நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் 2 தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை தொகுப்பாசிரியன்மார் முனைவர் ச.சாம்பசிவனார் முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி ஆதி பதிப்பகம் சென்னை - 600 004. நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் -2 தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி பதிப்பாளர் : ஆ. ஆதவன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 528 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 330/- படிகள் : 1000 அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : ஆதி பதிப்பகம் 4/2, 2 வது மாடி சீனிவாசா தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004. பதிப்புரை 20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும் பங்களிப்பைச் செய்த குடும்பம். வணங்குவோம். பெருமை பெற்ற பிறப்பினர் முதல் , முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முதுமுனைவர் வரை 15 பெருந் தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை தமிழின்பாலும், தமிழினத்தின்பாலும், இந்தியப் பெருநிலத்தின் விடுதலையின்பாலும் அவர் கொண்டிருந்த பற்றிமையை ஆசிரியர் சாம்பசிவனார் எழுதிய சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள நூலில் காண்க. எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஈ.வெ.ராமசாமி வணக்கம். என்று தொடங்கி தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்- . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள். குகை விட்டுக் கிளம்பிய புலியெனப் போர்க்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்லவேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்! - இது பேரறிஞர் அண்ணா கூறியது. அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சான்றோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நண்பர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர். தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேற வில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும். தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டியவரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்துவருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதி களாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி. இந்நூலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி. இந்நூல்களை வாங்கிப் பயனடைவீர். - பதிப்பாளர் பொருளடக்கம் பதிப்புரை 3 தொகுப்பாசிரியர் முன்னுரை 5 1. நுழைவாயில் 6 2. தொல்காப்பியர் பொருட்படலம் - உரைப்பாயிரம் 19 3. தொல்காப்பியர் பொருட்படலம் - அகத்திணையியல் 25 4. தொல்காப்பியர் பொருட்படலம் - புறத்திணையியல் 170 5. தொல்காப்பியர் பொருட்படலம் - மெய்ப்பாட்டியல் 313 6. தொல்காப்பியர் பொருட்படலம் - உள்ளுறைகள் 384 7. தொல்காப்பியர் பொருட்படலம் - களவியல்,கற்பியல், செய்யுளியல்கள் 398 8. உரிமையுரைகள் 465 9. புத்துரைகள் அறிமுகக்கட்டுரைகள் 493 10. தந்தை உரைபற்றித் தனயன் உரை 505 11. நாவலர் பாரதியாரின் வரலாற்றுக் குறிப்பேடு 507 12. நூற்பா அகராதி 511 13. நூற்பெயர் அகராதி 514 14. சிறப்புப்பெயர் அகராதி 516 15. மேற்கோள் பாடல் அகராதி 520 நுழைவாயில் முன்னுரை அல்லையாண் டமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச வில்லையூன் றிய,கை யோடும் வெய்துயிர்ப் போடும் வீரன் கல்லையாண் டுயர்ந்த தோளாய்! கண்கள்நீர் சொரியக் கங்குல் எல்லைகாண் பளவும் நின்றான்! இமைப்பிலன் நயனம் என்றான்! (கம்ப. குக. 42) என்பது கம்பன் பாடல்! இராமன் வனம் ஏகினான்; உண்மை உணர்ந்த பரதன், அவனுக்கு ஆட்சி நல்கிட, அவனிருக்கும் இடம்தேடிப் புறப் பட்டான்! குகனைக் கண்டான்! இராமனும் சீதையும், கல்லினையே தலையணையாகக் கொண்டு படுத்துறங்க, இலக்குவனோ, வில் ஏந்திய கையினனாய், வெய்துயிர்ப்போடு, கண்களில் நீர் தாரை தாரையாகச் சிந்த, அவர்கட்கு விலங்கு முதலாயவற்றால் எவ்வகைக் கேடும் நேராவண்ணம் கண் இமைக்காமல் விடிய விடியப் பாதுகாத்தான்! இவ் அரிய செய்தியைப் பரதனுக்குக் குகன் கூறியதாக அமைந்த பாடல் இது! இக் கருத்தை உட்கொண்டு கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல் ஒன்று: “ தமிழ்மகள் உறங்கத் தான்விழித் திருந்து இமையசை யாதொரு பகைஅணு காமல் காத்திருந் தான்! உயிர் காற்றொடும் போயது! காத்திருந் தான்! உயிர் காற்றொடும் போயது! தமிழன்னை உறங்கிக் கொண்டிருக்கத் தான் ஒருவனாகத் தனித்து நின்று, கண்ணிமைகூட அசையாமல் அவளுக்குப் பகைவரால் துன்பம் எதுவும் நேராவண்ணம் காத்திருந்தான் ஒருவன்! அத்தகை யானின் நல்லுயிர் இப்போது காற்றோடு காற்றாகக் கலந்து சென்று விட்டதே! என்பது இப்பாட்டின் பொருள்! ‘தமிழன்னைக்குக் கேடு வாராமல் அவ்வாறு காத்திருந்த காவலர் யார்தாமோ? என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆம்! அவரே, நாவலர் என்றும், கணக்காயர் என்றும், டாக்டர் என்றும் பல்லோராலும் பாராட்டப் பெற்ற ச. சோமசுந்தர பாரதியார்! அப்பேராண்மையாளர், 14.12.1959 இல், இம்மண்ணுலக வாழ்வை நீத்தபோது, கவிஞர் கண்ணதாசன் பாடிய கையறுநிலைப் பாடலின் ஒரு சிறு பகுதிதான் இது! வாழ்வும் வண்டமிழ்த் தொண்டும் 28.7.1879இல், எட்டயபுரத்தில் தோன்றிய நாவலரின் இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன் என்பது. தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும்; இளங்கலை, சட்டத் தேர்வுகளைச் சென்னையிலும் முடித்துக் கொண்டு, தூத்துக்குடியிலும், பின்னர் மதுரையிலும் வழக்கறிஞராக விளங்கிப், பெரும் பொருள் ஈட்டிப் பேரும் புகழும் பெற்றார். இடையே தாமாகவே பயின்று, முதுகலைப் பட்டமும் பெற்றார்! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1933 முதல் 1938 முடிய ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பேற்று, முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் போன்ற, தமிழ் காக்கும் மாமணிகளை உருவாக்கினார். இவர்தம் இல்லற வாழ்வின் பயனாய், இரு மனைவியர்க்கு, ஆடவர் இருவரும் பெண்டிர் மூவருமாக ஐந்து நன்மக்கள் பிறந்தனர்! நாவலர் பாரதியார் செய்த செயற்கருஞ் செயல்கள் பலப்பல. ஈண்டுச் சிலமட்டும் சுட்டலாம். தேசியகவி சி. சுப்பிரமணிய பாரதியாரின் இளமைக்கால இனிய நண்பர் இவர்; இவ்விருவரும் எட்டயபுரத்திலும் நெல்லை யிலும் ஒன்றாகவே பழகிவந்த பண்பினர். சி.சு. பாரதியார், தம் ஏழாம் வயதிலேயே கவி புனையும் பாங்கினை நேரிற்கண்டு, முதன்முதல் இவ்வுலகுக்கு எடுத்துரைத்த சிறப்பு நாவலருக்கே உண்டு! பாரதி எனும் பைந்தமிழ்ப் பட்டமும், இவ்விருவர்க்கும் ஒரே சமயத்தில், நெல்லை மாநகரில், யாழ்ப்பாணப் புலவர் ஒருவரால் வழங்கப்பட்ட சுவையான செய்தியை நாவலர் நம்பால் கூறி மகிழ்ந்ததுண்டு! அன்று. முதற்கொண்டே, சுப்பிரமணியம் சுப்பிரமணிய பாரதி ஆனார்; சோமசுந்தரன் சோமசுந்தர பாரதி ஆனார்! தூத்துக்குடியில் வழக்கறிஞராயிருந்தகாலை, செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்படும் வ.உ. சிதம்பரனாருடன் நெருங்கிய நட்புக் கொண்டதோடன்றி, அவருடன் நாட்டு உரிமைக் கிளர்ச்சி யிலும் ஈடுபட்டு, அரசியல் மேடைகளிலெல்லாம் தமிழிலே பேசி (அரசியல் மேடைகளிலும் ஆங்கிலத்திற் பேசுவதே சிறப்பெனக் கருதிய காலம்!) மக்களிடையே, உரிமை வேட்கை கிளர்ந்தெழச் செய்தார்! வ.உ.சி. தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலராகவும் இருந்தார்! அண்ணல் காந்தியடிகளைத் தென் தமிழ்நாட்டுக்கு வரவழைத்த சிறப்பும் நாவலருக்கு உண்டு! மதுரையில் காங்கிரசு மாநாடு கூட்டிச் சி.ஆர். தாசு போன்றவர் களைப் பங்குபெறச் செய்தார்; தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திலும் தீவிரப் பங்காற்றினார்; உசிலங்குளம் என்ற ஊரில் தாழ்த்தப் பட்டவர்க்கென்றே அக்காலத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றை உருவாக்கினார்! நாவலர் பாரதியார், நாட்டு விடுதலையின் பொருட்டுச் சிறை செல்லவில்லை; எனினும் இவரின் அருமைத் திருமகனார் இலட்சுமிரதன் பாரதியார், மகளார் இலக்குமி பாரதியார் உள்ளிட்ட ஏழுபேர் சிறை சென்றுள்ளனர் என்பது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக் களால் பொறிக்கத் தக்கதாம்! நாவலர் பாரதியார் ஆற்றிய தொண்டுகளில் எல்லாம் தலை யாயது ஒன்று உண்டு; அதுவே, அன்னைத் தமிழுக்குச் செய்த அரும்பணி! புதிய ஆராய்ச்சி நூல்களைத் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் படைத்தல், படைப்பிலக்கியங்கள் உருவாக்குதல், தமிழ் மாநாடுகளில் தலைமை ஏற்று வீர உரையாற்றுதல், தமிழ் மாணவர் பலரை உருவாக்குதல், தமிழ்ப் புலவர்க்குப் பொருளும் அளித்தல், பேச்சாலும் எழுத்தாலும் தமிழ் உணர்வு ஊட்டுதல், ஆய்வுக்கண் கொண்டு எதனையும் நோக்குதல், பிறர் கூறியதையே மீட்டும் கூறாமல் புதிதாக ஆராய்ந்து கூறுதல், அங்ஙனம் கூறும் போதும், தமிழ் மரபு இது, வேற்று மரபு இது எனத் தக்க ஏதுக்காட்டித் தம்கோள் நிறுவுதல் இன்னோரன்ன பல செயற்கருஞ் செயல்களால், தாம் வாழ்ந்த காலத்திலேயே, ஈழநாட்டினர் அளித்த நாவலர் எனும் நற்பட்டமும், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தார் அளித்த கணக்காயர் எனும் கவினுறு பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் அளித்த முனைவர்ப் பட்டமும் பெற்ற பெருமையினர்! தமிழ்நாட்டில் இந்தி கட்டாயப்பாடமாக ஆக்கப்பட்ட போது, அதனை முதன்முதலில் முழு மூச்சாக எதிர்த்துப் போராடிய தீரர் இவர்! அதனால், இவர், தாம் பிறந்த எட்டயபுரத்திலேயே கல்லடியும் வாங்கியவர். அப்போது முதலமைச்சராயிருந்த மூதறிஞர் இராசாசி அவர்கட்குக் கட்டாய இந்தியைக் கைவிடக் கோரித் திறந்த மடல் (An Open Letter to Hon’ble Minister C. Rajagopalachariar) ஒன்றினை எழுதித் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுப் பலர்க்கும் வழங்கியவர்! நாவலர் பாரதியார், தாம் வாழ்ந்த காலத்திலேயே சில நூல்களை வெளியிட்டுள்ளார். அவருக்குப்பின், என் விருப்பத்திற் கேற்ப, அவர்தம் குடும்பத்தினர் அனைவருமே, நாவலர் ச.சோ. பாரதியார் கல்வி அறப்பணிக்குழு ஒன்றைத் தொடங்க முடிவு செய்து, என்னை அதன் செயலாளராக இருக்கப்பணித்தனர். இவ் அறப் பணிக்குழு வாயிலாக, நாவலர் புத்தக நிலையத்தினர், நாவலர் எழுதிய நூல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டுத் தமிழகம் அறியச் செய்தனர். அதுகாறும் வெளிவராத கட்டுரைகள் பலவும் நூலாக்கம் பெற்றன. இவற்றிற்கெல்லாம் ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள் நாவலரின் அருமை வாழ்க்கைத் துணைவியார் திருமதி. வசுமதி அம்மாள் பாரதியும், அருமை மகனார் டாக்டர். சோ. இராசாராம் பாரதியும் ஆவர். எனினும் உடன் ஒத்துழைப்பு நல்கியவர்கள் அவரின் நன்மக்களாம் சோ. இலட்சுமிரதன் பாரதி, கி. இலக்குமிபாரதி, திருமதி மீனாட்சி அம்மையார், டாக்டர் (திருமதி) லலிதா காமேசுவரன் ஆகியோராவர்! இத்தகைய அணுக்கத் தொடர்பின் காரணமாக, யான் முனைவர்ப் பட்ட ஆய்வுக்கு, நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி என்னும் தலைப்பினைத் தேர்ந்தெடுத்து, ஆய்வுப் பணியை முடித்து, அதனை நூலாகவும் வெளியிட்டேன்! நாவலர் பாரதியார் எழுதிய நூல்களாவன: தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர் (தமிழிலும் ஆங்கிலத்திலும்), சேரர் தாய முறை (தமிழ், ஆங்கிலம்), சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம்), மாரிவாயில், மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி, தொல்காப்பியர் பொருட்படலப்புத்துறை: அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியன மற்றும் இவர், பல்வேறு இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், தமிழும் தமிழரும், அழகு, திருவள்ளுவர், நாவலர் பாரதியாரின் ஆராய்ச்சிகள் என நூல் வடிவாக்கமும் பெற்றுள்ளன. இவையனைத்தையும் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி என்னும் தலைப்பில், தொகுதி தொகுதியாக வெளியிட்டு, உலகோர் அனைவரும் நாவலரின் அரிய ஆய்வுக் கருவூலங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உயர் நோக்கத்தால், நாவலர் பாரதியாரின் அருமைத் திருமகளாரும், ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவன நிகர் நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான டாக்டர் (திருமதி) லலிதா காமேசுவரன் அவர்கள், தாமே முன்னின்று பெரும் பொருட் செலவில் கைம்மாறு கருதாமல், இத் தண்டமிழ்ப் பணியைத் தெய்வத் திருப்பணியாகக் கருதி மேற் கொண்டுள்ளனர்! இது, காலத்தினாற் செய்யும் பெருங் கடமையாகும்! புத்துரைப் பொலிவு இது, நாவலர் பாரதியார் எழுதிய தொல்காப்பியர் பொருட் படலப் புத்துரைகள் கொண்ட இரண்டாவது தொகுதியாகும்! தமிழில் தலைசிறந்த ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட - முழு முதல்நூல் தொல்காப்பியம். பண்டைத் தமிழர்தம் நாகரிகத்தையும், பண்பாட்டையும் எடுத்துரைக்கும் அரிய கருவூலம்! இந் நூலுக்கு உரைகண்டவர் பலர். அவர்கள் தத்தம் காலத்திற்கு ஏற்ப உரைகூறி யமைந்தனர். அவ்வுரைகளிற் பல, பண்டைத் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் முரண்பாடாகவுள்ளமை கண்டு, புத்துரை கூற விழைந்தார் நாவலர் பாரதியார். எழுத்து, சொல்,பொருள் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்ட இப் பெருநூலில், முன்னிரண்டை விடப் பொருளதிகாரம் தமிழுக்குத் தனிச்சிறப்பு நல்கவல்லது. ஆனால் முன்னைய உரையாசிரியர்களோ நூற்கருத்தைப் பல்காலும் பிறழ உணர்ந்து, தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் கூறி மயங்க வைத்துள்ளனர். எனவே, தொல்காப்பியர்தம் உளக்கிடக்கையை உள்ளவாறு உணர்த்த விரும்பிய நாவலர் பாரதியார், அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு என்னும் மூன்று இயல் கட்கும், முன்னைய உரையாசிரியர்களைப் போன்றே நூற்பாவாரியாக உரைவகுத்துத் தரலானார். இவ்வகையில், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் போன்ற உரையாசிரியர்களின் காலத்திற்கு நீண்ட இடைவெளிக்குப்பின், அவர்களைப் போன்றே மூன்று இயல்கட்குப் புத்துரை வகுத்து, அவ் உரையாசிரியர் வரிசையில் சேர்த்து எண்ணத்தக்க பெருஞ்சிறப்புக்குரியரானார் நாவலர் பாரதியார்! இம்மூன்று இயல்களின் புத்துரைச் சிறப்பினைக் குறித்த கட்டுரைகள், இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளன. எனினும், நாவலர் பாரதியார் கூறும் புத்துரைக்கு ஒவ்வோர் இயலிலிருந்தும் ஒவ்வொரு சான்று இவண் தரப்படுகின்றது: கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப (அகத். 1) என்பது, அகத்திணையியலில் வரும் முதல் நூற்பா. கைக்கிளை முதற்கொண்டு பெருந்திணை ஈறாக, முதலில் சொல்லப்பட்ட திணைகள் ஏழு என்பர் தமிழ்ச் சான்றோர் என்பது இதன் கருத்து. இதற்கு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும், முற்படக் கூறப்பட்டன... எனவே பிற்படக் கிளக்கப்படுவன எழுதிணை உள! என்று, அடுத்த புறத்திணையியலில் கூறப்படும் வெட்சி முதலான புறத்திணைகள் ஏழும் உண்டு என்பர். ஆனால், நாவலர் பாரதியாரோ, பின்வருமாறு விளக்கி, முன்னைய உரையை மறுப்பர்: இச்சூத்திரத்தில் அகத்திணையேழும் நிரலே கூறப் பெறாமையானும், கிளக்கும் என்னாது கிளந்த என இறந்தகால எச்சம் பெய்த பெற்றிமையானும், இதன் பின்னுள்ள சூத்திர வைப்பு முறையில் கைக்கிளையை முதலாகவும் அதனை யடுத்து அன்பின் ஐந்திணையும் இறுதியிற் பெருந்திணையுமாக அமைத்துக் கூறப்பெறாமல், முதற்கண் அன்பின் ஐந்திணை கூறி, அவற்றின்பின் கைக்கிளை, பெருந்திணைகள் தொடர்ந்து கூறப்படுவதனால் முற்படக் கிளந்த எழுதிணை என்பது அகத்திணை யியலில் இச்சூத்திரத்தின் பின் அமைத்துக் கூறப்பட்ட முறையைச் சுட்டாதென்பது வெளிப்படை. எனவே ஈண்டு முற்படக் கிளந்த என்பது, இடத்தால் முற்படக் கூறும் அமைப்பு முறையோடு பொருந்தாமையால், காலத்தால் முற்படக் கிளந்த ஒன்றினையே குறிக்குமென்பது தேற்றமாகும்! என்று புத்துரை கூறுவதனோடு, இந்தச் சூத்திரத்திற்கு முன்னர்ச் சில சூத்திரங்கள் இருந்திருக்க வேண்டும்; அவற்றில், பொருள் அகம் புறம் என இருவகைப்படும். அவற்றுள் பின்னர்க் கூறப்படும் புறத்திணை ஏழு ஆதல் போலவே அகத்திணையும் ஏழாகும்; அவ் அகத்திணையும் கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை என ஏழாக வகுக்கப்படும் என்பன போன்ற கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும்! என்று விளக்கமும் தருவது அறிவுக்கு விருந்தாகும்! எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே (புறத். 7) என்பது புறத்திணையில் வரும் நூற்பா. இதற்கு, முன்னைய உரை யாசிரியர்கள் கூறும் உரைக் கருத்து வருமாறு: இருபெரு வேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே, ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதல் உண்டாக அந்நாட்டிடத்தே சென்று, ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றம் கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை; ஒருவன் மண்ணசை யானே மேற்சென்றால், அவனும் அம்மண்ணழியாமல் காத்தற்கு எதிரேவருதலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உள தாகலின், அவ்விருவரும் வஞ்சிவேந்தர் ஆவர் என்றுணர்க! இதனை நாவலர் பாரதியார், பின்வருமாறு மறுத்துப் புத்துரை காண்பர்: இவ்வுரை, சூத்திரச் சொல்லமைதிக்கு ஏற்காததோடு, வஞ்சியியல்பை இழிதகு பழிதரும் பிழையொழுக்கமாகவும் பண்ணுகிறது. எஞ்சா மண்ணசை என்ற தொடர், அதையடுத்து நிற்கும் வேந்தனை என்னும் இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக்கு நேரே அடையாயமைவது வெளிப்படை. அவ்வளவிற் கொள்ளாமல், அத் தொடரைப் பின்வரும் வேந்தன் என்னும் எழுவாய்ச் சொல்லுக்கும் ஏற்றி, அவன் படையெடுத்துச் செல்லுதற்குக் காரணமே, மற்றவன் மண்ணிடத்து அவனுக்குள்ள வேட்கையாகுமென இவ்வுரைகாரர் விளக்குகின்றார். மன்னர் போர் கருதிப் படையெடுப்பதன் நோக்கமெல்லாம் பிறர் மண் கவரும் வேட்கைதான் எனும் கொள்கை நாகரிக உலகம் மதிக்கும் போரறமழித்துப் பழிக்கிடனாக்கும். தக்க காரணமின்றித் தவறற்ற மெலியாரின் நாட்டை வலியார், மண் வேட்கையாலே படையெடுத்துச் சென்று வென்று கவர்தல் வஞ்சித்திணை எனக் கூறுவது, உயர்ந்த பழந்தமிழ் ஒழுக்கத்தைப் பழிக்கத் தகும் பிழையாக்கி முடிப்பதாகும்! வலிச் செருக்கால், மெலியார் நாட்டைப் பறிப்பது உலகியலில் உண்டேனும், அதனை வெறுத்து விலக்குவதை விட்டு வேத்தியல் அறமாக்கி, வஞ்சியொழுக்கமெனச் சிறப்பித்து, ஒரு திணை வகையாக்குவது, அறனறிந்து மூத்த அறிவுடைய தொல்காப்பியர் நூற்பெருமைக் கிழுக்காகும்! அஃது அவர்கருத்தன்மை அவர் சூத்திரச் சொல்லமைப்பே தெற்றெனத் தெளிக்கின்றது. இச்சூத் திரத்தில் எஞ்சா மண்ணசையாலிருவேந்தர் என்னாமல், எஞ்சா மண்ணசை வேந்தனை என்றமைத்ததால் முன்னுரை காரர் பொருள். தொல்காப்பியர் கருத்தன்று என்பதே தேற்றமாகும்! இவ்வாறு முன்னைய உரையை மறுப்பவர். தணியாத பிறர்மண் ஆசையுடைய ஒரு வேந்தனை, (அறமறமுடைய) பிறிதொரு மன்னன், அவன்வஞ்ச நெஞ்சம் அஞ்சுமாறு தானே (படையொடு) மேற்சென்று வென்றடக்குதலைச் சுட்டும் அளவிற்று வஞ்சித்திணை என்று புத்துரை கூறிப், படையொடு பிறர்மேற் செல்லுதற்கு மண்ணசையே நோக்கமாயின் அது உயரொழுக்கமாகாமல், துன்பம் தவாஅது மேன்மேல் வரும் இழுக்கமாகும். இனி, மண் வேட்கையால் தன்மெலிவு நோக்கியிருக்கும் பகைவனை வென்றடக்க முயலாமல் வாளாவிருப்பது ஆண்மையற மழிப்பதாகும். அதனால் தன்னாட்டின்மேல் தணியாத வேட்கையுடைய அறமற்ற அயல்மன்னன் வலிபெருக்கித் தன்மேல் வருமுன்னமே தக்கபடையொடு தான்சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும். அது செய்யானை, எஞ்சா மண்ணசையுடையான் வஞ்சத் தால் வலிமிக வளர்த்து வாய்த்தபோது வந்து தடிவனாகை யால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடையானை வென்றடக்கி ஆண்மையறமாற்றுதல் போற்றத்தகும் ஒழுக்கமாகும். அவ் வொழுக்கமே பழந்தமிழர் கையாண்ட வஞ்சித்திணை! என அரிய விளக்கமும் அளிப்பர். பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப (மெய்ப்.1) என்பது மெய்ப்பாட்டியலில் வரும் முதல் நூற்பா. இதற்குப் பேராசிரியராகிய முன்னைய உரையாசிரியர், நாடகமகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்பவிளை யாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும், அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி யடங்கும் நாடக நூலாசிரியருக்கு! என்பர். இதற்கு நாவலர் பாரதியார் விரிவான மறுப்புரை தருவர்: தொல்காப்பியர் இங்கு விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பன்றிக் கூத்துறுப்பொன்றுமன்று!... அகப் புறப் பொருட்டுறை யனைத்திற்கு முரிய இயற்றமிழ்ச் சான்றோர் செய்யுளுறுப்பாவன மெய்ப்பாடென்பதை மறந்து, அவை நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும்... என மயங்கக் கூறினர்.. அன்றியும் இவை யெல்லாம் ஆரியக் கூத்து நூலார் கொள்கை களாதலின், அவை இயற்றமிழ் நூலில் இடம்பெறற்கில்லை! என்பது மறுப்புரையின் சுருக்கமாகும்! தொல்காப்பியப் பொருளதிகாரத்து ஒன்பது இயல்களில் அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் எனும் இம்மூன்றனுக்கும். நாவலர் பாரதியாரே முறையான புத்துரை எழுதி, நூல்களாக வெளியிட்டுப் பலர்க்கும் வழங்கினார்; அவரது மறைவுக்குப் பின்னர், இவை மறுபதிப்பாக வெளிவந்தன! ஆனால், நாவலர் பாரதியார், களவியல், கற்பியல், செய்யுளியல் முதலான வற்றில், இன்றியமையாச் சில நூற்பாக் களுக்குப் புத்துரை கண்டு, அவ்வப்போது பல்வேறு இதழ்களில் எழுதிவந்ததுமுண்டு! யான். முனைவர்ப் பட்ட ஆராய்ச்சிக்காகப் பல்வேறு இடங்களுக்கும் சென்றபோது, இத்தகு உரைகளைப் புதையல் போல் காண நேர்ந்தது. எனக்குக் கிடைத்தவற்றைத் தொகுத்து வைத்திருந்தேன். அவை, இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. களவியலில், இன்பமும் பொருளும் அறனுமென் றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே (களவி:1) என்பது முதல் நூற்பா. இதற்கு நாவலர் பாரதியார் கூறும் நயவுரை வருமாறு: இதில், காமம் ஆசை சுட்டும் வடசொல்ன்று; அன்புப் பொருளுடைத் தமிழ்ச் சொல்லாகும். அன்பை அதாவது காதலைக் குறிக்கும். இவ்வியலிலேயே காமத்திணையில் எனக் காமத்தை ஒழுக்கத்தோடு சேர்த்துக் கூறுதலானும், காமஞ் சான்ற எனக் கற்பியலில் கூறுதலானும், இழிதரு காமம் ஒழிய விலக்கி, மேதகு கடவுட் காதலையே காமத்தமிழ்ச்சொல் கண்ணுதல் தேற்றம்... இனி, வடவர் உவந்துழிக் கூடி உவந்துழிப் பிரியும் கந்தருவக் கூட்டம், பிரிவறு பெட்பா லுயிரொன்றிக் கூடி, மணமாய் மலர்ந்து மனைமாண்பு வளர்க்கும் தமிழரின் களவறக்காதலை ஒவ்வாதாதலின், காமக் கூட்டம் யாழ்த்துணைமையோர் மணமாம் என்றார். காதல் மீதூரக் கலந்து மகிழ் கந்தருவர் கூட்டம், நீளாது நிலையாது உலகறிய மணந்து நிலவா தொழியினும் காதலால் நேர்தலால், காதல் வேண்டாத ஆரியர் பிறவகைக் கூட்டமேழையும் விலக்கிக், களவுக் கூட்டம் காதலளவில் கந்தருவர் புணர்ச்சியை ஓரள வொக்குமெனுங் குறிப்பால், தமிழர் களவுத் திணை அன்புக் கூட்டம், காதலொடு கூடுங் கந்தருவர் கூட்டத் தியல்பே என்று கூறப்பட்டது! இதன்கண், வடவர் கந்தருவத்திற்கும் தமிழர் களவொழுக்கத் திற்குமிடையே காணலாகும் நுட்பமான வேறுபாட்டைச் சுட்டியமை அறியலாம். கற்பியலில் வரும் நூற்பா ஒன்று: காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே! (கற்பி : 51) இந் நூற்பாவுக்கு முன்னைய உரையாசிரியராம் நச்சினார்க்கினியரின் உரையினை மறுக்க வந்த நாவலர் பாரதியார், இல்லறத்தின் பின்னர்க் கடைநாள் துறவுநிலை நின்று, மெய்யுணர்ந்து வீடு பெறுப; இவ்வீடு பேற்றினை இன்றியமையாது இல்லறம் என்பது இதன் பயன் எனும் நச்சினார்க்கினியர் முடிபு. சைனர் துணிபா? அன்றி ஆசிரியர் சிலருவக்கும் வைதிக முடிபா? என்ற வினாத் தொடுத்து, தமிழ்கூறு நல்லுலகில் வழங்கும் மரபும், தமிழ்நூல் இலக்கண இயல்புகளுமே கூறவந்த தொல்காப்பியர், தம் குறிக்கோளை மறந்து, ஈண்டுத் தமிழரின் அகப்புறப் பகுதிகளில் பிறபிற சமயக் கோட்பாடுகளையும் பேதுறப் பெயர்த்துப் பேசித் தலைதடுமாறினரெனக் கொள்ளப் போதிய காரணமில்லை. அதனால் இவ்வுரை ஆசிரியர் கருத்தாகாமை விளக்கமாம்! என்று கூறியதனோடமையாது, உழுவலன்புடையார் இருவரும் மணந்து, பொருள் படைத்து, மாண்ட மனையறம் நிகழ்த்திக் கற்புக் கனிந்த அற்புக்கூட்டம் வீறுபெற்றுச் சிறந்தநாளில், சிறந்த தம் மக்களொடும், தம் மனையறத்திற்கு உரிமைச் சுற்றமாகிய பணியாளர் முதலிய பிற செயற்கைத் துணைவர் பல ரொடும், தலைவனும் தலைவியும் பல்லாற்றானும் மாண்பு பெற்ற அன்பு கனிந்த கற்புக் கூட்டம் அனுசரித்தல், முன் தாமே தலைப்பட்டுத் தழுவி வழுவாக் களவொழுக்குக் கடைகூட்டி வைத்த பயனன்றிப் பிறிதன்றாம்! எனப் புத்துரையும் காண்பர். செய்யுளியலிலும், மண்டிலம், குட்டம் என்பவற்றிற்கும் புத்துரை காண்பது எண்ணத்தக்கது. இவ்வாறு நாவலர் பாரதியார் கண்ட இப் புத்துரைகளின் சிறப்பினைக் குறித்து, எனது முனைவர்ப் பட்ட ஆய்வு நூலில் விரிவாகச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளேன். அதில் வரும் ஒரு பகுதியினை இவண் சுட்டுதல் சாலும்: திருவள்ளுவரைப் போலவே தொல்காப்பியரைப்பற்றியும் கட்டுக்கதை வழங்கி வந்தது. திருவள்ளுவரைப்பற்றி வழங்கிய கட்டுக்கதையைத் தம் திருவள்ளுவர் எனும் ஆராய்ச்சிநூலில் ஆணித்தரமாக மறுத்ததுபோலவே, தொல்காப்பியரைப்பற்றி வழங்கும் கட்டுக் கதையையும் தம் தொல்காப்பியப் புத்துரை நூலில் வன்மையாக மறுத்துக் காப்பியர் எனும் பெயர் எப்படி உண்டாயிற்று என்பதையும் தக்க சான்றுகளுடன் விளக்கியவர் நாவலர் பாரதியார். நூற்பாவுக்கு உரை கூறுமிடத்துக் கருத்து - பொருள் - குறிப்பு என மூன்றாகப் பகுத்து எளிய முறையில் உரை கூறுதல் - சிலவிடங்களில் முன்னைய உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றிச் செல்லுதல் - புத்தம் புதிய சான்றுகள் காட்டி விளக்குதல் ஆகியன, இவருடைய புத்துரைகளில் காணத்தகுவன. நூற்பா முழுமைக்குமாகப் புத்துரை கூறுவது, அன்றி நூற்பாவில் வரும் சொல் அல்லது சொற்றொடருக்குப் புத்துரை கூறுவது என்பது இவரது இயல்பு. அதேவேளையில், முன்னைய உரையாசிரியர் கூறுவனவற்றுள் ஏற்கத்தக்கன இவை எனக்காட்டி அன்னவரைப் போற்றுதலும் செய்வார். சொற்பொருள்நயம் காட்டுவதிலும் மாறுபட்ட கருத்துக்களை மிக வன்மையாக மறுத்துப் புத்துரை கூறுவதிலும் இவரது புலமையை அறிய முடிகின்றது. பூரணர், நச்சர், பேராசிரியர் இம்மூவர் உரையிலும் நச்சர் கூறும் உரையே, பெரும்பாலும் இவரது மறுப்புக்குள்ளாகிறது. நாவலர் பாரதியாரது உள்ளம் தொல்காப்பியரின் கருத்தினை அறிய விழைந்தது என்பதில் ஐயமில்லை! இவ்வகையில் நுண்மாண் நுழைபுலமிக்க பண்டை உரையாசிரியர்கள் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க வராக நாவலர் பாரதியார் விளங்குகின்றார்! முன்னைய உரையாசிரியர்கள் கூறி விட்டார்கள் எனவே அதனை ஏற்கத்தான் வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றித் தொல்காப்பியத்தை இப்படியும் ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கலாம் - புத்துரை கூறலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்களில் நாவலர் பாரதியாருக்குத் தனிச் சிறப்பு உண்டு! எனவே நாவலர் பாரதியாரின் தொல்காப்பியப் புத்துரைகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த அருங்கொடைகள் எனலாம்! நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப்பணி, (ப. 288) முடிவுரை தொல்காப்பியப் பொருளதிகார முழுமைக்குமே நாவலர் பாரதியார் இத்தகைய புத்துரைகள் எழுதாமற் போனாரே என்ற ஏக்கம், நமக்கு உண்டு! எனினும், இவர் எழுதிய புத்துரைகளை யேனும் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எமது விருப்பம்! வாழ்க நாவலர் பாரதியார்! அன்பன் முனைவர் ச. சாம்பசிவனார் பதிப்பாசிரியர் தொல்காப்பியர் - பொருட்படலம் உரைப்பாயிரம் மக்கள் பேசு மொழிகளில் புலமை சான்ற செய்யுட் செல்வமும் சொற்சிற்ப வளமும் நிரம்பியவை மிகச் சிலவேயாம். அவை யனைத்தும் மிகத் தொன்மையும், விரிந்து வரம்பறுத்திறுகிய இலக்கண யாப்புறவும் பெற்றுள்ளன. வளமிகுந்த பிற்காலப் புதுமொழிகள் சுருங்கி நெகிழ்ந்த இலக்கண நொய்மையுடை யனவாய் வழங்குகின்றன. திட்பமும் விரிவும் ஒட்பமும் சிறந்த பண்டை மொழிகள் பல, தம் பரந்து செறிந்த இலக்கணப் பொறையால் நலிந்து நடை தளர்ந்து வழக்கிழந்து, பழமை பாராட்டு வாரளவில் பயிற்சி குறுகிப் பெரும்பாலோர்க்குப் பெயர் தவிரப் பிரிதறியக் கூடாத மறை மொழிகளாகி விட்டன. யவனம், இலத்தீன், எபிரேயம், பழைய பாரசீகம், ஆரியம் போன்ற பழம் பெரு மொழிகள் எல்லாம் வேண்டாது வியத்தற்குரிய பொருட்காட்சி சாலை வியப்புக்களும், தேடுவார் எளிதில் தெளியாத இருட்புதர் களுமாயிருக்கின்றன. அவற்றிலமைந்த ஆன்றோர் செய்யுட் சிறப்பை விரும்புவோர் அவற்றை அரும்பொருட் சுரங்கங்களாக் கொண்டகழ்ந்தாராய்ந்தும், சமையக்கோள் வரலாறு சொற்சிற்ப வளர்ச்சிகளைத் தேடுவோர் அவை புதைந்த பாழ்பழம் பரப்பு களாய்த் துருவியும் பேணுவதால், அவைகளிறந் தறவே மறக்கப் படாமலிருந்து வருகின்றன. தொன்மை, சொற்சிற்பவளம், செய்யுட் சிறப்பு, நூற்றிட்பங் களில் முதுபெரு மொழியினத்திற் சேர்ந்து, பிற பல மொழிகளைப் போல வழக்கழியாமல், தளராது வளரும் உயிர்த்திறமும், இறவா இளமை வளமும் பெற்றுச் சாவாமொழி மூவாத் தமிழொன்றே. ஆழ்ந்தகன்ற நூற்பெருமை, செப்பனிட்ட சொற்செவ்விகளில் வடவாரியம் மேல்புல யவனம் முதலிய எதற்கும் இளையாச் சிறப்புடையது தமிழ். என்றாலும், வழக்கொழிந்த பிற முதுமொழிகள் வினைத்திட்பமொன்றே குறிக்கோளாய்க் கொண்டமைத்த நூற் பொறையால் நலிவுற்றன. அவ்வாறன்றி, எழுத்து, சொல், செய்யுள், பொருள், எல்லாம் திட்பமும், திகழும் ஒட்பமும் செழித்து, முதிரா இளநலம் தழையும் திறனும் ஒளிர்ந்தொழுகி, இழையும் செவ்வியும் நிறைந்து யாப்புறவுற்றது தமிழ்நூல். பிற பெரு மொழிகளை நலிவித்த வளர்ச்சியைத் தளர்க்கும் செயற்கைக் கட்டுப்பாடுகளின்றி, இயல்போடியைந்த தன் நயத்தகுநூலே கொழுகொம்பாகத் தமிழ்மொழி நாளும் உயர்ந்து வளர்ந்தது. செறிவும் நிறைவும் செய்யாஎழிலும் தழையத் துணைசால் நூல் வளமுடைமை தமிழின் சிறப்பு. அதனால் மூவாமுதலாத் தமிழ்மொழி இறவா இளநலம் திகழத் தளரா வாழ்வும் வளரெழில்வளமும் பெற்று என்றும் நின்று நிலவுகிறது. தற்காலம் தமிழில் தலைசிறந்து நிலவுவது தொல்காப்பியர் நூலே. அது, ஆரியப் பாணினிக்கும் தூரிய மேல்புல யவன அரித்தாட்டிலுக்கும் காலத்தால் முந்திய தொன்மையுடையது; பாணினியின் செறிவும், பதஞ்சலியின் திட்பமும், அரித்தாட்டிலின் தெளிவும், அவையனைத்திலுமில்லா வளமும் வனப்பும், அளவை நூன்முறை யமைப்பும் பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியா நெகிழ்வும் நிரம்பியமைந்தது. இத்தமிழ் நூல் பாணினிக்குப் பல நூற்றாண்டுகட்கு முந்தியது. வான்மீகர் பாராட்டிய கடல் கொண்ட கபாடம் அழியுமுன், அம்மூதூரிலாண்ட பாண்டியன் நிலந்தரு திருவில் நெடியோன் காலத்தில், அவனவையை அணிசெய்த புலவருள் தலைமை தாங்கிய பெரியார் ஒல்காப்புகழுடைத் தொல்காப்பியரே தம் பெயரால் இத்தமிழ்ப் பெருநூலை இயற்றின ரென்று அந் நூற்பாயிரம் இயம்புகிறது. ஒரு நூற்கு ஏற்ற பெயரிடுவதும், அன்றி அதை ஆக்கியோன் பெயராலழைப்பதுமே பழைய தமிழ் வழக்கு. பாயிரமில்லது பனுவலாகாதென்பர் தமிழ்ச் சான்றோர். பாயிரம் கூற வேண்டிய பலவற்றுள் நூற்பெயரும் நூலியற்றியோர் பெயரும் இன்றியமையாதன. இந்நூலையாக்கியோர் பெயர் தொல்காப்பியரென்றும், அவர் பெயரே அந்நூற் பெயராக்கப் பட்டதென்றும் இந் நூற்பாயிரம் இயம்புகிறது. பண்டைத் தமிழகத்தில் காப்பியர் எனும் இயற்பெயர் தமிழரிடைப் பெருவழக்குடைத் தென்பது, அப்பெயருடைய புலவர் பலர் பண்டைத் தொகைச் செய்யுட்கள் செய்தவராய்க் கூறப்பெறுவதால் நன்கறியலாம். ஒருபெயருடையார் பலரிருப்பின் அவரிடை வேற்றுமை விளங்க வேண்டி, ஏற்புடை அடைகள் அவரவர் பெயரொடு தொடுக்கப்படுஞ் செவ்விய முறையும் தொன்று தொட்டின்றுவரை நின்றுவரு முண்மை யாவருமறிந்ததே. பல்காப்பியர், காப்பியாற்றுக் காப்பியனார், சேந்தன்தந்தை காப்பியனார் எனக் காப்பியர் எனும் பெயருடைய புலவர் பலரைக் கேட்கின்றோம். அப்பெயருடையார் எல்லார்க்கு மிந்நூலுடையார் காலத்தால் முந்தியவராதலின், இவர் இயற்பெயரொடு தொன்மை சுட்டுங் குறிப்படைகூட்டித் தொல்காப்பியரெனப் பண்டைப் புலவரால் பாராட்டப் பெற்றனராதல் வெளிப்படை. தமிழ்ப் பெரியார் அனைவரையும் ஆரியக் கலப்புடையராக்கித் தலைசிறந்த தமிழ்நூல்களுக்கு வடநூற் சார்பு கற்பித்துக் கொள்ளுவதே பெருமையெனக் கருதிய இடைக்காலத்தவர், இறந்த ஆரிய அகத்தியரை எழுப்பித் தமிழ் நூற்கே வரை முழுமுதற் குரவரென் றொரு கதை கிளப்பித், தமிழ்த் தொல்காப்பியரை ஆரியப் பார்ப்பன ராக்கியதோடமையாமல், அவரை இல்லாவகத்தியற்குப் பொல்லா மாணாக்கருமாக்கி முடித்தார். காப்பியன் எனும் தமிழ்ச்சிறப் பியற்பெயரைக் காவியன் எனும் வடசொற்றிரிபாக்கிக், கவி மரபுடைய சுக்கிரன் குடிப்பிறப்பைச் சுட்டும் காரணப் பொதுப் பெயராக்கி, இரண்டாமூழித் துவக்கத்தில் இராமனுக்கு மூத்த பரசுராமனுக்கு இவரைத் தம்பியாக்கிப், பிறகு மூன்றாமூழி யிறுதியில் வடமதுரையாண்ட கண்ணன் உதவிபெற்றுத் தமிழகத்து வந்து குடியேறியவராக ஒரு பொய்ப்புராணமும் புனையப்பெற்றது. இதற்கு வடநூல்களிலும் பழைய தமிழ்ச் செய்யுட்களிலும் ஆதரவு யாதுமில்லை. இவ்வாறரும் பாடுபட்டுத் தமிழ்க் காப்பியனை ஆரியக் கவிக்குலப் பார்ப்பனனாக்கிய தோடமையாமல், தொல் காப்பியர் எனும் அவர் தமிழ் நூற்பெயரையும் தொல்காப்பிய மென வடநூற் தத்திதாந்த விதிப்படித் திரித்து வழங்கலாயினர். இது, இந்நூற்பாயிர வரலாற்றுக்கும் தமிழிலக்கண மரபுக்கும் முற்றிலும் முரணும் தவறு. தொல்காப்பியன் என்பதே இந் நூலியற்றியார்க் கியற்பெயரும், அவர் நூலுக்காகு பெயருமாம். இவர் தந்நூலிற் பலவிடத்தும், வடநூல் வழிகொள்ளாது தமிழ்மரபு தழுவியும் (அகத்தியரைச் சுட்டாமல்) தமக்கு முந்திய தமிழ்ச் சான்றோரியற்றிய பல முதனூல்களைத் தழுவியுமே தாம் இந்நூலை எழுதியதாகத் தெள்ளத்தெளிய விளக்குகிறார். பாயிரமும் இதனைத் தெளித்து வற்புறுத்துகிறது. எனினும், இவ்வுண்மையை எண்ணாமலும், ஆரியர் வருமுன் தமிழில் விரிந்த பல நூலும் தனிவேறு மரபுகளும் வழங்கிய வரலாறறியாமலும், வடமொழி வல்லார் இடைக்காலத்தில் தாமறிந்த வடநூல் முடிபுகளை இத் தமிழ்ப் பெருநூலுட் புகுத்தி உரை கூறினர். அவருரை முடிபு களைத் தொகுத்துப் பிற்காலத்தில் பன்னூல் பிறந்தன; அவற்றுட் சிறந்தது நன்னூல். முப்பதாண்டுகளுக்கு முன் ஓராராய்ச்சிக்காகத் தொல்காப்பியரின் சொற்படலத்தின் சிற்சில பகுதியைத் துருவ நேர்ந்தது. அவ்வளவில் முன் நன்னூலில் நான் கண்ட சில ஐயமகன்று தெளிவு பெற்றதுடன், தமிழ்ப் பழமரபு தழுவாவழுவால் முன் உரை களிலும், அவற்றைப் பின்பற்றி பன்னூல்களிலும் பொருந்தா முடிபுகள் புகுந்த நெறியும் அறியலானேன். உடனே தொல்காப்பியரின் சொற்படலத்தைப் பழைய பல உரைகளுடன் ஆய்ந்து துருவி முழுதும் படித்தேன். எழுத்தையும் ஒருமுறை தொடர்ந்தாய்ந்து முடித்தேன். அக்காலத்திலேயே என் பெருமதிப்பையும் உழுவலன் பையும் உரிமைகொண்ட இருமொழி இலக்கியப் பெருநிலை விளக்காயிலகிய (தற்போது மகாமகோபாத்தியாயராய் விளங்கும்) பண்டிதமணி கதிரேசப் பேராசிரியர் அவர்களோடும், காலஞ் சென்ற இலக் கணக்கடலனார் அரசஞ் சண்முகனாரோடும், தொந் நூலொடு நன்னூலை ஒத்துநோக்கிக் கண்ட உண்மைகள் சிலவற்றை எடுத்தளவி இன்பமும் பயனுமெய்தினேன். பிறகு, தொகைச் செய்யுட்களைத் துருவுங்கால் பற்பல பாட்டினுட்கோள் தொகுத்தாரின் துறைக்குறிப்பொடு பொருந்தாமை தோன்றியது. அவ்வையமகற்றி உண்மை தெளியவேண்டித் தொல் காப்பியர் பொருட் படலத்தைப் பல பழைய உரைகளுடன் ஆராய்ந்தேன். எழுத்திலும் சொல்லினும் விடப் பொருட்பகுதியில் உரைகாரர் தொல்காப்பியர் நூற்கருத்தைப் பல்காலும் பிறழக் கொண்டு மயங்குமுண்மை ஒருவாறு உணரலானேன். பொருளி லக்கணம் தமிழுக்குத் தனிச்சிறப்பாதலானும், அம்முறையில் வரையறுத்து வடித்தமைத்த வடநூன் முடிபுகளின்மையானும், தமிழ் மரபுகள் மொழி வளர்ச்சியின் மெய்வரலாறுகளைக் கருதாமலுரைகாரர் தத்தமக்குத் தோன்றியவாறு வடநூன் முடிபுகளை வலிந்து புகுத்தி இந்நூலொடுந் தம்முள்ளும் மாறுபட்டு வெவ்வேறு பொருள் கூறி மயங்கவைத்த பெற்றிமையும் உற்று நோக்க ஓரளவு வெளியாயிற்று. அதன் பிறகு இருபதாண்டு சென்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் தலைமைபெற்று உயர்வகுப்பு மாணவருக்கு இத்தமிழ்ப் பெருநூற் பொருட்படலம் உரைக்குங்கால், பழைய உரை விளங்காத பலவிடத் தென்புதியவுரை சொல்லி வந்தேன். அக்கழக ஆராய்ச்சிக்கட்டுரை அயன சஞ்சிகையில், விளங்காமல் மயங்கவைக்கும் சில அரிய நூற்பாக்களைப் பழைய உரைகளுடனாய்ந்து நான் கண்ட முடிபுகளை விளக்கி ஒருசில கட்டுரைகள் வெளியிட்டேன். சில கூட்டங்களிலும் நண்பரிடையும் சிலவற்றைச் சொல்லி வந்தேன். உண்மையிலூன்றிய உளச்செல்வரான புலவர் சிலர், பொருட்பகுதிக்கேனும் தொடர்ந்தென் புதியவுரையை எழுதி வெளியிடுமாறு வற்புறுத்தினர். தொடர்ந்திருந்து எழுதிவர உடல் நலமும் பிற துணையும் குறைந்ததனால் இடையிடையே எழுதிய என் குறிப்புக்களைத் தொகுத்து வெளியிடத் துணிந்தேன். அகத்திணையியல் முழுவதற்கும் முறையே முதலில் உரை யெழுதி முடிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிச் சஞ்சிகையில் வெளிவந்தது. அதைப் புத்தக வடிவில் அச்சிட உதவிய தமிழ்ப் புரவலரும், இளசை வளநாட்டு வேந்தருமான மாட்சி மிக்க இராச செகவீர ராமமுத்துக் குமார வெங்கடேசுர எட்டப்ப நாயக்க ஐயனவர்களுக்கு அவ்வுரையை அவர்களனுமதி பெற்று உரிமை செய்தேன். அதன்பிறகு, மக்கள் வாழ்வில் பெரும்பகுதியை விளக்கும் புறத்திணையியலுக்கு உரையெழுதி முடித்துவெளியிட முயன்றேன். அதையறிந்தவுடன் அறிவு வளர்ச்சியில் பெரிதும் கருத்துடைய செட்டிநாட்டரசர், மாட்சிமிக்க அண்ணாமலை வள்ளலார் அவ்வுரை வெளியிடும் செலவுக்கு மறு தபாலில் பொருளுதவி ஊக்கினார்கள். அவர்கள் பெருந்தகைமைக்கு அப்புத்துரையை அப்பெரியார்க்குரித்தாக்கி மனமார வாழ்த்துவதன்றி இம்மையில் எம்மனோர் செயற்குரியதெதுவுமுண்டோ? என் மெய்ப்பாட்டிய லுரையைப் புலவருக்கும் தமிழ்பயிலும் மாணவர்க்கும் உரித்தாக்கி யுள்ளேன். சால்புடைய தமிழ்ப்புலவர் தந்தகவால் என்னுரையை இகழாமல், இந்நூலின் மெய்ப் பொருளாராய்ச்சிக்குத் துணையாந் தூண்டுகோலாய்க் கொள்வரென நன்கறிவேன்: மற்றவரின் அழுக் காற்றை மதித்தல் மிகை. இவ்வுரை முறையாகத் தொடர்ந்து எழுதப் பெறாமல், வாய்த்தபொழுது நினைவு வந்த நூற்பாக்களைப் பெயர்த்தெடுத்து நெட்டிடைகழிய விட்டுவிட்டெழுதி வெவ்வேறு சஞ்சிகைகளில் வெளியிட்டதனால், சிற்சில விடங்களில் சில குறிப்புக்கள் மீண்டும் கூற நேர்ந்தது; இக்குற்றம் பொறுத்தற்குரியது. வழுவின்றி எழுதுதற்கும்அச்சிலெழும் பிழைதிருத்தியுத வுதற்கும் உறுதுணைவர் மதுரையில் நான் பெறுவதரிதானதனால், இப்பதிப்புப் பிழைபெருகி, மலர் கனிகள் மணவாமல் இலை மலிந்த சருக்க மயமாயினது. அதனுள்ளும் பயன்காணும் அருளு டைமை தமிழறிஞர் கடவுட்சால்பாதலினால், நடுவிகவாத் தமிழரிதை நகைக்க மாட்டார். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல ஆதலின் என்புத்துரையை வித்தகர் வெறுக்கார்; உண்மைநாடி யுவக்கும் மாணவர் இஃதவரைச் சிந்திக்கத் தூண்டுந் துணையாகப் பேணுவர். அழுக்காறுடையார் வழுக் காண முயல்வது அவரியல்பாதலின், அதற்கு வருந்தல் வேண்டா. கண்ட உண்மையைக் கரவாதுரைப்ப தென்னியல்பு. என் பல பனுவல்களை மறுப்பொல்லாது வெறுப்பவரும், புதிய என் முடிபுகளைத் தமதாக்கி என் பெயர் குறியாமலே வெளியிட்டுப் புகழ்பெறுபவரும் பலருளர். விலையின்றிக் கொண்டாலும் என் உரைகளிலெதனையுமே படித்துண்மை யுணர்த்தியவர் யாருமிலர். பல கலைக்கழகங்கள் உலகியலறிவை விலை பகர்பவரின் நிலைக்களமாக நிலவுகின்றன. எனினும், தமிழருக்குத் தமிழில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து வளர்வதால், இப் புத்துரை அத்துறையில் ஆராய்வார்க்குதவுமென எண்ணி வெளியிடத் துணிந்தேன். தமிழோங்க! தமிழறமும் தமிழகமும் என்றும் தழைக! மலையகம் பசுமலை 1.11.1942 ச.சோ.பாரதி. தொல்காப்பியர் - பொருட்படலம் அகத்திணை இயல் எழுத்துஞ் சொல்லும் செய்யுளுக்கு இன்றியமையாத உறுப்புக் களாதலின், அவற்றை முறையே முன்னிரண்டு பகுதிகளாக வகுத்துக் கூறினர் தொல்காப்பியர், புலவர்க்குரிய பொருட்பகுதியை மூன்றாம் படலமாக வகுத்தார். மக்கள் கருத்துக்களை விளங்க வெளிப் படுத்துங் கருவியனைத்தும் செய்யுளெனப்படும். செவ்விதாய உளப்பாடு, அதாவது உளத்துறுங்கருத்தைக் கேட்போருளத்துறக் கூறுதற்குரிய சொற்றொடர்களெல்லாம் செய்யுளாகும். பாட்டே செய்யுளென்பது பிற்காலப் பிழைவழக்கு. உரை, பாட்டு, நூல், பிசி, குறிப்புமொழி, மறைமொழி, பழமொழி எனப் பலவகையானும் பல்வேறுருவிற் றோன்றி நின்று பொருள்பயப்பனயாவும் செய்யுளே யாம். செய்யுளெல்லாம் பொருள் பற்றியவே யாகலானும், பொரு ளொன்றே மக்கள் குறியாகலானும் அப்பொருள் பற்றியும், அப்பொருளுரைக்குங் கருவியாகும் செய்யுள் பற்றியும், அவையிற்றுக் குறுப்பும் துணையுமாவன பிறபற்றியும் கூறுவனவற்றின் தொகுதி தொல்காப்பியரின் பொருட்படலமாகும். இனி, ஆரியர் செய்யுள் அனைத்தும் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றுள் ஒன்றும் பலவும் பொருளாகக் கொண்டே அமைதல் வேண்டுமென்பர். தமிழ்ப் புலவர், மக்கள் பொருளாக மதிப்பன எல்லாம் செய்யுளுக்குரியனவாகும் எனக் கொள்வர். அப்பொருளெல்லாம் மக்கள் வாழ்வொடு படுவவாகலானும், மக்கள் வாழ்வும் அகமும் புறமுமென இரண்டிலடங்குவதாக லானும், பொருளை அகமும் புறமுமென இருகூறாய் வகுத்துக் கூறுவதே தமிழ் மரபாகும். அம்மரபு மேற்கொண்டு தொல்காப்பியரும் தமிழ்ச் செய்யுட்பொருளை அகப்பொருளும் புறப்பொருளுமாக இருகூறாக்கி, அவற்றின் பொது இயல்புகள் அல்லது இலக்கணங்களைத் தம்நூலின் பொருட் படலத்தில் முதற்கண் அகத்திணையியல் - புறத்திணையியல் என முறையே வகுத்தமைத்துப், பிறகு அவற்றுள் அகத்தின் சிறப்பியல்புகளைக் களவியல் கற்பியல் பொருளியல்களில் விளக்கி, அவற்றின் பிறகே அப்பொருள்களை அறியக்கூறும் கருவியாகிய செய்யுளியல்புகளை மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் எனு மூன்று பகுதிகளிற்கூறி, இறுதியில் செய்யுள் செய்வார் தமிழ் மரபு பிறழாமற் காத்தற்கு வேண்டியனவற்றை மரபியலில் தொகுத்து விளக்கிப் போந்தார். இதில் முதற்கண்ணதாய இவ்வகத்திணையியல் மக்களின் அகவொழுக்கம் அல்லது காதலற வழக்குகளின் பொதுவிலக்கணம் கூறுகிறது. அகமாவது, காதலர் உளக்கிடையும், அவர் காதல் கதிர்த்து வினைப்பட்டு அன்னோர் மனையறவாழ்க்கையிற் றொடர் புறுவதுமாகும். திணையாவது ஒழுக்கம். ஆகவே, அகத்திணை என்பது காதல் கண்ணிய ஒழுகலாறாம். அவ்வொழுக்கப் பொது வியல்புகள் கூறும்பகுதி அகத்திணையியலெனப் பெயர் பெற்றது. (அதுவேபோல், புறத்திணையென்பதும் அகவாழ்க்கைக்குப் புறமான மக்களின் சமுதாயத் தொடர்புடைய ஒழுக்கமாகும். அதுபற்றிக் கூறுமிலக்கணப் பகுதி புறத்திணையியலெனப்படும்). திணைச்சொல் முதலில் ஒழுக்கத்துக்கு இயற்பெயர்.குறிஞ்சி முதலிய திணைப்பெயர்களும் நிரலே புணர்வு முதலிய ஒழுக்கம் பொருட்டாம். அவை அவ்வத்திணைக்குரிய நிலங்குறிப்பது ஆகுபெயர்நிலையில்; அவற்றின் முதற்பொருள் ஒழுக்கவகையே. இப்பழந் தமிழ் மரபே தொல்காப்பியர் சொல்வது. நாநிலங்களுக்கு ஒழுக்கங்களை வகுத்தனர் என்னாமல், நடுவணதொழிய நடுவணைந்திணை தமக்கு வையநானிலத்தை வகுத்தவாறென இவ்வியற் றுவக்கத்து அவர் விளக்குதல் காண்க. புணர்தல் முதலைந்தும் திணைக்குரிப் பொருளே என மீட்டும் கூறும் தொடருமிதனை வற்புறுத்தும். ஒழுக்கம் கருதாமல் நிலம் பற்றித் திணைவகுத்தல் பழமரபுணராது முரணப்படைத்த புது வழக்காம். இனி, அவர்காலத் தமிழ் நூல்வழக்கை மேற்கொண்டு அகப்புற வொழுக்கங்களைத் தொல்காப்பியர் முறையே ஒன்றற் கொன்றியைபுடைய எவ்வேழுதிணைகளிலடக்கி யமைத்தார். அவற்றில் அகவொழுக்கங்களை முறையே கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என முறைப்படத் தொகுத்தார். காதல் ஒருவன்பாற்கதிர்த்து, மற்றையோள்மாட்டுப் பருவமன்மையாற் பால்விளியுணராப் பான்மையிற் சிறக்கத் தோன்றா நிலையே கைக்கிளை. எனில், இந்நிலை, கன்றிய காதலன் காமாஞ்சாலா இளமையோள்வயின் தனக்கேமம் சாலப்பெறா னெனினும், தன்னலம் விழையாமல் பழிபடு பிழையொழித்து அவணலம் பேணியொழுகும் காதற் பெற்றிய தாகலின், அதனை முதலில் வைத்து, இருபாலும் காதலொத்துக் கனிந்து சிறந்த அன்பினைந்திணைகளை அதன்பின்னமைத்து, அவற்றின் பின் காதல் கண்ணாது கழிகாமப்பழிபிறங்கும் பெருந்திணையைப் பிரித்து நிறுத்தி முறைப்படுத்தினார். இவ்வெழுதிணைகளையுமிம் முறையாற் றொகுத்துக் காட்டினரெனினும், விரிக்குங்கால் இலக்கணம் நிறைந்த ஐந்திணைகளையும் தொடர்புடன் பலபட விளக்கித், தம்மியல் கூறுமளவில் அமைவனவான கைக்கிளை பெருந்திணைகளினிலக்கணங்களை முறையே இறுதியிலிரண்டு தனிச் சூத்திரங்களாற்றெளித்து முடிப்பர். இவ்வகத்தணையியற் சூத்திரங்களின் வைப்புமுறை வருமாறு: முதற் சூத்திரத்தில் அகத்திணைகள் ஏழெனத் தொகை வரை யறைப்பட்டது. அவ்வேழனுள் முதலும் இறுதியுமாகத் தமக்கென நிலத்தொடர்பில்லாத கைக்கிளை பெருந்திணைகளை விடுத்து, மற்ற ஒத்த காதல் திணைகள் ஐந்தனுள் பிரிவாம் பாலையைப் பொதுவாக்கி, ஏனைய நான்கினையும் தத்தமியல்பால் நால்வகைப் பட்ட தமிழ் கூறும் நல்லுலக நானிலப் பகுதிகளில் ஒவ்வொன் றிற்கும் முறையே சிறப்பியைபுபற்றி வகுத்துப் பொருத்திய மரபு இரண்டாஞ் சூத்திரத்திற் கூறப்படுகிறது. காடும், மலையும், ஊருங் கடலுமான நானிலப்பகுதிகளும், அவ்வந் நிலத்தில் சிறந்த முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனும் அடையாளப் பூக்களால் அழைக்கப் படுதலின், அவ்வப்பகுதிக்குச் சிறந்தியைந்த அகவொழுக்கங்களும் அவ்வந்நிலப் பூப்பெயர்களே கொள்வனவாயின. பூப் பெயர் கொள்ளும் இம்முறையைத் தழுவியே ஏனைப் பிரிவொழுக்கமும் நானிலங்களிலடங்காத சுரங்களிற் பெரும்பாலான பாலைப்பூவின் பெயரால் வழங்கலாயிற்று. இனி, அகப்பொருள் முதல் கரு உரியென மூன்று கூறுபடு மென்பது மூன்றாஞ் சூத்திரத்தாலும், அவற்றுள் முதல் பொருள் நிலமும் பொழுதுமென்றிருவகைப் படுமென்பது நாலாஞ் சூத்திரத் தாலும் விளக்கப்பட்டன. ஐந்தாஞ் சூத்திரத்தில் நிலமுதற்பொருளின் இயல்பும் வகையும் கூறப்பட்டன. 6 முதல் 11 வரையுள்ள ஆறு சூத்திரங்களால் காலமுதற்பொருள் அன்புத்திணை ஐந்தனொடு பொருந்தும் இயைபு விளக்கப்பட்டது. 12, 13ஆம் சூத்திரங்களில் அகவொழுக்க வகைகளும் முதற் பொருளின் கூறுகளும் முன் விளக்கிய முறையேயன்றி வேறுபட்டுத் தம்முள் விரவி வருதலு முண்டெனக் குறிக்கப்பட்டது. 14ஆம் சூத்திரத்தில் உரிப்பொருட்குச் சிறந்த ஒத்தகாதல் ஒழுக்கச் சிறப்புவகை யைந்தனியல்பும், 15, 16ஆம் சூத்திரங்களில் அவ்வைந்த னுளடங்காது அவைபோலவே சிறப்புடைய பொதுவகை அகவொழுக்கங்கள் சிலவும் கூறப்பட்டன. 17ஆம் சூத்திரம் உரிகருப்பொருள்கள் பலவேறு வகைப் படுவன போலன்றி, முதற்பொருள் நிலம்பொழுதிரண்டே வகைப் படுமென்பதை வலியுறுத்துகிறது. 18, 19ஆம் சூத்திரங்கள் அகப் பொருள் வகை மூன்றனுள் எஞ்சிய கருப்பொருள் வகைகளும் முறையே அகவொழுக்கங்களுக்கு ஏற்ற பெற்றி இயைந்தும் இயையாமலும் வருமாறு கூறும். 20 முதல் 24 வரையுள்ள சூத்திரங்களால் அகவொழுக்க மரபுகளுக்குப் பலதிறப்பட்ட தமிழ் மக்களின் உரிமை விளக்கப் பட்டது. 25 முதுல் 33 வரையுள்ள சூத்திரஙகளில் அகவொழுக்கங் களிற் பெருவரவிற்றாய பாலை, பிரிவின் நோக்கம்பற்றி அறுதிறப் பட்டு ஒவ்வொரு வகையும் வெவ்வேறு வகுப்பினருக்குச் சிறந்து பொருந்துமியைபுடன் விளக்கப்பட்டது. 34ஆம் சூத்திரத்தில் கடற்செலவும், 35ஆம் சூத்திரத்தில் மடற்றிறமும் மடவார்க்குக் கடியப்படுந் தமிழ்மரபு சுட்டப்படுகிறது. 36 முதல் 42 வரையுள்ள சூத்திரங்களில் தாயர், தோழி, கண்டோர், தலைவன் மற்றையோர் களுக்கு அகத்துறையில் கூற்றுநிகழ்தற்கேற்ற இடங்கள் கூறப்பட்டன. 43, 44ஆம் சூத்திரங்கள் முன் 15, 16இல் கூறிய பெருவரவான உரி ஒழுக்கம்போல் ஐந்திணையிலக்கணத்திலடங்காது, சிறுவரவிற்றாய் உரிப்பொருட்டுறைகளாகுமிரண்டைச் சுட்டுகின்றன. 45ஆம் சூத்திரம் உரிப்பொருட் புறனடையாய், முன் சுட்டியவற்றுள டங்காது உரிப்பொருளாதற்குப் பொருந்திய பிறபல, மரபு முரணா வாறு வருவனவுமுள, வெனக்கூறுகின்றது. 46 முதல் 49 வரையுள்ள சூத்திரங்கள் அகத்துறைகளுள் உள்ளுறையும் பிறவுமாய உவமங்கள் பயிலுமாறு கூறுகின்றன. 50ஆம் சூத்திரம் கைக்கிளை இயலையும், 51ஆம் சூத்திரம் பெருந்திணையியல் வகைகளையும், நிரலே விளக்குகின்றன. இவற்றுள் பின்னைய பெருந்திணையை விலக்கி முன்னதான கைக்கிளைக்கும் அன்பினைந்திணைகளுக்கும் பொருந்த வருவனவாய் முன்னே சுட்டப்பட்ட (1) நிகழ்ந்தது நினைத்தல், (2) நிகழ்ந்தது கூறி நிலையல் (3) மரபுதிரியாப் பிற உரிப்பொருள்கள் விரவல் (4) உள்ளுறை திணையுணர் வகையாதல், என்னும் நான்கும் வந்து பயிலுமென 52ஆம் சூத்திரம் கூறுகின்றது. 53ஆம் சூத்திரத்தில் இயற்பா வகைகளுள் கலியும் பரிபாடலுமே அகப்பொருட்குச் சிறந்துரியவாமென்பது சுட்டப்படுகிறது. ஈற்றிலுள்ள சூத்திரமிரண்டும் அகத்துறையில் தலைமக்கள் கூற்றுக்களில் இயற்பெயர் சுட்டுவது மரபன்றெனக் கூறுகின்றன. சூத்திரம்:1 கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப. கருத்து: இது, அகத்திணைகள் ஏழென வரையறுக்கின்றன. பொருள்: கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாக முன்னே சொல்லப்பட்ட அகத்திணை ஏழாமென்று கூறுவர் தமிழ்நூல் வல்லார். குறிப்பு: இச்சூத்திரத்தில் அகத்திணையேழும் நிரலே கூறப் பெறாமையானும், கிளக்கும் என்னாது கிளந்த என இறந்தகால எச்சம் பெய்த பெற்றிமையானும், இதன் பிறகுள்ள சூத்திர வைப்பு முறையில் கைக்கிளையை முதலாகவும் அதனையடுத்து அன்பினைந் திணையும் இறுதியிற் பெருந்திணையுமாக அமைத்துக் கூறப் பெறாமல், முதற்கண் அன்பினைந்திணை கூறி அவற்றின்பின் கைக்கிளை பெருந்திணைகள் தொடர்ந்து கூறப்படுவதாலும், முற்படக்கிளந்த வெழுதிணை என்பது அகத்திணையியல் இச் சூத்திரத்தின் பின் அமைத்துக் கூறப்பட்ட முறையைச் சுட்டா தென்பது வெளிப்படை. எனவே, ஈண்டு முற்படக்கிளந்த என்பது இடத்தால் முற்படக்கூறும் அமைப்பு முறையோடு பொருந்தாமையால், காலத்தால் முற்படக்கிளந்த வொன்றனையே குறிக்குமென்பது தேற்றமாகும். ஆகவே, பொருட்படலத்தின் முதலில்,பொருள் அகம்புற மென இருவகைப் படுமென்பதும், அவற்றுள் பின் கூறப்பெறும் புறத்திணை ஏழாதல் போலவே அகத்திணையும் ஏழாமென்பதும், அவ்வகத்திணையும் கைக்கிளை அன்பினைந்திணை பெருந்திணை என ஏழாக வகுக்கப்படுமென்பதும், ஆகிய இவற்றைச்சுட்டிய சில சூத்திரங்கள் அகத்திணையின் முதற்கண் இச்சூத்திரத்திற்கு முன்னே ஆசிரியரால் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறாயின் மட்டும் முற்படக்கிளந்த எனுமிச் சூத்திரச் சொற்களுக்குப் பொருளமைதியும், கைக்கிளை முதலா எனுந்தொடர்க்குப் பொருளும் அமைவதாகும். இப்பழநூற் சூத்திரங்கள் சில கடல் கோளாலும் புலம் பெயர்தலாலும் வீழ்ந்து மறக்கப்பட்டிருத்தல் கூடுமென்பது களவியலுரையாலும், தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையால் (ஏடு) பெயர்த்தெழுதுவோர் விழ எழுதினார்போலும் என்னும் இளம்பூரணர் உரைக் குறிப்பாலும் தெளியப்படும். அவ்வாறு கொள்ளாக்கால் இச்சூத்திரச் சொற் றொடர்கள் பொருந்தும் பொருளமைதி பெறுமாறில்லை. ஆதலா லும் முற்படக்கிளந்த என்னுந் தொடருக்கு இதற்கு முன்னே ஆசிரியர் கூறிப்போந்த என்று அமையப் பொருள் காண்பதே பொருத்தமாகும். சூத்திரம்: 2 அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே. கருத்து: இது, மேற்குறித்த திணைஏழனுள், தமக்கென நிலஉரிமையுடையன நான்கெனக் குறிக்கின்றது. பொருள்: அவற்றுள் நடுவணைந்திணை - முன்னைச் சூத்திரத்துட்கூறிய ஏழுதிணைகளுள் முதலுங்கடையுமான கைக்கிளை பெருந்திணைகளை நீக்கி, நடுநின்ற முல்லை. குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணை: நடுவணதொழிய = தம்முள் நடுவுநிலைத்திணையாகிய பாலையொழிய: படுதிரைவையம் பாத்தியபண்பே = கடல்சூழ்ந்த நிலத்தைப் பகுத்த இயல்பிற்று. குறிப்பு: இதில் ஐந்திணை எழுவாய்; பாத்திய பண்பே பயனிலை: ஒழிய என்னும் வினையெச்சம் பாத்திய எனும் பெயரெச்சங்கொண்டும், அப்பெயரெச்சம் பண்பே எனும் பெயர் கொண்டும் முடிந்தன. வையம், பாத்திய என்னும் வினைக்குச் செயப்படுபொருள். வையம் நானிலம் எனப்படுதலானும், அது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலெனத் திணைக்குரிய நிலத்தியல்பு பற்றிப் பகுக்கப்படுதலானும்,பாலைக்குத் தனித்துரிய நிலம் பிறி தின்மையானும், முல்லை முதல் நெய்தலீறான நிலங்களையே அவ்வத் திணைக் களனாகப் பொருள் நூலுடையார் கொள்ளு தலானும், வையத்தை நாற்கூறாகப் படுத்த இயல்புடைத்து. பாலை யொழிந்த நாலுதிணையும் என்பதை இச்சூத்திரம் விளக்கிப் போந்தது. இதனால் திணையே அகவுரிப்பொருளாய், அதற்குப் பொருந்த நிலம் பிரிவு கொண்டது என விளக்கப்பட்டது. சூத்திரம்: 3 முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே, பாடலுட் பயின்றவை நாடுங் காலை. கருத்து: இது, அகப்பொருள் முதல் கரு உரி என முத்திறப்படும் மரபு கூறுகிறது. பொருள்: பாடலுட்பயின்றவை நாடுங்காலை = புலவர் செய்யுளில் வந்து பயிலும் வழக்குகளை ஆராயுங்கால்; முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே = முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளென வகுத்த மூன்றுமே: நுவலுங்காலை முறை சிறந்தனவே = செய்யுளுக்குரிய புலனெறி வழக்கம் கருதுங்கால் முறையே ஒன்றினொன்று சிறந்தனவாம். குறிப்பு: முறை சிறந்தன என்பதனால் முதலிற் கருவும், கருவின் உரியும், ஒன்றினொன்று முறையே மேற்சிறப்புடைத்தாமெனவும், சிறந்தன என்பதனால் சிறவாப் பிறபொருளும் உளவாமெனவும் பெறுதும். அகப்பாட்டுக்களில் உரிப்பொருளே தலையாயதென்பதும், அதற்கு முதலுங் கருவும் சிறப்புதவுந்துணையாகச் சார்ந்துவரு பொருள்களா மென்பதும் வெளிப்படை. இனி, இம்மூன்றுமேயன்றி இவைபோலச் சிறவாத பிறபொருளும் உளவாதல் அகத்திணையியல் மரபுநிலை திரியாமாட்சியவாகி, விரவும் பொருளும் விரவுமென்ப என்னும் 45ஆம் சூத்திரத்தால் தெளியப்படும். இதில் மூன்றே என்பதில் ஏகாரம் தேற்றமும் பிரிநிலையுமாம். சிறந்தனவே என்பதிலேகாரம் இசை நிறையாகவேனும் அசை நிலையாக வேனுங் கொள்ளுக. சூத்திரம்: 4 முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப இயல்புணர்ந் தோரே. கருத்து: முன்னைச் சூத்திரங்கூறும் மூன்றனுள் முதற்பொரு ளினைத்தென இச்சூத்திரம் விளக்குகிறது. பொருள்: முதலெனப்படுவது = முதற்பொருளென்று கூறப்படுவது; நிலம் பொழுதிரண்டினியல்பு = நிலமும் பொழுது மாகிய இரண்டினியல்பாம்: என மொழிப இயல்புணர்ந்தோரே = என்று சொல்லுவார் பொருளிலக்கணம் உணர்ந்த புலவர். குறிப்பு: இதில் ஈற்றேகாரம் அசை நிலை. சூத்திரம்:5 மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. கருத்து: இது மேலே இரண்டாஞ் சூத்திரத்துட் கூறியாங்கு, நானிலம் முறையே நான்குதிணைக்கு உரிமைபெறு முறை கூறி, நிலமுதற்பொருள் திணையுரிப் பொருளொடியையுமாறு விளக்குகிறது. பொருள்: மாயோன்மேய காடுறையுலகமும் = கருநிறக் கடவுள் உறைவிடமாகிய நிரைமேயும் காட்டுநிலப்பகுதியும்; சேயோன்மேய மைவரையுலகமும் = செவ்வேளுறையும் மஞ்சு தவழும் மலைநிலப்பகுதியும்; வேந்தன்மேய தீம்புனலுலகமும் = இந்திரனுக்கிருப்பிடமாகிய இனிய புனல்நிறை நிலப்பகுதியும்; வருணன்மேய பெருமணலுலகமும் = கடல்கெழுகடவுளாகிய வருணன் விரும்பும் அகன்ற மணல்நிலப் பகுதியும்; முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே = முறையே முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற திணைவரிசையாற் சொல்லவும் படும். குறிப்பு : சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்பதனால், இந்த நாற்றிணைக்குரிய நானிலங்களும் ஈண்டுச் சொல்லாத வேறுமுறையாலும் கூறப்பெறும் என்பது பெறப்படும். இதில் நானிலப்பகுதியும் அவற்றிற்குரிய திணைப்பெயரும் நிரனிறையால் கூறப்பெற்றன. ஈண்டுக்கூறப்பெற்ற மாயோனுஞ் சேயோனும், கருநிறக் கடவுளுஞ் செவ்வேளுமாகத் தொன்று தொட்டுத் தமிழர் தொழும் கடவுளராவர். கருநிறத்தைப் பழிப்பதன்றிப் பாராட்டுதல் தொல்லாரியர் வழக்கன்று: தமிழிலோ எழில் பாராட்டி மாயோன் எனவும் மாயோயே எனவும் வரும் பழம் பாட்டுக்களின் தொடர்களும் குறிப்புக்களும் இங்குச் சிந்திக்கத்தக்கனவாம். இனி, இந்திரனும் வருணனும் ஆரியர் வழிபடுங் கடவுளராய்க் கருதப்பெறினும், அறப்பழங்காலத்தே அவர் தமிழர் வழிபட்ட தெய்வங்களாகவும், பிறகு அவரிடம் ஆரியர் வாங்கித் தம் வழிபடுகடவுளராக்கிக் கொண்டனரெனவும் சில மேனாட்டுப் புலவரின் ஆராய்ச்சிக்கட்டுரை களால் அறிகின்றோம். உண்மை யெதுவாயினும் பண்டைக் காலமுதல் இக்கடவுளர் பெயரும் வழிபாடும் தமிழகம் அறிந்ததென்பது தெளியப்படும். இச் சூத்திரத்தானும் முன்னைய சூத்திரத்தானும் முதற் பொருளின் முதற்பிரிவான நிலத்தியல்பும் திணைத்தொடர்பும் கூறப்பெற்றன. இனிவருஞ் சூத்திரங்களால் இதன் இரண்டாம் பிரிவான காலவியல்பும் பாகுபாடுகளும் கூறப்படும். சூத்திரம்: 6 காரு மாலையு முல்லை; குறிஞ்சி கூதிர் யாம மென்மனார் புலவர். கருத்து: இதுமுதல் 11 வரை ஆறு சூத்திரங்கள் காலமுதற் பொருள் திணையுரிப் பொருளுக்கு உரிமை கொள்ளுமாறு கூறுகிறது. பொருள்: காரும் மாலையும் முல்லை = கார்காலமாகிய பெரும்பொழுதும், மாலையாகிய சிறுபொழுதும் முல்லைத் திணைக்குச் சிறந்தன. குறிஞ்சி கூதிர்யாமம் = கூதிரென்னும் பின்பெயற் காலமாகிய பெரும் பொழுதும், நள்ளிரவாகிய யாம மென்னுஞ் சிறுபொழுதும் குறிஞ்சித் திணைக்குச் சிறந்தன; என்மனார் புலவர் = என்று கூறுவர் புலவர். குறிப்பு: ஓராண்டு, இளவேனில், முதிர்வேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என இவ்விரண்டு திங்கள் கொண்ட பருவம் அல்லது பெரும்பொழுது ஆறாகப் பகுக்கப்படும். இதில் கார்காலம் முன்பெயற்காலமான ஆவணியும் புரட்டாசியும் எனத் திங்களி ரண்டு கொண்ட பெரும் பொழுதாகும். பகல்- விடியல் அதாவது காலை, நண்பகல், எற்பாடு எனவும், இரவு - மாலை, யாமம், வைகறையெனவும், பகல் மூன்று இரவு மூன்றாக ஆறு சிறுபொழுதுகள் கூடியது ஒரு நாளாகும். ஈண்டு யாமம் என்பது நள்ளிரவு (இரவின் நடுக்கூறு) குறிக்கும் தமிழ்ச் சொல்; ஏழரை நாழிகைகொண்ட நாளின் எட்டிலொரு பகுதி சுட்டும் சாமம், வடசொல். இவற்றை ஒன்றெனக்கருதி மயங்குதல் தவறு. காரு மாலையும் முல்லைக்குச் சிறத்தலுக்குச் செய்யுள்: முகைமுற்றினவே முல்லை, முல்லையொடு தகைமுற்றினவே தண்கார், வியன்புலம் வாலிழை, நெகிழ்த்தோர் வாரார், மாலைவந்தன்றென் மாணலங்குறித்தே (குறுந். 188) இதில், குறித்த பருவத்தில் வாராத்தலைவன் பிரிவால் வருந்தி இருக்கும் தலைவிக்குக் காரும் மாலையும் துன்பம் தருதல் கூறுதலால், முல்லைக்குரிய பருவமும் பொழுதும் ஒருங்குற்ற பெற்றி யறிக. பழமழைகலித்த... .................. வண்டுசூழ் மாலையும் வாரார் கண்டிசிற் றோழி. பொருட்பிரிந்தோரே”(குறுந். 220) என்பது மிதுவே. இனிக் கூதிரும் யாமமும் குறிஞ்சிக் காதற்குச் செய்யுள் வருமாறு: சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் பிறரும் கேட்குந ருளர்கொல்? உறைசிறந் தூதை தூற்றுங் கூதிர் யாமத் தானுளம் புலம்புதொ றுளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே (குறுந். 86) இதில், கூதிரும் யாமமும் கூடுதலாகிய காலம் குறிஞ்சிக் குரித்தெனல் காண்க. காம மொழிவதாயினும் எனும் கபிலர் குறும்பாட்டில்(42)யமமும்,“யாதுbசய்வாங்கொல்nதாழிஎனும்நன்னாகையார்குறும்பாட்டில்(197)கூதிரும்குறிஞ்சிக்குரித்தாதல்குறிக்கப்படுதலுமறிக.சூத்திரம்: 7பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. கருத்து: இது மேலைச்சூத்திரத்திற்கோர்புறனடை; முன் பனியும் குறிஞ்சிக் குரித்தாமெனக் கூறுகிறது. பொருள்: பனியெதிர் பருவமும் = முன்பனிக் காலமும், உரித்தென மொழிப = குறிஞ்சித் திணைக்குரியதெனக் கூறுவர் (புலவர்.) குறிப்பு: பனி எதிர்பருவம் எனவே, மாலையிற் பனிதோன்றும் முன்பனிக் காலமாயிற்று. முன்பனிக்காலமாவது மார்கழி தை எனுந்திங்களிரண்டு கொண்ட பெரும் பொழுதாம். பருவமும் என்பதிலும்மை குறிஞ்சித்திணைக்குக் கூதிரேயன்றி இப்பருவமும் உரியதாம் எனப்பொருள் தருதலால், இறந்ததுதழீஇய எச்சவும்மை. மொழிப என்பதனால் அதற்குரிய எழுவாயான புலவர் என்பது அவாய் நிலையாற் கொள்ளப்படும் முன்பனிப்பருவம், கூடற் குரியது, பிரிவரியது, என்பதற்குச் செய்யுள்: உள்ளார் கொல்லோ, தோழி! மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல்லுறப் பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் பல்லித ழுண்கண் கலுழ நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே எனும் நற்றிணைப் (241ஆம்) பாட்டில், பின் பெயலாகிய கூதிர் கழிந்தபின் முன் பனிப்பருவ யாமப் பொழுது குறிஞ்சியாகிய கூடற்குரிமையும் பிரிவருமையும் ஆதலறிக. கொண்டலாற்றி எனும் நற்றிணைப் (89ஆம்) பாட்டில், .... மாமழை அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடைநாள் இரும்பனிப்பருவத்து..... இன்னும் வருமே தோழி, வாரா வன்க ணாளரோ டியைந்த புன்கண் மாலையும் புலம்புமுந் துறுத்தே என்பதுமது. இதில் வழிபெயற் கடைநாள் இரும்பனிப்பருவம் எனவே, பின்பெயற் கூதிர்கழிந்த முன்பனி எனத் தெளிக்கப்பட்டது. சூத்திரம் : 8 வைகுறு விடியல் மருதம்; எற்பாடுநெய்த லாதன் மெய்பெறத்தொன்றும்கருத்து: இது, மருதம் நெய்தல் திணைகளுக்குப்பருவமும் பொழுதும் குறிக்கின்றது. பொருள்: வைகுறு விடியல் மருதம் = பொழுது புலராத இரவினிறுதிப் பகுதியான வைகறையென்னும் சிறுபொழுதும், பொழுதுபுலர்ந்து எல்லெழுங் காலையான விடியலென்னும் சிறுபொழுதும், மருதத்திணைக்குச் சிறந்தனவாகும்; எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத்தோன்றும் = சுடர்படும் பகற்கால மூன்றாம் பகுதியாகிய சிறுபொழுது நெய்தற்றிணைக்கு உரிய பொழுதாதல் பொருள்பெறத் தோன்றுவதாகும். குறிப்பு: இதில், வைகுறிள வேனில் மருதம் எனும் பாடம் மருதத்திணைக்குப் பொழுதும் பருவமும் வழுவாதுரைக்கும் சிறப்புடைத்து. இனி எல்படும் பொழுதை எற்பாடென்பது தமிழ் வழக்கு. இன்றும் தமிழ் வழக்கறியா மேல் கடற்கரையில் படு ஞாயிற்றின் திசையைப் படுஞாறு என வழங்குதல் உலகறிந்த செய்தி. இதில் வைகுறு என்பது வைகறையின் மரூஉ. வைகறை விடியல் என்றே இளம்பூரண அடிகள் பாடங்கொண்டிருப்பதும் இதனை வலியுறுத்தும். வைகுறு விடியல் என்பதில் எண்ணும்மை சூத்திரச்செறிவு நோக்கித் தொக்கது. இனி, வைகுறு விடியல் என்ற தொடரை வைகுறுதலாகிய விடியல் எனக்கொண்டு பொழுது புலர்தற்கு முற்பட்ட இறுதி யிரவுக்காலத்தையே குறிக்குமென்றும், எற்பாடு என்பது சுடரெழுந்து வெயிலெறிக்கும் காலைப்பொழுதைக் குறிக்குமென்றும் ஆசிரியர் சிவஞான முனிவர் தம் முதற்சூத்திர விருத்தியில் கூறுகின்றார். வைகறையும் விடியலும் ஒருபொருட் கிளவிகள் என்னுமவர் கொள்கை பண்டைத் தமிழ்ப்புலவர்க் குடன்பா டன்றென்பது பழைய தொகைநூல்களில் பலவிடங்களிலும் பயின்றுவரும் குறிப்புக்களால் தெளியப்படும். வைகறையும் விடியலும் முன்னும் பின்னுமாக வரும் இருவேறு சிறுபொழுதுகளே யென்பது மதுரைக்காஞ்சி யடிகளா லினிதுவிளங்கும். .ïšnyh® நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிய புலர்ந்துவிடி விடியல் எய்த (662, 663, 664) என்ற அடிகளில் இருள் மாய்ந்து கதிர்விரியும், காலையை விடியலென்றும், பிறகு இரவுத்தலைப்பெயரும் ஏமவைகறை என்று அதேபாட்டில் 686ஆம் வரியில் வைகறையை விடியலி னின்றும் வேறுபிரித்து அது இரவுத் தலைப்பெயரும் ஏமஞ்செய் காலமென்றும், மாங்குடிமருதனார் கூறுதலால் அது வலிபெறு வதாகும். அன்றியும் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் தாம் பாடிய மலைபடுகடாத்தில், வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர எனும் 171, 172, 173ஆவது அடிகளில் வைகறைப் பொழுதைக் கூறி, பிறகு, அடி 195, 196 இல். ..........நள்ளிரு ளலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின் என்று இருள் புலர்ந்து பகல் மலர்ந்து கதிர்விரிந்த விடியற் காலத்தை வேறுபிரித் தோதினர். இஃது, இவ்விருபொழுதையும் இவ்வாறே வெவ்வேறாக மதுரைக் காஞ்சியில் விளக்கிய மாங்குடி மருதனார் கொள்கையே அடிப்பட்ட தமிழ் வழக்கென்பதனை வெள்ளிடை மலைபோல் விளக்குவதாகும். ஈண்டுப் பெருங்கௌசிகனார் நறவு மகிழ்ந்து வைகறைக் காலத்தே அனந்தல் தீர, கடமான் கொழுங் குறையும்....... பயினிணப் பிளவை..... தடியொடு விரைஇ.... குறமகளாக்கிய வாலவிழ்வல்சி அகமலியு வகை யார்வமொடளைஇ .... மனைதொறும் பெறுகுவிர் என்று முதற்கூறி, பிறகு அவ்வாறுண்ட நீவிர் விடியல் வரை வைகி விடிந்த பிறகு கழிவீராக; ஏனெனில், நீர் போகும் ஆறு, ......... பரலவற்போழ்விற் கரந்துபாம் பொடுங்கும் பயம்புமாருளவே, (அதனால்) குறிக்கொண்டு............ நோக்கி வறிது நெறியொரீஇ வலஞ்செயலாக் கழிமின், எனக் கூத்தருக்கு வைகறைப்பொழுதில் வழிக்கொண்டு பாம் பொடுங்கும் பள்ளங்களில் வீழ்ந்திடர்படாமல் தங்கிக் கதிர்விரிந்த விடியற்காலத்தே புறப்படுமாறு கூறுதலால், இவ்விரு காலமும் இருவேறு சிறுபொழுதுகளே என்பது தெள்ளத்தெளியக்கிடப்ப தாகும். இன்னும் மலைபடு கடாத்திலேயே, வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து என 257ஆவது வரியிலும், நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப் பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப் புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின் என 446 முதல் 448 ஆவது வரிகளிலும் வைகறையின் வேறுபட்ட விடியற்காலத்தை ஐயமற விளக்கியிருப்பது பாராட்டிச் சிந்திக்கத் தக்கது. இனி, அகநானூற்றில் 37, 41ஆம் பாட்டுக்களில் வைகுபுலர் விடியல் வைபெயர்த் தாட்டி எனவும், வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்ப எனவும் முறையே இரவுபுலர்ந்து கதிர்விரியும் விடியற்காலம் இனிது விளக்கப்பெற்றும், 42ஆவது பாட்டில் பெரும்பெயல் பொழிந்த ஏமவைகறை எனவும், 308ஆவது பாட்டில் ....... கங்குல்........ .......ஆலி யழிதுளி பொழிந்த வைகறை எனவும் வைகறை விளக்கப் பெற்று மிருக்கிறது. இன்னும், இரவிருள் கழிந்து பகலொளியெழுந்து படரும்புலரிய விடியல்’ என்பதும்பலபழம்பாட்டுக்களால்விளக்கமாகும். பெரும்புலர்விடியல் (குறுந். 224) (நற். 60), தண்புலர்விடியல்”(60),வைகுபுலர்விடியல்”(12) எனப்பல விடத்தும் புலரும் பொழுத விடியல் என உரைக்கப்படுதலால், இரவிருள் புலர்ந்து பகலொளியலர்ந்த நாட்காலைய விடியல் எனவிளங்குகிறது. புலரி, வைகல், விடியல் என்பன நாட்காலை எனும் ஒரு பொருள் குறிக்கும் பல பெயர்களாகப் பயிலுதலுமிதனை வலியுறுத்தும்.இனி, வைகறை இருள்கழியாத இரவினிறுதியென்பது விளங்க, வைகுறுமீனின் இனையத்தோன்றி (நற். 48) என மீனொளி மறையாத இருள் தங்கும் வான்சிறப்புடைய வைகறை என வருதலானுமறிக.குக்கூ என்றதுகோழி,அதனெதிர்................தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே (குறுந். 157) என்பதில், வைகறை தலைக்கோழி கூவும் விடியாப் பொழுதென விளக்கப்படுதலும் காண்க. சிவஞான முனிவர்எடுத்துக்காட்டும் முருகாற்றுப்படையடிகளும்,அவர் கொள்ளும் பொருளில்,வைகறையும்விடியலுமொன்றெனற்குமாறாகஅவை இருவேறு பொழுதுகளெனவேவிளக்குகின்றன. முட்டாட் டாமரைத் துஞ்சி, வைகறைகட்கமழ் நெய்த லூதி, எற்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்கும் (முருகு. வரி 73-76) என்பதவ்வடிகள். இதில், வண்டினம் இரவில் தாமரையில் தூங்கி, வைகறையில் நெய்தல் மலரூதி, பிறகு ஞாயிறெழும் விடியலில் சுனைப்பூக்களி லொலிக்கும் எனக்கூறி, இரவு வைகறை, விடியல் என மூன்றும் மூவேறு பொழுதெனத் தெளிக்கப்படுகின்றது. எனில், இதில் எல்பட என்பதற்கு ஞாயிறு எழ எனப் பொருந்தாப் பொருள் கூறுவதினும், ஞாயிறடையும் பகலிறுதிப் பொழுதில் எனக் கொள்ளுவதே சொல்லும் மரபும் சுட்டும் நல்ல கருத்தாகும்; எனவே விடியலுக்கு முன் வைகறையில் விழித்தெழும் வண்டினம் நெய்தலூதி, மாலைக்கு முன் பகல் மாய்ந்து சுடர்படும் எற்பாட்டில் சுனைமலர் களிலொலிக்கும் என்பதே இவ்வடிகளுக்கு நேரிய செம்பொருளாகும். இனி, வைகறை விடியல் எனுமிரு சிறுபொழுதும் ஒழிய எற்பாடு இவற்றின் வேறாய பகலிறுதிப் பொழுதென்பது, பகன்மா யந்திப் படுசுட ரமையம் என அகம் 48ஆம் பாட்டிலும் தெளிக்கப்படுகிறது: இன்னும், படுசுட ரடைந்த பகுவாய் நெடுவரை முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலை (நற். 33) எனும் இளவேட்டனார் பாட்டும், இரவின் முதற்பொழுதான மாலையை எற்பாட்டின் பிற்பொழுதாகக் கூறுதலும், பகலிறுதிப் பொழுதைப் படுசுடர் எனச் சுட்டுதலும் காண்க. “நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுக...., கல்சேர் மண்டிலம் நிவந்துநிலம் தணிய எனும் ஔவை நற்றிணை (187-ஆம்) பாட்டுமதுவே கூறுகிறது. ஒன்றுதுமென்ற தொன்றுபடு நட்பில் (நற். 109) எனும் பெரும்பதுமனார் நற்றிணைப் பாட்டிலும் உலமரக் கழியுமிப் பகல்மடி பொழுதே என வருதலறிக. இன்னும் இரவின் முதற் பொழுதா மாலைக்கு முந்தி பகலிறுதிப் பகுதியை கல்சுடர் சேரும் கதிர்மாய் மாலை (321) என மள்ளனாரும் கூறுதல் காண்க. இனைய பலபழம் புலவர் பாட்டுக்களால் பொழுது புலர்ந்து கதிர் விரியும் இளவெயிற் காலையாய பகற்பொழுதின் முதற்பகுதியே விடியலென்றும், இருள் புலருமுன்னுள்ள இரவின் இறுதிப்பகுதி நேரமே வைகறையென்றும், சுடர்படும் பகலிறுதிக் காலமே எற்பாடென்றும் மயக்கத்திற் கிடனின்றித் தெளியக்கிடக் கின்றது. இன்னும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலையென முறைசெய்தற்கேது, மாலையாமம், வைகறை, காலை, நண்பகல் என்னும் சிறுபொழுதின் கிடக்கை முறையேயன்றி வேறின்மை யானும், ஏனைத்திணைகட்குச் சிறுபொழுது ஒரோவொன்றே யாகலின் மருதமாத்திரைக்கிரண்டு கோடல் பொருந்தாமையானும், அஃதுரையன்றென மறுக்க என்னும் சிவஞானமுனிவர் கூற்றும் பொருந்தாமையறிக. சிறுபொழுது ஐந்து மாலை முதல் நண்பகல் வரையெண்ணி நிறுத்தப்படின், ஒருநாளுலப்புறாமல் பிற்பகல் பெயரும் பயனுமின்றி வீணே விடப்படுமாகலின், ஈண்டு எண்ணப் பெறாத பிற்பகலாகிய சிறுபொழுதொன்றுண்மையும், அதுவே எற்பாடாவதும் விளக்கமாகும். அன்றியும், அன்பினைந்திணைமுறை சிறுபொழுதின் கிடக்கை முறை பற்றியதேயாகும். என்பதற்கு முனிவரவர்களின் கூற்றைத் தவிரப் பிறிதாதரவின்மை யானும், பெரும்பொழுதாறினை ஐந்து திணைக்கு ஒரோவொன்றாய்க் கொடுத்தமை யாததாலும், சிறு பொழுதுகளுமவ்வாறமைதல் வேண்டா. குறிஞ்சிக்குக் கூதிரொடு முன்பனியும், பாலைக்கு வேனிலொடு பின்பனியும் ஆக இவ்விரண்டு பருவந்தந்து வைத்தும், மருதத்திற்கும் நெய்தலுக்கும் பெரும்பொழு தெதுவும் பிரித்துரிமை செய்யாமலும் சூத்திரிக்கும் ஆசிரியர் முறையிற் பொருத்தம் காணும் முனிவரவர்கள் மருதத்திணை யொன்றற்குச் சிறுபொழுதிரண்டமைத்தலின் பொருந்தாப் பெருந் தவறு காணுதற்குரிய நியாயத்தை விளக்கினார்களுமில்லை. இனி, பிற்றைய நாற்கவிராச நம்பியார் சிறுபொழுதைந்தென்று கூறுதலால், பண்டைப்புலவர் பாட்டுக்களைப் பொய்யாக்கித் தொல்காப்பியர் சூத்திரங்களுக்கும் புதுப்பொருள் காண்பது உரையறமாகாது. மேலும் வைகறையும் விடியலும் மருதத்திணையான ஊடலுக்கு உரித்தாமாறும், மாலையையும் யாமத்தையும் பரத்தையர் வீட்டிற் கழித்த தலைவன் தன்மாட்டு மீட்டுவரும், வைகறை விடியற்காலங் களில் தலைவி அவனோடூடுதல் இயல்பாவதும், பிறகு பொழுதேறி விருந்தினர்க்கு வேளாண்மை செய்தலால் ஊடல் தீர்தல் முறை யென்பதும், மருதக்கலி நெய்தற்கலி முதலிய பண்டைய அகத்துறைப் பாட்டுக்களால் இனிது விளங்கும். ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் எனும் குறளால் ஊடுமிடத்தெல்லாம் கூடுதலின்றியமையாமை பெறுதற்கில்லை. கூடிமுயங்கப்பெறின் அதற்கின்பம் என வள்ளுவர் விதந்து கூறுதலாலேயே, ஊடுந் தோறும் உடனே கூடல் ஒருதலையாகாது, கூடப்பெறாப் பொழுதுகளும் உளவாதல் இயல்பென்பது பெறப்படும். அன்றியும், ஊடல், அதன்பின் கூடநேர்ந்துழி, அக்கூட்டத்திற்கு இன்பம் மிகுக்கும் என்பது இக்குறட்பொருள் ஆவதன்றி, உடனே கூட நேராப் பொழுதெல்லாம் ஊடல் நிகழாது என்பது கருத்தாகாமை வெளிப்படை. இனி, காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் எனும் அள்ளூர் நன்முல்லையாரின் குறுந்தொகைப் பாட்டில் காலையும் விடியலும் வேறாக்கி விரிகதிர் விடியலைக் காலை யென்றபின் வைகறையை விடியலென்று கூறியதனால், வைகறை யின் வேறுபட்ட விரிகதிர் விடியலும் பகலிறுதியின் எற்பாடும் உண்டெனப் பண்டைப் புலவரின் பல பாட்டுக்கள் கூறுவதை மறுக்க வொண்ணாது, அதுவேபோல் அப்பாட்டில் எற்பாடு கூறப்பெறாமை கொண்டு பகல் மாய்ந்திப்படு சுடர்ப் பொழுதான எற்பாடு இல்லையெனலும் இயலாது. கூறப்பட்டதொன்று உண்டெ னலாமன்றிக் கூறப்பெறாமைகொண்டு உள்ளதொன்றை இல்லை யெனத் துணிதற்கு அளவைநூலிடந் தராது. மேலும், இப்பாட்டினடிகளில் சொற்றொறும் வருகின்ற உம்மை எண்ணும்மையேயாகும். என்று இப்பொழுதைந்தும் என முற்றும்மை பெறாமையானும் சிறுபொழுதைந்தேயாம் என்னு முடிவிற்கு இக்குறுந்தொகைப் பாட்டடிகள் இடந்தராவாம். எவ்வாற்றானும் பண்டைச் சான்றோர் பாட்டுப் பலவற் றுள்ளும் வைகறையும் விடியலும் இருவேறு சிறுபொழுதுகளா மென விதந்து கூறப்பெற்றிருத்தலானும், இச்சூத்திரத்தில் வைகறை யையும் விடியலையும் கூறி அவற்றின் வேறாய எற்பாடும் கூறப் பெறுதலானும், இரவுக்குச் சிறுபொழுது மூன்றாவதுபோல் பகலுக்கும் மூவேறு சிறுபொழுது உண்மையானும், ஈண்டு வைகுறு, விடியல், எற்பாடு என்பன மூன்றும் முறையே கங்குலிறுதிப்பொழுதான வைகறையும், வெயிலொடு விரிகதிர் விடியலான பகல் முதற் சிறுபொழுதாகிய காலையும் மருதத்துக்கும், பகலிறுதியில் சுடர் படும் பொழுதான எற்பாடு நெய்தலுக்கும் சிறப்புறவருமெனும் உரையே உண்மையுரை யாமெனத் தெளிதலெளிதாம். அதனால் நச்சினார்க்கினியரொடு இளம்பூரண அடிகளும் இதுவே இச் சூத்திரப் பொருளாகக் கூறுதல் அமைவுடைத்தாகும். 1. விடியல் அல்லது காலை மருதப் பொழுதாதற்குச் செய்யுள்: காலை எழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென தெறுவ தம்ம இத்திணைப் பிறத்தல்லே (குறுந். 45) நிரைதார் மார்பன் நெருந லொருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின் இயன்ற அணியன் இத்தெரு இறப்போன் பூங்கட் புதல்வனைநோக்கிநெடுந்தேர்தாங்குமதிவலவஎன்றிழிந்தனன்.... ........மகனொடுதானேபுகுதந்தோனயானதுதடுத்தனனாகுதல்நhணிஇடித்திற் கலக்கினன்போலுமிக்கொடியனெனச்சன்றலைக்குங்கோலெhடுகுறுக,தலைக்கொண்டு.................... அழுங்கின னல்லனோ அயர்ந்ததன் மணனே (அகம். 66) இதில், கூடாமலே தலைவி காலையில் ஊடியதிறம் கூறியதறிக. சேற்றுநிலை முனைஇய எனும் அகப்பாட்டும் (46); உணர்குவ னல்லேன், உரையல்நின் மாயம் எனும்(226ஆம்)அகப்பாட்டுமதுவேயாம். 2. வைகறை மருதப் பொழுதாதல், பொதுக்கொண்ட கெளவையிற் பூவணை பொலிந்தநின் வதுவையுங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை (கலி. 66) எனவரும் கலிப்பாட்டடியிற் காண்க. 3. இனி எற்பாடு நெய்தற்கு வருதல், நெடுவெண் மார்பி லாரம் போல் எனவரும் (120) அகப்பாட்டாலறிக. சூத்திரம்: 9 நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. கருத்து: இது பாலைக்குப் பருவமும் பொழுதும் கூறுகிறது. பொருள்: நடுவுநிலைத்திணையே = அன்பினைந்திணையுள் நடுநின்ற பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் = நடுப்பகல் முதிர்வேனி லொடுகூடப் பொருந்துமிடத்து; முன்னிய நெறித்து = அதுபிரிவுக்குச் சிறந்ததாகக் கருதும் முறைமை யுடைத்தாகும். குறிப்பு: ஏகாரம், முன்னது இசை நிறை, பின்னது அசை. நண்பகலாகிய சிறுபொழுதும் முதிர்வேனிலாகிய பெரும் பொழுதும் பாலைத் திணையாகிய பிரிவிற்குத் தனித்தனியுரிமை கொள்ளுதலேயுமன்றி, இவை தம்முட் கூடிய நிலையில் முதிர் வேனிலின் நண்பகல் பிரிவுக்கு மிகவும் சிறப்புரிமையுங் கொள்ளு மென்பது இச்சூத்திரத்தில் விளக்கப்படுகிறது. முதிர்வேனிற்காலம் ஆனியும் ஆடியுமாகிய திங்களிரண்டுமாம். இதில், வேனிலென்பது முதிர்வேனிற் பருவத்தையே குறிக்கும்; அதுவே பிரிவுக் குரித்தாகலின். முதிர்வேனிலிற் பிரிந்தார் கார்காலத்தில் கூடுவர். இளவேனில் கூடுதலுக்கே உரிய பருவமாகும். பின்பனிக்காலத்தில் பிரிந்தார் இளவேனிலிற் கூடுவர். முதிர்வேனில் பிரிவுக்குரித்தாதற்குச் செய்யுள்: உறைதுறந் திருந்த புறவிற் றனாது செங்கதிர்ச் செல்வன் தெறுதலில், மண்பக, உலகு மிகவருந்தி அயாவுறு காலைச் சென்றன ராயினும் நன்றுசெய் தனரெனச் சொல்லித் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் செங்கோல் வாளிக் கொடுவி லாடவர் வம்ப மாக்க ளுயிர்த்திறம் பெயர்த்தென வெங்கடற் றடைமுதற் படுமுறை தழீஇ உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது மாறுபுறக் கொடுக்கும் அத்தம் ஊறில ராகுத லுள்ளா மாறே (நற். 164) சூத்திரம்: 10 பின்பனி தானு முரித்தென மொழிப. கருத்து: இது, பிரிவுக்குப் பின்பனியும் உரித்தாதல் கூறுகிறது. பொருள்: (முதிர்வேனிலேயுமன்றி) பின்பனிக்காலமும் பிரிவுசுட்டும் பாலைத் திணைக் குரித்தாகுமென்று கூறுவர் (புலவர்). குறிப்பு: பின்பனிப்பருவம் மாசியும் பங்குனியுமாகிய திங்களிரண்டும் கொண்ட தாகும். பின்பனி பிரிவுப்பருவமாதல், பின்வரும் ஆலத்தூர்கிழாரின் குறும்பாட்டிற் காண்க. அம்ம, வாழி, தோழி! முன்னின்று பனிக்கடுங் குரையம் செல்லாதீமெனச் சொல்லின மாயிற் செல்லார் கொல்லோ? ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும் மலையுடைக் கானம் நீந்தி நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே (குறுந். 350) பின்பனிப் பிரிந்தோர் இளவேனிற் கூடுவதற்குச் செய்யுள்: கோங்கங் குவிமுகை யவிழ ஈங்கை நற்றளிர் நயவர நுடங்கு முற்றா வேனின் முன்னிவந் தோரே (நற். 86) ......òz®Ändh என இணர்மிசைச் செங்கணிருங்குÆலெதிர்குரšபயிற்Wமி‹பவேனிYம்வந்தன்W(ந‰. 224) என்னும்பெருங்கடுங்கோவி‹நற்றிணை¥பாட்டடிகளும்,பிரிந்j காதல®திரும்பக்கூடும்காkர்வேனின்மன்இJஎன்னுமfப்பாட்டடியு«, ஊடினீ ரெல்லா முருவிலான் றன்னாணை கூடுமி னென்று குயில்சாற்ற - நீடிய வேனற்பா ணிக்கலந்தாண் மென்பூந் திருமுகத்தைக் கானற்பா ணிக்கலந்தாய் காண். எனவரும் சிலப்பதிகார வெண்பாவும், பின்பனிக்காலம் பிரிவுக்கும், இளவேனில் கூடலுக்குமே ஏற்புடைத்தென்பதை வலியுறுத்தல் காண்க. சூத்திரம்: 11 இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும் உரிய தாகு மென்மனார் புலவர். கருத்து: இது முதிர்வேனிலிற் பிரிந்தார்கர் காலத்து மீண்டுவந்து கூடலும், பின்பனிக்காலம் பிரிந்தார் இளவேனிலில் கூடலும்மர பென்பதை விளக்குகிறது. பொருள்: இருவகைப்பிரிவும்= முன்னையிரு சூத்திரங்களிலும் கூறப் பெற்ற nவனிற்பிரிவும், பின்பனிப்பிரிவும்; நிiலபறத்தோன்றினும்= பிரிதனிமித்தங்களாக அiமயாது,பிரிந்துநின்றபhலையாகவேஉருப்படினும்;உரியதாகும்என்மனார்புலவர்= அதுபhலைக்குரியதேயhகும்என்றுகூறுவர்புலவர். குறிப்பு: இதில் இருவகைப் பிரிவென்பதற்கு உரையாசிரிய ரிருவரும் இருவேறுரைகள் தருவாராவர். தொல்காப்பியர் தம் இலக்கண நூலில் யாண்டும் தாம் நுவலும் பொருளை ஐயமற வரையறுத்து விளக்குவதைக் கடனாகக் கொண்டொழுகும் பான்மை பாராட்டத்தக்கது. உரைகாரர் கூறும் பிரிவுவகைகளை அவர் கருதினராயின், அவற்றை இங்கு விளக்காமல் இருவகைப் பிரிவெனப் பொதுவிற்கூறி வேண்டுவோர் வேண்டியாங்கு மாறிப்பொருள் கொள்ளுமாறு வைக்கமாட்டார். தானே வகைகளை விளக்காது தொகையைமட்டும் கூறுவது இலக்கண நூலார் மரபாகாது. அதனால் ஈண்டு இருவகைப்பிரிவு என்னுந் தொடர் சுட்டும் வகையிரண்டும், இதனொடு தொடர்புபடத் தொல்காப்பியர் தாமே கூறியவாதல் வேண்டும். முதிர்வேனிற்பிரிவை முன் ஒன்பதாஞ் சூத்திரத்திலும், பின்பனியிலும் பிரிவுண்டென்பதைப் பத்தாஞ் சூத்திரத்திலும் கூறியமைத்தாராதலின், இவ்விரு வகைப்பிரிவு என இச்சூத்திரத்தில் அவற்றைத் தொகுத்துச் சுட்டினாரென்பதே பொருந்துவதாகும். காலிற்பிரிவும் கலத்திற் பிரிவுமென நச்சினார்க் கினியர் கூறுவதே தொல்காப்பியர் கருத்தென்பது அவர் சூத்திரங்களில் யாண்டும் சுட்டப் பெறாமையாலும் அஃது இங்குக் கருத்தன்மையறிக. இனி, இளம்பூரணர் கொள்கையும் அமைவுடைத்தன்று. தலைமகளைப் பிரிதலும், அவளையுடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும் என்று பிரிவிருவகைத்தாமென்பதிவர் கூற்று. இது தொல்காப்பியர் நூலில் யாண்டும் ஆதரவுபெறாததோடு, தலை மகன் தலைமகளைக் கொண்டு தலைக்கழிதலையும் பாலை யென்று பொருளொடு பொருந்தாப் பெயரிடும் இவர் பிழைக்குத் தொல்காப்பியரை யாட்படுத்துவதுமாகும். பிரிவும், புணர்தலே போல், தலைமகன் தலைமகள் தம்முளாவதோர் ஒழுக்கமேயாதல் வேண்டும். கொண்டு தலைக்கழிதலில் இவ்விருவரும் தலைக்கூடித் தம்முட்பிரியாமல் ஒருங்கு செல்வராதலால், அஃதவர் காதற்றிணையில் பாலையாமாறில்லை. அவர் கூடியிருக்கவும், தலைவி தலைவனுடன் செல்லும் பொருட்டுத் தன் தமரைப்பிரிந்து செல்லல் பாலையெனில், தலைவியைக் காணவருந் தலைவன் தன் தமரையும் பாங்கரையும் பிரிந்துவரலும் பாலை யாதல் வேண்டும். இவ்வாறு யார் யாரைப் பிரிந்தாலும் பாலையென்று கொள்ளுதற்கு இலக்கண நூலிடந்தராது. அகத்திணைக ளனைத்தும் காதற்றலைமக்கள் தம்முள்நிகழும் அன்பொழுக்கம் பற்றியதேயாகுமன்றி, அவருள் ஒருவருக்கும் அயலவர்க்கும் இடைப்பட்ட ஒழுக்கத்தையும் தொடர்புகளையும் சுட்டமாட்டா. ஆதலானும், காலத்தால் வேறுபட்ட பிரிவிரண்டையும் இதற்குமுன் தனியிரண்டு சூத்திரங் களில் ஆசிரியர் விளக்கினாராகலானும், இச்சூத்திரத்தில் அவற்றையே இருவகைப் பிரிவுமெனத் தொகுத்துக்கூறி நிறுத்தினர் எனக் கொள்ளுதலே பொருத்தமாகும். 1. வேனிற்பிரிவுக்குச் செய்யுள் மேலே நடுவு நிலைத்திணையே எனும் 9ஆம் சூத்திரத்தின்கீழ்க் காட்டிய உறைதுறந்திருந்த எனவரும் நற்றிணைப் பாட்டாலறிக. இன்னும் பின்வரும் காவன்முல்லைப் பூதனார் பாட்டும் முதிர்வேனிற் பிரிவு கூறுதல் காண்க. அஞ்சி லோதி ஆய்வளை நெகிழ நேர்ந்துநம் அருளார், நீத்தோர்க் கஞ்சல் எஞ்சினம் வாழி, தோழி! எஞ்சாத் தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை வேனி லோரிணர் தேனோ டூதி ஆராது பெயரும் தும்பி நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே (குறுந். 211) இதில், தீய்ந்த மராமரத்தின் ஓங்கிய கிளையில் உண்டான ஒரே பூங்கொத்திலும்கூடத் தேன் எனும் பெண்வண்டோடு தும்பி எனுமாண்வண்டு ஊதி அளைந்து தேடியும் உண்ணத் தேனின்றி மீளும் எனலாலும், நீரின்மை சுட்டுதலாலும், பருவம் முதிர்வேனி லாதல் வெளிப்படை. அதில் தலைவன், தலைவியை அருளாதகன்று சுரனிறத்தலால், அவ்வேனில் பிரிவுப் பருவமாதலறிக. 2. இனி, வேனிற்பிரிந்தார் காரிற்கூடுதல் கீழ்வருஞ் செய்யுளிற் காண்க. விருந்தெவன் செய்கோ? தோழி! சாரல் அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச் சுரும்பிமி ரடுக்கம் புலம்பக் களிறட் டுரும்பி லுள்ளத் தரிமா வழங்கும் பெருங்கல் நாடன் வரவறிந்து விரும்பி மாக்கடல் முகந்து மணிநிறத் தருவித் தாழ்நீர் நனந்தலை யழுந்துபடப் பாஅய் மலையிமைப் பதுபோல் மின்னிச் சிலைவல் லேற்றொடு செறிந்தவிம் மழைக்கே (நற். 122) இன்னும், இலையில் பிடவம் ஈர்மல ரரும்ப எனும் பெருங் கண்ணனார் நற்றிணைப் பாட்டிலும், இத்துறை வருதலறிக. “ fh®bjhl§ »‹nw fhiy: tšÉiuªJ bršf, ghf!நின் தேரே, உவக்காண், கழிப்பெயர் களரிற் போகிய மடமான் விழிக்கட் பேதையொ டினனிரிந் தோடக் காமர் நெஞ்சமொ டகலாத் தேடூஉ நின்ற இரலை யேறே (நற். 242) இன்னும், உலகிற் காணி யாகப் பலர்தொழப் பலவயி னிலைஇய குன்றிற் கோடுதோ றேயினை உரைஇயரோ, பெருங்கலி எழிலி! படுமலை நின்ற நல்யாழ் வடிநரம் பெழீஇ யன்ன உறையினை; முழவின் மண்ணார் கண்ணி னிம்மென இமிரும் வணர்ந்தொலி கூந்தன் மாஅ யோளொடு புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்லூர் விரவு மலருதிர வீசி இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே (நற். 139) எனும் பெருங்கௌசிகனார் பாட்டும் முதுவேனிற் பிரிந்தார் காரிற்கூடி யின்புறலை விளக்கும் பரிசு களித்தற்குரியது. 3. இனி, பின்பனிப் பிரிவுக்குப் பாட்டு: அம்ம வாழி தோழி! காதலர், நூலறு முத்திற் றண்சித ருறைப்பத் தாளித் தண்பவர் நாளா மேயும் பனிபடு நாளே பிரிந்தனர் பிரியும் நாளும் பலவா குவவே (குறுந். 104) அம்ம வாழி தோழி! முன்னின்று பனிக்கடுங் குரையம் செல்லா தீமெனக் சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே (குறுந். 350) 4. பனியிற்பிரிவார் இளவேனில் கூடுவதற்குச் செய்யுள்: ஆற்றறல் நுணங்கிய நாட்பத வேனி விணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் நல்வயி னினையும் நெஞ்சமொடு கைமிகக் கேட்டொறுங் கலுழுமால் பெரிதே .................... நுண்பஃ றித்தி மாஅ யோளே (நற். 157) இன்னும், அன்பினர்,மன்னு«பெரியர்..................ணிருங்குயில் எதிர்குரல் பயிற்றும் இன்ப வேனிலும்வந்தன்று;நம்வயிற் பிரியலமென்றுதெளித்தோர்தேஎத் தினியெவன்மொழிகோயானே... வெம்முனை அருஞ்சுர முன்னி யோர்க்கே (நற். 224) எனவருமிப் பெருங்கடுங்கோ பாட்டும், ஈங்கே வருவர்; இனையல் எனும் கச்சிப்பேட்டு நன்னாகையார் குறும்பாட்டும் இத்துறையையே விளக்குதல் காண்க. சூத்திரம்: 12 திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே; நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே. கருத்து: இதுவும் இதையடுத்த உரிப்பொருளல்லன என்னுஞ் சூத்திரமும் முன் ஐந்தாவது சூத்திரத்திற் கூறிய முல்லை முதலிய நிலவகைகளுக்கும், பின் புணர்தல் பிரிதல் எனும் 14ஆவது சூத்திரத்திற் கூறும் குறிஞ்சி முதலிய திணைவகை களுக்கும்உள்ள இயைபு முரண்களை, நடுநிலைவிளக்காய் நின்று, எடுத்துக்காட்டி ஐயமகற்ற எழுந்த சூத்திரங்களாகும்.பொருள்: திணை மயக்குறுதலுங் கடிநிலை யிலவே = குறிஞ்சி முதலிய அன்பினைந் திணைகளான புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற ஐந்தொழுக்கங்களும் தத்தமக்குச் சிறப்புரிமை யுடைய முறையே குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்னும் நிலங்களில் நிகழ்வதுடன், அவ்வாறு சிறப்புரிமை யற்ற பிற நிலங்களில் வந்து கலத்தலும் விலக்கப்படா; நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப = (இவ்வாறொழுக்கங்கள் தமக் குரிமையற்ற நிலங்களில் நிகழ்ந்து மயங்குதலமையு மெனினும்) அவ்வொழுக்க மயக்கம் பற்றித் தம்முள் நிலங்கள் மயங்குதலில்லை யென்று கூறுவர்; புலன் நன்குணர்ந்த புலமையோரே = புலனெறி வழக்கங்களை நன்கறிந்த அறிவுடையோர். குறிப்பு: இதன் முதல் மூன்றாமடிகளின் ஈற்றேகாரங்கள் அசைநிலை. உம்மை திணைக்கும் மயக்கம் சிறப்பின்மை உணர்த்தும். இதனால் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொருதிணை சிறப்புரிமை யுடையதென்பதும், அவ்வுரிமை முறையன்றி நிலங்களுந் திணை களும் தம்முள் மயங்குதல் சிறவாதெனினும் விலக்குமாறில்லை என்பதும் தெளியப்படும். மயக்கம், தனக்குச் சிறப்புரிமையற்ற நிலத்தில் பிற ஒழுக்க நிகழ்ச்சி குறிக்கும்; எந்நிலத்தும் திணைகள் தம்முட்டா மயங்குதல் கூடாமையின், அது கருத்தன்மை தேற்றம். ஒருங்கு, உடனிகழ்ச்சிப் பொருட்டு. அகத்துறைகளில் முதலில் ஒழுக்கங்களுக்கே உரிய குறிஞ்சி முதலிய பெயர்கள் பின் நிரலே அவ்வொழுக்கங்களுக்குச் சிறந்துரிய நிலங்களுக்கும் ஆகுபெயராய் வழங்கலாயின. அவைகள் நிலங் களுக்கே உரிய பெயர்களெனல் பிற்காலப் பிறழ்வுணர்ச்சி. எனவே, சிறப்புக் குறியாகப் புணர்தல் முதலிய ஐந்திணைகளையும், ஆகு பெயராய் அவற்றிற்குச் சிறந்துரிய நிலங்களையும், குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் எனும் பொதுப்பெயர்களாற் கூறுதல் பழைய தமிழ் நூன் மரபு. எனில், பெயரொற்றுமையால் திணை களும் நிலங்களும் யாண்டும் ஒரு நீர்மைய வெனக் கொண்டு, திணைமயங்குந்தோறும் நிலமயக்கமும் உண்டெனக் கொள்ளுதல் கூடாதென வற்புறுத்தி ஐயமகற்றுவதே ஈண்டிச்சூத்திரக் கருத்தாகும். திணையென்பது ஒழுக்கத்திற்கே சிறந்துரிய பெயராகும். திணைக் குரிப்பொருளே என்னுஞ் சொற்றொடரும் இதனை வலியுறுத்தும். ஒவ்வோரொழுக்கமும் அவ்வவதற்குச் சிறப்புரிமை கூறிய ஒரு நிலத்திற்கே தனியுரிமை யுடைத்தன்று. ஒவ்வொரு நிலமக்களும் அவ்வந் நிலத்தில் ஐந்திணையொழுக்கங்களையும் கையாளுதலியல்பு. ஆகவே, ஒவ்வொரு நிலத்தும் அதுவதற்குச் சிறந்துரிய ஒழுக்கமே யன்றிப் பிறவொழுக்கங்களையும் தொடர்புபடுத்திப் புலனெறி வழக்கஞ்செய்தல் தவறாகாது. ஒரு நிலத்து நிகழும் ஒழுக்க வேறு பாட்டால் அந்நிலத்தியல்பும் மாறினதாகக் கருதலாகாது. மயங்கி நிகழும் ஒழுக்கத்தோடு ஒருங்கே நிலமயக்கங் கொள்ளுதல் மரபன்று என்பதும், ஒவ்வொரு நிலத்திற்குச் சிறப்புரிமையுடையதாகக் கூறப்படினும் அதுகொண்டு அந்நிலத்து அவ்வோர் ஒழுக்கமே நிகழ வேண்டும் என்ற வரையறையின்றி நிலத்தியல் கருதாமல் திணைமயக்கம் (அதாவது பிறவொழுக்க நிகழ்ச்சி) கூறுதலும் மரபென்பதும், தொல்காப்பியர் இச்சூத்திரத்தால் விளக்கிப் போந்தார். எனவே, எங்கு எவ்வொழுக்கம் நிகழினும் அதனால் நிலத்தியல் மாறாது; காடு புணர்ச்சி நிகழ்வதால் குறிஞ்சியாகாது, முல்லை நிலமேயாம். பிரிவாற்றாக் குறமகளிரிரங்குவதால் மலை நிலம் நெய்தலாகாது; குறிஞ்சியேயாம். தத்தம் இயல்மாறாத நிலம் யாதாயினும், அதில் நிகழும் ஒழுக்கம்பற்றித் திணை வகுப்பது பழைய மரபு; ஒழுக்க இயல் கருதாது, நிலவகையால் திணையமைப்பது பிழைபட்ட பிற்கால வழக்கு. அது தொல்காப்பியர்க்குடன்பாடன்று என்பது இச் சூத்திரத்தால் தெற்றென விளங்கும். புணர்தல் - முதலிய ஒவ்வொரு திணை அல்லது ஒழுக்கத்திற்கும், முறையே மலை முதலிய நிலங் களைப் போலவே, கூதிர்யாம முதலிய கால வகைகளும் தத்தம் இயற்பொருத்தம் பற்றித் தனிச்சிறப்புரிமை கொள்ளுமெனினும், ஒரு திணைக்கு ஒரே காலந்தான் கூறல் வேண்டுமெனும் வரையறை யில்லை. எந்தத் திணையும் தன் இயல்பற்றி அதற்குச் சிறந்துரிய தல்லாத பிறநிலம் பிற காலங்களில் நிகழ்தல் கூடுமாதலின், ஒவ்வொரு திணையும் எல்லாநிலங்களிலும் போலவே எல்லாக் காலங்களொடும் கலந்து நிகழ்வதும் கடியப்படாது என்பதும் வெளிப்படை. எனவே, ஒவ்வோரொழுக்கமும் அதற்குச் சிறந்துரிய தாகக் கூறப்பெற்ற நிலம் பொழுதுகளிலேயே நிகழும் என ஒரு தலையாக் கொள்ளல் கூடாது; உரிப்பொருள்களாகிய எல்லா ஒழுக்கங்களும், நிலமும் பொழுதுமாகிய முதற்பொருள் வகைகளில் ஒரோவொன்றைத் தத்தமக்கு இயலியைபுபற்றிச் சிறப்புரிமை கொள்ளினும், எல்லா நிலங்களினும் எல்லாப் பொழுதுகளினும் எத்திணையும் ஏற்ற பெற்றி கலந்து நிகழ்தலுங் கடியப் படாது என்பதே இச்சூத்திரக் கருத்தாதல் தெளிவாகும். இனி, இச்சூத்திரத்தில் முதற்பொருளிரண்டில் பொழுதுகூறாமல் நிலம் விதந்து கூறப் பட்டது. பொழுது போலன்றித் திணையொடு நிலம் குறிஞ்சி முதலிய பொதுப்பெயர் பெற்று மயங்குதலால் வரும் ஐயமகற்றற் பொருட்டு, திணையொடு பெயரொற்றுமையில்லாத பொழுதுகள் பற்றி அத்தகைய மயக்கத்திற் கிடனில்லையாதலின், பொழுது மயங்காமை விதந்து கூறவேண்டிற்றில்லை. இதற்கு ஒரு நிலத்து இரண்டுரிப்பொருள், அதாவது இரண் டொழுக்கம் தம்முன் மயங்குதலன்றி, இரண்டு நிலம் ஒரோ வொழுக்கத்தின்கண் மயங்குதலில்லை என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மேலும், உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது, திணை மயக்குறுதலுமென்றார், ஓருரிப்பொருளொடு ஓருரிப் பொருள் மயங்குதலும்.... இவ்வாறே காலமயங்குதலும், கருப் பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு எனச் சிறப்புக்குறிப்பும் கூட்டிவிரித்தார். இதனால் ஒரு நிலத்தொருகாலத்து ஒன்றன்மிக்க பலதிணைகள் மயங்குமென்பது கருத்தாயின், அது கூடாமை தேற்றம். அன்றி ஒருதிணை பல நிலத்தும் மயங்கும் இயல்பையே இவ்வாறு கூறினர் எனின், அது மிகையாவதோடு வேறுபாடில்லாத ஒரு மாறுபாட்டைத் தானேபடைத்து மயங்குவதுமாகும். ஒவ்வொரு நிலத்தும் அதற்குரிய வல்லாப் பிறவொழுக்கங்கள் நிகழ்தலமையும் என்பதனாலேயே, ஒவ்வோரொழுக்கத்திற்கும் அதற்குரிய நிலமே யன்றிப் பிறநிலங்களையுந் தொடர்புபடுத்திக் கூறுதல் அமைவுடைத் தென்பதும் தெளியப்படும். ஒரு நிலத்துப் பல வொழுக்கம் நிகழும் என்றபின், பலநிலத்து ஓரொழுக்கம் நிகழும் (அதாவது ஒவ்வோ ரொழுக்கத்தோடும் பல நிலத்தொடர்பு அமையும்) என்பதை விலக்குமாறில்லை.எனவே, நச்சினார்க்கினியர் கூறுவதே ஈண்டுக் கருத்தாயின், திணைமயக்குறுதலுங் கடிநிலையிலவே என்ற அளவே அக்கருத்தை விளக்கப் போதியதாகும்; நிலனொருங்கு மயங்குதலின்று எனக் கூட்டியுரைப்பது பொருட் பொருத்தமின்றி முரண்பாடும் விளைத்து மயங்க வைக்கும். இனி, ஒருப்பட்ட தலைமக்களுள் ஓரொழுக்கம் பல நிலங்களில் நிகழ்வது ஒரு காலத் தமையாது என்று கூறி, நச்சினார்க்கினியர் உரைக்கு அமைவு காட்டுவதும் பொருந்தாது. ஒரேகாலத்தும் ஒருநிலத்தும் பல வொழுக்கம் ஒருங்கு நிகழ்தலும், ஒருப்பட்ட ஒரே தலைமக்களுள் ஓரொழுக்கம் ஒருகாலத்துப் பலவிடத்து நிகழ்தலும் கூடாமை வெளிப்படை. அதனாலும் அது பொருளன்மையறிக. இதற்கு இளம்பூரணர் கூறும் பொருளாவது: ஒரு திணைக் குரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளொடு சேரநிற்றலுங் கடியப்படாது; ஆண்டு நிலம் சேரநிற்றலில்லை யென்று சொல்லுவர்; எனவே காலம் மயங்கும் என்றவாறாயிற்று என்பதே. சூத்திரத்தில் ஒரு நிலத்திற்குரிய வொழுக்கம் வேறொரு நிலத்திற்குக் கூறுதலும் கடிநிலையிலவெனத் தெள்ளத்தெளிய விளக்கி யிருக்கவும், அதற்கு மாறாக ஒருதிணைக்குரிய முதற் பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேர நிற்றல் கூடாது என முரணப் பொருள் கூறுவது அமைவுடைத்தன்று. தொல்காப்பியர் திணைமயக்குறுதல் என்றாரன்றி, திணையில் முதற்பொருள் மயங்குதல் என்று கூறினாரில்லை. ஆதலின், இளம்பூரணர் கூற்றும் இச்சூத்திரச் சொற்றொடருக்கு நேரிய பொருளன்று. திணைகளையும் நிலங்களையும் சுட்டி அவற்றினியைபு விளக்க எழுந்த இச்சூத்திரத்தில், அவற்றின் புறம்பான காலங்களை யும் கருப்பொருள்களையும் புகுத்த வேண்டிப் பழைய, உரைகாரர் இச்சூத்திரத்திற்குத் தம்முள் மாறுபடப் பலவாறு மயக்கத்திற் கிடமான பொருந்தாப் பொருள் கூறுவாராயினர். திணை மயக்குறுதற்குச் செய்யுள். கடற்கானற் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட அடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற - மடற்கானல் அன்றி லகவும் அணிநெடும் பெண்ணைத்தெம் முன்றி லிளமணன்மேல் மொய்த்து (திணைமாலை 190. செய். 56) இதில் குறிஞ்சித் திணையின் இரவுக்குறி நேரும்துறை, தனக்குரிய குறிஞ்சி நிலத்தன்றி, இரங்கற்றிணைக்குரிய நெய் தனிலத்து மயங்கியதறிக. அவ்வாறு குறிஞ்சித்திணை வந்து கலப்பினும், அதனால் நிலத்தியல் மயங்காமல் நெய்தலாகவே நிற்பது கூறப் படுதலும் காண்க. இன்னும், புலாலகற்றும் எனும் திணைமாலை (35ஆம்) வெண்பாவும் நெய்தனிலத்தில் குறிஞ்சித்திணை மயக்கம் கூறும். இனி, புன்புறவே சேவலோ டூடல் பொருளன்றால், அன்புற வேயுடையா ராயினும் - வன்புற் றதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த் திதுகாணென் வண்ண மினி (திணைமாலை 152ல். செய். 74) எனும் திணைமாலைப்பாட்டில் நெய்தற்றிணை பாலைநிலத்து மயங்குதல் அறிக. சூத்திரம்: 13 உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. கருத்து: இது ஐந்திணைகள் போலவே, அத்திணைகளின் சார்பான பிற உரிப்பொருள்களும் பல நிலங்களிலும் ஏற்றபெற்றி வந்து மயங்கும், என்று கூறுகிறது. பொருள்: உரிப்பொருளல்லன = திணைக்குரிப் பொருளே என வரையறுத்த புணர்தல் முதல் ஐந்திணையல்லாத உரிப்பொரு ளான தலைமக்கள் ஒழுக்கமாவன பிற; மயங்கவும்பெறும் = எந்நிலத்தும் வந்து கலத்தலுமுண்டு. குறிப்பு: புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் திணைக்குரிப்பொருள் ஐந்துமன்றி அவற்றின் சார்பாய் அவ்வுரிப் பொருள்களோடு அமைத்துக் கோடற்பாலனவாய், பிற்றைச் சூத்திரங்கள் கூறும் கொண்டுதலைக் கழிதல் பிரிந்தவ ணிரங்கல், கலந்த பொழுது. காட்சி முதலியனவும், ஐந்திணை உரிப்பொருள்களைப் போலவே ஒரு நிலத்துக்குத் தனியுரிமை யின்றி எல்லாநிலத்தும் வந்து மயங்கவும் பெறும். ஈற்றேகாரம் அசைநிலை. திணைக்குரிப் பொருள்களாக விதந்து கூறும் புணர்தல் முதலிய ஐந்தும் எந்த நிலத்தும் வந்து மயங்குதல் மேற் சூத்திரத்திற் கூறப் பட்டது. பேரளவில் அவ்வைந்தனுளடங்காமல், இயல்பற்றி உரிப்பொருளா யமைவன பிறவுமுள என்பதை இவ்வியல் கொண்டு தலைக்கழிதல் கலந்தபொழுதும் என்ற சூத்திரங்களிற் சுட்டுவதால், அத்தகைய பிற அகவுரிப் பொருள்களும், விதந்தோதிய ஐந்திணை யுரிப்பொருள்கள் போலவே, வரையறையின்றி யெந்த நிலத்தும் வந்து மயங்குதல் கூடும் என்பதை இந்தச் சூத்திரம் விளக்குகிறது. ஈண்டு உரிப்பொருளல்லன என்பது முன்னைச் சூத்திரத்தில் திணைக்குரிப்பொருள் என விதந்தோதிய தலைமக்களொழுக்கம் ஐந்து மல்லாத பிறவெனக் கொள்ளல் வேண்டும். உரிப்பொரு ளல்லன என்பதை அல்லன உரிப்பொருள் எனச் சொன்மாற்றி, முன்விதந்தோதிய ஐந்துமல்லாத உரிப்பொருளாவன எனக் கொள்ளுவதே ஈண்டுப் பெரிதும் பொருத்தமுடைத்தாம். இனி, இவ்வாறு கொள்ளாமல், உரிப்பொருளல்லாத கருப் பொருளும் முதற்பொருளும் பிறதிணையோடு சேரும் என்று இளம்பூரணர் பொருள் கொள்வதும் பொருந்தாது. ஏனெனில், திணைமயக்குறுதலும் என்ற சூத்திரத்தால் முதற் பொருள் மயக்க மும் எந்நில மருங்கிற் பூவும்புள்ளும் என்பதால் கருப்பொருள் களின் மயக்கமும் முன் தனி வேறு சூத்திரங்களாற் கூறியிருத்தலின், அவற்றையே இச்சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறினாரென்பது கூறியது கூறல் என்னுங் குற்றத்திற்கு அவரையாளாக்கும். உரிப்பொருள் என்றோதிய ஐந்திணையு மல்லாத கைக் கிளை பெருந்திணையும் நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் என்னும் நச்சினார்க்கினியர் உரையும் அமைவுடைத்தன்று. கைக் கிளை பெருந்திணைகளுக்கு நிலம் பொழுதுகளில் எதுவுமே தனியுரிமை கூறாததால், விலக்கில்லா நிலம்பொழுதுகளில் அவை வந்து மயங்குமெனச் சுட்டுதல் மிகையாகும். அன்றியும் மேல் இரண்டாஞ் சூத்திர முதல் கீழ் 42ஆம் சூத்திரமுடிய நிரலே நடுவணைந் திணைகளின் இயல்புகளையே விளக்கிப், பிறகு 43 முதல் 49 வரையுள்ள சூத்திரங்களில் சில பொதுவியல்புகள் கூறி, அவற்றின் பின் இவ்வியலிறுதியில் 50, 51ஆம் சூத்திரங்களில் கைக்கிளை பெருந்திணைகளை விளக்கி முடிக்கும் இந்நூலார் ஈண்டு அன்பினைந் திணையின் இயல்புகளுக்கிடையே இன்றியமையாத் தொடர்பு எதுவுமின்றி இறுதியிற் கூறும் கைக்கிளை பெருந்திணை களையிழுத்து அவற்றின் இலக்கணம் கூறுமுன் மயக்கங் கூறினா ரெனக் கொள்ளுதல் எவ்வாற்றானுஞ் சாலாமையறிக. ஐந்திணையல்லாப் பிற உரிப்பொருள் பலநிலத்து மயங்குதற்குச் செய்யுள்: கொண்டுதலைக்கழிதல் அத்தகைய பிற உரிப்பொருளாத லுண்டென அடுத்த பின் சூத்திரம் கூறுகிறது. அவ்வுரிப்பொருள் புணர்தற்குரிய குறிஞ்சி நிலத்தில் மயங்குவதாகக் கீழ்வரும் பழம் பாட்டுக் கூறுதல் காண்க. நினையாய், வாழி, தோழி! எனும் பூதந்தேவனார் குறும்பாட்டில், .............. புலிப்பகுவா யேற்றை .............விடர்முகைக் கோடை ஒற்றியகருங்கால்வேங்க வாடுபூஞ்சினையிற்கிடக்கும் உயர்வரநாடனொடுபெயருமாறே”(குறுந். 343) புலி வேங்கைச் சினையிற் கிடக்கு முயர்வரை நாடாகவே நிலம் குறிஞ்சி; நாடனொடு பெயர்தல் கொண்டுதலைக் கழிதலா முரிப்பொருள். இன்னும் ஊஉரலரெழ எனும் பெருங்கடுங் கோவின் பாட்டு மதுவாதலறிக. உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாற் கரும்புநடு பாத்தி யன்ன பெருங்கழிற் றடிவழி நிலைஇய நீரே (குறுந்.262) இதில், புணர்தற்குரிய மலையிற் றலைவனுடன் போகும் தலைவி களிற்றடி வழி நிலைஇய நீரைத் தலைவனோ டுண்ணுதலை விரும்பும் ஒழுக்கம் மயங்குதலறிக. இனி, கொண்டுதலைக்கழிதல், அன்னாய் வாழி வேண்டன்னை, நம்படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய, அவர்நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே (ஐங். 203) எனும் ஐங்குறுநூற்றுப் பாட்டில் குறிஞ்சி நிலத்தும், ஒன்றானு நாம்மொழிய லாமோ செலவுதான் பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச் செலற்கரிதாச் சேய சுரம் (திணைமாலை 150ல் செய். 87) எனும் திணைமாலை வெண்பாவில் பாலைநிலத்தும், வந்து மயங்குதல் காண்க. இதுபோலவே மற்றைய ஐந்திணையிலடங்கா உரிப்பொருள் அனைத்தும் எல்லாநிலத்தும் மயங்குமென்றறிக. சூத்திரம்: 14 புணர்தல் பிரித லிருத்த லிரங்கல் ஊட லிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. கருத்து: இச்சூத்திரம் அகப்பொருட் பகுதியிற் சிறந்த அன்பினைந்திணைக்கு நேருரிமைகொண்ட ஒழுக்க வகைகளை உணர்த்துகிறது. பொருள்: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடலிவற்றின் நிமித்த மென்றிவை = கூடுதல், பிரிதல், பிரிவிடையாற்றி யிருத்தல், ஆற்றாதிரங்கல், புலவி என்ற ஐந்தும் அவற்றிற் கியைபுடைய நிமித்தங்களுமே; தேருங்காலைத் திணைக்குரிப்பொருளே = ஆராயும் பொழுது அன்பினைந்திணையெனற்குச் சிறந்துரிய பொருள்களாம். குறிப்பு: இதில் ஈற்றேகாரம் தேற்றமாகும். முதல் கரு உரிப் பொருள்களனைத்தும் அகத்திணைப் பகுதியாகவே அமைத்துக் கோடல் தவறன்றாயினும், திணையென்பது ஒழுக்கங்கண்ணிய பேராதலால் அன்பினைந்திணை யெனற்குப் புணர்தல் பிரிதல் முதலிய தலைமக்கள் ஐந்தொழுக்கங்களே சிறப்புரிமையுடைய பொருள்களாகும் என்பதை இச்சூத்திரம் விளக்குகிறது. நிமித்தமாவது ஒவ்வோரொழுக்கத்தை யடுத்து முன்னும் பின்னும் முதலும் முடிவுமாகத் தொடுத்து அவ்வொழுக்கத்திற்கு இன்றியமையாத் தொடர்புடையனவற்றைச் சுட்டுவதாம். புகுமுகம் புரிதல், நகுநயம் மறைத்தல் முதலியன புணர்தலுக்கு முன்னெழும் நிமித்தங்களாம். அணிந்தவை திருத்தல், பாராட்டெடுத்தல் முதலியன புணர்வின் பின்னர் நிகழும் நிமித்தங்களாம். இவ்வாறு தொடர் பணிமை யற்றன நிமித்தமாகா. அன்னபிறவும்... நிமித்தமென்ப என்னும் மெய்ப்பாட்டியல் 19ஆம் சூத்திரமும் இதை வலியுறுத்தும். இவ்வாறே பிறதிணைகளுக்கும் நிமித்த வகைகளை ஏற்ற பெற்றி அமைத்துக் கொள்க. நிறுத்தமுறையானே முன்னர் முதற்பொருளைக் கூறினவர் அதனை யடுத்துக் கருப்பொருளைக் கூறாமல் அதற்குமுன் ஈண்டுரிப் பொருள்களைக் கூறுவதேனெனிற் சொல்லுவன்: அகப் பகுதியில் முதற்பொருள் உரிப்பொருள்கள் அல்லாதன அனைத்தும் கருப் பொருள்களா யமைதலின், முதலில் வரையறைப்பட்டவற்றை விளக்குவான் றொடங்கி, நிலம்பொழுதெனும் இரண்டே வகையு ளடங்கும் முதற்பொருள் கூறினதும், அளவறுதிப்படாக் கருப் பொருள்களைக் கூறுமுன், ஐந்து ஒழுக்கத்தளவில் அடங்கும் உரிப் பொருளை இடையிற்கூறியமைத்தபெற்றி உய்த்துணர வைத்தார். அகவகைச் செய்யுள்களனைத்தும் இவ்வைந்திணையே கூறுதலின், எடுத்துக்காட்டு ஈண்டைக்குவேண்டா. சூத்திரம்: 15 கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவ ணிரங்கலும் உண்டென மொழிப ஓரிடத் தான. கருத்து: இது, மேலைச்சூத்திரத்தில் திணைக்குரிப் பொரு ளென விளக்கிய ஐந்தனுளடங்காதனவாய்த், தம்மியல்பால் அகத் திணைகளுக் குரிப்பொருள்களாய் ஆட்சி பெறும் பிற சிலவும் உண்டெனக் கூறுகிறது. பொருள்: கொண்டுதலைக் கழிதலும் = களவில் தலைவன் தலைவியைத் தன்னுடன் கொண்டுசேறலும்; பிரிந்தவணிரங்கலும் = அவ்வாறுடன் கொண்டு செல்லுங்கால் தலைவியின் தமர்வரவு முதலிய காரணங்களால் பிரியநேரின் ஆண்டப் பிரிவுபற்றி யிரங்கலும்; உண்டென மொழிப = ஏற்றபெற்றி இவை உரிப் பொருள்போல வருதலும் உண்டு என்று கூறுவர் (புலவர்); ஓரிடத் தான = அவை அகத்திணைக் கியைபுடைய ஒரோவிடத்து. குறிப்பு: கொண்டுதலைக் கழிதல் என்பதனால், தலைமக்கள் தம்முள் அது பிரிதலாகாது; நேரே புணர்தலும் அன்றாம். அது நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன் கொண்டு பெயர்தலின் பிரிதலினடங்காமையானும், வேறு ஓதப் பட்டது எனும் இளம்பூரணர் குறிப்பு ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இனி, அதுவே போல் பிரிந்தவணிரங்கல் என்பதும் பிரிந்தவர் இரங்கல் என்னுந்திணைக்குரிப் பொருளின் வேறுபட்டது என்பதை விளக்குதற்காகவே, கொண்டுதலைக் கழியுமிடத்துப் பிரிய நேர்ந்துழி அவண் இரங்கல் என விதந்து விளக்கப்பெற்றது. இச்சூத்திரம் சுட்டும் இரண்டும் அகத்துறைகளில் உரிப்பொருள்களாகிய தலை மக்களினொழுக்கமாகவே ஆளப்பெறுதலானும், இவை புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற திணைக்குரிப்பொருள் களைந்தனுள் எதனிலும் அடங்காமையானும், அவற்றினின்றும் வேறு பிரித்து, இச்சூத்திரத்தால் ஒரோவிடத்து உரிப்பொருளாதற்கு உரியன இவையென்று தெளிக்கப்பட்டன. இதுவே தொல்காப்பியர் கருத்தென்பது பின் இவ்வியலில் ஒன்றாத்தமரினும் எனும் (41ஆம்) சூத்திரத்தில், இடைச் சுரமருங்கி லவள்தமரெய்திக் கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்தி என்றவர் விளக்குதலானுமறிக. ஈண்டு இளம்பூரணர் கொண்டுதலைக் கழிதலைப் பாலைக் கண்ணும் பிரிந்தவணிரங்கலைப் பெருந்திணைக் கண்ணும் வரும் உரிப்பொருள்களாக்கிப் பொருள் கூறுவர். உடன்கொண்டு போதல் (அதாவது கொண்டு தலைக்கழிதல்) பிரிவினடங்காது என இவரே கூறியபின், அது பிரிவாம் பாலைக் கண்வருமெனல், தன்னொடுதானே மாறுகொளக் கூறுவதாம். தலைமக்கள் தம்முட் பிரிந்திரங்குவது நேரிய நெய்தற்றிணைக் குரிப்பொருளாகும். பிரிந்திரங்கல் எனைத்தானும் பெருந்திணைப்பாற் படுதலில்லை, அது ஒத்தகாதலொழுக்கமாதலின். இனி, இவ்விரண்டையும் தந்நிலையில் உரிப்பொருளாக் காமல், திணைமயக்கம் என்று கொண்டு பாலைத்திணையுள் குறிஞ்சியும் நெய்தலுமாகிய பிறதிணைகளின் மயக்கம் கூறுவதாகக் கொள்ளும் நச்சினார்க்கினியர் உரையும் பொருந்தாது. திணை மயக்குறுதல் என்னுஞ் சொற்றொடரால் மயங்கி, ஒருதிணையுள் பிறதிணைகள் ஒருங்கு வந்து மயங்குமெனக் கொள்ளுதல் எவ்வாற் றானும் பொருந்தாது. தலைமக்களிருவருள் ஒருகாலத்தோரொழுக்கம் நிகழ்வதன்றிப் பலவொழுக்கம் ஒருகாலத்துக்கலந்து மயங்கு மென்பது இயல்பன்றாகலின், அதற்கிலக்கணமும் வேண்டப்படா. ஒரு நிலத்திற் பலவொழுக்கங்களும் ஓரொழுக்கம் பலநிலங்களிலும் வேறுபட்ட காலங்களில் நிகழுமென்பதையே முன் திணைமயக்குறுதல் என்னுஞ் சூத்திரத்தால் விளக்கினாரன்றி, ஒருகாலத்துப் பல வொழுக்கந் தம்முள் மயங்குமென்று தொல்காப்பியர் யாண்டும் கூறிலர், அஃதியல்பன்மையின். அதனால் இச்சூத்திரம் திணைமயக்கம் கூறுவதன்று, ஒருசார் உரிப்பொருளாம்பிற சில கூறுதலே நுதலிற்று என்பது தெளியப்படும். அன்றியும் இதில் திணைமயக்கம் கூறுதலே அவர் கருத்தாயின் இதனையும் இதுபோன்ற திணைமயக்கம் நுதலும் பிறசூத்திரங்களையும் திணைக்குரிப்பொருள் கூறுஞ் சூத்திரத்திற்குமுன் திணைமயக்குறுதலும் உரிப்பொருளல்லன என்பவற்றோடு இயைபு நோக்கி இணைத்துக் கூறியிருப்பர். அவ்வாறன்றி, திணைக்குரிப்பொருள் வகை ஐந்தையுங் கூறுஞ் சூத்திரத்திற்குப் பின் இது கூறப்படுதலால், இதுவும் அவ்வைந்தனுளடங்காத பிற உரிப்பொருள் வகை விளக்கு வதையே நுதலிற்றென்பது தேற்றம். ஈண்டு உம்மை யிரண்டும் எண்ணும்மை. கொண்டுதலைக் கழிதலுக்குச் செய்யுள், முன் உரிப்பொரு ளல்லன எனும் (13ஆம்) சூத்திர உரைக்குறிப்பில் காட்டிய பாட்டுக்களைக் காண்க. பிரிந்தவணிரங்கலுக்குச் செய்யுள்: நுமர்வரி னோர்ப்பி னல்லது, அமர்வரின் முந்நீர் மண்டில மனைத்து மாற்றாத் தெரிகணை விடுத்தலோ விலனே: அரிமதர் மழைக்கண் கலுழ்வகை எவனோ? இப்பழைய உரை மேற்கோட் செய்யுளில், தமர் வரவு கருதி அதனானேரும் பிரிவினுக்கஞ்சி உடன்போக்கில் தலைமகளிரங்கத் தலைவன் தேற்றுங் குறிப்பறிக. ஏதங் கருதா திளையோய்நீ என்னோடு போதரு வாய்கொல் புகலென்ற - காதலர்பின் வந்தேனை விட்டு மறைந்தார்; எமர்வெறுத்தேற் கெந்தநிலை எய்து மினி! எனும் வெண்பாவில், உடன்போக்கிடையில் தொடருந் தலைவி தமரை அவள்முன் இடருறப் பொருவதை வெறுத்துத் தலைவன் மறைய, தற்கொளவந்த தமரைமறுத்துக் கற்பு வற்புறுத்துந் தலைவி யினிரக்கம் கூறப்பெறுதல் காண்க. சூத்திரம்: 16 கலந்த பொழுதுங் காட்சியு மன்ன. கருத்து: இதுவும், ஐந்திணை வகுப்பில் அடங்காதனவாய் அகப்பகுதியில் உரிப்பொருள் ஆவன இன்னுஞ் சிலவற்றைக் கூறுகின்றது. பொருள்: கலந்த பொழுதும் = ஒத்த தலைமக்கள் தம்மிடைப் பாலதாணையின் முதல் எதிர்ப்பாட்டில் நிகழ்வும்; (கலந்த) காட்சியும் = அவ்வாறு தலைப்பட்டார் தம்முள் அறிவுடம் படுத்தற்குக் கூட்டிக் குறிப்புரைக்கும் நாட்டமும்; அன்ன = (மேலைச்சூத்திரத்திற் கூறியது போல) ஏற்புழி அகவொழுக்கத்திற்கு உரிப்பொருளாதற்குரியவாகும். குறிப்பு: உம்மை யிரண்டும் முன்னைச் சூத்திரத்தில் ஓதியவற் றுடன் வைத்தெண்ணத்தகும் என்பதைக் குறிப்பதால் இறந்தது தழீஇய எச்சவும்மை. அன்ன என்பது, மேற்கூறிய கொண்டு தலைக் கழிதல் பிரிந்தவணிரங்கல் என்பனவற்றை இங்குக் கூறிய கலந்த பொழுதும் காட்சியும் உரிப்பொருளியல்பால் ஒப்பன என்பதைச் சுட்டும் குறிப்பு முற்றாம். கலந்த என்னும் எச்சத்தைக் காட்சி யென்பதனோடுங் கூட்டுக. ஈண்டுப் பொழுது காலம் காட்டாது, தலைப்பட்டுழி நிகழ்ச்சிகளுக்கு ஆகுபெயராம். முதற்பொருளான காலம் முன்னரே கூறி முடிந்ததால் அது மீண்டும் கூறல் வேண்டா. இங்குக், கலந்தபொழு தென்பது பின்களவியல் இரண்டாஞ் சூத்திரம் கூறும் தலைமக்களின் தலையெதிர்ப்பாட்டையும், காட்சி என்பது அக்களவியல் ஐந்தாஞ் சூத்திரம் கூறும் அறிவுடம் படுத்தற்குக் குறிப்புநாடும் நோக்கத்தையும் முறையே குறிக்கும். கலத்தல் என்பது தலைப்படுதல் என்ற பொருளதாகும். ஒருமூவேங் கலந்த காலை என்னுங் கம்பரடியும், கலந்து போர்செய்தா ரோர்சிலர் என்ற கந்தபுராண அடியுங் காண்க. கலப்பும் என்னாது கலந்த பொழுதும் என்றது முதலெதிர்ப்படுங்காலத்து நிகழும் காட்சி, ஐயம், துணிவு முதலிய பலவும் அடங்குதற்பொருட்டு. இச்சூத்திரத்தில் காட்சியென்பது முதலிற் கிழவனுங் கிழத்தியுந் தலைப்பட்டுக் காண்பதன்று; அது கலந்தபொழுது என்பதில் அடங்கும். எதிப்பட்ட தலைமக்களிடை அவர் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை நாடும் நோக்கத்தையே ஈண்டுக் காட்சியென்றார். பின் களவியலில் விளக்கப்படுமிவை யிரண்டும் புணர்தல் முதலிய ஐந்திணைகளுள் எவையுமாகா வெனினும், அகத்துறைப்பாட்டுக்களுள் இவையும் உரிப்பொருள் களாக ஆட்சி பெறுவதால், ஐந்திணைகளுள் அடங்காத உரிப்பொருள் உண்மைகூறு மிவ்விடத்திலிவை இயைபு பற்றிக் குறிக்கப்பட்டன. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்று முடைத்து எனுங்குறளில் தலைமக்களின் முதற்றலைப்பாட்டில் இருவரும் தம்முள் அறிவுடம்படுத்தற்குக் குறிப்பறிய நாட்டமிரண்டும் கூட்டியுரைக்கும் பெற்றி விளக்கப்படுதல் காண்க. முன்னலும் முயற்சியுமின்றித் தாமே தமியராய்த் தலைப்படல் கலந்த பொழுதாகும்; தலைப்பட்டவர், ஒருவர் மற்றவர் குறிப்பறியநாடும் நோக்கு கலந்த காட்சி (அறிவினாட்டம்) ஆம் குறிக்கொண்டு நோக்குந்தலைவன், தலைமகள் குறிப்புநோக்கா லவள் கருத்தும் தன்னதேபோற் காதல் கண்ணியதெனக்கண்டு தனக்குத்தான் தேற்றுமவன்கூற்றில், ஐயமும், அச்சமும் தெளிந்து மகிழ்தலும் ஒருங்கு காணக் கிடக்கின்றன. முதலில் அவள்கருத் தறியாமையா லவன் அஞ்சுவதும், அச்சமகற்று மவள் அளிநோக்கும், அதன்மேலிருவருமறிவுடம்பட்டுள்ளம் புணர்ந்துழி அவனவள் நலம் பாராட்டலும் ஆகிய மூன்று மினிது விளங்கும். கூற்றமோ என்றதாலச்சமும், கண்ணோ என்றதால் கண்ணோடுமவள் காதல் நோக்கும், பிணையோ என்றதால் அறிவுடம்பட் டுளங்கலந்துழி அவனவளைப் பாராட்டலும் இனிதமையச் சிறுகுறளிற் செறித்த செவ்வி வியத்தற்குரித்து. அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு என்பதிலும், அணங்கா லையவச்சமும், மாதர் என்பதாலறிவுடம் பாட்டுத் தெளிவும், மயில் என்பதால் பாராட்டு மொருங்கமை தலறிக. மயில்கொல், மடவாள்கொல், மாநீர்த் திரையுட் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் குயில்பயிருங் கன்னி யிளஞாழற் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருத்துமென் னெஞ்சு (திணைமொழி. 49) இத்திணைமொழி வெண்பாவும், நெய்தனிலத்துக் கலந்த பொழுதும் காட்சியுமாய உரிப்பொருள் மயக்கம் கூறுகிறது. சூத்திரம்: 17 முதலெனப் படுவ தாயிரு வகைத்தே. கருத்து: இஃது, உரிப்பொருள் கருப்பொருள்கள் போல விலக்குகள் வேண்டி விரியாமல், முதற்பொருள் நிலம்பொழு திரண்டினுள் அடங்குமென்பதை வலியுறுத்தல் நுதலிற்று. பொருள்: முதலெனப்படுவது = முதற்பொருள் என்று சிறப்பித்துக் கூறப்படுவது. ஆயிருவகைத்தே = மேலே நாலாவது சூத்திரத்தில் கூறியாங்கு நிலம்பொழுதிரண்டி னியல்பெனும் இரண்டே வகைகளை யாண்டும் உடையதாகும். குறிப்பு: ஈற்றேகாரம் தேற்றங்குறிக்கும். முதல், கரு, உரி என்ற அகப்பொருட் பகுதிகள் மூன்றனுள் உரிப்பொருளாவன ஐந்தொழுக்கமும், அவைபோல அகத்துறையிற் சிறந்துரிய தலை மக்களின் காதலொழுக்கங்கள் பிற சிலவுமாக வகைபெறு மென்பதை இந்நூலார் மேற் சூத்திரங்களில் விளக்கினார். அது போலவே கருப்பொருள்களும் பலவகைப்படுமென்பதை இனி வருஞ் சூத்திரத்திற் கூறுவர். இவையிரண்டும் போலாது, யாண்டும் முதற்பொருளாவன நிலமும் பொழுதுமென்றிரண்டே வகைகளுள் அடங்குமென்பதை இயைபு நோக்கி இவ்விடைச் சூத்திரத்தால் ஐயமற வரையறுத்து வற்புறுத்துகிறார். இஃது இறந்தது காத்தல், கூறிற்றென்றல், முடிந்தது காட்டல் என்னும் உத்திகளால் அமையு மாதலின், கூறியது கூறலாகாது. முதல் கரு உரி என முன்னே முறைப்படுத்திக் காட்டியவர் முதற்பொருள் வகையியல்புகளை முதலிற் கூறி, அதையடுத்துக் கருப்பொருள் கூறாமல் உரிப்பொருள்களின் இயல் கூறினார், இவையிரண்டும் அளவு பட்டமையும் இயைபு நோக்கி. அவ்வியைபை வலியுறுத்தும் பொருட்டே ஈண்டு இச்சூத்திரத்தால் முடிந்தது காட்டித் தந்துணிபுரைத்தார். உரிப்பொருளனைத்தும் தலை மக்களின் அன்பினைந்திணை வகைகளில் அமைந்தடங்கும். முதற்பொருள்களும் நிலம்பொழுதெனும் இரண்டே வகையிலடங்கும். இவையிரண்டும் போலாது கருப்பொருள்வகைகள் எண்ணிறந்து ஏற்றபெற்றி விரியுமியல்புடையவாதலால், அளவுபட்ட இவையிரண்டும் முற்கூறி, இவற்றின்பின் இவையல்லாத அளவிறந்தனவாய் வரும் பலவும் கருப்பொருள் வகைகளாகு மென்பது விளங்கக் கருப்பொருளியல் இறுதியிற் கூறுகின்றார். இவ் அளவு முறையான் வைப்பு முறையும் அமைகின்றது. முதற்பொருள் இரண்டே வகைகளுள் அடங்குவதாகலின் முதலில் வைக்கப் பட்டது. உரிப்பொருள்கள் அகவொழுக்கங்களுள் சிலவாக ஐந்து வகைகளில் அடங்குதலால் அவற்றை முதற்பொருளின் பின்னர்க் கூறி, அவ்விரு வகை யளவானும் அடங்காமல் பலபடவிரியும் கருப்பொருள்களை அவ்விரண்டின் பின் அமைத்துக் கூறினார். சூத்திரம்:18 தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. கருத்து: இது முதல் உரிப்பொருள்களில் அடங்காவாய் அகத்திணைக்கு உறுப்பாம் கருப்பொருள்வகை உணர்த்துகிறது. பொருள்: தெய்வம் = வழிபடு கடவுட்பகுதி; உணாவே = ஊண்வகை; மா = விலங்குவகை; மரம் = மரஞ்செடிகொடி வகை; புள் = பறவை வகை; பறை = அவ்வந்நிலங்களுக்குரிய பறைவகைகள்; செய்தி = தொழில்வகை; யாழின் பகுதியொடு தொகைஇ = யாழ் வகைகளோடு கூட்டி; அவ்வகை பிறவும் = அவைபோல அகத் திணைகளுக்குச் சார்பாக வகைப்படுவன மற்றையனவும்; கருஎன மொழிப = கருப்பொருள்கள்கள் என்று கூறுவர் அகப்பொருணுலார், குறிப்பு: முன்னைச் சூத்திரக் குறிப்புரையில் சுட்டியாங்கு, முதலும் உரியுமல்லாத அகப்பொருள்களுள் அகத்திணைக்குக் கருவாய் அமைவன யாவும் கருப்பொருள்கள் என்பர் அகப் பொருள் நூலார். இச்சூத்திரத்தில் அளவற்ற கருப்பொருள்வகை களனைத்தையும் வகுத்து நிறுத்தல் கூடாமையின், சிறந்தன சில சுட்டி அவ்வகை பிறவும் கரு என்று கூறி மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடியவைத்தார் தொல்காப்பியர். சூத்திரம்: 19 எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். கருத்து: இது கருப்பொருண் மயக்கமும் கடிதலில்லை யென்பது கூறுகின்றது. பொருள்: எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் = எந்த நிலச் சார்பில் கூறப்படும் பூ, புள் முதலிய கருப்பொருள்களும்; அந்நிலம் பொழுதொடு வாராவாயினும் = அவ்வக் கருப்பொருட்குச் சிறந்துரிய நிலத்தோடும் பொழுதோடும் இயைந்து வந்திலவாயினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும் = கூறப்பட்ட ஒழுக்கநிகழிடத் தொடு பொருந்த அதற்கேற்ற பயன் தருவனவாய் அமையும். குறிப்பு: பூவும் புள்ளும் என்பவற்றுள் உம்மை எண்ணும்மை. வாராவாயினும் என்பதிலும்மை யெதிர்மறை சுட்டும்; கருப் பொருள்கள் பெரும்பாலும் தத்தமக்குரிய நிலம் பொழுதொடு இயைந்து வருதலே சிறந்த முறை, ஒரோவிடத்து மாறிவரினும் வந்த இடத்தொடு பொருந்தப் பயன் தருவதால் கடியப்படாமல் அமைத்துக் கொள்ளப்படும் எனும் பொருட்டாதலின். உரிப்பொருள்களைப் போலவே கருப்பொருள்களும் முதற் பொருள்களான நிலம்பொழுதுகளின் வகைகளில் இயைபுநோக்கி ஏற்றபெற்றி ஒரோவொன்றிற்கே சிறப்புரிமையுடன் பொருந்து வனவாகும். நிலம்பொழுது வகைகளின் பொருத்தம் நோக்கி அவ்வவற்றிற்குரிய கருப்பொருள்களமையக் கூறுவதே பெருவழக்காம். எனினும், ஒரோவிடத்து நிலம்பொழுதுகளுக்கு நேருரிமையல்லாத திணைக்குரிய வொழுக்கங்கள் மயங்கக்கூறுவது புலனெறி வழக் கென்று மேலே 12, 13 ஆவது சூத்திரங்கள் கூறினதால், அவ்விடங் களில் தம்முளியைபின்றி மாறுபட்ட முதலுரிப் பொருள்களில் எதற்கியையக் கருப்பொருள்களின் அமைவு கருதப்படுமென்ற ஐயம் எழுவதியல்பு. அவ்வையமகற்ற ஈண்டு இச்சூத்திரம் எழுந்தது. நிலம் பொழுதுகளோடு பொருந்தக் கருப்பொருள் கூறுவது பெருவழக்கிற்றாயினும், பயன்நோக்கி அகத்திணையிற் சிறந்த ஒழுக்கங்களுக்கியைய நலந்தருவனவற்றை அமைத்துக் கோடல் பாடல்சான்ற புலனெறிவழக்கேயாம் என்பதை இச்சூத்திரம் வலியுறுத்துகிறது. பாடலுட் பயின்றவை நாடுங்காலை முதலிற் கருவும் கருவில் உரியுமே முறை சிறந்தன எனுந் தமிழ்மரபை முன் மூன்றாஞ் சூத்திரத்துக் கூறினராதலின், நிலம்பொழுதுகளிலும் சிறந்த உரிப்பொருளொழுக்கத்திற்குப் பொருந்தவரும் கருப் பொருள்கள் முதற்பொருளுக்கியையாவிடத்தும் கடியப்படா என்று இதனால் இந்நூலார் அமைவுகாட்டி வற்புறுத்தினார். மாயோன்மேய எனும் முன்னைச் சூத்திரத்தில் நானிலங்கள் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் திணைப்பெயரே கொள்ளும் என்றமைத்ததும் அகத்துறைகளில் திணைக்குரிய பொருள்களான ஒழுக்கங்களே சிறப்புடையவாதல் பற்றியேயாம். ஆனால் ஒரு நிலத்திற் பிறிதொழுக்கம் நிகழ்வதாய்ப் புலனெறி வழக்கஞ் செய்யுமிடத்து அவ்வந்நிலத்தொடு இயற் பொருத்த மில்லாத கருப்பொருள்களைத் திணைநோக்கிக் கூறநேரின், நிகழுமொழுக்கத்துக்கு அக்கருப்பொருள்கள் ஏற்புடையனவாய் அமையும் பயனுடைத்தாதல் வேண்டுமென்று இந்நூலார் ஈண்டு ஒப்பக்கூறியமைத்தார். காடு, மலை, ஊர், கடல் என்பவற்றுள் கூறுவது யாதாயினும் அதற்கியையப் பொருத்தமுடைய கருப்பொருள் களமையக் கூறுதலொன்று, அன்றி அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணைக்குப் பொருந்த அமைவதொன்றாம். கருப்பொருள்கள் தமக்குரிய நிலம் பொழுதுகளோடு இயைய வாரா விடங்களில், அவ்வந்நிலத்து நிகழும் ஒழுக்கத்தோடு அமையும் பயனுடையவாதல் வேண்டும். ஈண்டு நிலத்தின் பயத்த என்பது நிகழும் ஒழுக்க நிலத்தைக் குறிக்கும். அஃதாவது, அந்நிலத்தில் நிகழ்வதாய்க் கூறப்படும் திணையைச்சுட்டும். (நெய்தற்) கடற் கருப்பொருள்களைக் காட்டொடு சேரக்கூறுமிடங்களில், அப் பொருள்கள் காட்டிற்குரிய பயன்தருமென்பது இச்சூத்திரக் கருத்தன்று; காட்டில் நெய்தற்றிணை நிகழுமிடத்துக் காட்டிற்குரிய வல்லாக் கருப்பொருள்கள்வரின், அவை ஆங்கே நெய்தற்றிணைக் கேற்பனவாய் அமையக் கூறுவது புலனெறி வழக்காம் என்பதே இச்சூத்திரம் நுதலிய பொருளாகும். பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி விரவுமல ரணிந்த வேனிற் கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன் றன்னையிவ ளுயிரே (ஐங்குறு. 367) இதில், பாலைக்குரிய வேனிற்காலத்து, முல்லைக் கான்யாற்றில், புணர்வுத்திணையில், பாலைக்கோங்கின் பசுமலரோடு குறிஞ்சி வேங்கைப்பூவும் விரவிப் புணர்ந்து பிரிந்தோர் ஒழுக்கொடு பொருந்தவந்த செவ்வியும் வாய்ப்பும் திகழ்வது காண்க. சூத்திரம்: 20 பெயரும் வினையுமென் றாயிரு வகைய திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே. கருத்து: இது, கருப்பொருள்களோடு அடைவுடைய அகத் திணைக் குரியரான அவ்வந் நிலமக்களின் பெயர்ப்பாகுபாடு கூறுகிறது. பொருள்: திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே = ஒவ்வோ ரொழுக்கத்தொடும் பொருந்திய முல்லை முதலிய நிலங் களில் புலனெறி வழக்கில் அகத்திணைக்குரியராய்க் கூறப்படும் மக்கட்பெயர்கள்; பெயரும் வினையுமென்றாயிருவகைய = அவ்வந்நிலத்தானமையும் பெயர்ப்பெயரும், அந்நிலத்து மக்களின் தொழிலான் அமையும் வினைப்பெயரும், என்று அவ்விரண்டு கூறுபாட்டினையுடையவாகும். குறிப்பு: ஈற்றேகாரம் அசைநிலை. பெயரும் வினையும் என்பவற்றுள் உம்மை எண்ணும்மை. திணைநிலை என்பது ஆகுபெயராய்த் திணைநிலையினரைக் குறிக்கும். நானிலங்களினும் உள்ள மக்கள், அகத்திணைக்குரியராய்ச் செய்யுளிற் கூறப்படுங்கால், முல்லை முதலிய அவ்வத்திணை நிலங்களுக்குரிய இயல் இயல்புடைய பெயர் கொள்ளுதல் ஒன்று; அவ்வாறன்றித் தத்தம் தொழிற்கியைபுடைய பெயர் கொள்ளுதல் ஒன்று; அவ்வாறன்றித் தத்தம் தொழிற்கியைபுடைய பெயர் கொள்ளுதல் ஒன்று. இவ்விருமுறைகளே தமிழகத் தொல்லை மரபொடு அடைவுடையவாகும். தொல்காப்பியர் காலத் தமிழுலகில் தமிழரிடைப் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுடன் வேறுபாடுடைய சாதிவகுப்புக்கள் கிடையா. அதனால் அக்காலத் தமிழ் மக்கள் தத்தம் நிலத்துக்கேற்றாங்கு ஆயர், குறவர், உழவர், மறவர் என்றழைக்கப் பட்டார்கள். இனி, ஒரு நிலத்துள்ளார் அந்நிலத்திற்குரிய தொழில் மேற் கொள்ளாது பிறிது தொழில் கையாளுவராயின், அவரவர் செய் தொழில் வேற்றுமையால் தொழில் குறிக்கும் ஏற்புடை வினைப் பெயர்களாலும் அழைக்கப்படுவர். நுளைஞர், பரதவர் என்பன நெய்தனிலஞ்சுட்டிய மக்கட்பெயர். வலையர், உமணர் என்பன நிலஞ்சுட்டாது, வலைவீசிப் பிழைக்குந் தொழிலுடையாரையும், உப்பு உண்டாக்கி விற்கும் தொழிலுடையாரையும் சுட்டும் வினைப் பெயர்கள். தொழில் எதுபுரிந்தும் நெய்தனிலம் வதிபவரைப் பரதவர் அல்லது நுளைஞர் எனவழங்கல் ஒரு முறை; அப்போது அப்பெயர் நெய்தனிலமக்கள் என்னும் பொருட்டாகும். இனி எந்நிலத்துறையினும் வலைத் தொழில் புரிந்து வாழ்வார் என்பதைக் குறிக்குங்கால், வலையர் என்னும் வினைப்பெயரால் அத்தொழிலுடையாரைச் சுட்டுவது ஒருமுறை. தமிழகத்திற் பண்டைக் காலத்தில் பிறப்பால் சாதி வகுப்புக்கள் இல்லாமையானும், தமிழ் மக்களெல்லாரும் விரும்பியாங்குத் தத்தமக்கேற்புடைய தொழில் கொள்ளும் உரிமை யுடையராதலாலும், நிலம் தொழில் வகைகளால் வேறுபடினும் உணவு மணங்களில் வேறுபாடின்றி யாண்டும் எல்லாரும் ஏற்ற பெற்றி கலந்து ஒன்றி வாழ்ந்தாராதலானும், அவர் அகவொழுக்கங் கூறும் புலனெறி வழக்கில் அக்காலத்தவரிடை நிலைபேறுற்ற நிலப்பெயர் வினைப்பெயர்களால் தமிழ் மக்கள் அழைக்கப்படும் மரபுண்மையைத் தொல்காப்பியர் ஈண்டு விளக்கிப் போந்தார். நிலம்பற்றிய மக்கட் பெயர், பெயர்ப் பெயர், செய்யும் வினை பற்றிய மக்கட்பெயர் வினைப்பெயர். அகம் 110ஆம் பாட்டில், போந்தைப் பசலையார், துளைச்சி யைத் தலைவியாகவும், நெடுந்தேரூரனைத் தலைவனாகவும் திணைநிலைப்பெயர் அமைத்துக் கூறியுள்ளார் நற்றிணை 45ஆம் பாட்டில், நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதற் றலைமகனாகவும், நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி, யினப்புள் ளோப்பும் புலவுநாறும் பரவர்மகள் தலைமகளாகவும், இவ்வாறு இவ்விரு வேறு நிலமக்கள் காதற்றலைமக்களாய் அகத்திணைக்குரியராயமைந் திருப்பது இங்குக் கருதத்தக்கது. அகம் 280ஆம் பாட்டில், பரதவர் மகளைத் தலைவியாகவும், பிறிதொரு நிலமகனைத் தலைவனாகவும், அமைத்து அம்மூவனார் கூறியதும் அக்காலத் தமிழ்மரபு அதுவாத லான் என்பது வெளிப்படை. இன்ன பல பழம்பாட்டுக்களால் பண்டைத் தமிழகத்தில் நானில மக்களுள் மணமும் உணவும் பிறப்பு நிலை வினைகள் பற்றி வரையப்படாமல் கலந்து கையாளப் பட்டன என்பது தெள்ளத்தெளியக் கொள்ளப்படும். மரபியலில் காணப் பெறும் வருணவகைபற்றிய சூத்திரங்கள் இடைச் செருகல் என்பது பிறாண்டு விளக்கப்படும். யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி யறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. என்னும் குறுந்தொகைப் (40ஆம்) பாட்டானும் பிறப்பு தொழில் வகை கருதாமல் ஒத்த அன்பே மணத்திற்குப் போதியது என்னுந் தமிழ்மரபு விளக்கமாகும். நானிலத் தமிழ்மக்களும் தம்முள் வேறுபாடின்றி மணந்து கொள்ளும் பழைய வழக்குண்மை, சாதி வெறியலைக்கும் பிற்காலக் கோவைகளும் பலநில மக்களின் கலப்புமணம் குறித்துத் தமிழ்மரபு வழுவாமல் அகத்துறைகளமைத்துக் கூறுவதாலும் வலுப்பெறுகின்றது. கழைகோடு வில்லியைச் செற்றார் தியாகர் கமலைவெற்பின் உழைகோடி சுற்றுங் கிரியெம தூரும தூர்மருதம்; தழைகோடி கொண்டு சமைத்ததெம் மாடை தனித்தனியோ? இழைகோடி பொன்பெறு மேயும தாடை யிறையவரே (எல்லப்பநாயினார் திருவாரூர்க் கோவை. செய். 101) இவ்வுண்மையை மறந்து தொல்காப்பியர் நூலின் உரைகாரர் இப்பண்டைத் தமிழிலக்கண (நூற்) சூத்திரத்திற்கு, அவர்கால இயைபற்ற புராணக் கதைகளையும் இயல்வழக்கற்ற ஆரியக் கொள்கைகளையும் புகுத்திப், பொருந்தாப் புத்துரைகள் கூறி மயங்கவைத்தார். ஆரியருள் நான்கு வருணத்தாருக்குமே தமிழரின் அகத்திணைக் களவியல் ஒழுக்க ஆட்சியுரிமை அவர் தம் தரும சாத்திரங்களிலும் வழக்கிலும் இன்மையானும், ஆரிய தரும நூல்கள்கூறும் உயர்பிறப் புரிமையுடைய இடையிருவணத்தார் தமிழகத்தென்று மில்லாமையானும், இவருரைகள் பொருந்தாமை யறிக. அன்றியும், தமிழிலக்கணநூல்...... மூவர் தண்பொழில் வரைப்பில் நாற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது எனத் தொல்காப்பியர் தாமும், வட வேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்துவழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்,செந்தமிழியற்கசிவணியநிலத்தொடுமுந்துநூல்கண்டுமுறைப்படஎண்ணிப் புலந் தொகுத்தோன... தொல்காப்பியன், எனத் தொல்காப்பியரின் பாயிரமும் வற்புறுத்துவதானும், இங்குத் தொல்காப்பியரின் சூத்திரங்கள் குறிப்பன எல்லாம் ஆரியவருண அறங்களையல்ல, தமிழ் மரபும் தமிழர் வழக்கங்களுமே யாமென்பது தேற்றம். இவ்வுண்மைகள் இனிவருஞ் சூத்திரங்களுக்கும் ஒக்கும்.சூத்திரம்: 21 ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்; ஆவயின் வரூஉங் கிழவரு முளரே. கருத்து: இது, மேற்சூத்திரத்திற் கூறிய திணை நிலைப்பெயர் வகைகளும் அப்பெயருடையாரின் அகத்திணைக்குரிமையுங் விளக்குகிறது. பொருள்: ஆயர் வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர்= ஆயர்n வட்டுவர் என்பன ஆண்பால் சுட்டும் முல்லை நிலமக்களின் திணை நிலப்பெயர்களாம்; ஆவயின் வரூஉம்கிழவரும்உளரே= அந்நிலத்துஅகத்திணைக்குரிமைbகாள்பவரும்உளராம். குறிப்பு: ஈற்றேகாரம் அசைநிலை. ஆயர் என்பது முல்லைநில மக்களுக்குத் திணைப்பெயராகும். அதுவேபோல், வேட்டுவர் என்பதும் முல்லைநில மக்கட் பெயரென்று இளம்பூரணரும், குறிஞ்சி நில மக்கட் பெயரென்று நச்சினார்க்கினியரும் கூறுவர். இவருள் இளம்பூரணர் கூற்றுப் பொருட் சிறப்புடையது. மாயோன் மேய என்னும் முன் 5ஆஞ் சூத்திரத்தில் திணைநிலங்களில் முதலில் வைத்தெண்ணிய முல்லை நில மக்களுக்குரிய பெயர்களுள், ஆயரென்னும் நிலப்பெயரும் வேட்டுவரென்னும் வினைப்பெயரும் அந்நிலத் தாண்மக்களின் திணைப்பெயர்களாக இச்சூத்திரத்தில் தொல்காப்பியர் எடுத்துக் காட்டினாரெனக் கொள்வதே பெயரும் வினையு மென்னும் மேற்சூத்திரக் கருத்தை விளக்குவதற்கு அடைவுபட அமைவதாகும். வேட்டுவரென்பது முல்லைத் திணைமக்களின் வேட்டு வினை சுட்டுந் திணைப்பெயராகும். அதனால், இந்நூலார் மேலே திணை நிலைப்பெயர் பெயரும் வினையுமென்றாயிருவகைய எனத் தொகுத்துக் கூறியதை, இச்சூத்திரத்தில் வகுத்து மெய்ந்நிறுத்து விளக்கினார். இதில் திணைப்பெயரென்றும், இதற்கு முன்னும் பின்னும் வரும் சூத்திரங்களில் திணைநிலைப் பெயரென்றும், வருவன அகவொழுக்கத்துக் குரிமைகொள்வார் பெயரையே குறிக்கும். அக்காலத் தமிழ் மரபுக்கும், உண்மையுலகியல் வழக்குக்கு மேற்பத், தமிழ் மக்களெல்லாரும் அகத்திணைத் துறைகளில் காதற்றலை மக்களாதற் குரியர் என்பதை இந்நூலார் இங்குப் பலசூத்திரங்களாற் தெளிக்கின்றார். நாடாட்சிக்குரியரே அகத்திணைக் கிளவித் தலைமக்கள் ஆவதற்குரியர் போலவும், அல்லாத நானில மக்களும் வினைவலர் அடியார் முதலாயினாரும் அன்பினைந்திணைத் துறைகளில் கிளவித்தலைவர். ஆகார் போலவும், பொருள்படுமாறு இச்சூத்திரங்களுக்குப் பிறர் கூறுமுரை பொருந்தாது. தலைமக்கள் என்பது ஈண்டு அகத்திணைக் கிளவித் தலைமக்களையே குறிக்கும்; நாடாட்சித் தலைமை குறிப்பது ஈண்டைக்கு வேண்டப்படா. பரத்தி ஒருத்தி, நியமமூதூர்க் கடுந்தேர்ச்செல்வன் மகனின் மெய்க்காதலை யிகழ்ந்து, யாம் புலவு நாறுதும் செலநின்றீமோ; (கடலின்) பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ? அன்றே என மறுப்பவள், தமக்கேற்ற தலைவர்தம் மினத்தவருள்ளுமுளர் எனத் தெளித்து, எம்மனோரிற் செம்மலு முடைத்தே (நற். 45) என விளக்கும் தருக்குரை, தமிழர் எவரேனும் அகத்துறையிற் றலைமக்க ளுரிமையனைத்து முடையர் என்னு முண்மையை வலியுறுத்துதல் காண்க. இன்னும் இதுபற்றி மேற் சூத்திர உரையிற் காட்டிய பாட்டுக்களுடன், பின்வரும் பண்டைச் சான்றோர் செய்யுளடிகளாலும் தமிழரிடை நிலம் தொழில் நிலை பிறப்பு வகைகளால் அகத்திணைக்குரிமை யாருக்கும் விலக்கில்லை யென்பது தெற்றென விளங்கும். நெல்லும் உப்பும் நேரேயூரீர், கொள்ளீரோவெனச் சேரிதோறும் உப்புச் சுமந்து விற்றுத்திரியும் உமண்மகளைத் தலைவியாக்கி, அம்மூவனார் கூறிய அகம் 390 ஆம் பாட்டு இவ்வுண்மையை வலியுறுத்தும். .rhu‰ சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளைத் தலைவியாக்கும் மால்வரை என்னும் கபிலர் குறும்பாட்டும், (குறுந். 95) வரையகச் சிறுதினைச் செவ்வாய்ப் பாசினம் கடியும் கொடிச்சியைத் தலைமகளாக்கும் நற்றிணை (134ஆம்) பாட்டும், இன்னும் இதுவேபோல் பல பழம்பாட்டுக்களும் பிறப்பாற் சிறப்பெதுவுமில்லாத ஆயர், குறவர் நுளையர் முதலிய யாரும் காதற்றலைமக்க ளாதற்குரியர் என்பதைத் தெளிவாக்கும். 1. “ gh§fU« gh£l§fh‰ f‹bwhL bršnth«,v« jh«ã bdhUjiy g‰¿id, <§bf«ik K‹idË wh§nf Éy¡»a všyh!நீ என் ஏமுற்றாய்? விடு. விடேன், தொடீஇய செல்வார்த் துமித்தெதிர்மண்டும் கடுவய நாகுபோ னோக்கிக் கொடுமையா நீங்கிச் சினவுவாய் மற்று. ............................fy¤bjhoahŠ செல்வுழி நாடிப் புலத்தும் வருவையா னாணிலி நீ (முல்லைக்கலி - 16) 2. கடிகொள் ளிருங்காப்பிற் புல்லினத் தாயர் குடிதொறும் நல்லாரை வேண்டுதி, எல்லா! இடுதேள் மருந்தே நின்வேட்கை? தொடுதரத் துன்னித்தந் தாங்கே நகைகுறித் தெம்மைத் திளைத்தற் கெளியமாக் கண்டை, அளைக்கெளியள் வெண்ணெய்க்கும் அன்னளெனக் கொண்டாய்; ஒண்ணுதால்! ஆங்குநீ கூறி னனைத்தாக: நீங்குக. .....................ËwhŒÚ சென்றி, எமர்காண்பர்: நாளைஎங் கன்றொடு சேறும் புலத்து (முல்லைக்கலி - 10) 3. யாரிவன் என்னை விலக்குவான்? நீருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை! நீமாறு, நின்னொடு சொல்லல் ஓம்பென்றார் எமர். (முல்லைக்கலி - 12) இவற்றால் முல்லைநிலத்தில் ஆயர் அகவொழுக்கத் தலைமக்களாதற் குரியரென்பது தெளிவு. சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவில் எயினர் தங்கை நின்முலைய சுணங்கென நினைதி நீயே; அணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே (ஐங்குறு. 363) என்னும் ஐங்குறு நூற்றுப்பாட்டால், முல்லைநிலத்தில் வேட்டுவத் தொழிலுடைய எயினர் தங்கை தலைமகளாதலறிக. இனி, என்னுள், வருதியோ நன்னடைக் கொடிச்சி என்னும் நற்றிணை 82ஆம் பாட்டில்வரும் அம்மள்ளனார் செய்யுளடியும், உறுகழை நிவப்பிற் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே. என்னும் நற்றிணை 204ஆம் பாட்டில் மள்ளனார் கூறும் அடிகளும் குறிஞ்சிக் குறத்தி தலைமகளாதற்கு மேற்கோள். அவ்வாறே, மீனெறி பரதவர் மடமகள் மானமர் நோக்கங் காணா வூங்கே என்னும் வெள்ளியந்தின்னனார் நற்றிணை 101ஆம் பாட்டடிகளும், முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே என்னும் நற்றிணை 207ஆம் பாட்டடிகளும் நெய்தற் பரத்தி தலைமகளாதற்கு மேற்கோளாம். இவ்வாறு, தமிழருள் யாரும் காதற்றலைமக்களாய் அகத் திணைக்கு உரிமைகொள்வர் என்பதைச் சுட்டுதற்காகவே, ஆவயின் வரூஉங் கிழவரு முளரே என்று இதில் ïந்நூலார்mமைவுபெறக்கூறித்bதளியவைத்தார். பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ அன்றே; எம்ம னோரிற் செம்மலு முடைத்தே, (நற்றிணை. 45) என்று உணக்கல் வேண்டி யினப்புள்ளோப்பும் புலவுநாறும் பரதவர் மகளைக் கிளவித்தலைவியாகக் கூறும் நற்றிணையடிகளானும் இவ்வுண்மையறிக. சூத்திரம்: 22 ஏனோர் மருங்கினு மெண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே. கருத்து: இது, மேற் சூத்திரத்திற் கூறிய முல்லை நிலம் ஒழியப், பிறநில மக்களின் திணைநிலைப் பெயர்களும் அவ்வாறே யமையும் என்பது கூறுகின்றது. பொருள்: எண்ணுங்காலை = ஆராயும் பொழுது; ஏனோர் மருங்கினும் = (மேற்கூறிய ஆயர் வேட்டுவரென்னும் முல்லைநில மக்கள் தவிரப்) பிறநிலமக்கள்பாலும்; திணைநிலைப்பெயர் ஆனாவகைய = அவர்க்குரிய அகத்திணைக்குரிப் பெயர்கள் சுருங்கக் கூறியமையாப் பல திறப்பட்டனவாகும். குறிப்பு: ஈற்றேகாரம் அசை. ஏனோர்மருங்கினும் என்பதி லும்மை, முன் ஆயர் வேட்டுவரொப்ப அவரல்லாப் பிறநில மக்க ளிடத்தும் என்னும் பொருட்டாதலால், எச்ச வும்மையாகும். நிலம்பற்றியும் தொழில் பற்றியும் தமிழ்மக்கள் கொள்ளும் பெயர் பலவாதலானும், அவ்வாறு வேறுபடும் பெயர்க்குரியர் யாவரும் அகப்பகுதியில் எல்லாத்திணைகளிலும் கிழவராதற் குரியராதலானும், திணைக்குரிய அன்னோர் பெயர்கள் கூறி யமையா ஆதலின் ஆனாவகைய திணைநிலைப்பெயர் என்று இங்குக் கூறப்பட்டது. இப்பெயர் வகைகளைப் பெயரும் வினையு மென்னும் முன் சூத்திரத்தின்கீழ் நச்சினார்க்கினியர் கூறுமுரைக் குறிப்புக் களானோராங்கறிக. மேற்சூத்திரத்தில் முல்லைநில மக்கள் தலைமக்களாதல் கூறப்பட்டது. அந்நிலத்துப் பெயர்ப்பெயருடைய ஆயரும், வினைப்பெயருடைய வேடரும் தலைமக்களாய குறிப்புடைய பழைய பாட்டுக்களுமாங்கே காட்டினோம். இனி, முல்லை யொழிந்த மற்றைய மூன்று நிலமக்களுமவ்வாறே காதற்றலைமக் களாவர் என இச்சூத்திரம் கூறுதலால், அதற்குச் செய்யுள் வருமாறு. (1) குறிஞ்சிநில மக்கள் தலைமக்களாதற்குச் செய்யுள்: (அ) யானை யுழலு மணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்; ஏனலு ளைய வரவுமற் றென்னைகொல்? காணினுங் காய்வ ரெமர் (திணைமொழி. 6) இதில், கானக்குறத்தி தலைவியாவதைக் காண்பாம். (ஆ) குன்றக் குறவன் காதல் மடமகள் (ஐங். 256) எனுங் கபிலர் குறுநூற்றடியுமது. குறத்தியர் தலைமகளிராகச் சுட்டும் பிற பாட்டுக்களை மேலே குறித்தோம். (2) (அ) அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை எனும் குறும்பாட்டில் (குறுந். 184) நுண்வலைப் பரதவர் மடமகள் தலைமகளாதலறிக. இன்னும், (ஆ) பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா திருங்கடன் மூழ்குவார் தங்கை இருங்கடலுள் முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே ஒத்தனம் யாமே யுளம். (திணைமாலை நூற்றைம்பது. 33) எனும் திணைமாலை வெண்பாவிலும் சங்கு குளிப்பாரின் தங்கை தலைமகளாவதறிக. (3) (அ) மருதநில மக்கள் தலைவராதலை. (அ) தொண்டி யன்ன என்னலந் தந்து கொண்டனை சென்மோ மகிழ்ந நின்சூளே (குறுந். 238) எனுங்குன்றியன் குறும்பாட்டிற் காண்க. அன்றியும், (ஆ) மேகத்தோய் சாந்தம் விசைதிமிசு காழகி னாகந்தோய் நாக மெனவிவற்றைப் போக எறிந்துழுவார் தங்கை யிருந்தடங்கண் கண்டு மறிந்துழல்வா னோவிம் மலை(28 திணைமாலை. 150) எனும் வெண்பாவில் நிலந்திருத்தி உழுவாரின் பெண்தலைமகளா தலறிக. சூத்திரம்: 23 அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். கருத்து: இஃது மேற்கூறியாங்கு நானிலமக்களே யன்றிப்பிற ஏழை மக்களும் அகத்திணைக் குரிமைகொள்வார் என்று கூறுகிறது. பொருள்: புறத்து = மேற்கூறிய நானிலமக்களின் திணைப் பெயர் வகுப்புக்களிலடங்காத; அடியோர் பாங்கினும் = பிறர்க் கடிமையாவாரிடத்தும்; வினைவலர் பாங்கினும் = அடிமை யரல்லாக் கம்மியர் போன்ற தொழிலாளரிடத்தும்; கடிவரையில = அகத்திணை யொழுக்கங்களை நாட்டிச் செய்யுட்செய்தல் விலக்கில்லை; என்மனார் புலவர் = என்பார் பொருள்நூல் வல்லார். குறிப்பு: ஈரிடத்தும், பாங்கினும் எனவரும் உம்மைகள், முன்னைச் சூத்திரங்கள் கூறுந் திணைமக்களொப்ப என இறந்ததுதழீ இயும், பின்னர் ஏவன் மரபினேனோரும் என்பதை நோக்கி எதிரது தழீஇயும்வந்த எச்சவும்மைகளாம். ஈண்டுப் புறத்தென்பது, மேற் சூத்திரங்களிற் கூறப்பட்ட நானிலமக்கள் வகுப்புக்களின் ஐந்திணைக்குப் புறத்தேயெனப் பொருள்கொண்டு, பழைய வுரைகாரர் இச்சூத்திரம் அடியோர் வினைவலர் போன்றவர்க்கு ஐந்திணை யொழுக்கம் உரித்தன் றெனவும், அவற்றின் புறத்தவான கைக்கிளை பெருந்திணைகளே அத்திறத்தார்க்குரிய அகவொழுக்கங்களாமெனவும், கூறுவாரா யினார். அவர் கூற்றுக்கள் சூத்திரச் சொற் றொடர்களுக்கு அமை யாமையோடு, முன்னுக்குப்பின் அவ்வுரையாளர் கூறுவன வற்றிற்கே மாறாக முரணுவதாலும், அவை பொருளன்மையறிக. இளம் பூரணர் இச்சூத்திரத்தின் கீழ், இது, நடுவணைந்திணைக்குரிய தலைமக்களை (முன்) கூறி, அதன் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை யுணர்த்துதல் நுதலிற்று என்று குறிக்கின்றார். அன்பினைந் திணையான ஒத்தகாமம் மேற்கூறிய நானில மக்களுக்கு மட்டும் அமையுமன்றி, இச்சூத்திரங்கூறும் அடியோர் வினைவலர்களுக்கு என்றும் இன்றென்பதே இளம் பூரணர் கருத்தென்பது ஈண்டவர் கூறுங்குறிப்பால் அறிகின்றோம். மேன்மக்களே என்றும் அன்பினைந்திணைக்குரியர், மற்றையோர் இழிதகவுடைய கைக்கிளை பெருந்திணைகளுக்கே உரியராவர் என்பதிவர் கருத்தாமேல், முன் முதற்சூத்திர உரையில், பிரமமுதல் தெய்வ மீறாக நான்கு மணமும் மேன்மக்கள்மாட்டு நிகழ்த லானும், இவை உலகினுள் பெருவழக்கெனப் பயின்று வருதலானும். அது பெருந்திணையெனக் கூறப்பட்டது என்றிவரே கூறுதல் முரணாகும். ஆனால், பெருந்திணை பெருவழக்கிற்றென்பதும், அது மேன்மக்கள்மாட்டு நிகழ்வதென்பதும், ஆண்டிவர் கூறிப் போந்தார். அன்றியும், ஏவன் மரபின் என்னும் அடுத்த சூத்திரத்தின் கீழ் ஏவுதன் மரபையுடைய ஏனையோரும் கைக்கிளை பெருந் திணைக்குரியர் என்றிவரே கூறுகின்றார். எனவே, இச்சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் இவ்வுரையாசிரியர் கைக்கிளை பெருந்திணை களுக்கு மேன்மக்கள் பெரும்பாலும் தலைமக்களாதற்குரியர் என்று தம் கருத்தை வலியுறுத்துபவர், இச்சூத்திரத்தின் கீழ் அதற்கு மாறாகக் கீழ்மக்களே கைக்கிளை பெருந்திணைகளுக்குரியர் என்று கூறுவது மாறுகொளக் கூறலென்னுங் குற்றத்திற்கவரையாளாக்குகிறது. இவ்வாறே, நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதும் பொருந்தாது. கைக்கிளை பெருந்திணைகளை ஆசிரியர் இவ்வியலின் இறுதியில் 50,51ஆம் சூத்திரங்களாக நிறுத்தி, அவற்றிற்கு முன்னெல்லாம் இச்சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் அன்பினைந் திணைப் பகுதிகளையே கூறிச் செல்வதால், இதில் அவர் கருத்து வேறுபாடு சுட்டப் பெறாத நிலையில் ஐந்திணைகளுக்கு வேறான கைக்கிளை பெருந்திணைகளை அவர் கூறுவதாகப் பொருள் காண முயல்வது அமைவுடையதாகாது. இனி, கைக்கிளை, பெருந்திணை போலவே இழிதகவுடைய பொருந்தாக்காமம் என்று இவ்வுரை யாளர் கருதுவதால், ஈண்டுக்கூறப்படும் அடியோர் வினைவலராகிய மேன்மக்களல்லாதார் இழிதகவுடைய அப்பொருந்தாக் காமத்திற்கு உரியரென்று இவர்கள் பொருள் கூறுகின்றனர் போலும். தொல் காப்பியர் பெருந்திணையொன்றையே பொருந்தாக்காமமெனக் கூறி, கைக்கிளையைக் குற்றமற்ற ஒருதலைக்காதல் என வேறுபடுத்தி விளக்குகின்றார். ஒருதலைக்காதல் கைக்கிளை. காதலித்தோரைக் காதலிக்கப்பட்டோரும் காதலித்தால், அது ஒத்தகாமத்தின்பா லடங்கும். அவ்வாறின்றிக் காதலிக்கப்பட்டோர்பால் காதலின்மை தெளியப்பட்டால், ஆண்டது பெருந்திணையிலடங்கும். அவ் வாறடக்காமல், பொருந்தாக்காமமான பெருந்திணையும் ஒத்த காமமான அன்பினைந்திணையும் வெவ்வேறுகூறி, அவற்றின் வேறுபட்டதாய்க் கைக்கிளையை இந்நூலார் பிரித்து இயல் விரித்தலால், கைக்கிளை அன்பொத்த இருதலைக்காமம் அன்றா யினும் அன்பற்ற பெருந்திணையு மாகாமல், குற்றமற்ற ஒருதலைக் காமமாய் எல்லோர்பாலும் கடியப்படாத நல் ஒழுக்கம் என்பதே தொல்காப்பியர் கருத்தென்பது தெளிவாகும். பாங்கரும் பாட்டாங் காற் கன்றொடு செல்வேம் என்னும் முல்லைக்கலியும், என்னோற்றனை கொல்லோ என்னும் மருதக்கலியும், அணிமுக மதியேய்ப்ப என்னும் குறிஞ்சிக்கலியும், அடியோர்; வினைவலர் அகத்திணைத் தலைமக்களாதற் குதாரணமாகும். அவை தலைமகளின் அன்புடன் பாடு சுட்டலின், பெருந்திணையும் கைக்கிளையுமாகா; இருவரு மொத்த அன்புத் திணையேயாம். 1. அடியார் அகப்பொருட்டலைவராதற்குச் செய்யுள்: என்னோற்றனை கொல்லோ (கலி. 94) என்னு மருதக்கலியில், ஓஒகாண், நம்முணகுதற் றொடீஇயர் நம்முண், நாமுசாஅம்; கோனடி தொட்டேன்; - ஆங்காக; சாயலின் மார்ப அடங்கினேன், ஏஎ பேயும் பேயுந் துள்ள லூறுமெனக் கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல், கண்டாய் தகடுருவ! வேறாகக் காவின்கீழ் போதர கடாரப் புல்லி முயங்குவேம் (போதரகடார=போதரு+அகடார.) என வருதலால், தலைமக்கள், தம்முரியராகாப் பிறரடியராதல் தெளிக. 2. இனி வினைவலர் தலைமக்களாதற்குச் செய்யுள்: காராரப் பெய்த கடிகொள்வியன் புலத்து (கலி. 109.) என்னு முல்லைக்கலியில், இவடான், திருந்தாச் சுமட்டினள், ஏனைத்தோள்வீசி வரிக்கூழை வட்டிதழீஇ, அரிக்குழை யாடற் றகையள் என வருதலால், இதிற் றலைமக்கள் வினைவலராதலறிக. இன்னும் கடிகொளிருங்காப்பில் (கலி. 110) பாங்கரும் பாட்டங் கால் (கலி. 116) யாரிவன் என்னை விலக்குவான் (கலி. 112) என்னுங் கலிப்பாக்களும் வினைவலர் பாங்கினும் அகஒழுக்கம் கடிவரை யின்மை குறிப்பனவாகும். பெருங்கட லுள்கலங்க நுண்வலை வீசி ஒருங்குடன் தன்னைமார் தந்த - கொழுமீன் உணங்கல் புள்ளோப்பும் ஒளியிழை மாதர் அணங்காகு மாற்ற வெமக்கு (ஐந்திணை ஐம்பது. 47) எனு மாறன்பொறையனார் வெண்பாவும் வினைவலர் காதலுரிமை குறிப்பதறிக. சூத்திரம்: 24 ஏவன் மரபி னேனோரு முரியர் ஆகிய நிலைமை யவரு மன்னர். கருத்து: இதுவும் அகப்பகுதியில் நானிலமக்களேயன்றி, திணைப்பெயர்க்குரிமை கொள்வாரின்னுஞ் சிலருளர் என்பது கூறுகின்றது. பொருள்: ஏவன் மரபின் ஏனோரும் = ஒருவரிடத்தடைந்து அவர் குற்றேவல் செய்வதையே மரபாகவுடைய (அடியாரும் வினைவலருமல்லாத) பிறரும்; உரியர்=நானில மக்களைப் போலவே அகத்திணைக்குரிமையுடையவராவர்; ஆகிய நிலைமையவரும் = அவ்வாறு ஒருவரையுமடையாமல் நாள்தோறும் ஏவுவார் தொழில் ஏற்பதாகிய நிலைமையுடையோரும்; அன்னர் = (அடைந்தாட் படும் குற்றேவல் மக்களைப் போலவே) அகத்திணைக் குரிமை யுடையராவர். குறிப்பு: ஏனோரும் நிலைமையவரும் என்பவற்றினும் மைகள் முன்னர்க் கூறியவரைக் குறித்து நிற்கும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாம். இதற்கும் கைக்கிளை பெருந்திணைகளை யிழுத்துப் புகுத்திக் கூறும் உரைகாரர் பழையவுரை பொருந்தா தென்பதை மேற்சூத்திரத்துக்குக் கூறிய குறிப்புக்களைக் கொண்டு தெளிக. ஏவன்மரபு என்பது, குற்றேவற்றொழில் புரிவார் சிறியநிலை குறிக்குமல்லால், பிறரை ஏவும் பெருவாழ்வுரிமை குறியாது; ஏவுதல் மரபென்னாது ஆசிரியர் ஏவன் மரபு என்றாராதலின். ஏவலர், ஆட்பட்ட அடிமைகளின் வேறாவர். ஆகவே, அடிமை யாய் ஆட்பட்ட அடியார் வேறு; அடிமைப்படாமல் ஒருவரை யடுத்து அவர்க்கே குற்றேவல் செய்து வாழும் ஏவலர் வேறு; ஒருவரையுமடையாமல் நாள்தோறும் வேண்டுவோர்க்கு அவ ரேவிய செய்து வாழ்வாராய ஏனையோர் வேறு. இம்மூவருள் அடங்காராய்க் கம்மியர் போன்ற ஏவலரல்லாத் தொழிலாளரான வினைவலர் வேறு. ஆதலின் இந்நால்வரையும் முறையே ஆசிரியர் இச்சூத்திரங்களில் நானிலமக்கள் போலவே அகவொழுக்கத்திற் குரிமையுடையரென்று விதந்து கூறினார். அறப்பரிசாரமும் ..... உரிமைச்சுற்றமோ டொருதனிப் புணர்க்க எனுமனையறம் படுத்த காதையடிகள் தமிழ்த்தனிக்குடி மக்களின்கீழ் ஏவலரும் அடிமைத்திரளும் வெவ்வேறாதலை விளக்குகிறது. பரிசாரம், ஏவற்றொழில்; ஈண்டது புரிபவருக்கு ஆகுபெயர் உரிமைச் சுற்றம், அடிமைத்திரள் என்றே சிலப்பதிகார உரைகாரரிருவரும் கூறுதலறிக. குற்றிளையோரும் அடியோர் பாங்கும் எனும் கொலைக்களக்காதை யடிகளும் பெருங்குடி தோறும் குற்றேவல் புரிவாரும் அடிமைகளும் உண்மையை உறுதிப்படுத்துகின்றது. இனி, இந்திரவிழவூரெடுத்த காதையில் தொழில் பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்;........ சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு எனவருமடிகளில் உயர் குடிமக்களின் ஏவலரல்லா வினைவலரும், பிறர் தம் ஏவலை மரபாகக்கொண்ட ஏனோரும் பழந்தமிழகத் துண்மை கூறுகிறது. பின் கட்டுரை காதையில் ஏவலிளைஞர் காவற்றொழுது எனவருதலால், ஏவல்மரபு, பிறரை ஏவும்பெற்றி குறியாது, பிறரேவலைத் தாம்புரியு நிலையையே குறிப்பது தெளிவாகும். இப்பழந் தமிழ்த்தொடர்நிலைச் செய்யுளடிகள், தொல்காப்பியர் சுட்டிய அடியார், வினைவலர், தனிக்குடி ஏவலர், ஏனைய ஏவன் மரபினர் எனும் கீழோர் நால்வரும் தமிழகத்துண்மையை வலியுறுத்தல் கருதற்குரியது. இனி, பிறரேவல்புரியும் ஏவன்மரபினரும் அகத்துறைத் தலைவராதற்குரிய ரென்பதற்குச் செய்யுள்: இகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல (கலி. 108) என்பதில் அளைமாறிப் பெயர்தருவா யறிதியோ?.... என்றானுக்கு, புளத்துளான் எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைத்தாளுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ? எனத் தலைவி கூறுவதால், இது பிறர் ஏவல் புரிவோர் அகத்துறை யிற் காதற்றலைமக்க ளாதற்குரிமை கூறுதலுணர்க. சூத்திரம்: 25 ஓதல் பகையே தூதிவை பிரிவே கருத்து: இது, மேல் முதற்சூத்திரத்திற் கூறிய ஏழுதிணைகளுள் குறிஞ்சி முதலிய நடுவணைந்திணைகளின் பொதுவியல்புகள் இதுவரையுங் கூறி, இனி அவ்வைந் திணைகளுள் நடுவணதானதும், களவு கற்பு என்னும் இருவகைக் கைகோள்களுக்கும் பொதுவான தும், தனக்கென நிலம் பகுக்கப்படாததுமாகிய பாலையென்னும் பிரிவொழுக்கத்தின் சிறப்பியல்கள் கூறத்தொடங்கிப், பிரிவின் வகைகளுள் சில உணர்த்துகிறது. பொருள்: ஓதல் பகையே தூது இவை = கல்வி கற்றலும், பகைகடியப் பொருதலும், தம்முள் பகைத்த பிறரைப் பொருதற் பொருட்டு வாயிலாகச் செல்லுதலும் ஆகிய இவை; பிரிவே = பிரிதற்கு நிமித்தமாய்ப் பாலைத் திணையாகும். குறிப்பு: இதில் ஏகாரமிரண்டும் அசை. ஓதற் பிரிவாவது பிறாண்டு தான் ஓதற்குரிய கல்விக்குப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது தன்னாட்டிற்கும் தன்னரசற்கும் பகையாவாரோடு போர்கருதிப் பிரிதல். தூதிற் பிரிதலாவது பகைத்தார் வேறிருவரைப் பொருதற் பொருட்டுப் பிரிதல். சூத்திரம்: 26 அவற்றுள் ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன. கருத்து: இது,மேற்சூத்திரம் கூறும் பிரிவு மூன்றனுள் இரண்டற் குரியாரை உணர்த்துகிறது. பொருள்: அவற்றுள் = மேற்குறித்த மூன்றனுள்; ஓதலுந் தூதும் = ஓதற்பிரிவும் தூதுபற்றிய பிரிவும்; உயர்ந்தோர் மேன = பெயரும் வினையும்பற்றிய திணைநிலைப் பெயர்க்குரியார் பலருள்ளும் அடியோர் வினைவலர் ஏவலர் போல்வாரல்லாத உயர்ந்தோர்க்கே உரியவாகும். குறிப்பு: அடியோர், வினைவலர், ஒருவருக்கு ஏவலர், ஏவன் மரபினேனையோர், இந்நால்வரும் பிறரேவலை எதிர்பார்த்து வாழ்பவராதலின் ஓதலும் தூதுமாகிய உயர்ந்தோர் தொழிலேற்றற்கு உரிமை கொள்ளார். அவரொழிந்த நானிலத் தமிழ்க்குடி மேன் மக்களே அவற்றை மேற்கொள்ளுதற்குத் தகுதியுடையராதலின், இவை அவ்வுயர்ந்தோர் மேலன என்று விளக்கப்பட்டன. உயர்ந்தோரல்லாத அடியார் முதலிய நால்வர்க்கும் அகத்திணை யொழுக்கங்கள் கடியப்படாவென மேல் இரண்டு சூத்திரங்களிற் கூறிய இந்நூலார், அவ்வொழுக்கங்களுள் ஒன்றான பிரிவிற்குரிய நிமித்தங்களுள் ஓதல் தூதாகிய இரண்டிற்கும் அவர் உரியராகாமை யான், அவை பற்றிய பிரிவிற்கும் அவர் உரியராகார் என்பதை இச்சூத்திரத்தால் தெளியவைத்தார். மேற்சூத்திரத்திற்கூறிய பிரி வினிமித்தம் மூன்றனுள் இரண்டே உயர்ந்தோர்க்குரியன என இச்சூத்திரம் கூறுதலால், எஞ்சிய பகைவயிற்பிரிவு உயர்ந்தோர்க்குப் போலவே பிறர்க்கும் உண்டென்பது பெறவைத்தார். உயர்ந்தோரின் ஏவல் மேற்கொண்டொழுகுவாரும், அவரேவியவழிப் பகைவரொடு பொருதற்குரிய ராதலின், பகைவயிற் பிரிவு அவர்க்கு விலக்கப் படாமையுணர்க. அதுவேபோல், பொருட்பிரிவும் எல்லோர்க்கும் பொதுவாகவும். இனி இச்சூத்திரத்திற்கு நால்வகை வருணத்துள் அந்தணர் அரசராகிய முதல் இருவகையினரே ஓதல்தூது மேற்கொள்ளற் குரியர் எனப்பிறர் கூறுமுரை பொருந்தாது. நான்கு வருணம் ஆரியர் அறநூல்களே கூறும் வகைகளாதலானும், பண்டைத் தமிழருள் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுகளுடன் வேறுபடும் அந்நால் வகை வருணங்கள் உலகியலில் வழங்காமையானும், தொல்காப்பியர் தாம்தமிழ் மரபுகளையே கூறுவதாக வற்புறுத்த லானும், அகத்திணையியலில் தமிழ்நாட்டு நானிலமக்கள் குறிக்கப் படுகின்றாரன்றி நான்கு வருணத்தாராய்த் தமிழ் மக்கள் யாண்டும் கூறப்படாமையானும், அவருரை அமைவுடையதன்று. அது சூத்திரக் கருத்தன்மை, இதில் உயர்ந்தோரென்பதற்கு முதலிரு வருணத்தா ரென்று உரையாசிரியரும், முதல் மூன்று வருணத்தார் என்று நச்சினார்க் கினியரும் தம்முள் மாறுபடக் கூறுதலானும் தெளியப்படும். அன்றியும், வணிகரை விலக்கி அந்தணரும் அரசருமே இவ்விருவகைப் பிரிவிற்குரியர் என்று தாம்கூறுதற்குக் காரணம், ஒழுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும் ஏனையரினும் (இவ்விருவருணத் தாரே) உயர்வுடையராதலின் (இவரை) உயர்ந்தோரென்றார் என்பர் இளம்பூரணர். ஒழுக்கம் குணம் செல்வங்களால் வணிகர் மற்றைய இருபிறப்பாளர்க்குக் குறைந்தவர் என்பதுண்மையன்றாக லானும், செல்வத்தால் வணிகர் ஏனையரினும் தாமே உயர்வு டைய ராதலானும், வணிகரும் நானிலத்தமிழரும் ஓதற்குரிய ரேயாதலானும் இதுவும் சூத்திரக் கருத்தாகாமை பெறப்படும். சூத்திரம்: 27 தானே சேறலும் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. கருத்து: இது, உயர்ந்தோர்க்குரிய பிரிவுவகை மூன்றனுள், மேற்சூத்திரம் கூறிய இரண்டு நீக்கி, அதிற் கூறப்படாத பகைவயிற் பிரிவுக்கு உரியாரை உணர்த்துகின்றது. பொருள்: தானே சேறலும் = பகைகடிதற்பொருட்டுத் தானே படையெடுத்துச் செல்லுதலும்: தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் = தன்னொடு பொருந்திய படைத்தலைவர் பிறர் செல்லுதலும்; வேந்தன் மேற்றே = மன்னவனைப் பொறுத்ததே யாகும். குறிப்பு: தானே என்பதன் ஏகாரம் பிரிநிலை; வந்த பகையை யடர்க்கத் தான் ஏவுதற்குரிய படைஞர் பிறரை நீக்கி வேந்தன் தானே சேறல் என்பதைச் சுட்டும். ஈற்றேகாரம் அசை. நாட்டின் பகைவராய வந்தாரை நலிவது வேந்தனுக்கே கடமையும் உரிமையும் ஆகும். மற்றையோர் மன்னராணையின்றித்தாமே பகைமை பாராட்டிப் பொருதல் அரசனால் ஒறுக்கப்படும் குற்றமாகும். அதனால் தன்கடனாற்ற, மண்ணாசையால் வந்த வேந்தனை அஞ்ச எதிர்சென்று பொருதழிக்க அந்நாட்டு வேந்தன் தானே செல்வதும், தன் படைஞரை ஏவி அவரைக்கொண்டு அக்கடனாற்றிப் பகை யழித்தலும், அவ்வேந்தன் மேலனவாவது வெளிப்படை. நெடுஞ் செழியன் வந்த பகைவர் மேற்சென்று தலையாலங்கானத்துப் பொருதழித்தது வேந்தன் தானே சேறற்குக் காட்டாகும். கருணா கரத் தொண்டைமான் படையொடு சென்று கலிங்கமழித்தது அரசனொடு சிவணிய ஏனோர் சேறற்கு எடுத்துக்காட்டாம். (i) பகைதெற வேந்தன் தானே சேறற்குச் செய்யுள்: 1. மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர் தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ ள்வளம் படவென்றுதகைநன்மாnமற்கொண்டு வள்வென்றுவருபவர்வனப்பாரவிடுவதோ ......................................பகைவென்று திறைகொண்டபாய்திண்டேர்மிசையவர் வகைகொண்டசெம்மனாம்வனப்பாரவிடுவதோ ...........................................எனவாங்கு வளாதிவயங்கிழாஅய்வருந்துவளிவளென நாள்வரைநிறுத்துத்தாம்செhல்லியபெhய்யன்றிமுளிவேற்றானயர்புகுதந்தார் நீளுயர் கூடல்bநடுங்bகாடியெழவ(பாலக்கலி.30)2. கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்திற் றவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே (பேயனார், ஐங்குறுநூறு 451) (ii) வேந்தனொடு சிவணிய ஏனோர் சேறற்குச் செய்யுள்: 1. காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோ யறியா வறனி லாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்லென ஆனா தெறிதரும் வாடையொடு நோனேன் தோழியென் தனிமை யானே (கழார்க் கீரனெயிற்றியார், அகம் 294) 2. கூதிர் நின்றன்றாற் பொழுதே; காதலர் நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை யறிந்தனர் கொல்லோ? தாமே யோங்குநடைக் காய்சின யானை கங்குற் சூழ அஞ்சுவர விறுத்த தானை வெஞ்சினவேந்தன் பாசறையோரே (உம்பற்காட்டிளங்கண்ணனார், அகம். 264) சூத்திரம்: 28 மேவிய சிறப்பி னேனோர் படிமைய, முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருள் முடியவும் பிரிவே. கருத்து: இது, மேற்கூறிய ஓதல் பகை தூது ஒழிய காவல் பொருளெனப் பிறவகைப் பிரிவுகளையும் அப்பிரிவுகளுக் குரியாரையுங் கூறுகின்றது. பொருள்: மேவிய சிறப்பின் ஏனோர் = வேந்தனொடு பொருந்திய சிறப்புடைய வேந்தன் கிளைஞர் ஏனாதியர் முதலியோர்; படிமைய முல்லைமுதலாச் சொல்லிய = நில வகுப்புக்களான முல்லைமுதற் நெய்தலிறுதியாக (மேலே ஐந்தாஞ் சூத்திரத்திற்) சொல்லப்பட்ட நால்வகை உலகங்கள்; முறையாற் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் = முறைவழுவித் தப்பியது முறையாற் றப்பாதாதலை விரும்பியும்; இழைத்த ஒண்பொருள் முடியவும் = (யாவரும்) வினைசெய்து உயர்ந்த பொருளை ஆக்கவும்; பிரிவே = பிரிதல் நிகழும். குறிப்பு: ஈற்றேகாரம் அசை. படிமைய என்பதில் படி நாட்டை அல்லது நிலத்தைக் குறிக்கும். இனி, படிமைய என்பதற்குப் பகைமையுடைய அல்லது கீழ்ப்படிந்த எனப்பொருள் கோடலும் பொருந்தும். பாலைத் திணையாகிய பிரிவு அறுவகைப்படும்; ஓதல், தூது, பகை, காவல், பொருள், பரத்தை என. அவற்றுள், பரத்தையிற் பிரிவு கைகோளிரண்டில் கற்பளவிலிடம் பெற்றுக் களவுக்கமை யாமையின், அப்பிரிவு பின்னர் அத்தொடர்புடன் கூறப்படும். ஆதலின் அதைநீக்கி, மற்ற ஐந்தும் இங்குக் கைகோளிரண்டிற்கும் பொதுவாகக் கூறப்பட்டன. அவ்வைவகைப் பிரிவுள், ஓதல் தூது காவல் மூன்றும் உயர்ந்தோர்க்கே யுரியன; பகை பொருட் பிரிவுகள் யாவர்க்கும் ஒப்பவுரியன. ஓதல் பகை தூதுபோலவே, பொருள் பற்றியும் காவல் பற்றியும் பிரிவு நிகழ்தல் உலகியலும், மரபும் ஆதலின், அவற்றுள் முதல் மூன்றும் முன்கூறியதால் காவற்பிரிவும் பொருட்பிரிவும் இச்சூத்திரத்திற் கூறப்பெற்றன. வேந்தனொடு சிவணிய ஏனோர், தம்பொருட்டு ஓதல் நுதலியும், வேந்தன் பொருட்டுத் தூது பகைதெறல் நுதலியும் பிரிவது போலவே, நாடுகாவல் பற்றியும் பொருள் முடிக்கவும் பிரிவுமேற்கொள்வது மரபு என்பது இச் சூத்திரத்தில் விளக்கப்பட்டது. வேந்தனுக்குப் பகைதெறத் தானே சேறலியல் பாயினும், பிறநாடு காவல் பற்றியும் பொருள்பற்றியும் பிரிதல் சிறந்ததன்றாகும். அதனால், மன்னற்குத் தானே பகைவயிற் சேறலுண்டென மேற்சூத்திரத்திற் கூறிய தொல்காப்பியர் அவனுக் குக் காவல் பொருட்பிரிவுகள் கூறாது, அவனொடு மேவிய சிறப்பினையுடைய ஏனைய உயர்ந்தோர்க்கு இப் பிரிவுகளை இதில் விதந்து கூறினார். (i) உயர்ந்தோர் காவற்பொருட்டுப் பிரிதற்குப் பாட்டு. 1. பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவார் ஒல்குபு நிழல் சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்; 2. திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்; 3. அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித் திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவார் ஊறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி யாறின்றிப் பொருள்வெஃகி யகன்றநாட் டுறைபவர் (கலி. 26) (ii) அவர் பொருள்வயிற்பிரிதற்கு தாரணம்: 1. அருஞ்சுரக் கவலை நீந்தி என்னும் இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே, காதலர் காதல்; அருளே காதலர் என்றி, நீயே (சீத்தலைச்சாத்தனார், அகம்.53) வெயில்வீற் றிருந்த வெம்மலை யருஞ்சுரம் ஏகுவ ரென்ப தாமே தம்வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லா தோரே (நற்றிணை. 84) சூத்திரம்: 29 மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே. கருத்து: இது,வேந்தர்க்கும் வேந்தரொடு சிவணிய சிறப்பின் ஏனோர்க்கும் உரிய பிரிவெல்லாம் அடியோர் கீழோரல்லா நானிலமக்களனைவர்க்கும் உரியவென் றுணர்த்துகின்றது. பொருள்: மேலோர் முறைமை = மேலே வேந்தனென்றும் வேந்தனொடு சிவணிய ஏனோரென்றும் மேவிய சிறப்பினே னோரென்றும் குறிக்கப்பட்ட மேலோர்களுடைய பிரிவு பற்றிய மரபெல்லாம்; நால்வர்க்கு முரித்தே = தமிழகத்தில் நானில மக்களுக்கும் ஒப்பவுரியன. குறிப்பு: மேலோர் பிரிவு ஓதல், தூது, காவல், பற்றியா மென்பது மேலிரு சூத்திரங்கள் குறித்தன. இதற்குப் பிறர்கூறும் வேறுபொருள்கள் சூத்திரக் கருத்தன்மை, இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் இச்சூத்திரத்திற்குத் தம்முள் மாறுபட வுரைகூறுதலான் விளங்கும். மேலோர் தேவரென்பர் இளம்பூரணர்; வணிகரென்பர் நச்சினார்க்கினியர். தேவரைப் பற்றிய குறிப்பு ஈண்டு வேண்டப் படாமையானும், நான்கு வருணத்தாருள் வணிகர் மேலோராகா மூன்றாம் வகுப்பினரே யாதலானும், இவ்வீருரையும் சூத்திரக் கருத்தோடு மாறுபடும். அது போலவே, நால்வர் என்பதை நான்கு வருணத்தார் எனறு இளம்பூரணரும், வணிகரை விலக்கி வேளாளரை இருவகையராக்கி அந்தணரரசரொடு கூட்டி நால்வர் என நச்சினார்க் கினியரும், தம்முள் மாறிக் கூறுவதும் அவ்விரு கூற்றும் தொல் காப்பியர் கருத்தன்மை காட்டும். தமிழகம் முல்லை முதலிய நானிலமாகத் திணைபற்றிப் பகுக்கப்படுமென்று மேலே 2, 5ஆம் சூத்திரங்களிலும், அந்நானில மக்களும் திணைதொறு மரீஇய திணைநிலப் பெயரொடு அகத்துறைகளில் கிழவராவரென 20, 21ஆம் சூத்திரங்களிலும் விளக்கியிருப்பதால், ஈண்டு நால்வ ரென்பது அந்நானில மக்களையே குறிக்கும். அந்நானிலத்தும் அடியோர் முதலிய கீழோரும், வேந்தர், வேந்தரொடு சிவணிய ஏனாதியர் முதலிய மேலோரும் உளராதலை, மேலே 23, 24, 26, 27, 28ஆம் சூத்திரங்களில் இந்நூலார் விளக்கியுள்ளார். அதனால், இதில் மேலோரென்றும் நால்வரென்றும் குறிக்கப்படுவோர், இவ்வியலில் முன் விளக்கியுள்ள வேந்தரொடு சிவணியோரும் நானிலத் தமிழ்மக்களுமேயாவர். அந்நால்வகைத் தமிழ் மக்களும் வேந்தரொடு சிவணிய மேலோரொப்ப ஓதல் தூது காவல் மேற் கொள்வதும், அதுபற்றிப் பிரிதலும் மரபென்பது இதில் விளக்கப் பட்டது. இனி யிவ்வாறின்றி நால்வர் என்பது நான்கு வருணத்தார் என்றும், மேலோர் என்பது அவருள் இருபிறப்பாளராய மேல் வகுப்பினர் மூவரென்றும், அல்லது அவருள்ளுஞ் சிறந்த பார்ப்பன ரென்றும் பொருள்கொள்ளின், மேலோரெனப்படுவார் யாவரே யாயினும் அவரை நீக்கியபின் அவரொழிந்த வருண வகுப்பினர் நால்வராதல் கூடாமை வெளிப்படை. அதுவுமின்றி, ஆரியர் அறநூல்கள் கூறும் பிறப்புரிமைகளுடைய இடையிருவருணத்தார் என்றும் தமிழகத்து இல்லாமையானும், தொல்காப்பியர் தமிழ் மரபுகளையும் தமிழர் வழக்குகளையுமே தாம்கூறுவதாக வற்புறுத்து வதானும், அவ்வுரை தொல்காப்பியர் கருத்தன்றென்பது தேற்றமாகும். பொருள்வயிற் பிரிவுக்குப் பாட்டு: 1. வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப் பொலங்கலவெறுங்கைதருமார்.... .... .... .... .... .... .... .... சுரம்புல்லென்ற ஆற்ற..... காடிறந் தோரே (மாமூலனார், அகம். 1) 2. நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய நின்றோள் அணிபெற வரற்கும் அன்றோ தோழி யவர்சென்ற திறமே (பாலங்கொற்றனார், நற்றிணை. 286) 3. ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி, அவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ, வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே (உகாய்குடிகிழார், குறுந்தொகை. 63) ii. தூதுப்பிரிவுக்குச் செய்யுள்: (1) “மிகைதணித்தற்கரிதமிருnவந்தர்வெம்nபார்மிடைந்த பகைதணித்தற்குப்படர்தலுற்றார்நமர்,பல்பிறவித் bதாகைதணித்தற்கென்னையண்டுகொண்டோன் றில்லைச்சூழ்பொழில்வhய் முiகதணித்தற்கரிதாம்புரிதாழ்தருமய்குழலே (திருச்சிற்றம்பலக்கோவையார்) (2) இகலுமிரு வேந்தர்க் கிடையமரின் தீமை அகலப் பொருத்த அகன்றார் - நகையாமே காமப் பகைதணியக் கற்பின் மனைபொருந்தி ஏம மெமக்கீயா தின்று. சூத்திரம்: 30 மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான. கருத்து: இது, மன்னரைப் பொருந்திச் சிறந்த வேந்தன் கிளைஞர் ஏனாதியர் முதலிய மேலோர்க்கு மேல் 27, 28ஆம் சூத்திரங்களில் கூறிய பகை, காவல், பொருள்பற்றி ஒழியப் பிற பிரிவுகள் கூறும் ஒழிபுச் சூத்திரமாகும். பொருள்: உயர்ந்தோர்க்குரிய = அடியோர் முதலிய கீழோரல்லாத சிறப்புடையோர் செய்தற்குப் பொருந்திய; ஓத்தின் ஆன = கல்வியான் ஆம் பிரிவுவகை அனைத்துக்கும்; மன்னர் பாங்கிற், பின்னோர் ஆகுப = மன்னர் சார்பில் அவரொடு சிவணிப் பின்னிற்போர் உரியராவர். குறிப்பு: பிரிவைந்தனுள் பொருளும் போரும் எல்லார்க்கும் பொது. ஓதலும் தூதும் அடியார் முதலிய கீழோரை விலக்கி மற்ற நானில மேன்மக்களுக்குரிய என்பதை மேல் 25, 26ஆம் சூத்திரங்கள் கூறின. நாடு காவற்பிரிவு மன்னரொடு சேர்ந்து சிறந்தார்க்குரித் தென 28ஆம் சூத்திரமும், அக்காவற்பிரிவு நானில மேன்மக்களுக்கு முரித்தென 29ஆம் சூத்திரமும் மொழிந்தன. இனி, மன்னரொடு சிவணிச் சிறந்த மேலோர், மன்னர் பொருட்டுப் பகைமேற் கொண்டு பிரிதல் மேல் 27ஆம் சூத்திரத்திலும், காவலும் பொருளும் பற்றிப் பிரிதல் 28ஆம் சூத்திரத்திலும் கூறப்பெற்றன வாதலின், அம்மூன்று மொழியத், தூது முதலிய பிறவுயர்ந்தோர் வினை பற்றிய பிரிவனைத்தும், மன்னர் பாங்கிற் பின்னோராய அன்னவர்க் குரித்தாம் என்பதை இவ்வொழிபுச் சூத்திரத்தில் இந்நூலார் கூறினார். அன்பு அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றியமையாத மூன்று என்பது வாய்மொழி. அதனால் மதி நுட்பம் நூலோடுடைய உயர்ந்தோர்க்கன்றி மற்றையோர்க்குத் தூது போல்வன கூடாமை ஈண்டு விளக்கப்பட்டது. இவ்வாறன்றி, இதனை இரண்டு சூத்திரமாகப் பிரித்துப் பிற வுரையாசிரியர்கள் கூறும் பொருள்கள் இந்நூலாரைக் கூறியது கூறும் குற்றத்திற் காட்படுத்தும். மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப எனத் தனியே பிரித்து, அதற்குப் பிறர் கூறும் உரை மேலே 27, 28, 29ஆம் சூத்திரங்களில் இந்நூலார் கூறியவற்றுள் அடங்குதலின், அஃதவர் கருத்தன்மையறிக. அதுவே போல், உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான என்பதைத் தனிச்சூத்திரமாக்கிப் பிறர் கூறும் பொருள், முன், ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன என்னும் சூத்திரங் கூறுவதிலடங்குமாதலின், அதுவும் அமைவதன்று. ஏடெழுதுவோரால் இவை பிரித்தெழுதப் பெற்று அதனால் பின் உரையாசிரியர்கள் தனிவேறு சூத்திரங்களாகக் கருதிமயங்கி, இந்நூலாசிரியரின் முன்சூத்திரப் பொருளொடு பொருந்தாவாறு மாறுபடவுரை கூறியுள்ளார். அன்றியும், இரண் டாய்ப் பிரிப்பின், இரண்டும் பொருள் முடிபின்றிப் பொலிவிழக்கும். சூத்திரம்: 31 வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே. கருத்து: இது, முடியுடை வேந்தரல்லாத குறுநில மன்னர்க்குப் பிரிவுவகை கூறுகின்றது. பொருள்: வேந்துவினையியற்கை = முடிமன்னரின் பிரிவுக் குரிய வினையியல்பு; வேந்தனின் ஒரீஇய = அவ்வேந்தரின் வேறாய; ஏனோர் மருங்கினும் = பிறவேளிர் முதலான குறுநில மன்னரிடத்தும்; எய்திடனுடைத்தே = பொருந்துதல் உரித்தாகும். குறிப்பு: ஈற்றேகாரம் அசை. குறுநில மன்னர் பிறநாடு கொள்ளப் போர்மேற் செல்லும் பிரிவுக்குப் பாட்டு: விலங்கிடுஞ் சிமையக் குன்றத் தும்பர் வேறுபல் மொழிய தேஎம் முன்னி வினைநசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு புனைமாண் எஃகம் வலவயி னேந்திச் செலன்மாண் புற்றநும் வயின்வல்லே வலனா கென்றலும் நன்றுமற் றில்ல. (இறங்கு குடிக்குன்ற நாடன், அகம். 215) இவ்வாறே மற்றைப் பிரிவுகளும் வந்துழிக் கண்டுகொள்க. சூத்திரம்: 32 பொருள்வயிற் பிரிதலும் அவர்வயி னுரித்தே உயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தான. கருத்து: இது, மேலதற்கோர் புறனடை. குறுநில மன்னர்க்குப் பொருட்பிரிவும் உண்டென்று கூறுகின்றது. பொருள்: பொருள்வயிற் பிரிதலும் = பொருள் பற்றிய பிரிவும்; அவர்வயினுரித்தே = மேற்குறித்த குறுநிலமன்னர் களுக்குரியதாகும்; உயர்ந்தோர் பொருள் வயின் ஒழுக்கத்தான = பொருள்பற்றி உயர்ந்தோரின் ஒழுக்கத்தோடு பட்டவிடத்தில். குறிப்பு: வேந்தரனைய குறுநிலமன்னர்க்குத், தற்பேணல் முதலிய பொதுவற மாற்றும்பொருட்டுப் பொருட்பிரிவு பொருந்தாது; காடு திருத்தி நாடாக்கல், குளந்தொட்டுக் கோயிலெடுத்தல், படைபேணி நாடாளல் போன்ற மேலொழுக்கம்பற்றி அஃதமையும் எனக்குறித்தல் இதன் கருத்தாகும். வேந்தர் வினையனைத்தும் குறுநில மன்னர்க்குப் பாலைத்திணையில் உரியவாகும் என மேலே குறிக்கப்பட்டமையால், வேந்தனுக்கு விலக்கப்பட்ட பொருள் வயிற்பிரிவு குறுநில மன்னர்க்கும் விலக்கோ எனுமையமகற்றி, அவர்க்கது கடிவரையின்று என்பதை இந்நூலார் இச்சூத்திரத்தால் விளங்கவைத்தார். அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் (கலி.11) என்னும் பாலைக்கலி யடிகள் இச்சூத்திரக் கருத்தை விளக்குவதறிக. மேல் பெயரும் வினையும் என்னும் 20ஆம் சூத்திர முதல் இதுவரையுள்ள சூத்திரங்களால், தொல்காப்பியர் தமிழகத்தில் அகத்திணைக்குரியாரை வகைப்படுத்திக் கூறினார். நானிலமக்களும் எல்லாத்திணைக்கு முரியரென்பதை ஆயர்வேட்டுவர் ஏனோர் பாங்கினும் என்னும் 21, 22ஆம் சூத்திரங்களில் விளக்கினார். அவரைப்போலவே, அடியோர், வினைவலர், ஏவலர், ஏவலரனை யவர் ஆகிய கீழோர் நால்வரும் அகத்திணைகளுக்குரிமை கொள்வ ரென்பது அடியோர் பாங்கினும், ஏவன் மரபின் என்னும் 23, 24ஆம் சூத்திரங்களில் விளக்கப்பட்டது. பிறகு அகத்திணையைந் தனுள் சிறந்த பாலைத்திணையின் வகைகளும், அவைபற்றிய பிரிவு களுக்குரியார் வகைகளும், ஓதல்பகையே என்னும் 25ஆம் சூத்திர முதல் பொருள்வயிற் பிரிதலும் என்னு மிச்சூத்திரம் வரை விளக்கப்பட்டன. அவற்றுள் 25. 26. 29ஆம் சூத்திரங்கள் நானில மக்களைப் பற்றியும், 27, 28, 30ஆம் சூத்திரங்கள் வேந்தனையும் வேந்தனொடு பொருந்திய ஏனோரையும் பற்றியும், 31, 32ஆம் சூத்திரங்கள் வேந்தர் குடியில் வாரா ஏந்தல்களான குறுநில மன்னரைப் பற்றியும் கூறுகின்றன. இதனால் தொல்காப்பியர் காலத் தமிழகத்தில், அகத்திணையொழுக்கம் மேற்கொண்டவர் அடியோர் முதலிய கீழோரும், நானிலமக்களும், மூவேந்தரும், வேந்தரைச் சார்ந்து சிறந்த ஏனோரும், வேந்தர்குடிவாரா நாடாட்சி கொண்ட குறுநில மன்னருமாய் அனைவருமடங்குவரென்பது தேற்றம். தமிழ் நாட்டில் முடிவேந்தர் மூவரே யாவரென்பது வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் என்னும் தொல் காப்பியர் செய்யுளியற் சூத்திரத்தானும், போந்தை, வேம்பே, ஆரெனவரூஉ மாபெருந் தானையர் மலைந்தபூவும் என்னும் புறத்திணையியற் சூத்திரத்தானும் பண்டைப் பாட்டுக்களானும் விளக்கமாகும். சூத்திரம்: 33 முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. கருத்து: இது, பெண்டிரொடு கடல்கடத்தல் தமிழ் மரபன்று என்று கூறுகின்றது. பொருள்: மகடூஉ வோடு முந்நீர் வழக்கம் இல்லை = பெண்ணோடு கடலேறிச் செல்லுதல் மரபன்று. குறிப்பு: வழக்கம் என்பது செல்லுதற்பொருட்டாதல் ஆள் வழக்கற்ற சுரத்திடை (அகம். 51) என்ற பெருந்தேவனார் அகப் பாட்டடியாலும், யாவரும் வழங்குந ரின்மையின் என்னும் மாமூலர் அகப்பாட்டடியானும், மான்றமாலை வழங்குநர்ச் செகீஇய, புலிபார்த்துறையும் புல்லதர்ச் சிறுநெறி என்னும் பூதனார் நற்றிணைப் பாட்டடியானும், வளிவழங்கும் என்னும் குறளடியானுமறிக. இனி, முந்நீர் என்பது கடலுக்கு இயற்பெயராதல் வெளிப் படையாகவும், அச்செம்பொருளை விட்டு, மூன்று நீர்மையாற் செல்லுஞ்செலவு என்று பொருள் கூறும் நச்சினார்க்கினியர் உரை எவ்வகையானும் பொருந்துவதன்று. அவர் கூறுமாறு ஓதல், தூது, பொருள் காரணமாக மட்டும் தலைவன் தலைவியை உடன் கொண்டு செல்லுதல் கடியப்படுமெனின், மற்றும் பகை காவல் முதலியவற்றில் தலைவியோடு கூடச் சேறல் உண்டு எனக் கொள்ளல் வேண்டும். ஓதல் தூது பொருள்பற்றித் தலைவியை உடன்கொண்டு செல்லுதலினும், பகை பிறநாடுகாவல் பற்றிய செலவுகளில் அவளைக் கொண்டு செல்லுதலால் வரும் ஏதம் பெரிதாகலானும், பின் கற்பியலில் எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார் எனப் பாசறையில் பெண்ணொடு சேறல் கடியப்படுதலானும், அவ்வாறு போர் காவல்களில் தலைவியொடு செல்லும் வழக்குண்மை சான்றோர் செய்யுட்களில் யாண்டும் பயிலாமையானும், அவ்வுரை சூத்திரக் கருத்தன்மை தேற்றமாகும். இனி, ஓதல், பகை, தூது, பொருள், காவல் அனைத்தும் பிரிவுவகைகளே யாதலானும், பிரிவு தலைமக்கள் தம்முள் பிரி தலையே குறிக்குமாதலானும், இப்பிரிவைந்தனுள் எதுபற்றியுந் தலைமகன் தலைவியுடன் செல்லுமாறில்லையென்பது தேற்றம். அதனாலும் நச்சினார்க்கினியர் கூறும்பொருள் இந்நூலார் கருத்தா காமை பெறப்படும். பின், இச்சூத்திரம் கூறுவது யாதெனின், அன்பினைந்திணை களுளெதனினு மடங்காதனவும், அகவொழுக்கத்திற்கு உரிப் பொருளாயமைவனவுமான களவில் உடன்போக்கும், கற்பில் ஏற்புழி மனைவியுடன் சேறலும் தமிழ் மரபென்பதும், அவ்வாறு செல்லுங்கால் பெண்டிரொடு கடல் கடத்தல் மரபன்றென்பதுமே யாம். இவற்றுள் முன்னது கொண்டுதலைக் கழியினும் என்னும் இவ்வியல் 15ஆம் சூத்திரத்தானும், பின்னது மரபு நிலைதிரியா என்னும் இவ்வியல் 45ஆம் சூத்திரத்தானும் அமையும். (i) களவில், கொண்டுதலைக்கழிதலுக்குச் செய்யுள்: அழிவில முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழ... ... . ... ... ... .... .... .... நிழல்காண் டோறும் நெடிய iவகி kணல்காண்nடாறும்tண்டல்iதஇ tருந்தாnதகுமதி,tலெயிற்nறாயே. மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் நறுந்தண் பொழில கானம் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே (பாலைபாடிய பெருங்கடுங்கோ, நற்றிணை. 9) (ii) கற்பில், தன்னை உடன்கொண்டு செல்லக் கொழுநனை மனைவி வேண்டற்குச் செய்யுள்: தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால் என்னீ ரறியாதீர் போல விரைகூறி னின்னீர வல்ல நெடுந்தகாங் எம்மையும் அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு (பாலைக்கலி. 6) சூத்திரம்: 34 எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறிமை யின்மை யான. கருத்து: இது, மகளிர்க்கு மடலேற விரும்புதலும் முறை யன்று என விலக்குதல் நுதலிற்று. இதுவும் பெண்ணியல் கூறும் பெற்றித்தாகலின், மகளிர்க்கு முந்நீர் வழக்கம் மறுக்கும் முன்னைச் சூத்திரத்தை யடுத்து மடன் மேவலை மறுக்கும் இச்சூத்திரம் அமைக்கப்பட்டது. பொருள்: எத்திணை மருங்கினும் = அகத்திணை ஏழனுள் எதன்கண்ணும்; மகடூஉ மடன்மேல் = தலைவி மடலேற விரும்புதல்; பொற்புடை நெறிமையின்மையான = அழகிய முறைமை இல்லை. குறிப்பு: எத்திணை மருங்கினும் என்றார்; அன்பினைந் திணைப் பகுதியில் ஆடவர்போல் பெண்டிர் மடல் விரும்புதல் அமையாமை மட்டுமன்று; பெருந்திணையினும் ஏறிய மடற்றிறம் ஆடவர்க்கன்றி, புலனெறி வழக்கில் மகளிர்க்குக் கூறுவது வழக்கா றில்லை என்பதை வற்புறுத்துதற்கு. மேவல் - மேல், இடைக்குறை; ஐந்தாம் பரிபாட்டிலும் மலைபடு கடாத்திலும் ஆரல்-ஆல் ஆனது போல. மேவல், விருப்பப் பொருட்டு. நம்புமேவு நசையா கும்மே (தொல். சொல், உரி. சூத், 33) பேரிசை தவிர மேஎ யுறையும் என்னும் மலைபடு கடாத்தடியுங் காண்க. இல்லை என ஒரு சொல்லை வருவித்து, ஆன என்பதைக் காரணக் குறியாக்கி, பெண்பால் மடன்மேவலில்லை; பொலிவுபெறும் நெறிமை இல்லாமையால், என இளம்பூரணர் கொண்டாங்குக் கொள்ளலும் தள்ளும் தன்மைத்தன்று. எவ்வாற்றானும், மடலேறுதல் எனப் பொருள் கொள்ளுதல் பொருந்தாது. ஆடவர்க்குமே மடலேறுதல் பொற்புடை நெறிமைக்கு மாறாக நோந்திறத்தின்பாற்பட்ட காதலற்ற கழிகாமப் பழி பிறங்கும் இழிதகவுடைய பெருந்திணையின் பாற்படும் என்பது ஏறிய மடற்றிறம்... பெருந்திணைக் குறிப்பே என்னும் சூத்திரத்தானும் வலியுறும். மடல் ஏறாமல், மடல் ஊர்வேன் எனக் கூறுதலும் ஆடவர்பால் பொற்புடை நெறியாக்காமல், ஒரோவிடத்துப் புலனெறி வழக்கில் அமைத்துக் கொள்ளப் படுகிறது. மடன்மா கூறும் இடனுமா ருண்டே எனுந் தொல் காப்பியச் சூத்திரத்தால், மடன்மா கூறுவதும் ஆடவரளவிலும் நன்மரபாகாமல், ஓராங்கு மரபு வழுவமைதியாக மட்டும் கொள்ளப் படும் தமிழ் வழக்குத் தெளிக்கப்பட்டது. அதன் காரணமும் எளிதில் அறியப்படும். ஊரறிய ஏறிய மடற்றிறம் ஆடவருக்கும் பொருந் தாக்காமமாம் பெருந்திணை எனக் கடியப்படுகிறது. ஏறாமல் தனியிடத்தே மடலூர்வேன் எனமட்டும் தலைமகன் ஒரோவழிக் கூறுதல் அமைத்துக் கொள்ளப்பட்டது; ஏனெனில் தலைவன் தன் காதற் பெருக்கை விளக்குமள விற்றாகி, தலைவியின், உறுதுணை யாம் தோழிக்கு அவன் தனித்துத் தலைவியின் இன்றியமையாமையை வலியுறுத்தும் கருத்துடைமை காட்டும் கருவியாக்குதலால், மடன்மா கூறுதல் அகப்பகுதியில் ஆண் மகனுக்கு மரபு வழுவமைதி யாக மட்டும் ஆளப்படும். இப்புலனெறி வழக்கு மறுத்தற்கில்லை என்பதைத் தொல்காப்பியர், மடன்மா கூறுமிடனுமா ருண்டே என்று கூறி, உம்மையாலும் ஏகாரத்தாலும் அதுவும் நன்மரபன் றென்பதை இனிது பெற விளக்கினார். ஆதலால் மடலேற அவாவுதல் ஒருவாறு ஆடவர்க்கு மரபு வழுவமைதியாக மட்டும் அமையு மெனக் காட்டும் ஆசிரியர், மகளிர்க்கு யாண்டும் பொற்புடை நெறியமையாகாது என்பதைச் சூத்திரத்தால் விலக்குவாரானார். இதுவே தமிழ் மரபென்பது: கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் என்னும் குறளாலும், அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல் மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையிற் கேட்டறிவதுண்டு அதனையாம் தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் என்னும் திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமடலின் அடிகளாலும் தெளியப்படும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்கதில் என்பதும். தலைவன் கூற்றேயாகலானும், மடல் ஊர்வேனென்று தலைவி கூறுதலாக யாண்டும் ஆன்றோர் செய்யுள் செய்யாமை யானும், மடல் ஏறும் விருப்பமும் மகளிர்க்குப் பொற்புடை நெறியாகாமை தேறப்படும். மேலும், உடம்பும் உயிரும் வாடியக் காலும் .. ... ... ... ... ... ... கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை என்னும் பொருளியற் (10) சூத்திரத்தால் மணந்து கணவனுடன் வாழும் மனைவியும் கணவனுக்குமே தன் காதலைக் காத்தலே பெண்ணியல்பென வலியுறுத்தப்படுகின்றது. தனியிடத்துக் கொண்ட கணவனுக்கும் கரத்தற்குரிய தன் காதலை ஊரறிய மடலேறிப் பறை அறைவேனெனல், நாணொடு நிறையைப் பூணாகக் கொண்ட பெண்டகைமைக்கு முற்றிலும் இயைபற்றதாகும் இதனாலன்றோ, காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய, ஆதலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான எனுங் களவியற் (17) சூத்திரத்தால் தொல்காப்பியர், களவில் தலைவியரிடம் கடலன்ன காமவேட்கை குறிப்பானன்றி நெறிப் படாமையையும், அவ்வாறு நெறிப்படின் அது பொற்புடைமை ஆகாமையையும் வற்புறுத்தினார். இத்தமிழ் மரபுக்கு மாறாக, கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்ப மடலூர்தல் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேற்கொண்ட போழ்து என நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோள் காட்டினாரா லெனின், பண்டைநன் மரபுக்கு மாறாகப், பெண்டிரெல்லாரும் யாண்டும், எந்நிலையிலும், ஆடவரெழிலுக்கு உடையுமுள்ளத்தினர் எனக்கூறும் உலா, மடல் முதலிய பனுவல் எழுந்த தகுதியும் மரபும் தலை தடுமாறிய பிற்கால வழக்கென மறுக்க. சூத்திரம்: 35 தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சம் சார்தலென்று அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி உரிய கருத்து: இது, தலைவனுடன் போன தலைவியின் பிரி வாற்றாத தாயாரின் பரிவு நிலைமையும், அது பற்றிக் கூற்று நிகழும் பகுதிகளும் கூறுதல் நுதலிற்று. பொருள்: போகிய திறத்து நற்றாய் புலம்பலும் = தலைமகள், தலைவனுடன் போனவழி, அவளைப் பெற்ற நற்றாயின் துனிதரும் தனிமையில் மகட் பிரிவின் அகப்பரிவாற் கூறுவனவும்: தன்னும் அவனும் அவளுஞ்சுட்டி = தன்னையும், தலைமகனையும் (அவனுடன் சென்ற) தன் மகளையும் குறித்து; மன்னு நிமித்தம் = அடிப்பட்ட புள் என்னும் நிமித்தங்களோடும்; மொழிப்பொருள் = விரிச்சி என்னும் நற்சொல்லோடும்; தெய்வம் = வேலன் வெறியாடல் முதலிய கடவுட் பராவலோடும்: நன்மை தீமை அச்சம் சார்தல் என்று = உடன் போக்கால் உளதாம் நன்மை தீமை அச்சம் சார்தல் என்பவற்றோடும்; அன்ன பிறவும் = அத்தகைய இடங்களுக்கேற்ற பிற கூற்றுக்களையும்; அவற்றொடு தொகைஇ = மேற்கூறிய வற்றோடு சேர்த்து; முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி = இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய மூன்று காலங்களோடும் இயைய விளக்கி; தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் = தலைவியின் தோழி யிடத்தும், தலைமக்களைக் கண்டு வருவோரிடத்தும்; ஆகிய கிளவியும் = நிகழும் கூற்றுக்களும்; அவ்வழி உரிய = அந்நிலையில் உரியனவாகும். குறிப்பு: போகிய திறத்து என்பதை முன்னே கூட்டிச் சூத்திரத் துறைகள் அனைத்திற்கும் பொதுவாக்கிப் பொருள் கொளலே பொருந்தும். ஆகிய கிளவி என்பதனைத், தன்னும் அவனும் அவளும் சுட்டி என்பது முதல் மூன்றுடன் விளக்கி என்பது வரை ஒவ்வொன்றனோடும், தோழி தேஎத்தும், கண்டோர் பாங்கினும், புலம்பலும் என்பவற்றோடும் தனித்தனிக் கூட்டுக. அவ்வழி என்பது அவ்வாறு உடன் போகிய மகட் பிரிவுக்கு வருந்தும் வழி என்றாகும். புலம்பல் தோழி தேஎத்தும், கண்டோர் பாங்கினும், வருந்திக் கூறலைச் சுட்டலாகாப் பொருள் கோடல், புலம்பே தனிமை (உரி. 83) என்னும் சூத்திரக் கருத்துக்கு மாறாகும். ஆதலால் நற்றாயின் தனிப்படர் இரக்கத்தையே அச்சொல் உணர்த்துமென்க. நிமித்தம் என்பது காக்கை கரைதல், பல்லி ஒலி, ஓந்தி நிலை, இடத்தோள் இடக்கண் துடிப்பு முதலியவைகளைக் கொண்டு நன்மை தீமை துணிதல். இதற்குப் புள்ளறிதல் என்றே பெயர் வழங்கிற்று. முதலில் பறவைகளைக் கொண்டு குறிபார்க்கும் வழக்கத்தால் பறவையைக் குறிக்கும் புள் என்னும் பெயர் நாளடை வில் எல்லாக் குறிகளையும் குறிக்கும் நிமித்தத்திற்கே வழங்கலாயிற்று. மொழிப் பொருள், என்பது; நற்சொல்; விரிச்சி, நற்சொல், மொழிப்பொருள் என்பன ஒரு பொருட் கிளவிகள். விரிச்சியை, வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு ஈண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று என்பர் புறப்பொருள் வெண்பாமாலையார். (i) தன்னும் அவனும் அவளும் சுட்டித் தாய் கூறும் கிளவிக்குச் செய்யுள்: இரும்புனிற் றெருமைப் பெருஞ்செவிக் குழவி பைந்தா தெருவின் வைகுதுயின் மடியுஞ் செழுந்தண் மனையோ டெம்மிவ ணொழியச் செல்பெருங் காளை பொய்மருண்டு, சேய்நாட்டுச் சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர் வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த குவளை உண்கண்என் மகளோ ரன்ன செய்போழ் வெட்டிப் பெய்த லாய மாலைவிரி நிலவிற் பெயர்புபுறங் காண்டற்கு மாயிருந் தாழி கவிப்பத் தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே (நற்றிணை. 271) இச்செய்யுளின் எம் இவண் ஒழிய எனவும், எற்கொள்ளாக் கூற்றே எனவும் தாய் தன்னையே சுட்டியும், செல்பெருங்காளை பொய் மருண்டு எனத் தலைவனைச் சுட்டியும், வீசுனைச் சிறுநீர் குடியினன் கழிந்த குவளையுண்கண் என் மகள் என உடன் போன மகளைச் சுட்டியும் கூறுதல் காண்க. என்னும் உள்ளினள் கொல்லோ, தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு அழுங்கல் மூதூர் அலரெழச் செழும்பல் குன்றம் இறந்தவென் மகளே (ஐங். 372) எனும் செய்யுளுமது. (ii) நிமித்தத்தொடு சார்த்தி நற்றாய் கூறும் கிளவிக்குச் செய்யுள்: மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை அன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்சி லோதியை வரக்கரைந் தீமே. (ஐங். 391) (iii) மொழிப்பொருள் என்ற நற்சொல்லாம் விரிச்சியொடு படுத்து நற்றாய் கூறுதற்குச் செய்யுள்: அருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்; சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி னுறுதுய ரலமர னோக்கி யாய்மக ணடுங்குசுவ லசைத்த கையள், கைய கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது; நீநின் பருவர லெவ்வம் களைமா யோயென. (முல்லைப்பாட்டு வரி. 7-21) (iv) தெய்வத்தொடுபடுத்தி நற்றாய் கூறும் கிளவி: அருஞ்சுர மிறந்தஎன் பெருந்தோட் குறுமகள் என்னும் அகம் (195) ஆம் பாட்டில், அறுவை தோயும் ஒருபெருங்குடுமிச் சிறுபைஞ்ஞாற்றிய பஃறலைக் கருங்கோல் ஆகுவ, தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோ நின்கழங்கின் திட்பம், ஆறாது வருபனி கலுழும் கங்குலின் ஆனாது துயரும் என்கண் இனிது படீஇயர், எம்மனை முந்துறத் தருமோ, தம்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே எனவரும் அடிகள் தெய்வத்தோடு படுத்து நற்றாய் கூறும் கிளவியாகும். (v) நன்மை சார்தல்: மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல, அறநெறி இதுவெனத் தெளிந்தஎன் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே. எனும் ஐங்குறுநூற்று (371)ச் செய்யுள் மகளின் நன்மை கருதிய தாய்கூற்றாம். (vi) உடன் போய மகளின் துன்புறு தீமை கருதித் தாய் கூறும் கிளவி: நிழலான் றவிந்த நீரி லாரிடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்குவல் லுநள்கொல் தானே ஏந்திய செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த பாலும் பலவென உண்ணாள் கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே (குறு. 356) நீர்நசைக் கூக்கிய உயவல் யானை இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள் மன்றஎன் மகளே பந்தும் பாவையும் கழங்குமெமக் கொழித்தே (ஐங். 377) என்பதும் அது. (vii) அன்ன பிறவும் என்றதால், சூத்திரத்தில் விதந்து கூறியன வல்லாத பிற பொருந்துந் துறைகளும் சுட்டப்பட்டன. தலைவியினற்றாய் தன் மகளை யுடன் கொண்டு சென்ற தலைவன் தாயை வெறுத்து நொந்து கூறுவது, அன்னபிற வற்றுள் ஒன்றாகும். அதற்குச் செய்யுள்: நினைத்தொறுங் கலிழும் இடும்பை எய்துக, புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும் வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே (ஐங். 378) (viii) முன்னியகாலம் மூன்றுடன் விளக்கிப் போகிய திறத்து நற்றாய் கூற்றுக்குச் செய்யுள்: பிரசங் கலந்த சிறுமதுகை யளே எனும் போதனார் நற்றிணைப் பாட்டில், ...............பூந்தலைச்சிறுகோல் உண்என்றோக்குபுபுடைப்ப........ அரிகரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇ மெலிந்தொழியப் பந்த ரோடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி, அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தந்தை கொடுஞ்சோ றுள்ளாள்; ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே. (நற்றிணை.110) எனுமடிகளில், தன் மகளின் கழிந்த இளமைச் செய்தியும், அறி வொழுக்க நிகழ்காலச் செய்தியும், அவள் மனையற எதிர்கால மட்சியும்தய்கூறுதலறிக.(iஒ) தோழி தேஎத்து நற்றாய் கூற்றுக்குச் செய்யுள்: செல்லிய முயலிற் பாஅய சிறகர் வாவ லுகுக்கு மாலையாம் புலம்பப் போகிய அவட்கோ நோவேன், தேமொழித் துணையிலள் கலிழு நெஞ்சின் இணையே ருண்கண் இவட்குநோ வதுவே (ஐங். 378) (x) கண்டோர் பாங்கில் நற்றாய் கூறுதற்கு எடுத்துக் காட்டுச் செய்யுள்: ஒருமக ளுடையேன் மன்னே: அவளும் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்; இனியே, தாங்குநின் அவலமென்றிர்; அதுமற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே? உள்ளின் உள்ளம் வேமே, உண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே (நற்றிணை. 184) இப் பாட்டில், தாங்குநின் அவலமென்றிர், அதுமற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே என அறிவுடை யோராகிய கண்டோர் பாங்கில் நற்றாய் பகர்ந்த கிளவி காண்க. (xi) நற்றாய் தனிமையிற் கூறல்: இதுவென் பாவை பாவை, இதுவென் னலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோஎன் பூங்க ணோளே (ஐங். 375) எனும் ஐங்குறுநூற்றுச் செய்யுள், மகட் பிரிந்த தாய் ஆற்றாமையால் வருந்தும் புலம்பு சுட்டிய கிளவியாகும். சூத்திரம்: 36 ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும், தாமே செல்லுந் தாயரு முளரே. கருத்து: இது, தலைவி உடன்போனவழி அவள் தாய்மார் அவளைத் தேடிச் செல்லுதலும் உண்டென உரைக்கின்றது. பொருள்: ஏமப் பேரூர்ச் சேரியும் = தீதுறாக்காவலுடைய பேரூரைச் சார்ந்த சேரியிலும்; சுரத்தும் = தலைவி உடன்போகிய அருவழியிலும்; தாமே செல்லும் தாயருமுளரே = தன்னையர் தமர் முதலியோர் துணையின்றிச் சென்ற மகளைத் தேடித் தாமே செல்லும் தாய்மாரும் உளராவர். குறிப்பு: ஏமமற்ற ஊராயின் தாயர்மனையிறந்து புறஞ் செல்லாராதலின் ஏமப் பேரூர்ச்சேரி எனப்பட்டது. ஏமப் பேரூர்ச் சேரியாயின், அதனளவு மகட்பெற்ற நற்றாய் தேடிச் செல்லுதல் அமையும்; நற்றாய் சுரஞ்சென்று தேடுதல் வழக்காறில்லை. செவிலித் தாயர் சுரத்தும் தேடிச் செல்வர். இதுவே பண்டைய ஆன்றோர் செய்யுளிற்கண்ட புலனெறி வழக்கம். சிற்றூராயின் தேடிச்செல்லுதல் வேண்டாவாதலின் சேரியுடைய பேரூரே கூறப்பட்டது தாயரும் எனும் உம்மையால், தாமே செல்லும் தாயர் சிலரேயாவரென்பதும், தேடப் பிற அயலோரை ஏவும் தாய்மாரே பலராவரென்பதும் பெறப்படும். அடுத்துப் பின் கூறும் அயலோரோடு சுரம் செல்லும் தாயருமுளரெனச் சுட்டுவதால் இவ்வும்மை எதிரது தழூஉம் எச்சமுமாம். இனி, சேரியும் சுரத்தும் என ஒருங்கெண்ணிச் செல்லுந் தாயரும் உளர் எனப் பன்மையாற் கூறுதலால், நற்றாய்மனை யிருந்து இரங்குவதன்றி மனையிறந்து புறம்பெயர்தல் இன்றெனக் கொண்டு, செவிலித்தாயரே சேரியும் சுரத்தும் செல்வர் எனப் பொருள் கொள்ளினும் தவறாகாது, நற்றாய் பேரூர்ச்சேரி அளவு தேடிச் செல்லுதற்குச் செய்யுள் வருமாறு: ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி (275) என்னும் அகப்பாட்டில் வெம்மலை அருஞ்சுரம்... கண்ணுடையீரே என வருமடிகள் ஏமப்பேரூர்ச் சேரியில் தேடிச்சென்ற நற்றாய் கூற்றாகும். கூழை நொச்சிக் கீழது என்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காண்டிரோ என்பதனால் அப்பேரூர் காவல் மதிலுடைய தென்பதும், அந்நகர் மதிற்புறத்தே தன்மகள் விரல்கொண்டு வரித்த வண்டல் காணக் கிடப்பதாய்க் குறித்ததனால் அது நகர்ப் புறச்சேரி என்பதும் விளக்கமாகும். அன்றியும், நம்மிவணொழிய என நற்றாய் தன் முன்னிலையோரையும் உளப்படுத்திக் கூறினதால், அவர் தலைமகள் ஊரவராதலும், தன்னைப்போல் அவரையும் தலைமகள் விட்டுச் சென்றாள் எனச்சுட்டுந் தாயினுளக்குறிப்பும் தெளியப்படும். இனி, செவிலி தேடிச் செல்லுதற்குச் செய்யுள்: காலே பரிதப் பினவே, கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே, அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே (குறுந். 44) பாலைக்கலியில், எறித்தரு கதிர்தாங்கி எனும் பாட்டில், வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை, என்மகள் ஒருத்தியும், பிறண்மகன் ஒருவனும், தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணீரோ பெரும எனுமடிகள் சுரஞ்சென்ற செவிலியின் கூற்றாம். சூத்திரம்: 37 அயலோ ராயினும் அகற்சி மேற்றே. கருத்து: இது, மேலதற்கோர் புறனடை கூறுகிறது. பொருள்: அயலோராயினும் = உடன்போயவரைத் தேடிச் சுரஞ்செல்லுஞ் செவிலித்தாயரன்றி, தமர், ஏவலர் முதலிய பிறரே யாயினும்; அகற்சி மேற்றே = அவர்தேடுதல் அண்மைச் சேரி யன்றி அகன்ற சேய்மைச்சுரத்தின்கண்ணதேயாகும். குறிப்பு: மேற் சூத்திரத்தில் சொல்லிய இரண்டனுள் தாயரே செல்லும் அண்மைச் சேரியை விலக்கிச் சேய்மைச் சுரத்திற்குத் தாயரல்லாப் பிறர் தேடிச்செல்லுதல் மரபு, ஈற்றேகாரம் தேற்றம். உம்மை, செவிலியர் போல அயலோரும் சேண்சுரம் செல்வரெனச் சுட்டலால் இறந்ததுதழீஇய எச்ச உம்மையாம். இதற்குப் பழைய உரைகாரர் வேறுபொருள் கூறுவர். அது வருமாறு: அயலோராயினும் = முற்கூறிய சேரியினும் சுரத்தினு மன்றித் தம்மனைக்கயலே பிரிந்தாராயினும்; அகற்சிமேற்றே = அதுவும் பிரிவின்கண்ணதாம் என இளம்பூரணரும், நச்சினார்க் கினியரும் உரை கூறுவர். மேற்சூத்திரம் கூறும் சேரியுஞ் சுரமும் காதலர் பிரியுமிடம் குறியாது, உடன்போன தலைமக்களைத் தாய்மார் தேடிச்செல்லும் இடத்தையே குறிக்குமாதலால், அங்குப் பிரியாமல் தம்மனை அயலேபிரிதலை இச்சூத்திரம் கூறுவதாகக் கொள்ளும் அவ்விருவர் உரையும் பொருந்தாது. அன்றியும் மேற்சூத்திரம் பாலையாம் பிரிவைக் குறிப்பதேயன்று; பிரியாமல் உடன்போன தலைமகளை அவள்தாயர் தேடிச் செல்லுதலை மட்டுமே குறிக்கும். பிரிவையே கருதாத இச்சூத்திரம் பிரியுமிடத் தணிமை குறிக்கும் எனல் எவ்வாற்றானும் அமைவதன்றாம். அதனாலும் அவர்தம் உரை தொல்காப்பியர் கருத்தன்மை அறிக. இனி, இதற்கு இன்னும் ஒருபொருள் கூறுவாருமுளர். அது வருமாறு: அயலோராயினும் = உடன்போய தலைமக்கள் சுரம் போகாமல் ஊரகத்தே மனை அயலில் தங்குவாராயினும், அகற்சி மேற்று = அதுவும் பிரிவின்கண்ணதேயாம். இவ்வுரையும் இச்சூத்திரத்திற்குப் பொருந்தாது. மனையயல் உறைதல் உடன்போதலாமாறில்லை. உடன் போய தலைமக்கள் மனையயல் உறைந்ததாகப் புலனெறி வழக்கில் யாண்டும் ஆன்றோர் செய்யுளிலாட்சியுமில்லை; தாமே செல்லும் தாயரும் என்னும் முன் சூத்திரத் தொடரொடு அடுத்தியையும் அயலோராயின் எனும் சொற்றொடர் அவ்வாறு செல்லுந் தாயரல்லாப் பிறரையே சுட்டுவது வெளிப்படை. மேலும், அகற்சி என்பது நெடுந்தூரத்தையே குறிக்குமாதலின், மனை அயலைக் குறியாது. அகற்சியை நீங்குதல் எனப்பொருள் கொண்டு, பிரிவெனும் பாலைத்திணையை இச்சூத்திரம் கூறுவதாக உரையாசிரியர் கொண்டனர்; முன், அவர் கொண்டுதலைக் கழிதலைப் பாலைத் திணையாகக் கொண்டதுபற்றி இச்சூத்திரத்திற்கும் இவ்வாறு உரை கூறுவாராயினர். உடன்போகும் தலைமக்கள் தம்முட் பிரிதலின்மையின், அவரொழுக்கம் பாலையாதலில்லை. அதனால் ஈண்டு அகற்சி என்பது பிரிதலை உணர்த்தாது சேய்மையையே உணர்த்துமென்க. தலைவிதமர் தேடிச் சுரஞ் செல்லுதற்குச் செய்யுள் வருமாறு: அன்றையனைய வாகி என்னும் நற்றிணை (48)ஆம் செய்யுளில், நீர்எமரிடை உறுதர ஒளித்த காடே என வருவதும், நற்றிணை (362) ஆம் செய்யுளில், நுமர்வரின் மறைகு வென் மாஅ யோளே என்பதும் சேண் சென்று தமர் தேடுதலைக் குறிக்கும். சூத்திரம்: 38 தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும், போக்கற் கண்ணும், விடுத்தற் கண்ணும், நீக்கலின் வந்த தம்முறு விழுமமும். வாய்மையும், பொய்மையும், கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைபெயர்த்துக் கொளினும், நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந் தோளை அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருக்கி வந்ததன் திறத்தோ டென்றிவை யெல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன. கருத்து: இச்சூத்திரம் தோழிக்குக் கூற்று நிகழுமிடம் உணர்த்துகின்றது. பொருள்: தலைவரும் விழும நிலையெடுத்துரைப்பினும் = தலைவனுக்கும் தலைவிக்கும் பிரிவால்வரும் ஏதப்பாடுகளை எடுத்துக் கூறுதற்கண்ணும்; போக்கற்கண்ணும் = தலைமகனுடன் தலைவியை அனுப்புமிடத்தும்; விடுத்தற்கண்ணும் = உடன் கொண்டு செல்லாமல், தலைவன் தலைவியை விட்டுப் பிரியு மிடத்தும்; நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் = தலைவி தன்னையும் தமரையும் நீத்துச் செல்லுதலால் தனக்கும் தாயர் முதலிய தமருக்குமுற்ற துன்பத்தையும்; வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய் நிலைநோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் மெய்யையும் பொய்யையும் புனைந்து கூறியும் கண்டோரைக்காட்டியும் நற்றாயின் பருவரலைக் கருதி மறுத்தரத் தலைவியை வரவேற்றுக் கொள்ளுதலினும்; நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை = தலைவன் விடுத்தகல ஆற்றாமையால் மிக நொந்து மனங்கலங்கும் தலைவியை; அழிந்தது களையென = வருந்துதலை ஒழியென; மொழிந்தது கூறி = தலைவன் கூறியதை எடுத்துக்கூறி; வன்புறை நெருங்கிவந்ததன் திறத்தொடு = வற்புறுத்தி ஆற்றுவிக்கும் கூற்றுக்கள் நிகழ்த்தும் திறத்தொடு; என்றிவையெல்லாம்; இயல்புறநாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன = அகத்துறை இலக்கணத்தை ஆராயின் தோழிக்குரியனவாய்ப் பொருந்தித் தோன்றும். குறிப்பு: விடுத்தற்கண்ணும் என்பதற்குப் பண்டை உரை யாளராய இளம்பூரணர் தலைவியைத் தோழி தலைவனுடன் கூட்டிவிடுத்தற்கண்ணும் எனப் பொருள் கூறுவர். போக்கற் கண்ணும் என்பதும் இதனையே குறிக்குமாதலின், இவர்பொருள் ஆசிரியர்க்குக் கூறியது கூறல் என்னும் குற்றம் தரும். அன்றியும், பின் தலைவன் கூற்றுக்களைக்கூறும், ஒன்றாத் தமரினும் எனும் சூத்திரத்தில் தலைவன் தலைவியை ஒன்றிய தோழியொடு வலிப் பினும் விடுப்பினும் என்று தொல்காப்பியர் கூறுதலான், தலைவி யைத் தலைவன் உடன்கொண்டு செல்லுதலும் விடுத்துச் செல்லு தலும் உண்டெனத் தெளியக் கிடத்தலின், ஈண்டு விடுத்தல் என்பதும் தலைவியைத் தலைவன் விட்டுச் செல்லலையே குறிக்குமென்பது ஒருதலை. இச்சூத்திரத்தில் தலைவன் மொழிந்ததை எடுத்துக்கூறித் தலைவியைத் தோழி ஆற்றுவித்தலைக் கூறுதலானும், தலைவி வருந்தத் தலைவன் அவளை விட்டுச் செல்லுதலுண்டென்பது போதரும். தலைப்பெயர்த்துக் கொளினும் என்பதற்கு நச்சினார்க்கினியர் உடன்போய தலைவியைத் தேடிச்செல்லாமல் தாயை மீட்டுக் கொள்ளுதல் எனப்பொருள் கொள்ளுவர். இதற்கு ஆன்றோர் செய்யுள் ஆட்சியின்மையின் இவ்வுரை சிறவாது. இதற்கு நச்சினார்க் கினியர் காட்டும், அவளே, உடனமர் ஆயமொடு ஓரைவேண்டாது எனும்பாட்டில் சுரஞ்செல்லும் தாயை மீட்ட குறிப்பொன்று மில்லை. மகட் பிரிவுக்கு வருந்தும் தாயைத் தோழி ஆற்றுவித்ததையே இச்செய்யுள் குறிக்கிறது. பால்பாற் படுப்பச் சென்றனள்; அதனால் நீஎவ னிரங்குதி அன்னை விழவயர்ந் திருப்பின் அல்லதை இனியே என்பதே ஈண்டுத் தோழி கூற்றாதல் காண்க. ஒழிந்ததுகூறி என நச்சினார்க்கினியர் கொண்ட பாடத்தினும், காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் கொண்ட மொழிந்தது கூறி எனும் பாடமே மரபுநிலை வழாச்சிறப்பும் செவ்வியு முடைத்து. வன்புறை நெருங்கு தலாவது, வற்புறுத்திக் கூறலாகும். இனி, நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சுகலுழ்ந்தோளை, அழிந்தது களைஇய ஒழிந்ததுகூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு எனப் பாடங்கொண்டு, மகட் பிரிவாற்றாது அரற்றும் தாயை அவள் வருத்தம் தீர்த்தல் கருதித், தலைவியும் தலைவனும் கூறியனவும் செய்தனவும் எடுத்துச் சொல்லி விரைவில் மீள்வாரென வற்புறுத்தித் தேற்றுங் கூற்றோடே, எனப்பொருள் கொள்ளுவதும் பொருந்துவதாகும். அதற்குச் செய்யுள்: அன்னை வாழியோ அன்னை நின்மகள் எனும் கீழ் வருஞ் செய்யுள் இதற்கு எடுத்துக் காட்டாகும். தலைவரும் விழுமநிலை எடுத்துரைத்தற்குச் செய்யுள்: பொலம்பசும் பாண்டிற் காசுநிரை அல்குல் இலங்குவளை மென்றோள் இழைநிலை நெகிழப் பிரிதல் வல்லுவை யாயின் அரிதே விடலையிவள் ஆய்நுதற் கவனே (ஐங். 310) இனி, தோழி தலைவற்குத் தலைவி விழுமம் கூறுதற்குச் செய்யுள்: பாஅல் அஞ்செவி எனும் பாலைக்கலியில், பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே (பாலைக்கலி. 5) எனவரும் போக்கியலுமதுவே. இனி, தோழி தலைவிக்குத் தலைவன் விழுமம் உரைத்தற்குச் செய்யுள் வருமாறு: தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்; இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; யாங்குச்செல் வாமென் னிடும்பை நோய்க்கென ஆங்குயான் கூறிய அனைத்திற்கும் பிறிதுசெத் தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற; ஐதே காமம்; யானே கழிமுதுக் குறைமையின் பழியுமென் றிசினே (குறு. 217) போக்கற்கண் தோழி தலைவற்குக் கூறியதற்குச் செய்யுள் வருமாறு: பெருநன் றாற்றிற் பேணாரு முளரே ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு புலவி தீர வளிமதி, இலைகவர் பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன் மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட! நின்னல திலளே. (குறு. 115) அண்ணாந்தேந்திய எனும் நற்றிணை 10ஆம் செய்யுளில் நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கேழூர என்பதும் போக்கற்கண் தோழி தலைவனுக்குக் கூறிய தாகும். இவளே நின்னல திலளே, யாயும் குவளை யுண்கண் இவளல திலளே, யானு மாயிடை யேனே, மாமலை நாட! மறவா தீமே எனவரும் செய்யுளுமது. தலைவனுடன் போக்கற்கண் தோழி, தலைவிக்குக் கூறிய தற்குச் செய்யுள்: ஊஉர் அலரெழச் சேரி கல்லென, ஆனா தலைக்கும் அறனில் அன்னை தானே யிருக்க தன்மகள் யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு விண்தொட நிவந்த விளங்குமலைக் கவாஅற் கரும்புநடு பாத்தி யன்ன பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. (குறு. 262) இது, தலைவியொடு தன்னை ஒருப்படுத்துணருந் தோழி கூற்று. தலைவியைத் தலைவன் விட்டுப் பிரியுமிடத்துத் தோழி தலைவற்குக் கூறியதற்குச் செய்யுள்: ...........உமணர்ச் சேர்ந்துகழிந்தமருங்கின்அகன்றலை ஊர்பாழ்த்தன்னஓமையம்பெருங்காடுஇன்னாவென்றீராயின்இனியவோ bபருமதமியேற்குமனையே(குறு.124) இதுவும் தன்னைத் தலைவிபோற் கூறும் தோழி கூற்று. மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங்கருஞ்சுரத்தரிடைச்bசல்வோர் சுரையம்புமூழ்கச்சுருங்கிப்புரையோர்தம் உண்ணீர்வறப்பப்புலர்வாடுநவிற்குத் தண்ணீர்bபறாஅத்தடுமாற்றருந்துயரம் கண்ணீர்நனைக்குங்கடுமையகடென்றால், என்னீர்அறியாதீர்போலஇவைகூறின் நின்னீரவல்லbநடுந்தகாbயம்மையும் அன்பறச்சூழாதேஆற்றிடைநும்மொடு துன்பந்துணையாகநடினதுவல்ல தின்பமுமுண்டோஎமக்கு.(கலி. 6) எனும் பாலைக் கலியுமது. ஒன்றில் காலை அன்றில் போலப் புலம்புகொண் டுறையும் புன்கண் வாழ்க்கை யானுமாற் றேனது தானும்வந் தன்று நீங்கல் வாழி யரைய.... எனும் நற்றிணைப் பாட்டும், தலைவிபோற் கூறும் தோழி கூற்று. மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர் அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ்வரை இறக்குவை யாயின் மைவரை நாட வருந்துவள் பெரிதே. எனவரும் ஐங்குறுநூற்றுச் (301) செய்யுமளுமது. தோழி, தலைவிக்குக் கூறியதற்குச் செய்யுள் வருமாறு: நிலந்தொட்டுப் புகாஅர், வான மேறார், விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார், நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோநங் காத லோரே. (குறு. 130) பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத் தேரக லல்குல் அவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப் புல்லரை யோமை நீடிய புலிவழங் கதர கானத் தானே. (ஐங். 316) எனும் ஐங்குறுநூற்றுப் பாட்டுமதுவே. நீங்கலின் வந்த தம்முறு விழுமம் தோழி கூறுதற்குச் செய்யுள்: அன்னை வாழியோ அன்னை, நின்மகள் என்னினும் யாயினும் நின்னினும் சிறந்த தன்னமர் இளந்துணை மருட்டலின் முனாஅது வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம் விழைவுடை உள்ளமொடு உழைவயிற் பிரியாது வன்கண் செய்து சென்றனள்; புன்கண் செய்தல் புரைவதோ அன்றே. தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளற்குச் செய்யுள்: புள்ளு மறியாப் பல்பழம் பழுநி மடமான் அறியாத் தடநீர் நிலைஇச் சுரநனி இனிய வாகுக வென்று நினைத்தொறுங் கலிழு மென்னினும் மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் மூரே (ஐங். 398) அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருங்கித் தோழி கூறுதற்குச் செய்யுள்: அரிதாய அறனெய்தி என்னும் பாலைக் கலியில், கடியவே கனங்குழாய் காடென்றார், அக்காட்டுள் ................................... பிடியூட்டிப் பின்னுண்ணும்களிறெனவு«உரைத்தனரே”(கலி. 10) என்பதுபோன்றதலைவன்மொழிந்தவற்றஎடுத்துக்காட்டி, இணைநல முடையகானஞ்சென்றோர் புனைநலம்வாட்டுநரல்லர்;மனைவயின் பல்லியும்பங்கொத்திசைத்தன; நல்லெழிலுண்கணும்ஆடுமாலிடனே.எனக்கூறி, அழியும்தலைவியைஆற்றுவித்தல்கண்க.தண்கயத் தமன்ற வன்படு துணைமலர் எனும் மருதனிளநாகனார் அகப்பாட்டில் (அகம். 59), வருந்தினைவாழியர்நீயே:...................................... தாம்பா ராட்டிய காலையு முள்ளார் பிரிந்து கேணுறைநர் சென்ற வாறே, புன்தலை மடப்பிடி உணீஇயர் அங்குழை நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுள் படிஞிமிறுகடியும்களிறே.என்று எடுத்துக்காட்டி அழியும் தலைவியைத்தோழி ஆற்று வித்தலும் காண்க. இனி, என்றிவை எல்லாம் எனப் பொதுப்படக் கூறுதலான், தோழி இது பருவமன்று என்பது போன்ற கூற்றுக்கள் நிகழ்த்தி ஆற்றுவித்தலையுங் கொள்க. அதற்குச் செய்யுள் வருமாறு: மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை; கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் bகாம்புசேர்bகாடியிணரூழ்த்த, வம்பமhரியைக்கhரெனமதித்தே (குறுந்.66) சூத்திரம்: 39 பொழுதும், ஆறும் உட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலும் ஊரது சார்வும் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்தெதிர் கூறி விடுப்பினும் ஆங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்ட தென்ப கருத்து: இது, தலைமக்கள் உடன்போக்கின்கண் கண்டோர் கூற்று நிகழுமிடம் கூறுகின்றது. பொருள்:பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றங் காட்டலும் = அவர் போகும் நேரமும் வழியும் அச்சந்தரத் தக்கவாக, அவை அஞ்சாது சென்று இடையூறு மேதங் கருதா தேகும் பிழையை அவர்கட்கு எடுத்துக் காட்டுதலும்; ஊரது சார்வும் = உடன் போவார்க்கு வழித்தங்க அண்மையில் ஊருண்மை யையும்; செல்லும் தேயமும் = அவர்கள் செல்லுமிடத்தின் சேய்மையையும்; ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் = அன்பு நிறைந்த உள்ளத்தொடு தலைமக்கட்கு அவர் நலம் பேணிப் பரிந்து கூறுமிடத்தும்; புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்ச மொடு அழிந்தெதிர் கூறி விடுப்பினும் = காதலால் கூடின தலைமக்கள்பால் அன்புற்ற உள்ளத்தோடு அவர் நிலைமைக்கு வருந்தி எதிரெடுத்துரைத்து அவரை விடுவிக்குமிடத்தும்; ஆங்கத் தாய் நிலைகண்டு தடுப்பினும் = தலைமக்களைத் தாங்கண்ட சுரத்திடையே தேடிவரும் செவிலித்தாய் நிலைமைகண்டு அவளை மேற்செல்லாது தடுத்துரைக்கு மிடத்தும்; விடுப்பினும் = நீ மேற் செல்லின் தலைமக்களைக் காண்பை எனக்கூறி அவளைப் போக விடுக்குமிடத்தும்; சேய் நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் = தொலை செல்லும் தலைமக்களின் உடன்போக்கலும், அவர் மறுதரவிலும்; கண்டோர் மொழிதல் கண்டதென்ப = உடன்போம் தலைமக்களைக் கண்டவர்கள் கூற்று நிகழ்தல், வழக்கின்கண் காணப்பட்டதென்பர் அகப்பொருள் நூலார். பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றங் காட்டற்குச் செய்யுள்: எல்லு மெல்லின்று, பாடுங் கேளாய், செல்லா தீமோ சிறுபிடி துணையே வேற்றுமுனை வெம்மையிற் சாந்துவந் திறுத்தென, வளையணி நெடுவே லேந்தி மிளைவந்து பெயருந் தண்ணுமைக் குரலே (குறு. 390) கண்டோர் ஊரணிமை கூறும் கிளவி வருமாறு: நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள், பல்கதிர்ச் செல்வன் கதிரும் ஊழ்த்தனன், அணித்தாற் றோன்றுவது எம்மூர், மணித்தார் மார்ப! சேர்ந்தனை சென்மோ. (பொருள். புறத்.சூ. 40. உரைமேற்கோள்) ஆர்வ நெஞ்சமொடு கண்டோர் கூறியதற்குக் கூற்று: வில்லோன் காலன கழலே, தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே, நல்லோர் யார்கொல் அளியர் தாமே, ஆரியர் கயிறாடு பாறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே. (குறு. 7) பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர் யார்கொல்? அளியர் தாமே, வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைக் காத லோரே. எனும் ஐங்குறுநூறு மது (381). அழிந்தெதிர் கூறி விடுத்தற்குச் செய்யுள்: இதுநும் மூரே, யாவருங் கேளீர்; பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம் யாம் பெற்றனமால் மீண்டனை சென்மோ. (பொருள். 40 சூ. மேற்கோள்.) தாய் நிலை கண்டு கண்டோர் தடுத்தற்குச் செய்யுள்: பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி! சிலம்புகெழு சீறடி சிவப்ப இலங்குவேற் காளையொடு இறந்தனள் சுரனே. தாய்நிலை கண்டு விடுத்தற்கு மேற்கோள்: நெருப்பவிர் கனலி உருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழ லிரீஇச் சிறுவரை இறப்பிற் காண்குவை, செறிதொடிப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே (ஐங். 388) சேய்நிலைக்ககன்றோர் செலவிற் கண்டோர் கூறும் கூற்று: செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள் மையணற் காளையொடு பைய வியலிப் பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை சென்றனள், என்றிர் ஐய! ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே? (ஐங். 389) இதில் செவிலி கொண்டுகூறும் கண்டோர் கூற்றைக் காண்க. மறுவரவின்கட் கண்டோர் கூறுதற்குச் செய்யுள்: இவன்இவள் ஐம்பால் பற்றவு மிவளிவன் புன்றலை யோரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது ஏதில் சிறுசெரு வுறுப மன்னோ; நல்லைமன் றம்ம பாலே! மெல்லியற் துணைமலர்ப் பிணைய லன்னஇவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே (குறு. 229) சூத்திரம்: 40 ஒன்றாத் தமரினும், பருவத்துஞ், சுரத்தும், ஒன்றிய மொழியொடு வலிப்பினும், விடுப்பினும், இடைச்சுர மருங்கின் அவள்தம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ ரெய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை யுளப்பட அப்பாற் பட்ட வொருதிறத் தானும்; நாளது சின்மையும், இளமைய தருமையும், தாளாண் பக்கமும், தகுதிய தமைதியும், இன்மைய திளிவும் உடைமைய துயர்ச்சியும் அன்பின தகலமும் அகற்சிய தருமையும்; ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்; வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியங் கருதிய ஒருதிறத் தானும்; புகழும் மானமும் எடுத்துவற் புறுத்தலும்; தூதிடை யிட்ட வகையி னானும்; ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்; மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும்; தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும், பாசறைப் புலம்பலும், முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்; காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்; பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும் எனஇரு வகையொடு உரைத்திற நாட்டங் கிழவோன் மேன கருத்து: இது, உடன்போக்கும், பிரிவின் வகையும், பிற காரணங்களும் பற்றித் தலைவனுக்குக் கூற்று நிகழும் இடன் கூறுகின்றது. பொருள்: ஒன்றாத்தமரினும், பருவத்தும், சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் = வரைவுடன் படாத சுற்றத்தோடும், பருவத்தின் கண்ணும், சுரத்திலும் ஏற்புடைச் சொல்லொடு தலைவியை உடன்கொண்டு செல்லத் துணியுமிடத்தும்; விடுப்பினும் = கொண்டு தலைக்கழியாமல் தலைவியைத் தான் விடுத்துப் பிரியுமிடத்தும்; இடைச்சுரமருங்கில் அவள் தமர் எய்தி = உடன்போக்கில் அரும் வழியினிடையே தலைவியின் தன்னையர் முதலிய சுற்றத்தாருற்று; கடைக்கொண்டு பெயர்தலில் = தலைவியைக் கொண்டு திரும்பு மிடத்து; கலங்கஞரெய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை உளப்பட = தலைவி மயங்கித் துன்பமெய்திக் கற்பால் தலைவன்பால் சேறலாலுளவாம் பூசலுட்பட; அப்பாற்பட்ட ஒரு திறத்தானும் = அத்தகைய (பல) பகுதிப்பட்ட ஒரு முறையானும்; நாளது சின்மையும் = வாழ்நாளின் சின்மையால் பொருள் வலித்தலும்; இளமைய தருமையும் = இன்ப நுகர்ச்சிக்குரிய இளமையின் அருமை (பொருட் பிணியை) நலித்தலும்; தாளாண்பக்கமும் = முயற்சியின் பெருமை கருதிப் பொருள் வலித்தலும்; தகுதிய தமைதியும் = தலைவியைப் பேணும் ஒப்புரவாண்மையறம் பொருட் பிணியை மெலித்தலும்; இன்மையதிளிவும் = இலம்பாட்டின் இழிவு கருதிப் பொருள் வலித்தலும்; உடைமைய துயர்ச்சியும் = தனக்குக் கிடைத்திருக்கும் தலைவியின் காதலாகிய புத்துடைமைச்சிறப்பு பொருட்பிணியை மெலித்தலும்; அன்பினதகலமும் = தலைவிபால் அன்பின் பெருக்கால் அவள் பொருட்டுப் பொருள் வலித்தலும்; அகற்சிய தருமையும் = அவளைப் பிரிந்திருக்க ஒல்லாமை பொருட்பிணியை மெலித்தலும்; ஒன்றாப் பொருள் வயின் ஊக்கிய பாலினும் = ஆக இவ்வாறு (ஒன்றுக்கொன்று மாறுபட்டுப்) பொருந்தாத பொருள்பற்றி வலிக்கும் பிரிவின் பகுதிகளிலும்; வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியங்கருதிய ஒருதிறத்தானும் = நூல் முதலிய வாயாற் கற்கும் கல்வியும், படை இயம் ஓவியம் முதலிய கையாற் பயிலும் கலையும் என வகுக்கப்பட்ட இறுதிறக்கல்விப் பகுதிகளின் பயனை எண்ணிப்பிரியும் ஒரு பகுதிக்கண்ணும்; புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் = (இவ்விரண்டிலும்) பிரிவால் வரும் புகழையும் பிரியாமையால்வரும் குற்றத்தையும் விளக்கி வலியுறுத்துமிடத்தும்; தூதிடையிட்ட வகையினானும் = தலைவியைப் பிரிந்து வேந்தரிடைச் செல்லும் வாயில் வகைகளிலும்; ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் =மேலே கூறியாங்குப் பொருள்ஓதல் தூது என்ற பிரிவின் பகுதி மூன்றிலும் கூற்றுக்கு அமைந்துவரும் பகுதிதொறும் ஏற்றவிடத்தும்; மண்டிலத் தருமையும் = பகைப் புலத்தின் அருமையும்; தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் = புகழாற் சிறந்த பகைவரின் பெருமையும்; பாசறைப் புலம்பலும் = போர்க்களக்கட்டூரிற் செரு முடிந்தபின் தலைவியை உள்ளும் தலைவன் தனிமையும்; முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகையினும் = வந்தவினை முடிந்த பொழுது தேர்ப்பாகனொடு தலைவன் தான் செய்ய விரும்புவன கூறும் வகையினும்; காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும் = பிறர் நாடு காக்குமிடத்தானும் ஓர் பிரிவின்கண்ணும்; பரத்தையினகற்சியிற் பரிந்தோட்குறுகி = பரத்தைப் பிரிவால் பரியும் தலைவியை அணுகி; இரத்தலும் = தன் தவறு பொறுக்குமாறு தலைவன் வேண்டுதலும்; தெளித்தலும் = தன் தவறின்மை கூறித் தலைவியைத் தேற்றலும்; என இருவகையொடு = என இவ்விரண்டு வகையொடுகூட, உரைத்திற நாட்டம் = மேற்கூறிய இடங்களிலெல்லாம் கூற்றுவகை நாடுதல்; கிழவோன் மேன = தலைவன்கண் நிகழும். குறிப்பு: இச்சூத்திரம் ஒன்றாத் தமரினும் என்பது முதல் ஒருதிறத்தானும் என்றதுவரை உடன்போக்கில் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டும் பகுதியும், பின் எஞ்சியவெல்லாம் பிரிவின்கண் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டும் பகுதியு மாக அமைந்துள்ளது. பிற்றைய பிரிவுப்பகுதியில் ஆறுவகைப் பிரிவும் கூறப்படுகிறது. நாளது சின்மையும் என்பது முதல், பொருள் வயின் ஊக்கிய பாலினும் என்பதீறாகப் பொருட் பிரிவும் (1), வாயினும் கையினும் என்பது முதல் எடுத்து வற்புறுத்தலும் என்றது வரை ஓதற் பிரிவும் (2), தூதிடையிட்ட வகையினானும் என்பதால் தூதிற் பிரிவும் (3), மண்டிலத்தருமை முதல் வினைத்திற வகையினும் என்றதுவரை பகைவயிற் பிரிவுவகையும் (4), காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும் என்பதால் நாடு காவற்பிரிவும் (5), பரத்தையினகற்சி என்பதால் பரத்தையிற் பிரிவும் (6) ஆகப் பிரிவு வகை ஆறும் முறையே வகைப்படுத்திக் கூறப்பட்டன. பாசறைப் புலம்பல், பாகனொடு கூறல் முதலியன பகைவயிற் பிரிவின்பாற் பட்டடங்கும், ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும், மூன்றன் பகுதியும் என்பது, அதற்கு முன் வகைப்படுத்திக் கூறப்பட்ட பொருள், ஓதல், தூது என்ற மூன்றன் பகுதிகளிலும் உரிய இடத்துத் தலைவன் கூறும் எனத் தொகுத்து உணர்த்தும் தொடராயமையும்; மூன்றன்பகுதி என்பதற்கு, இப்பகுதியில் தொல்காப்பியரால் சுட்டி விளக்கப்பெறாத பிற நூல்களிற் கண்ட நால்வகைவலியுள் மூன்றென இளம்பூரணரும், அறம், பொருள், இன்பமென நச்சினார்க்கினியரும் தம்முள் மாறுபட்டு இருவேறு பொருள் கூறுகின்றனர். இவை அறுவகைப் பிரிவிலடங்குதலானும், கூறும் தொகையால் குறிக்கும் வகைகளை நூலில் விளக்காது சூத்திரிப்பது நூன்மரபாகாமையானும், ஈண்டுப் பிரிவு வகை மூன்றும் விளக்கப் பட்டு அவற்றை அடுத்து மூன்றன் பகுதி எனத்தொகுத்துக் கூறப் படுதலானும், இத்தொடர் இச்சூத்திரத்தில் தெளிக்கப்பட்ட பிரிவு வகை மூன்றனையே குறிப்பது விளக்கமாகும். இவ்வாறே புறத் திணையியல் (24) மாற்றரும் கூற்றம் என்னும் சூத்திரத்திடையில் ஈரைந்தாகும் எனத்தொகுத்துப் பிரித்ததும் காண்க. பொருட் பிரிவுப் பகுதிக்கண், ஒருபுறம் பொருட் பிணியால் பிரிய விரும்புதலும், மறுபுறம் காதலால் பிரிவொல்லாது செல வழுங்குதலுமாகத் தம்முள் முரண்படும் இருவேறுணர்ச்சிகள் தலைவன்பால் நிகழுமியல்பை விளக்கிய பகுதி நயந்து பாராட் டற்பாலது. நாளது சின்மையால் பொருளீட்டும் விருப்பம் காதல் பெருக்கால் தகைக்கப்படுவதும், அன்புபற்றித் தலைவி பொருட்டுப் பொருளீட்டும் விருப்பம் அவ்வன்பிற்குரிய தலைவியின் பிரிவருமை யால் தகைக்கப்படுவதும், இயல்பாதலின் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கியபாலெனப் பொருட் பிரிவில் தலைவன் உள்ளத்தில் நிகழும் விருப்பு தடையுணர்ச்சி முரண் வலியுறுத்தப்பட்டது. உரைத்திற நாட்டம் கிழவோன்மேன என்பதை, அப்பாற் பட்ட ஒருதிறத்தானும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கியபாலினும், ஊதியங்கருதிய ஒருதிறத்தானும், திடையிட்ட வகையினானும், மூன்றன்பகுதியும், வினைத்திறவகையினும், ஆங்கோர்பக்கமும், இரத்தலும், தெளித்தலும் எனவரும் ஒவ்வொன்றோடும் தனித்தனி கூட்டுக. பொருள், ஓதல், தூது, பகை, காவல், பரத்தை என அறுவகைப் பிரிவும் வகைபெறக்கூறும் இச்சூத்திரத்தில் முதல் மூன்றையும் மூன்றன்பகுதியு மெனத் தொகுத்துப் பிரித்தார்; மற்ற மூன்றில் பகை காவலாகிய இரண்டும் தன்னளவிலும் பரத்தை தலைவி அளவிலும் பகைமை சுட்டுதலால் அம்மூன்றையும் வேறாக்கி, எண்ணும்மைகளை எல்லாம் இறுதியில் ஒடுக்கொடுத்துக் கூட்டிப் பிரிவுவகை ஆறும் விளக்கப்பட்டுள. ஒன்றாத்தமரினும், பருவத்தும், சுரத்தும் என்பவற்றுள் ஒவ்வொன்றின்கண்ணும் தலைவன் வலித்தலும், விடுத்தலும் இயல் பாகும். அவை வருமாறு: ஒன்றாத்தமர் உடன்படுமாறு தலைமகன் சான்றோரை விடுத்தது கேட்ட தோழி கூற்றாகவரும். எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஓதம் வாங்குந் துறைவன் மாயோள் பசலை நீக்கின னினியே. என்னும் ஐங்குறுநூற்று (145ஆம்) செய்யுளால், தலைவிதமர் மகட் கொடைக்கு ஒன்றாவழித் தலைவன் உடன்கொண்டு கழியத் துணிதலுண்மை விளங்கும். பெருநன் றாற்றிற் பேணாரு முளரே, ஒருநன்றுடைய ளாயினும் புரிமாண்டு புலவி தீர வளிமதி, இலைகவர் பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன் மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட! நின்னல திலளே. (குறுந். 115) இக்குறுந்தொகைச் செய்யுளில், நன்மலை நாட நின்னலதிலளே எனத் தோழி தலைவற்குக் கூறுதலால், தலைவனுக்குத் தலைவியைத் தரத் தமர் ஒன்றாமையும் அதனால் தலைவன் கொண்டுதலைக் கழிய வலித்தலும் கூறப்பட்டது. இனி, மணமறுத்த ஒன்றாத்தமரை உடன்படுத்தற் பொருட்டுப் பொருளீட்டக் கருதித் தலைவியை விடுத்துப் பிரிவதற்குச் செய்யுள்: இலையிலஞ்சிணை எனும் (254ஆம்) குறும்பாட்டில், வாரா,தோழி.... செய்பொருள் தரல்நசைஇச் சென்றோர் எய்தினராyனவரூcந்தூதே.” எனப் பொருள்தேடித்தரச் செல்லும் தலைவன் பிரிவு கூறப்படுதலறிக. பொத்தில் காழி எனும் (255ஆம்) குறும்பாட்டிலும், தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும் fமர்bபாருட்பிணிப்nபாகிய ehம்வெங்கhதலர்r‹றவாnw.” எனத் தலைவன் பொருட்பிரிவு வருதலறிக. அப்பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் கண்டு கொள்க. உடன்போக்கில் வலித்துக் கொண்டு செல்லும் தலைவன், தலைவிக்குச் சுரத்திடைக் கூறுதற்குச் செய்யுள்: அழிவில முயலும்ஆர்வமக்கள் வழிபடுbதய்வம்கட்கண்டஅங் கலமரல்வருத்தந்தீரயழநின் நலமென்பணைத்தோள்எய்தினமகலில், bபாரிப்பூம்புன்கின்எழிற்றகைbயாண்முறி சுணங்கணிவனமுலைஅணங்குகொளத்திமிரி நிழல்காண்nடாறும்bநடியiவகி, மணல்காண்nடாறும்வண்டல்iதஇ, வருந்தாnதகுமதி,வலெயிற்nறாயே; மநனைbகாழுதிமகிழ்குயிலலும் நறுந்தண்bபாழிலகனம், குறும்பலூரயாம்bசல்லுமறே. (நற்றிணை. 9) வருமழை கரந்த வானிற விசும்பின் நுண்டுளி மாறிய உலவை யாங்கட் டால நீழல் அசைவு நீக்கி, அஞ்சுவழி அஞ்சா தசைவழி யசைஇ, வருந்தா தேகுமதி வாலிழைக் குறுமகள்! இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை வீமல ருதிர்ந்த தேனாறு புலவிற் கான லார்மணன் மரீஇக் கல்லுறச் சிவந்தநின் மெல்லடி யுயற்கே. (நற்றிணை. 76) எனவரும் நற்றிணைச் செய்யுளுமதுவே. புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட் டொலிபன் முத்த மார்ப்ப வலிசிறந்து வன்சுவற் பராரை முருக்கிக் கன்றொடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழந் தேன்செய் பெருங்கிளை யிரிய வேங்கைப் பொன்புரை கவழம் புறந்தரு பூட்டு மாமலை விடரகங் கவைஇக் காண்வரக் கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்த காடே. என்னும் நற்றிணைப் (202) பாலைச் செய்யுளுமது. இனி, சுரத்தினதருமை கருதித் தலைவியை விடுத்தற்குச் செய்யுள்: உமணர், சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை யூர்பாழ்த் தன்ன, வோமையம் பெருங்காடு இன்னா வென்றி ராயின், இனியவோ பெரும தமியோர்க்கு மனையே. (குறு. 124) இதில் என்றிராயின் என்பதால், விட்டுப் பிரியும் தலைவன் கூறியதைத் தோழி கொண்டு கூறினாளென்றறிக. இனி, விட்டுச் சென்ற தலைவன் இடைச்சுரத்துத் தலைவியை நினைந்து கூறற்குச் செய்யுள்: எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கிற் தேம்பாய் கூந்தன் மாஅ யோளே. (ஐங். 324) வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கையள் எம்மொ டுணீஇய வருகதில் லம்ம தானே அளியளோ அளியளென் நெஞ்சமர்ந் தோளே. (குறு. 56) இடைச்சுர மருங்கில் தமர்வர, தலைவன் அருளால் மறைதற்குச் செய்யுள்: அன்றை யனைய வாகி யின்றுமெங் கண்ணுள் போலச் சுழலு மாதோ புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் இணையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக் கிடினென விடிக்குங் கோற்றொடி மறவர் வடிநவில் அம்பின் வினையர் அஞ்சா தமரிடை யுறுதர நீக்கிநீர் எமரிடை யுறுதர வொளித்த காடே. (நற். 48) இதில், முன் தலைவன் செய்ததைத் தோழி கொண்டு கூறிய தாகக் காண்கின்றோம். வினையமை பாவையி னியலி நுந்தை மனைவரையிறந்து வந்தனை யாயிற் தலைநாட் கெதிரிய தண்பெய லெழிலி அணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு நீவிளை யாடுக சிறிதே; யானே மழகளி றுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி அமர்வரின் அஞ்சேன், பெயர்க்குவென் நுமர்வரின் மறைகுவென், மாஅ யோளே. எனும் நற்றிணைச் (362ஆம்) செய்யுளுமது. இதில் தேடிப் பின்வந்த தலைவிதமர்க்கு ஊறு செய்யாது அருளான் ஒளிக்கும் தலைவன் தானே கூறியதும் அறிக. கற்பொடு புணர்ந்த கெளவைக்குத் தலைவன் கூற்றாகச் செய்யுள் வரின் கண்டுகொள்க. இனி, இதில் நாளது சின்மை, தாளாண்பக்கம், இன்மை யினிளிவு, அன்பினதகலம் எனும் நான்கும் பொருள்தேடத் தூண்டுதலும், அப்பொருட்பிணியை முறையே இளமையதருமை, தகுதியதமைதி, உடைமையது (காதல்) உயர்ச்சி, அகற்சியதருமை எனும் நான்கும் இன்பவிழைவால் தகைப்பதும் கூறப்படுகிறது. நாளது சின்மை பொருள்தேட வலித்தலும், அப்பொருட் பிணி தகைக்கும் இன்பநுக ரிளமையும், தம்முள் ஒன்றாமைக்குச் செய்யுள்: புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச் செல்லினும் செல்லா யாயினும் நல்லதற் குரியை வாழியென் னெஞ்சே; பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியிற் கெடுவ; யானே விழுநீர் வியலகந் தூணி யாக எழுமா ணளக்கும் விழுநிதி பெறினும், கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனென்; எனைய வாகுக வாழிய பொருளே. (நற்றிணை. 16) வங்காக் கடந்த செங்காற் பேடை எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது குழலிசைக் குரல குறும்பல அகவும் குன்றுறு சிறுநெறி அரியவென் னாது மறப்பருங் காதலி யொழிய இறப்பல் என்பதீண் டின்மைக்கு முடிவே. (குறுந். 151) எனும் குறுந்தொகைச் செய்யுளுமது. பொருள், வலிக்கும் நெஞ்சுக்கு அதனொடு பொருந்தா இளமையதருமை தலைவன் கூறற்குச் செய்யுள்: பைங்காய் நல்லிட மொரீஇ என்னும் நற்றிணைச் செய்யுளில், ................ghœeh£ டத்தம் இறந்துசெய்பொருளு«இன்ப«தருமெனிšஇளமைÆற்சிறªதவளkயுமில்y;இளiமகழிªதபின்iறவளikகாkந்தருjலுமின்w;அதனhšநில்லhப்பொருட்பிÂச்சே¿,வல்nலநெஞ்rம்வாய்க்கÃன்வினையே.” (நற். 126) எனத் தலைவன் கூறுதல் காண்க. இன்னும், அருவியார்க்கும் எனும் நற்றிணைச் (205) செய்யுளில் துன்னருங் கானம் என்னாய் நீயே; குவளையுண்கண்இவளீண்bடாழிய ஆள்விiனக்ககறி யயின்,இன்றெhடு போயின்றுகொல்nலாதானே..... ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே. என வருவதுமது. முதிர்ந்தோ ரிளமை ஒழிந்தும் எய்தார்: வாழ்நாள் வகையளவு அறிஞரு மில்லை; கருங்கண் வெம்முiலஞெமுங்கப்புல்லிக் கழிவதhககங்குல்.”(நற்.314) என்று தலைவன் கூறியதைத் தலைவி எடுத்துக் கூறும் செய்யுளில், இளமைய தருமையும் நளது சின்மையும் தம்முள் ஒன்றாது முரணு தலைக் காண்க.தாளாண்மையால்bபாருள் வலிக்கும் bநஞ்சிற்குத்தலை விதகுதிnநாக்கித் தலைவன் பிரிவருமை கூறுதற்குச்சய்யுள்: வினையே ஆடவர்க் குயிரே, வாணுதல் மனையுறை மகளிர்க் காடவ ருயிரென நமக்குரைத் தோரும் தாமே; அழாஅல், தோழி! அழுங்குவர் செலவே. இக் குறுந்தொகைச் (135ஆம்) செய்யுளில், தோழி கொண்டு கூறிய தலைவன் கூற்றால், ஆடவர்க்குத் தாளாண் பக்கம் இன்றியமையா தென்பதும், மனையற மகளிரின், தகுதி பேணுதல் அவ்வாடவர் கடனென்பதும், இவ்வாறு இருவேறுணர்ச்சி தம்முள் ஒன்றாப் பொருட்பிணியின்கண் தலைவற்குக் கூற்று நிகழுமென்பதும் காண்க. இன்னும், ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவும் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வரல் துணிந்த இவளினும், இவளுடன் வேய்பயில் அழுவம் உவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே. (பொருள். சூத். 41. நச்சினார். உரைமேற்கோள்.) என்னும் பொருளதிகாரச் சூத்திரம் 41ன் உரைமேற்கோள் செய்யுளாலும், ஒன்றாப் பொருட்பிணியில் தலைவியின் பிரிவருமை தலைவன் கூறுவதறிக. இனி, இன்மையதிளிவும் உடைமைய துயர்ச்சியும் கருதித் தலைவன் கூறுதற்குச் செய்யுள்: ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக் கம்மா அரிவையும் வருமோ! எம்மை யுய்த்தியோ! உரைத்திசி னெஞ்சே! (குறுந். 613) இச்செய்யுளில், இல்லோர்க்கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி என்பதால் இன்மையதிளிவும், அம்மா அரிவையும் வருமோ என்றதால் உடைமையாம் காதலின் செலவு தவிர்வது காண்க. இனி, இவ்வாறு செலவழுங்காமல் தலைவன் பிரிதலும் உண்டு; அதற்குச் செய்யுள்: இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடனிருந்தோர்க்கரும்ணர்வின்மென.... வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை, அரும்பÉழலரி¢சுரும்பு©பல்பேh தணியவருதÃன்மணியிUங்கதுப்பென... எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி, மைசூœவெற்பி‹மலைபyஇறந்J செய்பொரு£ககன்wசெயிர்தீ®காதல® கேளா®கொல்லோ,தோழி! ...... ...... ...... ...... ...... .....கார்ப் பெயற் குரலே. எனவரும் நற்றிணைச் (214) செய்யுளில் இவ்வாறு ஒன்றாப் பொருள்வயின் மாறுபட்டலைக்கும் உணர்ச்சி முரண்கூறித் தலைவன் ஒன்றாப் பொருள்வயிற் பிரிந்தமையும் காண்க.. அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் எனும் பாலைக்கலியுமதுவே. (பாலைக்கலி. 11) அன்புமிகையால் மனை மாட்சிக்குப் பொருள் வலித்தலும் தலைவியிற் பிரிவருமையால் செல்லத்துணியாமையு மாகிய ஒன்றாப்பொருட் பிணிக்குச் செய்யுள்: மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை இரும்பனம் பசுங்குடை பலவுடன் பொதிந்து பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன நறுந்தண் ணியளே; நன்மா மேனி புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள் மணத்தலும் தணத்தலு மிலமே; பிரியின் வாழ்தல் அதனினு மிலமே. (குறு. 168) மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல் குமரிவாகைக்கோலுடைநறுவீ kடமாத்nதாகைக்Fடுமியிற்nறான்றும் fனÚளிடைத்jனும்eம்மொ bடான்றுமணம்bசய்தனËவளெனில் eன்றேbநஞ்சம்eயந்தநின்Jணிவேv‹w Fறுந்தொகைப்(347)gட்டிலும்,mன்பினதகலமும்mகற்சியதருமையும்xன்றாப்bபாருள்வயின்Cக்குதல்fண்க.ïÅ, ஓதற் பிரிவில் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்: பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ? தீங்கதிர் மதியேய்க்கும் திருமுகம், அம்முகம் பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால் என்னும் பாலைக்கலித் (14) தாழிசையில் வாயின்வகுத்த கல்விப் பகுதியின் ஊதியங்கருதிய, தலைவன் பிரிவருமை காண்க. பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ? புரியவிழ் நறுநீலம் புரையுண்கண் கலுழ்பானாத் திரியுமிழ் நெய்யேபோற் றெண்பனி யுறைக்குங்கால். என்பதால், கையின் வகுத்த கல்விப் பகுதியின் ஊதியங் கருதித் தலைவன் பிரிந்தமை அறிக. இப்பிரிவுகளில் தலைவன் கூற்று வந்துழிக் கண்டுகொள்க. புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தும் தலைவன் கூற்றுக்குச் செய்யுள்: நாளும் நாளும் ஆள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென ஒண்பொருட் ககல்வர்நம் காதலர்; கண்பனி துடையினித் தோழி! நீயே. (சிற்றெட்டகம்) இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுட னிருந்தோர்க்கரும்புணர்வின்மென... வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை மைசூழ் வெற்பின்மலைபyஇறந்J செய்பொரு£ககன்றந«செயிர்தீ®காதலர்.” (நற். 214) எனும் நற்றிணைச் செய்யுளடிகளுமது. இச்செய்யுள் தலைவி கூற்றாயினும், இதில், இன்மென என்பதனால் தலைவன் கூறியதைத் jலைவிbகாண்டுTறியதுvdவிsங்குதலால்,புfழும்மhனமும்தiலவன்எLத்துவ‰òW¤âaj¿f. மிகைதணித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர்... என்னும் மணிவாசகர் கோவைச் செய்யுளில் தோழி கூற்றால் தலைவன் தூதிடையிட்டுப் பிரிதல் கூறப்படுகின்றது. தூதுபற்றிய பிரிவில் தலைவன் கூற்றுக்குச் செய்யுள் வந்துழிக் காண்க. கொடு மிடனாம் எனும் (36ஆம்) கலியில், தூதொடு மறந்தார் கொல்லோ என்பதனால், தூதின் பொருட்டுப் பிரிதற்கரிய தலைவியையும் தலைவன் பிரிந்ததறியப்படும். முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலிய வற்றில் மண்டிலத்தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பலவிடத்தும் வருதல் காண்க. தன் வேந்தனின் பகைவராய தோன்றல் சான்ற மாற்றாரைப் பொருது வெல்லப் பிரியும் தலைவன் கூற்று வருமாறு: பல்லிருங் கூந்தல்! பசப்பு நீவிடின் செல்வேந் தில்ல யாமே, செற்றார் வெல்கொடி அரண முருக்கிய கல்லா யானை வேந்துபகை வெலற்கே. (ஐங். 429) இனி, பாசறைப் புலம்பல் வருமாறு: புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத் துறந்துவந் தனையே, அருந்தொழிற் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை உள்ளுதொறுங் கலிழு நெஞ்சம்! வல்லே எம்மையும் வரவிழைத் தனையே (ஐங். 445) வினை முற்றிய தலைமகன் பாகனொடு விரும்பிக் கூறுதற்குச் செய்யுள்: விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம்பெயற் காரு மார்கலி தலையின்று;தேரும் ஓவத் தன்ன கோபச் செந்நிலம் வள்வா யாழி உள்ளுறு புருளக் கடவுக,காண்குவம்,பாக!... (அகம். 54) காவலுக்குப் பிரிந்த தலைவன் தான் வருவதாய்த் தலைவிக்குத் தூதனுப்பியது ஒருகுழை ஒருவன் போல என்னும் பாலைக் கலியில், ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புகழ் உலகேத்த விருந்துநாட் டுறைபவர் .................................................... ...................... நம் காதலர் .................................................. வருமெனவந்தன்றவ®வாய்மொழி¤தூதே”(கலி. 25) இனி, பரத்தையினகற்சியில் பரிந்த தலைமகளிடத்துத் தலைவன் இரத்தலும், தெளித்தலும் என இருவகையினும் கூற்று நிகழ்தற்குச் செய்யுள்: ஒரூஉ, கொடியியல் நல்லார்க்கு என்னும் மருதக்கலியில், ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு எனவும், அதுதக்கது, வேற்றுமை vன்கண்ணோXராதி,Ôதின்மை nதற்றக்கண்Oயாய்bதளிக்கு(மருதக்கலி.88) எனவும் தலைவன் தலைவியிடம் இரந்தும் தெளித்தும் கூறுதலும், ïனித்nதற்றேம்யாம், nதர்மயங்கிtந்தbதரிகோதைmந்நல்லார் jர்மயங்கிtந்தjtறஞ்சிப்gர்மயங்கிÚTறும்gய்ச்சூள்அzங்காயின்ntற்றினியhர்மேல்விËயுமோகூW. (fÈ. 88) எனக் கூறித் தலைவி ஊடல் தணிதலும் வந்தமை காண்க. நில்லாங்கு நில்லாங்கு என்னும் மருதக்கலியுள், ஆயும் ஆயிழாய் அன்னவை யானாங் கறியாமை போற்றிய நின்னைத் தொடுகு. (கலி. 45) எனத் தன் பரத்தமைக்குப் புலந்த தலைவியைத் தெளிக்கு முகத்தானும், நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித் தவறுதலைப் பெய்து கையொடு கண்டாய், பிழைத்தே னருளின் (மருதக்கலி. 45) என இரக்கு முகத்தானும், தலைவன் கூற்று நிகழ்த்தியது காண்க. சூத்திரம்: 41 எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே. கருத்து: இது, முன் சூத்திரங்களிற் கூறப் பெறாப் பிறரும் கூற்றுக் குரியராதல் உண்டு என்று எய்தாத தெய்துவிக்கிறது. பொருள்: எஞ்சியோர்க்கும் = இதுவரை குறித்துக் கூறப்படாத, செவிலி, பாங்கர், ஆயத்தார், பரத்தையர், வாயிலாவார், பாகன், பாணன் போன்ற பிறர்க்கும்; எஞ்சுதலில = அகத்துறைகளில் கூற்று ஒழிதல் இல்லை. குறிப்பு: ஈற்றேகாரம் அசை. இவ்வியலில் தலைமகள் கூற்றுத் தனித்துக் கூறப்படாதது சிந்திக்கத்தக்கது. உரையாசிரியர் இளம்பூரணர் தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம், காலப்பழமையால், ஏடு பெயர்த்தெழுதுவார் வீழ எழுதினர்போலும் எனக்கூறி, தலைமகள் கூற்றுவரும் பல இடங்களைச் சுட்டி விளக்கியுள்ளார். அகத்துறைப் பாட்டுக்களில் தலைவி கூறுமிடங்கள் பலபடியாகப் பாராட்டப்படுதல் பண்டைப் பாட்டுக்களில் பரக்கக் காணலாம். களவியல் 20ஆம் சூத்திரத்தில் தலைவி கூற்று நிகழுமிடங்களைத் தொல்காப்பியரே கூறியுள்ளார். அவற்றுட் சில துறைகளுக்குச் செய்யுள் வருமாறு: 1. காணுங்காற் காணேன் தவறாய, காணாக்காற் காணேன் தவறல் லவை (குறள். 1286) 2. உழந்துழந் துண்ணீரறுக விழைந் திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். (குறள். 1177) 3. புலப்ப லெனச்சென்றேன், புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு. (குறள். 1259) 4. மன்ற மராத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ. மென்ப; யாவதும் கொடியோ ரல்லரெங் குன்றுகெழு நாடர்; பசைஇப் பசந்தன்று நுதலே, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே. (குறுந். 87) இனி, செவிலி கூற்றுக்குச் செய்யுள்: முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇ குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. (குறுந். 167) கானங் கோழி கவர்குரற் சேவல் ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை; வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினும் சேந்துவர லறியாது செம்ம றேரே (குறு. 242) பாங்கன் கூற்றிற்குச் செய்யுள்: காமம் காம மென்ப, காமம் அணங்கும் பிணியு மன்றே; முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம், பெருந்தோ ளோயே (குறுந். 204) இது, தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்கலாற் றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. (குறுந். 58) இக்குறுந்தொகைப் (5ஆம்) பாட்டு. கழறிக்கூறிய பாங்கற்குத் தலைவன் மாறிக் கூறுதலாம். ஆயத்தார் கூற்றுக்குச் செய்யுள்: தாதிற் செய்த தண்பனிப் பாவை காலை வருந்தும் கையா றோம்பென ஓரை ஆயங் கூறக் கேட்டும் எனும் குறுந்தொகைச் (48ஆம்) செய்யுளில் ஆயத்தின் கூற்று நிகழ்ந்தமை காண்க. பரத்தையர் கூற்றிற்குச் செய்யுள்: கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சில் பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி யாமஃ தயர்கஞ் சேறும், தானஃ தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே. (குறுந். 80) கணைக்கோட்டு வாளை கமஞ்சூன் மாமழை துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வ மணங்குக, தோழி! மனையோண் மடைமையிற் புரக்கும் அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே. எனும் குறுந்தொகைச் (164ஆம்) செய்யுள் காதற்பரத்தை தலைமகட் குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன் பொற்கோ லவிர்தொடித் தற்கெழு தகுவி எற்புறங் கூறு மென்ப; தெற்றென வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன; அவ்வரைக் கண்பொர மற்றதன் கண்ணவர் மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே எனுங் குறுந்தொகைச் (364ஆம்) செய்யுளில் இற்பரத்தை பாங்காயினார் கேட்பக் கூறியது காண்க. “ நகைநன் குடையன் பாண! நும் பெருமகன் மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி யரண்பல கடந்த முரண்கொள் தானை வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு மன்னெயி லுடையோர் போல வஃதியா மென்னலும் பரியலோ விலமெனத் தண்ணடைக் கலிமா கடைஇ வந்தெஞ் சேரித் தாருங் கண்ணியுங் காட்டி யொருமைய நெஞ்சங் கொண்டமை விடுமோ வஞ்சக் கண்ணுடைச் சிறுகோல் பற்றிக் கதம்பெரி துடையள்யா யழுங்கலோ விலளே. எனும் நற்றிணைச் (150ஆம்) செய்யுளும் பரத்தை கூற்றாகும். பாகன் கூற்றிற்குச் செய்யுள்: விதையர் கொன்ற முதையற் பூழி யிடுமுறை நிரப்பிய வீரிலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை யரலை யங்காட் டிரலையொடு வதியும் புறவிற் றம்மநீ நயந்தோ ளூரே. எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு பரியல்; வாழ்கநின் கண்ணி; காண்வர விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா வண்பரி தயங்க வெழீஇத் தண்பெயற் கான்யாற் றிடுமணற் கரைபிறக் கொழிய வெவ்விருந் தயரு மனைவி மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே. பாணன் கூற்றிற்குப் பாட்டு வருமாறு: நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ; நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி ஈரித ழுண்கண் உகுத்த பூசல் கேட்டு மருளா தோயே. (ஐங். 480) கீழ்வரும் அயலோர் கூற்று ஊரும் அயலும் என்னும் செய்யுளியல் (503ஆம்) சூத்திரத்திற்கு மாறான பிற்கால வழக்காகும். துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ யறம் புலந்து பழிக்கு மளைக ணாட்டி! எவ்வ நெஞ்சிற் கேம மாக தந்தன ளோநின் மகளே, வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே (ஐங். 393) இது, உடன்போய்த் தலைமகள் மீண்டுவந்துழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. சூத்திரம்: 42 நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும். கருத்து: இது, ஐந்திணை இயல் விளக்கிய முன் சூத்திரத்தின் அடங்காமல் திணைக்குரிப் பொருளாய் அகத்துறைகளில் வந்து பயில்வனவற்றுள் பிறிதொரு செய்தி கூறுகிறது. பொருள்: நிகழ்ந்தது = தலைமக்கள்பால் முன் நிகழ்ந்த செய்திகள்; நினைத்தற்கு = பின் ஏற்றபெற்றி நினைவுறுதற்கு; ஏதுவுமாகும் = ஏற்புடை ஏதுக்களாதலுமுண்டு. குறிப்பு: இந்நூலார், முன் புணர்தல் பிரிதல் என்னும் (14ஆம்) சூத்திரத்தால் திணைக்குரிப்பொருள் ஐந்தையும் சுட்டினார். அவற்றுள் அடங்காமல் திணைக்குரிப் பொருளாகச் சான்றோர் செய்யுளில் ஆட்சி பெறுவன வேறு சிலவும் உளவாதலின் அவற்றை உரிப்பொரு ளல்லன எனும் சூத்திரத்தால் சுட்டி, அவற்றுள் கொண்டு தலைக்கழிதல் முதலிய சிலவற்றை இயைபு நோக்கி ஐந்திணை இலக்கணச் சூத்திரத்தை அடுத்தே கூறி, அவ்வாறு உரிப்பொருளாகும் வேறு சிலவற்றை இச்சூத்திரத்தானும் அடுத்த சூத்திரத்தானும் விளங்க வைத்தார். முன் நிகழ்ந்தது காதலர் பின்நினைப்பிற்கு ஏதுவாதல் அகத் துறையில் இயல்பாம் என்பதை இச்சூத்திரத்தானும், அவ்வாறு நினைத்துக் கூற்று நிகழ்தலும் அகத்துறையின்பாற் பட்டதே என்பதை அடுத்த சூத்திரத்தானும் தொல்காப்பியர் விளக்குகிறார். இனி, இச்சூத்திரமும் அடுத்த சூத்திரமும் காதற் கூற்றுக்குப் பொருளாமாயினும், கொண்டு தலைக்கழிதல் காட்சி முதலியன போலப் பெருவரவின்மையான் அவற்றொடு கூறாது, ஈண்டுக் கூற்று வகைகூறும் சூத்திரங்களோடு இவற்றை இந்நூலாற் கூறினா ரென்க. நிகழ்ந்தது நினைத்தற்குப் பாட்டு வருமாறு: யாருமில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ? தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே (குறு. 25) இது தலைவி நிகழ்ந்தது நினைத்தற்குச் செய்யுள். இனி, தலைவன் நிகழ்ந்தது நினைத்தற்குச் ச்யயுள்: இரண்டறி கள்விநங் காத லோளே: முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள்; கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. (குறு. 312) அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கு மெயிறுகெழு துவர்வாய், ஆகத் தரும்பிய முலையள், பணைத்தோள் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு பேயு மறியா மறையமை புணர்ச்சி பூசற் றுடியிற் புணர்வுபிரிந் திசைப்பக் கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையிற் கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்த மண்ணுநள் போல கடுங்கஞர் தீர முயங்கி நெருநல் ஆக மடைதந் தோளே, வென்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக் கடவு ளெழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅ யோளே. எனும் அகம் (62ஆம்) செய்யுளுமதுவே. சூத்திரம்: 43 நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. கருத்து: இதுவும், முற்சூத்திரத்தைப் போலவே, ஐந்திணை சூத்திரங்களி லடங்காது, அறவே அவற்றின் வேறுமாகாது, திணைக் குரிப் பொருளாய் அகத்துறையில் வந்து பயிலும் பிறிதொன்று கூறுகிறது. பொருள்: நிகழ்ந்தது கூறி = காதலர் தம்முள் நிகழ்ந்த செய்தியை எடுத்துக் கூறி; நிலையலுந்திணையே = நிலைபெறுதலும் அகத்துறை ஒழுக்கமேயாகும். குறிப்பு: பழைய உரைகாரர் இவ்விரு சூத்திரங்களையும் பாலைத்திணைக்கே உரியன போலக் கொள்ளுதல் அமைவுடைத் தன்று. பாலையல்லாப் பிற திணைகளிலும் நிகழ்ந்தது நினைத்தலும் நிகழ்ந்தது கூறி நிலையலும் வருதலின், அவை எல்லாத்திணைக்கும் உரியவாய் அமையுமென்க. அதுபற்றியே, பாலைத்திணை இயல்பு களோடு இவற்றைக் கூறாது, அவைமுடிந்து பொதுவியல் கூறும் இவ்விடத்து இச்சூத்திரங்கள் வைக்கப்பட்டன. மேலும், இவை புணர்ச்சி முதலிய ஐந்தனுள் எதனினும் அடங்காமல் உரிப்பொரு ளாயுமமைதலின், நிலையலும் பாலை நிலையலும் பிரிவு என்னாது ஐந்திணைகள் போல நிலையலும் திணையே எனப் பொதுப்படக்கூறிய பெற்றியுமறிக. தலைவி நிகழ்ந்தது கூறி நிலையலுக்குப் பாட்டு: கேட்டிசின் வாழி, தோழி! யல்கற் பொய்வ லாளன் மெய்யுற மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே, குவளை வண்டுபடுமலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே. (குறு. 30) துறுக லயலதுமாணைமாக்கொடி துஞ்சுகளிறிவருங்குன்றநாடன்நெஞ்சுகளனாகநீயலென்யானென... நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன் தவாஅ வஞ்சின முரைத்தது நோயோ தோழி நின்வயி னானே. (குறு. 36) என்பதுமது. கொடியவுங் கோட்டவும் நீரின்றிநிறம்பெறப் பொடியழற்புறந்தந்தபூவாப்பூம்பொலன்கோதைத்தொடிசெறியாப்பமையரிமுன்கையணைத்தோளாயடியுறையருளாமையொத்ததோநினக்கென.... நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தனன்; நறாஅவிழ்ந் தன்னஎன் மெல்விரற் போதுகொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன்; றொய்யி லிளமுலை யினிய தைவந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்; அதனால் அல்லல் களைந்தனன், தோழி! எனவரும் குறிஞ்சிக்கலி (18ஆம்) செய்யுளடிகளும் முன் நிகழ்ந்த தைத் தலைவி கூறி நிலையலாகும். மின்னொளி ரவிரற விடைபோழும் பெயலேபோற் பொன்னகை தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப் போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை யின்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்செவ்வாய் நன்னுதா னினக்கொன்று கூறுவாங் கேளினி; நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினை ஐதேய்ந்தன்றுபிறையுமன்று, iமதீர்ந்தன்றுமதியுமன்று, nவயுமன்றன்றுமலையுமன்று, பூவமன்றன்றுசுனையுமன்று, bமல்லவியலுமயிலுமன்று, bசால்லத்தளருங்கிளியுமன்று, எனவாங்கு, அனையனபலபாரட்டிப்iபயென வலைவர்nபாலச்nசார்பதbனாற்றிப் புலையர்nபாலப்புன்கnணாக்கித் bதாழலுந்bதாழுதான்,bறாடலுந்bதாட்டான் கழ்வரைநில்லாக்கடுங்களிறன்னோன்; bதாழூஉம்bதாடூஉமவன்றன்மை nயழைத்தன்மையோவில்லைnதாழி.(குறிஞ்சிக்கலி. 19) என்பதும், தலைவி நிகழ்ந்தது கூறி நிலையற்றுறையே. இனித் தலைவன் நிகழ்ந்தது கூறி நிலையலுக்குச் செய்யுள்: அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள், விளிநிலை கொள்ளாள்; தமியள் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள், கண்ணிய துணரா வளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கும் நிரைநிலை யதர பரன்முரம் பாகிய பயமில் கான மிறப்ப வெண்ணுதி ராயின்.... அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி யன்ன வாக வென்னுநள்போல.. முன்னங் காட்டி முகத்தி னுரையா வோவச் செய்தியி னொன்றுநினைந் தொற்றிப் பாவைமாய்த்தபனிநீர்நோக்கமொ டாகத்தொடுக்கியபுதல்வன்புன்றலைத் தூநீர்பயந்ததுணையமைபிணையன் மோயினள்உயிர்த்தகாலை,மாமலர் mணியுருவிழந்தவணியழிதோற்றங் கண்டேகடிந்தனஞ்செலவே;யொண்டொடி.... உழையமாகவும்இனைவோள்..... பிழையலண் மாதோ பிரிதுநா மெனினே. (அகநா. 5) சூத்திரம்: 44 மரபுநிலைதிரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப. கருத்து: இது, மேற்சூத்திரங்களி லடங்காத அகத்துறைப் பகுதிகளுள், ஐந்திணை அல்லாத உரிப்பொருட்கெல்லாம் ஓர் புறனடை கூறுகிறது. பொருள்: மரபு நிலைதிரியா மாட்சிய வாகி = முறைமை இயல் கெடாமலும், மாண்பு தருவனவுமாகி; விரவும் bபாருளும் விரவும் என்ப=திணக்குரிப் பொருளாய் ஐந்திண ஒழுக்கத்தோடு அமைய அகத்துiறகளில்கலந்து வரத்தகுவனபிறவும் வந்துபயிலும் என்று கூறுவர் அகப்பருணு லோர். குறிப்பு: இவ்வாறு கொள்ளாமல், இச்சூத்திரத்திற்கு முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாமென இளம் பூரணர் கூறும் பொருள் பொருந்தாது. இதுவும் முன்னிரண்டும் இந்நூலார் திணைப்பொருள்களெனப் பொதுப்படக் கூறியதால், உரைகாரர் இதை முல்லைக்கும் முன்னிரண்டைப் பாலைக்கும் தனித்தமைத்துக் கூறுவது சூத்திரக் கருத்தாகாமை தேற்றம். மேலும், திணைமயக் குறுதலும் என்னும் இவ்வியலின் முன் (12ஆம்) சூத்திரத்தால் முதலொடு திணைக்குரிப்பொருள் ஐந்து மயங்கு தற்கும், உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே என்னும் (13ஆம்) சூத்திரத்தால் ஐந்திணை இலக்கணத்திலடங்காத அகத்திற் குரிய பிற உரிப்பொருளெல்லாம் முதற்பொருளொடு மயங்குதற்கும், எந்நிலமருங்கிற் பூவும் புள்ளும் என்னும் (19ஆம்) சூத்திரத்தால் கருப்பொருள்கள் தம்முள்ளும் முதல் உரிப்பொருள்களோடும் விரவுதற்கும், புறனடைச் சூத்திரங்கள் தனித்தனியே கூறி வைத்தா ராதலால், ஈண்டு மீண்டும் முன்கூறிய முதலொடு கருப்பொருள் விரவுதலையே கூறினாரென்பது கூறியது கூறலாமாதலின் அது பொருந்தாதென்க. ஐந்திணையிலடங்காப் பிற உரிப்பொருட்டுறைகள் இவ்வியலில் மேற்சுட்டினமட்டோட மையாது வேறு வருவனவு முளவாதலின், அவற்றையமைக்க இப்புறநடை ஈண்டுக் கூறப்பட்டது. தலைமக்களின் மனையற மாட்சியைச் செவிலி வியந்து பாராட்டல், கற்பறக்காதலால் இற்சிறப்பின்பம் தலைவன் பாராட்டல், தலைவன் வரவு கூறுவாரைத் தோழி வாழ்த்தல், அவரைத் தலைவி வாழ்த்தல், இயற்பட மொழிதல், பரத்தை தலைவி பாங்காயினார் கேட்பக் கூறல் போல்பவையும் பிறவும் முன் கூறியவற்று ளடங்காமையின், அவையமைய இப்புறனடைச் சூத்திரமின்றியமையாமையறிக. பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும்பூந்தலைச் சிறுகோ லுண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தந்துற் றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇமெலிந் தொழியப் பந்த ரோடி ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவு யொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக். கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்: ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே. (நற். 110) தலைவன் இற்சிறப்பின்பம் பாராட்டற்குச் செய்யுள்: விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும் இரண்டுந் தூக்கில் சீர்சா லாவே, பூப்போ லுண்கண் பொன்போல் மேனி மாண்வரி யாகக் குறுமகள் தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. (குறுந். 101) இக் குறுந்தொகைப் பாட்டு இல்லறம் நடத்தும் தலைவன் தான் தன் கற்புயர்காதல் மனைவியாலெய்தும் இற்பேரின்பத்தைப் பாராட்டியது. இனி, தலைவன் வரவு கூறுவாளைத் தோழி வாழ்த்தற்குச் செய்யுள்: அரும்பெற லமிழ்த மார்பத மாகப் பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை, தம்மில் தமதுண் டன்ன சினைதொறும் தீம்பழந் தூங்கும் பலவி னோங்குமலை நாடனை வருமென் றோளே. (குறு. 83) அவ்வயலிலாட்டியைத் தலைவி வாழ்த்தற்குச் செய்யுள்: அமிழ்த முண்கநம் மயலி லாட்டி, பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லி யம்புளி மாந்தி யயலது முள்ளி லம்பணை மூங்கிலிற் றூங்குங் கழைநிவந் தோங்கிய சோலை மலைகெழு நாடனை வருமென் றோளே. (குறு. 201) தலைவி இயற்பட மொழிதற்குச் செய்யுள்: இதுமற் றெவனோ, தோழி! துனியிடை இன்னர் என்னு மன்னாக் கிளவி? இருமருப் பெருமை யீன்றணிக் காரா உழவன் யாத்த குழவியி னகலாது பாற்பெய் பைம்பயி ராரு மூரன் திருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டி ராகிய நமக்கே? (குறு. 181) நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று, நீரினு மாரள வின்றே, சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. (குறுந். 2) என்பது மியன்மொழிதலாம். பரத்தை தலைவி பாங்காயினார் கேட்பக் கூறியதற்குச் செய்யுள்: கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன், எம்மிற் பெருமொழி கூறித், தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கு மாடிப் பாவை போல, மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. (குறுந். 8) கணைக்கோட்டு வாளை கமஞ்சூன் மடநாகு துணர்த்தேன் கொக்கின் தீம்பழங் கதூஉந் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பௌவ மணங்குக, தோழி! மனையோண் மடமையிற் புலக்கும் அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே. என்னும் குறுந்தொகைச் (164ஆம்) செய்யுள் காதற்பரத்தை தலை மகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்ததாகும். சூத்திரம்: 45 உள்ளுறை உவமம், ஏனை உவமமெனத் தள்ள தாகும், திணையுணர் வகையே. கருத்து: இது, அகத்துறைச் செய்யுட்களில் வரும் உரிப் பொருட் பகுதிகள் எல்லாவற்றிற்கும் சிறப்பாக உரித்தாம் உவம வகை கூறுகிறது. பொருள்: திணையுணர் வகையே = ஐந்திணை உணர்த்தும் உரிப்பொருட் பகுதிகளில்; உள்ளுறை உவமம் = உள்ளுறை உவமமானது; ஏனை உவமமெனத் தள்ளதாகும் = மற்றைய உவமத் தோற்றம்போல அருகாமல் வந்து பயிலும். குறிப்பு: ஈற்றேகாரம் பிரிநிலை, அகத்துறைகளுள் திணை யுணர்வகையை வேறுபிரித்தலின், அவ்வகையல்லாப் பிற அகப் பகுதிகளில் ஏனையுவமம் அருகாது என்பது குறிப்பு. உவமம், வெளிப்படத் தோன்றும் உவமமும், உள்ளுறை உவமமுமென இருவகைத்தாம். இவற்றுள் உள்ளுறை உவமமே திணையுணரும் உரிப்பொருட் பகுதிகளைச் சிறப்பித்தற்கு உரித் தாகும். ஏனைய உவமம் அவ்வாறு அகவொழுக்க வகைகளுக்குச் சிறவாததாகையால், அகத்துறைகளில் திணையுணரும் பகுதிகளுக்கு அத்துணையா ஆட்சி பெறுதலில்லை. தள்ளதாகும் என்றதனால், ஏனை உவமம் அருகிப் பயிலும் என்பதும், உள்ளுறை உவமம் அவ்வாறன்றிப் பெருவரவிற்றாம் என்பதும் பெறப்படும். உள்ளுறை, உவமத்தின் ஒரு பகுதியா யடங்குமேனும், புறத்திற்கே பெரிதும் உரிமை கொள்ளும் ஏனை உவமம் போலாது அகத்திற்கே சிறந்துரிய தாதலின், இது உவம இயலிற் கூறப் பெறாது அகவொழுக்கம் கூறும் இத்திணையிற் கூறப்பட்டது. ஏனை உவமத்தை அகத்திணைக்குரித்தல்லாதது என ஏனை உவமச் சூத்திரத்தின் கீழ் விரிவுரையில் நச்சினார்க்கினியர் கூறுவர். சான்றோர் செய்யுட்களில் அருகிய ஆட்சி அகத்திணையிலும் ஏனை உவமம் பெறுதலின், அதனை அறவே அகத்திணைக்கு உரித்தில்லை என விலக்குதல் பொருந்தாது. இன்னும் இளம்பூரணர் உள்ளுறை உவமம் ஒழிந்த உவமம் என இருவகையாலும் திணை யுணர்வகை தப்பாதாகும் எனக் கூறுவதாலும், ஏனை உவமத்திற்கு அருகியேனும் அகத்திணைக்கண் ஆட்சி உண்மை தெளியப்படும். சூத்திரம்: 46 உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே. கருத்து: இது, உள்ளுறை உவமத்திற்கு நிலைக்களம் உணர்த்துகிறது. பொருள்: உள்ளுறை = அகத்திணையிற் பயிலும் உள்ளுறை உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளும் = கருப் பொருள்களுள் தெய்வம் நீக்கி மற்றையவற்றைத் தனக்கு நிலைக் களனாகத் தழுவி வரும் என்பது குறியறிந்தோரே = என்று கூறுவர் ஒப்பியலறிந்தோர். குறிப்பு: ஈற்றேகாரம் அசை. ஒப்பியலறிந்தோர் என்னு மெழுவாய் கூறுவர் என்னும் வினைக்கேற்ப அவாய் நிலையாற் பெறப்பட்டது. சூத்திரம்: 47 உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென வுள்ளுறுத் திறுவதை உள்ளுறை உவமம். கருத்து: இது, உள்ளுறை வுவமத்தின் இயல்பு கூறுகின்றது. பொருள்: உள்ளுறுத்திதனோடு ஒத்துப் பொருள் முடிகென = வெளிப்படக் கூறும் பொருளோடு, உள்ளும் பொருளும் ஒத்து முடியுமாறு; உள்ளுறுத் திறுவதை உள்ளுறை உவமம் = உள்ளத்து ஊன்றி நுணுகி உணர அமைந்து முடிவது உள்ளுறை உவமமாகும். குறிப்பு: இறுவதை என்பது, ஏற்றை என்பது போல, ஐயீறு பெற்று முடிந்த பெயர். எற்றோ வாழி, தோழி! முற்றுபு கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி வரையிழி யருவி உண்டுறை தரூஉம் குன்ற நாடன் கேண்மை மென்தோள் சாய்த்தும் சால்பீன் றன்றே (குறுந். 90) மிளகுக் கொடி வளரும் மலையில், இரவில், இடி முழங்கும் கார்தரு மழையில், உயிர் நிறைந்த முசுக்கடுவன் விரும்ப அதன் கையகப்படாது கிளையினின்று நழுவிய மணமுள்ள பலாக்கனியை மலையருவி தக்கார் உண்ணத் தகுந்த துறையில் கொண்டு தரும் குன்ற நாடன் கேண்மை மெல்லிய தோளைச் சிறிது வருத்தினும் அமைதியை அளித்தது என்றது வெளிப்படக் கூறும் பொருள், இதில், செல்வம் நிறைந்த அயலார் தலைவியை விரும்பி வந்தோர் வரைய வொண்ணாமல், ஊரலரை அஞ்சிச் செறித்த தலைவியைக் காவல் நிறைந்த இற்புறத்தில் இரவில் தோழி கொண்டுதர, தலைவன் உடன் கொண்டுசென்று, அவளைத் தன் மனையில் கற்பறம் சிறக்கக் காதலால் மணந்து நன்மையைத் தந்தான் என்பது உள்ளுறுத்து ஒத்துமுடிவதால், இது உள்ளுறை உவமமாமாறு காண்க. சூத்திரம்: 48 ஏனை உவமம் தானுணர் வகைத்தே. கருத்து: இஃது உள்ளுறை ஒழிந்த மற்றை உவமத் தோற்றம் உணர்த்துகிறது. பொருள்: ஏனை உவமம் = உள்ளுறை ஒழிந்த பிற உவமம்; தானுணர் வகைத்தே = நுணுகி உள்ளுறுத் துணர வேண்டாது, பட்டாங்கே சொல்வழிப் பொருளறியக் கிடக்கும் கூறுபாட்டை யுடைத்து. குறிப்பு: அகத்திணைக்குச் சிறந்துரிய உள்ளுறையைக் கூறிய பின், ஒப்பக்கூறல் ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல் என்னுமுறைபற்றி, உள்ளுறுத் துணரும் உள்ளுறை உவமம் போலாது பட்டாங்குணரும் பான்மைத்தாம் ஏனைஉவம இயலும் உடன் கூறப்பட்டது. திணையுணர்வகையல்லாப் பிற அகப்பகுதிகளி ளெல்லாம் ஏனையுவமும் ஒத்த வழக்குரிமை கொள்ளுதலின், அதுவுமிங்கமைய விளக்கப்பட்டது. இனி, உருவகத்தை உள்ளுறை உவமமென மயங்க வைக்கும் நச்சினார்க்கினியர் சிறப்புரை பொருந்தாமையுமறிக. சூத்திரம்: 49 காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடு மவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. கருத்து: இது, அகத்திணை ஏழனுள் மேல் நடுவணைந் திணைக்குரிய இயல்புகள் கூறியபின், எஞ்சி நின்ற இரண்டில் கைக்கிளை இயல்பை விளக்குகிறது. பொருள்: காமஞ்சாலா இளமையோள்வயின் = காதற் செவ்வி கனியும் பருவம் வராத சிறுமி ஒருத்தியிடம்; ஏமஞ்சாலா இடும்பை எய்தி = ஒரு தலைவன் தனக்கு மருந்து பிறிதில்லாப் பெருந்துயராம் காதனோய் கொண்டு; நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து = பட்டாங்குப் புகழ்தலும் (ஆற்றாமையால்) பழிப்பது போலப் புகழ்தலுமாகிய இருவகையானும் தன்பாலும் அச்சிறுமிபாலும் வீறுபெறத் தக்கன சார்த்தி; சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் = மனமாற்றம் பெறாத வழியும் தன்னுணர்ச்சி தானுரைத்து மகிழ்வது; புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு = பொருந்தி வெளிப்படும் கைக்கிளைத் திணையின் குறிப்பாகும். குறிப்பு: கைக்கிளை என்பது ஒருமருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும். காமச்செவ்வி அறியாத சிறுமியிடம் தலைமகனொரு வனுக்குத் தன்னலமறந்து அவள்பொருட்டே வாழ்வு எனக் கொள்ளும் காதற் பெற்றி தோன்றுங்கால், அது கைக்கிளை எனப்படும். காதலுணரும் பருவமுற்றால் தன்னைக்காதலியாத வழி தான் அவளைக் காதலிப்பதை, ஆடவனுக்கு நோந்திறப் பெருந்திணையாகக் கொள்வதல்லது செந்திறக்காதல் வகையாகப் பாராட்டுதல் பழந்தமிழ் மரபன்று. பருவமன்மையால் தன்னைக் காதலிக்க ஒல்லாத சிறுமியாயினும், அவள் தன்காதலுக்கு உரிய ளாதலின் காதலன் எனைத்து வகையானும் அவள் நலம் பேணுவதும், தன் புரைதீர் காதலால் தன்னொடும் அவளொடும் கொள்ளாத கூறாமல் பெருமை பேணும் பெற்றியனவே சார்த்திக் கூற்று நிகழ்த்துவதும், தனக்கு அவள்தந்த காதல் நோய்க்கு அணியிழை (காமஞ்சா லாமையின்) தானே மருந்தாக வொல்லாமையால் அவன் இடும்பைக்கு ஏமம் பெறானாயினும், தன் காதலுணர்ந்து அவள் அதற்கேற்ற பெற்றி மறுமாற்றம் கூறவொண்ணாளாயினும், அவள் பால் தன்னுணர்வுரைத்து மகிழ்வதும், குற்றமற்ற கைக்கிளையின் குறிகளாகும் என்பது இச்சூத்திரத்தில் வற்புறுத்தப்படுகிறது. அத்தகைய கைக்கிளையும் ஆடவர்க்கே அமைவதன்றி மகளிர்க்குக் கூறுவது மரபன்று. மகளிர்பால் ஒருதலைக் காம வெளிப்பாடு அவர்தம் பெண்ணீர்மைக்குப் பொருந்திய பொற் புடை நெறியாகாமையின், அதனைக் கைக்கிளையின்பாற்படுத் தாமல் பெருந்திணையில் அடக்குவதே புலனெறி வழக்கில் பண்டையோர் கொண்ட தமிழ் மரபாம். கைக்கிளைத் தலைவனுக்கும் அவன் காமஞ்சாலாக் காதற் சிறுமிக்கும் வீறுதர வருவனவே அவன் கூற்றாம்; அல்லாதன அவன் வாய்பிறவா என்பதை வற்புறுத்தற்குத் தருக்கிய புணர்த்து என்றுரைக்கப்பட்டது. தருக்கிய சிறை எனும் கம்பர் சொற் றொடரும் வீறுதரும் தருக்கின் பெற்றியை வலியுறுத்தல் காண்க. பண்டைத் தமிழ்ப் புலவர் கொண்ட தூய கைக்கிளையின் பெற்றியும் பெண்மைப் பண்பும் பாராட்டாது, பிற்காலத்தில் பிறர் பெருந்திணையின்பாற்படும்புரைபடுமிழிந்த ஒருதலைக் காமத்தைப் பெண்பாற் கைக்கிளை எனக் கொள்வாரானார். தம் புதுக் கொள் கைக்குத் தொல்காப்பியர் நூலில் இடமின்மை கண்டுவைத்தும், புல்லித் தோன்றும் கைக்கிளை எனலால் புல்லாமல் தோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும்; அது காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும் எனவும், அது களவியலிற் கூறப்படுவது போலவும் பழைய உரைகாரர் கூறுவர். அவரைப் பின்பற்றி நாற்கவிராசநம்பியும் தன்னகப் பொருளில் காமஞ் சான்ற இளமையோள் வயின் என்றே இலக்கணம் வகுத்துக், காமஞ்சாலா இளமையோள்பால் நிகழும் தலைவனின் தூய காதலைப் பாராட்டா தொழிந்தார். காட்சி முதலியவற்றைக் கைக்கிளை எனக் கொள்ளாமல் காமக்குறிப்பாம் ஐந்திணை உரிப்பொருள்களின் பாற்படுத்தித் தொல்காப்பியர் இவ்வகத்திணையியலிலும் களவியலிலும் கூறுதலானும், களவு இருமருங்கொத்த அன்பினைந்திணையின்பாற் பட்டடங்குதலானும், அவற்றின் வேறுபட்ட பெருந்திணையைப் போலவே கைக்கிளையும் அவற்றுள் அடங்காத வேறு திணையாய்ப் பிரித்துக் கூறப்படுதலானும், களவியலிற் கூறப்படும் எதுவும் அன்பின் ஐந்திணையன்றிக் கைக்கிளைத்திணை ஆகாமை ஒருதலை. இச்சூத்திரத்திற் கூறப்படும் கைக்கிளை குற்றமற்ற பெற்றியதாதலின், பொருந்தாக் காமமாகிய பெருந்திணை போலாது கைக்கிளை பொருந்தும் தூய காதலாம் எனற்கே புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே என இந்நூலார் விளங்க வைத்தார். (புல்லுதல் = பொருந்துதல், தழுவுதலுமாம்.) வாருறு வணரைம்பால் எனும் குறிஞ்சிக் கலியுள், உளனாஎன் உயிரைஉண் டுயவுநோய் கைம்மிக இளமையா னுணராதாய் நின்தவ றில்லானும் களைநரின் நோய்செயும் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய் (1) நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் நலியுநோய் மடைமையான் உணராதாய் நின்தவ றில்லானும் இடைநில்லா தெய்க்குநின் உருவறிந் தணிந்துதம் உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய் (2) அல்லல்கூர்ந் தழிவுற அணங்காகி அடருநோய் சொல்லினு மறியாதாய் நின்தவ றில்லானும் ஒல்லையே உயிர்வவ்வும் உருவறிந் தணிந்துதம் செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய். (3) என வந்தமை காண்க. இத்தாழிசைகளுள், (1) தலைவன் தன்னை நலியும் காமநோயை இளமையா னுணராதாய், மடமையா னுணராதாய், சொல்லினு மறியாதாய் எனக் கூறுதலால், அவள் காமஞ்சாலா இளமையோள் என்பது அறியப்படும். (2) களைநரின் நோய் செயும் கவின் எனவும், இடைநில்லா தெய்க்கு நின்உரு எனவும், ஒல்லையே உயிர் வவ்வும் உரு எனவும் அவளைப் புகழ்வதாலும், இக்கலியுள் சுரிதகத்தில் மற்றிந் நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின், பொலங்குழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவின் போல்வல் யான், நீ படுபழியே எனப் பழிப்பது போல அவள் பெருமை கூறுதலாலும், நன்மையும் தீமையும் என்றிரு திறத்தாலும் தன்னொடும் அவளொடும் தலைவன் தருக்கிய புணர்த்துக் கூறுதல் காண்க. (3) இளையோள் தனக்கு மறுமாற்றம் கூறா வழியும், நுமர்தமரில் லென்பாய் என விளித்து அவளிடம் சொல்லெதிர் பெறாத்தலைவன் தானே சொல்லி இன்புறுதல் காண்க. சூத்திரம்: 50 ஏறிய மடற்றிறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடலொடு தொகைஇ, செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. கருத்து: இது, நிறுத்தமுறையானே, எழுதிணைகளுள் இறுதி யாக எஞ்சி நின்ற பெருந்திணை இயல் கூறுகிறது. பொருள்: ஏறிய மடற்றிறம் = மடலேறுவேன் எனக் கூறுதலோடமையாது, தலைவன் மடலேறுதலும்; இளமை தீர்திறம் = இன்பம் துய்த்தற்கு உரிய பருவம் கழிந்தபிறகு எழும் விழைச்சு விருப்பமும்; தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் = தெளிய வொண்ணாமல் அறிவழிக்கும் கழி காமமும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ = கரைகடந்த காமத்தால் விரும்பாரை வலிதிற் புணரும் வன்கண்மையொடு கூட்டி; செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே = கூறப்பட்ட இந்த நான்கும் புரைபடுகாம இழிவொழுக்கத்தின் வகை குறிப்பனவாகும். குறிப்பு: திணை என்பது ஒழுக்கம். இங்குப் பெருந்திணை என்பது குறிப்பால் சிறிய ஒழுக்கம் எனப் பொருள்படும். கழிகாமத் தைச் சிறுமை எனக் கூறும் மரபு, செருக்கும் சினமும் சிறுமையும் எனும் குறளில் காமக் குற்றத்தைச் சிறுமை எனலாம் அறிக. அறிவுடை மக்கட்டன்மைக் கமையாத இப் புரையொழுக்கத்தைப் பெரியஒழுக்கம் என்றது, அது ஒழுக்கத்தொடு படாதென்பது குறிக்கும் அவையல்கிளவியாகும். மங்கலமற்றதையும் இடக் கரையும் மறைத்து எதிர்மறைப் பெயரால் வழங்குவது அடிப்பட்ட தமிழ் மரபு. தாலி பெருகிற்று, விளக்கைப் பெருக்கு, என்பவற்றுள் பெருமைச்சொல் மறுதலைப் பொருளில் வருவது போலவே, பொருந்தாக் காமத்தைப் பெருந்திணை என்பதிலும் பெருமை அடை ஒழுக்கச் சிறுமையைச் சுட்டுவதாகும். எனவே, பெருந்திணை என்பது அவையில் உரைக்கவொண்ணா இழிவொழுக்கத்தை மறைத்துக்கூறும் செய்யுள்வழக்கச் சொல்லாகும். பெருந்திணைவகை நான்கனுள், மடலேறுதலும் விரும்பாரை வலிந்து கூடலும் ஆடவர்மாட்டே நிகழும். மடன்மா கூறுதலும் கற்புடை மகளிர்க்குப் பொற்புடை நெறியின்மையின், மடலேறுதல் எஞ்ஞான்றும் அவர்க்கின்மை தெளியப்படும். மிக்க காமத்து மிடல் தம்மின் வலியராய ஆடவர்பால் மெல்லியலார்க்கு ஒல்லாதாகும். இளமைதீர் திறமும் தேறுதலொழிந்த காமமும் இருபாலார்க்கும் பொதுவாகும். (1) ஏறிய மடற்றிறம் பெருந்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள்: மடலே காமந் தந்த தலரே மிடைபூ வெருக்கி னலர்தந் தன்றே, இலங்குகதிர் மழுங்கி யெல்விசும்பு படரப் புலம்புதந் தன்றே, புகன்றுசெய் மண்டில மெல்லாந் தந்ததன் றலையும் பையென வடந்தை துவலை தூவக் குடம்பைப் பெடைபுண ரன்றி லியங்குகுர லளைஇக் கங்குலுங் கையறவு தந்தன்று, யாங்காகு வென்கொ லளியேன் யானே? (நற். 152) நாணாக நாறு நனைகுழலால் நல்கித்தன் பூணாக நேர்வளவும் போகாது பூணாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமே னின்றேன் மறுகிடையே நேர்ந்து. (திணைமாலை நூற்றைம்பது 16.) நாணொடு நல்லாண்மை பண்டுடையேன், இன்றுடையேன் காமுற்றார் ஏறு மடல். (குறள். 1133) எழின்மருப் பெழில்வேழம் என்னும் நெய்தற்கலியும் (21), சான்றவிர் வாழியோ என்னும் (22ஆம்) நெய்தற்கலியும் ஏறிய மடற்றிறப் பாக்களாதல் காண்க. (2) இளமை தீர்திறம் பெருந்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள்: மின்சாயன் மார்பன குறிநின்றேன் யானாகத் தீரத் தறைந்த தலையுந்தன் கம்பலுங் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநம் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத் தோழிநீ போற்றுதி யென்றி, அவனாங்கே பாராக் குறழாப் பணியாப் பொழுதன்றி யாரிவ ணின்றீ ரெனக்கூறி, பையென வைகாண் முதுபகட்டிற் பக்கத்திற் போகாது தையா றம்பலந் தின்றியோ வென்றுதன் பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும் யாதொன்றும் வாய்வாளே னிற்ப, கடிதகன்று கைம்மாறிக் கைப்படுக்கப் பட்டாய் சிறுமிநீ மற்றியா னேனைப் பிசாசரு ளென்னை நலிதரி னிவ்வூர்ப் பலிநீ பெறாஅமற் கொள்வேனெனப் பலவுந் தாங்காது வாய்பாடி நிற்ப, முதுபார்ப்பா னஞ்சினனாத லறிந்தியா னெஞ்சா தொருகை மணற்கொண்டு மேற்றூவக் கண்டே கடுதரற்றிப் பூச றொடங்கினன், ஆங்கே யொடுங்கா வயத்திற் கொடுங்கேழ்க் கடுங்க ணிரும்புலி கொண்மார் நிறுத்த வலையுளோ ரேதில் குறுநரி பட்டற்றாற் காதலன் காட்சி யழுங்க நம்மூர்க் கெலாஅ மாகுல மாகி விளைந்ததை யென்றுந்தன் வாழ்க்கை யதுவாகக் கொண்ட முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து (குறிஞ்சிக்கலி. 29) இக் குறிஞ்சிக்கலியுள், தீரத்தறைந்த தலையும் வைகாண் முதுபகட்டின் முதுபார்ப்பான் என வருதலால், இளமை தீர்ந்தான் ஒருவன் இணைவிழைச்சினை மேற்கொண்டான் என்பது புலனாகும். (3) தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் பெருந்திணைக் குறிப்பாதற்குத், தன்னை விரும்பாப் பிறன் மனையாளைப் பெட்டொழுகும் பேதையான தென்னிலங்கை அரக்கன் காமக்கதை சாலும். இராவணன் தன் காமப் புரையுணர்ந்து தேறாமல் இறக்குமட்டும் உளத்ததனை வளர்த்த பெருந்திணைப் பெற்றியைக் காட்டும் கம்பர் பாட்டுமிங்குக் கருதற்குரியது. வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கு மிடனின்றி உயிரிருக்கு மிடனாடி யிழைத்தவாறோ? கள்ளிருக்கு மலர்க் கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் உள்ளிருக்கு மெனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன்வாளி. (4) மிக்ககாமத்து மிடல் பெருந்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள்: என்றவ ளரசன்தன்னை நோக்கலள், இவன் கணார்வஞ் சென்றமை குறிப்பிற்றேறிக், கூத்தெலா மிறந்தபின்றை நின்றது மனத்திற்செற்றம், நீங்கித்தன் கோயில்புக்கான் மன்றல மடந்தை தன்னை வலிதிற்கொண்டொலிகொடா ரான். (சிந்தா. 685. காந்.) தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போதுபுல்லி, ஊனுடை உருவக் காக்கை இதழுகக் குடைந்திட் டாங்கு, கானுடை காலைதன்னைக் கட்டியங் காரன் சூழ்ந்து தானுடை முல்லை யெல்லாம் தாதுகப் பறித்திட் டானே. (சிந்தா. 686. காந்) சூத்திரம்: 51 முன்னைய நான்கும் முன்னதற் கென்ப. கருத்து: இது, கைக்கிளை பெருந்திணைகள் ஆகிய இரு சூத்திரங்கட்குமுன், ஐந்திணைகளுள் அடங்காமல் திணைக்கு உரிப்பொருள்களாய் அகப்பகுதியில் வரும் பொது இயல்களாகக் கூறப்பட்ட நான்கும், கைக்கிளை பெருந்திணையாய இரண்டனுள் முன்னதாய கைக்கிளைக்கு உரியவாதல் கூறுகிறது. பொருள்: முன்னைய நான்கும் = மேல் கைக்கிளை பெருந் திணைச் சூத்திரங்கட்கு முன்னே கூறிய (1) நிகழ்ந்தது நினைத்தல் (2) நிகழ்ந்தது கூறி நிலையல் (3) மரபுநிலை திரியாது விரவும் பொருள் விரவல் (4) உள்ளுறை உவமம் திணைபுணர் வகையாதல் என்ற நான்கும்; முன்னதற்கென்ப = கைக்கிளை பெருந்திணை யாகிய இரண்டனுள் முற்கூறிய கைக்கிளைக்காம் எனக் கூறுவர் பொருள் நூற்புலவர். குறிப்பு: என்ப என்பதற்கேற்பப் பொருள் நூற்புலவர் எனும் எழுவாய் அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. நிகழ்ந்தது நினைத்தல் முதல் உள்ளுறை உவமம் திணையுணர்வகை யாதல் வரை கூறப்பட்ட நான்கும் அன்பினைந்திணைகளுக்குப் பொதுவாய்த் திணைக்குரிப் பொருளாய் அமைதலால், அன்பினைந்திணைகளின் இயல்புகூறும் பகுதிகளின் இறுதியில் அவை அடைவுபெறக் கூறப்பெற்றன. இவை, நடுவணைந்திணைகளுக்குச் சிறந்துரிய வாதல் போலவே, புரைதீர்ந்த செந்நிறக் கைக்கிளையின்கண்ணும் வந்து பயிலும்; ஆனால் நோந்திறப் பொருந்தாப் பெருந்திணை யின்கண் இவை ஆட்சி பெறா. தொல்காப்பியர் நூலில் குற்றமற்ற கைக்கிளை ஒன்றே கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர் கைக்கிளையாகக் கருதும் தமிழ் வழக்கல்லாத தவறுடைய கூட்டமெல்லாம் பெருந்திணையாகக் கருதலே ஆன்ற மரபாகும். குற்றமற்ற செந்திறக் கைக்கிளையில், தூய ஒருதலைக் காதலுடையான் தருக்கிய புணர்த்துச் சொல்லியின் புறூஉம் காலத்துத் தன் காதலியைப் பற்றிய முன் நிகழ்ச்சிகள் அவன் நினைத்தற்கு ஏதுவாதலும், பின்கூறி இன்புறப் பெறுதலும், பிற விரவும் பொருள் விரவலும், உள்ளுறை உவமம் ஆளுதலும், இயலியையும் இன்பமும் பயக்கும். நோந்திறப் பெருந்திணை யிலோ பழிபடும் முன்நிகழ்ச்சிகளை நினைத்தது கூறலும் நேராமை யும், நேரின் இடும்பையன்றி, இன்பந்தாராமை வெளிப்படை. ஆதலால் அவை பெருந்திணைக்குப் பொருந்தாமை ஒருதலை. உள்ளுறை உவமமும் ஒத்த காம ஐந்திணைகளிலும் புரை தீர்ந்த கைக்கிளையிலும் சிறந்து வருதல்போல் பெருந்திணைக்கு மாட்சிப் படாமை எளிதில் தெளியப்படும். அதனால் இச்சூத்திரச் செம் பொருள் மேற்கூறியதே என்பது தேற்றம். இனி, இதற்குப் பழைய உரைகாரர் இருவரும் சூத்திரக் கருத்தொடு பொருந்தாது முரண்பட இருவேறு பொருள் கூறுவர். அவருரை பொருந்தாமை யாராய்வாம். இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் தரும் பொருளாவது: இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழ்ந்த காட்சியும் ஐயமும் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு நான்கும் நற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின் முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளை யாதற்குரிய என்று கூறுவர் ஆசிரியர், எறு, இனி, இதன் கீழ் நச்சினார்க்கினியர் கூறும் சில சிறப்புக்குறிப்புக்களும் ஈண்டுக் கவனிக்கத்தக்கன. அவையாவன: களவியலிற்கூறும் கைக்கிளை சிறப்பின்மையின், முன்னதற்குரிய எனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்றது முதலாக இந்நான்கும் கூறுமாறு ஆண்டுணர்க என்பன. இவ்வுரைக் கருத்து இச்சூத்திரத்தால் தொல்காப்பியர் சுட்ட நினைத்ததாமா? இங்கு நச்சினார்க்கினியர் கூறுவது அவருக்கு உடன்பாடாமேல், ஐயமகற்றி அக்கருத்தைப் பொருத்தமாக விளக்கும் சொற்பெய்து சூத்திரிப்பர் அன்றோ? அஃதவர் கருத் தன்மையை ஈண்டும் பிற இடங்களிலும் அவர் சூத்திரச் சொற் போக்கே தெளிய விளக்குகிறது. முதலில், ஒரே சூத்திரத்தில் ஈரிடத்தில் வரும் முன் என்னும் சொல் அவ்வீரிடத்தும் ஒரேவிதமாகப் பொருள்பட வேண்டும். இலக்கண நூலில் சூத்திரச் சொற்களை எளிதில் பொருள் விளங்குதற்கு மாறாக மயங்க அமைப்பது மரபன்று. இச்சூத்திர முதலில் முன்னைய நான்கும் என்பதில் வரும் முன் என்பதைக் கீழே அல்லது பின் எனும்பொருள் குறிப்பதாகக் கொண்டு, இடத்தால் முன்னே களவியலில் கூறும் காட்சி முதலிய நான்கும் எனவும், இரண்டாவ தாய் முன்னதற்கென்ப எனவருமிடத்துள்ள முன் என்பதை மேலே அல்லது காலத்தால் முன்னே எனக் கொண்டு, மேற்கூறிய கைக்கிளை பெருந்திணை என்ற இரண்டனுள் கைக்கிளைக்குரிய எனவும், நச்சினார்க்கினியர் பொருண்முடிவு செய்கின்றார். எனவே, இவ்வொரு சூத்திரத்தில் இருமுறை வரும் முன் என்னும் ஒரு சொல்லை முன்னுக்குப்பின் முரணுவதான இருவேறு பொருளில் இந்நூலார் கூறியதாகக் கொள்ள நேருகிறது. ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினும் தோன்ற யாத்தமைப் பதுவே சூத்திரம் எனவும், முதலும் முடிவும் மாறுகோ ளின்றி ........................ பொருண்மை காட்டி ............................................. நுண்ணிதின் விளக்கலது நூலெனப் படுவது எனவும் நூலுக்கும் நூலினுட் சூத்திரத்துக்கும் (செய்யுளியலில்) இலக்கணம் வகுப்பவரே, தம்மிலக்கண விதிக்கு மாறாகத் தாமே முன்பின் முரணிப் பொருள்நனி விளங்காது கற்பவர் மயங்குமாறு இச்சூத்திரத்தைத் தமது பெரு நூலில் யாத்துவைத்தார், எனக் கொள்ளுவது அவர் நூல் நோக்கிற்கும் சொற்போக்கிற்கும் பொருந்தாது? இங்கு இருமுறைவரும் முன் என்னும் சொல்லை ஈரிடத்தும் தெளிவான ஒருபொருள் குறியாமல் மாறான இருவேறு பொருள் படக் கூறி யாரையும் மயங்க வைக்க இந்நூலார் கருதார் என்பதொருதலை. இனி இரண்டாவதாக, இங்கு முன்னைய நான்கும் என வரையறைப்பட்டவை, அடுத்து இவ்வியலில் விளக்கப்பெறாதன வாய், பின்னே வெவ்வேறு, பொருள், நுதலிய பல்வேறு சூத்திரமும் ஒத்தும் கடந்து வேறோர் இயலில் வேறு பொருளிடைக்கூறப் போவனவற்றைக் குறிக்குமெனில், இங்கு அக்கருத்தை தெளிய விளக்கியிருத்தல் வேண்டும். இவ்வியலில் இச்சூத்திரம் கற்பவரை, இனிப் பின்கூறப்போகும் வேறோர் இயலில் இத்தொகையின் வகை நான்கும் சுட்டப்படுமெனத் தாம் கூறாமலே எதிர்பார்க்க வைக்கவும், இடையில் வருபவற்றுள் அவை எவை எனத் துணியாமல் மயங்க வைக்கவும் கருதுவரா? அவ்வாறு மயக்கம் தரும் கருத்தை அவருக்கேற்ற நிலையில்நிiனப்பது உiரயறமன்று.அண்மையில் வகைவிரிகள் கூறப்பெற்று, எளிதில்தளிவும்துணிவும்தருதற்குஏற்றவிடத்தன்றிப்பிறஇடங்களிளெல்லாம்இந்நூலார்வhளாதகை கூறி அiமவதில்லை.தாகை தரும் இடந்தொறும் அதன் வகையும் விளக்கிச் செல்வதவர் பிறழா முறையாதல் இந்நூல் முழுவதும் காணலாம். அதுவேயுமன்றிப், பின் களவியலிற் குறிக்கப்படுவதாகக் கருதும் ஒரு கைக்கிளையை விலக்கி, இங்குப் பெருந்திணைக்கு முன் விளக்கிய வேறொரு கைக்கிளையைக் குறிப்பதற்கு முன்னதற் கென்ப எனச் சிறப்பெய்துவித்தார் என்பர் நச்சினார்க்கினியர். அதனை அடுத்துக் களவியலில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்றது முதலாக இந்நான்கும் கூறுமாறு ஆண்டுணர்க, எனக் கூறி, முன்னையநான்கும் எனும் தொடரில் வரும் நான்கன் வகை விவரம் குறியாமல் வாளா தொகைகூறி விடுத்தார். களவியலில் அச்சூத்திரங்களுக்கு உரைகூறுமிடத்தும் எந்நான்கும் இவையென விளக்கினாரிலர். அங்குத் தொல்காப்பியர் காட்சி, ஐயம், தெளிவு என மூன்றே குறிக்கக் காண்கிறோம். நச்சினார்க்கினியர் கூறுமாறு காட்சி ஐயம் இரண்டுந்தவிரத் தெரிதல், தேறல் என வேறிரண்டு கூட்டி நான்கு பகுதிகள் இயற்கைப் புணர்ச்சிக்கும் தலைவன் தலைவியர் இருவரின் உள்ளவுடம்பாடு அறிய நாட்டம் இரண்டும் கூட்டியுரைக்கும் குறிப்புரைக்கும் முன் நிகழ்வனவாகத் தொல் காப்பியர் கூறினாறிலர். ஆகவே, களவியலில் தொல்காப்பியர் மூன்றே இன்றியமையா நற்காம முற்குறிப்பாகக் கூறினராதலால், அவற்றை இங்குக் கைக்கிளைக் குறிப்பாமெனச் சுட்ட நினைப்பின் முன்னையமூன்று மென்னாது நான்கும் என முறையிறந்து கூறியிரார். ஈண்டு நான்கெனத் தெளியக் கூறுதலால், இந்நான்கும் பின் களவியலிற் பேசப்படும் மூன்றல்லாத வேறாதல் வெளிப்படை இச்சூத்திரத்துத் தொகையெண் குறிக்கும். நான்கும் இவையென விளக்கப்பெறாததால், இதனோடியைந்து பொருள் தெளிதற்கு உதவுவதான நான்கன் வகை இச்சூத்திரத்தையடுத்து இவ்வகத் திணையியலிலேயே விளக்கப் பெற்றிருக்க வேண்டுமென்பது எளிதில் தெளியப்படும். அவற்றை அறியின், சூத்திரச் செம்பொருளும் உடனறியப்படுவதாகும். இவ்வுண்மைகளை உணர்ந்த இளம்பூரணர் முன் என்பதற்கு இச்சூத்திரத்தில் ஈரிடத்தும் காலத்தால் முற்கூறப்பட்டதையே அமைத்துக்கூறும் கடன் மேற்கொண்டார்; கொண்டு, இதற்கு முன்கூறிய பெருந்திணைப் பகுதியாகக் காட்டிய நான்கு நிலைகளில் ஒவ்வொன்றின் முன்னிலையும் இதற்கும் பெருந்திணைச் சூத்திரத் திற்கும் முற்கூறிய கைக்கிளைக்குப் பொருந்துமெனப் பொருள் கூறுவர். இவருரை முன் என்பதற்கு ஈரிடத்தும் ஓராங்கே நேர் பொருள் கூறும் பெற்றியளவில் குற்றமற்றது; நான்கெனும் எண்ணுக்கும் பொருந்துவது. எனில், பெருந்திணைப் பகுதிகளே தத்தம் முன்னைய நிலைகளில் கைக்கிளை ஆதற்கமையும் என்பது ஆன்றோர் வழக்கும் சான்றோர் செய்யுளும் தழுவாத முரணாகும். அப்பெருந்திணை நிலைகள் கைக்கிளையாவ தெப்படி என்பதையும் விளக்கிலர். இவர் அவ்வாறு கூறுவது, அதற்குமுன் கூறிய நான்கு அகத்திணைப் பொதுவிலக்கணக் குறிப்புக்களும் அவற்றின் பின் கூறும் கைக்கிளை பெருந்திணைகளுக்குமுள்ள இயலியைபும் முரணும் கருதாததால் நேர்ந்ததாகும். அதனால் இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் உரையும், நான்கென்னும் தொகைக்குரிய வகை தேறாமல் கூறியதன்றி, இச்சூத்திரக் கருத்தாகாமை யொருதலை. அன்றியும், இளம்பூரணர் கூறியவாறே கொள்ளினும், பெருந் திணைப்பகுதி நான்கன் முன்னிலைகள் கைக்கிளை ஒன்றற்கே அமையுமென்னும் நியதியில்லை. அந்நிலைகள் ஒத்தகாமத்திணை களுக்கே சிறந்துரியன. ஆதலால், முன்னதற்கென்ப எனுந் தொடரை இங்குச் சிறிது முற்கூறிய கைக்கிளை ஒன்றற்கே உரியது போலக் கொள்ளற்கில்லை. மடலேறாமல் ஏறுவேன் எனத் தோழிக்குக் கூறி வெளிப்பட இரத்தலே ஏறாமடற்றிறம். நலம் பாராட்டலே இளமை தீராத்திறம், புணரா இரக்கமே தேறுத லொழிந்த காமத்துமிகாத்திறம், நயப்புறுத்தலே மிக்க காமத்து மாறாத்திறம், என அம்முன்னிலை நான்கையும் இளம்பூரணர் இச்சூத்திரச் சிறப்புரையில் விளக்குகிறார். வெளிப்பட இரத்தலும், நலம்பாராட்டலும், புணரா இரக்கமும், நயப்புறுத்தலும், ஆய நான்கும் கைக்கிளையினும் ஒத்த காம ஐந்திணைகளுக்கே பெரிதும் சிறப்புரிமை உடையவாகப் பண்டைச் செய்யுள்களில் பயிலப் பார்க்கிறோம். இந்நூலாரும் ஐந்திணைத் துறைகளை விளக்குமிடத்து இவற்றினையும் ஐந்திணைத் துறைகளோடு இயைத்துக் கூறுகின்றார். ஆகவே, இந்நான்கையும் கைக்கிளைக்குச் சிறந்துரியவாக இங்குக் கொள்வது பொருந்தாது; அது இந்நூற் கருத்துமன்று. அதனாலும் அவருரை இச்சூத்திரப் பொருளாகாது. இனி, இவ்வியலில் மேற்கூறிய நான்கு அகத்திணைகளின் பொதுவிலக்கணங்கள், இவ்வகத்திணையியலில் விளக்கிய உரிப் பொருளான ஒத்தகாமத்திணை ஐந்திற்கே உரியனவா? அவற்றின் பின்னர்க் கூறும் திணைகள் இரண்டிற்குந் தொடர்புடையனவா? எனுமையமகற்றித் தெளிப்பது இன்றியமையாததாகும். ஆகவே, இச்சூத்திரத்தால் இந்நூலார் அவ்வினாக்களுக்குரிய விடையிறுத்து விளக்கலாயினர், என்பதை இங்குத் தெளிதல் எளிது. இதில் முன்னதற்கென்ப என்பது காலம்பற்றி முன்னதையே குறிப்பதாகக் கொண்டு, இதற்கு முற்கூறிய திணையிரண்டனுள் பெருந்திணைக்கு முன்னதான கைக்கிளையைச் சுட்டும் என்று நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் பொருள் காணுதலால், அம்முறையே இச்சூத்திரத்தில் வரும் முன்னைய நான்கும் என்ற சொற்றொடரும் காலத்தால் இதற்கு முற்பகுதியில் கூறப்பெற்ற நான்கே யாதல் வேண்டும் என்பது தேற்றமாகும். அவ்வாறு கூறிய நான்கு குறிப்புக்கள் பெருந்திணை கைக்கிளைகளை விளக்கும் இரு சூத்திரங்களுக்கும் முன் கூறப்பெற்றுள. ஆதலால் அவற்றையே இங்கு முன்னைய நான்கும் என்று சுட்டினர் இந்நூலார் எனத் துணிவதே பொருத்த மாகும். அவற்றின் விவரமும் பொருத்தமும் இனி ஆராய்வோம். கைக்கிளை பெருந்திணைகளின் இலக்கணம் கூறும் முன்னும், அன்பினைந் திணைகளின் பொது இலக்கணப் பகுதி கூறிமுடிந்த பின்னும், அவ்வைந்திணைகளுக்குப் பெருவரவினவாய் வந்துதவும் நான்கு செய்திகளைப் பற்றி விதிமுகத்தானும் விலக்குவகையானும் இந்நூலார் விளக்கிச் சில சூத்திரம் யாத்துளர் என மேலே காட்டி னோம். அவை, 1. நிகழ்ந்தது நினைத்தற் கேதுவாதல் (சூத். 43) 2. நிகழ்ந்தது கூறி நிலையல் (சூத். 44) 3. மரபுநிலை திரியாது விரவும் பொருள் விரவல் (சூத். 45) 4. உள்ளுறை உவம ஆட்சி (சூத். 46 முதல் 49 வரை) என்ற நான்கும் முன் ஒத்தகாமத்திணை ஐந்திற்கும் ஒத்து வழங்கும் பொது இலக்கணங்களாகக் கூறப்பெற்றன. இந்நான்கிலக்கணங் களும் அன்பினைந்திணைகளுக்கு உரியவாதலேயன்றி, அவற்றின்பின் கூறிய கைக்கிளைக்கும் ஒத்த உரிமை உடையனவாகும்; பெருந் திணைக்கு அவ்வாறு அமைந்தியையா; என்பதை வரையறுத்து, அச்சூத்திரம் இரண்டிற்கும் பின் புறனடையாக அக்கருத்தை விளக்க இச்சூத்திரம் எழுந்தது. இத் தொடர்பியைபுகளை நன்குணர் தற்கு இவ்வியலில் கூறும் சூத்திரத்தொகை வகைகளின் வைப்பு முறைப் பாகுபாடுகளை உய்த்துணர்தல் அவசியமாகும். இவ்வியலில், முதற் சூத்திரத்தால் அகத்திணை ஏழென இந்நூலார் தொகுத்து விளக்கினார். இரண்டாம் சூத்திரத்தால் அத்திணைகள் ஏழனுள் முதலும் இறுதியும் ஆய கைக்கிளை பெருந்திணையெனக் குறித்த இரண்டும் கழித்து இடைநின்ற ஐந்தும் ஒத்தகாம உரித்திணைகள் என்றும், அவ்வைந்தின் நடுநின்ற பாலை யொழிய மற்றைய நான்கும் குறிஞ்சி முதலிய நானிலங்களுக்கும் முறையே சிறப்புரிமையுடையன என்றும் கூறினார். பிறகு முதல், கரு, உரி, யெனும் மூன்றாஞ் சூத்திர முதல் எஞ்சியோர்க்கும் எனும் நாற்பத்திரண்டாஞ் சூத்திரம்வரை அந்நடுவணைந் திணை களின் பாகுபாடுகளும், அவ்வவற்றின் சிறப்பிலக்கணங்களும் வகைபெறக்கூறினார். பிறகு நிகழ்ந்தது நினைத்தற்கு எனும் (42ஆம்) சூத்திர முதல் ஏனைஉவமம் எனும் (48ஆம்) சூத்திரம் வரை அவ்வைந்திணைகளுக்கும் அமைய வந்து பயிலும் நான்கு பொது இலக்கணங்களைக் கூறி முடித்தார். பிறகு காமஞ்சாலா எனும் (49ஆம்) சூத்திரத்தில் கைக்கிளையையும், அதன் பிறகு ஏறிய மடற்றிறம் எனும் (50ஆம்) சூத்திரத்தில் பெருந்திணையையும் விளக்கினார். அவற்றின் பின் முன்னைய நான்கும் என்னும் இச்சூத்திரத்தை நிற்கவைத்தார். இவற்றுள் மூன்றாம் சூத்திரத்தால் அன்பினைந்திணைகளும் முதல் கரு உரியென வகைபெற வழங்கும் எனக்கூறி, அவ்வகைகளை விளக்கப் புகுந்தவர் புணர்தல் பிரிதல் எனும் 14ஆம் சூத்திரத்தில் உரிப்பொருள்களை வகுத்து, அது முதல் எஞ்சியோர்க்கும் எனும் 41ஆம் சூத்திரம் வரை அவ்வுரிப்பொருள் களுள் ஒவ்வொன்றன் தனிச் சிறப்பிலக்கணங்களையும் அவ்வத் திணையொடு நிரலே வகைபட விளக்கினர். இவையெல்லாம் அன்புரித்திணைகள் ஐந்தில் ஒவ்வொன்றற்கே சிறப்புரிமை யுடையனவாதல் கூறி, இவற்றின்பின் நிகழ்ந்தது நினைத்தற்கு என்பது (சூத். 42) முதல் ஏனையுவமம் என்பது (சூத். 48) வரை ஏழு சூத்திரங்களுள் இறுதி நான்கில் உள்ளுறையுவமம் ஒன்றும், முதல்மூன்று சூத்திரங்களில் தனிவேறு மூன்றுமாக நான்கு பொது இலக்கணங்களை ஒத்தகாமத்திணை ஐந்திற்கும் ஒத்த இயைபும் தொடர்பும் உடையனவாகத் தெள்ளிதிற் கொள்ள வைத்தார். இவற்றுள், முதலிரு சூத்திரங்களை (சூத். 43-44) பாலைக்கே உரியனபோல உரைகாரர் கூறுவது பொருத்தமற்றதாகும். இரண்டறிகள்விநங்காதலோளே; .............கான நாறவந்து நள்ளென்கங்குல்நம்மேhரன்னள், கூந்தல்வேய்ந்தவிரவுமலர்உதிர்த்து.......................... அமரா முகத்த ளாகித் தம்மோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312) எனத் தலைவிபால் நிகழ்ச்சி தலைவன் தன்னுள் நினைத்தற்கு ஏதுவானதைக் கூறும் குறுந்தொகை 312ஆம் பாட்டு, அம்மவாழிதோழி..... மாற்றலம் யாமென மதிப்புக்கூறி நம்பிரிந் துறைந்தோர்,மன்றநீவிட்டiனயோஅவருற்றசூளே.” என முன் தலைவன் நிகழ்த்திய சூளைத் தோழிதலைவிய நினைக்கச்செய்ததைக் கூறும் ஐங்குறுநூற்றுச்(227ஆம்)செய்யுளும்,பாலைபற்றியஅல்ல;ஈரிடத்தும்இவகுறிஞ்சித்திணையில்நிகழ்ந்ததைப் பின் நினைத்தற்குஏதுவானதையகுறித்தன. மின்னொளிர் அவிரறல் என்னும் குறிஞ்சிக்கலிப் (19ஆம்) பாட்டும் அனையதே. இனி, தீம்பால் கறந்த கலமாற்றி என வரும் முல்லைக் கலிச் (10ஆம்) செய்யுளும், கொடியவும் கோட்டவும் எனவரும் குறிஞ்சிக்கலிச் (18ஆம்) செய்யுளும் தலைவி முன்னி கழ்ந்தது கூறி நிலையலை உணர்த்துவன; இவை முறையே முல்லை யினும், குறிஞ்சியினும் வந்தன. இவ்வாறே இவ்விரு சூத்திரக்குறிப்புக்களும், உரைகாரர்கூறுமாறு பலைக்குத் தனியுரிமை bகாள்ளாமல், ஐந்திணை அனைத்திற்கும் வந்துபயிலும்,“மரபுநிலை திரியாமட்சியவாகி விரவும் bபாருளும் விரவுவதும் ,“உள்ளுறையுவமம்பயிலுவதும், ஒத்தகமத்திணை ஐந்திற்கும் ஒத்த உரிமையோ bடான்றிப் பயிலும் என்பதை உரைகாரரும் கூறுகின்றனர். அதனால், அவற்றிற்கு மேற்கோள் மிகையாகும். சூத்திரம்: 52 நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம், கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும், என்மனார் புலவர். கருத்து: இது, உலகியல் வழக்கொடுபட்டதே புலனெறி வழக்கம் என்பதையும், அன்புத்திணைக்குச் சிறந்துரிய பாட்டு வகையும் கூறுகிறது. பொருள்: நாடக வழக்கினும் = உலகியலை ஒட்டி உயர் குறிக்கோளோடு சுவைபடக் காட்டும் பொருநு வகை மரபு களோடும்; உலகியல் வழக்கினும் = உலக மக்களின் ஒழுகலாற் றொடும்; பாடல் சான்ற புலனெறிவழக்கம் = சிறப்புறப் புலவரால் அமைக்கப்படும் அகத்திணை மரபுகள்; கலியே பரிபாட்டாயிரு பாவினும் = கலியும் பரிபாடலுமாகிய இரு பாவகைகளிலும்; உரியதாகும்=சிறப்புரிமை கொண்டு பயிலும்; என்மனார் புலவர் = என்று கூறுவர் பொருள்நூற் புலவர். (பொருந் = நடிப்பு; ஒருவர்போல நடிப்பது.) குறிப்பு: புலவராற் பாடப்பெற்ற அகத்துறை மரபுகள் உலகியலைத் தழுவி அமைவதே இயல் நெறியின் இன்றியமையாக் குறிக்கோளும் பயனுமா மென்பதை இச்சூத்திரம் வற்புறுத்துகிறது. மக்கள் வாழ்க்கையொடு தொடர்பற்ற புலனெறி வழக்கம் எது வாயினும் பயனும் சுவையும் பயவாது. அதனால் உலகியல் வழக்கொடு அகத்திணைப் புலனெறி வழக்குத் தழுவி நடக்கும் என இதிற் கூறப்பட்டது. நாடகம் மக்கள் வாழ்க்கையையே உயரிய குறிக்கோளோடு இயைத்துச் சுவைபட நடித்துக் காட்டும் நோக்குடையதாய் உலகியலொடு ஒன்றுபட்டு ஒழுகுவதேயாமாகலின், உலகியல் வழக்கொடு நாடகவழக்கும் உடன் கூறப்பட்டது. உலகியல் வழக்கு, உள்ளவாறுலகத்தார் ஒழுகலாறாம். அவ்வாழ்வொழுக்கச் சிறப்பைச் சுவைபட ஆடிக்காட்டுவதே நாடக வழக்காம். ஆதலால் இவ்விரண்டும் மக்களின் வாழ்க்கையொடுபட்ட இயல்புகளையே குறிப்பனவாம். அகத்திணைப் புலனெறி வழக்கம் எல்லாம் மக்கள் வாழ்க்கையின் மெய்யியல்புகளைத் தழுவியே நடத்தல் இன்றியமை யாததாதலால், அவ்வாறு புலனெறி வழக்கஞ் செய்தலே தமிழ் மரபென்பதைத் தொல்காப்பியர் இச்சூத்திரத்தால் வலியுறுத்துவர். இனி, பலவகைப் பாக்களில், புறத்திணைக்குச் சிறப்பனவும் புறத்திணைக்கும் அகத்திணைக்கும் பொதுவாய் வருவனவுமான வெண்பா அகவல் வஞ்சிகளினும், கலியும் கலியுறுப்புக் கொண்டு நடக்கும் பரிபாட்டுமாகிய இரண்டுமே அகத்திணைக்குச் சிறந்து பயிலும் பெற்றியன. அகத்திற்குரிய பல்வேறுணர்ச்சிகளுக்கேற்பச் செவ்வி சிறந்த ஓசை வளமும், உள்ளியன உரைத்தற்கு வேண்டி யாங்கு விரவும் துள்ளல்தூக்கு முடையன அவ்விரு பாக்களுமாதலால், பண்டைத் தமிழ்ப் புலவர் அவற்றை அகத்திணைக்குரியவாக் கொண்டனர். அதனால் இவ்வியலில் அச்சிறப்புரிமை சுட்டப் பட்டது. சூத்திரம்: 53 மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர். கருத்து: இது அன்பினைந்திணைக்குச் சிறந்த ஒருமரபு கூறுகிறது. பொருள்: மக்கள் நுதலிய அகனைந்திணையும் = மக்கள் மதிக்கும் காதல் கண்ணிய நடுவனைந்திணைகளிலும்; ஒருவர் சுட்டிப் பெயர்கொளப் பெறாஅர் = தலைமக்கள் தம்முள் யாரும் இயற்பெயர் சுட்டி அகவப்பெறார். குறிப்பு: காதல் கண்ணிய ஐவகை அகவொழுக்கமும், நாண் - தன்னலமறக்கும் அன்பு - காதலாற் றவறுகாணாமடம் முதலிய சால்புகளாற் சிறந்த மக்கட் தன்மைக்கே இயைவதாகலின், மக்கள், நுதலிய அகனைந்திணை எனக் கூறப்பட்டது. மக்கள் நுதலிய என்பது, மக்கள் தாம் பொருளாகக் கருதிய எனவிரியும். இனி, மக்கள் என்பதை, மக்கட்டன்மை சுட்டுதலாகக் கொண்டு அத்தன்மை நுதலிய எனக் கொள்ளுதலும் ஒன்று. தலைமக்கள் இருபாலோருள் எவரும் தம் பெயர் சுட்டி அகவப் பெறாராதலின், இருபாற்கு முரித்தாகிய ஒருவர் என்னும் பொதுப் பெயரால் அம்மரபு கூறப்பட்டது. சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் என்பதனால், அளவளாவிற் அகவிச் சுட்டாத பிறவிடங்களில் தலைமக்கள் பெயர் கூறப்பெறுதல் தவறாகாதென்பதை, இளம்பூரணர் கொண்ட படி இதில் குறிப்பெச்சத்தாற் கொள்ளவிட்ட ஐயத்திற்கிடம் வையாமல், தொல்காப்பியர் அடுத்த சூத்திரத்தில் தெளியக் கூறுவர். சிலப்பதிகாரம் சிந்தாமணிபோன்ற பண்டைச் செய்யுட் களில், யாண்டும் தலைமக்கள் தம்முள் இயற்பெயர் சுட்டி அகவி அளவளவுதல் கூறப்பெறாமையும், அவ்வாறு அளவுதல் குறியாப் பிறவிடங்களில் தலைமக்கள் பெயர் கூறப்பெறுதலும் ஈண்டுக் கருதத்தக்கன. காதலாற் கலந்தார்க்கு, ஈருயிரென்பர் இடைதெரியார், அவர் தம்முள் ஓருயிராக உணர்வாராதலின், அவ்வுணர்ச்சி வயப்பட்டாருள் ஒருவர் ஒருவரைத் தம்மில்வேறுபட்ட பிறர் போலப் பெயர்சுட்டியளவுதல் இருமை நீங்கிய அவர் ஒருமைக் காதலு ணர்ச்சியோடு இயைவதன்று; ஆதலின் அவ்வாறு அளவுங்கால் என்னுயிர் என்கண் என்பன போன்ற வேறன்மையை விளக்குங் தற்கிழமைக் காதற்குறியீடுகள் கூறியளவுதலே இயல்பாகும். (1) இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே; இவன்வயிற் செலினே இவட்கும் அற்றே; காக்கை யிருகணின் ஒருமணி போலக் குன்றுகெழு நாடற்கும் கொடிச்சிக்கும் ஒன்றுபோல் மன்னிய சென்றுவா ழுயிரே. (2) காணா மரபிற் றுயிரென மொழிவோர் நாணிலர், மன்ற பொய்ம்மொழிந் தனரே; யாஅங் காண்டுமெம் அரும்பெற லுயிரே; சொல்லும், ஆடும், மென்மெல இயலும், கணைக்கால் நுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே. என்ற பழம் பாட்டுக்கள், காதலிற் கலந்தாரின் ஒருமை யுணர்ச்சியை வலியுறுத்தும். அவ்வாறு ஒன்றுபட்ட காதற்றலைமக்கள், தம்முள் வேறாயினார் போல ஒருவரையொருவர் பெயர்கூறி யளவளாவுதல் தம் காதற் செவ்விக் கியையாதாகலானும், அதுவேயுமன்றி ஒத்த அன்புக்கு இன்றியமையாத நன்கு மதிப்பைப் பிறர்போல் தம்முள் பெயர் சுட்டி அழைப்பது வளர்க்குமாறில்லை யாகலானும், தலைப்படுங்கால் ஒன்றிய காதலர் தம் உளத்துவளர் காதல் கமழும் மொழிகளால் ஒருவரையொருவர் பாராட்டுவதன்றிப் பெயர்சுட்டியளவுதல் மெய்க்காதற் குறியன்றாகலானும், அவ்வுணர்வியலுக்கேற்பப் புலனெறி வழக்கில் தலைமக்கள் ஒருவரையொருவர் அன்பொழுக் கத்தில் தம்முட் பெயர்சுட்டி அளவுதல் மரபன்றென இதில் வற்புறுத்தப்பட்டது. இதுவும் இதனையடுத்த கீழ்ச்சூத்திரமும் அகப்பகுதி அனைத் திலும், தலைமக்கள் பெயர்கூறப் பெறாமையே மரபெனக் கூறுங் குறிக்கோளுடையன போலக்கொண்டு, உரைகாரர் இவ்விரண்டிற்கும் வெவ்வேறு பொருள் கண்டனர். யாண்டும் பெயர் கூறாமையே தொல்காப்பியர் கருத்துமாமேல், மக்கள் நுதலிய அகனைந்திணையுள், தலைவனும் தலைவியும் பெயர்கூறப்பெறார் என்று இதனிலும், அகத்திணை மருங்கில் வழக்காறில்லை என்றடுத்த பின் சூத்திரத்திலும் தெளியவிளக்கி விலக்கியிருப்பர். அகத்திணை ஏழனுள் அல்லது அகத்திணை மருங்கில் என்னாது, அகனைந்திணையும் என்றும், தலைவனும் தலைவியும் பெயர் கூறப் பெறார், அல்லது யாண்டும் கிழவோர் பெயர்கூறப் பெறார் என்னாமல், சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் என்று இச்சூத்திரத்திலும், அகத்திணை மருங்கில் வழக்காறில்லை என்னாமல், அகத்திணை மருங்கின் அளவுதலிலவே என அடுத்த கீழ்ச் சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறிப்போந்ததால், அவர்க்கது கருத்தன்மை தேற்றமாகும். (1) ஒத்தகாதற் றலைமக்கள் அன்பளவுதலில் தம்முள் பெயர் சுட்டாராகையால் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் என்றும் (2) அவ்வாறு காதலிருவர் தம்முள் ஆதரவுபட்டு அளவுதல் கைக்கிளை பெருந்திணைகளிலின்மையால் அவ்விரண்டையும் விலக்கி அகனைந்திணை என்றெண் குறித்தும், (3) பெயர்சுட்டி அளவுதல் அன்புத்திணை அனைத்திலும் வழக்காறன்மையால் அகனைந்திணையும் என முற்றும்மை கொடுத்தும், இங்குத் தொல்காப்பியர் கூறிய குறிப்புத் தேறற்பாற்று. தலைமக்கள் தம்முள் அன்பளவுதலில் மட்டும் சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார் எனவும், அவ்வாறு அவருள் அன்பளவுதலின் புறத்தே அகப்பகுதிகளில் ஏற்புடை யிடங்களில் பெயர்கூறப் பெறுதல் கடியப்படாதெனவும், முறையே இவ்விரு சூத்திரங் களானும் தொல்காப்பியர் விளங்கவைத்தார். இனி, இதுவே தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கினும் செய்யு ளினும் அடிப்பட்டு வந்த ஆன்றமரபா மென்பது, சான்றோர் செய்யுட்களானும் தமிழ்மக்கள் கையாளும் ஆன்ற வழக்கானும் தேறப்படும். சிலப்பதிகாரம் சிந்தாமணி இராமாயணம் போன்ற சான்றோர் செய்யுட்களில் இம்மரபாட்சி கண்டு தெளிக. மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே அரும்பெறற் பாவாய், ஆருயிர் மருந்தே, பெருங்குடி வாணிகன் பெருமடமகளே, மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ? தாழிருங் கூந்தல் தையால்! நின்னை. என்று சிலப்பதிகாத்தின் தலைநாட் கூட்டத்துக்குப்பின் தன் தலைவியொடு அளவளாவும் கோவலன் அவள் நலம் பாராட்டும் குறிஞ்சித் திணையில் தலைவி பெயர்சுட்டாமல் அளவுதல், அகனைந் திணையில் தலைமக்கள் அளவளாவுமிடத்து ஒருவர் பெயரை மற்றொருவர் சுட்டா மரபு காட்டும். அஃதல்லாவிடத்துப் பெயர் சுட்டும் வழக்குண்மையை. ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி. மாசாத்து வாணிகன் மகனேயாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா! நின்னகர் புகுந்திங் கென்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி, கண்ணகி என்பது என்பெயரே எனக் கண்ணகி தென்னன்முன் கூறுதலால் அறிக. இவ்வடிகளில் தலைமக்கள் இருவர் பெயருமே கூறப்பெறுதலும் அறிக. இனி, தமிழகத்தில் செய்யுள் வழக்கேயன்றி உலகியல் வழக்கினும் இம்மரபுண்மை, பண்டை மரபழித்துப் பெண்டிரை யிழித்துமகிழ் பிறநாகரிகம் புகுந்த பிற்காலத் தமிழகத்திற் போலாது, அடிப்பட்ட பழந்தமிழ் மரபு பல வழுவாமற்பேணும் ஈழத்தில் இற்றை ஞான்றும் காணப்படும் நேரிற் பெயர் சுட்டாமை பெண் டிர்க்குப் போலவே ஆடவர்க்கும் உரித்தாய்க் கணவனும் மனைவி பெயர் சுட்டி அளவா வழக்கும், ஒருதலையாக இருபாலோரும் பன்மைக்குரிய இருபாற் பொதுச் சொற்களால் பேணிப் பேசித் தம்முள் அளவுதலும், தம்முள் அளவளவா இடங்களில் ஒப்ப இருபாலோரும் ஏற்புழி ஒருவர் பெயரை மற்றவர் கூறலும், ஈழத் தமிழருள் இன்றும் வழங்கக் காண்பாம். சிங்களர் முதலிய அந்நாட்டுப் பிறமக்களுள் என்றும் இம்மரபின்மையால், இது தமிழர் ஆண்டுத் தம்மொடு கொடுபோய்க் கையாளும் பழமரபேயாதல் வேண்டும். சூத்திரம்: 54 புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கில் அளவுத லிலவே. கருத்து: இது, மேலதற்கோர் புறனடையாய், எய்தாது எய்துவித்தது. பொருள்: புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது = (சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறுதல்) மேற்சூத்திரத்திற் கூறியாங்குத் தலைமக்கள் தம்முள் அளவளவாப் பிறவிடங்களில் ஐந்திணைப் புறனாய் அமைவதல்லால்; அகத்திணை மருங்கில் அளவுதல் இல = அகவொழுக்கத்தில் அவர் தம்முள் அளவளவலில் இல்லை. குறிப்பு: சுட்டி யொருவர் பெயர் கொளப் பெறுதல் என்னும் எழுவாய் மேற்சூத்திரத்தினின்று தொடர்புபற்றி வருவிக்கப் பட்டது. இனி, அளவுதலையே எழுவாயாக்கி, பெயர்சுட்டி அளவுதல் இல என முடிப்பினும் அமையும். அகனைந்திணையில் தலைமக்கள் தம்முள் இயற்பெயர் சுட்டி அளவளாவல் மரபன்றென முற்சூத்திரத்திற் கூறப்பட்டது. எனவே, அளவளாவல் அல்லாத அன்பினைந்திணை கூறுமிடங்களில் தலை மக்கள் பெயர்கொளப் பெறுதல் கடியப்படுமோ எனும் ஐயம் நீக்கற்கு இச்சூத்திரம் எழுந்தமையால், இது முன்னதற்குப் புறனடை யாயிற்று. இவ்வாறு காதலர் தம்முள் அளவளவுதல் ஒழிந்த ஏனை அன்பினைந்திணை அகப்பகுதிகளில் அவர் பெயர் சுட்டப் பெறுதலும், ஒருவர் பெயரை மற்றவர் கூறுதலும் இழுக்கன்று. இவ்வுண்மையை அரிமா சுமந்த அமளிமே லானைத் திருமா வளவனெனத் தேறேன், - திருமார்பின் மானமா லென்றே தொழுதேன், தொழுதகைப் போனவா பெய்த வளை என்னும் பட்டினப்பாலைத் தலைவனின் இயற்பெயர் சுட்டும் அகத்துறை வெண்பாவும், நெடுவரைச் சந்தன நெஞ்சங் குளிர்ப்பப் படுமடும் பாம்பேர் மருங்குல் - இடுகொடி ஓடிய மார்பன் உயர்நல் லியக்கோடன் சூடிய கண்ணி சுடும் என்னும் ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் இயற்பெயர் சுட்டும் பழைய வெண்பாவும் வலியுறுத்தும். இவ்விரண்டிடத்தும் தலைவி தலைவன்பெயர் கூறுதல் காண்க. தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்? பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்? மாஅ மிசையான்கொல்? நன்னன் நறுநுதலார் மாஅமை யெல்லாம் பசப்பு என்னும் பழைய வெண்பாவிலும் அகத்துறையில் தலைவன் பெயர்சுட்டுதல் காண்க. இவை கைக்கிளைப் பாக்களாதலிற் பெயர் கூறப்பெற்றது என்பார்க்கு, பெண்பாற் கைக்கிளை பிற்காலப் பிழை வழக்காவ தன்றிப் பண்டைப் புலவர் கொண்ட ஆன்ற வழக்கன்மையானும், தொல்காப்பியர் கைக்கிளையை ஆடவர்க்கே அமைத்துப் பெண்டிரின் ஒருதலைக்காமம் முதலிய மற்றனைத்தையும் பெருந்திணையிலடக்கி யமைவாராதலானும், இப்பழைய வெண்பாக்கள் அன்பினைந்திணைத் துறையே கூறுவனவாமெனக் காட்டி மறுக்க. மேலும் இதில் ஐந்திணை மருங் கென்னாது, அகத்திணை மருங்கில் என்றதனால், இந்நூற்பாக்கட்டளைக்குக் கைக்கிளை விலக்கின்மை யாலுமவர் கூற்றுப் பொருந்தாதென்க. அகநானூறு கலித்தொகை முதலிய அகத்தொகைச் செய்யுட் களில் யாண்டும் தலைமக்கள் பெயர் கூறப்படாமை கொண்டு, அகத்திணைப் பகுதி கூறும் செய்யுட்களில் இயற்பெயர்சுட்டு யாண்டும் எஞ்ஞான்றும் கடியப்படுமெனக் கூறுவாருமுளர். யாரையுங் குறியாமல் அகத்துறைகளின் செவ்வியைப் புனைந் துரைப்பதையே குறிக்கோளாகக் கொண்ட தனிச் செய்யுட் தொகுதிகளில் எவர் பெயரும் சுட்டற்கிடமின்மை வெளிப்படை; அது கொண்டு சிறப்புடையோரின் சீரிய காதல் பாடும் புலவர் தம் செய்யுட்களில் யாண்டும் தலைமக்கள் பெயரே கூறலாகாதென விலக்குதல் அமைவுடைத்தன்று; அவ்விலக்கிற்கு விதியும் வழக்கும் இல்லை. பெயர்கூறும் வழக்குண்மை முன் சூத்திர உரையிற் காட்டியன கண்டுணர்க. இனி, தக்கோர் தலைவராய் அவர் காதற் செவ்வியே பொருளாக வரும் பாட்டெல்லாம் அவர் பெயர் குறிப்பதனால் மட்டும் அகமாகாதென மறுக்குமாறில்லை. புறத்துறைப்பகுதி மிகுதியு முடைய பட்டினப்பாலை காதல் கண்ணிய முடிவு ஒன்றுகொண்டு அகநூலாகக் கருதப்படுங்கால், காதலொழுக்கமே பொருளாய் வரும் செய்யுளில் காதலர் பெயர் குறிக்கப்படுவதால் மட்டும் அதைப் புறமென விலக்க விதி யாதும் யாண்டும் தொல்காப்பியர் கூறவில்லை. ஆதலால் பெயர்சுட்டுதல் ஒன்றுகொண்டு கோவலன் கண்ணகி, கோவலன் மாதவி, மணிமேகலை உதயகுமரன், சீதை இராமன், சீவகன் மனைவியர் முதலியோர் காதல் கூறும் பகுதிகளெல் லாம் புறத்திணையின்பாற்படுமென்பது பொருந்தாக் கூற்றாகும். இனி, புறத்தகம் என்றொன்றின்மையான், அகப்புறம் என்றொன்றமைப்பது தொல்காப்பியர் யாண்டும் கருதாப் புதிய திணையாமாதலானும், அஃதமைவதன்று. இச்சூத்திரத்தில், புறத்திணை என்பதை மேற் சூத்திரத்திற் கூறிய அளவளவும் அகனைந்திணைப்புறம் என மாற்றிப் பொருள் கோடல் வேண்டும். அல்லாக்கால், அகமல்லாப் புறத்திணைக் குரியதனை மயக்கத்திற் கிடமாகத் தொல்காப்பியர் இவ்வகத்திணை யியலில் மறந்து கூறினாரென அவருக்கு மற்றொன்று விரித்த குற்றம் சுமத்துவதாக முடியும். ஆதலால் அஃது அவர் கருத்தன்மை அறிக. இனி, இங்குத் தொல்காப்பியர் புறத்திணையையே சுட்டு வதாகக் கொள்ளின், அளவளாவிடத்து அகத்திணையுள்ளும் பெயர் சுட்டல் அமையுமென ஐயமகற்றக் கருதி, அது கூறுமிச்சூத்திரத்தில் தலைமக்கள் சுட்டிப் பெயர் கொளப்பெறுதல் புறத்திணைக்கண் கடியப்படாதென்பதையும் ஒன்றென முடித்தல், தன்னின முடித்தல் எனுமுத்திகளால் ஈண்டு உடன் கூறினார் என அமைத்தல் வேண்டும். ஆகவே, அன்பினைந்திணை மருங்கினும் தலைமக்கள் தம்முள் அளவளவுதல் கூறுமிடத்து மட்டும் ஒருவரை ஒருவர் பெயர் சுட்டல் கடியப்படும் என்பதும், அவ்வாறு அளவுதலின் புறத்து ஐந்தகத்திணைகளிலும், அவற்றின் புறம்பே கைக்கிளை பெருந்திணை என்னும் அகப்பகுதிகளிலும், புறத்திணையில் மக்களின் தூய காதல் கண்ணிய பாடாண் பகுதிக்கண்ணும், அவ்வாறு பெயர் சுட்டுதல் கடிதலில்லையென்பதும், இதுவே அவர் காலப் புலனெறி வழக்காமென்பதும், இவ்விரு சூத்திரங் களாலும் அம்மரபுகளைத் தொல்காப்பியர் விளங்க வைத்தார் என்பது தேற்றம். அகத்திணையியற் புத்துரை முற்றிற்று. தொல்காப்பியர் - பொருட்படலம் புறத்திணையியல் ஒழுக்கமொன்றே கருதற்குரிய விழுப்பொருளாகக் கொண்டவர் பழையதமிழர். மக்களின் வாழ்க்கைச் செயலெல்லாம் திணையா (ஒழுக்கமா) யடங்கும். எல்லாச் சொற்களுக்கும் அவற்றின் பொருள் பற்றியே திணையும் பாலும் வகுக்கும் தமிழ்மரபு இதற்குச் சான்று பகரும். உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கம் பேணி, அதனை ஓம்பற் குரிய மக்கட்டன்மை சுட்டுவனமட்டே உயர்திணையெனவும், ஒழுக்கமே கருதொணாப்பிற எதனையும் குறிக்கும் சொற்களனைத்தும் அல்திணை (திணையல்லாதன) எனவும், தொல்காப்பியர் போன்ற பண்டைத் தமிழ்ப் புலவர் வகுத்த முறை இப்பழைய தமிழ் மரபுபற்றி யெழுந்ததாகும். தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் அறிவு நெறி கடைப்பிடித்தொழுகாது, உருவத்தால் மக்களே போல்ப வராயினும் மேவன செய்து திரியுங் கயவரையும், விரும்பியாங் கொழுகும் நரகரொடு தேவரையும், அறிவற்ற பிற அனைத்தையும் ஒருங்கே அல்திணையாக் கொண்டாண்ட பழந்தமிழ்மரபு உயர் வுள்ளும் தமிழர் ஒழுக்க நிலையையும் விழுப்பநோக்கையும் வலியுறுத்தும். மக்கள் வாழ்வில் தூய கற்புறுகாதல் கண்ணிய மனையற வொழுக்கம்பற்றிய அனைத்தும் அகமெனப்பட்டன. பிறர்தொடர் பின்றியமையா இற்புறவாழ்வோ டியைபுடைய வெல்லாம் புறமெனப்பட்டன. தனிச் சிறப்புடைய இத்தமிழ்மரபு பேணித் தொல்காப்பியர் தம் நூற் பொருட்பகுதியில், காதல் கண்ணிய அகத்திணையாமவற்றின் பொதுவியல்புகளைத் தொகுத்து அகத்திணை யியல் என்னும் பேரால் முதலிற் கூறினார். அவ்வக வொழுக்கின் சிறப்பியல்களைக் களவு கற்பு எனுங் கைகோளி ரண்டன்கீழ் வகுத்து விரிக்குமுன், பொருளை அகம்புறமென நிறுத்தமுறையானே, பொருளிடையீடாய், ஒருவாறாகத் திணை களுக்குத் தொடர்புடைய மற்றைப்புறவொழுக்க வியல்களையுஞ் சுட்டவேண்டி அவற்றை இவ்வியலில் விளக்குகின்றார்; ஆதலின், இது புறத்திணையியல் எனும் பெயர்கொண்டது. காதலறவொழுக்கங்களைத் தொகுத்து ஏழு திணையாகக் கொண்டதற்கேற்ப, மக்களின் புறவொழுக்கங்களையும், மறனுடை மரபின் ஏழேயாகக் கொள்ளும் பழைய தமிழ் முறையைத் தழுவி வெட்சி முதலாப் பாடாண் ஈறாப் புறத்திணை ஏழும் அவற்றின் இயல் துறை வகைகளும் இப்புறத்திணையியலிற் கூறப்படுகின்றன. பழங்காலத்தில் ஆடவர்க்குரிய சிறந்த சால்புகளான பெருமையும் உரனும் பெரிதும் மறத்தின் வீறாயமைதலின், புற வொழுக்கமெல்லாம் அமர்கொள் மரபின் திணைகளாயின. அவற்றை நிரலே முதலில் அகத்திணை ஒவ்வொன்றற்கும் ஏற்புடைப் புறனாயமையும் திணை வகையும் அதன் பெயரும் குறித்தல், அதையடுத்துடனே அப்புறத் திணையியல்விளக்கல், பிறகு அதன் துறைவகை தொகுத்தல், என முத்திறம்பட முறை பிறழாமல் விளக்குவர் தொல்காப்பியர். அவ்வத்திணை துறைகளின் தொகையெண், முதலிற்றிணைப் பெயரோடேனும், ஈற்றில் துறைவகையோடேனும் கூறப்பெறு கின்றது. எனவே ஒவ்வொரு புறத்திணைக்கும் குறைந்த அளவு மூன்றும், திணைதுறைகளின் சிறப்பியல்புகள் பெருகுமிடத்து மூன்றின் மிக்கும் சூத்திரங்கள் கூறப்படுகின்றன. புறத்திணை ஏழும் முறையே, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். இவை நிரலே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைகளுக்கு இயலியைபுடைமை கருதி அவ்வவற்றிற்குப் புறமாயமைவனவாய்க் கொள்ளப்பட்டுள. அவ்வமைதி அவ்வத்திணைச் சூத்திரத்தின் கீழ் விளக்கப்படும். அகத்திற்போலப், புறத்தும் திணைகளை அவ்வவ்வொழுக்கத்திற் சூடும்மாலை அல்லது அடையாளப் பூவாற் பெயரிட்டழைப்பது அடிப்பட்ட தமிழ் நூன்மரபாகும். இம் முறையே இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆகோளாம் வெட்சித் திணைவகையும், நான்கு, ஐந்துஆம் சூத்திரங்களில் ஆகோளைப் போலவே குறிஞ்சிப் புறனாய்ப் போர்துவக்கும் வெட்சியொழுக்கமாகும் கொடிநிலை; கொற்றவை நிலை என்பனவும் பிறவெட்சித் துறைகளும் கூறப்படு கின்றன. வெட்சி, போர்துவங்குமுன் பகைவர்க்கறிவிப்பதுபோல் அது பகைவர்நாட்டு ஆனிரைகளைக் களவிற் கொள்ளும் ஒழுக்க மாகும். போர்துவங்கிய பின் ஆகோள் கொண்டியாவதன்றி வெட்சியாகாது. அடையலர்க்கு அமர்க்குறிப் பறிவித்துப் படை தொடச் செய்து அவர்மேற் செல்வதே போரறமாதலின், அமரறி விப்பான் பகைப்புலத்து ஆகோடலைப் போர் தொடங்கும் மரபாக் கொண்டனர், பண்டைத் தமிழரும் பிறரும் பண்டைக் காலத்தில். களவில் ஆகொளவரும் முனைஞரைத் தடுத்து நிரைகாவலர் மீட்க முயல்வதும், அவரொடு நிரைகொள்வார் பொருவதும் வேறு திணையாகாமல் ஆகோளின் இடை நிகழ்ச்சிகளாயடங்கும் இயல் கருதி அவற்றை அனைக்குரி மரபிற்கரந்தை என வெட்சித் துறைகளில் அடக்குவர் தொல்காப்பியர். அதுபோலவே போர்த் தொடக்கமாம் கொடிநிலை, கொற்றவை நிலை போல்வனவற்றை யும் பிற பல துறைகளையும் வெட்சியிலடக்கிக் கூறினர். அவ்வாறு போர்துவக்கும் ஒழுக்கவகைகளனைத்தும் வெட்சி யெனப்பட்டு, மறனுடைமரபின் அமரறத் தொகுப்பாம் புறத்திணைவகையுள் முதற்கண் கூறப்படுகின்றன. பிறகு, பகையடப் படையொடுமேற் செல்லும் வஞ்சித் திணையை அதன்வகை துறைகளொடு 6 முதல் 8 வரையுள்ள சூத்திரங்கள் விளக்குகின்றன. அதையடுத்து, வேற்றுப்புலத்துப் படைகொடு செல்வோர் மாற்றலர் இருக்கையையெய்தி மலையுமுன் தம் ஆற்றிடை அக நாட்டுப் படையரண்களை எறிதல் அல்லது அகப்படுத்தல் அமர் வென்று தாம் மீள இன்றியமையாதாகலானும், அடையலரின் இடையரண்களை முற்றி எறிதலும் கோடலும் அவர்கட்கு வேண்டப் படுமாகலானும், அவ்வொழுக்கமாய உழிஞைத்திணையும் அதன் வகை துறைகளும் இவ்வியலில், 9 முதல் 13 வரையுள்ள சூத்திரங்களால் தெளிக்கப்படுகின்றன. முற்றுவோர் முயற்சியை அரண்காவலர் முரணாதுதடுப்பதும், அக்காவலர் எதிர்ப்பைக் கடந்தடக்கியன்றி அரண்எறிதல் கூடாமையும் இயல்பாகும். முற்றுவாரின்றி மதில் காவற்போர் நிகழுமாறில்லை யாகலானும், முற்றியெறிவாரின்றி வாளா அரண்காத்திருத்தல் நொச்சியெனக் கருதப்படாதாகலானும், அரண் எறிமுறையின் ஒருதிறனா அடங்கும் முற்றெதிர்ப்பைப் பிற்காலத்தவர் போல வேறு பிரித்து நொச்சி யெனத் தனித்திணையாக்காமல், செந்தமிழியற்கை சிவணிய நிலத்துப் பழைய முறை பேணி முற்றுகை பற்றிய உழிஞைத் திணையி லடக்குவர் தொல்காப்பியர். அவற்றின் பின், பகைமேற் சென்றாரைத் தகைத்து நின்றாரெ திரூன்ற, தானையிரண்டும் தம்முள் தலைமயங்கி மலைதலாகும் தும்பைத் திணையையும், அதன் வகை துறைகளையும் 14 முதல் 17 வரையுள்ள சூத்திரங்கள் தெரிவிக்கின்றன. படையெழுச்சியை மட்டும் வஞ்சியென வகுப்பதும், சென்றாரை நின்றாரெதிர்ப்பதைக் காஞ்சியெனத் தனியொரு திணையாப் பிரிப்பதும், எதிர்த் திருபடையும் அதர்ப்பட மலைதலைத் தும்பையென வேறோர் திணையாக் கூறுவதும் பிற்கால வழக்கு. சென்றாரை நின்றாரெதிர்ப்பது போராய்த் தும்பையிலடங்குதலானும், பொருதலற்ற எதிர்ப்பெதுவுங் கருதல் கூடாமையானும், பண்டைத் தமிழ் நூலோர், சென்ற பகையெதிர் நின்றுதகையும் எதிர்ப்பும், இருதிறப்படையும் ஒருதலைமலையும் போரும் உடனமையத் தும்பை யென வொரு திணையே கொண்டார்; தொல்காப்பியரும் அப்பழமரபே பேணிக்கூறுவர். போர்க் கூறாகும் தும்பைத்திணைக்குப்பின், பொருது வென்றோர் வீறுகூறும் வாகைத்திணையும் அதன் துறைகளும் 18 முதல் 21 வரையுள்ள சூத்திரங்களில் தெளிக்கப்படுகின்றன. அமர் வெற்றியுடன், அதற்கியைபுடையதாய்ப் பிறதுறைகளில் இகலி வென்றோர் வீறும் கூட்டி, ஒப்பக்கூறல் ஒன்றெனமுடித்தல் தன்னின முடித்தல் எனு முறையில், பாராட்டுக்குரிய வெற்றியனைத்தும் இவ் வாகைத் திணைவகையிலடக்கிக் கூறப்படுகின்றன. அதையடுத்து, அமர்கொள்மரபின்தும்பையும் வாகையுமான போரும் வெற்றியுமொழிய, மற்றைய விழுப்பமும் விழுமமும் விளைக்கும் பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லியநெறித்தாய பிறவொழுக்கத் தொகையாம் காஞ்சித் திணையும் அதன் துறைகளும் 22 முதல் 24 வரையுள்ள சூத்திரங் களாற் கூறப்படுகின்றன. இவ்வியல் ஈற்றில் இகலில் மிக்கார் வெற்றிமட்டுமன்றி, எனைத்துவகையானும் மேதக்காரை மீக்கூறலாய் அவர் பீடும்வீறும் புகழும்பாடாண்டிணையும் அதன் பொதுச்சிறப்பியல்புகளும் வகைதுறைகளும் விரிக்கப்படுகின்றன. இப்பழைய முறையினைத் தழுவாமல், பன்னிருபடலம், வெண்பா மாலைமுதலிய பிற்கால நூல்கள் புறத்திணைகளைப் பன்னிரண்டாக்கிக் கொண்டன. பன்னிருபடலம் பிற்கால நூலாதல் தேற்றம். அதிற் கூறப்படும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி முதலிய பலதிணையியலும் அவற்றின் துறைவகையும் தொல்காப்பியர் கொள்கையோடு மாறுபடுதல் கண்கூடாதலின், முரணுமிவ்விரண்டும் ஒரே, கணக்காயரிடம் இத்திணைகளை ஒருங்கு கேட்டோர் கூற்றாதல் கூடாமை ஒருதலை. பன்னிருபடலத்தின் வெட்சிப்படலம் தொல்காப்பியரால் அவரிவ்வியலிற் கூறுவதற்கு மாறாக இயற்றப்பட்ட தென்பதொன்றே பன்னிருபடலமாக்கியோர் காலம் பற்றிய கதையின் பொய்ம்மையைத் தெளிப்பதாகும். பன்னிரு படலத்தில் வெட்சிப் படலம், தொல்காப்பியர் கூறினா ரென்றல் பொருந்தாது என்று இளம்பூரணர் இவ்வியல் வெட்சி கூறும் சூத்திரவுரைக் கீழ் விளக்கியுள்ளார். புறத்திணைத் துறை களைப் பலவாறு பிற்காலத்தே பிறழக்கூறியோர் தம் பெயரொடு கூறத்துணியாமல், தம் நூலுக் குடன்பாடும் ஆட்சியும் பெற வேண்டிப் பண்டைப் பெரியோர் பெயரோ டதனை வெளிப் படுத்தியது வியப்பில்லை. ஞானவெட்டியை வள்ளுவருக்கும், புலமையற்ற பல பிற்காலச் சோதிட மருத்துவச் செய்யுட்களை அகத்தியருக்கும் சுமத்தியது போலவே, காலத்தால் மிகப்பிந்திய பன்னிருபடலத்தைத், தமிழகத்துப் புலந் தொகுத்தோனெனத் தன்பெயர் நிறீஇய தொல்காப்பியருக்கும், அவரோடொருபள்ளி மாணவராகக் கருதப்பெற்ற பழம்புலவருக்கும் சுமத்தியுள்ளாரெனத் தெளிதல் எளிதாம். இனி இப் பன்னிருபடலம் முதனூலாக (அதன்) வழி நூலே . . . . . வெண்பாமாலை யாதலால், பின்னது முன்னதன் முறையையே முழுதுந்தழுவி நடப்பதாகும். இவ்வுண்மை தேறாமல், இவற்றின் புதுமுறையே பழைய தொல்காப்பியமுங் கூறுமெனக் கருதிப் பிற்காலப் புலவர் சிலர் அப்பண்டைநூற் சூத்திரங்களுக்குப் பின்னூற் கருத்துக்களையேற்றிப் பலவிடங்களில் பிறழ உரைகூறி யிடர்ப்படுதலறிந்து பிழைவிலக்கி மெய்ப்பொருள் காணமுயலுவது நம்மனோர் கடமையாகும். எழுதிணை யென்னும் முந்துநூன் முறைபிறழப் பிந்தியோர் கொண்ட புறத்திணை பன்னிரண்டும் வருமாறு: (1) போர்த் துவக்கமாம் ஆகோள் வெற்றியும், (2) அதற்கு மறுதலையாய், வெட்சியோர் கவராமல் நிரை மீட்க முயலும் காவலர் எதிர்ப்பாம் கரந்தையும், (3) பகைவரின் நாடுகொள்ள வெழும் படைச் செலவு வஞ்சியும், (4) அதற்கு மறுதலையாய், மலையவந்த பகைவரை நின்றார் எதிரூன்றித்தகைவது காஞ்சியும், (5) மதிலை வளைத்துக் கொள்ளுதல் உழிஞையும், (6) அதற்கு மறுதலையாய்; அகத்தோர் தம் மதில்காத்தல் நொச்சியும், (7) சென்ற பகையோரும் நின்று தகைவாரும் தம்முட் பொருதல் தும்பையும், (8) போரில் வெல்லுதல் வாகையும், (9) எவ்வாற்றானும் புகழப்படுதல் பாடாணும், (10) இத்திணைகட்கெல்லாம் பொதுவாயுள்ளவை பொதுவியலும், (11) இரு மருங்கொவ்வா ஒருதலைக்காதல், கைக்கிளையும், (12) பொருந்தாக் காமம் பெருந்திணையும், எனப் பன்னிரு புறத்திணை பகரப்படுவன. இன்னும் இப்பின்னூலோர் இவற்றுள் முதலன ஏழே புறத் திணையெனவும், ஈற்றுறுமிரண்டு, அகப்புறமெனவும், இடைப்படு மூன்றும் புறப்புறமெனவும், தொகை பன்னிரண்டும் வகைபெறு மென்பர். காலத்தொடுபட்டு மரபு பிறழாமல் ஏற்புழி வழக்கொடு பொருந்தப் புகும் புதியதும், கடிதலின்றிப் போற்றற்குரியவாதல் கூடும். எனில், மிகையாகும். இப்புதிய புறத்திணைவகை பழைய தமிழ் முறையோடு முரணுவது மட்டுமன்று; இது செவ்விய வகுப்புமுறை யெதுவுமின்றித், தடை பலவற்றிற் கிடமும் தருகின்றது. முதற்கண், மேற்காட்டியாங்கு கரந்தை வெட்சியிலும் நொச்சி உழிஞையிலும் இப்பின்னூற் காஞ்சி தும்பையிலும் முறையே அதனதன் பகுதியாயடங்கியமைதலானும், எதிப்பற்ற வெட்சி வஞ்சி உழிஞை தும்பைகள் கருதொணாமை கண்கூடாதலானும், இவ்வாறு கூறுவன வேறாம் திணைகளெனப் பிரித்து வகுப்பதற் கிடமும், அதிற் சிறப்பும் காணற்கில்லை. இனி, திணையனைத்தும் ஒன்றிலொன்றடங்கா அகமும் புறமுமா யிருவேறு வகையா மெனக்கொண்ட பிறகு, திணை எதுவும் ஒன்று அகத்தது அன்றேல் புறத்தது எனப்படுதலன்றி, அகப்புறமாமென்றோர் புதுவகைப்படுத் தெண்ணுவது, பொய் பொய்யே யாவதன்றி, தனிப்பொய், பொய்ப்பொய், மெய்ப்பொய் என முத்திறப்படுமெனல் போல், பொருளொடு பொருந்தாப் போலி முறையேயாகும். புறமெதுவும் அகவகையாகாதது போலவே, அகமெதுவும் எனைத்து வகையானும் புறனாகாமையும் ஒருதலை யாத் தேறப்படும். அகத்தில் தனியகம் அகத்தகம் புறத்தகம் எனும் பாகுபாடின்மையால், புறத்துள்ளும் புறமேயன்றி புறப்புறமும் அகப்புறமும் வேறு கோடலமையாமையறிக. மெய்ப்பொய் ஒளியிருள் பகலிரா என்பனபோலவே, அகப்புறத்திணையொன்று கருதுமாறில்லை. இயல் வேறுபட்ட இருவகைத் திணைகளைப் புணர்த்து அகப்புறமெனப் புதுவதோர் விரவுத்திணை வகுத்த தோடமையாமல், புறப்புறமென வொருவகைகோடல் எற்றுக்கு? அகத்தின் வேறு புறமாதல்போலப், புறத்தின் வேறுபடுவது அகமே யாகும். மற்றைய புறப்புறமென்பது பொருளில் கூற்றாம். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்குப் புறனாவதன்றிப் புறப்புறமெனல் ஆகாமை யுணர்க எனக் காஞ்சிச் சூத்திரவுரையில் இம்முறையல்லா முறையை நச்சினார்க்கினியரும் மறுத்துரைக்கின்றார். பொரு வோரிருவருள் ஒருவர் வெல்லுதல் போரினியல்முடிபாகும். இதில் போராம் தும்பையைப் புறனாக்கிப், போரில் வேறலாம் வாகையைப் புறப்புறமென வேறுபடுத்துவதேன்? தனிவேறியல்புடைய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பைகளையெல்லாம் அகத்தின் வேறாம் பொதுவியல்கொண்டு புறமெனு மொருவகை யாக்குவோர், அவற்றோடியலியைபுடைய வாகை பாடாண்களையும் புறமாகக் கொள்ளாமல் வேறுவகையாக்கி மாறுபடுவானேன்? அன்றியும் பொதுவியல் என்பன புறத்திணைகளுக்குப் பொதுவாம் துறைகளே யாதலின், அவையொருதனி வேறு திணையாமாறில்லையே. பொதுவியலென்றோர் திணைப் பெயராகாமையுணர்க என நச்சினார்க் கினியரும் இதை மதுரைக் காஞ்சியுரையில் மறுப்பதறிக. மேலும் தொல்காப்பியர் போலவே கைக்கிளை பெருந்திணை களைப் பிற்காலத்தும் அகவகையாகவே கொண்டாள்வது, நம்பியகப் பொருளானும் அகத்துறைக் கோவைகளானும் இனிது விளங்கும். அப்படியிருக்க, அவற்றையே மீட்டும் புறத்திணை வகையுள்ளும் கூட்டி அத்திணைத் தொகை யெண்ணை மிகுப்பானேன்? இன்னும் புறத்திணைகள் காலமிடங் கருதாமல் ஒழுக்க நெறியில் ஒவ்வோர கத்திணைக்கும் புறனாதல் வேண்டுமென்ற நன்முறையிறந்து, புறத் திணைத் தொகையைப் பெருக்கி ஒழுக்க வேறுபாடின்றி எண்ணுக்குப் பன்னிரண்டாக்கி, அவற்றிற்கு அகத்திணை யேழனொடுந் தொடர்பறுத்துக் காணும் பயன்தானென்ன? பிந்திய நூல்கள் புறத்திணை யொவ்வொன்றன் துறைகள் இவை எனத் தொகுப்பதல்லால், தொல்காப்பியத்துட்போல அவ்வத்திணையின் செவ்வியல் விளக்காமை யொன்றே, புறம்பன்னி ரண்டென வகுத்தற்குரிய இயல் வேறுபாடு காணொணாமையையும், அத்தொகை வகை முந்துநூல் முறையொடு முரணிப் புலனெறி வழக்காகாமையையும் வலியுறுத்தும். எனவே, தொல்காப்பியரின் புறத்திணை வகுப்புமுறையே இயல்பொடு பொருந்தும் நயமுடைத்தாய்த் தொன்றுதொட்டு என்றும் நின்று வழங்கற்குரிய முன்னைத் தமிழக நன்முறையா மென்பது கண்டு தெளிக. இனி, அதத்திணையிய லுரைமுகத்துக் கூறியாங்குத் தொல் காப்பியர் நூலுள் இப்புறப்பகுதியிலும் பிறாண்டும் பிறர்கோள் பேசுமிடந்தவிர மற்றையவனைத்தும் வண்புகழ்மூவர் தண்பொழில் வரைப்பின் அகத்தவர்வழங்குந் தமிழ்ப்பழமரபுகளே கூறப்பெறு கின்றன என்பதனை மறக்கொணாது. இவ்வுண்மையை மறந்து உரைகாரர் பிற வடநூற்கொள்கைகளை இத்தமிழ் நூல் கூறுவதாகக் கொண்டதனால் பல சூத்திரங்களுக்குத் தொல்காப்பியர் நோக்குக்கும் அவர் சூத்திரச் சொற்போக்குக்கும் பொருந்தாப் பொருள்கூறி இடர்ப்படலாயினர். தமிழ் கூறுநல்லுலகத்து எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி, செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்படவெண்ணிப் புலம் தொகுத்த தொல்காப்பியரின் கருத்தைப்பேணி, அகப்புறத் தமிழ்ப்பழஞ் செய்யுண் மரபுகளுடன் முரணாவாறு, தமிழர் ஒழுக்கமுறை கூறும் இந்நூற் சூத்திரங்களின் உண்மைப்பொருள், அவ்வவற்றின் சொற்றொடரோடு அமைவு பெற நடுநிலையி லாய்ந்தறிய முயலுபவருக்குத் தெளிதல் எளிதாம். இதற்கு மாறாகத் தமிழகத்தின் புறத்தவர் பழக்கவொழுக்கங்களைப் புகுத்தித் தமிழர் பொருளியற் கூற்றுக்களுக்கு விளக்கம் காண முயல்வது, கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇயற் றாய், பிழையொடு பீழை விளைப்பதாகும். தொல்காப்பியர் - பொருட்படலம் புறத்திணையியல் சூத்திரம்: 1 அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின், வெட்சி தானே குறிஞ்சியது புறனே; உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே. கருத்து: இது, குறிஞ்சிக்குப் புறனாவது வெட்சியென்பதையும், அதன் துறைவகை இனைத்து இத்துணைத்து என்பதையும் கூறுகிறது. பொருள்: அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் = முற்கூறிய அகவொழுக்கம் பற்றிய இயல் வகை முறைகளைப் பிழையற நன்கறிந்தோர்; புறத்திணை இலக்கணந் திறப்படக் கிளப்பின் =புற ஒழுக்க இயல் வகை முறைகளைத் தெளிவுபட வகுத்துரைப்பின்; வெட்சிதானே குறிஞ்சியது புறனே ==வெட்சித் திணை குறிஞ்சியெனும் அகத்திணைக்குப் புறனாகும்; உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே=அவ்வெட்சித்திணை அச்சம் விளைக்கும் தோற்றமுடைய பதினான்கு துறைவகை கொள்ளும். குறிப்பு: இதில், ஏகார மூன்றனுள், முதலது, வெட்சியைப் புறத்திணை ஏழில் பிறவற்றினின்றும் பிரித்து விலக்குதலால், பிரிநிலையாம்; பின்னிரண்டும் தேற்றம்; அசையுமாம். அரில்தப உணர்ந்தோர் . . . . கிளப்பின் என்ற எச்சக்குறிப்பால், அகத்திணைகளி னியல்பை ஐயந் திரிபுகெட அறிந்தார்க்கன்றி, மற்றவர்க்கு அத் திணைகளொடு தனித்தனி யியைபுடைய புறத்திணைகளினியல் திறம்படக் கிளத்தல் கூடாமை சுட்டப்பட்டது. எனவே, புறத்திணைகளெல்லாம் முறையே ஒவ்வோர் அகத்திணைக் கியைபுடையவாதலும், அதனால் அகத்திற் போலவே புறத்திலும் திணை ஏழா யமைதலும் மரபென்பதும் வலியுறுத்தப்பட்டது. இனி, வெட்சி குறிஞ்சிக்குப் புறனாமாறு: காதல் கண்ணிய அனைத்தக வொழுக்கங்களுக்கும் குறிஞ்சி முதலாதல் போல, அமர்கொள் மரபின் புறத்திணைகளெல்லாம் வெட்சியைக் கொண்டு துவங்குதலானும், குறிஞ்சியும் வெட்சியும் ஒருங்கே களவில் நிகழ்வ வாதலானும், ஒழுக்க முறையால் வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயிற்று. இனி, நிரை மேயும் மலைச்சார்பு களவிற் கூடும் குறிஞ்சிக்கும் களவில் ஆதந்தோம்பும் வெட்சிக்கும் சிறந்துரியதா கலும், நள்ளிரா இவ்வீரொழுக்கங்களுக்கும் ஏற்புடைத்தாகலும், இடத்தானும் காலத்தானும் இவற்றிடை ஒருபுடை யியைபுடைமை எய்துவித்தலானும் வெட்சி குறிஞ்சிக்குப் புறனா யமையும். இன்னும், மக்களின் அக ஒழுக்கம் ஏழாதல் போல், அவற்றிற்கு இயலியை புடைய அவர்தம் புற வொழுக்கமும் எழுதிணை யென வகைபெற வைப்பதே பழைய மரபாதலின், அகத்திணை யியல் வகைகளை நன்கறிந்தார்க்கன்றி, புறத்திணைகளும் அவற்றின் துறைமுறைகளும் இனிது விளங்கா எனற்கு, அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் என்றிப் புறத்திணை முதற் சூத்திரத் துவக்கத்திற் கூறப்பட்டது. எனவே, இவ்வாறு அகத்திணை ஏழொடு புறத்திணை யேழும் யாப்புற வுடையதாகக் கொள்ளுவதே அடிப்பட்ட தமிழ் மரபெனத் தெளியவைப்பதால், அத்தொடர்பு தொலைத்துப் புறத்திணைகள் பன்னிரண்டென்னும் பிற்காலக் கொள்கை பழவழக்கொடு முரணு மிழுக்காதல் தேறப்படும். வெட்சியின் துறைகள், வேந்து விடு முனைஞ ரால் மறனுடை மரபில் நிகழ்தலின், போர் பயிலாத நிரைகாக்கும் ஆயரும் அயலாரும் அஞ்சுதல் இயல்பாம். ஆதலான், வெட்சித் துறைகள் உட்குவரத் தோன்றும் எனப்பட்டன. சூத்திரம்: 2 வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும். கருத்து: இது வெட்சித்திணையின் இயல் விளக்குகிறது. பொருள்: வேந்துவிடு முனைஞர் =மன்னரா வேலவப் பெற்ற படை மறவர்; களவின் வேற்றுப்புல ஆதந்தோம்பல் =கரவால் பிறர் நிலத்து நிரை கவர்ந்து போந்து புரந்தருதலை; மேவற்றாகும் =(அவ்வெட்சி) விரும்பும் தன்மைத்தாம். குறிப்பு: கொண்டபொருட் குறிப்பால் அவாய் நிலையாய் அவ் வெட்சி யென்பது கொள்ளப்பட்டது. இனி, வெட்சி மறனுடை மரபில் அமர் துவக்கும் ஒழுக்கு மாதலின், போர் விரும்பும் மன்ன ரேவலால் அது நிகழ்தற்பாற்று. பிற நாட்டொடு போர் தொடங்குதல் இறைமை முறையாய் மன்னர் பாலதேயாதலால், இப்போர்த் தொடக்கத்திணை அவராணை வழித்தாதல் ஒருதலை. அன்றியும், அது போர்க்குறி யாதலால், மன்னரேவினும், பொருந ரல்லாப் பிறர் மேற்கொள்ளற்பாற்றன்று. பிறர் நிரைகவர்தல் போர்த்தொடக்கம் குறியாமல் திருட்டாய்க் கருதப் பெறுமாகலின், இத்திணைக்கு மன்னர் பிறரை விலக்கித் தம் படைமறவரையே ஏவற்பாலர். மேலும், முனைஞரும் மன்ன ரேவலின்றித் தாம் விரும்பியாங்குப் போர் தொடங்கல் கூடா தாகலின், போர்த் தொடக்கமாம் ஆகோளும் வேந்தராணையில் வழி அவர்க் கொவ்வாத் தவறாகும். இத் தமிழ்ப் பேரறம் விளக்க வேண்டி, ஆனிரை கொள்ள வேந்து விடலும் அவ்வாறு விடப்படு வார் முனைஞரே யாதலும் வெட்சித் திணைக் கின்றியமையாமை சுட்டி வேந்துவிடு முனைஞர் எனக் கூறப்பட்டது. இன்னும், கவர விரும்பும் பிற நாட்டு நிரையும் போர் நிகழாக் காலத்து மன்னறக் காவல் துன்னித் தன்னிலத் துய்க்கப் பெற்றுழிக் கவரப்படுதல் முறை திறம்பி அறமழிப்பதாமாகலின், போர் துவக்குவோர் தமதல்லாப் பகை நிலத்தில் நிரைகவரற்பால ரெனற்கு வேற்றுப்புலத்து என விளக்கப்பட்டது. போராகாமல் போர்க்குறி யறிவிப்பாய் நிரைகொள்ளலே இத்திணை யாதலால், பகைப் படையின் எதிர்ப்பும் போரும் வேண்டாது பகைவர் நிலத்து அவரறியாமல் கரவில் கைப்பற்றும் முயற்சியே வெட்சியும், வெளிப்படையாய்ப் பகைவரை அறைகூவி நிரை கவர்தல் தும்பைப் பாற் கொண்டியையுமாமென்பது தோன்றக் களவின் எனக் கூறப்பட்டது. நிரைகவரக் கருதிச் சென்றோர் எதிர்பாராத காவலர் எதிர்ப்பிற்கிடைந்து நிரை கவராதேனும் கவர்ந்தாங்கே மீட்க விட்டேனும் வாளா மீளல் ஆகோள் வெட்சியாகா தென்பதையும், மீட்க விடாமல் கவர்ந்து கொணர்ந்த நிரையைத் தம்மை ஏவிய வேந்தர்பால் ஊறின்றியுய்ப்பது முனைஞர் கடனாதலையும் தெளிக்க வேண்டி ஆதந் தோம்பல் மேவற் றாகும் என விளக்கப் பட்டது. இக்கருத்தானே, ஓம்புதலாவது மீளாமல் காத்தல் எனவும், போர்க்கு முந்துற நிரை கோடல் சிறந்த தெனவும், இச் சூத்திரத்தின் கீழ் உரைக்குறிப்பாய் இளம்பூரணர் கூறுதலும் காண்க. இம் மாற்றருஞ்சால்புடை மரபுகள் போற்றாத பிற்காலத்தில், நிரை மீட்கும் முயற்சியை வெட்சியிலடக்காமல் கரந்தையென வேறு திணையாக்கியும், இவ்வெட்சியை வேந்தன்மேற்றாய் நிறுத்தாமல் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று அன்ன விருவகைத் தாக்கியும், தந்நாட்டை விலக்காமல் யாண்டும் பிறர் நிரை கவர்தல் வெட்சியாம் போலவும், முறைபிறழத் துறைகளைக் கூட்டியும் மாற்றியும், முந்துற நிரை கவர்ந்து அமரறிவித்துப் பின் பொருவதே போரறமென்பதை மறந்து போர்த் துவக்கத்தில் நிகழும் கொடிநிலை கொற்றவைநிலை வெறியாட்டு அன்ன கடவுட்பராவு நிலைகளை வெட்சிக்கண் போர்த்துறைகளாக எடுத்து நிறுத்தியும் இன்னும் பல்லாற்றானும் பின்னூல்களில் மரபிறந்த மாறுபாடுகள் மலிவவாயின. பன்னிருபடலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விருவகைத்தே வெட்சி எனவும், அதைப் பின்பற்றி வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப் பின்றியும், சென்றிகன் முறை ஆதந்தன்று என வெண்பாமாலை யிலும், வெட்சியை இருகூறுபடக் கூறினாராயினும், முன் வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின (படை எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர்செய்தல் என்பன) அரசர் மேலாய் இயன்று வருதலின், வேந்துறு தொழிலொழித்துத் தன்னுறு தொழிலெனத் தந்நாட்டும் பிறர் நாட்டும் களவில் ஆனிரை கோடலின், இவர் அரசரது ஆணையை நீங்கினா ராவர்: ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம், என இளம்பூரணரும் பிழைபட்ட பிற்காலக் கொள்கைகளைக் கடிதல் காண்பாம். இனி, முடிவேந்த ரல்லார் சிலரைப் புகழ்ந்துவரும் வெட்சிப் பாடாண் புறப்பாட்டுக்களைக் காட்டி, அவை மன்னர் பணிப்பின்றி ஆகோள் தன்னுறு தொழிலாய்க் கொள்வதற்கு மேற்கோள் என்பாருளர். அப்பாட்டுக்கள் குறுநில மன்னரைப் பற்றியவை. மன்பெறு மரபின் ஏனோ ராகிய குறுமன்னருக்கு வேந்துவினை யியற்கை வேந்தனின் ஒரீஇய(அவ்) வேனோர் மருங்கினும் எய்திடனுடைத்து எனத் தொல்காப்பியரே கூறுகிறார். எனவே, இன்னோரைப் பாராட்டும் வெட்சிப்பாடாண் புறப்பாட்டுக்கள், ஒரு வகையாய் மன்னராவார்க்கு உறுதொழிலே கூறுவனவாம்; வேந்தன் பணிப் பின்றியும் மக்களில் யாரும் தன்னுறு தொழிலாக நிரைகவரும் தவறுக்கு இப்பாட்டுக்கள் மேற்கோளாகாமை வெளிப்படை. சூத்திரம்: 3 படையியங் கரவம், பாக்கத்து விரிச்சி, புடைகெடப் போகிய செலவே, புடைகெட வொற்றி னாகிய வேயே, வேய்ப்புற முற்றி னாகிய புறத்திறை, முற்றிய ஊர்கொலை, ஆகோள், பூசன் மாற்றே, நோயின் றுய்த்தல், நுவல்வழித் தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடையென வந்த வீரேழ் வகையிற் றாகும். கருத்து: இது, முதற் சூத்திர விறுதியில் வெட்சி தானே உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே எனத் தொகுத்தோதிய துறைகளின் வகையும் பெயரும் விளக்குவதாகும். பொருள்: படையியங் கரவம் = நிரைகவரப் படை நடக்கும் ஆர்ப்பு; வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குத் துடியொடு புக்கு. (பெரும்பொருள் விளக்கம்: புறத்திரட்டு, 1236) பாக்கத்து விரிச்சி = செல்லும் பக்கத்தே புள்வாய் நற்சொல்லின் குறிப்பறிதல். (விரிச்சி புள்ளொலியால் நல்லதறிதல்) மன்னவன் னிரைவந்து கண்ணுறு மின்ன நாளினாற் கோடு நாமெனச் சொன்ன வாயுளே யொருவன் புட்குரன் முன்னங் கூறினான் முழுது ணர்வினான். (சிந்தாமணி, 415) . . . . . . . . . . . . . . . . நல்வேய்தெரிகாணவன் புள்வாய்ப்புச் சொன்னகணி (வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்) வேற்றூர்க் கட்சியுட்காரி கடியகுரலிசைத்துக் காட்டும் போலும், . . . . மறவன் கைவில் ஏந்திப்புள்ளும் வழிப்படர . . . . புல்லார் நிரைகருதிப் போகும். (வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்) புடைகெடப் போகிய செலவு = பக்கத்து இடமில்லையாம் படி படை பரந்துசெல்லுதல்; வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியர் செவ்வானம் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குந் துடியொடு புக்கு. (பெரும்பொருள் விளக்கம் : புறத்திரட்டு, 1236) புடைகெட ஒற்றின் ஆகிய வேயே = வேற்றுப்புலத்து இரு திறத்தும் ஒற்றறிய இடமில்லையாம்படி ஒற்றரால் அறிந்த உளவு; ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு. (பழம்பாட்டு) தம் மொற்றர் இனி யறிய இடமில்லாதாயிற்று, அவர் முற்றும் ஒற்றி முடிந்ததனால் பிறர் ஒற்ற இடமில்லையாயிற்று, அவரறியாவாறு தம் மொற்றர் மறைவில் ஒற்றிய திறப்பாட்டினால். வேய்ப்புற முற்றின் ஆகிய புறத்திறை = உளவறிந்த சூழலை வளைத்து அற்றநோக்கி அடங்கியிருத்தல். கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசெல் மள்ளர் பதிந்தார் - அரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி எரிந்தவியும் போலுமிவ் வூர். (பதிதல் = அமைதியாகத் தங்குதல். அரந்தை = துன்பம்.) முற்றிய வூர்கொலை=வளைந்துகொண்ட நிரை மீட்கப் பொரு வாரைக் கோறல்; (ஊர் மீட்கப் பொரும் ஊரவர்க்கு ஆகுபெயர்.) சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு. (பழம்பாட்டு) ஆகோள் = ஆனிரை கொள்ளுதல்; . . . . . . . . . . . . . . . . . புல்லா ரினநிரை செல்புற னோக்கிக் கையிற் சுட்டிப் பையென எண்ணிச் சிலையின் மாற்றி யோனே. (புறம். 257) ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய். (புறம். 259) எனும் புறப்பாட்டடிகளும் நிரை கொண்டோர் நிலையே கூறும். பூசல் மாற்று = நிரைகொண்டு மீள்வோர் மீட்போரால் நேரும் பூசலை விலக்குதல்; ஒத்த வயவ ரொருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசல் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில். (பழம்பாட்டு) போர் இன்றி நிரைகொள்வதே நோக்காதலின், போர் என்னாது பூசல் எனப்பட்டது. பூசல் - போரின்முன் நிகழும் ஆர்ப்பு. போராய் வளருமுன் அதனைத் தடுத்து விலக்கல் வெட்சி யார் வினையாதலின், பூசல் மாற்றெனப்பட்டது. நோயின் றுய்த்தல் = பற்றிய நிரை வருந்தாவாறு கொண்டு செலுத்தல்: . . . . . . . . . . . . . . முல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக் கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காமுறக் கன்றுபா லருந்துபு சென்றன மாதோ . . . . . . . . . கவைஇய நிரையே. (ஆசிரியமாலை - புறத்திரட்டு, 1242) நுவல்வழித்தோற்றம்=தம்மவர் புகழும்படி நிரை கொண்டார் மீளும் பொலிவு; . . . . . . . . . . . . ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉ மென் ஐக்கு உழையோர், தன்னினும் பெருஞ்சா யலரே. (புறம். 262, மதுரைப் பேராலவாயார்) தந்து நிறை = கொண்ட நிரையைத் தம திடத்துக் கொணர்ந்து நிறுத்தல்; கயமலர் உண்கண்ணாய் காணாய் நின்ஐயர், அயலூர் அலர எறிந்தநல் ஆனிரைகள் நயனின் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன. (வேட்டுவ வரி சிலப்பதிகாரம்) குளிறுகுரன் முரசங் கோட்டின் வெரூஉங் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம். (பழம்பாட்டு) பாதீடு = நிரை கொண்டோர் பரிசில் தம்முட் பங்கிடுதல்; நேரார் புலத்து நிரையைக் கவர்ந்தெதிர்த்த போரார் மறவர் புறங்கண்டு - பாராளும் வேந்தனைமுன் வாழ்த்தினார் வெட்சி முனைஞரவன் ஈந்தபொருட் பாதிடுவா ரின்று. (பாதிடுதல் = பங்கிடுதல்) உண்டாட்டு = வெட்சியோர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டு களித்தல்; முட்காற் காரை முதுபழ னேய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கந் தார நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிர்ப் புலம்புக் கனனே . . . . . . . . . . (புறம். 258) (கந்தாரம் = ஒருவகை மது. தலைச்சென்று = முன்சென்று.) கொடை = வென்று கொண்டோர், துடியன், கணி, பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்துவத்தல்; இளமா எயிற்றி! இவைகாண் நின்ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் கொல்லன் துடியன் கொலைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர் தம்முன்றில் நிறைந்தன. (வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்) . . . . . . . புல்லணற் காளை யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும். (புறம். 258) என வந்த ஈரேழ் வகையிற்றாகும் = என்று இவ்வாறு எண்ணப் பட்ட பதினான்கு வகைப்படும் (வெட்சித் துறைகள்.) குறிப்பு: செலவே, வேயே, மாற்றே என்பனவற்றுள் ஏகாரம் அசைநிலை; எண்ணேகார மெனினும் அமையும். வெட்சித் துறை யென்பது மேற்சூத்திரத்தினின்றும் அவாய்நிலை எழுவாயாயிற்று. சூத்திரம் : 4 மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையு மத்திணைப் புறனே. கருத்து: இது, மேற்கூறிய வெட்சி விளக்கத்திலமையாத போர்த்துவக்கக் குறியாகும் வெட்சிவகை வேறு சில கூறுகின்றது. பொருள்: மறங்கடைக் கூட்டிய = மிடல் மலிவால் அடல் விருப்பின் விளைந்த; துடிநிலை = முரசு பராவுதலும்; சிறந்த கொற்றவை நிலையும் = போருக்குச் சிறப்புரிமையுடைய கொற்ற வைக் கடவுளைப் பராவுதலும்; அத்திணைப் புறன் = (ஆகிய இவ் வெட்சி வகைகளும்) மேற்குறித்த குறிஞ்சித்திணைக்குப் புறனாகும். குறிப்பு: மறங்கடைக் கூட்டிய என அடை கொடுக்கப் பட்டது; இதுவும் மறனுடைய மரபாம் புறத்திணையெனற்கு. இதன்மேல் நடத்தக் கடவது போரேயாதலானும், போர்த் தொடக்கமே வெட்சித் திணையாதலானும், ஆகோளைப் போலவே முரசு பரவுதலும், தொடங்கும் போரில் வெற்றி விளைக்கும்படி கொற்றவை பராவுதலும், போர்த் தொடக்க நிகழ்ச்சிகளாமாதலானும், பின்னைய விரண்டும் முன்னையது போலவே வெட்சித் திணையாய்க் குறிஞ்சிக்குப் புறனா யமையும் பெற்றி இதிற் கூறப்பெற்றது. அகரச்சுட்டு புறன் என்னுங் குறிப்பால் வெட்சிக்கு அகமாக முதற் சூத்திரத்திற் குறித்த குறிஞ்சியையே குறிக்கும். அகரச் சுட்டு வெட்சித் திணையைக் குறிப்பதாகக் கொண்டு, துடி நிலையும் கொற்றவை நிலையும் வெட்சிக்குப் புறனாம் என்பர் நச்சினார்க்கினியர். வெட்சியே புறனாதலானும், பொதுவியல் பாடாண் முதலியவற்றைப் புறப்புறமென வகுத்த வெண்பாமாலை முதலிய பின்னூலாரும், துடிநிலை கொற்றவைநிலைகளைப் புறப்புற மென்னாது வெட்சியின் துறைகளாய் அடக்கினராதலானும், இக்சூத்திரத்தின் அகரச்சுட்டு வெட்சிக்கு அகமாகிய குறிஞ்சியையே குறிப்பது தேற்றம். முதற் சூத்திரத்தில், வெட்சியைக் கரவில் நிரைகவர்தல் என விளக்கியதால், அதிலமையாமல் வெட்சியின்பாற்பட்டுப் போர்த்து வக்கத்தில் நிகழ்பவற்றுள் இவ்விரு பராவுதலின் இன்றியமையாமை பற்றி இவற்றை விதந்து கூறல் வேண்டப்பட்டது முன் அகப்பகுதியில் உரிப்பொருள் ஐந்தில் புணர்வும் புணர்தனிமித்தமும் குறிஞ்சியென விளக்கியபின், அவ்விலக்கணத்தில் அமையாத கலந்த பொழுதையுங் காட்சியையும் பிற சிலவற்றையும் புணர்வே போல் குறிஞ்சிப் பாற்படுமெனக் குறித்து வேறு சூத்திரம் கூறினதுபோலவே அக் குறிஞ்சியின் புறமான வெட்சியிலக்கணத்திலடங்காத துடிநிலை, கொற்றவை நிலைகளும் போர்த்துவக்கமாம் வெட்சியின்பாற்படு மென்பதை இச் சூத்திரத்தால் விளங்க வைத்தார். போரற்றபோது முழக்காதிருந்த முரசை யெடுக்குங்கால், பராவி யெடுப்பது பண்டை வழக்காமென்பதை, மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை. . . . . . . . . (புறம். 50) என்னும் மோசிகீரனார் புறப்பாட்டாலும், தூத்துகி லுடுத்துத் தொடியுடைத் தடக்கைக் கோத்தொழி லிளையர் பூப்பலி கொடுத்துச் செம்பொன் நெல்லின் செங்கதிர் சூட்டி வெண்டுகி லிட்ட விசய முரசம். என்ற பெருங்கதை, உஞ்சைக் காண்டத்து 39ஆவது காதை, 21-24 வரிகளின் குறிப்பினானும் அறிக. போர் விரும்பியோர் முதலில் வெற்றி கருதிக் கொற்றவையைப் பராவுதல், வளையுடைக் கையிற் சூல மேந்தி கரியி னுரிவை போர்த்தணங் காகிய வரியி னுரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்பஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை . . . . . . . . . . . . . . . . . . . அமரிளங் குமரியு மருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே. என்னும் சிலப்பதிகார வேட்டுவ வரி 60-64, 73-74 வரிகளிலும், மற்றும் பழஞ்செய்யுள்களிலும் பரக்கக் காணலாம். இனி, துடிநிலை யென்னுமிடத்துக் குடிநிலை என இளம் பூரணர் கொண்ட பாடத்தின் பொருத்தம் புலப்படவில்லை. ஆகோள், கொற்றவைநிலைகளைப்போலக், குடிநிலை போர்த் தொடக்கத்திற்கு இன்றியமையாததன்று. இவ்வியலின் பின் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் துறைகளெனக் கூறப்படுவன மூன்று. அவற்றுள், முதலது கொடிநிலை (புறத்திணை சூ.33) அஃதொழிந்த மற்றிரண்டும் புறத்திணைத் துறைகளாக முன் வேறு சூத்திரங்களில் விளக்கப் பெற்றுள்ளன. அவற்றோடு அவ்வாறு புறத்திணை எதற்கும் துறையாக யாண்டும் விளக்கவோ சுட்டவோ பெறாத கொடிநிலையை வாளாகூட்டி, ஒருபரிசா யெண்ணுதல் அமைவுடைத்தன்று. புறத்துறைகளாக வேறு சூத்திரங்களில் விளக்கப்படும் இரண்டனொடு பின் சூத்திரத்தில் கொடிநிலை வாளா கூட்டிக் கூறப்பெறுதலால். அவையொப்பக் கொடிநிலையும் புறத்துறையாம் பரிசு பிறிதிடத்தில் சுட்டப் பெறுதல் முறையாகும். அதனாலும், கொடியெடுப்பு போர் துவக்கத்தில் நிகழ்வதொன்றாதலானும், கொடி நிலையைக் கொற்றவை நிலையோடு வெட்சி வகையாய் இதில் தொல்காப்பியர் கூறினார் எனக்கொள்ளுதலே சிறக்கும். அக்கொடிநிலைப் பாடம், நாளடைவில் ஏடெழுதுவோரால் குடிநிலையாக மாறி இளம்பூரணர் கண்டிருத்தல் வேண்டும். அப்பாடம் சிறவாமையால் அதனைப் பொருள் பொருந்தப் போர்க்குரிய துடிநிலையாக்கி நச்சினார்க் கினியர் பாடங்கொண்டதாகக் கருதற்கு இடனுளது. அன்றியும், துடி சூறைசுட்டும் பாலைநிலப் பறையே யாதலானும், எல்லா நிலத்துக்கும் பொதுவான போர்ப்பெரு முரசுக்குப் பெயரன்றா தலானும், இங்குத் துடிநிலைப் பாடத்தினும் கொடிநிலைப் பாடமே சிறப்புடைத்தாதல் மலையிலக்காம். ஆகவே, இளம் பூரணரின் குடிநிலை நச்சினார்க்கினியரின் துடிநிலை எனுமிரு பாடங்களையும் கொள்ளாது, இதில் கொடிநிலையே பாடமாக் கொள்ளின், பின் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவரும் எனத் தொகுத்த மூன்றனுள் மற்றவற்றோடு கொடிநிலையைக் கூட்டிக் கூறிய பெற்றி இனிது விளங்கும். போர்க்குமுன் கொடியெடுக்கும் மரபுண்மையை, புள்ளும் வழிப்படாப் புல்லார் நிரைகருதிப் போகுங் காலைக் கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடு மரமுன் செல்லும் போலும். என்னும் சிலப்பதிகார வேட்டுவ வரி அடிகளாலும் அறிக. சூத்திரம்: 5 வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉ மாபெருந் தானையர் மலைந்த பூவும், வாடா வள்ளி வயவ ரேத்திய வோடாக் கழனிலை யுளப்பட, வோடா வுடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும், ஆரம ரோட்டலும், ஆபெயர்த்துத் தருதலும், சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும், தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும், அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும், வருதார் தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும், வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டும், காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை, வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே. கருத்து: நிரை கவரும் வெட்சிக்குரிய படையியங்கரவ முதலிய துறை பதினான்கு முன்கூறி, அஃதல்லாத கொடிநிலை, கொற்றவைநிலை போன்ற போர்த் துவக்க வெட்சி வகையின் துறை இருபத்தொன்று இதில் விளக்கப்படுகின்றன. (வெட்சி வகையுள் சிறந்த ஆகோளையும் அதன் துறை பதினான்கையும் முதல் மூன்று சூத்திரங்களில் விளக்கி, பிறகு போர்த் துவக்கத் திணையாகிய வெட்சியில் சிறந்து வரும் ஆகோளே யன்றிப் பொதுவாக வரும் கொற்றவை நிலை போன்ற வேறு வெட்சிவகை யுண்மை இதன் முன் சூத்திரத்தில் கூறப்பட்டது. அப் பிற வெட்சி வகைகளுக்குரிய துறைகளை இது சுட்டுகின்றது.) பொருள்: (1) வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் = குறித்த போரில் கொற்றம் கருதிச் செறுமிகு சேயான முருகனை முதலில் பரவி, அவனுக்குரிய களியாட்டில் குறியுணர்ந்து கூறும் சிறப்பினையுடைய விரும் பத்தகும் வாய்ப்புணர்த்தும் வேலன் ஆடும் காந்தளும். (இவ் வெட்சிக்கு நேரான குறிஞ்சித்திணையில், தன் களவை மறைத்துத் தனிமை யாற்றாது தளரும் தலைவியின் மெலிவு கண்ட தாயர் உண்மை யுணரவேண்டிக் குறி சொல்ல விரும்பியழைக்கும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சார்ந்தது. அதனின் வேறாயது அக்குறிஞ்சிக்குப் புறனான வெட்சியில் வரும் துறையான வேலன் வெறியாட்டு என்பதை விளக்கவே இது வெறியாட்டு என்னாது, வெறியாடும் வேலன் விரும்பிச் சூடும் பூவின் பேரால் காந்தளெனக் குறிக்கப்பட்டது. எனவே, வேலன் வெறியாட்டு குறிஞ்சிக்கும் வெட்சிக்கும் பொதுவாயினும், வெட்சித் துறை வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவன்; குறிஞ்சித் துறையில் வெறியாடும் வேலன் குறிஞ்சிப்பூச் சூடுதல் மரபு. இதனை மதுரைக் காஞ்சியில், புறத்தில் அகத்துறையாக, அருங்கடி வேலன் முருகொடு வளைஇ அரிக்கூடு இன்னியம் கரங்கநேர் நிறுத்து கார்மலர்க் குறிஞ்சி சூடி எனவரும் அடிகளானுமறிக.) (2,3,4) உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்து புகழ்ப் போந்தை, வேம்பே, ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் = மாறுகொண்ட இருவேந்தர் பெரும்படை மறவர் தம்மை மலைவின்றித் தமரும் பிறரும் எளிதில் அறியும் வண்ணம் அடையாளமாகச் சூடும் சேரரது பனை, பாண்டியரின் வேம்பு, சோழர்தம் ஆத்தி என முறையே புகழோங்கி வரூஉம் பூக்களின் பேராலாய துறை மூன்றும், இரும்பனம் போந்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள் கண்ஆர் கண்ணிக் கரிகால் வளவன் எனவரும் பொருநராற்றுப்படை அடிகளில் போந்தை வேம்பு ஆர் எனும் அடையாளப்பூ மூன்றும் அமரில் சூடும் பரிசு குறிக்கப்படுதல் காண்க. (5) வாடா வள்ளி = வாடுங்கொடி யல்லாத வள்ளி யென்னும் பெயருடைய கூத்தும்; (வள்ளி என்பது வாடும் ஒரு கொடிக்கும் ஆடும் ஒருவகைக் கூத்துக்கும் பொதுப் பெயராதலால், ஓடாப் பூட்கை, வாடா வஞ்சி என்பனபோல, கொடியை நீக்கிக் கூத்தைச் சுட்டும் பொருட்டு இங்கு வாடா வள்ளி எனக் கூறப்பட்டது.) முருகனைப் பரசி வேல னாடுவது காந்தள்; அக்கடவுளைப் பாடிப் பெண்டிர் ஆடும் கூத்து வள்ளி. இது, மகளிர் மக்கட்டலை வனைப் புகழ்ந்து பாடும் உலக்கைப் பாட்டாகிய வள்ளை போலாது, காந்தளைப் போலவே கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும். இவ்வியலில் பின்வரும் கொடி நிலை காந்தள் வள்ளி என்ற . . . . . . . . கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே எனும் சூத்திரத் தானும் இவ்வியல்பு விளங்கும். பன்மர நீளிடைப் போகி, நன்னகர் விண்தோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடுபல கழிந்த பின்றை எனவரும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில், விண்ணுற வோங்கி விளங்கும் மதில் சூழ்ந்த மாடங்கள் நிறைந்த ஊர்களிலும் புறநாடு களிலும் கடவுளைப் பரசிப் பெண்டிர் ஆடும் வள்ளிக் கூத்தின் வளப்பம் குறிக்கப்படுவதறிக. (6) வயவர் ஏத்திய ஓடாக் கழல்நிலை = வென்றி மறவர் புகழும் புறங்கொடாவீறு குறிக்கப் பொருநர் காலில் அணியும் கழல் நிலையும்; (கழல் என்பது போர் வென்றிப் பெருமிதக் குறியாக மறம் பேணுந் திறலுடையார் காலில்பூணும் ஒரு அணி வகை. இதில் எண்ணும்மை தொக்கது.) ஒடாத் தானை ஒண்தொழிற் கழற்கால் செவ்வரை நாடன் . . . . . எனும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில், மறக்குறியாகத் தானை காலில் கழலணியும் பரிசு கூறப்படுதல் காண்க. (7) ஓடா உடல் வேந்து உளப்பட அடுக்கிய உன்ன நிலையும் = பின் வாங்காது மலையும் வேந்தன் வெற்றியை உளத்தெண்ணி, சார்த்து வகையால் உன்ன மரத்தில் நிமித்தங் கொள்ளும் உன்ன நிலையும்; (உடல்வேந்து என்பது பொருபடை என்பது போன்றதோர் வினைத்தொகை; உடலும் வேந்து என விரியும். உடலுதல் = சினந்து பொருதல்; பகைத்தலுமாம்.) உன்னம் = சிற்றிலையும் பொற்பூவுமுள்ளதோர் மரவகை. பண்டைத் தமிழ் மறவர் போர்க்கெழுமுன் உன்னமரக் கோட்டில் மாலைகளை அடுக்கி நிமித்தங்கொள்ளுவது வழக்காறு. (இனி, குறி பார்ப்பவர் தம் மன்னற்கு ஆக்கம் எனின் அம்மரக்கோடு தழைவதும், கேடுளதேல் அழிவதும் ஆகிய ஒரு கடவுட்டன்மையுண்டென்றும், அதனால் பொருநர் போருக்குமுன் அம்மரத்தைப் பரசிக் குறி கேட்பரென்றும், அவ்வாறு கேட்டலே உன்ன நிலையென்றும் உரைப்பாருமுளர்.) முன்னங் குழையவும் கோடெலா மொய்தளிரின் றுன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து. எனும் பழம்பாட்டு இவ் வுன்னநிலைத் துறையை விளக்குத லறிக. (8) மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில் தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும் = மாயோன் விரும்பும் நிலைத்த பெரிய சிறப்பினையுடைய கெடாத உயர்ந்த புகழினைக் குறிக்கும் காயா மலரால் நிமித்தங்கொள்ளும் பூவை நிலையென்னும் துறையும்; உன்ன மரக்கேட்டால் நிமித்தங் கொள்ளுவது போலத், தானை மறவர் காயாம்பூவால் நிமித்தங்கொள்ளும் ஒரு பழவழக்குண்டு. பூவை விரியும் புதுமலரில் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம் - மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை நிறத்தொடு நேர்தருத லான். என்னும் வெண்பாமாலைப் பாட்டாலும் அது விளக்கமாகும். (பிற்காலத்தில், பூவைநிலை சிறப்பாக மாயோனையும், பொது வகையில் பிற கடவுளரையும் ஒரு தலைமகனுக்கு ஒப்பிடும் துறையாகக் கருதப்பட்டு வருகிறது. இப் பொருளுக்கு, ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் எனும் நக்கீரர் புறப்பாட்டை மேற்கோளாகக் கொள்ளுவர். இதில் பாண்டியன் நன்மாறனைக் கண்ணுதற்கடவுள், பலராமன், திருமால், செவ்வேள் என்னும் நான்கு கடவுளர்க்கும் ஒப்புக் காட்டிப் புகழ்வதால், இப்பாட்டு பூவை நிலைத் துறைக்குச் சிறந்த பாட்டு எனக் கொள்ளப்படுகிறது. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வரும் உள்வரி 3உம் முறையே பாண்டியன், சோழன், சேரன் ஆகிய மூவேந்தரையும் தனித்தனியே திருமாலுக்கு ஒப்புக் கூறுதலால், அவையும் பூவை நிலையாம் என்பர்.) (9) ஆரமர் கட்டலும் = நிரை கவர்ந்த படை மறவரைக் கரந்தைப் பொருநர் வென்று புறம்கொடுத்தோடச் செய்தலும்; ஈண்டும் உம்மை தொக்கது. இதில் அமர் என்பது அமர் புரிபவருக்கு ஆகுபெயர்; வட வாரியரொடு வண்டமிழ் மயக்கத்து எனும் காட்சிக் காதை யடியினும், வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம், தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என என்னும் கால்கோட் காதையடியிலும், தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானம் எனவரும் குடபுலவியனார் புறப்பாட்டடியிலும், கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்து எனும் கபிலரின் 7ஆம் பத்தின் 3ஆம் பாட்டு அடியிலும், தமிழ் என்பது தமிழ்ப் படைக்கு ஆகுபெயராய் நிற்பதுபோல, ஈண்டு அமரென்பது தானைப் பொருநரைச் சுட்டுதல் வெளிப்படை. ஆரமர் ஓட்டல் எனப் பொதுப்பட நிற்றலால், நிரை கொண்டார் மீட்கவரும் மறவரை ஓட்டுதலும், மீட்பவர் நிரை கவர்ந்தவரை வென்றோட்டலு மாகிய இரண்டனையும் இத்தொடர் குறிக்கு மெனப் பிறர் உரை கூறினர். நிரை கொள்ளும் வெட்சிமறவர் மீட்போரை வென்றழிக்கும் பரிசெல்லாம் முன் வெட்சிவகை ஆகோளின் துறைகளுள் அடங்கக் கூறுதலானும், அதை விலக்கிக் கரந்தை முதலிய பிறவகை வெட்சித் துறைகளே இதிற் கூறவேண்டு தலானும், இதையடுத்த துறை கவரப்பட்ட நிரையை மீட்டுத் தருதலாதலின் கொண்டோரை வென்றன்றி ஆபெயர்த்துத் தருதல் கூடாமையானும், ஈண்டு ஆரமர் ஓட்டல் ஆகோள் மறவர் வென்றி குறியாது அவரை வென்றோட்டும் கரந்தைப் பொருநரையே குறிப்ப தொருதலை. அன்றியும், ஆரமரோட்டல் முதல் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் வரை குறிக்கப்படும் துறையனைத்தும் அனைக்குரி மரபினது கரந்தை எனத் தெளிக்கப்படுதலானும் இது கரந்தைத் துறையேயாம். (10) ஆபெயர்த்துத் தருதலும் = பகைவர் கவர்ந்த நிரையைக் காவலர் கரந்தை சூடிப் பொருது மீட்டித் தருதலும்; அமரோட்டலும் ஆபெயர்த்தலும் நிரைமீட்கும் கரந்தைப் பொருநர் வினையாதலானும், கவர்ந்த மறவரை வென்று ஓட்டினா லொழிய நிரை மீட்டல் கூடாமையானும், இவை யிரண்டும் காரண காரிய முறையில் ஒன்றை ஒன்று தொடர்ந்து நிகழும் பெற்றியவாகும். கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற் பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க் கொடுஞ்சிறைக் குரூஉப்பருந் தார்ப்பத் தடிந்துமாறு பெயர்த்தஇக் கருங்கை வாளே. எனவரும் ஔவையார் புறப்பாட்டும், . . . . . . . . . . . கன்றொடு கரவைதந்து பகைவர் ஓட்டிய நெடுந்தகை எனும் 264ஆம் புறப்பாட்டும், ஆரமரோட்டல் ஆபெயர்த்துத் தருதல் எனுமிரு துறைகளையும் ஒரு பரிசாய் ஒருங்கு கூறுதல் காண்க. வளரத் துடியினும் எனும் வடமோதங் கிழார் புறப் பாட்டிலும் இவ்விரு துறைகளும் ஒருங்கு வருதல் அறிக. (11) சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்துரைத்தலும் = மீட்சி மறவர் தம்வேந்தர் பெருமையை மீக்கூறுதலும்; இதுவும் கரந்தை வகையாதலால், மீட்போர் தம் வேந்தனை மீக்கூறுதலையே குறிப்பதாகும். என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்; பலரென்னை முன்னின்று கன்னின் றவர். (குறள். 771) பறைநிறை கொல்யானை பஞ்சவர்க்குப் பாங்காய் முறைமுறையின் உய்யாதார் தேயம் - முறைமுறையின் ஆன்போய் அரிவையர்போய் ஆடவர்போய் யாயீன்ற ஈன்போய் உறையும் இடம். (முத்தொள்ளாயிரத்திரட்டு செய். 9) இவ்விரண்டு பாட்டுக்களிலும், மறவர் தம்வேந்தன் சிறப்புக் கூறுதல் காண்க. (12) தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் = தத்தம் தலைமைத்தாம் முயற்சியின் திறல் குறித்துத் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதலும்; நெடுமொழி = தற்புகழ்ச்சி; தருக்கிய வஞ்சினமுமாம். மடங் கலிற் சினைஇ எனும் பூதப்பாண்டியன் (71ஆம்) புறப்பாட்டும், நகுதக்கனரே எனும் நெடுஞ்செழியன் (புறம். 72) பாட்டும், மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி எனும் நலங்கிள்ளி (புறம். 73) பாட்டும், ஆக மூன்றிலும் வேந்தன் தற்புகழ்ந்து வஞ்சினம் கூறுதல் விளக்கப்படுகின்றது. இனி, கந்துமுனிந் துயிர்க்கும் எனும் மூலங்கிழார் புறப்பாட்டில், . . . . . . . . . . . . .வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில் கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய நெடு மொழி . . . எனவரும் அடிகளில், பொருநர் போர்க்குமுன் ஊர்க்குள் நெடுமொழி கூறும் வழக்குண்மை சுட்டல் அறிக. (13) அனைக்குரி மரபினது கரந்தை, அன்றியும் = அத்தன் மைக்குரிய முறையால் வரும் நிரைமீட்சித் துறை வகை யெல்லாமும் கரந்தை வகையாகும், அல்லாமலும்; அனைத்துச் சொல் அத்தன்மைத்து எனப் பொருள்படுதல், அனைத்தாகப் புக்கியோய் எனும் 78ஆம் கலிப்பாட்டில் வருதலாலறிக. அனைத்துக்கு என நிற்கற்பாலது அனைக்கு எனக் குறுகியது, செய்யுளிசை நோக்கி; மனத்துக்கு என்பது மனக்கு எனவும், போருளதனைத்தும் என்பது போருளதனையும் எனவும், கம்பர் பாட்டுக்களில் இசை நோக்கிக் குறுகி வருதலும் காண்க. இனி, ஆரமரோட்டல் முதல் கூறிய நான்கும் நிரை மீட்சிக்கே வுரியவாதலின், அவற்றைக் கரந்தை என ஒருங்கு தொகுத்து, இதிற் கூறும் பிற வெட்சித் துறைகளினின்றும் வேறு பிரித்ததன் குறிப்பு அன்றியும் எனுஞ் சொல்லிடைப்பெய்து விளக்கப்பட்டது. பின்னைய பிள்ளை நிலை இரண்டும் பிள்ளையாட்டு ஒன்றும் ஆக மூன்றும் கரந்தைக்கேயன்றிப் பிறவற்றிற்கும் ஏற்குமாதலின், அவை கரந்தைத் தொகுதியிற் கூட்டப்படாமல் வேறு பிரித்துக் கூறப் பட்டன. இதில் கரந்தை என்பது தனித்துறையாகாமல் நிரைமீட்சித் துறை பலவற்றிற்குப் பொதுப் பெயராய்க் குறிக்கப்பட்டது. கரந்தை வெட்சித்திணை வகையாய்ப் பல துறைகளைத் தன்னுள் அடக்கி நிற்பதல்லாமல் தனித்தொரு துறையாகாமையால், அதற்குத் தனித்து மேற்கோட்செய்யுள் கூறுமாறில்லை. வெட்சியொடு கரந்தையை மயங்கவைக்கும் நச்சினார்க்கினியரும், கரந்தை வெட்சித் திணையாகாது எனக் கூறுகின்றார். கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலாற் பேராதலின், வெட்சித்திணைபோல ஒழுக்கம் அன்று என்பது இச்சூத்திரத்தின் கீழ் அவர் தரும் குறிப்பாகும். மேலும், கரந்தையை ஒரு தனித்துறையாய்க் கொள்ளின், இங்கு மொத்தம் எழுமூன்று துறைத்தே எனக் கூறியதற்கு துறையெண் 22 ஆகும். அது கூடாமையால், இதில் கரந்தையைத் தனித்துறையாய்க் கொள்ளாமல் நிரைமீட்சித் துறைகளுக்குப் பொதுப் பெயராகவே கொள்ள வேண்டுமென்பது தேற்றம். எனவே, இதனை ஒரு தனித்துறையாக்குதல் பொருந்தாமை வெளிப்படை. (14) வருதார் தாங்கல் = எதிர்த்து வரும் படையின் முன்னணி யைத் தனித்து நின்று தடுத்தல்; தார் என்பது படையணியைக் குறிக்கும். இதுவும் கரந்தை வகையேயாம். ஒன்னார் முன்னிலை முறுக்கிப் பின்னின்று நிரையொடு வருஉம் என்னை. எனும் 262ஆம் புறப்பாட்டில் இத்துறை விளக்கம் காண்க. இது எதிரூன்றிப் பொரும் தும்பைத்திணைத் துறையாகாமல் வெட்சித் துறைக்குரியது என்பது பின்னின்று நிரையொடு வருஉம் எனும் குறிப்பால் தேறப்படும். (15) வாள் வாய்த்துக் கவிழ்தல் = பகைவர் வாளால் பட்டு வீழ்தல்; ஆளும் குரிசில் உவகைக் களவென்னாம் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. எனும் பெரும்பொருள் விளக்கப் பழம்பாட்டில், வாட்போரில் வீழ்ந்தான் பெருமை கூறப்படுதல் காண்க. என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலையும் = (வருதார் தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல்) என இருதிறப்படச் சுட்டப்பட்ட பிள்ளை நிலைத் துறைகளும்; மேலே சிறப்பாகக் கரந்தை வகை நான்கு கூறி அவற்றைத் தொகுத்துப் பொதுவாகக் கரந்தையெனக் கூறியது போல, இங்குத் தார் தாங்கல், கவிழ்தல் எனும் இருவகைத் துறைகளும் பிள்ளை நிலை என்பதன் வகைகளாம் என்பதை விளக்கி இவ்விரண்டின் பின் இருவகைப்பட்ட பிள்ளைநிலையும் என்று அவற்றின் தொகையும் பொதுப் பெயரும் கூறப்பட்டன. அஃதன்றிப் பின்ளை நிலை எனத் தனித்தொரு துறை யின்மையால், துறை எழுமூன்றில் இது தனித்தெண் பெறாது. (16) வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கருளிய பிள்ளையாட்டும் = (ஆகோளல்லாத வெட்சிப் போரில்) வாளால் பொருது வென்று வந்தவனை உவந்து முரசொலிக்க நாட்டை அவனுக்குப் பரிசிலாய் அளிக்கும் பிள்ளையாட்டென்னும் துறையும்; தனக்கு வெற்றி தந்த வீரனை வேந்தன் நாடுதவிப் பாராட்டுதல் நன்றிமறவா மறக்கடனாகும். இதற்கு, வாட்போரில் இறந்த மறவனுக்குத் துறக்கமாகிய நாட்டை அளித்த பிள்ளையாட்டென்று இளம்பூரணர் உரை கூறுவர். இதில் எழுந்தோனை என்றதனால் இறவாமை தெளியப்படும்; இறந்தானை எழுந்தோனென்பது மரபன்று. அன்றியும் போரில் இறந்தவர்க்குத் துறக்க நாடு அருளு பவர் அவனைக் கொன்ற பகைவராவரன்றி இறந்த பொருநனின் வேந்தன் ஆகான். புறந்தராது பொருதுகளத்துயிர் கொடுத்தவனைத் தமரும் பகைவரும் பாராட்டிப் பரிந்திரங்குவர். அவன் இறந்தமைக்கு மகிழ்வது நன்மக்களியல்பன்று. ஈண்டு மகிழ்ந்து நாடவர்க் கருளிய பரிசு கூறுதலானும், அஃதுரையன்மை ஒருதலையாம். வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்தலை யொள்வாட் புதல்வர்க்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தான் கருதார்க்கு வான்கெழு நாடு வர. என வரும் பழம் பாட்டும் இளம்பூரணர் உரையை மறுத்துப் பகைவர் வானாடுபெற வென்றுவந்தவர்க்குப் பரிசிலாய் மன்னன் மண்ணாடு கொடுக்கும் பரிசே குறிப்பதறிக. (16 முதல் 21) காட்சி = பொருது வீழ்ந்தார்க்கு நடுதற் பொருட்டுத் தக்கதோர் கல்லைத் தேர்ந்து காணல்; கால்கோள் = தேர்ந்து கண்ட கல்லைக் கொணர்தல்; நீர்ப்படை = விழாவொடு அக்கல்லைத் தூய நீரால் குளிப்பித்தல்; நடுதல் = பிறகு அதனை எடுத்து நடுதல்; சீர்த்தகு மரபிற் பெரும்படை = சிறந்த முறையில் நாட்டிய கல்லுக்கு மிக்க பலியுணவு படைத்தல்; வாழ்த்தல் = அவ்வாறு கடவுளேற்றிப் பலியூட்டிய அக்கல்லைப் பழிச்சுதல்; என்று இரு மூன்று வகையில் கல்லொடு புணர = இவ்வாறு அறுதிறப்படும் நடுகல் துறைகளோடு சேர்ந்து; இதில் புணர்ந்து என்னும் எச்சம் புணர என நின்றது. அன்றி, நின்றாங்கே கொண்டு, சேர எனப் பொருள் கொள்ளினும் அமையும். இவையாறும் நடுகல் வகைகளாய் விழவொடு வரூஉம் துறைகளாதலின், இவற்றைக் கல்லொடு என ஒடுக் கொடுத்துப் பிரித்து, இரு மூன்று வகையிற் கல்லொடு புணர என எண் வேறு கொடுத்துத் தொகுக்கப்பட்டன. போரில் புகழொடு பட்டானைப் பாராட்டிக் கல் நட்டு விழவொடு பழிச்சுதல் பண்டைத் தமிழர் வழக்காகும். பெருங் களிற்றடியில் எனத் தொடங்கும் புறப்பாட்டில் (263). . . . . . . . . . . . . . . . தொழாதனை கழிதல் ஒம்புதி . . . . . வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லை என வருவதால், அமரில் பட்ட பொருநர்க்குத் தமர் கல் நட்டு வழிபடும் பழைய மரபு விளங்கும். பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி மரல்வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினி நட்டனரே கல்லும். எனும் 264ஆம் புறப்பாட்டிலும் இறந்த மறவனுக்குப் பெயர் பொறித்துக் கல்நாட்டும் பண்டை வழக்கம் குறிக்கப்படுகின்றது. சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே = கூறப்பட்ட ஆகோள் அல்லாத வெட்சிவகைத் துறைகள் இருபத்தொன்று ஆகும். இதில் ஏகாரம் அசை. துறை ஒவ்வொன்றனோடும் வரும் உம்மை எண்ணும்மை. சூத்திரம்: 6 வஞ்சி தானே முல்லையது புறனே. கருத்து: இது, வஞ்சிப்புறத்திணை முல்லை என்னும் அகத் திணைக்குப் புறனாம், என்கின்றது. பொருள்: வெளிப்படை. குறிப்பு: முதலேகாரம் பிரிநிலை, புறத்திணை ஏழனுள் வஞ்சியைப் பிரித்தலின். ஈற்றேகாரம் இசைநிறை; அசை எனினும் அமையும். (1) அகத்தில் தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் அல்லது வினைமேற் செல்வதுபோல, வஞ்சித் தலைவனும் தலை வியைப் பிரிந்து பகைமேற் செல்லுதலானும், (2) முல்லையிலும் வஞ்சியிலும் தலைவரைப் பிரிந்த தலைவியர் தனிமை தாங்காது வருந்திக் கற்பறம் பேணியிருப்பது பொது ஒழுக்கமாதலானும், (3) முல்லைத் தலைவர் தம் புலம்புறு தலைவியரைப் பிரிந்து செலவு மேற்கொள்வது மனையறம் பேணும் கடனிறுக்கும் பொருட்டாதல் போலவே, வஞ்சித் தலைவர் மேற்செலவும் ஆண்மையறம் பேணும் பொருட்டாதலானும், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. சூத்திரம்: 7 எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்று. கருத்து: இது, முல்லைக்குப் புறன் என்ற வஞ்சித் திணையின் இயல்பை விளக்குகின்றது. பொருள்: எஞ்சா மண்ணசை வேந்தனை = தணியாத பிறர் மண் ஆசை யுடைய ஒருவேந்தனை; வேந்தன் =(அறமறமுடைய) பிறிதொரு மன்னன்; அஞ்சுதகத் தலைச் சென்று = அவன் வஞ்ச நெஞ்சம் அஞ்சுமாறு தானே (படையொடு) மேற் சென்று; அடல் குறித்தன்று = வென்றடக்குதலைச் சுட்டும் அளவிற்று வஞ்சித்திணை. குறிப்பு: இச்சூத்திரத்திற்கு முன்னுரைகாரர் வேறு வகை யாய்ப் பொருள் கூறுவர். அவர் உரை வருமாறு: எஞ்சா மண்ணசை = இரு பெரு வேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கை யானே, அஞ்சு தகத்தலைச்சென்று = ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதல் உண்டாக அந்நாட்டிடத்தே சென்று, வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று = ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றம் கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை என்றவாறு. அதற்குமேல் அவர் தரும் சிறப்புரையாவது : ஒருவன் மண்ணசையானே மேற் சென்றால், அவனும் அம்மண்ணழியாமல் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சி வேந்தர் ஆவர் என்றுணர்க. இவருரை, சூத்திரச் சொல்லமைதிக்கு ஏற்காததோடு, வஞ்சி யியல்பை இழிதகு பழிதரும் பிழையொழுக்கமாகவும் பண்ணுகிறது. எஞ்சா மண்ணசை என்ற தொடர் அதை அடுத்து நிற்கும் வேந்தனை என்னும் இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக்கு நேரே அடையா யமைவது வெளிப்படை. அவ்வளவிற் கொள்ளாமல் அத்தொடரைப் பின்வரும் வேந்தன் என்னும் எழுவாய்ச் சொல்லுக்கும் ஏற்றி, அவன் படையெடுத்துச் செல்லுதற்குக் காரணமே மற்றவன் மண்ணிடத்து அவனுக்குள்ள வேட்கையாகுமென இவ்வுரைகாரர் விளக்குகின்றார். மன்னர் போர்கருதிப் படையெடுப்பதன் நோக்க மெல்லாம் பிறர்மண் கவரும் வேட்கைதான் எனும் கொள்கை நாகரிக உலகம் மதிக்கும் போரறமழித்துப் பழிக்கிடனாக்கும். தக்க காரணமின்றித் தவறற்ற மெலியாரின் நாட்டை வலியார் மண் வேட்கையாலே படையெடுத்துச் சென்று வென்று கவர்தலே வஞ்சித்திணை எனக் கூறுவது உயர்ந்த பழந்தமிழ் ஒழுக்கத்தைப் பழிக்கத்தகும் பிழையாக்கி முடிப்பதாகும். வலிச்செருக்கால் மெலியர் நாட்டைப் பறிப்பது உலகியலில் உண்டேனும், அதனை வெறுத்து விலக்குவதை விட்டு வேத்தியல் அறமாக்கி வஞ்சியொழுக் கமெனச் சிறப்பித்து ஒரு திணைவகையாக்குவது, அறனறிந்து மூத்த அறிவுடைய தொல்காப்பியர் நூற்பெருமைக் கிழுக்காகும். அஃது அவர் கருத்தன்மை அவர் சூத்திரச் சொல்லமைப்பே தெற்றெனத் தெளிக்கின்றது. இக்சூத்திரத்தில் எஞ்சா மண்ணசை யாலிரு வேந்தர் என்னாமல் எஞ்சா மண்ணசை வேந்தனை என்றமைத்த தால் முன்னுரைகாரர் பொருள் தொல்காப்பியர் கருத்தன்று என்பது தேற்றமாகும். படையொடு பிறர்மேற் செல்லுதற்கு மண்ணசையே நோக்க மாயின் அது உயரொழுக்கமாகாமல் துன்பம் தவாஅது மேன்மேல் வரும் இழுக்கமாகும். இனி, மண்வேட்கையால் தன் மெலிவு நோக்கியிருக்கும் பகைவனை வென்றடக்க முயலாமல் வாளா விருப்பது ஆண்மையற மழிப்பதாகும். அதனால் தன்னாட்டின்மேல் தணியாத வேட்கையுடைய அறமற்ற அயல் மன்னன் வலிபெருக்கித் தன்மேல் வருமுன்னமே தக்க படையொடு தான்சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும். அது செய்யானை எஞ்சா மண்ணசையுடையான் வஞ்சத்தால் வலி மிகவளர்த்து வாய்த்த போது வந்து தடிவனாகையால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடையானை வென்றடக்கி ஆண்மையற மாற்றுதல் போற்றத் தகும் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கமே பழந்தமிழர் கையாண்ட வஞ்சித்திணை. அதனையே இச்சூத்திரம் விளக்குகிறது. இளம் பூரணரும் அதுவே தொல்காப்பியர் கருத்தாகக் கொண்டு இச் சூத்திரத்திற்கு ஒழியாத மண்ணைநச்சுதலையுடைய வேந்தனை வேறொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தது என்று நேரிய உரை கூறுகின்றார். இச் செம்பொருள் சூத்திரச் சொற்கிடையால் தெளிவாகவும் அதைக்கொள்ளாமல், எஞ்சா மண்ணசையைப் படையெடுத்துச் செல்லும் வஞ்சி வேந்தனுக்கு ஏற்றிக் கூறினது, அறங்கருதா மறம் பேணி அயலார் மண்ணிலாசை வைத்துப் போர் மேற்கொள்ளு வதைப் போற்றத்தகும் மன்னர் ஒழுக்கமெனப் பேசும் ஒருசில வடநூற் கூற்றைப் பண்டைத் தமிழரின் இழுக்கறு போரற ஒழுக்கம் விளக்கும் இப் புறத்திணைச் சூத்திரக் கருத்தாகக் காட்ட முயலும் விருப்பின் விளைவாகும். இவ்விருப்புக் காரணமாக இடைக்கால உரைகாரர் படைத்துக் கூறும் குறிப்புரையில் ஒவ்வாத முரண்பாடுகள் மலிவதும் இயல்பாகும். அல்லதனை நல்லதெனச் சொல்லவரும் அல்லல்களுக் கெல்லையில்லை என்பதன் உண்மையை இவர் சிறப்புரைச் செய்திகள் வலியுறுத்துகின்றன. தணியாத மண்ணசையால் மெலியார் நாட்டை வலியார் வௌவுவது மன்னறமென்னும் ஆரியக் கொள்கையே வஞ்சித்திணையெனக் காட்டப் புகுந்து, அதை நாட்ட எழுதும் சிறப்புரையில் எழுகின்ற இடர்ப் பாடுகளைக் கருதுகின்றிலர். 1. முதலில், படையொடு செல்லும் வேந்தனை மெலியார் மண்ணில் எஞ்சாநசையால் வஞ்சி சூடினான் எனக் கூறி அவனைத் தவறுடையனாக்குங் குற்றம் மேலே குறிக்கப்பட்டது. 2. இனி, எஞ்சா மண்ணசை எனும் தொடரை நின்றாங்கே அதை அடுத்த வேந்தனை எனும் செயப்படு பொருளாகிய இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக் காக்காமல், அதைத் தாண்டிப் பின்வரும் வேந்தன் எனும் எழுவாய்ச் சொல்லுக்கு அடையாக்கிப் பிறர் மண்ணாசையே போரற நோக்கம் எனும் ஆரியக்கொள்கையைப் புகுத்தலாயினர். எனின், மூலத்தில் எஞ்சா மண்ணசை வேந்தனை எனச் சொற்றொடர் நிற்பதால், மண்ணசையைப் படை எடுக்கப்படும் வேந்தனுக்கு அறவேயில்லாமல் விலக்குமாறில்லை. வலிதிற் றம்நாட்டை வௌவ வரும் பிற வேந்தனைத் தன் மண் காக்க அதற்குரியான் எதிர்ப்பது இயலறமாகவும், அவ்வாறு எதிர்க்கும் அவன் தற்காப்பு முயற்சியும் மண்ணசை காரணமான வஞ்சியாகும் என இவ்வுரைகாரர் தம் சிறப்புரையில் வற்புறுத்தினார். இதிலெழும் முரண்பாடுகளை அவர் கருதுகிலர். படையொடு வந்த பகை வேந்தனை எதிர்த்துத் தன் மண் காப்பது அறமென்று கூறும் இவரே அத்தற்காப்புப் போர் முயற்சியும் மண்ணசையால் மேற்சேரும் வஞ்சியாம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? தன்னாடு கவரவரும் பகைவனை எதிர்ப்பது அறக்கடனாகுமன்றி மண்ணாசைக் குற்றமாகாதன்றே. பிறர்மண் வேட்கையைக் குற்றமெனக் கொள்ளாமல் மன்னருக்கு நல்லறமென்று சொல்லப் புகுவதால், இவ்வாறு வந்த பகைவனை எதிர்க்கும் தற்காப்பறப் போரையும் மண்ணசைப் போரென முறைமாறிக் கூற நேர்ந்தது. 3. மேலும், தன் நாடு கவர வந்தானைத் தற்காப்பின் பொருட்டுத் தகைப்பதை வஞ்சியெனக் கூறினதுமன்றி, மேற் சென்றானையும் எதிரூன்றினானையும் ஒருசேர வஞ்சித் தலைவராக்கினர். இது, வஞ்சி - மேற்செலவு எனத் துணிந்த தமிழ் இலக்கணத்தையே தடுமாறச் செய்யுந் தவறாகும். வலிகருதி வந்த மாற்றானை எதிர்த்து மலைதல் வஞ்சியாகாமல் வேறு தும்பைத் திணையாகும் எனத் தொல்காப்பியர் தெளியக் கூறுவதற்கு இவர் கொள்கை முழுதும் முரணாகும். தும்பை தானே மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப. இது தொல்காப்பியர் தரும் தும்பைத்திணை விளக்கம். எனவே, பிறர் நாட்டின்மேற் செல்லுதலே வஞ்சித்தினை யென்பதும், அப்படி வரும் மாற்றானை எதிர்சென்று மலைதலே தும்பைத் திணை யென்பதும் தமிழர் புறத்திணை மரபுகள் என்று தொல் காப்பியர் ஐயமற விளக்கியுள்ளார். இத்தகைய போரறச் சிறப்பு முறையைப் போக்கிப் பொருந்தா ஆரிய முறைகளைப் புகுத்திப் புத்துரை கூற முயன்றதால் வந்த முரண்பாடுகள் இவை. இன்னும், இத் தும்பைவிளக்கம் வஞ்சியியல்பைத் தெளிப் பதற்கு ஒருவாறு உதவுகின்றது. மேற்செல்லும் வஞ்சி வேந்தனுக்கு வஞ்சித்திணைச் சூத்திரத்தில் அடை எதுவும் சுட்டப்படவில்லை. அதற்கு மாறாக மண்ணசையுடைமை படையெடுக்கப்படும் வேந்தனுக்கு அடையாகக் குறிக்கப்பட்டது. அடுத்த தும்பைத் திணைச் சூத்திரத்தில் மேல் வந்த வேந்தன் படை எடுப்புக்கு மண்ணசைநோக்கம் சிறிதும் சுட்டப்படாததோடு, படையெடுக் கப்படும் மண்ணசை வேந்தனைப் பொருதடக்கும் வலியுடைமை ஒன்றே தக்க காரணமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. மண்ணசையால் வந்த வேந்தன் என்னாது, வாளா வந்த வேந்தன் என முன் கூறியதனோ டமையாது, மைந்து பொருளாக வந்த வேந்தனை என்று தும்பைச் சூத்திரம் தெளிப்பதினால், வஞ்சி வேந்தனின் பழுதற்ற போர் நோக்கம், பிறர்மண்ணசையன்று, அடுத்திருந்து மாணாது செய்வான் பகை, கொடுத்தும் கொளல் வேண்டுதலின், மண்ணசையுடைய வேந்தன் ஒருவனைப் பொருதடக்கும் வலியேயாம் என்பது விளக்கமாகும். முன்னுரைகாரர் கூறுமாறு மேற்செலவுக்கு மண்ணசையைக் காரணமாக்குவது தொல்காப்பியர் கருத்தாமேல், வஞ்சிச் சூத்திரத்தில் மேற்செல்லும் வேந்தனுக்கு மண்ணசை கூறாததோடு, மீண்டும் தும்பைத்திணைச் சூத்திரத்திலும் அவனுக்கு மண்ணசை சுட்டாது மைந்து பொருளாக என வேறு ஒரு குறிப்புக் கூறியிராரன்றே. இவ்விரு சூத்திரங் களிலும் தொல்காப்பியர் மேற்செல்லும் வேந்தனுக்கு மண்ணசை நோக்கை விலக்கிப் படை யெடுக்கப் படுபவனுக்கே அக்குற்ற முடைமை சுட்டியிருப்பதால் மண்ணசையை மன்னர் போரற நோக்கம் ஆக்குவதை மறுத்து வெறுக்கும் தமிழ் மரபே வலியுறுகிறது. சூத்திரம்: 8 இயங்கு படையரவம், எரிபரந் தெடுத்தல், வயங்க லெய்திய பெருமை யானும், கொடுத்த லெய்திய கொடைமை யானும், அடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானும், மாராயம் பெற்ற நெடுமொழி யானும். பொருளின் றுய்த்த பேராண் பக்கமும், வருவிசைப் புனலைக் கற்சிறை போல வொருவன் தாங்கிய பெருமை யானும், பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும், வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும், குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும், அழிபடை தட்டோர் தழிஞ்சி தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. கருத்து: இது வஞ்சித்திணையின் துறைவகையும் அவற்றின் தொகையும் கூறுகின்றது. பொருள்: இயங்குபடை யரவம் = போர்மேற் செல்லும் தானையின் ஆர்ப்பும்; உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருநர் ஆர்ப்பொடு முரசெழுந் தொலிப்ப இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக் கொடி யடுக்கத்து நிரயத் தானை. சிலப். கால்கோள். 34. 37 ஏற்றுரி போர்த்த வள்வார் இடுமுர சறைந்த பின்னாட் காற்றெரி கடலிற் சங்க முழவமு முரசு மார்ப்பக் கூற்றுடன் றனைய தானை கொழுநில நெளிய வீண்டிப் பாற்கடற் பரப்பின் வெள்வாட் சுடரொளி பரந்த வன்றே. சிந்தா. மண்மகள் இலம். 51 முன் வெட்சித்திணைத் துறையாய்க் குறிக்கப்பட்ட நிரை கவர விரையும் படை யியங்கரவத்தின் வேறாய், போர்மேற் செல்லும் தானையின் ஆரவாரம் இதில் கூறப்பட்டது. வெட்சியிலாகோள் களவில் நிகழ்வதாகலின், ஆர்த்துமேற் செல்வதற் கேற்புடைத்தன்று; அதனா லாங்கு வேந்துவிடு முனைஞரின் கரவியக்கத் தியலரவங் குறிக்கப் படையியங்கரவம் எனப்பட்டது. வஞ்சித்தானை வெளிப்பட விருதுடன் ஆர்த்துப் போர்க்கெழு மாதலின் படை அரவமெனவும், அது போரார்ப்பின் வேறாதலின் இயங்கு படையரவ மெனவும் விளக்கிய செவ்வி வியத்தற்குரித்து. எரிபரந்தெடுத்தல் = வழியில் பகைப்புலத்தில் தம் செலவைத் தகைக்கும் ஊர்களை நெருப்பிட் டழித்தலும்; காலென்னக் கடிதுராஅய் நாடுகெட எரி பரப்பி ஆலங்கானத் தஞ்சுவர விறுத் தரசுபட அமருழக்கி. மதுரைக் காஞ்சி 125 - 128 யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர அழல்கவர் மருங்கின் உருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின் . . . . . . . . . . . . . . . . . நின் பகைவர் நாடும் கண்டுவந் திசினே. (பதிற்று. 15) வயங்கல் எய்திய பெருமையானும் = மேற்செல்வோர் வினை விறல்களால் விளங்கிய சிறப்பும்; நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் ஈர்ங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் குடப்பாற் சில்லுறை போலப் படைக்கு நோயெல்லாம் தானா யினனே. (புறம் 276) கொடுத்த லெய்திய கொடைமையானும் = தானை மறவர்க் குத் தக்காங்குப் பண்பறிந்து வரிசையின் வழங்கும் கொடைப் பெருமையும்; . . . . . . . . . . . . . . . . . ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் தண்ணடை பெறுதல் யாவது படினே. (புறம். 287) இம்மைச் செய்தது என்னும் முடமோசியார் புறப்பாட்டு (134)ம் அதுவே. . . . . . . . . . . . . . . கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் கருங்களிற்று யானைப் புணர்நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடி பதிற்று 3ஆம் பத்தின் பதிகம் . . . . . . . . . . . . . . . ஈத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற் புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி. (பதிற்று. 15) பாணர் முதலிய இரவலர்க்கு வழங்கும் வள்ளன்மை வேறு; இங்குக் குறிக்கப்படுவது போர் வீரருக்கு மன்னர் வரிசை நோக்கி நாடு முதலிய நல்கும் பரிசேயாகும். அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தானும் = எதிர்ப்பாரை முன்னேறிப் பொருதழித்த வெற்றியும்; ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை, இன்றி னூங்கோ கேளலம்; திரளரை மன்ற வேம்பின் மாச்சினை யொண்தளிர் . . . . . . . . . . . . . . . . . . . . செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி ஒலியன் மாலையொடு பொலியச் சூடி . . . . . . . . . . . . . . . . . . . பொருதும் என்று தன்றலை வந்த புனைகழல் எழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. (புறம். 76) எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒருபகல் எல்லையில் உண்ணும் என்ப தாரிய அரச ரமர்க்களத் தழிய நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன் (சிலப். கால்கோள் 215-218) மாராயம் பெற்ற நெடுமொழியானும் = பெற்ற பரிசிற் பெருமிதத் தற்புகழ்ச்சியும்; மாராயம் என்பது வரிசையொடு பெற்ற பரிசு சுட்டும் நன்மதிப்பு. நெடுமொழி = தற்புகழ்ச்சி. நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னி அலர்மந் தாரமோ டாங்கயன் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்குவிறன் மாலை மேம்பட மலைதலும் காண்குவம் ஈங்கெனக் கொடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் நெடுமா ராய நிலைஇய வஞ்சியும் . . . . . . . . . . . . . . . . . . . புட்கைச் சேனை பொலியச் சூட்டிப் பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென் வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும் (சிலப். காட்சி. 137-142, 147-149) பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் = மாற்றாரை மதியாமல் எதிர்த்து ஊக்கிய மிக்க ஆண்மைத்திறமும்; கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு . . . . . . . . . . . . . . . . . . . குறந்தொடி கழத்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் யார்கொல்? வாழ்க அவன்கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்று மிலனே; பால்விட் டயினியும் இன்றயின் றனனே; வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே; அவரை அழுந்தப் பற்றி அகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்து நிலஞ்சேர அட்டதை மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினு மிலனே. (புறம். 77) இப் புறப்பாட்டில், நெடுஞ்செழியன் இளம் பருவத்தில் பகை மன்னர் எழுவரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தாக்கிப் பொருதுவென்ற ஆண்மைத் திறனை இடைக்குன்றூர் கிழார் புகழும் செவ்வி பாராட்டற்பாலது. வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும் = விரைந்து பெருகி வரும் வெள்ளத்தை அசை யாமல் நின்று தடுக்கும் கல்லணை போல, எதிர்த்து மேல்வரும் பகைப்படையை அஞ்சாது ஒருவனாய்த் தனி நின்று தகைக்கும் வீறும். வேந்துடைத் தானை முனைகெட நெரிநா ஏந்துவாள் வலத்தன் ஒருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற் காழி யனையன். (புறம். 330) வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகு இயன்றன்ன உருவினை யாகி வருபுனற் கற்சிறை கடுப்ப இடையறுத் தொன்னா ரோட்டிய செருப்புகல் மறவர் வாள்வலம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த. (மதுரைக் காஞ்சி 723 - 27) பிண்டமேய பெருஞ் சோற்று நிலையும் = திரளைகளாக விரும்பியாங்கு மிக்க சோற்றைத் (தானையர்க்கு) வழங்கும் தகைமையும்; . . . . . . . . . . . . . . . . . . . . . . ஒடாப் பூட்கை ஒண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர் உருமுநிலன் அதிர்க்கும் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும், கடுஞ்சின வேந்தே! நின் தழங்குகுரன் முரசே (பதிற்று. 30) . . . . . . . . . . . . . . . . . . அரும்படைத் தானை அமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து . . . . . . . . . . . . . . . . . . . கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென. (சிலப். கால்கோள். வரி 48-61) இச் செய்யுள்களுள் முன்னதில் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன் செருப்புகன் மறவர்க்குப் பெருஞ் சோறுகுத்த பரிசு கூறப்படுகின்றது. மற்றச் சிலப்பதிகாரச் செய்யுளடிகள் செங்குட்டுவன் வஞ்சி சூடி வட வாரியர்மேற் சென்றபொழுது நிகழ்த்திய செய்திகளுள் தன் படைத்தலைவர்க்குப் பெருஞ்சோறு வழங்கிய சிறப்புச் சுட்டுதல் காண்க. வென்றோர் விளக்கமும் = (சேரும் வழியில் நேரும் போர் களில்) கொற்றம் கொண்டோர் பொலிவும்; அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த வெள்வேல் பெரும்புலவுஞ் செஞ்சாந்து நாறிச் சுரும்பொடு வண்டாடு பக்கமு முண்டு குறுநரி கொண்டாடும் பக்கமு முண்டு. முத்தொள்ளாயிரம் தோற்றோர் தேய்வும் = அவரால் அடப்பட்டோர் மெலிவும்; வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த காய்வேற் றடக்கை கனகனும் விசயனும் ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு செங்குட் டுவன்தன் சினவலைப் படுதலும், சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர் பிடிகைப் பீலிப் பெருநோன் பாளர் பாடு பாணியர் பல்லியத் தோளினர் ஆடு கூத்தர் ஆகி எங்கணும் ஏந்துவா ளொழியத் தாம்துறை போகிய விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தர. (சிலப். கால்கோள். 221-20) இவ்வடிகளில் செங்குட்டுவனால் முறியடிக்கப்பட்டழிந் தோடிய பகைப்படையின் நலிவு விளக்கப்படுதலறிக. குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் = குறையாத சீருடைய தம் மன்னர் வெற்றிக்குப் புகழும் மாற்றார் தோல்விக்குப் பரிவும் குறித்து, மகளிர் பாடும் உலக்கைப் பாட்டும்; வள்ளை என்பது பெண்டிர் பாடும் உலக்கைப் பாட்டு; அதாவது தலைவனை வாழ்த்தி முருகனைப் பரசி உலக்கைக் குற்றோடொத்துப் பெண்டிர் பாடும் பாட்டு; ஆடவர் முருகனைப் பாடும் வள்ளியின் வேறுபட்டது. இது முன் வெட்சித்திணைச் சூத்திரத்தின் கீழ் விளக்கப்பட்டது. 1. வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத் தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதுஞ் சாந்த மரத்தி னியன்ற வுலக்கையால் ஐவன வெண்ணெ லறையுரலுட் பெய்திருவாம், ஐயனை யேத்துவாம் போல வணிபெற்ற மைபடு சென்னிப் பயமலை நாடனைத் தையலாய் பாடுவா நாம்; தகையவர் கைச்செறித்த தாள்போலக் காந்தண் முகையின்மேற் றும்பி யிருக்கும், பகையெனிற் கூற்றம் வரினுந் தொலையான், றன்னட்டார்க்குத் தோற்றலை நாணாதோன் குன்று; . . . . . . . . . . . . . . . . . . . . . எனவாங்கு, கூடி யவர்திறம் பாடவென் றோழிக்கு வாடிய மென்றோளும் வீங்கின ஆடமை வெற்ப னளித்தக்காற் போன்றே. (கலி. 43) 2. தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோள் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல். என்பது முதல் மூவரசரையும் வாழ்த்திச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை யிறுதியில் வரும் வள்ளைப்பாட்டு மூன்றும் இத் துறைத்தாம். அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ = பகைவரின் அழிவுதரும் படைக்கலன்களை எதிர்த்து மார்பேற்றுப் புண்கொண்ட மறவரைத் தழுவுதலுடன் கூட்டி; அழிபடை - வினைத்தொகை; அழிக்கும் படையென விரியும். தட்டுதல், எதிர்த்தல் அல்லது மோதலாகும்; எனவே, தட்டோர் என்பது பகைவர் படைகள் மோதி மார்பு புண்பட்டவர். . . . . . . . . . . . . . . . . .மின்னவிர் ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து . . . . . . . . . . . . . . . . . புடைவீழ் அந்துகில் இடவயிற் றழீஇ வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை அமைத்த கையன், முகனமர்ந்து . . . . . . . . . . . . . . . . . . சிலரொடு திரிதரும் வேந்தன். (நெடுநல்வாடை) இதில் செய்யென் கிளவி முதனிலைத் தொழிற்பெயர்; செய்கை எனப் பொருள்படும். இந் நெடுநல்வாடை ஈற்றடிகள் நெடுஞ்செழியன் பாசறையில் பொருது புண்பட்ட தன்படை மறவரை முக மலர்ச்சியுடன் பொருந்தப் பாராட்டித் தமராகத் தழுவும் பரிசு குறிக்கப்படுகின்றது. இனி, இதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, தளரும் தம் படையைப் பின் வாங்காது தடுத்தூக்கித் திறன் வியந்து தழுவு தலுடனே கூட்டி எனப் பொருள் கொள்ளினும் அமையும். இப் பொருளில் இத் துறைக்குச் செய்யுள் வருமாறு: . . . . . . . . . . . . . . . . அவர்படை வரூஉங் காலை நும்படைக் கூழை தாங்கிய அகல்யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ அரிதாற் பெருமநின் செவ்வி; . . . . . . . . . . . . . . . . . . . . . பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே. (புறம். 169) காரிக்கண்ணனாரின் இப் புறப்பாட்டடிகள் தளரும் தன் படையின் கூழை தாங்கி, வரும் பகைப் படையை வலி தொலைத்த பிட்டனின் பெருமையைக் கூறுகின்றன. இப் பொருளில் அழிபடை என்பது அழியும் படை என விரியும்; தட்டோர் என்பது தடுத்தோர் எனும் பொருளதாகும். அழிந்து புறங்கொடுத் தோடுபவர் மேல் படை தொடாத் தறுகண்மை தழிஞ்சி எனப் பிற்காலத்துப் புலவர் சிலர் கொள் வாராயினர். அப்பொருளில் இத்துறையைப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இச் சூத்திர அடிக்கு உரைகாரர் ஒருவரும் அப்பொருள் கொள்ளாமையானும், அது ஈண்டுப் பொருந்தாமை யறிக. கழிபெருஞ் சிறப்பிற்றுறை பதின்மூன்றே = மிகப் பெருஞ் சிறப்புடைய வஞ்சித்துறை பதின்மூன்றாகும். குறிப்பு: இதில், ஆன்களும் பக்கமும் இசை நிரப்பு. ஈற்றேகாரம், அசை. உம்மைகள் எல்லாம் எண் குறிக்கும். அரவம், எடுத்தல் என்பவற்றின் ஈற்றும்மை தொக்கன. சூத்திரம்: 9 உழிஞை தானே மருதத்துப் புறனே. கருத்து: இது, பற்றலர் அரணை முற்றி எறியும் உழிஞைப் புறத்திணை, மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம் எனக் கூறுகிறது. பொருள்: உழிஞை தானே = உழிஞைத் திணையானது; மருதத்துப் புறனே = மருதம் என்ற அகத்திணைக்குப் புறனாகும். குறிப்பு: தானே என்பதன் ஏகாரம் பிரிநிலை. புறனே என்பதன் ஏகாரம் ஈற்றசை. மருதத்துக்கும் உழிஞைக்கும் அரணுடைய ஊர்களே நிலைக் களம் ஆதலானும், புலத்தலும் ஊடலும் மருத ஒழுக்கம் ஆதல் போல முற்றிய ஊரரணின் அகப்புறப் படைகள் தம்முள் கலாய்த்து இகலுதலே உழிஞையாதலானும், மருதத்துக்கு உழிஞை புறனாயிற்று. சூத்திரம்: 10 முழுமுத லரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற் றாகும் என்ப. கருத்து: இஃது, உழிஞையின் இயல் விளக்குகிறது. பொருள்: முழுமுதல் அரணம் முற்றலும் = கெடாத தலையான காவலுடைய கோட்டையை வளைதலும்; கோடலும் = எயில்காவல ரெதிர்ப்பை அழித்து எயிலைக் கைப்பற்றுதலும்; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப = அம்முறைகளின் தன்மை யுடைத்தாம் உழிஞைத்திணை என்பர் புறநூற் புலவர். குறிப்பு: முன்னைச் சூத்திரத்து உழிஞை என்பது ஈங்கு ஆகும் என்னும் வினைக்குக் கொண்ட பொருள் தொடர்பால் எழுவா யாயிற்று. என்ப என்பதற்கு ஏற்பப் புறநூற் புலவர் என்னும் வினைமுதல் அவாய்நிலையால் வருவிக்கப்பட்டது. ஓசை நோக்கி அனைய என்பதன் ஈறு கெட்டு அனை என நின்றது. ஈங்குக் கோடல் என்பது முற்றியோர் வென்று அரண் கொள்ளு தலையே குறிக்கும். கொள்ளாது முற்றிய கோட்டையை விட்டு விலகுதல் உழிஞை ஆகாமையிற் கோடலும் முற்றலுடன் கூறப் பட்டது. இனி, கோடலை அரண் காவலர் தொழிலாக்கி, முற்றலை மட்டும் உழிஞை எனின், முற்றியோர் அரண்கைப்பற்றுதல் உழிஞையில் அடங்காமல், வேறு திணையுமாகாமல், குன்றக் கூறலாய் முடியும்; அன்றியும், முற்றியோர் அரணைப் பற்றாவழி அகப்படை அதனை மீட்டுக்கோடல் இன்மையால், அவரரண் கோடல் உழிஞை என்பது மிகைபடக் கூறலாகும். இன்னும், முற்றியோரை முறிய ஓட்டி அகத்தவர் வெற்றி பெற்றகாலை, அஃது அரண் காத்த லன்றிக் கோடலாமாறில்லை யாதலானும், முற்றியோர் வெற்றியால் அரணைப் பற்றிய பின் தோற்ற காவலர் அவரைமுற்றி அரணை மீட்டுக்கோடல் அவரளவில் உழிஞையே யாமாதலானும், முற்றி யோரும் அரண் காவலரும் கைகலந்து பொருவது உழிஞையின் இடை இயல் நிகழ்ச்சி யாவதன்றித் தன்னளவில் தனித்தொரு திணையாமாறு இல்லையாதலானும், அகத்தவர் எதிர்ப்பை நொச்சியெனத் தனித்தொரு திணையாக்கின் அதற்கு நேராம் அகத் திணை ஒன்று மின்றாதலானும், அகத்தோன் வீழ்ந்த நொச்சியை உழிஞைத் துறைவகைகளுள் ஒன்றாயடக்கிப் பின் சூத்திரம் கூறுவ தானும், இங்குக் கோடல் என்பது அகத்தவர்க்கு ஆகாமை ஒருதலை. சூத்திரம்: 11 அதுவே தானும் இருநால் வகைத்தே. கருத்து: இது, உழிஞைத் திணை எட்டு வகைப்படும் என்கின்றது. பொருள்: வெளிப்படை. ஏகாரம் ஈற்றசை. சூத்திரம்: 12 கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும், உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும், தொல்லெயிற் கிவர்தலும், தோலின் பெருக்கமும், அகத்தோன் செல்வமும், அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும், திறப்பட ஒருதான் மண்டிய குறுமையும், உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. கருத்து: இது, மேல் நாலிரு வகைத்தே எனத் தொகுத்த உழிஞை வகைகளின் பெயரும் இயல்பும் கூறுகிறது. பொருள்: 1. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் = பகைவர் நாட்டைக் கொள்ளத் துணியும் வீறும்; குறிப்பு: உள்ளின் விரைந்து முடிக்கும் உறுதி பற்றிக் குறித்த கொற்றம் என்றிறந்தகாலத்தாற் கூறப்பட்டது. 1. . . . . . . . . . . . . ஒன்னார் ஆரெயில் அவர்கட் டாகவும், நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய்! பூண்கடன் எந்தைநீ இரவலர் புரவே. (புறம். 203) ஆனா ஈகை எனத் தொடங்கும் இடைக்காடர் புறப்பாட்டில் கீழ்வரும் அடிகளும் இக்கொற்றம் பற்றியது. 2. மலையி னிழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் . . . புலவர் எல்லாம் நின்னோக் கினரே. நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. (புறம். 42) 2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் = எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய திறலுடைய வேந்தன் சீரும். ஏற்று வலனுயரிய எனும் நக்கீரர் புறப்பாட்டில், கூற்றொத் தீயே மாற்றரும் சீற்றம் வலியொத் தீயே வாலி யோனைப், புகழொத் தீயே இகழுநர் அடுநனை, முருகொத் தீயே முன்னியது முடித்தலின், ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் அரியவும் உளவோ நினக்கே . . . (புறம். 56) என இத்துறை வருதல் காண்க. இன்னும் பட்டினப்பாலையில் திருமாவளவனை, . . . . . . . . . . . . . மருங்கற மலையகழ்க் குவனே, கடல்தூர்க் குவனே, வான்வீழ்க் குவனே, வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறைபோகலின் (பட்டினப்பாலை அடி 270-273) எனப் பாராட்டுவது மித்துறையாகும். 3. தொல் லெயிற்கு இவர்தலும் = பகைவர் முன் பற்றாத பழைமையான அரண் மதிலைப் பற்றி முற்றியோர் ஏறுதலும்: 1. . . . . . . . . . . . . . . . . மைந்துடை ஆரெயில் புடைபட வளைஇ வந்துபுறத் திறுக்கும் பசும்பிசிர் ஒள்ளழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும் மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறற் றுப்புத்துறை போகிய கொற்ற வேந்தே . . . (பதிற்று. 62) 2. பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப் புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது, வினையுடம் படினும் ஒன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக. (பெரும்பாண். 448-454) 4. தோலின் பெருக்கமும் = பகைவர் படைக்கலன் உறாவாறு தடுக்கச் செறித்த கோடகங்களின் பொலிவும்; வினை மாட்சிய விரை புரவியொடு மழை யுருவின தோல் பரப்பி முனை முருங்கத் தலைச் சென்றவர். (புறம். 16) 5. அகத்தோன் செல்வமும் = (கொளற்கு அரிதாய், உணவு முதலிய கூழும் நன்னீரும் படையும் உலையா தூக்கும் அறை போகாத் தறுகண் மறவர் காவலும் உடைய) அரண் அகக்காவலன் பரிசு குறித்தலும்; அளிதோ தானே பாரியது பறம்பே, நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே. ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மே; இரண்டே, தீஞ்சுனைப் பலவின் பழமூழ்க்கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன் சொரியும்மே. வான்க ணற்றவன் மலையே; வானத்து மீன்க ணற்றதன் சுனையே; ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன். (புறம். 109) 6. அன்றி, முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் = அல்லாமலும், முனைந்து அரண் கொள்ள - முற்றிய தலைவன் அகத்தவர் எதிர்ப்பால் வருந்தும் பகுதியும்; அணங்கு = வருத்தம் தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்து ஊக்க முடையார் ஒதுங்கியும் - கார்க்கீண் டிடிப்புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார் அடிபுறத் தீடும் அரிது. (பெரும்பொருள் விளக்கம்) இனி, முற்றியோன் அகத்தவனை வருத்தும் பரிசும் எனினு மமையும். முன்னதில் அணங்கு தன்வினை; பின்னதிலது பிறவினை. (முன்னதற்குப், புறத்தோனை அணங்கிய எனக்கொள்ளுதலுமமையும்.) 1. தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதார் ஊர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு. பெரும் பொருள் விளக்கம் 2. செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமின் இடிமுர சார்ப்ப - அரவுறழ்ந்து ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து. (முத்தொள்ளாயிரம்) 7. திறப்பட ஒருதான் மண்டிய குறுமையும் = ஊறஞ்சாது உரனுடன் ஒருவனாய், எதிர்த்தேறிப் புரியும் குறும்போரும்; (ஊற்றத்தால் தனித் தேறி மாற்றலரை நெருங்கி மலையும் தறுகண்மை குறுமை அல்லது குற்றுழிஞை எனப்படும்,) சுதையத் தோங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து சிதையத் திண்டிறல் இராவணக் குன்றிடைச் சென்றான் ததையச் செங்கரம் பரப்பிய தன்பெருந் தாதை உதயக் குன்றினின் றுகுகுன்றிற் பாய்ந்தவன் ஒத்தான். எனும் கம்பர் பாட்டில், சுக்கிரீவன், இராவணன் மேல் தனியே பாய்ந்து மலைந்த குறும்போர் வருதல் காண்க. 8. உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்பட = வெகுண்டு மேல்வரும் உழிஞைப் பொருநரைப் பொருட்படுத்தா உரனுடையார் காவலால் கொளற்கரிதாம் அரணின் பெருமை உள்ளிட்டு; மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட திவ்வழி யென்றி, இயல்தார் மார்ப! எவ்வழி யாயினும் அவ்வழித் தோன்றித் திண்கூர் எஃகின் வயவர்க் காணில் புண்கூர் மெய்யின் உராஅய்ப், பகைவர் பைந்தலை எறிந்த மைந்துமலி தடக்கை ஆண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டற் காகாது வேந்துடை யரணே (தகடூர் யாத்திரை) சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே = முன் சூத்திரத்தில் சுட்டப்பட்ட எட்டு வகைத்தாம் உழிஞைத்திணை. குறிப்பு: நாலிரு வகைத்தே என முன் சூத்திரத்தில் தொகுத்த உழிஞையின் வகை எட்டும் இங்குக் கூறுப்படுதலின் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே எனக் குறிக்கப்பட்டன. ஈற்றேகாரம் அசை; இசைநிறை எனினுமமையும். நாலிரு வகைத்தே என்னும் முடிபுக்கேற்ப உழிஞைத் திணை என்னும் எழுவாய், கொண்ட பொருள் தொடர்பால் கொள்ளப்பட்டது. இவை எட்டும், பிறர்கூறுமாறு துறைகளாக உழிஞைத்துறை பதின்மூன்றும் அடுத்த சூத்திரம் கூறுதலால் - இவ்வெட்டும் உழிஞைத்திணை வகையெனத் தெளிக. சூத்திரம்: 13 குடையும், வாளும் நாள்கோள் அன்றி, மடையமை ஏணிமிசை மயக்கமும், கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும், அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும், மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும், நீர்ச்செரு வீழ்ந்த பாசியும், அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும், மதின்மிசைக் கிவர்ந்தோர் பக்கமும், இகன்மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணோ டொன்றத் தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ, வகைநாள் மூன்றே துறையென மொழிப. கருத்து: உழிஞைத்திணைவகை மேற்கூறி, இதில் அதன் துறைவகை பன்னிரண்டும் குறிக்கப்படுகின்றன. பொருள்: (1,2) குடையும், வாளும், நாள்கோள் = வேந்தன் கொற்றக் குடையும், வெற்றிப் போர் வாளும், முறையே நன்னாளில் எடுத்துக் கொள்ளுதலும்; முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை யேகென் றேத்த, மீளா வென்றி வேந்தன் கேட்டு . . . வாளுங் குடையும் வடதிசைப் பெயர்கென, . . . . . . . . . . . . . . . . . . . . . பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின் மறமிகு வாளும், மாலைவெண் குடையும், புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப் புரைதீர் வஞ்சிப் போந்தையிற் றொடுப்போன் அரைசுவிளங் கவைய முறையிற் புகுதர. (சிலப்பதிகாரம். கால்கோட்காதை) அன்றி = அல்லாமலும்; 3. மடையமை ஏணிமிசை மயக்கமும் = தொடையமைந்த ஏணிப் படிகளின்மேல் ஏறுவோரும் எதிர்ப்போரும் தம்முள் கலந்து மலைதலும்; (மலை = பூட்டு. ஏணிப் பக்கச் சட்டங்களில் பழுக்கள் பூட்டப்படுதலால், மடையமை ஏணி எனப்பட்டது.) பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்தா ராகில் - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும். பெரும் பொருள் விளக்கம் 4. கடைஇச் சுற்றமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் = முற்றியோன் தன் மறவரைச் செலுத்தி எதிர்த்தோரை மலைந்து மதிற்புறப் போர் முடிந்து ஒழியுமாறு வென்று எயிலைக் கைப்பற்றி உள்ளேறி அரணக மறவரைச் சூழும் முனைப்பும்; ஊர்சூழ் புரிசை உடன்சூழ் படைமாயக் கார்சூழ் குன்றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி ஆர்த்து (பழம்பாட்டு) 5. முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் = புறத்தோரால் வளைக்கப் பெற்ற அகப்படைத் தலைவன் அரண் காவல் விரும்பிப் புரியும் அமராம் நொச்சியும்; (வீழ்தல் = விரும்புதல், நொச்சி = மதில்; அது மதிற் காவற்கு ஆகுபெயர்) நீரற வறியா நிலமுதற் கலந்த கருங்கா னொச்சிக் கண்ணார் குரூஉத்தழை மெல்லிழை மகளிர் ஐதக லல்குற் றொடலை யாகவுங் கண்டனம், இனியே வெருவரு குருதியொடு மயங்கி யுருவுகரந் தெற்றுவாய்ப் பட்ட தெரியலூ ரன்செத்துப் பருந்துண் டுவப்பயாங் கண்டனம் மறம்புகன் மைந்தன் மலைந்த மாறே. (புறம் 271) 6. (மற்று) அதன் புறந்தோன் வீழ்ந்த புதுமையும் = அவ் வெதிர்ப் பால் வெகுண்டு புகுந்த புறப்படைத் தலைவன் விரும்பும் புதுக்கோளும்; (எதிர்ப்பாரை அடர்த்து அவர் நிலையிடத்தைப் புதிதாய்க் கொள்ளுதல் புதுமை எனப்பட்டது.) வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி ஒதுங்காதார் யாவர்? அவர் - மஞ்சுசூழ் வான்தோய் புரிசைப் பொறியும் அடங்கினவால், ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு (பெரும்பொருள் விளக்கம்) (மற்று, அசை) 7. நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் = எயிற் புறத்து நீர் நிலையில் (அகற்ற ஒழியாது வந்து விரவும் பாசிபோல) இருதிறப்படையும் தளர்ந் தகலாமல் மேன்மேல் விரும்பிக் கலந்து மலையும் பாசித் துறையும்; (விட்டு விலகாது விரைந்து விரவும் நீர்ப்பாசி போலக், கலந் திருபடையும் மலைத் திருதலையும் அலையென மோதும் அமரின் பரிசு, பாசி எனப்பட்டது.) முடிமனர் எழுதரு பரிதி மொய்களி றுடைதிரை மரக்கலம் ஒளிறு வாட்படை அடுதிறல் எறிசுறா வாகக் காய்ந்தன கடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே (சிந்தாமணி. 2223) 8. அதாஅன்று = அதுவுமன்றி; ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் = அரணகத்து ஊரில் அமர் விரும்பி ஒருவரை ஒருவர் முனைந்து பொரும் அப்பாசிப் போரின் தறுகண்மையும்; (மற்று, அசை, அதன் மறன் என்பது அண்மைச் சுட்டாய் மேற்பாசி மறனைச் சுட்டும்.) மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார் - எறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோல் நீங்காது தங்கோமான் ஊர்ச்செரு உற்றாரைக் கண்டு. (பழம்பாட்டு) 9. மதின்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் = மதின்மேல் ஏறி அகற்றப்படாது ஊன்றிய மறவர் பரிசும்; . . . . . . . . . . . . . . . . . நெடுமதில் நிறைப்பதணத் தண்ணலம் பெருங்கோட் டகப்பா எறிந்த பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ. (பதிற்றுப்பத்து 22) 10. இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் = பகை மதிலின் முடியகப்படுத்திய பெருமிதம் கொண்டாடும் நீர்விழவும். . . . . . . . . . . . . . . . . . .பகைவர் கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது வினையுடம் படினும் ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக (பெரும்பாண். அடி 450-54) (இதில் குடுமியை மதிலுக்கு ஆக்காமல் பிரித்து ஆகுபெய ராக்கிப் பிறர் குடுமி எனக்கொண்டு, காவலர் முடிக்கலம் எனப் பிறர் கூறுதல் பொருந்தாமை வெளிப்படை. வேந்தனுக்கல்லால் மதில் காக்கும் மறவர்க்கெல்லாம் முடிக்கலம் இன்மையானும், முற்றிய மதின்மேல் முடிவேந்தன் ஏறி முடிபறிகொடுத்தல் இராவணற்கன்றிப் பிறமன்னர்க்குச் சான்றோர் செய்யுட்களில் கேட்கப்படா அருநிகழ்ச்சி யாதலானும், இங்கு மதிற்குடுமி என நின்றாங்கே நேர் பொருள் கொள்ளுதலே அமையும். முற்றியோர் எயிற்குடுமி கொள்ளுதல், மேற் பெரும்பாண் அடிகளிலும் மற்றும் பல பழஞ் செய்யுள்களிலும் பரக்க வருவதனாலும், இதுவே தொல்காப்பியர் கருத்தாதல் தேற்றமாகும்.) 11. வென்ற வாளின் மண்ணோடு = உழிஞைப் போரில் வென்றோர், வெற்றிதந்த வாளை நீராட்டும் விழவுடன்; (மண்ணுதல் = கழுவுதல்.) போர்க்கு உரைஇப் புகன்று கழித்தவாள் உடன்றவர் காப்புடை மதில ழித்தலின் ஊனுற மூழ்கி உருவிழந் தனவே. (புறம். 97) (இங்கு வாளை வெற்றிதரும் படைக்கலங்களுக்குப் பொதுக் குறியீடாகக் கொள்ளுதல் சால்புடைத்தாகும். வாளைப் போலவே வேலும் பண்டை மறவர் கொண்ட போர்ப் படையாதலின், வென்றபின் வேல்கழுவி விழவெடுத்தலும் இத்துறையேயாகும்.) பிறர்வேல் போலா தாகி இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே இரும்புற நீறும் ஆடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங் கிருங்கடற் றானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவா னாதே. (புறம் 332) 12. ஒன்ற, தொகைநிலை யென்னும் துறையொடு தொகைஇ = (வென்ற வாளை நீராட்டும் விழவொடு) பொருந்த, தோற்றோர் தொகுதித் தொலைவாம் தொகை நிலை என்னும் துறையொடுகூட்டி; தொகைநிலைத் துறைக்குச் செய்யுள்; 1. அடுந்தேர்த் தானை ஆரிய வரசர் கடும்படை மாக்களைக் கொன்று களங்குவித்து நெடுந்தேர்க் கொடிஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட, எருமைக் கடும்பரி யூர்வோ னுயிர்த்தொகை ஒருபக லெல்லையி னுண்ணு மென்ப தாரிய வரச ரமர்க்களத் தழிய நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன். (சிலப்பதி. 26. கால்கோள் வரி 211-218) 2. . . . . . . . . . . . . . . . . . உருள்பூங் கடம்பின் பெருவாயி னன்னனை நிலைச்செ ருவினால் தலைய றுத்தவன் குருதிச் செம்புனல் குஞ்சர மீர்ப்பச் செருப்பல செய்து செங்களம் வேட்டுத் துளங்குகுடி திருத்திய விளங்குபெரு வென்றிக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (பதிற்றுப்பத்து, 4ஆம் பதிகம்) 3. பொற்புடை விரியுளைப் பொலிந்து பரியுடை நன்மான் வேந்தர் ஒட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சியிற் கொடிதே, மறப்பன் மாதோ நின்விறற் றகைமையே. (நற்றிணை - 270) இங்குப் பின்னிரு பாட்டுக்களில் நன்னனை அவன் தானை யொடழித்து, அழிந்தோர் மனைவியர் கூந்தலை அரிந்து, வென்ற வேந்தன் தன்தானைப் போர்யானைக் கயிறாகத்திரித்துக் கொண்ட கொடுமறமும், அப்போரில் தோற்றோர் தொகுதியின் தொலைவும் சுட்டப்படுதலின், இவை தொகை நிலைத் துறையாதல் காண்க. மக்கள் தொக்கதொகுதியாய்த் தொலைவதையே தொல்காப் பியர்காலப் புலவர் தொகைநிலை என வழங்கினர் என்பது, தும்பைத்திணைத் துறைவகையில் தொல்காப்பியர் சுட்டும் தொகை நிலைக் குறிப்பாலினிது விளங்கும். ஒருவரு மொழியாத் தொகை நிலை என்பது ஆங்கவர் தரும் தொகைநிலைக் குறிப்பாகும். உழிஞையிலும் தோற்றோரின் தொகையழிவே வென்றோர் விழவொடு ஒன்றுவதாகும். (இனி, இதில் தொகைநிலைக்கு நச்சினார்க்கினியர் வேறு பொருள் கூறுவர். போர் முடிவில் வென்றோர் வீழாது நின்றோரைத் திரட்டி, புண்புறம் பொதிந்தும், தண்மொழி பகர்ந்தும், அவர் திறம்வியந்தும், தளர்வோரை ஊக்கியும் பாராட்டுவது, தொகைநிலை என்பதவர் கருத்து. தொகை கூட்டம் குறிக்குமாதலின், அவ்வாறு கொண்டார்போலும்.) வகை நான் மூன்றே துறை என மொழிப = பன்னிரு வகைப் படும் உழிஞைத் துறை என்பர் புறநூற் புலவர். குறிப்பு: இதில், மற்று எல்லாம் அசை. உழிஞைத் துறை என்பது கொண்ட பொருட்டொடர்பால் பெறப்பட்டது. புறநூற் புலவர் எனும் எழுவாய் அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. புதுமையானும் என்பதில் ஆன் அசை. சூத்திரம்: 14 தும்பை தானே நெய்தலது புறனே. கருத்து: இது, தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் எனக் கூறுகிறது. பொருள்: வெளிப்படை. குறிப்பு: ஏகாரம், முன்னது பிரிநிலை; பின்னது அசை. நெய்தல் போலவே தும்பையும் ஆர்ப்பு, அலைப்பு, இரங்கல் இவற்றிற்கு இடனாதலானும், நெய்தலில் புலம்புறு தலைவியர் இரங்கல் ஓயத் தலைவர் கார்காலத்தே மீளுதல் போலத் தும்பையில் அமரோய்வு கார் காலத்தாதலானும், நெய்தற்குரிய பரந்த மென்னில வரைப்பு போர்க்குச் சிறந்துரியதாதலானும் நெய்தலுக்குத் தும்பை புறனாயிற்று. சூத்திரம்: 15 மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப. கருத்து: இது, தும்பைத் திணை இயல்பை விளக்குகிறது. பொருள்: மைந்து பொருளாக வந்த வேந்தனை = தன்வலியை மதித்து இகலி வந்த வேந்தனை; சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என்ப = எதிர்த்துப் போய்ப் பொருதடர்க்கும் சீருடைத்து தும்பைத் திணை என்பர் புறநூற் புலவர். குறிப்பு: தும்பைத்திணை என்னும் எழுவாய். பொருட் டொடர்பால் முன் சூத்திரத்தினின்றும் பெறப்பட்டது. தும்பை இரு படையும் ஒருங்கு மலையும் போர் குறிப்பதால், வந்த வேந்தனை இருந்த மன்னவன் எதிரூன்றிப் பொருதலும், அவ்வாறு தடுத்தெதிர்த் தவனை வந்தோன் அடுத்தமர் தொடுத்தலும், ஆகிய இருதிறமும் அடங்கச் சூத்திரம் அமைந்த செவ்வி கருதற்குரியது. எதிர்த் திருவர் மலைவதே போராதலின், போர் குறிக்கும் தும்பையின் வேறாக எதிரூன்றலைக் காஞ்சி என வேறு திணையாகக் கொள்ளும் பின்னூற் கொள்கை மிகையாதல் வெளிப்படை. அதுபற்றியே தொல்காப்பியர் எதிரூன்றலைக் காஞ்சியெனக் கூறிற்றிலர். சூத்திரம்: 16 கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா அருநிலை வகையோ டிருபாற் பட்ட ஒருசிறப் பின்றே. கருத்து: இது, தும்பைத் திணையின் ஒரு சிறப்புணர்த்துகிறது. பொருள்: கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் = அளவிறந்த அம்பும் வேலும் செறிந்து அடர்தலின்; சென்ற உயிரின் நின்ற யாக்கை. (அருநிலைவகை) = பிரிந்த உயிரினின்றும் நீங்கிய பின்னும் வீழாதுநின்ற உடலின் அரிய நிலைப்பரிசு. இருநிலந் தீண்டா அருநிலைவகையோடு = (அறுபட்டதலை முதலிய உறுப்புக்கள்) பெருநிலம் படியாது முறுகிய இகல்முனைப்பால் துடித்தியங்கும் அரிய நிலைமை யாகிய பரிசுடன்; இருபாற் பட்ட ஒரு சிறப்பின்றே = இவ்விரண்டு கூறுபட்ட ஒப்பற்ற சிறப்பினை யுடைத்தே தும்பைத்திணை. குறிப்பு: ஈற்றேகாரம் அசை. இன் உருபிரண்டில் முன்னது ஏதுப்பொருளிலும், பின்னது நீங்கற் பொருளிலும் வந்தன. முறுகிய தறுகண் முனைப்பால் உயிரிழந்த உடல் வீழாது நிற்றலும், துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் நிலந் தோயாமல் துடித்தியங்கலும், ஆகிய இருவகை அரிய நிலையைச் சிறப்பாக உடையது தும்பைத் திணை. இருநிலந் தீண்டாததிது எனக் குறியாமை, சிறப்பாகத் தலை துடிப்பதுடன் இற்ற உறுப்பெதுவும் துடிக்கும் இயல்பிற்றாகலின் சுட்டிக் கூறல் வேண்டாமைபற்றி அமைந்தது. அன்றியும், சென்ற உயிரினின்றயாக்கை எனப் பிரித்து, இருநிலந் தீண்டா அருநிலை வகையோடு, இரு பாற்பட்ட ஒரு சிறப்பின்று எனக் கூட்டியதால், யாக்கையும் அதன் அறுபட்ட உறுப்பும் தனித்தனி சுட்டுங் கருத்துத் தெளியப்படும். (இங்கு, அரு என்பதை அட்டை எனக் கொண்டு, அதன் பின்வரும் இருபாற் பட்ட எனுந் தொடரை அவ்வட்டைக்கு அடையாக்கி, இருகூறு பட்ட அட்டைப் பகுதிகள் தனித்தனி ஊர்ந்து இயங்குவதுபோலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் தனித்தனி துடிக்கும் எனப் பொருள் கூறுவர் பழைய உரைகாரர். இரண்டின் மேற்பட வெட்டுண்ட அட்டைத் துண்டுகளும் துடிப்ப தியல்பாதலால், இருபாற்பட்ட என்பது பொருளற்றதாகும். அன்றியும் ஊர்ந்து செல்லுதல் நிலமிசையே யாமாதலால் அது இருநிலந் தீண்டா அருநிலை எனற்குமமையாது. அதனால், இருபாற்பட்ட எனுந் தொடர் அதை யடுத்துவரும் ஒரு சிறப்புக்கே அடையாதல் தேற்றம்.) நின்ற யாக்கை, நிலந் தீண்டா உறுப்பு அருநிலை. என முறையே இரு திறப்பட்ட ஒரு சிறப்பாதல் காண்க. வெற்றுடலும் அற்ற தலையும் நிலந் தீண்டா நிலைக்குச் செய்யுள்: . . . . . . . . . . . . . . . . . . . வருபடை தாங்கிய கிளர்தா ரகல மருங்கட னிறுமார் வயவ ரெறிய உடம்புந் தோன்றா ருயிர்கெட் டன்றே; மலையுநர் மடங்கி மாறெதிர் கழிய . . . முலையா நிலையி னுடல்நின் றன்றே. (புறநானூறு) இது, சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அருநிலை குறிப்பது. இனி, கொடுமணம் பட்ட எனும் பதிற்றுப்பத்துப் பாட்டில், தலைதுமிந் தெஞ்சிய வாண்மலி யூபமொ டுருவில் பேய் மகள் கவலை கவற்ற (பதிற்று. 67) என்பதும், சிலப்பதிகாரக் கால்கோட் காதையில், தாரும் தாருந் தாமிடை மயங்கத் தோளும் தலையுந் துணிந்த வேறாகிய சிலைத்தோள் மறவ ருடற்பொறை யடுக்கத் தெறிபிண மிடறிய குறையுடற் கவந்தம் பறைக்கட் பேய்மகள் பாணிக் காட. என வருமடிகளும், இருநிலம் தீண்டாத் துணியுறுப் பருநிலை குறிப்பன. சூத்திரம்: 17 தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கு மூவகை நிலையும், வேன்மிகு வேந்தனை மொய்த்த வழியொருவன் தான்மீண் டெறிந்த தார்நிலை, யன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும், ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும், படையறுத்து பாழி கொள்ளும் ஏமத் தானும், களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும், களிற்றொடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும், வாள்வாய்த் திருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும், செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ யொருவன் மண்டிய நல்லிசை நிலையும், பல்படை யொருவற் குடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும், உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. கருத்து: இது, தும்பைத் திணையின் துறைவகையும் இயல்பும் கூறுகிறது. பொருள்: (1,3) தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் = பகைவரை அஞ்சப் பண்ணும் ஆட்படை வகுப்பு, யானை நிரை, குதிரையணி எனும் முத்திற நிலைகளும்; பகைபெரு மையிற் றெய்வம் செப்ப ஆரிறை யஞ்சா, வெருவரு கட்டூர்ப் பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர் செல்சமந் தொலைத்த வினைநவில் யானை கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல, மறவர் மறல், மாப்படை யுறுப்ப. (பதிற்று. 82) இதில், யானை தானை குதிரை (மா) என்ற மூவகை நிலையு மொருங்கு வருதலறிக. இனி, இவை தனித்தனியே வருதல் பெருவழக்கு. 1. முடிமன ரெழுதரு பருதி மொய்களி றுடைதிரை மரக்கல மொளிறு வாட்படை யடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன கடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே. (சிந்தாமணி. 2223) இது தானை மறம் விளக்கும் சிந்தாமணிப் பாட்டு. சிலப்பதி காரக் கால்கோட் காதை வரிகள் 194 - 204ம் இத்துறையாம். 2. அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சால் மன்னர் எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் கிள்ளி களிறு. (புறத்திரட்டு - முத்தொள். 1389) மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் திருத்தகு மார்போலை யாகத் - திருத்தக்க வையக மெல்லாம் எமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. (புறத்திரட்டு - முத்தொள். 1390) இவை யானைமறங் குறிக்கும் புறத்துறைப் பாட்டுக்கள். 3. நிலம் பிறக்கிடுவது போற்குளம்பு கடையூஉ வுள்ள மொழிக்குங் கொட்பின் மான்மே லெள்ளுநர்ச் செருக்குங் காளை கூர்த்த வெந்திற லெஃக நெஞ்சுவடு விளைப்ப வாட்டிக் காணிய வருமே நெருநை யுரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க் கரைபொரு முந்நீர்த் திரையிற் போழ்ந்தவர் கயந்தலை மடப்பிடி புலம்ப விலங்கு மருப்பியானை யெறிந்த வெற்கே. (புறம். 303) மாவா ராதே, மாவா ராதே, எல்லார் மாவும் வந்தன, எம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வ னூரு மாவா ராதே, இருபேர் யாற்ற வொருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல வுலந்தின்று கொல்லவன் மலைந்த மாவே. (புறம். 273) இவை குதிரைமறந் துலக்கும் பாட்டுக்கள். 4. வேன் மிகு வேந்தனை மொய்த்த வழி, ஒருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை, அன்றியும் = வேன்மறத்தால் வீறு பெற்ற வேந்தனைப் (பகைமறவர்) சூழ்ந்து நெருக்கிய விடத்து, அவன் தானைத்தலைவன் தான் ஒருவனாய்ப் பகைவர் முன்னணியை மறித்து முறித்த தும்பைத் தார்நிலையும், அல்லாமலும்; இவர்க்கீத் துண்மதி கள்ளே; சினப்போ ரினக்களிற் றியானை யியறேர்க் குரிசில்! நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன் அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே; மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும் உறைப்புழி ஓலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. (புறம். 290) இது தார்நிலை. வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச் செய்யோ னொளிவழங்குஞ் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை. (புறத்திரட்டு 1362) இதுவும் தார்நிலை. 5. இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் = எதிர்த்து மலையும் இருபடைத் தலைவரும் தம்முள் பொருது கெடும் பரிசும்; (தபுதி = இழவு அல்லது கேடு. இது கெடுதல் குறிக்கும் தபு என்னும் முதனிலை யடியாகப் பிறந்த தொழிற் பெயர்.) 6. ஒருவன், ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும் = ஒரு மறவன் தன் தலைவனை அவன் உடைபடை யுட்புகுந்து (அதன் பின்னணியைத் தாக்கும் பகைவரைத் தகைந்து) ஏமமுறக்காக்கும் தளராத் தறுகண்மையாகிய எருமைமறமும்; (கூழை = பின்னணி, தாங்கல் = தடுத்தல் அல்லது பேணுதலாம். இதில் தாங்கல் வினையை ஒருவனுக்கும் கூழைக்கும் தனித்தனி பிரித்துக் கூட்டுக. முறியுந் தம் படையின் பின்னணியைப் பகைவர் தாக்காது காத்தலும், அப்படை முறிய அடர்த்த பகைவரை எதிர்த்துத் தடுத்து நிறுத்தலும் ஒருவன் அருந்திறலாவதானும், அத்திறலுடை மறவன் (எதிர்வரும் எதற்கும் அஞ்சாது அசையாது நிலைத்து நிற்கும் எருமைபோல) தான் ஒருவனாய்த் தளராது எதிர்த்துவரும் படையைத் தாங்கும் தறுகண்மை வியத்தற்குரிய தாதலானும், அவன் திறம் எருமை மறமெனப்பட்டது. உடையும் படையின் பின்னணி தாங்கித் தொடரும் பகைஞரைத் தாக்கித் தகைக்கும் தறுகண்மை எருமை மறம் எனப்படும்.) 7. படை யறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும் = மேல் வரும் பகைப் படைக் கலங்களை அழித்து மதுகை கொள்ளும் பாதுகாவலானும். (பாழி = மதுகை, வலி பெருமையுமாம்.) நீலக் கச்சைப் பூவா ராடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே தன்னுந் துரக்குவன் போலு மொன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே. (புறம். 274) 8. களிறெறிந்து எதிர்ந்தோர் பாடும் = மேல்வரும் பகைவர் யானையை எதிர்த்தேறும் மறவர் பெருமையும், கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே சுட்டி யதுவும் களிறே யொட்டிய தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே. (தகடூர் யாத்திரை - புறத்திரட்டு 1372) 9. களிற்றொடுபட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் = ஊர்ந்த யானையொடு கெட்டழிந்த மன்னனை, வென்று கொன்ற மன்னனின் வாள் மறவர் சூழ்ந்தாடும் ஆர்ப்பும்; (அமலுதல் = நெருங்குதல். ஈண்டு அமலை பலர் நெருங்கி ஆர்க்கும் ஆரவாரத்திற்கு ஆகுபெயராயிற்று.) ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினா ரார்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. (புறத். 1348) 10. வாள் வாய்த்து இருபெரு வேந்தரும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும் = வாட்புண் பெற்று இகலும் பெருவேந்தர் இருவர் தாமும் தமக்குத் துணையாம் தமரும் ஒருவருந் தப்பாமல் மாய்ந்தழியும் தொகைநிலை என்னும் துறையும்; (இதில் வரும் தும்பைத் தொகைநிலை, முன் சுட்டப்பட்ட உழிஞைத் துறையான தோற்றோர் தொலைவு குறிக்கும் தொகைநிலையின் வேறுபட்டுப், பொருமிருதிறத்தார் தொலைவும் தெரிப்பதாதலின், ஈண்டு வேறு கூறப்பட்டது.) தொகைநிலைக்குச் செய்யுள்: வருதார் தாங்கி யமர்மிகல் யாவது பொருதாண் டொழிந்த மைந்தர் புண்தொட்டுக் குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி நிறங்கிளர் உருவிற் பேஎய்ப் பெண்டிர் எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந் தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமாய்ந் தனரே, குடைதுளங் கினவே, உரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே, பன்னூ றடுக்கிய வேறுபடு பஞிலம் இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர உடன்வீழ்ந் தன்றா லமரே, பெண்டிரும் பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார், மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே, வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற அரும்பெற லுலகம் நிறைய விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே. (புறம். 62) 11. செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் = போர்க்களத்தில் தன் வேந்தன் பட்டுவிழ வெகுண்டு அவன் படை மறவன் ஒருவன் அவனை வீழ்த்தியவரை அடர்த்தழிக்கும் தூய புகழ்ப் பரிசும்; மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபின் அருமறை ஆசான் ஒருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொடு இரவூர் அறியாது துவரை வேந்தொடு மாதுலன் தன்னை வாயிலின் நிறீஇக் காவல் பூட்டி ஊர்ப்புறக் காவயின் ஐவகை வேந்தரோடு அரும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரும் ஐம்பான் மருகரும் உடன்சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்த விசும்பி னகன்றலை யுலகமு மறிந்ததா லதுவே. (பெருந்தேவனார் பாரதப் பாட்டு) 12. பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும், உளப்பட = பலவேறாய பகைப் படையனைத்தும் ஒருவனுக்குடைந்து கெட்டழிந்தவிடத்து அவ்வாறு வென்றவன் வீறுகொண்டு புகழ்க்குரிய தன் வெற்றிவாளை வீசிக் கொன்று குவிக்கும் நூழில் என்னும் துறையும், கூட்ட; (ஒருவன் பலரைக் கொன்று குவிக்கும் தறுகண்மை நூழில் எனவும், நூழிலாட்டு எனவும் பெயர் பெறும். அது குவிதலையும் கொல்லுதலையும் குறிக்கும் சொல்லாகும்.) ஒருவனை யொருவ னடுதலும் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை இன்றி னூங்கோ கேளலம்; திரளரை மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய்க் கண்ணி ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பெரும்பூட் செழியன் பீடுஞ் செம்மலும் அறியார் கூடிப் பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. (புறம். 76) புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே = பொருந்தி விளங்கும் பன்னிரண்டு துறைகளையுடையது தும்பைத் திணை. (ஈற்றேகாரம் அசை. உம்மைகள் எண் குறிப்பன. பொருட்டொடர்பால் தும்பைத் திணை என்னும் எழுவாய் பெறப்பட்டது.) சூத்திரம்: 18 வாகை தானே பாலையது புறனே. கருத்து: இது, வாகைத்திணை பாலை என்னுமகத்திணைக்குப் புறனாமென வுணர்த்துகிறது. பொருள்: வெளிப்படை. குறிப்பு: ஏகாரம், முன்னது பிரிநிலை; ஈற்றது அசை. பாலை அறக்காதலை வளர்த்து மீட்டும் இன்பத்தை மிகுப்பது போல, வாகை மறக்காதலை வளர்த்து வெற்றியின்பம் விளைப்ப தாலும், பாலைபோல வாகையும் நிலம் வரைவின்றி யாண்டும் நிகழுமாகலானும், பாலைக்கு வாகை புறனாயிற்று. சூத்திரம்: 19 தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. கருத்து: இது, வாகைத்திணை இயல் விளக்குகிறது. பொருள்: தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை = குற்றமற்ற கோட்பாட்டளவில் மக்கள் அவரவர்துறையில்; பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப = வகைபட விஞ்சும் விறலை வாகை என்பர் புறநூற்புலவர். குறிப்பு: இங்கு வாகைச் சொல் கொண்ட பொருட் டொடர்பாலும், புறநூற்புலவர் எனும் எழுவாய் அவாய் நிலை யானும் கொள்ளப்பட்டன. இழிவொடு பழிபடு மெல்லாத்துறையும் வெறுத்து விலக்க வேண்டுமாதலின், அவற்றை நீக்கத் தாவில் கொள்கை என்றடை கொடுத்துப், புரைதீர் திறலெதுவும் வாகைக் குரித்தென வரை யறுத்துத் தெளித்த செவ்வி வியத்தற்குரியது. அவரவர் துறையில் பிறருடனுறழ்ந்து மேம்படு வெற்றி பெறுதல் வாகை எனப்படும். உறழ்பவரின்றி ஒருதுறையில் ஒப்பற்றுயரும் பரிசும் வாகையேயாகும்; மேம்பட்டு வீறு பெறுதலே வாகையாகலின், அதற்கு உறழ்ச்சி (போட்டி) இன்றியமையாததன்று. இசைபடப் புகழும் பாடாணின் வேறாய், உறழ்வாரை வென்று யரும் வீறும் எதிர்ப்பின்றி ஒருதுறையில் மேம்படும் விறலும் ஒப்ப வாகைவகையி லடங்கும். செய்யுள்: (1) ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் எனும் இடைக்குன்றூர் கிழார் புறப்பாட்டிறுதியடிகள், ஒத்தாரோ டுறழ்ந்துவென்ற வாகை குறிப்பதறிக. இன்றினூங்கோ கேளலம் . . . . . . . . . . . . . . . . . . . . நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடும் செம்மலு மறியார் கூடிப் பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. (புறம். 76) இன்னும் சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் எனும் கோவூர் கிழார் பாட்டினிறுதியில், விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப வலமுறை வருதலும் உண்டென் றலமந்து துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. (புறம். 31) எனவருவது, எதிர்ப்பாரின்றி உலகறிய வுயர்ந்த தறுகண் வீறு கூறும் வாகையாதல் காண்க. சூத்திரம்: 20 அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும், மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியி னாற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும், பாலறி மரபிந் பொருநர் கண்ணும், அனைநிலை வகையோ டாங்கெழு வகையில், தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர். கருத்து: இது, வாகையின் சிறப்புவகைகளைக் கூறுகிறது. பொருள்: அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் = ஆறு வேறுவகை மரபினரான பார்ப்பாரின் சிறப்பியல்பின் சார்பாயும், ஐவகைமரபின் அரசர் பக்கமும் = ஐவேறு குடிவகையினரா யாளும் மன்னர் இறைமைத் திறமையின் சார்பாயும்; இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் = அறு வேறு மரபினரான மற்றைய தமிழகமக்களின் சிறப்பியல்புகளின் சார்பாயும்; மறுவில் செய்தி மூவகைக்காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் = வழுவற்ற வகையால் நிகழ்ச்சிகளை வெயில் மழை பனியெனும் தன்மையால் வேறுபட்ட முக்காலத்திற்குமேற்ப முட்டின்றிக் கடைபோக நடத்தி முடிக்கும் அறிஞன் திறல் சார்பாயும்; நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் = எட்டுவகையில் நோற்பார் நோன்பின் சார்பாயும்; பாலறிமரபில் பொருநர் கண்ணும் = அறத்தின் பாகுபாடறிந்த முறையாற் பொருவார் போர்த் திறத்தின் சார்பாயும்; (இங்கிதனை இரட்டுறமொழிதலாக்கி, ஒப்ப நடிப்பவர் பொருநுத் திறலையும் குறிப்பதாகக் கொள்ளுதலும் கூடும்; (பொருந் = ஒப்பு; போல நடித்தல்)) அனைநிலைவகையொடு = அத்தன்மையநிலையில் வேறலின்கூறாய் வீறுதரும் பிறவகை வினைவிறற்றுறையுடனே; ஆங்கெழு வகையிற் றொகை நிலை பெற்ற தென்மனார் புலவர் = ஏழு வகையாகத் தொகுக்கப்படும் தன்மையுடையது (வாகைத் திணை) என்பர் புறநூற்புலவர். குறிப்பு: தொகைநிலை பெற்றது என்ற வினைக்கேற்ப, வாகைத்திணை எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் முன்னைச் சூத்திரத்திலிருந்து கொள்ளப்பட்டது. ஆங்கு உரையசை. புலவர் என வாளாகூறினும், இடம் பொருட் பொருத்தம் நூற் போக்குகளுக்கேற்பப் புறநூற் புலவர் என உரைகூறப்பட்டது. அறுவகைப்பட்ட பார்ப்பனர் என்றதனால் தொல்காப்பியர் காலத் தமிழத்தில் பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடையார் என்பது தெளிவு. இதையடுத்து அரசர் ஏனோர்களுக்கு மரபால் வகை எண் கூறப்படுதலின், பார்ப்பனரின் அறுவகையும் அவர்தம் மரபு பற்றியதேயாகும் மரபுச்சொல் குடிவகை குலமுறை வழக்காறு களைக் குறிக்கும். இனி, ஆறு தொழிலுடைமையால் பார்ப்பார் அறுவேறு வகையினராகாமை வெளிப்படை. ஓதுவியாது ஓதும்வகையார், ஓதாது ஓதுவிக்கும் வகையார், என்ற முறையில் ஒவ்வொரு தொழில் வகையால் பார்ப்பாரை வெவ்வேறு மரபினராய் வகுப்பது யாண்டும் கேட்கப்படாதது. இன்னும் இருபிறப்பாளருள் ஆறுதொழிலில் பின்னோர்க் கின்றிப் பார்ப்பாருக்குச் சிறப்புரிமைய மூன்றே: ஏற்றல், வேட்பித்தல், ஓதுவித்தல், இவை வீறுதரும் பெற்றியதன் றாதலின், வாகைவகையாகா. கொடைக்கு மாறாகக் கொள்ளுதலும் உயிர் செகுத்துண்டு வேட்டலும், வேதனத்துக்கு ஓதுவித்தலும் வெற்றிக்குரிய வாகையாகத் தமிழர் கொள்ளார். அவை வாகைவகையாய்ப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இங்குக் கருதற்கில்லை. எனவே, இக்காலப் பார்ப்பார் - எண்ணாயிரவர் - மூவாயிரத்தார் - வடமர் - சோழியர் என வெவ்வேறு மரபினராதல்போல, முற்காலத் தமிழகத்தும் பார்ப்பார் மரபால் ஆறுவகை பிரிந்தவராதல் இயல்பு. இனி, அறுவகை வைதிக மத மரபாக அறுவகைப்பட்டவ ராதலும் கூடும். எனைத்து வகையாயினும், இங்கு மரபால் அறுவகையிற் பிரிவுடைய பார்ப்பார் பரிசு குறிப்பதல்லால், அவர் அனைவருக்கும் பொதுவாகும் வினையாலவரை அறுவகைப்படுத்தல் தொல் காப்பியர் கருத்தன்மை ஒருதலை. துவக்கத்தில் தென்தமிழ் வரைப்பில் வந்து புகுந்த வம்பப் பார்ப்பார் மிகச் சிலராவர். மரபாலன்னோர் அறுவகையராதல் அக்காலத் தனைவரு மறிந்த தொன்றாகலின் வகை விரியாது அதன் தொகை கூறப்பட்டது, யாவருமறிவதைக் கூறுதல் மிகையாதலின்; இருசுடர் மூவேந்தர், நானிலம் என்புழி, சுடர் வகை, வேந்தர் குடிவகை, நிலவகைகளை விரித்தல் வேண்டாதது போல. இதிற்பின் ஐவகை மரபின் அரசர் இருமூன்று மரபின் ஏனோர் என அனைவரும் அறிந்த அவர் மரபுவகை விரியாது தொகை எண்ணாற் குறிப்பது போல, அக்காலம் யாவருமறிந்த பார்ப்பனர் மரபுவகை ஆறாதலின் எண் மட்டும் கூறப்பட்டது. வேந்தர்தம் வாகைக்குரியவை போர்வென்றி கொடை செங்கோற்செவ்வி போல்வன. அதுவேபோல் ஏனையதமிழ் மக்களுக்கு அவரவர்கொண்ட தவறறு தொழில் எல்லாம் வாகைக் குரியவாகும். ஐவகை மரபின் அரசர் என்றது, சேர, சோழ, பாண்டியராவார் முடிவேந்தர் குடிமூன்று, ஆளுதற்குரிய வேளிர் குடி ஒன்று, மற்றைய குறுநில மன்னர் குடிமரபொன்று, ஆக மன்னவர் ஐவகை மரபினராய்ப் பண்டைத் தமிழகத் தாண்டன ராதலின்; அரசர் எனப்படுதலான், ஈண்டுக் குறிப்பது ஆளு மன்னரை மட்டுமே. தமிழ் வழக்கில் ஆளாத அரசர் என்றொரு சாதியில்லை. அமர்தொழில் தறுகண் மறவர் அனைவருக்கும் பொது உரிமை. அத்தொழில் புரிபவர் பொருநராவதல்லால், அரசர் எனப்படார். இனி, இருமூன்று மரபின் ஏனோர் என்றதும், தமிழர் மரபுவகையே குறிப்பதாகும். பண்டைத் தமிழகத்தில் மக்கள் மரபாலும் தொழிலாலும் ஒத்த உரிமையுடன் வாழ்ந்தார்கள்; அவரிடைப் பிறப்பா லுயர்வு தாழ்வுடைமையும், விரும்பும் வினைபுரியும் உரிமை விலக்கும் வழக்காறில்லை. தமிழர் வாழ்க்கை முறை ஒழுக்க வழக்கம் விளக்கும் தொல்காப்பியரின் அகப்புறத் திணை யியல்களில் யாண்டும் வடநூல் சுட்டும் வருணவகைக் குறிப்பு ஒரு சிறிதுமில்லை. இவ்வுண்மை பெயரும் வினையு மென்றாயிருவகைய எனும் சூத்திர உரையில் விரித்து விளக்கப் பட்டது. அதனாலும், இங்குத் தொழிற்றுறையில் வாகை சூடுவோரின் மரபுவகையே கூறுதலானும், வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் வழக்கன்றிப் பிறநூல் மரபுகள் பேணாமையே தொல் காப்பியரின் துணிபாதலானும், ஈண்டு நிலம்பற்றிய தமிழர் மரபு வகை சுட்டுவதே கருத்தாதல் தேற்றமாகும். தமிழரின் தாவில் கொள்கை வினையனைத்தும் வாகைக்குப் பொருளாக, வெற்றி விரும்பு மக்களின் மரபுவகைகளையே இங்கு எண்கள் சுட்டுவது ஒருதலை. ஆயர், குறவர், உழவர், பரவர் என முல்லை முதல் நானில மக்களும், நிலக்குறிப்பின்றி யாண்டுமுள்ள வினைவலர், ஏவன் மரபினர் என்றிருவகையின் மக்களுமாக மரபால் அறுவகைப் பட்ட தமிழ்க்குடிகள் உண்மையைத் தொல்காப்பியரே அகத்திணையியலில் தெளித்துளாராதலின், தமிழர் புறவொழுக்கம் கூறுமிவ்வியலின் இச்சூத்திரத்தும் தமிழரை இரு மூன்று வகையின் ஏனோர் என்றடங்கக் குறிப்பதே அவர் கருத்தாமெனத் தேர்வது பொருத்தமாகும். அகத்திணை குறிக்கும் அடியோர், பிறர்போல் இன்ப ஒழுக்க மேற்பாராயினும், தாம் பிறர் உடைமையாய்த் தனிவினை யுரிமை தமக்கிலராதலின், வாகைக்குரியா ராகாரென்பது வெளிப்படை. அவரொழியத் தமிழர் அறுவகையாரே வாகைக்குரியர். இப்பழந் தமிழ் மரபுகள் கருதாமல், முன் உரைகாரர் இங்கு முதன்மூன்றடிகளும் வடநூல் கூறும் வருணவேறுபாடுகளை அவர வர்க் கறுதியிட்டு வகுத்த தொழிற்றொகுதியுடன் இங்குக் குறிப்பன போலக்கொண்டு பொருந்தாப் பொருள் கூறியிடர்ப்படுவர். தொல்காப்பியரின் துணிந்த நோக்கும், சூத்திரச் சொற்றொடர்ப் போக்கும் தெற்றெனத் தெளிக்கும் செம்பொருளைச் சிந்தியாமல், பழங்கால வழக்குகளை யறியாததால் தாமறிந்த தங்காலப் பிறநூற் கொள்கைகளை அறப்பழந் தமிழ்நூலுட் புகுத்த முயன்றவர் மயங்கலாயினர். இங்கு வருண கரும வரையறை விளக்குவது கருத்தாமேல், அதைத் தெளிக்கும் சொற்பெய்தல் எளிதாகும்; அதற்கு மாறாகத் தொழிற் சுட்டொழித்துக், குடிசுட்டும் மரபுச் சொற்பெய்தமைத்த சிறப்பின் குறிப்புச் சிந்திக்கற்பாற்று. அறுதொழிலுடைய பார்ப்பனர் பக்கமும், ஐவகைத் தொழிலுடை யரசர் பக்கமும், இருமூன்று தொழிலுடை ஏனோர் பக்கமும் என ஏற்ற தொழில்சொற்கூற்றால் விளக்கும் ஆற்றலின்றி இயைபினை மறந்து வேற்றுப்பொருள் விளக்கும் மரபுச் சொற் பெய்தனரென்று கூற யாரும் துணியார். இன்னும், இங்கு வருணவகை விளக்குவதே கருத்தாயின், உரிமையுடைய இருபிறப்பாளர் மூவரையு முறையே கூறிப், பிறகு அவர்க்குரிய அடிமைகளாய் உரிமையற்ற நான்காம் வருணத்தாரையும் வரிசைமுறையே வகுத்துக்கூறுவர். அதை விட்டுப் பார்ப்பாரையும் ஆளும் வேந்தரையும் மட்டும் சுட்டி, வைசியரையும் ஆளாக்கத்திரியரையும் அறவே விட்டு, அந்தணரும் அரசரும் அல்லார் எல்லாரையும் சூத்திரருடன் சேர்த்து ஓராங் கெண்ணி ஒருவகுப்பாக்கி ஒத்த வாகைத் தொழிலுடைய ஏனோர் எனத் தொகுத்துச் சுட்டியதொன்றே வருண தரும வகையெதுவும் கருதுங் குறிப்பிங்கின்மையினை வலியுறுத்தும். அன்றியும், தமிழ கத்தில் நான்கு வருணம் என்று மின்மை யாவருமறிந்த உண்மை. தமிழரொடு கலவாத் தருக்குடைய பார்ப்பார் தமிழருள் சத்திரியர் வைசியரென யாரையும் தழுவினதில்லை. உணவும் மணமும் ஓத்தும் வேள்வியும் முப்புரிச் சடங்கும் இருபிறப் பெய்தலும் இன்னபிறவும் தம்மரபினர்க்கு ஒத்த உரிமையைத் தமிழருள் யார்க்கும் பார்ப்பார் தாரார். இல்லாக் கற்பகம் பொல்லாயாளிகள் கதைக்கப்படுதல்போல், இடை இருவருணமும் வடவர் புனைந்த நூற்கதையன்றித் தமிழக வரைப்பில் வழக்காறில்லை. இன்னும், பார்ப்பாரல்லா மற்றைய மூன்று வருணத்தார்க்கும் மனு முதலிய வடநூல்கள் விதிக்கும் தொழில் வகைகள், இச் சூத்திரப் பழைய உரைகாரர் அவரவர்க்குக் காட்டும் தொழில் வகைகளுடன் முற்றும் முரணுதலானும், அவருரை பொருந்தாமை தேறப்படும். தமிழரெல்லாரும் கடைவருணச் சூத்திரர் என்பதே பார்ப்பனர் துணிவு. மற்றைய மேலோர் மூவருக்கும் அடிமை களாய்த் தொண்டு புரிவதொன்றே அவர்க்குரிய தொழில்; பிற தொழிலெதுவும் தமக்குத்தம் பயன்கருதி மேற்கொள்ளுமுரிமை சூத்திரருக்குச் சிறிதுமில்லை. ஒத்த உணவு மணம் ஓதல் வேட்டல் தொழில் முதலிய ஆரிய மக்களுரிமை எதுவுமில்லா இழிந்த அடிமைச் சூத்திரரை இரு பிறப்புடைய வைசியரோ டெண்ணி, வைசியர் தொழில்களைச் சூத்திரருக்குரித்தாக் கினதுமன்றி, தரும நூல்களில் வைசியருக்கும் விலக்கிய அறுதொழிலுடைமையையும் சூத்திரரான நான்காம் வருணத் தமிழருக்குத் தந்து கூறும் உரை ஆரிய நூல்களொடு முரணித் தமிழ்மரபு மழித்ததாகும். வரலாற்றுண்மை சிறிதுமறியாது வேளாளருள்ளிட்ட தமிழ்ப்பெருமக்களை எல்லாம் கடைக் கீழடிமைச் சூத்திர வருணத்தவரெனக் கூறுந்துணிவு அறிவறம் வெறுக்கும் வெற்றுரையாகும். இனி, பெரும் பொழுதாறும் வெயில், மழை, பனி என்ற மூன்றிலடங்கும். மூவகைக் காலமும் நெறியினாற்றிய அறிவன் என்றது, தன்மையால் முழுதும் வேறுபட்ட வெயில் மழை பனி என்ற மூவகைக் காலங்களின் நிலைமையும் விளைவும் நுண்ணிதி னுணர்ந்து காலத்தாலாற்றுவ ஆற்றிப் பயன்கொள்ளும் மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சரைக் குறிப்பதாகும். நாளும் கோளும் கண்டதுபோலக் கொண்டுகூறி வயிறு வளர்ப்போர், கேட்போர் விரும்பும் எதிர்கால நன்மைகளைப் புனைந்து கூறித் தந்நலம் பேணுமளவினர். அவரை எதிர்கால விளைவுகள் எடுத்துக்கூறும் கணிகளெனப்படுவதன்றி, மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவர் என்பது அமையாது. அறி வோடமையாது ஆற்றுதலும் கூறுதலால், கணிகளின் வேறாய், வருவன சூழ்ந்து செயல்வகை தேர்ந்து ஆய்ந்தாற்றும் அறிஞரான அமைச்சரைக் குறிப்பதே கருத்தாதல் தேற்றம். தாபதவழக்கு நாலிரண்டாதலு மக்கால வழக்கு. தாபதர் = தவம் செய்வார்; (தவம் = உற்ற நோய் நோற்றல். (நோற்றல் = பொறுத்தல்.) உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலிலி ருத்தல், நீரில் நிற்றல், காமங் கடிதல், வறுமை பொறுத்தல், வாய் மையால் வருந்தல் போலத் திண்ணியோருள்ளங் கண்ணியவகையின.) அனை நிலைவகைய என்பதில், அனைய எனுஞ்சொல் செய்யுளோசை நோக்கி அனை எனக் குறுகிற்று. அவ்வகைப்பிற வாகைக்குரியவை. ஆடல், பாடல், ஓவியமெழுதுதல் போல்வன. தேரும் குதிரையும் யானையு மூரும் திறல்வகை யெல்லாம் இதனுள் அடங்கும். இவை வாகைவகைகளே. வாகைத்துறைகளை அடுத்த சூத்திரம் கூறும். சூத்திரம்: 21 கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய மரபினு மேரோர் களவழி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையு மொன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானு மரும்பகை தாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமு மொல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானு மொல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானுந் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமுங் கட்டி னீத்த பாலி னானு மெட்டுவகை நுதலிய வவையத் தானுங் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானு மிடையில் வண்புகழ்க் கொடைமை யானும் பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானு மருளொடு புணர்ந்த வகற்சி யானுங் காம நீத்த பாலி னானுமென் றிருபாற் பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே. கருத்து: இது, வாகைத்திணையின் துறை பதினெட்டு ஆமாறு விளக்குகிறது. இவைகள் துறைகளென்றதனால் முன் சூத்திரம் கூறிய ஏழும் துறையாகாமல் வாகைத்திணையின் வகையாதல் தேறப்படும். பொருள்: கூதிர் வேனில் என்று இருபாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் = கூதிர்ப்பாசறை, வேனிற்பாசறை என்னும் காலத்திற்கேற்ப அமைத்த கட்டூர்களில் போர்விருப்பால் பொருந்தியிருந்து அமர் கருதிய முறையும். (பாசறை எனினும் கட்டூரெனினும் ஒக்கும்.) கூதிர்ப்பாசறைக்குச் செய்யுள்: புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக் கின்னா வரும்படர் தீர, விறறந் தின்னே முடிகதில் லம்ம; மின்னவி ரோடையொடு பொலிந்த வினைநவில் யானை நீடிர டடக்கை நிலமிசைப் புரளக் களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவ ரொளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித் தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல் பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் களையாப் பாய்பரிக் கலிமா விருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப் புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ வாடோட் கோத்த வன்கட் காளை, சுவன்மிசை யமைத்த கையன், முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான், சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. (நெடுநல்வாடை-அடி 166-188) நக்கீரரின் இப்பழம் பாட்டடிகளில் வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கி என்பது முதல் பாசறையில் கூதிரின் பரிசு கூறப்படுவ தறிந்தின்புறுக. மலைமிசை நிலைஇய எனும் மதுரை எழுத்தாளன் அகப் பாட்டும் மூதில் வாய்த் தங்கிய எனும் பெரும் பொருள் விளக்க வெண்பாவும் இத்துறைச் செய்யுட்களாகும். இனி, வேனிற் பாசறைக்குச் செய்யுள்: பெரும் பெயல் பொழிந்த சிறுபுன்மாலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த் துண்ணா துயங்கு மாசிந் தித்தும், ஒருகை பள்ளி யொற்றி, யொருகை முடியொடு கடகஞ் சேர்த்தி, நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி, யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ ளஞ்செவி நிறைய வாலின . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (முல்லைப்பாட்டு - அடி 6;71-89; 100 முதல் இறுதிவரை. நப்பூதனார் இம்முல்லைப் பாட்டடிகளில் வினைமேற் சென்ற தலைவன் மீளற்குரிய காருக்குமுன் போரைவிரும்பிக் காதலைவென்று களத்துத்தங்கும் வேனிற் பாசறைப் பரிசு விளக்குதல் கண்டு மகிழ்க. (2) ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் = களமர் களத்தில் நெற்போரடித்தல் முதலிய விழவார்ப் போடு, போர்க்களத்தில் தேர் மறவர் வெற்றிவிழவின் வீறும்; ஏரோர் களவழிக்குச் செய்யுள்: குடிநிறை வல்சிச் செஞ்சா லுழவர் நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப் பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சில் உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஊன்றித் தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை அரிபுகு பொழுதி னிரியல் போகி வண்ணக் கடம்பின் நறுமல ரன்ன வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற் கறையணற் குறும்பூழ் கட்சி சேக்கும். (பெரும்பாண். அடி. 197 - 205) இனித்தேரோர் களவழிக்குச் செய்யுள்: (1) உருவக் கடுந்தேர் முடுக்கிமற் றத்தேர்ப் பருதிசுமந் தெழுந்த யானை - இருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து. (களவழி - 4) எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன் என்றனி ராயின், ஆறுசெல் வம்பலிர்! மன்பதை பெயர, அரசுகளத் தொழியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை மீபிணத் துருண்ட தேயா வாழியிற் பண்ணமை தேரு மாவு மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணின்றோ விலனே; கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர் ஆபரந் தன்ன செலவிற்பல் யானை காண்ப லவன்தானை யானே. (பதிற்று. செய். 77) (3) தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும் = தேர்மறவரை வென்றழித்த குரிசிலின் தேர்முன் அவர்படை மறவர் களித்தாடுங் குரவைக் கூத்தும். செய்யுள்: (1) கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக வாளழி வாங்கி அதரி திரித்த வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தி, . . . . . . . . . . . . . . . . . . . . தேரூர் செருவும் பாடிப் பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி. சிலப்பதிகாரம் கால்கோட்காதை வரி 232-234;239-240 (4) ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும் = அதனொடு பொருந்து முறையானே, வென்ற குரிசில் சென்ற தேரின்பின் அவன் தானை மறவரும் ஏனை விறலியரும் அவன் புகழ் பாடி வாழ்த்தியாடும் குரவைக் கூத்தும்; (இனி, தேர்ப்பின் களத்துப் பிணக்கூழுண்ணும் பேய்களாடுங் குரவை எனினும் அமையும்.) செய்யுள்: வென்று களங்கொண்ட வேந்தன்தேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டாடின குரவைக் கூத்து. பெரும்பொருள் விளக்கம் பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை (சிலப்பதிகாரம் கால்கோட்காதை வரி 241 என்பதுமது. (5) பெரும்பகை தாங்கும் வேலினானும் = தனதிற் பெரிய பகைப்படையைத் தடுக்கும் வேல் வென்றியும். (பகை என்பது பகைப்படைக்கு ஆகுபெயர். தாங்குதல் = தடுத்தல்,) செய்யுள்: பிறர்வேல் போலா தாகி யிவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே; இரும்புற நீரு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி இன்குர லிரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினும் செல்லும்ஆங்; கிருங்கடற் றானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே. (புறம். 332) (6) அரும் பகை தாங்கும் ஆற்றலானும் = தடுத்தற்கரிய மாற்றலர் தானை மடங்கத் தடுக்கும் திறலும். (இதிலும், பகை, பகைப்படைக்கு ஆகுபெயர்.) வணங்கு தொடைப்பொலிந்த வலிகெழு நோன்றாள் அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து, விழுமியம், பெரியம் யாமே, நம்மிற் பொருநனு மிளையன், கொண்டியும் பெரிதென எள்ளி வந்த வம்ப மள்ளர், புல்லென் கண்ணர் புறத்திற் பெயர, ஈண்டவர் அடுதலு மொல்லான்; ஆண்டவர் மாணிழை மகளிர் நாணினர் கழியத் தந்தை தம்மூ ராங்கட் டெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே. (புறம். 78) (இடைக் குன்றூர் கிழாரின் இப்புறப்பாட்டு நெடுஞ்செழியன், தன்னை மதியாமல் தன் இளமை இகழ்ந்து மேல் வந்த அரும்பகை தாங்கி வென்ற ஆற்றலை விளக்குகிறது. மேல் ஐந்தாவதும் இதுவும் ஒரு குரிசிலின் தறுகண்மைத் திறலே குறிப்பினும், முன்னது வேல் விறலை விதந்துகூறப், பின்னது போர்த்திறனும் பெருவலியும் பேசுகிறது.) (7) புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் = சிறந்து பொருந் தாச் சிறிய வாழ்வினினும் வண்மை குன்றா வேளாண்மையும். இடனில் பருவத்தும் ஒப்புரவுக் கொல்கார் கடனறி காட்சி யவர் . . . . ஆதலின், வறுமைக் கஞ்சாத் தறுகணரூக்கம் வாகைக் குரித்தாயிற்று. செய்யுள் : எருது காலுறா திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில பசித்த பாண ருண்டுகடை தப்பலின் ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னிரக்கு நெடுந்தகை அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே (புறம். 327) இனி, இதற்கு வாழ்க்கையை விரும்பாது, வான் விரும்பிப் போர் மகிழும் வல்லாண்மையும் எனப்பொருள் கூறினும் பொருந்தும். அதற்குச் செய்யுள் வருமாறு: கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து மலிபுகழ் வேண்டு மனத்தர் - ஒலிகடல்சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணியமாம் போர்க்களத்துப் போந்து. (பாரதவெண்பா) (8) ஒல்லார் நாணப் பெரியவர்க்கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் = பகைவரும் நாணுமாறு தம் தலைவரைக் குறித்து முன் சொன்ன வஞ்சின வுரையொடு வாய்ப்ப அமைத்துப், பழந்தொடர்புடைய (படையா) உயிரைக் களப்பலியாக வழங்கும் மறவேள்வியும். செய்யுள் : 1 குழாக்க ளிற்றரசர் குறித்தெழு கொலைக்களம் விழாக்களம் போல மெய்ம்மலி யுவகை ஆண்மை யுள்ளம் கேண்மையிற் றுரத்தலின் அழுந்து படப்புல்லி விழுந்து களம்படுநரும், . . . . . . . . . . . . . . . . . . பிறப்பும் பெருமையும் சிறப்பும் செய்கையும் அரசறி பெயரும் உரைசெய லாண்மையும் உடையோ ராகிய படைகோண் மாக்கள் . . . . சென்று புகுமுலக மொன்றே யாகலின் . . . . ஒன்றுபடு மனத்தொடு கொன்றுகொன் றுவப்பச் செஞ்சோற்று விலையும் தீர்ந்து, தம்மனைவியர் தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும் புதுவது புனைந்த மகளிர்க்கு வதுவை சூட்டிய வான்படர்ந் தனரே. (பழையபாட்டு, புறத்திரட்டு 1354) செய்யுள் : 2 இழைத்த திகவாமற் சாவாரை யாரே பிழைத்த தொறுக் கிற்பவர்? (குறள். 779) (9) ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும் = பகைவரை இடம் வாய்ப்புழி அன்பாற் றழுவிக் கொள்ளும் பெருந் தகவும்; செய்யுள் : (1) பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு. (குறள். 874) செய்யுள் : (2) அறத்திற்கே அன்பு சார்பென்ப வறியார்; மறத்திற்கு மஃதே துணை. (குறள். 76) இனி, இதற்குப் பகைவர் நிலங் கைப்பற்றியாளும் திறலும் எனப் பொருள் கூறுவர் இளம்பூரணர். அப்பொருளில் இத்துறைக்குச் செய்யுள்: நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து பனிவார் சிமையக் கானம் போகி அகநாடு புக்கவர் அருப்பம் வௌவி யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில் (மதுரைக் காஞ்சிஅடி 147-151) குறிப்பு: இவ் வொன்பதும் மறத்துறையில் வாகைக்குரியன. இனி வரும் ஒன்பதும் அறத்துறையில் வாகைக் குரியவாகும். (10) பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் = எருதானும் பசுவானும் குற்றமற்ற சீர்மிகு சால்புடையார் பெருமையும்; (பகட்டால் சிறப்புடைச் சான்றோராவார், கோழைபடா மேழிச் செல்வராய வேளாண் மாந்தர்; ஆவாற் சிறப்புறுவார் ஆயர்; அதாவது கோவலர். ஆவினானும் எனக் கொள்ளாமல், மாவினானும் எனப்பிரித்து, யானை குதிரையாகிய மாவினானும் என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மறத்துறைக்குப் பொருந்து மல்லாமல், அவரே கூறுகிறபடி முன் ஒன்பதுமட்டும் மறவகையாக இது முதல் பின்வரும் ஒன்பதும் அறவகை வாகைத்துறைகளா தலின், அவ்வரிசையில் முதலாகுமிது அறத்துறைப் பொருளோ டமையாமை தெளிவு.) (1) பகட்டினாற் சிறப்புடைச் சான்றோர் பெருமைக்குச் செய்யுள் : (1) யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தார் ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு? (பெரும்பொருள் விளக்கம்) (2) ஆவினாற் சிறப்புடைச்சான்றோர் பெருமைக்குச் செய்யுள்: . . . . . . . . . . . . . . . . . .மறிய குளகரை யாத்த குறுங்காற் குரம்பைச் செற்றை வாயிற் செறிகழிக் கதவிற் கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் அதளோன் துஞ்சும் காப்பி னுதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில் கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் இடுமுள் வேலி யெருப்படு வரைப்பின் நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப் புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி ஆம்பி வான்முகி ழன்ன கூம்புமுகை உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து புகர்வாய்க் குழிசி புஞ்சுமட் டிரீஇ நாண்மோர் மாறு நன்மா மேனிச் சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோட் குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மகள் அளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉ மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின் இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர். (பெரும்பாண். அடி 147-168) ஆகாத் தோம்பி யாப்பய னளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை (சிலம்பு. அடைக்கலக். அடி. 120-121) எனும் சிலப்பதிகார அடிகளும் இத் துறையாம். (11) கட்டில் நீத்த பாலினானும் = அரசுகட்டிலை இகழ்ந்து துறக்கும் உரவோர் பரிசும்; செய்யுள் : பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபக லெழுவர் எய்தி யற்றே. வையமும் தவமும் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்தும் ஆற்றா தாகலின் கைவிட் டனரே காதலர்; அதனால் விட்டோரை விடாஅள் திருவே; விடாஅ தோரிவள் விடப்பட் டோரே. புறம். 358 (இங்கு கடிமனை நீத்த பாலினானும் எனப்பாடங் கொண்டு, பிறர்மனை நயவாமை குறிக்கும் என்பர் இளம்பூரணர். அஃதான்ற அறவொழுக்காமெனினும், இல்வாழ்வார் எல்லார்க்கும் பொது அறமாதலின் தனி ஒருவர் வாகைக்குரிய வீறாகாது. அன்றியும், அதனினும் அருமைத்தாகும் அறிவழி காம வெறியொழி விறலை இதன்கீழ்க் காம நீத்த பாலினானும் எனக்கூறுதலான், அதிலடங்கும் பிறர்மனை நயவாமையைத் தனித்தொரு துறையாக் குதலிற் சிறப்பில்லை. இன்னும், அப்பாடங்கொள்ளின், இறைமைச் செல்வத்தை இகழ்ந்து துறக்கும் உள்ள வெறுக்கையைக் குறிக்கும் வாகைத்துறை இல்லாதொழியும். ஆகையால், இங்குக் கட்டில் நீத்தபால் எனும் சிறத்தலறிக.) (12) எட்டு வகை நுதலிய அவையத்தானும் = எண்வகைச் சால்புகளும் நிறைந்தார் மன்றத்து மதிக்கப் பெறுஞ் சிறப்பும்; குறிப்பு: இது அவையத்து முந்தியிருக்கும் வீறு கூறுகிறது. அத்தகைய சால்புகள்: ஒழுக்கம், கல்வி, குடிப்பிறப்பு, வாய்மை, தூய்மை, நடுவுநிலை, அவாவின்மை, அழுக்காறாமை எனப்படுதல் நூலானறிந்தது. செய்யுள்: குடிப்பிறப் புடுத்துப், பனுவல் சூடி, விழுப்பே ரொழுக்கம் பூண்டு, காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித், தூய்மையின் காத லின்பத்துட் டங்கித், தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி, வைகலும் அழுக்கா றின்மை, அவாவின்மை, யென்றாங் கிருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை. (ஆசிரியமாலை) (13) கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் = வரையறுத்த ஒழுக்கங்கருதும் உரனும்; குறிப்பு: கண்ணுமை, கண்ணுதல் அடியாகப் பிறந்த பண்புப் பெயர்; (கண்ணுதல் = கருதல்) ஆளுதல் ஆண்மை எனவும், புகழ்தல் புகழ்மை எனவும் வருதல் போன்றது. விருப்பைவென்று அறிவாற் புலனைக் கட்டுப்படுத்துவதே ஒழுக்கமாதலின், கட்டமை ஒழுக்க மெனப்பட்டது. அது வாகையாதல், ஐந்தடக்கலாற்றின், ஐந்தவித்தானாற்றல் எனப் புலனடக்குதல் அரிய திறலாகக் கூறப்படுதலானறியலாம். (இனி, கட்டமை என்பதற்கு அறநூல் விதித்த எனப் பொருள்கூறித், தரும சாத்திரங்களுக்குச் சார்வபௌம ஆதிக்கமளிப்பர் சிலர்; தரும நூல்கள் மக்களுக்குத் தம்முள் மாறுபட விதிப்பன வாதலானும், அவற்றை எழுதியோ ராணைக்கு உளச்சான்றுக்கு எதிராக எல்லாரும் கட்டுப்படுதல் இயல்பன்றா தலானும், ஒருகால் அவ்வகைக் கட்டுப்பாடு வற்புறுத்தப்படுமேல் அது வாகையாகாமையானும், அது பொருளன்மையறிக.) செய்யுள்: (1) ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (குறள். 25) செய்யுள்: (2) பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். (குறள். 6) (14) இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் = இடை யறவின்றி வள்ளிய புகழை வளர்க்கும் கொடையும். செய்யுள்: (1) ஒருநாட் செல்லலம், இருநாட் செல்லலம், பலநாட் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ, அணிபூ ணணிந்த யானை யியறே ரதியமான்; பரிசில் பெறூஉங் காலம் நீட்டினும் நீட்டா தாயினும், யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக், கையகத் ததுவே, பொய்யா காதே; அருந்தே மாந்த நெஞ்சம் வருந்த வேண்டா, வாழ்கவவன் தாளே. (புறம். 101) செய்யுள்: (2) கடந்தடு தானை மூவிரும் கூடி உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியு முளமே குன்று முண்டுநீர் பாடினிர் செலினே. (புறம். 110) செய்யுள்: (3) ஈயென இரத்த லிழிந்தன்று, அதனெதிர் ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று, கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன்று, அதனெதிர் கொள்ளே னென்றல் அதனினு முயர்ந்தன்று, தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே; ஆவு மாவுஞ் சென்றுணக் கலக்கிச் சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும், உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும் புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை உள்ளிச் சென்றோர்ப் பழியலர், அதனாற் புலவேன், வாழியர் ஓரி! விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே (புறம். 204) (15) பிழைத்தோர்த் தாங்குங் காவலானும் = தவறிழைத் தோரைப் பொறுக்கும் ஏமமும்; செய்யுள்: (1) நிலமிசை வாழ்நர் அலமரல் தீர எனத் தொடங்கும் தாமப்பல்கண்ணனார் புறப்பாட்டில் கீழ்வரு மடிகள் இத்துறை குறிக்கும். நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவா யென்னினும், நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே, தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்ப! காட்டினை, ஆகலின், யானே பிழைத்தனென்; சிறக்க நின்னாயுள், மிக்கவரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே. (புறம். 43) செய்யுள்: (2) கருத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழால்; - ஒறுத்தாற்றின் வானோங் குயர்வரை வெற்ப பயமின்றே தானோன் றிடவருஞ் சால்பு. (பழமொழி 19) செய்யுள்: (3) மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியால் வென்று விடல். (குறள். 158) (இதில், மிகுதி = செருக்கு, தகுதி = பொறுமை; மிக்கவை = தவறுகள்,) (16) பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் = மெய்ப் பொருள் பற்றிய உள்ளப்பரிசும்; செய்யுள்: முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும் நுண்ணுற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனின் றவர். (திரிகடுகம். 35) இனி, (1) ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. (குறள். 354) (2) கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. (குறள். 356) எனவரும் வள்ளுவர் குறள்களு மித்துறையாகும். (17) அருளொடு புணர்ந்த அகற்சியானும் = யார் மாட்டும் விரிந்து பெருகும் அருளொடு கூடிய துறவும். குறிப்பு: கடனாற்றும் முயற்சிக்கஞ்சித் தனக்கொழிவு தேடும் போலித்துறவை விலக்கி, சுரந்து எல்லார் மாட்டும் பரந்து பயன் தரும் அகன்ற அன்பாற் பிறர்க்கென முயலும் மெய்த்துறவின் வீறே ஈண்டுக் கூறக் கருதலின், வாளா அகற்சி என்னாது அருளொடு புணர்ந்த என்றடையொடு தொடர்ந்து சுட்டப்பட்டது. செய்யுள்: (1) மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. (குறள். 244) செய்யுள்: (2) உண்டா லம்ம இவ்வுலகம்; இந்திர ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே; முனிவிலர்; துஞ்சலு மிலர்பிற ரங்சுவ தஞ்சிப்; புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே. (புறம். 182) (18) காமநீத்த பாலினானும் = வெல்லற்கரிய காமத்தை வெறுத்து விலக்கு மருந்திறலும்; குறிப்பு : இது துறவன்று; இல்வாழ்ந்தும் காமம் கடியும் உரனுள்ளமுடைய பெரியார் உண்மையால், வேண்டியவெல்லாம் ஒருங்குவிடும் பெருந்துறவின் வேறாய், இருநிலை வாழ்வினு மொருதலைநிற்போரறமாகும். முற்றும் பற்று விடும் கருத்தை இதிற் புகுத்தின், மேற்குறித்த தீரத்துறக்கும் அகற்சி யுளடங்கிக் கூறியது கூறுங்குற்றமாய் முடியும். ஆதலின், மேலது துறவும், இத்துறை துறவறம் கருதாது காமம் கடியும் இருநிலைக்கும் பொதுவான உரனுள்ளப் பெருமையும் விளக்குதல் வெளிப்படை. செய்யுள்: (1) (1) இளையர் முதியர் எனவிருபால் பற்றி விளையு மறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தா னுளன். (பெரும்பொருள் விளக்கம்) (2) எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில். (குறள். 910) (இவ்வொன்பதும் மேற்கூறியாங்கு அறவகை வாகைத் துறைகளாகும்.) என்றிருபாற்பட்ட ஒன்பதிற்றுத்துறைத்தே = என வகைக்கு ஒன்பதாய் இருவகையிலெண்ணிய பதினெட்டுத் துறையுடையது வாகைத்திணை. குறிப்பு: பதினெட்டுத் துறைத்தே என்னாது, இருபாற்பட்ட ஒன்பதிற்றுத்துறைத்தே என்றார்; மேற்கூறியாங்கு முன் மறவகையி லொன்பதும் பின் அறவகையிலொன்பதுமாக வாகைத்திணை துறைகொள்ளும் எனற்கு. இனி, இத்திணைத்துறை பதினெட்டும் தன்மையால் இரு வேறு வகைப்படுதலின் அவற்றை ஒருசேர எண்ணுதலமையாதாதலின், இருபாற்பட்ட எனவும், வகைக்கு ஒன்பதேயாதல் குறிக்க ஒன்பதிற் றுத்துறைத்து எனவும் விளக் கினார் இந்நூலார். இதில் வரும் இன்னும் ஆனும் உரையசைகள்; பாங்கு பக்கம் என்பன இசை நிரப்பு; ஈற்றேகாரம் அசை. சூத்திரம்: 22 காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. கருத்து: இது, அகப் பெருந்திணைக்குக் காஞ்சித் திணை புறனா மென்பது சுட்டுகிறது. பொருள்: இதன் பொருள் வெளிப்படை. குறிப்பு: ஏகார மிரண்டில், முன்னது பிரிநிலை; மற்றது ஈற்றசை. பொறியவிக்கும் உரனின்றி இன்பம் விழைந்து மேவன செய் வார் காமவகை பெருந்திணையாவது போல, முயற்சி மேற்கொள்ளும் உரனின்றி நிலையாமை சொல்லி நெஞ்சழிய மன மடிவதே காஞ்சியாவதானும், இவ்விரண்டுக்கும் இடம் பொழு திரண்டும் வரையறை யின்மையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. சூத்திரம்: 23 பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. கருத்து: இது, காஞ்சித்திணையின் இயல் விளக்குகிறது. பொருள்: பாங்கருஞ் சிறப்பின் = ஒப்பற்ற மறுமையின் பத்துக்கு; பல்லாற்றானும் = பலவழியானும்; நில்லா வுலகம் புல்லிய நெறித்தே = நிலையற்ற உலகியலை யிகழும் முறையினை யுடையது (காஞ்சித்திணை). குறிப்பு: நெறித்து என்னும் வினைக்கேற்பக் கொண்ட பொருட்டொடர்பால் காஞ்சித்திணை என்னுமெழுவாய் மேற் சூத்திரத்திலிருந்து கொள்ளப்பட்டது. பாங்கருமை = ஒப்பின்மை, சிறப்பு வீடுபேறாம் மறுமையின்பமாதல், சிறப்பென்னும் செம் பொருள் காண்பதறிவு என்னுங் குறளானறிக. இன்னுருபு ஏதுப் பொருட்டு. பல்லாறு, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வநிலையாமை போல்வன கூறுதலாம். மதுரைக் காஞ்சி இதற்கு எடுத்துக் காட்டாகும். இனி, இந்நூலில் இத்திணைக்கு வகுக்கும் துறைகளெல்லாம், உலகியலை இகழ்வதற்கு மாறாக, அதைத்தழுவியே அமைந்திருப்பதால், அதற்கேற்பப் பொருள் கூறுவாருமுளர். அவர் கூறும் பொருளாவது: பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் = முறை சிறவாத பல துறையானும், நில்லா வுலகம் புல்லிய நெறித்தே= நிலையற்ற உலகியலைத் தழுவியது காஞ்சித் திணை. இவ்வுரைக்கு, பாங்கு முறைப் பொருட்டாகும்; அருஞ்சிறப்பு அருங்கேடன் என்பது போலச் சிறவாமை குறிக்கும். இப் பொருளுக்கு, இதையடுத்த சூத்திர உரையில் அவ்வத் துறைக்குக் காட்டும் பாட்டே போதியதாம். சூத்திரம்: 24 மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும், கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும், பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தி னானும், ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற் பேஎய் ஒம்பிய பேஎய்ப் பக்கமும், இன்னனென் றிரங்கிய மன்னை யானும், இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும், இன்னகை மனைவி பேஎய் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும், நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி யாஞ்சி யானும், நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும், முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ. ஈரைந் தாகு மென்ப; பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசல் மயக்கத் தானும், தாமே யேங்கிய தாங்கரும் பையுளும், கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும், நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும், கழிந்தோர் தேஎத் தழிபட ருறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும், காதலி யிழந்த தபுதார நிலையும், காதல னிழந்த தாபத நிலையும், நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலை நிலையும், மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பயந்த தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும், மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பிற் றுறையிரண் டுடைத்தே. கருத்து: இது, காஞ்சித்துறை விழுப்ப வகை பத்தும் விழும வகை பத்துமாக இருபதாமாறு கூறுகிறது. பொருள்: 1. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் = யார்க்கும் விலக்கொணாது இறுதிதரும் கூற்றினாற்றல் கூறும் பெருங்காஞ்சியும்; பல்சான்றீரே எனும் நரிவெரூஉத்தலையாரின் புறப்பாட்டில் பின்வரும் அடிகளில் மாற்றருங் கூற்றின் பெருமை சாற்றுதல் அறிக; (1) . . . . . . . . . . . . . . . . . . . . . கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ. (புறம். 195) (2) உடற்றுப் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட் டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக் குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர் (சிந்தாமணி 2620) 2. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் = இளமைகழிந்த முதியோர், மற்றையவர்க்கு அப்பரிசு சுட்டி யறிவுறுத்தும் முதுகாஞ்சியும்; இதற்குப் பாட்டு: யாணர் வரவின் மேனா ளீங்கிவன் இளமைச் செவ்வி நயந்த பேதையர் காத லுண்கண் வருபனி நீங்கி இன்னுந் துயில்கொண் டிலவே; . . . (ஆசிரியமாலை) 3. பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும் = தகுதியொடுபட்ட பரிசு கருதி வாய்த்த புண்ணைக் கிழித்து உயிர் துறக்கும் மறக்காஞ்சியும்; பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கி, ஆங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோன்; அந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ, வெண்குடை யரசுமலைந்து தாங்கிய களிறுபடி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே. இதில், முன் ஒருவன் இறந்து கல்லான நிலையைப் போரில் புண்பட்ட ஒருவன்கண்டு, யாக்கை நிலையாமையை நினைத்துத், தன் புண்ணைக் கிழித்து உயிர் துறந்த தறுகண்மை கூறப்படுதல் அறிக. 4. ஏமச் சுற்றமின்றிப் புண்ணோற் பேஎயோம்பிய பேஎய்ப் பக்கமும் = பேணும் சுற்றத்தா ரின்மையால் புண்பட்டவனைப் பேய்பேணும் பேய்க் காஞ்சியும்; புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - உண்ணும் உளையோரி யுட்க வுணர்வொடுசா யாத விளையோன் கிடந்த விடத்து. 5. இன்னனென் றிரங்கிய மன்னையானும் = இன்ன பரிசுடையா னென்று இறந்தபின் ஒருவனை அயலோர் பரிந்து கூறும் மன்னைக் காஞ்சியும். இளையோர் சூடார், வளையோர் கொய்யார், நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி யணியாள், ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. (புறம். 242) 6. இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும் = இது செய்யத் தவிர்ந்தால் இன்னவாக முடியக்கடவது எனக் கூறும் ஒப்பற்ற சிறப்புடை வஞ்சினக் காஞ்சியும்; மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத் தடங்காத் தானை வேந்த ருடங்கியைந் தென்னொடு பொருது மென்ப; அவரை ஆரம ரலறத் தாக்கித் தேரோ டவர்ப்புறங் காணே னாயின், சிறந்த பேரம ருண்க ணிவளினும் பிரிக; அறநிலை திரியா வன்பி னவையத்துத் திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக; மலிபுகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனு மன்னெயி லாந்தையு முரைசா லந்துவஞ் சாத்தனு மாத னழிசியும் வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறருங் கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த வின்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ? மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலி னொரீஇப்பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. (புறம். 71) 7. இன்னகை மனைவி பேஎய் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் = புண்பட்டோன் உளையாவாறு இனிய வாயில் நகை வாய்ந்துவரும் அவன் மனைவி அவனைப் பேய் நெருங்காமற் காத்துத் தொடவிடாத தொடாக்காஞ்சியும்; தீங்கனி யிரவமொடு வேம்பு மனைச்செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி யையவி சிதறி யாம்ப லூதி யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ, காதலந் தோழி! வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறி யுடைய நெடுந்தகை புண்ணே. (புறம். 281) 8. நீத்த கணவற் றீர்த்த வேலிற் பெயர்த்த மனைவி ஆஞ்சி யானும் = அவனுடலொடு தன்னையும் விட்டிறந்த கணவனை முடித்த வேலினால் அவன் மனைவி கண்டோ ரஞ்சுமாறு தன்னு யிரைப் போக்கிய ஆஞ்சிக்காஞ்சியும்; யானை தந்த முளிமர விறகிற் கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி மந்தி சீக்கு மணங்குடை முன்றிலி னீர்வார் கூந்த லிரும்புறந் தாழப் பேரஞர்க் கண்ணன் பெருங்காடு நோக்கித் தெருமரு மம்ம தானே தன்கொழுநன் முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச் சிறுநனி தமிய ளாயினும் இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே. (புறம். 247) 9. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடஞ்சிய மகட்பாலானும் = குடித்தொன்மையில் ஒவ்வா நிலையில் ஒத்தா னாகக் கருதி மகள்கொள்ளப் படையொடு வந்த மன்னனொடு தொல்குடி மகளைப் படுத்தலஞ்சி, அதை விலக்க அவள் தன்னையர் வந்தவனோடு தம்முயிரைப் பொருட்படுத்தாது பொரும் மகட் பாற்காஞ்சியும்; களிறணைப்பக் கலங்கின காஅ எனவரும் அடை நெடுங் கல்லியார் புறப்பாட்டில், வந்தோர் பலரே வம்ப வேந்தர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மைய னோக்கிற் றையலை நயந்தோர்; அளியர் தாமே; யிவள்தன்னை மாரே; செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த் தாயினும் மன்னோ என்னா வதுகொல் தானே பன்னெல் வேலிப் பணைநல் லூரே (புறம். 345) ஏர்பரந்த வயல் என்னும் குன்றூர்கிழார் மகனார் புறப் பாட்டும், (புறம். 338) கானக்காக்கை என்னும் அரிசில் கிழார் பாட்டும் (புறம். 342) மகட்பாற் காஞ்சித்துறையை விளக்குதல் உணர்க. 10. கொண்டோன் தலையொடு, முலையும் முகனும் சேர்த்தி, முடிந்த நிலையொடு தொகைஇ, ஈரைந்தாகுமென்ப = இறந்த தன்கணவன் தலையைத் தன் மார்பினும் முகத்தினும் அணைத்து அவனோடு மனைவி தானும் மாய்ந்த முதுகாஞ்சியொடு கூட்டி விழுப்பவகைக் காஞ்சித்துறை பத்தாகும் என்பர் புறநூற்புலவர் ஒருசாரார். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்றிவை சொல்லி யழுவாள் கணவன்றன் பொன்றுஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள, நின்றான் எழுந்து, நிறைமதி வாண்முகங் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற (சிலப்பதி. காதை 19. அடி 60-63) இனி, விழுமவகைக் காஞ்சித்துறை பத்தும் கூறுகிறார். அவை வருமாறு: 11. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றமாய்ந்த பூசன் மயக்கத்தானும் = மிகுந்த புகழொடு பொருதுமடிந்த குரிசிலொரு வனை வளைந்திரங்கும் சுற்றத்தார் அரற்றி ஓய்ந்த அழுகைக்குரலரவ மயக்கமாம் காஞ்சியும்; இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி. (தகடூர் யாத்திரை) பாடுநர்க் கீத்த என்னும் பொத்தியார் புறப்பாட்டும் இத்துறையே கூறும். 12. தாமே யேங்கிய தாங்கரும் பையுளும் = போரில் ஊறுபட்டு ஓய்ந்தோர் தாங்களே பொறுத்தற்கரிய வருத்தங் கொண்டு ஏங்கும் துன்பக் காஞ்சியும்; (பையுள் = துன்பம்) இதில் தாமே என்பதை மனைவியர்மேல் ஏற்றி வேறு பொருள் கூறுவாரும் உளர். அது பொருந்தாமை வெளிப்படை. குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினு மாளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபத மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை யீன்ம ரோவிவ் வுலகத் தானே (புறம். 74) 13. கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் = கொழுநனொடு மாய்ந்த மனைவியின் மீச்செலவைக்கண்டு வழிச்செல்வோர் இரங்கிக் கூறும் மூதானந்தக் காஞ்சியும்; (1) . . . . . . . . . . .கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே, தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி. (சிலப்பதி. காதை 20 அடி 77-81) இதில், கண்ணகி காட்டிய சான்றால் தான் குற்றமற்ற கோ வலனைக் கொல்வித்த தன்தவறுகண்டு நெடுஞ்செழியன் உயிர் துறக்க, அவன் பெருங்கோப்பெண்டும் அவனுக்குப் பின் இருக்கத் தரியாமல் உடன் உயிர்இழந்தது கூறும் மூதானந்தம் வருதல் காண்க. (2) ஒருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார்; - போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கு முடனே - யுலந்த துயிர். (புற - பொரு - வெ - மா.) 14. நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனி மகள் புலம்பிய முதுபாலையும் =மிகப்பெரிய சுரத்திடைக் கொழுநனை யிழந்து தனியளாய் மனைவி யரற்று முதுபாலைக் காஞ்சியும்; (1) என்றிறத் தவலங் கொள்ள லினியே வல்லார் கண்ணி யிளையர் திளைப்ப நகாஅ லெனவந்த மாறே யெழாநெற் பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின் வளையில் வறுங்கை யோச்சிக் கிளையு ளொய்வலோ கூறுநின் னுரையே. (புறம். 253) (2) ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே, யணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்கவல்லேன்; என்போற் பெருவிதிர்ப் புறுக, நின்னை யின்னா துற்ற வறனில் கூற்றே; நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே. (புறம். 255) கலஞ்செய்கோவே என்னும் புறப்பாட்டும் இத்துறை யேயாம். 15. கழிந்தோர் தேஎத்துக் கழிபடருறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் = மாய்ந்தோர்மாட்டு அவருக்காக மிகவருந்தி மற்றையோ ரிரங்கும் கையறுநிலைக்காஞ்சியும்; இளையோர் சூடார், வளையோர் கொய்யார், நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி யணியாள், ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. (புறம். 242) இதற்கு, கணவனொடு மனைவியரும் கழிந்துழி இறந்து படா தொழிந்த ஆயத்தாரும் விறலியரும் தனிப்படருழந்த செயலறு நிலைமை எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மற்ற மூதானந்தம் கையறுநிலைகளு ளடங்குதலின் ஈண்டுப் பொருந்தாமை யறிக. 16. காதலியிழந்த தபுதாரநிலையும் = அன்புடை மனைவியை யிழந்த கணவனது தபுதாரநிலைக் காஞ்சியும்; ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளி ரிழைநிலை நெகிழ்த்த மன்னற் கண்டிகும், கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புளர்த்து வோனே. (புறம். 251) குறிப்பு: தாரம்தபு என்பது தபுதாரம் என நிலைமாறி நின்றது; முன்றில் கடைப்புறம் என்பனபோல. அதனால் சொல்மாற்றி, தாரம்தபுநிலை = இல்லாளையிழந்த நிலை எனப் பொருள் கொள்ளற்பாற்று. தபுதல் = கெடுதல்; அதாவது இழவு. 17. காதலனிழந்த தாபதநிலை = காதற் கணவனையிழந்து தவிக்கும் மனைவிநிலை குறிக்கும் தபாதநிலைக் காஞ்சியும்; (1) அளிய தாமே சிறுவெள் ளாம்பல், இளைய மாகத் தழையா யினவே; இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணு மல்லிப் படூஉம் புல்லா யினவே (புறம். 248) (2) குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசி லிரவலர்த் தடுத்த வாயிற் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி யல்லி உணவின் மனைவியோ டினியே புல்லென் றனையால், வளங்கெழு திருநகர்! வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டு முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே (புறம். 250) 18. நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலைநிலையும் = மனைவி, இறந்த கணவனோடு ஈமமேறிப் பெருந்தீயிற் புகுவாள் இடைவிலக்குவார்க்குக் கூறும் பாலைக் காஞ்சியும்; பல்சான் றீரே! பல்சான் றீரே! செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே! யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியு முயவற் பெண்டிரே மல்லே மாதோ. பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம நுமக்கரி தாகுக தில்ல, வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பறு வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே 19. மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த தாய்தப வரூஉந் தலைப்பெயனிலையும் = பெருஞ்சிறப்பொடு களத்துப் பொருது மாய்ந்த மகனைப் படையிழிந்து மாறினன் எனப் பிறர் பழிகூறக் கேட்ட தாய், அன்னவனை யீன்றமைக்கு நாணித் தன்னுயிர்விட முனைந்து களஞ்சேருந் தலைப்பெய னிலைக்காஞ்சியும்; நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோண் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்று பலர்கூற, மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக், கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துளவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணு உ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே (புறம். 278) கடல்கிளர்ந் தன்ன என்னும் ஔவையார் புறப்பாட்டும் இத்துறையேயாம். இனி, மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயர எனப் பாடங்கொண்டு, சிறப்பழியப் புதல்வன் புறக்கிட எனப் பொருள் கூறி, அதற்குத் தகடூர் யாத்திரைப் பாட்டின் பகுதியை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். அது, தாயின் மூதின் மறம் பேணினும், மகனைப் புறக்கொடைப் பழி பூணவைப்பதால், அப்பாடத்தினும் புதல்வற் பயந்த என்ற இளம்பூரணர் பழம்பாடமே பொருட் சிறப்புடைத்து. 20. மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர் செலச் செல்லாக்காடு வாழ்த்தொடு = விரிந்த இடத்தையுடைய உலகத்து இயல்முறை நன்றாய் உணருமாறு பல்லோரும் மாய்ந்தொழியத் தான் ஒழியாது நிற்கும் புறங்காட்டை வாழ்த்தும் காஞ்சியுடன்; பனிப்பழுநிய பல்யாமத்து எனும் கதையங்கண்ணனார் புறப்பாட்டில், . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நாடென மொழிவோ ரவனாடென மொழிவோர், வேந்தென மொழிவோ ரவன்வேந்தென மொழிவோர், நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப எல்லார் புறனும் தான்கண் டுலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய்த் தன்புறம் காண்போர்க் காண்பறி யாதே. (புறம். 356) என்பது இத்துறை. நிறையருஞ் சிறப்பில் துறைஇரண்டுடைத்தே = நிரம்பிய அரிய சீருடை காஞ்சித் துறைகள் இருவகைக்தாம். குறிப்பு: இதில் ஆன் எல்லாம் அசை. ஏகாரம் ஈற்றசை; இசைநிரப்பெனினும் அமையும். முதலில் ஒருபத்தைக்கூறி, நிலையொடு தொகைஇ ஈரைந் தென்ப என எண் கொடுத்துப் பிரித்து நிறுத்தியதுடன், என்ப என முற்றுவினை பெய்து முடித்தலின் அது பிறர்கோள் கூறியதாகும். காஞ்சித்துறை அப்பத்தே என்பது அவர் காலத்து ஒருசாரார் கொள்கையாதலின், அவற்றைத் தொகுத்துத் தனிஎண் கொடுத்துப் பிரித்தார். அது தானுடன்படாப் பிறர்கோளெனற்கு என்ப எனப் படர்க்கை வினைமுற்றுப்பெய்து, பின் தம் துணிபு விளக்கி மற்றொரு பத்தும் சேர்த்துக் காஞ்சித்துறை இருவகையாய் இருபதாமென முடித்தார். இனி, முதல்பத்தை ஈரைந்தாகும் எனப்பிரித்து நிறுத்திய தால், பின்கூறிய பத்தையும் பத்தெனத் தொகுத்துச் சுட்டியேனும், அல்லது முன் பத்தோடு கூட்டி எண்ணித் துறை இருபதெனச் சுட்டியேனும், இறுதியில் மொத்தத்தொகை எண் கூறுதல் வேண்டும். ஈற்றடி, துறை ஈரைந்தே என்றேனும், அன்றித் துறை இரு வகைத்தே என்றேனும் முன் பாடம்இருந்து பின் அது சிதைந்து இருத்தல் கூடும் எனத் தோன்றுகிறது. இதில் பின்கூறிய துறை பத்தும் துன்பநிலை குறிப்பதால் இவை விழுமவகையாதல் வெளிப் படை, அதனால் விழுப்ப வகையாக முதற்கூறிய துறை வகை பத்தின் வேறாகும் பின்பத்தும் என்பது விளங்குகிறது. இத்தன்மை வேறுபாட்டால் இச்சூத்திரங்கூறும் காஞ்சித் துறை இருபதும் ஒருபடித்தாய் நிரல்பட எண்ணாமல் வகைக்குப் பத்தாய்ப் பிரித்துத் தொகுத்து இருவகைப்படுமெனத் தெரிக்கப்பட்டன. சூத்திரம்: 25 பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. கருத்து: இது பாடாண் திணைக்கூறுகள் அகத்தில் கைக்கிளைத் திணைக்குப் புறனாகும் எனவும், பாடாண் திணை எட்டுவகைப் படும் எனவும் கூறுகிறது. பொருள்: இதன் பொருள் வெளிப்படை. குறிப்பு: புறத்திணைகள் ஏழனுள் முன்ஆறும் கூறி முடிந்த தனாலும், எஞ்சியபாடாண் ஒன்றே இதிற் கூறப்படுதலானும், பிறவற்றுள் ஒவ்வொன்றைப் பிரித்துக் கூறிய முன் சூத்திரங்களிற் போலத் தானே என்னும் பிரிநிலைச் சொற்குறிப்பு ஈண்டு வேண்டாதாயிற்று. புறனே . . . . உடைத்தே, என்பவற்றின் ஏகாரம் அசை. மற்றத்திணைகள் தனக்கொரு தனிநிலை பெறாமல் பிறதிணைகளை நிலைக்களனாகக் கொண்டு ஏற்றவிடத்தவை ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாய் அமையுமதனியல் கருதிப், பாடாண் பகுதி எனச் சுட்டப்பட்டது. வெட்சிப்பாடாண், வஞ்சிப் பாடாண், உழிஞைப்பாடாண், தும்பைப்பாடாண், வாகைப்பாடாண், காஞ்சிப்பாடாண், புரைதீர் காமம் புல்லிய பாடாண் என்றெழு வகையிற் பாடாண் பிறத்தலின், அவ்வத் திணைப்பகுதி நீக்கிப் புகழ்ச்சிக்குரிய ஒவ்வொரு பகுதியே பாடாணா மென்பது விளங்கப் பாடாண் என்னாமற் பாடாண்பகுதி எனத் தெளிக்கப்பட்டது. பாடாண் வகை ஒவ்வொன்றினும் அத்திணைப் பகுதி பிரித்துப் பாடாண் பகுதியை ஆய்ந்தறிய வேண்டுதலின், நாடுங் காலை எனக் கூறிய குறிப்பும் தேர்தற்குரியது. நாலிரண் டெனக் குறிக்கப்பட்டவை, பாடாண்திணை வகைகள். அவற்றின் விளக்கம் பின் கொடுப் போரேத்தி எனும், சூத்திரத்தில் கூறுகிறார்; அதையடுத்துத் தாவினல்லிசை எனுஞ் சூத்திரத்தால் பாடாணின் துறைகளை விளக்குகிறார்; முன், உழிஞைக்கு முதலில் அதன் வகை கூறிய பிறகு அதன் துறைகளை விளக்கியது போலப் பாடாண் துறைகள் பின் எட்டிறந்தன கூறுதலானும், அவற்றை இதில் எட்டெனச் சுட்டுத லமையா தாகலானும், இத்திணை வகை எட்டே பின் விரிப்பதானும், இதில் எட்டு எனுமெண் துறைத் தொகை யென நச்சினார்க்கினியர் கொண்டது பொருந்தா தென்க. இனிப் புறத்திணை ஆறும், அன்பினைந்திணை. . . கைக்கிளையாம் அகத்திணைகள் இரண்டுமாகப் பாடாண் பிறக்கும் வகை எட்டெனினு மமையும். இனி, கைக்கிளையிற் காதற்சிறப்பு ஒருவர்க்கேயாவது போலப் பாடாண் சிறப்பும் பொதுமையின்றித் தகவுடையார் ஒருவருக்கே உரித்தாக வருதலானும், கைக்கிளையில் காதற் கூற்றுப் பாராட்டுந் தலைவன் மாட்டாவது போற் பாடாண் கூற்றும் புகழ்வோர்தம் பக்கலிலே யமைதலானும், இரண்டினுக்கும் நிலம் பொழுது வரையறை இன்மையானும், கைக்கிளையி லிழுக்கு நீக்கித் தருக்கியவே சொல்லி யின்புறுதல் போலப் பாடாணில் பழிதழுவாப் புகழ்மை யொன்றே பயில்வதானும் இருதிணையு மொருதலையாச் செந்திறமா யமைதலானும், பாடாண் கைக் கிளைக்குப் புறனாயிற்று. சூத்திரம்: 26 அமரர்கண் முடியு மறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்று மென்ப. கருத்து: இது, பாடாண் திணை இயல் விளக்குகிறது. பொருள்: அமரர்கண் முடியும் அறுவகையானும் = போர் மறவர் (அஃதாவது பொருநர்) பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சிமுதல் காஞ்சியீறான புறத்திணை வகையாறினும், (புரைதீர் காமம் புல்லிய வகையினும் குற்றமற்ற அகப்பகுதியில் அன்பளைந்த காதல் திணை வகையினும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப = அவ்வெழுவகைத் திணைகளுள் இயல்பாக இதற்கேற்புடைய ஒவ்வொன்றின் கூறே பாடாணாய் அமையும் என்று கூறுவர் புறநூற்புலவர்.) குறிப்பு: தனிநிலை பெறாமல், பிறதிணைகளை நிலைக் களனாகக் கொண்டு, அவ்வவற்றில் புகழ்மைக்கேற்ற பகுதியே பாடாணா யியையுமென்பதை மேற் சூத்திரத்தில் பாடாண் பகுதி எனச்சுட்டி, இதில் அதன் தன்மை தெளிய விளக்கப்பட்டது. மேற்கூறி முடித்த ஆறு புறத்திணைப் பகுதிகளிலும், அகத்திணை வகைகளுள் புகழ்மையொடு பொருந்தாப் பெருந்திணை போன்ற பழிபடும் இழி காமவகை விலக்கித் தூய காதற் பகுதிகளிலும், புகழ்மை பாராட்டுதற்கேற்ற கூறு பாடாண் எனப் பெறும். (பாடாண் = பெருமை, அஃதாவது பீடு) அவ்வத்திணைப் பொருளின் மேல் அதிற் சிறந்த ஒருவரின் புகழ் பாராட்டும் பகுதியளவே பாடாணாகும். சிறப்பெதுவும் புகழ்க்குரிய யாதாமோரொழுக்கம் பற்றியன்றி யமையாதாகலின், அச்சிறப்பின் புகழாம்பாடாணும் அவ்வத் திணைப்புறத்துப் பிறத்தலே இயல்பாகும். ஆதலின், பாடாண் பிற திணைகளின் சார்பாய்ப் புகழ்மைப் பொருட்டா யமைதல் வெளிப் படை. இனி, அகப்புறத் திணைகளனைத்தும் மக்கள் ஒழுக்கம் பற்றியவை யாதலின் பாடாணும் மக்கட்குரியதே யாதல் வேண்டு மாதலானும், பண்டைச் சான்றோர் பாடாண் பாட்டுக் களெல்லாம் மக்களில் தக்கார் மாண்புகழாகவே வருதலானும், சூத்திர வைப்பு முறையில் தொல்காப்பியரின் மாறாத நியமப்படி இது பாடாணினியல் விளக்கம் கூறவேண்டும் சூத்திரமாதலானும், சூத்திரச் சொற்போக்கால் தொல்காப்பியர் கருத்தறிதல் உரையற மாதலானும், சூத்திரச் செம்பொருளிதுவாதல் ஒருதலை. இனி, இச் சூத்திரச் சொற்பொருளை வைப்புமுறையில் இடத்திற் கியையக்கொள்ளாமல் முன்னுரைகாரர் முரண்படத் தத்தம் விருப்பின்படி வெவ்வேறாய்க் கூறுவர். அவருரை நெடு வழக்கால் புலவரை மருட்டுதலால், மெய்ப்பொருளறிய அவருரைப் பெற்றி யாராய்தலும் பொருத்தமாகும். இதற்கு இளம்பூரணர் உரையாவது: அமரர் கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப் படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும், குற்றந் தீர்ந்த (ஐந்திணை தழுவிய அகமான) காமத்தைப் பொருந்திய வகையினும், அவற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண்டிணையாதற்குப் பொருந்தும், என்பதே. கொடிநிலை முதலிய ஆறும், கடவுட்புகழ்ச்சியன்றிப் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல் என்ற இவ்விருவகை யானும் ஒருவனைப் புகழ்தலால் பாடாண் பாட்டாயிற்று என்பது இச்சூத்திரத்தின்கீழ் இளம்பூரணர் தரும் சிறப்புரையாகும். இனி, இதற்கு உரைகாணும் நச்சினார்க்கினியர் கூறுவது: முதற்கண், பாடாண்திணை தேவரும் மக்களும் என இருதிறந் தார்க்கே உரிய என்பார், இவ்விரண்டனுள் தேவர்பகுதி யிவை யென்பதுணர்த்துகிறது (இச்சூத்திரம்) என்று இச்சூத்திரக்கருத்தை வரைந்து கொள்ளுகின்றனர். பின்னர்த், தாம் வரைந்துகொண்ட கருத்துடன் பொருந்த, பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்துமுடியும் அறுமுறை வாழ்த்தின்கண்ணும், அத்தேவரிடத்தே உயர்ச்சிநீங்கிய பொருளைவேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக்கண்ணும், மேல் பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக்கொண்ட ஒன்றனுள் - தேவரும் மக்களும் எனப் பகுத்த இரண்டனுள் - தேவர்க்குரித்தாம் பகுதியெல்லாந்தொக்கு ஒருங்குவரும் என்று கூறுவார் ஆசிரியர் என்றவர் கூறினார். இதன் பிறகு தாம் கூறும் புதுப்பொருளைப் பொருத்திக்காட்ட வேண்டி விரிவுரையிற் பல வருவித்துக் கூறுவர். அவையிற்றுள் இங்குச்சில கூறுதும். அமரரான தேவர் பரவப்படுதலேயன்றி, முனிவரும் பார்ப் பாரும் ஆனிரையும் மழையும் முடியுடைவேந்தரும் உலகுமாக ஆறும் பரவப்படுங்கால் அப்பராவு தேவர்கண்ணே வந்து முடியு மென்பர். அன்றியும் பராவப் பெறுந் தேவரல்லா இவ்வாறும் சிறப்பு வகையால் அமரர் சாதிப்பால் என்றல் வேத முடிவு என ஓரமைதி காட்டுவர். இனி புரைதீர் காமம் புல்லியவகை என்பதில் புரையைக் குற்றமென்னாது அதற்கு மாறாய உயர்ச்சி யெனக் கொண்டு, உயர்ந்த மறுமைப்பயனாம் வீடுபேறு வேண்டாமல் இழிந்த இம்மைப்பயன்களை விரும்பித் தேவர்ப் பராவுதலை ஆசிரியர் புரைதீர் காமம் புல்லியதாகக் கூறினாரெனக் கொள்ள வைக்கின்றார். ஒன்றன் பகுதி ஒன்றும் என்றதற்கு உரித்தாம் பகுதியெல்லாம் தொக்கு ஒருங்குவரும் என்றுரை கூறுவர். இச்சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியர் கண்ட இப்பொருள் இளம்பூரணர் உரையோடு மாறுபடுவதுடன், தொல்காப்பியர் கருத்து ஆகாமையும் சிறிது சிந்திக்கத் தெளிவாகும். 1. முதலில், தாம் கருதிய ஆறுவகையினை இந் நூலார் யாண்டு எவ்வாறு சுட்டினாரென்பதை இரண்டு உரைகாரருமே விளக்கினாரிலர். தாம் கூறக்கருதிய தொகைப்பொருள் இவையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல், உரைப்பார் உரைக்கும் வகை யெல்லாம் சென்று அமையச் சூத்திரிப்பது இலக்கணநூல் நோக்குக்கும் தொல்காப்பியர் சொற்போக்குக்கும் பொருந்துவதன்று. இந்நூலார் தாமே வரையறை செய்திலரெனில், அஃது அவர் நூலைக் கற்பவரை மயங்க வைக்கவும் மாறு கூறவும் இடந்தரும் இழுக்காய் முடியும். அவர் கூறும் அறுவகையினை அவர் நூலிலிருந்தேகண்டு தெளியா மையானே, உரைகாரர் பலரும் பலவாறு தத்தம் மனம்போன வாறெல்லாம் மயங்கி மாறுபடக் கூறற்கிடனாயிற்று. இதனாலன்றே நச்சினார்க்கினியர் ஈங்கு அறுவகையினைப் பரவும் வகையாக்காமல் பரவப்படும் செயற்கைக் கடவுட் போலிகளாம் தேவர் - பார்ப்பார் - பசு - மழை - மன்னர் - உலகு என்றெண்ணினார். இதற்கு மாறாக இளம்பூரணர் ஈண்டு அறுவகையை வணங்கப் பெறும் பொருள்களாக்காமல் வணக்கவகைகள் ஆறெனக்கொண்டு, கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப்படை புகழ்தல் பரவல் என்று கூறுவர். கற்றுவல்ல இருபேருரைகாரர் இதற்கு இவ்வாறு வெவ்வேறு பொருள் தம்முள்முரணிக் கூறுவரேல், மற்றையோர் உண்மை துணிவதெப்படிக் கூடும்? இவ்வாறு பலரும் பலவாறு கூற இடம் வைத்துத் தெளிவின்றி மயங்குமாறு தொல்காப்பியர் சூத்திரியாரென்பது ஒருதலை. அவர் தேர்ந்து தெரிக்க நுதலிய பொருளை நுவலும் இச்சூத்திரத்து அறுவகைகளை அவர் நூலிற் கண்டு தெளிவதே கற்பவர்கடனாகும். 2. இனி, நச்சினார்க்கினியர் உரையில், நேரே பராவப்படும் பிறப்புவகையால் இயற்கைத் தேவராவார் வேறு; தேவராய்ப் பிறவாவிடினும் வைதிகர்வாய்ச் சிறப்பு வகையால் தாம் பெறும் வணக்கத்தை மெய்த்தேவர்பால் உய்க்கும் பொய்த்தெய்வப் போலிகள் வேறு ஆறு எனக் கூறுப்படுகிறது. எனவே, இவ்வுரை அசலும் படியுமான தெய்வப் பகுதிகளிற் சென்று சேரும் வணக்க வகையெல்லாம் ஒருங்கு தொகுத்து இச்சூத்திரங் கூறவேண்டுவது ஏழுவகையாகவும், இந்நூலார் சூத்திரத்தில் அறுவகையென மறந்து கூறினரெனத் தொல்காப்பியரைப் பழித்ததாகும். 3. இன்னும், இயற்கை வகைப் பிறவித்தேவரன்றியும், பராவு வெறியான மக்கள் தாமே விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் வாழ்த்துப்பெறும் செயற்கைப் பொய்த்தேவப் போலிகள் நச்சினார்க்கினியர் கூறுமாறு ஆறே எண்ணில் அமைவனவன்றே. புள், விலங்கு, ஊர்வன, யாறு, மலை, மரம், செடி, கொடியாகிய பொருள்களில் வாழ்த்துக்கடியப்படுவ தொன்றேனுமுண்டோ? பாம்பு, எலி, பருந்து, மயில், மாடு, ஆல், வேல், அரசு அனைத்தையும் நாளும் நம்மவர் வணங்கக் காண்கிறோம். இது நல்ல வழிபா டெனவே கருதப்படுகிறது. கீதையும் வேதமும் எப்பொருளுந் தெய்வமாகும், எதன் வணக்கமும் தெய்வத்தின்பாற்சென்று முடியும் என விளக்கியிருக்க, பசு பார்ப்பாராதி ஆறு மட்டுமே வழுத்தற்குரியன வென்பது பொருந்தாதன்றே. 4. இனி, வேதம் தமிழர் படிக்கொணாதாகவே, வேதமுடிவென உரைகாரர் கூறுவதெல்லாம் சரியெனத் தமிழ் கற்பார் கொள்ளவும், கொண்டு வாளா அமையவும் கடவரென நச்சினார்க்கினியர் கருதினர்போலும்! அவர் இங்குக் கூறிய அறுவகையினவே தேவர்க்காம் வணக்கம் பெறற்குரிய வென்று எந்த வேதம் எப்பகுதியிற் கூறியுள்ளது? இதற்குத் தெளிவான வேதவாசகங் காட்டும்வரை இதுவே வேத முடிவென்பது துணியப்படாததாகும். இனி, ஆறு புறத்திணைகளினடியாகப் பிறக்கும் பாடாண் பகுதிகளுக்குச் செய்யுள் வருமாறு: (1) வெட்சிப்பாடாண்: முனைப்புலத்துக் கஃதுடை முந்நிரைபோல் வேந்தூர் முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - எனைப்புலத்துச் சென்றதுநின் சீர்த்தி தேர்வளவ! தெவ்வர்போல் நன்று முண்டாக நமக்கு - பழைய பாட்டு. நச். உரைமேற்கோள். செருப்பிடைச் சிறுபரலன்னன் எனும் புறப்பாட்டும் (257), முட்காற்காரை எனும் உலோச்சனார் புறப்பாட்டும் (புறம். 258), நறவுந் தொடுமின் எனும் பேராலவாயர் பாட்டும் (புறம். 262), குயில்வாயன்ன எனும் ஔவை புறப்பாட்டும் (புறம். 268), வெட்சியின் வகையாம். (2) வஞ்சிப்பாடாண்: வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்தினார்க் கீத்துமென் றெண்ணுமோ - பாத்தி யுடைக்கல மான்றேர் உடனீத்தான் ஈத்த படைக்கலத்திற் சால பல - தகடூர். புறத்திரட்டு 1257 காலனும் காலம் பார்க்கும் எனும் கோவூர்கிழார் புறப் பாட்டும் (புறம். 41), வல்லாராயினும் எனும் காரிக்கண்ணனார் பாட்டும் (புறம். 57) வஞ்சிப்பாடாண் வகையாதலறிக. (3) உழிஞைப்பாடாண்: வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி யொதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசைப் பொறியு மடங்கினவால் ஆன்றோ ரடக்கம்போ லாங்கு. - பெரும்பொருள் விளக்கம், புறத்திரட்டு. 1329 இரும்பனை வெண்டோடு எனும் கோவூர் கிழார் பாட்டும் (புறம். 45), மணிதுணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி எனும் மோசி சாத்தனார் பாட்டும் (புறம். 272), நீரறவறியா எனும் காமக் கண்ணியார் பாட்டும் (புறம். 271) உழிஞைப் பாடாணாதல் காண்க. (4) தும்பைப்பாடாண்: இன்கடுங் கள்ளின் ஆமூ ராங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே, நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதில் லம்ம; பசித்துப் பணைமுயலும் யானை போல இருதலை யொசிய வெற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு நிலையே. (புறம். 80) யாவி ராயினும் கூழை தார்கொண் டியாம்பொருது மென்ற லோம்புமின்; ஓங்குதிறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர் பெருமகன் கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழவுமேம் பட்ட நற்போர் முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே (புறம். 88) (5) வாகைப்பாடாண்: நீர்மிகிற் சிறையு மில்லை; தீமிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலு மில்லை; வளிமிகின் வலியு மில்லை; ஒளிமிக் கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்; போரெதிர்ந்து கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே. அளியரோ அளியர்அவ னளியிழந் தோரே, நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த செம்புற் றீயல் போல ஒருபகல் வாழ்க்கைக் கலம்வரு வோரே (புறம். 51) இன்னும், இமிழ் கடல் வளைஇய எனும் குடபுலவியனார் பாட்டும் (புறம். 19) வாகைப் பாடாண் பகுதியாம். இரும்பனம் புடைய லீகை எனும் பரணர் பாட்டும் (பதிற்று. 42), வாங்கிரு மருப்பிற்றீந்தொடை எனும் கபிலர் பாட்டும் (பதிற்று. 66) ஒழுகுவண்ணச் செந்துறைப் பாடாணாதலறிக. (6) காஞ்சிப் பாடாண்: அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின் எந்தையு முடையே மெங் குன்றும் பிறர்கொளார்; இற்றைத் திங்க ளிவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தரெங் குன்றுங் கொண்டார், யாமெந்தையு மிலமே. (புறம் 112) இது, பாரியின் யாக்கைநிலையாமையும் செல்வநிலையாமையுங் கூறுதலிற் காஞ்சியாய்ப், பாரி புகழ் குறித்தமையாற் பாடாணு மாயிற்று. நோகோ யானே, தேய்கமா காலை, பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்? உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டல் மரீஇ யோனே. (புறம். 234) இன்னும், இவ்வெள்ளெருக்கிலையார் புறப்பாட்டில் வேள் எவ்வியின் கொடைவென்றி வேளாண்மையும் அவனிறந்தற்கிரங்கலு முடன்கூறலால், இது காஞ்சிப் பாடாணாயிற்று. (7) இனிப் புரைதீர் காமம் புல்லிய பாடாண், குற்றமற்ற கைக்கிளையினும் அன்பொத்த ஐந்திணை மருங்கினும் பிறக்கும். அதற்குச் செய்யுள்: (அ) கைக்கிளைப் பாடாண் வருமாறு: பெண்மை யுணராப் பெதும்பை யெழில்நறவம் கண்வாய் மடுத்துக் களித்தவளை யண்மித்தன் உள்ளத் துறைந்தொளிரு மோவியநீ மண்ணில்நடை கொள்ளத் தகுமோ கொடுமையெனும் வள்ளலையச் செல்வி சிரித்துச் சிறகிலேன் நான்பறக்குங் கல்வியறி யேனிரண்டு காலுடையே னாதலினால் மெல்ல நடக்கின்றேன் வெகுள்வானே னென்னவன் கல்லா மழலைசெவிக் கண்டென்னும் எல்லாநின் பொல்லாப் புருவச் சிலைகுனித்துப் போர்விழியால் கொல்லா தருளிக் கொடுமைதவிர்த் தில்லோடென் நெஞ்சத்தை யாள நினையாயோ நீயல்லால் தஞ்சமிலேன் என்றிரக்குந் தன்கொடைமை எஞ்சாதான் அஞ்சொற் பொருளை யறியாதவள் மயங்க அஞ்சிப் பொறுக்கவென வல்லாந்து கெஞ்சும் உலகாளு மன்னன் உளமார்ந்த காதல் விலகாத வேளாண்மை வேட்டு. (ஆ) இருவயினொத்த தூயகாதற் பாடாண்: வையக மலர்ந்த எனும் பெரும்குன்றூர்கிழாரின் பதிற்றுப் பத்துப் (88ஆம்) பாட்டில், . . . . . . . . . . . . . . . . . . . . சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ! மாகஞ் சுடர மாவிசும் புகக்கும் ஞாயிறு போல விளங்குதி பன்னாள். (பதிற்றுப் பத்து 88) எனவருவது ஒழுகுவண்ணச் செந்துறைப்பாடாண். நல்லிசைச் சேயிழை கணவ என்றதனால் புரைதீர் காமம் புல்லிய பாடாணா யிற்று. இதுவேபோல, மீன்வயினிற்ப எனும் (90ஆம்) பாட்டிலும் புரைதீர்காமம் புல்லிய பாடாண் வருதலறிக. அது வருமாறு: . . . . . . . . . . . . . . . . . . . . வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ! நின்னாள் திங்க ளனைய வாகத் திங்கள் யாண்டோ ரனைய வாக; யாண்டே ஊழி யனைய வாக; ஊழி வெள்ள வரம்பின வாகென வுள்ளிக் காண்கு வந்திசின் யானே, செருமிக் குருமென முழங்கு முரசிற் பெருநல் யானை யிறைகிழ வோயே. (பதிற்று. 90) சூத்திரம் : 27 வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும், முன்னோர் கூறிய குறிப்பினும், செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. கருத்து : இது, சில பாடாண் துறைகளில் இயற்பாவிடத்துப் பயிலும் இசைப்பா வகை கூறுகிறது. பொருள் : வழங்கியன் மருங்கில் = பல பிறதிணைப் பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து; வகைபட நிலைஇ = அதனதன் கூறுபட நின்று; பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் = வாழ்த்தலும் புகழ்தலும் நுதலுமிடத்தும்; முன்னோர் கூறிய குறிப்பினும் = பண்டைச் சான்றோர் செந்துறை வழக்குச் சுட்டும் பிறவிடத்தும்; செந்துறை வண்ணப்பகுதி வரைவின்று = இயற்பாக்களேயன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படா. குறிப்பு : ஆங்கு உரையசை. ஏகாரம் ஈற்றசை. உம்மைகள் எண் குறிப்பன. செந்துறையாவது, இசைத் தமிழ்ப்பாட்டு வகை. வண்ணம் என்பது இசைக்குரிய ஓசை வேறுபாடு. பிறதிணைகளிற் போலப் பாடாணிலும் இயற்பாக்கள் பெரிதும் வழங்கும்; எனில், இங்குக் குறித்த சில பாடாண் வகைகளுக்கு மட்டும் இயற்பாக்களே யன்றி இசைப்பா வண்ணக்கூறுகளும் வந்து பயில்வதுமுண்டு என்பதே இச்சூத்திரக் கருத்தாகும். அது வண்ணப்பகுதி வருமெனக் கூறாது, வரைவின்று என்றதனால் விளங்கும். பாடாணில் பெரிதும் பயில்வன இயற்பாக்களே; இசைப்பா வண்ணவகை சிறுவரவிற்றே; அதுவும், இங்குக் குறித்த வகைகளில் மட்டுமேயாம். இதில் முன்னோர் கூறிய குறிப்பென்றது, பரவலும் புகழ்தலு மல்லாப் பிறதுறைகளை; குறித்த அவ்விரண்டிலும் செந்துறை வண்ணம் சிறப்புடைத்தாகும்; மற்றைய பாடாண் துறைகளில் பண்டைச் சான்றோர் செந்துறைக்குரியவெனக் குறித்தவற்றிற்கே இசைப்பா வண்ணம் ஏற்புடைத்து; அல்லனவெல்லாம் இயற்பாக்களே ஏற்குமென்க. புகழ்ச்சிப்பாடாண் வகைக்கு ஒழுகுவண்ணச் செந்துறைப் பாவகை வருமாறு: அட்டா னானே குட்டுவன்; அடுதொறும் பெற்றா னாரே பரிசிலர் களிறே; வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவில் சொரிசுரை கவரும் நெய்வழி யுராலிற் பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல நன்னுதல் விறலிய ராடுந் தொன்னகர் வரைப்பனிவ னுரையா னாவே - பதிற்றுப்பத்து. செய்.47 இதில், செங்குட்டுவன் கொடையும் வென்றியும் கபிலர் புகழ்தலால், இவ்வொழுகுவண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று. இனி, வாழ்த்துப்பாடாண் வகைக்கு வண்ணச் செந்துறை வருமாறு: பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி ஒண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ! ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர் கொள்ளாப் பாடற் கெளிதினி னீயும் கல்லா வாய்மைய னிவனெனத் தத்தங் கைவ லிளையர் நேர்கை நிரைப்ப வணங்கிய சாயல் வணங்கா வாண்மை முனைசுடு கனையெரி யெரித்தலிற் பெரிதும் இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பொறி மார்ப!நின் பெயர்வா ழியரோ, நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தருந் தீநீர் விழவில் பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமோ டுண்டினிது நுகருந் தீம்புன லாய மாடுங் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே - பதிற்றுப்பத்து. செ. 48 செங்குட்டுவனைக் கபிலர் பாடிய இப்பாட்டில் பெருந்துறை மணலினும் பலவே, நின்பெயர் வாழியர் வருதலால், இது வாழ்த்துப்பாடாண்; அதனாலிதற்கு ஒழுகுவண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று. இனி, இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருந்தாப் புத்துரைக் குறிப்பைச் சிறிதாராய்வோம். வண்ணப் பகுதி என்னும் தமிழியற் றொடருக்குரிய செம்பொருளை யிகழ்ந்து விலக்கி, வண்ணம் எனுந் தமிழ்ச் சொல்லை வருணம் என்னும் வடசொல்லின் சிதைவாக் கொண்டனர். கொண்டு, வண்ணப்பகுதி வரைவின்று என்பதற்கு, வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கும் நிலைமை யின்று என்று பொருள் கூறினார். வண்ணமும் தொடையும் பொரீஇ யெண்ணா என்பவா கலானும், ஐவகை நிறத்தினையும் வண்ணமென்ப வாகலானும், வண்ணமென்பது இயற்சொல்; வருணமென்பது வடமொழித் திரிபு என்றவரே தெளிந்து கூறினர்; எனினும் சூத்திரத்தில் அத் தமிழ்ச் சொல்லுக்குரிய பொருளை விட்டுத், தாம் கருதிய ஆரிய மரபைப் புகுத்தி மரபு பிறழப் புத்துரை கூறுவர். இஃதவர் மனப்பாங்கிருந்தவாறு, பட்டாங்கே இயலடைவில் நிரல்நிரையே சொற்கிடந்தவாறு கண்ணழிப்பின், இயலடைவில் நிரல்நிரையே சொற்கிடந்தவாறு கண்ணழிப்பின், சூத்திரச் செம்பொருள் தெளித லெளிது. அதை விலக்கிச், சுண்ணம் மொழிமாற்று முதலிய அரிய மாட்டேற்று மத்துக்களால் கலக்கி, எவ்வாற்றானும் ஒவ்வாப் புதுப் பொருள் காணத் துணியு மிவரியல்பிற்கிது நல்ல சான்று. சொற் றொடர் சுட்டும் செம்பொருளை இவரே குறிக்கின்றார். அதைக் கொள்ளாமைக்கிவர் இரண்டேதுக்கள் கூறுகிறார். (1) இதிற் குறித்த பாடாண் பகுதிகள் செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல்பற்றி வரும் என்பது. . . கூறின், அவை ஈண்டுக்கூறல் மயங்கக் கூறலாம். (2) அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கோர் காரணமின்மை யானும் அங்ஙனங்கூறாரென்க. இவற்றுள் முதலது இடம்பற்றியது. செய்யுளியற்குரிய பாட்டுவகை புறத்திணை யியலிற் கூறுதல் பொருந்தாதென்பதே, சொற்பொருளை விட்டொழிக்க விரும்புதற்கிவர் கூறும் காரணம். இந்நூற்பா சுட்டும் பாடாண் பகுதிகள் செந்துறை மார்க்க வண்ணப்பகுதியாகிய பாடல்பற்றி வருமென்பதே நேரிய பொரு ளென்றுடன் படுகிறார். ஆனாலும், செய்யுளியற்குரிய பாவகை கூறுதலால், அச்சொற்பொருளைக் கொள்ளலாகாதென விலக்குகிறார். இஃதிவர் பொருந்தாப்புத்துரைக்குப் போதாதென்பதும், புறத்திணையியலில் சில பாடாண் பகுதிகளுக்குச் சிறந்துரிய பாவகை சுட்டுவது இயலமைவுடைத் தென்பதும், தொல்காப்பியர் மரபு முறை மறவார்க்கெளிதில் தெளிவாகும் அகப்புறத் திணை களுக்குப் பொதுவான பா வகைகள் செய்யுளியலில் விளக்குவதால், திணைதோறும் அவ்வதற்குப் பாவகை கூறல் மிகையாகும். அதனால் தொல்காப்பியர் பிற புறத்திணைகளுக்குப் பாவகை தனித் தனி கூறிற்றிலர். எனில், செந்துறைப் பாடல் பிறதிணைகளுக்குப் பயிலாமல், பாடாணிலும் யாண்டும் பயிலாமல், பரவலும் புகழ்ச்சியும் முன்னோர் குறிப்புமான பகுதிகளுக்கு மட்டுமே பொருந்துமாதலின், அப்பொருத்தம் இவ்வியலிற் பாடாண் பகுதியொடு சேர்த்துக் கூறப்பட்டது. இவ்வாறு, ஏற்ற சில பிறவிடத்தும் பொதுவின்றிச் சிறப்பாகத் தனியுரிமையுடைய பாவகைகளைச் செய்யுளியலிற் கூறாமல் ஆங்காங்கே சுட்டுவது இந்நூலாரியல்பாகும்; அகத்திணைகளுக்குக் கலியும் பரிபாடலும் உரிய என்றகத்திணை யியலிறுதியிலும், அதுவே போல உவமவகையான உள்ளுறையுவமத்தை உவமவியலில் கூறாமல், பெருந்திணை ஒழியப் பிற அகத்திணைகளுக்குச் சிறப்புரிமை கொள்ளுவதால் அகத்திணை யியலினும், அவ்வாறே உவமத்தொடர்புடைய இறைச்சி முதலிய சில உள்ளுறைகளைப் பொருளியலிலும் விரித்து விளக்குதலறிக. எனவே, தன்னளவில் தவறற்றதாய், எளிதிற் பொருள் தெளியப்படுவதாகும் நேரிய சொற்பொருளை, இதிற் குறித்த பாடாண் வகைக்குரிய பாவகையைச் செய்யுளியலிற் கூறாமல் இங்குத் தொடர்பு கருதிப் பாடாண் பகுதியொடு இவ்வியலிற் கூறியதால் மட்டும், மயக்கம் தருமென விலக்குமாறில்லை. எவ்வாறாயினும் பண்டைத் தமிழ்த் திணை விளக்கும் பகுதியில், யாதும் பொருத்தமற்ற ஆரியரின் சாதிபேத ஏத வேறுபாடுகளைப் புகுத்தும் நச்சினார்க்கினியர் முயற்சி வியப்பொடு வெறுப்பை விளைப்பதாகும். எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் எனும் தமிழ்மரபொடு முற்றுமுரணுவதும் பிறப்பால் என்றுமாறாத உயர்வு தாழ்வுடையதுமான ஆரிய வருண முறைகளைப் பழைய தமிழர் புறவொழுக்கம் கூறுமிடத்துப் புகுத்த முயன்றிடர்ப்படுவதினும், பிறதிணைகளுக்கும் பாடாணில் பிறபகுதிகளுக்கும் பயிலாத செந்துறை வண்ணப் பாடல் இதிற் குறித்த சில பாடாண் பகுதிகளுக்கு விலக்கில்லை என்பதைப் புறனடையாக இந்நூலாரிங்குத் தெளிக்கு முண்மை தேர்வதே பெரிதும் நயமும் பொருத்தமும் பயனுமுடைத்து. சூத்திரம் : 28 காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். கருத்து : இது, புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதி ஒரோவிடத்துக் கடவுளர்க்கும் விலக்கில்லை என்று கூறுகிறது. பொருள் : காமப் பகுதி = பாடாண் வகையுள் புரைதீர் காமம் புல்லியபகுதி; கடவுளும் = (மக்களே யன்றிக்) கடவுளரும்; ஏனோர் மருங்கினும் = (தம்முள்ளும்) பிறரோடும்; வரையார் = கடியமாட்டார்; என்மனார் புலவர் = என்று கூறுவர் புறநூற்புலவர். குறிப்பு : இதில், உம்மையிரண்டும் சிறப்புக் குறிப்பாம்: மக்கட்கன்றி, கடவுளர்க்கும் தூய காதற்பகுதி பாடாணாதற் குரித்து; காதலியல்கருதா மேதகு கடவுளரும் இருதலையும் தாமாயும் ஒருதலை மனிதரோடும் காதல் கூறும் நற்காமப்பகுதியும் பாடாண் வகையாதலுண்டு என்பது குறிப்பு. புரைதீர்காமப் பாடாண் மக்களோடு தேவரும் சேர்வதுண்டு என்பது இந்நூற்பாக் கருத்து. தூய காதல் பாடாணாதற்குரிய தென்பது, மேல் அமரர்கண் முடியும் என்ற சூத்திரத்தில் புரைதீர்காமம் புல்லிய வகையினும் என்றதனால் விளக்கப்பட்டது. காதல் பெரும்பாலும் இருமருங்கும் மக்கட்டலைவரிடை நிகழ்வதியல்பு. ஒரோவழி, ஒரு கடவுள் பிறகடவுளோடும் அன்றிக் கடவுளல்லாப் பிறமனிதரோடும் காதல் கொள்வதும், அது குற்றமற்றதாயின் ஏற்புழிப் பாடாண் பகுதியாவதும் செய்யுளில் கடிதலில்லை என்றதில் கூறப்படுகிறது. மேற்பாடாணியல் விளக்கத்தில் புரையுடைக் காமமே கடியப்பட்டுக் கடவுளர் தூய காதல் விலக்காமையாலிது வேண்டாமெனின், திணை யெல்லாம் மக்களொழுக்கம் பற்றிய வாதலின் பாடாண்திணை கடவுளர் தூயகாதல் பற்றி வருமோ எனும் ஐயமகற்ற இது வேண்டு மென்க. பொதுவாய்ப் பொருளெல்லாம் மக்களின் அகமும் புறமுமாய ஒழுக்கங்களைப்பற்றியனவாகும். புறத்திணை ஏழனுள் இறுதியான பாடாணும், மற்றைய போலவே மக்கட்டலைவர் மேற்றாய், ஒன்று அமர்கொள் மரபின் அறுபுறத்திணை யினடியாய் வரும். அன்றி அகவகையில் புரைதீர் காமம் புல்லிவரும். இவ்விரு வகையுள், மறனுடை மரபின் பாடாணாறும் மக்கண் மேற்றாய்ச் செய்யுளில் வழங்கும். புரைதீர் காமம் புல்லிய பாடாணும் மானிடத் தலை மக்கள்மாட்டு வருதலே பெருவழக்காம். சிறுவர விற்றாக, காதல் கண்ணிய பாடாண் கடவுளரிடையும் மக்களொடு கடவுள் காதல் கொள்ளுமிடத்தும் வருதலும் புலனெறி வழக்கில் விலக்கில்லை எனும் பழமரபு கூறப்பட்டது. கடவுள் கடவுளொடு காதல்கொண்ட புரைதீர் காமப் பாடாணுக்குச் செய்யுள் வருமாறு: . . . . . . . . . . . . . . . . . கண்ணொடு கண்ணினைக் கௌவி யொன்றையொன் றுண்ணவு நிலைபெறா துணர்வு மொன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித் தொருவரை யொருவர்தம் உள்ள மீர்த்தலால் வரிசிலை யண்ணலும் வாட்க ணங்கையும் இருவரு மாறிப்புக் கிதய மெய்தினார். மருங்கிலா நங்கையும் வசையி லையனும் ஒருங்கிய இரண்டுடற் குயிரொன் றாயினார், கருங்கடற் பள்ளியிற் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ - கம்பர் இராமாவதாரம், மிதிலைக்காட்சி, செய்யுள் 35,37,38 இப் பாட்டுக்களில், திருமாலும் இலக்குமியும் பாற்கடலை விட்டுப் பிரிந்துலகில் வந்துகூடிக் காதலால் கலந்த தூயகாமப் பாடாண்பகுதி பீடுபெறுதலறிக. இனி, கடவுள் மானிடர் மருங்கு காதலித்த பாடாண் பகுதி, முருகவேள் குறவள்ளியை மணந்த கதையாலறிக. . . . . . . . . . . . . . . . . ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரால் வள்ளியொடு நகையமர்ந் தன்றே (முருகாற்றுப்படை, அடி100 - 102) சூத்திரம் : 29 குழவி மருங்கினும் கிழவ தாகும். கருத்து : இது, புரைதீர்காமம் புல்லிய வகைத்தாய பாடாண் திணைப்பகுதி மிக்கிளஞ் சிறார்மாட்டும் சார்த்திப் பாடப்பெறு மென்று கூறுகிறது. பொருள்: குழவிமருங்கினும் = காமஞ்சாலாச் சிறாரிடத்தும்: கிழவதாகும் = புரைதீர்காமம் புல்லிய பாடாண் புலனெறி வழக்கிற் குரியதாகும். குறிப்பு : உம்மை சிறப்புக்குறிப்பது. காதற்செவ்வி கருத வொண்ணாப் பேதைப்பருவச் சிறார்மாட்டும் நற்காமப் பாடாண் திணை புலனெறிவழக்காற்றில் உரிமை கொள்ளும் என்பது கருத்து. காமவுணர்வு குழவிக்கின்றெனினும், அக்குழவி மாட்டுத் தூயகாதல் கொள்வாரன்புப் பெற்றி பற்றிய பாடாண் அக்குழவியர் மேல் சார்த்தி வருவதே இதிற் கூறப்படுவது. காமப்பருவமுடையார் சிறாரைக் காதலிக்குங் கைக்கிளைப் பாடாண் புரைதீர் காமம் புல்லிய பாடாணா யடங்கும் பெற்றிமேலே கூறினார்; அத் தூய காதலால் குழவியர்பாற் சாரும் பாடாண் பகுதியை இங்குக் கூறினார்; அதனாலிது கூறியது கூறலாகாது. இதற்குச் செய்யுள் வருமாறு: பொன்திகழ்தன் மார்பென் புறந்தோயச் சாய்ந்தென்கண் தன்காந்த ளாற்பொத்தித் தான்சிரிக்கும் முன்வந்தென் கன்னத்தை முத்திக் கழுத்தைக்கை யாற்றழுவும் என்னத்தன் என்வாழ் வினி இது, காமஞ்சாலா பெண்ணியலாள் அஃதுணரா ஆண்மகவை யன்புசெய்து பாராட்டும் பாடாணாகும். இனி, காமஞ்சாலா இளமையோள்வயின் காளைப் பருவத் தலைவன் தூய காதல் பாடாணாதற்குச் செய்யுள்: வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்தோள் பேரெழில் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற் காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற் கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரையு நுசுப்பினாய்! நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடிக்கை வீசினை, ஆருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள். உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக இளமையா லுணராதாய்! நின்தவ றில்லானும், களைஞரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்! . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் பொலங்குழாய்! மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவன் போல்வல்யான், நீபடு பழியே இதில், காமஞ்சாலாச் சிறுமிபாற் புரைதீர் காதல் கூர்ந்த தலைவன் அவள் இளமையும் உயிர் வௌவும் எழிலும் பாராட்டு தலால், இது காதற் பாடாணாயிற்று. இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருந்தாது. பிள்ளைத் தமிழ் போன்ற பிற்காலப் பிரபந்தப் பகுதிகளைக் குறிப்பதிச்சூத்திரம் என்பரவர். அது செய்யுளியலிலன்றி ஈண்டுக் கூறற்பாற்றன்மையானும், அத்தகைப் பிரபந்த வகைகள் தொல் காப்பியர் காலத்தின்மையானும், அது கருத்தன்மை வெளிப்படை; இளம்பூரணரவ்வாறு கொள்ளாமையறிக. சூத்திரம் : 30 ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான. கருத்து : இது, பாடாண் திணையில் தலைமக்கள் ஊரும் உயர்குடிப்பிறப்பும் பாராட்டற்குரியன என விளக்குகிறது. பொருள் : ஊரொடு தோற்றமும் = தலைமக்களின் ஊர்ச் சிறப்பும் உயர்குடிப்பிறப்பும்; உரித்தெனமொழிப = பாடாண் திணையில் பாராட்டுக்குரிய எனக்கூறுவர் புறநூற் புலவர்; வழக்கொடு சிவணிய வகைமையான = அப்பாராட்டு புலனெறி வழக்கொடு பொருந்தும் பகுதிகளில். குறிப்பு : ஒடு இரண்டில் முன்னது எண் குறிக்கும். பின்னது மூன்றாம் வேற்றுமையுருபு. இதில், அடி இரண்டும் ஒரு சூத்திரமாயமைதல் பொருளடை வாற்றெளிவாகும். காலத்தால் முந்திய இளம்பூரணரும் அவ்வாறே கொள்ளுதலால், அதுவே பழையபாடமாவது தேற்றம். இவற்றைப் பிரித்திருவேறு நூற்பாக்களாக்கிப் பொருந்தாப் புதுப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். தனித்துத் தன்னளவில் பின்னடி முடிந்த பொருளுதவாமை வெளிப்படை. புறத்திணை அல்லது பாடாண் வகை யனைத்திற்கும் பொதுவான புறனடை கூறுதல் கருத்தாயின், அவ்வகையனைத்துங் கூறியபின் னிறுதியிற் புறனடை கூறல் முறையாகும்; இன்னும் இதன் பின்னும் பாடாண் வகை கூறுவதால் ஈண்டிது பொதுப்புறனடையாகாது. அன்றியும், முதலடிக்கு இவர் கூறும் புதுப்பொருள் தமிழறமும் பழமரபும் அழியவரு மிழுக்காகும். ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண் திணைக்குரித்து எனக் கூசாது கூறுகிறார். பரத்தை ஒருத்தியே யன்றிப் பலரொடும் வாழ்வாரிருக் கலாம். அன்னாரும் அவ்வாழ்வை நாணாமல் ஊரறியக்காட்டி அதைப் பாராட்டும் உயரொழுக்கமாகக் கருதும் பேதைமைக் காளாகார். அவ்வளவு நாணற்ற கீழ்மக்கள் உளராயின், அவர் கயமையைப் பாடாண் திணைக்குரித்தெனப் புலவர் தலைவரான தொல்காப்பியர் கொள்ளார். அக்கயவர் வாழ்வு வரைவிலா மாணிழையார் மென்தோள் அளறாழும் புரையிலாப் பூரியராம் திருநீக்கப்பட்டார் தொடர்பாக வெறுக்கப்படுவதே தமிழற மரபாயிருக்க, அதைப் புலவர் புகழ்ந்துபாடும் பீடுசான்ற பாடாண் திணைப் பகுதியாக நச்சினார்க்கினியர் கூறத்துணிந்தது வியப்பாகும்: அத்துணிவு அவர் மதித்த ஒருசில பிற்காலப் போலிப்புலவர் செய்யுட் போக்கையும், அவர்காலக் கயவர் சிலர் வாழ்க்கையையும் நோக்கியவர் கொண்டார் போலும். சொற்றொடர் சுட்டும் செம்பொருளை விலக்குதற்கு அவர் கூறும் ஏதுக்கள் போதாமையும் வெளிப்படை. அதையுமாராய்வோம். இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பும் என்று பொருள் கூறின். (1) முன்னர் வண்ணப் பகுதி என்பதனால் பிறப்புப் பெறுதலானும், (2) மரபியற் கண்ணே ஊரும் பெயரும் என்னும் சூத்திரத்து ஊர் பெறுதலானும், இது கூறியது கூறலா மென்றுணர்க இவ்விரண்டேதுக்களும் பொருளற்றன. (1) முதலில் வண்ணப்பகுதி என்பது செந்துறைப்பாட்டின் இன்னோசை வண்ண வகையைச் சுட்டுவதன்றி, ஒருவர் பிறந்த வருணவகை குறியாமை வழங்கியல் மருங்கின் எனு மேற்சூத்திரக் குறிப்புரையில் விளக்கப்பட்டது. ஆண்டது பாடாண் தலை மக்களின் குலப்பிறப்பைச் சுட்டாமை ஒருதலை. அன்றியும், வருணம் பொதுவாக ஆரியநூற் சாதியாவதன்றி, ஒருவரின் உயர் குடிப்பிறப்பாகாது. பாடாணாதற்குத் தலைமக்களின் உயர்குடிப் பிறப்பே உரித்தாமன்றி, வாளா வருண வகை சுட்டல் போதாது. பிறப்பளவில் சிறப்புச் சொல்லி இறுமாக்கும் வருண வகை பழைய தமிழ்மரபு மன்று. ஆன்ற குடிப்பிறப்பே வேந்தவாம் பண்பாகத் தமிழறநூல் கூறும். ஆதலின், இதிற் பொலிவு சுட்டும் தோற்றச் சொல், பீடுடைய தலைமக்கள் பிறந்த குடிப்பெருமையைக் குறிப்ப தல்லால், வேதங் கூறும் சாதியைச் சுட்டாது. (2) இனி, ஊரும் பெயரும் எனு மரபியற் சூத்திரம் நுதலும் பொருளும் இடஇயைபும் வேறு; அச்சூத்திரமே இடைச்செருகல் என்பாருமுளர். இன்னும், பின் மரபியற்சூத்திரம் ஊர்குறிப்பதால் ஈண்டைக்கேற்ற ஊர் கொள்ளலாகாதெனின், ஆண்டுப் பெயரும் மரபியற் சூத்திரம் சுட்டுவதால் இங்கிப்பகுதியில் பெயர் குறிப்பதும் பிழையாதல் வேண்டும். அதற்குமாறாகப் பாடாண் தலைமக்களின் பெயர் கூறப்பெறுமென்பது இதையெடுத்து மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே எனக் கூறப்படுகிறது. ஆகவே, பாடாண் தலைவரின் ஊரும் உயர் குடிப்பிறப்பும் பெயருமே அத்திணைப் பகுதியில் கூறுதல் மரபென்பதே, இதுவும் இதையடுத்த பின் சூத்திரமும் விளக்கும் பொருளாதல் தேற்றமாகும். தலைமக்கள் அகத்திணைப் பகுதியில் சுட்டி யொருவர் பெயர் கொளப்பெறார் என விலக்கியதால், புறத்தில் புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதியில் அவர் ஊரும் குடிப்பிறப்பும் பெயரும் சுட்டுதல் விலக்கின் றென்பதை ஈண்டைக்கேற்ப இப்புறத்திணையியலில் இயையக் கூறினர் இந்நூலார். இதற்கிளம்பூரணர் உரையும் சிறவாது. ஊரொடு தோற்றம் என்பது, பேதை முதலாகப் பேரிளம் பெண்ணீறாக வருவது என்றவர் கூறினர். மலைகலங்கினு நிறை நிலைகலங்காத் தமிழ் மகளிரெல்லாம் ஓரேதிலனுலாவில் உயிரினும் சிறந்த தம் நாணினுஞ் சிறந்த கற்பிழந்து காமவெறி கொள்ள வைத்துப் பழிபிறங்கும் பிற்காலப் பிரபந்தங்களை அமைப்பதற்கு இப்பொருள் கொண்டார்போலும். நிறையுடைய பெண்டிர் பிறர் நெஞ்சு புகார், அதற்கு மாறாகத் தந்நெஞ்சிற் பிறரைப் புகுத்துவர் பெண்டிரெனும் புலனெறியைத் தொல்காப்பியர் நூலுட்காண முயல்வது சுடருள் இருள்காண்ப தாகும். ஊர் குறித்தல் உரித்தாகும் பாடாண் பாட்டு வருமாறு: அணியிழையார்க் காரணங் காகிமற் றந்நோய் தணிமருந்துந் தாமேயா மென்ப - மணிமிடைபூண் இம்மென் முழவி னெயிற்பட்டின நாடன் செம்மல் சிலைபொருத தோள் -சிறுபாணுரையீற்றுப் பழைய பாட்டு கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவேனேற் கூடலென்று - கூடல் இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும் பிழைப்பிற் பிழைபாக் கறிந்து -முத்தொள்ளாயிரம் 73 இனித்தோற்றம் அதாவது குடிப்பிறப்பினுயர்வுரித்தாகும் பாடாண் பாட்டு: பிணிகிடந் தார்க்கும் பிறந்தநாட் போல அணியிழை யஞ்ச வருமால் - மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து - முத்தொள்ளாயிரம் 95 வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இனையளாய் மூந்திலள் கொல்லோ - தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கலென் பாள் - முத்தொள்ளாயிரம் 77 இன்னும், விழுவிலெம் வீதியுள் மாறன் வருங்காற் றொழுதேனைத் தோணலமுங் கொண்டான் - இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூச லினி - முத்தொள்ளாயிரம் 54 எனவரும் காமப்பாடாண் வெண்பாவில், கொற்கை என்றூரும், மாறன் என்றுயர் குடிப்பிறப்பாந் தோற்றமும் ஒருங்குவருதலும் காண்க. சூத்திரம் : 31 மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. கருத்து : இது, புரைதீர்காமப் பாடாண் பகுதியிற் றலைமக்கள் பெயருங் கூறப்பெறு மரபுண்மை சுட்டுகிறது. பொருள் : மெய்ப்பெயர் = தலைமக்களின் உண்மைப் பெயரை; மருங்கில் வழியே வைத்தனர் = பாடாண் பகுதியில் நெறியாக அமைத்துக் கூறினர் புறநூற்புலவர். குறிப்பு : மருங்கு = பக்கம்; இங்கது பாடாண் பக்கம் குறிக்கும். அகத்திணைக்கு விலக்கப்பட்ட இயற்பெயர் காதற் பாடாண் புறத்திணையில் வருதல் புலனெறியாதலின், வழியே வைத்தனர் என விளக்கப்பட்டது. ஈற்றேகாரம் அசை. புறநூற் புலவர் எனுமெழுவாய் அவாய்நிலையாற் கொள்ளப்பட்டது. மெய்ப்பெயர் குறித்தற் குரித்தாம் பாடாண் பாட்டு: நெடுவரைச் சந்தன நெஞ்சங் குளிர்ப்பப் படுமடும் பாம்பேர் மருங்குல் - இடுகொடி ஓடிய மார்ப னுயர்நல் லியக்கோடன் சூடிய கண்ணி சுடும் - சிறுபாணுரையீற்றுப் பழைய பாட்டு சூத்திரம் : 32 கொடிநிலை காந்தள் வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. கருத்து : இது, திணைகள் மக்கள் ஒழுக்கங்குறித்தே வருமாயினும், பாடாண்வகையி லொருசில தலைமக்கள் பாராட்டுடன் கடவுட்பராவலும் தழுவிவருமரபு கூறுகிறது. பொருள் : கொடிநிலை, காந்தள், வள்ளி என்ற = கொடி நிலை காந்தள் வள்ளி என்னும் பெயருடைய; வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் = போர்த்துவக்கமாம் வசையற்ற வெட்சியின் மறங்கடைக் கூட்டிய சிறப்பு வகை மூன்றை முதலாகக் கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் = கடவுட் பரவுதலுடன் பொருந்திவரும். குறிப்பு : ஈற்றேகாரம் அசை. பொதுவாகப் பாராட்டு நுதலும் பாடாணின் சிறப்புவகை மூன்று, கடவுள் வாழ்த்தைத் தழுவிவருதல் குறிக்கக் கடவுள் வாழ்த்துக்கு ஒடுக்கொடுத் துரைக்கப்பட்டது. போரைத் தொடங்குந் திணை வெட்சி; அதன் பொதுவகை ஆகோள்; சிறப்பு வகைகளுள் பாடாணாய்க் கடவுள் வாழ்த்துக் கண்ணுவன இதிற் குறித்த மூன்றுமேயாதலின், முற்றும்மை கூட்டப்பட்டது. இதிற் குறித்த மூன்றும் தம்மளவில் வெட்சி வகைகள். அவற்றை முதலாகக் கொண்டுவரும் பாடாண்பகுதி மூன்றே கடவுள் வாழ்த்தொடுவருமெனற்கு, முதலன மூன்றும் என்று கூறப்பட்டது. அகரமுதல எழுத்தெல்லாம் என்றதுபோல, கடவுள் கண்ணிய பாடாண்வகை இதிற் குறித்த மூன்று முதலன எனக்கொள்க. முதலன ஈண்டுக் குறிப்பு வினை; முதலாக வுடைய, என விரியும். இனி, கொடிநிலை முதலிய மூன்றையு முதலன என்றது, அவை அமர்கொள் மரபுத்திணை ஏழில் முதலாய வெட்சியில் போர்த்தொடக்க முதலில் நடைபெறுவனவாதலின், என்பாரு முளர். வெட்சி வகையாய் இதிற் குறித்த கொடிநிலை முதலிய மூன்றும், அடுத்த சூத்திரம் கூறும் வஞ்சிவகைக் கொற்றவள்ளை ஒன்றும், இங்கு முறையே அவ்வத்திணையடியாய்ப் பிறக்கும் பாடாண் வகையையே குறிக்கும் என்பதை இளம்பூரணர் நச்சினார்க் கினியரிருவரும் கூறுகின்றனர். ஆனால், இதன் முதலடியில், கொடிநிலை கந்தழி வள்ளி என்றிருவரும் பாடம் கொண்டு, கந்தழிக்கு வெவ்வேறு பொருள் கூறுவர். கந்தழி என்றொன்றை எத்திணைக்கும் துறையாகத் தொல்காப்பியர் கூறிலர்; யாண்டு மதை அவர் விளக்கவுமில்லை. பழைய சான்றோர் செய்யுட் களிலும் இப் பெயருடைய புறத்துறை எதுவும் பயிலாமையானும், இனைத்தென விளக்காதெதனையும் வாளாபெயரளவில் சுட்டி மயங்கவைப்பது தொல்காப்பிய ரியல்பன்றாதலானும், இதில் கந்தழி என்ற பாடம் பொருந்தாமை வெளிப்படை. அன்றியும், இதில் கடவுள் கண்ணிய பாடாணாய் முடியுமெனக் குறித்த மூன்றும் மறனுடை மரபிற் போர் துவக்கும் புறவொழுக்காம் ஒரேதன்மைய வென விளங்க முதலன மூன்றும் என்றொரு நிரலில் சுட்டப்படுதலானும், அவற்றுள் கொடிநிலையும் வள்ளியும் போர்த் துவக்கத்தில் நிகழும் வெட்சி வகைகளாய் முன் விளக்கப் பட்டன வாதலானும், அவற்றுடன் பொருந்த ஒருங்கு சுட்டப்படும் மற்றொன்றுமவை போலவே (இங்கு விளக்காமல்) முன் விளக்கப் பட்ட போர்த்துவக்க வெட்சிவகையாதல் வேண்டு மாதலானும், இவ்வியலில் முன் வெட்சித்துறைகளுள் முதலில் முருகக் கடவுள் வாழ்த்துடன் போர் துவக்குவதாய் விளக்கப்பட்டது காந்தளா தலானும், அதை யிங்குச் சுட்டாது விட்டுக் கடவுள் வாழ்த்தொடு வரும் வெட்சிப் பாடாண் வகை முதலன மூன்றும் என முற்றும்மை கொடுத்து முடித்தது குன்றக்கூறலெனும் குற்றமாமாதலானும், கடவுள் வாழ்த்தொடு பாடாணாய் முடியும் வெட்சியல்லாப் பிறவஞ்சி வகையை இதன்பின் வேறு சூத்திரத்திற் கூறுதலாலிங்குச் சுட்டிய மூன்றும் வெட்சிவகையாதலே முறையாதலானும், அத்தகைய வெட்சிவகை காந்தள் என்றன்றிக் கந்தழியென முன் சுட்டப் பெறாமையானும், இதிற் கந்தழியிடத்தில் காந்தளே நிற்றற்கு அமைவுடையபாடமாதல் வேண்டும்; நாளடைவில் பொருட் பொருத்தங் கருதாமல் ஏடு பெயர்த்தெழுதும் பரிசால் அது சிதைந்து கந்தழியாகி, பிறகதன் பொருத்தமாராயா துரைகாரர் தத்தமக்குத் தோற்றியவாறு பொருளுரைக்க அப்பாடமே நிலைத்தது போலும். இயற்பொருத்தம் தேராமல் கண்டாங்குக் கந்தழிப்பாடம் கொண்டவுரைகாரரும், அவருரையால் மயங்கிய பிறரும், அதன் பொருளும் பொருத்தமும் தெளிந்து துணியமுடியாமல் தம்முள் மாறுபட்டு மறுகுவதொன்றே அப்பாடத் தியைபின்மையைத் தெளிப்பதாகும். இதை நச்சினார்க்கினியர் பாடாண் பரிசழித்து அருவான கடவுளாக்குவர்; அது பாடாண் புறத்துறையாகாமையை ஆன்றோர் பழைய செய்யுட்களில் ஆட்சியின்மை வலியுறுத்தும். இளம்பூரணர் கந்தழியியல்பை விளக்காமல் அன்றெறிந்தானு மெனும் வெண்பாமாலைப் பாட்டைக் காட்டியமைவர். அப்பாட்டு உழிஞை வகையாதலொன்றே. வெட்சிவகை குறிக்குமிங்கது பொருந்தாமை துணியப் போதிய சான்றாகும். இனி, (i) கொடிநிலை வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வருதற்குச் செய்யுள் வருமாறு: (1) புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக் கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும் போலும் - சிலப்பதிகாரம் - வேட்டுவவரி இதில், நிரைகருதிப் போதல் வெட்சியாதலும், அதற்குக் கொடியெடுத்து முன் செல்லுதல் கொடிநிலையாதலும் காண்க. (2) மாற்றார் நிரைகருதி மாறன் படைமறவர் கூற்றிற் கொதித்தெழுந்தார் கோமான்சீர் - போற்றிக் கயலுயர்த்திக் கொற்றவையைக் கைதொழுதார் தங்கோன் வியனுலகை வென்றாள்க வென்று. இதில், வெட்சிப் பாடாண் கடவுள் வாழ்த்தொடு மாறன் கயற் கொடிநிலை தழுவிவருதலறிக. (ii) வெட்சிக் காந்தள் பாடாணாதற்குச் செய்யுள்: வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீர் ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன்களம்; -அகம். 98 இதில், வெட்சி வகைக் காந்தளில் முருகக் கடவுள் வாழ்த்து வருதலறிக. இன்னும், கடம்பெறிந்து சூர்தடிந்த செவ்வேளின் கைவேல் மடம்பெரியள் சிற்றிடைச்சி வள்ளி - தடவிழிவேற் கஞ்சமகிழ் வோனைவெறி யாடி யயர்வோமால் பஞ்சவன்கோல் பாராள்க வென்று எனும் வெண்பாவில், முருகக் கடவுள் வாழ்த்தோடு வெட்சி வகைக் காந்தள் பாண்டியரின் பாடாணாய் வருதல் காண்க. (iii) இனி, முருகனைப் பெண்டிர் பாடிப்பரவும் வெட்சிவகை வள்ளி பாடாணாதற்குச் செய்யுள்: அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரகத்துத் தன்மறந் தாடுங் குமரன்முன் கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையார் ஏர்க்காடுங் காளை யிவன் -நச். உரை மேற்கோள் இதில், பெண்டிர் முருகனைப்பாடும் வள்ளி எனும் வெட்சித் துறை வருதலறிக. இனி, வள்ளி பாடாணாய் வருமாறு: பெருங்கட் சிறுகுறத்தி பின்மறுகும் சேயோன் அருங்குன்றம் பாடுதுநா மன்று - கருங்கடல்மேல் வேல்விடுத்த வேப்பந்தார் மாறன் தமிழ்வேந்தன் கோல்வளர வாழ்த்தெடுத்துக் கொண்டு இது, மகளிர் முருகனைப்பாடிப் பாண்டியனைப் புகழ்ந்து பரவுதலால், வள்ளிப் பாடாணாதலறிக. கொற்ற வள்ளை யோரிடத் தான. கருத்து: கடவுள் வாழ்த்துக் கண்ணிய பாடாணாகும் வெட்சிவகை மூன்றை மேற் சூத்திரம் குறித்து. இது, வஞ்சிவகைக் கொற்றவள்ளையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு பாடாணா மெனக் கூறுகிறது. பொருள் : வெளிப்படை. குறிப்பு : முன் சூத்திரம் சுட்டும் வெட்சி வகை மூன்றும் பாடாணாங்கால் எப்போதும் கடவுள் கண்ணியே வரும். அவை போலாது வஞ்சிவகைக் கொற்றவள்ளை பாடாணாங்கால் ஒரோவிடத்து மட்டும் கடவுள் வாழ்த்தைத் தழுவிவரும். எனவே, வள்ளை கடவுள் வாழ்த்தின்றி மக்கள் சீர்த்திமட்டுஞ் சுட்டிப் பாடாணாய் வரும் பெற்றிய தென்பது பெறப்படும். திணை வேறுபாட்டோடு இத்தன்மை வேறுபாடுடைமையாலும், வள்ளை மற்றவெட்சி வகை மூன்று போலப் போர்க்கு முன்னிகழாமல் தொடங்கியபின் நிகழ்வதாலுமவற்றோடு சேர்க்காமல் பிரித்திதனைத் தனி வேறு நூற்பாவில் விளக்க நேர்ந்தது. களிறு கடைஇய தாட் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையாற் கண்ணொளிர் வரூஉங் கவின்சா பத்து மாமறுத்து மலர்மார்பிற் றோல் பெயரிய எறுழ்முன் பின் எல்லையு மிரவு மெண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின், நல்ல இல்ல வாகுப, இயல்தேர் வளவ! தண்புனல் பரந்த பூசன்மண் மறுத்து மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்றிகழ் வைப்பிற் பிறரகன்றலை நாடே - புறம். 7 இது, வஞ்சிவகைக் கொற்றவள்ளை; கரிகாற் சோழன் போர்ச்செலவின் புகழும் அவன் பகைவர் நாடழிவின் பரிவுங் கூறுதலாற் கடவுள் கண்ணா வஞ்சிப் பாடாணாயிற்று. இனிக் கொற்றவள்ளை, கடவுள் கண்ணிய பாடாணாதற்குச் செய்யுள்: நேரார் நிலமழிய நீள்மதிலூர் தாமெரியப் போர்மேல் வழுதிபடை போவதற்குக் - கார்குறுதும் நெற்றி விழியோனை நேர்ந்தவன்றாள் பாடுதுநாம் கொற்றந் தரவுலக்கை கொண்டு இதில், கண்ணுதற் கடவுளை வாழ்த்திப் போர்மேற் செல்லும் பாண்டியன் தமிழ்ப் படையைப் பாராட்டி நெற்குறும் பெண்டிர் பாடுதலாலிது வள்ளைப் பாடாணாதலறிக. சூத்திரம் : 34 கொடுப்போ ரேத்திக் கொடார்ப் பழித்தலும், அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும், சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும், கண்படை கண்ணிய கண்படை நிலையும், கபிலை கண்ணிய வேள்வி நிலையும், வேலி னோக்கிய விளக்கு நிலையும், வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉம் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. கருத்து : இது, முன் பாடாண் பகுதி நாடுங்காலை நாலிரண்டுடைத்து எனச் சுட்டிய பாடாண் வகைப் பொருள் எட்டினியலும் பெயரும் கூறுகிறது. பொருள் : (1) கொடுப்போரேத்தி - கொடுக்கும் வள்ளல் களைப் புகழ்தலும். குறிப்பு: இதில் ஏத்தி எனுமெச்சத்தை ஏத்தல் வினை எனப் பெயராக்கி வேறு பிரித்தெண்ணல் வேண்டும்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்டதரசு எனுங் குறளில், ஐந்தெனும் எண் கருதிக் கற்றறிதலைக் கற்றலும் அறிதலுமாகப் பிரித்தெண்ணியதுபோல. இதற்குச் செய்யுள்: பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வார் செந்நாப் புலவர் பாரி ஒருவனு மல்லன்; மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே - புறம். 107 பொருள் : (2) கொடாஅர்ப் பழித்தலும் = பற்றுள்ளத்தால் ஈயாதிவறியாரை இகழ்தலும்; குறிப்பு : ஈயார் பழியும் ஈவோர் புகழாமாதலின், அதுவும் பாடாணாயிற்று. அதற்குச் செய்யுள்: பண்டும் பண்டும் பாடுந ருவப்ப விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற் கிழவன் சேட்புலம் படரி னிழையணிந்து புன்றலை மடப்பிடி பரிசி லாகப் பெண்டிரும் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க் கண்டீ ரக்கோ னாகலி னன்று முயங்க லான்றிசின் யானே; பொலந்தேர் நன்னன் மருக னன்றியும் நீயே முயங்கற் கொத்தனை மன்னே; வயங்குமொழிப் பாடுநற் கடைத்த கதவின் ஆடுமழை யணங்குசா லடுக்கம் பொழியுநு மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே - புறம்-151 இதில், ஈயா விச்சிக்கோவை யிகழ்ந்து ஈயும் கண்டீரக் கோவைப் புகழ்வதறிக. இரவலர்ப்புரவலை நீயுமல்லை எனவெளிமானைப்பழித்த இளஞ்சித்திரனார் புறப்பாட்டும் (162), ஒல்லுவதொல்லும் என்று நன்மாறனைப் பழித்த மூலங்கிழார் புறப்பாட்டும் (196) இவ்வகையின. பொருள் : (3) அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும் = நெருங்கிப் பொருந்திப் புகழும் இயன்மொழி வாழ்த்தென்னும் துறையும். குறிப்பு : உள்ளசால் புரைப்பது இயன்மொழி, பிற்காலத்திது மெய்க்கீர்த்தி எனப்பட்டது. இதற்குச் செய்யுள்: அ. ஒன்று நன்குடைய பிறர்குன்றம் என்றும் இரண்டு நன்குடைத்தே கொண்பெருங் கானம்; நச்சிச் சென்ற விரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கும், அஃதான்று நிறையருந் தானை வேந்தரைத் திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே - புறம். 156 இன்னும், குறத்தி மாட்டிய எனும் கபிலர் புறப்பாட்டும் (108) பாரியை அவரடுத்தூர்ந்தேத்தியதாம். ஆ இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்; பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்றவன் கைவண் மையே - புறம்.134 என்பதுமது. பொருள் : (4) சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும் = நெடுந்தொலை வழி நடந்த வருத்தம் நீங்கப் புரவலர் தலைக்கடைக் காவலரிடம் இரவலர் கூறும் கடைநிலையும்; குறிப்பு : இதில், ஆன் அசை. இதற்குச் செய்யுள்: வாயி லோயே! வாயி லோயே! வெள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம் உள்ளியது முடிக்கு முரணுடை யுள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க் கடையா வாயி லோயே! கடுமான் றோன்றல் நெடுமா னஞ்சி தன்னறி யலன்கொல்? என்னறி யலன்கொல்? அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறுந்தலை யுலகமு மன்றே; அதனாற் காவினெங் கலனே, சுருக்கினெங் கலப்பை, மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே, எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே - புறம். 206 பொருள் : (5) கண்படை கண்ணிய கண்படை நிலையும் = இரவலன் உறக்கங் கருதிக்கூறும் கண்படை நிலை எனுந்துறையும். அதற்குச் செய்யுள்: “ வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னி!நின் ஓவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர், களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே; உலகங் காவலர் பலர்விழித் திருப்ப வறிது துயில்கோடல் வேண்டுநின் பரிசில் மாக்களும் துயில்கா சிறிதே. (நச். உரைமேற்கோள்) பொருள் : (6) கபிலைகண்ணிய வேள்வி நிலையும் = கபிலைநிறஞ்சிறந்த ஆவைக்கருதிய வேள்வி நிலையும். குறிப்பு : இதில், கபிலை என்பது அந்நிறமுடைய பசுவுக்கு ஆகுபெயர். இதனை ஆக்கொடை என்பர் பழைய உரைகாரரிரு வரும். இதற்குச் செய்யுள்: நன்றாய்ந்த நீணிமிர்சடை - எனும் மூலங்கிழார் புறப்பாட்டில் (166) காடென்றா நாடென்றாங் கீரேழி னிடமுட்டாது நீர்நாண நெய்வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும், மண்ணாணப் புகழ்பரப்பியும், அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் திருந்தேந்துநிலை என்றும் காண்கதில் லம்ம. என வருவதிது. இதில், பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் காட்டுப்பசு ஏழுவகை நாட்டுப்பசு ஏழுவகையாகப் பதினாலு வகைப் பசுவால் வேட்டபுகழை மூலங்கிழார் குறித்தல் காண்க. இது பார்ப்பன வாகைப் பாடாண். பொருள் : (7) வேலினோக்கிய விளக்குநிலையும் = மறத்தால் காத்து அறத்தா லோச்சும் செங்கோல் மாட்சி விளங்கும் விளக்கு நிலை என்னுந் துறையும். குறிப்பு : இதில், ஓக்கிய என்பது ஓச்சிய என்பதன் மரூஉ. இனி, வேலைநோக்கிய விளக்குநிலை எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர். அதுவுமிப்பொருளே குறிப்பதாகும். இருளொழித்து ஒளியுதவும் விளக்குப் போல, நாட்டில் வேந்தர் வேலும் கோலும் தீதகற்றி நலம் தருவதை விளக்குந்துறை என்பது கருத்து. வேல் காவற்கும், கோல் முறை செய்தற்கும் ஆகுபெயர்கள். இதற்குச் செய்யுள் வருமாறு: இருமுந்நீர்க் குட்டமும் எனும் புறப்பாட்டில் (20) செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே . . . . . . . . . . . . . . . . . . . . . . பகைவ ருண்ணா அருமண் ணினையே . . . . . . . . . . . . . . . . . . . . . . அறந்துஞ்சுஞ் செங்கோ லையே; புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா ஏமக் காப்பினை எனவருவது இத்துறை. இன்னும் நெல்லுமுயிரன்றே எனும் மோசிகீரனார் பாட்டும் (புறம். 186), நாடா கொன்றோ? எனும் ஔவை புறப்பாட்டும் (187) இத்துறையே குறிப்பன. பொருள் : (8) வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் = வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, அவற்றுடன் ஒருங்கெண்ணப்பட்டு வரும் புறநிலை வாழ்த்து, எனும் வாழ்த்தியல் வகை மூன்றும்; கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் = (புரைதீர் செந்திறக்) கைக்கிளை வகையாய்ப் பாடாணாவனவோடுஞ் சேரக்கூட்டி, முன்னேழும்போற் றனிநிலையின்றி இனம்தொக்கு வரும் தொகைப் பரிசாலொத்த இந் நான்கும்; உள என மொழிப = முன்னேழோடும் சேர்த்தெட்டாவது பாடாண் வகையாய் எண்ணுதற்குள்ளன என்பர் புறநூற்புலவர். குறிப்பு : இந் நூற்பாவில் வரும் உம்மைகள் எல்லாம் எண் குறிப்பன. செய்யுளியலில் புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ எனத் திறநிலை மூன்றும் சேர்த்தெண்ணப் பெறுவதையும், கைக்கிளைச் செய்யுள், செவியறி, வாயுறை, புறநிலை, என்றிவை தொகுநிலை என்றொரு பரிசாய்ச் சேர்ந்து வருவதையும் செய்யுளி யலிற்கண்டு தெளிக. இந்நான்கும் ஒருங்கே தொகுநிலைகளா வதானும், ஒரு பரிசாய்ப் பாடாணாதற் குரியவையாதலானும், அவற்றை ஒருங்கே கூட்டி எட்டாவது வகையாதிலெண்ணப் பட்டது. இதற்குமாறா யிவற்றைப் பிரித்துத் தனித் தனியே நான்காக்கி, ஏத்தலையும் பழித்தலையும் ஒன்றாக்கி, முன்கூறிய ஆறனோடே பத்தாய்ப் பாடாண் திணைக்குரிய துறைகள் உள என்பர் நச்சினார்க்கினியர். பாடாண் துறைகள் இதற்கடுத்த நூற்பாவில் கூறப்பெறுவதாலும், மற்றப் புறத்திணைகளுக்குரிய துறைகளையெல்லாம் சேர்த்தொவ்வொரு நூற்பாவிலமைப்பதும், வெட்சி, உழிஞை போன்ற சில திணைகளின் சிறப்புவகைகளை மட்டும் வேறொரு சூத்திரமாக்குவதும் தொல்காப்பியர் கொண்டாளு முறையாதலாலும், இதில் கூறுபவை பாடாண்திணையின் சிறப்பு வகைகளன்றித் துறைகளாகாமை தெளிவாகும். இன்னும், பாடாண் நாடுங்காலை நாலிரண்டு (சிறப்பு வகை) யுடைத்தென முன்னே எண் கொடுத்துத் தெளியக் கூறியதாலும், இங்கு முதலில் ஏழைத் தனித்தனி எண்ணிவிட்டு இறுதியிலொருபரிசான இந்நான்கை உளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் உள எனப்பிரித்து வேறு கூறியதாலும், இது பாடாணின் சிறப்பு வகை எட்டையே சுட்டுவது தேற்றமாகும். ஏத்தலும் பழித்தலும் வெவ்வேறு பரிசுடைமை மேற்காட்டிய சான்றோர் செய்யுட்களாலறிவதாலும் அது பொருந்தாமை தெளிவாகும். இன்னும் முன் நாலிரண்டுடைத்து என்பதைத் திணை வகையன்றித் துறைகளையே சுட்டுவதாய்க் கொள்ளின், இதிலும் இதையடுத்த சூத்திரத்தும் முறையே கூறப் பெறுவன தனித்தனியே எட்டிறந்தனவாமாதலானும் அது பொருந்தாமை ஒருதலை. அதனாலுமது தொல்காப்பியர் கருத்தாகாது. இனி (1) வாயுறை வாழ்த்து, பாடாணாதற்குச் செய்யுள் வருமாறு: எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும! நீயோ ராகலின் நின்னொனறு மொழிவல்; அருளு மன்பு நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொ டொன்றாது, காவல் குழவி கொள்பவரி னோம்புமதி; அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே - புறம். 5 (2) செவியறிவுறூஉ பாடாணாய் வருமாறு : வடாஅது பனிபடு நெடுவரை எனும் காரிகிழார் புறப்பாட்டில், பணியிய ரத்தைநின் குடையே, முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே; இறைஞ்சுக பெருமநின் சென்னி, சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை யெதிரே; வாடுக இறைவநின் கண்ணி, ஒன்னார் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே; செலீஇய ரத்தைநின் வெகுளி, வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே; ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னுக பெருமநீ நிலமிசை யானே. - புறம். 6 (3) புறநிலை வாழ்த்துப் பாடாண் செய்யுள்: (அ) திங்க ளிளங்கதிர்போற் றென்றிங்க ளூர்த்தேவன் மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து - திங்கட் கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப நிலைபெற்று வாழியரோ நீ - பழைய பாட்டு (ஆ) இமையா முக்க ணிலங்குசுடர் பயந்த உமையொரு பாகத் தொருவன் காப்பநின் பல்கிளைச் சுற்றமொடு நல்லிதி னந்தி நீபல வாழிய, வாய்வாட் சென்னி! நின் னொருகுடை வரைப்பி னீழல் பெற்றுக் கிடந்த வெழுகட னாப்பண் அகலிரு விசும்பின் மீனினும் பலவே. -சூத். 422 நச். உரைமேற்கோள் (4) கைக்கிளைப் பாடாணுக்குச் செய்யுள்: (அ) இனத்தோ டினஞ்சேரு மென்னுஞ்சொ லுண்மை மனத்துறைக்க வைத்தாய் மடவோய் - பனைத்தோணின் கண்ணிருவேல் கண்டதுமென் கைவேல் கழலுமெனின் எண்ணுவதென் நீயருளா யேல் (ஆ) நைவாரை நல்லார் நலிவரோ? நாளுமருள் செய்வார், சிரியார் சிறியார்போல்; - தெய்வ எழிலோய்! தொழுதேற் கிரங்குவதுன் பண்பின் வழியால் மறவாயென் மாட்டு இவ்வெண்பாக்களில், காமஞ்சாலா இளமையோள்வயிற் காதல்கொண்ட தலைவன் அவளிளமையு மழகும் பாராட்டுதலாலிவை பாடாணாதலறிக. சூத்திரம் : 35 தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும், கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும், சிறந்த நாளணி செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும், நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும், சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும், மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும், பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும், பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயிற் றோன்றும் இருவகை விடையும், அச்சமும் உவகையும் எச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலங் கண்ணிய ஓம்படை யுளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் காலம் மூன்றொடு கண்ணிய வருமே. கருத்து : இது, பாடாண்துறை கூறுகிறது. பொருள் : (1) கிடந்தோர்க்குத் தாவினல்லிசை கருதிய சூதரேத்திய துயிலெடை நிலையும் = துயிலும் புரவலர்க்குப் புரைபடா அவர் நல்ல புகழைக் கருதக் கட்டியங் கூறுவோர் எடுத்துரைக்கும் துயிலெடை என்னும் பள்ளி எழுச்சியும்; அதற்குச் செய்யுள்: கானம் பொருந்திய கயவாய் மகளிரின் யானுறுந் துயரம் நந்திய பானாள் இமையாக் கண்ணோ டமையாக் காத்தநின் மூதில் முதல்வன் துயில்கொண் டாங்குப் போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ சேக்கை வளர்ந்தனை பெரும! தாக்கிய வண்கை யவுண னுயிர்செல வாங்கவ னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய வாடா வஞ்சி மலைந்த சென்னிப் போரடு தானைப் பொலந்தேர் வளவ! நின்றுயி லெழுமதி நீயும் ஒன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே - நச். உரைமேற்கோள் (2) கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் = கூத்தர் முதலிய நால்வகை இரவலரும். (கூத்தர், பிறரொப்புக் கருதாது, பேசாமல் பாடாமல் மெய்ப் பாட்டால் அவிநயித்தாடுபவர். பாணர் இசை பாடுவோர்; இவர்தம் பாட்டும் கையாளுமிசைக் கருவியுங்கருதி, இசைப் பாணர் - யாழ்ப்பாணர் - துடிப்பாணர் அதாவது மண்டைப்பாணர் எனப் பலதிறப்படுவர்; யாழ்ப்பாணர் தம் யாழ்பற்றிச் சீறியாழ்ப் பாணர் அல்லது சிறுபாணர் - பேரியாழ்ப்பாணர் அல்லது பெரும்பாணர் என்றிருவகையினராவர். இனி, பொருநராவார் நாடகத்தில் குறித்த ஒருவரைப் போல நடிப்பவர். (பொருந் = ஒப்பு). விறலி, இசைக்கேற்ப ஆடுபவள் (விறல் = உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டுந் திறன். அத்திறலுடையார் விறலியர்). ஆற்றிடைக்காட்சி உறழத்தோன்றிப் பெற்றபெருவளம் பெறாஅர்க்கறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் = (பரிசில் பெற்று மீளுமொருவன் தன்னெதிரே பரிசில் விரும்பித் தரும்புரவலரைத் தேடிவரும் இரவலனுக்கு) வழியிடையில் தான் பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை மற்றவனுக்குத் தெரிவித்துத், தனக்களித்த புரவலன்பாற் சென்று பெறச்சொல்லும் பகுதியும்; இதில், கூத்தராற்றுப்படைக்கு மலைபடுகடாமும், பாணாற்றுப் படைக்குச் சிறுபாண் - பெரும்பாண்பாட்டுக்களும், பொருநராற்றுப் படைக்கு முடத்தாமக்கண்ணியார் கரிகாலனைப் பாடிய பொரு நராற்றுப்படைச் செய்யுளும், விறலியாற்றுப்படைக்குப் புறநானூற்று 105, 33ஆம் பாட்டுக்களும் எடுத்துக்காட்டாகும். (அ) கூத்தராற்றுப்படைக்குச் செய்யுள்: வான்தோய் வெண்குடை வயமா வளவன் ஈன்றோர் தம்மினும் தோன்ற நல்கினன்; சுரஞ்செல் வருத்தமொ டிரங்கி யென்றும் இரற்தோ ரறியாப் பெருங்கலஞ் சுரக்குவன்; சென்மத, வாழிய நீயே; நின்வயின் ஆடலு மகிழான், பாடலுங் கேளான், வல்லே வருகென விடுப்பி னல்லது நில்லென நிறுக்குவ னல்லன், நல்லிசைப் பெருந்தகை வேந்தர் கோலமொடு, திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே நச். உரைமேற்கோள் (ஆ) பாணராற்றுப்படைக்குச் செய்யுள்: வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத்த தழீஇ உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக் கிளக்கும் பாண! கேளினி நயத்திற் பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங்கு இலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டா ரகல நோக்கின் மலர்ந்தே - புறம். 155 (இ) பொருநராற்றுப்படைக்குச் செய்யுள்: அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாட் சோறு நசையுறாது வேறுபுல முன்னிய விரகறி பொருந! . . . . . . . . . . . . . . . . . கோடியர் தலைவ! கொண்ட தறிந! . . . . . . . . . . . . . . . . . போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந! வாடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு நீடுபசி யொராஅல் வேண்டி னீடின் றெழுமதி, வாழி, ஏழின் கிழவ! பழுமர முள்ளிய பறவையின் யானுமவன் இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் நசையுநர்த் தடையா நன்பெரு வாயில் இசையேன் புக்கென் னிடும்பை தீர . . . . . . . . . . . . . . . . . தன்னறி யளவையிற் றரத்தர யானும் என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மை தீர வந்தனென்; வென்வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் கரிகால் வளவன் தாணிழல் மருங்கி லணுகுபு குறுகித் தொழுதுமுன் னிற்கு விராயின், . . . . . . . . . . . . . . . . . . . . நன்பல் லூர நாட்டொடு நன்பல் வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை வெருவருஞ் செலவின் வெகுளி வேழம் தரவிடைத் தங்கலோ விலனே. - பொருநராற்றுப்படை (ஈ) இனி, விறலியாற்றுப்படைக்குச் செய்யுள்: சேயிழை பெறுகுவை, வாணுதல் விறலி! தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயினு மருவி கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும் நீரினு மினிய சாயற் பாரி வேள்பாற் பாடினிர் செலினே - புறம். 105 (3) சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும் = பிறந்த வெள்ளணி நன்னாளில் சினமகற்றிச் சிறந்தபெரு நாள் விழவயரும் பெருமங்கலம் என்னும் வெள்ளணி விழாவும்: (பெருமங்கலம் = வெள்ளணி என்னும் பிறந்தநாள் விழா. அந்நாளில் வெள்ளையணிதலால், அஃதப்பெயர் பெற்றது. இகழும் பகைவரைக் கறுத்தலும் தவறு செய்தாரை ஒறுத்தலும் வெள்ளணி விழவொடு கொள்ளாத சினமாதலின் அவற்றை விலக்கிச், சிறைவீடு கொடை முதலிய சிறந்தன செய்வதே முறையாத லிதிற் சுட்டப் படுந் துறையாகும்). அதற்குச் செய்யுள்: (அ) செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம் - நச். உரைமேற்கோள் (ஆ) பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள் சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு - மதுரைக்காஞ்சி, அடி 618 - 69 (4) சிறந்த கீர்த்தி மண்ணு மங்கலமும் = முடிபுனைந்த விழவின் நீராட்டு மங்கலமும்: (வடநூல்களிலும் இது பட்டாபிசேக உத்சவம் எனப் பாராட்டப்படுகிறது.) இதற்குச் செய்யுள்: மணிமுடி தான்சூடி வழுதியர்தென் கூடல் அணியா தனமிவர்ந்த வன்னாள் - பணியணியான் தாணினைந்து நீராடித் தாள்பணிவார் தார்மன்னர், வேணவெலா மீந்துவக்கும் வேந்து (5) நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும் = உலகிய லொழுக்குயர்த்தும் புகழ்பெற்ற வேந்தனது குளிர்ந்த குடைநிழல் முறைமையும்; அதற்குச் செய்யுள்: (அ) அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானைப் புறநீர்போன் முற்றும் பொதியும் - பிறரொவ்வா மூவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் மாறன் குடை (ஆ) . . . . . . . . . . . . . . . . . . . . முரசு முழங்கு தானை மூவருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும! . . . . . . . . . . . . . . . . . . . . ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி நடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ! - புறம். 35, அடி 4 - 21 (6) மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் = பகைவர்பால் கொற்றங் கருதிக் கொண்டாடும் வாள்நீராட்டு மங்கல விழாவும்; அதற்குச் செய்யுள்: பார்தாங்குந் தண்குடையான் பாண்டியன்வாள் பற்றலரின் தார்தாங்கு மார்பிளக்கத் தாக்கியசெந் - நீர்முடையை நீராட்டி நீக்கிநறு நெய்யணிநன் னாள்விழவைப் பாராட்டு மாறன் படை (7) மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் = நீண்டு நிலைத்த பகையரணெறிந்து பாழ்செய்து நீராடும் மற விழவும். அதற்குச் செய்யுள்: (அ) கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில் - புறம்.15 (ஆ) . . . . . . . . . . . . . . . . செற்றோர் கடியரண் தொலைத்த கதவுகொள் மருப்பின் முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் உகிருடை யடிய ஓங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப்போர் வேட்டு, வேறுபல் பூளையொ டுழிஞை சூடி . . . . . . . . . . . . . . . . . . . . முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை யெகுப்பி, வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் கராங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவியும் மயங்கி நீரற் றறுகோட் டிரலையோடு மான்பிணை யுகளவும், . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும், . . . . . . . . . . . . . . . . . . வளைவாய்க் கூகை நண்பகற் குழறவும் அருங்கடி வரைப்பி னூர்கவி னழியப் பெரும்பாழ் செய்து மமையான்: - பட்டினப்பாலை அடி, 228 - 270 (முன் உழிஞைத்துறையாகச் சுட்டிய இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலையழியாது கைப்பற்றிய விழவாம்; இப் பாடாண்துறை, பற்றாது பகையரணெறிந்தழித்துப் பாழ்செய்த களியாட்டைக் குறிப்பதால் இது முன்னதின் வேறாதல் வெளிப்படை. இங்கு மங்கலம் மகிழ் கூரும் விழவைக் குறிக்கும்: மண்ணு விழவெல்லாம் விழவயர்வார் நீராடித் தொடங்குமரபு பற்றிய குறிப்பு. எனவே, விழவுகள் மண்ணுமங்கல மெனப் பெறுதலறிக). (8) பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் - இரவலர் புரவலன் தலைவாயிலை யணுகிப் புகழ்ந்து பரிசில் கேட்கும் பெற்றியும்; (கடைக்கூட்டு = தலைக்கடை சேர்தல். கடைஇய என்பது கடாவிய என்பதன் செய்யுட் சொல்; கடாவல் =கேட்டல். இதற்குச் செய்யுள்: பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக் கயங்களி முளியுங் கோடை யாயினும் புழற்கா லாம்ப லகலடை நீழற் கதிர்க்கோடு நந்தின் சுரிமுக வேற்றை நாகிள வளையொடு பகல்மணம் புகூஉ நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல் வான்தோய் நீள்குடை வயமான் சென்னி! சான்றோ ரிருந்த அவையத் துற்றோன் ஆசா கென்னும் பூசல் போல வல்லே களைமதி யத்தை, உள்ளிய விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப் பொறிப்புண ருடம்பிற் றோன்றியென் னறிவுகெட நின்ற நல்கூர் மையே. - புறம். 266 (9) பெற்ற பின்னரும் பெருவளனேத்தி நடைவயிற்றோன்றும் இருவகை விடையும் = பரிசில் பெற்றபின்னும் (பெறுமுன் ஏத்தியது போலே) பெற்றோன் ஈந்தோனை மீக்கூறிப்புகழ்ந்து இரவலன் தானே விடைவேண்டலும் அவனுக்குப்புரவலன் விடைதரலும் ஆகிய உலகவழக்கில் பயின்றுவரு மிருவகை விடைகளும்; (1) பரிசிலன் விடைவேண்டற்குச் செய்யுள்: . . . . . . . . . . . . . . . . . . . . . எல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட் செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ! சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக, வல்லே அகறி ரோவெம் ஆயம் விட்டெனச் சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையிற் றரத்தர யானும் என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகாண் டின்மை தீர வந்தனென் - பொருநராற்றுப்படை, அடி 118 - 129 இவ்வடிகளில், பரிசிலன் பன்னாள் கரிகாற் புரவலனோடிருந்து, தனதூர்செல்ல விடைகேட்க அவன் பிரிவுக்கு வருந்திப் பின்னும் அவன் வறுமையும் வேட்கையும் தீர ஈந்தனுப்பியது கூறுதலால், இது இரவலன் விடைகேட்குந் துறையாதல் காண்க. ((2)) புரவலன் தானே விடைதரற்குச் செய்யுள்: தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற, செந்நாப் புலவீர்! வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மாகத் தான்பிற் வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே; அன்னதோர் தேற்றா ஈகையு முளதுகொல்? போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே. - புறம். 140 (10) அச்சமும் உவகையும் எச்சமின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் காலங்கண்ணிய ஓம்படை உளப்பட = நன்னாளும் நல்லகுறி (வாய்ப்புள்) நற்சொல் (விரிச்சி) முதலிய மற்றைய வாய்ப்புக்களும் கொண்டு, தலைவனுக்கு நேரும் தீமைக் கச்சமும் நன்மைக்கு மகிழ்வும் கூர்ந்து கவனக்குறைவின்றி ஆய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக்கூறும் வாழ்த்தடங்க; இதற்குச் செய்யுள்: காலனும் காலம் பார்க்கும், பாராது வேலீண்டி தானை விழுமியோர் தொலைய வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே! திசையிரு நான்கும் உற்கமுற்கவும், பெருமரத் திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும், வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும், எயிறு நிலத்து வீழவும், எண்ணெயாடவும் களிறுமேற் கொள்ளவும, காழக நீப்பவும், வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும், கனவி னரியன காணா நனவிற் செருச்செய் முன்ப!நின் வருதிற னோக்கி மையல் கொண்ட ஏமமி லிருக்கையர் புதல்வர்ப் பூங்கண் முத்தி மனையோட் கெவ்வங் கரக்கும் பைதல் மாக்களொடு பெருங்கலக் குற்றன்றால் தானே, காற்றோ டெரிநிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவ!நிற் சினைஇயோர் நாடே. - புறம். 41 இதில், உற்க முதலியன பகைவருக்குத் தீது சுட்டும் வாய்ப்புள் (உற்பாதம்). அவற்றை நோக்கிப் பகைவர் மேற் கிள்ளி படை யெடுத்துச் செல்ல, அவன்பகைவர் அஞ்சித் தத்தம் புதல்வரை முத்தி மனக்கலக்கத்தை மனைவிமார்க்கு மறைப்பர். அந்நிலையிற் காற்றுக்கூடிய நெருப்புப்போல் அவன் தகைவாரின்றி விரைந்து சென்று வென்று வீறெய்தப் பகைவர்நாடு பெருங் கலக்குறும் என்று, அவன் வென்றிப் புகழும் அவன் மாற்றார் நாடழிபிரக்கமும் கூறுதலால், இது கொற்றவள்ளைப் பாடாணாயிற்று. மண் திணிந்த நிலனும் எனும் புறப்பாட்டில், ஐம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றாற் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும் வலியும் தெறலும் அளியு முடையோய்! தொல்காப்பியர் - பொருட்படலம் மெய்ப்பாட்டியல் முன்னுரை தொல்காப்பியர் பொருட்பகுதி தமிழ் கூறுநல்லுலகத்தில் நல்லிசைப்புலவர் புனையும் செய்யுண்முறையும், அச்செய்யுட் கெல்லாம் சிறந்துரிய பொருட்டுறையும், இவற்றின் பல்வேறுறுப் பியல்களும் வகுத்து விளக்குவதாகும். மக்கள் கருதுவது பொருளே யாதலானும், செய்யுள் பொருளைப் புனைந்துரைக்குங் கருவியே யாதலானும், முதலில் சிறப்புடைப் பொருட்டுறை வகைகள் அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என ஐந்தியலான் வகைபடத் தொகுத்து விளக்கப்பட்டன. பின் அகப்புறப் பொருள்களைப் புனைந்துரைக்கும் செய்யுள் வகை கூறத் தொடங்கி, அச்செய்யுளுறுப்புக் களுள் பொருட் சிறப்பிற்குமிக்குரிமையுடைய மெய்ப்பாடு உவமை வகைகளை முன் இரண்டியல்களான் முறையே வகுத்து விளக்கி, பிறகு பிற செய்யுளுறுப்பும் அமைப்பும் வகையும் செய்யுளியலில் தொல்காப்பியர் தொகுப்பாராயினர். இம்முறையில் இவ்வியல் மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப்பை விளக்குவதாகும். மெய்ப்பாடு என்பது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற் புறவுடற் குரியாம். இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக்குறி புணர்க்கும் வழக்காறில்லை; உணர்வோடுள்ளக் கருத்தை யுரைக்கப் பல செயற்கைக்குறி வகுத்துக் கோடல் கூத்துநூற் கொள்கையாகும். (பட்டாங்கு) மெய்ப்படத் தோன்றும் உள்ளுணர்வை மெய்ப்பா டென்றது ஆகுபெயர். உள்ளுணர்வை உரிய இயற்புறக்குறியால் புலவன் செய்யுளில் புலப்பட அமைத்தல் வேண்டுமாதலின், செய்யுளுறுப்புக்களுள் மெய்ப்பாடு சிறப்பிடம் பெற்றது. அதனை விளக்கும் பகுதி மெய்ப்பாட்டியல். உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும் (செய்.சூ.204) எனும் செய்யுளியற் சூத்திரம் மெய்ப்பாட்டியல் கூறுகிறது. இம் மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்புறப்பொருட்டுறை அனைத்திற்கும் அமையவருவனவும், சிறப்பாக அகத்துறைகட் காவனவும் என இயல் வேறுபாடுடையவாதலின், பொதுவியல் புடையவற்றை இவ்வியலில் முதற்கூறிச் சிறப்பியல்புடையன பின்னர் விளக்கப்பெறுகின்றன. ஒருவரின் உள்ளுணர்வுகளுள் மற்றவர் கண்டுங் கேட்டும் அறியப் புறவுடற் குறியாற் புலப்படு பவையே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்பெறும். பாட்டு உரை நூல் முதலிய எழுவகைத் தமிழ்ச் செய்யுளெல்லாம் வட வேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழகத்து முடிவேந்தர் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயரெல்லை அகத்து யாப்பின் வழியதா மெனச் செய்யுளியலிலும், ஆரியநூல் வழக்குகளைக் கொள்ளாது தமிழ் மரபினையே தாம் கூறுவதாகப் பலவிடத்தும் தொல்காப்பியரே வற்புறுத்துவதாலும், தொல் காப்பியர் கூறும் மெய்ப்பாடுள்ளிட்ட செய்யுளுறுப்பனைத்தும் இயற்றமிழ் மரபு தழுவியவேயாகும் என்பது ஒருதலை. இவ் வுண்மைக்கு மாறாகப் பிற்கால உரைகாரர் தொல்காப்பியருக்குக் காலத்தாற் பிந்திய வடஆரியக் கூத்து நூல்களின் கொள்கைகளே தொல்காப்பியரும் கூறுவதாகக் கொண்டு இவ்வியற்றமிழ் நூற் சூத்திரங்களுள் வடநூல் வழக்குகளைப் புகுத்தி இடர்ப்பட்டுச் சொல்லொடு செல்லா வல்லுரை வகுத்து மயங்க வைத்தார். சொற்றொடர் சுட்டும் செம்பொருளே செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு மயங்கா மரபிற் புலம் தொகுத்த தொல் காப்பியரின் கருத்தா மாறுணர்ந்து நோக்கின், செய்யுளுப்புக்களுள் ஒன்றாய் எண்ணப்பட்டுச் செய்யுளியலில் (204ஆம் சூத்திரத்தால்) தெளிக்கப்பெறும் இயற்குறியாம் மெய்ப்பாடுகளின் வகைகளே இம்மெய்ப்பாட்டியலில் முறைப்பட எண்ணி விரிக்கப்பெறுஞ் செவ்வி இனிது விளங்கும். இவ்வியல் முதற்சூத்திரம் எண்வகை யியல்நெறி பிழையா தெனச் செய்யுளியல் (205ஆம்) சூத்திரம் கூறும் அகப்புறப் பொருட்டுறை அனைத்திற்கும் பொதுவாய மெய்ப்பாட்டுப் பொருளா முள்ளுணர்வு முப்பத்திரண்டும் புறத்தே இயற்குறியால் முறையே நானான்காய்த் தொக்கு எண்ணான்காகுமெனக் கூறும். இரண்டாம் சூத்திரம், அவ்வாறு நானான்காய் எண் வகையாவன வேயன்றி, வேறு எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் மெய்ப்பாடு முப்பத்திரண்டும், இரட்டுற மொழிதலால் நாலிரண் டாகும் என்பதை உம்மைத் தொகையாக்கி நாலும் இரண்டும் கூட்டி ஆறுவகைத் தொகைகளாய் எண்ணப்படுவனவுமாக அகப் பகுதிக்கே உரிய பிற மெய்ப்பாட்டுள்ளுணர்வுகளும் உளவென்பது கூறுகிறது. மூன்றாம் சூத்திரம், முதலிற் கூறிய நானான்காய்த் தொக்கு அகம் புறம் இருபொருட்கும் பொதுவாய் வரும் எட்டு வகைத் தொகை மெய்ப்பாடுகள் இவையென விளக்கும். 4 முதல் 11 வரையிலுள்ள சூத்திரங்கள், அவ்வினைத்தொகை எட்டும் தனிவகை பிரிக்கவரு முப்பத்திரண்டன் பெயரும் வகையும் விரிக்கும். 12ஆவது சூத்திரம், நந்நான்காய் இவ்வாறெண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொகுத் தெண்ணப்படும் மெய்தோன்றும் அகவுணர்வுகள் வேறும் உள என முன் இரண்டாம் சூத்திரம் சுட்டியவற்றின் பெயரும் வகையும் கூறும். பதின்மூன்று முதல் பதினெட்டு முடியவரும் ஆறு சூத்திரங்களால் அன்பொடு புணர்ந்த காதற்கூட்டத்தில் தோன்றும் அறுவகைத் தொகை பெறும் அகத்துக்கேயுரிய மெய்ப்பாடுகள் தெளிக்கப்படுகின்றன. 19ஆம் சூத்திரம், அறுவகைப்படுமவையும் அன்ன பிறவும் புணர்வின் நிமித்தமாமென உணர்த்துகிறது. 20ஆம் சூத்திரம், மேலனவற்றிற்குப் புறனடையாய், அவை கூறும் அகத்துறை மெய்ப்பாடுகள் கையறவுற்றுழிக் கூறியமுறையால் வினைப்பட்டுத் தோன்றாது முறை பிறழ்ந்து வருதலும் இயல்பா மெனக் கூறும். 21 முதல் 24 வரையுள்ள சூத்திரங்கள் புணர்ச்சி அல்லாத மற்ற நான்கு அன்புத்திணைகளுக்குரிய மெய்ப்பாடுகளைக் கூறுகின்றன. 25, 26 சூத்திரமிரண்டும் நிரலே அன்புத் திணைக்காவனவும் அல்லனவுமாம் குறிப்புக்களை விளக்குகின்றன. 27ஆம் சூத்திரம், இவ்வியலுக்குப் பொதுப்புறனடையாய் மெய்ப்பாடுகளின் இயல்வகைகளை நுண்ணுணர்வுடையாரல்லார் எண்ணி வரையறுத்தலின் அருமை கூறுகிறது. மெய்ப்பாட்டியற் சூத்திரங்கள் சூத்திரம் : 1 பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப. கருத்து : இஃது, இயற்றமிழ்ச் செய்யுளுள் யாண்டும் பயிலும் பொதுமெய்ப்பாடுகளின் தொகையும், அவை வகைப்படுமாறும் கூறுகிறது. பொருள் : பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் = தனிநிலை கருதாமல் ஒருபுறக்குறியால் புலப்படும் இனத் தொகுதியாய் எண்வகை மெய்ப்பாட்டுப் பொருளாகும் உணர்வுகள் முப்பத் திரண்டும்; கண்ணியபுறனே நானான்கென்ப = பொருந்தப் புலப்படும் மெய்ப்புறக்குறியால் நாலுநாலாய்த் தொகுத்து எண்ணப்படும் என்பர் புலவர். குறிப்பு : பொருளும் என்பதன் உம்மை, இனைத்தென அறிதலின், முற்றும்மை. பண்ணை என்பது தொகுதி. இஃது இடப் பொருட்டாதல் ஒலித்தனி முரசின் பண்ணை என்னும் கம்பரின் (மகரக்கண்ணன் வதை) செய்யுளடியாற் றெளிக; பலமுளை ஒருங்கு கிளைக்கும் ஒரு தட்டைத் தூறும், சுற்றம் செறிந்த ஒரு பெருங்குடியும், உறுப்பினர் நிறைந்த ஒரு கழகமும் தொகுதி பற்றிப் பண்ணை யெனப்படுதலானுமறிக. இனி, எண்ணான்கு என்றது, ஒத்த குறியியல் கருதித் தொகுத் தினம்புணர்க்காமல், தனித்தனி எண்ணவரும் மெய்ப்பாட்டுப் பொருளா முள்ளுணர்வுகளின் தொகையெண்; நானான்கென்றது அவை முப்பத்திரண்டையும் மெய்ப்படுகுறி யொப்புமையால் நிரலே நந்நாலாக இனம்புணர்த்தெண்ணும் வகைமுறை. இதன்பின் எள்ளல் முதல் விளையாட்டிறுதி தனிவகுத்து எண்ணப்பட்ட முப்பத்திரண்டும், மெய்ப்படு புறக்குறி இயலொப்பால் இனம் புணர்த்து நந்நான்காய்த் தொகுக்குங்கால், நகை முதல் உவகை ஈறாய் அப்பாலெட்டே மெய்ப்பாடு எனப்படுபவற்றுள டங்கும். குறியொப்பால் இனம் கூட்டித் தொகை பெற்று வருமிவை குறிமுறையால் எண்வகையியல் நெறிபிழையாமை கருதி இவ்வாறு கூறப்பட்டன என்க, நான்கன் முன் நான்கு நானான்கா மாறு, நான்கன் ஒற்றே லகாரமாகும் (457); வகரம் வருவழி )452)... நான்கன் ஒற்றே லகாரமாகும் (453); உயிர் வருகாலை (455)... மூன்றும் நான்கும் ஐந்தென்கிளவியும் தோன்றிய வகரத் தியற்கையாகும் (456) எனும் தொல்காப்பியர் எழுத்ததிகாரச் சூத்திரங்களாலறிக. இன்னும் கசதப முதன்மொழி வரூஉங்காலை, மூன்றன் ஒற்றே வந்த தொக்கும் (447) எனவும், நமவருகாலை, ஐந்தும் மூன்றும் வந்ததொக்கும் ஒற்றியல் நிலையே (451) எனவும் தெளிக்கும் தொல்காப்பியர், நான்கன் ஒற்று மவ்வாறாகும் எனக் கூறாமை யானும், முதற் பத்தெண்களுள் மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் எனக்கூறி நான்கன் முதலுக்குக் குறுக்கம் யாண்டும் குறியாமையானும், நானாற்றிசை (களவழி. 6) நானூறு நானிலம் - நானூல் - நாலெட்டு - நாலீரைம்பது - நாலிரண்டு... எனவே பல்காலும் பலவிடத்தும் பண்டைச் சான்றோர் செய்யுட்களில் பயிலுதலானும், நகரம் வருங்கால் நான்கன் ஒற்று லகரமாகி முதல் குறுகாது நால் என நின்று, வரு நான்கொடு புணர்ந்து நானான்கென வருதலே தமிழ் மரபாமாறு தேறப்படும். பிந்திய நன்னூலாரும், ஒன்றுமுத லெட்டீறா மெண்களுள்... மூன்றாறேழ் குறுகும் எனக்கூறி யமைந்தாரன்றி, நான்கன் முதலுக்குக் குறுக்கம் கூறிற்றிலர். எனவே, நானான்கென்பதே பண்டையோர் கொண்ட செய்யுட்சொல் என்பதும், நந்நான் கென்பது (இலக்கண) நூலாதரவற்ற பிற்காலப் பேச்சு வழக்காதலின் உரையிற் கொண்டமைக்கப் பெற்ற சேரிமொழி என்பதும் தெளிதலெளிதாம். இனி, புறனே என்றது உள்ளுணர்வு சுட்டும் புறக்குறியை; தத்தம் நிலையில் தனித்தனிக்குறியால் புறத்தே புலனாகாது கருத்தளவில் வகுத்தெண்ணும் எண்ணான்கு பொருளினின்றும், புறத்தே ஒவ்வொரு குறிக்கு நானான்காய்த் தொக்குப் புலனாகும் மெய்ப்பாட்டு வகையைப் பிரித்தலின், புறனே என்பதின் ஏகாரம் பிரிநிலை; அன்றி இசைநிரப்பும் அசை எனினும் அமையும். எண்ணான்கு பொருளும் நானான்கென்ப எனவே எண்வகை என்பது பெறப்படுமாதலின், கண்ணி புறனே நானான்கு என இடைப்புணர்த்துரைப்பானேன்? எனின், கூறுதும். உள் உணர்ச்சியளவில் தனிப்பிரித்து ஒருங்கெண்ணப்படும் முப்பத்திரண்டு பொருளும் புறத்தே மெய்ப்பாடாய்ப் புலனாதல் கொண்டே அறியப்படு தலானும், அவ்வாறு புலனாங்கால் அவை தனித்தனியே எள்ளற்குறி இளமைக்குறி பேதைமைக்குறி மடமைக்குறி என்றொவ் வொன்றும் வெவ்வேறாய்த் தனக்குரிய தனிக்குறியாற் றோன்றாமல், நந்நான்காய்ப் பண்ணைகூடி நகை அழுகை - இளிவரல் - மருட்கை - அச்சம் - பெருமிதம் - வெகுளி - உவகை எனும் மெய்ப்பாடு எட்டுவகையால் மட்டும் தோன்றுதலானும், இவ்வியல் நெறி குறித்தல் வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க. இன்னும், இச்சூத்திரம் சுட்டுவது இதுவேயென்பது, பின்னும் செய்யுளியலில் தொல்காப்பியரே அதன் உறுப்பாம் மெய்ப்பாட்டின் தன்மையை விளக்கியபின் அதையடுத்து எண்வகை யியனெறி பிழையாதாகி, முந்துறக் கிளந்த முடிவினததுவே எனக் கூறுதலானும், அதன் கீழ்ப் பேராசிரியரும் மேற் கூறப்பட்ட மெய்ப்பாடே இது; அவை நந்நான்காம் என உரைப்பதானும் தேறப்பெறும். இனி, என்ப என்றது பிற சூத்திரங்களிற்போல இயற்றமிழ்ப் புலவர் கொண்ட அடிப்பட்ட தமிழ்ச் செய்யுள் மரபிதுவென ஈண்டுச் சுட்டுவதன்றி, யாதொரு வேறு முதனூலும் அதன் கொள்கையும் குறிப்பதன்று. இச்சூத்திரப் பொருள் இதுவே யென்பது இதன்கீழ் இளம்பூரணர் தரும் குறிப்பானும் தெளிவாகும். அவர் குறிப்பாவது, முப்பத்திரண்டாவன நகை முதலானவற்றுக் கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத் தோதப்படுகின்றன என்பதாம். இச்சூத்திரத்தின் செம்பொருள் இதுவாகவும், பேராசிரியரும் பிறரும் ஆன்ற தமிழ் மரபும் தெளி சொற்குறிப்பும் முரண உரைகூறி மயங்க வைப்பர். பேராசிரியர் சுவைப் பொருளும் அப்பொருள் விளைக்கும் சுவையுணர்வும், அவ்வுணர்வால் தோன்றும் உள்ளக் குறிப்பும், இக்குறிப்பின் வழி உடம்பின்கண் வரும் வேறுபாடாம் விறலுமாக நான்கெண்ணி அவற்றைச் சுவை யெட்டோடும் கூட்டி ஒன்று நான்கு செய்துறழ, முப்பத்திரண்டாம் என அநுமானிப்பர். இன்னும் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள் என்பதற்கு, நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் எனப் பொருள் கூறி, கண்ணிய புறனே நானான் கென்ப என்பதற்கு அவை கருதிய பொருட் பகுதி பதினாறாகியடங்கும், நாடக நூலாசிரியருக்கு என முடிப்பர். இதில் பொருள் முப்பத் திரண்டென ஒருங்கெண்ணிய பிறகு அவை கருதிய பொருட் பகுதி எனப் பிரித்துப் பதினாறெனச் சுட்டுமாறென்னை? பொருள்கள் கருதிய பொருட் பகுதி என்பது பொருளில் வெற்றுரையாகும். மேலும், எண்ணான்கு பொருளும் ஓராங்கே ஒருங்கெண்ணப்படுதலின், அவை ஒருதரப் பொருளாதல் ஒருதலை. அதற்கு மாறாக, அவற்றைச் சுவையூட்டும் புலி முதலிய புறப்பொருள் வேறு, அப்பொருள் விளைக்கும் உணர்ச்சி வகை வேறு, உணர்ச்சியால் எழும் உள்ளக்குறிப்பு வேறு, அக்குறிப்பால் நிகழும் உடற்குறியாம் விறல் வேறு எனத் தம்முள் ஒவ்வா நால்வகையாய் உறழப் பிரித்தல் இங்குத் தொல்காப்பியர் கருத்தாமாறில்லை. அன்றியும் எண்ணான்காமவை குறியால் நந்நான் கோரினமாய்க் கண்ணிய புறனே எண்வகை ஆவதை விட்டு, பதினாறாவதெப்படி? புறப்பொருளும் அகவுணர்வும் ஒன்றாமேல், உணர்வெழுப்பும் குறிப்பையும் அதனுடன் நிகழும் விறலையும் வேறுபடுத்துவானேன்? அன்றியும் உணர்வூட்டும் புறப்பொருள் ஒன்றும் இல்லாமலே எண்ணியாங்கே மெய்ப்பாட்டுணர்வுகள் உள்ளத் தெழுமாதலின், எண்வகை மெய்ப்பாடுகளை எனைத்துவகைப் புறப்பொருள்களொடும் கூட்டவும் பெருக்கவும் வேண்டா. இனி, தொல்காப்பியர் இங்கு விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பன்றிக் கூத்துறுப் பொன்றுமன்றாதலின், அவற்றைச் சுவையெனவும் விறலெனவும் கூத்தியற் சொற்களால் யாண்டும் குறியாமல், செய்யுளிற் சுட்டற்குரிய மெய்ப்பாடெனவே கூறிப் போந்தார். அன்றியும், புறக்குறியாற் புலனாகும் மெய்ப்பாட்டுணர் வெல்லாம் நந்நான்கும் எவ்வெட்டுமாய்ச் சேர்ந்தே தொகுதியாக இயனெறியாற்றோன்றி வகை பெறுதலான், அவற்றைப் பண்ணைத் தோன்றிய எனச்சுட்டினார். தொல்காப்பியரின் இச் சொற் குறிப்புக்களைக் கருதாமல் உரைகாரர் இதில் பண்ணை என்பதை மகளிர் விளையாட்டெனக் கொண்டனர். அதனாற் பிறமொழிக் கூத்தியற் கொள்கைகளை இதிற்புகுத்தி இடர்ப்படலாயினர். இன்னும், அகப்புறப் பொருட்டுறை யனைத்திற்குமுரிய இயற்றமிழ்ச் சான்றோர் செய்யுளுறுப்பாவன மெய்ப்பாடென்பதை மறந்து, அவை நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத் திரண்டு பொருளும் எனப் பேராசிரியரும், ஈண்டுச் சொல்லப் படுகின்ற பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையால் பண்ணைத் தோன்றிய என்றார் என இளம்பூரணரும், மயங்கக் கூறினர். மேலும், உரைகாரர் கூறும் ஆரியக் கூத்து நூற்குறிப்புக்களே தொல்காப்பியர் இதில் கூறக் கருதின், அவற்றை எனைத்தளவும் குறியாமல் வாளா எண்ணான்கு பொருளும் நானான் கென்ப எனக் குன்றக்கூறிக் கற்பவர் பொரு ளறியாமல் மயங்க வைப்பாரா? அன்றியும், இவையெல்லாம் ஆரியக்கூத்து நூலார் கோள் களாதலின் அவை இயற்றமிழ் நூலில் இடம் பெறற்கில்லை. அதுவுமின்றி, இந்நூலில் யாண்டும் எனைத்தளவும் சுட்டாமலே, அயன்மொழிப் பிறநூற் குறிப்புக்களை அறிந்தன்றிக் கற்பவர் பொருளறியாவாறு தடுமாற இவ்வியற்றமிழ்ச் சூத்திரம் இயற்றப் பட்டதெனல் மருட்கையை விளைப்பதாகும். சூத்திரந் தானே ஆடி நிழலி லறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே எனத் தெளித்த தொல்காப்பியர் தாமே இச்சூத்திரத்தைப் பேராசிரியர் இளம்பூரணர் எனும் இருவரின் விரிவுரை கொண்டும் விளங்காமல் மயங்குமாறு யாத்துவைத்தாரென்பது பொருந்தாது. இதுவுமன்றி, இவ்வுரைகாரர் கூறும் ஆரிய நாடக நூற் சத்துவங்கள் தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப்பாட்டுணர்வுகள் ஆகா. இதனைப் பின் மெய்ப்பாட்டு வகை விளக்கும் சூத்திரத்தின் கீழ் விரித்துக் காட்டுதும். இனி, எண்ணான்கு பொருளும் பின் எள்ளல் முதல் விளையாட்டீறாக வரும் முப்பத்திரண்டுமாம் எனக் கண்டு கூறும் இளம்பூரணரும், நானான் கென்ப என்பதற்கு அம்முப்பத்திரண்டுமே நந்நான்காய் எண்வகை பெறும் என்னாமல், சுவையும் குறிப்பும் ஆகப் புறத்து நிகழும் பொருள் பதினாறாம் எனப் பொருள் கூறினர்; சுவைகளின் குறியான விறல்கள் புறத்து நிகழ்வன. சுவையும் அவற்றினகக் குறிப்பும், உள்ளுணர்வே யாமாதலின், அவற்றையும் விறல்களுடன் ஒருங்கெண்ணி ஆகப் பதினாறும் ஓராங்கே புறத்துநிகழ் பொருளெனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருந்தாமை ஒருதலை ஆதலானும் அது பொருளன்மை யறிக. சூத்திரம் : 2 நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. கருத்து : இது, முன்னதற்கோர் புறனடை; மேல் முதற் சூத்திரம் கூறும் எண்ணான்குமேயன்றிச் செய்யுட் பொருளாம் மெய்ப்பாட்டடுணர்வுகள் வேறுமுளவென்பது கூறுகிறது. பொருள் : நாலிரண் டாகும் பாலுமா ருண்டே = செய்யு ளுறுப்பாம் மெய்ப்பாட்டுணர்வுகள், மேற்கூறியாங்கு நந்நான்காய் எண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொக்கு வகைப்பட வருந்தன்மைய பிறவும் உள. குறிப்பு : ஈற்றேகாரம், முதலிற் கூறிய எண்ணான்கினின்றும் வேறும் உள்ளவற்றைப் பிரித்தலின் பிரிநிலை; ஈற்றசையுமாம். ஆகும் என்னும் வினைக்குச் செய்யுளுறுப்பாம் மெய்ப்பாட்டு ணர்வுகள் எனும் எழுவாய், கொண்ட பொருட்டொடர்பால், அவாய் நிலையில் பெறப்பட்டது. மார் - அசை. முன், முதற் சூத்திரத்தில் மெய்ப்பாட்டுணர்வாம் எண்ணான்கு செய்யுட் பொருளும் நந்நான்காய்த் தொகைஇ வருமெனச் சுட்டியதற் கேற்ப, அவ்வாறு தொக்க எட்டும் இதன்பின், நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப எனத் தொகுத்துக் கூறப்பட்டு, அதன்பின் அவ்வெட்டன் வகையாய்ப் பிரித்தெண்ணப்படுவன முப்பத்திரண்டும் முறையே எள்ளல் முதல் விளையாட்டீறாக விரிக்கப்படுகின்றன. அதுவேபோல், வேறு எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் இயல்புடைய முப்பத் திரண்டு மெய்ப்பாடுகளும், மேல் அப்பாலெட்டே எனவும் இங்கு நாலிரண்டாகும் பாலுமா ருண்டே எனவும் சுட்டியதற்கேற்ப முதல் எட்டு வகை முப்பத்திரண்டும் எள்ளல் முதல் விளையாட்டீறாய் முறையே எண்ணி முடிந்த பின், ஆங்கவை யொருபா லாக வொருபால் எனத் தொடங்கி உடைமை இன்புறல்... நடுக்கெனா அ... இவையும் உளவே அவையலங் கடையே என வேறு முப்பத் திரண்டு எண்ணி முடித்துக் காட்டப்படுதலின், இச்சூத்திரப் பொருள் இதுவாதல் தெற்றென விளங்கும். இச் செம்பொருளை விட்டு இதுசுட்டும் நாலிரண்டும் பின் நகையே அழுகை என எண்ணப்படும் எட்டுமே ஆமென்பாருரை கொள்ளின், அச்சூத்திரமே அப்பாலெட்டே மெய்ப்பாடென்ப என அவற்றின் எண் தொகை கூறுதலானும், முதற் சூத்திரத்தும் நானான்காய் எண்ணான்கு பொருளாம் என அவற்றின் எண்வகை குறிக்கப் பெறுதலானும், இச் சூத்திரம் இங்கு வேண்டப்படாது மிகைபடக் கூறலாய் முடியுமென்பது ஒருதலை. ஆதலின் அது பொருளன்மை யறிக. இனி, உய்த்துக் கொண்டுணர்தல், இரட்டுற மொழிதல் எனும் உத்திகளால் இச்சூத்திரத்துக்குப் பிறிதும் ஒருபொருள் கொள்ளுதலும் பொருந்தும். இதில் நாலிரண்டு என்பதை உம்மை தொக்க கூட்டெண்ணாக்கி, நாலுமிரண்டு மெனக்கூட்டி, அறுவகைப்படும் இயல்புடைய அகத்துறை மெய்ப்பாடுகளும் உளவெனப் பொருள்கூறி, அவ்வாறும் முறையேபுகுமுகம்புரிதல்...jFKiw நான்கே ஆறென மொழிப என எண்ணி முடிக்கும் மெய்ப்பாட்டுத் தொகை ஆறுமாமென அமைத்துக் கோடலும் தவறாகாது. சூத்திரம் : 3 நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப கருத்து: இது, முன் முதற் சூத்திரத்தில் அகவுணர்ச்சிச் செய்யுட்பொருள் முப்பத்திரண்டும் புறத்தே இயலொத்த இனக் குறிபற்றி நந்நான்காய்ப் பண்ணையிற்றோன்றுமெனச் சுட்டிய மெய்ப்பாட்டு வகையெட்டும் இன்னவென விளக்குகிறது. பொருள்: நகை = சிரிப்பு; அழுகை = அவலம்; இளிவரல் = இடும்பை, அஃதாவது துன்பம்; மருட்கை = மயக்கம்; அச்சம்= அஞ்சுதல்; பெருமிதம் = வீறு; அஃதாவது தருக்கு. வெகுளி = சினம்; உவகை = மகிழ்ச்சி; என்று அப்பாலெட்டே மெய்ப்பா டென்ப=என அத்தன்மைய மெய்ப்பாடு எட்டேயா மென்பர் புலவர். குறிப்பு: நகையே என்பதில் ஏகாரம் எண் குறிக்கும். எட்டே என்பதில் ஏகாரம் தேற்றமாம். இதில் இனக்குறியால் தொகுதியிற் புறத்திற்றோன்றும் மெய்ப்பாட்டுத் தொகை எட்டும், இதையடுத்து இவற்றின் வகைவிரிகளான எள்ளல் முதல் விளை யாட்டீறாகமுப்பத்திரண்டும் கூறி, பின் இவற்றை ஆங்கவை ஒருபாலாக எனச் சுட்டிப் பிரித்து நிறுத்தி, ஒருபால் எனத் தொடங்கி வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுணர்வு வகை குறிப்பதனால், இவை நந்நான்காய் எண்ணப்படும் பான்மைய வாதல், ஒருமுறை; இதன்பின் பிற எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் தன்மையவாதல் மற்றொரு முறை யென்பது தொல்காப்பியர் குறிப்பாம். அதனால் இதிற் கூறப்படுவன நாலு நாலாய்த் தொக்கு அம்முறையில் எண்ணப்படும் எட்டாம் என்பது விளங்க (பால் தன்மையைக் குறிப்பதாகலின் இம் மெய்ப்பாடுகள் அப்பாலெட்டே எனக் குறிக்கப்பட்டன. ஈற்றில் என்ப எனும் வினைக்குப் புலவர் எனும் எழுவாய் அவாய்நிலை. இனி, இம்மெய்ப்பாட்டுமுறை பிற ஆரியக்கூத்து நூல் வழக் கொடுபடாமல் என்றும் இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாய்த் தொன்று தொட்டு நின்று நிலவும் மரபிற்றாகும். இவ்வுண்மை இச்சூத்திரத்தின் கீழ் இது பிறர் வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடு என்பது உணர்த்துதல் நுதலிற்று எனப் பேராசிரியரே கூறுதலானும் விளங்கும். இவற்றின் இயல்வகை விரிக்கும் பிற சூத்திரங்களானும் இது விளங்கும். அன்றியும் ஆரிய நூலார் கூறும் நவரசங்கள் இம்மெய்ப்பாடுகளின் வேறாய் நடன நாட்டியச் சத்துவங்களாம். அவை முறையே சிருங்காரம், ஆசியம், கருணை, ரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் என்பனவாம். இவற்றுள், முதலில் நிற்கும் சிருங்காரம் கற்புக் கருதாக் காமக்களி. அதைச் செய்யுளிற் கொள்ளத்தகும் ஒரு பொருளாகத் தமிழ்ப்புலவர் கருதுகிலர். தமிழர் கூறும் உவகையெனும் மெய்ப்பாடு முறையே அறத்தான் வரும் செல்வம், கல்வியான் எய்தும் அறிவு, கற்புறுகாதற் கூட்டம், திளைத்தற்குரிய தூயவிளையாட்டு, இந் நான்கானும் வரும் மகிழ்ச்சியாகும். சிருங்காரத்தை இவ்வுவகை யோடு ஒப்பிட ஒல்லாமை கருதி, உவகை நாலில் ஒன்றாய தூய காதற் கூட்ட மலிவோடு உறழ்வித்து அமைதிகாட்ட முயல்வர் பழைய உரைகாரர். உயர்திணைக்குரிப்பொருளாய் இருதலை ஒருவயின் ஒத்த அன்புக் கூட்டத் தூய மகிழ்ச்சியும், பிறனில் பெட்டல் முதலிய தீமையிற்றீராக் கற்பொடு படூஉம் கடப்பாடு கருதாக் கழிகாமத் திளைப்பும் தம்முள் ஒவ்வாமை வெளிப்படை. இனி, ஆசியம் நால்வகை நகையை முற்றிலும் ஒவ்வாமையும் தெற்றெனத் தெளியப்படுவதாகும். கருணை - அருள், அதாவது அளியாமல்லால், அழுகை யாகாமை தேற்றமாம். அயலார் அல்லலுக்கு இரங்குவது அளி அதாவது கருணையாம்; அழுகையோ தம்பால் தாங்கரும் இழிவு, இழவு, தளர்வு, வறுமைகளால் வருந்துதலாகும். ஏமப் புணைசுடும் இரௌத்திரம் தனக்குத் தீங்கிழைத்த பிறர்மாட்டுச் செல்லும் சினமாம். உறுப்பறுதல் முதல் கொலைவரை நான்கும் தன்னைச் செய்யினும் பிறரைச் செய்யினும் ஒப்ப நிகழும் மனவுணர்வு வெகுளியாகும். வீரம் என்பது பெருமிதம் நான்கனுள் ஒன்றாம் தறுகண்மையில் அடங்கும். பேராண்மைப் பெற்றியொடு குறையா இறவாச் சிறப்பீயும் கல்வி, புகழ், கொடைகளான் எய்தும் மலிவொடு பொலியும் பெருமிதம், கேவலம் வீரத்தின் வேறாதல் வெளிப்படை. குற்சை என்பது அருவருப்பு. இதனை எனைத்து வகையானும் தமிழ்ச் சான்றோர் செய்யுளில் எஞ்ஞான்றும் உயர்ந்த சுவைதரும் மெய்ப்பாட்டுப் பொருளாகக் கொண்டிலர். அற்புதம் மருட்கை வகையில் ஒன்றாயடங்கும். சாந்தம் பிறிதுணர்வு எதுவும் அற்ற வெறுநிலை ஆதலின் அது மெய்ப்பாடாகாமை தேற்றம். அதனை, உளத்துரனால் மலரும் உணர்வான நடுவுநிலை யெனும் தமிழ்ச் செய்யுட் பொருளொடு ஒப்பதுபோலக் கூறுவர் உரைகாரர். சமனிலை அதாவது சாந்தி, உணர்வும் குறிப்பும் ஒன்றுமற்ற வெறுநிலை; எனவே அன்மைப் பொருளது. நடுநிலையோ தகுதி எனும் அறிவுணர்வாகும்; அதனாலது நேர்மை சுட்டுமுணர்வுப் பொருட்டாம். இவை தம்முள் இயல் ஒவ்வாமை கண்கூடு; அந்நடுவு நிலையை அப்பாலெட்டு மெய்ப்பாட்டு வகையில் அடக்காமல் பின் பிறிதொரு பாலாம் முப்பத்திரண்டனுள் வைத்து எண்ணுதலானும் அது இரசம் எட்டனோடு கூட்டி எண்ணப்பெறும் சாந்தமாகாமை ஒருதலை. சூத்திரம் : 4 எள்ளல், இளமை, பேதைமை, மடனென்று உள்ளப் பட்ட நகைநான் கென்ப. கருத்து : இது, முன்சிறந்த செய்யுட்பொருளாம் எண்ணான் குணர்வும் கண்ணியபுறனே நானான்காய்ப் பண்ணைத்தோன்றும் அப்பாலெட்டே மெய்ப்பாடு எனத் தொகுத்தவற்றுள், முதல் தொகுதியாம் நகை வகை நான்கும் அவற்றினியல்பும் கூறுகிறது. பொருள் : எள்ளல்=நகைமொழி அதாவது கேலி; இளமை = மழவு; அஃதாவது பிள்ளைத் தன்மை; பேதைமை = அறிவின்மை; மடம்=ஏழைமை, அதாவது தேராது எளிதில் நம்பு மியல்பு; என்று உள்ளப்பட்ட நகை நான்கென்ப=இந்நான்கும் நகையின் வகை நான்காய்க் கருதப்படுமென்பர் (உள்ளுறும் உணர்வை நுண்ணிதி னுணரும் புலவர்) குறிப்பு : எள்ளல், இழித்தலின் வேறுபட்ட நகைமொழி; பழிப்பில் பரிகாசம்; விளையாட்டேச்சுப் போல்வது. இளிவு பின் சூத்திரத்தில் அழுகைவகைத்தாய் வேறு கூறப்பெறுதலின், இங்கு நகைவகையுளொன்றெனப்படும் எள்ளல் இழியாச் சிரிப்பாதல் தேற்றம். ஊரன், எம்மிற் பெருமொழிகூறித் தம்இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல, மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே எனும் ஆலங்குடி வங்கனாரின் குறும்பாட்டில் (குறுந்.8) காதற் பரத்தை, தான் காதலிக்கும் வள்ளற்றலைவனை எள்ளுவதறிக. ஒண்டொடீ! நாணிலன் மன்றஇவன் ஆயின் ஏஎ! பல்லார் நக்கெள்ளப் படுமடன்மா வேறி நல்காள் கண்மாறி விடின்எனச் செல்வானாம் எள்ளி நகினும் வரூஉம், இடையிடைக் கள்வர்போல் நோக்கினும் நோக்கும் எனும் (61) குறிஞ்சிக்கலியில், பராவுதற்குரிய தலைவனைத் தோழி எள்ளல் காண்க. ... மகளிர் நலனுண்டு துறத்தி யாயின் மிகநன் றம்ம மகிழ்ந! நின் சூளே எனும் ஓரம்போகியார் குறும்பாட்டிலும் (குறுந். 384) பராவுந் தலைவனை இழியாமல் எள்ளுவதறிக. நகையாகின்றேதோழி... மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே (அகம்.56) எனுமகப்பாட் டடியுமதுவே, இளமை,அறிவுமுதிராப்பிள்ளைமை,பேதைமை,அறிவின்ம (ளுவரயீனைவைல); மடம்ஐயுறாதுநம்புமியல்பு. (ளுiஅயீடiஉவைல டிச innடிஉநnஉந). பேதைமை உவர்ப்பிக்கும்; மடம் உவப்பதுவும். எள்ளல் முதல் நான்கும்மகிழ்வொடுமருவும்பெற்றிய;இதனநகையெனப்படுதல்வகையாதெனினே... நகையொடு நால்வகை நனிமகிழ்வதுவே என்ற தொல்லை நல்லுரையானுமறிக. புறத்தே நகையாய் முகிழ்க்கும்குறி ஒன்றே அகத்து நிகழுமிந் நால்வகை யுணர்வும் தோற்றற் கேற்றதொரு மெய்ப்பாடாமெனு மியல்பைச்சுட்டி, உள்ளப்பட்ட நகை நான்கென்ப என்று அவற்றினியலும் வகையும் தோற்றுங்குறியும் ஒருங்கு விளக்கப் பெறுதலறிக. இதில் என்ப எனும் வினைக்கு, உள்ளுறுமுணர்வை நுண்ணிதினுணரும் புலவர்எனும்எழுவாய்இடநோக்கிஅவாய்நிலையாற்கொள்ளப்பட்டது.மெய்ப்பாட்டியலிறுதிப் புறநடைப்பொதுச்சூத்திரத்தில்உள்ளுணர்வின்நன்னயப்பொருள்கோள்தெரியின்,திண்ணிதினுணர்வார்க்கல்லதுஎண்ணற்கரிதாமெனக்கூறுதலால்,அதற்கேற்பஈண்டுமெய்ப்பாட்டியல் கூறுபவர்உள்ளுறுமுணர்வைநுண்ணிதினுணரும்புலவர்என்றேற்புடைஎழுவாய்bகாள்ளப்பட்டது.இதில் ‘என்றுஎன்பதுபிரிந்துசென்bறான்றும்எண்ணிiடச்சொல்;என்றும்எனவும்ஒடுவும்தோன்றிஒன்றுவழியுடையஎண்ணினுட்பிரிந்nத என்பதுஇடையியற்சூத்திரம். சூத்திரம் : 5 இளிவே இழவே அசைவே வறுமைஎன விளிவில் கொள்கை அழுகை நான்கே. கருத்து : இஃது, அழுகை எனு மவலவகை நான்கும் அவற்றி னினப்பொதுவியல்பும் உணர்த்துகிறது. பொருள்: இளிவு=இழிதகவு; இழவு=இழத்தல்; அசைவு = தள்ளாத் தளர்வு; அஃதாவது கையறவு; வறுமை = மிடி, அஃதாவது இல்லாமை; என விளிவில் கொள்கை அழுகை நான்கே = என்று, ஒழியா தலமரச் செய்யு மவலம் இந்நால்வகைத் தாம். குறிப்பு : ஈண்டு, இளிவு=பிறரிகழ்வாற் பிறக்குமவலம்; பழி பிறங்கும் பான்மைத்தாம் இளிவரலன்று. அவ் இளிவரலை அடுத்த சூத்திரம் கூறும். ஈண்டு இளிவுக்கு இதுவே பொருளாதல், இங்கு இழிவே எனக் கொண்ட பழம் பாடத்தானும் வலியுறும். நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே (குறுந். 169) இம் மகனல்லான் பெற்ற மகன் (கலி.86) பன்மாயக் கள்வன் (குறள். 1258) தீரத் தறைந்த தலையும்தன் கம்பலும் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநம் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானை (கலி. 65) இவை அகத்தில் இளிவு குறிப்பன. மக்களே போல்வர் கயவர் (குறள். 1071) தேவரனையர் கயவர் (குறள். 1073) இவை போல்வன புறத்தில் இளிவு குறிப்பன. ஒழிவு தருவன அழுகை விளையாதாகலின் விளிவில் கொள்கை அழுகை நான்கென அவற்றின் பொதுவியல்பு விளக்கப்பட்டது. ஏகாரங்கள் எண் குறிப்பன; ஈற்றது அசை; தேற்ற மெனினும் தவறாகாது. என என்பது பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச் சொல். சூத்திரம் : 6 மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே. கருத்து : இஃது, இளிவரல் எனும் மெய்ப்பாட்டு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கின்றது. பொருள் : மூப்பு=முதுமை; பிணி=நோய்; வருத்தம்=இடுக் கண், அதாவது அல்லல்; மென்மையொடு=எளிமை, அஃதாவது நொய்ம்மையுடன்; யாப்புறவந்த இளிவரல் நான்கே=தொடர்ந்து படரும் மானக்குறை நான்கு வகைத்தாம். குறிப்பு: மென்மை, இங்கு மிருதுத்துவம் குறியாது இகழ்ச்சிக்காளாக்கும் எளிமை அதாவது நொய்ம்மைப் பொருட்டாம். இளிவரல், மானம் குன்ற வருவது. இளிவரின் வாழாத மானமுடையார் எனவும், இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார் எனவும் வருதலான், இளிவரல் இப்பொருட்டாதல் தெளிக. முன் அழுகை வகையுள் ஒன்றாகச் சுட்டப்பட்ட இளிவு அவலிக்கும் அவமதிப்பைக் குறிக்கும். அது பழிபடு குற்றமின்றியும் பிறரிகழ்வாற் பிறக்கும் பெற்றியது; எனவே, இளிவு தன்னெஞ்சு சுடுதலின்மையால் வாழ்வில் வெறுப்பு விளையாது. முன் சூத்திரத்திலிதை இளிவென்னாது இழிவென்றே இளம்பூரணர் கொண்ட பாடத்தானும் இவ்வுண்மை வலியுறும். இச்சூத்திரம் சுட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும். தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம் கொள்வாம் என்றி தோழி! கொள்வாம் இடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டிய கொடுத்தவை தா என் சொல்லினும் இன்னா தோ? நம் இன்னுயி ரிழப்பே (குறுந். 349) குப்பைக் கோழித் தனிப்போர் போல விளிவாங்கு விளியி னல்லது களைவோ ரிலையா னுற்ற நோயே (குறுந். 305) இது மற் றெவனோ தோழி! துனியிடை இன்னரென்னுமின்னாக்கிளவி............... திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே (குறுந்.181) இன்ன பலவும் அகத்தில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை பற்றிய இளிவரல் குறிப்பன. தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய nகளல்nகளிர்nவளாண்áறுபதம் kJகையி‹றிவƉறுத்தீத்தணிaத் தhÄரந்துண்Q மளtஈன்k ரோïவ்வுலக¤தாd(புw«.74) தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்தம் நிலையி னிழிந்தக் கடை (குறள். 964) மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து (குறள். 968) இன்னபலவும் புறத்தில் இளிவரல் கூறுவன காண்க. இனி, மூப்பு முதல் மென்மை வரை ஒவ்வொன்றும் தன்னளவில் வாழ்வொல்லாத் தாழ்வு தொடரும் தன அமைத்தாதலின், அப்பொது வியல்பு விளங்க இவை யாப்புற வந்த இளிவரல் நான்கு எனப்பட்டன. ஏகாரம், முதலிரண்டும் எண் குறிக்கும், ஈற்றதசை, தேற்ற மெனினு மிழுக்காது. மென்மையொடு என்பதன் ஒடு பிரிந்த சென்றொன்றும் எண்ணிடைச் சொல். சூத்திரம் : 7 புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. கருத்து : இது மருட்கை எனு மெய்ப்பாட்டுவகை நான்கும் அவற்றின் இயல்பும் உணர்த்துகிறது. பொருள் : புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு= இந்நான்கனொடும் கூடி; மதிமை சாலா மருட்கை நான்கே=அறிவு சிறவா மயக்கவகை நான்காம். குறிப்பு : புதுமை, முன்னறியா யாணர்த்தன்மை; அதாவது நூதனம். பறழுக்கு வயிற்றில் புறப்பையுடைய கங்காரு, பறக்குமீன், சிற்றுயிருற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, கையிலடங்குஞ் சிறுநாய், கண்கொள்ளாப் பெருமலை, இருதலை, முக்கண், ஐங்கால், அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்பு உடைய உயிர்கள் போல்வன காண எழுமுணர்வு, புதுமையிற் பிறக்கும் வியப்பாகும்; அது பெரிதும் இயற்கையிற் றோன்று மியல்பிற்றாம். ஆக்கம், அறிவுடை மக்கள் சமைப்பாலாவது; எனவே ஆக்க மருட்கை செயற்கையிற்றோன்றும் அரும்பொருள் விளைக்கும் வியப்பாகும். வானவூர்தி, பேசும்படம் போல்வன ஆக்க மருட்கையாம். ஒன்றன் இயல்பு அமைப்பு விளைவுகளைக் கண்டாங்கே ஆய்ந்தறியக் கூடுமிடத்து மயக்கில்லை. மதியால் மதிக்கப்படாவழி மட்டுமே வியப்பு விளையும். ஆதலின், தேர்ந்து தெளியும் திறனற் றறிவுசிறவா நிலையில் வருவதே மயக்கமாமென்பது தோன்ற மதிமை சாலா மருட்கை நான்கே என அவற்றின் இயல்பும் வகைமையும் விளக்கப்பட்டன. ஆக்கமொடு என்பதின் ஒடு பிரிந்து மற்றைய ஒவ்வொன்றோடும் சென்று சேரும் எண்ணிடைச் சொல். ஈற்றேகாரம் அசை, தேற்றமுமாம். சூத்திரம் : 8 அணங்கே விலங்கே கள்வர்தம் மிறைஎனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே. கருத்து : இஃது, அச்சவகை நான்கும் அவற்றினியல்பும் உணர்த்துகிறது. பொருள் : வெளிப்படை; கூறாமலே விளங்கும். குறிப்பு : காட்சியளவில் காரணங் காணொணாவிடத்துக் கடவுள் மேல் ஏற்றிக்கூறு முலகியலில், துன்புறுத்தும் சூர் அதாவது இயவுளாக் கொள்வதை அணங்கென்பது பழ வழக்கு. கள்வர், அலைத்துப்பொருள் வௌவுவோர். இறை குற்றங் கடிந்தொறுக் கும் வேந்து. குடிக்குற்றம் ஒறுத்தோங்கும் அறம் பிறர்க்கின்மையின் மிறைகடியும் ஒறுப்பச்சம் தரும் வேந்தைத் தம்மிறை எனச் சுட்டிய பெற்றியறிக. அச்ச ஏதுவாம் தம் மிறையை (தவற்றை)யும், அதற்குரிய ஒறுப்பாலச்சுறுத்தும் தம் இறையையும், ஒருங்கே தம்மிறை எனச் சுருக்கி இரட்டுற விளக்கிய செவ்வியுணர்க. இனி, பிணங்கல்=மாறுபடல், நெருங்குதலுமாம். காரணத் தோடு மாறுபடுவதோ நெருங்குவதோ கூடுவதெதுவும் அஞ்சப் படாதாதலின், பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்றிந் நான்கன் பொதுவியல் விளக்கப்பெற்றது எனவும், ஏகாரங்களுள் முன்னவையும் எண்குறிக்கும்; ஈற்றேகாரம் தேற்றம், அசையுமாம். சூத்திரம் : 9 கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. கருத்து : இது, பெருமித வகையும் இயல்பும் கூறுகிறது. பொருள் : கல்வி முதல் கொடை யீறாக நான்கும் புகழத் தக்க பெருமித வகையாம். குறிப்பு : பெருமிதம், வெறுப்புக்குரிய செருக்கன்று; வீறு தரும் தருக்காகும்; எனவே, புகழ்க்குரிய பெருமையிற் பிறக்கும். மகிழ்வாம். இதன் பழியில் பெருமைப் பெற்றி தோன்றச் சொல்லப் பட்ட பெருமிதம் என விளக்கப்பட்டது. சொல் புகழாதல் வெளிப்படை. ஆகையால் கல்வி, ஆண்மை அதாவது செம்மற்றிறல், சீர்த்தி, வள்ளன்மை என்பவை மீக்கூறப்பெற்றுப் புகழ்தற்குரிய பெருமை யுணர்வூட்டலின், இவை நான்கும் பெருமித வகை யாயின. என எண்ணிடைச் சொல். ஈற்றேகாரம் அசை; தேற்றமு மாம். சூத்திரம் : 10 உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. கருத்து : இதில் வெகுளிவகை நான்கும் அவற்றின் பொது இயல்பும் கூறப்பெறுகின்றன. பொருள் : உறுப்பறை=சினை சிதைத்தல்; அதாவது அங்க பங்கம்; குடிகோள்=ஓம்பற்குரியாரை நலிதல்; அலை=அடித்தும் இடித்தும் அலமரச் செய்தல்; கொலை=கொல்லல்; என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே=இவை நான்கும் வெறுப்பால் விளையும் வெகுளி வகைகளாகும். குறிப்பு : உறுப்பின் ஊறும், சுற்ற நலிவும், அலைப்பும், கொலையும், வெறுப்பால் விளையும் சினமுதலாதலின் இவை வெறுப்பின் வந்த வெகுளி நான்கே என அவற்றினின் இயல்பு வகைமைகள் குறிக்கப்பட்டன. தீதில் சினம் அறமாதலின் அதனை விலக்கி வெறுத்தற்குரிய வெகுளி வகையே இங்குக் கூறப்பட்டன. ஈண்டு, என நனிவெறுப்பின் வந்த என்றிளம்பூரணர் கொண்ட பழைய பாடம், வெறுப்பு மிகுதியால் விளையும் வெகுளியின் பெற்றியை இனிது விளக்குதலறிக. இதில் என்ற, என்பது இளம்பூரணர் பாடத்து என போல எண் குறிப்பதை என்றும் எனவும் ஒடுவும் என முன்குறித்த இடையியற் சூத்திரத்தாலறிக. ஈற்றேகாரம், தேற்றம், அசையுமாம். சூத்திரம் : 11 செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த உவகை நான்கே. கருத்து : இஃது, உவகை வகையும் இயல்பும் உணர்த்துகிறது. பொருள் : செல்வம்=திரு அல்லது ஆக்கப் பெருக்கம்; புலன்=அறிவிலூறும் அகமலர்ச்சி; புணர்வு=கற்புறுகாதற் கூட்டம்; விளையாட்டு=தீதில் பொய்தல்; என்று அல்லல் நீத்த உவகை நான்கே=இந்நான்கும் அலக்கண் விலக்கிய மகிழ்ச்சி வகையாகும். குறிப்பு : செல்வம் அகமகிழ்விக்கும் ஆக்கப் பொதுப் பெயர். யாண்டும் எனைத்தளவும் உளமுளைய வருவதெதுவும் உவகைப் பொருளாகாது. புலன் ஈண்டுக் கல்விப் பயனாமறிவைக் குறிக்கும். அரிய புதிய ஆய்ந்து நுட்பமுணர்ந் துண்மகிழ்தற் கேதுவாமறிவு ஈண்டுக் குறிக்கப்பட்டது. நிறைந்த கல்வி உதவும் புகழ்க்குரிய முன்குறித்த பெருமித உணர்வின் உள்ளூறு மறிவின்பம் வேறாதலின், அவ்வறிவின்பம் இங்குப் புலனுவகை எனக் கூறப்பட்டது. இதனை உரனொடு முரணும் உணர்வு வகையாம் ஐம்பொறி நுகர்வென இளம்பூரணர் கூறுவராலெனின், பொறிவாயிலைந்தும் அவித் தடக்கற் பாலவென வெறுக்கப் பெறுதலானும், அவற்றில் அல்லல் நீத்தல் கூடாமையானும், அது பொருளன்மையறிக. அன்றியும், மெய்ப்பாட்டு வகை அனைத்துமே பொறி வழிப்படும் உணர்வுகளாதலின், அவற்றிலொன்றை மட்டும் பொறி நுகர்வெனக் கூறுதல் பொருந்தாமையானும், அது கருத்தன்மை தேறப்படும். இனி, புணர்வு அன்பொடு புணர்ந்த இன்பத்திணை ஐந்தில் இருவயினொத்த கற்புறு காதற்கூட்டமாம். தேறுதலொழிந்த தீதுறு காமக்களி எஞ்ஞான்றும் பகை, பாவம், அச்சம், பழி என நான்கு மிகவாவாம்; ஆதலின், அஃது அல்லல் நீத்த உவகைப் பொருளா காமை ஒருதலை. அதனாலீண்டுப் புணர்வு பழிபடு மிழிகாமச் சுவை கருதாது, கற்புறு காதற் கூட்டத்தையே சுட்டுவதாகும். விளையாட்டு மக்கள் உளங்களித்தாடும் தீதறியாப் பொய்தல், அதாவது ஓரைவகை அனைத்தையும் குறிக்கும். அஃது இரு பாலார்க்கும் ஏற்பதாகும். ஆண்மையழிந்து மகளிரை இழிக்கும் பிற்காலத்தில் விளையாட்டை அவருக்குத் தனி உரிமையாக்கி, விளையாட்டுப் பொதுப் பெயர்க்கெல்லாம் மகளிர் விளையாட்டெனப் புதுப் பொருளும் கொள்ளப்பட்டது. கடலாடல், புதுப்புனல் குடைதல். உண்டாட்டு, தீதுதவாக் கூத்துப் போல்வன வெல்லாம் விளையாட்டு வகையாகும். எனில், பீழையுதவு மெதுவும் அழுகை.... இளிவரல் முதலிய உணர்வின் வழித் தாமாதலின் அவற்றை விலக்கி, யாண்டும் எஞ்ஞான்றும் துன்பம் தீர்ந்த இன்ப வகையே உவகையாகுமென்று அதன் இயல் விளங்க அல்லல் நீத்த உவகை எனத் தெளிக்கப்பட்டது. புலனே என்பதன் ஏயும், என்றும் எண்குறிப்பன. ஈற்றே காரம், தேற்றம் அசையுமாம். சூத்திரம் : 12 ஆங்கவை யொருபா லாக, ஒருபா லுடைமை யின்புற னடுவுநிலை யருள றன்மை யடக்கம் வரைத லன்பெனாஅ, கைம்மிக னலிதல் சூழ்ச்சி வாழ்த்த னாணுத றுஞ்ச லரற்றுக் கனவெனாஅ, முனித னினைதல் வெரூஉதன் மடிமை கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅ, கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்த லைய மிகைநடுக் கெனாஅ, விவையு முளவே யவையலங் கடையே. கருத்து : இதற்கு முன்வரை முதற்சூத்திரங் கூறும் பண்ணைத் தோன்றும் எண்ணான்குணர்வின் மெய்ப்பாட்டுவகை விரித்து, இதில் முன் இரண்டாம் சூத்திரம் சுட்டிய நாலிரண்டாகும் பால வாய்ச் செய்யுட் பொருள் சிறக்கவரும் உள்ளுணர்வுகள் குறிக்கப் படுகின்றன. பொருள் : ஆங்கவை ஒரு பாலாக ஒருபால்=இதற்குமுன் நகையே... எட்டே மெய்ப்பாடென்ப என்பது முதல் செல்வம் புலனே... உவகை நான்கே என்பது வரை சூத்திரங்களில் கூறப் பட்ட மெய்ப்பாட்டுணர்வுவகை எட்டும் ஒருபான்மையவாக, மற்றொரு பெற்றியவாய்; உடைமை... நடுக்கெனாஅ இவையு முளவே=உடைமை முதல் நடுக்குவரை எவ்வெட்டாய் எண்ணப் படு முணர்வுகளும் செய்யுட்பொருள் சிறக்க வருவனவுள; அவை யலங்கடையே=இவை உளவாதல் முன் குறித்த மெய்ப்பாடு எட்டன்வகை தோன்றாவிடத்தாம். குறிப்பு : இதில் கூறப்பெறும் உணர்வு முப்பத்திரண்டும் எனாஅ எனும் அளபெடை இடைச்சொற்களால் எவ்வெட்டாய்ப் பிரித்து எண்ணப்படுதலால், இவை முதலிற் குறித்த நானான் காய்ப் பண்ணைத் தோன்றும் மெய்ப்பாடு எட்டன் வகைகளின் வேறாதல் வெளிப்படை. அன்றியும், நானான்காய்த் தொகுத்து முன் மெய்ப்பாட்டு வகை எட்டு எனச் சுட்டிய எண்ணான்குணர்வும் புறத்தே மெய்யிற்றோன்றுந் தன்மையவாதல், கண்ணியபுறனே நானான்கென்ப என முதற் சூத்திரத்தும், அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப எனத் தேற்றத்துடன் மூன்றாஞ் சூத்திரத்தும் வற்புறுத்தப் பெறுதலால் தெளிவாகும். அதனாலும், அப்பான்மை சுட்டி அவற்றை ஆங்கவை ஒருபாலாக எனப்பிரித்து நிறுத்தி, ஒருபால் என வேறு தொடங்கி எவ்வெட்டாய் வகுத்து இச்சூத்திரத் தெண்ணப்பெறும் உணர்வு முப்பத்திரண்டும் புறக்குறிச் சுட்டின்றி வாளா கூறப்பெறுதலாலும், நகை முதலிய புறக்குறிபெறும் பான்மைய எண்ணான் குணர்வின் மெய்ப்பாடு எட்டே எனக் குறித்து விலக்கியதாலும், இதில் நாலெட்டும் முன் எண்ணான்கென்ற மெய்ப்பாட்டு வகைகளின் வேறாய்ச் செய்யுட் பொருள் சிறக்கவரும் உணர்வுகளாதல் தேற்றமாகும். இப்பான்மை வேறுபாடு விளங்க, இச்சூத்திரத் துவக்கத்தில் இவ்வுணர்வுகளை எண்ணத் தொடங்குமுன் ஆங்கவை ஒரு பாலாக, ஒருபால் என நிறுத்த சொற்பெய்த குறிப்புமறிக. இவை புறக்குறிச்சுட்டுப் பெறாமையால் மெய்ப்பாடாகச் சிறவாவெனினும் மெய்ப்பாடுகள் போலச் செய்யுட் பொருள் சிறக்க வரும் உள்ளுணர்வுகளாதலின் இவ்வியலில் ஒப்ப முடித்துக் கூறப்பெற்றன. இனி, இவ்வாறு எண்ணான்கும் நாலெட்டுமாய் வகை பெறலொன்று, புறக்குறிச் சார்புடைமையும் இன்மையும் ஒன்று, ஆக இவ்விருதிற வேறுபாடேயுமன்றி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது. மெய்ப்பாட்டு வகை எண்ணான்கும் அகப்புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதில் குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் அகத்துறைகளுக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய், முறையே இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழா அலும் தோழியிற் புணர்வு மென்றாங் கந்நால் வகையினு மடைந்த சார்பொடு கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கப்பட்டுள. இனி, உடைமை என்பது பொருண்மை. அஃதாவது மதித்து உரிமைகொள்ளும் பெற்றியாகும். மதிக்கப்படுவதே பொருளாம். பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் என்பது காண்க. இனி ஒருவர் மற்றவர்க்குப் பொருளாதல் காதலின் முதற்படி, காதற்றலை வனைத் தலைவிக்குக் கிழவன் எனவும், தலைவியைத் தலைவனுக்குக் கிழத்தி யெனவும், சொல்லும் மரபு இப்பொருட் டாதலறிக, பிறன் பொருளாள் என மனைவியை உடைமைப் பொருளாகக் கூறியதும், உரிமை என்றே பெட்புடை மனைவிமார் அழைக்கப்பெறுவதும், யானுன் உடைமை எனக் காதலர் தம்முள் வழங்குவதும், இச்செவ்வி கருதியேயாம். எனவே அன்பின் வழித்தாம் உரிமையுணர்வே உடைமையாகும். இன்புறல், அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும். நடுவுநிலை, காதலுங் கடனும் மோதக் கோடா மனச்செப்பம்: விழைவுக்கடிமையாகாது அறமறவாக் காதற்செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமநிலை எனும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புக் காதலின் உணர்வையே குறிக்கும். அருள், தவறுணரா அன்பின் பெருக்கம்; காணுங்கால் காணேன் தவறாய என்பதறிக. தன்மை, தானதுவாகுமியல்பு; நோக்குவ எல்லாமவையே போறல் எனும் மனமாட்சி. அடக்கம்=தன் தலைமைநிலை மறந்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல். ஞாட்பினு ணன்ணாரும் உட்குமென் பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது எனவும் நாணொடு நல்லாண்மை (காதலுக்கு முன்) பண்டுடையேன் எனவும் வருவன வற்றால் அன்பு அடக்கம் தருதலறிக. இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைக் குறிக்குமெனினும் அமையும். வரைதல், நாணுவரை யிறந்து முன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை; இது காதலினெழுவது. அன்பென்பது அருட்கு முதலாகி மனத்தின்கண் முற்பட நிகழ்வது. இவை எட்டும் காதலின் முதனிலையா மியற்கைப் புணர்வொடு தொடர்வன. கைம்மிகல்=அடங்காக் காதற்பெருக்கு. நோய் மலிநெஞ்ச மொடு இனையல், தோழி என்பதும், ஆற்றா (காதல்) நோயட இவளணிவாட என்பதும் போல வருவன காண்க. காதல் கைம்மிகல் எனக் களவியலிலும் (சூ.115) முன் இவ்வியலிலும் (சூ.23) சுட்டுவதானுமுணர்க. நலிதல்=மெலிவு, அஃதாவது வலிஅழிவு. சூழ்ச்சி=நேராக்கூட்டம் நிகழவழியாராய்தல். வாழ்த்தல்= காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல். வாழி என்னெஞ்சே, நீவாழி பொழுது, வாழி அனிச்சமே காதலை வாழிமதி, புன்கண்ணை வாழி மருண்மாலை என வருவன காண்க. நாணுதல்=வெள்குதல்; காமமும் நாணும் உயிர் காவாத்தூங்கும் என்நோனா உடம்பினகத்து எனவும், பல்லோர் கூற யாம்நாணுதுஞ் சிறிதே எனவும், யானோக்குங் காலை நிலனோக்கும் எனவும், கொண்க னூர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்.... காணவந்து நாணப்பெயரும் எனவும் வருவன காண்க. துஞ்சல் = காதற் கனவுற வுறங்கல்; கயலுண்கண் யானிரப்பத் துஞ்சில்எனவும், துஞ்சுங்காற் றோண்மேலராகி எனவும், கனவினாற் காதலற் காணாதவர் எனவும் வருபவை கண்டறிக. அரற்றல்=வாய்விடல். “நெஞ்சநடுக்குற” வெனும் பாலைக்கலியில் “பாயல் கொண்டென்றோட் கனவுவார், ‘ஆய்கோற் றொடிநிரை முன்கையாள்; கையாறு கொள்ளள், கடிமனை காத்தோம்ப வல்லநள் கொல்லோ? என்றா ராயிழாய் எனவருதலின், தலைவன் அரற்றினமை காண்க. கனா=தூக்கத்திற் றோற்றுவது. இதுவும் காதலிற் கனிவது. நுண்பூண் மடந்தையைத் தந்தாய் போல இன்றுயில் எடுப்புதி கனவே (குறுந்.147) எனத் தலைவன் கனவிலும், நனவினானல்காக் கொடியார் கனவினான், என் எம்மைப் பீழிப்பது? எனத் தலைவி கனவிலும் அறிக. இவ்வெட்டும், இடந் தலைப்பாடெனு மிரண்டாம் காதனிலைக்குச் சிறந்துரியவாம். இனி, முனிதல் முதல் உயிர்ப்புவரையுள்ள எட்டும் பாங்கொடு தழாஅல் எனும் மூன்றாங் காதல் நிலைக்குரிய. அவை வருமாறு: முனிதல்=முன்விரும்பிய வெறுத்தல். பாலுமுண்ணாள் பந்துடன் மேவாள் எனுங் கயமனார் குறும்பாட்டாலறிக. நினைதல் = விருப்புற்று நினைத்தல், நினைப்பவர் போன்று நினையார்கொல் எனவும் உள்ளாதிருப்பினெம் அளவைத் தன்றே எனவும், தலைவியும், நினைந்தனல்லனோ பெரிதே எனத் தலைவனும் நினைத்தல் காண்க. (குறுந். 102, 99) .... பெரிதழிந்தெனவ! கேளாய், நினையினை நீ நனி எனவரும் நற்றிணைச் (253) செய்யுளுமிதுவேயாம். வெரூஉதல்=பிரிவும் ஊறும் அஞ்சுதல். அரிதரோதேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோரிடத்துண்மையால் என்பதிலும், நாம் நகப்புலம்பினும், பிரிவாங்கஞ்சித் தணப்பருங்காமம் தண்டியோரே என்னும் குறும்பாட்டிலும் (117) நீயே, அஞ்சல் என்ற என் சொல்லஞ்சலையே என்னும் சிறைக்குடி ஆந்தையார் (குறுந். 300) செய்யுளினும், பிரிவச்சம் கூறுப. இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல் (குறுந். 217) எனவும், உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் (நற். 253) எனவும், ஊறச்சம் கூறுதலும் உணர்க. மடிமை=ஆற்றாமையின், அயர்வு. இதனை விளை யாடாயமொ டயர்வோளினியே எனவும், ஆய்வளை ஞெகிழவும் அயர்வு மெய்ந்நிறுப்பவும், நோய் மலி வருத்தம் அன்னையறியின் எனவும், வரும் (குறுந். 396, 316) பாட்டடிகளானறிக. கருதல்=குறிப்பு. நாட்டமிரண்டும் அறிவுடம்படுத்தற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும், குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் எனுங்களவியற் சூத்திரங்களானுமிக் கருத்துண்மை தேர்க. செறாஅச் சிறுசொல்லும், செற்றார் போனோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (குறள். 1097): வைகல் தோறும் நிறம் பெயர்ந் துறையுமவன் பைதல் நோக்கம் நினையாய் தோழி... பிறிதொன்று குறித்ததவன் நெடும்புற நிலையே (குறுந்.செய் 298) என்பவற்றாலறிக. ஆராய்ச்சி= காதலரன்பு கனிய வழிசூழ்தல். மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ அழியல், வாழிதோழி... வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே (குறுந் 73) எனவும், அவரொடு சேய்நாட்டு... பெருங் களிற்றடிவழி நிலை இய நீரே உணலாய்ந் திசினால் எனவும் காதல் பற்றி ஆராய்ச்சி நிகழ்தலறிக. விரைவு=வேகம், ஆர்வ மிகுதியாலெழுவது. மாலைவாரா வளவைக் காலியற் கடுமாக் கடவுமதி, பாக!... உண்கட் தெரிதீங் கிளவி (யோள்) தெருமரல் உயவே... (குறுந்.250); காலியற் செலவின் மாலை எய்திச், சின்னிரை வால்வளைக் குறுமகள், பன்மாணாக மணந்துவக் குவமே (குறுந். 189); என்பவற்றாற் காதலின் வேகம் கண்டு தெளிக. உயிர்ப்பு=ஆனாக் காதலின் நெட்டுயிர்த்தல். பானாட் பள்ளியானையின் உயிர்த்தென்னுள்ளம் பின்னும் தன்னுழையதுவே (குறுந்.142) எனத் தலைவனும், பள்ளியானையின் உயிர்த்தனன்நகையிற் புதல்வற்றழீஇயினன் (குறுந்.359); பள்ளி யானையின் வெய்ய உயிரினை (நற். 253); எனத் தோழியும், கூடாவழிக்காதலன் நெட்டுயிர்த்தல் குறிக்கப் பெறுதலறிக. இனி, தோழியிற் புணர்வு என்னும் காதலின் நான்கா நிலைக்குரிய எட்டும் வருமாறு: கையாறு=வசமழிவு, அதாவது செயலறவு; இதுவும் காழ்த்த காதனோயால் வருவது. இதனை, பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமம் எனவும் (குறுந்.160): பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலை எனவும் (குறுந்.391); காலைவருந்துங் கையாறு எனவும் (குறுந்.48) வருவனவற்றாலறிக. இடுக்கண்=காதலால் வருந்தும் துன்பம். யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே (குறுந். 290) எனவும், நாமில மாகுத லறிதுமன்னோவில்லெறிபஞ்சிபோல... ... சேர்ப்பனொடு நகாஅ வூங்கே (நற்.299) எனவும், ..... இனைபெரி துழக்கும் நன்னுதல் பசலை நீங்க, அன்ன நசையாகு பண்பி னொருசொல் இசையாது கொல்லோ காதலர் தமக்கே (குறுந்.48) எனவும், படலாற்றா பைத லுழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண் (குறள். 1175) எனவும், பதிமருண்டு பைதலுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து (குறள். 1229) எனவும் tருவனவற்றால்fதல்நோயுழப்பவÇடுக்கண்fண்டுணர்க.bgh¢rh¥ò=kwâ. இது காதலர் அன்புத் திணைக் குரித்தாதல் வேட்கை ஒருதலை எனுங் களவியற் சூத்திரத்து மறத்தலையும் களவுக் கைகோளின் சிறப்புடை மரபினவையு ளொன்றாக் கூறுதலானும் விளங்கும். பொறாமை=காதலர் ஒருவர் பழி ஒருவர் ஆனாமை, ஒல்லாமை. இயற்பழிக்கும் தோழி கூற்றும், ஏனோர் தூற்றும் பழியும் தாங்காது தலைவி வெறுத்தல் காதலியல்பாம். இயற் பழித்த தோழியை மறுத்து, இதுமற் றெவனோ தோழி! துனியிடை இன்னம் என்னும் இன்னாக் கிளவி ....... திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே (குறுந். 181) எனவும், .... மான்மறி... பெருவரை நீழ லுகளும் நாடன் கல்லினும் வலியன் தோழி! (குறுந்.187) எனவும், .... பெருங்கனாடன், இனிய னாகலின், இனத்தினியன்ற இன்னாமையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தே ணாடே (குறுந்.288) எனவும், நாடன் நயமுடையன் அதனால் நீப்பினும் வாடல் மறந்தன தோள் (ஐந்திணை எழுபது செய். 2) எனவும், பெருமலைநாடற்கியானெவன் செய்கோ என்றி; யானது நகை என உணரேனாயின், என்னாகுவைகொல் நன்னுதல் நீயே எனவும், தலைவனைப் பழித்த தோழியை வெறுக்கும் தலைவி கூற்று வருதல் காண்க. வியர்த்தல்=நாணாலும் நடுக்கத்தானும் வேர்த்தல். இது காதலரியல் பாதலை, பொறிநுதல் வியர்த்தல் என இதன்பின்... சூத்திரத்து வருதலானு மறிக. நின் பிறைநுதற் பொறிவியர் உறுவளியாற்றச் சிறுவரை திற எனவரும் அகப்பாட்டினு மிது குறிக்கப்படுதல் காண்க. ஐயம்=காதல் மிகையாற் கடுத்தல். இது முதற் காட்சியினி கழும் ஐயமன்று; அது தெளிந்தபின் எழாதாதலின், ஈண்டு ஊடலில் எழும் ஐயஉணர்வைக் குறிக்கும். கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீரென்று: வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று, தும்முச் செறுப்பவழுதாள், நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று: என்பன போல வருவன கண்டு கொள்க. மிகை=கைம்மிகு காதலான் வரும் நிறையறிவு. இஃது இப் பொருட்டாதல் பொழுதலை வைத்த கையற்றுகாலை இறந்த போலக் கிளக்குங் கிளவி... மடனே, வருத்தம், மருட்கை, மிகுதியொடவை நாற்பொருட்கண் நிகழுமென்ப எனப் பொருளியலில் வருதலானறிக. மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றிவிடும் எனவும், காமக் கணிச்சியுடைக்கு நிறை என்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு எனவும் தலைவற்கும், பன்மயக் கள்வன் பணிமொழி யன்றோ நம்பெண்மை யுடைக்கும் படை எனத் தலைவிக்கும், காதல்மிகையும் அதனால் நிறையழிவும் சுட்டப்படுதலறிக. நடுக்கு=காதலர்க்கு உணர்வு மிகையானாம் பனிப்பு. ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர் (குறுந். 178) எனத் தலைவனுக்கும், சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே... மடந்தை! பரிந்தனென் அல்லனோ இறை இறையானே? (குறுந். 53) எனத் தலைவிக்கும், முறையே காதல் வேகத்தானாய நடுக்கம் குறிக்கப்பட்டமை காண்க. இவ்வாறு அகத்துறைகளுக்குச் சிறந்துரிய இவற்றையும் முன் எட்டே மெய்ப்பாடு என வகுத்துப் பிரித்த எண்ணான் குணர்வு போலவே, அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பவருவன எனக் கருதுவர் பழைய வுரைகாரர். நானான்காய் எட்டுவகை பெற்றுப் புறந் தோன்றலால் மெய்ப்பாடாமெனச் சுட்டி அவற்றை ஒருபால் எனப்பிரித்து நிறுத்தி, பின் மற்றொரு பாலெனக் குறிக்கப் பெற்ற இவை முப்பத்திரண்டையும் தனித்தும் நானான்காயும் எண்ணாமல், எவ்வெட்டாய் நான்கு வைகையிற்றொகுத்ததன் குறிப்பும் பயனும் அவருரையில் விளக்கப்பெறாமையானும், இவை முன் முப்பத் திரண்டின் வேறுபட்ட பான்மைய எனச் சூத்திரச் சொற்றொடர் சுட்டுதலானும், அவருரை பொருந்தாமை யுணர்க. அன்றியும், இவையும் முன்னவை போலப் பொருட் பகுதிகளிரண்டற்கும் பொதுவாய் வருமெனில், பொது உணர்வு பலவிருக்க இவற்றை இவ்வாறு ஈண்டுத் தொகுத்துக் கூறுதலிற் சிறப்பின்மையோடு, இவற்றுட் சில முன் மெய்ப்பாட்டு வகையில் வந்தனவால் ஈண்டு மீண்டுங் கூறுதல் மிகையுமாகும். இதில் வெரூஉதலும் நடுக்கமும் முன் அச்சமாகும்; அரற்றல் முன் அழுகையினடங்கும்: இன்புறல் முன் உவகையாகும்: மடிமை முன் அசைவிலடங்கும்; இடுக்கண் முன் வருத்தமாகும்; இதனாலும் இவர் கருத்து இச்சூத்திரப் பொருளன்மை தேறப்படும். பிறிதொரு பான்மைத்தாம் இவை முப்பத்திரண்டும் நானான்காயும் தனித்தும் எண்ணப்படாமல் எவ்வெட்டாய் நான்கு வகையிற்றொகுத்ததன் குறிப்பு அவர் கூறாமையானும், இவை முன்னவற்றின் வேறுபட்ட பான்மைய என இதில் தெளிக்கப்பட்டமையானும் அவர் கூற்றுப் பொருந்தாமை ஒருதலை. சூத்திரம் : 13 புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே யொன்றென மொழிப. கருத்து : மேல் அகத்திணைகளுக்குப் பொதுவாவன நாலெட்டுங் கூறி, அடுத்து அகத்துள்ளும் களவிற் சிறந்து பயிலும் மெய்ப் பாடுகள் உணர்த்தத் தொடங்கி, அவற்றுள் தலைப்படும் அன்பர் உளத்தெழுங் காதல் முதற்குறிகளை இச்சூத்திரம் கூறுகிறது. பொருள் : புகுமுகம் புரிதல்=தலைக் காட்சியில் தலைவன் நோக்கெதிர்வைத் தலைவி விரும்புதல்; பொறிநுதல் வியர்த்தல்= காதலால் நோக்கெதிர்ந்த தலைவி தனக்கியல்பாய அச்சமும் நாணும் அலைக்க அவள் நெற்றியின் பொறிவியர் பொடித்தல்; நகுநய மறைத்தல்=தலைவன் காதற்குறி கண்ட மகிழ்வால் முகிழ்க்குந் தன் முறுவலைப் பிறரறியாது தலைவியடக்குதல்; சிதைவு பிறர்க்கின்மையொடு=தன்னுள் நிறையழிவைப் புறத்துப் புலனாகாது மறைக்கும் தலைவி திறத்தொடு கூட்டி; தகுமுறை நான்கே ஒன்றென மொழிப=பொருந்த வரிசையில் எழும் இந்நான்கும் காதலின் முதற்கூறாகுமென்று கூறுவர் புலவர். குறிப்பு : இதில் கூறிய நான்கும் தலைக் கூட்டத்திலன் புறுவார் மாட்டு ஒன்றினொன்று இன்றியமையாத் தொடர்பொடு பொருந்தத்தோன்றி, அவரகத்து விளையுங்காதலின் முதற்குறியாய்ப் புறத்துப் புலப்படுதலின், இவை தகுமுறை நான்கே ஒன்றென மொழிப என ஒருபடித்தாத் தொகுத்துக் கூறப்பட்டன. பெருமையும் உரனுமுடைய தலைவன் தன் தழையுங் காதலை ஒளியானாக, அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய தன்மையால் தலைமகள் தன் சுரக்குங் காதலைக் கரக்குமாதலின், இம்மெய்ப்பாடுகள் பெரிதும் அவள்மாட்டே காணப்பெறும். இனி, புகுமுகம் என்பதை முன்றில், தொழுதெழும், வணங்கி வீழ்ந்தான் என்பனபோலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும். தலைவன் நோக்கெதிர்வைத் தலைவி விரும்புதலை, நோக்கினாள், நோக்கெதிர் நோக்குதல் (குறள். 1082); கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் (குறள். 102): என வருவனவற்றால் அறிக. நோக்கெதிர்ந்து தலைவன் காதற் குறிகண்டு மகிழுந் தலைவிக்கு உள்ளுணர்வு பொங்கப் பொள்ளெனப் புறம் வியர்த்தல் இயல்பாதலின், மறையா அவள் சிறு நுதலில் குறுவேர்வை தோன்றும். இதற்குச் செய்யுள்: (1) பெரும்புகழுக்குற்ற நின் பிறைநுதல் பொறிவியர் (அகம்.136) எனும் அகப்பாட்டடி காண்க. (2) யாழ்ப்போரில் சீவகனை முதலில் எதிர்ந்த தத்தைக்குக காதற்பெருக்கால் காமர் நுதல்வியர்ப்ப எனத் திருத்தக்க தேவர் கூறும் குறிப்பும் இம்மெய்ப்பாடேயாகும். (3) யானதற் காண்டொறும் தான்பெரிது மகிழாள், வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த நன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால் நெஞ்சே யானறிந் தேன்அது வாயா குதலே (இலக்கணவிளக்க மேற்கோள்) இப்பழைய பாட்டில், இச்சூத்திரம் சுட்டும் கடவுட் காதலின் முதற்குறி நான்கும் முறையே வருதல் கருதற்குரித்து. நகுநய மறைத்தலென்பது, முதற்காட்சியில் தலைவன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவி மகிழ்வான் முகிழ்க்குந் தன்முறுவலை, பிணையேர் மடநோக்கும் நாணு முடைய ளாதலின் மறைக்குமவள் முயற்சியைக் குறிப்பதாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், நாணினளிறைஞ்சி, மிகை வெளிப் படாது நகைமுகங் கரந்த நன்னுதல் அரிவை என வருதல் காண்க. இன்னும், யானோக்கப் பசையினள் பையநகும் (குறள்.1098) எனவும், கரப்பினுங் கையிகந்தொல்லா நின்னுண்கண் ணுரைக்க லுறுவதொன்றுண்டு (குறள்.1271) எனவும், பேதை நகை மொக்குள் உள்ளதொன் றுண்டு (1274) எனவும் வருவனவெல்லாம் தலைவியின் நகுநய மறைப்பைக் குறிப்பனவாம். இனி, நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் தலைவி தன் நிறை யழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி, சிதைவுபிறர்க் கின்மை எனப்பட்டது. மறைப்பேன்மற் காமத்தையானோ (குறள்.1253) எனப் பெண்ணியல்பு கூறும் குறள் இம்மெய்ப்பாடு குறிப்பதாகும். மேற்செய்யுளில் நன்னுதல் அரிவை தன் மனஞ் சிதைந்ததை நீயறிந்திலையால் நெஞ்சே யானறிந்தேனது வாயாகுதலே என வருவதுமதுவே. அதில் நன்னுதல் அரிவை தன் மனஞ் சிதைந்ததை மறைப்பதனால் நீயறிந்திலையால் எனவும், அவ்வாறு அவள் கரப்பினும் கையிகந்தொல்லா (அவள்) உண்கண் உரைக்கலுறும் குறிப்பால் தலைவன் அறிந்து அவள்பால் காதலுண்மையைத் தன் தளரு நெஞ்சொடு கிளந்து தேறுவனாதலின் யானறிந்தேனது வாயாகுதலே எனவும் கூறிய குறிப்பறிக. சீவகனைத் தத்தை முதலில் கண்டபோது, ... நிறையெனுஞ் சிறையைக் கைபோய் இட்டநாண் வேலியுந்திக் கடலென வெழுந்த வேட்கை விட்டெரி கொளுவ நின்றாள் எரியுறும் மெழுகின் நின்றாள். (சீவக.710) எனினும், அவ்வாறு அழியுந்தன் சிதைவு பிறரறியாது அடக்கும் விருப்பால், பூங்குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீநெஞ்சே (சீவக.712) என்று நெஞ்சொடு கூறித் தன்தளர்வு மறைக்கின்ற செவ்விகூறும் சிந்தாமணிச் செய்யுளடிகளாலுமிதையறிக. இனி, தலைக்காதலின் முதற்கூறாகும் இந்நான்கு, மெய்ப் பாடுகளையும் ஆரியர்நூல் கூறும் பத்தவத்தைகளுள் முதலதாக் கொள்ளும் உரையாசிரியர் கருத்துப் பொருந்தாமை, பேராசிரியர் இச்சூத்திரத்தின் கீழ் அதனை மறுப்பதாலறிக. இரண்டாமடி ஈற்றில் ஒடு பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச் சொல்; மற்றைய மூன்றொடும் தனித் தனிக்கூடி எண்ணுப் பொருள் விளக்கும் (சொல்.சூத். 289). நான்கே என்பதன் ஏகாரம் இசை நிறை; அசையெனினுமமையும். மொழிப எனும் வினைக்கு, கொண்டபொருள் தொடர்பால் புலவர் எனும் எழுவாய் அவாய் நிலையிற் கொள்ளப்பட்டது. சூத்திரம் : 14 கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ டூழி நான்கே இரண்டென மொழிப. கருத்து : இது முதலில் கண்டாங்கே கொண்ட காதல் வளர விளையும் விருப்பக் குறிகளை உணர்த்துகிறது. பொருள் : கூழைவிரித்தல்=(தழையுங்காதல் தன்னுளம் நெகிழ்க்கக்) குழையுங் கூந்தலைத் திருத்தக் குலைப்பது; காதொன்று களைதல்=செவியில் பூட்டாது செறுகியதோடு ஒன்றைத் திருத்து வாள்போலக் கழற்றுதல்; ஊழணிதைவரல்=பெண்டிர் பண்டை முறையே கொண்டணி தொடி வளைமுதலியவற்றை நழுவாது செறிப்பது போலத் தடவுவது; உடைபெயர்த்து உடுத்தலோடு = அழியுமுணர்வால் குழையுமுடலில் குலையுங் கலையின் நிலையைத் திருத்தி யணிதலுடனே; ஊழின் நான்கே இரண்டு என மொழிப=முறையே இந்நான்கும் திரண்டெழும் அன்பின் இரண்டாங்கூறாம் எனக் கூறுவர் புலவர். குறிப்பு : இதில் கூழை, கழலுங்காதணி, ஊழணி, கலையு முடைதிருத்தல் எல்லாம் பெண்டிர்க்குரியவாதல் வெளிப்படை. பாற்பொதுமை விலக்கக் கூழையெனப்பட்டது; பெண்டிர் கூந்தலே கூழையெனப்படுதலின். ஒன்று என்பதை முதனிலை ஆகுபெயராக்கி, பூட்டாது காதில் பொருந்தும் அணியெனக் கொள்ளினுமமையும். ஊழணி என்பது, கைம்மையரல்லாக் குலமகளிர் களையாது அணியும் வளைபோல்வனவற்றைக் குறிக்கும். இன்றியமையாது இவை குடிப்பெண்டிர் கொண்டணிதல் முறையாதலின், ஊழணியென உரைக்கப்பட்டன. (ஊழ்=முறை). உடைபெயர்த்துடுத்தலில், பெயர்த்து என்பது மீட்டும் எனும் பொருளைக் குறிக்கும்; அழித்து எனக் கொள்ளுதல் அமைவுடைத் தன்று. முன் சுட்டியுள்ள ஆடை நெகிழ்வதை மீட்டும் இறுக்குத லென்பதே பொருந்திய பொருளாகும்; அவ்வாறன்றி ஆடையைத் தலைவனெதிரில் தலைவி தானே அழித்துடுத்தல் பெண்ணீர்மை யன்றாதலின் அது பொருளன்மை தேற்றம். விண்ணுயர் விறல்வரைக் கவாஅன் ஒருவன் கண்ணின் நோக்கிய தல்லது தண்ணென உரைத்தலு மில்லை மாதோ, அவனே வரைப்பாற் கடவுளு மல்லன், அதற்கே ஓதி முந்துறக் காதொன்று ஞெகிழ நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத் துகிலும் பன்முறை நெடிது நிமிர்ந்தனவே, நீயறி குவையதன் முதலே, யாதோ தோழி அதுகூறுமா றெமக்கே. எனும் இலக்கணவிளக்க மேற்கோள் பழம்பாட்டில் இச்சூத்திரம் சுட்டும் மெய்ப்பாடு நான்கும் ஒருங்கே நிகழ்ந்தமை தலைவியே கூறுதல் காண்க. இவை, சிதைவு பிறர்க்கின்றிப் புறங்காத்து அகத்தழியுந் தலைமகள் மறையிறந்து மன்றுபடும் தன் நிறையழிகாதலை மறைக்கு முயற்சியில் அவள் காதலுணர்வொடு புணரும் குறிகளாம். காதற்கரப்பும், நிறையழிகாதல் மறைப்பினும் அமையாது புறம் பொசியும் சிறப்பும் பெண்ணியலாதலின், அவ்வியல் குறிக்கும் இவ்வுணர்வுகள் ஊழின் நான்கேயெனத் தொகுத்து இரண்டாங் காதற்கூறாய் உரைக்கப்பட்டன. (ஊழ்=இயல்பு, முறை). இவ்விடத்தில் இளம்பூரணர் கெழீஅய நான்கே எனப்பாடங் கொள்வர். அதுவும் இக்குறிப்பினதாதல் காண்க. இதில், ஓடு எண்ணிடைச்சொல். ஏகாரம் இசை நிறை. மொழிப எனும் வினைக்குப் புலவர் எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் கொள்ளப்பட்டது. சூத்திரம் : 15 அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலி யுறுத்தல், இருகையும் எடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப. கருத்து : இது ஊன்றி வளர்காதலின் மூன்றாங் கூறுபாடு ணர்த்துகிறது. பொருள் : அல்குல் தைவரல் முதல் கூறிய நான்கும் களவுக் காதலின் மூன்றாங் கூறாகுமென்பர் புலவர். குறிப்பு : அல்குல்=இருப்புறுப்பு (ஆசனம்). இனி இதை அவையல்கிளவியாகக் கொண்டு கூறும் உரை பொருந்தாது. கலையின் மேலணி மேகலை தன்னொடு, தழையின் ஆகிய மேலுடை தொடுவது இருப்பிடம் ஆவதன்றி இடர்க்கர்ப் பொருள் குறிப்பதன்று என்பது தேற்றம். திருந்திழை அல்குற்குப் பெருந்தழை யுதவி எனக் கூடலூர்கிழாரும், தழையணி யல்குல் மகளிர் என அம்மூவனாரும், தித்தி பறந்த பைத்தகல் அல்குற் றிருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத் தழையினும் என அஞ்சிலாந்தையும் பிறரும் கூறுவர். இவ்வாறு பொன்னொடு மணிமிடைந்த மேகலை இழை களும், கலையின் மேலணி தழையுடை வகைகளும் அசைந்தாடும் உறுப்பெனக் குறிப்பதாலும், இடக்கரென அடக்காமல் அல்குலெனச் செய்யுளில் பல்காலும் வருதலானும், அல்குல் அவையல்கிளவி யாகாமையும், இருப்புறுப்பையே சுட்டுதலும், தெளிவாகும். இனி, தைவரல்=தடவுதலாம். உடைபெயர்த் துடுத்திய பின், குலையாது திருத்திய கலை முன்நிலை படிய இடைக்கீழ் அவ்வுடைதொடும் தடம்விரி இருப்புறுப்பைத் தடவுதல் இயல்பு. அவ்வியல்பு இங்கு அல்குல் தைவரல் எனக் குறிக்கப்பட்டது. இஃது இப்பொருட்டாதல் இளம்பூரணருக்கும் கருத்தென்பது அவர் உரைக்குறிப்பால் அறிக. எனினும் அல்குலை அவையல் கிளவியாக்கி, அவிழ்த்து உடை நெகிழ்த்தவள் தன் அற்றம் மறைப்பதே அல்குல தைவரல் என்பர் பேராசிரியர். கற்பிறவாக் குலமகள் மணவாத் தலைவன் முன் மறந்தும் அது செய்ய ஒல்லாள். குலையுங்கலை நிலையைத் திருத்துவதியல்பு. தலைவன் எதிரில் தலைவி உடை அவிழ்த்துத் திருத்தாளாதலின், அற்றம் மறைப்பதும் அதற்கல்குல் தைவரலும் அவனெதிரில் அவள் எஞ்ஞான்றும் எண்ணவும் ஒல்லாள், அதனால் அஃதுரையன்மை அறிக. இனி, (களையா வளைபோன்ற) ஊழணி திருத்தியும், உடை திருத்தியுங் கொண்டபின், விரும்பப் புனைந்த வேறுகலன் திருத்தலும் காதற் காட்சியில் புகுமுகம் புரியும் பெண்டிர்க்கு இயல்பாகலின், அணிந்தவை திருத்தல் இங்குக் கூறப்பட்டது. அணிந்தவை = ஊழணியல்லாப் பிறகலன்களைக் குறிக்கும். இல்வலியுறுத்தலாவது, தனக்கியல்பில்லாத வன்மையைத் தோற்றுவித்தல். தலைவி, தளருந்தன் உளநிலையைத் தலைவனும் பிறரும் அறியாவாறு உரனுடைமை படைத்துக் காட்டுதல். பெருகுங் காதலால் பசைஇ, கண்களவு கொள்ளும் தலைவி தலைவனை ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதலோடு, செற்றார்போல் நோக்குவதும், நிறையழியுந் தலைவி தனக்கில் வலியுறுத்தும் பெண்ணியல்பாதலைக் குறிப்பறியுந் தலைவன் கூற்றால் குறளடிகள் விளக்குதல் காண்க. இருகையுமெடுத்தல், தன்மெய் தொட்டுப் பயிலும் தலைவன் தழுவக் குழைபவளுக்கு, முன் தான் கரந்த காதல் கைம்மிக, உடல் சிந்தைவச மாவதால், அவள் கருதாமலே கைகள் தாமே உணர்த்தும் குறிப்பாகும். ஓதியும் நுதலும் எனும் (சூ.582) இலக்கண விளக்க மேற்கோள் பழம்பாட்டில், மெலிந்திலளாகி வலிந்து பொய்த் தொடுங்கவும் யாமெடுத்தனைத் தொறும் தாமியைந் தெழுதலின் என வருவது இம்மெய்ப்பாடாகும். இதில் ஒடு எண் குறிக்கும். ஏகாரம் இசைநிறை. மொழிப எனும் வினை புலவர் எனும் அவாய்நிலை எழுவாய் கொண்டு முடிந்தது. சூத்திரம் : 16 பாராட் டெடுத்தல், மடந்தப வுரைத்தல், ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ, எடுத்த நான்கே நான்கென மொழிப. கருத்து : இது தோலாக்காதலின் நாலாங் கூறுணர்த்துகிறது. பொருள் : பாராட்டு எடுத்தல் முதல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொகுத்த நான்கும் தோலாக் காதலின் நாலாங் கூறாமெனக் கூறுவர் புலவர். குறிப்பு : (1) பாராட்டெடுத்தலென்பது, புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும். (1) தலைவன் தலைவி நலம் பாராட்டுவதற்குச் செய்யுள்: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்பது போல வருவன காண்க. (2) இனி, நிலத்தினும் பெரிதே வானினுமுயர்ந் தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்.3) நாடன், தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்னெடுந் தோளே இன்று முல்லை முகைநா றும்மே (குறுந். 193) உவந்துறைவார் உள்ளத்துள் என்றும்; இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர் (குறள். 1130) என்பவற்றில் புணர்ந்த தலைவனலம் தலைவி பாராட்டுதல் காண்க. (2) இனி, மடம் தப உரைத்தலாவது, பேதைமையொழியப் பேசுதல். முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் கரவறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழியத் தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந்நிலைதான் மடம் தபுதல். (மடம்=கள்ளமற்ற பிள்ளைத்தன்மை: தபுதல்=கெடுதல், நீங்குதல்) அவ் வறிமடநிலையிற் றேர்ந்துரையாடலே மடம்தப உரைத்த லெனக் குறிக்கப்பட்டது. பாராட்டெடுத்தல், மடம்தப உரைத்தல் முதலிய பல வாற்றானும் மறைத்த கூட்டம் புறத்துப் பொசிய, அயிர்த்தயலார் தூற்றுதற்காளாதலும் அவர் பரிவற்ற பழிச்சொற் கேட்டு நாணுதலும் தலைவிக்குநேரும். அம்பலும் அலரும் கூறும் வம்பர் யாரும் தலைவனறியப் பேசத் துணியார். ஒருவாறு பேசினும், உரனுடை மையினால் அவன் பொருட்படுத்தானாதலின், அவர் கூற்றை அஞ்சுவது தலைவிக்கே பெரிதும் இயல்பாம். (3) ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்பது, தலைவி தன் களவொழுக்கை ஐயுற்றயலார் தூற்றும் பழிக்கு வெள்குதல். யானே யீண்டை யேனே; என்னலனே ஆனா நோயொடு கான லஃதே துறைவன் தம்மூ ரானே; மறைஅல ராகி மன்றத் தஃதே (குறுந். 97) இவ் வெண்பூதியார் குறும்பாட்டில் தலைவி அலர்நாணுதல் கூறப்படுதலறிக. அலர்யாங் கொழிவ? தோழி எனும் சேந்தன் கீரன் குறும்பாட்டுமதுவே. (4) இனி, கொடுப்பவை கோட லாவது, தலைவன் அனுப்பும் தழையும் கண்ணியும் போன்ற காதற்கையுறையைத் தலைவி மாறாதேற்றணிந்து மகிழ்தல். முன், அலரஞ்சித் தலைவன் தருவன விலக்கிய தலைவி, அச்சமும் நாணும் அலராலழிய, அவன் தழையொடு கண்ணிதருவனகொண்டு பெருமகிழுறுவது பெண்ணியல்பாகும். மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய, பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ் அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி திருந்திழை அல்குற்குப் பெருந்தழை யுதவிச் செயலை முழுமுத லொழிய, அயல தரலை மாலை சூட்டி ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே (குறுந். 214) இதில், தலைவன் உதவிய கையுறைத் தழையைத் தலைவி ஏற்றணிந்துவர, அவள்பொருட்டு அவன் தழைகொய்த அசோகு பட்டதெனப்படுதலால், தலைவன் கொடுப்பதும் தலைவி கோடலும் கூறப்படுதலறிக. நல்லாறெனினும் கொளல்தீ தாதலின் தானொன்று வேண்டாத் தலைவி, பொருட் பொருட்டன்றி, அன்புக்குறியாய்த் தலைவன் தருவன அவன் பொருட்டேற்பாள் என்பது குறிக்க இங்கு அவள் கொடுப்பன கோடலும் கூறப்பட்டது. தலைவன் உதவுங் காதற் கையுறைகளை அவன் ஈவன தருவன என்னாது கொடுப்பன என்றார். தருந்தலைவனுணர்வில் பெறுந்தலைவியுயர்ந்தவளென்று எண்ணுவதியல் பாதலின். கொடுப்பன கோடல் செயலாயினும், கொள்பவளுணர்வை உள்ளவைப்பதால் மற்றவள் உள்ளுணர்வு மூன்றொடும் சேர்த்தெண்ணுதற் குரித்தா மென்னுங்குறிப்பால், உளப்படத் தொகைஇ என அதனைப் பிரித்துச் சுட்டிக் காட்டினர். இவை கரப்பு விருப்பைக் கடந்தெழுந் திறத்தவாதலின், எடுத்த நான்கெனக் குறிக்கப்பெற்றன. ஏகாரம் இசைநிறை புலவர் எனும் எழுவாய் பொருட் டொடர்பால் அவாய்நிலையாய்க் கொள்ளப்பட்டது. சூத்திரம்: 17 தெரிந்துடம் படுதல், திளைப்புவினை மறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி யுவத்தலொடு பொருந்திய நான்கே ஐந்தென மொழிப. கருத்து : இது காதலின் ஐந்தாங் கூறாவனவற்றை உணர்த்துகிறது. பொருள் : தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் கூட்டம் பெறாமல் நைந்தழி தலைவியின் ஐந்தாங் காதற் கூறாமென்பர் புலவர். குறிப்பு : (1) முற்படும் அலரால் இற்செறிவுறினும் தமர்மண மறுப்பினும் தனிமை ஆற்றாத் தலைமகள் தலைவனுடன் போக்குக்கு ஒருப்படவும், அன்றேல் தோழியால் அறத்தொடு நிற்க ஒருப்படவும் நேர்வள். இது தெரிந்துடம்படுதலாகும். ஆய்ந்து புணர்ச்சிக் குடம்படுதல் இதன் பொருள் என்பர் இளம்பூரணர். முன் இருகையும் எடுத்தாங்கே கூட்டவுடன்பாடு குறித்தமையால், ஈண்டது மீண்டுங் கூறவேண்டாதாகும். (2) இனி, ஆற்றாத் தனிமையிலழியும் தலைமகள் தனிமை தாங்கா உளத்தளாதலின், உவப்பிற்குரியவும் உவர்ப்பாளாகித் திளைப்பு வினைகளை வெறுப்ப தியல்பாம். அதனால் அந்நிலை குறிக்கப்பெற்றது. பாலும் உண்ணாள் எனும் கயமனார் குறும்பாட்டில், பந்துடன் மேவாள், விளையாட்டாய மொடு அயர்வோள் என, அன்புற்றழிபவள் முன்பு திளைத்தவற்றை வெறுக்குங் குறிப்பு விளக்கப்படுதல் காண்க. (3) இனி, கரந்திடத் தொழிதலாவது, சுரந்தெழு காதலைக் கரந்தழிதலைவி தனிமையில் வினையெலாம் தவிர்தலைச் சுட்டும். யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே (குறுந். 290) யாவது மறிகிலர் கழறு வோரே; தாயின் முட்டை போல வுட்கிடந்து சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தோ யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே (குறுந். 152) எனவரும் செய்யுளடிகளில் கரந்திடத் தொழிதல் கண்டு தெளிக. இனித் தலைவன் தற்காணவும் தான் அவற்காணவும் விரும்புவதே தண்டாக்காதற் பெண்டிரியல்பாதலின், அவ்வியல்புக்கு மாறாகவும் ஒழிதற் சொற்பொருட் கொவ்வாதாகவு மிதற்குப் பிறர் கூறுமுரை பொருந்தாமை தெரிந்து விலக்குக. (4) இனி, இவ்வாறு தனிப்படரால் மெலிபவள் தான் முயலாது தலைவனைக்காண நேரின் மகிழ்வாள். அதனால் கண்டவழி யுவத்தல் இங்குக் கூறப்பட்டது. இதிற் கூறியநான்கும் தலைமகளின் கடக்கொணாக்காதலின் அறிகுறியாய் அமைதலின், இவை பொருந்திய நான்கெனக் குறிக்கப் பெற்றன. ஒடு, பிரிந்து சென்று முன்னைய ஒவ்வொன்றோடும் ஒன்றும் எண்ணிடைச்சொல். ஏகாரம் இசைநிறை முன்னதிற் போலவே மொழிப எனும் வினைக்குப் பொருந்த அவாய்நிலையாற் புலவர் எனும் எழுவாய் கொள்ளப்பட்டது. சூத்திரம் : 18 புறஞ்செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையற வுரைத்தலொடு புலம்பிய நான்கே ஆறென மொழிப. கருத்து : இது மாறாக்காதலின் ஆறாங்கூறுணர்த்துகிறது. பொருள் : புறஞ்செயச் சிதைதல் முதலிய நான்கும் மாறாக் காதலின் ஆறாங்கூறாமெனக் கூறுவர் புலவர். குறிப்பு : உடன்போக்கும் மணமும் பெறாமல் இற்செறிப் புற்ற கற்புடைத் தலைமகள் வளர்ந்தெழு காதலாற்றளர்ந்தழி நெஞ்சொடு தனிமைதாங்காத்துனியால் வருந்துவள். அந்நிலை யிலவள் தன் எண்ணம் அறியாமல் வண்ணமகளிர் பண்ணுங் கோலம் காதலன் காண உதவாமையினால் ஏதமென முனைந்தும், அதனைக்கடியவும் களையவு முடியாமையினால் இணைந்தும் அழிவாள். அந்நிலை இங்குப் புறஞ்செயச் சிதைதல் எனக் கூறப்பட்டது. இனி, களவொழுக்கத்தில் ஆற்றாமையினால் அழியுந் தலைவி தன் விருப்பம்பெறவும் தான் வெறுப்பன விலக்கவும் வழிகாணாமல் தாங்காத்தனிமையினால் ஏங்கும் நிலை புலம்பித் தோன்றல் எனப்பட்டது. புலம்பு தனிமைத்தே என்பது தொல்காப்பிய ருரியியற் சூத்திரம். வருந்துமவளைப் பரிந்து சுற்றம் துனிமுதல் வினவ, அதற்கு அவள் சொல்வதறியாமல் குழம்பு முணர்வாற் குழறுநிலையைக் கலங்கி மொழிதல் எனக்கூறினர் தொல்காப்பியர். தனிமை தாங்காத் தலைவி காதல் கைம்மிகத் தெருமரு நிலையில் தன் ஆற்றாமை கூறத்துணிவாளாதலின், கையற வுரைத்தல் கடைசியில் கூறப்பட்டது. பூவிடைப்படினும் எனும் சிறைக்குடி ஆந்தையார் குறும்பாட்டில், பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல, கடனறிந் திருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே (குறுந். 57) எனக் காப்புமிகுதிக்கண் தலைமகள் தோழிக்குத் தன் கையறவு கூறுவதறிக. இதுபோலவே, காலையும் பகலும் எனும் குறும் பாட்டில் (32) வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே என அந்நிலையில் தலைவன் தன் கையறவு கூறுதலும் காண்க. இவளே, அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ, பல்கிளை நாப்ப ணில்கிளை போல, மொழிவகை யறியாள், பொழிகண் ணீர்துடைத் தியானே கையற வலம்வரும்; கூறாய் பெருமநிற் றேறு மாறே. எனும் இலக்கண விளக்க மேற்கோள் பழம்பாட்டில் இங்குக் கூறிய மெய்ப்பாட்டுணர்வுகள் நான்கும் ஒருங்கமையத் தோழி கூறினமை காண்க. இதில், ஒடு எண்ணிடைச் சொல்; ஏகாரம் இசைநிறை. எழுவாய் அவாய்நிலை. சூத்திரம் : 19 அன்ன பிறவு மவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்தம் என்ப. கருத்து : இது மேலனவற்றிற்குப் புறனடையாய் அவற்றின் பொதுத் தன்மையுணர்த்துகிறது. பொருள் : அன்னபிறவும் அவற்றொடு சிவணி=மேற்கூறிய ஆறு கூறாமுணர்வுகளை ஒத்தபிற காதற்குறி மெய்ப்பாடுகளும் அவ்வாறோடுங்கூடி; மன்னியவினைய நிமித்தம் என்ப=அவை யெல்லாம் நிலைத்த காதல் நிமித்தம் எனக் கூறுவர் புலவர். குறிப்பு : இங்குக் கூறப்பட்டவும் அவற்றொடு பொருந்தக் குறிக்கப் பட்டவுமாம் உணர்வெல்லாம் நிலைத்த காதற் கூட்டத் திற்கு நிமித்தமாதலால், அவற்றின் பொதுவியல்பு நேரே பொருளா காவிடினும் பொருளொடு பொருந்தி அக்கூட்டவிருப்பின் முதலும் முடிவுமாய்த் தோன்றுமாதலின், அவை அனைத்தும் கூட்டத் தினைக் குறிக்கும் நிமித்தம் எனப்பெறும். விளைபயன் ஒன்றன் அறிகுறி, விதைமுதல், விளைபயன், தோற்றுவாய்களை அதன் நிமித்தமென்பது முறையொடுமரபாம். ஆதலின், வீயாக் காதலை ஓயாதுணர்த்துமிவை புணர்வொடு பொருந்தும் நிமித்தம் எனப் பட்டன. இதனால் இவற்றின் தன்மை கூறிற்றாம். மேலுரைத்த இருபத்துநான்கே புணர்வின் நிமித்தமென நினையாது, அன்ன பிறவுள்ளனவும் தள்ளாது கொண்டமைகவெனக் கூறுதலால் புறனடையுமாயிற்று. களவொழுக்கம், கந்தருவம்போல நேர்ந்தவழிப் புணர்ந்து தீர்ந்தவழி மறக்கும் திறத்ததன்றாம்; இருவயினொத்துப் பிரியாது கூடிவாழ்தல் அன்றேல் தரியாது இறந்து முடிதல் எனும் துணிவுடையார் இருபாலவரும் ஒருவரை ஒருவர் இன்றியமையாக் காதலுடையார்க்கே உரியதாகலின், அவர் காதலொழுக்கம் மன்னிய வினை எனப்பட்டது. மன்னுதல்=நிலையுதற் பொருட் டாதல், மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை எனுங் குறளாலும், மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர் எனவும், மன்னுதல் வேண்டின் இசைநடுக எனவும் வருஞ் செய்யுளடிகளாலு மறிக. நிலையாக் காமப் பொய்யொழுக்கை விலக்கி, என்றுங்குன்றா திருவயினொத்த நிலைத்தகாதற் றிணைக்கே இம்மெய்ப்பாடு களுரிய என்பதை விளக்க, இவை மன்னிய வினைய நிமித்தம் எனச் சுட்டப்பட்ட செவ்வி அறிந்து பாராட்டற் பாற்று. சூத்திரம் : 20 வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே. கருத்து : இது மேலனவற்றிற்கோர் புறநடை. கையிகந்த காதல் நலிய ஆற்றாது மெலிபவர்பால் அன்பினைந்திணை நிமித்தமாம் மெய்ப்பாடுகள் மேற்கூறிய முறையில் நிகழாமையும் உண்டென்பது உணர்த்துகிறது. பொருள் : உயிர்மெலிவிடத்து = கழிபெருங் காதலால் ஆற்றாது உயிர் நையுங்கால்; வினை =அன்புத் திணை நிமித்தமாம் மெய்ப்பாட்டு நிகழ்வு; இன்மையும் உரித்து = மேற்கூறியாங்கு நேராமையும் அமையும். குறிப்பு : ஈண்டு வினையென்றது, முன் மன்னிய வினைய நிமித்தம் எனச் சுட்டிய மெய்ப்பாட்டுத் தொகுதியையேயாம். இனி, வினையுயிர் என்பதை உம்மைத் தொகையாக்கி, செயலும், உயிரும் ஓய்ந்து கையறு நிலையில் என உரை கொள்ளினும் அமையும். ஈற்றேகாரம் அசை. இன்மையும் என்பதன் உம்மை எதிர்மறைப் பொருட்டு; உண்மையே பெருவழக்கென்பது உம்மைக் குறிப்பு. மேற்கூறிய மெய்ப்பாட்டு நிகழ்ச்சி பொதுவியலாதலின் அம்முறையில் அவற்றைச் சுட்டி, அன்ன பிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப எனவுங்கூறி, அவற்றிற்குப் புறனடையாக அவை ஒரோவழி உயிர் மெலிவிடத்து நிகழாமையும் உளதாம் என்று இதிற் குறிக்கப்பட்டது. கூறிய மெய்ப்பாடுகள் குறித்த முறையில் நிகழ்வதே காதற் பொதுவியல்பென்பதும், விஞ்சுவேட்கையால் நெஞ்சறைபோகிய காதலர் ஆற்றாமையாற் கூடுவர், அன்றேல் மெலிந்து உயிர் வாடுவராதலின், அவர் அன்பொழுக்கம் இங்குக் கூறிய மெய்ப்பாட்டு முறை கடத்தலும் ஒரோவழி உண்டென்பதும், முறையே இவ்விரு சூத்திரமுஞ் சுட்டும் கருத்தாகும். சூத்திரம் : 21 அவையு முளவே அவையலங் கடையே. கருத்து : இது மேற்கூறியன தோன்றாவிடத்துக் கீழ்க் குறிக்கும் மெய்ப்பாடுகள் நிகழ்தலுமுண்டென்று உணர்த்துகிறது. பொருள் : அவையலங்கடையே=முன் கூறிய மெய்ப் பாடுகள் நிகழாவிடத்து; அமையும் உள=பின் சுட்டப்படும் பிறவும் உரியவாம். குறிப்பு : ஈற்றேகாரம் அசை. உம்மை எதிரது தழீஇய எச்சம். இஃது அடுத்த சூத்திரத்தின் முதலில் வைத்து எண்ணத் தக்கது. முன் ஆங்கவை யொருபாலாக எனுஞ் சூத்திரம் சுட்டுவன அதற்குமுன் கூறிய வாராவிடத்து நிகழ்தற்குரிய எனுங் குறிப்புத் தோன்ற அச்சூத்திர இறுதியில் அவையுமுளவே அயைலங் கடையே எனக் கூட்டியுரைத்த குறிப்பும் இங்குக் கருதற்பாற்று. ஆண்டு, இவையும் உளவே என்பது பிந்திய பேராசிரியர் பாடமாயினும், அவையும் உளவே என்பதே அவருக்குக் காலத்தால் முந்திய இளம்பூரணர் கொண்ட பழைய பாடமாகும். அதுவே போல் இதிலும் அக்குறிப்புணர்ந்த இந்நூலார் அவையும் உள எனவே கூறுவதை நோக்க, முன்னதிற் போலவே இதிலும் புதிய பிற மெய்ப்பாடுகள் குறிக்குங்கால், அவை முற்கூறிய நேரா விடத்தே தோன்றுமெனச் சுட்டுதற்குரிய வாய்பாடே அவையு முளவே அவையலங்கடையே எனும் தொடர் என்பது தேற்றமாகும். ஆகவே, பின் கூறும் புதிய மெய்ப்பாடுகள் முன் குறித்தவற்றோடு விரவாமல் அவையல்லாவிடத்தே தோன்றற்குரிய எனத் தெளிப்பதே ஈண்டு இந்நூலார் குறிக்கோள். அக்குறிக்கோள் தெளிக்கும் பொருள் முடியாது இதனைத் தனிச் சூத்திரமாகத் துணித்தெண்ணுவதினும், கீழ்க்கூறும் மெய்ப்பாடுகளுக்கு மேற் குறித்த வற்றின் இயைபு தோன்ற அவற்றைக் கூறும் அடுத்த சூத்திரத்தோடு இதை இணைத்தியைத்து ஒரு சூத்திரமாகக் கொள்ளுவதே அப் பொருள் நோக்கொடு சொற் போக்குக்கும் பொருத்தமாகும். இனி, இதனை மேலனவற்றிற்கெல்லாம் புறநடையாக்கி, மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள நடுவணைந் திணையல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண் எனவும், இதன் பின்கூறுபவை களவுங் கற்புமாகிய ஐந்திணைக்கும் உரிய எனவும், இளம்பூரணர் பொருள் கூறுவர். இச்சூத்திரத்தின் முற்கூறிய அவை என்பன புகுமுகம் புரிதல் முதலாயின. பிற்கூறிய அவை என்பன களவுங்கற்பும் எனக் குறிப்புரையுங் கூறிவைத்தார். இது, புகுமுகம் புரிதல் முதலியவற்றிற்கு இவர் கூறிய பொருட் குறிப்பொடு முற்றும் முரணுவதாகும். வேட்கையொருதலை என்னும் களவியற்சூத்திரங்கூறும் ஐந்திணை அன்புநிலைகளுள் முதல் ஆறுநிலைகளுக்குரிய மெய்ப்பாடுகளையே புகுமுகம் புரிதல் முதல் புறஞ்செயச் சிதைதல் ஈறாக வரும் சூத்திரம் ஆறும் முறையே விளக்குவதாக அச்சூத்திரக் கீழ்க்குறிப்புகளால் வற்புறுத்தும் இவரே அவ்வுரைக் கோளோடு மாறுபட்டு இங்கு வேறுபொருள் கூறுவது மாறுகொளக்கூறுவ தாகும். அதுவுமின்றி, இங்குச் சூத்திரநிலையும் சொல்லமைதியும் அவ்வுரைக்கு இடந்தராமையும் தேற்றமாகும். சூத்திரம் : 22 இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல் ஏத மாய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்புநனி சுருங்கல், கண்டுயின் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே யென்றல், ஐயஞ் செய்தல், அவன்றம ருவத்தல், அறனழிந் துரைத்தல், ஆங்குநெஞ் சழிதல், எம்மெய் யாயினு மொப்புமை கோடல், ஒப்புவழி யுவத்தல், உறுபெயர் கேட்டல், நலத்தக நாடிற் கலக்கமு மதுவே. கருத்து : இது முன்கூறியன வாராவிடத்து நேரும் வேறு சில மெய்ப்பாடுகளை உணர்த்துகிறது. பொருள் : இன்பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் ஈறாக எண்ணப்பட்ட இருபதும் அன்புத்திணையில் தனிப்படர்மெலிவின் துனி நனிவிளக்கும் மெய்ப்பாடுகளாகும். குறிப்பு : ஈற்றேகாரம் அசை. கலக்கமும் என்பதன் உம்மை முன் ஒவ்வொன்றோடு பிரிந்து சென்று ஒன்றும் எண்ணிடைச் சொல்: அன்றி, எச்சம் எனினும், சிறப்பெனினும் தவறாகாது. இனி, இதில் (1) இன்பத்தை வெறுத்தலாவது தனிப்படர்மெலியுங் காதலர், கூட்டத்தின் முன்னும் உடனுறை பொழுதும் தமக்கினிதாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும். தனித்த காதலர் இவற்றை வெறுத்துப் பழிக்கும் துறையில் வரும் செய்யுட்கள் பலவாதலின், ஈண்டு ஒன்றைக் குறித்தல் சாலும். பாலு முண்ணாள், பந்துடன் மேவாள், விளையா டாயமொ டயர்வோள் (குறுந். 396) இவ்வடிகளில், முன் அவள் விரும்பிய பால் பந்து ஆயம் எல்லாம் கூடப் பெறாத்தலைவிக்கு வெறுப்பாயினமை விளக்கப் படுதல் காண்க. (2) துன்பத்துப் புலம்பலாவது, தனிமை தாங்காக் காதலர் படர்மெலிந்திரங்கலாகும். கரத்தலு மாற்றேனிந் நோயை, நோய்செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும் (குறள்.1162) காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன் (குறள். 1167) எனும் குறள்கள் படர்மெலிந்திரங்கற் பாட்டுக்களாகும். (3) எதிர்பெய்து பரிதல் என்பது, உருவெளி கண்டிரங்குதல். வானம் பாடி வறங்களைந் தானாது அழிதுளி தலைஇய புறவிற் காண்வர வானர மகளோ நீயே மாண்முலை யடைய முயங்கி யோயே (ஐங்குறுநூறு. 418) என்னும் ஐங்குறுநூற்றுப் பேயனார் முல்லைப் பாட்டில் சுரத்திடைத் தலைவன் தலைவியின் உருவெளிகண்டு நயந்ததைப் பின் அவளிடம் கூறுதலறிக. (4) ஏதம், ஆய்தல் என்பது கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம். ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர்கொல்லெனத் துயரல், ஏதிலர் வரைவின் தீதினையஞ்சல், போல்பவை யெல்லாம் இதன் பாலடங்கும். .......... பாம்பின் பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு நடுநாள் என்னார் வந்து நெடுமென் பணைத்தோள் அடைந்திசி னோரே (குறுந். 268) எனும் சேரமான் சாத்தன் குறும்பாட்டும், இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல் (குறுந். 217) எனும் தங்கால் முடக்கொல்லனார் குறும்பாட்டடியும் இடையூறு படூஉம் ஏதம் ஆய்தலாகும். ........அன்னோ! மறந்தனர் கொல்லோ தாமே? களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது ........... அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் அத்தநீளிlஅழப்பிரிªதோரே” (குறுந். 307) எனும் கடம்பனூர்ச் சாண்டிலியன் குறும்பாட்டடிகள், பிரிந்தா® மறந்தனர் கொல்லெd வருந்துத குறிக்கும். பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல்? வயங்கிழாஅய்! வலிப்பல்யான் கேஎளினி (கலி.11) எனுங் கலியடியு மதுவேயாம். (5) பசியட நிற்றலாவது, தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும்பசிப் பிணியை அறவேதம் அடும்ஆற்றல். இனியான், உண்ணலும் உண்ணேன், வாழலும் வாழேன், தோணல முண்டு துறக்கப் பட்டோர் வணீருண்டகுடையோரன்னர் (கலி.23)எனுங் கலியடியும், ......நின்மகள் பாலுமுண்ணாள்பழங்கண்கொண்டு நனிபசந்தனள்எனவினவுதி(அகம். 48) எனும் அகப்பாட்டடிகளும் பசியடும் காதலியல் குறித்தல் காண்க. (6) பசலைபாய்தல் என்பது கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதல்நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு. யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! இரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ. (ஐங்குறு. 231) எனக்கு மாகாது, என்னைக்கு முதவாது, பசலை யுணீஇயர் வேண்டும் திதலை யல்குலென் மாமைக் கவினே (குறுந். 27) இவை பசலைபாயும் காதலியல்பு குறிப்பனவாகும். (7) உண்டியிற் குறைதல் ஆவது, உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட் கொண்டது போற் சிறிது உண்டுவைத்தல். முன் பசியடநிற்றல், தனிப்படர்மெலிவால் பசிப்பிணியுணராத கைகடந்த காதல் நிலை குறிக்கும். இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டி சுருங்குதலைச் சுட்டும். “Ô« ghÿ£oD« nt«ãD« if¡F«” (ï.É.g., 537) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக. (8) உடம்புநனி சுருங்கல் என்பது, உணவில்லாமையும் தணப் பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல். யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே (குறுந். 290) ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே. (நற்றிணை. 284) இவற்றுள், படரொல்லா துடல்மெலியும் காதலியல்பு வருதல் காண்க. (9) கண்துயில் மறுத்தல் : இது தண்டாக் காதல் கொண்டார் துயிலாமை. வாராக்காற் றுஞ்சா, வரிற்றுஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் (குறள். 1179) எனத் திருவள்ளுவரும், நனந்தலை யுலகமுந் துஞ்சும், ஓஒயான் மன்ற துஞ்சா தேனே. (குறுந். 6) எனப் பதுமனாரும், கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் cறைதலுKயங்குவம் (குறுந்.11) மாமூலனாரும், பிறங்குமலை அருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து பயிலிரு ணடுநாள் துயிலரி தாகி. (குறுந். 329) என ஓதலாந்தையாரும், மெல்லம் புலன்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே (குறுந். 5) என நரிவெரூஉத்தலையாரும், கோடீ ரிலங்குவளை நெகிழ நாளும் பாடில கலிழ்ந்துபனியானாவே ............. பெருங்கல் நாட! நின் நயந்தோள் கண்ணே (குறுந். 365) என நல்வெள்ளியாரும், பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க (கலி.16) எனப் பெருங்கடுங்கோவும், கண்துயில் ஒல்லாக் காதலியல்பு கூறுதல் காண்க. (10) இனிக் கனவொடு மயங்கல் என்பது, நயந்தோர் பிரிவால் அயர்ந்த காதலர், கனவிற்றுணைவரைக் கண்டு களித்து, விழித்தபின் காணாது வெருளுதலாகும். ........அல்கற் பொய்வலாளன்மெய்யுறன்மரீஇய வாய்த்தகைப்பொய்க்கனாமருட்டஏற்றெழுந்து அமளிதைவந்தனனே(குறுந்.30) என நன்னாகையார் குறும்பாட்டில் தலைவியும், .........ahH, நின் கோடேந்து புருவமொடுகுவவுநுதšநீÉ நறுங்கது¥புளரிaநன்ன®அமையத்J வறுங்fகாட்டிaவாயšகனவி‹ ஏற்றே¡கற்wஉலமரல்” (அகம்.39) என மதுரைச் செங்கண்ணனார் அகப்பாட்டில் தலைவனும், கனவொடுமயங்குதல் காண்க. நனவினால் நல்கா தவரைக் கனவினாற் காண்டலின் உண்டென் னுயிர் (குறள். 1213) எனும் குறளும் அது. (11) பொய்யாக் கோடலாவது, காதல்மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல். பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள். 1311) வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின் மாயம் மருள்வார் அகத்து (கலி. 88) இவற்றுள், தலைவி மெய்திரித்துப் பொய்யாக்கோடல் காண்க. (12) மெய்யே யென்றல் : இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவி யியல்பு. கானம் காரெனக் கூறினும் யானோதே றேனவர் பொய்வழங் கலரே (குறுந். 21) ................... பெருங்கல் நாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற இன்னா மையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே. (குறுந். 288) இதில் தலைவன் சொல் மெய்யெனக் கொள்ளும் காதலியல் வருதல் காண்க. கழங்கா டாயத்து அன்றுநம் மருளிய பழங்க ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே. (அகம். 66) என்பது மது. (13) ஐயம் செய்தல் : இது, காதல்மிகையாற் கடுக்கு மியல்பு. ஒண்ணுதல் நீவுவர் காதலர், மற்றவர் எண்ணுவ தெவன்கொல்? அறியேன், என்னும் (கலி.4) நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்துந்தாம் அஞ்சிய தாங்கே அணங்காகும் என்னுஞ்சொல் இன்தீங் கிளவியாய் வாய்மன்ற, நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட, யானும் இதுவொன் றுடைத்தென எண்ணி அதுதேர (கலி.24) இவற்றில் ஐயுறல் காதற்கியல்பாதல் காண்க. (14) இனி, அவன் தமர் உவத்தலாவது, தலைவி, தலைவன் சுற்றத்தை நயத்தல். ............ தந்தை காமுறற் தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும் ..... மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினள்முத்தினள்நோக்கிநினைந்த நினக்குயாம்யாரமாகுதும்என்று வனப்புறக்கொள்வனநhடிஅணிந்தனள்(கலி. 82) இதில் தலைவன் புதல்வனை வழிமுறைத் தாய் கண்டு மகிழ்ந்த செவ்வி கூறப்படுதல் காண்க. (15) அறனழிந் துரைத்தலாவது, அறனழிய வெறுப்பது போல வெறுத்துக் கூறல். ... பிரிந்தோ ருள்ளா தீங்குரல் அகவக் கேட்டும் நீங்கிய ஏதிலாளர்இவண்வரிற்போதிற் பொம்மலோதியும்புனையல், எம்முந்bதாடாஅல்,என்குவெமன்னே. (குறுந்.191) யாரு மில்லைத் தானே கள்வன், தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ (குறுந். 25) அளித்தஞ்சல் என்றவர் நீப்பிற் றெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு (குறள். 1154) விளியுமென் இன்னுயிர், வேறல்லம் என்பார் அளியின்மை யாற்ற நினைந்து (குறள். 1209) இவையனைத்தும் காதல்மிகையால் தலைவி அறனழிய வெஞ்சொல் விளம்புங் காதலியல் குறிப்பதறிக. இன்னும், நற்றோள் நயந்து பாராட்டி எற்கெடுத் திருந்த அறனில் யாய்க்கே (ஐங்குறு. 385) ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கும் அறனில் அன்னை தானே யிருக்கத் தன்மனை (குறுந். 262) என வருவனவும் அறனழிந்துரைத்தலேயாகும். அறனழிவது போலக் கூறினும், அக்கூற்றுக்கள் காதன்மையால் எழுதலால், மெய்யாக அறனழிக்கும் நோக் குடையனவாகா. இனி, அறன் அளித்துரைத்தல் எனும் பாடம் சிறவாது. அப்பாடத்திற்கு, அறத்தை அருளொடு கூறல் என்பது பொருளாகும். ஈண்டது பொருந்தாமை வெளிப்படை. (16) ஆங்குநெஞ் சழிதலாவது, சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல். ...... என்னெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை ஒழிய விடாதீமோ என்று (கலி. 143) நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல், அவர்நமக் கன்னையு மத்தனு மல்லரோ (குறுந். 93) என்பன இம்மெய்ப்பாடு குறிக்கும். அறனளித்துரைத்தாள், பின் அதற்கு நெஞ்சழிதல் வேண்டாளாதலாலும் அப்பாடம் பொருந் தாமை யறிக. (17) எம்மெய்யாயினும் ஒப்புமைகோடல் : இது காணும் பொருள் எதுவும் தலைவன் வடிவு வண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு. இந்திர நீலமொத் திருண்ட குஞ்சியும் சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும் சுந்தர மணிவரைத் தோளு மேயல, முந்தியென் னுயிரையும் முறுவல் உண்டதே படர்ந்தொளி பரந்துயிர் பருகு மாகமும் தடந்தரு தாமரைத் தாளு மேயல, கடந்தரு மதங்கலுழ் களிநல் யானைபோல் நடந்தது கிடந்ததென் னுள்ள நண்ணியே (கம்பர், மிதிலைக்காட்சி செய். 56, 57) இவற்றில், தலைவன் வடிவு, வண்ணம், நடை முதலிய வற்றிற்கேற்ப எப்பொருளா னும் ஒப்புக்கோடல் காண்க. இனி, ஏற்புடைப் பொருள்களைத் தலைவன் தலைவிக்கு ஒப்புக்கோடலும் இத் துறையாகும். நன்னீரை வாழி யனிச்சமே, நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் (குறள். 1111) மலர்காணின் மையாத்தி நெஞ்சே! யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று (குறள். 1112) மதியு மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன் (குறள். 1116) என வருபவையெல்லாம் தலைவன் தலைவிக்கு ஒப்புமை கோடலைக் குறிப்பன. (18) ஒப்புவழி யுவத்தல் : இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழுங் காதலியல்பாம். பால்கொள லின்றிப் பகல்போன் முறைக்கொல்காக் கோல்செம்மை ஒத்தி பெரும! (கலி. 86) (19) உறுபெயர் கேட்டல், இது தலைவன் பீடார் பெரும் புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல். அதற்குச் செய்யுள் : மராமர மிவையென வலிய தோளினான், அராவணை அமலனென் றயிர்க்கு மாற்றலான், இராமனென் பதுபெயர். இளைய கோவொடும் பராவரு முனியொடும் பதிவந் தெய்தினான் (கம்பர். பால.கார் முகப்.செய். 59) பூணியன்மொய்ம்பினன்புனிதனெய்தவில் ............... ................ நாணினி தேற்றினான்நடுங்கிற்றும்பரே” (மேலது,செய். 60) கோமுனியுடன்வருகொண்டலென்றபின்தாமரக்கண்ணினனென்றதன்மையhல்ஆமவனேகொலன்றயநீங்கினாள்,வாமnமகலையிறவளர்ந்ததல்குல”(மேலது,செய். 62) இவற்றில், இராமன் சிவன் வில்லை நாணேற்றி முறித்துச் சீதைக்குரிய நாயகனாயினான் எனத் தோழிவந்து கூற, சீதை தன்முன்bதருவிற்கண்டுகதலித்துமனத்தால்மணந்தஅத்தலைவன்பயரும்புகழும்அத்தோழிவாய்க்கட்டுமகிழ்ந்ததைக்கம்பர்விளக்குதலறிக. நசைஇயார்நல்கார்எனினும்அவர்மாட் டிசையும்இனியசவிக்கு.(குறள்.1199) மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணே னன்றுதீ தென்று பிற (கலி.142) என வருவனவும் உறுபெயர் கேட்டு மகிழும் கூற்றுக்களாதலறிக. (20) நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே என்பது, நன்றாகத் தகுதிநோக்கி யாராயின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும். மெய்ப்பாடேயாம். முன் குறித்த 19ம் அவையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித்தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது. அதற்குச் செய்யுள் : யாவது மறிகிலர் கழறு வோரே: தாயில் முட்டை போலவுட் கிடந்து சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ? யாமைப் பார்ப்பின் அன்ன காமங் காதலர் கையற விடினே (குறுந். 152) இக் கிளிமங்கலங்கிழார் பாட்டில் ஆனாக்காத லாற்றாத் தலைவி கலங்குதல் காண்க. இவையெல்லாம் பால் பிரியாது பொதுவாகக் கூறப்பட்ட தனால், பெருவழக்காய்த் தலைவியர்மாட்டே நிகழுமெனினும், ஏற்புழித் தலைவர்க்குரியன கோடலும் கடிவரை யின்மை கருதற் பாற்று. சூத்திரம் : 23 முட்டுவயிற் கழறல், முனிவுமெய்ந் நிறுத்தல், அச்சத்தினகறல், அவன்புணர்வு மறுத்தல், தூதுமுனி வின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே அழிவில் கூட்டம். கருத்து : மேலெல்லாம் களவொழுக்க மெய்ப்பாடுகள் கூறி, இதிற் கற்புக்குரியன கூறுகிறார். பொருள் : முட்டுவயிற்கழறல்=இற்செறிப்பு முதலிய கூட்டத்திற்கு இடையூறு உற்றுழி வரைவு வற்புறுத்தல்; முனிவு மெய்ந் நிறுத்தல்=வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்படு குறிப்பால் வற்புறுத்துணர்த்தல்; அச்சத்தின் அகறல்= அலரும் தலைவன் ஆற்றாறும் அஞ்சி, அவனணுகாது சேட்படுதல்: அவன் புணர்வு மறுத்தல்=வரையாது வந்தொழுகுந் தலைவன் கூட்ட மறுத்தல்: தூதுமுனிவின்மை=ஒழியாது உடனுறையும் அழிவில் கற்புக்கூட்டம் கருதிய தூதினை வெறாமை; அதாவது, வரைவுகருதி அவனுக்குத் தூதுய்க்கவும், அவன் தூது எதிரவும் விரும்புதல்; துஞ்சிச் சேர்தல்=வரையாதொழுகும் தலைவன் வரவு மகிழாது மாழ்கிக்கூடல்; காதல் கைம்மிகல்=புணர்வு பெறாமல் வரைவு நீட்டித்தவழிக் கையிகந்த காதலால் நையுநிலை; கட்டுரை யின்மை=காதல்மிகையால் வாய்வாளாமை; என்றாயிரு நான்கே அழிவில் கூட்டம்=எனவரும் எட்டும் வரைந்து பிரியா மனையற வாழ்க்கை விருப்பைக் குறிக்கும் மெய்ப்பாடாகும். குறிப்பு : நான்கே என்பதான் ஏகாரம் தேற்றம். ஆயிடை எனல் போலச் செய்யுளாதலின் ஆயிரு என அகரச்சுட்டு நீண்டது. மேலே நகையே அழுகை எனும் மூன்றாவது முதற் செல்வம் புலனே என்னும் பதினொன்றாம் சூத்திரம் வரையிலும் அகப்புறத் திணைகளிரண்டிற்கும் பொது மெய்ப்பாடுகளை விரித்து, அவற்றின் பின் அகப்பொருளை அகத்திணை களவு கற்பென மூவியலாக வகுத்ததற்கேற்ப அகவொழுக்க நிமித்தமாம் மெய்ப்பாடுகளையும் முத்திறப்படுத்தி, ஆங்கவை ஒருபாலாக (சூ.12) என்பதில் அகப்பகுதிக்குப் பொதுவாய் அமைவனவற்றைத் தொகுத்துக்கூறி, பிறகு புகுமுகம்புரிதல் (சூ.13) என்பது முதல் இன்பத்தை வெறுத்தல் (சூ.22) என்பது முடிய அகத்திற் கரவுக் காதலாம் களவினுக்குரியன தெளிக்கப்பட்டன. இனி, மறையாது உடனுறையும் கற்புக்காதற்குரியன கூறத்தொடங்கி, முதலில் உலகறிய இடையற வின்றி உடனுறையின்ப மனையற வாழ்க்கை வேட்கையால் வரைவு வற்புறுத்துந் தலைவிக்குரியன இதில் கூறப்படுகின்றன. இதன் பிற்சூத்திரங்களால் வரைந்துடன் வாழும் திருந்திய கற்புக்குரியன விளக்கப்பெறும். எனவே, முன் களவுக் குரியவற்றிற்கும் பின் களவின் வழித்தாய கற்பிற்குரியவற்றிற்கும் இடையே, அச்சிறந்த கற்பறவாழ்வுதரும் வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடு கூறும் இச்சூத்திரம் அமைந்த செவ்வியுணர்ந் துவத்தற்பாற்று. இனி அழிவில்கூட்டம் என்றது, களவிற் போலப் பிறர்க்கு மறைத்து இடையறவுபடுங் கரவுக்காதலைப் போலாது, உலகறிய ஒளியாது ஒழியாதுடனுறையும் கற்புக்காதற் கூட்ட வேட்கைக்குறிப்பு. கூட்டம் இங்குக் கூட்டம் தரும் வரைவு வேட்கைக் குறிப்பிற்காதலால் ஆகுபெயர். இனி, முட்டுவயிற் கழறலுக்குச் செய்யுள்: .........நாரை அறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் கண்ணாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணந் துறைவற் காணின், முன்னின்று கடிய கழற லோம்புமதி; தொடியோள் இன்ன ளாகத் துறத்தல் நும்மிற் றகுமோ வென்றனை துணிந்தே (குறுந்.296) இதில், சிறைப்புறத் தலைவன் வரைவுநீட்டம் கடிந்து கழறற் பாற்றெனத் தலைவி தோழிக்குக் குறிப்பாகச் சுட்டுவதறிக. பன்முட் டின்றால் தோழிநங் களவே (அகம்.122) என்னும் அகப்பாட் டடிக்குறிப்பு மிதுவே. முனிவு மெய்ந்நிறுத்தற்குச் செய்யுள் : விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம், கைந்நூல் யாவாம், புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம் உள்ளலும் உள்ளா மன்றே, தோழி! உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின் றிமைப்புவரை யமையா நம்வயின் மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே (குறுந். 218) நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே, இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே (குறுந்.4) இன்னும், இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே (அகம். 52) என்பதுமது. அச்சத்தி னகறற்குச் செய்யுள் : அலர்யாங் கொழிவ தோழி! பெருங்கடற் புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் யான்கண் டனனோ விலனோ, பானாள் ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத் தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆய மெல்லாம் உடன்கண் டன்றே (குறுந்.311) ............ இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி, இவடன் மடனுடை மையின் உயங்கும், யானது கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல் பெரும!என் நெஞ்சத் தானே (குறுந்.324) என்பதுமது. ............. அரும்படர் எவ்வம்இன்றுநாம்உழப்பினும் வாரற்கதில்லதோழி! சாரற் பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் உண்கிளி கடியும் கொடிச்சிலைக் குளிரே சிலம்பிற் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே (குறுந். 360) என வருவதுமது. அவன் புணர்வுமறுத்தற்குச் செய்யுள் : ............பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல், வாழியர், ஐய!எந் தெருவே (குறுந். 139) .......... நல்வரை நாட! நீவரின் மெல்லிய லோரும் தான்வா ழலளே (அகம்.12) என்பதுமது. தூது முனிவின்மைக்குச் செய்யுள்: ............ காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலின் நாணிய வருமே (குறுந். 10) கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது bபயர்த்துங்கடிந்தbசறுவிற்பூக்கும் நின்னூர் நெய்தல் அனையேம்,பெரும! நீயெமக் கின்னா தனபல செய்யினும் நின்னின்றமைதல்வல்லாமறே (குறுந்.309) இச் செய்யுட்களில் தணந்த தலைவன் தூதைத் தலைவி முனியாமையும், இன்ன னாயினள் நன்னுதல் என்றவர்த் துன்னச்bசன்றுbசப்புநர்ப்bபறினே நன்றுமன்வாழிதழி (குறுந்.98) என்னும் செய்யுளில் தணந்துறையும் தலைவனுக்குத் தலைவி தூதுய்ப்பதை முனியாமையும் கண்டு தெளிக. துஞ்சிச் சேர்தலாவது, வரைவுநீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாழ்கல். சோர்தல் என்னாது சேர்தல் என்ற தானும், துஞ்சலும் மடிமையு முன் ஆங்கவை ஒருபாலாக எனும் சூத்திரத்துத் தனி வேறு கூறப்படுவதானும், இங்கு இத்தொடர் வாளா மடிந்து மனை வைகுதலைச் சுட்டாமல், வரையாதொழுகுந் தலைவன் வரவு மகிழாது அவன் ஒழுக்கினுக்கு மாழ்கிப் பொலி வழி தலைவியின் மெலிவைக் குறிக்கும். துஞ்சல் மடிமையாகாமை, நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் என்று அவை வெவ்வேறு கூறப்பெறுதலானு மறிக. இதுவே பேராசிரியர்க்கும் கருத்தாதல், வேண்டியவாறு கூட்டம் நிகழப்பெறாமையின், தலைமகனொடு புலந்தாள் போல மடிந்தொன்றுமாதலின் என்னு மவர் உரைக் குறிப்பால் உணர்க. இனி, இஃது உரிமை பூண்டமையால் உறக்கம் நிகழ்தலா மாறும் எனும் இளம்பூரணர் கூற்றுப் பொருந்தாமை தேற்றம். இவ்வாறு துஞ்சிச்சேரு முளநிலையை, ............ கடவுள் நண்ணிய பாலோர் போல ஓரீஇ யொழுகும் என்னைக்குப் பரியலென்மன்யா‹பண்டொUகாலே.” (குறுந். 203) என்பதில் முன் தலைவற்குப் gரிந்தேன்;mதுfழிந்ததுvனத்jலைவிTறுங்Fறிப்பானும்fhண்க. கhjš கைம்மிகலுக்குச் செய்யுள்: ............... ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் அகலினும் அகலா தாகி இகலுந் தோழிநங் காமத்துப் பகையே (குறுந். 257) உள்ளின் உள்ளம் வேமே, யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே, வருத்தி வான்றோய் வற்றே காமம், சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே (குறுந். 102) என்பதுமது. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் (குறள். 1293) நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம மறையிறந்து மன்று படும் (குறள். 1254) என வரும் பாக்களும் காதல் கைம்மிகல் காட்டி நின்றன. கட்டுரையின்மை: கையி னாற்சொலக், கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன் (சிந்தா. 997) எனும் குணமாலைகூற்றில், கழிகாதலால் உரையறுதல் காண்க. இன்னும், ............ துறைவன் குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன் றறியாற் குரைப்பலோ யானே (குறுந். 318) எனவும், மெல்லிய விளிய மேவரு தகுந இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ மறத்தியோ வாழியென் னெஞ்சே (குறுந்.306) எனவும் வருவனவற்றிலும் தலைவி உரையறும் குறிப்பறிக. சூத்திரம் : 24 தெய்வம் அஞ்சல், புரையறந் தெளிதல் இல்லது காய்தல், உள்ள துவர்த்தல், புணர்ந்துழி யுண்மைப் பொழுதுமறுப் பாக்கம், அருள்மிக வுடைமை, அன்புதொக நிற்றல், பிரிவாற் றாமை, மறைந்தவை யுரைத்தல், புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்தும் செப்பிய பொருளே. கருத்து : இது வரைந்துடன் வாழும் கற்புக் காதலுக்குரிய மெய்ப்பாடுகள் கூறுகின்றது. பொருள் : தெய்வமஞ்சல் முதல் புறஞ்சொல் மாணாக் கிளவி வரை கூட்டிக் கூறிய பத்தும் அகத்திணையுட் சிறந்த கற்புக்காதற்குப் பொருந்தும் மெய்ப்பாடுகள் என்றவாறு. குறிப்பு : ஈற்றேகாரம் அசை. ஒடு பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல். பத்தும் என்பதன் உம்மை இனைத்தென அறிந்த முற்றும்மை. செப்பிய பத்தும் சிறந்த பொருளே எனச் சொன்மாறுக. அன்றிச் சொற்கள் நின்றாங்கே கொண்டு, மாணாக் கிளவியொடு கூட்டி எண்ணி, உயர்ந்த கற்புக்குறியாய்ச் சிறந்த பத்து மெய்ப்பாடுகளும் மேல் அழிவில் கூட்டமெனக் குறித்த கற்பொழுக்கத்திற்குரிய என்றுரைப்பினும் அமையும். இதில் பொருள் என்பது, ஈற்றடியைச் சொன்மாறிக் கண்ணழிப்பின் மெய்ப்பாடுகளையும், நின்றாங்கே கொள்ளின் கற்பொழுக்கையும் குறிப்பதாகும். பின்னுரைக்குப் பத்தும் என்பதைப் பத்து மெய்ப்பாடும் எனக் கொள்ளல் வேண்டும். இனித் தெய்வமஞ்சலாவது சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்கு மெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற்றொழு வதே நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று. மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப; யாவதும் கொடிய ரல்லர்எம் குன்றுகெழு நாடர், பசைஇப் பசந்தன்று நுதலே, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே (குறுந். 87) என்னும் கபிலர் செய்யுளும், தலைவி வழிபாடு கூறாது, அணங்கும் கடவுளை அஞ்சுதலளவே குறித்தமை அறிக. புரையறந் தெளிதல் என்பது உயர்ந்த மனையறம் உணர்ந் தோம்புதல். புரை ஈண்டு உயர்ச்சிப் பொருட்டு. இதுமற் றெவனோ தோழி! துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி ......... ஊரன் திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே (குறுந். 181) தற்காத்துத் தற்கொண்டாற்பேணித் தகைசான்ற சொற் காக்கும் சோர்வின்மையே திண்ணிய கற்பின் பெண்மையற மெனவுணர்ந் தொழுகுபவளே பெண்ணெனக் கூறப்படுதலானு மிவ்வுண்மையறிக. இல்லது காய்தல் கணவன்பால் இல்லாதவற்றை ஏறட்டு வெகுளுவது. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று (குறள். 1313) உள்ளது உவர்த்தல் : இது தலைவன் மெய்யாகச் செய்யும் அன்பினை மறுத்துப் பொய்யென வெறுத்தல். ........... ............... இன்று வந்து, ஆகவனமுலைஅரும்பியசுணங்கின் மாசில்கற்பின்புதல்வன்தாயென மாய்ப்பொய்ம்மொழிசாயினைபயிற்றியெம் முதுமைஎள்ளல்அஃதமைகுந்தில்ல ......... இளமை சென்று தவத்தொல் லஃதே இனிஎவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே (அகம்.6) எனும் பரணர் பாட்டு, பிரிந்து வந்த தலைவன் தன் ஆற்றாமையால் பரிந்து தலைவியைத் தழுவிப் பாராட்டவும், அவள் அதைப் பொய்யென வெறுப்பது குறிப்பதால், அது உள்ளது உவர்த்தலாகும். புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப் பாக்கம் என்பது மணந்துவாழ்வார் கற்புக்காதற்கு இடையுறு காலத்தடை கருதா தொழுகுதலாம். காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் (குறுந். 32) என்பதில் கற்புக்காதலில் பொழுதுவரையறையின்மை சுட்டியது காண்க. இத்தொடரைப் புணர்ந்துழியுண்மை, பொழுது மறுப் பாக்கம் எனப் பிரித்தெண்ணிப் பதினொன்றாக்குவர் பேராசிரியர். இது சிறந்த பத்தும் எனத் தெளித்துக் கூறிய சூத்திரச் சொற் றொடர்ச் செம்பொருளொடு முரண்படுவதால், அஃதுரையன்மை அறிக. பதினொன்றைப் பத்தென எண்ணலாமெனுந் தன் கொள்கைக்கு. ஒன்பதும் குழவியொடிளமைப் பெயரே எனு மரபியற் சூத்திர அடியை மேற்கோள் காட்டினார். மரபியற் சூத்திரத்தில், ஒன்பதும் குழவியொடு என்பதைக் குழவியொடு ஒன்பதும் என மொழிமாற்றினும் எண், பத்தாகாமல் ஒன்பதேயாகும். இங்கு, மொழி மாற்றினும் பேராசிரியர் கொண்டபடி எண் பத்தாகாமல் பதினொன்றாகின்றதாதலின், சொல்லொடு பொருள் முரண எண்ணுவதற்கு அம் மரபியற் சூத்திரம் மேற்கோளாகாமை வெளிப்படை. இனி, முதலுரை வகுத்த இளம்பூரணர் இச்சூத்திரத்தில் மெய்ப்பாடு பத்தெனவே எண்ணினார். எனின், அவர் இத்தொடரைப் பிரித்திரண்டாக்கி, மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல்மாணாக் கிளவி எனும் வேறுபடும் இரண்டை இணைத்து ஒன்றாக்கிப் பத்தெண்ணி, அமைவுகாட்டுவர். மறைந்தவை யுரைத்தல் தனி மெய்ப்பாடாதலானும், புறஞ்சொல்மாணாக் கிளவிக்கு இவ்வடை வேண்டப் படாமையானும், அவ்விரண்டையும் இணைத்தல் ஏலாமை அறிக. மேலும் புணர்ந்துழி உண்மையைப் பிரிப்பதால் போதரும் பொருட்சிறப்பின்மையும், அது சூத்திரக் கருத்தன்மையை வலியுறுத்தும். ஆதலின், இத்தொடரை நின்றாங்கே ஒரு தொடராகக் கொண்டு, அதன் செம்பொருளுரைப்பதே சூத்திரக் கருத்தாதல் தெளிவாம். அருள்மிகவுடைமையாவது முன் களவில் தலைவனருளை வேண்டிய தலைவி, கற்பில் தானவனை அருளொடு பேணும் பெற்றி. நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த கொடிய னாகிய குன்றுகெழு நாடன் வருவதோர் காலை இன்முகந் திரியாது கடவுற் கற்பின் அவனெதிர் பேணி மடவை மன்ற நீயெனக் கடவுபு துனியல், வாழி தோழி! சான்றோர் புகழு முன்னர் நாணுப பழியாங் கொல்பவோ காணுங் காலே (குறுந். 252) எனும் பாட்டில், பழிக்குரிய தலைவன் தவறுரைப்பதும் இழுக்கென வெறுக்கும் தலைவியினருள் நயத்தற்குரியது. மனைத் தக்க மாண் புடைய மனைவி இயல்பு, தற்காத்துத் தற்கொண்டாற் பேணுதல் எனும் வள்ளுவர் கொள்கையு மிவ்வுண்மையை வலியுறுத்தும். அன்புதொகநிற்றலாவது கொழுநன்கொடுமை உளங் கொளாமல், அவன்பாற் காதல் குறையாதொழுகல். ...........காதலர் நல்கார்நயவhராயினும் பல்காற்காண்டலும்உள்ளத்துக்கினித(குறுந். 60) ..........பெருங்கல் நாடன் இனியனகலின்இனத்தின்இயன்ற இன்னாiமயினுமினிதோ இனிதெனப்படூஉம்புத்தேள்நடே(குறுந்.288) நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும் வாடன் மறந்தன தோள் (ஐந்திணை எழு.2) என்பனவுமது. பிரிவாற்றாமை களவிற்போலக் கற்பிற் றலைவி காதலை மறைத்தல் வேண்டாமையின் தலைவன் பிரிவைத் தாங்கா தழுங்குதல். ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே (நற்.284) ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியா மையே அழிபடர் அகல வருவர் மன்னாற் றோழி! .........வாடை கடிமனமாடத்துக்கங்குல்வீசத்திருந்திiழநெகிழ்ந்துபெருங்கவின்சய நிரவளை யூருந்தேhbளன உரைbயாடுbசல்லுமன்பினர்ப்பெறினே (அகம். 255) மறைந்தவையுரைத்தலாவது முன் ஒளித்த நிகழ்ச்சி பின் உவந்தெடுத்துரைப்பது. ...............வளங்கே ழூரனைப் புலத்தல்கூடுமோதோழி!.... .....மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவையென மயங்கி யானோம் என்னவும் ஒல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே .... .... .... .... .... .... நெஞ்சறை போகிய அறிவி னேற்கே (அகம். 26) என்னும் பாட்டில் மறைவில் நிகழ்ந்ததை மனைவிபின்னர்த் தோழிக்கு எடுத்துரைக்கும் காதல்மாட்சியைக் கண்டு தெளிக. புறஞ்சொல்மாணாக் கிளவி தலைவனைப் புறந்தூற்றும் புன்சொற்பொறாத தலைவி அதை வெறுத்து மறுப்பது. அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு யானெவன் செய்கோஎன்றி, யானது நகையென வுணரே னாயின் என்னா குவைகொல் நன்னுதல் நீயே (குறுந். 96) என்னும் பாட்டில் தலைவனைப் புறம்பழித்த தோழியைத்தலைவி வெகுளு மிம்மெய்ப்பாடு விளக்கப் பெறுதலறிக. புறஞ்சொல் நன்றாகாதென வெறுக்குந் தலைவியின் மறுப்புரை, புறஞ்சொல் மாணாக்கிளவி என்று கூறப்பட்டது. இனி, முன் களவியலில் வேட்கை ஒருதலை உள்ளுதல் என்னும் சூத்திரத்தில், வேட்கை முதல் சாக்காடீறாகக் கூறிய பத்தும் களவிற்குச் சிறந்தனவாதலின், அவை, சிறப்புடை மரபினவை களவென மொழிப எனக் குறிக்கப்பட்டன. அதுவேபோல், இங்குக் கூறிய பத்தும் கற்பிற்குச்சிறந்தனவாதலின், சிறந்த பத்தும் செப்பிய பொருளே எனப்பட்டன. இன்னும், கரந்தொழுகலால் காமஞ் சாலாத களவினும், வரைந்து உலகறிய உடன்வாழ்ந்து ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றிக் கிழவனும் கிழத்தியும் வாழ்தலால் காமஞ் சான்ற கற்புச் சிறந்தது. அச்சிறந்த வாழ்வு முன் கழிந்த களவின் பயனாமெனக் கற்பிய லிறுதியில் தெளிக்கப்பட்டிருந்த லால், அன்புத்திணையிற் சிறந்தது கற்புக் காதல், அதற்குச் சிறந்தன இங்குக் கூறப்படும் மெய்ப்பாடு பத்தும், எனும் அமைவு தோன்ற, இப்பத்து மெய்ப்பாடுகளையும் சிறந்த பத்தும் செப்பிய பொருளே எனக்கூறிய பெற்றியும் தேறற்பாலது. சூத்திரம்: 25 பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. கருத்து: இது, தலையாய காதல் நிலையாவதற்குக் காதலரிரு பாலார்க்கும் வேண்டப்படும் ஒப்புவகை கூறுகின்றது. பொருள்: பிறப்பு = தோன்றிய குடிநிலை; குடிமை = ஒழுக்கநிலை; ஒழுக்க முடைமை குடிமை என்பதனாலும், பிறப்பு வேறு கூறுவதாலும், இதில் குடிமை ஒழுக்கம் குறிக்கும். ஆண்மை = ஆளுந்திறம். இது காதலர்க்கின்றியமையா ஒப்பு வகையுள் ஒன்றெனப் படுதலின், இருபாலவர்க்கும் பொதுவாதல் தேற்றம். மனையாட்டி, இயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணியப்படும். ஆண்டு = பருவம்; அதாவது வயது; உருவு=வடிவம்; அதாவது மூப்போ டிளமை முரணா வனப்பு. நிறுத்த காம வாயில் = நிலைத்த காதல்நிலை; நிறை = அடக்கம்; அருள் = பிறர் வருத்தம் பொறாப் பரிவுடைமை; உணர்வு = அறிவு; உணர்ச்சி எனினும் அமையும்; திரு = செல்வம்; இது பொருள் பற்றியதன்று; உள்ள மலர்ச்சி. செல்வ மென்பது சிந்தையினிறைவே என்பதனாலும் இப்பொருட்டாதலறிக. என முறையுக் கிளந்த ஒப்பினது வகை = என்று நிரலே கூறிய பத்தும் காதலர்க் கின்றியமையா ஒப்பின் வகையவாம். குறிப்பு: ஈற்றேகாரம் அசை. மற்றைய ஏயும் ஒடுவும் எண்ணிடைச் சொற்கள். முன் களவியலில், ஒன்றே வேறே என்றிருபால்வயின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப எனும் சூத்திரத்தில், தலைக் காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர்தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டியதால், இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப்பட்டது. இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும். ஆண்டுக் கூறாமையால், ஒத்த காதலை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து, அவை நிலைத்த மெய்க்காதற் கேயுரியவாதலின், அக்காதல் நிலைக்குரியதென முன் தொகுத்துக் கூறிய ஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது. இவைதாமே மெய்ப் பாடாகாமை இவற்றின் தன்மையால் தெளியப்படும். சூத்திரம்: 26 நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை என்றிவை யின்மை என்மனார் புலவர். கருத்து: இஃது இவ்வியலிற் கூறி மெய்ப்பாடுகள் தோன்று தற்குரிய காதலுக்காகாத குற்றங்களைக் கூறுகின்றது. பொருள்: நிம்பிரி = பிறைபொறாப் பெற்றி; அதாவது சகிப்பின்மை. இஃதழுக்காறன்று அழுக்காறு தனித்தார்மாட்டும் தவறாமாதலானும், இங்குக் காதலர் வாழ்வுக் காகாதன கூறுவதே கருத்தாதலானும், குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை யாமாதலானும், இற்கிழத்திக்கு இன்றியமையா மடன் என்பது தலைவன் குற்றம் தானறியாமை யாதலானும், தலைவனைக் காணாக்கால் அவன் தவறல்லன காணாத் தலைவி, அவனைக் காணுங்கால் தவறாய காணாள் என இல்லாளியல் சொல்லப் பெறுதலானும், ஈண்டு நிம்பிரி அழுக்காறு என்னும் பொறாமை சுட்டாது பிழைபொறாப் பெற்றியையே குறிப்பது தெளிவு. அஃதுளதாயின் காதல் வாழ்வுக்கு ஏதமாதலின் விலக்காயிற்று. கொடுமை = அறனழிய நெறிபிறழு மியல்பு. வியப்பு = மருட்கை; இதை அற்புதம் என்பர் வட நூலுடையார். இது ஒத்த காதலுக்கு ஒல்லாக் குற்றமாகும். மருட்கை மதிமை சாலாதாதலானும், அஃதுள்வழித் தலையாய காதல் நிலையாமையானும்,* அதுவும் விலக்காயிற்று. புறமொழி = பழிதூற்றுதல்; இல்லாட்கு நல்லறம், புறஞ்சொல் மாணாக் கிளவியென முன் கூறியதனாலும், பழிதூற்றும் தவறுடைமை காதல் வாழ்வுக்கு ஏதம்பயக்குமாதலாலும், அது விலக்குதற்குரிய இழுக்காயிறறு. வன்சொல் = வருத்தமுறுத்தும் கடுஞ்சொல்; பொச்சாப்பு = சோர்வு. இஃது உவகை மகிழ்ச்சியிற் பிறப்பதாகலின், காதற்கடனிகந்து ஏதந்தரும் தவறாகும். மடிமை = சோம்பர்; குடிமையின்புறல் = தலைவி தன் குடியுயர்வுள்ளி யுவத்தல்: இது கற்புறுகாதலுக் கொல்லாது. முன் களவியலில் இருவர்க்கும் குடிமை ஒப்புமை நன்றாம், அன்றேல் தலைவன் மிக்கோனாதல் தவறாகாது எனக் கூறி, எஞ்ஞான்றும் தலைவி உயர்வைத் தவிர்த்தது; அது தலைவனுக்கு இழிவுணர்த்தி ஏதம் விளைக்குமாதலின். அதனால் அது மெய்க்காதலுக்கு இழுக்காயிற்று. ஏழைமை இங்கு எளிமை, அதாவது தணிவுப் பொருட்டு. தணிவுணர்வு மறப்பது அன்பொழுக்கத்திற்காகாத தவறு. இனி, ஏழைமை வெண்மையறிவெனின், தலைவிக்கு வேண்டப் படும் புரையறமறிதல் கூடாதாகலின், அது பொருளன்று. அஃகி அகன்ற அறிவுடையளாயினும், பிற பெருமை அனைத்து முடைய ளாயினும், தணிவொடு பணிதலும் தாழ்ந்தவனெனினும் தலைவ னுயர்வு தன்னுள்ளத்து நிறுத்தலும் காதற்றலைவிக்கு வேண்டும். அதனால், தலைவி தன்தாழ்வுமறத்தல் இல்லறக் காதலுக்கு இழுக் கென விலக்கப்பட்டது. தலைவிக்கு உயர்குடியுவகை விலக்கிய தோடமையாது, தன்பணிவு மறவாது தலைவனுயர்வுள்ளலு மின்றியமையாதென வற்புறுத்துங் குறிப்பால், குடிமையின்புறல் கூடா தென்பதனோடு ஏழைமை மறப்பும் விதந்து விலக்கப்பட்டது. இனி ஒப்புமையாவது, தலைவனைப் பிறரொடு ஒப்ப நினைப்பது; அந்நினைவும் கற்பறமழிக்கும் இழுக்காமாதலிற் கடியப்பட்டது. முன் எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல் வேண்டப்பட்டதெனின், அது மலர் மதிபோன்ற பொருள்களை அவற்றிற் கேற்கும் தலைவன் உறுப்போ டொப்புமைகோடலே குறித்தலின், அது குற்றமற்ற காதற்குறிப்பு எனக்கொள்ளப்பட்டது. இங்குப் பிறரொடு தலைவனின் ஒப்பு நினைப்பது பெண்மைக் கேலாப் பிழையாதலின், அது கடியப்பட்டது. என்றிவையின்மை = எனக் குறித்த குற்றங்கள் இல்லாமை (காதலர்க்கு வேண்டும்); என்மனார் புலவர் = என்று கூறுவர் புலவர். குறிப்பு: இதில் ஒடுக்கள் எண் குறிப்பன. குடிமையின் புறலை இளம்பூரணர் ஒரு தொடராகவே கொண்டு, ஏழைமை மறப்பை இரண்டாக்கிக் குற்றம் பதினொன்று எனக் கொள்வர். பேராசிரியர் குடிமையும், இன்புறலும் என வெவ்வேறு பிரித்துப் பன்னிருகுற்றம் எண்ணிக் காட்டுவர். குடிமை காதலர்க்கு வேண்டப் படும் ஒப்புவகையுள் ஒன்றெனவும், (மெய்ப். சூ. 25) இன்புறல் உண்மைக்காதற் குறிப்பென்றெண்ணப்படும் மெய்ப்பாடுகளுள் ஒன்றெனவும் (மெய்ப்.சூ. 12) இவ்வியல் முன் சூத்திரங்களிற் குறிப்பதனால் அவற்றைக் காதற் கொல்லாக் குற்றமென் றிங்குத் தொல்காப்பியனார் கடிந்தாரெனக் கோடல் முன்னொடு பின் முரணுவதால் எனைத்தானும் எண்ணற் பாற்றன்று. ஆதலின், குடிமையின்புறலை ஒரேதொடராக் கொண்டு பிறப்பின் பெருமிதம் தலைவிக்கேலாத் தவறெனக் கூறுவதே கருத்தாதல் தேற்றம். அதுவே போல் மறைப்பை ஏழை மையின் வேறாகப் பிரித்தலும் பொருந்தாது. மேலே பொச்சாப்பு மெய்க்காதற் குறிகளுள் ஒன்றெனக் கூறப்படுதலின், அதனையே மறப்பெனச் சொன்மாற்றிக் காதற்கேலாக் குற்றமெனக் குறிப்பதாய்க் கருதற்கில்லை. அன்றியும், ஏழைமையுணர்வு நன்றாவதன்றிக் காதல்வாழ்விற் கடிவரையின்று. ஆதலின், அவ்விரண்டையும் ஒருங்கெண்ணி, ஏழைமை மறப்பைக் குற்றமாக் கொள்வதே ஒருதலை. இன்னும் மேலிரு சூத்திரமும் பத்தே கூறுதல் நோக்க, ஈண்டு மவ்வாறு பத்தெனக் கொள்வதே ஏற்புடையதாகும். இனி, இன்மை என்மனார் என்பதைக் காதலர்க்கு இன்மை வேண்டும் என விரித்தது, பொருள் விளங்கும் பொருட்டும், இன்மை வேண்டும் என நிற்பிற் பொருள் முடிமையானும் என்க. கூறிய பத்துக்குற்றங்கள் உள்வழி, உண்மைக்காதல் நிலையா தாதலின், காதல் மெய்ப்பாடுகளைக் காணுதல் அவையற்ற இடத்தாமெனச் சுட்டுதற்கு அவை இவ்வியலிறுதியிற் கூறப்பட்டன. சூத்திரம்: 27 கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. கருத்து: இது மெய்ப்பாடுகளுக்குப் பொது புறனடையாய், அவற்றினியல்பும் குறிப்பும் நுண்ணறிவில்லார்க்கு எண்ண வொண்ணாமையும் கூறுகின்றது. பொருள்: கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கல்லது = காண்பதும் கேட்பதும் ஆசற ஆயும் நுண்மாண் நுழைபுலனுடையார்க்கன்றி; நன்னயப் பொருள்கோள்= சிறந்த நயத்தகு மெய்ப்பாடுகளின் இயல்பும் குறிப்பும் உணர்ந்துகோடல்; தெரியின் = ஆராயுங்கால்; எண்ணருங் குரைத்து = நினைத்தற்கரிது. குறிப்பு: முதலிரு சொல்லி னும்மைகள் எண்குறிப்பன. குரையும், ஈற்றேகாரமும அசைகள்; மெய்ப்பாடு உள்ளுணர்வைக் கொள்ளுதற்குதவும் குறிப்பாய்ச் சொல்லினும் செயலினும் தோற்றுமாதலின், கண்டதும் கேட்டதும் யாப்புறக் கொண்டு அது விளக்கும் உளக்கிடையளக்கும் நுண்ணுணர்வு அருமைத் தென் பதைத் தெரிப்பது இச்சூத்திர நோக்காம். ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் (குறள். 702) எனும் பொருளுரையில், கூறாது நோக்கிக் குறிப்பறிதலின் அருமை கூறப்படுதலறிக. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ னோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு (குறள். 1097) என்பதில் தலைவியின் செறுநோக்கின் அன்புண்மையைக் கண்ணினும், சிறுசொல்லின் அன்புண்மையைச் செவியினுமாகத் தலைவன் தன்னுண்ணுணர்வால் திண்ணிதி னுணர்தல் காண்க. இனி, கண்ணிற் சொலிச் செவியினோக்கும் எனவரும் பாட்டான் அகத்திறப்போலப் புறத்திலும் மன்னர் உள்ளுணர்வு களைக் கண்ணினும், செவியினும் நுண்ணிதின் உணருமாறுங் கருதுக. மெய்ப்பாட்டியலுரை முற்றிற்று. தொல்காப்பியர் பொருட்படலம் உள்ளுறைகள் உள்ளுறை என்பது புதைபொருள். சொற்களின் செம்பொரு ளன்றிக் கூற்றினகத் தடங்கிநின்று உய்த்துணரத் தோன்றும் மறைபொருளை உள்ளுறை என்பர் தமிழ்நூற்சான்றோர். உள்ளுறை என்பது வெளிப்படையின்றிக் கூற்றினுள்ளே குறிப்பாய் உறைவது (தங்குவது) எனப் பொருள்படும். எனவே, கூறிய சொற்பொருளின் புறத்தே குறிப்பிற் கொள்ளுமாறு கூற்றினுள்ளே எஞ்சி நிற்கும் பிறிதொரு பொருளே உள்ளுறை அல்லது எச்சம் எனப்படும். குறிப்பிற் கொள்ளும் உட்பொருள் சொற்களிலும் சொற்றொடர் களிலும் அமைதல் கூடும். சொல்லெச்சக் குறிப்பியல்களைத் தொல்காப்பியர் சொற்படலத்தில் எச்சம் குறிப்பு எனப் பலவாறு சுட்டி விளக்கினார். சொற்றொடர்களாலமையும் செய்யுளில் புலவர் தங்கருத்தைப் பட்டாங்குக் கூறுவது தவிர, மறைபொருளாகத் துறைபல புனைந்து உய்த்துணரவைக்கும் உள்ளுறைகளைத் தொகுத்து அவை (1) தம்மியல்பால் இருதிறப்படுமெனவும், (2) கூறும் புலவர் குறிக்கோளால் ஐந்து வகைப்படுமெனவும் பொருட் படலத்தில் விளக்கியுள்ளார். I. செய்யுளுறுப்பாம் உள்ளுறைகள் தம்மியல்பால் இரு வகையாமாறு: (1) சொற்பொருளின் வேறாய்க் குறிப்பிற்றோன்றும் மறை பொருளைக் கூறுஞ்சொற் றுணைகொண்ட நுனித்தாய்வோர் உய்த்துணரத் தோற்றுவிக்கும் கூற்றைச் சொல்லொடுமுடிவு கொளியற்கை புல்லிய கிளவி எனவும், (2) புலவன் நோக் குணர்த்தக் கூற்றுச்சொல் துணையாகாமல், கூறும் முறை ஒலி முதலிய பிற அடையாளம் அல்ல குறிப்பால் அதனை உய்த்துணர வைக்கும் கூற்றைக் குறிப்பொடு முடிவு கொளியற்கை புல்லிய கிளவி எனவும், தொல்காப்பியர் செய்யுளியல் விளக்குகிறது. சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொளியற்கை புல்லிய கிளவி எச்ச மாகும் (செய்யுளியல். சூ. 198) என்பது இதுபற்றிய செய்யுளியற் சூத்திரம். (1) சொல்லொடு முடிபுகொள் உள்ளுறைக்குச் செய்யுள்: பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீ ராம்பலுங் கூம்பின, இனியே வந்தன்று வாழியோ மாலை, ஒருதா னன்றே கங்குலு முடைத்தே (குறுந். செய்யுள். 122) இதில், வாழியோ என்ற சொல் குறிப்புமொழியாய், நோய் தரவந்த மாலையைத் தனிமையால் நொந்து வெறுக்கும் தலைவி யுணர்வைச் சுட்டி முடிவு கொள்ளுதலறிக. வெட்சிக் கானத்து என்னும் (புறம். 202 ஆம்) பாட்டில், பாரிமகளிரைக் கொள்ள மறுத்த இருங்கோவேளை வெறுத்துக் கூறுங் கபிலர் கைவண்பாரி மகளிரென்ற வென், தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும! விடுத்தனென், வெலீஇயர் நின்வேலே என்றதுமிவ்வகைக் குறிப்பு மொழியே என்பர் புறநானூற்றின் பழையவுரைகாரர். ஒல்லுவ தொல்லும் (புறம். 196) எனும் ஆவூர்மூலங்கிழார் பாட்டில், .............................. அனைத்தா கியரினி யிதுவே, எனைத்துஞ் சேய்த்துக் காணாது கண்டன மதனால் நோயிலராகநின்புதல்வர்;யானும்................... செல்வ லத்தை;சிறக்கநி‹னாளே” எனும் வாழ்த்து மித்தகைத்தாதலுங் காண்க. (2) இனி,குறிப்பொLமுடிவுகொள்ளியற்fயஉள்ளுiறவருமாW: கருங்கால் வேங்கை வீயுறு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே (குறுந். 47) இந் நெடுவெண்ணிலவினார் பாட்டு, தோழி தலைவனிரவு வருதல் ஒல்லாதெனச் bசால்லி,குறிப்பால்வiரவுகடாவும்கருத்தொடுமுடிவுகொள்ளியற்பிற்றாதல்கhண்க. இச் சூத்திரத்திற்கு பொருள்முடிக்க வேண்டப்படும் பிறிதொரு சொல் எஞ்சி வருவது சொல்லெச்சம் எனவும், பிறி தொரு சொல் வேண்டாமல் தானே நின்று bசாற்பொருளன்றிப்பிறிதொருbபாருள்சுட்டுவதுகுறிப்பெச்சம்எனவும்இருவகைத்தம்எனப்பொருள் கூறுவர் பழைய உரைகாரர். அவ்வெச்சங்கள் சொல்லளவில் அமைவன, சொற்படல எச்சவியலில் விளக்கப் பட்டுள்ளன. இங்குச் சொற்றொடர்ச் செய்யுளில் கூறப்படும் இவ்வெச்சங்கள் குறித்த பொருளை முடிய நாட்டும் யாப்பின் வழித்தாய செய்யுளுறுப்பாய் ஓர் கூற்றின்பாற்படும். (கூற்றெனினும் கிளவியெனினும் ஒக்கும்.) இவை சொல்லெச்சங் குறியாமல், கிளவிச்சொற்களின் உள்ளுறையாம் பொருளெச்சத்தையே குறித்து வரும். சொல்லும் அதன் குறிப்புமாய் நிற்கும் சொல்லெச்சங்கள் சொல்லளவில் அமைந்து, பிரிநிலை முதல் பத்து வகைப்படும் என முன் எச்சவியலிற் கூறப்பட்டன. செய்யுளுறுப்பாம் உள்ளுறைச் சொற்றொடர்ப் பொருளெச்சங்கள், சொல்லோடு முடிவுகொ ளியற்கைய (1) குறிப்பொடு முடிவுகொளியற்கைய (2) என்றிரு வகைத்தாம். சொல்லெச்சங்களை அவைதாம் தத்தம் குறிப்பின் எச்சம் சுட்டும் என முன் எச்சவியலிற் கூறியதன் பிறகு, இங்குச் சொற்றொடர்ப் பொருளெச்சங்களைச் சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொளியற்கைய எனவும், எழுத்தொடும் சொல் லொடும் புணராதாகிப் பொருட்புறத்ததுவே எனவும் செய்யுளியலில் தொல்காப்பியரே வேறு கூறுதலால், இவ்வீரெச்ச வகைகளும் வெவ்வேறினமென்பதே அவர் கருத்தென்று தெற்றென விளங்கும். இவற்றுள் சொல்லளவிற்றாய முன்னவை பத்தும் சொல்லதிகார எச்சவியலில் பிரிநிலை, வினையே என்னும் 34ஆவது சூத்திர முதல் சொல்லெனெச்சம் என்னும் 45ஆவது சூத்திர மீறாகப் பல சூத்திரங்களால் தெளிக்கப் பெற்றிருப்பதாலும் அவற்றிற் சொற்குறிப்பெச்சம் அவைதாம் தத்தம் குறிப்பின் எச்சமாகும் எனும் 44ஆம் சூத்திரத்திலும், சொல்லெச்சம் சொல்லெனெச்சம், முன்னும் பின்னும் சொல்லள வல்லது எஞ்சுதலிலவே எனும் 45 ஆம் சூத்திரத்திலும் தனித்தனியே விளக்கப்பட்டிருப்பதாலும், சொல்லிலக்கணத்தின் பாற்பட்ட அவ்வெச்சங்கள் அமைவுபட ஆண்டுச் சொற்படல எச்சவியலில் கூறப்பெற்றவற்றையே ஈண்டுச் செய்யுளியலில் மீண்டும் கூறும் குற்றமுடையர் தொல்காப்பியர் என்பது பொருந்தாமையாலும் இச்செய்யுளியற் சூத்திரத்திற்குப் பழைய உரைகாரர் கூறும் பொருள் பொருந்தாமை அறிக. II. இனிச் செய்யுளை ஆக்கும் புலவனின் நோக்கங் கொண்டு உள்ளுறை ஐந்து வகைப்படும் என்பதைத் தொல்காப்பியர் உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே எனும் பொருளியல் 46ஆம் சூத்திரத்தால் விளக்கினர். (i) இவற்றுள் உடனுறை என்பது இறைச்சியாகும். ஒரு கூற்றில் வரும் சொற்களின் வெளிப்படைச் செம்பொருளின் வேறாய் அக்கூற்றில் உள்ளுறுத்திறுவது இறைச்சி அல்லது உடனுறை எனப்படும். இறுதல், இறைச்சி என்பன தங்குதல் அதாவது அடங்கி நிற்பது எனும் பொருள் தரும். எனவே, ஒரு கூற்றில் அதன் மொழிப் பொருளின் புறத்தே திறத்தியல் மருங்கிற் றெரியுமோர்க்கே உய்த்துணரப் புலனாகும் புதைபொருளை இறைச்சி எனவும், உடனுறை எனவும் வழங்குவர் பண்டைப் புலவர். அது, இறைச்சி தானே பொருட் புறத்ததுவே (சூ. 33). இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே (சூ. 34) “அன்புறு தகுவன” ....(சூ. 35) எனும் பொருளியற் சூத்திரங்களால் விளக்கப் படும் இறைச்சியா முள்ளுறைக்குச் செய்யுள்: நசைபெரி துடையர், நல்கலு நல்குவர்; பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின், தோழி! அவர்சென்ற வாறே (குறுந். 37) இக்கூற்றில் ஒப்புக்குறிப்பின்மையால் உள்ளுறையுவமம் கொள்ளற்கில்லை. எனில், ஆண் யானை தன் பிடியின் பசி தீர்க்க யாமரத்தின் பட்டையுரித்தூட்டும் காதற் காட்சியுடைய வழியிற் சென்ற தலைவன் அக்காட்சியாற் றலைவியைத் தான் உடனிருந்து பேணி இன்பம் நுகர்வித்தாற்றும் தன் ஆண்மையறத்தை நினைப் பதும் நினைத்து மீள்வதும் கூடுமென்னும் குறிப்புடைமையா லிஃதிறைச்சி யாதல் காண்க. (ii) உள்ளுறை உவமமாவது, ஒப்பும் பொருளும் ஒருங்கு புலப்பட வரும் ஏனை உவமம் அல்லது செவ்வொப்பணி போலாது, கூறப்படும் கருப்பொருட் செய்தியினகத்தடங்கி, அச்செய்தியே ஒப்பாய், அது விளக்கும் பொருள் கூறாக்குறிப்பாய் உய்த்துணர்வோரால் மட்டும் அறிய நிற்பது. உள்ளுறை உவமம், அகத்திணை இயலில், (1) உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலமெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே (அகத். சூ. 50) (2) உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருள் முடிகென உள்ளுறுத் துரைப்பதே உள்ளுறை யுவமம் (அகத். சூ. 51) எனும் சூத்திரங்களால் தெளிக்கப்பட்டது. உள்ளுறை உவமம் வருமாறு: கொடிப்பூ வேழம் தீண்டி அயல வடுக்கொள் மாஅத்து வண்டளிர் நுடங்கும் மணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின்சா யற்றே (ஐங். 14) இதில், கொடிப்பூவேழம் பரத்தையாகவும், மா தலைவி யாகவும், வேழம் தீண்டி வடுப்படு மாவின் வண்டளிர் நுடங்கல் பரத்தைநலிய வருந்துந் தலைவியின் மெலிவாகவும் (தெய்வ மொழிந்த) மருதநிலக் கருப்பொருள்களை நிலனாக்கி அவற்றால் ஒப்புப் பொருளை உள்ளுறுத் தமைத்தலால், இஃதுள்ளுறையுவம மாகும். (iii) சுட்டு என்பது ஒரு கூற்றின் வெளிப்படையான சொற் பொருளன்றி அக்கூற்றின் உள்ளுறையாகப் பிறிதொன்றைக் குறிப்பால் உணர்த்துவதாகும். கருதிய பொருளைக் கூற்றின் சொற்றுணைகொண்டே சுட்டுவதும், சொற்பொருளின் புறத்தே குறிப்பாலுணரச் சுட்டுவதும் எனச் சுட்டு இருவகைத்தாம். இவை முறையே சொல்லொடு முடிவுகொளியற்கை புல்லிய கிளவி, (1) குறிப்பொடு முடிவுகொளியற்கை புல்லிய கிளவி (2) என வகுத்துக் கூறப்பட்டன. (1) இவற்றுள் முன்னது கூற்றின் சொற்றுணை கொண்டே செய்யுளிற் புலவன் உட்குறிப்பை உணர்த்துவதாகும். ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும், தோன்றுவது கிளந்த துணிவினானும் என்றிருவகைத்தாம் பிசி நிலைகளும் சொல் லொடு முடிவுகொளியற்கையவாம் சுட்டிலடங்கும். பிறை கௌவி மலை நடக்கும் என்னும் ஒப்பொடு புணர்ந்த உவமம், அக்கூற்றின் சொற்றுணையானே யானையைச் சுட்டுவதாயிற்று. இனி, நீராடான் பார்ப்பான், நிறஞ்செய்யான், நீராடின் ஊராடும் நீரிற்காக்கை என்பதில், ஒப்பின்றிக் கூறுவோன் உள்ளத்தில் தோன்றுவது கிளந்த துணிவுறு கூற்றும் அதன் சொல்லாற்றலாலேயே நெருப்பைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு இவ்விருதிறப் பிசிநிலை வகையும் சொல்லொடு முடிவுகொளியற்கை புல்லிய கிளவியாதல் கண்கூடு. உற்றுநோக்கின், உள்ளுறை உவமமும் சொல்லொடு முடிவு கொளியற்கை புல்லிய உள்ளுறையேயாம். உள்ளுறை யுவமம் யாண்டும் கருப்பொருள் பற்றியேவரும்; சுட்டுக் கவ்வரையறை யில்லை. (2) இனி, எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் பொருட் புறத்ததுவே குறிப்பு மொழியாகும் (செ.சூ. 172) என விளக்கப் பெற்றவை குறிப்பொடு முடிவுகொளியற்கை புல்லிய சுட்டு வகையாகும். கற்கறிக்க நன்கட்டாய் என்பது போல்வன இவ்வகைச் சுட்டாகும். உறந்தையைப் பறவாக் கோழி என்பதும், சேரர் பேரூரைப் பூவா வஞ்சி என்பதும் போல்வன இதன்பாற் படும். இவையேபோல் இறைச்சி வகையும் ஓரளவு குறிப்பொடு முடிவுகொளியற்கை புல்லிய உள்ளுறையாகும். இவற்றிடை வேற்றுமை பின்னர்க் காட்டுதும். (iv) சிறப்பென்பது, புகழொடும் பொருளொடும் புணர்ந் தன்றாகி வெளிப்பட விரியாது (124), கூற்றானன்றிக் குறிப்பால் உணர்த்தும் புகழொடு புணர்ந்த அங்கதச் செய்யுளும், அன்ன பிறவுமாகும். இது அங்கதத்தின் ஒருவகையாய்ப் புகழொடும் பொருளொடும் புணர்ந்தன்றாயிற் செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர் (செ.சூ. 124) எனும் சூத்திரத்தால் தெளிக்கப்பெற்றது. சிறப்புக்குச் செய்யுள்: பாரி பாரி என்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி ஒருவனு மல்லன்; மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே (புறம். 107) இது பழிப்பது போலப் புகழ்வதால், சிறப்பென்னு முள்ளுறையாயிற்று. (v) நகை என்பது பழிசுரக்கு மொழிகரந்து, வசையொடு வரும் அங்கதச் செய்யுளும் அது போல்வன பிறவுமாகும். இது செய்யுளியலில் விளக்கப்பட்டுள்ளது. வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர் (செய்.சூ. 129) மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும் (செய்.சூ.126) பட்டாங்குக் கரவாவசைகூறும் செம்பொருளங்கதம் உள்ளுறை யாகாமை வெளிப்படை நகை என்னு முள்ளுறைக்குச் செய்யுள்: இவ்வேபீலியணிந்துமாலைசூட்டிக் கண்டிரள்நோன்காழ்திருத்திநெய்யணிந்து கடியுடைவியனகரவ்வே;அவ்வே பகைவர்க்குத்திக்கோடுநுதிசிதைந்து கொற்றுறைக்குற்றிலமாதோ ........................... அண்ணலெங் கோமான்வைந்நுதிவேலே. (புறம். 95) (குற்றில =குறியகுடிiசயுற்றுள). இது, தொண்டைமானை ஔவை புகழ்வது போலப் பழிப்ப தால், வசைகரந்த அங்கதமாம்,நகை’என்னு«உள்ளுறையாதல்காண்f. இதன் பிற்பகுதி அதிகமானைப் பழிப்பதுபோலப் புகழும் சிறப்பென்னும் உள்ளுறையாதலுமறிக. III. இனி, உள்ளுறை உவமம், இறைச்சி, இவை தம்முள் அறியக்கிடக்கும் வேறுபாடுகளும், இவற்றிற்கும் சுட்டு என்னும் உள்ளுறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளும் பற்றிப் பல்காலும் பலவாறு மயக்கம் நேருகிறது. அதனால் அவற்றின் இயல்பையும் சிறிதாராய்ந்துதெளிய முயல்வது ஈண்டு வேண்டப்படுவதாம். ஆகவே, இவற்றினியல் விளக்கும் தொல்காப்பியர் சூத்திரங்களால் தேறத்தகுவனவற்றைத் தேர்ந்து தெளிதல் இன்றியமையாதது. III. (i) (1) உள்ளுறை உவமத்தை அகத்திணை இயலில் மூன்று சூத்திரங்களால்விளக்குவர்.(1) உள்ளுறை உவமம், ஏனை உவமமெனத் தள்ளா தாகும் திணையுணர்வகையே(அகத்.சூ. 45). குறிப்பால் வரும் உள்ளுறை உவமம், செவ்வொப்பணி போலாது, யாண்டும் காதலொழுக்கம் உணர்த்துதல், தவிராதுஎனஇச்சூத்திரத்திற்கூறி,இவ்வீருவமங்களுள்உள்ளுறைஉவமத்தின்இயல்பைஅடுத்தசூத்திரத்தாற்கூறுவர்.(2) உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே (அகத்திணை. சூ. 46) என்பது இரண்டாம் சூத்திரம். இதனால் தெய்வம் தவிரப் பிற கருப்பொருள்களுள் ஒன்றைக் களனாகக் கொண்டே உள்ளுறை உவமம் வரும் என்பது பெறப்படுகின்றது. கூறப்படும் கருப் பொருட் செய்தியே ஒப்பாய், கூறக்கருதிய பொருள் அவ்வொப்பின் உள்ளுறையாய்ப் புலனன்குணர்வோர்க்கு உய்த்துணரத் தோன்றும் கூறாக் குறிப்பாய்க் கருப்பொருளில் மறைந்து தோன்றுவதே உள்ளுறை உவமத்தின் இயலாதலின், கருப்பொருட் டொடர்பு இதற்கு இன்றியமையாததாகும். (3) உள்ளுறுத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென உள்ளுறுத் திறுவதே உள்ளுறை உவமம் (அகத்திணை. சூ.47) என்பது இவ் வுவமம் பற்றிய மூன்றாம் சூத்திரம். உள்ளுறை உவமத்துக்குக் கருப்பொருட்சார்பு இன்றியமையாததென முன் சூத்திரத்திற் கூறி, இதில் கூறப்படும் கருப்பொருட்செய்தியே வெளிப்படு பொருளாய் நிற்க, அதனகத்தடங்கி அச்செய்தியே ஒப்பாகி, அதை ஒத்துக் கூறக்கருதும் பொருள் குறிப்பால் உணர நிற்பதே உள்ளுறை உவமம் என்று அதனியல் விளக்கப்பட்டது. எனவே, இம்மூன்று சூத்திரங்களால் முறையே உள்ளுறை உவமம், (1) அகத்திணைவகை உணர்த்தல் தவிராதென்பதும், (2) கருப்பொருட் செய்தியுள் கூறாக் குறிப்பாய் அடங்கி நிற்பதும், (3) அக் கருப்பொருட் செய்தியே ஒப்பாய், அவ்வொப்புக் கேற்ப அதை உய்த்துணர்வோர்க்குக் கருதியபொருள் புலப்படுமாறு அமைவதும், இவ்வுவம உள்ளுறையின் இயல்களெனத் தெளிக்கப் பட்டது. சுருங்கச் சொல்லின், உள்ளுறை உவமம் (1) ஒப்பு அல்லது உவமத்தன் ஒருவகையாய், அகவொழுக்கவகை விளக்கத் தவிரா தென்பதும், (2) அது தெய்வம் தவிர யாதானும் ஒரு கருப் பொருளைக் கந்தும் களனுமாய்க் கொண்டே வருமென்பதும், (3) அடைவுபடக் கூறப்பட்ட கருப்பொருட் செய்தியினடங்கி அதுவே ஒப்பாக அவ்வொப்புக்கேற்ற பிறிதொரு பொருளாய்க் கூற்றின் புறத்தே குறிப்பால் உணரத் தோன்றும் என்பதும், இம் மூன்று சூத்திரங்களின் கருத்தாகக் காண்கின்றோம். இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி ஊரன் (ஐங். 18) இதில் வாட்கோரையொடு கொறுக்கைப்புல்லும் கரும் போடசையும் வயலூரன் என்றது, பரத்தையர் தம்பாங்கியரொடு குலமகளிரொப்பச் செம்மாக்க அவர்பால் ஒழுகும் தலைவன் என்பதைக் குறித்தலால், இது கருப்பொருளை நிலனாகக் கொண் டெழுந்த உள்ளுறை உவமமாயிற்று. III. (i) (2) இனி, இறைச்சியாவது ஒரு கூற்றின் புறத்தே அதன் மொழிப்பொருளின் வேறாய் நுனித்து நோக்குவார்க்கு மட்டும் குறிப்பாலறியத் தோன்றும். மறைபொருளாம். இதனை வியங்கியம் எனவும், தொந்யார்த்தம் எனவும் கூறுவர் வட நூலார். இவ்விறைச்சியியல் (அ) இறைச்சிதானே பொருட் புறத்ததுவே எனும் பொருளியற் சூத்திரத்தால் பெறப்படுகின்றது. இதில் கூறப்பட்ட பொருள் என்பது கூற்றின் சொற்பொருளையே குறிக்கும். எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் பொருட் புறத்ததுவே குறிப்பு மொழியாகும் என்பதனாலும் தொல்காப்பியரின் இக்கருத்து வலியுறுதல் காண்க. இது கருப்பொருளைப் பற்றிவருமென யாண்டும் தொல்காப்பியர் கூற்றானும் குறிப்பானும் உணர்த்தாமையின், அஃதவர் கருத்தன்மை அறிக. இறைச்சிதானே உரிப்புறத்ததுவே எனும் பாடம் ஏடு பெயர்த்தெழுதுவோர் பிறழக் கொண்டதாகத் தோன்றுகிறது. உரிப்பொருட்சிறப்பை விளக்கும் அகத்துறைச் செய்யுளில் உள்ளுறை உவமம் போலவே பெருவழக்காய் ஆளப்படுவது இறைச்சி. இறைச்சியால் உணர்த்தப்படுவது உரிப்பொருளே யாகும். அதனால் உரியையே சிறப்பாய் விளக்கும் இறைச்சியை உரிப்புறத்து எனக் கூறுவது அதனியலுக்கு முரணாவதால், அப்பாடம் பொருந்தாமை அறிக. இச்சூத்திரத்தின் நேரிய பாடங்கொண்ட நச்சினார்க்கினியர் உவமம் சுட்டாக் கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும்பிறிதொரு பொருளைக் குறிப்பது இறைச்சி எனச் சூத்திரத்திற்குப் பொருள் கூறுவர். கருப்பொருளின் சார்பு உள்ளுறை உவமத்துக்குப்போல இறைச்சிக்கும் வேண்டப்படுவதான குறிப்பே இறைச்சி பற்றிய தொல்காப்பியர் சூத்திரங்கள் ஒன்றிலேனுமில்லாதது கருதற்பாலது. கருப்பொருட் சார்பு இறைச்சிக்கும் இன்றியமையாததாக நச்சினார்க்கினியர் கொண்டதனாலேயே, கருப்பொருளையே பற்றுக் கோடாய்க் கொண்டுவரும் உள்ளுறை உவமத்துக்கும் அதை வேண்டாத இறைச்சிக்கும் வேறுபாடு விளங்காமல் மயங்க நேர்ந்தது. (ஆ) இறைச்சி பிறக்கும் பொருளுமா றுளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே (பொருளியல். சூ. 34) எனும் பொருளியற் சூத்திரத்தையும், இறைச்சியினியல்பே கூறுவதாகக் கொண்டு அதற்கு வேறுபாடு கூறுவர் நச்சினார்க் கினியர். இவர், இறைச்சி கருப்பொருளைச் சார்ந்தே வருமெனக் கருதினாராதலின், இச்சூத்திரம் கருப்பொருட் டொடர்புடைய உள்ளுறை உவமத்தினின்றும் இறைச்சியை வேறுபடுத்திக் கூறவந்தது போலக் கொண்டு, இதற்குப் பொருந்தாப் பொருள் கூறுவாராயினர். அது சூத்திரச் சொற்போக்குக்கும் நூல் நோக்குக்கும் ஒவ்வாது, முன்னைச் சூத்திரத்திற் கூறியாங்கு, ஒரு கூற்றில் அதன் சொற்பொருளின் வேறாய் இறைச்சி எனும் உள்ளுறை அதாவது மறைபொருள் தோன்றுவதும் தவிர, அவ்விறைச்சி அல்லது மறைபொருளி னின்றும் நுணுகி ஆராயும் திறனுடையார்க்குப் புலனாகும் மற்றொரு மறை பொருட்குறிப்புத் தோன்றுவதும் உண்டு என்பதே இச்சூத்திரத்திற்குரிய நேரிய பொருளாகும். இதற்கு இளம்பூரணர் தரும் உரையும் இக்கருத்தையே வலியுறுத்தும். இறைச்சிப்பொருள் வயிற்றோன்றும் (பிறிதுமோர்) பொருளும் உள. பொருட்டிறத்தியலும் பக்கத் தாராய்வார்க்கு என்பது இதற்கு அவர் கூறும் உரையாகும். எனவே (1) ஒரு கூற்றின் சொற்பொருளின் வேறாய், அதன் புறத்தே குறிப்பிற் றோன்றும் பிறிதொரு பொருளே உடனுறை அல்லது இறைச்சி என்பதும், (2) அவ் விறைச்சி யினின்றும் உய்த்துணர்வோர் அறியக் கிடக்கும் உட்கருத்து இன்னும் வேறாவது முண்டு என்பதும், முறையே இவ்விரு பொருளியற் சூத்திங்களானும் விளக்கப்படும் பொருள்களாகும். அம்ம வாழி தோழி! இன்றவர் வாரா ராயினோ நன்றே, சாரற் சிறுதினை விளைந்து வியன்க ணரும்புனத்து இரவரி வாரிற் றொண்டகச் சிறுபறை பானாள் யாமத்தும் கறங்கும் யாமங் காவல ரவியா மாறே (குறுந். 375) இதில், இரவுக்குறிபெற்று வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக, அவன் கேட்கத் தலைவிக்குக் கூறுவாள் போலத் தோழி, யாமங் காவலர் உறங்காவாறு தினைக்கதிர் அரிவோரின் பறை யாமத்தும் கறங்குதலால் இன்றிரவுவருதல் நன்றன்றென அவனுக்கறிவுறுத்துவது, இச்செய்யுட் கூற்றின் சொற்பொருளாகும். இனி, சிறுதினை விளைந்து முதிர்ந்ததால் அதனை அரியப் பகல் போதாமல் இரவுமரிவாரின் பறை யாமத்தும் கறங்க, அதனால் காவலர் அவியார் (அதாவது உறங்கார்). அதனால் பகலுமவன் வருதல் ஒல்லாது, இனித் தினையரிந்து முடிந்ததும் தலைவி புனங்காவலொழிந்து இற்செறிக்கப் படுவாளாகவே இனி அவன் இராப்பகலிரு போதும் வாரற்க, எனும் குறிப்பு இக்கூற்றின் சொற்புறத்தே தோன்றும் இறைச்சியாகும். இனி, அதன்மேலும் இதில், இவ்வாறு களவொழுக்கம் தடைபடும்; இனி நீ இவணலம் நுகர விரும்புவையேல் தாழாது விரைந்து வரைந்தெய்து என வரைவுகடாவுங் குறிப்பு, இக்கூற்றின் இறைச்சியில் உய்த்துணரத் தோன்றும் பிறிதொரு பொருளாம் உட்கருத்தாகும். III. (i) (3) இறைச்சி உள்ளுறை உவமம், இவற்றுள் வேறு பாடுகளாவன. (1) கடவுள் ஒழிந்த கருப்பொருளொன்றைக் களனாகக் கொண்டு, அக் கருப்பொருட் செய்தியையே ஒப்பாக்கிக் கருதிய பொருளை அவ்வாறன்றிக் குறிப்பாலுணர்த்துவது உள்ளுறை உவமம்; அவ்வாறன்றிக் கருப்பொருட் சார்பே வேண்டாமல், சொற்களின் செம்பொருளின் புறத்தே ஒரு கூற்றில் புலனன் குணரும் புலவர்க்குக் குறிப்பாற்றோன்ற, செய்யுளில் புலவன் கருதியமைக்கும் மறைபொருளே இறைச்சியாகும். உள்ளுறை யுவமம் கருப்பொருள்பற்றியன்றி வாராது; இறைச்சிக்கது வேண்டா. (2) கருப்பொருட் சார்பு வேண்டாதாகவே, இறைச்சிக்கு எவ்வகை ஒப்பு அல்லது உவமக் குறிப்பும் இன்றாகும். இது இவற்றிடையுள்ள மற்றொரு வேற்றுமை. (3) இன்னும் ஒரு வேறுபாடும் இவற்றிடைக் காணலாம். உள்ளுறை உவமம், கூறிய கருப்பொருட் செய்தியையே ஒப்பு அல்லது உவமையாகக்கொண்டு, தானதன் உட்பொருளாக (உபமேயமாகக்) குறிப்பிற் புலப்படுவ தாகலான், உள்ளுறை உவமம் கருப்பொருட் செய்தி கூறும் சொல்லொடு முடிவு கொளியற்கைப் புல்லிய கிளவியாகும். இறைச்சியோ, கருப்பொருட் சார்பும் ஒப்பும் வேண்டாது, ஒரு கூற்றின் சொற்பொருளின் வேறாய் அதன் புறத்தே குறிப்பிற்றோன்றுமாதலின், அது குறிப்பொடு முடிவு கொளியற்கை புல்லிய கிளவியாகும் (கிளவி எனினும், கூற்றெனினும் ஒக்கும்.) வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும் கருமயிர்ப் புருவை ஆசையின் அல்கும் மாஅல் அருவித் தண்பெருஞ் சிலம்ப! நீயிவண் வரூஉங் காலை மேவரு மாதோ இவணலனே தெய்யோ. (ஐங். 238) இச், செய்யுளில், முதன் மூன்றடியும் உள்ளுறை உவமம்; பின்னிரண்டும் இறைச்சி. முதன் மூன்றடிகளில், நீண்ட கொம்புடைய வீறுகொள் பொருதகரான யாட்டுக்கடா தன்னை விரும்பி வாராமல் வேறுபட்டாலும், மென்மயிர்ப் பெட்டையாடு ‘கடாவரும்’ என்னும் நசையால் தங்கும் கருநீரருவி குளிர்விக்கும் ‘பெருமலை யுடையோனே! எனக் கூறப்பட்டது. அதனால், தலைவன் தலைவிபால் வாராமல் தவறிழைக்கும் தறுகண்மையன் ஆயினன்; எனினும் தன் மலையருவிபோல் தட்பமுடையனாகலின், தலைவி அவன் இன்னும் தன்னைத் தலையளிக்க வருவனென நம்பி உயிர் வாழாநின்றாள் எனக் குறிப்பாற்றோன்றும் உள்ளுறை உவமம் இச்செய்யுட் கூற்றினுள்ளடங்கியதாய், அக்கூற்றின் செய்தியோ டொத்துப் பொருள் முடிவதாயிற்று, எனவே, இஃது உள்ளுறை உவமமாதல் காண்க. இதன் பின்னிரண்டடியில், தலைவன் வரையா தொழுகும் வன்கண்மையைச் சுட்டி, விரைவில் தலைவியை அவன் வரையுமாறு தூண்ட விரும்பும் தோழி, நீ வருங்கால்தலைவி உன்னைக் காணும் மகிழ்ச்சியினால், பிரிவாலிழந்த அவள் பொலிவு உன்னுடன் வரும் எனக் கூறி, உன்பொருட்டே உயிர் வாழும் தலைவிபால் வந்துநீ காணுவது அவள் பொலிவென்றே; நீ வாராமையால் இவள் நலனழிந்து மெலிவது நீ அறியாய்; அவள் நலன் அழியாமற் பேண விரும்புவையேல், விரைவில் இவளை வரைவாயாக எனக் குறிக்கின்றாள். இக் கருத்து அத்தோழி கூறிய சொற்பொருளின் வேறாய், ஒப்பொன்று மின்றிக் குறிப்பாகத் தோன்றுதலால், இஃது இறைச்சியாயிற்று.இதில் கருப்பொருட் சார்பும் ஒப்புமின்மை கண்கூடு. III. (i) (4) இவ்வாறு தம்முட் பல வேறுபாடுடையவேனும், இவற்றிடையுள்ள சில ஒற்றுமைகளும் கருதற்குரியவாம். அவையாவன: (1) இவ்விரண்டும் உள்ளுறை வகைகளாதல் ஒன்று. (2) இன்னும், இவை இரண்டும் அகவகைக்கே பெரு வழக்காய் வழங்கிவரும் சிறந்த செய்யுளுறுப்புக்களாதல் மற்றொன்று. III. (ii) (1) இனி, எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத்ததுவே குறிப்பு மொழி என்ப என விளக்கப் பெற்ற சுட்டு என்னும் உள்ளுறையும் இரு வகைத்தாம். (1) ஒன்று, உள்ளுறை உவமம் போல, ஒப்பொடு புணர்ந்த உவமத்தாய் வரும் பிசி போல்வன சொல்லொடு முடிவு கொளியற்கை புல்லிய கிளவி மேற்றாம்: (2) மற்றொன்று, இறைச்சி போலத் தோன்றுவது கிளந்த துணிவினால் வரும் பிசி போல்வனவும், கூற்றிடை வைத்த குறிப்பாம் அங்கதம் போல்வனவும், குறிப்பொடு முடிவு கொளியற்கை புல்லிய கிளவி மேற்றாம். III (ii) (2) சுட்டுக்கும், இறைச்சி உள்ளுறையுவமங்கட்கு முள்ள வேற்றுமை யாதெனின், (அ) உள்ளுறை உவமமும் இறைச்சியும் எழுநிலத் தெழுந்த செய்யுள் வகையில் பெரு வழக்காய் அடிவரை கொள்ளும் பாட்டிற் பயில்வது. குறிப்பாய் வரும் சுட்டு அவ்வாறன்றி உரை பிசி அங்கதம் முதலியவற்றிலும் வருவதாம். (ஆ) உள்ளுறையுவமம் கருப்பொருள் பற்றியே வரும்; சுட்டுக்கது வேண்டுவதன்று. (இ) இறைச்சியும் உள்ளுறை உவமமும் புறத்துறையில் விலக்கில்லை எனினும், அகத்துறைகளுக்கே சிறப்புரிமை கொண்டு வழங்கும்; சுட்டு, புறத்தும் அகத்தும் ஓராங்கு ஒத்தியலும். தொல்காப்பியர் - பொருட்படலப் புத்துரை குறிப்பு: நாவலர் ச. சோமசுந்தரபாரதியார், தொல்காப்பியத்தின்கண் உள்ள பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு இம்மூன்று இயல்கட்கும் முறையான உரை தந்துள்ளார். இவை நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இனிப் பொருளதிகாரத்தில் உள்ள களவியல், கற்பியல், செய்யுள் இயல்கட்கும் உரை எழுதத் தொடங்கினார். ஆனால் அவை முழுவடிவம் பெறவில்லை! ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக நமக்குக் கிடைத்த சில நூற்பாக் களின் உரை விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன. பஆ.) களவியல் அகப்புறத் திணைகளின் பருப் பொருளை மேல் இப்படல முதல் ஈரியல்களில் தொகுத்துக்கூறிப், பின் அகவொழுக்க நுண் பொருள்களான அன்பினைந்திணைகளை இவ்வியலில் வகுத்து, அவற்றின் துறை முதலிய உறுப்புக்களைத் தொல்காப்பியர் விரிக் கின்றார். அவைகளை முறையே களவு-கற்பு என்றிருகைகோள் களாக வகுத்து, அவற்றின் நுணுக்கங்களை அவ்வப் பெயரா னீரியல்களில் விளக்குகிறார். தலைமக்கள் தாமே தமியராய் முதலில் எதிர்ப்படும் காட்சிமுதல், நாளும் வளருமவர் காதல் பிறரறிய வெளிப்படும் வரை, காதலரதனை மறைத்தொழுகலால். அவர்தம் கரந்த காதல் ஒழுக்கம் களவெனப்படும். காதல் வெளிப்பாடு கற்பென வழங்கும். பிறரறியாமல் இருபாலார் மறைத்தொழுகும் காதல் மறை அல்லது களவு; உலகறியக் காதலர் மணந்து கணவனு மனைவியுமாய்க் கூடிவாழ்தல். கற்பு அல்லது மனையறம் எனப்படும் இவ்விரண்டனுள் களவுக் காதலொழுக்கம் இவ்வோத்தில் விரிக்கப் பெறுதலால், இது களவிய லெனப்பட்டது. இதில், முதற் சூத்திரம் களவொழுக்க விளக்கம். தலைமக்களின் முதலெதிர்ப்பாடான காட்சி. 2வது சூத்திரத்தும், எதிர்ப்பட்ட தலைமக்கள் தம்முள் ஒருவரை யொருவர் முன்னறியாமையால், யாரோ எனக் கடுக்கும் ஐயம். 3ஆவதிலும், ஐயமகலத் தேர்ந்து தெளிதல். 4ஆவதிலும், அவ்வாறு தெளிந்தாருளக் குறிப்பை விழி வாய்மொழியால் இருவரு மயர்வற உணர்தல். 5வது 6ஆவது நூற்பாக்களிலும் அவையே கூறப்படுகின்றன; அடுத்த 7-8 சூத்திரங்கள், முறையே ஆண்மை பெண்மைகளின் சிறப்பியல்பு. அதாவது இருபாலோருளப்பான்மைகளைக் குறிக்கின்றன. அப்பாற் சிறப்பியல்கள். அவர் காதலொழுக்க முறையின் நிறை உரைகளைத் தெளிப்பவையாதலின். அவ்வொழுக்கத் துறைகளை உய்த்துணரும் பொருட்டு அவற்றுக்கு முன் சுட்டப்படுகின்றன. 9முதல் களவொழுக்கம் விரிக்கப்படும் தம்முள் ஒத்த காதலுண்மையை உணர்ந்த இருவரும். தத்தமியல்பாலதை மறைத்தொழுகும் முயற்சியில் அடையும் நிலை வேறுபாடுகளை 9ஆவது நூற்பா தொகுக்கும் அந்நிலையில், அவரிடை நிகழும் செய்திகளிற் சிறந்த சிலவற்றை 10ஆவது சூத்திரம் பகரும். 11 முதல் 16 வரையுள்ள நூற்பாக்கள், களவிற்றலைவன் கூற்றிடம் கூறும். 17 முதல் 19 வரை, தலைவியின் கிளவியருமையும், 20-21 அவள் கூற்று நிகழ்தற்கேற்ற இடமும் குறிக்கும். 22-தலைவிக்கும் 23-தோழிக்கும், 24-செவிலிக்கும், 25-பெற்ற நற்றாய்க்கும், 26-அவ்விரு தாயர்க்கும், முறையே கூற்று நிகழுமிடங்களைக் கூறும். 27-பெண்ணீர்மையாற் பிறங்கும் தலைவி காதலியல் வேறுபாடு சுட்டும். 28ஆம் சூத்திரம், தலைமக்கள் பாங்காற்றுணையின்றித் தாங்களே காதற்றூதராய்ச் சென்று கூடுதலுண்டெனக்கூறும். இனி, களவு கூட்டக் களஞ்சுட்டு முரிமை தலைவியதென்று 29லும், ஒரோவழி தோழியுங் களங்குறிப்பாளென 30லும் கூறப் படுகின்றன. 31-களவிடைக் காதலர் அளவா நாட்களும், 32-தலைவி உற்றார்க்குரைத்துத் தன்மறை மணமுடிப்பார்த்தேர்ந்து அறத்தொடு நிற்கும் தகவும் சுட்டும். அவ்வாறவள் தேறிக் கூறற்குரிய இருவருள், செவிலியின் சிறப்பு 33லும், தோழியுரிமை 34-35லும் விளக்கப்படும். தலைவி களவைத் தோழி தேரும் மூவகை முறையும் 36லும் அப்படித் தேர்ந்து தெளியும்வரை, தோழி தன்பால் குரையிரந்து பின்னிற்கும் தலைவனுக் கிடந்தராமை 37லும், தலைவி யொருப்பாடறிந்தபின் அவளைத் தலைவனிடம் சேர்க்க வழி வகைநாடிக் கூட்டுந்திறனும் தோழியினுரிமை என்று 38லும் குறிக்கப்படுப. 39 முதல் 42 வரையுள்ள சூத்திரங்கள், களவுக் காலத்துத் தோழி துணையால் குறியிடம் பெற்ற தலைவன் இரவிலும் பகலிலும் ஏற்றவழி தலைவியைக் கூடுமுறை கூறும். 43-தலைவன் சிறைப்புறம் நிற்க, தலைவியும் தோழியும் வரைவு வற்புறுத்திக் குறிப்பானவற்குக் கூறுமுறை சுட்டும். இனிக் களவுக்காலத்துத். தலைவிபோற் காதலால் தொடலையும் தொழிலும் துறந்து ஒழுகுதல் தலைவனுக்கில்லா ஆணியல்பு 44லும், அதுபோலவே, கரவொழுக்கத்துத் தலைவன் இரவு வருவதின் ஏதமும் ஊறும் நினைந்தினைதல் தலைவிக்கன்றித் தலைவற் கில்லாமை 45லும் சுட்டப்படுப. தலைமகள் களவுக் காதலை, அவள் தந்தையும் தன்னையரும் பிறர் கூறாமல் தாமே குறியானறிதலும், தாய் செவிலி போலக்கூற வுணர்தலும் முறையே 46-47 சூத்திரம் சொல்லும். களவொழுக்கம் பிறர்க்கு வெளிப்படுவது தலைவனால் நேர்வதன்றித் தலைவியால் நேராமை 48ஆவதிலும். அவ் வெளிப்பாட்டாலாயினும், வெளிப்படுமுன் தலைவியின் குரவர் நேர்ந்து கொடுக்கப் பெற்றாயினும் தலைமகன் வரைந்து கோடல் 49ஆவதிலும் கூறப்படுகின்றன. இறுதியில், களவு வெளிப்பாட்டின் பிறகு. நெட்டிடையிட்டுப்பிரிதல் கூடாமையின், வரையுமுன் பிரிவு நீளாதஃகிய இருவகையன்றிப் பிறவகையின்மை 50ஆவது சூத்திரம் சுட்டும். சூத்திரம் : 1 இன்பமும் பொருளு மறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை, மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள் துறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே. கருத்து: இது, களவொழுக்கத்துக் காதற் கூட்டத்தை ஆயுங் கால், அது வேதியர் வகுத்த கூட்ட மெட்டனுள், காதலளவில் கந்தர்வ மணத்தியல்பை ஓரளவொக்கும் எனக் கூறுகிறது. பொருள்: யாவரும் உகக்கும் மனமலர்ச்சியும், அதற்குத் துணையாய் மக்கள், மதிக்கும் பொருளும், அவை இரண்டையும் விளைக்கும் அறனுமாக மூன்றும் சேர்ந்து அன்பு தழுவிய ஐவகை ஒழுக்க நெறியில் காதற்கூட்டத்தை ஆராயுங்கால். அது வேதியர் மருங்கில் ஓதப்படும் கூட்டமெட்டனுள், இசைநூற்படி யமைந்த இனிய யாழ்வல்ல கந்தருவமணத்தைக் காதலியல்பால் ஒரோவழி ஒக்கும். குறிப்பு : ஒத்த காதலர் உயிரொன்றிக்கூடும் அன்பொழுக்கம். துவக்கத்தில் பிறர்க்கு மறைக்கப்படினும், மணத்தொடு மலர்ந்து வயதொடு வளர்ந்து இருவரையும் மனையறம் புகுத்தலால், அது அறத்தொடு புணர்ந்ததாகும். இதை, அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழு மில. (குறள்: 39) என்பதில் ஏகாரமும். எல்லாம் என்பதும் தமிழரின்பக் கருத்தை வற்புறுத்தலாலறிக. பொருள், அறமும் இன்பமும் விளை முளை யாதலை. அறனீனும், இன்பமு மீனும், திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (குறள்: 754) எனும் குறளிற்காண்க. இழிகாமப் பெருந்திணையும் ஒருதலை முனைத்த கைக்கிளையும் விலக்கி. அக உரிப் பொருள்களாக இருவயினொத்த அன்பினைந்திணைக் காதற்கூட்டத்தை மட்டும சுட்ட. அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம் என்று கூறப்பட்டது. இதில் காமம் ஆசை சுட்டும் வடசொலன்று. அன்புப் பொருளுடைத் தமிழ்ச்சொல்லாகும்; அன்பை அதாவது காதலைக் குறிக்கும். இவ்வியலிலேயே, காமத்திணையில் எனக் காமத்தை ஒழுக்கத்தொடு சேர்த்துக் கூறுதலானும் காமஞ்சான்ற எனக் கற்பியலில் கூறுதலானும், இழிதரு காமம் ஒழிய விலக்கி, மேதகு கடவுட்காதலையே காமத்தமிழ்ச்சொல் கண்ணுதல் தேற்றம். மேலும், கற்பும் காமமும் எனும் கற்பியற் சூத்திரத்தின்கீழ். காமம் என்பதற்கு அன்பென்றே நச்சினார்க்கினியர் பொருள் கொள்ளுதலுமறிக. இவ்வியலில் தலைவனைக் காமக்கிழவனெனக் கூறுதலும் இதனை வலியுறுத்தும். ஆசை குறிக்கும் காமச் சொல்லை, வடநூலார் காதலின்பத்துக்கு வழங்குதல் இலக்கணை. அதனாலிங்குக் காமக்கூட்டம் என்றது, அறத்தொடுபட்ட அன்புத் திணைக் கூட்டத்தைக் குறிப்பது தெளிவாம். இனி, வடவர் உவந்துழிக்கூடி உவந்துழிப்பிரியும் கந்தருவக் கூட்டம். பிரிவறுபெட்பா லுயிரொன்றிக்கூடி, மணமாய்மலர்ந்து மனைமாண்பு வளர்க்கும் தமிழரின் களவறக்காதலை ஒவ்வாதா தலின் காமக்கூட்டம் யாழ்த்துணைமையோர் மணமாம் என்றார்; காதல் மீதூரக் கலந்து மகிழ் கந்தருவர்கூட்டம், நீளாது நிலையாது உலகறிய மணந்து நிலவாதொழியினும் காதலால் நேர்தலால், காதல் வேண்டாத ஆரியர் பிறவகைக் கூட்டமேழையும் விலக்கி, களவுக்கூட்டம் காதலளவில் கந்தருவர் புணர்ச்சியை ஓரள வொக்கு மெனுங் குறிப்பால், தமிழர் களவுத்திணை அன்புக் கூட்டம், காதலொடுகூடுங் கந்தருவர் கூட்டத்தியல்பே என்று கூறப்பட்டது. மறையோர் என்றது, வேதமோதும் ஆரியரை. தேம் என்பது, இடப் பொருளுருபு. அதனைத் தேயத்தின் மரூஉவாக்குதல் பொருந்து பொருளுதவாது. மன்றல், மணம், என்றசொற்கள், இங்குக் கூட்டம் குறிக்கும் காரணமொடு மணப்பது, நூல்களில் வரைதல் அல்லது வரைவென வழங்கும். களவிலக்கணத்தை விளக்குவதோடமையாது, தமிழ் நூலில் ஆரியர் எட்டுக் கூட்டங்களை இழித்துப் பேசுவதேன்? எனில், தொல்காப்பியர் காலத்துக்கு முன்னமே ஆரியப்பார்ப்பனர், தமிழ்நாடு புகுந்து இடம்பெற்றுத் தங்கித் தம் வடகலையை வளர்க்கத் துடங்கியதால், அக்காலத்தவர் மொழிப் பேரிலக் கணமான ஐந்திரமும் பிறநூலும் ஆராய்ந்து, அவற்றின் வேறுபட்ட தமிழ் மரபுகளைத் தமிழரொடு அவ்வாரியப் புலவருக்கும் விளக்க வேண்டி. இரு கலை மரபு வேறுபாடுகளை இடையிடைக் குறிப் பாராயினர்; அவற்றுள் இம் மணமரபு வேற்றுமை பெரிதாதலின், அதையிங்குச் சுட்டினர். காதலையிகழ்ந்து, மக்களைப்பெற்றுத் தம்மினம் பெருக்குவதே ஆரியமணத்தின் அடிநோக்கம்; கன்றிய காதலால் ஒன்றியறம் வளர்ப்பது, தமிழ்மண மரபு. இதனை, இந்நூற்பா விதந்து விளக்குகிறது. எனவே, என்றுங் குன்றா அன்பின் விளைவாய் அறத்தொடு புணர்ந்த காதல் வாழ்வே களவுத்திணை எனக் களவியல் விளக்குவது, இச்சூத்திரக் கருத்தெனக் கண்டு தெளிக. சூத்திரம் : 2 ஒன்றே, வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப; மிக்கோ னாயினும் கடிவரை யின்றே. கருத்து: இந்நூற்பா, பண்பொத்துப் பால் வேறு பட்டாரிருவர் உழுவற்காதலெழுதற்கிடனாம் காட்சி கூறுகிறது; அதாவது உழுவலரிருவர் உளமொருப்பட்டு உயிரொன்ற முதலிற்றலைக்கூடுங் காட்சியின் மாட்சி கூறுகிறது. பொருள் : ஒன்றே, வேறே, என்றிருபால்வயின் = நானிலப் பரப்பில், ஒரு நிலத்திருவராதல், அன்றி அவ்விருவர் வெவ்வேறு நிலத்தராதல் என இருமுறையில்; பாலதாணையின் = அதுவரை அவரறியாது மறைந்து அவருள்ளத்துறைந்த உழுவல் தழைந் திணைக்கும் அவர்க்கியல்பான பால்விளியால் (Sex Urge); ஒன்றி யுயர்ந்த ஒத்தகிழவனும் கிழத்தியுங்காண்ப=உயிரொன்றி உணர்வொத்துயர்ந்த பத்தும் பண்பும் ஒத்தாரிருவர், ஒருவருக் கொருவ ரின்றியமையாக் (காதற்) கிழவராய்த்தாமே தலைப்படுவர்; மிக்கோனாயினுங்கடிவரை யின்றே=இருவரும் ஒவ்வாவிடத்துத், தலைமக னுயர்வு தள்ளுதற்கில்லை. குறிப்பு : முதலடியில் ஏகாரமிரண்டும், இரண்டிலொன்று எனக்குறிப்பதால், பிரிநிலை. எண் இடைச் சொல். உயர்ந்த எனும் பெயரெச்சம், தனித்தனியே சென்று கிழவனும் கிழத்தியும் என்ற பெயர்களுடன் முடியும். அதைப் பாலுக்கு அடையாக்கிற் பொருள் சிறவாது, உயர்வதும் தாழ்வதும் பாலியல்பன்றாதலின். அன்றியும் உயர்த்தும் என்னாமல் உயர்ந்த எனத் தன் வினைச்சொல்லாயும், ஒன்றியென்னும் தன் வினையெச்சத்திற்கு முடிவிடமாயும் நிற்பதாலும், அது பாலுக்கு அடையாமாறில்லை. பால் முதலடியில் முறை அல்லது வகையும், இரண்டாமடியில் ஆண் பெண் இயல்பால் எழும் அற உழுவற் கிழமையுங் குறிக்கும். பாலதாணை என்பது, பத்துப்பண்பு மொத்துப் பாலியலிணைக்க, இருவர் ஒருமனப்பட்டு உயிரொன்றி, ஒருவரையொருவரின்றி யமையா உணர்வு தழைய ஈர்த்திணைக்கும் உயிரியல்பின் ஏவல்; அதாவது பால்விளியைச் சுட்டுவதாம். (ghšÉË-Sex Urge.) பால் வேறுபாட்டால் யாரும் யாரையுங் கண்டவுடன் காதலிப்பதியல்பில்லை. உள்ளுணர்வால் உயிரொன்றற் கொத்தாரே கண்டாங்குக் காதலித்து இருவயினொத்து ஒருமனப்பட்டு உயர்வாழ்வால் இன்பம் துய்ப்பர். பால் வேறுபாட்டால் மட்டும் எவரும் தாம் கண்ட எவரையும் காதலிக்கப் பாலியல் விளியாது. ஒரோவிடத் தோரளவு பொறி வயத்தார் சிலருக்கு உணர்வு திரிவதுண்டெனின், அது இருவயினொத்தொரு மனத்தால் உயிரொன்றும் மாறா மெய்க் காதலாகாது. எழுந்து அழியும் இழிகாம விகற்பமாகும். அனையவர் காமம் நிலையுதலில்லை. உள்ளமும் உயிரும் இரண்டற ஒன்றுபட் டுயர்தற்கேற்ற உழுவலன்பு, முளையோடு விளைதிறனும் அகத்தடங்கியமையும் விதை போன்றதாம். அவ் வித்து, நீர் ஊர முளை கிளைத்து வளர்வதுபோல், உழுவற்காதல் மறைந்துறையு முள்ளத்தா ரெதிர்ப்பாட்டால், அவர் காதல்முளை கூர்த்துத் தளிர்த்துயர்ந்து தழைவதியல்பு. அதுவே, பாலது (விளி =) ஆணையாகும். உழுவலாவது தூண்டும் பிறதுணையும் பொருட்டும் வேண்டாது, பண்பொத்துப் பால் வேறுபட்டார் இருவரகத் துருவின்றி ஒடுங்கியிருந்து, அவர் எதிர்ப்பட முளைத்து விளையும் அன்பறக்காதல், ஒத்தபண்பு பத்தாதல், பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காம வாயில், நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே என மேல்வரும் மெய்ப்பாட்டியல் சூத்திரத்தான் அறிக. இனி, முன்னறியாமல் முதலிலெதிர்ப்படும் பண்பொத்த இருபாலார் தலைப்பட்டு, அக்காட்சியில் அவரிடைக் காதலெழ உளமொன்றி, அதனால் ஒருவருக்கொருவர் காதற்கிழமை கொள்வர். ஆகவே, கண்டு காதலித்து அன்புரிமை பூண்டார் என்று கூறுதல் முறை; அதற்குமாறாகக், கிழவனுங் கிழத்தியுமாகக் காண்பர் என்றது, காலவழு என்பார்க்கு, அவர் கருத்தை மறுத்து, களவறக் காதல் பற்றிய பண்டைத் தமிழர் கொண்ட கருத்தை வற்புறுத்த வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க. முன் அகத்தில்லாது புதிதாய்க் காட்சியிற் பிறப்பது, உழுவற்காதலன்று, காமமாகும். அதை இணைவிழைச்சு என்பர் தமிழ்நூலார். அது உழுவலன் பின்மாட்சிக்கு மாறுபட்டது. உழுவற் காதல் உள்ளத்தொடுங்கி என்றும் நின்றது; முன் அகத்தில்லாது புதிதாய்ப் பொறிவழிப் புகுந்து, காண்பார் உணர்வைக் கவ்வியமைப்பது காமம்; அது, விதையாமல் வளரும் களைபோல. ஒழிதற்குரிய உணர்ச்சி வெறி, காணாமுன் இருவரகத்தும் ஒடுங்கியுறையும். உழுவற்காதல் கணடாங்கே காட்சியொடு தோன்றுமாட்சியைத் தெளிக்கக், காண்பது மிருவரும் காதற் கிழமைபூண்பதும் ஒரு காலத்துடனி கழ்ந்து, இருவருங் காதலுரிமையொடு மெதிர்ப்படுவர் எனத் தெளிய விளக்கிய நயம் மிக வியக்கத்தக்கது. இனி, பாலதாணை என்பதை விதியின் ஏவலெனக் கொண்டுரை கூறினர் பழைய உரைகாரர். அது, தமிழ் மரபழித்தலால், தவறெனமறுக்க விதியை விலக்கிக் களவிற் காதலர் உழுவலன்பின் விழுமிய இயல்பும் நூன்மரபும் விளக்கி, பேராசிரியர் திருக்கோவை ஏழாம் கலித்துறை உரையிற் கூறுதலானும் இவ்வுண் மையறிக. களவுக் காதலர் உழுவல் அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம்..... விதியாவது செயப்படும் வினையினது நியதியன்றே. அதனானே (விதியானே) அன்பு தோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவும் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும். அது மறுத்தற் பொருட்டன்றே, தொல்லோரிதனை இயற்கைப் புணர்ச்சி எனக் குறியிட்டது. அல்லதூஉம், நல்வினை துய்த்தக்கால் முடிவெய்தும்; இவர்களன்பு துய்த்தாலு முடியாது எஞ்ஞான்றும் ஒரு பெற்றியே நிற்கும். அல்லதூஉம்,....... பலபிறப்பினும் ஒத்து நின்றதோர்வினை இல்லை என்பது. (எனவே) இவரன்பிற்குக்காரணம் விதியன் றென்பது. இது, தமிழ்மரபு தழுவிப் பேராசிரியர் களவுக் காதலை விளக்கியவாறு. இனி, கற்பற வாழ்வுக்குக் களவியற்காதல் இன்றியமை யாததென்பது தமிழ்ச்சான்றோர் கண்ட உண்மை. இவ்வுண்மை கற்பெனப்படுவது களவின் வழித்தே. என்றும் அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது (மனையறம்) பயிற்றல் இறந்ததன் (கழிந்த களவுக் காதலின்) பயனே என்றும் நூல்களில் வற்புறுத்தப்படுதலா னறியப்படும். இருவயினொத்த உழுவலன் புண்மை, முன்னறியா இருவர் தாமே தமியராய்த் தலைப்பட்டுக் கண்டாங்கே உணர்வோடுயிரொன்றி ஒருமனப்பட்டு ஒருவரை ஒருவரின்றியமையாமல் இருவரும் உளம் புணரும் களவுக்காதல் அறவொழுக்கால் தேறப்படும் முன்னறிவும் பிறதுணையும் கூட்டக் கண்டிருவர் காதல் கூர்தல், பிற குறிக்கோள் கொண்டுளதா மாதலின், குறிப்பின்றி உள்ளுறையும் உழுவலன்பே அவர் காதற் காரணமாய்த் துணிதற்கில்லை. நாளும் பல பெண்டிரைக் கண்டு வரும் ஒருவனுக்கும், அவ்வாறே நாடோறும் ஆடவரைக் காணும் ஒருத்திக்கும் காணப்பட்டார்மாட்டெல்லாம் அவரின்றித் தானமையாக் காதல்வேட்கை பிறப்பதில்லை. பதவி, பணம், புகழ்மை, இளமை, அழகு முதலிய பயனோக்காற் பிறக்கும் வேட்கை, உளத்துறையு முழுவலன்பாகாமையின், அறநெறியினிலையாது. முன்னறிந்து தலைப்படுவாருள்ளத்துப் பிற குறிக்கோளுருவெடுத்து நிலையாத வேட்கையினுக் கிடந்தரலாம். அதுகொண்டே, முன்னறியார் தமியராய்த் தலைப்பட்டுக் கண்டாங்கே காதலினால் உயிரொன்றி உளங்கலத்தல் களவொழுக்கத் துவக்கமென நூல்கள் கூறும். இங்குத் தொல்காப்பியர் வலியுறுத்துமிக்கருத்து, இறையனார் களவியல் 2ஆம் சூத்திரத்தில் தானே, அவளே, தமியர் காணக் காமப்புணர்ச்சி, இருவயினொத்தல் எனக் கூறுதலானு மினிது விளங்கும். இதில் காமப் புணர்ச்சி என்றது காதற் கூட்டத்தை. காமச்சொல் காதல் குறிப்பது, முன் முதற் சூத்திர உரைக் குறிப்பால் தெளிக. இருவயினொத்தல் களவிலும், பின், மணந்துவாழுங் கற்பிலும், மாறாமல் குறையாமல் இருவருக்கும் ஒருபடித்தாய் நிலையும் ஒத்த காதலுணர்வாம். தலைமக்கள் முதற் காட்சியில் தமியராய் எதிர்ப்பட்டுக் காதலால் உளங் கலத்தற்குச் செய்யுள்: யாரு மில்லைத்; தானே கள்வன்; தானது பொய்ப்பின், யான்எவன் செய்கோ? தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்கும் குருகு முண்டுதா மணந்த ஞான்றே (குறுந். 25) இக் குறுந்தொகைப் பாட்டில், மணவாமல் ஒருவழித் தணந் தொழுகும் தலைவனும் தானும் தமியராய் முன்னே முதனாட் காட்சியிற் காதலாலுயிரொன்றிக் கலந்த உள்ளப்புணர்ச்சியை ஒருவருமறியாமை நினைந்து, அவன் கொடுமைக்கினைந்து தலைவி தோழிக்குப் புனைந்து கூறுவதைக் கபிலர் குறிப்பதறிக. இனி, மிக்கோனாயினும் கடிவரையின்றே என்றதன் குறிப்பறிவாம். ஒத்த கிழவனும் கிழத்தியும் காதலாலொன்றிக் காண்பர் என்று பண்பொப்புபால் விளியாலொன்றுதள் கின்றியமையாததெனக் குறித்ததனால், செவ்வொப்பமையாமற் சிறிது துயர்வு ஒருபால் நேருமிடத்தெல்லாம், களவொழுக்கம் கடியப்படும் என்றெண்ணக்கூடும். அதைவிலக்கி, உயர்வுளதேல், அது கிழவன்பாலாயிற் கேடு பெரிதில்லை என்றிப்புறநடையால் ஓரளவு தானுடன்பட்டமைக்கின்றார். உலகியலில் ஒப்பருமை உளதாக, அதைக்கடிதல் கூடாமையால் யாண்டும் யாவர்க்கும் காதலற வாழ்வுக்குச் செவ்வொப்பே சாலச்சிறந்தது. மிகுதி (=உயர்வு) யார்மாட்டும் நன்றன்று. ஒரோவழி இருவருள் ஒருவர் சிறிது சிறந்துயருமிடத்து, அச் சிறப்புத் தலைவி மாட்டுளதாமேல், தலைவனிலைதடுமாறும்; காதலற மனைவாழ்வில், தலைவி மிகத்தாழ்வதும் நலந்தராது; ஒப்பதுவே மனைமாட்சி வளர்ப்பதாகும். தலைவியினுயர்வு, தலைவனுக்குப் பெருமை உரன் பிறங்காமல் உட்க இடமுண்டாக்கும். அதனால், ஒத்தவர்கள் கூடுவதே இனிமைதரும். ஒவ்வாக்கால், சிறிதுயர்வு தலைவன்பாலாதல் அவர்காதலுக்குத் தீதில்லை, என்றதனைக் கடியாமல் உலகியலிற் காணுதலால் நூல்களு முடன்பட்டுரைக்கும் தலைவி யிற்றலைவன் உயர்ந்தோனாதற்குச் செய்யுள் வருமாறு: இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீள்நிலப் பெருங்கடல் களங்கஉள் புக்கு மீனெறி பரதவர் மகளே! நீயே, நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர் செல்வர் காதல் மகனே புலவு நாறுதும், செலநின் றீமோ. பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ?அன்றே.... (நற். 45: 1-5, 8-10) எனவரும் நற்றிணைப்பாட்டில், தலைவனுயர்வு களவுக் காதலில் கடியப்படாமை காண்க. அன்னைஅறியினுமறிகஎனத்தொடங்கும்போந்தைப்பசலையார்அகப்பாட்டும்,தலைவிநுளைச்சியாகத்தலைவன்நெடுந்தேர்ஊரனாகக்காதலாற்கலந்தவர்களவொழுக்கம்குறிப்பதறிக.இதில், அவர் jவறிழையாமல்cளம்புணர்ந்bதாழுFம்fளவறக்fதல்bதளிவுறவிளங்கும்bசவ்விcவக்கத்தக்கது. அன்னை அறியினும் அறிக அலர்வாய் அம்மென் சேரி கேட்பினுங் கேட்க. பிறிதொன்றின்மைஅறியக்கூறி, கொடுஞ்சுழிப்புகாஅர்த்தெய்வம்நோக்கிக் கடுஞ்சூள்தருகுவென்நினக்கே.... (அகநா, 110:1-5) எனத்தோழி, தன் தலைவியின் கற்பறக்காதலைப் பொற்புற எடுததுச் செவிலிக்குரைத்து அறத்தொடுநிற்கும் அழகறிந்துவப்பாம். இன்னும், பொன்னடர்ந்தன்ன (அகம். 280) என்னும் அம்மூவனார் பாட்டிலும், பரதவன் மகளும் மருத ஊரனும் உளம்புணர்ந் தொழுகும் களவுக்காதல் விளக்கமாகும். கழைகோடிவில்லியைச்செற்றார்தியாகர்மலைவெற்பில் உழைகோடிசுற்றும், கிரிஎமதூர்,உமதூர்மருதம். தழைகோடி கொண்டு சமைத்த தெம்மாடை தனித்தனியே இழைகோடி பொன்பெறுமே உமகாடை இறையவரே. எனவரும் எல்லப்பநாவலர் திருவாரூர்க் கோவைக் கலித்துறையும், மருதப்பெருங்குடி நிதிக்கிழவன் தலைவனாகக் குறவர் குறுமகள் தலைவியாகக் களவுக்காதலில் உளம் புணர்ந்தொழுகலும், தலைவனுயர்வு தழுவப்படுதலும் தோழி கூற்றாய்ச் சொல்லக் காண்பாம். சூத்திரம் : 3 சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப; இழிந்துழி இழிபே சுட்ட லான. கருத்து : மேலே களவும் காட்சியும் தெளிய விளக்கி, இதில் ஐயம் கூறுவர் தொல்காப்பியர். பொருள் : சிறந்துழி, ஐயம் சிறந்தது என்ப = முன்னறியார் முதலெதிர்வில் காதலிப்பார், ஒருவரை மற்றவர் யார் இவரென்று ஐயுறுங்கால், அவ் ஐயம், உயர்வோடு உறழ்தல் பெருமை தரும் என்பர் களவியல் நூலார்; இழிந்துழி இழிபே சுட்டலான = ஐயம் இழிவு தழுவி எழுமிடத்து, ஐயுறுவார் உள்ளத்து (இகழ்ச்சி) இழி வுணர்ச்சி குறிக்கும் அன்றி, காதல் வளர்க்காது. குறிப்பு: காட்சியிற் காதலர் முன்னறியாமையால் ஆவயினெதிர்ந்தவர் யாவர்கொல் என்று இருவர்க்கும் ஐயம் எழுவதே இயல்பு. ஆனால், ஐயம் மேன்மைவழி நிகழ்தல் பெருமை; தாழ்வின் வழிப்படுமேல் காதலைத் தகையு மிழிதகவாம், காணப்பட்டாள் அறமகளோ? ஆரணங்கோ? திருமகளோ? மடமயிலோ? எனத் தலைவனும், எதிர்ந்தவனைச் செவ்வேளோ? காமனோ? இயக்கரின் பெருமகனோ? எனத் தலைவியும் எண்ணுதல் இருவருக்கும் பெருமை தரும். உருவுமாறும் அரக்கியோ? அணிபுனைந்த அலகையோ? மோகினிபோல்வந்த மூத்தவளோ? எனத் தலைவியைத் தலைவனும்; புளிஞனோ? அரக்கனோ? புலைமகனோ? எனத் தலைவனைத் தலைவியும் எண்ண நேரில், ஒருவரையொருவரிகழ்ந்து வெறுப்பதல்லால், வியக்கவும் நயக்கவும் இயலாமை தேற்றம். அதனால், மேலோரொடு வைத்தையுறலே சிறந்தது. இழிந்தோரா யெண்ணுதல் இழுக்காகும் என்பதே இச் சூத்திரச் செம்பொருளாகும். இனி, சூத்திரச் சொற்றொடருக்கேற்ற செம்பொருளிது வாகவும், பழைய உரைகாரர் இருவரும், சிறந்துழி என்பதற்கு இருபாலவருள், சிறந்த ஆண்மகனுக்கே ஐயம்தகும் என்றும், அறிவிற் குறைந்த பெண்மக்கள் ஐயந்தீர்க்கும் கல்வியறிவில்லாமை யால் அவர்பால் ஐயமே கூடாதென்றும் பொருள் கூறினர். அவருரை, பெண்களை இழிக்கும் வடநூல் வழக்கைத் தழுவி எழுதிய பிழையென மறுக்க அன்றியும்; தமிழ்ச்சான்றோர் இருபாலோர்க்கும் இயல்பாகும் ஐயம் ஏற்புழிக் கூறுதலானும், அவருரை தவ றென்றறிக. காதற்காட்சியில் இருவருக்கும் போதரும் ஐயம் கூறும் பாட்டு வருமாறு: 1. செம்மல ரடியும் நோக்கித் திருமணி அல்குல் நோக்கி வெம்முலைத் தடமும் நோக்கி விரிமதி முகமும் நோக்கி விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி, மைம்மலர்த் தடங்கண் நங்கை மரைமலர்த் தேவி என்றான் (சிந்தாமணி : 739) 2. வரையின் மங்கைகொல், வாங்கிருந் தூங்குநீர்த் திரையின் செல்விகொல், தேமலர்ப் பாவைகொல், உரையின் சாய லியக்கிகொல், யார்கொலிவ் விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே (சிந்தா. 1326) 3. விண்ணி னீங்கிய மின்னுரு இம்முறை பெண்ணின் நன்னலம் பெற்றதுண் டாங்கொலோ, எண்ணி னீதல தென்றறி யேன்,இரு கண்ணி னுள்ளும் கருத்துளுங் காண்பெனால் (கம்பன், மிதிலைக்காட்சி, 135) 4. “ வள்ளற் சேக்கைக் கரியவன் வைகுறும் வெள்ளப் பாற்கடல் போன்மிளிர் கண்ணினாள் அள்ளற் பூமக ளாகுங் கொலோ? என துள்ளத் தாமரை யுள்ளுறை கின்றதே (கம்பன், மிதிலைக்காட்சி, 136) இந் நான்கு பாக்களும், தலைவன் ஐயுறவுகூறும், முதலிரண்டும், சீவகன் முறையே தத்தையையும், பதுமையையும் முதற்கண்டு கூறியவை. பின்னிரண்டும் இராமன் சீதையை யாரென அறியாமல் முதலிற் கண்டு காதலாற் கூறியன. 5. அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ? கனங்குழை மாதர்கொல்? மாலுமென் நெஞ்சு (குறள் : 1081) என்ற குறளும் தலைவனதையமே கூறுகிறது. 1. கண்ணெனும் வலையி னுள்ளான், கையகப் பட்டி ருந்தான். பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப் புடைய நம்பி, எண்ணின்மற் றியாவ னாங்கொல், என்னிதற் படுத்த ஏந்தல் ஒண்ணிற உருவச்செந்தீ உருவகொண் டனைய வேலான் (சிந்தாமணி. 713) 2. வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ? மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ? நிணந்தென் நெஞ்சநி றைகொண்ட கள்வனை அணங்கு காள்! அறி யேன். உரை யீர்களே (சிந்தா, 1311) 3. அல்லினை வகுத்ததோர் அலங்கற் காடெனும் வல்லெழு வல்லவோர் மரக தப்பெருங் கல்லெனு மிருபுயம், கமலங் கண்ணெனும் வில்லொடு மிழிந்ததோர் மேக மென்னுமால், (கம்பன். மிதிலைக்காட்சி, 53) இம்மூன்றும், தலைவனை எதிர்ப்பட்ட தலைவியின் ஐயம் கூறுகின்றன. இவற்றுள் முதலிரண்டும் முறையே தத்தையும் பதுமையும் சீவகனை முன்னறியாமல் முதலிற்கண்டு காதல் கூர்ந்தையுற்றதைக் குறிப்பன. கடைசிக் கம்பன்பாட்டு, சீதை இராமனை யாரென்றறியாமல் காதலெழக்கண்டு அவன் பாற்கொண்ட சிறந்துழி ஐயம் குறிப்பதாகும். இன்னும் இதுவே போல், சுந்தரரும் பரவையும் முந்துறத் தாமறியாராய் வந்தெதிரக் கண்டிருவருள்ளத்தும் எண்கொள்ளாக் காதலின் முன்பெய்தாத ஒரு வேட்கை எழ, ஒருவரையொருவர் ஐயுற்றுத் தெளிந்ததைத், தெய்வமணம் கமழும் பாட்டால் சேக்கிழார் கூறக்காண்பாம். 1. கற்பகத்தின் பூங்கொம்போ, காமன்தன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ. அற்புதமோ சிவனருளோ அறியேன்என் றதிசயித்தார். (திருத்தொண்டர் புராணம் தடுத்தாட்கொண்ட படலம் 140) இது சுந்தரரின் ஐயம் சுட்டும். 5. முன்னேவந் தெதிர்தோன்று முருகனோ, பெருகொளியாற் றன்னேரில் மாறனோ, தார்மார்பின் விஞ்சையனோ, மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ, என்னேஎன் மனந்திரித்த இவன்யாரோ? எனநினைந்தார். (மேற்படி 144) இது பரவை மனத்தையும் பகர்தல் காண்க. சூத்திரம் : 4 வண்டே இழையே, வள்ளி, பூவே, கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என அன்னவை பிறவும் ஆங்கவ ணிகழ நின்றவை களையும் கருவி என்ப. கருத்து : இது, கண்ட காதலர் உளத்தெழுமையம் களைதற் குதவும் கருவிகள் கூறும். பொருள் : வண்டே..... அச்சம் என்றன்னவை பிறவும் = வண்டுமுதல் அச்சம் ஈறாக எட்டும் (அவையொத்த மற்றும் குறிகளும்); ஆங்கவண் நிகழ = அவர் எதிர்ப்பாட்டில் நேராநிற்ப; நின்றவைகளையும் கருவி என்ப = அந்நிகழ்ச்சிகள் அவர் மனத் தெழுமையம் தீர்க்கும் கருவிகளாம் என்று கூறுவர் களவறநூலோர். குறிப்பு : எதிர்ப்பட்ட காதலர் ஒருவரை மற்றவர், தெய்வ மோ, மக்களுள்ளாரோ என்றெண்ணிய ஐயமகல, தெய்வத்துக் கொவ்வாத மக்களுக்கியல்பான குறிநேர்தல் கொண்டே துணிதல் இயல்பு; ஆதலால் ஐயுற்றார் ஆராய்ச்சிக்கேற்ற இயற்குறிகளிங்குச் சுட்டப்பெறுகின்றன. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்; ஆதலின் சூழ்ச்சித்துணை (ஆராய்ச்சிக்கருவி) கூறவே, அவற்றாற் றேர்ந்து தெளியும் துணிவு மிதனாற் கூறப்பட்டமை தெளிக. வண்டு, தேனின்மையால் தேவரணிமலர் மேலாடாது, இழை (செய்கலன் மக்கட்குரியது) தேவரணிவது. இழையா (செய்யா) அணியே யாதலின், இழை ஐயமகற்றுங் கருவியாகும். வள்ளி, சந்தனக்குழம்பால் மார்பிலிடுங் கோலமாதலின், அதுவும் தேவர்க்கில்லை. பூ, தேவருலகிலுள்ளது. வாடாது; வாடுமலர்கள் மாந்தர் பாலது. கண், மக்களது அகத்தியல் நிழற்றும் முகத்தொளிர் விளக்கு; தேவர்விழி, உள்ளுணர் வொளித்துப் புறநிகழ்வு கொள்ளும் கள்ளவழியேயாகும் (பொறிச்சுருங்கை) அலமரல்நாண், மடம், பற்றி உளம் தடுமாறல்; தேவர்க்கஃதின்மையின், அதுவும் குறியாயிற்று. இமைத்தல், மக்கள் விழிக்கியல்பு; இமையா நாட்டம் அமரர்க் கமையும். ஆதலினதுவும் குறியாயிற்று. அச்சம், புதுமையிற் பிறக்கும் உளநடுக்கும், அதன் புறக்குறியும் ஆம். அதுவும் அமரர் பாலறியப்படாமையின், மக்கட்குறியாயிற்று. இனி, அன்ன பிறவும் என்றது, அடிநிலந் தோய்தல், வியர்த்தல், நிழலாடுதல், போல்வன மாந்தர்க்கன்றித் தேவர்க்கின்மையின், அவையும் மக்களியலுக்கு அறிகுறியாகும். 1. மாலை வாடின, வாட்கண் இமைத்தன, காலும் பூமியைத் தோய்ந்தன, காரிகை பாலின் தீஞ்சொற் பதுமையிந் நின்றவள் சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே (சிந்தா. 1334) 2. திருநுதல் வேரரும்பும், தேங்கோதை வாடும், இருநிலம் சேவடியும் தோயும் அரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கும், ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே. (புறப்பொருள் வெண்பாமாலை கைக்கிளை, 3) 3. பாயும் விடையரன் தில்லையன்னாள் படைக்கண் ணிமைக்கும் தோயும் நிலத்தடி, தூமலர் வாடும், துயர மெய்தி ஆயு மனனே! அணங்கல்லள். அம்மா முலைசுமந்து தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. (திருக்கோவை, செய். 3) சூத்திரம் : 5 நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும். கருத்து: இது, தலைக்காட்சியிற் காதலர் ஐயுற்றுத் தெளிந்ததும், இருவரகத்தும் ஒத்த காதலுண்மையை அவர் உய்த்துணர்ந்து உள்ளத்தா னொன்றற்குரிய குறிப்பறிதல் கூறுகிறது. பொருள் : அறிவுடம்படுத்தற்கு = (கண்டு கடுத்துத் தெளிந்த காதலர்) உணர்வொத்து உள்ளத்தாலொருப்பட்டுக் கலத்தற்கு (முன்); நாட்டமிரண்டும் = ஏதிலார்போலப் பொதுநோக்கும் காதற்குறி நோக்கும் ஆய இருநோக்கும்; கூட்டி உரைக்கும் குறிப்புரையாகும் இருவரும் கருத்தொருமித் திணைதலை உணர்த்தும் குறிப்பு மொழியாம். குறிப்பு : உட்கருத்தைக் கட்புலத்துக் கண்டறிய நாடும் நோக்கம் நாட்டம் எனப்பட்டது. உள்ளத்துழுவ லன்புடையார் ஐயுறவொண்ணாத நொதுமல் பொதுநோக்கும் ஆக இருநோக்கும் முன்னறியா இருபாலார் முதலெதிர்வில் கொள்ளுவதே முறை யாதலானும், ஏதிலார்தம்முட் குறிக்கொண்டு நோக்கல் நாகரிகர் இயல்பன்றாதலானும், பொதுவும் குறிப்புமாகிய நாட்ட மிரண்டும் கூட்டி உரைக்கும் என்று குறிக்கப்பட்டது. இனி, இருவர் குறி நோக்கும் ஒத்தாலன்றி ஒருப்பாட்டுணர்வு பிறவாதாகலின், இருவர் நோக்கமும் ஒருங்கு குறிக்கவேண்டி நாட்டமிரண்டும் எனப்பட்ட தெனினும் இழுக்காது, கூட்டியுரைக்கும் குறிப்புரையாவது உழுவற்காதலால், இருவர்தம் உள்ளம் ஈர்த்து இணைவதைக் குறிக்கும் நோக்கம் என்றவாறு. இக்கருத்தைக் கண்ணொடு கண் இணைநோக்கு ஒக்கின் என வள்ளுவர் வற்புறுத்தலானும் தெளிக. குறிப்புரை என்றது, வாயாற் பேசாது விழியாற் குறிக்கும் மொழியை, உள்ளப் புணர்ச்சிக்கு, குறிப்பறிந் தறிவுடம்படுதல் இன்றியமை யாமையின், காட்சிக்குப் பின்னும், உணர்வுப் புணர்ச்சிக்கு முன்னும் குறிப்பறிதலை வள்ளுவரும் கூறுதல் காண்க. ஒருவர் கண்ணிலவர் எண்ணக் குறிப்பறியு முண்மை, உரையும் ஆடுப கண்ணினானே கண்ணிற் சொலிச்; செவியினோக்கும் என்ற ஆன்றோர் செய்யுளடிகளானும்; கூறாமை நோக்கிக் குறிப்பறிவான், ஐயப்படா தகத்துணர்வான், அகநோக்கி உற்றதுணர்வார், நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லைபிற எனுங் குறளடிகளானுமுணர்க இனி, விழிமொழியும் குறிப்புரைக்குச் செய்யுள் வருமாறு. 1. கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில (குறள். 1100) 2. நெடுந்தகைநின்றுநோக்க,............ .............................................. குடங்கையின் நெடியகண்ணாற் குமரன்மேல் நோக்கினாளே (சிந்தாமÂபதுமை,125) 3. எண்ணரு நலத்தினா ளினையள் நின்றுழி கண்ணொடுகண்ணினை¡கவ்Éஒன்றையொ‹ றுண்ணவும்,நிலைபெறhதுணர்îமொன்றிl அண்ணலு«நோக்கினான்,அவளு«நோக்கினாள்” (கம்பர். பாலகாண்டம், மிதிலை, 35) சூத்திரம் : 6 குறிப்பே குறித்தது கொள்ளு மாயின் ஆங்கவை நிகழும் என்மனார் புலவர். கருத்து : இது,nமலதற்கோர்புறநடை.மேற்சொன்ன குறிப்புரை எதிர்ப்பட்டார் ஐயுற்றுத்தளிந்து ஒருவரை ஒருவர் நேhக்குங்கால் இருவர் குறிப்பும் ஒத்துழிநிகழும், அன்nறல் நிகழாதென்று கூறுகிறது. பொருள் : குறிப்பே = ஒருவரின் குறிப்பு நோக்கம்; குறித்தது கொள்ளுமாயின் = தன் குறிப்பை மற்றவர் நோக்கிலும் கண்டு தெளியுமானால்; ஆங்கவை நிகழும் = அவ்வாறு கொண்ட விடத்து நாட்டமிரண்டின் குறிப்புரை நடக்கும்; என்மனார் புலவர் = என்று கூறுவோர் களவு நூலோர். களவு நூலோர் எனுமெழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் கொள்ளப்பட்டது. குறிப்பு : ஏ இசைநிறை; ஒழியசை எனினும் ஒக்கும். அவை என்றது, மேற்கூறிய நாட்டமிரண்டும் கூடியுரைக்கும் குறிப்புரைகளைச் சுட்டும். எதிர்ந்தார் இருவருள். ஒருவர் குறி நோக்குத் தன் குறிப்பை மற்றவர் நோக்கிற் காணுமிடத்து, அவ்விரு வருள்ளும் நாட்டமிரண்டின் குறிப்புரை நிகழ்தற்குச் செய்யுள் மேற்சூத்திரத்தின்கீழ்க் கூறப்பட்டது. ஒருவர் குறிப்பு தான் குறித்ததை மற்றவர் கண்ணிற் கண்டு கொள்ளாவிடத்து அக் குறிப்புரை நிகழாமை முறுவலென்னும் தோழியை ஐயன்காண, ஓடரிநெடுங்கண் என்னும் ஓலையை எழுதிவிட்ட அநங்கமாலை யின் குறிப்பு, சீவகன் கண்ணில்தன் குறிப்பைக் காணாமையின், அவர் தம்முள் விழிமொழியுங் குறிப்புரை நிகழ்வுறாத் தேவர் சிந்தாமணி வரலாற்றில் கண்டுதெளிக. குறிப்புரை நிகழுமாறும் அதன் வேறுபாடும் மெய்ப்பாட்டியலில் விளக்கப்பெறுதலானறிக. சூத்திரம் : 7 பெருமையும் உரனும் ஆடூஉ மேன. கருத்து : இதுவரை, களவிற் காதலர் எதிர்ப்பாடும், அவர்தம் ஐயமும் தெளிவும், நாட்டமிரண்டால் குறிப்பறிந்து கண்களாலுரை யாடி அறிவுடம்பட்டு, உணர்வொன்றி உள்ளம் புணர்தலுங்கூறி, இனி அவர் களவொழுக்கம் விளக்கக் கருதிய தொல்காப்பியர் அவ்வொழுக்கிற்குரிய அவர்பாற் பண்புரைக்கத் தொடங்கி, இதில், ஆடவரியல்பு குறிக்கின்றார். பொருள் : பெருமையும் = பெருந்தகைமையும்; உரனும் = கலங்கா உணர்வும்; ஆடூஉமேன = ஆண்மகனுக்குரியவாம். குறிப்பு : சிறுமை வெறுத்தரியபுரியு முள்ள நிறைவு பெருமை எனப்படும்: அசைவிலா அறிவின் துணிவு உரனாகும். இனி, ஈண்டிவ்வியல்பு கூறவே, தலைவி குறிப்பறிந்த தலைமகன், அவளொடு தான் உள்ளுணர்வினொன்றி நின்று மகிழ்நிலையில், அவள் தனிமையையும் காதற் கனிவையும் துணைக்கொண்டு அவன் பெண் பெருமை குன்ற இன்பம் நுகராமல் தன் பெருமையாலே புன்விழைவை வென்று, அவள் குரவர் தரப் பெற்று, வரைந்தெய்தும் வரையும் தம்மிடைக் கரந்து வளர் காதல் பரந் தலர் படாமல், உரந்துணையதாக மறைந்தொழுகுமியல்பும் அமையக் கூறலாயிற்று. எனவே, உள்ளப்புணர்வன்றி வரையுமுன் மெய்யுறு புணர்ச்சி களவுத் திணையில் காதலர்க் கறநெறியன்மை பண்டை நூலோர் கொண்ட மரபு. தொல்காப்பியரும் இயற்கைப் புணர்ச்சிக்குச் சிறப்புக்கூறாக் குறிப்பும் தேறற்குரியது. வரையுமுன் காதலர் புரைபடு கூட்டம், அறமரபறியாப் பிறபின்னூற்களில் வரைவின்றி யாண்டும் பலபட வழங்கும்; தொல்லைச் சான்றோர் நல்ல செய்யுளில் இயற்கை நோக்கியது அருகித் தோன்றும். சூத்திரம் : 8 அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய என்ப. கருத்து : இதில் முன்னதில் ஆணியல்பு கூறி, பெண்ணியற் பண்புகளைக் குறிக்கின்றார் தொல்காப்பியர். பொருள் : அச்சமும் = உட்கும்; நாணும் = வெட்கமும்; மடனும் = அன்பாற் குறைகாணாப் பண்பும்; நிச்சமும் பெண்பாற்கு உரிய = எஞ்ஞான்றும் பெண்ணியல்பென்பார் அகநூற்புலவர். குறிப்பு : கண்டறியாப் புதுமையாற் பெண்டிர்க்கு அச்சம் பிறக்கும். எள்ளும் பழிக்கு உள்ளம் வெள்குதல் பெண்ணியல்; ஆதலிற் காதலைச் சாதல் நேரினும் பேதைப் பெண்டிர் ஓதத் துணியார். உற்ற காதலர் குற்றம் உணராமல் முற்றுநம்பும் பெற்றிமை மடனாம். மடனைப் பேதைமை என்பர், அவற்றின் வேறுபாடறியார், எள்ளல், இளமை பேதைமை, மடன் என்று எள்ளப்பட்ட நகை நான்கென்ப என்று மடனைப் பேதைமையின் வேறாய்த் தொல்காப்பிய ரெண்ணுதலறிக. அறிந்தும் அறியார் போலமைதல் பேதைமை; காதலாற் குறை காணமாட்டாமை மடம். இவை நிச்சமும் பெண்பாற்குரிய என்றதன் குறிப்பும் அறிதற்குரியது. மேற்சூத்திரம் சுட்டிய ஆணியல்கள் நிரம்பா ஆடவர் ஒரோவழி உளராதல் கூடுமெனினும் இதிற்குறித்த பண்பு மூன்றும் குடிப் பிறந்த மகளிரெல்லார்க்கும் என்றும் இன்றியமையா இயல்பாகும் என்ற உண்மையை விளக்க, மேல் ஆடுஉமேன என வாளாது கூறி, இதில் நிச்சமும் உரிய என்று தெளிக்கப்பட்டதறிக. இனி, இப்பால் இயல் அறியின், பின் களவுத்திணைத் துறைகளில் காணப்படும் நீரமையும் நுட்பமும், நேர்மையும் விளங்கும். இவ்வியலில் காமத்திணையில் என்னும் சூத்திரத்துக் குறிப்பினும் இடத்தினுமல்லது வேட்கை நெறிப்படவாரா அவள் வயினான், என்பதும், தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை, என்பதும். பின் பொருளியலில், கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை என்பதும் பிறவும், பெண்ணியலாலே பிறங்குந்துறைகள். தலைவன் குறிப்பறிந் தொன்றி தலைவிதன் காதலுணர்வைக் கரந்தகத்தடக்கிப், பிரிவாற்றாமற் பேதுற்றுழப்பினும், தானது கிளத்தல் தலைவிக்கின்மை அவள் பெண்ணியலறிவின் விளக்கமாகும். கையறவுற்று மெய்யுறு புணர்வுக்குக் கிணங்கும்போதும், தழையும் காதல் விழைவைக் கரந்து தலைவி செயலற்றுத் தழுவுந் தலைவன் எழுவுறழ் தோளில் குழைவதன்றிக் கூற்று நிகழ்த்து மாற்றல் காணாள், இவையெலாம் தேறப் பாலியலறிவு வேண்டு மாதலின், துறைகூறத் தொடங்குமுன், இருபாலவ ரியல்பும் இரு நூற்பாவால் இடைப்பிறவரலாய்த் தொடுக்கப்பெற்றன. இவை கூறும் இயல்புகளால், தலைமக்களின் அன்பினைந்திணைத் துறையொழுக்கமும் வினைகளுமமைவ தாகலின், இவையறிதல் வேண்டப்படுதலுணர்க. சூத்திரம் : 9 வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை யிறத்தல், நோக்குவ எல்லா மவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்கா டென்ற சிறப்புடை மரபினவை களவென மொழிப. கருத்து : அறிவுடம்பட்டு உணர்வோ டுயிரொன்றி உள்ளம் புணர்ந்த காதலர், உலகறிய வரைந்தோ அலரின்றி மறைந்தோ கூடி இன்பம் துய்க்கப் பெறாவழிக் கையிகந்து பெருகுமவர் காதலைக் கரந்தொழுக நேர்தலின், ஆற்றாமையா லவரடையும் காம வேதனைகள் இந்நூற்பாவிற் சுட்டப்பெறுகின்றன. பொருள் : வேட்கை = அறிவுடம்பட்ட காதலர் செறியப் பெறாமையால் எய்தும் ஏக்கறவு, அதாவது பெருவிருப்பு; ஒருதலை உள்ளுதல் = ஒருவரை ஒருவர் இடைவிடாது நினைத்தல்; மெலிதல் =கூடப்பெறாது காமத்தால் வாடல்; ஆக்கம் செப்பல் = பிரிவாற்றாத் தலைவி, தணந்த தலைவனுக்கு ஊறு நேராது வாழ்த்தல்; நாணு வரையிறத்தல் = நாணழிதல்; நோக்குவ எல்லாம் அவையே போறல் = வெளியே காணுபவை அனைத்தும் உள் உணர்வின் உருவெளி ஒத்தல்; அதாவது கண்ணிற்றோன்றுவ எண்ணிய வொத்தல்; மறத்தல் = காதலன்றி ஏதும் நினையாதயர்த்தல்; மயக்கம் = மால் கொண்டு மருளல்; அதாவது காதலாற் கலங்கல்; சாக்காடு = சாதல்; என்ற சிறப்புடை மரபினவை எனப்பட்ட முறையே காதற்குச் சிறந்த தொடர்புடைய இவ் ஒன்பதும்: களவு என மொழிப = களவுக் காதற் கூறுபாடு எனக் கூறுவர் களவு நூற் புலவர். குறிப்பு : மொழிப எனும் வினைக்கு ஏற்ப எழுவாய் பொருட்டொடர்பால் கொண்டு கூறப்பட்டது. இதிற் கூறிய ஒன்பதும், களவுத் திணையில் உயிரும் அறிவும் ஒன்றி உணர்வாற் புணர்ந்த காதலர், ஊர் அலரஞ்சி அறம்பேணித் தாம் கரந் தொழுகும் காதல் கையிகந்து பெருக. ஆற்றா நிலையில் அடையும் ஏமமற்ற காம வேதனைகள். இவை முறையே களவுக் காதலினளவுக் குறியாய் ஒன்றின்மே லொன்றாய்த் தனிமை ஆற்றார் தம்பால் நிகழ்வன. இவற்றா லெழுபவை அன்புத் திணைத் துறைகளாதலின், அத்துறை வகை தொடங்குமுன் ஈண்டிவை சுட்டப்பட்டன. இவற்றைக் களவுத்திணை இலக்கண மென்பது, இவற்றியலறியாக் கூற்றாதல் வெளிப்படை. இனி, இவற்றினிவ்வியலைச் சான்றோர் செய்யுட் சான்றாலறியலாம். வேட்கை: (தலைவன் வேட்கை) நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப் பெயனீர்க்கேற்றபசுங்கலம்போல உள்ளந்தாங்காவெள்ளநீந்தி அரிதவாவுற்றனைநெஞ்சே.... (குறுந். 29:1-4) தலைவியின் வேட்கை : யானே ஈண்டை யேனே; என்னலனே ஏனல் காவலர் கவணொலி வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனோ டாண்டொழிந் தன்றே (குறுந். 54) 2. ஒருதலை உள்ளல்: (தலைவன் உள்ளல்) உள்ளிக் காண்பென் போல்வல்; முள்ளெயிற் றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகில் ஆரம் நாறும் அறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286) தலைவி உள்ளல் : விளியுமென் இன்னுயிர், வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து (குறள். 1209) உள்ளின் உள்ளம் வேமே; உள்ளா திருப்பினெம்மளவைத்தன்றே;வருந்தி வான்றோய்வற்றேகாமம்; சான்nறாரல்லர்யமரீஇnயார(குறுந்.102) 3. மெலிதல்: (தலைவன் மெலிவு) 1. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே, ஞாட்பினுள் நண்ணாரு முட்குமென் பீடு (குறள். 1088) 2. “ பாலொத்த வெள்ளருவிப் பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த ஐவனங் காப்பாள்கண் - வேலொத்தென் நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பானோ?காண்கொடா அஞ்சாயற் கேநோவல் யான் (திணைமாலை 19) 3. சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலினாய்ந்த ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா! தடவரைத்தோட் கென்கொலாம் புகுந்தெய்தியதோ (திருக்கோவை. 25) தலைவி மெலிவு : பெருந்தோள் நெகிழ வவ்வரி வாடச் சிறுமெல் லாகம் பெரும்பசப் பூற (நற். 358:1-2) மலரே ருண்கண் மாணலந் தொலைய, வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்றா கின்றே தோழி! ஆற் றலையே! (குறுந். 377: 1-3) 4. ஆக்கம் செப்பல் : 1. ........................................................ தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் இறந்துஎரிநையாமல்,பாஅய்முழங்கி வறந்தென்னசெய்தியோ? வானம்! சிறந்தஎன் கண்ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ? கொண்மூக் குழீஇ முகந்து...(நய்தற்கலி. 28:18-22) இதில், சுரஞ்சென்றதலைவன்வெம்மையால்வருந்தாமல்துளித்துவமழையைத்தலைவிnவண்டிவழ்த்தல்கண்க. 2. .......... நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கண்மிசைச் சிறுநெறி மாரி வானம் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே (அகம். 128) எனவரும் கபிலர் நெடும்பா வடிகளின் குறிப்புமிதுவே. 3. தோளும் தொல்கவின் தொலைய, நாளும் நலங்கவர் பசலை நல்கின்று நலிய, .......... கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச் சென்றன ராயினும், செய்வினை அவர்க்கே வாய்க்கதில் வாழி, தோழி!....... (அகநா. 347 : 1-2: 6-9) இன்னும், பாடின்றிப் பசுந்தகண் எனத் தொடங்கும் பாலைக்கலி முழுதும் இத்துறையாதல் காண்க. (கலித்தொகை. பாலை. 15) 5. நாணுவரை யிறத்தல் : (தலைவன் நாணழிவு) பொன்னே ராவிரைப் புதுமலர்மிடைந்த பன்னூன்மலைப்பனைபடுகலிமாப் பூண்மணிகறங்கnவறி,நணட்டுப் பழிபடர்உண்ணோய்வழிவழிசிறப்ப... (குறுந். 173 : 1-4) இன்னும், விழுத்தலைப் பெண்ணை என்ற மாதங்கீரன் குறும்பாட்டில், ....... பிறரெள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கில் பெருநாண் நீங்கித் தெருவி னியல்வும் தருவது கொல்லோ.... (குறுந். 182 : 3-5) எனும் தலைவன் கூற்றவன் நாணழிவு கூறுதலும் காண்க. இன்னும், அறிவும், நம்மடக்கமும் நாணொடு வறிதாக (கலி. 138) நோனா வுடம்பு முயிரு மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து (குறள். 1132) காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை (குறள். 1134) என வருவனவும் தலைவனாணழிவு கூறும், தலைவி நாணழிதல் : நாணென வொன்றோ வறியலம், காமத்தாற் பேணியார் பெட்ப செயின் (குறள். 1257) ........ மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம்போல நாணுவரை நில்லாக்காமம்நண்ணி.... (அக. 208 : 18-20) ..... சேணும்எம்மொLவந்j நாணு«விட்டே«அலர்கவி›வூரே”(நற். 15 :9-10) 6. நோக்குவ எல்லாம் அவையே போறல் : ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும், காந்தட் கிவரும், கருவிளம் பூக்கொள்ளும், மாந்தளிர் கையிற் றடவரும், மாமயில் பூம்பொழி னோக்கிப் புகுவன பின்செல்லும், தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடும் நீள்கதுப் பிஃதென நீரற லுட்புகும் *(இளம்பூரணர் உரைமேற்கோள்) முன்னிலையாக்கல் : 1. ஒடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்னையர் nகாடும் புருவத் துயிர் கொல்வை மன்னீயும்; பீடும் பிறரெவ்வம்ப hராய்;முiல சுமந்துவாடும்சிறுமென்மருங்கிழவல்கண்டாய் (சிலப். கானல்வரி. 19) இன்னும், காமனைத் தொழுது தன்னைச் “சீவகனகலம்nசர்க்கவரம்bபற்றுத்திரும்பியசுரமஞ்சரி.தான் காதலிக்கும், சீவகன் தன் கடியறை மருங்கினின்ற மைந்தனைக்கண்டு நாணி, வடியுறு கடைக்கணோக்க நெஞ்சுதுட் கென்ன வார்பூங்கொடியுற ஒசிந்து நின்றாள். அப்போதவள் வேட்கையைக் குறிப்பாலுணர்ந்த சீவகனும் காமம் கைமிக, அவளொடு இன் தமிழியற்கை இன்ப நிலைபெற நெறியிற்றுய்யக்க நினைத்து, அவளை முன்னிலை யாக்கிச் சொல்லும் பாட்டுமித்துறை விளக்கும். தேறினேன் தெய்வமென்றே; தீண்டிலே னாயி னுய்யேன்: சீறடி பரவ வந்தேன் அருளெனத் தொழுது சேர்ந்து, நாறிருங் குழலி னாளை நாகணை விடையிற் புல்லிக் கோறொடுத் தநங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே (சிந்தாமணி சுரமஞ்சரி : 68) இதில், தன்னுறு வேட்கை தலைவன் முற்றிறவாது நாணுந் தலைவியைத் தலைவன் முன்னிலையாக்கலும். பின்னவளோடும் இன் தமிழியற்கை இன்பம் துய்த்தலும் முறையே வருதலறிக. சொல்வழிப் படுத்தல் = தான் சொற்படி நடக்கத் தலைவியைத் தூண்டித் தலைவன் வேண்டல். இதற்குச் செய்யுள். சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா, யாழ,நின் திருமுக மிறைஞ்சி நாணுதி; கதுமெனக் காமம் கைம்மிகிற் றாங்குதல் எளிதோ? கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல; நண்ணார் அரண்தலை மதில ராகவும் முரசுகொண் டோம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே. (நற். 39) தலைவியை முன்னிலைப் படுத்தித்தான் முதலிற் சொல்லிய தன் ஆற்றாவேட்கையை அவள் ஏற்றுரை தாராமை நேர்மையன்று; எனில், அவள் வாளாமை அன்புக் குறையாலன்று; பெண்மைக் குரிய பெருநாணால் அவள் பேசக் கூசினள்; அஃதவள் திருமுகம் இறைஞ்சுதலாற்றேற்றம். தன்னளவில் கைமிகு காமந் தாங்குந்தர மன்று; அதன் மேலவள் கண்ணும் தோளும் தன்னை யணங்குவ தாலும் தன்னாற்றாமைக் கவள்இரங்கி இணங்குவதே முறை எனத் தலைவன் இரப்பதை மருதனிளநாகனாரிதிற் றெளிப்பது காண்க. 3. நன்னய முரைத்தல் - தலைவியின் நலம் பாராட்டல். இதற்குச் செய்யுள் : 1. மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன் (குறள். 1126) 2. கயலெழுதி, வில்லெழுதிக் காரெழுதிக், காமன் செயலெழுதித், தீர்ந்தமுகம் திங்களோ? காணீர் திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கணேர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே (சிலப். கானல் 11) 4. நகை நனியுறாஅ அந்நிலையறிதல் - தலைவன் தன்னய முரைத்தற் ககமகிழும் தலைவி அதை மறைக்க, மலராது முகிழ்க்குமவள் முறுவற் குறிப்பைத் தலைவன் தேறல். இதற்குச் செய்யுள் : 1. மாணிழை பேதை நாறிருங் கூந்தல் ஆணமு மில்லாள் நீருறை சூருடைச் சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியியல் நொதுமல் நோக்கைக் காண்மோ, நெஞ்சே வறிதான் முறுவற் கெழுமிய நுடங்குமென் பணைவேய் சிறுகுடி யோளே. (இளம்பூரணர் உரைமேற்கோள்) 2. யானோக்குங் காலை நிலனோக்கும்; நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும் (குறள் : 1149) 3. மெலிவு விளக்குறுத்தல் - தன்னுறு வேட்கை தாங்கொணாத் தலைவன் தானுறு தளர்வைத் தலைவிக்குத் தெளித்தல். இதற்குச் செய்யுள் : எரிமணிக் கலாபத் திட்ட இந்திர நீல மென்னும் ஒருமணி உந்தி நேரே ஒருகதி ருமிழ்வ தேபோல் அருமணிப் பூணி னாள்தன் அவ்வயி றணிந்த கோலத் திருமயி ரொழுக்கம் வந்தென் திண்ணிறை கவர்ந்த தன்றே (சிந்தா. 2061) இதில், தான் கூட விரும்பும் சீவகனை நேரிற் கண்டு நாணி ஒசிந்து நின்ற சுரமஞ்சரிக்கவன் தன் தளர்வுரைத்த பரிசு கூறப் படுதலறிக. 2. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் (குறள். 1135) 6. தன்னிலையுரைத்தல் - (கையிகந்த காமம் நலிய ஆற்றாத் தலைவன் தன் மெலிவு விளக்கியும் உடன்பாடுரையாத் தலைவிக்கு) அவன் அவளிரங்குமாறு ஆனா நோயால் நோனாத் தன் படர் நுவலல். 1. நோனா உடம்பும் உயிரு மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து (குறள். 1132) 2. எழின்மருப் பெழில்வேழம் எனும் நெய்தற்கலியில், ......... அறிவும்நம்மறிவாய்ந்தஅடக்கமும்நாணொடு வறிதாக.......... உரிதென் வரைத்தன்றிஒள்ளிழதந்த பரிசழிபைதல்நோய்மூழ்கி,எரிபரந்த நெய்யுண்மெழுகின்நிலையாது,பைபயத் தேயும்அளித்தென்னுயிர். ............... என்றுயான்பாடக்கேட்டு அன்புறுகிளவியாள்அருளிவந்தளித்தலின்... (நெய்தற்கலி. 21 : 3-4; 20-23; 26-27) என்னுமடிகளுமித்துறை குறிப்பவையே. இதில், என்றுயான் பாடக் கேட்டு அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின் என வருவதால், தலைவிக்குத் தலைவன் தன்னிலை கூறியதும், அது கேட்ட தலைவிஅருளிவந்தளித்ததும்,தெளிக்கப்படுதலறிக. 7. தெளிவகப்படுத்தல் - அவனிலைக் கிரங்கித்தன் அன்புடைத் தலைவன் துன்பந்தீர இன்பக் கூட்டத்திற்கிணங்கித் தலைவி உடன்பட்டதைக் குறிப்பாலுணர்ந்து தலைவன் தேர்ந்த தன் துணிவை ஆர்ந்து மனங்கொள்ளுதல். அதற்குச் செய்யுள் : 1. கன்று புகுமாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று, கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ, நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல்நகைஇச் சென்றஎன் நெஞ்சே (உரை மேற்கோள்) 2. யாயும் ஞாயும் யாரா கியரோ; எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்; யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே (குறுந். 40) என்றின்னவை நிகழுமென்மனார் புலவர் = என்றிதிற் கூறிய ஏழும் கூட்டமின்மை ஆறாத் தலைவனுக்கு இயல்பாம் நிலைகளென்பர் களவுநூற்புலவர். குறிப்பு : இந்நூற்பா, மெய்யுறு கூட்டம் எய்தப் பெறாத் தலைவன் ஆனாக்காம நோயால் அடையு நிலைகளைக் கூறுதல் வெளிப்படை. புணர்வின் பின்னிவை உணர்வின் வாரா. இவற்றைப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாந் துறைகளென்பார், களவுக் காதலற வறியாதார்; இனித் தலைவர்க்கன்றித் தலைவியர்க்குச் சாற்றுதல் கூடா. காமத்திணையிற் கண்ணின்று வரூஉம் நாணுமடனும் பெண்மைய வாதலிற் குறிப்பினுமிடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள் (தலைவி) வயினான என்று இவ்வியலிற் கூறப்படுதலின், வேட்கை வெளிப்படுத்தும் இத்துறை ஏழும் தலைவிக் கொவ்வாமை தேற்றம். .............................* சூத்திரம் : 13 பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப. இது இளம்பூரணத்திலுள்ளது. நச்சினார்க்கினியர் இதில் பன்மையை ஒருமையாக்கிப், பாங்க னிமித்தம் பன்னிரண்டென்ப எனப்பாடங்கொண்டு, பொருளும் சிறிது மாற்றிக்கூறினார். இருவருரையும் ஆசிரியர் கருத்தொடு பொருந்துவதாயில்லை எனத் தெரிகிறது. முதலில், பன்னிரண்டாவன இவையெனத் தொல்காப்பியர் யாண்டுக்கூறினார் என்பதை இரண்டு உரைகாரருமே சுட்டிலர். இலக்கணநூலில், ஆசிரியர் தாம் நுதலிய பொருளை இனைத்தெனத் தெளிவியாதிரார். படிக்கும் பலரும் பலவாறு திரியக்கொள்ளவைப்பது இலக்கண நூலில் இழுக்காகும். ஈண்டு இளம்பூரணர் கொண்ட 12ம், நச்சினார்க்கினியர் கூறும் 12ம், தம்முள் வேறுபடுகின்றன. இவருள் இளம்பூரணர் முதலில் உரைகண்டவர். இருவரும் இருவேறு 12 நிமித்தம் வகுத்தெண்ணச் சூத்திரம் இடந்தராது. இருவரில் ஒருவரேனும், இருவருமேனும் தவறாகக் கூறினராதல் வேண்டும். இருவர் கூற்றும் ஆசிரியர் கருத்தாயமைதல் கூடாது. இனி, யாண்டும் இவ்வீருரைகாரரும் ஆசிரியர் வகுத்து 12 நிமித்தங்கூறிய இடத்தையேனும், ஆசிரியரே சுட்டிய நிமித்தப் பெயர்களையேனும் காட்டவுமில்லை. எனவே, இனி மூன்றாவ தொருவர் முன்னிருவருங் கூறாத புதிதான பன்னிரண்டு நிமித்தங் களையே இச்சூத்திரக் கருத்தாகக் கூறவுங்கூடும். ஆசிரியர் நுதலிய 12 யாவை என முடிவு காண்பதெப்படி? இவ்வாறு ஐயத்திற் கிடனாகச் சூத்திரித்தார் என்பது நூலியல்புக்கும் ஆசிரியர் பெருமைக்கும் பொருந்தாது. இரண்டாவதாக, களவியற்றொடக்கத்தில் வரும் இச்சூத்திரத்தில் கற்பின்பாற்படுங் கூட்டங்களை ஆசிரியர் கூறினா ரென்பது கொள்ளற்பாற்றன்று. இரண்டு உரைகாரருமே எட்டு மணத்தையும் ஈண்டுத் தொல்காப்பியர் கருதி இச்சூத்திரமியற்றிய தாகக் கொள்ளுகின்றனர். இது ஆசிரியர் கற்பிலக்கணங்களைப் பின்வேறியலாக்கி இங்குக் களவிலக்கணங் கூற எழுந்த இவ்வியலுக்கும் நூற்போக்குக்கு மியைவதன்று. இனி, பைசாசம், இராக்கதம், ஆசுரம்போன்ற பல கூட்டங் களும் இடையே பாங்கரை இன்றியமையா நிமித்தமாகக் கொள்ள வேண்டுவனவுமல்ல. அதான்று. அவை களவியலில் இலக்கணங் கூறப்பெறக் காரணமுமில்லை. இன்னும், களவின் பகுதியாகிய உடன்போக்கைக் களவின் வேறாய் விதந்தோதி வேறெண்ணலும், கற்பின் பகுதிகளான பல கிழத்தியரையும் பரத்தையரையுங் கூடுங் கூட்டங்களை யெல்லாந் தனிவேறெண்ணிக் கூட்டலும், கற்பை இக் களவியற்பகுதியி லிழுத்தெண்ணலும் பொருத்த மின்றாம். இவ்வாறு பிரித்துக் கூட்டினாலன்றி இளம்பூரணருரையில் நிமித்தம் 12 நிரம்புமாறில்லை. அஃதே போல், நச்சினார்க்கினியத்தில் களவினைந்திணையை ஐவகையாக்கியதும், அவற்றொடு களவுக்கு ஒப்பான கந்தருவத்தை நீக்கி மற்றை மறையோர் தேயத்து மன்றலெனும் ஏழுங்கூட்டிப் பன்னிரண்டாக்குவதும் பொருந்துவதன்றாம். அன்றியும், எல்லா நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் எல்லாத்திணையுங் கூட்டமாகா. கூட்டத்திற்கு வேண்டப்படும் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டும் இரங்கல், இருத்தல், பிரிவு என்பவற்றுள் இடம் பெறற்கில்லை. இவைகளை யெண்ணிக் கூட்டிப் பன்னி ரண்டாக்கிக் களவுக் கூட்டத்திற்காம் நிமித்தம் இவையெனல் பொருந்தாது. அன்றியும், நச்சினார்க்கினியர் கூட்டத்திற்குரிய பாங்கரெல்லாம் பார்ப்பனப் பாங்கராகக் கொண்டதற்கும் நியமமில்லை. கடைசியாகப், பிரமமுதல் பைசாச மிறுதியாக எண்ணப் படும் எட்டும் ஆரியர் நூலில் மக்களுள் நடக்கக்கூடியனவாகக் கண்ட கூட்டமன்றி, அவையெல்லாம் வதுவை மணமாகா. எனைத்தாயினும் அவற்றைத் தமிழரின் அன்பிற் சிறந்த காமக் கூட்டத்தொடு இணைத்தெண்ணவும், அவற்றிற்காவனவற்றைக் களவுக் கூட்ட நிமித்தங் கூறுமிடத்து ஆசிரியர் கூறக்கருதினரென் றெண்ணவும், பாயிரத்தானும் நூற்போக்கானுந் துணியப்பட்ட ஆசிரியர் நோக்கம் இடந்தராது. ஆகவே, ஈண்டு இவ்வுரைகள் தவறாதல் வெளிப்படை. அதனால் ஆசிரியர் சுட்டிய நிமித்த மாவன பன்னிரண்டும் யாவையென ஆய்ந்து தெரியற்பாற்றாம். அவை யாவையாயினும், ஆசிரியர் நூலிலே கூறப்பட்டவை யாகவே இருத்தல் வேண்டும். நுதலிய பொருளிலக்கண முழுவதும் ஒரு சூத்திரத்திலேயே உரைத்துத்தீரவேண்டுமெனும் நியதியில்லை. ஒன்றில் தொகையும் மற்றொரு சூத்திரத்தில் அதன் வகையுங் கூறிப்போதல் ஆசிரியர் முறையென்பதைத் தொல்காப்பியத்திற் பலவிடத்துங் காணலாம். ஆனால், தாம் நுதலிய தொகையின் வகைவிவரத்தைத் தாமே வகுத்து விளக்காமல், பிறர் மயங்கவும் மாற்றிக்கூறவும் இடம்வைத்து வகையே கூறாதொழிவது ஆசிரியர் நூலில் யாண்டுங் காண்டற்கில்லை. ஆதலால் இங்கு அவர் தொகை பன்னிரண்டெனச்சுட்டிய பாங்கர் நிமித்தங்களின் வகை விவரமும் இச்சூத்திரத்தை யடுத்தே ஆசிரியர் கூறி வைத்திருப்பர் எனக் கருதுவது தவறாகாது. இந்நினைவோடு துருவிப் பார்த்தால் இதற்கு முன்னதற்கு முன்னைய சூத்திரத்தில் இப்பன்னிரண்டும் வேறு சில நிமித்தங்களுடன் சேரக்கூறப் பட்டிருப்பதைக் காணலாம். களவியலில் இதற்குத் தொடர்புடையதாய்ச் சிறிது முன்னின்ற 11ஆம் சூத்திரம். மெய்தொட்டுப்பயிறல்..... .............. மடன்மா கூறு மிடனுமா ருண்டே என்பதாகும். இதில் இயற்கைக் கூட்டம், இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம். பாங்கியிற் கூட்டம் எனும் களவிற்கூட்டம் நான்கினும் சென்று அமையும் நிமித்தங்க Ÿநிரல்பl விளக்க¥ பெறுகின்றன. இதிற் கூறப்பட்ட இருபதனுள் மெய்தொட்டுப் பயிறல் முதல் தீராத்தேற்றம் வரையெண்ணிய இருநான்கு கிளவியும் இயற்கைக்கூட்டம், இடந்தலைப்பாடு என்னும் இவ்விரண்டன் பகுதியவாம். அடுத்த நான்கும் பாங்கனாற்கூடும் கூட்டத்திற்கும், இறுதி எட்டும் பாங்கியிற் கூட்டத்திற்குமாகப் பன்னிரண்டு நிமித்தங்களும் ஆசிரியர் விளக்கியுள்ளார். இதுவே ஆசிரியர்கருத்தும் அவர்கொண்ட முறையும் என்பது, இச்சூத்திரங் கூறும் நிமித்தங்கள் இருபதில்பhங்கர் நிமித்தமாகாதனவற்றை இருநான்கு கிளவியுமன முதலில் ஆசிரியர்தாகை கூறிப்பிரித் தமையானும், அவநீக்கி எஞ்சியவற்றையேபhங்கர் நிமித்தம்பன்னிரண்டென்ப எனப்பின்13ஆம் சூத்திரத்தால் தொகுத்துக் கூறினமயானும், எல்லாவுரைகாரரும் இந்த11ஆம் சூத்திரத்தின் கீழ்ப்பங்கன்பாங்கிகளான இருவகப்பாங்கர் நிமித்தம் இப்பன்னிரண்டாகவே உடன்பட்டுக் கூறுதலhனும் தெளிவhகின்று. ஆகவே, பாங்கன் பாங்கிகளாலாயகூட்டத்திற்கான நிமித்தம் பன்னிரண்டும் இச்சூத்திரத்தில் பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப எனத் தெளிக்கப்பட்டுள்ளன. இவை மற்றைய இயற்கைக் கூட்டம் இடந்தலைப்பாடுகளின் நிமித்தம் எட்டனோடும் இங்குச்சேர்த்துக் கூறப்பட்டு எல்லாம் தலைவன் கூற்று நிகழ்தற்கிடனாகுமென்று பொதுப்படக் கூறியதனால், இதில் ஆசிரியர் பாங்கன் பாங்கியிருவராலாங் கூட்டங்களுக்கு வரும் நிமித்தங்களைப் பிரித்து, முன்னைச் சூத்திரத்திற் கூறிய இருபதனுள் பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப எனத் தனியே வேறு தொகுத்து இச்சூத்திரத்தில் விளக்கிப் போந்தார். எனவே, இக் களவியல் 13ஆம் சூத்திரத்தில் ஆசிரியர் தொகுத்துக்கூறிய பாங்கர் நிமித்தம் பன்னிரண்டாவன, முன்னைய 11ஆம் சூத்திரத்துப் பிற்பகுதியில் பெற்றவழி மகிழ்ச்சியும் என்பது முதல் தோழி, நீக்கலினாகிய நிலையுநோக்கி, மடன்மாகூறு மிடனுமாருண்டே என்பதீறாக வகுத்து விளக்கிய பன்னிரண்டுமேயாம் என்பது அங்கை நெல்லிபோற் சங்கையறத் தெளியக்கிடக்கின்றது. ஆசிரியர்க்கு இது கருத்தாமேல், வகைகூறிய முன்னைப் பதினோராஞ் சூத்திரத்தை ஒட்டி இத்தொகைச் சூத்திரத்தை நிறுத்தாமல் இடையே பிறிதொரு சூத்திரம் வரவைத்தது ஏனெனில், கூறுவன். மெய்தொட்டுப்பயிறல் என்னுஞ் சூத்திரம், நால்வகைக் களவுக்கூட்ட நிமித்தங்களை வகுத்துக்கூறினும், அவையெல்லாம் தலைவன் கூற்று நிகழ்தற் கிடனாமாறு கூறுதலை நுதலிற்று. தலைவன் கூற்று நிகழ்தற்கேதுவாய பிறசிலவும் ஈண்டுத் தொடர்பு டைமைகருதிப் பண்பிற் பெயர்ப்பினும் எனும் சூத்திரத்தில் அவற்றையும் இதனையடுத்துத் தொகுத்துவைத்தார். அதன்பின் முன்னைய சூத்திரத்தில் தலைவன் கூற்றிற்கிடமாயவற்றையெல்லாம் வகுத்து விளக்கியதனால், அவற்றில் பாங்கர் நிமித்தமாவன பன்னிரண்டே எனத் தெளித்தற்கு இத்தொகைச் சூத்திரங் கூறினர். அன்றியும், பாங்கன் பாங்கிகளினிமித்தங்களான இப்பன்னிரண்டனுள் முன்னைய மூன்றும் கைக்கிளைக்கும், பின் இறுதிய நான்கும் பெருந்திணைக்கும் பொருந்தற்பால எனவும், இடையைந்தும் எஞ்ஞான்றும் ஐந்திணைக் களவுக் கூட்டத்திற்கே யாமெனவும், இவற்றிற்கியைவதோர் சிறப்பிலக்கணமு மிங்குத்தாம் கூறுகின்றாராகலின், அதற்குமிப்பாங்கர் நிமித்தம் 12 எனுந் தொகை பிரித்து முன் கூறவேண்டினராசிரியர். இவை பலவும் செவ்வனே சொல்லமைதியும் சூத்திரத்தொடர்புங் கருதி உய்த்துணருங்கால், இச்சூத்திரங்களுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கொண்ட உரை, ஆசிரியர் கருத்தாகாமை தெளிவாகும். சூத்திரம் : 14 - 15 முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே. இவற்றுள் முதலதற்குப் பழைய உரைகாரர் இருவரும், மறையோர் தேயத்து மன்றல்களான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்ற எட்டனுள் பிரமமுதல் தெய்வமீறாகவுள்ள நான்கும் பெருந் திணை கொள்ளும் எனவும், இறுதிமூன்றான ஆசுரம், இராக்கதம், பைசாசங்கள் கைக்கிளைக்குறிப்பாமெனவும் பொருள் கூறினார். இது பொருந்தாது. (1) முதலில் இவ்வெட்டுக் கூட்டங்களையே ஈண்டுக் கருதுவ தான குறிப்பு ஆசிரியர் கூற்றிலில்லை. இரண்டாவதாக, தமிழரின் களவிலக்கணப் பகுதியில் களவுக்கூட்டம் நால்வகை கூறி, அவற்றினிடைத் தலைவன் கூற்று நிகழ்தற்கான நிமித்தங்களை முன் 11ஆம் சூத்திரத்தில் விளக்கிப் பின் 16ஆவது சூத்திரத்தில் தலைவி கூற்றுக் கூறு மாசிரியர் இவற்றினிடையில் தமிழ் நாட்டிற்குச் சம்பந்தமில்லாத வடநூல்களில் வரும் எட்டுக் கூட்டத்தை இழுப்பதற்கு இயைபும் அவசியமுமில்லை. எடுத்தாளும் பொருளுக்கு இன்றியமையாத தொடர்புடைய வல்லாத வடநூற் கூட்ட மெட்டினையுங் குறிக்க விரும்பியிருப்பின், ஆசிரியர் அதனை விதந்து கூறி விளக்கியிருப்பர். அவ்வாறு தம் விருப்பை விளக்காமலும், முன்னைய மூன்று, பின்னர் நான்கு என இங்குத்தாம் சுட்டுபவை யெவை? எவற்றனுள் இவற்றைத் தாம் பிரித்துக் கூறியது? என்பவற்றைத் தெளிவாக்காமலும், வாளா முன் மூன்று பின் நான்கு எனுந்தொகையளவில் நிறுத்தி அவற்றின் வகையை விளக்காமல், மயக்கத்திற்கும் வேண்டியார் வேண்டியாங்கு விரித்தற்குக் களனாகவும் ஆசிரியர் தம் அரிய இலக்கண நூலில் இடந்தருவாரல்லர். ஆதலால், ஈண்டு மூன்று நான்கு எனத் தொகுத்தவை ஆசிரியரே வகைவிரித்து விளக்கி யுள்ளவற்றைக் குறிப்பனவாகக் கொள்ளுவதே மரபும் முறையுமாகும். (2) இனி, இவ்வாரியநூற் கூட்டமெட்டினையே குறிப்ப தாகக் கொள்ளினும், அவற்றுள் முதலி லெண்ணப் பெறும் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம் என்ற மூன்றைக் கைக்கிளையாகவும், பின்னான்கான தெய்வதம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம் என்பவை பெருந்திணையாகவுங் கொள்ளல் வேண்டும். இவைதாம் இவ்வெட்டனுள் முன்மூன்று, பின்னான்கு என வரிசையில் எண்ணற் குரியவாகும். இதனைவிட்டு, இறுதி மூன்று கைக்கிளை முதலில் நான்கு பெருந்திணை என, ஆசிரியரின் விசதவாக்குக்கு விரோதமாக மாற்றிக்கூற நியாயமில்லை. நிரலே இவ்வரிசையில் இவற்றை யமைத்துக் கூறுவதிலேற்படும் சில அசங்கதங்களை விலக்கவேண்டி உரைகாரர் தமது இயையாவுரைக்கு அமைய அமையாவரிசை முறைமாற்றிக் கூறலானார். (3) இனிப், புணர்ந்து முடியு மணமெட்டனுள் எதையும், புணர்ச்சிபெறாததும் பெறுதலொண்ணாததுமான கைக்கிளை யாக்குவது, தமிழ் மரபுக்கும் தொல்காப்பிய இலக்கணத்திற்கும் முற்று முரணாகும். கூட்டம் பெறாதவரையே கைக்கிளையாம். கூட்ட மெதுவாயினும், அது ஒன்று அன்பிற் கூட்டமான களவு, அல்லது பெருந்திணையாவதன்றிக் கைக்கிளையாகக் கொள்ளு மாறில்லை. ஆகவே, அவ்வாறு கோடல் ஆசிரியர் கருத்தாகாது. (4) இன்னும், முதல் மூன்று, ஈற்று நான்கு என்னாமல் சூத்திரத்தில் வாளா முன்னைய மூன்று பின்னர் நான்கு எனவே கூறப்படுவதனால், மூன்றும் நான்கும் ஏழேயாக, எட்டெண்ணுடைய வடநூல் கூறுங்கூட்டங்களை இங்குச்சுட்டித்தீர வேண்டிய நியதி யில்லை. இவை யெட்டும் மணமெனக் கருதுதற்குரியவுமல்ல. சிலவே குற்றமற்ற மணமும், வேறு சில வெறுக்கத்தக்க பாவக் கூட்டமுமாகும். வடநூல்களும், இவ்வெட்டினையும் கொள்ளற் குரிய வதுவை முறைகளாகக் கூறவுமில்லை; மக்களுள் நிகழக் கூடிய கூட்டங்களாக மட்டும் சுட்டுகின்றன. எனவே, சூத்திரத்திற் கவசியமான ஏழெண் கொள்ளும் எழுபிறப்பு; எழுதீவு, ஏழுலக மாதியவற்றுள் ஒன்றைக்கூறி இச்சூத்திரத்தொகை எண்ணை யமைத்தல் கூறுவதாகவும், இவற்றையெல்லாம் விலக்கித் தமிழ் மரபாகாத ஆரியநூலிற் காணப்பெறும் எட்டுவகைக்கூட்டங் களை ஆசிரியர் எனைத்தானும் அக்கருத்தைக் குறியாதிருக்க, இத்தமிழிலக்கணச் சூத்திரம் நுதலிய பொருளாக இங்குக்கொள்ள நியாயமும் அவசியமுமில்லை. (5) இனிப் பழைய உரைகாரர் கொள்கைப்படி இச்சூத்திரம் இவ்வெட்டு மணத்தைக் குறிப்பதாகக் கொண்டாலும், வரிசை முறையில் இவ்வெட்டில் முதலிலிருந்து முறையே மூன்றும் நான்குமாக ஏழுபோக இறுதிநின்ற பைசாசம் எண்ணப்படாமலும், நடுநின்ற கந்தருவம் பெருந்திணை கொள்ளும் பின்னான்கனோடு சேர்த் தெண்ணப்பட்டும் வரும். இது அசங்கதமாக முடியும். இதை விலக்க வேண்டி, முன்னைய மூன்று என்பதை முதலிலிருந்து எண்ணுவதைவிட்டுக் கந்தருவத்தை விலக்கெல்லையாக வைத்து, அதன் பின்னுள்ள மூன்றை முதலில் மூன்றெனவும், கந்தருவத்துக்கு முன்னிற்கும் நான்கையும் பின்னர் நான்கெனவும் உரைகாரர் இயல் முறை பிறழக்கூறநேர்ந்தது. (6) இப் பொருந்தா உரை கோடலால் வரும் அசங்கதம் இன்னும் ஒன்றுளது. குற்றமற்ற பிரமமுதலிய முதல் நான்கையும் குற்றம் நிறைந்த பொருந்தாத இழிந்தகாமமான பெருந்திணை யாகவும், வெறுக்க வேண்டிய பாவக்கூட்டமான பைசாசம் ஆசுரம் இராக்கதங்களைப் புரைதீர்காமமான தூயவுணர்ச்சியை நிலைக் களனாகக்கொண்டு நிற்கும் கைக்கிளையாகவும் கூறுதல் விபரீத மன்றோ? தொல்காப்பியர் செந்திறக் கைக்கிளை உயர்ந்தோர் மேற்கொள்ளுந் தவறற்ற நல்ல காமமெனவும், நோந்திறப் பெருந் திணை இழிந்தோர்பாற்பாடும் தவறான பொருந்தாக் காமமெனவும், அகத்திணை 53-54ஆவது சூத்திரங்களால் தெற்றென விளக்கிப் போந்திருக்கவும், அவர் கூற்றுக்கு மாறாகப் பாவக்கைக்கிளையும் புனிதப் பெருந்திணையும் உள்ளனபோலக் கொள்ளுதல் இழுக் காகும். சிந்திப்பார்க்கு வடநூல் கூறும் எட்டுக் கூட்டமல்லாத ஆசிரியர் தாமே தம் தமிழிலக்கண நூலில் தமிழ்மரபாக விளக்கியன வேறாதல் வேண்டுமென விளங்கும். அவை யாவையெனத் தெளிதற்கு அடுத்த சூத்திரத்தையும் சிறிது கவனித்தல் வேண்டும். இனி, அடுத்த 15ஆவது சூத்திரம், முதலொடு புணர்ந்த யாழோர் மேன, தவலருஞ்சிறப்பின் ஐந்நிலம்பெறுமே. என்பது. இதற்கு இளம்பூரணர், கருப்பொருளொடு புணர்ந்த கந்தருவநெறி களவும் உடன்போக்கும் இற்கிழத்தி காமக்கிழத்தி காதற் பரத்தையும் எனச் சொல்லப்பட்ட ஐவகைக்கூட்டம் எனப் பொருள் கூறினார். (1) உடன்போக்கு, களவினொரு பகுதியேயாகலானும், இருகிழத்தியர் பரத்தையர் கூட்டமெல்லாம் கற்புக்கைகோளி லடங்கிய சிலவுட்பிரிவுகளே யாகலானும், இவற்றைக் களவுக் கூட்டம் கற்புக்கூட்டம் என்பவற்றோடு ஒத்த தனிவேறு கூட்டங்கள் போலப் பிரித்தெண்ணுதல் பொருந்தாது. இவ்வாறு உட்பிரிவு களை யெல்லாம் எண்ணில், இயற்கை, இடந்தலைப்பாடு, பாங்கன் பாங்கிகளாலாவன, பகற்குறி, இரவுக்குறியாதிக் கூட்டங்களை யெல்லாம் கூட்டியெண்ணல் வேண்டும். இவை பலவற்றை விலக்கிக் கூட்டமின்றிக் கூட்டநிமித்தமேயான உடன்போக்கைக் களவொடொப்பத் தனிவேறு பிரித்தெண்ணக் காரணமில்லை. (2) களவெனவே, அதனுட் பிரிவுகளெல்லாம் அடங்கும். உட்பிரிவுகள் அனைத்தையும் பிரித்து விலக்கியபின் களவென வொருதனி வேறு கூட்டங் கருதுதற்குமில்லை. (3) கற்பியல்பின் வேறாக விதந்து பிரித்து அக்கைகோளி னிலக்கணமெல்லாம் ஆண்டு விளக்கும் ஆசிரியர், இக்களவியல் முற்பகுதியில் களவுக்கேயுரிய நால்வகைப் புணர்வும், அவற்றின் நிமித்தங்களும், அவை களனாகத் தலைவன் கூற்று நிகழுமாறுங் கூறுமிவ்விடத்துக் கற்புக்கூட்டப் பாகுபாடு சிலவற்றை யிழுத்துப் பேசலானாரென, அக்குறிப்பை ஆசிரியர் சுட்டாதபோது, நாமவ்வாறு உரையிற்கொள்ள நியாயமில்லை. (4) முதலொடு புணர்ந்த என ஆசிரியர் தெளிசொற் கூறவும், அது குறிக்கும் நிலம் பொழுதெனும் இருமுதற் பொருள்களை விலக்கி, இங்குக் கருப்பொருளொடு புணர்ந்த என மாறுகூறுவதும் ஆசிரியர் கருத்திற்கிணங்குவதன்று. (5) இதில் யாழோர்மேன... ஐந்நிலம் பெறும் எனுந் தெளிசொற்களால் ஆசிரியர் களவுக்கைகோளுக்குரிய அன்பினைந் திணைகளையே கருதினரென்பது தெளிவு. இவ்வாறு கொண்டால் தாம் கூறக்கருதிய பொருளொடு பொருந்தாதெனக்கண்டு, ஈண்டு ஐந்துங் கூட்டமேயாக அமைக்கவிரும்பி உரையாசிரியர் இடர்ப் படுகின்றார். ஐந்திணையாம் உரிப்பொருள்களில், குறிஞ்சித் திணையே கூட்டமாக, பிறதிணைகள் களவின்பத்தைச் சிறப்பிக்குங் கூட்டத்துணைத்திணைகளே யாதலால், அவையனைத்தும் ஐந்துகூட்டமெனக் கூறற்கில்லை. ஆனால், இதிலும் இதன் முன்னவையான இருசூத்திரங்களிலுமெண்ணப்பட்ட ஐந்தும் ஏழுமாகிய பன்னிரண்டும் பாங்கரைவேண்டுங் கூட்டமே யாகுமெனத் தாம்துணிந்தபடியால், ஆசிரியர் இச்சூத்திரங்களில் முன்விளக்கிய ஐந்திணையிலக்கணத்தையும் தெளிவான சொற் களையுங் கருதாமல், தாம் கூட்டங்களாக ஐந்தினைக் கூற நினைந்து களவுகற்பு இவற்றினுட் பிரிவுகளில் தமக்குத் தோன்றிய சிலவுமாகச் சேர்த்து, ஐந்து கூட்டம் இச் சூத்திரம் நுதலியதாகவும், முன்சூத்திரம் ஆரியமண மெட்டில் இடைக்கந்தருவமொழிய மற்றைய ஏழு கூட்டங்களையே நுதலியதாகவும் கூறிவைத்தார். இதில் உடன்போக்கு கூட்டச்சார்பன்றிக் கூட்டமாகாமையும், பாங்கியன்றிப் பாங்கனிமித்தமாகாமையும், பைசாச முதலியவற்றிற்கு இருவகைப் பாங்கரும் வேண்டப்படாமையும், எண் வகைக் கூட்டம் தமிழ் மரபில்லாமையும், அவற்றையும் பின் வேறு பகுதியாக இலக்கணங் கூறுங் கற்புப்பகுதிகளையும் இங்குக் களவுப்புணர்ச்சி அதற்குரிய பாங்கர் நிமித்தம் தலைவன் கூற்றுக்களுக்கு இலக்கணங் கூறுமிடத்து வலிந்து இழுத்து இணைப் பதின் அமைவின்மையும், முதலொடு என்பதற்குக் கருப்பொருளொடு என்பதன் பொருந்தாமையும், இன்ன பலபிற இயைபின்மைகளும் ஈண்டு உரையாசிரியர் கருதினாரில்லை. இனி, இவ்வாறே இச்சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியரும் பொருந்தாப் பொருள் கூறிப்போந்தார். இனி யாழோர் மேன.... ஐந்நிலம் பெறுமே யெனுமிச் சூத்திரம் சுட்டும் ஐந்நிலமென உரைகாரரிருவருங் கொள்ளற்கில்லை. அவர்கள் முன்னைய சூத்திரங்களோடு இதனைச் சேர்த்து இவற்றில் வரும் மூன்றும் நாலும் ஐந்துமான பன்னிரண்டுங் கூட்டமேயெனக் கொண்டதனால், அப்பன்னிரு கூட்டத்திற்கும் பன்னிரு நிலங்கூறல் கூடாமையானும், தாம் கொண்ட கூட்டம் பன்னிரண்டுக்கும் ஒப்ப அமைவதான தோர் பொருளே ஈண்டு நிலத்திற்குக் கொள்ள வேண்டுதலானும், நடுவணைந்திணையான களவுக்கே வையம்பாத்திய ஐவகை நிலத்தையும் ஆக்கிவிடில் பிறகூட்டம் ஏழும் பெறுநிலமில்லை யாகலானும், பாலைக்கு நிலமின்றிப் பிறநான்கு திணைகளுக்கே யுரியவாக வையத்தை நானிலமெனவே ஆசிரியர் கூறினாராகவே அதற்கு மாறாக அவ்வாசிரியரின் இச்சூத்திரத்துக்கு ஐந்து நிலப் பகுதி கூறக் கூடாமையானும், ஈருரைகாரரும் ஈண்டு ஐந்நிலம் என்பதற்கு நிலப்பகுதி யென்னாது இதில் ஐந்தும் முன்னைய சூத்திரத்திலேழுமான பன்னிரண்டுக்கும் அமையவேண்டி வேறுபொருள் காண முயல்வாரானார். இளம்பூரணர் ஐந்நிலம் பெறும் என்பதற்குக் கந்தருவம் ஐந்து வகைப்படும் என்று கூறி, அவை களவு உடன்போக்கு கிழத்தியரிருவர் பரத்தையர் கூட்டம் ஆகக்கூட்டம் ஐந்துமாமென்பர். நச்சினார்க்கினியர், ஐந்நிலம் இவையென விளங்கக் கூறாமல் வாளா ஐவகை நிலனும் பெறுதலின் எனக்கூறிவிட்டு ஈண்டு யாழோர் மேன என்பதை அன்பினைந்திணைக் களவான கந்தருவமல்லாததும், ஆனால் அக் களவையே முதலாகக் கொண்டு வருவதுமான பிறிதொரு இரண்டாங் கந்தருவமாகும் என்று ஒரு புத்துரை புனைந்தார். இஃது இவர் அறிவு வளத்தின் அருமை காட்டுவதாகு மன்றி ஆசிரியர் கருத்தை விளக்குவதாயில்லை. அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டமாந் தமிழ்க்களவு மறையோர் தேஎத்து மன்றலெட்டனுள் துறையமை நல்லியாழ்த்துணைமை யோரியல்பாகும் ஆரியக் கந்தருவத் தன்மையாம் என்று களவியல் முதற்சூத்திரத்தில் தெற்றெனத் தெளித்த தொல்காப்பியர். பிறிதியாண்டும் இதனின் வேறாயதோர் கந்தருவமும் தமிழ் நூலார்க் குடன்பாடாவதுளதெனக் குறித்தாரிலர். ஆகவே ஈண்டு நச்சினார்க்கினியர் கூறும் புத்துரை ஆசிரியர் கருத்தன்றென்பது விளக்கம். அன்றியும், நச்சினார்க்கினியரின் இவ்விரண்டாங் கந்தருவம் தமிழிலக்கணம் அறியும் களவு கற்பு எனும் இரு கைகோளினும் அடங்காதாகவே, தமிழிலக்கண நூலில் அதற்கிடனுமில்லை. இனி, நச்சினார்க்கினியர், களவினை முதற் கந்தருவமென வேறு பிரித்து, அது நூல்களிற் புலவர் புனைந்துரைத்த கற்பனை யளவே யமைவதெனவும், உலகியலில் நடைபெறுவது தாங்கூறும் இரண்டாங்கந்தருவமே யாகுமெனவும், களவியல் 13, 14, 15ஆம் சூத்திரங்களுக்குத் தாம்கண்ட வுரையில் வலியுறுத்தித் தமது இக்கருத்தையே பின் சிந்தாமணி நாமகளிலம்பகம் 158ஆவது செய்யுளுரையிலும் அநுவதிக்கின்றார். ஆசிரியரோ தம் தமிழிலக்கண நூலில் தாம் கூறும் அகப்பொருளனைத்தும் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் புலவரின் புலநெறி வழக்குமாவன வற்றுள் எதனையும் விலக்காது எல்லாத் தமிழ் மரபுகளையும் வடித்துத் திரட்டிக் கூறிப்போவதாக விதந்து விளக்கி வைத்தார். (அகம். சூத்திரம் 53) ஆகையால் ஆசிரியரின் தெளித்த கூற்றுக் கொவ்வாத நச்சினார்க்கினியருரை ஆசிரியரின் சூத்திரக் கருத்தா காமை தெளியப்படும். எனைத்தாயினும் இச்சூத்திரம் சுட்டும் ஐந்நிலம் குறிஞ்சி முதலிய நிலப்பகுதிகளைக் குறியாதென்பது ஒருதலை. இனி, ஈண்டு ஐந்நிலம் களவின்பாற்படும் ஐந்திணையு மாகாவென ஈருரைகாரருந் துணிந்தது சரியே. முதலில் பாங்கர் நிமித்தம் பன்னிரண்டெனத் தொகுத்துப் பின் அவையாவன முன்னைய மூன்று பின்னர் நான்கு, யாழோர்மேன, ஐந்து என வகுத்து ஆசிரியர் முறையே யீங்கு இச்சூத்திரங்களிற் சுட்டிப் போவதனால் அவர் கூறும் இப்பன்னிரண்டும் ஒரே தன்மையன வாதல் வேண்டும் என்பது தெளியக் கிடக்கின்றது. ஆகவே, அகத்திணை யேழேயாதலால், அவற்றுள் ஐந்திணை யிங்குப் பன்னிரண்டு நிமித்தங்களில் ஐந்தெனக் கூறின், மற்றைய நிமித்தம் ஏழனுக்கும் ஒப்பப் பொருளுமமையாது. இங்கு ஆசிரியர் கூறும் பன்னிரண்டனுக்கும் ஒத்து அமையும் பொருள் காண்பதே முறையாகும். அதனை யினி யாராய்வாம். தாம் இங்கு இச்சூத்திரங்களால் வகுத்துக் கூறுவன பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்பதை ஆசிரியர் இதற்குமுன் தொகுத்துக் கூறிய களவியல் 13ஆவது சூத்திரம் யாப்புறுத்துளது. அப்பன்னிரண்டும் களவில் தலைவன் கூற்று நிகழ்தற்கேதுவாகும் பலவற்றுள் பாங்கன்பாங்கிகளின்பாற் படுவனவேயாகும். அப்பாங்கர் நிமித்தம் பன்னிரண்டும், முன் மெய்தொட்டுப் பயிறல் முதலிய பல நிமித்தங்களும் தொகுத்துக் கூறும் 11ஆம் சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன. இதனை, 13ஆம் சூத்திரக்கருத்தை மேலே நாம் ஆராய்ந்தபோது கண்டு தெளிந்தோம். அப்பன்னிரண்டும் அன்பினைந்திணைக் களவுக்காமேனும், அவற்றுள் முதல் மூன்று கைக்கிளைக்கும், பின் இறுதி நான்கு பெருந்திணைக்கும் வரற்பால. நடுவணைந்து நிமித்தங்களும் இவ்விரு திணைக்கும் வாராது, நடுவணைந்திணைக் காமக் கூட்டத்துக்கு மட்டுமே பொருந்துவனவாம். இதனையே ஆசிரியர் இங்கு இச்சூத்திரங்களால் விளங்க வைத்தார். இதனால் களவியல் பதினைந்தாவது சூத்திரத்தில் ஐந்நில மென்பது, முன் பதினோராவது சூத்திரத்தில் தலைவன் கூற்று நிகழுங் களம்பல கூறியவற்றுள் முதலெட்டு நீக்கிப் பின்கூறிய பாங்கர் நிமித்தமான பன்னிரண்டனுள் முதல் மூன்றும் இறுதி நான்கும் நீக்கி, இடை நின்ற ஐந்து களனுமே யாகுமென்பது தெளிவாகும். எனவே, இதற்கு முன்னைய பதினான்காம் சூத்திரம் கூறும் ஏழும், ஆசிரியர் முன் பதினொன்றாம் சூத்திரத்துள் விளக்கிய பாங்கர் நிமித்தம் பன்னிரண்டில் முதல் மூன்றும் இறுதி நான்கும் ஆக ஏழு களன்களாகும். இவ்வாறு இவையமைவதனை யினியிங்குச் சிறிது ஆராய்வாம். மேலே களவியற் பதின்மூன்றாஞ் சூத்திரப் பொருளை ஆராயுங்கால், அதிற் கூறப்படும் பாங்கர் நிமித்தம் பன்னிரண்டும், அதற்கு முன்னைய மெய்தொட்டுப் பயிறல் என்னும் பதினொன்றாம் சூத்திரத்துக் கூறப்படும் பெற்றவழி மகிழ்ச்சி முதல் மடன் மாகூறு மிடனுமாருண்டே என்பது வரை சொல்லப்படும் பன்னிரண்டேயாமெனக் கண்டுவைத்தோம். தலைவன் கூற்று நிகழ்தற்காம் நிமித்தம் இப்பன்னிரண்டனுள், முதல் நான்கு பாங்கன் கூட்டம், இறுதியெட்டும் பாங்கியிற் கூட்டமாவனவாம். அப்பன்னிரண்டு நிமித்தம் வருமாறு: 1. பெற்றவழி மகிழ்ச்சி 2. பிரிந்தவழிக் கலங்கல் 3. நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைத்தல் 4. குற்றங்காட்டிய வாயில்பெட்பு 5. பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பு 6. ஊரும் பேருங் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பினிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதி 7. தோழி, குறையவட்சார்த்தி மெய்யுறக்கூறல் 8. தண்டாதிரப்பு 9. மற்றையவழி 10. சொல்லவட் சார்த்தலிற் புல்லியவகை 11. அறிந்தோளயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங்கூறல் 12. தோழி, நீக்கலினாகிய நிலைமை நோக்கி மடன்மாகூறல். இப் பன்னிரண்டே களவுக்கூட்டத்தில் தலைவன் கூற்றுக்கிடனாகும். பாங்கர் நிமித்தங்களாம். இவை தம்முள் முன்னின்ற 1. பெற்றவழி மகிழ்தல் 2. பிரிந்தவழிக் கலங்கல் 3. நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைத்தல். என்பவை மூன்றும், அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் காமக்கூட்டமாம் களவு நிமித்தமாவதுடன், அகப்புறமாகிய தூயசெந்திறக் கைக்கிளைத்திணைக்கு முரியனவாகத் தக்க குறி அல்லது நிமித்தங்களாயும் அமைவனவாம். இப்பன்னிரண்டனுள் பின்னிறுதி நின்ற இரந்து பின்னிற்றலை மாறுமிடத்துத் தலைவன் பால் நிகழும் வேறுணர்ச்சியைச் சுட்டும் மற்றையவழி முதல் மடன்மாகூறல் இறுதியான நான்கும் தூய காமக் கூட்டத்திற்கே யன்றிப் பொருந்தா இழிந்த காமமான நோந்திறப் பெருந்திணைக் கும் அடையாளம் அல்லது நிமித்தமாகவும் அமைவுறுவனவாம். இவ்வாறு முன் 3. பின் 4. ஆக இவை 7ம் போக, நடுவணின்ற 4ஆவதான குற்றங்காட்டிய வாயில் பெட்பு முதல் 8 ஆவதான தண்டாதிரப்பு ஈறாகக் கூறப்பெற்ற ஐந்தும் கைக்கிளை பெருந் திணைகளுக்கு எவ்வாற்றானும் யாண்டும் பொருந்தாதனவாய் அன்பொடு புணர்ந்த நடுவணைந்திணைக் காமக்கூட்டமாங் கந்தருவத்திற்கேயுரிய நிமித்தங்களாகும். இதுவே தமிழ் மரபு. இவ்வுண்மையையே ஆசிரியர் இங்குத் தமிழ்க் களவிலக்கணங் கூறும் களவியலில் 11 முதல் 15 ஆவது வரையுள்ள சூத்திரங்களால் தெளிசொற் பெய்து விளக்கிப் போந்தார். இவ்வுண்மையை மறந்து நெகிழவிட்டு, வடநூலிற் காணப்படும் தமிழ் மரபாகாத கூட்டம் எட்டினை இவை குறிப்பதாகக் கொண்டதனால், உரைகாரர் இச்சூத்திரங்களுக்குச் செம்பொருள் கூறமாட்டாது மயங்கக் கூறலாயினர். *சூத்திரம் : 31 முந்நா ளல்லது துணையின்று கழியாது; அந்நா ளகத்தும் அதுவரை வின்றே. இதன் பொருள் : முந்நாளல்லது துணையின்று கழியாது = களவுக்காலத்துத் தலைவி பூப்பால் புறம்பெயராமல் மனையகத் தடங்கி யொழுகும் மூன்றுநாட்களைத் தவிரப் பிறிதெந்நாளும் தலைவனும் தலைவியும் கூடாது கழிவதில்லை. அந்நாளகத்தும் அதுவரைவின்றே = பூத்தகாலத்தும் கூட்டம் களவிற் கடியப்படுவதில்லை. இதுவே இச்சூத்திரச்சொற்றொடர் சுட்டும் செம்பொருளாகும். தொல்காப்பியர் கருத்தும் அதுவேயாதலால், அக்கருத்துக்கேற்ற சொற்கள் இச்சூத்திரத்தில் பெய்தமையானும், பின் கற்பியலில் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரலுள்ள மொடளவியவிடத்தும், அந்தரத்தெழுதிய எழுத்தின் மான, வந்தகுற்றம் வழிகெட வொழுகலும் என்று இவ்வாறு களவுக் காலத்தே காதல் மிகுதியால் நிகழ்ந்த தவறுகளை நீக்குதல் குறித்தமையானும், தெற்றெனவிளங்கும். இதற்குமாறாக உரைகாரர் கூறுவவனைத்தும் பொருந்தாமையை அவருரைக்குச் சூத்திரச் சொற்கள் இடந்தராமை யொன்றே தெளிவிக்கும். சூத்திரம் : 44 மறைந்த வொழுக்கத் தோரையு நாளும் துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை. இதன் பொருள் : மறைந்தவொழுக்கத்து = களவொழுக் கத்திலே; ஓரையும் நாளும் துறந்தவொழுக்கம் = தனக்கியல்பான விளையாட்டுக்களையும் நாள்வேலைகளையும் துறந்து அனவரதம் காதலிலேயே அழுந்திக்கிடக்கும் வழக்கம்; கிழவோற்கில்லை = தலைவன்மாட்டுக் காணப்படுவ தொன்றன்று. எனவே களவில் தலைவிக்குத் தன் காதலன்றிப் பிறிதெதிலும் உளங்கொள்ளாமல் முழுதும் தன்னைக் காதலுக்கே கொடுத்துப் பிறவெல்லாவற்றையும் மறந்தொழுகுதலியல்பா மென்பதும், தலைவன் அவ்வாறன்றித் தன் தகுதிக்கேற்ற விளையாட்டுக்களை ஒழித்துவிடாமல் ஆடியும் நாள்தோறும் தனக்குரிய தொழிலாற்றியும் வருவதுடன் ஏற்றபெற்றியால் காலமிடங்கருதிக் காதலின்பத்தையும் துய்ப்பானாவான் என்பதும், உலகியல் கருதி இச்சூத்திரம், கூறுகின்றது. ஓரை = விளையாட்டென்பது, சங்க இலக்கிய முழுதும் அச்சொல்லுக்கு அப்பொருளாட்சி யுண்மையால் விளங்கும். ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல்காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதனிலேனும் சான்று காணுதலரிது. மிகவகன்ற பிற்காலப்புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒருநாளினுள் நன்மை தீமைகளுக்குரியதாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவு) என்றபொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார். அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், ஓரையென்னும் தனித்தமிழ்ச் சொல்லுக்கு, அக்காலத்திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப் பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக் கொள்ளுவதே முறையாகும். அதைவிட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்குமேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம் அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சி யறத்திற்கும் பொருந்தாது. அடையின்றி ஓரை என்பதற்கு முகூர்த்தமென்று பொருள் கொண்டால், நல்ல நேரத்தைக் குறிப்பதன்றித் தீய இராசியைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்தாது. ஒழுக்கமென்னுஞ் சொல்லைப் போலவே முகூர்த்தமும் தன்னளவில் நல்லதையே குறிக்கும் ஆகலான். கற்பியல் சூத்திரம் : 31 பின்முறை யாகிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினு மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் இறந்த துணைய கிழவோ னாங்கட் கலங்கலு முரிய னென்மனார் புலவர். இதன் பொருள் : பின்முறையாகிய பெரும்பொருள் = வரைவிற்குப் பின் தலைவியைத் தணக்கப் போதிய பெருமை யுடைத்தாகத் தலைவன் கருதிச் செய்த பொருளை; (148) வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும் = மணந்து கற்புங் காமமும் நற்பாலொழுக்கமுமாய தொன்முறையுடைய மனைவிக் கெதிர்கொண்டு புகுங்காலும். அல்லது அன்ன நன்மனையாள்தன்னிற் பொருளைப் பெரி தாக்கித் தற்பிரிந்து தேடிய பொருளொடு மீளும் தலைவனைச் சினவாது (பிரிதற்கு முன் நடந்தபடியே நடந்து) தொல்லைக் கற்புறுகாம நற்பாலொழுக்க முறையில் எதிர்ப்படுவாளாயினும் எனலுமாம். மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் = பரத்தைமையால் பிரிந்த தலைவன் தன் தவறஞ்சி மகனை வாயிலாகக் கொண்டுபுகினும்; இறந்த துணைய கிழவோன் = தன் பிரிவுக்காலத்துத் தலைவிக்குத்தான் காதலறங்கடந்த அளவினனாய தலைவன் அதாவது, தவறிழைத்த வாழ்க்கைத் துணையாய தலைவன். ஆங்கண் கலங்கலுமுரியன் = அவ்வாறு பிரிந்து மீண்டு தலைவியை எதிர்ப்படுமிடத்து அவட்குத்தானிழைத்த தவறு நினைத்துக் கலங்கலுமுரியன். உம்மையால் கலக்கங்காட்டாமல் தன் காதல் நிறைவு கூறித் தலைவியைத் தேற்றவும் ஊடல்தீர்க்கவும் முயலுவதே தலைவனின் பெரும் இயல்பென்பது விளங்கும். இச்சூத்திரத்திற்கு இதுவே ஆசிரியர் கருத்தாம் என்பது, முன் கற்பியல் 9ஆம் சூத்திரத்துப் பெரும்பொருள் எனும் தொடரை இப்பொருளிலேயே தொல்காப்பியர் பெய்தமைத்தபெற்றி வலியுறுத்தும். பெறலரும் பெரும்பொருள் முடிந்தபின்வந்த என்ற சூத்திரமுதலடிக்கு இளம்பூரணர் இவ்வுரையே கூறுவதும் கருதற்பாலது. அவர் ஆங்குத்தரும்பொருளாவது : பெறுதற்கரிய பெரும்பொருளை முடித்தபின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய மரபு காரணத்தால் தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழி கூற்று நிகழும், என்றவாறு இவ்வாறு உரியபொருள் கூறியதோட மையாது. பெரும்பொருள், ஈண்டு, வரைவிற்கேற்றது; தேறுதல், சுழலநோக்குதல் என விசேடவுரையும் கூறி, பெரும்பொருள் என்னும் தொல்காப்பியத் தொடருக்கு அத்தொடர்ச் சொற்கள் சுட்டும் நேரியபொருளைத் தெள்ளத் தெளித்துப் போந்தார். அதே சூத்திரத்தில், பின் சீருடைப் பெரும்பொருள் வைத்த வழி, மறப்பினும் எனவருமடியும் கவனிக்கத்தக்கது. ஆண்டும், வரைந்துகொண்டு வாழும் தலைவன் இல்வாழ்க்கை இனிது நடத்தற்குவேண்டிப் பெரும்பொருள் தேடுவதைப் பெரிதாகத் தன் மனத்தில் கொண்டபொழுது, அது காரணமாகத் தலைவி யுடனுறையும் காதற்கடனைத் தலைவன்மறந்து பிரிவுக் குறிப்பைத் தோற்றுவிப்பினும் தோழிகூற்று நிகழும், என்பதே இவ்வடிக்கு இனிது பொருந்தும் செவ்விய பொருளாகும். முதலடிக்குச் செம் பொருள் கூறிய இளம்பூரணர் இப்பின்னடிக்கு அதைமறந்து, பெரும்பொருள் என்பதற்குரிய செம்பொருளை விட்டு, இத்தொடரை இலக்கணையாக இற்கிழமையைக் குறிக்கும் என்றெழுதலானார். அதைக் கொழுகொம்பாக்கி, முதலடியில் வரும் இத்தொடரையும் ஆகுபெயராக்கிப் பெரும்பொருள் என்பதற்கு வதுவை எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். அவரே, பிந்திய அடிக்குத் தலையாய இல்லறத்தைத் தலைவி மாட்டு வைத்த காலத்துத் தலைவன் அறஞ்செய்தற்கும் பொருள் செய்தற்கும் இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும் தலைவியைமறந்து ஒழுகினும் என வுரை கூறினார். இலக்கண நூலில் ஒரு சொல்லையோ தொடரையோ பலவிடங்களில் பல்வேறு பொருளில் பெய்துபோவது இலக்கண நூலார் முறையன்று. அது அறிவுக்கும் ஆட்சி மரபுக்கும் மாறான தவறாகும். சூத்திரம், மற்றைப்பாட்டுப் போலாது, திரிசொல் முதலிய மயக்கச் சொற்களைவிலக்கி, எளிய இயற்சொற்களால் சொற்சுட்டும் செம்பொருள் கற்பார்க்குக் கண்டளவே தோன்றுமாறு அமைதலே முறை. தொல்காப்பியரே, அவற்றுட், சூத்திரந் தானே, ஆடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே எனச் சூத்திர இலக்கணம் கூறுபவர், அவ்விலக்கணத்துக்கு மாறாகத் தானே பல சூத்திரங்களில் ஒரே தொடரைப் பலவேறு பொருளிற்பெய்து மயங்கவைப்பாரா? ஒருகாலுமில்லை. பிறிது கருத்தைச் சுட்டாவிடத்தெல்லாம் சூத்திரச்சொற்றொடர் சுட்டும் செம்பொருளே ஆசிரியர் கருத்தாகக்கொள்ளுதல் கற்போர்கடன். ஆகையால் கற்பியல் 9ஆம் சூத்திரத்திலீரிடத்தும், 31ஆம் சூத்திரத்திலோரிடத்தும் வரும் பெரும்பொருள் எனும் சொற்றொடர் அம்மூவிடத்தும் பெரிதாகிய பொருள் என்பதையே குறித்தல் வேண்டும். முன்னையதான 9ஆம் சூத்திரத்தில், முதலடியில் வரைவின்பொருட்டு வரைவுக்குமுன் பொருள் செய்யச் சென்ற தலைவன், பொருளைச் செய்துமுடித்து வரைதற்கு வந்தபொழுது. அப்பொருட் பொருட்டுச் சிறுகாலையவன் தலைவியைப் பிரிந்த தற்கு வெகுண்டுதெறாமல், வரைதற்கு வந்த மகிழ்ச்சிமலிந்து தோழிக்குக் கூற்றுநிகழுமென்பது, கூறப்பட்டது. அதே சூத்திரத்தில் பிந்திய அடியில், வரைந்து வாழும் தலைவன் வரைந்தபின் இல்லறமினிது நடத்தற்பொருட்டுப் பொருள் தேட நினைத்துத் தலைவிக்குரிய தன் காதற்கடனை மறப்பானாகக் கண்ட தோழிக்குக் கூற்று நிகழ்வதை ஆசிரியர் சுட்டுகின்றார். இவ்விருவகைப் பொருட்பிரிவையு மிதிற்கூறிய ஆசிரியர், இவற்றுள் முன்னதான வரைவுக்கு முன்பொருளாக்கியதை விலக்கி, வரைந்தொழுகும் தலைவன் கற்பொழுக்கமுடைய தலைவியை மறந்து பிரியுங்குறிப்புக் காட்டிய பொழுது தோழி கூறுவதையு மிங்குக் கூறிப், பின் 31ஆம் சூத்திரத்தில் அவ்வாறு இல்லறத்திற்கு வேண்டிய பொருட்குப் பிரிந்த கணவன், பொருளொடு மீளுபவன், தான் தணந்துவைத்த தலைவியை அப்பொருளொடு எதிர்ப்படுங்கால் தன் நெஞ்சில் கலக்கங் கொள்ளுமிடத்தை விளக்குகின்றார். இதனால், ஈண்டு, பின்முறை ஆக்கிய பெரும்பொருள் என்பது, வரைந்தபின் தலைவன் செய்யும் பொருளென்பதைத் தெளிக்க வந்த தொடரெனத் தெளிதலெளிதாம். இனி, இச்சூத்திரத்தில் நச்சினார்க்கினியர் சில பாடபேதங் கொள்ளுகிறார். அவர் பாடமும் சூத்திரப் பொருளை மாற்றற் குரியதன்று. முதலடியில் ஆகிய என்ற இளம்பூரணர் பாடத்தை ஆக்கிய என மாற்றிக்கொள்ளுவர் நச்சினார்க்கினியர். எது பாடமாயினும், வரைவுக்குப்பின் முறையாகத் தலைவன் செய்த பெரும்பொருளையே சுட்டுவதாகும். நச்சினார்க்கினியர் பாடத்தில், இச்சூத்திரத்தின் 4ஆவது அடியிற் பெரியதொரு மாறுதல் காணப் படுகிறது. இறந்த துணையகிழவோனாங்கண் என்ற இளம்பூரணர் பாடத்தை அறவேமாற்றி, கிழவோன் இறந்தது நினைஇ ஆங்கண் எனப் புதியதொரு பாடங்கொண்டனர் நச்சினார்க்கினியர். தமக்கு முந்திய உரையாசிரியர் பாடத்தைச் சுட்டாமலே புறக்கணித்துத் தாம் புதுப்பாடங் கொண்டதற்கேற்ற ஆதாரத்தையும் விளக்கி னாரில்லை. அதன் முறையை ஈண்டாராய்தற்கவசியமில்லை யாதலால், அதை விட்டு, நச்சினார்க்கினியர் பாடத்தால் சூத்திரக் கருத்து வேறுபட்டதா என்பதை மட்டும் நோக்குவோம். இவர் பாடமும், பிரிந்து மீண்டதலைவன், கழிந்த தன்தவறு நினைந்து. அம்மீட்சிக் காலத்துக் கலங்குவதுமுண்டு என்பதையே கூறுதலால், இச்சூத்திரத்திற்கு ஆசிரியர் கொண்ட கருத்து மேலே நாம் தெளித்துக் கூறியதேயாகுமென்பது வலியுறுகின்றது. சூத்திரம் : 51 காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே. இதற்கு இளம்பூரணர், உரைகூறல் மிகையெனவும் சூத்திரத்தால் பொருள் விளங்குமெனவும் கூறியமைந்தார். நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்துக்குத் தமது வழக்கம் போற் புத்துரை கூறமுயன்று பெரிதும் இடர்ப்படுவாராயினர். நின்றாங்கமையும் நேரிய பொருள் தராது தொடர்தொறுஞ் சொற்களைப் பிய்த்து இட்டம்போல் இடம் மாற்றி வைத்துப் புதுவதோர் சூத்திரமாகத் தைத்து மருள் வரும் பொருள் தருவாரானார். கிழவனுங் கிழத்தியும், சுற்றமொடுதுவன்றி, அறம்புரி மக்களொடு, சான்ற காமங் கடைக்கோட்காலை, சிறந்தது ஏமஞ் சான்ற பயிற்றல், இறந்ததன் பயனே என்பதுஇவர் கொண்டு கூட்டிக் கண்ட புதிய சூத்திரமாம். இதற்கு அவர் தரும் பொருளாவது : தலைவனுந்தலைவியும், உரிமைச் சுற்றத்தோடே கூடி நின்று, இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களோடே தமக்கு முன்னரமைந்த காமத்தினையும் தீதாக உட்கொண்ட காலத்திலே, அறம்பொருள் இன்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ் சான்றவற்றை யடிப்படுத்தல், யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் என்றவாறு என்பதாம். இதன்மேல் அவர் தரும் விசேட வுரை வருமாறு : சான்ற காமமென்றார், நுகர்ச்சி யெல்லாம் முடிந்தமை தோன்ற; இது கடையாயினார் நிற்குநிலை யென்றுணர்த்தற்குக் கடையென்றார்; ஏமஞ்சான்றவாவன, வானப்பிரத்தமும் சந்நியாசமும்; எனவே இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று, பின்னர் மெய்யுணர்ந்து வீடு பெறுப; என்றார். இவ்வீடு பேற்றினை யின்றியமையாது இல்லறமென்பது இதன்பயன். இது காஞ்சியாகாதோவெனின், ஆகாது. நிலையின்மை சான்றோர் கூறக் கண்டுதெளிதல் காஞ்சி. இஃது அன்னதன்றிச் சிறந்த வீட்டின்ப வேட்கையால் தாமேயெல்லாவற்றையும் பற்றறத் துறத்தலின் அகப்பொருட் பகுதியாம் என்பதாகும். இதில் காணப்பெறும் விபரீத வெதிரேக விளைவுகள் வியப்பினை விளைப்பனவாம். (1) முதலில் மனையறமாண்பு விளக்கும் கற்பியலில் துறவற வீறு கூறல் மாறுபாடாம். கற்பியலில் இல்லற விருப்பை விளைப்பதே முறையாக அதைவெறுத்து விலங்குந் துறவின் சிறப்பை விரிப்பது விந்தையன்றோ! (2) துறவு கூறுவதே இச்சூத்திர நோக்கமாயின், இதில் அக்கருத்தோடு பொருத்தமற்ற பல சொற்றொடரை ஆசிரியர் அமைத்து வைத்தது வியப்பினும் வியப்பே. பிறப்பறுக்கலுற்றார்க்கு (தம்) உடம்பும் மிகை ஆதலால் மற்றுந் தொடர்ப்பாடு எதுவும் அவர்க்கு இடர்ப்பாடே யாமெனக் கூறவேண்டா. சான்றோர் கூறவும் வேண்டாது தாமே எல்லாவற்றையும் பற்றறத்துறக்கும் தலைவனுந் தலைவியும், தம்மில் ஒருவரை ஒருவர் துறவாமல் தொடர்வதே தவமறைந்தல்லவை செய்யும் தவறாகும். அதனோடும் அமையாமல், துறவுபுகும் கிழவனும் கிழத்தியும் (உரிமைச்) சுற்றத்தோடு துவன்றித், தாம் துறவை விரும்பாமல் இல்லறஞ் செய்தலையே விரும்பிய மக்களோடு கூடிச் சிறந்ததான துறக்கந் தரும் துறவினைப்பயில முயலல் படிற்றொழுக்க மாவதன்றித் தவத் துறவு ஆவதன்றே. துறக்கம் வேண்டித் துறப்பவரிருவர் (கிழவனுங் கிழத்தியும்) அதனை வேண்டாது இல்லறஞ் செய்தலையே விரும்புந் தம்மக்களொடுஞ் சுற்றத்தொடும் துவன்றியது எற்றுக்கோ? இவ்வாறு யாரொடுந் தொடர்பறுக்காமல் எனைவரொடுந் துவன்றித் துறவுபுகும் இருமுது கிழவரும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு விடுத்துத் தீரத்துறந்து தலைப் பட்டாராகார்; மயங்கிவலைப்பட்ட மற்றையவரே யாகித். தவம் தாம் மேற்கொள்வ தவமாகத் துறந்தார் போல் வஞ்சித்து வாழும் வன்கண்ண ராகி முடிவர். (3) இன்னும், பொறியெறிந்து ஐந்தன் புலத்தையட்டு நோற்றலின் ஆற்றல் தலைப்படுதலே அறத்துறவாகும். அதற்கு மாறாக நுகர்ச்சி யெல்லாமுடிந்தமைந்து, பொறிகளோடு புலனுஞ் செத்து, உளத்தோடு உடலுந்தளர்ந்து, கடையாயினார், நிற்குநிலை எய்தித்தள்ளாடும் (குடுகுடு) கிழவனும் கிழவியும் தமக்கு இன்னும் பற்றுக்கோடா யுற்றாரெல்லாம் சுற்றத் தொடர் இறுகப்பற்றித் துறவுபுகுவது தெண்ணீரடுபுற்கை உப்பு காடி முதலாய துப்புரவு ஏதுமில்லார் பெருநோன்பு பேசுவது போல்வ தன்றோ? இனையதொரு துறவின் திறத்தைத் தொல்காப்பியர் இங்குச் சுட்டிச் சூத்திரிக்கும் நோக்கந்தானென்றேனோ? (4) இனி இல்லறத்தின் பின்னர்க் கடைநாள் துறவுநிலை நின்று மெய்யுணர்ந்து வீடுபெறுப; இவ்வீடுபேற்றினை இன்றி யமையாது இல்லறம் என்பது இதன் பயன் எனும் நச்சினார்க் கினியர் முடிபு. சைனர்துணிபா? அன்றி ஆசிரியர் சிலருவக்கும் வைதிகமுடிபா? இனித் துறவின்றித் துறக்கமில்லை. அதனால் வீடுபெற விரும்பும் இல்வாழ் வாரெல்லார்க்கும் துறவு இன்றியமையாததே என்பது சமணர்மதம். சமண சமயமும் அதன் கொள்கைகளும் தமிழகத்தில் மூன்றாந் தமிழ்ச் சங்க முடிந்து சில நூற்றாண்டுகட்குப் பின்னரே பரவலாயின. சங்கத் தொகை நூல்கள் அனைத்துக்கும் சில நூற்றாண்டுகளாவது முந்தியது தொல்காப்பியம் என்பது தமிழர் யாவர்க்கும் ஒப்ப முடிவதாகும். தொல்காப்பியத்துக்குப் பிறகே அதை நூலாகக் கொண்டெழுந்த குறளில் இச்சமணக் கொள்கைக்கு மாறான தமிழர்பழவழக்குமரபற வொழுக்கங்களே கூறப்பெறும். குறள் கூறும் அறம் தமிழர் மரபென்பதில் ஐயமில்லை. வீட்டின்பமாகிய சிறப்பீனுமறம்; அறனெனப் பட்டதேயில் வாழ்க்கை; அவ்வறத்தாற்றி னில்வாழ்க்கையை; வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃது அவ்வில்வாழ்வார் பிறந்துழலும் வாழ்நாள் வழி யடைத்து வீட்டின்பச் சிறப்பீனும். இவ்வறனிழுக்கா இல்வாழ்க்கை, வீடுபெற விரும்பித் துறவு மேற்கொண்டு நோற்பாரினோன்மையுடைத்து. ஆற்றினொழுக்கி என்ற குறளில் தமிழர் மனையற மரபு மாட்சி வலியுறுத்தப் படுகின்றது. இத்தமிழ் மரபுக்கு முழுதுமாறாகத் துறவு துறக்கம் பெறுதற்கு இன்றியமையாத துணையெனப் பின்னெழுந்த சமணர் கொள்கையை அறப்பழைய தமிழர் மரபு கூறும் தொல்காப்பியர். தமிழர் மனையறம் கூறும் கற்பியலிறுதியில் தமிழரெல்லார்க்கும் வற்புறுத்த இச்சூத்திரம் செய்தாரென்பது எத்துணையியைபின்மை யுடைத்து என்பதை எண்ணுவார்க்கு உண்மை தெளிவாகும். உலகத்தையும் மனையறவாழ்க்கையையும் வெறுக்குந் துறவு துறக்கம் பெறுதற் கின்றியமையாததென்னும் வேதகாலக் கொள்கை ஆரியருக்கு முடன்பாடில்லை என்றே தெரிகிறது. எதுவாயினுமாகுக. எனைத்தாயினும் இது, அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை, அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றின் (துறவாகிய) புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவதெவன் என்று இல்வாழ்ந்து செம்மாக்குந் தமிழர் மரபாகாது. துறவுநிலை கொள்ளாமல் வீடுபேறெய்த வொண்ணாதென்னும் பிறசமயத்தாரோ ஆண்மகனே அஃது அடைபவனாவான், பெண்ணாய்ப் பிறந்தோர்க்கு வீடுபே றெண்ணற் கில்லையென்பர். ஈண்டுக் கிழவனையுங் கிழத்தியையும் ஒருங்கே வீடுபெற வைக்கும் கூட்டுத் துறவொன்று கூறுவது எந்த வேதத் துணிவென் பதை நச்சினார்க்கினியர் விளக்காததால் அதை நாம் தெளி யொணாது. இஃது எதுவாயினுமாகுக. தமிழ்கூறு நல்லுலகில் வழங்கும் மரபும் தமிழ் நூல் இலக்கண இயல்புகளுமே கூறவந்த தொல்காப்பியர், தங்குறிக்கோளை மறந்து ஈண்டுத் தமிழரின் அகப்புறப்பகுதிகளில் பிறபிற சமயக் கோட்பாடுகளையும் பேதுறப் பெயர்த்துப் பேசித் தலைதடுமாறினரெனக் கொள்ளப் போதிய காரணமில்லை. அதனால் இவ்வுரை ஆசிரியர் கருத்தாகாமை விளக்கமாம். (5) இறுதியாகக் கற்பின் திறம் மலர்ந்த இல்லற இலக்கணமும் இன்பக் கூறும் கூறி முடித்துக் கடைசியில் துறவில் கற்பியலை முடித்துக் காட்டினரெனற்கும் இங்கு இடமில்லை; இது கற்பியலின் கடைசிச் சூத்திரமுமன்று. வீடுபேறுகருதி, அதுதர வன்மையற்ற கற்பறத்தைக் களைந்துவிட்டுச் சிறந்த துறவு புகவைத்த பிறகு, மனையறமாண்புக்கே வேண்டப்படும் வாயில்களையும், பிரித்து வினைமுடித்துத் தன் தலைவியின் புணர்ச்சி வேட்டுத் தாழாது விரைந்து மீளும் தலைவனின் மரபுகளையும் விளக்கி ஆசிரியர் மீண்டுஞ் சூத்திரிப்பது பொருந்துவதன்றே. இனைய பிற பின்னைய, சூத்திரங்கள் பேசுவது கற்பாகிய இல்லற இலக்கணமேயாதலால், இவற்றின் முன்னிற்கும் காமஞ் சான்ற எனும் இச்சூத்திரம் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும் இல்வாழ்வாரின் அன்புமறனு முடைய மனையறவீறு கூறுதலையே நுதலும் அன்பினைந்திணைப் பகுதியாகிய கற்பியலில் மனையறச் சிறப்பே விளக்குவதியல்பாகும். இதுவே ஆசிரியர் கருத்தாமென்பது, இச்சூத்திரச் சொற்றொடர்கள் நிரல்பட நின்றாங்குத் தரும் நேரிய செம்பொருளாலும் தெளிவாகும். அம்மெய்ப் பொருளை இங்கு இனிமேல் ஆராய்வோம். காமஞ்சான்ற கடைக்கோட்காலை = முன் அம்பல் அலர் கட்கிடனாய், அவை தரும் அச்சத்தாலும் பிறபல சிறு துனி களாலும் சிறவாததாய்ப் பிறகு உழுவலன்புடையாரிருவரும் மணந்து பொருள் படைத்து மாண்டனையறம் நிகழ்த்திக் கற்புக் கனிந்த அற்புக் கூட்டம் வீறு பெற்றுச் சிறந்த நாளில்; ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு = தமக்கு எஞ்ஞான்றும் அன்புறும் இயற்கைத் துணையாகச் சிறந்த தம்மக்களொடும் தம்மனையறத்திற்கு உரிமைச் சுற்றமாகிய பணியாளர் முதலிய பிற செயற்கைத்துணைவர் பலரொடும்; கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் = தம் உழுவலன்பால் மனைமாண்ட கற்புக் கூட்டத்திற்கு உரிமையுடையோரான தலைவனுந் தலைவியும் இவை பல்லாற்றானும் மாண்புபெற்ற அன்பு கனிந்த கற்புக் கூட்டம் அனுசரித்தல்; இறந்ததன் பயனே = முன் உளம் பொய்யாத உழுவலன்பால் தாமே தலைப்பட்டுத் தழுவி வழுவாக் கள வொழுக்குக் கடைகூட்டி வைத்த பயனன்றிப் பிறிதன்றாம். சுருங்கச் சொல்லின், நல்வாழ்வெய்தி இல்வாழ்வார் இருமுது குரவரும் பின் பலவாறு சிறந்த தம் கற்பின் கூட்டமாய் மனை மாட்சிப் பேறெய்தலெல்லாம், முன் அவர் பிறர் கூற உற்ற சுற்ற முணர்ந்து உளையச் சாலாத களவொழுக்கில் அவ்விருவரின் செவ்விய அறனிறவா அன்பொடு புணர்ந்த தூய காமக் கூட்டம் தொடர்ந்து துறைமுற்றிக் கடைகூட்டிய பயனேயாம் என்பதே இச்சூத்திரப் பொருளாகும். இஃது அகப்பகுதியில் இக்கற்பியலில் இச்சூத்திர நிலை இதன் சொல் அமைதி, தொடர்தொறும் செறிந்த சொல்லாக்கக் குறிப்புக்கள், தமிழ் வழக்கு, நூல் நுதலும் ஆசிரியர் குறிக்கோள் ஆகிய எல்லாவற்றோடும் இயையும் இயலழகும் பெற்று முரணெது வுமின்றிக் கிடைக்கும் நேரிய பொருளாம். செய்யுளியல் சூத்திரம் : 115 ஒத்தா ழிசையு மண்டில யாப்பும் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப. இதற்குப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணராகிய மூவரும் ஒன்றோடொன் றொவ்வாத மூன்று உரைகள் எழுதுகிறார்கள். முரணுடைய மூன்றுரைகளும் பொருந்துமாறு கருதி ஆசிரியர் ஒரு சூத்திர மமைத்திருக்கமாட்டார். ஆகவே இதன் மெய்ப்பொருள் காணமுயலுதல் முறையாகும். இவற்றுள் பேராசிரியர் கூறும் உரையாவது. ஒத்தாழிசைக் கலியின்கண்ணும் மண்டிலயாப்பின் கண்ணும் குட்டம் வருங்கால், அளவடிக்குப் பொருந்திவரும் தத்தம் பாக்கள். இச்சூத்திரத்துக்கு இவ்வாறு பொருள் கொள்ளுதலில்வரும் முரண்பாடுகளுக்குச் சமாதானம் காணலரிது. (i) முதலில், ஒத்தாழிசை, மண்டிலம், குட்டம் என்ற மூன்றனோடும் ஆசிரியர் தனித்தனியே எண்ணும்மை கொடுத்து, ஓராங்கே இம்மூன்றும் நேரடிக் கொட்டின என ஒருபடியாகக் கூறுவதால், இவை தம்முள் ஒத்து நேரடிக்குப் பொருந்தும் என்பதே ஆசிரியர் கருத்தாகும். இதற்கு மாறாக, இவற்றுள் குட்டத்தை மட்டும் வேறுபிரித்து, அஃது ஒத்தாழிசை மண்டிலயாப்பு எனுமிரண்டின்கண்ணும் வருங்கால் என்றுரைப்பது எப்படிப் பொருந்தும்? குட்டத்தோடு ஆசிரியர் கூட்டிவைத்த உம்மையை வாளா உண்டு விழுங்கி ஒழிப்பது முறையா? அன்றியும், ஒத்தாழிசை, மண்டிலயாப்பு என்ற இரண்டும் குட்டத்தோடு ஒரு நிலையவாய்க் கூட்டி எண்ணப்பட்டு, எல்லாம் எழுவாயாக ஒட்டின எனும் பயனிலை கொள்ளநிற்கவும், பேராசிரியர் முதலிரண்டையும் ஏழாம் வேற்றுமையாக்கி, இறுதிநின்ற குட்டத்தைமட்டும் எழுவாய்ப் பொருளதாக் கொண்டு அவ்வெழுவாய்க்குச் சூத்திரத்தில் எங்கு மில்லாத வருங்கால் எனு முடியாததோர் எச்சப்பயனிலை படைத்துக் கூட்டுதற்கவசியமும் ஆதாரமும் காட்டி விளக்கினாரில்லை. இன்னும் ஒட்டின என்னும் பன்மைவினை, எண்ணும்மைகளா லிணைக்கப்பெற்ற ஒத்தாழிசை மண்டிலயாப்பு குட்டம் என்ற மூன்று எழுவாய்ச் சொற்களுக்கும் ஒத்த ஒரு பொதுப் பயனிலையாகப் பொருந்தி நிற்பவும், முன்னிரைண்டை ஏழாம் வேற்றுமை யுருபுதந்து விலக்கிவிட்டு, அவ்விரண்டின் - கண்ணும் குட்டம்வரின் அக்குட்டம் நேரடிக் கொட்டும் என ஒருமை எழுவாய்க்குப் பன்மைப் பயனிலை காட்டுவது தவறாகுமே! இனி ஈரிடத்தும் வருங் குட்டங்கள் என்று எழுவாய்க்கும் பன்மைகொள்ள அமையுமென்பார்க்குப் பல இடங்களில் வருதலால் மட்டும் ஒரு பொருள் பன்மையாக மாட்டாது; இரண்டிலும் வருவது குட்ட மென்ற தொன்றேயா கையால். அஃதமையாதெனக்காட்டி மறுத்திடுக. இவ்விடர்ப்பாடு பலவும் பேராசிரியர் உரையில் விலக்கிற்கில்லை. இவை தம்மள விலேயே இச்சூத்திரத்திற்கு இவ்வுரை பொருந்தாமையை இனிது காட்டும். எனில், இப்பொருளிலெழும் முரண்பாடுகளும் மட்டிலமையா. (ii) இடையடி குறைந்தமை குட்டமெனத் தம் சிறப்புரைப் பகுதியிலிவரே குட்டத்தின் இலக்கணஞ் சுட்டியுள்ளார். எனவே நேரடியிற் குறைந்துவரும் குட்டம் நேரடிக்கொட்டும் என்பது முற்றும் பொருந்தாக் குற்றமாவதன்றிச் சொல்லோடு பொருந்தும் நல்லுரையாகாது. (iii) இனி,நேரடியைத் தமக்குரிமை கொண்ட பாக்களும் இடையடி குறைந்து வருதலையும் கொள்ளுமென்பதையே இச்சூத்திரம் கூறவந்ததென்னின், அதுவுமமையாமை காட்டுவன். இது கூறுவதே ஆசிரியர் கருத்தாயின் நேரடிப்பாக்களில் குட்ட முந்தோன்றும் எனச் சுருங்க வமையாமல், ஒத்தாழிசை முதலிய பாவகை எண்ணிப் பின்னும் நேரடிக்கு என விதந்து கூறல் மிகையாகும். ஒத்தாழிசையும் மண்டிலமாகிய ஆசிரியமும் நேரடியே கொள்ளு மாகாலான், அவற்றின்கண் குட்டமும் வரும் என்று கூறுவதே போதும்; மீட்டும் நேரடிக்கு என்று கூட்டியுரைத்தல் வேண்டா. (iv) ஒத்தாழிசையும், மண்டிலமும், கலியுமாசிரியமுமான பாவகைகளும் குட்டம் எவ்வகைப்பாவிலும் வரத்தகும் சீர்குறைந்த அடியும் என இவர்தம் உரையிற் கூறுவதால் இவற்றை ஆசிரியர் ஒருபடியாக வைத்தெண்ணினாரென்பது அமைவுடைத்தன்று. எல்லாப் பாக்களிலும் வரும் ஒருவித அடியைக் கலி, ஆசிரியம் முதலிய பாவகைகளோடு ஒத்து ஒருசேர நிறுத்தி எண்ணுவது இயையும் இலக்கண முறையுமாகாது. சீர்குறைந்த அடியான் குட்டம் இன்னின்ன பாக்களில் வருமெனலொன்று; அன்றி நேரடியான நாற்சீரடிகளோடு கூடி இடையிடையே வந்து பொருந்துவது முண்டு எனல் ஒன்று; இவ்விரண்டிலொரு இயல் முறையை விடுத்து, நாற்சீரடிவரும் பாவகைகளையும் கூறி, அவற்றோடு அப்பாக்களில் அருகி வந்தமையுமொரு சீர்குறைந்த அடிவிசேடத்தையும் உடனொருங்கு நிறுத்திக் கூறுதற்கு எவ்வகை அமைவும் முறையும் இன்றியமையாமையும் காணலரிது. ஆகவே அக்கருத்தால் ஆசிரியர் சூத்திரம் யாத்திருக்க மாட்டாரென்ப தொருதலை. (v) அன்றியும், ஆசிரியமும் கலியும் நேரடியையேயன்றி அளவு குறைந்த அடிகளையுங் கொண்டு வருதலுண்டு என்று ஆசிரியர் முன்னரே பாக்களினடி பற்றிக் கூறும் உரிய இடத்தில் தக்க தனிச் சூத்திங்களால் விளக்கிவிட்ட பிறகு மீட்டும் அச்செய்தியை இங்கு வறிதே மிகைபடக் கூறாரன்றோ? ஈற்றயலடி இடையும் வரையார் என்ற செய்யுளியல் 68, 69ஆவது சூத்திரங்களில் ஆசிரியத்துக்கும், முச்சீர் முரற்கை என்ற இவ்வியல் 70ஆவது சூத்திரத்தில் கலிப்பாவிற்கும் குறைந்த - அடிகள் வந்தமையுமென விளக்கப்பட்டுள்ளது. ஆகவே இச்சூத்திரம் முன் கூறியதையே மீண்டுங் கூறவந்ததெனின், மிகையால் ஆசிரியருக்குப் பிழைப் பூட்டும், அதனாலுமிப் பொருளிதற்குப் பொருந்தாமை யறியப்படும். (vi) இன்னும், இங்கு மண்டில மென்பது ஆசிரியமென்றுரை காரர் கூறுவது சரியானால், இதற்குப் பின்வரும் மண்டில குட்டம் என்றிவை யிரண்டும் செந்தூக்கியல..... எனும் சூத்திரம் நகைத்தற் கிடனாம். ஆசிரியமும் குட்டமும் ஆசிரிய இயல என ஆசிரியர் ஓர் இலக்கணம் கூறுவரா? எனவே மண்டில யாப்பு என்பதால் ஆசிரியமல்லாத பிறிதொன்றையே ஆசிரியர் இங்குக் கூறக் கருதினார் என்பது தெளியக்கிடக்கிறது. (vii) மேலும், ஆசிரிய முதலிய பாவகைகள் பற்றி முன் பலபட விளக்கி முடித்து, இச்சூத்திரமுதல் பின் கூற்று மாற்றமும் என்னும் இச்செய்யுளில் 156ஆவது சூத்திரம் வரை முறையே கலியிலக்கணம் கூறுவதால், இச்சூத்திரத்தில் கலியோடு ஆசிரியத்தை மீட்டு மிழுத்துக் காட்டிக் கூறக் காரணமில்லை. இச்சூத்திரம் கலியிலக்கணம் கூற எழுந்த தென்னாமல், பாவிலக்கணமே கூறுகின்றது என்று உரைத் தொடக்கத்தில் பேராசிரியர் காட்டியதும், தாமிதற்குக் கொண்ட பொருளுக்குப் பொருந்த வேண்டிய புனைந்து கூறியதன்றி வேறில்லை. எனவே இங்கு இனைய பலதடை முரண் களுக்கிடமான இவ்வுரை பொருந்தாமை தெளிதலெளிது. இனி, நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் இச் சூத்திரத்தில், பேராசிரியரைப் போலக் குட்டமும் என்பதனும்மையைக் கழித்தொதுக்காமல், எண்ணும்மையாகவே கொண்டனர். எனினும் நச்சினார்க்கினியர் குட்டத்தைக் குறைந்து வருமடியெனவே கொண்டு, ஒத்தாழிசை, மண்டிலயாப்பு, சீர்குறைந்து வரும் குட்டம் ஆகிய மூன்றும் நேடியான நாற்சீரடிக்குப் பொருந்தின என்று பொருள் கூறினார். பேராசிரியர் மண்டில யாப்பை ஆசிரியமாக மட்டுங் கொள்ள, நச்சினார்க்கினியர் அதை மண்டலித்து வரும் ஆசிரியமும் வெண்பாவுமாகக் கூறினார். எனவே குட்டமும் என்பதில் உம்மையை யொழிக்காமல் அதனை எண்ணும்மையாக வைத்து, அதையும் மற்ற முன்னிரண்டனோடு கூட்டி எண்ணியதும், மண்டிலயாப்பில் ஆசிரியத் தோடு வெண்பாவையும் சேர்த்தெண்ணியதுமான இரண்டுவேற்றுமை தவிர, பிறவாற்றால் பேராசிரியர்போலவே இச்சூத்திரத்துக்கு இவரும் பொருளமைத்து, ஒத்தாழிசை முதல் சீர்குறைந்த குட்டமீறாக மூனறும் நாற்சீரடிக்குப் பொருந்தி வருமெனவே பொருள் கூறுவதால் மேலே காட்டிய பேராசிரியர் உரையை மறுக்கும் தடைமுரண்களில் முதலது நீங்கப் பிறவனைத்தும் இவருரையையும் மறுப்பனவாகும். இனி, இளம்பூரணர் இச்சூத்திரத்திற்குக் கூறும் உரை மற்றிருவர் உரையிற் கண்ட பல தவறுகளைக் கொள்ளாமல் நடக்கின்றது; குட்டமும் என்பதில் உள்ள உம்மையைப் பேராசிரியர் உரைபோல ஒழித்தொதுக்காமல் உள்ளபடிக் கொள்ளுகிறது. பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிற் போலக் குட்டத்தைச் சீர்குறைந்த அடியென்று கொண்டு, குறைந்த அடி நேரடிக்குப் பொருந்துமென ஒவ்வாவுரை கூறி நல்ல சூத்திரத்தை யல்லதாகச் செய்யாமற் குட்டத்தைக் கலியுறுப்பான தரவெனக்காட்டிச் செவ்வமைதி பேணுகின்றது. எனில், மண்டிலத்தை மற்றிருவர் போலவே, இவரும் ஆசிரியமெனக் கூறுவதுமட்டும் அமைவுடைத்தாகாது. மேலே பேராசிரியர் உரையை யாராயுங்கால் காட்டிய (v) - (vi) ஆவது முரண்பாடுகள் இவருரைக்கும் தடையாக நிற்கும். ஆசிரியத்திற்கு வரும் அடிவகைகளெல்லாம் முன் செய்யுளியல் 52, 53, 67, 68, 69ஆவது சூத்திரங்களில் உலப்பக்கூறி விளக்கி விட்டதால் அதற்கு நேரடி பொருந்துமென்று இங்கு ஆசிரியர் மீட்டும் கூறுவதாகக் கொள்ளுதல் பொருந்தாது. மேலுமிச்சூத்திரம் கலியிலக்கணப்பகுதியின் முதற் சூத்திரமாதலானும் இதில் கலியன்றி ஆசிரிய உறுப்பை இங்குக் கூறற்கில்லை. இவருரையிற் குறைவு இவ்வளவே. மற்றிருவர் போலாது இச்சூத்திரம் சீர்குறைந்த அடியைக் குறியாமல் நேரடிபயிலும் பாவுறுப்புக்களையே சுட்டும் நோக் குடையதென இளம்பூரணர் கண்டு கூறினது பாராட்டத் தக்கது. இனி, இச்சூத்திரம் நுதலும் நேரிய பொருள் தெளிதலெளி தாகும். இதற்கு முன்னெல்லாம் பிறபாவகை யிலக்கணங்கூறி முடித்து ஆசிரியர் இது முதல் 156ஆவது சூத்திரம் வரை கலியிலக் கணம் வகுத்துச் செல்லுவதால், இதில் வரும் பகுதி யெல்லாம் கலியுறுப்புக்களாகவே கருதப்படல் வேண்டும்; முதலு மிறுதியுமான ஒத்தாழிசையும் குட்டமும் (தரவும்) கலியுறுப்புக்களாகாலான், இடைநிற்கும் மண்டிலயாப்பு மட்டும் கலியல்லாத ஆசிரியமாகக் கருதுதல் பொருந்தாது. அதுவும் கலியுறுப்பாதலே அமை வுடைத்தாம். (i) இச்சூத்திரங் கூறு மூன்றனுள் முதல் நிற்கும் ஒத்தாழிசை கலி நால்வகை யுளொன்றான கலிப்பாவன்று; கலிப்பாவகைகளில் வரும் ஒத்து மூன்றியலும் தாழிசையுறுப்பேயாகும் (செய்.சூ. 142) இவ்வாறன்றி, ஒத்தாழிசைக் கலிப்பாவையே குறிப்பதாகக் கொள்ளின் அப்பா முழுதும் அப்பாவுறுப்புக்களனைத்தும் நேரடி கொள்ளு மென்ற நியதியில்லாமையால், நாற்சீரடி கொண்டு நடக்கும் தாழிசையுறுப்பு மட்டுமே இங்குச் சுட்டப்பட்ட தென்பதே பொருந்துவதாம். (ii) இறுதி நிற்கும் குட்டம் என்பது கலியுறுப்பான தரவாகும். குட்டம் எனினும் தரவெனினும் ஒக்கும் என்று இளம்பூரணர் இச்சூத்திரவுரையில் கூறுதல் கவனிக்கத்தக்கது. (iii) இனி இவற்றினிடை நிற்கும் மண்டிலயாப்பும் அடைவே அராகமென்னுங் கலியுறுப்பேயாதல் வேண்டும். அராகம் என்பது அறாது கடுகிச்சேறல் என்று பேராசிரியர் எருத்தே கொச்சகமென்னும் செய்யுளியல் 152ஆவது சூத்திர உரையில் விளக்கியுள்ளார். உருண்டோடும் நடையுடைமை அராக வியல்பு. உருட்டு வண்ண மராகந் தொடுக்கும் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனாரும் (செய். 232). இனி, மண்டிலம் என்பது வட்டமாயோடல் அல்லது உருண்டோடல் எனும் பொருட்டாம். (2,3 பிங்கலம் 3919) (மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி 3 ஆம் தொகுதி பக்கம் 1601) புறநானூற்றுச் செய்யுள். 30இல் பரிப்புச் சூழ்ந்த மண்டிலம் என்றும், புறப்பொருள் வெண்பாமாலை, வென்றிப்படலத்தில் செலவொடு மண்டிலம் சென்று என்றும், வருதலுங்காண்க. ஆகவே, மண்டலித்து அறாது உருண்டோடும் இயல்புடைய அராகமே மண்டிலயாப்பெனச் சுட்டப் பெறுவது அமை வுடைத்தாகும். இனி, இச்சூத்திரப் பொருள் வருமாறு: ஒத்தாழிசை, அராகம், தரவு என்ற மூன்று கலியுறுப்புக்களும் நாற்சீரடியான நேரடி பொருந்தி வருவனவாம் என்று புலவர் கூறுவர். இனி இப்பொருளே இதையடுத்து வரும் இரண்டு செய்யுளியற் சூத்திரங்களுக்கு மியைபுடையதாகும் என்பதை அவ்வச்சூத்திரப் பொருளாராய்வுழிக் காட்டுவன். சூத்திரம் : 116 குட்டம் எருத்தடி யுடைத்து மாகும். தரவில் ஈற்றயலடி குறைந்து வரும் என்பதே இதன் பொருளென உரையாசிரியரும் பேராசிரியருங் கூறுவர். இனி, நச்சினார்க்கினியரோ இதில் எருத்தைத் தரவென்றும் குட்டத்தைக் குறைந்த அடியென்றும் தாம் மேற் சூத்திரத்தில் கொண்டபடியே ஈண்டும் கூறித் தரவினது ஈற்றடி குறைந்து வருதலை யுடைத்தாம் என்று இங்குப் பொருள் கூறினர். எருத்து எனுஞ் சொல் ஈற்றயலடிக்காதல், தரவுக்காதல் பெயராகும். நச்சினார்க்கினியர் இங்கு எருத்தைத் தரவெனக் கொண்ட நிலையில், இச்சூத்திரத்தில், அவர் தரும் பொருளுக்கு அவசியமான ஈற்றடி சுட்டுஞ் சொல் வேறின்மையால், இவர் பொருளுக்குச் சூத்திரம் இடந்தராமை வெளிப்படை. இதில் குட்டத்தையே உரையாசிரியர் கூறியபடித் தரவெனக் கொள்ளின் குட்டம் எனும் பெயரெழுவாய்க்குப் பயனிலை யடையாய் நிற்கும் எருத்தடி என்பது ஈற்றயலடி எனும் பொருள் தருவது இனிது விளங்குவதாம். இதனால், மேற்சூத்திரத்தில் நேரடிகொள்ளுமென்ற தரவின் ஈற்றயலடி ஒரோவழிச் சீர்குறைந்த அடியுமேற்கு மென்பதைத் தெரிவிக்கவே இச்சூத்திரம் எழுந்த தாகும். இப்படி ஈற்றயலடி குறைந்துவருதல் சிறுவரவிற்றென்று சுட்டற்கே, உடைத்துமாகும் என இதில் ஆசிரியர் உம்மை கூட்டியுரைத்துள்ளார். பேராசிரியர் குட்டம் எருத்தடியின்கண்ணும் வரும் என்று இதற்குப் பொருள்கூறி, குட்டம் இடைவருவதன்றி ஒருபாட்டின் ஈற்றயலடிக்கண்ணே வந்தொழிதலும் உண்டு எனச் சிறப்புரை யானும் அப்பொருளை வலியுறுத்தினார். எருத்தடியை ஈற்றயலடி என்றிவர் கொண்டது பொருந்தும். குட்டம் குறைந்த வடியென்றால் இவர் கருத்தின்படி முந்திய சூத்திரத்தானே இவ்விலக்கண மடங்குமே. மீட்டொரு சூத்திரமிங்கு வேண்டா. நாற்சீரடிப்பாக்களில் எங்கும் குறைந்தவடி வருமென்று அதற்கிவர் பொருள் கூறினதாலேயே ஈற்றயலில் குட்டம் வரலாமென்பது போதருமே. இனி, இவர் கருத்தின்படி இச்சூத்திரமே பொதுவாக எப்பா வினும் ஈற்றயலடி குட்டமாக (குறைந்ததாக) வரும் என விதிப்ப தாகும். ஈற்றயலடியே ஆசிரிய மருங்கிற்றாற்ற முச்சீர்த்தாகு மென்ப (செய் . சூ. 68) என்று முன் தெளிவாகக் கூறிவிட்டாரா கையால் இங்கு அவ்வாசிரியமல்லாத வேறு இன்னபாவினீற்றயலினும் குறைந்த குட்டம் வருமென விளக்காமல் வாளா கூறினாராசிரியர். ஆகவே அவ்வாறு குற்றப்பட வரும் பொருளை இச்சூத்திரத்திற் குரியதாக ஆசிரியர் கருதியிராரென்பது ஒருதலை. சூத்திரம் : 117 மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும் செந்தூக் கியல வென்மனார் புலவர். இதற்குப் பேராசிரியர் கூறும் பொருளாவது: மேற்கூறிய மூன்றனையும் இன்னபாவென்பது உணர்த்தினான். அவற்றுள் இறுதிநின்ற மண்டிலமுங் குட்டமும் ஆசிரியப்பாவை உறுப்பாக உடைய என்றவாறு இனி, நச்சினார்க்கினியரும் மண்டிலம், குட்டமென்று முற்கூறியவையிரண்டும் ஆசிரியப்பாவின்கண்ணே பயில நடக்கும் என்று கூறுவர் புலவர் என்றே இதற்குப் பொருள் கூறினார். இவ்விருவருரையிலுங் காணப்படும் முரண்பாடுகள் பலவாம். மண்டிலம், குட்டம் என்பவற்றிற்குரிய பொருளை இவ்வுரைகாரரிருவரும் இச்சூத்திரத்திற்குத் தாம் கூறும் உரையில் விளக்கவில்லை. முந்திய சூத்திரத்தில் மண்டிலத்தை ஆசிரிய மெனவும், குட்டத்தைக் குறைந்த அடியெனவும் இவர்கள் கூறியதால், அதுவே போதும்; அப்பொருளை இச்சூத்திரத்திலுமச் சொற்களுக்கு இவர் கொண்டாரென்பதமையுமெனில், அது பொருந்தாமை காண்போம். முதலில் மண்டிலம் என்பதே ஆசிரியப் பாவாமானால், அதனைச் செந்தூக்கியல என ஆசிரியர் கூறுவது எவ்வாறு இயையும்? செந்தூக்கு என்பதும் ஆசிரியத்தையே குறிப்பதாம். செந்தூக்கென்பது ஆசிரியப்பா என்றவாறு என்று பேராசிரியர் இச்சூத்திரத்தின் கீழ். சிறப்புரையில் வற்புறுத்தினார். முன், வஞ்சித்தூக்கே செந்தூக்கியற்றே எனும் 71ஆவது சூத்திரத்தின் கீழ் உரையிலும், செந்தூக்கென்பதை இவ்வுரைகாரரும் ஆசிரிய மெனவே கூறியமைத்தது மிங்குச் சிந்திக்கத்தக்கது. எனவே ஆசிரியம் ஆசிரியத்தி னியல்புடையது என இதில் ஆசிரியர் கூறினார் என்பது நகைக் கிடனாவதன்றி நல்ல பொருளெதுவும் தருவதில்லை. (2) இனி, ஆசிரியமும் குட்டமும் ஆசிரியப்பாவினை யுறுப்பாக உடைய எனும் பேராசிரியர் கூற்றுப் பெரிதும் பிழை படுவதாகும். ஆசிரியமாகிய மண்டிலம் ஆசிரியப் பாவினையே தனக்கு உறுப்பாகக் கொள்ளுமா றெங்ஙனம் ஆகும்? ஒருகால் மண்டிலம் என்பது ஆசிரியப்பாவகைகளுள் சிலவாகிய நிலை மண்டிலம் அடிமறி மண்டிலம் மென்ற மண்டலித்துவரு மிரண்டனையே குறிக்குமெனினும், ஆசிரியப்பாவினுள் அதன் சிலவகையாயடங்கு மிவ்விரண்டும் தம்மினும் விரிந்த செந்தூக்கா மாசிரியப் பாவினைத் தமக்கு உறுப்பாயுடைய என்பதும் பொருந்தாது. இதுவே போல, ஒத்தாழிசையாகிற் கலிப்பாவினை உறுப் பாகவுடைய என இவர் கூறுவதும் பழுதேயாகும். ஒத்தாழிசைக்கலி கலிப்பாவகை நான்கனுள் ஒன்றாகும். ஒத்தாழிசைக் கலிப்பாக்களில் வரும் பலவுறுப்புக்களில் ஓருறுப்பேயாகும். எதுவாயினும் கலிப்பாவினை யுறுப்பியாகவும், ஒத்தாழிசையை யுறுப்பாகவும் கூறலாமன்றிக் கலிப்பாவினை ஒத்தாழிசைக்கு உறுப்பெனல் ஒருவகையானும் பொருந்தாது. அன்றியும், (3) குட்டத்தை முன் ஒத்தாழிசையும் எனவரும் சூத்திரத்தில் சீர் குறைந்துவரும் அடியொன்று கூறிவைத்து, இச்சூத்திரத்தின் கீழ்ச் சிறப்புரையில் பேராசிரியர், இணைக்குறள், நேரிசை என்ற இரண்டு ஆசிரியப்பாவகைகளே இருவகைக் குட்டமாம் என்று குறிப்பது, முன்னுக்குப் பின் முரண்படக் கூறும் குற்றமாகும். குட்டம், சீர்குறைந்த அடியையாதல், நேரிசை முதலிய ஆசிரியப் பாவகையையாதல் குறித்தல் வேண்டும். இரண்டில் யாதானு மொன்றையே இச்சூத்திரங்களில் வரும் குட்டத்திற்குப் பொருளாகத் துணிவதைவிட்டு, முன் சூத்திரத்தில் குறைந்தஅடி எனவும், இச்சூத்திரத்திலதையே ஆசிரியப்பாவகை எனவும் கொள்ளுதல் இலக்கண அமைவுடைத்தன்றாகும். பல வேறு பொருளில் ஒரே சொல்லை இலக்கண விதிகளில் ஆசிரியர் கூறி மயங்கவைப்பாரல்லர். (4) மேலும் குட்டத்தை ஆசிரியப்பாவகை எனக் கொள்ளின், அப்பொருள் இங்கு ஆசிரியரின் இரு சூத்திரங்களையும் அலமரச் செய்யும். முன்னைச் சூத்திரத்தில் ஆசிரியப்பாவகை நான்கினையும் குறிப்பது ஆசிரியர் கருத்தாயின், ஒத்தாழிசையும் ஆசிரியப்பாவும் என்று தெளிவாகக் கூறுவதை விட்டுத் தாம் எங்கும் பொருளை அல்லது இலக்கணத்தை விளக்கிக்காட்டாத மண்டிலம், குட்டம் என இரண்டு சொற்கள் பெய்து, ஆசிரியமொன்றைச் சுட்ட மாட்டார். அதுவுமன்றி, பேராசிரிய ரிங்குக் கூறுமாறு, மண்டிலம், நாற்சீரடியே யாத்துவரும் நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பாவகைகளை மட்டுஞ்சுட்டி, குட்டம், குறைந்த அடிகளை இடையிடை மிடைந்துயாத்த இணைக்குறள் நேரிசை ஆசிரியப் பாவகைகளையே குறிப்பதாயின் மண்டிலத்தின்கண் குட்டம் வருங்கால் என்று முன் சூத்திரத்தின் கீழ்ப் பேராசிரியர் கூறியது பொருந்தாக் கூற்றாகிமுடியும். மண்டில ஆசிரியப்பாக்களில், குட்டம் வருமாறில்லை. குட்டமாவன, மண்டிலப் பாவாகா, எனைத்து வகையானும் இவர்தம் கூற்றுக்கள் இடர்ப்பட்டழியும். இனி, முன் சூத்திரத்தில், நாற்சீரடியான் மண்டலித்து வரும் ஆசிரியமும் வெண்பாவும் மண்டிலத்துளடங்குமென விளக்கிய நச்சினார்க்கினியர், அதை மறந்தோ அல்லது அதற்கு மாறாகவோ. இச்சூத்திரவுரையில், அவ்விருபாக்களையு மடக்கிய மண்டிலம் அவற்றுளொன்றேயான ஆசிரியப்பாவின்கண் பயில நடக்கும் தன்மையை யுடைய எனக் கூறுவதும் வியப்பையே விளைப்பதாகும். இவை பலவற்றானும் இச்சூத்திரத்திற்கு இவ்விருவர் தரும் உரையும் தக்கதன்று எனத் தெளியலாகும். இனி இதற்கு இளம்பூரணர் கூறும் உரையாவது: மண்டிலமாகக் கூறப்படும் பாவும் குட்டமெனக் கூறப்படும் பாவும் அகவலோசை யியல்பின. இவர் மண்டிலத்தை ஆசிரியமெனவும், குட்டத்தைத் தரவெனவும் முன் சூத்திரத்திற் கூறினதால், அப்பொருளே இங்குங் கருதினரென்பதே பொருத்தமாகும். அவ்வாறு கொள்ளுவதில் மற்றை யுரைகாரருக்குக்காட்டிய தடை முரண்களில் சில இவ்வுரையமைவின்மையை வலியுறுத்தும். ஆகையால், இதில் மண்டிலத்தை அடிமண்டிலித்துவரும் அராகமாகவும், குட்டத்தை யிவர் கூறியவாறே தரவெனவுங் கொள்ளுவதே இச்சூரத்திரத்திற்கு அல்லலற்ற நல்ல பொருளமைவு அளிப்பதாகும். முன் 115ஆவது சூத்திரத்தால் தாழிசை, அராகம், தரவு எனும் மூன்று கலியுறுப்புக்களும் அளவடிபயின்று வருமென விளக்கி, அதையடுத்து 116ஆவது சூத்திரத்தில், அம்மூன்றனு ளொன்றான தரவு பெரும்பாலும் நேரடி பெறுவதியல்பாயினும், ஒரே வழி அதன் ஈற்றயலடி குறைந்து வருவதுமுண்டு எனத் தெரித்து இச்சூத்திரத்தால் அத்தரவொழிய, தாழிசை, அராகமெனுங் கலியுறுப்பிரண்டும் செந்தூக்கியல் பெற்று நடக்கும் என்று ஆசிரியர் விளக்கினார் எனக் கொள்வதே இம்மூன்று சூத்திரங் களுக்கும் ஒத்து முரணற்று ஏற்புடைய பொருட்பொருத்தம் தருவதாகும். எனவேஅராகம், தரவு என்ற இவ்விரண்டு கலியுறுப் புக்களும் ஆசிரியத்தூக்கினியல் பெற்று நடக்குந் தன்மையன, என்று புலவர் கூறுப என்பதே இச்சூத்திரத்துக்குப் பொருந்தும் பொருளாகும். சூத்திரம் : 154 தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்ததும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும். சூத்திரம் : 155 பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே. இச்சூத்திரங்களுக்கு நச்சினார்க்கினியர், பேராசிரியரது உரையையே வேறுபாடு யாதுமின்றிச் சில சொல் மாற்றங்களுடன் கொண்டு, தருதலான் இவ்விருவர் உரையும் ஒன்றேயாகக் காண்கிறோம். முதற் சூத்திரத்தின் கீழ், கொளுவுரையில் பேராசிரியர் வெண்கலி என்றதை நச்சினார்க்கினியர் கலிவெண்பா என மாற்றினது தவிர, இவருள் வேறு பொருள் மாறுபாடு காணற் கில்லை. இருவரும் இங்குத் தொல்காப்பியச் சூத்திர அடிகளை இரு சூத்திரமாகக் கொண்டு, இருவேறு விதி வகுப்பனவாகக் கருதுகின்றனர். இவற்றுள் முன்னையது அதன் முன்னர்க்கூறிய ஒருபொருள் நுதலிய என்னும். (செய். 153) சூத்திரத்திற் கூறிய கலிவெண் பாட்டின் வேறாய் விரவுறுப்புடைமையின், ஆசிரியர் அதனை இங்குவேறு கூறினதாக ஈண்டு இவ்விரண்டுரைகாரரும் துணிகின்றனர். துணிந்து, இதன்கீழ், தரவிற்கும் போக்கிற்கும் இடையன பாட்டாகிப் பயின்றும், வேறு நின்ற ஒரு சீரினை அளவடியோடு அடுக்கிக்கூற ஐஞ்சீராகியும், அவ்வாறே இருசீர் அடுக்க அறுசீர் பெற்றும், வெண்பா எனப்பட்ட உறுப்பின் இயற்கை சிதையாமல் பொருள்புலப்படத் தோன்றும் என்று பொருள் வரைகின்றனர். எனவே செந்துறையாகித் திரிபின்றி யார்க்கும் வெள்ளடியியலால் ஒரு பொருள் கூறும் கலிவெண்பாட்டு வேறு முற்கூறப்பெற்றதும், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும், ஐஞ்சீரும் அறுசீரும் அடுக்கப்பெற்று வெண்பா இயலான் வெளிப்படத்தோன்றும் வெண்கலிப்பா வேறு இச்சூத்திரம் கூறுவதெனக்கொண்டு, கலிவெண்பாட்டு இரு கூறுபடுமெனவும், அதனால் ஆசிரியர் இருவேறு சூத்திரங்களால் அவற்றை விளக்கி விதிகள் வகுத்தனர் எனவும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ஓராங்குக் கூறுகின்றனர். பிறகு, பாநிலை வகையே ... ... நுவன்றறைந்தனரே என்பதைத் தனிவேறு சூத்திரமாகக் கொண்டு, அதற்கு, மேற்பாவின் நிறைநிலை வகையான் கொச்சகக் கலியாமென்று நூலறிந்த ஆசிரியர் கூறித்துணிந்தனர் என்று பொருள் கூறுகின்றனர். இவ்வாறு இருவேறு சூத்திரங்களாக்கி அவற்றிற்கு இவர்கள் தரும் உரை, ஆசிரியர் கருத்தொடு பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. முன் - இருசூத்திரங்களால், வெள்ளடியியலால் திரிபின்றி வரும் கலிவெண்பாட்டு ஒன்று, தரவு முதலிய உறுப்பொடு வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் வெண்கலிப்பா ஒன்று, என இன்னணம் கலிவெண்பா இருவகைத்தென்று ஆசிரியர் கூறக்கருதின குறிப்பை இவர்கள் யாண்டுக் கண்டனர்? அஃதை விளக்குகின்றார்களில்லை. ஆசிரியர் செய்யுளியலில் பாட்டு உரைநூலே எனவரும் 79ஆம் சூத்திரத்தால் செய்யுள் எழுவகைப் படும் எனக்கூறிப், பின் ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே எனும் 105ஆம் சூத்திரத்தால் பாட்டு நான்கு வகைப்படும் என விளக்கினார். அதன் பிறகு, ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டே, கொச்சகம், உறழொடு கலிநால் வகைத்தே என்ற 130ஆம் சூத்திரத்தில் மேற்கூறிய தமிழ்ப்பாவகை நான்கனுள் கலிப்பா நான்கு வகை பெறும் என்று தெளித்தார். இவற்றுள், முதலதான ஒத்தாழிசைக் கலிப்பாவின் இலக்கணம் தொகை வகைகளை ஒத்தாழிசைக்கலி எனும் 131ஆம் சூத்திர முதல் எருத்தே கொச்சகம் எனும் 152ஆம் சூத்திரம் வரையுள்ள சூத்திரங்களில் ஆராய்ந்தார். இரண்டாவதான கலிவெண் பாட்டிலக்கணத்தை ஒருபொருள் நுதலிய.... எனவரும் 153ஆம் சூத்திரத்தில் விளங்கக் கூறினார். நான்காவதான உறழ்கலிப்பா இலக்கணம் கூற்றும் மாற்றமும்.... உறழ்கலிக் கியல்பே எனும் 156ஆம் சூத்திரத்தால் விளக்க முறுகிறது. எஞ்சிய கொச்சகக் கலிப்பா இலக்கணம், இவ்வுரைகாரர் கொள்கைப்படி யாண்டும் விளக்கப்பெறாது ஒழிவதாகும். கலிப்பாவகை நான்கில் மூன்றற்குத் தனித்தனி இலக்கணத்தை விளக்கும் ஆசிரியர் இக் கொச்சகக்கலி ஒன்றற்கு மட்டும் இலக்கணத்தை விளக்காமல் பெயரளவில் சுட்டிச் சூத்திரித்து அமைத்தார் என்பது இயைபுடைய தாமா? கலிவகை நான்கில் இரண்டாவதான ஒருபொருள் நுதலிய எனும் கலிவெண்பாட்டிலக்கணச் சூத்திரத்திற்குப் பின்னும், கூற்று மாற்றமும் எனும் நான்காவதான உறழ்கலி இலக்கணச் சூத்திரத்திற்கு முன்னும், நிறுத்த முறையானே கலியின் மூன்றாம் வகையான கொச்சக இலக்கணம் கூறப்பெறல் வேண்டும்; அதுவே முறையுமாகும். இவ்வுரைகாரர்கள் இவற்றின் இடை நின்றதை இருவேறு சூத்திரமாக்கிக் கொண்டு, ஒன்று முற்கூறிய கலிவெண் பாட்டின் வேறு பாடெனவும், மற்றொன்று கொச்சக மெனவும் கொள்கின்றார்கள். இதில், முன்னையதில் இலக்கணம் மட்டுங் கூறிப் பெயர் எதுவும் கூறப்பெற்றிலது; பின்னையதிற் பெயர் மட்டும் கூறி இலக்கணம் எதுவும் விளக்கப்பட்டிலது. ஆசிரியர் இப்படி வாளா இலக்கணம் கூறிய முற்சூத்திரத்தில் தாம் விளக்க நினைப்பது வெண்கலியின் வேறுபாடே ஆமெனில், அதனை விளங்கக் கூறாது ஒழிவாரா? செய்யுளியல் முழுதும் பாக்களுக்குத் தாம் கூறும் பகுதிகள் மீட்டும் வகைபெற்று வேறுபடு மிடந்தோறும், அவ்வாறு அவற்றுள் ஒவ்வொன்றும் இனைத்து வகைப்படும் எனவும் அவ்வகை ஒவ்வொன்றும் இன்ன இலக்கணம் உடையதெனவும் ஆசிரியர் விளக்கிப் போவதே நியதமாயிருப் பதைக் காண்கிறோம். ஆசிரியம் வஞ்சி.... நாலியற்றென்ப பாவகை விரியே (சூத். 105) எனவும், ஒத்தாழிசைக்கலி..... கலிநால் வகைத்தே (சூத். 130) எனவும், அவற்றுள், ஒத்தாழிசைக்கலி இருவகைத்தாகும் (சூத். 131) எனவும் கூறிப், பின்னதின் இருவகை இலக்கணத்தை முறையே இடைநிலைப்பாட்டொடு (சூத். 132) ஏனைய ஒன்றே (சூத். 138), எனவும், அவ் ஏனைய ஒன்றான புறநிலை ஒத்தாழிசையை அதுவே, வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே (சூத். 139) எனவும், ஒருபோகியற்கையும் இருவகைத்தாகும் (சூத். 147) கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று (சூத். 148) எனவும், இவ்வுட் பகுதிகளினிலக்கணத்தை முறையே வண்ணகம் தானே (சூத். 149), அம்போதரங்கம் (சூத். 151). எருத்தே கொச்சகம் (சூத். 152) எனவும் நிரல் நிறையாகச் செவ்விய முறையில் தவிராது கூறிப்போந்த ஆசிரியர். கலிவெண்பாட்டு இருவகைத்தாமென்பது தமது கருத்தாயின் அதனைமட்டும் விளக்காமல் உரைகாரரை உய்த்துணர வையார். அஃதன்றியும், தரவும் போக்கும்.... வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் என்பதில் தாம் கூறும் இலக்கணம் எதற்கு எனத் தெளியக் கூறாமலும், தோன்றும் என்பதற்கு உரிய எழுவாய் அல்லது முதனிலையை மறைத்தும் மயங்கவையார் இந்நின்ற நிலையில் தோன்றும் என்பது பொருண்முடியாமல் பிறிதொரு சொல்லை அவாவி நிற்பது தேற்றம். இவையேயும் அன்றிப், பாநிலை வகையே கொச்சகக்கலியென நூனவில்புலவர் நுவன்றறைந்தனரே என்பது தனிச்சூத்திரமெனின், பொருளின்றி நின்றுவற்றும். கொச்சகக் கலியாவது பாநிலை வகையே என்பதால் தெளியப்படுவது எதுவுமில்லை. பிற பாவகைகள் ஒவ்வொன்றற்கும் தனித்தனியே இலக்கணம் கூறி விளக்கின ஆசிரியர் ஈண்டுக் கொச்சகக்கலி வகைக்கு மட்டும் இலக்கணம் கூறாமைக்குக் காரணம் காண்டல் அரிது. இதில் இலக்கணம் எதுவுமின்றி வாளா கொச்சகக் கலியெனப்பெயரும், முன்னதிற் பெயரொன்றுமின்றி வாளா இலக்கணமுங் கூறினரெனக் கொண்டு, ஆசிரியர் முன்னதிற் கூறாப்பெயர் வெண்கலிப்பா எனவும், பின்னதிற் கொச்சகக் கலிக்குக் கூறா இலக்கணம் பாவின் நிலைவகை எனவும் உரை காரர்கள் கூறுவதில் பெறத்தகும் ஊதியம் என்னை? மேலும் பாநிலைவகை எனுந் தொடர் எப்பாவின் எந்நிலை என்பதை விசதமாக்காமல் நிற்பதும் தெளிவே. ஆகவே, தோன்றும் எனுஞ்சொல்லும், பாநிலைவகை எனுஞ் சொற்றொடரும் முடிவின்றித் தனித் தனி நின்று பொருள் குன்றுவதினும், அவை ஒன்றையொன்று ஒன்றித் தழுவக் கண்டு, ஈண்டுச் சூத்திரம் இரண்டன்றி ஒன்றேயாக எல்லா அடிகளையும் இணைத்து நோக்கின், பொருந்திய பொருளும் திருந்திய இலக்கணமும் மாணச்சிறந்து காணப்படும். இவற்றைத் தொடுத்துப் படிப்புழி முன்னதிற் கூறும் இலக்கணம் அமைந்து தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியாம் என்பது இனிது பெறப்படும். எனவே, இதற்கு முற்கூறிய கலிவெண்பாட்டிலக்கணச் சூத்திரமும், இக் கொச்சகக் கலியிலக்கணச் சூத்திரமும், இதன்பின் உறழ்கலி யிலக்கணச் சூத்திரமுமாக நிரலே நின்று, ஆசிரியர் முதலில் ஒத்தாழிசைக் கலிமுதல் தொகுத்துக்கூறிய கலிவகை நான்கும் மலைவின்றி முடிந்து அடைவே இலக்கணம் அடையக் காண்கிறோம். ஆகையால் இங்கு இஃது இவ்வாறு ஒரு சூத்திரமாய் நிற்பது கொண்டு, தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும், ஐஞ்சீரடுக்கியும் அறுசீர்பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக்கலியென நூலறிபுலவர் விளக்கித் தெளித்தார் என்ற செம்பொருள் கண்டு, மருளகற்றித் தெருளவைப்பதே இயலியைபும் இலக்கணப் பயனொடு பொருணயமும் ஒருங்கு தருவதாகும். தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை களவியல், கற்பியல், செய்யுளியல்கள் முற்றும். ( குறிப்பு : நாவலர் ச.சோ. பாரதியார். 1942இல், இந்நூலை வெளியிட்டபோது, இதனை எட்டயபுரத்தரசருக்குக் கையுறையாய் உரித்தாக்கினார். அஃது இவண் தரப்படுகிறது!) இளசை வளநாட்டு வேந்தர், மாட்சிமிக்க திருவளர்ச் செம்மல், இராச செகவீர ராம முத்துக்குமார வெங்கடேசுர எட்டப்ப நாயக்க ஐயனவர்கள்பால் எழுமையும் தொடரும் உழுவற் கையுறையாய் அகத்திணையியற் புத்துரையை ஒப்புவிக்கும். உரிமையுரை மூவேந்தர் குடிமுடிந்து முத்தமிழும் வீழாமல் முழங்க வைப்போர், பாவேந்தர் பாடமறப் பகைமன்னர் பாராட்டப் பாராள் வேந்தர், நாவேந்தர் வாழ்த்தவளர் புகழறம்பல் கலைகளெலாம் நாளும்தங்கள் கோவேந்த ரென்றுரிமை கொண்டாடக் கொற்றமுயர் வாகை கொள்வோர். (1) பேரால நிழலமர்ந்து பேசாமல் மெய்யுணர்த்தும் பெரியோன் முன்னாள் ஓரால முண்டதற்குக் கடவுளரால் இறைவனென உயர்த்தப் பெற்றான்; *ஊரால மைந்தினையுண் டோங்கறங்காத் தெண்டிசையு மாணை போக்கும் ஏரால மைந்திறைவர் ஏட்டமரென் றிசைபெறுத லியல்பாமன்றே. (2) தென்னிளசை மன்னர்வெங்க டேசுரெட்டர் சீர்மரபு சிறக்கத் தோன்றி மன்னுபுகழ் மணந்துமகிழ் மகிபனிள வயதில்முதிர் மதியின் மிக்கான். கன்னிமுதல் வடவரையுங் கடந்துயரும் புகழ்மரபின் கடவுட் சால்பால் தன்னுலகிற் கலிதொலையத் தள்ளாத வளமலியத் தரணி யாள்வோன். (3) மதிமரபன், குளிர்வெண்முழு மதிக்குடையை நிழற்றியறம் வளர்ப்போன், வாய்மைப் பதி படிறு சதிகரயப் பரிவறியான், பாவவியற் பகைவன், மேலோர் துதிமுத்துக் குமாரவெங்க டேசுரெட்ட துரையென்பால் சுரக்கு மன்பால் முதியதமிழ்க் காப்பியரி னகத்திணைக்கென் புதியவுரை முடித்துத் தந்தேன். (4) பிறந்ததின முதலாகப் பெற்றெடுத்த குரவரினும் பெருகுமன்பாற் சிறந்ததெலாஞ் செய்துதவிச் சிறியேனை யாளாக்கித் திருவார்கல்வி துறந்தவரும் விரும்புதமிழ்ச் சுவைஅறிவு தந்தோர்தம் மருகன், செவ்வேட் கிறந்தாலும் பிறந்துழைப்பேன் இவ்வுரையைக் கையுறையாய் உரித்தாக்கின்றேன். (5) மலையகம் பசுமலை ச.சோ. பாரதி. 1. 10. 42 ( குறிப்பு : நாவலர் ச.சோ. பாரதியார், இந்நூலை 1942இல், வெளியிட்டபோது, இதனைச் செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியாரவர்கட்குக் கையுறையாய் உரித்தாக்கியுள்ளார். அஃது இங்கே தரப்படுகின்றது. மாட்சிமிக்க செட்டி நாட்டு மன்னர் உயர் திருவாளர் டாக்டர் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களுக்கு இப்புறத்திணையியற் புத்துரையைப் பாராட்டுக் கையுறையாய் உரித்தாக்கும் வாழ்த்துப்பா 1. திருவினாலத் திருவையொத்த அறிவினாலு மொருவனாய்க் கருவில்மன்னு திருமணந்த கற்பகத்தி னுற்பவன், பொருவிலாத புகழினோடு புவியிலென்று மன்னனாய் மருவிவாழு மாட்சியுற்று வழியனோர்க்கும் நல்கினோம். 2. ஆளுமன்னர் மரபினோர்தம் அறிவிலாத சிறுமையால் நாளும்வீ றிழந்துவீழ, நன்றுசூழு மறிவுசெவ் வேளுமெஞ்சு வினையையாளும் விறலினாலிப் புவியெலாம் நீளும்நல்ல புகழுமன்னர் நிலையுமன்ன நிறுவினோன். 3. இகன்மையற்ற வியல்பினால்நல் லின்சொலீர மளைஇஒண் முகனமர்ந்து முறுவலோடு சிலசொலுந் திறத்தினால் தகவளர்ந்து தாழ்விலாமற் சார்வுதீரத் தருதலால் இகபரத்தி றப்பிலாச் சிறப்பையென்று மெய்தினோன். 4. இன்னல்யாவு மடமையா லிங்கெழுவ தென்றுணர்ந்தது துன்னலா தொழித்திடத் துணிந்தண்ணா மலைப்பெயர் மன்னமக்க ளறிவுசால்நல் வாழ்வுறத்தன் நிதியினாற் பன்னரும்பல் கலைகளோங்கு கழகமுண்டு பண்ணினோன். 5. அறத்தினின்ற அசைவிலாத அறிவினல்ல ஆள்வினைத் திறத்தினின்ற சூழ்ச்சிநன்று தேர்தலொன்று துணிவினாற் சிறத்தலைத்தன் னுரிமைகொண்ட செம்மல்பாற் றொல்காப்பியர் புறத்திணைப்புத் துரைபுணர்த்திப் புகழ்புரிந்து போற்றுகேன். மலையகம் ச.சோ.பாரதி பசுமலை 10-11-42 (குறிப்பு : நாவலர் ச.சோ. பாரதியார், இந்நூலினை 1942இல வெளியிட்டபோது, புலவர்க்கும் மாணவர்க்குமென உரித்தாக்கினார் அஃது இவண் தரப்படுகின்றது) அறிவு சான்ற புலவருக்கும் அறிவவாவும் மாணவர்க்கும் மெய்ப்பாட்டியற் புத்துரையை உரித்தாக்கும் அன்புரை கரையிலாக் கடலை யொத்த கல்விதந் நிகரில் காட்சி புரையிலா வொழுக்கம் பூண்ட புலவர்க்கு முண்மை காண விரையுநல் லுள்ளந் தூய மேவுமா ணவர்க்கு மெய்ப்பாட் டுரையையென் னன்பினோடு முரிமைசெய் துவக்கின் றேனால். மலையகம் ச.சோ.பாரதி பசுமலை 11 - 11 -42 தொல்காப்பியர் - பொருட்படலம் மெய்ப்பாட்டிய லுரைப்பாயிரம் பொருட்படலப் புத்துரையின் பொதுப்பாயிரம் அகத்திணை யியலுரைத் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை இவ்விய லுரையுடனும் கூட்டிப் படிப்பது நயனொடு பயனுதவும். மெய்ப்பாடுகள் போலவே உள்ளுறை வகைகளும் சிறிது மயக்கம் தருவதால், அவற்றியல் வேறுபாடுகளைத் தெளித்து விளக்கும்படி வற்புறுத்திய மாணவரின் விருப்பத்திற்கிணங்க, உள்ளுறை விளக்கச் சுருக்கம் இம்மெய்ப்பாட்டியலுரையொடு சேர்த்திருக்கிறது. மலையகம் ச.சோ.பாரதி பசுமலை 10 - 11- 42 (குறிப்பு : 1964ஆம் ஆண்டு, இந்நூலின் 2ஆம் பதிப்பு வெளியிட்டபோது எழுதப்பெற்ற கட்டுரை இது.) அகத்திணையியற் புத்துரை அறிமுகம் வித்துவான் திரு. வீ.ப.கா. Rªju«,v«.V., தமிழ் விரிவுரையாளர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை. நாவலர் ; கணக்காயர், நற்பெரும் ஆய்வாளர், பசுமலை ச. சோமசுந்தர பாரதியார் ஆற்றிய பல்வேறு தமிழ்த் தொண்டுத் துறைகளுள் தலையாயது, தொல்காப்பியப் பொருட்படலத்திற்கு அவர் கண்ட புத்துரையாகும். மங்கிக்கிடந்த தொல்காப்பியம் அவர் ஆய்வுரையாலும் சொற்பொழிவுகளாலும் ஒரு புது மங்கல வாழ்வு பெற்றது; வளர்ந்தோங்கத் தொடங்கியது; அறிஞர் பெருமக்களைச் சிந்திக்கத் தூண்டியது; மேலும் பல உரைகள் தோன்றத் துணைபுரிந்தது. (அ) நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலிய இடைக்கால உரையாசிரியர்கள், சூத்திரங்கள்தோறும் தம்முள் பெரிதும் மாறுபட்டு, முரண்பட்டு வெவ்வேறு பொருள் கூறிக் கற்போரை மயங்க வைக்கின்றனர். நாவலர் அவ்வுரையாசிரியர் கூற்றுக்களுள் இவை இவையே ஒவ்வியன, இவை இவையே ஒவ்வாதன என ஏற்ற காரணங்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் தெளிவுறுத்தியுள்ளார். (ஆ) உரையாசிரியன்மார், வடநூன் முடிபுகளை வலிந்து புகுத்தித், தமிழர்தம் அறநெறி மாண்புச் சிறப்பைத் தாழ்த்தியுள்ள இடங்களில் எல்லாம் அஞ்சாது கண்டித்துரைத்துத், தமிழுக்கு இயற்கையாக உரிய அற எழிலை இலங்கச் செய்கின்றார். (இ) தொல்காப்பியம், வடநூல் வழியே அமைந்தது அன்று; தமிழ் மரபு தழுவியது என்று, ஆங்காங்குக் காரணங்காட்டி நிறுவுகின்றார். (ஈ) தொல்காப்பியர் நூலானது முன்பின் முரணாத அழகிய அமைப்பு முறையுடையது; ஆழம் நிறைந்தது; தெளிவு செறிந்தது; வளர் எழில் வளப்பம் வாய்ந்தது என எங்கும் எழிலுற எடுத்து விளக்கிச் செல்கின்றார். நன்னூல், நம்பியகப்பொருள், புறப் பொருள் வெண்பாமாலை முதலிய வழிநூல்களைக் காட்டிலும் சிறப்பமைப்பும் அவைபோலப் பிழைபடாப் பெரும் வனப்பும் உடையது தொல்காப்பியம் என நிறுவுகின்றார். (உ) நூற்பாக்களை விளக்குங்கால், மரபாக, இலக்கண ஆசிரியர்கள் கூறிவரும் பழைய எடுத்துக்காட்டுக்களையே மீண்டுங் கூறாது, புத்தம் புதிய, ஏற்ற, இனிய பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் தந்துள்ளதனின்றும், பாரதியாரின் சங்க இலக்கியப் பயிற்சியும் ஆழ்ந்தகன்ற அறிவுத் திறனும் அறியலாகும். (ஊ) நாவலரவர்கள், சூத்திரந்தோறும் நம் சிந்தனையைத் தூண்டிப் பல புதிய செவ்விய செய்திகளைச் சொல்லிச் செல்கின்றார். அவற்றை முழுமையும் தனித்தனி விரிக்கிற் பெருகும். எனவே, சீரிய செய்திகளுள் சிலவற்றை மட்டும் இங்குச் செப்புகின்றேன். இவை நூலை முறையே கற்பதற்குத் தூண்டுதலாக உதவலாம் என எண்ணுகின்றேன். 1. திணைப் பெயர்களின் பொருள் குறிஞ்சி, நெய்தல் முதலிய திணைச் சொற்கள், முறையே, புணர்தல், இரங்கல் முதலிய பொருளைக் குறிப்பன. எனவே அகத்திணைச் சொற்களெல்லாம் ஒழுக்கத்திற்குரிய இயற்பெயர்ச் சொற்கள். புணர்தல் ஒழுக்கத்திற்குரிய குறிஞ்சி எனும் சொல்லானது. பின்னர் ஆகுபெயர் நிலையில், குறிஞ்சி நிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சி எனும் சொல்லின் முதற்பொருள் புணர்தல் என்பதாகும். வழிப்பொருள் குறிஞ்சி நிலமாகும். இது போன்றே பிறதிணைப் பெயர்கட்கும் கொள்க. குறிஞ்சி முதலிய பெயர்கள் நிலங்களுக்கே உரிய பெயர்கள் என்றது பிற்காலத்தார் பிழைபட்டுப் பிறழ்ந்து உணர்ந்து உரைத்ததாகும். 2. நிலங்கட்கு ஏற்பத் திணை வகுக்கப்படவில்லை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நானிலங்களை வகுத்து, அவற்றிற்கு ஏற்ற ஒழுக்கங்களை வகுத்தனர் என்பது உரையாசிரியர் சிலர் கொண்ட கொள்கை. இது பிழைபட்ட பிற்காலக் கொள்கை என நாவலர் தெறிவுறுத்தியுள்ளார். திணையே (ஒழுக்கமே) உரிப்பொருளாகும். அகப்பாட்டுக்களில் அதுவே தலையாயதுமாகும். ஆகவே, ஒழுக்கங்கட்குப் பொருந்துமாறு நிலங்கள் பிரிக்கப்பட்டன எனலே, செவ்விய கொள்கையாகும். உரிப்பொருளாகிய ஒழுக்கத்திற்கு, முதற்பொருளும் கருப்பொருளும் துணையாகவும் சார்ந்து வருவனவாகவும் அமைக்கப்பட்டவை யேயாகும். ஒழுக்கங் கருதியே, அனைத்தையும் பிரித்தமைத்தல், தமிழ் மரபு தமிழ் அறவுணர்வும் ஆகும் எனப் பல்வேறு சூத்திரங்களில் நாவலர் நன்கு உணர்த்திச் செல்வதை இன்று நடுநிலை நெஞ்சங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. 3. தமிழர் தம் கடவுளர்கள் மாயோன், இந்திரன், வருணன் முதலிய கடவுளர்கள். தமிழர்தம் கடவுள்கள். மாயோன் கருநிறக் கடவுள், மாமை கறுப்பு நிறம். ஆரியர்க்கு வழக்கம். கருநிறத்தைப் பழிப்பதே யன்றிப் புகழல் அன்று. ஆனால் தமிழ் நூற்கள் கருநிறத்தைப் புகழும், இந்திரனும், வருணனும் ஆரியர் வழிபடுங் கடவுளராய்க் கருதப் பெறினும், மிக மிகப் பழங்காலத்தே திராவிடர் வழிபட்ட தெய்வங் களாகவும், பின்னர்த், திராவிடரிடம் ஆரியர் வாங்கித் தம் வழிபடு கடவுளாக்கிக் கொண்டனர் எனவும் சில மேனாட்டுப் புலவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளாலும் அறிகின்றோம் என்றுரைத்துள்ளனர். இவர் கூறியதை மேலும் ஆராய, வருணன் என்ற சொல், தமிழ்ச் சொல் எனப் புலப்படுகின்றது. வண்ணன், வண்ணான், வண்ணத் துப்பூச்சி, வண்ணக்கன் (நற். 257), வண்ணப்புறக் கந்தரத்தனார் (அகம். 49) முதலியன தனித் தமிழ்ச் சொற்கள். திருணை -திண்ணை; உருண்டை - உண்டை. இச் சொற்களில் ரு நீங்குவது போன்று, வருணன் என்பதில் ரு நீங்குவது இயல்பே. இந்திரன் என்ற சொல்லமைப்பையும் ஆராய, அதுவும் தமிழ் எனப் புலப்படுகிறது. இந்திரன் என்ற சொல்லுக்குப் பொருந்தாத முரண்பட்ட பல்வேறு வேர்ச் சொற்பொருள் ஆரிய மொழியில் கூறப்பட்டுள்ளதே. அது ஆரியச் சொல் இல்லை எனக் காட்டுவதாகும். இந்து சிந்து சிந்து - சிதறிவிழு. துளிகளாக விழு. மழை, துளிகளாகச் சிதறிவிழுவது. இந்திரன் - மழைக் கடவுள். எனவே. சொற்பொருள் வழி நோக்கினும் நாவலர் கொள்கை வலியுறுவதை நன்குணர்க. 4. சிறுபொழுது ஐந்தல்ல; ஆறே! நாற்கவிராச நம்பியாரும், சிவஞான முனிவரும் பிறரும் சிறுபொழுது ஐந்து எனக் கூறியுள்ளனர். அவர்கள் காட்டும் ஐம்பொழுதுகள்: 1. மாலை - இரவின் முதற் காலம் 2. யாமம் - இடை யிரவு 3. வைகறை - இதுவே விடியல் நேரம் 4. எற்படு காலை - சூரியன் எழுங் காலை 5. நண்பகல் - உச்சிப் பொழுது மாலை யாமம் வைகறை எற்படு காலை - வெங்கதிர் காயுநண் பகலெனக் கைவகைச் சிறுபொழுது ஐவகைத் தாகும் - 12. அகப்பொருள் விளக்கம் இச்சூத்திரத்தைப் பின்பற்றியே சிவஞான முனிவர் சிறு பொழுது ஐந்தே என நிலைநாட்டப் பல்வேறு காரணங்காட்டி யுள்ளார். முனிவர் கூறிய முக்கியக் காரணங்களையும் நாவலர் விடுத்த நன்மறுப்புக்களையும் முறையே காண்போம். சிவஞா : 1. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளை இம்முறைப்படுத்தியதற்குக் காரணம் - மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல் என்னும் சிறுபொழுதின் கிடக்கை முறையேயன்றி, வேறு ஒரு காரணமும் இல்லை. ஆகையால் சிறுபொழுது ஐந்தே. நாவலர் : 1. ஐந்திணை முறை வைப்பிற்குச் சிறு பொழுதின் கிடக்கை முறையே காரணம் என்றது முனிவர் தாமாகவே படைத்துக்கொண்ட கற்பனைக்காரணமேயாகும். இவர் கூற்றிற்கு இவரே ஆதரவாவர் தவிரத் தொல்காப்பியத்துள் ஆதரவில்லை. மேலும், மருதத்திற்குச் சிறுபொழுது இரண்டு; மேலும் பெரும் பொழுதுகளையும் ஐந்திணைகளையும் இணைக்கவில்லை. சிவஞா : 2. வைகறையும் விடியலும் இரண்டு தனித் தனிப் பொழுதுகள் அல்ல; இரண்டும் ஒரே பொழுதுதான் என்றார். நாவலர் : 2. வைகறை என்பது சூரியன் எழுதற்கு முன்னான இரவின் இறுதிநேரம். விடியல் என்பது சூரியன் புலருங்காலம். இவை இரண்டும் இரு தனிப்பொழுதுகள் என்பதைப் பண்டைத் தொகை நூற்களால் அறியலாகும். இருள் மாய்ந்து கதிர் விரியும் விடியல் என மதுரைக் காஞ்சியிலும், வான்கண் - விரிந்த என (257) மலைபடுகடாத்திலும் வைகுபுலர் விடியல், புலரி விடியல், பெரும் புலர் விடியல், தண் புலர் விடியல் எனத் தொகை நூற்களிலும் விளக்கமாய் வருவதால், சூரியன் வான்வெளிக் கிளம்பும் பொழுதே விடியல் என அறிக. இரவுத்தலை பெயரும் ஏமவைகறை என (686) மதுரைக் காஞ்சியிலும், வைகுறு மீனின்இனையத் தோன்றி. . . . . வைகறை என (48) நற்றிணையிலும் வரும் செய்திகளால், வைகறை என்பது இருள் நீங்காத இரவின் இறுதிக் காலம் என்பது அறிக. விடியல் வேறு; வைகறை வேறு. இவை இரண்டும் ஒன்றல்ல. வேர்ச் சொல் பொருளே இவை தனிச் சிறுபொழுதுகள் எனத் தெளிவிக்கும். வைகு + அறை = வைகறை; வைகுதல் - தங்குதல்; தூங்குதல். தங்குதலின் இறுதிக் காலம் வைகறை. விடிதல் - விடுபடுதல். இரவு விடுபட்ட காலம். ஒப்பு : படு - படி படிதல் ; விடு விடி - விடிதல். 3. இனிச் சிவஞான முனிவரும், நாற்கவிராசநம்பியாரும் எல்படு என்பதற்குச் சூரியன் எழுங் காலை எனப் பொருளுரைத்தனர். அதனை நாவலர் மறுத்து உரிய நற்பொருள் விளக்கியுள்ளார்: எல் என்பது சூரியன். எல்படு பொழுதை எற்பாடு என்பதே தமிழ் வழக்கு. நாள் நடைமுறைப் பேச்சில் சாயுங்காலம் எனும் தொடரும் இதனை விளக்கும். இன்றும் மலையாள நாட்டில், ஞாயிறு மறைந்து படும் திசையைப் படுஞாயிறு என்றே வழங்குவர். சங்கச் செய்யுட்களும் இச்சிறு பொழுதை நன்கு விளக்குகின்றன. பகன் மாய்ந்து இப்படுசுடர் அமையம் என (48) அகநானூற்றாலும். படுசுடரடைந்த பகுவாய் நெடுவரை என (33) நற்றிணையாலும், சூரியன் படும் பகலிறுதிக் காலமே எற்பாடு என்பது தெளிக. 4. மேலும் பகலை மூன்று பொழுதாக்கி, இரவையும் மூன்று பொழுதாக்கிக் கூட்ட, ஒரு நாளாகும். பகல் = 1. காலை, 2. நண்பகல், 3. எற்பாடு. இரவு = 1. மாலை. 2. யாமம், 3. வைகறை. எனவே சிறுபொழுது ஆறு. இதை மறந்து, ஐந்து என்றால், ஒருபொழுது விடுபட்டு, ஒருநாள் முழுமையாகாது குறைபட்டு நிற்கும். நம்பியார் தம் சூத்திரத்து ஒரு நாளை, நண்பகலொடு, குறைபட நிறுத்துகின்றார். 5. மேலும் நண்பகல் என்ற சொல்லில், நடு எனச் சுட்டப் படுவதால், முன்பகல், பின்பகல் எனப்பட்ட பொழுதுகட்கு இடைப்பட்ட பொழுதே நண்பகல் என அறியலாகும். எனவே, நண்பகல் என்ற சொல்லே, பகல் முப்பொழுது என்பதைத் தெளி வுறுத்துகிறது. இது போலவே, நடுக்கூர்ச் சாமம், நள்ளிரவு என்ற தொடர்களும், இரவின் முக் கூறுபாட்டினை விளக்குகின்றன. மேலும், கணக்காயர் காட்டும் கணக்கான காரணங்களை நூலில் கருதிக் கற்றுத் தெளிக; நம்பியகப்பொருள் இலக்கண நூல் தவறு என அறிக. 5. உடன் கொண்டு போதல் பாலையன்று! தலைவன், தன் காதலியின் பெற்றோர்க்குத் தெரியாமல், தலைவியைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு போதல் பாலைத் திணையாகும் என உரையாசிரியர் உரைத்தனர். அவர் உரைத்த கருத்தே இன்றுவரை புலவரிடம் செல்வாக்குப் பெற்று வளர்ந் தோங்கி நிற்கிறது. இக்கருத்தானது அகத்திணையின் அழகிய அமைப்புமுறை நெறியோடு பொருந்தியதன்று என நாவலர் பாரதியார் நவில்கின்றார். 1. குறிஞ்சித்திணை என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் புணர்வு ஒழுக்கமாவது போன்று, பாலைத்திணையும் தலைவன் தலைவிக்கிடையே நிகழும் பிரிவு ஒழுக்கமாகும். தலைவன் தலைவி இவர்கள் ஒருவரை ஒருவர் பிரிதல் மட்டும் பாலை யாகுமேயன்றி, இவர்கள் மற்றோரைப் பிரிவதெல்லாம் பாலை எனக் கொள்ள அகப்பொருள் இலக்கணம் இடந்தராது. கொண்டு தலைக்கழிதலில் அதாவது உடன் கொண்டு போதலில் தலைவி, தலைவனுடன், தலைக்கூடிச் செல்வதால் இருவரும் உடன் செல்வதைப் பாலைத்திணை என வகுப்பது திணைப்பகுப்பு முறைக்குப் பொருந்தாது. பாலை என்பது பிரிதல். 2. சிலர் கூறலாம், தலைவியானவள், தன் பெற்றோரையும். தோழியரையும், சுற்றத்தினரையும் பிரிந்து செல்வதால், இது பாலைத்திணையாகக் கருதலாகும் என்று. இவ்வாறு அமைதி காட்டல் பொருந்தாது. ஏனெனில், இரவுக் குறியீடு, பகற்குறியீடு, முதலிய பல்வேறு துறைகளிலும், தலைவன், தன் பெற்றோர் முதலியோரைப் பிரிந்து வருகின்றான்; தலைவியும் பிரிந்து வருகின்றாள். அத்துறைகள் பாலையாகா! மேலும் தலைவனோ, தலைவியோ, தன் பெற்றோர் முதலியோரைப் பிரிதலைப் பாலை எனக் கொள்ளுமாறு. தொல்காப்பியர் யாண்டும் தெளிவுறுத்தவில்லை. அவ்வாறாயின், உடன் கொண்டுபோதல் எத்திணையின்பாற்படும், அது ஒரு நிலத்தைக் கடந்து செல்வதால் புணர்தலுள் அடங்காது; தலைவியைத் தலைவன் உடன் கொண்டு செல்வதால் பாலையாகாது. மேலும், அது, இருத்தல், இரங்கல், ஊடல் திணை களுமாகாது. எனவே இது ஐந்திணையுள் அடங்காமல், ஒரு நிலத்துத் தனியுரிமை கொள்ளாமல், தனி உரிப்பொருளாய் வருதலுண்டு என்பதைப் பல சூத்திரங்களின் உரையில் நாவலர் விளக்கியுள்ளார். ஐயா கலித்தொகையில், உடன்போக்குச் செய்யுட்கள் பாலைக்கலிப் பகுதியினுள் பகுக்கப்பட்டுள்ளதாலும் போக்கெல்லாம் பாலை என்ற பழம் வெண்பாவாலும், அதனைப் பாலை எனக் கொள்ளலாகாதோ? என ஒருநாள் வினவியதற்குக் கணக்காயர் அறிவூட்டிய கருத்து வருமாறு : உரையாசிரியர்களின் தவறான கருத்தை ஒப்புக்கொண்டு, போக்கெல்லாம் பாலை எனப் பிற்காலத்தில் பிழைபடப் பாடிவிட்டனர். மேலும், சங்கப் பாடல்களைத் தொகுத்த காலத்துத், தொகுத்த ஆசிரியர்கள் பாடல் துறைகளை வகுத்துக் குறித்தனர்; அவர் குறித்த துறைவழியே பின்னர் உரை எழுதினர். இவை யாவும் பிழையற்றன என ஏற்றற் குரியனவல்ல. புறநானூற்றுக்குப் புறப்பொருள் வெண்பாமாலை கொண்டு துறை வகுத்ததைக்காட்டிலும், தொல்காப்பிய நெறிப் படியே துறை வகுப்பதே சிறப்பாகும். மேலும் கலித்தொகைக்கு உரை எழுதியவரும் துறை சுட்டியவரும் ஒருவரே - நச்சினார்க் கினியரே. இவர் தொல்காப்பியத்திற்குப் பொருந்தாத உரைகளைக் கூறி, அப்பொருந்தா இலக்கண உரைகட்கு ஏற்ப இயையுமாறு கலித்தொகைத் துறைகளையும் தாமே தம் போக்குப் படியே திரித்து அமைத்துக் காட்டியுள்ளார். நச்சர் கூறினும், பண்டை யாசிரியர் வேறு எவர் கூறினும் உடன்போக்குப் பாலையாகாது என்று விளக்கினார். 6. பிரிந்தவண் இரங்கல் பெருந்திணையா? உடன்கொண்டு போம் காலத்துத் தலைவியின் சுற்றம் வருந்துதலாலோ பிற காரணத்தாலோ, பிரிய நேரின், அங்கு அப்பிரிவு பற்றி இரங்குதல் பெருந்திணைப்பாற்படும் என இளம்பூரணர் இயம்பியுள்ளார். பிரிந்து இரங்கல், ஒத்த காதலரிடையே நடை பெறுவதால், இது பெருந்திணையாகாது. சீரிய காதல் தலைமக்கள் தம்முள் பிரிந்து இரங்குவது, நேரிய நெய்தற்றிணை சார்ந்த உரிப்பொருளாகும். 7. திணை மயக்குறுதல் பற்றித் தவறாய கருத்து நச்சினார்க்கினியர், அகத்திணையியல் 14ஆம் நூற்பாவில், திணை மயக்குறுதல் என்பதை விளக்குங்கால், ஓர் உரிப்பொருளொடு, ஓர் உரிப்பொருள் மயங்குதலையும் கொள்ளல் வேண்டும் என்றுரைத்துள்ளனர். இது தவறு என்பதற்குக் கணக்காயர் பாரதியார் காட்டிய காரணங்கள் வருமாறு: 1. ஓரொழுக்கச் செயல் நிகழும்போது, மற்றோர் ஒழுக்கச் செயல் எவ்வாறு நிகழ இயலும்? குறிஞ்சி நிகழும்போது பாலையும் நிகழுமோ? அவ்வாறு பலவொழுக்கங்கள் தம்முள் மயங்குமென்று தொல்காப்பியர் இயற்கைக்கு முரண்பட்டு யாண்டும் கூறவில்லை. திணைமயக்கம் என்பது யாது? (1) ஒரு நிலத்தில் அந்நிலத்திற்குரித் தல்லாத மற்றோர் ஒழுக்கம் நிகழலாம். காட்டாகக் குறிஞ்சி நிலத்தில் பிரிவு ஒழுக்கம் நிகழலாம். இதனையே, வேறுமுறையில் சொன்னால், ஓரொழுக்கம் அவ் வொழுக்கத்திற் குரியதல்லாத பிறிதொரு நிலத்தில் நிகழலாம் - எனச் சொல்லலாம். (2) மேலும் ஒரு நிலத்திற்கும், ஒழுக்கத்திற்குமுரிய கருப்பொருட்கள் பிறிதொரு நிலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் வரலாம். இவையே திணைமயக்கம் நிகழும் நெறி. 8. பண்டைக் காலத்தில் பிறப்பால் சாதி வகுப்பில்லாமை பிறப்பளவில் உயர்வு தாழ்வு கருதும் வேறுபாடுடைய சாதி வகுப்புக்கள் பண்டு தமிழகத்தில் கிடையா. நானிலங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் தமக்குள் திருமணங்கள் புரிந்தனர். அவர்கள் பெயர்களின் அமைப்பு நிலத்தின் அடிப்படையிலோ தாம் செய்த தொழிலின் அடிப்படையிலோ அமைந்தது. நுளைஞர், பரதவர் என்பன நெய்தல் நிலத்தவர் என்பதைக் காட்டும் பெயர்கள். வலையர் என்பது மீன் பிடிக்கும் தொழிலர் என்பதைக் காட்டும் பெயர். உமணர் என்பவர் உப்பு விற்பவர்; ஆயர் - முல்லை நிலத்தவர்; வேட்டுவர் - வேட்டைத் தொழிலவர். பண்டைத் தமிழகத்துத், திருமணங்கள் - பிறப்பில் உயர்வு தாழ்வு கருதாமலும் ஒத்த அன்பே சீரியதாகக் கருதி நடைபெற்றன. மேலும், மரபியலில் காணப்பெறும் ஆரியர் வருணவகை பற்றிய சூத்திரங்கள் இடைச் செருகல் என்பது தெளிக. 9. சிறுதொழில் செய்து வாழ்ந்தோரும் காதல் ஒழுக்கமுடையோரே! நாட்டை ஆள்வோரே, காதல் திண்மையுடையராகும் தகுதியுடையவர் என்றும், சிறுதொழில் செய்து எளிய வாழ்க்கை வாழ்வோர் காதல் தலைமக்கள் ஆதற்குரிய திண்மையுடையரல்லர் என்றும் இடைக்கால உரையாசிரியர்கள் தவறாக எண்ணிப் பல சூத்திரங்கட்கு உரை எழுதிவிட்டனர். இன்றும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவோர் பலரும் அவ்வாறே எழுதித் தொழில்புரியும் மக்கட்குச் சிறப்புத் தர மறுக்கின்றனர். ஆனால், வினைவலரும் அடியாரும், அன்பின் ஐந்திணைத் துறைகளில் தலைவர்கள் ஆதற்குரியரே. அவர்களுள்ளும் பலர் உறுதிப்பாடும் உயர் பண்பாடும் உடையரே. ஆதலால் அவர்களைக் காதல் துறைக் கிளவித் தலைவராகக் கொண்டு செய்யுட் புனைந் துள்ளனர் பண்டைப் புலவர் பலர். ‘c¥ò¡F beš jhßnuh? எனக் கூவி, ஊர்தோறும் விற்றுவரும் உமண் மகளையும் (அகம் 390), சாரற் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளையும் (குறுந். 95) வரையகச் சிறுதினைச் செவ்வாய்ப் பாசினம் கடியும் கொடிச்சியும் நற். 134) நிணச் சுறாவறுத்த வுணக்கல் வேண்டி, இனப்புள் ஒப்பும் புலவு நாறும் பரவர் மகளையும் (நற். 45) கிளவித் தலைவியராகப் படைத்துச் சீரிய உயிர்க் காதல் பண்பு நெறி மகளிராகக் காட்டியுள்ளமை அறிக என விளக்கியருளியுள்ளார். இதுபோன்றே வினைவல்லாருள்ளும், அடிமை பூண்ட வருள்ளும் குற்றேவல் தொழில் புரிவாருள்ளும் காதற்றலைமை பூண்டார்க்கு எடுத்துக்காட்டுக்கள் நாவலர் தம் நூலுள் தந்துள்ளார். 10. ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன ஓதற் பிரிவும் தூதிற் பிரிவும் உயர்ந்தோர்க்குரியன என்பது இச்சூத்திரப் பொருள். உயர்ந்தோர் யார்? எவ்வாறு உயர்ந்தோர்? உயர்ந்தோர் என்பவர் அந்தணர் அரசர் என்ற முதலிரு வருணத்தார் என்று இளம்பூரணர் உரை கூறினார். ஆனால் நச்சினார்க்கினியர், அந்தணர், அரசர், வணிகர் என்ற முதல் மூன்று வருணத்தாரும் உயர்ந்தோர் என்றுரைத்தனர். இவருரைகட்கு நாவலர் மறுப்பு: 1. நான்கு வருணப் பாகுபாட்டினை ஆரியர் அற நூற்களே வற்புறுத்துவன. தமிழ் மரபுக்கு அப்பாகுபாடுகள் ஒவ்வாதவை. 2. வணிகரைத் தாழ்ந்தவர் என இளம்பூரணர் நீக்கியது பொருந்தாது. வணிகரும் ஒழுக்கத்தாலும் செல்வத்தாலும் நாகரிகத்தாலும் உயர்ந்தோரே. தமிழ்நாட்டில், பண்டு அரசியல் சமுதாய அமைப்பு முறையில் நால்வகையினர் கீழோராக் கருதப்பட்டனர். 1. அடியார் : போரிலோ, விலைக்கு வாங்கியோ அடிமை யாக்கப்பட்டவர்கள். 2. வினைவலர் : தொழில் வல்லவர்கள். 3. ஏவன் மரபினர் : ஒருவனை யடைந்து அவன் ஏவலைச் செய்யும் உரிமை பூண்டு நிற்பவர். 4. ஏவல் மரபினர் ஏனோர் : நாள்தோறும் கூலிதருவார்க்குக் குற்றேவல் செய்து வாழ்பவர். இந்நால்வகையினரும் பிறர் ஏவலைச் செய்து வாழ்பவர் ஆதலின், இவர் கீழோர் எனப்படுவார். இந்நால்வகையினர் தமிழ் நாட்டிலிருந்தமையைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் நன்கறியலாகும். இந்நால்வகைக் கீழோரே, ஓதுதலுக்கும் தூதுக்கும் உரியோராகார். இவர் தவிரத் தமிழ்நாட்டில் நானில மாந்தரும் உயர்ந்தோரே. காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிவுறுதல் கைக்கிளையா? தொல்காப்பியர் கூறிய கைக்கிளை இலக்கணத்தைத் தெளி வாக அறிந்து கொள்ளாது, நம்பியகப் பொருள் நூல், கைக்கிளை பற்றித் தவறான கருத்துக்களை வலியுறுத்தி வளர்த்துவிட்டது. 1. கைக்கிளை என்பது ஒரு மருங்கு பற்றிய குற்றமற்ற காதலாகும். ஆனால் காட்சி எனும் துறை, ஒத்த காம உணர்வு தூண்டப் பெற்ற தலைவன் தலைவி ஆகிய இருவரிடையே நிகழ்வது. ஆகையால் அது கைக்கிளை ஆகாது. காட்சி முதலிய வற்றைத் தொல்காப்பியர் இருமருங்கு ஒத்த களவு நெறியில் கூறியுள்ளார். 2. கைக்கிளை ஆடவர்க்கே அமைவதன்றி, மகளிர்க்குக் கூறுவது தொல்மரபன்று. மகளிர்பால் ஒருதலைக்காமம் மிகுந்து, தாமே, ஆடவன்பால் சென்று தம்கழிகாமத்தை யுரைப்பது, பெண்ணீர்மைக்குப் பொருந்துவதன்று. அது கைக்கிளையாகாது. அது இழிந்த காமம். ஆதலால், அதனைப் பெருந்திணைப்பாற் படுத்துவதே இலக்கண மரபாகும். எனவே, பெண்பாற் கைக்கிளை என நம்பியகப் பொருள் நூலார் வகுத்தது, தொல்காப்பியத் தூய அறநெறி மாண்புக்கு முரண்பட்டது. பெருந்திணை என்ற பெயர்க்காரணம் பெருந்திணை என்ற பெயர்க்கு எல்லாவற்றிலும் பெரியதிணை. ஏனெனில் எண்வகை மணத்துள் இத்திணை ஒன்று மட்டும் நான்கு மணம் பெற்று நடத்தலின், இது பெரியதிணை எனப் பெயர் பெற்றது என்று நச்சினார்க்கினியர் விளக்கினார். இளம்பூரணரோ, பெருமைமிக்க திணை என விளக்கினார். இந்த இரு விளக்கங் களும் பொருளொடு பொருந்தாதவை. நாவலர் தரும் விளக்கம் : திணை என்பது ஒழுக்கம். இங்குப் பெருந்திணை என்பது, சிறிய ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். கழிகாமத்தைச் சிறுமை எனக் கூறும் மரபு, செருக்கும் சினமும் சிறுமையும் என்னும் குறளில் காமக்குற்றத்தைச் சிறுமை எனலால் அறிக. இது தாழ்ந்த மாக்களின் இழிந்த ஒழுக்கம். இதனைப் பெரிய ஒழுக்கம் என்றது எதிர்மறைப் பொருளில் குறித்ததாகும். தாலி பெருகிற்று, விளக்கைப் பெருக்கு என்பவற்றுள் பெருமைச் சொல், மறுதலைப் பொருளில் வருவது போன்று இழிந்த காம ஒழுக்கத்தை மறுதலைப் பொருளில் பெருந்திணை எனக் குறிக்கப் பெயரிட்டனர். இவ்வாறே நூல் முழுமையும் சூத்திரந்தோறும் நாவலர் பாரதியார் நல்ல பல கருத்துக்களை நமக்கு அள்ளி வழங்கியுள்ளார். அவர் கருத்துக்கள் பரவுவதால் மொழியானது வளமும் வனப்பும் செறிவும், திட்பமும் பெறும் என்பது திண்ணம். நன்மை தராப் புன்மைக் கருத்துக்களை எவர் கூறினும், எவர் போற்றினும் அவை நாளடைவில் நலிந்தொழியும். (குறிப்பு: 1965ஆம் ஆண்டு. இந்நூலின் 2ஆம் பதிப்பு வெளி யிட்டபோது எழுதப்பெற்ற கட்டுரை இது.) புறத்திணையியற் புத்துரை அறிமுகம் வித்துவான் திரு. நா. இராமையாபிள்ளை எம்.ஏ., மதுரை. நாவலர் பாரதியாரின் தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலுக்கு அறிமுகவுரை என்ற ஒன்று இன்றியமையாததா என்னும் கேள்வி என் மனத்தில் எழாமவில்லை. இற்றைய நாளில் தமிழார்வம் கற்றார் முதல் கல்லார் வரை, சிறுவர் முதல் முதியோர் வரை, அரசியலறிஞர் முதல் சுயநலமிக்கார் வரை, யாவர்மாட்டும் நிலவியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியெனினும் தமிழ்மொழியின் நடை நலிந்துவருவது வருந்தற்குரிய செய்தியாயுள்ளது. முன்னைய நாளில் தமிழில் நல்ல நடை எழுதும் சான்றோரை யாண்டும் காணலாம். இன்று தெளிவான தமிழ்நடை எழுதுவாரை அருகியே காண முடிகிறது. செய்தித்தாள், மாத இதழ், வார இதழ் முதலிய யாவற்றிலும் நல்ல மொழிநடையைக் காண்டலரிது. பேசுவது போலவே எழுதல் வேண்டுமெனப் பிடிவாதம் கொள்வாரையும் காணலாம். தூய தமிழ்நடை எழுதவேண்டுமென்ற விருப்பம் இற்றையநாளில் சிலரிடம் இருப்பினும். தமிழ்க் கல்வியின் குறைவாலும், இளமையிற் பயின்ற சொற்கள் போட்டி போட்டு முன்வருவதாலும், அவற்றை நீக்கித் தூய தமிழ்ச் சொற்களைக் காண்டல் சிறிது துன்பமாக இருப்பதாலும். துன்பத்தைப் பொருட் படுத்தாமல் முயன்றால் கருத்துப்போக்குக்குத் தடையேற்படுகிறது என்ற காரணத்தாலும் வாளா வந்தநடையை எழுதிவிடுகின்றனர். இவ்வாறு தமிழ் நடையை நன்கு பேண முடியாமற் போகிறது. எனவே நாள்தோறும் தமிழ்நடை நலிந்துகொண்டு வருகிறது. இதன் காரணமாகப் பண்டைய நூல்களிலுள்ள தமிழ்நடை பலருக்கு விளங்காமற் போகிறது. அப்போது விளக்கம் தேவைப்படுகிறது. இப்படி நூல்களின் உரைக்கு. உரை தேவைப்படுகிற காலமாக இக்காலம் மாறிவருகிறது. இந்த வகையில் சேர்ந்ததன்று நாவலர் பாரதியாரின் புத்துரை. நாவலர் பாரதியாரின் நல்லுரை தொல்காப்பியத்திற்கு ஏற்பட்டிருந்த முன்னைய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் என்னும் இருசான்றோர்களின் உரைகளிலுள்ள பொருந்தாக் கொள்கைகளையும். அடிப்பட்ட தமிழ் முன்னோர்களின் கருத்துக்களுக்கு மாறானவற்றையும் நீக்கிப் பொருந்தும் கொள்கைகள் இவைதாம் எனக்காட்டிப், பண்டைத்தமிழ் நூல்களிலிருந்து அவற்றிற்குச் சான்றும் காட்டி நிறுவுவதேயாகும். நாவலர் பெருமானின் இப்புத்துரை நூலைப், பொருள் நோக்கோடு பார்ப்போ மானால், தொல்காப்பியம் கற்றார் மட்டுமே நன்கு உணர்ந்து கொள்ள முடியும். மற்றையார் இதைக் கற்க விழையார். நாவலர் பாரதியாரின் புறத்திணையியற் புத்துரை நூலின் உரைநடை, பண்டைய உரையாசிரியர்களின் நடையை ஒப்ப விளங்குகிறது. இதனைக் கற்றார் தவிர மற்றார் புரிந்துகொள்ள முடியாதெனின், கற்றாருக்கு அறிமுகம் வேண்டுவதில்லை; மற்றாருக்கு இந்நூல் கற்க விழைவில்லாத காரணத்தால் அவருக்கும் அறிமுகம் வேண்டுவதில்லை. எனவே இவ்வறிமுகம் தேவையற்றவொன்று எனின் இதை நான் எழுதக் காரணம் கூறுவன். நாவலர் பாரதியார் இல்லறத்தின் நல்லறத் துணைவியாய் விளங்கிய உயர்திருவாட்டி ச.சோ. வசுமதி பாரதியார் அவர்கள் ஐயா அவர்களின் நூலுக்கு ஒரு அறிமுகம் எழுதவேண்டும் என்று எனக்கிட்ட ஆணை என்னால் மறுக்க முடியாதது முதற் காரணம். இப்புத்துரை நூல் 1942இல் அச்சாகி வெளிவருதற்கு முன்பு இதனை நாவலர் பெருமான் ஆய்ந்து வாய்மொழியாகக் கூறக் கேட்டு நான் எழுதிவந்த ஆசைத் தொடர்பு இரண்டாவது காரணம். பலமுறை இந்நூலைப் படித்திருந்தாலும் மற்றுமொருமுறை படிக்க வாய்ப்பேற்படுகிறதே என்ற மகிழ்ச்சி மூன்றாவது காரணம். இவ்வறிமுகம் எழுதும்போது இதன் பெருமையை எடுத்துக்கூற வாய்ப்பேற்படுகிறதே என்பது நான்காவது காரணம். இன்ன - பல காரணங்களாலேயே எழுதத் துணிந்தேன். இவற்றைத் தவிர இவ்வறிமுகம் எழுதுவதற்கு எனக்கு எவ்விதத் தகுதியுமில்லை. இனி, நாவலர் பாரதியாரின் உரைநலம்பற்றி நோக்குவோம். தொல்காப்பியர் பொருட்படலம் - புறத்திணையியலில் முதன் முதலில் அவர்கள் தொகுப்பாக, புறத்திணைபற்றி எழுதுவதை யாவரும் ஊன்றிப் படித்து உணர வேண்டும். ஏனெனின் தொல் காப்பியர் புறத்திணை ஏழு என்று சொல்லியிருக்கப் பிற்காலத்தவர் ஏழுக்கு மேற்பட்டவற்றைப் புறத்திணையில் கூறுகின்றனர். இரு கூற்றையும் கண்டு, அதையதை அப்படியப்படியே கொண்டு வாழ்வாரும் உண்டு. பண்டைத் தமிழர் கொண்ட கொள்கை எது எனச் சிந்தியாமல், சிந்தனையுள்ள தமிழ் இளைஞர்களுக்கு வழி காட்டாமல் வாழும் தமிழறிஞர் பேதைமையைச் சுட்டிக்காட்டி, எழுதிணையின் இறந்தவை பழுதுற்ற கொள்கை எனக் காட்டி யிருக்கும் நாவலரின் நல்லுரை, தமிழ்மொழியின்மாட்டும் தமிழறக் கொள்கைகளின் மாட்டும், தொல்காப்பியர்மாட்டும் ஈடுபாடுடைய சான்றோர்களுக்கு இன்பமாய் இருக்கும். பசுக்கூட்டத்தைக் கவர்ந்துசெல்வாரிடமிருந்து மீட்கமுயல்வார் செயல் வெட்சியுள் அடங்காது கரந்தை என்னும் திணையில் அடங்குமென வேறொரு திணை உண்டாக்கிக்கூறும் பிற்காலத்தார் கொள்கை தொல்காப் பியரால் ஒப்பமுடிந்ததன்று என்று நாவலர் பாரதியார் விளக்கிக் காட்டுவதை நயன்தெரிந்த நல்லோர் பயன் நிறைந்த கூற்று எனக் கொள்வர். 1940ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்து கொண்டிருக்கும் காலம். யான் நாவலர் பாரதியாரோடு இருந்து இப்புத்துரையின் உரையை எழுதிக் கொண்டிருக்குங் காலம். நல்ல நாவன்மையுடைய நல்லார் ஒருவர் பசுமலையில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி நாவலர் பாரதியார் இல்லம் வந்து உரையாடிக் கொண்டிருப்பார். நல்ல தமிழ் நூல்களின் கருத்தை நாவலர் பாரதியார் நவிலச் செவி வாயாகக் கொண்டு நெஞ்சு களனாக அவர் ஏற்றுக் கொள்வார். அவை அவரின் சொற் பொழிவுகளுக்கு உதவும் என்பது அவர் கருத்து. பூவொடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதற்கிணங்க நாவலர் பாரதியாரோடு இருந்த என்னை அவர் நன்கு மதித்தார்; உயர்வாகப் போற்றினார். உயர்ந்த தொல்காப்பியர் நூல்களை நாவலர் பாரதியாரோடு இருந்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கிருக்கிறது என்று பாராட்டினார். ஆகவே என்னை எங்குக் கண்டாலும், யாரோடு கண்டாலும் எனக்கு அவர் மரியாதை செலுத்துவதோடு பிறருக்கும் என்னை உயர்வாக அறிமுகப்படுத்தி வைப்பார். இதன் காரணமாக அவர்பால் எனக்கு இயல்பாக அன்பு எழுந்தது. நானும் சில வேளைகளில் அவர் இல்லத்திற்குச் சென்று உரையாடிக் கொண்டிருப்பது வழக்கம். ஒருநாள் மாலை நான்கு மணியிருக்கும். நானும் அவரும் அவரது இல்லத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். தொல்காப் பியத்தில் ஒன்று கூறுமாறு என்னிடம் வேண்டினார். வெறியறி சிறப்பின் வெவ்வாய்வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும் என்ற தொல்காப்பியர் வெட்சித் திணைச் சூத்திரத்தைக் கூறினேன். பொருள்கூறச் சொன்னார். குறித்த போரில் கொற்றம் கருதிச் செறுமிகுசேயான முருகனை முதலில் பரவி, அவனுக்குரிய களியாட்டில் குறியுணர்ந்துகூறும் சிறப்பினையுடைய விரும்பத்தகும் வாய்ப்புணர்த்தும் வேலன் ஆடும் காந்தளும் என்ற நாவலர் பாரதியாரின் நயவுரையைக் கூறினேன். அதுகேட்ட அவர், தொல்காப்பியத்தின் பெருமையையும் நாவலர் பாரதியாரின் நயவுரையையும் நானிலமறியும் நன்னாளே தமிழ்நாட்டின் பொன்னாளாம் எனக் கூறி மகிழ்ந்தார். இனி, வெட்சித்திணையில், படையியங்கரவம் என்று தொடங்கும், சூத்திரத்தில் நுவல்வழித் தோற்றம் என்னும் துறை வருகிறது. நுவல்வழித் தோற்றம் என்பது களவில் ஆனிரைகொண்டு தம்மவர் புகழும்படி வெட்சியார் மீளும் பொலிவு, எனப்பொருள் படும். இத்துறைக்கு நாவலர் பாரதியார் சான்று தேடிக்கொண்டி ருக்கும்போது நான் கீழ்வரும் பாடலைக் காட்டினேன். ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉம் என்ஐக்கு உழையோர், தன்னினும் பெருஞ்சா யலரே. நாவலர் பாரதியார் இதனையே ஏற்று அமைத்துக் கொண்டார்கள். நான் அன்று, துறையின் பொருளறிந்து எடுத்துக் காட்டினேன் என்று சொல்ல முடியாது. ஏதோ காட்டினேன், அமைந்து கொண்டது. இதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இது என் நினைவிலிருந்து மாறவில்லை. இனி, நாவலர் பாரதியாரின் கூர்த்த மதியைக் காணக் கீழ்வருவது ஒரு சான்று. மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே. என்னும் புறத்திணையியல் நான்காம் சூத்திரத்தின் ஈற்றயற்சீரில் வரும் அகரக்சுட்டிற்குக் கூறும் விளக்கம் நனி சிறந்ததோடு அறிவின் கூர்மைக்கு அடையாளமாக விளங்கி நூல்நயம் நுகர்வார்க்கு இன்பவிருந்தாய் அமைகிறது. அகரச்சுட்டு, புறன் என்னும் குறிப்பால் வெட்சிக்கு அகமாக முதற்சூத்திரத்தில் குறித்த குறிஞ்சியையே குறிக்கும். அகரச்சுட்டு வெட்சித்திணையைக் குறிப்பதாகக்கொண்டு, துடி நிலையும் கொற்றவை நிலையும் வெட்சிக்குப் புறனாம் என்பர் நச்சினார்க்கினியர். வெட்சியே புறனாதலானும், பொதுவியல் பாடாண் முதலியவற்றைப் புறப்புறமென வகுத்த வெண்பாமாலை முதலிய பின்னூலாரும் துடிநிலை கொற்றவை நிலைகளைப் புறப்புறமென்னாது வெட்சியின் துறைகளாய் அடக்கினராதலானும், இச்சூத்திரத்தின் அகரச்சுட்டு வெட்சிக்கு அகமாகிய குறிஞ்சி யையே குறிப்பது தேற்றம் என்பர் நாவலர் பாரதியார். மேற்காட்டிய நான்காம் சூத்திரம் ஈரடியாலானது. முதலடியிலுள்ள துடிநிலை என்னும் பாடம் நச்சினார்க்கினியர் கொண்டது. ஆனால் இளம்பூரணர் குடிநிலை என்று பாடங்கொண்டார். இக்குடிநிலை என்னும் பாடம் பொருத்தமாய் இல்லை என்று நாவலர் பாரதியார் தெரிவிக்கிறார். ஆகோள் கொற்றவை நிலைகளைப் போலக் குடிநிலை போர்த் தொடக்கத்திற்கு இன்றியமையாததன்று என்று காட்டுகிறார் நாவலர் பாரதியார். அவ்வாறாயின் துடிநிலை என்னும் பாடம் சிறந்ததல்லவா எனலாம். சிறந்தது எனக் கொள்ளுதற்கில்லை; கொடிநிலை என்பதாக இருக்க வேண்டுமென்று நாவலர் பாரதியார் ஆய்வுரை காட்டியிருக்கிறார். இது தொல்காப்பியத்தில் ஈடுபாடுள்ளவர்க்கு அறுசுவை உண்டி போல அறிவுக்கு விருந்தாயிருக்கும். இனி, தும்பைத் திணை பற்றிக் கூறுமிடத்துக் கீழ்வரும் சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் நயம்பட உரை கூறுகிறார். முன்னிரு உரையாசிரியர்கள் கூறிய பொருந்தாத் தன்மைகளைக் காரணம் காட்டி மறுத்துப் பொருந்தும் தன்மைகளைக் காட்டுகிறார். கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலம் தீண்டா அருநிலை வகையோடு இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே. இளம்பூரணர் உரை: கணையும் வேலும் படைத் துணையாக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்றயாக்கை, நீர் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு. இருபாற்படுக்கப்படும். அற்றதுண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினையுடைது. (இருநிலம் தீண்டா அரு = நீருட் கிடக்கும் அட்டை). நச்சினார்க்கினியர் உரை: பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பானெய்தும் வேல் கொண் டெறிந்தும் போர்செய்ய, அவ்வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின், சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு, வாளும் திகிரியும் முதலியவற்றால் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி இரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத் திணை என்றவாறு. எனவே, முற்கூறியமைந்து பொருளாகப் பொருதலினும் நின்றயாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலும் கூறினார். இது திணைச் சிறப்புக் கூறியது. மொய்த்தலின் என்றது யாக்கையற்று ஆடவேண்டுதலிற் கணையும் வேலுமன்றி வாள் முதலியன ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறபோல் அற்றுழியும் உடம்பாடுதலின் அட்டையாடல் எனவும் இதனைக் கூறுப என மேலும் விளக்கினர் நச்சினார்க்கினியர். நாவலர் பாரதியார் உரை: அளவிறந்த அம்பும் வேலும் செறிந்து அடர்தலின், பிரிந்த உயிரினின்றும் நீங்கிய பின்னும் வீழாது நின்ற உடலின் அரிய நிலைப்பரிசு (அறுபட்ட தலை முதலிய உறுப்புக்கள்) பெருநிலம் படியாது முறுகிய இகல் முனைப் பால் துடித்தியங்கும் அரிய நிலைமையாகிய பரிசுடன் இவ்விரண்டு கூறுபட்ட ஒப்பற்ற சிறப்பினையுடைத்து தும்பைத் திணை. முறுகிய தறுகண் முனைப்பால் உயிரிழந்த உடல் வீழாது நிற்றலும், துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் நிலந்தோ யாமல் துடித்தியங்கலும் ஆகிய இருவகை அரிய நிலையைச் சிறப்பாக உடையது தும்பைத்திணை. இருநிலந் தீண்டாததிது எனக் குறியாமை, சிறப்பாகத் தலைதுடிப்பதுடன் இற்ற உறுப்பெதுவும் துடிக்கும் இயல்பிற்றா கலின் சுட்டிக்கூறல் வேண்டாமைபற்றி அமைந்தது. அன்றியும், சென்ற உயிரின் நின்றயாக்கை எனப் பிரித்து, இருநிலந்தீண்டா அருநிலை வகையோடு, இருபாற்பட்ட ஒரு சிறப்பின்று எனக் காட்டியதால், யாக்கையும் அதன் அறுபட்ட உறுப்பும் தனித்தனி சுட்டுங் கருத்துத் தெளியப்படும். (இங்கு, அரு என்பதை அட்டை எனக்கொண்டு, அதன் பின்வரும் இருபாற்பட்ட எனுந் தொடரை அவ்வட்டைக்கு அடையாக்கி, இரு கூறுபட்ட அட்டைப் பகுதிகள் தனித்தனி ஊர்ந்து இயங்குவது போலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் தனித்தனி துடிக்கும் எனப் பொருள் கூறுவர் பழைய உரைகாரர். இரண்டின் மேற்பட வெட்டுண்ட அட்டைத் துண்டுகளும் துடிப்பதியல்பாதலால், இருபாற்பட்ட என்பது பொருளற்றதாகும். அன்றியும் ஊர்ந்து செல்லுதல் நிலமிசையேயாம் ஆதலால் இரு நிலந் தீண்டா அரு நிலை எனற்கும் அமையாது. அதனால், இருபாற்பட்ட என்னும் தொடர் அதையடுத்துவரும் ஒரு சிறப்புக்கே அடையாதல் தேற்றம்.) நின்ற யாக்கை, நிலந்தீண்டா உறுப்பு அருநிலை, என முறையே இரு திறப்பட்ட ஒரு சிறப்பாதல் காண்க. இந் நாவலர் பாரதியாரின் உரையில் மறுப்பும் விளக்கமும் தெளிவும் சிறப்பும் மிளிர்ந்து காணப்படுவது காண்க. இனி, அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் புறத்திணையியல் 20ஆவது சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் ஆய்ந்துகூறும் அரிய உரைப்பகுதிகள் தமிழ்நாட்டார் கற்றுத் தெளிய வேண்டியவையாகும். இச்சூத்திர உரைப்பகுதியில் பழந்தமிழ் மரபுகள் யாவை என்பனவறறை அறிந்து கொள்ள முடியும். தொல்காப்பியர் சுட்டும் செம்பொருள் யாது என்று தெளிந்து கொள்ள முடியும். நாவலர் பாரதியார் 21ஆம் சூத்திரத்திற்கு வாகைத் திணைத் துறை மறவகை ஒன்பதும் அறவகை ஒன்பதும் பதினெட்டு என்பதை எவ்வளவு தெளிவாக விளக்கிக் காட்டுகிறார் என்பது கற்றார்கண்டு கழிபேருவகை கொள்ள வேண்டியதாகும். அமரர்கண் முடியும் அறுவகையானும் என்ற 26ஆவது சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் தந்த புத்துரை என்னால் எளிமைப் படுத்தப்பட்டு மதுரை மாவட்டத் தமிழாசிரியர் மன்றத்தார் 16.10.64ந் தேதி வெளியிட்டுள்ள ஆண்டு மலரில் வெளியிடப் பட்டுள்ளது காண்க. இனி, ஊரொடுதோற்றமு முரித்தென மொழிப என்பதை ஒரு தனிச்சூத்திரமாக்கி நச்சினார்க்கினியர், ஊரில் பொது மகளிரோடு கூடிவந்த விளக்கமும் பாடாண் திணைக்குரித்து எனக் கூறுகிறார். இதை நாவலர் பாரதியார் கடுமையாக மறுக்கிறார். இப் புதுப்பொருள் தமிழ் அறமும் பழமரபும் அழிய வரும் இழுக்காகும். பரத்தை ஒருத்தியே யன்றிப் பலரொடும் வாழ்வார் இருக்கலாம். அன்னாரும் அவ்வாழ்வை நாணாமல் ஊரறியக்காட்டி அதைப் பாராட்டும் உயர் ஒழுக்கமாகக் கருதும் பேதைமைக்கு ஆளாகார்; அவ்வளவு நாணற்ற கீழ்மக்கள் உளராயின், அவர் கயமையைப் பாடாண் திணைக்கு உரித்தெனப் புலவர் தலைவரான தொல்காப்பியர் கொள்ளார். அக் கயவர் வாழ்வு திருநீக்கப் பட்டார் தொடர்பாக வெறுக்கப்படுவதே தமிழ் அற மரபாகும். இவ்வாறு தமிழ் மரபு கூறி நாவலர் பாரதியார் நச்சினார்க்கினியரின் தவறான உரையைப்போக்கித் தக்கவுரை கூறித் தமிழ் மக்கள் அறப்பாங்கைப் பாதுகாக்கின்றார். வழக்கொடு சிவணிய வகைமையான என்ற வரியையும் சேர்த்து ஈரடிச் சூத்திரமாக்கிப் பாரதியார் உரை கூறுகிறார். எனவே அச்சூத்திரம் வருமாறு, அதன் எண், 30. ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான. பொருள்: தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப் பிறப்பும் பாடாண் திணையில் பாராட்டுக்குரிய எனக் கூறுவர் புறநூற்புலவர், அப்பாராட்டுப் புலனெறி வழக்கொடு பொருந்தும் பகுதிகளில். இனி, 32ஆவது சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் கண்ட ஆராய்ச்சி பொன்னேபோற் போற்றும் தன்மையுடையது. அச்சூத்திரம்: கொடிநிலை காந்தள் வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இதன் முதலடியில் காந்தள் என்ற இடத்தில் கந்தழி என்ற சொல் இருக்கும். கந்தழி என்றே இளம்பூரணரும், நச்சினார்க் கினியரும் பாடங்கொண்டு வெவ்வேறு பொருள் கூறுகின்றனர். இது பொருந்தாது என்று நாவலர் பாரதியார் ஆய்ந்து உரை தருகிறார். இந்த ஆய்வுரை தஞ்சாவூரையடுத்த கரந்தட்டாங்குடி யிலிருக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி ஒன்றுக்கே தமிழ்நாட்டு மக்கள் நாவலர் பாரதியாருக்குக் கடமைப்பட்டவர்களாவார்கள். நாவலர் பாரதியார் கருத்துக்களை நன்கு ஆராய்ந்து தமிழ் அற மரபுபேணி உரை வகுத்தார் என்றும், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரின் தவறான உரையை மறுப்பதற்கு அஞ்சாமல் மறுத்துத் தக்க உரை கூறினார் என்றும் இதுவரை கண்டோம். அவற்றோடு சொற்பொருள் கருதி ஆய்ந்து விளக்கந்தரும் நயத்தையும் இனிக் காண்போம். தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என 35ஆவது சூத்திரம் கூறுகிறது. இதனில் கூறப்படும் கூத்தர், பாணர், பொருநர், விறலி எனப்படுவார் பற்றிய நாவலர் பாரதியார் விளக்கத்தைக் காண்க. கூத்தர் - பிறர் ஒப்புக் கருதாது. பேசாமல் பாடாமல் மெய்ப் பாட்டால் அவிநயித்து ஆடுபவர். பாணர் - இசைபாடுவோர் இவர்தம் பாட்டும் கையாளும் இசைக்கருவியும் கருதி இசைப்பாணர் - யாழ்ப்பாணர் - துடிப் பாணர் அதாவது மண்டைப்பாணர் எனப் பலதிறப்படுவர். யாழ்ப்பாணர் தம் யாழ்பற்றிச் சீறியாழ்ப்பாணர் அல்லது சிறுபாணர் பேரியாழ்ப் பாணர் அல்லது பெரும்பாணர் என்றிருவகையினராவர். பொருநர்: நாடகத்தில் குறித்த ஒருவரைப் போல நடிப்பவர். (பொருந் = ஒப்பு.) விறலி: இசைக்கேற்ப ஆடுபவள். (விறல் = உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டுந் திறன். அத்திறனுடையார் விறலியர்.) இவ்வாறு ஒல்காப் புகழுடைத் தொல்காப்பியர் நூலுக்கு நாவலர் பாரதியார் நவிலும் நயவுரைகள் நானிலமுள்ளளவும் நிலவி நிற்கும். ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு நூற்பாவையும் அறிவெனும் நாவால் அசைத்துச் சுவைத்து முன்னைய உரையாசிரி யர்களால் எழுந்த பொருத்தமற்ற உரைகளைப் போக்கி நல்லவை களை ஆக்கி நானில மக்களுக்கு நயத்தொடு நல்கியுள்ளார். அக் கடமைப்பாட்டில் முன்னைய உரையாசிரியர்கள் தவற்றைத் துணிந்து மறுத்தும் நயவுரைகளைப் போற்றியும் அமைத்துக் கொண்ட அருமைகள் பெரிதும் பாராட்டிப் போற்றற்குரியன. இந்தத் துணிவு தொல்காப்பியர் நூல் தோன்றி உரை வகுக்கப்பட்ட காலத்திற்குப் பின் எண்ணுறாண்டுகளாக எவருக்கும் தோன்றாமல் நாவலர் பாரதியாரிடமட்டுமே தோன்றியுள்ளதாகும். துணிவு என்பது ஏதாவதொன்று கூறி விடுவதென்பதன்று. சொல்லப்பட்ட செய்தி மறுக்க முடியா திருக்க வேண்டும். அதுவே துணிபாகும். நாவலர் பாரதியார் தொல்காப்பியப் புறத்திணையியல் ஆராய்ச்சி யுரை தமிழ்நாட்டில் வந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாயிற்று. இதுவரை இவ்வுரையை மறுத்தார் எவருமில்லை. பொதுவாக, நாவலர் பாரதியார் ஆராய்ச்சிக் கருத்து எதனையும் இதுவரை மறுத்தாரில்லை. மறுக்க முடியாததாக அமைவதே நாவலர் பாரதியாரின் ஆராய்ச்சியாக இருக்கும். மறுக்கக் கூடிய ஆராய்ச்சியை ஆராய்ச்சி எனலாமா? பொறாமையின் காரணமாக ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். அது மறுத்ததாகாது. இவ்வாறான ஆராய்ச்சியைக் கைம்மாறு கருதாது நல்கிய நாவலர் பாரதியாருக்கு நன்றி செலுத்தி அடியிலிருந்து முடியும் வரை தமிழ்மக்கள் நுகர்வார்களாக! (குறிப்பு: 1975ஆம் ஆண்டு, இந்நூலின் 2ஆம் பதிப்பு வெளியிடும் போது எழுதப் பெற்ற கட்டுரை இது.) மெய்ப்பாட்டியற் புத்துரைச் சிறப்பு பேராசிரியர் திரு ச. சாம்பசிவனார் எம்.ஏ., செந்தமிழ்க் கல்லூரி, மதுரை. (செயலர், ச.சோ. பாரதியார் கல்வி அறப்பணிக்குழு) ஆற்றல்சேர் ஆய்வாளர் வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்தைப் பொறுத்த மட்டில், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவரைத் திறனாய்வாளர்களின் முன்னோடி எனலாம்! “ எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண்ப தறிவு.”* என்ற குறட்பா வாயிலாகத் திறனாய்வின் இன்றியமையாமையைச் சுட்டிக்காட்டுகின்றார் வள்ளுவர் எனலாம்! இவருக்குப் பின், இடைக்காலத்தே வாழ்ந்த உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச் சிலையார் போன்றோர் தொல்காப்பியத்திற்கு உரை கண்டதன் வாயிலாகத் திறனாய்வுத் துறையினை ஓரளவு வளர்த் துள்ளனர் எனலாம். மணக்குடவர், பரிமேலழகர் முதலானோரும் திருக்குறளுக்கு உரைவிளக்கம் கூறுமுகத்தான், இத்துறைக்கு ஆக்கமளித்தனர்! இவர்கட்குப்பின்னர், நெடும் பல்லாண்டுகளாகத் திறனாய்வுத்துறை, வளர்ச்சிபெற்றதாகத் தெரியவில்லை. பிற்காலத்தே தோன்றிய மாதவச் சிவஞான முனிவர், தொல்காப்பியப் பாயிரத்திற்கும், முதல் நூற்பாவுக்கும் விரிவுரை எழுதியுள்ளார். இலக்கணக் கடல் எனப் போற்றப்படும் அரசஞ்சண்முகனாரும் தொல்காப்பியப் பாயிர விருத்தி எழுதியுள்ளார். செந்தமிழ் ,தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி முதலான இதழ்களில், இலக்கண இலக்கியங்களைப்பற்றி அவ்வப்போது அறிஞர் சிலர், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவந்துள்ளனர். உரையில் ஐயம் உரையில் மறுப்பு, மறுப்புக்கு மறுப்பு என இலக்கிய - இலக்கண மோதல்கள் பல, அறிஞர் பலரிடையே எழுந்தன! எனினும் இவையெல்லாம், திறனாய்வின் பாற்பட்டனவே! இன்று நம்மிடையே பல திறனாய்வாளர்கள் தோன்றித் தமிழன்னையை அணிசெய்து வருகின்றனர். இவர்கட் கெல்லாம் வழிகாட்டுநராக, முன்னோடி யாக - ஆற்றல்சேர் ஆய்வாளராக விளங்கியவர் நாவலர் - கணக்காயர் டாக்டர் ச. சோமசுந்தரபாரதியார் ஆவார்! புத்துரைப் பொலிவு பண்டை உரையாசிரியர்களைப் போன்றே நாவலர் பாரதியாரும், தொல்காப்பியத்திற்குப் புத்துரை கண்டுள்ளார். எழுத்தினும், சொல்லினும்விடப் பொருட்பகுதியில் உரைகாரர், தொல்காப்பியர் நூற்கருத்தைப் பல்காலும் பிறழக்கொண்டு மயங்கினர் என உணர்ந்த நாவலர் பாரதியார். பொருளதிகாரத்தின் அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு என்னும் மூன்று இயல் கட்கும் முழுமையாகவும் முறையாகவும் உரை வழங்கியுள்ளார். இடையீடுபட்ட நெடும் பல்லாண்டுகட்குப் பின்பு, இங்ஙனம் இயல்கள் வாரியாக உரைகண்ட பெருமை நாவலர் பாரதியார் ஒருவரையே சாரும்! ஆதலின், தொல்காப்பிய உரைகாரர் வரிசையில் இவரும் ஒருவர் எனும் உரை சாலவும் பொருந்தும்! இம்மெய்ப்பாட்டியலுக்கு நாவலர் பாரதியார் காணும் புத்துரைகள் பலவாகும். அவற்றுள், ஒருசில மட்டும் ஈண்டு எடுத்துக் காட்டுதல் சாலும்! (1) மெய்ப்பாடு என்பதற்கு விளக்கம் கூறவந்த இளம்பூரணர். அச்சமுற்றான்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத் தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகும் தன்மை மெய்ப் பாடென்று கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று. அஃதேல், இவ்விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டு மென்க! என்பர். பேராசிரியர், மெய்ப்பாடென்பது பொருட்பாடு. அஃதாவது, உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல் என்பர். நாவலர் பாரதியாரோ, மேற்காட்டிய உரைகளைப் பின் வருமாறு மறுத்துப் புத்துரை காண்கின்றார். (அ) செய்யுள் உறுப்புக்களுள் பொருட்சிறப்பிற்கு மிக்கு உரிமையுடையது மெய்ப்பாடு. (ஆ) எனவே, செய்யுளுறுப்பை விளக்குவதே மெய்ப்பாடு. (இ) மெய்ப்பாடு என்பது அகவுணர்வு களை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற்புறவுடற்குறியாம்! இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக் குறி புணர்க்கும் வழக்காறில்லை! உணர்வோடு உள்ளக் கருத்தையுரைக்கப் பல செயற்கைக்குறி வகுத்துக் கோடல் கூத்துநூற் கொள்கையாகும்! பட்டாங்கு மெய்ப்படத் தோன்றும் உள்ளுணர்வை மெய்ப்பாடென்றது ஆகுபெயர். உள்ளுணர்வை உரிய இயற்புறக் குறியால் புலவர் செய்யுளில் புலப்பட அமைத்தல் வேண்டுமாதலின், செய்யுளுறுப்புக்களுள் மெய்ப்பாடு சிறப்பிடம் பெற்றது. அதனை விளக்கும் பகுதி மெய்ப்பாட்டியல்! என்பது இவர் விளக்கமாகும். தொல்காப்பியர் இவ்வியலில் விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பே தவிரக் கூத்து உறுப்பு அன்று! பேராசிரியர், நாடக நூலாசிரியர்க்கு எனக் கொண்டு, சுவை என்றும் விறல் என்றும் கூத்தியற் சொற்களைப் பயன்படுத்துகின்றார். ஆனால் தொல்காப்பியரோ, மெய்ப்பாடு என்ற சொல்லையே ஆள்கின்றா ரன்றிச் சுவை, விறல் என்பவற்றை யாண்டும் ஆளவில்லை! என்பது நாவலர் பாரதியார் கூற்றாகும். பண்ணை என்பதற்கு விளையாட்டு ஆயம் என இளம் பூரணரும். முடியுடைவேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்ப விளையாட்டு எனப் பேராசிரியரும் உரைகூற. நாவலர் பாரதியாரோ, பண்ணை என்பது, தனிநிலை கருதாமல் ஒருபுறக் குறியால் புலப்படும் இனத் தொகுதி என்று புத்துரை கூறியதோடு. இஃது இப் பொருட்டாதல், ஒலித்தன முரசின்பண்ணை என்னும் கம்பரின் செய்யுளடியாற்றெளிக எனச் சான்றும் காட்டுகின்றார். உரையாசிரியரும் பேராசிரியரும் வடமொழிக் கூத்தியற் குறிப்புக்களையே தொல்காப்பியர் கூறினார் என்னும் பொருள்பட உரை எழுதிப் போந்தனர். இவர்கள் கூற்று மெய்யெனக் கொள் வோமாயின், தொல்காப்பியரே இதனை வெளிப்படையாகக் கூறியிருப்பாரன்றோ? சூத்திரமானது, ஆடிநிழல் போல, நாடு தலின்றிப் பொருள் நனிவிளங்க அமைய வேண்டும் என இலக்கணம் வகுத்த தொல்காப்பியரே, படிப்பவர் மருளுமாறு சூத்திரம் அமைப்பாரோ? எனவே, இவ்வுரைகாரர்கள் கூறும் பிறமொழிக் கூத்துநூற் சத்துவங்கள் தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப்பாட்டுணர்வுகள் ஆகா! என நாவலர் பாரதியார் விளக்கம் கூறுவது அறிவினுக்கு விருந்தாக அமைகின்றது! (2) பண்ணை . . . நானான் கென்ப எனும்நூற்பாவில், நானான் கென்ப என்பதற்கு உரைகாரர்கள் பதினாறு எனப் பொருள்கொள்வர். சுவை எட்டு; குறிப்பு எட்டு ஆகப் பதினாறு என்பது இளம்பூரணர் விளக்கம். அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள்; அவற்றைக்கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை; அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு; நடுக்கமும் வியர்ப்புஞ் சத்துவம் என்பது இவர் உரை. பேராசிரியர், முப்பத்திரண்டு பொருளும், அவைகருதிய பொருட் பகுதி பதினாறாகி அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு என்று உரைப்பர். இதற்கு நாவலர் பாரதியார் கூறும் புத்துரை வருமாறு - இதில் பொருள் முப்பத்திரண்டென ஒருங்கு எண்ணியபிறகு அவைகருதிய பொருட் பகுதி எனப் பிரித்துப் பதினாறு எனச் சுட்டுமாறு என்னை? பொருள்கள் கருதிய பொருட்பகுதி என்பது பொருளில் வெற்றுரையாகும்! எனப் பேராசிரியர்தம் கூற்றை மறுப்பர். நானான் கென்ப என்பதனை உரையாசிரியர்கள் பதினாறு எனப் பொருள் கொள்ள, இவரோ, நாலுநாலாய்த் தொகுத் தெண்ணப்படும் என்று கூறி நான்கு என்பதன்முன் வரும் நான்கு, நானான்கு ஆவதன்றி, நந்நான்கு ஆவது, பிற்காலப் பேச்சு வழக்கு என விளக்கமும் தந்து, முப்பத்திரண்டு பொருளும், புறத்தே மெய்ப்பாடாய்ப் புலனாதல் கொண்டே அறியப்படுதலானும், அவ்வாறு புலனாங்கால் அவை தனித்தனியே எள்ளற்குறி இளமைக்குறி பேதைமைக் குறி மடமைக் குறி என்று ஒவ்வொன்றும் வெவ் வேறாய்த் தனக்குரிய தனிக்குறியால் தோன்றாமல், நானான் காய்ப்பண்ணைகூடி நகை - அழுகை - இளிவரல் - மருட்கை - அச்சம் - பெருமிதம் - வெகுளி - உவகை எனும் மெய்ப்பாடு எட்டுவகையால் மட்டும் தோன்றுதலானும், இவ்வியல்நெறி குறித்தல் வேண்டி இவ்வாறு கூறப்பட்டதென்க!! என நயமும் தெளிக்கின்றார் நாவலர்! சுவைப்படுபொருள், சுவை, குறிப்பு, சத்துவம் எனப் பகுத்துரைக்கும் இளம்பூரணர்தம் கருத்தையும் இனிதாய் மறுத் துரைக்கின்றார் இவர்! எண்ணான்கு பொருளும் ஓராங்கே ஒருங்கெண்ணப்படுதலின், அவை ஒருதரப் பொருளாதல் ஒருதலை. அதற்கு மாறாக அவற்றைச் சுவையூட்டும் புலி முதலிய புறப் பொருள் வேறு... தம்முள் ஒவ்வா நால்வகையாய் உறழப் பிரித்தல் இங்குத் தொல்காப்பியர் கருத்தாமாறில்லை!.... எண்வகை மெய்ப் பாடுகளை எனைத்து வகைப் புறப்பொருளகளொடும் கூட்டவும் பெருக்கவும் வேண்டா! இங்ஙனம் இவர் உரைக்கும் உரை ஏற்புடைத்தென்பதனை, அடுத்து வரும் எள்ளல் இளமை பேதைமை மடனென், றுள்ளப் பட்ட நகைநான் கென்ப முதலான எண்வகை மெய்ப்பாடுகளை விளக்கும் நூற்பாக்கள், நான்கு நான்கு எனத் தொகுத் தெண்ணப் படுவனவற்றால் தெளியலாம்! (3) நாலிரண் டாகும் பாலுமா ருண்டே என்ற நூற்பாவுக்கு மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டென வரும் பக்கமுண்டு; அவையாவன: குறிப்புப் பதினெட்டனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவையெட்டுமாக்கி நிகழ்தல் என இளம்பூரணரும், முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலே யன்றி எட்டாதலும் உண்டு; அவை வீரம், அச்சம், வியப்பு, இழிபு, காமம், அவலம், நகை, நடுவுநிலை யென்பன எனப் பேராசிரியரும் உரை கூறினர். நாவலரோ, செய்யுள் உறுப்பாம் மெய்ப்பாட்டுணர்வுகள் மேற்கூறியாங்கு நந்நான்காய் எண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொக்கு வகைப்பட வரும் தன்மைய பிறவும் உள என்று கூறுவர். இதற்குச் சான்றாக. ஆங்கவை யொருபாலாக வொருபால் எனும் நூற்பாவைக் காட்டி உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு என எவ்வெட்டாய் முப்பத்திரண்டு எண்ணி முடித்துக் காட்டப்படுதலையும் விளக்குவர். பண்ணைத்...... நானான் கென்ப என்பது தொகைச் சூத்திரம் நகையே.... டென்ப என்பது வகைச் சூத்திரம். எள்ளல்..... கென்ப முதலாயின விரிச்சூத்திரங்கள். இவ்வாறே, நாலிரண்டாகும் பாலுமா ருண்டே என்பது தொகைச் சூத்திரம். ஆங்கவை யொருபாலாக... கடையே என்பது விரிச் சூத்திரம் எனப் புத்துரைகாணும் நாவலர் திறம் அறிந்து இன்புறத்தக்கது! இனி, இதே நூற்பாவுக்கு நாவலர், மற்றொரு நயவுரையும் நவில்கின்றார்: உய்த்துக்கொண்டுணர்தல், இரட்டுற மொழிதல் எனும் உத்திகளால் இச்சூத்திரத்திற்குப் பிறிதும் ஒரு பொருள் கொள்ளுதலும் பொருந்தும். இதில் நாலிரண்டு என்பதை உம்மை தொக்க கூட்டெண்ணாக்கி, நாலும் இரண்டும் எனக் கூட்டி, அறுவகைப்படும் இயல்புடைய அகத்துறை மெய்ப்பாடுகளும் உளவெனப் பொருள் கூறி, அவ்வாறும் முறையே புகுமுகம் புரிதல்... மொழிப என்று தொடங்கிப், புலம்பிய நான்கே ஆறென மொழிப என எண்ணிமுடிக்கும் மெய்ப்பாட்டுத் தொகை ஆறுமா மென அமைத்துக் கோடலும் தவறாகாது! நாவலர் நயவுரை இனி, நூற்பாக்களுக்கு நாவலர் காணும் நயவுரைகளும் பலவாகும். அவற்றுட் சில: (1) எள்ளல்.......... கென்ப என்ற நூற்பாவுக்கு, எள்ளல் - நகைமொழி, அஃதாவது கேலி; இளமை - மழவு அஃதாவது பிள்ளைத்தன்மை, அறிவு முதிராப் பிள்ளைமை; பேதைமை - அறிவின்மை (Stupidity); மடன் - ஏழைமை. அஃதாவது தேராது எளிதில் நம்பு மியல்பு (Simplicity or innocence). பேதைமை உவர்ப்பிக்கும்; மடம் உவப்புதவும். எள்ளல் முதல் நான்கும் மகிழ்வொடு மருவும் பெற்றிய என்பது இவருரை. (2) அழுகையின் வகையுள் இழிவு என்பதும் ஒன்று. பேராசிரியர் இதனை இளிவே எனப் பாடபேதமாகக் கொண்டு உரை எழுதுவர். பிறர் தன்னை எளியனாக்குதலாற் பிறப்பது இழிவு என்பர் இளம்பூரணர்; பிறரால் இகழப்பட்டு எளியனாதல் இளிவு என்பர் பேராசிரியர். ஆனால், மெய்ப்பாடு எட்டனுள் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என நால்வகைப்படும்; இளிவரலும் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், முதற்கண் கூறிய இளிவு அல்லது இழிவுக்கும்; பின்னர்க் கூறிய இளிவரலுக்கும் உள்ள வேறுபாடு யாது எனத் தெளிவான உரைவிளக்கம் காணவியலவில்லை. நாவலர் பாரதியார், பின்வருமாறு உரைநயம் காண்பர்: இளிவு இழுதகவுட் பிறர் இகழ்வாற் பிறக்கும் அவலம்; பழிபிறங்கும் பான்மைத்தாம் இளிவரலன்று! என்று இளிவுக்கு விளக்கம் கூறி இளிவரல் என்பதற்கு, மானம் குன்ற வருவது; இளிவரின் வாழாத மானமுடையார் எனவும், இடுக்கண்வரினும் இளிவந்த செய்யார் எனவும் வருதலான் இளிவரல் இப்பொருட்டாதல் தெளிக என விளக்கம் கூறுவர். முன் அழுகை வகையுள் ஒன்றாகச் சுட்டப்பட்ட இளிவு, அவலிக்கும் அவமதிப்பைக் குறிக்கும் அது பழிபடு குற்ற மின்றியும் பிற ரிகழ்வாற் பிறக்கும் பெற்றியது; எனவே, இளிவு, தன்னெஞ்சு சுடுதலின்மையால் வாழ்வில் வெறுப்பு விளையாது... இச்சூத்திரம் காட்டும் இளிவரல், உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்ற வரும் பழிநிலையைக் குறிக்கும்! என இளிவுக்கும், இளிவரலுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைக் காட்டுவர் நாவலர்! (3) ஆங்கவை யொருபாலாக என்ற நூற்பாவுக்கு, உடைமை முதல் நடுக்கு வரை எவ்வெட்டாய் எண்ணப்படும் உணர்வுகளும் செய்யுட் பொருள் சிறக்க வருவனவுள என்று கூறி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது, மெய்ப் பாட்டு வகை எண்ணான்கும் அகப்புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதிற் குறிக்கும் உணர்வு வகை நாலெட்டும் அகத்துறைக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய், முறையே இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழா அலும் தோழியிற் புணர்வுமென்றாங் கந்தால்வகையினு மடைந்த சார்பொடு; கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கப் பட்டுள எனநயவுரையுங் காட்டுவர் நாவலர். (4) உடை பெயர்த்துடுத்தல் (நூற்பா 14) என்பதற்கு இளம்பூரணர் ஆடையைக் குலைத்துடுத்தல் என்றும், பேராசிரியர் உடுத்த உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் என்றும் உரை கூறிப் போந்தனர். நாவலரோ, அழியும் உணர்வால் குழையும் உடலில் குலையும் கலையின் நிலையைத் திருத்தி அணிதல் என்று கூறியதனோடமையாது, பெயர்த்து என்பது மீட்டும் என்பதைக் குறிக்கும்; அழித்து எனக் கொள்ளுதல் அமைவுடைத்தன்று. முன் கட்டியுள்ள ஆடை நெகிழ்வதை மீட்டும் இறுக்குதல் என்பதே பொருந்திய பொருளாகும்; அவ்வாறன்றி ஆடையைத் தலைவ னெதிரில் தலைவிதானே அழித்துடுத்தல் பெண்ணீர்மையன்றாதலின் அது பொருளன்மை தேற்றம்! என விளக்குவது எத்துணை இன்பம் பயப்பதாக வுள்ளது! (5) இவ்வாறே அல்குல் தைவரல் என்பதற்கு மேலது உடை பெயர்த்துடுத்தலாகலான் அதன் வழித் தோன்றுவது உடை பெரிதும் நெகிழ்ந்து காட்டுதலாயிற்று; அதனைப் பாதுகாத்தலின் அவ்வற்றம் மறைக்கும் கையினை அல்குல் தைவரல் என்றானென்பது பேராசிரியர் உரை. இளம்பூரணரும் அவையல் கிளவியாகக் கொண்டு உரைகூறுவர். இவ்வுரை பொருந்தாது எனக் கருதிய நாவலர், கலையின் மேலணிமேகலை தன்னொடு, தழையின் ஆகிய மேலுடை தொடுவது இருப்பிடம் (ஆசனம்) ஆவதன்றி, இடக்கர்ப் பொருள் குறிப்பதன்று என்பது தேற்றம் ........ பொன்னொடு மணிமிடைந்த மேகலை இழைகளும், கலையின் மேலணி தழை யுடை வகைகளும் அசைந்தாடும் உறுப்பெனக் குறிப்பதாலும், இடக்கரென அடக்காமல் அல்குலெனச் செய்யுளில் பல்காலும் வருதலானும் அல்குல் அவையல்கிளவி யாகாமையும், இருப்பு உறுப்பையே சுட்டுதலும் தெளிவாகும்... எனினும் அல்குலை அவையல்கிளவி யாக்கி அவிழ்த்து உடை நெகிழ்த்தவன் தன் அற்றம் மறைப்பதே அல்குல் தைவரல் என்பர் பேராசிரியர். கற்பிறவாக்குலமகள் மணவாத் தலைவன்முன் மறந்தும் அது செய்ய ஒல்லாள். குலையும்கலை நிலையைத் திருத்துவதியல்பு. தலைவன் எதிரில் தலைவி உடை அவிழ்த்துத் திருத்தாளாதலின், அற்றம் மறைப்பதும் அதற்கு அல்குல் தைவரலும் அவன் எதிரில் அவள் எஞ்ஞான்றும் எண்ணவும் ஒல்லாள், அதனால் அஃதுரை யன்மை அறிக! எனப் புத்துரை காண்பது பொருத்தமாயுள்ளதன்றோ? தெய்வமஞ்சல் என்பதற்குச், சூள் பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்கு மெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற் றொழுவதே நல்லில்லாட்டியர் தொல்லறமாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக் கூறிய பெற்றியும் கருதற்பாற்று என இவர் கூறுவது சிந்தனைக்கு விருந்தாயுள்ளது. இங்ஙனமே இவர் காட்டும் நயவுரைகள் பலகண்டு நமதுள்ளம் மகிழ்கின்றது! முன்னோர் மொழிந்த மொழிபொருள் நாவலர் பாரதியார் நூற்பாத்தொறும் புத்துரை கண்டாலும், முன்னைய உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரியர் போன்றோர் மொழிந்த கருத்துக்களில், ஏற்பனவற்றை எடுத்துரைக்கவும் தவறினாரல்லர், சான்றாகச் சில காட்டலாம்: (1) இச்சூத்திரப் பொருள் இதுவே யென்பது இதன்கீழ் இளம்பூரணர் தரும் குறிப்பானும் தெளிவாகும்! (2) நகையே எனும் நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் சுட்டும் குறிப்பினை அப்படியே எடுத்துக் காட்டுகின்றார் நாவலர். இது பிறர் வேண்டு மாற்றானன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடு என்பது உணர்த்துதல் நுதலிற்று எனப் பேராசிரியரே கூறுதலானும் விளங்கும், என்று காட்டுகின்றார். (3) முன் சூத்திரத்திலிதை இளிவென்னாது இழிவென்றே இளம்பூரணர் கொண்ட பாடத் தானும் இவ்வுண்மை வலியுறும். (4) இஃது இப்பொருட்டாதல் இளம்பூரணருக்கும் கருத்தென்பது அவர் உரைக்குறிப்பால் அறிக. (5) இவையும் உளவே என்பது பிந்திய பேராசிரியர் பாடமாயினும் அவையும் உளவே என்பதே அவருக்குக் காலத்தால் முந்திய இளம்பூரணர் கொண்ட பழைய பாடமாகும்! (6) இது பேராசிரியர்க்கும் கருத்தாதல், வேண்டியவாறு கூட்டம் நிகழப் பெறாமையின், தலைமகனொடு புலந்தாள் போல மடிந்தொன்றுமாதலின் என்னுமவர் உரைக் குறிப்பால் உணர்க! இயற்றமிழ் ஏற்றம் இயம்பல் நாவலர் பாரதியார், தம் புத்துரையில் இயற்றமிழின் ஏற்றத்தை இனிது எடுத்து இயம்பும் திறமும் காணலாம். ஒல்லும் வகையான், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழர்தம் பண்டை மரபையும் செல்லும் வாயெல்லாம் சிந்தைமகிழ்வுடன் ஏத்துவது இவர்தம் இயல்பு. இச்சூத்திரத்தின் செம்பொருள் இதுவாகவும், பேராசிரியரும் பிறரும் ஆன்றதமிழ்மரபும் தெளிசொற் குறிப்பும் முரண உரைகூறி மயங்க வைப்பர். ... அதனாற் பிறமொழிக் கூத்தியற் கொள்கை களை இதிற்புகுத்தி இடர்ப்படலாயினர், இவையெல்லாம் ஆரியக் கூத்து நூலார் கோள்களாதலின் அவை இயற்றமிழ் நூலில் இடம் பெறற்கில்லை! இதுவுமன்றி, இவ்வுரைகாரர் கூறும் ஆரிய நாடக நூற் சத்துவங்கள் தொல்காப்பியர் இயற்றமிழ்ச் செய்யுளுக்குக் கூறும் மெய்ப்பாட்டுணர்வுகள் ஆகா! இம்மெய்ப்பாட்டு முறை பிற ஆரியக் கூத்து நூல் வழக்கொடுபடாமல் என்றும் இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாய்த் தொன்றுதொட்டு நின்று நிலவும் மரபிற்றாகும். அன்றியும் ஆரிய நூலார் கூறும் நவரசங்கள், இம் மெய்ப்பாடு களின் வேறாய் நடன நாட்டியச் சத்துவங்களாம். அவை முறையே சிருங்காரம், ஆசியம், கருணை, ரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் என்பனவாம். குற்சை என்பது அருவருப்பு. இதனை எனைத்து வகை யானும் தமிழ்ச் சான்றோர் செய்யுளில் எஞ்ஞான்றும் உயர்ந்த சுவைதரும் மெய்ப்பாட்டுப் பொருளாகக் கொண்டிலர்! இங்ஙனம் இவர் ஏத்துமிடங்கள் பலவற்றை இந்நூலிற் காணலாம். நுண்மாண் நுழைபுலம் நூற்பாக்களை விளக்குமிடத்து, உரையாசிரியர்கள் காட்டும் செய்யுட்களை அப்படியே, மீட்டும் காட்டாமல், சங்க இலக்கியங் களினின்றும், பிறவற்றினின்றும் வேறு பல செய்யுட்களைச் சான்றாகக் காட்டுவது நாவலர் பாரதியாரின் இயல்பாகும். இஃது இவரது நுண்மாண் நுழைபுலத்தையும், பன்னூற் பயிற்சியையும் அறியத் துணைபுரியும்! எள்ளல் என்பதற்கு இளம்பூரணர், நகையா கின்றே தோழி எனும் நெடுந்தொகைப் பாடலையும்; பேராசிரியர், எள்ளி நகினும் வரூஉம் (கலித். 61), நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே (அகம். 248) என்ற பாடல்களையும் சான்றாகக் காட்டுவர். நாவலரோ, ஊரன்... தாய்க்கே எனக் குறுந்தொகைப் பாடலை (எண் 8)க் காட்டுவர். இவ்வாறே, நூற்பாத் தோறும் பெரும்பாலும், புதிய பல எடுத்துக்காட்டுக்களைக் காட்டிச் செல்வர்! இவர் எடுத்தாண்டுள்ள நூற்பட்டியலைக் காணுமிடத்து, இவர்தம் புலமைத்திறத்தை ஒருவாற்றான் அறியக்கூடும்! இலக்கண நடை நூலுக்கு உரைகாண வந்த உரையாசிரியரனைவரும், இலக்கண நடை காட்டி எழுதுவது மரபு. பண்ணைத் தோன்றிய கண்ணிய புறன் எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக. அன்றியும், எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறன் என ஒருசொல் நடையாக ஒட்டித், தோன்றிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாக்கினும் அமையும். புறன் என்னும் எழுவாய் நானான்கென்னும் பயனிலை கொண்டு முடிந்தது! இஃது இளம்பூரணர் காட்டும் இலக்கண நடை (மெய்ப். நூற்பா 1). எண்ணு நிலைவகையால் தொகைபெற்ற நான்கென்னும் எழுவாய்க்கு மூன்றென்பது பெயர்ப்பயனிலையாய் வந்தது - இது, பேராசிரியர் காட்டும் இலக்கண நடை (மெய்ப். நூற்பா. 15). இனி, வினையுயிர் என்பதை உம்மைத் தொகையாக்கி, செயலும் உயிரும் ஓய்ந்து கையறு நிலையில் என உரை கொள்ளினும் அமையும். ஈற்றேகாரம் அசை, இன்மையும் என்பதன் உம்மை, எதிர்மறைப் பொருட்டு; உண்மையே பெருவழக்கென்பது உம்மைக் குறிப்பு. இது நாவலர் பாரதியார் காட்டும் இலக்கண நடை இனி, நாவலர், நூற்பாவுக்கு உரை கூறுங்கால், (1) கருத்து (2) பொருள் (3) குறிப்பு என மூவகையாகப் பகுத்துக் கொள்வார். நூற்பா நுவலும் கருத்து இஃது எனக் கருத்து என்ற பகுதியிலும்; பதவுரையினைப் பொருள் என்ற பகுதியிலும்; விளக்கவுரை, மேற்கோள், சான்று முதலானவற்றைக் குறிப்பு எனும் பகுதியிலும் விளக்குவது. படிப்போர்க்குப் பெருவிருந்தாய் அமைவன. இவ்வாறே நூல் முழுமையும் நாவலர் பாரதியார் அரிய பல நயவுரைகளை அள்ளி வழங்குகின்றார். இவற்றைப் படிக்கும் போது, தொல்காப்பியநூல் முழுமைக்குமே இவர் உரை எழுதி யிருந்தால், எத்துணைப் பெரும்பயன் கிட்டியிருக்கும் என்ற உணர்வு தோன்றாமற் போகாது. எனினும் இவர் எழுதிய மூவியற் புத்துறை தமிழகம் உள்ளளவும் நின்று நிலவத்தக்கது! இத்தகு உரையினைப் படித்து, ஆராய்வது - மேலும் புத்தம்புதிய பொரு ளுரைகளைக் கண்டுமகிழ்வது தமிழ் ஆய்வாளர்களின் கடனாகும்! இவ்வகையில் நாவலர் ச.சோ. பாரதியாரவர்கட்குத் தமிழ்ப் பெருமக்கள் என்றும் கடப்பாடுடையராவர்! வாழ்க தொல்காப்பியர்! வாழ்க நாவலர் பாரதியார்! தந்தை உரை பற்றித் தனயன் உரை குறிப்பு: நாவலர் பாரதியார் இவ்வியலில் இளிவே என்பதற்குக் கூறும் உரைபற்றி, அன்னாரின் மகனார் திரு சோ. இலட்சுமிரதன் பாரதியார் கூறும் சிறு குறிப்புரை இது. சூத்திரம் 5இல் வரும் இளிவே என்பதற்கு இழிதகவு என்ற பொருளும், குறிப்பில் இளிவு - பிறரிகழ்வாற் பிறக்கும் அவலம், பழி பிறங்கும் பான்மைத்தாம் இளிவரலன்று, அவ்விளிவரல் அடுத்த சூத்திரம் கூறும் என்றும், சூத்திரம் 6இல். மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு, யாப்புற வந்த இளிவரல் நான்கே என்பதில் தொடர்ந்து படரும் மானக்குறை நான்கு வகைத்தாம் என்ற பொருளும், குறிப்பில் இளிவரல் மானங்குன்ற வருவது என்றும் பிறவும் காணப்படுகின்றன. சூத்திரம் 6இன், இளி இளிவரின் - இளிவந்த என்பன மானங்குன்ற வருவதாக மட்டிலுமே கொள்ள வேண்டுமென்பதும், சூத்திரம் 5இல் காணும் இளிவே என்பது அத்தகையதல்ல, மானங்குன்றச் செய்த பிறரிகழ்வு மட்டிலுமே என்பதும் சரியான தாகத் தெரியவில்லை. சூத்திரம் 5இல், இளிவே, இழவே, அசைவே, வறுமை என விளிவில் கொள்கை அழுகை நான்கே என்பது ஒருவன் தனது விளிவில் கொள்கையால் அந்நான்கிற்கும் பொறுப்பாகலால், அதனால் அவன் மானங்குன்ற நேரலாம் என்பதும், சூத்திரம் 6இல் காணும், மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய நான்கும், அவை தொடர்ந்து படரும் இயற்கை வயத்தால் அவனது பொறுப்பின்றியே நிகழக்கூடுமானதால், அவற்றிற்கு அவன் மானங்குன்ற வேண்டியதில்லை என்பதாகவும், கொள்ளுதல் பொருத்தமானதாகத் தெரிகிறது. சூத்திரம் 5இல், உள்ள இளிவே என்பதற்கும், சூத்திரம் 6இல், உள்ள இளிவரல் என்பதற்கும் காணக்கூடிய வேறுபாடு, முன்னது விளிவில் கொள்கைப் பாங்கினதாகவும், பின்னது, யாப்புறவரும் தகைமையானும் இருப்பதாகக் கொள்ளலே சிறக்கும் எனத் தோன்றுகிறது. நாவலர் பாரதியாரின் வரலாற்றுக் குறிப்பேடு 1879 சூலை 27 - நாவலர் பாரதியார் தோற்றம்: இயற்பெயர்: சத்தியானந்த சோமசுந்தரன். (தந்தை: எட்டப்ப பிள்ளை. தாய் : முத்தம்மாள்). 1894 (ஏறத்தாழ) மீனாட்சியம்மையாரை மணமுடித்தல். 1898 மார்ச் 30 - முதல் மகன் இராசாராம் பாரதி பிறப்பு. 1903 பிப்ரவரி 16- இரண்டாம் மகன் இலக்குமிரதன் பாரதி பிறப்பு. 1905 அக்டோபர் 13 - மகள் இலக்குமி பாரதி பிறப்பு. 1905 சட்டப்படிப்புத் தேர்வு. 1905-1920 தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழில். 1905-1919 நாட்டு உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக அரசினர் ஐயப்பட்டியலில் நாவலர் பெயர். 1913 எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றி பெறல். 1916 ஆக. 19 - கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் ஆராய்ச்சிச் சொற்பொழிவு. 1920 தூத்துக்குடியை விட்டு மதுரை வந்து வழக்கறிஞர் பணிபுரிதல். 1920 மதுரையில் மாநிலக் காங்கிரசு மாநாட்டை நடத்துதல். 1926 மதுரையில் சி.ஆர். தாசைப் பேசச் செய்தல். 1926 சனவரி 25 மதுரைத்தமிழ்ச்சங்கம், வாலிபக்கிறித்தவர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் ஆராய்ச்சிச் சொற்பொழிவு. 1927 திசம்பர் 1- வசுமதி அம்மையாரைத் திருவெட்டாற்றில் மணம் புரிதல். 1929 பிப்ரவரி 28 - மகள் மீனாட்சி பிறப்பு. 1929 மார்ச் 11 - சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் திருவள்ளுவர் சொற்பொழிவு. 1930 சூலை 27 - மகள் லலிதா பிறப்பு. 1930 ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம். 1932-1933 மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறுப்பு. 1933 மே 13 - உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் தொடக்கப்பள்ளி உண்டாக்குதல். (வீரர் வ.உ.சி.யின் தொடக்க விழா உரை). 1933-1938 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைமைப் பணி. 1935 செப்டம்பர் 15 - எட்டயபுரத்தில் தமிழகம் புதுமனை புகுவிழா. 1936 ஈழ நாட்டுச் சுற்றுப் பயணம் (2ஆவது முறை). 1937 செப்டம்பர் 5- சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவர். 1937 அக்டோபர் 25- இந்தி மொழி பற்றிச் சென்னை மாநில முதலமைச்சர் திரு ச. இராசகோபாலாச்சாரியாருக்கு வெளிப்படை மடல் எழுதல். 1942 ஆக. 1-3 - மதுரை முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவர். 1944 திசம்பர் 30-31 - ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் (3வது முறை) ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றத்தாரின் நாவலர் பட்டம். 1948 பிப்ரவரி 14 - சென்னையில் அகில தமிழர் மாநாட்டின் தலைவர். 1948 சூன் 27 - இந்திமொழிபற்றிச் சென்னை மாநிலக் கல்வியமைச்சர் திரு தி.சு. அவினாசிலிங்கஞ் செட்டியாருக்கு மடல் எழுதுதல். 1954 சனவரி 17 - மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் கணக்காயர் பட்டமும் பொன்னாடை போர்த்தலும். 1954 சூலை 11 - அண்ணாமலை நகரில், சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர். 1955 பிப்ரவரி 9 - அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழாவில் முனைவர் (டாக்டர்) பட்டம். 1955 பிப்ரவரி 28 - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொன்னாடை போர்த்தல். 1956 சூன் 3 - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா 5ஆம் நாள் விழாவின் இயலரங்குத் தலைவர். 1957 சூன் 22 - சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கல். 1958 திசம்பர் 14 - பசுமலையில் தமிழகப் புலவர் குழு அமைப்புக் கூட்டம்: குழுவின் தலைவர். 1959 சூலை 27 - மதுரையில் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா - பாராட்டு. 1959 அக்டோபர் 4- மதுரையில் தமிழகப் புலவர் குழுவும், மதுரை நகரவையும் பாராட்டுதல். 1959 நவம்பர் 8 - மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாவில் தொடக்க உரை நாவலர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டம். 1959 திசம்பர் 2 - பசுமலையில் தமது இல்லத்தில் மயக்கமுற்று விழுதல். 1959 திசம்பர் 4 - மதுரை அரசினர் பெரு மருத்துவமனை செல்லல். 1959 திசம்பர் 7- நினைவிழத்தல். 1959 திசம்பர் 14- இறைவனடி சேரல் [ïuî 8.40 kÂ]. 1959 திசம்பர் 15 - பசுமலையில் உடலுக்கு எரியூட்டல் [khiy 6kÂ]. 1959 டிசம்பர் 15 - இறுதிக் கடனிகழ்ச்சி - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட பல அறிஞர்களின் சொற்பொழிவு, ஏழைகளுக்கு உணவளித்தல். 1963 நாவலர் சோமசுந்தர பாரதியார் கல்வி அறப்பணிக்குழு தோற்றுவித்தல். நூற்பா அகராதி (எண் - பக்க எண்) அகத்திணை மருங்கி 178 அச்சமும் 416 அடியோர் பாங்கினும் 76 அணங்கே 330 அதுவே தானும் 214 அதுவே வண்ணக 463 அமரர்கண் 271 அம்போதரங்கம் 463 அயலோ ராயினும் 105 அல்குல் 346 அவற்றுட் 443 அவற்றுள், ஒத் 463 அவற்றுள் ஓதலுந் 81 அவற்றுள் நடுவ 30 அவையு முளவே 355 அறுவகைப்பட்ட 236 அன்புறு தகுவன 387 அன்ன பிறவு மவற் 353 ஆங்கவை ஒருபா 333 ஆசிரியம் வஞ்சி 461,463 ஆடி நிழலின் 155 ஆயர் வேட்டுவர் 70 ஆறுசெல் 126 இடைநிலைப் 463 இயங்குபடை 204 இருவகைப்பிரிவும் 45 இளிவே இழவே 327 இறைச்சி 393 இறைச்சிதானே 387 இறைச்சியிற் 387 இன்பத்தை 357,368 இன்பமும் 400 உடம்பும் உயிரும் 96 உயிர்வரு 317 உய்த்துணர் 314 உரிப்பொரு ளல்லன 49,54,60,140 உருட்டு 455 உழிஞை தானே 213 உள்ளுறுத் திதனோ 391 உள்ளுறை 143,152,391 உள்ளுறை தெய்வம் 144,391 உறுப்பறை 331 ஊரொடு 286 எஞ்சா மண்ணசை 200 எஞ்சி யோர்க்கும் 131,159 எண்வகை 314 எத்திணை மருங்கினும் 94 எந்நில மருங்கிற் 65,140 எருத்தே 462,463 எழுத்தொடும் 389 எள்ளல் 325 ஏமப்பேரூர்ச் 103 ஏவன் மரபி 79,92 ஏறிய மடற்றிறம் 149,159 ஏனை உவமம் 145,159 ஏனைய ஒன்றே 463 ஏனோர் மருங்கினு 74 ஒத்தாழிசை 450,462,463 ஒருபொருள் 461,462 ஒருபோகியற் 463 ஒன்றாத் தமரினும் 116 ஒன்றே வேறே 403 ஓதல் பகையே 81,92 ஓதலுந் தூதும் 90 கசதப முதன்மொழி 317 கணையும் வேலும் 226 கண்ணினும் 382 கலந்த பொழுதும் 60 கல்வி தறுகண் 331 காஞ்சி தானே 257 காமஞ் சாலா 146,159 காமஞ் சான்ற 445 காமத் திணையிற் 97 காமப் பகுதி 283 காரு மாலையு 33 குடையும் வாளும் 219 குட்டம் 456 குழவி மருங்கினும் 285 குறிப்பே 414 கூதிர் வேனி 241 கூழை விரித்தல் 344 கூற்றும் 462 கைக்கிளை முதலா 29,176 கொச்சக 463 கொடிநிலை காந்தள் 291 கொடுப்போ 270,295 கொண்டுதலைக் 58,94 கொள்ளார் தேஎம் 214 கொற்ற வள்ளை 294 சிறந்துழி 408 சுட்டி யொருவர் 166 சூத்திரந் தானே 320 செல்வம் புலனே 332 சொல்லொடும் 385 தரவும் 460 தலைவரும் விழும 107 தன்னும் அவனும் 97 தன்னுறு வேட்கை 417 தாவில் கொள்கை 234 தாவில் நல்லிசை 270,302 தானே சேறலும் 83 தானை யானை 228 திணைமயக் 49,60,140 தும்பை தானே 203,225 தெய்வ முணாவே 64 தெய்வம் அஞ்சல் 392 தெரிந்துடம் 350 நடுவணைந்ணை 30 நடுவுநிலை 43,47 நமவருகாலை 317 நம்பு மேவு 95 நாடக வழக்கினும் 160 நாட்ட மிரண்டும் 413 நாலிரண் டாகும் 321 நான்கன் ஒற்றே 317 நிகழ்ந்தது கூறி 137,158 நிகழ்ந்தது நினைத்தற் 135, 158, 159 நிம்பிரி 379 படையியங் கரவம் 182 பண்ணைத் 316 பனியெதிர் 35 பாங்கருஞ் சிறப்பிற் 257 பாங்கர் 426 பாடாண் பகுதி 269 பாட்டு உரை 461 பாநிலை 460 பாராட்டெடுத்தல் 348 பிறப்பே 378,404 பின்பனி 44 பின்முறை 441 புகழொடும் 389 புகுமுகம் புரிதல் 341,368 புணர்தல் பிரித 49,57, 135,159 புதுமை பெருமை 329 புலம்பே தனிமை 98,352 புறஞ்செயச் 352 புறத்திணை மருங்கிற் 166 பெயரும் வினையு 67,92 பெருமையும் 415 பெறலரும் 442 பொருள்வயிற் 91,92 பொழுதுதலை 340 பொழுதும் ஆறும் 113 மண்டிலம் 457 மக்கள் நுதலிய 162 மரபுநிலை திரியா 140,158 மறங்கடைக் கூட்டிய 186 மறைந்த 440 மன்னர் பாங்கிற் 89 மாயோன் மேய 32,70 மாற்றருங் 120,258 முட்டுவயிற் 367 முதலும் முடிவும் 155 முதலெனப் படுவது 32,63 முதலொடு 431 முதல் கரு 31 முந்நா 439 முந்நீர் வழக்கம் 93 முழுமுத லரணம் 213 முன்னைய 152,431 மூப்பே 328 மெய்தொட்டுப் 429 மெய்ப்பெயர் 290 மேலோர் முறைமை 87 மேவிய சிறப்பி 85 மைந்து பொருளாக 225 மொழி கரந்து 390 வகரம் வருவழி 317 வசையொடும் 390 வஞ்சிதானே 199 வண்டே 411 வண்ணகம் 463 வழங்கியன் 279 வாகை தானே 234 வினையுயிர் 354 வெறியறி சிறப்பின் 189 வேட்கை 377,417 வேண்டிய பொருளின் 99 வேந்துவிடு முனைஞர் 179 வேந்துவினை 90,181 வைகுறு 36 நூற்பெயர் அகராதி (எண் - பக்க எண்) அகநானூறு 38,40,43,68,71,85,87,88,91,93,100, 104, 113, 130, 136, 140, 168, 293, 326, 342, 359, 361, 362, 368, 369, 370, 374, அற்புதத் திருவந்தாதி 379 ஆசிரிய மாலை 184,252,260 இராமாவதாரம் 284 இலக்கண விளக்க மேற்கோள் 343, 345,347,353,360 இறையனார் களவியல் 406 உரைமேற்கோள் 60, 115, 126, 275, 302, 303, 304, 306, 422, 424, 426 ஐங்குறுநூறு 56, 67, 73, 75, 84, 100, 101, 102, 103, 109, 111, 112, 115, 116, 121, 123, 129, 134, 135, 160, 358, 359, 364, 388, 392, 395 ஐந்திணை ஐம்பது 79 ஐந்திணை எழுபதும் 339,376 கந்த புராணம் 61 கம்பராமாயணம் 165,218,365,366,410,411,414 கலித்தொகை 43, 78, 81, 87, 92, 111, 112, 129, 130, 211, 327, 359, 362, 363, 364, 365,366,421 களவழிநாற்பது 245 குறுந்தொகை 34, 35, 39, 42, 45, 47, 48, 49, 56, 69, 72, 75, 89, 101, 105, 109,110, 111, 112, 113, 115, 116, 121, 123, 125, 126, 128, 131, 132, 133, 136, 137, 138, 141, 142, 143, 145, 160, 325, 326, 327, 328, 329, 337, 338, 339, 340, 348, 349, 350, 351, 353, 357, 358, 359, 360, 361, 362, 363, 364, 366, 368, 369, 370, 371, 372, 373, 374, 375, 376, 377, 385, 387, 394, 407, 419, 420, 421, 426 கூத்தராற்றுப்படை 304 சிலப்பதிகாரம் 45,165,182,183,185, 186, 189, 205, 207, 208, 209, 210, 220, 223, 227, 246, 251, 263, 264, 293, 422, 424, சிறுபாணாற்றுப்படை 304 சிறுபாணுரை பழைய பாட்டு 289, 290 சிற்றெட்டகம் 128 சீவக சிந்தாமணி 152, 165, 182, 205, 221, 229, 259, 343, 344, 372, 410, 413, 414, 423, 424 ஞானவெட்டி 174 தகடூர் யாத்திரை 218, 231, 264, 275 திணைமாலை நூற்றைம்பது 53, 54, 56, 75, 150, 419 திணைமொழி 62, 75 திரிகடுகம் 255 திருக்குறள் 41, 62, 96, 131, 151, 195, 249, 252, 254, 255, 256, 327, 329, 337, 339, 343, 348, 354, 358, 360, 361, 362, 363, 365, 366, 372, 374, 382, 401, 414, 419, 421, 422, 424, 425 திருச்சிற்றம்பலக் கோவையார் 89, 129, 413, 420 திருத்தொண்டர் புராணம் 411 திருமுருகாற்றுப் படை 39,285 திருவாரூர்க் கோவை 69, 408 தொல்காப்பியம் 177, 441, 442, 447 நம்பியகப்பொருள் 176 நற்றிணை 35, 36, 40, 44, 45, 48, 49, 68, 71, 72, 73, 74, 87, 88, 94, 99, 102, 103, 106, 110, 111, 122, 123, 124, 125, 127, 128, 134, 141, 150, 224, 337, 338, 360, 376, 408, 420, 422, 423 நன்னூல் 22 நெடுநல்வாடை 212, 243 பட்டினப் பாலை 167, 216, 308 பதிற்றுப்பத்து 206, 207, 209, 216, 222, 224, 227, 228, 245, 276, 278, 280 பரிபாடல் 95, 162 பழமொழி 254 பன்னிரு படலம் 174, 181 பாரதப்பாட்டு 233 பாரத வெண்பா 248 பாலைக்கலி 84,94,105,109,111,127,128 பிங்கலம் 455 புறத்திரட்டு 182, 183, 184, 229, 230, 231, 232, 248, 275 புறநானூறு 184, 185, 186, 187, 193, 195, 196, 197, 199, 206, 207, 208, 209, 212, 215, 216, 217, 218, 221, 223, 227, 229, 230, 231, 232, 234, 235, 236, 246, 247, 248, 251, 253, 254, 255, 259, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 275, 276, 277, 295, 296, 297, 298, 299, 301, 305, 307, 308, 309, 310, 311, 312, 329, 385, 390 புறப்பொருள் வெண்பாமாலை 99, 174, 193. 265, 413 பெரிய திருமடல் 96 பெருங்கதை 188 பெருந்தேவனார் பாரதம் 233 பெரும்பாணாற்றுப் படை 191, 306, 310 பெரும் பொருள் விளக்கம் 182. 183. 197. 217. 218. 220. 221. 246, 250, 256, 275 பொருநராற்றுப் படை 191, 306, 310 மதுரைக்காஞ்சி 37, 191, 206, 209, 249, 306 மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி 455 மருதக்கலி 78, 130, 131 மலைபடுகடாம் 37 முத்தொள்ளாயிரம் 195,210, 229, 289, 290 முல்லைகலி 72, 78 முல்லைப் பாட்டு 100, 244 விறலிமாற்றுப்படை 304, 306 சிறப்புப் பெயர் அகராதி (எண் - பக்க எண்) அகத்தியர் 21, 174 அஞ்சிலாந்தை 346 அடைநெடுங் கல்லியார் 262 அண்ணாமலை வள்ளல் 23 அதிகமான் 253, 390 அநங்கமாலை 415 அந்துவஞ்சாத்தன் 261 அம்மள்ளனார் 73 அம்மூவனார் 71, 346, 408 அரசஞ்சண்முகனார் 22 அரிசில் கிழார் 263 அரித்தாட்டில் 20 அள்ளூர் நன்முல்லையார் 42 ஆலங்குடி வங்கனார் 325 ஆலந்தூர் கிழார் 385 ஆவூர் மூலங்கிழார் 385 இடைக்குன்றூர் கிழார் 208,247 இராமன் 21,168,366,410 இராவணன் 218 இருங்கோவேள் 385 இலக்குமி 284 இளம்பூரணர் 30,46,53,55,58, 59, 70,76,83,87,105, 119, 131, 144, 156, 157, 163, 181, 189, 198, 202, 249, 251, 268, 272, 273, 287, 289, 292, 293, 299, 320, 328, 332, 346, 347, 351, 356, 371, 375, 393, 422, 424, 427, 444, 450, 453, 454, 455, 459 இறங்கு குடிக்குன்ற நாடன் 91 உகாய்குடி கிழார் 89 உதயகுமரன் 168 உம்பற்காட்டிளங் கண்ணனார் 85 உலோச்சனார் 275 எல்லப்ப நாயினார் 69 எல்லப்ப நாவலர் 408 ஓதலாந்தையார் 361 ஓய்மாநாட்டு நல்லியக் கோடன் 167 ஓரம் போகியார் 326 ஓரி 253 ஔவை 195, 268, 275 கச்சிப்பேட்டு நன்னாகையார் 49 கடம்பனூர்ச் சாண்டிலியன் 359 கண்டீரக் கோ 297 கண்ணகி 165, 168 கண்ணன் 21 கண்ணுதற்கடவுள் 193 கதிரேசன் 22 கதையங்கண்ணனார் 268 கபிலர் 35, 72, 75, 194, 276, 281, 297 கம்பர் 218, 365, 410, 411, 414 கயமனார் 337, 351 கரிகாலன் 304 கரிகாற் சோழன் 295, 310 கருணாகரத் தொண்டைமான் 84 கழார்க் கீரனெயிற்றியர் 84 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் 224 காப்பியர் 20,21 காப்பியாற்றுக் காப்பியனார் 21 காமக் கண்ணியார் 275 காமன் 422 காரிகிழார் 301 காரிக்கண்ணனார் 212,275 காரைக்காலம்மையார் 380 கிளிமங்கலங்கிழார் 366 குடபுலவியனார் 276 குணமாலை 372 குன்றூர்கிழார் மகனார் 263 கூடலூர் கிழார் 346 கோவலன் 165,168 கோவூர் கிழார் 275 கௌணியன் விண்ணத் தாயன் 299 சாத்தன் 261 சிவஞான முனிவர் 37,39,40 சிறைக்குடி ஆந்தையார் 337,353 சீதை 168, 366, 410 சீவகன் 168, 410, 411, 415, 422, 424 சுக்கிரன் 21 சுக்கிரீவன் 218 சுந்தரர் 411 சுரமஞ்சரி 422, 423, 424 செங்குட்டுவன் 210, 280 செவ்வேள் 193 சேக்கிழார் 411 சேந்தன் கீரன் 349 சேந்தன் தந்தை காப்பியனார் 21 சேயோன் 32,33 சேரமான் சாத்தன் 358 தங்கால் முடக் கொல்லனார் 358 தத்தை 410, 411 தாமப்பல் கண்ணனார் 254 தித்தன் 276 திருத்தக்கதேவர் 415 திருமங்கையாழ்வார் 96 திருமால் 193, 194, 284 திருமாவளவன் 167, 216 திருவள்ளுவர் 41, 255, 260, 414 தொண்டைமான் 390 தொல்காப்பியர் 20,21,22,25, 46, 53, 64,69,77,78, 82,92,96, 108, 147, 153, 156, 161, 163, 165, 168, 169, 171, 172, 173, 174, 177, 181, 188, 201, 202, 203, 204, 222, 224, 226, 237, 238, 271, 273, 274, 282, 292, 300, 313, 314, 319, 320, 352, 381, 384, 386, 387, 391, 392, 398, 402, 416, 427, 436, 443, 447, 448, 455 நக்கீரர் 193, 215, 243 நச்சினார்க்கினியர் 46, 52, 55, 74, 77, 83, 87, 93, 94, 97, 105, 108, 119, 126, 144, 153, 154, 156, 158, 176, 189, 196, 224, 249, 266, 268, 270, 272, 273, 274, 281, 283, 286, 287, 292, 293, 393, 401, 426, 427, 428, 430, 435, 436, 443, 444, 445, 448, 450, 453, 454, 456, 457, 460, 461 நம்பூதனார் 244 நரிவெரூஉத்தலையார் 361 நலங்கிள்ளி 196 நல்வெள்ளியார் 361 நன்மாறனார் 297 நன்னன் 167, 224 நன்னாகையார் 35, 49, 361 நாற்கவிராச நம்பி 148 நெடுஞ்செழியன் 84, 208, 212 நெடுமானஞ்சி 298 நெடுவெண்ணிலவினார் 386 பதஞ்சலி 20 பதுமனார் 360 பதுமை 410, 411 பரசுராமன் 21 பரணர் 276,374 பரமதத்தன் 380 பரவை 411 பலராமன் 193 பல்காப்பியர் 21 பல்யானைச்செல்கெழு குட்டுவன் 209 பாணினி 20 பாண்டியன் நன்மாறன் 193 பாண்டியன் நிலந்தரு திருவின் நெடியோன் 20 பாரி 253, 277, 297 பாரிமகளிர் 385 பாலங்கொற்றனார் 88 பாலை பாடிய பெருங்கடுங்கோ 94 பூதந்தேவனார் 56 பூதப்பாண்டியன் 195 பூதனார் 93 பெருங்கடுங்கோ 45, 49, 56, 361 பெருங்கண்ணனார் 48 பெருங்குன்றூர்கிழார் 278 பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் 37,48 பெருங்கோப்பெண்டு 264 பெருங்கௌசிகனார் 37, 48 பெருந்தேவனார் 93 பெரும்பதுமனார் 40 பேயனார் 84 பேராசிரியர் 318, 320, 323, 344, 347,356, 371, 375, 381 பேராலவாயர் 275 பொத்தியார் 264 போதனார் 102 போந்தைப் பசலையார் 68 மகரக்கண்ணன் 316 மணிமேகலை 168 மணிவாசகர் 129 மதுரை எழுத்தாளன் 243 மதுரைச் செங்கண்ணனார் 361 மதுரைப் பேராலவாயார் 185 மள்ளனார் 40 மாங்குடி மருதனார் 37 மாதவி 169 மாமூலனார் 88, 93, 360 மாயோயே 33 மாயோன் 32, 33, 193 மாறன் பொறையனார் 79 முடக் கொல்லனார் 358 முடத்தாமக் கண்ணியார் 304 முடமோசியார் 206 முருகவேள் 285, 294 முருகன் 210, 294 மூலங்கிழார் 196, 297, 299 மோசி கீரனார் 187, 300 மோசி சாத்தனார் 275 வள்ளி 294, 412 வான்மீகர் 20 விச்சிக் கோ 297 வெண்பூதியார் 349 வெளிமான் 297 வெள்ளியந்தின்னனார் 73 வெள்ளெருக்கிலையார் 277 வேந்தன் 32 வேள் எவ்வி 277 மேற்கோள் பாடல் அகராதி (எண் - பக்க எண்) அகர முதல 291 அஞ்சி லோதி 47 அடுந்தேர்த் தானை 223 அணங்குகொல் 62, 410 அணிமுக 78 அணியிழையார் 289 அண்ணாந் தேந்திய அமரகத்து 294 அமிழ்த முண்க 142 அம்ம வாழி 44 அம்ம வாழி... இன்றவர் 394 அம்ம வாழி ... காதலர் 48 அம்ம வாழி தோழி 160 அம்ம வாழி... முன் 49 அயத்துவளர் 136 அயிற்கதவம் 229 அரிதரோ 337 அரிதாய அறனெய்தி 92 அரிமா சுமந்த 167 அரிற்பவர்ப் 133 அருங்கடிவேலன் 191 அருஞ்சுரக் கவலை 87 அருஞ்சுர மிறந்த 100 அரும்பவிழ் 210 அரும்பெற லமிழ்தள 142 அருவி 377 அருவி யார்க்கும் 125 அலர் யாங் 369 அல்லினை 411 அவளே, உடனமர் 108 அழிவில முயலும் 94, 121 அளிதோ தானே 217 அளித்தஞ்சல் 363 அளிநிலை பொறாஅ 139 அளிய தாமே 266 அறத்தாற்றி 448 அறத்தான் 401 அறத்திற்கே 249 அறநீர்மை 307 அறனீனும் 401 அறனெனப் 448 அறிகரி பொய்த்தல் 75 அற்றைத் திங்கள் 277 அனைத்தாக 196 அன்பினர் 49 அன்பு அறிவு 90 அன்றை யனைய 123 அன்ன நடையார் 56 அன்னாய் வாழி 56 அன்னை அறியினு 408 அன்னை வாழியோ அன்னை 112 ஆளும் குரிசில் 197, 232 ஆறுசெல் வருத்தத்து 126 ஆற்றி னொழுக்கி 448 இகலுமிரு வேந்தர்க் 89 இகல்வேந்தன் 81 இசையும் இன்பமும் 127,128 இடனில் பருவத்தும் 247 இடிக்குங் கேளிர் 132 இடுக்கண் வரினும் 328 இதுநும் மூரே 115 இதுமற் றெவனோ 142,328 339,373 இதுவென் பாவை 103 இந்திர 364 இமிழ்கடல் 276 இமையா முக்க 302 இம்மைச் செய்தது 206,297 இரண்டறி கள்விநங் 136,160 இரவலர் புரவலை 297 இரவலர் வம்மி 264 இருஞ்சா யன்ன 392 இருமுந்நீர் 299 இரும் பனம் 191,276 இரும்பனை 275 இரும்புனிற் 99 இலையிலஞ்சிணை 121 இலையில் பிடவம் 48 இவர்க்கீத் 230 இவளே... 353 இவளே, கானல் 407 இவளே நின்னல 110 இவள்வயிற் செலினே 163 இவன் இவள் ஐம்பால் 116 இவ்வே பீலி 390 இழைத்த திகவாமற் 249 இளமா எயிற்றி 186 இளையர் 256 இளையோர் 261, 265 இனத்தோ 302 இன்கடுங் 276 இன்றி னூங்கோ 235 இன்ன னாயினள் 371 ஈங்கே வருவர் 49 ஈதலும் துய்த்தலும் 89,126 ஈயென 253 உடற்றுப்பிணி 259 உணர்குவ 43 உண்டா லம்ம 255 உருவக் கடுந்தேர் 245 உலகிற் காணி 48 உவந்துறைவார் 348 உழந்துழந்து 131 உள்ளார் கொல்லோ 35 உள்ளிக் 419 உள்ளின் 371, 419 உறைதுறந் 44 ஊஉர் அலரெழ 110, 364 ஊடினீ 45 ஊடுதல் 41 ஊர்சூழ் 220 எக்கர் ஞாழல் 120 எண் சேர்ந்த 256 எண்ணரு சேர்ந்த 256 எரிகவர்ந் துண்ட 123 எரிமணி 424 எருது காலுறா 247 எருமை யன்ன 301 எல்லு மெல்லின்று 114 எழின் மருப் 425 எற்றோ வாழி 145 எனைப் பெரும் 245 என்றவ ளரசன் 152 என்றிறத் 265 என்னும் உள்ளினள் 99 என்னைமுன் 195 என்னோற்றனை 78 ஏசாச்சிறப்பின 165 ஏதங் கருதா 60 ஏதிலார் போலப் 347 ஏர்பரந்த 263 ஏற்றுரி போர்த்த 205 ஏற்றுவலன் உயரிய 193,215 ஐந்தவித்தா 252 ஐம்பெரும் 311 ஐயப் படாஅ 382 ஐயுணர் 255 ஐயோவெனின் 265 ஒண்டொடீ 325 ஒண்ணுதற் 362, 419 ஒத்த வயவ 184 ஒருகுழை ஒருவன் 130 ஒருநாட் 253 ஒருமக ளுடையேன் 103 ஒருவ ரொருவ 183 ஒருவனை ஒருவன் 207,234, 235 ஒரூஉ, கொடியியல் 130 ஒல்லுவ 297 ஒளிறேந்து 360, 376 ஒன்றானு நாம் 56 ஒன்றில் காலை 111 ஒன்றுது மென்ற 40 ஒன்று நன் 297 ஒன்னார் முன்னிலை 197 ஓங்கு நிலைத்தாழி 104 ஓங்கெழிற் 422 ஓடுந் திமில் 422 ஓருயி ராக 265 ஓவத் தன்ன 266 கடந்தரு 253 கடம் பெறிந்து 294 கடலன்ன 96 கடல்கிளர்ந் 258 கடற்கானற் 53 கடிகொள் 72 கடுந்தேர் 308 கட்டி யன்ன 231 கண்களவு 342 கண்டுகேட் 348 கண்ணெனும் 410 கண்ணொடு 414 கணைக் கோட்டு 133, 143 கந்துமுனிந் துயிர்க்கும் 196 கயமலர் 185 கயலெழுதி 424 கரத்தலு 358 கரந்தியல் காட்டுத் 183 கரந்தை நீடிய 195 கரப்பினுங் 343 கருங்கால் 385 கருத்தாற்றி 254 கலஞ்செய் 265 கலிவர லூழி 248 கல்சுடர்சேரும் 40 கழனி மாத்து 142 கழைகோடி 408 கழைகோடு 69 களிறணைப்ப 262 களிறு கடைஇய 248 கற்பகத்தின் 411 கற்றீண்டு 255 கன்றுபுகு 425 காணா மரபிற் 163 காணுங்காற் 131 காமக் கடும் 358,421 காமக் கணிச்சி 340 காமமொழிவ 35 காமம் காமம் 132 காய்சின வேந்தன் 84 காராரப் பெய்த 78 கார் செய் காலை 84 கார் தொடங் 48 காலனும் 311 காலே பரிதப் 105 காலைஎழுந்து 42 காலையும் 374 கானக் காக்கை 263 கானங் கோழி 132 கானம் பொருந்திய 303 கிண்கிணி 208 குக்கூ 39 குடிப்பிறப் 252 குயில்வாயன்ன 275 குய்குரன் 266 குழவி யிறப்பினு 264 குழாக்களிற் 248 குளிறு குரன் 185 குறத்தி மாட்டிய 297 குன்றக் குறவன் 75 கூடற் பெருமானை 289 கூதிர் நின்றன்றாற் 85 கூந்த லாம்பன் 133 கூற்றமோ 62 கெட்டார்க்கு 372 கேட்டிசின் வாழி 137 கைவினை 370 கொடிப்பூ 388 கொடியவுங் 138 கொடுமணம் பட்ட 227 கொடுமிடனாம் 129 கொண்ட லாற்றி 36 கோங்கங் குவி 45 கோடீ 360, 361 கோட்டுப்பூ 374 கோமுனி 366 சான்றவிர் 151 சிலைவிற் பகழி 73 சிறப்புடை மரவான் 235 சிறைபனி 34 சிறைவான் 420 சுதையத் தோங்கிய 218 செம்மலரடி 409 செய்கையரிய 306 செய்வினைப் 116 செருக்கும் சினமும் 150 செருப்பிடைச் 275 செருவெங் 218 செல்லிய முயலிற் 102 செறாஅச் 382 சென்ற நிரைப் 183 சேயிழை 306 சேற்றுநிலை 43 சொல்லிற் 423 தடவு நிலை 310 தண்கயத் தமன்ற 113 தண்ணந் 328 தண்ணீர் பெறாஅத் 94 தலையி 329 தாக்கற்குப் 217 தாதிற் செய்த 132 தாய்வாங்கு 218 திங்க ளிளங் 302 திருநுதல் 413 தினைகிளி 109 தீங்கரும்பு 211 தீங்கனி 262 துஞ்சுங்காற் 336 தும்முச் 340 துறந்ததற் 134 துறுகலயலது 137 தூஉஉத் தீம்புகை 167 தூத்துகி 187 தேவரனையர் 327 தேறினேன் 423 தேனுடைந் 152 தொடலை 424 தோளும் 421 நகுதக்கனரே 196 நகைநன் குடையன் 133 நசைஇயார் 366 நசைபெரி 387 நரம்பெழுந் 267 நல்லுரை 419 நல்லோண் மெல்லடி 115 நறவுந் தொடுமின் 275 நறுவிரை துறந்த 206 நனவினால் 361 நன்றாய்ந்த 298 நன்னலந் 364 நன்னீரை 365 நாடா கொன்றோ 300 நாணாக நாறு 150 நாணென 422 நாணொடு 151 நாமில மாகுத 338 நாளும் நாளும் 128 நிரைதார் 42 நிலத்தினும் 142,348 நிலந்தொட்டுப் 111 நிலம்பிறக்கிடுவது 229 நில்லாங்கு 130 நிழலான் றவிந்த 101 நிறையுடையே 372 நினக்கியாம் 134 நினைத்தொறுங் 102 நினைப்பவர்போன்று 337 நினையாய் வாழி 56 நீரறவறியா 221, 275 நீராடான் 389 நீர்த்தோ 254 நீர்நசைக் கூக்கிய 101 நீர்மிகிற் 276 நீலக் கச்சை 231 நுண்ணிய 414 நுமர்வரி 60 நெஞ்சு நடுக்குற 362 நெடுந்தகை 414 நெடிய திரண்ட 375 நெடுவரைச் 167, 290 நெடுவெண் 43 நெய்தல் கூம்ப 40 நெருப்பவிர் 116 நெல்லு முயி 300 நேரார் 185, 295 நைவாரை 302 நோகோ யானே 277 நோக்கினாள் 342 நோமென் 369 நோனா 421, 425 பகன்மா யந்தி 40 பகைநட்பா 249 பகை பெருமையிற் 228 படர்ந் தொளி 364 படலாற்றா 339 படுசுடரடைந்த 40 பதிமருண்டு 339 பயங்கெழு 309 பரலுடை 199 பரிதிசூழ்ந் 251 பருகிய நோக் 284 பல்சான்றீரே 267 பல்லிருங் கூந்தல் 129 பல்வரி யினவண்டு 86 பழ மழை கலித்த 34 பறை நிறை 195 பனிப் பழுநிய 268 பன்மாயக் கள்வன் 327, 340 பாஅல் அஞ்செவி 109 பாங்கரும் பாட் 72 பாடின்றிப் 361 பாடுநர்க் கீத்த 264 பாயும் விடை 413 பாரி பாரி 296, 390 பார் தாங்கும் 307 பாலு முண்ணாள் 351, 357 பாலொத்த 419 பிணிகிடந் 289 பிரசங் கலந்த 141 பிறர்வேல் 223, 246 புகழ்சால் சிறப்பிற் 129 புணரிற் புணராது 124 புண்ணனந்த 260 புலப்ப லெனச் 131 புலாலகற்றும் 53 புலிபொரச் சிவந்த 122 புள்ளு மறியாப் 112 புன்கண்ணை வாழி 336 புன்புறவே 54 பூணியன் 365 பூவிடைப் 353 பூவை விரியும் 193 பெண்ணியலா 362 பெண்மையுணராப் 277 பெருங்கடலுள் 79 பெருங்கடல் வெண் 75 பெருங்கட் 294 பெருங்களிற்றடியில் 199 பெருநன் றாற்றிற் 109, 121 பெருந்தோள் 420 பைங்காய் நல்லிட 125 பைங்காய் நெல்லி 155 பைங்காற் 385 பைம்பொற் 280 பொத்தில் காழி 121 பொரியரைக் 66 பொருது வடுப்பட்ட 260 பொருவரு மூதூரிற் 220 பொலம்பசும் பாண்டிற் 109 பொறிவாயி 252 பொன்செய் பாண்டிற் 112 பொன்திகழ்தன் 285 பொன்னடர்ந் 408 பொன்னே 421 போர்க்கு உரைஇப் 223 மக்களே 327 மடங்கலிற் சினைஇ 195,261 மடலே காமந் 150 மடவ மன்ற 113 மணிமுடி 307 மணிதுணர்ந் 275 மண்திணிக்க 311 மதியு 365,423 மயங்கமர் 84 மயில்கொல் 62 மரங்கொல் 349 மராமர 365 மருங்கிலா 284 மருந்தோ 329 மருப்பூசி 229 மரையா மரல் 111 மலரே ருண்கண் 420 மலர் காணின் 365 மலைமிசை 243 மலையி னிழிந்து 215 மல்குசுனை 127 மள்ளர் கொட்டின் 101 மறங்கெழு வேந்தன் 233 மறநாட்டுந் 222 மறுவில் தூவிச் 100 மறைப்பேன் 342 மற்றவர் 380 மன்ற 131,373 மன்னர்க்கு 354 மன்னவன் னிரை 182 மன்னுயிர் 255 மாசற விசித்த 187 மாசறு பொன்னே 165 மாணிழை 424 மாரிப் பித்திகத்து 127 மாலை வாடின 412 மாலை வாரா 338 மால்வெள் 111 மாவாராதே 229 மாற்றார் நிரை 293 மிகுதியால் 254 மிகைதணித்தற் 89,129 மின்சாயன் மார்பன 151 மின்னொளி ரவிரற 138 மீன்வயி னிற்ப 278 முகைமுற்றினவே 34 முடிமன ரெழுதரு 229 முடிமனர் 221 முடிமுதிர் 73 முட்காற் காரை 185 முந்நீர்த் 255 முதிர்ந்தோ ரிளமை 125 முளிதயிர் 132 முனைப்புலத்து 275 முன்னங் குழையவும் 193 முன்னேவந் 411 மூதில் வாய் 243 மெல்ல வந்தென் 196 மெல்லிய 372 மேகத்தோய் 75 மொய்வேற் 218 யாங்குவல் 359 யாணர் வரவின் 260 யாதுசெய்வாங்கொல் 35 யாமெங் காதலர் 338,351,360 யாயும் 69,426 யாரிவன் என்னை 72 யாரு மில்லைத் 136,363,406 யாவது மறிகிலர் 351,366 யாவி ராயினும் 276 யானதற் காண் 342 யானே 349,419 யானைதந்த 262 யானை நிரை 250 யானை யுழலு 75 யானோக்குங் 424 வங்காக் கடந்த 125 வடாஅது பனிபடு 301 வணங்கு 247,410 வணிகனும் 380 வந்தோர் பலரே 262 வருமழை கரந்த 122 வரையின் 410 வல்லா ராயினும் 275 வழுத்தினாள் 340 வழுவிலெம் 290 வளரத் துடியினும் 195 வளையவாய் 290 வள்ளற் சேக்கை 410 வன்கண்குடி 296 வன்கண் மறமன்னன் 198 வாங்கிரு மருப்பிற் 276 வாயி லோயே 298 வாய்வாட் டானை 298 வாராக்காற் 360 வாருறு வண 148,286 வார்கோட்டு 395 வானம் பாடி 358 விடர்முகை 369 விண்ணி னீங்கிய 410 விண்ணுயர் விறல் 345 விதையர் கொன்ற 134 விரிதிரைப் பெருங்கடல் 141 விருந்தின் மன்னர் 129 விருந்தெவன் 47 விலங்கிடுஞ் சிமையக் 91 வில்லோன் காலன 115 விழவுடை யாங்கண் 236 விருவிலெம் 290 விளியுமென் 363,419 வினை மாட்சிய 217 வினையமை 124 வினையே ஆடவர் 126 வீழ்நாள் 448 வெஞ்சின வேந்தன் 221,225 வெட்சிக் கானத்து 385 வெயில் வீற் 87 வெய்யோ னெழா 230 வெவ்வாள் மறவர் 182,183 வெள்ளெருக்கஞ் 152 வென்று களங் 246 வேட்டச் செந்நாய் 123 வேங்கை தொலைத்த 210 வேத்தமர் 275 வேய்மருள் 88 வையக மலர்ந்த 278