முதுமொழிக் களஞ்சியம் 2 க முதல் - சூ வரை ஸந்குஊயிகீகுரூபுஹங்நிகுது செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : முதுமொழிக் களஞ்சியம் - 2 தொகுப்பாசிரியன்மார் : இரா. இளங்குமரனார் பி. தமிழகன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 248 = 264 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 முன்னுரை கட்டொழுங்குடையது பாட்டு. அக்கட்டொழுங்கு, கற்று வல்லார்க்கே கைவரும் சிறப்பினது. ஆனால், கல்லார் வாயிலும் கட்டொழுங்கமைந்த மொழித்திறம் உண்டு என்பதைக் காட்டு வன பழமொழி, விடுகதை, புதிர், தாலாட்டு, ஒப்பாரி, நாட்டுப் பாட்டு முதலியவை. அவர்கள் சொல வடை என வழங்குவது புலவர்க்குச் சிலேடை யாயிற்று. அவர்கள் புதிர் என்பது பழநாள் பிசி யாக உள்ளது. பழமொழி யோ முன்னாள் முதுமொழி யாம். மக்கள் வழக்கில் இருந்து கிளர்ந்த மொழி, என்றும் மக்கள் வழக்காக இருக்க வேண்டும். மக்கள் வழக்கில் இருந்து அகலு மாயின், வழக்கிழந்து ஒழிந்தும் போகும். ஆதலால், தொல்காப்பியர் மக்கள் வழக்கைப் பெரிதும் போற்றினார். யாப்புக் கட்டுப்போல் அமையாமல் நீக்குப் போக்குடன் அவற்றைக் கொள்ளவும் புலமையரை ஏவினார். அடிவரையறை இல்லாதவை எனவும், அவை ஆறுவகைய எனவும் சுட்டினார் அவர். எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப என்றும், அவைதாம், நூலின் ஆன, உரையின் ஆன, நொடியொடு புணர்ந்த பிசியின் ஆன, ஏது நுதலிய முதுமொழி ஆன, மறைமொழி கிளந்த மந்திரத்து ஆன, கூற்றிடை வைத்த குறிப்பின் ஆன (தொல்.செய்யுளியல் 164, 165) என்றும் கூறுவன அவை. முன்னை முதுமொழியே, பின்னைப் பழமொழியாய்ப் பெயர் கொண்டது. முதுகுன்றம், பழமலையாய் மாறியதுடன் விருத்தாசல மாகவும் வேற்றுமொழியில் வழங்கப்படுவது ஒரு சான்று. முதுமொழியின் இலக்கணம் நுண்மையும் சுருக்கமும் ஒளிஉடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப (தொல். செய்யுளியல்:177) என்பது. இந்நூற்பாவிற்குப் பொருள், நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும் என்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக், கருதின. பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று சொல்வர் என்றவாறு என்றார் இளம்பூரணர். கூரிதாய்ச் சுருங்கி விழுமிதாய் எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்த பொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழியென்ப புலவர் என்றவாறு என்றார் பேராசிரியர். இம்முதுமொழிக்குப் பழமொழிப் பாடல் ஒன்றனைப் பேராசிரியர் எடுத்துக் காட்டினார். அப்பாடலில் கன்றுமேயக் கழுதை காதை அறுத்தல் என்னும் பழமொழி இடம் பெற்றுள்ளது. முன்றுறையரையனார், பழமொழி நானூறு என்னும் அறநூல் இயற்றினார். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகியது. நானூறு பழமொழிகளைத் தேர்ந்து அவற்றின் வழியாக அறவுரை கூறுவதாக அமைந்தது. அந்நூல் வெண்பா யாப்பினது. அரையனார், மக்கள் வழக்கில் இருந்து பழமொழிகளை எடுத்துக் கொண்டார் எனினும், அவர் உரைநடை வகையால் பயன்படுத்தினார் அல்லர். கட்டொழுங்கு மிக்க வெண்பா யாப்பிற்குத் தகவே பயன் படுத்துதல் அவர்க்குக் கட்டாயம் ஆயிற்று. மக்கள் வழக்கு, புல மக்கள் வழக்காக மாற்றமுற்றது. எனினும், பழமொழி இருவகை வழக்குகளுக்கும் ஏற்பப் பெரிதும் அமைந்தன. தமிழ் வரலாற்றில் பழமொழித் தொகுப்பாளர் ஒருவரை முற்படுத்த வேண்டும் எனின் முந்து நிற்பார் முன்றுறையரையரே ஆவர். அவர் ஆர்வமும் தொகுப்பும் அந்நாளொடு நோக்க அருமை யுடையனவாம். தனித் தனிச் சூழலில் எழுந்த பழமொழி களை, ஓர் ஒழுங்குற்ற துறைப் பகுப்பொடு அமைத்தல் அரிது. தனித்தனிப் பாடல் போல் அமைந்து நின்ற அவற்றைத் திருமணம், செல்வ கேசவராய முதலியார் என்பார் பெரிதும் உழைத்து, கல்வி முதலாக வீட்டு நெறி ஈறாக 34 பகுதிகளாகப் பகுத்தார். கடவுள் வணக்கமும் தற்சிறப்புப் பாயிரமும் அத் தொகுதி கொண்டே அமைத்தார். ஆனால், எடுத்துக் கொண்ட பகுதி ஒவ்வொன்றுக்கும் இவ்வளவே பாடல் என வரம்பிட வாய்ப்புக் கிட்டிற்றில்லை. கல்விக்குப் பத்துப் பாடல், கல்லார்க்கு ஆறு பாடல், அவையறிதலுக்கு ஒன்பது பாடல் - என்பது போல் அமைத்தார். அவ்வமைப்பும் வாய்த்திராக்கால், நமக்குப் பொருள் தொடர்பு கிட்டியிராதாம். அணியெல்லாம் ஆடையின் பின் இருதலைக் கொள்ளி என்பார் இறைத்தோறும் ஊறும் கிணறு உமிக்குற்றுக் கைவருந்து மாறு ஒருவர் பொறை இருவர்நட்பு கல்தேயும் தேயாது சொல் கற்றலில் கேட்டலே நன்று குலவிச்சை கல்லாமல் பாகம்படும் தனிமரம் காடாதல் இல் திங்களை நாய் குரைத்தற்று நாய்காணிற் கற்காணா வாறு நிறைகுடம் நீர்தளும்பல் இல் பாம்பறியும் பாம்பின கால் மகனறிவு தந்தையறிவு முதலிலார்க்கு ஊதியம் இல்லை. இவை பழமொழி நானூறில் இடம் பெற்றவை. கூடிய அளவிலும் எளிதில் புலப்பாடு உடையவை இவை. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதிலுள்ள எளிமையும் விளக்கமும் ஓட்டமும் நாய்காணிற் கற்காணா வாறு என்பதில் காணமுடிய வில்லை. ஆனால், இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ள முறை பழமொழி அளவில் நின்று விடுவது இல்லையே! மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை நாய்காணின் கற்காணா வாறு என அறஞ்செய்தற்குப் பயன்படுத்துகிறார் அரையனார். நரை திரை மூப்பு என்பவை வருமுன்னே பல்வேறாம் நற்செயல் களைச் செய்துவிடல் வேண்டும்; அவ்வாறு செய்யாதவர் பின்னே படுக்கை ஒடுக்கமாகிக் கிடக்கும் நிலையில் செய்தற்கு இயலார்; இத்தகையரைக் காணின் நாயைக் கண்ட போது கல்லைக் காணாதது போல் என்னும் பழமொழி விளக்கமாம் என்பது பொருளாம். நானூறு பழமொழியைத் தொகுத்தது அருமை என்றால், அப்பழமொழி வழியே சொல்லும் அறத்தைக் கண்டு அமைவாய் உரைக்க எத்தகைய முயற்சியும் கூர்மையும் வேண்டி யிருந் திருக்கும் என்பதை உணர்த்துவதற்கே இதனைக் கூறிய தென்க. இதன் பயன், பழமொழி வெளிப்பட விளங்கினாலும் அப்பழமொழியின் உள்ளீட்டுப் பொருளை உணர்ந்து பயன் கொள்ளல் வேண்டும் என்பது தெளிவாதற்கே சுட்டியதாம். மேலும் இதன்கண் மெய்யியல் கொள்கை உள்ளமை திருமந்திர மரத்தை மறைத்தது மாமதயானை என்பதன் வழியே அறியலாம். பழமொழியின் முன்னைப் பெயர் முதுமொழி என அறிந்தோம். திருக்குறளை முதுமொழி என வழங்கும் வழக்கம் உண்டு. தொல்காப்பியர் சொல்லிய நுண்மை, சுருக்கம், ஒளியுடைமை, மென்மை முதலியவற்றையுடைய தாய்க் கருதிய பொருளைத் தெளிவொடு கூறுவதாய் அமைந்தது கொண்டு, அப்பெயரைத் திருக்குறளுக்கு இட்டனர். இதன் சான்றாக விளங்கும் நூல், முதுமொழி மேல் வைப்பு என்பது. இது வெள்ளியம்பலவாணத் தம்பிரான் இயற்றியது. சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுமொழி வெண்பா என்பனவும் திருக்குறளை முதுமொழி என்று கூறுவனவே. இவற்றை இயற்றியவர்கள் முறையே சிவஞான முனிவரும், சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளும் ஆவர். அப்பரடிகள் திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார். அப்பழமொழிகளையும் எவர்மீதோ சாற்றாமல் தம்மீதே சாற்றுகின்றார். கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆரூரானைக் கையினால் தொழாதொழிந்து கனியிருப்பப் காய்கவர்ந்த கள்வனேனே என்று முதற்பாடலில் கூறும் அவர், முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே (2) அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே (3) பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே (4) ஏதன்போர்க் காதனாய் அகப்பட் டேனே (5) இருட்டறையில் மலடுகறந் தெய்த்த வாறே (6) விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே (7) பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே (8) தவமிருக்க அவம்செய்து தருக்கி னேனே (9) கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே (10) என்கிறார். இவை, ஒரு பொருள் பற்றிய பழமொழிகளா? உவமைகளா? கட்டுமிக்க யாப்பில் கூட இவ்வாறு பழமொழி களை வைக்க முடியுமா? முடிந்ததா? இல்லையா? அப்பரடிகள் கொண்ட முதற்பழமொழியாகிய, கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே என்பது, இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்பதைப் பழமொழியாக்கி வைக்கும் சான்று அல்லவோ! படிக்காசுப் புலவரின் தண்டலையார் சதகம், முத்தப்பச் செட்டியாரின் செயங்கொண்டார் வழக்கம் என்பனவும் பழமொழி விளக்கமாக அமைந்த நூல்களே. இதோ வரும் உரைநடையைப் படியுங்கள் ஒரு கிராமத்தில் பத்தேர்ச் சமுசாரி ஒருவன் தீர்வைப் பணம் கட்ட வழியில்லாமல், தன் காணி பூமி முதலாகிய ஆதிகளை யெல்லாம் தோற்று, உடுக்க வதிரமும் இல்லாமல், பரதேசம் போய் விடலாம் என்று நினைத் திருக்கையில், பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறித் துவைத்தது போல பழமுதல் பாக்கிக்காகச் சர்க்கார் சேவகர் வருகிற செய்தியறிந்து அவர்களுக்கு என்ன உத்தரம் சொல்கிறதென்று ஏக்கமுற்று, சட்டி சுட்டது கைவிட்டது என்பது போல, அதுவே வியாஜமாகப் பெண்சாதிபிள்ளை முதலான குடும்பத்தை எல்லாம் துறந்து, கோவணாண்டியாய் வெளிப்பட்டு வருகையில், நடு வழியில் வேறொரு சேவகனைக் கண்டு, காலைச் சுற்றின பாம்பு கடியாமல் போகாது என்பதாக, இந்தச் சனியன் இங்கும் தொடர்ந்து வந்ததே! ïÅ v¥go? என்று நடுநடுங்கி, ஜைன கோயில் ஒன்றில் போய் ஒளிந்தவன், அந்தக் கோயிலில் நிர்வாணமாயிருந்த ஆள்மட்டமான ஜைன விக்கிரகத்தைப் பார்த்துத் தன்னைப் போலப் பயிரிட்டுக் கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு, ஐயோ! நான் பத்தேர் வைத்துக் கெட்டுக் கோவணத் தோடாவது தப்பி வந்தேன், அப்பா, நீ எத்தனை ஏர் வைத்துக் கெட்டாயோ? cd¡F ïªj¡ nfhtzK« ïšyhkš nghŒ É£lnj! என்று அதைக் கட்டிக் கொண்டு அழுதான் இது விநோத ரச மஞ்சரி என்னும் நூலில் பயனில் உழவு என்னும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி. இதில் வரும் பழமொழி நகைச்சுவை ஆகியவை படிப்பாரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுதல் உறுதி. இதனை எழுதியவர் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பார். கி. பி. 1876இல் முதல் பதிப்பு வெளிவந்தது. இந்நூல் முதற்பதிப்பில் 16 கட்டுரைகளையும் பின்வந்த பதிப்புகளில் 20 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. இவ்வொரு நூலில் மட்டும் ஏறத்தாழ முந்நூறு பழமொழிகள் இடம் பெற்றன என்றால் இந்நூலே பழமொழிக் களஞ்சியம் தானே! இடையே சிலச்சில பழமொழி நூல்கள் வரினும் பெருந்திரட்டாகக் கி.பி. 1912 இல் ஒன்று வெளிப்பட்டது. அது அனவரத விநாயகம் பிள்ளை என்பாரால் பரிசோதிக்கப் பட்டு, மதரா ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப் பட்டது. 12, 270 என்னும் எண்ணிக்கையுடையது. அதன் விலை ரூபா. 2. மொழிஞாயிறு பாவாணர் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றிய போது, பழமொழி பதின்மூவாயிரம் என்னும் பெயரிய தொகை செய்து அச்சகத்துக்கும் சென்று பின் அச்சிடப் படாமலும், மூலப்படி மீள வராமலும் ஒழிந்தது என்பது அவர் கடிதங்களால் அறியப்படும் செய்தி.. அந்நாளில் திருவரங்க நீலாம்பிகையார் பழமொழித் தொகுப்பு ஒன்று செய்து வந்தார் என்பதும் பாவாணர் கடித வழியாய் அறிய வாய்க்கின்றது. அது தொகையும் ஆகவில்லை; அச்சுக்குச் செல்லவும் இல்லை. அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகவும், துறை வாரியாகவும் பழமொழித் தொகைகள் வெளிப்பட்டன. கலைமகள் ஆசிரியர் கி.வா. சகநாதனார் அவர்களால் நான்கு தொகுதிகள் வெளிப்பட்டன. இருபதாயிரம் பழமொழிகளைத் தாண்டிய எண்ணிக்கையுடையன அவை. பொதுவுடைமைத் தோழர் தொண்டில் தூயர் சீவானந்தம் அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கிய நாளில் பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, சாமி பாட்டு, கும்மிப்பாட்டு, புனைகதை என்பவற்றையெல்லாம் தொகுக்கவேண்டும் என்று பேராவல் கொண்டார். நாட்டில் வட்டாரம் தோறும் வழங்கும் பழமொழிகளை யெல்லாம் ஒருங்கே திரட்டுதல் அரிது. நூல்களில் காணக் கிடைப்பனவாகிய எல்லாவற்றையும் திரட்டுதலும் அரிது. பழமொழித் தொகுதிகளில் இடம் பெற்றாலும் மரபுத் தொடர், வழக்கு மொழி, அறநூல் தொடர், விடுகதை, உவமை எனவும் உள்ளன. அவற்றை விலக்கின் ஒரு பெரும் பகுதி அகன்று விடும். இனிச் சாதிமை சார்ந்ததும் வெறுக்க வைப்பதுமாம் பழமொழிகளும் உள. அவற்றை அறவே நீக்கல் வேண்டும். அதனால், அந்நாள் மக்கள் வாழ்வியல் எண்ணப் போக்கு என்பவை அறியவாயா நிலையும் உண்டாம். 1. எவ்வாற்றானும் எவரும் வெறுத்தற்கு இடமிலாப் பழமொழிகளைத் தொகுத்தல் 2. வேற்றுச் சொல் கலவாமல் தொகுத்தல் 3. கூடிய அளவும் கொச்சை வழு நீக்கித் தொகுத்தல் என மூன்று வரம்புகளைக் கொண்டு தொகுத்தால், முற்றிலும் மக்கள் வழக்கில் இருந்து தடம் மாறிப் புலமையர் வழக்காகிவிடல் உறுதி! ஆதலால் மொழிக்கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த, முயன்று தொகுத்த பழமொழித் தொகை இது. இதில் உள்ள பழமொழி எண்ணிக்கை ஏறத்தாழ இருபதாயிரம். பழமொழி அல்லது முதுமொழி என்பதன் இலக்கணம் தொல்காப்பியத்திலேயே உண்டு என்னும் போது, அதுவும் அவருக்கு முந்தை இலக்கண நூல்களிலேயே இடம் பெற்றிருந்தன என்னும் போது, பழமொழி உருவாக்கம் ஏற்படுமளவு மொழிவளம் துறையறிவு பண்பாடு முதலியவை ஏற்பட்டிருக்க வேண்டும் என்னும் போது, அவை தோன்றிய காலத்தை வரம்பிடுவது அவ்வளவு எளியது அன்றாம். மொழிப் பழமையொடு, பழமொழிப் பழமையும் ஒப்புடையதாம் என்பதே சாலும்! வாங்கும் போது உள்ள குணம் கொடுக்கும் போது இல்லை என்னும் மக்கள் மொழி, கலித்தொகையில் இடம் பெறுகிறது. உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத்தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே! கலி - 22 என்பது அது. உலகத் தொழில்களில் தலையாயது உழவே. குறிப்பாகத் தமிழகத்தின் உழவுச் சிறப்பு வள்ளுவத்தில் ஓரதிகாரம் கொண்டது. வாழ்வார் என்றால் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றது. உழவின் வழிப்பட்டதே. உலகம் என்பதைச், சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் என்றது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி என்றும் குறித்தது. கம்பரால் ஏர் எழுபது என்னும் நூலும், திருக்கை வழக்கம் என்னும் நூலும் இயற்றப்பட்டன. இவ்வாறு பாடு புகழ் பெற்ற உழவு வழிப்பட்ட பழமொழிகள் மிகப் பலவாம். வேளாண்மை என்பது உழவுத் தொழிலை மட்டும் அல்லாமல் பிறர்க்கு உதவி வாழ்வதாம் பண்பாட்டுப் பெருமையும் பெற்றது. ஆதலால், இவை தனியாய்வுக்கு உரிய வளம் உடையவை. இனி, மருத்துவம் தமிழகத்தில் சிறந்தோங்கியமை சித்த மருத்துவம் என்னும் சிறப்பால் புலப்படும். திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என அறநூற் பெயர்களே மருத்துவஞ்சார் தலைப்பின எனின், அம் மருத்துவ வழிப்பட்ட பழமொழிகளும் பெருக்க மிக்கவையேயாம். தனித்துறையாய் எடுத்து ஆயத் தக்க பெருமை யுடையது அது. இவ்வாறு பல்வேறு ஆய்வுப் பொருள்களின் வைப்பகமாக இருப்பது பழமொழித் தொகுப்பு என்பது வெளிப்படை. பழமொழி வழியாகச் சொல்லப்படும் அறநெறிகள் எண்ணற்றவை. பல்வேறு மெய்ப்பாட்டு - சுவை - விளக்கமாக அமைந்தவையும் மிக்கவை. அறிவியல், பொருளியல், இன்பியல், வழிபாடு எனப் பகுத்தாய்வு மேற்கொள்ளவும் இடம் தருவன பழமொழிகள். சில பழமொழிகள் மக்கள் வழக்கில் பெருக இருந்தாலும் பழமொழித் திரட்டுகளில் இடம் பெற்றிருந்தாலும் நூலாசிரியர் களால் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றை இத் தொகுப்பில் இடம் பெறச் செய்யவில்லை. கூடிய அளவும் இடக்கரடக்கு என்னும் அவையல் கிளவியும் இனத்துக்குப் பழிப்பாவனவும் இடம் பெறாமல் செய்யினும், பழமொழியின் உயிர்ப்பு நீங்கிப் போகுமென அவை விலக்கப்பட்டில. அவை தகவாம் வகையில் கொள்ளப்பட்டுள. கூடிய அளவிலும் கொச்சையும் வழுவும் அகற்றிச் செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன. மக்கள் உணர்வை மதித்துப் போற்றுதலால் முழுதுறு செவ்வடிவோ, அறவே அயன்மொழிச் சொல் நீக்கமோ கொண்டதாக இத்தொகை அமைந்திலது என்பதைச் சுட்டுதல் முறைமையாம். வெவ்வேறு வட்டாரங்களில் ஒரு பழமொழி வழங்குங் கால் சில மாற்று வடிவங்களையும் சில வேறு சொற்களையும் கொண்டிருத்தற்கு இடமுண்டு. அவை அடைப்புக்குள் உள்ளன. சில பழமொழிகள் முடிபு இன்றி இருக்கும். அவற்றின் முடிபு அடைப்புக் குறியுள் இடம் பெறும். குறுவட்டாரம் பெருவட்டாரம் தமிழகம் எனப் பரவலாக வழங்கும் பழமொழிகள் எல்லாமும் அமைந்த திரட்டு இஃது ஆதலால், வட்டாரப் பெயர் சுட்டிக் காட்டல் அரிதாயிற்று. இம்முயற்சியில் ஈடுபடுவார் பலராய், வட்டாரம் வட்டாரமாய் அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தினால் தமிழ் வளம் மேலும் பெருக வாய்க்கும். அதனால், வழக்கும் செய்யுளும் என்னும் மொழி உயிர் நாடிகள் இரண்டும் ஒருங்கே சிறக்க வாய்ப்பும் உண்டாம். பாவாணர் தொகுத்த பழமொழி பதின்மூவாயிரம் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும், அவர் பயன்படுத்திய பழமொழி கள் பெரிதும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தம் விருப்பாகச் செய்து இத்தொகையில் பயன்படுத்திக் கொள்ள உதவியவர் வெங்காலூர் தனித்தமிழன்பர் சி.பூ. மணி அவர்கள். பின்னர்ப் பாவாணர் தொகுத்த பழமொழியென்று சேலம் திரு.வெங்கரைமணியன் அவர்கள் வழியே ஒன்று கிடைத்தது. அதில் பாவாணர் கையெழுத்து எவ்விடத்தும் இல்லை. எனினும் இத்தொகுப்பில் சேராத சில பழமொழிகள் கிடைத்தன. அவற்றை இணைத்து அப்பயனும் வாய்க்கச் செய்தோம். மேலும், நெடிய காலமாக எம்மால் தொகுக்கப்பட்டுக் குறிப்பேட்டில் தங்கிக் கிடந்தவை, நினைவில் பதிவாகியவை ஆகியவையும் இத்தொகையில் இடம் பெற்றுள்ளன. முனைவர் தமிழகனார் கடின உழைப்பெடுத்துத் தொகுத்த தொகுப்பும், அவர் பேராசிரியப் பணியாற்றும் நாவலர் ந.மு.வே. திருவருள் கல்லூரி மாணவ மாணவியர் தொகுத்த தொகுப்பும் இதன்கண் இடம் பெற்றுள. பழமொழி, வட்டார வழக்கு என்பவை கிட்டுமென எண்ணி நூற்றுகணக்கான பக்கங்களைத் திருப்பியும் ஒன்று தானும் கிட்டாத கதை நூல்களும் உண்டு. சுவை சுவையான பழமொழிகளைத் திரட்டுப் பாகாகத் தந்த சிறுகதை நூல்களும் உண்டு. தேடி வைத்ததைத் தொகுத்தும், புதுவதாகத் தேடித் தொகுத்தும் நம் முந்தையர் வைத்துச் சென்ற வைப்புநிதி யென விளங்கும் இப்பழமொழியை ஆர்வத்தால் அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு வழங்க முந்து நின்றவர் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனரும் தமிழ்ப் போராளியாய்த் தோன்றித் தமிழ்க் காவலராகத் திகழ்பவருமாகிய திரு.கோ.இளவழகனார் அவர்கள் தேடித் தொகுத்த இத்தொகையினும் பாரிய பல் தொகுதி எனினும் துணிவுடன் வெளியிடும் அளப்பரிய ஆர்வத் தொண்டர் அவர். அவர்க்கு நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டும்! இதன் மெய்ப்பினைப் பல்கால் பார்த்து அயராமல் திருத்திய ஆர்வத் தொண்டர் முனைவர் தமிழகனார் இத்தகு பல திறப்பணிகளைச் செய்தலில் தழும்பேறியவர். அவர் தொண்டு வாழ்வதாக. இன்ப அன்புடன் இரா.இளங்குமரன் பதிப்புரை முதுமொழிக் களஞ்சியம் எனும் பெயரில் தமிழ்மண் அறக்கட்டளையின் முத்திரைப் பதிப்புகளாக ஐந்து தொகுதிகள் வெளிவருகின்றன. மொத்தம் 19336 பழமொழிகள் உள்ளன. மொழிக் கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த முயன்று தொகுத்த முதுமொழித் தொகை இது, கொச்சையும் வழுவும் அகற்றி செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன என முன்னுரைப் பகுதியில் அய்யா இளங்குமரனார் குறித்துள்ளார். இக்குறிப்புகளைக் கொண்டு இத்தொகுதிகளின் அருமைப்பெருமைகள் புலப்படும். இதுவரையிலும் பழமொழிகள் எனும் தலைப்பில் வெளிவந்தனவற்றுக்கும் இவற்றுக்கும் உள்ள சிறப்புகளைக் களஞ்சியத்தின் முன்னுரையிலும், பின்னட்டைச் செய்திலும் காண்க. முந்தையர் தொகுத்து வைத்த வைப்பு நிதியைத் தமிழ் உலகு பயன் கொள்வதற்கு தமிழ்மண் அறக்கட்டளை தம் கடனைச் செய்துள்ளது. இக்களஞ்சியங்களை செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், முனைவர் பி.தமிழகன் ஆகிய பெருந்தமிழறிஞர்கள் பல்லாற்றானும் உழைத்துத் தொகுத்துத் தந்துள்ளனர். இதனைப் பிழையற்ற செம்பதிப்பாக தமிழ்கூறும் உலகிற்குத் தந்துள்ளோம். இப்பெரு மக்களின் தன்னலம் கருதாத் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறேன். பழந்தமிழ் மக்களின் கருவூலத்தை உங்களுக்குத் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்வீர். இச்செந்தமிழ்க் களஞ்சியங்கள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய அரங்க. குமரேசன், வே.தனசேகரன் , மு.ந. இராமசுப்ரமணிய ராசா, இல.தருமராசு, ரெ.விசயக்குமார், முனைவர் கி.செயக்குமார், திருமதி கீதா நல்லதம்பி, அரு.அபிராமி, புலவர் மு.இராசவேலு மற்றும் மேலட்டை அழகுற வருவதற்கு துணை யிருந்த செல்வி வ.மலர் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். பதிப்பாளர் முதுமொழிக் களஞ்சியம் 2 க முதல் - சூ வரை க 5420 கக்கத்திற் சிமிண்டுகிற கை நமனல்லவோ? கக்கும் பிள்ளை தக்கும் (கக்கின) கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை. கங்கைக்குப் போன கடாவைப் போல கங்கை ஆடப்போன கடாவைக் கட்டி உழுதானாம். கங்கை ஆடப்போனவன் கடாவைக்கட்டி அழுதானாம். கங்கை ஆடப் போந்தேன் சோறுதம்மின். கங்கை நீரும் கழிவு நீரும் ஒப்பப் பார்க்கும் ஒருமை. கங்கையிடைக் காவிரியிடைக் கொன்ற பாபம். கங்கையிலே படிந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக் காய் ஆகாது. (படர்ந்தாலும்) 5430 கங்கையிலே பிறந்த நத்தை சாளக்கிராமம் ஆகாது. கங்கையிலே பிறந்ததனாலேயே நத்தை புனித மானதாக ஆகிவிடாது. கங்கையிலே முழுகினாலும் கருமம் தொலையாது. கங்கையிலே முளைத்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது. கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமற் செய்த பாவம் தீராது. கங்கையில் ஆடினாலும் கர்மம் தொலையாது. கங்கையில் ஆடினாலும் பாவம் தீருமா? (போகாது) கங்கையாற்றில் சாக்கடை கலந்தால் கங்கை நீராம். கங்கையில் நீராடுபவன் குட்டையில் முழுக வேண்டுமா? கங்கையில் மூழ்கினாலும் கடன்காரன் விடான் 5440 கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? கசக்கி மோந்து பார்க்கலாமா? (மோரலாமா) கசடர்க்கு இல்லை கற்றோர் உறவு. கசடர்க்கு யோகம் வந்தால் கண்ணுந் தெரியாது; காதுங் கேளாது. (மண்ணுந் தெரியாது) கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. கசடான கல்வியிலும் கல்வியீனம் நலம். கசந்தாலும் பாகற்காய்; காறினாலும் கருணைக் கிழங்கு. கசாப்புக் கடைக்காரன் தர்மசாத்திரம் பேசுவது போல். கசாப்புக் கடைக்காரனைக் கண்ட நாய் போல். கசாப்புக் கடையை நாய் காத்த மாதிரி. 5450 கசிந்து வந்தவன் கண்ணைத் துடை. கசிந்து வந்தவனை நசியவிடக் கூடாது. கச்சல் நிலமானாலும் கைசேர்க்கை. கச்சற் கருவாடு மோட்சத்திற்குப் போனாலும் பிச்சைக்காரன். கச்சை கட்ட ஆளிருக்கு; கஞ்சி ஊற்ற ஆளில்லை. கச்சேரிக்குப் போனவன் கடைத்தேற மாட்டான். கச்சேரிக்குப் போனானோ காடையத்தில் போனானோ? (இழவு) கச்சேரிக்கு முன்னே போகாதே; கழுதைக்குப் பின்னே போகாதே. கஞ்சக் கருமி பிஞ்சப் பிசுநாறி. கஞ்சனுக்குக் காசு பெரிது; கம்மாளனுக்கு மானம் பெரிது. 5460 கஞ்சனுக்குக் கொள்ளை பஞ்சம் இல்லை. கஞ்சனுடைய மகன் ஊதாரியாக இருப்பான். கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம். கஞ்சிக் கவலை கடன்காரர் தொல்லை சொல்லத் தொலையுமோ? கஞ்சிக்குக் காணம் கொண்டாட்டம். கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்கிறான். கஞ்சி குடித்தது கழுக்காணி; கூழ் குடித்தது குந்தாணி. கஞ்சி ஊற்ற ஆள் இல்லை என்றாலும் கச்சைகட்ட ஆள் உண்டு. கஞ்சி வார்க்க ஆளில்லாமற் போனாலும் கச்சைகட்ட ஆளிருக்கிறது. கஞ்சி குடித்த மலையாளி சோற்றைக் கண்டால் விடுவானா? 5470 கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் குடிக்க வேணும். கஞ்சித் தண்ணீருக்குக் காற்றாய்ப் பறக்கிறான். கஞ்சியைக் காலில் கொட்டிக் கொள்ளும் அவசரம். கஞ்சிக் காமாலை, சோறு பித்தம். கஞ்சி வார்க்கக் கடப்படாதவன் ஒன்னுவிட்ட சித்தப்பன் மகளைக் கட்டினானாம். கடகச் சந்திர மழை கல்லைத் துளைக்கும். கடந்து போனது கரணம் போட்டாலும் வாராது. கடப்படாதவன் கொல்லையிலே கருவைமுள். கடப்பாறை விழுங்கி விட்டுச் சுக்குக் கசாயம் குடித்தல் சரியாகுமோ? (தீருமா?) கடப்பாறையே காற்றில் பறக்கும் போது எச்சில் இலை எம்மாத்திரம்? 5480 கடலிலே ஏற்றம் போட்ட கதை. கடலிலே துரும்பு கிடந்தாலும் மனதிலே ஒரு சொல் கிடவாது. கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளையும் நாரத்தங்காய்க்கும் தொந்தம் (உறவுண்டு) கடலில் இட்ட பெருங்காயம் மணக்குமா? கடலில் எதிர் நீச்சல் போடுகிறவனுக்குக் கம்மாய்த் தண்ணி எம்மாத்திரம்? கடலில் கரைத்த (பெருங்)காயம் போல. கடலில் கையைக் கழுவி விடுகிறதா? கடலில் போட்டுவிட்டுச் சாக்கடையில் தேடுகிறதா? கடலில் மூழ்கிப் போனாலும் கடனில் மூழ்கிப் போகாதே. கடலிலும் பாதி கடம்பாக் குளம். 5490 கடலில் போனால் என்ன செய்யலாம்! கடனில் போகக் கூடாது. கடலின் ஆழத்தை அளந்தாலும் கன்னி மனத்தின் ஆழத்தை அளக்க முடியாது. கடலுக்குக் கரை போடுவார் உண்டோ? கடலும் காலளவு காரியக்காரனுக்கு. கடலை அடைக்கக் கரை போடலாமா? கடலைத் தாண்ட ஆசை உண்டு; கால்வாயைத் தாண்ட கால் இல்லை. கடலைத் தாண்டக் கால் உண்டு; கால்வாயைத் தாண்டக் காலில்லை. கடலைத் தாண்டினவனுக்கு வாய்க்கால் தாண்டுகிறது அரிதா? கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது. கடலைத் தூர்த்தும் காரியத்தை முடிக்க வேண்டும். 5500 கடலைத் தூர்த்தாவது கார் விரைக்க வேண்டும். கடலை விதைத்தால் கடுத்த உரம். கடலை விதைப்பது கரிசல் காட்டில். (நிலத்தில்) கடல் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன? கடல் உப்புக்கும் மலை நாரத்தாங்காய்க்கும் எங்கெங்கு கொடுத்துவச்சிருக்கோ? கடல் உப்பள்ளிக் கல்நாட்டில் விற்றல். கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற் போல. கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே? கடல் கொதிக்கத் தொடங்கினால் தண்ணீர் விட்டு விளாவ முடியுமா? கடல் கொந்தளித்தால் கலய நீர் தணிக்குமா? 5510 கடல் சுறாவுக்கு முன் சிறுமீன் நிற்குமோ? கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளிச்சி தாலி வற்றாது. கடல் தாண்ட மனம் உண்டு; கால்வாய் தாண்டக் காலில்லை. கடல் திடலாகும்; திடல் கடலாகும். கடல் நிறைந்து ஆவது என்ன? காஞ்சிரை பழுத்து ஆவது என்ன? கடல் நீந்திக் கன்றடியில் ஆழ்ந்துவிடல் கடல் நீரை ஏற்றம் போட்டு இறைக்க முடியுமா? கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன? கடல் பாதி; கடம்பங்குளம் பாதி (திருநெல்வேலிப் பகுதி) கடல் பெருகினால் கரை ஏது? 5520 கடல் பெருகினால் கரையும் பெருகுமா? கடல் மணலை எண்ணக் கூடுமா? கடல் மீது தூங்குகிறவன் பனிக்கா அஞ்சுவான். கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? கடல் மீனுக்கு நுளையன் இட்டதே பேர் (சட்டம்). கடல் முழுவதும் கவிழ்ந்து குடிக்கலாமா? கடல் வற்றினால் கருவாடு தின்னலாமென்று குடல் வற்றிச் செத்ததாம் கொக்கு. கடல் வற்றட்டும் என்று கொக்கு காத்துக் குடல் வற்றிச் செத்ததுபோல. கடல் வற்றும்னு நினைச்சுக் குடல் வற்றிச் செத்தாம் கொக்கு. கடவுள் கதவை அடைத்தால் சன்னலைத் திறந்து விடுகிறார். 5530 கடவுள் சித்தத்துக்கு அளவேது. கடவுளுக்குத்தான் வெளிச்சம். கடவுளே கட்டை வண்டி ஓட்டுறாராம்; பூசாரி புல்லட்டு கேட்கறானாம். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். கடவுளைப் பகைத்தாலும் (ஊர்க்)கணக்கனைப் பகைக்காதே. கடற்கரைத் தாழங்காய் கீழே தொங்கி என்ன? மேலே தொங்கி என்ன? கடனாகக் கிடைக்கிறதானாலும் ஆனையை வாங்கிக் கட்டிக் கொள்வதா? கடனா உடனா வாங்கிக் காரியத்தை முடி. கடனாச்சு; உடனாச்சு; வீட்டுமேலே சீட்டாச்சு; அடித்து விடடா தேவடியாள் தெருவிலே பல்லக்கை. கடனோடு கடன் கதம்பம் காற்பணம். (கந்தப் பொடி) 5540 கடனோடு கடனாகிறது; அண்டை வீட்டின் மேலே சீட்டு ஆடுகிறது. பிள்ளைக்குக் கலியாணம் பண்ணு. கடனோடே கடன்; உடனோடே உடன். கடன் இருக்கிறவன் கட்டிவிட்டுச் சாவதில்லை; முதலிருக் கிறவன் தின்றுவிட்டுச் சாவதில்லை. கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு. (கால் வயிற்றுக் கஞ்சி) கடன் இல்லாத கஞ்சி கால்வயிறு போதும். கடன் இல்லாத சோறு கால்வயிறு போதும். (கவளமாயினும்) கடன் உடன் வாங்கி உடம்பைத் தேற்று; கடன்காரன் வந்தால் முதுகைக் காட்டு. கடன் என்றால் கம்மாளன் யானை இரண்டு என்பான் (ஐந்து). கடன்காரனுக்குத் கடனும், பழிகாரனுக்குப் பழியும் கொடுத்துத் தீர வேண்டும். கடன் காரன் பாழ்கிடையாய்க் கிடக்கிறான். 5550 கடன் காரனுக்கு மயிரும் காலனுக்கு உயிரும். கடன்காரனை வைத்த கழு உண்டா? (வதைத்த) கடன் காலச் சனியன். கடன் கேட்காமல் கெட்டது; வழி நடக்காமல் கெட்டது. கடன் கேட்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது. கடன் கொடுத்தான் நட்பை உடன் கெடுத்தான். கடன் கொடுத்துப் பொல்லாப்பு அடைவதைவிடக் கடன் கொடுக்காமல் பொல்லாப்பு அடையலாம். கடன் கொண்டான் துன்பம் உடன் கொண்டான். கடன் கொண்டும் செய்வன செய். கடன் கொண்டும் செய்வார் கடன். 5560 கடன் சிறிது ஆனாலும் கடமை பெரிது. கடன் நெஞ்சைக் கலக்கும். கடன்படாக் கஞ்சி கால் கஞ்சி. கடன்பட்ட சோறு கால் வயிறு நிரம்பாது. கடன் பட்டவன் சோறு கால் சோறு. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்குகிறது. கடன் பட்டாயோ, கடை கெட்டாயோ? கடன்பட்டு உடன்பட்டு அம்மை கும்பிட, நீ யார் கூத்தி விழுந்து கும்பிட. கடன்பட்டு உடன்பட்டு உடம்பைத் தேற்று மகனே, கடன் காரன் வந்தால் தடியைத் தூக்கு மகனே! கடன்பட்டும் பட்டினியா? 5570 கடன்பட்டும் பட்டினி, கலியாணம் செய்தும் துறவி (பிரம்மச்சாரி) கடன் பெறும்போது வாங்குபவன் தொழுவான்; கடனை வசூலிக்கும்போது கடன் கொடுத்தவன் தான் தொழ வேண்டும். கடன் வாங்கி உடன் வாங்கிச் சாமி கும்பிட, நீ யாரடா கூத்திமகன் விழுந்து கும்பிட? கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான். கடன் வாங்கிக் கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான். கடன் வாங்கிக் கடன் கொடுத்து வாழ்ந்தவன் இல்லை. கடன் வாங்கிக் கடன் தராதே; மரம் ஏறிக் கைவிடாதே. கடன் வாங்கிச் செலவு செய்தவனும் மரம் ஏறிக் கை விட்டவனும் சரி. கடன் வாங்கிப் பயிர் இட்டவனும் கச்சேரி காத்தவனும் கடைத் தேறான். கடன் வாங்கியும் கல்யாணம் செய். 5580 கடன் வாங்கியும் பட்டுணி; கலியாணம் பண்ணியும் மாணி (பிரம்மச்சாரி) கடன் வாங்கியவன் மடியில் கல நெருப்பு. கடன் வாங்குகிறபோது இனிப்பு; கடன் கொடுக்கிற தென்றால் கசப்பு. கடன் வாங்குகிறவன் கடைத்தேற மாட்டான். கடன்னா எட்டு யானை என்பானே. கடா ஆனாலும் உழக்குப்பால் கறக்காதா என்கிறான். கடா இடுக்கில் புல் தின்கிறது போல. கடா கடா என்றால் கால் ஆழாக்குப் பீச்சு என்கிறாயே! கடா கடா என்றால் உழக்குப் பால் என்று கேட்கிறாயே! கடா கடா என்றாலும் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான். 5590 கடா கன்று போட்டது. கொட்டகையிலே பிடித்துக் கட்டு. கடாச் சண்டையில் உண்ணி நசுங்கின கதை. கடா பின் வாங்குவதெல்லாம் பாய்ச்சலுக்கு இடம். கடா பின் வாங்குவதெல்லாம் தாக்குவதற்கு அடையாளம். கடா பொலிகிறது வண்டி பால் குடிக்கவா? கடா மிடுக்கிலே புல்லுத் தின்கிறதா? கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழுப்போன இடம்? கடி கோவிலிலே கட்டினநாய். கடிக்க ஒரு எலும்பும் இல்லை; காதில் மினுக்க ஓலையும் இல்லை. கடிக்கப் பாக்கு கொடாத சிற்றப்பன் கடைத்தெரு மட்டும் வழிவிட்டானாம். 5600 கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம். கடிக்க வந்த நாய்க்கு எலும்பைப் போட்டாற் போல. கடிக்க வந்த நாய்க்குத் தேங்காய்க்கீற்று போட்டாற் போல. கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா? கடிக்கிற நாய்க்குக் கழுத்தில் குறுங்கயிறு. கடிக்கிற நாயைக் காசுகொடுத்து வாங்கலாமா? கடிக்கிற பாம்பை நல்ல பாம்பு என்ற கதை. கடிதான சொல் அடியிலும் வலிது (பெரிது). கடிதான பிள்ளை பெற்றோருக்கு உதவுமா? கடித்த நாயை வெறிநாய் என்பது போல. 5610 கடித்த நாய்க்குக் காடியைக் கொடு. கடித்த நாயைக் கொன்றாலும் பயன் உண்டாகாது. கடித்த நாயைப் பைத்தியம் கொண்டது என்பார்கள். கடித்த பாக்கு கொடுக்காத நல்லாத்தாள் கடையநல்லூர் வரைக்கும் போய் வழியனுப்பித்தாளாம். கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன் காதவழி வந்தானாம். (சிற்றன்னை) கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் விடத்தைத் தான் தரும். கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் கடித்தே தீரும். கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி. கடித்த வாய் துடைத்தாற் போல. கடித்தால் நாய்; மிதிபட்டால் வாய் இல்லா சீவன். 5620 கடித்தாலும் கடிக்கட்டும் நீ கொல்லாதிரு. கடித்துப் போட்ட மாங்காய் காசுக்கா போகும். கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை. கடிநாய் எலும்புக்குப் பறந்தாற் போல. கடிய சொல்லை விட கொடிய அடியே அடிமேல். கடிய மாட்டுக்குக் கம்பு உடையும்; கொடிய மாட்டுக்குக் கொம்பு உடையும். கடியாத மூட்டை என்று விட்டு விடுவார்களா? கடியும் சுக்குத்தான் அடியும் சுறுக்குத்தான். கடிவாளம் இல்லாத குதிரை. கடிவாளமும் சேணமும் இட்டாலும் கழுதை குதிரையாகாது. 5630 கடுகத்தனை நெருப்பும் காட்டை எரித்துச் சாம்பலாக்கி விடும். கடுகிற்று முடுகிற்று வடுகச்சிக் கல்யாணம். கடுகு அத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்தி விடும். கடுகு அளவும் களவுதான்; கற்பூரக் களவும் களவுதான். (களவும்) கடுகு சிந்தினால் கலகம் வரும். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. (போகுமா?) கடுகு செத்தாலும் கறுப்பு போகாது. கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக் கொண்டு திரிவான். பூசணிக்காய் போவது தெரியாது. கடுகு போன இடம் ஆராய்வார்; மிளகு போன இடம் ஆராயார். கடுகு போன இடத்தை ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது. 5640 கடுக்கன் இட்ட நேற்றுக்குள் காதறுந்த சுறுக்கு. கடுக்கன் சோடியும் காளைமாட்டுச் சோடியும் அமைவது கடினம். கடுக்காய்க்கு அகணி நஞ்சு; சுக்கிற்குப் புறணி நஞ்சு. கடுகை அரைத்துக் குடித்தானாம்; கோவணத்தை அவிழ்த்துப் பார்த்தானாம். கடுகு மலையாச்சு; மலை கடுகாச்சு. (கடுகும்) கடுங்காற்று மழை கூட்டும்; கடு நட்புப் பகை காட்டும். கடுங் காற்று மழையாகும்; கடும் உறவு பகையாகும். கடுங்கானத்துள் கதிரவன் தோன்றினாற் போல. கடுஞ்சிநேகம் கண்ணைக் குத்தும். கடுஞ்சிநேகம் கண்ணுக்குப் பகை. (பொல்லாப்பு) 5650 கடுங் கோபம் கண்ணைக் கெடுக்கும். (மறைக்கும்) கடுஞ் செட்டுக் கண்ணைக் கெடுக்கும். கடுஞ் செட்டுக் காரியக் கேடாம். கடுஞ் செட்டுத் தயவைக் கெடுக்கும். கடுஞ் சொல் கேட்டால் காதுக்குக் கொப்புளம். கடுநட்பு கண்ணைக் கெடுக்கும். (சிநேகம்) கடுமுடுக்கடா சேவகா, கம்பரிசி அடா சம்பளம். கடும்பசி கல் மதிலை உடைத்தாவது களவு செய்ய வைக்கும். கடும் போரில் கை விடலாமா? கடுவெளியைக் கானல் நீராய்க் கண்டது போல. 5660 கடை ஓடித் தாவும் நிலத்துக்குக் கரையடி மேட்டு நிலம் எளிது. கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவார். கடை கெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம். கடை கெட்ட மூளி சூலானாலும் காற்பணத்துக் காசு செல்லும். கடை கெட்ட வாழ்வு, தலை கட்ட நேரமில்லை. கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள். கடைச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தாற் போல. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுப்பாள் (எடுக்கிறது) கடைந்த மோரிலே வெண்ணெய் எடுக்கிறவன். 5670 கடைந்தே காணவில்லை; குடைந்தா வரும்? கடைந்தெடுத்த பேர் வழி. கடைப்பிறப்பு கழுதைப் பிறப்பு. கடையும் போது வாராத வெண்ணெய் குடையும் போது வரப் போகிறதா? (வந்துவிடுமா?) கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அவிசாரி புருசன் ஆபத்துக்கு உதவுவானா? கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே. கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான். கடையில் இருக்கும் கன்னியைக் கொள். கடையிலே தேளைக் கண்ட கை அசக்கினால் நிற்குமா? கட்டக் கருகமணி இல்லாமற் போனாலும் பேர் என்னவோ? 5680 கட்டத் துணி இல்லை; கூத்தியர் இரண்டு பேர். கட்டத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை. கட்டத் தெரியாவிட்டாலும் கட்டின வீட்டிற்கு குற்றம் சொல்வான். கட்டத் தெரியாதவளுக்குச் சீலை கரட்டுக்காலிலே; போடத் தெரியாதவளுக்குத் தாலி பிடரியிலே. கட்டத் தெரியாதவன் கட்டின வீட்டிற்கு வக்கணை சொல்லக் கூடாது. கட்டத் தெரியாதாம் கோமணம்; கழைமேலே கூத்தாடு வானாம். கட்டத் தெரியாவிட்டாலும் கட்டின வீட்டிற்கு வக்கண யடிக்கத் தெரியும். கட்டப் பஞ்சாயத்தை ஒட்டப்பஞ்சாயத்து இல்லை. கட்டப் பாலை முற்றப் பழுக்குமோ? கட்டப்பட்டாலும் துக்கப்படலாகாது. 5690 கட்டாந்தரை அட்டை போலக் கட்டிக்கொண்டு புரளு கிறதா? கட்டாந்தரையிலே முக்குளிக்கிறது. கட்டாந்தரையில் தேள் கொட்டக் குட்டிச்சுவரில் நெறி கட்டினதாம். கட்டி அடித்தால் என்ன? விட்டு அடித்தால் என்ன? கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறது. கட்டி அழுகையிலே என் மகளே, உனக்குப் பெட்டியிலே கை என்ன? கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம். கட்டிக் கறக்கிற மாட்டிடைக் கட்டிக் கறக்க வேண்டும்; கொட்டிக் கறக்கிற மாட்டைக் கொட்டிக் கறக்க வேண்டும். கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எதுவரைக்கும்? கட்டிக் கொடுத்த கட்டுச் சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளைக்கு வரும்? 5700 கட்டிக் கொண்டு வரச் சொன்னால் வெட்டிக் கொண்டு வருவான். கட்டிச்சோறு கட்டிக்கிட்டு அழுவுதாம்; கண்ணாடி சுவ ரெல்லாம் புட்டுக்கிட்டு விழுகுதாம். கட்டிடம் கட்டியவன் முட்டாள்; வாழுகிறவன் சமர்த்தன். கட்டித் தங்கமானால் கலீரென்று ஒலிக்குமா? கட்டித் தயிரானால் கொட்டைப் பாக்கு நிற்கும். கட்டிப் படுத்தால் அல்லவோ உட்காய்ச்சல் தெரியும், கட்டிப் பிடித்தான் காவாலி; வெட்டிப் போட்டாள் வீராயி. கட்டிப் பீ எல்லாம் கூழ்ப் பீயாய்க் கரைந்தது. கட்டிமகள் பேச்சு; கல்லுக்குக் கல் அண்டை கொடுத்தது போல். கட்டிலின்மேல் ஏறியும் முறையா? (முறைபார்க்கிறது உண்டா?) 5710 கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போகுமா? கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுக் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள். கட்டி வயிரம் கொட்டிக் கிடந்தாலும் கஞ்சியாக்கலாமா? கட்டி வழி விட்டால் வெட்டி அரசு ஆளலாம். கட்டி விதை; வெட்டி விதை. கட்டி வைத்த பூனையை அவிழ்த்து விட்டு வாபூசு என்றால் வருமா? கட்டி வைத்த முதல் அழியக் கச்சவடம் பண்ணாதே. (கச்சவடம் - வியாபாராம்) கட்டி வைத்து அடித்தால் நாயும் கவ்விடும். கட்டின கோவணத்தைக் காற்றில் விட்டவன். கட்டின பெண்சாதி இருக்க காத்தாயியைக் கண்ணடித் தானாம். 5720 கட்டின பெண்டாட்டி பட்டி மாடு மாதிரி. கட்டின மாட்டை அவிழ்ப்பாரும் இல்லை; மேய்த்த கூலியைக் கொடுப்பாரும் இல்லை. கட்டினவளுக்குக் காடு கரையை எழுதி வச்சாலும், வைச்சுக் கிட்டவளுக்கு வாய்க்கால் வரப்பையாவது எழுதனும். கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஆயிரம் வீடு. (பல) கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு. கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை. கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லுவார் பலர். கட்டின வீட்டையும் கட்டின பெண்டாட்டியையும் பழுது சொல்லாதே. f£odh‹ jhÈ; fh£odhŸ nfhy«.(fh£odh‹) கட்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த கப்பரையும் அல்ல. 5730 கட்டுக் கட்டு விளக்குமாறு கப்பலிலே வருகிறது என்றால் ஒரு காசு விளக்குமாறு இரண்டு காசு. கட்டு கட்டோடு இருக்க பூட்டை நாய் கொண்டு போயிற்று. கட்டுக் கலங் காணும்; கதிர் உழக்கு நெல் காணும். கட்டுக் காடை இடமானால் குட்டிக் சுவரும் பொன்னாகும். கட்டுக் குலைந்தால் கனம் குலையும். கட்டுச் சோறும் கற்ற வித்தையும். கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினாற்போல (எலிக் குஞ்சை) - (பெருச்சாளியை) - (பூனையை). கட்டுச் சோற்று மூட்டையும் கைப்பிள்ளையும் எடுக்கலாகாது. கட்டுத் தறியை விட்டு மேய்ச்சற் காட்டில் பிடிப்பது. கட்டுத் துறை சரியாக இருந்தால் கன்றுக்குட்டி துள்ளி விளையாடும். 5740 கட்டுப்படாத பெண்ணை வெட்ட வெளியிலே பார். கட்டுப் பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப்பட வேண்டும்; குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும். கட்டுப் பானை ஊற்று எட்டு நாளைக்கே. கட்டு மரத்தைச் சென்னாகுனி அரிக்கிறது போல. கட்டு மானம் இல்லாத வீட்டுக்குக் கப்பலில்வந்தாலும் கட்டாது. கட்டெறும்பு இட்டலியைத் தூக்கினது போல. கட்டை இருக்கிற மட்டும் கவலை உண்டு (கட்டம்) கட்டைக் கலப்பையும் மொட்டைக் காளையும் காணிக்கு உதவாது. கட்டைக்குக் கழுத்துக்குக் காலடி சொந்தம் வேணும். கட்டை போகும்போது காலாழி பீலாழியா? 5750 கட்டைக் கோணல் அடுப்பில் நிமிர்ந்தது. கட்டை கிடக்கிற கிடையைப் பார்; கழுதை குதிக்கிற குதியைப் பார். கட்டை போனால் அடுப்போடு. கட்டையைச் சுட்டால் கரியாகுமா? மயிரைச் சுட்டால் கரியாகுமா? கட்டை விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டினாற் போல (குஞ்சலம்). கட்டோடே போனால் கனத்தோடே வரலாம். (வாழலாம்) கணக்கப் பிள்ளை எல்லாம் எழுத்துப் பிள்ளையா? கணக்கப் பிள்ளைக் கொடுக்கைத் தூக்கி கண்டவ ளெல்லாம் செருப்பைத் தூக்கி. கணக்கப்பிள்ளை பெண்சாதி கடுக்கன் கோட்டுக் கொண்டா ளென்று காரியக்காரன் பெண்சாதி காதை அறுத்துக் கொண்டாளாம் (கம்மல்) கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு. 5760 கணக்கனை வைத்துக் கொண்டல்லவோ கள்ளப் பிள்ளையை வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கனுக்குக் கைக்கூலி கட்டிக் குடியிருக்கக் கடன் என்றாராம். கணக்கனுக்கு மோட்சம் இல்லை; ஒட்டனுக்கு நரகம் இல்லை. கணக்கனைக் கண்ட இடத்தில் கண்ணைக் குத்து. கணக்கனைப் பகைத்தாயோ? காணியை இழந்தாயோ? கணக்கனோ? குணக்கனோ? கணக்கன் கணக்கு அறிவான். தன் கணக்கைத் தான் அறியான். கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை. கணக்கன் கணக்கைத் தின்னாவிட்டால் கணக்கனை கணக்கு தின்று விடும். கணக்கன் கெட்டால் பள்ளிக்கூடம். 5770 கணக்கன் கணக்கைத் தூக்கி; கண்டவனெல்லாம் செருப்பைத் தூக்கி. கணக்கன் வீட்டுக் கல்யாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு. கணக்கிலே கயிறா கோத்து இருக்கிறது? கணக்கு அதிகாரத்தைப் பிளக்கும்; கோடாரி மரத்தைப் பிளக்கும். கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது. கணக்கு அறிவான் காலம் அறிவான். கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்தில் கண்ணைக் குத்து. கணக்குப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு விளக்கெடுக்க சரியா இருக்கு. கணக்கு வாத்தியாருக்குப் பயந்துக்கிட்டு கடை வேலைக்குப் போனா, எண்ணிப் பார்த்துக் காசை வாங்குன்னானாம் எழவெடுத்த முதலாளி. கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும். 5780 கணத்தைக் கணம் காக்கும்; பணத்தைப் பணம் காக்கும். கணவனுக்கு மிஞ்சிய தெய்வம்இல்லை. கணவனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை; கடலுக்கு மிஞ்சின ஆழம் இல்லை. கணவனைப் பிரிந்து அயல் வீட்டில் இருக்காதே. கணவனைப் பிரிந்தும் அயல் வீட்டில் இருக்கிறதா? கணவனை வைத்துக் கொண்டல்லவோ கள்ள மாப்பிள்ளையைக் கொள்ள வேண்டும். கணவன் அடித்தானென்று கொழுந்தன் மேல் எரிந்து விழுந்தாளாம். கணவன் இல்லாத கற்புடைய பெண்ணின் கட்டழகு பயன்படாதது போல. கணிசத்துக்கு இவள்; காரியத்துக்கு அவள். கணுக்கணுவான கரும்பானாலும் ஆனைக்கு என்னவோ கடைவாய்க்குத்தான். 5790 கணுக்கால் பெருத்தால் கணவனுக்கு ஆகாது. கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள். கணை முற்றினால் கட்டையிலே. கண் அளக்காததைக் கை அளந்து விடுமா? கண் அறிந்தும் அயல்மனையில் இருக்கிறதா? கண் இருந்தும் கண்ட மங்கலத்தில் பெண் கொடுப்பார்களா? கண் இருந்தும் குழியில் விழலாமா? கண் இல்லாக் குருடனுக்கு மூக்குக் கண்ணாடி ஏன்? கண் உள்ள போதே காட்சி; கரும்புள்ள போதே ஆலை. கண் ஊனன் கைப்பொருள் இழப்பான். 5800 கண் ஒளி பெரிதா? கதிர் ஒளி பெரிதா? கண் கண்டது கை செய்யும். கண் காணாமல் கடும்பழி சொல்கிறதா? கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெரியுமா? கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறைவில்லை? கண் குற்றம் கண்ணுக்குத் தெரியுமா? கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா? கண் கெட்ட பிறகா சூரிய நமக்காரம் செய்கிறது? கண் கொண்டல்லவோ வழி நடக்க வேண்டும்? கண்ட இடத்தில் திருடன் கண் போகிறது. 5810 கண்ட கண்ட கோயில் எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டு; காணாத கோயிலுக்குக் காணிக்கை நேர்ந்து வைதாளாம். கண்டது கற்கப் பண்டிதனாவான். கண்டது கற்கப் பண்டிதனாவான்; கண்டது தின்னக் குண்டனாவான். கண்டது சுவைத்தாலும் கண்ட மட்டே. (கழுத்து) கண்டதே காட்சி; கொண்டதே கோலம். கண்டது எல்லாம் ஓடித் தின்னும் ஆடு; நின்று நின்று மேய்ந்து போகும் மாடு. கண்டது கேட்டது சொல்லாதே; காட்டு மரத்தில் நில்லாதே. கண்டது சொன்னால் கொண்டிடும் பகை. (மூள்வது) கண்டது பாம்பு; கடித்தது கருக்குமட்டை. கண்டதே காட்சி; கொண்டதே கோலம். 5820 கண்டதை, கேட்டதைச் சொல்லாதே; காட்டுமரத்தில் நில்லாதே. கண்டதைக் கேளாவிட்டால் கொண்டவன் அடிப்பான். கண்டதைக் கொண்டு கரையேற வேண்டும் (கண்டத்தைக்) கண்டதைக் கொண்டு காலை வாரி அடிக்கிறதா? கண்டதைத் தின்றால் குண்டனாவான். கண்டதைப் பாடினால் பண்டிதன் ஆகலாம். கண்ட மங்கலத்து அஞ்சு பெண்களும் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகார். கண்ட மாப்பிள்ளையை நம்பிக் கொண்ட மாப்பிள்ளையைக் கைவிட்டாற் போல. கண்டமாலையை மறைக்கக் கழுத்துமாலை போட்டானாம். கண்டம் இல்லாத எருமை தண்டம். 5830 கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர். கண்டவன் எடுத்தால் கொடுப்பானா? கண்டறிந்த நாயுமல்ல, கனமறிந்த பேயும் அல்ல. கண்டறிய வேண்டும் கரும்பு சுகம்; உண்டறிய வேண்டும் உடல். கண்டறியாதவன் பெண்டு படைத்தால் காடுமேடெல்லாம் இழுத்துத் திரிவானாம். கண்டால் ஆயம்; காணாவிட்டால் மாயம். கண்டால் எரிந்துவரும்; காணாவிட்டால் தேடிவரும். கண்டால் எரியுது காணாட்டித் தேடுது. கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு. 5840 கண்டால் ஒன்று; காணாவிட்டால் ஒன்று. கண்டால் கரிச்சிருக்கும்; காணாவிட்டால் இனித்திருக்கும். கண்டால் காமாட்சி நாயக்கர், காணாவிட்டால் காமாட்டி நாயக்கர். கண்டால் காளியக்காள்; காணாவிட்டால் மூளியக்காள். கண்டால் காயம்; காணாவிடில் மாயம். கண்டால் துளை; காணா விட்டால் மலை. கண்டால் சரக்கறியேன்; காணாமல் குருக்கறியேன். கண்டால் கீச்சுக் கீச்சு; காணாவிட்டால் பேச்சுப் பேச்சு (கிளி) கண்டால் தண்டம்; வந்தால் பிண்டம். கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிரை? 5850 கண்டால் நாயக்கர்; காணாவிட்டால் வடுகப் பயல். கண்டால் முறைசொல்லுகிறது; காணாவிட்டால் பெயர் சொல்லுகிறது. கண்டால் வத்தி; காணாவிட்டால் கொள்ளி. கண்டிப்பு இருந்தால் காரியம். கண்டிருந்தும் மலத்தைக் கவிழ்ந்திருந்து தின்னுவார்களா? கண்டு எடுத்தவன் கொடுப்பானா? கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டுக்கு வழி தெரியும். கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டில் எரியும். கண்டுநூல் சிடுக்கெடுத்தாச்சு; வண்டி நூல் இருக்கிறது. கண்டு பேசக் காரியம் இருக்கிறது; முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது. 5860 கண்டும் காணவில்லை; கேட்டும் கேட்க வில்லையென்று இருக்க வேண்டும். கண்டும் காணாதது போல் விட்டுவிட வேண்டும். கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் இருக்க வேண்டும். கண்ணடி தாங்கக் கண்டவன் எவன்? கண்ணடிபட்டவன் காலடியில் கிடப்பான். கண்ணராவிக்குப் பிள்ளைப் பெற்று இரண்டு ரூபாய்க்கு விற்றானாம். கண்ணாடி நிழலிற் கண்ட பணம் கடனுக்கு உதவுமா? கண்ணாடிக் கடைக்காரன் கனவு போல. கண்ணாடியிற் கண்ட பணம் கடன் தீர்க்க உதவுமா? கண்ணாம்பூச்சி விளையாட்டு கதை கதையாய் ஆச்சு. 5870 கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி. கண்ணாலம் என்றானாம்; கட்டு தாலி என்றாளாம். கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறைக்க வேண்டும். கண்ணாலே கண்டது பொய்; கருதி விசாரித்தது மெய். கண்ணாலே கண்டதும் பொய்; காதாலே கேட்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய். கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீர வேண்டும். கண்ணால் அளப்பதைக் கையாலா அளக்கமுடியும்? கண்ணால் கண்டதற்குச் சாட்சியா? கண்ணான பேரை மண்ணாக்குகிறான். கண்ணான பேரை புண்ணாக்கிக் கரும்பான பேரை வேம் பாக்கினான். 5880 கண்ணில்லாத ஊமையன் கடலில் வீழ்ந்ததுபோல. கண்ணிழந்தவனுக்குக் கண்டதெல்லாம் கறுப்பு. கண்ணியில் அகப்பட்ட மானுக்குக் கணத்தில் மனங் கலங்கும். கண்ணிலே எண்ணெய் கரிக்குமோ, பிடரியிலே எண்ணெய் கரிக்குமோ? கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ? கண்ணிலே படுகிறது புருவத்திலே படியும். கண்ணிலே புண் வந்தால் கண்ணாடி பார்க்க முடியுமா? கண்ணில் உண்டாகும் புண்ணில் கோலிட்டது போல. கண்ணில் கண்டது கோடி; காணாதது அனந்த கோடி. கண்ணிற் பட்ட கையைத் தறிப்பார் இல்லை. 5890 கண்ணிற் பட்டவன் காத்தன்; கட்டி முடித்தவன் சாத்தன். கண்ணிற் பட்டாற் கரிக்குமா? புருவத்தில் பட்டால் கரிக்குமா? கண்ணிற் புண்வந்தால் கண்ணாடி பார்க்கல் ஆகாது. கண்ணியில் மாட்டிக் கொண்ட கலைமான் போல. கண்ணினாற் கண்டதைக் கையால் செய்யவேண்டும். கண்ணின் குறைபாடு கண்ணுக்குத் தெரியாது. (குற்றம்) கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம். கண்ணுக்கு இமை காதமா? (புருவம்) கண்ணுக்கு இமை பகையா? கண்ணுக்கு இமை, பெண்ணுக்கு நாணம். 5900 கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல். கண்ணுக்குள் சம்மணம் கொட்டுவான்; கம்பத்தில் ஐந்தானை கட்டுவான். கண்ணு சொல்லியா இமை மூடுகிறது; கலசம் சொல்லியா நிழல் விழுகிறது. கண்ணும் கருத்தும் உள்ளபோது இல்லாமல் கண் பஞ்சு அடைந்தபின் என்ன கிடைக்கும்? கண்ணூனன் கைப்பொன் இழப்பான். கண்ணு சொல்லியா இமை மூடுது; கலசம் சொல்லியா நிழல் விழுவுது. கண்ணுதான் நொள்ளை காரியத்திலே கொள்ளை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல். கண்ணைக் காட்டி அழைத்தால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா? (அழைத்தால்) கண்ணைக் குத்திவிட்டது என்று கையை வெட்டுவதா? 5910 கண்ணைக் குத்திய விரலைக் களைந்து எறிவார் உண்டா? கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது. கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கூடவா கெடுக்கும்? கண்ணைக் கெடுத்தவன் கோலைக் கொடுப்பான். கண்ணைக் கெடுப்பான் கவிராயன்; எண்ணி ஈவான் உரைகாரன். கண்ணைக் கொண்டுதானே கண்ணை அளக்கனும். கண்ணைப் பிடுங்கிய தெய்வம் மதியைக் கொடுத்தது (கெடுத்த). கண்ணைத் திற என்றால் வாயைத் திறப்பான். கண்ணைத் திறந்துகொண்டே கிணற்றில் விழுந்தது போல. கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழமுடியுமா? 5920 கண்ணை மூடிக் குட்டுகிறதா? கண்ணொளி தவிர கதிரவன் ஒளிவேறு இல்லை; மங்கை சுகத்தைத் தவிர மற்ற சுகம் வேறு இல்லை. கண்ணோட பிறந்த காவேரி ஆனாலும் உதட்டைச் சுட்டு உறவாடுவாள். கண்ணோட பிறந்த காவேரியானாலும் நம் எண்ணம் சரியாகுமா? கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழமாட்டார்கள்; கண் தெரிந்து வழி நடக்கும்படி நினை. கண் தெரியாமல் வழி எப்படி நடப்பது? கண் நோய்க்கு மருந்து உண்டு; மன நோய்க்கு மருந்து உண்டா? கண் படைத்தும் குழியில் விழலாமா? கண் பார்த்ததோ பாம்பு; கடித்ததோ கூழாங்கல். 5930 கண் பார்த்தால் கை செய்யும். கண் பார்த்துக் கையால் எழுதாதவன் கசடனாவான். கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலக மெல்லாம் சுற்றும். கண்மூடிப் பழக்கம் மண்மூடிப் போகும். கண்மூடுகிற வரையில் வாய்மூடாப் பட்டினி. கதவைச் சாத்தினால் நிலை புறம்பு. கதி கெட்ட நாய் அமாவாசை கும்பிடுகிறது. கதி கெட்ட மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம். கதிரவன் சிலரைக் காயேன் என்னுமோ? கதிரிலே ஒடிக்காதே என்றால் கணுவிலே ஒடித்துப் போடுகிறாயே. 5940 கதிருக்கு முந்நூறு நெல் இருந்தால் முழு வெள்ளாண்மை. கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு. கதிரைப் பார்க்கிறதா? குதிரைப் பார்க்கிறதா? கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது. கதிர் போல் இளைத்துக் குதிர்போல் பெருப்பது. கதிர் முகத்தில் என்ன ராசி முழக்கம் வேண்டும்? கதை அளிக்காததை கவிதை அளிக்காததைக் கண் அளிக்குமா? கதைக்குக் கண் இல்லை; காமத்திற்கு முறை இல்லை. கதைக்குக் கால் இல்லை; கண்ட புருசனுக்கு முறை இல்லை. கதைக்குக் கால் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை. 5950 கதைக்குக் கால் இல்லை; பேய்க்குப் பாதம் இல்லை. (புட்டம்) கதைக்குக் காலும் இல்லை; கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை. கதைக்குக் காலும் இல்லை; தலையும் இல்லை. கதைக்குத் தலை இல்லை; பேய்க்குக் கால் இல்லை. கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஒரு தோரணமாம். கதை கதைதான்; கணக்குக் கணக்குதான். கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி. கதையிலே செத்தவனுக்குக் கழுத்துத் தாலி அறுக்கவா? கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா? கத்தரிக்காய் என்றால் மாற்று; கருவாட்டுக் கறி என்றால் ஊற்று. 5960 கத்தரிக்காய் கரப்பான் அதுவும் இல்லாட்டிப் பறப்பான். கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மனைக் குற்றம் என்கிறாள். கத்தரிக்காய்ச் சொத்தை கடுகத்தனை. கத்தரிக்காய் தின்ன தின்ன ஆசை; பிள்ளை பெறபெற ஆசை. கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுரா? கத்தரிக்காய் வாங்கிக்கிட்டுப் பூசணிக்காய் கொசுராக் கேட்டாளாம். கத்தரிக்குக் காம்பு சுவை; வெள்ளரிக்கு விதை சுவை. கத்தரிக்காய் விரை சுரையாய் முளைக்காது. கத்தரிக்காய் விற்ற பெட்டி காசுப் பெட்டி; வெள்ளரிக் காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி. கத்தரிக் கொல்லையில் கூத்து வேடிக்கை பார்த்தது போல. 5970 கத்தரித் தோட்டக்காரனுக்குக் கண் தெரியாது; வெள்ளரித் தோட்டக் காரனுக்குக் காது கேளாது. கத்தரித் தோட்டத்துக் களை பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்; கன்றுக் குட்டிக்குப் புல் பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும். கத்தரி முற்றல்; வாழை வாடல். கத்தி இருக்கும் இடத்திற்கு மரை காவுகிறதா? (மரை - திருகு) கத்தி கூர் மழுங்கத் தீட்டுமளவில் அது இரட்டைக் கூர் பட்டது போல. கத்தி எட்டின மட்டும் வெட்டும்; பணம் பாதாளம் மட்டும் பாயும். கத்திக் கட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்சாதி. (பெண்டாட்டி) கத்திப் பிடிக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு ஆகட்டும். கத்தியும் வெண்ணெயும் காய்ச்சித் துவைத்துக் கடை. கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான். 5980 கத்தியைப் பார்க்கிலும் கனகோபம் கொலை செய்யும். கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது; பாடு பாடு என்றால் புலவனும் பாடான். (சொல்லு சொல்லு, சொல்லான்) கத்துகிற மட்டும் கத்திவிட்டு போகச்சே கதவைச் சாத்தி விட்டுப் போ. கந்தப் பொடிக் கடைக்காரனுக்குக் கடுகு வாசனை தெரியும். கந்தபுராணத்தில் இல்லாதது எதிலும் இல்லை. கந்தபுராணத்தில் இல்லாத புளுகு எந்தப் புராணத்திலும் இல்லை. கந்தலைக் கட்டிக்கிட்டுக் கரையோரம் போனாலும் கள்ளச்சி கள்ளச்சிதான். கந்தனுக்குப் புத்திக் கவட்டியிலே. கந்தன் புத்தி கவட்டையிலே. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி. 5990 கந்தை உடுத்துக் கடைவீதி போனாலும் கண்ணாட்டி கண்ணாட்டியே. கந்தைக்கு ஏற்ற பொந்தை; கழுவுக்கு ஏற்ற கோமுட்டி. (தகுந்த) கந்தைக்குச் சரடு ஓட்டுகிறது எல்லாம் பலம். கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும். கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும். கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி. கபடன் சொல்லினும் கடிய சொல்லே நலம். கபடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் உருப்படா. கபடு சூது கடுகாகிலும் தெரியாது. கப்பல் ஏறிப்பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமா? 6000 கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே. (உடைந் தாலும்) கப்பல் ஏறிவிட்ட காகம் கலங்குமா? கப்பல் ஓட்டி வாழ்வு காற்று அடித்தால் போச்சு. கப்பல் பாட்டு; காற்று வலுத்தால் தாட்டு. கப்பல் போம்; துறை கிடக்கும். கப்பல் போல வந்தது; கையிறுக்கம் இல்லை. கப்பல் விட்டுக் கெட்ட குடி கொட்டை நூற்றா வாழும். கப்பலில் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல். கப்பலில் பாதிப்பாக்கைப் போட்டுவிட்டுத் தேடுவது போல. கப்பலில் பெண் வருகிறது என்றானாம். அப்படியானால் எனக்கு ஒன்று; என் அப்பனுக்கு ஒன்று என்றானாம். 6010 கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி; கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி. கப்பி என்றால் வாயைத் திறக்கிறது; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதுமா? கமரில் ஊற்றின பால். கம்பத்தில் ஏறி ஆடினாலும் கீழ்வந்துதான் பிச்சை கேட்க வேண்டும். கம்பம் பிச்சையோ கடைப் பிச்சையோ? கம்பளி மூட்டையென்று கரடி மூட்டையை அவிழ்த் தானாம். கம்பளி மூட்டையை எடுக்கப்போய் கரடி கையில் அகப் பட்டானாம். கம்பளிப் புழு பயிர்த் தெம்பினை வாங்கும். கம்பளியிலே ஒட்டின கூழைப்போல. (பீப்) கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா? 6020 கம்பளியிலே பால ஊத்திக்கிட்டுக் கலயத்திலே காளானைப் போட்டுக்கிட்டுப் போனாளாம். கம்பன் வீட்டு அடுப்புக் கட்டியும் கவி பாடும். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும். கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவி பாடுவாள் (வெள்ளாட்டி வேலைக்காரி) கம்புக்குக் களைவெட்டப் போய்த் தம்பிக்குப் பெண் பார்த்து முடித்தாளாம். கம்புக்குக் களை வெட்டினாற் போலுமிருக்க வேண்டும்; தம்பிக்குப் பெண் பேசினாற் போலுமிருக்க வேண்டும். கம்புக்குக் கால் உழவு. கம்பும் காரும் கதிரிலே முடுகும். கம்பு கொண்டு வந்து நாயை அடிப்பதா? கம்பு கிடக்கும் இடத்துக்கு நாயைத் தூக்கிக் கொண்டு போவதா? கம்பு மாவு கும்பினால் களிக்கு ஆகுமா? 6030 கம்பு எடுத்தவனும் கத்தி எடுத்தவனும் அதாலேதான் சாவான். கம்மலிட்ட பயிரும் ஓமலிட்ட குடித்தனமும் முன்னுக்கு வராது. கம்மனாட்டிப் பிள்ளையாயிருந்தாலும் செய்யும் சடங்கு செய்யவேண்டும். கம்மனாட்டி வளர்த்த கழுவு மாதிரி. கம்மாளன் இருந்த இடமும் கழுதை இருந்த இடமும் சரி. கம்மாளன் எடுக்காத சிக்கலை வாணியன் எடுப்பான். கம்மாளன் துணிவாங்கினால் கால் மயிர் தெரிய வாங்குவான்; அதைச் சலவைக்குப் போடும்போது அடுப்பில போட்டாலும் வேகாது. கம்மாளன் நாய் சம்மட்டிச் சத்தத்துக்கு அஞ்சுமா? (தொனிக்கு) கம்மாளன் பசுவைக் காதறுத்துக் கொண்டாலும் உள்ளே செவ்வரக்குப் பாய்ச்சியிருப்பான். கம்மாளன் பசுவைக் காதறுத்து வாங்கினாலும் செவ்வரக்கு ஒட்டியிருக்கும். 6040 கம்மாளன் பணம் கரியும் பொரியுமாய்ப் போய்விட்டது. கம்மாளன் பல்லக்கு ஏறினால் கண்டவர்க்கு எல்லாம் இறங்க வேண்டும். கம்மாளன் பிணத்தைக் காதறுத்தாலும் இரத்தம் வராது. கம்மாளன் வீட்டிற் பிள்ளை பிறந்தால் விலைமகள் தெரு வில் சர்க்கரை வழங்குவாள். (தேவடியாள் வீட்டில்) கயிறு இல்லாப் பம்பரம் போல. கயிற்றைப் பாம்பென்று எண்ணிக் கலங்குகிறது போல. கரடி கையில் உதைப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம். கரடிக்குப் பயந்து ஆனையிடம் தஞ்சம் புகுந்தாற் போல. கரடிக்குப் பிடித்த இடமெல்லாம் மயிர். கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது. (இடம்) 6050 கரடியைக் கைவிட்டாலும் கரடி கையை விடவில்லை. கரடி புற்றிலே வாய் வைத்தாற்போல. கரடி பிறை கண்டது போல. கரடி வந்தால் எல்லோரும் என்மேல் விழுங்கள். கரட்டுக் காட்டுக்கு முரட்டுக் கலப்பை. (மண்வெட்டி) கரணகம் நீங்கின் கருமகமும் நீங்கும். (கரணகம் - காரணம், கருமகம் - காரியம்) கரணம் தப்பினால் மரணம். (கரணம் - திருமணம்) கரணைக்குக் கலக்கொத்து கொத்தினால் தருணத்தில் பலன் தரும். கரம் கொண்டவன் அறம் வழுவலாகாது. கரம் பற்றிய கன்னியைக் கதற அடிக்கக் கூடாது. 6060 கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது. கரம்பு உழுது கம்பு விதை. கரிக்காலி முகத்தில் விழித்தால் கஞ்சியும் கிடைக்காது. கரிக்குருவியார் கண்ணுக்குக் காக்கையார் பொன்னொத்துத் தோன்றும். கரிசல் நிலத்தில் காக்கும் ஈரம். கரிசல் காட்டு வெள்ளாமைக்குக் காலம் பூரா மானம் பார்ப்பு. கரிசனப் பட்ட மாமியார் மருமகனைப் பார்த்து ஏக்க முற்றாளாம். (மருமகளை) கரிசனமுற்ற சிற்றாத்தே நீ கம்பங் கொல்லையும் வாடி கட்டி அடி. கரிசனமுள்ள கட்டியம்மா கதவைத் திற பீ பெய்ய. கரிசனம் எல்லாம் கண்ணுக்குள்ளே; வஞ்சனை எல்லாம் நெஞ்சுக்குள்ளே. 6070 கரிசனம் கட்டிக் கொண்டு அழுகிறது; கண்ணாடிச் சுவர் முட்டிக் கொண்டு அழுகிறது. கரிசனம் கட்டி அழுகிறது கண்ணாடி மாளிகை புட்டுக்கிட்டு அழுவுது. (கட்டுச்சோறு) கரிச்சுக் கொட்டினாலும் எரிச்சல் வராதா? கரி விற்ற பணம் கரியாய் இருக்குமா? கரி விற்ற பணம் கறுப்பாகவா இருக்கும்? கரிவிற்ற காசு கறுப்பாய் இருக்குமா? (கரியாய்) கரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும். கரு இல்லாத வித்தையும் குரு இல்லாத சீடனும் போல். கருக்கலில் எழுந்தாலும் நறுக்கென்று சமைக்க மாட்டாள். கருக்கல் பொழுதை நம்பாதே; கலியாணச் சோற்றையும் நம்பாதே. 6080 கருக்கு உருக்கி நெய் வார்த்தாலும் கண்ட நியாயம்தான் சொல்லுவான். கருங்கடல் உப்பிற்கும் கருமலை நாரத்தைக்கும் சொந்தம் ஏற்படுவது போல். கருங்கண்ணிபட்டால் கரையான்; கண்ணாலும் திரும்பிப் பாரான். கருங்கல்லில் ஈரம் ஏறாத்தன்மை போல. கருங்கல்லில் நார் உரிப்பான். கருங்காலிக் கட்டைக்கு வாய்கோணாக் கோடாலி கதலித் தண்டுக்கு வாய் கோணிற்றாம். (நாணா) கருங்கொல்லன் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை. (கருமான்) கருடன் இடம்போனால் எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும். கருடன் பறக்க ஒரு கொசுகு பறந்தாற் போல. கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை. 6090 கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது. கருத்தப் பிள்ளைக்கு நகைபோட்டுக் கண்ணால் பாரு; சிவத்தப் பிள்ளைக்கு நகை போட்டுச் செருப்பாலடி. கருப்பங் கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போச்சுதாம். கருப்பங்கட்டியிலும் கல் இருக்கும். கருப்பங் கொல்லையிலே நெருப்புப் பொறி விழுந்தாற் போல. கருப்பிலே பிள்ளை விற்றாற் போல. (கருப்பு - பஞ்சம்) கருப்புக்கு இருந்து பிழை; கலகத்துக்கு ஓடிப் பிழை. கருப்பட்டி என்றவன் வாயைச் சளுப்பட்டி என்று நக்கு கிறதா? (நக்கக் கூடாது) கருப்பட்டியைக் கொடுத்துக் கட்டிக் கொண்டு அழுதாலும் கசக்குது என்று சொல்கிறான். கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு. 6100 கருமத்தில் வந்தது தருமத்தில் போகும். கருமத்தை முடிப்பவன் அருமை ஒன்றும் பாரான். கருமத்தை முடிக்கிறவன் கடலை ஆராய்வான். கருமம் ஆகிறவரை கழுதையையுங் காலைப் பிடிக்க வேண்டும். கருமம் முடியும் வரைக் காலில் விழுந்துக் கும்பிட்டுக் கருமம் முடிந்தபின் காலை வாரி அடித்தாற் போல. கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். கரும்பிலும் தேள் இருக்கும்; கள்ளியிலும் பால் இருக்கும். கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்தாற் போல. கரும்பு இனிக்கிறதென்று வேரோடு தின்னலாமா? (பிடுங் கலாமா) 6120 கரும்பு உள்ளபோதே ஆலை ஆட்டிக் கொள். கரும்பு கசந்தால் வாய்க் குற்றம். கரும்பு கசந்தால் வாயில்தான் கோளாறு. கரும்பு கசந்தால் வாய்க்குப் பொல்லாப்பு. கரும்பு கட்டோடே இருந்தால் எறும்பு தானே வரும். (தன்னாலே) கரும்பு கெட்டால் துரும்புக்கும் கடை. கரும்பு கோணலானால் கட்டியும் பாகுமாம்; மனது கோண லானால் என்ன செய்யலாம்? கரும்பு கோணியிருந்தாலும் தித்திக்கும். கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கரும்புச் சுவை கழுதைக்குத் தெரியுமா? கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சின பாலுக்குச் சர்க்கரை ஆகுமா? 6130 கரும்புக்குக் கணு இருந்தாலும் கசக்குமா? கரும்புக்குப் பழமும் கற்றவருக்குப் பணமும் பொன்னுக்கு மணமும் இல்லை. கரும்பு தின்னக் கூலியா? கரும்பு தீவியதென்று வேர்முட்டத் தின்னக் கூடாது. கரும்பு கசந்தது காலத்தோடே; வேம்பு தித்தித்தது வேளை யோடே. கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன். கரும்பும் வேம்பாகும் காதல் போதையிலே. கரும்பைக் கழுதை முன்போட்டால் அதற்குத் தெரியுமோ கரும்புச் சுவை. கரும்பைக் கெடுக்கும் கறையான் பூச்சி. கரும்பைக் கையில் பிடித்தவன் எல்லாம் மன்மதன் ஆகி விடுவானா? 6140 கரும்பை விரும்ப விரும்ப வேம்பு. கருவாடு களவு கொடுத்த பாப்பாத்தி போல. கருவாட்டுக் கூடையை நாய் காக்கும். கருவி இல்லாமற் கருமம் செய்ததுபோல. கருவிலே திருவுடையார். கருவேலஞ் சாந்து மூலத்துக்குச் சாந்தி. கருவேல மரத்திற்கு நிழல் இல்லை; கன்னானுக்கு முறை இல்லை. கருவை உரு அறியான்; கண்டாரைப் பேரறியான். கரை இழந்த இடம் பார்த்துத்தான் (ஆறு) உடையும். கரைக்கிற மாவை விட்டு விட்டு அரைக்கிற மாவைத் தேடிய கதையா. 6150 கரைக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு கரைப்பான்; குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு குடிப்பான். கரைப் பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல் லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்டபாடு போல. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். கரைவழியை அண்டினால் காகமும் பொன்நிறம். கர்த்தாவைக் குருடன் கண்தான் வேண்டுவான். கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும். கல உமி தின்றால் ஓர் அரிசி தட்டாதா? கலகத்திலே புளுகாதவர் இல்லை. கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா? கலகமே மெய்யானால் புளுகாதவன் பாவம். 6160 கலகம் கலந்தால் உலகம் கலங்கும். கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். கலக்கத்தில் கலக்கம் கடன் கொண்டார் நெஞ்சக் கலக்கம். கலக்கந்தை கட்டிக்கொண்டு காணப் போனாளாம்; இரு கலக் கந்தை கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம். கலக்கம் இல்லா நெஞ்சுக்கு இனக்காப்பு என்ன? கலக்கம்பு தின்றாலும் காடை காட்டிலே. கலக்கம்பு போட்டு வளர்த்தாலும் காடை காட்டிலே. (காட்டையே பார்க்கும்) கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்; அடர விதைத் தால் போர் உயரும். கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது. கலக்கிக் கடலைச் சேறாக்கிவிட முடியுமா? 6170 கலத்தைக் கெடுத்ததாம் குறுணி. கலத்தில் இட்டாயோ? வயிற்றில் இட்டாயோ? கலத்தில் சோறு போட்டதும் காசிக்குப் போனவனும் வருவான். கலத்திலே சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற் போல. கலத்துக்குத் தெரியுமா கற்பூர வாசனை? கல நெல்லுக்குக் கல உமி இருக்குமா? கலந்த விதை சிறந்த பயனைத் தரும். கலப் பணத்தைப் பார்க்கிலும் ஒரு கிழப் பிணம் நல்லது. கலப்பணம் இருந்தாலும் ஒரு கிழப்பிணம் இருக்க வேண்டும். கலப்பதரைக் குத்தினாலும் அரிசி ஆகாது. 6180 கலப் பயறு விதைத்து உழக்குப் பயிர் விளைந்தாலும் புதுப் பயறு புதுப்பயறுதான். கலப்பாலில் துளி நஞ்சு கலந்தாற் போல. கலப்பாலுக்குத் துளிப் பிரை. கலப்பாலை ஒருமிக்கக் குடித்த பூனையை உழக்காகிலும் கறக்கச் சொன்னால் கறக்குமா? கலப்பாலையும் சோற்றையும் காலால் உதைத்துப்போட்டு விலை மோருக்கும் கூழுக்கும் வெளியே தவிக்கிறதா? (வீதி வீதியாய் அலைந்தானாம்) கலப்பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா? கலப்பால் கறந்தால் கன்று முதலாகுமா? கலப்பால் கறக்கலாம்; துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா? கலப்பால் குடித்த பூனை ஓர் உழக்காகிலும் கறக்கத் தருமா? கலப்பால் குடித்த பூனை கஞ்சித் தண்ணீர் குடிக்குமா? 6190 கலப்பால்கூடி ஒரு கன்று ஆகுமா? கலப்பானாலும் பூசப் பூசப் பொன்னிறம். கலப் புல் தின்றாலும் காடை காட்டுக்குள்ளே. கலமா இடித்தவள் பாவி; கப்பி இடித்தவள் புண்ணிய வதியா? கலம் இல்லாது கடல் கடத்தல். கலம் கலக்காத உறவு பாழ். கலம் கலந்தால் குலம் கலக்கும். கலம் கிடக்கிறது கழுவாமல்; கல நெல் கிடக்கிறது குத்தாமல். கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது. கலம் குத்துகிறவள் காமாட்டி; கப்பி குத்துகிறவள் சீமாட்டி. 6200 கலம்பகத்திற்கு இரட்டையர். கலம் போனதும் அல்லாமல் கண்ணுக்கும் மூக்குக்கும் வந்தது கேடு. கலிக்குப் புதுமையான காரிய மிருக்கிறது. கலியன் பாற்சோறு கண்டது போல. கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தாற்போல. (கல்யாணம்) கலியாணத்துக்கு உதவாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆடுகிறது. கலியாணத்துக்குச் சொன்ன பொய் காடு வரை போகாது. கலியாணத்திலும் பஞ்சம் இல்லை; களத்திலும் பஞ்சம் இல்லை. கலியாணத்திற்கு வந்த பெண்டுகளிடத்தில் போனால் போவேன்; இல்லா விட்டால் கல்லிலே வைத்து நறுக்குவேன். கலியாணத்திற்கு வந்தவர்கள் பந்தக்காலைப் பிடித்து வேடிக்கை பார்த்தனர். 6210 கலியாணப் பந்தலிலே கட்டின ஆடுபோல. கலியாணப் பிரியத்தில் வண்ணானை மச்சான் என்று கூப்பிட்டாளாம். கலியாணத்தைப் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார். கலியாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை; கலியாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலை. கலியாணம் எங்கே? காசுப் பையிலே. கலியாணம் கழிந்தால் கைச்சிமிழ் கிட்டாது. (கல்யாணம்) கலியாணம் செய்கிறதும் கதவைச் சாத்துகிறதும். கலியாணம் செய்தும் சந்நியாசியா? கலியாணம் பண்ணின வீட்டில் ஆறு மாசம் கருப்பு. கலியாணம் பண்ணும் வரையில் பிள்ளை; கண்ணை மூடும் வரையில் பெண். 6220 கலியாண வீட்டிலே கட்டி அழுகிறவள் இழவு வீட்டில் விட்டுக் கொடுப்பாளா? (கேட்க வேண்டுமா?) கலியாண வீட்டிலே பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டிலே சும்மா இருப்பாளா? கலியாண வீட்டிலே பிள்ளை வளர்த்தாற் போல. கலியாண வீட்டிற்குப் போய் அறியான்; மேளச் சத்தமும் கேட்டறியான். கலியாண வீட்டுக் கறி அகப்பை சாவு வீட்டுச் சோற்று அகப்பை. கலையும் மப்பைக் கண்டு கட்டியிருந்த விதையை வட்டிக்கு விட்டானாம். கலையும் மப்பை நம்பிக் கரைத்த மாவை வட்டிக்கு விட்டது போல. கல் கிணற்றுக்கு ஏற்ற இரும்புத் தோண்டி. கல் தேயும் சொல் தேயாது. கல் பிறவாதே காடே உழு. 6230 கல் மழை பெய்தாலும் கருங்கல் கரையுமா? கல்லைப் போல் கணவனிருக்கக் கஞ்சிக்கு அழுவானேன். கல் மேல் எழுத்துக் கலையுமோ? கல்யாணம் என்றால் கிள்ளுக் கீரையா? கல்யாணம் பண்ணவில்லையென்று களிப்பு; ஊர்வலம் வரவில்லையென்று உளப்பு. கல்யாணம் பண்ணாமல் பைத்தியம் தீராது; பைத்தியம் தீராமல் கல்யாணம் ஆகாது. கல்யாணம் போவதும் கட்டி அழுவதும் வட்டியில்லாக் கடன். கல்யாணம் முடிந்த பிறகு பந்தலில் வேலை என்ன? கல்யாணமும் வேண்டாம்; கல்லெடுப்பும் வேண்டாம். கல்யாண வீட்டில் கால் நீட்டி அழுவது போல. 6240 கல்யாணி என்கிற பெண்ணுக்குக் கல்யாணமும் வேண்டுமோ? கல்லடிச் சித்தன் போனவழி காடு வீடு எல்லாம் தவிடுபொடி. கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது. கல்லானாலும் தடி ஆனாலும் பல் போகிறது ஒன்று கல்லன் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு. கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே. (மல்லாடாதே) (கற்றாரிடம்) கல்லாதவர் கண் இல்லாதவர். கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம். கல்லாத பேர்களே நல்லவர்கள். கல்லாமல் குல வித்தை பாதி வரும். 6250 கல்லார் உறவகல்; காமக்கடல் கட. கல்லார் உறவிலும் கற்றார் பகை நலம். கல்லாலே கட்டிச் சாந்தாலே பூசியிருக்கிறதா? கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன். கல்லார்க்கு இரண்டு கண்; கற்றார்க்கு மூன்று கண். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன். கல்லில் உள்ளது என்ன? கையில் எடுத்தவன் கலையில் உள்ளது. கல்லில் நார் உறிப்பவன். கல்லிலும் வன்மை கனமூடர் நெஞ்சு. கல்லிலே நார் உரித்துக்கடுகில் கடல் அடைப்பான். 6260 கல்லிலே வெட்டி நாட்டினாற் போல. கல்லில் பூப்பூக்க காத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். கல்லு உள்ளதே கிணறு; கரை உள்ளதே தோட்டம். கல்லுக்குள் தேரையைக் காப்பாற்ற வில்லையா? கல்லுக்குள் இருக்கிற தேரையையும், முட்டைக்குள் இருக்கிற பறவைக் குஞ்சையும் ஊட்டி வளர்க்கிறது யார்? கல்லுப் பிள்ளையாரைக் கடித்தால் பல்லுப்போம். (ஊம்பினால்) கல்லுப் பிறளாத காடே உழு; சொல்லுப் பிறளாதவனிடமே பேசு. கல்லும் தேங்காயும் சந்தித்தது போலப் பேசுகிறான். கல்லு வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும். கல்லெறி தப்பினாலும் கண்ணெறி தப்பாது. 6270 கல்லை ஆகிலும் கரைக்கலாம்; கல் மனத்தைக் கரைக் கலாகாது. கல்லை இடறினாலும் கணக்கனை இடறாதே. கல்லை உந்திக் கடல் கடத்தல். கல்லை எதிர்த்தாலும் கணக்கனை எதிர்க்காதே. கல்லைக் கட்டிக் கொண்டு பாழுங்கிணற்றில் விழுவார்களா? கல்லைக் கட்டி முத்தம் கொடுத்தாற் போல. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கரைக்கலாம்; மனதைக் கரைக்கலாமா? கல்லைக் கிள்ளினால் கை நோகும். கல்லைக் குத்துவானேன்? கை நோகுதென்று அழுவானேன்? 6280 கல்லைப்போலக் கணவனிருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்? கல்லைப் பிளக்கக் காணத்தை விதை. (பிளந்து) கல்லெடுத்தால் நாய் ஓடும்; கம்பு எடுத்தாலும் பேய் ஓடும். கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆமோ? கல்லெறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்ப முடியாது? (அடிக்கு) கல்லோடு முரணினாலும் கணக்கனோடு முரணாதே. கல்வி அழகே அழகு. கல்வியில்லாச் செல்வமும் கற்பில்லா அழகும் கடுகளவேனும் பிரகாசிக்காது. கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு. கல்வி இல்லாத அனுபவம் அனுபவம் இல்லாத கல்வியை விட மேல். 6290 கல்வியிற் பெரியன் கம்பன். கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும். கல்வி ஒன்றே அழியாச் செல்வம். கல்விக் கழகு கசடற மொழிதல். கல்விக்காரப் பெண்ணாள் களைவெட்டப் போனாள்; களை கொட்டு இல்லையென்று மெனக்கெட்டுப் போச்சு. கல்வி கரையிலே; கற்பவர் நாள் சில. கல்வி கற்கிறதைவிடக் கருத்தை ஆராய்கிறது நன்மை. கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறது. கல்விக்கு இருவர்; களவுக்கு ஒருவர். கல் வீட்டில் இருக்கும் கடனும் தெரியாதாம்; கருப்புப் புடவையில் இருக்கும் அழுக்கும் தெரியாதாம். 6300 கல் வீட்டுக்காரி திருநாள் கமுக்கம்; குச்சு வீட்டுக்காரி திருநாள் கூக்குரல். கல் வீட்டுக்காரி போனால் கமுக்கம்; குச்சு வீட்டுக்காரி போனால் கூச்சல். கவடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிறும் கடைத்தேறா. கவணெறி நெறியில் நில்லாதே; கண்டவன் தலையை உடைக்கும். கவலை உடையாருக்குக் கண் உறக்கம் வராது. கவலை கறியைத் தின்னும். கவி கொண்டாருக்குக் கீர்த்தி; அதைச் செவிக் கொள் ளாருக்கு அவகீர்த்தி. கவி கொண்டாருக்கும் கீர்த்தி; கலைப்பாருக்கும் கீர்த்தியா? கவிழ்ந்த பால் கலம் ஏறாது (கலயம்) கவுண்டனுக்கு எருது போயிற்று என வருத்தம்; சக்கிலி யனுக்குக் கொழுப்பில்லையே என்று வருத்தம். 6310 கவுண்டன் கம்பளியில் பால் ஊற்றிக் கலயத்தில் காளானைப் பிடுங்கிப் போட்டதுபோல. கவுளி சொல்லுகிற பல்லி எச்சில் தாழியில் விழுந்தாற் போல. கவைக்குத் தகாத காரியம் சபைக்குத் தகுமா? கவையில் அடிபட்டவனுக்கு இரண்டு அடி. கழனிக்கு அண்டை வெட்டிப்பார்; கண்ணுக்கு மை இட்டுப்பார். கழனியில் புரண்ட கழுதைக்கு அதுவே கைலாசம். கழிச்சலும் விக்கலும் சேர்ந்தால் நம்பப்படாது. கழு ஏறத் துணிந்த நீலி கையில் மை இட்டதற்குக் கரிக்கிறது என்றாளாம். கழுகுக்கு மூக்கில் வேர்த்தாற் போல. கழுதை அறியுமா கற்பூர வாசனை? (கந்தப் பொடி) 6320 கழுதை உழுது கம்பு விளையுமா? கண்டியான் உழுது நெல் விளையுமா? கழுதை என்றைக்கு உழுவுக்கு வருவது வண்ணான் எப்போது சம்சாரியாகிறது? கழுதை கடித்தது மல்லாமல் காலையும் மிதித்ததாம். கழுதை கலம் சுமந்தாலும் கால் காசு மதிப்பில்லை. கழுதைக் காமம் கத்தினால் தீரும்; நாய்க் காமம் அலைந்தால் தீரும். கழுதை குதிரை யாகுமா? கழுதை கெட்டால் குட்டிச்சுவர். கழுதைக்கு உபதேசம் காதிலே ஓதினாலும் காள், காள் என்ற புத்தியை விடாது. கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரலன்றி அங்கொன்றும் இல்லை. கழுதைக்கு ஏன் கடிவாளம்? 6330 கழுதைக்குக் கட்டமண்ணே கண்ணாடி மாளிகை. கழுதைக்குக் கலப்பணம் கொடுத்தாலும் காள் என்ற புத்தி போகாது. கழுதைக்குச் சேணம் கட்டினால் குதிரை ஆகுமா? கழுதைக்குத் தெரியுமா கரும்புச் சுவை? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? கழுதைக்குப் பின்னால் போகாதே; எசமானனுக்கு முன்னே போகாதே. கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சினால் தீருமா? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல். கழுதை நோக்கம் வண்ணானுக்குத் தெரியாதா? கழுதை புரண்டால் காடு கொள்ளாது. 6340 கழுதை பொட்டையாயிருந்தாலும் சகுனத்தடைக்குக் குறைச்சல் இல்லை. கழுதைப் பாரம் வண்ணானுக்கு என்ன தெரியும்? கழுதைப் புட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும். (விட்டை) கழுதைப் புண்ணுக்குத் தெருப் புழுதிதான் மருந்து. கழுதைப் பொதியில் ஐங்கல மாறாட்டமா? கழுதை பேய்ந்தா கண்மாய் நிறையப் போகுது? கழுதை மயிர் பிடுங்கி தேசம் கட்டி ஆள்கிறதா? கழுதை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்க் கிறதா? கழுதை மேல் ஏறியும் பெருமை இல்லை; இறங்கியும் சிறுமையும் இல்லை. கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டாற் போல (சூத்திலே) 6350 கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சிபுரத்தில் பிறக்க வேண்டும். கழுதையென்று தெரியாமல் ஏன் வாலைப் பிடிக்க வேண்டும்? அது காலை உதறி கொட்டையை ஏன் வீங்கடிக்க வேண்டும்? கழுதை வாயைப் பார்த்து நெல்லைக் கோட்டை விட்டாற் போல. கழுதை விட்டை கைநிறைய கழுத்தறுக்கக் கத்தி கையிற் கொடுத்தாற் போல. கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம்; கையிலே இருக்கிறது கொடிய நகம். கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம்; மடியில் இருப்பது கன்னக்கோல். கழுத்திலே கரிமணி; பெயர் முத்து மாலை. கழுத்திலே குத்துகிறது கண் கெட்டவனுக்குத் தெரியாதா? கழுத்திலே தாலி ஏறினால் நாய் மாதிரி வீட்டில் கிடக்க வேண்டியதுதானே? 6360 கழுத்திலே தாழிவடம்; மனத்திலே கரவடம். கழுத்துக்குக் கீழே போனால் கட்டம் கழுத்துக்கு மேல் கத்தி வந்திருக்கச்சே செய்ய வேண்டிய தென்ன? கழுத்துக்கு மேல் சாண்போனால் என்ன? முழம் போனால் என்ன? கழுத்துப்பிடி கொடுத்தாலும் எழுத்துப்பிடி கொடுக்கக் கூடாது. கழுத்து மாப்பிள்ளைக்குப் பயப்படா விட்டாலும் வயிற்றுப் பிள்ளைக்குப் பயப்பட வேண்டும். கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா? கழுநீர்ப் பானையில் விழுந்த பல்லியைப் போல. கழுவிக் கழுவி ஊற்றினாலும் கவிச்ச நாற்றம் போகாது. கழுவிக் கழுவி ஊற்றினாலும் கருவாட்டு வாசம் போகாது. 6370 கழுவிய காலைச் சேற்றில் வைப்பதா? கழுவிக் குளித்தாலும் காக்கை நிறம் மாறாது; உருவிக் குளித்தாலும் ஊத்தை நாற்றம் போ கழுவில் இருந்து கை காட்டுவான். கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன். கழைக் கூத்து ஆடினாலும் காசுக்குக் கீழேதான் வர வேண்டும். கழை மேல் ஏறி ஆடினாலும் கீழே வந்துதான் பிச்சை கேட்க வேண்டும். களங்காய் இருண்டிருப்பதும் விளங்காய் திரண்டிருப்பதும் இயற்கை. களம் காக்கிறவளை மிரட்டுவானாம் போர் பிடுங்குகிறவன். களர் உழுது கடலை விதை. களர் கெடப் பிரண்டை இடு. 6380 களர் நிலத்திலே கரும்பு வை களர் நிலத்திலே சம்பா விளையுமோ? களர் நிலத்தை நம்பி உழாதே; கடும் படையில் போகாதே. களர் முறிக்க வேப்பந் தழை. களரை ஒழிக்கக் காணம் விதை. களரை நம்பிக் கெட்டவனும் இல்லை; மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. களவாடின மாடு சந்தை ஏறு களவாண்டுப் பிழைப்பதிலும் கச்சட்டம் கழுவிப் பிழைக்கலாம். களவாளிப் பயலுக்குக் காடுபோன இடமெல்லாம் ஊர். களவு ஆயிரம் ஆனாலும் கழு ஒன்று. 6390 களவுக்கு ஒருவர்; கல்விக்கு இருவர். களவு கற்றாலும் தன்னைக் காக்க வேண்டும். களவு கொண்டு ஆபரணம் பூண்டாற் போல. களவும் கற்றுமற. களிக்குக் காரணம் பாய்கிறது. கீரைக்கு லகடு பாய்கிறது. களிறுவாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா? களிறு பிளிறினால் கரும்பைக் கொடு. களை எடாதவன் விளைவு எடான். களை எடாப் பயிரும் கவடுள்ள நெஞ்சும் கடைத்தேறா? களை எடுத்தால் முறை எடுக்கும். 6400 களைகள் படரும் காற்றிலும் புள்ளினும். களைகளை முளையிற் களையாவிடின் பயிர் விளைந்து பயன்தரா. களை பிடுங்காப் பயிர் காற்பயிர். (எடாப்) களை கிளைத்தால் போச்சு; பயிர் கிளைத்தால் ஆச்சு. களைத்தவன் கம்பைத் தின்ன வேண்டும். களையக் கூடாததைக் கண்டால் அடிபெயர்ந்து அப்புறம் போ. களையைக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக்கொள். களையைப் போக்கல் விளைவைத் தரும். களையை முளையிலே கிள்ளு. கள் அண்ணன்; காப்பி தம்பி. 6410 கள் குடித்தவன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு. கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்; பால் குடித்தவனுக்குப் பால் ஏப்பம். கள் விற்ற காற்காசிலும் அமிர்தம் விற்ற அரைக்காசு நேர்த்தி. கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல். கள்ள நெஞ்சம் துள்ளிக் குதிக்கும். கள்ள நெஞ்சு காடு கொள்ளாது. கள்ளப் பிள்ளையிலும் செல்லப்பிள்ளை உண்டா? கள்ளப் பிள்ளையும் செல்லப்பிள்ளையும் ஒன்றா? கள்ளப் புருசனை நம்பிக் கணவனைக் கைவிடலாமா? கள்ள மனம் துள்ளும். 6420 கள்ள மாடு சந்தை ஏறாது. கள்ள மாடு துள்ளும். கள்ள மாப்பிள்ளைக்குக் கண்ணீர் முந்தும். கள்ளம் பெரிதோ? காப்புப் பெரிதோ? கள்ளம் போனால் உள்ளது காணும். கள்ள வாசலைக் காப்பானைப் போல. கள்ள விசுவாசம் கழுத்தெல்லாம் செபமாலை. கள்ளனுக்கு அமாவாசை கற்கண்டு மாதிரி. கள்ளனுக்கு ஊர் எல்லாம் பகை. கள்ளனுக்குக் களவிலே சாவு. 6430 கள்ளனுக்குக் களவிலே சாவு; பரமசாதுவுக்குப் பாம்பினால் சாவு. கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை. கள்ளனுக்குக் கூவென்றவன் பேரிலே பழி. கள்ளனுக்குத் தெரியும் களவு முறை. கள்ளனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி. கள்ளனுக்குப் பாதி, கறிக்குப் பாதி. கள்ளனுக்கும் பாதி; வெள்ளனுக்கும் பாதி. கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தது போல. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம். கள்ளனும் வெள்ளனும் ஒன்று. 6440 கள்ளனை ஆரும் நள்ளார் என்றும். கள்ளனை உள்ளே வைத்துக் கதவைச் சாத்தினாற் போல. கள்ளனைக் காட்டிக் கொடுத்தவன் பகை. கள்ளனைக் காவல் வைத்தது போல. கள்ளனைக் குள்ளன் பிடித்தான். (பாய்ந்தானாம்) கள்ளனைக் கொண்டுதான் கள்ளனைப் பிடிக்க வேண்டும். கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது (நம்பலா காது.) கள்ளனையும் தண்ணீரையும் கட்டிவிட வேண்டும். கள்ளனையும் புகையிலையையும் கட்டித்தீர். கள்ளனையும் புகையிலையையும் கண்ட போதே கட்ட வேண்டும். 6450 கள்ளனையும் வெள்ளனையும் கட்டி விடு. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது. கள்ளன் ஆனால் கட்டு; வெள்ளன் ஆனால் வெட்டு. கள்ளன் உறவு உறவுமல்ல; காசா விறகு விறகும் அல்ல. கள்ளன் உறவு காமாடு தலைமாடு. கள்ளன் உறவுக்குப் பள்ளன் உறவுமேல் கள்ளன் கள்ளோட; பாம்பாட்டி பாம்போட. கள்ளன் கொண்ட மாடு எத்துறை போய் என்ன? கள்ளன் கூத்து கறி கூத்து. கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காமல் கடுக்கனைக் கழற்றிக் கொண்டான். 6460 கள்ளன் பிள்ளைக்கும் கள்ளப்புத்தி. கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின் போகக் கூடாது. கள்ளன் புத்தி திருட்டு மேலே. கள்ளன் புத்தி கன்னக் கோலிலே. கள்ளன் பெண்சாதி கைம்பெண்டாட்டி. கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? (பெரிதா?) கள்ளன் போன மூன்றாம் நாள் கதவு ஏழ் குட்டிக்கரணம் அடித்ததாம். கள்ளன் போன மூன்றாம் நாள் கதவை இழுத்துச் சாத்தினான். கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியான். (அகமுடையான்) கள்ளன் மறவன் கனத்தால் அகம்படியான் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளன் ஆவான். 6470 கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறிகேட்கலாமா? கள்ளன் மனைவி கைம்பெண் என்றும். கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை. கள்ளிகள் எல்லாம் வெள்ளிகள் ஆவார் காசு பணத்தாலே; வெள்ளிகள் எல்லாம் கள்ளிகள் ஆவார் விதியின் வசத்தாலே. கள்ளிக்கு ஏன் முள்வேலி? கழுதைக்கு ஏன் கடிவாளம்? கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; அவள் கணவனுக்கு கை முந்தும். கள்ளிக்கு கண்ணீர்முந்தும்; கொள்ளிக்கு வாய் முந்தும். கள்ளிக்குக் கலநீர் கண்ணிலே. கள்ளிக்குத் தண்ணீர் கண்ணிலே, நீலிக்குத் தண்ணீர் நிமையிலே (இமையில) கள்ளிக்கு நாடு எல்லாம் காடு. 6480 கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்? கள்ளிக்கு மகா விருட்சம் என்று பெயர் வைத்தது போல. கள்ளிக்கு முள்வேலியும் கழுதைக்குக் கடிவாளமும் வீண். கள்ளிக்கு வேலி ஏன்? சுள்ளிக்குக் கோடாலி ஏன்? கள்ளிக்கும் கற்றாழைக்கும் களைவெட்டுவதா? கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினாளாம். கள்ளி துள்ளி அரிவாள் மனையில் விழுந்தாளாம். கள்ளி நிழலாமா? கண்ட பேர் தாய் ஆவாரா? கள்ளி நீள வளர்ந்தாலும் காயுமில்லை; பூவுமில்லை. கள்ளி பெருத்தென்ன? காய் ஏது? பழம் ஏது? 6490 கள்ளியிலும் சோறு; கற்றாழையிலும் சோறு. கள்ளி வேலியே வேலி; கரிசல் நிலமே நிலம். கள்ளு குடித்தவன் கொள்ளு பொறுக்கான். கள்ளு குடித்தவனுக்கு வாய் என்றும் சூத்தென்றும் தெரியாது? கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் கூத்திக் கள்ளனும் இருப்பான். கள்ளும் சூதும் இருக்கிற இடத்தில் விலைமகளும் கள்ளனும் கண்டிப்பாய் இருப்பார்கள். கள்ளை ஊற்றி உள்ளதைக் கேள். கள்ளைக் குடித்தவன் உள்ளதைக் கக்குவான். கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான். கள்ளைக் குடித்தவன் கண்ணைப்பார்; இரண்டு பெண் டாட்டிக்காரன் சிண்டைப்பார். 6500 கள்ளைக் கொடுத்து காரியத்தை அறி. கள்ளை விட்டுக் காட்டுத்தேனைக் குடித்தது போல. கறக்கக் கறக்க ஊறும் ஆவின்பால்; கற்க ஊறும் மெய்ஞ் ஞானம். கறக்கிறது உழக்குப் பால்; உதைக்கிறது பல்லுப் போக. கறக்கிற பசுவை விற்று ஊம்பக்கிடா வாங்கினானாம். கறக்கிற பசுவையும் கைக் குழந்தையையும் கண்ணாகப் பார்க்க வேண்டும். கறக்கிற மாட்டைக் கள்ளன் கொண்டு போனால் வறட்டு மாடு மகாலட்சுமி ஆகும். கறந்த பாலும் எச்சில்; பிறந்த பிள்ளையும் எச்சில். கறந்த பாலைக் காக்கையும் தொடாது. கறந்த பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காசநோய் தானே வரும். 6510 கறந்த பால் முலைக்கு ஏறுமா? (காம்புக்குள்) கறந்த பால் மடிக்கு ஏறுமா? கெட்டபால் நன்பால் ஆகுமா? கறவை உள்ளான் விருந்துக்கு அஞ்சான். கறவை மாடு கண்ணுக்குச் சமானம். கறிக்கு அலைந்தவன் பீர்க்கு போடு. கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கவோ! கறிக்கு இல்லாத வாழைக்காயைப் பந்தலில் தோரணம் கட்டினானாம். கறிக்குக் கலநெய் வார்த்தாலும் கணக்கோடே வார்க்க வேண்டும். கறி மீனுக்காகக் குளத்தை வெட்டி விடுவதா? கறியிலே உயர்த்தி கத்தரிக்காய்; உறவிலே உயர்த்தி சின்னாயி. 6520 கறியிலே கத்தரிக்காய்; உறவிலே சிற்றம்மை. கறி விற்ற சோற்றிலே கத்திக்குவாங்க; மோர்விற்ற சோற்றிலே முத்திக்குவாங்க. கறிவேப்பிலை கன்று போல். கறிவேப்பிலைக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம் கறிவேப்பிலை என்பாள். கறுத்தது எல்லாம் தண்ணீர்; வெளுத்தது எல்லாம் பால் என்கிறான். கறுத்த பார்ப்பானையும் வெளுத்த பறையனையும் நம்பாதே. கறுப்புக்கு நகையைப் பூட்டிக் கண்ணாலே பார். கறுப்புக்கு நகை போட்டுக் காதவழி நின்று பார்; சிவப்புக்கு நகைபோட்டுச் செருப்பால் அடி. கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா? கறுப்பும் வெள்ளையும் கண்ணுக்குத் தெரியாவா? 6530 கறுப்பு மாடு கால் மாடு. கறுப்பு வெளுப்பு ஆகாது; கசப்பு இனிப்பு ஆகாது. கறுப்பே ஓர் அழகு; காந்தலே ஒரு சுவை (ருசி) கறையான் புற்றில் அரவம் குடிகொண்டதுபோல். கறையான் புற்று எடுக்க கருநாகம் குடிபுகுந்த கதையாய். கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது. கற்க கசடறக் கற்க. கற்கக் கற்கக் கள்ளாமை தெரியும். கற்கண்டால் செய்த எட்டிக் கனியும் கசக்குமோ? (காயும்) கற்கண்டுக் கள்ளன் கசாயம் தான் குடிப்பானாம். 6540 கற்கிள்ளி கை உய்ந்தார் இல்லை. கற்கையில் கல்வி கசப்பு; கற்றபின் அதுவே இனிப்பு. கற்பகத் தருவைச் சார்ந்த காகம் அமுதம் உண்ணும். கற்பகத்தைச் சார்ந்தும் காஞ்சிரங்காய் கேட்கலாமா?. கற்பனை கல்லைப் பிளக்கும். கற்பித்தவனுக்கு காக்க வல்லமை இல்லையா? கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன். கற்பில்லாத அழகு வாசனை இல்லாத பூ. கற்பில்லாதவளைக் கழுதை கூட மதியாது. கற்புடைய பெண் அமுதம் போன்றவள். 6550 கற்புடைய மனைவிக்குக் கணவனே தெய்வம். கற்பூரம் சாப்பிட்ட வாய்க்கு உப்பில்லாக் கொழுக்கட்டை எப்படி இருக்கும்? கற்பொழில் மடவார் கணவனை அகலார். கற்பெனப் படுவது சொல்திறம்பாமை. (தவறாமை) கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது? கற்றது அறிந்தார் கண்டது அடக்கம். கற்றது எல்லாம் வித்தை அல்ல; பெற்றது எல்லாம் பிள்ளை அல்ல; நட்டது எல்லாம் பயிர் அல்ல. கற்றது கடுகளவு; கல்லாதது கடல் அளவு. கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு. கற்றது கையளவு; கல்லாதது உலகளவு. 6560 கற்றது சொல்லான் மற்று என்ன செய்வான்? கற்றது அறிந்தார் கண்டது அடக்கம். கற்றதைக் காய்ச்சியோ குடிக்கப் போகிறாய்? கற்பூரம் சாப்பிட்ட வாய்க்கு உப்பில்லாக் கொழுக்கட்டை என்னான்னு இருக்கும்? கற்றலில் கேட்டலே நன்று. கற்றவரது கோவம் நீரின் பிளவுபோல் மாறும். கற்றவர் கொள்ளும் கோவம் கணநேரமும் நிலைக்காது. கற்றவனிடத்திலா வித்தையைக் காட்டுவது? கற்றவனுக்கு எந்த வித்தையும் கால் நாழிகையில் வரும். கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம். 6570 கற்றவனுக்கு மயிர் அத்தனை; கல்லாதவனுக்கு மலை அத்தனை. கற்றவனுக்கு வித்தை கால்வழி. கற்றவனும் உண்பான்; பெற்றவனும் உண்பான். (பெற்றவளும்) கற்றவன் கழுநீர்ப் பானையில் கைவைத்த கதையா. கற்றவித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன் போல. கற்ற வித்தையைப் பெற்ற தாயிடம் காட்டுவதா? கற்றறி மோழையாய் இராதே. கற்றறிவு கடைபோகா. கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடிவைக்காது. கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சும் போகா. (வீச்சமும்) 6580 கற்றும் கற்றறி மோழை, கண்ணிருந்தும் குருடு. கற்றோர் பெருமை கற்றோர் அறிவர். (பெற்றோர்) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. கன ஆசை கன நட்டம். கன எலி வளை எடாது. கன தாராளம்; மனது இறுகல் (குறுகல்) கனத்த உடைமைக்கு அழிவு இல்லை (அனர்த்தம்) கனத்தால் இனமாகும்; பணத்தால் சனமாகும். (மனத்தால்) கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி. கனத்தைக் கனம் அறியும்; கருவாட்டுப் பானையைப் பூனை காக்கும். 6590 கனத்தைக் கனம் அறியும்; கருவாட்டுப் பொடியை நாய் அறியும். கனத்தைக் கனம் காக்கும்; கறிச்சட்டியை நாய் காக்கும். கன நேசம் கண்ணைக் கெடுக்கும். கன மழை பெய்தாலும் கருங்கல் கரையுமா? கனமூடன் கைப்பொருள் இழப்பான். கனவிலும் காக்கைக்கு மலம் தின்பதே நினைவு. கனவிலே கண்ட தங்கம் காசுக்கடைக்கு உதவுமா? கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை. கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா? கனவில் கண்ட பணம் கடனைத் தீர்க்குமா? 6600 கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? கனவில் கண்ட பொருள் கானில் கண்ட புனல். கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா? கனவுக்கும் பேய்க்கும் கால்கள் கிடையா. கனா முந்துறாத வினை இல்லை. கனி இருக்கக் காய் கவர்வது போல. கனி மரத்தை எல்லோரும் உலுக்குவர். கனிந்த பழம் தானே விழும். கனிந்த முகத்தில் கரிபூசி விடுதல் கனியை விட்டுக் காயைத் தின்பதா? 6610 கன்மத்தினால் சாதியன்றிச் சென்மத்தினால் இல்லை. கன்மத்தினால் வந்தது தன்மத்தினால் போகவேண்டும். கன்றி கீழேயும் கடன்காரன் கீழேயும் நிற்காதே. கன்று இருக்கக் காசத்தனை பால்கறவாப் பசு (கரண்டியத் தனை) கன்று செத்தபிறகு கலப்பால் கறக்குமா? கன்று இருக்கப் பாலைக் கறவாத பசு கன்று செத்தபிறகு கலப்பால் கறக்குமா? கன்று உள்ளபோதே காணோம்; கன்று செத்தபிறகா கொட்டப் போகிறது? கன்றுக்குட்டி கதிரை மேய கழுதைக் குட்டிக்காதை அறுத்தான். கன்றுக்குட்டி கிட்டவும் கடன்காரன் கிட்டவும் இருக்கக் கூடாது. கன்றுக்குட்டி பயம் அறியாது. கன்றுக் குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா? 6620 கன்று கூடிக் களம் அடித்தால் வைக்கோலும் ஆகாது செத்தையும் ஆகாது. கன்றுக்குப் புல் பிடுங்கியது போலவும் தென்னைக்கு களை எடுத்தது போலவும். கன்று கெட்டால் காணலாம் தாயருகே. கன்று செத்தால் கமலம்; மாடு செத்தால் நிமிளம். (கைம்மலம்) (நிர்மலம்) கன்று செத்துக் கைமேலே கறக்கலாமா? கன்றும் தாயும் காடு ஏறி மேய்ந்தால் கன்று ஒரு பக்கம். தாய் ஒரு பக்கம். கன்று தின்னப் போரும் பசங்கள் தின்னப் பந்தியும். கன்றைத் தேடிப் பசு தவிக்கிறது போல. கன்றைப் பார்த்துப் பசுவைக் கொள். கன்றைப்பிடி என்றால் கட்டுத்தறியைப் பிடிக்கிறான். 6630 கன்றைவிட்டு மாட்டை முட்ட விடுகிறது. கன்றோட சேர்ந்த பன்றியும் புல் தின்னும். கன்னக் கோலை மறைத்துக் கொண்டு கைச்செபமணியைச் செபிக்கிறது. கன்னத்தில் அடித்தாலும் கதறிஅழச் சீவன் இல்லை. கன்னான் கடையிலே யானை பூந்தாற் போல. கன்னான் கொண்டது கடை கொண்டது. கன்னான் நடமாடக் குயவன் குடி போவான். கன்னான் வந்து மூன்று நாளாகிறது. கதவு முக்கரணம் பாய்கிறது. கன்னி அறிவாளோ காமரசம்? கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா? 6640 கன்னி இருக்கக் காளை மணை ஏறலாமா? கன்னியின் கற்பு கண்ணாடிப் பாத்திரம் போன்றது. உடைந்தால் உதவாது. கன்னியின் இதயம் இருண்ட கானகம். கன்னி எதையும் வாங்கவும் கூடாது; கொடுக்கவும் கூடாது. கன்னிக் காற்று கடலும் வற்றும். கன்னிச் செவ்வாய் இடித்தால் கடலும் வற்றும். கன்னிச்சேற்றைக் காய விடாதே; கண்ட மாட்டைக் கட்டி உழு (கண்ட மாடு - எருமை.) கன்னி தன்னில் இந்து பிறக்கக் கொல்லும். கன்னி நிலவிலே கட்டி ஓட்டடா கடாமாட்டை. கன்னிப் பூ மலரவில்லை. 6650 கன்னிப் பெண்ணை வீட்டில் புலிபோல் காத்து வரவேண்டும். கன்னியும் தூக்கமும் தனிவழிப் போகா.  கா காகத்தின் கழுத்து கருத்தென்ன வெளுத்தென்ன? காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல. காகம் இல்லாத ஊரும் சோனகர் இல்லாத ஊரும் இல்லை. காகம் இல்லாத ஊர் இல்லை; துயரம் இல்லாத வீடு இல்லை. காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர். (சோனகன்) காகம் ஏறிப் பனங்காய் உதிருமா? காகம் ஏறப் பனம்பழம் விழுமா? காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக் கொள்ளுவாளாம். 6660 காகம் வலமானால் ஆயுள் விருத்தியாகும் (ஆயுசு) காகிதப் பூவும் கற்பிழந்த பெண்ணும் ஒன்றே. காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை. கண்ணாளன் வருந்துணையும் பொறுக்கலையோ புன்னை? காக்காய் கறி சமைத்துக் கருவாடுமென்று தின்பர் சைவர். காக்காய் (கால்கை) பிடிக்கிறவனை நம்பாதே. காக்கை இருந்த கொம்பு அசையாது. காக்கை ஏறின கொம்பு அசையாதா? காக்கை அன்ன நடை நடக்கப் போய்த் தன்னடையும் கெட்டதுபோல. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா. காக்கை கண்ணிற்குப் பீர்க்கம் பூ பொன்நிறம். 6670 காக்கையிற் கரிது களாம்பழம். காக்கையின் கழுத்தில் பனங்காயைக் கட்டினது போல (சீட்டுக்காயை) காக்கையும் கத்திப் போகிறது. கருவாடும் உலர்ந்து போகிறது. காக்கை கரிசட்டியைப் பழித்ததாம். காக்கை கரைந்தால் ஆரோ வருவார். காக்கை நோக்கு அறியும்; கொக்கு உப்பு அறியும். காக்கை (கால்கை) பிடிக்கிறவனுக்குக் காலம். காக்கைக்கு இருட்டில் கண் தெரியாது. காக்கைக்கு ஐந்து குணம். காக்கைக்கு எதிரில் நின்று கொண்டு காக்கை கண்கூசும் வெள்ளையென்பார். 6680 காக்கைக்குக் கொண்டாட்டம்; எருதுக்குத் திண்டாட்டம். காக்கைக் குஞ்சையும் கணக்கன் குஞ்சையும் கண்ட இடத்தில் குத்த வேண்டும். காக்கைக்குச் சோறு வைக்கக் காதவழி போனானாம். காக்கைக்குப் பயந்து அழுவாள்; கழுகுக்குத் துணிந்து எழுவாள். காக்கைக்குப் பயந்திருப்பாள்; கழுகுக்குத் துணிந்திருப்பாள் காக்கைக்குப் புடுக்கு உண்டானால் பறக்கிறபோது தெரியாதா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு. காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும். காக்கையும் குயிற்குஞ்சைத் தன்குஞ்சுபோல வளர்க்கும் காக்கையைக் கண்டு பயப்படுவான்; கள்ளன்கூடப் புறப் படுவான். 6680 காக்கையைக் கண்டு அஞ்சுவான்; கரடியைப் பிடித்துக் கட்டுவான். (அஞ்சுவாள், கட்டுவாள்) காக்கையைக் கண்டு அஞ்சுவாள்; காவேரி ஆற்றை நீந்துவாள். காக்கை வலமடித்தது; கரிக்குருவி இடமடித்தது. காக்கை விரும்பும் கனி வேம்பு. காசா லேசா என்றான் செல்வன். காசாலே சா என்றான் புலவன். காசி இரண்டு எழுத்துத்தானே, காண எத்தனை நாட்செல்லும்? காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை. காசிக்குப் போயும் குட்டம் கொண்டவன் (பார்ப்பான்) காலில் விழுந்தானாம். காசிக்குப் போயும் முடத் தவசி காலில் விழுகிறதா? 6690 காசிக்குப் போய்ச் சொறியன் காலில் விழுந்தாற் போல. காசிக்குப் போய்ப் பரதேசி காலில் விழுந்தானாம். காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு. காசிக்குப் போனாலும் கட்கத்தில் மூட்டையா? காசிக்குப் போனாலும் கதிபெற வழி இல்லை. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது காசிக்குப் போனாலும் தன்பாவம் தன்னோட. காசிக்குப் போனானாம் காவடி கொண்டு வந்தானாம். காசி போனால் ஏதாவது ஒன்றை விடவேண்டாமா? காசியில் இருந்தவன் கண்ணைக் குத்தக் காஞ்சிபுரத்தி லிருந்து கையை நீட்டிக் கொண்டு போனானாம். 6700 காசியில் இறக்க முக்தி; கமலையில் பிறக்க முக்தி (கமலை - திருவாரூர்) காசிராசா பாதி குமரசாமி பாதி (குமரகுருபரர் மடம்) காசு இருந்தால் பெட்டியிலே; பவிசு இருந்தால் மூஞ்சியிலே எனக்கு என்ன ஆச்சு? காசு இல்லாதவன் இக்கரையில் கிடந்தால் என்ன? அக் கரையில் கிடந்தால் என்ன? காசு இல்லாதவன் முழுதும் போட்டது போல. காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன? காசு இல்லாதவனை வேசியும் துப்ப மாட்டார்கள். காசு இல்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி கண்ணே. காசு இல்லாதவன் கடைத்தெரு வழியே போகலாமா? காசு கையிருந்தால் கலியாணம் நினைத்தபோது. 6710 காசு கொடுத்தால் வேசி வருவாள்; கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும், ஆத்தாளும் கூட வருவார்கள். காசு போட்டால் வேசி அருமையா? காசுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுக்கு காசுக்கு விற்றாலும் வட்டிக்குக் கட்டாது. காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் குஞ்சு ஆகாது (கம்மாளன்) காசுக்கு ஒரு குட்டி ஆனாலும் கரூர்க் குட்டி ஆகாது. காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும். காற்றைப்போல் பறக்கவும் வேண்டும். காசுக்கு ஒரு தம்பி ஆனாலும் கள்ளத் தம்பி ஆகாது. காசுக்கு ஒரு படி என்றால் பணத்துக்குப் பத்துப்படி என்கிறாயே! காசுக்கு ஒரு புடவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம். காசுக்குக் கடவுளை விடக் கனம் அதிகம். 6720 காசுக்குக் கம்பன்; கருணைக்கு அருணகிரி. காசுக்குப் பத்துப் பெண்டாட்டி; கொசுருக்கு ஒரு குத்து. காசுக்குப்போன மானம் கோடி கொடுத்தாலும் வராது. காசுக் கூடு கரிக்கூடாய்ப் போயிற்று. காசுக்கு உலோபி கழுதையினிடத்திற் போனாற் போல. காசு கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம். காசுப் பையோடே களவு போனால் கடையிலே செட்டிக்குக் காரியம் என்ன? காசை எண்ணுவான் கணக்கன், களவை எண்ணுவான் திருடன். காசைக் கண்டபடி செலவழிப்பான் ஊதாரி, காலத்தைக் கண்டபடி செலவழிப்பான் பேதாரி. காசைக் கரி ஆக்காமல் சீனிவாங்கிச் சுடு. 6730 காசைக் கரி ஆக்காதே, வாணத்தை வாங்கிக் கொளுத்து. காசைக் கொடுத்து நோயை விலைக்கு வாங்காதே. காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா? காசைக் கொடுத்துக் கோணமாடு வாங்குகிறதா? காசைப் பார்த்தால் ஆசையாய் இருக்கிறது; கண்ணைப் பார்த்தால் போதையாய் இருக்கிறது. காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக் கொண்டது போல. காஞ்சிரங் கனி கடுஞ்சிவப்பாய் இருந்தால் கடிதாக உயிர் மாய்க்கும். காஞ்சிபுரத்துக்குப் போனால் காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம். காஞ்சிபுரம் குடை, திருப்பதி வடை, சீரங்கத்து நடை. காடிக் கஞ்சி ஆனாலும் மூடிக்குடி. 6740 காடியாயினும் மூடிக்குடி. காடிக்குப் போய்த் தயிர் கொண்டு வந்தது போல. காடு அழிந்தால் நாடு அழியும். காடு அறியாதவன் கல்லாங் காட்டை உழு. (உழ வேண்டும்.) காடு ஆண்டவரும் பாண்டவர்; நாடு ஆண்டவரும் பாண்டவர். காடு ஆறு மாசம்; நாடு ஆறுமாசம். காடு எரியும்பொழுது வீடு எரியக் கூடாது. காடுகள் இருப்பின் நாடுகள் செழிக்கும். காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான். காடு காத்த நாயும் வீடு காத்த நாயும் வீண் போகுமா? 6750 காடு கெட ஆட்டை விடு. காடு கெட ஆடு விடு; ஆறு கெட நாணல் இடு; ஊர்கெட நூலை விடு. காடும் செடியுமில்லாத ஊருக்குக் கழுதை முள்ளி கற்பக விருட்சம். காடு சொக்கினவழி ஆட்டை விட வேண்டும்; ஊர் சொக்கினவழி கொங்கனை விட வேண்டும். (சொக்குதல் - தழைத்தல், அழகாயிருத்தல்) காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது. காடு விளைந்தாலும் உழவனுக்குக் காலும் கையுமே மிச்சம். காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம். காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா? காடு வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு வெட்டப் பயமா? காடு வெட்டி நஞ்சை பண்ணு; மாடு கட்டி வைக்கோல் போடு. 6760 காடு வெட்டிப் பருத்தி விதைத்தால் அப்பா முழச் சிற்றாடை என்றாளாம். காடு வெட்டி ரெங்கனுக்கு வைப்பாட்டி இரண்டாம். காடு வெந்தால் சந்தன மரமும் வேகாதோ? காடை இடமானால் நாட்டை ஆளலாம். காடை கட்டினால் பாடை கட்டவரும். காடை கத்தினால் பாடை கட்டும் (கட்டினால்) காடை கலம் தின்றாலும் காட்டைத்தான் பார்க்கும். காடைக்குக் கலக்கம்பு போட்டாலும் காட்டைத்தான் பார்க்கும். காட்ட முடியுமே தவிர ஊட்டமுடியுமா? காட்டாளுக்கு ஒரு நீட்டாள், நீட்டாளுக்கு ஒரு முடக்காள், முடக்காளுக்கு ஒரு நொண்டிக்குதிரை. 6770 காட்டாளுக்கு ஒரு மூட்டாள்; அடுப்பங் கட்டைக்கு ஒரு துடைப்பக்கட்டை. காட்டாளுக்கு ஒரு மோட்டாள்; மோட்டாளுக்கு ஒரு மொண்டி ஆள். காட்டாற்றுச் சரசரப்பு காட்டானைக்குப் பரபரப்பா? காட்டான் மோட்டான் சண்டைக்கு இளைச்சான். காட்டானை உண்ட கனிபோல் இருக்கும் தேட்டாளன் திரவியம். காட்டானைக்கு வீட்டு ஆனையைக் கண்டால் இளப்பம். காட்டானையைக் காட்டி வீட்டுப் பெண்ணைத் தள்ளுகிறது. காட்டானையைப் பிடிக்க வீட்டானை வேண்டும். காட்டானை விட்டாலும் கவியானை விடாது. காட்டிக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுக்காதே. 6780 காட்டிக் கொடுத்துக் கடக்கப் போய் நிற்கலாமா? காட்டிலே எறிந்த நிலவும்; கடலிலே பெய்த மழையும் காட்டில் கலியாணம்; வீட்டில் விருந்து. காட்டில் செத்தாலும் வீட்டில்தான் தீட்டு. காட்டில் புதைத்த கனதனமும், பாட்டில் புதைத்த பழம் பொருளும் வீட்டில் மனையாள் மனமும் நாட்டில் அறிவது அரிது. காட்டில் புலி கொல்லும்; நாட்டில் புளி கொல்லும். காட்டு ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக் கிறது போல. காட்டுக்காடை இடமானால் குட்டிச்சுவரும் பொன்னாகும். காட்டுக் காடையைப் பிடிக்க வீட்டுக் காடை வேண்டும். காட்டுக்காரன் சும்மா இருந்தாலும் பூட்டைப் பிடுங்கி சும்மா இருக்க மாட்டானாம். 6790 காட்டுக்கு எறிந்த நிலவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண். காட்டுக்கு எறிந்த நிலவும் கானலுக்குப் பெய்த மழையும் (வீண்) பயனில்லை. காட்டுக்குக் களையெடுத்தாற் போலிருக்க வேண்டும்; கன்றுக்கும் பில்லுப் பிடுங்கினாற் போலிருக்க வேண்டும். காட்டுக்கு ஒரு தெய்வம்; வீட்டுக்கு ஒரு தெய்வமா? காட்டுக்குருவிக்கு ஆசைப்பட்டுக் கைக்குருவியை விட்ட கதை. காட்டுக்குப் புலி ஆதரவு; புலிக்குக் காடு ஆதரவு. காட்டுக்குப் பெய்த மழை, கானலுக்கு எறிந்த நிலா (பயன்) காட்டுக்குள் இருந்து கைகாட்டும் கள்ளி, காக்கை பறக்கக் கண்டு திடுக்கிட்டுப் போனேன் என்றாளாம். காட்டுக் கோழிக்கு உரற்குழியே கைலாசம். காடுத் தீயில் கருவேலங்கட்டை மட்டுமல்ல சந்தன மரமுந் தான் சாம்பலாகும். 6800 காட்டுத் தேனை விட்டுக் கள்ளைக் குடித்ததுபோல. காட்டுப் பாலுக்கு ஏற்ற கல்லுப்பு. காட்டுப் பூனைக்கு சிவராத்திரி விரதமா? காட்டுப் பேய்ச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா? காட்டு மடத்திலே ஓட்டாண்டிகள் கூடினதுபோல். காட்டு வழியாய்த் தனியே போகக் கூடாது. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும். காட்டு வேளாண்மையையும் வயிற்றுப் பிள்ளையையும் எப்படி மறைக்கிறது? காட்டேரி உடைமை இராத் தங்காது. காட்டைக் காணாமல் கோட்டேர் போடாதே. 6810 காட்டைக் காத்த நரியும் வீட்டைக் காத்த நாயும் வீண் போகாது. காட்டைக் காத்தவனும் கடையைக் காத்தவனும் வீண் போவது இல்லை. காட்டை விதைத்துக் கதவை அடை. காட்டை விற்றுக் கள்ளைக் குடித்தாலும் கவுண்டன் கவுண்டன்தான். காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? காட்டை வைத்துக் கொண்டல்லவோ வேட்டை ஆட வேண்டும். காட்டோடு போயிற்று குளிரும் காய்ச்சலும். காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? காணாததை எல்லாம் காணலாம் கந்த புராணத்திலே. (பொருளெல்லாம், புளுகு எல்லாம்) காணாததைக் கண்டதாம் கருங்கழுதை; கூறாமல் தின்னதாம் தினைத் தவிட்டை. 6820 காணாத நாய்க்குக் கருவெல்லம் போட்டாற் போல. காணாத மூளி கஞ்சியைக் கண்டால் ஓயாமல் கூட்டரைப் பாளாம். காணாத மூளி கஞ்சியைக் கண்டால் ஓயாமல் ஊற்றிக் குடிப்பாளாம். காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊதிக் குடித்தானாம். காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம். காணாதன எல்லாம் காணலாம் காஞ்சிப்புராணத்திலே. காணாது கண்ட கம்பங் கூழைச் சிந்தாது குடி யடி சில்லி மூஞ்சி. (குடியடா, மூக்கா) காணாது கண்டவன் பெண்டு படைத்தால் காடுமே டெல்லாம் கட்டி இழுப்பான். காணாப்பால் கலப்பால். காணாப்பீ கழுவாமல் போம். 6830 காணாமல் போன முயல் பெரிய முயல். காணாமல் போன யானையைப் பானைக்கு உள்ளே தேடினால் கிடைக்குமா? காணம் என்றால் வாயைத் திறக்கிறது; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது. காணம் விற்று ஓணம் கொண்டாட வேண்டும். காணி அறுத்தாலும் கோணி கொள்ள வில்லை. காணி ஆசை கோடி கேடு. காணி ஏற கோடி அழியும். காணிக்கு ஒத்தது கோடிக்கு. காணிக்கு ஒரு கருவேலும் வேலிக்கு ஒரு மூங்கிலும். காணிக் கல்லா அசையாமல் இருக்க? 6840 காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம். காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செல வழிக்கிறது. (கோணி, கோணி) காணிச் சோம்பல் கோடி கேடு. காணி தேடிக் கோடி அழிப்பதா? காணி தேடினும் கரிசல் தேடு. காணி நிலம் இல்லை; கலப்பை சாத்த இடம் இல்லை. காணி மந்தம் கோடி துக்கம். காணியாளன் வீடு வேகும்போது காலைப் பிடித்து இழுத்த கதை. காணியில் இல்லாததா கோடியில் வரப்போகிறது? காணியை நட்டபின் களத்தில் நிற்பதே நன்மை. 6850 காணி லாபம்; கோடி நட்டம். காண்பாரைக் கண்டு கழுதை பரதேசம் போயிற்றாம். காதம் கொடுத்து இரு காதம் வாங்குகிறது போல. காதம் போனாலும் கண்ணுக்கு உரியவர் வேண்டும். காதல் வசப்பட்டவரும் கவிதை வசப்பட்டவரும், கள் வசப்பட்டவரும் சும்மா இருக்க மாட்டார்கள். காதம் விட்டு இரு காதம் சுற்றுவது போல. காதல் சிறகு கட்டிக்கொண்டு பறக்கும்; திருமணமோ நொண்டி நொண்டி நடக்கும். காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமானம் (பெயர் தெரியாதவன்) காதவழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம். காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு. 6860 காதிலே கழுத்திலே ஒன்னும் இல்லை; கழற்றிப் போட அலைகிறாளாம். காதில் கடுக்கன் இட்டால் முகத்தினுக்கு அழகு. காதில் கேட்டதும் பொய்; கண்ணில் கண்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய். காதில் சிலந்தி ஓதடி ஆனந்தி. காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. காது அறுத்த கூலி கைமேலே. காது அறுத்தாலும் அறுக்கும்; பேன் எடுத்தாலும் எடுக்கும் குரங்கு. காது காது என்றால் நாது, நாது என்கிறான். (எனது, எனது) (வேது, வேது) காது காது என்றால் கேது கேது என்றான். காது குத்த மனம் பொறுக்காதா? 6870 காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு. காதும் காதும் வைத்தாற் போல இருக்க வேண்டும். காதை அறுத்தவன் கண்ணைக் குத்தினாலும் குத்துவான். காதை அறுத்தவன் கண்ணைக் குத்தாமல் விட்டானே? (விடுவானோ?) காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா? காதோலைக்குக் கதியைக் காணோம்; கால் கொலுசுக்கு ஆடுகிறது. காத்தானுக்கு நோய் வர, தீர்த்தானுக்கு மருந்து கொடு காத்திருந்த நாய்க்குக் கல்லெறிதான் மிச்சம். காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான். காந்தலே சுவை; கருப்பே அழகு (ருசி) 6880 காந்தாரி கண் பட்டால் கல்லும் கரிந்து விடும். காப்பானுக்குக் கள்ளன் இல்லை (கள்ளம்) காப்பான் பெரிதா? கள்ளன் பெரிதா? காப்பு இட அத்தை இல்லை; கலகமிட அத்தை உண்டு. காப்புச் சொல்லும் கை மெலிவை. காப் பொன்னிலும் மாப்பொன் திருடுவான். காமக் கோட்டாலைக்குக் கண்மண் தெரியாது. காமத்துக்குக் கண் இல்லை; காதும் இல்லை. காமம், இருமல், நெருப்பு இம்மூன்றையும் கடக்க முடியாது. காமம் கொண்டவனுக்குக் கட்டில் வித்தியாசம் தெரியாதாம்; கடன்பட்டவனுக்குத் தடம் வழி புரியாதாம். 6890 காமனுக்குக் கண்டவிடத்தில் கண். காமாலைக் கண்ணனுக்குக் கண்டது எல்லாம் மஞ்சள் (மஞ்சளாம்) காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் மாஞ்சேறு. காமிக்கு உறவுமுறை இல்லை. காமுகனுக்குக் கண்ட இடத்தில் கண். காயமென்ன கற்கண்டா? உயிரென்ன தித்திப்பா? காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம். காயிலே கெட்டது கத்தரிக்காய்; சாதியிலே கெட்டவன் வெள்ளாளன். காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாசம் கலியாணம். காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல. 6900 காயும் பயிருக்குப் பெய்யும் மழை போல. காய்க்காத மரம் கல்லடி படுவதில்லை. காய்க்கு அலைந்தவன் பீர்க்குப் போடு. காய்க்குக் கொடி இளைக்குமா? காய்க்குக் கொடி கனமா? (பாரமா) காய்ச்சல் இல்லா நிலம் கடுகளவும் பயன்படாது. காய்ச்சலும் கழிச்சலும் சேர்ந்து விட்டால் நம்பப்படாது. காய்ச்சி காய்ச்சிதானே நீட்ட வேண்டும்? காய்ச்சி வார்த்த பெண்ணுக்குப் பேச்சு மூச்சு அற்றது. காய்ச்சின கஞ்சி வார்க்க ஆளில்லாமற் போனாலும் கச்சை கட்ட ஆளிருக்கிறது. 6910 காய்ச்சினவள் காய்ச்சினால் கழுதை மூத்திரமும் சுவையாய் இருக்கும் (ருசியாய்) காய்ச்சுகிறவள் காய்ச்சினால் கழுதை மள்ளும் மணக்கும். (மள் - கழுதை மூத்திரம்) காய் கனிந்தால் தானாக வீழும். காய்த்த கொம்பு பணியும். காய்த்த பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்றவாறே. காய்த்த மரத்தில் கல் எறிபடும்; காயாத மரத்தில் எறிபடுமா? காய்த்த மரத்திலே கல் எறியும்; சில் எறியும். காய்த்த மரத்துக்குத் தான் கல்லடி. காய்த்த மரத்தில் தின்ன வௌவாலுக்குத்தான் தெரியும். காய்த்த மரம் வளைந்துநிற்கும், நற்குணம் உடையவர் தணிந்து நிற்பார். 6920 காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ? காய்த்த மரம் வளையும். காய்ந்த இரும்பு குடித்த நீரை விடாது. காய்ந்த எரு காசுக்கும் உதவாது. காய்ந்த கொம்பு பணியும். காய்ந்த சுண்ணாம்பையும் வதங்கின வெற்றிலையையும் இளைத்த இராசாவையும் விடக்கூடாது. காய்ந்த செட்டுக்குச் சேதமில்லை. காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறது போல. காய்ந்த மரம் தளிர்க்குமா? காய்ந்த மாடு கம்பங்கதிரில் புகுந்தாற்போல. 6930 காய்ந்த வானம் பெய்தால் விடாது. காய்ந்த வித்துக்குப் பழுது இல்லை. காய்ந்தால் காயும் கார்த்திகை. காய்ந்தாலும் கவலை; பேய்ந்தாலும் கவலை. காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ. காய்ந்தால் கடுவெளி; பேய்ந்தால் பெருவெள்ளம். காய்ந்தும் கெடுத்தது; பேய்ந்தும் கெடுத்தது . காய்ந்தும் கெடுத்தது வெயில்; பேய்ந்தும் கெடுத்தது மழை. காய்ந்து கெட்டது பிசானம்; காயாமல் கெட்டது கார். காய்ந்து போன கார்த்திகை வந்தால் என்ன? தீய்ந்து போன தீபாவளி வந்தால் என்ன? மகாராசன் பொங்கல் வந்தால் மார்புமுட்டும் சோறு. 6940 காய்ப் பாரத்தைக் கொடி தாங்காதா? காய் பறிக்கக் கத்தரி நடு. காரணத்திலிருந்து தான் காரியம். காரணம் இல்லாமல் நாய் குரைக்காதே. காரணம் இன்றிக் காரியம் இல்லை. காரணம் சொல்பவன் கடமை செய்யான். காரக் கார ரோகம்; பாடப்பாட ராகம். காரமில்லாத சாறு சட்டி நிறைய; ஊகமில்லாத பிள்ளைகள் வீடு நிறைய. காராம் பசுவுக்குப் புல் ஆனால் நந்தவனத்துக்குக் களையும் ஆம். காரிகை கற்றுக் கவி பாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று. (பாடாதவன்) 6950 காரியக்காரன் கொல்லையிலே கழுதை மேய்கிறது. காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை. காரியத்துக்குக் காலைப் பிடி; காரியம் முடிந்தால் குடுமியைப் பிடி. காரியத்தைப் பற்றிக் கழுதையின் காலைப் பிடி. காரியப் பைத்தியம். காரியமாகு மட்டும் காலைப் பிடி; காரியமான பிறகு கழுத்தைப் பிடி. காரியம் இல்லாத மாமியாருக்குக் கல்லும் நெல்லும் கலந்து வைத்தாள். காரியம் என்றால் காலைப் பிடிப்பான்; காரியம் முடிந்தால் காலை வாருவான். காரியம் உள்ளவரைக் காலைப் பிடி; இல்லா விட்டால் பல்லைப் பிடி. காரியம் சாதிக்கிறவன் வீரியம் பேசமாட்டான். 6960 காரியம் பெரிதோ? வீரியம் பெரிதோ? காரியம் முடிகிறவரை காலைப்பிடி; காரியம் முடிந்ததும் வாரியடி. காரியும் வெள்ளையும் கருதிப் பயிரிடு. (காரி - எள்; வெள்ளை - பருத்தி) காருக்குப் பின் பட்டமில்லை; கார்த்திகைக்குப் பின் மழையு மில்லை. காரும் கம்பும் கதிரிலே. காருக்கும் கத்திரிக்கும் காலமில்லை. காருக்கு வயலும் மோருக்குச் சோறும் அதிகமாக வைக்கக் கூடாது. காரையும் எள்ளையும் கருதிப் பயிரிடு. (கைவிடாதே) (கார் - கார்ப்பருவம்) காரையை வெட்டிக் கரணை போட்டால் எடையும் பணமும் காணும். கார் அறுக்கட்டும்; கத்தரி பூக்கட்டும். 6970 கார் ஆடு; பிசானம் குழை. கார் கடை விலை; சம்பா தலைவிலை. கார் மின்னிக் கெட்டது; பருவம் மின்னாமல் கெட்டது. கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும். கார்த்திகை ஆத்தி காம்பெல்லாம் சுவை. (அகத்தி) கார்த்திகைக்கு அப்பால் மழையுமில்லை; கருணனுக்கு அப்பால் கொடையுமில்லை. கார்த்திகைக்குப் பிறகு கால் கோடை. கார்த்திகைக்குப் பிறகு மழை இல்லை; கர்ணன் செத்தால் சண்டையில்லை. கார்த்திகை கார் கடைவிலை; தை சம்பா தலை விலை. கார்த்திகை கண்டு களம் இடு. 6980 கார்த்திகை நண்டுக்குக் கரண்டி நெய். கார்த்திகைப் பனியைப் பாராதே கட்டி ஓட்டடா ஏர் மாட்டை. கார்த்திகை பிறந்தால் கால் கோடை. கார்த்திகை பிறந்தால் கை நாற்றை எறிந்து விடு. கார்த்திகைப் பிறை கண்டாற் போல. கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரையேறு. கார்த்திகை மழை கல்லையும் உடைக்கும். கார்த்திகை மாதத்தில் உழுதால் கடுகு மிளகுக்கும் காணாது. கார்த்திகை மாதத்தில் கனத்த மழை. கார்த்திகை மாதத்தில் கால் கொள் விளைந்தால் மேல் கொள் விலையாகாது. 6990 கார்த்திகை மாசம் (அவரைக்காய்) கையிலே; மார்கழி மாசம் மடியிலே. கார்த்திகை மாதத்திற் கடுமழை பெய்தால் கல்லின் கீழ் இருக்கிற புல்லும் கதிர் விடும். கார்த்திகை மாதத்தில் கம்பு விதைத்தான்; கூத்தியாள் வாயில் மண் போட்டான். கார்த்திகை மாதத்தில் கலக்கொள்ளு விதைத்தாலும் விதைக் கொள்ளு கூட காணாது. கார்த்திகை மாதத்தில் கலக்கொள் விதைத்தால் மரக்கால் கொள் விளையும். கார்த்திகை மாதத்தில் கொள் காடை பதுங்கும் படி இருக்க வேண்டும். கார்த்திகை மாதத்துச் சாகுபடி கக்கத்தில் வைக்கோலும் கொட்டாங்குச்சியில் நெல்லும். கார்த்திகை மாதத்து மழை கலங் கழுவுவதற்கு முன்னே வந்து போகும். கார்த்திகை மாதம் கலங் கழுவ விடாது. கார்த்திகை மாதம் கால் நாழிகைப் பொழுதிருந்தாலும் காற்றடிக்கும். 7000 கார்த்திகை மாதத்துக் கருணைக் கிழங்கு கடைவா யெல்லாம் நெய்யொழுகும். கார்த்திகையில் கருக்கல் கண்ட இடத்தில் மழை. கார்ப்பயிர் கலந்து கெட்டது. பிசானப் பயிர் நெருங்கிக் கெட்டது. காலகதியை யாரும் கடக்க மாட்டார்கள். காலஞ் செய்கிறது கோலம் செய்யாதே. காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது. காலத்தில் ஓட்டை அடைக்கப்படாவிட்டால் கப்பலும் முழுகி விடும். காலத்தில் பயிர் செய்தால் கடன் வாங்க வேண்டாம். காலடி வைக்கும்போதே நீச்சானால் கரை ஏறுகிறது எப்படி? கால தாமதம் காரியக்கேடு 7010 கால தாமதம் சாலவும் தீது. காலத்தில் பிறந்த பிள்ளை கைக்கு உதவும். காலத்தில் போனாலும் கலசத்தில் போகக்கூடாது; கலசத்தில் போனாலும் குலிசத்தில் போகக்கூடாது. காலத்தில் போனாலும் சூலத்தில் போகாதே. காலத்திற்கு ஏற்ற கோலம். காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம். காலத்துக்குத் தக்க கோலம்; தேசத்துக்குத் தக்க பாசை; தாளத்துக்குத் தக்க மேளம். காலத்துப் பழி காத்துச் சுழிக்கும். காலமே எழுந்திருந்து காக்கை பார்க்கிறது ஆகாது. கால மல்லாக் காலத்திற் காய்த்ததாம் பேய்ச் சுரக்காய். 7020 காலம் அறிந்து ஞாலம் ஒழுகு. காலம் அறிந்து காரியம் செய். காலம் அறிந்து பிழையாதவன் வால் அறுந்த குரங்கு ஆவான். காலம் அறிந்து பெய்யாத மழையும் நேரம் அறிந்து உண்ணாத ஊணும் சரியல்ல. காலம் எல்லாம் பாடுபட்டும் கையில் கால் துட்டைக் காணோம். காலம் எவருக்கும் காத்திருப்பதில்லை. காலம் செய்வது ஞாலம் செய்யாது. காலம் செய்வதைக் கோலம் செய்யாது. காலம் செய்வதைக் காலன் செய்வான். காலம் துக்கத்தை மாற்றும். 7030 காலம் நம்மைக் கொன்றால் காலத்தை நாம் கொல்ல வேண்டும். காலம் போம், சொல் நிற்கும். காலம் போம், வார்த்தை நிற்கும்; கப்பல் போம், துறை நிற்கும். காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது போல. காலம் வரும்வரை காலன் காத்திருப்பான். காலம் காலமா ஆண்டதெல்லாம் கதவு சந்துல கிடக்குது; நேற்று வந்த மூளி பாண்டு பத்திரம் கேட்கிறது. காலாலே நடந்தால் காத வழி; தலையாலே நடந்தால் எவ்வளவு தூரம்? காலாலே நடந்தால் காதவழி போகலாம்; தலையாலே நடந்தால் தத்தேரியா போகவேண்டும். காலால் இட்ட முடியைக் கையால் அவிழ்க்க முடியாது காலால் இட்ட வேலையைத் தலையால் செய்கிறது. 7040 காலால் நடக்காமல் காற்றாய்ப் பறக்கிறது. காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக் கூடாது. காலால் முடிந்ததைக் கையால் தள்ள முடியாது. காலிப் பெட்டியைப் பூட்ட வேண்டியதில்லை. காலிலே பட்ட பிறகா கிரகசாரம் (சனி) போய்விடாது? காலில் கஞ்சி ஊற்றினாற் போல. காலில் கட்டினால் விருது; குப்பையில் கிடந்தால் துணி. காலில் பட்டது கண்ணில் பட்டது போல. (தைத்தது) காலில் பட்டது கையிலும் படும்; மூக்கிலும் படும். காலில் விழுகிறது நல்லது; மேலில் விழுகிறது கெட்டது. 7050 காலில்லா முடவன் கடலைத் தாண்டுவானா? காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றி எறி. (உதவாத) காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா? காலுக்குக் கடுப்பே தவிர கண்ட பலன் ஒன்றும் இல்லை. காலுக்குக் கை உதவி; கைக்குக் கால் உதவி. காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும். காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான். காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர் கோலை விட்டுக் குலாவி நடப்பரே. காலை உப்பலும் கடும்பகல் வெயிலும் மாலை மேகமும் மழைதனில் உண்டு. காலைக் கல்லு; மாலைப் புல்லு. (கல், புல்) 7060 காலைக் குளி மாதம் தங்கும்; நடுப்பகல் குளி வாரம் தங்கும்; அந்திக் குளி அன்றைக் குளி. (எண்ணெய் தேய்த்துக் குளியல்) காலைக் கடன் வாங்கச் சொல்லும்; அந்திக் கடன் ஆனை கட்டச் சொல்லும். காலைக் கூழைத் தள்ளாதே; கம்மாளன் வரவைக் கொள்ளாதே. காலைக் கேட்டுக் கொண்டா நடக்கிறது? காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. (கடியாமல்) (சுற்றின) காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும். (அளங்கும்) காலைச் செவ்வானம் கடுக மாரி. காலைச் செவ்வானம் கடலுக்குப் பெய்யும். காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர். காலைச் செவ்வானம் கரம்பில் கட்டு; அந்திச் செவ்வானம் ஆற்றில் கட்டு. 7070 காலைச் செவ்வானம் காலத்திலும் மழையில்லை; அந்திச் செவ்வானம் அப்பொழுதே மழை. காலைத் தூக்குகிற கணக்குப் பிள்ளைக்கு மாதம் பத்து ரூபாய். காலைத் தென்றல் மழையைக் காட்டும்; மாலைத் தென்றல் மழையை விலக்கும். காலைப் பனிக்கும் கண் விழிக்கும் ஒத்தது செல்வம். காலைப் பார்த்து மேழியை வெட்டு. காலைப் பிடி என்றால் கழுத்தைப் பிடித்தாளாம். காலைப் பிடித்த சனி நடந்தால் ஒழிய விடாது. காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றியடிக்கும். காலைப் பிடித்த சனியன் கழுத்தைப் பிடிக்க அதிக நேரம் ஆகாது. காலைப் புல்லும் மாலைக் கல்லும் ஆளைக் கொல்லும். 7080 காலை மிதித்தால் தலையை மிதிப்பான். காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது. காலை எழுந்து காக்கை முகத்தில் விழிக்காதே. காலையில் கல் மாலையில் புல். காலையில் தயிர், கடும் பகலில் மோர், மாலையில் பால். காலை மேகமும் கடுந்தனி வெயிலும் மாலை உப்பலும் மழைதனில் இல்லை. காலை மோடமும், கழுதை வாடையும், மாலைத் தென்றலும் மழையில்லை. காலை விருந்தைத் தட்டாதே; கசடருடன் கூடித் திரியாதே. காலை வெயிலைக் கழுதை விடாது. காலை வெயில் பாலுக்குச் சமம்; மாலை வெயில் மருந்துக்குச் சமம். 7090 கால் அடிபட்ட நாயும் காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவுமா? கால் அணாக் கொடுக்கிறேன் என்றால் காதவழி நடப்பான். கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம்; நூல் அளவே ஆகுமாம் நுண் சீலை (நூற்சீலை) கால் ஆட்டி வீட்டில் வாலாட்டி இருக்காது. கால் ஆட்டுகிறவர் வீட்டில் வாலாட்டி நாய் தங்காது. கால் ஆடக் கோல் ஆடும்; கோல் ஆடக் குரங்கு ஆடும். (பாம்பு) கால் ஒடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம். கால் காசுக்குத் தாலி கட்டாதவனும், காலில் விழாத பிள்ளையும் பயன் இல்லை. கால் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது. கால் காசு குரங்கு முக்கால் காசுப் பழம் தின்னும். 7100 கால் சிறிதாகில் கனல் ஊரும்; கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும். கால் துட்டுக்குப் பசு வாங்க வேண்டும்; அது கால்படி பால் கறக்க வேண்டும். கால் நடைக்கு இரண்டு காசு; கைவீச்சுக்கு ஐந்து காசு. கால் நுழையக் கூடாத இடத்தில் தலையை நுழைத் திடுவான். கால் படி அரிசி இருந்தால் கஞ்சி; அரைப்படி அரிசி இருந்தால் அன்னம். கால் போகா இடத்தில் தலையிட்டுக் கொள்ளாதே. கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா? கால் வந்து சூழக் கரிவந்து சூழ்ந்தது. கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா? கால்வாயைத் தாண்ட முடியாதவன் கடலைத் தாண்டப் போகிறானாம். 7110 காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும். காவல் காக்க வந்த குரங்கு கைத்துப்பாக்கி கேட்டதாம். காவல் தானே பாவையர்க்கு அழகு. காவி உடுத்தவரெல்லாம் விவேகானந்தரா? காவேரி ஆறு கரை புரண்டு போனாலும் வீராணத்து ஏரி விதை முதலுக்குக் கட்டாது. காவேரி கண்மாய்க் கரைபுரண்டாலும் வீரமங்கலத்துக் கண்மாய் இருகுழிக்கும் காணாது. காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும். காவேரியும் கொள்ளிடமும் கரைபுரண்டு போனாலும் வீராணத்து ஏரியில் விரலளவுதான் தண்ணீர் ஏறும். காவேரியை விட கனத்த நதி வேறு இல்லை. காவேரியைப் போல நதி இல்லை; சாவேரியைப் போல இராகம் இல்லை. 7120 காவோலை விழுந்ததென்று குருத்தொலை சிரித்ததாம். காழி பாதி; வீழி பாதி. காள வாய்க்கு மழையும் கைம்பெண்டாட்டிக்குப் பிள்ளையும் (கேடு) காளிப்பட்டம் போனாலும் மூளிப்பட்டம் போகாது. காளை இளைத்தாலும் கொம்பு இளைக்காது. காளை ஈன்றதென்று கேட்குமுன்னே கயிறு எடு என்றானாம். காளை நாகரிகம் வாளா கிடக்குமா? காளை போன வழியே கயிறு போகும். காளை மாடு ஆனாலும் கன்றுக்கு உழக்குப் பால் தா என்றானாம். காளையைக் கட்டுத்தறியில் விட்டுவிட்டு மேயும் இடத்தில் பிடிக்க முடியுமா? 7130 காளையை வாங்குகிறவன் கொம்பைப் பார்ப்பானா? காதைப் பார்ப்பானா? காறிப் போன கருணைக் கிழங்கு பழம்புளியால் பதம் பெற்றது. காற்றடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது. கற்றாடி விடக் கற்றுக்கொடுத்தால் தானும் பறக்க ஆசைப் பட்டாளாம் தங்கமகள். காற்றில் ஆடினதாம் கம்பங்கதிர்; அதற்குப் பயந்ததாம் சிட்டுக்குருவி. காற்றில்லாமல் தூசி பறக்குமா? காற்றுள் உள்ள போதே தூற்றிக் கொள்; கதவு உள்ள போதே சாத்திக் கொள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்; கரும்புள்ள போதே ஆட்டிக் கொள். காற்று காற்றோடே போயிற்று; காசு கடையோடே போயிற்று. காற்றுக்கு எதிரே துப்பினால் முகத்தில் விழும். 7140 காற்றுக்கு நேரே துப்பினால் முகத்தில் தான் விழும். காற்று கொண்டு போகிற எச்சிலையைக் கல் வைத்து அழுத்தினால் கடலேறி வந்தது. காற்றும் சிலரை நீக்கி வீசுமோ? காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு. காற்றைப் பார்த்துக் கப்பலை விடு. காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது. காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா? காற்றைப் பிடித்துக் கையில் அடக்க முடியுமா? காற்றை விதைத்தால் புயலை அறுக்கலாம். கானலை நீரென்று எண்ணும் மான் போல.  கி 7150 கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மணையில் வை. கிடக்கிறது எல்லாம் கிடக்க கிழவியைத் தூக்கி மணையில் வைத்தாளாம் கிடக்கிறது ஒட்டுத் திண்ணை; கனவு காண்கிறது மச்சு வீடு. கிடக்கிறது கிடக்கட்டும்; கிழவனையும் கிழவியையும் உள்ளே விடுங்கள். கிடக்கிறது குட்டிச் சுவர்; கனாக் காண்பது மச்சு மாளிகை. (குப்பைக் குழி) கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல். கிடந்த குச்சியை எடுத்து நடந்த மாட்டை ஓட்டாதே. கிடந்தது கிடந்தால் நடந்தது காதம். கிடந்த பசியைக் கிள்ளிக் கிளப்பினானாம். கிடாக் கன்று போட்டது என்றால் பிடித்துக் கட்டு என்றானாம். 7160 கிடாரம் உடைந்தால் கிண்ணிக்கு ஆகும்; கிண்ணி உடைந்தால் என்னத்துக்கு ஆகும்? கிடை கிடந்த இடத்தில் மயிர்கூடக் கிடையாது. கிடைக்கப் போகும் பலாக்காயைவிட கிடைக்கும் களாக்காய் மேல். கிடைக்கு கிடை ஆடுதான். கிட்ட உறவு முட்டப் பகை. (நெருங்க) கிட்டக் கோட்டையிட்டால் எட்ட மழை. கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது. கிட்டாதாயின் வெட்டென மற. கிட்டாத ஒன்றை வெட்டென மற. கிட்டினால் கரும்பு; கிட்டாவிட்டால் வேம்பா? 7170 கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும். கிணறு இருக்க மலை தோண்டாதே. (கிடக்க) கிணறு தப்பித் துரவில் விழலாமா? கிணறு மெத்தினால் கீழ்வரை பொசியும். கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல. கிணறு வெட்டித் தவளையும் பிடித்து விடுகிறதா? கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா? கிணறு வெட்டுவோர் நீரையும் சுரகக் விடுவார்களா? கிணறு வெட்டியா தாகம் தீர்கிறது? கிணறு வெட்டுவோர நீரையும் சுரக்க விடுவார்களா? 7180 கிணற்றிலே போட்டு விட்டுச் செப்புக் குடத்தைத் தேடினாற் போல. கிணற்றில் போட்ட கல் மாதிரி. கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா? கிணற்றின் ஆழமும் கயிற்று நீளமும் பார்க்க வேண்டும். (வேண்டாமா) கிணற்றுக்கு அழகு தண்ணீர்; பெண்ணுக்கு அழகு திலகம். கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தான். கிணற்றுக்குள்ளே கங்கை குதித்தாற் போல. கிணற்றுக்குத் தகுந்த தாம்புக் கயிறு போட வேண்டும். கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா? கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகும்? 7190 கிணற்றுத் தவளைக்கு உலகம் தெரியாது. கிணற்றுத் தவளைக்குக் கிணறுதான் சமுத்திரம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? கிணற்று மேடு விளைநிலக் கேடு. கிணற்று மேட்டில் கீரைப் பாத்தியா? கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா? கிணற்றைக் காத்தால் வயிற்றைக் காக்கும். கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும். கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பையிலே மயிரே புறப்படும். கிண்டக் கிண்ட கீரையும் மயிரும். 7200 கிண்டி விட்டுக் கேளிக்கை பார்க்கிறது (வேடிக்கை) கிண்ணி பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது. கிண்ணி வைத்துக் கிண்ணி மாற்றுகிறது. கிரக சாந்திக்குச் சவரம் பண்ணிக் கொள்ளுகிறதா? கிராக்கி மொச்சைக் கொட்டை; வராகனுக்கு இரண்டு கொட்டை. கிராம சாந்திக்காகத் தலையைச் சிரைத்துக் கொண்டானாம். கிராமத்தைப் பார்க்கச் சொன்னால் சேரியைப் பார்க்கிறான். கிரிசை கெட்டு வரிசை மாறுகிறது. கிரியை அற்றோன் மறையைச் சாற்றுவது ஏன்? கிலி பிடித்ததோ, புலி பிடித்ததோ? 7210 கிழ ஓணான் மரம் ஏறாதா? கிழக் கிடாவைப் புகழ்கிறது இகழ்ச்சி அல்லவா? கிழக்கிலும் மேற்கிலும் கனாவிலும் கடன் கொடாதே. (கருவிலும்) கிழக் குடலுக்குச் சோறும் இடிசுவருக்கு மண்ணும் இடு. கிழக் குரங்கு குட்டி போட்டாற் போல. கிழங் கெட்டை வீட்டில் இருப்பது நல்லது. கிழத்துக்குச் சோறும் முறத்துக்குச் சாணியும். கிழப் பேச்சுக் கவைக்கு உதவுமா? கிழப் பேச்சு சபைக்கு ஏறுமா? கிழமானாலும் கெட்டானாலும் கட்டிக் கொண்டவள் பிழைப்பாள். 7220 கிழவனுக்கு வாழ்க்கை படுகிறதைவிடக் கிணற்றில் விழுந்து சாகலாம். கிழவனுக்கு வாழ்க்கை படுகிறதைவிடக் கிணற்றில் விழுகிறது நலம். கிழவனைப் பண்ணிக் கொண்டால் கடைசி வரையில் சாப்பாடு. கிழவன் கொடுத்த பணத்துக்கு நரை உண்டா? கிழவன் பேச்சுக் கிண்ணாரக்காரனுக்கு ஏற்குமா? கிழவன் தான் நரை; கிழவன் கொடுத்த பணமுமா நரை? கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேற மாட்டாது. (ஈடேறாது.) கிழவிச் சொல்லைக் குமரி கேளாள். கிழவி தலை நரைத்ததென்ன? அதை மழுங்கச் சிரைத்த தென்ன? கிழவி தன் காலை மடக்க மாட்டாள். 7230 கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம். கிழவி தொட்டாளாம் சோறு நைந்ததாம். கிழவி பேச்சைக் கிண்ணாரக்காரன் கேட்பானா? கிழவி போனபோது சுவர் இடிந்து விழுந்ததாம். கிழவியிடம் வாய்கொடுத்தால் சொன்னதையே சொல்வாள்; குளவியிடம் கைகொடுத்தால் கொட்டின இடத்திலே கொட்டும். கிழவியை அடித்தால் வழியிலே பேளுவாள். கிழவியைப் பாட்டி என்பதற்குக் கேட்க வேண்டுமோ? கிழிந்தாலும் பட்டுச் சேலை; நைந்தாலும் நெற்சோறு. கிழிப்பது எளிது தைப்பதுதான் கடினம். கிளர்த்தும் கல்வி தளர்ச்சி படாது. 7240 கிளி அருமையைப் பூனை அறியுமா? கிளி அழுதால் பூனை விடுமா? கிளி போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோலக் கூத்தியாள் வேண்டுமாம். (வைப்பாட்டி) கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா? கிள்ளப் பழுக்குமாம்; கிளி இருந்து கொஞ்சுமாம். கிள்ளாக்குச் செல்லும் கெடி மன்னர் போல. கிள்ளி எடுக்கச் சதை இல்லை; பேர் தொந்தியா பிள்ளை (தடியன்). கிள்ளி எடுத்தால் முள்ளிக் கொடுக்கலாம். கிள்ளிக் கொடுப்பான் கருமி; அள்ளிக் கொடுப்பான் ஊதாரி. கிள்ளுகிறவனிடத்தில்இருந்தாலும் அள்ளுகிறவனிடத்தில் இருக்கக்கூடாது. 7250 கிள்ளுவார் கீழே இருந்தாலும் இருக்கலாம்; அள்ளுவார் கீழே இருக்க முடியாது.  கீ கீரிக்கும் பாம்புக்கும் தீராப்பகை. கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ். கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுவதற்கா? கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். கீரைக்குக் கழுவின தண்ணீர் கிண்டி அவிக்கப் போதும். கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போல. கீரைக்குப் புழு வேரில். கீரைத்தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டு ஏன்? (பாட வேண்டுமா?) கீரை நல்லதானால் கழுவின தண்ணீரே போதாதா? 7260 கீரையும் இரண்டு கறி பண்ணாதே. கீரையும் வேண்டாம்; கீரையில இருந்த சாறும் வேண்டாம். கீரையை வெட்டித் தோரணம் கட்டினானாம். கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன? கீர்த்தியால் பசி தீருமா? கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கிறான். கீழே தள்ளியதும் இல்லாமல் குதிரை குழியும் பறித்ததாம். கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம் (கோலார் தங்கவயலில்) கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றானாம். கீழைச்சாரம் வெங்களப்பன்; மேலைச்சாரம் எங்களப்பன். 7270 கீழைத் தெருக் கிழவி அவிசாரி போனாளென்று மேலைத் தெருக் கிழவன் கோவணத்தில் கிட்டியைக் கட்டி அடித்தானாம். கீழைத் தெருவிலே பல்லக்குக் கொடுத்து மேலைத் தெருவில் பிடுங்கிக் கொள்ளுகிறது. கீழோர் ஆயினும் தாழ உரை. கீழ்க்காது மூளி; மேற்காது மூளி; சண்டைக்கு இரண பத்திரகாளி. கீழ்க்குலத்தவன் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான். (கற்றவன்தான்) கீழ்மட்டை விழுந்தது என்று மேல் மட்டை சிரித்ததாம். கீறாத புண் ஆறாது. கீறி ஆற்றினால் புண் ஆறும். கீறிக்காட்டி கிளையை வளர்க்கும் கோழி. கீறி வலிமை உழவின் ஆழம். 7280 கீறினால்தான் கட்டி ஆறும்; பிறரிடம் சொன்னால்தான் துக்கம் ஆறும்.  கு குங்கிலியத் தூபம் காட்டிச் சன்னதமும் குலைந்தால் கும்பிடு எங்கே? குங்குமம் இட்ட நெற்றியும் குசுவிட்ட குண்டியும் சரியாகுமா? குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம்; குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா? குங்குமம் சுமந்த கழுதை வாசனை அறியுமா? (பரிமளம்) குசு கும்பிடப் போனால் தெய்வம் திடுக்கென்றதாம். குசு கொண்டு வந்திருக்கிறேன்; கதவைத் திற; கொட்டி வைக்க இடம் இல்லை. குசு புடைக்க வெறும் முறம் ஆச்சு. குசும்புக்கும் கவுண்டிக்கும் மருந்து ஏது? (பொறாமைக்கும் வழுக்கைக்கும்) குசுவுக்குப் பயந்து குடி ஓடிப் போனாளாம். 7290 குசுவைப் பிடித்தாலும் குணத்தைப் பிடிக்க முடியாது. குச்சத்திரம் குசுவாகப் போக. குச்சத்திரம் குடியைக் கெடுக்கும். குச்சி எடுத்துக் குரங்கை விரட்டப் போய்க் குறுக்கே கிடந்த நாய் குதறிக்கிட்டு விட்டுச்சாம் குச்சிக்கிழங்கு வந்தால் குடிமானம் பெருமானம். குச்சு நாய்க்கு மச்சு வீடா? குச்சு வீடு கட்டி மச்சு வீடு கட்டு. குச்சு வீடு கட்டியல்லவா மச்சு வீடு கட்ட வேண்டும். குஞ்சானா குத்துமேன்னு முட்டைக்கு முடி வெட்டிய மாதிரி. குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற் போல. (குறுஞ்சிரிப்பு) 7300 குஞ்சுடன் மேய்ந்த கோழியைக் கருடன் கொண்டு சென்றது போல. குடத்தில் பொன் கூத்தாடுமா? குடத்தில் விளக்கை இட்டு கோபுரத்தின்மேல் வைத்தாற் போல. குடத்துள் ஏற்றிய விளக்கு. குடத்துள் விளக்கும் தடத்துள் வாளும். (தடம் - உறை) குடத்தைக் கவிழ்த்துப் பழத்தைச் சொரிந்த கதை. குடப்பால் கறந்தால் குதிரை ஓட்டம் ஓடமாட்டாது. குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது. குடம் தண்ணீரில் கொள்ளி வைத்த கதை. குடலும் கூந்தலும் கொண்டது மட்டும் கொள்க. (கொள்கை) 7310 குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் அதுவும் கசகர்ண வித்தை என்கிறான். குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் வாழைநார் என்பார். (வைக்கோல் புரி) குடல் அறுந்த கோழி எங்கே போகும்? குடல் அறுந்த நரி எந்தமட்டும் ஓடும்? (எவ்வளவு தூரம்) குடல் ஏற்றம் தெரியாமல் கோடி பணம் செலவழித்தான். குடல் கள்ளு கொள்ளும்; படல் முள்ளு கொள்ளும். குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். குடல் காய்ந்தால் நாய்க்கு நாற்றம் நறுமணம். குடல் காய உண்டால் உடல் காயம் ஆகும். குடல் கூழுக்கு அழ, கொண்டை பூவுக்கு அழுகிறதா? 7320 குடல் கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம். குடி இருக்க வந்தாயோ? கொள்ளி வைக்க வந்தாயோ? குடியிருக்காத வீட்டில் குண்டு பெருச்சாளி குடித்தனம் நடத்தும். குடி இருந்த வீட்டுக்குக் கொள்ளி வைக்கிறதா? குடி இருந்து அறி; வழி நடந்து அறி. குடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப்பார். குடி இருப்பது குச்சு வீடு; கனாக் காண்பது மச்சு மாளிகை. குடி இருப்பது குச்சு, கொடுக்கல் வாங்கல் மச்சு. குடி இல்லா ஊரில் அடியிடல் ஆகாது. குடி இல்லா ஊரில் குருவியும் பறக்காது. 7330 குடி இல்லா ஊருக்குக் குள்ள நரியே அரசன். குடி இல்லா வீட்டில் குண்டுப் பெருச்சாளி உலாவும். குடி உடையான் முடி உடையான். குடி உயரக் கோல் உயரும். குடி உயர முடி உயரும். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. குடிகாரன் வீட்டில் விடிய விடியச் சண்டை. குடி கெடுத்த குசியிலே குரங்கைக் கட்டிக்கொண்டு அழுதானாம். குடிக்கக் கஞ்சி இல்லை; கொப்புளிக்கப் பன்னீராம். குடிக்கக் கஞ்சி இல்லையாம்; கூத்துப் பார்க்கப் பட்டுச் சேலையாம். 7340 குடிக்கக் கூழ் இல்லாதவன் கூத்தியாள் வீட்டுக்குப் போக ஆசைப்பட்டானாம். குடிக்கச் செம்பும் எரிக்க விளக்கும் வேண்டாமா? குடிக்கத் தண்ணீர் கேட்டால் குளிப்பாட்டக் கொண்டு வருவான். குடிக்கத் தெரியாதவன் கவிழ்த்துக் கொட்டினானாம். குடிக்கிறது எருமை மூத்திரம்; கடித்துக் கொள்வது இஞ்சிப் பச்சடி. குடிக்கிறது காடிநீர்; அதற்குத் தங்க வட்டிலா? குடிக்கிறது கூழாம்; இருக்கிறது சிங்காசனமாம். குடிக்கிறது கூழ்; கொப்புளிக்கிறது பன்னீர். குடிக்கிறது கூழானாலும் குண்டிகழுவறது பன்னீர் என்பாளாம். (கால் கழுவறது) குடிக்கிறது பழங்கஞ்சி; கொப்புளிக்கிறது பன்னீர். 7350 குடிக்கிறது வெந்நீர்; கொப்பளிப்பது பன்னீர். குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா? (கமரிலே) குடிக்கிற முலையும் பிடிக்கிற முலையும் ஒன்றுதானா? குடிக்கிறவன் கையைக் சுற்றிச்சூடு போட்டாலும் குடியை விடான். குடிக்கிற வீடு விடியுமா; இடிக்கிற வீடு இருக்குமா? குடிக்கு ஒரு பிள்ளை; கோடிக்கு ஒரு வெள்ளை. குடிக்குச் சகுனியும் கொல்லைக்குப் பல்லியும் கூடா. (பல்லி - பூண்டுவகை) குடி சூது விபசாரம் குடியைக் கெடுக்கும். குடிச்ச மாரை அசப்பான். குடித்த மருந்து குடித்தாற் போல எடுத்தால் பரிகாரி வாயிலே மண்ணுதான். 7360 குடித்த மறி கூட்டில் கிடக்காது. குடித்தனம் மேலிட வேண்டிப் பிடாரியைப் பெண் வைத்துக் கொண்டவன். குடித்தனமோ துரைத்தனமோ? குடித்தனம் என்று பண்ணினால் நன்மையும் வரும்; தீமையும் வரும். குடித்தனம் செழித்தால் துரைத்தனம் செழிக்கும். குடிபோன வீட்டிலே வறட்டு நாய் காத்தது போல. குடிப்பெண் வயிறு எரியக் கொடிச்சீலை நின்றெரியும். (தானே) குடிமதம் அடிபடத் தீரும். குடியனும் வெறியனும் அடிபடாமல் குணப்பட மாட்டார்கள். குடியிருக்கிற வீட்டில் கொள்ளி வைக்கலாமா? 7370 குடியிலே குரங்கானாலும் கொள். குடியிலே பிறந்து குடிகாட்டம் ஆடுகிறான். குடியில் பிறந்து செடியில் விழுந்தான். குடியும் குடித்தனமாக, குடித்தனமும் கோடிக்கரைக்கு வந்துவிட்டது. குடியும் சூதும் குடியைக் கெடுக்கும். குடியும் மடியும் கொண்ட குடும்பம் கூடிக்குலவவா செய்யும்? குடியே குடியைக் கெடுக்கும். குடிலானாலும் கூட்டிக் குடியிரு. குடி வைத்த வீட்டில் கொள்ளி வைக்கலாம். குடி வைத்தாயோ? கொள்ளி வைத்தாயோ? 7380 குடுமி உள்ளவன் அள்ளியும் முடியலாம் அவிழ்த்தும் விடலாம். குடுமிக்கு ஏற்ற கொண்டை. (தக்க) குடுமித் தலையும் மொட்டைத் தலையும் கூடுமா? குடுமித் தலையைப் மொட்டைத் தலையுடன் சேர்த்து முடி போட்டானாம். குடுமியானுக்குக் குறுணி கொடுக்கிறதா என்று புற்றின் மேல் படுத்த கதை. குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் மூத்தவளும் உதவாது. குடும்பத்தின் குத்துவிளக்கு குத்தும் விளக்காகிவிடக் கூடாது. குடும்பம் இரண்டானால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் குடைந்து கெட்டது காது; குத்திக் கெட்டது பல்; தேய்த்துக் கெட்டது கண். குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்; (மடையன்) குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள். 7390 குட்ட நாடு கெட்டால் எட்டு நாடும் கெட்டன. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது. (குறையாது) குட்டி ஆடு செத்ததென்று கோனாய் குந்தி அழுததாம். குட்டி ஆனைக்கும் கொம்பு முளைத்தது; பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சு. குட்டி ஆனை குளத்தைக் கலக்கும். குட்டி இட்ட நாய்க்குக் குப்பை மேடு கோபுரம். குட்டி குரைத்து நாய் தலையில் வைக்கிறது. குட்டிக் கரணம் போட்டாலும் கஞ்சன் ஒரு காசு கொடான். (லோபி) குட்டிக் கரணம் போட்டாலும் மட்டி புத்தி போகாது. குட்டிக் கரணம் போட்டாலும் வட்டில் சோற்றுக்கு வழி இல்லை. 7400 குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான். குட்டிக் கழுதையானால் எட்டு மடங்கு அழகு. குட்டி கிடக்கிற கிடையைப் பார்; குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். குட்டிக் குரங்கானாலும் கெட்டிப் பிடி. குட்டிக் குரங்கானாலும் குறும்புக்கு என்ன குறையா? குட்டிக் குலைத்து நாயின் தலையில் வைத்தது? குட்டிக் கொழுந்தனும் கோள் சொல் நாத்தனாரும் குட்டிக் கொள்ளும்போதே முட்டிக்கொண்டானாம். குட்டி கொழுத்தாலும் வழுக்கை வழுக்கைதான். குட்டிச் சாத்தான் கொடுத்ததைக் கெடுக்கும். குட்டிச் சுவரிலே தேள் கொட்டக் கட்டுத்தறியிலே நெறி ஏறுமா? 7410 குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டினது போல. குட்டிச் சுவரிலே தேள் கொட்ட நெடுஞ்சுவரிலே நெறி கட்டியதாம். குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா? குட்டிச் சுவருக்குள் உட்கார்ந்து கொண்டு மச்சு வீட்டைப் பற்றிக் கனவு கண்டானாம். குட்டிச் சுவரும் குரங்கிருந்த மாளிகையும் பாழ். குட்டி செத்தாலும் குரங்கு விடாது. குட்டி நரை குடியைக் கெடுக்கும். குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. குட்டி நாய் குரைத்து பட்டி நாய்க்குக் கேடு வந்தது. குட்டி நாய் கொண்டு வேட்டை ஆடுகிறதா? 7420 குட்டி நாய் வேட்டை நாயை விரட்டினாற் போல. குட்டி நாயும் குழந்தைப் பிள்ளையும் இட்ட கையைப் பார்க்கும். குட்டிப் பாம்பை அடித்தாலும் குற்றுயிராய் விடக்கூடாது. குட்டிப் பையைக் கேட்டால் கொட்டைப் பாக்கு இல்லை என்கிறான். குட்டி போட்ட நாயைப் போல ஏன் உறுமுகிறாய்? குட்டி போட்ட நாய்போலக் குரைக்கிறது. குட்டி போட்ட நாய் முடங்கினாற் போல. குட்டி மானம் விட்டுக் குசவனோடு பேசினால் சட்டையும் பண்ணான்; சட்டியும் கொடான். (குட்டுமானம்) குட்டியாடு தப்பி வந்தால் குள்ள நரிக்குச் சொந்தம். குட்டியின் கையைப் பிடித்துக் குரங்கு கொள்ளிக் கட்டைச் சூடு பார்த்தாற் போல. 7430 குட்டியைத் தூக்கும் பல்தான் எலியைக் கொன்று தின்னவும் ஆகிறது. குட்டி வேதாந்தம் குடியைக் கெடுக்கும். குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா? (குண்டு - பள்ளம்) குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும். குட்டை குடிப்பினால் சேறு தான் மிஞ்சும். குட்டைத்தாதன் மகன் மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான். குட்டை மரம் குலுங்கக் காய்க்குமா? குட்டையில் ஊறிய மட்டை. குட்டையைக் கலக்கிப் பருந்துக்கு இரை இட்டதுபோல. குட்டையைக் குழப்பி மீனைப் பிடிப்பது போல. 7440 குட்டையில் விழுந்த மீனுக்கு அதுவே சொர்க்கம். குட்டை வால் நாய்க்கு நெஞ்சில் அறிவு. குணக்கு எடுக்க நாய் வால் நிமிருமா? குணக் கேடனாலும் கொழுநன்; நலக்கேடனாலும் நாயகன். குணச்சிறப்பைக் குலத்திற் பார். குணத்திற்கு அழுகிறதா? பிணத்திற்கு அழுகிறதா? குணத்தைச் சொல், குலத்தைச் சொல்லாதே. குணத்தை மாற்றக் குரு இல்லை. குணம் அழிந்தாரோடு தேவரும் பேசார். குணம் இல்லாக் கல்வி பாழ். 7450 குணம் இல்லாத வித்தை அவித்தை. குணம் உள்ள இடத்திலே மணம் உண்டு. குணம் உற்றவன் மணம் உற்றவன்; குணம் அற்றவன், மணம் அற்றவன். குணம் குப்பையிலே; பணம் பந்தியிலே. குணம் குற்றம் யாருக்கும் உண்டு. குணம் கெட்ட இடத்திலே குன்றியும் இராது. குணம் கெட்ட மாப்பிள்ளைக்கு மணம் கெட்ட பணியாரம். குணம் கெட்டால் குரங்கு. குணம் கொடுப்பவன் குரு. குணம் பாதி; கொண்ட நோவு பாதி. 7460 குணம் பெரிதே யன்றிக் குலம் பெரிதல்ல. குணம் போல வாழ்வு. குண்டடி பட்டவனுக்கு மருத்துவம் பார்க்காமல் கூட்டிக் கொண்டு வந்தவனுக்கு மருத்துவம் பார்த்த கதை. குண்டன் கூடினால் சண்டை வரும்; குமரி கூடினால் நகர் பாழாகும். குண்டாக் கரணம் போட்டாலும் பிண்டச் சோற்றுக்கு வழி இல்லை. குண்டி எத்தனைக் குளம் கண்டதோ? குளம் எத்தனை குண்டியைக் கண்டதோ? குண்டி எத்தனையோ துணைகளைக் கண்டது; குந்தாணி எத்தனையோ உரலைக் கண்டது. குண்டி எத்தனை கோணற் கோணினாலும் சுமை வீட்டிற் போய்ச் சேர்ந்தாலே சரி. குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும். (வற்றினால்). குண்டித் துணியை நம்பாதவன். 7470 குண்டி மறைக்கத் துணி இல்லை; கொண்டை, பூவுக்கு அழுகிறதாம். குண்டு இல்லாமல் வண்டும் இல்லாமல் குருவி சுடலாமா? குண்டு உழுதவனும் துண்டு நெய்தவனும் கடைத்தேறான். குண்டு குண்டு என்று ஓடினாலும் குட்டி ஆனை குதிரை ஆகுமா? குண்டுச் சட்டியிலே கரணம் போடுகிறான். குண்டுச் சட்டியிலே குதிரை ஓட்டுகிறது. குண்டுணி சொல்கிறவர்களுக்கு இரு நாக்கு; கட்டுவிரி யனுக்கும் இரு நாக்கு. குண்டு பட்டுச் சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம். குண்டு போன இடத்தில் குருவி நேர்ந்தது. குண்டை இளைத்தால் குடி இளைக்கும். 7480 குண்டை சாவு கொடுத்தவனும் பெண்டு சாவு கொடுத்த வனும் ஒன்று. குண்டை பலத்தால் குடி பலக்கும். குண்டை பெருத்தால் குடி பெருக்கும். குண்டை விளங்கினால் குடி விளங்கும். குண்டோட்டம் குதிரை ஓட்டம். குதிக்கும் முன் பார்த்துக் குதி. குதி குதி என்பார்கள் எல்லாரும் கூடக் குதிப்பார்களா. குதித்து ஓடினால் குலைப்பதறி ஓடும் நோய். குதித்துக் குதித்து மாவிடித்தாலும் குந்தாணிக்கு ஒரு கொழுக்கட்டையும் கிடையாது. குதித்துக் குதித்து மாவிடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டையே. 7490 குதிகால் பெருத்தவள் குடும்பத்துக்கு ஆகாள். குதிரை இருப்பு அறியும்; கொண்டவன் குணம் அறிவாள் பெண்டாட்டி. குதிரை இல்லா ஊருக்குக் கழுதை தம்பிரான். குதிரை இல்லா ஊருக்குக் கழுதைதான் பஞ்ச கல்யாணி. குதிரை உதைத்தாலும் உதைக்கலாம்; கழுதை உதைக் கலாமா? (கழுதையா உதைக்கிறது?) குதிரை எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும். குதிரை ஏற யோகமிருந்தால் கொண்டு தர ஆள்வரும். குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது. குதிரை ஏறி என்ன? கோணக் கொம்பு ஊதி என்ன? குதிரை கடிவாளம் என்றால் வாயை மூடும்; கொள் என்றால் வாயைத் திறக்கும். 7500 குதிரை களவு போனபின் கொட்டகையைப் பூட்டுவது போல். குதிரை கீழேயும் தள்ளிப் பள்ளமும் பறித்ததாம் (குழியும்) குதிரை குட்டியானாலும் கொள்ளு தின்பதில் குறைவில்லை. குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆணைக்கு அர்ரம் குதிரை குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்க வில்லை. குதிரையின் குணத்தைக் கண்டுதான் கொம்பில்லாமல் படைத்தான் ஆண்டவன். குதிரை குருடனாலும் கொள்ளு தின்கிறதில் குறைவில்லை. (குறையா? குறைச்சல் இல்லை.) குதிரை செத்ததும் அல்லாமல் குழி தோண்ட மூன்று பணம். குதிரை செத்ததும் அல்லாமல் சேணம் சுமக்க வேலை ஆயிற்று. குதிரை தூக்கிப் போட்டதன்றியும் குழியும் பறித்ததாம். 7510 குதிரை நடக்காவிட்டால் இராவுத்தர் கொக்காய்ப் பறப்பாரோ? குதிரை நடைவாராமல் கொக்காய்ப் பறப்பானாம் இராவுத்தன். குதிரை நல்லதுதான்; சுழி கெட்டது. குதிரை நொண்டி ஆனாலும் கொள்ளுத் தின்ன இராசா. குதிரையான குதிரையெல்லாம் கூரையைப் பறித்துத் தின்கிறபோது, குருட்டுக் குதிரை கோதுமை மாவுக்கு அழுததாம். குதிரையின் கொழுப்பறிந்து சுவாமி கொம்பு கொடாமற் போனார். குதிரையும் ஏறிக் குதிரைக் குட்டியும் ஏறுவதா? குதிரையும் கழுதையும் ஒன்றா? குதிரையைத் தண்ணீரண்டை இழுத்துச் செல்லலாமே தவிரக் குடிக்கச் செய்ய முடியாது. குதிரை வாங்கியபின் லகானுக்கு வழக்கா? 7520 குதிரை வால் பெரிதாக இருந்தாலும் தன் மட்டுந்தான் வீசும். குதிரை வால் வீச்சு குதிரை மட்டும். குதிரை வால் இருந்தால் எட்டின மட்டுந்தான் வீசும்? குத்தக் கூலியும் கொடுத்து எதிர்மூச்சும் போட்டானாம் (போடுகிறதா) குத்தாத காதுக்கு ஊனம் இல்லை. குத்தாத காதுக்கு ஊனம் இல்லை; குரைக்காத நாய்க்கு உதையும் இல்லை. குத்திக் கெட்டது பல்; குடைந்து கெட்டது காது; தேய்த்துக் கெட்டது கண். குத்திக் கொண்டு வா என்றால் வெட்டிக் கொண்டு வருகிறான். குத்திக் கொழுப் பிடித்தால் கும்பி நிறையும் ஆசாரிக்கு. குத்தி வடித்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம். 7530 குத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது. குத்தின அரிசி கொழியலோடு இருக்க, இந்தாடா மாமா என் தாலி என்றாளாம். குத்துக்காலி குடித்தனத்துக்கு உதவாள். குத்துக் குத்தாய் நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா? குத்துக்கு நிற்பான் வீரமுட்டி; கொள்ளை கொண்டு போவான் தவசிப் பிள்ளை. குத்துக்கு முன்னே குடுமியைப் பிடி. குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா? குத்துப் பட்டவன் தூங்கினாலும் குறை வைத்தவன் தூங்க மாட்டான். குத்துப் பொறுத்தாலும் குறை வயிறு பொறுக்குமா? குத்து விளக்கிற்கும் குண்டிக்குக் கீழ் இருட்டு. 7540 குத்தேரி இருக்கிறது குத்தேரி இருக்கிறது என்று குடிப்பிச்சை எடுத்தாளாம். குந்தாலிக்கும் பாரை வலிது. குந்தி இருந்தால் குடல் பசிக்காதா? குந்தி இருந்து தின்றால் குன்றும் கரையும். குந்திக் குளித்தால் உடம்பு குறுணித் தண்ணீர் குடிக்கும். குந்திய கிழவியை எந்திரி என்றானாம். குந்தித் தின்றால் குன்றும் மாளும். குந்தினால் எழுந்திருக்க மாட்டேன்; குஞ்சு பொரித்தால் பேர் பாதி. குந்தி வடித்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம். குபேரன் பட்டணத்திலும் விறகுத் தலையன் உண்டு. 7550 குபேரன் பட்டணத்தில் கொள்ளை போயிற்றாம்; ஒருவனுக்கு ஊசி கிடைத்ததாம். குபேரன் பட்டணத்தில் கொள்ளை போனாலும் அதிட்ட வீனனுக்கு அகப்பைக் காம்பு அகப்படுமா? குபேரன் பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றும்இல்லை. குப்புறக் கவிழாத குழவி குதித்தெழுந்தோடினது என்பது போல. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றானாம். குப்புற விழுந்து தவம் செய்தாலும் குருக்களுக்கு மோட்சம் இல்லை. குப்பை இல்லா வேளாண்மை சப்பை. (வெள்ளாமை) குப்பை இன்றிப் பயிர் விளையாது. குப்பை உயரும்; கோபுரம் தாழும். குப்பை உயர்ந்தால் குடி உயரும். 7560 குப்பை உயர்ந்தால் போபுரம் ஆகுமா? குப்பை உயர்ந்தென்ன? கோபுரம் தாழ்ந்தென்ன? குப்பை ஏறிக் குடை பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுந்தம் பார்த்தானாம். குப்பை ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுந்தம் போகிறனாம். குப்பை ஏறிக் கூவாத கோழி, கோபுரம் ஏறி வைகுண்டம் காட்டுமா? குப்பை ஏறிக் கோணற் சுரைக்காய் அறுக்காதவன் வானில் ஏறி வைகுண்டம் பார்த்தானாம். குப்பைக்காரி கண்ணில் கூலிக்காரி இழப்பம். குப்பைக்காரி பிள்ளையும் குமரியானால் தெரியும். குப்பைக்காட்டுக் கோழிக்கு கும்பி குறையாது. குப்பைக் கீரைத் தண்டு கப்பலுக்குப் பாய்மரம் ஆகுமா? 7570 குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றிமணியே. குப்பைக்குள் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குன்றுமா? (போகுமா? போகாது.) குப்பை சீக்கும் நாயே, உனக்குக் கொற்றத் தவிசும் உண்டோ? குப்பைத் தொட்டி நாய் எருக்கிடங்கு நாயை ஏளனம் செய்ததாம் குப்பைத் தொட்டியாய் இருந்தாலும் நாய்க்குத் தன் தொட்டி பொன் தொட்டியே. குப்பைமேடு உயர்ந்தது; கோபுரம் தாழ்ந்தது. குப்பையிலே போட்டாலும் குன்றிமணி மங்காது. குப்பையில் இருந்தாலும் குன்றிமணி; செப்பிலே இருந்தாலும் மாணிக்கம். குப்பையில் ஏறி உப்பு வண்டி எண்ணினாள். குப்பையில் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது. 7580 குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினதுபோல. (ஏறும்) குப்பையில் போட்டாலும் குன்றிமணி குன்றிமணிதான்.. குப்பையிலே இருக்கும் கொட்டாங்கச்சி ஒரு குச்சியைக் கோத்துக் கிட்டுத்தான் இருக்கும். குப்பையில் இருந்தாலும் மாணிக்கம் மாணிக்கம்தான். குப்பையில் போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து விட்டுப்போடு. குப்பையில் முளைத்த கீரை கப்பலுக்குக் கால் ஆகுமா? குப்பையும் கோழியும் கூடினாற் போலக் குருவும் சீடனும். குமரிக்கு உள்ள தளுக்கு, குட்டிபோட்டால் லொளுக்கு. குமரிக்கு ஒரு பிள்ளை; கோடிக்கு ஒரு வெள்ளை. குமரிக்குக் கொண்டாட்டம் கிழவனுக்குத் திண்டாட்டம். (கிழவிக்கு) 7590 குமரிக்கு முதுகில் பிள்ளை. குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது. (தனியாக) குமரிப் பால் குமட்டுமா? குமரிப்பிள்ளை ஒத்தையிலே போனாலும் போகும்; கொட்டாவி ஒத்தையிலே போகாது. குமரிப் பெண்ணைத் தாசி வீட்டில் அடகு வைத்தது போல. குமரியாயிருக்கையில் கொண்டாட்டம்; கிழவியாயிருக்கை யில் திண்டாட்டம். குமரியைக் கொண்டவனை விட்டுக் கூட வந்தவனோடு கூட்டி அனுப்புவது போல. கும்பகோணத்தான் கொள்ளை கொண்டு போகத் தஞ்சா வூரான் தண்டங் கொடுத்தானாம். கும்பகோணத்தில் காவேரி தாண்டக் கொட்டையூரில் கச்சம் கட்டினானாம். கும்பகோணத்தில் கூலி எடுக்கக் குத்தாலத்திலேயிருந்து குனிந்து கொண்டு போனானாம். 7600 கும்பகோணத்தில் மூட்டையைத் தூக்கக் குத்தாலத்தில் முண்டாசு கட்டினானாம். கும்பகோணத்துக்கு வழி என்ற என்றால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம். கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டு போகத் தஞ்சாவூர்ப் பார்ப்பான் தண்டம் கொடுத்தானாம். கும்பகோணம் கோபுரத்தழகு; தஞ்சாவூர் தடி அழகு. கும்பத்தில் மழை பெய்தால் குப்பை மேடு எல்லாம் நெல். கும்பத்து வெள்ளி, குடம் கொண்டு சாய்க்கும். கும்பலில் கோவிந்தா போடுவது போல போடுகிறான். கும்பி கூழுக்கு அழுகிறது; கொண்டை பூவுக்கு அழுகிறது. கும்பி கூழுக்கு அலைகிறது; கொண்டை எண்ணெய்க்கு அலைகிறது. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல. 7610 கும்பிடுகிறவனைத் தான் கேட்குமாம் கோழிக் குஞ்சுக் காவு. கும்பிடப் போனவன் தலை மேலே கோயில் இடிந்து விழுந்தது. கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்க வேண்டும். கும்பிடு கொடுத்து கும்பிடு வாங்கு. கும்பிடு போட்டுக் குடியைக் கொடுக்காதே. கும்பிடும் கள்ளர் குழைந்திடும் கள்ளர். கும்பிட்ட கையைக் குறுக்கிட்டு ஒடிப்பதா? கும்பிட்ட கையை வெட்டியது போல கும்பிட்ட கோயில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல கும்பிட்ட தெய்வம் குலதெய்வம். 7620 கும்பிட்டுக் கடன் கொடாதே; கும்பிட்டுக் கடன் வாங்காதே. கும்பிட்டுக் கடன் வாங்குகிறதா? கும்பியிலே கல்லை விட்டு எறிந்தால் மேலே தெறிக்கும். குயத் தாதனும் இடை ஆண்டியும் இல்லை. குயத்தி நாக்கை அறுத்தாலும் குண்டு சட்டி இரண்டு காசு தான் என்பாள். குயத்தி நாக்கை குட்டம் போட்டாலும் குடம் இரண்டு காசு என்பாள். குயவனுக்கு ஆறு மாத வேலை; தடிகாரனுக்கு ஒரு நிமிட வேலை. குயவனுக்குப் பல நாள் வேலை; தடிகாரனுக்கு ஒருநிமிட வேலை. (தடியனுக்கு) குயவன் சட்டியா கொடுத்து மாற்ற? குயவன் வீட்டில் பானை இருந்தால் வர மாட்டார்களா? பெண் இருந்தால் கேட்க மாட்டார்களா? 7630 குயவா கலயம் கொண்டு வா. இடையா பால் கொடு என்றாற் போல. குயில் கூவிக் கெடுகிறதாம்; மயில் ஆடிக் கெடுகிறதாம். குயில் போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோல் ஒரு வைப்பாட்டி வேண்டும் குயில் முட்டை இடக் காகம் கண்டுகளிக்க. குரங்காட்டிக்கு அவன் குரங்குதான் பெரிது. குரங்கானாலும் குலத்திலே கொள்ள வேண்டும். குரங்கினுள் நன்முகத்த என்றும் இல். குரங்கின் கை பூ மாலை. குரங்கின் கையில் கொள்ளி கொடுக்கலாமா? குரங்கின் கையில் சிக்கிய பாம்புபோல 7640 குரங்கின் தலையில் கரகம் வைத்துக் காளிகும்பிட்டது போல. குரங்கின் பீயை மருந்துக்குக் கேட்டால் கொடுக்குமா? அடித்து வாங்க வேண்டும். குரங்கின் மலத்தை மருந்துக்குக் கேட்டால் கொப்புக்கிளை யெல்லாம் தத்திப் பாயும். (பீயை) குரங்கின் மூத்திரம் துளி ஆயிரம் பொன். குரங்கின் வயிற்றில் குஞ்சரம் பிறக்குமா? குரங்கு என்றாலும் குலத்தில் கொள். (ஆனாலும்) குரங்கு உடம்பில் புண் வந்தால் கோவிந்தாதான். குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்? குரங்குக்கு ஏணி வைத்துக் கொடுத்ததுபோல. குரங்கு காது அறுத்தாலும் அறுக்கும்; பேன் எடுத்தாலும் எடுக்கும். 7650 குரங்குக்கிட்டே மருந்துக்கு மூத்திரம் கேட்டால் சங்க முள்ளில் அடித்தது போல. குரங்குக் குட்டிக்குத் தாவக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? குரங்குக்குக்கூடுகட்டத் தெரியாது. ஆனால் கட்டின கூட்டைப் பிரிக்கத் தெரியும். குரங்குச் சாவு சிரங்கிலே. குரங்குக்கு மரம் ஏறக் கற்றுக் கொடுத்தானாம். குரங்குக்குத் தன் மணம் நறுமணமாம். குரங்குக்குத் தேள் கொட்டினால் மரத்துக்கு மரம் தாவுமாம். குரங்குக்குப் பிய்க்கத் தெரியும்; கட்டத் தெரியாது. குரங்குக்குப் புண்வந்தால் குத்திக்கிட்டுச் சாகுமாம். குரங்குக்குப் புண் வந்தால் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருக்குமாம். 7660 குரங்குக்குப் புத்தி சொன்னால் குடியிருப்புப் பாழ். குரங்குக்கு வாழ்க்கைப் பட்டால் குதித்தேறாமல் முடியுமா? குரங்குக்குத் தன்குட்டி பொன்குட்டி. குரங்கு கை பூமாலை. குரங்கு தன் குட்டியின் கையைக் கொண்டு பதம் பார்க்கிறது போல குரங்கு தாவுகிற தாவிலே குட்டியை மறக்குமா? குரங்கு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது. குரங்கு பிடித்ததுதான் பிடி. குரங்குப் பிடியே பிடி. குரங்குப் பிணமும் குறவன் பிணமும் சுடுகாடு கண்டதில்லை. 7670 குரங்குப் பிணமும் குறப்பிணமும் கண்டவர் இல்லை. குரங்கும் உடும்பும் பிடித்தது விடா. குரங்கு மரத்தில் ஏறும்; குழந்தை இடுப்பில் ஏறும். குரங்கு மழையில் நனைந்தாலும் நனையும்; குடிசையில் போய் ஒண்டாது. குரங்கு முகத்துக்குப் பொட்டு எதற்கு? குரங்கு முகம் எல்லாம் ஒருமுகம்; கூத்தாடி பேச்செல்லாம் ஒரு பேச்சு. குரங்கு வாழைப்பழத்தைக் கண்டால் சும்மா விடுமா? குரங்கு விழுந்தால் கூட்டத்துடன் சேராது. குரங்கெல்லாம் ஒரே முகம் (ஒரு) குரங்கை அழைத்துக் கொண்டு கூத்துப் பார்க்கப் போனானாம். 7680 குரங்கைக் குளிப்பாட்டிக் கோபுரத்தில் வைத்தாலும் குணத்தைக் காட்டும். குரங்கைத் தாங்காத கொம்பு உண்டா? குரப்பமிட்டுத் தேய்த்தாலும் குதிரை ஆமா கழுதை? குரு இல்லாத சீடன் உண்டா? குரு இல்லாச் சிட்சையும் கரு இல்லா வித்தும் பாழ் குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை; முதல் இல்லார்க்கு லாபமும் இல்லை. குரு இல்லை வித்தை பயன் இல்லை. குரு என வந்தான். திரு உரை தந்தான். குருக்கள் நின்று பெய்தால் சீடன் ஓடிப் பெய்வான். குருக்கள் பீயை அரைப்பு என்று தேய்த்துக் கொள்கிறதா? 7690 குருக்கள் வீட்டு மாடும் குருக்களாகி விடுமா? குருக்களைக் கடித்த நாய் புழுத்துச் செத்தாலும் குருக்கள் வலிக்கு என்ன செய்வது? குரு கடைக் கண் கூட்டுவிக்கும். குருடர்கள் ஊரிலே ஒற்றைக் கண்ணன் இராசா. குருடர் கூடி ஆனை கண்ட கதை. குருடனுக்குக் கண்வேண்டுமென்று சொல்லுவான். வேண்டா மென்று சொல்லுவானா? குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்க முடியுமா? குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்கள். குருடனுக்குத் தொட்டால் கோபம்; முடவனுக்கு விட்டால் கோபம். குருடனுக்குப் பால் கொக்குப் போன்றது. 7700 குருடனுக்கு வேண்டியது கோல். குருடனும் செவிடனும் கூத்துப் பார்க்கப் போய் குருடன் கூத்தைப் பழித்தான், செவிடன் பாட்டைப்பழித்தான். குருடனும் செவிடனும் கூத்துப் பார்க்கப் போய், குருடன் கூத்து நன்றாய் இருக்கிறது என்றான், செவிடன் பாட்டு நன்றாய் இருக்கிறது என்றான். குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற் போல. குருடனை ராசவிழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா? குருடனை விருந்துக்கு அழைத்தால் உதவிக்கு ஒருவன் வருவான். குருடன் ஆடுமேய்க்க எட்டு ஆளுக்கு வேலையா? குருடன் கிழித்தது கோவணத்துக்கு ஆகும். குருடன் கைக்கோலைப் பிடுங்கினது போல. குருடன் கையிலே கோலைத்தான் கொடுத்தனுப்பலாம். குண்டியைப் பிடித்துத் தள்ளிக்கிட்டா இருக்க முடியும். 7710 குருடன் கையில் விலாங்கு அகப்பட்டது போல. (மீன்) குருடன் தண்ணீருக்குப் போனால் பின்னோடு எட்டாள் மெனக்கீடு. குருடன் கைத் தீப்பந்தமும் குழந்தைக் கைப்படைக்கலமும் போல குருடன் தூங்குவதும் ஒன்றுதான் விழித்திருப்பதும் ஒன்று தான். குருடன் பரதநாட்டியம் போல. குருடன் பழுதை திரித்தது போல. குருடன் பெண்டாட்டி கூனனோடு உறவாடினாள். குருடன் வேண்டுவது கண் பெறத்தானே. குருடானாலும் குதிரை சிமிட்டுகிறதில் தாழ்ச்சியில்லை. குருடி தண்ணீர்க்குப் போனால் எட்டாள் மினக்கெடு. 7720 குருடி, மலை மேலே எறும்பு ஊர்கிறது என்று சொன்னானாம்; கூடக்குட்டியும் போகிறது என்றானாம் மற்றவன். குருடி மை இட்டாலும் குருடு குருடே. குருடு குருடு என்றால் செவிடு செவிடு என்கிறாய். குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிக்குள் விழும். குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல குருட்டுக் கண் இருட்டுக்கு அஞ்சாது. குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவதென்ன? குருட்டுக் கண்ணை விடக் கோணக்கண் மேலானது. (எதற்கு) குருட்டுக் கண் தூங்கி என்ன? தூங்காது என்ன? (விழித்து) குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. 7730 குருட்டுக் கொக்கிற்கு ஊர்க்குளமே சாட்சி. (உப்பளமே) குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கினது போல. குருட்டு நாய்க்கு அதிட்டம் வந்த மாதிரி. குருட்டு நாய்க்கு இருட்டுள் வறட்டுப்பீ அகப்பட்டாற் போல. (ஏனோ) குருட்டு நாய்க்கு திருட்டுப் புத்தி எதற்கு? (குணம்) குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல (தாவினாற்) குருட்டுப் பெண்ணுக்கு வறட்டு சம்பம். குருட்டு மாட்டைத் தெய்வம் காக்கும். குருட்டு வேசி தவிட்டுக்குப் பிலுக்கினாளாம். குருட்டோடு அழுதாலும் செவிட்டோடு அழ முடியாது. 7740 குரு இல்லார்க்கு வித்தை இல்லை; முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை. குருத் துரோகம் குல நாசம். குரு நின்ற நிலையில் நின்றால், சீடன் ஓடுகிற ஓட்டத்தில் இருக்கிறான். குரு நின்று கொண்டு பெய்தால் சீடன் ஓடிக் கொண்டு பெய்வான். குரு பார்க்கக் குறையொன்றும் இல்லை. குரு பார்க்க கோடிபலன் உண்டாகும். குரு பார்வையால் கோடிப் பாவம் விலகும். குரு மொழிக்கு இரண்டு உண்டா? குரு மொழிக்கு எதிர் மொழி இல்லை. குரு மொழிக்குக் குறுக்கே பேசலாமா? 7750 குரு மொழி கேளாதவனும் தாய்வார்த்தைக்கு அடங்காத வனும் சண்டி. (கேளாதவனும்) குரு மொழி தெய்வமொழி. குரு மொழி மறந்தோன் திரு அழிந்து அழிவான். குரு வாய்மொழியே திருவாய்மொழி. குரு சொல்லுக்கு எதிர்ச்சொல் உண்டா? குருவி ஏறக் கொம்பிருந்தால் குறுணி வரகு குறைவாகும். குருவி குடித்தால் குளம் வற்றாது. குருவிக்கு ஏற்ற ராமசரம். குருவிக்குத் தகுந்த பாரம் குருவிக்குப் பல நாளைய வேலை; குரங்குக்கு ஒரு நாழிகை வேலை. 7760 குருவிக் கூட்டைக் குலையக் கலையாதே. குருவி சொல்லும் மருவிக் கேள். குருவி தலையில் பனங்காயை வைத்தாற் போல. குருவிபோலக் கூடுகட்டிக் குரங்குபோலப் பிய்த்தெறிவான். குருவிசெப்புச் செய்ய முடியாத குயவன் குன்னி மொடா செய்ய ஆசைபட்டாற் போல. குருவி மேல் இராமபாணம் தொடுத்தாற் போல. குருவுக்கு ஏற்ற சீடன். குருவுக்குத் துரோகம் செய்தாலும் குடலுக்குத் துரோகம் செய்யக் கூடாது. குருவுக்கு மிஞ்சின சீடன். குருவுக்கும் நாமம் குழைத்துப் போடுவான். 7770 குருவும் தாரமும் கொண்டவன் தவம். குருவேடம் கொண்டவன் எல்லாம் குரு ஆவானா? குருவைப் போல் கொடுப்பவர் இல்லை; சனியைப் போல் கெடுப்பவர் இல்லை. குரைக்காத நாய் குதிகாலைக் கடிக்கும். குரைக்காத நாயையும் அசையாத நீரையும் நம்பாதே. குரைக்கிற நாய் ஆனாலும் பட்டியைக் காக்கட்டும். குரைக்கிற நாய்க்கு எல்லாம் கொழுக்கட்டை போட முடியுமா? குரைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற் போல. குரைக்கிற நாய்க்கு ஒரு துண்டு கருப்பட்டி. குரைக்கிற நாய்க்குப் பிண்டம் போடு; தானே ஓடிப் போகும். 7780 குரைக்கிற நாய் கடிக்காது; குழைகிற நாய் விலகாது. குரைக்கிற நாய் கடிக்காது; இடிக்கிற மேகம் பெய்யாது. (வானம்) குரைக்கிற நாய் வேட்டைக்கு உதவாது. குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? குரைக்கிற நாயின் வாயிலே கோலைக் கொடுத்தால் ஊர் எங்கும் கொண்டோடிக் குரைக்கும். குரைக்கிற நாயை அடித்தால் இன்னம் கொஞ்சம் கூடக் குரைக்கும். குரைக்கிற நாயைக் கண்டு பயப்படாதே. குரை குரை என்றால் குரைக்காதாம் கொல்லக்குடி நாய்; தானாகக் குரைக்குமாம் தச்சக்குடி நாய். குரைத்தால் நாய்; இல்லாவிட்டால் பேய். குலத்தளவே ஆகும் குணம். 7790 குலத்திலே முளைத்த கொடி என்ன கொடி? கற்பிலே மலர்ந்த பெண் கொடி. குலத்துக்கு ஏற்ற குணம். குலத்துக்கு ஏற்ற பெண்; நிலத்துக்கு ஏற்ற நெல். குலத்துக்கு ஏற்றப் பேச்சு. குலத்துக்கு ஏற்ற புத்தி; தீனிக்கு ஏற்ற லத்தி. குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு. குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு. குல தெய்வம் ஆனாலும் கொடுமைக்குத் துணை போகாது. குல மகளிர் தன் கணவனையும் விலைமகளிர் தன் மேனி யையும் பேணுவார்கள். குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல். 7800 குலமகட்குத் தெய்வம் தன் கொழுநன். குலம் எப்படியோ குணமும் அப்படியே. குலம் குப்பையிலே பணம் பந்தியிலே. குலம் குலத்தோடு; வெள்ளம் ஆற்றோடு. குலம் குலத்தோடே; வெள்ளாடு தன்னோடே. குலம் கெட்டாலும் குற்றம் வைக்கலாகாது. குலம் புகுந்தும் குறை தீர வில்லை; (குறையா?) குலமகன் குலத்துக்கு அழுவான்; மூக்கறையான் மூக்குக்கு அழுவான். குலமும் ஒன்று; குடியும் ஒன்று. குலவிச்சைக் கல்லாமற் பாகம் படும். 7810 குல வித்தை கற்றுப் பாதி; கல்லாமற் பாதி. குலாசாரத்தைக் குழிக்கறி ஆக்கி மதாசாரத்தின் வாயில் மண் அடிக்க வேண்டும். குலை நடுங்கப் பேசினால் அலமந்து போகும். குழந்தை இல்லாத வீடு சுடுகாடு. குழந்தை இல்லா வீடு சுடுகாடு; குழந்தை உள்ள வீடு கோயில். குழந்தை இல்லா வீட்டில் கிழவன் துள்ளிக் குதித்தானாம். குழந்தை காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் பொல்லாதவை. குழந்தைக்காரன் குழந்தைக்கு அழுதாள் பணிச்சவன் காசுக்கு அழுதானாம். குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு லாபம். குழந்தைக்கு நெருப்பும் தெரியாது; நீரும் தெரியாது. 7820 குழந்தை நோய்க்கு வஞ்சகம் இல்லை. குழந்தைப் பசி கொள்ளித் தேள். (போல) குழந்தைப் பசியோ? கோயில் பசியோ? குழந்தைப் பட்டினியும் கோயில் பட்டினியும் இல்லை. குழந்தைப் பாலை வெடிப்பிலே வார்க்கிறதா? குழந்தைப் பிடியோ? குரங்குப் பிடியோ? குழந்தை பிறக்குமுன் பேர் இடுகிறதா? குழந்தை மலத்துக்குக் குட்டி நாய் வந்ததுபோல. குழந்தையின் முகமும் வாடக் கூடாது; குளுக்கையின் நெல்லும் குறையக் கூடாது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடிய இடத்தில். (கொண்டாடும்) 7830 குழந்தையும் தெய்வமும் கொண்டு அணைக்கிற பக்கம். குழந்தையுள்ள வீடு கோயில். குழந்தையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுதல். குழந்தை வளர்ப்பது ஒரு கோயில் கட்டுவதற்குச் சமம். குழந்தை வாக்கு தெய்வ வாக்கு. குழம்புப்பால் குடிக்க குமரகண்ட வலிப்பா? குழவிக்கு இல்லை குலமும் பகையும். குழறி அடிக்கும் காற்றுக்கு கைம்மேல் மழை. குழிப் பிள்ளை மடிப்பிள்ளை. குழிப் பிள்ளையை எடுத்து இழவு காணுகிறது. 7840 குழியிலும் பிள்ளை மடியிலும் பிள்ளை. குழியிற் பயிரைக் கூரைமேல் ஏறவிடுகிறது. குழியிற் பயிரை கூரைமேல் ஏறவிட்டாற் போலாயிற்று. குளத்தில் போட்டுக் கிணற்றில் தேடலாமா? குளத்திலே கால் கழுவாவிட்டால் குளத்துக்கு என்னகுறை? குளத்திலே கோவித்துக் கொண்டு குண்டி கழுவாமல் போனானாம். குளத்தின் மேலே கோபம் வந்தால் தண்ணீர் குடிக்காமல் போகிறதா? குளத்துக்குத் தண்ணீர் வரக் குந்தாணி குந்தாணியாய்ப் பெய்தால் போதுமா? குளத்துக்கு மழை குந்தாணியா? குளத்துக்குள்ளே தண்ணீர் கிடந்தால் கிணற்றுக்குள்ளே ஊற்றடிக்கும். 7850 குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரை இட்டது போல. குளத்தை வெட்டிவிட்டுத் தவளையைக் கூப்பிட வேண்டுமா? குளத்தை வெட்டினால் தவளை தானே வரும். குளத்தொடு புலந்து குளியாமலும் கூவலொடு புலந்து குடியாலும் போனவன். குளத்தோடு கோவித்தவன் மலத்தோடு அலைவான். குளத்தோடு கோவித்துக் கால் கழுவாமல் போகிறதா? குளப்படி கண்டு கடல் ஏங்குமா? குளப்படி தண்ணீர் சமுத்திரமானால் குடம் தண்ணீர் எவ்வளவு ஆக வேண்டும்? குளப்படி தண்ணீரைச் சமுத்திரத்தில் இறைப்பானேன்? குளப்படி நீரை இறைத்தால் கடற் பள்ளம் நிரம்புமா? 7860 குளம் உடைந்து போகும் போது முறை வீதமா? குளம் எத்தனை குண்டியைக் கண்டது; குண்டி எத்தனை குளத்தைக் கண்டது? குளம் காக்கிறவன் தண்ணீரைக் குடியானோ? குளம் தோண்டித் தவளையைக் கூப்பிட வேண்டுமா? குளம் தோண்டித் தவளையைக் கொண்டுவந்து விட்டவர் ஆர். குளம் பெருத்தது அடைச்சாணி; கோயில் பெருத்தது சேரமாதேவி. குளம் வற்றிய பின் கொக்கு நிற்குமா? குளம் வற்றியும் முறைவீதம் உண்டா? (வற்றினால்) குளம் வெட்டப் பூதம் புறப்பட்டது போல. குளம் வெட்டும் முன்னே முதலை குடியிருக்குமா? 7870 குளவி ஊதி ஊதிப் புழுவைத் தன்னிறம் ஆக்கியது போல. குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை. குளவிக் கூட்டிலே கல்லை விட்டு எறியாதே. குளவிக் கூட்டைக் கோலால் கலைத்தாற் போல. (கலைக்காதே) குளவி புழுவைத் தன்நிறம் ஆக்குவது போல. குளவி கூடு கட்டினால் பிறப்பு; நாய் பள்ளம் தோண்டினால் இறப்பு. குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசினாற் போல. குளிசம் கட்டிக் குட்டி இரட்டித்தது. குளித்தபின் சாய்க்கடையில் விழுவது போல். குளித்தால் குளிர் போகும்; நசித்தால் நாணம் போகும். 7880 குளித்துப் பேணினவனுக்கு இரு வேலை. குளித்து முப்பது நாள் ஆகவில்லை; குனிந்து உப்பு எடுக்க முடியவில்லை. குளிராத உள்ளும் கூத்தியாரும் உண்டானால் மயிரான சம்பளம் வந்தால் என்ன? போனால் என்ன? குளிராத வீடும் கூத்தியாரும் உண்டானால் மயிரான வேளாண்மை விளைந்தால் என்ன? விளையாமற் போனால் என்ன? குளிருக்கு இல்லாத குறியும் சேலையும் கூரையெல்லாம் கட்டிக் கொண்டு ஆடுகிறதாம். குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா? குளிர்ந்த நிழலும் கூத்தியார் வீடும் உள்ள போது மயிரான உத்தியோகம் இருந்தாலென்ன? போனால் என்ன? குளு குளு என்பார் தீப்பாய்வார்களா? குள்ளக் குளிர நீராடினால் குளிர் போகும். குள்ள நரி தின்ற கோழி கூவப் போகிறதா? 7890 குள்ளப் பார்ப்பான் பள்ளத்தில் விழுந்தான்; தண்டு எடு, தடி எடு. குள்ளனைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கலாமா? குள்ளன் குடி கெடுப்பான்; குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள். குள்ளுப் பிடித்தவளே குழி விழுந்த மூஞ்சிக்காரி. குறடும் பேதையும் கொண்டது விடா. (கொடிறு) குறட்டுக் கத்தி ஆண் பிள்ளையை விடாது; கொழுந்துக் கூடை பெண் பிள்ளையை விடாது. குறத்தி பிள்ளை பெற குறவன் காயம் தின்ன. (மருந்து) குறத்தி பிள்ளை பெற குறவன் மருத்துவம் பண்ண. குறப்புத்தியோ அரைப்புத்தியோ; குற வழக்குக்குச் சக்கிலி வழக்கு இலேசு. 7900 குறவழக்கு தீர்க்க குருநாதன்தான் வரவேண்டும். குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீரா. குறவன் குச்சுக் கட்டினாற் போல. குறளுக்கு வள்ளுவர்; அகவற்குக் கபிலர். குறிக்குத் தகுந்த இராமசரம். குறிஞ்சி அழிந்து நெருஞ்சி ஆயிற்று. குறிஞ்சிக்கு கபிலர். குறி தப்பினாலும் நெறி தப்பக் கூடாது. குறிப்பு அறிந்து கொடுக்கும் கொடையே கொடை. குறியாடு தலை குத்தினது போல. 7910 குறி தப்பினாலும் தப்பலாம்; நெறி தப்பக் கூடாது. குறுங்கொல்லும் நெடுந் தச்சும். குறுணிக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பதக்கு பதக்கு என்று அடித்துக் கொண்டால் வருமா? (கிடைக்குமா?). குறுணிக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டுப் பதக்குக்கு ஆசை பட்டால் கிடைக்குமா? குறுணிக்கு ஆசைபட்டாள் பதக்கைப் பன்றி தின்று விட்டுப் போயிற்று. குறுணிக்கு வேலை செய்து பதக்குக்கு ஆசைபடலாமா? குறுணி கொடுத்து நாழி வாங்குகிறதா? குறுணிப் பால் கறந்த போதிலும் கூரை பிடுங்கப் பார்த்திருக் கலாமா? குறுணிப் பால் கறந்தாலும் கூரையைப்பிய்க்கிற மாடு உதவாது. குறுணிப் பீ தின்னவனுக்குக் குசு நாத்தம் தெரியுமா? 7920 குறுணி போட்டால் பதக்கு வருமா? குறுணி மை தான் இட்டாலும் குருட்டுக்கண் தெரியுமா? குறுநரியைக் கொல்ல நல்ல நாராயம் வேண்டுமோ? குறுணி மைதான் இட்டாலும் குருடு, குருடே குறுணி மை தான் இட்டாலும் குறிவடிவம் கண் ஆகாது. குறுணி வரகு தூக்கமுடியாவிட்டாலும் அது தூக்கும். குறும்பன் புத்தி கும்பத்திலே. குறும்பைத் தவிர்க்கும் குடி தாங்கு. (குடி தாங்கி) குறுமை பூத்தாலும் குணம் போமா நெருப்புக்கு? (குறும்பை) குறும்பியுள்ள காது தினவு தின்னும். 7930 குறுவையை அள்ளி நடு; சம்பாவைக் கிள்ளி நடு. குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன். குறை உள்ளார்க்கு உண்டு குறுகுதல்; கறை உள்ளார்க்கு உண்டு கரவு. குறை குடம் கூத்தாடும். குறை குடம் கூத்தாடும்; நிறைகுடம் நிலை நிற்கும். குறை குடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது. (கூத்தாடும்) குறைந்த கருமான்; நீண்ட தச்சன். குறைந்த வயிற்றுக்குக் கொள்ளும் பலாக் காயும்; நிறைந்த வயிற்றுக்கு நீர் மோரும் பானகமும். குறைந்த உணவு நிறைந்த ஆயுள். குறையச் சொல்லி நிறைய அள. 7940 குறையை நினைத்துக் கோயிலுக்குப் போகத் குறைவந்து கொண்டையிலே ஏறிற்றாம். குறை வித்தையைக் குருவுக்குக் காட்டுகிறதா? குறை வேலையை அம்பலத்திற் கொண்டு வரலாமா? குறை வேலையைக் குருக்களுக்கும் காட்டலாகாது. குற்றத் தண்டனையிலும் சுற்றத் தண்டனை நல்லது. குற்றத்துக்குத் தெரிவது குற்றமே. குற்றத்தைத் தள்ளிக் குணத்தைப் பாராட்டு. குற்றம் அடைந்த கீர்த்தி குணம் கொள்வது அரிது. குற்றம், குணம் பாராது; பார்த்தாலும் பாராட்டாது. குற்ற மனச் சாட்சி கூடி வாழும் சத்துரு. 7950 குற்றமும் நற்றமும் பார்க்கக் கூடாது. குற்றம் உள்ள நெஞ்சு குறு குறு என்னும்; குறும்பி உள்ள காது குட குட என்னும். (தினவு கொள்ளும்) குற்றம் உள்ள நெஞ்சு கூடி வாழும் நஞ்சு. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. குற்றம் பார்த்தால் சுற்றம் உண்டா? குற்றம் போலச் செய்து குணம் செய்கிறது. குற்றம் மறைப்பதில் மற்றொரு குற்றம் நேரும். குற்றவாளி பலவீனன். குற்றிக் கல்லுக்கும் கோவம் வரும். குனிந்து ஒரு துரும்பு கிள்ளிப் போடச் சீவன் இல்லாமற் போனாலும் பேர் என்னவோ பனை பிடுங்கி. 7960 குனியக் குனியக் குட்டுக் கிடைக்கும். குனிந்தவனுக்குக் கூட ஒரு குட்டு. குன்றக்குடித் தேவடியாளுக்கு நின்றாற் போலப் பயணம் வரும். குன்றி மணி இல்லாத் தட்டான் குசுவுக்குச் சமானம். குன்றி மணித் தங்கம் இல்லாவிட்டால் கொஞ்சங் கூடத் தட்டான் பிழைக்க மாட்டான். குன்றி மணிக்கும் குண்டியிற் கறுப்பு. குன்றி மணி குப்பையில் கிடந்தாலும் குன்றுமா நிறம்? குன்றி மணிப் பொன் பூட்டிக் கொள்ளக் கோடி தவம் செய்ய வேண்டும். குன்றிய அறிவுடையார்க்கு குன்றின் அளவினரும், குன்றி மணியளவிலேயே தோன்றுவர். குன்றின் மேலிட்ட விளக்குப் போல. 7970 குன்றினால் பாலா? குழைந்தால் சாதமா? குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். குன்று முட்டிய குருவி போல.  கூ கூகைக்குப் பகலில் கண் தெரியாது. கூச்கூச் என்றால் நாய் மூஞ்சியை நக்குமாம். கூட இருந்துகொண்டு கொள்ளியைச் செருகலாமா? (குடி இருந்து) Tl ïUªJ gh®; T£L¥ gÆ® ï£L¥ gh®.(To) கூடத்தைக் கொடுத்தாலும் மாடத்தைக் கொடுத்தல் ஆகாது. கூடப் பிறந்தவனைக் கோள் சொல்லிக் கொல்கிறதா? கூடம் ஒன்று போடும் முன்னே சுத்தி இரண்டு போடும். 7980 கூடம் இடிந்தால் மாடம். கூடம் விரிய விரியக் கூட்டுவதே வேலை. கூடா நட்பு கேடாய் முடியும். கூடி இருந்து குலாவுவார் வீட்டில் ஓடி உண்ணும் கூழும் இனிது. கூடி எல்லோரும் தூக்கி விடுங்கள்; பிணக்காடாய் வெட்டிக் குவித்துப் போடுகிறேன் என்றான். கூடி வருகிற காலத்தில் குடுமி நட்டமாய் நிற்குமாம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூடு இருக்கக் குருவி போன மாயம் என்ன? கூடு புருவம் குடியைக் கெடுக்கும். கூடும் காலம் வந்தால் தேடும் பொருள் மடியிலே. 7990 கூடு முடி குடியைக் கெடுக்கும். கூடைக் கல்லும் பிள்ளையாரானால் எந்தக் கல்லைக் கும்பிடுகிறது, கூடை கூடையாகக் கொடுத்தாலும் குறை நீங்காது. கூடை நகையும் குச்சிலிப் பொட்டும். கூடையைச் சுட்டுக் கரியாகுமா? மயிரைச் சுட்டுக் கரியாகுமா? கூட்டத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல. கூட்டம் பெருத்தால் குசு பெருக்கும். கூட்டிக் கொடுத்தாலும் காட்டிக் கொடுக்கக் கூடாது. கூட்டுப் பயிர் குடியைக் கெடுக்கும். கூட்டு வியாபாரம் குடுமிப் பிடி. 8000 கூட்டோடு கைலாயம். (கூண்டோடு). கூட்டோடு போச்சுது குளிரும் காய்ச்சலும் (கூண்டோடு) கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக் குறுணித் தெய்வம் கூத்தாடும். கூதலுக்கு இல்லாத சேலை கூடாரம் கட்ட போச்சாம். கூத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்கு வழி இல்லை. கூத்தாடி உள்ளபக்கம் பந்தம் பிடி. கூத்தாடி கிழக்கே பார்ப்பான்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான். (கூத்துக்காரன்) கூத்தாடிக்குக் கிழக்கே கண்; கூலிக்காரனுக்கு மேற்கே கண். கூத்தாடிக் கணவன் வயிற்றைக் கெடுத்தான்; வாய்ப்பட்டி மாமியார் வாயைக் கெடுத்தாள். கூத்தாடிக்குக் கீழே கண்; கூலிக்காரனுக்கு மேலே கண். 8010 கூத்தாடிக்கு மீசை எதற்கு? கூத்தாடி சிலம்பம் படை வெட்டுக்கு ஆகுமா? (கூத்தாட்டுச்) கூத்தாடி சிலம்பம் படை வெட்டுமா? கூத்தாடிக்கு முறை இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை. கூத்தாடிகளில் பெரியவர்; கூட்டத்தில் சிறியவர். கூத்தாடி குண்டாடிக் கரணம் போட்டாலும் பிண்டச் சோற்றுக்கு மன்றாட்டம். கூத்தாடி சிநேகம் குடியைக் கெடுக்கும். கூத்தாடிப் பெண்ணுக்குச் சூதாடிக் கணவன். கூத்திக் கள்ளனுக்குக் குணம் ஏது? கூத்திக் கள்ளன் குடியை ஒழிப்பான். 8020 கூத்திக் கள்ளன் பெண்டாட்டியை நம்பமாட்டான். கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான்; வேசிக்கு இட்டு விறகு ஆனான். கூத்திக்குத் தக்க பந்தம்; காற்றுக்குத்தக்க படல். (கூத்துக்கு) கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும்: கூத்தியார் செத்தால் ஒன்றும் இல்லை. கூத்தியார் செத்தால் பிணம்; அவள் ஆத்தாள் செத்தால் மணம். கூத்தியார் பிள்ளைக்குத் தகப்பன் யார்? (கூத்தி) கூத்தியார் போனால் குறுங்கட்டில் வெறுங்கட்டில் (ஆகுமா) கூத்தியார் வாழ்வு கொடுக்கிற வரையில்தான். கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான். கூத்தியாருக்கு வழி அற்றவன். 8030 கூத்துக்கு இல்லாத சேலை கூரையெல்லாம் தொங்குகிறதாம். கூத்துக்கு ஏற்ற கொட்டு கொட்டுகிறது கூத்துக்கு ஏற்ற பந்தம் பிடிக்கிறது. கூத்துக்குப் புகுந்தவன் கொட்டுக்கு அஞ்சித் தீருமா? கூத்துக்கு மீசை சிரைக்கவா? கூத்துக்கும் பீத்துக் கட்டுகிறதா? கூத்துப் பார்க்க போன இடத்திலே பேய் பிடித்தாற் போல. (தேள் கொட்டினாற்) கூந்தலும் குடலும் கொண்டது கொள்கை. கூந்தல் அழகி குடியைக் கெடுப்பாள் கூந்தல் அழகி கூப்பிட்டாள் பந்தலிலே. 8040 கூந்தல் உள்ளவள் அள்ளி முடிகிறாள். கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா? கூப்பாட்டால் சாப்பாடு ஆகுமா? கூப்பிடப் போன தாதி மாப்பிள்ளையைக் கைக்கொண்டாள். கூப்பிட்ட குரலுக்கு ஆளைக் காணோம். கூடம் நிறைய இலை போட்டாளாம். கூம்புக்கு அப்புறம் ஊம்புனாலும் மழை இல்லை. (கூம்பு - கார்த்திகை) கூர்ந்து கவனித்தால் குதிரையும் கழுதையாகத் தெரியும். கூரம்பாயினும் வீரியம் பேசாதே. கூர்மையாளனே நேர்மையாளன். கூரிய சொல்லான் ஆரினும் வல்லான். 8050 கூரியன் ஆயினும் வீரியம் பேசாதே. கூரு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல்லுத் தின்னுமாம். (குதிரை) கூருக்கு எதிர் உதைத்தால் சூர் எழ வருத்தும். கூரு தப்பினால் குப்பையும் பயிர் ஏறாது. (கூரு - முளை) கூரை ஏறிக் கோணச் சுரைக்காய் அறுக்காத குருக்களா வானத்தைக் கீறி வைகுந்தத்தைக் காட்டப் போகிறார்? கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவானா? கூரை ஏறிக் கோழி பிடிக்க மாட்டாத குருக்களா வானங் கீறி வைகுண்டம் காட்டுவார்? கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவனா கோபுரம் ஏறிக் குடக் கூத்தாடுவான்? கூரைக்காய் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா? கூரை மீது ஓடுங் குரங்கைப் பார்த்துக் கூட்டில் இருந்த குரங்கு விசாரித்ததாம். 8060 கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கை. கூரையைப் பிரிக்கக் குரங்குக்குப் பிடி கடலை. கூரை வீடானால் என்ன கொண்டவன் குணத்தோடிருந்தால். கூலி குறைந்தால் வேலை கெடும். கூலிக்காரன் பெண்சாதி குளிக்கப் போகிறாளாம்; குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதாம். TÈ¡F mW¤jhY« FW¡F mW¡fyh«; åzD¡F mW¤J btËÆny Éghnd‹?(åQ¡F, வீதியிலே) கூலிக்கு உழைக்கிறவனுக்கு ஆனைத் தாலியா? கூலிக்குக் கழு ஏறுவார்களா? கூலிக்குக் குத்துகிறவளைக் கேளிக்கை ஆடச் சொன்னானாம். கூலிக்குக் குத்துவாள் பிள்ளைக்குத் தவிடு பஞ்சமா? 8070 கூலிக்குத் தாலி அறுப்பாரும் இல்லை; மேலைக்கு இருப்பாரும் இல்லை. கூலிக்கு நாற்று நட வந்து எல்லைக்கு வழக்கோ? கூலிக்கு நாற்று நடவந்து வயலுக்கு வேலி போட்டாளாம். கூலிக்கு நாற்று நட வந்தவனுக்கு எல்லைக்கு வழக்கோ? கூலிக்கு நெல் குத்தலாமாம்; கைமூலம் தெரியக் கூடாதாம்! கூலிக்குப் பாவம் குறுக்கே. கூலிக்குப் பாவி குறுக்கே வந்தான். கூலிக்கு மாரடிக்கிறதா? கூலியைக் குறைக்காதே; வேலையைக் கெடுக்காதே. கூலிக்கே குத்துவதானாலும் கமுக்கட்டு மயிர் தெரியாமல் இருக்குமா? 8080 கூலிப் படை குத்துமா? கூவத்தைக் கண்டு கடல் ஒத்துமா? கூலிப் படை வெட்டுமா? கூலியும் கொடுத்து எதிர் மூச்சும் போட்டாளாம். கூவுகிற கோழிக்கும் கூப்பிடுகிற பண்ணாடிக்கும் என்ன வேலை? கூவுகிற கோழிக்கும் குத்திக் கொண்டு இருக்கிற அம்மை யாருக்கும் என்ன வேலை? கூழானாலும் குளித்துக் குடி. கூழாயிருந்தாலும் மூடிக் குடி. கூழிலே விழுந்த ஈ குழம்புகிறது போல. கூழு குடிக்கிறையா அப்பா, குறுணி குடிப்பேன் குப்பா. கூழுக்கு அவ்வை; ஊழுக்குக் கூத்தன். 8090 கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும், பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும் ஒரே அழுகை. கூழுக்குக் குட்டிச் சுவரோடு போனவளே! கூழுக்குக் குறடு மிளகாய். (மாங்காய்) கூழுக்குப் பாடிக் குடியைக் கெடுத்தான். கூழுக்கு மாங்காயும்; குரங்குக்குத் தேங்காயும். கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம். கூழுக்கு மாங்காய் தோற்குமோ? கூழுக்கும் ஆசை மாவுக்கும் ஆசை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. கூழும் அமுதாம் பசிக்கு; குச்சும் மச்சாம் குளிருக்கு. 8100 கூழைக் குடித்தாலும் கதவை அடைத்துக் குடி. கூழைக் குடித்தாலும் குப்பையைச் சுமந்தாலும் குப்பைக் காட்டுப்பெண் ருக்குமணி; பாலைக் குடித்தாலும் பட்டைக் கட்டினாலும் பட்டணத்துப் பெண்கள் பறக்கை (தட்டுவாணி) (பரத்தை) கூழைக் குடித்தான் ஆளைக் காணோம். கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக் கலப்பை காட்டைக் கெடுக்கும். கூழைக் கும்பிடு குடியைக் கெடுக்கும். கூழையன் சொல்லைக் கேட்டான் மோழையன் ஆனான். கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக் கொண்டவன் பிழைப்பவன். கூழ் ஆனாலும் குளித்துக் குடி; கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு. கூழ் என்றாலும் குடிக்கிறவன் பிழைப்பான். கூழ் குடிக்காத பொட்டை; கேழ்வரகு ஏண்டா நட்டாய்? 8110 கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது. கூழ் குடித்தாலும் குட்டாய்க் குடிக்க வேண்டும். கூழ் குடித்த குழந்தை குந்தாணி. கூழ் குடித்தவன் ஆனான்; குந்திக் குடித்தவன் மடிந்தான். கூழ் குடித்தால் குந்தாணி; கஞ்சி குடித்தால் கழுக்காணி. கூழ் சுடுகிறது கீரைக்குக் கேடு. கூழ்ப் பதனிப் பானையில் கைவிட்டவன் விரலைச் சப்பாமல் வேட்டியிலா துடைப்பான்? கூழ்ப் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமற் சொல்லலாமா? கூழ் புளித்தது பால்கூடப் புளித்ததென்று விட்டுவிடாதே. கூறி விற்காதே; தேடி வாங்காதே. 7920 கூறு கெட்ட கழுதை ஏழுகட்டுப் புல் தின்றது போல. கூறு கெட்ட மாட்டுக்கு ஆறு கட்டுப் புல்லா? கூறை இட்ட நாள் முதல் தாரை இட்டு அழுதாள். கூனக்கிழவன் போன திசை பாழ். கூனர் குருடரைக் குறும்பு செய்யாதே; கூனனை எண்ணிக் கொண்டவனை இழந்தாள். கூனனைக் கொண்டு குழப்படி மகளே, காணிக்குப் பேரப் பிள்ளை. கூனனைக் கொண்டு குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற. கூனி அழுதாள் குடிகேடு ஆக்கினாள். 7930 கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும். கூனிக்குத் தெரியுமா கோபுரத்தின் உச்சி? கூனியூர் சென்றால் இங்கிருந்தே கூனிக் கொண்டா போக வேண்டும்? கூனி வாயால் கெட்டது போல.  கெ கெஞ்சினால் மிஞ்சுவது; மிஞ்சினால் கெஞ்சுவது. கெஞ்சினால் மிஞ்சுவான்; மிஞ்சினால் கெஞ்சுவான். கெஞ்சி மணியம் பண்ணுகிறதா? கெஞ்சும் புத்தி கேவலம் கொடுக்கும். கெடுகாலத்துக்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார். கெடுகிறகுடி கிழக்கே இருக்கிறது. விடுகெந்தவெடி ஊர் கோலம். 7940 கெடுக்க நினைக்கின் அடுக்கக் கேடுறும். கெடுக்கினும் கல்வி கேடு படாது. கெடுங் காலத்துக் கெட்டார் புத்தியைக் கேட்பார். கெடுங்குடி சொற் கேளாது. கெடுத்தவருக்கும் நீ கேடு நினையாதே. கெடுப்பதும் வாய்; கொடுப்பதும் வாய். கெடுப்பவருக்குக் கெடுமதி பிடரியில். கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும். கெடுப்பார் கெடுவார். கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது. 7950 கெடுவது செய்தால் படுவது கருமம். கெடுவதும் வாயால் கூட்டுவதும் வாயால். கெடுவான் கேடு நினைப்பான். கெட்ட இடையனுக்கு எட்டு ஆடு போதும். கெட்ட ஊருக்கு எட்டு சொல். கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்று மீனை எடுத்து விழுங்கினதுபோல. கெட்ட காலத்துக்குப் பழுதையும் பாம்பாகும். கெட்ட காலத்துக்கு விபரீதப் புத்தி. கெட்ட குடி கிழக்கே போனா என்ன? மேற்கே போனா என்ன? கெட்ட காலம் வந்தால் பாம்பும் எலியின் உதவியை நாடும். 7960 கெட்ட காலம் வினோத புத்தி. கெட்ட குடி கெட்டாலும் வட்டி நட்டம் இல்லாமல் வாங்கி விடு. கெட்ட குடிக்கு எள்ளும் ஆமணக்கும் ஏறுகொண்ட வெள்ளாமை. கெட்ட குடிக்கு ஒரு குட்டைப் பசு. கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது. கெட்ட குடிக்கு ஒரு துட்டப் பிள்ளை. கெட்ட குடி கட்டி வருமா? கெட்ட குடி கெடட்டும், நீ குடி மிளகு சாற்றை. கெட்ட குடியே கெடும்; பட்ட காலிலே படும். 7970 கெட்ட கேட்டுக்குக் கொட்டு ஒன்று முழக்கு ஒன்றா? கெட்ட கேட்டுக்குக் கொட்டு முழக்கா? கெட்ட கேட்டுக்குக் கெண்டை போட்ட முண்டாசு குறைச்சலா? கெட்ட கேட்டுக்கு இரட்டை ஆள் கூலியா? கெட்ட கேட்டுக்குப் பட்டுப் பீதாம்பரம். கெட்ட கேட்டுக்குப் பிச்சை குடுவை இரண்டாம். கெட்டதுதான் கெட்டாய் மகளே கிட்ட வந்துபடு என்றானாம். கெட்டது பட்டது கிருஷ்ணாங்குளம்; அதிலும் கெட்டது அத்திப்பட்டாங்குளம். கெட்டது பட்டது கிருஷ்ணம் பேட்டை; அதிலும் கெட்டது ஆனைக் குளம். கெட்டதும் கிழிந்ததும் பெற்றான் கோனான் நாட்டிலே. 7980 கெட்ட நாய்க்குப் பட்டது உறுதி. கெட்ட பால் நல்ல பால் ஆகுமா? கெட்ட பெயர் ஒரு போதும் மறையாது. கெட்ட பேருக்கு எட்டு வார்த்தை. கெட்ட மாடு தேடுவாரும் இல்லை; மேய்ச்சல் கூலி கொடுப் பாரும் இல்லை. கெட்ட மாட்டைத் தேடும் முன்னம் எட்டு மாட்டைக் கட்டலாம். கெட்ட மார்க்கத்தில் இருக்கும் ஒருவன் மற்றவர்களையும் இழுத்துக் கொள்வான். கெட்டவள் கங்கை ஆடினால் பாவம் தீருமா? (போகுமா?) கெட்டவனைக் கண்டால் கிளையிலும் சேரார். கெட்டவனுக்கு எத்தனை படிப்பித்தாலும் துட்டத்தனம் விடான். 7990 கெட்டவனுக்குக் கெட்டதுதான் கிடைக்கும்; நல்லவனுக்கு நன்மையே கிடைக்கும். கெட்டவனுக்குப் பட்டதுதான் உறுதி. (ஆதாயம்) கெட்டவன் பட்டணம் சேர்வான். கெட்டவன் பேரில் பழி; அப்பனைப் போட்டு வழி. கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. கெட்டாலும் செட்டி செட்டியே! கிழிந்தாலும் பட்டு பட்டே. கெட்டார் வாழ்ந்தால் கிளைப்புரை தலைமுறை; வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் உதவார். கெட்டான் பயல் பொட்டலிலே; விழுந்தான் பயல் சறுக் கலிலே. (கணுக்கலிலே) கெட்டான் வாழ்ந்தால் கிளைகிளையாய்த் தளிர்ப்பான்; வாழ்ந்தான் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான். 8000 கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும். கெட்டிக்காரனுக்குப் பயமில்லை; மட்டித்தனனுக்கு நய மில்லை. கெட்டிக்காரன் கொல்லையிலே கழுதை மேய்கிறது. கெட்டிக்காரன் கொல்லையிலே எட்டுப் பாதை. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும். (பொய்யும்) கெட்டிக்காரன் புளுகும் பட்டப் பகல் போல் வெளியாகும். கெட்டிக்காரன் பெண்டாட்டியை எட்டுப் பேரு கொண்டு போனார்களாம். கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும். கெட்டித் தங்கமானால் கலீரென்று ஒலிக்குமா? கெட்டி மேளத்தில் பிடித்த சனியன் கொட்டு முடிக்கிலே தான் தீரும். 8010 கெட்டு ஓடினாலும் நட்டு ஓடு. கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா? கெட்டுப் போகிற காலம் வந்தால் சொட்டுப் புத்தித் தோன்றாதா? (தேடுவானாம்) கெட்டுப்போன கற்பு எட்டுநாள் அழுதாலும் வருமா? கெட்டுப் போன பார்ப்பானுக்குச் செத்துப்போன பசு தானம். கெட்டும் பட்டணம் சேர். கெட்டோர்க்கு இல்லை நட்டோர் உலகில். கெட்டோர்க்கு ஏது கேளும் கிளையும்? கெண்டை பட்டாலும் பட்டது. கிடாரம் பட்டாலும் பட்டது. கெண்டையைப் போட்டு வராலை இழுக்கிறது. (இழுப்பதா?) 8020 கெண்டையைப் போட்டு விராலைப் பிடிக்கிற வித்தை. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான். கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. கெலியன் பாற்சோறு கண்டாற் போல. கெழுதகைமை இல்லா நட்பு உறுப்பறை போல.  கே கேசம் உள்ள பெண் எப்படியும் கொண்டை போடுவாள். கேடது இல்லான் பாடது இல்லான். கேடு காலத்தில் ஓடு கப்பரை. கேடு வரும் பின்னே; மதி கெட்டு வரும் முன்னே. கேடு வரும் போது மதிகெட்டு வரும். 8030 கேடு வரும் முன்னே மதிகெட்டு வரும்; வாழ்வு வரும் முன்னே மதி கூடி வரும். கேட்க வேண்டுமா கிழவியைப் பாட்டி என்பதற்கு? கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ். கேட்காமல் கொடுப்பது உத்தமம்; கேட்டுக் கொடுப்பது மத்திமம்; கேட்டும் கொடாமல் இருப்பது அதமம். கேட்காமல் விட்டது கடன்; பாராமல் விட்டது பயிர். கேட்கிறவன் கேணைப் பயலா இருந்தால் கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்பான். கேட்கிறவன் கேணைப் பயன்னா கேப்பையிலே அல்வா வரும் என்பான். கேட்கிறவன் கேணையனாயிருந்தால் எறும்பு ஏரோப் பிளான் ஓட்டிச்சு என்பான். கேட்கிறவன் கேணையனாய் இருந்தால் கடப்பாறையும் காற்றில் பறக்கும். கேட்கிறவன் கேணையனாய் இருந்தால் கடுகு மிடாச் சோறாகும். 8040 கேட்டதை எல்லாம் நம்பாதே; நம்பினதை எல்லாம் சொல்லாதே. கேட்ட வரம் கிடைக்கவில்லை போட்ட விதை முளைக்க வில்லை. கேட்ட நாயைச் செருப்பால் அடி; சொன்ன நாயைச் சோட்டால் அடி. கேட்டில் உறுதி கூட்டும் உடமை. கேட்டில் ஒதுங்கும் கெடுங்காலி. கேட்டு ஊற்றுகிற கஞ்சி உறைக்கு வராது. கேட்டுக்கு மூட்டை; கேடு காலத்துக்குச் சீலைப் பேன். கேட்டை நட்சத்திரம் ஏட்டனுக்கு ஆகாது. (ஏட்டன் - மூத்தவன்) கேட்டையில் பிறந்தால் எட்டுச் சேவகன் உண்டு. கேட்டையிலே பிறந்தால் கோட்டை கட்டி ஆள்வான். 8050 கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே. கேட்பார் இல்லையா கேடு கெட்டவனை? கேதம் கேட்க வந்தவள் தாலி அறுப்பாளா? (கேதம் - இழவு) கேதுவைப் போல் கெடுத்தவனும் இல்லை; இராகுவைப் போல் கொடுத்தவனும் இல்லை. கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு. கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்பார்க்கு மதி இல்லையா? கேளாச் செவிக்குச் கலக்கம் இல்லை கேளாச் செவிக்கு மூளா நெருப்பு. கேளாத கடன் பாழ். கேளாத கடனும் ஆடாத உறவும் பாழ். 8060 கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை. கேள்வி உடைமை கீர்த்தியே கல்வி. கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான். கேள்விப் பேச்சு ஊரைச் சுடும். கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். (நீளும்) கேள்வியறிவு கிடைக்குமா யார்க்கும். கேள்வியில் சிறந்த அறிவெதும் இல்லை.  கை கை அழுத்தமானவன் காசைச் செலவிடான். கை அழுத்தமானவன் கரையேற மாட்டான். கை இல்லாதவன் கரணம் போடலாமா? கால் இல்லாதவன் ஓடலாமா? (ஓடவும் முடியுமா?) 8070 கை ஈரம் காயாமல் காட்ட வருகிறது. கை ஊன்றி அல்லவோ கரணம் போட வேண்டும்? கைக் காசு இல்லாமல் கடைப்பக்கம் போகாதே. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. கைக்குக் கண்ணாடியா? கை கண்ட வேசிக்குக் கண்ணீர் குறைச்சலா? கை கருணைக் கிழங்கு; வாய் வேப்பங்காய். கைக் காடையைக் காட்டிக் காட்டுக் காடையைப் பிடிக்க வேண்டும். கை காய்த்தாற் கமுகு காய்க்கும். (காய்ந்தால்) கைக்கு அடங்காத விளக்குமாறும் வாய்க்கு அடங்காத மருமகளும். 8080 கைக்குக் கை நெய் வார்த்தாலும் கணக்குத் தப்பாது. (தப்பக் கூடாது) கைக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடிக்க வேண்டும். கைக்குழந்தை செத்தது காரியத்துக்கு எளிது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலும் வாய்க்கு எட்டியது வயிற்றிற்கு எட்டாமலும். கைக்குள் மாத்திரையைத் திரட்டுதல் போல். கைக்கு வந்த லட்சுமியைக் காலாலே தட்டுகிறான். கைக்கு வாய் உபசாரமா? கைக் கொள்ளாத சத்தியத்தைக் கற்காதிருத்தல் நலம். கைக் கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறாது. கை கண்ட பலன். 8090 கை கண்ணைக் குத்தினால் கையை வெட்டி விடுகிறதா? கை தப்பிக் கண்ணிலே பட்டாற் கையைக் கண்டிப்ப துண்டா? (கண் பார்ப்பதுண்டா?) கை கொடுத்துக் கொண்டே கடையாணி பிடுங்குகிறான். கை நிறைந்த பணத்தை விடக் கண் நிறைந்த கணவன் மேல். (பொன்னான) கை நிறையப் பொன் இல்லாவிட்டாலும் கண் நிறைந்த கணவன் இருக்க வேண்டும். கைபட்டால் கண்ணாடி. கைப்போடாத புருசன் இல்லை.. விரல் போடாத பெண் இல்லை. கைப்பண்டம் கருணைக் கிழங்கு. கைப்பழத்தை விட்டுவிட்டு துறட்டுப் பழத்துக்கு ஆசைப் பட்டானாம். (துறட்டிப்)(தொங்கினானாம்). கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்? 8100 கைப் பழத்தை நம்பி வாய்ப் பழத்தை வழியில் விட்டான். கைப் பறவையைப் பறக்க விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா? கைப் பிள்ளைக்கு முன் கயிற்றுப்பிள்ளை (வயிற்றுப்) கைப் பிடித்து இழுத்தும் அறியாதவள் சைகை அறிவாளா? கைப் புண்ணுக்குக் கண்ணாடியா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமோ? (பூணுக்குக்) கைப்பொருள் அற்றவனைக் கட்டின பெண்டாட்டி கூட எட்டிப்பாராள். கைப்பொருள் அற்றால் கட்டுக் கழுத்தியும் பாராள். கைப்பொருள் அற்றால் கம்மனாட்டியும் சீண்டாள். கைப்பொருள் இருந்தால் கனமிகவுண்டு. 8110 கைப்பொருள் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்வான்? கைப்பொருள் இல்லா வழிப்போக்கனுக்குக் கள்வர் முன் படலாம். கைப்பொருள் இல்லை என்றால் கட்டினவனுக்கும் இளக்காரம். கைப்பொருள் தன்னினும் மெய்ப்பொருள் கல்வி. கைப்பொருள் போனால் கால் காசுக்கும் மதிக்க மாட்டார்கள். கைப்பொருள் போனாலும் கல்விப் பொருள் போகாது. கைம்பெண்டாட்டி எருமையிலே கறவை பழகினாற் போல. கைம்பெண்டாட்டிக்கு ஒருத்தன்; ஆனால் கட்டுக் கழுத்திக்கு எட்டுப்பேர். கைம்பெண்டாட்டிக்கும் காளவாய்க்கும் எங்கே என்று காத்திருக்கும். கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம். 8120 கைம்பெண்டாட்டி பெற்ற பெண் ஆனாலும் செய்யும் சடங்கு சீராய்ச் செய்ய வேண்டும். கைம்பெண்டாட்டி பெற்ற கழிசடை. கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி. (கழுவு மாதிரி) கைம்பெண் வளர்த்த பிள்ளை மூக்கணாங் கயிறு இல்லாத காளை. (சரடு) கைம்பெண் கூரையில்லாத கட்டடமாவாள். கையது சிந்தினால் அள்ளலாம்; வாயது சிந்தினால் அள்ள முடியாது. கையால் ஆகாத சுப்பி; திருவாரூர் திப்பி. கையால் ஆகாத சிறுக்கி வர்ணப் புடைவைக்கு ஆசைப் பட்டாளாம். கையால் ஆகாததற்கு வாய் பெரிது. கையால் ஆகாதவன் கட்டிக் கொண்டானாம் மூன்று தாரம். 8130 கையால் ஆகாதவனுக்குக் கரம்பிலே பங்கு; உழதவனுக்கு ஊரிலே பங்கு. கையால் ஆகாதவன் பெண்டாட்டி கண்டவர்க் கெல்லாம் கண்ணாட்டி. கையால் கிழிக்கும் பனங்கிழங்கிற்கு ஆப்பும் வல்லீட்டுக் குற்றியும் ஏன்? கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடரி வேண்டுமோ? கையாலே செய்வதை வாயாலேயா செய்ய முடியுமா? கையாலே தொட்டது கரியாயிற்று. கையெழுத்து போட்டாயா? கழுத்தைக் கொடுத்தாயா? கையாளக் கையாள இரும்பும் பளபளக்கும். கையாளாத கருவி துருப் பிடிக்கும். கையாளுகிற இரும்பு பளபளக்கும். 8140 கையானையைக் கொண்டு காட்டானையைப் பிடிக்க வேண்டும். கையிலும் மடியிலும் இல்லாதவனைக் கள்வர் பயம் என்ன செய்யும்? கையிலே இருக்கிற கொய்யாப் பழம் தெரியாது; வேலியிலே இருக்கிற விளாம் பழத்து மேலேதான் புத்தி போகும். கையிலே இருக்கிற சோற்றைப் போட்டுவிட்டு, எச்சிற் சோற்றுக்குக் கை ஏந்தினாற் போல. கையிலே காசு வாயிலே தோசை. கையிலே வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையலாமா? கையில் அகப்பட்ட துட்டுக் கணக்குப் பேசுகிறது. கையில் இருக்க நெய்யிலே கை இடுவானேன்? கையில் இருக்கிற குருவியை விட்டு விட்டுப் பறக்கிறதற்கு ஆசைப்பட்டாற் போல. கையில் இருக்கிற பறவையை விட்டுவிட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா? 8150 கையில் இருக்கும் கனியை எறிந்து மரத்திலிருக்கும் கனியைத் தாவுவது போல. கையில் இருந்தால் கடை கொள்ளலாம். கையில் இருந்தால் கர்ணன். கையில் இருந்தால் கால்நடையே காட்டும். கையில் இருந்தால் பாக்கு; கையை விட்டால் தோப்பு. கையில் இருப்பது செபமாலை; கட்கத்தில் இருப்பது கன்னக்கோல். கையில் இல்லாதவன் கள்ளன். (இல்லாவிட்டால்) கையில் இல்லாவிட்டால் கண்டாரும் பேச மாட்டார்; கேட்டாரும் மதிக்க மாட்டார். கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். கையில் உள்ள களாப்பழம் மரத்தில் உள்ள பலாப் பழத்துக்கு மேல். 8160 கையில் எடுக்கு முன்னம் கோழி மோசமென்று அறியாது. கையில் களவும் வாயில் பொய்யும் ஆகாது. கையில் காசிருக்கக் கறிக்கு அலைவானேன்? கையில் காசிருந்தால் அசப்பில் ஒரு வார்த்தை வரும். கையில் காசுமில்லை; முகத்தில் பொலிவும் இல்லை. கையில் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா? கையில் கெளுத்தி மீன் வைத்துக்கொண்டு ஆணத்திற்குக் கத்திரிக்காயைத் தேடி அலைந்தாளாம். கையில் மஞ்சள்ஆனால் காரியம் மஞ்சூர்தான். கையெழுத்துப் போடத் தெரிந்தால் கடனுக்குத் தான் வழி. கையெழுத்துப் போடத் தெரியா விட்டால் என்ன, தலை யெழுத்துச் சரியாக இருந்தால்போதும் 8170 கையை அறுத்துவிட்டாலும் அகப்பையைக் கட்டிக் கொண்டு திருடுவான். கையை உடைத்துவிட்டவன் தலையை உடைத்தாலும் உடைப்பான். ifia C‹¿¡ fuz« nfhl nt©L«.(bfh©L) கையைக் கொடுத்தால் மீளலாம்; வாயைக் கொடுத்தால் மீள முடியுமா? கையைச் செட்டியார் குறைத்தால், காலைக் கைக்கோளன் குறைப்பான் (நெகக்கோளன்) கையைப் பார் முகத்தைப் பார் என்று இருந்தால் காரியம் ஆகுமா? கையைப் பிடித்து இழுத்தும் வாராதவள் கண்ணைக் காட்டி அழைத்தால் வருவாளா? கையைப் பிடித்துக் கண்ணைப் பார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குவதா? கையைப் பிடித்துக் கள்ளை வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குவதா? கையைப் பிடித்துத் தூக்கி விடு, பிணக்காடாய்க் குவிக்கிறேன் என்றானாம். 8180 கையை மிதித்தவனைக் காலையானாலும் மிதி. கையை மூடிக் கொண்டிருந்தால் கமுக்கம்; விரலைத் திறந்தால் வெட்டவெளி. (கையைத்) கையை விட்டுத் தப்பினால் காடை காட்டிலே. கை வரிசை இருந்தாலும் மெய் வரிசை வேண்டும். கை விதைப்பை விடக் கலந்த நடவை நல்லது. கைவிரல் கண்ணிலே பட்டால் கையை என்ன பண்ணலாம்? கை வைத்தால் கை இற்றுப் போம்.  கொ கொக்கரித்த பேரெல்லாம் கூடத் தீப்பாய்வார்களா? கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ, நெருப்பிற் குதிப்பார்க்குச் சொர்க்கமோ? கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து அது உருகிக் கண்ணில் விழும் பொழுது பிடித்துக் கொள்ளலாம். 8190 கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போல. கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டதில்லை. கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா? கொக்குக்கு உண்டா வீரசைவம்? கொக்குக்கு ஒன்றே மதி; கொழுக்கட்டைக்கு ஒன்றே குறி. கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டு போக? கொக்கு குருவி போலக் கொத்திக் கொத்திச் சேர்க்கிறது. (சேகரிக்கும்.) கொக்குக் கூட்டத்தில் இராசாளி விழுந்தாற் போல. கொக்குத் தலையிலே வெண்ணெய் வைத்த மாதிரி. கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற் போல. 8200 கொக்கு மேடேறினால் மழை பெய்யும். கொக்கோகம் பார்த்தவன் அக்காளை ஏறுவான். கொக்கோடு இளங்குஞ்சு தெரிந்தார் இல்லை. கொங்கனுக்குக் குலமும் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை. (முறையும்) கொங்காடைக்குள்ளே கல்லீடு. கொங்கிலே குறுணி விற்கிறது; இங்கு என்ன லாபம்? கொங்கு மலிந்தால் எங்கும் மலியும். கொங்கு வெறுத்தால் எங்கும் வெறுக்கும். கொசு அடிக்கக் குறுந்தடி வேண்டுமா? கொசுகிலே குறுணிப்பால் கறக்கலாமா? 8210 கொசுகிலே பிளவை; அதிலே நீரழிவு; அறுக்கிறது எங்கே? அட்டை விடுகிறது எங்கே? கொசுக் கண்ணியைக்கூடக் குமரியிலே பார்க்க வேண்டும். கொசுக்கள் எல்லாம் கூடிக் கார்த்திகைத் தீபத்திற்கு நெய்க் குடம் எடுத்ததாம். கொசு, கருடன் கூடப் பறந்தாற் போல. கொசுவின் முதுகிலே பிளவை வந்தது போல. கொசுவுக்கு அஞ்சிக் குடிபெயர்ந்து போகிறதா? கொசுக்கு அஞ்சிக் கோட்டையை விட்டு ஓடுகிறதா? கொசு மூத்திரம் குறுணி. கொசு மொய்த்த கண்ணியைக் குமரியிலே பார். கொசுவை அடித்தால் கொசுவும் கிடையாது. 8220 கொசுவைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற் போல். கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா? கொசுவை வடிப்பார் அசிகைப் படுவார். கொச்சியிலே குறுணி மிளகென்றால் இங்கென்ன? கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றால் பனையையும் தின்று விடலாம். கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றால் மலையையும் தின்று தீர்த்து விடலாம். கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகு நீர் குடிக்கிறது? கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான். கொஞ்சம் இடம் கொடுத்தால் விஞ்ச இடம் தேடுவான். கொஞ்சம் நஞ்சம் இருந்தது குருக்களை அடைந்தது; கோயிலிலே வௌவால் அடைந்தது. 8230 கொஞ்சிக் கூத்தாடி நடந்தாலும் குதிரை ஆகுமா கழுதை? கொடாக் கண்டன் விடாக்கண்டன். கொடாத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல. கொடாதவன் எருமைப்பாலும் கொடான். கொடாதவனுக்குக் கூத்துப் பறி; இடமாட்டாதவனுக்கு எச்சில். கொடிகள் படரக் கொம்பு வேண்டாமா? கொடிக்கம்பத்தைப் பயற்றங்காயாய்த் தின்பவருக்குக் கோபுரம் கொழுக்கட்டை. கொடிக் காலில் மின்னினால் விடிகாலை மழை. கொடிக்கம்பத்தடியிலுள்ள சிற்றுருவத்தையே. (பிள்ளை யாரையே) கோயிற் படிமையாகக் கருதித் தொழுவது போல. கொடிக்குக் காய் பாரமா? 8240 கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா? கொடிக்குச் சுரைக்காய் கனமா? கொடி சுற்றிப் பிறந்த பிறந்த பிள்ளை குலத்திற்கு ஆகாது. (குடும்பத்திற்கு) கொடி சுற்றிப் பிறந்தால் கொண்டவனுக்கு ஆகாது; மாலைச் சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது. கொடியசைத்தால் குளமெல்லாம் தலை. கொடியும் பெண்டிரும் கொண்டது விடார். கொடிறும் பேதையும் கொண்டது விடா. கொடுக்கனுக்கு அப்பால் மழையும் இல்லை; கருணனக்கு அப்பால் கொடையும் இல்லை. (கொடுக்கன் - தேள், நளி கார்த்திகையுமாம்.) கொடுக்கமாட்டாதவன் கூத்தைப் பழித்தான்; இடமாட்டாத வன் எச்சிலென்று சொன்னான். கொடுக்காத பேருககுக் கொடுத்துக் காட்டு. 8250 கொடுக்கிறது உழக்குப் பால்; உதைக்கிறது பல்லுப் போக. கொடுக்கிற கைக்கு என்றும் குறைவு இருக்காது. கொடுக்கிற சாமி என்றால் குண்டியைக் கிழித்துக் கொண்டு கொடுக்கும். கொடுக்கிற தெய்வம் கூப்பிட்டுக் கொடுக்கும் (எப்பவும்) கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும். கொடுக்கிற நேரம் வந்தால் கடவுள் கூரையை பிளந்து கொண்டு கொட்டுவார். கொடுக்கிறதையும் கொடுத்துக் குட்டரோகி காலில் விழுகிறதா? கொடுக்கிற தெய்வம் முகம்மேல் அடித்துக் கொடுக்கும். (சூத்திலே) கொடுக்கிறவன் எப்போதும் கொடுப்பான். கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். 8260 கொடுக்கிறவன் கன்னத்தில் அடித்துக் கொடுப்பான். கொடுக்கிறவன் குடுமியைப் பிடித்துக் கன்னத்தில் அடித்துக் கொடுப்பான். கொடுக்கிறவன் கை என்றும் மேலேதான்; வாங்குகிறவன் கை என்றும் கீழேதான். கொடுக்கிறவனைக் கண்டால் குண்டம் பேய் குழைந்து குழைந்து ஆடும். கொடுக்கிறான் பழனியாண்டி; தின்கிறான் சுப்பாண்டி. கொடுக்கிறேன் என்றால் ஆசை; அடிக்கிறேன் என்றால் பயம். கொடுக்கினும் கல்வி குறை படாது. கொடுக்கும் எருவால் எடுக்கும் விளைவு. கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது. கொடுங்கோல் அரசன் கீழ் குடியிருத்தல் ஆகாது. 8270 கொடுங்கோல் மன்னன் நாட்டிலும் கடும்புலி வாழும் காடு நன்று. கொடுத்த கடன் கேட்டால் குமர கண்ட வலிப்பு வலிக்கிறதாம். கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை. கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு. (கெடுக்கும்) (குட்டிச்சாத்தான்) கொடுத்ததைக் கேட்டால் அடுத்த வீடும் பகை. கொடுத்த பணம் செல்லாவிட்டால் கூத்தரிசிக்காரி என்ன செய்வாள்? கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு; கொடாதவருக்கு ஒன்றும் இல்லை. கொடுத்தவரைப் புகழ்வார்; கொடாதவரை இகழ்வார். கொடுத்தவன் அப்பன்; கொடாதவன் சுப்பன். கொடுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு. 8280 கொடுத்தால் ஒரு பேச்சு; கொடாவிட்டால் ஒரு பேச்சு. கொடுத்தால் ஒன்று; கொடுக்காவிட்டால் ஒன்று. கொடுத்தால் தான் சாமி; கொண்டு வந்தால்தான் மாமி. கொடுத்தாலும் ஒன்று; கொடாவிட்டாலும் ஒன்று. கொடுத்தாற் போலக் கொடுத்து வாங்கினாற் போல வாங்கிக் கொள்ளுகிறது. கொடுத்து உறவு கொள்; கோளன் என்று இரேல். கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி. கொடுத்துக் கெட்ட பேர் வாங்குவதை விடக் கொடாமல் கெட்ட பேர் வாங்குவது மேல். கொடுத்துக் கெட்டார் ஆரும் இல்லை. கொடுத்துப் பொல்லாப்பு அடைவதை விடக் கொடாமல் பொல்லாப்பு அடைவது மேல். 8290 கொடுத்தும் அறியான் கொடுத்தவர்களைக் கண்டும் அறியான். கொடுத்தும் கொல்லை வழியாய்ப் போகிறதா? கொடுத்து வாங்கினாயோ? கொன்று வாங்கினாயோ? கொடுத்து வைத்தவனுக்குத் தான் குளிர் காய்ச்சல். கொடுப்பதைக் கெடுப்பாரைத் தெய்வமே கெடுக்கும். கொடுப்பதைத் தடுப்பவன் உடுப்பதும் இழப்பான். கொடுப்பதைக் கொடுத்தால் குடங்கொண்டு தண்ணீருக்குப் போவாள். கொடுப்பவரைத் தடுப்பவன் குலநாசம் அடையும். கொடுப்பாரைத் தடுக்காதே. கொடுப்பதைக் கொடுத்தால் கும்பிடு தானாகக் கிடைக்கும். 8300 கொடுப்பதையும் கொடுத்துக் குறுவைச் சோற்றை யுண்பதா? கொடுப்பதையும் கொடுத்துவிட்டுக் குருட்டுக் தாசியிடம் போன மாதிரி. கொடுப்பார் பிச்சையைக் கெடுப்பார் கெடுக்கிறது. கொடுப்பது கொஞ்சமாக இருந்தாலும் கும்பிடு பெரிதாக இருக்க வேண்டும். கொடுந்தேளும் கோள் சொல்கிறவனும் ஒன்று. கொடும்பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும். கொடுமை அற்றவன் கடுமை யற்றவன். கொடுமை கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை கோவணம் இல்லாமல் ஆடுது. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனாளாம்; அங்கே ஒரு கொடுமை வந்து கூத்தாடியதாம். கொடுமை சுடப்பட்ட செல்வம் பசுங்கலத்தில் பால் கவிழ்ந்தது. 8310 கொடுமையான அரசன்கீழ் இருப்பதைக் காட்டிலும் கடுமை யான புலியின் கீழ் இருப்பது நன்று. கொடையிலும் ஒருத்தன்; படையிலும் ஒருத்தன். கொட்டிக் கிடந்து ஆகிறதென்ன கொண்டவன் இல்லாமல்? கொட்டிக் கிழங்கு பறிக்கப் போனால் கோவித்துக் கொள்வார் பண்டாரம்; அவித்துரித்து முன்னே வைத்தால் அமுது கொள்வார் பண்டாரம். கொட்டிக் கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத் தெரியுமா? கொட்டிக் கிழங்கும் ஒரு முட்டுக்கு உதவும். கொட்டிக் கிழங்கும் வெட்டைக்கு உதவும். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகுமா? கொட்டிக் கொட்டிக் குளவி புழுவை நிறத்துக்கு ஆக்கிவிடும். கொட்டிய பாலின் முன் கூவி அழுது ஆவதுண்டா? 8320 கொட்டியா தேள் கூண்டிலே இருக்கும். கொட்டினால் தேள்; கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? கொட்டும் கொட்டும் ஒன்றாய்ப் போயிற்று; கொட்ட வந்த பறையன் வேறாய்ப் போய்விட்டான். கொட்டும் பறை தட்டம் அறியாது. கொட்டு முழக்குக் கோயிலிலே; வெற்றிலைப் பாக்கு கடையிலே. கொட்டு முழக்குப் பெரிதுதான்; ஆனால் கோவணத்துக்கே பஞ்சம்தான். கொட்டை நூற்கிற அம்மாளுக்குப் பட்டணம் விசாரிப்பது ஏன்? கொட்டோட முழக்கோட வந்தவன் எட்டோட இழவோட அல்லவா போவான். கொட்டோட முழக்கோட வாழ்ந்து திட்டோட வசவோட போகிறது. கொண்ட அழகே இன்றிக் குடித்தனத்துக்கு லாயக்கு இல்லை. 8330 கொண்ட இடத்திலே கொடுத்தாலும் கண்ட இடத்திலே கொடுக்காதே. கொண்ட கடையிலா விற்கிறது? கொண்ட கணவனிடத்திலே இரண்டகமா? கொண்டதுக்கு இரட்டி கண்டது வாணிகம். கொண்டது கொள்முதல் ஆனால் கோணி விலையும் காணாது. கொண்டதைக் கொண்டபடி விற்றால் கோணி லாபம். கொண்ட படி விற்றால் கண்ட லாபம் உண்டா? கொண்ட பிறகு குலம் பேசி என்ன பயன்? கொண்ட பெண் சாதியே கூர் அரிவாளாய் இருந்தாள். கொண்ட பெண்சாதியை விட்டாலும் கொள்ளுக் கடகாலை விடாதே. (கொள்ளுக் கடலை) 8340 கொண்டவள் குறிப்பு அறிவாள்; குதிரை இருப்பு அறியும். கொண்டவனுக்கு இல்லாத வெட்கம் கண்டவனுக்கு உண்டா? கொண்டவனுக்கு இல்லை; கண்டவனுக்கு என்ன கேடு? கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்றாய்ப் போய் விடுவார்கள்; கொட்டு மேளக்காரனுக்குத்தான் கோணக் கோண இழுக்கும். கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்று; கொட்ட வந்த பறையன் தூரத் தூர. கொண்டவனே தொண்டையைப் பிடித்தால் பெண்டு என்ன செய்வாள்? கொண்டவனை விட்டுக் கண்டவனிடம் போனால் கண்டவன் பெண்டாட்டிக்குக் கால் பிடிக்க வேண்டும். கொண்டவன் அடிக்கக் கொழுந்தன் மேல் விழுந்தாளாம். கொண்டவன் இருக்கக் கண்டவனோடு போவானேன்? கொண்டவன் உறவு உண்டானால் மண்டலம் எல்லாம் ஆளலாம். 8350 கொண்டவன் உறுதியாக இருந்தால் கோபுரம் ஏறிச் சண்டைப் போடலாம். கொண்டவன் காய்ந்தால் கண்டவன் காயும். கொண்டவன் காய்ந்தால் கூரை ஓலையும் காயும். கொண்டவன் குணமாயிருந்தால் குருடிமலையிலும் குடியிருக்கலாம். கொண்டவன் குணம் தூற்றினால் கூடையும் தூற்றும். கொண்டவன் குரங்கு, கண்டவன் கரும்பு. கொண்டவன் கோபியானால் கண்டவனுக்கு இளக்காரம். கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம். கொண்டவன் செத்த பிறகா கொண்டையும் வெண்டயமும்? கொண்டவன் தூற்றினால் கூரையும் தூற்றும். 8360 கொண்டவன் நாயே என்றால் கண்டவனும் கழுதை என்பான். கொண்டவன் பலம் இருந்தால் கூரை ஏறிச் சண்டை போடுவாள். கொண்டவன் பலம் இருந்தால் குப்பை மேடு ஏறிச் சண்டை செய்யலாம். கொண்டவன் வலுவாளி, கொடுத்தவன் ஏழை. கொண்டாடா குறுணி குத்திரண்டா பதக்கு. கொண்டாட்டம் போய்த் திண்டாட்டம் ஆயிற்று. கொண்டாடுவார் இல்லாவிட்டால் திண்டாடி நிற்கும். கொண்டார் முனியிற் கண்டார் கடிவர். கொண்டானும் கொடுத்தானும் ஒன்று; இந்தக் கலியாணத் தைக் கூட்டி வைத்தவன் வாயில் மண். கொண்டானும் கொண்டானும் சம்பந்தி; கொட்டவந்தவன் அம்பலம். 8370 கொண்டானும் கொடுத்தானும் கூடக் கூட பெற்றாரும் பிறந்தாரும் வேறுவேறு. கொண்டான் காயில் கண்டான் காயும். கொண்டு குலம் பேசுகிறதா? கொண்டு வந்த ஆமுடையான் குளித்து வருவதற்குள் கண்டு வந்த மாப்பிள்ளை கொண்டோடிப் போனான். கொண்டு வந்த பிறகு குலத்தைச் சொல்லாதே. கொண்டு வந்தால் தந்தை; கொண்டு வராவிட்டாலும் தாய். கொண்டு வாரம் கொடுத்தவனும் உழுது வாரம் கொடுத்த வனும் கடைத்தேற மாட்டார்கள். கொண்டை அழகி போனால் பின்னல் அழகி வருவாள். கொண்டை பூவுக்கு அழுகிறதாம்; கும்பி கூழுக்கு அழுகிறதாம். கொண்டை வளந்தான் சுழி குடும்பத்துக்கு ஆகாது. 8380 கொண்டைக்காரி போனால் கோடாலி முடிச்சுக்காரி வருகிறாள். கொண்டைக்குத் தக்க பூ. கொண்டைக்குப் பூச்சூடிச் சண்டைக்கு நிற்கிறது. கொண்டையிலே காற்றடித்தாற் போல கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்லர். கொதிக்கிற எண்ணெயில் தண்ணீர் தெளித்தது போல. கொதிக்கிற கூழுக்கு இருக்கிற சிற்றப்பா. கொத்தடிமை குடி அடிமையா? கொத்திக் கண்ட கோழியும் நக்கிக் கண்ட நாயும் நில்லா. கொத்துதடி கோழி; வித்தையடி மாமி. 8390 கொந்தளம் போடுகிறவனுக்கு ஒரு பணம்; கோளாறு சொல்கிறவனுக்கு இரண்டு பணம். கொப்பத்தில் வீழ்ந்த ஆனையும் கொல்லையிற் சிக்கிய மானும் போல. கொம்பால் உழுது கொண்டியால் பரம்படி. கொம்பில் ஒரு நெல் விளைந்தாலும் சம்பாவுக்கு இணை ஆகாது. கொம்பு இரண்டு; குரல்வளை மூன்றா? கொம்புக்குக் குறுணிபால் கிடைத்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது. கொம்பு முளைக்காத ஆனைக்கு தும்புக் கயிறு தொண்ணூறு. கொம்புளதற்கு ஐந்து முழம்; குதிரைக்குப் பத்து முழம் (விலக வேண்டும்) கொம்பு பின்னால் முளைத்தாலும் முன்னால் முளைத்த காதைவிட வலிமையானதாகும். கொய்யா வனத்துக்குக் குரங்கை காவல் வைத்தானாம். 8400 கொருக் கலப்பை கொண்டு விதை. கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா? கொலையும் செய்வாள் பத்தினி. கொல்லத்தில் குறுணி விற்றாலும் இல்லத்துக்குச் சுகம் வருமோ? கொல்லத்துக்காரன் மேற்கே பார்ப்பான்; கூத்துக்காரன் கிழக்கே பார்ப்பான். கொல்லத் தெருவில் ஊசி விற்றாற்போல. கொல்லத் தெருவில் ஊசி விற்க வேண்டியதில்லை. கொல்லவரும் யானை முன்னே கல்லைவிட்டு எறியாதே. கொல்லனைக் கண்டால் குரங்கும் அடித்துக் கட்டிக் கொள்ளுமாம். கொல்லனைக் கண்டால் குரங்கு மல்லு கட்டச் சொல்லும். 8410 கொல்லைக் கண்ட குரங்கு பணி செய்யும். கொல்லன் உலையில் கொசுவுக்கு என்ன வேலை? கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம். கொல்லன் களத்திலே ஈக்கு என்ன வேலை? கொல்லன் தெருவில் ஊசி விலை போமா? கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு. கொல்லுவதுங் கொலை; கொல்லக் கருதுவதும் கொலை. கொல்லைக் காட்டில் நரியைக் குடிவைத்துக் கொண்டது போல. கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது போல. 8420 கொல்லைக் கீரை மருந்துக்கு ஆகாது. கொல்லைக்குப் பல்லி; குடிக்கும் சகுனி. கொல்லைக் காய்ந்தாலும் குருவிக்கு மேய்ச்சல் உண்டு. (சாவியானாலும்) கொல்லைக் குறுணி யாகிலும் சொன்ன குறுணி போமா? கொல்லைத் தலைமாட்டில் இருப்பது போல கொல்லைப் பச்சிலை மருந்துக்கு உதவுமா? கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா? கொல்லைப் பயிரோ? கொள்ளைப் பயிரோ? கொல்லையில் குற்றியை அடைந்த புல் உழவன் உழு படைக்குக் கெடுமா? கொழுக் கட்டைக்குத் தலை பார்த்துக் கடிக்கிறதார? 8430 கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கதைக்குக் கால் இல்லை. கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குறவனுக்கு முறையும் இல்லை. (குடியனுக்கு) (கோயிலாண்டி) கொழுக்கட்டை தின்றதால் கழுத்துச் சுளுக்கிக் கொண்டதாம். கொழுக்கட்டை தின்ற நாய்க்குக் குறுணி மோர் குரு தட்சிணை. கொழுகொம்பு இல்லாத கொடி. கொழுத்த ஆடு குட்டி போட்டாலும் வழுக்கட்டை வழுக் கட்டைதான். கொழுத்த மீன் தின்கிறவன் குருவிக் கறிக்கு அசிங்கப் படுவானா? கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு. கொழுத்தவனுக்குக் கொள்ளும்; இளைத்தவனுக்கு எள்ளும். கொழுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு; இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு. 8440 கொழுத்துச் செத்தால் இழுத்து எறி. கொழுநன் நட்பு இல்லாத பெண்ணும் உழவு நட்பு இல்லாத பயிரும் பயனில்லை. கொழுமீதிற் குடிகொண்ட குடிச் செல்வம் செல்வம். கொள் என்றால் வாயைத் திறக்கும்; கடிவாளம் என்றால் வாயை மூடும். (திறக்கிறதா? மூடுகிறதா?) கொள்வார் அற்ற குயக்கலம் போல கொள்வாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை. கொள்வார் இல்லாத போது கொடுப்பாருக்கு என்ன வேலை? கொள்வார் இன்றிக் கொடுப்பார் இல்லை. கொள்ளப் போய்க் குருடியைக் கொண்டானாம். கொள்ளி இல்லாத சொத்து பிள்ளை இல்லாத சம்பாத்யம். 8450 கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதா? கொள்ளிக் கட்டையில் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடு வடுவாய்ச் சுடுகிறான். கொள்ளிக் கட்டையால் சூடுபோட்டுக் கொள்வதனாலேயே பூனை வரிப்புலியாகி விடுமா? கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகலாகாது. (எதிரே) கொள்ளிக்கு என்ன கொளுத்தியவன் அயலான் என உண்டா? கொள்ளித் தேளுக்கு மணியம் கொடுத்தது போல. கொள்ளி முடிவானை அள்ளி முடியவா முடியும்? கொள்ளியை வாங்கினால் கொதிக்கிறது அடங்கும். (இழுத்துப் போட்டால்) கொள்ளி வைத்த இடத்தில் அள்ளி எடுக்கிறதா? கொள்ளுக்கொடி பந்தல் ஏறாது. 8460 கொள்ளுத்தின்று கொள்ளையிலே போவான். கொள்ளும் வரையில் கொண்டாட்டம்; கொண்ட பிறகு திண்டாட்டம். கொள்ளுவாசனை கண்ட குதிரை போல. கொள்ளுவெள்ளாமை கொள்ளை வெள்ளாமை. கொள்ளை அடித்துத் தின்கிறவனுக்குக் கொண்டு தின்னத் தாங்குமா? கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது. கொள்ளைக்கு முந்து; கோபத்துக்குப் பிந்து. கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு. கொள்ளைக் கூட்டத்துக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை. கொள்ளையிடப் போகிறவனுக்குக் குருடன் துணை ஆகுமா? 8470 கொளிஞ்சி மிதித்தால் களஞ்சியம் நிறையும். கொற்றவன் அறியான் உற்றிடத்து உதவி. கொற்றான் ஆனாலும் பெற்றவள் பிள்ளை. கொற்றவனை விடக் கற்றவன் மிக்கோன். (பெரியவன்) கொன்றாரைக் கொல்லும் அல்லால் கொலை விடாது. கொன்றால் பாவம், தின்றால் தீரும். (போயிற்று) கொனைக்கும் மல்லி சந்தைக்குப் போனாளாம்; வயிற்றுப் பிள்ளையோடே இழுத்தடிச்சானாம்.  கோ கோ எப்படி? குடிகள் அப்படி? கோடாலிக் காம்பினால் குலத்துக்கு கேடுவரும். கோடாலிக் காம்பு குலத்துக்கு ஈனம். 8480 கோடானுகோடி வினை வரினும் மனம் கோணாமல் இருப்பதே கோடிபெறும். கோடி கப்பல் ஓடிய வீடு கொட்டை நூற்றா விடியும்? கோடி கொடுத்தாலும் கோபுரம் தாழாது. கோடிச் சீமானும் கோவணாண்டியும் சரியா? கோடிச் சீமான் துணிய வேண்டும் அல்லது கோவணாண்டி துணிய வேண்டும். கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை; குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளை. (கோடிக்கு) கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையருடன் கூடாதே. கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது. கோடி துக்கம் குழந்தை முகத்தில் ஆறும். கோடி நேசம் கேடு படுத்தும். 8490 கோடிப் புடவையைக் கட்டிக் கொண்ட தைரியத்தில் குச்சைக் கொளுத்திக் கொண்டாளாம். (குடிசையை) கோடி போனாலும் ஐயோ! கோவணம் போனாலும் ஐயோ! கோடி முண்டர் ஏறி மிதித்தாலும் கூழாங்கல் சாந்துக்கு வருமா? கோடி வித்தையும் கூழுக்குத்தான். கோடீசுவரனைக் கெடுக்க ஒரு கோவண ஆண்டி போதும். கோடு போனவன் ஓடு ஏந்துவான் (கோடு - நீதிமன்றம்) (அடுத்தவன்) கோடு ஏறினார் மேடேற மாட்டார். கோடு கண்டாயோ? ஓடு கண்டாயோ? கோடை இடி இடித்தா குளம் நிரம்பும்? கோடை இடித்துப் பெய்யும்; மாரி மின்னிப் பெய்யும். 8500 கோடை இடித்துக் கெட்டது; மாரி மின்னிக் கெட்டது. கோடை இடியும் மாரி மின்னலும் மழை அதிகம். கோடையால் காய்கிற பயிர் வாடையால் தளிர்க்கும். கோட் செவிக்குறளை காற்றுடன் நெருப்பு. கோட்சொல்பவனைக் கொடுந்தேன் எனநினை. கோட்டானை மடியிற் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்தானாம். கோட்டுச் சம்பா ஆக்கி வைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள். கோட்டைக்குள் எலியை வைத்துக் கட்டியது போல. கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா? கோட்டைக் குள்ளே படை வெட்டிக் கொள்ளுகிறதா? 8510 கோட்டைக்குள் குத்துவெட்டு என்றால் எதிரிக்கு இளக்காரம் தான். கோட்டையில் குண்டு போடுவான் கோயிலில் குண்டு போடுவானா? கோட்டையில் பிறந்தாலும் போட்ட விதி மாறுமா? கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட விதி மாறுமா? (புள்ளி போகுமா) (எழுத்து) கோட்டை புகுந்தாலும் போட்ட கோடு தப்பாது. கோணல் கொம்பு ஏறி என்ன? குதிரை ஏறி என்ன? வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகுதூரம். கோணல் வாயன் கொட்டாவி விட்டால் போல. கோணா மாணாப் பெண்டாட்டி மாணிக்கம் போலப் பிள்ளை பெற்றாள். கோணி கொண்ட மட்டும்; எருது இழுத்த மட்டும். (கோணி - சாக்கு) கோணி கொண்டது; எருது சுமந்தது. 8520 கோணிக்கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமல் காணி கொடுப்பது மேல். கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு. கோத்திர ஈனன் சாத்திரம் பார்ப்பான். கோத்திரத்திலேயே கிடைத்தால் குரங்கானாலும் கொள். கோபத்தில் அறுத்த மூக்கு சந்தோசத்தில் வருமா? கோபம் ஆறினால் குரோதம் ஆறும். கோபம் இல்லாத் துரைக்குச் சம்பளம் இல்லாத சேவகன். கோபம் இல்லாத துரையும் சம்பளம் இல்லாத சேவகனும். கோபம் இல்லாத கணவனும் கணவன் அல்ல; கொதித்து வராத சோறும் சோறு அல்ல. கோபம் இல்லாதவனைக் குரு காப்பார். 8530 கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. கோபம் உள்ள இடத்தில் தான் சந்தோசம் இருக்கும். கோபம் பாபம் சண்டாளம். கோபம் குடியைக் கெடுக்கும். கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் சந்தோசம் வந்தால் எழுந்திருக்கலாமா? கோபம் வந்ததும் குப்புற விழுந்தால் மகிழ்ச்சி வந்தால் மார்த்தட்டி எழும்ப முடியுமா? கோபமும் தாபமும் கூடிக் கெடுக்கும். கோபமும் நெருப்பும் உடனே கெடுக்கும். கோபி குதிரை மேல் கடிவாளம் இல்லான். கோபுரத்தில் ஏறிப் பொன்தகடு திருடு என்ற கதை. 8540 கோபுரத்தில் ஏறி விழுந்தவனுக்கு எங்கே கண்டு இழை இடுகிறது? கோபுரத்தில் விளக்கை வைத்துக் கொட்டுக் கூடையால் மூடுவானேன்? கோபுரத்தின் மேலேறிக் குடத்தைக் கழற்றுகிறவன் அரைக் கீரைக் கொல்லையைப் பார்த்துக் கொள்ளை கொள்ளை என்றானாம். கோபுரத்தைப் பொம்மையா தாங்குகிறது? கோபுரத்தைப் பதுமை தாங்காது! கோபுரமும் முட்டும்; குபேரனுக்கும் கை சளைக்கும். கோபுரம் தாண்டுகிற குரங்குக்குக் குட்டிச் சுவர் என்ன பிரமாதம்? (எம்மாத்திரம்) கோபுர விளக்கைக் கூடையால் மூடுவானேன். கோமளவல்லிக்கு ஒரு மொழி; கோளாறுகாரிக்குப் பல மொழி. கோமாளி இல்லாத கூத்துச் சிறக்குமா? 8550 கோமுட்டிப் புத்திக்கு மோசம் இல்லை. கோமுட்டி கலியாணத்தில் பாலூற்றிய கதை. கோமுட்டிப் பிசாசு பிடித்தால் விடாது. கோமுட்டி வீட்டுப் பெருச்சாளிக்குப் கொண்டதென்ன? கொடுத்ததென்ன? கோம்பை நாய் கொடும்புலியின் கழுத்தையும் கவ்வும். கோயிலையும் குளத்தையும் அடுத்திருக்க வேண்டும். கோயில் அருகே குடி இருந்தும் கெடுவதா? கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம். (இருக்கலாமா?) கோயில் கும்பத்திலே நிற்கிறவனுக்கு ஆகாயம் பெரிதாத் தெரியும். கோயில் குளம் கடவுள் நம்பாதவனுக்கு இல்லை. 8560 கோயில் மதில்மேலே தேள்கொட்டிற்றாம்; குருக்கள் அகத்து ஞானாம்பாளுக்கு நெறி கட்டிற்றாம் கோயில் சிறிதானாலும் கொட்டு முழக்குப் பெரிது. கோயில் சோற்றுக்குக் குமட்டின தேவடியாள் காடிச் சோற்றுக்கும் கரணம் போடுகிறாள். கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதுமா? கோயில் பூனைக்குப் பயம் ஏது? கோயில் தரிசிக்குச் சதிர் ஆடக்கற்றுக் கொடுத்தது போல. கோயில் பூனை தேவருக்கு அஞ்சுமா? கோயில் மாடு போல தின்று திரிகிறது. கோயிலுக்குப் போனால் தேவருக்கு அஞ்சாதே. கோயிலுக்கு அருகே குடியிருப்போருக்குத் தெய்வ மகிமை தெரியாது. 8570 கோரக்கர் வைத்தியம் குணத்திற்கு ஏற்குமா? கோரை குடியைக் கெடுக்கும். கோரைக் கொல்லையைப் பிடித்தவனும் மலடியை மணந்த வனும் பயன் அடைய மாட்டார்கள். கோரை முடி குடியைக் கெடுக்கும். கோரைக் கிழங்கும் ஒரு வேளைக்கு உதவும். கோர்ட்டுக்கு முன்னால் போகாதே கழுதைக்குப் பின்னால் போகாதே. கோலக்காரி கோலக்காரி என்று கூப்பிட்டாளாம் பந்தலுக்கு, அவள் அவசரக் கோலம் என்று அள்ளித் தெளித்தாளாம். கோலாடினால் குரங்காடும். கோல் எடுத்தால் குரங்காடும். கோல் எடுத்த பிள்ளை குருட்டுப் பிள்ளை. 8580 கோல் ஒடிந்து போனாலும் ஊன்றுகோல் ஆகுமே! கோவணம் இழிந்தால் கல்லடி, கொள்கை இழந்தால் மந்திரி. கோவணத்தில் இடி விழுந்தது என்றானாம். கோவணத்தில் காசு இருந்தால் கோழி கூப்பிடப் பாட்டு வரும். கோவணத்தில் ஒரு காசு இருந்தால் கோழி கூப்பிட ஒரு பாட்டுப் பாடுவான். கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரம் இல்லை. கோவணத்தை அவிழ்த்து மேற்கட்டு கட்டுகிறது. கோவணம் இல்லாதவன் பட்டறை கட்டுவது. கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக் காரன். கோவணம் பரதேசம் போனால் ஒருத்தன் குண்டிக்குள்ளே தானே நுழையனும். 8590 கோவணம் பீயைத் தாங்குமா? (தாங்காது). கோவிந்தா என்றால் கோடி குளிப்பு என்றால் குளிக்காமல் முழுகாமல் இருக்கலாமா? கோவிலைக் கட்டி நாயைக் காவல் வைத்தாற்போல. கோவிலைச் சாக்கிட்டுக் குயவன் பிழைத்தது போல. கோவிலை நம்பிக் குயவன் பிழைக்கிறது போல. கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொட்டைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்? கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்து உமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள். கோவில் கட்டியல்லவோ விளக்குப் போட வேண்டும். கோவில் கட்டிக் குச்சு நாயைக் காவல்; மாடி வீட்டைக் கட்டி மரநாயைக் காவல் (வைப்பதா?) 8600 கோவில் கொள்ளைக்காரன் குருக்களுக்குத் தட்சிணை கொடுப்பானா? கோவில் சோற்றுக்குக் குமட்டின தேவடியாள் காடிச் சோற்றுக்குக் கரணம் போடுகிறாள். கோவில் தாசிக்குச் சதிர் ஆடக் கற்றுக் கொடுத்தது போல கோவில் பட்டியை விட்ட குதிரை கோபால சமுத்திரம் போனவுடன் துள்ளிக் குதித்ததாம். கோவில் பூனை தேவருக்கு அஞ்சாது. கோவில் விளங்கக் குடி விளங்கும் (விளங்கினால்) கோவில் கொட்டு முழக்கு; கடையில் பாக்கு வெற்றிலை. கோவுக்கு அழகு செங்கோல் முறைமை. கோவூராள் அவுசாரி போக, குன்றத்தூரான் தண்டம் கொடுக்க. கோவேந்தன் குதிரை ஊர்வலம் போகிறதென்று கூழைவால் குதிரை குறுக்கே போனதாம். 8610 கோழி அடிக்கிறதுக்குக் குறுந்தடியா வேண்டும்? (குறுந்தடி வேண்டுமா?) கோழி அடை வைக்குமுன்னே குஞ்சுகளை எண்ணலாமா? கோழி ஓட்டத் தெரியாதவன் கொக்கு வாரியா? கோழி ஓட்டினாலும் கும்பினிக்கு ஓட்டு. கோழி கருப்பானாலும் வெள்ளை முட்டை தான் இடும். கோழி கருப்பானாலும் முட்டையும் கருப்பா? (முட்டையுமா கருப்பு?) கோழி களவுபோக ஆடுவெட்டிப் பொங்கல் இடுகிறதா? கோழி காலில் பட்டுச் சுற்றினாலும் குப்பையைக் கிளறாமல் இராது. கோழிக் கறி கொடுத்துக் குயில் கறி வாங்கினாற் போல. கோழிக் காய்ச்சல் வேசைக் காய்ச்சல். 8620 கோழிக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் விடா. கோழிக்கு வந்தது குஞ்சிக்கு வராதா? கோழிக்குக் கொண்டை அழகு; குருவிக்கு மூக்கு அழகு. கோழி குஞ்சிலும் அவரைக்காய் பிஞ்சிலும் (பயன் படுத்து) கோழி குஞ்சுக்குப் பால் கொடுக்குமா? கோழி குருடானாலும் குழம்பு சுவையாய் இருந்தால் சரி. கோழி கூப்பிட்டு விடிகிறதா? நாய் குரைத்து விடிகிறதா? கோழி கூவா விட்டால் பொழுது விடியாதா? கோழி கூவிப் பொழுது விடியுமா? கோழி கொடுத்துக் குரலும் அழுகிறதா? 8630 கோழி கொழுத்தால் முட்டை இடாது. கோழிக்குக் குப்பையைத்தான் பறிக்கத் தெரியும்; குடியான வனுக்கு மண்ணைத்தான் கிளரத் தெரியும். கோழி திருடியவன் கதை பொழுது விடிந்தால் தெரிந்து போகும். கோழி திருடியும் கூடிக் குலாவுகிறான். கோழி திருடியவன் தலையில் கொண்டை மயிர். கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுகிறான் (திருடிய) கோழிக்குத் தீவனம் கூடுதலாக வைத்தால் ஒன்றுக்கு இரண்டு முட்டையா இட்டுவிடும்? கோழி நொடத்துக்குக் கடாவெட்டிப் பொங்கல் வைப்பவன். கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? 8640 கோழி மிதித்துக் குஞ்சு சாகாது. (சாகுமா?) கோழி முடத்துக்குக் கடாவெட்டிக் காவு கொடுக்கிறதா? கோழி முட்டைக்குச் சுருக்கு வைப்பான். கோழி முட்டைக்குச் சுருக்கு வைத்து வாத்து முட்டைக்கு வரிச்சல் வைப்பான். கோழி முட்டைக்குத் தலையுமில்லை. கோயிலாண்டிக்கு முறையுமில்லை. கோழி முட்டைக்கு மயிர் பிடுங்குகிறது. கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும். கோழியின் காலுக்குப் பூணாரம் போட்டாலும் குப்பையைக் கிளறுவதை மாற்றிக் கொள்ளாதே. கோழியும் திருடிவிடுவான், கூடியும் குலாவுவான். கோழியைக் கேட்டா ஆணம் காய்ச்சுகிறது. 8650 கோழியைக் கேட்டுத்தான் மிளகாய் அரைப்பார்களா? கோழியைக் கூண்டு கட்டிக் கோடி நாள் வளர்த்தாலும் கூண்டைத் திறந்தால் கூரையிலேதான் இராத்தூக்கம் போடும். கோழியைக் கொடுத்துக் குரலையும் இழந்தானாம். கோழியைத் திருடியவன் கூந்தல் மேலே இறகு. கோழியை வளர்க்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும்; கழுத்தை அறுக்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும். கோழை கையிலே கிடக்கிற கொடுவாளுக்கு மதிப்பில்லை. கோழை நாய்க்குப் பட்டது அரிது. கோழையில் மொய்த்துக் குழம்பும் ஈ போல. கோழையும் ஏழையும் கூடின காரியம் பாழிலே பாழ். கோழையை அறுக்கும் குப்பைமேனிச் சாறு. 8660 கோளரிவாய்த் தலை மீளுவது அரிது. கோளாறு இல்லாத செட்டி கோவணத்தை அவிழ்ப்பானா? கோளுக்கு முந்தாதே; கூழுக்குப் பிந்தாதே. கோளும் சொல்லிக் கும்பிடுவது ஏன்? கோளும் குறளையும் குலத்துக்கு ஈனம். கோள் சொல்லிக் குடியைக் கெடுக்கிறதா? கோள் சொல்லிக் குடும்பத்தைக் கெடுத்தவனைக் கொடுந்தேள் என்று நினை. கோள் சொல்லிக் குண்டுணி கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு கோள் குண்டுணி, சொல்கிறவனை நம்பக் கூடாது. 8670 கோனான், கோல் எடுக்க நூறு ஆடும் ஆறு ஆடு ஆயின. கோன்நிலை திரியின் கோள் நிலை திரியும்.  கௌ கெளவை சொல்லில் எவ்வர்க்கும் பகை. கெளவைப் பட்டால் காயத்தில் ஒரு முழம் நீளுமா? கெளவையது இல்லான் திவ்விய சொல்லான். கௌளி ஊருக்கெல்லாம் பலன் சொல்லும்; தான் மாத்திரம் கழுநீர்ப் பானையில் விழும்.  ச சகதியில் கல்லை விட்டெறிந்தால் தன்துணி என்றும் அயலார் துணி என்றும் பாராது. சகதியில் கல்லை விட்டெறிந்தால் நம்மீதுதானே தெறிக்கும். (மேலே) (முகத்தில்) சகத்தைக் கொடுத்தும் சுகத்தை வாங்கு. (கொடுத்தாவது) சகத்தைக் கெடுத்துச் சுகத்தை வாங்குகிறார். 8680 சகல தீர்த்தங்களுக்கும் சமுத்திரமே ஆதரவு. சகல நதிகளுக்கும் சமுத்திரமே ஆதரவு. சகல நட்சத்திரமும் கூடினாலும் சந்திரனுக்கு இணை ஆகுமா? சகலமும் கற்றவன் தன்னைச் சார்ந்திரு. சகலன் உறவிற் சாண் கொடி (கயிறு) பஞ்சமா? சகலை உறவு சாகும் மட்டும். சகாயம் செய்த குள்ளநரியைப் பானலில் வைத்தது போல. சகுனம் சொன்ன பல்லி கழுநீர்ப் பானையில் விழும். சகுனம் நன்றாயிருக்கிறதென்று விடிகிற வரைக்கும் கன்னம் வைக்கலாமா? சகுனம் பார்க்கப் போகும்போது பூனையை மடியில் கட்டிக் கொண்ட மாதிரி. 8690 சகோதரம் உள்ளவன் படைக்கு அஞ்சான். சக்கர நெறி நில். சக்கரம் அறுக்கிறது; கபாலம் ஏந்துகிறது. சக்களத்தி அறுத்தால் தானும் அறுப்பாள். சக்களத்திக்கு ஆண் பிள்ளை பெற்றால் பொறாமை; மலடிக்கு எவள் கிள்ளை பெற்றாலும் பொறாமை (பெண்) சக்களத்திப் பிள்ளை தலைமாட்டுக் கொள்ளி. சக்கிலித் தெரு நாய் சமயத்துக்கு உதவாது. சக்கிலிப் பெண்ணும் சாமைக் கதிரும் பக்குவத்திலே பார்த்தால் அழகு. சக்கிலியச் சாமிக்குச் செருப்படிப் பூசை. சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும். 8700 சக்கிலியன் ஏமாற்று பறையன் குழப்பம். சக்கிலியன் சாமியைச் செருப்பால் அடித்துக் கும்பிடுவானா? சக்கிலியனை நம்பினாலும் ஒக்கிலியனை நம்பாதே. சக்கு சக்கு என்று பாக்குத் தின்பான் சபை மெச்ச, வீட்டிலே வந்து கடைவாய் நக்குவான் பெண்டுகள் மெச்ச. சக்தி உள்ள சாமியைக் கும்பிடு; புத்தியுள்ள பிள்ளையைப் பெறு. சக்தி இருந்தால் செய்; சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு. சங்கஞ்செடி ஓணானைக் கண்டு சாகிற கிழவியைக் குத்தின கதை. சங்கடமான பிள்ளையைப் பெற்று வேங்கடராமன் எனப் பெயர் வைப்பார். சங்கட வேதனைக் கெல்லாம் தலையிட்டுக் கொள்கிறதா? சங்க நிழலில் தங்காப் புலவர் புலவரே அல்லர். 8710 சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் விழுமா? சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா? சங்கிலே வார்த்தால் தீர்த்தமும் செம்பிலே வார்த்தால் தண்ணீருமா? (சட்டியில்) சங்கீதம் தெரிந்து என்ன பயன் இங்கிதம் தெரிய வேண்டும். சங்கு ஆயிரம் கொண்டு காசிக்குப் போனாலும் தன்பாவம் தன்னோடே. சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால் பொன்பாளம் வந்தாலும் வந்தது; மண்பாளம் வந்தாலும் வந்தது. சங்கு உடைந்தது; மண் கரைந்தது. சங்கு ஊதாமல் தாலி கட்டுவது உண்டா? சங்கு ஊதிப் பொழுது விடியுமா? சங்கு சுட்டாலும் தன்வெண்மை குன்றாது. 8720 சங்கு சுட்டாலும் வெண்மை தரும். சங்கு சூத்தும் ஆண்டி வாயும். சங்கைச் சுட்டாலும் மங்குமா நிறம்? சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை (இல்லை என்றால்) சடை கொண்ட இலுப்பையைத் தடி கொண்டு அடித்தாற் போல. சடைத் தம்பிரான் சோற்றுக்கு அழுகிறானாம்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம். சடைத் தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறான்; லிங்கம் பர மான்னத்துக்கு அழுகிறதாம். சடைத் தம்பிரானுக்குச் சாதம் இல்லாதபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்? சடையைப் பிடித்து இழுத்தால் சந்நியாசி கிட்ட வருவார். சட்டம் இயற்றியவனே சட்டத்தை மீறலாமா? 8730 சட்டி ஓட்டை ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. சட்டி சடக்கு என்றதாம், சாடை எனக்கு என்றதாம். சட்டி சுட்டது கை விட்டது. சட்டி திருடும் நாய்க்குப் பெட்டிப்பணம் எதற்கு? சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை. சட்டிப் பீ தின்னா என்ன? சொட்டுப் பீ தின்னா என்ன? சட்டி புழைக்கடையிலே அகப்பை வாசலிலே. சட்டியில் இருக்கிறது தான் அகப்பையில் வரும். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும். (இருந்தால் அல்லவா) சட்டியோடு அகப்பை தட்டாமல் போகுமா? 8740 சட்டியோடு தின்று பானையோடு கை அலம்புகிறது. சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? சட்டைக்காரன் நாயை எட்டிநின்று பார். சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகு போல. சண்டிக்கு ஏற்ற மிண்டன். (முண்டன்) சண்டிக் குதிரைக்கு ஏற்ற மொண்டிச் சாரதி. சணப்பன் கையில் அகப்பட்ட சீலைப்பேனைக் கொல்லவும் மாட்டான், விடவும் மாட்டான். (சணப்பன் - சமணன்) சணப்பன் வீட்டுக் கோழி தானாக வந்து மாட்டிக் கொள்ளும். சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு பூட்டிக் கொண்டது போல. சணப்பன் வீட்டு நாய் சணல் கட்டிலின்மேல் ஏறினாற் போல. 8750 சண்டாளன் வீட்டிலும் சந்திரன் பிரகாசிப்பான். சண்டிக் குதிரையும் பட்டி மாடும் போல். சண்டி மிரண்டால் காடு கொள்ளாது. (கலைந்தால், புரண்டால்) சண்டி மாட்டுக்குச் சறுக்கியது தான் சாக்கு. சண்டி செய்ததற்குச் சாட்சி என் மகள் இருக்கிறாள். சண்டை செய்யும் இரண்டு கடாக்களின் நடுவே நரி நின்று நசுங்கியது போல. சண்டை பிடிக்கிறவனுக்குக் கூட சனிக்கிழமை ஆகாது. சண்டை முகத்திலே உறவா? சண்டை வருகிறது மாமியாரே சாதத்தை எடுத்து உள்ளே வையும். சண்டையில் கைமறந்தவனும் சபையில் வாய் மறந்தவனும் கடைத்தேறான். 8760 சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறது போல. சதி செய்கிறவர்களுக்குச் சமர்த்தம் என்று பெயர். சதுரக் கள்ளியில் அகில் உண்டாகும். சதை இல்லாமல் கத்தி நாடுமோ? சதை உள்ள இடத்தில் கத்தி நாடும். (நாடவேண்டும்) சத்தத்துக்கு அளப்பதற்கு முன் பொதிக்கு அள. சத்தம் பிறந்த இடத்தே சகல கலையும் பிறக்கும். சத்தம் போட்டால் சண்டப் பிரசண்டன். சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல. சத்தியத்திற்குச் சிறந்தவன் அரிச்சந்திரன். 8770 சத்தியத்திற்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டு அழப் போகிறானா? சத்திய நெறியே சன்மார்க்க நெறி. சத்தியம் சத்தி; தத்துவம் சுத்தி. சத்தியமே தரும நித்தியம். சத்தியம் தலை காக்கும். சத்தியம் வெல்லும், அசத்தியம் கொல்லும். சத்தியுள்ள சாமியைக் கும்பிடவேண்டும்; புத்தியுள்ள பிள்ளையைப் பெறவேண்டும். சத்திரச் சாப்பாட்டுக்கு நாய் சிபாரிசா? சத்திரத்தில் இன்னும் நுழையவிடலில்லை; இலை கிழிசல் என்றானாம். சத்திரத்தில் சாப்பாடு; சாவடியில் (மண்டபத்தில்) படுக்கை. 8780 சத்திரத்தில் சோறு இல்லை என்றால், இலை பீற்றல் என்றானாம். சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பணையோ? (அப்பணை - ஆணை) சத்திரத்துச் சாப்பாட்டுக்கு அப்பணையங்கார் சிபாரிசா? சத்திரத்துச் சாப்பாட்டுக்கு தாத்தையங்கார் உத்திரவா? சத்திரத்து நாயை அடித்தால் கேட்பார் யார்? சத்திரத்துப் பாட்டுக்குத் தெருப்பாட்டு மேலா? (திருப்பாட்டு) சத்திரத்தைக் கட்டி நாயைக் காவல் வைத்தாற்போல. சத்துக்களோடு சத்துக்கள் சேர்வர்; சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும். சத்துருக்களையும் சித்தமாய் நேசி. சத்துரு பகை; மித்துரு வதை. 8790 சத்துரு பொறுமை தனக்கே தண்டனை. (பொறாமை, பெருமை) சத்துருவைச் சார்ந்து கொல்லவேண்டும். சந்தடி சாக்கிலே கந்தப்பொடி காற்பணம். சந்தடியில்லாத ஊர் சுடுகாட்டுக்குச் சமம். சந்தத்திற்கு அருணகிரி. சந்தம் இல்லாக் கவிக்கு அந்தம் இல்லை. (அந்தம் - அழகு) சந்தனக் கட்டை தேய்ந்தால் கந்தம் குறைபடுமா? சந்தனக் கட்டை தேய்ந்தால் பெட்டிக்குள்ளே போகும், துடைப்பக்கட்டை தேய்ந்தால் குப்பைக்குத்தான் போகும். சந்தனக் கட்டை தேய்ந்தாலும் மணம் வீசும். சந்தனக் கருடன் வந்தவழி போனால் கங்கையில் போட்டதும் தன் கைக்கூடும். 8800 சந்தனக் குறடு தேய்ந்தாலும் மணம் குறையாது. சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது. சந்தன மரம் போல் ஒரு மகனும் சம்பங்கி போல் பெண்ணும். சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளிக்கலாமா? (தெளிக்கலாச்சுது) சந்தனம் மிகுந்தால் சூத்திலே பூசிக் கொள்கிறதா? சந்தன மரக் காட்டிலே நாகம் இருக்காது. சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? சந்தியிலே நடந்த சண்டைக்குச் சாட்சி வேறு வேண்டுமா? சந்தியில் அடித்தால் சாட்சிக்கு ஆர் வருவார். சந்திரன் இல்லா வானமும் மந்திரி இல்லா அரசும் பாழ். 8810 சந்திரன் மறைந்தால் நிலா நிற்குமா? சந்திரன் குளிர்ச்சியாய் காய்ந்தாலும் சூரியனையே உலகத் தவர் நாடுவார்கள். சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான். சந்திரனுக்கு உண்டோ சண்டாளன் வீடு? சந்திரனுக்குச் சரியாக முட்டை தட்டினானாம். சந்திரனுக்கும் களங்கம் உண்டு. சந்திரனைப் பார்த்து நாய் குலைத்து ஆவது என்ன? சந்தை இரைச்சலிலே குடியிருந்து கெட்துமாதிரி. சந்தைக்காரன் பேச்சிலே சத்திருக்காது; சர்க்காரன் பேச்சிலே சத்தியமிருக்காது. சந்தைக்கு வந்தவர்கள் வழிக்குத் துணையா? 8820 சந்தைக்குப் போகிறவன் வழித்துணை வாரான். சந்தை கூடுமுன்னே முடிச்சவுக்க முந்தின கதை. சந்தைக் கூட்டம் பொம்மாலாட்டம். சந்தை நடுவே ஓகத்தில் அமர்ந்திருப்பது போன்று. சந்தைப் பிச்சை; தந்தப் பல்லக்கா? சந்தையில் அடித்ததற்குச் சாட்சி ஏது? சந்தையில் கும்பிட்டால் வாழ்த்துவாரும் இல்லை; வை வாரும் இல்லை. சந்தையில் விலை போகாது, எந்த ஊரிலும் விலை போகாது. சந்தை வாக்கு பொய்க்காது. சந்தோசம் சாண் பலம். 8830 சந்நியாசம் சகல நாசம். சந்நியாசிக்கு என்ன சம்சாரக் கவலை? சந்நியாசிக்குச் சாப்பாட்டுக் கவலையா? சந்நியாசிக்கும் போகாது சாதி அபிமானம். சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சம்சாரம் மேலிட்டது போல. சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பது தான். சபைக்கு இருக்கத் தெரியாதவன் சதிராட்டம் போடுவேன் என்றானாம். சபைக் கோழை ஆகாது. சபையிலே நக்கீரன்; அரசிலே விற்சேரன். சப்பாணிக்கு நொண்டி சண்ட பிரசண்டன். 8840 சப்பாணிக்கு நொண்டி சடுகுடு வை. சப்பாணிக்கு விட்ட இடத்திலே கோபம். சப்பாணி மாப்பிள்ளைக்கு சத்து ஒடிந்த பெண்டாட்டி. சப்பாணி வந்தால் நகர வேண்டும், பல்லக்கு வந்தால் ஏற வேண்டும். சப்பைக் கட்டு கட்டுகிறான். சமண சந்நியாசிக்கும், வண்ணானுக்கும் சம்பந்தம் என்ன? (சமணர், அமணர்) சமயத்திலே காலைப் பிடி,தீர்ந்து போனதும் தலையைப் பிடி. சமயம் வாய்த்தால் சண்டியும் வீரனாவான். சமயம் வாய்த்தால் நமனையும் பல காரம் செய்வான். சமயம் வாய்த்தால் சப்பாணியும் மலையேறுவான். 8850 சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல. சமர்த்தன் சந்தைக்குப் போய்ச் சொத்தைக் கத்தரிக்காய் வாங்கினானாம். சமர்த்தன் சந்தைக்குப் போனால் கொள்ளவும் மாட்டான், கொடுக்கவும் மாட்டான். சமர்த்தன் பெண்சாதியும் சோரம் போவாள். சமர்த்தி என்ன பெற்றாள்? சட்டிச் சோற்றைத் தின்னப் பெற்றாள். (சமர்த்திலே) சமர்த்திலே குண்டு பாயுமா? சமர்த்தில் வாழ்ந்தவர்களும் இல்லை; அசட்டில் கெட்டவர் களும் இல்லை. சமர்த்து உள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதம். சமர்த்துக்காரன் சண்டைக்குப் போனானாம்; கொக்கு தூக்கி நக்குன்னு போட்டுச்சாம் சமர்த்துக்கிட்டே பேசி வெல்லலாம்; அசட்டுக்கிட்டே சண்டை போட்டாலும் முடியாது. 8860 சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போகிறான். சமிக்ஞை அறியாதவன் சதுரன் அல்லன். சமுத்திரத்திலே ஏற்றம் போட்டு இறைத்தாற் போல. சமுத்திரமும் சாக்கடையும் சரியா? சமைக்கப் படைக்கத் தெரியாமற் போனாலும் உடைக்கக் கவிழ்க்கத் தெரியும். சமைந்தால் தெரியும் சக்கிலியப் பெண்ணும் சாமைக்கதிரும். சமையல் தெரிந்தவனுக்கு உமையவள் உள்ளங்கையிலே. சமையல் காரனுக்குச் சோறு ஒரு பிரச்சனை ஆகாது. சமையல் வீட்டிலே முயல் தானே வந்தது போல. சம்சாரம் பெருத்துப் போச்சு என்று சாலுக்குக் குறுணி விதைத்தானாம். 8870 சம்சாரமோ சாகரமோ? சம்சாரி அகத்திலே சாதத்துக்கு என்ன குறைவு? சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கின்றன. சம்பந்தன் தன்னைப் பாடுவான்; அப்பன் என்னைப் பாடுவான்; சுந்தரன் பொன்னைப் பாடுவான். சம்பம் சல சல என்கிறது; மொல்லை மொலு மொலு என்கிறது. சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சும் இல்லை; பேச்சும் இல்லை. சம்பந்தி வாய்க்கும் மாப்பிள்ளை குணத்துக்கும் இன்னும் ஒரு பெண்ணை இழுத்து விட்டாளாம். சம்பளம் அரைப் பணமானாலும் சலுகை இருக்க வேண்டும். சம்பளம் அரைப் பணமானலும் சளுக்கு முக்காற்பணம். சம்பளம் இல்லாத சேவகனும் கோவமில்லாத எசமானனும். 8880 சம்பளம் குறைந்தாலும் சலுகை இருக்க வேண்டும். சம்பா விளைந்து சாய்ந்து கிடக்கிறது; உண்பார் இல்லாமல் ஊர்க்குருவி மேய்கிறது. சம்பாவைக் கிள்ளி நடு; குறுவையை அள்ளி நடு. சம்மன் இல்லாமல் ஆசர். சரக்கு அளவாயிருந்தால் சந்தைக்கு வரும். சரக்கு கண்ட இடத்திலே பிள்ளைக்கு மருந்து கொடுக்கிறது போல. சரக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது போல. சரக்கு மலிந்தால் சந்தைக்கு வந்துவிடும். (கடைக்கு) சரக்கு முறுக்கா? சரக்காளர் முறுக்கா? (செட்டியார்) சரக்கை விற்க சந்தைக்கு வந்தால் கூவித்தானேஆகணும்? 8890 சரத்தைப் பார்த்து பரத்தைப் பார். சரடு ஏறுகிறது கந்தைக்கு லாபம். சரம் பார்த்தவனைச் சருகாதே; பட்சி பார்த்தவனைப் பகைக்காதே. சரி விற்கக் குழி மாறுகிறதா? சரீரப் பிரயாசை என்னத்திற்கு? சாண் வயிற்றுக்குத்தான். சருகு அரிக்க நேரம் இருந்ததன்றிக் குளிர்காய நேரம் இல்லை. சருகைக் கண்டு தழல் அஞ்சுமா? (தணல், தீ) சருக்கரை தின்று பித்தம் போகுமானால் கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்? சருக்கரைப் பாகுத் தோண்டியிலே தாழ மொண்டாலும் தித்திப்பு, மேலே மொண்டாலும் தித்திப்பு. சர்க்கரை என்றால் தித்திக்குமா? 8900 சர்க்கரை என்று எழுதி நக்கினால் தித்திக்குமா? சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும். சர்க்கரை பந்தலில் தேன்மாரி பெய்ததாம். சர்க்கரைப் பொங்கலுக்குப் பத்தியம் இல்லை; சாண்வயிறு நிரம்பிவிட்டால் வைத்தியம் இல்லை. சர்க்கரைப் பொம்மையில் எந்தப் பக்கம் தித்திப்பு? சர்க்கரையும் நெய்யும் சேர்ந்தால் கம்பளத்தையும் தின்னலாம். சர்க்கரையும் மணலும் சரியாகுமா? சர்க்கார் பிணத்தை வெட்டியான் சுமந்த மாதிரி. சர்க்கார் காரனுக்குச் சமய சந்தர்ப்பம் தெரியாது. சந்தைப் பிச்சைக் காரனுக்குத் தாரதம்மியம் தெரியாது. 8910 சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும். சலிப்பிலே புளிப்பு தட்டுதாம்; சாராயத்திலே மப்பு தட்டுதாம். சலிப்போடு சம்பந்தி இழுத்தால் இலைப் பருக்கை. (ஏழு இலை) சலுகை உள்ள மாடு படுகை எல்லாம் மேய்ந்ததாம். சல்லாப்புடவை குளிர் தாங்குமா? சல்லி கட்டின மாட்டுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? சல்லி மோதக் கல்லி பறிக்கிறது. சலித்துக் கொடுத்த காரியம் சந்தோசம் வந்தால் தீருமா? சவத்துக்கு அழுவாருக்குத் தம் துக்கம். சவலைப் பிள்ளை அறியுமா முலைக்குத்து நோய்? 8920 சவுடால் பொடி மட்டை; தட்டிப் பார்த்தால் வெறுமட்டை. சளி துப்பியவனை விட்டுட்டுச் சளிமேலே கல்லெறிந்தான் என்கிற மாதிரி. சளி பிடிக்காத மூக்கு இல்லை; சாராயம் குடிக்காத நாக்கு இல்லை. சளி பிடித்ததோ? சனி பிடித்ததோ? (சளிப்பு) சளித்துப் புளித்துச் சக்கிலியனோடே போனாளாம்;அவன் செருப்புத் தைக்கச் சொன்னானாம். சளுக்கன் தனக்குச் சத்துரு; சவுளிக்காரனுக்கு மித்துரு. சற்குருவைப் பழித்தோர் சாய்ந்தே போவார். சற்சனர் உறவு சர்க்கரைப் பாகு. சற்புத்திரன் இருக்கிற இடத்திலே தறுதலையும் இருக்கிறது. சனத்தோடு சனம் சேரும்; சந்தையோடு கர்ப்பூரம் சேரும். 8930 சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும். சனி ஒழிந்தது சங்கடம் தீர்ந்தது. சனிக்கிழமை நோன்பென்று சமைத்தாளாம் பெண்பிள்ளை; சாம்பிராணி வாங்காமல் தயங்கினானாம் ஆண்பிள்ளை. சனிக்கிழமை விரதமென்று சமைக்கிறாளாம் பொம்பளை; எனக்கு ஒருவாய் சோறு கிடைக்கலேன்னு குதிக்கிறானாம் ஆம்பளை. சனிப்பயிர் சாத்திரத்திற்கு உதவும். சனிப்பிம் தனியே போகாது. சனிப்பிம் துணை தேடும். சனி பிடித்த நாரை கெளிற்றைப் பிடித்து விழுங்கினாற் போல். சனியன் பிடித்தவளுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது. சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் புருசன் அகப்பட மாட்டான். 8940 சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாளாம்; ஈர் பிடித்தவன் எதிர்த்து வந்தானாம். சனியன் பிடித்தவனுக்கு ரசம் குளிர்ச்சி; தரித்திரம் பிடித்த வனுக்குச் சொப்பனத்திலேயும் பட்டினி. சனியனை அடிமடியில் கட்டியது போல. சனியும் பிணியும் தன்னைவிட்டுப் போகாது சனியும் புதனும் தங்கும் வழி போகக்கூடாது. சனியும் புதனும் தன்னை விட்டுப் போகாது. சனியைப் போலக் கொடுப்பவனும் இல்லை, சனியைப் போலக் கெடுப்பவனும் இல்லை. சன்னத்துக் குறைந்தால் கும்பி குறையும்.  சா சாகக் காசிக்குப் போ; சாப்பிடச் சூரத்துக்குப் போ. சாகத் திரிகிறான் சண்டாளன்; சாப்பிட்டுத் திரிகிறான் பெண்டாளன். 8950 சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டும். (நீச்சு) சாகத் துணிந்தவளுக்குக் கடலும் காலளவு. சாக நேரம் ஒழிய, வேக நேரம் இல்லை. சாகப் பயந்தவள் சுடுகாட்டை முறைக்க முறைக்கப் பார்த்தாளாம். சாகப் பொழுதன்றி வேகப் பொழுது இல்லை. சாகப் போகிற கட்டைக்குச் சஞ்சலம் எதற்கு? சாகப் போகிற நாய் கூரை மேல் ஏறின மாதிரி. சாக மாட்டாத மாடு கொம்பைக் கொம்பை அலைத்தாற் போல. சாக வேண்டும் என்கிற சதுரையை விட்டுவிட்டு வா; வாழவேண்டும் என்கிற வலதியை அழைத்து வா. சாகாப்பேருக்கு ஆகாரம் ஏன்? 8960 சாகாமல் கற்பதே கல்வி; பிறரிடம் ஏகாமல் உண்பதே ஊண். சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்றாற் போல. (சாகப் போகிற) சாகிறது போல் இருந்து நோய் தீருகிறதும் உண்டு. சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற் போல. சாகிற நாளைக்கு வாதம் பலித்ததாம். (வயதில்) (வாதம் - ரசவாதம்) சாகிற பேருக்குச் சமுத்திரம் கால்வாய். 8890 சாகிற மட்டும் சட்டி தலைமாட்டிலா? சாகிற வரைக்கும் சங்கடமானால் வாழ்கிறது எக்காலம்? சாகிற வரைக்கும் சஞ்சலமானால் போகிறது எந்தக்காலம்? சாகிற வரைக்கும் சனியன் பிடித்தால் வாழ்கிறது எக்காலம்? சாகிற வரையில் கட்டமானால் சுகம் எப்போது? சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் பஞ்சாங் கக்காரன் விடான். (சோசியக்காரன், பார்ப்பான்) சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டும். சாகிறவனைப் போலிருப்பான் பிழைப்பான்; பிழைப்ப வனைப் போலிருப்பான் சாவான். சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா? சாகிறவன் சனியனுக்கு ஏன் பயப்பட வேண்டும்? 8900 சாகையில் வந்தால் பாடையில் பார்க்கலாம். சாக்கடைக்கும்பிக்குப் போக்கிடம் எங்கே? சாக்கடைச் சேறு என்றாலும் சக்களத்தி என்றாலும் சரி. சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தி என்றாற் போதும். சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப் போகாது. சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே? சாக்கிரி செய்யப் போனாலும் போக்கிரித் தனம் குறையாது. சாக்கும் போக்கும் ஏற்கா ஐயன்முன். சாடிக்கு ஏற்ற மூடி. சாடிக்கு மூடி வாய்த்தது போல. 8910 சாடி சட்டிச்சூளை மேலே கோடை இடி விழுந்தாற் போல. சாடை தெரியாத சக்களத்திக் கோழிக் கொய்யா மரத்திலே ஏறிக்கிட்டுக் கியாங் கியாங்குதாம். சாடை தெரியாதவன் சண்டாளன். சாடை அறியாதவன் சங்காத்தியோ? சாட்சிக் காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம். சாட்டு இல்லாமல் சாவு இல்லை. சாட்டை அடியும் சவுக்கு அடியும் பொறுக்கலாம்; மூட்டைப் பூச்சியும் முணுமுணுப்பும் ஆகா. சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா? சாட்டை இல்லாமலே பம்பரம் சுழலுமா? 8920 சாணான் உறவு சாக்கடை வரையில். சாணான் எச்சில் கருப்புக் கட்டி; சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில். சாணான் புத்தி தட்டிக்குள்ளே, புட்டிக்குள்ளே. சாணான் புத்தி சாணுக்குள்ளே. சாணானுக்கு ஏறும்போது ஒரு புத்தி; இறங்கும் போது ஒரு புத்தி. சாணானுக்குக் கிணை சட்டிக்குள்ளும் பெட்டிக்குள்ளும். சாணி எடுக்கிற நாய்க்குச் சந்தனப் பொட்டு ஒரு கேடு. சாணி ஒரு கூடை சவ்வாது ஒருபண எடை. சாணிக் குழியையும் சமுத்திரத்தையும் சரியாய் நினைக் கலாமா? 8930 சாணிச் சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றா? (சரியாகுமா?). சாணிச் சட்டி சமையல் சட்டியாகுமா? சாணிச் சட்டியும் தெரியாது; சருவச் சட்டியும் தெரியாது. சாணிச் சட்டி வைக்கிற இடத்தில் சாணிச் சட்டி வைக்க வேண்டும்; சருவச் சட்டி வைக்கிற இடத்தில் சருவச் சட்டி வைக்க வேண்டும். சாணி சுமக்கிற சிறுமிக்குச் சந்தனப் பூச்சு எதற்கு? சாணியும் சவ்வாதும் சரியாகுமா? சாணியைக் கொடுத்து மெழுகு என்றாளாம். சாணுக்கு ஒரு பாம்பு; முழத்துக்கு ஒரு பேய். சாணுக்குச் சாண் வித்தியாசம். சாண் வயிறோ? சரீரம் எல்லாம் வயிறோ? 8940 சாண் உழவு முழு எருவுக்குச் சமம். சாண் ஏற முழம் சறுக்கிறது. (ஏறினால்) சாண் ஏறிய பின் முழம் சறுக்கியது போல. சாண் கால் கழுவினால் முழச்சோறு. (அலம்பினால்) சாண் காட்டிலே முழக்கழி வெட்டினானாம். சாண் காட்டிலே முழத்தடி வெட்டலாமா? சாண் குருவிக்கு முழ வாலாம். சாண் சடைக்கு முழக் கயிறா? (முழத்துணியா) சாண் சடை; முழம் சோறு. சாண் செடியிலே முழத்தடி வெட்டலாமா? 8950 சாண் தண்ணீரிலே முழப்பேய். சாண் பண்டாரத்துக்கு முழத் தாடி. (விபூதி) சாண் பறையனுக்கு முழத்தடி. சாண் பாம்பானாலும் அதை அடிக்க முழத்தடி வேண்டும். சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை மாண்பிள்ளை. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை இருக்க வேண்டும். சாண் போனால் என்ன? கழுத்து மட்டும் போனால் என்ன? சாண் முறியும் முழம் புரியும் பொத்தல் ஒன்று. சாண் வீட்டுக்கு முழத்தடி. சாதத்துக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே தொங்கு கிறதா? 8960 சாதத்துக்குப் புனுகும் சந்தனத்துக்குப் பெருங்காயமும் போடலாமா? சாதி அந்த புத்தி; குலம் அந்த ஆசாரம். சாதிக்கு அடுத்த புத்தி; தீனிக்கு அடுத்த லத்தி. சாதி அபிமானமும் சமய அபிமானமும் சந்நியாசிக்கும் உண்டு. (போகா) சாதி ஒளிக்குமா? சதகுப்பை நாற்றம் போகுமா? சாதிக்கு ஏற்ற புத்தி சாப்பாட்டுக்கு ஏற்ற லத்தி. சாதிக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது. சாதிக்குத் தக்க புத்தி; குலத்துக்குத் தக்க ஆசாரம். சாதி குணம் காட்டும்; சந்தனம் மணம் காட்டும். சாதி சாதிதான்; சோதி சோதிதான். 8970 சாதி சாதியைக் கொள்ளும்; சதகுப்பை நாற்றத்தைக் கொள்ளும். சாதிச் சைவரும் போலிச் சைவரும். சாதித் தொழில் விடுமா? சர்க்கரை கசக்குமா? சாதிப் பழக்கமும் சதகுப்பை நாற்றமும் போகா. சாதி பேதம் சண்டாள வேதம். சாதியில் கெட்டது கிள்ளை; சாமியில் கெட்டது மாரியம்மன்; காயில் கெட்டது கத்தரிக்காய். சாது சாது என்கிற சந்நியாசிக்குத் தடிபோல ஐந்து குழந்தை களாம். சாதுப் பசுவையும் ஏழைப் பார்ப்பானையும் நம்பாதே. சாதுப் பாம்பு சாகக் கடித்தது. சாதுப் பெண்ணுக்கு ஒரு சூதுப் பிள்ளை வந்ததுபோல். 8980 சாது மிரண்டால் காடு கொள்ளாது. (இடம் கொள்ளாது) சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கிற்றாம். சாதுரியப் பூனை மீனைவிட்டுப் புளியங்காயைத் தின்றதாம். சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடு. சாத்திரம் பாராத வீடும் சமுத்திரம் பார்த்த வீடும் கெடும். சாத்திரம் பாராத வீடு சமுத்திரம். சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள்; கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு. சாத்திரத்துக்குத் திருமந்திரம்; கோத்திரத்துக்குத் திருவாசகம். சாத்திரம் படித்தாலும் ஆத்திரம் போகாது. சாத்திரம் பார்த்தால் மூத்திரம் பெய்ய இடம் இல்லை. 8990 சாப்பிட்ட சோற்றுக்கு ஊறுகாய் தேடுவார்களா? சாப்பிட்டவனுக்குப் படுக்க பாய் கிடைக்கவில்லை; சாப்பிடாதவனுக்குச் சாப்பிட இலை கிடைக்கவில்லையாம். சாப்பிணி மருந்து ஏற்காது. சாப்பிள்ளை பெறுவதிலும் தான் சாவது நலம். சாப்பிள்ளை பெற்றவளுக்குச் சந்தோசம் வருமா? சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சி கூலி தப்பாது. சாப்பிள்ளை பெற்றுத் தாலாட்டவா? சாமத்து நாய் ஊளை தெருவுக்குக் கேடு. சாமர்த்தியர் கோழி சாமம் போலக் கூவிற்றாம். சாமி கை காட்டும் எடுத்து ஊட்டுமா? 9000 சாமிக்கே உண்டைக் கட்டிக்குத் திண்டாட்டமாம்; பண்டாரத்துக்கு சர்க்கரைப் பொங்கல் கேட்குதாம். சாமி சக்தி பூசாரிக்குத் தெரியாதா? சாமியாராகிவிட்டு மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போனானாம். சாமியார் நாய் சீடனுக்குப் பயப்படுமா? சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பது போல. சாமி சொத்தைத் தின்னுகிறவன் பூமி கொள்ளாமல் போயிடுவான். சாமி வந்த போதே சாட்டை போட்டுக் கொள்ள வேண்டும். சாமி வழிகாட்டும் எடுத்து ஊட்டாது. சாமியைத் தூக்கிச் செல்லுவோர் சாமி கும்பிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 9010 சாமைப் பயிர் விளைந்தால் தெரியும்; சக்கிலியப் பெண் சமைந்தால் தெரியும். சாமைப் பயிரைக் கதிரில் பார். சாமைப் புல்லை மேய்ந்த மாடும் சக்கிலிச்சிக் கிட்ட போனவனும் தேங்க மாட்டான். சாமை வெள்ளாமை ஊமை வெள்ளாமை. சாய்ந்த மரத்தில் ஓடி ஏறலாம். சாய்ந்தரத்தில் கல்யாணம் பிடி தாம்பூலம். சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடுவது போல. சாரல் மழையில் முளைத்த கோரை தானே? சாராயத்தைக் கொடுத்து நியாயம் கேட்டானாம். சாராயத்தைக் கொடுத்துப் பூராயத்தைக் கேள். 9020 சாராயத்தைத் தினம் குடித்தால் காராளனும் கடை மகனாவான். சாராயம் குடித்த நாய் போல். சாரை கொழுத்தால் மாட்டுக் காரனிடம் போகும். சாரை தின்னும் ஊருக்குப் போனால் நடுக்கண்டம் எனக்கு. சாலாய் வனைந்தால் என்ன? சட்டியாய் வனைந்தால் என்ன? சாலாய் வைத்தாலும் சரி; சட்டியாய் வைத்தாலும் சரி. சாலை வழியே போகிற சனியனைச் சாயங்காலம் வீட்டுக்குவா என்றானாம். சாலோடு அகப்பை தட்டாமற் போகுமா? சாலோடு தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தீர்க்கும். சால்போல் வயிறு ஊசிபோல் தொண்டை. 9030 சால்வயிறு நிறைந்தாலும் சவலை வயிறு நிறையாது. சாவட்டக் கொத்துமல்லி மேவட்டம் போடுகிறது. சாவாமற் கற்பதே கல்வி; பிறர் ஏவாமல் உண்பதே ஊண். சாவார்க்குச் செய்வது செத்த பிறகா? சாவியில்லாத பூட்டும் சந்தர்ப்பம் பார்க்கும் நட்பும் வீண். சாவுகிற காலத்தில் சங்கரா சங்கரா என்றால் வாழ்ந்த காலத்துப் பாவம் போகுமா? சாவுக்குப் பிடித்தால் லங்கணத்துக்கு வரும். சாவுக்கு வாடா என்றால் பாலுக்கு வருவான். சாவுப் பானை விடியாது; சங்கடப் பானை விடியும். சாவேரி ராகமே ராகம்; காவேரித் தீரமே தீரம். 9040 சாறு மிஞ்சினால் பாறை; சாந்து மிஞ்சினால் குப்பை. சாற்றிலே வேண்டாம் தெளிவிலே வாரு. சான்றோர் அவைப்படிற் சாவாதாம் பாம்பு. சான்றோர் இல்லாத சபை குறவர் சேரி. சான்றோர் கயவர்க்கு உரையார் மறை. சான்றோன் ஆக்குவது தந்தை கடனே.  சி சிக்குப் பிடித்த தலைக்குச் சீயக்காய் உறவு. சிங்கத்திற்குக் காடு ஆதரவு; காட்டுக்குச் சிங்கம் ஆதரவு. சிங்கத்தின் காட்டை சிறுநரி வளைத்தாற் போல. சிங்கத்தில் சிதறினால் கும்பத்தில் குவிக்கலாம். 9050 சிங்க சொப்பனம் கண்ட ஆனை போல. சிங்கத்துக்குத் தன்காடு பிறன்காடு இல்லை. சிங்கத்துக்கு நாயா சிங்காரமுடி சூட்டுகிறது? சிங்கத்துக்குப் பங்கம் இல்லை. சிங்கத்துக்குப் பிறந்தது சிற்றெறும்பு ஆகுமா? சிங்கம் இருக்கக் குட்டி வசமாமா? சிங்கம் இளைத்தால் சுண்டெலி கூட மேலேறிக் குதிக்குமாம். சிங்கம் தன் பசிக்கு ஆனையைத் தேடிக் கொல்லும். சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா? சிங்கம் பசித்தால் தேரையைத் தின்னுமா? 9060 சிங்கனுக்குப் பெண்டாட்டி வாய்த்ததைப் பார்; இரண்டு வீடுகட்டித் தாரேன் என்று ஏய்த்ததைப் பார். சிங்காரவல்லி அங்கயற்கண்ணிக்குத் தீட்டு மாறிய பின் திரட்டிச் சடங்கு. சிடுக்குத் தலையும் கொடுக்குப் பேனும். சிடுக்குப் பெருத்தால் கொண்டை பெருக்கும்; தாயார் செத்தால் வயிறு பெருக்கும். சிட்டாள் எட்டாளுக்குச் சமானம்; முட்டாள் எதற்கு ஆவான்? சிட்டாளுக்கு ஒரு முட்டாள்; செருப்புத் தூக்கிக்கு ஓர் அடைப்பைக் காரனா? சிட்டுக் குருவிக்குப் பட்டங் கட்டினால், சட்டிபானை எல்லாம் லொட லொட வென்று தத்தும். சிட்டுக்குருவிக்கு ராமபாணமா? சிட்டுக் குருவி மேல் பனங்காயை வைத்தது போல. சிட்டுக் குருவி மேல் பிரமாத்திரம் தொடுக்கலாமா? 9070 சிட்டுக் குருவியா திருவணை அடைக்கப் போகிறது? சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம். சிணுங்குகிறது எல்லாம் பூசைக்கு அடையாளம். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போல. சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்க வேண்டுமா? சித்தம் திருத்தல் செத்துப் பிறத்தல். சித்தன் போக்கு சிவன் போக்கு. சித்தன் போக்கு சிவன் போக்கு; ஆண்டி போக்கு அதே போக்கு. சித்தி பெறாத மருந்தும் மருந்தோ? பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ? சித்திரக்காரனுக்குத் தெரியாமல் சீட்டுக் கிழியுமா? 9080 சித்திரக் கொக்கு இரத்தினத்தைக் கக்குமா? சித்திரமும் கைப்பழக்கமும் செந்தமிழும் நாப்பழக்கம். சித்திர வேலைக்காரனுக்குக் கை உணர்த்தி; தெய்வப் புலவனுக்கு நா உணர்த்தி. சித்திரை எள்ளைச் சிதறி விதை. சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை; பங்குனி என்று பருக்கிறதும் இல்லை. சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை; வைகாசி என்று வளர்வதும் இல்லை. (வாழ்வதும் இல்லை) சித்திரைக் கோடையில் உத்தரவுச் சாடை. சித்திரைப் பத்தில் சிறந்த பெருங்காற்று; ஐப்பசி பத்தில் அறையில் அடைபடும். சித்திரை பத்துக்கு மேல் சிறந்த பெருங்காற்று. சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம். 9090 சித்திரைப் பிள்ளை சீரைக் குறைக்கும். சித்திரை மழை சின்னப் படுத்தும். சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும். சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை; ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிட்டவானும் இல்லை. சித்திரையில் தலைச்சன் பிறந்தால் உத்திரத்தூணும் இற்று விழும். சித்திரை மாதம் பிறந்தால் செல்வத்தளிரோடும். சித்திரை மாதத்து மழை சினையை அழிக்கும். சித்திரைப் புழுதி மெத்தவும் நன்று. சித்திரை மாதத்தில் சீராய் விதை விதைத்தால் பத்தரை மாற்றுப் பசும்பொன் அதில் விளையும். சித்திரைமாதம் சிறந்தமழை பெய்யாமற் போனால், வில்லாததை விற்று வெள்ளாடு கொள்ளு. 9100 சித்திரை மின்னல் ஆகாது; மார்கழி இடிக்கவும் ஆகாது. சித்திரை மழை செல்வ மழை. சித்திரை மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம். சித்திரை மாதத்தில் சிறந்துழுத புழுதியிலே கத்தரி நடாமல் கரும்பு வைக்கலாமா? சித்திரை மாதம் கத்திரி வெயில். சித்திரை மாதம் சீருடையோர் கல்யாணம்; வைகாசி மாதம் வரிசையுள்ள கல்யாணம்; ஆனி மாதம் அரைப் பொறுக்கிக் கல்யாணம். சித்திரையில் பெற்றாள்; மார்கழியில் மகிழ்ந்தாள். சிநேகம் செய்தபின் சோதி; தெளிந்த பின் நம்பு. சிந்தாது அறுந்தால் மங்காது இருக்கலாம். சிந்தி அறுந்துபோகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்? 9110 சிந்தின வீட்டிலே சேராது; மங்கின வீட்டிலே வாராது. சிந்திக்காமல் படிப்பது வீண்; படிக்காமல் சிந்திப்பதோ பாழ். சிந்திப்போன பாலை எண்ணி அழுவதில் பயன் இல்லை. சிப்பாய் நாய் துப்பாக்கிக்குப் பயப்படுமா? சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும். சிம்பிலே வளையாதது பம்பிலே வளையப் போகிறதா? சிரங்கு பிடித்தவன் கையும் இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இராது சிரங்கு முற்றிப் பவித்திரம் ஆனாற்போல. சிரசுக்கு மேலே ஆக்கினையும் உண்டோ? (இல்லை) சிரஞ்சீவி பெற்றவருக்குச் சிவபயம் ஏது? (எமபயம்) 9120 சிரட்டைத் தண்ணீர் எறும்புக்குச் சமுத்திரம். சிரிக்கத் தெரியாதவன் பிழைக்கத் தெரியாதவன். சிரிக்கும் பெண்ணையும் அழும் ஆணையும் நம்பாதே. சிரித்தாயோ? சீரைக் குலைத்தாயோ? சிரித்தாயோ? சீலையை அவிழ்த்தாயோ? சிரித்தால் வெட்கம்; அழுதால் துக்கம். சிரித்தாளாம் சிரித்தாளாம் சீழ்வடிந்த கன்னி; அவள்மேல் ஆசை வைத்தானாம் தண்ணீர் வடிந்த உதடன். சிரித்துக் கெடுத்தான் சிவன். சிரித்துச் சிரித்து தின்ற தோசைக்குக் காசில்லையா? சிரித்துப் பேசினால் சீலையை அவிழ்த்துக் கொடுத்து விடுவாள். 9130 சிரிப்பாணிக் கூத்து சிரிப்பாய்ச் சிரித்துச் சீலைப்பேன் குத்துகிறது. சிரிப்பாய்ச் சிரித்துச் சீலைப்பேன் குத்துகிறது. சிரிப்பாய்ச் சிரித்துத் தெருவிலே நிற்கிறது. சிரிப்பார் முன்னே இடறிவிழுந்தாளாம். சிரிப்பு குடியைக் கெடுக்கும்; சீதளம் உடலைக் கெடுக்கும். சிரிப்பும் புளிப்பும் சிலகாலம். சிரைக்க வந்தால் அடைப்பமும் கிண்ணியும் சரியாயிருக்க வேண்டும். சிரைக்க வந்தவனுக்கு அப்பம் வேண்டாமா? சிரைக்கிறதை விட்டுவிட்டுச் சினையாட்டுக்கு மயிர் பிடுங்கிய கதையாய். சிரைத்தால் கூலி; சேவித்தால் சம்பளம். 9140 சிரைத்தால் மொட்டை; வைத்தால் குடுமி. சிலவானக் கள்ளி செலவு அறிவாளா? (சில்வானக்) சிலுக்கச் சிலுக்கக் குத்துகிறதெல்லாம் சித்திரத்துக்கு அழகு. சிலுவுண்டானால் சேவகம் உண்டு. சிலைக்குச் சீலைக் கட்டினாலும் சீலையைத் தூக்கிப் பார்ப்பானாம். சில்லறைக் கடன் சீரழிக்கும். சில்லறைச் சாவகாசம் சீலையைக் கிழிக்கும். சிவக்க முற்றின வாழைக்காய் புளியில்லாமல் இனிக்கிறது. சிவசிவா, திருப்பிப் போட்டு அடித்தால் சாகும் என்றான் சந்நியாசி. சிவபூசை வேளையிலே கரடி புகுந்தாற் போல. 9150 சிவராத்திரியோடு பனி சிவசிவா என்று போகும். சிவன் சொத்து குலநாசம். சிவனிலும் பெரிய தெய்வம் இல்லை. சிவனுக்கு மிஞ்சின தெய்வம் இல்லை; சித்தியாருக்கு மிஞ்சின சாத்திரம் இல்லை. சிவனே என்று இருந்தாலும் தீவினை விடவில்லை. சிவனை நினைத்து ஆர் கெட்டார்? சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. சிவாயநம என்பவருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும்; சுமக்கவும் வேண்டும். சிறப்புடைய பொருளை முற்படக் கிளத்தல். 9160 சிறப்போடு பூனை இறப்பில் இருந்தால் புறப்படமாட்டாது எலி. சிறிசுக்கு இடம் கொடேன்; சேம்புக்குப் புளி இடேன். சிறிய கண்ணாடி பெரிய உருக்களைக் காட்டுமாப் போலே. சிறிய பாம்பானாலும் பெரிய தடிகொண்டு அடி. சிறியா நங்கை இல்லையேல் சீறிய பாம்பு பிடிப்பார் இல்லை. சிறியாரோடு இணங்காதே; சேம்புக்குப் புளிவிட்டுக் கடையாதே. சிறியார் இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது. சிறியார் இட்ட வேளாண்மை அறுவடை ஆகாது; அறுத்தாலும் களம் சேராது. சிறியார்க்கு இனியதைக் காட்டாதே, சேம்புக்குப் புளிவிட்டு ஆக்காதே. சிறியார் எல்லாம் சிறியார் அல்லர். 9170 சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் பொறுப்பது கடனே. சிறுகக் கட்டிப் பெருக வாழ். சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம். சிறுகச் சிறுக வெட்டினால் பெரிய மரமும் வீழ்ந்துவிடும். சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான். சிறு குழந்தை இல்லாத வீடும் வீடுஅல்ல; சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறியல்ல. சிறு குழிகள் கொஞ்சம் தண்ணீரால் நிரம்பும். சிறுக்கி என்றால் சீவனே போய் விடுகிறதாம். சிறுக்கி சின்னப்பணம்; சிறுக்கி கொண்டை மூன்று பணம். சிறுக்கி சேதி தெரியாமல் செடியைச் செடியைச் சுற்றுகிறது. 9180 சிறுக்கி மயல் தெரியாமல் செடி தூக்கி அலைந்தானாம். (மனம்) சிறுக்கி சிம் என்றாளாம்; பாவாடை பர்க் என்றதாம். சிறு தீ பெரு நெருப்பு. சிறு துரும்பும் பல்குத்த உதவும். சிறு துளி பெருவெள்ளம். சிறுத்திருக்கையில் வளையாதது பருத்திருக்கையில் வளையுமா? சிறு பாம்பையும் பெரிய தடியால் அடிக்க வேண்டும். சிறு பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு. (ஆடுவார்) சிறு பிள்ளை இட்ட வேளாண்மை வீடுவந்து சேராது. சிறு பிள்ளை இல்லாத வீடும், சீரகம் இல்லாத கறியும் செவ்வையாய் இரா. 9190 சிறு பிள்ளை கட்டிய சிற்றாடை போல. சிறு பிள்ளை பயம் அறியாது. சிறு பிள்ளை வீடு வீடு அல்ல. சிறு புண்ணையும் ஏழை உறவினனையும் அலட்சியம் செய்யாதே. சிறு பொறியே பெருந்தீ. சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது. சிறு போது படியாத கல்வி அழுக்குச் சேலையில் சாயம் ஏற்றினது போல. சிறு மீன் எல்லாம் பெருமீனுக்கு இரை. சிறு முள்ளு குத்திப் பெருமலை நோகுமா? சிறுமைப் படுகிறதை விடச் சாவது உத்தமம். (செத்தால் உத்தமம்) 9200 சிறுமையிற் கல்வி சிலைமேல் எழுத்து. சிறுமையும் பெருமையும் தான்தர வரும். சிறு உருவத்தை உடையவரும் அரும்பொருளைச் செய்வார். (ரூபத்தை) சிறுவர் இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது. சிறு விதையாகிய ஆலமரம் பெருநிழலைக் கொடுக்கும். சிறைக்குக் கீழ் சிறை; அதன் கீழ் அம்பட்டன். சிறைச் சாலைக்கு அழகு இல்லை; தேவடியாளுக்கு முறை இல்லை. சிறைப் பட்டாயோ? குறைப்பட்டாயோ? சிற்றப்பன் வீட்டுக்குப் போய்க் சிற்றாடை வாங்கி வரலாம் என்று போனாளாம்; சிற்றப்பன் பெண்சாதி ஈச்சம்பாயை இடுப்பில் கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம். சிற்றப்பன் சீராட்டிக் கண்ணில் சுட்டானாம். 9210 சிற்றம்மை சீராட்டிக் கண்ணில் சொருகினாளாம். சிற்றளவாகக் கட்டிப் பேரளவாக வாழவேண்டும். சிற்றாத்தை பிள்ளையும் பிள்ளையோ செத்தையிற் பல்லியும் பல்லியோ? சிற்றாள் எட்டு ஆளுக்குச் சரி. (சமானம்) சிற்றாள் வேலை எட்டாள் வேலை. சிற்றானைக் குட்டிக்குச் சிற்றெறும்பு சளைக்காது. சிற்றின்பம் எண்ணார் மற்றின்பம் கண்டார். சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர். சிற்றுளி சரியாக இருந்தால் மலையையும் துளைத்து விடலாம். சிற்றுளியும் மலையைத் தகர்க்கும். 9220 சிற்றூண் இனிது. சிற்றூரிலே செல்லக் கூத்துக் கட்டின கதை. சிற்றூரிலே பாரிக் கூத்தா? (பாரக்) சிற்றெறும்புக்குக் கொட்டாங்கச்சி நீர் சமுத்திரம். சிற்றெறும்புக்குச் சிற்றெறும்பும் கட்டெறும்புக்குக் கட்டெறும்பும்தான் உறவாக முடியும். (தேடும்) சினத்தால் அறுத்த மூக்கு சிரித்தால் வருமா? சினத்திருந்தார் வாசல்வழி போக வேண்டாம். சினத்தைப் பேணில் தவத்திற்கு அழிவு. சினந்தவரை சினம் தழுவாது. சினந்தாலும் சீர் அழியப் பேசாதே. 9230 சினம் மீறினால் இனம் தெரியாது. சினைப்பட்ட மாட்டைச் சீந்தாது காளை; செரிக்கு முன்னே தின்பவன் மோளை. சின்னக் கண்ணி அகமுடையான் செவ்வாய்க் கிழமை செத்தானாம்; வீடுவாசல் மெழுகி வைத்து வெள்ளிக்கிழமை அழுதாளாம். சின்னக் காசை அலட்சியம் செய்தால் பெரிய காசு சேராது. சின்னக் குட்டி அகமுடையான் சித்திரை மாதம் அடித்தானாம்; அவள் அடிப்பொறுக்காமல் ஆடி மாதம் அழுதாளாம். சின்னதைக் கொடுத்துப் பெரியதை வாங்கிக் கொள்கிறது. சின்னப் பாம்பானாலும் பெரியதடி கொண்டு அடி. சின்னப்பிணம் ஆனாலும் பெரியபிணம் ஆனாலும் சங்கு ஊதிக்குக் கால்பணம். சின்னமீன் பெரியமீனுக்கு இரை. சின்ன மீனைப் போட்டால் பெரிய மீனைப் பிடிக்கலாம். 9240 சின்ன வீட்டில் நடந்து சீமந்தத்தில் தெரியும். சின்ன வீட்டுச் சேதி அம்பலத்தில் வரும்.  சீ சீ என்ற வீட்டில் நாயும் நுழையாது. (பேயும்) சீ என்ற காட்டில் செந்நாய் சேருமா? சீ என்றால் நாயும் திரும்பிப் பாராது. சீக்கிரப் புத்தி பலவீனம். சீக்கிரம் பழுப்பது சீக்கிரம் உளுக்கும். சீ சீ என்கிறதும் இந்த வாய்தான்; சிவசிவா என்கிறதும் இந்த வாய்தான். சீ சீ நாயே என்றால் பிள்ளை பிள்ளைதானே. சீட்டாளுக்கு ஒரு மோட்டாள்; செருப்புத் தூக்கிக்கு ஓர் அடைப்பைக்காரனா? 9250 சீட்டாளுக்கு ஒரு மோட்டாளு; பன்னிக்குட்டிக்கு ஒரு பயிராளு. சீதனக் கள்ளி விருந்து அறியாள். சீதேவியுடனே திருப் பாற்கடலில் மூதேவி ஏன் பிறந்தாள்? சீதேவியுடன் கூட மூதேவி பிறந்தாற் போல. சீதை அழகால் கெட்டாள்; திரௌபதி சிரிப்பாள் கெட்டாள். சீதை பிறக்க இலங்கை அழிந்தது. சீபுரத்துப் பள்ளி செத்தும் கெடுத்தான்; இருந்தும் கெடுத்தான். (கெட்டான்) (சீபுரம் - சீவத்துப்பள்ளி - செங்கல்பட்டு மாவட்டம்) சீப்பை எடுத்து ஒளித்தால் கலியாணம் நிற்குமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? சீப்பை மறைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடுமா? 9260 சீமந்தத்தோடு சிடுக்கு விட்டது. சீமந்தப் பந்தலில் புடைவையை நடுக்கிழித்து மூட்டினாளாம். சீமாற்றுக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சமாம். சீமாற்றை ஒளித்தால் கலியாணம் நிற்குமா? சீரகம் இல்லாத இரசமும் சரி; சிறு கொழுந்தன் இல்லாத வீடுஞ்சரி. சீரக ரசத்துக்கு சிற்றாட்கள் எட்டுப்பேர். சீரங்கத்தில் உண்டா சிவதருமம்? சீரங்கத்தில் உலக்கை கொடுத்தது போல. சீரங்கத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவாய்மொழி கற்பிக்க வேண்டுமா? சீரங்கத்துக் காகம் கோவிந்தம் பாடுமா? 9270 சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டது போல. சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலே பாரியைப் பறி கொடுத்ததுபோல. சீரங்கத்துக்குப் போயும் சொறித்தாதன் காலில் விழுகிறதா? சீரங்கம் போனாலும் சிரிக்கா முகரி; சிரிப்பு வந்து வித்தாலும் வாங்கா முகரி. (முகரி - முகத்தாள்) சீரங்கத்து நடை அழகு; காஞ்சிபுரம் குடை அழகு. சீரங்கத்துல ஒரு பரியாரியாம்; அவன் ஒரு முறையிலே எனக்குச் சித்தப்பனாம். சீரணி கெட்டால் கோரணி. சீரழிவைக் சொல்லப் போனால் சேலை ஒருமுழம் கிழிந்து விடும். சீராளனைப் பெற்ற பிறகு திருச்சீலைத்துணிகூட அகப்பட வில்லை. சீராளன் கலியாணத்தில் மூன்றுபேர் பெண்டுகள்; மாரோடு மார்தள்ளுது. 9280 சீரியார்க்கு அன்பு செய். சீரியர் கெட்டாலும் சீரியரே. சீருக்குச் சலுகையா? சலுகைக்குச் சீரா? சீரைத் தேடின் ஏரைத் தேடு. சீர் அற்ற கையிற் செம்பொன் விலைபெறா. சீர் அற்ற பானைக்குச் செம்பொன் ஏது? சீர் அற்ற பாவியை நீரில் பார்; துப்பு அற்ற பாவியை உப்பில்பார். சீர் அற்ற வாழ்வை நீரிலே பார்; துப்புஅற்ற வாழ்வை உப்பிலே பார். சீர் உண்டனால் சிறப்பு உண்டு. சீர் கொண்டு வந்தால் சகோதரி. 9290 சீர்மை உண்டானால் நேர்மையும் உண்டு. சீலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போனாளாம். (சிற்றாத்தாள்) அவள் ஓலையைக் கட்டிக் கொண்டு ஓடி வந்தாளாம். (ஈச்சம்பாயைக்) சீலைப்பாய் ஈழம்போய்ச் சீனிச் சர்க்கரை கட்டுமா? சீலைமேல் சீலை கட்டித் தேவரம்பை ஆடினாலும் ஓலை மேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது. சீவரத்துக் கிராமணி இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான். சீவன் போனால் சீர்த்தியும் போகுமா? சீவனம் செய்ய நாவினை விற்கேல். சீவனும் கெட்டது; வியாதியும் பொட்டென்று நின்றது. சீவன் போன பிறகு நோய்க்கு மருந்து கொடுப்பதா? சீ விடு என்றாளாம் சிறுபருப்பில் நெய்யை. 9300 சீறிய பாம்புக்குச் சிறியா நங்கைவேர். சீறிவரும் வடவாக்கினியைச் சிறு குட்டைத் தண்ணீர் அவிக்குமா? சீறும் படையைக் கண்டு செடிக்குள் நுழைகிறது. சீனி இட்டுக் காய்ச்சிய பால் தித்திப்பு இல்லை என்பது போல. சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா? சீனிக்கிழங்கு தின்ற பன்றி செவி அறுத்தாலும் நிற்காது.  சு சுக துக்கம் சுழல் சக்கரம். சுகத்துக்குச் சொல்லிப் போக வேண்டும்; துக்கத்துக்குச் சொல்லாமல் போக வேண்டும். சுகத்துக்குப் பின் துக்கம், துக்கத்துக்கு பின் சுகம். சுகத்தைத் தள்ளினாலும் துக்கத்தைத் தள்ளலாகாது. 9310 சுகத்தைப் பெற்றதும் அல்ல; தவத்தைப் பெற்றதும் அல்ல. சுகத்தையாவது பெற வேண்டும்; தவத்தையாவது பெற வேண்டும். சுகம் கெட்டால் விரதம் தக்க வேண்டும், விரதம் கெட்டால் சுகம் தக்க வேண்டும். சுகம் கெட்டால் விரதம் லாபம்; விரதம் கெட்டால் சுகம் லாபம்; இரண்டும் கெட்டால் என்ன லாபம்? சுகம் தக்குகிறதும் இல்லை; விரதம் தக்குகிறதும் இல்லை. சுகம் மெத்தை அறியுமா? சுகம் வந்தால் சந்தோசப்பட்டுத் துன்பம் வந்தால் பின் வாங்குவானேன்? சுகமும் கூழும் இறுகத் தடிக்கும். சுகமும் துக்கமும் ஒருவர் பங்கல்ல. சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு. 9320 சுகுணசுந்தரி இல்லாத வீடு சுடுகாடு. சுக்கிர உதயத்தில் தாலிகட்டிச் சூரிய உதயத்திற்குள் அறுத்தாள். சுக்கிர திசை அவன் சூத்திலே அடிக்கிறது. சுக்கிர திசை வந்தால் சுமந்து வந்து கொடுக்கும். சுக்கிரன் முளைப்பு ஒருவருக்கும் தெரியாது. சுக்கிரனைப் போலக் கொடுக்கிறவன் இல்லை; கேதுவைப் போலக் கெடுக்கிறவன் இல்லை. சுக்கு அறியாத கசாயம் உண்டா? (இல்லாத) சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றாளாம்; செக்குக் கண்ட இடத்தில் தலை விரித்தாளாம். சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும். (பெற்று கொள்வது) சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுத் தொட்டில் கண்ட இடத்தில் தாலாட்டலாமா? 9330 சுக்குக் கண்ட இடத்தில் பெற்று, சூரியநாராயணன் என்று பெயர் இடுவாள். சுக்குக் கண்ட இடத்தில் முக்கிப் பிள்ளை பெறுவாளா? சுக்குக் கண்ட இடமெல்லாம் பிள்ளை பெறமுடியுமா? சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை. சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; தாய்க்கு மிஞ்சின உறவும் இல்லை. சுக்குக்கு மேல் வைத்தியமும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மேல் தெய்வமும் இல்லை. சுக்குத் தண்ணீர் தினமும் குடித்தால் சுழற்றி எறியலாம் மூன்றாம் காலை. சுக்குத் தின்று முக்கிப் பெற்ற பிள்ளையைப் போல் காப்பாற்றுகிறாள். சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை. சுக்கு செத்தாலும் சுரணை போகாது. 9340 சுக்கும் பாக்கும் வெட்டித் தருகிறேன் சுள் சுள் என்று வெயில் எறி. சுங்கமும் கூழும் இறுகத் தடிக்கும். (இருக்கத்) சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது. சுங்கா மூஞ்சியைக் காட்டாதே; வந்த விருந்தாளியை ஓட்டாதே. (சுங்கா - சுருங்காத) சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும். சுடலை வைராக்கியம் வீடு வரை. சுடுகாடு போன பிணம் இதுவரை திரும்பி வந்தது இல்லை. சுடுகாடு போன பிணம் திரும்பாது (திரும்பி வாராது) சுடுகாடு போன பிணம் நடு வீடு வந்து சேருமா? 9350 சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறிமூக்கன். சுடுகாட்டுப் பேச்சு சொன்னதோடு போச்சு. சுடுகாட்டு வழி போனாலும் இடுகாட்டுவழி போகலாகாது. சுடுகிற தழலை மடியில் கட்டலாமா? சுடு கெண்டைக்காக ஏரியை உடைக்கலாமா? சுடுநீரிலே விழுந்த பூனை பச்சைத் தண்ணீரைக் கண்டாலும் பயப்படுமாம். சுடு நெருப்பை மடியிலே முடியலாமா? சுட்ட எண்ணெயைத் தொடாதே; வறுத்த பயற்றை விடாதே. சுட்ட கஞ்சி குடித்தால் பட்ட கனை போகும். சுட்ட சட்டி அறியுமா ஆப்பத்தின் சுவையை? 9360 சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமா? சுட்ட சட்டி சுவை அறியுமா? சுட்ட சட்டி தொடாதவளா உடன்கட்டை ஏறப் போகிறாள். சுட்ட நண்டுக்கு வேலி கட்டின சுடுகாட்டுப் பள்ளி. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா? சுட்டவன் இருக்கக் குண்டை நோகிறதா? சுட்டாலும் தெரியாது; தொட்டாலும் தெரியாது. சுட்டிக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது. சுண்டினாலும் பாற்சுவை குறையுமா? சுண்டெலிக்குப் பயந்தது மத்த யானை; சுக்குக்குப் பயந்தது வாத ரோகம். 9370 சுண்டெலி சிலம்பம் படித்து ஆனையை வெல்லமுடியுமா? சுண்டைக்காயில் கடிக்கிறது பாதி வைக்கிறது பாதியா? சுண்டைக்காய் காற்பணம் சுமைக்கூலி முக்காற்பணம். சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம். சுண்ணாம்புக் கலயத்தை நாய் தூக்காது. சுத்தம் சுகம் தரும். சுத்த சைவம் மரக்கறி எல்லாம் தள்ளுபடி. சுத்தம் சோறு போடும். சுத்தம் சோறு போடும்; எச்சில் இரக்க வைக்கும். சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும். 9380 சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு. சுத்திக் காரனுக்கு மூன்று இடத்திலே பீ. (மலம்) சுதேசம் விட்டுப் பரதேசம் போகாதே. சுமக்கிறவனுக்குத் தெரியும் காவடிப் பாரம். சுமந்த கருப்பைக் கல்லவா கிடந்த உயிரைப் பற்றித் தெரியும்! சுமந்தவன் தலையிலே பத்துச் சுமை. சுமப்பவன் அல்லவோ அறிவான் காவடிப் பாரம்? சுமை இருந்தால் சுங்கம் உண்டு. சுமை இழந்தாருக்குச் சுங்கம் இல்லை. சுமை கனத்தால் முன்னது பின்னதாகப் பேசுகிறதா? 9390 சுமை தாங்கி ஆயம் தீர்க்குமா? சுமை தாங்கி சுங்கம் இறுப்பது இல்லை. சும்மா அறுப்பாளா சொத்தைக் களாக்காயை? சும்மா ஆடுகிற சாமி கொட்டைக் கேட்டால் சும்மா இருக்குமா? சும்மா ஆடுமா சோழியன் குடுமி? சும்மா இரு என்றால் அம்மானை போலக் குதிக்கிறாயே. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை. சும்மா இருக்கிற பெண்ணைத் தகப்பன் வந்து கெடுத் தானாம். சும்மா இருக்கிற மணியாரனைத் தூண்டி விடுவானேன்? போன வருட வாயிதாவைப் போட்டுக்கொள்வானேன்? சும்மா இருக்கிறவன் சூத்திலே சுப்பல் எடுத்துக் குத்து வானேன்? 9400 சும்மா இருக்கும் திறம் அரிது. சும்மா இரு சொல்லற. சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப்பணத்துத் தாலி போதாதா? சும்மா இருந்த உடம்பிலே சுண்ணாம்பைத் தடவிப் புண்ணாக்குவானேன்? சும்மா இருக்கிறவனைப் பிடிப்பானேன்? இரவெல்லாம் கிடந்து பிதற்றுவானேன்? சும்மா இருப்பவன் சோம்பேறி. சும்மா கல அரிசி சுமக்கமாட்டான்; நனைந்து முக்கலம் சுமப்பானா? சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி. சும்மா கிடக்கிற அம்மாளுக்குத் தோசையும் போட்டுப் பானம் ஊற்றினால் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்பாள். சும்மா கிடக்குமா சுவை கண்ட நாய். 9410 சும்மா கிடந்த கோழியை ஏன் சூத்தைக் கிள்ளுவானேன்? அது சூத்தை ஆட்டி ஆட்டிக்கொத்தவருவானேன்? சும்மா கிடைக்குமா சோணாசலன் பாதம்? சும்மா கிடைத்தால் எனக்கொருத்தி எங்கப்பனுக் கொருத்தி. சும்மா சும்மா அகப்படுமா அமாவாசைப் பருக்கை. சும்மா சும்மா போனால் அம்மாவும் முகம் சுளிப்பாள். சும்மாட்டுக்கும் சும்மா இருப்பவனுக்கும் என்ன தெரியும்? சும்மா பெண்டாட்டி கிடைத்தால் எனக்கொருத்தி எங்கப்பனுக் கொருத்தி. சும்மா வந்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பாராதே. சும்மா விழிக்கவே கண்ணைக் காணோம்; சிமிட்டி விழிப்ப தெங்கே? சுயபுத்தி இல்லாவிட்டாலும் சொற்புத்தியாவது கேட்க வேண்டும். 9420 சுயபுத்தியும் இல்லை; சொற்புத்தியும் இல்லை. சுரம்போக்கி உல்கு கொண்டார் இல்லை. சுரமண்டலம் கடித்தால் பரமண்டலம். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். சுருட்டை சோறு இடும்; பம்பை பால் வார்க்கும்; கோரை குடி கெடுக்கும். சுருட்டை சோறு போடாது; பரட்டை பாலூற்றாது. சுரைக்காய் ஆனால் கறிக்குப் பாதி; விதைக்கும் பாதியா? சுரைக்காய்க்கு உப்பு இல்லை; பாகற்காய்க்குப் பருப்பு இல்லை. சுரைப்பூவுக்கும் பறைப்பாட்டுக்கும் மணம் இல்லை. சுரை நட்ட இடத்தில் பாகல் முளைக்காது. (பாவை) 9430 சுவரில் முளைத்த செடியைச் சும்மாவிட்டால் அத்திரத்தையே ஆட்டிவிடும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியுமா? சுவருக்கும் காதுகள் உண்டு. சுவரை வைத்துக் கொண்டல்லவோ சித்திரம் எழுத வேண்டும். சுவரை வைத்துச் சித்திரம் வரைய வேண்டும். சுவருக்கு மண் இட்டுப்பார்; பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார். சுவாதியில் வில் போட்டால் சொன்னபடி மழை. சுவர்க்கத்திற்குப் போகிற பொழுது கக்கத்திலே ராட்டினமா? சுவர்க்கீரையை வழித்துப் போடடி சுரணை கெட்ட வெள்ளாட்டி என்றானாம். சுவாமி வரங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான். 9440 சுவாமி வரங்கொடுத்தாலும் முன்னடியான் வரங்கொடான். சுவை கண்ட பூனை உறி உறியாய் தாவும். சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு. சுள்ளைக் சுட்டுக் கொண்டு கள்ளைக் குடிக்கிறது. சுள்ளியை உடைக்கக் கோடாலி வேண்டுமா? சுள்ளெறும்பிலே சப்பை வெட்டுவான். சுற்றச் சுற்றத் தூதும் கிடைக்காது. சுற்றத்தவரைப் பற்றி இரு. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். சுற்றத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை. 9450 சுற்றம் வேண்டின் குற்றம் பாரேல். சுற்றிச் சுற்றிச் சுங்கச் சாவடிக்கே வந்ததுபோல. சுற்றிச் சுற்றி வந்தாலும் சுங்கக்காரனிடத்தே தான் வர வேண்டும். சுற்றும் முற்றும் பார்த்தான் சிண்டைப் பிடித்து இழுத்தான் என்கிற மாதிரி.  சூ சூடப் புத்தி சொல்லி வருமா? சூடு உணர்ச்சி தராது சுரணை கெட்ட மாட்டுக்கு. சூடு அடித்த மாடு வைக்கோல் தின்னாமல் இருக்குமா? சூடு அடிக்கிற மாட்டை வாயைக் கட்டலாமா? சூடு கண்ட பூனை அடுப்பைக் கண்டால் அஞ்சும். சூடு ஒரு ருசி; சிவப்பு ஓர் அழகு. 9460 சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது. சூடு கண்ட பூனை அடுப்படியில் வாராது. (அடுப் பண்டையில் போகாது) சூடு கண்ட நாய் சாம்பல் குளியாது. சூடு சுரணை அற்றவனுக்கு நாடு நகர் பெரிதா? (ஏது?) சூடு சுரணை இல்லாதவனுக்குச் சுரைக்காய்; சொன்னபடி கேளாதவனுக்குக் கீரைத்தண்டு. சூடுண்ட பூனை அடுப்படியில் செல்லாது. சூடுபட்ட பூனைக்குச் சுடுதண்ணிக்கும் பச்சைத் தண்ணிக்கும் வேறுபாடு எப்படி தெரியும்? சூடு பட்ட பூனை பால் குடிக்குமா? சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா? சூடு முற்றினால் பித்தம். 9470 சூட்டோடு சூடு; நூற்றோடு நூறு. சூத பலத்தைச் சுகமுகத்தினால் அறி. சூதனுக்கு நீதி இல்லை. சூதன் கைப்பணம் சூழ இருப்போர்க்கு. சூதன் கொல்லையில் மாடு மேயும். சூதாடி கெட்டான்; சுற்றி இருந்தவன் வாழ்ந்தான். சூதாடி கையும் கோள்காரன் வாயும் சும்மா இரா. (சூதுக்காரன்) சூதாடித் தோற்றவனுக்குக் சுகம் கிட்டாது. சூதானத்துக்கு அழிவு இல்லை. சூதினால் வெல்வது எளிது. (சூதில்) 9480 சூதுக்காரன் கையை வெட்டிப் போட்டாலும் துடுப்பைக் கட்டிக் கொண்டு ஆடுவான். சூதுக்காரன் பணம் சுற்றியிருக்கிற பேரைச் சாரும். சூதும் வாதும் வேதனை செய்யும். சூது விரும்பேல். சூத்தடிச் சிரங்கும் எதிர் வீட்டுக் கடனும் ஆகாது. சூத்திரம் இல்லாமல் பொம்மை ஆடாது. சூத்திர வேதன் சாத்திரம் பார்ப்பான். சூத்தில் அடித்தானாம் பல்லு போச்சாம். சூத்திலே கட்ட துணியில்லை; கூத்தியார் இரண்டு. சூத்து இல்லாக் குடுவை சுழன்று சுழன்று ஆடுகிறது. 9490 சூத்து எப்படி அலைந்தாலும் சரி; காவடி மாத்திரம் இராமேசுவரம் போய்ச் சேர்ந்தால் சரி. சூத்து ஒட்டினால் குதிரை வரகு வைக்கோலைத் தின்னும். சூத்து ஒட்டினாலும் குசுநாற்றம் போகிறதில்லை. சூத்துக்குத் தடுக்குப் போட்டுச் சுற்றிக்கொண்டு திரிகிறது. சூத்துத் துணியை நம்புகிறதில்லை. சூத்துப் புடவையை விட்டால் மாற்றுப்புடவை இல்லை. சூத்தைப் பார்த்தால் தெரியாதா சோழமண்டலத்து அகவிலை? சூத்தையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறது. சூத்தை வழித்து முக்காடு போட்டாற்போல. சூரனுக்குத் துரைமக்கள் துரும்பு. 9500 சூரனுக்குச் சேர்ந்த மரணம் சிறுதுரும்பு. சூரனை வெல்லச் சூரன் உண்டு. சூரன் என்று வீரம் பேசாதே; சூரனுக்குச் சூரன் உண்டு. சூரியனுக்குக் குடை பிடிக்கலாமா? சூரியனுடைய பிரகாசத்துக்கு முன்னே மின்மினி விளங்க மாட்டாது. சூரியனைக் கண்டு உலகம் விளங்கும். சூரியனைக் கண்டு பட்டி குரைத்தால் சூரியனுக்கு என்ன? சூரியனைக் கையால் மறைக்க முடியுமா? சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல. சூரியனைப் பார்க்க எழுபவன் சுறுசுறுப்பாளி. 9510 சூரியன் பார்க்க எழுபவன் சோம்பேறி. சூரியனை மறக்காதே; சுறுசுறுப்பை இழக்காதே. சூரியனை மறைக்கும் சூரியன் இல்லை. சூரியன் எழுமுன் காரியம் ஆடு. சூரியன் கீழ்த் தோன்றியது எல்லாம் மாயை. சூரியன் வெளிச்சத்தில் சுடர் விளக்கு எதற்கு? சூரிய விளக்கிருக்க சுடர்விளக்கு எதற்கு? சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்துகொள்ளும். (சூலாடு மீன்) சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடி வாயில் மண்ணை போடுகிறதா? சூலிக்குச் சுக்கு மேல் ஆசை. 9520 சூலி மயக்கமும் சுடுகாட்டு ஞானமும் பாதிவழி மறையும் மட்டும். சூல் கொண்டவளுக்குத் தான் பிரசவத்தினுடைய வலி தெரியும்! சூழ இருப்பதுதான் சுற்றத்திற்கு அழகு. சூழ ஓடியும் வாசலாலேதான் போகணும். சூளை மேட்டுக் கழுதை சுண்ணாம்பைக் கூட அழுக்குப் படுத்த முடியுங்கிறாற் போல.  நூ நூலுக்கு ஏற்ற சரடு. நூலும் சூலும் சேரக் கூடாது. (நூல் - பூணூல் கல்யாணம்) நூலும் புடவையும் நூற்றெட்டுக் காலமா? நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு. 12610 நூலைப் போல் சேலை; தாயைப் போல பிள்ளை. (பெண், மகள்) நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு. நூல் இல்லாமலே மாலை கோத்தது போல. நூல் கற்றவனே மேலவன் ஆவான். நூல் போனால் நூற்றுஎட்டு நோயும் போயிற்று. (நூல் - தாலி) நூறு ஆண்டு ஆயினும் கல்வியை நோக்கு. நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்க வேண்டும். நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும். நூறு பலம் மூளையை விட ஒரு பலம் இதயம் உயர்ந்தது. நூறு பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை வெற்றவள் மருத்துவம் பார்க்கப் போனாளாம். 12620 நூறு வயதுக் கிழவன் ஆனாலும் நுழைந்து பார்க்க ஆசை. நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணியாரம். நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம். நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு இரைதான். நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார். நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு. நூற்றுக்குத் துணிந்த தூற்றுக் கூடை. நூற்றுக்கு மேல் ஊற்று. (அப்புறம்) நூற்றுக்கு மேல் ஊற்று; ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. நூற்றெட்டு அடிக் கம்பத்திலே ஆடினாலும் பூமியில் வந்து தான் தானம் வாங்க வேண்டும். 12630 நூற்றைக் கெடுத்ததாம் குறுணி. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு. நெ நெகிழ்ந்த இடம் கல்லுகிறதா? நெசவு நெய்பவனுக்குக் குரங்கு எதற்காக? நெஞ்சு அறிதுன்பம் வஞ்சனை செய்யும். நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ? நெஞ்சு அறியாத பொய் இல்லை. நெஞ்சு இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச இலக்கணம் தெரிந்து பயன் என்ன? நெஞ்சு மிக்கது வாய் சோரும். நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. 12640 நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம். நெடுங் கடல் ஓடியும் நிலையே கல்வி. நெடுங் காலம் நின்றாலும் நெல் முற்றிப் பணம் இரட்டி. நெடுங் கிணறும் வாயாலே தூரும். நெடும் பகலுக்கும் அத்தமனம் உண்டு. நெடும் மரம் விழுந்தால் நிற்கிற மரம் நெடுமரம். நெட்டி ஒரு பிள்ளை, சர்க்கரைக் குட்டி ஒரு பிள்ளையா? நெட்டை கட்டை (கூடுதல் குறைதல்) இருந்தாலும் சரியென்று போதல் வேண்டும். நெட்டைக் குயவனுக்கும், நேரிட்ட கம்மாளனுக்கும் பொட்டைக்கும் புழு ஏர்வை. நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பாதே. 12650 நெட்டையை நம்பினாலும் குட்டையை நம்பாதே. நெய் உருக்கி மோர் பெருக்கி நீர் அருக்கிச் சாப்பிட வேண்டும். (கருக்கி) நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன். நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக்குட்டி. (நெசவாளிக்கு) நெய்கிறவன் குண்டி அம்மணம். நெய்க்குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல. நெய்க்குடம் உடைந்ததால் நாய்க்கு விருந்து. நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை. நெய்க்குத் தொன்னை ஆதரவு; தொன்னைக்கு நொய் ஆதரவு. (ஆதாரமா?) நெய் நேத்திர வாயு; அன்னம் அதிக வாயு. 12660 நெய் முந்திரியோ? திரி முந்திரியோ? நெய்யால் நெருப்பவிப்பது போல. நெய்யும் திரியும் போனால் நிற்குமா விளக்கு? நெய்யும் நெருப்பும் சேர்ந்தாற் போல. நெய் வார்த்த கடன் நின்று வாங்கினாற் போல. நெய் வார்த்த பணம் முழுகிப் போகிறதா? நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா? நெருக்க நட்டு நெல்லைப் பார்; கலக்க நட்டுக் கதிரைப் பார். நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும். நெருஞ்சி முள்ளுக்குக் கோபம் வந்தால் கவட்டை மட்டுந்தான். (மட்டுந்தானே?) 12670 நெருப்பால் வெந்த குழந்தை நெருப்பைப் பார்த்தால் பயப்படும். நெருப்பிலும் பொல்லாச் செருப்பு. நெருப்பிலும் பொல்லாது கருப்பின் வாதை. (கருப்பு - பஞ்சம்) நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாட மாட்டான். நெருப்பு இருக்கிற காட்டை நம்பினாலும் நீர் இருக்கிற காட்டை நம்பக் கூடாது. நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? நெருப்பு இல்லாமல் புகையாது. (புகையுமா) நெருப்பு இல்லாமல் புகை கிளம்பாது. நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகுமா? நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது. 12680 நெருப்புக்கு ஈரம் உண்டா? நெருப்புக்குத் தீட்டு இல்லை; எச்சிலும் இல்லை. நெருப்புக்குத் தெரியுமா தன்னாள் வேற்றாள்? நெருப்புக்கு நீர் பகை. நெருப்புக்கும் நீர்க்கும் இரக்கம் கிடையாது. நெருப்பு சிறிது என்று முன்றானையில் முடியலாமா? நெருப்பு சுட்டு உமிக் காந்தலில் விழுந்தது போல. நெருப்புத் துண்டை முந்தானையில் முடிந்து கொண்டது போல. நெருப்பு நின்ற காட்டில் ஏதாவது நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது. நெருப்பு நெருப்பா தின்றாலும் கருப்பு கருப்பாத்தான் பேளனும் 12690 நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான். நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பொம்மை ஆடுமா? (பதுமை) நெருப்பும் சரி பகையும் சரி. நெருப்பை அறியாமல் தொட்டாலும் சுடும். நெருப்பை ஈ மொய்க்குமா? நெருப்பைக் கண்டு மிதித்ததாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும். நெருப்பைக் குளிப்பாட்டின நிறம். நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறமாகும். நெருப்பைச் செல் அரிக்குமா? நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் சுவாலை கீழ் நோக்குமா? 12700 நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது. நெருப்பைப் புழுப் பற்றுமா? நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான். நெருப்பை மடியில் முடிகிறதா? நெல் அல்லாதது எல்லாம் புல். நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண். நெல் ஏறக் குடி ஏற. நெல் குறுணி; எலி முக்குறுணி. நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசின மாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினது மாதிரி இருக்கும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும். (உதவும்) 12710 நெல்லுக்கு உமியுண்டு; நீருக்கு நுரையுண்டு; இதழ் பூவிற்கும் உண்டு. நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும். நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறாள். (உறவு இல்லை என்பது குறிப்பு) நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா? நெல்லுக்கு நேரே புல். நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். நெல்லுக்குக்குள்ளே அரிசி இருக்கிறது ஒருவருக்கும் சொல்லாதே என்றானாம். நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது. நெல்லு சிந்தினால் அள்ளலாம்; சொல்லு சிந்தினால் அள்ள முடியாது. நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும். 12720 நெல்லுப் பயிரும் நேருள்ள பார்ப்பானும் நீரின் மேல். நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா? நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ணக் கூடாது. (முடியாது) நெல்லை அல்வா; கடம்பூர் போளி; மணியாச்சி முறுக்கு; சாத்தூர் வெள்ளரி. நெல்லை அள்ளலாம்; சொல்லை அள்ள முடியாது. நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல. நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா? நெல்லை விற்று உமியா வாங்குவது? நெல்லோடு பதரும் உண்டு. நெல் விளைந்த பூமியும் அறியாய்; நிலா எறிந்த முற்றமும் அறியாய். 12730 நெல் விரைக்கு, சனிக் குறுக்கும் செவ்வாய்க் குறுக்கும் ஆகாது. (விரைக்கு - விதைக்க) நெல் வேர் இடப் புல் வேர் அறும். நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல. நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண். நெற்பயிர் விளை. நெற்பயிர் அழிக்கும் நாவாய்ப் பூச்சி. நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே. நெற்றிச் சுருக்கமும் புத்திச் சுருக்கமும் ஒன்று. நெற்றிக்குப் புருவம் தூரமா?  நே நேசம் உள்ளவர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல. 12740 நேத்திர மணியே சூத்திர அணியே. நேயமே நிற்கும். நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்காது. நேரா நோன்பு சீராகாது. நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது. நேரு சிவப்பு; நெல்லுப்பானை சுத்து. நேருத்திரம் செமைப் பழி. நேரே போனால் எதிரும் புதிரும். நேரே போனால் நேசம் போகும். நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசமாகார். 12750 நேர்மை உண்டானால் நீர்மையும் உண்டு. நேர்வழி நெடுக இருக்கக் கோணல் வழி குறுக்கே வந்ததாம். நேற்று இருந்தவர் இன்று இல்லை. நேற்று இருந்தவனை இன்றைக்குக் காணோம். நேற்று இருந்தால் இன்றைக்கும் இருப்பாரா? நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான். நேற்று வந்தாளாம் குடி; இன்று விழுந்ததாம் இடி. நேற்று வெட்டின கிணற்றில் முந்தா நாள் முதலை புறப் பட்டதாம். நேற்றைக் கிழவி இன்றைக் குமரியா? நேற்றைச் சோறு இன்றைக்குக் காடி. 12760 நேற்றைப் போலவா இன்றும் இருக்கும்.  நை நைடதம் புலவர்க்கு ஔடதம். நைபவர் எனினும் நொய்ய உரையேல். நையக் கற்கினும் தொய்ய நன்குரை. (நொய்ய) நையப் புடைத்தாலும் நாய் நன்றி மறவாது. நைவினை நணுகேல்.  நொ நொச்சி இலைத் தலையணை நோய் நொடிக்குத் தடுப்பணை. நொடிப் போதும் வீணிடேல். நொண்டி ஆயக்காரன் கண்டு மிரட்டுகிறது போல. நொண்டி ஆடு வந்துதான் படல் சாத்த வேண்டும். 12770 நொண்டி ஆனை நொடியில் அழிக்கும். நொண்டிக் குதிரைக்குச் சருக்கினது சாக்கு. நொண்டிக் குதிரை வண்டிக்கு ஆகாது. நொண்டிக்கு உண்டு நூற்றெட்டுக் குறும்பு. (கிறுக்கு) நொண்டிக்குக் குச்சோட்டாமா? நொண்டிக்கு நூறு கிறுக்கு. நொண்டிக்கு நூற்றெட்டுக் கால். நொண்டிக்கு நூற்றெட்டு குறும்பு. (நூற்றியெட்டு) நொண்டிக்குப் பெயர் தாண்டவராயன்; நொள்ளைக் கண்ணனுக்குப் பெயர் செந்தாமரைக் கண்ணன். நொண்டிக்கு விட்ட இடத்திலே கோபம். நொண்டிக் கோழிக்கு உரல் கிடை தஞ்சம். 12780 நொண்டி நாய்க்கு ஓட்டமே நடை. நொண்டி நொண்டி நடப்பானேன்? கண்டதற்கெல்லாம் படைப்பானேன்? நொண்டுகிற மாடு பொதி சுமக்காது. நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து இட்ட மாதிரி. நொந்ததை உண்டால் நோய் உண்டாகும். நொந்த புண்ணிலே வேல் கொண்டு குத்தலாமா? நொந்தவர்களைக் கொள்ளை இடுகிறதா? நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர். நொந்து நூல் அழிந்து போகிறது. நொந்து நொந்து சொன்னாலும் நீசக்கயவர் வசமாகார். 12790 நொய் அரிசி கொதி பொறுக்குமா? (தாங்காது) நொய் அரிசி பொரி பொரிக்காது. நொய்யர் என்பவர் வெய்யவர் ஆவார். நொள்ளைக் கண்ணுக்கு மை இடுகிறதா? நொள்ளைக் கண்ணுக்கு நோப்பாளம். நொள்ளைக் கண்ணு நரி விழுந்து லோகம் மூன்றும் சென்ற கதை. நொள்ளைக் கண் மூடி என்ன? விழித்து என்ன? நொள்ளை நாய்க்கு வெள்ளை காண்பித்தாற் போல. நொறுக்குத் தீனி நோயைப் பெருக்கி. நொறுங்கத் தின்றால் நூறு வயசு. 12800 நொறுங்கத் தின்று நோயை அகற்று. நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயது. நொறுங்கரிசி கொதி தாங்காது. நொறுங்குண்டவனைப் புறங் கொண்டு உரையாய்.  நோ நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார். நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு என்றானாம். நோகாமல் வாழ நினைப்பவனுக்கு வேகாத சோறு கூட வயிற்றுக்குத் கிடைக்காது. நோக்கத்துக்கு ஒதுங்கு. நோக்க நோக்கான் நோக்காமுன் நோக்குவான். நோக்கு நோக்கென்று பிள்ளை பெற்றாளாம்; அவள் நோணி புறப்பட்டுச் செத்துப்போனாளாம். 12810 நோஞ்சல் பூனை மத்தை நக்குகிறது போல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்வே வாழ்வு; குறைவற்ற செல்வமே செல்வம். நோயற்று வாழ்வதே வாழ்வு. நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற் போல. நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம். நோயாளி தலைமாட்டில் பரிகாரி இருந்து அழுதாற் போல. நோயாளி வருத்தம் நோயாளிக்குத் தெரியும். நோயாளி விதியாளி; யானால் பரிகாரி பேதாளி ஆவான். (போராளி) நோயைக் கட்ட வேண்டுமானால் வாயைக் கட்ட வேண்டும். 12820 நோய் கொண்டார் பேய் கொண்டார். நோயோ? பேயோ? நோய்க்கு இடம் கொடேல். நோய்க்கு இடம் கொடுத்தால் பேய்க்கு இடம் கொடுத்த மாதிரிதான். நோய்க்கும் பார்; பேய்க்கும் பார். நோய் ஒரு பக்கம் சூடு ஒரு பக்கமா? நோய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு. நோய் தீர்ந்தபின் வைத்தியனை மதிக்க மாட்டார். நோய் நொடி போக்க வேம்பு. நோய்ந்த புலியானாலும் மாட்டுக்கு வலிது. 12830 நோய்ப்புலி ஆகினும் மாட்டுக்கு வல்லது. நோய் போக்குவது நோன்பு; பேய் போக்குவது வேம்பு. (இரும்பு) நோலா நோன்பு சீராகாது. நோலாமையினால் மேலானது போம். நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல. நோவு ஒன்று இருக்க மருந்து ஒன்று கொடுத்தது போல. நோவாமல் நோன்பு கும்பிட்டான்; சாகாமல் சாமி கும்பிடுகிறான். நோவு காடு ஏறிப் போயிற்று. நோன்பு என்பது கொன்று தின்னாமை.  நௌ நௌவித் தொழில் செய். 12840 நௌவியாய்த் திரியேல். (நௌவி - ஆடு) நௌவியில் தானே கல்வியறிவைக் கல். (தெய்வறிவைக்) நௌவியும் வாழ்க்கையும் அழகு அல்ல; நற்குணம் ஒன்றே அழகு. 