முதுமொழிக் களஞ்சியம் 1 அ முதல் - ஓள வரை ஸந்குஊயிகீகுரூபுஹங்நிகுது செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : முதுமொழிக் களஞ்சியம் - 1 தொகுப்பாசிரியன்மார் : இரா. இளங்குமரனார் பி. தமிழகன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 280 = 296 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 முன்னுரை கட்டொழுங்குடையது பாட்டு. அக்கட்டொழுங்கு, கற்று வல்லார்க்கே கைவரும் சிறப்பினது. ஆனால், கல்லார் வாயிலும் கட்டொழுங்கமைந்த மொழித்திறம் உண்டு என்பதைக் காட்டு வன பழமொழி, விடுகதை, புதிர், தாலாட்டு, ஒப்பாரி, நாட்டுப் பாட்டு முதலியவை. அவர்கள் சொல வடை என வழங்குவது புலவர்க்குச் சிலேடை யாயிற்று. அவர்கள் புதிர் என்பது பழநாள் பிசி யாக உள்ளது. பழமொழி யோ முன்னாள் முதுமொழி யாம். மக்கள் வழக்கில் இருந்து கிளர்ந்த மொழி, என்றும் மக்கள் வழக்காக இருக்க வேண்டும். மக்கள் வழக்கில் இருந்து அகலு மாயின், வழக்கிழந்து ஒழிந்தும் போகும். ஆதலால், தொல்காப்பியர் மக்கள் வழக்கைப் பெரிதும் போற்றினார். யாப்புக் கட்டுப்போல் அமையாமல் நீக்குப் போக்குடன் அவற்றைக் கொள்ளவும் புலமையரை ஏவினார். அடிவரையறை இல்லாதவை எனவும், அவை ஆறுவகைய எனவும் சுட்டினார் அவர். எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப என்றும், அவைதாம், நூலின் ஆன, உரையின் ஆன, நொடியொடு புணர்ந்த பிசியின் ஆன, ஏது நுதலிய முதுமொழி ஆன, மறைமொழி கிளந்த மந்திரத்து ஆன, கூற்றிடை வைத்த குறிப்பின் ஆன (தொல்.செய்யுளியல் 164, 165) என்றும் கூறுவன அவை. முன்னை முதுமொழியே, பின்னைப் பழமொழியாய்ப் பெயர் கொண்டது. முதுகுன்றம், பழமலையாய் மாறியதுடன் விருத்தாசல மாகவும் வேற்றுமொழியில் வழங்கப்படுவது ஒரு சான்று. முதுமொழியின் இலக்கணம் நுண்மையும் சுருக்கமும் ஒளிஉடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப (தொல். செய்யுளியல்:177) என்பது. இந்நூற்பாவிற்குப் பொருள், நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும் என்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக், கருதின. பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று சொல்வர் என்றவாறு என்றார் இளம்பூரணர். கூரிதாய்ச் சுருங்கி விழுமிதாய் எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்த பொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழியென்ப புலவர் என்றவாறு என்றார் பேராசிரியர். இம்முதுமொழிக்குப் பழமொழிப் பாடல் ஒன்றனைப் பேராசிரியர் எடுத்துக் காட்டினார். அப்பாடலில் கன்றுமேயக் கழுதை காதை அறுத்தல் என்னும் பழமொழி இடம் பெற்றுள்ளது. முன்றுறையரையனார், பழமொழி நானூறு என்னும் அறநூல் இயற்றினார். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகியது. நானூறு பழமொழிகளைத் தேர்ந்து அவற்றின் வழியாக அறவுரை கூறுவதாக அமைந்தது. அந்நூல் வெண்பா யாப்பினது. அரையனார், மக்கள் வழக்கில் இருந்து பழமொழிகளை எடுத்துக் கொண்டார் எனினும், அவர் உரைநடை வகையால் பயன்படுத்தினார் அல்லர். கட்டொழுங்கு மிக்க வெண்பா யாப்பிற்குத் தகவே பயன் படுத்துதல் அவர்க்குக் கட்டாயம் ஆயிற்று. மக்கள் வழக்கு, புல மக்கள் வழக்காக மாற்றமுற்றது. எனினும், பழமொழி இருவகை வழக்குகளுக்கும் ஏற்பப் பெரிதும் அமைந்தன. தமிழ் வரலாற்றில் பழமொழித் தொகுப்பாளர் ஒருவரை முற்படுத்த வேண்டும் எனின் முந்து நிற்பார் முன்றுறையரையரே ஆவர். அவர் ஆர்வமும் தொகுப்பும் அந்நாளொடு நோக்க அருமை யுடையனவாம். தனித் தனிச் சூழலில் எழுந்த பழமொழி களை, ஓர் ஒழுங்குற்ற துறைப் பகுப்பொடு அமைத்தல் அரிது. தனித்தனிப் பாடல் போல் அமைந்து நின்ற அவற்றைத் திருமணம், செல்வ கேசவராய முதலியார் என்பார் பெரிதும் உழைத்து, கல்வி முதலாக வீட்டு நெறி ஈறாக 34 பகுதிகளாகப் பகுத்தார். கடவுள் வணக்கமும் தற்சிறப்புப் பாயிரமும் அத் தொகுதி கொண்டே அமைத்தார். ஆனால், எடுத்துக் கொண்ட பகுதி ஒவ்வொன்றுக்கும் இவ்வளவே பாடல் என வரம்பிட வாய்ப்புக் கிட்டிற்றில்லை. கல்விக்குப் பத்துப் பாடல், கல்லார்க்கு ஆறு பாடல், அவையறிதலுக்கு ஒன்பது பாடல் - என்பது போல் அமைத்தார். அவ்வமைப்பும் வாய்த்திராக்கால், நமக்குப் பொருள் தொடர்பு கிட்டியிராதாம். அணியெல்லாம் ஆடையின் பின் இருதலைக் கொள்ளி என்பார் இறைத்தோறும் ஊறும் கிணறு உமிக்குற்றுக் கைவருந்து மாறு ஒருவர் பொறை இருவர்நட்பு கல்தேயும் தேயாது சொல் கற்றலில் கேட்டலே நன்று குலவிச்சை கல்லாமல் பாகம்படும் தனிமரம் காடாதல் இல் திங்களை நாய் குரைத்தற்று நாய்காணிற் கற்காணா வாறு நிறைகுடம் நீர்தளும்பல் இல் பாம்பறியும் பாம்பின கால் மகனறிவு தந்தையறிவு முதலிலார்க்கு ஊதியம் இல்லை. இவை பழமொழி நானூறில் இடம் பெற்றவை. கூடிய அளவிலும் எளிதில் புலப்பாடு உடையவை இவை. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதிலுள்ள எளிமையும் விளக்கமும் ஓட்டமும் நாய்காணிற் கற்காணா வாறு என்பதில் காணமுடிய வில்லை. ஆனால், இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ள முறை பழமொழி அளவில் நின்று விடுவது இல்லையே! மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை நாய்காணின் கற்காணா வாறு என அறஞ்செய்தற்குப் பயன்படுத்துகிறார் அரையனார். நரை திரை மூப்பு என்பவை வருமுன்னே பல்வேறாம் நற்செயல் களைச் செய்துவிடல் வேண்டும்; அவ்வாறு செய்யாதவர் பின்னே படுக்கை ஒடுக்கமாகிக் கிடக்கும் நிலையில் செய்தற்கு இயலார்; இத்தகையரைக் காணின் நாயைக் கண்ட போது கல்லைக் காணாதது போல் என்னும் பழமொழி விளக்கமாம் என்பது பொருளாம். நானூறு பழமொழியைத் தொகுத்தது அருமை என்றால், அப்பழமொழி வழியே சொல்லும் அறத்தைக் கண்டு அமைவாய் உரைக்க எத்தகைய முயற்சியும் கூர்மையும் வேண்டி யிருந் திருக்கும் என்பதை உணர்த்துவதற்கே இதனைக் கூறிய தென்க. இதன் பயன், பழமொழி வெளிப்பட விளங்கினாலும் அப்பழமொழியின் உள்ளீட்டுப் பொருளை உணர்ந்து பயன் கொள்ளல் வேண்டும் என்பது தெளிவாதற்கே சுட்டியதாம். மேலும் இதன்கண் மெய்யியல் கொள்கை உள்ளமை திருமந்திர மரத்தை மறைத்தது மாமதயானை என்பதன் வழியே அறியலாம். பழமொழியின் முன்னைப் பெயர் முதுமொழி என அறிந்தோம். திருக்குறளை முதுமொழி என வழங்கும் வழக்கம் உண்டு. தொல்காப்பியர் சொல்லிய நுண்மை, சுருக்கம், ஒளியுடைமை, மென்மை முதலியவற்றையுடைய தாய்க் கருதிய பொருளைத் தெளிவொடு கூறுவதாய் அமைந்தது கொண்டு, அப்பெயரைத் திருக்குறளுக்கு இட்டனர். இதன் சான்றாக விளங்கும் நூல், முதுமொழி மேல் வைப்பு என்பது. இது வெள்ளியம்பலவாணத் தம்பிரான் இயற்றியது. சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுமொழி வெண்பா என்பனவும் திருக்குறளை முதுமொழி என்று கூறுவனவே. இவற்றை இயற்றியவர்கள் முறையே சிவஞான முனிவரும், சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளும் ஆவர். அப்பரடிகள் திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார். அப்பழமொழிகளையும் எவர்மீதோ சாற்றாமல் தம்மீதே சாற்றுகின்றார். கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆரூரானைக் கையினால் தொழாதொழிந்து கனியிருப்பப் காய்கவர்ந்த கள்வனேனே என்று முதற்பாடலில் கூறும் அவர், முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே (2) அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே (3) பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே (4) ஏதன்போர்க் காதனாய் அகப்பட் டேனே (5) இருட்டறையில் மலடுகறந் தெய்த்த வாறே (6) விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே (7) பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே (8) தவமிருக்க அவம்செய்து தருக்கி னேனே (9) கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே (10) என்கிறார். இவை, ஒரு பொருள் பற்றிய பழமொழிகளா? உவமைகளா? கட்டுமிக்க யாப்பில் கூட இவ்வாறு பழமொழி களை வைக்க முடியுமா? முடிந்ததா? இல்லையா? அப்பரடிகள் கொண்ட முதற்பழமொழியாகிய, கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே என்பது, இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்பதைப் பழமொழியாக்கி வைக்கும் சான்று அல்லவோ! படிக்காசுப் புலவரின் தண்டலையார் சதகம், முத்தப்பச் செட்டியாரின் செயங்கொண்டார் வழக்கம் என்பனவும் பழமொழி விளக்கமாக அமைந்த நூல்களே. இதோ வரும் உரைநடையைப் படியுங்கள் ஒரு கிராமத்தில் பத்தேர்ச் சமுசாரி ஒருவன் தீர்வைப் பணம் கட்ட வழியில்லாமல், தன் காணி பூமி முதலாகிய ஆதிகளை யெல்லாம் தோற்று, உடுக்க வதிரமும் இல்லாமல், பரதேசம் போய் விடலாம் என்று நினைத் திருக்கையில், பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறித் துவைத்தது போல பழமுதல் பாக்கிக்காகச் சர்க்கார் சேவகர் வருகிற செய்தியறிந்து அவர்களுக்கு என்ன உத்தரம் சொல்கிறதென்று ஏக்கமுற்று, சட்டி சுட்டது கைவிட்டது என்பது போல, அதுவே வியாஜமாகப் பெண்சாதிபிள்ளை முதலான குடும்பத்தை எல்லாம் துறந்து, கோவணாண்டியாய் வெளிப்பட்டு வருகையில், நடு வழியில் வேறொரு சேவகனைக் கண்டு, காலைச் சுற்றின பாம்பு கடியாமல் போகாது என்பதாக, இந்தச் சனியன் இங்கும் தொடர்ந்து வந்ததே! ïÅ v¥go? என்று நடுநடுங்கி, ஜைன கோயில் ஒன்றில் போய் ஒளிந்தவன், அந்தக் கோயிலில் நிர்வாணமாயிருந்த ஆள்மட்டமான ஜைன விக்கிரகத்தைப் பார்த்துத் தன்னைப் போலப் பயிரிட்டுக் கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு, ஐயோ! நான் பத்தேர் வைத்துக் கெட்டுக் கோவணத் தோடாவது தப்பி வந்தேன், அப்பா, நீ எத்தனை ஏர் வைத்துக் கெட்டாயோ? உனக்கு இந்தக் கோவணமும் இல்லாமல் போய் என்று அதைக் கட்டிக் கொண்டு அழுதான் இது விநோத ரச மஞ்சரி என்னும் நூலில் பயனில் உழவு என்னும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி. இதில் வரும் பழமொழி நகைச்சுவை ஆகியவை படிப்பாரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுதல் உறுதி. இதனை எழுதியவர் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பார். கி. பி. 1876இல் முதல் பதிப்பு வெளிவந்தது. இந்நூல் முதற்பதிப்பில் 16 கட்டுரைகளையும் பின்வந்த பதிப்புகளில் 20 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. இவ்வொரு நூலில் மட்டும் ஏறத்தாழ முந்நூறு பழமொழிகள் இடம் பெற்றன என்றால் இந்நூலே பழமொழிக் களஞ்சியம் தானே! இடையே சிலச்சில பழமொழி நூல்கள் வரினும் பெருந்திரட்டாகக் கி.பி. 1912 இல் ஒன்று வெளிப்பட்டது. அது அனவரத விநாயகம் பிள்ளை என்பாரால் பரிசோதிக்கப் பட்டு, மதரா ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப் பட்டது. 12, 270 என்னும் எண்ணிக்கையுடையது. அதன் விலை ரூபா. 2. மொழிஞாயிறு பாவாணர் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றிய போது, பழமொழி பதின்மூவாயிரம் என்னும் பெயரிய தொகை செய்து அச்சகத்துக்கும் சென்று பின் அச்சிடப் படாமலும், மூலப்படி மீள வராமலும் ஒழிந்தது என்பது அவர் கடிதங்களால் அறியப்படும் செய்தி.. அந்நாளில் திருவரங்க நீலாம்பிகையார் பழமொழித் தொகுப்பு ஒன்று செய்து வந்தார் என்பதும் பாவாணர் கடித வழியாய் அறிய வாய்க்கின்றது. அது தொகையும் ஆகவில்லை; அச்சுக்குச் செல்லவும் இல்லை. அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகவும், துறை வாரியாகவும் பழமொழித் தொகைகள் வெளிப்பட்டன. கலைமகள் ஆசிரியர் கி.வா. சகநாதனார் அவர்களால் நான்கு தொகுதிகள் வெளிப்பட்டன. இருபதாயிரம் பழமொழிகளைத் தாண்டிய எண்ணிக்கையுடையன அவை. பொதுவுடைமைத் தோழர் தொண்டில் தூயர் சீவானந்தம் அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கிய நாளில் பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, சாமி பாட்டு, கும்மிப்பாட்டு, புனைகதை என்பவற்றையெல்லாம் தொகுக்கவேண்டும் என்று பேராவல் கொண்டார். நாட்டில் வட்டாரம் தோறும் வழங்கும் பழமொழிகளை யெல்லாம் ஒருங்கே திரட்டுதல் அரிது. நூல்களில் காணக் கிடைப்பனவாகிய எல்லாவற்றையும் திரட்டுதலும் அரிது. பழமொழித் தொகுதிகளில் இடம் பெற்றாலும் மரபுத் தொடர், வழக்கு மொழி, அறநூல் தொடர், விடுகதை, உவமை எனவும் உள்ளன. அவற்றை விலக்கின் ஒரு பெரும் பகுதி அகன்று விடும். இனிச் சாதிமை சார்ந்ததும் வெறுக்க வைப்பதுமாம் பழமொழிகளும் உள. அவற்றை அறவே நீக்கல் வேண்டும். அதனால், அந்நாள் மக்கள் வாழ்வியல் எண்ணப் போக்கு என்பவை அறியவாயா நிலையும் உண்டாம். 1. எவ்வாற்றானும் எவரும் வெறுத்தற்கு இடமிலாப் பழமொழிகளைத் தொகுத்தல் 2. வேற்றுச் சொல் கலவாமல் தொகுத்தல் 3. கூடிய அளவும் கொச்சை வழு நீக்கித் தொகுத்தல் என மூன்று வரம்புகளைக் கொண்டு தொகுத்தால், முற்றிலும் மக்கள் வழக்கில் இருந்து தடம் மாறிப் புலமையர் வழக்காகிவிடல் உறுதி! ஆதலால் மொழிக்கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த, முயன்று தொகுத்த பழமொழித் தொகை இது. இதில் உள்ள பழமொழி எண்ணிக்கை ஏறத்தாழ இருபதாயிரம். பழமொழி அல்லது முதுமொழி என்பதன் இலக்கணம் தொல்காப்பியத்திலேயே உண்டு என்னும் போது, அதுவும் அவருக்கு முந்தை இலக்கண நூல்களிலேயே இடம் பெற்றிருந்தன என்னும் போது, பழமொழி உருவாக்கம் ஏற்படுமளவு மொழிவளம் துறையறிவு பண்பாடு முதலியவை ஏற்பட்டிருக்க வேண்டும் என்னும் போது, அவை தோன்றிய காலத்தை வரம்பிடுவது அவ்வளவு எளியது அன்றாம். மொழிப் பழமையொடு, பழமொழிப் பழமையும் ஒப்புடையதாம் என்பதே சாலும்! வாங்கும் போது உள்ள குணம் கொடுக்கும் போது இல்லை என்னும் மக்கள் மொழி, கலித்தொகையில் இடம் பெறுகிறது. உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத்தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே! கலி - 22 என்பது அது. உலகத் தொழில்களில் தலையாயது உழவே. குறிப்பாகத் தமிழகத்தின் உழவுச் சிறப்பு வள்ளுவத்தில் ஓரதிகாரம் கொண்டது. வாழ்வார் என்றால் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றது. உழவின் வழிப்பட்டதே. உலகம் என்பதைச், சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் என்றது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி என்றும் குறித்தது. கம்பரால் ஏர் எழுபது என்னும் நூலும், திருக்கை வழக்கம் என்னும் நூலும் இயற்றப்பட்டன. இவ்வாறு பாடு புகழ் பெற்ற உழவு வழிப்பட்ட பழமொழிகள் மிகப் பலவாம். வேளாண்மை என்பது உழவுத் தொழிலை மட்டும் அல்லாமல் பிறர்க்கு உதவி வாழ்வதாம் பண்பாட்டுப் பெருமையும் பெற்றது. ஆதலால், இவை தனியாய்வுக்கு உரிய வளம் உடையவை. இனி, மருத்துவம் தமிழகத்தில் சிறந்தோங்கியமை சித்த மருத்துவம் என்னும் சிறப்பால் புலப்படும். திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என அறநூற் பெயர்களே மருத்துவஞ்சார் தலைப்பின எனின், அம் மருத்துவ வழிப்பட்ட பழமொழிகளும் பெருக்க மிக்கவையேயாம். தனித்துறையாய் எடுத்து ஆயத் தக்க பெருமையுடையது அது. இவ்வாறு பல்வேறு ஆய்வுப் பொருள்களின் வைப்பகமாக இருப்பது பழமொழித் தொகுப்பு என்பது வெளிப்படை. பழமொழி வழியாகச் சொல்லப்படும் அறநெறிகள் எண்ணற்றவை. பல்வேறு மெய்ப்பாட்டு - சுவை - விளக்கமாக அமைந்தவையும் மிக்கவை. அறிவியல், பொருளியல், இன்பியல், வழிபாடு எனப் பகுத்தாய்வு மேற்கொள்ளவும் இடம் தருவன பழமொழிகள். சில பழமொழிகள் மக்கள் வழக்கில் பெருக இருந்தாலும் பழமொழித் திரட்டுகளில் இடம் பெற்றிருந்தாலும் நூலாசிரியர் களால் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றை இத் தொகுப்பில் இடம் பெறச் செய்யவில்லை. கூடிய அளவும் இடக்கரடக்கு என்னும் அவையல் கிளவியும் இனத்துக்குப் பழிப்பாவனவும் இடம் பெறாமல் செய்யினும், பழமொழியின் உயிர்ப்பு நீங்கிப் போகுமென அவை விலக்கப்பட்டில. அவை தகவாம் வகையில் கொள்ளப்பட்டுள. கூடிய அளவிலும் கொச்சையும் வழுவும் அகற்றிச் செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன. மக்கள் உணர்வை மதித்துப் போற்றுதலால் முழுதுறு செவ்வடிவோ, அறவே அயன்மொழிச் சொல் நீக்கமோ கொண்டதாக இத்தொகை அமைந்திலது என்பதைச் சுட்டுதல் முறைமையாம். வெவ்வேறு வட்டாரங்களில் ஒரு பழமொழி வழங்குங் கால் சில மாற்று வடிவங்களையும் சில வேறு சொற்களையும் கொண்டிருத்தற்கு இடமுண்டு. அவை அடைப்புக்குள் உள்ளன. சில பழமொழிகள் முடிபு இன்றி இருக்கும். அவற்றின் முடிபு அடைப்புக் குறியுள் இடம் பெறும். குறுவட்டாரம் பெருவட்டாரம் தமிழகம் எனப் பரவலாக வழங்கும் பழமொழிகள் எல்லாமும் அமைந்த திரட்டு இஃது ஆதலால், வட்டாரப் பெயர் சுட்டிக் காட்டல் அரிதாயிற்று. இம்முயற்சியில் ஈடுபடுவார் பலராய், வட்டாரம் வட்டாரமாய் அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தினால் தமிழ் வளம் மேலும் பெருக வாய்க்கும். அதனால், வழக்கும் செய்யுளும் என்னும் மொழி உயிர் நாடிகள் இரண்டும் ஒருங்கே சிறக்க வாய்ப்பும் உண்டாம். பாவாணர் தொகுத்த பழமொழி பதின்மூவாயிரம் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும், அவர் பயன்படுத்திய பழமொழி கள் பெரிதும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தம் விருப்பாகச் செய்து இத்தொகையில் பயன்படுத்திக் கொள்ள உதவியவர் வெங்காலூர் தனித்தமிழன்பர் சி.பூ. மணி அவர்கள். பின்னர்ப் பாவாணர் தொகுத்த பழமொழியென்று சேலம் திரு.வெங்கரைமணியன் அவர்கள் வழியே ஒன்று கிடைத்தது. அதில் பாவாணர் கையெழுத்து எவ்விடத்தும் இல்லை. எனினும் இத்தொகுப்பில் சேராத சில பழமொழிகள் கிடைத்தன. அவற்றை இணைத்து அப்பயனும் வாய்க்கச் செய்தோம். மேலும், நெடிய காலமாக எம்மால் தொகுக்கப்பட்டுக் குறிப்பேட்டில் தங்கிக் கிடந்தவை, நினைவில் பதிவாகியவை ஆகியவையும் இத்தொகையில் இடம் பெற்றுள்ளன. முனைவர் தமிழகனார் கடின உழைப்பெடுத்துத் தொகுத்த தொகுப்பும், அவர் பேராசிரியப் பணியாற்றும் நாவலர் ந.மு.வே. திருவருள் கல்லூரி மாணவ மாணவியர் தொகுத்த தொகுப்பும் இதன்கண் இடம் பெற்றுள. பழமொழி, வட்டார வழக்கு என்பவை கிட்டுமென எண்ணி நூற்றுகணக்கான பக்கங்களைத் திருப்பியும் ஒன்று தானும் கிட்டாத கதை நூல்களும் உண்டு. சுவை சுவையான பழமொழிகளைத் திரட்டுப் பாகாகத் தந்த சிறுகதை நூல்களும் உண்டு. தேடி வைத்ததைத் தொகுத்தும், புதுவதாகத் தேடித் தொகுத்தும் நம் முந்தையர் வைத்துச் சென்ற வைப்புநிதி யென விளங்கும் இப்பழமொழியை ஆர்வத்தால் அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு வழங்க முந்து நின்றவர் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனரும் தமிழ்ப் போராளியாய்த் தோன்றித் தமிழ்க் காவலராகத் திகழ்பவருமாகிய திரு.கோ.இளவழகனார் அவர்கள் தேடித் தொகுத்த இத்தொகையினும் பாரிய பல் தொகுதி எனினும் துணிவுடன் வெளியிடும் அளப்பரிய ஆர்வத் தொண்டர் அவர். அவர்க்கு நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டும்! இதன் மெய்ப்பினைப் பல்கால் பார்த்து அயராமல் திருத்திய ஆர்வத் தொண்டர் முனைவர் தமிழகனார் இத்தகு பல திறப்பணிகளைச் செய்தலில் தழும்பேறியவர். அவர் தொண்டு வாழ்வதாக. இன்ப அன்புடன் இரா.இளங்குமரன் பதிப்புரை முதுமொழிக் களஞ்சியம் எனும் பெயரில் தமிழ்மண் அறக்கட்டளையின் முத்திரைப் பதிப்புகளாக ஐந்து தொகுதிகள் வெளிவருகின்றன. மொத்தம் 19336 பழமொழிகள் உள்ளன. மொழிக் கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த முயன்று தொகுத்த முதுமொழித் தொகை இது, கொச்சையும் வழுவும் அகற்றி செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன என முன்னுரைப் பகுதியில் அய்யா இளங்குமரனார் குறித்துள்ளார். இக்குறிப்புகளைக் கொண்டு இத்தொகுதிகளின் அருமைப்பெருமைகள் புலப்படும். இதுவரையிலும் பழமொழிகள் எனும் தலைப்பில் வெளிவந்தனவற்றுக்கும் இவற்றுக்கும் உள்ள சிறப்புகளைக் களஞ்சியத்தின் முன்னுரையிலும், பின்னட்டைச் செய்திலும் காண்க. முந்தையர் தொகுத்து வைத்த வைப்பு நிதியைத் தமிழ் உலகு பயன் கொள்வதற்கு தமிழ்மண் அறக்கட்டளை தம் கடனைச் செய்துள்ளது. இக்களஞ்சியங்களை செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், முனைவர் பி.தமிழகன் ஆகிய பெருந்தமிழறிஞர்கள் பல்லாற்றானும் உழைத்துத் தொகுத்துத் தந்துள்ளனர். இதனைப் பிழையற்ற செம்பதிப்பாக தமிழ்கூறும் உலகிற்குத் தந்துள்ளோம். இப்பெரு மக்களின் தன்னலம் கருதாத் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறேன். பழந்தமிழ் மக்களின் கருவூலத்தை உங்களுக்குத் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்வீர். இச்செந்தமிழ்க் களஞ்சியங்கள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய அரங்க. குமரேசன், வே.தனசேகரன் , மு.ந. இராமசுப்ரமணிய ராசா, இல.தருமராசு, ரெ.விசயக்குமார், முனைவர் கி.செயக்குமார், திருமதி கீதா நல்லதம்பி, அரு.அபிராமி, புலவர் மு.இராசவேலு மற்றும் மேலட்டை அழகுற வருவதற்கு துணை யிருந்த செல்வி வ.மலர் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். பதிப்பாளர் முதுமொழிக் களஞ்சியம் 1 அ முதல் - ஓள வரை அ அ அ உ அறிந்தான் அத்தனையும் அறிவான். அ உ அறியான் ஆரை அறிவான்? அஃகமும் காசும் சிக்கெனத் தேடு. அஃகம் குறைய ஐந்தும் குறையும். அஃகம் சுருக்கேல். அஃகம் மலிய ஐந்தும் மலியும். அகங்காரம் உள்ளவர்க்கு ஆண் பிள்ளை; புண்ணியம் செய்தவர்க்குப் பெண்பிள்ளை. அகங்காரிக்கு அம்மி என்ன? குழவி என்ன? அகங் குளிர்ந்தால் அஞ்சும் குளிரும். 10 அகங்கை இரண்டானால் புறங்கை நாலாகுமா? அகங்கையைப் பிளந்து விட்டுப் புறங்கையை ஒட்டுவதா? அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா? அகங்கையை விட்ட புறங்கையா? அகட விகடத்துக்கு அடுப்பே கண். அகட விகடமாய்ப் பேசுகிறான். அகட விகட மெல்லாம் ஆறே நாளைக்கு. அகட விகடம் கற்றவனுக்கு அடங்கித்தான் நடக்கணும். அகத்திக் கீரையில் அறுபத்து மூன்று ஆற்றல். அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்தல். 20 அகதிக்கு ஆகாயமே துணை. (அகதி - ஏதிலி) அகதிக்குத் தெய்வமே துணை. அகதிக்கு வந்தது ஆருக்கும் வராதா? அகதி சொல் அம்பலம் ஏறாது. அகதி தலையிற் பொழுது விடிந்தது. அகதி பெறுவது பெண்பிள்ளை; அதுவும் வெள்ளிப் பூராடம். அகதியை அடித்துக் கொல்கிறதா? அகதியைப் பகுதி கேட்கிறதா? அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன? 30 அகத்திக் கீரை வேகாமல் கெட்டது; முருங்கைக் கீரை வெந்துவிட்டது. அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்கு வந்தவன் பீமுண்டை என்றானாம். அகத்திலே உண்டானால் அம்மா சமர்த்து. (அம்பிசமத்து) அகத்தில் அமையாதது அறிவாவது இல்லை. அகத்தில் இருந்தால் முகத்தில் பளிச்சிடும். அகத்தியன் தமிழுக்கும் குற்றம் கூறுவார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகத்துக்கழகு அகமுடையாள். அகத்துக்குச் சாட்சி முகம். அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல். 40 அகத்துப் புண்ணுக்கு அகத்திக் கீரை. அகத்து மகிழ்ச்சி முகத்து நிகழ்ச்சி. அகத்துக்கு மூத்தது அசடு. அகந்தை வந்தால் அழிவு வரும்; அடக்கம் வந்தால் ஒழுக்கம் வரும். அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா. அகப்பட்ட நாயை அடித்தால் அடுத்த நாய் தானே ஓடும். அகப்பட்ட நாயை அடிக்கும்போது அதைக்கண்ட நாய் காதவழி ஓடும். அகப்பட்டவனுக்கு அட்டமத்துச் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்துக் குரு / வியாழ வட்டம். அகப்பட்ட வேலை அரிய வேலை. அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்ளன் கள வெடுக்கிறது? 50 அகப்பாட்டுச் சொன்னால் புறப்பாட்டுப் பாடுகிறான். அகப்பை அடிதான் ஆரையும் திருத்தும். அகப்பை அடியை ஆர்தான் தாங்குவார்? அகப்பை அறியுமா அறுசுவை? அகப்பை அறியும் ஆக்கினதின் சாரம். அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும். அகப்பை பிடித்தவன் தன்னவனானால் அடிப்பந்தியில் இருந்தாலென்ன? கடைப்பந்தியில் இருந்தாலென்ன? அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி. அகப்பைக்குக் கணை வாய்த்தது போல. அகப்பைக்கு வேக்காடு; துடுப்புக்குக் குளிர்ச்சியா? 60 அகம் அங்கே; ஆக்கை இங்கே. அகம் ஏறச் சுகம் ஏறும். அகம் குளிர முகம் மலரும். அகம் சிரித்தால் முகம் சிரிக்கும். அகம்படியார் கிளர்ந்தால் அரசாலும் அடக்க ஆகாது. அகம்பாவத்திற்கு வழி ஆர்தலை மேலுமா? அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்; அகம் குறைந்தால் எல்லாம் குறையும். அகம் மலிந்தால் புறம் மலியும். அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்;அம்மாளுக்குச் செய்தால் அவமானம். அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண்போகா. 70 அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன். அகமுடையான் அடித்தற்கு மைத்துனனைக் கோவித்துக் கொண்டாளாம். அகமுடையான் அடித்தது பெரிதில்லை; சக்களத்தி சிரித்ததே பெரிது. அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவேன்? அகமுடையான் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும்போதாது. அகமுடையான் திட்டியதைக் கேட்டு அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம். அகமுடையான் பலமுண்டானால் அரங்கம் ஏறிச்சண்டை போடலாம். அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லலாமா? அகமுடையானைக் கொன்ற அற நீலி. அகமுடையானைக் கொன்ற அறுதாலிக்கு அறிவு வந்தது. 80 அகமுடையானை நம்பி ஆடலாமா ஆட்டம்? அகராதி படித்தவன் அஞ்சிப் பேசுவானா? அகராதி படித்தவனுக்கு எதிராகப் பேசாதே. அகராதி படித்துவிட்டால் அடக்கமின்றிப் பேசுவதா? அகல இருந்தால் நிகள உறவு. அகல இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை. அகல இருந்தால் பகையும் உறவாம். அகல இருந்தால் புகல உறவு. அகல இருந்து அண்டியவரைக் காக்கிறது. அகல உழுவதில் ஆழ உழுவது மேல். 90 அகலக்கால் வைக்காதே; ஆனதை எல்லாம் இழக்காதே. அகலக்கோட்டை இட்டால் அடை மழை பெய்யும். அகலவன் பண்பாட அதுகேட்டுப் பெண்பாட. அகல்வட்டம் பகல் மழை. அகவிலை அறியாதவன் ஆக்கம் அறியான். அகவிலை ஏறினால் அவளுக்கென்ன? அகமுடையான் இருக்கிறான் தேடிப் போட! அகவிலை தெரியாதவனுக்குத் துக்கமே இல்லை. அகவிலை தெரியாது; அவள் பேச்சும் புரியாது. அகவிலையில் திண்டாடும்போது அட்டிகைகேட்டாளாம் வைரத்தில். அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம் (வைகுந்தம்). 100 அகழிவாய் முதலை போல் வாயைப் பிளக்கிறான்.அகன்று இருந்தால் ஆரும் உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை. அகன்ற வட்டம் அன்றே மழை; குறு வட்டம் பின்னால் மழை; அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை. அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா? (அக்காள்) அக்கம் பக்கம் பார்த்துப் பேசு. அக்க ஏறுமட்டும் அண்ணன் தம்பி அக்கரை ஏறினால் அவனாரோ? நானாரோ? அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும். 110 அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் இராமத்தைப் பார் என்றானாம். அக்கரை வந்து முக்காரம் போடுது. அக்க விலை அறியாதவன் துக்கம் அறியான். அக்கறை அறை அறை என்கிறது; கம்மஞ் சோறு கறை கறை என்கிறது. அக்கறை தீர்ந்தால் அக்காள் புருசன் என்ன கொக்கா? அக்கன்னா அரியன்னா உனக்கு வந்த விதியென்ன? அக்கன்னா இக்கன்னா நக்கன்னா நரியன்னா. அக்காக் குருவி அஞ்சூருக்குப் பறந்தா தங்கச்சிக் குருவி தாவியே பத்து ஊருக்கு போகுமாம். அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால் அப்பா முழச் சிற்றாடை என்கிறதாம் பெண். அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா? 120 அக்காளானாலும் சக்களத்தி; அண்ணன் ஆனாலும்பங்காளி. அக்காளுக்காக மச்சான் காலில் விழுந்தானாம். அக்காளுக்கு வந்தது தங்கைக்கும் வராதா? அக்காளைக் கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்? அக்காளைப் பழித்துத் தங்கை அழிம்பானாள். (அவிசாரி யானாள்) அக்காளைப் பழித்துத் தங்கை அருள் கெட்டாள். (போனாளாம்) அக்காளோடு போயிற்று அத்தான் உறவு. (மச்சான்) அக்காள் அரிசி கொடுத்தால் தானே தங்கை தவிடு கொடுப்பாள்! அக்காள் ஆயிரம்; அத்தான் மட்டும் ஐந்தா? அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான். 130 அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு. அக்காள் உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடு. (சொத்து) அக்காள் உண்டானால் மச்சான் உண்டு. அக்காள் உறவும் மச்சான் பகையுமா? அக்காள் கெட்ட கேட்டுக்கு முக்காடு கூடவா? அக்காள் கொடுத்தால் தங்கம்; அண்ணி கொடுத்தால் பித்தளை. அக்காள் செத்தால் மச்சான் உறவு அற்றுப் போச்சு. அக்காள் செத்தால் மயிராச்சு; கம்பளிமெத்தை நமக்காச்சு. அக்காள்தான் கூடப்பிறந்தாள்; மச்சானும் கூடப்பிறந்தானா? அக்காள் போய்விட்டால் அத்தான் அகமுடையான். 140 அக்காள் பெண் ஆனாலும் ஆருமறியக் கலியாணம். அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான். அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது. அக்காள் வந்தாள்; தங்கை போனாள். அக்காள் வீட்டுக்குப் போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேண்டும். அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம். அக்கியானம் பிடித்த முண்டைக்குச் சிவக்கியானம் என்று பேர். அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே. m¡»uhu¤âš ãwªjhš ehŒ ntj« m¿íkh?(eÇ) அக்கிராரத்துக்கு ஓர் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர். 150 அக்கிராரத்துச் சனி அண்டைக்குத் தாவாதா? அக்கிராரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது. அக்கிராரத்து நாய் பிரதிட்டைக்கு அழுதது போல. அக்கிராரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா? அக்கினி மலையிலே கர்ப்பூரபாணம் விட்டது போல. அக்கினியைக் குளிப்பாட்டி ஆனைமேல் வைத்தாற் போல. அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல. அக்கினியைத் தின்று கக்குகிற பிள்ளை அல்லித் தண்டைத் தின்கிறது வியப்பா? 160 அக்கினியாற் சுட்ட புண் விசமிக்கது. அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை. அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் ஏது? அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கிறான். அங்கங்கு குறுணி அளந்துகொட்டி இருக்கிறது. அங்கத்திலே குறைச்சலில்லை ஆட்டடா பூசாரி. அங்கத்தை ஆற்றில் அலசக் கூடாதா? அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர். அங்கத்தைக் கொண்டுபோய் ஆற்றில் அலசினாலும் தோசம் போகாது. அங்கத்தைக் கொண்டு ஆற்றில் சேர்க்க வொண்ணாது. 170 அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும். அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது. அங்காங்கு வைபோக மாயிருக்கிறான்; இங்கே பார்த்தால் அரைச்காசு முதலும் இல்லை. அங்காடிக் காரிக்குச் சங்கீதம் வருமா? அங்காடிக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம் கறிவேப்பிலை என்பாள். அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே. அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே. அங்காடிக் கூடையை அரக்கப் பரக்க அடிக்காதே. அங்காடி நாய்போல் அலைந்து திரியாதே. 180 அங்காடிப் பேச்சு அங்கோட போச்சு. அங்காடி மாடு அடையுமா தொழுவிலே? அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு. அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம். அங்காடி விலையால் எங்கோடிப் போனாளோ? அங்காடி விலையேற்றம் ஆரைவிட்டு வைக்கும்? அங்காடி விலையை அதிர அடிக்காதே. அங்காடி விற்பவள் அலைச்சலுக்குப் பயப்படுவாளா? அங்காடி விற்கிறவளுக்குச் சும்மாடு கோளத் தெரியாதா? அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும். 190 அங்கிடு தொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு; இங்கிரண்டு குட்டு. அங்கிட்டு வைப்பான்; இங்கிட்டு எடுப்பான். அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா. அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான். அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன் (திம்மட்டிராயன்) அங்கு வைத்து இங்கு வைத்து அடிமடியிலே கையை வைத்தான். அங்கூதி இங்கூதி அடுப்பூதி. அங்கே கண்டான் இங்கே செய்கிறான். அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிச் சாவு. அங்கே போனால் அப்படி; இங்கே பார்த்தால் இப்படி. ஆகிறது எப்படி? 190 அங்கே போனேனோ! செத்தேனோ! அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கேவாடி காற்றாய்ப் பறக்கலாம். அங்கேயும் இருப்பான்; இங்கேயும் இருப்பான்; அவசரத்துக்குக் கூப்பிட்டால் எங்கேயும் இல்லான். அங்கையில் நெல்லிக் கனிபோல. ஆச்சன் பெண்டாட்டியை ஆளாதவன் யார்? அசட்டுக்கு ஐங்கலக் காமம், அசட்டுக்கு வாழ்க்கைப் பட்டு ஆயிரங்காலம் வாழ்வதை விட சமத்துக்கு வாழ்க்கைப் பட்டு சடுதியில் அறுக்கலாம். அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் ஆண்டு வாழ்வதை விட சத்துக்கு வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று தாலி யறுப்பதே மேல். அசலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறது. அசலிலே பிறந்த கசுமாலம். 200 அசலும் பிசலும் அறியாமல் அடுத்தாரைக் கெடுக்கப் பார்க் கிறான். அசல் அகத்து நெய்யே; என் பெண்டாட்டி கையே. அசல் வாழ ஆறுமாதம் பட்டினி. அசல் வாழ்ந்தால் அன்றே குடிபோவான். அசல் வாழ்க்கையில் ஐந்து நாள் பட்டினி கிடப்பாள். அசல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறதா? அசல் வீட்டான் பிள்ளை ஆபத்துக்குதவுவானா? அசல் வீட்டுக் காரனுக்குப் பரிந்துகொண்டு ஆமுடையானை அடித்தாளாம். அசல் வீட்டுக்குப் போகிற பாம்பை அவனேன் பிடித்தான்? அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. 210 அசல் வீட்டு விளக்கை மூச்சு விட்டே அணைப்பாள். அசந்தால் வசந்தான். அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி. அசவாப் பயிரும் ஆனதே உறவும் அசுணமாச் செவிப்பறை அடுத்தது போலும். அசுவினி கார்த்திகையில் இடிஇடித்தால் ஆறு கார்த்திகை மழை இல்லை. அசைந்து தின்கிறது மாடு; அசையாமல் தின்கிறது வீடு. அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது. அசைப்புக்கு ஈயடிக்கு ஆயிரம் பொன் வாங்குவாளா? அசைபோட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்? 220 அசையாத மணி அடிப்பதே இல்லை. அசையாது நிற்கும் பழி. அசையோ பயிர்; அடம்போ குடித்தனம். அசைவிருந்தால் விட்டுப் போக மாட்டான். அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான். அச்சம் ஆண்மை குலைக்கும். அச்சமுடையார்க்கு அரணில்லை. அச்சமுடையார்க்கு அழிவு நேர்வது போல். அச்சாணி அன்னதோர் சொல். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. 230 அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு. அச்சியிலும் பிச்சைக்காரன் உண்டு. அச்சியென்றால் உச்சி குளிருமா? அழுவணம் (ஐவணம்) என்றால் கை சிவக்குமா? அச்சில்லாத் தேர் ஓடவும் ஆமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா? அச்சில்லாமல் தேர் ஓடாது. (ஓடுமா?) அச்சில்லாமல் தேர் ஓட்டி, ஆம்புடையான் இல்லாமல் பிள்ளை பெற்றளாம். அச்சைக் குச்சாக்கி அருமந்த பிள்ளையை முடமாக்குவாள். அச்சைக் குச்சாக்கி ஆணியைக் கோணியாக்குவான். அஞ்சரப்பும் போட்டு அலம்பினவனுக்கு வெட்கம் ஏது? அஞ்சரிசிப் பஞ்சம் நெஞ்சை அடைக்கிறதா? 240 அஞ்சலி வணக்கம் ஆருக்கும் நன்மை. அஞ்சலை உடம்பை பஞ்சா உழைத்தேன். அஞ்சனக் காரன் முதுகில் வஞ்சனைக் காரன் ஏறினான். அஞ்சனம் குருட்டுவிழிக்கு என்ன செய்யும்? அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி. mŠrh beŠR gil¤jhš MU¡F Mth‹?(Mfh‹) அஞ்சாவது பெண்ணு அடுக்களையெல்லாம் பொன்னு. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது. அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்! அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தர மாட்டார்கள். 250 அஞ்சாறு பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான். அஞ்சி அஞ்சி வாழ்வதைவிட அஞ்சாமல் சாவதே மேல். அஞ்சி ஆண்மை செய்ய வேண்டும். அஞ்சிக் கடன் கேட்டவனும் கெஞ்சி பிச்சை போட்டவனும் உருப்பட மாட்டார்கள். அஞ்சிக்கில்லை அடைக்கலம். அஞ்சிலே பழுத்து ஆறிலே விழுந்தான். அஞ்சிலே பிஞ்சிலே அடித்து வளர்க்க வேண்டும். அஞ்சிலே பிஞ்சிலே அறிய வேண்டும். அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதிற்குமேல் கொஞ்சினானாம். அஞ்சிலே வளையாதது; அம்பதிலே வளையாது. 260 அஞ்சி மணியம் பண்ணாதே; கெஞ்சிச் சேவகம் பண்ணாதே. (புரியாதே) அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிச்சைப் கேட்காதே. அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான். அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா? அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை. அஞ்சின பேரைக் கெஞ்ச அடிக்கிறதா? அஞ்சினவனுக்கு அகப்பைக் கணையும் பேய். அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை. அஞ்சினவனொழிய மிஞ்சினவனில்லை. அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும். 270 அஞ்சினவனைப் பேய் அடிக்கும். அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம் பேய். அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே. அஞ்சினாரைக் கெஞ்சுவிக்கும்; அடித்தாரை வாழ்விக்கும். அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும். அஞ்சு கதவும் சாத்தியிருக்க ஆமுடையான் வாயிலிலே போனவளார்? அஞ்சு காசிலே கல்யாணமாம்; அதிலே ஒரு வாண வேடிக்கையாம். அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும். அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். அஞ்சுக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது. அஞ்சு குஞ்சும் கறியாமோ? அறியாப் பெண்ணும் பெண்டாமோ? 280 அஞ்சு குடியை அரைக்குடி ஆக்குவான். அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன்; திரட்டிக்குக்கொண்டு வந்தானாம். அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை. அஞ்சு பணங் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர்குடிப்பானேன். அஞ்சு பணம் கொடுத்து அழச் சொன்னாளாம். பத்துப்பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னாளாம். அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது. அஞ்சு பெண் பிறந்தால் (பெற்றால்) அரசனும் ஆண்டி யாவான். அஞ்சு புலன் அடங்கினால் அகிலமும் அடங்கும். அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை. அஞ்சு பேருக்குப் பெண்டாட்டி அழியாத பத்தினி. 290 அஞ்சு பேரல்லோ பத்தினிமார்; அஞ்சிலே இரண்டு பழுதில்லை. அஞ்சு பொன்னும் வாங்கார் அரைப்பணமே போதுமென்பார். அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே; அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே. அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள். அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாச் சிறுக்கியும் கறியாக்குவாள். அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருவக் கட்டிக் கொண்டு வந்தாற் போல வலக்காரமாய்ப் பேசுகிறாய். அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும்பதற்றம் ஆகாது. அஞ்சு வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி. அஞ்சு வயதில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின் போது திரும்பி வந்தானாம். அஞ்சு வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் மடக்க வேண்டும். 300 அஞ்சு விரலும் சமமாக இருக்குமா? (ஒன்றாக) அஞ்சு வீட்டுக்கு அப்பாத்தை; பத்து வீட்டுக்குப் பதி விரதை. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான். அஞ்சூர்ச் சிம்மாளம், ஐங்கல அரிசி ஒரு கவளம். அஞ்செழுத்தும் பாவனையும் அப்பனைப் போல் இருக்கிறது. அடக்கத்தில் பெரியது நாவடக்கம். அடக்கமற்ற பெண் அவிந்து போன கண். அடக்கமுடைய பெண்ணுக்கு அழகேன்? அடக்கமே அறிவுக்கு வித்து. அடக்கமே பெண்ணுக்கு அழகு. 310 அடக்கம் ஆயிரம் பொன் தரும். (பெறும்) அடக்கம் உடையார் அறிஞர்; அடங்காதார் கல்லார். அடக்கம் உயர்வு தரும். அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை. அடக்குவாரற்ற கழுக்காணி. அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமு மாய்த் திரிகிறான். அடக்குவாரின்றேல் ஆமையும் தாவும். அடங்காத பிள்ளைக்கு ஒரு வணங்காத பெண். அடங்காத மகள் சடங்காயி இருக்கிறாள்; அப்பனைக் கூப்பிடு குச்சு கட்ட. அடங்காத மனைவியும் ஆங்காரப் புருசனும். 320 அடங்காத பாம்பிற்கு அரசன் மூங்கில் தடி. (மாட்டுக்கு) அடங்காப்பிடாரி ஆருக்கு அடங்குவாள் அடங்காப்பிடாரியைக் கொண்டவனுங் கெட்டான்; அறுகங் காட்டை உழுதவனுங் கெட்டான். அடங்காப்பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டதுபோல். அடங்காப் பெண்சாதியால் அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு. அடங்கா மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி. அடங்கி நின்றவர் நின்று வாழ்வார். அடங்கிப் போனால் அப்பாவி; முடங்கிக் கிடந்தால் மூதேவி. அடங்கின பிடி பிடிக்க வேண்டுமேயல்லாமல், அடங்காப் பிடி பிடிக்கலாகாது. அடங்கினவர் நாடாள்வார்; பொங்கினவர் காடாள்வார். 330 அடங்கினவர்கள் பெரியவர்கள்; அடங்காதவர்கள் அறிவிலிகள். அடடா கருக்கே அரிவாள் மணை சுறுக்கே. அடம்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு. அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேற வேணுமா? அடர விதைத்தால் படரும் தழைகள். அடர விதைத்துச் சிதறப் பிடுங்கு. அடர விதைத்து ஆழ உழு. (அழிய) அடர்த்தி முன்னழகு; பௌக்கம் பின்னழகு. அடர்த்தியை அப்போதே பார்; பௌக்கத்தைப்பின்னாலே பார். அடவி சென்றும் விறகுக்குப் பஞ்சமா? 340 அடாது செய்தவன் படாது படுவான். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம். அடி அதிரசம் (ஆலங்காய்). குத்து கொழுக்கட்டை. அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா? அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவார். அடி என்கப் பெண்சாதியில்லை, அட்ட புத்திர வெகு பாக்கியம். அடி என்கிற அமைச்சனுமில்லை; பிடி என்கிற அரசனும் இல்லை. அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை என்றானாம். அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம். அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்? 350 அடி ஓட்டையாயிருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. அடி காட்டிலே, நடு மாட்டிலே, நுனி வீட்டிலே. அடி கொத்தாலும் பிடி கொடுக்காதே. அடிக்க அடிக்க அம்மியும் நகரும். அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள்; படப்பட அடிக்கிறவனும் முட்டாள். அடிக்க அடிக்கப் பந்து அதிக விசை கொள்ளும் (எழும்). அடிக்க அடிக்கப் பிள்ளை வளரும்; முறுக்க முறுக்க மீசை வளரும். அடிக்கடி அரசன் வந்த ஊர் அதிவளர்ச்சி அடையும். அடிக்கரை பிடித்துப் போனால் முடிக்கரை சேரலாம். அடிக்காயிரம் பொன் கொடுக்க வேண்டும். 360 அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா? அடிக்கிற கைதான் அணைக்கும். அடிக்குப் பயந்தவன் ஆணைக்குத் தாழ்ந்தவன். அடிக்குப் பயந்து அடுப்பில் விழுந்தாளாம். அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை. (அரவணைக்கும்) அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்ற வேண்டும். அடிக்கும் காற்று வெயிலுக்கு அஞ்சாது. அடிக்கும் பிடிக்கும் சரி. அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார். அடிச்சக்கை பொடி மட்டை. 370 அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா? அடிச்சட்டிக்குள்ளே கரணம் போட்டுக் குண்டு சட்டியில் குதிரை சவாரி பண்ணினானாம். அடிச்சிக்கு ஆசை அரசன் மீது. அடிச்சுவடு கண்டு கள்ளனைப் பிடிக்கலாம். அடிச்சோறு பிடித்ததுக்காகச் சோற்றைக் கொட்டவா முடியும்? அடிதடிக்கு நடுவே கொடி பிடிக்கிற மாதிரி. அடிதண்டம் பிடிதண்டம். அடிதெற்றினால் ஆனையும் சறுக்கும். அடித்த இடம் கண்டுபிடித்தழ ஆறு மாதம் செல்லும் (கண்டுபிடிக்க) அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி. 380 அடித்தது ஆட்டம்; பிடித்தது பெண்டு. அடித்தவனை விட்டுவிட்டு வலியில் துடிப்பவனைப் பிடித்த கதையா. அடித்தவன் பின்னாலே போனாலும் போகலாம்;பிடித்தவன் பின்னாலே போகக் கூடாது. அடித்தாலும் கணவன்; புடைத்தாலும் கணவன் (அணைத் தாலும்) அடித்தால் முதுகில் அடி; வயிற்றில் அடிக்காதே. அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு. அடித்து எடுத்தால்தான் நெல்லு; அழுக்குப் போக விளக்கினால் தான் பல்லு. அடித்துப் பழுத்ததும் பழமா? அடித்துப் பால் புகட்டுகிறதா? அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா. (சொன்னபடி கேட்காது) 390 அடி நாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா? அடி நொச்சி நுனி ஆமணக்கா? அடிபட்ட நாய் குரைத்தே தீரும். அடிபட்ட பாம்பு கடிக்காமல் விடாது. அடிபட்டவனுக்கு அடிச் சொந்தமில்லையா? அடி பட்டவன் அழுவான். அடி பட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடி பட வேண்டும். அடி பட்டு ஓடுவான் பாடுவான். அடி பொறுத்தாலும் வசவு பொறுக்க முடியாது. அடிப்படை கோணினால் சூரியப்படை கோணும். 400 அடிப்பானேன் பிடிப்பானேன்; அடக்குகிற வழியில் அடக்குவோம். அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன? அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அடிமை படைத்தால் ஆள்வது கடன். அடியாத மாடு படியாது. (பிள்ளை) அடியிலுள்ளது நடுவுக்கும் முடிக்கும் உண்டு. அடியும் பட்டுவிட்டு புளித்த மாங்காயா தின்ன வேண்டும்? அடியே என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; இருக்கும் பிள்ளையோ எட்டுப் பேராம். அடியேன்னு சொல்ல ஆளைக் காணோம்; அதிட்ட புத்திரனுக்கு அடிபோடறானாம். அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு. 410 அடியைப் பிடிடா பாரத பட்டா. அடியை விட ஆவலாதி பெரியது. அடி வண்டிக் கிடாப் போல. அடி வயிற்றில் இடி விழுந்தாற் போல. அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல. அடி வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அடிவாரத்திலிருந்து அண்ணாந்து பார்ப்பவன் முடியை அடைய மாட்டான். அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை. அடிவானம் கருத்தால் ஆண்டை வீடு வறுக்கும். அடுக்கல் குத்தினால் நடுக்கல் குத்துவாள். 420 அடுக்களை உறவில்லாமல் அம்பலத்து உறவா? அடுக்களை கிணற்றில் அமுதம் எழுந்தாற்போல. அடுக்களைக் குற்றம் திருப்பால் குழைந்தது; (சோறு) ஆமுடையான் குற்றம் பெண்ணாகப் பிறந்தது. அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும். அடுக்களைப் பூனை இடுக்கிலே ஒளியும். அடுக்களைப் பெண்களுக்கு அழகு வேண்டுமா? அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு எப்படி தெரியும்? அடுக்குகிற வருத்தம் உடைக்கிறதுக்குத் தெரியாது. அடுத்த கூரை வேகுங்கால் தன்கூரைக்கு வராதா? அடுத்தவரை அகல விடலாகாது. 430 அடுத்தவரைக் கெடுக்கலாமா? அடுத்தவர் எல்லாம் கெடுத்தவர் தாமா? அடுத்தவன் தலையில் நரை என்பானேன்; அவன் அதைச் சிரை என்பானேன். அடுத்தவன் வாழ்வைப் பகலே குடி கெடுப்பான். அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம். அடுத்த வீட்டுக்காரி ஆண்பிள்ளை பெற்றாளாம்; எதிர்த்த வீட்டுக்காரி இடித்துக்கிட்டுச் செத்தாளாம். அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அம்மிக் குழவி யெடுத்துக் குத்திக் கொண்டாளாம். அடுத்த வீட்டுக்கு அஞ்சி அமாவாசை; எதிர்த்த வீட்டுக்கு அஞ்சி ஏகாதசி. அடுத்த வீட்டுக்கூரை வேயுங்கால் தன் வீட்டுக்கு கூரைக்குக்கேடு. 440 அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டிக் கையே. (அண்டை வீட்டு) அடுத்த வீட்டுப் பிள்ளையாண்டான் பாம்பைப் பிடி; அல்லித் தண்டாட்டம் சில்லுன்னு இருக்கும். அடுத்தாரைக் கெடுத்து அண்டைவீட்டில் கன்னம் இடலாமா? அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான். அடுத்தாரைக் கோவித்தால் கெடுத்தாலும் கெடுப்பார். அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும். அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை. அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும். அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் தான் ஆகும். அடுத்து வந்தவர்க்கு சொல்வோன் குரு. 450 அடுப்பரைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும் வேணும். அடுப்பங்கரையே கைலாசம்; ஆம்படையானே சொர்க்கலோகம். அடுப்படியே திருப்பதி; ஆட்டுக்கல்லே குல தெய்வம். அடுப்பனலில் வெண்ணெய் வைத்த கதை. அடும்பாம்படையே காணியாட்சி; ஆம்படையானே குல தெய்வம்; அடுப்பிலே பூனை தூங்குது. அடுப்பில் வைத்த கொள்ளி எரிந்துதான் தீர வேண்டும். அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு? அடுப்பு எரிந்தால் பொரி பொரியும். தாயார் செத்தால் வயிறு எரியும். அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான் மேல் காட்டினாளாம். 460 அடுப்பு மூன்றானால் அம்மா பாடு திண்டாட்டம். அடுப்பு நெருப்பும் போயிற்று; வாய்த்த மனைவியும் போயிற்று. அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா? அடுப்பே திருப்பதி ஆம்படையானே குலதெய்வம். அடுப்பே திருப்பதி வாயிலே வைகுந்தம். அடைக்கலங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம். அடைக்கலங் குருவிக்கு இரை பஞ்சமா? அடைக்கலம் என்று வந்தவன் படைக்கலம் எடுக்கிறான். அடைஞ்சால் அம்மாக்கண்ணு விடிஞ்சால் விளக்குமாறு. அடைஞ்சால் வெல்லக்கட்டி, விடிஞ்சால் வேப்பங்காய். 470 அடை தட்டின வீடு தொடை தட்டும். அடை தட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா. அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார். அடைந்து கிடப்பானாம் செட்டி; அவனை இழுப்பானாம் தட்டான். அடைப்பட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா பணம் பாக்கி என்கிறான் வட்டி. அடைமழை காலத்திலே ஆடுமாடு; பஞ்சகாலத்திலே பிள்ளைகுட்டி(ஆகாது) அடைமழை காலத்தில் ஆடுமாடு ஆகாது; பஞ்ச காலத்திலே பெண்டாட்டி ஆகாது. அடைமழைக் காலத்தில் ஆற்றங்கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம். அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம். அடைமழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும். 480 அடைமழை விட்டும் செடி மழை விடவில்லை (கொடி) அடைமழையை நம்பினாலும் அழுமூஞ்சியை நம்ப முடியாது. அடையலும் விடியலும் குருடுக்கில்லை. அடையா, அப்பமா, விண்டுக் காட்ட? அடைவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்க நேரம் இருக்காது. அட்ட தரித்திரம் ஆத்தாள் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு. அட்டமத்துச் சனி அழுதாலும் விடாது. அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல. அட்டமத்துச் சனி நட்டம்வரச் செய்யும். அட்டமத்துச் சனி பிடித்தது; பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது. 490 அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற் போல. அட்டாரைத் தொடாக்காலம் இல்லை. அட்டாலும் பால் சுவையில் குன்றாது. அட்டிகைக்கு ஆசைப்பட்டுக் கட்டின வீட்டை இழந்தாளாம். அட்டிகைக்கு ஆசை வைத்து எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம். அட்டியில்லாமல் வருவாள் ஐந்து பத்துத் தந்தால். அட்டைக்கும் குட்டைக்குந்தான் உறவு; அதில் விழுந்த எருமைக்கு என்ன உறவு? அட்டைக்கும் திருப்தி இல்லை; அக்கினிக்கும் திருப்தி இல்லை. அட்டைக்குத் தெரியுமா கட்டில் சுகம்? அட்டை செத்தால் குட்டைக்கு நட்டமா? 500 அட்டையை எடுத்துத் தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குட்டையிலே. அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நாடும். அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தாலும்; அது நழுவிக் கொண்டுதான் போகும். அட்டையைப் பிடித்துக் கட்டிலில் வைத்ததுபோல. அணி இலாக் கவிதை பணி இலா வனிதை. (அணி) அணி பூண்ட நாய் போல. அணிலுக்குப் பழம் அரிதா? ஆண்டிக்குச் சோறு அரிதா? அணில் ஏறத் தென்னை அசையுமா? அணில் எறிய கொம்பு அசங்காமல் இருக்குமா? அணில் கொப்பிலே (கொப்பிலும்) ஆமை கிணற்றிலே (கிணற்றிலும்) 510 அணில் நெட்டியா தென்னை சாயும்? அணில் நெட்டினதும் தென்னைமரம் வீழ்ந்ததும். அணில் வாயாற் கெடும். அணியெல்லாம் ஆடையின்பின். அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சிப் பிள்ளைக்கு சோறு அரிதோ? அணிற் பிள்ளையின் தலைமீது அம்மிக்கல்லை வைத்தது போல. அணு அளவு இலாபத்திலும் அரைப்பங்கு பாழ். அணு மகா மேரு ஆகுமா? அணுவும் மலையாச்சு; மலையும் அணுவாச்சு. அணை உடைந்த பிறகு பனையைத் தூக்கிப் போட்டுத் தடுத்திட முடியாது. 520 அணை கட்டே உடைந்தபின் அறுகம்புல்தானா தடுத்து விடும். அணை கடந்த வெள்ளத்தை அடைக்க முடியுமா? அணை கடந்த வெள்ளத்தைத் தடுப்பவர் யார்? (மறிப்பவர்) அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. அணை கடந்த வெள்ளம் அழைக்கத் திரும்புமா? அணை கட்ட இறங்கி ஆற்றோடு போய்விட்டான். அணைச்சு வளைச்சா பிடிக்குள்ளே வரும். அண்டங் காக்கை குழறுகிறாற் போல. அண்டத்தில் இல்லாததும் பிண்டத்தில் உண்டா? அணைகிற விளக்கு நன்றாய் எரிந்து அணையும். 530 அண்டத்தில் மலக் குற்றமானால் கண்டத்தில் கபக்குற்றம் அண்டத்திற்கு உள்ளது பிண்டத்திற்கும் உண்டு. அண்டத்துக் கொத்தது பிண்டத்துக்கு. அண்டத்தைக் கையில் வைத்தாட்டும் பிடாரிக்குச் சுண்டைக் காய் எடுப்பது பாரமா? அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? அண்ட நிழலில்லாமற் போனாலும் ஒண்ட அடியுண்டு. அண்ட நிழலில்லாமற் போனாலும் பேர் ஆலால மரம். அண்டமும் பிண்டமும், அந்தரங்கமும் வெளியரங்கமும். அண்டரைப் போல் தொண்டரும். அண்டர் எப்படியோ தொண்டரும் அப்படியே. 540 அண்டவும் நிழலில்லை; ஒண்டவும் சுவரில்லை. அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? அண்டா வாயைக் கட்டலாம்; தொண்டை வாயைக் கட்டலாமா? அண்டை கொண்டு கெண்டை மேயும். அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கைவிடாதே. அண்டையில் இருக்குது காவிரி முழுக மாட்டாளாம் மூதேவி. அண்டையில் சமர்த்தன் இல்லாத அரசனுக்கு அபகீர்த்தி வரும். அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே! அண்டை வீடு அடுத்த வீடு பகையா யிருக்கக் கூடாது. அண்டை வீடு அம்பட்டன் வீடு; எதிர்த்த வீடு ஏகாலி வீடு. 550 அண்டை வீடு எல்லாம் சண்டை வீடா? அண்டை வீட்டுக் கடன் ஆகாது. அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துக் சிரங்கும் ஆகாது. அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அசல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டது போல. அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான் (திரிவான்) அண்ணனார் சேனையிலே அள்ளி உண்ணப் போகிறாள். அண்ணனிடத்தில் ஆறுமாதம் வாழ்ந்தாலும் அண்ணி யிடத்தில் அரை நாழிகை வாழலாமா? அண்ணனுக்குத் தம்பி அல்லவென்று போகுமா? அண்ணனை அகம் காக்க வைத்து விட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம். 560 அண்ணனைக் கொன்ற பழி சந்தையிலே தீர்த்துக் கொள்ளுகிறது போல. அண்ணன் இருக்கிற அழகைப் பார்த்துத் தங்கை தடியா என்று கூப்பிட்டாலாம். அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம். அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்? (கிடைக்கும்) அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலியாகுமோ? அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு. அண்ணன் சம்பாதிக்கிறது; தம்பி அரைஞாண் கயிற்றுக்குச் சரி. அண்ணன் செத்த பிறகு மன்னியிடம் உறவா? அண்ணன் சோற்றைத் தின்று பொன்னன் மாட்டை மேய்த்தானாம் தம்பி. அண்ணன் தம்பி தான் சென்மப் பகையாளி. 570 அண்ணன் தான் கூடப்பிறந்தான்; அண்ணியுமா கூடப் பிறந்தாள்? அண்ணன் தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்? அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம். அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு. அண்ணன் பெண்டாட்டி அரைப்பெண்டாட்டி; தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி. அண்ணன் பெரியவன், அப்பா காலைப் பிடி. அண்ணன் பெரியவன், சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்பு கொண்டு வா. அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; அடுத்த பங்கை விடவும் மாட்டேன். அண்ணன் பேரிலிருந்த கோவத்தை நாய் பேரிலாற்றினான். அண்ணாக்கக் குடிக்க ஆறுமாதமா படிக்கணும்? 580 அண்ணாத்தை பேச்சை அடுப்பிலே போடு. அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை; ஆண்டி களுக்கு எழுபத்து நாலு பூசை. அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னர்சாமி மயிரைப் பிடுங்குமா? அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி வம்பா செய்யும்? அண்ணாவிதான் செத்தார்; அவர் சொல்லிக் கொடுத்த பாடமுமா செத்தது? அண்ணாவி நின்று கொண்டு மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான். அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா? அண்ணாவி விழுந்ததும் ஒரு அடவுதான். அண்ணாவு என்றால் என்ன, உண்ணாவு தானே. அண்ணாவுக்கு மனது வரவேண்டும்; அண்ணி பிள்ளை பெற வேண்டும். 590 அண்ணி இல்லையானால் அண்ணி வயிற்றுப் பிள்ளை. அண்ணி மனம் வைத்தால் கிண்ணிக்குப் பஞ்சமா?.... அதட்டிப் பேசினால் உண்மை அழிந்தா போகும்? அதமனுக்கு ஆயிரம் ஆயுசு. அதற்கும் இருப்பான்; இதற்கும் இருப்பான்; ஆக்கின சோற்றுப் பங்கிற்கும் இருப்பான். அதன் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்துகிறது. அதிக ஆசை அதிக நட்டம். அதிக கடன்காரனுக்கும் அரும்பேன்காரனுக்கும் ஒன்றும் தோணாது. அதிக கரிசனமானாலும் ஆமுடையானை அப்பா என்றழைக் கிறதா? அதிக நட்பு ஆபத்துக்கு இடம். 600 அதிகப் பணம் புழக்கம் ஆளைக் கெடுக்கும். அதிகமாகத் தின்பவனுக்கு அறிவு மட்டு. அதிகமான பழக்கம் அவமரியாதையைத் தரும். அதிகாரம் ஆறு பணம்; பணியாரம் பத்து பணம். அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத அலுவலும் எதற்கு? அதிகாரம் இல்லாவிட்டால் பரியாரம் வேண்டும். அதிகாரியுடனே எதிர் பண்ணலாமா? அதிகாரியுடனே எதிர்வாதம் செய்யாதே. அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால் விடியுமட்டும் திருடலாம். அதிகாரி வந்தால் அடித்துக்காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு. 610 அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம். அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது. அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்குமாம். (அதிசயமான) அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை. அதிட்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். அதிட்டம் ஆறாய்ப் பெருகுகிறது. அதிட்டம் இருந்தால் அரசு பண்ணலாம். அதிட்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும். அதிட்டம் கெட்ட கழுக்காணி. அதிட்டம் கெட்டதுக்கு அறுபது நாழியும் கெட்டது (தியாச்சியம்) 620 அதிட்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும். அதிர அடித்தால் உதிர விளையும். அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை. அதிர ஆடினால் முதிர விளையும். அதிர (அவல்) இடித்தால் உதிர விளையும். அதிராமப்பட்டினத்துக் கழுதை மொச்சைக் கொட்டையை நினைத்துக் கொண்டதாம். அதிர பதற நடந்தால் கதறகதற போயிடுவான். அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா மணியைப் பூசாரி; எடுபிடி வேலை செஞ்சுகிட்டு இருடா பூசாரி. அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை. அதைரியம் உள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற் போல. 630 அதை விட்டாலும் கதியில்லை; அப்புறம் போனாலும் விதியில்லை. அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே. அத்தச் செவ்வானம் அடைமழைக்கு அடையாளம். அத்தனையும் தான் செய்தாள்; உப்பிட மறந்தாள். m¤â¥ gH¤ij¥ ã£lhš m¤jidí« òG.(brh¤ij) அத்தி பழுத்தால் அங்கு; ஆல் பழுத்தால் இங்கு. அத்திப் பூவை ஆர் அறிவார்? அத்திப் பூவைக் கண்டார் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தார் உண்டா? அத்து மீறிப் போனான்; பித்துக்கொள்ளி ஆனான். அத்தை அருமை செத்தால் தெரியும். 640 அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை. அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி. அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி; மாமியில்லா பெண்டாட்டி வயிறுதாரி. அத்தை இல்லா வீடு சொத்தை. அத்தைக்கு அகப்பைக் கஞ்சி ஊற்றாதவளே; அடுத்தவள் கிட்டே பிடுங்குபட்டவளே. அத்தைக்குப் புத்தி சொல்லி அண்ணன் மகள் அவுசாரி போன கதையா. அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா. அதைத்தான் சொல்வானேன்; வாயைத்தான் வலிப்பானேன். அத்தைப் பாட்டி போல அளந்து கொட்டுகிறாள் பெரிதாக. அத்தை மகள் சொத்தை; அவள் கேட்கிறாள் மெத்தை. 650 அத்தை மகளானாலுஞ் சும்மா வருவாளா? அத்தை மகளைக் கொள்ள முறை கேட்க வேண்டுமா? அத்தோட நின்றது அலைச்சல்; கொட்டோட நின்றது குலைச்சல். அந்த ஊர் தேவடியாள் (அவுசாரி) பரதேசம் போனாளாம்; ஏழூர்க்காரர் எதிர்த்தாற்போல வந்தார்களாம். அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்து விட்டாள். அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று. அந்தணர்க்குத் துணை வேதம். அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும். அந்தந்த கோவிலுக்கு அந்தந்த பூசாரி. அந்தப் பருப்பு இங்கே வேகாது. 660 அந்தம் உள்ளவன் ஆட வேண்டும்; சந்தம் உள்ளவன் பாட வேண்டும். அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது. அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல. அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது. அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி. அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும். அந்தி கிழக்கு அதிகாலை மேற்கு கொரடுபோட்டால் வராத மழை வரும். அந்திச் சிவப்பு அடைமழைக்கு அடையாளம். அந்திச் செவ்வானம் அப்போதே மழை. அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடிமருமகளே! விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே! 670 அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது. அந்திப் பீ சந்திப் பீ பேளாதான் வாழ்க்கை, சாமப்பீ தட்டி எழுப்பும். அந்தி மழை அழுதாலும் விடாது. அந்தி மழையும் அந்தி விருந்தாளியும் விடமாட்டார்கள். அந்தியிலே செவ்வானம் அடைமழைக்குச் சம்மானம்; காலையிலே செவ்வானம் காலத்துக்கும் மழையில்லை. அந்து கண்ணிக்கு அழுதாலும் வாரானாம் ஆமுடையான். அந்து ஊதும் நெல் ஆருக்குப் பயன்படும். அந்நிய மாதர் அவதிக்கு உதவார். அப்பச்சி குரும்பையைச் சூப்ப, பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல. அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது; பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது. 680 அப்படிச் சொல் வழக்கை; அவன் கையில் கொடு உழக்கை. அப்படிப் பார்த்தாலும் விகடகவி; இப்படி பார்த்தாலும் விகடகவி. அப்படியும் பேசுவான்; இப்படியும் பேசுவான். அப்பத்துக்கு மேல் நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும். அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ; தித்திப்பை எப்படி நுழைத்தாளோ! அப்பத்தைத் திருடிய பூனைக்கு நியாயம் வழங்கிற்றாம் குரங்கு. அப்பத்தைத் தின்னுடான்னா தொளையை எண்ணுகிறான்னாம். அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டுமா? அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில். அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா? 690 அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு! அப்பனுக்கே அரைக்கோவணமாம்; இழுத்துப் போத்துடா மகனே என்றானாம். அப்பனுக்கே ஒட்டுக் கோவணம்; மகனுக்கும் இழுத்துப் போர்த்து என்றாளாம். அப்பனோட போகிறவள் ஆர்கிட்டேயும் போயிடுவாள். அப்பனோடே போகிறவளுக்கு அண்ணன் ஏது? தம்பி ஏது? அப்பன் அடி மரத்திலே தூங்கினால் மகன் முடிக்கொம்பிலே படித்திருப்பான். அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும். அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா? அப்பன் இல்லாதது அரட்டை; தாய் இல்லாதது தறுதலை. அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடுமா? 700 அப்பன் எடுத்து எடுத்துக் குடிக்கிறான்; மகள் அப்படியே குடிக்கிறான். அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது. அப்பன் செத்தும் தம்பிக்கு அழுகிறதா? அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்ப கோணத்தில் கோதானம் செய்கிறான். அப்பன் தலையில் உப்பு வைத்து ஐந்துக்கு ஒன்று, ஆறுக்கு ஒன்று என்று மாறுவது. அப்பா என்றால் உச்சி குளிருமா? அப்பாருக்கு இட்ட கப்பரை ஆரச்சுவற்றிலே இருக்கிறது. அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அப்பைக் கொண்டு உப்பைக் கட்டு; உப்பைக் கொண்டு ஒக்கக் கட்டு. அப்போது விளைந்த சம்பாவுஞ்சரி; ஆறு மாதத்துக் காரும் சரி. 710 அமரிக்கை ஆயிரம் பொன் பெறும். அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைச் சோறு சும்மா அகப்படுமா? அமாவாசைச் சோறு எப்போதும் கிடைக்குமா? அமாவாசை பணியாரம் அன்றாடம் கிடைக்குமா? அமாவாசைப் பருக்கை அரைப் பருக்கை; கும்மாளம் போடுது குண்டுப் பருக்கை. அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா? அமாவாசைப் பருப்புச் சோறு சும்மா சும்மா கிடைக்குமா? அமாவாசை பொன்னு அவுசாரியாய்ப் போகும். 720 அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? அமுக்கினாற் போலிருந்து அரணை அழிப்பான். அமுதம் உண்கிற வாயால் விசம் உண்பார்களா? அமுதம் உண்கிற வாய்தான் விசத்தையும் உண்கிறது. அமுதுபடி பூச்சியம் ஆடம்பரம் அதிகம். அமைச்சன் இல்லாத அரசும் ஆமுடையான் இல்லாத ஆயிழையும். அமைதி ஆயிரம் பெறும். அமைதி கெட்ட நெஞ்சம் ஆடி ஆடிக் கெஞ்சும். அமைதி வேண்டுமெனில் அமருக்கு அணியமாயிரு. அம்பட்டக் கிருதும் வண்ணார ஒயிலும் 730 அம்பட்டக் குடியில் சிரைத்த மயிருக்குப் பஞ்சமா? அம்பட்ட வேலை அரைவேலை. அம்பட்டன் கத்தியும் சரி; அவனோட நாக்கும் சரி. அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர். அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும். அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா? அம்பட்டன் வீட்டில் மயிருக்குப் பஞ்சமா? அம்பட்டன் வேலை செய்ய வந்தால் சரியாய்ச் செய்ய வேண்டும். அம்பத்தூர் வேளாண்மை ஆனை கட்டும் தாள்; வானை முட்டும் போர்; ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தாலென்ன? அடுத்த திருமாளிகையிற் கிடந்தாலென்ன? 740 அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான். அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல. அம்பலத்தில் பொதி அவிழ்க்கல் ஆகாது. அம்பலப் புளியானால் ஆருக்குச் சொந்தம்? அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது. அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக் கொண்டு நரிவால் கொள்ளுவார்களா? அம்பிட்டுக் கொண்டார் தும்மட்டிப் பத்தர். அம்பு கிடைக்கும் போது ஆனைக் கட்டலாகாது. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா? 750 அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும். அம்மா அம்மா என்று அழைத்தால் பத்து மாதம் சுமந்து பெற்றவள் ஆவாளா? அம்மா குதிர் போல; ஐயா கதிர் போல. அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒரு கேடா? அம்மா செத்தால் அப்பா சித்தப்பா. அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டு போய்விடுவார். அம்மாள் தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார். அம்மாமி வாயைக் கிண்டினால் அத்தனையும் பழமொழி. அம்மாவுக்குப் பின் அகமுடையாள். அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி. 760 அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ? அம்மான் மகளுக்கு முறையா? அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா? அம்மி இருந்து அரணை அழிப்பான். அம்மிக் குழவி ஆலாய்ப் பறக்கும்போது எச்சில் இலையைக் கேட்பானேன். அம்மி சுறுக்கா? அரைப்பவர் சுறுக்கா? அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ? அம்மியிலே குத்துனா என்ன? ஆட்டுரலில் குத்துனா என்ன? நெல்லு அரிசியானா சரி. அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது எச்சில் இலை எனக்கு என்ன கதி என்றாற்போல. அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா? 770 அம்மைக்கு அமர்க்களம் ஆக்கிப்படை! எனக்கு அமர்க்களம் பொங்கிப் படை. அம்மையார் பெறுவது அரைக்காசு; தலை சிரைப்பது முக்காற்காசு. அம்மையார் வரும்வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா? அம்மையாரே வாரும்; கிழவனைக் கொள்ளும். அம்மையார்க்கு என்ன துக்கம்? கந்தைத் துக்கம். அம்மையில்லாத பிறந்தகமும் ஆமுடையானில்லாப் புக்ககமும் அம்மை வீட்டுத் தெய்வம் நம்மை விட்டுப் போமா? அயலார் உடைமையில் பேயாய்ப் பறக்கிறான். (ஆந்தையாய்) அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு. அயலூர் நாணயக்காரனை விட உள்ளூர் அயோக்கியன் மேல். 780 அயல் வீட்டான் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா? அயல் வீட்டு ஆண்மகன் அவத்தைக்கு உதவான். அயல் வீட்டுப் பையா பாம்பைப் பிடி; அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும். அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது. அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது. அயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது (சமைப்பை). அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல் (சாப்பிடு) அய்யாசாமிக்குக் கல்யாணம் அவரவர் வீட்டிலே சாப்பாடு. அய்யன் அமைப்பு யாராலும் தள்ள முடியாது. அரக்கன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன? 790 அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள்; புண் பிடித்தவன் பின்னாலே போனான். அரகர என்கிறவருக்குத் தெரியுமா? அமுது படைக்கிற வனுக்குத் தெரியுமா? அரகர என்பது பெரிதோ? ஆண்டிக்கு இடுவது பெரிதோ? அரங்கன் சொத்து அக்கரை ஏறாது. அரங்கனை நினைக்கக் குரங்கனா வரணும்? அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனா? அரங்கின்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசலும் ஒன்று. அரங்கூடு குரங்கே மரத்தை விட்டு இறங்கே. அரசங் கட்டையும் ஆபத்துக்கு உதவும். அரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம் (தொட்டு) அரச மரத்தைப் பிடித்த சனியன் பிள்ளையாரையும் பிடித்ததாம். (பிடித்து ஆட்டியதாம்) 800 அரசர் மகளும் வறையோட்டிற்கு முட்டுப் படுவாளாம். அரசர் பகை அழியாப் பகை. அரசறிய வீற்றிருந்த வாழ்வு விழும். அரசனில்லாப் படை வெட்டுமா? அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை. அரசனுக்கு ஓர் ஆனை இருந்தால் ஆண்டிக்கு ஓர் பானை யாவது இராதா? அரசனுக்குச் செங்கோல் உழவனுக்கு உழவுக் கோல். அரசனுக்குச் சொன்னது அனைவர்க்கும் சொன்னதாகும். அரசனுக்குத் துணை வயவாள். அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூல மாகிறது. 810 அரசனும் சரி; அரவும் சரி. அரசனும் சரி; அழலும் சரி. அரசனும் ஆண்டியாவான்; ஆண்டியும்அரசன் ஆவான். அரசனும் பெண்ணும் அருகில் இருப்பதைப் பற்றிக் கொள்வார்கள். அரசனே முட்டி எடுக்கிறான்; அவன் ஆனை, கரும்புக்கு அழுகிறதாம். அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருசனைக் கண்டால் பிடிக்காது. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாளாம். அரசனோடு எதிர்த்த குடிகள் கெட்டுப் போகும். அரசன் அதிகாரம் அவன் நாட்டோடே. அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார். 820 அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும். அரசன் ஆனைமேல் வருகிறான் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம். அரசன் இட்டதே சட்டம். அரசன் இருக்கப் பட்டணம் அழியுமா? அரசன் இல்லாத நாடு புருசன் இல்லாத வீடு. அரசன் உடைமைக்கு ஆகாயவாணி சாட்சி. அரசன் எப்படியோ அப்படியே குடிகள். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள். அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கும் என்றால் கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள். 830 அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்புவது போல. அரசன் சீறின் ஆம் துணை இல்லை. அரசன் வழிப்பட்டது அகலிடம் (அவனி) அரசாணை ஆர்வாயில் இருந்து வந்தாலும் அரசாணைதான். அரசாளும் மன்னனும் அன்னைக்கு மகனே. அரசில்லாப் படை வெல்லுவதரிது. அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். அரணை அலகு திறக்காது. அரணை கடித்தால் அப்பொழுதே மரணம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 840 அரண்மனை ஆனைக்கு அம்பாரி வைத்தாலும் ஆலய ஆனைக்குக் கொட்டு மேளம் போதுமே. அரண்மனை உறவைக் காட்டிலும் அடுக்களை உறவுதான் மேல். அரண்மனைக் கழுதை ஊர்வலம் போகுதுன்னு கூழைவால் குதிரை குறுக்க மறுக்க ஓடுச்சாம். அரண்மனை காத்தவனும் அடுப்பங்கடை காத்தவனும் வீண் போறதில்லை. அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள். அரண்மனைக் காரியம் அறிந்தாலும் சொல்லாதே. அரண்மனைக்கு ஆயிரஞ் செல்லும், குடியானவன் என்ன செய்வான்? அரண்மனைக்கு எதிர்மனை இருக்க முடியுமா? அரண்மனையைப் பகைத்தாலும் அடுத்த வீட்டைப் பகைக்காதே. அரண்மனை வாசல் காத்தவனும் பரிமடை காத்தவனும் பழுது போவதில்லை. 850 அரதேசி (அகதேசி) பரதேசிக்கு உணவளிக்க வேண்டும். அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும். அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும். அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணிநல்லது. (மேல்) அரமும் அரமும் கூடினால் கின்னரம். அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும். அரவத்தைக் கண்டால் கீரி விடுமா? அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே. அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். அரனருள் அல்லாது அணுவும் அசையாது. 860 அரனருள் உற்றால் அனைவரும் உற்றார். அரி என்கிற அட்சரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாமா? அரி என்றால் ஆண்டிக்குக் கோவம்; அரன் என்றால் தாதனுக்குக் கோவம். அரிக்கிற அரிசியை விட்டுட்டுச் சிரிக்கிற சித்தப்பனோடு போனாளாம். அரிக்கிற அரிசியை விட்டுட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம். அரிசி அள்ளக் குறையும்; அவல் முள்ளக் குறையும். அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை. அரிசி என்று அள்ளிப் பார்ப்பாருமில்லை; உமி என்று ஊதிப் பார்ப்பாருமில்லை. அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா? 870 அரிசி உண்டானால் வரிசையும் உண்டு; அக்காள் உண்டா னால் மச்சானும் உண்டு. அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது. அரிசிக்குக் கொதி அதிகம்; அவிசாரிக்கு வாய் அதிகம். அரிசிக்குத் தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும். அரிசிக்கு தக்க உலை. அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா? அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்? அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா? அரிசி தின்ன வாயும் அவுசாரி போனவளும் சும்மா இருக்காது. அரிசிப் பகையும் ஆமுடையான் பகையும் உண்டா? (எத்தனை நாளைக்கு?) 880 அரிசிப் பல்காரி அவிசாரி; மாட்டுப் பல்காரி மகராசி. அரிசிப் பானையும் குறையக் கூடாது; ஆண் மகன் முகமும் வாடக் கூடாது. அரிசிப் பிச்சை எடுத்து அறுகங் காட்டில் கொட்டினாற் போல. அரிசிப் பிச்சை வாங்கி அரிக்கும் சட்டியில் கொட்டினேனே! அரிசிப் புழு சாப்பிடாதவர் இல்லை; அகமுடையானிடம் அடிபடாதவளும் இல்லை. அரிசியும் கறியும் உண்டானால் அக்காள் வீடு வேண்டுமா? அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சாப்பிட போன மாதிரி. அரிசியை இறைத்தால் ஆயிரம் காக்கை. அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு. அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டடி; இங்கு இரண்டடி. 890 அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல். அரிது அரிது மானிடர் ஆதல் அரிது. அரித்தவன் சொறிந்து கொள்வான். அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயிரம் தீர்வை உண்டா? அரிந்தால் அரிக்கன் சட்டிக்குக் காணாது; குலுக்கினால் குண்டான் சட்டிக்குக் காணாது. அரிப்புக்காரச் சின்னிக்கு அடுப்பங்கரைச் சோறு; எரிப்புக் கார எசக்கி எத்திலே தின்பாள் சோறு. அரிய சரீரம் அந்தரத்தில் எறிந்த கல். அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான். அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு. அரிவாளுக்கு வெட்டினால் கத்தி பிடிக்காவது உதவும். 900 அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெட வேண்டும். அரிவாள் சூட்டைப் போலக் காய்ச்சல் மாற்றவோ? அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே. அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக்குச்சி. அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான். அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வௌவால் சேராது. அருக்காணி முத்துக் கரிக் கோலமானாள். அருக்காணி நாய்ச்சியார் குரங்குப் பிள்ளை பெற்றாளாம். அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா? அருங்காட்டை விட்டவனும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான். 910 அருங்காய் பிஞ்சிலே தெரியும். அருங்கொம்பில் தேனிருக்கப் புறங்கையை நக்கினால் வருமா? அருங்கோடை துரும்பு அற்றுப் போகுது. அருஞ்சுனை நீருண்டால் அப்பொழுதே சுரம். அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட்செல்வம் ஆருக்கும் இல்லை. அருணாம்பரமே கருணாம்பரம். அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அத்தமிக்க வடிக்க மாட்டேனா? அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை. அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை குறைந்து போம். 920 அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிராது. அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன? அருமை அறியாதவன் இருந்தென்ன? இறந்தென்ன? அருமை அறிவானோ? அரவணைத்துப் பார்ப்பானோ? அருமை நண்பனை ஆபத்தில் அறியலாம். அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதி காலத்து உரல் போகலாது. அருமை பெருமை அறிந்தவன் அறிவான். அருமையாய்த் தாடியை வளர்த்து அம்பட்டன் கையில் கொடுக்கவா? அரும்பு ஏறினால் குறும்பு ஏறும். அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா? 930 அரும்பு மீசைக்காரனுக்குக் குறும்பு அதிகம். அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது. (விறுவிறு) அருவருப்பான சோற்றைக் காட்டிலும் விறுவிறுப்பான பசி மேலானது. அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும் (அசங்கிதக்) அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை; பொருள் இல் லார்க்கு இவ்வுலகு இல்லை. அருள் வேண்டும்; பொருள் வேண்டும்; ஆகாய வாணி துணையும் வேண்டும். அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா? அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது. அரைக்கண் அமாவாசை ஆனை முட்டையைக் கண்டானாம். அரைக் கல்வி முழு மொட்டை. 940 அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம். அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம். (வேலை) அரைக்காசு என்றாலும் அரண்மனை சேவகம். அரைக்காசு என்றாலும் அரண்மனை வேலை நல்லது. அரைக்காசுக்கு அறுத்த மூக்கு ஆயிரம் பொன் கொடுத் தாலும் ஒட்டுமா? அரைக்காசுக்கு ஆசைப்பட்டு அஞ்சுருபா இரவிக்கை கிழிந்ததாம். அரைக்காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா? அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும். ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். அரைக்காசு கொடுத்து அழச் சொல்லி அஞ்சு காசு கொடுத்து நிறுத்தச் சொன்னாற் போல. அரைக்காசு பெறாத பாட்டியம்மாவுக்கு மூன்று காசு கொடுத்து மொட்டை யடிக்க வேண்டும். 950 அரைக்காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத் தாலும் போகாது. அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி; ஆயிரம் பொன்னை அரைக் காசாக்குகிறவளும் பெண்சாதி. அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான்; குடிக் கிறவன் ஒன்று நினைத்துக் குடிக்கிறான். அரைக்குடம் ததும்பும்; நிறைகுடம் ததும்பாது. அரைக்குடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது. அரைக்கட்டி நாய்க்கு உரிகட்டித் திருநாளா? அரைகுறை மருத்துவன் ஆளைக் கொல்வான். அரைகுறை வித்தையுடன் அம்பலத்தில் ஏறினால் குறை யும் நிறைவாகிவிடும். அரைகுறை வேலையை ஆசானுக்குக் காட்டாதே. அரைச் சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்தது போல. 960 அரைச் சீலை கட்டக் கைக்கு உபசாரமா? அரைச்சொற் கொண்டு அம்பலம் ஏறலாமா? அரைச் சொற் கொண்டு அம்பலம் ஏறினால், அரைச் சொல் முழுச் சொல்லாமா? அரைஞாண் கயிறும் தாய்ச் சீலையுமாய் விடுகிறவளும் பெண்சாதி. அரைத்ததும் மீந்தது அம்மி; சிரைத்ததும் மீந்தது குடுமி; அரைத்த பயறு முளைத்தாற் போல. அரைத்த மாவையே அரைப்பது போல. அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்குத் தோசைக் கல். அரைத்தாலும் சந்தனம் அதன் மணம் மாறாது. அரைத்துட்டுக்குப் பீ தின்கிறவன். அரைத் துணியை அவிழ்த்து மேல்கட்டு கட்டியது போல. 970 அரைப்படி அரிசி அன்னதானம்; விடிகிறவரையில் மேளதாளம். அரைப்படி அரிசியில் அன்னதானம்; அதிலே கொஞ்சம் மேளதாளம். அரைப்படி அரிசியில் அன்னதானம் விடிய விடிய செய் தானாம். அரைப்படி ஈருக்காரி ஆம்பளைக்குக் கஞ்சி ஊற்ற மாட்டாள். அரைப்பணம் இல்லாதவன் அக்கரையில் கிடந்தா லென்ன? இக்கரையில் கிடந்தாலென்ன? அரைப்பணங் கொடுக்கப் பால்மாறி ஐம்பது பொன் கொடுத்துச் சேவை செய்த கதை. (சேர்வை) அரைப்பணங் கொடுத்து அழச் சொல்லி ஒரு பணங் கொடுத்து ஓயச் சொன்னதுபோல. அரைப்பணச் சேவகமானாலும் அரண்மனைச் சேவகம் போலாகுமா? அரைப்பணம் கொடுத்து ஆடச் சொன்னால் ஒரு பணம் கொடுத்து ஓயச் சொல்ல வேண்டும். அரைப் பணத்துக்கு மருத்துவம் பார்க்கப்போய் ஐந்து பணத்து நெளி உள்ளே போய்விட்டது. 980 அரைப்பணத்துக்கு வாய் அதிகம்; ஐந்தாறு அரிசிக்குக் கொதி அதிகம். அரைப்பவன் அரைத்தால் அடுப்புச் சாம்பலும் மருந்தாகும். அரையிலே இரண்டு காசு இருந்தால் அசப்பிலே இரண்டு வார்த்தை வரும். அரையிலே கட்ட துணியில்லை; கூத்தியார் மட்டும் இரண்டாம். அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது. அரைவாய் வடித்த முன்சோறு கழுநீரிலே விழும். அரை வேலையைச் சபையிலே கொண்டு வருவதா? அரோகரா என்பவனுக்குப் பாரமா? அமுது படைப்பவனுக்குப் பாரமா? அலந்த சோறு இல்லை இருப்பது அமுத சுரபி. அலுங்காமல் குலுங்காமல் இருந்தால் ஆயிரம் நோய். 990 அலுத்து சலுத்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் இழுத்து மச்சான் அண்டையில் போட்டாளாம். (கொடங் கையில்) அலுத்து சலுத்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் ஈச்சம் பாயைச் சுற்றிக்கிட்டு எதிரே வந்தாளாம். அலை அடங்கிய பின் தலை முழுக முடியுமா? அலை எப்பொழுது ஒழியும்? தலை எப்பொழுது முழுகிறது? அலை ஓய்ந்து கடலாடலாமா? அலை ஓய்ந்து கடல் ஆடுவது இல்லை. அலை கடலுக்கு அணை போடலாமா? அலை நிற்கப் போவதும் இல்லை; தம்பி தர்ப்பணம் செய்து வரப்போவதும் இல்லை. அலை போல நாக்கும், மலைபோல மூக்கும் ஆகாசம் தொட்ட கையும். அலை மோதும் போதே தலை முழுக வேண்டும். 1000 அலையும் நாய் பசியால் இறக்காது. அலைவாய்த் துரும்புபோல் அலைகிறது. அல்லல் அற்ற பருக்கை அமைதி தரும். அல்லல் ஒரு காலம்; செல்வம் ஒரு காலம். அல்லக் காட்டு நரி பல்லைக் காட்டுகிறது. அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம். அல்லவை தேய அறம் பெருகும். அல்லாத வழியால் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் இவை ஆகா. அல்லாதவன் வாயில் கள்ளை வார். அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல். 1010 அல்லி போல மிதப்பார் உப்புப் போலக் கரைவாரா? அவகடம் உள்ளவன் அருமை அறியான். அவகுணக்காரன் ஆகாசமாவான். அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு. அவசரக் கோலமென்று அள்ளித் தெளித்தாளாம். அவசரத்திலே கலியாணம்; சாவகாசத்திலே சங்கடம். அவசரத்தில் கடபொடா சட்டிக்குள் கை நுழையது. அவசரத்தில் கையைவிட்டால் அரிக்கண் சட்டியிலும் கை நுழையாது. (அண்டாவிலும்) அவசரத்தில் உபகாரமா? அவசரத்தில் குண்டு சட்டியிலும் கை நுழையாது. 1020 அவசரத்தில் செத்த பிணத்துக்கு பீச் சூத்தோடு மாரடிக்கிறாள். அவசரத்துக்கு பாபமில்லை. அவசரப்பட்ட மாமியார் ஆணச் சட்டியிலே கால் கழுவி னாளாம். (ஆணம் - குழம்பு) அவசரப்பட்ட மாமியார் மருமகனை அழைத்தாளாம். (கணவ னென்று) அவசரமாக உழப் போகிறேன்; சோற்றோடு கொழு கொண்டு வா என்றானாம். அவசாரி ஆனாலும் அதிட்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை வேண்டும். அவசாரி ஆமுடையான் ஆபத்துக் குதவுவானா? அவசாரி என்று ஆனைமேல் ஏறலாம்; திருடி என்று தெருவில் வரலாமா? அவசாரி போகவும் ஆசை இருக்கிறது; அடிப்பான் என்று பயமாய் இருக்கிறது. அவசாரியிலே வந்து பெருவாரியிலே போகிறது. 1030 அவதந்திரம் தனக்கு அந்தரம். அவதிக் குடிக்குத் தெய்வமே துணை. அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணிகவை இல்லை. அவத்தனைக் கட்டி வாழ்வதை விடச் சமர்த்தனைக் கட்டி அறுத்துப் போடலாம். அவப்பொழுதினும் தவப்பொழுது நல்லது. அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான். அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார். அவரவர் எண்ணத்தை ஆண்டவன் அறிவார். அவரவர் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான். அவரவர் பெற்ற பிள்ளை அவரவர்க்குப் பெரிது. 1040 அவரவர் மனசே அவரவர்க்குச் சாட்சி. அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும். அவரைக்கு ஒருகொடியும் அகம்படிக்கு ஒரு குடியும் (போதும்) அவரைக்கு ஒரு செடி ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை. அவரை போட்டால் துவரை முளைக்குமா? (நட்டால்) அவலக் குடித்தனத்தை அம்பலப் படுத்தாதே. அவலங் கெட்ட பூனை ஆற்றிலே குதித்ததாம். அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்க வேணுமா? அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான். அவலைச் சாக்கிட்டு உரலை இடிக்கிறது. 1050 அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கிறான். அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு. அவல் அவல் என்கிறது நெல்; மழை மழை என்கிறது புல். அவளுக்கானால் அவமானம் இவளுக்கானால் வெகுமானம். அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள். அவளுக்கு இவள் அழகாம்; இவளுக்கு அவள் அழகாம். அவளுக்கு எவள் ஈடு? அவளுக்கு அவளே சோடு. அவளுக்கு நிரம்பத் தளுக்குத் தெரியும். அவளுக்கு வந்தால் ஆனை; எவளுக்கும் வந்தால் பூனை. அவளைச் சொல்லி என்ன? அவள் ஆத்தாளைச் சொல்லணும். 1060 அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்? அவளை நினைப்பானேன்? கவலைப் படுவானேன்? அவளைப் பார் அழகு தேவதை. அவள் அழகுக்குத் தாய்வீடு ஒரு கேடா? அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள். அவள் சமத்து, பானை சந்தியிலே கவிழ்ந்தது. அவள் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது. அவள் சாட்டிலே திரை சாட்டா? அவள் பலத்தை மண்கொண்டொளித்தது. அவள் பேர் கூந்தலழகி; ஆனால் அவள் தலை மொட்டை. 1070 அவள் பேர் தங்கமாம்; காதில் பிச்சோலையாம். அவள் வாராள் சீதேவி, அப்பால் போ மூதேவி. அவளே இல்லையாம்; பிள்ளை ஐந்தாறாம். அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை. அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம். அவனுக்கும் இவனுக்கும் அசகசாந்தரம். அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது மேல். அவனே வைத்த தீயிற்கு ஆரைச் சொல்லி நோவது? அவனை நம்பிப் பாய் போட்டாளாம்; அவன் போனானாம் சத்திரத்திற்கு. அவன் அசையாது அணு அசையாது. 1080 அவன் அடி வைத்த இடம் பொடி சுட்டுப் போகும். அவன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்; அவன் அருள் அற்றால் அனைவரும் அற்றார். அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான். அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கு. அவன் அவன் தலையெழுத்தின்படி நடக்கும். அவன் அவன் நிழல் அவன் அவன் பின்வரும். அவன் அவன் பாடு அவனவனோட. அவன் அவன் மனசே அவனவனுக்குச் சாட்சி. அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. அவன் இட்டதே சட்டம். 1090 அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு ஒரு மொந்தை போடு. அவன் கையைக் கொண்டே அவன் கண்ணில் குத்தினான். அவன் செய்த வினை அவனைச் சாரும். அவன் சொன்னதே சட்டம். இட்டதே பிச்சை (போட்டதே) அவன் பார்ப்பான் என்றிருந்தால் எவன் பார்ப்பான்? அவன் பாட்டுக்கு எவன் தாளம் போடுவான்? அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால். அவன் பேச்சைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி. அவிக்கி சட்டியை விடமூடுகிற சட்டி பெரிதாக இருக்கிறது. 1100 அவிசாரிக்கும் ஆற்றில் விழுகிறவளுக்கும் காவல் போட முடியுமா? அவிசாரி என்று பெயர் இல்லாமல் ஐந்து பிராயம் கழித் தாளாம். அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை அவிசாரி பிள்ளை சபைக்கு உறுதி. அவிசாரி போனாலும் முகராசி வேண்டும்; அங்காடி போனாலும் கை ராசி வேண்டும். அவிட்டத்தில் பிறந்த தங்கச்சியை அந்நியத்தில் கொடுக்கக் கூடாது. அவிட்டத்தில் ஆண் பிறந்தால் தவிட்டுப் பானையெல்லாம் தனம். அவிட்டத்துப் பெண் தொட்டதெல்லாம் பொன். அவித்த பயறு முளைக்குமா? அவிழ் என்ன செய்யும் அஞ்சுகுணம் செய்யும், (அவிழ்தம்) பொருள் என்ன செய்யும், பூவை வசம் செய்யும். 1110 அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம். அவுசக் கண்ணி நெல்லிடித்தாளாம்; அன்றைக்குப் பிடித்த தாம் அடைமழையும் காற்றும். அவுசாரிக்கு ஆணையில்லை; திருடிக்குத் தெய்வமில்லை. அவுசாரி போனவ புருசனை நம்ப மாட்டாளாம். அவுசாரியாய்ப் போனாலும் அதிட்டம் வேண்டும்; முண்டச் சியாய்ப் போனாலும் முக ராசி வேண்டும். அழ அழச் சொல்லுகிறவன் வாழச் சொல்லுவான்; சிரிக்கச் சிரிக்கச் சொல்லுகிறவன் கெடச் சொல்வான். அழ அழச் சொல்லுவார் தன் மனிதர் (தமர்), சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் புறத்தியார் (பிறர்) அழகன் நடைக்கு அஞ்சான்; செல்வன் சொல்லுக்கு அஞ்சான். அழகான இரம்பை கொட்டுந் தொம்பை. அழகால் கெட்டாள் சீதை; வாயால் கெட்டாள் திரௌபதி. 1120 அழகிருந்தென்ன, அதிட்டம் இருக்க வேண்டும். அழகிலே பிறந்த பவளக் கொடி, ஆற்றிலே பிறந்த சாணிக் கூடை. அழகிலே பவளக் கொடி; அந்தத்திலே மொந்தை மூஞ்சி. அழகில்லாதவள் மஞ்சள் பூசினாள்; ஆக்கத் தெரியாதவள் புளியைக் கரைத்து ஊற்றினாள். அழகிற்கு மூக்கை அழிப்பார் உண்டோ அழகு, அடைத்த கதவுகளையும் திறக்கும். அழகு இருந்து அழும்; அதிட்டம் இருந்து உண்ணும். அழகு ஒழுகுது மடியிலே; கட்டடி கலயத்தை. அழகு ஒழுகுகிறது நாய் வந்து நக்குகிறது; ஓட்டைப் பானை கொண்டு வந்து பிடித்து வைக்க. அழகுக்காக மூக்கை அறுப்பாளா? 1130 அழகுக்கு அழகு அடக்கம். அழகுக்கு அணிகலம் அணிந்தால் ஆபத்துக்கு உதவும். அழகுக்கு அணிந்த நகை ஆபத்துக்கு உதவுமே. அழகுக்கு இட்டால் ஆபத்துக் குதவும். அழகு சோறு போடுமா? அதிட்டம் சோறு போடுமா? அழக் கொண்ட எல்லாம் அழப்போம். அழச் சொல்லுகிறவன் பிழைக்கச் சொல்லுவான். சிரிக்கச் சொல்லுகிறவன் கெடச் சொல்லுவான். அழித்துக் கிழித்துப் போட்டு வழித்து நக்கி என்று பெயரிட் டானாம். அழிந்த கொல்லையில் ஆனை மேய்ந்தாலென்ன? குதிரை மேய்ந்தாலென்ன? அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன? கழுதை மேய்ந்தாலென்ன? 1140 அழிந்தவள் ஆரோடு போனால் என்ன? அழிந்து பழஞ்சோறாய்ப் போய்விட்டது. அழிய உழுது அடர விதை. அழியாச் செல்வம் விளைவே ஆகும். அழியாத செல்வத்துக்கு அசுவம் வாங்கிக் கட்டு. அழிவழக்குச் சொன்னவன் பழிபொறுக்கும் மன்னவன். அழிவுக்கு முன்னால் அகந்தை. அழுகலுக்கு ஒரு புழுத்தல். அழுகள்ளன், தொழுகள்ளன், ஆசாரக் கள்ளன். அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பப்படாது. 1150 அழுகிற பிள்ளைக்கு அரிவாள் மணையை அண்டை கொடுத்தாளாம். அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு. அழுகிற பிள்ளைக்கு வாழைப் பழம். அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழு(கு)கிற வீட்டில் இருக் கலாகாது. அழுகிற வீட்டுக்குப் போனாலும் திருட்டுக் கை சும்மா இராது. அழுகிற வேளை பார்த்து அக்குளில் பாய்ச்சுகிறான். அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்பு கெலிப்பின் மேலும் தான். அழுகைத் தூற்றல் அவ்வளவும் பூச்சி. அழுகை மூஞ்சி நெல்லிடித்தாளாம்; அடித்ததாம் காற்றும் மழையும். அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போட. 1160 அழுகையும் சிணுங்கலும் அம்மான் வீட்டில்; சிரிப்பும் களிப்பும் சிற்றப்பன் வீட்டில். அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம். அழுக்குச் சீலைக்குள் மாணிக்கம். அழுக்கு தீரக் குளித்தவனும், ஆசை தீரக் கூடியவனும் இல்லை. அழுக்குத் துணிக்குள் சாயம் தோய்ப்பது போல. அழுக்கை அழுக்கு கொல்லும்; இழுக்கை இழுக்குக் கொல்லும். அழுக்கைத் துடைத்து மடியில் வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது. அழுத கண்ணீரும் சிந்திய மூக்கும். அழுத பிள்ளை உரம் பெறும். அழுத பிள்ளை பசியாறும். 1170 அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம். அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை. அழுதவனுக்கு அகங்காரம் இல்லை. அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம். அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும். அழுது அழுது பெற்றாலும் அவள்தான் பெற வேண்டும். அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும். அழுத்தக்காரன் சந்தைக்குப் போனால் புழுத்த கத்தரிக் காயும் கிடைக்காது. அழுத்தக்காரன் புழுத்த கத்தரிக்காய் வாங்கியது போல. 1180 அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சம் எவர்க்கும் உதவுவான். அழுத்தி அளந்தால் அரைப்படிப்பால் கால்படியாகுமா? அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுப விக்க ஒட்டுமா குழந்தை? அழுவார் அழுவார் தம் துக்கம் அசலார்க்கு அல்ல. அழுவார் அழுவார் தம் துக்கம், பாடி அழுவார் பலதுக்கம். அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவர் அற்ற சுடலையும் (சுடுவார்). அழையாத வீட்டில் நாய்போல் நுழையாதே. அழையாத வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது. அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி. அழையா வீட்டிற்கு நுழையாத விருந்து. 1190 அளகாபுரி கொள்ளையானாலும் அதிட்ட ஈனனுக்கு ஒன்று மில்லை. அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு. அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும். அளக்கிற நாழி அகவிலை அறியுமா? அளந்த அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும். அளந்த நாழி கொண்டு அளப்பான். அளந்த மரக்கால் அவரைப் பந்தலில் இருக்கு. அளந்தால் ஒரு சாணில்லை; அரிந்தால் ஒரு சட்டி காணாது. அளவான உறக்கம் அருமையான அவிழ்தம். அளவிட்டவரைக் களவு இடலாமா? 1200 அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அளவு அறிந்து அளித்து உண். அளவு அறிந்து உண்போன் ஆயுள் நீளும். அளவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுது இல்லை. அளறு உழுதவன் ஆண்டான்; மணல் உழுதவன் மாண்டான். அளுக்கு வீட்டு நாய் உளுக்கையிலே; ஐயா வீட்டு நாய் சவுக்கையிலே. அளுங்கு பிடி பிடித்தாற் போல. அள்ளப் போனாலும் அதிட்டம் வேண்டும். அள்ளரிசி புள்ளரிசி அவளானால் தருவாள்; அறியாச் சிறுக்கி அவள் என்ன தருவாள்? அள்ளாது குறையாது; இல்லாது பிறக்காது. 1210 அள்ளாது குறையாது; சொல்லாது பிறவாது. அள்ளி அமுக்கினால் அற்ப ஆயுள். அள்ளிக் குடிக்கத் தண்ணீரில்லை; அவள் பேர் கங்காதேவி. அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன். அள்ளிக் கொண்டு போகும் போது கிள்ளிக் கொண்டு வருகிறான். அள்ளிக்கோ அம்மாளு என்றால் தள்ளிவிடு நாய் மாமு என்றான். அள்ளித் தந்தால் ஐயா, சாமி! இறுக்கிப் பிடித்தால் ஈயாக் கருமி. அள்ளித் துள்ளி அரிவாள் மணையில் விழுந்தாளாம். அள்ளிப் பால் வார்க்கையிலே சொல்லி வார்த்தது. அள்ளிய காரும் கிள்ளிய சம்பாவும். 1220 அள்ளி நடவேணும் சம்பா; கிள்ளி நடவேணும் பொற்சாலி. அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது. அள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் கிள்ளுகிறவன் இடத்தில் இருக்கக் கூடாது. அள்ளும்போது கிள்ளுவது. அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம். அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுக்க பாயில்லை. அறக்கல்வி முழுமொட்டை. அறக் காய்ந்தால் வித்துக்கு ஆகாது. அறக் குழைந்தாலும் குழைப்பாள்; அரிசியாய் இறக் கினாலும் இறக்குவாள். அறக் கூர்மை முழுமொட்டை. 1230 அறங்கையும் புறங்கையும் நக்குதே (அகங்கையும்) அறச் செட்டு முழு நட்டம். அறத்துக்கும் பாடி கூழுக்கும்பாடி. அறத்தால் வருவதே இன்பம். அறத்தில் திரியாப் படர்ச்சி வழிபாடே. அறத்திற்குக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கிறாயா? அற நனைந்தவருக்குக் குளிர் எங்கே வந்தது? அற நனைந்தவருக்கு கூதல் என்ன? அறம் தப்பியவர் அழிவர். அறப்படித்த பூனை காடிப்பானையில் தலையை விடும். 1240 அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தது போல. அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்; வாங்கவும் மாட்டான். அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார். அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை. அறப்பேசி உறவாட வேண்டும். அறமுறுக்கினால் அற்றுப் போகும். அறமுறுக்கினால் கொடி முறுக்குப்படும். அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும். அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறு. அறவடித்த முன்சோறு கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல. 1250 அறவுங் கொடுங்கோல் அரசன் கீழ்க்குடியிருப்பிற் குறவன் கீழ்க் குடியிருப்பு மேல். அறம் கெட்ட நெஞ்சு திறம் கெட்டு அழியும். அறம் செய்யின் மறம் கெடும். அறம் பெருக மறம் தகரும். அறம் பொருள் இன்பம் எல்லார்க்கும் இல்லை. அறம் வெல்லும் பாவம் தோற்கும். அறிஞர்க் கழகு அகத்துணர்ந்து அறிதல். அறிஞர்க் கழகு கற்றுணர்ந்து அடங்கல். அறிஞர் தோற்பன கொண்டு அவை புகார். அறிந்த ஆண்டையென்று கும்பிடப் போனால், உங்கள் அப்பன் பத்து பணம் கொடுக்க வேண்டும், கொடு என்றான். 1260 அறிந்ததையும் ஐந்து பேரிடம் கேள். அறிந்த பார்ப்பான் சிநேகிதன்; ஆறு காசுக்கு மூன்று தோசையா? அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற்போல. அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா? அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேண்டும். (தீர்க்க) அறிந்தும் கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்து புண்ணாயிற்று. அறிய அறியக் கெடுவார் உண்டோ? அறியாக் குளியாம் கருமாரிப் பாய்ச்சல். அறியாத ஊருக்குப் புரியாத வழிகாட்டினாற் போல. அறியாத நாளெல்லாம் பிறவாத நாள். அறியாப் பாவம் பறியாய்ப் போயிற்று. அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு. 1210 அறியாப் பிள்ளை புத்தியைப் போல. அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக் கவா? அறியாமை தொலைந்தால் ஆக்கம் தானே வரும். அறியாவிட்டால் அசலைப் பார்; தெரியாவிட்டால் தெருவைப் பார். அறிவாய்க்கு வாய் பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது. அறிவால் உணரும்போது அனுமானம் எதற்கு? அறிவாளிக்கு ஆகாயமும் எளிது; முட்டாளுக்கு சிலந்தி வலையும் வலிது. அறிவிலே விளையுமா? எருவிலே விளையுமா? அறிவில்லார் சிநேகம் அதிகம் உத்தமம். அறிவினும் பெரிது ஆர்வம். 1220 அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே. அறிவு அற்றவனுக்கு ஆண்மை ஏது? அறிவு அற்றவனுக்கு ஆர் சொன்னால் என்ன? அறிவு ஆர் அறிவார்; ஆய்ந்தவர் அறிவார். அறிவு இருந்தென்ன அதிட்டம் வேண்டும். அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலுமில்லை. அறிவு இல்லாதவன் ஆரிடமும் தாழ்வு படுவான். அறிவு இல்லாதவனுக்கு வேலை ஓயாது. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. 1230 அறிவு உடையார் ஆவது அறிவார். அறிவு உடையாரை அடுத்தாற் போதும். அறிவு உடைய ஒருவனை அரசனும் விரும்புவான். அறிவு கெட்டவனுக்கு ஆர் சொல்லியும் என்ன? அறிவு கெட்ட நாய்க்கு அவலும் சர்க்கரையுமா? அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும். அறிவு புறம்போய் ஆடினது போல. அறிவு பெருத்தோன் அல்லல் (நோய்) பெருத்தோன். அறிவு மனத்தை அரிக்கும். அறிவேன், அறிவேன் ஆலிலை புளியிலை போலிருக்கும் என்றானாம். 1240 அறிவைக் கொண்டவள் சிங்காரி; அகந்தை கொண்டவள் அகங்காரி. அறிவை வளர்க்க அரசமரத்தடி. அறுகங் கட்டைபோல் அடிவேர் துளிர்க்கிறது. அறுகங் கட்டையும் ஆபத்துக் குதவும். அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்; அடங்காப் பெண்ணைக் கொண்டவனும் கெட்டான். அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம். அறுக்க ஒரு யந்திரம்; அடிக்க ஒரு யந்திரம். அறுக்க தாலி இல்லை; சிரைக்க மயிரும் இல்லை. அறுக்கத் தெரியாத முட்டாளுக்கு ஐம்பது அரிவாள். அறுக்கப் பொறுக்கப் பாடுபட்டுக் குடிக்கக் கஞ்சியில்லை. 1250 அறுக்கப் பொறுக்கப் பாடுபட்டும் படுக்கப் பாயில்லை. அறுக்க மாட்டாதவன் கையிலே ஐம்பத்தெட்டு கருக்கரி வாள். (இடுப்பிலே) அறுக்கிற அறுப்பை விட்டுவிட்டுச் சிரிக்கிற சிற்றப்ப னோடு போனாளாம். அறுக்கு முன்னே புடுக்கைத் தா; தீக்கு முன்னே தோலைத் தா. அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும். அறுகு முளைத்த கொல்லையும் அரசரோடு எதிர்த்த குடியும் ஈடேறாது. அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேட்டை. அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன். அறுதலி முண்டைக்கு அடுத்த வீட்டுக்காரன்மேல் கண். அறுத்த கைக்குச் சுண்ணாம்பு கொடுக்கமாட்டான். 1260 அறுத்தவளுக்கு அறுபது நாழிகையும் வேலை. அறுத்துக் கொண்டதாம் கழுதை எடுத்துக் கொண்டதாம் ஓட்டம். அறுத்து ஆற்ற வேண்டிய கட்டி. ஐயோ என்றால் ஆறிப் போகுமா? அறுத்துக் கொண்டு போன மாட்டுக்கு தெற்கென்ன? வடக்கென்ன? அறுந்த விரலுக்கு சுண்ணாம்பு கிடைக்காது. அறுநான்கில் பெற்ற பிள்ளையும் ஆவணி ஐம்மூன்றில் நடுகையும் அனுகூலம். அறுபது அடிக்கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்க வேண்டும். அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு. அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம். அறுபது தேங்காயை எழுபது குயவர் சுமந்தது போல. 1270 அறுபது நாளைக்கு எழுபது கந்தை. அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரைவயிற்றுக்கு அன்னம் இல்லை. அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம். அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம். அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. (அறுவடை) அறுவாய்க்கு வாய் பெரிது, அரிசிக்குக் கொதி பெரிது. அறைக் காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான். அறைக்கினும் சந்தனம் தன்மணம் மாறாது. அறைக்கீரை புழுத் தின்னாதவனும் அவசாரிகையில் சோறுண்ணாதவனும் இல்லை. அறைக்கீரை போட்டால் சிறுகீரை முளைக்குமா? 1280 அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும். (ஆடித்தான்) அறையில் இருந்த பேர்களை அம்பலத்தில் ஏற்றுகிற புரட்டன். அறையில் சொன்னது அம்பலத்துக்கு வரும். அறையில் நடப்பது அம்பலத்துக்கு வரலாமா? அறைவீட்டுச் செய்தி அம்பலத்தில் வரும். அற்ப அறிவு அல்லற் கிடம். அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும். அற்ப உறவு ஆயுள் துயரம். அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோசம் வந்தாலும் வருமா? (பொன் கொடுத்தாலும்) அற்ப சகவாசம் பிராண சங்கடம். 1290 அற்ப சுகம் கோடி துக்கம். அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டால் திருக்குளத்தில் போட்டுத் தேடி எடுக்குமாம். அற்பத்திற்கு அழகு குலைகிறதா? அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும். (அறைத்) அற்பப் படிப்பு ஆபத்தை விளைவிக்கும். அற்பனுக்கு பவிசு வந்தால் அடைமழையில் கோடைக் கானல் போவான். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். அற்பன் கை ஆயிரம் பொன்னினும் சற்புத்திரன் கைத் தவிடு நன்று. அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான். அற்றது பற்றெனில் உற்றது வீடு. 1300 அற்றத்துக்கு உற்ற தாய். அற்ற குற்றம் (கேடு, பழுது) பார்க்க ஆளில்லை. அனந்தத்துக்கு ஒன்றாய் உறையிட்டாலும் அளவிடப் போகாது. அனற்றை இல்லா ஊரிலே வண்ணார் இருந்து கெட்டார்கள். அனாதைக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? திருமாளிகையில் கிடந்தால் என்ன? அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும். (தெளிந்தால், ஔஷதம்) அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம். அன்பின் பணியே இன்ப வாழ்வு. அன்பின் உறைவிடமே அன்னை. அன்பு அற்ற மாமியாருக்குக் கும்பிடுகிறதும் குற்றந்தான். 1310 அன்பு அற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே. அன்பு இருக்கும் இடம் அரண்மனை. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்பு இல்லாக் கூழும் இன்பம் இல்லா உடன்பிறப்பும். அன்பு இல்லாத தாயும் அறிவு இல்லா மகனும் இன்பம் இல்லாத உடன்பிறப்பும் எதற்குப் பயன்? அன்பு இல்லாதவர்க்கு ஆதிக்கம் இல்லை. அன்பு இல்லாதவிடத்து அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகுமா? அன்பு இல்லாள் இட்ட அமுது ஆகாது. அன்பு உடையானைப் பறிகொடுத்து அலையும்போது அசல் வீட்டுக்காரன் வந்து அழைத்த கதை. அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான். 1320 அன்பு உள்ள குணம் அலையில்லா ஆறு. அன்பு குறைந்து போனால் தவறு தடியாகத் தெரியும். அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை. அன்பும் சிவமும் இரண்டல்ல ஒன்றே. அன்பே சிவம்; சிவமே அன்பு. அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம். அன்பே மூவுலகுக்கும் அரசன். அன்றாடம் சோற்றுக்கு அல்லாடி நிற்கிறது. அன்றாடும் சாவார்க்கு அழுவாருமில்லை; நித்தம் சாவாருக்கு நீர் பிழிவாருமில்லை. அன்று அடிக்கிற காற்றுக்குப் படல் கட்டிச் சாத்தலாம். 1330 அன்று அற ஆயிரம் சொன்னாலும் நின்ற ஒரு காசு பெரிது. அன்று இறுக்கலாம்; நின்று இறுக்கலாகாது. அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா? அன்று கட்டி அறுத்தாலும் ஆக்கமுள்ள ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும். அன்று கண்டதை அடுப்பில் போட்டு ஆக்கின பானையைத் தோளில் போட்டுக் கொண்டு திரிகிறதுபோல். அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை. அன்று கழி; ஆண்டு கழி. அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது. அன்று குடிக்கத் தண்ணீரில்லை; ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம். அன்று கொள், நின்று கொள், என்றும் கொள்ளாதே. 1340 அன்று தப்பினால் ஆறு மாதம். அன்று தின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆகுமா? அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல். அன்று பார்த்ததற்கு அழிவில்லை. அன்றும் இல்லை காற்று; இன்றும் இல்லை குளிர். அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல். அன்று விட்டகுறை ஆறு மாதம். அன்றைக்கு அறுத்த கார்; ஆறு மாதச் சம்பா. அன்றைக்கு ஆடை, இன்றைக்குக் கோடை, என்றைக்கு இடையன் தரித்திரம். (குடை) அன்றைக்கு ஆடை, இன்றைக்குக் கோடை, என்றைக்கு விடியும் முடியும் பீடை. 1350 அன்றைக்கு எழுதினதை அழித்தெழுதப் போகிறானா? அன்னக் காவடிகள் எங்கே இருக்கும் என்றால் குன்னக் குடியில் என்பார். அன்னச் சுரணை அதிகமானால் அட்சர சுரணை குறையும். அன்னதானம் எங்குண்டு; அரசன் அங்கு உண்டு. அன்னதானத்திற்கு நிகர் என்ன தானம் இருக்கிறது? அன்ன நடைக்கு ஆசைப் பட்டு தன்னடையும் போயிற்றாம். (உள்ளநடையும்) அன்னநடை நடக்க தன் நடையும் போயிற்றாம். அன்னப் பாலுக்குச் சிங்கியடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரைத் தேடுகிறான். அன்னப்பிடி வெல்லப்பிடி ஆயிற்று. அன்னம் அதிகம் தின்பானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். 1360 அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும். அன்னம் முட்டானால் எல்லாம் முட்டும். அன்ன மயம் இன்றிப் பின்னை மயம் இல்லை. அன்னிய மாதர் அவதிக்கு உதவுவாரா? (உதவார்) அன்னுக் குத்தி வாசலிலே நின்னு மழை பெய்தாம்; அவுசாரி வாசலிலே முள்ளு மழை பெய்யுதாம். அன்னைக்கு உதவாதவன் ஆருக்கும் உதவான். அன்னைக்குப் பின் பெற்ற அப்பன் சிற்றப்பன். அன்னை செத்தால் அப்பன் சிறப்பான். அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 1370 அன்னையொடு அறுசுவை போம்.  ஆ ஆ ஆ என்பவருக்கு என்ன? அன்னம் படைப்பவர்க்கல்லவா தெரியும். ஆ என்ற ஏப்பமும் அலறிய கொட்டாவியும் ஆகா. ஆ என்று போனபிறகு அள்ளி இடுகிறதா? ஆ ஓ என்றால் ஐயாவோ என்கிறான். ஆகடியக் காரன் போகடியாய்ப் போவான். ஆகட்டும் என்பவன் அவதிப்பட வேண்டும். ஆகவேண்டும் என்றால் காலைப்பிடி; ஆகாவிட்டால் கழுத்தைப்பிடி. ஆகாசக் கோட்டை கட்டுகிறதா? ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்லுகிறேன்; என்னை ஆற்றுக்கு அப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு. 1380 ஆகாசத்துக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலை மேலே. ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான். ஆகாதக் காரியத்திற்கு அண்ணனைக் கேளு ஆகாத காரியத்திற்குப் போகாதே. ஆகாதது போகாததுக் கெல்லாம் ஆளுக்கொரு நாளைக்கு வேணுமாம் கட்டைக்கு. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு; அதிலும் கெட்டது குருக்களுக்கு. ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை வீட்டுக் காரனை என்ன செய்யும்? ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் வேண்டாம். (தியாச்சியம்) ஆகாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம். ஆகாத மாமியார்க்குக் கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம். 1390 ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக் கொள். ஆகாதவனுக்கு ஆயிரம் காசிலும் ஆகாது.. ஆகிறவனுக்கு அரைக்காசிலும் ஆகும். ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும். ஆகாதவன் மூத்திரம் ஆற்றோடு போனால் என்ன? குளத் தோடு போனால் என்ன? ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அப்பனையும் ஆத்தாளையும் கொல்லுமே யொழிய, பஞ்சாங்கம் சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்? ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம்; அட்டத் தரித் திரனுக்குப் பெண்ணும் பிள்ளையும். ஆகாத்தியக்காரனுக்குப் பிரமகத்திகாரன் சாட்சியா? ஆகாயத்தில் போன சனியனை ஏணி வைத்து இறக்கி னானாம். ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா? ஆகாயத்தில் கூட அரைக் குழிக்கு அவகாசம் இல்லை. 1400 ஆகாயத்தில் போகிற சனியினை ஏணி வைத்து இறக்கின மாதிரி. ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல. ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல. ஆகாயத்தை வடுப்படக் கடிக்கிறதா? ஆகாயத்தை வில்லாக வளைப்பான்; மணலைக் கயிறாகத் திரிப்பான். ஆகாயப் புரட்டனுக்கு அந்தரப் புரட்டன் சாட்சி சொன் னானாம். ஆகாயம் எல்லாம் மீன்களாய் இருந்தாலும் ஒரு நிலாவுக்கு ஈடாகுமா? ஆகாயம் பார்க்கப் போயும் இடுக்கு முடுக்கா? ஆகாயம் போட்டது; பூமி ஏந்திற்று. ஆகாய மட்டும் அளக்கும் இரும்புத் தூணைச் செல்லரிக் குமா? 1410 ஆகாயம் மணல் கொழித்தால் அடுத்தாற்போல் மழை. ஆகாய வல்லிடி அதிர இடிக்கும். ஆகா வழியும் வேகாக் குசக்கலமும். ஆகிற காலத்தில் அடியாளும் பெண்பெறுவாள். ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும். ஆகிற காலத்தில் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம். ஆகிற காலமெல்லாம் அவிசாரியாடி சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம். ஆகிற குடி அரைக்காசால் ஆகும். ஆகிற சில ஆகட்டும்; அண்டைவீட்டின் மேல்சீட்டு ஆகட்டும். ஆகிறது அரைக்காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது. 1420 ஆகிறதும் பெண்ணாலே; அழிகிறதும் பெண்ணாலே. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் ஆகான். (விடியாது) ஆகுங்காய் பிஞ்சிலே தெரியும். ஆகுங்காலம் ஆகும்; போகுங்காலம் போகும். ஆகுங்காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போலச் சேரும். ஆக்க அறியாவிட்டால் புளியைக் கரை; அழகு இல்லா விட்டால் மஞ்சளைப் பூசு (தெரியாவிட்டால்) ஆக்கங்கெட்ட குரங்கே மரத்தைவிட்டு இறங்கே. ஆக்கங்கெட்ட பொம்பளை சந்தைக்குப் போனாளாம்; அங்கேயும் ஆம்பளைக்குப் பஞ்சமாம். ஆக்கங் கெட்ட மூதிக்கு ஆடி என்ன? தீபாவளி என்ன? ஆக்கப் பிள்ளை நமது வீட்டில்; அடிக்கிற பிள்ளை எதிர் வீட்டில். 1430 ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கக் கூடாதா? (முடியாதா?) ஆக்கப் பொறுத்த தெய்வம் ஆறப் பொறுக்காதா? ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க வில்லையா? ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறானா? ஆக்க மாட்டாத அழுகல் நாரிக்குத் தேட மாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம். ஆக்க மாட்டாத பெண்ணுக்கு அடுப்புச் சட்டி பத்தாம். ஆக்க மாட்டான்; அரிய மாட்டான்; அருகே இருந்து அடைப் பங்கட்டுவான் ஆக்க மாட்டேன் என்றால் அரிசியைப் போடு. ஆக்கமும் கேடும் அனைவர்க்கும் உண்டு. 1440 ஆக்கம் அரை விலை; தூக்கம் முழு விலை. ஆக்கம் கெட்ட அக்காள் மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும். ஆக்கம் கெட்ட அண்ணன் வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது; வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது. ஆக்கம் கெட்ட அம்மாவுக்கு ஆண்டுக்கு இரண்டு பிள்ளைகள். ஆக்கம் பெருக பெருகத் தூக்கம் தொலையும். ஆக்க வில்லை, அரிக்க வில்லை, மூக்கெல்லாம் முழுக் கரியாக இருக்கிறதே. ஆக்க வேண்டாம் அரிக்க வேண்டாம் பெண்ணே! அருகி லிருந்தால் போதுமடி கண்ணே. ஆக்களைக் காக்கும் ஆயன் போல மக்களைக் காப்பவன் அரசன். ஆக்கி அரைத்துப் போட்டவள் எல்லாந்தான் கேட்பாள்? (அரித்து) ஆக்கி அரித்துப் போட்டவள் கெட்டவள்; வழிகாட்டி அனுப்பினவள் நல்லவள். 1450 ஆக்கிக் குழைப்பேன்; அரிசியாய் இறக்குவேன். ஆக்கிப் படைத்தால் ஆள் ஆள், தூக்கி எறிந்தால் தூள் தூள். ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கி திரிசமம் பண்ணாதே. ஆக்கிப் போட்டால் ஆளும் பேரும். ஆக்கி வைத்த சோறும் ஆம்பளை கோவமும் ஆறித்தானே தீரும். ஆக்கி வைத்த சோற்றுக்கு ஆளா பஞ்சம்? ஆக்கினவள் கள்ளி; உண்பவன் சமர்த்தன். ஆக்கினையும் செங்கோலும் அற்றது அரைநாழிகையிலே. ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். ஆக்குகிறவள் அளவுகோல் அடுப்படி ஆகும். 1460 ஆக்குகிறவள் சலித்தால் அடுப்பு பாழ்; குத்துகிறவள் சலித்தால் குந்தாணி பாழ். ஆக்குகிறவள் சிரித்தால் ஆக்கியது அறுசுவை. ஆக்கூர் அடிவாழை; அண்ணன் தம்பி பெருவாழை. ஆக்கை விழுந்தால் அய்யோ குய்யோதான். ஆங்காரத்தாலே அழிந்தவர் அனந்தம் பேர். ஆங்காரம் வந்த தென்று அரிவாள்மணையில் ஏறினால். ஆங்காரம் வந்துவிட்டால் போங்காலம் வந்தாச்சு. ஆங்காலத்தில் ஆடித் தொலைத்தால் , போங்காலத்தில் பொங்கவா செய்யும்? ஆங்காலத்துக்குச் சாங்காலமும் இல்லை; போங்காலமும் இல்லை. ஆங்காலமும் போங்காலமும் ஆர் அறிவார்? 1470 ஆங்காலம் ஆகும், போங்காலம் போகும். ஆசரித்த தெய்வமெல்லாம் அடியோட மாண்டது. ஆசன வாய்க்கு ஆகாயத் தாமரை. ஆசாரக் கள்ளனை அடுப்படியில் பார். ஆசாரப் பூசைச்சட்டி அதன்மேல் கவிச்சுச் சட்டி. ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப், பாசாங்கு பேசி பதி இழந்து போனேனே. ஆசாரிப் பெண்ணுக்கு அழகா பார்க்கிறது? ஆசானுக்கும் அடைவு தப்பும், ஆனைக்கும் அடி சறுக்கும். ஆசிரியர் சொல் அம்பலச் சொல். ஆசிரியர் சொன்னதை அப்படியே நம்ப வேண்டுமா? 1480 ஆசிரியர் பேச்சு அரசனையும் வெல்லும். ஆசிரியன் தவறி நடக்கலாமா? அகராதியில் பிழை இருக் கலாமா? ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை. ஆசுத்துமா கண்டவனுக்கு ஆயுசு நூறு. ஆசை அண்டாதானால் அழுகையும் அண்டாது. ஆசை அண்டினால் அழுகையும் அண்டும். ஆசை அதிகமுள்ளவனுக்கு ரோசமிருக்குமா? ஆசை அவள்மேலே. ஆதரவு பாய் மேலே. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூ று நாளும் போனால் துடைப்பக் கட்டை. ஆசை இருக்கு அரசாள; திறமை இருக்கு கழுதை மேய்க்க. 1490 ஆசை இருக்கிறது தாசில் பண்ண; அமிசை இருக்கிறது கழுதை மேய்க்க. ஆசை உண்டானால் பூசை உண்டு. ஆசை உள்ள இடத்தில் பூசையும்; அன்பு உள்ள இடத்தில் தென்பும். ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு. ஆசை உறவு ஆகுமா? ஆதரவு சோறு ஆகுமா? ஆசை கடுக்குது; மானம் தடுக்குது. ஆசைக் கணவன் ஆயிரம் மடங்கு உசத்தி. ஆசை காட்டி மோசம் செய்கிறதா? ஆசைக் காரனுக்கு ரோசமில்லை. ஆசைக்கு ஆசை பேராசை. 1500 ஆசைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளை கையிலே விதை யைக் கொடுத்தானாம். ஆசைக்கு இல்லா வாழைப்பழம் வாசலெல்லாம் கட்டித் தொங்குதாம் ஆசைக்கு ஒரு பெண்; அடிக்கிளைக்கு ஒரு ஆண். ஆசைக்கு ஒரு பெண்; ஆதிக்கு ஒரு ஆண். ஆசைக்கு முடிவு ஆறடிதான். ஆசைக்குகோர் அளவில்லை. ஆசைதீரக் கூடினவனும் இல்லை; அழுக்குத் தீரக் குளித் தவனுமில்லை. ஆசை தீர்ந்தால் அல்லல் தீரும். ஆசையும் நாசமும் அடுத்து வரும். ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது? 1510 ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் ஆண் பிள்ளை அடுத்த கண்ணும் பாரான். ஆசைப்பட்டு அவிசாரி போனாளாம்; அடைமழை காற்று அடித்துக் கொண்டு போயிற்றாம். ஆசை பெரிதோ? ஆனை பெரிதோ? (மலை) ஆசை பெருக அலைச்சலும் பெருகும். ஆசைப்பட்டு மோசம் போகாதே. ஆசைப்படுவது அவ்வளவும் துன்பம். ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று. ஆசை மருமகன் தலைபோனாலும் ஆதிகாலத்து உரல் போகக் கூடாது. ஆசையினால் அல்லவோ பெண்களுக்கு மீசை முளைப்ப தில்லை. ஆசையெல்லாம் தீர அடித்தாள் முறத்தாலே. 1520 ஆசை ரோசம் அறியாது. ஆசைவிட்ட ஆண்டி பேராண்டி. ஆசை வெட்கம் அறியுமா? ஆசை வெட்கம் அறியாது; அநியாயம் எதுவும் அறியாது. ஆசை வைத்தால் நாசம். ஆசை வைத்தவன் அடுகிடை கிடந்தானாம்; மீசை வைத்தவன் மினுக்கிக் கிட்டானாம். ஆச்சாபுரக் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன் பறைச்சேரி நாயோடே பங்கமழிகிறான். ஆச்சா விதைத்தால் ஆமணக்கு விளையுமா? ஆச்சானுக்குப் பீச்சான்; மனிதனுக்கு உடன் பிறந்தான். ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் படித்துப் பேசாதே. (மாட்டாத) 1530 ஆடத் தெரி; பாடத் தெரி; அப்படியே அடங்கத் தெரி. ஆடத் தெரியாத தேவடியாள் வாசல் கோணல் என்றாளாம். (கூடம், தெரு, வீதி) ஆடத் தெரியாதவள் அரங்கம் கட்டி ஆடினாளாம். ஆடப் பாடத் தெரியாதவருக்கு இரண்டு பங்குண்டு என்ற கதை. ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல. ஆடமாட்டேன் பாட மாட்டேன் குடம் எடுத்துத் தண்ணீர்க்குப் போவேன். ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டாற் போல. ஆடவர்க்கு வன்மையும் பெண்டிர்க்கு மென்மையும். ஆடவன் செத்தபின்பு அறுதலிக்குப் புத்திவந்தது. ஆடவிட்டு நாடகம் பார்க்கிறதா? 1540 ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது. ஆடாச்சாதி ஊடாச் சாதியா? ஆடாத கூத்தாடினும் காரியத்தில் கண்ணாயிரு. ஆடாதான் மத்தளத்தைப் பழித்தானாம். ஆடாது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாயிற்று. (அறுத்தாயிற்று) ஆடாதும் ஆடி ஐயனார்க்குக் காப்பும் அறுத்தாயிற்று. ஆடாதே ஆடாதே கம்பங் கதிரே; அதற்கா பயந்தாய் சிட்டுக் குருவி. ஆடாதொடையும் ஐந்து மிளகும் தின்றால் பாடாத வாயும் பாடும். அடி அடி போடாதே; கூனி குடிபோகாதே, அடி அரைக்குழி; ஆவணி முழுக்குழு; புரட்டாசி பெரும் போக்கு. 1550 ஆடி அவரை தேடிப் போடு. ஆடி அழைக்கும்; தை தள்ளும். ஆடி ஆவணிக் கீழைக் காற்றும் ஐப்பசி மேல் காற்றும் அடித்தால் சொப்பனத்திலும் மழை இல்லை. ஆடி ஆனை வால் ஒத்த கரும்பு; புரட்டாசி பதினைந்தில் விதைத்த வித்து. ஆடி இருந்த இடமும் அகமுடையான் இருந்த இடமும் உருப்படா. ஆடி ஒருகுழி அவரை போட்டால் கார்த்திகை ஒரு சட்டி கறி. ஆடி ஓய்ந்தால் அங்காடிக்கு வரவேண்டும். ஆடிக் கரு அழிந்தால் மழைகுறைந்து போம். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும். ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும். 1560 ஆடிக் காற்றில் அம்மியே பறக்கையில் ஆலிலை எந்த மூலை? ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது எச்சிலை எம் மாத்திரம்? ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவம் பஞ்சு என்ன சேதி என்று கேட்டதாம். ஆடிக்காற்றில் அம்மி பறக்கும்போது இலவம் பஞ்சு எம் மாத்திரம்? (எந்த மூலை) ஆடிக் காற்றில் ஆனையும் அசையும் போது கழுதைக்கு என்ன கதி? ஆடிக் காற்று நாடு நடுக்கும். ஆடிக் கீழ்க்காற்றும் ஐப்பசி மேல்காற்றும் அடித்தால் அவ்வாண்டும் இல்லை, மறு ஆண்டும் இல்லை மழை. ஆடிக்கு அடைபட்டவளே; அமாவாசைக்கு வெளிப் பட்டவளே. ஆடிக்கு ஒரு தடவை; அமாவாசைக்கு ஒரு தடவை. ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒருகாய் காய்க்கும். 1570 ஆடி கழிந்த எட்டாம்நாள் கோழி அடித்துக் கும்பிட்டானாம். ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடித்துச் செருப் பால் அடி! ஆடிக்குத் தப்பிய கோழியும், மாரிக்குத் தப்பிய மகவும் உறுதி. ஆடிக்கு வா என்றால் அமாவாசைக்கு வந்தானாம். ஆடிச்செவ்வாய் அம்மனை வணங்கு. ஆடிச் செவ்வாய் தேடிக்குளி; அரைத்த மஞ்சளை தேய்த்துக் குளி. ஆடி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்தது. ஆடி பிறந்தால் ஆட்டம் பிறக்கும். ஆடி பிறந்தால் போடி பிறந்தகத்துக்கு. ஆடிப் பட்டத்து மழை தேடிப் போனாலும் கிடைக்காது. 1580 ஆடிப் பட்டம் தேடி விதை. ஆடிப் பண்டிகை தேடி அழை. ஆடிப் பிள்ளை (தென்னை) தேடிப் புதை. ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற. ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும். ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம். (வலி) ஆடி மாதம் அடி வைக்கக் கூடாது. ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய் காய்க்கும். ஆடிய காலும் பாடிய நாவும் சும்மாவிராது. ஆடிய கூத்தும் பாடிய இராகமும் சும்மா இரா. 1590 ஆடியில் ஆனை ஒத்தகிடா, புரட்டாசியில் பூனை போலாகும். ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பயன் இல்லை. ஆடியில் விதை போட்டால் கார்த்திகையில் காய் காய்க்கும். ஆடி வாழை தேடி நடு. ஆடி விதை தேடிப் போடு. ஆடி விதைப்பு; ஆவணி நடவு. ஆடி வெப்பல் ஆட்டுக் கிடைக்குச் சமம். ஆடு அடித்த வீட்டில் நாய் காத்தாற் போல. ஆடு அடித்தால் அந்தப் பக்கம்; அகப்பை தட்டினால் இந்தப் பக்கம். ஆடு அடித்தாலும் அன்றைக்குக் காணாது; மாடு அடித் தாலும் மறுநாள் காணாது. 1600 ஆடு அப்பூ; ஆவாரை முப்பூ. ஆடு அறியுமோ அங்காடி வாணிகம்? ஆடு அறுக்கிறவனை நம்பும். ஆடு அறுபது என்பானாம்; வெள்ளாட்டைக் கண்டால் விலுக்கு விலுக்கு என்பானாம். ஆடு ஆடு என்று போனால் மாடு மாடு என்று படுக்கிறது. ஆடு இருக்க இடையனை விழுங்குமா? ஆடு இருக்கப் புலி இடையனை எடாது. ஆடு இருந்த இடத்தில் அதர் இல்லை; மாடு இருந்த இடத்தில் மயிர் இல்லை. ஆடு இருந்த இடமும் அம்படியான் இருந்த இடமும் உருப் படாது. ஆடு உதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறான். 1610 ஆடு ஊடாட காடு விளையாது. ஆடு ஓடின காடும் அடி ஓடின வெளியும் விருத்தி ஆகா. ஆடு ஓடின காடும் அரசன் போன வீதியும் அம்மா வீடு தேடிப் போன பெண்ணும் அடுத்த மாதம் குட்டிச் சுவர். ஆடு கடிக்கிறதென்று அறையில் இருப்பாளாம்; ஆம்புடை யான் சம்பாதிக்கப் பேயாய்ப் பறப்பாளாம். ஆடு கடிக்குமென்று இடையன் உறியேறிப் பதுங்குவானாம். ஆடு கட்ட வீடு இல்லை; ஆனை வாங்கப் போனானாம். ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியாக இருந்தது. ஆடுகள் இருந்தால் கோனார்; இல்லாவிட்டால் போனார். ஆடுகளின் சட்டியை நாய் உருட்டுவது போல. ஆடு கால் பணம்; கோசம் முக்கால் பணம். 1620 ஆடு காற் பணம்; புடுக்கு முக்காற் பணம். ஆடு கிடக்கிற கிடையைப் பார்; ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார். ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று. ஆடு கிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும். ஆடு கெட்டவன் ஆடித் திரிவான்; (கொண்டவன்) கோழி கெட்டவன் கூவித்திரிவான். (கொண்டவன்) ஆடு கொடுக்காத இடையன் ஆவைக் கொடுப்பானா? (பசுவை) ஆடு கொடுத்தவனுக்குக் குட்டி கொடுக்க என்ன தடை? ஆடு கொண்டு உழுது ஆனை கொண்டு போர் அடித்தாற் போல இருக்கிறது. ஆடு கொழுக்கக் கொழுக்கக் கோனானுக்குச் சந்தோசம். 1630 ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம். ஆடு கொழுத்தால் ஆயனுக்கு ஊதியம். ஆடு கொழுத்தாலென்ன? ஆனை கட்டி வாழ்ந்தாலென்ன? ஆடு கொழுத்தால் ரோமத்தில் தெரியும். ஆடு கோழி ஆகாது; மீன் கருவாடு ஆகும். ஆடு கோனானின்றிப் போகுமா? ஆடுங் காலத்தில் தலைகீழாக நடந்தால் ஓடும் கப்பரையும் ஆவான். ஆடுங்காலம் தலை கீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத் தான் கூடும். ஆடு திருடுகிற கள்ளனுக்கு ஆக்கிப் போடுகிறவள் கள்ளி. ஆடு தின்பாளாம் இரண்டு; ஆட்டைக் கண்டால் சீ சீ என்பாளாம். 1640 ஆடு தின்ன தழையைத்தான் குட்டித் தின்னும். ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம். ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா? ஆடு பகை, குட்டி உறவா? ஆடு பகையும், குட்டி உறவுமா? ஆடு பட்டியிலே இருக்கும் போதே கோசம் தன்னது என்கிறான். ஆடு பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும். ஆடு பிடிக்கக் கரடி அகப்பட்டது போல். ஆடு பிழைத்தால் மயிர் தானும் கொடான். ஆடுபோல் சாப்பிட வேண்டும்; ஆனைபோல் குளிக்க வேண்டும். 1650 ஆடு மலையேறி மேய்ந்தாலும் குட்டி கோனான் கிட்டதான். ஆடு மலையேறி வந்தாலும் குட்டி கோனானோட. ஆடு மறித்தவன் செய்விளையுமா? அங்கலாய்த்தவன் செய்விளையுமா? ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா; பெண்டு பிள்ளை இல்லாதவன் தண்டுக்கு ராசா. ஆடு மிதியாக் கொல்லையும் ஆளன் இல்லாப் பெண்ணும் வீண். ஆடு மேய்த்த இடத்தில் அரைமயிர் கூட இல்லை. ஆடு மேய்த்தாற் போலவும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற் போலவும். ஆடு மேய்ப்பவனை நம்பாது; அறுக்கிறவனைத்தான் நம்பும். (வளர்க்கிறவனை) ஆடும் திரிகை அசைந்து நிற்பதற்குள் ஓடும் சிந்தை ஒன்பதாயிரம். ஆடுவதும் ஆடி அவரையும் பறித்தாயிற்று. 1660 ஆடு வரும் பின்னே. தலை ஆடி வரும் முன்னே. ஆடு வளர்க்கிறவனை விட அறுக்கிறவனைத்தான் நம்புமாம். ஆடு வாங்கப் போனவன் ஆனை விலை கேட்டானாம். ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே. ஆடே பயிர்; ஆரியமே வேளாண்மை. (ஆரியம் - கேழ்வரகு) ஆடை இல்லாத மனிதன் அரைமனிதன். (இல்லாதவன்) ஆடை இல்லாதவன் அரை மாந்தன்; கல்வி இல்லாதவன் கால்மாந்தன். ஆடை உடையான் அவைக்கு அஞ்சான். ஆடைக்கும் கோடைக்கும் ஆகாது. ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா? 1670 ஆடை பாதி; அழகு பாதி. ஆடையணி அழகினும் அறிவு சிறந்தது. ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிட்டம். ஆட்காட்டி சொந்தக் காரனையும், திருடனையும் காட்டிக் கொடுக்கும். ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக் காரனோ? அவன்கால் அடிபிடித்துப் போகிறவன் கெட்டிக் காரனோ? ஆட்டத்துக்குத் தகுந்த மேளம்; மேளத்துக்குத் தகுந்த ஆட்டம். ஆட்டமும் கூத்தும் அடங்கிற்று அத்தோடே. ஆட்டமும் பாட்டும் அரைநாழிகை; அவளைச் சிங்காரிக்க ஆறு நாழிகை. ஆட்டம் நாலுபந்தி; புறத்திலே குதிரை. ஆட்டம் போட்ட வீட்டுக்கு விட்டம் ஒரு கேடா? 1680 ஆட்ட விதி கெட்டு ஆட்டம் போட்டால் ஆட்டமா அது? ஆட்டாளுக்கு ஒரு சீட்டாள்; அடைப்பக்காரனுக்கு ஒரு துடைப்பக் கட்டை. ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்; அந்த மோட்டாளுக்கு ஒரு சீட்டாள். ஆட்டி அலைத்துக் காசு வாங்கினேன்; செல்லுமோ? செல்லாதோ? அதைக் கொண்டு எருமை வாங்கினேன்; ஈனுமோ? ஈனாதோ? ஆட்டி விட்டால் ஆடுகிற தஞ்சாவூர் பொம்மை. ஆட்டிலே ஐம்பது ஆடு தின்பாளாம்; வெள்ளாட்டைக் கண்டால் விருக்கு விருக்குன்னு இருப்பாளாம். ஆட்டிலே பாதி ஓநாய். ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பாலில்லை. ஆட்டின் உரம் ஓராண்டு நிற்கும்; மாட்டு உரம் ஆறாண்டு நிற்கும். ஆட்டின் வாலை அளவறுத்து வைத்திருக்கிறது. 1690 ஆட்டு எரு அவனுக்கு; மாட்டு எரு மகனுக்கு. ஆட்டு எரு அவ்வருடம்; மாட்டெரு மறுவருடம். ஆட்டுக் கடா சண்டையில் நரி அகப்பட்டது போல (செத்தது) ஆட்டுக் கடா பின்வாங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். ஆட்டுக்காரன் பிள்ளைக்கு ஈரல் அரிதா? ஆட்டுக் கறியும் நெல்லுச்சோறும் தம்மாகும்மா. அந்தக் கடன் கேட்கப் போனால் கிய்யா மிய்யா. ஆட்டுக் கறியிலே அடிச்சுக்குவாங்க; கோழிக்கறியிலே கூடிக்குவாங்க. ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல (கோனாய்) ஆட்டுக் குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனை உயரம் வருமா? ஆட்டுக் குட்டிக்கு ஆனையைக் காவு கொடுக்கிறதா? 1700 ஆட்டுக் குட்டிமேல் ஆயிரம் பொன்னா? ஆட்டுக் குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதைபோல. ஆட்டுக்கு ஒத்தது குட்டிக்கு. ஆட்டுக்குச் சுகமானபின் ஆட்டு மயிரைக்கூட இடையன் சாமிக்குக் கொடுக்க மாட்டான். ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது. ஆட்டுக்குத் தோற்குமா கிழப் புலி? ஆட்டுக்கு நோன்பு அன்றைக் கோடு சரி. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; அறிவு இல்லாத வனுக்கு மூன்று கொம்பு. ஆட்டுக்கும் மாட்டுக்கும் முறையா? காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா? ஆட்டுக்கு வாலை அளந்து வைத்திருக்கிறான். 1710 ஆட்டுக்கு வேகம் பள்ளத்திலே; ஆனைக்கு வேகம் மேட்டிலே. ஆட்டுத் தலைக்கு ஏகாலி பறந்தானாம். ஆட்டுத் தலைக்கு ஓச்சன் பறக்கிறது போல. (வண்ணான்) ஆட்டு மந்தையைக் காக்கும் நாய் வீட்டுப் புழுக்கையைக் கூடத்தான் காக்க வேண்டும். ஆட்டு வாணிகம் ஆலிங்கனத்தை விடக் கூட்டு வாணிகர் குட்டு நல்லது (கூட்டு - வாசனைப்பொருள்) ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது. ஆட்டை அறுத்து ஆட்டுத் தலையிலே கட்டுகிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடிக்கிற கதையா? ஆட்டைக் கழுதையாக்கிய அரிட்டாப்பட்டி. ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்க வேண்டும். 1720 ஆட்டைக்கு ஒருமுறை காணக் சோட்டை இல்லையோ? ஆட்டைத் தூக்கிக் குட்டியிலே போட்டுக் குட்டியைத் தூக்கி ஆட்டிலே போடுகிற கதை. ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான். ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ஆட்டைக் காணாம் ஆட்டைக் காணாம் என்று தேடினானாம். ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு காடெங்கும் தேடினது போல. ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல். ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும். ஆணாய்ப் பிறந்தால் அருமை; பெண்ணாய்ப் பிறந்தால் பெருமை. ஆணுக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தலாகாது. (கேடு) 1730 ஆணுக்கு அறிவு; பெண்ணுக்கு அழகு. ஆணுக்கு ஆலம் விழுது. ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்யாதே. ஆணுக்குப் பெண் அத்தமிச்சுப் போச்சா? ஆணுக்குப் பெண் அழகு. ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு. ஆணை அருநிழலில் வை; பெண்ணைப் பெருநிழலில் வை. ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர். ஆணோ அவலம்; பெண்ணோ போவலம் ஆண் அழகனும் சோறும் அடைவாய் இருந்தால் வீடெல்லாம் பிள்ளை விட்டெறிந்து பேசும். 1740 ஆண் ஆயிரம் ஒத்தாலும் பெண் நாலு ஒவ்வாது. ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை. ஆண் உறவும் உறவல்ல; வேலி நிழலும் நிழலல்ல. ஆண்கள் இல்லா ஊரில் எல்லாப் பெண்களும் பதிவிரதைகள். ஆண் கேடு அரசு கேடு உண்டா? ஆண் சிங்கத்தை ஆனை அடுக்குமா? ஆண்ட பொருளை அறியாதார் செய்தவம் மாண்ட மரத்திற்கு அணைத்த மண். ஆண்டவனுக்கு அஞ்சுவதே அறிவின் தொடக்கம். ஆண்டவன் எழுதியதை அழித்தெழுத முடியுமா? ஆண்டவன் படியளப்பான். 1750 ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்? ஆண்டாருக்குக் கொடுக்கிறாயோ? சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? ஆண்டாருக்கும் பறப்பு; கோவிலுக்கும் சிறப்பு. ஆண்டாரைப் பூதம் அஞ்சும், மாண்டால் ஒழியப் போகாது. ஆண்டார் இருக்கும் வரையில் ஆட்டும் கூத்தும். ஆண்டால் அம்மியும் தேயும். ஆண்டி அடிக்கச் சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு? ஆண்டி அடித்தானாம்; கந்தைப் பறந்ததாம். ஆண்டி அன்னத்துக்கு அழுகிறான்; அவன் நாய் அப்பத்துக்கு அழுகிறது. ஆண்டி எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும்? 1760 ஆண்டி எப்போது சாவான்? மடம் எப்போது ஒழியும்? ஆண்டி மடம் கட்டுகிறதுபோல. ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதை ஆண்டி கிடக்கிறான் அறையிலே; அவன் சடை கிடக்கிறது தெருவிலே. ஆண்டி கிடப்பான் அறையிலே; கந்தை கிடக்கும் வெளியிலே. ஆண்டி கிடப்பான் மடத்திலே; சோளி கிடக்கும் தெருவிலே (சோளி - பை) ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல். ஆண்டிக்கு, அரண்மனை இருந்தால் என்ன? எரிந்தால் என்ன? ஆண்டிக்கு அவன்பாடு; தாதனுக்குத் தன்பாடு. ஆண்டிக்கு ஆணைக்காட்டி; ஆண்டைப் பெண்டாட்டிக்கு காலைக்காட்டி 1770 ஆண்டிக்கு இடச் சொன்னால் தாதனுக்கு இடச் சொல்லுகிறான். ஆண்டிக்கு எதற்கு அரிசிவிலை? ஆண்டிக்கு எதற்கையா ஆணை? ஆண்டிக்கு எந்த மடம் சொந்தம்? ஆண்டிக்கு என்ன பித்து? கந்தல் பித்து. ஆண்டிக்கு ஏன் அம்பாரக் கணக்கு? ஆண்டிக்குப் பிச்சையா? அவன் குடுவைக்குப் பிச்சையா? ஆண்டிக்கு வாய்போச்சு; அண்வுக்கு அதுவும் இல்லை! (பார்ப்பானுக்கு) ஆண்டி செத்தான் மடம் ஒழிந்தது. ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போயிற்று? 1780 ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது. ஆண்டி பிள்ளைக்குச் சோறு அரிதோ? ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு (அவலம்) ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான். ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும். ஆண்டியே சோற்றுக்கு அலையும்போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம். ஆண்டியை அடித்தானாம் அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம். ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான்; தாதனைக் கண்டால் ரங்கன் என்கிறான். ஆண்டி வேடம் போட்டும் அலைச்சல் தீரவில்லை. ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான். 1790 ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஊனக் கண்ணுக்கு அரிது. ஆண்டை கூலியைக் குறைத்தால், சாம்பான் வேலையைக் குறைப்பான். ஆண்டை மேல் வந்த கோபத்தைக் கடாவின்மேல் காண்பித் தான். (ஆற்றினான்) ஆண் தாட்சண்யப் பட்டால் கடன்; பெண் தாட்சண்யப் பட்டால் விபச்சாரம். ஆண் நிழலில் நின்றுபோ; பெண் நிழலில் இருந்து போ. ஆண்பிள்ளைக்கு அநியாயப்பட்டால் தீரும்; பெண் பிள்ளைக்கு அழுதால் தீரும். ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள்; அக்காள் தங்கச்சி ஒத்திரார்கள். ஆண்பிள்ளைகள் ஆயிரம் பேர் ஆனாலும் ஒத்திருப்பர்; பெண் பிள்ளைகள் அக்காள் தங்கச்சி ஆனாலும் ஒத்திரார்கள். ஆண்பிள்ளை அழுதால் போச்சு; பெண் பிள்ளை சிரித்தால் போச்சு. ஆண் பிள்ளை இரக்கம் பார்த்தால் கடனாளியாவான்; பெண்பிள்ளை இரக்கம் பார்த்தால் பிள்ளைதாய்ச்சியாவாள். 1800 ஆண்பிள்ளை இல்லாத குடும்பமும் வேலி இல்லாத பயிரும் வீணாத்தான் போகும். ஆண்பிள்ளை புத்தி அரைப்புத்தி. ஆண் மகன் முன்நின்று எய்வான்; பேடி பின்நின்று எய்வான். ஆண் முந்தியோ? பெண் முந்தியோ? ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம். ஆண்மைக்கு ஆலம் பழம். ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தின் மேற் குறை சொல்லுவான். ஆண்மையும் முயற்சியும் உள்ளவனுக்கு அரசும் தஞ்சம். ஆதவன் உதிப்பதே கிழக்கு; அக்கம நாயக்கர் சொல்வதே வழக்கு. அதைக்கேட்டு நடந்தால் மினுக்கு; எதிர்த்துப் பேசினால் தொழுக்கு. ஆதவன் உதிப்பதே கிழக்கு; கணக்கன் எழுதியதே கணக்கு. 1810 ஆதரவு அற்ற சொல்லும் ஆணி கடவாத கைமரமும் பலன் செய்யா. ஆதரவும் தேவும் ஐந்து வருடத்தில் பலன் ஈயும். ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா? ஆதாயம் இல்லாமல் ஆற்றில் இறங்காத செட்டியா? ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவானா? ஆதாயம் உள்ளவரை ஆற்றைக் கட்டி இறைத்துவிட்டுப் போகிறான். ஆதாயமே செலவு, அறையிருப்பே நிலுவை. ஆதாயம் பெருகினால் ஆணவம் பெருகும். ஆதி கருவூர், அடுத்தது வெஞ்சமாக் கூடலூர். ஆதி கருவூர், அழும்பப் பயல் வேலூர். 1820 ஆதித்தன் தெற்கு வடக்கு ஆனாலும் சாதித்தொழில் (சனித்தொழில்) ஒருவரையும் விடாது. ஆதியிலே வந்தவள் வீதியிலே நிற்பாளாம்; நேற்று வந்தவள் நெய்யூற்றித் தின்பாளாம். ஆதீனக் காரனுக்குச் சாதனம் வேண்டுமா? ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம் (கும்ப கோணத்தில்) ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கைபோட்டுச் சண்டைக்கு வருவான். ஆத்தாள் சாவுக்கு அழுவாத மகன் மாமியார் தலைவலிக்கு மருந்து வாங்க ஏமத்திலே எதிரா நடந்தானாம். ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள். ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடு சொல்லிக் கொண்டாளாம். ஆத்தாளும் மகளும் காத்தானுக் கடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான், கைவிட்டாலும் விட்டான். ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; ஆமுடையானைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது. 1830 ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் ஏது? தங்கை ஏது? ஆத்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் (ஆத்தி - செல்வம்). ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு. ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா? ஆத்திரத்துக்கு அவிசாரி ஆடினால் கோத்திரம் பட்டபாடு படுகிறது. ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது (அடக்கப்படாது) ஆத்திரம் உடையான் கோத்திரம் அறியான். ஆத்திரம் நட்டத்தைக் கொடுக்கும் (கட்டத்தை) ஆத்திரம் பெரிது; ஆனாலும் புத்தி மிகப் பெரிது. ஆத்துத் தண்ணீரை ஏத்துத் தண்ணீர் தடுத்திட முடியுமா? 1840 ஆத்தும சுத்தியாகிய நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்சலக்கணம் தெரிந்து பலனென்ன? ஆத்தூரான் பெண்டாட்டி ஆரோடோ போனாளாம்; சேத்தூ ரான் தண்டம் அழுதானாம். ஆநாயம் சொல்லுவானேன்; ஊநாயம் கேட்பானேன்? ஆந்தை சிறிது; கீச்சு பெரிது. ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் சகுனத்திற் பஞ்சை யில்லை. ஆந்தை பவிசு கெட்டுக் கிடந்தாலும் சகுனத்துக்குக் குறைச்சல் இல்லை. ஆந்தை விழி விழித்தால் அருண்டு போவாரோ? ஆபத்தில் அறியலாம் அருமைச் சினேகிதனை. ஆபத்தில் காத்தவன் ஆண்டவன் ஆவான். ஆபத்திலே சிநேகிதனை அறி. 1850 ஆபத்திற் காத்தவன் ஆட்சி அடைவன். ஆபத்துக்கு உதவினவனே நண்பன். (பந்து) ஆபத்துக்கு உதவாத பெண்டாட்டி அழகுக்கா வைத்திருக் கிறது? ஆபத்துக்கு உதவாத பெண்டாட்டி அழகாயிருந்து என்ன பயன்? ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் ஆகக் கடை. ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி ஆமுடையான்? ஆபத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினது போல. (நீந்தினானாம்) ஆபத்துக்குப் பாவம் இல்லை. ஆபத்துக்குப் பாவம்னு கையைக் கொடுத்தா விரலில் இருந்த மோதிரத்தைப் பிடுங்கினாளாம் ஆத்தோடு போனவ. ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு. 1860 ஆப்பக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கின மாதிரி. ஆப்பு அசைத்த குரங்கு போல. ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல. ஆப்பம் சுடுகிற அம்மாளுக்கு அறுவர் வேண்டுமாம். ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தல் ஆகாது. (விதைப்பானா?) ஆமணக்கு நட்டால் ஆச்சா வாகுமா? (விளைத்தல்) (முளைக்குமா?) ஆமணக்கு முத்து ஆணி முத்தாகுமா? ஆமுடையான் கோப்பில்லாக் கூத்தும் குருவில்லா ஞானமும் உருப்படா. ஆமுடையான் பேர் சொன்னால் ஆயிரங்காலம் வாழலாம். ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வர வேண்டும். 1870 ஆம் என்ற குற்றம் அடிவயிறு கனத்தது. ஆம்படையான் என்றால் ஆசை; அடிப்பான் என்றால் பயம். ஆம்புடையான் செத்தபிறகு அறுதலிக்குப் புத்திவந்தது. ஆம்புடையான் பலமுண்டானால் குப்பையேறிச் சண்டை போடலாம். ஆம்படையான் அடித்தது கோபமில்லை; அண்டை வீட்டுக் காரன் சிரித்தது கோபமாம். ஆம்படையான் அடித்தாலும் அடித்தான்; கண் பூளை போயிற்று. ஆமை அசையாமல் ஆயிரம் முட்டையிடும். ஆமை எங்கே இருந்தாலும் நினைப்பெல்லாம் கரையிலே. ஆமை கிணற்றிலும் அணில் கொம்பிலும். ஆமைக்கு அடக்கம் ஆர் கற்பித்தார்? 1880 ஆமைக்குப் பத்து அடி என்றால் நாய்க்கு நாலடி. ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாம் அது சொன்னால் பாவம். ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் உருப்படாது. (விளங்காது) ஆமை புகுந்த வீடும் வெள்ளைக்காரன் காலடி வைத்த நாடும் பாழ். ஆமை மயிர்க் கயிற்றால் கொம்புக் குதிரையைக் கட்டினாற் போல. ஆமையுடனே முயல் முட்டை இடப் போய்க் கண் பிதுங்கிச் செத்ததாம். ஆமையைத் தூக்கி நிறுத்திய அழகுக் கோலம். ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலி. ஆமையைச் சுடுகிறது மல்லாக்கில்; அதை வாயால் சொன்னால் பொல்லாப்பு. ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்வது. 1890 ஆயக்காரனுக்குப் பிரமகத்திக்காரன் சாட்சி. ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான்; அதா வெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான். ஆயத்திலும் நியாயமாய்ப் போக வேண்டும். ஆயத்துக்குக் குதிரை; கீயத்துக்குக் குட்டி. ஆயத்துக்குப் பயந்து ஆற்றிலே நீந்தினானாம். ஆயத்துறையிலே அநியாயம் செய்யாதே. ஆயவஞ்சனை பிறர் வஞ்சனை ஒருவருக்கும் ஆகாது. ஆயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது. ஆயி பார்த்த கலியாணம் போயி பார்த்தால் தெரியும். ஆயி மகளாயிருந்தாலும் வாயும் வயிறும் வேறுதானே! 1900 ஆயிரங் குணம் ஒரு கஞ்சக்குணத்தால் தட்டும் ஆயிரங் காய்ச்சியான தென்னைக்கு ஓலைக் குறைவினால் ஒரு குறையுமில்லை. ஆயிரங் காலத்துப் பயிர். ஆயிரங் காலே அரைக்காற் பணம் (மாகாணி) ஆயிரங் குதிரையை அறவெட்டின சிப்பாய்தானா இப்பொழுது பறைச் சேரி நாயோடே பங்க மழிகிறான்? ஆயிரத்தில் ஒரு நல்லவனை அறிந்து கொள்ளலாம்; ஆனால் ஒரு பெண்ணை அறிந்து கொள்ள முடியுமா? ஆயிரத்திலே ஒருவனே அலங்கார புருசன். ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல. ஆயிரத்திற்கு மேலே ஆற்றுப் பெருக்கு. ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனை பலம். 1910 ஆயிரம் ஆண்கள் ஒத்திருந்தாலும் அக்காள் தங்கை ஒத்திரார். ஆயிரம் ஆனாலும் அவுசாரி சமுசாரி ஆவாளா? ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார்; கந்தைபொறுக்கி தொந்தோம் தொந்தோம் என்று கூத்தாடுவான். ஆயிரம் உடுக்கள் சேர்ந்தாலும் ஒரு திங்களுக்கு நிகராகுமா? ஆயிரம் உடையான் அமர்ந்திருக்கும் அரைப்பண முடையான் ஆடிவிடும். ஆயிரம் உருபா வந்தால் என்ன? ஆயிரம் உருபா போனால் என்ன? ஆயிரம் உளிவாய்ப்பட்டு ஒரு லிங்கம் ஆக வேணும். ஆயிரம் எறும்பும் ஆனை பலம். ஆயிரம் கட்டு கட்டினால் ஆனை பலம். ஆயிரம் கப்பியில் கழுவின கப்பி. 1920 ஆயிரம் கல நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி. ஆயிரம் கற்றிருந்தாலும் விளம்பரம் வேண்டும். ஆயிரம் காக்கைக்கு ஒரு கல். ஆயிரம் காசுக்குக் குதிரை வாங்கினவனுக்கு அரைக் காசுக்குச் சவுக்கு வாங்க முடியலையா? ஆயிரம் குருடர்கள் சேர்ந்தாலும் குதிரையைப் பார்க்க முடியுமா? ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கி அங்குசம் வாங்கப் பேரம் பண்ணினானாம். ஆயிரம் கோவிந்தம் போட்டாலும் அமுது படைக்கிற வனுக்கு அல்லவோ தெரியும் வருத்தம்? ஆயிரம் கோழி தின்ற வரகு போல. ஆயிரம் செக்கு ஆடினாலும் அந்திக்கு எண்ணெய் இல்லை. ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து. 1930 ஆயிரம் திட்டு ஆனையையும் சாய்க்கும். ஆயிரம் நட்சத்திரம் கூடினும் ஒரு நிலாவிற்கு ஈடாகா. ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும். ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நட்டமா? ஆயிரம் பட்டும் அவமாச்சு; கோயிலைக் கட்டியும் குறையாச்சு. ஆயிரம் பனையுள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஒரு ஈர்க்கு இல்லை. ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்; நூறு பாட்டுக்கு நுனி தெரியும்; ஒரு பாட்டிற்கும் உருத் தெரியாது. ஆயிரம் பிறை கண்டவர். ஆயிரம் பெண்டாட்டி கட்டி அறுக்கப் பெண்டாட்டி இல்லை. ஆயிரம் பேரிடத்தில் சினேகம் பண்ணினாலும் ஆண் பிள்ளைகளுக்கு என்ன? 1940 ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் (வேரைக் கண்டவன்) ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணம் செய்து வை (திருமணம், ஒரு விளக்கேற்றி) ஆயிரம் பொன் கொடுத்தாலும் அறுந்த மூக்கு ஒட்டாது. ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப் பணத்துச்சவுக்கு. ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கும் சவுக்கடி வேண்டும். ஆயிரம் ரூபாய்க்குக் குதிரை வாங்கி அரையணா சவுக்கு வாங்க யோசித்தானாம். ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது. (அவசரம்) ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது. ஆயிரம் வருடம் ஆனாலும் ஆனை மறக்குமா? ஆயிரம் வாழ்த்து பூனையையும் ஆனையாக்கும். 1950 ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும். ஆயிரம் வேரைக் கண்டவர் அரைவைத்தியர். ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே. ஆயுசு கெட்டியானால் ஔடதம் பலிக்கும். ஆயுசு பூராவாக இருந்தால் மாந்தம் மயிரைப் பிடுங்குமா? ஆயுதமில்லாரிடத்தில் ஆடல் செய்யலாமா? ஆயுத மில்லாரை அடிக்கிறதா? ஆய்ச்சி நூற்கிற நூல் ஐயர் அரைஞாண் கயிற்றுக்குந்தான் காணும். ஆய்ந்து ஓய்ந்து அக்காளிடம் போனால் அக்காள் இழுத்து மாமன்மேல் போட்டாளாம். ஆய்ந்தோய்ந்து பார்த்து நட்புச் செய்ய வேண்டும். 1960 ஆய்ந்தோய்ந்து பாராதான் காரியம் சாந்துயரம் தரும். ஆய் பார்த்த கலியாணம் போய்ப் பார்த்தால் தெரியும். ஆய் பார்த்த மண்டபத்தைப் போய் பார்த்தாத் தெரியும். ஆரக் கழுத்தி அரண்மனைக் காகாது. ஆரடா அன்னத்து மறைவிலே என்றால் நோயாளி பத்தியம் பண்ணுகிறேன் என்றானாம். ஆரணியமான அழகாபுரிக்கு ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று. ஆரம்ப சூரத்தனம். ஆரம்பத்துச் சூரத்துவம் முடிவில் மோசம். ஆரல் மேல் பூனை அந்தண்டை பாயுமோ? இந்தண்டை பாயுமோ? ஆராகிலும் படியளந்து விட்டதா? 1970 ஆரால் கேடு? வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்ணாயிரு. ஆருக்காகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாட் பொறுக்கும்; ஆத்ம துரோகஞ் செய்தால் அப்போதே கேட்கும். ஆருக்கு ஆர் துணை. ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்? ஆருக்கும் அஞ்சான்; ஆர்படைக்கும் தோலான். (தோளான்) ஆருக்கும் அடங்காதவன் ஊருக்கு அடங்குவான். ஆருக்கும் ஆனால் காமாலை; அவனுக்கு ஆனால் பூமாலை. ஆருக்கும் மாட்டாதவன் பெண்டுக்கு மாட்டுவான். ஆருக்கு வந்ததோ? எவருக்கு வந்ததோ என்றிருக்காதே! 1980 ஆருக்கு வந்த விருந்தோ என்றருந்தால் விருந்தாளி பசி என்னாவது? ஆருமற்றதே தாரம்; ஊரில் ஒருவனே தோழன். ஆருமில்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப் பிள்ளை. ஆரும் அகப்படாத தோசம்; மெத்த பதிவிரதை. ஆரும் அறியாமல் கொண்டு கொடுத்தானாம்; காடு மேடெல்லாம் கரி ஆக்கினானாம். ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு. ஆரும்இல்லாத ஊரிலே அசுவமேத யாகம் செய்தானாம். ஆரும் இல்லாதவர்க்கு ஆவரை இருக்கு. ஆரே சாரே என்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினி பார்க்கிற வனுக்குத் தெரியுமா? ஆரோ செத்தான்; எவனோ அழுதான். 1990 ஆரை இறுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையை இறுக்கி முகம் இறுக்கிறது. ஆரை ஏய்த்தாலும் அடுப்பை ஏய்க்க முடியாது. ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக் கூடாது. ஆரை பற்றிய நன்செயும் அறுகு பற்றிய புன்செயும் (களை போக்கல் கடினம்) ஆரை பற்றிய நன்செய்; அறுகு பற்றிய செவ்வல்; கோரை பற்றிய கரிசல். ஆரோக்கியம் ஆயுசு விருத்தி. ஆர் அற்றுப் போனாலும் நாள் ஆற்றும். ஆர் ஆக்கினாலும் சோறு ஆக வேணும். ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும். ஆர் ஆர் என்பவர்கள் எல்லாம் தீக்குளிப்பார்களா? 2000 ஆர் ஆருக்கு ஆளானேன்; ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு. ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக் கூடாது. ஆர் குடி கெட்டாலும் சந்தைக்குக் காற்பணம். ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி! ஆர் கெட்டால் என்ன? ஆர் வாழ்ந்தால் என்ன? ஆர்க்காட்டில் சண்டையானால் அடுப்பங்கரையில் ஒளிந் திருப்பான். ஆர் சமைத்தாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும். ஆர் புருசனை ஆர் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்? ஆர் மேல் கண்; அனந்திமேல் கண். ஆர்த்தார் எல்லாம் போருக்கு உரியவர் அல்லர். 2010 ஆலக்குடியாள் அவுசாரி போகத் தென்னங்குடியான் தெண்டம் கொடுத்தானாம். ஆலமரம் பழுத்ததென்று பறவைக்கு ஆர் சீட்டனுப்பினது? ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா? ஆலமரத்துக்கு அறுகம்புல்லின் வேரா? ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாற் போல. ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம். ஆலம்பாடி அழகு எருது; உழவுக்கு உதவா இழவு எருது. பிள்ளையும். ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆத்தானத்துக்கு ஒரு பிள்ளையும். ஆலயம் இடித்து அன்னதானம் செய்தானாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. 2020 ஆலின் மேல் புல்லுருவி. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை. ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல. ஆலை பாதி; அழிம்பு பாதி. ஆல் பழுத்தால் அங்கே; அரசு பழுத்தால் இங்கே. ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி. ஆல் போல் தழைத்து, அறுகுபோல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்க! ஆவணி ஐந்துல சிங்கம் கெலித்தால் அதிக மழை பெய்யும். ஆவணி தலைவெள்ளமும் ஐப்பசி கடைவெள்ளமும் கெடுதி. 2030 ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும். ஆவணி மாதம் அழுகைத் தூற்றல். ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருசன் வீடு போனாளாம். ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அணைத்து நடு. ஆவணியில் கீழ்க்காற்றும் ஐப்பசியில் மேல்காற்றும் அடித்தால் முன்பயிர், பின்பயிர் இரண்டும் சமம்தான். ஆவணியில் நெல் விதைத்தால் ஆனைக் கொம்பு தானாய் விளையும். ஆவதற்கும் அழிவதற்கும் பேச்சே காரணம். ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும். ஆவதும் சொல்லாலே; அழிவதும் சொல்லாலே. ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. 2040 ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடரான். ஆவர்க்கும் இல்லை; தேவர்க்கும் இல்லை. ஆவல் மாத்திரம் இருந்தாலென்ன? அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்.? ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும். ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ? ஆவி போனபின் ஆர் தயவு வேணும். ஆவின் பாலிருக்க அங்கணநீர் குடிப்பார் போல. ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறுகொண்டு போகறப்போ சுற்றுக்கோவில் சுவாமியெல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுகிறதாம். ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் ஈயும். ஆவூராள் அவுசாரி போனாளாம்; தேவூராள் தெண்டம் கொடுத்தாளாம். 2050 ஆவென்று போனபின் அள்ளி இடுவது ஆர்? ஆவைக் காப்பது பேரறம். ஆ வேறு நிறமானாலும் பால்வேறு நிறமாமோ? ஆழ உழுதாலும் அடுக்க உழு. ஆழ உழுது அரும்பாடு பட்டாலும் பூமி விளைவது புண்ணியவான்களுக்கே. ஆழ உழுது தேடி எடு ஆழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டார்கள். ஆழம் தெரியாமல் காலிட்டுக் கொண்டேன்; அண்ணா மலையப்பா காலை விடு. ஆழம் தெரியாமல் காலை விடாதே. (விடுவதா?) ஆழம் அறியும் ஓங்கில்; மேளம் அறியும் அரவம். (ஓங்கில் - ஒருவகை மீன்) 2060 ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம். ஆழாக்கு அரிசியானாலும் வெந்துதான் வடிக்கணும். ஆழி எல்லாம் வயலானால் என்ன? அவனி எல்லாம் அன்ன மயமானால் என்ன? ஆழி கொண்டாலும் காழி கொள்ளாது. (காழி - சீர்காழி) ஆழியை நாழி கொண்டு அளப்பது போல. ஆழுக்கும் பாழுக்கும் ஒருவந்தூரன்; கடாவெட்டுக்கு மோகனூரான். ஆழும் பாழும் அறைக்கீரைப் பாத்தியும். ஆளப்படுகிறவனே ஆளத்தெரிந்தவன். ஆளமாட்டாதவனுக்குப் பெண்டாட்டி ஒரு கேடு. ஆளமாட்டாதவனுக்குப் பெண்டேன்? 2070 ஆள விரும்புகிறவர் எல்லாம் அரசராக முடியாது. ஆளனைப் பிரிந்திருத்தல் அரிவையர்க்கு அழகன்று. ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும். ஆளான ஆட்களுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காக்காய்ப் பிசாசு கஞ்சிக்கு அழுகிறது. Ms‹ cwî c©lhdhš khÄ kÆ® kh¤âu«.(Mz‹) (பலமிருந்தால்) ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது. ஆளன் இல்லாதவளிடம் ஆளாளுக்கு மணியம். ஆளன் இல்லாத பெண்ணுக்கு வாழ்வு இல்லை. ஆளன் இல்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி. 2080 ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான். ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும் வேண்டாமா? ஆளுக்கு ஒரு குட்டு வைத்தால் அடியேன் தலை மொட்டை (ஆண்டி) ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை. (ஐயன்) ஆளுக்கு ஒரு குட்டு குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது. ஆளுக்குக் கீரைத் தண்டு; ஆனைக்கு வாழைத் தண்டு. ஆளுக்கேற்ற வேடம்; காலத்திற்கேற்ற கோலம். ஆளுக்குத் தக்கபடி வேடம் போடுதல். ஆளுக்குத் தகுந்த கொட்டு கொட்டுகிறது. ஆளுக்குத் துக்குணி ஆள் பாரம். 2090 ஆளுக்குள்ளே ஆளாயிருப்பான். ஆளும் கோளும் படைத்தவனை வேலும் கோலும் என்ன செய்யும்? ஆளும் சரக்கு அறுபத்து நாலு (சரக்கு - உணவுப் பொருள்கள்) ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும். ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும். ஆளை ஆள் குத்தும் ஆள் மிடுக்கு; பத்துப் பேரைக் குத்தும் பணமிடுக்கு. ஆளை ஏய்க்கும் நரி; அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு. ஆளைக் கண்ட நரி வாலைக் குலைத்துக் கொண்டு ஓடுமாம். ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணாவிட்டால் மூன்று மணி. ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய். 2100 ஆளைக் கண்டு மயங்காதே ஊதுகாமாலை. ஆளைச் சுருட்டும் வெள்ளத்தில் ஆலிலை எந்த மட்டு? ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா? ஆளைச் சேர்த்தாயோ அடிமையைச் சேர்த்தாயோ? ஆளைத் தூக்கி ஆள்மேல் போடுகிறதா? ஆளைப் பார் முகத்தைப் பார். ஆளைப் பார் சோளக்கொல்லை பொம்மை மாதிரி. ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவு தான். ஆளைப் பார்த்தால் அழகுபோல்; வேலையைப் பார்த்தால் எழவுபோல. ஆளைப் பார்த்தான் வாயில் ஏய்த்தான். 2110 ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான். ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது (அவளைப்) `ஆளைப் பார்த்து மலைக்காதே ஊதுகணை. ஆளோட ஆள அழுதாளாம் ஓவாச்சி. ஆள் அண்டிப் பேசாதவனும் செடி அண்டிப் பேளா தவனும் ஒன்று. ஆள் அரை முழம்; கோவணம் முக்கால் முழம். ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது. ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்கு போடு. ஆள் ஆளும் பண்ணாடி; எருது ஆர் மேய்க்கிறது? ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரை இடிக்கும். 2120 ஆள் ஆளைக் குத்தும்; பகரம் பத்துப் பேரைக் குத்தும்? ஆள் ஆனையை மறந்தாலும் ஆனை ஆளை மறக்குமா? ஆள் இருக்கக் குலை சாயுமா? (கொலை) ஆள் இருக்கும் இளக்காரத்தில் ஆவாரையும் பீயை வாரி இறைக்கும். ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ். ஆள் இல்லாப் படை அம்பலம். ஆள் இல்லாப் பத்தினி, இடம் இல்லாப் பத்தினி, ஆளைக் கண்டால் ஈடில்லாப் பத்தினி. ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா? ஆள் இளந்தலைக் கண்டால் தோணி மிதக்கப் பாயும். ஆள் இளப்பமாயிருந்தால் எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான். 2130 ஆள் இளப்பமாயிருந்தால் எருது மச்சான் முறை கொண்டாடும். ஆள் இளப்பாயிருந்தால் ஆவாரம் பூவும் புறத்தால் அடிக்கு மாம். ஆள் ஏற நீர் ஊறும். ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும். ஆள் கால்; வாய் முக்கால். ஆள்கிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு. ஆள் சரியில்லை என்றாலும் ஆயுதம் சரியாய் இருக்க வேண்டும். ஆள் சிறிதானாலும் சாமான் பெரிதாயிருக்க வேண்டும். ஆள் பஞ்சையாய் இருந்தாலும் ஆயுதம் திறமாய் இருக்க வேண்டும். 2140 ஆள்பவர் அடிக்கடி போனால் ஊரே அழகாம். ஆள் பாதி; ஆடை பாதி. ஆள் போகிறது அதமம்; மகன் போகிறது மத்திமம். (அடுத்தவன்) தான் போகிறது உத்தமம். ஆள் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவின மாதிரி. ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை. ஆள் மறந்தாலும் ஆனை மறக்காது. ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம். ஆற அமர காரியஞ் செய்ய வேண்டும். ஆறல்ல நூறல்ல ஆகிறது ஆகட்டும். ஆறாச் சூட்டை ஆமணக்கு எண்ணெய் ஆற்றும் 2150 ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆனான குடித்தனம் நீறாய்விடும். (குழந்தை) ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான். ஆறாவது பெண் தரித்திரம். ஆறாவது பெண் பிறந்தால் ஆறாய்ப் பெருகினாலும் பெருகும்; நீராய்த் தணிந்தாலும் தணியும். ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம். ஆறிய புண் அரிக்கும். ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. ஆறிலே செத்தால் அறியா வயது; நூறிலே செத்தால் நொந்த வயது. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ். ஆறின கஞ்சி பழங்கஞ்சி. 2160 ஆறின சாப்பாடு சுகத்துக்குக் கேடு. ஆறின புண்ணிலும் அசடு நிற்கும். ஆறின புண்ணைக் கீறி ஆற்றுவானேன்? ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார். ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி. ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும். ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ யார்? நான் யார்? ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்த்துக் குடுமியிலே கட்டிக் கொண்டானாம். ஆறு காதம் என்கிற போதே கோவணத்தை அவிழ்ப் பானேன். (அரைத்துணியை) ஆறு கெட நாணல் இடு; ஊரு கெட நூலை இடு; காடு கெட ஆடு விடு; மூன்றுங் கெட முதலியை விடு (முதலையை). 2170 ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி. (கொண்டது) ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி. ஆறு கோணலாய் இருந்தாலும் நீரும் கோணலோ? மாடு கோணலாய் இருந்தாலும் பாலும் கோணலோ? ஆறு தாண்டிப் போனாலும் அவனை விடுமா சனி? ஆறு நாள் ஓதி நூறு நாள் விட எல்லாம்போம். ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவே மேல். ஆறு நிறைய தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்? ஆறு நிறைய தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்! ஆறு நிறைய தண்ணீர் போனாலும் பாய்கிறது கொஞ்சம்; சாய்கிறது கொஞ்சம். ஆறு நீந்தினவனுக்குக் குளம் நீந்துவது அரிதோ? 2180 ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்? ஆறு நூறு ஆகும்; நூறும் ஆறு ஆகும். ஆறு நேராய்ப் போகாது. ஆறு நேரான ஊர் நில்லாது. ஆறு நேரான ஊரும், அரசனோடு எதிர்த்த குடியும், புருசனோடு ஏறுமாறான பெண்டும் நீறு நீறாகி விடும். ஆறு பார்க்கப் போக ஆய்ச்சிக்குப் பிடித்தது சலுப்பு. ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கண்ணு. ஆறு போவதே கிழக்கு; அரசன் சொல்வதே வழக்கு. ஆறு போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆறு மாதப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா? 2190 ஆறு மாதம் பழுத்தாலும் விளாமரத்தில் வௌவால் சேராது. ஆறு மாதத்துக்கு வட்டியில்லை; அப்புறம் முதலே இல்லை. ஆறு முழக் கூந்தல் என்பார் அத்தனையும் கடைச்சரக்கு. ஆறும் கடன், நூறும் கடன், பெருசாச் சுடடா பணியாரத்தை. ஆறும் மலையும் போல் இயற்கையும்; அகழியும் மதிலும் போல் செயற்கையும். ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும். ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும். ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும். ஆற்ற மாட்டாத அம்மாயி சங்கிலியை பிடித்து ஆட்டினாளாம். ஆற்றருகில் இருந்த மரமும் அரசு அறிந்த வாழ்வும் நிலையல்ல. 2200 ஆற்றப் புழுதி ஈரம் தாங்கும். ஆற்றவும் கற்றார் அறிவுடையார். ஆற்றிலே அகப்பட்டுச் சேற்றிலே சிக்கப்பட்டுக் கிடக்கிறாள். ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போல (குழி) ஆற்றிலே ஊறுகிறது; மணலிலே சுவறுகிறது. ஆற்றிலே ஒருகால்; சேற்றிலே ஒருகால். ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடக்க வேண்டும். ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, அம்மா குடி. (ஐயா, ஆத்தா) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு. 2210 ஆற்றிலே போட்டுக் குளத்திலே தேடுவது போல. ஆற்றிலே போனாலும் போவனே அன்றித் தெப்பக் காரனுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்றானாம். ஆற்றிலே வந்தது மடுவிலே போயிற்று. ஆற்றிலே வருகிறது மணலிலே சொருகுகிறது. ஆற்றிலே வெள்ளம் போனால் அதற்கு மேலே தோணி போகும். ஆற்றிலே வெள்ளம் வந்தால் ஆனை தடுக்குமா? ஆற்றில் இருந்து அரகராப் பாடினாலும் சோற்றில் இருக்கிறான் சொக்கப்பன். ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கிட்ட பதருமாயிற்று. ஆற்றில் பெருவெள்ளம் நாய்க்கென்ன? சளப்புத் தண்ணீர்! ஆற்றுக்கண் அடைத்தாலும் ஊற்றுக் கண் உதவும். 2220 ஆற்றுக்கு அக்கரை போனதும் அண்ணா ஒருபிடி சாப்பிட்டு விட்டுப் போ என்றாளாம். ஆற்றுக்கு ஒரு நாணல்; நாட்டுக்கு ஒரு பூணூல். ஆற்றுக்குச் செய்தது அபத்தம்; கோயிலுக்குச் செய்தது குற்றம். ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி. ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயிற்றங்காய் கறியா? ஆற்றுக்குப் போகச் சொன்னால் சேற்றுக்குள் போகிறவன். ஆற்றுக்குப் போனதும் இல்லை; செருப்பைக் கழற்றினதும் இல்லை. ஆற்றுக்குப் போவானேன்? செருப்பைக் கழற்றுவானேன்? ஆற்றுக்குப் போன ஆசாரப் பாப்பாத்தி, துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம். ஆற்று நீர் ஊற்றி அலசிக் கழுவினாலும் வேற்றுநீர் வேற்றுநீர்தான். 2230 ஆற்று நீர் பித்தம் போக்கும்; குளத்து நீர் வாதம் போக்கும்; சோற்று நீர் எல்லாம் போக்கும். ஆற்று நீர் வடிந்தபின் ஆற்றைக் கடக்க நினைத்தானாம். ஆற்றுப் பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழி. ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும். ஆற்று மணலை அரைத்துக் கரைத்தாலும் வேற்றுமுகம் வேற்றுமுகந்தான். ஆற்று மணலை அளவிடக் கூடாது. ஆற்று மணலும் ஆகாசத்து நட்சத்திரமும் அள விடப் படுமோ? ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் பெண்டாட்டியை எண்ண முடியாது. ஆற்று மண்ணுக்கு ஒரு வேற்று மண் (உரம்) ஆற்று மீனுக்குச் சேற்றுப் புழு. 2240 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை. ஆற்றுவார் இல்லாத துக்கம் நாளடைவில் ஆறும். ஆற்றுவெள்ளம் ஆனையை என்ன செய்யும்? ஆற்றை அண்டி இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மலையை அண்டி இருக்க வேண்டும். ஆற்றைக் கடத்திவிடு; ஆகாசத்திற் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான். ஆற்றைக் கடக்க ஒருவன் உண்டானால் அவனைக் கடக்கவும் ஒருவன் உண்டு. ஆற்றைக் கடந்தவனுக்கு ஓடம் எதற்கு? ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. ஆற்றைக் கண்டு ஊற்றைப் பறிக்கவில்லை; அம்மியைக் கண்டு மிளகாய் அரைக்கவில்லை. 2250 ஆற்றைக் கெடுத்தது நாணல்; ஊரைக் கெடுத்தவன் பார்ப்பான். ஆற்றைத் தாண்டியல்லவோ கரையேற வேண்டும்? ஆற்றை நம்பியா ஊற்றை இறைக்கிறோம்; அம்மியை நம்பியா மிளகாய் அரைக்கிறோம். ஆற்றைப் பார்த்தால் போதுமா? ஆழம் பார்க்க வேண்டாவா? ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடு போகாதே (ஆண்டான் கவிராயர்) ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே. ஆற்றோடு போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போக மாட்டான். ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது. ஆற்றோட போகிறானே என்று கையைக் கொடுத்தால் விரலில் இருந்த மோதிரத்தை வெடுக்கென்று இழுத்தானாம். ஆற்றோடே போனாலும் போகிறதேயல்லாமல் தெப்பக் காரனுக்கு ஒரு காசு கொடுக்கிறதில்லை. 2260 ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன? ஆனதுக்கு ஒரு ஆகாதது; ஆகாதற்கு ஒரு ஆனது. ஆன தெய்வத்தை ஆறுகொண்டு போகிறது; அனுமந்த ராயனுக்குத் தெப்பத் திருவிழாவா? ஆனந்தக் கண்ணீர்க்கு அரைப்பலம் மிளகு. ஆன மட்டும் ஆதாளி அடித்துப்போட்டு, ஆந்தைபோல் விழிக்கிறான். ஆன மாட்டை விற்றவனும் அறுகங்காட்டைத் தொட்டவனும் கெட்டான். ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல. ஆனவன் ஆகாதவன் எல்லாத்திலும் உண்டு. ஆனவனோடு சேர்ந்தால் அறிவும் உண்டு; நினைவும் உண்டு; ஈனவனோடு சேர்ந்தால் என்ன உண்டு? ஆனால் அச்சிலே வார்; ஆகாவிட்டால் மிடாவிலே வார். 2270 ஆனால் அந்த மடம்; ஆகாவிட்டால் சந்த மடம். ஆனால் ஆதித்த வாரம்; ஆகாவிட்டால் சோமவாரம். ஆனான பட்டதெல்லாம் அடிமாண்டு போகிறதாம். எச்சிற் கலை என் கதி என்ன என்றதாம். ஆனானப் பட்டவர்கள் தானானம் அடிக்கிற போது அழுகற் பூசணிக்காய் தெப்பம் போடுகிறது. ஆனி அடி இடாதே; கூனி குடி போகாதே. (கூனி - பங்குனி) ஆனி அடி எடார்; கூனி குடி புகார். ஆனி அடி வைத்தாலும் கூனி குடி புகாதே. ஆனி அடை சாரல்; ஆவணி முச்சாரல்; ஆடி அதிசாரல். ஆனி அரை ஆறு; ஆவணி முழு ஆறு. ஆனி அரைவட்டை; போடி உங்கள் ஆத்தாள் வீட்டுக்கு. 2280 ஆனி அரணை வால்பட்ட கரும்பு ஆனைவால் ஒத்தது. ஆனி அலறும்; ஆடி அரசேறும். (அரசேறும் - அடங்கும்) ஆனி மாதம் கொறடு போட்டால் மோழியைக் கழற்றி மூலையில போடு (கொறடு - வானவில்) ஆனி மாதம் போடுகிற பூசணியும் ஐயைந்து வயதிற் பிறந்த பிள்ளையும் ஆபத்தக் குதவும். ஆனி முற்சாரல்; ஆடி அடைசாரல். ஆனியிற் பூனையும் குடி போகாது. ஆனியும் கூனியும் ஆகா. ஆனை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும். ஆனை அடி பொறுத்தாலும் ஆட்டு அடி பொறுக்க முடியாது. ஆனை அடியும் சரி; குதிரை குண்டோட்டமும் சரி. 2290 ஆனை அம்பலம் ஏறும்; ஆட்டுக்குட்டி அம்பலம் ஏறுமா? ஆனை அயர்ந்தாலும் பூனை அயராது. ஆனை அரசன் கோட்டையைக் காக்கும்; பூனை எலி வளையைக் காக்கும். ஆனை அழிப்பது தெரியவில்லையாம்; ஆடு அழிப்பது தெரிகிறதாம். ஆனை அழுக்கு அலம்பினால் தெரியும். ஆனை அழுதால் பாகன் பழியா? ஆனை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும். ஆனை அறிவு பூனைக்கு ஏது? ஆனை ஆங்காரம் அடிபேரும் மட்டும். ஆனை ஆசாரவாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும். 2300 ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா? ஆனை ஆனை என்றால் தந்தம் கொடுக்குமா? ஆனை இருந்த இடமும் அரசன் இருந்த இடமும் ஒரு நாளும் பொய்யாகா? ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன். ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது. ஆனை இலைக்கறி, பூனை பொரிக்கறி. ஆனை இல்லாத ஊர்வலம், பருப்பு இல்லாத கல்யாணம். ஆனை இளைத்தால் ஆடு ஆகுமா? ஆனை எவ்வளவு பெரிதானாலும் அங்குசக் குச்சிக்கு அடக்கந்தானே? ஆனை ஏற அங்குசம் இல்லாமல் முடியுமா? 2310 ஆனை ஏற ஆசை; தாண்டி ஏறச் சீவன் இல்லை. ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவதுபோல. ஆனை ஏறியும் சந்துவழி நுழைவானேன்? ஆனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தாற் போல. ஆனை ஏறினால் மாவுத்தன்; குதிரை ஏறினால் ராவுத்தன். ஆனை ஏறினால் வானம் எட்டுமோ? ஆனை ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத்தான் வேண்டும். ஆனை ஒரு குட்டி போட்டும் பலன், பன்றி பல குட்டி போட்டும் பலனில்லை. ஆனை ஒழுக்க ஆசை; பூளு எட்ட வேண்டுமே. ஆனை கட்டச் சங்கிலி தானெடுத்துக் கொடுத்தாற் போல. 2320 ஆனை கட்டி ஆண்டால் அரசனும் ஆண்டியாவான். ஆனை கட்டித் தீனி போடமுடியுமா? ஆனைகட்டியார் வீட்டில் வாழ்க்கைப் பட்டால், ஆறுகலம் அரிசியாவது சிறப்பு வைக்க வேண்டாமா? ஆனை கட்டி வாழ்ந்தவன் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லை. ஆனை கட்டு தாள் வானை முட்டு போர். ஆனை கட்டின மரம் ஆட்டம் கொடுக்கும். ஆனை கட்டும் தொழுவத்தில் பூனை கட்டலாமா? ஆனை கண்ட பிறவிக்குருடர் அடித்துக் கொண்டது போல. ஆனை கருப்போ வெள்ளையோ, கொம்பு வெள்ளைதான். ஆனை கலக்குகிற குட்டையில் கொக்கு மீன் பிடிக்கச் சென்றதாம். 2330 ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்; ஒட்டை கறுத்தால் உதவி என்ன? ஆனை காணாமல் போனால் குண்டுச் சட்டியிற் தேடினால் அகப்படுமா? ஆனை காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் பாகனுக்கு அடிமை. ஆனை குத்தும் தோட்டிக்குப் பிணக்கா? ஆனை கிட்டப் போக ஆசையாக இருக்கிறது; மாணி எட்டவில்லை. ஆனை குடிக்கும் தண்ணீர் பூனை குடிக்குமா? ஆனை குட்டி போட்டதென்று முயல் முக்கினாற் போல. ஆனை குட்டி போடுகிறதென்று ஆடும் போட்டால் புட்டம் கீறி விடும். ஆனை குட்டி போடும் என்று நம்பி லத்தி போட்டதாம். ஆனைக் குட்டிக்குப் பால் வார்த்துக் கட்டுமா? 2340 ஆனை குப்புற விழுந்தால் தவளை கூட உதைத்துப் பார்க்குமாம். ஆனை குளிக்கச் செம்பு தண்ணீரா? ஆனை குளித்த குளம் போல. ஆனை கெட்டுப்போகக் குடத்தில் கைவிட்டுப் பார்க்கிறதா? ஆனை கேடு அரசு கேடு உண்டா? ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா? ஆனை கொடுத்தவன் அங்குசம் கொடானா? ஆனை கொடுத்து ஆடு வாங்கினானாம். ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா? ஆனை கொழுத்தால் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும். 2350 ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு; மனிதன் கொழுத் தால் கீரைத்தண்டு. ஆனைக் கண் விழுந்த பலாக்காய் போல. ஆனைக்காரன் பெண் அடைப்பைக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளம். ஆனைக்காரனுக்கு ஆனையாலே சாவு. ஆனைக் கவடும் பூனைத் திருடும். ஆனைக்காரனிடம் சுண்ணாம்பு கேட்டது போல. ஆனைக்கில்லை கானலும் மழையும். ஆனைக்கு அகங்காரமும் பெண்ணுக்கு அலங்காரமும் (தீமை தரும்) ஆனைக்கு ஒரு கவளம்; ஆளுக்கு ஒருவேளைச் சோறு. ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம். 2360 ஆனைக்கு ஒரு பிடி; எறும்புக்கு ஒன்பது பிடி. ஆனைக்குக் கண் அளந்தார்; ஆட்டுக்கு வால் அளந்தார். ஆனைக்குக் கோவணம் கட்டினாற் போல. ஆனைக்குத் தீனி அகப்பையில் கொடுத்தால் போதாது. ஆனைக்குத் தீனி வைத்துக் கட்டுமா? ஆனைக்குத் தீனியிடும் வீட்டில் ஆட்டுக் குட்டிக்குப் பஞ்சமா? ஆனை துரத்தி வந்தாலும் ஆனைக்காவில் புகல் ஆகாது. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும். ஆனைக்குத் தெரியுமா அங்காடி விலை? ஆனைக்குத் தேரை ஊனா? 2370 ஆனைக்குப் பகை சுள்ளெறும்பு. ஆனைக்குப் பனை சர்க்கரை. ஆனைக்குப் புண் வந்தால் ஆறாது. ஆனைக்கு மங்கள நீராட்டு. கிண்ணத்தில் எண்ணெய் எடு. ஆனைக்கு மதம் பிடிக்க; பாகனுக்குக் கிலி பிடிக்க. ஆனைக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது. ஆனைக்கு இராசா மூங்கில் தடி. ஆனைக்கு லாடம் அடித்ததைக் கண்டதுண்டா? ஆனைக்கும் அடி சறுக்கும். ஆனைக்கும் அடி தவறும்; பூனைக்கும் எலி தவறும். 2380 ஆனைக்கும் அடி தவறும்; வேடனுக்கும் குறி தவறும். ஆனைக்கு அறுபது முழம்; அறக்குள்ளனுக்கு எழுபது முழம். ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும். ஆனைக்கும் உண்டா ஏழரை நாட்டுச் சனி? ஆனைக்கும் உண்டு அவகேடு. ஆனைக்கும் பானைக்கும் சரி. ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம். ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்குச் சோறில்லையாம். ஆனைக் கூட்டம் எதிர்த்தால் பூனைக்குட்டி என்ன செய்யும்? ஆனைக்கொரு வாழைத்தண்டு; ஆண்பிள்ளைக்குக் கீரைத் தண்டு. 2390 ஆனை சிந்திய சிறுகவளம் எறும்புகூட்டத்துக்குப் பெரு கவளம். ஆனை செத்தாலும் ஆயிரம் பொன். ஆனை சொற்படி பாகன்; பாகன் சொற்படி ஆனை. ஆனை தரைக்கு ராசா; முதலை தண்ணீர்க்கு ராசா. ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டி தழுவுகிறதா? ஆனை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்ளும். ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது. ஆனை திரும்ப அரைக்கால் நாழிகை. ஆனை தின்ற விளாங்கனி. ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது. 2400 ஆனை துறடு அறியும்; பாகன் நோக்கு அறிவான். ஆனை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லை. ஆனை நடைக்கும் குதிரை ஓட்டத்திற்கும் சமம். ஆனை நிழல் பார்க்கத் தவளை அழித்தாற் போல. ஆனை நிற்க நிழல் உண்டு; மிளகு உருட்ட இலை இல்லை! ஆனை நீட்டிப் பிடிக்கும்; பூனை தாவிப் பிடிக்கும். ஆனை நுழைய அடுக்களை பிடிக்குமா? ஆனை படுத்தால் ஆட்டுக் குட்டிக்குத் தாழுமா? ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை பட்டால் கொம்பு; புலி பட்டால் தோல். 2410 ஆனை பலம் அதுக்குத் தெரியாது. ஆனை பழக்க ஆனை வேண்டும். ஆனை பார்க்க வெள்ளெழுத்தா? ஆனை பாய்ந்தால் ஆர் பிடிப்பார்? ஆனை பிடிக்க பூனை சேனை. ஆனை பிடிப்பவனுக்குப் பூனை எம்மாத்திரம்? ஆனை புகுந்த கரும்புத் தோட்டமும் அமீனா புகுந்த வீடும் உருப்படா. ஆனை பெரிது ஆனாலும் அதன் கண் சிறிது. ஆனை பெருத்தும் ஊனம் உதறாதே. ஆனை போக அதன் வால் போகாதோ? 2420 ஆனை போகிற வழியிலே எறும்பு தாரை விட்டாற் போல. ஆனை போகிறது தெரியாது; எலி போகிறது தெரியுமா? ஆனை போன வீதி கேட்க வேண்டுமோ? ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டியா போக முடியாது? ஆனை போய் ஆறு மாசம் ஆனாலும் தாரை மறையுமா? ஆனை போல் ஐந்து பெண் இருந்தாலும் பூனை போல் ஒரு நாட்டுப் பெண் வேண்டும். ஆனை போல வந்தான் பூனை போலப் போகிறான். ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது. ஆனை பசிக்குச் சோளப் பொரியா? ஆனைப் பாகன் ஆனைக்கு வீட்டைக் காட்டான். 2430 ஆனைப் பாகன் மனைவி ஆறு மாசத்துக்குள் விதவை. ஆனை மதத்தால் கெட்டது; அரசன் பயத்தால் கெட்டான். ஆனை மதத்தால் வாழைத் தண்டு; ஆண்பிள்ளை மதத்தால் கீரைத்தண்டு. ஆனை மதம் பட்டால் காடு கொள்ளாது; சாது மதம் பட்டால் ஊர் கொள்ளாது. ஆனை மிதிக்கப் பிழைப்பார்களா? (மிதித்தால்) ஆனை மிதித்த காசு பானை நிரம்பும். ஆனை மிதித்து ஆள் பிழைக்கவா? ஆனை மிதித்துக் கொல்லும்; புலி இடிந்து கொல்லும். ஆனை முகவரைப் பிடித்த கலி அரசமரத்தையும் பிடித்தது போல். ஆனை முகவனுக்கு அவல்கடலை கொண்டாட்டம். 2440 ஆனை முட்டத் தாள் வானைமுட்டப் போர். ஆனை முட்டத் தேர் நகரும். ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடமில்லையா? ஆனை மேல் அங்குமணி எடுத்தாலும் ஆனைவால் கூழை வால். ஆனை மேல் அம்பாரி போனால் பூனைக்கு என்ன புகைச்சல்? ஆனை மேல் இடும் பாரத்தைப் பூனைமேல் இடலாமா? ஆனை மேல் உட்கார்ந்திருப்பவன் வெறிநாய் கடிக்கு மென்று அஞ்சுவானா? ஆனை மேல் ஏறிப் பாறை மேல் விழுகிறதா? ஆனை மேல் ஏறினால் ஆருக்கு லாபம்? ஆனை மேல் ஏறுவேன், வீரமணி கட்டுவேன். 2450 ஆனை மேல் போகிறவனைச் சுண்ணாம்பு கேட்டால் அகப்படுமா? ஆனை மேல் போகிறவனையும் பானையோடே தின்றான் என்கிறது. ஆனை மேல் வருபவன் அந்துகாலன்; குதிரை மீது வருபவன் குந்துகாலன். ஆனை வயிறு நிரம்பினாலும் ஆட்டு வயிறு நிரம்பாது. ஆனையிலே போனாலும் அந்துகண்ணன் என்பார்கள்; குதிரையிலே போனாலும் குந்துகண்ணன் என்பார்கள். ஆனையின் அதிகாரம் சிற்றெறும்பிடம் செல்லாது. ஆனையின் கண்ணுக்குச் சிற்றெறும்பும் மலையாம். ஆனையும் அறுகம் புல்லினால் தடைபடும். ஆனையும் ஆனையும் முட்டும்போது இடையில் அகப்பட்ட கொசுவின் கதி என்னாவது? ஆனையை அடக்கலாம்; அடங்காப் பிடாரியை அடக்க முடியாது. 2460 ஆனையை அடக்கலாம்; ஆசையை அடக்க முடியாது. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இரும்பு அங்கு சத்திற்கு ஏமாந்து நிற்பானேன்? ஆனையை இடுப்பிலே கட்டிச் சுளகாலே மறைப்பாள். ஆனையைக் கட்ட ஓணான் கொடி போதுமா? ஆனையைக் கட்டி ஆள ஆண்டியால் முடியுமா? ஆனையைக் கட்டி ஆளலாம்; அரைப்பைத்தியத்தைக் கட்டி ஆள முடியாது. ஆனையைக் கட்டித் தீனி போட முடியுமா? ஆனையைக் கண்டு அஞ்சாதவன் ஆனைப் பாகனைக் கண்டால் அஞ்சுவானா? ஆனையைக் காணோம் என்று பானையைத் தேடிய கதையாக இருக்கிறது. ஆனையைக் குடத்தில் அடைக்க முடியுமா? 2470 ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா? ஆனையைக் கொன்று அகப்பையால் மூடினாற் போல. ஆனையைத் தண்ணீரில் இழுக்கும் முதலை, பூனையைத் தரையில் இழுக்குமா? ஆனையைத் துரத்த நாயா? ஆனையைத் தேடக் குடத்துக்குள் கைவிட்டாற்போல. ஆனையை நம்பிப் பிழைக்கலாம்; ஆண்டியை நம்பிப் பிழைக்க முடியுமா? ஆனையை நோண்டினால் அது உன்னை நோண்டி விடும். ஆனையைப் பார்க்க ஆயிரம் பேர். ஆனையைப் பார்த்து விட்டுப் பூனையைப் பார்த்தால் பிடிக்குமா? ஆனையைப் பிடிக்க ஆனைதான் வேண்டும். 2480 ஆனையைப் பிடிக்க எலிப்பொறியா? ஆனையைப் பிடித்துக் கட்ட அரைஞாண் கயிறு போதுமா? ஆனையைப் பிடிப்பான் ஆண்பிள்ளைச் சிங்கம்; பானையைப் பிடிப்பாள் பத்தினித் தங்கம். ஆனையைப் புலவனுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு. ஆனையைப் பூனை ஆக்குவான்; பேனைப் பெருமாள் ஆக்குவான். ஆனையைப் பூனை மறைத்ததாம். ஆனையைப் போல் சுவர் எழுப்பினால் ஆர் தாண்டுவார்கள்? ஆனையைப் போல் வஞ்சனை; புலியைப் போல் போர். ஆனையை விழுங்குவான்; கடைவாயில் ஒட்டிய ஈயைக் கண்டு நடுங்குவான். ஆனையை விற்றா பூனைக்கு வைத்தியம் பண்ணுகிறது? 2490 ஆனையை விற்று துறட்டிக்கு மன்றாடுகிறான். ஆனை லத்தி ஆனை யாகுமா? ஆனை வந்தாலும் தாண்டுவான்; புலி வந்தாலும் தாண்டுவான். ஆனை வந்து விரட்டினாலும் ஆனைக்காவில் நுழையாதே. ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே. ஆனை வலம் போனாலும் பூனை வலம் போகக்கூடாது. ஆனைவாய்க் கரும்பும், பாம்பின் வாய்த் தேரையும் யமன் கைக் கொண்ட உயிரும் திரும்பி வரா. ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம். ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா? ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி. ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம். 2500 ஆனை விழுந்தால் அதுவே எழுந்திருக்கும். ஆனை விற்றால் ஆனை லாபம்; பானை விற்றால் பானை லாபம். ஆனை வீட்டிலே பிறந்து அடைப்பக்காரனுக்கு வாழ்க்கை பட்டாளாம். ஆனைவேகம் அடங்கும் அங்குசத்தில். ஆன்றோர் அறிவு நிறைந்தோர்.  இ இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான். இக்கரைக்கு அக்கரை பச்சை. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இக்கரையில் பாகலுக்கு அக்கரையில் பந்தல். இக்கரையில் பாகலைப் போட்டு அக்கரையில் கொழு கொம்பு வைக்கிறான். 2510 இக்கன்னா வைக்காமல் பேசமாட்டானே! இங்கிதம் தெரியாதவளுக்குச் சங்கீதம் தெரிந்து பலனென்ன? (தெரியாதவனுக்கு) இங்கு இருந்த பாண்டம் போல (இங்கு - பெருங்காயம்) இங்கே தலை காட்டுகிறான்; அங்கே வால் காட்டுகிறான். இங்கே வா நாயே என்றால் மூஞ்சியெல்லாம் நக்குகிறது. இசை இல்லாப் பாட்டு இழுக்கு (இசைவு) இச்சித்த காரியம் இரகசியமல்லவே. இச்சைச் சொல் யாசகத்தால் இடிபட்டவனில்லை. இச்சையாகிய பாக்கியமிருக்க பிச்சைக்குப் போவானேன். இச்சையுள்ள காமுகர்க்குக் கண்ட இடத்திலே. 2520 இஞ்சி தின்கிற குரங்குபோலப் பஞ்சரிக்கிறான். இஞ்சி தின்ற குரங்கே இன்னும் கொஞ்சம் உறங்கே. இஞ்சி தின்ற குரங்கைப் போல. இஞ்சியில் பாய்ந்தா லென்ன? மஞ்சளில் பாய்ந்தாலென்ன? இஞ்சி யென்றால் தெரியாதா? எலுமிச்சம் பழம் போலத் தித்திப்பாயிருக்குமே. இஞ்சி லாபம் மஞ்சளில், இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே. இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவது. இடக் கைக்கு வலக்கை து; வலக்கைக்கு இடக் கை துணை. இடக்கை பிட்டத்துக்கு எளிது. 2530 இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான். இடம் அகப்படாத தோசம் மெத்த பதிவிரதை. இடம் இல்லாத இடத்தில் இளையாளும் பிள்ளை பெற்றாள். இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். இடமாட்டாதவன் எச்சில் என்றானாம். இடம்பட வீடு எடேல். இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணக் கூடாது. இடறி விழுந்தவன் அதுவும் ஒரு பங்கி என்றானாம். இடறின காலிலே இடறுகிறது. இடாதவனுக்கு இட்டுக் காட்டு. 2540 இடாள், தொடாள் மக்கள் மீது உயிராம். இடி இடி எங்கே போகிறாய்? ஏழையின் தலையில் விழப் போகிறேன். இடி இடிச்சாலே எலி உருட்டுதுங்கிறச் செவிடனுக்கு, தேங்காய் விழுற சத்தம் மட்டும் தெளிவா கேட்குமாம். இடிஇடித்தாலும் படபடப்பு ஆகாது. இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு இடித்தால் குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக் கொண்டு குடிப்பான். இடிக்கிற வானம் பெய்யாது. இடிக்கிற வானம் பெய்யாது. குலைக்கிற நாய் கடிக்காது. இடிக்குக் குடை பிடிக்கலாமா? இடிக்கும் முன் குனிய வேண்டும். இடிகொம்புக்காரன் கோழி, குசுச் சத்தத்துக்கு அஞ்சுமா? 2550 இடி கொம்பும் விட்டு, பிடி கொம்பும் விட்டது போல. இடித்த புளி போல் இருக்கிறான். இடித்த புளியாட்டம் இருந்தால் என்னதான் நடக்கும்? இடித்தவளுக்கும் புடைத்தவளுக்கும் ஒன்று; ஏன் என்று வந்தவளுக்கு இரண்டு. இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க எட்டிப் பார்த்தவள் கொட்டிக் கொண்டு போனாளாம். இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும் பிடிசோறு அன்பாய்ப் போடுவது போதும். இடிமேல் இடி விழுந்தால் குடை மேல் குடை பிடிப்பான். இடிவிழுந்த ஊரில் குடியிருந்தாலும் இடை விழுந்த ஊரில் குடியிருக்கல் ஆகாது. இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் இடிசாமம். இடுகிற தெய்வம் எங்கும் இடும். 2560 இடுகிறவள் தன்னவளானால், அடிப்பந்தியிலிருந்தாலென்ன? கடைப்பந்தியிலிருந்தாலென்ன? இடுகிறவன் தன்னவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன? இடுப்பில் இரண்டு காசு இருந்தால், சருக்கென்று இரண்டு வார்த்தை வரும். இடுப்பிலே காசு இருந்தால் அசப்பிலே வார்த்தை வரும். இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம். இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான். இடுப்பைப் பிடிடா என்றால் எதையோ பிடிக்கிறான். இடும்பனுக்கு வழி எங்கே? இருக்கிறவன் தலை மேலே. இடும்பு செய்வார்க்கு இராப்பகலில்லை. இடும்புக்குத் தின்றால் உடம்புக்குப் பலம். 2570 இடுவது பிச்சை; ஏறுவது மோட்சம். இடுவார் இடுவதையும் கெடுவார் கெடுப்பார். இடுவார் பிச்சையைக் கெடுக்கிறதா? இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார். இடுவார்க்கு இல்லை கெடுவாழ்வு. இடுவாள் இடுவாள் என்று ஏக்குற்று இருந்தாளாம்; நாழி நெல் கொடுத்து நாலாசையும் தீர்த்தாளாம். இடைக்கணக்கன் செத்தான்; இனி பிழைப்பான் நாட்டான். இடைக்கிழவி எப்போ சாவாளோ, இடம் எப்போ ஒழியுமோ? இடைக்கோழி இராத் தங்குமா? இடைசாய்ந்த குடம் கிடை. 2580 இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் பார்த்ததுபோல. இடைச்சி ஆத்தாள் கோனிச்சி. இடைச்சி சம்பத்தும் சாணாத்தி வாழ்வும் சரி. இடைச்சி மாப்பிள்ளை என்றைக்கு வருவான்? இடைச்சி மாயம் மோரோடு தண்ணீர் கலந்த மாயம். இடைச்சிக்கு எட்டுத் தாலி; பறைச்சிக்குப் பத்துத் தாலி. இடைச்சிக்கு மாப்பிள்ளை என்றைக்கிருந்தாலும் வருவான். இடைஞ்ச முடைஞ்ச வீட்டிலே பெண்ணோட தாயி புளி குடிக்க வந்தாளாம். இடைத்தெருவில் ஊர்வலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறான். இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது. 2590 இடையனில் ஆண்டியுமில்லை; குயவனில் தாதனும் இல்லை. இடையனும் பள்ளியும் இறைத்த புலம் சாவி. இடையன் எப்போது சாவானோ? கம்பளி எப்போது மிஞ்சுமோ? இடையன் எறிந்த மரம் போல. இடையன் கரடிமேல் ஆசைப்பட்டது போல. இடையன் கலியாணம் விடியும் பொழுது. (விடிய விடிய) இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி. இடையன் செய்வது மடையன் செய்யான். இடையன் பிடரியிலே ஆட்டைப் போட்டுக் கொண்டு தேடினாற் போல. இடையன் புத்தி பிடரியிலே. (இடைப்புத்தி) 2600 இடையன் பெருத்தாலும் இடையன் கிடைநாய் பெருக்காது. இடையன் வெட்டு அறா வெட்டு. இடையூறு செய்தோன் மனையில் இருக்காது பேய் முதலாய். இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு. இட்ட உறவு ஏனாதிக் கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம். இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா? இட்ட கடன் பட்ட கடனுக்கு ஈடாகாது. இட்ட குடி கெடுமா? இட்ட குடியும் கெட்டது; இளைத்த குடியும் கெட்டது. 2610 இட்ட குடியும் கெட்டு ஏற்ற குடியும் கெட்டது. இட்ட கையை நத்துமா? இடாத கையை நத்துமா? இட்டதன் மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா? இட்டது சட்டம் எடுத்தது வரிசை. இட்டது எல்லாம் கொள்ளும் பட்டிமகன் கப்பரை. இட்ட தெல்லாம் பயிராமா? பெற்றதெல்லாம் பிள்ளையாமா? இட்டதைக் கேட்டால் கெட்டது உறவு. இட்ட படியே ஒழிய ஆசைப்பட்டுப் பலன் இல்லை. இட்டம் அற்ற முனியன் அட்டமத்துச் சனியன். இட்டவர்கள் தொட்டவர்கள் கெட்டவர்கள்; இப்போது வந்தவர்கள் நல்லவர்கள். 2620 இட்டவன் இடாவிட்டால் வெட்டுப் பகை. இட்ட வீடு கல்யாணம்; இடாத வீடு கல்லெடுப்பு. இட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா? இட்ட வீட்டுக்குப் பிட்டிட்டுக் கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண்ணிட்டுக் கொண்டு திரிகிறான். இட்டாருக்கு இட்ட பலன். ஏரி யடைத்தாருக்குக் கோடி பலன். இட்டாருக்கு இடுதலும், செத்தாருக்கு அழுதலும். இட்டாருக்கு இட வேண்டும்; செத்தாருக்கு அழ வேண்டும். இட்டார்க்கு இட்டபடி. இட்டார்க்கு இடு; செத்தாருக்கு அழு. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர். 2630 இட்டிலியா தோசையா கொட்டி வைத்தால் போதும். இட்டு ஆளாப் பெண்ணுக்குச் சுட்டாலும் தெரியாது. இட்டு உண்டான் செல்வம் தட்டுண்டாலும் கெடாது. இட்டுக் கெட்டாரும் இல்லை; ஈயாது வாழ்ந்தாரும் இல்லை. இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை. இட்டுக் கெட்டவன் எள்ளு விதை. இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு. இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் சமைக்கவும் தெரியும். (அடுக்கவும்) இணக்கம் அறிந்து இணங்க வேண்டும். இணக்கம் இல்லாதவனோடு என்ன வாது? 2640 இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி. இணங்கினால் தித்திப்பு; பிணங்கினால் கசப்பு. இணை பிரியா அன்றில் போல. (பிரிந்த) இதற்கா பயப்பட்டேன் என் ஆண்டவனே, ஆனை குதிரை வந்தாலும் தாண்டுவனே! இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா? (பணமா) இது தெரியாதா இடாவே? நுகத்தடிக்கு நாலு துளை. இதைச் சொன்னான் பரிகாரி; அதைக் கேட்டான் நோயாளி. இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்? இத்தனை பெரியவர் கையைப் பிடித்தால் எப்படி மாட்டேன் என்கிறது. இத்தனை பேர் பெண்டுகளில் என் பிள்ளைக்கொரு தாயில்லை. 2650 இந்த அடிக்கு எந்த நாயும் சாகும். இந்த அம்பலம் போனால் செந்தி அம்பலம். இந்த எலும்பைக் கடிப்பானேன்; சொந்தப் பல்லும்போவானேன்? இந்தக் கண்ணில் புகுந்து அந்தக் கண்ணில் புறப்படுகிறான். இந்தக் கருப்பில் செத்தால் இன்னும் ஒரு கருப்பு மயிரைப் பிடுங்குமா? இந்தக் குண்டுக்குத் தப்பித்தால் மக்காவுக்குப் போயிடு வேன் என்றானாம். இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்? (இத்தனைத்திரு) இந்தச் சளுக்கனுக்கு இரண்டுப் பெண்டாட்டி; வந்தவாசி மட்டும் வல்ல வாட்டு. இந்தப் பூனையும் பால் குடிக்குமா? இந்தப் பெரிய கொள்ளையிலே அப்பா என்கப் பிள்ளை யில்லை. 2660 இந்த மடம் போனால் சந்தை மடம். (இல்லாவிட்டால்) இந்த மூஞ்சிக்குத் தஞ்சாவூர்ப் பொட்டு; வந்தவாசி வரையில் வல்லவாட்டு; அதைக் கழுவப் புழலேரித் தண்ணீர். இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே. இந்திரனைக் சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமதர்ம ராசனைக் கையாலே மறைப்பாள். இந்திரைக்கு மூத்தவள் மூதேவி. இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னாகும். இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது. இம்பூரல் தெரியாமல் இருமிச் செத்தான் (இம்பூரல் - தூதுவளை). இம்மிக்கு ஆசைப்பட்டு இன்னுயிரை யிழந்தவர். இம்மிய நுண்பொருள் ஈட்டி நிதியாக்கிக் கம்மியரும் ஊர்வர் களிறு. 2670 இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம். இம்மையில் பிறர்க்கும் மறுமையில் தமக்கும். இம்மென்று போனாளாம்; பிள்ளையைப் பெற்றாளாம். இயமன் ஒருவனைக் கொல்வான்; ஏற்றம் மூவரைக் கொல்லும். இயல்பாய் மணம் இல்லாச் சந்தனக் கட்டை இழைத்தாலும் மணக்காது. இயற்கை வாசனையோ? செயற்கை வாசனையோ? இரக்கப்பட்டால் ஏறி மிதிப்பதா? இரக்கப்பட்டு இடம் தந்தவனை அரக்கப்பதற அடித்து வெருட்டுவதா? இரக்கப் போனாலும் சிறக்கப் போ. இரக்கம் இல்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடிது. 2680 இரக்கம் இல்லாத வைத்தியன் யமனுக்குச் சமம் இரக்கம் கெட்டவன் எல்லாம் கெட்டவன். இரக்கிற நாய்க்குச் சோறு பஞ்சமா? இரசவாதிக்கு ஏது பஞ்சம்? இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல. இரண்டு ஆட்டில் ஊட்டிய குட்டியானான். இரண்டு இரும்பு ஏழடிக் கரும்பு. இரண்டு ஓடத்தில் கால் வைக்கிறதா? இரண்டு கண்ணும் பொட்டை; பெயர் தாமரைக் கண்ணன். இரண்டும் கெட்டான் பேர்வழி. 2690 இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டு. இரண்டு கையும் போதாதென்று அகப்பையும் கட்டிக் கொண்டான். இரண்டு பட்ட ஊரில் குரங்கும் குடி இராது. இரண்டு பெண் கொண்டானுக்கு நடையிலே வாருகோல்; ஒரு பெண் கொண்டானுக்கு உறியிலே சோறு. இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை என்ன கொண்டை? இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம். இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்? இரண்டு வீட்டிலும் கலியாணம்; இடையில் செத்ததாம் நாய்க்குட்டி. இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை ஏறிச் செத்தானாம். இரண்டும் இரண்டு அகப்பை; இரண்டும் கழன்ற அகப்பை. 2700 இரத்தக் கொதிப்புக்குப் பூண்டு; இருமலுக்கு வசம்பு. இரத்தம் சுண்டினால் எல்லாம் சரியாகி விடும். இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை. இரந்து உண்டவன் இருந்து உண்ணான். இரந்து குடித்தாலும் இருந்து குடி. இரந்தும் பருந்துக்கு இடு. இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன். இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா? இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை. இரப்பவனுக்குப் பஞ்சம் என்றைக்கும் இல்லை. 2710 இரப்பவனுக்கு வெண்சோறு பஞ்சமா? (வெறுஞ் சோறு) இரப்பான் சோற்றுக்கு என்றும் பஞ்சம் இல்லை. இரப்பாரின்றி ஈவாரில்லை. இரவலுக்குப் போனாலும் இனத்தோடு தங்கணும். இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன். இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவா. இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா? இரவல் சதமா? திருடன் உறவா? இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம். (சேலையை) இரவல் சோறு பஞ்சம் தாங்குமா? 2720 இரவல் துணியாம், இரவல் துட்டாம், இழுத்துக் கொட்டு மேளத்தை, இறுகக் கட்டு தாலியை. இரவல் புடவையில் தூரமானாற் போல. இரவல் புருசா கதவைத் திற; ஏமாளி புருசா வீட்டை விடு. இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை. இரவில் எது செய்தாலும் அரவில் செய்யாதே (அரவு - இராகு) இரவில் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகலில் பிறந்த பிள்ளையும் ஆகாது. இரவு எல்லாம் இராமாயணம் கேட்டுவிட்டு விடிந்ததும் சீதைக்கு இராமர் என்ன வேண்டும் என்றானாம். இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா? இரவுச் சாப்பாட்டைக் குறைத்தால் ஆயுள் நீளும். இரவும் பகலும் எவர்க்காவும் காத்திரா. 2730 இரவு வேளைக்கு இலுப்பெண்ணெய் விளக்கு. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையிற் கெட்டவனும் இல்லை. இராசப் பையன் ஆடுகிறான் என்று தாசப்பையனும் ஆடு கிறான். இராசா வீட்டில் இருந்து கொண்டு அன்ன தரித்திரம் எதற்கு? இராசன் ஏறிய குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது? இராசன் செங்கோல் தன் நாடு வரையில். இராசன் இருக்கப் பட்டணம் அழியுமா? இராசன் மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான். இராட்டை வேலை தெரியாதவன் தேர் வேலைக்கு அச்சாரம் வாங்கினதுபோல. இராப் பட்டினிக்காரியைத் தீட்டின அரிசி கடன் கேட்டா ளாம். 2740 இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா? இராப் பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப் பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம். இராப் பட்டினி பகல் கொட்டாவி. இராப் பட்டினி பாயோடே. இராப் பிறந்த குழந்தை பகலிலே கத்தும்; பகல் பிறந்த குழந்தை இராவிலே கத்தும். இராப் பிறந்த பிள்ளையும் ஆகாதுங்கிறான்; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாதுங்கிறான். இராமநாதபுரத்து அழுக்கி, இராசசிங்கமங்கலத்து மினுக்கி. இராமனைப் போல் அரசன் இருந்தால் அனுமனைப் போல் சேவகன் இருப்பான். இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டா லென்ன? (பரதன்) இராமன் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தி. 2750 இரா முழுதும் இராமாயணம் கேட்டு சீதைக்கு இராமன் என்ன வேண்டும் என்ற கதை. இராமேசுவரம் போயும் செய்த பாவம் தொலைய வில்லை. இராவணன் என்றால் படையும் நடுங்கும். இராவுத்தரே கொக்கா பறக்கிறாராம்; குதிரை கோதுமை அல்வா கேட்டுச்சாம். இரிசி உடைமை இராத் தங்காதது போல. இரிசிப் பிண்டம் இராத் தங்காது. இரிசிக்கு புருசன் ஆசை உண்டா? (இரிசி - பேடி) இரிசி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது. இரு கண்ணும் இல்லாதவனுக்குத் தாமரைக் கண்ணன் என்பது போல. இரு காலும் அற்றவனுக்குத் தாண்டவராயன் என்பது போல. 2760 இருக்க இடம் இல்லாமல் போனாலும் பெருக்கக் பெருக்க பேசுவதில் மாத்திரம் குறையில்லை. இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான். இருக்க இருக்க எல்லாம் இசைவாகும். இருக்கச் சாணிடமில்லாமற் போனாலும் பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரம் குறைவில்லை. இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்னு. இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும். இருக்கிற அன்றைக்கு எருமை மாடு தின்றாற் போல. இருக்கிற அன்றைக்கு எள்ளுக் கொல்லை; இல்லாத அன்றைக்கு வெறுங் கொல்லை. இருக்கிற அன்றைக்கு மனக்கொல்லை; இல்லாத அன்றைக்கு சிவக்கொல்லை. இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாம் சுகம். 2770 இருக்கிற இடத்தை விளக்கேற்றித்தான் பார்க்க வேண்டும். இருக்கிறது மூன்று மயிர்; அதில் இரண்டு புழுவெட்டு. இருக்கிறதை விட்டுவிட்டுப் பறக்கறதைப் பிடிக்கபோன கதையா. இருக்கிறபோது பெருங்கும்பம்; இல்லாதபோது காவிக்கும்பம். இருக்கிறவர்கள் சாப்பிட்டால் மருந்துக்கு; இல்லாதவர்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கு. இருக்கிற வரையில் இருள் மூடிப் போச்சாம்; செத்தவன் கண் செந்தாமரை என்றானாம். இருக்கிறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு அநேக வீடு. இருக்கிறவனுக்கு ஒன்று; இல்லாதவனுக்குப் பத்து. இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய் சிரைப்பான். (ஒழுங்காய்) இருக்கிறவன் நம்மவனானால் இடைப்பந்தியில் இருந்தா லென்ன? கடைப்பந்தியில் இருந்தாலென்ன? 2780 இருக்கும் இடம் ஏவுமா? இருக்கும் பிள்ளை மூன்று; ஓடும் பிள்ளை மூன்று; பறக்கும் பிள்ளை மூன்று. இருக்கும் போதே இரக்கப் போவானேன்? இருக்கும் வளையில் எலியைக் கொல்ல முடியாது. இருசுழி இருந்து உண்டாலும் உண்ணும்; இரந்து உண்டாலும் உண்ணும். இருட்டறைக்குள்ளே நுழைந்து முரட்டுத் திருடனைப் பிடிக்கிற மாதிரி. இருட்டில் உதட்டைப் பிதுக்கின மாதிரி. இருட்டில் சிவப்பாயிருந்தால் என்ன? கருப்பாய் இருந்தால் என்ன? இருட்டில் போனாலும் திருட்டுக் கை நிற்காது. இருட்டிலே குருட்டு ஆண்டி. 2790 இருட்டின வீட்டில் குருட்டெருமை போல. இருட்டுக் குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம். இருட்டு வீட்டிலே குருட்டு காக்காய் ஓட்டுகிறது. இருட்டு வீட்டில் குருட்டு ஆனை. இருட்டு வீட்டில் குருட்டுப் பிள்ளை பெற்றாளாம். இருட்டு வீட்டிலே குருட்டுக் கண்ணன் மலட்டு மாட்டை விடிய விடியக் கறந்தானாம். இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைத்தது போல். இருட்டைப் பழிப்பதா அறிவு? விளக்கை ஏற்றுவதே அறிவு! இருதலைக் காதலே இன்பம் தரும். இருதலைக் கொள்ளி எறும்பு போல் இடர்ப்படுபவனுக்கு இன்பம் ஏது? 2800 இருத்திக் கழுத்தை அறுத்து ஈரமண்ணையும் கூறு கொள் கிறதா? இரு நாய்க்கிட்ட எலும்பு போல. இருந்த இடம் ஏழு முழ ஆழம் வெந்து போகும். இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்துப் போயிற்று. இருந்த கால் மூதேவி; நடந்த கால் சீதேவி. இருந்தல்லவோ படுக்க வேண்டும்? இருந்த வெள்ளத்தைத் தள்ளுச்சாம் வந்த வெள்ளம். இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் தள்ளிக்கிட்டுப் போயிற்றாம். இருந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி. இருந்தவன் எழுவதற்குள்ளே நடந்தவன் ஒருகாதம். 2810 இருந்தவன் தலையிலே இடிவிழுந்தாற் போல. இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன். இருந்தாலும் பொல்லாப்பு; இல்லாமலும் பொல்லாப்பு. இருந்தால் அப்பன்; இல்லாவிட்டால் சுப்பன். இருந்தால் அள்ளி வீசுவான்; இல்லாவிட்டால் சொல்லி வீசுவான். இருந்தால் இடுவது; இல்லையே விடுவது (உரம்) இருந்தால் ஏகக் கொள்ளை; இல்லாவிட்டால் பகற் கொள்ளை. இருந்தால் ஓணம்; இல்லாவிட்டால் ஏகாதசி. இருந்தால் சாப்பாடு; இல்லாவிட்டால் பட்டினி. இருந்தால் செட்டி; எழுந்திருந்தால் சேவகன். 2820 இருந்தால் நாவாப்சா; இல்லாட்டி பக்கிரிசா. இருந்தால் பூனை; பாய்ந்தால் புலி. இருந்து இருந்து இடையனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம். இருந்து சுகங் கற்றால் வரப்பேறிப் பேள முடியாது. இருந்து கெட்டவன் இரப்புக்கும் ஆகான். இருந்து கொடுத்தால் நடந்து வாங்க வேண்டும். இருந்து பணங்கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது. இருந்தும் கெடுத்தான் பாவி செத்தும் கெடுத்தான். இருபது ஆண்டுகள் சிரமப்பட்டு ஒரு ஆணை ஒரு பெண் உருவாக்குகிறாள்; இரண்டு வினாடிகளில் வேறொரு பெண் அவனை மாற்றி விடுகிறாள். இருப்பது இரு மயிர்; அதில் ஒன்று புழுவெட்டு. 2830 இருப்பது எல்லாம் இருந்துவிட்டு இளித்தவாயன் ஆவானேன். இருப்பது பொய்; போவது மெய். இருப்பத்தோரு வயசுக்கு மேலே மனித எலும்பு வளர்ச்சி இல்லை. இருப்பவனுக்கும் கேளாதவனுக்கும் கொடுக்காதே. இருப்பிடம் தலைப்பிள்ளை; தலைக்கடை தென்னம் பிள்ளை. இரு மனது மங்கையோடு இணங்குவது அவலம். (மனசு, அவம்) இருமினால் பிழைப்பது கடினம்; தும்மினால் கேட்க வேண்டுமோ? இரும்பு அடிக்கிற இடத்தில் ஈய்க்கு என்ன வேலை. (நாய்க்கு, எறும்புக்கு) இரும்பு எடுத்த கையும், துரும்பு எடுத்தகையும் சும்மா இராது. இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா? (இருப்பு) 2840 இரும்பு கோணினால் யானையை வெல்லலாம்; கரும்பு கோணினால் கட்டியும் பாகுமாம்; அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமோ? நரம்பு கோணினால் நாமதற்கு என் செய்வோம்? இரும்புச் சலாகையை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாறு குடித்தால் தீருமா? (துண்டை) இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும். இரும்பு செம்பானால் துரும்பு தூணாகும். இரும்புத் துண்டை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாற்றைக் குடித்தால் சரியாகுமா? இரும்புத் துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா? இரும்புத் தூணைச் செல் அரிக்குமா? (கறையான்) இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது. இரும்பும் குறும்பும் இருக்கக் கெடும். இரும்பை இரும்புதான் பிளக்க வேண்டும். 2850 இரும்பை இரும்புதான் வெட்ட வேண்டும்; எருக்கங்குச்சி வெட்டாது. இரும்பை எலி தின்றது என்கிறான் இடக்கன். இரும்பை எலி தின்னுமா? இரும்பை எறும்பு அரிக்குமா? இரும்பைக் கறையான் அரித்தால், பிள்ளையைப் பருந்து கொண்டு போகாதா? இரும்போடு உராய்ந்தால் தங்கத்துக்குத்தான் கேடு. இருமலே இடி விழுகிறது; தும்மல் எப்படியோ? இருமும் போது கட்டிய தாலி தும்மும்போது அறுந்து விட்டது. இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா? இருவரும் ஒத்தால் ஒருவருக்கும் பயமில்லை. 2860 இருவரும் ஒத்தால் பிணக்கு வருவானேன்? இருவர் நட்பு ஒருவர் பொறை. இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை. இருவர் வேட்டைக்கு ஒரு நாயா? இரு வீட்டுக்கு ஒரு முகடு. இருளனுக்குத் தெரியாதா எலிக்குஞ்சு வாசனை? இரு வீட்டுக்கு ஒரு முற்றம். இருளன் பிள்ளைக்கு எலி பஞ்சமா? இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? இருளன் இராச விழி விழிப்பானா? 2870 இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம். இரைச்சலே ஒழிய கழிச்சல் இல்லை. இலக்கணப் பெண்சாதி மானியம் காக்கிறாள். இரை போடும் மனிதனுக்கு இரையாகும் ஆடு. இலக்கணம் கற்றவன் கலக்கம் அறச்சபை காண்பான். இலக்கணம் புலவர்க்கு அணிகலன். இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம். இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவது இல்லை. இலங்கையில் பிறந்தவர்கள் எல்லாம் இராவணன் அல்லர். 2880 இலங்கையைச் சுட்ட குரங்கு. இலந்தைப்பழம் புழுப்போல் துடிக்கிறது. இலவசம் கொடுத்தவனும் கெட்டான்; இலவசம் வாங்கினவனும் கெட்டான். இலவசமாய் வந்த மாட்டை நிலவிலே கட்டி ஓட்டு. இலுப்பைச் சர்க்கரை கொடையாம்; துரைகள் மெச்சின நடையாம். இலுப்பைப் பூவுக்கு இருபுறமும் பொத்தல். இலுப்பைப் பூவைத் திருப்பினால் இரண்டுபுறமும் பொத்தல். இலை அசைந்தாலும் இலைக்குக் கேடு; முள் அசைந்தாலும் இலைக்குக் கேடு. இலை தின்னி காய் அறியான். இலைக் கறிக்கு வழியில்லை; இட்டிலி தோசை கேட்குதாம். 2890 இலைக்கும் உண்டு பட்டையும் பழுப்பும். இலை சாய்கிற பக்கம் குலை சாயும். இலைப் பழுப்பு ஆனாலும் குலைப் பழுப்பு ஆகாது. இலைப்புரை கிளைத்து எடுப்பதா தங்கம்? இலை மறைவு காய் மறைவு. இலை மறைவு தலை மறைவு வேண்டாமா? இலையும் பழுப்பும் எங்கும் உண்டு. இல்லது வாராது உள்ளது போகாது. இல்லறமும் துறவறமும் மனத்திலே. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. 2900 இல்லறம் பெரிது; துறவறம் சிறிது (பழிப்பு) இல்லாத ஊருக்கு எவரைக் கேட்டால் வழிதெரியும்? இல்லாத சொல் அல்லல் படும். இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. இல்லாதவன் கோவம் பொல்லாதது. இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா? இல்லாதவன் பெண்டாட்டி எல்லோருக்கும் வைப்பாட்டி. இல்லாதவனோ? பொல்லாதவனோ? இல்லாதவன் பொல்லாதவன். இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம். 2910 இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது. இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா? இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை. இல்லானை இல்லாளும் வேண்டாள். இல்லிடமில்லார்க்கு நல்லிடமில்லை. இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற மூதேவிக்கு என்ன வந்தது? இல்லை என்கிற வீட்டில் பல்லியும் சேராது. இல்லை என்று தேடிப்போய் இருப்பதையும் இழந்தான். இல்லோர் இரப்பது இயல்பு. இல்வாழ்க்கையே நல்வாழ்க்கை. 2920 இவள் இழுப்புக்கும் அவன் பரப்புக்கும் எல்லாம் சரியாப் போகும். இவள் பத்தினி வேடம் போட்டாள்; அவன் படுதா பிடித்துக் காட்டினான். இவள் விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலை மகனுக்குக் கலியாணம் பண்ணுவாள். இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம் (ஏழு) இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான். இவன் புத்தி உலக்கைக் கொழுந்து. இவன் மகாபெரிய கள்ளன், காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கிறது அரிது. இவ்வழி போனால் நாய்; அவ்வழி போனால் முள். இவ்வூர்ப் பூனையும் புலால் தின்னாது. இழந்த சொத்து பெரிய சொத்து. 2930 இழப்பதற்கு இல்லாதவன் ஈடுபடுவது அரசியல். இழப்பாரை வெல்வார் இல்லை; எதிர்ப்பாரை வெல்வார் உண்டு. இழவுக் கள்ளனாக இருந்தாலும் உளவுக்கள்ளனாக இருக்கக் கூடாது. இழவு கொடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. இழவுக்கு இஞ்சி வாங்கப்போனவன் கருமாதிக்குக் கத்திரிக் காய் வாங்கிக் கொண்டு வந்தான். இழவுக்கு வந்தவனை உழவுக்கு அழைத்தானாம். இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா? இழவு சொன்னவன் பேரிலேயா பழி? இழவு வீட்டுக்குப் போனாலும் இடக்கை நீளும். இழவைத் துறப்பவர் எல்லாம் துறப்பார். 2940 இழுக்கும் மாட்டுக்குத் தானே கழுத்துப் புண் வலி. இழுக்கான பொன்னைப் புடத்தில் வைத்து எடுப்பார். இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று. இழுத்த படியெல்லாம் வரும் தங்கக் கம்பி. இழுத்துப் பிடித்துத் தின்றாலும் வழுக்கி வழுக்கிப் போகும். இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்? இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டு. இழை ஊடாடா நட்பு பொருள் ஊடாடக் கெடும். இழையத் தீட்டிக் குழைய வடித்தல். இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான். 2950 இளங்கன்று பயமறியாது. (காளை) இளஞ்சிங்கம் மத யானைக்கு அஞ்சுமா? இளமைச் சோசியம் முதுமை வைத்தியம். இளமையில் கல். இளமையில் கல்வி எப்போதும் நிற்கும். இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து. இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை (மிடிமை) இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது. இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம். இளமையில் முயற்சி முதுமைக்கு ஆறுதல். 2960 இளமையில் முயற்சி முதுமையில் காக்கும். இளம் பருத்திக்காடு ஏழு உழவு செய்தால் சொப்புப் பணம் வரும். இள வெந்நீர் குளிக்காதவளா உடன்கட்டை ஏறப் போகிறாள்? இளவெயில் காயாத வளா தீப் பாயப்போகிறாள்? இளிச்ச கண்ணி பிளிச்சை வாங்காள். இளித்தவாயனைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம். இளித்தவாயன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி (மச்சினச்சி) இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி; ஏறியடித் தானாம் தவசிப்பிள்ளை. இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு. இளைத்த உடம்புக்கு இரும்பைக் கொடு. 2970 இளைத்த புலியைப் பார்த்து எலி, எழுந்திருச்சு வாடா மச்சான் சடுகுடு ஆடலாம் என்றதாம். இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர். இளைத்தவர் கிளைப்பார்; கிளைத்தவர் இளைப்பார். இளைத்தவள் தலையில் ஈரும் பேனும். இளைத்தவனோடே சேர்ந்தாலும் மலைத்தவனோடே சேரக் கூடாது. இளைத்தவனுக்கு எள்ளு; வலுத்தவனுக்கு வாழை. இளைத்தவனைக் கண்டானாம்; ஏணிப்பந்தம் பிடித் தானாம். இளைத்தவனை வலியான் கோவித்தால் வலியானை வல்லவன் கேட்பான். இளைத்தவன் எள்ளை விதை. இளைத்தவன் இரும்பை உண்; வலுத்தவன் வாளம் உண். 2980 இளைத்தவன் எள்ளு போடுவான்; வலுத்தவன் கரும்பு போடுவான். இளைத்தவன் எள்ளு விதைக்க வேண்டும்; கொழுத்தவன் கொள்ளு விதைக்க வேண்டும். இளைத்தவன் ஏழு வருசத்திற்கு எள்ளு விதைக்க வேண்டும். இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனி. (வைப்பாட்டி) இளைத்து இனத்தாரிடம் போவானேன்? இளைது என்று பாம்பு இகழ்வார் இல். இளைப்பு ஓட்டினால் எமனையும் பலகாரம் பண்ணுவாள். இளைமைச் சூதாடி முதுமைப் பிச்சை. இளையாளைக் கிழவன் அரிக்கிறது போல. இளையாளே வாடி மளையாளம் போவோம்; மூத்தாளே வாடி, முட்டிக்கொண்டு சாவோம். 2990 இளையாள் இலை தின்னி; மூத்தாள் காய் அரிவாள். இறகு இல்லாப் பறவைக்கு உட்கார ஒரு நாழிகை இல்லை. இறகு முற்றிப் பறவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்க்கும். இறக்கப் போனாலும் சிறக்கப் போ. இறக்கப் போனாலும் பரக்கப் போக வேண்டும். இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு. இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்; ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச்சே நீச்சானால் கரையேறுவது எப்படி? இறங்கு துறையிலே நீத்தானால் ஏறு துறையிலே எப்படி? இறங்கு துறையிலே நீத்தானால் இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது? 3000 இறங்கு பொழுதிலே மருந்து குடி. இறங்கும் படர்தாமரை; ஏறும் தேமல். இறடுங்கால் இறடும். இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி. இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம். இறந்தால் போச்சு மூச்சு; மறந்தால் போச்சுக் காசு. இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும். இறந்து இறந்து பிறந்தாலும் இருவக் கரையானாய்ப் பிறக்க வேண்டும். இறப்பில் இருந்த அகப்பை சோற்றில் விழுந்த மாதிரி. இறாக்கறியோ புறாக் கறியோ! 3010 இறுகினால் களி; இளகினால் கூழ். இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை. இறுப்பானுக்குப் பணமும் கிடையாது; உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது. இறைக்க இறைக்க கிணறு சுரக்கும். இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப்பெருகும் பெருஞ்செல்வம். இறைக்கிற கிணறு ஊறும்; இறையாத கிணறு நாறும். இறைக்கிறவன் இளித்த வாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடும். இறைக்கை முளைத்தால் பறக்க இடம் தேடும். இறைச்சி தின்றவன் கடுப்புக்கு மருந்து அறிவான். இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப்போட்டு கொள்ளலாமா? 3020 இறைத்த கிணறு ஊறுமா? இறையாத கிணறு ஊறுமா? இறைத்த கிணறு ஊறும்; இறையாத கிணறு நாறும். இறைத்த கிணறு சுரக்கும். இறையத்தனை அச்சாணி மலையத்தனைத் தேரை நடத்தும் இறையாத கிணறு பாழும் கிணறு. இறைவனை ஏற்று; அரசனைப் போற்று. இனக் கூட்டானாலும் நிலக்கூட்டு ஆகாது. இனக் கேடே மனக் கேடு. இனத்தை இனம் தழுவும். இனத்தைக் கண்டாலும் கனத்தையே தேடும். 3030 இனப்பகை எரி நெருப்பு. இனம் இனத்தோடு சேரும். இனம் இனத்தைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும். இனம் இனத்தோடே; பணம் பணத்தோடே. இனம் இனத்தோடே; வெள்ளாடு தன்னோடே. இனம் போன்று இனமல்லார். இனிக்குதென்று முழுங்கவும் முடியவில்லை; கசக்குது என்று துப்பவும் முடியவில்லை. இனிப்பிலா விருந்து விருந்தாகுமா? இன்சொல்லால் இடர் வராது. இன்சொல்லே ஏற்றம் தரும். 3040 இன்பமும் துன்பமும் இணைவிடா. இன்பமும் துன்பமும் யாருக்கும் உண்டு. இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு. இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு. இன்பமும் துன்பமும் பொறுமையிலே. இன்று அற்று இன்று போகிறதா? இன்று இருப்பார் நாளைக்கு இல்லை. இன்றிருப்பார் நாளை இல்லை; நேற்றிருந்தார் இன்றில்லை. இன்று இருப்போன் நாளை இருப்பான் என்று சொல்ல முடியாது. இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி. 3050 இன்றைக்கு அறையில் இருந்தால் நாளைக்கு அம்பலத்தில் வந்தே தீரும். இன்றைக்கு ஆவது நாளைக்கு ஆகுமா? இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும். இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுக்க மாட்டானா? இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம். இன்றைக்குச் சாவது நேற்றுத் தெரியுமா? இன்றைக்குச் சிரிப்பு நாளைக்கு அழுகை. இன்றைக்குச் சின்னதுக்கு வந்தது நாளைக்குப் பெரியதுக்கு வரும். இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள். இன்றைய இளைஞர் நாளைய மூத்தோர் (தலைவர்) 3060 இன்னம் இருக்கிறது தேருக்குள் சிங்காரம். இன்னும் போடு இரண்டு மொந்தை.  ஈ ஈ அடித்தான் காப்பி. ஈ, எறும்பு நுழையாத இடம் இல்லை. ஈ ஏறி மலை சாயுமா? ஈக்கடித்த பெண்ணுக்கு இழை ஒட்டுவதா? ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமல் பிடிப்பார்கள். ஈகை இல்லா கை சோகை. ஈகை உடையோன் எக்களிப்பு அடைவான். ஈகையாளனுக்கே இரு கையும் பயன்படும். 3070 ஈகையின்றிப் புகழில்லை. ஈக்கும் பாலுக்கும் எச்சில் இல்லை. ஈக்கு விடம் தலையில்; தேளுக்கு விடம் கொடுக்கில். ஈசல் இறகு முளைத்தால் சாவு பக்கத்திலேயே. ஈசலுக்கு எல்லாம் பகை. ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது. ஈசல் பறந்தால் மழை. ஈசல் பறந்தால் மழை மாறும். ஈசல் பெறும் போக்கில் சொறியாத் தவளை வேட்டை ஆடும். ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுந்தது. 3080 ஈசல் பொறுக்கி பேசவும் அறியான். ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல். ஈசனுக்கு ஒப்பு எங்குமில்லை. (இங்கொன்று) ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா? ஈசன் எப்படி, அப்படி தாசன். ஈசானிய மின்னலுக்கு எருதும் நடுங்கும். ஈச்சங் கள்ளு எதிலும் குளிர்ச்சி. ஈச்சங் காட்டில் எருமை குடியிருந்த கதை. ஈச்ச மரம் இலை உதிர்க்காது; ஈயாக் கருமி எதையும் இழக்கான். ஈச்ச முள் கொண்டு இறுக இறுகத் தைத்தாலும் தேற்றிய வசனம் சொல்லாமல் விடான். 3090 ஈச்ச முள்ளாலே இருவாயும் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை; பூவுக்கு மணம் இல்லை என்கிறாள் (என்கிறான்) ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு. ஈடன் பாடு அஞ்சன்; கூழை எருது நுளம்புக்கு அஞ்சாது. ஈடு ஆகாதவனை எதிர்க்காதே. ஈடு உள்ள குடிக்குக் கேடு இல்லை. ஈடு சோடு எங்கும் கிடையாது. ஈட்டி எட்டின மட்டும் குத்தும்; பணம் பதின்காத மட்டும் குத்தும். ஈட்டி எட்டின வரை பாயும்; பணம் பாதாளம் வரை பாயும். ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் வரைக்கும் பாயும். ஈட்டிக்காரன் என்றால் எட்டூர் நடுங்கும். 3100 ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை. ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி. ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இடு குமரி. ஈதல் உடையோரை யாவரும் புகழ்வர். ஈந்து உண்டால் வயிறு நிறையும். ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும். ஈ போகிறது தெரியும்; எருமை போகிறது தெரியாது. ஈப் பிசினி இரப்பது கூடக் கக்கிசம் (கஞ்சிசம்) ஈயத்தைக் காய்ச்சலாம்; இரும்பைக் காய்ச்சலாமா? ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. 3110 ஈயத்தைப் புடம் வைத்தால் ஈயம் வெள்ளி ஆகுமா? ஈயம் பிடித்தவன் ஏது சொல்லினும் கேளான். ஈயாத புல்லர் இருந்தென்ன? போயென்ன? எட்டி மரம் காயாது இருந்தென்ன? காய்த்துப் பயனென்ன? ஈயாத புல்லனை எவ்விடத்தும் காணோம். ஈயாத கஞ்சன் இருந்தென்ன? போயென்ன? (லோபி) ஈயாத கருமிக்கு ஏராளச் செலவு. ஈயாதவன் தோட்டத்து வாழை இரண்டு குலை தள்ளும். ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ் செடி தழைத்தென்ன? ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான். ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ். 3120 ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். ஈயார் பொருளுக்குத் தீயார். ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. ஈயுந்தனையும் எரு இடு; காயுந்தனையும் களை பறி. ஈயைப் பிடித்தால் கை வேறு; கால் வேறு. ஈயைப் போல் துப்புரவும் எறும்பைப் போல் சுறுசுறுப்பும் (சுத்தமும் பலனும்) ஈர் உருவப் பேன் அகப்படும். (அகப்படுமா?) ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல. ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும். ஈரங்காய்ந்தால் பிட்டத்தில் மண் ஒட்டாது. 3130 ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தறுப்பான். ஈரத்தில் ஏரைப் பிடி. ஈரத்துணியை இடுப்பில் கட்ட வேண்டியதுதான். ஈரத்துணியைப் போட்டுக் கழுத்தை அறுப்பான். (வெட்டுவான்) ஈரம் தானே பீரம் பயிர்க்கு. ஈர நாவிற்கு எலும்பில்லை. ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும். ஈரமில்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன? ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா? ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா? ஈரம் உள்ள இடத்திலே ஈமொய்குமா? 3140 ஈரம் இருந்தால் ஏறி மிதிக்கவா? ஈரம் உள்ள இடத்திலே ஈ மொய்கும். ஈரம் உடையோரை யாவரும் புகழ்வர். ஈரம் போகாமல் எருவை மூடு. ஈரலிலே மயிர் முளைத்தவன். ஈர விதைப்பும், ஈரூர் வேளாண்மையும், தாரம் இரண்டும் தனக்குப் பகை. ஈர வெங்காயத்திற்கு இருபத்து நாலு புரை. ஈரூரில் உழுதவனும் கெட்டான்; இரண்டு பெண்டாட்டி கட்டினவனும் கெட்டான். ஈரை நினைப்பான்; பேனை மறப்பான். (மறக்கான்) ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறது (ஆக்கு கிறாள்; ஆக்கிடுவான்) 3150 ஈவதினும் மேல் இல்லை; இரப்பதினும் தாழ்வு இல்லை. ஈ வதையைக் கண்டால் யாவரும் அண்டார். (ஈவதை) ஈ விழுந்தாலும் எடுத்தாலொழியப் போகுமா? ஈ விழுந்த சோறு எடுத்தாலொழியப் போகுமா? ஈவோனுக்கு ஒருபோது உணவு; இரப்போனுக்குப் பல போது உணவு. ஈவோனுக்கு ஒருபோது போசனம்; இரப்போனுக்கு ஏராளம். ஈவோனுக்குப் பாக்கு வெற்றிலை; இரப்போன் வயிற்றுக்குச் சோறு. ஈழத்தில் எண்ணெய் ஆடி இங்கே பதம் பார்ப்பதா? ஈழத்தில் செக்காட; இங்கே பதம் பார்க்க. ஈழத்தில் தேங்காய் காசுக்கு இரண்டு என்று வாங்கப் போன கதை. 3160 ஈழமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் சாமத்துக்கு மழை தப்பாமல் வரும். ஈழையும் கொல்கையும் எதிர்த்து மின்னினால் பள்ளத்திலே இருக்கிற குடியை மேட்டிலே போடு. ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான். ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ். ஈனரை அடுத்தால் மானம் அழியும். ஈனவும் தெரியாது; நக்கவும் தெரியாது (எடுக்கவும்) ஈனனுக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் கைக் கொள்வான். ஈனனுக்கு இரு செலவு. ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப்போம். ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய். 3170 ஈன்றவள் தாய் பாட்டி; இவள் தாயின் தாய் பூட்டி. ஈன்றோர் நஞ்சிற் சான்றோர் இல்லை.  உ உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங் கிளிஞ்சில் பயிராகுமா? உங்கப்பன் மேலே ஆணை, என் மேலே ஆசையாயிருக்க வேண்டும். உங்களப்பன் செத்தான் பழி உன்னை விடேன். உங்களப்பன் பூச்சிக்குப் பயப்பட்டேனோ? உன் பூச்சிக்குப் பயப்பட? உங்கள் உறவிலே வேகிறது. ஒரு கட்டு விறகிலே வேகும். உங்கள் உறவிலே வேகிறதைவிட ஒரு கட்டு விறகிலே வேகிறது மேல். உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது. உங்கள் வீட்டுப் பனங்கட்டை ஒற்றைப் பணத்தை முடிந்து கொண்டு கிடக்குமோ? 3180 உசுபிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய். உச்சத்தில் சொன்னால் அச்சம் இல்லை. (பல்லிவாக்கு) உச்சந்தலையில் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா? உச்சந் தலையில் முள்தைத்து உள்ளங் காலில் புரை ஓடிற்றாம். உச்சாணிக் கிளையில் ஏறினால் உயிருக்கு ஆபத்துத்தானே? உடம்பிலே பயமிருந்தால் நன்றாய்ச் செய்வான். உடம்பின்றி உயிரில்லை. உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய். உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்த கதை. உடம்பு எல்லாம் புளுகு; பல் எல்லாம் ஊத்தை. 3190 உடம்புக்குப் பால் குடிப்பதா? ஊருக்குப் பால் குடிப்பதா? உடம்பு தேற்றிக் கொண்டு அல்லவா யோகத்தில் போக வேண்டும். உடம்பு உளைந்த கழுதை உப்புக் களத்திற்குப் போனது போல். உடம்புதான் சரியில்லை ஒரு சாணை மாவு வை என்றானாம். உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன? உடம்பை ஒடித்துக் கடம்பில் விடு. (முறித்து) உடம்போடே ஒரு நாட்டியம் உண்டா? உடலினை உறுதிச் செய். உடலுக்கு ஓய்வு தருபவன் குடலுக்கு ஓய்வு தருகிறானா? உடலுக்குள்ளே நாக்கை வளைக்கிறதா? 3200 உடலுக்கோ பால் வார்த்து உண்பது? ஊருக்கோ பால் வார்த்து உண்பது? உடல் அளவு விரதம்; பொருள் அளவு தானம். உடல் இரண்டு; உயிர் ஒன்று. உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை. (உள்ள வனுக்கு) உடல் ஒருவனுக்குப் பிறந்தது. நாவு பலருக்குப் பிறந்தது. உடல் முழுதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தெரு முழுதும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். உடல் மெச்சப் பால் குடிக்கிறாயா? ஊர் மெச்சப் பால் குடிக்கிறாயா? உடன் பிறந்தார் மீதுள்ள பகையாற் பெற்ற தாயைக் கொல்வதுபோல். உடன் பிறந்தே கொல்லும் பிணிகள். (வியாதி) உடன் பிறப்பால் தோள்வலி போம். 3210 உடன் பிறப்பு இல்லாத உடம்பு பாழ். உடாப் புடவை பூச்சிக்கு இரை. உடுக்காத புடவையைச் செல்லு அரிக்கும். உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கைவேறு. உடுக்கைக்கு இடை சிறுத்தால் ஓசையுண்டு; உரலுக்கு இடைசிறுத்து உதவி என்ன? உடுத்த சீலை (புடவை) பாம்பாய்க் கடித்ததுபோல. உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்; உண்டு கெட்டான் சோனகன்; புதைத்துக் கெட்டான் தமிழன். உடுத்துக் கெட்டான் துலுக்கன்; தின்று கெட்டான் மாத்துவன் (உண்டு) உடுப்பது பீறல் ஆடை; நடப்பது தந்தக் குறடாம். உடுப்பாரைப் பார்த்தாலும் உண்பாரைப் பார்க்கலாமா? 3220 உடும்புக்கு இரண்டு நாக்கு; உனக்கு இரண்டு நாக்கா? உடும்புக்கு இரண்டு நாக்கு; மனிதனுக்கு ஒரு நாக்கு. உடும்புக்கறி தின்றவன் வாயால் எடுத்தால் உட்சதை பிடுங்கிக் கொண்டு வரும். உடும்பு போனால் போகிறது; கைவந்தால் போதும். உடும்பு வேண்டாம் கையை விடு. உடைத்துப் போட்ட தேங்காய் ஒட்டவா செய்யும்? உடைந்த சட்டி உலைக்கு உதவாது. உடைந்த சங்கில் ஊதை பறியுமா? உடைந்த சங்கு ஊத்துப் பறியுமா? உடைந்த தடியை ஒருபோதும் நம்பாதே. 3230 உடைமுள் காட்டில் நடைபார் ஒய்யாரம். உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா? உடைமைக்காரனுடன் உண்டா ஓர் நாட்டியம்? உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு. உடைமை யென்பது கல்வி யுடைமை. உடைமையும் கொடுத்து அருமையும் குலைவதா? உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. உடையவராக இருந்தால் உறவெல்லாம், படை படையாகக் குவியும். உடையவனிற் கைபற்றினவன் மிடுக்கன். உடையவன் அறிந்திடாத சடுக்கு இல்லை. 3240 உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை. உடையவன் இல்லாவிட்டால் ஊருக்கு இளப்பம். உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை. உடையவன் இல்லை என்றால் ஓணான்கூட வீட்டுக்கு வந்து ஒன்றுக்கு இருந்து விட்டுப் போகும். உடையவள் கண்ணோடாப் பயிர் உடனே அழியும். உடையவன் சொற்படி கமுகடி களை பறி. உடையவன் பார்க்காத வேலை ஒரு முழங் கட்டை. உடையவன் பாராப் பயிர் உருப்படுமா? உடையவன் பொறுத்தாலும் உடையவன் வீட்டு நாய் பொறுக்காது. உடையார் உண்டைக் கட்டிக்கு அழும்போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்கிறதாம். 3250 உடையார் பாளையம் காட்டிலே ஒன்பது புலியைக் குத்தினேன்; இப்ப நாயைக் கண்டால் நடுங்குகிறேன். உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன? உடையைப் பறிக்கிறவன் கடையை விடுவானா? உடையைப் பற்றிய தீ உடையவனை விடுமா? உட்கார்ந்தல்லவோ படுக்க வேண்டும்! உட்கார்ந்தவனைக் கட்டமாட்டாதவன், ஓடுகிறவனைக் கட்டுவானா? உட்கார்ந்திருந்தவன் எழுந்திருக்குமுன் நின்றவன் நெடுந் தூரம் போகலாம். உட்கார்ந்தவன் காலிலே மூதேவி; ஓடுகிறவன் காலிலே சீதேவி. உட்கார்ந்தால் எழுந்திருக்காத பிள்ளையும், படுத்தால் எழுந்திருக்காத பெண்ணும் நலம். உட்கார்ந்தால் ஒய்யாரம்; ஓடினால் ஊர்க்கள்ளி. 3260 உட்கார்ந்திருக்கும் போது அடித்தால் பொன்னாகும். ஓடும் போது அடித்தால் செம்பானாலும் ஆகும் இரும்பானாலும் ஆகும். உட்கார்ந்திருப்பது ஒட்டுத்திண்ணை; கனவு காண்பது மச்சு மேல். உட்கார்ந்து உட்கார்ந்து குண்டி பெருத்தது; ஓடி ஓடி நரம்பு வலுத்தது. உட்கார்ந்துதான் காலை நீட்ட வேண்டும். உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா? உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று. உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி. உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி. உணவுக்கு நெருக்கம்; நட்புக்குத் தொலைவு. 3270 உணவே மருந்து; மருந்தே உணவு. உண் உண் என்று உபசரியான் வாசலிலே உண்ணாம லிருப்பது கோடி பெறும். உண்கிற சோற்றிலே கல்லைப் போடுகிறதா? (மண்ணை) உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா? உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா? உண்ட இடத்தில் உட்கார்ந்திருந்தால் கண்ட பேர் கரிப்பார்கள். உண்ட இலையில் உட்கார்ந்தால் சண்டை வரும். உண்ட இளைப்பு தொண்டருக்கு உண்டு. உண்ட உடம்பிற்கு உறுதி; உழுத புலத்தில் நெல்லு. (உடலுக்கு) உண்ட உடம்பு உருளும்; தின்ற பாக்குச் சிவக்கும். 3280 உண்ட உடல் உரஞ் செய்யும். உண்ட களை தொண்டருக்கும் உண்டு. உண்ட சுற்றம் உருகும். உண்ட சோற்றுக்கு இரண்டகம் பண்ணுகிறதா? உண்டதற்குப் பின்னே ஒருநூறடி உலாவு. உண்டது தானே ஏப்பம் வரும். உண்டதும் தின்றதும் லாபம்; பனியில் கிடந்தது லோபம். உண்டதை உடம்பு சொல்லும்; விளைந்ததை வைக்கோல் சொல்லும். உண்ட பிள்ளை உரஞ் செய்யும். உண்ட பேர் உரம் பேசுவார். 3290 உண்ட வயிறு கேட்கும்; தின்ற பாக்கு சிவக்கும். உண்ட வயிற்றுக்கு உபசாரமா? உண்ட வயிற்றுக்குச் சோறும், மொட்டைத் தலைக்கு எண்ணெயும் போல. உண்டவள் உண்டு போக என் தலை விண்டு போகிறதா? (உண்டவன்) உண்டவன் உரம் செய்வான். உண்டவன் பாய் தேடுவான்; உண்ணாதவன் இலை தேடுவான். உண்டவன் வாழ்வான்; உண்ணாதவன் சாவான். உண்ட வாய்க்கு ஒரு வெற்றிலை. உண்ட வீட்டிலே உட்காராதே போனால், கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள். உண்ட வீட்டிலே கிண்டி தூக்குவது போல. 3300 உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே. உண்ட வீட்டுக்கு இரண்டு நினைக்கிறவன் உண்டா? உண்டார் மேனி கண்டால் தெரியும். உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும். உண்டால் உடம்பு சொல்லும்; விளைந்தால் வைக்கோற் போர் சொல்லும். உண்டால் கொல்லுமோ? கண்டால் கொல்லுமோ? உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு. உண்டால் தீருமா பசி? கண்டால் தீருமா பசி? உண்டால் மயக்கம் உண்ணாவிட்டால் கிறக்கம். உண்டாற் கொல்லும் நஞ்சு (விஷம்) 3310 உண்டான தெய்வங்கள் ஒதுங்கி நிற்கையில் ஊர்ப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுததாம். உண்டானபோது கோடானுகோடி. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. உண்டி முதற்றே உணவின் பிண்டம். உண்டி வேண்டும்; இல்லாவிட்டால் தின்றி வேண்டும். உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல். உண்டு இருக்க மாட்டாமல் ஊர்வழியே போனானாம். தின்று இருக்க மாட்டாமல் தேசாந்திரம் போனானாம். உண்டு உறியில் இரு என்றால், உருண்டு தரையில் விழுந் தானாம் (தெருவில்) உண்டு என்று பெண் கொடுத்தால் சாதிகுலம் கேட்டானாம். 3320 உண்டு என்ற பேருக்கு ஈசன் உண்டு; இல்லை என் போருக்கு இல்லை. உண்டு கண்ட பூனை உறியை உறியைத் தாவும். உண்டு களித்தவனிடம் சோற்றுக்குப் போ; உடுத்துக் களித்தவனிடம் துணிக்குப் போ. உண்டு கெட்டவனும் தின்று கெட்டவனும் இல்லை. உண்டு கெட்டான் ஊதாரி; உதவிக் கெட்டான் உபகாரி. உண்டு கெட்டான் பார்ப்பான்; உடுத்துக் கெட்டான் துலுக்கன். உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இருக்குமா? உண்டு சுவை கண்டவன் ஊரை விட்டுப் போக மாட்டான். உண்டு தின்று உயரமானால் ஊரிலே காரியம் என்ன? உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்? 3330 உண்டு ருசி கண்டவனும் பெண்டு ருசி கண்டவனும் விடான். (சுவை) உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்; (சுவை) பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான். உண்டை பட்டு உறங்குகிற குருவி போல. உண்ணக் கை சலித்து இருக்கிறான். உண்ணப் படையுண்டு வெல்லப் படையில்லை. உண்ணப் பார்த்தாலும் உழைக்கப் பாராதே. உண்ண வந்த பிடாரி ஊர்ப்பிடாரியைத் துரத்திற்றாம். உண்ண வா என்றால் குத்த வருகிறான். உண்ணவும் தின்னவும் என்னைக் கூப்பிடு; ஊர்க் கணக்குப் பார்க்க என் தம்பியை அழை. உண்ணா உடம்பு உருகாது; தின்னாப் பாக்கு சிவக்காது. 3340 உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறியிடுவேன். உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும். உண்ணாத தின்னாத ஊர் அம்பலம். உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது. உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உருக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது. உண்ணாமல் கெட்டது உறவு; கேளாது கெட்டது கடன். உண்ணாமல் தின்னாமல் உறமுறையாருக்கு ஈயாமல் (வாழ்ந்து என்ன பயன்?) உண்ணாக்கைத் தொட்டால் அண்ணாக்கு. உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசங் கொண்டேன். உண்ணி கடித்த நாய் உதறுவது போல. 3350 உண்ணியைக் கண்டால் ஊரின் பஞ்சம் தெரியும். உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா? உண்ணும் உணவே மருந்து. உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி. உண்ணுவாளாம் தின்னுவாளாம் சீதாதேவி; உடன்கட்டை ஏறுவளாம் பெருமாதேவி. உண்ணேன் உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும். உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல். உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்தெண்ணும் மனம். உண்பது நாழி; உடுப்பவை இரண்டே. 3360 உண்பன தின்பன உறவுதான், செத்தால் முழுக்குத்தான்? உண்பாருக்குச் சம்பா; உழைப்பாருக்குக் குறுவை. உண்பாரைப் பாத்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது. உண்பான் தின்பான் சிவப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீரமுட்டி. உண்பான் தின்பான் சேப்பெருமாள்; குத்துக்கு நிற்பான் வைராகி (சேவைப்பெருமாள்) உண்பான் தின்பான் நயனப்பச்செட்டி; உடன்கட்டை ஏறுவான் பெருமாள் செட்டி. உண்மை உயர்வளிக்கும். உண்மைக்காரனுக்கு ஊரே பகை. உண்மைக்கு உத்தரம் இல்லை. உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை. 3370 உண்மை சொன்னால் உண்மை பலிக்கும்; நன்மை சொன்னால் நன்மை பலிக்கும். உண்மை நன்மொழி திண்மை உறுத்தும். உண்மைப்படு உறுதிப்படு. உண்மையைச் சொன்னால் உடம்பு எரிச்சல். உண்மையைச் சொன்னால் உலகம் வெறுக்கும். உண்மையைச் சொன்னால் ஊருக்குப் பொல்லாதவன். உணர்வு இல்லாக் கருவியும் உப்பு இல்லாச் சோறும் சரி. உணவு விளைவிப்பது சட்டியில்; உறவு விளைவிப்பது பட்டியில். உதடு துடிப்பார்க்கு உண்டை வெல்லம் ஆகுமாமோ? உதடு தேய்வதை விட உள்ளங்கால் தேயலாம். 3380 உதடு பழஞ்சொரிய உள்ளே நெஞ்சு எரிய (தேன், வயிறு) உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல. உதடு வெல்லம், உள்ளம் கள்ளம். உதட்டிலே உறவும் உள்ளே பகையும். (நெஞ்சிலே) உதட்டிலே புண்ணென்று பால் கறக்க முடியலை என்றாளாம். உதட்டிலே வாழைப்பழம்; உள்ளே தள்ள வேண்டுமோ? (தள்ளுவார் உண்டோ?) உதட்டிலே வெல்லம்; உள்ளத்திலே நஞ்சம். உதட்டுக்குப் பால் மாறின தாசியும், மேட்டுக்குப் பால் மாறின கணக்கனும். உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது. உதட்டுத் துரும்பு ஊதப் போகாது. 3390 உதயத்தில் வந்த மழையும், மாலையில் வந்த மாப்பிள்ளை யும் விடா. உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல. உதவாப் பழங்கலமே, ஓசையில்லா வெண்கலமே. உதவா முட்டி சுந்தரம் ஓதுகிறாளாம் மந்திரம். உதவி செய்யாவிட்டாலும் ஊறு செய்யாமல் இரு. உதவி செய்வாருக்கு இடையூறு ஏது? உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள். உதி பெருத்தால் உத்திரத்திற்கு ஆகுமோ? உதி பெருத்தாலும் உத்திரத்துக்கு உதவாது. உதியம் பெருத்து உத்திரத்துக்கு ஆகுமோ? 3400 உதிரத்துக்கு அல்லவோ உருக்கம் இருக்கும். உதிரம் உறவறியும். உதைத்த காலுக்கும் முத்தம் தருவான், உள்ளே தள்ளி உதையும் தருவான். உதைத்த காலை முத்தம் இடுவது. உதைத்த கால் புழுக்கிறபோது அல்லவோ புழுக்கும்? உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடிவயிறுசீழ் கட்டுகிறது. உதைத்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உபயோகப்படா. உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான். உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான். கொட்டி வெளுப்பான் கொங்கு வண்ணான். உதைபட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற் போல. 3410 உத்தம சேவகம் பெற்ற தாய்க்கு அதிகம். உத்தமச் சேரிக் குயவனுக்கு ஒன்றால் ஒன்று குறைவு இல்லை. உத்தமம் ஆன பத்தினி ஊர் மேலே வருகிறாள்; விட்டுக் கொடு துடைப்பக்கட்டை உஷார்; உஷார். உத்தமம் கிழக்கு; உயிர் வளரும் மேற்கு; மத்திமம் தெற்கு; மரணம் வடக்கு. உத்தமனுக்கு உடன்படிக்கை ஏன்? உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை. உத்தமனுக்கு ஓலை எதற்கு? உத்தமனுக்கும் தப்பிலிக்கும் (போக்கிரிக்கும்) உடன் படிக்கை வேண்டாம். உத்திரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை. உத்திரத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் வயலுஞ் சரி. 3420 உத்திரம் பார்த்து வித்தை எடு. உத்திரத்து அளவு கேட்டால் அரிவாள் பிடி அளவு வரும். உத்திரம் இல்லாமல் வீடு கட்டுகிற மாதிரி. உத்திராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா? உத்தியோகம் புருட லட்சணம். உத்திராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர்வாரியில் ஒரு நிலமும். உந்தி உந்திக் குதிச்சாலும் உயரத்துக்குத் தக்கதான் தாவ முடியும். உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதே. உபகாரம் வீண் போகாது. உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும். 3430 உபசரியாத வீட்டிலே உண்ணாதிருப்பதே கோடிதனம். உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா? உபசார வார்த்தைக் காசாகுமா? உண்டால் ஒழியப் பசி தீருமா? உபசார வார்த்தை வாய்க்குக் கேடு. தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு. உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சீடன் ஓடிக் கொண்டே பெய்வான். உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா? உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உப்பிட்டுக் கெட்டது மாங்காய்; உப்பிடாமல் கெட்டது தேங்காய். உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும். உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன். 3440 உப்பு இருக்கிறதா என்றால் பப்பு இருக்கிறது என்றார். உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும் (தட்டி உடையாமல் தானே உடையும்) உப்பு இருந்தால் பருப்பு இராது; பருப்பு இருந்தால் உப்பு இராது. உப்பு இல்லாக் கீரை குப்பையில் இருந்தால் என்ன? உபயோகம் அற்ற அகமுடையான் பக்கத்தில் இருந்தால் என்ன? உப்பு இல்லாத ஊறுகாயா? சுக்கு இல்லாத கசாயமா? பருப்பு இல்லாத கல்யாணமா? உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே. உப்பு இல்லாமல் ஒரு மிடாக் கஞ்சி குடிப்பான் (கலக்கஞ்சி) உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை. அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை. உப்பு உள்ள பாண்டம் உடையும். உப்பு எடுத்த கையாலே கர்ப்பூரமும் எடுக்க வேண்டும். 3450 உப்பு கட்டினால் உலகம் கட்டும். உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்தி போல. உப்புக் காண் சீசீ உமி! உப்புக்கு ஆகுமோ? புளிக்கு ஆகுமோ? உப்புக்குச் சப்பானி ஓலைக்கு எழுத்தாணி. உப்புக்கும் உதவாதவன் ஊருக்கு உதவமாட்டான். உப்புக்கும் உதவான் சப்புக்கும் உதவான் உப்புச் சட்டியும் வறையோடும் விற்றுக் கடனைக் கொடுத்து விட்டான். உப்புத் தண்ணீரும் கப்பு மஞ்சளும் ஊறிப் போயிற்று. உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போட வேண்டுமா? 3460 உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்புச் செய்தவன் தண்டனை அனுபவிப்பான். உப்பு நீர் மேகம் சேர்ந்தால் உலகில் பிரவாகம். உப்புப் பொதிகாரன் உருண்டு உருண்டு அழுதானாம்; வெற்றிலைப் பொதிகாரன் விழுந்து விழுந்து சிரித்தானாம். உப்புப் பொறாத காரியத்துக்கு ஊரைக் கூட்டினானாம். உப்புப் போட்டுச் சோறு தின்றால் சுரணை இருக்கும். உப்பு மலை மேல் உட்கார்ந்து சாப்பிட்டாலும் அள்ளிப் போட்டால் தானே. உப்பு மிஞ்சினால் உப்புச்சாறு; புளி மிஞ்சினால் புளிச்சாறு. உப்பு மிஞ்சினால் தண்ணீர் போடு; தண்ணீர் மிஞ்சினால் உப்புப் போடு. உப்பு முதல் கற்பூரம் வரைக்கும் வேண்டும். 3470 உப்பும் இல்லை; சப்பும் இல்லை. உப்பும் இல்லை; புளியும் இல்லை. உப்பும் இல்லை; புளியும் இல்லை, உண்டைக்கட்டியே உன்னை விட்டால் கதியும் இல்லை பட்டைச் சாதமே. உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை? உப்பை விற்கச் சொன்னாளா? ஊர்ப் பெரிய தனம் செய்யச் சொன்னாளா? உப்பைக் கடித்துக் கொண்டு உரலை இடித்தானாம்? உப்பைச் சிந்தினையோ? துப்பைச் சிந்தினையோ? உப்பைச் சுருக்கு உடலுக்குப் பெருக்கு. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்; தப்பைத் செய்தவன் தண்டனை அடைவான். உப்பைத் தேய்த்தால் உறிஞ்சிக் குடிக்கும் மாடு. 3480 உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்குவான். (ஓரிலை) உப்பைப் பெருக்குவது தப்பு. உப்போட முப்பத்திரண்டும் வேண்டும். உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும். உமக்கென்ன! வயதுக்கு நரைத்ததோ? மயிருக்கு நரைத்ததோ? உமி குத்தி கை நோகலாமோ? உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல. உமியும் கரியும் இருக்கிறது; உடைமை செய்யப் பொன்னில்லை. உமியைக் குத்திக் கை சலித்தது போல. உம் என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி. 3490 உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா? (ஆகாது) உயர்குடி பெருங்குடி முதுகுடி நன்குடி. ca®ªj mL¥ò mk®ªj mL¥ò.(ma®ªJ) ca®ªj fh‰iw¡ fh‰W nkhJ«.(ku¤ij¤jh‹) உயர்ந்தோருக்குப் பொருளும் மானவீரனுக்கு உயிரும் தூசு. உயிரிருக்க ஊனை வாங்குறது. உயிரிருக்கும் போது ஒரு கரண்டி நெய் வார்க்காதவன் ஒமத்தில் ஒன்பது கரண்டி வார்த்தானாம். உயிரிருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார். உயிரிருந்தால் உப்பு விற்றும் பிழைக்கலாம் (மாறி உண்கலாம்) உயிருக்கு மிஞ்சின ஆக்கினையும் இல்லை. கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமும் இல்லை. 3500 உயிருக்கு வந்தது மயிரோடு போயிற்று. உயிருள்ள மட்டும் தைரியம் விடலாமா? உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுக்க வேண்டும். உயிரைப் பகைத்தேனோ ஒரு நொடியில் கெட்டேனோ? உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம். உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழியில்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய்விட்டது போல. உயிரோடு ஒரு முத்தம் கொடுக்கவில்லை; செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம். உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா? உயிரோடு திரும்பிப் பாராதவள் செத்தால் முத்தம் கொடுப் பாளா? உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறில்லை. 3510 உயிர் காப்பான் தோழன். உயிர் பெரிதா? பணம் பெரிதா? உயிர் போகுமட்டும் கவரிமான் ஒரு மயிர் கொடாது. உயிர் போம்போதும் தைரியம் விடலாகாது. உயிர் போனாலும் உள்ளதைச் சொல்ல மாட்டான். உரக்கக் கத்தினால் உண்மையாகிவிடுமா? உரத்த குடிக்கு அனர்த்தம் இல்லை. உரத்த குரல் நெடுந்தொலைவு கேட்கும். உரத்தைத் தள்ளுமாம் உழவு. உரம் உதவுவது போல் ஊரார் உதவமாட்டார். 3520 உரம் ஏற்றி உழவு செய். உரம் செய்கிறது உறவுடையான் செய்யமாட்டான். உரலிலே தலையை விட்டுக்கொண்டு (மாட்டிக்) உலக்கைக்கு பயப்பட்டால் தீருமா? உரலிலே துணி கட்டியிருந்தாலும் உரிந்து பார்க்க வேண்டும் என்கிறான். உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி (இரண்டு). உரலுக்குப் பஞ்சம் உண்டா? உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கைக்கு அஞ்சலாமா? உரலுங் கொடுத்துக் குரலும் போக வேண்டும். உரல் பஞ்சம் அறியுமா? (அறியாது) 3530 உரல் மத்தளத்தோடு முறையிட்டாற் போல. உரிக்க உரிக்க உள்ளியில் ஒன்றுமில்லை. உரித்த கடலைத் தோலில் ஒழுகியதாம் எண்ணெய். உரித்த பழம் என்ன விலை? உரிக்காத பழம் என்ன விலை? என்றானாம் ஒரு சோம்பேறி. உரியவன் நோக்க உவக்கும் பயிர்கள். உரிய உரிய மழை பெய்து எரிய எரிய வெயில் காய்கிறது. உரியிலே ஒக்குமாம் உருளைக் கிழங்கு; கண்டு பிடிக்குமாம் கருணைக் கிழங்கு. உரு ஏறத் திரு ஏறும். உருக்கம் உள்ள சிற்றாத்தே ஒதுக்கில் வாடி கட்டி அழலாம். (உருக்கமாய்) உருசி கண்ட பூனை உறிக்கு உறிக்குத் தாவுமாம். வரிசை கண்ட மாப்பிள்ளை வந்துவந்து நிற்பானாம். 3540 உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும். உருட்டி விளையாடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை. உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும். உருண்டு உருண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும். உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும். உருத்திராக்கப் பூனை ஒன்றும் தெரியாததுபோல் இருக்கும். உருப்படத் திருப்படும். உருப்படாக் கோயிலில் உண்டைக் கட்டிவாங்கி விளக்கு இல்லாக் கோயிலில் விண்டுவிண்டு தின்றானாம். உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தை அல்ல சனத்தைப் பார். 3550 உருவிக் குளிப்பாட்டி உள்ளாடை கட்டாமல் (இருக்கலாமா?) உருவிய வாளை உறையில் இடாத வீரன். உருளுகிற கால் பாசி சேர்க்காது. உரைத்த கட்டை மணம் பெறும். உரைத்த சந்தனமும் கரைத்த மஞ்சளும். உலகத்துக்கு ஞானி பேய்; ஞானிக்கு உலகம் பேய். (ஞானம்) உலகம் அறிந்த தாசிக்கு வெட்கம் ஏது? சிக்கு ஏது? உலகம் இப்படியும் சொல்லும் அப்படியும் சொல்லும். உலகம் பல விதம். உலகம் போகும் போக்கும் ஒன்றும் புரியவில்லை. 3560 உலகம் முழுதும் எரிக்கும் சூரியனையும் ஒருகுடை மறைக்கும். உலகம் முழுதுங் கட்டியாண்டாலும் ஊழிற்குத் தப்ப எவராலாகும்? உலகமே ஒரு நாடக சாலை. உலகாயி பாட்டுக்கு ஊராயி பாட்டு ஒட்டுமா? உலகியல் என்பது ஒப்புரவு ஒழுகல். உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை. உலகிலே பெண் என்றால் பேயும் இரங்கும். உலக்கைக்கோ ஒருபக்கம் இடி; மத்தளத்துக்கோ இருபக்கம் இடி. உலக்கைக் கொழுந்தும் குந்தாணி வேரும். உலக்கை சிறுத்துக் கழுக்காணி ஆயிற்று. 3570 உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆச்சுது. உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைவாளா? உலக்கை நாதன் போன வழி எல்லாம் தவிடு பொடி. உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று. உலக்கையாலே காதுகுத்தி உரலாலே தக்கை போட்டது போல. உலர்ந்த தரையில் கோலம் போடுகிறதும் ஓர்ப்பிடிப் பெண்களுக்குக் காரியம் செய்கிறதும் ஒளிதரும். உலர்ந்த தலைக்கோலமும் ஓர்ப்படி பெற்ற பிள்ளையும் ஒட்டா. உலுத்தின் விருந்திற்கு ஒப்பானது ஒன்று மில்லை. உலையரிசி எல்லாம் குலையரிசியாப் போச்சே. உலையைக் கூட்ட ஒரு மூன்று கல். 3580 உலையைக் கூட்டி விட்டு அரிசி தேடும் பிழைப்பு. உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியுமா? (மூடலாமா) உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுகிறது. உலோபிக்கு இரு செலவு. உல்லாச நடை மேலுக்குக் கேடு; மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு. (மேனிக்கு) உவர் நிலத்திட்ட விதையும் சமரிடத்தில் சென்ற சேனையும் இரண்டாம் பட்சம். (விரையும்) உவட்டை மாற்றிட வேப்பம் புண்ணாக்கு (உவடு - களர்) உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள். உழக்கு எண்ணெய் வாங்கி உழக்கு எண்ணெய் விற்றாலும் மினுக்கு எண்ணெய் மிச்சம். உழக்கிலே கிழக்கு மேற்கா? 3590 உழக்குளிர் அடித்தால் நாற்றுப் பிடுங்கப்படாதா? உழக்கு உள்ளூர்க்கு; பதக்கு பரதேசிக்கு. உழக்கு உற்றார்க்கும் பதக்குப் பரதேசிக்குமானால் உழுத வனுக்கென்ன? உழக்கு ஊம்பப் போய்ப் பதக்குப் பன்றி கொண்டு போச்சாம். உழக்கு நெல்லுக்கு உழைக்கப் போய் பதக்கு நெல்லைப் பன்றி தின்றது போல. உழக்கு மிளகு கொடுப்பான் ஏன்? ஒளித்திருந்து மிளகு சாறு (நீர்) குடிப்பான் ஏன்? உழக்கு விற்றாலும் உண்ணாமல் முடியுமா? உழக்கு விற்றாலும் உரலுக்கும் பஞ்சமா? உழவர்கரை வேளாளர்க்கு மிதியடி பொன்னாலே. உழவர் கரை (ஒழுகரை) புதுச்சேரி அருகில் உள்ள ஊர். உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல். 3600 உழவற உழுதவன் ஊரில் பெரியவன். உழவற உழுதால் விளைவற விளையும். (விளைவேற) உழவன் கணக்குப் பார்த்தால் ஒரு சிரங்கையும் மிஞ்சாது. உழவன் சோம்பின் உழக்குக் காணான். உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆளலாம். உழவனுக்கு உழவுக் கம்புதான் மிச்சம். உழவால் பயிர் ஆகிறது எருவாலும் ஆகாது. உழவில் பகையானால் எருவிலும் தீராது. உழவிலே இல்லாவிட்டால் மழையிலே. உழவிற்கு ஏற்ற கொழு. 3610 உழவின் சிறந்த தொழிலும் இல்லை. உழவின் மிகுந்த ஊதியம் இல்லை. உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான். உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டிப்புக் காணும். உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும். உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே. உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்குப் பம்பரம் (முன்னே வரும்) உழவுக்குக் களவாளி; ஓழுக்குப் பம்பரம். உழவுக் கள்ளன் இழிவுக் கள்ளன். உழவுக்குப் பகை எருவில் தீருமோ? 3620 உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்து விடுகிற ஆளும் உதவாது. உழவுந் தரிசும் ஓர் இடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே. உழவு நட்பில்லாத நிலமும் மிளகு நட்பில்லாத கறியும் வழவழ. உழவு மறந்தால் எருது படுக்கும். உழவு மாடானால் ஊரிலே விலைப்படாதா? உழவு மாடு ஊருக்குப் போனால் இழுத்துப் பிடித்து ஏரில் பூட்டியது போல. உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள். உழவோர் உழைப்பில்தான் உலகோர் பிழைப்பர். உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று. உழுகிற காலத்தில் ஊர்சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவாள் எடுத்துக்கொண்டு புறப்பட்டால். 3630 உழுகிறது ஓர் ஏர், முன் ஏரை மறி என்றானாம். உழுகிறதை விட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற் போல. உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் ஆள் கொண்டு வந்தாற் போல. உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும். உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான். உழுகிற மாட்டுக்கு ஒரு படி கொள்ளு. ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒருபடி கொள்ளா? உழுகிற மாட்டை எருது நக்கினது போல. உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல. உழுகிறவனுக்குத் தான் தெரியும் உடம்பு வருத்தம். 3640 உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சின முறை கொண்டாடும். உழுகின்ற நாளில் ஊர்சுற்றப் போனால் அறுக்கின்ற நாளில் ஆள் தேட வேண்டாம். உழுத எருதானாலும் ஒரு நாற்றைத் தின்ன ஒட்டார். உழுத காலாலே உழப்பி விடு. உழுத மாட்டை ஒரு பிடி நாற்று தின்னவிடார். உழுத மாட்டை நுகத்தால் அடித்தாற் போல. உழுத மாடு ஊருக்குப் போக ஏருங்கலப்பையும் எதிர்க்க வந்ததாம். உழுத புழுதி உரத்திலும் மேல். உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல்லும் காணாது. உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது. 3650 உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது. (உழக்கேனும்) உழுதவன் காட்டைப் பார்; மேய்ச்சவன் மாட்டைப் பார். உழுதவன் கெட்டதில்லை; ஊர்சுற்றி வாழ்ந்ததில்லை. உழுது அலர்ந்தது பழுதாகாது. உழுதுவிட்டு வந்தவனை ஒட்டுத்திண்ணையில் இருந்தவன் உதைத்தானாம். உழுதொழில் நிற்கின் மறுதொழில் நடவா? உழுபவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியுமா? உழுபவன் ஊர்க்கணக்குப் பண்ணுவானோ? உழுபவன் ஏழை ஆனால் எருதும் ஏழைமை முறைமை கொண்டாடும். உழுவதற்கு முன் உரத்தை நாடு. 3660 உழுவார் உலகத்தார்க்கு ஆணி. உழுவார் கூலிக்கு அழுவார். உழுவாரைப் பார்த்தாலும் பார்க்கலாம்; உண்பாரைப் பார்க்க மனம் தாங்காது. உழுவானுக்கு ஏற்ற கொழு, ஊருக்கேற்ற தொழு. உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார். உழைக்க மனம் இருந்தால் பிழைக்க வழி இல்லையா? உழைக்க வேண்டும்; இல்லாவிட்டால் உரம் பெற முடியாது. உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது. உழைக்காமல் பறிக்காமல் ஒரு குதிர் நெல் தின்ன ஆசைப் பட்டான். உழைக்கிற கழுதை என்றைக்கும் உழைத்தே தீர வேண்டும். (எந்நாளும்) 3670 உழைக்கிறவன் கண்ணீர் உலகத்தை அழிக்கும். உழைத்த அளவுக்கு ஊதியம். உழைத்த கை ஓயாது. உழைத்துச் சாப்பிடுகிற சீதேவிக்கு ஒண்ட குடிசையைக் காணாம்; ஓடுகாலி மூதேவிக்கு ஊர் முழுக்க வீடாம். உழைத்துப் பிழைக்கிறது ஒரு கோடி, ஏய்த்துப் பிழைப்பது ஏழு கோடி. உழைப்பவர் ஒரு கோடி, உண்பவர் ஒன்பது கோடி. உழைப்பு உடல் நல மூலிகை. உழைப்புக்கு ஊர்க்குருவி; இழைப்புக்கு வான்குருவி. உழைப்புக்குத் தகுந்த ஊதியம். உழையா உடம்பு உளுத்துப் போன உலக்கை. 3680 உழையாமல் தின்றால் ஊளைச் சதை. உளவன் இல்லாமல் ஊர் அழியுமா? உளவு போல இருந்து குளவு போலக் கொட்டுகிறதா? உளறிக் கொட்டிக் கிளறி மூடாதே. உளவு இல்லாமல் களவு இல்லை (நடக்குமா) உளவு ஆளைப் பிடித்தால் களவு வெளிப்படும். உளி எத்தனை? மலை எத்தனை? உளிபடும்போது வலிபடுதுன்னு சொல்லுற எந்தக் கல்லும் சிலையாகாது. உளி மலையை உடைக்குதா? மலை உளியை உடைக்குதா? 3690 உளிக் காய்ந்திருக்கும் போது அடித்தால் பொன்னாகும்; ஓடும்போது அடித்தால் செம்பானாலும் ஆகும்; இரும்பானாலும் ஆகும். உளுவைக் குஞ்சுக்கு நீச்சம் கற்றுக்கொடுக்க வேண்டுமா? உள் நீச்சல் பழகினவன் உயிரைவிட ஊர்க்கேணியிலா போய் விழுவான்? உள்சுவர் இருக்கப் புறச்சுவர் தீற்றுவார்களா? உள்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று உள்வீட்டிலே கீரை வைத்துக்கொண்டு அசல்வீட்டுக்குப் போவானேன்? உள்வாங்கு மண்ணுக்கு உறவென்ன பகையென்ன? உள்வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் (கெட்டது) உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும். உள்ளங்கால் அரித்தால் உள்ளூர் வழி நடப்பார். 3700 உள்ளங்கால் அரித்தால் ஊர்ப்பயணம் நடக்கும். (ஊருக்குப் போகணும்) உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கையை நக்கியது போல. உள்ளங்கை அரித்தால் காசுவரும். உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்? உள்ளங்கையில் இட்டவர்களை உள்ளளவும் நினை. உள்ளங்கையில் தேனை வைத்துப் புறங்கையை நக்கினாற் போல. உள்ளங்கை நெல்லிக்கனி. உள்ளங்கையில் போட்டுப் புறங்கையில் நக்கலாமா? உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறவன். உள்ளது குற்றம் ஒருகோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ? 3710 உள்ளது குறைவதும் நிறைவதும் ஊழ்வினை உள்ளது சொல்ல உள்ளதும் போனது உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா (போச்சு) உள்ள தெய்வங்களை யெல்லாம் ஒருமிக்க வருந்தினாலும் பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருடன் உள்ளத்தைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம். உள்ளதைக் கொண்டு ஊராள வேண்டும். உள்ளதைக் கொண்டு நல்லதைப் பயிர்செய். உள்ளதைச் சொல்லடா நொள்ளைக் கண்ணா. உள்ளதைச் சொல்லி மெலிந்தேன்; நொள்ளைக் கண் ஆச்சி பிச்சைபோடு. 3720 உள்ளதைச் சொல்லு உலகத்தை வெல்லு. உள்ளத்தைச் சொன்னால் உறவு அற்றுப் போகும். உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல். உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாம். உள்ளதைச் சொன்னால் ஊருக்குப் பகை (சொன்னவன்). உள்ளதைச் சொன்னால் எல்லோருக்கும் பகை. உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளம். (கண்ணனுக்கு) உள்ளதையும் கெடுத்தாள் உதறுகாலி வந்து. உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் (நொள்ளைக்). உள்ளதை விற்று நல்லதைச் கொள்ளு. 3730 உள்ளத்தில் ஒன்றும் குறையாது கள்ளமில்லா மனத்தார்க்கு (உள்ளதில்). உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும். உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் வெல்லமும். உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்றானாம். உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான். உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை; மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான். உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை; சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் ஏது? உள்ள மாற்றைக் காட்டும் உரைகல்லும் மெழு குண்டையும். உள்ளம் அறியாத கள்ளம் இல்லை. உள்ளம் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் கொப்புளமும். 3740 உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. உள்ளரங்கச் செய்தி ஊரரங்கம் ஆகலாமா? உள்ளவனிடம் கள்ளன் போனாற் போல. உள்ளவன் சொத்தை உரியவன் தின்பான். உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும்; இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும். உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிற மட்டும் திருடலாம். உள்ளால பேசினாலும் ஊரால வந்து விடும். உள்ளாளில்லாமற் கோட்டை அழியாது. உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா? உள்ளிருந்தார்க்குத் தெரியும் உன் வருத்தம். 3750 உள்ளிருந்து கள்ளன் உளவறிந்து செய்வான். உள்ளிப்பூண்டுக்கு எத்தனை வாசனை கட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும். உள்ளிய தெள்ளியராயினும் ஊழ்வினை பைய நுழைந் திடும். உள்ளியிட உள்ளியிட உள்ளே போச்சுது. உள்ளுக்குள்ளே கொட்டின தேளே உருமந்திரம் சொல்லு கிறேன் கேளே (உள்ளூற). உள்ளூரான் தண்ணீர்க்கு அஞ்சான்; அயலூரான் பேய்க்கு அஞ்சான். உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா? உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் வெளியூரிலே வேலி தாண்டுவானா? உள்ளூரிலே பூனை பிடிக்காதவன் அயலூரிலே ஆனை பிடிப்பானா? உள்ளூரிலே யானை வெளியூரிலே பூனை 3760 உள்ளூரிலே விலைபோகும் உழைக்கிற மாடு உள்ளூரிலே விலைப்படாத மாடா அசலூரிலே விலைப்படும்? உள்ளூரில் பெண்ணு கட்டக் கூடாது; ஊர் ஓரத்தில் காணி நடக்கூடாது. உள்ளூருக்கு ஆனை அயலூருக்குப் பூனை உள்ளூர் ஆண்டி காத்தாண்டி; நீ பீத்தாண்டி உள்ளூர் உறவுஞ்சரி; வீடு(ஊடு) கூட்டுகிற விளக்க மாறுஞ்சரி உள்ளூர்க் குளம் தீர்த்தக் குளம் ஆகாது உள்ளூர்க் குறுணியும் சரி அயலூர் பதக்கும் சரி உள்ளூர்ச் சம்பந்தம் உள்ளங்கைச் சிரங்குபோல உள்ளூர்ச் சம்பந்தியும் உள்ளங்கைப் புண்ணும் ஒரே மாதிரி 3770 உள்ளூர்ப் பகையும் உலகத்துக்கு உதவும் உள்ளூர்ப் பிறந்தகமோ? உள்ளங்கைப் புண்ணோ? உள்ளூர்ப் புலி வெளியூர் எலி உள்ளூர்ப் பூனை அயலூர் ஆனை உள்ளூர்ப் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது. உள்ளூர்ப் பெண்ணும் ஊரடித் தோட்டமும் ஒன்று உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி (ஒன்று). உள்ளூர் மாடு உள்ளூர் சந்தையில் விலை போகாது. உள்ளூர் மேளம். உள்ளெரிச்சல் இருந்தால் உலையரிசி கொதித்து விடாது 3780 உள்ளே இருக்கிற சாமி உருண்டை சோற்றுக்கு அழுகிற தாம்; வெளியே இருக்கிறசாமி புளியோதரை கேட்குதாம் உள்ளே இருக்கிற பூம்மா பிள்ளைவரம் கேளம்மா? உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா? உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளமில்லா மனதுக்கு ஏன்? உள்ளே பார்த்தால் ஓக்காளம் வெளியே பார்த்தால் மேற்பூச்சு உள்ளே போனால் பிணம் வெளியே வந்தால் பணம் (கோலார் தங்க வயலில்) உள்ளே வயிறு எரிய உதடு பழம் சொரிய. உறங்கிய நரிக்கு உணவு கிட்டாது உறவிலே சின்னாயியும் கறியிலே கத்திரிக்காயும் (சிறந்தது) உறவிலே நஞ்சு கலக்கிறதா? 3790 உறவிலே வேகிறதைவிட ஒரு கட்டு விறகிலே வேகலாம் (போகிறதைவிட போகலாம்). உறவு உண்ணாமல் கெட்டது உடை உடுக்காமல் கெட்டது (உடம்பு). உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே. உறவுக்கு ஒன்பதுபடி ஊருக்குப் பத்துப்படி. உறவுக்கு ஒன்பதுபடி பணத்துக்குப் பத்துப்படி. உறவுக்கும் பகைக்கும் பொருளே காரணம் (துணை) உறவு தானே உணர்ந்து கொள்ளும். உறவுதான் பயிரிலே கையை வைக்காதே. உறவும் பாசமும் உதட்டோடே. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. 3800 உறவு போல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா? உறவு முறையான் மூத்திரத்தை உமிழவும் முடியாது, விழுங்கவும் முடியாது. உறவு முறையான் வீட்டில் உண்டவரை மிச்சம் உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே உறவைப் போல இருந்து குளவியைப் போலக் கொட்டு கிறான். உறிஅற மூளி நாய்க்கு வேட்டை உறிப்பணம் போய்த் தெருச் சண்டையை இழுக்கிறது. உறியிலே இருக்கிற இரகசியம் பூனைக்குத்தான் தெரியும் உறியிலே கட்டித் தூக்கினாலும் அழுகற்பூசினிக்காய் அழுகலே உறியிலே தயிரிருக்க ஊரெங்கும் வெண்ணெய்க்கு அலை வானேன் 3810 உறியிலே தயிர் இருந்தால் உறங்குமோ பூனைக்குட்டி? உறியிலே வெண்ணெயிருக்க நெய்க்கலைவானேன்? உறுதி எதிலும் பெரிது. உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது. உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா? உறுமீனைக் கண்டால் சிறுமீன் நில்லா. உறைமோருக்கு இடமில்லாத வீட்டில் விலைமோருக்குப் போனதுபோல். உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான். உற்ற கணவனும் ஒருநெல்லும் உண்டானால் சித்திரம் போலே குடிவாழ்க்கை செய்யலாம். உற்ற நண்பன் உயிர்க்கு அமிர்தம். 3820 உற்றது சொல்ல அற்றது பொருந்தும் (சொன்னால்). உற்றது சொல்ல ஊரும்அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல. உற்றது சொன்னால் அற்றது பகை (அறும்) உற்ற பேர்களைக் கெடுக்கிறதா? உற்றாரை விட ஊரார் தேவலை. உற்றார் உதவுவரோ? அன்னியர் உதவுவரோ? உற்றார் உறவினர் உதவுவார். உற்றார் எல்லாம் உறவினர் அல்லர். உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடான்; நமனுக்கு நாலு பிள்ளை கொடுப்பான். உற்றாருக்கு ஒரு மாசம்; பகைத்தாருக்குப் பத்து நாள். 3830 உற்றாருக்கு ஒன்று கொடான் பகைவருக்கு நாலும் கொடுப்பான் (பிள்ளை) உற்றார் தின்றால் புற்றாய் விளையும்; ஊரார் தின்றால் போராய்விளையும் (வேறாய்) உற்றுப்பார்க்கில் சுற்றம் இல்லை. உற்றுப்பார்த்த பார்வையிலே ஒன்பதுபேர் பட்டுப் போவார். உறங்கியவன் கன்று கடாக்கன்று உறன் முறைக்கு இல்லாத ஊறுகாய் உறியில் கட்டி ஆடுகிறதாம். உனக்குத் தெரிந்தவர் உறவு, எனக்குத் தெரிந்தவர் பகை; உருப்படுமா குடும்பம்? உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே (பெப்பே). உனக்கு மழை பெய்யும் எனக்கு நீர் தா என்றானாம். உன் அப்பன் மேலே ஆணை என்மேலே ஆசையாயிருக்க வேண்டும். 3840 உன் உத்தமித் தங்கை ஊர்மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது. உன் கண்ணில் உத்தரம் இருக்கும்போது பிறர் கண்ணில் உள்ள துரும்பைப் பாராதே. உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே. உன் சொல்லிலே உப்பும் இல்லை சப்பும் இல்லை. உன் நடையை உன்னைவிட அறிந்தார் இல்லை. உன்முகம் எப்படி முன்முகம் அப்படி. உன்ன ஓராயிரம் பன்னப் பதினாயிரம். உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய். உன்னுடைய கர்வத்தால் ஓதுகிறாய் சூதும் வாதும். உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை. 3850 உன்னைப் பிடி என்னைப் பிடி என்றாய் விட்டது. உன்னையும் என்னையும் ஆட்டுகிறது மன்னி கழுத்துச் சிறுதாலி. உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே. உன்னை விட்டால் கதியில்லை; உலக்கையை விட்டால் வழியில்லை. உன்னைப் போல பிறனை நேசி. உன்னோடே பிறந்ததில் மண்ணோடே பிறக்கலாம்.  ஊ ஊக்கம் இல்லாத பிள்ளை வீடு நிறைய ஊக்கங் கெட்டவன் ஒன்றுக்கும் ஆகான். ஊக்கமது கைவிடேல். ஊக்கம் ஒத்த உறுதுணை இல்லை. 3860 ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும். ஊக்கம் போனால் தேக்கம் உறுதி. ஊசல் ஆடித் தன்னிலையில் நிற்கும். ஊசி இடந்தராமல் நூல் கோக்கமுடியுமா? ஊசி ஒரு முழத் துணியையாவது கொடுக்கும்; உற்றார் என்ன கொடுப்பார்? (அதுதானும் கொடார்கள்) ஊசிக் கண்ணிலே ஆகாயம் பார்க்கிறதா? ஊசிக் கணக்குப் பார்க்கிறான் ஊசிக் குத்திக் கொண்டவன் அழாமல் இருக்க, பார்த்தவன் அழுவானேன்? ஊசி கொண்டு கடலாழம் பார்ப்பது போல 3870 ஊசி கொள்ளப் போய்த் துலாக்கணக்குப் பார்த்ததுபோல் ஊசி கோக்கிறதற்கு ஊரில் துழாவாரம் ஏன்? ஊசிக்கு அடிப்புறம் கணமா? தலைப்புறம் கணமா? ஊசிக்கு ஊசி எதிரேறிப் பாயுமா? ஊசிக்குக் கள்ளன் உடனே வருவான் ஊசிக்குத்தின் மேல் உரல் விழுந்த கதை ஊசி சென்ற வழியே நூலும் செல்லும் (போன, போகும்) ஊசித் தொண்டையும் தாழி வயிறும் ஊசி நூலால் இறுகத் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை என்றாளாம். ஊசி பொன்னானால் என்ன பெறும்? 3880 ஊசி போகிறது கணக்குப்பார்ப்பான்; பூசணிக்காய் போகிறது தெரியாது ஊசிபோலத் தொண்டை; கோணிபோல வயிறு ஊசி போலத் தொண்டையும் தாழி (சாலு) போல வயிறும். ஊசிபோல மிடறும் தாழிபோல வயிறும். ஊசிப்போன வடை; உள்ளேயெல்லாம் நூல் ஊசி மலராமல் சரடு ஏறுமா? ஊசி மலிவென்று சீமைக்குப் போகலாமா? ஊசி முனையிலே நிற்கிறான். ஊசிமுனையில் தவஞ்செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும். Cá _Šáia Cij v‹d brŒí«?ஊக்கம் இடங் கொடுக்காமல் நூல் நுழையாது. 3890 ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? ஊசியும் அல்லவோ ஒரு சரட்டைக் கோத்துக் கொண்டிருக் கிறது. ஊசியும் கருமானும் உருண்டு ஓடிப் போனான். ஊசியும் நூலும் தையலுக்கு ஆகும். ஊசியை ஊசிக்காந்தம் இழுக்கும்; உத்தமனை நட்பு இழுக்கும். ஊடுமறிந்த பேச்சு உதறியடித்த கண்ணாடி. ஊட்டமிக்க உணவு உடலைக் கொழுக்க வைக்கும். ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது. ஊடைக்குப் பாவு இருந்தால் அல்லவோ ஓடிஓடி நெய்வான்? ஊணார உண்டால் பூணாரம் தேவையில்லை. 3900 ஊணன் கருமம் இழந்தான் உலுத்தன் பெயர் இழந்தான் ஊணால் வருவதும் வாழ்வு ஊணால் போவதும் வாழ்வு. ஊணினால் உறவு; பூணினால் அழகு. ஊணினால் புத்தி; பூணினால் சாதி. ஊணுக்கும் உழையாதவன் ஊருக்கா உழைப்பான். ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான். ஊணுக்கு முந்தி; உழைப்புக்குப் பிந்தி. ஊணுக்கு முந்து; உழவுக்குப் பிந்து. ஊணுக்கு முந்து. வேலைக்குப் பிந்து (படைக்கு). ஊணும் இல்லை உறக்கமும் இல்லை. 3910 ஊணும் உறக்கமும் ஒத்தார்க்கு ஒத்தபடி. ஊணும் போட்டு வீணும் கேட்பானேன்? ஊணை அள்ளி ஓரக்கண் பார்ப்பவன் உருப்பட மாட்டான். ஊணை ஒடுக்கினால் உள்ளம் ஒடுங்கும். ஊணைக் கழிப்பானேன்? உலுப்பைக்குத் தொங்குவானேன்? ஊண் அருந்தக் கருமம் இழப்பர். ஊண்ஊக்கம் இடங்கொடுக்காமல் நூல் நுழையாது. அற உயிர் அறும். ஊண் அற்றபோதே உடலற்றது. ஊண் அற்ற போதே உளம் அற்றது போல. ஊண் அற்ற போதே உறவு அற்றுப்போம் (அற்றது). 3920 ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும். ஊண் மிச்சம் உலகாளலாம். ஊண் மிச்சம் உழவில் இல்லை (உழவிலும்). ஊதாரிக்குப் பொன்னும் துரும்பு. ஊதிஊதி உள்ளதெல்லாம் பாழ். ஊதிஊதிப் பார்க்க உள்ளதெல்லாம் உமி. ஊதிக் கதித்த உடம்பில் வெள்ளையும் சள்ளையும். ஊதியமும் இழப்பும் வாணிகத்திற்கு இயல்பு. ஊதினாற் போம்; உறிஞ்சினால் வரும். ஊதுகிற சங்கு ஊதினால் விடிகிறபொழுது விடிகிறது. 3930 ஊதை அறிந்தவன் வாதி; உப்பை அறிந்தவன் யோகி. ஊத்தை திரண்டு அச்சாணி ஆகுமா? ஊத்தை திரண்டு கழுக்காணி ஆச்சுது. ஊத்தைப் பல்லுக்கு விளங்காய் சேர்ந்தது போல. ஊத்தைப் பெண் பெற்றபிள்ளை கழுவக் கழுவத் தேயும். ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை; பசிபோகத் தின்றவனுமில்லை. ஊத்தை போனாலும் உள்வினை போகாது (ஊழ்வினை) (தீராது) ஊத்தை வாயன் தேடக் கர்ப்பூரவாயன் தின்ன. ஊத்தை வாயன் தேட நாற்றவாயன் தின்ன. ஊத்தை வாய்க்கும் ஓரிலைக்கு வக்கில்லை. 3940 ஊத்தை வாய்க்கும் உமிழ்நீருக்கும் கேடு ஊமை ஊரைக் கெடுக்கும் ஆமை கிணற்றைக் கெடுக்கும். ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். (பேரை) ஊமை ஊரைக் கெடுக்கும் வாயாடி பேரைக் கெடுக்கும். ஊமை கண்ட கனாப்போல சீமை பட்டணம் ஆகுமா? ஊமை பிரசங்கம் பண்ண செவிடன் கேட்டது போல். ஊமை போல இருந்து எருமை போலச் சாணி போட்டதாம் . ஊமைக்கு உளறுவாயன் அண்டபிரசண்டன். ஊமைக்கு உளறுவாயன் உற்பாதபிண்டம். ஊமைக்குத் தெத்துவாயன் உயர்ந்த வாய்ச்சாலகன். 3950 ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி. ஊமையனுக்குத் தெத்துவாயன் உயர்ந்த வாய்ச்சாலகன். ஊமையனுக்கு உளறுவாயன் மேல். ஊமையன் கண்ட கனாப் போல. ஊமையன் கனாக்கண்டால் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டான். ஊமையன் கனவு கண்டதுபோலச் சிரிக்கிறான். ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க. ஊமையன் பேச்சு அவன் அம்மாவுக்குத் தெரியும். ஊமையன் பேச்சு பழகின பேருக்குத் தெரியும். ஊமையாயிருந்தால் செவிடும் உண்டு. 3960 ஊமையாய் இருப்பவன் செவிடாயும் இருப்பான். ஊமையான மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை. ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானாம். ஊமையும் அல்ல; செவிடும் அல்ல. ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற்போல. ஊமையைவிட உளறுவாயன் மேல். ஊரறிய நட்பார்க்கு உணாக் கடனன்றோ? ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவரில்லை. ஊராரே வாருங்கள் ழுதுகுநீர் குத்துங்கள். ஊரார் உடைமைக்குப் உலைவைக்கிறாள். 3970 ஊரார் உடைமைக்கு ஓவாண்டிபோல் திரிவான். ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான். (பறக்கலாமா) ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே. ஊரார் எருமை பால் கறக்கிறது. நீயும் ஊட்டுகிறாய், நானும் உண்ணுகிறேன். ஊரார் கணக்கு உடையவன் பிடரியிலே. ஊரார் சொத்துக்கு ஆசைப்பட்டுத் தன் சொத்தை இழந்தானாம். ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும். ஊரார் பண்டம் உமி; தன்பண்டம் தங்கம். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தாலும், ஊரார் பிள்ளை, ஊரார் பிள்ளைதான். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். 3980 ஊரார் வீட்டுக் கலியாணமே ஏன் அவிழ்ந்தாய் கோவணமே. ஊரார் வீட்டுச் சோற்றைப் பார்; ஓசுபாடி வயிற்றைப் பார். ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. ஊராருக் கெல்லாம் ஒருவழி; இவனுக்கு ஒருவழி. ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை. ஊராளுகிறவனுக்குப் பேளப் புழைக்கடை இல்லை. ஊரான் குசு ஊசக் குசு; தன் குசு தங்கக் குசு. ஊரான் பண்டம் உமிபோல, தன் பண்டம் தங்கம் போல. ஊரான் வீட்டுப் பிள்ளை உபகாரத்துக்கு ஆகாது. ஊரான் வீட்டுக் கலியாணம்; மார் முட்டும் சந்தனம். 3990 ஊரான் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு உப்பு இல்லை என்று சொல்லாதே. ஊரான் வீட்டுச் சோற்றைப் பாரு; சோணிப்பையன் வயிற்றைப் பாரு. ஊரிலே எளியாரை வண்ணான் அறிவான்; சாதிப்பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான். (ஊரில்) ஊரிலே கலியாணம் மாரிலே சந்தனம். ஊரிலேயும் போவாள் சொன்னால் அழுவாள். ஊரில் ஒருவனே தோழன். ஆருமற்றதே தாரம். ஊரில் பஞ்சம் நாயில் தெரியும். ஊரின் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும். ஊருகிற அட்டைக்குக் காலெத்தனை யென்று அறிவான். ஊருக்கு அடங்காதவன் வீட்டுக்கு அடங்குவான்; வீட்டுக்கு அடங்காதவன் ஊருக்கு அடங்குவான். 4000 ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான். ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல். ஊருக்கு அழகு நீரும் நிழலும். ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கும் ஆகான்? ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா? ஊருக்கு ஆகாதவன் வீட்டுக்கும் ஆகான். ஊருக்கு ஆகாதது வீட்டுக்கும் ஆகாது. ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான். ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன். ஊருக்கு இரும்பு அடிக்கிறான். வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை. 4010 ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியான். ஊருக்கு எல்லாம் சொல்லுகிற பல்லி கழு நீர்ப்பானையில் விழுந்ததாம். ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை. ஊருக்கு ஏற்றுக்கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான். ஊருக்கு ஒடுங்கான் யாருக்கும் அடங்கான். ஊருக்கு ஒரு கூடை, சந்தைக்கு ஆயிரங்கூடை. ஊருக்கு ஒரு தேவடியாள் யாருக்கு என்று அழுவாள் (வேசி) (ஆடுவாள்) ஊருக்கு ஒரு வழி. ஒன்றரைக் கண்ணனுக்கு ஒருவழி. ஊருக்கு நாட்டான் பெண்டாட்டி என்றால் ஓ என்பாளாம்; ஓர் ஆளுக்குச் சோறு என்றால் ஊகும் என்பாளாம். 4020 ஊருக்குப் பால் குடிக்கிறாயா? உடம்புக்குப் பால்குடிக் கிறாயா? ஊருக்குப் பேரும் உறவின் முறைக்குப் பொல்லாப்பும். ஊருக்குப் போகிறவர் வேலை சொன்னால் ஓடி ஓடிச் செய்தாலும் தீராது. ஊருக்குப் போனவர் சேதி சாமிக்குத் தெரியும். ஊருக்கு மாரடித்து ஒப்புக்குத் தாலி கட்டுகிறாளாம். ஊருக்கு முந்தி விளக்கு ஏற்றினால் உயர்ந்த குடியாகலாம். ஊருக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் ஒருபிடி உயரும். ஊருக்கு இராசாவானாலும் வீட்டுக்குப் பிள்ளை (ஊட்டுக்கு) ஊருக்கு விளைந்தால் ஓட்டுக்குப் பிச்சை. ஊருக்கு வேலை செய்வதே மணியமா யிருக்கிறான். 4030 ஊருக்குள் நடக்கிற விசயம் யாருக்குத் தெரியும்? உள்ளே இருக்கிற குமரிக்குத் தெரியும்? ஊருக்கெல்லாம் ஒருவழி உனக்கு ஒருவழியா? ஊருக்கே ஒருவழி இந்த ஊர்க்காலிக்குத் தனிவழி. ஊருக்கே தான்தான் ராசான்னு சொன்னப்பப் பாதி ஒட்டுப் போட்ட துணி பட்டுன்னு விட்டுதாம். ஊருடன் கூடி வாழ். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊரெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. ஊரெல்லாம் சுத்தி; உடம்பெல்லாம் வத்தி; வந்துச்சாம் புத்தி. ஊரெல்லாம் சுற்றி என் பேர் முத்தி. ஊரெல்லாம் பிள்ளை பெற்றால் வீடெல்லாம் புரண்டு அழுதாளாம். 4040 ஊரெல்லாம் வாழ்கிறதென்று வீடெல்லாம் அழுது புரண்டால் வருமா? ஊரெல்லாம் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதான் ஒட்டும். ஊரென்று இருந்தால் பறைச்சேரி இருக்காதா? ஊரை அடித்து உலையில் போடுகிறதா? ஊரை ஆண்டாயோ? ஊரான் பெண்ணை ஆண்டாயோ? ஊரை ஆள்கிற ராசாவுக்கு உட்கார இடம் இல்லையாம். ஊரை ஆள்கிறவன் பெண்டாட்டிக்குப் பேளக்கூட நேர மில்லை. ஊரை ஆள்கிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது. ஊரை உழக்கால் அளக்கிறாள்; நாட்டை நாழியால் அளக்கிறாள். ஊரை ஏமாற்ற ஒருபொய் சொன்னால் அதை உருப்படுத்த ஒன்பது பொய் சொல்ல வேண்டும். 4050 ஊரைக் கண்டவுடனே உடுக்கையைத் தோளில் போட்டுக் கொண்டாளாம். ஊரைக் காட்ட ஒரு நாய் போதும். ஊரைக் கெடுத்தான் ஒற்றைக் கடைக்காரன். ஊரைக் கொளுத்துகிற ராசாவுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி. ஊரைச் சுற்றி வந்தாலும் வீட்டுக்கு வந்தாதான் சொந்தம். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே. ஊரை நினைப்பவரை ஊர் நினைக்கும். ஊரைப் பகைத்தேனோ ஒரு நொடியில் கெட்டேனோ? ஊரைப் படல் கட்டிச் சாத்த முடியுமா? ஊரைப் பழித்தானாம் ஒற்றைப் பாட்டுக்காரன். 4060 ஊரைப் பார்க்கச் சொன்னால் சேரியைப் பார்க்கிறான். ஊரைப் பார்த்து ஓம்பிப் பிழை. ஊரைப் பிடித்த சனியனுக்கு நாயைப் பிடித்துச் சூலம் போட்டது போல. ஊரை விட்டுப் போகும் போது தாரை விட்டு அழுதாளாம். ஊரை வளைத்தாலும் உள்ள துணை இல்லை. நாட்டை வளைத்தாலும் நல்ல துணை இல்லை. ஊரை விழுங்குகிற மாமியாருக்கு அவளையே விழுங்குகிற மருமகள் வந்தாளாம். ஊரே போவாளாம், பேர் சொன்னால் அழுவாளாம். ஊரோடு ஒக்க ஓடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு. ஊரோடு ஒட்டி வாழ். ஊர் அருகே ஒரு வயலும் உத்தரத்தில் ஒரு புத்திரனும். 4070 ஊர் அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் பஞ்சமா? ஊர் அறிய மேஞ்ச மாட்டை உழவுக்குப் பூட்டுவாங்களா? ஊர் ஆளுகிற ராசாவுக்குப் பேள இடம் கிடைக்க வில்லையாம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஊர் இருக்கிறது பிச்சை போட, ஓடிருக்கிறது வாங்கிக் கொள்ள. ஊர் இருக்கிறது வாய் இருக்கிறது. ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும் வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும். ஊர் உண்டாகியல்லவோ கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும். ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு. ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. 4080 ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை. ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி? ஊர் எங்கும் பேர் வீடு பட்டினி. ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே. ஊர் எல்லாம் உறவு; ஒருவாய்ச் சோறு இல்லை. ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல். C® všyh« rjkhFnkh?ஒருமரம் தோப்பாகுமோ ? ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் புரண்டு அழுதால் வருமா? ஊர் என்று இருந்தால் சேரியும் இருக்கும். ஊர் எனப்படுவது உறையூர். 4090 ஊர் ஒக்க ஓடவேண்டும். ஊர் ஓசை அடங்கும் வரை வெண்ணெய் காய்ச்சினாளம். ஊர் ஓட ஒக்க ஓடு; நாடோட நடுவே ஓடு. ஊர் ஓரத்தில் ஒரு நன்செய்யும் உத்தரத்தன்று ஒரு பிள்ளையும் வாய்த்தால் அரிது. ஊர் ஓரத்தில் கொல்லை உழுதவனுக்குப் பயிர் இல்லை. ஊர்க் கழுதை இருக்கச் கூத்தாடிக் கழுதைக்குச் சனி பிடித்தது. ஊர்கிறது என்றால் பறக்கிறது என்று சொல்லும் சனம். ஊர் கூடித் தானே தேர் இழுக்கவேண்டும்? ஊர் கூடிச் செக்குத் தள்ள வாணியன் எண்ணெய் கொண்டு போக. ஊர் கூடிச் செக்குத் தள்ளலாமா? 4100 ஊர் கெட நூலை விடு. ஊர் கோப்பழிந்தால் ஓடிப்பிழை. ஊர்க் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல. ஊர்க்காக்கை கரையிலே வந்தட்டிக் காக்கை வரப்பிலே. ஊர்க்குருவிமேல் இராமபாணம் தொடுக்கிறதா? ஊர்க் கோடியில் ஒரு வீடு கட்டி, ஓர்ப்படிதம்பிக்குப் பெண் கொடுத்தாற் போல. ஊர்க் கோழியும் நாட்டுக் கோழியும் கூடில் உரலிலுள்ள புழுங்கலரிசிக்குச் சேதம். ஊர் சுற்றிக்கு உட்காரத் தொல்லை. ஊர்ச் சக்கிலி எல்லாம் சேர்ந்து தோலைக் கெடுத்தனராம். ஊர்ச் சண்டை கண்ணுக்கு அழகு. 4120 ஊர்ச் சண்டைக்கு இடுப்புக் கட்டாதே ஊர்ச் சேதி தெரிந்தால் உடும்பு தோளில் கிடக்காதா? ஊர் நடுநின்ற ஊர் மரம் போல. ஊர் நன்றாயிருந்தால் ஓட்டுப் பிச்சை அகப்படும். ஊர் நட்டம் ஊரிலே; தேர் நட்டம் தெருவிலே. ஊர் நல்லதோ வாய் நல்லதோ? ஊர் பாடெல்லாம் கால்பாடு; ஊர் இழவெல்லாம் பேரிழவு ஊர்ப் பிள்ளையை முத்தமிட்டால் உதட்டுக்குக் கேடு. ஊர்ப் பீக்கு நாணவந்தான் அடித்துக் கொண்டது போல. ஊர்ப் பொருளை உப்பு இல்லாமல் கூடச் சாப்பிடுவான். 4130 ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி. ஊர் முட்டியடிக்கிறது; குப்பத்துக்கு ஆள் தள்ளினாம் ஊர் மெச்சப் பால் குடிக்கலாமா? ஊர் மேலே போனவளுக்குத் தோள்மேலே கொண்டையாம்; அதைப் போய்க் கேட்கப் போனால் லடபுடா சண்டையாம். ஊர் வாயைப் படலிட்டு மூடலாமா? ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. (உண்டா?) ஊர் வாயை அடக்கினாலும் ஊறுவாயை அடக்க முடியாது. ஊர் வாரிக் கொல்லையும் சரி, உத்திராடத்துப் பிள்ளையும் சரி. ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம். ஊர் வாழ்ந்தால் ஓட்டுப் பிச்சைக்கும் வழி இருக்கும். 4140 ஊர் விசயங்களில் ஊமை செவிடாய் இரு. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேன். ஊழி பெயரினும் கலங்கார் உரவோர். ஊழிற் பெருவலி ஒன்று உண்டோ? ஊழுக்குக் கூத்தன் பாடுவான்; கூழுக்கு ஔவை பாடுவாள். ஊழும் உற்சாகமும் ஒத்துக் கொள்ள வேண்டும். ஊளைச் சதை ஒருகூடை நோய். ஊளைச் சேற்றுக்கு ஒளிந்து பயந்தான்னா, காலைச் சேற்றுக்குக் கடுப்பான் பஞ்சமாயிடும். ஊற ஊற அள்ளினால்தான் ஊற்று. ஊறல் எடுத்தவன் சொறிந்து கொள்வான். 4150 ஊறாக் கிணறு, உறங்காப்புளி, தீராவழக்கு திருக்கண்ண மங்கை. ஊறு காயே நல்லுடலுக்கு நாறுகாய். ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒருபானைச் சோற்றைத் திணிப்பது போல. ஊறுகாயைப் பேர்த்துவைத்துச் சோற்றைக் கிள்ளி வைத் தானாம். ஊற்றிய எண்ணெய்க்கு உயர்ந்த மணம். ஊற்றிய நெய் ஊரை அழைக்கும். ஊற்றுப் பாய்ச்சல் ஆற்றுப்பாய்ச்சல் பத்துக்குழியும் ஏரிப் பாய்ச்சல் நூறுகுழியும் சரி. ஊற்றை உடலில் நாற்றத்துக்கா பஞ்சம்? ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே. ஊற்றை மலத்தைக் கண்ட பன்றி உதட்டுக் குள்ளே சிரித்துக் கொண்டதாம். 4160 ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்? ஊனம் இல்லான் மானம் இல்லான் . ஊனுக்கு ஊன் உற்ற துணை. ஊன் அற்ற போதே உளமற்றது . ஊன்ற எடுத்த தடி உச்சந்தலையை உடைத்தது. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது. ஊன்ற வைத்த கொம்பு உச்சி மோட்டைப் பிளக்கிறது.  எ எக்கியத்தில் மூத்திரம் பெய்தது போல . எக்கிலே பிள்ளை பெற்று இறவாணத்திலே தாலாட்டு வாளாம். எக்குப் புடவை சோர்ந்தால் கைக்குண்டோ உபசாரம்? 4170 எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை . எங்கள் பிள்ளை செல்லப்பிள்ளை; தென்னை மரத்தில் முள்ளைக் கட்டு. எங்கள்வீட்டுக்கு வந்தால் என்னகொண்டு வருகிறாய்? உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்? எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகிறது. எங்கும் சுற்றி அரங்கரைச் சேவி. எங்கும் மடமாய் இருக்கிறது, இருக்கத்தான் இடமில்லை. எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும். எங்கே போனாலும் இங்கே வந்து தானே ஆக வேண்டும். எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒர் இடம் வேண்டும். எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பும் உண்டு. 4180 எங்கே வந்தது இரைநாய்? பங்குக்கு வந்தது மரை நாய் . எங்கேயோ இடித்தது வானமென்று இருந்தேன்; என் தலையிலேயே இடித்தது அது. எங்கேயோ இருப்பு! எங்கேயோ எண்ணம்! என்ன ஆகும்? எங்கேயோ எண்ணெய் மழை பெய்ததென்று இருந்தாளாம். எசமானுக்கு முன்னே போகாதே. எசமான் கோபத்தை எருமைக் கடாவின் மேல் காண்பித் தானாம். எசமான் வீடு நொடித்து விட்ட தென்று நாய் பட்டினியாகக் கிடந்ததாம் . எச்சரசம் ஆனாலும் கைச்சரசம் ஆகாது. எச்சிலைத் தின்றாலும் எசமானன் விசுவாசம் காட்டும்நாய்; பாலைக் குடித்தாலும் பகையை நினைக்கும் பூனை . எச்சிலைக்கு நாய் அடித்துக் கொண்டு நிற்கிறது போல. 4190 எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே பார். எச்சிலைக் குடித்தால் தாகம் தீருமா? எச்சிலைத் தின்று ஏப்பம் விட்டாற் போல. எச்சிலைத் தின்று பசி தீருமா? எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள் எச்சில் இரக்க அடிக்கும்,பற்று பறக்க அடிக்கும் . எச்சில் இரக்கும் , தூமை (தீட்டு) துடைக்கும். எச்சில் இலை எடுக்க வந்ததா நாய் ? எண்ணிப் பார்க்க வந்ததா நாய் ? எச்சில் இலைக்கு இச்சகம் பேசுகிறது. எச்சில் இலைக்கு எதிர் இலை போடலாமா? 4200 எச்சில் இலைக்கு ஏசெண்டு; குப்பைத் தொட்டிக்குக் குறிப்பு. எச்சில் இலைக்கு நாய் அடித்துக் கொண்டு நிற்கிறது போல. எச்சில் இலை நாயானாலும் எசமான் விசுவாசம் உண்டு. எச்சில் எடுக்கச் சொன்னார்களா , எத்தனை பேர்கள், என்று எண்ணச் சொன்னார்களா? எச்சில் தின்றாலும் வயிறு நிறையத் தின்னவேண்டும்; ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடியு மட்டும் கேட்க வேண்டும். எச்சில் நாய்க்குக் கண்டது எல்லாம் ஆசை. எச்சில் விழுங்கித் தாகம் அடங்குமா? எச்சிற் கலைக்கு இச்சகம் பேசுகிறது. எச்சிற் கலைக்கு இடம் கொடுத்தால் எட்டத்தில் போகுமா? எச்சிற் கலைக்கு இதம் பாடுகிறது. 4210 எச்சிற் கலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு, மண்ணாங் கட்டிக்கு எச்சிற் கலை ஆதரவு. எச்சிற் கையால் காக்கை ஓட்டமாட்டான் . எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? எச்சிற் கையால் காக்கை விரட்டாத கஞ்சன் . எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தால் வரப்பு ஏறிப் பேள்கிறதும் முடியாது. எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து வீழ்ந்தாளாம். எடுக்கிறது எருமைச்சுமை, படுக்கிறது பஞ்சணைமெத்தை. எடுக்கிறது சந்தை கோபாலம், ஏறுகிறது தந்தப் பல்லக்கா? எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு. எடுக்கிறது வறட்டிச்சுமை, நடக்கிறது தங்கக் குமிழ்ச் செருப்பு. 4220 எடுக்குமுன்னேயே கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம். எடுத்த அடி மடங்குமா? எடுத்த கால் வைப்பதற்குள் வைத்தகால் செல் அரிக்கிறது. எடுத்த சுமை சுமந்தல்லவோ இறக்க வேண்டும். எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும். எடுத்தாலும் பெயர் சரியாய் எடுக்க வேண்டும். எடுத்தாளாத பொருள் உதவாது. எடுத்து எடுத்து உழுதாலும் எருதாகுமா கடா? எடுத்து மூடிவிட்டு எதிரே வந்து நிற்பாள். எடுத்து விட்ட எருது எத்தனை நாள் உழைக்கும்? 4230 எடுத்து விட்ட நாய் எத்தனை நாளைக்குக் குரைக்கும்? எடுத்து விட்ட மாடு எத்தனை தூரம் ஓடும்? எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும். எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு. எடுப்பாருக்குக் கைப்பிள்ளை; இழுப்பார்க்குத் தாசி. எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் இளைப்பும் களைப்பும் அதிகமாகும். எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் பிள்ளை ஏங்கி ஏங்கி அழுமாம். எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டாகும். எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் தம்பி களைத்தாற் போல் இருப்பான். எடுப்பாரைக் கண்டால் குடம் கூத்தாடும். 4240 எடுப்பார் கைப்பிள்ளை. எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை. எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா? எட்கிடைநெற்கிடை விட்டு எழுது. எட்டக் கோட்டை கிட்டத்தில் மழை. எட்டடி வாழையும் பத்தடி பிள்ளையும். எட்டடி வாழை, கமுகு, ஈரடி கரும்பு, கத்திரி; இருபதடி பிள்ளை. எட்டாக் கனிக்கு எடுத்தகனி இனிப்பு எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பயன்? எட்டாக்கையில் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். 4250 எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்ட கதை. எட்டாத பழம் புளிக்கும். எட்டாத மரத்து இளநீர் போல ஒட்டாத பேரோடே உறவாக நிற்காதே. எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விட்டது போல. எட்டாப்பூ தேவர்க்கு; எட்டும் பூ தங்களுக்கு. எட்டாம் பேறு பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர். எட்டாள் வேலையைச் சிற்றாள் செய்வான். எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும். எட்டாம் பொருத்தம் அவளுக்கும் அவனுக்கும். எட்டி உதைத்தாலும் பெற்றவன் பெற்றவன்தான்; என்னமா எடுத்து வளர்த்தாலும் மற்றவன் மற்றவன்தான். 4260 எட்டி உதைத்தால் கட்டிப்பிடிப்பான்; கட்டிப்பிடித்தால் எட்டி உதைப்பான். எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்ளலாமா? எட்டி எட்டிப் பார்ப்பாரும், ஏணி வைத்துப் பார்ப்பாரும், குட்டிச் சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு. எட்டிக் குடுமியைப் பிடித்து இறங்கிக் காலைப் பிடிக்கிறவன். எட்டிக் குட்டி இறக்கிக் காலைப்பிடித்துக் கொள்ளுகிறது. எட்டிக் கோட்டை கட்டினால் கிட்டி மழை உண்டு. எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா? எட்டி நிழலில் நின்றாலும் நிற்கலாம். ஈயாதவன் நிழலில் நிற்காதே. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? எட்டிப் பழத்தை இச்சிக்கிறதா? 4270 எட்டிப் பார்த்தாற் போலக் கொட்டிக் கொண்டு போகிறான். எட்டிப் பார்த்த இடம் குட்டிச்சுவர். எட்டி மயிரறுப்பாள், எட்டாட்டிக் காதறுப்பாள். எட்டி மரம் ஆனாலும் பச்சென்று இருக்கவேண்டும் . எட்டி மரம் ஆனாலும் வைத்த மரத்தை வெட்டாதே. எட்டி மரம் ஆனாலும் வைத்தவர்க்குப் பாசம். எட்டியிலே கட்டு மாம்பழம் உண்ணலாமோ? எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்பட்டது. எட்டின மட்டும் வெட்டும் கத்தி, எட்டாத மட்டும் வெட்டும் பணம். எட்டினவன் ஆனாலும் முட்டப் பகை ஆகாது. 4280 எட்டினால் குடுமியைப் பிடி; எட்டாவிட்டால் காலைப்பிடி (சிண்டை) எட்டினால் முடி, எட்டாவிட்டால் அடி. எட்டு எருமைக்காரி இரப்பு மோர் கேட்டாளாம். எட்டு எருமைக்காரி போனாளாம் ஓர் எருமைக் காரியிடம். எட்டு எள்ளுக்கு ஒரு சொட்டு எண்ணெய். எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக் கிழவியைக் கட்டிக் கொண்டார்கள். எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது. எட்டுக் கோயில் பூசை பண்ணியும் எச்சன் வீடு பட்டினி. எட்டுச் சந்தைக்கு ஒரு சந்தை பொட்டைச் சந்தை. எட்டுச் சிந்தாத்திரை ஒரு தட்டுதலுக்கு ஒக்கும். 4290 எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை முழுகில் தப்பாமல் தலைப்போம். எட்டு ஞாயிறு எண்ணெய் தேய்த்தால் குட்டம் வரும். எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப்போகுமே விக்கல். எட்டுப்படி அரிசி ஒரு கவாளம், ஏழூர்ச் சண்டை ஓர் சிம்மாளம். எட்டுப் பிள்ளைக்கு ஒரு செட்டுப் பிள்ளை போதும். எட்டு மாடு தந்தால் இருபது மாடு தருவானாம். எட்டு மாட்டுக்காரி இரப்புமோர் கேட்டாளாம். எட்டு மெத்தையில் கட்டி வாழ்ந்தாலும், எரிகிறது கட்டை முட்டையில்தான் எட்டும் இரண்டும் தெரியாத பேதை (நாத்தை). எட்டு முழமும் ஒரு சுற்று , எண்பது முழமும் ஒரு சுற்று. 4300 எட்டு வட்டம் கட்டிக் கொண்டு எதிர்ப்புறம் போனாளாம்; அவள் பத்து வட்டம் கட்டிக் கொண்டு பரக்கப் பரக்க வந்தாளாம். எட்டு வருசத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடியதாம். எட்டு வீடு தட்டியும் ஓச்சன் குடி பட்டினி. எண் இல்லாதவர் கண் இல்லாதவர், (அற்றவர்) எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர் எண் காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே. எண் சாண் உடம்பு இருக்க இடி விழுந்ததாம் வயிற்றிலே. எண் சாண் உடம்பு இருக்க கோவணத்திலே விழுந்ததாம் இடி. எண் சாண் உடம்பிற்கும் தலையே தலை. எண்ணத் தொலையாது ஏட்டில் அடங்காது. எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைத் தின்னுகை யில், குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிறதாம். 4310 எண்ணம் அற்ற இராசன் பன்றி வேட்டை ஆடினாற் போல . எண்ணம் இட்டவன் தூங்கான், ஏடு எடுத்தவனும் தூங்கான். எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய். (கை ஓலை) எண்ணம் எல்லாம் பொய், எழுதிய எழுத்து மெய். எண்ணம் எல்லாம் பொய், ஏளிதம் மெய், எண்ணம் எல்லாம் பொய், மௌனமே மெய். எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பின் புத்தி. எண்ணிச் சுட்ட பணியாரம் பேணித்தின்னு மருமகனே! மருமகனே! எண்ணிச் செட்டுப் பண்ணு , எண்ணாமற் சாகுபடி பண்ணு, எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமற் செய்கிறவன் மட்டி. 4320 எண்ணிச் செய்வது செட்டு, எண்ணாமற் செய்வது வேளாண்மை. எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை. எண்ணி முடியாது ஏட்டில் அடங்காது. எண்ணிய எண்ணம் எல்லாம் பொய் , எழுதிய எழுத்து மெய். எண்ணிய எண்ணம் என்னடி ? அண்ணா என்று அழைத்த முறை என்னடி? எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய குடி. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேற்படும். எண்ணெயைத் தடவி ஆற்றில் புரண்டாலும் ஒட்டும் மணல் தான் ஒட்டும். எண்ணெயைத் தேய்க்கலாம் எழுத்தை மறைக்கலாமா? 4330 எண்ணெய் எடுக்குமுன் பிண்ணாக்கை எடு என்கிறான். எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக் கொண்டு சீப்புக் கண்ட இடத்தில் சீவிக் கொள்ளுகிறது. எண்ணெய் காணாத தலையும், தண்ணீர் காணாத பயிரும். எண்ணெய்க் குடத்திலே பிடுங்கி எடுத்தாற் போல. எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல. எண்ணெய்க் குடமும் வெறுங்குடமும் முட்டினால் எதற்குச் சேதம்? எண்ணெய்க் குடம் உடைத்தாலும் ஐயோ! தண்ணீர்க் குடம் உடைத்தாலும் ஐயோ! எண்ணெய்க் குடம் உடைத்தவளும் அழுகிறாள்; தண்ணீர்க் குடம் உடைந்தவளும் அழுகிறாள். எண்ணெய்க் குடம் எதிரே வந்தால் என்ன? தண்ணீர்க் குடம் வந்தால் என்ன? இடிக்காமல் போனால் சரி. எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு எதிரே வந்த நாயை விரட்டி விரட்டி அடித்தான். 4340 எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்த பாடு இல்லை. எண்ணெய்ச் சேதமேயல்லாமல் பிள்ளை பிழைக்காது. எண்ணெய் தடவிக்கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும். எண்ணெய் பிள்ளையோ? வண்ணப்பிள்ளையோ? எண்ணெய் போகக் குளிக்கலாம்; எழுத்து போகக் குளிக்க முடியுமா? எண்ணெய் முந்துதோ திரிமுந்துதோ? எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டோ? எண்ணெயில் இட்ட அப்பம் போலக் குதிக்கிறான். எண்ணெயைத் தேய்க்கலாம் , எழுத்தைத் தேய்க்க முடியாது. எண்ணெழுத்து இகழேல். 4350 எண்பது அடிக் கம்பத்தில் ஏறி ஆடினாலும் இறங்கி வந்து தான் சம்மானம் வாங்க வேண்டும். எண்பது வயதுக்கு மேல் மண்பவளம் கட்டிக் கொண்டாளாம் எண் மிகுந்தவனே திண் மிகுந்தவன். எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான். எதார்த்தவாதி வெகுசன விரோதி . எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம் . எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா? எதிரிக்குச் சகுனத்தடை யென்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா? எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். எதிரி போட்டு மாவிடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம். 4360 எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும். எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம் . எதிர்த்த வீடு ஏகாலி வீடு , அடுத்த வீடு அம்பட்டன் வீடு, எதிர்த்துக் கெடுத்தான் பெரியப்பன் சிரித்துக் கெடுத்தான் சிற்றப்பன். எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு. எதிர் வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு. எது எப்படி போனாலும் தன் காரியம் தனக்கு. எது பிரியம் என்றால் இல்லாதது பிரியம். எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும். 4370 எதை வாரிக் கட்டிக் கொண்டு போகிறது. எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற் போமா? எத்தனை சிரமம் இருந்தாலும் திண்டிக்குச் சிரமம் இல்லை. எத்தனை தரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான். எத்தனை தான் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா? எத்தனை தேய்த்தாலும் பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை. எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா? எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது. எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனை எழுப்ப முடியுமா? எத்தனை வித்தை கற்றாலும் செத்தவன் பிழைக்க அறியான். 4380 எத்தால் உரைத்தாலும் தட்டான் பவுனாக வளர்ந்ததாம் உண்டை. எத்தால் பிழைக்கலாம் ஒத்தால் பிழைக்கலாம். எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம். எத்திப் போடுவேன் எத்து என்றால் எழுந்திருக்க மாட்டாதவன். எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலாட்டுகிறது. எத்துணையோர் சொல்வார். ஒன்றுகூட செய்ய மாட்டார். எத்துப் பிழைப்பு எத்தனை நாளைக்கு? எத்துமானத்திலே பிள்ளை பெற்று இறவானத்திலே தொட்டில் கட்டினாளாம். எத்துவாரை எத்தி நான் எலி பிடித்துக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி. எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம். 4390 எத்தைக் கண்டு ஏய்த்தான் துய்ப்பைக் கண்டு ஏய்த்தான். எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி. எத்தைத் தின்றால் பித்தம் தீரும்? எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டக் கூர். எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்ச இலை உதிராது. எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை. எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்; அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம். எந்தத் துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமைப் போகாது. எந்த நாய் எந்தச் செருப்பைக் கடித்தால் என்ன? எந்தப் புராணத்தில் இல்லாவிட்டாலும் கந்தப்புராணத்தில் இருக்கும். 4400 எந்தப் புற்றிலே எந்தப் பாம்பிருக்குமோ? யாரு கண்டா? எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்? எந்த மனசும் மைந்தனை வெறுக்குமா? எந்த வயலிலும் களைகள் முளைப்பது போல. எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தைவாக்குப் பொய்க்காது. எந்த வேடம் வந்தாலும் தீவட்டிக்காரனுக்குக் கேடு. எந்நிலத்தில் விதைத்தாலும் எட்டிக்காய் தெங்காகாது. எந்நிலத்தில் வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகாது. எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய். எப்பிறை கோணினாலும் தைப்பிறை கோணலாகாது. 4410 எமனுக்கு ஏழு பிள்ளையைத் தூக்கிக் கொடுத்தாலும் உயிரோட ஒரு பிள்ளையைக் கொடுக்க மனசு வருமா? எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான். எமனைப் பலகாரம் பண்ணிச் சுப்பிரமணியனைத் துவையல் அரைத்தாற் போல. எமன் அறியாமல் உயிர் போகுமா? எமன் ஏறுகிற கடாவாயிருந்தாலும் உழுதுவிடுவான். எமன் ஒருவனைக் கொல்வான். ஏற்றம் மூவரைக் கொல்லும். எமன் கையில் அகப்பட்ட உயிர்போல. எமன் நினைக்கவும் பிள்ளை பிழைக்குமா? எமன் பிடித்தால் எவன் பிழைப்பான்? எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா? (அடிக்குமா?) 4420 எமன் வாயிலிருந்து மீண்டது போல. எய்கிறவன் எய்தால் அம்பு என்ன செய்யும்? எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? எய்தவன் இருக்க அம்பை நொந்து பலன் யாது? எரிகிற இடத்தில் சுக்கை வைத்து ஊதினாற் போல. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி? எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது? எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினது போல். எரிகிறது நெஞ்சு சிரிக்கிறது வாய். 4430 எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும் (பிடுங்கினால்) எரிகிற நெருப்பிலே நெய்விடலாமா? எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி. எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அடக்கலாமா? எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல. எரிகிற புண்ணில் புளி இட்டது போல. எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். எரிகிற விளக்கில் எத்தனை ஏற்றினாலும் குறையுமோ? எரிகிற வீட்டில் சுருட்டுக்கு நெருப்பு கேட்டான். எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் (லாபம்) 4440 எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்டநாள் பார்த்தது போல. எரிக்கும் நெருப்போடு காற்றுக் கூடியது போல். எரிச்சல் வந்தல்லவோ கடிக்கும். எழுப்பிவிட்டா கடிக்கும்? (அடிக்கும்) எரிந்த பசியில் இழந்த மணியைத் தேடப் போனாற் போல. எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழப் போகிறேன்; கஞ்சியுடன் சாறு கொண்டுவா என்ற கதை. எரிப்புக்காரன் பின்னோடு போனாலும் போகலாம்; செருப்புக் காரன் பின்னோடு போகக் கூடாது. எரு இட்டால் விளையுமா? ஏவரிந்தால் விளையுமா? எரு இல்லாப் பயிர் மாடு இல்லாக் கன்றுபோல. எரு இல்லா வயல் கன்று இல்லா மாட்டுக்குச் சமம். எரு இல்லையேல் மறுபயிரும் இல்லை. 4450 எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான். எருக்கு இலைக்கு மருக்கொழுந்து வாசனையா? எருக்குழியின்றி ஏர் பிடியாதே. எருக்கைக் சொடுக்க வேண்டும்; ஈச்சை கிழிக்க வேண்டும். எருக்கை வெட்டி அடித்து ஏரைக் கட்டி உழு. எரு செய்வது இனத்தான் செய்யான். எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து. எருது இழுத்த மட்டும், கோணிகொண்ட மட்டும். எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும். எருது ஈன்றது எனுமுனம் என்ன கன்று என்றது போல. 4460 எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்றதுபோல (தோட்டத்திலே, தொழுவத்திலே) எருது உழவுக்குக் காய்கிறது; உண்ணி எதற்குக் காய்கிறது? எருதும் எருதும் போராட நடுப்புல்லுத் தேய்த்தாற் போல. எருது ஏழையானால் பசு பத்தினிதான். எருது ஏறாவிட்டால் பசு பத்தினி கொண்டாடும். (கூடா விட்டால்) எருது கட்டு நடக்கிற ஊரிலே எருமைக்கடா தேடிப்போனாற் போல. எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய். எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்; ஈனாப் பெண்டிர்க்கும் ஏழே கடுக்காய்; படை எடுத்த மன்னர்க்கும் ஏழே கடுக்காய். எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது; பறையன் கொழுத்தால் பாயில் இரான். எருது கோபம் கொண்டு பரதேசம் போனது போல. 4470 எருதுக்கு நோய் வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா? (தொழுவம்) எருதுக்கு தன்புண் அழற்சி; காக்கைக்கும் தன்பசி அழற்சி. எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறதா? (தொழுவம்) எருது நினைத்த இடத்திலே புன் செய்க்கு உழுகிறதா? எருது நினைத்தால் கொட்டகை கட்டுகிறதா? எருது நோயை நினைக்கும்; காக்கை பசியை நினைக்கும். எருது நோய் காக்கை அறியுமா? எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? (புண்) எருது நோவு காக்கைக்குத் தெரியுமா? எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா? 4480 எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது? எருது வாங்குமுன்னே புன்செய்க்கு உழு என்கிறாய். எருத்துப் புண் காக்கைக்குத் தெரியுமா? எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத அலரும் வீணே. எருமுட்டைப் போரை பேய் அடிக்குமா? எருமை இருந்தல்லவோ பால் கறக்க வேண்டும். எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறான் (கொடு). எருமைக்கடா சந்தைக்குப் போச்சாம்; அங்கேயும் கட்டி உழுதானாம். எருமைக் கன்று அருமைக் கன்று. எருமைக்கு வெள்ளாடு ஏத்தக் கறக்குமா? 4490 எருமைக் கொம்பு நனைகிறதற்குள்ளே எழுபதுதரம் மழை வருகிறது. எருமைக் கொம்பு காய்வதற்கு முன் எட்டுத்தரம் மழை பெய்யும். எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா? (மூத்திரம்) எருமைச் சாணி ஓமத்திற்கு ஆகுமா? எருமைப் போய் ஏரியில் விழுந்தால் தவளை தானே குதித் தோடும். எருமை மாட்டின் மேல் எத்தனைச் சூடு இருந்தாலும் தெரியாது; பசு மாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும். எருமை மாட்டின்மேல் மழை பெய்தது போல. எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக் கொண்டு விலை பேசுவதா? (பார்க்கிறது) எருமை முட்டைப் புராணம் வாசிக்கிறான். எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா? 4500 எருமை வாங்குமுன் நெய்விலை கூறாதே. எருமை வாங்குமுன் நெய்விலை பேசுகிறதா? பிள்ளைப் பெறுமுன் பெயர் வைக்கிறதா? எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற் போல எருவுக்குப் போனவன் எலுமிச்சம் பழம் எடுத்தது போல. எருவும் தண்ணீரும் உண்டானால் எந்த நிலமும் விளையும்! எலி அம்மணத்தோடு போகிறது என்கிறான். எலி அழுதால் பூனை விடுமா? எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது. எலி அறுக்கும் தூக்கமாட்டாது. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். 4510 எலி இல்லாத வளையை நாய் பறிக்காது. எலி கட்டப் பாம்பு குடிகொள்ள. எலிக்கு அஞ்சுவான் புலிக்கு அஞ்சானாம். எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல்; எளி யார்க்கு அனுகூலம் வலியார் அரசுக்கு அஞ்சுதல். எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம். எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தியது (சுட்டது போல) எலிக்குப் பயப்பட்டு வீட்டில் தீயைவைத்தது போல. எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான். எலி தலையிலே கோடாலி விழுந்தது போல. எலிதலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற் போல. 4520 எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். எலி பாழானாலும் தனிப்பாழ் எலி பூனைக்குச் சலாம் பண்ணுவது போல. எலி பூனையை வெல்லுமா? எலிப் பிழுக்கை இறப்பில் இருந்தென்ன? வரப்பில் இருந் தென்ன? எலி பெருத்தால் பெருச்சாளி ஆகுமா? எலியாரை பூனையார் வாட்டினால், பூனையாரை நாயார் வாட்டுவார். எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல. எலியும் பூனையும் போல் வாழ்கிறது (இருக்கிறது) எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா? 4530 எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ? எலிவளை நோண்ட பாம்பு குடிப்போக எலிவளையானாலும் தனிவளை வேண்டும். எலிவளையும் தனிவளை, தனிவளையும் தன்வளை. எலிவால் கொண்டைக்கு ஏணிபோல் பூச்சரம். எலிவீடு கட்டப் பாம்பு குடி கொள்ளும். எலி வேட்டைக்குத் தவிலடிப்பா? எலிவேட்டையாடத் தவில் வேணுமா? எலுமிச்சங் காய்க்குப் புளிப்பு ஏற்றுகிறது போல. எலுமிச்சஞ்செடிக்கு எருப்போட்டாற் போல. 4540 எலுமிச்சம் பழம் என்றால் தெரியாதா? இஞ்சிபோலக் கசக்கும் என்றானாம். vY«ò ïšyh eh¡F všyh« ngR«.(v¥goí«) எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா? எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புஞ் சோறும் ஏன்? எலும்பைக் கடிப்பானேன், சொந்தப் பல்லுப் போவானேன். எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தாள். எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, பாவி என் தலையிலே பத்து எழுத்து. எல்லாத் தொழிலும் ஒருசாண் வயிற்றிற்கே. எல்லாத்துக்கும் உண்டு இலையும் பழுப்பும். எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்று அறியாதவனும் இல்லை. 4550 எல்லாம் அறிந்தும் கழுநீர்ப் பானையில் கையிடுகிறதா? எல்லாம் இருக்கிறது பெட்டியிலே; இலைக்கறி கடையச் சட்டி இல்லை. எல்லாம் ஏறி இளைத்த குதிரையின் மேல் தம்பி பொற் பட்டம் கட்டிப் புறப்பட்டான். எல்லாம் கிடக்கக் கிழவனைத் தூக்கி மனையில் வைத்தாளாம். எல்லாம் சரியென்று எண்ணலாமா? எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பனம்பழத்தைக் கரடிமுட்டை என்றானாம். எல்லாம் தெரிந்த நாரி, நிமிட்டி ஏற்றடி விளக்கை. எல்லாம் விதிப்படி நடக்கும். எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது. எல்லாருக்கும் சளி துரும்புபோல, எனக்குச் சளி மலைபோல (சனி) 4560 எல்லாருக்கும் புத்தி இருந்தால் புத்தி இல்லாதவன் ஆர்? எல்லாரும் ஆளின் கீழே நுழைந்தால் இவன் ஆளின் நிழலின் கீழே நுழைவான். எல்லாரும் ஆனை மேய்த்தால் இவன் அவன் நிழலை மேய்ப்பான். எல்லாரும் என் மண்டையில் பொங்கித் தின்கிறார்கள். எல்லாரும் நெல்லை உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம். எல்லாரும் சட்டியைப் போட்டு உடைத்தால் இவன் சிரட்டையைப் போட்டு உடைக்கிறான். எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின்மேல் சாத்திரியார் ஏறி சறுக்கி விழுந்தார். எல்லாரும் கப்பல் ஏறியாயிற்று, இனி அம்மானார் பொற் பட்டம் கட்டப் போகிறார். எல்லாரும் தடுக்கின் கீழே நுழைந்தால் அவன் கோலத்தின் கீழே நுழைகிறான். எல்லாரும் தேங்காய் உடைத்தால் நான் சிரட்டையாவது உடைக்கலாம். 4570 எல்லாரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கை யார் தூக்குகிறது? எல்லாரும் நல்லாரா? கல்லெல்லாம் மாணிக்கமா? (மனிதரா) எல்லார் தலையிலும் எட்டெழுத்து; என்பாவி தலையில் பத்தெழுத்து. எல்லா வீட்டிற்கும் இரும்பு அடுப்பே ஒழியப் பொன் அடுப்பு இல்லை. எல்லா வீட்டுத் தோசையிலும் ஓட்டை. எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்க மாட்டான். எல்லை கடந்தால் தொல்லை. எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமைவிடார். எவற்றைக் காவாதே போனாலும் நாவைக் காக்க வேண்டும். எவள் சுட்டாலும் பணியாரம் ஆனால் சரி. 4580 எவன் எதை விதைக்கிறானோ அவன் அதை அறுப்பான். எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு மூன்று பணம். எவனோ வைத்தான் தோப்பு. அதை இழுத்தடித்ததாம் காற்று. எவ்வளவு தின்றாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்கும். எவ்வளவு தூரம் போனாலும் தன் ஊரறிய நாய்க்குத் தெரியும். எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவதான் ஒட்டும். எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள். எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான். எழுத வழங்காத வாழ்க்கை கழுதை புரண்ட களம். (எழுதி வழங்கான்) எழுத வாசிக்கத் தெரியாமற் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும். 4590 எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? எழுதாத ஓலையும் பீற்றல் முறமும் வந்தது போல். எழுதாப் பொறிக்கு அழுதால் தீருமா? எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான். எழுதிய விதி அழுதால் தீருமா? எழுதின விதியை அழுதாலும் மாற்ற முடியாது. எழுதின விதியை யாராலும் மாற்ற முடியாது. எழுதுகிற எழுத்தாணி இரட்டைக் கூர்ப்பட்டாற் போல. எழுதுகிறது பெரிதல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது. எழுதுவது அருமை, எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை. 4600 எழுத்தாணிப் பூண்டு எழுந்து நிற்க வைக்கும். எழுத்து அறச் சொன்னாலும் பெண்புத்தி பின் புத்தி. எழுத்து அறிந்த மன்னன் கிழித்து எறிந்தான் ஓலை (அறியா) எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை. எழுத்து அறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும். எழுத்து இல்லாதவன் கண் இல்லாதவன். எழுத்து இல்லாதவன் கருத்து இல்லாதவன். எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உதட்டுக்குப் பால் மாறின தாசியும் வருத்தம் அடைவார்கள். (பால்மாறின - சோம்பல்பட்ட) (உதட்டுக்கு, படுக்கைக்கு, பல்காட்டின) எழுந்ததும் தொழு, தொழுததும் படு. 4610 எழுந்திருக்கப் பால்மாறி இல்லை என்றாளாம் பிச்சை. எழுந்திருப்பான், கால்தான் இல்லை. எழுபது சென்றாலும் பறை ஏவினால்தான் செய்யும் (சொன்னாலும்) எழுப்பி அடித்தான்; திருப்பிக் கடித்தேன். ஏழைப்பட்ட பார்ப்பானும் மேழித் தொட்டுப் பார்க்கான். எளிதாய் வந்த பொருளின் அருமை தெரிவதில்லை. எளிதில் நம்புபவன் எளிதில் ஏமாறுவான். எளிய நிலையில் இருப்பவர் ஏளனத்திற்கு ஆளாவர். எளியவனுக்குப் பெண்டாய் இருக்கிறதிலும் வலியவனுக்கு அடிமை ஆகிறது நல்லது. எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது. 4620 எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான். எளியவன் பிள்ளை ஆனாலும் செய்ய வேண்டிய சடங்கு செய்ய வேண்டும். எளியவன் பெண்டாட்டி எல்லார்க்கும் மைத்துனி. எளியவன் பேச்சு புகையிலும் இலேசு. எளியாரை எதிர் இட்டுக் கொண்டால் உயிர்க்குற்றம். எளியாரை வலியார் அடித்தால் வலியாரை (வாசற்படி) அடிக்கும் (தெய்வம்) எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரைத் தெய்வம் வாட்டும். எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது. எள் இடித்த உரலை மருமகன் நக்கிய கதையா. எள் இன்றேல் எண்ணெயும் இன்றே. 4630 எள்ளு என்பதற்கு முன்னே எண்ணெயாய் நிற்கிறான். எள்ளு என்றால் எண்ணெயாய் நிற்பான். எள்ளுக் குறுணி எலி முக்குறுணி. எள்ளுக்காய் பிளந்தாற்போல பேச வேண்டும். எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு. எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேளை வேளாளா! கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர் செய். எள்ளுக்கு தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு. எள்ளுக்குப் புள்ளு வரும், எச்சிற்கு எலும்பு வரும். (எறும்பு) எள்ளுதான் எண்ணெய்க்கு உலருகிறது; எலிப் பிழுக்கை என்னத்துக்கு உலருகிறது? கூட இருந்த குற்றத்திற்கு. எள்ளுதான் எண்ணெய்க்கு காய்கிறது எலிப் பிழுக்கை எதற்குக் காய்கிறது? 4640 எள்ளுப் போட்டால் எள்ளெடுக்கப் போகாது. எள்ளு போட்டால் எள் விழாது. எள்ளுத் தின்றால் எவ்வளவு பசி தீரும்? எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய். எள்ளுப் பயிருக்கு எழுபது நாள். எள்ளும் தினையும் எழுபது நாளில் பயிராகும். எள்ளு விதைக்க எறங்காடு, கொள்ளு விதைக்கக் கல்லாங்காடு. எள்ளு விதைத்த காட்டில் கொள்ளு விளையாது. (முளையாது) எள்ளு விதைத்த காடு சப்பைக் காடு; கொள்ளுவிதைத்த காடு சத்துக்காடு. எள்ளு விழுந்தால் எடுக்க மகாசேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே. (ஆள்) 4650 எள்ளும் கரும்பும் இறுக்கினால் பயன் தரும். எள்ளும் கரும்பும் எடுக்கும் பயிராகும். எள்ளும் கொள்ளும் எழுபது நாள். எள்ளும் கொள்ளும் ஏறி எதிர்வாய்ப் பயிரும் விளைந்து வந்தால் வெள்ளாளன் பாக்கியம். எள்ளைத் தின்றால் எண்ணெய் இல்லை; மாவைத் தின்றால் பணியாரம் இல்லை. எள்ளை நக்கித்தின்னு அவலை முக்கித் தின்னு. எள்ளை நீக்கிக் கொண்டுவரப் போன பேய் எண்ணெய் கொண்டுவர இசைந்தது போல. எள்ளை வைத்துக் கொண்டு எண்ணெய்க்கு அழுவானேன். எறிகிறது முயலுக்கு படுகிறது பற்றைக்கு. எறிச்ச கறி பழையமுது எந்நாளும் கிடைக்குமா? 4660 எறிவார் கையிலே கல்லைக் கொடுக்கிறதா? எறிவார் கையில் கல்லிருந்தால் எறிந்து விடுவாரே! எறிவானேன் சொறிவானேன்? எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப் பெரு வெள்ளம். எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறியது. எறும்பு ஆனை ஆகுமா? துரும்பு தூண் ஆகுமா? எறும்பு ஊர இடங் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான். (நுழைய) எறும்பு ஊரக் கல்லும் தேயும். எறும்பு ஊரக் கல் குழியும். எறும்பு ஊரின் பெரும்புயல் வரும். 4670 எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது; பெரிய பூசணிக்காய் போகிறது தெரியாது. எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா? எறும்பு கடிக்கப் பொறுக்காதா? எறும்புக் கடிக்கு மருந்தா? எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம். எறும்புக்குத் துரும்பு போதும் ஆற்றைக் கடக்க. எறும்புக்குத் தெரியாத கரும்பா? எறும்புக்குத் தன்மூத்திரமே வெள்ளம். எறும்பு தின்றால்தான் கண் நன்றாகத் தெரியும். எறும்பு தின்றால் எண்ணாயிரம் காலம். 4680 எறும்பு தின்றால் நூறு வயது. எறும்பு புற்றெடுக்கப் பாம்பு குடிபுக. எறும்புப் புற்றில் நாகம் (பாம்பு) குடிக் கொள்வது போல. எறும்புப் புற்றின் கீழ் நீர் ஊற்று. எறும்பும் தன்கையால் எண்சாண். எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும். எனக்குப் பழையது போடு, உனக்குப் பசியாவரம் தருகிறேன். எனக்கென்று ஒரு பெண்டாட்டி இருந்தால் டக்கென்று ஓர் அடி அடிக்கலாம். என் அப்பன் கூத்தாடி எனக்கொன்றும் தெரியாது பிச்சைப் போடு. என் இளக்காரம் விளக்காய் எரிகிறது. 4690 என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது. என் எச்சிலைக் கழுவி உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும். என் காரியம் எல்லாம் நந்தன் படைவீடாய்ப் போயிற்று. என் குடி கெட்டதும் உன்குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும். என் குடுமி அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது. என் பசிக்குக் கஞ்சி ஊற்றினால் உனக்குப் பசியாவரம் தருவேன். என் புருசனும் கச்சேரிக்குப் போகிறான். என் பேரில் தப்பிருந்தால் என்னை மொட்டை அடித்துக் கழுதைமேல் ஏற்றிக் கொள். என் பெண் பொல்லாதது. உன் பிள்ளையை அடக்கிக் கொள். என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தான். 4700 என் பகைவனுக்குப் பகைவன் எனக்கு நண்பன். என் மகளைக் கெடுத்தது அழகு; என்னைக் கெடுத்தது நரை. என் மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள்; என் மருமகள் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவாள். என் மருமகளுக்கு வேப்பெண்ணையாம் தூக்கெண்ணெய், விளக்கெண்ணையாம் தலைக்கெண்ணெய். என் முகத்திலே கரி பூசாதே. (சாணி) என் முதுகுத் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கிறது. என் வயிற்றில் பாலை வார்த்தாய். என் வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு. என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்? என் வீடும் பாழ், எதிர்த்த வீடும் பாழ். 4710 என்று நின்றும் பொன்றுவர் ஓர்நாள். என்றும் இடி குலைச்சல் எப்பொழுதும் நீங்குவதில்லை என்றும் காய்க்கும் எலுமிச்சை. என்றும் பயப்படுதலிலும் எதிரே போதல் உத்தமம். என்றைக்கும் எல்லாரையும் ஏமாற்ற முடியாது? என்றைக்கு இருந்தாலும் கிணற்றங்கரைப் பிள்ளையார் கிணற்றிலேதான். என்றைக்கு இருந்தாலும் கொங்கல் காற்றோட குழுமம் ஆற்றோட. என்றைக்கு இருந்தாலும் திருடன் பெண்டாட்டி தாலி அறுக்கத்தான் வேண்டும். என்றைக்கு இருந்தாலும் திருமழபாடி ஆற்றோட. என்றைக்கும் ஆகாதவன் இன்றைக்கு மட்டும் ஆவானா? 4720 என்றைக்கும் சிரிக்காதவள் சந்தைக்கடையில் சிரித்தாளாம். என்றைக்கும் திருநாள் இருப்புப் பணம் இருந்தால். என்றைக்கும் போடாத புண்ணியவதி இன்றும் போட வில்லை; தினம் போடுகிற தேவடியாளுக்கு இன்றைக்கு என்ன கேடு வந்தது? என்றைக்கும் போடாத லட்சுமி இன்றைக்கும் போடவில்லை; தினம் போடுகிறவளுக்கு இன்றைக்கு என்ன வந்தது? என்ன குத்தினாலும் பதர் அரிசியாகாது என்ன சொன்னாலும் என் புத்தி போகாது. என்ன சொன்னான் பரியாரி; இம்னு கேட்டான் நோயாளி. என்ன மாயம் இடைச்சி மாயம், மோரோடு தண்ணீர் கலந்த மாயம். என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியிலே. என்னவாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது. 4730 என்ன விலை ஆனாலும் நாய் நாய்தானே! என்னமோ சொன்னாளாம் பொம்மனாட்டி; அதைக் கேட்டானாம் கம்மனாட்டி. என்னால் ஆகாதது என் குசுவாலா ஆகும்? என்னால் கெட்டானாம் தன்னால் கெட்டவன். என்னாலே நீ கெட்டாய் உன்னாலே நான் கெட்டேன். என்னோடு வந்தால் பொன்னோடு போகலாம்; ஏரோடு வந்தால் தேரோடு போகலாம். என்னிலும் கதிகெட்டவன் என்னை வந்து மாலையிட்டான். என்னிலும் மேல் இல்லை; என் நெல்லிலும் சாவி இல்லை. என்னை ஆட்டுகிறது, உன்னை ஆட்டுகிறது, மன்னிக் கழுத்துத் தாலி. என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி. 4740 என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கை நிறையப் பொன்னைக் கொடுத்தால் புணர்ந்து விடுவேன். என்னைக் கெடுத்தது நரை; என் மகளைக் கெடுத்தது முலை. என்னைப் படைத்தவன் தானே உன்னையும் படைத்தான்? என்னை நம்பாமல் உன்னை நம்பலாமா?  ஏ ஏகமும் கெட்டவனே! ஏறடா பாடையிலே (செத்தவனே). ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள். ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம். ஏகாதசி திருடியை ஏற்றடா இரதத்தின்மேல். ஏகாதசி தோசை இளையாள் மேல் ஆசை. ஏகாதசி மரணம் துவாதசி தகனம். 4750 ஏகாதசி மரணம் முத்தி என்று நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறதா? ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்துபோன கதை. ஏச்சுக்கு ஒன்றும் இல்லை என்றால் எருமைக்காரனுக்கு முட்டியில் சிரங்கு. ஏச்சோற்றுக்குக்காரனுக்கு என்ன வேலை என்றால் தோப்புக்குப் போய் தொன்னை தைக்கிறது. ஏடறியேன் எழுத்தறியேன் என்னவென்று தானறியேன். ஏடா கூடக்காரனுக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலைமேலேதான். ஏடா கூடம் எப்படி என்றால் போகிறவன் தலையில் பொத் தென்று அடித்தான். ஏடா கூடம் பேசினால் அகப்பை சூனியம் வைப்பேன். ஏடு அறியாதவன் பீடு பெறாதவன். ஏடு கிடக்கத் தோடு முடைந்தாளாம். 4760 ஏடைக்கும் கோடைக்கும் இருந்தால் இழிகண்ணி. ஏட்டிக்குப் போட்டி. ஏட்டிக்குப் போட்டி எருமைச்சாணி. ஏட்டிக்குப் போட்டி ஏசலிப்பு. ஏட்டில் அடங்காது எண்ணத் தொலையாது. ஏட்டில் எழுதிவாங்கிய கடனைப் பாட்டெழுதித் தீர்த்தான். ஏட்டில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் தித்திக்குமா? ஏட்டுக் கணக்கைக் கூட்டிப் பெருக்கினால் கூட வந்து விடுமா? ஏட்டுச் சுரைக்காயோ வீட்டுச் சுரைக்காயோ? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? (ஆகுமா) 4770 ஏட்டைக் கட்டி இறவாரத்திலே வை. ஏணிக் கொம்பிற்கு எதிர்க்கொம்பு போடலாமா? ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா? ஏணிமடம் என்றால் நோணிமடம் என்கிறான். ஏணிக்குக் கோணியும் ஏட்டிக்குப் போட்டியும். ஏணியைத் தள்ளிப் பரண்மேல் ஏறலாமா? ஏணிக்கழிக்குக் கோணக் கழிவெட்டுகிறதா? ஏணைக் கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா? (வெட்டலாம்) ஏண்டா கருடா, சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்தான். ஏண்டா பட்டப் பகலில் திருடுகிறாய்? என் அவசரம் உனக்குத் தெரியுமா? 4780 ஏண்டாப் பயலே கேட்ட? அதுக்குத் தாண்டா சொறியறேன். ஏண்டா புளியமரத்தில் ஏறினாய் என்றால், பூனைக் குட்டிக்குப் புல் பறிக்க என்கிறான். ஏண்டா முடிச்சு அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா? ஏண்டா விழுந்தாய் என்றால் கரணம் போட்டுப் பார்த்தேன் என்றானாம். ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்கு முன் கட்டாச்சே. ஏண்டி நிக்கற சந்தியிலே, பேனு கடிக்குது மண்டையிலே, ஏண்டி பாட்டி மஞ்சள் குளிக்கிறேன்னானாம்; பண்டை யிலே இருந்த சோட்டைடா பேராண்டின்னாளாம். ஏண்டி பாட்டி மஞ்சள் குளித்தாய்? பழைய நினைப்படா பேராண்டி. ஏண்டி அக்கா இளைத்துப் போனாய் எருமை மாடாட்டம்; அதாண்டி யக்கா இளைத்துப் போனேன் ஆனைக் குட்டியாட்டம். ஏண்டி பெண்ணே இளைத்தாய் குதிர்போல? 4790 ஏது பிரியம்? இல்லாதது பிரியம். ஏதும் அற்றவனுக்கு இரண்டு பெண்டாட்டி ஏன்? ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா. ஏதும் இல்லை, ஏகாந்தமும் இல்லை, பூ நாகம். ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை. ஏந்தாழை என்றால் கோந்தாழை. ஏப்பம் பரிபூரணம் சாப்பாடு சுழியம். ஏமாந்தவளே! வாடி ஓமாந்தூர் போகலாம். ஏமாந்தால் நாமம் போடுவான், இருந்தால் நீறு பூசுவான். ஏமாற்றம் எத்தனை நாள் நடந்தாலும் உண்மை ஒரு காலத்தில் வெளிப்படாமல் போகாது. 4800 ஏமாற்று வாழ்வு நீடிக்காது. ஏய்த்தால் மதினியை ஏய்ப்பேன், இல்லாவிட்டால் பரதேசம் போவேன். ஏரி உடைகிறதுக்கு முன்னே அணை போடவேண்டும். ஏரி உடைத்தவள் கம்பளியைப் பிடித்துக் கொண்டால் சரியா? ஏரி உடைந்து போகும்போது முறைவீதமா? ஏரி எத்தனை ஆள் கண்டிருக்கும்? ஆள் எத்தனை ஏரி கண்டிருப்பான்! (கால் கழுவுதல்) ஏரிக்கு ஏற்ற எச்சிற்கலை; குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை. ஏரிக்குப் பயந்து கழுவாமல் ஓடினானாம். ஏரிக்கும் மடுவுக்கும் ஏற்ற வித்தியாசம். ஏரி நிமிர்ந்தால் இடையனையும் பாராது (ஏரி - திமில்) 4810 ஏரி நீரைக் கட்டுவது அரிது, உடைப்பது எளிது. ஏரி நிறைந்தால் கரை கசியும். ஏரி பெருகினால் எங்கும் பெருக்கு. ஏரிப் பெருக்கு ஊருக்கு நன்மை. ஏரி மிதந்தால் இடையனை மதியாது (ஏரி - திமில் ஏறு). ஏரி மடை என்றால் நேரி மழை. ஏரியின் மேல் கோவித்துக் கால் கழுவாமல் போனால் ஏரியா நாறும்? ஏரி உடைந்தால் இடும்பன் தடியா காக்கும்? ஏரியுடைந்தால் இறவை நிலமும் பாழ். ஏரியோடு பகைகொண்டு குளிக்காமல் இருக்கிறதா? 4820 ஏரிவற்றினால் ஏன் இருக்கும் கொக்கு? ஏரை அடித்தேனோ, கூழை அடித்தேனோ? ஏரை இகழ்ந்தார் பேரை இகழ்ந்தார். ஏர் அற்றவன் இரப்பாளி. ஏர் அற்றுப் போனால் சீரற்றுப் போகும். ஏர் உழுகிறபிள்ளை இளைத்துப் போனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர். ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா? ஏர் உழுகிறவன் இளப்பமாயிருந்தால் எருது மச்சான் முறை கொண்டாடுமாம். ஏர் ஓட்டும் பிள்ளைக்கு இடப்புறம் மச்சம்; வாழும் தங்காளுக்கு வலப்புறம் மச்சம். ஏர் ஓட்டுவதினும் எருவிடுதல் நன்று. 4830 ஏர் ஓட்டம் இன்றித் தேரோட்டம் இல்லை. ஏர்ச் சாலுக்கு எதிர்ச்சால் இல்லை. ஏர் நடந்தால் பேர் நடக்கும். ஏர் பிடிக்கிறவனுக்கு இடக்கையில் மச்சம்; வாழப் புகுந்த வளுக்கு வலக்கையில் மச்சம். ஏர் பிடித்தவன் என்ன செய்வான், பானை பிடித்தவள் பாக்கியம். ஏர் பிடித்தவன் ஏழை, பானை பிடித்தவள் பாக்கியம். ஏர் பிடித்தவன் செழித்தால் எல்லார் வாழ்வும் செழிக்கும். ஏலேல சிங்கன் பொருள் எங்கேயும் போகாது. ஏலேல சிங்கன் கப்பல் ஏழுகடலிற் போனாலும் திரும்பும் (பொருள்). ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும். 4840 ஏவா மக்கள் மூவா மருந்து. ஏவுகிறவனுக்கு வாய்ச் சொல், செய்கிறவனுக்குத் தலைச் சுமை. ஏழரைச் சனி எதிரே வந்தது போல. ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை. ஏழாயிரம் பொன் பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில் குருட்டுக்குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம். ஏழு அறை கட்டி அதில் வைத்தாலும், ஒரு தாழறையில் சோரம் போவாள். ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி. ஏழு உழவு உழுதாலும் எருப்போட வேண்டும். ஏழு உழவு உழுதால் எருப்போட வேண்டாம். ஏழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை. 4850 ஏழு ஊருக்கு ஒரு கொல்லன். ஏழு மடிப்பு உழுத புலமும்ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபது நாள் காய்ச்சல் தாங்கும். ஏழு மலை தாண்டலாம்; ஓர் ஆறு தாண்ட முடியாது. ஏழு வருடம் மஞ்சள் பயிரிட்டால் என் நிறம் ஆக்குவேன் என்று அது சொல்லும். ஏழு ஏழு பிறவிக்கும் (சென்மத்துக்கும்) போதும். ஏழை அடித்தேனோ கூழை அடித்தேனோ? ஏழை அழுத கண்ணீர் கூரியவாள் ஒக்கும். ஏழை என்கிற பார்ப்பானையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே. ஏழை என்றால் எவர்க்கும் எளிது. ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள். 4860 ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு. ஏழைக்குத் தெய்வமே துணை. ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை. ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக் காரன் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்று ஏங்குகின்றான். ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை, பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை. ஏழை சொல் அம்பலம் ஏறாது (பேச்சு). ஏழை பாக்குத் தின்ன, எட்டு வீடு அறிய வேண்டுமா? ஏழைப் பார்ப்பான் வாயில் பேளப் பார்ப்பான். ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை. 4870 ஏழையின் பசிக்கு ஒரு நெல்லா உணவு? ஏழையைக் கண்டால் மோழையும் பாயும். ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல். ஏழ்மையும் பேறும் எட்டியே நிற்கும். ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன். ஏற ஆசைப்பட்டால் சாணாரப்பிறவி வேண்டும். ஏற ஆசைப்பட்டால் சாணானாய்ப் பிறக்க வேண்டும். ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கொன்று உனக்கொன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோவம், இறங்கச் சொன்னால் நொண்டிக்கு கோவம். ஏறச் சொன்னால் குதிரைக்குக் கோவம்; இறங்கச் சொன்னால் இராவுத்தருக்குக் கோவம். 4880 ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய். ஏறப்பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை (எண்ணா யிரங்காய்). ஏற முடியாதவனுக்கு ஏணி நெட்டை. ஏறவிட்டு ஏணியை வாங்கினாற் போல். ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய். ஏறாத வார்த்தை வசை. ஏறாத வார்த்தை வசையோடு ஒக்கும். ஏறாமடைக்கு நீர் பாய்ச்சுவதா? ஏறாத மேட்டிலும் ஏறிப் போவான். ஏறாத மேட்டுக்கு ஏற்றம் போட்டவன். 4890 ஏறாத மேட்டில் என்ன விளையும்? ஏறி அடுத்து வில் போல் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும். ஏறி இறங்க ஏழு நாழிகை, இறங்கி ஏற எட்டு நாழிகை. ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காதே. ஏறின கொம்பால் இறங்க வேண்டும். ஏறினால் எருதுக்குக் கோவம், ஏறாவிட்டால் நொண்டிக்குக் கோவம். ஏறுகிற குதிரைக்கு எருதே மேல். ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு உத்தமம். ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம். ஏறுக்கு மாறு எத்தனுக்குத் தொத்தன். 4900 ஏறு நெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது. (சூறாந்தலை) ஏறு மாறாய் பேசுகிறதா? ஏறும் தேமல், இறங்கும் படர்தாமரை, கூடும்புருவம் குடியைக் கெடுக்கும். ஏற்கனவே நொண்டி, அதிலேயும் கொழு பாய்ஞ்சிருச்சாம். (கிழக்கோலம்) ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக் கோலம். ஏற்கனவே கோணல்வாய், அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி? ஏற்பது இகழ்ச்சியாகும். ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாட் பிடிக்கு வரும் (கோலுக்கு). ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம். ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப்பானை தானே நிரம்பும். 4910 ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை. ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை; பூசாரிப் பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை. ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு. ஏற்றிவிட்டால் எருதுக்கு நோவு; இறக்கி விட்டால் நொண்டிக்கு நோவு. ஏனவாயனும் கோணவாயனும் இணைஞ்சு போனாற் போல. ஏனவாயனைக் கண்டாளாம்; ஏணிப்பந்தம் பிடித்தாளாம். ஏனோ தானோ என்றால் எதுவும் விளங்காது. ஏன் அடா இடறிவிழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம். ஏன் அடா விழுந்தாய் என்றால் கரணம் போட்டேன் என்றானாம். ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா காற்றாய்ப் பறக்கலாம். 4920 ஏன் அயலானைக் கண்டாளாம், ஏணி பிடித்தாளாம்? ஏன் என்பாரும் இல்லை, எடுத்துப் பார்ப்பாரும் இல்லை. ஏன் என்றால் எதிரி; இல்லை என்றால் கருமி. ஏன் என்று கேட்க ஆளில்லை; வா என்று கூற வாயில்லை. ஏன் காணும் தாதரே ஆண்டி புகுந்தீர்? இதுவும் ஒரு மண்டலம் பார்த்துவிடுவோம். ஏன் கொட்டாவி என்றால் இல்லாத கொட்டாவி என்கிறான். ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒரு காசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன்.  ஐ ஐங்கலக் கப்பியில் கழுவின கப்பி. ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை. ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக்காசு. 4930 ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும். ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன் தானே வரும். ஐங்காதம் போனாலும் தன் பாவம் தொலையாது. ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே. (வரும்) ஐங்காயம் இட்டு அவரைப் பருப்பு இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக் காய்க்கு. ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக் காய்க்கு. ஐதது நெல் அடர்ந்தது சுற்றம் (ஐது). ஐந்தாவது பெண்குழந்தை கெஞ்சினாலும் கிடைக்காது. ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா? ஐந்தில் வராதது ஐம்பதில் வருமா? 4940 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐந்திற்கு இரண்டு பழுதில்லாதிருக்கும். ஐந்துக்கு இரண்டு பழுதில்லை. ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை. ஐந்து வயதில் ஆதியை ஓது. ஐந்து மூன்றும் அடுக்காயிருந்தால் அறியாப் பெண்ணும் கறியாக்குவாள். ஐந்தும் மூன்றும் சரியாயிருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள். ஐந்து விரலும் ஐந்து கன்னக் கோல். ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான். ஐந்து வயதிலே அண்ணன் தம்பி; பத்து வயதிலே பங்காளி. 4950 ஐந்து வருசம் கொஞ்சி வளர்; பத்து வருசம் அடித்து வளர்; பதினாறு வருசம் தலைக்கு மேல் பழகி வளர். ஐந்து விரலும் ஒன்றாய் இருக்குமா? ஐப்பசி அடை மழை; ஐப்பசி ஆறில் இடித்தால் அடிப்பானை விதைக்கும் ஆனி உண்டாக்கும். ஐப்பசிக் காலம் அப்பிப் பிடிக்கும். ஐப்பசிப் பனி அத்தனையும் மழை. (அப்போதே) ஐப்பசி மழை அடைமழை (அழுமழை). ஐப்பசி மாதம் அடைமழை; கார்த்திகை மாதம் கனமழை. ஐப்பசி மாதம் அடைமழை; கார்த்திகை மாதம் கடு மழை. ஐப்பசி மாதம் அழுகைத் துற்றல் அவ்வளவும் பூச்சி. 4960 ஐப்பசி மாதத்தில் இடி இடித்தால் ஆனைக் கொம்பு முளைக்கும். ஐப்பசி மாதத்தில் இடி இடித்தால் கிணற்று அடியில் அருகு முளைக்கும். ஐப்பசி மாதத்தில் நெல் விதைத்தால் அவலுக்கும் நெல்லா காது. ஐப்பசி மாதத்தில் நடவு நட்டால் ஆனைக் கொம்பு விழும். ஐப்பசி மாதத்தில் நட்ட நடவும் அறுபது வயதில் பெற்ற பிள்ளையும் (ஆகாது). ஐப்பசி மாதத்து நாத்து அருகிலே சாத்து. ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று, உரித்த தோலும் காயும். ஐப்பசி மாதப்பொழுது அப்பனுக்குச் சோறு போடுவதற்குள் போயிடும்: கார்த்திகை மாதப்பொழுது கன்றுக்குட்டி விழுந்து எழுவதற்குள் போயிடும். ஐப்பசி மேல் காற்றுக்கு அப்பொழுதே மழை. ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு. 4970 ஐப்பசி மருதாணி அரக்காய்ப் பற்றும். ஐப்பசி மாதம் பசு கறக்கும்முன் பன்னிரண்டு பாட்டம் மழை. ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடைவெள்ளமும் கெடுதி. ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம். ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை. ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை. ஐம்பதிலே அறிவு, அறுபதிலே அடக்கம். ஐம்பதில் ஆட்டம் அறுபதில் ஓட்டம். ஐம்பது ஆம்பளை ஒன்றாயிருந்தாலும் ஐந்து பொம்பளை ஒன்றாயிருக்க மாட்டார்கள். ஐம்பது குயவர்கூடி ஒன்பது பானை செய்தனராம். 4980 ஐம்பதுக்கு மேல் மண்பவழம் கட்டுகிறதா? ஐம்பது வந்தாலும் அவசரம் கூடாது. ஐம்பது வயசிலே ஆண்பிள்ளைக்கு மறுமகிழ்ச்சி. ஐம்பது வயதானவனுக்கு அரிவை ஏன்? ஐம்பது வயதானவனுக்கு ஐந்து வயதுப் பெண்ணா? ஐம்பதிலும் ஆசை வரும். ஐயப்பட்டால் பைய நட. ஐயப்பட்டான் ஆவதும் கெடுப்பான். ஐயப்பன் குதிரையை வையாளி விட்டகதை. ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது. 4990 ஐயம் ஏற்றும் அறிவே ஓது. ஐயம் தீர்ந்தும் நெஞ்சாரவில்லை. ஐயம் புகினும் செய்வன செய். ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே. ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடங்கொடார்கள். ஐயர் உருள, அம்மை திரள. ஐயர் என்பவர் துய்யர் ஆவர். ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை. ஐயர் தின்னும் பருப்பு ஐந்துகுடி கெடுக்கும். ஐயர் பாதி அரண்மனை பாதி. 5000 ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா? ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும். ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் தெய்வம் (பிடாரி) ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திரகாளி. ஐயனார்க்குக் காப்புக் கட்ட ஆடடுக்கடாவின் தலைக்கு வந்துவிடிந்தது. ஐயனார் படையில் குயவனார் பட்டது போல. ஐயனாரே வாரும் கடாவைக் கொள்ளும். ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது. ஐயன் தின்னு கெட்டான்; துலுக்கன் உடுத்துக் கெட்டான். ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ? 5010 ஐயா அரசே என்றால் அடித்த அடிமறந்து போகுமா? ஐயா கதிர்போல அம்மா குதிர்போல ஐயா சாமிக்குக் கல்யாணம் அவரவர் வீட்டில் சாப்பாடு. ஐயா சொல்படி காலைக் கிளப்படி. ஐயாட்டுக்குக் கிடைக்குச் சமம் தை உழவு. ஐயா தாசி கவனம் பண்ண அஞ்சாளின் சுமையாச்சு. ஐயாவுக்கு வித்தையில்லை, அம்மாளுக்குக் கர்வமில்லை. ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் தை ஐந்தில் நட்ட நடவும். (சிறக்கும்) ஐயோ என்றால் ஆறுமாசத்துப் பாவம் சுற்றும். ஐயோ என்றால் ஆறிவிடுமா அறுவாள் வெட்டு. 5020 ஐயோ என்றால் பாவம் கையோடு வரும். ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி.  ஒ ஒக்கச் சிரித்தால் வெட்கம் இல்லை. ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டழும்போது ஒப்பாரித் தங்கைக்குச் சிற்றாடையாம். ஒக்க வந்தவனை உடைப்பிலே தள்ளிவிட்டுக் கள்ளப் புருசனைக் கையோடு கூட்டிக்கிட்டுப் போனாளாம். ஒக்கலிலே பிள்ளை வைத்து ஊரெல்லாம் தேடினாளாம். ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண்வாங்கின கதை. ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் ஆகும். ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் அடங்குமா? ஒட்டகத்தின் முதுகுக்குக் கோணல் ஒன்றா இரண்டா? 5030 ஒட்டகத்துக்கு உடம்பெல்லாம் கோணல். ஒட்டகத்துக்கு ஒரு பக்கமா கோணல், தமிழ்நாட்டுக்கு ஒரு பக்கமா கேடு? ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போடு. ஒட்டனுக்குத் தெரியுமா லட்டுமிட்டாய்? ஒட்டன் கண்டானா லட்டுருண்டை? போயன் கண்டானா பொரியுருண்டை. ஒட்டன் வீட்டு நாய் கட்டில் ஏறித் தூங்கிற்றாம். ஒட்டன் வீட்டு நாய் கூழுக்குக் காத்த மாதிரி. ஒட்டா ஒருமதி கெட்டாய். ஒட்டாது பாவம்; கிட்டாது சேவை. ஒட்டாரம் பேசினால் ஒருவரும் வரார். 5040 ஒட்டிக் கொண்டு வந்தாலும் தட்டிக் கழிக்கிறான். ஒட்டிக் கொண்டு வந்தபேரைத் தட்டிக் கழிக்கலாமா? ஒட்டிய சீதேவி நெட்டியோடே போம். ஒட்டினாலும் உழக்குப் பீச்சுகிறதா? ஒட்டினால் தொட்டிலும் கொள்ளும்; ஒட்டாவிட்டால் கட்டிலும் கொள்ளாது. ஒட்டுத் திண்ணை உறக்கக் கேடு. ஒட்டுத் திண்ணையில் பட்டுப்பாய் போட்டவள். ஒட்டைக்குச் சுளுவு பட்டாற்போல. ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறது போல. ஒட்டகைக்கு மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை. 5050 ஒண்டவந்த எலி உரம்பெற்றது, அண்டி இருந்த பூனை ஆலாய்ப் பறக்கிறது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தியது. ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று. ஒண்டுக் குடித்தனமும் ஓரக் குடித்தனமும் ஒத்து வராது. ஒதி பெருத்தால் உரலாமா? ஒதி பெருத்து என்ன? உபகாரம் இல்லாதவன் வாழ்ந் தென்ன? ஒதி பெருத்துத் தூணாமா? ஒதிய மரமும் சமயத்துக்கு உதவும். ஒதிய மரம் தூணாமோ? ஓட்டாங் கிளிஞ்சல் காசாமோ? (துட்டாமோ) ஒதிய மரம் தூண் ஆகாது, ஒட்டாஞ் சில்லு காசாகாது. 5060 ஒதுங்கி நின்னவளை உட்காரச் சொன்னால் உட்காந்திருந்த பாயே என்னோடதுன்னாளாம். ஒத்த கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலக் குடிவாழ்க்கை செய்யலாம். ஒத்த விடத்தில் நித்திரை கொள். ஒத்தாள் ஓரத்தாள் ஒரு முற்றம்; நாத்தனார் நடுமுற்றம். ஒத்தி வெள்ளம் வருமுன்னே அணை கோலிக் கொள்ள வேண்டும். ஒத்து வாழாக்குடி ஒருநாளும் விடியாது. ஒப்பாரி பாடவந்தவளை ஓய்ந்து போகச் சொல்ல முடியாது. ஒப்புக்குச் சித்தப்பா உப்புப் போட்டு நக்கப்பா! ஒப்புக்குச் சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை. ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம்; உள்ளே இருக் குமாம் ஈரும் பேனும். 5070 ஒயிலாகப் பேசுகிறாள்; ஆனால் தனமறிந்த கப்பரையு மில்லை; கண்டறிந்த நாயுமில்லை. ஒரு அடி அடித்தாலும் பட்டுக் கொள்ளலாம்; ஒரு சொல் கேட்க முடியாது. ஒரு உறையிலே இரண்டு கத்தியா? ஒரு ஊரிலே இரண்டு பைத்தியக்காரனா? ஒரு ஊருக்கு வழிகேட்க ஒன்பது ஊருக்கு வழிகாட்டு கிறான். (சொல்ல) ஒரு ஊர் நடப்பு ஒரு ஊருக்குப் பழிப்பு. ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு ஒன்பது ஆள்கூடி இழுத்தாற் போல. ஒரு கண்ணிலே புகுந்து ஒரு கண்ணிலே வருகிறவன். ஒரு கண்ணிலே வெண்ணெய் ஒரு கண்ணிலே சுண்ணாம்பு. ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுவதா? 5080 ஒரு கரண்டி எண்ணெய் கொண்டு ஊர்ப்பந்தி போடுவான். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒரு காசுக்கு மூக்கு அரிந்தால் ஒன்பது காசுகொடுத்தால் ஒட்டுமா? ஒரு காசுக்குப் போன மானம் ஓராயிரம் கொடுத்தாலும் வராது. ஒரு காசுக்கு மோர் வாங்கி ஊரெல்லாம் தானம் பண்ணினானாம். ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா? ஒரு காசு பேணின் இரு காசு தேறும். ஒரு காலைச் செய்த தச்சன் மறுகாலும் செய்வான். ஒரு கால் பார்த்தால் புன்செய்; இருகால் பார்த்தால் நன்செய். ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான். 5090 ஒரு கிழப்பிணம் ஒரு கலப்பணம். ஒரு குருவி இரையெடுக்க ஒன்பது குருவி வாய் திறக்க. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை. ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா? ஒரு குழந்தைக்குத் தாய் இருக்குமிடம்தான் சொர்க்கம். ஒரு குளப்படி நீரைக் கண்டு திரைக்கடல் ஏங்குமா? ஒரு குற்றத்தை மறைக்க குற்றம் பெருகுமே. ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால் இரு குற்ற முற்றவள் வந்து சேருவாள். ஒரு குடை முடைந்தவன் ஒன்பது கூடை முடைவான். (கூடு, கூண்டு) ஒரு குருடி தண்ணிக்குப் போக ஒன்பது குருடி தேடிப்போன கதை. 5100 ஒரு கூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை. ஒரு கூன் சர்க்கரையாக ஒத்துவாழ். ஒரு கையால் இறைத்து இருகையால் வார வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா? ஒரு கை தட்டினால் ஓசை கேட்குமா? இருகை தட்டினால் ஓசை கேட்குமா? ஒரு கை முழம் போடுமா? ஒரு கோவம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோசம் வந்தாலும் எழும்பலாமா? ஒரு சந்திப் பானையை நாய் அறியுமா? ஒரு சட்டம் இன்னொரு சட்டத்தை அடிக்கும். ஒரு சட்டியிலே இரண்டு தைலம். 5110 ஒரு சாண் காட்டிலே ஒரு முழத்தடி வெட்டலாமா? ஒரு சாதிக்கு ஏச்சு; ஒரு சாதிக்குப் பேச்சு. ஒரு சாவிப் போட்டுத் திறந்தால் ஒழுங்காத் திறக்கும்; பத்துச்சாவி போட்டுத் திறந்தால் பழுதாத் திறக்கும். ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும். ஒரு ஞானமும் இல்லாதவளுக்குப் பேர் திருஞானமாம். ஒரு தட்டில் ஓர் ஆனை; மறு தட்டில் ஆயிரம் பூனை. ஒரு தம்படி மிச்சப்படுத்தியது ஒரு தம்பிடி சம்பாதித்தது ஆகுமா? ஒரு தலைக்கு இரண்டு ஆணையா? ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய். ஒரு துரும்பு பழுதை யாகுமா? 5120 ஒரு தையல் ஒன்பது தையலைத் தவிர்க்கும். ஒரு தொழுமாடு முட்டிக் கொள்ளவும் செய்யும்; நக்கிக் கொள்ளவும் செய்யும். ஒருத்தர் போனவழி ஒருத்தர் போகிற தில்லை. ஒருத்தி, செத்துப் போன மாடு உயிரோடு இருந்தால் உடைந்து போன கலயத்தால் ஒன்பது கலயம் கறப்பேன் என்றாளாம். ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை. ஒரு நாய் குரைத்தால் ஊர் நாயெல்லாம் கரைக்கும். ஒரு நாய் குரைத்தால் பத்து நாய் பதில் கொடுக்கும். ஒரு நாய் வீட்டில் இருந்தால் பத்துப் பேர் காவல் காத்தது போல் ஆகும். ஒரு நாள் காய்ச்சல் ஆறுமாத வலுவைப் போக்கும். ஒரு நாள் கூத்துக்குத் தலையைச் சிரைத்தது போல். 5130 ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைத்த கதையா. ஒரு நாளாய் இருந்தாலும் திருநாள்; ஒருவாயாக இருந் தாலும் நெல்லுக்கஞ்சி. ஒரு நாளியாலும் வரும்; ஒரு மூளியாலும் வரும். ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி; பிறக்கிறது கோடி. ஒரு நாளும் இல்லாத திருநாள். ஒருநாளும் சிரிக்காதவள் திருநாளிலே சிரித்தாள்; திரு நாளும் வெறுநாளாயிற்று. ஒரு நாளும் போகாதவள் திருநாளுக்குப் போனாளாம்; திருநாளும் வெறுநாளாய்ப் போனதாம். ஒருநாள் ஒரு யுகமாய் இருக்கிறது. ஒருநாள் தூக்கமின்மை ஒன்பதுநாள் தொல்லை. (வினைக் கேடு) ஒருநாள் பஞ்சத்தை உற்றாரிடம் காட்டினாளாம். 5140 ஒருநீள நாக்குதான் ஆயிரம் தினுசு தேடுமாம்; பலவீட்டு அடுப்புருசி வீட்டுக்காரியை விரட்டுமாம். ஒருமாதப் பஞ்சத்தை உரக்கச் சொன்னார்களாம். ஒரு பக்கம் பெய்தால் ஒரு பக்கம் காயும். ஒரு பசியும் இல்லை என்பாள்; ஒட்டகத்தையும் விழுங்கி விடுவாள். ஒரு பணம் கொடுத்து அழச் சொல்லி ஒன்பது கொடுத்து ஓயச் சொன்னது போல் ஒரு பணம் கொடுப்பானாம், ஓயாமல் அழைப்பானாம். ஒரு பனை இரண்டு பாளை; ஒன்று நுங்கு, ஒன்று கள்ளு. (ஒரே பனையில்) ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு (உள்ளங் கையில்) நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு. (ஓடு) ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல, ஒரு மரமும் தோப்பல்ல. 5150 ஒரு பிள்ளை பேளவும், ஒரு பிள்ளை நக்கவும். ஒரு பிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம். அது செரியா மாந்தக் குணம் பிடித்துச் செத்ததாம். ஒரு பெட்டை நாய்க்கு ஒன்பது ஆண் நாயா? ஒரு பெண்ணின் யாத்திரை சமையலறையிலிருந்து வாயிற் படி வரை. ஒரு பெண் என்று ஊட்டி வளர்த்தால், அது ஊர் மேலே போச்சுது. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும். ஒரு பொழுதுச் சட்டி, அதன்மேல் கவிச்சுச் சட்டி. ஒரு மணத்திற்கு ஏழு செருப்பு தேய வேண்டும். ஒரு மயிர் போனாலும் கவரிமான் வாழாது. ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது. 5160 ஒரு மரத்துப்பட்டை ஒரு மரத்தில் ஒட்டுமா? ஒரு மரத்துப் பழம் ஒருமரத்தில் ஒட்டுமா? ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க? ஒரு மரமும் தோப்பன்று; ஒரு மகவும் மகவன்று. ஒரு முருங்கையும் ஒரு எருமையும் உண்டானால் வருகிற விருந்துக்கு மனங்களிக்கச் செய்வேன். ஒரு முழ நாய்க்கு ஒன்றரை முழ வாலெதுக்கு? ஒரு முழுக்கிலே முத்து எடுக்க முடியுமா? (மண்) ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா? ஒரு முறை செய்தவன் ஒன்பது முறை செய்வான். ஒருமைப்பாடு இல்லாத குடி ஒரு மிக்கக் கெடும். 5170 ஒரு மொழிக்கு உயிர் உலக வழக்கே. ஒருவருக்குத் துன்பம் மற்றொருவருக்கு இன்பம் ஒருவருக்கு நிறைவும் குறைவும் ஊழ்வினைப் பயன். ஒருவர் அறிந்தது உலகு அறிந்தது. ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம் (பரகசியம்) ஒருவர்க்கு இடுக்கண் வந்தால் அடுக்கடுக்காய் வரும். ஒருவர் பொறை இருவர் நட்பு. ஒருவராய்ப் பிறந்தால் நன்மை; இருவராய்ப் பிறந்தால் பகைமை. ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை. இருவராய்ப் பிறந்தால் பகைமை. ஒருவனுக்கு இருவர் துணை. ஒருவனை அறிய இருவர் வேண்டும். 5180 ஒருவனுக்குச் சொன்மதி இருக்க வேண்டும் அல்லது தன்மதி இருக்க வேண்டும். ஒருவனுக்குச் சொல் புத்தி இருக்க வேண்டும் அல்லது சொந்தப்புத்தி இருக்க வேண்டும். ஒருவனுக்குத் தன்மதியாவது சொன்மதியாவது இருக்க வேண்டும். ஒருவனுக்குத் தாரம் மற்றவனுக்குத்தாய். ஒருவனுடைய தாரம் மற்றவனுக்குத் தாய்! ஒருவனும் பிறப்பா? ஒன்றிமரமும் தோப்பா? ஒருவனை அறிய இருவர் வேண்டும். ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான். பலரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான். ஒருவனைக் கொன்றால் தூக்கு; பலரைக் கொன்றால் பாராட்டு. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு. 5190 ஒருவன் அறிந்த இரகசியம் உலகத்தில் பரவும். ஒருவன் அறிந்தால் உலகம் அறியும். ஒருவன் குழியிலே விழுந்தால் எல்லாரும் கூடி அவன் தலையிலே கல்லைப் போடுகிறதா? ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா? ஒருவன் துணையாக மாட்டான், ஒரு மரம் தோப்பாக மாட்டாது. ஒருவன் மளிகைக்காரனாக இருக்க வேண்டும்; ஒருவன் சோளிகைக்காரனாக இருக்க வேண்டும். ஒருவாய்ச் சோற்றுக்கு ஊர்வழியே போனான் பார்ப்பான். ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும். ஒருவிரல் நொடி இடாது. ஒருவிலே இருந்தாலும் இருக்கலாம்; ஒழுக்கிலே இருக்க முடியாது. 5200 ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம். ஒரு வீட்டிலே மணக்கோலம்; எதிர் வீட்டிலே பிணக்கோலம். ஒரு வேளை உண்போன் யோகி; இருவேளை உண்போன் போகி; மூவேளை உண்போன் ரோகி. ஒரே குஞ்சுள்ள கோழி ஒயாமற் கொக்கரிக்கும். ஒலியிருந்த சட்டி இன்ன சட்டி என்று தெரியாது. (கட்டி) ஒல்லி நாய்க்கு ஒட்டியாணம் வேண்டுமாம். ஒவ்வாக் கட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசை யோடு ஒக்கும். ஒழிந்த வேலையில் அவிசாரி போனால் உப்புப் புளிக்காகும். ஒழுகாத வீடு உள்ளங்கை அத்தனை போதும். ஒழுகாத குச்சில் ஒருமுழக் குச்சில். 5210 ஒழுகுகிற வீட்ல் ஒன்றுக்கு இருந்தால் வெள்ளத்தோடு வெள்ளம். ஒழுக்கத்தின் மிக்க உயர்வில்லை; இழுக்கத்தின் மிக்க இழிவில்லை. ஒழுகுகின்ற வீட்டில் இருந்தாலும் அழுகின்ற வீட்டில் இராதே. ஒழுக்கத்தைக் காட்டிலும் உயர்வில்லை. ஒழுக்கம் உயர்குலத்தில் நன்று. ஒழுக்கிலே முக்காடா? ஒழுக்குக்கு வைத்த சட்டி போல. ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்தது போல. ஒழுகாத குச்சில் ஒருமுழக் குச்சில். ஒழுகுகிற வீட்டில் ஒன்றுக்கு இருந்தால் வெள்ளத்தோடு வெள்ளம். 5200 ஒழுங்கு ஊராளும். ஒழுங்கு ஊருக்குப் போவுச்சாம்; ஊரே ஒழுங்காச்சாம். ஒழுங்கு ஒருபணம்; சளுக்கு (டம்பம்) முக்காற் பணம். ஒழுங்கு கணக்குப் பிள்ளை ஊரை வளைச்சுப் போட்டான் ஒளிக்கப் பாயும் இடம் இடைஞ்சலா? ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா? ஒளிக்கும் சேவகனுக்கு மீசை முறுக்கிட ஒன்பது ஆளாம். ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் மீசை ஏன்? ஒளியத் தெரியாமல் தலையாரி வீட்டில் ஒளிந்தானாம். ஒளியில்லாவிட்டால் இருளையும், இருள் இல்லாவிட்டால் ஒளியையும் காணலாம். 5210 ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும். ஒற்றடம் அரை வைத்தியம். ஒற்றியும் சீதனமும் பற்றி ஆள வேண்டும். ஒற்றுமை இல்லாத குடி ஒருமிக்கக் கெடும். ஒற்றுமையே வலிமை. ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை. ஒற்றைக் கண்ணுக்கு ஓரக் கண்ணன் சாட்சி. ஒற்றைக் காலும் ஓரியுமாய் சமுசாரம் செய்கிறான். ஒற்றைப் பாக்கு எடுத்தால் உறவு முறியும். ஒற்றையால் குடியிருந்தால் ஒல்லிப் படும். 5220 ஒன்றரைக் கண்ணன் ஓரக்கண்ணனைப் பழித்தானாம். ஒன்ற வந்த பிடாரி ஊர்ப்பிடாரி ஆனதுபோல். ஒன்ற வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஓட்டினது போல். ஒன்றா சொல்லுகிறான்? ஒரு வழியா போகிறான். ஒன்றால் ஒன்று குறையில்லை. முன்னால் கட்டத் துணி யில்லை. ஒன்றான தெய்வம் உறங்கிக் கிடக்கும் போது பிச்சைக்கு வந்தவன் ததியோததனத்திற்கு அழுகிறானாம். ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்க மூலைவீட்டுத் தெய்வம் குங்கிலியம் கேட்குமாம். ஒன்று இருந்து இன்னொன்று இல்லை. ஒன்றுக்கு இரண்டாம் வாணிகம் இல்லை. ஒன்றுக்கு இரண்டு; உபத்திரவத்துக்கு மூன்று. 5230 ஒன்று கொண்டு எட்டுவிற்றால் லாபமே லாபம். ஒன்றுக்கு வாங்கி எட்டுவிற்றால் லாபமே லாபம். ஒன்றுக்கும் அற்ற தங்காளுக்குக் களாக்காய்ப் புல்லாக்கு. ஒன்றுக்கும் ஆகாத ஊர்ப்பறை. ஒன்றுக்கும் ஆகாதவன் உபாத்தியாயன் ஆகட்டும். ஒன்று கட்டி விதை; ஒன்று வெட்டி விதை. ஒன்று குறைந்தது கார்த்திகை; ஒக்கப் பிறந்தது மார்கழி. ஒன்று செய்தாலும் உருப்படியாய்ச் செய்ய வேண்டும். ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாமும் தெரியாது. ஒன்று நினைக்க ஒன்றாயிற்று. 5240 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒன்று பெற்றது ஒன்பது பெற்றது போல். ஒன்றும் அறியாத கன்னி; அவள் வயிற்றிலே கண்டதாம் ஆறுமாத சன்னி. ஒன்றும் அறியாதவளாம் கன்னி, ஓடிப் பிடித்தாளாம் ஆறுமாத சன்னி. ஒன்றும் இல்லாத தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்காம். ஒன்றுமில்லா மூளிக்கு ஒன்பது நாள் சடங்கு; அதுவும் இல்லா மூளிக்கு ஐம்பது நாள் சடங்கு. ஒன்று விடியட்டும் விடியட்டும் என்கிறது ஒன்று விடிய வேண்டா விடிய வேண்டா என்கிறது ஒன்று விடிந்தாலும் விடியாவிட்டாலும் சரி என்கிறது. ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெண்ணையாவது பெற்றாளாம். ஒன்றும் இல்லாத தாசனுக்கு ஒன்றரைத் தோசை. ஒன்றும் தெரியாத சின்னக்கண்ணு பானை தின்னுவான் பன்றிக்கறி. 5250 ஒன்றும் தெரியாத பாப்பா ஒருமணிக்குப் போடுவாளாம் தாப்பா. ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள். ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை. ஒன்றே தொடினும் நன்றே தொடு. ஒன்றா சொல்லுகிறான்? ஒருவழியா போகிறான். ஒன்றே செய்யினும் நன்றே செய்க. ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஒன்றே ஆயினும் நன்றாய் அறி. ஒன்றே குதிரை ஒன்றே ராவுத்தன். ஒன்றே ராசா ஒன்றே குதிரை. 5260 ஒன்றை ஒன்று தள்ளும்; உன்னைப் போட்டு மண்ணு தள்ளும். ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு. ஒன்றைப் பத்தாகவும் பத்தை ஒன்றாகவும் சாதிக்கிறான். ஒன்றைப் பிடித்தால் உடனே சாதிக்க வேண்டும். ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு. ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு. ஒன்றைப் பெற்றால் நன்றே பெற வேண்டும்.  ஓ ஓகுடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை. ஓங்கி அறைந்தால் ஏங்கி அழச் சீவனில்லை. ஓங்கில் அறியும் உயர் கடலின் ஆழம், பாங்கி அறிவாள் தன் கணவனின் வலிமை. (ஓங்கில் - மீன்வகை) 5270 ஓங்கின கை நிற்காது. ஓங்கின கோடரி நிற்காது. ஓங்கு ஒன்று அடி இரண்டு. ஓசிக்கு அகப்பட்டால் எனக்கு ஒன்று; எங்கள் அண்ணனுக்கு ஒன்று. ஓசை காட்டி பூசை செய். ஓசைபெறும் வெண்கலம்; ஓசைபெறா மட்கலம். ஓடக்காரனிடம் கோவித்துக் கொண்டு ஆற்றோடு போன மாதிரி. ஓட நினைத்து உறங்கினவன். ஓட மருந்துண்டு உறங்கி விழுந்தாயோ? ஓடமாட்டாதவன் திரும்பிப் பார்த்தானாம். 5280 ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு. ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் காணவும் படும். ஓடம் விட்ட ஆறும் அடி சுடும். ஓடம் விட்ட இடம் அடி சுடும், அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும். ஓடவும் மாட்டான், பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான். ஓடவும் மாட்டான், பிடிக்கவும் மாட்டான். ஓடவும் முடியவில்லை; ஒதுங்கவும் முடியவில்லை. ஓடறது வண்டி, ஓடாதது நொண்டி. ஓடி உழக்கு அரிசி சாப்பிடுவதை விட உட்கார்ந்து ஆழாக்கு அரிசி சாப்பிடலாம். 5290 ஓடி உழக்கு சம்பாதிக்கிறதை விட உட்கார்ந்த இடத்திலே ஆழாக்கு சம்பாதிப்பது போதும். ஓடி ஒருகோடி தேடுவதிலும் இருந்து ஒருகாசு தேடுவது நலம். ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும், உட்கார்ந்து ஒரு பணம் சம்பாதிப்பது நன்று. ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது. ஓடி ஓடி நூறுகுழி உழுகிறதைப் பார்க்கிலும், அமர்ந்து அமர்ந்து ஆறுகுழி உழுவது நல்லது. ஓடி ஓடிப் பறந்தாலும் ஓடக்காரன் தாமதம். ஓடிப் பழக்கமுள்ள கால் நிற்காது. ஓடிப் போகிறவன் பாடிப் போகிறான். ஓடிப் போன ஊரில் ஆதரித்தவன் வள்ளல். ஓடிப் போன புருசன் வந்து கூடிக் கொண்டானாம், உடைமை மேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாளாம். 5300 ஓடிப் போன முயல் பெரிய முயல். ஓடிப் போனவளைத் தேடிப் போகாதே. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு, அகப்பட்ட வனுக்கு அட்டமத்தில் சனி. ஓடிப்போன வெள்ளம் ஒரு நாளும் திரும்பாது. ஓடிப் போனால் உமிக்காந்தல், உள்ளே வந்தால் செந்தணல். ஓடி மேய்ந்த சிறுக்கிக்கு ஒன்றியிருக்க மனம் வருமா? ஓடி வந்து உமிக்காந்தலை மிதித்தாளாம்; திரும்பி வந்து தீக்காந்தலை மிதித்தாளாம். ஓடி வந்து கொள்ளாத உறவேதும் இல்லை. ஓடி வரும் பூனை; ஆடி வரும் ஆனை. ஓடின மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை. 5310 ஓடினால் மூச்சு; நின்றால் போச்சு. ஓடினால் வண்டி; ஓடாவிட்டால் நொண்டி. ஓடு காலம் ஓடவிட்டால் நிற்கும் காலம் என்ன செய்வது? ஓடு கால் தோணி ஒரு காலம் மட்டுமே. ஓடுகிற ஆறு ஓடிக் கொண்டே இருக்குமா? ஓடுகிற கழுதை வாலைப் பிடித்தால் உடனே கொடுக்கும் பலன். ஓடுகிற தண்ணீரை ஓங்கி அடித்தாலும் அது கூடுகிறபக்கம் தான் கூடும். ஓடுகிற திரிகை ஒரு சுற்று வருவதற்குள் உதிக்கும் எண்ணம் கோடானு கோடி. ஓடுகிறது பஞ்சையாய் இருந்தாலும் சிமிட்டுவது இரண்டு முழம். ஓடுகிற பாம்பைக் கையினாற் பிடித்து உண்கிற வாயில் மண்ணைப் போட்டுக் கொள்ளுகிற காலம். 5320 ஓடுகிற பாம்பைக் கையினாற் பிடிக்கிற பருவம் (வயது). ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது; ஒழுகுகிற சாண்டையைக் குடிக்கிற வயது. ஓடுகிற பாம்பை உச்சியில் மிதிக்கிற பருவம். ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் விட்டுக் கல் எறி. ஓடுகிற நாயைக் கண்டால் வெருட்டுகிற நாய்க்குத் தொக்கு. (துரத்துகிற) ஓடுகிற நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம். ஓடுகிற நீரில் அசுத்தம் இருக்காது. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு எளிது. ஓடுகிறவனை விரட்டுவது எளிது. ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா? 5340 ஓடும் பொன்னும் ஒப்ப நினைப்பார். ஓடும் இருக்கிறது நாடும் இருக்கிறது. ஓட்டம் உள்ளவரை ஆட்டம் அதிகம் ஓட்டமும் ஆட்டமும் உடம்புக்கு நல்லது. ஓட்டனுக்குப்பின் உறவில்லை. ஓட்டனுக்கும் ஓட்டிக்கும் மேல் உறவில்லை. ஓட்டி ஓட்டி மிளகு அரைக்கப் பாட்டி வந்தாளாம்; பையனுக்குச் சோறு போடக் குட்டி வந்தாளாம். ஓட்டி சீமான் ஓட்டினான்; பழமுள்ள காட்டில் ஓட்டினான். ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி. ஓட்டைக் காதில் ஒழுக விட்டான் கேட்டதை. 5350 ஓட்டைக் குடத்திலேதான் சர்க்கரையிருக்கும். ஓட்டைச் சங்கால ஊத முடியாது. ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. ஓட்டைத் தோண்டிக்கு அறுந்துபோன கயிறு சரி. ஓட்டைத் தோண்டியும் அறுந்துபோன தாம்புக் கயிறும். ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல ஓட்டைப் பானைக்கு உறைபோட்டு என்ன பயன்? ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா? ஓட்டைப் பானைக்குள் நண்டை விட்டது போல ஓட்டைப் பானையில் விட்ட தண்ணீர் போல 5360 ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா? ஓட்டை மதகிலே தண்ணீர் போனால் தோட்டிக்கு என்ன வாட்டம்? ஓட்டை வீட்டிலே மூத்திரம் பெய்தால் ஒழுக்கோடு ஒழுக்கு. ஓணத்து மழை நாணத்தைக் கெடுக்கும். ஓணான் ஓட்டம் எவ்வளவு தூரம். ஓணானுக்கு வேலி சாட்சி; வேலிக்கு ஓணான் சாட்சி ஓணான் கடித்தால் ஒரு நாழிகையில் சாவு; அரணை கடித்தால் அரை நாழிகையில் சாவு. ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும்? ஓணான் வேலிக்கு இழுக்கிறது. தவளை தண்ணீருக்கு இழுக்கிறது. ஓதப்பணம் இல்லை, உட்காரப் பாய் இல்லை; உனக் கென்ன வாய்? 5370 ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். ஓதின மஞ்சள் உறியிலே இருக்கும் போது வேதனை என்ன செய்யும்? ஓதுவான் எல்லாம் உழுவான் தலைக்கடை. (ஓதுவார்) ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா? ஓநாயிடம் இருந்தால் ஊளை இடத்தான் வேண்டும். ஓநாய் புகுந்த ஆட்டுப்பட்டி போல ஓநாய்க்கு அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். ஓந்தி தலையாட்டினால் ஓடியா போவேன்? ஓமல் இட்ட பண்டம் உள்ளே வந்து சேரவில்லை. ஓம் என்ற தோசம் வயிற்றில் அசைந்தது. 5380 ஓயாக்கவலை தீரா நோய். ஓயாது சிரிப்பவள் உன்னையே கெடுப்பவள் ஓயாமல் அழு நோவாமல் அடிக்கிறேன் என்ற கதை. ஓய்ந்ததடி பனங்காடு; உட்கார்ந்தாளடி சாணாத்தி. ஓய்ந்த முழுக்கு ஒரே முழுக்கு. ஓய்ந்த வேளையில் அவிசாரி ஆடினால் உப்புப் புளிக்கு ஆகும். ஓய்விலா நேசமே ஓலமே சரணம். ஓரக்கண்ணனைப் பழிக்கிறான் ஒற்றைக் கண்ணன் (ஒன்றரைக்) ஓரண்டைக் காடு காடுமல்ல; ஓரேர் உழவு உழவுமல்ல. ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்? 5390 ஓரம் சொன்னவன் ஆருக்கும் ஆகான். ஓரம் சொன்னவன் குடித்தனம் போல. ஓரம் போனால் சோரம் இல்லை. ஓர் ஆடு நீர்விட்டால் எல்லா ஆடும் நீர்விடும். ஓர் ஆண்டி பசித்திருக்க உலகமெல்லாம் கிறுகிறு என்று சுற்றுகிறது. ஓர் உறையில் இருகத்தியா? ஓர் ஊருக்கு ஒருவழியா? ஓர் ஊருக்கு ஒரு பேர் இட்டுக் கொள்ளலாமா? ஓர் ஊர்ப் பேச்சு ஓரூர்க்கு ஏச்சு. ஓர் எருமை, ஒரு முருங்கைமரம், கால்காணி இருந்தால் பஞ்சம் போகும். 5400 ஓர் ஏர்க்காரன் ஓட்டிக் கெட்டான் ; நாலு ஏர்க்காரன் நிறுத்திக் கெட்டான். ஓர் ஏர்க்காரன் ஓட்டிக் கெட்டான்; நாலு ஏர்க்காரன் நிறுத்திக் கெட்டான்; பத்து ஏர்க்காரன் பார்த்துக் கெட்டான். ஓர்த்தது இசைக்கும் பறை. ஓர்ப்படியாள் பிள்ளை பெற்றாள் என்று ஒக்கப்பிள்ளை பெறலாமா? ஓலைப் பாயில் நாய் மோண்டாற் போல ஓலையைக் கண்டதும் ஓவென்று அழுகிறான். ஓலை வந்துவிட்டால் காலை என்ன? மாலை என்ன? ஓவாய்க்காரன் அவலுக்கு அலைந்த கதையா? ஓழி மகன் கலியாணத்திலே உண்டது லாபம்.  ஔ ஔவியம் பேசாமை அகத்திற்கு அழகு. 5410 ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. ஔவியம் பேசுதல் எவ்விதமும் கேடு. ஔவை சொல் அரசேறிய சொல். ஔவை சொல் கேள். ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை. ஔவை சொல்லுக்கு அடுத்த சொல் இல்லை. ஔவைச் சாமிக்கு ஆண்வாடை ஆகாது. ஔவைப் பாட்டிக்கு ஆர்பாட்டி ஒப்பு? ஔவையார் மேலும் குற்றம் உண்டு; அண்ணாவியார் மேலும் பழுதுண்டு. ஔவை வாக்கு அமுத வாக்கு. 