முதுமொழிக் களஞ்சியம் 3 செ முதல் - நூ வரை ஸந்குஊயிகீகுரூபுஹங்நிகுது செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : முதுமொழிக் களஞ்சியம் - 3 தொகுப்பாசிரியன்மார் : இரா. இளங்குமரனார் பி. தமிழகன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 208 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 முன்னுரை கட்டொழுங்குடையது பாட்டு. அக்கட்டொழுங்கு, கற்று வல்லார்க்கே கைவரும் சிறப்பினது. ஆனால், கல்லார் வாயிலும் கட்டொழுங்கமைந்த மொழித்திறம் உண்டு என்பதைக் காட்டு வன பழமொழி, விடுகதை, புதிர், தாலாட்டு, ஒப்பாரி, நாட்டுப் பாட்டு முதலியவை. அவர்கள் சொல வடை என வழங்குவது புலவர்க்குச் சிலேடை யாயிற்று. அவர்கள் புதிர் என்பது பழநாள் பிசி யாக உள்ளது. பழமொழி யோ முன்னாள் முதுமொழி யாம். மக்கள் வழக்கில் இருந்து கிளர்ந்த மொழி, என்றும் மக்கள் வழக்காக இருக்க வேண்டும். மக்கள் வழக்கில் இருந்து அகலு மாயின், வழக்கிழந்து ஒழிந்தும் போகும். ஆதலால், தொல்காப்பியர் மக்கள் வழக்கைப் பெரிதும் போற்றினார். யாப்புக் கட்டுப்போல் அமையாமல் நீக்குப் போக்குடன் அவற்றைக் கொள்ளவும் புலமையரை ஏவினார். அடிவரையறை இல்லாதவை எனவும், அவை ஆறுவகைய எனவும் சுட்டினார் அவர். எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப என்றும், அவைதாம், நூலின் ஆன, உரையின் ஆன, நொடியொடு புணர்ந்த பிசியின் ஆன, ஏது நுதலிய முதுமொழி ஆன, மறைமொழி கிளந்த மந்திரத்து ஆன, கூற்றிடை வைத்த குறிப்பின் ஆன (தொல்.செய்யுளியல் 164, 165) என்றும் கூறுவன அவை. முன்னை முதுமொழியே, பின்னைப் பழமொழியாய்ப் பெயர் கொண்டது. முதுகுன்றம், பழமலையாய் மாறியதுடன் விருத்தாசல மாகவும் வேற்றுமொழியில் வழங்கப்படுவது ஒரு சான்று. முதுமொழியின் இலக்கணம் நுண்மையும் சுருக்கமும் ஒளிஉடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப (தொல். செய்யுளியல்:177) என்பது. இந்நூற்பாவிற்குப் பொருள், நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும் என்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக், கருதின. பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று சொல்வர் என்றவாறு என்றார் இளம்பூரணர். கூரிதாய்ச் சுருங்கி விழுமிதாய் எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்த பொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழியென்ப புலவர் என்றவாறு என்றார் பேராசிரியர். இம்முதுமொழிக்குப் பழமொழிப் பாடல் ஒன்றனைப் பேராசிரியர் எடுத்துக் காட்டினார். அப்பாடலில் கன்றுமேயக் கழுதை காதை அறுத்தல் என்னும் பழமொழி இடம் பெற்றுள்ளது. முன்றுறையரையனார், பழமொழி நானூறு என்னும் அறநூல் இயற்றினார். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகியது. நானூறு பழமொழிகளைத் தேர்ந்து அவற்றின் வழியாக அறவுரை கூறுவதாக அமைந்தது. அந்நூல் வெண்பா யாப்பினது. அரையனார், மக்கள் வழக்கில் இருந்து பழமொழிகளை எடுத்துக் கொண்டார் எனினும், அவர் உரைநடை வகையால் பயன்படுத்தினார் அல்லர். கட்டொழுங்கு மிக்க வெண்பா யாப்பிற்குத் தகவே பயன் படுத்துதல் அவர்க்குக் கட்டாயம் ஆயிற்று. மக்கள் வழக்கு, புல மக்கள் வழக்காக மாற்றமுற்றது. எனினும், பழமொழி இருவகை வழக்குகளுக்கும் ஏற்பப் பெரிதும் அமைந்தன. தமிழ் வரலாற்றில் பழமொழித் தொகுப்பாளர் ஒருவரை முற்படுத்த வேண்டும் எனின் முந்து நிற்பார் முன்றுறையரையரே ஆவர். அவர் ஆர்வமும் தொகுப்பும் அந்நாளொடு நோக்க அருமை யுடையனவாம். தனித் தனிச் சூழலில் எழுந்த பழமொழி களை, ஓர் ஒழுங்குற்ற துறைப் பகுப்பொடு அமைத்தல் அரிது. தனித்தனிப் பாடல் போல் அமைந்து நின்ற அவற்றைத் திருமணம், செல்வ கேசவராய முதலியார் என்பார் பெரிதும் உழைத்து, கல்வி முதலாக வீட்டு நெறி ஈறாக 34 பகுதிகளாகப் பகுத்தார். கடவுள் வணக்கமும் தற்சிறப்புப் பாயிரமும் அத் தொகுதி கொண்டே அமைத்தார். ஆனால், எடுத்துக் கொண்ட பகுதி ஒவ்வொன்றுக்கும் இவ்வளவே பாடல் என வரம்பிட வாய்ப்புக் கிட்டிற்றில்லை. கல்விக்குப் பத்துப் பாடல், கல்லார்க்கு ஆறு பாடல், அவையறிதலுக்கு ஒன்பது பாடல் - என்பது போல் அமைத்தார். அவ்வமைப்பும் வாய்த்திராக்கால், நமக்குப் பொருள் தொடர்பு கிட்டியிராதாம். அணியெல்லாம் ஆடையின் பின் இருதலைக் கொள்ளி என்பார் இறைத்தோறும் ஊறும் கிணறு உமிக்குற்றுக் கைவருந்து மாறு ஒருவர் பொறை இருவர்நட்பு கல்தேயும் தேயாது சொல் கற்றலில் கேட்டலே நன்று குலவிச்சை கல்லாமல் பாகம்படும் தனிமரம் காடாதல் இல் திங்களை நாய் குரைத்தற்று நாய்காணிற் கற்காணா வாறு நிறைகுடம் நீர்தளும்பல் இல் பாம்பறியும் பாம்பின கால் மகனறிவு தந்தையறிவு முதலிலார்க்கு ஊதியம் இல்லை. இவை பழமொழி நானூறில் இடம் பெற்றவை. கூடிய அளவிலும் எளிதில் புலப்பாடு உடையவை இவை. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதிலுள்ள எளிமையும் விளக்கமும் ஓட்டமும் நாய்காணிற் கற்காணா வாறு என்பதில் காணமுடிய வில்லை. ஆனால், இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ள முறை பழமொழி அளவில் நின்று விடுவது இல்லையே! மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை நாய்காணின் கற்காணா வாறு என அறஞ்செய்தற்குப் பயன்படுத்துகிறார் அரையனார். நரை திரை மூப்பு என்பவை வருமுன்னே பல்வேறாம் நற்செயல் களைச் செய்துவிடல் வேண்டும்; அவ்வாறு செய்யாதவர் பின்னே படுக்கை ஒடுக்கமாகிக் கிடக்கும் நிலையில் செய்தற்கு இயலார்; இத்தகையரைக் காணின் நாயைக் கண்ட போது கல்லைக் காணாதது போல் என்னும் பழமொழி விளக்கமாம் என்பது பொருளாம். நானூறு பழமொழியைத் தொகுத்தது அருமை என்றால், அப்பழமொழி வழியே சொல்லும் அறத்தைக் கண்டு அமைவாய் உரைக்க எத்தகைய முயற்சியும் கூர்மையும் வேண்டி யிருந் திருக்கும் என்பதை உணர்த்துவதற்கே இதனைக் கூறிய தென்க. இதன் பயன், பழமொழி வெளிப்பட விளங்கினாலும் அப்பழமொழியின் உள்ளீட்டுப் பொருளை உணர்ந்து பயன் கொள்ளல் வேண்டும் என்பது தெளிவாதற்கே சுட்டியதாம். மேலும் இதன்கண் மெய்யியல் கொள்கை உள்ளமை திருமந்திர மரத்தை மறைத்தது மாமதயானை என்பதன் வழியே அறியலாம். பழமொழியின் முன்னைப் பெயர் முதுமொழி என அறிந்தோம். திருக்குறளை முதுமொழி என வழங்கும் வழக்கம் உண்டு. தொல்காப்பியர் சொல்லிய நுண்மை, சுருக்கம், ஒளியுடைமை, மென்மை முதலியவற்றையுடைய தாய்க் கருதிய பொருளைத் தெளிவொடு கூறுவதாய் அமைந்தது கொண்டு, அப்பெயரைத் திருக்குறளுக்கு இட்டனர். இதன் சான்றாக விளங்கும் நூல், முதுமொழி மேல் வைப்பு என்பது. இது வெள்ளியம்பலவாணத் தம்பிரான் இயற்றியது. சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுமொழி வெண்பா என்பனவும் திருக்குறளை முதுமொழி என்று கூறுவனவே. இவற்றை இயற்றியவர்கள் முறையே சிவஞான முனிவரும், சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளும் ஆவர். அப்பரடிகள் திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார். அப்பழமொழிகளையும் எவர்மீதோ சாற்றாமல் தம்மீதே சாற்றுகின்றார். கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆரூரானைக் கையினால் தொழாதொழிந்து கனியிருப்பப் காய்கவர்ந்த கள்வனேனே என்று முதற்பாடலில் கூறும் அவர், முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே (2) அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே (3) பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே (4) ஏதன்போர்க் காதனாய் அகப்பட் டேனே (5) இருட்டறையில் மலடுகறந் தெய்த்த வாறே (6) விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே (7) பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே (8) தவமிருக்க அவம்செய்து தருக்கி னேனே (9) கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே (10) என்கிறார். இவை, ஒரு பொருள் பற்றிய பழமொழிகளா? உவமைகளா? கட்டுமிக்க யாப்பில் கூட இவ்வாறு பழமொழி களை வைக்க முடியுமா? முடிந்ததா? இல்லையா? அப்பரடிகள் கொண்ட முதற்பழமொழியாகிய, கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே என்பது, இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்பதைப் பழமொழியாக்கி வைக்கும் சான்று அல்லவோ! படிக்காசுப் புலவரின் தண்டலையார் சதகம், முத்தப்பச் செட்டியாரின் செயங்கொண்டார் வழக்கம் என்பனவும் பழமொழி விளக்கமாக அமைந்த நூல்களே. இதோ வரும் உரைநடையைப் படியுங்கள் ஒரு கிராமத்தில் பத்தேர்ச் சமுசாரி ஒருவன் தீர்வைப் பணம் கட்ட வழியில்லாமல், தன் காணி பூமி முதலாகிய ஆதிகளை யெல்லாம் தோற்று, உடுக்க வதிரமும் இல்லாமல், பரதேசம் போய் விடலாம் என்று நினைத் திருக்கையில், பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறித் துவைத்தது போல பழமுதல் பாக்கிக்காகச் சர்க்கார் சேவகர் வருகிற செய்தியறிந்து அவர்களுக்கு என்ன உத்தரம் சொல்கிறதென்று ஏக்கமுற்று, சட்டி சுட்டது கைவிட்டது என்பது போல, அதுவே வியாஜமாகப் பெண்சாதிபிள்ளை முதலான குடும்பத்தை எல்லாம் துறந்து, கோவணாண்டியாய் வெளிப்பட்டு வருகையில், நடு வழியில் வேறொரு சேவகனைக் கண்டு, காலைச் சுற்றின பாம்பு கடியாமல் போகாது என்பதாக, இந்தச் சனியன் இங்கும் தொடர்ந்து வந்ததே! ïÅ v¥go? என்று நடுநடுங்கி, ஜைன கோயில் ஒன்றில் போய் ஒளிந்தவன், அந்தக் கோயிலில் நிர்வாணமாயிருந்த ஆள்மட்டமான ஜைன விக்கிரகத்தைப் பார்த்துத் தன்னைப் போலப் பயிரிட்டுக் கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு, ஐயோ! நான் பத்தேர் வைத்துக் கெட்டுக் கோவணத் தோடாவது தப்பி வந்தேன், அப்பா, நீ எத்தனை ஏர் வைத்துக் கெட்டாயோ? cd¡F ïªj¡ nfhtzK« ïšyhkš nghŒ É£lnj! என்று அதைக் கட்டிக் கொண்டு அழுதான் இது விநோத ரச மஞ்சரி என்னும் நூலில் பயனில் உழவு என்னும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி. இதில் வரும் பழமொழி நகைச்சுவை ஆகியவை படிப்பாரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுதல் உறுதி. இதனை எழுதியவர் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பார். கி. பி. 1876இல் முதல் பதிப்பு வெளிவந்தது. இந்நூல் முதற்பதிப்பில் 16 கட்டுரைகளையும் பின்வந்த பதிப்புகளில் 20 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. இவ்வொரு நூலில் மட்டும் ஏறத்தாழ முந்நூறு பழமொழிகள் இடம் பெற்றன என்றால் இந்நூலே பழமொழிக் களஞ்சியம் தானே! இடையே சிலச்சில பழமொழி நூல்கள் வரினும் பெருந்திரட்டாகக் கி.பி. 1912 இல் ஒன்று வெளிப்பட்டது. அது அனவரத விநாயகம் பிள்ளை என்பாரால் பரிசோதிக்கப் பட்டு, மதரா ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப் பட்டது. 12, 270 என்னும் எண்ணிக்கையுடையது. அதன் விலை ரூபா. 2. மொழிஞாயிறு பாவாணர் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றிய போது, பழமொழி பதின்மூவாயிரம் என்னும் பெயரிய தொகை செய்து அச்சகத்துக்கும் சென்று பின் அச்சிடப் படாமலும், மூலப்படி மீள வராமலும் ஒழிந்தது என்பது அவர் கடிதங்களால் அறியப்படும் செய்தி.. அந்நாளில் திருவரங்க நீலாம்பிகையார் பழமொழித் தொகுப்பு ஒன்று செய்து வந்தார் என்பதும் பாவாணர் கடித வழியாய் அறிய வாய்க்கின்றது. அது தொகையும் ஆகவில்லை; அச்சுக்குச் செல்லவும் இல்லை. அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகவும், துறை வாரியாகவும் பழமொழித் தொகைகள் வெளிப்பட்டன. கலைமகள் ஆசிரியர் கி.வா. சகநாதனார் அவர்களால் நான்கு தொகுதிகள் வெளிப்பட்டன. இருபதாயிரம் பழமொழிகளைத் தாண்டிய எண்ணிக்கையுடையன அவை. பொதுவுடைமைத் தோழர் தொண்டில் தூயர் சீவானந்தம் அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கிய நாளில் பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, சாமி பாட்டு, கும்மிப்பாட்டு, புனைகதை என்பவற்றையெல்லாம் தொகுக்கவேண்டும் என்று பேராவல் கொண்டார். நாட்டில் வட்டாரம் தோறும் வழங்கும் பழமொழிகளை யெல்லாம் ஒருங்கே திரட்டுதல் அரிது. நூல்களில் காணக் கிடைப்பனவாகிய எல்லாவற்றையும் திரட்டுதலும் அரிது. பழமொழித் தொகுதிகளில் இடம் பெற்றாலும் மரபுத் தொடர், வழக்கு மொழி, அறநூல் தொடர், விடுகதை, உவமை எனவும் உள்ளன. அவற்றை விலக்கின் ஒரு பெரும் பகுதி அகன்று விடும். இனிச் சாதிமை சார்ந்ததும் வெறுக்க வைப்பதுமாம் பழமொழிகளும் உள. அவற்றை அறவே நீக்கல் வேண்டும். அதனால், அந்நாள் மக்கள் வாழ்வியல் எண்ணப் போக்கு என்பவை அறியவாயா நிலையும் உண்டாம். 1. எவ்வாற்றானும் எவரும் வெறுத்தற்கு இடமிலாப் பழமொழிகளைத் தொகுத்தல் 2. வேற்றுச் சொல் கலவாமல் தொகுத்தல் 3. கூடிய அளவும் கொச்சை வழு நீக்கித் தொகுத்தல் என மூன்று வரம்புகளைக் கொண்டு தொகுத்தால், முற்றிலும் மக்கள் வழக்கில் இருந்து தடம் மாறிப் புலமையர் வழக்காகிவிடல் உறுதி! ஆதலால் மொழிக்கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த, முயன்று தொகுத்த பழமொழித் தொகை இது. இதில் உள்ள பழமொழி எண்ணிக்கை ஏறத்தாழ இருபதாயிரம். பழமொழி அல்லது முதுமொழி என்பதன் இலக்கணம் தொல்காப்பியத்திலேயே உண்டு என்னும் போது, அதுவும் அவருக்கு முந்தை இலக்கண நூல்களிலேயே இடம் பெற்றிருந்தன என்னும் போது, பழமொழி உருவாக்கம் ஏற்படுமளவு மொழிவளம் துறையறிவு பண்பாடு முதலியவை ஏற்பட்டிருக்க வேண்டும் என்னும் போது, அவை தோன்றிய காலத்தை வரம்பிடுவது அவ்வளவு எளியது அன்றாம். மொழிப் பழமையொடு, பழமொழிப் பழமையும் ஒப்புடையதாம் என்பதே சாலும்! வாங்கும் போது உள்ள குணம் கொடுக்கும் போது இல்லை என்னும் மக்கள் மொழி, கலித்தொகையில் இடம் பெறுகிறது. உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத்தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே! கலி - 22 என்பது அது. உலகத் தொழில்களில் தலையாயது உழவே. குறிப்பாகத் தமிழகத்தின் உழவுச் சிறப்பு வள்ளுவத்தில் ஓரதிகாரம் கொண்டது. வாழ்வார் என்றால் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றது. உழவின் வழிப்பட்டதே. உலகம் என்பதைச், சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் என்றது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி என்றும் குறித்தது. கம்பரால் ஏர் எழுபது என்னும் நூலும், திருக்கை வழக்கம் என்னும் நூலும் இயற்றப்பட்டன. இவ்வாறு பாடு புகழ் பெற்ற உழவு வழிப்பட்ட பழமொழிகள் மிகப் பலவாம். வேளாண்மை என்பது உழவுத் தொழிலை மட்டும் அல்லாமல் பிறர்க்கு உதவி வாழ்வதாம் பண்பாட்டுப் பெருமையும் பெற்றது. ஆதலால், இவை தனியாய்வுக்கு உரிய வளம் உடையவை. இனி, மருத்துவம் தமிழகத்தில் சிறந்தோங்கியமை சித்த மருத்துவம் என்னும் சிறப்பால் புலப்படும். திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என அறநூற் பெயர்களே மருத்துவஞ்சார் தலைப்பின எனின், அம் மருத்துவ வழிப்பட்ட பழமொழிகளும் பெருக்க மிக்கவையேயாம். தனித்துறையாய் எடுத்து ஆயத் தக்க பெருமை யுடையது அது. இவ்வாறு பல்வேறு ஆய்வுப் பொருள்களின் வைப்பகமாக இருப்பது பழமொழித் தொகுப்பு என்பது வெளிப்படை. பழமொழி வழியாகச் சொல்லப்படும் அறநெறிகள் எண்ணற்றவை. பல்வேறு மெய்ப்பாட்டு - சுவை - விளக்கமாக அமைந்தவையும் மிக்கவை. அறிவியல், பொருளியல், இன்பியல், வழிபாடு எனப் பகுத்தாய்வு மேற்கொள்ளவும் இடம் தருவன பழமொழிகள். சில பழமொழிகள் மக்கள் வழக்கில் பெருக இருந்தாலும் பழமொழித் திரட்டுகளில் இடம் பெற்றிருந்தாலும் நூலாசிரியர் களால் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றை இத் தொகுப்பில் இடம் பெறச் செய்யவில்லை. கூடிய அளவும் இடக்கரடக்கு என்னும் அவையல் கிளவியும் இனத்துக்குப் பழிப்பாவனவும் இடம் பெறாமல் செய்யினும், பழமொழியின் உயிர்ப்பு நீங்கிப் போகுமென அவை விலக்கப்பட்டில. அவை தகவாம் வகையில் கொள்ளப்பட்டுள. கூடிய அளவிலும் கொச்சையும் வழுவும் அகற்றிச் செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன. மக்கள் உணர்வை மதித்துப் போற்றுதலால் முழுதுறு செவ்வடிவோ, அறவே அயன்மொழிச் சொல் நீக்கமோ கொண்டதாக இத்தொகை அமைந்திலது என்பதைச் சுட்டுதல் முறைமையாம். வெவ்வேறு வட்டாரங்களில் ஒரு பழமொழி வழங்குங் கால் சில மாற்று வடிவங்களையும் சில வேறு சொற்களையும் கொண்டிருத்தற்கு இடமுண்டு. அவை அடைப்புக்குள் உள்ளன. சில பழமொழிகள் முடிபு இன்றி இருக்கும். அவற்றின் முடிபு அடைப்புக் குறியுள் இடம் பெறும். குறுவட்டாரம் பெருவட்டாரம் தமிழகம் எனப் பரவலாக வழங்கும் பழமொழிகள் எல்லாமும் அமைந்த திரட்டு இஃது ஆதலால், வட்டாரப் பெயர் சுட்டிக் காட்டல் அரிதாயிற்று. இம்முயற்சியில் ஈடுபடுவார் பலராய், வட்டாரம் வட்டாரமாய் அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தினால் தமிழ் வளம் மேலும் பெருக வாய்க்கும். அதனால், வழக்கும் செய்யுளும் என்னும் மொழி உயிர் நாடிகள் இரண்டும் ஒருங்கே சிறக்க வாய்ப்பும் உண்டாம். பாவாணர் தொகுத்த பழமொழி பதின்மூவாயிரம் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும், அவர் பயன்படுத்திய பழமொழி கள் பெரிதும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தம் விருப்பாகச் செய்து இத்தொகையில் பயன்படுத்திக் கொள்ள உதவியவர் வெங்காலூர் தனித்தமிழன்பர் சி.பூ. மணி அவர்கள். பின்னர்ப் பாவாணர் தொகுத்த பழமொழியென்று சேலம் திரு.வெங்கரைமணியன் அவர்கள் வழியே ஒன்று கிடைத்தது. அதில் பாவாணர் கையெழுத்து எவ்விடத்தும் இல்லை. எனினும் இத்தொகுப்பில் சேராத சில பழமொழிகள் கிடைத்தன. அவற்றை இணைத்து அப்பயனும் வாய்க்கச் செய்தோம். மேலும், நெடிய காலமாக எம்மால் தொகுக்கப்பட்டுக் குறிப்பேட்டில் தங்கிக் கிடந்தவை, நினைவில் பதிவாகியவை ஆகியவையும் இத்தொகையில் இடம் பெற்றுள்ளன. முனைவர் தமிழகனார் கடின உழைப்பெடுத்துத் தொகுத்த தொகுப்பும், அவர் பேராசிரியப் பணியாற்றும் நாவலர் ந.மு.வே. திருவருள் கல்லூரி மாணவ மாணவியர் தொகுத்த தொகுப்பும் இதன்கண் இடம் பெற்றுள. பழமொழி, வட்டார வழக்கு என்பவை கிட்டுமென எண்ணி நூற்றுகணக்கான பக்கங்களைத் திருப்பியும் ஒன்று தானும் கிட்டாத கதை நூல்களும் உண்டு. சுவை சுவையான பழமொழிகளைத் திரட்டுப் பாகாகத் தந்த சிறுகதை நூல்களும் உண்டு. தேடி வைத்ததைத் தொகுத்தும், புதுவதாகத் தேடித் தொகுத்தும் நம் முந்தையர் வைத்துச் சென்ற வைப்புநிதி யென விளங்கும் இப்பழமொழியை ஆர்வத்தால் அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு வழங்க முந்து நின்றவர் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனரும் தமிழ்ப் போராளியாய்த் தோன்றித் தமிழ்க் காவலராகத் திகழ்பவருமாகிய திரு.கோ.இளவழகனார் அவர்கள் தேடித் தொகுத்த இத்தொகையினும் பாரிய பல் தொகுதி எனினும் துணிவுடன் வெளியிடும் அளப்பரிய ஆர்வத் தொண்டர் அவர். அவர்க்கு நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டும்! இதன் மெய்ப்பினைப் பல்கால் பார்த்து அயராமல் திருத்திய ஆர்வத் தொண்டர் முனைவர் தமிழகனார் இத்தகு பல திறப்பணிகளைச் செய்தலில் தழும்பேறியவர். அவர் தொண்டு வாழ்வதாக. இன்ப அன்புடன் இரா.இளங்குமரன் பதிப்புரை முதுமொழிக் களஞ்சியம் எனும் பெயரில் தமிழ்மண் அறக்கட்டளையின் முத்திரைப் பதிப்புகளாக ஐந்து தொகுதிகள் வெளிவருகின்றன. மொத்தம் 19336 பழமொழிகள் உள்ளன. மொழிக் கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த முயன்று தொகுத்த முதுமொழித் தொகை இது, கொச்சையும் வழுவும் அகற்றி செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன என முன்னுரைப் பகுதியில் அய்யா இளங்குமரனார் குறித்துள்ளார். இக்குறிப்புகளைக் கொண்டு இத்தொகுதிகளின் அருமைப்பெருமைகள் புலப்படும். இதுவரையிலும் பழமொழிகள் எனும் தலைப்பில் வெளிவந்தனவற்றுக்கும் இவற்றுக்கும் உள்ள சிறப்புகளைக் களஞ்சியத்தின் முன்னுரையிலும், பின்னட்டைச் செய்திலும் காண்க. முந்தையர் தொகுத்து வைத்த வைப்பு நிதியைத் தமிழ் உலகு பயன் கொள்வதற்கு தமிழ்மண் அறக்கட்டளை தம் கடனைச் செய்துள்ளது. இக்களஞ்சியங்களை செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், முனைவர் பி.தமிழகன் ஆகிய பெருந்தமிழறிஞர்கள் பல்லாற்றானும் உழைத்துத் தொகுத்துத் தந்துள்ளனர். இதனைப் பிழையற்ற செம்பதிப்பாக தமிழ்கூறும் உலகிற்குத் தந்துள்ளோம். இப்பெரு மக்களின் தன்னலம் கருதாத் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறேன். பழந்தமிழ் மக்களின் கருவூலத்தை உங்களுக்குத் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்வீர். இச்செந்தமிழ்க் களஞ்சியங்கள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய அரங்க. குமரேசன், வே.தனசேகரன் , மு.ந. இராமசுப்ரமணிய ராசா, இல.தருமராசு, ரெ.விசயக்குமார், முனைவர் கி.செயக்குமார், திருமதி கீதா நல்லதம்பி, அரு.அபிராமி, புலவர் மு.இராசவேலு மற்றும் மேலட்டை அழகுற வருவதற்கு துணை யிருந்த செல்வி வ.மலர் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். பதிப்பாளர் முதுமொழிக் களஞ்சியம் 3 செ முதல் - நூ வரை செ செக்கடி முத்தி எனக்கென்ன புத்தி? செக்கடிக்கும் தம்பூருக்குக் ஒத்துவருமா? செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளுக்குக் காணும்? செக்கானிடம் சிக்கின மாடும் பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்பட மாட்டார்கள். செக்கில் அரைபட்ட எள் திரும்ப முழுசு ஆகுமா? 9530 செக்கில் அரைபட்ட தேங்காய் பிண்ணாக்கு ஆவதைப் போல. (பிண்ணாக்கை போல) செக்கு உலக்கையை விழுங்கியவனுக்குச் சுக்குக் கசாயம் மருந்து ஆமா? (போதுமா) செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியாதா? செக்குக் கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்துச் சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெறுவது. செக்கு கண்ட இடத்தில் தலையை விரிக்கிறதா? செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன். செக்குக்கு மாடு கொடுத்தாலும் கொடுக்கலாம்; சீவலப் பேரியில் பெண் கொடுக்கக் கூடாது. (திண்டுகல்லில்) செக்கும் சிவலிங்கமும் தெரியாதா? செக்கு மாட்டைக் கவலையில் கட்டினாற் போல. செக்கை விழுங்கிவிட்டுச் சுக்குத் தண்ணீர் குடித்தாற் போல. 9540 செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல. செங்கோல் அரசனே தெய்வம் ஆவான். செங்கோல் கோணினால் எங்கும் கோணும். செங்கோலுக்கு முன் சங்கீதமா? செங்கோலுக்கு முன்னால் சங்கீதம் செல்லுமா? செஞ்சி அழிந்தது; சென்னை வளர்ந்தது. (அழிய) செடி கண்டு பேளாதவன் வாழ்க்கை தடி கொண்ட நாயோடு ஒக்கும். செடியில் இருக்கிற ஓணானை மடியில் கட்டிக்கொண்டு குடைகிறது குடைகிறது என்றான். (என்கிறான்) செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்? செடியில் வணங்காதது மரத்தில் வணங்குமா? 9550 செடியில் வளையாதது மரத்தில் வளையாது. செடியை வைத்துக் கொண்டு விலை கூறலாம். செட்டி என்றால் சீரகம் மணக்குமா? செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன். செட்டிக்கு உறக்கம் உண்டு; வட்டிக்கு உறக்கம் இல்லை. செட்டிக்கு எதற்குச் செம்புச் சனியன்? செட்டிக்கு ஏன் சென்மச் சனியன். செட்டிக்கு ஒரு சந்தை; திருடனுக்கு ஓர் அமாவாசை. செட்டிக்கு ஒரு தட்டு; சேவகனுக்கு ஒரு வெட்டு. செட்டிக்கு தொட்டதெல்லாம் துட்டு. 9560 செட்டிக்கும் பயிருக்கும் சென்மப் பகை. (மட்டிக்கும்) செட்டிக்கு வட்டியிலே கண்; கள்ளனுக்கு பெட்டியிலே கண். செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை. செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை. செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமோ? செட்டி கூடிக் கெட்டான்; சேணியன் பிரிந்து கெட்டான். செட்டி கெட்டாலும் எட்டு நாளில் பிழைப்பான். செட்டி கெட்டால் பட்டு உடுத்துவான். செட்டி கொடுத்துக் கெட்டான். செட்டி சிங்காரிக்கிறதற்குள்ளே பட்டணம் பறி போகிறது. 9570 செட்டி சுற்றாமல் கெட்டான்; தட்டான் தட்டாமல் கெட்டான். செட்டி நட்டம் குடியானவன் தலையிலே. செட்டி பிள்ளையோ? கெட்டி பிள்ளையோ? செட்டி படை வெல்லுமா? சேற்றுத்தவளை கடிக்குமா? செட்டி படை வெட்டாது; செத்த பாம்பு கொத்தாது. செட்டி பட்டினி; கால்பணம் வெட்டினான். செட்டி பணத்தைக் குறைத்தான்; சேணியன் நூலைக் குறைத்தான். செட்டிப் பிள்ளை கெட்டி. செட்டி புறப்பட்டால் பட்டணம் முடியும். செட்டி போன இடம் எல்லாம் வட்டக் காற்பணம். 9580 செட்டி மகன் கப்பலுக்குச் செந்தூரான் துணை. செட்டி மிடுக்கோ? சரக்கு மிடுக்கோ? (முடுக்கோ) (செட்டியார்) செட்டிமுறை எட்டு முறை; எட்டு முறையும் கெட்ட முறை. செட்டியாருக்கு ஒரு காலம்; சேவகனுக்கு ஒரு காலம். செட்டியாரே செட்டியாரே என்றால் சீரகம் பணஎடை முக்காற் பணம் என்கிறான். செட்டியாரே செட்டியாரே என்றால் சீரகம் மணக்கிறது என்பான். செட்டியார் சிங்காரிப்பதற்குள் பட்டணம் கொள்ளை போய்விடும். செட்டியார் பிணம் சீத்தென்று போயிற்று. (பணம்) செட்டியார் பிள்ளை செல்லப் பிள்ளை ஆனால் படைக்குப் போகிற நாயக்கரைப் பயமுறுத்தலாமா? செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும். 9590 செட்டியும் தட்டானும் ஒன்று; கட்டிப் புரண்டால் தனி. செட்டி வீட்டில் கொட்டிக் கிடந்தால் குட்டைத் தாதனுக்கு என்ன பயன்? செட்டி வீட்டில் பணம் இருக்கிறது; ஆல மரத்தில் பேய் இருக்கிறது. செட்டி வீட்டு நாய் சேர் காத்திருந்தது போல. செட்டி வீட்டு நாயும் கணக்குப் பார்த்துக் கடிக்கும். செட்டி வெள்ளரிக்காய் என்றால் நரி நொட்டை விட்டுத் தின்னுமாம். (சொட்டாங்குவிட்டு) செட்டுக்கு ஒரு தட்டு; தேவடியாளுக்கு ஒரு மெட்டு. செட்டுக்கு வெள்ளாமை சிறக்காது. செத்த அன்று வா என்றால் பத்தன்று வருவான். (பத்தாம் நாளைக்கு) செத்த ஆடு காற்பணம்; சுமைக்கூலி முக்காற்பணம். 9600 செத்த ஆடு பலுகும்; விற்ற ஆடு குறையும். செத்த ஆட்டுக்குக் கண் பெரிது; தாய் இல்லாப் பிள்ளைக்கு வயிறு பெரிது. செத்த கழுதைமேல் எத்தனை கழுதை ஏறினால் என்ன? செத்த நாய் திரும்பக் கடியாது. செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைக்காரன் பெண்டாட்டி. (வித்தைக்காரப் பெண்பிள்ளை) செத்த பாம்பை எட்ட நின்று அடிப்பான் சீனத்து அதிகாரி. செத்த பாம்பை எட்டித் தள்ளி நின்று அடிக்கும் தீரன். செத்த பிணங்களைக் கண்டு சாகும் பிணங்கள் அழுகின்றன. செத்த பிணத்தில் கடை, உற்றார்க்கு உதவாதவன். செத்த பிணத்திற்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது. 9610 செத்த பிணத்திற்குக் கண் ஏன்? சிவசிவா ஆண்டிக்கு பெண் ஏன்? செத்த பிணத்திற்குச் சாகப் போகும் பிணங்கள் அழுவானேன்? செத்த பிணத்திற்குச் சீரிட்டழு. செத்த பிணம் எந்தத் தெருவோ? செத்த பிறகே செத்தவனுக்குச் செய்கிறது. (செய்தவனுக்கு) செத்த பிறகா செல்வம் அனுபவிக்கிறது. செத்த பின் எப்படிப் போனால் என்ன? செத்த மாடு புல்லுத் தின்னுமா? செத்த மாட்டிற்குப் புல்தானம் செய்தானாம். செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்தரிக் காயை அறுக்கும். 9620 செத்தவர்கள் இதுவரை உடன்கொண்டு போனது ஒன்று மில்லை. செத்தவர்களெல்லாம் பிழைத்துவிட்டால் செகம் தாங்குமா? செத்தவன் உடலம் சுமந்தவன் தலைமேலே. செத்தவன் உடைமை இருந்தவன் அடைக்கலம். செத்தவன் உடைமை இருந்தவனுக்குக் கிடைக்கும். செத்தவன் கண் கடாக்கண்; இருந்தவன் கண் இல்லிக் கண். செத்தவன் கண் செந்தாமரைக் கண்; இருக்கிறவன் கண் நொள்ளைக் கண். செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்தாற் போல. (கொடுத்த சம்பந்தம்) செத்தவன் காதிலே சுக்கை வைத்து ஊதினாற் போல. செத்தவன் சாட்சிக்கு வருவதில்லை. 9630 செத்தவன் சூத்து தெற்கே இருந்தால் என்ன? வடக்கே இருந்தால் என்ன? (கிழக்கே, மேற்கே) செத்தவன் தலை கிழக்கே இருந்தாலென்ன? மேற்கே இருந்தாலென்ன? செத்தவன் பாடை ஏறித்தானே ஆகவேண்டும். செத்தவன் பாரம் சுமந்தவன் தலையில். செத்தவன் பிழைத்தால் வெற்றி கொள்கிறது ஆர்? செத்தவன் பிள்ளை இருக்கிறவனுக்கு அடைக்கலம். செத்தவன் பெண்சாதியை இருந்தவன் கைக்கொண்டாற் போல. செத்தவன் பெண்டினைக் கட்டினாலும் விட்டவன் பெண்டினைக் கட்டக் கூடாது. செத்தவன் மேலே எத்தனை வண்டி ஏறினால்தான் என்ன? செத்தவன் வாயிலே மண்; இருந்தவன் வாயிலே சோறு. 9640 செத்தவன் வீட்டிற் கெட்டவன் ஆர். செத்தவன் வீட்டிற் பாடுபட்டவர் ஆரோ? செத்தாருக்குச் சீரிட்டு அழு. செத்தாரைச் சாவார் சுமப்பர். செத்தால் செடியைக் கா; பிழைத்தால் வீட்டைக் கா. செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு. (நாற்றம்) செத்தால் தெரியும் சுடுகாடு. செத்தால் பிழைக்க மாட்டான். செத்துங் கொடுத்தான் சீதக்காதி; செத்துங் கெடுத்தார் சேதுப்புலவர். செத்துப் போகும் போது தலையில் கட்டிக் கொண்டு போகிறானோ? 9650 செத்துப்போன பசுவைக் கெட்டுப் போன பார்ப்பானுக்குத் தாரை வார்த்த கதை. செத்துப்போன பாட்டி இருந்தால் கூட இரண்டு சிற்றப்பனைப் பெற்றிருப்பாள். செத்துப்போன பார்ப்பானுக்குச் செட்டிப் பெண்ணைக் கொடுத்தாளாம். செத்துப்போன மாடு உயிரோடு இருந்தால் உடைந்து போன கலயத்தால் ஒன்பது கலயம் கறப்பேன் என்றானாம். செத்தும் கொடுத்தான் சீவரத்துக் கிராமணி. செத்தும் சாகாதவன் தியாகம் கொடுப்போன். செத்தைக் கூலி காற்பணம்; செமை(சுமை)க் கூலி முக்காற் பணம். செந்தணலை முன்றானையில் முடியலாமா? செந்நாய்க் கூட்டத்துக்குச் சிறுத்தையும் அஞ்சும். செந்நாயைச் செருப்பால் அடி; கருநாயைக் கழியால் அடி. 9660 செப்படி வித்தை எப்படிப்போவேன்? செப்பிலுமில்லை, பந்திலுமில்லை. செப்பில்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா? செம்பரப்பாக்கத்தான் பேர் பெற்றான்; மாங்காட்டான் நீர் பெற்றான். செம்பியன் ஒருவன், சேரன் ஒருவன், சேர்த்துப் பிடிக்கப் பாண்டியன் ஒருவன். செம்பிலும் இல்லை கல்லிலும் இல்லை. செம்பாடு அடித்தால் என்பாடு தீர்ந்தது. செம்பு நடமாடினால் குயவன் தானே குடி பிடுங்குவான். செம்போத்து வலமானால் சம்பத்து உண்டாகும். செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓநாய் உள்ளே. 9670 செயமுள்ள மட்டும் பயம் இல்லை. செயற்கை மணமோ? இயற்கை மணமோ? செய்கிறது எல்லாம் செய்துவிட்டுக் கழுநீர்ப் பானையில் கை அலம்பினாளாம். செய்கிறது சிரைக்கிற வேலை; நினைக்கிறது சிரசுத்தார் வேலை. செய்கிற வேலையை விட்டுவிட்டுச் சினையாட்டுக்கு நார் கட்டினானாம். செய்கிற வேலையை விட்டுவிட்டுச் சினையாட்டைச் சிரைத்தானாம். செய்கிறவர்களுக்குச் சொல்லத் தெரியாது; சொல்கிறவர் களுக்குச் செய்யத் தெரியாது. செய்த கை சேவேறும். செய்த கை சேவேறும்; செய்யாத கை நோவேறும். செய்த தீவினை செய்தவர்க்கே. 9680 செய்த நன்றியைச் செத்தாலும் மறக்கலாமா? செய்த பாவத்தைச் சொல்லிக் கழி. செய்த மேனி சேவு; செய்யாத மேனி நோவு. செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும். செய்த பாவம் சொன்னவர் வாயோடே. செய்த வினை செய்தவர்க்கு எய்திடும். செய்த வினை செய்தவனையே சாரும். செய்தார்க்குச் செய்வது செத்த பிறகோ? செய்தவனுக்குச் செய்ய வேண்டும்; செத்தவனுக்கு அழ வேண்டும். செய்யத்தக்கதைச் செய்யாமல் விட்டுவிடுவதினும் பிந்திச் செய்வது மேல். 9690 செய்தார்க்குச் செய்வது செத்த பிறகோ? செய்யாத கையைத் தீயிலே வை. செய்யாத வித்தை எல்லாம் செய்தாலும் தேங்காய்க் குடுக்கையிலே மூத்திரம் பெய்வாளா? செய்யுத் தொழிலில் நெய்யும் தொழிலே சிறப்பு. செய்யும் தொழிலெல்லாம் சீர் தூக்கிப் பார்க்கில் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. செய்வது சிவபூசை; இடிப்பது கோவில் மதிலை. செய்வன திருந்த செய். செய்வாருக்குச் செய்வார் செத்துக் கிடப்பாரா? செருக்கி சேதி தெரியாமல் தம்பி செடியைச் செடியைச் சுத்தினானாம். (சிறுக்கி) செருப்படி கொடுத்துவிட்டுக் கடித்துக் கொள் என்று கருப்பட்டி கொடுத்தானாம். 9700 செருப்பால் அடித்தாலும் திருட்டுக்கை நில்லாது. செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுத்தாற் போல. செருப்பால் அடித்துக் குதிரையோடு தீவட்டி கொடுத்தாற் போல. செருப்பால் அடித்துப் பட்டுப் புடவை கொடுத்தாற் போல. செருப்பால் அடித்துப் பருப்புச்சோறு போட்டது போல. செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும். செருப்பு கடித்தால் திருப்பிக் கடிப்பதா? செருப்புக்காகக் காலைக் குறைக்க முடியுமா? செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? செருப்பு காலைக் கடித்தால் நாம் செருப்பைக் கடிப்பதா? 9710 செருப்புக்கு அச்சாரம் துரும்பு. செருப்புக் கொள்ளுகிறது காலுக்கோ? தலைக்கோ? செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டுவதா? செருப்புக்கு மிஞ்சின அடியும் இல்லை; பருப்புக்கு மிஞ்சின குழம்பும் இல்லை. செருப்பு சின்னதானால் காலைத் தறிக்கிறதா? செருப்பு பொன்னால் செய்யப்பட்டிருந்தாலும் காலில் தானே போட்டுக் கொள்ளவேண்டும். செருப்புப் போட்டவன் கூடவும் சந்நியாசி கூடவும் துணை போகாதே. செலவில் குறைந்த வரவானால் சேமிப்பது எப்படி? செலவு அதிகம்; வரவு சேராது. செலவு இல்லாச் செலவு வந்தால் களவு இல்லாக் களவு வரும். 9720 செலவு இல்லாப் பணத்துக்குச் சில்லறைக் கடை வைத்துப் பார்த்தானாம். செலவு உண்டானால் சேவகமுண்டு. செலவைக் குறைக்க வேண்டுமென்று சோறு தின்னாமல் இருக்க முடியுமா? செலவோடு செலவு கந்தப் பொடிக்குக் காற்பணம். செல்லரித்த காதுக்கு வெள்ளைக் கம்மல் ஏன்? செல்லக் குடுக்கைத் தேங்காயே பல்லிடுக்கில் புகுந்தாயோ! செல்லச் சக்கிலிப் பிள்ளை செருப்புச் செருப்பாய்த் தின்று கழிகிறது. செல்லச் சிறுக்கி ஆமுடையான் செவ்வாய்க்கிழமை செத்தானாம்; வீடு வெறிசாய்ப் போகுமென்று வெள்ளிக் கிழமை எடுத்தாளாம். செல்லப் பிள்ளை சீலை விடாதாம் பிள்ளை பெறுமட்டும். செல்லம் சறுக்குதா? வாசற்படி வழுக்குதா? 9730 செல்லம் சிரிப்பாணி; சீரங்கத்துக் குந்தாணி. செல்லம் சீர் அழிக்கும். செல்லம் செதுக்குதாம்; வாசற்படி வழுக்குதாம். செல்லம் சொல்லுக்கு அஞ்சாள்; அழகி நடைக்கு அஞ்சாள். செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா? செல்லம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டலமும் செல்லும் . செல்லம் முற்றின பாகற்காய் புளியில்லாமல் நெளிகிறதாம். செல்லாத காசு என்றைக்கும் செல்லாது. செல்லாக் கோபம் பொறுமைக்கு அடையாளம். செல்வத்தில் ஒரு பெண் பிறந்தது; செட்டித்தெரு எல்லாம் திரிந்து விட்டு வந்தது. 9740 செல்லாப் பணம் சந்தையிற் செல்லுமோ? செல்லும் காசுக்கு வட்டம் உண்டா? செல்லும் செல்லாததற்குச் செட்டியார் இருக்கிறார். செல்வத்தில் அழுத்த முள்ளவன் செத்தாலும் கொடான். செல்வச் செருக்கினால் திரட்டுப்பால் குமட்டுகிறது. செல்வத்துப் பயனே ஈதல். செல்வத்துப் பொருள் கொடுத்தால் குறையும்; கல்வி குறையுமோ? செல்வக் காலத்தில் தாழ்மை வேண்டும்; வறுமைக் காலத்தில் மேன்மை வேண்டும். செல்வப் பெண் சீரங்க நாயகிக்குச் சீதனம் வந்ததாம் வறையோடு. செல்வம் உண்டாகும் காலம் செய்கை உண்டு; வல்லமை உண்டு. 9750 செல்வம் செருக்குகின்றது காசுக்கு வழி இல்லை. செல்வம் செருக்குகிறது; வாசற்படி வழுக்குகிறது. செல்வம் சொல்லுக்கு அஞ்சாள்; அழகி நடைக்கு அஞ்சாள். செல்வம் தீமைகளின் தாய்; வறுமை நற்குணத்தின் தாய். செல்வம் நிலையில் சேட்டன் கீழ் இரு. செல்வம் மிகமிகச் செருக்கு அதிகரிக்கும். செல்வம் சொல்லுக்கு அஞ்சாது. செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான். செவல்பட்டிக்கு வழி எது என்றால், செவலைக் காளை ஐம்பது ரூபாய் என்றான். செவிடன் காதில் சங்கு ஊதின மாதிரி. 9760 செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போல். செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற் போல. செவிடன் கண்டறிவான் குருடன் கேட்டறிவான். செவிடு இருந்தால் ஊமை இருக்கும். செவ்வாயோ? வெறுவாயோ? சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல. சென்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது. சென்ம வாசனை செருப்பாலடித்தாலும் போகாது. சென்ற இடமெல்லாம் சிறப்பே கல்வி. சென்ற இடம் சிறப்பும் கொண்ட இடம் காணியும். 9770 சென்ற இடமெல்லாம் செல்லவிடாது அறிவு. சென்ற காரியத்தைப் பார்த்து வருங்காரியத்தை அறி. சென்றவன் செலவை நின்றவன் கெடுத்தான். சென்றும் செலவழித்தும் சீர் அழிந்த குடித்தனம்.  சே சேஎன்றாள் இடுப்புப் பிடித்துக் கொண்டதாம். சேடனுக்கு ஏன் குரங்கு? (சேடன்-சேணியன்) சேடனுக்கு ஏன் குரங்குப் புத்தி? சேற்றில் கிடப்பவனுக்கு ஏன் சோமக்கட்டு? சேடன் தயிரைக் குடித்து விட்டுக் கைக்கோளன் வாயில் இடித்தானாம். சேடன் வாய்க்கொழுப்பு நீராக வடியும். சேணியனைக் கெடுக்கச் சாண் குரங்கு பற்றாதா? 9780 சேணியன் குடுமி சும்மா ஆடுமா? சேணியன் நூலை விற்பான்; சௌராட்டிரன் சேலையை விற்பான். சேத நினைவிற்குப் பூதஞ்சிரிக்கும். சேதாவைக் கொன்று செருப்பைத் தானம் செய்ததுபோல. சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்? சேம்புக்குத் தண்ணீர் சோம்பாமல் இறை. சேம்புக்குப் புளியிடாதே; சிறிசுக்கு இடம் கொடாதே. சேர இருந்தால் செடியும் பகை; தூர இருந்தால் தோட்டியும் உறவு. (சேடியும்) சேரச் சேரச் செடியும் பகை. சேரச் சேரப் பண ஆசை; பெறப் பெறப் பிள்ளையாசை. 9790 சேரப் போனால் செடியும் பகை. சேராத இடத்திலே சேர்ந்தால் வாராத துன்பம் வரும். (வரத்தான் செய்யும்) சேராரோடு சேராதே; சேம்பைப் புளியிட்டுக் கடையாதே. சேரிடம் அறிந்துசேர். சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும். சேர்க்கைக்குத்தக்க பழக்கம். சேர்க்கை வாசனையா? இயற்கை வாசனையா? சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்த பின். சேர்த்து வைத்துப் பசுக் கறக்கலாமா? சேர்ந்து கெட்டவர் இல்லை; பிரிந்து வாழ்ந்தவர் இல்லை. 9800 சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. சேலத்துக்குப் போகிறவன் தடம் எது என்றால் செவலைக் காளை இருநூறு என்றானாம். சேலத்துச் சர்க்கரை சித்தப்பா, ஏட்டில எழுதி நக்கப்பா! சேலைக்குத்தக்க ஒய்யாரம் சேலைமேல் சேலைகட்டும் தேவ ரம்பை ஆனாலும்; ஓலை மேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது. சேவல் கூவினால் தான் பொழுது விடியுமா? (கூவி) சேறு கண்ட இடத்தில் மிதித்துச் சலம் கண்ட இடத்தில் கால் கழுவுவார்கள். சேறு போகச் சேற்றால் கழுவுகிறதா? சேறில் (சேறு+இல்) சிரிப்பு; செந்நெலில் வெறுப்பு. சேற்றால் எடுத்த சுவர். 9810 சேற்றில் கல்லை விட்டெறிந்தால் மேலே தெறிக்கும். சேற்றில் இறங்கியவன் அழுக்கை அறிவான்; சுமப்பவன் தான் பாரம் அறிவான். சேற்றிலே செந்தாமரை; குப்பையிலே குன்றிமணி. சேற்றில் புதைந்த கம்பம் எந்தப் பக்கமும் திரும்பும். சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவானேன்? சேற்றிலே புதைந்த ஆனையைக் காக்கையும் கொத்தும். சேற்றிலே யானை புதைந்தால் காக்கையும் கொத்தும். சேற்று முகத்தில் சிரிப்பு; செந்நெல் முகத்தில் நெருப்பு. சேற்று நீரில் தேற்றாம் வித்தை உரைத்தால் சேறுவேறு நீர் வேறு பிரிந்திருப்பது போல. சேனைக்குப் பட்டமோ? சேனாதிபதிக்குப் பட்டமோ?  சை 9820 சைகை அறியாதவர் சற்றும் அறியார். சைவச் சாமி சாப்பிடுமா ஆட்டுக்கடா. சைவத்திற்கு ஆசைப்பட்டு மரக்கறியைத் தள்ளிவிட்டேன். சைவத்தைக் கெடுக்கப் பண்டாரம்; வைணவத்தைக் கெடுக்கத் தாதன். சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம். சைவம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது. சைவம் உயர்வா? சாதி உயர்வா?  சொ சொகுசுக்காரி சம்பம் கொண்டை அவிழ்ந்தால் போயிற்று. சொக்கட்டான் சோழி சதுரங்கம் இம்மூன்றும் துக்கம் அற்றார் ஆடும் தொழில். சொக்கட்டான் விளையாட்டு பொல்லாத சூது. 9830 சொக்க நாதர் கோயிலுக்குப் புல்லுக்கட்டு கட்டினாற் போல. சொக்கர் உடைமை அக்கரை ஏறாது. சொக்கர் காசு அக்கரை சேராது. சொக்கனுக்குச் சட்டி அளவு; சொக்கன் பெண்டாட்டிக்குப் பானை அளவு. சொக்கனும் செட்டியும் தொற்றினாற் போல. (தோன்றினாற்) சொக்கன் சுற்றுவது கம்பளி மூட்டைக்கு. சொட்டையிலே உள்ள சீலம் சுடலை வரை. சொட்டை வாளைக் குட்டிபோல் துள்ளி விழுகிறது. சொத்தி கை நீளாது; நீளக் கை சுருங்காது. சொத்து இன்று வரும், நாளைக்குப் போகும்; சொந்தம் கடைசி வரை வரும். 9840 சொத்துக் கால்பணம்; சுமைகூலி முக்கால் பணம். சொத்துக் குடலிலே சோறு புகுந்தால் தத்தக பித்தக என்ற கதை. சொத்தைக் கொடுத்துப் புத்தி வரவேண்டும்; இல்லா விட்டால் செருப்படி பட்டும் புத்தி வரவேண்டும். சொத்தைப் பல் சுகத்தைக் கெடுக்கும். சொத்தைப் போல வித்தைப் பேணு. சொந்த ஊர் சுடுகாட்டிற்கும் அயலூர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும். சொந்தக்காரரைக் கண்டால் சுற்றி மொள்ளுமாம் ஆப்பை; வேற்றாரை கண்டால் எற்றி மொள்ளுமாம் ஆப்பை. சொந்தக் குடுமிக்கு எண்ணெயைக் காணோம்; சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் வைக்கப் போய்விட்டானாம். சொந்தக் காரய் இருந்தாலும் பெட்ரோல் இருந்தால் தான் நகரும். சொந்தக் கோழி தோல் முட்டை இடுகிறது. 9850 சொந்தப் புத்தி வேண்டும்; இல்லாவிட்டால் சொல் புத்தி வேண்டும். சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு உதவுமா? கனவு கண்ட பணம் செலவுக்கு உதவுமா? சொப்பனத்தில் கண்ட பணம் செலவுக்கு ஆகுமா? சொப்பிலே சோறு ஆக்கினால் சுளுவுதான்; சும்மா இருந்து பிள்ளை பெற்றால் அழகுதான். சொப்பு வனைய மாட்டாதவன் மிடாவுக்கு அச்சாரம் வாங்கினாற் போல. சொரணை கெட்டவனுக்கு வீடும் இல்லை; நாடும் இல்லை. சொருக்கி போனாள்; சிறுக்கி வந்தாள். சொருக்குக் கொண்டைக்காரி சொக்குப்பொடி போடுவாள். சொருகி இருந்த அகப்பை சொத்தென்று விழுந்ததாம். சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் புறப்பட்டது. 9860 சொர்க்கத்திலே தோட்டியும் சரி; தொண்டைமானும் சரி. சொர்க்கத்துக்கு நான் போனால் போகலாம். (நான் - அகங்காரம்) சொர்க்கத்துக்குப் போகிற போதும் கக்கத்திலே கழுதைக் குட்டியா? சொர்க்கத்துக்குப் போகிற போதும் பக்கத்திலே கூத்தியாரா? சொர்க்கத்துக்குப் போனாலும் கக்கத்திலே ஒரு பிள்ளை ஏன்? சொல் அம்போ? வில் அம்போ? சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று. சொல்கிறவனுக்கு வாய்ச் சொல்; செய்கிறவனுக்குத் தலைச் சுமை. சொல் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கு ஈனம். சொல்திறம் கூறல் கற்றவர்க்கு அழகு. 9870 சொல்போதும் சொரணை உள்ளவனுக்கு. சொல்லச் சொல்லச் செவிடி புக்ககம் போனாளாம். சொல்லச் சொல்லப் பட்டிப் பெண்ணைப் பெற்றாள். சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்றான். சொல்லப் பயன்படுவர் சான்றோர். சொல்லப் போனால் பொல்லாப்பு; சொறியப் போனால் அரையாப்பு. சொல்லம்பே வில்லம்பில் மேல். brhšyhJ ãwthJ; mŸshJ FiwahJ.(ãw¡fhJ) சொல்லாது விளையாது; இல்லாது பிறவாது. சொல்லாமலே செய்வார் பெரியர், சொல்லிச் செய்வார் சிறியர். சொல்லியும் செய்யார் கயவர். 9880 சொல்லாமல் செய்வார் நல்லோர்; சொல்லியும் செய்யார் கசடர். (பெரியார்) சொல்லாமற் பிறக்காது; அள்ளாமற் குறையாது. சொல்லால் முழக்கிலோ சுகமில்லை. சொல்லாற்றல் இல்லாதார்க்குத் தவ ஆற்றலும் செல்லாது. சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில் நிற்கும். (எத்தனைக்காலம் வரும்) சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுக்கிற சோறும் உறவுக்கு வராது. சொல்லிச் செய்வார் சிறியார்; சொல்லாமல் செய்வார் பெரியோர்; சொல்லியும் செய்யார் கயவர். (கசடர்) சொல்லிக் காட்டாதா பல்லுவரிசை. சொல்லிக் கேளாதவன் சுட்டாலும் கேளான். சொல்லிக் கொடுத்தும் எழுதிக் கொடுத்தும் பின்னோடே போனானாம். 9890 சொல்லிப் போகவேண்டும் சுகத்துக்கு; சொல்லாமற் போக வேண்டும் துக்கத்துக்கு. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே. சொல்லின் உறுதி நல்ல நெறியே. சொல்லுக்குக் கீரன்; வில்லுக்கு ஓரி. சொல்லுக்கு மட்டுமா நாகாத்தல், சுவைக்கும் தான். சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான், சோதிக்கும் சாதிக்கும் நடுவானான். சொல்லும் சொல் ஆக்கமும் கேடும் தரும். சொல்லும் சொல் கேட்டால் சுட்டாற் போல் கொடுப்பார். சொல்லைச் சுருக்கு; செயலைப் பெருக்கு. சொல்வதிலும் செய்து காட்டுதல் நல்லது. 9900 சொல்வது எளிது; செய்வது அரிது. சொல்வதைக் கேளாத பிள்ளையும்; நீட்டின காலை மடக்காத நாட்டுப் பெண்ணும். சொல்வதை விடச் செய்வது மேல். சொல்வளம் இல்லாத நற்கதை; சொல்லில் அதுவே துர்க்கதை. சொல்வன்மை இருந்தால் பொய்யும் மெய்யாகிவிடும். சொல்வார் எல்லாம் துணிவாரா தீப்பாய? சொல்வார் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு. சொள்ளு பெருத்தால் சொல்லும் பெருக்கும். சொறி சொறிகிற சுவாரசியத்தில் ஆனை விலை கேட்ட மாதிரி. சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ். 9910 சொறி நாய்க்குக் குட்டையே சொர்க்கம். சொறிநாய் சோர்ந்து விழும்; வெறிநாய் விழுந்து கடிக்கும். சொறி பிடித்த நாயானாலும் வீட்டைக் காக்கும். சொறி பிடித்தவன் கையும் இரும்படிச்சவன் கையும் சும்மா இருக்காது. சொற்சுருக்கம் பொருட் பெருக்கம். சொற் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கு ஈனம். சொன்ன சொல்லுக்கு இரண்டில்லாமல் வருவான். சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய். சொன்னதைச் சொல்லடி சுனை கெட்ட மூளி. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. 9920 சொன்னபடிக் கேட்காவிட்டால் மண்ணைவெட்டி மாபடைப் பேன். சொன்னபடி கேட்டால் மாபடைப்பேன்; கேளாவிட்டால் மண்ணைவெட்டிப் படைப்பேன். சொன்னால் குற்றம்; சொறிந்தால் அரிப்பு. சொன்னால் துக்கம்; அழுதால் வெட்கம். சொன்னால் ஆய் செத்துப்போவாள்; சொல்லாவிட்டால் அப்பன் செத்துப்போவான். சொன்னால் வெட்கக்கேடு; அழுதால் துக்கக்கேடு. சொன்னால் வெட்கம்; அழுதால் துக்கம். சொன்னாலும் உறைப்பதில்லை; சுட்டாலும் உறைப்பதில்லை. சோ சோகைக்குச் சுகம் தேடுது; தின்றுவிட்டால் தின்ணை தேடுது. சோசியம் சொல்லப் பாலியம் போதும். 9930 சோட்டால் அடித்து வெகுமானம் கொடுப்பது. சோதி இல்லா வானமும் நீதி இல்லா அரசனும். சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பலுக்குத் தொடர்ச்சி இளைப்பு; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி மூடத்தனம். (மூடம்) சோம்பலே சோறு இன்மைக்குக் காரணம். (பிதா) சோம்பலே துன்மார்க்கத்துக்குப் பிதா. சோம்பல் அம்பலம் வேகிறதே என்றால் அதைச் சொல் வானேன்; வாய் வலிப்பானேன் என்பானாம். சோம்பல் இல்லாத தொழில் சோதனை இல்லாத துணை. சோம்பல் இன்னல் சேர்க்கும். சோம்புக்கு இடங்கொடேல்; சேம்புக்குப் புளியிடாதே. 9940 சோம்பேறிக்கு ஒரு வேலையும் தீராது. சோம்பேறிக்குச் சோளம் வேளாண்மை. சோம்பேறிக்குச் சோறு கண்ட இடம் சுகம். சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே. சோம்பேறிக்கு வாழைப்பழம் உரிக்காமல் கொடு. சோம்பேறி கோல் எடுத்தால் நூறு ஆடு ஆறு ஆடு ஆயினவாம். சோம்பேறி சோளம் விதை. சோம்பேறித் தனத்துக்குப் பசிதான் மருந்து. சோழ நாடு சோறுடைத்து. சோழ நீதி பெண்டு விற்றுப் போகிறதா? 9950 சோழபுரத்தானோ? சூது பெருத்தானோ? nrhH k©lynkh?சூது மண்டலமோ? சோழியன் குடுமி சும்மா ஆடுமா? (ஆடாது) சோளக் கொல்லை பொம்மை மாதிரி. சோளக் கொல்லையிலே மாடு மேய்துன்னு சொன்னானாம்; சொன்ன வாயாலே விரட்டி விட்டுப் போன்னானாம். சோளக் கொல்லையில் மாடுமேய்ந்தால் சொக்கனுக் கென்ன? சோளச் சோற்றில் நெய் ஊற்றினாலும் சோழியன் புத்தி போகாது. சோளப் பயிரை மேய்ந்த மாடு சொக்கிக் கிட்டுச் சாவும். (ஆடு) சோளப் பயிரை மேய்ந்த மாட்டுக்குச் சொர்க்க லோகம் வேண்டுமா? சோளம் நட்டாற் போல் கம்பு கெட்டாற் போல். 9960 சோளி சோளியோட, சுரைக் குடுக்கை ஆண்டியோடே. சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது. (கேட்பது) சோறாகவே பயிர் விளைந்தால் அடுப்பு ஏன்? நெருப்பு ஏன்? சோறு அகப்பட்ட இடம் சொர்க்கம். (கண்ட) சோறு எங்கே விக்கும். தொண்டையில் விக்கும். சோறு என்ன செய்யும்; சொன்ன வண்ணம் செய்யும். சோறு கண்ட இடம் சொர்க்கம். கஞ்சி கண்ட இடம் கைலாசம். சோறு கண்ட இடம் சுகம் என்று இருப்பான். சோறு சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால் பொறுக் கலாமா? சோறு சிந்தினால் பொறுக்கலாம்; மானம் சிந்தினால் பொறுக்கலாமா? 9970 சோறும் சீலையும் கேளாமல் இருந்தால் சொந்தப் பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்கிறேன். சோறும் சீலையும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்துக் கொள்கிறேன். சோறு தின்னத் தொடங்கிய குழந்தை பாலை மறக்கும்; திருமணமான பெண் தாயை மறப்பாள். சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவு இல்லை. சோறு போட்டுப் பீயும் வாரவேண்டிய தாயிற்று. சோறு வேண்டாதான் கருப்புக்குப் பயப்படான். (கருப்பு - பஞ்சம்) சோற்றால் மடை அடைக்கும் சோழ நாடு. சோற்றிலும் கருப்பு உண்டு; சொல்லிலும் பழுது உண்டு. சோற்றிலுள்ள கற்களைப் பொறுக்காது சோற்றையே கொட்டி விடுவது போல. சோற்றிலே இருக்கானாம் சொக்கப்பன். 9980 சோற்றிலே கிடக்கிற கல் எடுக்க மாட்டாதவன் சிவன் கோயில் வரிக்கல்லை எடுப்பானா? சோற்றிலே கிடக்கிற கல் எடுக்காதவனா மோகனக் கல்லெடுக்கப் போகிறான். சோற்றில் இருக்கும் கல்லை பொறுக்க முடியவில்லை; சொக்கநாத சுவாமி அடிக்கல்லைப் பேர்க்கிறானாம். சோற்றில் இருக்கிற கல்லை எடுக்காதவன்; சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா? சோற்றில் கிடக்கிற ஈயை எடுக்கமாட்டாதவன்; சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவானா? சோற்றில் கல் எடுக்க அறியாதவன் முகவணைக் கல் எடுப்பானா? சோற்றின் மறைவில் பத்தியம் பிடிக்கிறது. சோற்றுக்கு அலைந்தவன் சோழ நாடு போ. சோற்றுக்கு அலைந்தவன் சோளத்தைப் போடு; காய்க்கு அலைந்தவன் பீர்க்கைப் போடு. சோற்றுக்கு ஆலாய்ப் பறக்கிறான். 9990 சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ? சோற்றுக்கு இருக்கிற பார்ப்பான் சொன்னபடியெல்லாம் கேட்பான். சோற்றுக்கு இல்லாத வாழைக்காயைப் பந்தலில் கட்டித் தொங்கவிடுகிறதா? சோற்றுக்கு இளைத்தாலும் சொல்லுக்கு இளைக்கிறதா? சோற்றுக்கு ஏமாந்தால் சோளத்தை விதை. சோற்றுக்கு ஏற்ற பலம். சோற்றுக்குக் காற்றாய்ப் பறக்கிறது. சோற்றுக்குக் கேடு; பூமிக்குப் பாரம். சோற்றுக்குத் தண்டம்; பூமிக்குப் பாரம். சோற்றுக்குத் தாளம் போடுகிறான். 10000 சோற்றுக்குத் தான் பஞ்சம்; சொல்லுக்குமா பஞ்சம்? சோற்றுக்கே தாளமாம் பருப்புக்கு நெய் கேட்டானாம். சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்குச் சிம்மாசனம் போட முடியுமா? சோற்றுக்கு வீங்கின நாயே மாட்டுப் பொங்கலிலே வாயேன். சோற்றுக்கு வீங்கினவன் பேளுக்குறிச்சி போக வேண்டும்; அடிக்கு வீங்கினவன் போச்சம்பாளையம் போக வேண்டும். சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை. சோற்றுப் பானை உடைந்தால் மாற்றுப்பானை இல்லை. சோற்று மறைவிலே யாரடா? சுரக்காரன் பத்தியம் பிடிக்கிறேன். சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா? சோற்றைப் போட்டுக் கையைப் பிடிக்கலாமா? 10010 சோற்றைப் போட்டுத் தொண்டையை நெரிப்பது போல. சோற்றைப் போட்டு மென்னியைப் பிடித்தாற் போல. சோற்றை விடுவானேன்? சொல்லுக் கேட்பானேன்?  ஞா ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான்; ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான். ஞாயிற்றுக்கிழமை நாயும் செக்கடிக்குப் போகாது. ஞாயிற்றுக்கிழமை நாய் கூட எள்ளுக்காட்டில் நுழையாது. ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர் நாய் படாதபாடு பட வேண்டும். (பிறந்தால்) ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர் நாய்படாத பாடுதான். ஞானத்துக்கு உலகு பகை; உலகுக்கு ஞானம் பகை. ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை. 10020 ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும். ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே. ஞானிக்கு மன்னன் துரும்பு. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும். ஞானிக்கு இல்லை ஞாயிறும் திங்களும். ஞானிக்கு நரர் துரும்பு. ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லையே.  த தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு. தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம்; மகன் எழுத்துப் போட்டது வேண்டும் என்கிறான். தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம்; பிள்ளைக்கு எங்கே இழுத்துப் போர்த்துகிறது. 10030 தகப்பனுக்குக் கட்டக் கோவணம் இல்லை; மகன் தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம். தகப்பனுக்குக் காய்ச்சுகிற பாலில் தடியைத் துவைக்கிறது பிள்ளை. (ஆடையை) தகப்பனுக்குக் காய்ச்சுகிற பாலில் குதியைத் தேய்க்கிற பிள்ளை. தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறுமாதம் இருந்தால் போகும். தகப்பன் ஒரு பாக்கு; பிள்ளை ஒரு தோப்பு. தகப்பன் தடுக்கில் நுழைந்தால் மகன் கோலத்தில் நுழைவான். தகப்பன் தேடக் கர்த்தன்; பிள்ளை அழிக்கக் கர்த்தன். தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாட்டாங்கத் தண்டம் செய்ய வேண்டும் அல்லவா? தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா? தகப்பன் பேரை எடுக்கிற பிள்ளையே பிள்ளை. 10040 தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழுவார்களா? (விழலாமா?) தகாத உறவு தானாகப் போகுமா? தகிடு தத்தம் போட்டாலும் தகரக் குவளை கிடையாது. தக்க வாசல் இருக்கத் தாளித்த வாசலிலே நுழைகிறது. தக்கா புக்கா தண்டடி தடியடி. தக்கைப் பூண்டு தகைமைசால் உரமாம். தக்கோன் எனத் திரி. தங்க ஊசி என்கிறதுக்காக விழுங்க முடியுமா? தங்க ஊசி என்றால் வயிற்றிலா குத்த முடியும்? தங்க ஊசி என்று கண்ணைக் குத்திக் கொள்ளலாமா? 10050 தங்கக் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா? தங்கக் கத்தி என்று வயிற்றைக் கிழித்துக் கொள்ளலாமா? தங்கக் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தாற் போல. தங்கக் கொழு என்றால் நெஞ்சிலா இடித்துக் கொள்வது? தங்கச்சிப் பிள்ளை தன்பிள்ளை ஆகுமா? தண்ணீர்க் குடமும் தன்குடம் ஆகுமா? தங்கச்சி பிள்ளை தன் பிள்ளையானால் தவத்துக்குப் போவானேன்? தங்கச் சூரிக்கத்தி என்று வயிற்றில் குத்திக் கொள்ளலாமா? தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. தங்கத்தூள் அகப்பட்டாலும் செங்கல் தூள் அகப்படாது. தங்கத்தைக் கண்டு சிரித்ததாம் பித்தளை. 10060 தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும் தன்புத்தி விடுகிற தில்லை என்கிறான். தங்கத்தைக் குவித்தாலும் தன்புத்தி விடுவதில்லை. தங்கத்தைத் தவிட்டுக்கு மாறுவதா? (மாற்றுகிறதா?) தங்கத்தை விற்றுத் தவிடு வாங்கினது போல. தங்கப் பொடி அகப்பட்டாலும் செங்கற்பொடி அகப்படாது. தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கயவர். தங்க முடியைத் தலையிலே சூட்டினாலும் சொந்த புத்தி ஒருபோதும் மாறாது. தங்கமும் பொன்னும் தரையிலே; ஒருகாசு நாரத்தங்காய் உறியிலே. தங்கமும் பொன்னும் தரையிலே கிடக்கிறது; ஓட்டைக் காசு உறியிலே ஏறிவிட்டது. தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது. 10070 தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும். தங்கம் தரையிலே கிடந்தால் என்ன? குன்றிமணி குப்பையிலே கிடந்தால் என்ன? தங்கம் தரையிலே தவிடு பானையிலே. தங்கம் புடத்தில் வைத்தாலும் தன் நிறம் போகாது. (மாறாது) தங்கவேலை அறியாத ஆசாரியுமில்லை; தாய்ப்பால் குடிக்காத குழந்தையுமில்லை. தங்கின வியாழன் தன்னோடு மூன்று பேர். தசைகண்டு கத்தி நாட்ட வேண்டும். தக்க வாசல் இருக்கத் தாணித்த வாசலிலே புறப்படுகிறது. (தாளித்த) தச்சன் அடிக்கக் கடா இழுத்தது. தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியிடிக்க உலாவித் திரிகிறான். (திரிந்தேன்) 10080 தச்சன் அடித்த வாசலில் எல்லாம் தாழக்குனிகிறது. தச்சன் கருமான் தள்ளுபடி; மற்றவை எல்லாம் ஏறுபடி. தச்சன் கோணல் நிமிர்த்தான் தப்பிதச் சொல்லாகப் பேசாதே. தச்சன் தட்டு என்றால் தச்சத்தி அரிசி என்பாள். தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன? கொல்லன் பெண் சாதி கூலிக்கு அறுத்தால் என்ன? தச்சன் பெண்சாதி தரையிலே; கொல்லன் பெண்சாதி கொம்பிலே. தச்சன் லொட்டு என்றால் அவன் பெண்டாட்டி துட்டு என்பாள். தச்சன் வீட்டில் தயிரும் எச்சன் வீட்டில் சோறும் எப்படிச் சேரும்? தச்சன் வீட்டிலே பால்சோற்றை நத்தாதே வெள்ளாளா! (நக்காதே) தஞ்சம் என்ற பேரைக் கெஞ்ச அடிப்பதா? 10090 தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. தஞ்சாவூர் எத்தனும் திருவாரூர் எத்தனும் ஒன்று சேர்ந்தாற் போல. தஞ்சி தப்பாளு, தச்சப் பையன் கூத்தியார். தஞ்சையில் திருட இங்கிருந்தே பம்ம வேண்டுமா? தடத்திலே போகிறவனுக்குத் தடிக்கம்பு எதற்கு? தடத்தோடு போகிறவனைத் தாடி என்றாளாம்; தாடி பிடிச்ச வுடனே வாடி என்றானாம். தடவிப் பிடிக்க முடியில்லை; அவன் பெயர் சௌரிப் பெருமாள். தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவள் பெயர் கூந்தல் அழகி. தடவிப் பிடிக்க மயிர்இல்லை. அவன் பெயர் சவுரிராசப் பெருமாள். தடி அடித்துத் தண்ணீர் விலகிடுமா? 10100 தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனா? தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா? தடிக்கு அஞ்சாத பாம்பு. தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம். தடிக்கு மிஞ்சின மிடா. தடி மழை விட்டும் செடி மழை நிற்கவில்லை. தடியங்காய் திருடினவள் தோளைத் தடவிப் பார்த்துக் கொண்டாளாம். தடுக்கின் கீழே நுழைந்தால் கோலத்தின் கீழே நுழைகிறது. தடுக்கி விழுந்தால் தங்கப் போகணி; எகிறிவிழுந்தால் இருப்புச்சட்டி. தடுக்கி விழுந்தால் படிக்குப் பாதி. 10110 தட்சணை தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும். தட்டத் தட்ட எள்ளு; கொட்டக் கொட்டக் கேழ்வரகு. தட்டாரச் சித்து தரையிலே; வண்ணாரச் சித்து வழியிலே. தட்டாரச் சித்து தறிச்சித்து; வண்ணாரச் சித்துக்கு வராது. தட்டாரப் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும். தட்டானிடம் இருந்தால் என்ன? கும்மிட்டியில் இருந்தால் என்ன? தட்டானுக்குப் பயந்தல்லவோ அணிந்தான் சிவன் பாம்பையே. தட்டானும் செட்டியும் ஒன்றானால் தங்கம் கொடுத்தவன் வாயிலே மண். தட்டானும் செட்டியும் தலைப்பட்டாற் போல. தட்டானும் செட்டியும் கண்; சட்டியும் பானையும் மண். 10120 தட்டானைச் சேர்ந்த தறிதலை. தட்டானைத் தலையில் அடித்து வண்ணானை வழி பறித்தது. தட்டான் உயரக் காரும் கட்டும். (தட்டாரப் பூச்சி) தட்டான் கொசு தடுமாறுகிறதுபோல. தட்டான் கொழுத்தால் தரையில் கிடப்பானா? தட்டான் காப்பொன்னிலும் மாப்பொன் எடுப்பான். (கா, மா - அளவு) தட்டான் தட்டினால் தட்டாத்தி துட்டு என்பாள். தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் திருடுவான். தட்டான் தாய்த் தாலியிலும் தடவி எடுப்பானாம். தட்டான் தாழத் தட்டாத மழை. 10130 தட்டான் தாழப் பறந்தால் தப்பாது மழை பொழியும். தட்டான் பறந்தால் தட்டி இறைத்துக்கிட்டுத்தான் வரும். தட்டான் பறந்தால் கிட்ட மழை. தட்டிக் கெட்டது வயிறு; தட்டாமல் கெட்டது தலை. தட்டிக் கொடுத்தால் தம்பி தலைவிரித்து ஆடுவான். தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் (கேட்க) தட்டிப் போட்ட வடையைத் திருப்பிப்போட நாதிஇல்லை. (வறட்டியை) தட்டினால் தட்டான்; இல்லாவிட்டால் கெட்டான். தட்டுக் கெட்டால் பொட்டுப் பொடிதான். தட்டுக் கெட்டு முறுக்குப் பாய்ந்து கிடக்கிறது. 10140 தணிந்த வில்லுத்தான் தைக்கும். தண்ட சோற்றுக்காரன் குண்டு போட்டால் வருவான். தண்டட்டிக் காரி தண்டட்டியை வாங்கிக் கொண்டால், விடைத்த காது விடைத்த காதுதான். தண்டத்துக்கு அகப்படும்; பிண்டத்துக்கு அகப்படாது. தண்டரிந்த மூக்கு; தலைக்கு இரண்டு அமுக்கு. தண்டாந் தடுக்கு தலைக்கு இரண்டு அமுக்கு. தண்டிகை ஏறப் பணம் இருக்கிறது; தலையில் கட்டத் துணி இல்லை. (கூடத்) தண்டில் போனால் இரட்டிப்புச் சம்பளம். தண்டில் போனால் இரண்டிலே ஒன்று. தண்டு கொழுத்தால் தரையில் இருக்காது; நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது. 10150 தண்டு முண்டுக் காரனுக்குத் தயிரும் சோறும்; அடிபிடிக் காரனுக்கு ஆணமும் சோறும். தண்டு முண்டுக்காரனுக்குத் தயிரும் சோறும்; விசுவாசக் காரனுக்கு வெந்நீரும் சோறும். (வெந்நீர்ச் சோறு) தண்டை இட அத்தை இல்லாவிட்டாலும் சண்டை இட அத்தை உண்டு. தண்ணீரிலே அடிபிடிக்கிறது. தண்ணீரிலே அளவெடுத்தாலும் தாரையிலே அளவெடுத்து விடுவான். தண்ணீரிலே தடம் பிடிப்பான். தண்ணீரிலே போட்டாலும் நனையாது; கரையில் போட்டாலும் காயாது. தண்ணீரிலேயா தன்பலம் காட்டுகிறது. தண்ணீரில் விளைந்த உப்பு தண்ணீரிலே கரைய வேண்டும். தண்ணீரின் கீழே குசுவிட்டால் தலைக்குமேலே. 10160 தண்ணீரில் அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும். தண்ணீரில் இருக்கிற தவளையைத் தரையில் எடுத்து விட்டது போல. தண்ணீரில் இருக்கும் வரைதான் தவளைக்கு மதிப்பு. தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான். தண்ணீரில் கீழே மூச்சுவிட்டால் தலைக்கு மேலே. தண்ணீருக்குள் கிடக்கும் தவளை தண்ணீரைக் குடித்ததும் குடிக்காததும் யாருக்குத் தெரியும்? தண்ணீருக்குள் குசுவினாலும் தலைக்கு மேலே வந்துவிடும். தண்ணீரும் காவிரியே; தார்வேந்தனும் சோழனே; தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே. தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும். 10170 தண்ணீரைத் தடிகொண்டு அடித்தாலும் தண்ணீரும் தண்ணீரும் விலகுமா? தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா? தண்ணீர் அடித்துத் தண்ணீர் விலகுமா? தண்ணீர் ஆளுக்கு நிலைக்கயமா? தண்ணீர் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு. தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும். தண்ணீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா? தண்ணீர் கண்டாயா? பால் கண்டாயா? தண்ணீர்க் காசு தண்ணீரில்; பால் காசு பாலில். தண்ணீர் கிடக்கும் நாக்குத் தலைகீழாய்ப் புரளும். 10180 தண்ணீர் குடித்த வயிறும் தென்னவோலை இட்ட காதும் சரி. தண்ணீர்க் குடம் உடைந்தாலும் ஐயோ; தயிர்க்குடம் உடைந்தாலும் ஐயோ. தண்ணீர்க்குள்ளே குசுவிட்டால் தலைக்குமேலே முட்டை வரும். தண்ணீர் தகராறு; பிள்ளை பதினாறு. தண்ணீர் தேங்கி நின்றால் பயிர் ஓங்கி நிற்கும். தண்ணீர் மிஞ்சினால் உப்பு; பயிர் மிஞ்சினால் தண்ணீர். தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். தத்திக் குதித்துக் தலைகீழே விழுகிறது. தத்தி விழுந்தால் தரையும் பொறுக்காது. தத்துவம் அறிந்தவன் தவசி. 10190 தந்தவன் இல்லையென்றால் வந்தவன் வழியைப் பார்க்க வேண்டும். (பார்க்கிறான்) தந்தனப் பாட்டும் ரஞ்சனக் கூத்தும். தந்தால் ஒன்று; தராவிட்டால் ஒன்று. தந்தான் தமக்கு; வந்தான் வழக்கு. தந்தி தாழ்ப்பாள் தச்சப் பையன் கூத்தியார். தந்திரத்தால் தேங்காய் உடைக்கலாமா? தந்திரம் படைத்தவன் தரணி முழுவதையும் ஆள்வான். தந்திரம் பெரிதா? மந்திரம் பெரிதா? தந்தை எவ்வழி அவ்வழி புதல்வன். தந்தை தாய்ப் பேண். 10200 தந்தைக்குத் தலைப்பிள்ளை; தாய்க்குக் கடைப் பிள்ளை. தந்தைக்குப் பின் தமையன். தந்தைக்குப் பின் தமையன்; தாய்க்குப் பின் தமக்கை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தப்படி எடுத்துத் தாடையில் போடாதே. தப்படி ஆனவனை உப்பிலே போடு. (தப்பில்) தப்பிலேயும் அடிப்பேன்; தவிலிலேயும் அடிப்பேன்; தப்பு கிழிந்து போனால் தைத்துக்கிட்டும் அடிப்பேன். தப்பு அடித்தவன் தாதன்; சங்கு ஊதினவன் ஆண்டி. தப்புப் புடலுக்கு நல்ல ருசி. தமக்கு மருத்துவர் தாம். 10210 தமக்கு மூக்கு போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழை வேண்டும். தமக்கை கிண்ணிப் பிச்சை எடுக்கத் தம்பி கும்ப கோணத்தில் கோதானம் பண்ணுகிறான். தமரில்லாத நகரமும் காடாகும். தமிழுக்கு இருவர்; தத்துவத்துக்கு ஒருவர். தமையன் தந்தைக்குச் சமம்; தம்பி பிள்ளைக்குச் சமம். தமையன் மனைவி தாய்க்குச் சமம். தம் இனம் தம்மைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும். தம்பலப் பூச்சி தானே திரியும் மழைப்பெய்தால். தம்பி இருந்தாலும் இருந்தான் கம்பி நீட்டினாலும் நீட்டினான். தம்பி உடையான் படைக்கு அஞ்சான். (உடையவன்) 10220 தம்பி உள்ளவன் சண்டைக்கு அஞ்சான். தம்பி உழுவான் மேழி எட்டாது. தம்பி கால்நடை; பேச்சு பல்லக்கிலே. தம்பிக்கு அலுவல் தலை சொறிய நேரமில்லை. தம்பி சமர்த்தன் உப்பு இல்லாமல் கலக் கஞ்சி குடிப்பான். தம்பி சிம்புகிற சிம்பலுக்குத் தயிரும் சோறும் சாப்பாடு. தம்பி சோற்றுக்குச் சூறாவளி; வேலைக்கு வாரா வழி. தம்பி தலை எடுத்துத் தறி முதலும் பாழாச்சு. தம்பி தாய்மொழி கற்கத் தாளம் போடுகிறான்; அண்ணன் அந்நிய மொழியிலே ஆர்ப்பாட்டம் செய்கிறானாம். தம்பி தெள்ளுமணி; திருட்டுக்கு நவமணி. 10230 தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால். தம்பி பிள்ளை யாண்டான் அலுவல் தலைசொறிய நேரமில்லை. தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி. தம்பி பேச்சைத் தண்ணீரில்தான் எழுதவேண்டும். தம்பி மொண்டது சமுத்திரம் போல. தயிருக்குச் சட்டி ஆதரவு; சட்டிக்குத் தயிர் ஆதரவு. தயிரும் பழையதும் கேட்டான்; கயிறும் பழுதையும் பெற்றான். தயிர் உலர்த்திச் சண்டைக்கு இழுத்தது போல. தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா? தயிர் பாலினின்று திரிந்துள்ளது போல. 10240 தயிர்ப்பானை உடைந்தால் காக்கைக்கு விருந்து. தயிர்ப்பானையை உடைத்து காகத்துக்கு அமுது இட்டாற் போல. தயிர் மீண்டும் பாலாகாது. தரகுக்காரப் பயலுக்குத் தன் காடு பிறன் காடு ஏது? தரக்கு வந்தால் சரக்கு விற்கும். (தரக்கு - தரகு) தரத் தர வாங்கிக் கொள்ளுகிறாயா? தலையை முழுகிப் போட்டுப் போகட்டுமா? தராதரம் அறிந்து புராதனம் படி. தரித்திரப் பட்டாலும் தைரியம் விடாதே. தரித்திரப் பட்டி மகன் தனபால் செட்டி. தரித்திரம் அறியாப் பெண்டாட்டியால் பயன் இல்லை. 10250 தரித்திரம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம்; அப்போதே ஏகாதசி விரதம் எதிரே வந்ததாம். தரித்திரம் பிடித்தவன் தலை முழுகப் போனானாம்; அப்போதே பிடித்ததாம் மழையும் தூறலும். தரித்திரனுக்குப் புதையல் கிடைத்தது போல. தரித்திரன் சந்தைக்குப் போனால் தங்கமும் பித்தளை ஆகும். தருமத்தில் வந்தவற்றை தருமத்தால் அழிக்க வேண்டும். தருமத்துக்கு அழிவு சற்றும் வராது. தருமத்துக்குத் தாழ்ச்சி வராது. தருமத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா? தருமத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா? தருமத்தைப் பாபம் வெல்லாது. 10260 தருமம் இறுதியில் வெற்றி யடையும். தருமம் செய்பவன் ஒருநாளும் தாழ்ந்துவிட மாட்டான். தருமம் தலை காக்கும். தருமம் தலைகாக்கும்; தலையை மயிர் காக்கும். தரைக்குப் பண்ணாடி; மலைக்கு மண்ணாடி. தரை நீக்கிக் கரணமா? தரையிலேயே உள் நீச்சல் அடிக்கிறவனுக்குத் தண்டனை கொடுக்கத் தண்ணியில போட்ட மாதிரி. தரையில் ஓடும் தேர் கடலில் ஓடுமா? தரையில் கிடந்தவன் தரையில் கிடக்கிறானா? பாயில் கிடந்தவன் பாயில் கிடக்கிறானா? தரையில் தேளும் தண்ணீரில் தேளி மீனும் கொட்டியது .போல. 10270 தரையில் படுத்தவன் பாய்க்குப் போவான்; பாயில் படுத்தவன் தரைக்கு வருவான். தலை அளவும் வேண்டாம்; அடி அளவும் வேண்டாம்; குறுக்கே அள அடா படியை. தலை ஆடும் முன்னே வால் ஆடலாமா? தலை இடிக்குத் தலையணையை மாற்றி ஆவது என்ன? தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். தலை இருக்க வால் ஆடுமா? (ஆடலாமா? ஆடக்கூடாது.) தலை எழுத்து இருக்கத் தந்திரத்தால் ஆவது என்ன? தலை எழுத்திற்குத் தலையைச் சிரைத்தாற் போகுமா? தலை எழுத்தைத் தந்திரத்தால் மாற்றிவிட முடியாது. தலை எழுத்தோ? சிலை எழுத்தோ? 10280 தலை கீழாகத் தவம் செய்தாலும் கூடுகிற காலம் வந்தால் தான் கூடும். தலைக்கு உயர்ந்தால் தனயனும் தோழன். தலைக்கு ஏற்ற குல்லாயா? குல்லாய்க்கு ஏற்ற தலையா? தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும். தலைக்குத் தகுந்த குல்லாவா? குல்லாவுக்குத் தகுந்த தலையா? தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்குகிறதா? தலைக்குத் தலை நாட்டாண்மையாய் இருக்கிறது. தலைக்குத் தலை பண்ணாட்டு. தலைக்குத் தலை நாயகம். தலைக்கு நரை போடலாம்; மனதுக்குத் திரை போட முடியுமா? 10290 தலைக்குத்தலை பெரியதனம்; உலைக்குத்தான் அரிசி இல்லை. தலைக்கு மிஞ்சின தண்டனையில்லை; நீர்ச்சீலைக்கு மிஞ்சின நிரப்பில்லை. தலைக்கு மிஞ்சின தலைப்பாகை. தலைக்கு மிஞ்சின மிடா. தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; காவலுக்கு மிஞ்சின உபகாரம் இல்லை. தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணத்திற்கு மிஞ்சின தரித்திரம் இல்லை. தலைக்கு முடியோ? காலுக்கு முடியோ? தலைக்கு மேல் செல்வம் வந்தாலும் தலையணைமேல் உட்காராதே. தலைக்குமேல் வெள்ளம் போகும் போது சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? தலைக்குமேல் கை காட்டுகிறதா? (காட்டுகிறது) 10300 தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. தலைக்கு வந்தது மயிரோடு போயிற்று. தலைக்கு வேறு சிகைக்காய்; தாடிக்கு வேறுசிகைக்காயா? தலை சுழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும். தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்கு மருத்துவம் பார்த்தாளாம். (புத்தி சொன்னாளாம்) தலைச்சன் பிள்ளைக்கு இல்லாத தண்டையும் சதங்கையும் இடைச்சன் பிள்ளைக்கு வந்தனவா? தலைச்சன் பிள்ளை பெற்றவளுக்குத் தாலாட்டும், ஆம்புடையான் செத்தவளுக்கு அழுகையும் தானே வரும். தலைச்சனுக்குத் தாலாட்டும், தலைவன் செத்தால் அழுகையும் தாமே வரும். தலை சொறியக் கொள்ளி தானே வைத்துக் கொண்டாற் போல. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். 10310 தலை தெரியாமல் எண்ணெய் தேய்ப்பதா? தலை நோய்க்குத் தலையணையைத் திருப்பிப் போட்டால் தீருமா? தலை நோவும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். தலை பகை; வால் உறவா? தலை பெரிது என்று கல்லில் முட்டிக் கொள்ளலாமா? தலைபோனபின் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? தலை மாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக் கொண்டாய். தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம். தலையாரி வீட்டில் திருடி அதிகாரி வீட்டில் ஒளித்ததுபோல. தலையாலே மலை பிளப்பான். 10320 தலையால் வந்த பெருநிதியைக் காலால் தள்ளுகிறதா? தலையில் இடித்த பிறகா தாழக் குனிகிறது? தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது போல. தலையிலே இடிபட்ட பிறகு தாழக் குனிந்து தானே ஆக வேண்டும். தலையில் எழுதியிருப்பது தலையைச் சிரைத்தால் போகுமா? தலையில் எழுத்து இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமா? தலையிலே பாம்பு; மலையிலே மருந்து. தலையிலே விறகுக்கட்டு! காலிலே தந்தப் பாதுகையா? தலையும் தலையும் பொருதால் மலையும் வந்து பொறுக்கும். தலையைச் சுற்றுகிற மாடும், கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா. 10330 தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் (பசியும்) தலைவன் இல்லாப் படை, தலை இல்லா உடம்பு. தலைவன் நிற்கத் தண்டு நிற்கும். தவசிக்குத் தயிரும் சோறும் விசுவாசிக்கு வெந்நீரும் பருக்கையும். தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும். தவசே அணிகலன்; தாழ்மையே மேன்மை. தவஞ் செய்தான் சுவர்க்கம் புகும்; தாயைக் கொன்றான் நரகம் புகும். தவத்தில் இருந்தால் தலைவனைக் காணலாம். தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு இருவர்; வழிக்கு மூவர். (கல்விக்கு) 10340 தவழும் குழந்தைக்கு நடக்கும் குழந்தை யமன். தவழும் வரைதான் தாய்ப்பால். தவளை கத்தினால் தானே மழை. தவளை தண்ணீருக்கு இழுக்க ஓந்தி மேட்டுக்கு இழுக்கிறது. தவளை தண்ணீர்க்கும் எலி திட்டைக்கும் இழுப்பது போல். தவளை தண்ணீர்க்கும் ஓணான் வேலிக்கும் இழுத்த கதையா. தவளை தன் வாயால் கெடும். தவளை தாமரைக்கு அருகிருந்தும் அதன் தேனை உண்ணாது. தவளை வாயும் தனிக்குடித்தனமும் ஆகாது. தவிடு அள்ளிய கை தனம் அள்ளும். 10350 தவிடு தின்கிறதிலே ஓய்யாரம் என்ன? தவிடு தின்பவன் அமுதை விரும்புவானா? தவிடு தின்னும் அம்மையாருக்கு விளக்குப் பிடிக்க ஓர் ஆளா. தவிடு விற்கப் போனால் புயலடிக்குது; உப்பு விற்கப் போனால் மழை பேயுது. தவிட்டுக்கு ஆசைப்பட்டுத் தீட்டிய அரிசியை நாய் கொண்டு போனதாம். தவிட்டுக்கு வந்த கைதான் தங்கத்துக்கும் வரும். (தனத் துக்கும்) தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? தவிலடிக்க ஒரு கொம்பு; தப்பட்டைக்கு இருகொம்பு; தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பாலுண்டு. தழைத்த மரம் வளையாத கணக்கும் உண்டா? 10360 தழைந்து போனால் குழைந்து வருவான். தளபதி இல்லாத தளம், கரை இல்லாத குளம். தளர்ந்த கிழவனுக்குச் சோறும் இடிந்த சுவருக்கு மண்ணும் உண்டானால் சில நாள் நிற்கும். தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளைப் பிடிப்பானேன்? தள்ளரிய தாறுவந்து தாய் வாழையைக் கெடுத்தாற் போல. தள்ளாதவன் மனைவி பிள்ளைத்தாய்ச்சி; தள்ளிவிட்டு ஓடுதாம் குள்ள நரி. தள்ளிப் பேசினாலும் தழுவிக் குழைகிறதா? தறுதலி மகனுக்கு வாழ்க்கைப் பட்டு விறுதாலியா அறுத்தேன். தறுதலைக்கு தயவு ஏது? தறுதலைக்கு ராசா சவுக்கடி. 10370 தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கு அழகு கொண்டை. தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன? இருந்தால் என்ன? தனக்கு உதவாத பாலைக் கொட்டிக் கவிழ்த்தாளாம். தனக்கு உதவாத பிள்ளை ஊருக்கு உதவும். தனக்கு உழும் கலப்பை. தனக்கு உழைக்கிறவன் பிறர்க்கும் உழைக்கிறான். தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள். தனக்கு ஒரு நீதி; பிறர்க்கு ஒரு நீதி. தனக்குக் கண்டு தானே தானம் வழங்க வேண்டும். தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது; ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளாது. 10380 தனக்குத் தவிடு குத்த மாட்டாள்; அயலாருக்கு இறுங்கு இடிப்பாள். (இறுங்கு - கருஞ்சோளம்) தனக்குத் தனக்கென்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும். தனக்குத் தனக்கென்றால் புடுக்கும் களை வெட்டும். தனக்குத் தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா? தனக்கும் தெரியாது சொன்னாலும் கேட்க மாட்டான். தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம்; ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கல்யாணம் செய்கிறானாம். தனக்குப் பின் தானம். தனக்குப் பெரியாரைத் தடிகொண்டா அடிக்கிறது. தனக்குப் போகத் தானம். தனக்கு மணக்காத தாழம்பூ. 10390 தனக்கு மிஞ்சி தருமம். தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழை வேண்டும். தனக்கும் உயர்ந்த குலத்தில் பெண்ணைக் கொடு; தன்னிலும் குறைந்த இடத்தில் பெண்ணை எடு. தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும். தனக்குள்ள அகப்பை தணிந்து விடுமாம்; ஊருக்குள்ள அகப்பை உசந்து வருமாம். தனக்கே தகராறம்; தம்பிக்கு மறுதாரமாம். தனக்கே தகராறு; பிள்ளை பதினாறு. தனித்த ஓநாய் சிங்கத்திற்கு சமம். தனத்தால் இனம் ஆகும்; பணத்தால் சனம் ஆகும். தனிமரம் தோப்பாகாது. (தோப்பாகுமா?) 10400 தனிவழி போகாதே; அரவத்தொடு ஆடாதே. தனிவழியே போனவளைத் தாரம் என்று எண்ணாதே; தங்கச்சி கழுத்து நகையை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடாதே. தன் ஆள் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு. தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே ஆளும். தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும். தன் ஊருக்கு அன்னம், பிற ஊருக்குக் காகம். தன் ஊருக்கு ஆனை; அயலூருக்குப் பூனை. தன் ஊருக்கு புலி; அயலூருக்கு நரி. (காளை, பூனை) தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு; வேண்டா ஊர் வடக்கு. (தலை வைத்துப் படுக்கும் திசை) தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும். 10410 தன் ஊரில் நாய் அடிக்காதவன் அயலூரில் ஆனை அடித்தானாம். தன் கண் இரண்டு போனாலும் அயலான் கண் ஒன்றாவது போக வேண்டும். தன் கண்ணில் இருக்கும் உத்திரம் தெரியாமல் தம்பி கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கப் போனானாம். தன் கண் தனக்குத் தெரியாது. தன் கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்க வேண்டும். தன் காசு செல்லாவிட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம். தன் காயம் தனக்குத் தித்திப்பு. தன் காரியப் புலி. தன் காரிம் என்றால் தன் சீலையும் பதைக்கும். தன் காரியம் பாராதவன் சதையால் ஒரு புழு புழுப்பான். 10420 தன் காலைத் தானே கும்பிட்டுக் கொள்ளலாமா? தன் குஞ்சு என்று வளர்க்குமாம் குயிற் குஞ்சைக் காகம். தன் குசு தங்கக் குசு; ஊரான் குசு ஊசக் குசு. தன் குழந்தைக்குப் பால் கொடுக்காதவள் சக்களத்தி பிள்ளைக்கா பால் கொடுக்கப் போகிறாள்? தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா? தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. (தெரியாது) தன் குற்றம் தனக்குத் தெரியாது. தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை. தன் குற்றம் முதுகில்; பிறர் குற்றம் எதிரில். தன் குற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியா. 10430 தன் குற்றமும் முதுகும் தனக்குத் தெரியா. தன் கை ஆயுதம் பிறன் கையில் கொடுப்பவன் பதர். தன் கைத்தனம் உதவுவது போலத் தாயார் கைத்தனம் உதவாது. தன் கைத் தவிடு உதவுவதுபோலத் தங்கைக் கைத்தனம் உதவாது. தன் கையே கண்ணைக் குத்தினாற் போல. தன் கையே தனக்கு உதவி. தன் கொல்லையில் கீரையை வைத்துக் கொண்டு அசல் வீட்டுக்குப் போவானேன்? தன் சதையே தனக்குச் சத்துரு. தன் சனத்தைக் கண்டால் தாவி மொள்ளுமாம் ஆப்பை; இரவல் சனத்தைக் கண்டால் எற்றி மொள்ளுமாம் ஆப்பை. தன் சனத்தையும் தன்னையும் கண்டால் தணித்து மோக்குமாம் ஆப்பை; ஊரார் சனத்தையும் உன்னையும் கண்டால் உசத்தி மோக்குமாம் ஆப்பை. 10440 தன் சோற்றில் உள்ள கல்லைப் பொறுக்க மாட்டாதவன் சொக்கனார் கோயில் மதில் கல்லைப் பிடுங்கப் போனானாம். தன் சோற்றைத் தின்று தரையில் இருந்தால் வீண் சொல் கேட்க விதியோ? தன் தப்புப் பிறருக்குச் சந்து. தன் திசை கண்டு கத்தி நாட்டவேண்டும். தன் தொழிலைப் பாராதவனுக்குத் தலையளவு பஞ்சம். தன் நாற்றத்தைத் தானே கிளப்பிக் கொள்கிறதா? தன் நிலத்தில் குறுமுயல் தந்தியிலும் வலிது. (தந்தி - யானை) தன் நிழல் தன்னைக் காக்கும். தன் நிழல் தன்னோட வரும். தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை; தாய் அறியாத சூல் இல்லை; 10450 தன் நெஞ்சே தன்னைச் சுடும். தன் நெய்யில் தான் பொரியுமாறு. தன் நோய்க்குத் தானே மருந்து. தன் பணம் செல்லாவிட்டால் தாதனைக் கட்டி அடித்தானாம். தன் பண்டம் தங்கம் போல; ஊரார் பண்டம் உமி போல. தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும். தன் பல்லைக் குத்திப் பார்த்தால்தான் தன்வாய் நாற்றம் தெரியும். தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசம் காட்டுகிறது போல. தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா? தன் பாவம் தன்னோடே. 10460 தன் பானை சாயப் பிடிக்கிறது இல்லை. (பிடிப்பார் உண்டோ?) தன் பிள்ளை என்று தலைமேல் வைத்துக் கொள்ளலாமா? தன் பிள்ளைக்குப் தான் அடிக்கத் தலையாரியை சீட்டுக் கேட்டு வர வேண்டுமா? (கேட்கிறது போல) தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா? தன் பிள்ளை தவிட்டுக்கு அழுகுதாம்; தங்கச்சிப் பிள்ளை அப்பளத்துக்கு அழுகுதாம். தன் பொண்டாட்டியை அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதா? தன் பொண்டாட்டி தாகம் தணிப்பாள்; ஊரான் பெண்டாட்டி உபசாரத்துக்கு ஆகாது. தன் மனம் பொன் மனம். தன் மாவானால் தின்னாளோ? தானே வாரி மொக்களோ? தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும். 10470 தன் முதுகில் அழுக்கு இருப்பது தெரியாமல் பிறன் முதுகில் அழுக்கு, அழுக்கு என்பது போல. தன் முதுகு ஒருபோதும் தனக்குத் தெரியாது. தன் மூக்கு அறுபட்டால் எதிரிக்குச் சகுனப் பிழை. தன்மை உடைமை தலைமை. தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா? (உலவிக் கலாமா?) தன் வாதம் போக்காது ஊர்வாதம் போக்க இயலாது. தன் வாய்க் கஞ்சியைக் கவிழ்த்துப் போட்டான். தன் வாயிலே சீதேவி, முன் வாயிலே மூதேவி. தன் வாயாலே தான் கெட்டான். தன் வாயால் தவளை கெட்டது. 10480 தன் வாயால் தான் கெட்டதாம் ஆமை. தன் வினைத் தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும். தன் வீடு தவிர அசல் வீட்டுக்கு மேட்டு வரி என்கிறான். தன் வீடு நம்பி அயல் வீடு நம்ப மாட்டாள். தன் வீட்டில் கறவைப் பசுவை வைத்துக்கொண்டு அசல் வீட்டுக்குப் பாலுக்குப் போனாளாம். தன் வீட்டு ஆமுடையான் தலைமாட்டிலும், அசல் வீட்டு ஆமுடையான் கால் மாட்டிலும் நலம். தன் வீட்டுக் கதவை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் ஓட்டினானாம். (பிடுங்கிக் கொடுத்துவிட்டு) தன் வீட்டுக் கள்ளி அயல்வீட்டுக் காரியை நம்பமாட்டாள். தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம்; ஊரார் வீட்டுக்கு இரும்பு இடிக்கப் போனாளாம். தன் வீட்டுத் தீ என்றால் சுடாதா? 10490 தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை அசல் வீட்டுக்குப் போகச் சொன்னால் போவானா? தன் வீட்டு நாய் என்று தாவ விடுவதா? தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இடலாமா? தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இட்டாற் சுடாதா? தன் வீட்டு விளக்கு தன்னைச் சுடாதா? தன்னது தன்னது என்றால் குசுவும் மணக்கும். தன்னவன் செய்கிறது மன்னவனும் செய்யான். தன்னவன் பரிமாறினால் தலைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? தன்னன்னா என்றால் பாட்டுக்கு அடையாளம். தன்னாலே தாழ் திறந்தால் தச்சன் என்ன செய்கிறது? 10500 தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்? தன்னுயிர் கருப்புக் கட்டி. தன்னுயிர் போல மன்னுயிர் காக்க வேண்டும். (கருத) தன்னுயிர் போல மன்னுயிர் எண். தன்னை அறிந்தவன் கடவுளையும் அறிந்தவனாவான். தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான். தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம். தன்னை அறிந்தவன் தானே தலைவன். தன்னை அறிந்தவன் தலைவன் ஆவான். தன்னை அறிந்து பின்னைப் பேசு. 10510 தன்னை அறியாத சன்னதம் உண்டா? (இல்லை) தன்னை இகழ்வாரைப் பொறுத்ததே தலையாம். தன்னை ஒளித்தொரு வஞ்சனை இல்லை. தன்னைக் கட்டக் கயிறு யானை தானே எடுத்துக் கொடுத்தாற் போல. தன்னைக் காக்கின் கோபத்தைக் காக்க வேண்டும். தன்னைக் கொண்டு பிறரை அளப்பதா? தன்னைக் கொல்ல வந்த பசுவைக் கொல்லு. தன்னைக் கொல்ல வந்த பசுவையும் தான் கொல்லாததே தருமம். தன்னைக் கொல்ல வந்த பசுவைத் தான் கொன்றால் பாவம் இல்லை. தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான். 10520 தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்; தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக் கட்டை. தன்னைத் தான் அறிவான்; தடியனைத் தடி அறியும். தன்னைப் புகழாத கம்மாளனும் இல்லை. தன்னைப் பாடுவான் சம்பந்தன்; என்னைப் பாடுவான் அப்பன்; பொன்னைப் பாடுவான் சுந்தரன். தன்னைப் புகழாதவரும் இல்லை; தனித்த இடத்தில் குசுவாதரும் இல்லை. தன்னைப் பெற்ற தாய் அன்னப் பிச்சை எடுக்கிறாள்; பிள்ளை தங்கச் சரம் போடச் சொல்லித் தொங்கித் தொங்கி அழுகிறாள். தன்னைப் பெற்ற தாய் கின்னிப் பிச்சை எடுக்கிறாளாம்; மகள் தங்கத்திலே தாலி தொங்கத் தொங்கப் போடுறாளாம். தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறானாம். தன்னைப் பெற்றவள் கொடும் பாவி; பெண்ணைப் பெற்றவள் மகராசி. 10530 தன்னைப் போல் பிறரை நேசி. தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசமாக்குவாள். தன்னையே கொல்லும் சினம். தன்னையே சார்ந்திருப்பதுதான் சகலமும் கற்றவனுக்குள்ள தகுதி. தன்னோவை அறிவான் பிறர்நோவை அறிய வேண்டாமா?  தா தாகம் இருக்கிறது; இறக்கம் இல்லை. தாகத்துக்குத் தண்ணீர் கேட்டான் என்று கொடுத்தால் பசிக்குது பொங்கல் வேண்டுமென்று கேட்டானாம். தாகம் எடுக்கிறது என்று தண்ணீர்க்குப் பதில் விசத்தைக் குடிப்பதா? தாகம் எடுத்த பின்னா குளம் வெட்டுகிறது? தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேல் ஏறுகிறான். 10540 தாங்குகிற ஆள் உண்டு தளர்ச்சி உண்டு. தாங்குகிறதுக்கு ஆள் இருந்தால் தளதள என்று வளர் வதற்குக் கேட்பானேன். தாசனுக்கு இட்ட கட்டளை பதினெட்டுப் பொக்கணம். தாசிக்குப் பணம் கொடுத்தால் தகப்பனும் போகலாம்; பிள்ளையும் போகலாம். தாசி பகட்டும் தாவணி மிரட்டும் போகப் போகப் தெரியும். தாசி பிள்ளைக்குத் தகப்பன் யார்? தாசில் வீடு போனால் செருப்படை. தாசி வீடு போனவனும் கெட்டான்; தாதராக் காட்டை உழுதவனும் கெட்டான். தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டானாம். (சுருட்டுக்கு) தாடிக்குப் பூச் சூடலாமா? 10550 தாடி வளர்த்தவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளா? தாட்சணியம் தனநாசம். தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும்; விசுவாசக் காரனுக்கு வெந்நீரும் பருக்கையும். தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும்; கூட்டாட்டக் காரனுக்குக் கூழும் தண்ணீரும். தாட்டோட்டக்காரனைக் கூடுவதினும் தனியே இருப்பது நலம். தாதத்தியைக் கெடுத்தவன் தாதன்; குயவனைக் கெடுத்தவள் குயத்தி. தாதன் ஆட்டம் திருப்பதியிலே தெரியும். தாதனைக் கண்டால் ரங்கன்; ஆண்டியைக் கண்டால் லிங்கன். தாது அறியாதவன் பேதை வைத்தியன். தாமதம் தாழ்வுக்கு ஏது. 10560 தாம் கெட்டாலும் பிறருக்குக் கேடு நினைத்தல் ஆகாது. தாம்பும் அறுதல் தோண்டியும் பொத்தல். தாம்பூலத் தட்டுச் சாதிக் காதது இல்லை. தாம்பைப் பிடித்து உழுதவனுக்குத் தார்குச்சிதான் மிச்சம். தாம்பை விட்டு வாலைப் பிடிக்கிறது போல. தாயற்ற போதே சீரற்றுப் போச்சு. தாயாதிக்காரன் வாழ வைத்த வீடு உண்டா? தாயாதிக்குக் குணம் இல்லை; கோவணத்துக்கு மணம் இல்லை. தாயில்லாப் பிள்ளையும் வளரும் தஞ்சாவூர். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. 10570 தாயின் சொல் கேளாட்பிள்ளை நாயின் வாய்ச்சீலை. தாயின் தங்கத்திலும் தட்டான் திருடுவான். தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே. (சேயும்) தாயே என்று போனாலும் நாயே என்று வருகிறது. தாயை அடக்கி அவிசாரி போனாளாம். தாயை அடக்கி மகள் ஊர் சுற்றுகிறாளாம். தாயைக் கண்டான்; மகளைக் கொண்டான். தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே பாதிப் பேர். தாயைக் கொன்றவன் சொல்லுக்கு அஞ்சான். தாயைச் சேர்ந்தே உறவானாலும் அறுத்துத்தான் உறவாட வேண்டும். 10580 தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டாம். தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் பார்க்க வேண்டாம். (குளக்கரை) (அடுப்பங்கரை) தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணைச் சந்தைக் கடையில் பார்க்கலாம். தாயைப் பகைத்தாலும் ஊரைப் பகைத்தல் ஆகாது. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே. (பழிக்கலாமா?) தாயைப் பழித்தவன் சேயையும் பழிப்பான். தாயைப் பழித்த பிள்ளையை ஊரும் பழிக்கும். தாயைப் பழித்து மகள் அவுசாரி போனாளாம். தாயைப் பார்த்துக் பெண்ணைக் கொள்; பாலைப் பார்த்துப் பசுவைக் கொள். தாயைப் போலப் பிள்ளை; நாயைப் போல வால். 10590 தாயைப் போலப் பிள்ளை; நூலைப் போல சீலை. தாயை மறக்கடிக்கும் தயிரும் பழஞ் சோறும். தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம். தாயோடு போயிற்றுச் செல்வம்; தேரோடு போயிற்றுத் திருநாள். தாயோடு போயிற்று பிறந்த வீடு. தாய் அடித்துப் பிள்ளை விலகிப் போயிடுமா? தாய் அற்றால் சீர் அறும். தாய் அறியாத சூல் இல்லை. தாய் அறியாத சூலும் உண்டோ? தாய் இட்ட பேரை ஊர் இட்டு அழைக்கும். 10600 தாய் இட்ட பேர் தலைமேலே; இந்த நாய் இட்ட பேர் நடுவிலே. தாய் இருந்தால் நாய் வருமா? தாய் இருந்தால் குழந்தை தானே வளரும். தாய் இல்லாக் குழந்தை தானே வளரும். தாய் இல்லாத பிள்ளை ஊருக்கு ஆகுமா? தாய் இல்லாத பிள்ளை தறிதலை. தாய் இல்லாத பிறந்தகமும் கணவன் இல்லாத புக்ககமும். தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி. தாய் இல்லாதவனுக்கு ஊர் எல்லாம் தாய். தாய் இல்லாப் பிள்ளைக்கு நாய் பட்ட பாடு. 10610 தாய் இல்லாப் பிள்ளை தான் தோன்றியாய்விடும். தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா? தாய் இல்லாமல் சேய் உண்டா? தாய் இல்லா வீட்டில் தங்குகிற வேலையில்லை; பிறப்பு இல்லா வீட்டில் புகுகிற வேலை இல்லை. தாய் உள்ள மட்டும் சீராட்டு. தாய் உறவா? நாய் உறவா? தாய் உறவோ? நாய் உறவோ? தாய் ஊட்டாத சோற்றைத் தயிர் ஊட்டும். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். (பத்தடி) தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டடி பாய்வாள். 10620 தாய் ஒரு பாக்குத் தான் கமுகந் தோப்பு என்கிறாள். தாய் கட்டம் தலையிலே மகள் கட்டம் மடியிலே. தாய் கூடப் பிறந்த மாமனிடத்தில் குலமும் கோத்திரமும் சொன்னது போல். தாய் கைக்குத் தோசம் இல்லை. தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தனமே மேல். தாய் கொட்டையூரில் முட்டி எடுக்கிறாள்; பையன் கும்ப கோணத்தில் கோதானம் பண்ணுகிறான். தாய் கொண்டு பொறுக்காததை ஆர் பொறுப்பார்? தாய்க் கண்ணோ? நாய்க் கண்ணோ? தாய்க் கிழவி எப்போது சாவாளோ? தாழ்வாரம் எப்போது ஒழியுமோ? தாய்க் கிழவியும் வெறிநாயும் பிடித்தால் விடார். 10630 தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான்; ஊருக்கு அடங்காதவன் ஒருவருக்கும் அடங்கான். தாய்க்கு அடங்காப்பிள்ளை ஊருக்கு அடங்கும். தாய்க்குப் பின் தாரம். (அடுத்தது) தாய்க்கு ஆகாத பிள்ளை ஊருக்கு ஆகாது; ஊருக்கு ஆகாத பிள்ளை ஒருவருக்கும் ஆகாது. தாய்க்கு ஆகாத பிள்ளையும் தட்டானுக்கு ஆகாத பொன்னும் பதர். தன்னை அறிந்தவன் தானே தலைவன். தாய்க்கு ஆகாத மகன் ஆருக்கு ஆவான்? தாய்க்கு இட்டது தலைமகளுக்கு. தாய்க்கு உள்ளது மகளுக்கு. தாய்க்கு ஒளித்த சூலா? தாய்க்கு ஒளித்த சூலும் உண்டோ? 10640 தாய்க்குச் சோறு இருக்கிறது; ஊருக்குப் புகழ்ச்சியா? தாய்க்குத் தலைப்பிள்ளை; தகப்பனுக்கு இளைய பிள்ளை. (கொள்ளிக்கு) தாய்க்குத் தவிடு இடியான்; தம்பிரானுக்கு இரும்பு இடிப்பான். தாய்க்குத் தாலி செய்தாலும் தட்டான் திருடுவான். தாய்க்குத் தாலி செய்தாலும் அதிலேயும் கால் குன்றிமணி (எடுப்பான்) தாய்க்குத் தெரியாமல் மகள் சூலானாளா? தாய்க்கு மிஞ்சிய உறவும் இல்லை; சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. தாய்க்கு மூத்தத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்கிறான். தாய்க்குத் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன். தாய்க்கு விளைந்தாலும் தனக்கு விளைய வேண்டும். 10650 தாய்க்கே சனியன் பிடித்தால் கருப்பத்துக்கு என்னாகும்? தாய்ச் சீலைக்குச் சாண் துணி இல்லை; தலைக்கு மேலே சரிகை மேற்கட்டி. தாய் செத்தால் மணம்; மகள் செத்தால் பிணம். தாய் செத்தாள்; மகள் திக்கற்றாள். தாய் சொல் கேளாப்பிள்ளை தறிதலை. தாய் சொல் கேளாதவன் நாய் வாய்ச் சீலை. (கேளாப் பிள்ளை) தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை. தாய் சொல் விரதத்தை விட்டு வேறே விரதத்தை எடுக்கிறதா? தாய் சொல்லைத் தட்டாதே. தாய் தகப்பன் பட்டினி கிடக்க ஊரில் அன்னதானம் செய் கிறானாம். 10660 தாய் தட்டுப் பிச்சை எடுக்கிறாள்; பிள்ளை கும்ப கோணத்தில் கோதானம் பண்ணுகிறான். (நாட்டும்) தாய் தந்தை இறந்தாலும் பிழைக்கலாம்; நாணயம் இழந்தால் பிழைக்கலாமா? தாய் தவிட்டுக்கு அழுகிறாள்; மகள் இஞ்சிப் பச்சடி கேட்கிறாள். தாய் தவிட்டுக்கு அழுகிறாள்; பெண்ணோ பால் பாயாசம் கேட்கிறாள். தாய் தன்னை அறியாத கன்று இல்லை. தாய் தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்? தாய் தூற்றினாலும் ஊர் தூற்றும்; கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான். தாய் தேடியும் மகள் தேடியும் மடி சீலை ஒன்று. தாய் பொறுக்காததை ஊர் பொறுக்குமா? (பொறுக்காது) தாய் பொன்னிலும் மாப்பொன் திருடுவான் தட்டான். 10670 தாய் போல் பெண்ணும் தகப்பன் போல் பிள்ளையும். தாய் போனால் தகப்பன் தாய் ஆதி. தாய் மடியில் தங்கம் இருந்தாலும் தன் மடியில் தவிடாவது வேண்டும். தாய் மனம் பித்து; தகப்பன் மனம் கல். தாய் மனைக்கு வந்தது தன் மனைக்கும். (பிள்ளை மனைக்கும்) தாய் மாமன் வீட்டிலேயே குலம் கோத்திரம் கேட்கிறது? தாய் மிதிக்க குஞ்சு முடம் ஆகாது. தாய் முகம் காணாத பிள்ளையும் மழைமுகம் காணாத பயிரும் செவ்வைப் படா. தாய் முகம் பார்க்கும் சேய்முகம் போல. தாய் முலை குடித்துத் தாகம் தணிய வேண்டும். 10680 தாய் முலைப் பாலுக்குப் பால் மாறினது போல. தாய் வசவு பிள்ளைக்குப் பலிக்குமா? தாய் வயிற்றில் இராது பிறந்தது போல. தாய் வயிற்றைப் பார்ப்பாள்; பெண்டாட்டி மடியைப் பார்ப்பாள். தாய் வழிப்பிள்ளை; சால் வழித் தண்ணீர். தாய் வீட்டுக்குப் போனாலும் தன்னைப் பேணிப் போக வேண்டும். தாய் வீட்டுக்குப் போனாலும் தலைப் பொழுதுக்கு மேல் போக வேண்டும். தாய் வீட்டுப் பெருமையை அக்காள் தங்கச்சி பேசிக் கொண்டாற்போல. தாய் வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஆடிய கூத்தும் (உருப்படாது) தாய் வைத்த பெயர் தலையில் இருக்க நாய் வைத்த பெயர் நடுநாயகமாக விளங்கிற்றாம். 10690 தாரத்தைக் காப்பாற்றாதவன் வீரம் எதற்கு உதவும்? தாரமங்கலமும் தாடிக் கொம்பும் சிற்ப அழகு. தாரமும் குருவும் தலைவிதி போல. தாரமும் குருவும் வாய்ப்பது தலைவிதிப் படி. (தன் வினைப் பயன்) தாரம் தேடக் கிடைப்பாள்; தம்பி தேடக் கிடைப்பானா? தாரமிழந்தவனுக்குப் பெண் கொடுத்தாலும் தானே ஆக்கித் தின்னவனுக்குப் பெண் கொடுக்கக்கூடாது. (தாரமுள்ள வனுக்குப்) தாராளப்பட்ட கையே தண்ணிப்பானையில் வையேன். தாராளம் தண்ணீர் பட்டபாடு; நீர் மோர் நெய்பட்ட பாடு. தாராளன் தண்ணீர்ப்பந்தல் நீர்ச் சோற்றுத் தண்ணீர் நெய்பட்டபாடு. தார் புறப்பட்டுத் தாய் வாழையைக் கெடுத்த மாதிரி. 10700 தாலாட்டும் பிலாக்கணமும் தரமறிந்து சொல்ல வேண்டும். தாலி அறித்தவளுக்கு மருத்துவச்சித் தயவு ஏன்? தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்? தாரம் தப்பின வனுக்குப் பொங்கியிட. தாலி அறுத்தவள் வீட்டிலே தடவினது போல. தாலி அறுத்தவள் வீட்டிலே தலைக்குத் தலை பெரியதனம். தாலி அறுத்த வீட்டில் ஆளுக்கு ஆள் அதிகாரம். தாலி அறுப்பான் கலியாணத்தில் தலைக்குத்தலை நாட்டாண்மை. தாலி கட்டு முன்னால் வெல்லக்கட்டி; தாலி கட்டின பின்னால் வேப்பங்காய். தாலி கட்டும் பெண்ணின் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா? தாலிக்கு வேலி தார் மன்னன். 10710 தாலிப் பறி, சீலையைப் பறியா? தாலிப் பேச்சு; ஆனாலும் அறுத்துப் பேச்சு. தாலியை அறுத்துப் பீலி பண்ணினாளாம். தாலி வாங்குதல் தயையில்லா தனம். தாழ உழுதால் தளிர் ஓடும். தாழப் பொறுத்தாலும் வாழப்பொறுக்க மாட்டாள். தாழிப் போல் வயிறும் ஊசிபோல் மிடறும். தாழ் இட்டவன் தாழ் திறக்க வேண்டும். தாழ் குலத்தில் பிறந்தாலும் புத்தியினால் அலரிப் பூவைப் போல் பயன்படுவர். தாழ்ந்த இடத்திலே தண்ணீர் தங்கும். 10720 தாழ்ந்த இடத்திலேதான் தண்ணீரும் கோபமும். தாழ்ந்த கூரையுள்ள வீட்டில் தாழ்ந்துதான் நுழைய வேண்டும். தாழ்ந்தவன் கெட்டுப் போனால் பிச்சைக்காரனும் ஏசுவான். தாழ்ந்தது தங்கம்; உயர்ந்தது பித்தளை. தாழ்ந்து நின்றார் வாழ்ந்து நிற்பார். தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும். தாழ்மை இல்லாத வாலிபன் வீண். தாழ்வதும் வாழ்வதும் சகடக்கால் போல. தாழ்வான இடத்திலேதான் தண்ணீர் தேங்கும். தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும். 10730 தாள் உண்ட நீரைத் தலையாலே தரும் தென்னை. தாள் ஏற நீர் ஏறும். தாளத்துக்குத் தக்க மேளம். தாளுக்கும் அகப்படாமல், தாழ்ப்பாளுக்கும் அகப்படாமல். தானத்தில் சிறந்தது நிதானம். தானப்பனுக்கு மூக்கில்லையானால் சாட்சி சொல்ல நாக்குப் போதாதா? தானமாகக் கொடுத்த புடவையை முழம் போட்டுப் பார்த்தாளாம். தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தானாம். (பார்க்காதே) தானா எவனும் கெட மாட்டான் தடுக்கி விழாமல் எழ மாட்டான். தானாக ஆடுகிற பேய் கொட்டைக் கண்டால் விடுமா? 10740 தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியுமா? தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி. தானாகச் சாப்பிட்டால் வீணாய்ப் போகும்; பங்கிச் சாப் பிட்டால் பசியாறும். (பசியாறலாம்). (பங்கி - பங்கிட்டு) தானாகத் தின்று தலையாகப் போகவேண்டும். தானாகத் தின்று வீணாகப் போகாதே. தானாகப் பழுப்பது பழமா? தள்ளிப் பழுப்பது பழமா? தானாக வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா? தானும் இடாள்; இட்டவர்களையும் பார்த்தறியாள். தானும் உண்ணான்; பிறர்க்கும் கொடான். தானும் உண்ணான்; தரையிலும் போடான். 10750 தானும் படுக்க மாட்டான்; தள்ளியும் படுக்க மாட்டான். தானும் படுக்க மாட்டான்; தன்னையும் படுக்கவிட மாட்டான். தானும் போகான்; தலையிலும் கிடக்கான். தானும் வாழ்கிற காலத்தில் வயிறும் கிறுக்கும்; மதியும் பெருக்கும். தானே அறியாதவன் பிறர் சொன்னால் கேட்பானா? தானே உழுது பயிர் செய்கிறவனுக்குச் சமானம் இல்லை. தானே கனியாததைத் தடிகொண்டு அடித்தால் கனியுமா? தானே பழுக்காததைத் தடிகொண்டு அடித்தா பழுக்க வைக்க முடியும்? தானே பழுத்தால் பழமா? தடியால் அடித்தால் பழமா? தானே போய் மோர் இல்லை; தயிர் அனுப்பச் சீட்டனுப் பினானாம். 10760 தானே வாழ்ந்து தலைமகள் அறுக்க வேண்டுமாம். தான் அழியத் தெற்கும்; வைத்தவன் அழிய வடக்கும் தான் அடங்கத் தன் குலம் அடங்கும். தான் அறியாச் சிங்காரம் தன் பிடரிக்குச் சேதம். தான் அறியாத ஆவேசம் உண்டா? தான் அறியாதது நஞ்சோடு ஒக்கும். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். (ஆடாது போனாலும்) தான் ஆண்ட உலக்கையும் தங்கப் பூச்சரடும் தலை மரு மகளுக்கு. (பூஞ்சரமும்) தான் இருக்கிற அழகுக்குத் தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெய். (பூசி) தான் ஈன்ற காய் வாழைக்கு எமன். 10770 தான் ஏற நீர் ஏறும். தான் ஏறி விளையுமல்லது நீர் ஏறி விளையாது. தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். தான் கள்ளன் பிறரை நம்பான். தான் கள்ளனானால் ஊரும் கள்ளனாம். தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை. தான் குடிக்கக் கூழ் இல்லை; வாரத்துக்கு இரண்டு பன்றிக் குட்டி வளர்க்கிறான். தான் குடிக்காத பாலைக் கவிழ்த்து விடுகிறதா? தான் கும்பிடும் தெய்வமானாலும் பொய்ச் சத்தியம் செய்தால் பொறுக்குமா? தான் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி. 10780 தான் கெட்ட குரங்கு வனத்தையே அழித்ததாம். தான் கெட்டதும் அல்லாமல் வனத்தையும் அழித்ததாம். தான் சம்பாதித்தால் தனக்கு உதவும்; ஊர் சம்பாதித்தால் உதவ மாட்டாது. தான் சாக மருந்து தின்பார்களா? (உண்பார் இல்லை) தான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன? நிமிர்ந்து என்ன? தான் செய்யாத வேலை தரிசம் பாழ். தான் தளம்பல்; பிறருக்கு ஊன்றுகோல். தான் தற் புகழ்தல் தகுதியன்றே. தான் திருடன் அடுத்தவனையும் திருடன் என்பான். தான் திருடி அயல் வீடு நம்பாள்; கூத்திக் கள்ளன் பெண் சாதியை நம்பான். 10790 தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் கட்டிக் கொண்டான். தான் தின்கிற நஞ்சு தன்னைத் தான் கொல்லும். தான் தின்ற நஞ்சு தன்னை எரிக்கும். (கொல்லும்) தான் தின்னச் சோற்றுக்கு வழியைக் காணோம்; வாரத்துக்கு இரண்டு கோழி வளர்த்தானாம். தாம் தின்னத் தவிடு இல்லை; தங்கத்தாலே தாலி தொங்கப் போடச் சொன்னாளாம். தான் தின்னத் தவிடு இல்லை; நெல் கொட்டத் தொம்பை தேடினானாம். தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான். தான் தின்னி பிள்ளை வளர்க்காள்; தவிடு தின்னி கோழி வளர்க்காள். தான் தேடிய பொருளைச் செல வழிக்க அடுத்த வீட்டுக் காரன் உத்தரவு வேண்டுமா? தான் தொழும் தெய்வமானாலும் பொய்ச் சத்தியம் செய்தால் சகிக்குமா? 10800 தான் தோன்றித் தம்பிரானாய் இருக்கிறான். தான் பத்தினியானால் தேவடியாள் தெருவிலும் குடியிருக் கலாம். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால். தான் பெற்ற குழந்தையைத் தானே சீராட்டுமாம் காம்பு இல்லாத கத்தரிக்காய். தான் பெற்றால் தாலாட்டும்; தாயார் செத்தால் பிலாக் கணமும் தானே வரும். தான் போக மாட்டாதவன் தண்ணீர் மிடாவுக்குச் சீட்டு எழுதி விட்டானாம். தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு, விளக்கு மாற்றையும் கவ்விக் கொண்டு போனதாம். தான் போகாத காரியத்துக்கு ஆள் போனால் ஒரு செட்டு. (கொட்டு) தான் போட்ட தார் வந்து தாய் வாழையைப் பழித்த கதை. தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம். 10810 தான் போனால் தாகத்துக்குத் தண்ணீர் கிடையாது; எழுதடா நூறுகுடம் தயிருக்கு என்றானாம். தான் வாழ்க்கைப் பட்டல்லவா தங்கைக்கு வரன் தேட வேண்டும்? தான் வாழத் தன் சீலை வாழும். தான் வாழ்ந்தல்லவா தங்கைக்கு நாள் பார்க்க வேண்டும். தான் வெட்டின குழி தனக்குத் தானே. தான் வெட்டின குழியில் தானே விழுவான். (விழுந்தான்) தான்றிக் காயில் சனியன் புகுந்தது போல. (மரத்தில்)  தி திகம்பர சந்தியாசிக்கு வண்ணான் உறவு ஏன்? திகைப்பூண்டு மிதித்துத் திக்குக் கெட்டாற் போல. திக்கு இல்லாப் பிணம் தெருவில் கிடக்கும். 10820 திக்கு அற்ற ஊருக்குத் திருடன் புள் கருட கம்பம். திக்கு அற்றவருக்குத் தெய்வமே துணை. திங்கள் துக்கம் திரும்பி வரும். திங்கள் துக்கம் திருப்பிக் கேட்பார். திங்களில் கேட்டார் திரும்பக் கேட்பார். திசை தவறினாலும் வசை தவறாது. திசைப் புரட்டனுக்குப் புளுகுத் தாழ்ச்சி இல்லை. திட மனப்படு, தீம்பர்க்கு அருகில். திடுக்கிட்டவனுக்குத் திண்டென்ன மெத்தை என்ன? திடுக்கென்று கனாக்கண்டான் திண்ணையில் படுத்தவன் தெருவெல்லாம் சொந்தமென்று. 10830 திடுக்கென்று போம் உடலை நிலை என்று நம்பலாமா? திட்டத் திட்டத் திண்டுக்கல்; வைய வைய வைரக்கல். திட்டம் போட்டுக் கட்டிய வீட்டில் சட்டை மாட்ட இடம் இல்லை. திட்டிக் கெட்டாரும் இல்லை; வாழ்த்தி வாழ்ந்தாரும் இல்லை. திண்டிக்கு அவசரம்; வேலைக்கு ஒளிப்பு. திண்டிக்கு திம்ம ராசா; வேலைக்கு போத்த ராசா. திண்டுக்கல் உப்பு இரண்டுக்கு ஒன்று. திண்டுக்கு மிண்டென்று உளறுகிறான். திண்ணிய இரும்பையும் அரம் தேய்த்துவிடும். திண்ணை தூங்கி என்றைக்கும் விடியான். 10840 திண்ணை தூங்கிக்குப் பெண்ணைக் கொடுப்பார்களா? திண்ணைக்குத் தேள்கொட்ட தண்ணீர் மிடாவுக்கு நெறி கட்ட. (மொந்தையில்) திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கு விடியும். திண்ணையில் பெண்ணைத் திருப்பி வைக்கிறது; மனையில் பெண்ணை மாற்றி வைக்கிறது. திண்ணை வீணன் திருவாசல் வீன். (தெருவாசல்) திம்மி குத்தினாலும் பொம்மி குத்தினாலும் நெல் அரிசி யானால் சரி. திரட்டுப்பால் குமட்டுகிறதா? (புரட்டுகிறதா?) திரண்ட பெண் தேரடிக்குப் போகக் காசு எதற்கு? பணம் எதற்கு? திரவியத்தில் அழுத்தமானவன் செத்தாலும் கொடான். திரள் எலி வளை எடாது. 10850 திரித்த வரையிற் கயிறு; திரியாத வரையில் பழுதை. திரி மிஞ்சுகிறதோ? எண்ணெய் மிஞ்சுகிறதோ? திரு உண்டானால் திறமை உண்டாகும். திரு ஏற உரு ஏறும். திருகாணிக்கு வலிவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு. திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை. (தீங்கும் காணலாயிற்றே) திருக் காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா? திருக்குளத்துக்குப் பாசியும் தரித்தினுக்குப் பிள்ளையும். திருக்குளத்துத் தண்ணீருக்குத் தேவடியா உத்தரவு எதற்கு? சத்திரத்துச் சாப்பாட்டுக்குச் சாமியார் உத்தரவு எதற்கு? திருச்சி எத்தனுக்குச் சரியான தஞ்சை எத்தன். 10860 திருச்சிராப்பள்ளித் தேவடியாளுக்கு இருத்தினாற் போலக் கொண்டையாம். திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்; தகப்பன் செத்தால் பிள்ளையம்பலம். திருச்செந்தூர் முக்காணிச்சி சொருக்கை நினைத்து அழுதானாம். திருடத் தெரிந்தால் தெற்று மாற்றும் தெரிய வேண்டும். திருடத் தெரிந்தாலும் தெற்றத் தெரிய வேண்டும். (தெட்ட) திருடத் தெரியாதவன் தலையாரி வீட்டிலே திருடினாற் போல. திருடப் போய்த் தலையாரி வீட்டில் ஒளிந்து கொண்டானாம். திருடப் போனாலும் திசை வேண்டும். திருடப் போனாலும் திசை வேண்டும்; அவிசாரியாய்ப் போனாலும் அதிட்டம் வேண்டும். திருடனாத் திருந்தாவிட்டால் திருட்டு ஒழியாது. 10870 திருடனுக்கு உறவில்லை. திருடனுக்குத் திருட்டுப் புத்தி போகாது. திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல. திருடனுக்குத் தோன்றும் கள்ளப் புத்தி. திருடனுக்குப் பணம்; நாய்க்கு எலும்பு. திருடனை இராசவிழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா? திருடனைக் கண்டால் குரைக்குமாம்; தலைவனைக் கண்டால் குழைக்குமாம். திருடனைக் காவல் போட்டது போல. திருடனைக் கொண்டு திருடனைப் பிடிக்க வேண்டும். திருடனைத் துணைக் கொண்டு பணப்பெட்டியைக் காப்பது போல. 10880 திருடனைத் தேள் கொட்டினது போல. திருடனைப் பதுங்கிப் பிடித்தால் அல்லவா பிடிபடுவான்? திருடனைப் பிடிக்கத் திருடனை விடு. திருடனைப் பிடிக்கத் திருடனே வேண்டும். திருடனை வைத்துக் கதவை சாத்தினது போல. திருடன் கையில் சாவியைக் கொடுத்தாற்போல. திருடன் துணைக்கு திருட்டு நாய். திருடன் புகுந்த ஆறாம் மாதம் நாய் குரைத்தது போல. திருடன் பெண்டாட்டி என்றைக்கும் கைம்பெண்டாட்டி. திருடன் பெண்டாட்டி என்றைக்கும் தாலியறுப்பாள். 10890 திருடன் மகன் தகப்பன் சாமி. திருடி என்று தெருவில் போகக்கூடாது; அவிசாரி என்று ஆனை மீதும் ஏறலாம். திருடி குடியாவாளா? தவிடு களியாகுமா? திருடிக்குத் தெய்வமில்லை; சம்சாரிக்கு ஆணையில்லை. திருடி தேர் மேல் வருகிறாள்; அவுசாரி ஆனைமேல் போகிறாள்; பத்தினி பார் மூலையில் ஒதுங்குகிறாள். திருட்டு உடைமை உருட்டிக் கொண்டு போம். திருட்டு உடைமைக்கு மத்தளம் மரக்கால். திருட்டுக்கு இருட்டு ஏது. திருட்டுக்கு நவமணி. திருட்டுக் கை இருட்டுக்குள்ளே போனாலும் சும்மா இராது. 10900 திருட்டுக் கை நிற்காது. திருட்டுச் சாமியாரும் குருட்டுக் கூத்தியாரும். திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல. âU£L bešY¡F¤ bjh«giu ku¡fhš.(k¤js«) திருட்டுப் பயல் கல்யாணத்தில் முடிச்சு அவிழ்க்கிற பெரியதனம். திருட்டுப் பயலுக்குத் திரட்டுப் பாலும் சோறும்; விசுவாசக் காரனுக்கு வெந்நீரும் பருக்கையும். திருட்டுப் பயலுக்குப் புரட்டுக் குருக்கள். திருட்டுப் புத்தி தலைக்கட்டுமா? திருட்டுப் பூனை அடுப்பங்கடையைச் சுற்றும். திருட்டுப் பூனைக்குச் சலங்கை கட்டினாற் போல. 10910 திருட்டுப் பூனைக்குப் போடு திரட்டுப்பாலும் சோறும். திருட்டுப் பையன் வருகிறான்; தவலை, செம்பை வெளியில் வையும். திருட்டு மூஞ்சி காட்டி விடும். திருட்டு வாய்த்தால் திருட மாட்டாரோ? (திருடப்படாதா) திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன். திருத்தங்கலுக்கு மறுதங்கல் கிடையாது. திருத்தியில்லாத எசமான் வீண். திருநாளுக்குப் போகிறாயா என்றால் ஆம் ஆம்; திரும்பி வருகிறாயா என்றால் ஊகூம். திருநாளுக்குப் போகிறாயா? திண்டிக்குப் போகிறாயா? திருநாளும் முடிந்தது; எடுபிடியும் கழிந்தது. 10920 திருந்த ஓதத் திரு உண்டாமே. திருப்பணி செய்யக் கருத்திருந்தால், கருப்படியின் பேரிலே விருப்பிருக்கும். திருப்பதி அம்பட்டன் வேலை. திருப்பதிக் கழுதை கோவிந்தம் போடுமா? திருப்பதிக்குப் போயும் பரதேசி காலில் விழுந்தானாம். திருப்பதிக்குப் போய் மொட்டைத் தலையைத் தேடினாற் போல. திருப்பதி போனாலும் துடைப்பம் மூன்று காசுதான். திருப்பதி மொட்டை போதாதென்று திருவரங்கத்தில் வந்து சிரிப்பாய்ச் சிரித்தானாம். திருப்பதியில் எத்தனையோ மொட்டை; இலந்தை மரத்தின் கீழ் எத்தனையோ கொட்டை. திருப்பதியில் குட்டையில் விழுந்த மொட்டையைத் தேடிய கதை. 10930 திருப்பார்க்கத் தீங்கெல்லாம் நீங்கும். திருப்புன்கூர் வெல்லம் திரட்டிக் கொடுத்தாற் போல. திருப்பூந்துருத்தி உபசாரம்; திருநெல்வேலி ஆசாரம். திருமகள் பார்வை இருந்தால் சென்ற இடமெல்லாம் பெரும்பாதையாய்விடும். திருமணத்திற்கு முன் பெண் அழுவாள்; திருமணத்திற்குப் பிறகு கணவன் அழுவான். திருமணை செய்யத் தெரியாதவன் தேர் வேலைக்கு அச்சாரம் வாங்கினானாம். திருமழபாடிப் பிள்ளையார் என்றைக்கு இருந்தாலும் ஆற்றோட. திருமுலைப்பால் அருந்தினோர்க்கு மறுமுலைப்பால் இல்லை. திருவண்ணாமலைக் குடைக்கு நிழல் உண்டு பண்ணுகிறதா? திருவரங்கத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவாய்மொழி கற்பிக்க வேண்டுமா? 10940 திருவரங்கம் நடை அழகு. திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டா? திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார். திருவாசல் ஆண்டியும் ஒருவேளைக்கு உதவுவான். திருவாதிரை ஒரு வாய்க்களி; திருப்பிக் கேட்டால் செருப் பால் அடி. திருவாதிரைக் களி தினமும் அகப்படுமா? திருவாதிரைப் பயணம் திரும்பி வர ஒட்டாது. திருவாதிரை மழை இல்லாவிட்டால் திருப்பி மழை காண்பது அரிது. திருவாதிரையில் போன பொருள் திரும்பி வருகிறது கண்டிப்பு. திருவாய்த்தான் இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான். (திருவாழத்தான்) 10950 திருவாய்க்கு எதிர்வாய் உண்டோ? திருவாரூர்த் தெரு அழகு; திருவொற்றியூர்த் தேர் அழகு. திருவாரூர்க் தேர் அசைகிற மாதிரி அசைகிறான். திருவாரூர்த் தேர் அழகு; திருவிடைமருதூர்த் தெரு அழகு; மன்னார்குடி மதில் அழகு; வேதாரண்யம் விளக்கு அழகு; கும்பகோணம் கோயில் அழகு. திருவாரூர்த் தேர் ஓட்டம்; திரும்பிப் பார்த்தால் நாய் ஓட்டம். திருவாரூர்த் தேருக்கு உலுக்கு மரம் போடுகிறது போல. திருவிழாப் பார்க்க வந்தவன் கழுத்தில் தவிலைக் கட்டி அடித்தது போல. திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்; நெய் வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும். திருவிளக்கு இட்டாரை தெய்வம் காக்கும். திருவிளக்கு இட்டால் தீவினை தீரும். 10960 திருவிளக்கு இல்லாவீட்டில் பேய் குடியிருக்கும். திருவிளையாடலுக்கு மறுவிளையாடல் உண்டோ? திருவுக்கும் முருவு கொடுப்பாள்; திருவெறும்பூருக்கும் சீட்டுக்கொடுப்பாள். திருவையாற்றான் பாடென்றால் பாட மாட்டான்; பாடாதே என்றால் பாடுவான். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. தில்லிக்கு இராசாவானாலும் தாய்க்கு பிள்ளை தானே. (தள்ளிக்கு) தில்லும் மல்லும் அல்லல். தில்லை அந்தணர் கூடுவது எப்போது? ஓடுவது எப்போது? தில்லைக் காளி எல்லைக்கு அப்பால். தில்லைக்குத் தீட்சிதன்; இலங்கைக்கு இராச்சதன். 10970 தில்லைப் பெண் எல்லை தாண்டாது. தில்லை பாதி திருவாசகமும் பாதி. தில்லைப் பெண் எல்லை விட்டுப் போகாள். திறந்த கதவுக்குத் திறவுகோல் தேடுவானேன்? திறந்த வீடு செல்லாத்தாள் கோவில்போல இருக்கிறது. திறந்த வீட்டில் நாய் நுழைந்தாற் போல. திறமைக்குத் தக்க பயிற்சி; தேவைக்குத் தக்க நுகர்ச்சி. திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாய் மாறிவிடுவது போல. தினவு எடுத்தவன் சொறிந்து கொள்ள வேண்டும். தினவுக்குச் சொறிதல் இதம். 10980 தினை அளவு செய்தாருக்கும் பனை அளவு செய். தினை அறுக்கச் சென்ற இடத்தில் பனை முளைத்தது போல. தினை நன்றி செய்தால் பனையாகத் தோன்றும். தினைப் பயறும் பாலும் தின்னாதிருந்தும் வினைப் பயனை வெல்வது அரிது. தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத் தவன் வினை அறுப்பான். தின்பது கொஞ்சம் சீவனும் நிலையில்லை. தின்ற நச்சு கொல்லும்; தின்னாத நஞ்சு கொல்லுமா? தின்ற மண்ணுக்குத் தக்க சோகை. தின்ற மதம் கண்ணைக் கெடுக்கும். தின்றால் அல்லவோ நஞ்சு கொல்லும்? 10990 தின்றால் கொல்லுமோ, கண்டால் கொல்லுமோ விடம்? தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா? தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது. தின்று கொழுத்தால் சும்மா இருக்க மாட்டான். தின்று மிகுந்த பாக்கைத் திரும்பவும் போடுவார்களா? தின்று சுவை கண்டவன் திண்ணை விட்டுப் போகான்; பெண்டு சுவை கண்டவன் பின்னையும் போகான். தின்னதை மறக்கலாம், சொன்னதை மறக்கலாமா? தின்னத் தவிடு இல்லை; தங்கச் சரப்பளி தொங்கத் தொங்கத் ஆடுகிறதாம். தின்னத் தின்ன ஆசை; துடைப்பக் கட்டைப் பூசை. தின்னத் தின்னக் கேட்குமாம் பிள்ளை பெற்ற வயிறு. 11000 தின்னத் தெரியாமல் தின்பானேன்? தின்னத் தெரியாமல் தின்று பேளத் தெரியாமல் பேளுகிறது. தின்ன மண்ணுக்குச் சோகை தின்ன மாட்டாத நாய் பண்ணையைக் காத்தது போல. தின்னல தின்னல என்றவளைத் தெருவிலே விட்டுப்பாரு; உண்ணல உண்ணல என்றவளை ஊருலே விட்டுப்பாரு. தின்ன வந்த பிடாரி தெருப் பிடாரியைத் துரத்திற்றாம். தின்னாததையும் தின்று தேவாங்காய்ப் போவானேன்? தின்னுமாம் ஒரு படப்பு; திரும்பாதாம் ஒரு மடக்கு. தின்னா வீட்டில் தின்னி.  தீ தீ இல்லாமல் புகை எழும்பாது. 11010 தீக்குக் காற்று உதவினாற் போல. தீச்சுட்டது ஆறும் நாச்சுட்டது ஏறும். தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது. தீட்டுங்கல்லில் கூர்மை பார்க்கிறது. தீட்டுத் துடைக்கப் பண்ணும். தீ நாள் திருவுடையாருக்கு இல்லை. தீபத்தில் ஏற்றிய தீ வட்டி. தீப்பட்டக் குழந்தை நெருப்புக்கு அஞ்சுகிற மாதிரி. தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டைக்குப் பஞ்சமா? (தீயால் எரிந்த) தீப்பட்ட வீட்டிலே பிடுங்கினது ஆதாயம். 11020 தீப்பட்ட வீட்டிற்குப் பீக்குட்டைத் தண்ணீர். தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது. ÔÄŠr it¤jhY« gifÄŠr it¡fš MfhJ.(Ôia) தீமை மேலிடத் தெய்வம் கை விட்டது. தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான். தீமையை வெல்ல நன்மையைச் செய். தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது; தீயார் வளரச் செய்வது தீது. (பணி) தீயாரோடு இணங்காதே; சேப்பங்கிழங்குக்குப் புளி குத்தாதே. தீயில் இட்ட நெய் திரும்ப வருமா? தீயில்லாமல் புகையாது. 11030 தீயினால் சுட்ட புண் ஆறும்; வாயினால் சுட்ட புண் ஆறாது. தீயும் தீயும் சேர்ந்து பெருந்தீ ஆனாற் போல். தீயும் பயிருக்குப் பேயும் மழை போல. தீயைச் செல் அரிக்குமா? தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நட்டம் ஆக்குவான். தீரக் கற்றவன் தேசிகன் ஆவான். தீர விசாரியாமல் தீர்ப்பு சொல்லக்கூடாது. தீராக் கோபம் போராய் முடியும். (பாடாய்) தீராச் செய்கை சீராகாது. தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி. 11040 தீரா நோய்க்குத் தெய்வமே கதி. தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி. தீரா வழக்கு நேர் ஆகாது. தீர்க்க முடியாத துன்பத்திற்காகக் கவலைப்படாதே. தீர்த்தக் கரை பாவி. தீவட்டிக் காரனுக்குக் கண் தெரியாது. தீவட்டிக் காரனுக்கு வெளிச்சம் பிடிக்க வேண்டுமா? தீவட்டிக் கொள்ளை போன பின் திருமாங்கல்யச் சரடு தேடினாளாம். தீவட்டி தூக்க வேண்டுமானால் திருமண் போடத் தெரிய வேண்டும். (திருவரங்கத்தில்) தீவட்டியின் கீழ் விளக்கு. 11050 தீவினை, செய்தவர்க்கே சேரும். தீவினை செய்யின் பெய்வினை செய்யும். (பேய்) தீவினை முற்றிப் பாழ்வினை ஆச்சுது. தீனிக்கு அடுத்த லத்தி; சாதிக்கு அடுத்த புத்தி. (ஏற்ற)  து துக்கத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தோட்டிச்சியைக் குத்தகையாக வைத்துக் கொண்டானாம். (தொட்டிச்சியை) துக்கத்தைச் சொல்லி ஆற்றவேண்டும்; கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும். துக்கப்பட்டவருக்கு வெட்கம் இல்லை. துக்கம் அற்றவனுக்குச் சொக்கட்டான். துக்கம் உள்ள மனத்தில் துன்பம் ஏன் வேறே? துக்கலூரிலும் கல்யாணம்; துடியலூரிலும் கல்யாணம், நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது. 11060 துக்கிரிக்குத் தொடையிலே மச்சம். துக்கிணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை. துக்கிணிப் பிடித்தவளுக்கு தொடையிலே மச்சம். துஞ்சி நின்றான், மிஞ்சி உண்ணான். துஞ்சி நின்றால் மிஞ்சி உண்ணான். (உண்ணாள்) துஞ்சூமன் கண்ட கனா. துடிக்கக் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறது. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. துடுப்பு இருக்கக் கை வேவானேன்? (வேகுமா) துடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டினது போல. 11070 துட்டனைக் கண்டால் தூர விலகு. துட்டுக்கு இரண்டு துக்காணிக்கு மூன்று. துட்டுக்கு எட்டுக் குட்டியானாலும் துலுக்கக் குட்டி உதவாது. துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுத்துட்டுக்கு விற்றாலும் வட்டிக்கு ஈடு ஆகாது. துட்டுக்கு ஒரு குட்டி என்றாலும் துலுக்கக் குட்டி ஆகாது. (விற்றாலும்) துட்டுக்கு ஒரு சேலை விற்றாலும் நாய்சூத்து அம்மணம். (அம்பலம்) துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? திட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? துட்டைக் கொடுத்துத் துக்கத்தை வாங்கிக் கொண்டாளாம். துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை; அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை. (துணிந்தவளுக்கு, அழுதுவளுக்கு) துணிந்த மல்லுக்கு தோளில் சுட்டால் அதுவும் ஒரு ஈக்கடி. 11080 துணிந்த முண்டையைத் தொடையில் சுட்டால் அதுவும் ஓர் ஈக்கடி என்று சொன்னாளாம். துணிந்தவருக்குத் துக்கம் ஏது? துணிந்தவனுக்குக் கடலும் காலளவு. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை. துணிந்தவனுக்குத் துணை வேண்டுமா? துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சு மெத்தை. துணிந்தவனுக்கு ப் பயமா? துணிந்தாருக்குத் துக்கம் இல்லை. துணிந்தாருக்குத் துக்கம் உண்டா? பணிந்தாருக்குப் பாடு உண்டா? துணி முள்ளிலே பட்டால் முள்ளுக்குச் சேதமில்லை துணிக்கே. 11090 துணியைத் தூக்குவதற்கு முன்னே தொடையில் வைப்பது போல. துணிவது பின், நினைவது முன். துணிவும் பணிவும் துக்கம் தீர்க்கும். துணை இரண்டானால் தூக்கணத்துக்கு மனை இரண்டு. (மனைவி) துணை இருப்பாருக்கு வினை இழைப்பதா? துணை உடையான் படைக்கு அஞ்சான். துணை கண்ட நாய் சிதம்பரம் போனாற்போல. துணைக்குத் துணையும் ஆயிற்று; தொண்டைக் குழிக்கு வினையும் ஆயிற்று. துணை பட்டாலும் பிணை படாதே. துணைப்பட்டால் சாக வேண்டும்; பிணைப்பட்டால் இருக்க வேண்டும். 11100 துணை பெற்றவன் வீண் போகான். துணை போனாலும் பிணை போகாதே. துணையோடு அல்லது நெடுவழி போகேல். துண்டு இழுபட்டால் தொண்டன் ஆய்விட்டானாம். துண்டுப் பாளையக்காரன் இடைநடுவில் துடிக்கிறது போல. துண்டும் துணியும் சீக்கிரம் விலைபோகும்; பட்டும் பணியும் பையத்தான் விலை போகும். துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிய கதை. துப்பட்டியிற் கிழித்த கோவணம் தானே? துப்பற்ற நாரிக்குக் கொப்பழகைப் பார். துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தாற் போல. 11110 துப்பின தம்பலம் வாய்க்கு வராது. துப்பு அற்ற கணவனுக்குத் துறுதுறுத்த பெண்டாட்டி. துப்பற்ற வாழ்வை உப்பிலே பார்; சீரற்ற வாழ்வை நீரிலே பார். துப்பு அற்றவனை உப்பிலே பார்; சீர் அற்றவனை நீரிலே பார். துப்புக்கெட்ட சாம்பானுக்கு இரட்டைப் படித்தரம்; தூர்ந்த கிணற்றுக்கு இரட்டை ஏற்றம். துப்புக்கெட்ட நாய்க்கு இரட்டைப் பங்கு. துப்புக்கெட்ட மாப்பிள்ளைக்கு இரட்டைப் பெண்டாட்டி. துப்புக்கெட்டவளுக்கு இரட்டைப் பரிசமா? துப்புக்கெட்டவளுக்கு உப்புக்கண்டம் எதற்கு? தும்மலிலே போனாலும் தூற்றலில் போகக்கூடாது. 11120 தும்பினவன் செத்தால் நிம்மனம் அற்றது. தும்பி பறந்தால் தூரத்தில்மழை. தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறதா? (பிடித்தாற்போல) தும்மல் நன்னிமித்தம். தும்மினால் குற்றம் இருமினால் அபராதம். துயரப் பட்டால் ஆறுதல் உண்டு; துன்பப் பட்டால் தேறுதல் உண்டு. துருசு கல்வி; அரிது பழக்கம். (அரிப்பது) துருத்தியைக் கண்ட இரும்பா? துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது. துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையை நுழைப்பான். 11130 துரும்பு பெருத்துத் தூணானாற் போல. துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும். துரும்பும் கலத் தண்ணீரைத் தேக்கும். துரும்பைக் கிள்ளிப் போட்டு நீ தான் மாப்பிள்ளை என்றால் அதுகூடத் துள்ளுமாம். துரும்பைத் தூணாக்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெரு மாளாக்கி விடுவான். துரும்பை வைத்து மூத்திரம் பெய்கிறதா? துரை ஆண்டால் என்ன? துலுக்கன் ஆண்டால் என்ன? துரைகளோடு சொக்கட்டான் போடலாகுமோ? துரைசித்தம் கனச்சித்தம். துரை நல்லவர்; பிரம்பு பொல்லாதது. 11140 துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல். துர்ச்சனனைக் கண்டால் தூர விலகு. துர்ப்பலத்திலே கருப்பிணி ஆனால் எப்படி முக்கிப் பெறுகிறது? துர்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்; சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம். துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும். (கருவி) துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை. துலாம் இடிக்கிறது பிடி ஏற்றத்தை. துலுக்கக்குடியில் ஏது பேயாட்டம்? துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினது போல. துலுக்கனுக்கு ஏன் துறட்டுக் கடுக்கன்? 11150 துலுக்கன் உடுத்துக் கெட்டான்; பார்ப்பான் உண்டு கெட்டான். துலுக்கன் கந்தூரி தூங்கினால் போச்சு. துலுக்கன் துணியால் கெட்டான்; பார்ப்பான் பருப்பால் கெட்டான். துலுக்கன் புத்தி தொண்டைக்குழி வரைக்கும். துலுக்கன் துணிக்கு என்ன பஞ்சம்? துவி நாக்கு இடறும். துழாவிக் காய்ச்சாதது கஞ்சியுமல்ல, வினாவிக் கட்டாதது கல்யாணமும் அல்ல. துளசிக்கு வாசமும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே உண்டு. (தெரியும்) துளித்துளியாய் வெள்ளமா? துடுமென்று வெள்ளமா? துள்ளாதே, துள்ளாதே ஆட்டுக்குட்டி, என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி. 11160 துள்ளித் துள்ளிக் குதித்ததாலும் வெள்ளிப் பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது. துள்ளிய மீன் தூரியில் விழுமா? நீரில் விழுமா? யார் கண்டார்? துள்ளுகிற மாடு பொதி சுமக்கும். (சுமக்காது) துள்ளுகிற கெளுத்துச் செத்துப் போகிறது தெரியாதா? துள்ளும் மான் துள்ளித் துரவில் விழுந்தது. துள்ளு மறி கொலை அறியாது. துறக்கத் துறக்க ஆனந்தம் துறந்தபின்பு பேரின்பம். துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா? (வாய்க்கு) துறவறம் இல்லறம் மனத்திலே. துறவிக்கு வேந்தன் துரும்பு. 11170 துறுதுறுத்த வாலு துக்காணிக்கு நாலு. துற்றிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமாம் கிணறு அநேகம். (துள்ளிச்) துன்பத்திற்கு இடம் கொடேல். துன்பத்திற்கு யாரே துணையாவர்? துன்பத்தின் முடிவு இன்பம். துன்பம் உற்றவர்க்கு இன்பம் உண்டு. துன்பம் தொடர்ந்து வரும். துன்பம் முந்தி; இன்பம் பிந்தி.  தூ தூக்கணங்குருவி குரங்கிற்குப் புத்தி சொன்னது போல. தூக்கணத்துக்குத் துயரமில்லை; மூக்கணத்துக்கு முசு இல்லை. (மூக்கணம் - எருது) 11180 தூக்க நினைத்து நோக்கிப் பேசு. தூக்கி ஏறவிட்டு ஏணியை வாங்கும் தூர்த்தர் சொல்லைக் கேளாதே. தூக்கி நிறுத்தடா பிணக்காடாய் வெட்டுகிறேன் என்றானாம். தூக்கிப் போட்டதும் அல்லாமல் குதிரை குழியும் பறித்ததாம். தூக்கி வளர்த்த பிள்ளையும் தொடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படா. தூக்கி வினை செய். தூக்கினால் சென்னி துடிக்கத் துணித்துவிடு; (துணிக்க) மாக்கினால் சக்கரம் போல் அணை. (அடை) தூக்கு உண்டானால் நோக்கு உண்டு. தூக்குவதற்கு ஆள் இருந்தால் பிள்ளை மாஞ்சு மாஞ்சு அழுமாம். (ஏங்கி ஏங்கி) தூங்காதவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனுக்கும் விளங்கும் குட்டி. 11190 தூங்காதவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக் குட்டி. தூங்காதவனுக்குச் சுகம் இல்லை. தூங்கிக் கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி. (ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி) தூங்கிய நாய்க்குத் துடைப்பம் எதிரி. தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது தூங்கினவன் கன்று கிடாக்கன்று (சேங்கன்று) தூங்கினவன் சாகிறதில்லை; வீங்கினவன் பிழைக்கிறதில்லை. தூங்கினவன் தொடையிலே கயிறு திரிக்கிறான். தூங்கினவன் தொடையிலே திரித்த வரைக்கும் லாபம். தூங்குகிற நரிக்கு இரை கிடையாது. 11200 தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினது போல. (உசுப்பி) தூங்குகிற புலியைத் தட்டி எழுப்புவானேன்? தூங்குகிற மணியக்காரனைத் தட்டி எழுப்பாதே. தூங்குகிற வரிக்காரனை எழுப்பிவிட்டால் போன வருடத் தீர்வையும் கொடுத்துவிட்டுப் போ என்பான். தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி அத்தாளம் இல்லை என்று சொன்னது போல. (அத்தாளம்-இரவு உணவு) தூங்குகிறவனை எழுப்புவானேன்? அவன் தொண்ணூறு பணம் குறைந்தது என்பானேன்? தூங்குகிறவன் சூத்திலே சுப்பல் எடுத்துக் குத்தினாற் போல. தூங்கும் புலியை வால் உருவி விட்டாற் போல. தூங்கு மூஞ்சி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம். தூங்குவது சிறிய தூக்கம்; போவதோ பெரிய தூக்கம். 11210 தூணில் புடவையைக் கட்டினாலும் தூக்கிப் பார்ப்பான் தூர்த்தன். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். தூணைத் துரும்பாக்கித் துக்குணியை மலையாக்கிடுவான். தூண்டா விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும். தூண்டில்காரனுக்குத் தக்கையிலே கண். (மிதப்பிலே) தூண்டில்காரனுக்கு மிதவையிலே கண் இருக்கணும். தூண்டில் நுனி இரைக்கு ஆசைப்பட்டு மீன் உயிர் இழப்பது போல. தூண்டில் போட்டவனுக்குத் தக்கைமேல் கண். தூண்டில் போட்டு ஆனை பிடிக்கும் புத்திசாலி. தூண்டிலில் அகப்பட்ட மீன் துள்ளி நத்தினால் விடுவார்களா? 11220 தூண்டிலில் பொதிந்த தேரை. தூண்டிலைப் போட்டு வராலை இழுக்கிறது. தூண்டின விரல் சொர்க்கம் பெறும். தூத்துக்குடிச் சந்தையிலே துட்டுக்கொரு பெண்டாட்டி. தூத்துக்குடிச் சந்தையிலே துட்டுக்கொரு பெண்டாட்டி சும்மா கிடைத்தால் எனக்கொருத்தி எங்கப்பனுக் கொருத்தி. தூமத்தீயைக் காட்டிலும் காமத்தீ கொடிது. தூமை துடைக்கப் பண்ணும். தூய்மை வாய்மை தரும். தூர இருந்தால் சேர உறவு. தூர உறவு சேரப் பகை. 11230 தூரத்திலே குண்டூசி தெரியும்; வழியிலே படுத்திருக்கிற எருமைமாடு தெரியாது. தூரத்துச் சொந்தம் ஆபத்துக்கு உதவாது. தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. தூரத்துப் பச்சை பார்வைக்கு இச்சை. தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப் போனால் கல்லும் கரடும். தூரப் போக வேண்டுமா, கீரைப் பாத்தியிற் கை வைக்க. தூரப் போய்க் கீரைப் பாத்தியிற் பேண்டானாம். தூர மண்டலம் சேய மழை; சேர மண்டலம் தூர மழை. தூரம் மறக்கிற போது பிள்ளை பெறக்கனவு கண்டாளாம். 11240 தூர்த்தர் என்போர் சொல் எழுத்து உணரார். தூர்த்தர் சொல்லைக் கேட்டால் வாய்த்திடும் கேடு. தூர்த்த கிணற்றைத் தூர் வாராதே. தூலம் இழுத்த கிடா நடு வீட்டில் தூங்குமா? தூளி இல்லை கூத்தியார் இரண்டுபேர். தூறல் நின்றாலும் தூவானம் நில்லாது. (தூற்றல்) தூறான குடி நீறாகும். (தூறு ஆடின) தூற்றலிலே போனாலும் தும்மலிலே போகக்கூடாது. தூற்றித் திரியேல். தூற்றின் கண் தூவிய வித்து. 11250 தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.  தெ தெய்வ அருள் இருந்தால் செத்தவனும் பிழைப்பான். (எழும்புவான்) தெய்வத்துக்குச் சத்தியம்; மருந்துக்குப் பத்தியம். தெய்வத்துக்குச் செய்வதும் செய்க்கு உரம் போடுவதும் வீண் அல்ல. தெய்வத்தை இகழ்ந்தவர் செல்வத்தை இழந்தார். தெய்வப் புலவனுக்கு நா உணரும்; சித்திர ஓடாவிக்குக் கை உணரும். (சித்திரக்காரனுக்கு) தெய்வம் இல்லாமலா பொழுது போகிறதும் பொழுது விடிகிறதும். தெய்வம் உண்டு என்பார்க்கு உண்டு; இல்லை என்பார்க்கு இல்லை. தெய்வம் காட்டும், ஊட்டுமா? தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 11260 தெய்வம் கெடுக்காத குடியைத் தெலுங்கன் கெடுப்பான். தெய்வம் சீறின் கைதவம் ஆகும். தெய்வம் படி அளக்கும். தெய்வமே துணை. தெய்வம் தீமை செய்யினும் கொற்றன் தீமை செய்யான். தெய்வம் நின்று கொல்லும். தெய்வ வணக்கம் நரக வாசலை அடைக்கும் தாழ். தெரிந்தவர்கள் தென்னம் பிள்ளை வைப்பார்கள். தெரிந்தவன் என்று கும்பிடு போட்டால் உன் அப்பன் பட்ட கடனை வைத்துவிட்டுப் போ என்றானாம். தெரிந்தவனுக்குத் தெரியும் செம்மறியாட்டு முட்டை. 11270 தெரிந்தே குட்டையில் விழ முடியுமா? தெரியாத் துணையே. பிரியாத் துணை நீ. தெரியாது மிதிப்பினும் தீச்சுடுதல் போல. தெரியாமலா ஆட்டுக்கு வாலை அளந்து வைத்திருக்கிறான். தெருச் சண்டைக்கு இடுப்புக் கட்டுகிறதா? தெருச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. தெருச் சண்டையை விலைக்கு வாங்குகிறதா? தெரு முனையில் நின்று பாடினால் என்ன? திருவையாறு போனால் என்ன? மிஞ்சியது தேங்காய் மூடி தானே? தெருவிலே ஊர்வலம் போகிறதென்று திண்ணையில் தூங்குபவன் திணறிக்கொண்டு செத்தானாம். தெருவிலே போகிற சனியனை விலை கொடுத்து வாங்கினதுபோல. 11280 தெருவோடு போகிற வண்டியைக் காலில் இழுத்து விட்டுக் கொண்டது போல. தெருளா மனதுக்கு இருளே இல்லை. தெவிட்டாக் கனி பிள்ளை; தெவிட்டாப் பானம் தண்ணீர். (அமிழ்தம்) தெளித்த விதை மறைத்து மூடு. தெள்ளிய அறிஞர் செல்வராவது இல்லை. தெள்ளிய திருமணி, திருட்டுக்கு நவமணி. தெறிக்க அடித்த தட்டானைப் போல. தெற்கத்திக் குருவியை வடகத்திக்குருவி தெற்றி அழைத்த தாம்; சீகம்பழம் தின்னப் போக. (சீசம்பழம்) தெற்கு விழுந்த கருக்கலும் தேவடியாளிடம் போன காசும் திரும்பா. தெற்கு வடக்குத் தெரியாதவன். 11290 தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும். தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா? தெற்கே பிறை சாய்ந்தால் தெருவெல்லாம் கூடை; வடக்கே பிறை சாய்ந்தால் வரப்பெல்லாம் கூடை. (தைப்பிறை) தெற்கே சாய்ந்தால் தெருவெல்லாம் பெட்டி; வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் பெட்டி. தெற்கே போகிற நாய்க்கு வடக்கே வால். தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை. தெற்றிப் பறிப்பாரை எத்திப் பறிக்கிறது. (எட்டிடத்தில்) தென்காசி ஆசாரம்; திருநெல்வேலி உபசாரம். தென்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகின் நடைதிருந்திப் பார்ப்பான் ஆவான். தென்றல் அடிக்கிற காற்றே, என் இறுக்கத்தை ஆற்றே. 11300 தென்றல் திரும்பியும் மழையா? தென்றல் முற்றிப் பெருங்காற்று ஆயிற்று. தென்றல் முற்றானால் புயலாக மாறும். தென்றலுக்கு மேகம் தெறிபட்டுப் போகும். தென்றலும் வாடையும் இறக்கும் பயிர்கள். தென்னை மரத்திலே தேள் கொட்ட பனைமரத்திலே நெறி கட்டினது போல. தென்னை மரத்தில் ஏண்டா ஏறினாய்? கன்றுகுட்டிக்குப் புல் பிடுங்க, தென்னை மரத்தில் புல் ஏதடா? அதுதான் கீழே இறங்குகிறேன். தென்னை மரத்தில் ஏறுபவனை எவ்வளவு தூரம் தூக்கி விடமுடியும்? தென்னை மரத்தில் என்னை வளர்த்தாள் பாவி. தென்னை மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும். 11310 தென்னை மரத்தின் நிழலும் தேவடியாள் உறவும் சரி. தென்னை மரத்துக் குரங்கே! என்னைப் பார்த்து இறங்கே. தென்னை மரத்தைக் கோணலாக்கியவரும், தேக்கு மரத்தை நேராக்கியவரும் இல்லை. தென்னை மரத்தை வைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்; பனை மரத்தை வைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான். தென்னையைப் பெற்றால் இளநீர்; பிள்ளையைப் பெற்றால் கண்ணீர். தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும். தென்னை வளர்ந்தால் பண்ணை வளரும். தென்னை வைத்து வாழையாயிற்று; வாழை வைத்து மஞ்சள் ஆயிற்று; மஞ்சள் வைத்து முள்ளி ஆயிற்று.  தே தேங்காயிற் சிறிது; மாங்காயிற் பெரிது. தேங்காயைத் தின்றவன் தின்ன, கோம்பையைச் சூப்பினவன் தண்டம் இறுக்கிறதா? 11320 தேங்காயை விழுங்குகிறது தினை; பருவத்தை விழுங்குகிறது பனை. தேங்காய்க்கு மூன்று கண்; தாய்க்கு ஒரே கண். தேங்காய் தின்றவன் ஒருத்தன்; தண்டம் கொடுத்தவன் ஒருத்தன். தேங்காய் தின்றால் இனிக்குமா? தேவடியாள் வீடு போனாள் இனிக்குமா? தேங்காய் திருடியவன் ஒருத்தன்; தெண்டம் கொடுத்தவன் இன்னொருத்தன். (புடுங்கியவன்) தேங்காய் தின்னக் காசு இல்லை; தெண்டம் கட்ட காசு இருக்கு. தேசங்கள் தோறும் பாசைகள் வேறு. தேசத்து நன்மை, தீமை அரசர்க்கு இல்லையா? தேசத்தோடு ஓத்து வாழ். தேசம் எல்லாம் பறக்கும் காகம், தான் இருக்கும் கொம்பை அறியாது. 11330 தேடத்தசை இருந்தும் அனுபவிக்க அதிட்டம் இல்லை. தேடப்போன மூலிகை காலில் அகப்பட்டது போல. தேடப்போன மச்சினன் செருப்படியில் அகப்பட்டது போல. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். தேடாது அழித்த தேவடியாள் தேவடியாளா? தேடித் திருவிளக்கு வை. தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர். தேடிப் பிடித்தாள் தேவடியாள் கள்ளனை. தேடிப் பிழைக்காத பிள்ளை திருடிப் பிழைக்காது. தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா? 11340 தேடிப் போகாதே; கூறி விற்காதே. தேடிப் போனது அகப்பட்டது போல. தேடிப் போன தெய்வம் எதிரே வந்தது போல. தேடிப் போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போல. தேடியதை எல்லாம் கொடுத்துத் தேட்டு மீன் வாங்கித் தின்னு. தேடின பூண்டு காலிலே மிதிபட்டது போல. (சிக்கினது) தேடின மருந்து காலிலே மிதிபட்டது. தேடிய பொருள் காலில் தட்டினது போல. தேடுவார் அற்ற பிணம் தெருவோடே. தேய்ந்த அம்மாள் தெய்வயானை; தெய்வத்துக்கு இட்டாலும் ஏறாது. 11350 தேய்ந்த கட்டை மணம் நாறும். தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது. தேயத் தேய மணக்கும் சந்தனக் கட்டை. தேராச் செய்கை தீராச் சஞ்சலம். தேருக்கு உள்ளே சிங்காரம் தெரு எல்லாம் கிடக்கிறது. தேருக்குப் போகும் போது தெம்பு; திரும்பி வரும்போது வம்பு. தேருக்குள் சிங்காரம்; தெரு எல்லாம் அலங்காரம். தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல. தேரை கிட்ட தப்பிப் பாம்பு கிட்ட மாட்டிக் கிட்டாற் போல. தேரைக்கு இட்ட சோறும், திண்ணைக்கு இட்ட மண்ணும் திரும்பாது. 11360 தேரை மோந்த தேங்காய் போல. தேரோடு திருநாள் ஆயிற்று; தாயோடு பிறந்தகம் போயிற்று. தேரோடு போயிற்றுத் திருநாள்; தாயோடு போயிற்று பிறந்த வீடு. (பிறந்தகம்) தேர் இருக்கிற மட்டும் சிங்காரம்; தேர் போன பிறகு என்ன? தேர் தெருத்தெருவாக ஓடினாலும் தன்நிலைக்கு வந்து தானே ஆக வேண்டும். தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால். தேவடியாளிடம் கொடுத்த சொத்து திரும்ப வருமா? தேவடியாளுக்குத் தினம் ஒரு கணவன். தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கு; தேவடியாள் செத்தால் ஒன்றும் இல்லை. தேவடியாள் சிந்தாக்கு உள்ள வரையில் நட்டுவனுக்குப் பஞ்சம் இல்லை. (சிந்தாக்கு - பொட்டு) 11370 தேவடியாள் குடியில் குமரிப் பெண்ணை ஈடு வைக்கலாமா? தேவடியாள் சிங்காரிக்கும் முன்னே தேர் ஓடி நிலையில் நின்றது. தேவடியாள் செத்தால் பிணம்; தேவடியாள் தாய் செத்தால் மணம். தேவடியாள் திரிந்து கெட்டாள்; தேவடியாள் பிள்ளைக்குத் தகப்பன் பெயர் தெரியுமா? தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா? தேவடியாள் மகனுக்கு திவசமா? தேவடியாள் மூக்கில் மூக்குத்தி கிடந்தால் நட்டுவக்காரன் பட்டினி கிடப்பான். தேவடியாள் வீடு கொள்ளை போவது போல. தேவடியாள் வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தாற் போல. 11380 தேவடியாள் வீட்டுத் தாழ்ப்பாள் எப்பொழுது வேண்டு மானாலும் திறக்கும். தேவர் உடைமை தேவருக்கே. தேவரே தின்றாலும் வேம்பு கைக்கும். தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும். தேவாமிர்தத்தை நாய் இச்சித்த கதை. தேவைக்கு மிஞ்சின பணமும் இறந்த பின் எஞ்சிய பணமும் வீண். தேவையற்ற செலவால் தேவைச் செலவு திணறும். தேளுக்குக் கொடுக்கில் விடம்; தீயவருக்கு நாவில் விடம். தேளுக்குக் கொடுக்கில் விடம்; தேவடியாளுக்கு உடம்பு எங்கும் விடம். தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிடத்துக்கு நிமிடம் கொட்டும். (நாழிகைக்கு ஒரு தரம்) 11390 தேளுக்கு மணியம் தந்தால் நொடிக்கு நொடி கடி. தேளை நெருப்பிலிருந்து எடுத்தால் எடுத்தவனையே கொட்டும். தேளோடு போனாலும் தெலுங்கனோடு போகாதே. தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா? தேள் கொட்டிய நாய் போல. தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்து விட்டவனையே கொட்டும். தேற்றிக் கழுத்தறுக்கிறது. தேற்றினும் மகப்பிரிவு தேற்றல் ஆகாது. தேனழித்தவன் கையை நக்குவான். (நக்குவான்) தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் யார்? (உண்டோ?) 11400 தேனுக்கு ஈயைப் பிடித்துவிட வேண்டுமா? தேனும் தினைமாவும் தேவர்க்கு அமிழ்தம் (அர்ப்பதம்) தேனை எடுத்தவரைத் தெண்டிக்குமா தேனீ (தெண்டிக்குமாம்) தேனைத் தடவிக்கொண்டு தெருத் தெருவாய்ப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். தேனைத் தொட்டாயோ? நீரைத் தொட்டாயோ? தேனை நக்கிவிட்டு இளித்த வாயன் தலையில் தடவினாற் போல. தேனை வழிக்கிறவன் புறங்கையை நக்க மாட்டானா? தேனை வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரங்காய் தேங்காய் ஆகாது. தேன் உண்டானால் ஈ தேடி வரும். தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும். 11410 தேன் எடுத்தவன் நக்காமல் இருப்பானா? தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? (எடுக்கிறவன்) தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான். தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான். தேன் ஒழுகப் பேசித் தெருக்கோடி மட்டும் வழிவிட்டானாம். தேன் குடித்த குரங்கைத் தேள் கொட்டியது போல. தேன் கூட்டிலே கல்லை விட்டு எறியலாமா? தேன் தொட்டார் கை நக்காரோ?  தை தை ஈனாப் புல்லும் இல்லை; மாசி ஈனா மரமும் இல்லை. தை உழவு ஐயாட்டுக் கிடை. 11420 தை உழவோ நெய் உழவோ? தை எள் தரையில்; மாசி எள் மடியில்; வைகாசி எள் வாயில். தைக்கவும் வேண்டாம்; பிய்க்கவும் வேண்டாம். தைக் குறுவை தரையை விட்டு எழும்பாது. தைக் குறுவை தவிட்டுக்கும் உதவாது. தைக் குறுவையோ, பொய்க் குறுவையோ? தைத்த வாய் இருக்கத் தனிவாயிற் புறப்பட்டாற் போல. தைப்பனி தரையைத் துளைக்கும்; மாசிப் பனி மச்சைத் துளைக்கும். தைப்பனி தரையெல்லாம் நடுங்கும்; மாசிப் பனி மரமெல்லாம் நடுங்கும். தைப்பாளையைத் தடவி எடு. 11430 தை பிறந்தது தரை வறண்டது. தைப் பிறந்தால் வழி பிறக்கும். தைப் பிறந்தால் தலை ஈரம் காயும். தைப் பிறந்தால் தலைக் கோடை. தைப் பிறந்தால் தழல் பிறக்கும். தைப் பிறை தடவிப் பிடி; ஆடிப் பிறை தேடிப் பிடி. தைப் பிறை தெற்கு உயர்ந்தால் தெருவெல்லாம் பெட்டி. தைப் பிறை வடகொம்பு உயர்ந்தால் வடவனுக்கும் சோறுண்டு; தென்கொம்பு உயர்ந்தால் தெருவெங்கும் திரிய வேண்டும். தை மழை தவிட்டுக்கும் ஆகாது. தை மழை நெய் மழை. 11440 தை மாதத்துப் பனி தரையெல்லாம் குளிரும். தை மாதத்து விதைப்புத் தவிட்டுக்கும் ஆகாது. தை மாதம் தரையும் குளிரும்; மாசி மாதம் மண்ணும் குளிரும். தை மாதம் தலையெல்லாம் பனி. தையல் இட்ட புடவை நைய நாள் செல்லும். தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு. தையல் சொல் கேளேல். தையலின் செய்கை மையலை ஊட்டும். தையலும் இல்லான் மையலும் இல்லான். தையில் கல்யாணமாம்; ஆடியிலே தாலி கட்டிப் பார்த்துக் கொண்டாளாம். 11450 தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை. தையும் மாசியும் வையகத்து உறங்கு. தைரியம் ஒன்றே தனமும் கனமும். தைரியம் சகல நன்மையும் தரும். தை வாழை தரையில் போடு. தை வெள்ளம் தாய்க்குச் சோறு.  தொ தொங்குகிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சு வீடு. தொடங்குகிறது குட்டிச் சுவர்; நினைப்பது மச்சு மாளிகை. தொடாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்; தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டான். தொடுக்கத் தெரியாவிட்டாலும் கெடுக்கத் தெரியாதா? 11460 தொடுத்த காரியத்தை விடுகிறதா? தொடை தட்டின மனிதனும், அடை தட்டின வீடும் பாழ். தொடையிலே சிரங்கு; மாமனார் வைத்தியம். தொடையிற் புண்ணை; நடையிற் கட்டுகிறதா? தொட்ட காரியம் துலங்காது. தொட்ட குறை விட்ட குறை தொடராமல் போகாது. தொட்டது துலங்கும்; தொடர்ந்தது விளங்கும். தொட்டது துலங்கும்; வைத்தது விளங்கும். தொட்டவன் மேல் தொடு பழி. தொட்டவன் மேலே பழி; உங்கள் அப்பனைப் பிடித்து வலி. 11470 தொட்டால் கெட்டு விடும் கண்; தொடாவிட்டால் கெட்டு விடும் தலை. தொட்டால் சிணுங்கி; தோட்டத்து முள்ளங்கி. தொட்டால் தோழன்; விட்டால் மாற்றான். தொட்டால் விடாது தொட்டியப் பிசாசு. தொட்டான் மூக்கு அறுந்து போச்சு என்றாளாம். தொட்டியப் பேய் சுடுகாடு மட்டும். தொட்டில் கண்ட இடத்தில் தாலாட்டலாமா? தொட்டிலில் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன். தொட்டிலுக்குப் பிள்ளையும் கொட்டிலுக்குப் பெண்ணும். தொட்டிலும் ஆட்டித் தொடையைக் கிள்ளுவது போல. 11480 தொட்டிலை ஆட்டும் கை; தொல்லுலகை ஆளும் கை. தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவாள். தொட்டிலையும் ஆட்டிவிட்டுப் பிள்ளையையும் கிள்ளி விட்ட மாதிரி. தொட்டிலையும் ஆட்டுவார்கள்; பிள்ளையையும் கிள்ளி விடுவார்கள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். தொட்டு எடுத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற் போல. தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது. தொட்டுக் கெட்டது கண்; தொடாமற் கெட்டது தலை. தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை; சோட்டி (சடை) போட்டுக்க அலையிறாளாம். தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை அடிமகளே! தோட்டம் எல்லாம் தீ விளக்காம். 11490 தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை; போடுடா பட்டுக் கோட்டைக்கு இரண்டு தீவட்டி. தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு. தொட்டுத் துடைக்க எண்ணெய் இல்லை; இரட்டைப் பந்தம் பிடிக்கிறானாம் ரங்க வண்ணான். தொண்டுக்குத் தொண்டே சாட்சி; துவரம் பருப்புக்கு நெய்யே சாட்சி. தொண்டைக் குழியில் பிய்த்தால் எங்கே சொறிவது? தொண்டை பெரிதென்று அம்பட்டன் கத்தியை விழுங்கு கிறதா? தொண்டைமான் நாட்டில் தொட்டதெல்லாம் கல். தொண்டை வலிக்குச் சாராயம்; தொடைவலிக்கு வெந்நீர். தொண்ணூறு கடனோடே துவரம் பருப்புக் காற் பணம். (பொன்னோடே) தொத்துக்குத் தொத்து சாட்சி; துவரம் பருப்புக்கு மத்தே சாட்சி. 11500 தொத்துக்கு வந்தவன் துரைத்தனம் செய்வானா? தொத்தும் என்றால் மீனாட்சி; தொனுக்கும் என்றால் காமாட்சி. தொப்புள் அறுக்கப் போய் மாணியை அறுத்துக் கொண்டானாம். தொப்பை வயிறு தொல்லை கொடுக்கும். தொம்பரை நம்பி படையெடுத்தாற் போல. தொம்பைக் கூண்டிலே எலியைக் காவல் வைத்துக் கட்டினது போல. தொழில் இல்லாதவன் தோட்டம் செய். தொழிலை விட்டவன் முகடி தொட்டவன். தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும். தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. 11510 தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகுமா? தொழுவார் எல்லாம் உழுவார் தலைக் கடையில். தொழுவார்க்கு ஒரு கோயிலும் உழுவார்க்கு ஒரு நிலமும் கிடையாவா? தொன்மை நாடி நன்மை நாடாதே. தொன்மை மறவேல். தொன்னிலம் முழுதும் தோன்றியது கல்வி. (தொன்னகம்) தொன்னைக்கு நெய் ஆதரவு; நெய்க்குத் தொன்னை ஆதரவு (ஆதாரம்)  தோ தோகை அழகைத் தொட்டுப்பொட்டு இட்டுக் கொள்ளலாம். தோசிப் பெண்ணுக்கு ஏற்ற சொறியங் கொள்ளி மாப்பிள்ளை. தோசைக்குத் தோசை ஓட்டை. 11520 தோடு ஒரு நகையா? தோசை ஒரு பலகாரமா? தோட்டக்காரனும் திருடனும் சேர்ந்தால் விடிய விடியத் திருடலாம். தோட்டக்காரன் சும்மா இருந்தாலும் தொட்டு நக்கி சும்மா இருக்க மாட்டான். (சீட்டைப் பொறுக்கி) தோட்டக்காரன் வாழ்வு காற்றடித்தால் போயிற்று. தோட்டக்காரன் வீட்டில் நீட்டப் பாய்க்குப் பஞ்சமாம். தோட்டத்தில் பழம் இருக்கத் தூரத்தில் போவானேன். தோட்டத்தில் பாதி கிணறு. தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா? தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு. தோட்டத்துப் பச்சிலை மருந்துக்கு உதவாது. 11530 தோட்டப் பாய் முடைகிறவனுக்குத் தூங்கப் பாய் இல்லை. தோட்டம் நிலைக்கும் முன் கத்திரிக் கொல்லை வைக்கிறாயே? தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்க வேண்டும்? தோட்டம் முச்சாண்; சுரைக்காய் அறு சாண். தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை. தோட்டி உறவு தமுக்கோடு சரி. தோட்டிப் பிள்ளை அவனுக்குத் துரைப்பிள்ளை. தோட்டி போல் உழைத்துத் துரைபோல் உண். தோட்டி போல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும். தோட்டி போல் உழைத்துத் தொண்டைமான் போல் வாழ். 11540 தோட்டி போல் உழைத்தால் துரை போல் உண்ணலாம். தோட்டி முதல் தொண்டைமான் வரையில். தோட்டி வேலையானாலும் துட்டு நிறைய வரவேண்டும். தோணிக்குள்ளே ஓடினால் துரையை அடைய முடியுமா? தோணி போகும்; துறை கிடக்கும். தோண்டக் குறுணி; தூர்க்க முக்குறுணி. தோண்டிக் கள்ளைத் தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையனாவான். தோண்டியும் பொத்தல்; தாம்பும் அறுதல். தோண்டுகிறது பதக்கு; தூர்க்கிறது முக்குறுணி. தோ தோ என்றால் மூஞ்சியை நக்கிற்றாம். 11550 தோய்க்கிற வண்ணாத்திக்கு ஊசு என்ன ஓர் ஆளா? தோய்த்துக் கொண்டு தின்பேன் உனக்கென்ன? தோப்புக்கே சொந்தக்காரனாக இருந்தாலும் திருட்டு மாங்காய் ருசிக்கத்தானே செய்யும். தோரணி கெட்டால் கோரணி. தோல் இருக்கச் சுளை போமா? தோல் இருக்கச் சுளை விழுங்கி. தோல்மாறி தொண்ணூறு நாள். தோல்வியே வெற்றிக்கு அறிகுறி. தோல் விற்ற காசு வீசுமா? தோழனாவது துலங்கிய கல்வி. 11560 தோழனோடும் ஏழைமை பேசேல். (தோழமையோடும்) தோழன் தொடை நடுங்கி; துணைக்கு வந்தவன் நடுநடுங்கி. தோழி வீட்டுக்குப் போனாலும் தூக்கோடு போக வேண்டும். தோளில் ஆட்டைப் போட்டுக் கொண்டு ஆட்டைக் காணோம் ஆட்டைக் காணோம் என்றானாம். தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா? (கடிக்கலாமா?) தோளின் பேரில் தொண்ணூறு அடி அடித்தாலும் துடைத்துப் போடுவான். தோளின் பேரில் தொண்ணூறடி; துடைத்துவிட்டால் ஒன்றும் இல்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன். தோற்பது கொண்டு சபை ஏறுகிறதா? தோற்பன தொடரேல். 11570 தோற்பும் கெலிப்பும் ஒருவர் பங்கு அல்ல. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு. தோன்றிற் புகழொடு தோன்றுக. தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும். தோன்றின யாவும் அழியும். தோன்றின யாவும் துலங்குவதில்லை.  ந நகத்தால் கிள்ளாததைக் கோடரி கொண்டு வெட்ட நேரிடும். நகத்தால் கிள்ளாவிட்டால் கோடரி வெட்டுக்கும் அடையாது. நகத்தால் கிள்ளுகிறதைக் கோடரி கொண்டு வெட்டுகிறதா? நகத்திலே கிள்ளுகிறதைக் கோடாலி கொண்டு வெட்டணுமா? 11580 நகம் நனையாமல் நத்தை பிடிக்க முடியுமா? நகரத்துக்கு இரண்டாமவனாக இருப்பதினும் நாட்டுப் புறத்திற்குத் தலைவனாயிருப்பது நன்று. நகரம் எல்லாம் நமக்குச் சொந்தம், ஆனால் தங்கத்தான் இடம் இல்லை. நகரிப் பெண் நாடு ஏறாது. (நகரி - ஆழ்வார் திருநகர்) நகரைக்குப் பெத்தை வழிகாட்டுகிறதோ? நகைக்கு மகிழ்ச்சி; நட்புக்கு நஞ்சு. நகைச் சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும். நகைத்து இகழ்வோனை நாயென நினை. நகை போட்டதும் இல்லை; போட்டவர்களைப் பார்த்ததும் இல்லை. நக்கத் தவிடும் இல்லை; குடிக்கத் தண்ணீரும் இல்லை. 11590 நக்கப் போனவள் துக்கத்தோடு வந்தாள். நக்க வந்த நாய் முக்கத்திலே உட்கார்ந்துச்சாம். நக்கல் வாய் தேட; நாறல் வாய் அழிக்க. நக்கவாரக் கச்ச வடம் போல. நக்க விட்ட நாயும் கொத்த விட்ட கோழியும் சும்மா இரா. நக்கிக் கொண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் போல. நக்கி நக்கி நாக்கும் புண்ணானது. நக்கு உண்டார் நா எழார். நக்குகிறது சோளத் தவிடாம்; நடக்கிறது பாதக் குறடாம். நக்குகிற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா? 11600 நக்குகிற பொழுது நாவு எழும்புமா? நக்குகிறவனுக்குச் செக்கென்ன? சிவலிங்கமென்ன? நச்சுப் பேச்சு நாளும் தரித்திரம். நச்சு மரமானாலும் நட்டவர் வெட்டுவார்களா? நச்சு மரமானாலும் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். நச்சு மரமானாலும் வைத்தவன் மரம். நச்சு வாயன் வீட்டிலே நாறு வாயன் குடியிருந்தாற் போல. (நாறல்) நச்சு வாயன் வீட்டிலே நாறு வாய் பெண்கொண்டானாம். (நாற) நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி; குப்பையில் இருந்தாலும் குன்றிமணி. (கோமேதகம்) நஞ்சு நாற்கலம் வேண்டுமா? 11610 நஞ்சைக்கு ஏழுழவு; புஞ்சைக்கு நாலுழவு. நஞ்சை லாபம் புஞ்சையில். நடக்க அறியாதவனுக்கு நடு வீதி காத வழி. நடக்கக் கற்ற பிள்ளை தவழக்கற்றதாம், தாயார் செய்த தவம். நடக்கச் சோம்பல் படுபவனுக்கு நடுவீதியும் காதவழி. நடக்கத் தெரியாதவன் நட்டுவனார்க்கு வழிகாட்டுவானா? நடக்கத் தெரியும் நக்கரிக்கத் தெரியும் குந்த வை கூறுகெட்ட தாயாரே! நடக்கத் தெரிந்தவன் பிணியைக் கடக்கத் தெரிந்தவன். நடக்கப் பயந்தவன் சிற்றப்பன் வீட்டில் பெண் கட்டினானாம். நடக்க மாட்டாத தலவாடிக்கு நாலு பக்கமும் சவாரி. (லவாடிக்கு) 11620 நடக்க மாட்டாதவன் சிற்றப்பன் வீட்டில் பெண் கட்டினானாம். (பயந்தவன், அஞ்சியவன்) நடக்க முடக்கழிந்தவன் சிற்றப்பா வீட்டில் கலியாணம் முடித்தானாம். நடக்கிற எருதின் வாலைப் பிடிக்கிற மாதிரி. (அஞ்சி) நடக்கிறது நடக்கட்டும் தெய்வம் இருக்கிறது. நடக்கும் கால் தவறுவதிலும் நா தவறுதல் கெட்டது. (கூடாது) நடத்தை தப்பியவன் அண்ணனாகிலும் தம்பியாகிலும் நறுக்கு. நடந்த காலிலே சீதேவி; இருந்த காலிலே மூதேவி. (நடந்தவன், இருந்தவன்) நடந்த கால் சீதேவி; இருந்த கால் மூதேவி. (கிடந்த கால் மூதேவி) நடந்த பிள்ளை நகருகிறது. நடந்தார்க்கு நாடு எங்கும் உறவு; கிடந்தார்க்குப் பாயே உறவு. 11630 நடந்தால் நாடு எல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை. நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே. நடலப் புடலங்காய் காய்க்கிறதாம்; நாழிக்குப் பத்தெட்டு விற்கிறதாம். நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது. நடவில் சிரிப்பு; அறுவடையில் நெருப்பு. நடவுக்குத் தெளி நாலத் தொன்று. (நாலில் ஒன்று) நடவுக்குத் தூவல் நாலத் தொரு பங்கு. நடு உழவிலே நத்தை தெறித்தது போல. நடு ஊரில் நச்சுமரம் பழுத்தது என்ன? நடுக்கடலில் விழுந்து அலைகிறவனுக்கு ஒரு தெப்பம் அகப்பட்டதைப் போல. 11640 நடுக்கம் எடுத்தவனுக்கு இருபத்தெட்டாம் நாள் கலியாணமாம். நடுங்க அடித்துப் பிடுங்குகிறதா? நடுச் சமுத்திரத்திலும் நாய்க்கு நக்குத் தண்ணீர் தான். நடுச் செவியில் நாராசம் காய்ச்சி விட்டாற் போல. நடுத்தரம் ஆனவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்றவைத்தால் மாறும். நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா? நடுத்தெருவில் பிச்சைக்கு வந்துவிட்ட பிறகு வெட்கம் மானம் பார்க்கலாமா? நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் வருவான். நடுப்படையில் சென்றால் வடுப்படாமல் மீளுவான். நடுப்பறப் படுத்தவனுக்குப் பாயுமில்லை; தலையணையும் இல்லை. 11650 நடுப்புடவையில் கோவணம் கிழிக்கிற மாதிரி. நடுமேட்டில் நாய் கத்திற்றாம்; தீர்த்த முடக்கில் தேள் கொட்டிற்றாம். நடு வீட்டில் நல்லெண்ணெய் விளக்கு. நடு வீட்டில் வைத்தாலும் நாய் நாய்தான். நடுவுளவன் தளர்ந்தால் நாடி தளரும். (நாடுவுளவன் - வயிறு) நடை சிறிதாகில் நாள் ஏறும்; படை சிறிதாகில் பயம் ஏறும். நடை பாக்கியம் இடை போக்கியம். நட்ட அன்றும் சாவி; அறுத்த அன்றும் பட்டினி. நட்ட அன்று மழையும் கெட்ட அன்று விருந்தும் கேடு. நட்டடியில் காய்ந்தால் நானாழி நெல்லும் காணாது. 11660 நட்ட குழி நாற்பது நாள் காக்கும். நட்டது எல்லாம் மரமாகுமா? பெற்றது எல்லாம் பிள்ளை யாகுமா? நட்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன். நட்ட நடவில் முழம் ஆனேன்; நடவு திரும்பிச் சாண் ஆனேன். நட்டவனுக்குத் தெரியும் பயிரோட அருமை; பெத்த வனுக்குப் புரியும் பிள்ளையோட அருமை. நட்டாலும் தில்லை நாயகம் நடவேண்டும். நட்டாற்றில் கைவிட்டாற் போல. நட்டாற்றில் கட்டுச் சோற்றை அவிழ்த்தாற் போல. நட்டுக் காய்ந்தால் நாழி நெல் காணாது. நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா? 11670 நட்டுவன் பிள்ளைக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டுமா? நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டடிக்கத் தெரியாதா? (முட்டடிக்க) நட்டுவச்சிக்கு உண்டு தட்டுவாணித் தனம். (நட்டுவனுக்கு) நட்டுவனுக்கு நொட்டுப் பழக்குகிறாயா? நண்டு அளந்த நாழி போல. நண்டு இழந்த நாழியும், தொண்டு இழந்த கயிறும். நண்டு ஊர நாடு செழிக்கும். நண்டு எழுத்து கண்டு எழுதுமா? நண்டுக்கு அழகு சேறும் கலங்கலும். நண்டுக்குக் கல்யாணம்; நரிக்குப் பொங்கல். 11680 நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்தது போல. நண்டுக்குக் குளம் வற்றிப் போச்சே என்று கொக்கு கவலைப் பட்ட மாதிரி. நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது. நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. நண்டு கொழுத்தால் வளையில் இராது, பள்ளி கொழுத்தால் பாயில் இராது. நண்டுக்குச் சீவன் போகிறது; நரிக்குக் கொண்டாட்டம். (திண்டாட்டம்) நண்டுக்குப் பட்டால்தான் தெரியும்; குரங்குக்குச் சுட்டால் தான் தெரியும். நண்டுக்குப் புளியங்காய் இட்டு நறுக்கினாற் போல. நண்டு மேடேறினால் மழை பெய்யும். நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாற் போல. 11690 நண்டை நாழி கொண்டு அளக்கலாமா? நண்பொருள் கொடுத்து நன்றாய் ஓது. நதி எல்லாம் பாலானாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். நதி மூலத்தையும் முனிமூலத்தையும் ஆராய்ச்சி செய்யக் கூடாது. (ரிஷி) நத்த வாழைக்கு நித்தம் ஒருகாசு. நத்த வாழையிலை நித்தம் காற்பணம். நத்துப் புல்லாக்கு நாணயம் பார்க்கிறது; இரட்டைக் குண்டு அட்டிகை எட்டி எட்டிப் பார்க்கிறது. நத்தை வயிற்றிலே முத்துப் பிறக்கிறது. நத்தை வயிற்றிலும் முத்துப் பிறக்கும். நந்தவனத்து ஆண்டி மாதிரி. 11700 நந்தவனம் அறியுமா தொண்டு மாடு? நந்தன் தோல் காசு வழங்கினாற் போல. நந்தன் படை வீடா? நந்தன் படைவீடும் நாயடுத்த அம்பலமுமாய். நபுஞ்சகன் கையில் அரம்பை அகப்பட்டது போல. நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும். நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? நமன் அறியாமல் உயிர் போய் விடுமா? நமன் எடுத்துக் கொண்டு போகும்போது நழுவி விழுந்தவன். நமன் வாயிலே மண் போட்டாயா? 11710 நமனுக்கு நாலுபிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான். நம் நிழல் நம்மோடே. நம்ப மாட்டாதவன் பெண்சாதிக்கு நாற்பதுபேர் மாப் பிள்ளையாம். நம்ப வைத்துக் கழுத்து அறுக்கலாமா? நம்பியவர்களே மோசம் செய்தால் நல்லது எப்படி நடக்கும். நம்பினவனுக்கு நடராசா; நம்பாதவனுக்கு எமராசா! நம்பின பேரை நட்டாற்றில் கைவிடலாமா? நம்பின பேரைக் காட்டில் விடலாமா? நம்பினால் தெய்வம்; நம்பாவிட்டால் கல். நம்பினோர் கெடார்; நாடினோர் வாடார். 11720 நம்மாழ்வார் நம்மைக் கெடுத்தார்; கூரத்தாழ்வார் குடியைக் கெடுத்தார். நம்மைச் செருப்பால் அடித்தாலும் நம் அண்ணன் வீட்டுப்பயலை வாடா, போடா என்னலாமா? நம்மை நம்ப வேண்டாம்; அம்மாளைத் தாலி வாங்கச் சொல். நம்மை வணங்குகிறவனை நாம் வணங்குகிறதா? நம் வீட்டு விளக்கென்று முத்தமிட்டுக் கொள்ளுகிறதா? நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது. நயத்தில் ஆகாதது பயத்தில் ஆகாது. நயமொழியால் சயமுண்டு. நயமொழியால் நாலு காரியத்தைச் சாதிக்க முடியும். நரகல் தானும் நல்லெரு வாகும். 11730 நரசிம்மரை நரி மிரட்டியதாம்; நரியை நாய் மிரட்டியதாம். நரப்புப் புல்லைப் பிடுங்கினாலும் வரப்புப் புல்லைப் பிடுங்காதே. நரம்பு இல்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் புரளும். நரி இடத்திலே போகிறது எப்படி? வலத்திலே போகிறது எப்படி? மேலே விழுந்து கடிக்காமல் போகிறது உத்தமம். நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? நரி இடம் போனால் நல்லதா? வலம் போனால் நல்லதா? என்றால் மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது. நரி ஊரை விட்டுப் புலி ஊருக்குப் போனேன்; புலி ஊரும் நரி ஊர் ஆயிற்று. நரி ஊளையிட்டால் சமுத்திரம் மட்டும். நரி எதிர்த்தால் சிங்கம். நரி ஒரு சாலுக்கு உழப்போனது. 11740 நரிக்கு அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். (மணியம் கொடுத்தால்) நரிக்குக் கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். நரிக்குட்டிக்கு ஊளையிடப் பழக்க வேண்டுமா? நரிக்கு நண்டு ஆசை; நாய்க்கு எலும்பு ஆசை. நரிக்குத் தலைமை கொடுத்தால் மந்தைக்கு இரண்டு ஆடு கேட்கும். நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு கேட்குமாம். நரிக்கு மணி கட்டினால் கிடைக்கு எட்டாடு கேட்கும். நரி கிணற்றிலே விழுந்தால் தண்டெடு தடி எடு. நரி குசு விட்டதாம் கடல் கலங்கிற்றாம். நரி கூப்பிடு கடல் ஒதுங்கிப் போகும். 11750 நரி கொழுத்தால் வளையில் இராது. நரி கொழுத்தென்ன? காஞ்சிரம் பழுத்தென்ன? நரி செத்த இடத்திலே நாய் வட்டம் போட்டது போல. நரி தின்ற கோழி கூவவா போகிறது? நரி தின்ற கோழி கூவுமா? நரி தின்ற கோழி கூவாது. நரி நாலுகால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன். நரி முகத்திலே விழித்தது போல. நரி முன்னே நண்டு கரணம் போட்டது போல. நரியண்ணன் கோளாறு நடக்கும்போதே தெரியும். 11760 நரியின் கலியாணத்தில் வெயிலோடு மழை. நரியின் கையில் இறைச்சியை வைத்த கதை. நரியின் கையிலே குடல் கழுவக் கொடுத்தது போல. நரியை ஏய்க்கப் பார்க்கிறதாம் தில்லை நண்டு. நரியை நனையாமல் குளிப்பாட்டுவான். நரியை வெள்ளரிக்காய் மிரட்டினாற் போல. நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி. நரி வாயிலே மண் போட்டாயா? நரிவால் பற்றி நதி கடக்க ஆகாது. நரிவாலைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறது போல. 11770 நரைக்க நரைக்க விரைக்கும். நரை திரை இல்லை; நமனும் அங்கு இல்லை. நரைத்த மயிர் கறுத்த நங்கை நாச்சியார் கொண்டை முடிப்பாளாம் நரைத்த தலைக்கு இட்ட எண்ணெயும், இதயமற்ற வனுக்குப் போட்ட சோறும். நரைத்தவன் எல்லாம் கிழவனா? நரைத்தவன் கிழவன்; நாமம் இட்டவன் தாதன். நரை மயிர் கருத்தால்தான் நங்கை நாச்சியார் குழல் முடிப்பாளாம். நலங் கெட்டவளுக்கு நாணல் என்ன? கோணல் என்ன? நல் இணக்கம் அல்லது அல்லற் படுத்தும். நல் இனத்தில் துணை இல்லை. 11780 நல் இனத்தில் நட்பு வலிது. நல் உடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவுக்குக் கொடு. நல்ல அமைச்சு இல்லாத அரசு விழியின்றி வழிச் செல்வான் போலாம். நல்ல இனம் வல்ல கனம். நல்ல உடம்புக்கு நாழி சோறு. நல்ல உயிர் நாற்பது நாள் தாங்கும். (இருக்கும்) நல்ல எண்ணெய் நரையை வெருட்டும். நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன? நல்ல எழுத்து நடுக்கே; கோணல் எழுத்து குறுக்கே. நல்ல கதை நீளம் இல்லை. 11790 நல்ல காரியத்துக்கு நானூறு இடைஞ்சல். நல்ல குடிக்கு நாலிலொரு பங்காளி. (நாலத்தொரு) நல்ல குதிரை புல்லுக்கு அழுகிறது; நொண்டிக் குதிரை கொள்ளுக்கு அழுகிறது. நல்ல குருவினை நாடிக் கொள். நல்ல தந்தை நூறு ஆசிரியர்க்குச் சமம். நல்லது கண்டால் இறைவனுக்கு என்பார் நல்லோர். நல்லது கண்டால் நாயகனுக்கு நல்குவார். நல்லது கெட்டது சாமிக்குத் தெரியும்; மேடு பள்ளம் தண்ணீர்க்குத் தெரியும். நல்லது கெட்டது நாடறியாத தில்லை. நல்லது கெட்டது நாலுபேர் சொல்வார்கள். 11800 நல்லது கெட்டது தெரியுமா நலிவடைந்த சாதிக்கு? சின்னது பெரியது தெரியுமா சீரழிந்த சாதிக்கு? நல்லது கெட்டால் நாய்க்கும் கடை. நல்லது கெட்டால் நாய்க்கும் வழங்காது. நல்லதுக்கா நரையான் இடமாச்சு? நல்லதுக்கு ஒரு பொல்லாதது; பொல்லாததுக்கு ஒரு நல்லது. நல்லதுக்கு நாலு இடையூறு வரும். நல்லது செய்கிறதுக்குக் காலமில்லை. நல்லது செய்து நடுவழியியே போனால் பொல்லாதது போகிற வழியே போகிறது. நல்லது செய்வதில் நாலு இடையூறு வரும். நல்லது சொல்ல நாட்டுக்கு ஆகாது. 11810 நல்லது சொல்ல நாடும் இல்லை; உற்றது சொல்ல ஊரும் இல்லை. நல்லது சொல்லிக் கெட்டார் இல்லை. நல்லது சொல்லி நடுவழியே போனாலும் பொல்லாதது போகிற வழியே போகும். நல்லது சொன்னால் நாத்திகனா? நல்லது தெரியுமா நாய்க்கு? நல்லது நலுங்கினால் நாடா அது. நல்லது நாற்கலம்; ஊத்தை ஒன்பது கலம். நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும். நல்லது பொல்லாததும் நாக்கிலே. நல்லதும் பொல்லாததும் நாக்கினாலே தான் வரும். 11820 நல்லதும் கெட்டதும் நம்மனத்திலே தான். நல்ல தேசத்துக்கு நாலு செம்பு. நல்ல நாயானாலும் நரகலை நாடித்தானே செல்லும்? நல்ல நாச்சியார் கடைந்தமோர், நாழி முத்துக்கு நாழி மோர். நல்ல நாயைக் கிள்ளியா பார்க்க வேண்டும்? நல்ல நாளிலே நாழி கறக்காத மாடு கோடை நாளிலே குறுணி கறக்குமா? நல்ல நாளிலே நாழிப்பால் கறவாத மாடா ஆகாத நாளிலே அரைப்படி கறக்கும்? நல்ல நாளிலே நாழிப்பால் கறவாததா கோடை நாளிலே குறுணிப்பால் கறக்கும்? (குறை நாளிலே) நல்ல நாளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப்பால் கறக்குமா? நல்ல நினைவை அனுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல். 11830 நல்ல பாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியது போல. (நாக்குப்பூச்சி) நல்ல பாம்பை ஆட்டுகிற பிடாரன் நாகப்பூச்சியைக் கண்டு பயப்படுவானா? (நாக்குப்பூச்சி) நல்ல பெண் இருமுறை வீட்டை வீட்டுப் போவாள். ஒன்று திருமணம், மற்றது மரணம். நல்ல பெண்டாட்டி வாய்த்தவனைப் போல வலிமைசாலி கிடையாது. நல்ல பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி. நல்ல மரத்திலே முளைத்த புல்லுருவி. நல்ல மரத்தில் நரை முளைத்தாற் போல. (நரையான்) நல்ல மரத்தில் நச்சுக் கனி பழுக்காது. நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது; நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது. நல்ல மனைவி நல்லதைக் கண்டால் நமது புருசனுக்கு என்று எடுத்து வைப்பாள். (எனது) 11840 நல்ல மாடானால் உள்ளூரில் விலை போகாதா? நல்ல மாடு உள்ளூரில் விலை போகும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நற் பெண்டாட்டிக்கு ஒரு சொல். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நாற மாட்டுக்குப் பல சூடு. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; பட்டி மாட்டுக்குப் பத்துச் சூடு. நல்ல மாட்டுக்கு ஓர் அடி; நல்ல மனுதர்க்கு ஒரு சொல். (பெண்ணுக்கு) நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார். நல்லவர் கண்ணில் பட்ட நாகமும் சாகாது. நல்லவர்களுக்குச் சொல்லாமல் சாவு வரும். நல்லவர் கெட்டால் நாயும் சீந்தாது. 11850 நல்லவர் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர் போல உதவும். நல்லவரிடத்தில் நன்மை விளங்கும். நல்லவர்கள், ஒருநாள் செய்த உபகாரத்தை மறவார். நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்க வேண்டும்; கெட்டவன் உறவைப் பத்துப் பணம் கொடுத்து நீக்க வேண்டும். நல்லவன் என்று பெயர் எடுக்க நாட் செல்லும், கெட்டவன் என்று பெயர் ஒருகணத்தில் வந்து விடும். நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமற் போவது. நல்லவனுக்குக் காலம் இல்லை. நல்லவனுக்கு நாடு எங்கும் உறவு. நல்லவனுக்கு நாலு இடத்தில் மயிர்; போக்கிரிக்குப் பொச்சு வாயெல்லாம் மயிர். 11860 நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நாட்டும் வேண்டாம்; சீட்டும் வேண்டாம். நல்லவாயன் சம்பாதிக்க நாறவாயன் தின்னு பார்த்தான். நல்லவாயன் தேட நாறவாயன் தின்னு பார்த்தான். நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு வராது. நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான். (தாக்கினான்) நல்ல வீடு என்று பிச்சைக்கு வந்தேன்; கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள். நல்லறம் உள்ளது இல்லறம். நல்ல வேளை முளைக்கிற இடத்தில் நாய் வேளையும் முளைக்கிறது. நல்லா இருந்தால் பெண்டாட்டி; நாயாப் போனால் வைப்பாட்டி. நல்லாருக்குப் பெய்த மழை எல்லாருக்கும் ஆம். 11870 நல்லாரைக் கண்டால் நாய் போல் இரு; பொல்லாரைக் கண்டால் பூனை போல இரு. நல்லாரைக் காண்பதுவும் நன்றே. நல்லாரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை. நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும். நல்லார் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் ஆம். நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம். நல்லாவின் கன்றானால் நாகும் விலை பெறும். நல்லான் பிறர் குறை சொல்லான். நல்லிணத்திலும் நட்பு வலிது நல்லிணக்கம் அல்லது அல்லற் படுத்தும் 11880 நல்லோர்க்குப் பொறுமையே துணை. நல்லோர் நடத்தை தீயோர்க்குத் திகில். நல்லோரை ஏசினால் நாவும் புழுக்கும். நல்லோரை நாடு அறியும்; பொன்னை நெருப்பு அறியும். நல்லோரை நாவில் உரை. நவரைக்கு உழுதாயோ? நட்டப் பட்டாயோ? நவரைக்கு நிலமும் மோருக்குச் சாதமும். நவரையோ? துவரையோ? நவரைக்குச் சேறு கூடாது. நவாபு அத்தனை ஏழை; புலி அத்தனை சாது. 11890 நழுவப் போகிறவனைத் தழுவிப் பிடிக்கிறதா? நற்குணமே நல்ல பொருள். நற்சிங்கத்திற்கு நாயா முடிசூட்டுகிறது? நனவில் இல்லது கனவிலும் இல்லை. நனைத்துச் சுமக்கிறதா? நனைந்த ஆட்டுக்கு நரி உதவினது போல. நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகுக்குச் சேதம். நனையாமல் நத்தை எடுக்க முடியுமா? நோவாமல் நுங்கு எடுக்க முடியுமா? நனையா வறட்டி இல்லையெனில் ஆனைக்கால் நோய் இல்லை. நன்செய் பாராமல் கெட்டது; புன்செய் பார்த்துக் கெட்டது. 11900 நன்மையைக் கடைபிடி. நன்மை செய்தார் நன்மை பெறுவார்; தீமை செய்தார் தீமை பெறுவார். நன்மை செய்தால் தீமை இல்லை. நன்மை செய்திடில் நாலு இடையூறும் வரும். நன்மை செய்பவருக்கு இடையூறு செய்கிறதா? நன்மை செய்யக் கர்மம் விளையாது. நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும். நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி. நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும். நன்றாய் இருந்தாலும் நல்லி சுட்ட பணியாரம். 11910 நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; கெட்டாலும் தாங்க மாட்டார்கள். நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; நலம் தப்பினாலும் பார்க்க மாட்டார்கள். நன்றாய் முடிவது எல்லாம் நன்றே. நன்றாற்றலுள்ளும் தவறுண்டு. நன்றிக்கு நாய்; கர்வத்துக்கு களிறு. நன்றி கெட்ட நாய் தின்றதெல்லாம் மண்ணா? நன்றி கெட்டவன் நாயினும் கடையன். நன்றி மறந்தாரை தெய்வம் நின்று கொல்லும். நன்றி மறந்தாரை நடுங்கக் கேட்கும் தெய்வம். நன்று செய் மருங்கில் தீது இல். 11920 நன்னிலம் கரந்தை; நடுநிலம் கொளிஞ்சி.  நா நா அசைய நாடு அசையும். நா உள்ளவன் கழு ஏற மாட்டான். நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம். நாகசுரம் என்ன தெரியாதா? மத்தளம் போல கலகல என்னும். நாகப்பாம்பு ஆடுகிறதைப் பார்த்து நாக்காம் பூச்சி ஆடுமா? நாகரிகப் பெண்ணுக்கு நாக்குத் தூக்கு மிச்சம். நாகரிகம் மிகுந்து நாயும் காப்பி கேட்கிறது. நாக்காலே போட்டமுடி பல்லால் கடித்து இழுத்தாலும் வருமா? நாக்கிலே இருக்கின்றன நன்மையும் தீமையும். 11930 நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறான். நாக்கிலே புண்ணாம்; நாய் நொண்டி நொண்டி நடந்ததாம். நாக்கிலே வெல்லம், நாவிலே விடம். நாக்கிற்கு நரம்பு இல்லை. நாக்குக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரட்டினாலும் புரளும். நாக்குக்கு என்ன பூட்டா? சாத்தா? நாக்குக்குச் செல்லம் கொடுப்பது நாசக்குறி. நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர். நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது. நாக்கும் சீக்கும் பொல்லாதவை. 11940 நாக்கும் மூக்கும் செத்தால் நாழிகைக் கணக்கு. நாக்கை அடக்கி ஆளாவிட்டால் அது நம்மை யாளும். நாக்கைப் படைத்தவர்கள் நாலையும் சொல்வார்கள்; பல்லைப் படைத்தவர்கள் பத்தையும் சொல்வார்கள். நாக்கை விற்று ஆக்கித் தின்கிறது. நாசியால் போகிற சீவனைக் கண்டறைக் கோடரியால் வெட்டுவதா? (கண்டர) நாடறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் பஞ்சமா? (வேண்டுமா? தேவையா?) நாடறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் ஏன்? பிற்குடுமி என்னத்துக்கு? நாட வைத்துக் கேடு செய்வது. நாடி அறிவான் நமன் அறிவான். நாடிக் கெடுப்பாரைக் கூடிக் கெடுக்கிறது. (கெடுக்கிறதா?) 11950 நாடிய பொருள் கை கூடும். நாடு ஆண்டதும் பாண்டவர்; காடு ஆண்டதும் பாண்டவர்? நாடு ஆளப் பிறந்தானா? காடு ஆளப் பிறந்தானா? நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை. (வாழ்ந்தால்) நாடு எல்லாம் உழைத்தாலும் நாய் வால் நேராகாது. நாடு ஏற்பன செய். நாடு ஓட நடுவில் ஓடு; ஊர் ஓட ஒக்க ஓடு. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகுமா? (நலிந்தாலும்) நாடு காடாகும்; காடு நாடாகும். நாடு காடு ஆயிற்று; காடு கழனி ஆயிற்று. 11960 நாடு சுற்றியும் வீடு வந்து சேர வேண்டும். நாடு செழித்தால் கேடு ஒன்றும் இல்லை. நாடு செழித்தால் நாகரிகம் தானே வரும். நாடு பாதி; நங்கவரம் பாதி. நாட்சென்ற கொடை நடை கூலி ஆகும். நாட்டரசன் கோட்டை; நாலு பக்கம் ஓட்டை. நாட்டாண்மைக்காரனைப் பகைத்துக் கொண்டால் பழைய கந்தாயத்தைக் கேட்பான். நாட்டாளுக்கு ஒரு சீட்டாள்; வெற்றிலை மடிக்க ஒரு வேற்றாள். நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேசவல்ல குட்டி. 11970 நாட்டார் மகளை ஓட்டால் மூடியிருக்கிற மாதிரி. நாட்டான் பெண்சாதி என்றால் ஏன் என்பாள்; நாலு பேருக்குச் சோறு என்றால் ஊம் என்பாள். (ஊனம்) நாட்டில் பஞ்சாங்கம் போனால் நட்சத்திரமும் போச்சோ? நாட்டிலே விளைந்தால் நன்னாரி; மலையிலே விளைந்தால் மாகாளி. நாட்டுக்கு அரசன்; வீட்டுக்கு நாய். நாட்டுக்கு ஒரு தலைவன்; நாய்க்கு ஒரு எசமான். நாட்டுக்கு ஒரு மழை; நமக்கு இரண்டு மழை. (நமக்கு - ஓட்டைக்குடிசைக்கு) நாட்டுக்குக் கரும்பு; வீட்டுக்கு வேம்பு. நாட்டுக்கு நல்ல துடைப்பம்; வீட்டுக்குப் பீற்றல் துடைப்பம். நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமை போகாது. 11980 நாட்டுக்கு முன்னே விளக்கேற்றினால் நல்ல குடியாவான். நாட்டுப் பெண்ணும் ஒரு வீட்டுப் பெண்தான். நாட்டை ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது. நாட்டைக் கலக்கி நாளில் நாட்டினாலும் நாய் வாலை நிமிர்த்த அரசனாலும் முடியாது. நாட்டை நாழியால் அளக்கிறார்; ஊரை உழக்கால் அளக்கிறார். நாணம் இல்லாதச் சிறுக்கிக்கு நாலு திக்கும் வாசல். (நங்கைக்கு) நாணம் இல்லாதச் சிறுக்கிக்கு நாலு புறம் வாசல் படி. (நகைக்கு) நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள். நாணம் இல்லாத கூத்தாடிக்கு நாலு திக்கும் கூத்தி. (வாத்திக்கு) நாணம் இல்லாக் கூத்தியாருக்கு நாலு புறமும் வாயிலாம். (சிறுக்கிக்கு) 11990 நாணம் கெட்ட நாரி ஓணம் வந்தாள் வருவாளா? நாணமும் அச்சமும் நாய்களுக்கு ஏது? நாணமும் இல்லை; மானமும் இல்லை. நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா? நாணும் கால் கோணும்; நடக்கும் கால் இடறும். நாண் இல்லா நங்கை; பூண் இல்லா மங்கை. நாதனின் பட்சம் ஆயிரம் லட்சம். (நாயகன்) நாதாரி வீட்டுக்கு நாலு பக்கம் வாசற்படி. நாத்து முப்பது; சாத்து முப்பது. நாமம் போட்டவன் எல்லாம் தாதனா? திருநீறு பூசினவன் எல்லாம் ஆண்டியா? 12000 நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். நாம் நாயை மறந்தாலும் நாய் நம்மை மறக்குமா? நாமம் போட்ட குரங்கானாலும் நடுத்தெருவிலே போக முடியுமா? நாயம் கேட்டுக் கொண்டா காயம் உரைக்கிறார்கள்? அம்மியைக் கேட்டுக் கொண்டா மிளகாய் அறைக்கிறார்கள்? நாயனம் இருந்தால்தானே ராகம் பாட முடியும்? நாயன் இல்லாத நங்கை இருந்தென்ன? போயென்ன? நாயடித்த துட்டு குரைத்தா காண்பிக்கிறது? நாயாகக் கத்திப் பேயாகப் பறந்தாலும் முடியாது. நாயா சிங்கத்துக்கு நற்பட்டம் கட்டுகிறது? 12010 நாயார் ஊரிலே நரி அம்பலம் பண்ணியதாம். நாயாலாகுமா கொக்கைப் பிடிக்க? நாயாடி மக்களோடு போய் ஆட வேண்டாம். நாயாகப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும். நாயிடம் தேன் இருக்கிறது. நக்கவா? துக்கவா? எதுக்கு ஆகும்? நாயின் அவசரம் வாலுக்குத் தெரியும். நாயின் கழுத்தில் நவரத்தினம் கட்டினாலும் நாய்க்குத் தெரியுமா அதன் மகிமை? நாயின் காதில் தேனடை வைத்தது போல. நாயின் கோபத்தைப் பற்றிப் பூனையைக் கேட்டால் தெரியும். நாயின் நிழல் போல வாழ்நாள், கடிகம் பால் கழிவது போல. 12020 நாயின் பின்னோடு நாலைந்து; பன்றியின் பின்னோடு பத்தெட்டு. நாயின் பீயை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? (மலத்தை) நாயின் புண்ணை நாய் நக்கும். நாயின் மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? விழுந்தால் என்ன? நாயின் வாயில் கோலைக் கொடுக்கிறதா? நாயின் வாயில் சிக்கிய எலியை போல. நாயின் வாலைக் குணக்கு எடுக்கலாமா? நாயின் வாலைக் குழாய்க்குள் விட்டாலும் சமமாகுமா? நாயின் வாலைப் பன்னீராண்டு குழாயில் இட்டாலும் எடுக்கும்போது வளைந்துதானே இருக்கும். நாயின் வாலை மட்டை வைத்துக் கட்டினாலும் நேராகுமா? 12030 நாயின் விசுவாசம் பூனைக்கு வருமா? நாயின் வீரம் தன் வீட்டு வரையில் தான். நாயும் தன் நிலத்துக்கு ராசா! நாயும் நரியும் ஒன்றாகுமா? நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு! நாயும் பேயும் உறவறியாது. நாயும் பேயும் பிள்ளை ஆகுமா? நாயும் வயிறு வளர்க்கும் நடுச்சாமத்திலே. நாயும் வளர்த்து நரகலையும் வாருவானேன்? நாயை அடக்க நாலு பேர்; நாவை அடக்க நாலாயிரம். 12040 நாயை அடிக்கத் குறுந்தடி வேண்டுமா? நாயை அடிக்காதே; நாய் முள்ளைச் சுமக்காதே. நாயை அடித்த பாவம் குரைத்தால் போகுமா? நாயை அடித்தால் காலைத் தூக்கும். நாயை அடித்தாலும் நாலு காசு கிடைக்குமா? நாயை அடித்துப் பல்லியைப் பார்ப்பானேன்? நாயை அடிப்பதற்கு நல்ல தடி வேண்டுமா? நாயை அடிப்பானேன்? காலைக் கடிப்பானேன்? நாயை அடிப்பானேன்? காலைப் பிடிப்பானேன்? நாயை அடிப்பானேன்? பல் இளிவு பார்ப்பானேன். (இழிவு) 12050 நாயை அடிப்பானேன்? நடு வீடெல்லாம் கழிவானேன்? நாயை அடிப்பானேன்? பீயைச் சுமப்பானேன்? நாயை உசுப்பச் செய்து நரி உள்ளே நுழைந்து கொண்டது. நாயை உசுப்புவதை விட நாமே பிடுங்கலாம். நாயை எங்கே அடித்தாலும் காலில்தான் நோக்காடு. நாயை ஏய்க்குமாம் நரி. அதை ஏய்க்குமாம் ஒற்றைக் கால் நண்டு. நாயை ஏவினால் அது தன் வாலை ஏவுமாம். நாயை ஓட்டிப் பேயைக் கூட்டி வந்தானாம். நாயை ஓட்டிவிட்டு நடுக் குப்பையில் உட்காரவா வேண்டும்? நாயைக் கட்டி மாரடித்து நல்ல மனிதனும் நாயாய்ப் போனான். 12060 நாயைக் கண்டா காயம் கரைகிறது? நாயைக் கண்டு தானா காயம் கூட்டுகிறது. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் நரிக்கு லட்டுண்டை மாதிரி. நாயைக் கண்டால் பேயும் விலகும். நாயைக் கண்டால் மனிதனுக்குப் பயம்; மனிதனைக் கண்டால் நாய்க்குப் பயம். நாயைக் கிளப்பிவிட்டு முயலைப் பிடிப்பது போல. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக்குக் கொண்டு வாசலில்தான் படுக்கும். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு வள்ளுன்னு வரும். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைக்கிற புத்தி போகாது. 12070 நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக் குப்பை மேட்டுக்குதான் போகும். (பீ தின்ன போகும்) நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும். (மூஞ்சியை) நாயைக் கொண்டு போனால் மியாவைக் கொண்டு வரலாம். நாயைக் கொன்ற பாவம் நாலு சென்மம் எடுத்தாலும் போகாது. நாயைச் சட்டை பண்ணுகிற நேரம் நாமே அள்ளிக்கொட்டி விடலாம். நாயைச் சீ என்றால் காதவழி போகும். நாயைப் போல் நான்கு யுகம் வாழ்ந்து என்ன? நாயைப் போல் பாடுபட்டால் ஆனையைப் போல் அரசாளலாம். நாயையே திருடன் அடித்துக் கொண்டு போனால் யார் ஐயா குரைப்பது? நாயை வளர்த்தால் நல்ல வழி காட்டும்; பூனையை வளர்த்தால் பொட்டை வழிகாட்டும். 12080 நாயை வெட்டிச் சூ காட்டினாலும் அது தன் வாலை ஆட்டும். நாயை வைத்துக்கொண்டு தானே குரைத்தாற் போல. நாயோடு சேர்ந்தாலும் நல்ல முயல் கிடைக்கும். நாயோடு படுப்பானேன்? தெள்ளுப் பூச்சியோடு எழுந் திருப்பானேன்? நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது. நாய் அடிக்கக் குறுந்தடி வேண்டுமா? நாய் அடித்த துட்டு குரைத்தா காண்பிக்கிறது? நாய் அறியுமா ஒரு சந்திப் பானை? நாய் அறியுமா செக்கும் சிவலிங்கமும்? நாய் அன்பு நக்கினாலும் தீராது. 12090 நாய் ஆசை மலத்தோடு. நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு. நாய் இருப்பது ஆள் இருக்கிற மாதிரி. நாய் இல்லாப் பட்டி நட்டத்துக்கு உள்ளாகும்; காவல் இல்லாத் தோட்டம் களவுக்கு உள்ளாகும். நாய் உதறினால் நல்ல சகுனம். நாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும்? நாய் ஊளையிட்டால் ஊர் நாசம் ஆகும். நாய் என்றாலும் நாயகன்; பேய் என்றாலும் புருசன். நாய் ஏறினாலும் உப்பு மூட்டை நாழி குறையும். நாய் ஒரு சிறு எலும்புக்கும் சந்தோசம் அடையும். 12100 நாய் ஓட்டமும் சில்லறைப் பாய்ச்சலும். நாய் ஓட ஓட நரியும் விரட்டும். நாய் ஓடித்தான் வேட்டையைப் பிடிக்கணும். நாய் ஓடினால் துரத்தும்; துரத்தினால் ஓடும். நாய் கக்கித் தின்றது போல. நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி. நாய் கடித்ததும் அல்லாமல் செருப்படியும் படவேண்டும். நாய் கடித்த வீட்டில் நீராகாரம் குடி. நாய் கடித்தால் கூட வைத்துக் கட்டக் காசு இல்லை. நாய் கடித்தால் செருப்பால் அடிக்கலாமா? 12110 நாய் கடித்தால் நாமும் கடிப்பதா? நாய் கத்தினால் நமனும் பயப்படுவான். நாய் கவ்வின் பேர்த்தும் நாய் கவ்வினார் இல். நாய்களிலுமா சாதி வித்தியாசம்? நாய் காணிற் கற்காணாவாறு. நாய் கிடக்குதாம் குப்பையிலே. அது கனாக் காண்குதாம் மெத்தையிலே. நாய் கிழடானாலும் மலம் தின்னும் புத்தி போகாது. நாய் குட்டி போட்ட இடமும் நாரத்தை பட்ட இடமும் பாழ். நாய் குப்பை மேட்டிலே; பேய் புளிய மரத்திலே. நாய் குரைக்கப் பேய் நடுங்கும். 12120 நாய் குரைத்துக் குட்டி தலையில் வைத்ததுபோல. நாய் குரைத்து நத்தம் பாழாகுமா? நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்தி. நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப் பாலும் சோறுமா? நாய் கெட்ட கேட்டுக்கு நடு வீட்டில் ஒரு சந்தியா? நாய் கெட்ட கேட்டுக்கு நந்தியாவட்டம் பூவாம்; அது கெட்ட கேட்டுக்கு அமாவாசை விரதமாம். நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல்; அது கெட்ட கேட்டுக்குப் புளி போட்ட கறி. நாய் கெட்ட கேட்டுக்கு வெள்ளிக்கிழமை விரதமா? நாய் கெட்டால் குப்பையிலே. நாய் கொண்டால் பார்ப்பாரும் உண்பர் உடும்பு. 12130 நாய் கொண்டு போன பானையை ஆர் கொண்டு போனால் என்ன? நாய் கோயிலுக்குப் போவானேன்? கோயில் காத்தவன் தண்டம் இறுப்பானேன்? நாய்க்கடிக்குச் செருப்படி. நாய்க் கடிக்கு நாற்பது நாள் பத்தியம். நாய்க்கடி பட்டவன் நாற்பதாம் நாள் குரைத்தாற் போல. நாய்க்கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை இல்லாது போகாது. நாய்க்கடி போதாதென்று செருப்படி பட்டானாம். நாய்க்கடி நஞ்சு நாற்பத்தெட்டு நாள். நாய்க்கருக்கு அவசரம்; நாலு மூன்றுமாகப் பாடு (மாசப்) நாய்க்கரே நக்குறாராம்; குதிரை கோதுமை ரொட்டி கேட்குதாம். 12140 நாய்க்காவல் தாய்க்காவல் போல. நாய்க்கு அழகு வாலும், வாய்க்கு அழகுபல்லும். நாய்க்கு இரும்புக் கடையில் அலுவல் என்ன? நாய்க்கு உண்டான நல்லறிவும் இல்லை; பேய்க்கு உண்டான பெரிய அறிவும் இல்லை. நாய்க்கு உண்டோ நாளும் கிழமையும்? நாய்க்கு உண்டோ மலப் பஞ்சம்? நாவிதனுக்குஉண்டோ மயிர்ப் பஞ்சம்? நாய்க்கு உபதேசம் நாள் முழுக்கச் சொன்னாலும் வள்வள் என்பதை விடாது. நாய்க்கு உள்ள நன்றி நல்லவர்க்கும் கிடையாது. நாய்க்கு எங்கே அடிபட்டாலும் காலைத்தான் நொண்டும். நாய்க்கு எச்சில் இலை; பேய்க்கு வேப்பிலை. 12150 நாய்க்கு எதற்கு நன்னாரிச் சர்பத்து? நாய்க்கு எதிரே நாய் வராமல் இருந்தால் காசிக்குப் போய்த் திரும்புமாம். நாய்க்கு எலும்புத் துண்டம் போட்ட மாதிரி. நாய்க்கு எலும்பு போட்டால் நல்லாத்தான் வாலாட்டும். நாய்க்கு ஏன் தேங்காய்? நடுவீட்டில் போட்டு உருட்டவோ? நாய்க்கு ஒரு சூல்; அதற்கு ஒரு மருத்துவச்சியா? நாய்க்கு ஒரு சூலும் அதற்கு ஒரு மருத்துவமும் நாட்டில் உண்டோ? நாய்க்கு ஓர் அலுவலும் இல்லை; ஊசென்று உட்கார நேரமும் இல்லை. நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற் போல. நாய்க்குக் குப்பை மேடு; பேய்க்குப் புளிய மரம். 12160 நாய்க் குட்டிக்குக் குரைக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? நாய்க் குடலுக்கு நறுநெய் தங்குமா? நாய்க் குணம் செருப்பால் அடித்தாலும் போகாது. நாய்க்குச் சந்தோசம் வந்தாலும் கோபம் வந்தாலும் மனிதன் மேல் விழுந்து பிடுங்கும். நாய்க்குத் தவிசு இட்டாற் போல. நாய்க்குத் தெரியுமா ஒரு சந்திப்பானை? நாய்க்குத் தெரியுமா கொக்கு பிடிக்க? நாய்க்குத் தெரியுமா தீவட்டி வெளிச்சம். நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி. நாய்க்குத் தெரியுமா நல்ண்ணெய்ப் பானை? 12170 நாய்க்குத் தெரியுமா முத்துமாலை? நாய்க்குத் தேனீக் கொட்டினால் சுற்றிச் சுற்றிக் குரைக்குமாம். நாய்க்கு நக்கத் தெரியும்; முதலைக்கு முழுங்கத் தெரியும். நாய்க்கு நகை போட்டால் நாய்க்கு அழகா? நாயகனுக்கு அழகா? நாய்க்கு நரகல் சர்க்கரை. நாய்க்கு நருள் வேண்டும்; பூனைக்கு இருள் வேண்டும். (நருள் - மக்கள்) நாய்க்கு நல்ல காலம் என்றால் நான்கு எச்சில் இலை கிடைக்கும். நாய்க்கு நல்ல ருசி தெரியுமா? நாய்க்கு நறுநெய் இணங்காது. (தெரியுமா?) நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; காக்கைக்கு மூக்கில் வேர்க்கும். 12180 நாய்க்கு நாணயம் எதற்கு? நாய்க்கு நாய் பகை; கோழிக்குக் கோழி பகை; வைத்தி யனுக்கு வைத்தியன் பகை; தாசிக்குத் தாசி பகை. நாய்க்கு நாலு சலாம் போட்டாலும் நன்றி கெட்டவனுக்குச் சலாம் போடாதே. நாய்க்கு நாலு மாசம்; பூனைக்கு ஆறு மாசம். நாய்க்கு நாறல் கஞ்சி வார்த்தாலும் அது வீண் போகாது. நாய்க்கு நோய் ஏது? நாய்க்குப் பகை நாயேதான். நாய்க்குப் பட்டம் கட்டினால் நாயகன் பேரைச் சொல்லும். நாய்க்குப் பயந்து நரியிடம் ஒளிந்தாற் போல. நாய்க்குப் புண் வந்தால் நக்கும்; கோழிக்குப் புண் வந்தால் கொத்தும். 12190 நாய்க்குப் பெயர் முத்துமாலை; அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந் தவிடு. நாய்க்கும் உண்டு சூல் அழகு. நாய்க்கும் தன் வீடுதான் பெரிது. நாய்க்கு முழுத்தேங்காய் தகுமா? நாய்க்கு மூத்தாள் தாய்க்கும் ஈயாள். நாய்க்குவாழ்க்கை பட்டால் குரைக்க வேண்டும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறவேண்டும். நாய்க்கு வாழ்ந்து நாலுபிள்ளை பெற்றாலும் தாய்க்கு உதவி. நாய்க்கு வெண்டயம் கட்டினால் நாயகனுக்கு அழகு. நாய்க்கு வேர்வை நாக்கிலே சொட்டும். நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை. 12200 நாய்ச் சண்டை நாலே விநாடிதான். நாய் சமுத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர். நாய் சந்தைக்குப் போனதென்று நரியும் சந்தைக்குப் போனதாம். நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா? நாய் சிம்மாசனம் ஏறினால் சிங்கத்தைப் பார்த்து ரகவலை அள்ளியான்னு அதிகாரம் பண்ணுமாம். நாய் சிலிர்த்தால் நல்ல சகுனம். நாய் சூத்திலே தேனடை இருந்தால் யாருக்கு லாபம்? நாய் தான் குரைக்கும்; நாய் விற்ற காசுமா குரைக்கும்? நாய் தான் வாலை ஆட்ட வேண்டும்; வால் நாயை ஆட்டக் கூடாது. நாய் தொட்ட சட்டி நல்லதுக்கு உதவாது. 12210 நாய்த்தோல் செருப்பு தைக்க உதவுமா? நாய்த் தோல் செருப்பு ஆகுமா? நாய் நக்க நக்கக் கல் தேயும். நாய் நக்கிக் குடிப்பதனால் கடல் வற்றிவிடுமா? நாய் நக்கிக் குளம் வற்றி விடுமா? நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா? நாய் நக்கிப் பிழைக்கும்; காக்கை கத்திப் பிழைக்கும். நாய் நக்கிப் பிழைக்கும்; கோழி கொத்திப் பிழைக்கும். (குத்திப்) நாய் நக்கிய சட்டியை நாய்க்கே போடு. நாய் நம்மைக்கடித்தால் நாம் நாயைக் கடிக்கிறதா? 12220 நாய் நரியை ஏவ, நரி நண்டை ஏவ, நடக்குமா வேலை? நாய் நல்லதானால் குணம் நல்லதாகுமா? நாய் நல்ல வழி காட்டும்; பூனை பொட்டை வழிகாட்டும். நாய் நன்றி மறவாது; பசு கன்றை மறவாது. நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா? நாய் நீரில் உள்ள நிழலை நம்பித் தன் வாயில் உள்ள இறைச்சியை இழந்தாற் போல. நாய் நுழையாத வீடுண்டா? நாய் நொண்டி ஆனாலும் எச்சில் இலை கண்டால் ஓடத்தான் செய்யும். நாய்ப் பஞ்சம் நக்கித் தீரும்; கோழிப் பஞ்சம் கொத்தினால் தீரும். நாய் படாத பாடு. 12230 நாய்ப்பட்ட பாடு தடிக் கம்புக்குத் தெரியும். நாய் பிட்டத்தில் தேள் கொட்டினால் நாய்தான் நக்க வேண்டும். நாய்ப் பீயை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவு வானேன்? நாய்ப் புண்ணுக்குச் சாம்பல் மருந்து. நாய்ப் புத்தி வாலைக் குழைத்துக் கொண்டு ஓடும். நாய் பெற்ற தெங்கம் பழம். நாய் போல் உழைத்தாலும் வாய்ச் சோறு இல்லை. நாய் போல் குரைத்து நடுத்தெருவில் நிற்பானேன்? நாய் மனிதனைக் கடித்தால் அதற்காக மனிதன் நாயைக் கடிப்பதா? நாய் மாதிரி விழுவான்; நரி மாதிரி குழைவான். 12240 நாய் மூத்திரம் குத்துக் கல்லில். நாய் மோப்பம் பிடிக்கிற மாதிரி. நாய் வந்தால் நாழி எண்ணெய்க்குக் கேடு; பேய் வந்தால் ஒரு பிள்ளைக்குக் கேடு. நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா? நாய் வாய் வைத்ததுபோல வேலை செய்கிறது. நாய் வாலிலே தேன் இருந்தால் யாருக்குக் கூடும். (வைத்தால்) நாய் வாலுக்குத் தப்பை வைத்துக் கட்டினாலும் குரைக்கிற குணம் போகாது. நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா? நாய் வாலை நறுக்க நாவிதன் வேண்டுமா? நாய் வாலை நிமிர்த்த முடியுமா? 12250 நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது; பேய்க் காலைப் பார்க்கவும் முடியாது. நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா? நாய் விற்ற காசு குரைக்குமா? நாய் விற்ற காசு குரைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா? நாய் விற்ற துட்டைக் குரைத்தா காண்பிக்கிறது. நாய் வீட்டைக் காக்கும்; புலி காட்டைக் காக்கும். நாய் வீட்டைக் காக்கும்; பூதம் பணத்தைக் காக்கும். நாய் வீட்டைக் காக்கும்; பூனை அடுப்படியைக் காக்கும். நாய் வீட்டைக் காக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். நாய் வீட்டைச் சுற்றும்; நோய் உடலைச் சுற்றும். 12260 நாய் வேடம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? நாய் வேடம் போட்டால் குரைக்க வேண்டும்; பேய் வேடம் போட்டால் ஆட வேண்டும்? நாரத்தங் காய்க்கு இட்ட உப்பும் நாத்தனாருக்கு இட்ட சோறும் எவ்வளவானாலும் போதா? நாரத்தங் காய்க்கு போடுகிற உப்பும் நாத்தனாருக்குப் போடுகிற சோறும் வீண் போகா. நாரத்தங் காய் விற்ற காசு கசக்குமா? நாரத்தை காய்க்க நாய்ப்பலி இட வேண்டுமாம். நாரை அறியாத குளமும் நமன் அறியாத உயிரும் உண்டோ? நார் அறுந்தால் முடியலாம்; நரம்பு அறுந்தால் முடியலாம்; மனம் அறுந்தால் முடியலாமா? (முறிந்தால்) நார் அற்றால் கூடும்; நரம்பு அற்றால் கூடுமோ? நார் இல்லாமல் மாலை தொடுக்கலாமோ? 12270 நாலடி அடித்துப் போர் மேல் போட்டாயிற்று. நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடி கையடி செல்லாது. (அடிக்காதே) நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான். நாலாம் மாதம் நாழி பிடித்து உட்காரும்; எட்டாம் மாதம் எட்டி அடி வைக்கும். நாலாம் பிறை பார்த்தால் நாயாய் அலைவார்களாம். நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சலாய்த்தான் முடியும். நாலாம் பிறை பார்த்தால் நாய் பட்ட பாடு பட வேண்டும். நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்று உண்ணும். நாலாவது பெண், நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை. நாலாவது பெண் பிறந்தால் நாதாங்கியும் கிடையாது. 12280 நாலு ஆண்கள் கூடினால் ஒற்றுமை; நாலு பெண்கள் கூடினால் வேற்றுமை. நாலு ஆறு கூடினால் பாலாறு. (நால் ஆறு = கௌண்டிண்ய ஆறு, பெண்ணை யாறு செய்யாறு, கிளியாறு) நாலு காரை கூடினால் ஒரு பழுதை. நாலு கால் சோமாரியும் ஒரு காலிலே இறங்கினாற் போல. நாலு காலிலே நரி கள்ளன்; இரண்டு காலிலே இடையன் கள்ளன். நாலு செத்தை கூடினது ஒரு கந்தை. நாலு தடவை தப்பினவனுக்கு நமன் பயன் ஏது? நாலு தலைமுறைக்கு முன் நாவிதனும் சிற்றப்பன் ஆவான். நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு; ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு. நாலு பிள்ளை பெற்றால் நாதாங்கியும் இருக்காது. 12290 நாலு பிள்ளையும் நல்ல பிள்ளையானால் மேலும் பிள்ளை பெறுவானேன்? நாலு பேர்க்கு இளையவனாய்ப் பிறப்பதில் நாயாகப் பிறப்பது நல்லது. நாலு பேர் கூடினது சபை. நாலு பேர் போன வழி நல்ல வழி. நாலு பேர் போன வழியில் நாமும் போக வேண்டும். நாலு பேர் வாழ நடுவிலே நாம் நாழ. நாலுமாடு கூடினால் நடுக்கெடுக்கும் சிங்கம். நாலு மாதம் வரையில் நாய்கூடப் பிள்ளையை வளர்க்கும். நாலு முழத்தில் நடுவில் ஒரு முழம். நாலு வாசல் கோட்டை; நாலு பக்கம் ஓட்டை. 12300 நாலும் கிடக்க நடுவிலே நாத்தனார் தலையைச் சிரைத்தாளாம். நாவல் பழுத்தால் நாடு செழிக்கும். நாவலும் பாகலும் இரத்தம் தேற. நாவிதன் கத்தி படுவெட்டுக்கு ஆகாது. நாவிதன் குப்பையை என்ன கிளறினாலும் மயிர்தான் கிடைக்கும். நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும். நாவு அசைய நாடு அசையும். நாவுக்கு எலும்பு இல்லை; எப்படி புரண்டாலும் புரளும். நாவை அடக்க நாலும் அடங்கும். நாவை அடக்கி ஆளாவிட்டால் அது தன்னையே ஆளும். 12310 நாவைச் சுற்றிப் பிடிக்கிற தாகத்துக்கு நாள் கேட்டானாம் கிணறு வெட்ட. (பாரித்தானாம்) நாழி அரிசிச் சோறு உண்டவன் நமக்கு உயிர் கொடான். நாழி அரிசிச் சோறு சாப்பிட்டாலும் நாய் நாலு வீட்டில் நக்கித்தான் தின்னும். நாழி அரிசிச் சோறு தின்றாலும் நாய்க்குக் குடல் நிறையாது. நாழி அரிசி நாய் கொண்டு போனால் ஞானமும் கல்வியும் பேய் கொண்டு போகும். நாழி உடைந்தால் நெல்லுக்குச் சேதமா? நாழி உப்பும் நாழி அப்பும் நாழி ஆனவாறு போல. (சிவவாக்கியார்) நாழிச் சோறு நமனை விரட்டும். நாழிச் சோற்றுக்கு நாளெல்லாம் உழைப்பு. நாழி நெல்லுக்கு ஓர் அந்து. 12320 நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிருவாணம் போகுமா? நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா? (போகாது) நாழி மாவுக்கு நானாழி வெல்லம். (வெள்ளம்) நாழி முகவாது நானாழி. நாழியால் சமுத்திரத்தில் நானாழி மொள்ளலாமா? நாழியை மூளி என்றால் மரக்காலைப் பொட்டை என்பதுபோல். நாழி வர மூதேவி; மரக்கால் வரச் சீதேவி. நாழி வரச் சீதேவி; மரக்கால் வர மூதேவி. நாளுக்கு நாள் நரியாய்ப் போகிறது. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை. 12330 நாளும் கிழமையும் பார்த்துச் செய்தாலும் வருவது வந்தே தீரும். நாளும் கோளும் நன்மை செய்யும். நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம். நாளை என்பது நமன் நாள் ஆகும். நாளை என்பதைவிட இல்லை என்பவன் நல்லவன். நாளைக்கு ஒரு திறமும் வேலைக்கு ஒரு நிறமும். நாளைக்குக் கல்யாணம் பிடியடா பாக்கு வெற்றிலை. (வெற்றிலை பாக்கு) நாளைக்குக் கிடைக்கும் சீலையை நம்பி இன்று இருக்கும் கந்தையை எறியாதே. நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது. நாளைக்குத் தெரியும் நாச்சியாத்தாள் மாரடி. 12340 நாளைக் குறைத்தால் தன்னைக் குறைக்கும். நாளை மடக்கினால் நம்மை மடக்கும். நாளை வரும் நெற்குவியலிலும் இன்று உள்ள படி விதை பெரிதென்று விழுங்கலாமா? நாளை வரும் பலாக்காயை விட இன்று வரும் களாக்காய் நல்லது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக. நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார். நாள் ஏர் உழும் போதே வரப்பிலே ஏற்றினானாம். (ஏற்றினாளாம்) நாள் ஏறினால் கீழ் ஏறும். நாள் செய்வதை நல்லவர்களால் செய்யமுடியாது. நாள் சென்ற கொடை நடைக் கூலி ஆகும். 12350 நாள் தவறினும் நாத் தவறான். நாள் பட்ட நோய்க்கு நாளும் கிழமையும் இல்லை; நடக்கிற காரியத்துக்குக் கடுக்க நிற்கிறதிலே சாரமில்லை. நாறல் கூழுக்கு அழுகல் மாங்காய். நாறல் சடலம் நலமில்லா மட்பாண்டம். நாறல் சாணியை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவுவானேன்? நாறல் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம். நாறல் வாயன் தேட ஊத்தை வாயன் உண்டானாம். நாறல் வாயன் தேடினதை நல்ல வாயன் தின்றாற் போல. நாறல் வாயனிடத்தில் இருந்தாலும் நச்சு வாயனிடத்தில் இராதே. நாறலையும் மீறலையும் கண்டால் நாத்தனார்க்குக் கொடுப்பாள். 12360 நாற வாயன் வீட்டிலே நச்சவாயன் பொண்ணு கட்டினானாம். நாற வாயன் வீட்டிலே பொண்ணு கட்டினாலும் நச்சுவாயன் வீட்டிலே பொண்ணு கட்டக் கூடாது. நாற்பதுக்கு மேல் சென்றால் நாய்க்குணம். நாற்பது சென்றால் நாய்க்குச் சரி. நாற்பது வயதிலே நாய்க்குணம்; அறுபது வயதில் பேய்க் குணம். நாற்பது வந்தால் நரை வரும். நாற்றக் கூழுக்கு அழுகல் மாங்காய். நாற்று முப்பது; சாற்று முப்பது. நானிலம் தன்னில் நாயகம் கல்வி. நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள். 12370 நானும் ஓட்டை என் வீடும் பொத்தல். நானும் பிழைத்தேன்; என் கந்தலும் பிழைத்தது என்றானாம். நானும் வந்தேன்; நாற்றமும் போயிற்று. (மாமியார் வீட்டு நாற்றமும்) நான் இட்ட மருந்தும் போக ஒட்டாது; நன்னாரி வேரும் சாக ஒட்டாது. நான் என்றால் இளக்காரம்; என் பீ என்றால் பலகாரம். (பீ - சொத்து) நான் என்றால் உனக்குக் கடைவாயில் பீ. நான் ஒன்றை எண்ண, விதி ஒன்றை எண்ணிற்று. நான் கண்டதே காட்சி; நான் கொண்டதே கோலம். (கொள்கை) நான் கத்தை கொடுத்தேன்; அவன் மெத்தை கொடுத்தான். நான்காம் மாதம் நாய்க்கும் மெருகிடும். 12380 நான் கிடக்கிற கிடையைப் பாரடா நங்க வெள்ளாளார்; கோவணத்தை அவிழ்த்துப் பாரடா கொங்க வெள்ளாளார். நான்கு நடலம் தேங்காய் புடலம். நான் காய்ச்சிக் குடிக்கிறேன்; நீ பீய்ச்சிக் குடி. நான் கெட்டாலும் எதிரி வாழ வேண்டும். நான் தேடிப் பச்சை போட நாரிகள் எல்லாம் வந்தார்கள் தெய்வம் ஆட. (பிச்சை போட) நான் நட்டேன்; நாதன் பயிராக்கினான். நான் நோகாமல் அடிக்கிறேன்; நீ ஓயாமல் அழு. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிறதா? நான் வாழ்ந்த வாழ்வைச் சொல்லுகிறேன்; அண்டை வீட்டுக்காரன் இருக்கிறானா? பார். நான்று கொண்டு சாகச் சாண் கயிறு பஞ்சமா?  நி 12390 நிதம் கண்ட கோழி நிறம் கெடும். நிதி அற்றவன் பதி அற்றவன். நித்தம் கிடைக்குமா அமாவாசை நெய்ச்சோறு? நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டோ? (ஒப்பாரி வைப்பவரும்) நித்தம் போனால் முத்தம் சலிக்கும். (முற்றம்) நித்தம் மழை பெய்தால் கொத்தன் குடி பாழ். நித்திய கண்டம் பூரண ஆயுசு. (தீர்க்க) நித்திய தரித்திரனுக்கு ஆசை அதிகம். நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு? நித்திரை சுகம் அறியாது; பசி ருசி அறியாது. 12400 நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக் காரி மகன்; பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் மகன். நிமிராத அத்தைக்குக் குனியாத மருமகள். நிமிர்ந்தால் வானம்; குனிந்தால் பூமி. நிமிர்ந்து போட்டது என்ன? குனிந்து எடுத்தது என்ன? நிருவாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக் காரன். நிர்வாண தேசத்தில் சேலை கட்டினவள் பைத்தியக்காரி. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். நிலத்திற்குத் தகுந்த கனியும்; குலத்திற்கு தகுந்த குணமும். நிலத்தினால் நீரின் தன்மை குன்றினாற் போல. நிலத்து அளவே பயிர்; குலத்து அளவே குணம். 12410 நிலத்துக்கு ஏற்ற கனி; குலத்துக்கு ஏற்ற புத்தி. நிலத்துக்கு ஏற்ற நீரும்; குலத்துக்கு ஏற்ற சீரும். நிலத்துக்கு ஏற்ற விதை; குலத்துக்கு ஏற்ற பெண். நிலத்தைப் பொறுத்து எரு இடு. நிலமும் தெரியாது; நிலாக் காய்கிற இடமும் தெரியாது. நிலம் ஓய்ந்து வாழ்க்கைப்பட முடியுமா? நிலம் கடக்க நீர் பாயலாமா? நிலம் பார்த்துப் பயிர் இடு; குலம் பார்த்துப் பெண் எடு. நிலம் விளைந்தால் நலம் விளையும். நிலாக் காய்கிற இடமும் தெரியாது; நெல் விளைகிற பூமியும் தெரியாது. 12420 நிலாப் புறப்பட எழுந்தானாம்; நெல் குழி வரைக்கும் நகர்ந்தானாம். நிலாவைப் பார்த்து நாய் குரைத்தாற் போல. நிலை இல்லான் வார்த்தை நீர் மேல் எழுத்து. நிலை குலைந்தால் சீர் குலையும். நிலைமை தப்பியவனுக்கு நீதி. நிலையாமை ஒன்றே நிலையானது. நிலையிற் பிரியேல். நிலையை விட்டால் நீச்சு. நில்லாத காலடி நெடுந்தூரம் போகும். நிழலடி யானாலும் நீரடியாகாது. 12430 நிழலின் அருமை வெயிலில் தெரியும். நிழலுக்கு ஆகாத நீண்ட புல் மாதிரி. நிழலுக்கும் கனவுக்கும் ஒத்தது ஆக்கை. நிழல் கடக்கப் பாயலாமா? நிழல் நல்லதுதான் முசிறு கெட்டது. (ஒட்டாது) நிறம் சுட்டாற் போம்; குணம் கொன்றாற் போம். நிறைகுடம் தளும்பாது. நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும். நிறைகுடம் நீர் தளும்பல் இல். நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்தது போல. 12440 நிறைந்த சால் நீர் கொள்ளுமா? நிறைந்த வயிற்றுக்கு நீர்மோரும் பானகமும் நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற் போல. நிறையக் குளித்தால் கூதல் இல்லை. நிறையக் குறுணி வேண்டாம்; தலை தடவிக் குறுணி கொடு. நிறையக் கேள்; குறைய பேசு. நிறையச் சாதிக்க வேண்டுமானால் குறையப் பேசு. நிறைய முழுகினால் குளிர் இல்லை. நிற்கச் சீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்புக் கட்சி. நிற்க நிழலைக் காட்டினால் படுக்கப் பாய் கேட்கிற மாதிரி. 12450 நிற்க நிழல் இல்லை; சாயச் சுவர் இல்லை. நினைக்க முத்தி அண்ணாமலை. நினைக்கும் கேடு தனக்கு. நினைக்கும் கேடு தனக்குத் தலைமேல். நினைத்த நேரம் நெடு மழை பெய்யுமா? நினைத்த போது பிள்ளை பிறக்குமா? நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும். நினைத்துக் கொண்டாளாம் கிழவி வயசுப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட. நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும். நினைப்பு பிழைப்பைக் கெடுத்ததாம்; நீராரத் தண்ணீர் உப்பைக் கெடுத்ததாம். 12460 நினைப்பு குடியைக் கெடுத்ததாம்; நேர்வானம் பிட்டத்தைத் கெடுத்ததாம். நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்தத் தண்ணீர் உப்பைக் கெடுத்தது. நினைவாய் நினைத்ததெல்லாம் கனவாய்ப் போய்விட்டதாம். நினைவே கனவு. நின்ற அறைக்கு நெடுஞ்சுவர்; விழுந்த அன்றைக்குக் குட்டிச்சுவர். நின்ற மரத்தில் நெடுநேரம் போனால் நின்ற மரமே நெடுமரம். (நின்ற இடத்தில்) நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்; விழுந்தால் குட்டிச் சுவர். நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று. (இருந்த) நின்றால் நெடுமரம்; விழுந்தால் பனை மரம். நின்று தின்றால் குன்றும் குறையும். 12470 நின்று போட்டதும் இல்லை; குனிந்து எடுத்ததும் இல்லை.  நீ நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; ஊதி ஊதித் தின்னலாம். நீ அறையில் ஆட்டினாய்; நான் அம்பலத்தில் ஆட்டினேன். நீ இருக்கிற அழகுக்காகத் திருட வந்தாய்? நீ இருக்கிற முகரைக்கு அம்மியில் மிளகாய் அரைத்து அங்கு வைத்து இங்குத் தேய்த்தாற் போல இருக்கு. நீ உளறாதே; நான் குழறுகிறேன். நீக்குப் போக்கு இல்லாதவனுக்கு நெஞ்சுமட்டில் வயிறு நீக்குப் போக்குத் தெரியாமல் நேர்ந்தபடி. நீங்கின நோயின் மறுதாக்குதல் முன்னினும் வலிதாயி ருத்தல் போல. நீசரானவர் நிலைபெறக் கல்லார். 12480 நி செத்ததும் இல்லை, நான் அழுததம் இல்லை நீ செத்தால் உலகமெல்லாம் எலும்பாய்ப் போகுமா? நீச்சம் அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும். நீச்சக் கடலிலே நெட்டி மிதக்கிறது போல. நீச்சுத் தண்ணீருக்குக் கெஞ்சினவள் பசும்பாலுக்குச் சர்க்கரை தேடுகிறாள். நீச்சு நிலை இல்லா ஆற்றிலே நின்றெப்படி முழுகுகிறது? நீட்டவும் மாட்டார் முடக்கவும் மாட்டார். நீட்டிச் சுருக்கின் மூண்டது நெடும்பகை. நீட்டி நீட்டிப் பேசுகிற வெள்ளாளப் பையா உங்கள் துரை சாணி எங்கள் சிறைச்சாலையில் இருக்கிறாள். நீட்டின விரலில் பாய்வது போல. 12490 நீட்டு வித்தை ஏறாது. நீட்டு வெற்றிலை காவி ஏறுமா? கூத்தியாள் பிள்ளை கொள்ளி வைக்குமா? நீண்ட கை குறுகாது; சொத்திக் கை நீளாது. நீண்ட கை நெருப்பை அள்ளும். நீண்ட தச்சும் குறுகிய சொல்லும். நீண்ட நாட்பட்ட நோயானாலும் நீக்கியே தீர வேண்டும். நீண்ட பல்காரன் சிரித்தாலும் அழுவது போல் இருக்கும். நீண்ட புல் நிற்க நிழலாமா? நீ தடுக்கிலே நுழைந்தால் நான் கோலத்திலே நுழைவேன். நீதி அற்ற பட்டணத்திலே நிறை மழை பெய்யுமா? 12500 நீதி இல்லா ஊருக்குப் போகிறதே வழி. நீதி இல்லா நாடு நிலவு இல்லாத முற்றம். நீதி கேளாமல் தலையை வெட்டுவார்களா? நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா? நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மறுப்பானா? (மரிப்பானா?) நீந்த அறியாதவனுக்கு வெள்ளம். நீந்த அறியாதவனை ஆறு இழுத்துப் போகும். நீந்தத் தெரியாமல் குளத்தில் இறங்க மாட்டேன் என்றானாம். நீந்த மாட்டாதவன் ஆற்றோடு போகிறான். நீந்த மாட்டாதவன் சமுத்திரத்தைக் கடக்கப் புறப்பட்டானாம். நீந்த மாட்டாதவன் பெருங்கிணற்றில் விழுந்ததைப் போல். 12510 நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகிறது. நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும். நீ போய் அலப்பிவிட்டு வராதே; நான் போய் உளறிவிட்டு வருகிறேன். நீயும் நானும் அடா! சாறும் சோறும் அடா! நீயும் நானும் அடி! எதிரும் புதிரும் அடி! நீயும் நானும் சோடி ஓடிப் போகலாம் வாடி நீயும் நானும் சோடி! நித்திரை போகலாம் வாடி! நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. நீரளவு எடுத்தாலும் நெஞ்சளவு எடுக்க முடியாது. நீரளவே ஆகுமாம் நீராம்பல். 12520 நீராலே விலகினாய் நீ; நான் நெருப்பாலே விலகினேன். நீரில் ஆழ்பவன் சிறுகோலையும் பற்றுவது போல. நீரில்லாமல் பயிர் செய்யல் ஆகாது. நீரில் இறங்கினால் தவளை கடிக்குமா? நீரில் எழுத்தாகும் யாக்கை. நீரில் குமிழி இளமை. நீரின்றி அமையாது உலகு. நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும். நீரும் சோறும் தின்று நிழலில் படுத்தால் மலடிக்கும் மயக்கம் வரும். நீரும் பாசியும் கலந்தாற் போல. 12530 நீரை அடித்தால் நீர் விலகுமா? நீரை அடித்தால் வேறாகுமா? நீரைக் கண்டு நெல்லை விதை. நீரைக் கழுவி நிழலைப் புதைப்பது போல. நீரைச் சிந்தினையோ? சீரைச் சிந்தினையோ? நீரைச் சுருக்கி மோரைப் பெருக்கு. நீரைத் தெளிக்க நெல்லி. நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ? நீரைத் தொட்டுத் தேனைத் தொட்டாற் போல. நீரோடு வந்தது ஆற்றோடு போச்சு; பாலோடு வந்தது காலோடே வந்தது. 12540 நீர் அடித்தால் நீர் விலகுமா? (விலகாது) நீர் அழியச் சீர் அழியும். நீர் அளவே ஆகுமாம் நீராம்பல். நீர் ஆழம் கண்டாலும் நேரிழையார் நெஞ்சாழம் காண முடியாது. (பெண்) நீர் ஆனாலும் மோர்; பேய் ஆனாலும் தாய். நீர் இருக்க மோருக்கு என்ன குறை? நீர் இல்லா நாடு நிலவு இல்லா முற்றம். நீர் இல்லா நாடும், சீர் இல்லா ஊரும். நீர் இல்லையானால் மீன் இல்லை. நீர் உயர நெல் உயரும். 12550 நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்; நீர் போனால் மீன் என்ன துள்ளுமா? நீர் உள்ளவரை சொல்லி நெருப்பாய் முடிந்தது. நீர் உள்ளவரை மீன்குஞ்சு துள்ளும். நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா? நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும், சர்க்கரை என்று சொன்னால் வாய் இனிப்பதும் உண்டா? நீர் ஏற நெல் ஏறும். நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்துவைத்த மட்டும் இருக்கும். நீர்க்குள் பாசி போல் வேர்க் கொள்ளாது. நீர்கண்ட இடத்தில் சாப்பிடு; நிழல் கண்ட இடத்தில் படுத்து உறங்கு. நீர்க்கோழியை நிலத்துக்கு வா என்றால் வருமா? 12560 நீர் சொரிந்து ஒளி விளக்கு எரித்தல். நீர்ச் சீலை இல்லை; நெடுமுக்காடா? நீர்ச்சோறு தின்று நிழலில் இருந்தால் மலடிக்கும் மசக்கை வரும். நீர் போனால் மீன் துள்ளுமா? நீர்ப்பாண்டு மெய்யானால் கௌபீனம் தாங்குமா? (தாங்குமோ?) நீர்ப் பாம்பு கடியாது; நிலை உயர்ந்தால் தட்டாது. நீர் பெருத்தால் நெல் சிறுக்கும். நீர் மடையும் அம்பலமும் நின்றவனுக்கு உண்டு. நீர் மேல் எழுத்து நிற்குமா? நீர் மோருக்கும் கதியற்ற வீட்டிலே ஓமத்துக்குப் பசுநெய் கேட்டாற் போல. 12570 நீர் மோருக்கு வழியில்லாத வீட்டிலே ஓமத்துக்காக நெய் சேர்த்து வைக்க நினைத்த மாதிரி. நீர் மோரும் சோறும் நெடுநாளைக்கு இருந்தால் போதும். நீர் வளம் உண்டானால் நெல்வளம் உண்டாகும். நீர் வறண்டால் மீன் துள்ள மாட்டாது. நீர் விளையாடேல். நீர் விற்ற காசு நீரோடு போயிற்று; மோர் விற்ற காசு மோரோடு போயிற்று. நீலத்துக்குக் கருப்பு ஊட்ட வேண்டுமா? நீலிக்குக் கண்ணீர் நிமையிலே. நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே; மாலிக்குக் கண்ணீர் மடி மேலே. நீலிக்கு நிலக்கண்ணில் தண்ணீர். 12580 நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும். நீறில்லா நெற்றி பாழ்; நெய்யில்லா உண்டி பாழ். நீறு இல்லாத நெற்றி பாழ்; கோலம் இல்லாத முற்றம் பாழ். நீறு பூத்த நெருப்புப் போல.  நு நுங்கு தின்றவன் ஓடி விட்டான்; நோண்டித் தின்றவன் பட்டுக் கிட்டான். நுங்கு தின்றவன் போகக் கூந்தல் நத்தியவன் அகப்பட்டது போல. நுட்பப் புத்திமான் திட்பச் சித்தனாவான். நுணலும் தன் வாயாற் கெடும். நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழே. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. 12590 நுண்ணிய கருமமும் எண்ணிச் செய்தல் வேண்டும். நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னபடி ஒன்றும் நடவார்கள். நுண்ணியது அளக்கக் கண்ணே போதும். நுண்பொருள் கொடுத்து நுண்ணியர் ஆவர். நுண்மை நுகரேல். நுரை தின்று பசியாறுமா? நுரையைத் தின்றால் பசி போகுமா? நுழைவிட்டுச் செய்; நூல் கற்று அடங்கு. நுளையன் அறிவானா இரத்தினத்தின் பெருமை? நுளையன் பேச்சு அம்பலத்தில் ஏறுமா? (ஏறாது) 12600 நுளையிலே ஆசாரமா? நுனிக் கொம்பில் ஏறி அடிக்கொம்பை வெட்டுவார்களா? நுனி நாக்கில் அமுதம்; அடி நாக்கில் நஞ்சு. நுனிப்புல் மேய்ந்தாற் போல. நுனி மரத்தில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? நுனியில் மேய்கிறது.  நூ நூலுக்கு ஏற்ற சரடு. நூலும் சூலும் சேரக் கூடாது. (நூல் - பூணூல் கல்யாணம்) நூலும் புடவையும் நூற்றெட்டுக் காலமா? நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு. 12610 நூலைப் போல் சேலை; தாயைப் போல பிள்ளை. (பெண், மகள்) நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு. நூல் இல்லாமலே மாலை கோத்தது போல. நூல் கற்றவனே மேலவன் ஆவான். நூல் போனால் நூற்றுஎட்டு நோயும் போயிற்று. (நூல் - தாலி) நூறு ஆண்டு ஆயினும் கல்வியை நோக்கு. நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்க வேண்டும். நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும். நூறு பலம் மூளையை விட ஒரு பலம் இதயம் உயர்ந்தது. நூறு பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை வெற்றவள் மருத்துவம் பார்க்கப் போனாளாம். 12620 நூறு வயதுக் கிழவன் ஆனாலும் நுழைந்து பார்க்க ஆசை. நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணியாரம். நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம். நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு இரைதான். நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார். நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு. நூற்றுக்குத் துணிந்த தூற்றுக் கூடை. நூற்றுக்கு மேல் ஊற்று. (அப்புறம்) நூற்றுக்கு மேல் ஊற்று; ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. நூற்றெட்டு அடிக் கம்பத்திலே ஆடினாலும் பூமியில் வந்து தான் தானம் வாங்க வேண்டும். 12630 நூற்றைக் கெடுத்ததாம் குறுணி. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு. 