விதைத்தவனுக்குத் தெரியாதா எப்பொழுது அறுக்க வேண்டுமென்று? விதைத்தால் வரகை விதை; சேவித்தால் வடுகனைச் சேவி. விதை பாதி வேலை பாதி. விதைப்பதன் முன் வேலி அடை. விதை முதல் அகப்பட்டாலும் வேளாண்மையை விடாதே. விதை முந்தியா? மரம் முந்தியா? விதையின் தன்மைதானே விளைச்சலில் வரும்? விதையை அடித்தானாம், விலாவிலே போய்ப்பட்டதாம். விதை விதைத்து வேலியை அடை. வித்தகன் தொட்டுவிட்டால் விறகு கட்டையும் வீணையாகும். 18300 வித்தாரக்கள்ளனுக்கு வேத போதனை செய்து என்ன பயன்? வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்; கத்தாழை முள்ளு கொத்தோட குத்துச்சாம். (தைத்ததாம்) வித்தாரக்காரன் செத்தால் பிழைக்கான். வித்து இருக்குமிடத்தில் வேர் இருக்க வேண்டும். வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை, கீழும் இல்லை. வித்து இல்லாமல் மரம் இல்லை; மரம் இல்லாமல் வித்து இல்லை. வித்து இல்லாமல் முளை உண்டாகுமா? வித்து இல்லாமல் விளைவு உண்டாகுமா? வித்து இன்றிச் சம்பிரதம் இல். வித்து இன்றி விளைவு இல்லை. 18310 வித்துப் பலம் பத்துப்பலம். வித்துவானுக்கு வேற்று நாடு ஏது? வித்துவானும் மதயானையும் சரி. வித்துவானை அடித்தவனும் இல்லை; பெற்ற தாயுடன் போனவனும் இல்லை. வித்துவான் அருமையை விறகுத் தலையன் அறிவானா? வித்துவான் அருமையை வித்துவான் அறிய வேண்டுமே அல்லாமல் விறகு விற்கிறவனா அறியப் போகிறான்? வித்துவான் பெருமையை விறகு வெட்டி அறிவானா? வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து. (அழிக்கிற) வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவிலே முட்டை. வித்தை அடித்தே செத்த பாம்பு ஆடுது. 18320 வித்தை அற்ற அழகு வாசனை இல்லாத முருக்கம் பூ. வித்தை இல்லாத மாந்தர் விலங்கினும் கடையர். வித்தை உள்ளவன் தூங்கமாட்டான்; விசாரம் உள்ளவனும் தூங்க மாட்டான். வித்தை உள்ளவன் பெரியவன். வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி. வித்தைக்காரப் பெண்பிள்ளை செத்த பாம்பை ஆட்டுகிறாள். வித்தைக்காரன் தவறி விழுந்தால் அதுவும் ஒரு விளையாட்டு. வித்தைக்காரன் பிழைப்பு வீதியிலே. வித்தைக்காரன் நாய்க்குக் கற்ற வித்தை எல்லாம் தெரியும். வித்தை பொறுத்து விளைவின் திறமை. 18330 வித்தையடி மாமி விற்கிறதடி பணியாரம். வித்தையில் எளிது சூன்யம்; பன்னத்திலே எளிது நீற்றுப் பெட்டி. விந்து விட்டாயோ நொந்து கெட்டாயோ? (வெந்து விட்டாயோ) விபசாரி என்று விமானம் ஏறினாலும் திருடி என்று தெருவழிப் போக முடியுமா? வியாதிக்கு மருந்து உண்டு; விதிக்கு மருந்து உண்டா? வியாதியிலும் மருந்து கொடிது. வியாழன் கூடினால் விவாகம் கூடும். விரகன் கோசம் கட்டை தட்டிப்போம். விரதத்திற்கு விரதமும் கெட்டு, சுகத்திற்குச் சுகமும் கெட்டது. விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்; சுகம் கெட்டாலும் விரதம் தக்க வேண்டும். 18340 விரலுக்கு ஏற்ற வீக்கம். (தக்க, தகுந்த) விரலூண்டு இடம் கொடுத்தால் வீடு எல்லாம் கைக் கொள்கிறதா? விரலைக் காட்டி உரலை விழுங்குவான். விரல் உதவி விருந்தினர் உதவார். விரல் உரலானால் உரல் என்ன ஆகும்? (எப்படி யாக மாட்டாது) விரல் உரலானால் உரல் உத்தரம் ஆகுமா? விரல் கண்ணிலே குத்தினது என்று வெட்டி விடுவார்களா? (போடுவார்களா?) விரல் நக்கி மோர் குடிப்பது போல. விரல் நுழைக்க இடம் விட்டால் உலக்கையை நுழைக்கப் பார்க்கிறான். விரல் நுழைய இடம் கொடுத்தால் உரலை நுழைக்கிறான். (தலையை) 18350 விரல் போகாத இடத்தில் உரல் போகுமா? விராலைப் போட்டுச் சுறாவைப் பிடிக்கிறது. விரித்து உடுத்தினால் அழுக்குப் படும். விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர். விருதுக்காகவா வேட்டை ஆடுகிறது. விருதுக்கு மாவிடித்தால் குதிர்க்கம்புக்குத்தான் கேடு. விருதுக்கு வேட்டையாடப் போய் மருந்துக்கு பச்சிலை பறித்து வந்தானாம். விருதுபட்டிக்குப் போகிற சனியனை வீட்டுக்கு வந்து விட்டுப் போ என்றானாம். விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்கினாற் போல. விருந்து அளித்துப் பகையைத் தேடிக் கொள்வதா? 18360 விருந்து இட்டுப் பகையை விளைக்கிறது. (இட்டா) விருந்து இல்லாச் சோறு மருந்தோடு ஒக்கும். விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம். விருந்து உண்ணாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது. விருந்துக்கு அழைத்து விசத்தைக் கொடுத்தது போல. விருந்துக்குப் போட்டு வெறும் வீடு ஆனாயோ? விருந்தும் மருந்தும் மூன்று வேளை. (நாள், பொழுது) விருந்து வராத வீடு சுடுகாடு. விருந்தும் வியாதியும் சொல்லிக் கொள்ளாமல் வருமாம். விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு. 18370 விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா? விருப்பத்தினால் சாதிக்க முடியாததை வீம்பினால் சாதிக்க முடியுமா? விரும்ப விரும்ப வேம்பும் கரும்பு ஆகும். விரும்பினால் வேம்பும் கரும்பு ஆகும். விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? விரைவாய் ஓடலாம் விரைவாய் உண்ணலாமா? விலக்கக் கூடாத துன்பத்திற்கு விசனப்படாதே. விலங்கும் பறவையும் விதித்த கோடு கடவா. (தாண்டமாட்டா) விலங்கு வேண்டாம் குட்டையில் மாட்டு என்றது போல. விலங்கு வேண்டாம் தொழுவில் இருக்கிறேன். (போடு என்கிறான்) 18380 விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டது போல. விலைக்குக் கொண்டு விருதுக்கு வேட்டை ஆடுகிறதா? விலை மகட்கு அழகு தன்மேனி மினுக்குதல். விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கல்யாணம் பண்ணுவான். வில் அடியால் சாகாதது கல்அடியால் சாகுமா? வில் அம்பை விடச் சொல் அம்பு கொடியது. (கொடுமை யானது) வில் அம்போ? சொல் அம்போ? வில் இல்லாதவன் அம்பு தேடுவானேன்? வில் எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனா? வில்லங்கத்துல காலை விட்டு விடிய விடிய நாய் ஓட்டினானாம். 18390 வில்லங்கத்தை விலைக்கு வாங்கினாற் போல. வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன். வில்லுக்கு ஓரி; சொல்லுக்கு மாவலி; கொடைக்குக் குமணன்; நடைக்கு நக்கீரன். வில்லுக் குனியாது எய்தால் விலகாது எதிரிப்படை. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக; பனம்பழம் தின்பார் பசிபோக. வில்வம் பித்தம் தீர்க்கும்; பனை பசி தீர்க்கும். வில் வளைந்தால் மோசம் தரும். வில் வங்குவது எதிரியைக் கொல்லத் தான். வில் வளைவதும் பெரியோர்கள் பணிவதும் நல்லதற்கு அடையாளம் அல்ல. விழலுக்கு இறைத்த நீர். 18400 விழா மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணினாளாம். விழிக்கு விழி பாய்ச்சுகிறது. விழித்தவன் கன்று நாகு கன்று; தூங்கியவன் கன்று கடாக் கன்று. விழியிலே குத்தின விரலை அறுப்பாருண்டோ? விழுங்கின ரகசியம் வயிற்றில் இராது. விழுந்த இடம் பொழுது விட்ட இடம் விடுதி. விழுந்தது பாம்பு; கடித்தது மாங்கொட்டை. விழுந்தவன் எழுந்திருந்தால் வெட்கத்துக்கு அஞ்சிச் சிரிப்பான். விழுந்தவன் சிரித்தானாம் வெட்கத்துக்கு அஞ்சி. விழுந்தால் சிரிப்பார்; வேடிக்கை பார்ப்பார். 18410 விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான். விழுந்து உடுத்தால் அழுக்கு தெரியும். விழுந்தும் கரணம் போட்டேன் என்ற கதை. விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். விளக்கு இருக்க தீயைத் தேடுவரோ? விளக்கிருக்க நெருப்புக்கு அலைவானேன்? விளக்கிலே விட்டில் பூச்சி ஏறினால் உயிர் பிழைப்பது ஏது? விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே. விளக்கு இல்லாத வீட்டில் பேய் குடி இருக்கும். விளக்கு ஏற்றா வீட்டில் வேதாளம் குடி புகும். 18420 விளக்கு ஏற்றிக் கூடையால் மறைக்கிறது. விளக்கு ஏற்றிக் கெட்டவரும் வெற்றிலை கொடுத்துக் கெட்டவரும் இல்லை. விளக்கு ஒளிக்கு ஆசைப்பட்ட விட்டில் போல. விளக்குமாறு எடுக்க வெண்கலப் பூட்டை உடைத்து விட்டுப் போனானாம். விளக்குமாற்றால் அடித்துக் குதிரையோடு தீவட்டி கொடுத்தாற் போல. (குதிரை மேல் ஏற்றி) விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டினாற் போல. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? விளக்கெண்ணெயைத் தடவிக் கொண்டு ஆற்று மணலில் புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும். விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிரப் பிள்ளை பிழைப்பது இல்லை. விளக்கைக் கொளுத்திக் கீழே வைப்பார் உண்டோ? 18430 விளக்கை நிறுத்தினால் இருட்டைக் கூப்பிட வேண்டுமோ? விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுகிறதா? விளக்கை வைத்துக் கொண்டு நெருப்புக்கு அலைவானேன்?. விளங்காமடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி அகப்படாது. (விளங்காமூடி) விளங்காய்க்குத் திரட்சி உண்டு பண்ணுகிறதா? விளங்காய் தின்று விக்கின கதை. விளைநிலம் அறிந்து விரை இடு. விளைகிற போதே சோறாய் விளைந்தால் விறகு விராட்டி என்னத்துக்கு? விளைந்த கதிர் வணங்கும். விளைந்ததும் விளையாததும் வைக்கோலைப் பார்த்தால் தெரியும். 18440 விளையாட்டாய்ச் செய்தது வினையாய் முடிந்தது. (முடிந்ததாம்) விளையாட்டுச் சண்டை வினைச் சண்டையாம். விளையாட்டுப் பண்டம் வீடுவந்து சேராது. விளையாட்டுப் பிள்ளைக்கு மண் மேல் ஆசை. (பெண்ணுக்கு) விளையாட்டுப் பிள்ளைக்கு விதரணை தெரியாது. (தெரியுமா?) விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது. விளையாட்டுப் பிள்ளைகள் செய்த வேளாண்மை வீடுவந்து சேராது. விளையாட்டுப் பூசல் வினைப்பூசல். விளையாட்டு வினையாய்ப் போயிற்று. விளையாட்டே வினையாகும். 18450 விளையாத கொல்லைக்கு வேலை மிச்சம்; வாழாத பொன்னாளுக்கு வாய் மிச்சம். (மிச்சம் - அதிகம்) விளையாத வேளாண்மைக்கு வேலை அதிகம்; பிழையாத பிள்ளைக்குப் பேச்சு அதிகம். விளையா மரம் போன்ற முதிரா அறிவு. விளையும் பயிர் முளையிலேயே தெரியும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும்; விதைக்காய் பிஞ்சிலே தெரியும். விளைவது அரிசியானாலும் மேல் உமி போனால் விளையாது. விளைவது ஆகிலும் அளவறுந்து அழி. விள்ளாதது குறையாது; இல்லாதது வாராது. விறகு உடைத்த கம்பு விறகுமேலே. விறகுக் கட்டுக்காரனுக்குத் தலைவலி வந்தால் விறகிலே ஓரடி அடித்தால் போய்விடும். (நோய்) 18460 விறகுக் கட்டுக்காரனுக்குப் பிளவை புறப்பட்டால் விறகு கட்டையால் ஓரடி. விறகுக் கட்டுக்காரனுக்கு நாரை வலமானால் ஒரு பணம் விற்கிறது ஒன்றேகாற் பணம் விற்கும். விறகு கோணலானாலும் நெருப்புப் பற்றாதா? விறகுத் தலையனுக்கு நோக்காடு வந்தால் விறகு கட்டோடு போய்விடும். விறைத்த குண்டி வெறுங்குண்டி. விறைப்புக் காரிக் கூடப் போனாலும் செருப்புக்காரி கூடப் போகாதே. விற்க முடியாத பொருளுக்குத் தான் விளம்பரம் தேவை. விற்காத இடையன் சினை ஆட்டைக் காட்டினானாம். விற்காதவன் சினைமாட்டைக் காண்பித்தது போல. விற்ற ஆடு போக, சொச்ச ஆடு விழித்தாற் போல. 18470 விடுபாடு - எதிர்ப்பக்கம் பார்க்க - கவனமாய் இணைக்க. வினா முந்துறாத விடை இல்லை.  வீ வீக்கமோ தூக்கமோ? வீக்கம் கண்டால் தூக்கமாம். வீக்கம் வெறும் ஏக்கமாகப் போன மாதிரி. வீங்கலுக்கு விசமம் அதிகம். (விசம்) வீங்கலுக்கு வீரியம் அதிகம். வீங்காத வயிறு நோய்க்கு ஏங்காது. வீங்கியவன் சாவான்; தூங்கியவன் பிழைப்பான். வீசம் இறுத்த குடி நாசம். 18480 வீசி நடந்தால் வெள்ளி வீசம் குறையும். வீசி நடந்தால் வீசம் குறையும். வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும். வீடு இல்லாதவனுக்கு நெருப்புப் பயம் இல்லை. வீடு எரிய கிணறு எடுக்க. வீடு எரியும் போது பிடுங்கினது இலாபம். வீடு எல்லாம் குருடு; வாசல் எல்லாம் கிணறு. வீடு கட்டுகிறது அரிது; வீடு அழிக்கிறது எளிது. வீடு கட்டும் முன்னம் கிணறு வெட்ட வேண்டும். வீடு தருவோன் மேலும் தருவோன். 18490 வீடு தோறும் வாசல்படி உண்டு. வீடு நிறைந்த விளக்குமாறு. வீடு பலக்கக் கட்டினால் புயலுக்கு ஈடு கொடுக்கும். வீடு பற்றிக் கொண்டு எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்டானாம். (சுருட்டுக்கு) வீடு பற்றி வேகும் போதா கிணறு எடுப்பது? (போது கிணறு எடுப்பதா?) வீடு பற்றினதற்குக் கிணறு வெட்ட நாள் பார்த்த கதை. வீடு போ போ என்கிறது; காடு வா வா என்கிறது. வீடு வரை மனைவி; காடு வரை பிள்ளை. வீடும் விளக்குமாயிருந்தால் நாடும் நடப்பும் வேண்டாம். வீடும் வேலையும் ஒன்றா? 18500 வீடு விட்டு வெளிப்பட்ட நாய் விடுதி நாய். வீடு விழுந்தது விறகுக்கு ஆச்சு. வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர். வீடு வெறும் வீடு; மேல் வீடு அதிகாரம். (வேலூர்) வீடென்று இருந்தால் குப்பையென்று இருக்கும். வீட்டிலே வினை இருக்கிறது; வினை தீர்த்தான் கோயிலுக்குப் போனால் தீருமா? வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான். வீட்டில் அழகு வேம்படி ஆகும். வீட்டில் இருக்கிற சாமியைப் போகச் சொல்லிவிட்டுக் காட்டில் இருக்கிற சாமியை வரவழைத்தாளாம். வீட்டில் இருக்கிறது வெறும் சோகை; விருந்தாளி வந்தது காமாலைச் சோகை. 18510 வீட்டில் இருக்கிற நாயை அடித்தால் வெளியே இருக்கிற நாய் ஓடிடுமாம். வீட்டில் இருக்கிற பூனையை அடித்தால் மேட்டில் இருக்கிற எலியைப் பிடிக்கும். வீட்டில் சமைத்தால் அடுப்படி; கோயிலில் சமைத்தால் மடப்பள்ளி. வீட்டில் வாலாட்டி இருந்தால் காலாட்டிச் சாப்பிடலாம். (வாலாட்டி - ஆடு மாடுகள்) வீட்டின் செழிப்புக் காட்டில் தெரியும். வீட்டு அடிக்கு வேம்படி மேல். வீட்டு அழகு வாசற்காலைப் பார்த்தால் தெரியும். வீட்டு இளக்காரம் வண்ணான் அறிவான். வீட்டு எலியை அடித்தால் மோட்டு எலி பறக்கும். வீட்டுக் கருமம் நாட்டுக்கு உரையேல். 18520 வீட்டுக் கழுதை ஊராருக்குச் சுமக்குது. வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா? வீட்டுக்காரியை நம்பி வேலைக்காரி கெட்டாள், வேலைக் காரியை நம்பி வீட்டுக்காரி கெட்டாள். வீட்டுக் காவற்கு உரிய நாயை இறவை ஏற்றத்திற்குக் கட்டினானாம். வீட்டுக்காரிக்குப் போட்டிக் காரி. வீட்டுக் குருவியைக் காட்டி காட்டுக்குருவியைப் பிடி. வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்கி விடுவார்கள். வீட்டுக்கு அலங்காரம் பெரியகுடி. (மனையாள், விளக்கு, வேளாண்மை) வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி; வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி. (வீட்டுக்குள்) வீட்டுக்கு உள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்? 18530 வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும். வீட்டுக்கு ஒரு வாசற்படி; பூட்டுக்கு ஒரு திறவுகோல். வீட்டுக்குக் கேடும் சோற்றுக்கு நாசமும். வீட்டுக்குச் செல்வம் மாடு; காட்டுக்குச் செல்வம் முருங்கை. வீட்டுக்குச் சோறில்லை சிவனறிவான்; நாட்டுக்குச் செல்லப்பிள்ளை நானல்லவா? வீட்டுக்கு நானும் வெளிக்கு நீயும். வீட்டுக்குப் புகழ்ச்சியோ, நாட்டுக்குப் புகழ்ச்சியோ? வீட்டுக்குப் புளி; காட்டுக்குப் புலி. வீட்டுக்குப் பின்னால் மாட்டைக் கட்டி மாட்டுக்குப் பின்னால் தீனி போட்டது மாதிரி. வீட்டுக்கு வரும் விருந்தாளி வீம்பிலே பெருச்சாளி. 18540 வீட்டுக்கு வாய்த்தது எருமை, மேட்டுக்கு வாய்த்தது போர். வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது. வீட்டுக்கு வீடு மண் அடுப்புத்தான். வீட்டுக்கு வீடு வாசலும், கடைக்குக் கடை ஆளும். வீட்டுக்கு வீடு வாசற்படி. வீட்டுள்ளே நாயை அடித்தால் வெளிக்குப் போனதை அள்ள வேண்டும். வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன். வீட்டுக் கொடியை வெட்டினால் வீட்டுப் பெண் வேட்டகத்தில் தங்காது. வீட்டுச் செல்வம் மாடு; தோட்டச் செல்வம் முருங்கை. (வீட்டுக்கு, தோட்டத்திற்கு) வீட்டுச் சோற்றைத் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்? 18550 வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்? வீட்டுச் சோறும் வேண்டாம்; அடுப்பாண்டியும் வேண்டாம். (வீட்டுச்சாறும்) வீட்டுத் தெய்வத்தை விளக்குமாற்றால் அடித்துக் காட்டுத் தெய்வத்தைக் கையெடுத்துக் கும்பிட்டானாம். வீட்டு நாயைக் கட்டிப் போட்டால் வெளியே போய் மேயாது. வீட்டு நாய்ப்பாசம் வேறு நாய்க்கு ஏது? வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும். வீட்டுப் பிள்ளையும் வெளிப்பிள்ளையும் வித்தியாசம் அறியா. வீட்டுப் புலி, வெளிப் பூனை. வீட்டுப் பூனையை அடித்தால் மேட்டுவளையில் இருக்கும் எலி வருமாம். வீட்டுப் பெண்சாதி வேம்பு; நாட்டுப் பெண்சாதி கரும்பு. 18560 வீட்டை எல்லாம் வெல்லத்துக்கு மாறினானாம். வீட்டை ஏன் இடித்தாய்? மூட்டைப்பூச்சிக்குப் பயந்து. வீட்டைக் கட்டி ஓட்டைப் போடு. வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடி வைப்பதா? வீட்டைக் கட்டிப் பார்; கலியாணம் பண்ணிப் பார். (செய்து) வீட்டைக் கட்டிப் பார்த்தால் தெரியும்; கலியாணம் செய்து பார்த்தால் தெரியும். வீட்டைக் கட்டு; காட்டை அழி. வீட்டைக் காக்கும் நாயும் நாட்டைக் காக்கும் சேவகனும் ஒன்றாகி விடுவார்களா? வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண் போகா. வீட்டைக் காத்து அருள்; பாட்டைப் பார்த்து அருள். 18570 வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா? வீட்டைப் பிடுங்கி விறகாய் எரித்தாலும் வீணாதி வீணணுக்கு என்ன செய்வேன்? வீட்டையும் கொள்ளை கொடுத்துப் பங்குக்கும் நிற்கிறது. வீட்டை விடக் கதவு பெரியதாய் இருக்கிற மாதிரி. வீட்டை விழுங்குகிற பேய் வந்தால் தாழ்ப்பாள் போட்டால் விடுமா? வீணருக்குச் செய்தது எல்லாம் வீண் ஆம். வீணருக்கும் கீர்த்திக்கும் வெகு தூரம். வீணாரவாரம் கிழவி திரண்டதும் பாட்டுக்கு வழி இல்லாமல் பிணங்கி அழுததும். (பிட்டுக்கு) வீணான வீணனுக்கு வாணாளை மாய்ப்பானேன்? வீணுக்குத் தாலி கட்டி வீம்புக்கு அறுப்பதா? 18580 வீணை கோணினாலும் நாதம் கோணுமா? வீண் இழவாம்; வெங்காயத் தாளாம்; பிடுங்கப் பிடுங்கப் பேரிழவாம். வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா? வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவிற்குப் பந்தல் போடு. வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன் படுவார்கள். வீதிச் சண்டையை விலைக்கு வாங்குவது போல. வீதியும் பெண்ணும் விலை போச்சுது கை தப்பினால். வீதியிலே வெள்ளை வேட்டி; வீட்டைப் பார்த்தால் மொல்லை மாறி. வீம்புக்காரனுக்கு மேல் தெரியுமா? வீம்புக் குப்பையில் விளையும் வீண்செடி. 18590 வீம்புக்கு வேடம் கொள்ளாதே. வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான். வீரம் இல்லாத பேடியைப் போருக்கு அழைக்கிறது போல. வீரன் சூரனானாலும் முன்படை வேண்டும். வீரம் கெட்டவன் சேரன் ஆவானா? வீரம் பேசிக் கொண்டு எழுந்த சேவகன் வெட்டுக்களம் கண்டு முதுகு இடலாமா? வீரன் கேண்மை கூரம்பாகும். வீராணத்து ஏரி விழுந்து விழுந்து விளைந்தாலும் பெருமாக்கூர் ரண்டுக்குப் பொரிமாவுக்குக் காணாது. வீரியத்தை விடக் காரியம் பெரிது? வீரியம் இல்லையேல் காரியம் இல்லை. 18600 வீரியம் பெரிதோ? காரியம் பெரிதோ? வீரிலிப்பட்டிச் சனியனை என் வீடு மட்டும் வந்து விட்டுப்போ என்றாளாம்.  வெ வெகு சன வாக்கியம் பொய் போகாது. வெங்கண்ணை வாங்கு உன் கண்ணைக் கொடுத்து. வெங்காயத்துக்கு எத்தனை வாசனை கூட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும். வெங்காயம் இட்ட கறிக்குச் சந்தேகம் இல்லை. வெங்காயம் பந்தாடை விரிச்சாலும் விரிக்கும்; வெந்தாலும் வெந்து போகும். வெங்காயம் போடாத கறியும் கறியுமல்ல; சந்தடியில்லா ஊரும் ஊருமல்ல. வெங்காயம் விற்பவனைச் சங்கீதம் பாடச் சொன்னாற் போல. வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும். 18610 வெங்கார் அழிந்தால் விதை முதலும் காணாது. வெங்கார் புழுதிக்கு விளையாத பயிர் உண்டோ? (வெண்கார்) வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா? (வெச்ச அனலுக்கு) வெடிபடச் சிரிப்பவர் வெள்ளறிவுடையோர். வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான். வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா? வெட்கத்தை விட்டு வெளியிலே செல்லலாமா? (சொல்லலாமா?) வெட்கப்படுகிற வேசியும் வெட்கங்கெட்ட சமுசாரியும் உதவார்கள். (உதவுவார்கள்) வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏதுக்கு? வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண். 18620 வெட்கம் சடையான் கடன் வாங்கக் கை நீட்டான். வெட்கம் உள்ள வேசியும் கெட்ட குலப்பெண்ணும் விளங்கார். வெட்கம் கெட்ட சுக்காங்கீரை; இரா அடுப்பிலே வெந்த கீரை. வெட்கம் கெட்ட நாய்க்கு வீறாப்பு அதிகமாம். வெட்கம் கெட்ட நாய்க்கு வெண் பொங்கலாம். வெட்கம் கெட்ட மூளிக்கு முக்காடு ஒரு கேடா? (மாராப்பு ஏன்?) வெட்கம் கெட்டவன் ஊருக்குப் பெரியவன். வெட்கம் கெட்டாலும் கெடட்டும் தொப்பையில் இட்டால் போதும். வெட்கம் போனால் போகட்டும் தொப்பை நிரம்பினால் போதும். வெட்கம் வாழைக்காய் கறி ஆகுமா? 18630 வெட்டப் பலம் இல்லை; வெட்டிக்குப் போக மனமில்லை. வெட்டரிவாளுக்குக் குளிரா? காய்ச்சலா? வெட்ட வருகிற மாட்டுக்கு வேதம் ஓதினால் ஒக்குமா? (போதுமா?) வெட்ட வெளிச்சம் பட்டப்பகலாய்ப் போயிற்று. வெட்ட வெட்ட தழைக்கும் வேட்டுவர் படை. வெட்ட வெளியிலே வையாளி விடுகிறதா? வெட்டி எல்லாம் தண்ணீர், மண்கட்டி எல்லாம் புல் நாற்று. வெட்டிக் களை எடுத்தால் கட்டு முக்கலம் காணும். வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினது போல. வெட்டிக்குப் பிறந்த பிள்ளை வேலியிலே. 18640 வெட்டிக்குப் போனாலும் விருந்துக்குப் போகாதே. வெட்டிக் குறும்பு நட்டமாகும். வெட்டிக் கெட்டது தென்னை; வெட்டாமல் கெட்டது பனை. வெட்டிக் கெட்டது வேம்பு; வெட்டாமல் கெட்டது பூவரசு. வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா? வெட்டிக் கொண்டு வரச் சொன்னால் கட்டிக் கொண்டு வருவான். (வருகிறான்) வெட்டிப் போட்டுக் கட்டிக் கொண்டு அழுகிறது. வெட்டியவனுக்கு ஒரு கிணறு; வண்ணாத்திக்குப் பல கிணறு. வெட்டி வா என்றால் வேருடன் பிடுங்கி வருகிறான். வெட்டி விதை கட்டி விதை. 18650 வெட்டி விதைப்பதை விடக் கட்டி விதைப்பது மேல். வெட்டி வெட்டிப் பார்த்தாலும் முட்டக்கரிக் காசுதான் அகப்படும். வெட்டி வேரில் விசிறியும் விளாமிச்சை வேரில் தட்டியும் பண்ணு. வெட்டி இடத்தில் நீர் ஊறும்; வீடு கட்டின இடத்தில் நடை ஏறும். வெட்டின குளத்தில் நீர் இருக்க ஊர் ஊராக நீருக்கு அலைந்தானாம். வெட்டினவனுக்கு ஒரு கேணி; வீணாதி வீணனுக்குப் பல கேணி. வெட்டு ஒன்று துண்டு இரண்டு. (கண்டம்) வெட்டுகிற கத்தியை வீசியா காட்ட வேணும்? வெட்டுப் பட்டால் தட்டு விளையாது. (தட்டு - சோளத் தட்டு) வெட்டுப் பட்டால் வெட்டுக் காயச்சாறு, திட்டுப்பட்டால் குமட்டிக்காய்ச்சாறு. 18660 வெட்டென உரையேல்; துட்டர்கள் அறைவர். வெட்டெனப் பேசேல். வெட்டை முற்றினால் கட்டையிலே. வெண்கலக் கடையில் யானை புகுந்தாற் போல. வெண்கலத்துச் சூடும் வேட்டகத்து வார்த்தையும் ஆறா. வெண்கலம் ஒலிக்கும் பொன்கலம் ஒலிக்காது. வெண்கலம் நடமாடக் குயவன் குடி போகிறான். வெண்கலம் வெண்கலம் என்றால் ஓட்டை ஓட்டை என்கிறான். வெண்டலைக் கருடன் சென்றிடமானால் எவர் கைப் பொருளும் தன் பொருளாகும். வெண்டைக்காய்க்கு விதை ருசி; கத்தரிக்காய்க்கு காம்பு ருசி. 18670 வெண்ணீறு வினை அறுக்கும். வெண்ணெய்யைக் கொடுத்துவிட்டு நெய்க்கு அலைந்த கதை போல. வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? (வைத்துக் கொண்டு) வெண்ணெய் உருகுமுன் பெண்ணை பெருகும். வெண்ணெய்க் கட்டியும் முப்பாலும் போடுவார் விக்கிக் கொள்வதற்கு என் செய்வார்? வெண்ணெய்க்கும் காவல் பூனைக்கும் தோழன். வெண்ணெயும் சீனியும் விரசி ஊட்டலாம்; விக்கிக் கொள்வதற்கு என்ன செய்யலாம்? வெண்ணெய் தடவிக் கொக்குப் பிடிக்குங்கதை போல. வெண்ணெய்ப் போல உழவு குன்னுப் போல விளையும். வெது வெதுத்த தண்ணீர் குளிக்காதவளா உடன் கட்டை ஏறப்போகிறாள்? (குடிக்காதவளா) 18680 வெந்ததைத் தின்று வந்ததெல்லாம் பிதற்றுகிறது. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகிறது. வெந்தது போதும் முன்றானையில் கொட்டு. வெந்தது போதும் வந்ததை மடியில் கட்டு. வெந்த புண்ணில் வேல் நுழைந்தாற் போல. வெந்த புண் வினை செய்யாது. வெந்த முகத்தைக் காட்டாதே; வந்த விருந்தை ஓட்டாதே. வெந்த மூஞ்சியை விளக்கில் காட்டினாளாம்; வந்த விருந் தெல்லாம் ஓடிப் போச்சுதாம். வெந்தயம் இட்ட கறிக்குச் சந்தேகம் இல்லை. வெந்தயம் போடாத கறியும் கறியல்ல, சந்தை இல்லாத ஊரும் ஊரல்ல. (சந்தடி) 18690 வெந்தால் தெரியும் வெங்காய மணப்பு. (மணம்) வெந்து கெட்டது முருங்கைக்கீரை, வேகாமல் கெட்டது அகத்திக்கீரை. வெந்நீரில் குளிக்க அஞ்சுபவரா தீயிற்பாயப் புகுவார்? வெந்நீரில் விழுந்த கோழி தானே எழுந்து போமா? வெந்நீரில் வீடு வேகுமா? வெந்நீரைக் காலில் கொட்டியது போல. வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும். வெந்நீர் இறைத்தால் வீடு வேகுமா? வெந்நீர் என்றால் வாய் வெந்து விடுமா? வெம்பா பெய்தால் சம்பா விளையும். (பேய்ந்தால்) (வெம்பா - பகலில் பனி போல் வெள்ளையாய்ப் பெய்வது) 18700 வெயிலிலே போட்டாலும் காய மாட்டான்; தண்ணீரில் போட்டாலும் நனைய மாட்டான். வெயிலில் நடந்தால் நிழலின் அருமை தெரியும். வெயிலிலே விடுகிறதுமில்லை; மழையிலே விடுகிறது மில்லை. வெயிலின் முன்னே மின்மினி பிரகாசிக்குமா? வெயில் விதைப்பும் சரி; வைப்பாட்டி பிள்ளையும் சரி. வெல்லக் கட்டிக்கும் மெல்லப் பல்லு வேணும். வெல்லத்தால் பிள்ளையார் வைத்தால் நைவேத்தியத் துக்குக் கிள்ளி வைக்கலாமா? வெல்லத்தைக் காட்டிப் பிள்ளையை அழைக்கிறதா? வெல்லத்துக்கு ஆசைப்பட்டு விரலைக் கடித்த மாதிரி. வெல்லப்படை இல்லை; தின்னப்படை உண்டு. 18710 வெல்லப் பேச்சுச் சொல்லுக்கு அசையாது. வெல்லப் போனான் ஒரு செல்லப்பிள்ளை; மெல்லப் போனான் ஒரு அமுங்குத் தலைவன். வெல்லமும் போச்சு; வெல்லம் கட்டிய துணியும் போச்சு. வெல்லம் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும். வெல்லம் உள்ளவாயைச் சளுப்பென்று நக்குகிறான். வெல்லம் என்கிற வாய் தித்திக்குமா? வெல்லம் சர்க்கரை சொல்லப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா. வெல்லம் தின்கிறவன் ஒருவன்; விரலைச் சூப்புகிறவன் வேறு ஒருவன். வெல்லம் பெருத்தது வேலூர். வெல்ல வார்த்தையால் சொல்லுகிறதா? 18720 வெல்லாது உங்கள் படை; செல்லாது பாண்டியன் முன். வெளாவுக்கு வெளா பாத்திதானே? வெளிச்சம் இருளானால் இருள் என்ன ஆகும்? வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான். வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி. வெளிமழை விட்டாலும் செடி மழை விடாது. வெளியில் ஒழுங்கு; உள்ளே ஓக்காளம். வெளியில் சொன்னால் வெட்கம்; சொல்லவிட்டால் துக்கம். வெளியில் தளுக்கு; உள்ளே அழுக்கு. வெளியில் பார்த்தால் டம்பம்; உள்ளே பார்த்தால் ஓக்காளம். 18730 வெளியே வெளிக்கட்டு; உள்ளே நார்க்கட்டு. வெளுத்ததெல்லாம் பால் அல்ல; கருத்ததெல்லாம் தண்ணீர் அல்ல. வெளுத்ததெல்லாம் பால் அல்ல; மின்னுவதெல்லாம் பொன் அல்ல. வெளுத்ததெல்லாம் பாலா? கருத்ததெல்லாம் தண்ணீரா? வெளுத்ததெல்லாம் பாலாகுமா? வெளுத்ததெல்லாம் பால்; கருத்ததெல்லாம் தண்ணீர். (பால் ஆகுமா? தண்ணீர் ஆகுமா?) வெளுத்ததெல்லாம் பால்னு நம்புகிறவன். வெளுப்பானிடம் துணியைப் போட்டுவிட்டுக் கொக்கின் பின்னால் அலைந்த மாதிரி. வெள்ளத்திலே நின்றாலும் மூடர்கள் தாகத்துக்கு அலைவார்கள். வெள்ளத்தில் வந்தது தண்ணீரில் போயிற்று. 18740 வெள்ளத்துக்குப் பள்ளம் பாலமா? வெள்ளமே போனாலும் பள்ளமே விளையும். வெள்ளமே யானாலும் பள்ளம் பார்த்துப் பயிரிட வேண்டும். வெள்ளம் வரும்முன்னே அணை போடவேண்டும். (கோல வேண்டும்) வெள்ளரிக்காய் விற்ற கூடை வெறுங்கூடை; பாகற்காய் விற்ற கூடை பணக்கூடை. வெள்ளாடு தன்னோடே; செம்மறியாடு இனத்தோடே. வெள்ளாடு நஞ்சிலும் நாலு வாய் கடிக்கும். வெள்ளாடு நனைகிறது என்று ஓநாய் ஓவென்றதாம். வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப் புலி விழுந்து விழுந்து அழுகிறதாம். வெள்ளாடு புகுந்த தோட்டமும் வெள்ளாளன் புகுந்த காரியமும் வெட்ட வெளி. 18750 வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்துதான் கும்பிட வேண்டும். வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற்காலம் செத்துப் போயிற்று. வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா. வெள்ளாட்டுப் பாலும் வெள்ளெருக்கம் பாலும் ஒன்றாகி விடுமா? வெள்ளாளக் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி. வெள்ளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மையல்ல. வெள்ளாளன் கால் வைத்த இடமும் வெள்ளாடு கால் வைத்த இடமும் உருப்படா. வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் வழ வழ கொழ கொழ. (விழல் வழலே) வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும். வெள்ளாளன் மரபே மரபு; கள்ளர் திருட்டே திருட்டு. 18760 வெள்ளாளன் மினுக்குப் பண்ணிக் கெட்டான்; வேசி சளுக்குப் பண்ணிக் கெட்டாள். வெள்ளாளன் வைத்துக் கெட்டான்; துலுக்கன் உடுத்திக் கெட்டான். வெள்ளி இருக்க வியாழன் குளித்தாளாம். வெள்ளி எண்ணெய் கொள்ளிக்கு ஆகாது. வெள்ளி எதிரே போனாலும் போகலாம்; வெள்ளாளன் எதிரில் போகக் கூடாது. வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது. வெள்ளிக் கொண்டையைப் போட்டால் பள்ளிக் கொண்டை யைப் பிடிக்கலாம். வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி. வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா? வெள்ளி மூக்கனுக்கு வெளுப்பும் ஒன்றுதான்; அழுக்கும் ஒன்றுதான். 18770 வெள்ளி மோதிரம் ஓசை தரும்; பொன் மோதிரம் ஓசை தராது. வெள்ளியில் விதை முடி; சனியில் கதிர் முடி. வெள்ளி வட்டிலும் வேண்டும்; விளிம்பிலே பொன்னும் வேண்டும். வெள்ளி விதைபிடி; வியாழன் கதிர் பிடி. வெள்ளி வீசினால் வீசம் குறையும். வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போகும். வெள்ளெலி வேட்டை நாயை எதிர்க்க முடியுமா? வெள்ளை இட்டால் வினை போகும். வெள்ளை உடுத்து வீசி நடந்தாலும் வெள்ளாட்டி வெள்ளாட்டியே. வெள்ளை எல்லாம் பால்; வெளுத்தது எல்லாம் மோர். 18780 வெள்ளைக் காக்கை மல்லாக்கப் பறக்குதாம். வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடம் கொடுத்தார்கள்; அது அறுத்து ஊர் முழுதும் அடித்து இது எனது என்றான். வெள்ளைக்காரன் உடுத்திக் கெட்டான்; துலுக்கன் தின்று கெட்டான்; தமிழன் வைத்துக் கெட்டான். வெள்ளைக்கு அழுக்கும், வேண்டாத பேருக்கு வார்த்தையும் எப்படியும் வரும். (வெள்ளைத் துணிக்கு) வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை. வெள்ளைக்குக் கள்ளம் இல்லை. வெள்ளை கொடுக்க வினை தீரும். வெள்ளை கொடுக்க வினை தீரும்; பச்சை கொடுத்தால் பாவம் தீரும். வெள்ளை சொட்டை; கருப்பு வைரம். வெள்ளைப் பூண்டுக்கு எத்தனை வாசனை கட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும். 18790 வெள்ளையப்பன் இருந்தால் எல்லாம் செய்யலாம். வெள்ளையும் சொள்ளையுமாய் வந்தான்; வீட்டுக்குச் சோறு இல்லை. வெள்ளை வண்ணாத்திப் பூச்சி மிச்சமானால் வெள்ளம் அதிகம். வெள்ளை வேட்டியில் பட்டகறை வெளிச்சம் போடாமல் தெரியும். வெள்ளை வேட்டி வீராசாமிக்கு வேலூரிலே பெண்ணாம். வெறிகாரன் குடியை விடான்; வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான். வெறி கொண்ட மனதுக்குக் குழி தோண்டும் குணம் தோன்றும். வெறிக்கு இட்டு அழியேல். வெறிநாய் அழகு சொறி நாய்க்கு வருமா? வெறிநாய்க்கு வெல்லக் கட்டி. 18800 வெறிநாய் கடித்தால் உடனே மரணம். வெறிநாய் திருநாளுக்குப் போனதாம்; வெகுமக்களால் அடிபட்டுச் செத்ததாம். வெறிநாய் வேட்டி கட்டித் திருநாள் பார்க்கப் போகிறது. வெறிப்பிள்ளை கிழித்தது கோவணத்துக்கு ஆகும். வெறிபிடித்த நாய்க்கு வெந்நீர்க் குளியலாம். வெறி பிடித்த நாய் வேங்கைக்குச் சமம். வெறி பிடித்த நாய் வேடிக்கை ஆகாது. வெறியன் கிழித்தது கோவணத்துக்கு ஆகும். வெறுங் கஞ்சியைக் குடித்துவிட்டு மீசையிலே நெய்யைத் தடவிக் கொள்கிறதா? வெறுங் கழுத்துக்கு அரைப் பணத்துத் தாலி மேல். 18810 வெறுங் கரண்டி வாயைப் புண்ணாக்கும். வெறுங் கழுதைக்கு வீறாப்பு அதிகம். வெறுங் காதுக்கு ஓலைக்காது மேல். வெறுங் குண்டானில் கை அலசுவாள். வெறுங் குண்டி அம்மணம்; போட்டுக்கொள் சம்மணம். வெறுங் கூதி அம்மணமாம்; போட்டுக்கடி சம்மணமாம். வெறுங் கை தட்டான் இரும்பு ஊதி செத்தான். வெறுங் கை முழம் போடுமா? (வெறுங்கையில்) (வெறும் பூக்கு) வெறுஞ் சட்டி தாளிக்கிறாள். வெறுஞ் சலுக்கன் வீறாப்புக்காரன்; வீட்டிலே சோறு இல்லை. 18820 வெறுஞ் சிறுக்கி ஆம்புடையான் வீம்புக்குத் தாண்டி விழுந்தானாம். வெறுஞ் சிறுக்கியாம்; போலியாம்; வெள்ளியினாலே பீலியாம். வெறுஞ் சூத்தை நக்குகிறதைவிடப் பீச்சூத்தை நக்குகிறது மேல். வெறுந் தரையில் கிடந்த பாட்டிக்குக் குறுங்கட்டில் கிடைத்ததாம். வெறுநாய் சந்தைக்குப் போய் வெள்ளிக்கோல் அடி பட்டதாம். (அடிபட்டு வரும்) (தின்றதாம்) வெறும் பயலுக்கு ஏற்ற வீறாப்பு. வெறும் பயலுக்கு வீறாப்பு எதற்கு? வெறும் பயல் திருவிழாவுக்குப் போனானாம்; என் தண்டட்டியைக் காணாம் என்று சொன்னானாம். வெறும் பானையில் பழையதும் வேப்பங்காய்த் துவையலும். வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று. 18820 வெறும் புளி தின்றால் பல் கூசும். வெறும் பெருமை சோறு போடாது. வெறும் பெருமை பேசினால் எருமைக்குப் புல்லாகுமா? வெறும் வாயை மென்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்தாற் போல. (தின்றவனுக்கு) வெறும் வாய்க்கு இலை கெட்ட மாப்பிள்ளை வருகிறான்; கடன் வாங்கித் திருவிளக்கு ஏற்று. வெறும் வாய்க்கு இலை கெட்டவன் வருகிறான்; கடன் வாங்கியாவது விளக்கு ஏற்றி வை. வெறும் வாய்க்கு இலை கெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தால் கொடி கிடைக்காது; கொடி கிடைத்தால் விறகு கிடைக்காது. வெறும் வாயை மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் கிடைத்தாற் போல. (கிழவிக்கு) (மெல்லுகிறவனுக்கு) வெறும் வாயை மெல்லுகிறவன் அவல் கிடைத்தால் விடுவானா? வெற்றியும் தோல்வியும் வீரனுக்குச் சமம். 18830 வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசிக்கு மஞ்சளும் மெருகூட்டும். வெற்றிலைக் கொடி விசாகக் கார்த்திகையில் விசிறிப் போட்டாலும் செழிக்கும். வெற்றிலைப் பொதிகாரனும் அழுகிறான்; உப்புப் பொதிக் காரனும் அழுகிறான். வெற்றிலைப் போடச் சுண்ணாம்பு வாங்கி வீட்டுக்கு அடித்திடுவான். வெற்றிலை போடுவாள் பெண்பிள்ளை; அவளை வெற்றிலைக் கொடிக்காலுக்கு விடமாட்டான் ஆண்பிள்ளை. வெற்றியென்ன தானா வந்து வெளிச்சமா போடும்?  வே வேக நேரம் இருந்தாலும் சாக நேரம் இல்லை. வேகப் பொறுத்தது ஆறப் பொறுக்கக் கூடாதா? வேகப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்க முடியவில்லை. வேகாத கல்லை எடுத்து நோகாமல் இடித்துக் கொள். 18840 வேகாத சோற்றுக்கு விருந்தாளி இரண்டு பேர். வேகாத சோற்றுக்கு வேண்டாத விருந்தாளி. வேகாத வீட்டில் வேகும் கட்டை காமம். வேகிற வயிற்றுக்கு வெள்ளி என்ன? செவ்வாய் என்ன? (உடலுக்கு) வேகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம். (லாபம்) வேகிற வீட்டுக்குக் கணக்குப் பார்ப்பார் உண்டோ? வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு சாட்சியா? வேகிற வீட்டை அவிக்காமல் இருப்பார் உண்டோ? வேங்கைப் புலிக்கு முன் மான் நிற்குமா? வேங்கைப் புலியை வெள்ளாடுகள் சூழ்ந்தாற் போல. 18850 வேசி அவல் ருசி அறியாள்; வெள்ளாட்டி எள் ருசி அறியாள். வேசி ஆடினால் காசு; வெள்ளாட்டி ஆடினால் சவுக்கு. வேசி உறவு காசிலும் பணத்திலுந் தான். வேசி உறவும் வெள்ளாட்டி அடிமையும் காசு பணத்தளவே காணலாம். வேசி உறவும், வியாபாரி நேசமும், மாசி நிலவும், மதியார் முற்றமும் எவரும் செல்லக்கூடாது. வேசிக்கு ஆசை காசு பணத்து மேலே. வேசிக்கு ஆணை இல்லை; வெள்ளாட்டிக்குச் சந்தோசம் இல்லை. வேசிக்குக் காசு மேலாசை; விளையாட்டுப் பிள்ளைக்கு மண்மேல் ஆசை. வேசிக்கு விழிநீர் அரிதோ? வேசிக்கு விடியுமட்டும் உறவு. 18860 வேசி காசு பறிப்பாள். வேசி கூச்சப்பட்டால் வெண்காசு கிடைக்குமா? வேசி தளுக்குப் பண்ணிக் கெட்டாள்; வெள்ளாளன் மினுக்குப் பண்ணிக் கெட்டான். வேசிப் பிள்ளைக்குத் தகப்பன் யார்? வேசிமேல் ஆசைப்படுகிறது வெள்ளெலும்பை நாய் கௌவினதற்கு ஒப்பாம். வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பூசரரும் ஒருவருக்கு ஒருவர் பொருந்தும். வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது காண்பர். வேசியைப் பெண்டாக வைத்துக்கொண்டால் வேறே வினை தேவை இல்லை. வேசியைப் பெண்டாக வைத்துக்கொண்டால் விளக்குத்தான் பிடிக்க வேண்டும். வேசியர் ஆசை விடிந்தால் தெரியும். 18870 வேசி வீடு போவதும் வெந்து சாம்பலாவதும் ஒன்றுதான். வேசையர் அடைந்தால் விடிந்தால் தெரியும். வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை. (வேட்டைக் காரனுக்கும் ஆட்டக்காரனுக்கும்) வேடத்தால் என்ன? வெண்ணீற்றினால் என்ன? வேடமோ தவவேடம்; மனதிலோ அவ வேடம். வேடருக்கு அருமையான வேட்டை முயல் வேட்டை. வேடர் இல்லா ஊரில் யாவும் குடியிருக்கும். வேடனுக்குத் தேன் பஞ்சமா? மூடனுக்கு அடி பஞ்சமா? வேடன் கையில் கிடைத்த தேன்கூடு. வேடன் பிள்ளைக்கு இறைச்சி அரிதா? 18880 வேடிக்கைக்குப் பிள்ளை பெற்றேன்; வேண்டுமென்றால் பேர் இடு. வேடிக்கைக்கு விலை இல்லை; கதைக்குக் கால் இல்லை. வேடிக்கைக்கு விலை உண்டா? வேட்டகத்தில் உண்போன் கக்கித் தின்னும் நாயோடு ஒட்டான். வேட்டகத்துப் பருப்பு விளைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வது போல. வேட்டகத்து வார்த்தையும் வெள்ளிப் பாத்திரச் சூடும் ஆனா. வேடன் வெடி எடுப்பான்; வெள்ளாளன் தீம்பு வைப்பான். வேட்டால் மதனியை வேட்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன் என்றானாம். வேட்டி இடுப்பிலே நிற்கவில்லை; தாலிகட்ட பெண்டாட்டி வேண்டுமாம். வேட்டிக்குள்ளே ஓணானை விட்ட மாதிரி. 18890 வேட்டியை வண்ணானுக்கும் போட்டாயா? வாணியனுக்குப் போட்டாயா? வேட்டுக்கு வேட்டும் வைப்பான்; வேலைக்கு ஆளும் வைப்பான். வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும். வேட்டைக்கு ஆகாத நாய் வீரம் பேசியதைப் போல. வேட்டைக்குச் சென்ற நாய் வீட்டுக்கு வந்தது போல. வேட்டை கண்ட நாயும் சாட்டை கண்ட மாடும் சும்மா இருக்குமா? வேட்டை நாய்க்கு முயலைக் கண்டால் வேகம்; முயலுக்கு வேட்டை நாயைக் கண்டால் பயம். வேட்டை நாய்க்கு விருந்து அளிப்பது போல. வேட்டை நாய்ப் பாய்ச்சல் மாதிரி. வேட்டை நாய் வழக்கு அறியுமா? 18900 வேட்டை நாயைக் கண்ட சொறி நாய் வாலை மடக்கினது போல. வேட்டை பெரிதென்று பேய் நாயைக் கட்டி இழுக்கிறதா? வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை. வேண்ட வேண்டத் தாண்டவம் ஆடுகிறாள். வேண்டாத நாளிலே வேப்பங்காய் ஆனேன். வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம். வேண்டாத பேருக்கு ஈந்து என்ன? வேலையில் ஆற்றுத் தண்ணீர் விழுந்து என்ன? வேண்டாதவனுக்கு வெட்டு வேண்டியனு. வேண்டாதவனுக்கு வலப் பக்கத்தில் ஊறுகாய். வேண்டாதவனுக்கு வெறும் வெற்றிலை; வேண்டிய வனுக்கு மூன்று சரக்கும். (வேண்டாதவன் கையில்) 18910 வேண்டாதவனிடத்திலும் வெள்ளை வாங்கலாம். வேண்டாதாரை நினைத்தால் வேப்பங்காய். (நினைத்தால்) வேண்டா வெறுப்புக்குப் பிள்ளையைப் பெற்றுவிட்டுக் காண்டா மிருகம்னு பேர் வைத்தாளாம். வேண்டா வெறுப்பும் திருவாதிரையும். வேண்டியவன் காதலைப் பார்; வேண்டாதவன் தூதைப் பார். (காதல் - கூளப்ப நாயக்கன் காதல்; தூது - விறலிவிடு தூது) வேண்டியவன் கொல்லை வெள்ளரிக்காய்; வேண்டாதவன் கொல்லை வேப்பங்காய். வேண்டியவன் என்றால் வேட்டியையும் கொடுத்து விடுவான். வேண்டியவன் வந்தால் வீடு விழாக்கோலம்; வேண்டாதவன் வந்தால் வீடு எழவெடுத்தது. வேண்டி வேண்டிக் கொடுத்தால் வாங்குகிறவனுக்கு இளக்காரந்தான். வேண்டி வேண்டிக் கொடுத்தால் வேண்டாம் என்பதா? 18920 வேண்டினால் வேலியிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் வேரிலும் காய்க்காது. வேண்டும் அயிரை விட்டு வரால் வாங்குபவர். வேண்டுமானால் அவரை வேரிலும் காய்க்கும். வேண்டும் என்றால் எதுதான் செய்யக்கூடாது? வேண்டும் என்றால் வீடு; வேண்டாம் என்றால் காடு. வேண்டும் என்றால் வெண்ணெய் என்பாள்; வேண்டாம் என்றால் விளக்குமாறு என்பாள். வேண்டும் என்றால் வெல்லம்; வேண்டாம் என்றால் வேம்பு. வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும் பலா; வேண்டாம் என்றால் உச்சியிலும் காய்க்காது. வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய்போல் நூற்கலாம். வேதத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை. 18930 வேதத்துக்கும் விக்கிரக பக்திக்கும் பகை. வேதமும் தெரியணும்; வியாழனும் தெரியணும். வேதம் படித்துவிட்டு விறகுவெட்ட முடியுமா? வேதம் பொய்த்தாலும் வியாழன் பொய்க்காது. வேதனைக்குப் பிள்ளை பெற்று வேம்புடையான்னு பேருவச்சான். வேதனையை விலைகொடுத்து வாங்குவதா? வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை; வேதாரணியத்தில் பாம்பு குறைகிறதும் இல்லை. வேதாரணியத்தில் விளக்கு அழகு. வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். 18940 வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல். வேதியனுக்குப் பைத்தியம் பிடித்தால் வேதமே ஓதுவான். வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை. வேந்தன் துறவிக்குத் துரும்பு. வேந்தனும் பாம்பும் நெருப்பும் சரி. வேப்பங்கனிக்குக் காகம் காத்திருக்கும். வேப்பங்காய் விற்றுவந்த காசு கசக்குமா? வேப்பந் தோப்பும் நாய் மந்தையும் காண்பது அரிது. வேப்பம் பழம் சிவந்தாலும் விரும்புமா கிளி? 18950 வேப்பூர்த் திருடனை நம்பினாலும் கருப்பூர்ப் பார்ப்பானை நம்பக் கூடாது. வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல; மருந்து எண்ணெய். வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா? (கசக்காது) வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும். வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா? வேம்புக்குப் பல் அழகு பெறும்; வேலுக்குப் பல் இறுகும். வேம்பு செய்வதை வேறு எவரும் செய்யார். வேம்பு தின்பவனுக்கு வேம்பு ருசி; கரும்பு தின்பவனுக்குக் கரும்பு ருசி. வேம்பும் கரும்பாச்சே; வெற்றிலையும் நஞ்சாச்சே. வேம்பும் சரி; பாம்பும் சரி. 18960 வேம்பும் சரி; வேந்தனும் சரி. வேம்பு ருசி என்றால் வேரோடு தின்பதா? வேம்பு வெட்டிக் கெட்டது; பூவரசு வெட்டாமல் கெட்டது. வேம்பைத் தின்றார்க்கு வேம்பே மரணம். வேம்பை விரும்ப விரும்பக் கரும்பு ஆகும். வேரில் விட்டால் கிளையில் துளிர்க்கும். வேரைக் கல்லி வெந்நீர் விடலாமா? வேரைக் களைந்து வெந்நீர் ஊற்றுகிறதா? வேரில் வெந்நீரில் ஊற்றினாற் போல. வேர் இல்லாக் கொற்றான் போலே. 18970 வேர்க்க விளையாடினால் வியாதி நீங்கும். வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே? வேர் நின்றால் மரம் நிற்கும்; வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான். வேர் மூலிகை; மரம் மூலிகை; காய் மூலிகை. வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது. வேலங்காட்டிலே போய் விளாங்காய் தேடினாற் போல. வேலமரத்துக்கு நிழல் இல்லை; வெள்ளாளனுக்கு உறவு இல்லை. வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும். வேலம்பட்டை மேகத்தை நீக்கும்; ஆலம்பட்டை பித்தத்தை அடிக்கும். வேலி அருகே குடியிருந்தாலும் வெள்ளாளன் அருகே குடியிருக்காதே. 18980 வேலி ஒன்றுக்கு ஈரிணை மாடும் இரண்டு ஆளும் வேண்டும். வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு. வேலிக்கு ஓணான் சான்று; ஓணானுக்கு வேலி சான்று (சாட்சி) வேலிக்கு ஓணான் சாட்சி; வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி (வெட்டியான்) வேலிக்கு ஓணான் சாட்சி; வேலனுக்கு ஆணை சாட்சி. வேலிக்கு போட்ட முள் காலுக்கு வினை ஆயிற்று. (வைத்த) வேலிக்கு முள் போட காலில் தைத்தது. வேலிக்குள் போற பாம்பை வீட்டுக்குள் வா என்றானாம். வேலி சாடும் பசுவுக்கு என்றைக்கும் கோல் கொண்டுதான் மரணம். வேலி நிழல் ஆமோ? வேற்றுப் பேர் தாய் ஆமோ? 18990 வேலி நிழலும் நிழல் அல்ல; ஆண் உறவும் உறவு அல்ல. வேலி பயிரைக் காக்கும்; தாலி தன்னைக் காக்கும். வேலிப் புறத்திலே கண்ணும் மாமியார் தலையிலே கையும். வேலியிலே போகிற ஓணானை மடியில் கட்டிக் கொண்டு குத்துது குடையுது என்றானாம். வேலியிலே சீலையைப் போட்டால் மெள்ளத்தான் எடுக்க வேணும். வேலிச் சீலையை வெட்டியிழுத்தால் வேலிக்கென்ன கேடு? வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி? (வேளாண்மை எதற்கு ஆகும்) வேலியே வயலை அழித்தால் விளைகிறது எங்கே? வேலிலும் நாலு பலன் உண்டு. வேலி வைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலை வைத்து ஆடாத வாணியனும் சரி அல்ல. 19000 வேலுக்குப் பல் உறுதி; வேம்புக்குப் பல் ஒளி. வேலும் வாளும் அடலுக்கு உறுதி. வேலை அற்ற அம்பட்டன் பெண்டாட்டி மயிரைச் சிரைத்தானாம். (மகளைப் பிடித்து, பூனையை) வேலை அற்ற கோழி வெறுமனே முட்டை இட்டதாம். வேலை அற்ற தட்டான் ஊதுகுழலை உடைத்தானாம். வேலை அற்ற தட்டான் தேவையற்ற பொருள்களை நிறுப்பானாம். வேலை அற்ற நாய்க்கு வேறு வேலை என்ன? வேலை அற்ற மாமியார் கழுதையைப் போட்டுச் சிரைத்தாளாம். வேலை அற்ற மாமியார் மருமகளைப் போட்டுத் தாலாட்டி னாளாம். வேலை அற்ற மாமியார் மருமகன்கிட்டே போனாளாம். 19010 வேலை அற்றவன் வேளாளத் தெருவுக்குப் போ; அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போ. வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன்? பாம்பு இல்லா ஊருக்குள் கீரிப்பிள்ளை ஏன்? வேலை இல்லாத மஞ்சிகன் வெண்கழுதையைப் பிடித்துச் சிரைத்தானாம். வேலை இல்லாத தலை வீண் எண்ணக் கலை. வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம். வேலை இல்லாதவன் சீலைப்பேன் குத்தினாற் போல. வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு எதற்கு? எச்சில் சோற்றுக்காரனுக்கு டம்பம் எதற்கு? வேலை இல்லாத மதிப்பை வெட்டி தட்டிக் கொள்வான். வேலை இல்லாவிட்டால் வெள்ளாளத் தெருவுக்குப் போ. வேலைக் கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு. 19020 வேலைக் கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு; வெட்கம் கெட்ட நாரிக்கு அகமுடையான்மேல் சாக்கு. வேலைக் கள்ளிக்கு வேளைக்குக் காற்படி; வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப்படி. வேலைக்காரன் வந்தால் கூழைக் காய்ச்சி ஊற்று; வெட்டிக் காரன் வந்தால் வெள்ளைச் சோறு போடு. வேலைக்காரி என்று வேண்டிய பேர் கேட்டார்கள்; குடித்தனக்காரி என்று கொடுக்க மாட்டோம் என்றார்கள். வேலைக்காரி மினுக்குப் பண்ணிக் கெட்டாள்; வேசி தளுக்குப் பண்ணிக் கெட்டாள். வேலைக்காரி மேல் பாசம் வீட்டுக்காரிக்குக் கேடு. வேலைக்கு இளைத்தவளுக்குப் பிள்ளை மேல் சாக்கு. வேலைக்கு ஏற்ற கூலி; வேசிக்குத் தக்க காசு. வேலைக் குழப்பிக்கு பிள்ளை மீது சாக்கு. வேலைக்கோ சம்பளம்? ஆளுக்கோ சம்பளம்? 19030 வேலை செய்தால் கூலி; வேடம் போட்டால் காசு. வேலை செய்யாக் கள்ளிக்கு பிள்ளைமேல் சாக்கு; வெட்கம் கெட்ட மூளிக்கு அகமுடையான் மீது சாக்கு. வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை; வேலை செய்கிற பிள்ளையைக் காலில் வை. வேலை சொன்னால் பேள வருது என்பான். வேலை பார்த்துப் பெண்ணைக் கொள். வேலை மினக்கெட்டவன் பெண்டாட்டி தலையைச் சிரைத் தானாம். (மெனக்கெட்ட) வேலை முகத்தில் நெருப்பும் சோற்று முகத்தில் சிரிப்பும். வேலை முத்தோ? பிள்ளை முத்தோ? வேலையை அளந்தால் கூலியையும் அளப்பான். வேலையைப் பார்த்துக் கூலி கொடு. 19040 வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு; சாலையைப் பார்த்து ஊருக்கு நட. வேலையைப் பார்த்து வேலை செய்தால் விரல் மடக்கக் கூட நேரமிருக்காது. வேலை வேலைதான்; வீடு வீடுதான். வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை. வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும். வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி? வேளாண்மை எல்லாம் வல்லாண்மையாலே. வேளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல. வேளாளன் கலியாணம் விடிந்தால் தீர்ந்தது. வேளாளன் புத்தி வேலிவரை; வடுகன் புத்தி வாயில்படி வரை. 19050 வேளாளன் வைத்துக் கெட்டான்; துலுக்கன் உடுத்துக் கெட்டான். வேளாளனைப் பாடிய வாயால் வேந்தனைப் பாடுவது இல்லை. வேளை அறிந்து பேசு; நாளை அறிந்து பயணம் பண்ணு. வேளைக்காரன் படுத்துகிற பாட்டுக்கு மேளக்காரன் என்ன செய்வான்? வேளைக்கு அரைக்காசு ஆயிரம் பொன் ஆம். வேளைக்கு அரைப்படி வெங்காய ரசம் இருந்தால் சும்மா இருந்து சொகுசாகச் சாப்பிடுவான். வேளைக்கு அரைப்பணம் ஆயிரம் பொன்; வேளை தப்பினால் நாயுடை மயிர். வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி. வேளைக்கு ஓர் உறவு; ஆளுக்கு ஒரு மரபு. வேளைக்குத் தக்க புத்தி. 19060 வேளைக்குத் தகுந்த வேடம். வேளையும் நாழிகையும் வந்தால் வேண்டாம் என்றாலும் நிற்காது. வேளையும் பொழுதும் வாய்க்க வேணும். வேளையோ அவல வேளை; வீட்டிலோ அன்னம் இல்லை. (அவ வேளை) வேறு வினை தேவை இல்லை; வினை தீர்த்தான் கோவிலுக்குப் போக வேண்டியதில்லை. வேற்றாளைக் கண்டால் மெத்தி மொள்ளும் ஆப்பை; சொந்தக் காரனைக் கண்டால் சுற்றி மொள்ளுமாம் ஆப்பை. வேற்றூர் அரிசி விறகுக்கரி உண்டானால் சாற்றூர்க்கு இல்லை சரி. வேற்றூர் அரிசியும் விறகும் உண்டானால் சாத்தூருக்கு ஒப்பு இல்லை. வேனலுக்குக் கனமழை வரும்; வேந்தனுக்கு கனசனம் வரும். வேனல் காலத்துக்கு விசிறி; ஆன காலத்துக்கு ஆச்சாவும் தேக்கும் வை.  வை 19070 வை என்ற எழுத்தே சொல்லும் செயலும் ஆகும். வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும். வைகறைத் துயில் எழு. வைகாசி எள்ளு வாயிலே. வைகாசி மழை வாழை பெருகும். வைகாசி மாதம் வரகு விதைத்தால் கையாடல் கலம் காணும். வைகாசி பிறந்தால் வடுவும் பழம் பழுக்கும். வைகுண்டம் போகிறவனுக்கு வழிகாட்ட வேணுமா? வைகுண்டத்துக்குப் போகணும் என்றால் வழி தெரியாமலா நிற்பான்? வைக்கத் தெரியாமல் வைக்கோல் போரில் வைத்தானாம். 19080 வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா? வைக்கவும் தெரியாது; வைத்துப் படைக்கவும் தெரியாது. வைக்கிறவன் வைத்தால் நடுப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? வைக்கோல் எடுத்த காசுக்கு வழக்காடி நிற்கையில் பரவச்சேரி மணியம் வாங்கித்தரச் சொன்னானாம். வைக்கோல் எடுத்த வழியாய் இருக்கிறது. வைக்கோல் கட்டுக்காரனாவது ஒதுங்க வேணும்; வழியே போகிறவனாவது ஒதுங்க வேணும். வைக்கோல் காரையில் அடித்தானாம் மாய்ந்து மாய்ந்து அடித்தானாம். வைக்கோல் கூரையினும் விழல் கூரை வெகுநாள் இருக்கும். வைக்கோல் கூளமும் ஒரு வேளைக்கு உதவும். (கூழானாலும்) வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா? புல்தின்ற குதிரைக்கு வேகம் அதிகமா? 19090 வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம்; மதுரம் அதிகம். வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும். வைக்கோல் பஞ்சமா? வறட்டுப் பசு பஞ்சமா? வைக்கோல் படப்புக்கு ஒரு கன்றுக்குட்டி; வாழ்கிற வீட்டுக்கு ஒரு பொட்டைக் குட்டி. வைக்கோல் பட்டையில் கட்டின நாய். வைக்கோல் படப்பின் மேல் நாய் படுத்த மாதிரி. வைக்கோல் போருக்கு நாயைக் காவல் வைத்தாற் போல. வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போல. வைக்கோல் போரில் நின்று மேயும் காளைக்குப் பிடுங்கிப் போட்டால் கட்டுமா? வைக்கோல் மேல் படுத்துவிட்டு அரிப்புக்கு அஞ்சலாமா? 19100 வைக்கோலில் விளைந்ததை வைக்கோலில் கட்ட வேண்டும். வைதவனுக்குத் தானே வாய் நோவும்! வைதாரை மறந்தாலும் நன்றி செய்தாரை மறவாதே. வைதாரையும் வாழ்க என வாழ்த்து. வைதாரை வாழ வைக்கும்; வாழ்ந்தாரைத் தாழ வைக்கும். வைத்த உடைமையைக் கேட்க வயிறு எரிகிறது. வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாகும். வைத்தது எல்லாம் மரமாகுமா? வைத்ததுக்கு மேல் வழி இல்லை; பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை. வைத்தது வரிசை; சிரைத்தால் மொட்டை. 19110 வைத்ததை மறந்தாலும் வாங்கினதை மறக்கலாமா? வைத்த பணம் குறையக் கூடாது; மக்கள் தொப்பை வாடக் கூடாது. வைத்த பிழைப்புக்கு வைப்பாட்டி இரண்டு பேர். வைத்த பிள்ளையைப் பாதுகாத்தால் பெற்ற பிள்ளைக்கு உதவும். வைத்த மரத்தில் இலை அறுக்காதே. வைத்தவன் எடுக்க வேண்டும்; வழிதெரிந்தவன்தான் நடக்க வேண்டும். வைத்தவன் எடுக்க வேண்டும்; வழிதெரிந்தவரே முன்னே செல்ல வேண்டும். வைத்தவன் பொருள் வல்லாருக்குக் கொள்ளை. வைத்தவன் மறந்துவிட்டால் வழிப்போக்கனுக்குத்தான் லாபம். வைத்தால் குடுமி; சிரைத்தால் மொட்டை. 19120 வைத்தால் பயிராகும்; வாழை வைத்தால் தோப்பாகும். வைத்தால் பிள்ளையார்; வழிதெறித்தால் சாணி. வைத்திருந்தால் வெள்ளிக்குடம்; விழுந்துவிட்டால் ஓட்டைக்குடம். வைத்தியத்தில் இரண வைத்தியமும் வயசில் இளமையும் நன்மை தரும். வைத்தியமோ பைத்தியமோ? வைத்தியம் கொஞ்சமாவது தெரியாத பேர்கள் இல்லை. வைத்தியர் பாடு கொண்டாட்டம்; வறியோர் பாடு திண்டாட்டம். வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதம். வைத்தியனுக்குச் சொர்க்கம் இல்லை; வாத்தியாருக்கு நரகம் இல்லை. 19130 வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம். வைத்தியனுக்கும் அஞ்ச வேண்டும்; வம்பனுக்கும் அஞ்ச வேண்டும். வைத்தியனுக்கு மோட்சம் வேண்டும்; வாத்திக்கு மோட்ச வழி உண்டு. வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே. வைத்தியனும் கைவிட்டால் ஆண்டவனே கதி. வைத்தியனே பெரியவன் என்பார் சிலர்; வாத்தியே பெரியவன் என்பார் சிலர். (பெரிது) வைத்தியன் அதிகாரம் சாகிற வரைக்குந்தான்; பஞ்சாங்கக் காரனோ செத்தாலும் விடமாட்டான். வைத்தியன் உயிர் இருக்கும் வரையில் விடமாட்டான்; வைதிகன் உயிர் போன பிறகும் விடமாட்டான். வைத்தியன்கிட்ட வம்புக்கு நிற்காதே. வைத்தியன் கையைப் பார்த்து வாக்கு இட்டது போல. 19140 வைத்தியன் கொடுத்தால் மருந்து; இல்லாவிட்டால் மண். வைத்தியன் சொன்னதெல்லாம் மருந்து. வைத்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல. வைத்தியன் பாராத நோய் தீருமா? வைத்தியன் பிழைப்பு ஊர் பிழைப்பு. வைத்தியன் பிள்ளைக்கு நோய் தீராது; வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது. வைத்தியன் பிள்ளை சாகானோ? வாத்தியார் பெண் அறுக்காளோ? வைத்தியன் பிள்ளை நோயாளி; வாத்தியார் பிள்ளை கோமாளி. வைத்தியன் பிள்ளை நோயினால் சாகாது; மருந்தினால் சாகும். வைத்தியன் பிள்ளை வைத்தியன். 19150 வைத்தியன் பெண்டாட்டி சாகிறது இல்லையா? வாத்தியார் பெண் அறுக்கிறது இல்லையா? வைத்தியன் பெரிதோ? மருந்து பெரிதோ? வைத்தியன் பேச்சு நாலில் ஒருபங்கு. வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம். வைத்தியன் மருந்துக்குப் பேரில்லை. வைத்தியன் வீட்டில் சாவும் சோசியன் வீட்டில் அறுக்கிறதும் இல்லையா? வைத்தியன் வீட்டு நாய் வாத நோய் அறியாதாம். வைத்திருந்த சொத்துக்கு வட்டி வருமா? வைத்திருந்தால் வெள்ளிக் குடம்; விழுந்துவிட்டால் ஓட்டைக் குடம். வைத்திருப்போருக்கு ஒரு கடை; வாங்குவோருக்கு ஒன்பது கடைகள். 19160 வைத்தீசுவரன் கோவிலுக்குப் போயும் வயிற்றுவலி தீரவில்லை. வைத்தீசுவரன் கோவிலுக்குப் போய் வயிற்றுவலியை வாங்கி வந்தானாம். வைத்துப் பார்க்கிறது விற்றுப் பார். வைத்து வாழ்ந்தவனும் இல்லை; கொடுத்துக் கெட்டவனும் இல்லை. வைத்து வைத்தவன் போல எடுத்துக் கொண்டான். வைப்பாரை வைக்கிற வரிசை தெரியவில்லை; விளக்குமாறு சாத்துகிற மூலை தெரியவில்லை. வைப்பு வாக்குப் பார்த்துப் பேச வேண்டும். வையகக் கூத்தே வயிற்றில் அடக்கம். வையகத்தார் மழைக்கு என்ன செய்ய முடியும்? வையகத்தில் எல்லோரும் ஒருபோக்கு அல்ல. 19170 வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை. வையகத்து உற்றவன் மெய்யகன் உற்றவன். (வையகம்) வையகத்தில் உடம்பு இல்லாத பேர்க்கு உப்பு வேண்டாம். வையகத்தில் உடம்பு இல்லாவிட்டால் உடை வேண்டும்; பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும். வையகத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள். வையகத்தில் உப்பும் வேண்டும்; உடலும் வேண்டும். வையகத்தில் உயர்ந்தோர் சிலர்; தாழ்ந்தோர் சிலர். வையகத்தில் உயர்ந்தோர்க்கு இறை தாழ்ந்தோர். (இரை) வையகத்தில் சைவனுக்குச் சைவன் மேல். (சைவம்) வையகத்தில் தந்தையினும் தாய் சிறந்தவள். 19180 வையகத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும். வையகத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டதில்லை. வையகத்தில் நல்வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா? வையகத்தில் நெல் அரிசி வேண்டாதாரும் புல் அரிசி சிக்காதாரும் உண்டு. வையகத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும். வையகத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும். வையகம் ஒழியும், வான் ஒழியும், வல்லவர் வசனம் ஒழியாது. (வையம்) வையகம் செழிக்க மெய்யகம் வேண்டும். வையத்துள் நீதி செய்யத் தக்கது. வையம் அறியுமா வீட்டு வழக்கு. 19190 வையம் ஏற்றின் ஐயம் இல்லை. வையம் ஒத்தால் ஐயம் இல்லை. வையம் கெட்டால் ஐயம் உண்டு. வையம் தோறும் தெய்வம் தொழு. வையம் பகைக்கின் ஐயம் உண்டு. வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை. வையம் பெரிது; அதில் வருத்தமும் பெரிது. வையம் பெரிதானாலும் வனம் உள்ள இடம் கொஞ்சம். வையம் வாழச் சொன்னாலும் வழக்கு மழுங்கச் சொல்லும். வைய வைய வைரக்கல்; திட்டத் திட்டத் திண்டுக்கல். 19200 வையார் ஊசியைக் குறச்சேரியில் விற்றாற் போல. வைரத்தில் ஊசி பாயுமா? வைரத்தை வைரம் அறுக்கும்; அரத்தை அரம் கொல்லும். வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும். வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான். வைரம் மனதில் வையாதே. வைராக்கிய சதகம் சதகங்களில் சிறந்தது. வைராக்கியத்துக்கு அம்பட்டன் கத்தியை விழுங்குகிறதா? வைவார்க்கு இன்பம் இல்லை; பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை. வைஷ்ணவனுக்கு வயிற்றிலே பல்.  வௌ வௌவாலாய்த் தொங்கினாலும் நடக்காத காரியம் நடக்காது. 19210 வௌவாலுக்கு இரவில் கண் தெரியும். வௌவாலுக்கு எது தூரம்? வௌவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நட்டம். வௌவாலுக்கு நீளவும் தெரியும்; குறுகவும் தெரியும். வௌவாலுக்கு மரமே கதி; அதன் குஞ்சுக்கும் அதுவே கதி. வௌவாலுக்கு மரமே கதி; வேலையற்றவனுக்கு வீடே கதி. வௌவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள்? வௌவாலைக் கொன்றாலும் பிடியை விடாது. வௌவாலைத் தின்றாலும் அணிலைத் தின்னலாகாது. வௌவாலைப் பட்சி என்கிறதா? மிருகம் என்கிறதா? 19220 வௌவாலோ சிறிது; அதன் அடியோ வலிது. வௌவாலோடு அணிற் பிள்ளை சேருமா? வௌவால் அடிக்குப் பயப்படலாமா? வௌவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா? வௌவால் அடித்துத் தின்னும்; அணில் கடித்துத் தின்னும். வௌவால் அடைகிற வீட்டில் குடியிருப்பது எப்படி? வௌவால் அடைந்த வீடும் அமீனா அடைந்த வீடும் உருப்படா. வௌவால் கடித்த பழம் வாய்க்குச் சுவை. வௌவால் தின்னாத பழம் இல்லை. (பழமா?) வௌவால் வீட்டுக்குப் போனால் தலைகீழாகத் தொங்க வேண்டும். 19230 வௌவால் வீட்டுக்கு வௌவால் போனால் நீயும் தொங்கு, நானும் தொங்கு. வௌவிச் சேர்த்த பேருக்குப் பொருள் உண்டு. வௌவிய கருமம் எண்ணித் துணி. வௌவில் குடியிருக்கலாமா? வௌவி வௌவிச் சேர்த்தாலும் மற்றவர்க்கு வைத்து ஒழிவான். வௌவின பேர்க்கு முடிவது சுருக்கு.