வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 3 ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஓர் தீர்க்கதரிசி, நான் கண்ட நால்வர் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 3 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16 + 256 = 272 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 170/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர்,சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப்பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெரு மக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்தசாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர் விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர் களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒரு போதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர் களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாண புரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்து கின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனை யாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலை முறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக் காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண் கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் நுழையுமுன்... இராமகிருட்டிணர்  மாந்தநேயப் பண்பாளரின் திருப்பெயர் இராம கிருட்டிணர். ஆன்மீகத்தின் இமயம். அமைதியின் வெளிப்பாடு. மௌன மொழிகளால் மக்களோடு பேசியவர். வசீகர கண்களால் மக்களை ஈர்த்தவர்.  அன்பை அடித்தளமாகக் கொண்டவர். தொண்டால் வான்தொட வளர்ந்தவர். தூய்மையின் பிறப்பிடம்.இவர் வாழ்வு, - இலட்சிய அடையாளங்கள்.புது உலகின் பொன் விடியல்கள். மாந்தர்குல மாண்புகள். துறவின் மலை  மண்ணாசையையும், பொன்னாசையையும் துறந்த பெருந்துறவி. இவருக்கு முன்பும் உலகத்தைத் துறந்த வர்கள் உண்டு. இவருடைய துறவோ நெருப்பின் நடுவே குளிர்ச்சி தருவது; கதிரவன் முன்பு பனிமலை கரைவது போன்றது.  இந்தியப் பெருநிலத்தின் ஆன்மீகத்திற்குப் பெருமை சேர்த்த வரலாறு. இந்திய அரசியலுக்கும் குமுகாய வாழ்வுக்கும் பொருளாதார வளத்துக்கும் ஊற்றுக் கண்ணாய் அமைந்த வரலாறு.  இவரைப் பற்றிப் பேசப்பட்ட பொருள் பெரியது. அதை எழுதிய முறையோ அதனினும் பெரியது. நம் முன் உயிரோ வியமாய்த் தரப் பட்டுள்ளது உள்ளே செல்லுங்கள். தளராத தாய்மொழிப் பற்று  தாய்மொழிப் பற்றில் தளராத ஆர்வம் கொண்டவர். பளபளக்கும் பல பட்டைகளை உடைய உறுதியான வயிரம் போன்ற நெஞ்சினர். இராமகிருட்டிணர் - விவேகானந்தர்  அலை அடங்கி அமைதியாக இருக்கின்ற கடலைப் போன்றவர் இராமகிருட்டிணர். குமுறிக் கொந்தளிக்கும் கடலைப் போன்றவர் விவேகானந்தர்.  முன்னவர் (இராமகிருட்டிணர்) கீழை அறிவியலுக்குச் சமமானவர். பின்னவர் (விவேகானந்தர்) மேலை அறிவியலை ஆன்மீகக் கண்கொண்டு பார்த்தவர்; முன்னவர் அன்பின் நிறைவாய் இருந்தவர் - பின்னர் அறிவின் நிறைவாய் இருந்தவர்;  முன்னவர் மௌனத்தில் இனிமையைக் கண்டவர்- பின்னவர் பேச்சிலே பெருமிதம் கொண்டவர்; முன்னவர் ஒளியாய் இருந்தவர் - பின்னவர் ஒலியாய் வாழ்ந்தவர்;  முன்னவரின் ஆன்மீக ஆற்றலின் முன்னே பின்னவரின் அறிவு ஆற்றல் அடங்கிப் போயிற்று. இப்பெருமக்கள் இருவராலும் இந்தியா பெற்ற பேற்றினை - பெருமையைப் படியுங்கள். வாழ்க்கையைப் பண்படுத்திக் கொள்ளலாம்.  இலக்கிய வானில் கதிரவனைப் போல் ஒளிவிட்டவர்கள், குமுகாயத் தொண்டில் நிமிர்ந்த நடையினராய் வாழ்ந்த வர்கள், அறிவின் சிகரமாய் இருந்தவர்கள், ஆளுமையால் செல்வத்தால் உச்சத்தில் நின்றவர்கள் இவர்களிடம் கைகட்டி நின்ற வரலாற்றை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். * * * நான் கண்ட நால்வர்  திரு.வி.க., வ.வே.சு. அய்யர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் - தமிழகம் ஈன்றெடுத்த தவப்புதல்வர்கள். இந்திய விடுதலை வேள்வியில் இவர்களின் வாழ்க்கை பின்னிப் பிணைந்த போராட்ட வரலாறு. எளிய வாழ்க்கை யையும், அப்பழுக்கில்லாத மாந்த நேயப் பண்புகளையும் உயர்ந்த வாழ்க்கையாகக் கொண்டவர்கள்.  நால்வரும் சிறந்த புலவர்கள். உண்மையான புலவன் நாட்டுப் பற்றில்லாதவனாயிருக்க முடியாதென்ற கருத்துடை யவர்கள். இதனால்தான் அரசியலிலே தீவிரமாக ஈடு பட்டார்கள். அரசியலிலே ஈடுபடாதிருந்தால்கூட அறிஞர்கள் என்ற முறையில் பேரும் புகழுமெய்தியிருப்பார்கள்.  நால்வரும், நல்ல பண்பாடு இன்னதென்பதை உணர்ந்து அந்தப் பண்பாடாகவே வாழ்ந்தவர்கள். நால்வரும், தாங்கள் இந்திய நாகரிகத்தின் படிநிகராளிகள் என்பதை மறவாமல் வாழ்க்கையை நடத்தியவர்கள். இவர்களுடைய அன்றாட வாழ்க்கை எளிய வாழ்க்கை- உயர்ந்த நோக்கம் என்ற வாசகத்திற்கு இலக்கணம் வகுத்தாற் போல் அமைந் திருந்தது.  நால்வரும் இறைப் பற்றர்கள்; பித்தர்கள் என்றும் கூறலாம். நால்வரிடத்திலும் சமய அறிவு முழுமையாகப் பொலிவுற் றிருந்தது; இதனால் சமரச நோக்குடையவர் களாக இருந்தார்கள். நால்வரும் சாதி, வகுப்பு, இன, மொழி வேற்றுமைகளைக் கடந்தவர்கள்.  நால்வரும் அகத்துறவு பூண்டவர்கள். நால்வரும் பழமை யையும் புதுமையையும் இணைத்து வைக்கும் பாலமாய் அமைந் திருந்தார்கள்.  நால்வரும் பேசுவதைப் போலவே எழுதுவதிலும், எழுதுவதைப் போலவே பேசுவதிலும் ஒரே மாதிரியான ஆற்றல் படைத்தவர்கள். நால்வரும் ஒழுக்கநெறி பெரிது முடையாராய் வாழ்ந்தவர்கள்.  நால்வரும் தாய்நாட்டின் விடுதலைக்காக, தங்களுக் கேற்பட்ட எல்லா இன்னல்களையும் புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டவர்கள்.  இவர்கள் விடுதலைக்காக மட்டும் உழைத்தவர்கள் அல்லர். மிகச் சிறந்த அறிவாளிகள். தமிழ் மக்களின் அறிவை வளர்த் தெடுத்தவர்கள். அவர்களின் நெஞ்சத் தைப் பண்படுத்திக் கொடுத்தவர்கள். பலகோணங்களில் வைத்து மதிப்பிட வேண்டிய வயிரம் போன்றவர்கள். இவர்களைத் தமிழகம் அறிந்திருக்க வேண்டாமா? பெரியாரின் பெருந்தொண்டு  சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், திராவிட இயக்க வளர்ச்சிக்கு நீரூற்றி வளர்த்த வரலாற்றைப் பற்றி இந்நூலில் உள்ள முரண்பட்ட செய்திகள் நெஞ்சில் முள்ளாக உறுத்து கின்றன. நடுநிலை தவறிய மனவுணர்வு இந்நூலுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. சிந்தியுங்கள். பெரியாரின் பெருந் தொண்டை நினையுங்கள்.  இதழ்ப் பணியில் வணிக நோக்கம் மேலோங்கி இருக்கும் இன்றைய நிலையில் அன்று தொடங்கப் பட்ட தேசபக்தன் இதழின் நாட்டுத்தொண்டும், தமிழ்த் தொண்டும் இன்றைய தமிழக இதழாளர்கள் படித்துக் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. தமிழர்கள் அறிய வேண்டிய ஒன்று; இந்நூலில் வ.உ.சி. பற்றிய வரலாறு இடம் பெறாதது மிகுந்த மனவருத் தத்தைத் தருகிறது. படியுங்கள்.  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - திரூமூலரின் வாக்கிற்குச் சான்றாக வாழ்ந்த இப்பெரு மக்களை நெஞ்சில் நிறுத்துங்கள். சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் ஒழுக்கமே உயர்வாக கொண்டவர்களின் வாழ்வியல் கூறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர்கள் வழிநின்று பண்பட்ட குமுகாயம் அமைவதற்கு சிந்தனை வித்தை ஊன்றுங்கள்.  இன்று நம் கண்முன்னே பட்டொளி வீசிப் பறந்து கொண் டிருக்கும் தேசியக் கொடிக்கு அடிப்படையாக இருந்த வர்கள். நமக்கு கலங்கரை விளக்கமல்லவா? இவர்கள் யார்? நூலின் உள்ளே தெரிந்து கொள்ள வேண்டாமா? நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒரு தீர்க்கதரிசி பிரசுராலயத்தின் வார்த்தை ஒரு நாட்டின் பெருமை அதனை ஆளும் அரசர்களிடத்திலே இல்லை; அதனை ஆட்டி வைக்கும் அரசியல் வாதிகளிடத்திலேயு மில்லை. பண பலமோ புய வலியோ படைத்தவர்களாலும் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தரமுடியாது. வற்றாத நதிகளும் குறையாத சுரங்கங்களும் ஒரு நாட்டினுடைய செழுமையை அதிகரிக்கச் செய்யமாட்டா. உயர்ந்த மலைகளும் மதில்களும், அழகிய கட்டிடங்களும் கோயில்களும் ஒரு நாட்டினுடைய உயர்வுக்கும் பண்பாட்டிற்கும் சாட்சிகளாக மாட்டா. ஒரு நாட்டினுடைய பெருமை, செழுமை, உயர்வு எல்லாம் அந்த நாட்டிலே அவதரிக்கும் மகான்களைப் பொறுத்திருக்கிறது. அப்படியானால், இந் நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டாகிய, இந்த மகானுடைய - இந்த நாட்டினுடைய - பெருமையை எங்கள் ஆசிரியர் சர்மாஜி மூலம் ஒரு நூல் வடிவாகச் சமர்ப்பிக்கும் கடமையிலிருந்து நாங்கள் வழுவவே முடியாதல்லவா? பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் வாசகர்களுக்கு கடவுளோடு இரண்டறக் கலந்து வாழக் கூடிய பக்குவம் பெறாதவர்கள், கடவுளோடு கலந்து வாழ்கின்றவர்களோடவாவது வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அறிஞர்கள். இப்படி முயற்சி செய்தால் நமது மனம் ஒழுங்குபடும். அது, தன்னுடைய இஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாமல் நம்முடைய இஷ்டத்திற்கு அது வரும். அப்படி வருமானால் அதனைக் கடவுளின் பக்கம் திருப்பலா மல்லவா? இதனாலேயே சத் சங்கம் வேண்டுமென்று சொல்கிறார்கள் பெரியோர்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், கடவுளைக் கண்ட ஒரு மகா புருஷர். இவரைப் பற்றிச் சொல்வது கடவுளைப் பற்றிச் சொல்வதாகும். இவரை அறிவது ஹிந்து மதத்தை அறிவதாகும். ஹிந்து மதமானது யாரையும் அந்நியர் என்று கருதுவதில்லை. எல்லோரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் என்றே ஹிந்து மதம் அநாதிகாலந் தொட்டு கோஷித்துக் கொண்டு வருகிறது. இந்தக் கோஷம் உலகெங்கும் பரவவேண்டும். பலவித வேற்றுமைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஆட்பட்டிருக்கிற இன்றைய உலகத்திற்கு ஹிந்து மதத்தின் சாரத்தை ஊட்டுவது பிரதியொரு ஹிந்துவினுடைய கடமையுமாகும். இந்தக் கடமையைச் செய்வதற்கு இந்தச் சிறிய நூல் ஒரு தூண்டு கருவியா யிருக்குமானால் அது யான் பெற்ற பேறாகும். இந்த நூலை எழுத வேண்டுமென்று என்னை ஊக்கிய அன்பர் ஸ்ரீ அரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெ. சாமிநாதன் 1. தோன்றிய காலம் சங்கரருடைய அறிவும் சைதன்யருடைய இருதயமும் கொண்ட ஒருவர் தோன்றுவதற்குக் காலம் பக்குவமுடையதா யிருந்தது. பிரதியொரு மதத்திடமும் ஒரே சக்தி, ஒரே கடவுள் இருப்பதைக் காணக் கூடிய ஒருவர் தோன்றுவதற்குக் காலம் பக்குவமுடையதாயிருந்தது... இத்தகைய ஒரு மனிதர் தோன்ற வேண்டியது அவசியமாயிருந்தது. அந்த மனிதர்தான் ஸ்ரீ ராம கிருஷ்ணர் . - சுவாமி விவேகானந்தர் ஒரு நாட்டின் பெருமை அதனை ஆளும் அரசர்களிடத்திலே இல்லை: அதனை ஆட்டிவைக்கும் அரசியல் வாதிகளிடத்திலேயும் இல்லை. பண பலமோ புயவலியோ படைத்தவர்களாலும் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தர முடியாது. வற்றாத நதிகளும், குறையாத சுரங்கங்களும் ஒரு நாட்டினுடைய செழுமையை அதிகரிக்கச் செய்ய மாட்டா. உயர்ந்த மலைகளும் மதில்களும், அழகிய கட்டிடங்களும் கோயில்களும் ஒரு நாட்டினுடைய உயர்வுக்கும் பண்பாட்டிற்கும் சாட்சி களாக மாட்டா. ஒரு நாட்டினுடைய பெருமை, செழுமை, உயர்வு எல்லாம் அந்த நாட்டிலே அவதரிக்கும் மகான்களைப் பொறுத்திருக்கிறது. எந்த நாட்டில் மனிதத் தன்மைக்கு இலக்கியமாயுள்ள மகா புருஷர்கள் தோன்றுகிறார்களோ, எந்த நாட்டில் நான், எனது, எனக்கு என்று வாழாமல், பிறர், பிறரது, பிறருக்காக என்று வாழ் கின்ற உத்தமர்கள் உதிக்கிறார்களோ, எந்த நாட்டில் மனிதர்க ளுடைய மேலான தன்மைகளைத் தூண்டி விடக் கூடிய சிருஷ்டி களைச் செய்கின்ற கர்த்தர்கள் உதயமாகின்றார்களோ, அந்த நாடுதான் பெருமை கொள்ளத் தகுதி யுடைய நாடு. அந்த நாட்டைத் தான் உயர்ந்த நாடு, செழுமையுள்ள நாடு என்று சொல்ல வேண்டும். அந்த நாடுதான், சரித்திரத்திலே சாசுவதமான தானத்தைப் பெறுதற்குரியது. எந்த நாட்டில் இத்தகைய மகான்கள் தோன்றுவது நின்று விடுகிறதோ அந்த நாட்டினுடைய நல்வாழ்வும் முற்றுப் பெற்று விடுகிறது. அந்த நாட்டினுடைய புராணம், நாகரிகம் ஆகிய யாவும், பொருட்காட்சி சாலையைப் புகலிடமாகக் கொண்டு விடுகின்றன. கிரீ தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கி.மு. நான்காவது நூற்றாண்டு வரை அதற்கேற்பட்டிருந்த பெருமையும் புகழும் போல, அந்த நூற்றாண்டுக்குப் பிறகு அதற்கு ஏற்படவே யில்லை. ஏனென்றால், அந்த நாட்டிலே வழிவழியாக வந்து கொண்டிருந்த மகான் பரம்பரையானது அரிட்டாட்டலோடு1 நின்றுவிட்டது. அவனுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள், எத்தனையோ நாவலர்கள், எத்தனையோ வீரர்கள் அந்த நாட்டில் தோன்றினார்க ளென்பது வாதவம். ஆயினும் என்ன பிரயோஜனம்? அவர்கள் மகான்களில்லையே. ஒரு நாட்டிற்குப் பெருமையை உண்டுபண்ணுஞ் சக்தி, இருக்கிற பெருமைக்குப் பங்கம் வராமல் பாதுகாக்குஞ் சக்தி, மகான்களுக்குத்தான் உண்டு. மகா அலெக்ஸாந்தர்2 அரிட்டாட் டலினுடைய சிஷ்யன்தான்; சிறந்த வீரன்தான். ஆனாலும் அவனால் கிரேக்க வாழ்வுக்குப் பெருமை தேடித்தர முடியவில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய பேராசையிலே தன்னையும் அழித்துக் கொண்டு, தனது நாட்டின் பெருமைக்கும் முற்றுப் புள்ளிவைத்து விட்டான். மகா அலெக்ஸாந்தருடைய மரணத்தோடு, கிரேக்க இலக்கியத்திற்கும், தத்துவஞானத்திற்கும், கலைகளுக்கும் ஏற்பட்டிருந்த செழிப்பான காலமும் முடிந்து விட்டது என்பது ஒரு சரித்திராசிரியனுடைய வாக்கு. மகான்கள், கால தேச வர்த்தமானங்களைக் கடந்தவர்கள். இவர்கள் ஒரு காலத்திலே தோன்றி, அந்தக் காலத்திற்கேற்ற வகையில் சில காரியங்களைச் செய்கிறார்களென்பது வாதவம். ஆனால் அந்தக் காரியங்கள், எக்காலத்திற்கும் பொருத்தமுடையனவாயிருக் கின்றன; பிரயோஜனமுடையனவாகவும் இருக்கின்றன. இங்ஙனமே இவர்கள், ஒரு தேசத்திலே பிறந்தாலும் உலகத்திற்காக வாழ்கி றார்கள். எந்நாட்டவரும் எக்காலத்தவரும் போற்றக்கூடிய விதமாக வும் பின்பற்றக் கூடிய விதமாகவும் இவர்களுடைய வாழ்க்கை இருக் கிறது. இவர்கள் காலத்திலே நிகழும் வர்த்தமானங்கள், இவர்க ளுடைய தீர்க்க திருஷ்டியை மறைப்பதில்லை; உலகத்தை ஒரு குடும்பமாகக் கருது கின்ற இவர்களுடைய மனப்பான்மையை மாற்றுவதில்லை; இவர் களுடைய மன அமைதியைக் குலைப்பது மில்லை. இவர்கள் பிறந்த நாடு மண்ணிலே புதைந்து போய்விடுகிறது; இவர்கள் வாழ்ந்த காலம் ஜனங்களுடைய மறதியின் ஆழத்திலே மறைந்து விடுகிறது; இவர்களுடைய அன்றாட வாழ்க்கையை யொட்டி நடைபெற்ற நிஜமான சம்பவங்கள்,காலாந்தரத்தில் கட்டுக்கதைகளாக மாறிவிடுகின்றன. ஆனால் இவர்கள் நித்தியமாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்; இவர்களுடைய சிருஷ்டிகள் என்றும் ஜீவகளையோடு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன; இவர் களுடைய தொண்டு பிற்காலத்தவருக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கிறது. ஜூலிய சீஸருடைய1 ரோமராஜ்யம் சரித்திராசிரியர் களுடைய ஆராய்ச்சிப் பொருளாகப் போய் விட்டது. முஸோலினியி னுடைய2 இத்தாலிய சாம்ராஜ்யம் நிலை குலைந்து போய்விட்டது. ஆனால் வர்ஜிலும்3 தாந்தேயும்4 இன்னமும் அங்கு இசை முழக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; செயிண்ட் பிரான்சிஸும்5 ஸவோன ரோலாவும்6 இன்னமும் அங்கு உலவிக் கொண்டுதான் இருக்கி றார்கள். மகா ஆட்டோ மன்னன்7 கண்ட ஜெர்மனி எங்கே? மகா ப்ரெடெரிக்8 ஆண்ட ஜெர்மனி எங்கே? ஹிட்லர்9 நிர்மாணித்த மூன்றாவது ஏகாதிபத்தியம்10 எங்கே? சீரழிந்து சிதறுண்டு போய் விட்டது. ஆனால் மார்ட்டின் லூதருடைய11 வாக்கும் கெதேயி னுடைய12 வாக்கும் இன்னமும் அங்கு ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பொஹிமியா13 என்றொரு தேசத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களல்லவா? அதன் உருமாறி பெயரும் மாறிப்போய் விட்டது. ஆனால் அந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவன் ஒரு குருடன். ஜான் ஜிகா14 என்று பெயர். அவன் அடிமைக் குழியிலே அழுந்திக் கிடக்கிறவர்களுக்கு இன்னமும் வெளிச்சம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான். சீனாவின் மீது உங்கள் சிந்தனையைச் சிறிது செலுத்துங்கள். அந்தச் சீனாவைப் பெருஞ்சுவர் போட்டு வளைத்துக் கட்டினான் ஹுவாங் தீ15 என்ற ஓர் அரசன். பெரிய காரியந்தான். உலகத்து ஏழு அதிசயங்களுள் அந்தச் சீனப் பெருஞ்சுவர் ஒன்றாக இருக்கிற தென்பது வாதவம். ஆனால் அவனையோ, அவன் ஆண்ட சீனாவையோ எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்துக்கொண் டிருக்கிறார்கள்? f‹óÎaÞ!16 இந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் சீனாவின் மீது நமக்கு ஒருவித பக்தி உண்டாகிறது. அவனுடைய இனிய உபதேசங்கள் நம் செவியிலே வந்து விழுந்து கொண்டிருக்கிற மாதிரியான உணர்ச்சி ஏற்படுகிறது. சீனாவின் நாற்புற எல்லைகள் எத்தனை தடவை எப்படி எப்படி மாறிய போதிலும், கன்பூஷியஸும், அவனைப் போல் அந்த நாட்டில் அவதரித்த மற்ற மகான்களும் சன்மார்க்கத்திலே செல்லும் பிரயாணிகளுக்கு, என்றென்றுமுள்ள வழி காட்டிகளாக இருந்து கொண்டிருப்பார்கள். மகான்கள், காலத்தின் தேவையை அனுசரித்து அவதரிக்கிறார்கள்; அந்தக் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். ஜனங்களுடைய எண்ணத்திலே கலக்கம். பார்வையிலே சூனியம், செயலிலே தடுமாற்றம், இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் மகான்கள் தோன்றி அந்த ஜனங்களுடைய எண்ணத்திலே தெளிவையும், பார்வையிலே பிரகாசத்தையும், செயலிலே நிதானத்தையும் உண்டு பண்ணுகிறார்கள். இவர்கள் நித்திய புருஷர்களானபடியால், எந்த நாடு, எந்தக் காலம், தங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறது என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவர்கள் தீர்க்கதரிசி களானபடியால், இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற விதமாகத் தங்கள் சொல்லையும் செயலையும் அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சொல்லாலும் செயலாலும் என்ன பயனேற்படு மென்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. பயனை எதிர்பார்த்தால்தானே கவலைப் படப் போகிறார்கள்? ஆனால் இவர்கள் எதிர்பார்த்தாலும் எதிர்பாரா விட்டாலும் இவர்களுடைய சொல்லும் செயலும் நிச்சயமாகப் பயனளிக் கின்றன. பயனை எதிர்பாராமல் பணி செய்வது இவர்கள் சுபாவம்; பயனுண்டாகு மானால் அஃது இவர்களுடைய பணியின் பரிணாமம். உலகத்தில் இதுவரை எத்தனையோ மகான்கள் அவதரித் திருக்கிறார்கள். அவர்கள் அவதரித்த காலத்தின் நிலைமையை நாம் சிறிது நினைவுக்குக் கொண்டு வந்து பார்த்தோமானால், அவர் களுடைய வருகை எவ்வளவு அவசியமாயிருந்தது என்பதும், அந்த அவசியத்தை நிறைவேற்றவே அவர்கள் அவதரித்தார்கள் என்பதும் நன்கு புலனாகும். உதாரணமாக யேசுநாதர் அவதரித்த காலத்தின் நிலைமையைச் சிறிது கவனிப்போம். அவர் பிறந்த காலத்தில் உலகத்தை அடர்ந்த (அஞ்ஞான) அந்தகாரம் மூடிக்கொண்டி ருந்தது. அப்பொழுதைய உலகத்தின் நெடுகிலும் உருவ வழிபாடு நிறைந்திருந்தது. மூடப் பழக்க வழக்கங்களும் அனாசாரங்களும் மலிந்திருந்தன. கிரீ என்ன, ரோமாபுரி என்ன, எகிப்து என்ன, இந்த நாடுகளிலெல்லாம் ஜனங்கள் பலவிதமான தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள். அக் காலத்து ஜனங்களுடைய மனதில் இந்தப் பல தெய்வ வழிபாடு நன்றாக ஊறிக்கிடந்தது. ஆடம்பர வாழ்க்கை, சுகபோகங்கள் ஆகிய இவைகளுக்கு மத்தியில் ஒழுக்க மென்பது உடைந்துபோய்விட்டது. அவ்வப்பொழுது மகாபுருஷர்களால் ஏற்றிவைக்கப்பட்ட அறிவு விளக்கு, உண்மை விளக்கு, அணைந்து போயிருந்தது. எந்த தரும நியாயங்களை மகான் ஸாக்ரட்டீ1 வகுத்து விட்டுப் போனானோ, எந்த தரும நியாயங்களுக்காக அவன் தன் உயிரையே பலி கொடுத்தானோ, அந்த தரும நியாயங்களின் அனுஷ்டானத்தினால் ஏற்பட்டு வந்த நன்மைகள் யாவும் அடையாளம் தெரியாமலே போய்விட்டன. இதே கதியைத் தான் பேரறிஞனாகிய பிளேட்டோ2 வகுத்துவைத்துப் போன தத்துவ ஞானமும், அரிட்டாட்டல் வகுத்து வைத்துப் போன விஞ்ஞான அறிவும் அடைந்தன. உண்மை யான தத்துவ ஞானத்திற்குப் பதிலாக போலித் தத்துவங்கள் அங்கு மிங்குமாக உலவின. பெரும்பாலோ ரான ஜனங்கள், உண்பது, குடிப்பது, சந்தோஷமாயிருப்பது என்ற வகையிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்; பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டார்கள். இன்னும் பலர், ஒழுக்கத்தின் அடி வேரையே வெட்டி வீழ்த்திவிட்டனர். உலகம் முழுவதிலும் பொதுவாக ஏற்பட்டிருந்த இந்தச் சீரழிவுக்கு மத்தியிலே, யூதமதம் மட்டும் தனிப்பட்ட சிறப்புடன் காட்சி யளித்துக்கொண்டிருந்தது. கடவுள் ஒருவரே என்ற கொள்கையை அந்த மதம் முக்கியமாகக் கொண்டிருந்த தனால், அஃது - அந்த மதம் - மேற்படி சீரழிவுக்கு மத்தியிலே பெரிய ஆறுதலாயிருந்தது. ஆனால் அந்த மதத்திலே கூட வெறும் சடங்குகள் நிரம்பிக் கிடந்தன. இந்த மதத்தினர் இரண்டு பிரிவின ராகப் பிரிந்திருந்தனர். ஆக, உலக முழுவதும் ஒரே இருட்டாகக் காணப்பட்டது. அந்த நிலையில் ஒரு வெளிச்சம் தேவை யாயிருந்தது. மானிட சமுதாயம் கடுமையானதொரு வியாதியினால் அவதைப் பட்டுக்கொண்டு இறக்குந் தறுவாயிலிருந்தது. அதிலிருந்து காப்பாற்ற அவசரமான ஒரு பரிகாரம் அவசியமாயிருந்தது. இந்த அவசியத்திற்காகவே யேசுநாதர் தோன்றினார். அந்தக் காலத்திற்கு அவர் வருகை தேவையாக இருந்தது. மகான்களுடைய அவதார வரலாறுகளை நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், அவர்கள் அவதரித்த காலத்தில், ஏறக்குறைய மேலே சொன்ன நிலைமைதான் இருந்தது என்பது நன்கு தெரியவரும். புத்தர், கன்பூஷிய, ஸாக்ரட்டீ ஆகிய இப்படிப்பட்ட மகான்கள் அவதரித்த காலத்தில் உலகம் இருந்த நிலைமை என்ன? அவரவர்கள் நாடு இருந்த நிலைமை என்ன? அப்பொழுதைய ஜனங்களின் மனப்போக்கு எப்படி இருந்தது? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் ஆசிரியனுடைய வாக்குப்படி, அப்பொழுதிருந்த தலைமுறையினருக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இருந்த தொடர்பு அற்றுவிட்டது. தேசீய உணர்ச்சி என்பது இறந்தொழிந்தது. போர்க்குணம் எங்கும் பரவியிருந்தது. இந்த நிலைமையிலிருந்து உலகத்தைக் காப்பாற்று வதற்காகவே, ஜனங்களை நல்வழிப் படுத்துவதற்காகவே மேற் சொன்ன மகான்கள் தோன்றினார்கள். எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் மகான்கள் அவதரிக்கிற போழ்து இந்த மாதிரியான ஒரு நிலைமையே இருந்திருக்கிறது. இனி, புனிதமான நமது நாட்டிற்கு வருவோம். உலகத்திற்கு உய்யும் வழி காட்டிய உத்தமர்கள் எத்தனை பேர் நமது தாய் நாட்டில் உற்பவித்திருக்கின்றனர்! எண்ணித்தான் ஆகுமா இவர்களின் வரிசையை? சொல்லத்தான் போகுமா இவர்களின் பெருமையை? இத்தகைய உத்தமர்களை ஈன்றளிக்கிற விஷயத்தில் இந்தியா தனிச் சிறப்பு வாய்ந்ததென்பதை நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் இந்தியாவிலேதான் மகான் களின் பரம்பரை என்ற ஒரு பரம்பரை உண்டு. இந்த மகான் பரம்பரைக் கொடியின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று எந்தச் சரித்திராசிரி யனாலும் துணிந்து கூற முடியாது. அப்படியே இந்தக் கொடி எவ்வளவு தூரத்திற்குப் படர்ந்து செல்லும் என்று எந்த தீர்க்கதரிசியினாலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இந்தியாவின்மீது எத்தனையோ படையெடுப்புகள் வந்து மோதியிருக்கின்றன; அந்நியர்களுடைய ஆதிக்கங்கள் நடைபெற்றிருக் கின்றன. வேறெந்த நாடாயிருந்தாலும் இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்து பட்டிருக்கும். ஆனால் இந்தியா வீழவே இல்லை; வாழ்ந்து கொண்டிருக்கிறது; இன்னும் பல் கோடி நூறா யிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும்; வாழ்ந்து கொண்டிருப்ப தோடு மட்டுமல்லாமல், உலகத்திற்கு வழி காட்டிக் கொண்டுமிருக்கும். இஃது உறுதி. இப்படி உறுதியாகச் சொல்வதற்கு என்ன ஆதார மென்று வாசகர்கள் கேட்கலாம். இந்தியாவிலே நூற்றாண்டுகள் கணக்காக அவதரித்துக் கொண்டு வந்திருக்கிற உத்தம புருஷர்கள் - இவர்களை மகான்களென்றோ, மகா புருஷர்களென்றோ, தீர்க்க தரிசிகளென்றோ, எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள் ளுங்கள். - இந்தியா, சாசுவதமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கும், உலகத்திற்கு நிரந்தரமாக வழிகாட்டிக் கொண்டிருப்பதற்குமான அதிவாரத்தை அமைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்த அதிவாரந்தான் ஆத்மீக அதிவாரம். இந்த அதிவாரத்தின் மீதுதான் இந்தியாவின் அரசியல் வாழ்வு, சமுதாய வாழ்வு, பொருளாதார வாழ்வு ஆகிய யாவும் நிர்மாணம் செய்யப் பட்டிருக் கின்றன. அழியாத ஒன்றை அதிவாரமாகக் கொண்டிருப்ப தனால் தான், இந்தியா, அழியாமல் இருந்து வருகிறது; இனியும் இருந்து வருமென்று சொல்ல முடிகிறது. இந்தியாவிலே அவதரித்த மகான்கள், எந்த நிலைமையிலே எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள்; எந்த இடத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள்; சிருஷ்டிக்க வேண்டிய இடத்திலே சிருஷ்டித்தும், சம்ஹரிக்க வேண்டிய இடத்திலே சம்ஹரித்தும், பரிபாலனம் செய்ய வேண்டிய இடத்திலே பரிபாலித்தும் வந்திருக்கிறார்கள். ஜனசமுதாயத்தின் கட்டுக் கோப்பு தளர்ந்து போயிருக்கிறதா? பழமையின்மீது துரு ஏறிவிட்டதா? லௌகிக சக்திகள் வலுத்துப் போய் பாரமார்த்திகத்தை அழுத்திக் கொண்டி ருக்கின்றனவா? ஜனங்கள், அறியாமையாகிற அந்தகாரத்தில் தவித்துக் கொண்டி ருக்கிறார்களா? அசிரத்தை காரணமாகத் தூங்கிக் கொண்டி ருக்கிறார்களா? அடிமைக் குழியிலே விழுந்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்களா? இந்த அறியாமையினாலும் அடிமைத்தனத் தினாலும், அவர்களிடத் திலே நியாயமாக இருக்கவேண்டிய மேலான தன்மைகளெல்லாம், இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிப்போய் அடியோடு நசித்துப் போய் விடுகின்ற நிலைமையை அடைந்து விட்டனவா? இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் மகான்கள் தோன்றி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள். எந்த மாதிரியாக இவர்கள் தோன்றிய போதிலும், அதாவது சிருஷ்டி கர்த்தர் களாகவோ, சம்ஹார மூர்த்திகளாகவோ, பரிபாலன புருஷர் களாகவோ எப்படித் தோன்றிய போதிலும், இவர்களுடைய நாட்ட மெல்லாம் நிலையான ஒன்றின்மீதுதான் எப்பொழுதும் பட்டுக் கொண்டேயிருந் திருக்கிறது. அதனின்று இவர்கள் தங்கள் பார்வையைத் திருப்பியதே கிடையாது. அதற்கு ஒரு பெயர் கொடுத்து, அந்தப் பெயருக்குள்ளே அதனைச் சிறைப்படுத்தவும் இவர்கள் விரும்பவில்லை. அறிஞர்கள் அதற்குப் பல பெயர்களிட்டழைத்தாலும், அஃதென்னவோ ஒன்று தான், அது நிலையாயுள்ளது, காலத்தைக் கடந்தது, மனிதனுடைய சிந்தனா சக்திக்கு அப்பாற்பட்டது, அஃது இன்ன உருவமுடையது என்று நிர்ணயித்துச் சொல்ல முடியாது என்பதே இவர்களுடைய கோட்பாடா யிருந்தது. நிலையாயுள்ள அந்த ஒன்று என்ன? அதுதான் சத்தியம்; தர்மம்; அன்பு; அழகு; சிவம்; சக்தி;கிருஷ்ணர்; யேசு; அல்லா. யார் எந்தப் பெயரிட்டழைத்தாலென்ன? பெயரிலே என்ன இருக்கிறது? எங்கும் இருக்கின்ற, எல்லாருக்கும் தேவையாயிருக்கின்ற நீரை, சிலர் ஜலம் என்கிறார்கள்; சிலர் பானி என்கிறார்கள்; சிலர் வாட்டர் என்கிறார்கள். இப்படிப் பல பெயர்களிட்டழைப்பதினால், அந்த நீர், பல நீர்களாகி விடாதல்லவா? அதனுடைய தன்மையும் மாறா தல்லவா? நிலையாயுள்ள அந்த ஒன்று - அந்தப் பரம்பொருள் - எல்லா ஜீவராசிகளிடத்திலும் சிறு பொறியாக விளங்கிக் கொண்டிருக் கிறது. ஆகையால் எல்லா ஜீவராசிகளும் அந்தப் பரம்பொருளின் - அந்த ஒரு கடவுளின் - குழந்தைகள். எப்படி ஒரு தாயின் வயிற்றிலே பிறந்தவர்கள் அத்தனை பேரும் சகோதரர்களோ அப்படியே ஒரு கடவுளின் குழந்தைகளான அத்தனை கோடி ஜீவராசிகளும் - ஆம், கோடானுகோடி ஜீவராசிகளும் - சகோதரர்கள். இத்தகைய உண்மைகளையே எல்லோருக்கும் உணர்த்தி வந்தனர் இந்தியாவிலே தோன்றிய மகா புருஷர்கள். இவர்களுடைய வாக்கி லிருந்து உதித்த எந்த மணிமொழியை வேண்டுமானாலும் கேளுங்கள்; இவர்கள் புரிந்த எந்த ஒரு செயலை வேண்டுமானாலும் பரிசீலனை செய்து பாருங்கள்; அவற்றில் இந்த உண்மைகள் ஒளிவிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கும். இந்த உண்மைகளை உணர்ந்திருந்தமையாலும், பிறருக்கு உணர்த்தி வந்தமையாலும், இவர்கள், யாரையும் தங்கள் ஆதிக்கத் திற்குக் கட்டுப் படுத்த விரும்பவில்லை; தங்களுடைய அறிவுக்குக் கூட மற்றவர்களை அடிமைப்படுத்தக் கூடாதென்று கருதினார்கள்; தங்களுடைய உபதேசங்களுக்கு இணங்கி நடக்க வேண்டுமென்று யாரையும் கட்டாயப்படுத்தியது கிடையாது. இந்தியாவில் தோன்றிய மகான்களிடத்திலே காணப்பெறுகின்ற விசேஷமான அமிசம் இது. இந்த மகான்களின் வரிசையிலே வந்தவர்தான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர். பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக் காலத்தில் இவர் வருகை இந்தியாவுக்கு அவசியமாயிருந்தது. எப்படி அவசிய மாயிருந்த தென்பதைப் பற்றிச் சிறிது விளக்குவோம். பதினெட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நன்றாக வேரூன்றத் தொடங்கி விட்டது. ஆங்கிலேயர்களுடைய நிருவாகத் திறமை, கல்வி முறை, எண்ணப்போக்கு இவைகளில் இந்தியர்களுக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட ஆரம்பித்தது. அன்றாட விவகாரங்களில் ஆங்கில பாஷையை உபயோகிப்பதும், ஆங்கில முறைகளைப் பின்பற்று வதும், ஆங்கில அரசாங்கத்தின் கீழ் உத்தியோகம் வகிப்பதும் கௌரவமாகக் கருதப் பட்டன. உழுதுண்டு வாழ்வதே வாழ்வு என்ற எண்ணத் திற்குப் பதில் உத்தியோகம் புருஷலட்சணம் என்ற எண்ணம், கிராமங்களிலே வசித்துவந்த மத்தியதர வகுப்பின ரிடத்தில் பரவத் தொடங்கியது. இதன் விளைவாகக் கிராமங்களின் செல்வாக்கு குன்றி வந்தது; நகரங்களுக்குப் புதிய வாழ்வு பிறந்தது. நாட்டிலே ஆங்கிலம் பயிலுவிக்கும் கல்விச் சாலைகள் அதிகரித்து வந்தன. இந்தக் கல்விச்சாலைகளில் பயின்ற இளைஞர்கள், இந்திய உடலும் ஆங்கில உள்ளமும் படைத்தவராயினர். மேனாட்டி லிருந்து வந்த எந்த ஒரு கருத்தையும், எந்த ஒரு கொள்கையையும் கைகொட்டி வரவேற்றனர். அப்படி வரவேற்றதோடல்லாமல், இந்தியாவின் பழமையைப் பரிகசிக்கவும் தலைப்பட்டனர். இந்தியாவுக்கென்று தனியான, நாம் பெருமைப்படக்கூடிய ஒரு கலாசார பரம்பரை இருக்கிறதா, நமது முன்னோர்களுக்கு லௌகிக வாழ்க்கை யென்பது ஏதேனும் தெரியுமா என்று இப்படியெல்லாம் கேட்கலாயினர். இனி நாம் இந்த நாகரிக உலகத்தில் மற்ற நாட்டினரைப் போல் வாழ வேண்டுமானால், நமது முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் பிரயோஜன மில்லை; மேனாட்டினர் செல்லும் பாதையிலே, அவர்கள் கோலும் வழியிலே செல்லவேண்டும்; இவை போன்ற எண்ணங்கள் இவர்களை ஆட்கொண்டன. மற்றும் பதினெட்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மேனாட்டில் பரவி வந்த உலகாயதக் கொள்கைகள் இந்தியாவிலும் பிரவேசித்தன. அந்தக் கொள்கைகளை ஆதரித்து எழுதப் பெற்ற நூல்களை இந்திய இளைஞர்கள் படித்தனர். படித்துவிட்டு, கடவுள் ஒருவர் உண்டா, அப்படி உண்டானால் அவரை அறிவினால் அறிய முடியுமா, மதம் வாழ்க்கைக்கு அவசியமா என்பன போன்ற கேள்வி களைக் கேட்க முற்பட்டனர். நாதிகம், மெதுவாக இவர்கள் மனதிலே முளைவிட்டது. மேனாட்டின் மீது இவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு ஆர்வத்துடனும் பக்தியுடனும் தங்கள் பார்வையைச் செலுத்தினரோ அவ்வளவுக் கவ்வளவு வேகமாக, தாய் நாட்டின் மீதும் அதன் புராதனத்தின் மீதும் இவர்கள் கொண்டிருந்த பிடிப் பானது தளர்ந்து வந்தது. ஆங்கிலம் பயிலுவிக்கும் கல்விச்சாலைகள் நாட்டில் அதிகரித்து வந்தன என்று மேலே சொன்னோமல்லவா, இதற்கு முக்கிய காரணமா யிருந்தவர்கள் கிறிதுவப் பாதிரிமார்கள். இவர்கள் ஆங்கிலக் கல்வி யோடு கிறிதுவ மதத்தையும் சேர்த்துப் பரப்பினர். கல்விக்காக இவர்கள் செய்த சேவையை யாராலும் பாராட்டாமலிருக்க முடியாது; அதனை யாரும் மறக்கவும் முடியாது. அதற்காக இவர்களுக்கு இந்தியா என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் கிறிதுவ மதத்தைப் பரப்புகிற உற்சாகத்தில் என்பதற்குப் பதில் திணிக்கிற உற்சாகத்தில் என்று சொன்னாலும் பொருந்தும். - பிற மதங் களைக் கண்டபடி தூற்றினர்; கிறிதுவ ரல்லாதாருக்குப் பாவத்தினின்று விடுதலையே கிடையாதென்கிற மாதிரியாகப் பிரசாரஞ் செய்தனர். இவர்களுடைய பிரசாரம், ஜனங்களுடைய மனதில், சிறப்பாக ஆங்கிலம் படித்த இளைஞர்களின் மனதில் மெது மெதுவாகப் படிந்து வந்தது. இந்தப் பாதிரிமார்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு எப்பொழுதும் எவ்வகையிலும் கிடைத்து வந்தது. இந்த ஆதரவை வைத்துக்கொண்டு இவர்கள் கல்விச்சாலைகளென்ன, ஆபத்திரிக ளென்ன, ஆகிய இவைகளை ஆங்காங்கு நிறுவினர்; பத்திரிகைகள் நடத்தினர்; சுதேச பாஷைகளில் பல நூல்களை வெளியிட்டனர். தவிர, இந்தப் பாதிரிமார்கள், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக எவ்வித கஷ்டங்களையும் சகித்துக் கொண்டார்கள்; பொறுமை யைக் கடைப்பிடித்தார்கள்; இனிய பேச்சுக் களினாலும் அன்பான உபசரணைகளினாலும் ஜனங்களைத் தங்கள் வசப்படுத்தினார்கள். இவையெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு ஜன சமுதாயத்திலே ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தச் செல்வாக்கின் பயனாக இவர்களுடைய மதப் பிரசாரத்திற்கு ஜனங்கள், சிறப்பாக மேலே சொன்ன மாதிரி ஆங்கிலம் படித்த இளைஞர்கள், சுலபமாக ஈடுபடலானார்கள். இங்ஙனம் இவர்கள் ஆங்கிலக் கல்வி பயின்றதன் விளைவாக வும், கிறிதுவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும், இரண்டுங் கெட்ட நிலையை அடைந்தனர். இந்தியாவின் புராதனப் பண்பாடுகள் இவர்களிடத்திலிருந்து அகன்றன. மேனாட்டு நவீனக் கோட்பாடுகளை இவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் புராதனத்திற்கு இவர்கள் அந்நியர்களாயினர். அப்படியே மேனாட்டு நவீனத்திற்கும் இவர்கள் அந்நியர்களாயினர். இந்தக் காலத்து நிலையைப் பற்றி ஸ்ரீ கேசவ சந்திர சேனர் ஒரு பிரசங்கத்தில் கூறுகிறார்:- இந்தியாவின் புராதன தாபனங்களை நாம் அழித்து விட்டோம். ஆனால் இந்த அழிவினின்று நாம் ஒரு புதிய வாழ்வு கோலும் விஷயத்தில் வெற்றி பெறவில்லை... ஆங்கிலம் படிக்காத நமது நாட்டாரே, ஆங்கிலம் படித்தவர்களிடத்தில் பல குறைகள் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர். நம்முடைய படிப்பை அவர்கள் வியந்து போற்றுகின்றனர்; ஆனால் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் இளைஞர்கள், முந்திய தலைமுறையினரைப் போல் யோக்கியதை யுடையவர்களாகவோ, ஒழுக்கமுடையவர்களாகவோ இல்லை யென்று கூறுகின்றனர். சுருக்கமாக, பதினெட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்தி லிருந்து பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலம் வரையுள்ள சுமார் நூறு வருஷ காலத்தில் இந்தியாவின் கலைகள், நாகரிகம் முதலிய யாவும் மிகவும் தாழ்வான திதியை அடைந்து கொண்டு வந்தன. எந்த ஆத்மீக அடிப்படை மீது ஹிந்து சமுதாயம் நிர்மாணிக்கப் பட்டிருந்ததோ, எந்த ஆத்மீக அடிப்படை ஹிந்து சமுதாயத்தை இத்தனை வருஷ காலமாகக் காப்பாற்றிக் கொண்டு வந்ததோ அந்த ஆத்மீக அடிப்படை தகர்ந்து விடும் போலிருந்தது. ஆனால் நல்ல வேளையாக - இதனைக் கடவுள் சித்தம் என்று சொன்னாலும் சரி, ஹிந்து தர்மத்தின் அழியாத் தன்மை யென்று சொன்னாலும் சரி, - இந்த ஆபத்து ஏற்படவில்லை. இதற்கு முன் ஹிந்து ஜாதிக்கு இந்த மாதிரியான ஆபத்துகள் எத்தனையோ தடவை ஏற்பட்டிருக் கின்றனவல்லவா, அப்பொழுதெல்லாம் ஹிந்து தர்மத்தினிடமுள்ள எந்த ஜீவசக்தியானது ஹிந்து சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததோ அதே ஜீவசக்திதான் இப்பொழுதும் ஹிந்து சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும். ஹிந்து சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்வதையும், ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சில இயக்கங்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே தோன்றத் தலைப்பட்டன. பிரும்ம சமாஜம் என்ன, ஆரிய சமாஜம் என்ன, பிரும்மஞான சபை (தியஸாபிகல் சொஸைட்டி) என்ன, இந்த மாதிரியான இயக்கங்கள் தோன்றி ஹிந்து சமுதாயத்தின் மீது படிந்திருந்த தூசு மாசுகளை அப்புறப்படுத்தின; கிறிதுவப் பாதிரிமார்கள், ஹிந்து மதத்தைப் பல விதமாகத் தாக்கிப் பிரசாரஞ் செய்துவந்தார்களல்லவா, அந்தப் பிரசாரத்திற்கு இரையாகி விடாதபடி ஹிந்து மக்களைத் தடுத்தன. மதச் சீர்திருத்த இயக்கங்க ளாகவும் சமூதாயச் சீர்திருத்த இயக்கங்களாகவும் தோன்றி இந்த அளவுக்கு இவை செய்த வேலைகளை யாருமே பாராட்ட வேண்டும். ராஜாராம் மோகனராய் (1774-1833), கேசவ சந்திர சேனர் (1838-1884), தயானந்த சரவதி (1827-1883), ப்ளாவ்ட்கி அம்மையார் (1831-1891), ஆல்க்காட்துரை (1832-1907) இப்படிப் பட்டவர்களெல்லோரும் இந்தக் காலத்தில் அரும்பாடு பட்டனர். இவர்கள் செய்த வேலைகளை இவர்கள் காலத்துக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கவேண்டும். அப்பொழுது தான் இவர்கள் ஆற்றிய தொண்டின் அருமை தெரியும். ஒரு பக்கத்தில் கிறிதுவப் பாதிரிமார்களின் எதிர்ப்பு, மற்றொரு பக்கத்தில் பழமையிலே ஊறிப் போயிருந்த வைதிகர்களின் துவேஷம், இன்னொரு பக்கத்தில் புதுமையில் அபாரமோகங் கொண்டிருந்த ஆங்கிலம் படித்த இளைஞர்களின் பரிகாசம், ஆகிய இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியில் இருந்து கொண்டு இவர்கள் வேலை செய்தார்கள். இவர்கள் ஹிந்து சமூகத்தின் நன்றிக்கு என்றும் உரியவர்கள். ஆனால் இவர்கள் ஹிந்து மதத்தின் ஓரோர் அமிசத்தை எடுத்துக்கொண்டு அதை மட்டும் சீர் திருத்தினர். ஹிந்து மதமானது பல கிளைகளையுடைய ஒரு மரம்; பல துறைகளையுடைய ஒரு தடாகம். இந்தப் பேருண்மையைக் காண இவர்கள் தவறிவிட்டார்கள். பரம்பொருள் ஒன்றுதான். அது நாமரூப மற்றது என்ற உண்மையை மட்டும் ஒப்புக் கொண்டு, அதனைச் சுற்றிக் காலக்கிரமத்தில் எழுந்த பல கோட்பாடுகள், எண்ணங்கள் முதலியவற்றை யெல்லாம் வெறும் மூடக்கொள்கைகள், அர்த்த மற்றவை யென்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். ஹிந்து மதத்தை இவர்கள் மொத்தமாகப் பார்க்கவில்லை. அதன் வேற்றுமைகளுக்குக் கீழேயுள்ள ஒற்றுமை யைக் காணவில்லை. இந்த நிலைமையில், ஹிந்து மதத்தின் பல்வேறு அமிசங்களை யும் ஒற்றுமைப் படுத்திக் காட்டி, அதன் பழமையிலே பொதிந் துள்ள உண்மையை உணர்த்தக் கூடிய ஒரு மகா புருஷர் தேவையா யிருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தோன்றியவர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். 1. Aristotle கி.மு. 384-321. 2. Alexander the Great கி.மு. 356-323. 1. Julius Caeser கி.மு. 100-44. 2. Mussolini 1883-1945. 3. Virgil கி.மு. 70-19. 4. Dante 1265-1321. 5. St. Francis of Assisi 1182-1226. 6. Savonarola 1452-1498. 7. Otto the Great 912-973. 8. Frederick the Great 1712-1786. 9. Hilter 1889-1945. 10. Third Reich. 11. Martin Luther 1433-1546. 12. Goethe 1749-1832. 13. Bohemia. இதுவே 1914-18ஆம் வருஷ யுத்தத்திற்குப் பிறகு ஜெக்கோலோவேகியா நாடாக மாறியது. 14. John Zizka 1360-1424. 15. Huang Ti கி.மு. 256-210. 16. Confucius கி.மு. 551-479. 1. Socrates கி.மு. 470-399. 2. வாழ்ந்த வாழ்க்கை கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்றென்னுள்ளமும்... - அப்பர் ஸ்ரீராமகிருஷ்ண பரம்ஹம்ஸர் கடவுளின் குழந்தை. சாதாரண உலகரீதிக்கு அவர், ஓர் ஏழைக் குடும்பத்திலே பிறந்து, எல்லாப் பிள்ளை களையும் போல் வளர்ந்து, எல்லாப் பிள்ளைகளுடனும் விளையாடி, எல்லோரையும் போல் ஒரு பெண்ணை விவாகஞ் செய்து கொண்டு, ஒரு கோயிற் பூஜகராக வாழ்க்கையை நடத்தி னார் என்று சொல்லிவிடலா மாயினும், உண்மையில் அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கடவுள் வாழ்க்கையாகவே இருந்தது; ஒவ்வொரு நிமிஷமும் அவர் கடவுள் நினைவாகவே இருந்தார். அவருடைய வாழ்க்கையைப் பாரமார்த்திகக் கண் கொண்டு பார்க்கவேண்டும்; அப்படிப் பாராமல் லௌகிக திருஷ்டியில் பார்த்தோமானால், குருடன் பாலைப் பார்த்த கதையாகத்தான் முடியும். ஸ்ரீராமகிருஷ்ணரே இந்தக் கதையைச் சொல்லி யிருக்கிறார். ஓர் ஊரில் ஒரு குருடன் இருந்தான். அவனுக்குப் பால் எப்படி இருக்குமென்று தெரிந்துகொள்ள ஆசை. தன் நண்பனொருவனை அழைத்து, பால் எப்படி இருக்குமென்று கேட்டான். அவன் கொக்கைப் போல் வெளுப்பாய் இருக்கும் என்றான். கொக்கு எப்படி இருக்கு மென்று கேட்டான் குருடன் மீண்டும். அரிவாளைப் போல் கழுத்து வளைந் திருக்கும் என்றான் நண்பன். அப்படியானால் அரிவாள் எப்படி இருக்கு மென்று சொல்வாயா என்றான் மறுபடியும் அந்த அந்தகன். எப்படியிருக்கு மென்று சொல்வது? அந்த நண்பனுக்குப் புரியவில்லை. சிறிது நேரங் கழித்து, தன் முன் கையை ஓர் அரிவாளைப் போல் வளைத்து வைத்துக் கொண்டு, இதைத் தொட்டுப்பார்; இப்படித்தான் இருக்கும் அரிவாள் என்றான். உடனே அந்தக் கபோதி, இப்பொழுது நன்றாகத் தெரிந்து கொண்டேன், பால் எப்படி இருக்குமென்று; முன் கை, வளைந்திருப்பதைப் போலிருக்கும் என்று சந்தோஷமாகக் கூறினான். இந்தக் கதையாகத்தான் ஆகும் பாரமார்த்திகக் கண்ணில்லாமல், ஸ்ரீராமகிருஷ்ணருடைய வாழ்க்கையை நோக்குவதும், அப்படி நோக்கினால் அவருடைய வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததோடு மட்டுமல்ல, தவறாகவும் புரிந்து கொள்ளும்படி யாகிவிடும். இதைக் காட்டிலும், ஒரு மகானுக்கு இழைக்கக்கூடிய அபசாரம் ஒன்றுமில்லை. அவரைப் போற்ற நமக்குத் தெரியாவிட்டாலும், பிறர் தூற்றுமாறு அவரை வைக்கக் கூடாதல்லவா? ஒரு ராஜதந்திரியினுடைய ஜீவிய சரித்திரத்திலாகட்டும், ஒரு போர் வீரனுடைய வாழ்க்கை வரலாற்றிலாகட்டும். எத்தனையோ அதிசய சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்படி நிகழ்வது அவர் களுடைய வாழ்க்கைக்கு இயல்பு. அவர்களுடைய வாழ்க்கையில், வெற்றி தோல்விகளென்ன, உருட்டல் மிரட்டல்களென்ன, அந்தரங்க பகிரங்க சூழ்ச்சிகளென்ன, இப்படிப்பட்டவைகளைச் சந்திக்கிறோம். விதியை, மதி எதிர்த்து நிற்கிறது; மதியை, விதி, புறமுதுகிடச் செய்கிறது. வாதத்தினால் வெற்றி கிடைக்கிறது சிலசமயங்களில்; பிடிவாதத் தினாலும் காரியம் கை கூடுகிறது. வேறு சில சமயங்களில். மந்திரத்தில் மாங்காய் விழுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில்; தந்திரத்தினால் எதுவும் பலிக்காது போவது முண்டு. இன்னும் சில சந்தர்ப்பங்களில். வாழ்க்கைக்கு ஆத்மீக அடிப்படை யென்பதொன்றுண்டு என்பதை உணராத சாதாரண ஜனங்கள் இருக்கிறார்களல்லவா, அவர்களால் பெரிய மனிதர்க ளென்று கருதப்படுகின்றவர்களுடைய வாழ்க்கையில், இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்வதைக் காண்கிறோம். இவை களைப் படித்தும் கேட்டும் விடுகிற அந்தச் சாதாரண ஜனங்கள், அவர் களிடத்தில் - அந்தப் பெரிய மனிதர்களிடத்தில் - ஒரு பிரமை கொண்டு விடுகிறார்கள்; அவர்களால்தான் உலகம் நிற்கிறது, நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு விடுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. யார், பல் உயிர்களாகி எங்கும் பரந்தவன்காண் ஈசன் என்ற உண்மையை உணர்ந்தவர்களா யிருக்கிறார் களோ, அந்த உண்மையை உணர்ந்ததன் விளைவாக எல்லா உயிர் களையும் தம்மைப்போல் நேசிக்கிறார்களோ அவர்களிடத்தில் தான், அந்த உயர்ந்தோர் மாட்டுத்தான் உலகம் இருக்கிறது; அவர்களால்தான் இயங்குகிறது. அவர்கள் தான் மகான்கள். அவர்கள் நன்றுடையார்; தீயதிலார். அவர்கள், தாம் வேறு, கடவுள் வேறு என்று நினைப்பதில்லை. அது வென்றால் எதுவென ஒன்றடுக்குஞ் சங்கையாதலினால், அது வெனலு மறவே விட்டு மதுவுண்ட வண்டென இருப்பர். இதனால், தாம் வேறு, கடவுள் வேறு என்று நினைக்கும் சாதாரண ஜனங்கள் அவர்களை மதிப்பதில்லை; பித்தரென்றும் பேயரென்றும் பரிகசிக்கின்றனர். ஆனால் அவர்கள்தான் கடவுளின் நிஜமான குழந்தைகள்; அவர் களிடத்தி லிருந்துதான் தெய்வ வாக்கு பிறக்கிறது. கடவுள் சில சமயங்களில், பித்தர், குடியர், குழந்தைகள் ஆகிய இவர்கள் வாயிலாகப் பேசுகிறார் என்ற வாசகம் இங்குக் கூர்ந்து சிந்திக்கத் தக்கது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படிப்பட்ட நிஜமான குழந்தைகளிலே ஒருவர். அவரை யறிய வேண்டுமனால், குழந்தை மனம் வேண்டும்; பாரமார்த்திகப் பார்வை வேண்டும். ஆதலின் வாசகர்களே, உங்கள் மனம் எங்குப் போயிருந் தாலும் சரி, உங்கள் பார்வை எங்குத் திரும்பி யிருந்தாலும் சரி, தயை செய்து அவற்றைத் திருப்பி வரவழையுங்கள்; குழந்தை மனமாகவும் பாரமார்த்திகப் பார்வை யாகவும் மாற்றிக் கொண்டு விடுங்கள். நிச்சயம் ஸ்ரீராமகிருஷ்ணர் - ஆம்; மகானாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் - உங்களுக்குக் காட்சி யளிப்பார். வங்காள மாகாணத்திலுள்ள ஹூக்ளி ஜில்லாவில் காமர்ப்புகூர் என்பது ஒரு பெரிய கிராமம். இதில் க்ஷுதிராம் சட்டர்ஜி என்ற ஒரு பிராமணர், வைதிக நெறி தவறாது வாழ்க்கை நடத்திவந்தார். இவருடைய தர்மபத்தினி சந்திரமணிதேவி. மனமொத்த இவ்விருவ ருடைய இல்லற வாழ்க்கையின் இனிமையில் கிராமவாசிகள் பெரிதும் ஈடுபட்டவர்களாய் இவர்களிடத்தில் அன்பும் மரியாதை யும் செலுத்தி வந்தனர். இந்தத் தம்பதிகளுக்கு நான்காவது புத்திரராக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பிறந்தார். இவர் பிறந்தது 1836ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பதினெட்டாந்தேதி காலை. இவருக்கு மூத்தவர்களாக ராமகுமாரர், ராமேசுவரர் என்ற சகோதரர் இருவரும், காத்யாயினி என்ற சகோதரி ஒருத்தியும் இருந்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் பிறப்பதற்கு முந்தி, க்ஷுதிராம்-சந்திரமணி தம்பதிகள் கயை க்ஷேத்திரத்திற்கு யாத்திரையாகப் போயிருந் தார்கள். இந்த யாத்திரைக்குப் பிறகு பிறந்த குழந்தையாகையால், ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, கயை க்ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் கடவுளின் திருநாமமாகிய கதாதரன் என்ற பெயரை வைத்தனர். கதாதரருடைய குழந்தைப் பருவம், அன்பு நிறைந்த சூழலின் மத்தியில் கழிந்தது என்று சொல்ல வேண்டும். இதற்கு முதலாவது காரணம், இவர் பிறந்ததும், குடும்பத்தில், வறுமை அகன்றது; தன லட்சுமியும் தானிய லட்சுமியும் பிரவேசித்தனர். இதனால் குடும்பத் தினர் எல்லோரும் இவரிடத்தில் தனியான ஓர் அன்பு செலுத்தினர். அதிருஷ்டத்தைக் கொண்டு வந்த குழந்தையல்லவா? இரண்டாவது காரணம், கதாதரர், பார்ப்பதற்கு மிகவும் லட்சணமா யிருப்பார். குழந்தையைப் பார்த்தாலே, கையிலெடுத்துச் சீராட்ட வேண்டு மென்று தோன்றும். அவ்வளவு வசீகரமான தோற்றம். தேகத்தைத் தொட்டால் புஷ்பம் போல இருக்கும். முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்பு. குறு குறுத்த பார்வை. பெண்மை யெல்லாம் திரண்டு இங்ஙனம் ஆண் உருவெடுத்து வந்திருக்கிறதோ என்று சொல்லும்படியாக இருக்கும். கேட்பானேன் எல்லோரும் குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் குலாவுவதற்கு? கதாதரருடைய பிற்காலப் பெருமைக்கு அறிகுறியெனச் சொல்லத் தக்க சிற்சில பாலிய நிகழ்ச்சிகளை மட்டும் இங்குச் சுருக்கமாக எடுத்துக் காட்ட விரும்புகிறோம். கதாதரருக்குச் சிறு பிராயத்திலிருந்தே, இயற்கைக் காட்சி களில் ஈடுபட்டு, அவற்றில் தம்மை மறந்து விடக்கூடிய மனோ பரிபக்குவம் ஏற்பட்டிருந்தது. இதனைப் பூர்வ ஜன்மத்து வாசனை யென்றுதான் சொல்ல வேண்டும். கடவுள் நெறியிலே செல்கின்ற ஆத்மாக்களுக்கு இது சகஜமான அனுபவம். இயற்கைக் காட்சி களையெல்லாம் கடவுள் காட்சியாகவே அவர்கள் காண்பார்கள். ஒருநாள் காலை, கதாதரர், கிராமத்து நிலங்களூடே வரப்பின்மீது சென்று கொண்டிருந்தார். வானத்தில் கரிய மேகங்கள் திரண்டு சென்று கொண்டிருப்பதையும், அவற்றின் கீழே வெண்ணிறக் கொக்குகள் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருப்பதையும் பார்த்தார். அவற்றின்மீது இவர் மனம் சென்றது. கருமைக்குக் கீழே வெண்மை! நேர் விரோதமான நிறம்; ஆனால் அற்புதமான காட்சி! திருமாலும் லட்சுமியும் இல்லையா? கதாதரர் இந்தக் காட்சியைக் கண்டு மெய்மறந்து போய் அப்படியே கீழே விழுந்துவிட்டார். அந்த வழியே அகமாத்தாக வந்தவர்கள் பார்த்து இவரை வீடு தூக்கிச் சென்றார்கள். இந்த மாதிரி தம்மை மறந்து நிற்கிற நிலை இவருக்குச் சிறு வயதிலேயே பலதடவை ஏற்பட்டிருக்கிறது. இயற்கைக் காட்சிகளிலே யாருக்கு அதிகமான ஈடுபாடு இருக்கிறதோ அவர்கள், கவிதை, சித்திரம், சங்கீதம் ஆகிய இப்படிப் பட்டவைகளில் அதிகமான விருப்பமுடையவர்களாயிருப்பார்கள். ஏன், அவர்களே கவிஞர்களாகவும், சித்திரக்காரர்க ளாகவும், சங்கீதம் பயில்வோராகவும் திகழ்தல் கூடும். அவர்கள் மனம் விரைவிலே ஒன்றுபடும்; ஒரு நிலையிலே நிற்கும். இந்த ஒரு நிலை மனந்தான் அவர்களைக் கடவுள் நெறியிலே அழைத்துச் செல்கிறது; அந்தக் கடவுளோடு அவர்களை ஒன்று படுத்துகிறது. இதனாலேயே காவியம், ஓவியம், இசை ஆகிய இவை பலவும் கடவுளைக் காட்டும் வழிகாட்டிகள் என்று சொல்வார்கள் பெரியோர்கள். கதாதரருக்கு, அழகான சரீரத்தைப் போலவே இனிமையான சாரீரமும் உண்டு. சிற்பக் கலையும் நன்றாகத் தெரிந்திருந்தது. கிராமத்துக் குயவர்கள், களி மண்ணினால் பல உருவங்களைச் செய்வார் களல்லவா? கதாதரர் அங்கெல்லாம் சென்று, அவர்கள் எப்படிச் செய் கிறார்கள் என்று நுணுக்கமாகக் கவனிப்பார். மணிக் கணக்காக இப்படி உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருப்பார். சிறு பிள்ளைதானே? சிறிது கூட சலிப்புக் காட்டமாட்டார். தாம் பார்த்த உருவங்களை அப்படியே செய்தும் விடுவார். அவை அழகா யிருந்தன வென்று சொல்லவும் வேண்டுமோ? கைத் திறனும் மன ஒருமைப் பாடும் சேர்ந்து செய்த உருவங்களல்லவோ? இங்ஙனம் பழகிப் பழகி கதாதரர் ஒரு சிறந்த சிற்ப நிபுணராகி விட்டார். சிற்பக் கலையில் கைதேர்ந்த பலரும் - வயதும் அனுபவமுடையவர்கள் - இவருடைய ஆலோசனையைக் கேட்கத் தொடங்கினார்கள்; சிறு பிள்ளைதானே என்று அலட்சியம் செய்ய வில்லை. இவருடைய சிற்பக் கலைத் திறமையிலே அவர்களுக்கு அவ்வளவு மதிப்பு! கதாதரர், இங்ஙனம் அழகான உருவங்களைச் செய்து என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? விற்றுவிடுவார். பார்த்த வர்கள் வாங்காமலிருக்கமாட்டார்கள். அவைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படிக் கிடைக்கிற பணத்தைக் கொண்டு, தம்முடன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்குத் தின் பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். இந்தச் சிறிய உடலிலே எவ்வளவு பெரிய மனம்! கதாதரர், சாரீர சம்பத்துடையவராய் இருந்தபடியால் கேட்ப வர்கள் அனுபவிக்கக் கூடியவிதமாகப் பாடுவார். பாடுகிறபோது அபிநயமும் பிடிப்பார். கிராம ஜனங்கள் தங்கள் தங்கள் வீட்டுக்கு இவரை அழைத்து வந்து பாடச் சொல்லிக் கேட்டும், ஆடச் சொல்லிப் பார்த்தும் அக மகிழ்வார்கள். சிறப்பாகப் பெண்கள் இவரிடத்தில் அதிக பிரியங் காட்டினார்கள். இவருக்குப் பிடித்த மான தின்பண்டங்கள் செய்து கொடுப்பார்கள். அயல் வீட்டுப் பிள்ளையாயிற்றே என்ற சங்கோஜம் சிறிதுமில்லாமல் சகஜமாக இவரிடத்தில் பழகுவார்கள். சுருக்கமாக, கதாதரர், கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் குழந்தையாகவும் இருந்தார். கதாதரர், பிள்ளைப் பருவத்திலிருந்தே, தமது நடை உடை பாவனைகளால் மற்றவர்களை மகிழ்விக்கும் ஆற்றல் படைத்தவரா யிருந்தார். சில சமயங்களில், பெண்ணுடை தரித்துக்கொண்டு, அண்டை அயலிலுள்ள வீடுகளுக்குச் செல்வார். யாரோ பெண் குழந்தை வந்திருக்கிறதென்று நினைத்து, அங்குள்ள பெண்கள் இவரைத் தங்கள் இருப்பிடத்திற்குத் தாராளமாக அழைத்துச் சென்று இவருடன் கூச்சமில்லாமல் பழகுவார்கள். திடீரென்று இவர், தமது பெண்ணுடையைக் களைந்துவிட்டு, கதாதரனாகத் தோன்றுவார். ஏமாற்றமடைந்து போனோமே யென்று அவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இவரும் கூடச் சிரிப்பார். பிறரைச் சந்தோஷப்படுத்துவதிலே இவருக்கு எப்பொழுதும் ஒரு சந்தோஷம். கதாதரருக்கு ஞாபக சக்தி நிரம்ப உண்டு. எதுவும் இவர் மனதிலே சீக்கிரம் பதிந்து விடும். பார்த்ததை அப்படியே செய்வார்; கேட்டதை அப்படியே ஒப்புவிப்பார். நமது நாட்டில் தெருக் கூத்துக்கள் நடைபெறு வதுண்டல்லவா? இதிகாச புராணங்களிலே வரும் கதைகளே நாடகங் களாக நடித்துக் காட்டப்பெறும். காமர்ப்புகூரிலும் அக்கம்பக்கத்தி லுள்ள கிராமங்களிலும் நடை பெறும் இந்தத் தெருக்கூத்துகளுக்கு கதாதரர் விடாமல் சென்று பார்ப்பார். அங்குப் பாடப்பெறும் பாடல்களும், பேசப் படும் பேச்சுக்களும் இவருக்கு நன்றாக நெட்டுருவாகிவிடும். வீட்டுக்கு வந்து, தாம் பார்த்ததையும் கேட்டதையும் அப்படியே நடித்துக் காட்டுவார். இங்ஙனம் சிறு வயதிலேயே இவருக்கு புராண இதிகாசக் கதைகளில் நல்ல பரிச்சயம் ஏற்பட்டிருந்தது; அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களாக நடித்துக் காட்டும் ஆற்றலும் இருந்தது. எந்தப் பாத்திரமாக நடிக்கிறாரோ அந்தப் பாத்திரமாகவே ஆகி விடுவார். இந்த மாதிரி சம்பவங்கள் சில இவருடைய பாலியத்தில் நிகழ்ந்திருக்கின்றன. கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய மாந்தோப்பு. பசும்புல் மூடிய மைதானத்தின் நடுவே இந்தத் தோப்பு இருந்தது. காலை நேரம். சூரியன் தன் கிரணங்களை மெதுவாகத் தோப்புக்குள் புகவிட்டு அவைகளின் மூலம் அங்கு என்ன நடைபெறுகிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிறான். கதாதரரும், அவரையொத்த சில சிறுபிள்ளை களும் அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கூச்சலும் வேடிக்கையுமாக இருக்கிறது. கதாதரர் ஒரு பாடலைப் பாடுகிறார். கூச்சலும் வேடிக்கையும் அடங்கி விடுகின்றது. பாட்டின் இனிமையிலே சிறு பிள்ளைகள் ஈடுபட்டுவிடுகிறார்கள். r§Ñj« KoªjJ«, ‘ehbkšnyhU« nr®ªJ xU ehlf« eo¥nghkh? என்று கதாதரர் கேட்கிறார். ஆட்சேபமென்ன? எல்லோரும் ஒப்புக்கொள்கி றார்கள். உடனே நாடகம் துவங்குகிறது. என்ன நாடகம்? பக்கத்துக் கிராமத்திலே இவர்கள் பார்த்த நாடகந்தான். ஸ்ரீகிருஷ்ண பகவான் மதுரையிலே இருக்கிறார். பிருந்தாவனத்திலுள்ள கோபிகை திரீகள், அவரை விட்டுப் பிரிந்திருப்பதனால் அடைகிற துன்பத்தை வருணிக் கின்ற நாடகம். கதாதரர், ராதையானார்; மற்றச்சிறுவர்கள், கோபிகை களானார்கள். இவர்களிலே ஒருத்தி பெயர் பிருந்தை. ராதை, பிரிவாற்றாமையால் பெரிதும் துயருறுகின் றாள். அவளுடைய உயிருக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என்று தோழிகள் அஞ்சு கிறார்கள். உடனே பிருந்தையை கிருஷ்ணனிடம் தூது அனுப்பு கிறார்கள். பிருந்தை, புறப்படுவதற்கு முன், கிருஷ்ண னிடம் என்ன சொல்ல வேண்டுமென்று ராதையைக் கேட்கிறாள். அவளோ தன் மனத்தைக் கிருஷ்ணனிடம் பறிகொடுத்து விட்டிருக் கிறாள். எனவே அவளால் ஒன்றுஞ் சொல்லமுடியவில்லை. கண்களிலே நீர்மட்டும் பெருகிக் கொண்டே யிருக்கிறது. கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விடுகிறாள். அவ்வளவுதான். நாடகம் நின்று விட்டது. மூர்ச்சையாகிக் கீழே விழுந்து கிடப்பது யார்? ராதையென்ற பாவனையில் இருக்கிற கதாதரர்! இன்னொரு சம்பவம். கதாதரருக்கு ஒன்பது வயது. கிராமத்திலே ஒரு நாடகம் நடைபெற்றது. அதில் கதாதரர் சிவனாக வேஷந்தரித்துக் கொண்டார். மெய்யெல்லாம் திருநீறு; தலையிலே சடைமுடி; இடுப்பிலே புலித்தோல்; கையிலே திரிசூலம். இந்தக் கோலத்துடன் கம்பீரமாக நடந்து வந்து மேடையிலே நின்றார். பார்த்தவர்கள் பிரமித்துப் போனார்கள். முகத்திலே ஈசுவர களை ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கதாதரருடைய நிலைமை யென்ன? மேடை மீது வந்து நின்றதுதான் தெரியும்; தம்பிதமாகி விட்டார். தாமே சிவனானார். கண்களிலே ஆனந்தபாஷ்பம். நாடகம் மேலே நடைபெறவில்லை. கதாதரருக்குச் சுயநிலை ஏற்பட மூன்று நாளாயிற்று. இந்த மாதிரி இவர் அடிக்கடி சுயநிலை இழந்து விடுவதைக் கண்டு, உற்றார் உறவினர் பெரிதும் அஞ்சினர்; காக்கை வலி யென்று கருதினர். என்ன அறியாமை! ஆனால் கதாதரர், தமக்கு அந்தமாதிரி வியாதி யொன்றும் இல்லையென்றும், தம்மைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லையென்றும் உறுதியாகக் கூறுவார். கதாதரருக்குச் சிறு வயதிலிருந்தே அச்சமென்பது தெரிய வில்லை. வயதானவர்கள் போவதற்கு அஞ்சுகிற இடங்களுக்குக்கூட இவர் தைரியமாகச் செல்வார். நள்ளிரவானாலும் சரி, சுடுகாடானா லும் சரி, இவர் பயப்பட்டதே கிடையாது. அச்சமென்பது அறியாமையினின்று பிறந்தது. அந்த, அறியாமை பிறவியிலேயே இவரை விட்டு அகன்றது போலும்! ஆனால் கதாதரருடைய பெற்றோர்கள் இதனை அறிவார் களா? உலக வழக்கப்படி இவருக்கு ஐந்தாவது வயதில் அட்சராப் பியாசம் செய்வித்தனர். அதிருஷ்டத்தோடு பிறந்த தங்கள் மகன் அறிவு நிறைந்த வனாகப் பிரகாசிக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு இருக்கு மல்லவா? ஆனால் கதாதரர் ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவே இல்லை. தம்மைச் சுற்றியுள்ள இயற்கை யன்னையிடமிருந்து, உலகத்திடமிருந்து, கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருக்க, புதகங்களை வைத்துக் கொண்டு படிப்பதற்கு என்ன இருக்கிறது, வெறும் புதகப் படிப்பிலே என்ன பிரயோஜனம் என்ற எண்ணம் இவரை யறியா மலே இவரிடத்தில் குடிகொண்டிருக்க வேண்டும். இதனால்தான் பள்ளிக்கூடப் படிப்பு இவருடைய கவனத்தை ஈர்க்கவில்லை. சிசு போதம் என்ற முதற்பாட புத்தகத்திற்கு மேல் இவர் மனஞ் செல்ல வில்லை. கணக்கா? அது பிடிக்கவே பிடிக்காது. எப்படியோ கூட்டல் மட்டும் தெரிந்து கொண்டார். கணக்குக்கு அடங்காத ஒன்றின்மீது மனம் லயித்துப் போயிருக்கிறவர்கள், சாதாரண கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டி ருப்பார்களா? அவர்களால் தான் முடியுமா? உலகத்தினருக்குச் சாதாரணமாயிருப்பது அவர் களுக்கு அசாதாரணமாகவும் அனாவசியமாகவும் இருக்கிறது. அவர்களுக்குச் சாதாரணமாகவும் அவசியமாகவும் இருப்பது உலகத் தினருக்கு நேர் விரோதமா யிருக்கிறது. சரித்திர, காலந்தொட்டு அவதரித்து வந்திருக்கிற மகான்களின் வாழ்க்கையில் இதனைச் சகஜமாக காண்கிறோம். கதாதரர் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்லவில்லையென்றா லும், அங்குப் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் இவரிடத்தில் மிகவும் அன்பு காட்டினர்; மரியாதையாகவும் நடந்துகொண்டனர். பள்ளிக்கூடம் முடிந்ததும், மாலை நேரங்களில், கதாதரர், பிள்ளை களை ஒன்றுகூட்டி வைத்துக் கொண்டு, ஆடியும் பாடியும் அவர் களை மகிழ்விப்பார். தாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த புராண இதிகாசக் கதைகளை அவர்களுக்கு அழகாக எடுத்துச் சொல்வார். இதனால் அவர்கள் இவரிடத்தில் அதிக ஈடுபாடுடையவர்க ளானார்கள். பிள்ளைகள் அனைவரும் இவரிடத்தில் ஈடுபட்டிருக்கிறார் களென்பதையும், இதற்குரிய காரணத்தையும் பள்ளிக்கூட ஆசிரியர் தெரிந்துகொண்டு ஒருநாள் பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு இவரைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவ்வளவுதான். இதற்குப் பிறகு ஒழுங்காகப் பள்ளிக்கூடம் வருவதில்லை யென்பதற்காகவோ, பாடங்களைச் சரியாகப் படிப்பதில்லை யென்பதற்காகவோ இவரைக் கடிந்து கொண்டதே கிடையாது. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும், பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகு இவரை ஓரிரண்டு பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டுவிட்டுத்தான் வீட்டுக்குப் போவார். கதாதரர் பள்ளிக்கூடப் படிப்பிலே அதிக சிரத்தை காட்ட வில்லையென்றாலும், படித்தவர்களைக் காட்டிலும் அதிக அழகாக வும், கேட்பவர் மனத்திலே பதியும் படியாகவும் புராண இதிகாசக் கதைகளைச் சொல்வார். தன்னுடனொத்த சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு நடித்துக் காட்டும் நாடகங்களுக்கு வேண்டிய பாடல் களையும் வசனத்தையும் இயற்றிக் கொடுப்பார். இயற்கையி லேயே இவருக்கு அறிவு நிரம்பி யிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை. படித்த புலவர்களுக்குப் புரியாத விஷயங்கள் இவருக்குச் சுலபமாகப் புரிந்துவிடும். யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய ஈமச் சடங்குகள் முடியுந் தறுவாயில், பல பண்டிதர்களை வரவழைத்துப் பிரசங்கங்கள் செய்விப்பது நம் நாட்டில் சில இடங்களில் வழக்கம். ஒரு சமயம் காமர்ப்புகூரிலுள்ள ஒரு பணக்காரருடைய வீட்டில் இத்தகைய பண்டித சபை யொன்று நடைபெற்றது. கூடியிருந்த பண்டிதர்கள் பல பிரச்சனைகளைக் குறித்துத் தர்க்கம் செய்துகொண்டிருந்தனர். கதாதரர் அவர்களுக்குச் சமதையாக இருந்து தர்க்கம் செய்தார். இவருடைய புத்தி சாதுரியத்தைக் கண்டு பண்டிதர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறுபிள்ளை, எதிர்காலத்தில் அதி மானுஷ்ய சக்தியுடையவ னாவான் என்பதில் சந்தேகமில்லை என்று ஆசீர்வதித்தார்கள். கதாதரருக்கு, பிரகலாதனிடத்தில் ஈடுபாடு அதிகம். அவ னுடைய ஆழ்ந்த பக்தியையும் கடவுளின் உண்மையிலே அவனுக் கிருந்த உறுதியையும் இவர் படித்துச் சொல்கிறபோது கேட்பவர் களுக்கு மயிர்க் கூச்செறியும். காமர்ப்புகூரில் மாது என்ற ஒரு கைக்கோளன் இருந்தான். நல்ல பக்திமான். அவன், அடிக்கடி சாயங்கால நேரங்களில் பள்ளிக் கூடம் விட்டதும், கதாதரரைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், தன்னாலியன்ற உபசரணை களைச் செய்து, பிரகலாதனுடைய சரித்திரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்பான். படித்தறியாத தானும், தன்னைப் போன்றவர்க ளும் பிரகலாதனுடைய சரித்திரத்தைக் கேட்டுப் பயன் பெற வேண்டுமென்பது அவன் எண்ணம். கதாதரர், சிறு பிள்ளையா யிருந்தும் அபார சக்தியுடையவர். அவர் ஒரு தெய்வாமிசம் என்பது அவனுடைய நம்பிக்கை. இங்ஙனமே கிராமத்திலுள்ள வேறு சிலரும் கதாதரரிடத்தில் பக்தி பூண்டொழுகி வந்தனர். சீனிவாசன் என்ற ஒருவன். சின்னு என்று இவனை எல்லோரும் அழைப்பர். சங்கு அறுப்பது இவன் தொழில். படிப்பு வாசனை யில்லாதவன். இவனுக்குக் கதாதரரிடத்தில் அபார பிரேமை. இவரை ஒரு தெய்வமாகவே கருதி வழிபட்டு வந்தான். இவரைத் தனியாக ஓரிடத்திற்கு அழைத்துக்கொண்டு போவான். அங்கே இவரை உட்கார வைத்து, கோயிலிலுள்ள ஒரு விக்கிரகத்திற்கு என்னென்ன மாதிரி பூஜை செய்வார்களோ அந்தந்த மாதிரியே இவரையும் பூஜிப்பான். மலர் களால் அர்ச்சனை, தீபங்காட்டல், நைவேத்தியம் படைத்தல் எல்லாம் நடைபெறும். கடவுளை நேரிலேயே கண்டு விட்டதாக ஆனந்த பரவசனாவான். ஆனந்த மேலீட்டால் அழுவான். இங்ஙனம் கதாதரரிடத்தில் ஈடுபட்டவர்கள் கிராமத்தில் இன்னும் சிலர் இருந்தனர். அப்பொழுது இவருக்கு என்ன வயது தெரியுமா? ஏழுட்டு வயதுதான்! காமர்ப்புகூரில் ஒரு சத்திரம் உண்டு. பூரி-ஜகந்நாத க்ஷேத்திரத் திற்கு யாத்திரையாகச் செல்லும் சாதுக்கள் பலரும் இங்கு வந்து தங்கிப் போவது வழக்கம். சிறுபிள்ளையாகிய கதாதரர் அவர் களிடம் சென்று பழகுவார். அவர்களுக்குத் தேவையான விறகு, நீர் ஆகியவைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; இன்னும் பலவிதங் களிலும் அவர்களுக்குச் சேவை செய்வார். அவர்கள் நடத்தும் ஆத்மார்த்தமான சம்பாஷணைகள், சங்கீர்த்தனங்கள் முதலியவை களில் பக்தி சிரத்தை யோடு கலந்து கொள்வார். அவர்களுடைய யாத்திரை வரலாறுகளைக் கேட்டு அகமகிழ்வார். அவர்களுடைய தெய்வபக்தி, எளிமையும் தூய்மையும் கலந்த வாழ்க்கை, அகப் பட்டதைக் கொண்டு திருப்தியடை கிற மனப்பான்மை ஆகிய இவை யாவும் பாலிய கதாதரருடைய பசுமனதில் நன்றாகப் பதிந்து விட்டது. அவர்களுடைய துறந்த வாழ்க்கையில் பற்றுள்ளங் கொண்டு விட்டார். ஒருசமயம் இவருடைய தாயார், இவருக்கு ஒரு புதிய துணியைக் கொடுத்து அதைக் கட்டிக்கொள்ளும்படி செய்தார். அப்படியே கட்டிக் கொண்டு இவர் மேலே சொன்ன சாதுக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வழக்கம்போல் சென்றார். அவர்கள் கௌபீன தாரிகளாயிருப்பதைக் கண்டார். என்ன தோன்றியதோ என்னவோ? தாமும் அப்படி உடுத்திக் கொள்ளத் தீர்மானித்து விட்டார். கட்டியிருந்த புதுத்துணியைத் துண்டு துண்டாகக் கிழித்து, அவைகளில் இரண்டு துண்டுகளை எடுத்து அவர் களைப் போல் கோவணமும் அரைஞாண் கயிறுமாக உடுத்திக் கொண்டார். இந்த வேஷத்துடன் தாயிடம் ஓடிவந்து அம்மா, நான் எப்படி ஒரு சாதுவாக, சந்நியாசியாக ஆகி விட்டேன், பார் என்று சந்தோஷத் துடன் கூறினார். இவரை இந்தக் கோலத்தில் பார்த்ததும் தாயாருக்குக் கோபம் வந்தது. எந்தத் தாயினுடைய கண்கள்தான், தன் மகனைத் துறவியாகக் காணச் சகிக்கும்? கடிந்து கொண்டாள். ஆனால் உடனே அந்தத் தாய் மனம் இரங்கிவிட்டது. குழந்தையைக் கட்டியணைத்து உச்சி மோந்தாள். கதாதரர், ஏழாவது வயதில் தந்தையை இழந்த தனயனானார். குடும்பப் பொறுப்பை மூத்த மகனான ராமகுமாரர் ஏற்றுக் கொண்டார். இரண்டு வருஷங்கழித்து, கதாதரருடைய ஒன்பது வயதில், இவருக்கு உபநயனம் செய்வித்தார். உபநயனச் சடங்கின் போது, உபநயனம் செய்விக்கப்பெற்ற பிரும்மசாரி பவதி பிட்சாந் தேஹி என்று சொல்லிக் கொண்டு பிட்சை கேட்கவேண்டு மென்பது சம்பிரதாயம். அநேகமாக உற்றார் உறவினர்களிடமே இந்தப் பிட்சை கேட்க வேண்டும்; அல்லது பிராமணர் வீடுகளி லேயே கேட்கவேண்டும்; பரம்பரையாக நடைபெற்று வருகின்ற முறை இது. ஆனால் கதாதரர் இப்படிச் செய்யச் சம்மதப்பட வில்லை. தனி என்ற கொல்ல மாது ஒருத்தி, சந்திரமணி தேவியின் அன்புக்கு உரியவள்; நேரிய வாழ்க்கையும் நிரம்பிய சீலமும் உடையவள். அவளிடம் சென்று பிட்சை கேட்டார் கதாதரர். இது கூடாது என்று தடுத்தனர் கூட இருந்தவர்; அந்தணருக்கு இஃது இழுக்காகு மென்று சீறினர். ஆனால் கதாதரர் கேட்கவில்லை. அந்த அம்மையாரிட மிருந்து பிட்சை பெறுகிற வரையில் சாப்பிடப் போவதில்லை யென்று சொல்லி ஓர் அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டுவிட்டார். உபநயனச் சடங்குகள் மேற் கொண்டு நடைபெறவில்லை. ஒரு நாள் பூராவும் இப்படிக் கழிந்தது. கடைசியில் கதாதரருடைய விருப்பம் நிறைவேறியது. அந்தக் கொல்ல மாதிடமிருந்தே பிட்சை பெற்றார். உபநயனச் சடங்குகள் தொடர்ந்து நடைபெற்று முடிந்தன. பரந்த உள்ளத்தில் குறுகிய எண்ணங்கள் இடம் பெறுவதில்லை யென்பதற்கு இஃதோர் உதாரணம். தகப்பனார் இறந்த பிறகு குடும்பப் பொறுப்பை எற்றுக் கொண்ட ராமகுமாரர், சிறிது காலங் கழித்து கல்கத்தா சென்று அங்கு ஜோதிட ராகவும், பெரிய மனிதர் வீடுகளில் பூஜகராகவும் இருந்து ஜீவனம் நடத்தி வந்தார். கூடவே, இலவசமாக சம்கிருத பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வந்தார். இதுதான் இந்தியாவினுடைய பண்பாட்டின் விசேஷம். ஒருவன், எவ்வளவு வறுமையுடையவனாக இருந்தபோதிலும் அவன், தான் கற்ற வித்தையை பிறருக்கு இலவச மாகத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமே தவிர, அதற்கு எவ்வித பிரதிப் பிரயோஜனத்தையும் எதிர்பார்க்கக் கூடாது. வித்தையை வர்த்தகம் செய்தல் கேவலமென்று இந்தியாவில் தொன்று தொட்டு கருதப்பட்டு வந்திருக்கிறது. ராமகுமாரருடைய செறிந்த புலமையும் அடங்கிய தன்மையும், அவரைப் பெரிய மனிதர் பலருடைய நன் மதிப்புக்குரியனவாக்கின. தமது சம்பாத்தியத்தில் ஒரு சிறு பகுதியை, காமர்ப்புகூரிலுள்ள தமது தாயார், சகோதரர்கள்டங்கிய குடும்பத் திற்கு அனுப்பிவந்தார். கதாதரரோ, இங்குக் காமர்ப்புகூரில், பள்ளிக்கூடம் போவதை அடியோடு நிறுத்தி விட்டார். தெய்வத்திற்குப் பூஜை செய்வதும் தாய்க்குத் தொண்டு செய்வதும் இவருடை முக்கிய வேலைகளாயின. வழக்கம் போல் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு கடவுள் சம்பந்த மான பாடல்கள் பாடுவதிலும் நாடகங்கள் ஆடுவதிலும் மற்றப் பொழுதைப் போக்கி வந்தார். இப்படியே இவரை விட்டுவைக்க லாமா? இவருடைய எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொண்டிருந்த இராமகுமாரர் இவரைக் கல்கத்தாவுக்கு வரவழைத்து தம்முட னிருத்திக் கொள்ளத் தீர்மானித்தார். தமையனார் விருப்பத்திற் கிணங்க கதாதரர் தமது பதினேழாவது வயதில் கல்கத்தா சென்றார். கல்கத்தா வந்தடைந்த கதாதரரை, பெரிய மனிதர் வீடுகளில் தாம் செய்யும் பூஜைகளுக்கு உதவியாயிருக்கும்படியும், கூடவே சம்கிருதம் படிக்குமாறும் ராமகுமாரர் கூறினார். அப்படியே கதாதரரும் சில வீடுகளில், தமையனாருக்குப் பதில் பூஜை செய்து வந்தார். ஆனால் இவர் செய்த பூஜைக்கும் மற்றவர்கள் செய்கிற பூஜைக்கும் எவ்வளவோ வித்தியாசமிருந்தது. சுருக்கமாக இவர் மனம் வைத்துப் பூஜை செய்தார். இங்ஙனம் இவர் மனம் பூஜையில் சென்றதே தவிர படிப்பில் செல்லவில்லை. ஆயினும் தமையனா ருடைய விருப்பத்தை மறுக்க முடியாதவராய் சம்கிருத இலக்கணத்தைப் படிக்கத் தொடங்கினார். சில நாட்கள் படித்தார். மனதில் பதிந்தால்தானே? இப்படி யிருக்கிறபோது ஒருநாள் இவர் தமது அறையின் தாழ்வாரத்தில் தனிமையில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண் டிருந்தார். அப்பொழுது இவருக்குத் தெரிந்த பண்டிதர் - நியாயம், மீமாம்சை இவைகளில் மகா வல்லவர்- ஒரு சிறு மூட்டையை எடுத்துக் கொண்டு வந்தார். என்ன மூட்டை அது சுவாமி? என்றார் கதாதரர். ஒன்றுமில்லை; கொஞ்சம் அரிசியும் இரண்டு வாழைக்காயுந்தான். அதோ இருக்கிற அந்த மாளிகையில் கிடைத்தது என்றார் அந்தப் பண்டிதர். அவருடைய பதில் கதாதரரைச் சிந்தனையிலாழ்த்தி விட்டது. அடே, இவ்வளவு படித்ததற்கு இந்த அரிசியும் வாழைக்காயுந்தானா? எழுத்தறி வில்லாத ஒரு சாதாரண கூலிக்காரன் கூடவல்லவோ இதைக் காட்டிலும் அதிகமாகச் சம்பாதிக்கிறான். ïªj m‰g¤â‰fhfth, j®¡fbk‹d, Ûkh«ir ba‹d ïitfisbašyh« go¡f nt©L«? என்றெல்லாம் எண்ணினார். அந்த நிமிஷத்திலிருந்து இந்த வயிற்றுப் படிப்பு வேண்டவே வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார். சில நாள் படிப்பு ஒரு நிமிஷத்தில் முடிந்து விட்டது. தமையனார் எவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை. இப்படி யிருக்கையில் ராமகுமாரருக்குப் புதிய வேலை யொன்று கிடைத்தது. கல்கத்தாவுக்குச் சுமார் நான்கு மைல் தொலைவிலுள்ள தட்சிணேசுவரம் என்ற இடத்தில் ராணி ராசமணி என்ற ஒரு ஜமீன்தாரிணி, காளிதேவிக்குப் பெரிய தொரு கோயில் கட்டுவித்தாள். இதனோடு சேர்ந்தாற்போல் சிவனுக்கும் விஷ்ணு வுக்கும் ஆலயங்கள் நிர்மாணிக்கப் பெற்றன. நல்ல இடம்; கங்கைக் கரை; சுற்று முற்றும் பழந்தருமரங்களும் குளிர்தரு சோலைகளும். இதனால் யாத்திரிகர்கள் வந்து தங்கிப் போவதற்குச் சௌகரியமான இடமாயிருந்தது. மற்றும் ராசமணி அம்மையார், பரதேசிகளுக்குச் சாப்பாடு கிடைக்கும்படியான ஏற்பாடுகளும் இங்குச் செய்தார். இதனாலும் இங்கே ஜனங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டிருந் தார்கள். இந்தக் காளிகோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப் பெற்றார் ராமகுமாரர். இதனால் தட்சிணேசுவரத்திலேயே இவர் வசிக்க வேண்டிய தாயிற்று. கூடவே சகோதரரான கதாதரரையும் அழைத்துக் கொண்டு போனார். சில நாட்கள் கழித்து இவர்களுடைய சகோதரியின் புத்திரர் இருதயர் என்பவரும் வந்து சேர்ந்து கொண்டார். ராமகுமாரர், தமது பூஜைத் தொழிலிலே பக்தி சிரத்தையோடு ஈடுபட்டார். கதாதரரோ, அங்குள்ள தெய்வங்களை வழிபட்டுக்கொண்டும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டுமிருந்தார். ஒரு நாள் கதாதரர், கங்கைக் கரையிலுள்ள களிமண்ணை எடுத்து அதைக் கொண்டு ரிஷபவாகன ரூடராக சிவபெருமானின் உருவத்தைச் செய்து வைத்தார். அழகா யிருந்ததென்று சொல்லவும் வேண்டுமோ? பார்த்தவர் அனைவரும் அதன் அழகை வியந்து பாராட்டினர். அப்பொழுது அந்த வழியாக மதுரநாத விசுவாசர் உலாவிக் கொண்டிருந்தார். இவர் ராணி ராசமணி அம்மையாரின் மருமகப் பிள்ளை. அந்த அம்மையாரின் ஆதி பாதிகளை யெல்லாம் இவர்தான் நிருவாகம் செய்துவந்தார். இவர் மேற்படி உருவத்தைப் பார்த்து அதிசயங்கொண்டு ‘இந்த அழகிய உருவத்தைச் சமைத்தது யார்? என்று அருகிலிருந்தவர்களைக் கேட்டார். கதாதரர் என்று அறிந்து அவரைக் காண ஆவல் கொண்டார். அப்படியே கதாதரர் மதுரநாதரை வந்து பார்த்தார். இவருடைய இந்த முதல் சந்திப்பு குரு சிஷ்யத் தொடர்பாக முற்றி விட்டது. தமது குருவாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவ்வப் பொழுது இடும் கட்டளைகளை அவ்வப்பொழுது மதுரநாதர் நிறை வேற்றி வந்த வரலாறுகளை நாம் பின்னாடி பார்க்கப் போகிறோமல்லவா? மதுரநாதர், கதாதரரை, அவருடைய தமையனார் ராமகுமாரருடைய அர்ச்சக வேலையில் உதவிசெய்து கொண்டிருக்கும்படி கேட்டுக் கொண்டார். கதாதரரும் அப்படியே செய்துகொண்டு வந்தார். விஷ்ணுகோயிலில் வேறோரு பிராமணர் அர்ச்சகரா யிருந்து வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் இவருடைய அஜாக்கிரதையி னால் பூஜா விக்கிரகத்தின் கால் ஒடிந்து போய்விட்டது. எல்லோரும் கலவர மடைந்தனர். மூளியாகப் போன உருவத்திற்குப் பூஜை செய்யலாமா என்பதைப் பற்றி பண்டிதர்களுக்குள் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றன. ராணி ராசமணி அம்மையாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியில் கதாதரரையும் அபிப்பிராயங் கேட்டார்கள். ஒரு திரீ, தன் புருஷனுடைய காலொடிந்து போனால் அந்தப் புருஷனை அந்த திரீ என்ன செய்யவேண்டுமென்று யோசனை சொல்கிறார்கள் இந்தப் பண்டிதர்கள்? அவனை நிராகரித்து விடவேண்டுமென்று சொல்கி றார்களா? அல்லது வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெறவேண்டும் என்று சொல்கிறார்களா? என்று திருப்பிக் கேட்டார். பண்டிதர்கள் சிகிச்சை செய்வதுதான் சரியென்று ஒப்புக்கொண்டார்கள். கதாதரர், ராணியைப் பார்த்து நீங்களென்ன, இறந்துபோன உங்கள் கணவரை - ராணி ராசமணி அம்மையார் ஒரு விதவை யென்பதை இங்கு வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். - இதுகாறும் வழிபட்டுக் கொண்டு வந்தீர்களா? அல்லது வெறும் விக்கிரகத்தை வழிபட்டுக் கொண்டு வந்தீர்களா? என்று கேட்டார். இந்தக் கேள்வியின் அர்த்தத்தை அந்த அம்மையார் புரிந்துகொண்டு விட்டார். கதாதரர் ஒரு சிறந்த சிற்பி யென்பது அவருக்குத் தெரியும். இவரைக் கொண்டு அந்த விக்கிரகத்தைச் செப்பனிடச் செய்து, இவரையே அந்த விஷ்ணு ஆலயத்தின் அர்ச்சகராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். சுமார் ஆறுமாத காலம் இந்த வேலையைப் பார்த்தார் கதாதரர். பின்னர் இவர், காளி கோயிலின் அர்ச்சகராகவும், ராமகுமாரர் விஷ்ணு கோயிலின் அர்ச்சகராவும் மாறிக் கொண்டார்கள். காளிகோயிலின் அர்ச்சகராக கதாதரர் நியமிக்கப்பட்டவுடன் இவரிடத்தில் ஒரு பெரிய மாறுதல் தோன்றத் தொடங்கியது. வெறும் விக்கிரகத்திற்குத் தாம் பூஜை செய்வதாக இவர் கருதவே யில்லை. சர்வஜீவராசிகளையும் சிருஷ்டித்துக் காப்பாற்றுகின்றவள் எவளோ, நம்பினோரை ஆதரிக்கின்றவள் எவளோ, அவளே, அந்த ஜகன்மாதாவே, தமது போஷணையில் இருப்பதாகவும் அவள் சந்தோஷப்படுகிற வகையில் அவளுக்குச் சிசுருஷை செய்து வருவது தனது கடமை யென்றும் கருதினார். பரிசுத்தமான மலர்களைக் கொய்து கொண்டு வந்து அழகான மாலையாகத் தொடுத்து அணிவிப்பார்; இனிமையான பாடல்களைப் பாடுவார்; நல்ல வெயிலாயிருக்கிற பொழுது அருகில் நின்று விசிறிக் கொண்டி ருப்பார்; நல்ல வெற்றிலையையும் பாக்கையும் பார்த்தால், அம்பாளுக்குப் பிடிக்குமென்று சொல்லி அழகான தாம்பூலச் சுருளாக மடித்துக் கொடுப்பார். இப்படியே தின்பண்டங்கள் விஷயத்திலும். சுருக்கமாக, காளிதேவியின் பூஜகராக நியமிக்கப் பெற்ற சில மாதங்கள் வரை, கதாதரர், தம்மை மறந்து அந்தக் காளிதேவியின் நினைவாகவே இருந்தார். இவருடைய நிலைமையைப் பார்த்தார் ராமகுமாரர். பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயந்தார். இப்படியே விட்டுவைக்க லாகா தென்று தீர்மானித்தார். இவரை காமர்ப் புகூருக்கு அனுப்பி, அங்கு உத்தம குலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முக்கர்ஜியின் அருமைப் புதல்வி ஸ்ரீ சாரதாமணிதேவியை இவருக்கு விவாகம் செய்வித்தார். அப்பொழுது கதாதரருக்கு வயது இருபத்திரண்டு அல்லது இருபத்துமூன்று இருக்கும். சாரதாமணி தேவிக்கு வயது ஐந்து. விவாகமானதும், கதாதரர், மீண்டும் தட்சிணேசுவரம் போந்து அம்பாளின் அர்ச்சகராக அமர்ந்து கொண்டார். அன்னையின் நினைவு முன்னைக் காட்டிலும் அதிகமாகிவிட்டது. எங்கும் எல்லாவற்றிலும் ஜகன்மாதாவையே கண்டார். அன்னையின் நினைவில் தமது நினைவை யிழந்து பலநாட்கள் இருந்ததுண்டு. இந்தக் காலத்தில் இவர் ஒரு கடவுட் பித்தராகவே இருந்தார். இவர் உடல் நலம் குன்றியது. கூட இருந்தவர்கள் பெரிதும் கவலை கொண்டார்கள். இந்தச் சமயத்தில், இவருடைய வாழ்க்கையில் சிரத்தை கொண்ட ராமகுமாரர் காலமாகி விட்டார். இவரைத் தனியாக ஒருவர் இருந்து பராமரித்துக் கொண்டிருக்க வேண்டியதா யிருந்தது. இந்தப் பொறுப்பை, ஏற்கனவே சொல்லப் பெற்ற இவருடைய சகோதரியின் மகனான இருதயர் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீராமபிரானுடைய பதினான்கு வருஷ வனவாசத்தின் போது, லட்சுமணப் பெருமாள், கூடவே நிழல்போலிருந்து சேவை செய்தார் என்று படித்திருக்கிறோம். ஆனால் இங்கே இருதயர், சுமார் முப்பது வருஷகாலம், ஸ்ரீராமதிருஷ்ணருக்கு, நிழல் போல் இருந்து தொண்டு செய்ததைப் பார்க்கிறோம். கதாதரருடைய தேக நிலையிலும் மனோ நிலையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. அர்ச்சகர் பொறுப்பினின்று விலக்கப் பட்டார். கட்டுகளற்ற ஒன்றின்மீது மனம் லயித்துப் போயிருக்கும் ஒருவரை எந்த விதமான கட்டுகளும் உட்படுத்த யாரும் விரும்ப மாட்டார்களல்வா? இந்தச் சந்தர்ப்பத்தில் ராணி ராசமணி அம்மையார் தேகவியோகமடைந்தார். மதுரநாதர் ஜமீன்தாரியின் நிருவாகத்தை ஏற்றுக்கொண்டார். அவர் கதாதரரிடம் அத்தியந்த விசுவாசம் கொண்டவரல்லவா? கதாதரருடைய ஆத்ம சாதனைக்குத் தேவையான சகல சௌகரியங்களையும் செய்து கொடுத்தார். இந்தக் காலத்தில் கதாதரருடைய உடலத்திற்குப் பல உபாதிகள் ஏற்பட்டன. பசியின்மை; தூக்கமின்மை; மேலெல்லாம் எரிச்சல். உடல் நிலைதான் இப்படியென்றாலோ, உள்ளத்திலே ஒரு குமுறல்; பெரிய புயற்காற்று அடித்துக் கொண்டிருந்தது. உடல் உபாதிகளுக்குப் பரிகராங் காண மதுரநாதருடைய முயற்சியின் பேரில், வைத்தியர்கள் பலர் வந்து பரிசோதனை செய்து பார்த்தனர். இன்ன வியாதி என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடலை யொட்டிய வியாதியாயிருந்தால் தானே? மனதோடு மட்டும் ஒட்டிய வியாதியா யிருந்தாலும் மனோதத்துவ சாதிரிகளால் சிகிச்சை செய்ய முடியும். ஆனால் கதாதரரைப் பற்றிக்கொண் டிருக்கிற வியாதி இவைகளுக்கெல்லாம் மேற்பட்ட கடவுள் வியாதியல்லவோ! கடவுளைக் கண்டால்தானே அந்த வியாதி போகும். கடவுளைக் காட்டுவார்தான் இப்பொழுது வேண்டும். அப்படிக் காட்டுவார் ஏற்பட்டனர் கதாதரருக்கு. இவருடைய வாழ்க்கையில் இஃது ஓர் அதிசயமான விஷயம். கடவுளைக் காண பலவழிகளுண்டு. அவரவரும் அவருடைய பக்குவத்திற்கேற்றபடி ஒவ்வொரு வழியாகச் சென்று அந்தக் கடவுளைக் கண்டிருக்கின்ற னர். கதாதரர், இந்தப் பல வழிகளாகவும் சென்று அந்த ஒன்றான பொருளைக் கண்டிருக்கிறார். அப்படி ஒன்றாகக் கண்டதோடல் லாமல் அந்தந்த வழியினால் காட்டப்பெற்ற விதமாகவும் கண்டி ருக்கிறார். எந்த வழியாகச் சென்று அந்தப் பரம்பொருளைக் காண வேண்டுமென்று இவர் மனம் விழைகிறதோ அந்த வழியாக இவரை அழைத்துச் செல்ல, அந்த வழியிலே சென்று பழகினவர்கள் அவ்வப்பொழுது இவருக்கு வாய்த் திருக்கிறார்கள். பரம் பொருளைப் பராசக்தி வடிவமாகக் காண்டல் ஒரு முறை. இதற்குத் தாந்திரிக மெனப் பெயர். ஞான மார்க்கத்தையும் கர்ம மார்க்கத்தையும் சமரஸபடுத்திச் செல்கின்ற இந்த முறையில் அறுபத்து நான்கு சாதனங்கள் உண்டென்றும், இது மகா கடினமான தென்றும் கூறுவர். இந்தத் தாந்திரிக மார்க்கத்தில் கதாதரரை அழைத்துச் செல்ல பைரவி பிராம்மணி என்ற ஓர் அம்மையார் வழி காட்டியாயமைந்தார். சுமார் மூன்று வருஷ காலம் இந்தத் தாந்திரிக சாதனங்கள் பலவற்றையும் பயின்று ஜகதம்பிகை யின் பல தோற்றங்களையும் கண்டு களித்தார் கதாதரர். ஜிதேந்திரிய ரானார். அஷ்டமாசித்திகளும் இவருக்குக் கிடைத்தன. ஆனால் அவைகளைத் துச்சமெனத் தள்ளினார். உலகை மயக்குவதற் கல்லவோ அவை தேவை யென்று கருதினார். இந்த மூன்று வருஷ காலத்தில் இவர் முகத்தில் ஒரு தேஜ உண்டாயிற்று; உடலைப் பற்றியிருந்த நோய்கள் யாவும் பறந்தன. இதற்குப் பிறகு பக்தி மார்க்கத்திலே செல்ல விரும்பியது இவர் மனம். இதற்கு இசைவாக ஜடதாரி என்ற ஒரு வைஷ்ணவப் பெரியார் இவருக்கு வாய்த்தார். கடவுளை, பெற்ற குழந்தையாகவும், உற்ற தோழனாகவும், மணந்த நாயகனாகவும் இப்படிப் பல வகை முறைகளால் வழிபடுகிற இந்தப் பக்தி மார்க்கம் பூராவையும் கடந்தார். இதற்குப் பிறகு அத்வைத மார்க்கத்திலே திரும்பியது இவர் மனம். தோதாபுரி என்ற ஒரு பெரியார் இந்தக் காலத்தில் இவருக்குக் குருவாக வந்து சேர்ந்தார். இவருடைய ஆணைப்படி கதாதரர் சந்நியாசம் பெற்றுக் கொண்டார்; அத்வைத சாதனங்கள் பலவற்றை யும் பயின்றார். தேகாத்ம வாத புத்தியை ஒழித்தார். இரண்டற்ற ஒன்றாகிய பரம் பொருள் காலத்தைக் கடந்தது, அதற்குத் தோற்றமு மில்லை, முடிவு மில்லை, எண்ணத்திற்கு அப்பாற்பட்டது அது, வரம்பில்லாத பேரின்பம் அது, பேசாத நிலை அது, அதனைச் சொல்லால் சொல்லிக் காட்ட வேண்டு மானால் சச்சிதானந்தம் என்று சொல்லலாம், அங்கு எல்லாம் அடங்கி ஒடுங்கி விடுகின்றன என்ற உண்மையை உணர்ந்தார் கதாதரர். உணர்ந்தாரென்ன, தாமே அதுவாகி விட்டார். ஜீவாத்மாவோடு பரமாத்மா ஐக்கியப்பட்டிருக் கின்ற நிலையே நிர்விகற்ப சமாதியாகும். இந்த நிலை, எப்படி யிருக்மென்று சொல்ல முடியாது; இதனை அனுபவிக்கத்தான் முடியும்; அனுபவித்ததைச் சொல்லவும் முடியாது. சொல்லுக்கு அப்பாற் பட்டதன்றோ இந்த நிலை. இந்த நிலையிலே கதாதரர் பல நாட்கள் இருந்தார். இஃது - இந்த நிலையை யடைவது - இவருக்குச் சர்வ சாதாரணமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்ஙனம் பிரும்ம சாட்சாத்காரம் பெற்ற பின் இவரிடத்தில் எல்லா வேற்றுமை களும் அற்றுப் போயின; பச்சைக் குழந்தை போலானார். இங்ஙனம் பிரும்ம சாட்சாத்காரம் பெற்றவர்கள் மறுபடியும் உலக நினைவு பெறுவதில்லை யென்று சொல்வர். ஆனால் கதாதரர், உலகத்திற்கு நல்வழி காட்டும் பொருட்டு, உடல் நினைவோடு இன்னும் சில வருஷ காலம் இருக்கவேண்டுமென்று பராசக்தி தனக்குக் கட்டளை யிட்டிருப்பதாக உணர்ந்தார். இதன் பிறகு பிரபஞ்ச உணர்ச்சி பெற்ற வரானார். இதற்கு - இந்த உடல் நினை வோடு கூடிய நிலைக்கு - வர இவர் சுமார் ஆறு மாதகாலம், வயிற்றுக் கடுப்பு முதலிய நோய்களுக்கு உட்பட வேண்டியதாயிற்று. இதற்குப் பிறகு, வேற்று மதத்தினர் கடவுளைக் காண எந்தெந்த வழியாகச் செல்கிறார்களோ அந்தந்த வழியாகத் தாமும் செல்ல வேண்டு மென்று ஆசை கொண்டார். இங்ஙனமே இலாமிய மதத்தை அவலம்பித்தார். ஒரு முலிமைப்போலவே உடை உடுத்து, தினந்தோறும் நமா சொல்லிவந்தார். ஏன், ஒரு முலிமாகவே வாழ்ந்தார் என்று சுருங்கச் சொல்லிவிடலாம். கடைசியில் இந்த இலாமிய மார்க்கத்தின் மூலமாகக் கடவுளைக் கண்டார். இந்த இலாமிய சாதனையைத் தொடங்கியபோது கதாதரருக்கு ஏறக்குறைய முப்பது வயது. இதற்குப் பிறகு சுமார் எட்டு வருஷங்கழித்து, தமது முப்பத் தெட்டாவது வயதில், கதாதரர், கிறிதுவ மதத்திலே ஈடுபட்டு, ஓர் உண்மைக் கிறிதுவராக வாழ்ந்து, கிறிதுவர்கள் காண்கிறபடி கடவுளைக் கண்டார். அதவைத மார்க்கத்திலே சென்று கொண் டிருந்த காலத்தில் இவர் புத்த மத அனுபவங்களையும் பெற்றார் என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். இலாமிய சாதனம் பயின்று முடிந்த பின்னர் கதாதரர் உடல் நல நிமித்தம், காமர்ப்புகூருக்குச் சென்று சுமார் ஏழெட்டு மாதகாலம் வசித்துவிட்டு பின்னர் தட்சிணேசுவரம் வந்து சேர்ந்தார். அது போழ்து, ஸ்ரீ சாரதமணி தேவியாரும், கணவரோடு சேர்ந்து வாழ்வதற் குரியராய் தட்சிணேசுவரம் போந்தார். அவர், தம் நாதர் அடைந்துள்ள மேலான நிலையை அறிந்தவராய், அவருக்குத் தாய் போலிருந்து போஷிப் பதிலும், சிஷ்யை போலிருந்து சிசுருஷை செய்வதிலும் திருப்தி யடைந்தார். உலகத்திலே அவதரித்த மகான் களிற் பலர், தங்கள் தாய்மார்களால் பெருமையடைந்திருக்கி றார்கள்; ஆனால் கதாதரர், தமது தர்மபத்தினியால் பெருமை யடைந்தார். இப்படிச் சொல்வது இவருடைய பெருமையை எந்த விதத்திலும் குறைப்பதாகாது. இதற்குப் பிறகு, அதாவது 1866ஆம் வருஷத்திலிருந்து, கதாதரருடைய வாழ்க்கை மகான் தன்மை நிறைந்த வாழ்க்கையாக இருந்ததென்று சொல்ல வேண்டும். சுமார் இருபது வருஷ காலம் இவர், வெல்ல மலையாகவும் மலர்க் கூட்டமாகவும் இருந்தார். இந்த வெல்ல மலையை மொய்த்துக் கொண்டிருந்த உழைப்பாளிகளான எறும்புகள் தான் எத்தனை? இந்த மலர்க் கூட்டத்திலிருந்து ஞான மதுவுண்டு கொண்டிருந்த வண்டுகள் தான் எத்தனை? இந்தக் காலத்தில் கதாதரர், மதுரநாதருடன் அநேக க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். கடவுட் தன்மை எங்கெல்லாம் குடி கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று அந்தத் தன்மையை வழிபட்டார். தமக்குப்பின் சந்ததியாராக ஒரு தொண்டர் குழாத்தைச் சிருஷ்டித்தார். இவர் அருளிவந்த உபதேசங் களின் விளைவாக, பாரத நாட்டிலே அதுவரை பரவியிருந்த அறியாமை இருள் அகன்றது. மேனாட்டுப் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த பலர் தங்கள் தாய்த் திருநாட்டை நோக்கலாயினர்; அதனை, அதன் பழைய பெருமையிலே கொண்டு வந்து நிறுத்த வேண்டு மென்று சங்கற் பித்துக் கொண்டனர். பொதுவாக பாரத மக்கள் விழிப்படைந்தனர். வந்த வேலை முடிந்து விட்டது என்று உணர்ந்தோ என்னவோ, கதாதரர் 1886ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினைந்தாந் தேதி கடைசியாகக் கண் மூடிக் கொண்டு விட்டர். 3. மகான் தன்மை நிறைந்த ஞானம் மூடத்தனம் போலிருக்கிறது. சிறந்த நாவன்மை தட்டுத்தடுமாறிப் பேசுவது போலிருக்கிறது. - லாவோத்ஸே க்ஷூதிராம் சட்டர்ஜியின் குழந்தையாகப் பிறந்த கதாதரர் மறைந்துவிட்டார். ஆனால் கடவுளின் குழந்தையாக, கடவுளின் அமிசமாக அவதரித்த ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்து கொண்டிருக்கி றார். ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தது யாரோ அவரே இந்த உடலில் ராமகிருஷ்ணனாக வந்துள்ளார் என்று ஸ்ரீ ராம கிருஷ்ணரே சொல்லி யிருக்கிறார். ராமர் தசரதருடைய மகனாகத் தோன்றியதும், கிருஷ்ணர் வசுதேவருடைய பிள்ளையாகப் பிறந்த தும். கதாதரர்க்ஷூதிரா மின் புதல்வராக உடம்பெடுத்ததும் எல்லாம் ஒரு வியாஜந்தான். உண்மையில் இவர்களெல்லோரும் கடவுட் சக்திகள். அருவமாயுள்ள இந்தச் சக்திகள், அந்தந்தக்கால நிலைமைக்கேற்றவாறு மேற் சொன்ன உருவங்களாக அவதரித்தன. ஹிந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை இது. இந்த நம்பிக்கை ஒருபுற மிருக்கட்டும். சாதாரண திருஷ்டியி லிருந்து பார்த்தாலும், கதாதரர் என்ற பெயர் எல்லோருடைய நினைவி லிருந்தும் அகன்று போகலாம். ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயர் எல்லோருடைய நெஞ்சத்திலும் எந்நாளும் இருந்து கொண்டிருக்கும். ஆதலின் இந்த அத்தியாயத்திலிருந்து கதாதரர் என்ற பெயருக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயருக்கு வணக்கஞ் செலுத்தி வரவேற்போம். ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய வாழ்க்கையின் பிற் பகுதிக் காலத்தில், பலவித சாதனைகள் பயின்றதன் விளைவாக, அவருடைய உடல் சுருங்கி, அழகு குன்றி விட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற முறையில் அவரை ஜனங்கள் தெரிந்துகொண்ட சமயத்தில் அவர் உடலழகு இல்லாதவராகவே காணப்பட்டார். அழகு சொட்டும் குழந்தையென்று எந்த கதாதரரை நாம் வருணித்தோமோ அவரையே இங்கே உடலழகு வாய்க்கப்பெறாத ராமகிருஷ்ணர் என்று கூறத் துணிகிறோம். ஏனென்றால் இங்கே நாம் பார்ப்பது கதாதரர் அல்ல; ஸ்ரீ ராமகிருஷ்ணர். சரி; ஸ்ரீ ராமகிருஷ்ணர் உடலழகு இல்லாதவர்; வட மொழியோ ஆங்கிலமோ பயிலாதவர். இவருக்குக் தெரிந்த ஆங்கில மெல்லாம் ஐந்தாறு வார்த்தைகள்தான். வாட்டர் டாம் தாங்க் யூ1 இந்த மாதிரி சில வார்த்தைகளே தெரியும். தாய்மொழியாகிய வங்காளியிலும் அதிக பரிச்சயமுடையவர் என்று சொல்லமுடியாது. ராமாயணத்தைக் கம்பன் தமிழில் ஒரு காவியமாகச் செய்திருப்பது போல வங்கமொழியில் கீர்த்தி வாசர் என்ற கவிஞர் காவியமாகச் செய்திருக்கிறார். இதில் யுத்த காண்டத்தின் ஒரு பகுதியை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது பதினேழாவது வயதில் குண்டு குண்டான எழுத்துக்களில் எழுதினார். இப்படிப் பெயர்த்தெழுதியதில்கூட அநேக பிழைகள். இதுதான் இவருடைய வங்க மொழிப் பயிற்சிக்கு அத்தாட்சி. அழகாக, ஆற்றொழுக்குப் போல் பேசும் ஆற்றலும் இவருக்கு இல்லை. பேசுகிறபோது கொஞ்சம் நெருடி நெருடி, அதாவது தத்தித்தத்திப் பேசுவார். இத்தகையவரிடத்தில், ஆங்கிலத் திலும் வடமொழியிலும் சமயஞானப் பயிற்சியிலும் வல்லுநர்களான பலரும், மேனாட்டு நாகரிகத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்த இளைஞர் பலரும், செல்வமும் சமுதாயத்திலே செல்வாக்குமுடைய பலரும் ஆட்பட்டிருந்தார்கள். மைக்கேல் மதுசூதன தத்தர் என்ன, பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ன, பண்டித ஈசுவர சந்திர வித்தியா சாகர் என்ன, மகரிஷிதேவேந்திரநாத் தாகூர் - இவர் ரவீந்திர நாத் தாகூரின் தந்தை - என்ன, இப்படிப் பட்டவர்க ளெல்லோரும் இவரிடத்தில் தலைவணங்கி நின்றார்கள். ஹிந்து மதத்தைப் புனருத் தாரணம் செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் சில இயக்கங்கள் தோன்றின வென்று முன்னே சொன்னோமல்லவா, அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிலரும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அத்தியந்த விசுவாசிகளானார்கள். சிறப்பாக பிரும்ம சமாஜத்தின் முக்கியதரான கேசவ சந்திரசேனர், இவருடைய பரந்த மனப் பான்மையிலும் சமரஸ நோக்கிலும் பெரிதும் ஈடுபட்டார். கேசவசேனரின் நாவன்மை, ஸ்ரீ ராமகிருஷ் ணரின் எளிய வார்த்தை களுக்கு முன்னர் மௌனஞ் சாதித்தது. கேசவசேனரும் அவருடைய சகபாடிகளும், மணிக்கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் முன்னிலையில் உட்கார்ந்து உபதேச அமுதைப் பருகிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மட்டுமென்ன? சிறந்த நாடகாசிரிய ரான கிரீஸ சந்திர கோஷ், ஸ்ரீ ராமகிருஷ்ணரால் பெரிய மாற்றத்தை யடைந்தார். தர்க்க சாதிரத்தில் மகா பண்டித ரான கௌரிகாந்த தர்க்க பூஷணர் என்பவர், தட்சிணேசுவரம் போந்து ஸ்ரீ ராம கிருஷ்ணரிடம் ஞான வெளிச்சம் பெற்றார். ராஜ புதனத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற புகழ் படைத்தவர் பண்டித நாராயண சாதிரி என்பவர். வேதாங்கங்கள் ஆறையும் கரைகண்டவர். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்று உபதேசம் பெற்று சந்நியாசம் வாங்கிக் கொண்டார். பர்த்வான் சமதானத்தில் பிரதம வித்துவானாக விளங்கிய பண்டித பத்மலோசன தர்க்காலங்காரர் என்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரை ஓர் அவதார புருஷ ரென்று கருதினார்; பயபக்தியுடன் இவருடைய உபதேசங்களைக் கேட்டு வந்தார். இன்னும் அநேக உதாரணங் களைச் சொல்லலாம். இங்ஙனம் இலக்கியவானிலே சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந் தவர்கள், சமுதாய சாகரத்தில் கம்பீரமாக ஊர்ந்து சென்ற நாவாய் போன்றவர்கள், இந்த எளிய மனிதரிடத்தில் ஏன் கைகட்டி வாய் பொத்தி நின்றார்கள்? இவரிடத் தில் என்ன மகிமை இருந்தது? அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு மகான். இப்படி ஒரு வார்த்தையாகச் சுருக்கிச் சொல்வதிலேயே நாம் திருப்தியடைகிறோம். எப்படி இவருடைய எளிய தன்மையிலே இவருடைய அருமை பெருமைக ளெல்லாம் அடங்கி யிருந்தனவோ அப்படியே மகான் என்ற இந்த ஒரு வார்த்தையிலேயே எல்லா அர்த்தங்களும் அடங்கி யிருக்கின்றன. இவருடைய மகான் தன்மைக்கு முன்னர் அறிவு, அதிகாரம், பதவி, பட்டம், பணம் ஆகிய யாவும் அடங்கி ஒடுங்கி விட்டனவல்லவா? இந்த மகான் தன்மையுடையவர்களையே தீர்க்க தரிசிக ளென்றும், அவதார புருஷர்களென்றும் சொல்கிறோம். இவர்களை ஈசுவர கோடிகள் என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இவர்கள் மானிட ஜாதியின் நன்மைக்காக அவ்வப்பொழுது கடவுளால் அனுப்பப் பெறும் விசேஷ தூதர்கள். இவர்கள் உலகத்தினருக்காக உலகத் தினரைப்போல் வாழ்வார்கள். ஆனால் இவர்களுடைய நாட்டமெல் லாம் கடவுளிடத்திலே தான் இருக்கும். இஷ்டப்பட்ட போது மேலே செல்லவும், அதாவது கடவுளிடத்திலே ஐக்கியமாகி இருக்கவும், இஷ்டப்பட்டபோது கீழே இறங்கி வரவும், அதாவது உலக விவகாரங்களில் ஈடுபடவும் இவர் களால் முடியும். இவர்கள், சீன ஞானி கன்பூஷிய கூறுகிற மாதிரி, பூவுலகையும் வானுலகையும் சமரஸப் படுத்திக்கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவர்கள். இப்படிப்பட்ட ஈசுவர கோடிகளில் ஒருவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர். மகான்கள் தண்ணீரைப் போன்றவர்கள். எல்லா ஜீவராசி களுக்கும் முக்கிய ஆதாரமாக இருப்பது நீர். இருந்தாலும் அஃது எல்லாவற்றிற்கும் கீழான இடத்தில் தங்கியிருக்கிறது. நீரைப்போல் மிருதுவான வது கிடையாது; ஆனால் அது நெருப்பை அணைக்க வல்லது; கற்பாறயைக் கரைக்குஞ் சக்தியுடையது. தண்ணீர் எல்லோருக்கும் எவ்வித வித்தியாசமும் பாராட்டாமல் தன்னை வழங்கிக் கொண்டிருக்கிறது; ஆனால் உடனுக்குடன் அது நிரம்பி யும் விடுகிறது. அதனுடைய தாழ்மையிலேதான் அதன் உயர்வு இருக்கிறது; அதன் வழங்குத் தன்மையிலேதான் அதன் நிறைவு இருக்கிறது. மகான்களும் இப்படித்தா னல்லவா? இவர்கள், தங்களைப் பெருமைப் படுத்திக்கொள்வதில்லை; எல்லோருக்கும் முன்னால் வந்து நிற்பதுமில்லை; அடக்கம் ஒடுக்கமாக இருப்பதிலேயே இவர்கள் திருப்தி யடைகிறார்கள். ஆனால் எல்லோருடைய பார்வையும் இவர்கள் மீதுதான் விழுகிறது; எல்லோரும் இவர்களை நாடித்தான் வருகிறார்கள். இவர்கள் இனிய சுபாவமுடையவர்களா யிருக்கிறார்கள்; ஆனால் இவர்களைக் கண்ட மாத்திரத்தில் எல்லோருக்கும் ஒருவித பயபக்தி உண்டாகிறது. இவர்கள் அன்பான வார்த்தைகளைத்தான் சொல்கிறார்கள்; ஆனால் அந்த வார்த்தைகள் கல்போன்ற மனத்தினைக் கரைத்து விடுகின்றன. இன்னும் மகான்கள், யாருடனும் சண்டை போடுவதில்லை; இதனால் யாருக்கும் இவர்களுடன் சண்டைபோடும் தைரியம் உண்டாவ தில்லை. அநேக சம்பவங்கள் நிகழ்வதற்கு, அநேக மனிதர்கள் வளர்ச்சி யடைவதற்கு, இவர்கள் உதவியாயிருக்கிறார்கள்; ஆனால் அந்தச் சம்பவங்களின் நிகழ்ச்சியிலே, அந்த மனிதர்களின் வளர்ச்சியிலே இவர்கள் தலையிடுவதில்லை. இவர்களுக்கென்று சொந்தமான இருதயம் கிடையாது; உலகத்திலுள்ள சர்வ ஜீவராசி களுடைய இருதயங்களும் இவர்களுடைய இருதயந்தான். இவர்கள், நன்மையை நன்மையினால் சந்திக்கிறார்கள்; தீமையையும் நன்மையினால் சந்திக்கிறார்கள். மகான்களைச் சிலர் காற்றுக்கு ஒப்பிட்டுச் சொல்வார்கள். எல்லோருக்கும் தேவையாயிருக்கிற காற்று எல்லோராலும் பார்க்கப் படுவதில்லை யல்லவா? எல்லோர் கண்களுக்கும் இல்லாம லிருந்து கொண்டே அஃது எல்லோருக்கும் சேவை செய்கிறது. வானுற ஒங்கி வளர்ந்திருக்கும் மரங்களும் இந்தக் காற்றுக்கு முன்னர் தலை வணங்கிக் கொடுக்கின்றன. மகான்களும் இப்படித்தான். இவர்கள், மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அந்த மற்றவர்க ளுடைய வாழ்க்கைக்கு உதவியாயிருக்கிறார்கள். செல்வச் சிறப்புடை யவர்கள், கல்விச் செருக்குடையவர்கள், அதிகாரத் திமிர் படைத்த வர்கள் ஆகிய எல்லோரும், மகான்களுக்கு முன்னர், பள்ளிக்கூடத் தில் வாத்தியாருக்கு அடங்கின பிள்ளைகள் மாதிரி ஆகிவிடுகி றார்கள். மகான்களைப் பற்றி சீன ஞானியாகிய லாவோத்ஸே1 கூறு கின்ற வாசகம் இங்குக்கவனிக்கத்தக்கது:- இவர்கள், தங்களுடைய சொற்களால் மற்றவர்களுக்குக் கற்பிப்பதில்லை; செயல்களாலேயே கற்பிக்கின்றனர். இந்தச் செயல்களுக்கு இவர்கள் எந்த விதமான சன்மானத்தையும் எதிர்பார்ப்பதில்லை. பூரணத் துவத்திற்காக இவர்கள் உழைக்கிறார்கள்; அந்த உழைப்புக் குண்டான மதிப்பு தங்களுக்குக் கிடைக்க வேண்டு மென்று இவர்கள் ஆசைப்படுவ தில்லை. ஆத்மீக வாழ்க்கையைப் பற்றின அலுவல்களிலேயே இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவசியத்திற்கு அதிகப்பட்டவை களையெல்லாம் அவர்கள் ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். தன் முனைப்பு என்பது இவர்களுக்கு இருப்பதே இல்லை. தீமைகளைக் களைகிற விஷயத்தில் இவர்கள் மென்மையான சுபாவமுடையவர் களாகவும் இருப்பது கிடையாது. கௌரவம், அகௌரவம் இரண்டும் இவர்களுக்கு ஒன்றுதான். எல்லாரும் இவர்களுடைய குழந்தைகள். நன்னெறியே இவர்களுடைய தாய். மகான்கள், இயற்கையோடியைந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதனால் இவர்கள், செயற்கையான வாழ்வு நடத்துகிறவர்களுக்கு, அதாவது சாதாரண உலக விவகாரங்களிலே ஈடுபட்டிருக் கிறவர் களுக்கு, இயற்கைக்கு விரோதமான வாழ்வு நடத்துகிறவர் களாகத் தென்படுகிறார்கள். ஏனென்றால், அவர்கள், தங்களுடைய செயற்கை வாழ்வையே இயற்கை வாழ்வென்று நினைத்துக் கொண்டிருக் கிறார்களல்லவா? ஆதலின், அவர்கள், மகான்களைப் பித்தரென்று பேசுவதிலே என்ன ஆச்சரிய மிருக்கிறது? உண்மையில் மகான்கள் கடவுட் பித்தர்கள்தான். கடவுட் பக்தர்கள் வேறே; கடவுட் பித்தர்கள் வேறே. உலக விவகாரங்களுக்கு மத்தியில், அதாவது உலக விவகாரங்களைக் கவனித்துக்கொண்டு, கூடவே கடவுளைப்பற்றி நினைக்கிறவர்கள், கடவுட் பக்தர்கள். கடவுட் பித்தர்கள் இப்படியல்ல. உலகத்தினை, அதாவது உலக விவகாரங்களை, அடியோடு மறந்துவிட்டு கடவுள் நினைவாகவே இருப்பார்கள். இவர்களுக்குக் கடவுளைப் பற்றிய பிரக்ஞை ஒன்று தவிர, மற்றவைகளின் மீது பிரக்ஞையே இராது. பக்தர்களைப் பச்சைக் காய்களுக்கும் பித்தர்களைப் பழுத்த பழங்களுக்கும் ஒப்பிடுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.ïªj¡ கடவுட் பித்தையே பிரேமை என்பார்கள். உலக நினைவை இழந்து கடவுள் நினைவாக இருக்கிறவர் களைச் சித்த சுவாதீன மில்லாதவர்கள் என்று உலக நினைவாகவே இருக்கிறவர்கள் கருதி விடுகிறார்கள்; இவர்களை ஏசவும் பேசவும் முற்படுகிறார்கள். அத்தா! அரியே! என்றுன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றார் என்னை, முத்தே! மணி மாணிக்கமே! முளைக்கின்ற வித்தே! உன்னை நான் எங்ஙனம் விடுகினே என்று கதறுகின்றார் திருமங்கையாழ்வார். இந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் தகுந்தாற்போல் கடவுள் நினைவுடையவர்களும் நடந்துகொள்கி றார்கள். சில சமயங்களில் இவர்களைப் பார்த்தால் குடித்து விட்டிருக்கிற வெறியர்கள் மாதிரி இருக்கும்; பகலென்றும் இரவென்றும் வித்தியாசம் தெரியாது. எப்படி ஒரு குடிகாரன், உடம்பிலே அணியவேண்டிய சட்டையைச் சில சமயங்களில் தலையிலும், சில சமயங்களில் காலிலும் அணிந்து கொள்கிறோனோ அதைப்போல கடவுள் வெறியர்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தினைப் பற்றிய நினைவே இல்லாமல் நடந்து கொள்கிறார் கள். சில சமயங்களில் இவர்களுடைய செயல்கள் குழந்தைகளின் செயல்கள் போலிருக்கும்; இன்னும் சில சமயங்களில் அனுபவம் நிறைந்தவர்களின் செயல்களைப் போலிருக்கும். அநேக சமயங் களில் இவர்களுக்குத் தங்கள் தேகத்தின் நினைவே இராது. இப்படிப்பட்டவர்களை மத்தர் பேயரோடு பாலர் தன்மையது மருவியே துரிய வடிவமாய், மன்னு தேகமொடு காலமாதியை மறந்த நின்னடியர் என்கிறார் தாயுமானார். இவர்களுக்கு நன்மையோடு தீமையில்லை, நாடுவதொன்றில்லை, சீல மில்லை, கோலமில்லை, புலனில்லை, கரணமில்லை, குணமில்லை, குறியில்லை, குலமு மில்லை... இங்ஙனம் உலகத்தினர் இவர்களை, இந்த மகான்களைப் பித்தர்களென்று கருதுவதைப் போல் இவர்களும், இந்த மகான் களும், உலகத்தினரைப் பித்தர்களென்று கருதுகிறார்கள். பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர் பேயனே எவர்க்கும் என்கிறார் ஒருவர். இப்படிப் பரபரம் ஒருவரையொருவர் கருதிக்கொண்டு விடுவதால் இருவருக்கும் மத்தியில் ஓர் இடைவெளி ஏற்பட்டு விடு கிறது; ஒருவரிடமிருந்து மற்றொருவர் ஒதுங்கியே இருக்கிறார்கள். இருந்தாலும் மகான்கள், கடவுள் நினைவுக்கு உலகத்தினரைத் திருப்பவே பாடுபட்டு வருகிறார்கள். உலகத்தினரோ, இந்த மகான் களுடைய பிற்காலத்தில் தான் இவர்களைப் புரிந்துகொண்டு இவர் களுடைய அருகில் வருகிறார்கள். உலகத்தினரைக் கடவுள் நினைவுக்குத் திருப்பவேண்டு மென்கிற கருணையுடையவர்களா யிருப்பதனால்தான் மகான்கள், உலகத் தினருக்குச் சுலபமாகப் புரியக்கூடிய உலக விஷயங்களை உதாரணங் களாகக் காட்டி, கடவுள் தன்மையை விளக்குகிறார்கள்; எல்லா ஜனங்களும் கடவுள் நிலையை அடைய வேண்டுமென்பதற் காகவே எல்லா ஜனங்களும் புரிந்து கொள்ளக்கூடிய பாஷையில் பேசுகிறார்கள். இவர்களுடைய உபதேசங்கள், மண்ணிலே பிறந்து, திறந்த வெளியிலே வளர்கின்றன. எத்தகைய சிக்கலான பிரச்னை களையும் இவர்கள் சாதாரண உபமான உபமேயங்களைக் காட்டிப் புரியவைத்து விடுகிறார்கள். இதனால்தான், இவர்களுடைய உபதேசங் களில் சிறு கதைகள், விடுகதைகள் எல்லாம் காணப் படுகின்றன. புத்தர், ஸாக்ரட்டீ, யேசுநாதர், கன்பூஷிய, இப்படிப் பட்ட மகான்களுடைய உபதேசங்களைச் சிறிது படித்துப்பாருங்கள். எவ்வளவு எளிய உவமைகள்! ஆனால் எவ்வளவு பெரிய உண்மை களை விளக்குகின்றன! யாரார் எப்படி எப்படி வழிபடுகின்றார் களோ அப்படி யெல்லாம் கடவுள் காணப்படுகின்றார் என்ற உண்மையை ஸ்ரீ ராமகிருஷ்ணர், எத்தகைய அருமையான சிறு கதையின் மூலம் விளக்குகிறார் கேளுங்கள். ஒருவன் ஒரு காட்டிற்குள் சென்று மரத்தின் மீது பிராணி யொன்றிருப்பதைப் பார்த்தான். gh®¤JÉ£L¤ âU«ãtªJ, j‹ e©g‹ xUtÅl« ‘e©gh, fh£oš eh‹ xU ãuhÂia¥ gh®¤nj‹; m~J v›tsî mHfhd át¥ò bjÇíkh? என்றான். அந்த நண்பன் ஓ, நான்கூட காட்டிற்குள் சென்றிருந்தபோது அந்த பிராணியைப் பார்த்தேனே; அதனைச் சிவப்பு என்று எப்படிச் சொல்கிறாய்? பச்சை நிறமல்லவோ அது என்றான். இந்தச் சமயத்தில் வேறோருவன் வந்து, நீங்கள் இரண்டு பேர் சொல்வதும் தவறு; அந்தப் பிராணி மஞ்சள் நிறமுடையது என்றான். இப்படிப் பலர் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு நிறத்தைச் சொன்னார்கள். ஒருவன் சாம்பல் நிறமென்றான்; இன்னொருவன் ஊதா நிற மென்றான். யார் சொல்வது சரி யென்பதைப்பற்றி இவர்களுக் குள்ளே சண்டை வந்துவிட்டது. கடைசியில் மரத்தருகில் சென்று பார்ப்பதென்று தீர்மானித்து அப்படியே சென்றார்கள். அந்த மரத்தடியில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனிடத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் பார்த்த நிறத்தைப்பற்றிச் சொன்னார்கள். அவன் கூறினான்:- சகோதரர்களே, நான் இந்த மரத்தடியில்தன் வசிக்கிறேன். நீங்கள் சொல்கிற பிராணியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அனைவர் சொல்வதும் சரியே. அந்தப் பிராணி ஒரு சமயத்தில் சிவப்பாகவும், இன்னொரு சமத்தில் மஞ்சளாகவும், மற்றொரு சமயத்தில் ஊதாவாகவும், இப்படி ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுகிறது. அது பச்சோந்தி. சில சமயங்களில் அதற்கு எவ்வித நிறமும் இருப்பதில்லை. மகான்கள், பெண்மையை வழிபடுகின்றார்கள்; பெண்மை யிலே இறைமையைக் காண்கிறார்கள். இவர்களுடைய பெண் ணுள்ளந்தான், எல்லோருடைய துன்பங்களுக்கும் பரிகாரம் காணவேண்டுமென்று விழைகின்றது; அந்தப் பெண்ணுள்ளத்தின் பலகணிகள் போன்றிருக்கிற கண்கள்தான் எல்லோருடைய துக்கத்திற்காகவும் கண்ணீர் வடிக்கின்றது. மகான்களுடைய உடலமைப்பையோ உள்ளப் பாங்கையோ சிறிது உற்றுப் பாருங்கள். பெண் தன்மையின் அமிசங்கள் நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். புத்தர் என்ன, யேசுநாதர் என்ன, இப்படிப் பட்டவர்களுடைய முகத்தில்தான் என்ன சாந்தம்! உதட்டில்தான் என்ன அழகான புன் சிரிப்பு! கண்களில்தான் எவ்வளவு அருள் நிறைந்த பார்வை! இவர் களுடைய கண்களில், ஓர் அறிஞர் கூறுகிற மாதிரி, அறிவின் உயரம், தெய்வீக அமைதி, ஆத்மீக ஆழம் எல்லாம் நிரம்பியிருக் கின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிறு வயதில் ஒரு பெண்ணைப் போலவே இருந்தார் என்றால் அஃது இவருடைய பிற்கால மகான் தன்மையின் ஆரம்ப சூசகமேயாம். ஆனால் சிலர் கேட்கலாம், ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது உபதேசங்களில் அடிக்கடி பெண்ணையும் பொன்னையும் விலக்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொல்கிறாரே என்று. வாதவம்; ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படித் தான் சொல்கிறார். காமினி (பெண்) காஞ்சனம் (பொன்) என்ற வார்த்தை களை அடிக்கடி உபயோகித் திருக்கிறார். ஆனால் எந்த அர்த்தத்தில் இந்த வார்த்தைகளைச் சொல்லி யிருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெண்ணாசையையும் பொன்னாசையையுமே இவர் வெறுக் கிறார்; விலக்கச் சொல்கிறார். எல்லா மகான்களும் இதைத்தானே சொல்லி யிருக்கிறார்கள்? ஆத்ம சாதனைக்கு இந்த இரண்டு ஆசைகளும் இடையூறா யிருக்கின்றன என்ற காரணத்தினாலேயே இவைகளை விலக்கச் சொல்கிறார்கள் அறிஞர்கள். ஆத்மீகத் துறையில் இறங்கத் தீர்மானித்தவர்கள், ஆணாயிருந்தால் பெண்ணாசையையும், பெண்ணா யிருந்தால் ஆணாசையையும் துறந்துவிட வேண்டியது அவசியமாகும். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது உபதேசங்களில் வலியுறுத்தி யிருக்கிறார். பெண்ணாசையைத் துறக்க வேண்டுமென்று சொன்ன ஸ்ரீ ராமகிருஷ்ணர், எல்லாப் பெண்களையும் ஜகன்மாதாவின் வடிவங் களாக வழிபட்டார். இந்த விஷயத்தில் தம் மனைவியென்றும், மற்ற திரீகளென்றும் இவர் வேற்றுமை பாராட்டவேயில்லை. எல்லோரும் இவருக்குத் தாய்மார்களாக, அருள் வடிவங்களாக, தியாகமூர்த்தி களாகவே தென்பட்டார்கள். இவர் தாந்திரிக சாதனத்தை ஒரு திரீயினிடம் பயின்றதை இங்கு வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம். பெண்ணுள்ளம் படைத்த மகான்கள், மற்றவர்களுடைய துக்கத்திற்காகக் கண்ணீர் வடிக்கிறார்களென்று மேலே சொன் னோமே, அது வெறும் அலங்கார பாஷையல்ல; உண்மை வாசகம். இவர்கள், மற்றவர்களுடைய துக்கத்திற்காக மட்டும் கண்ணீர் வடிப்பதில்லை; மற்றவர்களுடைய அறியாமைக்காகவும் அழுகி றார்கள். இப்படி அழுகிறபோதுதான், இவர்களைப் பைத்தியக் காரர்களென்று, இவர்களை அறியாத, இவர்களை அறிந்துகொள்ள முடியாத உலகம் சொல்கிறது. ஆனால் இவர்களுடைய மனப் புண், அதிலிருந்து கசிகிற ரத்தம், இவைகளெல்லாம் அதற்கென்ன தெரியும்? கிறிது பிறப்பதற்குச் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே கிரீ தேசத்தில் ஹெராக்ளீட்ட1 என்றொரு ஞானி இருந்தான். இவன் ஸாக்கரட்டீஸின் ஆசிரியன் என்று சொல்வர். இவன், மானிட ஜாதியின் அறியாமைக்காக எப்பொழுதும் அழுதுகொண்டிருப்பான். ஐயோ, மனிதர்கள் சன்மார்க்கத்திலே செல்லாமல் இப்படிக் கெட்டுப் போகிறார்களே என்று இவனுக்கு ஆத்திரம் வரும். அந்த ஆத்திரம் அழுகையாக வெளிப்படும். இதனால் இவனை, இவன் சமகாலத்தவரும், பிற்காலத்தவரும் அழுகின்ற ஞானி என்று அழைத்தார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், பலதடவைகளில், உலகத்தின் அறியாமையைக் குறித்து வருந்தியிருக்கிறார்; அழுதிருக்கிறார். இங்ஙனமே மற்றவர் களுடைய துயரத்திற்காகத் தாம் துயரப்பட்டு மிருக்கிறார். ஒரு சமயம் இவர் கங்கைக்கரையின் மீது உலவிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு படகோட்டி, மற்றொரு படகோட்டியைக் கன்னத்திலே நன்றாக அறைந்து விட்டான். அதைப் பார்த்து விட்டார் இவர். தாமே அறை பட்டதாக உணர்ந்தார். ஐயோ, நோகிறதே, நோகிறதே என்று உரக்கக் கதறினார். அருகிலிருந்தவர்கள் ஒடிவந்து பார்த்தார்கள். என்ன கண்டார்கள்? இவர் முதுகில், அடித்த விரல் அடையாளங்கள் இருந்தன. என்ன ஆச்சரியம்! எல்லா ஜீவராசிக ளையும் தானாகப் பார்க்கிற ஒரு நிலையை, எல்லா ஜீவாராசிகளின் துன்பத்தையும் தன்னுடைய துன்பமாகக் கருதுகின்ற ஒரு தன்மையை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் அடைந்திருந்தார் என்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்? இதனால்தான், அதாவது தான் வேறு, மற்ற ஜீவராசிகள் வேறு என்ற பேதமற்ற நிலையிலே இருந்த காரணத்தினால்தான், ஸ்ரீ ராம கிருஷ்ணர், ஜீவராசிகளிடத்தில் கருணை காட்டவேண்டும், அவை களுக்கு உதவி செய்யவேண்டும், என்று யாராவது சொன்னால், அவர்களைக் கண்டித்துவந்தார். நரேந்திர நாதரையும், மற்றும் சில சிஷ்யர்களையும் பார்த்து ஒரு சமயம் கூறுகிறார்: ஜீவராசிகளிடத் தில் கருணைகாட்டுவதாம்! என்ன அகங்காரம்! ஜீவன்கள் யார்? இவனைத் தவிர்த்து வேறில்லை. பிரதியொரு ஜீவனையும் கடவுளாகக் கருதி, அதற்குப் பக்தி சிரத்தையோடு தொண்டு செய்யவேண்டும்; கருணை மேலீட்டால் தொண்டு செய்தல் என்பது கூடாது. கருணை யென்பதே, மேலானவர் கீழானவர் என்ற வேற்றுமையைக் கற்பித்து விடுகிறது. இந்த வேற்றுமை யில்லாமல், எல்லா ஜீவராசிகளையும் தானாகக் கருதி, அந்த ஜீவராசிகளே தானாக இருந்து கொண்டு அவைகளுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்பதே ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய கருத்து. சுவாமி விவேகானந்தர், பிற்காலத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய பெயரால் ஒரு திருத்தொண்டர் குழாத்தை அமைத்ததற்கு இந்தச் சீரிய உபதேசமே வித்தாயிருந்தது. உலகத்தினருடைய அறியாமையைக் கண்டு, அந்த அறியாமை காரணமாகத் துன்பப்படுகிறவர்களைக்கண்டு, எப்படிச் சிலர் அழுகிறார் களோ அப்படியே சிலர் சிரிக்கிறார்கள். சிரிப்பு என்பது அழுகையின் மறு புறந்தானே? மிதமிஞ்சிய துக்கமானது சிரிப்பாக வெளிவருகிறது. இப்படிச் சிரிக்கிற மகான்களும் பலர் இருந்திருக் கிறார்கள்.1 உலகத்தின் அறியாமையைக் கண்டு, அந்த அறியாமை காரணமாக அது துன்புறுவதைக்கண்டு வருந்துகிறவர்கள் அழு கிறார்கள்; சிந்திக்கிறவர்கள் சிரிக்கிறார்கள். இதுதான் வித்தியாசம். உலகத்தின் அறியாமையையும் துன்பத்தையும் கண்டு மகான்கள் அழுவார்களென்று சொன்னால், இவர்கள் எப்பொழுதும் அழுது கொண்டிருப்பார்கள், சிரிக்கவே மாட்டார்கள் என்பது அர்த்தமல்ல. இவர்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பார்கள்; மற்றவர் களையும் சிரிக்க வைப்பார்கள். சுருக்கமாக இவர்கள் நகைச்சுவை யின் ஊற்றுக்களமாயிருப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங்களில் இந்த நகைச்சுவை, ஒளிவிட்டு வீசுவதைப் பல இடங்களில் பார்க்கலாம். கடவுள் தன்மை படைத்த மகான்கள் லட்சியத்திற்காகவே வாழ்கிறார்கள். அந்த லட்சியத்திற்காக தோல்வியைத்துலையற்றார் கண்ணுங்கொள்கிறார்கள்; துன்பங்களை யெல்லாம் இன்பமாக அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு, நேர்மை இன்னது, அழகு இன்னது, நல்லது இன்னது என்பது சுலபமாகப் புரிந்து விடுகிறது. எது சரி, எது தவறு என்ற சந்தேகமே இவர்களுக்கு உண்டாவ தில்லை. இந்தச் சந்தேகமில்லாத காரணத்தினால், இவர்கள் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்கிறார்கள்; எந்த ஓர் அபிப்பிராயத்தையும் திடமாகச் சொல்கிறார்கள்; இப்படிச் சொல்வதற்கு மற்றவர்களை இணங்க வைக்கிறார்கள். இவர்களுடைய மனோ உறுதியின் முன்னர் மற்ற வர்கள் தலைவணங்குகிறார்கள். இவர்களுடைய எந்த ஒரு விவகாரத் திலும் தான் என்பது லவலேசமும் இருப்பதில்லை. இதனால் இவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் மற்றவர்கள் சுலபமாக ஆட்பட்டு விடுகிறார்கள். அவர்கள் இவர்களை - இந்த மகான்களை - தனி மனிதர்களாகக் காண்பதில்லை; ஏதோ ஒரு சக்தியாகவே காண்கிறார்கள். இவர்களைக் கண்ட மாத்திரத்தில் யாருக்குமே ஒருவித பயபத்தி உண்டாகிறது; இவர்களிடத்தில் தங்கள் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது. இவர்கள் அதிகார தோரணையோடு சொன்னாலும், அதில் அன்பும் இனிமையும் கலந்திருப்பதால், அதற்காக யாரும் வருந்துவதில்லை. இவர்கள், மற்றவர் களைக் கண்டித்தாலும், அதில் தன்னலம் இல்லாததினால், அதனை யாவரும் ஏற்றுக் கொள்கி றார்கள். மகான்கள் எதைச் சொன்னாலும் அது புதிதாகவே இருக் கிறது. மற்றவர்களிடமிருந்து இவர்கள் எண்ணங்களை இரவல் வாங்குவ தில்லை. தங்கள் சுய அறிவிலிருந்து, சுய உணர்ச்சி யிலிருந்து, சுய அனுபவத்திலிருந்து உண்டாகிற எண்ணங்களையே இவர்கள் வெளியிடுகிறார்கள். இவர்களுடைய அறிவு, கல்வி கேள்விகளின் விளைவாக ஏற்பட்டது அல்ல. இயற்கையிலேயே, அதாவது பிறக்கிற போதே இவர்களுக்கு அறிவு இருக்கிறது. மற்றும், தங்களுடைய லட்சியத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கையானது, இவர்களுக்கு அபார ஞானத்தையும் அனுபவத்தையும் அளித்து விடுகிறுது. இவர்கள், மற்றவர்களுடன் தர்க்கம் செய்து தர்க்கம் செய்து உண்மையைக் காண் கிறார்களில்லை; நம்பிக்கை யினாலேயே உண்மையைக் காண்கிறார்கள். பேரறிஞர்களுக்குக்கூட புலப்படாத உண்மைகள், இந்த நம்பிக்கை காரணமாக, இவர்களுக்கு எளிதிலே புலப்பட்டு விடுகின்றன. இதனால்தான் இவர்கள், தாங்கள் பிறந்த சமுதாயத்திற்கு, வாழ்கின்ற காலத்திற்கு, எதைச் செய்தால் சந்தோஷம் உண்டாகுமோ அதைச் செய்யாமல், எதைச் செய்தால் நன்மை உண்டாகுமோ அதைச் செய் கிறார்கள். நன்மையைச் செய்ய முன்வருவோர் தீமையை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும். மகான்கள் இதற்கும் தயாராக இருக்கிறார்கள். மகான்கள் புதிதாகச் சொல்வதோடு குறைவாகவும் சொல்கி றார்கள். மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய இவர்கள் அவதரிக்க வில்லை; மற்றவர்களை நல் வழிப்படுத்தவே அவதரிக்கிறார்கள். மற்றவர்களை நடத்திச்செல்ல முன் வருவோர் தாங்களும் நடக்க வேண்டுமல்லவா? உட்கார்ந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தால், மற்றவர்களை நல்வழியிலே அழைத்துச் செல்லமுடியுமா? நான் அப்படிப் பேசினேன்; இப்படிப் பேசினேன்; ஒருவரும் என் பேச்சைக் கேட்கவில்லையே என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். அங்கலாய்ப்பதில் என்ன பிரயோஜனம்? பேச்சுக்குள்ள மதிப்பு தற்காலிக மதிப்புத்தான்; செயலுக்குத்தான் நிரந்தர மதிப்பு உண்டு. மகான்கள் உபதேசகர்களாக வாழ்வதில்லை; உபதேசமாக வாழ்கிறார்கள். இவர்கள் ஞானபோதகர்கள் அல்ல; ஞானிகள். இவர்கள் செல்வத்தை வழங்கும் கொடையளிகள் அல்ல; இவர்களே செல்வம். ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஹிந்துமதம் என்றால் என்ன வென்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காணும் முயற்சியில் தமது வாழ்நாளைக் கழிக்கவில்லை. இவர் ஹிந்து மதமாகவே வாழ்ந்தார். இதில்தான் இவருடைய மகிமை யெல்லாம் தங்கி யிருக்கிறது. இவர் ஓர் உபதேசகர் அல்லர்; பிறருக்கு உபதேசிப்பதை இவர் தொழிலாகக் கொள்ளவில்லை. குருவா யிருப்பதையே தொழிலாக உடையவர்கள் அற்ப புத்தி படைத்தவர்கள் என்றும் கடவுளின் கட்டளை யில்லாமல் மற்றவர்களுக்குப் போதனை செய்வதில் அர்த்தமில்லை யென்றும் இவரே கூறியிருக்கிறார். இவர் வெறும் உபதேசகராக மட்டும் இருந்திருந்தால் இவருக்கு இவ்வளவு பெருமை ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம். நமது நாட்டில் எத்தனையோ புலவர்கள், நூலாசிரியர்கள் வாழ்ந்து வந்திருக்கி றார்கள். அவர்கள் பெயரையும் நம்மிலே பலர் அறியார். ஆனால் ஹனுமானையோ, துருவனையோ, பிரகலாதனையே, கண்ணப் பனையோ, காரைக்கா லம்மையாரை யோ அறியாதவர், அவர்களுக்குத் தலை வணங்காதவர், நமது நாட்டிலே யாரேனும் உண்டோ? ஏன்? அவர்கள் பக்தியாகவே வாழ்ந்தார்கள்; பக்தியைப்பற்றி அவர்கள் உபதேசிக்கவில்லை. இங்ஙனமே ராமாயணத்தில், லட்சுமணன் சேவையாக வாழ்ந்தான்; பரதன், எல்லாம் உன்னடிமையே, எல்லாம் உன் உடைமையே என்ற லட்சியமாக வாழ்ந்தான். மதமானது, மனிதனிடத்திலேயுள்ள தெய்வத் தன்மையைத் தூண்டிவிட வேண்டும்; அவனைச் சன்மார்க்கத்திலே செலுத்த வேண்டும்; அவனிடத்தில் சகோதரத் தன்மையை வளர்க்க வேண்டும்; சர்வ ஜீவராசி களுக்கும் அவன் இருதயத்தில் இடம் அளிக்க வேண்டும். உண்மையான ஒரு மத புருஷனுக்குப் பிற மதங்களிலே துவேஷம் இராது; பிற மதத்தினரைத் தன் சகோதரர்கள் போலக் கருதி அவர்களுடைய மத அனுஷ்டானங்களுக்கு மதிப்புக் கொடுப்பான்; எல்லா மதத்தினரும் வணங்கும் கடவுள் ஒருவர்தான், அவரை, அவரவரும் அவரவருடைய மனோ பரி பக்குவத்திற்குத் தகுந்தபடி பல பெயர்களிட்டழைக்கின்றனர், பல மாதிரியாக வழிபடுகின்றனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்வான். இந்தப் பேருண்மையைத் தான் ஹிந்து மதமானது காலத்தின் ஆரம்பத்திலிருந்து முழக்கம் செய்து வருகிறது. யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அப்படியே அவர்களுடைய தகுதிக்கு என்னை ஆக்கிக்கொள்கிறேன். மனிதர்கள் எல்லோரும் என் வழியையே பின்பற்று கிறார்கள் என்பது கீதாவாசகம்.1 உண்மையான ஒரு ஹிந்துவுக்கு, ஹிந்து வல்லாதான் ஒருவனுமே இல்லை. அவனுக்கு எல்லோரும் கடவுள் புத்திரர்கள்தான்; அதனால் தன்னுடைய சகோதரர்கள்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இப்படிப்பட்ட ஹிந்துவாகவே வாழ்ந்தார். இவர் பிற மதங்களைப் படித்து அவற்றின் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வில்லை; அந்தந்த மதமாகவே வாழ்ந்தார்; அந்தந்த மதத்தின் கடவுளைக் கண்டார். இவருக்கு அல்லா வேறு, யேசு வேறு, கிருஷ்ணன் வேறு என்ற வேற்றுமையே தோன்றவில்லை. சர்வ மதங்களின் ஐக்கியமாக இவர் வாழ்ந்தார். சிக்காகோ நகரத்தில் கூடிய சர்வமத மகாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பேச எழுந்ததும் முதன் முதலாக சகோதரிகளே! சகோதரர்களே! என்று தொடங்கினார். வேற்று நிறத்தினரும், வேற்று நிலத்தினரும், வேற்று மதத்தினருமான அங்குக் கூடியிருந்த வர்களைப் பார்த்து சகோதரிகளே! சகோதரர்களே! என்று அழைத்தாரல்லவா, அதில்தான் ஹிந்துமதத்தின் சாரம் அடங்கி யிருக்கிறது. எல்லா உயிர்களிடத்தும் ஈசன் பரந்து விளங்குகின்றான். எல்லாம் அவனுடைய குழந்தைகள், ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் அனைவரும் எப்படிச் சகோதரர்களாவார்ளோ, எப்படிச் சகோதர பாவத்துடன் வாழவேண்டுமோ அப்படியே ஈசன் குழந்தைகளாகிய மக்களனைவரும் சகோதர சகோதரிகளே. அந்தச் சகோதர பாவத் துடன்தான் உங்களைப் பார்க்கிறேன், உங்கள் முன் வந்து நிற்கிறேன், என்னை வேற்றுமனிதனாகக் கருத வேண்டாம், என் நிறம் கருப்பாயிருக்கலாம், என் உடை உங்களுக்கு விநோத மாகத் தென்படலாம், எனது தாய்ப் பாஷை வேறு, எனது தாய்நாடு வேறு, என்னுடைய நாகரிக பரம்பரை வேறு, இருந்தாலும் என்னிடத்தில் எந்தப் பரம்பொருள் குடிகொண்டிருக்கிறதோ அந்தப் பரம் பொருள்தான் உங்களிடத்திலும் குடிகொண் டிருக்கிறது, ஆதலின் இங்குக் கூடியுள்ளவர் அனைவரும் என்னுடைய சகோதர சகோதரி களே என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். இந்தச் சகோதரத் துவத்தைப் போதிக்கிற மதந்தான் ஹிந்துமதம். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார். பரம்பொருளை அடைவதற்கான வழிகள் என்னென்ன உண்டோ, ஆத்ம வளர்ச்சியில் ஒரு மனிதன் அடைய வேண்டிய நிலைகள் என்னென்ன உண்டோ அவைகளை யெல்லாம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கற்றுத் தெரிந்து கொண்டவரல்லர்; பிறகுக்குக் கற்பித்தவருமல்லர்; அனுபவத்தில் உணர்ந்தவர், ஸ்ரீ ராம கிருஷ்ணரைப் பொறுத்தமட்டில் யோகாப்பியாசம், பராபக்தி, ஈசுவர சக்தி, நிர்விகல்ப சமாதி, பிரும்ம சாட்சாத்காரம், சச்சிதானந்தம் ஆகிய இவை யெல்லாம் வெறும் வார்த்தைகளல்ல; அனுபவ உண்மைகள். இங்ஙனம் ஒவ்வொன்றையும் அனுபவித்துச் சொல்கிற காரணத் தினால்தான், ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங்களை, படித்தவர்களும் பாமரர்களும் எளிதிலே புரிந்து கொள்ள முடிகிறது; அனுஷ்டானத்திலே கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. பாமரர்களும் புரிந்து கொள்ளக்கூடிய உபமான உபமேயங்களையே இவர் கையாள்கிறார்; அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களையே உதாரணங்களாகக் காட்டி பெரிய வேதாந்த உண்மைகளை விளக்குகிறார். மகான்கள், இயற்கை யறிவு படைத்திருக்கிற காரணத்தினால் தீர்க்கதரிசிகளாயிருக்கிறார்கள். இவர்களுக்கு வருங்காலத்தில் இன்னது நடக்கப் போகிறதென்பது சுலபமாகத் தெரிகிறது. வருங்காலத்தைத் தங்கள் கண் முன்னாலேயே பார்க்கிறார்கள். யார் என்ன நினைக்கிறார்கள், யாருக்கு என்ன லபிக்கப் போகிறது என்பவைகளை நேரில் காண்பது போல் சொல்லி விடுகிறார்கள். இத்தகைய தீர்க்கதரிசிகளில் ஒருவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இதை நிரூபிப்பதற்கு இவருடைய வாழ்க்கையிலிருந்து ஓரிரண்டு உதாரணங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறோம். இவருக்கு விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று இவருடைய தாயாரும் இவருடைய மூத்த சகோதரரும் பல இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தார்கள். சரியான பெண் அகப்படவில்லையேயென்று ஒருநாள் தாயாரும் மூத்த மகனும் ஏக்கப் பட்டுத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் - அப்பொழுது கதாதரர் - அவர்களைப் பார்த்து ஏன் வீணாக அலைகிறீர்கள்? அருகிலுள்ள ஜயராம்வடி என்ற கிராமத்தில் ராமச்சந்திர முக்கர்ஜி என்ற ஒருவர் இருக்கிறார். அவர் வீட்டில் எனக்கு வாழ்க்கைப்பட வேண்டியவள் காத்துக் கொண்டிருக்கிறாள் என்றார். தாயாரும் தமையனாரும் முதலில் இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிறிது திகைத்தார்கள். பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன மாதிரி சென்று பார்த்த போது, ராமச்சந்திர முக்கர்ஜியினுடைய வீட்டில் ஸ்ரீ சாரதாமணி தேவியார் இருப்பதைக் கண்டார்கள். அவரையே பின்னர் விவாகம் செய்து வைத்தார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பல சிஷ்யர்கள் ஏற்பட்டிருந்தார்க ளல்லவா, இப்படித் தமக்குச் சிஷ்யர்கள் ஏற்படுவார்கள் என்பது இவருக்கு முன்னாடியே தெரிந்திருந்தது. இதை அடிக்கடி பிரதாபித்தும் இருக்கிறார். ஒருநாள், எனக்குச் சிஷ்யர்கள்- என்னுடைய நெருங்கிய தோழர்கள், என்னுடைய பிரதிபிம்பங்கள்- பலர் ஏற்பட்டிருப்பதாக ஒரு காட்சி புலப்பட்டது. உடனே,......நீங்க ளெல்லோரும் எங்கே? இங்கே வாருங்கள். உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டி ருக்கிறேன் என்று கதறினேன் என்று கூறுகிறார் ஓரிடத்தில், அப்பொழுது சிஷ்யர்களாக யாரும் இவரை வந்து அடையவில்லை. இங்ஙனமே, தம்மிடம் பேச வருகிறவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது, எந்த எண்ணத் தோடு, எந்த மனப்பான்மையோடு தம்மை நாடி வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டுவிடுவார். அதற்குத் தக்கபடி பேசி அவர்களை நல் வழிப்படுத்துவார். தீர்க்கதரிசிகளின் லட்சணம் இதுவே யன்றோ? ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு பரமஹம்ஸர். பரமஹம்ஸர்களுடைய லட்சணம் இன்னது என்பதை இவரே விவாதித்திருக்கிறார். இஃது இவருடைய சுய சரித்திரத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இவர் கூறுவதன் சாரமாவது: பரமஹம்ஸர்கள் ஐந்து வயதுக் குழந்தைகள் போன்றவர்கள். பார்க்கு மிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரி பூரணானந்தத்தையே பார்க்கின்றனர். இவர்களுக்கு அந்நிய ரென்றும் உறவினர் என்றும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்கள், தங்கள் நடை உடை பாவனைகளில் சிந்தை செலுத்தாதவர்களா யிருக்கிறர்கள். ......áy சமயங்களில் பரமஹம்ஸர்கள் பைத்தியக் காரர்கள்போல் நடந்து கொள்கிறார்கள். நான்கூட இப்படிப் பைத்தியக்காரனாக நடந்து கொண்டிருக்கிறேன். இங்கு தட்சிணேசு வரத்தில் காளிகோயில் தாபிதமான சில நாட்கள் கழித்து ஒரு நாள் ஒரு பைத்தியக்காரன் வந்தான். உண்மையில் அவன் ஒரு ஞானி. அவன், ஒரு கையில் மாமரத்துக் குச்சிகள் சிலவற்றையும், இன்னொரு கையில் மாஞ்செடி ஒன்றையும் வைத்துக் கொண்டிருந்தான். காலிலே கிழிந்த செருப்பு போட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எந்தவிதமான மட்டு மரியாதை களும் தெரியவில்லை. கங்கையிலே குளித்தான். குளித்த பிறகு அனுஷ்டானமெதுவும் அவன் செய்ய வில்லை. தான் வைத்திருந்த ஒரு சிறு மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து ஏதோ எடுத்துத் தின்றான். பின்னர் காளி கோயிலுக்கு வந்து, கோயிலே அதிர்ந்து போகும் படியாகச் சில பாடல்களைப் பாடினான். எல்லோருக்கும் சாப்பாடு போடுகிற இடத்தில் அவனை யாரும் அனுமதிக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை அவன் பொருட்படுத்தவு மில்லை. பக்கத்தில் எச்சில் தொட்டி இருந்தது. அதில் தனக்கு ஏதேனும் ஆகாரம் கிடைக்குமா என்று தேடிப் gர்த்தான்.Tl ehŒகளும்இருªjன.நாய்fS« அவனைப் பொருட்படுத்தவில்லை; அவனும் அந்த நாய்களைப் பொருட்படுத்த வில்லை. இதப்பார்த்த ஹல்தாரி - ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உறவினர்; சிஷ்யர் - ஓடி வந்து நீயார்? Ú xU óuz PhÅah? என்று அவனைப் பார்த்துக் கேட்டார். இதற்குஅவன்உஷ்;ஆம்;நான்ஒரு பூரணஞானிதான் என்றான்.......eh§fbsšnyhUம்அவdப்பார்க்fப்போனோ«. அவன் ஞானமொழிகளைப் பேசினான்; ஆனால் பைத்தியக்காரன் போல் நடந்துகொண்டான். போகிறபோது சொன்னான்:- இந்தக்குட்டைத் தண்ணீருக்கும் கங்கை ஜலத்திற்கும் வித்தியாசமில்லையென்ற மனோ நிலை உங்களுக்கு எப்பொழுது ஏற்படுகிறதோ mப்பொழுதுதான் cங்களுக்குப் óரணஞானம் tந்ததாக mர்த்தம். ïப்படிச் bசால்லிக் கொண்டே mவன் nபாய்விட்டான். gukA«[Ãiy இன்னது என்று இப்பொழுது நமக்கு நன்கு தெரிகிறதல்லவா? 1. Water, Damn, Thank you. 1. Lao-Tse கி.மு. 604-531. 1. Heracleitus. 1. கிரேக்க தேசத்திலே இத்தகைய சிரிக்கிற ஞானி ஒருவன் இருந்திருக்கிறான். டெமாக்ரீட்ட (Democritus) என்பது இவன் பெயர். கி.மு. 460-370. 1. அத: 4-11. 4. பல கோணங்களில் அச்சம் இலர், பாவம் இலர், கேடும் இலர், அடியார் நிச்சம் உறுநோயும் இலர்........... திருப்பாதம் பணிவாரே. - சம்பந்தர் மகான்கள் பல பட்டைகளையுடைய வைரம் போன்றவர்கள். எந்தப் பட்டையிலிருந்து பார்த்தாலும் அந்த வைரம் பிரகாசிப்பதைப்போல், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மகான்களுடைய மகத்துவம் நமக்குப் புலனாகின்றது. ஏனென்றால் இவர்களுடைய வாழ்க்கை பூரண வாழ்க்கை. வாழ்க்கையின் ஓர் அமிசத்தைமட்டும் தொட்டுவிட்டு இவர்கள் மறைந்து போவ தில்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கையின் எந்த அமிசத்தை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அந்த அமிசம் நிறைவுடையதாகவே இருக்கிறது. எல்லாக் கால நிலைகளுக்கும் பொருந்துகிறவர்களா யிருப்பதைப்போல் இவர்கள் எல்லோருடைய மனோ நிலைகளுக்கும் பொருந்துகிறவர்களா யிருக்கிறார்கள். பக்தனுக்குப் பக்தனாகவும் ஞானிக்கு ஞானியாகவும் இப்படி அவரவருக்கும் அவரவராகவே காட்சி யளிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எல்லோ ருடைய வாழ்க்கையும் கலந்திருக்கிறது; இவர்களுடைய உப தேசங்களில் எல்லோருக்கும் பயன்படும்படியான மணிகள் இருக்கின்றன. இதனால் இவர்கள் எக்காலத்திற்கும் வழிகாட்டிகளா யிருப்பதைப்போல் எல்லோருக்கும் வழிகாட்டிகளா யிருக்கிறார்கள். இங்ஙனம் எக்காலத் திற்கும் எல்லோருக்கும் சொந்தமாயிருப்பத னால், இவர்களுடைய சொல்லும் செயலும் சில சமங்களில் முரண்பாடுடையனவாகத் தென்படு கின்றன. ஆனால் இந்த முரண்பாட்டில்தான் இவர்களுடைய மகத்துவம் இருக்கிறது. கடவுளின் லட்சணம் பல முரண்பாடுகளுடையது என்பது ஓர் அறிஞருடைய வாக்கு. அப்படியானால் கடவுளின் அமிசமா யிருக்கப்பட்ட மகான்களும் முரண்பாடுடையவர்களாக இருப்பது சகஜந்தானே? மகான்களுடைய வாழ்க்கை ஒரே அடிப்படையின் மீதுதான் அமைந்திருக்கிறது. இதனால் எந்த மகானையும் எந்த மகானுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது சுலப சாத்தியமாகிறது. புத்தர், ஸாக்ரட்டீ, கன்பூஷிய, யேசுநாதர், பன்னிரண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சங்கரர், ராமானுஜர், சைதன்யர், துக்காராம், காந்தி ஆகிய இவர்களில், இவர்கள்போல் நமது நாட்டிலும் மற்ற நாடுகளிலும் உதித்த இன்னும் பலரில், யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு யாருடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஸ்ரீ ராம கிருஷ்ணருடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஆச்சரியகரமான ஒற்றுமைகள் பலவற்றைக் காண்பீர்கள். ஆனால் இந்த ஒப்பிட்டுப் பார்க்கிற வேலையில், வாசகர்களே, இப்பொழுது நீங்கள் இறங்க வேண்டாம். அது தனியாகச் செய்ய வேண்டிய வேலை. இப்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சந்நிதானத்திற்கு வாருங்கள். இவர் எந்தெந்த விதமாகத் தோற்றமளிக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படிப் பார்க்கிறபோது, மற்ற மகான்களுடைய தரிசனமும் உங்களுக்கு ஏகதேசமாகக் கிடைக்கும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் எப்படி எல்லா மதங்களுக்கும் உரியவராக இருக்கிறாரோ அப்படியே எல்லா ஆசிரமங்களுக்கும் ஏற்றவராக இருக்கிறார். இவர் ஒரு பிரும்மசாரியா? ஆம்; கிருகதரா? ஆம்; வானப் பிரதரா? ஆம்; சந்நியாசியா? ஆம் எல்லாக்கேள்விகளுக்கும் ஆம் என்ற பதில்தான் இவருடைய வாழ்க்கையிலிருந்து கிடைக் கிறது. அதாவது இவர் பிரும்மசாரிகளுக்கு பிரும்மசாரியாகவும், கிருகதர்களுக்கு கிருகத ராகவும், வானப் பிரதர்களுக்கு வானப் பிரதராகவும், சந்நியாசிகளுக்கு சந்நியாசியாகவும் இருக்கிறார்; அவரவர்களுக்கும் அவரவர் நிலையிலிருந்து வழிகாட்டியாக இருக்கிறார் என்பதே இதன் தாத்பரியம். இங்ஙனம் எல்லா ஆசிரமங்களுக்கும் பொருந்துகிற விதமாக இவருடைய வாழ்க்கை அமைந்திருந்த போதிலும், மொத்தமாகப் பார்க்கிறபோது, இவருடைய வாழ்க்கை முற்றுந் துறந்த முனிவர் வாழ்க்கையே யாகும். இவருடைய துறவு பரிபூரணமானது; எவ்வித கலப்பும் இல்லாதது. ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு முன்னால் எத்தனையோ பேர் உலகத்திற்காக உலகத்தினைத் துறந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் மகான்கள்தான்; ஆட்சேபமில்லை. அனால் அவர் களுடைய துறவுக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய துறவுக்கும் வித்தி யாசம் இருக்கிறது. உதாரணமாக, புத்தர் இல்லறத்தி லிருந்துவிட்டு பிறகு துறவறத்தை மேற்கொண்டார்; சங்கரர் இல்லறத்திற்குள் பிரவேசியாமலே துறவறத்திற்குள் நுழைந்து விட்டார்; திருநீல கண்ட நாயனார், தாம் எடுத்துக்கொண்ட ஒரு பிரதிக்ஞைக்காக இல்லறத்திலிருந்து விலகி யிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரோ இல்லறத்திலிருந்து கொண்டே துறவியா யிருந்தார். இவருடைய துறவு, நெருப்பின் மத்தியிலே குளிர்ச்சியா யிருக்கிற மாதிரி; சூரியன் முன்னர் பனிமலை கரையாமலிருக்கிற மாதிரி. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதாமணி தேவியாருடன் எத்தகைய தொடர்புடையவரா யிருந்தாரென்பதைப் பற்றிச் சொல்வதற்குமுன், இவர் உள்ளத்தில் ஆசையென்னும் பாசி படராமலே இருந்ததைப் பற்றிச் சில உதாரணங்களைக் காட்ட விரும்புகிறோம். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு பிடி பொன்னும் ஒரு பிடி மண்ணும் ஒன்றுதான். ஒரு நாள் நான் பஞ்சவடிக் கருகில் கங்கைக்கரையின் மீது உட்கார்ந்து, ஒரு கையில் ஒரு ரூபாயும் மற்றொரு கையில் களி மண்ணையும் வைத்துக் கொண்டு இந்த ரூபாயும் மண்தான், இந்த மண்ணும் ரூபாய்தான் என்று சொல்லி இரண்டையும் கங்கையில் வீசி எறிந்தேன் என்று இவரே கூறியிருக்கிறார். செம்பு, பித்தளை முதலிய உலோகங்களினாலாய பாத்திரங்களைத் தொட்டாலே இவர் உடல் பூராவும் வலிக்கும். இந்தமாதிரி பல சமயங்களில் துன்பப் பட்டிருக்கிறார். உலோகங்களி னாலாய பாத்திரங்க ளென்ன, எந்த ஒரு பொருளையும் தமது என்று இவர் வைத்துக் கொள்ளாதவரா யிருந்தார். அப்படி யாரேனும் நிர்ப்பந்தப்படுத்தி இவரிடத்தில் ஒரு பொருளைக் கொடுப்பார் களானால் இவர் படும் அவதையைச் சொல்லிமுடியாது. இவருடைய அனுபவங் களில் சிலவற்றை இவர் வாக்கு மூலமாகவே கேளுங்கள்:- நான் ஏதேனும் ஒரு நாணயத்தைத் தொட்டேனாகில் என் கை முறுக்கிக் கொண்டு விடுகிறது; என் மூச்சு நின்றுவிடுகிறது. இன்னும், நான் உடுத்தி யிருக்கும் வேஷ்டியில் ஒரு சிறிய முடிச்சைக் கட்டுவேனாகில் என்னால் மூச்சு விடமுடியாமல் போய் விடுகிறது. அந்த முடிச்சை அவிழ்க்காத வரையில் என் மூச்சு நின்றே போய் விடுகிறது....... ஒரு நாள் நான் சம்பு மல்லிக்கின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பொழுது எனக்கு வயிற்றுத் தொந்திரவு அதிகமாயிருந்தது. அவ்வப் பொழுது கொஞ்சம் அபினியை உட்கொண்டு வாருங்கள், வயிற்றுத் தொந்திரவு நீங்கிவிடுமென்று சொல்லி அவர் கொஞ்சம் அபினியை என் வேஷ்டியில் வைத்து முடிச்சுப் போட்டு அனுப்பினார். சிறிது தூரம் வந்தேன். மேலே செல்ல எனக்கு வழி தெரியவில்லை. தட்டுத்தடுமாறிக் கொண் டிருந்தேன். முடிச்சை அவிழ்த்து அபினியை எறிந்த பிறகுதான் என்னால் மேற்கொண்டு செல்ல முடிந்தது........ ஒரு நாள் காமர்ப் புகூரில் சில மாம்பழங்களைப் பொறுக்கி யெடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். ஆனால் என்னால் வழி நடக்க முடியவில்லை. ஒரே இடத்திலேயே நின்றுவிட்டேன். கொண்டுவந்த மாம்பழங்களை என்னிடமிருந்து அப்புறப் படுத்திக்கொண்ட பிறகுதான் என்னால் மேற்கொண்டு செல்ல முடிந்தது. மார்வாரி வகுப்பைச் சேர்ந்த லட்சுமி நாராயணர் என்பவர் ஒரு வேதாந்தி. அடிக்கடி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்து போவார். ஒரு நாள் இவருடைய படுக்கையின் மீதிருந்த விரிப்பு அழுக்கடைந் திருந்ததைப் பார்த்துவிட்டு அந்த மார்வாரி கனவான் உங்கள் பெயரால் பதினாயிரம் ரூபாய் பாங்கியில் போட்டு வைக்கிறேன். அதிலிருந்து கிடைக்கும் வட்டியை உங்கள் செலவுக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்றார். இதைக்கேட்ட ஸ்ரீ ராம கிருஷ்ணருக்குத் தடிகொண்டு அடித்தமாதிரி இருந்தது; தன் வசமற்றவரானார். இவைகளினால் என்ன தெரிகிறதென்றால் ஸ்ரீ ராம கிருஷ்ணருக்கு உடைமை உணர்ச்சி என்பது லவலேசமும் இல்லாம லிருந்தது. ஆம்; நான் என்பது அற்றுவிட்ட இடத்தில் எனது எனக்கு என்பது எப்படி இருக்கும்? ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உத்தமமான கணவர். ஒரு புருஷன் தன் திரீயினிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு இவர் வழி காட்டியாயிருந்தார். ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்கு அவ்வப்பொழுது, ஒரு குடும்பத்தை எப்படி ஒழுங்காக நடத்துவது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து வந்தார். அவருக்கு - ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்கு - பரிபூரண உரிமை அளித்திருந்தார். இதனால் அந்த அம்மையாரும் தமது கடமைகளை உணர்ந்து செய்து வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சிஷ்யர் களிடம் வேடிக்கையாகச் சொல்வார்:- நான் விவாகம் செய்துகொண்டு என்ன பிரயோஜனம் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தத் திடமில்லாத தேகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு எனக்கு மனைவி இல்லாதிருந்தால் என்கதி என்னவாயிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். என் ஆகார விஷயங்களில் யார் இவ்வளவு சிரத்தை யோடு செய்யமுடியும்? ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாமணி தேவியாருக்குக் கணவராக இருந்ததோடு குருவாகவும் இருந்தார். அப்படியே ஸ்ரீ சாரதாமணி தேவியார், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு மனைவியாக இருந்ததோடு தாயாகவும் இருந்தார். இருவருக்குமிடையே இருந்த உறவு மகா அற்புதமானது. உலக சரித்திரத்தில் இந்த மாதிரியான தாம்பத்ய உறவை வேறெங்கும் காணமுடியாது? இருவருடைய உறவும் பால் உணர்ச்சியற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஸ்ரீ சாரதாமணி தேவியை காளி மாதாவாகக் கண்டாரே தவிர சாதாரண திரீயாகக் காணவில்லை; அப்படிப்பட்ட கருத்து இவர் மனத்தில் ஒரு கணமும் உதித்ததில்லை. ஒரு நாள் இரவு ஸ்ரீ சாரதாமணி தேவியார் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய திருவடிகளை வருடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அம்மையார் தமது பர்த்தாவை நோக்கி தாங்கள் என்னை எவ்வாறு கருதுகிறீர்கள்? என்று கேட்டார். என்னை ஈன்றவள் ஜெகன்மாதா. அவளே இப்பொழுது இந்த வடிவம் தாங்கி எனக்குச் சிசுருஷை செய்து கொண்டிருக்கிறாள் என்று உடனே கூறினார். என்ன உயர்ந்த நிலை! இப்படிக்கூறியது மட்டுமல்ல, ஸ்ரீ சாரதா தேவியை, காளிமா தேவியாகக் கருதி, தந்திர சாதிரங்களில் கூறியுள்ளபடி அவருக்குப் பலதடவைகளில் பூஜையும் செய் திருக்கிறார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாமணி தேவியைத் தாயாராகக் கருதியது போல் ஸ்ரீ சாரதா தேவியாரும் ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தாயாராகக் கருதினார். இது தான் வேடிக்கை. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது உடலைக் கழற்றி எறிந்தபோது ஸ்ரீ சாரதா தேவியார் தாயே, தாயே, என்னை விட்டுவிட்டு எங்கே சென்று விட்டீர்? என்று கதறியது இப்பொழுதும் நமது உள்ளத்தை உருக்குகிறது. இருவரும் உத்தமமான காதலர்கள். ஆனால் இவர்களுடைய காதல் உடலைப் பற்றியதன்று; ஆத்மாவைப் பற்றியது. பிளேட்டோ கூறிய ஆத்மீகக் காதல் இருக்கிறதே, அது வெறும் கற்பனையல்ல, அனுபவ சாத்திய மானது என்பதை ஸ்ரீ ராமகிருஷ்ண - சாரதாமணி தாம்பத்ய வாழ்க்கை நிரூபிக்கிறது. உலகத்திலே தாய்மார்களால் மேன்மையடைந்த புத்திரர்கள் உண்டு. ஆனால் மனைவிமார்களால் அமர நிலை யடைந்தவர் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒருவர் என்று சொன்னால் அஃது அவருடைய பெருமைக்கு எந்த விதத்திலும் இழுக்காகாது. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய தெய்வீக வாழ்வு சோபித மடைவதற்கு ஸ்ரீ சாரதா தேவியார் ஒரு தூண்டா விளக்குப் போலிருந்தார் என்று சுருக்கமாகச் சொல்வதே பொருத்தமா யிருக்கும். இங்ஙனம் ஸ்ரீ சாரதாமணி தேவியாருடன் ஆத்மீகக் காதல் வாழ்க்கை நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாதாரண ரீதியில் குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்குச் சிறந்த வழி காட்டியாயிருக்கிறார். இல்லற வாழ்க்கையை இவர் அலட்சியப் படுத்திப் பேசவில்லை. அதற்கு மாறாக அதைச் சிறப்பித்துப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். கடவுள் வாழ்க்கைக்குக் குடும்ப வாழ்க்கை முரண்பட்ட தல்ல என்பது இவருடைய கருத்து. குடும்பப் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்புவித்துவிட்டு, தான் கடவுளை நாடிச் செல்வதாகக் கூறுகிறவன் ஒரு கோழை, கடமையைச் செய்யத் தவறியவன் என்பது இவருடைய அபிப்பிராயம். தன் குடும்பப் பொறுப்பை மறந்து விட்டு அவர்களை மாமியார் வீட்டுப் பாதுகாப்பில் விட்டுச் செல்வது தன்மதிப்பற்ற செயலாகும் என்று இவர் ஓரிடத்தில் கூறியிருக்கிறார். கிருகதர்கள், கோட்டைக் குள்ளிருந்து சண்டை போடும் வீரர்கள்; சந்நியாசிகள், திறந்த மைதானத்திலிருந்து கொண்டு சண்டை போடும் வீரர்கள் என்று இவர் இல்லறத்தையும் துறவறத்தையும் இணைத்துச் சொல்வது, இரண்டின் இன்றியமையாத் தன்மையை எடுத்துக் காட்டுவது, எவ்வளவு ஆச்சரியமா யிருக்கிறது? வீரர் யார் என்பதற்கு இவர் கூறும் லட்சணமே வேறு. சித்தத்தைச் சிவன்பாலிருத்தி விட்டு, உலகத்தில் தான் செய்ய வேண்டிய கடமைகளை எவன் ஒழுங்காகச் செய்து கொண்டு வருகிறானோ அவன்தான் நிஜமான வீரன். தலையிலே ஒரு பெரிய சுமையை வைத்துக் கொண்டு ஒரு கலியாண ஊர்வலத்தைப் பார்ப்பது ஒரு பலசாலியினால் தானே முடியும்? என்று இவர் கேட்கிறார். தட்சிணேசுவரத்தில் இவர் கடவுட் பித்தராய் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமது உறவினர்களிடத்தில் அதிக வாஞ்சை காட்டி வந்தார்; அவர்களுடைய சுகதுக்கங்களில் கலந்து கொண்டார். ஒரு சந்நியாசிக்கு இது பொருந்துமா என்று சிலர் கேட்கலாம். ஆனால் பூரணத் துறவு பூண்டவர்களுடைய இருதயத் திலே உறவினர் என்றும் அந்நியர் என்றும் வேற்றுமையே உதிப்ப தில்லை. அவர்கள், எல்லோரிடத்திலும் கடவுளைக் காண்கி றார்கள்; எல்லோரிடத்திலும் ஒரே விதமான அன்பு செலுத்துகி றார்கள். அவர்கள் உறவினர்களை அந்நியர்களாகக் கருதுகிறார்கள்; அப்படியே அந்நியர்களை உறவினர்களாகக் கருதுகிறார்கள். புத்தர் பிரானும் சைதன்ய சுவாமிகளும் ஞானோதயம் பெற்ற பிறகு, தங்கள் உற்றார் உறவினரிடத்தில் அன்பு பாராட்டி வந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது தாயாரிடத்தில் பரம பக்தியுடை யவர். அந்த அம்மையார்-சந்திரமணிதேவி என்பது அந்த அம்மாளுடைய பெயர் என்பது நேயர்களுக்கு ஞாபக மிருக்கலாம்.-தட்சிணேசுவரத்திற்கு வந்து கங்காதீர வாசம் செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து அவருடைய அந்திம காலம் வரை அவருக்கு வேண்டிய பணிவிடைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தவறாது செய்து வந்தார். அவருடைய சிறிய சிறிய தேவைகளையும் கவனித்து ஆவன செய்வார். தாயன்பானது கடவுள் அன்புக்குச் சமமானது என்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்குணர்ந்தவர். உலகத்தைத் துறந்த மகான்கள் யாருமே தங்கள் தாயைத் துறக்கவில்லை. சைதன்யர் துறவு பூண்டு விட்டதைக் கேட்ட அவருடைய தாயார் மிகவும் வருத்தமடைந் திருந்தார். அதை யறிந்த சைதன்யர் அவரிடம் சென்று அம்மா, வருத்தப்படாதீர்கள்; நான் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் என்று ஆறுதல் கூறினார். முற்றத் துறந்த பட்டினத்தடிகளும் சங்கரரும் தங்கள் தங்கள் தாய்மாரிடத்தில் பரம பக்தியுடனேயே நடந்து வந்தனர். யானு மிட்ட தீ மூள்க மூள்கவே என்ற பட்டினத்தடிகளின் வாக்கு இச் சந்தர்ப்பத்தில் நமது நினைவுக்கு வருகிறதல்லவா? இவர்களைப் போலவே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் தமது தாய்க்கு மகனாக இருந்து, தாயாரிடத்தில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதற்குச் சிறந்த வழி காட்டியா யிருந்தார். இல்லற வாழ்க்கை இனிது நடைபெற வேண்டுமானால் பெண்ணும் பொன்னும் அவசியமென்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்கு உணர்ந்திருந்தார். உலக வாழ்க்கையில் பணம் அவசிய மானதுதான்; ஆனால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிராதே. வருவதைக்கொண்டு திருப்தி யடைவதுதான் நல்லது என்றும், பணமிருந்தால் ஒருவன் உண்ணவும், உடுக்கவும், வீடு கட்டிக் கொண்டு வசிக்கவும், கடவுளைத் தொழவும், அடியார்களுக்குத் தொண்டு செய்யவும், ஏழைகளை ஆதரிக்கவும் முடிகிறது. இந்த மாதிரியான வழிகளில்தான் பணத்தை உபயோகிக்க வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கோ, தேக சுகங்களுக்காகவோ, சமுதாயத்தில் ஓர் அந்ததைப் பெறவோ பணம் இருக்கவில்லை என்றும் இவர் சொல்லியிருக்கிறார். பணத்தின் உபயோகத்தைப்பற்றி இதைவிட அழகாகவும் சுருக்கமாகவும் எந்தப் பொருளாதார சாதிரியாவது கூற முடியுமா? இதிலிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய அனுபவ ஞானம் நன்கு புலப்படும். சில மார்வாரி பக்தர்கள் தம்மைத் தரிசிக்க வந்தபோது அவர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம் செய்கையில் வியாபாரத்தில் லாப நஷ்டங்கள் வரலாம்; ஆனால் எந்த விதத் திலும் வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியது இங்குச் சிந்திக்கத் தக்கது. ஹெராக்ளீட்ட என்ற கிரேக்க ஞானி1 அதிகமான புதகப் படிப்பினால் அறிவு உண்டாகாது என்று கூறினான். இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் பல தடவைகளில் வலியுறுத்திச் சொல்லி யிருக்கிறார். வெறும் புதகப் படிப்பினால் மனிதன் வளர்ச்சி யடையமாட்டான். அதனால் அவனுக்கு நன்மை உண்டாகாது என்பது இவர் கருத்து. இந்தக் கருத்தை இவர், தமது கல்கத்தா வாசத்தின் போதே வெளியிட்டிருக்கிறார்.2 பாரமார்த்தி கத்தைப் பின்னணியாகக் கொள்ளாத புலமையை இவர் வெறுத்தார். கடவுளை அறிவதுதான் அறிவு; மற்றவையெல்லாம் அறிவாகாது, அறியாமையின் பாற்படும் என்று இவர் கூறியிருப்பது, இந்திய பரம்பரையான பண்பாட்டைச் சாரமாக எடுத்துச் சொல்வது போலிருக்கிறது. கேசவ சந்திர சேனர் ஓரிடத்தில் கூறுகிறார்:- இந்த நாட்டை-இந்தியாவை - புனருத்தாரணம் செய்யவேண்டுமானால், உங்களுடைய எல்லாச் சீர் திருத்த இயக்கங்களுக்கும் மதத்தை அடிப்படையாகக் கொள்ளுங்கள். ...............இந்தியாவுக்கு நீங்கள் ரெயில், தந்தி முதலிய லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான சௌகரியங்களை ஏற்படுத்திக் கொடுப்ப தற்கு முன்னர் அதற்கு உயிரைக் கொடுங்கள். உண்மையான ஆத்மீக வாழ்க்கையைக் கொடுங்கள்; வெறும் புதகப் படிப்பினால் நன்மை யுண்டாகாம லிருப்பது மட்டுமில்லை, அதனால் தீமையும் உண்டாகிறது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் கருதுகிறார். அதிகமான மதக் கிரந்தங்களைப் படித்து விடுவதனால் நன்மைக்குப் பதில் அதிகமான தீமையே உண்டாகிறது; மதக்கிரந்தங்களின் சாரத்தைத் தெரிந்து கொண் டிருந்தலே போதுமானது என்பது இவருடைய வாக்கு. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உண்மையான குரு. கடவுளையும் மனிதனையும் ஒன்று சேர்த்து வைக்கிறவர்தான் உண்மையான குரு என்ற தம்முடைய வாசகத்திற்குத் தாமே இலக்கியமாயிருந்து கொண்டு, தம்மை நாடிவந்த சிஷ்யர்களை கடவுள் நிலைக்கு அழைத்துக் கொண்டு போனார். அப்படி அழைத்துக் கொண்டு போகிறபோது, தம்மிஷ்டத்திற்கு, தம்முடைய பாதையில் அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க வில்லை; வரவேண்டுமென்று அவர்களைக் கட்டாயப்படுத்தவுமில்லை. அவரவருடைய வாழ்க்கை நிலைக்கும் மனோ நிலைக்கும் தகுந்தபடி அவர்களை வருமாறு செய்தார். தமது சிஷ்யர்கள் கடவுள் வாழ்க்கையை வாழவேண்டு மென்பதுதான் இவருடைய நோக்கமாயிருந்ததே தவிர, அவர்கள் எப்படி வாழவேண்டு மென்பது இவருடைய நோக்கமாயிருக்க வில்லை. இவருடைய சிஷ்யர்களிலே வயது முதிர்ந்தவர்களும் இளைஞர்களு மிருந்தார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களை இவர் செய்யவில்லை; ஒரே வழியைக் கோலிக் காட்டவில்லை; யாரையும் அவரவருடைய வழியிலிருந்து விலகி வருமாறு கூறவில்லை. வயதானவர்களை இல்லறத்திலேயே இருக்கு மாறு கூறினார்; இளைஞர்களைத் துறவறம் பூண்டு தொண்டு செய்யுமாறு கூறினார். இல்லறத்திலே ஈடுபட்டிருக்கிற தமது சிஷ்யர்களைப் பார்த்துச் சொல்வார்:- உலகத்தைத் துறப்பதனால் நீங்கள் அடையக்கூடிய லாபமென்ன? குடும்ப வாழ்க்கை ஒரு கோட்டை மாதிரி. மற்றும் ஞானமடைந் தவன் முக்தன். நான் பந்தத்திற்கு உட்பட்டிருக்கிறேன் என்று பைத்தியக்காரன்தான் சொல்வான். மனந்தானே எல்லாவற்றிற்கும் காரணம். அது பந்தமற்றிருக்குமானால் நீயும் பந்தமற்றிருப்பாய். நான் காட்டிலே இருந்தாலும் சரி நாட்டிலே இருந்தாலும் சரி எப்பொழுதும் பந்தத்திற்குட்பட்டிருப்பதில்லை. நான் கடவுளின் குழந்தை. ஆதலின் அரசர்களுக்கு அரசன். என்னை யார் பந்தத்திற்குட்படுத்த முடியும்? ........நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறபோது, உங்கள் ஒரு கை வேலை செய்து கொண் டிருக்கட்டும்; மற்றொரு கை கடவுளின் பாதங்களைப் பிடித்துக் கொண்டிருக்கட்டும் வேலை முடிந்த பிறகு சும்மாயிருக்கிற சமயத்தில் அந்தப் பரந்தாமனின் இரண்டு பாத கமலங்களையும் உங்கள் இரு கைகளாலும் பற்றி உங்கள் இருதயத்திலே வைத்துக்கொள்ளுங்கள். லௌகிக எண்ணங்களினால் கறைப்படாத மனமுடைய தம்மை நாடிவந்த இளைஞர்களுக்கு இவர் காட்டிய வழி வேறு. இவர்களைத் தமது பிற்கால பாரமார்த்திக சந்ததிகளாகக் கருதி னார்; அதற்குத் தகுந்தாற்போல் இவர்களைத் தயார் படுத்தினார். அஞ்ஞான இருட்டில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பாமரர் களுக்கு ஞான வெளிச்சம் காட்ட வேண்டிய இவர்களைப் பலவித பரிசோதனைகளுக்குட்படுத்தி நெருப்பிலே காய்ச்சப் பெற்ற தங்கம் போலாக்கினார். இவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தை நாடு கின்றவர்களல்லர்; மற்றவர்களுடைய முன்னேற்றத்தை நாடு கின்றவர். எனவே இவர்கள், தங்களை அழித்துக்கொண்டு மற்றவர் களுக்காக வாழ வேண்டும். கடின மார்க்கந்தான். ஆனால் இந்தியா வின் வருங்கால நல்வாழ்வுக்காக இத்தகைய ஒரு தொண்டர் கூட்டம் அவசியமானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் நன்கு உணர்ந்தார். இந்த விஷயத்திலும் இவர் ஒரு சிறந்த தீர்க்கதரிசியாயிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சிஷ்யர்களிடத்தில் ஒரு தாயைப் போல் நடந்து கொண்டார். அவர்களுடைய அன்றாட வாழ்க்கை யில் பெரிதும் சிரத்தை காட்டுவார். அவர்களுடைய குறை நிறை களை விசாரித்துத் தம்மாலியன்ற பரிகாரத்தைச் செய்வார். அவர்களுடைய சுக துக்கங் களிலே கலந்து கொள்வார். சிஷ்யர்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய முன்னிலையில் இருக்கிற போது பரம சந்தோஷத்தை யடைந்தவர்களா யிருப்பார்கள். இங்ஙனம் பலருக்கு இவர் குரு வாயிருந்த போதிலும் இவர் தம்மைக் குரு என்று ஒரு பொழுதும் சொல்லிக் கொண்டது கிடையாது. தம்மை யாராவது குரு அல்லது எஜமானர் அல்லது தந்தை என்று அழைத்தால் தமது மனம் பெரிதும் புண்படுவதாக இவர் அடிக்கடி சொல்வ துண்டு. சச்சிதானந்தமாயிருக்கிற பரம் பொருள் ஒன்றுதான் உண்மை யான குரு என்பது இவர் கருத்து. எல்லோரும் குருமார்களாக இருக்க வேண்டு மென்கிறார்கள். ஆனால் யாரும் சிஷ்யர்களாக இருக்க விரும்புவதில்லை என்கிறார் ஓரிடத்தில். ஸ்ரீ ராமகிருஷ்ணர் உண்மையான ஒரு சிஷ்யராகவும் இருந்தார். பைரவி பிராம்மணி, ஜடதாரி, தோதாபுரி ஆகிய இவர்களிடத்தில், ஒரு சிறுபையன் எப்படி தன் பள்ளிக்கூட ஆசிரியரிடத்தில் நடந்து கொள்வானோ அப்படியே நடந்து கொண்டார். தோதாபுரியி னுடைய பரிகாசம், பைரவி பிராம்மணியின் கோபம் எல்லாவற்றை யும் இவர் சகித்துக் கொண்டார். அவர்களிடத்தில் இவர் எவ்வித குறையையும் காண்பதில்லை. பைரவி பிராம்மணி இவரோடு சில வருஷகாலம் தங்கி யிருந்த காலத்தில், அவரைத் நமது தாயாகக் கருதி அவரிடத்தில் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டு வந்த தோடல்லாமல், ஸ்ரீ சாரதாமணி தேவியையும், தமது மாமியாராகக் கருதி அவரிடத்தில் நடந்து கொள்ளுமாறு கூறினார். மேற்படி பைரவி பிராம்மணி, ஜடதாரி, தோதாபுரி ஆகியோர் இவரிடத்திலிருந்து தெரிந்து கொண்டவை பல; அவர்களுடைய மனப்போக்கே மாறிவிட்ட தென்றும் சொல்லலாம். ஆனால் அவர் களிடத்தில் தாம் பயின்றதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் முக்கியமாகக் கருதினார்; அவர்களை குருமார்களாக என்றென்றும் போற்றி வந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த பக்தர். ஆனால் இவருடைய பக்தியானது, கடவுளை வாயாரப்புகழ்ந்து பாடுவதோடும் அவர் நிகழ்த்திய அற்புதச் செயல்களை நினைந்து மனமுருகுவதோடும் நிற்கவில்லை. யாருடைய புகழுக்காகவும் கடவுள் காத்துக் கொண் டிருக்கவில்லை; மானிடர்கள் வியந்து பாராட்டுவார்க ளென்று எதிர்பார்த்து அவர் எந்த அற்புதச் செயலையும் செய்யவில்லை. அவருடைய கடமையை அவர் செய்து கொண் டிருக்கிறார். அவருடைய குழந்தைகளாகிய நாம் அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டாமா? பிள்ளைகள், தங்கள் தாயாரிடம் சென்று, தாயே, நீ ரூபவதி, குணவதி, சுசீலை என்று தோத்திரம் செய்து கொண்டிருந்தால் அந்தத் தாயார் திருப்தி யடைந்து விடுவாளா? அப்படி தோத்திரம் செய்து கொண் டிருப்பது அவளுக்குச் சிசுருஷை செய்ததாகுமா? தன்னுடைய சந்ததிகள் தன்னை என்றும் புகழ்ந்து பாடிக்கொண் டிருப்பார்கள் என்பதை எதிர்பார்த்து ஒரு தாயார் தன் சந்ததிகளை போஷித்துக் காப்பாற்றுவதில்லை. அப்படி எதிர்பார்ப்பது தாய்மையின் தன்மை யல்ல. அவளுக்குத் துக்கம் ஏற்படுகிற காலத்தில் அந்தத் துக்கத்தைத் துடைக்க வேண்டும்; அவளுடைய சுகத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பிள்ளைகளுடைய கடமை இதுவே யாகும். அதுபோல், சர்வ ஜீவராசிகளுக்கும் தாயா யிருக்கப்பட்ட கடவுளைப் புகழ்ந்து பாடுவதோடு திருப்தியடை யாமல் அந்தக் கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டும். அதுதான் கடவுள் பிள்ளைகளாகிய மானிடர் களின் கடமை. கடவுள் தொண்டாவது என்ன? கடவுளின் அமிசமா யிருக்கிற எல்லா ஜீவராசிகளுக்கும் தொண்டு செய்வதுதான் கடவுள் தொண்டு. இந்தத் தொண்டு செய்கிறவன்தான் பக்தன்; கடவுளுக் குகந்தவன்; கடவுள் நெறியில் செல்கிறவன். இதுதான் ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய கோட்பாடு. இதையே விவேகானந்தருக்கும் வலியுறுத்திக் கூறினார். சமாதி நிலையிலேயே இருக்கத் தாம் விரும்புவதாகவும் அதுவே தமக்கு ஆனந்தமா யிருக்கிறதென்றும் விவேகானந்தர் கூறியபோது, அது கூடாது; அது சுய நலத்தை நாடுவதாகும். ஜனங்களுக்கு ஆத்மீக உணர்ச்சியை ஊட்டுவாயாக; ஏழைகளுடைய துயரத்தைப் போக்குவாயாக என்று கட்டளை யிட்டார் அவருடைய குருநாதர். இந்தக் கட்டளையை நிறைவேற்றி வைக்கு முகத்தான், தமது குருநாதருடைய பெயரால் ஒரு தொண்டர் தாபனத்தை நிறுவினார் விவேகானந்தர் அதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்.1 இந்த தாபனம், எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் எல்லோருக்கும் சேவை செய்கிற ஒரு தாபனமாக இது காலை உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் இட்ட கட்டளை, தம்மை எப்படிப் பிணித்திருக்கிற தென்பதைப்பற்றி விவேகானந்தர், தமது சகபாடிகளிடம் ஒரு சமயம் பின்வருமாறு கூறினார்:- ஓ, நான் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. நான் ராமகிருஷ்ணருடைய அடிமை. தாம் செய்யவேண்டிய வேலையை எனக்கு விட்டுவைத்துப் போயிருக்கிறார். அதை நான்முடிக்காத வரை எனக்கு அவர் ஓய்வுகொடுக்கமாட்டார்............எனக்கு ஓய்வு கிடையாது. ராமகிருஷ்ணர், காளி என்றுஎதஅழைத்தாரேhஅஃது-அந்தச்சக்தி-அவர் இந்தப் பூவுலக விட்டுச் செல்வதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முந்தி, எனது உடலையும் ஆத்மாவையும் தன்னுடையதாக்கிக் கொண்டு விட்டது. அதுவே என்னை வேலை செய், வேலை செய் என்று கட்டாயப்படுத்துகிறது; என் சொந்த விஷயங்களில் என் கவனம் சென்று விடாதபடி தடுக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது தெய்வ பக்தியை, ஏழை மக்க ளுடைய துயரத்தைப் போக்குவதன் மூலமாக வெளிப்படுத்தி யிருக்கிறார். அநேக சந்தர்ப்பங்களில். ராணி ராசாமணி அம்மை யாருடைய மருகரான மதுர நாதருடன் இவர் க்ஷேத்திர யாத்திர செய்துவந்தாரல்லவா,1 அப்பொழுது யாத்திரையை முடித்துக் கொண்டு கல்கத்தாவுக்குத் திரும்புகையில், வழியில் தேவகார் என்ற இடத்தில் ஒருநாள் தங்கும்படி நேரிட்டது. அதுகாலை அந்தப் பிரதேசத்தில் கடுமையான பஞ்சம். ஜனங்கள் நாட்கணக்கில் உணவின்றி வாடினர்; எலும்புக் கூடுகளாயினர்; உடுக்கக் கந்தையு மில்லாமல் கஷ்டப்பட்டனர். இந்த நிலையிலிருந்த ஜனங்களை ஸ்ரீ ராமகிருஷ்ணர் பார்த்துவிட்டார். இவருடைய அருள் நெஞ்சம் உருகியது. உரக்க அழுதுவிட்டார். அவர்கள் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இவர்களுக்கு உணவும் உடையும் உடனே கிடைக்குமாறு செய்யுங்கள். இல்லா விட்டால் இவர் களோடு நானும் பட்டினி கிடந்து சாவேன் என்றார் மதுரநாதரிடம். மதுரநாதரால் மறுக்கமுடியுமா? சிறந்த குருபக்த ரல்லவா? உடனே எல்லோருக்கும் உணவு உடை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குத் திருப்தி உண்டாயிற்று. அதற்குப் பிறகுதான் எல்லோரும் கல்கத்தா வந்து சேர்ந்தார்கள். இந்த யாத்திரையினால் மதுரநாதருக்கு ஏற்பட்ட செலவு சுமார் எண்பதினாயிரம் ரூபாய் என்பர். இன்னொரு சமயம் மதுரநாதர் கிதி வசூலுக்காகத் தமது ஜமீனுக்குச் சென்றிருந்தார். கூட ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்பொழுது குடிஜனங்களுக்கு மிகவும் சிரமமான காலம். ஏனென்றால் இரண்டு வருஷமாகத் தொடர்ந்தாற்போல் சரியான விளைவு இல்லை. கிதி பாக்கியைக் கொடுக்கமுடியாமல் கஷ்டப்பட்டார்கள். தங்களுடைய அன்றாட ஜீவனத்திற்கு வழி தெரியாமல் தவித்தார்கள். பார்த்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவர்களுடைய திதியை. தம்மை ஆட்கொண் டிருக்கும் காளிமாதேவி, வறுமை வடிவெடுத்துத் தம்மைச் சுற்றி உலவிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். மதுரநாதரைப் பார்த்து, இவர்களிடமா கிதி பாக்கியை வசூல் செய்யப் போகிறீர்கள்? அப்படிச் செய்யக்கூடாது. இவர் களுக்குத் தேவையான உணவு வகைகள் துடைக்குமாறு செய்யுங்கள்; nபாதிய gணcதவியும் bசய்யுங்கள். ஜf‹ kதாதான் இந்த Mதிgதிகளுக் கெல்லாம் எஜமானி; அவளுடைய பிரதிநிதி தான் நீங்கள் vன்பது உங்களுக்கு ஞபகமிருக்கட்டும். ஆதலின் அவளுடைய பணத்தை அவளுடைய குடியானவர்களுக்குச் செலவழிக்க நீங்கள் சிறிது கூடத் தயங்கக் கூடாது என்று கூறினார். மதுர நாதர் அப்படியே செய்தார். ஆகவே படமாடுங் கோயிலுக்குள் சென்று பாசுரம் பாடிக் கண்ணீர் வடிப்பதோடு தன் பக்தியைக் கரை கட்டிக்கொண்டு விடுகிறவன் உண்மை யான பக்தனாகமாட்டான், யார் நடமாடுங் கோயில்களாகிய ஜனங்களிடம் சென்று ஆறாய்ப் பெருகும் அவர்களுடைய துக்கக் கண்ணீரைத் துடைக்கிறானோ, யார் வறுமையி னாலும் அறியாமையினாலும் வளைந்து போயிருக்கிற அவர்க ளுடைய வாழ்க்கையை நேர் படுத்தி விடுகிறானோ, அவனே பக்தனா வான் என்பதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சிறந்த உதாரணபுருஷராய் இருக்கிறார் என்பது பெறப்படுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் உத்தமமான வீரர். இப்படிச் சொல்வது சிலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். ஆனால், யார் அன்பு நிறைந்தவர் களாயிருக்கிறார்களோ, யாரிடத்தில் உடைமை உணர்ச்சி என்பது லவலேசமும் இல்லையோ அவர்கள் அஞ்சுவது யாதொன்று மில்லை. அவர்கள் நமனையும் அஞ்சார்; யாருக்கும் பணியார். ஆம்; கடவுளைத் தவிர வேறு யாருக்கும் அவர்களுடைய தலை வணங்கு வதில்லை. உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன், இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் என்கிறார் பெரியாழ்வார். அவர்களுடைய உள்ளம், மற்றவர்களுடைய துயரத்தைக் கண்டு எளிதிலே நெகிழக் கூடியதாயிருந்தாலும், தீமைகளை எதிர்ப்பதில், தீமைகளைக் களைவதில், அசாதாரண மான உறுதியுடைய தாயிருக்கும். அவர்கள், தங்களையும் மற்றவர்களையும் வேறு வேறாகப் பிரித்துப் பார்ப்ப தில்லை யாதலினால், தங்களிடத்திலேயுள்ள குறைநிறை களை எளிதிலே உணர்ந்து கொள்வது போல் மற்றவர்களிடத்திலேயுள்ள குறை நிறைகளையும் சுலபமாக அறிந்து, அவர்களைச் சீர்திருத்த முற்படு கிறார்கள். ஏனென்றால் தங்களைப்போல் மற்றவர்களும் தீமைகளினின்று விலகி நல்லவர்களாயிருக்க வேண்டுமென்பதே அவர்கள் நோக்கம். இந்த நோக்கமுடையவர்களாயிருப்பதனால் அவர்களை எல்லோரும் போற்று கிறார்கள்; எல்லோரும் அவர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்; அதாவது அவர்களுடைய அஞ்சாமையைக் கண்டு அஞ்சுகிறார்கள், எந்த இடத்தில் கோழைத்தனம், துவேஷம், அச்சம் ஆகிய இவைகளின் ஆட்சி நடைபெறுகிறதோ அந்த இடத்திற்குக் கடவுள் வருவதில்லை என்பது ஒரு வாக்கு. பரம்பொருள் பயமற்றது. இதனால் அந்தப் பரம்பொருளை அடைந்தவர்களுக்கும் பயம் உண்டாவதில்லை. பாலூட்டி வளர்த்த தாயாயினும் சரி, போற்றிப் பராமரித்து வந்த பிறராயினும் சரி, அவர்கள் தெய்வநெறியிலிருந்து மயிரிழை பிசகி நடந்தாலும் உடனே அவர்களைக் கண்டித்து நல்வழிப்படுத்துகிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நன்றிக்குரியவ ராகிய ராணி ராசமணி அம்மையார் ஒருசமயம் தட்சிணேசுவரம் போந்து காளிதேவியை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்ரீ ராமகிருஷ்ணர், அம்பாளைப் போற்றி உருக்கமாகச் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ராசமணி அம்மையார் நடுவில் கொஞ்சம் கவனக்குறைவா யிருந்தார். தமது ஜமீன் சம்பந்தமான ஒரு வழக்கில் அவர் மனம் சென்றது. இதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் அறிந்து கொண்டுவிட்டார். உடனே அவருடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அறை கொடுத்தார். அக்கம் பக்கத்தி லிருந்தவர்கள் அதிர்ச்சி யடைந்து போனார்கள். ஆனால் அந்த அம்மையார் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராயிருந்தது போலவே பெரிய மனமும் படைத்த வராயிருந்தார். தமது குற்றத்தை உணர்ந்தார். ஒரு சிறுமியைப்போல் வெட்கித் தலைகுனிந்தார். ஜகன் மாதாதான் தமது பிசகை உணர்த்த தண்டனையளித்ததாகக் கருதினார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் அந்த அம்மாள் செலுத்தி வந்த பக்தி இன்னும் அதிகமாயிற்று. கோயிற் பரிவாரத்தினரும் இவரிடத்தில் - ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் - முன்னைக் காட்டிலும் அதிகமான மரியாதை காட்டத் தொடங்கினர். இந்தப் பயமற்ற தன்மையுடையவராயிருந்ததனால் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது மனதில் தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன் தெரிவித்து விடுவார். ஒரு சமயம், சில மார்வாரி பக்தர்கள், இவருக்குச் சில பிரசாதங்களைக் கொண்டுவந்து கொடுத்தனர். அவை பொய் சொல்லிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று காரணஞ் சொல்லி, அவைகளை ஏற்க மறுத்துவிட்டார். மற்றவர்களுடைய அபிப்பிராயத்தைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையானாலும் சரி, மற்றவர்களைப் பற்றித் தமது அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டி யிருந்தாலும் சரி, அதை, அவ்வப்பொழுது இனிய மொழிகளால் சொல்லி விடுவார். கேசவ சந்திரேசேனர், மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், சுவாமி தயானந்த சரவதி ஆகிய இப்படிப்பட்ட பெரியார்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண ரிடத்தில் பெரிதும் ஈடுபட்டவர்கள். ஆனால் அவர்களுடைய கொள்கைகளை ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஏற்றுக்கொள்வதில்லை. இதை அழகாக எடுத்துச் சொல்லி விடுவார். ஒரு நண்பரிடம் தேவேந்திர நாத் தாகூரைப்பற்றி கூறுகிறார்:- ஒரு சமயம் நான் மதுரநாதருடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அவருக்குப் பல சிறிய குழந்தைகள் இருப்பதை அப்பொழுது பார்த்தேன். குடும்ப வைத்தியர், மருந்துகள் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எட்டுக் குழந்தைகளுக்குப் பிறகு, ஒரு மனிதன், கடவுளைப்பற்றி நினைக்காவிட்டால், வேறு யார்தான் நினைக்கப் போகின்றார்? இவ்வளவு ஐசுவரியத்தை அனுபவித்த பிறகு தேவேந்திரர், கடவுளைப் பற்றி நினைக்கா விட்டால் அவருக்கு அது வெட்க மல்லவோ? ஆனால் குடும்பத் திலே இருந்துகொண்டு பக்தி செலுத்துகிறவர்களுக்கும், எல்லா வற்றையும் துறந்துவிட்டு பக்தி செலுத்துகிறவர்களுக்கும் வித்தி யாசம் உண்டு. முன்னவர், மலர்மீது அமர்ந்து மதுவுண்ணும் தேனீ மாதிரி. இந்தத் தேனீ, மலரிலிருக்கும் தேனைத் தவிர வேறோன்றை யும் சாப்பிடாது. பின்னவரோ ஈ மாதிரி. ஈ யானது புண்ணின் மீதும் உட்காருகிறது; பட்சணத்தின் மீதும் உட்காருகிறது. அதைப்போல் குடும்பத்திலே இருக்கிற பக்தன், ஒரு சமயம் கடவுள் நினைவாக இருக்கிறான்; அடுத்த சமயம் உலக நினைவு அவனுக்கு வந்து விடுகிறது. உண்மையைக் கடைப்பிடிக்கிறவர்கள், சொன்னபடி செய்வதில் மிகுந்த சிரத்தை காட்டுவார்கள்; பிறரிடமிருந்தும் இந்தச் சிரத்தையை எதிர்பார்ப்பார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், சிறிய விஷயங்களில் கூட இந்தச் சிரத்தையைக் காட்டினார். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிட்டால் அதைச் செய்தே முடிப்பார். சொல்வதும் செய்வதும் ஒன்றாயிருக்கவேண்டு மென்பது இவர் கருத்து. உண்மை யென்பதும் இதுதானே? கூறுகிறார்:- ஒருவன் உண்மையைக் கடைப் பிடிக்காவிட்டால் அவன் எல்லாவற்றையும் இழந்து விடுகிறான். தோட்டத்திற்குப் போகிறேன் என்று அகமாத்தாக நான் சொல்லி விட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப் போவதற்கு அவசியமில்லா விட்டால்கூட நான் போயே ஆகவேண்டும். அப்படிப் போகா விட்டால் நான் உண்மையினின்று பிறழ்ந்தவனாவேன். ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய உண்மை நெறி எவ்வளவு கடினமானது! தன்னம்பிக்கை யுடையவர்கள், கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருப்பார்கள். இங்ஙனமே தன்னம்பிக்கையானது, கடவுளின் உண்மையிலே நம்பிக்கை கொள்ளும்படி செய்கிறது. கடவுளைக் காட்டுவீர்களா? என்று விவேகானந்தர் கேட்டபோது காட்டுவேன் என்றும், கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்றபோது ஆம்; பார்த்திருக்கிறேன்; இப்பொழுதும் பார்க்கிறேன்; உன்னை இங்கே எப்படிப் பார்க்கிறேனோ அதைவிட அதிகமாகப் பார்க்கிறேன் என்றும் கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இந்த உறுதியான வாசகந்தான், கடவுளின் உண்மையிலே கொண்டிருந்த இந்தத் திட நம்பிக்கைதான், விவேகானந்தரை இவரிடத்தில் ஈடுபடுத்தியது. ஸ்ரீராமகிருஷ்ணர், தாய்மொழிப் பற்று நிரம்ப உடையவர். தம் எதிரில் தமக்குத் தெரியாத ஆங்கிலத்தில் யாராவது பேசுவார்க ளானால் அதை நாசூக்காகக் கண்டித்து விடுவார். ஒரு சமயம், வங்க இலக்கியத்திற்குப் புதியதொரு ஜீவகளையை ஏற்படுத்திக் கொடுத்த வரும், அரசாங்க உத்தியோகத்திலிருந்தவருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஸ்ரீ ராமகிருஷ்ணரைத் தரிசிக்க முதன் முதலாக வந்தார். அவருடன் கூட வந்திருந்த நண்பர், இவர்தான் பங்கிம் என்று பங்கிம் சந்திரரை அறிமுகப் படுத்தி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர், பங்கிம்! உங்களைக் கூனலாக்கிவிட்டது, வளையச் செய்துவிட்டது எது? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். பங்கிம் என்றால் வங்க பாஷையில் கோணல் அல்லது வளைவு என்று அர்த்தம். பூட் தான் இந்தக் கோணலுக்குக் காரணம். நமது வெள்ளை எஜமானர் களுடைய பூட் உதைகள் என் உடம்பைக் கூனலாக்கி விட்டன என்றார் பங்கிம்சந்திரர். பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ணபகவான் ஏன் சியாமள வர்ணமாயிருக்கிறார் என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லி முடித்ததும், இவர் சொன்னதைப் பற்றி பங்கிம் சந்திரரும் அவருடைய நண்பரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கி றீர்களா? என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். நீங்கள் இதுகாறும் சொன்னதைப் பற்றி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள் அவர்கள். ஸ்ரீராமகிருஷ்ணர் சிரித்துக் கொண்டே பின்வரும் கதையைக் கூறினார்:- ஒரு சமயம் ஓர் அம்பட்டன் ஒரு பெரிய மனிதருக்கு க்ஷவரம் செய்து கொண்டிருந்தான். அப்படிச் செய்து கொண்டிருக்கிற போது, ஏதோ தவறுதலாக, அந்தப் பெரிய மனிதருடைய முகத்திலே காயம் பட்டுவிட்டது. பெரிய மனிதர், கோபமேலிட்டவராய் டாம் என்றார். அந்த அம்பட்டனுக்கோ இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டான். மேற்கொண்டு க்ஷவரம் செய்யவில்லை. இப்பொழுது டாம் என்று சொன்னீர்களே, அதனுடைய அர்த்தம் என்ன? என்று கேட்டான். அந்தப் பெரிய மனிதர் வீணாகப் பேசாதே. அதற்கு அர்த்தமொன்றுமில்லை. கொஞ்சம் ஜாக்கிரதையாக க்ஷவரம் செய், அவ்வளவுதான் என்றார். அம்பட்டன் விடுகிற பெயர் வழியா யில்லை. டாம் என்ற வார்த்தைக்கு நல்ல அர்த்த மாயிருந்தால், நான் டாம், எங்கப்பா டாம், எங்கள் முன்னோர்களெல்லோரும் டாம்கள். ஆனால் அந்த வார்த்தைக்குக் கெட்ட அர்த்தமாயிருந்தால் நீங்கள் டாம், உங்களப்பா டாம், உங்கள் முன்னோர்களெல் லோரும் டாம், டாம், டாம் என்றான் அவன், ஒரு பாஷையைத் தெரியாதவர் முன்னிலையில் அந்தப் பாஷையில் பேசக் கூடா தென்றும், அப்படிப் பேசுவது மரியாதைக் குறைவு என்றும், நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக இந்தக் கதையைச் சொல்லிக் காட்டினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஸ்ரீ ராமகிருஷ்ணர், தாய் மொழிப் பற்றுடையவரா யிருந்ததைப் போல் தாய் நாட்டுப் பற்றுடைய வராகவும் இருந்தார். இவர் அரசியலைப் பற்றி ஒன்றும் பேசவில்லையென்பது வாதவம். ஆனால் லட்சியம் வாய்ந்த ஓர் அரசியலுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய முக்கியமான அமிசங்கள் யாவும் இவருடைய உபதேசங்களில் அடங்கியிருக்கின்றன என்று திடமாகக் கூறலாம். கடவுள் தூதர்கள் எப்பொழுதும் மனிதர்களாகவே இருக்கி றார்கள்; அவர்கள் செய்கிற உபதேசங்களும் அரசியல் தன்மை வாய்ந்ததாகவே இருக்கின்றன என்பது ஒரு வாசகம். சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையும் வாக்குகளும் இந்த வாசகத்திற்கு நல்ல உதாரணங்களா யிருக்கின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணர், தமது சூழ்நிலையை நன்கு அறிந்தவர்; நமது நாட்டின் நிலைமையும் நன்கு உணர்ந்தவர். இந்தியா, அந்நிய ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதையும் அதனால் ஏற்பட்டிருக்கிற விளைவுகளையும் பற்றி எவ்வளவு அழகாகக் கூறுகிறார் கேளுங்கள்:- வேதங்களிலே சொல்லப்பட்டிருக்கிற சடங்குகளை இப்பொழுது நாம் அனுஷ்டிப்பது மிகவும் கடினம். மற்றும் இப்பொழுது ஜனங்கள் அடிமைகளுடைய வாழ்க்கையை நடத்து கிறார்கள். தொடர்ந்தாற்போல் சுமார் பன்னிரண்டு வருஷகாலம் மற்றவர்களிடம் வேலை செய்கிறவர்கள் அடிமைகளாகிவிடு கிறார்கள். யாரிடத்தில் வேலை செய்கிறார்களோ அவர்களுடைய சுபாவங்களெல்லாம் இவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றன. இவர்கள், தங்கள் எஜமானர்களின் கீழ் வேலை செய்து கொண்டிருக்கிற போது, அந்த எஜமானர்களுடைய ரஜோகுணத்தையும், தமோ குணத்தையும், பலாத்கார உணர்ச்சியையும், ஆடம்பரப் பிரியத்தை யும், இவை போன்ற மற்றத் தன்மைகளையும் அடைந்து விடுகி றார்கள். இவர்கள், தங்கள் எஜமானர்களுக்கு வேலை செய்வதோடு மட்டுமில்லை; உத்தியோகம் முடிந்தபிறகு உபகாரச் சம்பளமும் பெறுகிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணர், குழந்தைகளோடு குழந்தையாயிருந்து விளையாடுவார்; இளைஞர்களோடு இளைஞராயிருந்து அவர் களுடைய தர்க்க வாதங்களுக்கெல்லாம் சாவதானமாகப் பதிலளிப்பார்; ஞானி களோடு ஞானியாயிருந்து மௌன சம்பாஷைனை செய்வார்; பக்தர்களோடு பக்தராயிருந்து பரம்பொருளின் புகழைப் பாடுவார். இவர், எந்த நிலைக்கும் தகுதியுடையவர்; எந்தக் கோணத்திற்கும் பொருந்து கிறவர்; எல்லோருக்கும் உரியவர்; எக் காலத்திலும் இருக்கிறவர். இவர், அனுபவ அறிவுக்கு எடுத்துக் காட்டு; ஆத்ம ஞானத்திற்கு ஒளி; மகான்; தீர்க்கதரிசி. 1. 42ஆம் பக்கம் பார்க்க. 2. 28ஆம் பக்கம் பார்க்க. 1. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் தாபிதமானது 1-5-1897. 1. 34ஆம் பாக்கம் பார்க்க. 5. அளித்த நன்கொடை என்னுடைய சர்வத்தையும் இன்று உனக்குக் கொடுத்து விட்டேன். இப்பொழுது ஒன்றுமில்லாத ஓர் ஏழைதான் நான். இந்தச் சக்தியைக் கொண்டு நீ உலகத்திற்கு மகத்தான நன்மையைச் செய்வாயாக! .இந்த வேலை நிறைவேறாத வரையில் நீ திரும்பி வராமலிருப்பாயாக! - பரமஹம்ஸர் ஸ்ரீராமகிருஷ்ணர் அனைத்தையும் துறந்தவர். ஆனால் மகத்தான தொரு நன்கொடையை அளித்திருக்கிறார். என்ன ஆச்சரியம்! ஆனால் என்ன முரண்பாடு! மற்றவர்களுக்காக எல்லா வற்றையும் அளித்துவிட்டு தாம் ஒன்றுமில்லாதவராதல் உலகத்திலே சகஜம். இப்படிப்பட்ட மகான்களைப் பற்றிப் படித்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். ஆனால் ஒன்றுமே இல்லாதவர், எல்லாவற்றை யும் அளித்தல் எங்ஙனம் சாத்தியம்? ஸ்ரீராமகிருஷ்ணர் விஷயத்தில் இது சாத்தியமாகவே இருந்திருக்கிறது. தம்மையே மற்றவர்களுக் காக ஒப்புக்கொடுத்து விட்டவர் பலருண்டு உலகத்திலே. தம்மைக் காட்டிலும் மேலான ஒன்றைத் தாமே சிருஷ்டித்து, அதை மற்றவர் களுக்காக ஒப்புக் கொடுத்து விட்டு, அப்படி ஒப்புக்கொடுத்து விட்டதனால் மேன்மையடைந்தவர் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் ஸ்ரீ ராம கிருஷ்ணர் ஒருவர். இவர் அளித்த நன்கொடைதான் சுவாமி விவேகானந்தர். இந்திய தேசத்தின் சரித்திரத்தில், ஹிந்து மதத்தின் சரித்திரத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஒரு நிரந்தரமான தானம் ஏற்பட்டி ருக்கிறது. அவருடைய மகிமையை இன்று பலரும் அறிந்து கொண் டிருக்கின்றனர் என்று சொன்னால் அதற்கு சுவாமி விவேகானந்தர் தான் காரணம். இங்ஙனமே இந்தியாவின் பெருமையை, ஹிந்து தர்மத்தின் மேன்மையை சுவாமி விவேகானந்தர், உலகிற்கு அறிமுகப் படுத்தி வைத்தாரென்று சொன்னால், இந்திய தேசீய வாழ்க்கையில் ஒரு புதிய ஜீவசக்தியைப் புகுத்தினாரென்று சொன்னால், அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர்தான் காரணம். ஸ்ரீ ராம கிருஷ்ணர் இல்லா விட்டால் சுவாமி விவேகானந்தர் இல்லை; சுவாமி விவேகானந்தர் இல்லாவிட்டால் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் இல்லை. உலகத்திலே அவதரித்த மகான்களிற் பலர், தங்களுடைய பிற்காலத்தில், தங்களுடைய சிஷ்ய கோடிகளால் விபரீதமாக வியாக்கியானம் செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள். இது விஷயத்தில் அதிருஷ்டம் வாய்ந்த மகான்கள் ஒருசிலரேயென்று துணிந்து கூறலாம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த ஒருசிலரில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேச மணிகளை விளக்கிக் கொண்டிருப்ப தோடு விவேகானந்தர் திருப்தியடைய வில்லை; அவைகளைச் செயலில் கொண்டுவந்தார்; அநேகருடைய வாழ்க்கையில் கொண்டு புகுத்தினார்; ஊற்றாகத் தோன்றியதை ஆறாகப் பெருக்கினார்; அந்தப் பெருக்கை அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் பக்குவமாகப் பாய்ச்சினார்; ஆத்மீக வறட்சியடைந் திருந்த மேனாட்டுக்கு இந்தியாவின் ஆத்ம சக்தியைப் புகட்டினார்; லௌகிக சித்திகளில் வறட்சியடைந்திருந்த இந்தியாவுக்கு மேனாட்டின் விஞ்ஞான முன்னேற்றத்தை எடுத்துக் காட்டினார்; தமது குருநாதனுடைய புகழைப் பாடுமுகத்தான் இந்தியாவின் பண்பாட்டை உலகத்திற்கு எடுத்துக்கூறினார். சுருக்கமாக மேனாட்டாருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த இந்தியாவைப் பற்றிய அறியாமை இருளை விளக்கிய சூரியன் விவேகானந்தர். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இருந்த தொடர்பை சொற்களினால் சொல்லிக்காட்ட முடியாது. மன ஒருமையை வார்த்தைகளுக்குள்ளே சிறைப்படுத்த முடியுமா? தாய் தந்தையருக்கும் மக்களுக்கும் இடையே இருக்கிற அன்பு, தம்பதிகளிடையே நிலவும் காதல், சகோதர வாஞ்சை, ஆண்டான் அடிமை விசுவாசம், நவில்தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும் இன்பம் தரு நட்பு, இவை யெல்லாம் ஒன்று சேர்ந்தால் என்னவாகிறதோ அது தான் ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் தொடர்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்தமாதிரியான குருசிஷ்ய சம்பந்தத்தை உலக சரித்திரத்தில் ஏகதேச மாகத்தான் பார்க்கிறோம். ராமபிரானுக்கும் ஹனுமானுக்கும், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும், புத்தருக்கும் ஆனந்தருக்கும், ஸாக்ரட்டீஸுக்கும் பிளேட்டோவுக்கும் எத்தகைய தொடர்பு இருந்ததோ அத்தகைய தொடர்பே ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இருந்த தென்று கூறலாம். சாதாரணமாக குருமார்களை நாடித்தான் சிஷ்யர்கள் செல்வது வழக்கம். ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் விஷயத்தில் சிஷ்யனை நாடி குரு செல்கின்ற ஆச்சரியத்தைக் காண்கிறோம். தமக்குப் பின்னால் தமது உபதேச பொக்கிஷத்தை, ஆத்மஞான அனுபவக் களஞ்சியத்தை முறை யாகக் காப்பாற்றி உலகிற்கு வழங்கக்கூடிய ஒருவர் தேவையென்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணர் உணர்ந்தார். இதற்குத் தகுதியானவர் நரேந்திரர்தான் - இதுதான் சுவாமி விவேகானந்தருடைய பூர்வாசிரமப் பெயர் - என்பதை, அவரை முதன் முதலாகப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டார். தீர்க்கதரிசியல்லவா? இதனால் ஆரம்பத்திலிருந்தே அவரிடத்தில் தனியன்பு செலுத்தினார். முதல் சந்திப்பிலேயே நீண்ட காலமாகப் பரிச்சயமானவர் போலவே பழகத் தொடங்கினார். மற்றச் சிஷ்யர் களிடத்தில் விவேகானந்தரைப் புகழ்ந்து பேசுவார்; அவரை ஒரு நித்திய சித்தர் என்பார். நரேந்திரரைப் பாருங்கள். அவருக்கு யாரும் லட்சிய மில்லை... தமக்குத் தெரிந்ததை யெல்லாம் என்னிடத்தில் கூட அவர் சொல்வதில்லை. மற்றவர்களிடத்தில் அவருடைய மேதையைப் பற்றிப் புகழ்ந்து பேசுவேனோ என்ற பயம் அவருக்கு. அவர் அஞ்ஞானத் தினின்றும், மாயையினின்றும் விடுபட்டவர். அவருக்கு பந்தமென்பதே இல்லை. அவர் ஒரு மகாத்மா. அவரிடத்தில் அநேக நல்ல குணங்கள் இருக்கின்றன. அவர் சிறந்த சங்கீத நிபுணர்; பேரறிஞர். மற்றும் அவர் தமது ஆசாபாசங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். தாம் விவாகமே செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறுகிறார் இப்படியெல்லாம் நரேந்திரரைப் புகழ்ந்து பேசுவார். இன்னும் ஓரிடத்தில் சொல்கிறார்:- நரேந்திரர் எப்பொழு தாவது இங்கே - தட்சிணேசுவரத்திற்கு - வந்தால், அறையில் எத்தனைபேர் இருந் தாலும் அவரிடத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பேன். மற்றவர் களிடத்திலும் பேசுங்கள் என்பார் அவர். பிறகுதான் மற்றவர்களிடத்திலும் பேசுவேன். அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்கு அதிகம் ஏற்பட்டுவிட்டது. அவருக்காக, அவர் வரவில்லையே யென்பதற்காக, அழுதிருக்கிறேன். தமது குருநாதர் தம்மிடத்தில் எத்தகைய அன்பு காட்டினார் என்பதை நரேந்திரர் உடல் புளகித்து உள்ளமெல்லா உருகக் கூறுவதைக் கேளுங்கள்:- என்னுடைய தகப்பனார் இறந்துபோன பிறகு எனது தாயாரும் சகோதரர்களும் பட்டினியால் வருந்தி னார்கள். குருநாதர், குஹா என்பவரை ஒரு நாள் சந்தித்து நரேந்திர ருடைய தந்தையார் இறந்து விட்டார். அவருடைய குடும்பம் நிரம்பப் கஷ்ட தசையிலே இருக்கிறது. அவருக்கு இப்பொழுது நண்பர்கள் பண உதவி செய்தால் நல்லது என்று கூறினார். குஹா என்பவர் சென்றவுடன், குருநாதரை நான் கடிந்து கொண்டேன். ‘இவைகளையெல்லாம் அவரிடத்தில் போய்ச் சொல்வானேன்? என்று கேட்டேன். குருநாதர் அழுது விட்டார். உனக்காக வீட்டுக்கு வீடு பிச்சையெடுப்பேன் என்றார். அவர் தமது அன்பினால் எங்களை அடக்கியாண்டார் நான் தட்சிணேசுவரத்திற்கு மூன்றாவது தடவ சென்றபோது,குருநாதர் சமாதியிலாழ்ந்துவிட்டார். என்னைக் கடவுள் போல் நினைத்துப் பலவிதமாக தோத்திரம் செய்ய ஆரம்பித்து விட்டார். என்னிடம் கூறினார்,- ஓ நாராயணா, எனக்காக இந்த உடம்பெடுத் திருக்கிறாய் என்றார்... அவர் நோயாயிருந்த போது, கையலம்பிக் கொள்ள நான் தண்ணீர்வார்த்தால் கூடாது’ என்பார்... அவர் என் பொருட்டு ஜகன் மாதாவிடம்எத்தனை தடவை பிரார்த்தனை செய்திருக்கிறார்!... என் மனத்தில் எப்பொழுதாவது கெட்ட எண்ணம் உதித்தால் அது குருநாதருக்கு உடனே தெரிந்து விடும். சில சமயங்களில் நான் கெட்டவர்களுடைய சகவாசத்தில் ஈடுபட்டுவிடுவேன். அப்பொழு தெல்லாம் குருநாதர் என் கையிலிருந்து எவ்வித ஆகாரத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவருடைய கை ஆகாரத்தை எடுக்கும்; ஆனால் வாயண்டை செல்லாது. நீ இன்னும் தயாராகவில்லை போலிருக்கிறது என்பார் என்னிடம். ஸ்ரீ ராமகிருஷ்ணர், நரேந்திரரை, குழந்தையாகக் கருதிக் கொஞ்சுவார் ஒரு சமயம்; பரம்பொருளின் வடிவமாகக் கருதிப் போற்றுவார் இன்னொரு சமயம். ஒரு நாள், பிரபல நாடகாசிரியரான கிரீசந்திரகோஷின் வேண்டுகோளுக்கிணங்கஅவருடையவீட்டுக்கு,ஸ்ரீராமகிருஷ்ணர்,தமதுசிஷ்யர்கள்சகிதம்சென்றிருந் jர். vல்லோரும் ஓரிடத்âš அமர்ந்தhர்கள். பல விஷயங்களைப் பற்றித் தர்க்க வாதங்கள் நடைபெற்றன. அப்பொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணர் ஓரிடத்திலும் நரேந்திரர் அவருக்குச் சிறிது எட்டினாற் போலவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஸ்ரீராமகிருஷ்ணர், மெது மெதுவாக நரேந்திரர் அருகே நகர்ந்து வந்து உட்கார்ந்தார். அவருடைய உடம்பை மெதுவாகத் தடவிக் கொடுத்தார்; தாடையைத் தொட்டுக் கொண்டே ஹரி ஓம், ஹரி ஓம், ஹரி ஓம் என்றார். இப்படிச் சொல்லிக்கொண்டே வெளியுலக நினைவை இழந்துவிட்டார். அவருடைய கை, நரேந்திரருடைய பாதத்தைத் தொட்டுக் கொண் டிருந்தது; இந்த நிலையிலும், ஒரு கையினால் நரேந்திரருடைய உடம்பைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவரிடத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நரேந்திரரைப் பார்த்து, கூப்பிய கையராய் ஒரு பாட்டு; தயை செய்து ஒரு பாட்டு; பிறகு நான் சரியாகிவிடுவேன் என்றார். நரேந்திரரும் பாடினார். பாட்டைக் கேட்டுக் கொண்டே ஸ்ரீ ராமகிருஷ்ணர் சமாதியி லாழ்ந்து விட்டார். இங்ஙனம் நரேந்திரரிடமிருந்து பெருக்கெடுத்து ஓடிவந்த இசை வெள்ளத்திலே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மை இழந்து விட்டிருக்கிறார் பல சமயங்களில். நரேந்திரருக்கு விவாகம் நிச்சயிக்கப் பட்டிருப்பதாக ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு யாரோ சொல்லிவிட்டார்கள். அவரால் இதைச் சகிக்க முடியவில்லை. காளி மாதாவிடம் சென்று அவருடைய திருப்பாதங் களைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர்பெருக தாயே, எப்படியாவது விவாகம் நடைபெறாமல் செய்துவிடு. என்னுடைய நரேந்திரனை சம்சார சாகரத்தில் மூழ்கடித்து விடாதே என்று பிரார்த்தனை செய்தார். நரேந்திரருக்கு விவாகம் நடைபெற வில்லை. விவேகானந்தருடைய எதிர்கால வாழ்க்கை எவ்வித பந்தங்களுக்கும் உட்படாததாய், தியாகத்தின் நிறைவாக இருக்க வேண்டுமென்பதில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு எவ்வளவு சிரத்தை இருந்ததென்பது இதனின்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளை சிவபெருமான் தடுத்தாட் கொண்ட வரலாறு இங்கே நமது ஞாபகத்திற்கு வருகிற தில்லையா? தம்மை நாடிவரும் சிஷ்யர்கள் தாமரை மலர் போன்றவர்கள் என்கிறார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். சிலர் பத்து இதழ்களுடைய தாமரை, இன்னுஞ் சிலர் பதினாறு இதழ்களுடைய தாமரை, வேறு சிலர் நூறு இதழ்களுடைய தாமரை, ஆனால் நரேந்திரரோ ஆயிரம் இதழ்களுடைய தாமரையென்று சொல்லி விவேகானந்தரிடத்தில் தமக்குள்ள விசேஷ மதிப்பை வெளிப்படுத்துகிறார். நான்கு பேர் மத்தியில் தாம் இருக்கிறபோது, தமது பக்கத்தில் நரேந்திரர் இருந்துவிட்டால், தமக்குப் பெரிய பக்க பலமாயிருக்கிறதென்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார். அவருடைய ஆத்ம சக்தியிலே எவ்வளவு நம்பிக்கை! இந்த நம்பிக்கை இருந்ததனாலேயே தமது கடைசி காலத்தில் சிஷ்யகோடிகள் அனைவரையும் விவேகானந்த ரிடத்தில் ஒப்புவித்து அவர்களை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். இதே நிறையிலேயே விவேகானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ணரை வைத்துப் போற்றுகிறார். ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்:-இப்பொழுது நான் என்ன முடிவுகட்டியிருக்கிறே னென்றால், ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குச் சமதையானவர் வேறுயாரு மில்லை யென்பதுவே யாகும். இத்தகைய நிறைவை, இத்தனை ஆச்சரியகரமான அன்பை, பந்தப்பட்டுக் கிடக்கும் மனிதனிடத் திலே காட்டப் படுகின்ற இத்தகைய கருணையை, உலகத்திலெங்கும் காணமுடியாது... பேராபத்துகள் ஏற்பட்ட காலத்தில், ஆசாபாசங்கள் சூழ்ந்துகொள்ளும் காலத்தில், நான் பெரிதும் துக்கமடைந்தவனாய் அழுத வண்ணம் கடவுளே, என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை செய்திருக்கிறேன்; ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆச்சரியகரமான முனிவர் அல்லது அவதார புருஷர் அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள், இவர், மனிதனுடைய இருதயத்தை ஊடுருவிப் பார்க்கும் தமது சக்தியி னால், என் மனோ வேதனைகளையெல்லாம் அறிந்து, என்னையும் மிஞ்சி என்னைத் தம்மிடம் அழைத்துக் கொண்டதன் மூலம் அந்த வேதனைகளை யெல்லாம் அகற்றினார். கடவுளிடத்தி லிருந்து பெற முடியாததைத் தமது குருநாதரிடத்திலிருந்து பெற்றதாக இவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பக்தி இவைகளையே காட்டுகிறது. ஸ்ரீராமகிருஷ்ணர் ஏன் விவேகானந்தரை ஆட்கொண்டார்? ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து உபதேசம் பெறவேண்டுமென்பதற்காக விவேகானந்தர் அவரை நாடவில்லை. இதை விவேகானந்தரே பின்னொரு சமயம் ஒப்புக் கொண்டிருக்கிறார். குருநாதர் சொன்ன வைகளில் பெரும்பாலனவற்றை நான் முதலில் ஏற்றுக்கொள்ள வில்லை. ‘அப்படியானால் ஏன் இங்கே வருகிறாய்-? என்று ஒரு நாள் என்னைக் கேட்டார். உங்களைப் பார்க்க வருகிறேனே தவிர கேட்க வரவில்லை யென்று பதில் கூறினேன். .. இதைக் கேட்டு அவர் பெரிதும் சந்தோஷப் பட்டார். இந்தக் கடைசி வாக்கியத்தில்தான், விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் ஈடுபட்டதன் ரகசியம் அடங்கியிருக்கிறது. ஸ்ரீராமகிருஷ்ணர் நேர்மையுள்ளவர்; கள்ளங் கபடில்லாதவர்; சத்திய மூர்த்தி; நேர்மையுள்ளவர்களால்தான் நேர்மையை அறிந்து கொள்ள முடியும்; பாராட்ட முடியும். சத்திய புருஷர்கள் தான் சத்தியத்தின் மகிமையை உணரமுடியும். விவேகானந்ருடைய பரிசுத்த இருதயத்தையும், உண்மையைக் காணவேண்டுமென்பதிலே அவருக் கிருந்த துடிதுடிப்பையும் ஸ்ரீராமகிருஷ்ணர் சுலபமாகத் தெரிந்து கொண்டு விட்டார்; அவரை ஆட்கொண்டார். குடியான வர்கள் நல்ல உழவு மாடுகள் வாங்கிவர சந்தைக்குச் செல்வார் களல்லவா? அப்படிச் சென்று ஒவ்வோர் எருதாக வாலைப் பிடித்துப் பார்ப்பார்கள். இப்படிப் பிடித்துப் பார்க்கிறபோது சில எருதுகள் எவ்வித உணர்ச்சியும் பெறாமல் அப்படியே படுத்துக்கொண் டிருக்கும். இவற்றை, சப்பைமாடுகள்; பிரயோஜனமில்லை என்று சொல்லி நிராகரித்து விடுவார்கள். இன்னுஞ் சில மாடுகள், வாலைத் தொட்ட மாத்திரத்தில் சுறுசுறுப்புக் காட்டும். இப்படிப்பட்டவை களைத்தான் விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள். நரேந்திரர், இந்தப் பிந்திய எருது களைப் போன்றவர். அவரிடத்தில் நிரம்பத் துடி துடிப்பு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பரமஹம்ஸர். சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை முதன் முதலில் சந்திக்கிறபோது, குமுறிக் கொந்தளித்தெழுகின்ற சமுத்திரமும் அலை யடங்கி அமைதியாயிருக்கின்ற சமுத்திரமும் சந்திப்பது போல இருந்தது;1 புதுமையும் பழமையும் கலப்பது போல இருந்தது; மேனாட்டு விஞ்ஞானமும் கீழ் நாட்டு ஞானமும் கூடுவது போலிருந்தது. விவேகானந்தர் அறிவின் நிறைவாயிருந்தார்; ராமகிருஷ்ணர் அன்பின் நிறைவாயிருந்தார். முன்னவர் அறிவுக் கண்களைக் கொண்டு கடவுளைக் காண முடியுமாவென்று கேட்டுக் கொண்டிருந்தார்; பின்னவர் நம்பிக்கையைத் துணை பற்றிச் சென்று கடவுளைக் கண்டே இருந்தார். முன்னவர் பேச்சிலே பெருமிதம் கண்டிருந்தார்; பின்னவர் மௌனத்திலே இனிமை கண்டிருந்தார். இந்த நிலைமையிலேதான் இருவருக்கும் சந்திப்பு ஏற்பட்டது. அறிவு, அன்பிலே அடைக்கலம் புகுந்தது; பேச்சு, மௌனத்திலே லீன மாகியது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சாதாரண மனிதராகவே காணப் பட்டார். அவருடைய சொற்களும் செயல்களும் எளிமையுடையன வாகவே இருந்தன. இத்தகையவரிடத்தில் மகாமேதாவியான, அந்த மேதையிலே பெருமிதங் கொண்டிருந்த விவேகானந்தர் எப்படி அடங்கிப் போனார் என்பது ஆச்சரியமான விஷயமே யாகும். ஆனால் இஃது இந்தியாவின் பண்பாட்டையே காட்டு வதாயிருக்கிறது. ஆத்ம சக்திக்கு முன்னே அறிவுச் சக்தி அடங்கிப் போகிறது. முழு முதற்பொருளைக் கண்டவரிடத்தில், மற்றப் பொருள்களுடைய வர்கள் ஐக்கியப் பட்டு விடுகிறார்கள். இந்திய சரித்திரத்தின் நெடுகிலும் இந்த மாதிரியான சம்பவங்களை அடிக்கடி சந்திக்கிறோம். இந்தியாவின் நாகரிகம், ஓர் அறிஞர் கூறிய மாதிரி, மலர்களின் அழகைப் பற்றிக் கவலைப் படுவதில்லை; விதையின் அர்த்தத் திலேயே அதிக கவனஞ் செலுத்துகிறது. ஸ்ரீராமகிருஷ்ணருடைய வாழ்க்கையையும் சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையையும் ஒன்று சேர்த்தே பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தியாவினுடைய வாழ்க்கையின் முழுத் தன்மையும் தெரியும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒளியென்றால் விவேகானந்தர் அதன் ஒலியாயிருந்தார். ராமகிருஷ்ணர் கவிதை யென்றால் அதன் விரிவுரையாயிருந்தார் விவேகானந்தர். ராம கிருஷ்ணர் போதித்த உண்மைகளை எவ்வளவு அழகாக, எவ்வளவு கம்பீரமாக சொல்லால் முழக்கிக் காட்டுகிறார் விவேகானந்தர்! கேளுங்கள் சிலவற்றை:- சென்ற காலத்தில் நிலவிய மதங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்; அவைகளுக்கு வணக்கஞ் செலுத்துகிறேன். அந்தந்த மதத்தினரோடு சேர்ந்துகொண்டு, அந்தந்த மதத்தினர் வழிபடுகின்ற முறையில் நான் கடவுளை வணங்குகிறேன். நான் ஒரு முகம்மதி யருடைய மசூதிக்குச் செல்வேன்; கிறிதுவருடைய ஆலயத்திற்குச் சென்று அங்கே சிலுவையின் முன்னால் முழந்தாளிட்டு வணங்குவேன்; புத்தர் கோயிலுக்குச் சென்று புத்தரிடத்திலும் தர்மத்தினிடத்திலும் சரணமடைவேன்; காட்டிலே சென்று, எல்லோருடைய இருதயங்களையும் பிரகாசமய மாக்குகின்ற ஜோதி எதுவோ அந்த ஜோதியைக் காண முயன்று கொண்டிருக்கிற ஹிந்துவுடன் தியானத்தின் ஆழ்ந்திருப்பேன். இப்படி யெல்லாம் நான் செய்வதோடல்லாமல், வருங்காலத்தில் தோன்றக் கூடிய மதங்களனைத்திற்கும் என் இருதயத்தைத் திறந்து வைத்துக் கொண்டுமிருப்பேன். மதமென்பது நூல்களிலே இல்லை; புத்தி பூர்வகமான அங்கீகாரத்தில் இல்லை; அறிவிலும் இல்லை. அறிவு, தத்துவங்கள், ததாவேஜுகள், கொள்கைகள், நூல்கள், சடங்குகள் இவை யெல்லாம் மதத்திற்குத் துணை செய்வனவேயாம். மதமென்பது மெய்ப்பொருளை அடைவதிலேயே இருக்கிறது. உலகத்திலுள்ள எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று முரண் பட்டவை யல்ல; விரோதமானவையுமல்ல. அவை, நித்தியமா யுள்ள ஒரு மதத்தின் பல தோற்றங்களேயாம். அந்த ஒரு மதமே, பல நிலை களிலுள்ளவர்களுக்கு, பலவகை அபிப்பிராயங்களுடையவர் களுக்கு, பல ஜாதியினருக்கு ஏற்றவிதத்தில் பல மதங்களாகத் தோற்றமளிக்கிறது. * * * விவேகானந்தர், ராமகிருஷ்ணரைப் போல் ஒரு தீர்க்கதரிசி. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், நிகழ்கால நிலையைப் புலப் படுத்துவதோடு எதிர்காலத்திற்கு வழி காட்டியாகவு மிருக்கிறது. அவர் அன்று சொன்னது இன்றும் பொருத்தமாயிருக்கிறது. சங்கநாதம் செய்கிறார் ஓரிடத்தில்:- * * * ஆணை பிறந்துவிட்டது. இந்தியா எழுந்திருக்க வேண்டும்.... பாரத மாதாவை இனி யாரும் தடுக்க முடியாது. இனி அவள் ஒரு போதும் தூங்கப் போவதில்லை. வெளிச் சக்திகள் எவையும் அவளைப் பின் தள்ள முடியாது. அவள் எழுந்து நிற்க முற்பட்டு விட்டாள்... நீண்ட இரவு கழிந்து விட்டது; கொடிய துன்பங்கள் விலகிவிட்டன. ஒரு குரல் நம்மை நோக்கி வருகிறது ... இமய மலையி லிருந்து வருகிற காற்றைப் போல், இறந்து போகுந் தறுவாயிலிருந்த அவளுடைய எலும்புகளிலும் தசை நார்களிலும் அஃது - அந்தக் குரல் - உயிரளித்துக் கொண்டு வருகிறது. அவளுடைய சோர்வு நீங்கி விட்டது. அவள் - நமது தாய் நாடு - விழித்துக் கொண்டு விட்டாள். 1. தனுஷ்கோடியில் மகோததியும் ரத்னாகரமும் சந்திப்பதை இங்கே வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம். 6. உபதேச மணிகள் சந்திரன் மேலும் மேலும் வளர்ச்சியடைவதைக் கண்டு சமுத்திரத்தின் கொந்தளிப்பு அதிகமாகிறது. அதுபோல் பிறர் மேன்மையடைவதைக் கண்டு மகான்கள் சந்தோஷப்படுகிறார்கள். - துளசிதாஸர் ஸ்ரீராமகிருஷ்ணர், மேடை மீதேறி ஒரு பிரசங்கமும் செய்ய வில்லை; ஆத்மஞான வகுப்புகள் வைத்து நடத்தவில்லை; யாருக்கும் மந்திரோபதேசம் செய்யவில்லை. இருந்தாலும் இவரைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். இந்தக் கூட்டத் தினருடன் இவர் எப்பொழுதும் சம்பாஷணை செய்து கொண்டிருப்பார். இவருடன் ஒருமுறை அல்லது இருமுறை சம்பாஷித்து விட்டுச் சென்றவர்கள், இதுகாறும் தங்களுக்குத் தெரியாமலிருந்தனவெல்லாம் இப்பொழுது தெரிந்துவிட்டதாக உணர்வார்கள்; மேலும் மேலும் இவருடன் சம்பாஷிக்க வேண்டு மென்று ஆவல் கொள்வார்கள்; இவருடைய வாக்கிலிருந்து வரும் ஒவ்வொன்றையும் உபதேச மணியாக ஏற்றுக்கொண்டு, அவற்றை பக்தி சிரத்தையுடன் தங்கள் இருதய பொக்கிஷத்தில் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று விருப்பங் கொள்வார்கள். ஏனென்றால் அவை, வாழ்க்கையில் வழிகாட்டும் விளக்குக ளல்லவா? இத்தகைய விளக்குகளாயுள்ள உபதேசமணிகளிற் சிலவற்றை இங்கே தருகின்றோம். பக்தி நிறைந்த ஒரு குடும்பத்தைப் போஷணை செய்ய பணம் சம்பாதிக்க வேண்டியதுதான். உங்கள் வருமானம் அதிகமாவதற் கான முயற்சிகளை நீங்கள் செய்யலாம். ஆனால் அதை யோக்கியமாகச் செய்யவேண்டும். வாழ்க்கையின் லட்சியம் பணம் சம்பாதிப்பதல்ல; கடவுளுக்குத் தொண்டு செய்வது. கடவுள் தொண்டுக்காகப் பணம் பிரயோஜனப்படுமாகில் அப்பொழுது அதனால் கெடுதல் இல்லை. * * * (காளிதேவியிடம்) தாயே, ஒவ்வொருவரும் தங்கள் தங்க ளுடைய கடிகாரந்தான் சரியென்று சொல்கிறார்கள். கிறிதுவர்க ளென்ன, பிரும்மசமாஜத்தார் என்ன, ஹிந்துக்க ளென்ன, முஸல்மான்களென்ன, இவர்கள் ஒவ்வொருவரும் என்னுடைய மதந்தான் உண்மையானது என்று சொல்கிறார்கள். ஆனால், தாயே, உண்மையில் யாருடைய கடிகாரமும் சரியான தில்லை. உன்னை உண்மையாக யார் அறிய முடியும்? உன்னை ஒருவன் மனப்பூர்வ மாக வழிபடுவானாகில், உனது அருளினால், எந்த மார்க்கத்தின் மூலமாகவேனும் உன்னை வந்து அடையக் கூடும். * * * தர்க்கம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. தர்க்கவாதத்திற்கு அப்பாற்பட்டவர் கடவுள். உலகிலுள்ள அனைத்தையும் நான் கடவுளாகவே காண்கிறேன். அப்படியிருக்க தர்க்கவாதம் செய்வதில் என்ன பிரயோஜனம்? தோப்புக்குள் சென்று மாம்பழங்களைத் தின்றுவிட்டு வெளியே வாருங்கள். அவ்வளவுதானே? மாமரங்களி லுள்ள இலைகளைக் கணக்கிடவா நீங்கள் தோப்புக்குள் செல்கி றீர்கள்? இல்லையே. அப்படியிருக்க, மறுபிறவியைப் பற்றியோ, உருவ வழிபாட்டைப் பற்றியோ வாதம் செய்து கொண்டிருப்பதில் காலத்தை வீணாக்குவானேன்? * * * திரீகளெல்லோரும் சக்தியின் வடிவங்கள். இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில், விவாகத்தின் போது, மணமகள் தன் கையில் ஒரு கத்தியைப் பிடித்துக் கொள்ளவேண்டுமென்பது ஒரு வழக்கம். வங்காளத்தில் மணமகள் பாக்குவெட்டியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மணமகன், தெய்வ சக்தியின் வடிவமாயிருக்கப்பட்ட மணமகளின் துணைகொண்டு மாயாபந்தத்தை அகற்ற வேண்டு மென்பது வேயாகும் * * * கடவுள் இரண்டு சந்தர்ப்பங்களில் சிரிக்கிறார். வைத்தியர், நோயாளியின் தாயாரைப் பார்த்து, அம்மா, பயப்படாதீர்கள்; உங்கள் பையனை நான் நிச்சயம் சொதப்படுத்தி விடுகிறேன். என்று சொல்கிற போது, கடவுள் சிரிக்கிறார். நான் இந்தப் பையனுடைய உயிரை எடுத்துக் கொண்டு விடப்போகிறேன். ஆனால் இந்த வைத்தியர் அந்த உயிரைக் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்கிறார் என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டு சிரிக்கிறார் கடவுள். கடவுள்தான் எஜமானர் என்பதை வைத்தியர் மறந்துவிட்டு தாம்தான் எஜமானர் என்று நினைத்துக் கொள்கிறார். இரண்டு சகோதரர்கள் தங்கள் நிலத்தைக் கயிறு போட்டு இரண்டு பங்காகப் பிரித்து இந்தப் பக்கம் என்னுடையது; அந்தப் பக்கம் உன்னுடையது என்று சொல்லிக் கொள்கிற போதும் கடவுள் சிரிக்கிறார். உலகம் பூராவும் என்னுடைய தாயிருக்க, இவர்கள் என்னுடையது என்று சொல்லிக் கொள்கிறார்களே யென்று சொல்லிச் சிரிக்கிறார். * * * ஒருவன் உலக வாழ்க்கையிலே ஈடுபட்டிருந்த போதிலும் அவன் அடிக்கடி ஏகாந்தத்தில் இருக்க வேண்டும். ஒருவன் குடும்பத்தை விட்டுத் தனியாகச் சென்று மூன்று நாட்களுக்காவது கடவுளை நினைத்து அழுதால் போதும். அவனுக்கு ஓய்விருக்கிற போது ஒரு நாளைக்காவது கடவுளைப் பற்றி நினைத்தால் போதும். அதனால் அவனுக்கு நன்மையே உண்டாகும். தங்களுடைய மனைவிக்காகவும் மக்களுக்காவும் ஜனங்கள் ஒரு பானை கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் கடவுளுக்காகக் கண்ணீர் வடிக்கிறவர் யார்? * * * மனிதர்களைத் தானியங்களுக்கு ஒப்பிடலாம். யந்திரத்தில் அகப்பட்டுக்கொண்டு அரை படப் போகிற தானியங்களைப் போல் அவர்கள் இருக்கிறார்கள். நடு அச்சைச் சுற்றியுள்ள தானியங்கள் மட்டுந் தான் அரை படாமல் தப்பித்துக் கொள்கின்றன. அது போல் மனிதர்களும் கடவுளாகிய அச்சினிடம் அடைக்கலம் புக வேண்டும். அவரை அடையுங்கள்; அவர் பெயரைச் சொல்லுங்கள். அப்பொழுது நீங்கள் முக்தி பெறுவீர்கள். இன்றேல் யமனால் நசுக்கப்பட்டு விடுவீர்கள். * * * ஒவ்வோர் உபாதியும் மனிதனுடைய சுபாவத்தை மாற்றி விடுகின்றது. அழகான கறுப்புக் கரை அங்கவதிரத்தைப் போட்டுக் கொள்ளட்டும், உடனே அவன் காதல் பாட்டுகளைப் பாட ஆரம்பித்து விடுகிறான். சீட்டாட்டம், கைத்தடி ஆகிய இவையெல் லாம் உடனே தொடர்ந்து விடுகின்றன. ஒரு நோயாளி கூட உயர்ந்த பூட் போட்டுக் கொண்டு விட்டானாகில், பாருங்களேன் அவனை, விசில் அடித்துக் கொண்டு ஓர் இங்கிலீஷ்காரணைப் போல் மாடிப் படிகள் ஏற ஆரம்பித்து விடுகிறான். ஒரு மனிதன் பேனாவைக் கையிலே பிடித்துக கொள்ளட்டும், அகப்பட்ட காகிதத்தில் கிறுக்கத் தொடங்கி விடுகிறான். பேனாவுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. பணமும் ஒரு பெரிய உபாதிதான். பணமிருந்து விட்டால் அது மனிதனை எவ்வளவு மாற்றி விடுகிறது... ஒரு தவளை, தனது வளையில் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு யானை அந்த வளையின் மீது போய்க்கொண்டிருந்தது. உடனே தவளைக்குக் கோபம் வந்துவிட்டது. தன் வளையிலிருந்து வெளியிலே வந்து, யானையை உதைக்கிறாற் போல் காலைத் தூக்கிக் கொண்டு ஏ யானையே, என் தலை மீது நடந்து செல்ல உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டது. பணத்தினால் உண்டாகக் கூடிய கர்வம் இத்தகையது! * * * யார் மீதும் துவேஷம் கொள்ளாதே. சிவன், காளி, அரி இவை யெல்லாம் ஒரு பரம்பொருளின் வெவ்வேறு தோற்றங்கள் தான். * * * எவ்வளவுக் கெவ்வளவு கடவுளுக்கருகில் வருகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு சாந்தி உண்டாகிறது. கங்கைக்கு அருகில் வரவர அதனுடைய குளிர்ச்சியை அதிகமாக உணர்கிறீர்கள். அந்தக் கங்கையிலேயே அமிழ்ந்து விட்டாலோ பரிபூரண நிம்மதி ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் சிநேகமாயிருங்கள். அப்படியிருப்பது உங்களுக்குத்தான் நன்மை. அதனால் எல்லாருக்கும் சந்தோஷம். நாடகத்தில், சங்கீத கோஷ்டியினர் ஒத்துப் பாடினால்தான் நாடகம் நன்றாக இருக்கிறது; பார்க்க வந்திருக்கும் ஜனங்களும் சந்தோஷப் படுகிறார்கள். * * * விறகிலே தீ இருக்கிறதென்று அறிதலும் நம்புதலும் ஞானம். அந்தத் தீயிலே சோறு சமைப்பதும், அந்தச் சோற்றைச் சாப்பிடுவதும், அதிலிருந்து போஷணை பெறுவதும் விஞ்ஞானம். தன்னுடைய சொந்த அனுபவத்தினால் கடவுள் இருக்கிறார் என்று உணர்வது ஞானம். அந்தக் கடவுளோடு பேசுவது, அவரைக் குழந்தையாகவோ, நண்பனாகவோ, எஜமானனாகவோ, காதலனாகவோ அனுபவிப்பது, விஞ்ஞானம். * * * எந்தவிதமான பொய்யும் நல்லதல்ல. புனிதமான உடையா யிருந்தால் கூட அது பொய்யுடையாயிருந்தால் அது நல்லதல்ல. அந்தரங்க எண்ணத்தைப் போல் பகிரங்க உடையும் இல்லா திருந்தால் அது நாளாவட்டத்தில் நாசத்தையே உண்டு பண்ணும். பொய் சொல்லிக் கொண்டும் பொய்யான காரியங்களைச் செய்து கொண்டு மிருந்தால் பொய்யைப் பற்றிய பயமே போய் விடுகிறது. ஒரு கிருகதனுடைய வெள்ளை ஆடையே சிறந்தது. உலகப்பற்று வைத்துக் கொண்டு. லட்சியத்திலிருந்து அடிக்கடி நழுவிப் போக, வெளியிலே காஷாயந்தரித்துக் கொண்டிருப்பது எவ்வளவு கேவலம்! * * * மெய் பேசுவது கலியுகத்தின் தவமாகும். இந்த யுகத்தில் மற்றத் தவங்களைச் செய்தல் கடினமாகும். உண்மையைக் கடைப் பிடிக்கிறவன் கடவுளை அடைகிறான். * * * சுயநலம் சிறிதேனும் இல்லாமல் மற்றவர்களுடைய நன்மைக் காக வைத்தியன் தன் தொழிலைச் செய்வானாகில் வைத்தியத் தொழில் மிகவும் மேன்மையானது. * * * வார்த்தைகளை வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோஜனம்! ஏதாவது செய்யுங்கள். சித்தி என்ற வார்த்தையைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதனால் நீங்கள் ஏதேனும் சித்தி பெற முடியுமா? * * * உலர்ந்த தீக்குச்சிகளாயிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்துக் கிழித்தாலும் உடனே நெருப்பு கிடைக்கிறது. அவை ஈரமாயிருந்தால், ஐம்பது குச்சிகளைக் கிழித்தாலும் நெருப்பு உண்டாவதில்லை. தீக்குச்சிகள் தான் நஷ்டம். அது போல உங்கள் மனம் உலக சுகங்களிலே தோய்ந்திருக்கு மானால், கடவுளுணர்ச்சி உங்களுக்கு உண்டாகவே உண்டாகாது. ஆயிரந்தடவை நீங்கள் பிரயத்தனப் படலாம்; ஆனால் எல்லாம் வீண்தான். உலக சுகங்களின் மீது உங்களுக்கிருக்கப்பட்ட பற்று உலர்ந்து போகட்டும், அதாவது இல்லாமற் போகட்டும், உடனே கடவுளுணர்ச்சி உண்டாகும். * * * ஞானமில்லாதவன், பிறருக்கு ஞானோபதேசம் செய்ய முற்படுவது, தனக்குப் படுக்கையில்லாதான், பிறரைத் தன் படுக்கையில் படுத்துக் கொள்ளுமாறு சொல்வது போலிருக்கிறது. * * * தர்க்கவாதம் செய்வது எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. தர்க்கத்திற்கெல்லாம் அப்புறப்பட்டவர் கடவுள். உலகத்திலுள்ள சகலமானவற்றையும் நான் கடவுள் மயமாகவே காண்கிறேன். அப்படி யிருக்க தர்க்கம் செய்வதில் என்ன பிரயோஜனம்? * * * பயப்படாதீர்கள். உங்களை வழிநடத்திச் செல்கிறவர் கடவுள். அப்படியிருக்க யாருக்கு நீங்கள் பயப்படவேண்டும்? கடவுளே உங்களுடைய துணையாயிருக்கிறார். அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை அழைத்துச் செல்வார். * * * எவன், நான் அடிமை, அடிமை யென்று சொல்லிக் கொண்டிருக் கிறானோ அவன் உண்மையிலேயே அடிமையாகி விடுகிறான். உலக பந்தங்களிலிருந்து நான் விடுதலை பெற்றி ருக்கிறேன்; நான் சுதந்திர புருஷன் என்று எவன் சொல்லிக் கொண்டிருக்கிறானோ அவன் உண்மையிலேயே சுதந்திர புருஷனா கிறான். பந்தம் என்பது மனதைப் பொறுத்தது; சுதந்திரம் என்பதும் மனதைப் பொறுத்தது, * * * ஒருவன் தன் திரண்ட செல்வத்தை யெல்லாம் கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்வானாகில் அதை அவர் பொருட்படுத்துகிறாரா என்ன? இல்லவே இல்லை. அன்பையும் பக்தியையும் எவன் அளிக்கிறானோ அவன்மீதுதான் அவருடைய திருவருள் விழுகிறது. அவரால் பெரிதும் மதிக்கப்பெறுவது அன்பு, பற்றின்மை, துறவு ஆகிய மூன்றுந்தான். * * * அறிவு, பலவீனமுடையது; நம்பிக்கை, சர்வ சக்தியை யுடையது. அந்த நம்பிக்கைக்கு முன்னர், இயற்கையின் சக்திகள் கூட ஒதுங்கி வழி விடுகின்றன. ஆத்மார்த்தமான முன்னேற்றத்திற்கு வேர் போலிருப்பது நம்பிக்கை. மற்றவைகளை யெல்லாம் நீங்கள் ஒதுக்கித் தள்ளி விடலாம்; ஆனால், நம்பிக்கை மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும். * * * புலன்களிடத்தில் உனக்கு எவ்வளவுக் கெவ்வளவு பற்றுதல் குறைகிறதோ அவ்வளவுக் கவ்வளவு கடவுளிடத்தில் நீ கொண் டிருக்கிற அன்பு அதிகமாகும். எவ்வளவுக்கெவ்வளவு கடவுளருகில் நீங்கள் வருகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்மீது உங்களுக் கிருக்கும் பக்தியும் அதிகப்படும். * * * உண்மையான ஒரு பக்தன் எப்படி நினைக்கிறான், எப்படி உணர்கிறான் தெரியுமா? ஆண்டவனே, நீ எஜமானன்; நான் உன் வேலைக்காரன்: நீ தாய்; நான் உன் குழந்தை; நீ எல்லாமும்; நான் உன்னிலே ஓர் அமிசம்: இப்படியாக நினைக்கிறான்; உணர்கிறான். * * * உலகத்திலே நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர் களும் இருக்கிறார்கள். அதாவது கடவுளை நேசிக்கிறவர்களும் இருக்கிறார்கள்; நேசியாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எல்லாருடைய இருதயத்திலும் கடவுள் இருக்கிறார். நான் கண்ட நால்வர் பிரசுராலயத்தின் வார்த்தை நான் கண்ட நால்வர் என்ற இந்த நால்வர் வாழ்க்கைச் சரிதத்தில் ஐவருடைய வாழ்க்கைகளைப் பற்றிய வரலாறு இடம் பெற்றிருப்பதைக் காணலாம். வாழ்க்கை வரலாறு பற்றி எழுதுவதில் மூன்று வழிகளுண்டு என்று சொல்லலாம். ஒருவர், தம் வாழ்க்கையையே சுய சரிதமாக எழுதுவது ஒருவழி. மற்றவர் வாழ்க்கையைப் பற்றி அநேகர் எழுதியதை அல்லது கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு சித்திரிக்கப்படுவது மற்றொரு வழி. சமகாலத்தில் வாழ்ந்த மற்றவர்களோடு தாமும் இணைந்து பழகி அவர்கள் வாழ்க்கையிலுள்ள குண சித்திரங்களை விவரிப்பது வேறொரு வழி. இந்த மூன்றாவது வழியைப் பின்பற்றியே எமது ஆசிரியர் இந்நூலை எழுதியிருக் கிறார். அப்படி எழுதும் பொழுது தம்மைப் பற்றியும் அநேக இடங் களில் குறிப்பிடவேண்டி வந்துவிடுகிறது. அப்படிக் குறிப்பிடா விட்டால் நிரம்பச் சுற்றி வளைத்துப் பேச நேரிடும். யார் யாரைப் பற்றி எழுதுகிறாரோ அவர்களிடம். தாம் கண்டவற்றையும் அவர்கள் வாழ்க்கையிலிருந்து ஆய்ந்து எடுத்த பகுதிகளையும் சித்திரிப்ப தென்றால் ஆசிரியர், அவர்களோடு இரண்டறக் கலந்த பகுதிகளைக் காட்டாமலிருக்க முடியாது. அப்படிக் காட்டும் பொழுது, தம் சொந்த சரித்திரத்தின் பல கோணங்கள் அவரை - ஆசிரியரை - அறியாமலேயே இடம்பெற்று விடு கின்றன. ஆகவே இந்த நூல் ஐவருடைய வாழ்க்கைகளாகவே ஆகிவிடு கிறது. ஆனால் ஆசிரியர் நால்வர் வாழ்க்கையைப் பற்றித்தான் குறிப்பாகச் சொல்ல நினைக் கிறாரென்பதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். இதிலிருந்து இந்த நால்வரோடு எமது ஆசிரியருக்குள்ள ஒருமைப்பாடு வாசகர் களுக்குத் தெற்றெனப் புலப்படுகிறதல்லவா? எழுத்துப் பணியையே தம் லட்சியமாகக் கொண்ட எமது ஆசிரியர், இந்நால்வருடன் தம்மையும் இணைத்துக்கொண்டது பொருத்தமாகவே இருக்கிறது. அதோடு எமது ஆசிரியர், உண்மை யான நாட்டுப் பற்றுடையவர் என்பதை அவர் ஊழியம் புரிந்த பத்திரிகைகள் வாயிலாகவே நாம் அறிய முடிகிறது. அந்தப் பத்திரிகைகள், தேசீயத்தை அடிப்படையாகக் கொண்டவை; தேசீய உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதற் கென்றே ஏற்பட்டவை; அந்தச் சிறந்த கொள்கைக்காகவே பொருள் நஷ்டமடைந்து தம்மை மாய்த்துக் கொண்டவை. கொள்கைக்கு முதலிடம் அளித்த அப் பத்திரிகைகள், வியாபார நோக்கங் கொண்டிருக்க முடியாதல்லவா? அந்த நோக்கத்தோடு - வியாபார நோக்கத்தோடு - அப்பத்திரிகைகள் இந்நாள் வரை ஜீவித்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றுப் பகுதியை எழுத எமது ஆசிரியரோ, அதைப் பிரசுரிக்க நாமோ தலைப்பட்டிருக்கமாட்டோம். பத்திரிகையே படித்தறியாத அக்காலத்திற்கும் பத்திரிகையைக் கையில் வைத்துக் கொள்வதே ஒரு நாகரிகம் என்று நினைக்கும் இக் காலத்திற்கும் நிரம்ப வித்தியாசமுண்டு. அக்காலத்துப் பத்திரிகைகள் தமிழ் மொழிக்கு வளமுண்டுபண்ணி, தேசபக்திக் கனலை எழுப்பி, தியாகச் செயலை நிலைநிறுத்தி,கவிதைகளின் மூலம் நல்ல எண்ணங் களைப் பரப்பி பாமர மக்களையும் தேசப்பணியில் ஈடுபடுத்தின. அக்காலத்துப் பத்திரிகை உலகம் எவ்வளவு பெரும்பேறு பெற் றிருந்தது என்பதை இப்பொழுது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும். எத்தொழிலிலும் ஒரு நேர்மையும் லட்சிய நோக்கும் இருக்க வேண்டுமென்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் இப்பொழுது இருக்கக் காண்கிறோமா என்பது ஒரு புதிராகவே தென்படுகிறது. திரு வி. f., வ. வே. ஸு. ஐயர், பாரதி இம்மூவரும் தமிழ்ப் பத்திரிகை உலகத்தின் ஜீவநாடிகள். அவர்களுக்கு உறுதுணை யானவர் சிவம். தேசபக்தியே உருவாகக் கொண்ட சிவத்தின் வாழ்க்கையும் அவர் களோடு பின்னிக் கிடந்திருக்கிறது. அதைச் சுற்றி வளர்ந்தது எமது ஆசிரியரின் வாழ்க்கை. மொழி வளர்த்த பெரியார், தேசீய வீறுகொண்ட மகான், கவித் திறத்தால் உணர்ச்சியூட்டிய பெருமான், தேசசேவைக்கு அர்ப்பணித்துக் கொண்ட தியாகி ஆகிய இந்நால்வரும் தமிழ் நாட்டின் தவப்புதல்வர் களல்லவா? அவர்களைத் தமிழர் எண்ணத்தி லிருந்து மறக்காமல் செய்து அவர்கள் செயல்களைத் தமிழனிடம் இடம்பெறச் செய்வது எமது கடமை எனக் கொள்கிறோம். வாசகர்களுக்கு என் நண்பர் வ . ரா. இப்பொழுது இருந்திருப்பாரானால், இந்த நூலில் எழுதியிருப்பவைகளைப் பார்த்துவிட்டு என்ன ஓய் சர்மா! நீர் கூட, நான், எனக்கு, என்னுடைய என்றெல்லாம் போட்டு எழுத ஆரம்பித்துவிட்டீர்? நீர்தான் ரொம்ப தன்னடக்கமுடையவராச்சே? உம்மைப்பற்றி எங்குமே பிரதாபித்துக் கொள்ளமாட் டீரே? என்று கேட்டிருப்பார்; ஆம்; நிச்சயம் கேட்டிருப்பார். இந்தக் கேள்வி, அன்பை அடிப்படையாகக் கொண்ட தென்பது எனக் கல்லவோ தெரியும்? இந்த அன்பு காரணமாக அவர், சில சமயங்களில் என்மீது ஆத்திரங் காட்டியதுண்டு, முதலியாரைப்போலே. நான் திரை மறைவிலே இருப்பதில் திருப்தி யடைகிறவன், வெளிச் சத்திலே வரக் கூச்சப் படுகிறவன் என்பது அவர்களுடைய அபிப்பி ராயம்; இப்படி இருக்கலாமா என்பது அவர் களுடைய கேள்வி; இருக்கக்கூடா தென்பது அவர்களுடைய தீர்ப்பு. ஆனால் நான் என்ன செய்யட்டும்? இதுவரை வெளி வந்துள்ள எனது நூல்களில் அவள் பிரிவு ஒரு நூலைத் தவிர வேறெந்த நூலிலும் - வாசகர்களுக்கு என்னும் பகுதியைத் தவிர - நான், எனது என்றெல்லாம் நான் சொல்லிக்கொண்டதில்லை. அவள் பிரிவு என்ற நூலில் மட்டும் என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. ஏனென்றால் அஃது என் சுய சரித்திரத்தின் ஒரு பகுதியல்லவா? நான் கண்ட நால்வர் என்ற இந்த நூலும், அப்படிப்பட்ட சுயசரித்திரத்தின் ஒரு பகுதிதா னென்பது, இதற்குள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும். ஆக, நான் எனது என்று சொல்லிக்கொள்வதெல்லாம், தன்முனைப்பினா லன்று, அவசியத்தை முன்னிட்டு என்று மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். வ. ரா. வைப்பற்றி இங்கே ஏன் பிரதாபிக்கிறேனென்றால், என்னுடன் பழகி, என்னிடம் அதிக சுவாதீனம் கொண்டாடிய பழைய இலக்கிய நண்பர்கள் சிலரில் அவர் முக்கியமானவர்; என் னிடம் அதிகமாகக் காதல் கொண்டவர். காதல் என்ற வார்த்தையை அதன் முழு அர்த்தந் தெரிந்து தான் இங்கே உபயோகிக்கிறேன். ஆனால் இந்தக் காதல் வெளிப்படை யாகத் தெரியாது. உண்மை யான காதல், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாதல்லவா? வ. ரா. வயதிலே எனக்கு மூத்தவராயிருந்தும், அவருடைய மதிப்பிலே நான் உயர்ந்தவனாகவே நின்றேன். தமது நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்கிறபோது ‘அப்பழுக்கில்லாத மனிதர்’ என்று சொல்லுவார்; சொல்லிவிட்டு அடுத்த கணமே, என்மீது இரக்கங் காட்டுகிற பாவனையில் ‘ஆனால் இந்த உலகத் தில் வாழ லாயக்கில்லாதவர்’ என்று சொல்லி உரக்கச் சிரித்துவிட்டு, உடனே ‘இல்லையா சர்மா? என்று என்னைப் பார்த்துக் கேட்கவும் செய்வார். வாதவம் என்பேன் நான். நான் எப்பொழுதாவது எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கம் என்று பேச்செடுப்பேன். போதும், போதும்; உமது எளிய வாழ்க்கையையும் உயர்ந்த நோக்கத்தையும் குப்பையிலே கொண்டு போடும் என்று மேலே பேசவொட்டாதபடி செய்து விடுவார். ஏற்கனவே நாங்கள் கேள்வி வாயிலாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தோமாயினும் 1923ஆம் வருஷம் டிசம்பர் மாதம் காக்கினாடா காங்கிரஸின் போதுதான் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அப்பொழுது என்னுடைய தமிழ் நடையில் அவருக்கு வெறுப்பு. அவருடைய கருத்துச் செறிந்த சொற்கோவையில் எனக்கு மதிப்பு. முதற்சந்திப்பு, லேசான பரிச்சயத்துடன் முற்றுப்பெற்று விடும் என்று நான் அப்பொழுது நினைத்தேன். அவர் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. சிறிது காலத்திற்குப் பின்னர் நாங்கள் நெருங்கிய நண்பர்க ளாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது; ஏற்படுத்திக் கொடுத்தது சுயராஜ்யா பத்திரிகை. இந்தப் பத்திரிகையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சேவை செய்தோம். சேவை செய்த அந்த நாட்கள் இன்பகர மான நாட்கள். பத்திரி காலயத்தில் எனக்காக எந்தச் சலுகையையும் நான் கோரமாட்டேன். ஆனால் வ. ரா. வோ எனக்குச் சலுகை காட்டும்படி எனக்காகப் பரிந்து பேசுவார்; போராடவும் செய்வார். சக உதவி ஆசிரியர்கள் பலரும் வம்புக்காரப் பெயர்வழி என்று சொல்லி அவரிடமிருந்து சிறிது ஒதுங்கியே இருப்பார்கள். ஆனால் நான் அப்படியிருக்கவில்லை. நான் ஒதுங்க முயன்றாலும் அவர் என்னை ஒதுங்கவிடவில்லை; இழுத்து வைத்துப் பேசுவார். பத்திரிகையில் தாம் எழுதியதை எனக்குப் படித்துக் காட்டுவார்; என் அபிப்பிராயத்தைக் கேட்பார்; அந்த அபிப்பிராயத்திற்கு மதிப்புக் கொடுப்பார். அப்படியே நான் எழுதியதை அவருக்குப் படித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் கோபம் வந்துவிடும். உமது புத்திசாலித் தனத்தை நீரே வைத்துக்கொள்ளும் என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டுவிடுவார். படித்துக் காட்டுகிறேன் என்று அவர் முகத்தருகே என் முகத்தைக் கொண்டு போவேன். அப்படி வாரும் வழிக்கு என்று சொல்லி உரக்கச் சிரிப்பார். படித்துக் காட்டுவேன். சில சமயங்களில் பேஷ் என்பார். சில சமயங்களில் இன்று உமது நடையில் சுரத்து இல்லை. என்ன காரணம்? ஆம்படையாள் கோபித்துக் கொண்டாளோ? என்று கேலி செய்வார். கல்மஷமற்ற மனம் படைத்த செம்மல் வ. ரா. 1942ஆம் வருஷம் மே மாதம் ஒரு நாள் மாலை. நான் பர்மாவி லிருந்து நடைபயணமாக வந்து சேர்ந்து ஏறக்குறைய ஒரு வாரமா யிருந்தது. நான் உயிரோடு வந்து சேர்ந்ததைக் கேள்விப்பட்டார் வ. ரா. ஓடோடியும் வந்தார் என்னைப் பார்க்க. என் வீட்டித் தாழ்வா ரத்து முன்படியில் நான் அப்பொழுது உட்கார்ந்திருந்தேன். காம்ப வுண்ட் கேட் டண்டை வரும்போதே என்னைப் பார்த்துவிட்டார்; ஓய் சர்மா! இனி நீர் சாகவேமாட்டீர் என்று உரக்கச் சொல்லிக் கொண்டே வந்தார்; கண்களில் ஈரம் கசிய என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். இனி உமக்குச் சாவே இல்லை என்றார் மறுபடியும். அப்பொழுது நான் அதிகமாக நடமாட முடியாமலிருந்தேன். எதிர் வீட்டிலுள்ள டாக்டர் ஒருவர் எனக்குச் சிகிச்சை செய்து வந்தார். வ. ரா. வந்த சமயம், அந்த டாக்டரும் என் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க வந்தார். அந்த டாக்டரை வ. ரா . வுக்கு முன் பின் தெரியாது. அவர் வந்து என்னை விசாரித்ததிலிருந்து அவர்தான் எனக்குச் சிகிச்சை செய்து வரும் டாக்டர் என்று தெரிந்துகொண் டார். உடனே அவரைப் பார்த்து டாக்டர் ஸார்! இவரை ஒரு தனிப்பட்ட வியக்தி என்று நினைத்துவிடாதீர்கள். இவர் சமுதாயத் தின் பிரதிநிதி. இவருக்குச் சிகிச்சை செய்வது, சமுதாயத் திற்குச் சிகிச்சை செய்வதாகும். ஆனால் இவர், நீர் சிகிச்சை செய்வதை உபகாரமாகக் கருதி சும்மா இருந்துவிடமாட்டார். பிறருடைய உபகாரத் திற்குப் பந்தப்பட்டவரல்லர் இவர் என்று மடமடவென்று சொன்னார். டாக்டர் இதைக்கேட்டுச் சிறிது அசந்து போனா ரென்றே சொல்லவேண்டும். அன்று முதல் சமீப காலம் வரை இந்த டாக்டர்தான் எனது உடலின் பாதுகாவலராயிருந்து வந்தார். ஒரு தடவைகூட இவர் எனக்கு பில் அனுப்பியதில்லை; நானும் இவருடைய பாக்திதாரனாக இருக்கவில்லை. வ. ரா. என்னை அறிந்து கொண்டிருந்ததற்கு இதைக் காட்டிலும் வேறு என்ன உதாரணம் வேண்டும்? 1942ஆம் வருஷக் கடைசியில் என்னுடைய சோவியத் ருஷ்யா புத்தகம் வெளி வந்தது. அதைப் படித்துப் பார்த்தார் வ. ரா. அதன் எளிய நடையைப் பெரிதும் ரசிப்பதாகக் கூறினார்; என்னைப் பாராட்டினார். இந்தப் பாராட்டுதலில், அவரிடம் இயற்கையாகவுள்ள உற்சாகம் ததும்பிக் கொண்டிருந்தது. என்னுடைய நடையைப்பற்றி அவர் முதலில் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டுவிட்டதாக இதற்கு முன் - சுயராஜ்யா பத்திரிகை காலத்திலேயே – கூறியிருக்கிறா ரென்றாலும், இப்பொழுது இவ்வளவு உற்சாகத்துடன் கூறியது எனக்குப் பெருமையாகவே இருந்தது. இந்த நூலில் பிரதாபிக்கப்பட்டுள்ள நால்வருள் பாரதியா ரிடத்தில் வ. ரா. வுக்கு அதிக விசுவாசம். இதனால் மற்ற மூவரிடத்தில் விசுவாசக் குறைவு என்பது அர்த்தமல்ல. பாரதியாரிடத்தில் பரம பக்தி பூண்டவர். வ. ரா. அவரைத் தமது குருநாதனாக வழிபட்டார். பாரதியார் உலக மகாகவிகளில் ஒருவர் என்று நிர்த்தாரணம் செய்ய கச்சை கட்டிக்கொண்டு போராடினார். பாரதியர் சொல்லாதது எதுவுமேயில்லையென்பது வ. ரா. வின் திடமான அபிப்பிராயம். இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் நால்வரிடத்திலும் காணப் பெற்ற சில பொதுவான தன்மைகளை இங்கு வரிசைப்படுத்திக் கூறுதல் பொருத்தமாயிருக்குமென்று நினைக்கிறேன். 1. நால்வரும், சிறந்த புலவர்கள். உண்மையான புலவன் நாட்டுப் பற்றில்லாதவனாயிருக்க முடியாதென்ற கருத்துடைய வர்கள். இதனால் தான் அரசியலிலே தீவிரமாக ஈடுபட்டார்கள். அரசியலிலே ஈடுபடா திருந்தால் கூட அறிஞர்கள் என்ற முறையில் பேரும் புகழுமெய்தி யிருப்பார்கள். 2. நால்வரும்,பண்பாடு இன்னதென்பதை உணர்ந்து அந்தப் பண்பாடாகவே வாழ்ந்தவர்கள். 3. நால்வரும், தாங்கள் இந்திய நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்பதை அசந்தும் மறவாமல் வாழ்க்கையை நடத்தியவர்கள். இவர்களுடைய அன்றாட வாழ்க்கை எளிய வாழ்க்கை; உயர்ந்த நோக்கம் என்ற வாசகத்திற்கு இலக்கணம் வகுத்தாற்போல் அமைந் திருந்தது. 4. நால்வரும், கடவுட் பக்தர்கள்; கடவுட் பித்தர்கள் கூட. நால்வரிடத்திலும் சமய ஞானம் பூரணமாகப் பொலிவுற்றிருந்தது; இதனால் சமரஸ நோக்குடையவர்களாயிருந்தார்கள். 5. நால்வரும், ஜாதி, வகுப்பு, இன, மொழி வேற்றுமைகளைக் கடந்தவர்கள். 6. நால்வரும், அகத்துறவு பூண்டவர்கள். 7. நால்வரும், பழமையையும் புதுமையையும் இணைத்து வைக்கும் பாலமாயமைந்திருந்தார்கள். 8. நால்வரும், பேசுவதைப் போலவே எழுதுவதிலும், எழுது வதைப் போலவே பேசுவதிலும் ஒரே மாதிரியான ஆற்றல் படைத்தவர்கள். 9. நால்வரும், சீலமே பெரிதுமுடையாராய் வாழ்ந்தவர்கள். 10. நால்வரும், தாய்நாட்டின் விடுதலை நாடி, தங்களுக்கேற் பட்ட எல்லா இன்னல்களையும் புன்சிரிப்போடு ஏற்று அனுபவித்த வர்கள். 1857ஆம் வருஷம் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத் தின் நூற்றாண்டு விழா 1957ஆம் வருஷம் ஆகட் மாதம் நாடெங் கணும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டதல்லவா, இதையொட்டி, சென்னை அரசாங்கத்தார், சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட சிலருக்கு, குறிப்பாக இந்நூலில் பிரதாபிக்கப்பட்டிருக்கிறவர் களுக்கு நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தினர். வ. உ. சிதம்பர னாருக்கு, அவர் பிறந்த ஊராகிய ஒட்டப் பிடாரத்தில் ஒரு நினைவு மண்டபம் நிறுவ 7-8-57இல் கால்கோள் விழா நடைபெற்றது. ஏற்கனவே, தூத்துக்குடியில் வ. உ. சி. பெயரால் ஒரு கல்லூரி சிறந்த முறையில் நடைபெற்று வருவது அன்பர்களுக்குத் தெரிந்ததே. சென்னையில் தொழிலாளர் வசிக்கும் ஒரு பகுதிக்கு திரு. வி. க. நகர் என்று பெயரிட்டு அங்கு திரு. வி. க. வின் உருவச் சிலையொன்று 16 - 8 - 57இல் நிறுவப் பெற்றது. வ. வே. ஸு ஐயரின் நினைவாக, பாபநாசம் கல்யாண தீர்த்தத்தில் 8-8-57இல் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. சுப்பிரமணிய சிவனார் ஞாபகார்த்தமாக, சேலம் பாப்பாரப்பட்டியில் ஓர் ஆதாரப் பள்ளி 1957 ஆகட் மாதக் கடைசியில் திறக்கப்பெற்றது. இந்த ஏற்பாடுகளைச் செய்த சென்னை அரசாங்கத்தார், தமிழ் மக்களுடைய பாராட்டுதலுக் குரியராகின்றார். ஆனால் நல்லறிஞர்கள், நினைவுச் சின்னங்களிலே மட்டும் வாழ்வதில்லை, அவர்கள், எந்தச் சமுதாயத்தின் நலனுக்காக உழைத்தார்களோ அந்தச் சமுதாயத்தின் இதயத்தில் சிரஞ்சீவிகளாக வாழ்கிறார்கள். இந்த நூலில் நால்வரைப்பற்றி மட்டும் பிரதாபித்திருக்கிறீர் களே, இவர்களுடைய சமகாலத்தவராக இருந்த, இவர்களுடைய நன்மதிப்புக் குரிய வராயிருந்த வ. உ. சிதம்பரம் பிள்ளை1 அவர்களைப் பற்றி ஏன் எழுத வில்லை, அவரும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்று அன்பர்கள் கேட்கலாம். வ. உ. சி. அவர்கள் தேசபக்தன் பத்திரிகாலயத்திற்கு அடிக்கடி வந்து போவார். அப்பொழுதெல் லாம் அவரைப் பார்த்திருக்கிறேன்; அவருடன் பேசியுமிருக்கிறேன். ஆனால் பழகியதில்லை. அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அந்த விஷயத்தில் நான் ஒரு துர்ப்பாக்கியசாலி. ஒரு சில தடவை அவருடன் பேசியிருக்கிறேன் என்பதைக்கொண்டு அவரைப்பற்றி எழுதிவிடலாமா? அந்தத் துணிச்சல் எனக்கு ஏற்படவில்லை. இந்த நூலில் கூறப்பெற்றுள்ள நால்வரும், எந்த அளவுக்கு எனக்குப் பரிச்சயமாயிருந்தார்களோ அந்த அளவுக்கு அந்த வரிசை யில் இடம் பெற்றிருக்கிறார்கள். கூறப்பெற்றிருக்கும் விஷயங்களில் கூடுதல் குறைச்சல் இருக்கின்றனவென்றால், என்னுடைய பரிச்சயத் தின் கூடுதல் குறைச்சல்தான் காரணம். இந்த நால்வரைப் பற்றி, இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலை வாசகர்களுக்கு இந்த நூல் உண்டு பண்ணுமானால், அது எனக்கு மிகவும் திருப்தியளிக்கும். இந்நால் வரை இன்னும் அதிகமாக அறிந்துள்ள அறிஞர்கள், இவர்களைப்பற்றி விரிவான நூல்கள் எழுத முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். வாசகர்களுக்கு உபயோகமாயிருக்குமென்று கருதி, நால்வ ருடைய வாழ்க்கை வரலாறுகளையும் தனித்தனியே சுருக்கமாகக் கொடுத்திருக் கிறேன். நால்வருடைய உருவப்படங்களும் எழுத்து மாதிரிகளும் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்நூலில், சிவனாரைப்பற்றி எழுதுவதற்கு அவருடைய சகோதரர் ஸ்ரீ வைத்தியநாத சர்மா பெரிதும் உதவியாயிருந்தார். என் வேண்டுகோளுக் கிணங்கி, தமது தமையனாரைப் பற்றித் தம்மிட மிருந்த பலவகைக் குறிப்புக்களையும் மனமுவந்து கொடுத்ததோடு, எழுதும் வேலையில் எவ்வளவு தூரம் முன்னேற்றமடைந்து வந்திருக்கிறே னென்று அடிக்கடி விசாரித்தும் வந்தார். இவர் எதிர்பார்த்தபடி இந்த நூலைச் சீக்கிரம் வெளிக் கொணர முடிய வில்லை. இதற்காக நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். இவரும் துரதிருஷ்டவசமாக, 1958ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் காலமாகிவிட்டார். ஸ்ரீ வைத்தியநாத சர்மாவிடம் என்னை அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தி வைத்தவர் ஸ்ரீ வாசு தேவய்யர். இவரைப் பற்றி இந்த நூலில் பிரதாபித்திருக்கிறேன். இவருக்கும், ஸ்ரீ நெல்லையப்பருக்கும், ஸ்ரீ வைத்தியநாத சர்மாவுக்கும் நான் பலவிதங் களில் கடப்பாடுடையேன். இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்நூலுக்குத் தேவையாயிருந்த பலவிதக் குறிப்புக்களையும் படங்களையும் உதவியவர் ஸ்ரீ ரா. அ. பத்மநாபன். இவை பலவற்றின் உரிமைகள் இவருடையனவே. ஸ்ரீ பத்மநாபன் தமிழ்நாட்டில் தேசீய இயக்கத்தை வளர்த்துக் கொடுத்தவர்களும், வேறு பல துறைகளில் உழைத்தவர்களுமான பெரியவர்கள் பலரைப்பற்றி நல்ல முறையில் தமிழருக்கும் பிற மொழியினருக்கும் தெரிவிக்க வேண்டுமென்பதில் அளவில்லாத உற்சாகமுடையவர்; இதற்காக அல்லும் பகலும் உழைத்து வருகிறவர். சிறப்பாக பாரதியாரிடத்தில் அபார பக்தியுடையவர். பாரதியாரைப்பற்றின சகல விஷயங்களையும் சேகரித்து, அவை களைப் பல இடங்களிலும் பொருட்காட்சிகளாக அமைத்துக் காட்டி, பாரதீயத்தைப் பரப்பி வருகிறார். பாரதியாரைப்பற்றி அருமையான நூலொன்றும் எழுதியிருக்கிறார். இவருடைய முயற்சிகள் மேலும் மேலும் வெற்றிபெற்று வரவேண்டு மென்றும், இவருக்கு எல்லா நலன்களும் உண்டாக வேண்டுமென்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ வ. வே. ஸு. ஐயர் வழக்குச் சம்பந்தமான சில விவரங்களை இந்நூலில் கொடுப்பதற்கு உதவிய சுதேசமித்திரன் உதவி ஆசிரியர் ஸ்ரீ எ. நடேச ஐயருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். இவர், தேசபக்தன் பத்திரிகையில் என்னுடன் சக உதவி ஆசிரியரா யிருந்தார். அன்பும் அடக்கமும் நிறைந்தவர். 1920ஆம் வருஷம் பாரதியார் சுதேசமித்திரனில் பணியாற்ற வந்த காலத்தில் அவருட னிருந்து பணியாற்றியவர். நல்ல பரோபகாரி. இவர் நீடூழி வாழ்க! இந்நூலில் காட்சியளிக்கும் நால்வரும் தமிழ்த் தாயின் தவப்புதல்வர்கள்; பாரத தேவியின் திருவடித் தொண்டர்கள்; உலகம் யாவும் ஒரு குடும்பமாக வாழ வேண்டுமென்ற லட்சியத்தைக் கொண்டிருந்தவர்கள். இவர்களைப்போல் இன்னும் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பற்றித் தமிழர்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியமாகும். இந்த அரும்பணியைச் செய்ய பேனா மன்னர் பலர் முன் வருவார்களாக! இந்நூலில் 98ஆம் பக்கம் 18ஆவது வரியில் ரோம எண்களுக்கு என்றிருப்பதை அரபு எண்களுக்கு என்று மாற்றி வாசித்துக் கொள்ளுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தியாகராய நகர் சென்னை 1-5-1959 1. இவர் பிறந்தது: 5-9-1872; மறைந்தது: 18-11-1936. தாயார்: பரமாயி அம்மாள்; தந்தையார்: வ. உலகநாத பிள்ளை. தமிழ் முனிவர் நான் கண்ட நால்வருள் முதல்வர் முதலியார். எனக்கு ஐயருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிட்டிய தற்கும், சிவத்தின் பழக்கம் கிடைத்ததற்கும், பாரதியாரின் பரிச்சயம் ஏற்பட்டதற்கும் காரண மாயிருந்தவர் முதலியார்தான். இதனா லேயே இவரை - இல்லை, இல்லை, அவரை - முதலில் வைத்துப் பேசுகிறேன். முதலியார்தான், நம்மைவிட்டு எட்டிப்போய் விட்டாரே, இனி இவர் என்று எப்படிச் சொல்வது? அவர் என்றுதானே சொல்லவேண்டும்? திரு. வி. க. என்பர் பலர். கலியாண சுந்தரனார் என்பர் சிலர். யார் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளட்டும்; எனக் கென்னவோ அவர் முதலியார்தான்; நான் அவருக்கு சர்மாதான். அது மட்டுமல்ல; என்னுடைய முதலியார் அவர்; அவருடைய சர்மா நான். இப்படி நானாகச் சொல்லிக்கொள்ள வில்லை. இருவருக்கும் தெரிந்த நண்பர்கள், என்னிடம் வந்து பேசுகிறபோது உங்கள் முதலியார் என்று தான் சொல்வார்கள்; அவரிடம் போந்து சல்லாபம் செய்கிறபோது உங்கள் சர்மா என்றுதான் சொல் வார்கள். நண்பர்களே! சாட்சி கூறுங்கள். முதலியார் என்று சொல்லாமல், திரு. வி. க. என்றோ, வேறு விதமாகவோ நான் சொன்னால், அவர் சேய்மையில் இருக்கிற மாதிரி, யாரோ அந்நியரை அழைக்கிற மாதிரி எனக்குப்படுகிறது; முதலியார் என்றால்தான் அவர் என் அண்மையில் இருக்கிற மாதிரி, நெருங்கிய உறவினர் ஒருவரை அழைக்கிற மாதிரி எனக்குத் திருப்தி உண்டாகிறது. உண்மையில் அவர் என் அண்மையிலே கூட இல்லை; என் உள்ளத்திலேயே இருக்கிறார். இந்தக் காற்றடைந்த பை கட்டவிழ்கிற வரையில் அங்கேயே இருப்பார். நண்பர்களே! இது சத்தியம். முதலியார், எனக்கு எல்லா வகையிலும் முதல்வர். ஆசிரிய பீடத்தமர்ந்திருந்த காரணத்தினால் மட்டுமன்று; வயதிலே, புலமையிலே, பண்பாட்டிலே, எல்லாவற்றிற்கும் மேலாக என்னிடம் காட்டிய அன்பிலே எனக்கு மூத்தவராகவே இருந்தார்; என்னைத் தமது இளையவனாகவே நடத்தி வந்தார். இந்தக் காரணங்களி னாலேயே அவரை முதலில் வைத்தும், முதலியார் என்று அழைத்தும் என் உளமார்ந்த நன்றியை இங்குத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலியாரை நான் முதன் முதலாகப் பார்த்தது 1917 - ஆம் ஆண்டு நவம்பர் திங்கள். நாள், கிழமை எதுவும் நினைவில்லை. அவரைப் பார்த்தது எந்த நாளோ அந்த நாளே நான் எழுத்தாளனாகப் பிறந்த நாள். அதற்கு முந்தி நான் எழுதியிருக் கிறேன்; ஓரிரண்டு நூல்களும் வெளி யிட்டிருக்கிறேன். ஆனால் எழுதுவதையே என் வாழ்நாள் பணியாக மேற்கொண்டது அன்றைய தினத்தி லிருந்து தான். எனவே அந்த முதல் சந்திப்பு, என் வாழ்க்கை யிலே ஒரு திருப்பத்தைக் காட்டிக்கொடுத்தது; அதுகாறும் என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் - ஆம், பேசிய மொழியினையும் பிறந்த நாட்டினையும் பற்றிக் கொண்டிருந்த உணர்ச்சிகள்தான் - ஒருமுகப்பட்டு ஓட ஒரு வாய்க் காலை அமைத்துக் கொடுத்தது. ஆனால் திருப்பமென்றும் வாய்க்கா லென்றும் இப்பொழுதுதான் சொல்கிறேன். அப்பொழுது ஒன்றும் தெரியாது. முதலியாரைக் கண்டேன். ஆட்கொண்டார். ஆட் பட்டேன். அவ்வளவுதான் தெரியும். அந்த நிலையில் நாளும் கிழமையும் மறந்து நின்றேன். இன்னமும் நினைவுக்கு வரவில்லை. வராததற்காக வருத்தமுமில்லை. சென்னை மயிலாப்பூரில் தணிகாசல முதலியார் என்ற ஒரு மகாவித்துவான் இருந்தார். இவரை நான் நேரில் பார்த்ததில்லை; ஆனால் இவரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் சிறந்த சிவபக்தர். கபாலீசுவரனுடைய தரிசனம் இல்லாமல் ஒரு நாளும் இருந்ததில்லை; சைவ சாதிரங்களிலே வல்லவர்; இவற்றைத் திறம்பட போதிப்பதில் ஆற்றல் மிக்கவர்; ஆனால் மகா முன்கோபி. அரைகுறையாகப் படித்தவர்கள் இவரை எளிதிலே அணுக முடியாது; அணுகினால் சூறாவளியிலே அகப்பட்ட சருகு மாதிரிதான். இவரிடம் சைவ சாதிரங்களைக் கற்கும் நற்பேறு பெற்றவர் முதலியார். இந்த மயிலை தணிகாசல முதலியாரிடம், பிற்காலத்தில் தமிழ்ப் பாடம் கேட்டவருள் ஒருவர் காஞ்சிபுரம் வாசுதேவ ஐயர்1 என்பவர். இவர் எனது அரிய நண்பர். இவருக்கும் முதலியாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவரும் ஒரே ஆசிரியரிடம் பயின்றவர்கள் என்ற முறை யில் வெகு சகஜமாகப் பழகு வார்கள். முதலியாரை, என்ன கல்யாணம் என்றுதான் அழைப்பார் வாசுதேவ ஐயர். வாசுதேவ ஐயரை என்ன வாசுதேவா என்றுதான் கூப்பிடுவார் முதலியார். இந்த வாசுதேவ ஐயர், என்னைக் காட்டிலும் இரண்டு வயதுதான் மூத்தவர்; ஆனால் என்னைக் காட்டிலும் இருபது மடங்கு தமிழில் பற்றுடை யவர்; பயிற்சியுமுடையவர். தமிழின் தொன்மையையோ பெருமையையோ அறியாமல் யாரேனும் இவரிடம் வந்து தமிழில் என்ன இருக்கிறது என்று பேச்சுக் கொடுத்துவிட்டால் போதும். பிடித்தது அவருக்குச் சனியன். அவரை அலசிப் பிழிந்தெடுத்துவிடுவார். தமிழில் எல்லாம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் வரையில் அவரை விடமாட்டார். இங்ஙனம் தமிழின்மீது தணியாத காதல் கொண்ட ஒரு சிலரைத் தான் நான் பார்த்திருக்கிறேன். வாசுதேவ ஐயர் வாழ்க! இவருடைய தமிழ்ப்பற்று வாழ்க! வாசுதேவ ஐயரும் நானும் மயிலையில் ஒரே தெருவில் வசித்து வந்தோம். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்கள் பல ஏற்பட்டதுண்டு. என்ன பேச்சு? புறநானூறுதான்! கம்ப ராமாயணம்தான்! இப்படிச் சங்க கால இலக்கியங்கள் முதல் பி. ஆர். ராஜமய்யருடைய கமலாம்பாள் சரித்திரம் வரையில் எல்லாம் எங்கள் பேச்சில் புரளும். வாசுதேவ ஐயருக்குக் கனத்த குரல். பேச்சிலே இனிமை இராது. சர்வ சாதாரணமாகப் பேசினால் கூட சண்டைபோடுகிற மாதிரிதான் இருக்கும். நான் தாழ்ந்தே பேசுவேன். இவர் உரக்கவே பேசுவார். கையோங்கிவிடப் போகிறாரே என்றுகூட சில சமயங்களில் என்வீட்டிலுள்ளவர்கள் பயப்படுவார்கள். ஆனால் இவர் உள்ளம் வெள்ளை என்பது எனக்கல்லவோ தெரியும்? எப்படியென்றால், கள்ளச் சிரிப்பு என்பதை இவர் அறியவேமாட்டார். நான் அப்பொழுது அரசாங்க ஊழியனாயிருந்தேன். அதைநான் ஓர் அடிமைத்தளையாகக் கருதிவந்ததையும், வேண்டா வெறுப்புடன்தான் அதில் இருந்து வந்தேனென்பதையும், என் உள்ளமெல்லாம் இலக்கியத்திலும், அரசியலிலும், பத்திரிகை உலகத்திலும் ஈடுபட்டிருந்த தென்பதையும் வாசுதேவ ஐயர் நன்கு அறிந்து கொண்டிருந்தார். ஒருநாள் காலை என்னிடம் வந்து எனது நண்பர் கலியாண சுந்தர முதலியார் தேசபக்தன் என்ற ஒரு தினசரிப் பத்திரிகையை நடத்தப் போகிறாரென்று அறிகிறேன். அப் பத்திரிகையில் சேர்ந்து பணியாற்ற உனக்கு விருப்பமிருக்குமாயின் அவரிடம் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றார். திருவருள் கூட்டி வைப்பதாகக் கருதி உளம்பூரித்து உடன்பட்டேன். அப்படியே மறுநாளோ அதற்கு மறுநாளோ, காலை சுமார் ஏழரை மணிக்கு வாசதேவ ஐயரும் நானும் ராயப்பேட்டை சென்று முதலியாரைக் கண்டோம். உச்சிக் குடுமி; நெற்றியிலே பூசிய திருநீறு; முகத்திலே பூத்த புன்முறுவல்; உடல்பிலே சாம்பல் நிற வர்ணமுள்ள முழுக்கை பிளானல் ஷர்ட்; இடுப்பிலே நான்கு முழ வேஷ்டி; இந்தக் கோலத்தில் தான் முதன்முதலாக முதலியாரைக் கண்டேன். வாசுதேவ ஐயர், என்னை அறிமுகப்படுத்தி வைத்து, நான் வந்திருப்பதன் நோக்கத்தைச் சுருக்கமாகத் தெரிவித்தார். தேசபக்தன் தொடங்கு நாள் எந்த நாளோ அந்த நாளே தொடங்கி தாங்கள் அதில் சேர்ந்து பணியாற்றலாம் என்று முதலியார் என்னைப் பார்த்துக் கூறினார். என்ன ஆச்சரியம்! என்னை முன்பின் தெரியாது; என்னுடைய தகுதியைச் சிறிதுகூட பரிசீலனை செய்து பார்க்கவில்லை; இருந்தும் என்னை ஏற்றுக் கொண்டார். திருவருள் கூட்டி வைத்ததென்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? ãwF rhtjhdkhf ‘VnjD« üšfŸ vGâÆU¡»Ö® fsh? என்று என்னைக் கேட்டார் முதலியார். என்னுடைய முதல் வெளியீடாகிய கௌரீமணி என்ற சிறு நூலைக் கையிலே எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அதைக் கொடுத்தேன். அதுதான் என் உத்தியோக விண்ணப்பத்தாளாயமைந்தது. இங்கே ஒரு சிறிய விஷயம். ஊதியத்திற்காக எந்த உத்தி யோகத்தையும் நான் நாடியதில்லை; விண்ணப்பத்தாளை நீட்டி எந்த உத்தியோகத்தையும் பெற்றதில்லை. உத்தியோகம் என்னை நாடி வந்ததேயன்றி நான் உத்தியோகத்தை நாடிச் சென்றதே கிடையா தென்று சொன்னால், தற்பெருமை பாராட்டிக் கொள்வதாக வாசகர்கள் கருதிக்கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொள் கிறேன். மற்றும், எந்த உத்தியோகமாயினும், எந்த அலுவலாயினும் அதில் முழு மனத்துடன் தான் ஈடுபடுவேனே தவிர, அரைகுறை மனத்துடன் ஈடுபடுவதென்பதை அறியேன். மனம் வைத்து வேலை செய்ய முடியாதென்று தெரிந்தால், அந்த உத்தியோகத்திலிருந்து அல்லது அலுவலிலிருந்து விலகிக் கொண்டு விடுவேனே தவிர, அதிலேயே, எந்த ஒரு காரணத்திற்காகவும் உழன்று கொண்டிருக்க மாட்டேன். இந்த மனப்பான்மை என்னைப் பல சங்கடங்களுக்கு ஆளாக்கியிருக்கிறதென்று மட்டும் இங்குச் சுருக்கமாகக் கூறிக் கொண்டு மேலே செல்கிறேன். நான் கொடுத்த கௌரீமணி என்ற நூலின்மீது முதலியார் சிறிது கண்ணோட்டம் செலுத்திவிட்டு, தமிழ்ச் சொற்களை இன்னும் அதிகமாகப் பெய்து எழுதினால் நன்றாயிருக்கும் என்று கூறினார். அவர் உள்ளக் கிடக்கை இன்னதென்று உணர்ந்துகொண் டேன். கௌரீமணி என்ற அந்த நூலில் வடமொழிச் சொற்களை அதிகமாகப் புகுத்தியிருந்தேன். காரணம் வேறொன்றுமில்லை. எனக்கும் வடமொழியில் பரிச்சயம் உண்டு என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்ற அகந்தை மனப்பான்மை தான். அந்த நூல் வெளி யானபோது எனக்குப் பத்தொன்பது வயது. இறுமாப்பு தாண்டவ மாடிக்கொண்டிருந்த பருவம். ஆனால் அந்தத் தாண்டவம், என் உள்ளத்திலேதான் நடைபெற்றது; யார் முன்னிலை யிலும் நடைபெற வில்லை. என் தந்தையிடமிருந்து நான் பெற்ற செல்வம் பணிவு. எல்லோரிடத்திலும் பணிவு; எக் காலத்திலும் பணிவு என் பிறப் போடு ஒட்டி வந்த இந்தப் பணிவு, இடையிலே எழுந்த இறுமாப்பை அடக்கியாண்டதுபோலும். இப்பொழுது, அறியாமை யென்பது என்னிடம் பரிபூரணமாகக் குடிகொண்டிருக்கிற தென்பதை நன்கு அறிந்து கொண்டிருக்கிறேன். இஃதிருக்கட்டும். தேசபக்தனில் சேர்ந்துகொண்ட மூன்றாவது நாளே, வட மொழி கலவாத தமிழில், தூய தமிழில் எனக்கு எழுதத் தெரியு மென்பதை முதலியார் தெரிந்துகொண்டார்; ஆச்சரியப்பட்டாரோ என்னவோ தெரியாது; என் எழுத்திலே திருப்தியடைந்தார் என்பது மட்டும் தெரியும். இப்படித்தான் எழுதவேண்டும்; நமது பத்திரிகைக்கு ஏற்ற நடை என்று கூறி என்னைப் பாராட்டினார். அன்றைய தினத்திலிருந்து அவருடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவனானேன். தேசபக்தன் 7-12-1917இல் தொடங்கப் பெற்றது. மறுநாள் முதலியார் சேலத்திற்குப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அங்கு பிரின் கே. எ. துரைராஜா அவர்கள் தலைமையில் ஜடி கட்சி மகாநாடு கூடியது. அதற்கு எதிர்ப்பாக நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுமாறு முதலியார் அழைக்கப் பட்டிருந்தார். அதற்குச் செல்லுமுன் பத்திரிகையின் தலையங்கத்தை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார். உபதலை யங்கம், ஆசிரியக் குறிப்புக்கள் முதலியவைகளை எழுதும் பொறுப்பையும், மற்றச் செய்திகளை ஒழுங்குபடுத்திக் கொடுத்துப் பத்திரிகையை வெளிக்கொணரும் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்துச் சென்றார். பொதுவாக, எந்த மகாநாடு நடைபெற்றாலும் அந்த மகா நாட்டில் நிகழ்த்தப்பெறும் தலைமையுரையின் பிரதிகள் முன்ன தாகவே பத்திரிகைகளுக்கு அனுப்பப்படுமென்பதையும், மகாநாடு நடைபெறு கின்ற தினத்தன்று தலைமையுரையையும், அவசிய மென்று கருதினால் அந்தத் தலைமையுரையைப் பற்றிய கருத்துரை யையும் பத்திரிகைகள் வெளியிடுமென்பதையும், பத்திரிகைத் தொடர்புடையவர்கள் நன்கு அறிவார்கள். இந்த முறையையொட்டி, துரைராஜா அவர்களின் தலைமை யுரையைப் பற்றிய கருத்துரை தேசபக்தனில் உபதலையங்கமாக வெளிவந்தது. இதை எழுதியவன் நான்தான். சேலத்திலிருந்து திரும்பி வந்த முதலியார் இந்த உபதலையங்கத்தைப் படித்துவிட்டு இப்படித் தான் எழுதவேண்டும்; நமது பத்திரிகைக்கு ஏற்ற நடை என்று மேலே சொன்னவிதமாகக் கூறி என்னைப் பாராட்டினார். நானடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல வேண்டுமோ? சாதாரணமாக ஒரு பத்திரிகையில், தலையங்கங்கள், ஆசிரியக் குறிப்புக்கள் முதலியவற்றை எழுதும் பொறுப்பு, பத்திரிகைத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்களிடமே ஒப்படைக்கப் படுவது வழக்கம். ஆனால் எனக்கோ, பத்திரிகைத் துறை முற்றிலும் புதிது. தேச பக்தனில் வந்து சேருவதற்கு முன்னர், சில பத்திரிகை களுக்குக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தினசரிப் பத்திரிகை களைப் படிப்பதில் அலாதியான ஓர் ஆர்வம் எனக்குண்டு. இவற்றைத் தவிர வேறெவ் விதமான அனுபவமும், பத்திரிகைத்துறையைப் பொறுத்த மட்டில் எனக்குக் கிடையாது. அப்படியிருந்தும் முதலியார். தேசபக்தன் தொடங்கிய ஓரிரண்டு நாட்களிலேயே, உபதலையங்கங்கள், ஆசிரியக் குறிப்புக்கள் முதலியவற்றை எழுதும் பொறுப்பை எனக்கு அளித் தாரென்றால், என்மீது அவருக்கிருந்த அன்பையும் நம்பிக்கையையும் என்னென்று சொல்வது? இந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் களங்கம் உண்டுபண்ணக்கூடிய விதமாக நான் கனவிலும் நடந்து கொண்ட தில்லையென்று இங்கே பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னிபெசண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் (சுய ஆட்சி) இயக்கம் நாடெங்கணும் வலுத்து நின்றது. இதனைத் தமிழ் நாட்டில் உரமூட்டி வளர்த்தது தேசபக்தன். இந்த இயக்க சம்பந்தமான பல செய்திகளும் திரண்டு, பத்திரிகையின் முதல் பக்கத்தில் தினந் தோறும் காட்சி யளிக்கும். செய்திகளென்றால் உப்புசப்பில்லாத செய்திகளல்ல. வீரச்சுவையும் நகைச்சவையும் இவற்றில் செறிந்து கிடக்கும். இயக்க சம்பந்தமான சிறுசிறு கட்டுரைகளென்ன, கவிதைகளென்ன, மேற்கோள்களென்ன, இன்ன பலவும் இந்த முதற்பக்கத்தில் அழகுற வெளியாகும். இந்த முதற்பக்கத்தை நிரப்பும் பொறுப்பு என்னுடையதாகவே இருந்தது. செய்திகளையெல்லாம் திரட்டி, சுயராஜ்யப் போர்முனையிலிருந்து - ஒரு போர்வீரன் எழுதுவது என்ற தலைப்பின்கீழ் கொடுத்து வந்தேன். சில நாட்களில் - அநேகமாக வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது இருக்கும். - இந்த முதற்பக்கத்தின் மையத்தில் நாற்புற வரம்பு கட்டி, சங்க நூல்களிலிருந்து. தமிழர்களின் வீரத்தைக் குறிக்கும் ஏதேனும் ஒரு செய்யுளை, சிறு குறிப்புரையுடன் இடம்பெறச் செய்வேன். முதலியார் இவற்றைக் கண்டு மகிழ்வார். சங்க நூல்களில் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு என்பதை நன்கு அறிந்து எனக்கு மேலும் மேலும் உற்சாகமூட்டுவார். என்மீது அவர் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் வளரலாயின. இந்த அன்பையும் நம்பிக்கையையும் பலவிதமாக, பல சமயங்களில் புலப்படுத்தியிருக்கிறார். தேசபக்தனில், ஆசிரியக் குறிப்புக்கள் அரிமா நோக்கு என்ற தலைப்பின்கீழ் வெளிவரும். அரிமா நோக்கு என்பதற்குச் சிங்கப்பார்வை என்று அர்த்தம். சிங்கப் பார்வை எப்படி நேரியதாயிருக்குமோ அப்படியே இந்த அரிமா நோக்கின் கீழ் வெளிவரும் கருத்துக்களும் நேர்மை யுடையனவாயிருக்குமென்பதே தாத்பரியம்! இந்த அரிமா நோக்கின் பெரும்பகுதியை நானே எழுத வேண்டுமென்பது முதலியாரின் விருப்பம். ஆனால் இதை வெளிப்படையாகத் தெரிவிக்கமாட்டார்; எனக்கு மட்டும் சூசகமாகத் தெரிவிப்பார். வெளிப்படையாகத் தெரிவித்தால், என் எழுத்துக்களுக்கு, முதலியார் முக்கியத்துவம் கொடுக்கிறாரென்றும், எனக்கு அதிக சலுகை காட்டுகிறாரென்றும் மற்ற உதவி ஆசிரியர்கள் கருதி, என் மீது அனாவசியமாகப் பொறாமைப்பட ஏதுவுண்டாகுமல்லவா? இதற்கு முதலியார் இடங்கொடுக்க விரும்பவில்லை. மற்றும், அரிமா நோக்கின் கீழ் மற்ற உதவி ஆசிரியர்கள், குறிப்புக்கள் எழுதினால் அவற்றை, முதலில் என்னைச் சரிபார்க்கச் செய்வார் முதலியார்; பிறகு தாம் சரிபார்ப்பார். இதனால் சில சமயங்களில், உதவி ஆசிரியர்கள் சிலருக்கு என்மீது வருத்தம் ஏற்பட்டதுண்டு. இவனென்ன, எங்கள் எழுத்தைச் சரி பார்ப்பது? ïtD« v§fis¥nghš X® cjÉ MáÇa‹ jhnd? என்ற எண்ணந்தான் இந்த வருத்தத்திற்குக் காரணம். நான் வேகமாக எழுதுவேன். தினசரிப் பத்திரிகையில் நின்று நிதானமாக எழுதிக்கொண்டிருந்தால் முடியுமா? மொழிபெயர்ப்பாயினும் சரி, கட்டுரைகளாயினும் சரி,வெகு சீக்கிரத்தில் எழுதி முடிப்பேன். இதற்குக் காரணம், என்னிடம் ஏதோ அபூர்வமான சக்தி அமைந்திருந்த தென்பதல்ல; எழுதவேண்டுமென்பதிலே எனக்கிருந்த ஆர்வமும் உற்சாகமுந்தான். இதனால், என் வேலை அதிகப்பட்டது. ஆனால் நான் சலிப்புக் கொள்வதேயில்லை. முதலியாருக்கு இது நன்கு தெரியும். என்மீது அவர் கொண்டிருந்த அன்பு பெருகுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிருந்தது. மகாநாடுகள், பொதுக்கூட்டங்கள் முதலியவை காரணமாக முதலியார் அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்லும்படியாயிருக்கும். அந்தக் காலங்களில், பத்திரிகையின் தலையங்கங்களை எழுதும் பொறுப்பு பெரும்பாலும் என்னிடமே வந்து சேரும். தேசபக்தன், நவசக்தி இரண்டிலும் இப்படித்தான். இரண்டிலும் நான் சேவை செய்தவன் என்பதை இங்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தலையங்கங்கள், உபதலையங்கங்கள், தேசபக்தன் அரிமா நோக்கு, நவசக்தி இடியேறு இவைகளை எழுதுகிற போது முதலியாருடைய நடையையே பின்பற்றுவேன், அவர் எழுதியதா, நான் எழுதியதா என்று வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடிகூட இருக்கும். ஒரு பத்திரிகையின் அபிப்பிராயங் களைத் தெரிவிக்கும் பகுதி எல்லா வகையிலும் ஆசிரியருடைய தாகவே இருக்க வேண்டுமென்பது என் கொள்கை. இதை நான் கண்டிப்பாகப் பின்பற்றி வந்தேன். இது சம்பந்தமாக, ருசிகரமான இரண்டு மூன்று செய்திகளை இங்குச் சொல்லிக்காட்ட விழை கிறேன். அந்தக் காலத்தில், இந்தியாவுக்குச் சுயராஜ்யம் நல்க வேண்டு மென்று, இங்கிலாந்தில் கிளர்ச்சி செய்தல் அவசியம் என்ற ஒரு கருத்து நாட்டிடையே நிலவிவந்தது. இதற்கிசைய, இந்தியாவி லிருந்து ஐவர் அடங்கிய ஒரு தூது கோஷ்டி இங்கிலாந்துக்குப் புறப்பட்டது. இந்த ஐவர் யார்? (1) லோகமான்ய பால கங்காதர திலகர் (2) விபின சந்திரபாலர் (3) நரசிம்ம சிந்தாமணி கெல்கார் (4) ஜி. எ. கபர்தே (5) தேஷ்பாண்டே. இந்த ஐவரும் கொழும்பு வழியாக இங்கிலாந்து செல்வதென்று ஏற்பாடாகி யிருந்தது. கொழும்பு செல்கிற வழியில் இவர்கள் 1918ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் சென்னை போந்தனர். இவர்களை வரவேற்று தேசபக்தன், தலையங்கப் பகுதியில் ஐந்து கட்டுரைகள் வெளியிட்டது. முதலியார் திலகரைப்பற்றித் தலையங்கம் எழுதினார். நான் விபினசந்திர பாலரைப்பற்றி உபதலையங்கம் எழுதினேன். மற்ற உதவியாசிரி யர்கள், மற்ற மூவரைப் பற்றியும் எழுதினார்கள். படித்த வாசகர் களிற் சிலர், திலகரும் பாலரும் ஒரே நடையில் காட்சி யளிக்கிறார் களென்று தம்மிடம் தெரிவித்ததாக முதலியார் என்னிடம் தெரி வித்தார். இதனால்தான் இதை இங்குக் குறிப்பிடுகிறேன். 1919ஆம் வருஷம் ஆகட் மாதம் கடைசி வாரத்தில் திருச்சி யில் சென்னை மாகாண அரசியல் மகாநாடு ராமநாதபுரம் ராஜா தலைமையில் கூடியது. இதற்கு முதலியார் சென்றிருந்தார். மகா நாட்டின் தொடக்க நாளன்று, தேசபக்தனில், தலைவருடைய பேருரையும், அதைப்பற்றிய தலையங்கமும் வெளியாயின. தலை யங்கத்தை எழுதியவன் நானே. அதில் தலைமையுரையின் சில பகுதிகள் கண்டிக்கப்பட்டிருந்தன. முதலியாரே அந்தத் தலை யங்கத்தை எழுதியிருப்பதாக சேதுபதி மன்னர் கருதிக்கொண்டு விட்டார். மகா நாட்டின் இரண்டாவது நாள் பிற்பகல் நடவ டிக்கைகள் துவக்கமாவதற்கு முன்னர், சேதுபதி மன்னர் தலையங்கத்தைப் படித்துவிட்டு, முதலியாரைப் பார்த்து என்ன முதலியார்வாள், என்னை இப்படித் தாக்கி எழுதியிருக்கிறீர்களே என்று கேட்டார். முதலியாருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால், தலையங்கத்தில் என்ன எழுதியிருக்கிற தென்று அவருக்குத் தெரியாது. அதை அவர் இன்னும் பார்க்கவில்லை. இந்த நிலையில் என்ன பதில் கூறுவார்? புன்சிரிப்போடு மௌனஞ் சாதித்துவிட்டார். பிறகு வேறோர் அன்பரிடமிருந்து பத்திரிகையை இரவல் வாங்கிப் படித்த பிறகுதான், தலையங்கத்தில் என்ன எழுதப் பட்டிருக்கிற தென்று தெரிந்துகொண்டார். மகாநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு, முதலியார், இந்தச் சம்பவத்தை நிரம்பச் சுவையுடன் பிர தாபித்தார். என்னுடைய நடையைப்போல உங்கள் நடை இருப் பதனால் எனக்கல்லவோ ஆபத்தாயிருக்கிறது என்று சிரித்துக் கொண்டே கூறினார். அவர் கூறித்தான் இந்தத் திருச்சி மகா நாட்டு நிகழ்ச்சி எனக்குத் தெரியும். நவசக்தியிலும் இதேமாதிரி முதலியார் இல்லாத சமயங்களில் நான் தலையங்கங்கள் எழுதி வந்ததன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடமான நிலைமைகள் பல. 1922ஆம் வருஷம் ஜூலை மாதம் திருநெல்வேலி ஜில்லா மகாநாடு, முதலியார் தலைமையில் நடைபெற்றது. முதலியாரின் தலைமையுரையைப்பற்றி திராவிடன் பத்திரிகை தலையங்கம் தீட்டியிருந்தது. அதில், முதலியாருக்குச் சரித்திர ஞானம் இல்லை என்னும் கருத்து காணப்பட்டது. இஃது என் மனத்தை உறுத்தியது. எனவே நவசக்தியில் தீராவிடம் என்ற தலைப்புக் கொடுத்து திராவிடன் கூற்றை மறுத்து ஓர் உபதலையங்கம் எழுதினேன். இதற்குப் பதில், திராவிடன் நவைசக்தி (நவை - குற்றமுள்ள) என்ற தலைப்புக் கொடுத்து எழுதியது. திராவிடன் ஆசிரியர் அவ்வப் போழ்து நவசக்தி காரியாலயம் போந்து முதலியாருடன் அளவளாவிச் செல்வதுண்டு. இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், திராவிடன் ஆசிரியர், தீராவிடம் என்று தலைப்புக் கொடுத்து எழுதியது முதலியாரல்ல என்று குறிப்பாகத் தெரிந்து கொண்டார். இரண்டு மூன்று தினங்கள் கழித்து, திராவிடன் பத்திரிகையில், தீராவிடம் என்ற தலைப்புக்கொண்ட நவசக்தி உப தலையங்கம் ஒரு பார்ப்பனரால் எழுதப்பட்டதென்ற கருத்தடங்கிய ஒரு கடிதம் வரையப்பட்டிருந்தது! முக்கியமான செய்திகளுக்கோ, கட்டுரைகளுக்கோ ஆசிரியப் பகுதியில் வரும் குறிப்புக்களுக்கோ நான் தலைப்புக் கொடுப்பதைத் தான் முதலியார் பெரிதும் விரும்புவார்; அந்தத் தலைப்புக்களைக் காரியாலயத்திற்குப் போதரும் குறிப்பிட்ட சில நண்பர்களிடம் படித்துப் படித்துக் காட்டுவார். தமது கடைசி நாட்கள் வரை, இந்தத் தலைப்புக்கள் சிலவற்றை அவர் மறக்கவேயில்லை. வரும் நண்பர்களிடம் அவற்றைச் சொல்லிக் காட்டி மகிழ்வார். அவருடைய இந்த மகிழ்ச்சியில் பங்கு கொண்ட நண்பர்களிற் சிலர், இதைப் பற்றி என்னிடம் தெரிவித்திருக்கின்றனர். ஒரே ஓர் உதாரணத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். ஜாலியன் வாலா பாக் படுகொலைக்குக் காரணமாயிருந்த தளபதி டையர் என்பவனுக்கு, அவனுடைய வீரச்செயலைப் பாராட்டுமுகத்தான், இங்கிலாந்தில் நல்ல வேலைப்பாடமைந்த ஒரு வாள் பரிசாக வழங்கப் பட்டது. நாற்புறத்திலும் சுவர்களால் சூழப்பட்டிருந்த ஒரு தோட்டத்தில் கூடியிருந்த நிரபராதிகளான மக்களை, எவ்வித காரணமுமில்லாமல், முன்னறிவிப்பும் கொடாமல் சுட்டுக்கொன்ற மாபாவி ஒரு வீரனா? அவனுக்குப் பரிசா? அந்தப் பரிசும் ஒரு வாளா? என்ன கேவலம்? இங்கிலாந்து மக்கள், வீரத்தின் மாண்பு புலனாகாத மனம் படைத்தவர்களா? இன்னோரன்ன கருத்துக்கள் அடங்கிய ஓர் உபதலையங்கத்தை நவ சக்தியில் எழுதினேன். வெட்டவோ? வீசவோ? என்ற தலைப்புக் கொடுத் திருந்தேன். முதலியாருக்கு இந்தத் தலைப்பு மிகமிகப் பிடித்திருந்தது. அடிக்கடி, வரும் நண்பர்களிடம் இத்தலைப்பைப் பற்றிக் கூறுவார். தேசபக்தனுக்கும் சுதேசமித்திரனுக்கும், செய்திகளை முன்கூட்டி வெளியிடுகின்ற விஷயத்தில் அதிக போட்டி ஏற்பட்டது. இது காரணமாக, தேசபக்தன் ஆசிரியக் குழுவினர் சுறுசுறுப்பாக வும் நிறையவும் வேலை செய்யவேண்டிய அவசியத்திற்குட்பட்டனர். சகோதர உதவி ஆசிரியர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பது, அவர்கள் எழுதியவைகளை ஒழுங்காக அச்சகத்திற்கு அனுப்புவது முதலிய பல அலுவல்களும் என் பொறுப்பிலேயே விடப்பட்டன. இதனால் என் வேலையும் பொறுப்பும் அதிகப்பட்டதோடு, சகோதர உதவி ஆசிரியர்களின் கோப பாணங்களும் சாப அம்புகளும் என்மீது விழுந்த வண்ணமிருந்தன. முதலியார், யாரையும் கண்டிப்பாக வேலை வாங்கமாட்டார். கண்டிப்பு என்பது அவரது அகராதியில் இல்லாத வார்த்தை. எல்லோரிடத்திலும் அவர் சாது வாகவே நடந்துகொண்டு விடுவார். நானோ, வேலை விஷயத்தில் மகா கண்டிப்புக்காரன். பத்திரிகை, நிறைய விஷயங்களுடன் நல்ல முறையில் வெளிவர வேண்டுமென்ற ஒன்றிலேயே என் அறிவு, மனம்,செயல் எல்லாம் ஒன்றி நிற்கும். செய்யவேண்டிய வேலையைப் பொறுத்தமட்டில், முதலியாரானாலுஞ் சரி, என்னைக் காட்டிலும் வயதிலோ அனுப வத்திலோ முதிர்ந்த மற்ற உதவி ஆசிரியர்களானாலுஞ் சரி, எல்லோ ரும் எனக்கு ஒன்றுதான். முதலியாருக்கு, என் கண்டிப்பு தோரணை மிகவும் பிடிக்கும். ஆனால் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ள மாட்டார். உதவி ஆசிரியர்கள் என் மீது குறை கூறுவார்களானால் அதை ஒரு காதிலே வாங்கி மற்றொரு காதால் விட்டுவிடுவார். மறைமுகமாக என்னை உற்சாகப்படுத்தியும் பாராட்டியும் வருவார். இன்னின்ன மாதிரி வேலைகள் நடைபெற வேண்டுமென்று நான் முதலியாரிடம் தனிமையில் ஒரு திட்டம் போட்டுக் காட்டுவேன். அதை அவர் அங்கீகரிப்பார். அவர் அங்கீகாரம் பெற்ற பின்னரே அதை நடைமுறைக்குக் கொணர்வேன். அன்றாடம் வரும் தந்திச் செய்திகள் அன்றாடம் பத்திரிகை யில் வெளியாகிவிடவேண்டும்; அன்றாடச் செய்திகளை ஆதார மாகக் கொண்டே அன்றாட ஆசிரியக் குறிப்புக்கள் எழுதப்பெறல் வேண்டும். வெளியூர் அன்பர்கள் அனுப்பும் கடிதங்களோ, கட்டுரைகளோ உடனுக்குடன் பிரசுரமாதல் வேண்டும்; இப்படிச் சில நியமங்களை நடைமுறையில் கொண்டு வருவதிலேயே நான் நாட்டமுடைய வனாயிருந்தேன். இது விஷயத்தில் என்னோடு ஒத்துழைக்க, உதவி ஆசிரியர் சிலர் மறுத்த துண்டு. ஓர் ஆசிரியர், அசோசியேடெட்பிர தந்திச் செய்திகளில் சிலவற்றை மட்டும் சுருக்கி மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டு, மற்ற வற்றை அப்படியே சுருட்டிச் சுருட்டி மேஜை டிராயருக்குள் திணித்து விடுவார், இதை நான் ஒருநாள் கண்டுவிட்டேன். அவரிடம் நேர் முகமாக இதைச் சொல்லிக்காட்ட விரும்பாமல், அன்றாடம் வரும் தந்திச் செய்திகள் பூராவும் அன்றாடமே பிரசுரமாகுமாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன் என்று ஆங்கிலத்தில் ஒரு சீட்டு எழுதி அவரிடம் கொடுப்பித்தேன். இதற்கு அவர் அந்தச் சீட்டி லேயே இது ஓடுகிற குதிரையை சவுக்கால் அடிப்பது மாதிரி இருக் கிறது என்று ஆங்கிலத்திலேயே எழுதி அனுப்பிவிட்டார்! இன்னோர் ஆசிரியர், சில சமயங்களில் அரிமா நோக்கின் கீழ் சில குறிப்புக்கள் எழுதுவார். அப்பொழுது அவர், முந்திய நாள் நியு இந்தியா பத்திரிகையில் ஆன் தி லைன் (On the Line) என்ற தலைப்பின்கீழ் வெளி வந்திருக்கும் ஆசிரியக் குறிப்புக்கள் சில வற்றை அப்படியே மொழி பெயர்த்துக் கொடுத்துவிடுவார். இஃது எனக்குப் பிடிப்பதில்லை. வெளியாகின்ற கருத்து ஒன்றாயிருந் தாலும் கையாள்கின்ற பாஷை வேறாயிருக்க வேண்டுமென்பது என் கோட்பாடு. அன்றாடம் கிடைக்கும் தந்திச் செய்திகளை ஆதார மாகக்கொண்டு அன்றாடம் ஆசிரியக் குறிப்புக்கள் எழுதப்பெற வேண்டுமென்று பலமுறை அவருக்கு ஜாடையாகச் சொல்லி வந்தேன். தம்மைப் பற்றி மிகவும் உயர்வாகக் கருதிக் கொண்டிருந்த அவர், என் சொல்லுக்கு மதிப்புக் கொடாமலே எழுதி வந்தார். இதை முதலியாரிடம் தெரிவித்தேன். முதலியார் அந்த உதவி ஆசிரியரிடம் இரக்கம் காட்டி வந்தார். இந்த இரக்க உணர்ச்சி காரணமாகவே அவரை ஓர் உதவி ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். இஃதெனக்கு நன்கு தெரியும். முதலியார், அந்த உதவி ஆசிரியரை நேரே கூப்பிட்டுக் கண்டிக்க விரும்பவில்லை. எனவே, நீங்கள் கண்டிப்பாக இருங்கள் என்று எனக்குச் சொல்லி விட்டார். ஆசிரியக் குறிப்புக்கள், நியு இந்தியா பத்திரிகையின் மொழி பெயர்ப்பாக இருக்கக்கூடாது; நமக்கு வரும் தந்திச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு சொந்த நடையில் எழுதப் பெற வேண்டு மென்று அவருக்கு ஒரு சீட்டு எழுதிக் கொடுத்தேன். ïj‰F mt® ïªj khâÇahd Éõa§fËš Tlth c§fŸ c¤juî?என்று பதில் எழுதி யனுப்பினார்! இதை முதலியாரிடம் காட்டினேன். எல்லாம் சரிப்பட்டுவிடும் என்று சுருக்கமாகக் கூறிவிட்டார். பிறகு அந்த உதவி ஆசிரியரைத் தனியாக வரவழைத்து ஏதேனும் சொன்னாரோ என்னவோ எனக்குத் தெரியாது. மறுதினத்திலிருந்து அந்த உதவி ஆசிரியர், என் விருப்பப்படியே ஆசிரியக் குறிப்புக் களின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்து வந்தார். மற்றோர் ஆசிரியர், வெளியூர் நிருபர்கள் அனுப்பும் செய்தி களைத் தணிக்கை செய்து வெளியிடச் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அந்தப் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றி வரவில்லை. வரும் செய்திகளில் பெரும்பாலன வற்றை அப்படியே தமது மேஜை அறைக்குள் அடக்கம் செய்து விடுவார். இதைப் பலமுறை நான் கவனித்தேன். என்ன செய்வது? அவரிடம் நேரில் சொல்லிக் கண்டிக்க எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால், என்னைக் காட்டிலும் வயதிலும் பத்திரிகை அனுப வத்திலும் அவர் மூத்தவராயிருந்தார். முதலியாரிடம் முறையிட்டுக் கொண்டேன். வெளியூர் நிருபர்களும், தாங்கள் அனுப்பும் செய்திகள் பிரசுரமாவதில்லையே என்று கடிதங்கள் எழுதி வந்தார்கள். என்ன செய்வார் முதலியார்? ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருக் கிறவர்கள், தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை யுடையவர் அவர். அந்த உதவி ஆசிரியரோ, பத்திரிகைத் துறைக்குப் புதியவரல்லர். அவரே இப்படிச் செய்தால் எப்படி என்று மனம் வருந்தினார். வேறு வழியில்லை. ஒரு நாள், அந்த உதவி ஆசிரியர் மேஜையருகில் வந்து நின்றுகொண்டு, வெளியூர்ச் செய்திகள் இன்னும் வெளி வராமல் எவ்வளவு பாக்கியிருக்கின்றன. பார்க்கலாம் என்று சொல்லிய வண்ணம் மேஜை டிராயரை இழுத்தார்; கத்தை கத்தையாக இருந்த காகிதங்களை மேஜைமீது எடுத்துப் போட்டார். ‘ï¥goí« brŒayhkh? என்று சொல்லிக் கொண்டே தம் அறைக்குள் சென்றுவிட்டார். அந்த உதவி ஆசிரியர் முகம் சிறுத்து விட்டது. ஏன்? என்மீது கோபம். நான்தான் இப்படிச் செய்யச் செய்தேன் என்று அவர் கருதினார். நடைமுறையிலே நான் கொண்டு வந்த மற்றொரு கண்டிப் பான நியதி, தலையங்கத்தை யார் எழுதியதென்று வெளியார் யாருக்கும் சொல்லக்கூடாதென்பது. தலையங்கத்தை யார் எழுதியபோதிலும், அஃது ஆசிரியர் எழுத்தாகவே, பொதுவாகப் பத்திரிகையின் கருத்தாகவே கொள்ளப்பட வேண்டுமென்பது என் கொள்கை. இதை முதலியார் பெரிதும் ஆதரித்தார். இப்படி எத்தனையோ சம்பவங்கள். நவசக்தியிலும் இப்படித் தான். உதவி ஆசிரியர்களின் எரிச்சலுக்குப் பலமுறை ஆளாகியிருக் கிறேன். காரணம், பத்திரிகை ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதில் நான் காட்டி வந்த கண்டிப்புத்தான். முதலியாருடைய நடையைப் பின்பற்றி வந்ததனாலும், பத்திரிகாலயத்தில் கண்டிப்பான தோரணையில் நடந்து வந்ததனா லும், என்னைத் தவறாக நினைத்த அன்பர் அநேகர். எனது நண்பர் வ. ரா. என்று அழைக்கப்பட்டு வந்த திருப் பழனம் வ. ராமசாமி ஐயங்காரை, 1923ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், காக்கினாடாவில் மௌலானா முகம்மதலி தலைமையில் நடை பெற்ற காங்கிரஸின்போது முதன்முதலாகச் சந்தித்தேன். அதற்கு முன்னர், என்னை அவர் கேள்வி வாயிலாகவே அறிந்திருந்தார்; என்னை நேரில் பார்த்ததில்லை. என்னைப் பார்த்து இன்னான் என்று தெரிந்த கொண்டதும், அருகிலிருந்த ஓர் அன்பரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்கையில் இவர் கலியாண சுந்தர முதலியாரைப் போலவே கொடுந்தமிழ் எழுதுவதில் மகா கெட்டிக் காரர் என்று கூறினார். அவர் கூறியதில் ஏளனமும் அலட்சியமும் கலந்திருந்தன. முதலியார் விஷயத்திலோ, என் விஷயத்திலோ ஏளனமல்ல; அலட்சியமல்ல; கடினமான தமிழ்நடை விஷயத்தில். கடுந்தமிழ் என்றுகூட அவர் சொல்லவில்லை; கொடுந்தமிழ் என்றே கூறினார். அவ்வளவு கோபம் முதலியார் - என் நடை மீது! உண்மை யில் முதலியார் எழுதி வந்தது கொடுந்தமிழுமல்ல; கடுந்தமிழுமல்ல; செந்தமிழ்; இலக்கண வரம்புக் குட்பட்டுக் களிநடனம் புரிகின்ற இனிய தமிழ். ஆனால் வ. ரா. வுக்கு இலக்கணமென்றால் வேப்பங் காய். அதைக் கட்டிச் சுருட்டிக் கடலில் எறிந்துவிடவேண்டு மென்று ஆத்திரம் ஆத்திரமாகப் பேசுவார். வ. ரா. வைப்போல் இன்னும் பல நண்பர்கள், என்னுடைய நடையைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். பத்திரிகையில் செய்திகள் நல்ல தலைப்புக்களுடன் அழகாக வெளியாக வேண்டுமென்ற விஷயத்திலும் செய்திகளை வெளியிடும் விஷயத்தில் மற்றப் பத்திரிகைகளை முந்திக்கொள்ள வேண்டுமென் பதிலும் நான் காட்டி வந்த கண்டிப்பு, சில சமயங்களில் முதலியார் மீதும் பாய்வதுண்டு. அப்பொழுதுதெல்லாம் சிறிதுகூட முகஞ் சுளித்துக் கொள்ள மாட்டார்; நான் அவரை அதிகாரம் செய்வதாக வும் கருதிக் கொள்ளமாட்டார். இவைகளுக்கு மாறாக முகத்திலே புன்சிரிப்பு தவழ என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டே நடப்பார். அன்பையும் ஒழுங்கையும் அடிப்படையாகக் கொண்டது இந்த உத்தரவு என்பதை உணர்ந்த பெருந்தகையல்லவோ அவர்? முக்கிய மான செய்திகள் நிறைய வந்து அவைகளை அன்றே வெளியிட்டாக வேண்டிய நாட்களில் இன்றைய தினம் தங்கள் தலையங்கத்தை ஒன்றேகால் பத்திக்குள் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்று முதலியாரிடம் கூறுவேன். ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்கவே மாட்டார். அப்படிக் கேட்க அவருக்கு உரிமையுண்டு; அதிகார முண்டு. ஆயினும் கேட்கமாட்டார். காரணத் தோடுதான் கூறுகிறான் இவன் என்று அறிந்துகொண்டு நான் சொல்லும் வரம்புக்குட்பட்டு தலையங்கத்தை முடித்துக்கொண்டுவிடுவார். இதற்குக் காரணம் என்மீது கொண்டிருந்த அன்பு அல்ல; என் மீது வைத் திருந்த நம்பிக்கையென்று சொல்வது ஓரளவுக்குத்தான் பொருந்தும். பத்திரிகை நல்ல முறையில் வெளியாக வேண்டுமானால், அதற்கு ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்த அனைவரும் ஒருவித ஒழுங்குக்கு, ஒருவித கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடப்பதில், தாம் மற்றவர் களுக்கு வழிகாட்டியாயிருக்க வேண்டுமென்று அவர் கருதி வந்ததுதான் காரணம். தவிர, சில நாட்களில், இன்று என்ன தலையங்கம் எழுத லாம் என்று என்னையும் ஓரிரண்டு உதவி ஆசிரியர்களையும் கேட்பார். கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். கடைசியில் என் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து அதையே பெரும்பாலும் ஏற்றுக் கொள்வார்; அப்படியே எழுதுவார். ஏகதேசமாக என் கருத்து செல்லுபடியாகாமற் போவதுமுண்டு. இதற்காக நான் சிறிதும் வருந்தமாட்டேன் என்று முதலியாருக்கு நன்றாகத் தெரியும். என்மீது முதலியாருக்கிருந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் எத்தனையோ உதாரணங்களை நான் சொல்லிக் காட்ட முடியும். நவசக்தி காரியாலயத்தில், மொத்தம் நாலைந்து நாற்காலி களுக்கு மேலிரா, இவற்றுள் ஒன்றில் நான் அமர்ந்து பணிபுரிவேன். அநேகமாக, காரியாலயத்திற்குத் தினசரி காலை பத்து மணிக்குமேல் பதினோரு மணிக்குள் வருவேன். அப்பொழுது முதலியாருடன் வெளியூர் அன்பர் சிலர் பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் எல்லா நாற்காலிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்கள். என்னுடைய நாற்காலியும் பறிமுதலாகியிருக்கும். நான் வந்ததும் முதலியார்,தமது நாற்காலி யினின்று எழுந்து நின்றுகொண்டு இதில் அமருங்கள் என்று கூறுவார். முதலியார் எழுந்து நின்றதும், பேசிக்கொண்டிருக்கும் அன்பர் களும் எழுந்து நிற்பார்கள். இஃதொரு வேடிக்கைக் காட்சி யாயிருக்கும். நான் வேண்டா மென்று மறுத்து என் பணி செய்யுமிடத்திற்குப் போக முற்படுவேன். அப்பொழுது முதலியார். காரியாலயத்துப் பையனொரு வனைக் கூப்பிட்டு, தமது நாற்காலியை எடுத்துப்போய் எனக்குப் போடச் சொல்லுவார். நான் மீண்டும் மறுத்துவிட்டு, ஜாடையாக அச்சுக் கோக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவேன். முதலியாரும் இதை ஜாடையாகப் புரிந்து கொள்வார். இப்படித் தமது நாற்காலியை எனக்கு விட்டுக் கொடுக்க முற்படுவதோடல்லாமல், முதலியார், வந்திருக்கும் அன்பர்களிடம் இவர்தான் எங்கள் சர்மா என்று என்னை அறிமுகப்படுத்தி வைப்பார்: நிரம்ப அடக்கமுடையவர்; வேகமாக எழுதுவார்; என்று பல வகையாகச் சிலாகித்துப் பேசுவார். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில்தான் நான் ஜாடையாக அச்சுக் கோக்கும் இடத் திற்குச் சென்றுவிடுவேன். இவையெல்லாம் சிறிய விஷயங்கள்தான். ஆனால் இவற்றி லல்லவோ முதலியாரின் பெருந்தன்மை மிளிர்கிறது? காந்தியடிகளின் பேச்சோ, எழுத்தோ எதுவாயிருந்தாலும் அதை நானே தமிழ்ப்படுத்தித் தரவேண்டுமென்பது முதலியாரின் அன்பான கட்டளை. இதுமட்டுமல்லாமல், அஃது அச்சு வாகன மேறுவதற்கு முன்னர் ப்ரூப்புகளை நானே சரிபார்க்க வேண்டு மென்று கூறுவார். உடல்நிலை காரணமாக நான் காரியாலயத் திற்குச் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில்கூட, காந்தியடிகள் சம்பந்தமான ப்ரூப்புகள் மட்டும் என் வீட்டுக்கு வந்து திருத்தம் பெற்றுச் செல்லும். இது விஷயத்தில் முதலியார் மிகவும் கண்டிப் பாகவே இருந்தார். தற்பெருமைக்காக இதை நான் இங்கே சொல்லிக் கொள்ளவில்லை. முதலியார் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாகவே இதை இங்குத் தெரிவித்துக் கொள் கிறேன். முதலியாருக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பின் தொடக்க காலத்திலேயே அவருடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் நான் உரிய வனானேன் என்பதற்கு இன்னும் ஒரு சிறிய உதாரணம். முதலியாரின் தர்ம பத்தினி கமலாம்பிகை அம்மையார், தேசபக்தன் தொடங்கிச் சுமார் ஒன்பது மாத காலம் வரையில்தான் உயிரோ டிருந்தார். இந்த ஒன்பது மாத காலத்தில் பிந்திய சுமார் நான்கு மாதங்கள், முதலியாரின் உள்ளத்தை எப்படியெல்லாம் உலுக்கி விட்டன என்பது எனக்கு ஒருவாறு தெரியும். ஏனென்றால் அப் பொழுது அம்மையாரை எலும்புருக்கி நோய் அதிகமாக வாட்டி வந்தது. அவருடைய பரிதாப நிலையை நினைத்து நினைத்து முதலியார் ஆழ்ந்த பெருமூச்சு விடுவார்; கண்களில் நீர்மல்கும்; ஆனால் அது தாரையாக வழிந்து ஓடாமல் தடுத்துக் கொள்வார்; கண்களை அடிக்கடி துடைத்துக் கொள்வார். அவருடைய தன் னடக்க சக்தியை நான் அப்பொழுது நன்கு தெரிந்துகொண்டேன். முதலியார் குடும்பம் ஏக குடும்பமாயிருந்தபடியால், சில சமயங்களில் அவருக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுவிடும். குடும்ப நிருவாகம், முதலியாரின் தமையனார் திரு வி. உலகநாத முதலியாரின் பொறுப்பிலும். தாயார் சின்னம்மாளின் மேற்பார்வை யிலும் பெரும் பாலும் நடைபெற்று வந்தது. குடும்ப விவகாரங் களில் முதலியார் அதி மாகத் தலையிடவோ, தன்னிச்சையாக நடந்துகொள்ளவோ மாட்டார். நோய் வாய்ப்பட்டிருக்கும் தமது மனைவியாருக்கு, தாம் விரும்புகின்ற அல்லது அந்த அம்மையார் விரும்புகின்ற பழம் முதலியவைகளை வாங்கிக் கொடுக்க வேண்டு மென்று தமையனாரிடம் நேரில் சொல்லக் கூச்சப்படுவார். எனவே என்மூலம் தமது விருப்பத்தைத் தமையனாரிடம் தெரிவிப்பார். சில சமயங்களில் சீட்டெழுதிக் கொடுப்பார்; சில சமயங் களில் வாய் மொழியாகவே சொல்லியனுப்புவார். இங்ஙனம் சின்னசாமிக்கும் பெரியசாமிக்கும் நான் தூதுசென்ற சந்தர்ப்பங்கள் பல. பெரியசாமி என்பது உலகநாத முதலியாருக்கும் சின்னசாமி என்பது கலியாண சுந்தர முதலியாருக்கும் வீட்டிலே வழங்கப்பட்டு வந்த பெயர்கள். தாயார் சின்னம்மாள், இந்தப் பெயர்களாலேயே இருவரையும் அழைத்து வந்ததை என் செவியாரப் பலமுறை கேட்டிருக்கிறேன். இந்தப் பெயர்களாலேயே இருவரும் ஒருவரை யொருவர் அழைத்துக்கொள்வர். 1919ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பஞ்சாபில் படுகொலை நடைபெற்றதல்லவா, இதைப்பற்றி காங்கிர கமிட்டி விசாரனை நடத்தி ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை மொழி பெயர்க்கப்பட்டு நூல் வடிவாக தேசபக்தன் காரியாலயத்தினரால் வெளியிடப்பட்டது. இதற்கு முதலியார் ஒரு முகவுரை அளித் திருந்தார். இதற்குப்பிறகு நான், காங்கிர கமிட்டி அறிக்கையுள் பட பலவற்றை ஆதாரமாகக் கொண்டு ஏப்ரல் - 1919 அல்லது பஞ்சாப் படுகொலை என்ற பெயரால் தனிநூலொன்று எழுதி னேன். இதற்கு முகவுரை அளிக்குமாறு முதலியாரைக் கேட்டுக் கொண்டேன். இதே விஷயமாக ஏற்கனவே வெளியாகியுள்ள ஒரு நூலுக்கு. அதுவும் தேசபக்தன் காரியாலயத் தினராலேயே வெளி யிடப்பட்டிருக்கிற ஒரு நூலுக்கு முகவுரை எழுதியிருக்கிற காரணத் தினால் அவர் என் வேண்டுகோளுக்கிசைய மறுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி மறுக்கவில்லை. உடனே மனமுவந்து நீண்டதொரு முகவுரை எழுதிக் கொடுத்தார். இப்படி எழுதிக் கொடுத்தது பெரிதல்ல; இந்த நூலை விரைவில் வெளிக்கொணர வேண்டுமென்ற ஆவலினால், நூலின் கடைசி பகுதியை எழுதி முடிப்பதற்காக நான்கு நாள் எனக்கு விடுமுறை வேண்டுமென்று கேட்டேன்; சிறிதுகூட முகம் கோணாமல் கொடுத்தார். உதவி ஆசிரியர் சிலருக்கு இதனால் சிறிது மனவருத்தமென்பதை முதலியாரோ நானோ அறியாமலில்லை. என் சொந்தத்தில் வெளியான இந்த நூலுக்கு, அப்பொழுது தான் அட்வோகேட் - ஜெனரல் பதவியிலிருந்து விலகி காங்கிர தொண்டில் ஈடுபட்டிருந்த எ. சீனிவாச ஐயங்கார் இருநூறுரூபாய் நன்கொடை அளித்தார் என்பதை நான் இங்குக் குறிப்பிட்டுத்தா னாக வேண்டியிருக் கிறது. அவருடைய இந்த நன்கொடைக்குக் காரணமாயமைந்தது முதலியாரின் சிபாரிசுக் கடிதமே. மேற்படி நூலை அச்சிட, தம்பு செட்டி தெருவில் உள்ள ஓர் அச்சகத்தில் கொடுத்திருந்தேன். தேசபக்தன் காரியாலயம் ராயப் பேட்டையில். ப வசதி கிடையாது. நகரும் டிராம் வண்டிதான் உண்டு. இந்தப் போக்குவரத்து சிரமத்தைப் பொருட்படுத்தாமலும், மற்ற அலுவல் களைப் புறக்கணித்துவிட்டும், முதலியார், தாம் எழுதிக்கொடுத்த முகவுரையைத் தாமே பிழை திருத்தித் தரவேண்டு மென்ற பெருநோக்குடன், மூன்று நான்கு தடவை அச்சகத்திற்கு வந்து போனார். முதலியாரின் இந்த மூன்று நான்கு தடவை வருகையைக் கண்டு அச்சகத்தினர் ஆச்சரியப்பட்டனர். அச்சகத் தின் தலைமைக்காரியதர் முதலியாருக்கென்ன, உங்களிடத்தில் இவ்வளவு அன்பு? என்று அப்பொழுது என்னைப் பார்த்துக் கேட்டது இன்னும் என்காதுகளில் விழுந்துகொண்டிருக்கிறது. முதலியார், என்னுடைய தன் மதிப்புணர்ச்சியைப் பாராட்டி வந்தார்; இதற்காக என்னிடம் விசேஷ அன்பு செலுத்தினார் என்றுகூடச் சொல்லவேண்டும். ஒரு சமயம் தேசபக்தன் ஆரம்ப கர்த்தரான சுப்பராய காமத், உதவி ஆசிரியர்களுக்குச் சம்பள உயர்வு தரப் போவ தாகச் சொல்லிக்கொண்டு ஆசிரியக் கூடத்துக்கு வந்தார். என்னுடைய சம்பளம் அப்பொழுது முப்பத்தைந்து ரூபாய். அஃது ஐம்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. இங்ஙனமே மற்ற உதவி ஆசிரியர்களுக்கும் சம்பளம் கூட்டி வழங்கப்பட்டது. இதை அறிவித்துவிட்டு, காமத் எல்லோருக்கும் சம்பளம் உயர்த்தப்பட் டிருக்கிறது. இனிமேல் மனம் வைத்து நன்றாக வேலை செய்வீர் களென்று நம்புகிறேன் என்று கூறினார். அப்படி யானால் இதுவரை நாங்கள் மனம்வைத்து வேலை செய்யவில்லையா? நன்றாக வேலை செய்யவில்லையா? சம்பளம் ஒன்றை மட்டும் குறியாகக் கொண்டு எங்களில் யாரும் இந்த வேலைக்கு வரவில்லை. பத்திரிகைத் தொழிலிலே இருந்த உற்சாகம்; மொழி, நாடு இவைகளின்மீது கொண்ட பற்று; இவையே எங்களை இந்தத் தொழிலில் பிடித்துத் தள்ளின. முதலியார் இதை நன்கு அறிவார்.1 காமத் இப்படிக் கூறியதும், எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது; பொங்கி எழுந்தேன். என்ன மிடர் காமத்! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இதுவரை நாங்கள் மனம் வைத்து வேலை செய்யவில்லை. நன்றாக வேலை செய்யவில்லை என்றல்லவோ ஏற்படுகிறது? நீங்கள் கொடுக்கிற சம்பளத்திற்காகவா நாங்கள் இங்கே வந்து வேலை செய்கிறோம்? நீங்கள் சொல்வதை நான் பலமாக ஆட்சேபிக்கிறேன் என்று, முகம் சிவக்க, உதடு துடிக்க, ஆங்கிலத்தில் படபடத்துக் கொட்டினேன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலியார், ஒன்றும் சொல்லாமல் மெதுவாக வெளியே போய்விட்டார். காமத்தும் பதில் சொல்லாமல் போய் விட்டார். அவர் போன பிறகு, கூட இருந்த உதவி ஆசிரியர்களின் ஒருவர் என்ன இருந்தாலும் சர்மா, உமக்கு முன்கோபம் அதிகம். காமத் நமது எஜமானரல்லவா? அவரை எதிர்த்து நீங்கள் இப்படிப்பேசலாமா? சம்பள உயர்வை மறுத்துவிட்டால் என்ன செய்வது? என்று சொன்னார். அவர்மீது என் சீற்றம் பாய்ந்தது. அவர் அடங்கிவிட்டார். நான் மௌனியானேன். மறுநாள் முதலியார் என்னைப் பார்தது, நேற்று காமத்துக்குச் சரியான சூடு கொடுத்தீர்கள், என்னடா இந்த மனிதன் இப்படிப் பிதற்று கிறானே, சம்பள உயர்வை நாசூக்காவும் சுமுகமாகவுமல்லவோ அறிவிக்கவேண்டும் என்று நினைத்தேன். நான் நினைத்ததை நீங்கள் நன்றாகச் சொல்லிவிட்டீர்கள் என்று கூறினார். என்னுடைய சீற்றத்திற்கு ஆளான உதவி ஆசிரியரும் மறுநாள் வந்து நேற்று நீங்கள் வெளியிட்ட அபிப்பிராயம் சரிதான். ஆனால் அதைச் சிறிது நிதானமாக, படபடக்காமல் சொல்லியிருக் கலாம் என்பதற்காகவே அப்படிப் பேசினேன் என்றார். அவரைக் கடிந்தாற் போல் பேசியதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அப்பொழுதெல்லாம் எனக்கு முன் கோபம் அதிகம் என்பதை இப்பொழுது பகிரங்கமாக ஒப்புக் கொள் கிறேன். ஆசிரியரைப் பற்றியோ, உதவி ஆசிரியர்களைப் பற்றியோ யாரேனும் சிறிது குறைவாகப் பேசினால்கூட நான் சகித்துக் கொண் டிருக்கமாட்டேன். அவர்மீது சீறிப் பாய்வேன். இப்பொழுது நினைத்தால் வெட்கமாயிருக்கிறது. என் சீற்றத்திற்காளான அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னோடு சேர்ந்து பணியாற்றி வந்த உதவி ஆசிரியர் சிலரை எவ்வளவு கடிந்துகொண்டிருக்கிறேன்? காரணம் அவர்கள்மீது வைத்த கோபமா? இல்லவே இல்லை. பத்திரிகை ஒழுங்கான முறை யில் அமைய வேண்டும். அதில் வரும் தலைப்புக்கள், வாசகங்கள் முதலிய யாவும் சொற்பிழை, கருத்துப்பிழை இல்லாமலும் கண்ணியமாகவும் இருக்கவேண்டும். இந்த ஒரு நோக்கந்தான், எனது அப்பொழுதைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் ஊடுருவிப் பரந்திருந்தது. இந்த நோக்கத்துடன் நான் சொன்ன சொல்லினாலும் செய்த செயலினாலும் எந்த உதவி ஆசிரியருடைய வேனும் மனம் புண்பட்டிருக்குமானால், அவருக்கு இப்பொழுது என் மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலியார், என்னுடைய தன்மதிப்பு உணர்ச்சியைப் பாராட்டி வந்தாரெனினும், என்னுடைய தன்னடக்கத்திற்காக என்மீது அதிருப்தியும் கொண்டிருந்தார். தன்னடக்கம் தேவைதான்; ஆனால் அதை நான் அளவுக்கு மிஞ்சிக் கடைப்பிடிப்பதாக அவர் கருதினார். தன்னடக்கம் என்று சொல்லிக்கொண்டு உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமையைக்கூட மறுத்துக் கொள்கிறீர்களே என்று அடிக்கடி கூறுவார். ஒரு சில நபர்களின் பெயரைக் குறிப்பிட்டுக் காட்டி அவர் தம்மை எப்படி எப்படி யெல்லாம். விளம்பரப்படுத்திக் கொள்கிறார் பாருங்கள் - இவர் ஒரு தகுதியுமில்லாமல், எவ்வித வேலையும் செய்யாமல், எதற்கும் நான் முந்தி, நான் முந்தி என்று எப்படி முன்னுக்கு விழுந்தடித்துக் கொண்டு வருகிறார் பாருங்கள் – நீங்களென்னடா வென்றால், செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் ஓசைப்படாமல் செய்து விட்டு பின்னுக்கே போய்விடுகிறீர்கள்; இந்தக் காலத்திற்கு இஃது ஏற்குமா? என்று இடித்து இடித்துக் கூறுவார். ஆனால் அவர் கூறுவது என் உள்ளத்தில் பதிவதே இல்லை. வேலைதான் முக்கியமே தவிர விளம்பரம் முக்கியமில்லை என்று சில சமயங்களில் பதிலுரைப்பேன். இந்தப் பின்னுக்குப் போவதென்பது - இதைத் தன்னடக்கம் என்றாவது சொல்லிக் கொள்ளுங்கள்; அல்லது வேறெந்தப் பெயரிட்டேனும் அழைத்துக் கொள்ளுங்கள் - என் சுபாவத்திலேயே ஒன்றிவிட்டது. நாளது வரை இதிலிருந்து - இந்தச் சுபாவத்திலிருந்து - என்னால் விடுதலை செய்துகொள்ள முடிய வில்லை. 1918 - ஆம் வருஷம் பெசண்டம்மையாரின் ஹோம் ரூல் (சுயஆட்சி) இயக்கத்தின் சார்பாக தேசீயக் கல்வி இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதான புருஷராக விளங்கியவர் ஜி.எ. அருண்டேல். இந்தியாவின் பண்பாட்டை அனுசரித்துச் சிறுவர் சிறுமியர்க்குக் கல்வி புகட்டப்பட வேண்டுமென்பதே இந்த இயக்கத்தின் அடிப்படையான நோக்கம். இதற்காகச் சென்னையில் அப்பொழுது பேட்டைக்கொரு கூட்டமாக அடிக்கடி நடை பெற்று வந்தது. புரசை வாக்கத்தில் ஒரு பொதுக்கூட்டம். முதலியார், பிரதம பேச்சாளராக இருந்து அரியதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அடுத்தாற்போல் என்னைப் பேசச் சொன்னார்கள். ஏதோ உளறிக் கொட்டினேன். கூட்டம் முடிந்து வீட்டுக்குத் திரும்பி வருந்தறுவாயில் கோகலே ஹாலில் ஒரு பொதுக்கூட்டத் திற்கு ஏற்பாடு செய்து அதில் உங்களைப் பேச வைக்கப் போகிறேன் என்று முதலியார் கூறினார். வேண்டாமென்று மறுத்துவிட்டேன். இதனால் முதலியாருக்கு என்மீது சிறிது வருத்தம். ஒரு சமயம், தேசபக்தன் ஆசிரியக் குழுவினர் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்துப் புகைப்படமெடுப்பதென்று ஏற்பாடாயிற்று. மோபரீ ரோடி லுள்ள குகானந்த நிலையத்தில் ஒன்று கூடினோம். புகைப்பட மெடுக்கிறவர், சிலரை, முன்வரிசையில் உட்காரச் செய்தார்; சிலரைப் பின் வரிசையில் நிற்கச் செய்தார். முதலியார் முன் வரிசையில் நடுவண் அமர்ந்தார். அவருக்கு ஒரு பக்கத்தில் உலகநாத முதலியார் அமர்த்தப்பட்டார். மற்றொரு பக்கத்தில் நான் உட்கார வேண்டுமென்று முதலியார் கூறினார். வற்புறுத்தவும் செய்தார்; பெரிய முதலியாரும் கூறினார். ஆனால் நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். உதவி ஆசிரியர்களில் என்னைக் காட்டிலும் வயதிலே மூத்தவர்களும், பத்திரிகைத் துறையில் அனுபவம் முதிர்ந்தவர்களுமான ஒரு சிலர் இருக்க, அவர்களல்லவோ முன் வரிசையில் அமர்த்தப்பட வேண்டு மென்று சொல்லி நான் பின் வரிசையில் நின்றுகொண்டேன். புகைப் படமும் எடுத்து முடிந்துவிட்டது. இப்படி நான் செய்தது தன்னடக்கத்தின் பாற்படுமா என்பது முதலியாரின் கேள்வி. 1919ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத் தொடக்கத்தில் லோகமான்ய பால கங்காதர திலகர் சென்னை போந்து, தேசபக்தன் விருந்தினராக சுப்பராய காமத் வீட்டில் தங்கியிருந்தார். மூன்றாவது நாள் அவர் திரும்பிச் செல்லும் நாள். அன்று அவருடன் தேசபக்தன் ஆசிரியக் குழுவினர் இருந்து போட்டோ எடுத்துக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது. திலகர் சம்மதத்தின் பேரிலேயே இங்ஙனம் தீர்மானமாயிற்று. உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும், இதில் ஒரு மகிழ்ச்சி; ஒரு பெருமை. நான் மட்டும் இதற்கு விலக்காயிருந்தேன். என் சிறுமையைத்தான் நான் அதிகமாக உணர்ந்தேன். திலகர் பெருமான் எங்கே? நாம் எங்கே? அவருடனிருந்து போட்டோ எடுத்துக் கொள்வதனாலேயே நமக்குப் பெருமை ஏற்பட்டு விடுமா? இப்படிப் பல கேள்விகள் என் உள்ளத்தெழுந்தன. கடைசியில் போட்டோ எடுத்து முடிந்தது நானில்லாமல். இதனால் என்மீது முதலியாருக்குச் சிறிது அதிருப்தி நவசக்தியில் நான் சேவை செய்து வந்தபோது சட்டசபைத் தேர்தலில் நிற்கும் அபேட்சகர் பலர், தங்கள் தேர்தல் அறிக்கையை நல்ல தமிழில் எழுதித் தரவேண்டுமென்று கோரி காரியாலயத்துக்கு வருவர். இந்த அறிக்கைகளில் பெரும்பாலன ஆங்கிலத்திலேயே இருக்கும். சிலவற்றைத் தமிழாக்கிக் கொடுக்கும் பொறுப்பை முதலி யார் என்னிடமே ஒப்புவிப்பார். நான் தமிழ்ப்படுத்தி உடனுக்குடன் முதலியாரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவேன். அபேட்சகர்கள், தாங்கள் கொடுத்ததைத் திருப்பிப் பெற்றுக்கொண்டு போக, காரியாலயத் திற்குத் தவணைப்படி வருவர். அப்பொழுது, தமிழ்ப் படுத்தப் பட்டிருக்கும் அறிக்கையை மேல்நோக்காகப் படித்துப் பார்த்துவிட்டு உங்களைத் தொந்தரவு படுத்துவது இதற்காகத்தான்; உங்களுடைய தமிழுக்குத்தான் என்று உபசாரமாகக் கூறுவர். அதற்கு முதலியார் நான் ஒன்றுமே செய்யவில்லை; எல்லாம் எங்களுடைய சர்மாவின் வேலை என்று பதில் கூறிக்கொண்டே என்னைக் கூப்பிட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். அவர்களும் என்னைப் பாராட்டு முகத்தான் ஓரிரண்டு வார்த்தைகள் சொல்லத் தொடங்கியதும், நான் என்ன செய்து விட்டேன்? ஒன்று மில்லை. எல்லாம் (முதலியாரைச் சுட்டிக் காட்டி) இவ்விடத்துக் கைத்திறன்தான். அறிக்கை நன்றாயிருக்கிறதென்று நீங்கள் கருதினால், அதற்குக் காரணம் இவர்கள்தான் என்று கூறுவேன். அவர்கள் - அபேட்சகர்கள் - திரும்பிச் சென்ற பிறகு, முதலியார் என்னிடம் தம் வருத்தத்தைத் தெரிவிப்பார். ஏன் இப்படிச் சொல்லு கிறீர்கள்? தமிழ்ப்படுத்தியது நீங்கள்தானே? நான்தான் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதில் என்ன தவறு? உங்களுடைய தமிழ்ப்படுத்தும் திறமையை மற்றவர்கள் தெரிந்துகொள்வதுதான் எப்படி? இப்படியே இருந்தீர்களானால் நீங்கள் முன்னுக்கே வரமுடியாது என்று சிறிது கடிந்தாற்போல் கூறுவார். நான் மௌனஞ் சாதிப்பேன். இப்படியெல்லாம் நான் முதலியாருடைய அதிருப்திக்கு ஆளான போதிலும், அதில் - அவருடைய அதிருப்தியில் - நான் திருப்தியே அடைந்தேன். ஏனென்றால், அந்த அதிருப்திக்கு அடிப் படையில் நின்று நிலவியது என்மீது கொண்ட அன்பல்லவோ? முதலியாரும் நானும் பத்திரிகை அலுவல் முடிந்ததும், மாலை நேரங்களில் கடற்கரை நண்ணுவோம். பெரும்பாலும் லாயிட் ரோட் தான் எங்கள் வழியாக அமையும். கடற்கரையில் அதிக ஜன நடமாட்ட மில்லாத இடத்தில் அமர்ந்து நாங்கள் எவ்வளவு பேசினோம்? என்னென்ன விஷயங்களைப்பற்றி யெல்லாம் பேசினோம்? அநேகமாக முதலியாரைப் பேச விட்டுவிட்டு நான் கேட்டுக் கொண்டிருப்பேன். இந்தக் காலத்தில்அவரிடமிருந்து நான் பெற்ற கேள்விச் செல்வம் மிக அதிகம். சில நாட்களில் சுப்பராய காமத்தும் எங்களோடு வருவார். ஆனால் அவர் மனம் எங்கெங்கெல்லாமோ சுழன்று திரிந்துகொண் டிருக்கும். இதனால் கடற்கரை வரை வந்துவிட்டுத் திரும்பிவிடுவார். அங்கே அமர்ந்து சிறிது நேரமாவது அவர் மன அமைதி பெற்றா ரில்லை. நவசக்தி தோன்றி அதில நான் சேவை செய்யத் தொடங்கிய பிறகு, முதலியாரும் நானும், எங்கள் மாலை நடையைக் கிழக்குப் பக்கத்திலிருந்து மேற்குப் பக்கம் திருப்பினோம்; அதாவது, இப்பொழுது தியாகராய நகர் என்று அழைக்கப்படுகிற மாம்பலம் பகுதிக்கு. ரெயில் நிலையத்திற்கு மேற்கிலுள்ளதுதான் மாம்பலம். கிழக்குப் பகுதி புலியூர் என்னும் கிராமத் தொடர்புடையதா யிருந்தது. ஆயினும் இதனை மாம்பலம் என்றே ஒரு சம்பிரதாயம் போல் அழைத்து வந்தனர். உண்மையில் இது சிறிய கிராமமாகக் கூட அப்பொழுது இருக்க வில்லை; மயிலாப்பூர் ஏரியின் தொடர்ச்சியாக இருந்தது; வேல மரங்களும் பனைமரங்களும் மிக அதிகமாயிருந்தன; ஆங்காங்குத் தோட்டப் பயிர் நடைபெற்று வந்தது. இப்பொழுது பனகால் பார்க் கா யிருப்பது அப்பொழுது ஒரு பெரிய குட்டையாயிருந்தது. மயிலாப்பூரில் குடியிருந்த நான், அமைதியான ஒரு சூழ் நிலையை விரும்பியும், வயதடைந்து வந்த எனது பெற்றோர்களின் உடல்நலனைக் கருதியும் இங்கு வந்து குடிபுகுந்தேன். நான் வந்தபொழுது இங்கு ஏழெட்டு வீடுகளே இருந்தன. இருந்தாலும் இந்த ஏழெட்டு வீட்டுக்காரர்களும் எவ்வளவு மனங்கலந்து பழகி னோம்? எவ்வளவு ஒற்றுமை எங்களிடையே நிலவியது? இப்பொழுதோ? ஊர் விரிந்தது; நாகரிக வசதிகள் அதிகமாயின; ஆனால் நீ யாரோ, நான் யாரோ என்ற மனப்பான்மையுடன்தான் எல்லோரும் பழகி வருகின்றனர். எங்கணும் இப்படித்தானே? இடம் விரிய மனம் சுருங்குகிறது; எண்ணிக்கை அதிகப்பட தரம் குறைகிறது. குடிபுகுந்த மூன்றாண்டுகளுக்குள் எனக்கென்று சொந்தமாக ஒரு சிறு இல்லம் அமைந்தது. இதுவே இன்றளவும் எனது வாசதலமா யிருக்கிறது. இந்த இடம் முதலியாருக்கு நிரம்பப் பிடித்தம். வசிக்கின்ற பகுதி சிறிதாகவும், சுற்றியுள்ள தோட்டப்பகுதி அதைக் காட்டிலும் பெரிதாகவும் அமைந்திருந்ததே அவருடைய பிடித்தத்திற்குக் காரணம். வீட்டுக்கு முன்புறத்துத் தோட்டப் பகுதியில், பின்புறத்திலுள்ள கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட வெண்மணலை ஒரு குவியலாகக் கொட்டச் செய்திருந்தேன். அதில் வந்து அமர்வார் முதலியார். அவர் உள்ளத்தில் உவகை பொங்கும்; முகம் அதைப் பளிங்குபோல் காட்டும். குழந்தை மனம் படைத்தவ ரல்லவா? எங்கள் வருகை தெரிந்ததும், எனது வாழ்க்கைத்துணைவி, ஒரு கூஜா நிறைய கிணற்று நீரை நிரப்பிக் கொண்டு வந்து வைப்பாள். இதிலிருந்து ஒரு கோப்பை நீர் அருந்தியதும் இளநீர் இந்தத் தண்ணீருக்கு ஈடாகுமா? என்பார் முதலியார். இந்த மாதிரி அடிக்கடி கூறுவார். தெள்ளிய தண்ணீரைப் பருகுவதிலே முதலியாருக்கு எப்பொழுதுமே அலாதியான ஆனந்தம் உண்டு. உண்மையில், பரந்த கடலோரத்தைக் காட்டிலும் இந்தத் திறந்த வெளியில்தான் முதலியார் அதிக இன்பம் நுகர்ந்தார்; அதிகமான அமைதியைப் பெற்றார். இதை நான் உறுதியாகக் கூற முடியும். ஆரவாரத்தி னிடையே அமைதியைக் காண்டல் முதலியாருக்குக் கடினமல்ல. இருந்தாலும், அமைதியான சூழலின் மத்தியில் இருந்து அமைதி காண்டல் அவருக்கு மிகவும் உவகை தருவதாயிருந்தது. கடற்கரையில், அலையோசை ஒரு பக்கம்; பரதவர் கூச்சல் மற்றொருபால்; சிற்றுண்டிகளை விற்போரின் கூவல் பிறிதொரு புறம்; திடீர்திடீரென்று அலைகள் வந்து நம் மீது பாயும்; மீன் நாற்றம் நம் மூக்கைத் துளைக்கும். இவையெல்லாம், எனது இல்லத் தின்முன் பரந்துகிடந்த வெளியில் இல்லை; இந்த இல்லாமையைத் தான் விரும்பினார் முதலியார். இதனாலேயே எனது சிறுகுடிலை அடிக்கடி நண்ணினார். இந்த மாதிரி ஒரு சிற்றில்லம் அமைத்துக் கொண்டு என் வாழ்க்கையைக் கழிக்க விரும்புகிறேன் என்று பல முறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவருடைய விருப்பத் திற்குகந்ததா யிருக்கிறதே நமது மனை என்று எனது மனையாட்டி பல முறை சொன்னதையும் கேட்டிருக்கிறேன். 1929ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், முதலியார், சில வைத்திய நண்பர்களின் ஆலோசனைக்கிணங்க, பல்லாவரம் சென்று வதிந்தார். அப்பொழுது, குறைந்த பட்சம் இரண்டு நாளைக்கொருதரமாவது நான் அவரைச் சென்று காண்பேன். காரியாலயத்தைப் பற்றிய சகல தகவல் களையும் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு. இன்னதற்கு இன்னபடி செய்யலாமென்று யோசனைகளும் சொல்லியனுப்புவார். அங்கு அவருக்கு அமைந்திருந்த அமைதியான சூழ்நிலைதான், அவர் உட்கொண்ட மருந்து, பத்திய உணவு இவை களைக் காட்டிலும் அதிகமான நன்மையை அவருக்குச் செய்தது என்று நான் திண்ணமாகக் கூறுவேன். வைத்திய நண்பர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் விரைவிலேயே அவர் குணமடைந்து, ராயப்பேட்டை போந்து தம் அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டார். பொதுவாக, முதலியார் கிராம வாசத்தையே அதிகம் விரும்பினார்; அதிகம் நாடினார். ஆனால் அஃது அவருக்குக் கை கூடவே இல்லை. நகர வாழ்க்கை அவரைப் பொறுத்த மட்டில் நரக வாழ்க்கையாக இருந்தது. கடுநரக நகர்சந்தை கருதாமை வேண்டும்; பாழான பட்டணத்தைப் பாராமை வேண்டும் என்கிறார் தமது நூலொன்றில். எந்தப் பொருளின்மீது ஒருவன் அதிக இச்சை வைக்கிறானோ அந்தப் பொருள் அவனுக்கு எளிதில் கிட்டாததாகிவிடுகிறது என்ற முதுமொழிப் படி, அவர் எவ்வளவுக் கெவ்வளவு இயற்கையின் மீது பற்றுள்ளம் வைத்திருந்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருடைய வாழ்க்கை, செயற்கைக் சூழலிலேயே நடைபெறவேண்டிய நிர்ப்பந்தத்திற்குட் பட்டிருந்தது. இதற்காக அவர் பலமுறை வருந்தியதுண்டு. எங்கள் இருவருடைய மாலை நடை, தினந்தோறும் நடை பெற்றதென்று சொல்ல முடியாது. அநேக நாட்களில் முதலியார், பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிடுவார்; அல்லது வெளியூர் களுக்கு, மகாநாடு போன்றவைகள் நிமித்தம் சென்றுவிடுவார். இவைகளினால் மாலை நடை தடைப்படுகிறதேயென்று அவர் அடிக்கடி வருத்தப் படுவார். ஆனால் இதற்காகப் பொதுப் பணியைப் புறக்கணிக்கமாட்டார். அஃது எவ்வளவு சிறிய பணியாயிருப் பினும், யார் வாயிலாக வரினும், முகஞ்சிணுங்காமல், முணுமுணுக் காமல், தன்னலத்தைச் சிறிதுகூடப் பொருட்படுத்தாமல் ஏற்றுக் கொண்டு திருந்தச் செய்வார். மாம்பலம் பக்கம் எங்கள் நடையைத் திருப்பிவிட்ட காலங் களில், எங்களுடன் வருவார் ஸ்ரீ ச. நடேச முதலியார்1 என்ற அன்பர். ராயபேட்டை அன்பர் குழாத்தில் தலைசிறந்தவர் இவர் என்று துணிந்து கூறுவேன். இவருக்கும் முதலியாருக்கும் நீண்ட நாள் தொடர்பு உண்டு; முதலியார் குடும்பத்தின் நண்பர் என்னலாம். இவர், முதலியாருக்குப் பல வகையிலும் உதவியாயிருந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். மிகுந்த தன்னடக்கமுடையவர். வாழ்க்கையின் மேடுபள்ளங்களை நன்கு அறிந்தவர்; நிறைய அனுப வித்தவர். ஆனால் முயற்சியில் சலியாதவர்; ஊக்கத்தில் குன்றாதவர். இவ்விரண்டு தன்மைகளுமே என்னை இவரிடம் ஈடுபடுத்தின. அவனுபவ ரீதியான ஆலோசனை களைக் கேட்க வேண்டுமென்றால் இவரிடம்தான் கேட்கவேண்டும். இவருடைய ஆலோசனைகளில் சிலவற்றை முதலியார் ஏற்றுக் கொண்டிருந்தாரானால், அவருடைய கடைசி நாட்கள் வேறு விதமாகக் கழிந்திருக்கும். ஸ்ரீ நடேச முதலியாரைப் போல், முதலியாரிடமும் என்னிட மும் ஒருங்கே அபிமானம் செலுத்தியவர் பலர் உண்டெனினும், இன்னும் ஒருவரைப் பற்றி மட்டும் இங்குக் குறிப்பிட விரும்பு கிறேன். இவர்தான் ஸ்ரீ வே. தியாகராஜ முதலியார்.1 இவர் தேசபக்த னிலும் நவசக்தியிலும் சேவை செய்வதவர். பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி என்று சொல்வார்களே அந்த வாசகம் இவருக்குத் தான் பொருந்தும். பேச்சிலே, நடையிலே எல்லாவற்றிலும் மிக நிதானம். ஆனால் ஒரு செயலிலே இறங்கிவிட்டாரானால், சோர்வோ, சலிப்போ கொள்ளவே மாட்டார். நியாயத்திற்குத் தலை வணங்குவார்; அந்த நியாயம் கிடைக்க வேண்டுமென்பதற்காக யாருடனும் போராடுவார். அநியாயத்தைக் கண்டுவிட்டாலோ சீறி யெழுவார். இதனால் எல்லோருக்கும் இவரிடத்தில் ஒருவித அச்சம். இவரை, முதலியாரின் நிழல் என்று சொல்லலாம். அவருடைய மெய்க்காப்பாளராகவே இவர் திகழ்ந்தார். அவருடைய பெருமையைக் குறைத்துப் பேசுகின்ற முறையில் யாரேனும் வாய் திறந்துவிட்டால் போதும். இவரது நா படபடத்துப் பேசும்: கரங்களும் சில சமயங்களில் நீண்டுவிடும்! முதலியாரே இவரைத் தடுத்து நிறுத்தினாலொழிய நீட்டிய கைகளைத் தொங்கப்போட மாட்டார். முதலியார் கண்ணொளி இழந்து நின்ற காலத்தில் இவரும் கண்ணொளி இழந்தவர் போலவே யாகி விட்டார். உண்மை யில் சிறிது காலத்திற்குப் பிறகு கண்பார்வையும் மங்கிவிட்டது. ஆயினும் முதலியாருக்கு நினைவுக் சின்னம் நிறுவும் விஷயத்தில் கடைசி மூச்சு வரை பக்தி சிரத்தையோடு ஈடுபட்டிருந்தார். முதலியார், மனத்துக்கண் மாசிலர். வைதாரையும் வாழ்த்து வார். யாரிடத்தும் பகைமை பாராட்டியது கிடையாது. அரசியலில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு, கருத்தொன்று நாட வாயொன்று பேசும் என்று சொல்வார்களல்லவா, அதை முதலியாரிடத்தில் காண முடியாது. அரசியலிலோ, சமயத் துறையிலோ, பிறவற்றிலோ, தம்மினும் மாறுபட்டார் யார் வரினும், எப்பொழுது வரினும் அவரிடம் நகைமுகங் கொடுத்துப் பேசுவார். அவர்கள் எரிமலை யென சொற்களை வீசி எறிவார்கள். முதலியாரோ இமயமலையென இருந்து இரண்டொரு வார்த்தைகளில் பதில் சொல்லுவார். அவர்கள் சீற்றம் தணியும்; முகம் மலரும். அம்மலர்ச்சி கண்டு முதலியாரின் அகம் குளிரும். இதைப் பல தடவை நான் பார்த் திருக்கிறேன். இது மட்டுமல்ல, மாறுபட்டார் யார் வந்து எந்த விதமான உதவி கோரி நின்றாலும் அவர்களுக்குத் தம்மால் இயன்றதைச் செய்யச் சிறிதும் தயங்கமாட்டார் முதலியார். காரியாலயத்தின் பணம்முடையாக இருக்கும். பெரியசாமி முணுமுணுத்துக் கொண்டிருப்பார்.(நவசக்தியைப் பொறுத்த மட்டில் காரியாலய நிருவாகம் பூராவும் அவர் வசமே இருந்தது.) அந்தச் சமயத்தில் சின்னசாமியிடம் யாராவது வந்து ஐந்து அல்லது பத்து ரொக்கம் கேட்பார்கள், இல்லையென்று அவரால் எப்படி மறுக்க முடியும்? பெரியசாமி க்குச் சொல்லியனுப்புவார்; சில சமயங் களில் என்னை விட்டுச் சொல்லச் சொன்னதுமுண்டு. பெரியசாமி யின் முணு முணுப்பு வலுக்கும். ஆயினும் என்ன? சின்னவர் சொல்லி யனுப்பிய படி பெரியவர் கொடுத்துத் தானாக வேண்டும்; யாரிட மிருந்தாவது கைமாற்றுப் பெற்றேனும் கொடுத்துத்தானாக வேண்டும். உதவி மறுப்பு என்பது முதலியாருக்குத் தெரியாத ஒரு சொற்றொடர். முதலியார், தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது, வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது மாலை நேரங்களில் தொழிலாளர் சங்கத்திற்குப்போய் வர வேண்டி யிருக்கும்; சில சமயங்களில் தினசரியும் செல்ல வேண்டியிருக்கும். அந்த நாட்களில், ராயப்பேட்டையிலுள்ள ஜட்கா வண்டிக்காரர் களுக்கும் ரிக்ஷா வண்டிக் காரர்களுக்கும் கொண்டாட்டம் என்று சொன்னால், வாசகர்களே! எதற்கும் எதற்கும் சம்பந்தம் என்று ஆச்சரியப்பட்டுக் கேட்கிறீர் களல்லவா? ஆம்; சம்பந்தம் உண்டு. முதலியாரின் தாராள மனப் பான்மை அங்குள்ள எல்லாருக்கும் நன்கு தெரியும். எனவே, வெளியே புறப்படுகிறார் என்று தெரிந் ததும், வண்டிக்காரர் ஒவ்வொருவரும், முன்வந்து என் வண்டியில் ஏறுங்கள் என் வண்டியில் ஏறுங்கள் என்று வேண்டுவர். நியாய மாகக் கொடுக்க வேண்டிய வண்டி வாடகை எட்டணாவாயிருந் தால், முதலியார், ஒரு ரூபாயோ, ஒன்றரை ரூபாயோ கொடுப்பார். ஏன் முந்திக்கொண்டு வரமாட்டார்கள் அவரை ஏற்றிக்கொண்டு போக? ஏழை எளியவர்களிடத்தில் அவர் காட்டிய பரிவு மிக அதிகம். சில சந்தர்ப்பங்களில் அளவுக்கு மிஞ்சியும் காட்டுவார். இதனைப் பலர் துர் உபயோகப்படுத்திக் கொண்டு மிருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை, அவருக்குத் தெரியா தென்பதல்ல; போனால் போகிறார்கள்; இல்லாமையினால் தானே இப்படிச் செய்கிறார்கள் என்று, அவரை அன்புமுறையில் கண்டிக்கிறவர்களுக்குப் பதில் கூறுவார். முதலியார், செல்வத்தைச் சிறிதும் பேணாதவர். அவர் நாவையோ, தலையையோ அசைத்திருந்தால் ஆயிரக் கணக்கில் குவித்திருக்கலாம். அன்பர் சிலர், அவருக்கு நிதி திரட்டி வழங்கவும் ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர் எல்லாவற்றையும் மறுத்து விட்டார். உரிமைச் சக்திகள் சில, பணப்பையைக் காட்டி அவரைத் தங்கள் வசப்படுத்தப் பார்த்தன. கட்சிகள் சில, அவரைத் தங்கள் ஆடற்கருவியாக உபயோகப்படுத்திக் கொண்டு, காலியாயிருந்த தங்கள் பணப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் நோக்கத்துடன் அவருக்கு நப்பாசை காட்டின. பணத்தைக் கொண்டு என்னென்ன வெல்லாமோ செய்யத் துணிகின்றனர் மனிதர். ஆனால் பணத்திற்கு அடிமைப்பட்டவரன்றோ இவர்களுக்கு இரையாவர்? முதலியார், பணத்தை அடிமையாகக் கொண்டவர் என்பதை நான் பல வழியாலும் அறிந்திருக்கிறேன். யானறிந்த வரையில் அவர் ஒரு சிறு பர் (பணப்பை) கூட வைத்துக்கொண்டது கிடையாது. முதலியார், சீலமே பெரிதும் உடையார். இந்தச் சீலம் என்ற சொல். பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லல்லவா? நேர்மை, நிதானம், சொற்பிறழாமை,கண்ணியமாக நடந்து கொள்ளுதல். பிறரையும் கண்ணியமாக நடத்துதல், இப்படிப் பல மேலான தன்மைகளை அடக்கிக் காட்டுகின்றதன்றோ இந்த ஒரு சொல்? இந்த மேலான தன்மைகளை யெல்லாம் திரட்டி ஆங்கிலத்தில் கல்ச்சர் என்ற ஒரு வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். தமிழில் இதனைப் பண்பாடு என்று கூறுவர் சிலர்; ஸம்காரம் என்று சொல்லுவர் சிலர்; சால்பு என்று சாற்றுவர் சிலர்; சீலம் என்று சொன்னாலும் பொருத்தமா யிருக்குமென்றே தோன்றுகிறது. மனிதத்தன்மையென்று சொன்னால், இந்தச் சீல முடைமையையே குறிக்கும். இதனை மனிதம் என்று புதுப்பெயர் கொடுத்து அழைத்திருக்கிறார் முதலியார். இங்ஙனம் மனிதம் என்ற சொல்லை ஆக்கிக்கொடுத்தது மட்டுமல்ல, மனிதமாகவே வாழ்ந் தார் அவர். இதனால்தான் அவர் அரசியலில் வெற்றி காணவில்லை; தோல்வி கண்டாரென்றே சொல்லவேண்டும். ஆனால் இந்தத் தோல்வியே அவருக்கு மனிதத் தன்மையின் வெற்றியை வாங்கிக் கொடுத்தது என்று திண்ணமாகச் சொல்லலாம். இந்த வெற்றிக்குத் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் காந்தியடிகளும் மனித வாழ்க்கையும் என்ற நூலை எழுதினார். இது, முதன்முதலாக, தேசபக்தன் முதல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. இதனை விரித்து ஒரு நூலாக எழுத வேண்டுமென்று நான் பன்முறை முதலியாரை வேண்டிக்கொண் டேன். எல்லாம் மாலை நடைகளின்போதுதான். என் வேண்டு கோள் நிறைவேறியது குறித்துப் பெருமகிழ்வெய்துகிறேன்; பெருமையும் கொள்கிறேன். முதலியாரின் சீலத்திற்கு அச்சாணிபோல் விளங்கியது, பெண்மைக்கு அவர் செலுத்தி வந்த பக்தி. பெண்மக்கள் யாரேனும் காரியாலயத்திற்கு வந்தால் அவர்களை எழுந்து நின்றே வரவேற்பார். அவர்களை உட்காரச் செய்துவிட்டே தாம் உட்காருவார். அவர் களும், என்ன சொல்லிக்கொள்ள வேண்டுமென்று வருகிறார்களோ அதை, தந்தையிடம் மகள் சொல்லிக் கொள்வதைப் போல் சொல்லிக் கொள்வார்கள். முதலியாரின் சில வார்த்தைகளைக் கேட்டதும், மனக் குறை அகன்றவர்களாகவோ, மனநிறைவு பெற்றவர்களாகவோ அவர்கள் திரும்பிச் செல்வார்கள். சுருக்கமாக, அவர் பெண்மையை இறைமையாகப் போற்றினார். பெண்மையின் பெருமை என்ற அவருடைய நூலிலிருந்து இதை நாம் நன்கு உணரலாம். முதலியார், மறுமணம் செய்துகொள்ள மறுத்ததொன்றைக் கொண்டே, அவர் பெண்மையை எவ்வளவு உயர்ந்த நிலையிலே வைத்துப் போற்றினார் என்பது நன்கு புலனாகும். காதல் என்பது, கைமாறிச் செல்லக்கூடிய நாணயமல்ல; சிறிது காலம் வளர்ந்தும் சிறிது காலம் தேய்ந்தும் போகிற சந்திரனல்ல; உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிற உறவல்ல. அது, பாலுணர்ச்சியை அடிமை கொள்ளும் சக்தி வாய்ந்தது; ஒருத்தனுடைய ஆன்மாவை யும் ஒருத்தியினுடைய ஆன்மாவையும் இணைக்கும் பாலமாயமைந் திருப்பது. இதனை விசைப்பாலம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அந்த ஒருத்தனோ, ஒருத்தியோ மறைந்துவிட்டால், இருக்கின்ற ஒருத்தனிடமோ, ஒருத்தியிடமோ, அது தானாகவே வந்து சேர்ந்துவிடும். இந்தக் காதலின் உண்மையான லட்சணத்தை முதலியார் நன்கு அறிந்தவர்; உண்மையான காதலராகவே ஆயுள் பரியந்தம் வாழ்ந்தார். முதலியார், பன்மையில் ஒருமை காணும் பெற்றியர்; உலகத்து உயிர்களத்தனையையும் கட்டிக் காத்து நிற்கின்ற பரம்பொருள் ஒன்றேயென்ற பேருண்மையைத் தெளிவுற உணர்ந்தவர். இங்ஙனமே உலகத்தில் நிலவும் சமயங்கள் பலவாயினும் அவை போதிக்கும் உண்மையொன்றே யென்பதையும் நன்கு அறிந்தவர். யான் முதல்முதல் குமரனை வழிபட்டேன். அவ்வழிபாடு கண்ணன், கிறிது, புத்தர் முதலியவரையும் குமரனாகவே உணர்த்திற்று. இப்பொழுது குமரன், கண்ணன், கிறிது, புத்தர் முதலியவரெல் லாம் எனக்கு ஒருவராகவே மிளிர்கிறார். அவர் தம் போதனைகளி லுள்ள ஒருமைப் பாடும் எனக்குச் செவ்வனே புலனாகிறது என்று கூறியிருக்கிறார், தமது வாழ்க்கைக் குறிப்புக்களில். காராவும் வெண்ணாவும் கறக்கும் பால் ஒன்றே; பாண்மொழிகள் பல ஒலிக்கப் படியும் பொருள் ஒன்றே; பன்னிறத்து விளக்குநிரை படருமின்னல் ஒன்றே; பூண்தொடையல் புகுந்த கயிறொன்றே ஆமாறு புகல்மதங்கள் உயிராகப் பொலியும் சன்மார்க்கம் என்கிறார் பிறிதோரிடத்தில். பண்பாடு என்ற ஒரு சொல்லை இதுபோழ்து பலரும் பல பொருள்களில் கையாண்டு வருகின்றனர். இந்தப் பல பொருள் களில் ஒன்று, பிறர் உணர்ச்சியை மதித்து நடத்தல் என்பதாகும். இதில் - பிறர் உணர்ச்சியை மதித்து நடப்பதில் - மிக வல்லவர் முதலியார். அவரைக் காண வருவோர், பல மாதிரியாகப் பேசுவர்; பல நிலைகளிலிருந்து பேசுவர்; உரிமையோடு பேசுவர் சிலர்; உறுதியோடு பேசுவர் சிலர்; தங்கருத்தை லேசாகத் தெரிவித்து அதன் மீது முதலியார் கொள்ளும் கருத்து யாதென அறிய விழைவோர் சிலர். இந்தப் பலதரத்தவருக்கும் முதலியார் இன்முகத்தினராகவே காட்சியளிப்பார்; பதற்றமில்லாமல் இவர்களுடன் பேசுவார்; உண்மையில், பிறர் மனம் நோக அவருக்குப் பேசவே தெரியாது. எல்லாரையும் திருப்தி செய்ய முயலுவார், இதனால் ஒரு சிலருடைய அதிருப்திக்காளான சந்தர்ப்பங்களும் உண்டு. முதலியாருக்குச் சங்கீதத்தில் வெகு பிரியம். ஆனால் அவரைப் பார்த்தால் அப்படித் தெரியாது. அவருடைய தந்தையார் விருத்தாசல முதலியார் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். அதனாலேயே, தமக்குச் சங்கீதத்தை அனுபவிக்கும் மனப்பண்பு ஏற்பட்டிருக்கிறதென்று முதலியார் அடிக்கடி சொல்லுவார். சரப சாதிரியாரைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசுவார். அப்படிப் பேசியதன் சாரத்தை இங்கே தருகிறேன்:- என் தந்தையார், எங்கே சங்கீதக் கச்சேரி நடைபெற்றாலும் அங்கே செல்லுவார். இளமையி லிருந்தே எனக்கு இசைப்பயிற்சி பெறவேண்டு மென்ற ஆர்வமுண்டு. இதை நன்கு உணர்ந்திருந்த அவர், தாம் செல்லும் இடங்களுக்கு - முக்கியமான இசை நிகழ்ச்சிகளுக்கு - என்னையும் கூட்டிக்கொண்டு போவார். அப்பொழுது, அதாவது என் இளமையில், சரப சாதிரியார் புல்லாங்குழல் வாசிப்பதில் பிரசித்தியடைந்திருந்தார். ஜடி மணி ஐயருடைய வீட்டில் அவர் அடிக்கடி இசை விருந்து அளிப்பார். அதற்கு என் தந்தையார் தவறாமல் செல்லுவார். நானும் துள்ளிச் செல்லும் கன்றுபோல் அவரைப் பின் தொடர்வேன். பார்வையற்றிருந்த சரப சாதிரியாரை அடிக்கடி பார்க்கும் பேறு எனக்கு இளமையில் கிட்டியது, எனது பூர்வ ஜன்ம புண்ணிய பலன் என்றே கருதுகிறேன். அவருடைய இசையமுதைப் பருகுவேன். என் அடி வயிற்றிலிருந்து ஆனந்த அலை எழும்; என் உள்ளத்தைத் தாக்கும்; ஆனந்தக் கண்ணீர் பெருக்குவேன். சிறுவனாகையால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. சரப சாதிரி யாருக்குப் பிறகு எத்தனையோ பேர் ஊது குழல் வாசிக்கிறார்கள். நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கு இணை அவரே தான். முதலியார், சொற்பொழிவு நிகழ்த்தும் காலத்து, மேற் கோளாக ஒரு செய்யுளை எடுத்துச் சொல்ல வேண்டுமானால் இசை யோடுதான் சொல்லுவார். ராகத்தோடு கூடிய இசையாக இல்லா விட்டாலும். கேட்பதற்கு இனிமையாயிருக்கும். தலைவராகவோ, பேச்சாளராகவோ தாம் கலந்துகொள்ளும் எந்த ஒரு சமயச் சார்பு பற்றிய கூட்டத்திலும், தேவாரம், திருவாசகம் முதலியவற்றை ஓத வல்லார் யாரேனும் வந்திருப்பதாகத் தெரிந்தால் அவரை அழைத்து ஓதச் செய்வார்; ஓதியவரைப் பாராட்டுவார். அவருடைய பாராட்டு தலைப் பெற்றுப் பெருமையடைந்த சகோதர சகோதரிகள் பலர். முதலியாரைச் சாது முதலியார் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எந்தப் பொருளில் இப்படிக் கூறினர் என்பதை யும் நான் அறிவேன். அரசியலில் செல்வாக்கிழந்துவிட்டதால் சாது வாகி விட்டார் என்பர் சிலர். செயலாற்றும் திறனிழந்துவிட்டபடி யால் சாது வாகிவிட்டார் என்பர் சிலர். ஏளனமும் அலட்சியமும் கலந்த தோரணையிலேயே இவர்கள் இப்படிப் பேசினர். முதலி யாரைச் சரிவர அறிந்துகொள்ளாமையினாலேயே, அறிந்துகொள் ளும் மனப்பாங்கும், அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் இல்லாமையினாலேயே இப்படிப் பேசினர் என்றுதான் நான் கொள்கிறேன். முதலியார் எப்பொழுதுமே செயலற்ற சாதுவாக இருக்க வில்லை. கடைசி காலத்தில் கண்ணொளி இழந்திருந்த வேளையில் கூட, நூல்கள் பல ஆக்கித் தந்து கொண்டிருந்தார்; தொழிலாளர் நலனில் எப்பொழுதும் போல் அக்கரை செலுத்தி வந்தார். ஆற்றிய சொற்பொழிவுகள் தான் எத்தனை? சுருக்கமாக எந்தத் துறையிலும் அவர் ஈடுபடாமலில்லை. ஓய்வு என்று சொல்லி அவர் செயலற்று இருக்கவில்லை. பம்பரம் வேகமாகச் சுற்றுகிறபொழுது நின்ற நிலையில் இருப்பது போலவே தோன்றும். அது போலவே மேலோர்களின் செயலும் இருக்கும். அவர்கள் வெளிப்பார்வைக்கு, ஓய்வு பெற்றிருப்ப வர்கள் போலத் தோன்றுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தான் சலியாமல் உழைக்கிறவர்கள். அவர்கள் கண்களை மூடிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற யாவும் அவர்களுக்குப் புலனாகிக் கொண் டிருக்கும். பகவத்கீதை கூறுகிறது:- தன்னிலே தான் இன்புறுவான்; தன்னிலே தான் திருப்தியடைவான்; தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான்; அவனுக்குத் தொழி லில்லை. அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனு மில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக் குப் பயனில்லை; எவ்விதப் பயனையும் கருதி அவன் எந்த உயிரையும் சார்ந்து நிற்பதில்லை. ஆதலால் எப்போதும் பற்று நீங்கி, செய்யத் தக்க தொழிலைச் செய்துகொண்டிரு. பற்றில் லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனி தன் பரம்பொருளை எய்துகிறான்.. முதலியார், மெதுவாக நடப்பார்; வேகமாக எழுதுவார். அவர் எழுத்தைப் புரிந்துகொள்வது சிறிது கடினம். அச்சகத்தி லுள்ள ஓரிரண்டு பேருக்கும் எனக்கும் மட்டுமே புரியும். எனவே, அவர் எழுதுவதன் அச்சுத் தாள்களை (ப்ரூப்புகளை)த் திருத்தும் பொறுப்பை இரண்டு மூன்று பேரே ஏற்றுக்கொள்வர். அவர்கள் திருத்தினால்தான் முதலியாருக்குத் திருப்தியாயிருக்கும். இந்த விஷயத்தில் அவருடைய திருப்தியைப் பெற்றிருந்தவரில் நான் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன். பொதுவாக, பேச்சிலே வல்லவர், எழுத்திலே வல்லவரா யிருப்ப தில்லை. ஒரு சிலரே இரண்டிலும் வல்லவராயிருப்பர். இந்த ஒரு சிலரில் தலை சிறந்தவராயிருந்தார் முதலியார். அதிலும், பேசுவதைப் போலவே எழுதுவார்; எழுதுவதைப் போலவே பேசுவார். இரண்டுக்கும் வேற்றுமையே தெரியாது. பேசுகையில் ஆய்த எழுத்தைப் பிரயோகம் செய்வதில் கூடத் தவறமாட்டார். எடுத்துக்கொண்ட பொருளை யொட்டியே பேசுவார்; சிறிதுகூட விஷயத்திற்குப் புறம்பாகச் செல்ல மாட்டார்; தமது ஆழ்ந்த புலமையை அந்த ஒரு சொற்பொழிவிலேயே புலப்படுத்திவிட வேண்டுமென்று விரும்பவும் மாட்டார். பேசவேண்டிய பொருளைப் பற்றிச் சில குறிப்புக்களைத் தயாரித்துக்கொண்டு தான் பேச்சு மேடைக்குச் செல்வார். கண்ணொளி இழந்து நின்ற காலத்தில், குறிப்புக்கள் வைத்துக் கொண்டு பேசுவதென்பது அவரால் இயலாமற் போய்விட்டது. அவருடைய பேச்சிலே அமைந்த தனிச்சிறப்பு, பேச்சின் முடிவுரையேயாகும். சமார் ஒரு மணி நேரம் பேசினால், கடைசி பத்து நிமிஷம், அதுகாறும் பேசியதையெல்லாம் திரட்டிச் சொல்வது மிக அழகாயிருக்கும். ஒன்றையும் விடாமல் சொல்லுவார். இங்ஙனம் திரட்டிச் சொல்வது எல்லோர் மனத்திலும் நன்கு பதிந்துவிடும். பேசத் துவங்கிவிட்டால்,கர்ச்சனை செய்யும் சிங்கமாகக் காட்சி யளிப்பார்; தனிப்பட்ட முறையில் அவருடன் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறபோது, கொஞ்சும் குழந்தையாகக் காட்சி யளிப்பார்; உண்மையில் சாதுவாகவே திகழ்வார். அவர் உடலத்தை முதுமை மூடிக்கொண்டிருந்த போழ்தும், உள்ளத்தைக் குழந்தைமையே ஆட்கொண்டிருந்தது. முதலியார், புறத்துறவு பூண்டவரல்லர்; ஆனால் அகத்துறவு பூண்டவர். அகத்துறவு இல்லாத புறத்துறவை அவர் வெறுக்கவும் செய்தார். உலக வாழ்வு கடவுள் கொடையென்பதும், அதைத் துறத்தல் கூடா தென்பதும் அவரது கோட்பாடாயிருந்தது. முதலியார், பழமையின் பிரதிநிதி; ஆனால் புதுமையின் சங்கநாதம். ஆண்மைக்கு அணிகலன்; பெண்மைக்கும் விளக்கம். சாந்தத்தின் வடிவம்; ஆனால் வீரத்தின் ஊற்றுக்களம். தமிழனாகப் பிறந்தார்; இந்தியனாக வாழ்ந்தார். அவர் திருநாமம் வாழ்க! வாழ்க தமிழ் முனிவர்! 1. இவர் பிறந்தது: 1893ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இரண்டாந் தேதி. தாயார் - ஞானம்மாள்; தந்தையார்:- வேங்கடேசுவர ஐயர். 1. தேசபக்தன் ஆசிரியக்கூடம் இதுபோழ்து புலனாகிறது. உதவி ஆசிரியரெல்லாம் இளைஞர். அவர் ஊதியத்துக்கென்று உழைத்த வரல்லர்; தேசபக்தி மேலீட்டான் சேவை செய்ய வந்தவர். அவர் தம் முகங்கள் என் முன்னே மலர்ந்து நிற்கின்றன. என் அறையின் எதிரிலே அவர் வரிசையாக அமர்ந்து தொண்டு செய்யும் காட்சியை என் கண்கள் காண்கின்றன. அத்திருக்கூட்டத்தை - தொண்டர் குழாத்தை - இளைய உருவங்களை - என் நெஞ்சம் மறக்குமோ? - திரு வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள் - பக்: 265 - 266. 1. இவர், ஜவுளிக்கடை நடேச முதலியார் என்ற பெயரால் பிரசித்தி பெற்றவர். வியாபாரத்தில் நாணயத்தையும் நேர்மையையும் கடைப் பிடித்தவர். இவர் பிறந்தது உத்தேசமாக சித்திரபானு வருஷம் - 1882ஆம் வருஷம். இவர் சொந்த ஊர். கூவத்திற்கருகிலுள்ள களாம்பாக்கம். தாயார்: அங்கமுத்து அம்மாள். தந்தையார் : சபாபதி முதலியார். 1. இவர் பிறந்தது 1894ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் எட்டாம் தேதி. சொந்த ஊர்: செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த திருக்கச்சூர் கிராமம். தாயார்: பாக்கியம்மாள்; தந்தையார்: கு. வேதாசல முதலியார். ஸ்ரீ தியாகராய முதலியாரின் சமயத்தொண்டு ஆரவாரமும் ஆடம்பரமு மற்றது. ராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபை, சைவ சித்தாந்த மகா சமாஜம், ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் தேவதானம் முதலிய தாபனங்களில் இவர் தொண்டு பரிமளித்தது. 1957ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினாறாம் தேதி இவர் இறைவனடி சேர்ந்தார். அருளாட்சி அனைத்துயிரும் ஒன்றென்னும் ஆட்சியரு ளாட்சி ஆருயிர்கள் பசியறியா ஆட்சியரு ளாட்சி வனப்புடைய பெண்ணுள்ளம் மகிழ்வதரு ளாட்சி வாழ்க்கைவழிப் பரநலத்தை வளர்ப்பதரு ளாட்சி தனக்குரிய மொழியிடத்தே காப்பதரு ளாட்சி தனைப்போலப் பிறரை எண்ணுந் தண்மையரு ளாட்சி உனைத்தினமும் நினையுணர்வை யூட்டவரு ளாட்சி ஒளியாட்சி அருளாட்சி ஓங்கஅருள் அரசே, - திரு. வி. க. திரு. வி. கலியாண சுந்தர முதலியார் (1883 - 1953) என் பெயர் திரு. வி. கலியாண சுந்தரம். திரு. திருவாரூரைக் குறிப்பது; வி. விருத்தாசல முதலியாரை உணர்த்துவது. தமைய னாரும் யானும் இளமையில் வி. உலகநாதன் - வி . கலியாண சுந்தரம் என்றே எங்கள் பெயரை எழுதி வந்தோம். பள்ளிகளிலும் எங்கள் பெயர்கள் அவ்வாறே பதிக்கப்பட்டன. எங்கள் பங்காளியில் ஒருவர் எங்கள் தந்தையாரிடம் போந்து பிள்ளைகள் திருவாரூரை ஒதுக்குவ தென்ன? நம் பிள்ளைகள் எங்கே பிறந்தாலும் வளர்ந்தாலும், எங்கே போனாலும் வந்தாலும் நம் முன்னோர் ஊராகிய திருவாரூரை மறத்தலாகாது. பிள்ளைகள் பெயர்களின் முன் வியுடன் திருவை யும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்தம் வலியுறுத்தலுக்குப் பின்னரே திரு சேர்க்கப்பட்டது. இங்ஙனம் முதலியார் தமது வாழ்க்கைக்குறிப்புக்களில், தமது முன்னோர்கள் வாழ்ந்த ஊர், தமது தந்தையார் பெயர், தமையனார் பெயர் இவைகளை நமக்கு அறிமுகப்படுத்தி வைக் கிறார். முதலியாரின் மூதாதையர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர் களாயிருந்தபோதிலும், முதலியார் பிறந்தது, வளர்ந்தது, கல்வி பயின்றது, புகழெய்தியது எல்லாம் தொண்டை நாட்டிலேதான். சேக்கிழார் பெருமானைப் பெற்றுக் கொடுத்துப் புகழ்கொண்ட தொண்டை நன்னாடே! திரு. வி. க. வைப் பெற்றுப் பெருமை கண்டாய்! சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரிய புராணத்தை நல்ல முறையில் பதிப்பித்து வெளியிட்டவர் நமது முதலியாரென்பதைத் தமிழன்பர் பலரும் அறிவர். செங்கற்பட்டு ஜில்லா சைதாப்பேட்டை தாலுகா பூவிருந்த வல்லிக்குச் சமீபத்திலுள்ள துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர் நமது முதலியார். பிறந்தது சுபானு ஆண்டு ஆவணித் திங்கள் பதினோராம் நாள் (26 - 8 - 1883) ஞாயிற்றுக்கிழமை. ஆறாவது பிள்ளை யென்பதைக் குறிப்பதற்காகவோ என்னவோ, பிறவியிலேயே முதலியாருக்கு ஆறு விரல்கள் வலது காலில் அமைந்திருந்தன. ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழும் என்று அப்பொழுது கிராமத்தி லுள்ளவர்கள் பேசிக்கொண்டார்களாம். முதலியார் ஆனை கட்டி வாழவில்லை; மனிதனாகவே வாழ்ந்தார். ஆனை கட்டி வாழ்வதைக் காட்டிலும் மனிதனாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை உலகில் எத்தனைபேர் உணர்ந்திருக்கிறார்? முதலியாரின் மூத்த சகோதரர் திரு. வி. உலகநாத முதலியார். அவர் பிறந்தது விஷு ஆண்டு ஆவணித் திங்கள் இருபத் தொன்பதாம் நாள் (12-9-1881). இருவரும் - உலகநாதரும் கலியாண சுந்தரரும் - இரட்டையர் போலவே வாழ்ந்து வந்தனர் தாயார் சின்னம்மாள் மூத்தவரைப் பெரியசாமி என்றும் இளையவரைச் சின்னசாமி என்றும் அருமையுடன் அழைப்பது வழக்கம். துள்ளம் கிராமத்தில் மளிகைக் கடை வைத்து நேரிய முறையில் வியாபாரம் செய்து வந்த விருத்தாசல முதலியார், சிறிது காலங் கழித்து, இராயப்பேட்டை போந்து வசிக்கலானார். நோக்கம், பிள்ளைகளுக்கு உயர்தரக் கல்வி புகட்ட வேண்டுமென்பது. அப்பொழுது நமது முதலியாருக்கு ஏழு வயது. இராயப்பேட்டை போந்ததும், முதலியார் பள்ளியில் சேர்க்கப் பெற்று நல்ல முறையில் படித்து வந்தார் மெட்ரிகுலேஷன் வகுப்போடு படிப்பு நின்று விட்டது. முதலியார், இளமையிலேயே தமிழ்த் தாய்க்குத் தலைவணங்கி நின்றார். தமிழைக் கற்று அதில் புலமை பெற வேண்டுமென்ற ஆர்வத்திற்கு ஆட்பட்டார். அக்காலத்தில் பெரும் பண்டிதராகவும் சிறந்த நாவலராகவும் விளங்கிய யாழ்ப்பாணம் நா. கதிரைவேற் பிள்ளையின் மாணாக்கரானார். தமிழ் இலக்கியங்கள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பிள்ளையவர்கள் சிவபத மெய்திய பிறகு மயிலை மகாவித்துவான் தணிகாசல முதலியாரை அணுகி அவரிடம் சைவ சாதிர நூல்களையும் வேறு பல நூல்களையும் பாடங்கேட்டு அறிவிலே தெளிவு பெற்றார். இன்னும் அறிஞர் பலர் வாயிலாகப் பல சமய உண்மைகளைத் தெரிந்து கொண்டார். வாழ்க்கையின் பிற்பகுதியில், சமரஸ சன்மார்க்கத்தை அவர் வலியுறுத்தி வந்தனரென்றால், அதற்குக் காரணமாயிருந்தது, இளமையில் அவர் பெற்றிருந்த சர்வ சமய அறிவேயாகும். முதலியார், சிறு வயதில் ஆங்கில மொழியின் மீது அதிக மோகங் கொண்டிருந்தார். அதில் புலமை பெற்றுப் புகழடைய வேண்டுமென்ற ஆசை நிறைய இருந்தது. ஆனால் தமிழறிஞர் பலருடன் கொண்ட தொடர்பு காரணமாக அந்த ஆசை தமிழ்க் காதலாக முகிழ்த்தது. தமிழன்னைக்குப் பல நூல்மாலைகளைச் சாத்தும் பேறுபெற்றார். பள்ளிப் படிப்பு முற்றுப்பெற்றதும்,முதலியார் ஏதேனும் ஓர் உத்தியோகத்தில் அமர்ந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட் பட்டார். இதற்காகத் தம்மை ஓரளவு தகுதிப்படுத்தியும் கொண்டார். ஆயினும், மனத்திற்குப் பிடித்த உத்தியோகம் எளிதில் கிடைக்க வில்லை. யான் லோயர் செகண்டரி செர்டிபிகேட் உடையவன். புக் கீப்பிங் செர்டிபிகேட் உடையவன். என் கையெழுத்தோ தலை யெழுத்து! எனக்கு என்ன ஊழியம் கிடைக்கும்? ஊழியத்துக்குச் செல்ல மனமெழுவ தில்லை. நூல்களை ஆராய்ந்து காலங் கழிக்கவே மனம் விரும்பியது. மன விருப்பம் நிறைவேறியதா? இல்லை. ஏன்? குடும்பத் தொல்லை பெரியது என்கிறார் தமது வாழ்க்கைக் குறிப்புக்களில். கடைசியில், சில நண்பர்களின் முயற்சியின் பேரில் பென்ஸர் கம்பெனியில் முதலியாருக்கு ஓர் உத்தியோகம் கிடைத்தது. அப்பொழுது அவருக்கு ஏறக்குறைய இருபத்திரண்டு வயது. சுமார் ஒன்றரை ஆண்டு இந்த உத்தியோகத்தில் ஈடுபட்டிருந்தார் அதற்கு மேல் அதில் மனஞ் செல்லவில்லை. விடுதலை பெற்றுக்கொண்டார். சைவமும் தமிழும் அவரைக் கைதட்டி அழைத்த வண்ணமிருந்தன. அவ்வழைப்புக் கிணங்கி சைவ சமயப் பிரசாரமும் தமிழ்த் தொண்டும் செய்தார். இந்தக் காலத்தில்தான் பெரிய புராணம் குறிப்புரையுடன் நல்ல முறையில் வெளிவந்தது; பெரிய புராணப் பிரசங்கங்களும் தொடர்ந்து நிகழ்த்தப் பெற்றன. குடும்பப் பொறுப்பை நன்குணர்ந்தவர் முதலியார். எனவே நிலை யானதோர் உத்தியோகத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமைக் குட்பட்டார். ஆயினும் உத்தியோகத்தை அவர் நாட வில்லை; உத்தியோகம் அவரை நாடி வந்தது, சென்னை ஆயிரம் விளக்கிலிருந்த வெலியன் மிஷன் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரா யமர்ந்தார். அந்தப் பள்ளிக்கூடத்தின் இணைப்பாகத் தொடங்கப் பெற்ற வெலியன் டெக்னிகல் இன்டிடியூட்டி லும் சேர்ந்தாற் போல் சேவை செய்தார். சுமார் ஆறு ஆண்டுகள் - 1910ஆம் ஆண்டி லிருந்து 1916ஆம் ஆண்டு வரை - ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்தார். மேற்படி பள்ளியின் தலைமை யாசிரியரா யிருந்தவர் ஜான் ரத்தினம் பிள்ளை என்பவர். அவர் உண்மைக் கிறிதுவராக வாழ்ந்தவர். அவரிடத்தில் முதலியாருக்கு அதிக ஈடுபாடு. அவரும், முதலியாரைத் தமது இளைய சகோதரர்போல நடத்தி வந்தார். வெலியன் மிஷன் பள்ளியில் அலுவல் பார்த்துக் கொண் டிருந்த காலத்தில்தான் முதலியாருக்குத் திருமணம் நடைபெற்றது. அவர் தம் திருக்கரங்களைப் பற்றும் பேறு பெற்றவர் கமலாம்பிகை அம்மையார். பொறுமையின் உறையுள்; பெண்மையின் அணிகலன். இருவரும் சேர்ந்து ஆறு ஆண்டுகள் இனிதே இல்லறம் நடத்தினர். இருவருடைய அன்பு வாழ்க்கையில் முகிழ்த்த அமிழ்த முளைகள் இரண்டு. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். ஆண் குழவி பிறந்த வாரத்திலேயே மறைந்தது. பெண் குழந்தை திலகவதி கண்காட்டி, முகங் காட்டி, கை காட்டி, கால் காட்டிச் சுமார் ஓராண்டு வளர்ந்தது; பின்னே இன்னுயிர் நீத்தது. கமலாம்பிகை அம்மையாரும் 1918ஆம் ஆண்டு உயிர் நீத்தனர். முதலியாருக்கு அப்பொழுது வயது முப்பத்து மூன்று. முதலியார், வெலியன் மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு வந்த காலத்தில், பட்டினத்தார் பாடலுக்கு விருத்தியுரையொன்று எழுதினார். மிக விரைவாக எழுதப்பட்ட உரையடங்கிய இந்நூல், பத்தாண்டு உறங்கி, இப்பொழுது (1923ஆம் ஆண்டு) முதன் முதலாக அச்சு விமானமேறிற்று. செய்வன திருந்தச்செய் என்ற நன்மொழியைக் கண்டிப் பாகக் கடைப் பிடித்தவர் முதலியார். சிறப்பாக, தாம் எழுதும் நூல்கள் பிழையற இருக்கவேண்டும் என்பதில் அவர் அதிக அக்கரை காட்டினார். ஒரு சிறு பிழையைக் கண்டாலும் அதற்குப் பெரிதும் மனம் நோவார். தமது உள்ளக் கிடக்கையை, மேற்படி பட்டினத்தார் விருத்தியுரையின் முகவுரையில் பின்வருமாறு புலப்படுத்துகிறார்:- இத்தகைய நூல்களையும் உரைகளையும் அச்சிட்டு வெளியிடும் அன்பர் பலர் வியாபாரத்திலும் பொருளீட்டுவதிலும் கருத்தைப் பெரிதும் செலுத்துகின்றாரன்றி, மொழிமீதும் எழுத்துப் பிழைமீதும் கருத்தைச் செலுத்துகின்றாரில்லை. காலஞ்சென்ற வித்துவ மணிகள் எழுதிய பல உரைகள் சில குஜிலிக் கடைக்காரர்க ளிடத்தில் அகப்பட்டுத் தவிக்கின்றன. அதை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் கண்ணீர் பெருகுகிறது. தமிழ் வளமும் தமிழ்ப் புலமையும் அருகி வரும் இந்நாளில் எழுத்துப் பிழையின்றியாதல் நூல்களை அச்சிடுவோர்க்கு மனமார்ந்த நன்றி செலுத்துங் கடப்பாடுடையேன். முதலியார், வெலியன் மிஷன் பள்ளியில் ஆசிரியராயிருந்த காலத்தில் தான், சில நண்பர்களுடன் சேர்ந்து ராயப்பேட்டையில் சிவ சுப்பிரமணிய பக்த ஜன சபை என்ற ஒரு சபையைத் தோற்றுவித்தார். எதற்காக இதை இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறதென்றால், முதலியார் ஒரு கிறிதுவப் பள்ளியில் உத்தியோகம் பார்த்து வந்த போதிலும், கிறிதுவ சகோதரர்களோடு நெருங்கிப் பழகி வந்த போதிலும், தமது சமயத்தையும், அதற்காகத் தாம் செய்யவேண்டிய கடமையையும் மறந்துவிடவில்லை யென்பதைச் சுட்டிக் காட்டு வதற்குத்தான். அவரவருக்குரிய தருமத்தை அவரவரும் செய்து கொண்டிருத்தல் வேண்டுமென்று கீதை முழங்குகிறதல்லவா? அதை நன்குணர்ந்தவர் முதலியார். 1916ஆம் ஆண்டில் முதலியார், ஆயிரம் விளக்குப் பள்ளியி லிருந்து விலகி வெலி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் பதவியை ஏற்றார். நல்ல முறையில் போதித்து மாணாக்கர்களுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டினார். ஆனால் பதினெட்டு மாதங்களுக்கு மேல் இப்பதவியில் அவர் இருக்கவில்லை. தேசம் அழைத்தது; பத்திரிகையுலகம் கை தட்டிக் கூப்பிட்டது. 1917ஆம் ஆண்டு நாட்டில் சுய ஆட்சிக் கிளர்ச்சி சண்ட தாண்டவம் புரிந்தது. அத்தாண்டவம் நாளுக்கு நாள் எழுச்சியூட்டிக் கொண்டே வந்தது ...... அன்னி பெசண்டம்மையார் (16-6-1917) காப்பில் வைக்கப் பட்டார். என் (முதலியார்) நெஞ்சம் அரசியலில் தோய்ந்தது.............. கல்லூரி விடுத்து நாட்டுக்குச் சேவை செய்தல் வேண்டுமென்ற வேட்கை என்னுள் முருகிக் கிளர்ந்தது. 5-12-1917இல் கல்லூரியிலிருந்து விடுதலை பெற்றார். சுய ஆட்சிக் கிளர்ச்சியைத் தமிழ் நாட்டில் உரம் பெறச் செய்ய தேசபக்தன் தினசரிப் பத்திரிகை தோன்றியது. இதன் தோற்றம் 7-12-1917. இதன் ஆசிரியரானார் முதலியார். முதலியார், கல்லூரியின் ஆசிரிய பீடத்தைத் துறந்துவிட்டு, பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்தபோழ்து, அவருடைய நெருங்கிய நண்பர்களாகிய புலவர் மணிகள் பலர் அவரைத் தடுத்தார்கள். கல்லூரி ஆசிரியப் பதவியைத் துறந்துவிட வேண்டா மென்று அவருக்குப் பக்கம் பக்கமாகக் கடிதங்கள் எழுதினார்கள். கொள்ளை எரி அரசியலில் குதிக்கவேண்டாமென்று அவருக்கு எச்சரிக்கை செய்தார்கள். அவர் கேட்கவில்லை. தமக்கு இயற்கை யாய் அமைந்துள்ள புன்முறுவலால், அந்த எச்சரிக்கைகளை யெல்லாம் புறக்கணித்துவிட்டார். நாடின்றி மொழியில்லை என்ற உண்மை, இளமையிலிருந்தே அவருடைய உள்ளத்தில் பதிந் திருந்தது. அதனை வெளிப்படுத்தவேண்டிய சந்தர்ப்பம் வரவே அவர் சிறிதுகூடத் தயங்காமல் அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். அவருடைய நாட்டுப்பற்று, பண்டிதர் பணிக்கு விடைகொடுத்துவிட்டது; தேசபக்தன் ஆசிரிய பீடத்தில் அமர்வித்தது. முதலியார், கல்லூரியை விடுத்ததன் விளைவாகப் புலமைக்குப் பெருநஷ்டம் ஏற்பட்டுவிட்ட தென்று அப்பொழுது புலவர்கள் வருந்தினார்கள்; பின்னர், முதலியாரின் தேசத் தொண்டி னாலும்,பத்திரிகைத் தொண்டினாலும் புலமைக்குப் பெருமை ஏற்பட்டதாகப் பெருமை கொண்டார்கள். முதலியார், தேசபக்தன் பத்திரிகையின் ஆசிரிய பதவியை ஏற்றுக்கொண்ட காலத்தில், தமிழ்நாட்டின் அரசியல் துறை ஆங்கில மயமாக இருந்தது. அதனைத் தமிழ்மய மாக்கினார்; தமது பேச்சாலும் எழுத்தாலும், எந்த ஒரு நுண்ணிய கருத்தினையும் தமிழில் தெளிவாகக் கூற முடியுமென்று நிரூபித்தார். தமிழகத்தில் ஒரு புத்துணர்ச்சியை உண்டு பண்ணினார்; தமிழருக்குத் தனி வாழ்வு உண்டு என்பதை உணர்த்தினார். திலகரின் சங்க நாதத்திற்குத் தமிழ் நாட்டில் எதிரொலி கொடுத்தவர் முதலியார். காந்தியடிகளின் அஹிம்சா இயக்கத்திற்குத் தமிழ்நாட்டில் உரமூட்டியவர் முதலியார். தேசபக்தன் பத்திரிகையின் அன்றாட இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், அப்பொழுதைய தமிழ் நாட்டின் தேசீயத் துடிப்பை ஒருவாறு கேட்கலாம். முதலியார், சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை தேசபக்தன் ஆசிரிய பீடத்தை அலங்கரித்திருந்தார். பிறகு, நிருவாகதர் களுக்கும் முதலியாருக்கும் சிறிது பிணக்கு உண்டாயிற்று. எனவே விலகிக் கொண்டார். அதுகாறும் புதுவையில் அஞ்ஞாதவாசம் செய்து வந்து தேசபக்தன் செய்த கிளர்ச்சியின் பயனாகத் தடை நீங்கப் பெற்ற திரு. வ. வே. ஸு. ஐயர் தேசபக்தன் ஆசிரியபீடத்தில் அமர்ந்தார். முதலியார் தேசபக்தன் ஆசிரியரா யிருந்த காலத்தில் தொழிலாளர் நலனில் கவனஞ் செலுத்தினார். தொழிலாளர் சங்கம் தோற்று விக்கப்பட்டது. அச்சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள் முதலியாருக்கு ஒரு பணமுடிப்பு அளித்தனர். அது, நவசக்தி எனும் வாரப்பத்திரிகை தோன்றுவதற்குக் காரணமா யமைந்தது. அதன் முதல் இதழ் 22 - 10 - 1920இல் வெளிவந்தது. சுமார் இருபது ஆண்டுகள் முதலியாரை ஆசிரியராகப் பெற்று நவசக்தி தமிழ் நாட்டில் நல்ல வேலை செய்தது; சிறப்பாகத் தொழிலாளர் இயக்கத்தை வலுப் படுத்திக் கொடுத்தது. தொழிலாளர் நலனுக்காக முதலியார் தூங்காத இரவுகள் பல; அனுபவியாத துன்பங்கள் சில. அதிகார சக்தியின் உறுமல், குண்டு களின் வீச்சு, தொழிலாளர்களின் வேதனை, தலைவர்களென்று முன் வந்தவர்களின் சமரஸப் பேச்சுக்கள் ஆகிய பலதிறப்பட்ட சக்தி களுக்கு மத்தியில், முதலியார் மனவமைதி குலையாமல், தொழிலாளர் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் உழைத்த உழைப்பு அந்தத் தொழிலாளர்களின் இதயத்தில் சாசுவத மான முத்திரையிட்டிருக்கிறதென்பதை யாரே மறுக்க முடியும்? தமிழ் மொழி வளம்பெற முதலியார் ஆற்றிய தொண்டுகள் சொல்லுக்கடங்கா. சுமார் ஐம்பது நூல்கள் வரை அவரால் இயற்றப் பட்டு வெளி வந்திருக்கின்றன. கண்பார்வை இழந்து நின்ற போழ்தும், பிறரைக்கொண்டு எழுதச் செய்து சில நூல்களை வெளியிட்டார். 1943ஆம் ஆண்டு ஆகட் திங்கள் முதலியாரின் அறுபது ஆண்டு நிறைவு விழா தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பெற்றது. முதலியார், புகழைத் தேடிச் செல்லாதவர்; அதனால் அஃது அவரைத் தேடி வந்து அடைந்தது. முதலியாருடைய வாழ்நாளின் பிற்பகுதியைத் துன்ப மேகம் சூழ்ந்துகொண்டது. கண்ணொளி இழந்து மிகவும் கஷ்டப் பட்டார். அப்பொழுதெல்லாம் அவருக்கு உறுதுணையாயிருந்தவர் சண்மு கானந்த சுவாமிகள்1 என்பவர். முதலியாருக்குத் தாம் செய்யும் தொண்டு தமிழ்த் தாய்க்குச் செய்யும் தொண்டென்று கருதியவர் சுவாமிகள். இவர்தம் அன்புத் தொண்டு முதலியாருக்கு எவ்வளவு ஆறுதலா யிருந்ததென்பதை ஒரு சிலரே அறிவர். சண்முகானந்தரின் தன்னல மற்ற சேவை இளைஞர் மனத்தில் பதிவதாக! முதலியாரின் கடைசி காலத்தில், அவருடைய நூல்களை நல்ல முறையில் அச்சிட்டு வெளிக்கொணரும் பொறுப்பை ஏற்று நடத்தியவர் திரு. மு. நாராயணசாமி முதலியார்2 என்பவர். இவரிடத் தில் முதலியாருக்கு அதிக நம்பிக்கை. நவசக்தியின் முற்பகுதிக் காலத்திலிருந்து இவர் சாது அச்சுக்கூடத்தில் சாதுவாகப் பணி யாற்றி வருகிறார். பிறரால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத முதலியாரின் கையெழுத்தை இவர் சுலபமாகப் புரிந்துகொண்டு அதனை அச்சிலே கொணரும் ஆற்றல் வாய்ந்தவர். திரு. வி. உலக நாத முதலியார் மறைந்த பிறகு சாது அச்சுக் கூடத்தின் நிருவாகம் பூராவையும் நாளது வரை இவரே ஏற்று நடத்தி வருகிறார். இவரை முதலியார், தமது நூல்களில் பன்முறை வாழ்த்தியிருக்கிறார். கண்ணொளி இழந்து நின்ற முதலியாரின் உடல் நிலை வரவரச் சீர்கெட்டு வந்தது. கடைசியில் 1953ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் பதினேழாம் தேதி இரவு சுமார் ஏழு மணிக்கு ஆண்டவன் திருவடி சேர்ந்தார். அவர்தம் திருநாமம் வாழ்க! 1. இவர், வட ஆறுகாட்டில், 1889ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதின்மூன்றாந் தேதி பிறந்தவர். தாயார்: மீனாட்சி அம்மாள்; தந்தையார்: துரைசாமி முதலியார். பத்தொன்பதாவது வயதில் திருமணம். மனைவியார்; கமலாம்பாள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. கமலாம் பாள் அம்மையார், சண்முகானந்தரது இருபத்தாறாவது வயதில் இறைவனடி சேர்ந்தார். மனைவியை இழந்த பிறகு, சண்முகானந்தர் மனத்துறவு பூண்டவராய், கன்னியாகுமரி முதல் இமயம் வரை கால் நடையாக யாத்திரை செய்தார். சில ஆண்டுகள் ரிஷிகேசத்தில் தங்கினார். திரு. வி. க. வுடன் தொடர்பு கொண்ட பிறகு அரசியலில் ஈடுபட்டு ஐந்து முறை சிறை சென்றார். ஹிந்தி மொழிப் பிரச்னை சம்பந்தமாக இரண்டு தடவை சிறை வாசம் அனுபவித்தார். இந்நூலாசிரியர்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் திரு. வி. க. வின் இறுதிக் காலம் வரை என்னால் இயன்ற தொண்டினை அவருக்குச் செய்து, திரு. வி. க வினால் மனமுவந்த வாழ்த்தும், சிறந்த ஒருவர்க்குத் தொண்டு செய்தோம் என்ற மனத்திருப்தியும் அடைந்தேன் என்று குறிப்பிடுகிறார். 2 . இவர் தென்னாறுகாடு ஜில்லா பெண்ணாகடம் என்னும் ஊரில் 1908ஆம் வருஷம் டிசம்பர் மாதம் இருபதாந் தேதி பிறந்தவர். தாயார்: தையல்நாயகி அம்மாள்: தந்தையார்: முனிசாமி முதலியார். 1925ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து திரு. வி. க. வின் சாது அச்சுக்கூடத்தில் பணியாற்றி வருகிறார். திரு. வி. க.வின் கண்ணொளி மங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, அவரது நூல்கள் பலவும் இவரது பொறுப்பிலும் மேற்பார்வை யிலுமே வெளிவந்தன என்று சுருக்கமாகச் சொல்லலாம். அந்தண்மையின் அணிகலன் அந்தண்மையின் அணிகலனென வாழ்ந்த வ. வே. சு. ஐயருக்குச் சிறியேனை முதன்முதலாக அறிமுகப்படுத்தி வைத்த வன், கி.மு. நான்காவது நூற்றாண்டில் பாடலி புத்திரத்தைத் தலைநக ராகக் கொண்டு அரசாண்ட சந்திரகுப்த சக்ரவர்த்தி! என்ன பிதற்றுகிறாய் பேதாய் என்று என்னைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறதல்லவா, வாசகர்களே, உங்களுக்கு? சற்றுப் பொறுங்கள். ஐயர், சந்திரகுப்த சக்ரவர்த்தியைப்பற்றி ஒரு சிறிய நூல் எழுதியிருந்தார். அது தேசபக்தன் பத்திரி கைக்கு மதிப்புரைக்கு வந்திருந்தது. மதிப்புரை செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்புவிக்கப் பட்டது. ஏதோ எனக்குத் தெரிந்த வரையில் மதிப்புரை எழுதினேன். அந்த மதிப்புரை, என் பெயருடன் 1918ஆம் வருஷம் மே மாதம் எட்டாந் தேதி. இதழில் வெளி வந்தது. அதன் பெரும்பகுதியை இங்கு அப்படியே கொடுக்கிறேன்:- ஸ்ரீமான் வ.வே.சு. ஐயருடைய புத்தகம் தமிழுலகுக்குப் பெரு நன்மை பயக்கும் என்பது திண்ணம். புத்தகத்தின் அளவு சிறியதே யாயினும் விஷயம் நிரம்பியிருக்கிறது. சந்திரகுப்தனுடைய சரித்திரத்தை வாசிப்பவர் இன்புறும் வண்ணம் இவர் எழுதிக்கொண்டு செல்கின்றார். ஆனால் 75 பக்கங் கொண்ட இச்சிறிய நூலில் சந்திரகுப்தனுடைய முழுச் சரித்திரத்தை யும் அவனுக்கு முன்னும் பின்னும் நடந்த விஷயங்களையும் எதிர்பார்த்தல் தவறு. சந்திரகுப்தனுடைய காலத்தில் ஆட்சிமுறை எங்ஙனமிருந்தது என்பதை ஒருவாறு விளக்கிக் காட்டியிருக்கிறார். இலங்கையில் உத்தியோகஞ் செய்து வந்த டர்னௌர் என்ற ஆங்கில பாலி பாஷைப் பண்டிதர் 1833ஆம் வருஷத்தில் பதிப்பித்த மஹாவமிச சரித்திரத்தின் முகவுரையில் சந்திரகுப்த சக்ரவர்த்தியைப் பற்றி விரிவாய்க் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு விஷயம் இங்குக் கூறவேண்டியது அவசியமா யிருக்கிறது. அந்நிய நாட்டுப் பெயர்களை, வழக்கில் உள்ளபடி உபயோகித்தல் நலம். அதை விடுத்து அந்நியப் பெயரைத் தமிழ்ப் பெயராக மாற்றுதல் பொருந்தாது. உதாரணமாக அரிடாட்டல் என்ற கிரீக் ஆசிரியனை அரிதோத்தலன் என்றும், பிளேட்டோ என்பானை பிளாத்தன் என்றும் கூறுவது பொருத்தமேயன்று. மற்றும் பழைய அதினாபுரமாகிய டில்லியை தில்லி என்று அழைப்பானேன்? ஸ்ரீமான் ஐயருடைய புத்தகத்தின் கடைசி பாகத்தில், டாக்டர் பூனர், மௌரியர் பாரசீகர்களே என்று தாபித்துள்ள கொள்கை களைத் தகுந்த காரணங் காட்டி மறுத்திருக்கிறார். இது பெரிதும் போற்றத்தக்கது. டாக்டர் பூனரின் கோட்பாடுகளை அறிஞர் அங்கீகரியார். அவருடைய வாதங்கள் அருவருக்கத் தக்கவை. டாக்டர் பூனருக்கு இத்தகைய எண்ணம் உதித்தது எக்காரணங் கொண்டோ? சந்திரகுப்த மௌரியன் பாரசீகரிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய அமிசம் ஒன்றுமே யில்லை. அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு முன்னரே பாரசீகரைவிட இந்தியர்கள் நாகரிக முதிர்ச்சி பெற்றவர்களா யிருந்தனர். கி. மு. 549 முதல் கி. மு. 486 வரையில் கிரீ தேசத்தில் மிலேட என்னும் ஊரிலிருந்த ஹெகடாயி என்ற கிரீக் சரித்திரக்காரன் முதன்முதல் இந்தியாவைப் பற்றிப் பேசியிருக்கிறான். அவன் இந்தியாவின் சீர்த்த நாகரிகத்தைப் பற்றி வெகுவிரிவாய்ப் பேசுகிறான். அங்ஙனமிருக்க, சந்திரகுப்தன், தன் நாட்டில் இல்லாததொரு நாகரிகத்தைப் பாரசீக தேசத்திலிருந்து கற்றுக்கொள்ள முயன்றிருப்பானா? சந்திரகுப்தன் பாரசீகனல்ல; பாரசீக நாகரிகத்தைக் கற்றுக்கொண்டவனுமல்ல. இதைத் தருக்க முறைகொண்டு மறுத்த ஸ்ரீமான் ஐயருக்குச் சரித்திர உலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. கடைசியில் ஒன்றுகூறி முடிக்கிறேன். ஸ்ரீமான் ஐயருடைய சரித்திரப் புத்தகத்தைப் படித்தால் தேசாபிமானமும் நாட்டு உணர்ச்சியும் உண்டாகும் என்பது திண்ணம். இதே மாதிரி ஸ்ரீமான் ஐயர் பண்டைச் சரித்திரங்களை விரிவாய்ச் சரித்திர ஆதாரத்துடன் எழுதுவாரென நம்புகிறேன். அதற்கு இறைவன் திருவருள் செய்வா னாக. இந்த மதிப்புரையில் எவ்வித விசேஷமுமில்லை. என் அறியாமை தான் புலனாகிறது. இப்பொழுது இதைப் பார்த்துத் தலை குனிகின்றேன். ஐயர் இதைப் பார்த்து என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. ஆனால் மதிப்புரை எழுதியவனைப்பற்றி விசாரித்தாரென்பது மட்டும் தெரியும். அப்பொழுதெல்லாம் தேசபக்தன் காரியாலயம் நாட்டுப் பற்றின் ஊற்றுப்போலிருந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தேசபக்தர் பலர் காரியாலயத்திற்கு அடிக்கடி வந்துபோவர். புதுவையிலிருந்து வந்த போனவரும் உண்டு. அவர்கள் மூலமாக அப்பொழுது அங்கு அஞ்ஞாதவாசம் செய்து வந்த அரவிந்தர், சுப்பிரமணிய பாரதி, வ. வே. சு. ஐயர் முதலியவர்களைப்பற்றி ஆசிரியர் குழாத்தைச் சேர்ந்த நாங்கள் ஒருவாறு தெரிந்து கொண் டிருந்தோம். அவர்களில் யாரையும், எங்களில் ஒருவரைத் தவிர மற்ற யாரும் பார்த்ததில்லை. அந்த ஒருவர் தான் பரலி. சு. நெல்லை யப்பர்1; எங்களுடைய மூத்த சகோதரராக மதிக்கப்பெற்றவர். இவர் புதுவைப் பெருமக்களுடன் நெருங்கிப் பழகியவர். அவர்களைப் பற்றி அடிக்கடி எங்களிடம் கூறுவார். எனவே அவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்களுக்கு அதிகரித் திருந்தது. அந்த ஆவலும் சில மாதங்களுக்குப் பின்னர் நிறைவேறியது. என்னைப் பொறுத்தமட்டில் அரவிந்தரைத் தரிசிக்கும்பேறு பெற்றேனில்லை. புதுவையில் வதிந்த இவர்களில் ஒரு சிலருக்குத் தன்னா லியன்றவளவு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டுமென்று தேசபக்தன் காரியாலயம் ஆவல் கொண்டது; கொண்டதன் விளைவாக ஐயரின் பன்மொழிப் புலமையைக் கண்டது; அதனைத் தமிழுலகுக்குப் பயன்படுத்தத் தீர்மானித்தது. ஐயர், பத்திரிகையில் தொடர்ந்தாற்போல் கட்டுரைகள் எழுதிவருவதென்றும், அதற்காக அவர் மாதம் முப்பது ரூபாய்வீதம் சன்மானம் பெறுவதென்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோல் ஐயர் கட்டுரைகள் எழுதி வந்தார். அவற்றைப் பத்திரிகைக் குரிய முறையில் அமைத்து வெளி யிடும் பொறுப்பு பெரும்பாலும் எனக்கே வந்து சேரும். நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களும் பாரதிதாசன் கனக சுப்புரத்தினம் அவர்களும் அப்பொழுது பக்தனில் பாட்டுக்கள் தீட்டி வந்தார்கள். இந்தப் பாட்டுக்கள் பெரும்பாலும், எனது கெழுதகை நண்பரும் கவி உள்ளம் படைத்த வருமான பரலி. சு. நெல்லையப்பரின் எழுது கோலுடன் உறவு கொண்டாடிவிட்டு அச்சகம் நுழையும். சில சமயங்களில் சிறியேனுடைய எழுது கோலுக்கும் அந்த உறவு கிட்டும். கிட்டிப் பயனென்னை? கவிதைப் பூங்காவை எட்டிப் பார்ப்பதற்குக்கூடத் தகுதியற்றவனாயிருக் கிறேன். ஐயர், தமது கட்டுரைகளால் என்னைக் கவர்ந்தார். அவருடைய முகத்தைப் பாராதவனாயிருந்தும் அவருடைய அகத்தை ஒருவாறு என்னால் பார்க்கமுடிந்தது. அவரை விரைவிலே சந்திப்போமென்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது. புதுவைத் தேசபக்தர்கள்மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் பலவும் விலக வேண்டுமென்றும், அவர்கள், தாய்நாட்டில் விருப்ப மான இடங்களுக்குச் செல்லவோ, அங்கு வசிக்கவோ வாய்ப்புப் பெற வேண்டுமென்றும் தேசபக்தன் குரல் எழுப்பியது. தலை யங்கம், உபதலையங்கம், அரிமா நோக்கு இவைகளில் அடிக்கடி இந்தப் புதுவை வீரர்கள் இடம் பெற்று வந்தார்கள். இதன் விளைவாகவும், முதல் உலக மகாயுத்தத்தின் நெருக்கடி ஒருவாறு தணிந்துவிட்டதென்று அப்பொழுதைய அரசாங்கம் கருதியதன் காரணமாகவும் இவர்கள் மீதிருந்த தடைகள் அகன்றன. அரவிந்தர் மட்டும், புதுவையை நிரந்தரப் புகலிடமாகக் கொண்டுவிட்டார். மற்றவர்கள் புதுவையினின்று விடைபெற்றுக் கொண்டார்கள். தேசபக்தன் தாபனத்திற்கும் முதலியாருக்கும் சிறிது காலமாகப் புகைந்துகொண்டிருந்த பிணக்கு வளர்ந்து கடைசியில் 1920ஆம் ஆணடு ஜூலை மாதம் மூன்றாவது வாரம், முதலியாரை ஆசிரியப் பதவிக்கு விடை கொடுத்துவிடுமாறு செய்தது. அப்பொழுது தேசபக்தன் பொறுப்பாளராயிருந்த சுப்பராய காமத், ஐயரைக் கடித வாயிலாகவும் ஆள்மூலமாகவும் அணுகி, ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். ஐயரும் இணங்கினார். மாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளம். சம்பளம் என்ற சொல்லை இங்கு உபசார வழக்காகவே உபயோகிக்கிறேன். ஐயர், குடும்பத்துடன் சென்னை போந்து சாதாரண வாழ்க்கை நடத்த, குறைந்தபட்சத் தேவை யாக இந்தத் தொகை நிர்ணயிக்கப் பெற்று வழங்கப்பட்டதே தவிர, ஐயரின் தன்மையையோ திறமையையோ உத்தேசித்து அல்ல வென்பதை அப்பொழுது நாங்களெல்லோரும் நன்கு உணர்ந்திருந்தோம். ஐயர், 1920ஆம் வருஷம் ஜூலை மாதம் முப்பத்தோராந் தேதி ஆசிரியப் பொறுப் பேற்று, தம் பெயருடன் தலையங்கம் எழுதினார். அதில், தாம் ஆசிரியப்பொறுப்பேற்கச் சம்மதித்ததற்கான காரணத்தை இரண்டு மூன்று வாக்கியங்களில் கூறியிருக்கிறார்:- காரியதரிசி என்னை வருவித்து நான்தான் ஆசிரிய தானத்தை வகிக்கவேண்டும் என்று வேண்டியபோது பக்தன் மீதுள்ள வாஞ்சையினாலும், என்னுடைய நோக்கங்களைத் தமிழ் நாட்டவர்க்கு விதாரமாய்த் தெரிவிக்க அவனே சிறந்த வாயிலாக இருப்பானாகையினாலும், நாட்டின் தற்கால ராஜதந்திர நிலைமையில் ராஜதந்திரம் பயின்று எல்லோருக்கும் ராஜீய சம்பந்தமான தேச சேவை செய்யவேண்டி யது கடமையானதாலும் நான் சம்மதித்தேன். பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முந்திய நாளோ அதற்கு முந்திய நாளோ - இப்பொழுது எனக்குச் சரியாக ஞாபகமில்லை. - ஐயர் பக்தன் காரியாலயத்திற்கு வந்தார். முற்பகல் சுமார் பத்தரை மணி இருக்கும். அப்பொழுதுதான் முதன்முதலாக ஐயரைப் பார்த்தேன். கோடிட்ட நெற்றி; அதில் பிறை வடிவமான சந்தனப் பொட்டு; புன்சிரிப்பு தவழும் உதடுகள்; ஒழுங்காகச் சீவிவிடப்பட்ட தலைமயிரும் தாடிமீசையும்; கட்டுமதான சரீரம்; அதை ஓர் உத்தரீயம் மறைத்துக் கொண்டிருந்தது; இடுப்பிலே பஞ்சகச்ச வேஷ்டி; கையிலே ஒரு புத்தகக் கட்டு; இந்தத் திருக்கோலத்தில் காட்சியளித்தார் ஐயர். வந்ததும் உதவி ஆசிரியர்களாகிய எங்கள் எல்லாருக்கும் கைகூப்பி வணக்கஞ் செய்தார்; நாங்களும் பிரதி வணக்கஞ் செய்தோம். பரலி. நெல்லையப்பர், அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். உங்களோடு சேர்ந்து பணியாற்ற வந்திருக்கிறேன் என்றார் ஐயர். எங்கள் பாக்கியம் என்றார் நெல்லையப்பர். அப்பொழுது அவர் வந்த நின்ற திருக்கோலத்தையும், சிரித்த முகத்துடன் இரண்டு மூன்று வார்த்தைகள் சொன்னதையும் என்னால் மறக்கவே முடியாது. அவர் வணக்கம் செய்தாரென்றால், தலை குனிந்தன்று; தலை நிமிர்ந்துதான். ஆண்டவன் ஒருவனுக்குத் தவிர மற்ற யாருக்கும் அவர் தலை குனிந்தது கிடையாது. அப்பொழுது அவருக்கு நாற்பதுவயதுகூட பூர்த்தியாக வில்லை. ஆயினும் அவருடைய தலை மயிரிலும் தாடி மீசையிலும் நூற்றுக்குச் சுமார் முப்பத்தைந்து சத விகிதம் நரைத்திருந்தது. நெற்றியில் திரையும் விழுந்திருந்தது. ஆயினும் அவருடைய உடலுறுப்பு ஒவ்வொன்றும் வஜ்ரக் கட்டுடையதாக இருந்தது. முதற் பார்வையிலேயே தேகத்தை நன்றாகப் பாதுகாத்து வருகிறவர் என்பது புலனாகியது. அகன்ற மார்பு; வளையாத முதுகெலும்பு; கர்லா கட்டைகள் மாதிரி கைகளும் கால்களும்; ஒளியும் அருளும் நிறைந்த கண்கள்; இவைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓவியனோ, சிற்பியோ, தங்கள் கைத்திறனைக் காட்டுவதற்கேற்ற உருவம். அந்த நாள் முதல் தேசபக்தன் ஆசிரிய பீடத்திலிருந்த வரையில் தினந்தோறும் ஐயரைப் பார்க்கவும் அவரோடு நெருங்கிப் பழகவும் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, இடையில் பெல்லாரி சிறையில் அவர் வதிந்த ஒன்பது மாத காலம் தவிர, 1925ஆம் வருஷம் ஜூன் மாதம் பாபநாசம் அருவியில் கலக்கும் வரை அவரைப் பலமுறை சந்தித்துப் பேசும் பேறு எனக்கு இருந்தது. அநேகமாக, சென்னை போதரும்போதெல்லாம் எங்கள் சந்திப்பு நிச்சயம். சேரமாதேவி குருகுலத்தைப்பற்றி அவர் கட்டிய மனக் கோட்டை, பின்னர் அது சம்பந்தமாக அவர் அடைந்த மனவேதனை, இவைகளையெல்லாம் நான் ஒருவாறு அறிவேன். அஃதிருக்கட்டும். ஐயர், ஒருதரமாவது கலகலவென்று உரக்கச்சிரித்து நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான புன்சிரிப்புதான். அவருடைய நடையிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு போக்கிலும் எப்படி ஒருவித நிதானமும் கம்பீரமும் இருந்தனவோ, அப்படியே அவருடைய புன்சிரிப்பிலும் ஒருவித அடக்கமும் கம்பீரமும் கலந்து விளங்கின. அவர் சிரித்துக் கொண்டே நம்மிடம் சம்பாஷிக்கிற போது ஓ! இந்த ஆத்மா, எத்தனையோ கஷ்டங்களை மகா அலட்சியத்துடன் சமாளித்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட துன்பங்கள் வந்த காலத்திலும் கொஞ்சங்கூட கலங்காத மனம் இந்த வஜ்ர சரீரத்திற்குள் இருக்கவேண்டும் என்பன போன்ற எண்ணங்களே நமக்கு உண்டாகும். ஐயர், தமது தேகத்தை நன்றாகப் பேணிப் பாதுகாத்து வந்தது போல், தம்மோடு பழகுகிறவர்களையும், அவ்வாறு பாதுகாக்கும் படி கூறுவார். என் உடல் விஷயத்தில் அவருக்கு மிகவும் அதிருப்தி. சிறு வயதிலிருந்தே இப்படித்தான் இருக்கிறீர்களோ? இப்படியே தேகத்தை வைத்துக் கொண்டிருக்கலாமா? இருபத்தைந்து வயது கூடப் பூர்த்தியாகவில்லை. தோள்தட்டி நிற்கவேண்டிய பருவ மல்லவா இது? ஏன் தினந்தோறும் சிறிது நேரமாவது தேகப் பயிற்சி செய்யக் கூடாது? இப்படிக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு என்னைத் தர்ம சங்கடமான நிலைமைக்குட்படுத்திவிடுவார். நான் அப்பொழுதெல்லாம் ஒரு புத்தகப் புழுவாயிருந்தேன். காரியாலயத்திற்குச் செல்லாத நாட்களில் அடையாறு நூல் நிலையமும் கன்னிமாரா நூல்நிலையமும் எனது புகலிடங்களா யிருந்தன. இங்ஙனம் விடுமுறை நாட்களில்கூட நான் வீட்டில் தங்காமற் சென்றது, எனது பெற்றோர்க்குச் சிறிது வருத்தமே. ஒரே பிள்ளை யல்லவா? ஆனால் என் கதை இங்கே எதற்கு? உடல் உரம் பெற்றிருந்தால்தான் உள்ளம் உறுதிப் பட்டிருக்குமென்பது ஐயரின் திடமான நம்பிக்கை. இதைப் பல விதமாக என் போன்ற மெலிந்த தேகமுடையவர்களுக்கு வற்புறுத்திச் சொல்லுவார். பாரத ஜாதி வீறுகொண்டு வாழவேண்டுமானால் அதன் முப்பது கோடி பிரஜைகளும் பீமார்ஜுனர்களாய்த் திகழ வேண்டு மென்பார். இந்த மாதிரியான கருத்துக்களை மிகவும் அழகான பாஷையில், யாருடைய மனமும் புண்படாத வகையில் சொல்லுவார். தாம் சொன்னபடி நடந்து வந்தார். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வார், நித்தியானுஷ்டானங்களில் தவறமாட்டார். தலைமயிரைச் சீவிவிட்டிருப்பது, வேஷ்டி உடுத்தி யிருப்பது, இப்படிச் சாதாரண விஷயங்களிலும் ஒருவித ஒழுங்கு காணப் பெறும். இதனால் கம்பீரமாகத் தோற்றமளிப்பார் அவரைப் பார்த்தவுடன் நம்மையறியாமல் அவரிடத்தில் வாஞ்சையும் பக்தியும் உண்டாகும். மகரிஷி வ. வே. சு. ஐயர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டா ரென்பதில் ஆச்சரியமில்லை. 1920ஆம் வருஷம் ஜூலை மாதம் கடைசி நாளன்று, ஐயருடைய முதல் தலையங்கத்தைத் தாங்கி தேசபக்தன் வெளி வந்தானல்லவா, அப்பொழுது நான் பிரதம உதவி ஆசிரியனா யிருந்தேன். என்னுடைய மாதச் சம்பளம் அறுபது ரூபாய். ஆசிரிய கூடத்தின் பெரும்பாலான பொறுப்புக்களைக் கவனித்து வந்த என்னைப் பற்றி ஐயர் என்ன அபிப்பிராயங் கொண்டாரோ, எப்படி மதிப்பிட்டாரோ, எனக்குத் தெரியாது. செப்டம்பர் மாதத்திலிருந்து எனது சம்பளத்தை எழுபது ரூபாயாக உயர்த்திக் கொடுக்கும்படி காரியாலயத்தில் ஏற்பாடு செய் திருந்தார். இஃது எனக்குத் தெரியாது. ஐயரும் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை. காரியாலயத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்த சீனிவாச ராகவன் என்ற நண்பரும் எனக்குத் தெரிவிக்கவில்லை, செப்டம்பர் மாதக் கடைசி. முதலியார் நவசக்தியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வந்தார். அக்ட்டோபர் மாதம் மூன்றாவது வாரம் முதற்சிலம்பின் முதற்பரல் வெளிவர வேண்டுமென்று தீர்மானமாயிற்று. தொடக்கத்திலிருந்தே நான் அதில் பணியாற்ற வேண்டுமென்பது முதலியாரின் விருப்பம், தமது விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். ஐயருடன் தாம் கலந்து பேசுவதாகவும் என்னைப் பொறுத்தமட்டில் ஏதும் தடை யில்லையே என்றும் கேட்டார். தடையேது? ஐயரிடம் விடை வாங்கிக் கொள்வ தெப்படியென்று தயங்கினேன். ஆயினும் என்ன செய்வது? முதலியாரின் அன்பான கட்டளையல்லவா? ஐயரிடம் முதலியாரின் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆம்; முதலியாரும் என்னிடம் சொன்னார். தேசபக்தன் நீங்கள் பெற்று வளர்த்த குழந்தை. முதலியாரே விலகியிருக்கக்கூடாது. அவர் விலகின கையோடு நீங்களும் விலகிக்கொண்டால் எப்படி? உங்களைப் போன்றவர்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்த்துத்தானே நான் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். தவிர, செப்ட்டம்பர் மாதத்திலிருந்து உங்களுடைய சம்பளத்தை எழுபது ரூபாயாக உயர்த்தித் தரும்படி காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருக்கிறேனே. சம்பளத்திற்காக நீங்கள் வேலை செய்யவில்லையென்றாலும், உங்கள் பொறுப்புக்குத் தக்க ஊதியம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பது என் கருத்து; அப்படிக் கிடைக்கச் செய்வது எனது கடமையுங்கூட என்று கூறித் தமது விசுவாசத்தினாலும் நம்பிக்கையினாலும் என்னைக் கட்டுப்படுத்திவிட்டார். எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. சிறிது தயங்கினாற்போல் நின்றேன். நீங்கள் சும்மா போங்கள்; நான் முதலியாரிடம் சொல்லிக் கொள்கிறேன் என்று விடை கொடுத்து விட்டார். இனி அங்கே நிற்பதெப்படி? அன்று மாலை முதலியாரிடம் சென்று நடந்த விஷயத்தைக் கூறினேன். அவரும் ஐயர் சொல்வதும் சரிதான். தேசபக்தனும் நம்முடைய குழந்தைதானே? ஆகையால் இப்பொழுது நீங்கள் அங்கேயே இருங்கள்; பிறகு பார்த்துக் கொள்ளலாம். தற்காலிக மாக ஒருவரை நியமித்துக் கொள்கிறேன் என்று பெருந்தன்மை யோடு கூறினார். ஐயரும் மறுநாள் முதலியாரைக் கண்டு பேசி விட்டு வந்து என்னை மன அமைதி பெறுமாறு கூறினார். என்னுடைய சம்பளம் உயர்த்தப்பட்டதை நான் பெரிதாகக் கருதவில்லை; என்னுடைய சக உதவி ஆசிரியர்களிடம் சொல்லி மகிழக்கூடிய அவ்வளவு முக்கியமாகவும் நான் எண்ணவில்லை; எனது பெற்றோர்களிடமும் இதைப்பற்றிப் பிரதாபிக்கவில்லை. மறுமாதம் - அக்ட்டோபர் மாதம் நான் சம்பளப் பட்டியில் கையெழுத்திட்டுவிட்டு எழுபது ரூபாயைப் பெற்றுக் கொண்டேன். சம்பளப் பட்டியில் ஒவ்வோர் ஆசிரியருக்கும் ஒவ்வோர் ஏடு விடப் பெற்றிருக்கும். அதை அவர் எத்தனை தரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்; மற்றவர்களுடைய ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பது முறையன்று, மரியாதையான செயலுமன்று என்று சாதாரணமாகச் சொல்லுவார்கள். இதைத் தெரிந்துகொள்ளாத சக உதவி ஆசிரியர் ஒருவர், என்னுடைய சம்பள ஏட்டைப் புரட்டிப் பார்த்தார். எழுபது ரூபாயென்றிருந்தது. முந்தின மாதம் அறுபது; இந்த மாதம் எழுபது! ஆத்திரம் வந்துவிட்டது அவருக்கு; சம்பள உயர்வுக்காக அல்ல; அந்த உயர்வை அவருக்கோ, மற்ற உதவி ஆசிரியர்களுக்கோ நான் தெரிவிக்கவில்லை யென்பதற்காக. தவிர, எனக்குமட்டுந்தான் இந்த உயர்வு என்பதையும் கண்டு கொண்டார். வந்தார் என்னிடம். என்ன சர்மா, முதலியாரைத்தான் காக்காய் பிடித்து வைத்துக் கொண்டிருந்தீர்கள் என்று எண்ணினேன்; ஐயரையும் காக்காய் பிடித்துவிட்டீர்களே; உம்முடைய சாமர்த் தியமே சாமர்த்தியம்; நீங்கள் மட்டும் சம்பள உயர்வு பெற்றுக் கொண்டதோடுகூட மற்றவர்களுக்கு அதைத் தெரிவிக்காமலும் இருந்துவிட்டீர்களே என்று படபடப்பாகக் கூறினார். நான் சிறிது நேரம் பொறுத்து நிதானமாக ஐயா, காக்காய் பிடிக்கிற தொழில் எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் என் வாழ்க்கைப் போக்கே வேறு விதமாகத் திரும்பியிருக்கும். நான் சம்பள உயர்வு கோரவில்லை. ஐயரே எனக்குக் கூட்டிக் கொடுக்கும்படி செய்தார். இந்தச் சம்பள உயர்வை நான் பெரிதாகக் கருதவில்லை. அதனால் தான் உங்களிடமெல்லாம் தெரிவித்துக் கொள்ளவில்லையே தவிர, தெரிவிக்கக்கூடாதென்ற எண்ணமில்லை. எனது எண்ணத் தூய்மைக்குத் தயை செய்து மதிப்புத்தர வேண்டுகிறேன் என்று பதில் கூறினேன். அவரும் அப்பொழுது அடங்கிவிட்டார். இருந்தா லும் உள்ளூற அவருக்கு மனக்கசப்புதான். இதை, நான் பகிர்ந்து கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்யாமலிருப்பதில் காட்டி வந்தார். ஐயரிடம் இதை நான் சொல்லவில்லை சொல்லாம லிருப்பதுதான் உத்தமம் என்று கருதினேன். ஐயர், பொதுப்படையான விஷயங்களைப் பற்றித் தலையங்கம் எழுதவேண்டியிருந்தால் அதைப் பெரும்பாலும் வீட்டிலேயே எழுதிக் கொண்டு வந்துவிடுவார். அன்றாடப் பிரச்னைகளைப் பற்றிய தலையங் கங்களைக் காரியாலயத்திற்கு வந்து, கிடைத்திருக்கும் செய்திகளை ஆய்ந்து பார்த்த பின்னரே எழுதுவார். அப்படி எழுதுவதற்கு முன்னர் அநேகமாக என்னைக் கலந்தாலோசிப்பார். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். நான் சொல்லுவது சரியாயிருந்தால் ஏற்றுக்கொள்வார்; தவறாயிருந்தால் திருத்துவார். ஏற்றுக்கொள்வதில் கௌரவம் பாராட்டமாட்டார்; திருத்துவதில் தயக்கமும் காட்டமாட்டார். ஐயர் இல்லாத காலங்களில் தலையங்கம் எழுதும் பொறுப்பு பெரும்பாலும் என்னையே வந்தடையும். சில சமயங்களில் நெல்லை யப்பரும் எழுதுவார். நான் எழுதுவதாயிருந்தால் ஐயருடைய நடையையே பின்பற்றுவேன். அவருடைய எழுத்தில் வடமொழிப் பிரயோகங்கள் விரவி நிற்கும். நான் அப்படியே கையாளுவேன். வட மொழியில் எனக்கேற்பட்டிருந்த சொற்பப் பரிச்சயம் அப்பொழுது பெருந்துணையாய் நின்றது. முதலியாருடைய நடையையோ ஐயருடைய நடையையோ நகல் செய்ய வேண்டுமென்பது என் நோக்க மல்ல; தலையங்கம் ஆசிரியருடைய நடையில் அமைந் திருக்க வேண்டுமென்பதுதான் என் நோக்கம். யார் எழுதினாலென்ன? ஆசிரியருடைய கருத்துக்களைத்தானே அதில் - தலையங்கத்தில் - பிரதிபலிக்கச் செய்யவேண்டும்? அப்படிப் பிரதிபலிக்கச் செய்கிற போது அவருடைய நடையிலேயே அவை அமைய வேண்டு மல்லவா? நான் பின்பற்றிய இந்த முறையை முதலியாரைப்போல் ஐயரும் பாராட்டினார். ஐயருடைய பன்மொழிப் புலமை என்னை வியக்கச் செய்தது. தமிழ், சம்கிருதம், ஹிந்தி, வங்காளி, ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் ஆகிய பாஷைகளில் அவர் வல்லவர். தெலுங்கும் கன்னடமும் பேசக் கேட்டிருக்கிறேன். அந்தந்த மொழியினையும் அந்தந்த மொழியினர் பேசுகின்ற மாதிரியே பேசுவார். உச்சரிப்பில் சிறிதுகூட மாற்றம் இராது. லண்டனிலிருந்து தப்பி வந்த பொழுது அவர் ஒரு முலிமாகவே நடித்து வந்தாரென்று நான் கேள்விப்பட் டிருந்தேன். அது சாத்தியமாவென்று நான் சந்தேகித்ததுமுண்டு. ஆனால் அவரோடு நெருங்கிப் பழகிய பின்னர் அவருக்கு எதுவும் சாத்தியமென்று தெரிந்தேன். ஐயர் என்னிடம் காட்டி வந்த சலுகை காரணமாக, அவரை நான், பல மொழிகளில் பேசிக் காட்டுமாறு கேட்பேன். அவரும் சலியாமல் பேசிக் காட்டுவார்; அல்லது படித்துக் காட்டுவார். ஒவ்வொரு மொழியும் எப்படிப் பேசப்படுகிறதென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது என் ஆவல். என் ஆவலை அவரிடம் உரிமையோடு தெரிவித்துக் கொள்வேன். அவரும் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொடுப்பதோடு நில்லாமல், ஒரு மொழி எப்படிப் பேசப்படுகிறதென்பதைத் தெரிந்து கொண்டால்மட்டும் போதாது; அந்த மொழிக்குள் நுழைந்து பார்க்க வேண்டும்; அதன் இலக்கியங்களில் சிலவற்றையேனும் ருசி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்; சந்தர்ப்பம் வாய்க்கிறபோது ருசி பார்க்கும்படியும் செய்வார். அந்தோ! அந்த நாள் திரும்பி வருமோ? ஐயர், மேனாட்டு இலக்கியங்களில் சிறப்பானவற்றைத் தமிழ்ப் படுத்தி வெளியிடவேண்டுமென்று பெரிதும் ஆவல் கொண் டிருந்தார். இதைப்பற்றி அடிக்கடி என்னிடமும் இன்னும் சிலரிட மும் பிரதாபிப்பார். புதுவையில் மண்டையம் ஸ்ரீனிவாஸாச் சாரியார் போன்ற சில நண்பர்களின் ஒத்துழைப்பின்மீது தாம் தொடங்கியுள்ள கம்ப நிலையம் என்ற நூல் வெளியீட்டு தாபனத்தைப் பற்றியும், அது நிறைவேற்ற உத்தேசித்திருக்கும் திட்டங்களைப் பற்றியும் கூறுவார். இந்தக் கம்ப நிலைய அலுவல் சம்பந்தமாக இடையிடையே புதுவைக்குச் சென்று வருவார். தினப்பத்திரிகை மூலமாக இலக்கிய சேவை செய்ய முடியா தென்றும், மாதப் பத்திரிகைதான் அதற்கு ஏற்றதென்றும், அதன் மூலமாகத்தான் ஜனங்களுக்கு இலக்கியத்தில் ருசி உண்டு பண்ண முடியுமென்றும், பிற மொழிகளில் இத்தகைய இலக்கியப் பத்திரிகைகள் இருக்கின்றனவென்றும் சொல்லிக் காட்டுவார்; தமிழில் இத்தகைய பத்திரிகை ஒன்றுகூட இல்லையே என்று ஏங்குவார்; கல்கத்தாவில் ராமானந்த சாட்டர்ஜியின் ஆசிரியப் பொறுப்பில் நடைபெற்று வந்த மாடர்ன் ரெவ்யு என்ற ஆங்கில மாதப் பத்திரிகை மாதிரி வெளிவர வேண்டுமென்பார். கம்ப நிலையம், மாதப் பத்திரிகை இவ்விரண்டுமே அவர் எண்ணத்தின் முன்னணியில், நிறைவேற்றப்படவேண்டிய திட்டத்தின் முதல் வரிசையில் நின்றனவென்பதை நான் நன்கு அறிவேன். பின்னர் சேரமாதேவி குருகுலம் தொடங்கி அதிலிருந்து பாலபாரதி என்ற மாதப் பத்திரிகையை வெளியிட்டதன் மூலம், தமது திட்டத்தின் ஒரு பகுதியை, தமது ஆவல்களில் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டார். என்று சொல்லலாம். அந்தப் பாலபாரதி பத்திரிகை அவருடைய பன்மொழிப்புலமையைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. ஆனால் அதற்குப் போதிய ஆதரவு இல்லை. குருகுல அலுவல் நிமித்தம் அவர் சென்னை போதரும்போது, இதைப்பற்றிச் சொல்லி வேதனைப்படுவார்; சந்தாதார்களைச் சேர்த்துத் தரும்படி அன்பர் சிலரை வேண்டுவார். தமிழன்னைக்குச் சேவை செய்ய வேண்டு மென்று அவர் துடித்த துடிப்பு, அந்தத் துடிப்பு, படித்தவர்க ளென்றும் பணக்காரர்களென்றும் விளம்பரமாகியுள்ள ஒரு சிலருடைய இதயத்தைத் தொடவேண்டுமென்று அவர் கொண்ட ஆவல், அந்த ஆவல் நிறைவேற அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, அந்த முயற்சி கைகூடாத சமயங்களில் அவர் அடைந்த மனச்சோர்வு, இவைகளைப் பற்றி எப்படி விவரித்து எழுதுவேன்? எனது எழுது கோலுக்குச் சக்தியில்லையே. ஐயர் மனச்சோர்வு அடைந்தாரென்றால், ஒரு கணநேரந்தான். இமைப்பொழுதில் அந்தச் சோர்வு மறைந்துவிடும். அந்தத் திண்ணிய மனத்தில் சோர்வுக்கு இடமேயில்லை. அன்பானது துன்பத்தைத் தருமென்று சொல்வார்கள். அதுபோல் தமிழ்த்தாய்மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தியானது, ஏகதேசமாகச் சோர்வு போல் தோன்றி அவரை மேலும் உற்சாகப்படுத்திவிட்டது. அவருடைய உற்சாகத்திற்குத் தள்ளுகட்டை மாதிரி அமைந்தது இந்தச் சோர்வு என்றே சொல்ல வேண்டும். ஐயர், பல மொழிகளில் புலமை பெற்றிருந்த போதிலும், தமது நண்பர்களுடன் அநேகமாகத் தமிழிலேயே பேசுவார். ஆங்கில மொழி யறிந்த தமிழர் சிலரிடத்தில் காணப்படுவது போல இடையிடையே ஆங்கிலச் சொற்கள் விரவி வரமாட்டா. சுத்தத் தமிழிலேயே பேசுவார். நான் சில சமயங்களில் என்னை யறியாமல் ஆங்கிலச் சொற்களைக் கலந்து உளறுவேன். புன்சிரிப்போடு அவற்றைத் தமிழ்ச் சொற்களாக்கி, தமிழிலேயே சம்பாஷணை செய்வார். அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேச்சு வருகிறபோது கூட கூடிய மட்டில் அவற்றைத் தமிழிலேயே விளக்கி வைப்பார். ஆனால் அந்த விளக்கத்தில் வடசொற் பிரயோகங்கள் சிறிது அதிகமாகக் காணப் பெறும். இலக்கிய சம்பந்தமான சம்பாஷணைகளில், அவருடைய பரந்த அறிவு ஒளிவிட்டு வீசுவதைப் பார்க்கலாம். கம்பனும் வள்ளுவனும், வால்மீகியும் காளிதாசனும், ஹோமரும் வர்ஜிலும் அவர் வாக்கிலே களி நடனம் புரிவார்கள். இருந்தாலும், கம்பனை யும் வள்ளுவனையும், அவர் தமது வழிபடு தெய்வங்களாகவே கொண்டாடி வந்தாரென்று சொல்லலாம். ஐயர், தேசபக்தன் பத்திரிகையில் ரோம எண்களுக்குப் பதில் தமிழ் எண்களையே உபயோகிக்க வேண்டுமென்ற புதிய ஏற்பாட்டைச் செய்தார். அப்பொழுது இது புதிய ஏற்பாடாக எங்களுக்குத் தோன்றியது. அதனால்தான் புதிய ஏற்பாடென்று இங்கே சொல்கிறேன். உண்மையில் இதுதான் பழைய ஏற்பாடு. பத்திரிகையில், பக்கங்களின் எண், வருஷம், மாதம், தேதி முதலியவைகளைக் குறிப்பிடும் எண்கள் ஆகிய யாவும் தமிழ் எண்களாகவே இருக்கும். முதலில் இஃது எங்களுக்குச் சிறிது சங்கடமாகவே இருந்தது. வாசகர்கள் இதைச் சுலபமாகப் புரிந்து கொள்ளமாட்டார்க ளென்று சொல்லி, இந்தச் சங்கடத்திலிருந்து விடுதலை பெறப் பார்த்தோம். முடியவில்லை. தொடர்ந்தாற் போல் தமிழ் எண்களைக் கையாண்டு வந்தால் வாசகர்கள் புரிந்துகொண்டு விடுவார்கள் என்று எங்களுக்குச் சமாதானம் கூறிவிடுவார். நாமே வழக்கில் கொண்டு வராவிட்டால் மற்றவர்கள் எப்படி வழக்கில் கொண்டு வருவார்கள்? நாமல்லவோ வழி காட்டவேண்டும்? நம்முடையது தினசரிப் பத்திரிகை. தினந்தோறும் தமிழ் எண்களை வாசர்களின் கண்களில் படும்படி செய்து வர நமக்குத்தான் நிறையச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆகையால் நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவார். தமது நண்பர்களுக்கு எழுதும் கடிதங்களில் தமிழ் வருஷம், மாதம், தேதியையே குறிப்பிடுவார். கிறிதுவ சகாப்தத்திற்குப் பதில் சாலிவாகன சகாப்தம் அல்லது விக்கிரம சகம் அல்லது திருவள்ளுவர் ஆண்டு, இப்படிப்பட்டவைகளையே வழக்கில் கொண்டு வர வேண்டுமென்று கூறுவார்; தமது எழுத்துக்களில் கொண்டு வந்து காட்டவும் செய்வார். தேசபக்தனில், எல்லோராலும் சர்வசாதாரணமாக வழங்கப் பட்டு வந்த ஆங்கிலச் சொற்களுக்குப் பதில் தமிழ்ச் சொற்களையே வழங்க வேண்டுமென்ற நியதியைக் கடைப்பிடித்தார். உதாரணமாக, டிராம் வண்டி என்று எழுதமாட்டார்; மின்சார வீதி வண்டி என்றே எழுதுவார். ஹைகோர்ட்டுக்கு உயர்தர நீதி தலம்; ரெயில்வே டேஷனுக்கு புகைரத நிலையம்; இப்படி, இப்படி. ஜனங்களுக்குப் புரிகின்ற முறையில் வட சொற்களைக் கலந்து எழுதுவதனால், தமிழ்ப் பாஷையின் கௌரவம் குன்றிவிடாதென்பதும், உண்மை யில் அது தமிழ்ப் பாஷைக்கு ஒரு கம்பீரத்தையே கொடுக்கிற தென்பதும் அவர் கருத்து. அவருடைய எழுத்துக்கள், பொருள் ஆழமும் நடைகம்பீரமும் கொண்டன வாயிருந்தன என்பதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்திய தேச சரித்திரம் தேசீயக் கண்ணோட்டத்துடன் எழுதப் படவில்லையென்பது ஐயரின் பெருங்குறை. அந்தக் குறையை நிவர்த்திப்பது தமது தலையாய கடமையென்று கருதினார். அப்படியே இந்திய தேச சரித்திரத்தை நோட் புத்தகத்தில் எழுதிக் கொண்டு வந்தார். எப்பொழுதுமே அவர் கையில், புத்தகங்களும் நோட் புத்தகங்களும் சேர்ந்த ஒரு கட்டு இருக்கும். இந்தக் கட்டோடுதான் பத்திரிகாலயத் திற்கு வருவார். இதில், மேற்படி இந்திய தேச சரித்திர நோட்புத்தகங் களும் அடங்கியிருக்கும். இவற்றிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டுவார். அப்பொழுது அவர் காட்டிய உற்சாகம், எத்தனையோ வருஷங் களுக்குப் பிறகு இப்பொழுதுகூட என் மனக்கண் முன்னர் தாண்டவம் செய்கிறது. ஐயருடைய வைதிகத் தோற்றம், பலருடைய சந்தேகப் பார்வைக்கு அவரை ஆளாக்கிவிட்டது. இது பெரிதும் வருந்தத் தக்க விஷயம். உண்மையில் அவர் ஆசார சீலர்; ஹிந்து தர்மத்தை நெறி தவறாமல் அனுஷ்டித்து வந்தார். அப்படித்தாம் அனுஷ்டிப் பதைப் பார்த்து, அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பரிகாசம் செய்வரோ என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதேயில்லை. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால் செம்பு ஜலமில்லாமல் செல்ல மாட்டார்; செம்பு அகப்படாவிட்டால் தகரக் குவளையையாவது எடுத்துச் செல்வார். அப்பொழுது அவரைப் பார்த்தால் பத்தாம் பசலி பிராமணர் போலவே தோன்றும். இது மிகச் சிறிய விஷயந்தான். ஆனால் இதைக் கண்டிப்பாகச் செய்து வந்தார். அவரோடு நெருங்கிப் பழகியவர்கள்தான் அவருடைய தூய்மையான உள்ளத்தைப் பார்க்க முடியும். அதில் உயர்வு தாழ்வு என்ற வேற்றுமைக்கறை படிந்ததேயில்லை. தர்ம தேவதையின் சாட்சியாக இதை நான் கூற முடியும். அவர் பிராமண குலத்தில் பிறந்தவர் என்ற நோக்கோடு அவரைப் பார்த்தனர் பலர். ஆனால் அவர் பிராமணராகவே வாழ்ந்துவந்தார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். அப்படியானால் பிராமணன் யார் என்ற கேள்வி எழுதிற தல்லவா? ஒரு வடமொழி நூல் இதற்குப் பின் வருமாறு விடை கூறுகிறது:- யோகசாதனம், தப, புலனடக்கம், பரந்த நோக்கு, சத்திய சீலம், மனோ வாக்கு காயத்தில் தூய்மை, வேதஞானம், தயாளகுணம், லௌகிக விவகார ஞானம், கூர்மையான அறிவு, தெய்வபக்தி முதலிய தன்மைகளுடையவர்கள்தான் பிராமணர்கள். இந்த இலக்கணத்திற்குப் பொருந்தும் வகையில் ஐயர் திகழ்ந்தா ரென்பதை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் நன்கு அறிவார்கள். அவர், தமது லட்சியம் நிறைவேற வேண்டுமேயென்பதற்காக, சூழ்நிலையை ஓரளவு அனுசரித்துக் கொண்டு போக விரும்பினார். அதை அடியோடு புறக்கணித்துவிட அவர் விரும்பவில்லை. அப்படிச் சூழ்நிலையை அனுசரித்துக்கொண்டு போக வேண்டு மென்பதும் சொற்பகாலத்திற்கு மட்டுமேயென்று அவர் கொண்டார். சொற்ப காலத்திற்குள் அந்தச் சூழ்நிலையைத் தம் வயப்படுத்திக் கொண்டுவிட முடியும், அதைக் கடந்துவிடவும் முடியும் என்று அவர் நம்பியிருந்தார். அதற்கு அவர் அவகாசம் பெறவில்லை. தவறான பிரசாரத்திற்கு இரையானார். இதனால் நஷ்டம் யாருக்கு? தமிழ் மொழிக்கும் தமிழர் சமுதாயத்திற்குந் தான். எப்பொழுதுமே ஒன்றை உருவாக்குவது கடினம்; உருவாக்கியதை உடைப்பது சுலபம். தீண்டாதாருக்கு உபநயனம் முதலிய சம்காரங்களைச் செய்வித்து அவர்களைப் பல வழிகளிலும் உயர்த்த வேண்டுமென்று ஐயர் சில திட்டங்கள் வகுத்திருந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒரு குலமாக, ஓரினமாக வாழவேண்டு மென்று அடிக்கடி பேசுவார். அவர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை யென்பது அவர் கருத்து. ஜாதி என்ற சொல்லை, விரிந்த பொருளி லேயே அவர் உபயோகித்து வந்தார். உணவு உட்கொள்ளும் விஷயத்தில் அவர் ஒதுக்கல் முறையைக் கையாண்டதில்லை. தேசபக்தன் ஆசிரியராயிருந்த காலத்தில் இடைவேளைச் சிற்றுண்டிக்காக, காரியாலயத்திற்குச் சுமார் ஒரு பர்லாங்கு தூரத்தி லிருந்த ஒரு ஹோட்டலிலிருந்து தோசை தருவிப்பார். ஒரே ஒரு தோசைதான். ஆனால் அது நெய்த்தோசையாக இருக்கவேண்டும். அதுதான் அவருக்கு நிரம்பப் பிடிக்கும். காரியாலயத்து யாராவது ஒரு பையன்தான் - அநேகமாக அச்சுக் கோப்பவர்களில் ஒருவன் தான் - அதை வாங்கிக்கொண்டு வருவான். அவனுடைய குலம் கோத்திரம் முதலியவைகளைப்பற்றி அவர் கவலைப்பட்டதே யில்லை. தம்பீ, கை கால்களைக் கழுவிக்கொண்டு சுத்தமாகப் போகவேண்டும். தெரியுமா? என்றுமட்டும் சொல்லி அவனிடம் காசு கொடுத்தனுப்புவார். ஹிந்துக்களும் முலிம்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய வர்கள் என்பதை ஐயர், பல முகாந்தரங்களைக் காட்டி தேசபக்தன் பத்திரிகையில் எழுதி வந்தார். அதோடு மட்டுமல்ல, எங்கேனும் ஹிந்து - முலிம் பிணக்கு என்னும் புகை எழுந்தால் அதை உடனே சென்று அணைத்து வந்தார். திருவல்லிக்கேணி பைகிராப்ட் ரோட்டி ல் ஜாம் பஜாருக்கு அருகில் அவர் குடியிருந்தபோது இந்த மாதிரியான தொண்டுகள் செய்து இரு சார்பினருடைய நன்றியை யும் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார். ஐயர், தேசபக்தன் ஆசிரிய பீடத்தில் அமர்ந்திருந்த காலத்தில், பொதுக்கூட்டங்களோ வேறு அலுவல்களோ இல்லாத மாலை நேரங்களில், ஐயரும் நானும் கடற்கரைக்குச் செல்வோம். சில சமயங் களில் இரண்டொரு நண்பர்களும் கூட வருவார்கள். அங்கு மணற் பரப்பில் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். ஆனால் இப்படிப் பேசிக்கொண்டிருந்த நாட்கள் சிலவே. பெரும் பாலான நாட்களில் நடைதான். எங்களில் யாரும் வயது முதிர்ந்தவர் களில்லை யாதலினால், நடந்து செல்வதிலே அதிக உற்சாகங் காட்டினோம். காரியாலயத்தில் உட்கார்ந்திருந்தே வேலை செய்து வந்த எங்களுக்கும், திரும்பவும் கடற்கரையில் உட்காருவதற்கு மனமிருப்பதில்லை. நடந்தால்தான் உடல் சோர்வும் உள்ளச் சோர்வும் போகும்போல் ஓர் உணர்ச்சி உண்டாகும். Ianu ‘ï‹W c£fh®ªJ ngRnthkh? என்று சொல்லி உட்காரும்படியான நிலைமையில் வைத்துவிட்டா லொழிய மற்ற நாட்களில் நடைதான். உட்கார்ந்து பேசிய நாட்கள் சிலவானாலும் அவை என்றும் மறக்க முடியாதவை. ஏனென்றால், அப்பொழுது நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் பெரும்பாலும் அரசியலையே பொருளாகக் கொண் டிருந்தன. காந்தியடிகளின் சக்தியாக்கிரக இயக்கம் அரும்புவிட்டுக் கொண்டிருந்த காலம் அது. தீவிரப் புரட்சிவாதியாக இருந்த ஐயர் சத்தியாக்கிரகத்தின் தத்துவத்தை எவ்வளவு அழகாக எடுத்துச் சொன்னார்! அஹிம்சையின் விரிந்த பொருளை எப்படியெல்லாம் எடுத்துக் காட்டினார்! நமது பண்டைய இலக்கியங்களில் அவருக் கிருந்த நுண்ணிய புலமை அப்பொழுது நன்கு புலனாகியது. இங்ஙனம் உட்கார்ந்து பேசிய சில நாட்களில் என்றைக் கேனும் ஒரு நாள் ஐயர் தெம்பு அற்றவராகக் காணப்படுவார்; முகத்தில் சோர்வு தட்டும்; இயற்கையான புன்சிரிப்பு உள்ளடங்கி யிருக்கும். ஏன் என்று நாங்கள் கேட்க முடியுமா? அவராகச் சொன்னால் கேட்டுக் கொள்ளலாமேயன்றி நாங்களாகக் கேட்பது உசிதமன்று, மரியாதையுமன்று எனக் கருதிச் சும்மா இருந்துவிடு வோம். ஆனால் ஐயர் சும்மா இருக்கமாட்டார்; சோர்வையோ உற்சாகத்தையோ மௌனம் என்ற பெட்டிக்குள் வெகுநேரம் பூட்டி வைக்க அவருக்குத் தெரியாது. தாம் எழுதி வந்த இந்திய தேச சரித்திரத்தின் சில பகுதிகளைப் படித்துக் காட்டுவார். நாங்கள் உட்கார்ந்து பேசிய இடம், இப்பொழுது க்வீன் மேரீ காலேஜ் இருக்கிறதல்லவா, அதற்கு எதிரில், அலை வந்து மோதுகின்ற இடத்திற்குச் சிறிது எட்டினாற்போலுள்ளது.. இந்த இடத்தைப் புனிதமான இடமாக இப்பொழுதும் நான் கருதுகின் றேன். இப்பொழு தெல்லாம் நான் கடற்கரைக்கு அதிகமாகச் செல்வதில்லை. அப்படிச் சென்றால், இந்த இடத்திற்கு என்னை யறியாமல் எனது கால்கள் செல்லும்; ஒரு கணமேனும் என் மனம் இங்குத் தங்கும். இந்த இடம் எங்களுக்கு மட்டுமல்ல, திரு. வி. கலியாண சுந்தர முதலியார், எ. சீனிவாச ஐயங்கார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், இப்படிப் பல பெரியார்களுக்கும் சம்பாஷணை தலமாயமைந் திருந்தது. அலைகடலே, மணற்பரப்பே, புனிதம் பெற்றீர்கள்! இந்தப் புனிதமான இடந்தான், எங்கள் நடைக்கும் புறப்படும் இடமாக இருந்தது. இருவரோ, மூவரோ, நால்வரோ - பெரும் பாலும் நான்கு பேருக்குமேல் சேர்ந்ததில்லை - பக்கத்திற்குப் பக்கமாக அணி வகுத்தாற்போல் நடந்து செல்வோம். கடல் அலை அடிக்கடி எங்கள் கால்களைக் கழுவிவிடும். உடுத்தியிருக்கும் வேஷ்டியின் கீழ்ப்பாகம் உப்புத் தண்ணீரைச் சுவைக்கும். அவ்வளவு ஓரமாகச் செல்வோம். கீழே மிருதுவான மணல்; குளிர்ந்த கடற்காற்று; மேலே அந்திவானம்; முன் நிலவாயிருந்தால் கேட்க வேண்டியதேயில்லை. நடப்பதற்குச் சிரமமே இராது. நாங்கள் அணி வகுத்தாற்போல் செல்கிறபோது, எதிரில் வருகிற வர்கள், எங்களுக்கு வழிவிட்டுத் தான் போகவேண்டும்; நாங்கள் ஒதுங்க மாட்டோம். அப்பொழுது நாங்கள் அடைந்த உற்சாகத்தை என்னென்று வருணித்து எழுதுவது? இப்பொழுது நினைத்துக்கொண்டால் கூட, அந்த மாதிரியான கூட்டுறவு, அந்தமாதிரி நண்பர்களுடன் சல்லாபம், தண்ணீர் ஓரமாகச் சென்று கொண்டே பல அரிய விஷயங்களைப் பற்றிப் பேசுதல், இப்படிப்பட்ட பாக்கியங்களெல்லாம் இனி நமக்குக் கிடைக்குமா என்று சில சமயங்களில் ஏங்கி நிற்க வேண்டியிருக் கிறது. க்வீன் மேரீ காலேஜ் ண்டை தொடங்கிய எங்கள் நடைபயணம், கலச மஹால் என்று அழைக்கப்பட்ட செனெட் ஹவு கட்டடத்திற்கு அருகிலுள்ள இரும்பு வாராவதியின் கீழே போகும் கூவம் வாய்க்கால் கடலில் கலக்கிற இடத்தில் வந்து முடியும். இங்கிருந்து மீண்டும் க்வீன் மேரீ காலேஜு க்கு அதே நடைமுறையில் திரும்பி வருவோம். இதற்குப் பிறகு அவரவர் வீட்டுக்கு அவரவரும் செல்லவேண்டியதுதான். இங்ஙனம் நாங்கள் நடக்கிறபோது, ஐயர் மட்டும், யாருடைய காலடி முன்னால் எடுத்து வைக்கப் படுகிறதென்பதைக் கூர்மை யாகக் கவனித்துக்கொண்டு, அதற்குப் போட்டி போடுவதுபோல், தமது காலடியை முன்னால் எடுத்து வைப்பதில் முனைவார். இதை எங்களில் யாராவது ஒருவர் பார்த்துவிட்டு, போட்டி போட்டுக் கொண்டு காலை நீட்டி வைப்போம். இந்தப் போட்டாபோட்டி யில், நிதானமாக ஆரம்பித்த எங்கள் நடை, கடைசியில் ஓட்டமாக வந்துமுடியும். எங்களுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கும். ஐயருக்கு மட்டும் எவ்வித களைப்பும் இராது. நாங்கள் எங்குப் போய்ச்சேர வேண்டுமென்று லட்சியம் வைத்துக்கொண்டு புறப்படுகிறோமோ அங்கு ஓட்டமாகச் சென்று அடைந்தவுடன், எங்கள் களைப்பையும் மறந்து, விழுந்து விழுந்து சிரிப்போம், அந்தச் சிரிப்பிலே ஐயர் எவ்வளவு ஆனந்தமாகக் கலந்து கொள்வார்? அந்தச் சிரிப்பை எப்பொழுது கேட்கப் போகிறேன்? அந்த மலர்ந்த முகத்தை எப்பொழுது பார்க்கப் போகிறேன்? ஐயரை, புரட்சி வீரராகவும், நூலாசிரியராகவும், சேரமாதேவி குருகுல தாபகராகவுமே தமிழ் நாட்டில் பலர் அறிவர். ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது பலருக்குத் தெரியாது. அவர், நாடகக் கலையின் நுட்பங்களை நன்கு அறிந்தவர். அவருக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தபடியால், ஒவ்வொரு மொழியிலும் நாடகக் கலை எப்படி வளர்ந்து வந்திருக்கிறதென்பதை ஆராய்ச்சி செய்து வைத்திருந்தார். ஆங்கிலப் புலவனான ஷேக்பியர்1 நாடகங்களி லும், பிரெஞ்சுப் புலவனான ராஸீன்2 என்பவனுடைய நாடகங் களிலும் அவருக்குத் தனிக்காதல். அவற்றில் சிலவற்றையேனும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமென்பது அவருடைய ஆவல். தமது அருமந்தன்ன குழந்தை செல்வி சுபத்திராவுக்கு, ஷேக்பியர் நாடகங்களில் ஒன்றான ஜூலிய சீஸர் என்னும் நாடகத்தில் வரும் போர்ஷியாவாகவும், ஜான்சி ராணி லட்சுமி பாயாகவும் நடிக்கக் கற்றுக் கொடுப்பார்; அந்தக் குழந்தை நடிப்பதைப் பார்த்து உள்ளம் பூரிப்பார். அதனிடத்தில் - செல்வி சுபத்திராவினிடத்தில் - அவர் கொண்டிருந்த பிரேமையையும், அதன் எதிர்கால நல்வாழ்வில் வைத்திருந்த நம்பிக்கையையும் எழுத்துக்களில் இசைத்துக் காட்ட முடியாது. ஐயர், செல்வி சுபத்திராவைக் கடற்கரைக் கூட்டங்களுக்கு அழைத்து வருவார். அப்பொழுதும் அந்தச் செல்வியைப் பார்த்திருக் கிறேன்; ஐயருடைய வீட்டுக்குச் சென்ற சமயங்களிலும் பார்த்திருக் கிறேன் முகத்திலேதான் என்ன களை! எப்பொழுதும் புன்சிரிப்பு! யாரிடத் திலும் இனிமை தவழும் பேச்சு! அம்மா சுபத்திரா! உன்னிலே பாரத சக்தியைக் காணவேண்டுமென்று விழைந்தார் உன் தந்தை; அதற்காக உன்னைப் பல விதங்களிலும் தகுதிப்படுத்தி வந்தார். ஆனால் எதிர்பாராத வகையில் உன்னோடு அவரையும் அழைத்துக்கொண்டு அருவியிலே மறைந்துவிட்டாய். அதைக்கேட்டு உள்ளம் பதறினேன்; கண்ணீர் ஆறாய்ப் பெருக் கினேன். உனக்காக மட்டுமல்ல, தமிழகத் திற்குமாக. தமிழகத்தின் பெருவாழ்வுக்காக ஐயர் கட்டி வந்த மனக்கோட்டைகளெல்லாம் ஒரு நொடியில் இடிந்து கரைந்து விட்டனவே யென்று அன்று ஏற்பட்ட ஏக்கம் இன்னும் என்னை விட்ட பாடில்லை. தேசபக்தன் காரியாலயத்தைச் சேர்ந்த நாங்களெல்லோரும் சேர்ந்து த. நாராயண சாதிரியார் இயற்றிய போஜ சரித்திர நாடகத்தை நடிப்பதற்கு ஏற்பாடு செய்தோம். ஐயரே இதற்கு முன் நின்றார். ஆரம்பத்தில், ஞாயிற்றுக்கிழமைதோறும் பகல் நேரத்தில் ஒத்திகை நடைபெற்று வந்தது. காரியாலயத்திலேதான் எல்லா ஒத்திகைகளும். ஐயருக்கு ஞானசாகரர் வேஷமும், எனக்குக் காளிதாசன் வேஷமும், நடராஜப் பிள்ளை என்பவருக்கு போஜன் வேஷமும் கொடுக்கப் பட்டிருந்தன. இங்ஙனம் வேஷந் தாங்குவ தோடு ஐயருக்கு நாடகத்தை நடத்திக் கொடுக்கிற பொறுப்பும், அதாவது, டைரெக்ட் செய்கிற பொறுப்பும் கொடுக்கப்பட் டிருந்தது. ஒத்திகைகளில் ஐயர் எவ்வளவு குதூகலத்துடன் கலந்து கொண்டார்! எப்படி எப்படியெல்லாம் நடிக்க வேண்டுமென்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்! நாடகக் கலையில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் தேர்ச்சியையும் அப்பொழுது நான் நன்கு தெரிந்து கொண்டேன். போஜ சரித்திரம் பகிரங்கமாக நடிக்கப்படவில்லை; ஒத்திகை யோடு நின்றுவிட்டது. அதற்குள் தேசபக்தன் கைமாறி பல சிக்கல் களுக்குள்ளாகிவிட்டது. பிறரிடத்தில் இங்கிதமாக நடந்துகொள்ளவேண்டுமென்றால் ஐயரிடத்தில் தான் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். வாய் தவறி அவமரியாதையான ஒரு வார்த்தைகூட வெளி வராது. தம்மைச் சந்திக்க வருகிறவர்களின் அறிவுப்பக்குவம், மனப்பக்குவம் இவை களை எளிதிலே உணர்ந்து அவர்களிடம் அந்தப் பக்குவத்திற்குத் தகுந்தபடி பேசுவார். மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியிருந்தாலும் இனிமையான மொழிகளில்தான் தெரி விப்பார். ஆத்திரமோ, பதற்றமோ அவர் அடைந்ததை நான் பார்த்த தில்லை. அச்சகத்திலோ, காரியாலயத்திலோ யாரேனும் தவறு செய்துவிட்டால் அதற்காக அவரைக் கடிந்துகொள்ள மாட்டார்; நயமான முறையில் அவரைத் திருத்துவார். ஒரு சமயம், அச்சுப் பிழைகளைத் திருத்தும் அலுவல் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், கவனப் பிசகால், அநேக பிழை களைத் திருத்தாமலே விட்டுவிட்டார். அந்தப் பிழைகளுடன் பத்திரிகையும் வெளிவந்துவிட்டது. வெளிவந்த பிறகு நான் பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன். பிழை பரிசோதகரை ஏன் இப்படி என்று கேட்டேன். நான் திருத்தியே கொடுத்தேன். அச்சகத்தார்தான் திருத்தாமல் விட்டு விட்டிருக்கிறார்கள் என்று அவர் ஒரேயடியாகச் சாதித்துவிட்டார். உடனே அச்சகம் சென்று விசாரித்தேன். அச்சகத்தை மேற்பார்வை செய்து வந்தவர் சிறிது முன்கோபி. அச்சுத்தாள்களை வரவழைத்துப் பார்த்தார். பிழைகள் திருத்தப் பட்டிருக்கவில்லை. சீறியெழுந்தார் அந்தத் தாள்களுடன் நேரே அந்தப் பரிசோதகரிடம் வந்தார். உண்மையிலேயே நீ திருத்தங்கள் செய்தாயா? இந்தப் பச்சிலை சாட்சியாகச் சொல் என்று படபடப்பாகச் சொல்லிவிட்டு, அருகிலிருந்த ஒரு செடியிலிருந்து ஒரு சிறு கிளையை ஒடித்துக் கொண்டு வந்து அந்தப் பரிசோதகரின் தலைமீது அடித்துவிட்டார். அந்த அப்பாவிமனிதர் அழுது விட்டார். இது தெரிந்த ஐயர், தமது அறையிலிருந்து வெளியே வந்து, அந்தப் பரிசோதகரை அணுகி, அவருடைய வயது, அவருக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பு முதலியவைகளை நாசூக்கான பாஷையில் சாவதானமாக எடுத்துக் காட்டி அவரைச் சமாதானப்படுத்தினார்; பொய்யினால் விளையக்கூடிய தீமைகளை அவருக்குப் பலவாறாக உணர்த்தினார். ஐயருடைய அன்பு மொழிகள், அந்தப் பரிசோதகரின் மனத்தை அடியோடு மாற்றிவிட்டன; தம் செயலுக்குப் பெரிதும் வருந்தினார். இனி ஒரு போதும் பொய் சொல்லமாட்டேன் என்று ஐயருக்கு வாக்குக் கொடுத்தார். ஐயருடைய மேலான பண்பாட்டுக்கு இன்னும் ஒரு சிறிய உதாரணம்.தலையங்கம் எழுதுவதன் சம்பந்தமாகவோ, வேறு ஏதேனும் முக்கியமான விஷயம் பற்றியோ கலந்து பேசுவதற்காக என்னை அழைப்பார். எப்படி? தாம் இருக்கும் இடத்திலிருந்து கொண்டே என் காது கேட்கும்படியாக சர்மாவாள் அங்கே இருக்கிறாப்போலேயோ - அவர் உபயோகித்த பாஷை இது, - என்பார். அதாவது நான் அங்கு வரவேண்டு மென்பது கருத்து. இதை அவர் வேறு விதமாகவும் சொல்லியிருக் கலாம். அப்படிச் சொல்ல அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தன. சர்மா, இங்கே வா என்று அழைத்திருக்கலாம்; அல்லது காரியாலயத்துப் பையன் மூலமாக என்னை வருமாறு உத்தரவு செய்யலாம். ஆனால் அப்படி யெல்லாம் அவர் செய்ததில்லை. அவருடைய பண்பாட்டுக்கு அது விரோதம். உதவி ஆசிரியர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், காரியாலயத்துச் சிப்பந்திகளிடம் எப்படிப் பேசவேண்டும் என்பன போன்ற சாதாரண விஷயங்களில் அவர் அடைந்திருந்த பக்குவம், பொறாமைப்படக் கூடியதாக இருந்தது. ஐயர், தேசபக்தன் ஆசிரியராயிருந்த காலத்திலேயே, அது கைமாறிப் பல சிக்கல்களுக்குள்ளாகிவிட்டதென்று மேலே சொல்லப் பட்டதல்லவா, அப்பொழுது நானும், உதவி ஆசிரியர்களில் ஒருவரும், காரியாலய உத்தியோகதர்களில் இருவரும் விலகிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்டோம். புதிய சொந்தக் காரர்கள், மேற்சொன்ன எங்கள் நால்வர் மீதும் அனாவசியமான சந்தேகங் கொண்டனர். இதற்கு மூல காரணமாயிருந்தவன் நான்தான். என்னுடைய சுதந்திரப்போக்கு அவர்களுக்குப் பிடிக்க வில்லை. ஒரு பத்திரிகையின் சொந்தக்காரர்கள், ஆசிரியர் குழாத்தின் பொறுப்பில் தலையிடக் கூடாதென்பது என் கருத்து. ஆசிரியர் களுடைய எழுதுகோல் நேர்மை வழியில் செல்ல வேண்டுமானால் அவர்களுக்குப் பரிபூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்பது என் கொள்கை. இதை நான் பலமுறை சொல்லி வந்தேன்; செயலிலும் காட்டி வந்தேன். புதிய சொந்தக்காரர்களுக்கு இது பிடிக்கவில்லை; தங்கள் முன்னர் உதவி ஆசிரியர்கள் பல்லெல்லாம் தெரியக் காட்டி நிற்க வேண்டுமென்று விரும்பினர். பத்திரிகையில் அவர்களுடைய சொந்த அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லாமற் சொல்லிக் காட்டினர். இவைகளுக் கெல்லாம் நான் இணங்கவில்லை. அவ்வளவுதான். அவர்களுடைய சந்தேகப் பார்வை என்மீது திரும்பியது. எப்பொழுதுமே அவர் களுக்கு நேர்மையான பார்வை கிடையாது. நான் ஏதோ சூழ்ச்சி செய்வதாக மருண்டனர். என்னுடைய சூழ்ச்சி வலையில் மற்ற மூவரையும் நான் சிக்க வைத்து விட்டதாகக் கருதினர். இனி அந்த இடத்தில் மனம் வைத்து வேலை செய்தல் இயலுமோ? ஒரு நாள் காலை ஐயருடைய வீட்டுக்குச் சென்று, உள்ள நிலைமையை விளக்கிச் சொன்னேன். அவரும் இதை ஏற்கனவே உணர்ந்திருந்தார். நானும் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன். சூழ்நிலை வரவர மோசமாகிக்கொண்டு வருகிறது. எனக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. என்னை எங்கே சிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தாபனத்திற்கு ஊறு நேரிடக்கூடாதென்றுதான் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் விலகிக் கொண்டு விடுவதுதான் உங்கள் கண்ணியத்திற்கு ஏற்றதாயிருக்கும். தொட்டால் சிணுங்கி சுபாவமுடைய உங்களுக்கு அவர்களுடைய சொல்லும் செயலும் எப்படிப் பிடிக்கும்? நானே இதை உங்களுக்குச் சொல்லவேண்டுமென்றிருந்தேன். எனக்கும் தாபனத்திலிருந்து சீக்கிரத்தில் விடுதலை கிடைத்து விடுமென்று நினைக்கிறேன் என்று சாவதானமாகக் கூறினார். இதற்கு இரண்டு மூன்று, நாட்கள் கழித்து நானும் மற்ற மூன்று நண்பர்களும் தாபனத்திலிருந்து விலகிக் கொண்டோம். ஆனால் சொந்தக்காரர்கள், எங்களை விலக்கிவிட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். எப்படியோ, என்னைப் பொறுத்த மட்டில் தேசபக்தன் தொடர்பு அற்றுவிட்டது. சிறிது காலத்திற்குள் ஐயரை, அவர் பயந்திருந்தபடியே சொந்தக்காரர்கள் சிக்கலுக்காளாக்கிவிட்டார்கள். பத்திரிகையில் சட்ட விரோதமான ஒரு கட்டுரை வெளி வந்ததற்காக ஐயர், ஆசிரியர் என்ற முறையில் பொறுப்பேற்றுக்கொண்டு சிறைவாசத் தண்டனை பெற்றார். பெல்லாரி சிறையில் ஒன்பது மாத கால வாசம்! கட்டுரைக்குக் காரணமாயிருந்தவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தப்பி விட்டார்கள், பழி ஒரு பக்கம்;பாவம் ஒரு பக்கம் என்ற பழமொழிக்கு இலக்கானார் ஐயர். 1921ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் பெல்லாரி சிறை நண்ணிய ஐயர், ஒன்பது மாத காலத்தை அங்குக் கழித்துவிட்டு 1922ஆம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் சென்னை போந்தார். அவரை வரவேற்க சென்ட்ரல் டேஷனில் நண்பர்கள் பலர் கூடியிருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாக நின்றேன். ஐயர் வண்டியை விட்டு இறங்கினார். பார்த்தேன். உள்ளம் பதறினேன். அவருடைய பொன்மேனி கருமேனியாகி இருந்தது; நெற்றிச் சுருக்கங்கள் அதிகமாகக் காணப்பட்டன; கட்டு மதான சரீரம் மெலிந்து கிடந்தது. வெயிலில் வாடிவதங்கின இலைபோல் தோற்றமளித்தார். ஆனால் புன்சிரிப்பு மட்டும் அகலவே இல்லை. இந்தக் கோலத்தில் வந்து நின்ற அவருடன் நான் என்ன பேசுவது? சௌக்கியமா என்று கேட்பதா? சிறைவாசம் எப்படி யிருந்ததென்று கேட்பதா? மற்றவர்கள் என்னென்னவோ உபசார வார்த்தைகள் சொன்னார்கள். எனக்கு மட்டும் நா எழவே இல்லை. நான் எட்டவே நின்றேன். ஐயர் கிட்டவே வந்தார். சர்மாவாள் சௌக்கியந்தானே? சௌக்கியந்தான். தங்கள் உடம்பு நிரம்ப மெலிந்து கறுத்துவிட்டதே? அப்படி யொன்றுமில்லையே. நன்றாகத்தானே இருக் கிறேன். என்ன விசேஷம்? என்று கேட்டுத் தமது தாடியைத் தடவினார். விசேஷ மொன்றுமில்லை யென்று சொல்லி நானும் என் தாடியைத் தடவினேன். இஃதென்ன வேடிக்கை என்று கேட்கிறீர்களா, நண்பர்களே? ஆம்; அப்பொழுது நான் தாடி மீசை வளர்த்து வந்தேன். சட்டை போடுவ தில்லை; உத்தரீயம் மட்டுந்தான். இடுப்பில் நான்கு முழ வேஷ்டி உடுத்தமாட்டேன்; எட்டு முழ வேஷ்டிதான். பரம வைதிக கோலம். ஐயரை அப்படியே காபி அடித்து விட்டாற்போலிருக் கிறது என்று நண்பர்களே, முடிவு கட்டிவிடாதீர்கள். எதிலும் காபி அடிக்கிற பழக்கம் எனக்குக் கிடையாது. 1922ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பதினெட்டாந்தேதி காந்தியடிகள் ஆறு வருஷச் சிறைத்தண்டனை பெற்றார். இஃது என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. அவர் விடுதலை பெறும்வரை தீட்சை வளர்ப்பதென்று சங்கற்பம் செய்துகொண்டேன். பிரதி மாதமும் பதினெட்டாந் தேதியை விரத நாளாகக் கொண்டாட உறுதி பூண்டேன். அப்படியே, பிரதி மாதமும் பதினெட்டாந் தேதி உண்ணாவிரதத்தையும் மௌன விரதத்தையும் அனுஷ்டித்து வந்தேன். அன்று என் இல்லத்தில் தேசீய பஜனை நடைபெறும். அரசாங்க உத்தியோகதர் உள்பட அன்பர் பலர் அதில் கலந்து கொள்வர். அரசாங்க உத்தியோகதரிற் சிலருக்குத் தேசீய இயக்கத்தில் மனப்பூர்வமான அனுதாபம் இருந்தது; ஆனால் அந்த இயக்கத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாதவர்களாயிருந் தார்கள். அவர்களுக்கு, தங்களுடைய அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள இந்தத் தேசீய பஜனை ஒரு நல்ல வாய்ப்பா யமைந்தது. பதினெட்டாந் தேதி மௌன விரதம் பூண்டிருந்தேனாயினும் காரியாலயத்திற்குச் செல்லத் தவறமாட்டேன். நவசக்தியில் அப்பொழுது பணியாற்றி வந்தேன் என்பதை இங்கு நண்பர்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லையல்லவா? முதலியார், எனது மௌன நிலையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடப்பார்; எனது மௌனம் கலையாதிருக்குமாறு பார்த்துக்கொள்வார்; கண்டு பேச வருவார்க்கு, பேசாதிருக்குமாறு எச்சரிக்கை விடுத்துக் கொண் டிருப்பார். என்ன அன்பு! என்ன அன்பு!! 1922ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் வாரம் எனது தந்தையார் காலமாகிவிட்டார். அதனால் எனது தீட்சையை எடுத்து விட வேண்டியதாயிற்று. நான் எதற்காகத் தாடி மீசை வளர்த்து வந்தேன் என்பதை, பெல்லாரி சிறையிலிருந்து வந்த ஐயர் தெரிந்துகொண்டிருக்க முடியாதல்லவா? mjdhš jh‹ v‹id¥ gh®¤jJ« ‘v‹d Énrõ«? என்று கேட்டார். நானும் காரணத்தைச் சொல்ல வில்லை, இஃதென்ன பெரிய விஷயம் என்று சும்மாயிருந்து விட்டேன். பெல்லாரி சிறை வாசத்திற்குப் பிறகு ஐயருடைய உடல் நிலை பழைய நிலையை யடையவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். 1923ஆம் வருஷம் டிசம்பர் மாதம் காகினாடாவில் நடைபெற்ற காங்கிரசின்போது ஐயரைப் பார்த்தேன். அதே கறுத்து மெலிந்த தோற்றந்தான். அப்பொழுது ஆகாரத்தை வேறு கட்டுப் படுத்திக் கொண்டிருந்தார். தேங்காய், வேர்க்கடலை முதலியவை களே தினசரி ஆகாரத்தின் முக்கியப் பொருள்களாயிருந்தன. ‘V‹ ïªj Mfhu Ãak«? என்று கேட்டேன். ஆத்ம சுத்திக்காக என்றார், எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. பெல்லாரி சிறைவாசமோ, ஆகாரத்தில் கட்டுப்பாடோ அவருடைய முகத்தில் எவ்விதமாற்றத்தையும் செய்யவில்லை. எப்பொழுதும் போல் அந்த முகம் மலர்ந்தே இருந்தது; புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டுதான் இருந்தது; கண்களில் ஒளி வீசிய வண்ண மிருந்தது. ஆனால் சேரமாதேவி குருகுலத்திற்கு விரோதமாக ஏற்பட்ட கிளர்ச்சி யானது, அவருடைய உள்ளத்தை அசைத்தே கொடுத்து விட்டது; அந்த அசைவு அவருடைய முகத்தில் பிரதிபலிக்காமல் இல்லை. காகினாடா காங்கிரசில் ஐயருடைய திண்ணியமனம், கொண்டகொள்கையில் நம்பிக்கை இவ்விரண்டினையும் நேரில் கண்டேன். காங்கிரசின் அடிப்படை நோக்கத்தில் ஒரு மாற்றத்தை விரும்பினார் ஐயர். அதாவது காங்கிரசின் லட்சியம் பரிபூரண சுயேச்சை என்றிருக்கவேண்டுமென்பது இவர் கொள்கை. ஆனால் அப்பொழுதிருந்த சூழ்நிலையில் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. விஷயாலோசனைக் கமிட்டியில் இது சம்பந்தமாக ஒரு பிரேரணை கொண்டு வந்தார்; தோல்வி. பிறகு பகிரங்க காங்கிரசில் இந்தப் பிரேரணையைக் கிளத்தினார். தலைமை வகித்த மௌலானா முகம்மதலி, பிரேதணையைக் கிளத்த வேண்டாமென்று எவ்வளவு சொல்லியும் ஐயர் கேட்கவில்லை. பிரதிநிதி என்ற முறையில் தமக்குள்ள உரிமையை உபயோகிக்க அனுமதி கொடுக்குமாறு பணிவுடன் ஆனால் உறுதியுடன் கேட்டார். அப்படியானால் உங்கள் இஷ்டம் என்று சொல்லி, தலைவர், பிரேரணை கொண்டு வர அனுமதித்தார். ஐயர், தமது பிரேரணையைக் கொண்டு வந்து சில வார்த்தைகளே பேசினார். ஆனால் இதனை ஆமோதிக்கக்கூட ஒருவரும் முன் வரவில்லை. இதற்காக ஐயர் மனவாட்டம் கொள்ள வில்லை. ‘eh‹ m¥bghGnj brh‹ndnd, nf£O®fsh? என்ற கருத்தை உள்ளடக்கி மௌலானா அவர்கள், ஐயரைப் பார்த்து ஒருவித பரிகாசச் சிரிப்பு சிரித்தார். இதற்காகவும் ஐயர் மன வருத்தம் காட்டவில்லை. ஆனால் அவர் கொண்டிருந்த நோக்கமே பின்னர் காங்கிரசில் ஊர்ஜிதம் பெற்றது. இஃதொன்றைக் கொண்டே ஐயரை ஒரு தீர்க்க தரிசியென்று திண்ணமாகச் சொல்லலாமல்லவா? அவரை, அவருடைய சமகாலத்தவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றால், அதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு தீர்க்கதரிசியா யிருந்ததுதான். பொதுவாகவே, தூய்மையான உள்ளம் படைத்தவர்கள்,பரந்த நோக்கமுடையவர்கள், ஐம்பது அல்லது நூறு வருஷங்களுக்கு பின்னாடி சொல்ல வேண்டியவைகளை, ஐம்பது அல்லது நூறு வருஷங்களுக்கு முன்னாடியே சொல்கிறவர்கள், தன்னலம் பேணாது பிறர்நலமே பெரிதெனக் கருதுகிறவர்கள் - இப்படிப் பட்டவர்களை அவர்களுடைய சம காலத்தவர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அதுமட்டுமல்ல தவறாகப் புரிந்துகொண்டு அவர்கள்மீது வசை பாடவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். உலகத்தில் தோன்றிய மகான்கள் அத்தனை பேருடைய வாழ்க்கையும் இந்தப் பரிதாப நிலைக்குட்பட்டதாகவே இருந்திருக்கிறது. மகான்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் ஐயர். தமது சம காலத்தவரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத துரதிருஷ்டசாலி யென்றுதான் அவரைச் சொல்லவேண்டும். ஐயர், நட்புக்காகத் தமது கருத்தை மறைத்தோ மழுப்பியோ சொல்லமாட்டார். பாரதியாரும் ஐயரும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பதையும், ஒருவருடைய மேதையில் மற்றொரு வருக்கு எவ்வளவுமதிப்பு இருந்ததென்பதையும் தமிழுலகம் நன்கறியும். இருந்தாலும் பாரதியாருடைய காதற் பாட்டுக்களிற் சில, சிறிது வரம்பு மீறிவிட்டனவோ என்று ஐயர் கருதினார். பாரதியார் பாடல்கள் அடங்கிய பதிப்பு ஒன்றின் முகவுரையில் ஐயர், தமது இந்தக் கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். 1924ஆம் வருஷம் நான் எழுதிய பாணபுரத்து வீரன் என்ற ஒரு நாடகத்திற்கு முகவுரை எழுதி அளிக்குமாறு ஐயரைக் கடித வாயிலாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு ஐயர், நீண்ட பதிற்கடிதம் எழுதியிருந்தார். என் துரதிருஷ்டம், அதை எங்கேயோ போக்கடித்து விட்டேன். அதில், தங்களுடைய ஸௌலப்ய குணத்திற்காகவும் மற்றப் பண்புகளுக்காகவும் முகவுரை எழுதித் தரவேண்டியது எனது கடமையாயிருந்த போதிலும், ஒரு நாடகத்திற்கு என்னென்ன லட்சணங்கள் இருக்க வேண்டுமென்று நான் கருதுகின்றேனோ அந்த லட்சணங்கள் தங்களுடைய நாடகத் தில் இல்லையாதலினால் முகவுரை எழுதியனுப்ப அசக்தனாயிருக் கிறேன் என்று கண்டிருந்தார். கடிதத்தின் சாரம் இதுதான். வாசகத்தில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஸௌலப்ய குணம் என்ற சொற்றொடர் கடிதத்தில் இடம் பெற்றிருந்தது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. ஒருவரை முதன்முதலாகப் பார்த்ததும், அவரைப் பற்றி நமக்குள் ஒருவித அபிப்பிராயம் ஏற்படுகிறது. அந்த அபிப்பிராயம் சரியாவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். அல்லது அடுத்தடுத்துப் பழகின பிறகு முதலில் கொண்ட அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால் மகான்களைப் பார்த்த மாத்திரத்தில், முதற்பார்வையில் என்ன அபிப்பிராயம் நமக்கு ஏற்படுகிறதோ அந்த அபிப்பிராயம் நிரந்தரமாகவே நம் உள்ளத்தில் இடம் பெற்று விடுகிறது; மாற்றிக்கொள்ள வேண்டிய முகாந்தரமே ஏற்படுவதில்லை. ஐயரை முதன்முதலாகப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் என்ன? ஓ! இந்த ஆத்மா, எத்தனையோ துன்பங்களை மிகுந்த அலட்சியத்துடன் சமாளித் திருக்கவேண்டும். இந்த வஜ்ர தேகத்திற்குள்ளே வஜ்ர மனம் குடி கொண்டிருக்க வேண்டும் என்ற அபிப்பிராயமே எனக்கு ஏற் பட்டது. இந்த அபிப்பிராயத்தை நான் பின்னர் மாற்றிக் கொள்ளவே இல்லை; அதற்கு மாறாக இந்த அபிப்பிராயம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வளர்ந்தது. 1. பரலி. சு. நெல்லையப்பர் திருநெல்வேலிக்கு எட்டுமைல் தொலைவிலுள்ள பரலிக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். இந்த ஊரின் முதல் மூன்று எழுத்துக்களே இவருடைய பெயருக்கு முன்னால் கட்டியங் கூறிக்கொண்டு நிற்கின்றன. இவர் பிறந்தது விரோதி ஆண்டு புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாள். (18-9-1889). இவர் தந்தையார்: சுப்பிரமணிய பிள்ளை; தாயார்: முத்துலட்சுமி அம்மையார். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரால் தம்பி என்று உரிமையோடு அழைக்கப் பெற்று அவருடைய பேரன்பைப் பெற்றவர். அவருடைய நாட்டுப் பாடல்கள், கண்ணன் பாட்டு முதலியவைகளை முதன்முதலாகத் துணிந்து வெளியிட்டவர், கவிதைகள் பல இயற்றியுள்ளார்; உரைநடை வல்லுநருங்கூட. 1. Shakespeare - 1564 - 1616. 2. Racine - 1639 - 1699. நமது மாதரின் வாழ்க்கை நோக்கந்தான் என்ன? அவர்கள் குமாதாக்களாக இருந்து கொண்டு சம்பாதிப்பதா? அல்லது மாஜிட்ரேட், தாசீல் முதலிய உத்தியோகங்கள் பார்த்து ராஜ்ய நிருவாகத்தை நடத்துவதா? அல்லது கடை கண்ணிகளில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்வதா? அல்லது யந்திர சாலைகளிலும் ஆலைகளிலும் புகுந்து தச்சர் செய்யும் வேலைகள் செய்து அவைகளை நடத்துவதா? இவை ஒன்றும் அல்ல என்று அநேகமாய் எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். மற்றும் என்னதான் அவர்கள் வாழ்க்கையின் லட்சியம்? எனக்குத் தோன்றிய மட்டில் இவ்விலட்சியத்தை இரண்டாகக் கூறலாம். ஒன்று பொது லட்சியம்; மற்றது ஆத்ம லட்சியம், அதாவது, தாங்கள் பிறந்த குடும்பத்துக்கும் புகுந்த குடும்பத் துக்கும் தாயகமாகவும் ஆதாரமாகவும் இருக்க வேண்டும். - வ. வே. ஸு. ஐயர். t.nt.ஸு. ஐயர் (1881 - 1925) திருச்சியைச் சேர்ந்தது வரகனேரி என்னும் சிற்றூர். இதில், வேங்கடேசய்யர் என்ற ஓர் அந்தணர் வாழ்ந்து வந்தார். வடமொழி யிலும் ஆங்கிலத்திலும் புலமை நிறைந்தவர்; தெய்வ பக்தியுள்ளவர்; ஆசார சீலர்; பள்ளிக்கூட இன்பெக்டராக அலுவல் பார்த்து வந்தார். இவருடைய தர்ம பத்தினி காமாட்சி அம்மாள். ஈரோட்டுக்கு அருகிலுள்ள சின்னாளப்பன்பட்டி என்ற கிராமந்தான் இந்த அம்மாளின் பிறந்தகம். வேங்கடேசய்யர் - காமாட்சி அம்மாள் மனமொத்த தம்பதி களாய் இல்லற வாழ்க்கையை இனிது நடத்தி வந்தனர். இவர்களுக்கு 1881ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் இரண்டாந்தேதி ஓர் ஆண் மகவு பிறந்தது. இதற்குச் சுப்பிரமணியம் என்று பெயரிட்டனர். ஆனால் வீட்டில் மணி என்ற செல்லப்பெயராலேயே அழைத்து வந்தனர். இந்த மணிதான் பிற்காலத்தில் வ. வே. சுப்பிரமணிய ஐயர் என்ற பெயரால் பிரசித்தி யடைந்து, தமிழ் மொழிக்கு அரும்பணி களாற்றியும், தாய் நாட்டுக்குப் பெருஞ்சேவைகள் செய்தும் இறவாத புகழ் பெற்றார். இவரை வ. வே. சு. ஐயர் என்ற சுருக்கமான பெயராலேயே தமிழர் அறிவர். மணி, இளமையில் தந்தையிடமே கல்விபயின்றார். பிறகு, கிறிதுவப் பள்ளிக்கூடமொன்றில் சேர்ந்து படித்து, பன்னிரண்டாவது வயதில் மெட்ரிகுலேஷன் பரீட்சையில், சென்னை ராஜதானியிலேயே ஐந்தாவது மாணாக்கனாகத் தேறினார். இதை அப்பொழுது திருச்சியிலுள்ளவர்கள் ஆச்சரியமாகச் சொல்லிக் கொண்டார்கள். மணிக்குச் சிறு வயதிலேயே இலக்கிய ருசி ஏற்பட்டுவிட்டது. தமது படிப்பை, பள்ளிக்கூட பாடபுத்தகங்களோடு வரம்பு கட்டிக்கொள்ள வில்லை. வடமொழியிலும் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ள பண்டை நூல்கள் பலவற்றைப் படிப்பதில் சிரத்தை காட்டினார்; அவற்றைப் படிப்பதில் தனியான இன்பம் நுகர்ந்தார். வால்மீகியும் காளிதாசனும், வள்ளுவனும் கம்பனும், ஹோமரும் வர்ஜிலும் மணியை இளமையிலேயே ஆட்கொண்டு விட்டார்கள். படிப்பிலே சிரத்தை காட்டியதைப்போல், உடற்பயிற்சி விஷயத்திலும் அதிக ஊக்கங் காட்டினார். மணி, வகுப்பிலே எப்படி எல்லாப் பாடங்களிலும் முதல்வராக நின்றாரோ அப்படியே விளையாட்டு மைதானத்திலும் எல்லா விளையாட்டுகளிலும் முதல்வராக நின்றார். பகி, தண்டால் முதலிய இந்திய விளை யாட்டுகளில் நல்ல தேர்ச்சி பெற்றார். மணி, பதின்மூன்றாவது வயதில், அதாவது 1894ஆம் வருஷத் தில் திருச்சி செயிண்ட் ஜோஸப் காலேஜில் எப். ஏ. வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். காலேஜில் சேர்ந்துவிட்டாரல்லவா? இனி மணி என்று அழைக்கலாமா? ஆகையால், இனி இந்தக் கட்டுரையைப் பொறுத்த மட்டில், ஐயர் என்றே அழைத்துக்கொண்டு போவோம். 1894ஆம் வருஷம் எப்.ஏ. வகுப்பில் சேர்ந்த ஐயர், 1899ஆம் வருஷம் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் வக்கீல் பரீட்சைக்குப் படித்துத் தேறினார். 1901ஆம் வருஷத்திலிருந்து திருச்சி ஜில்லா கோர்ட்டில் வக்கீலாகத் தொழில் நடத்தத் தொடங்கினார். ஐயர், பி.ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது திருமணம் நடைபெற்றது. பாக்கியலட்சுமி என்ற பெயர் கொண்ட அம்மையார் இவருக்கு மனைவியாக வாய்த்தார். இவருடைய வாழ்க்கையின் கரடு முரடான பாதைகளில், இவருடன் கை கோத்துக் கொண்டு, சிறிதுகூட முகஞ்சுளிக்காமல் குதூகலத்துடன் சென்ற உத்தமி. ஐயருக்கு விவாகமாகும்போது பதினைந்தே வயதுதான். விவாகமானதற்குப் பிறகு தான் பி. ஏ. பட்டம் பெற்றார். ஐயர், திருச்சியில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டு வந்தபோது, ரங்கூனுக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. இவருடைய உறவினர் பசுபதி ஐயர் என்ற ஒருவர் அங்கு இருந்தார். பெங்களூர், புதுச்சேரி, ரங்கூன் முதலிய இடங்களில் அவர் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். வியாபார நிமித்தமாக அவர் அதிக காலம் ரங்கூனிலேயே இருந்து வந்தமையாலும், அங்கேயே அதிகமாகப் பொருள் சம்பாதித்தமையாலும் அவரை ரங்கூன் பசுபதி ஐயர் என்றே பலரும் அழைத்து வந்தனர். அவருக்கு ரங்கூனில் சில கோர்ட்டு வேலைகள் இருந்தன. அவைகளைக் கவனிப்பதற்காக ஐயரை ரங்கூனுக்கு அழைத்தார். அப்படியே ஐயர் ரங்கூனுக்குச்சென்று 1907ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்திலிருந்து அங்கே வக்கீல் தொழிலை நடத்தத் தொடங்கினார். நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் ஐயருக்கு வேறோர் ஆசை இருந்தது. அதாவது லண்டனுக்குச் சென்று பாரிடர் பரீட்சைக்குப் படித்துத் தேர்ந்து, பாரிடராகத் தொழில் நடத்த வேண்டுமென்பதுதான் அந்த ஆசை. தமது ஆசையை பசுபதி ஐயரிடம் தெரிவித்தார். அவரும் இந்த ஆசையை நிறைவேற்றி வைப்பதாகக் கூறி வேண்டிய உதவிகளையும் செய்தார். ஐயர், ரங்கூனில் வசித்துக் கொண்டிருந்தபோது, பிற்காலத்தில் பிரபல டாக்டராகப் புகழ் பெற்றவரும், சென்னை அரசாங்க மந்திரிகளுள் ஒருவராயிருந்தவருமான டி. எ. எ. ராஜன் (தி. சே. சௌந்தரராஜன் என்பது முழுப்பெயர்.) அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே இருவரும், திருச்சியில் சகமாணவர்களாயிருந்த போதிலும், ரங்கூனில்தான் இருவரும் நெருங்கிய நண்பர்களானார் களென்று சொல்லவேண்டும். இந்த நட்பு மேலும் மேலும் வளர்வதற்கான சந்தர்ப்பங்கள் பல பிற் காலத்தில் இருவருக்கும் கிடைத்தன. ராஜன், ஐயரை மணி என்றே அழைப்பார். ஐயர், ராஜனை சௌந்திரம் என்றே கூப்பிடுவார். இஃதிருக்கட்டும். 1907ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் ஐயர், இங்கி லாந்துக்குப் பயணமானார். கப்பல் பிரயாணத்தில், ஹிந்து மதத்திற் குரிய ஆசார அனுஷ்டானங்களை யெல்லாம் விடாமல் அனுஷ் டித்து வந்தார். தாம் ஒரு ஹிந்து என்பதையும், அதற்கு மேலாக ஓர் இந்தியன் என்பதையும் மறக்கவேயில்லை; கப்பல் பிரயாணத்தின் போது மட்டுமல்ல; எப்பொழுதுமே; வாழ்நாள் பூராவுமே. இங்கிலாந்து சென்று பாரிடர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கையில் ஐயருக்கு, சவர்க்காருடைய நட்பு கிடைத்தது. இவருடைய முழுப்பெயர் விநாயக தாமோதர சவர்க்கார்; லோகமான்ய திலகரிடத்தில் பரம பக்தி பூண்டவர்; அவருடைய அரசியல் வழி முறைகளைப் பின்பற்றுவதில் உற்சாகங் காட்டியவர். இவர் அப்பொழுது, அதாவது ஐயர் இங்கிலாந்து சென்று லண்டனை அடைந்த பொழுது இந்தியா ஹவு என்ற இந்திய இளைஞர் விடுதியின் முக்கியதராயிருந்தார். இந்த இந்தியாஹவுஸை தாபித்தவர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவர். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த இவர், இந்தியா, அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும்பொருட்டு இங்கி லாந்தில் அரிய வேலைகள் செய்து வந்தார். இந்த அரும்பணியில் இவருக்கு உறுதுணையாயிருந்தவர், பார்சி வகுப்பைச் சேர்ந்த காமா1 என்னும் அம்மையார். இவர்தான் முதன்முதலாக, இந்தியாவுக் கென்று தனியாக ஒரு தேசீயக் கொடி இருக்க வேண்டுமென்று உணர்ந்து, அதை உண்டு பண்ணியவர். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா பெயரும் காமா அம்மையார் பெயரும் இரண்டு கலங்கரை விளக்கங்களாக என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். இவ்விருவரும் சேர்ந்து, லண்டனில், இந்திய சுய ஆட்சி சங்கம் என்ற பெயரால் ஒரு தாபனத்தைத் தோற்றுவித்து, அதன் மூலமாக, இந்தியா சுதந்திரம் பெறவேண்டிய அவசியத்தைப்பற்றிப் பிரிட்டிஷ் மக்களிடையே பிரசாரம் செய்து வந்தார்கள். தவிர, இங்கிலாந்துக்கு வரும் இந்திய மாணவர்கள், சௌகரியமாகத் தங்கிப் படிப்பதற்காக இந்தியாஹவு என்ற ஒரு தாபனத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள்; இங்கு வந்து தங்கும் இளைஞர்களில் தேவைப்பட்டவர் களுக்குப் பொருளுதவி முதலியனவும் செய்து வந்தார்கள். இவ்விருவருடைய சுயராஜ்யப் பிரசாரத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் விரும்பவில்லை. இதனால் இவர்கள் பலவித தொந்தரவுகளுக்காளாயினர். எனவே இவர்களால் லண்டனில் தொடர்ந்து வசிக்க முடியவில்லை. பாரி மாநகரில் சென்று குடியேறினார்கள். அங்கும் இந்தியாவுக்காக, சுயராஜ்யப் பிரசாரம் செய்து வந்தார்கள். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, ஜினீவா நகரத்தில் 1930ஆம் ஆண்டு இறந்து போனார். காமா அம்மையார், இந்தியா போந்து, சிறிது காலத்திற்குப் பிறகு 1936ஆம் ஆண்டு இறந்து போனார். இவர்கள் பாரிஸுக்குச் செல்லு முன்னர், தாங்கள் நடத்தி வந்த இந்தியாஹவுஸை, தங்களோடிருந்த இளைஞர் சிலரிடம் ஒப்படைத்துச் சென்றனர். இந்த இளைஞர்களில் முக்கியதரா யிருந்தவர் சவர்க்கார். இவரோடிருந்த தமிழ் நாட்டவரில், ஐயரைத் தவிர, டாக்டர் ராஜனும், எம். டி. திருமலாச்சாரியும் குறிப்பிடத் தக்கவர்கள். ரங்கூனில் வைத்தியத் தொழில் நடத்தி வந்த டாக்டர் ராஜன், மேல்படிப்புக்காக லண்டன் போந்து, இந்தியா ஹவுஸில் ஜாகை அமர்த்திக் கொண்டிருந்தார். ஐயர், லண்டனுக்குச் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு, அதாவது 1907ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதன்முதலாக சவர்க்காரைச் சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே அவரிடத்தில் இவருக்கு ஈடுபாடு உண்டாகிவிட்டது. அவருடைய களங்கமற்ற தேசபக்தி, அதனைச் செயல்படுத்த வேண்டுமென்பதிலே அவர் காட்டிய தீவிர உணர்ச்சி முதலியன ஐயரைக் கவர்ந்தன. இவருடைய வாழ்க்கையில், இந்த முதல் சந்திப்பு, முக்கியமான திருப்பம் என்று சொல்லவேண்டும். சில நாட்களுக்குப் பிறகு ஐயர், தமது ஜாகையை நிரந்தரமாக இந்தியா ஹவுஸுக்கு மாற்றிக்கொண்டு விட்டார். இந்தியா ஹவுஸில் அனைவரும் ஒரு குடும்பம் போலவே வசித்தனர். தங்களுடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு, மிச்சப் படுவதை சுயராஜ்யப் பிரசாரத்திற்காக உபயோகப்படுத்தினர். பணியாட் களை வைத்துக்கொள்ளாமல் தங்களுடைய அலுவல் களைத் தாங் களை கவனித்துக் கொண்டனர். இந்தியா ஹவுஸில் வாரந்தோறும் கூட்டங்கள் நடை பெற்றன. இந்தக் கூட்டங்களில் சவர்க்கார்தான் முக்கிய சொற் பொழிவாளரா யிருப்பார். வீரம் செறிந்த உரைகள்! தவிர, சிவாஜி, குரு கோவிந்த சிங். மகாராணா பிரதாப சிம்மன், இப்படிப்பட்டவர் களுடைய நினைவு நாட்கள் கொண்டாடப் பெறும். தவிர, கத்திச் சண்டை, துப்பாக்கிப் பிடித்துச் சுடுதல் முதலிய ராணுவ சம்பந்த மான பயிற்சிகளும் இங்கு அளிக்கப்பட்டன. மற்றும், சவர்க்காரும் ஐயரும் படிப்பு நிமித்தம் லண்டன் போந்துள்ள இந்திய இளைஞர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களுக்கு, இந்தியா, அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டிய அவசியத்தை உணர்த்திவந்தனர். மேலும் இவ்விருவரும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பல துண்டுப் பிரசுரங்கள் எழுதி அச்சிட்டு வினியோகித்தனர். 1857ஆம் வருஷத்து முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி, தேசீய நோக்குடன், சவர்க்கார் ஒரு நூல் எழுதினார். இது லண்டனிலேயே, ஆசிரியர் பெயரில்லா மல் அச்சிடப் பெற்று வினியோகிக்கப்பெற்றது. அரசாங்கத்தார் இதற்குத் தடையுத் தரவு போட்டனர். இதனால் இந்தியாவில் இதனைப் பகிரங்கமாகப் பரப்ப முடியவில்லை; ஆனால் இது ரகசியமாக வினியோகிக்கப்பட்டு வந்தது. 1907 - 08ஆம் வருஷத்து தேசீய இயக்கத்திற்கு அநேகருடைய ஆதரவைத் தேடிக் கொடுத்தது இந்த நூல் என்று சொல்லவேண்டும். 1906ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்திலிருந்து கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், சென்னையில் இந்தியா என்ற பெயரால் ஒரு பத்திரிகை தொடங்கி நடத்தி வந்தார். சவர்க்காரின் மேற்படி நூலின் சில பகுதி களைத் தமிழ்ப்படுத்தி இந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வந்தார் ஐயர். தவிர, இதன் லண்டன் நிருபராயிருந்து, வாரந்தோறும் இதற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வந்தார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் நியாயமான உரிமை களுக்காகப் போராடி வந்த காந்தியடிகள் 1908ஆம் வருஷம் இங்கிலாந்துக்கு வந்திருந்தார். அவரை, சவர்க்காரும் ஐயரும் சந்தித்துப் பேசினார்கள். இவ்விருவரும், பலாத்காரத்தினால்தான் இந்தியா சுயராஜ்யம் பெற முடியும் என்பதில் திட நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். காந்தியடிகளோ, அஹிம்சையில் தீவிரமான பற்றுள்ளங் கொண்டிருந்தவர். சவர்க்காரும் ஐயரும், காந்தியடி களைச் சந்தித்து அவரைத் தங்கள் கொள்கைக்குத் திருப்ப வெகு பிரயத்தனம் செய்தார்கள். இவர்களுடைய பிரயத்தனம் பயனளிக்க வில்லை. ஆனால் பிற்காலத்தில், ஐயர் காந்தியடிகளின் அஹிம்ஸைக் கொள்கை யிலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பெரிதும் ஈடுபட்டுவிட்டார். 1908ஆம் வருஷம் தீபாவளியின்போது இந்தியா ஹவுஸில் சிறு விருந்தொன்று நடத்துவதென்றும், இதற்கு லண்டனிலுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைப்பதென்றும், விருந்துக்குப் பிறகு ஒரு சிறு கூட்டம் நடத்துவதென்றும் சவர்க்காரும் ஐயரும் தீர்மானித்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். விருந்துக்கு வருமாறும், பிறகு நடக்கவிருக்கும் கூட்டத்திற்குத் தலைமை வகித்துச் சில வார்த்தைகள் பேசுமாறும் இருவரும் காந்தியடிகளைக் கேட்டுக் கொண்டனர். காந்தியடிகளும் சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டார். என்ன நிபந்தனைகள்? விருந்து எளிய முறையில் நடைபெற வேண்டும்; எல்லாம் மரக்கறி பதார்த்தங்களாகவே இருக்க வேண்டும். சமையலுக்கு வெளியார் யாரும் தேவையில்லை; நம் கையாலேயே தயார் செய்யவேண்டும். இந்த நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. விருந்து தினத்தன்று மாலை இந்தியா ஹவுஸில் சமையல் வேலையில் எல்லோரும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். டாக்டர் ராஜன்தான் மேற்பார்வை. இரவு ஏழரை மணிக்கு விருந்து தொடங்குவதென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சுமார் ஆறு மணிக்கு மிகுந்த எளிய தோற்றத்துடன் ஒருவர் இந்தியா ஹவுஸுக்குள் நுழைந்தார். யாரோ ஓர் ஏழை, இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக அங்குள்ளவர்கள் கருதினார்கள். வந்தவரும் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களோடு சேர்ந்துகொண்டார். டாக்டர் ராஜன், அவரை இன்னாரென்று விவரமாக விசாரித்துக் கொள்ளாமல், அவரை அதிகாரத்தோடு வேலை வாங்கினார். அவரும் புன்சிரிப் புடன் தமக்கு இட்ட வேலைகளை ஒழுங்காகச் செய்து வந்தார். அப்பொழுது, சவர்க்காரோ ஐயரோ அங்கிருக்கவில்லை. சிறிது நேரங்கழித்து, வெளியிலே சென்றிருந்த ஐயர் திரும்பி வந்தார். பார்த்தார். உள்ளே நடைபெறுகிறவைகளை, அடடா! இவரையா வேலை வாங்குகிறீர்கள்? இவர்தானே இன்றைய கூட்டத்திற்குத் தலைவர்? என்று சிறிது கடுகடுத்துப் பேசிவிட்டு, அந்த ஏழை மனிதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த ஏழை மனிதர் தான் காந்தியடிகள்! விருந்து நடைபெற்றது. காந்தியடிகள் எல்லோருடனும் உட்கார்ந்து உண்டார். பிறகு, பாத்திரங்களைக் கழுவி அவற்றை உரிய இடங்களில் ஒழுங்காக வைப்பதில் மற்றவர்களுக்குத் துணையா யிருந்தார். பிறகு நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் பேசுகிறபோது, லண்டனில் மரக்கறி உணவுவகைகள் அடங்கிய விருந்து நடத்துவது எவ்வளவு கடினமென்பது தமக்குத் தெரியு மென்றும், விருந்தில் கலந்த கொள்ளத் தமக்குச் சந்தர்ப்பம் அளித்ததற்காகப் பெரிதும் சந்தோஷப் படுவதாகவும், விருந்து தயாரிப்பு வேலையில் தம்மை உபயோகப் படுத்திக் கொண்டதற்காக நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்துக் கொண்டு, சத்தியத்திலும் அஹிம்ஸையிலும் தமக்குக் குன்றாத நம்பிக்கை இருக்கிறதென்றும், இவ்விரண்டையும் உறுதியாகக் கடைப் பிடிப்பதன் மூலம்தான் இந்தியா சுயராஜ்ய லட்சியத்தை அடைய முடியுமென்றும் தெரி வித்தார். காலக்கிரமத்தில் ஐயர், காந்தியடிகளின் கொள்கைகளை ஒப்புக்கொண்டு, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரக இயக்கம் வெற்றி பெறுவதற்குப் பெரிதும் உழைத்தார். இந்தியா ஹவு மீது போலீசாரின் கண்காணிப்பு வரவர அதிகமாகிக் கொண்டு வந்தது. இதில் ஜாகை வைத்துக்கொண் டிருந்தவர்கள் ஒருவர் பின்னொருவராக வெளியில் சென்று வசிக்க ஆரம்பித்தார்கள். சவர்க்கார், வைத்திய சிகிச்சைக்காக, பாரிஸுக்குச் செல்ல வேண்டிய அவசியத்துக்குட்பட்டார். ஐயர், லண்டனிலேயே ஒரு ஹோட்டலில் சென்று தங்கினார். சில நாட்களுக்குப் பிறகு ஐயர் பாரிடர் பரீட்சையில் தேறி பட்டமும் பெற்றார். ஆனால் உடனே அதை மறுத்துவிட்டார். எந்த நோக்கத்திற்காக தாம் லண்டன் வந்தாரோ அந்த நோக்கத்தைத் தாமே சிதற அடித்துக்கொண்டார். எல்லாம் தாய்நாட்டிற்காகத் தான்! தாய்நாட்டின் விடுதலைக்காக, தம்முடைய சர்வத்தையும் அர்ப்பணம் செய்த மகா தியாகி! முதன் முதல் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்து பட்டத்தைத் துறந்தவர் ஐயர்தான்! அப்பொழுது இவருக்கு வயது இருபத்தொன்பது! இந்த நிலையில் - 1910ஆம் வருஷம் மே மாதம் - லண்டனில் கர்ஸன் வில்லி1 என்ற ஆங்கிலேயர், மதன்லால் திங்க்ரா2 என்ற ஓர் இந்திய இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்தியா ஹவுஸில் சிறிது காலம் வசித்து வந்தவர். இதனால் இந்தியா ஹவுஸில் வசித்து வந்த பலர்மீதும் போலீசாருக்குச் சந்தேகம் உண் டாகியது. இந்தியா ஹவு விடுதியைச் சோதனை போட்டனர். ஏதோ அகப்பட்ட சில சாமான்களை எடுத்துக் கொண்டு போயினர். கடைசியில் திங்க்ராவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. கர்ஸன் கொலையைத் தொடர்ந்தாற்போல், இந்தியாவில் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த நாசிக் என்ற ஊரில் ஜாக்ஸன்3 என்ற ஒரு போலீ உத்தியோகதர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கும் லண்டன் இந்தியா ஹவுஸில் வசித்து வந்தவர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் போலீசார் கருதிவிட்டார்கள். பாரிஸில் சவர்க்காரும் லண்டனில் ஐயரும் பலத்த கண்காணிப்புக்குட்பட்டார்கள். இவ் விருவரையும் எப்படியாவது சிறைப்படுத்திவிட முனைந்தனர் போலீசார். இதை ஒருவாறு தெரிந்துகொண்ட ஐயர், பாரிஸிலுள்ள சவர்க்காருக்குத் தகவல் கொடுத்தார். அவரும், லண்டனிலுள்ள தம் நண்பர்களைச் சந்திக்க விரும்பி உடனே இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். இங்கிலாந்து ஒரு சுதந்திர நாடு; அங்குத் தம்மைக் கைது செய்ய மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார் அவர். ஆனால் இங்கிலாந்து மண்ணை மிதித்தவுடன் அவரைப் போலீசார் கைது செய்து லண்டனுக்குக் கொண்டு வந்து சிறையிலே வைத்துவிட்டார்கள். ஜயருக்கு இது தெரிந்தது. தண்ணீரிலிருந்து எடுத்துத் தரையிலே விடப்பட்ட மீனைப்போல் துடித்தார். சவர்க்காரிடத்தில் அவ்வளவு ஈடுபாடு இவருக்கு. சுமார் இரண்டு மாத காலம் சவர்க்கார் சிறையிலே கிடந்தார். சிறையிலே கிடந்த சவர்க்காரை ஐயர் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தார். இவரையும் சிறைப்படுத்தி விட போலீசார் வலை வீசியிருந்தனர். ஆனால் இவருக்கு இது தெரியாது. சவர்க்கார் இதை எப்படியோ தெரிந்துகொண்டுவிட்டார். ஐயர் வழக்கம்போல் ஒரு நாள் சவர்க்காரைச் சந்திக்கச் சிறைக்குச் சென்றார். சவர்க்கார்: என்ன ஐயர்! இன்னுமா நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்? அநேகமாக இன்று உங்களுக்கு வாரண்ட் பிறந்துவிடும். இன்றே உங்களைக் கைதுசெய்துவிடுவார்களென்று தோன்றுகிறது. ஆகையால் உடனே தப்பி வேறு நாட்டுக்குச் சென்றுவிடுங்கள். ஐயர்: நீங்கள் சிறையில் இருக்கும்போது நான் மட்டும் தப்பிச் செல்வதா? நானும் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன். சவர்க்கார்: பிடிவாதம் செய்யவேண்டாம். எல்லோரும் சிறையில் கிடப்பதால் என்ன பயன்? வேறெங்கேனும் சென்று, தாய் நாட்டுக்கு உங்களாலானதைச் செய்துகொண்டிருங்கள். எப்படியும் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் இங்கிலாந்து எல்லையைவிட்டுத் தாண்டிச் சென்றுவிடுவது நல்லது. ஐயருக்கு வேறு வழியில்லை. சவர்க்காரிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு, தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார். ஹோட்டல் முதலாளி ஓர் அம்மையார். ஐயருடைய நேர்மையான வாழ்க்கையிலும் களங்கமற்ற தேச பக்தியிலும் அதிக மதிப்பு வைத்திருந்தவர். ஐயர் ஹோட்டலுக்கு வந்ததும், இந்த அம்மையாரிடம், தாம் உடனே புறப்படவேண்டிய அவசியத்தைத் தெரிவித்தார். அவரும் அவசரம் அவசரமாக, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். ஐயர், இந்த ஹோட்டல் வாசத்திற்கு முந்தியே தாடி மீசை வளர்த்துக் கொண்டிருந்தார். இதுதான் இவரைப் பலவித ஆபத்துக் களினின்று காப்பாற்றிக் கொடுத்தது. யாரும் சுலபமாக அடையாளங் கண்டு கொள்ள முடியாத தோற்றத்துடன், கையிலே ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு, விடியற்காலையில் ஹோட்டலை விட்டுக் கிளம்பினார் ஐயர். இந்தப் பெட்டியின்மீது வி. வி. எ. என்ற மூன்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. முதலில் பிரான் தேசம் சென்றுவிட வேண்டுமென்பது இவர் உத்தேசம். அப்படியே துறைமுகம் சென்று கப்பலேறிவிட்டார். பொழுது விடிந்ததும், லண்டனில் போலீகாரர்கள், ஐயரைக் கைது செய்து கொண்டு போக, ஹோட்டலுக்கு வந்தனர். ஐயர் வெளி நாட்டுக்குப் போய் விட்டார் என்று ஹோட்டல் தலைவி சொல்லி விட்டார். தென்னிந்தியராகிய வ. வே. ஸு. ஐயர் எங்கு அகப்பட்டாலும் சரி, அவரை உடனே கைதி செய்க என்று எல்லா ரெயில்வே டேஷன் களுக்கும் கப்பல்கள் செல்லும் ஊர்களுக்கும் போலீசார் தந்திகள் கொடுத்தனர். ஐயர் ஏறிச் சென்ற கப்பலில் போலீ உளவாளிகள் இருந்தார்கள். அவர்களுக்கும் தந்தி கிடைத்தது. அவர்கள், கப்பலில் ஐயரைத் தேடித் தேடிப் பார்த்தார்கள். அகப்படவில்லை. ஆனால் கப்பலில் ஓர் இந்தியர் இருந்தார். ஆனால் அவர் தாடி மீசையுடன் கூடிய ஒரு சீக்கியர். அவர் பக்கத்தில் வி. வி. எ. என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டி இருந்தது. இவர்தான் ஒருகால் வி.வி.எ. ஐயராக இருப்பாரோ என்று போலீசாருக்குச் சந்தேகம். ஆனால் இந்தச் சந்தேகத்தின் பேரில் எப்படிக் கைதி செய்வது? அவர் ஐயராக இல்லாவிட்டாலோ? விபரீதமாகவல்லவோ முடியும்? எனவே ஒரு சூழ்ச்சி செய்தனர். தந்திக் கவர் ஒன்றை எடுத்து அதை நன்றாக ஒட்டி அதன்மீது வி. வி. எ. ஐயர் என்று ஆங்கிலத்தில் விலாசமிட்டு, ஐயரிடம் கொடுக்கச் செய்தனர். தந்தியைப் பார்த்தால் யாருக்கும் ஒருவித திகைப்பும், முகத்தில் மாறுதலும் உண்டாகு மல்லவா? அதைக்கொண்டு ஐயர் இன்னார் என்று அறிந்து கொண்டு விடலாமென்பது போலீ காரரின் எண்ணம். ஐயர், தந்திக் கவரை வாங்கிக் பார்த்தார். ஓ! இந்தத் தந்தி எனக்கல்லவே? வி. வி. எ. ஐயருக்கல்லவோ இது சேர வேண்டும்? என்று சொல்லி, கவரைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் தந்தியைக் கொடுத்த போலீகாரன் லேசான பேர்வழியாயில்லை. மன்னிக்க வேண்டும்; இதோ உங்கள் பெட்டியின்மீது வி. வி. எ. என்று எழுதப் பட்டிருப்பதால் நீங்கள் தான் வி. வி. எ ஐயராயிருக்கலாமென்று எண்ணினேன் என்றான். இல்லை, இல்லை; என்பெயர் வி. விக்கிரம சிங் என்றார் நிதானமாக ஐயர். போலீகாரனும் வாயடைத்துக்கொண்டு போய்விட்டான். எத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும் கலங்காத மனவுறுதி படைத்தவர் ஐயர் என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் வேண்டுமோ? இங்ஙனம் சாமர்த்தியமாகப் போலீ வலையில் சிக்கிக் கொள்ளாமல் ஐயர், ஆம்ட்டர்டாம்1 நகரம் வழியாக பாரி வந்து சேர்ந்தார். அங்கு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா,காமா அம்மையார், திருமலாச்சாரி முதலிய நண்பர்கள் இவரை அன்புடன் வரவேற்று வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுத்தார்கள். காமா அம்மையார் தமக்கு ஒரு தாய்போலிருந்ததாக ஐயர் ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். மேற்சொன்ன மூவருக்கு மட்டுந்தான் இவர் ஐயரென்று தெரியும். மற்றவர்கள் இவரை விக்கிரம சிங் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். போலீசாருடைய குற்றமே காணும் கண்கள், இவர்களைச் சுற்றி வட்டமிட்ட வண்ணம் இருந்தன. ஐயர், சுமார் ஒரு வருஷ காலம் பாரிஸில் தங்கியிருந்தார். இந்தக் காலத்தில், அடுத்து இந்தியா செல்வதற்காகத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார் என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஐயர் பாரிஸில் தங்கியிருந்தபோது, லண்டனில் சிறை வைக்கப்பட்டிருந்த சவர்க்காரை போலீசார், தக்க பந்தோபதுடன் கப்பலேற்றி இந்தியாவுக்கு அழைத்துச் சென்றனர். நாசிக்கில் நடைபெற்ற ஜாக்ஸன் கொலை சம்பந்தமாக இவரை விசாரித்து, தண்டனைக்குட்படுத்த முனைந்திருந்தது அரசாங்கம். ஆனால் பாரிஸிலிருந்த தேசபக்தக் குழுவினர் இவரை எப்படியாவது போலீ பிடியினின்று மீட்டுக் கொண்டுவிட முனைந்தனர். இதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருந்தனர். சவர்க்காரை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் மார்சேல்துறைமுகம் நண்ணும் கால மறிந்து இவர்கள், பாரிஸிலிருந்து மேற்படி துறை முகத்திற்கு வந்து காத்திருந்தனர். கப்பல் துறைமுகத்திற்குச் சமீபத் தில் வரும் சமயம். சவர்க்கார், அதிலிருந்து தப்பி, கடலில் நீந்திக் கொண்டு கரையேற முயன்றதும், அவரைக் காப்பாற்ற ஐயர் முதலாயினோர் செய்திருந்த ஏற்பாடுகள் பலிக்காமற் போனதும், சவர்க்காரை முன்னைக் காட்டிலும் அதிக பந்தோபதுடன் போலீசார் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று விசாரணைக்குட் படுத்தி, கடைசியில் அவரை அந்தமான் தீவுக்கு அனுப்பச் செய்ததும் வேறு கதை; சவர்க்காரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற வேண்டிய கதை. ஐயர், பாரிஸிலிருக்கையில், போலிசாருக்குப் பலவித போக்குகள் காட்டி அவர்களை மருளச் செய்து கொண்டிருந்தார். ஊரிலுள்ள தமது குடும்பத்தினருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவார். ஒரு கடிதத்தில், தாம் பாரிஸிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப் போவதாக எழுதுவார். இன்னொரு கடிதத்தில், தென்னமெரிக்காவிலுள்ள பிரேஜில்1 நாட்டுக்குச் சென்று குடியேறப் போவதாகத் தெரிவிப்பார். மற்றொரு கடிதத்தில், தாம் இந்தியா வுக்கே திரும்பிவரப் போவதில்லையென்று காட்டுவார். தாம் எழுதும் கடிதங்களைப் போலீசார் பிரித்துப் பார்ப்பர் என்பது இவருக்குத் தெரியும். இந்தக் கடிதங்களைப் பார்த்த போலீசார், ஐயருடைய இருப்பிடம் தெரியாமல் திகைத்தனர்; பல இடங் களிலும் ஆள்விட்டுத் தேடினர். ஐயரோ, பாரிஸில் சுமார் ஒரு வருஷ காலம் தங்கிவிட்டு, பிறகு ஒரு பார்சி கனவான் மாதிரி வேஷந் தரித்துக்கொண்டு ரோமாபுரிக்குப் புறப்பட்டார். வழி நெடுக, தமக்கு இங்கிலீஷ் பாஷை தெரியாதது போலவே நடித்து வந்தார். ஐரோப்பியர் யாரை யாவது சந்தித்துப் பேசும்படி நேரிட்டால், ஒன்று ஹிந்துதானி அல்லது லத்தீன் பாஷையில் பேசி வந்தார். தமது பெயர் ரடம் சேட் என்று சொல்லிக்கொண்டார். இங்ஙனம் தம்மைப் புலப்படுத்திக் கொள்ளாமல் பிரயாணம் செய்து ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தார். ரோமாபுரியை ஒரு கலைக்கூடம் என்று சொல்லலாம். ஐயர் கலைச்சுவை மிக்கவர். எனவே அந்த ஊரில் சில நாட்கள் தங்கி, கலையழகு நிரம்பிய இடங் களையெல்லாம் பார்த்து அனுபவித்தார். நேபிள் நகரத்திற்கும் சென்று வந்தார். ரோமாபுரியில் தங்கியிருந்த போது, தாந்தே2 என்ற கவிஞன் எழுதிய தெய்விக நாடகம்3 என்னும் நூலையும், இத்தாலிய - இங்கிலீஷ் அகராதி ஒன்றையும் விலைக்கு வாங்கி, புதுச்சேரியி லிருந்த தமது நண்பர் மண்டயம் ஸ்ரீனிவாஸாசாரியாருக்குத் தபாலில் அனுப்பி வைத்தார். தாம் புதுச்சேரி வந்து சேரப்போவ தற்கு இது முதல் அறிகுறியாயிருக்கட்டும் என்பது ஐயரின் உத்தேசம் போலும். ஆனால் ஸ்ரீனிவாஸாசாரியார், தபால் மூலம் இந்தப் புத்தகங்கள் தமக்குக் கிடைத்தபோது ஆச்சரியமே பட்டார். தமக்கு இவை ஏன் அனுப்பப் பெற்றிருக்கின்றன என்பது அப்பொழுது அவருக்குத் தெரியாது. ரோமாபுரியில் சில நாட்கள் தங்கிவிட்டு, பிறகு ஐயர் கான்ட்டாண்டி நோபிளுக்குச் சென்றார். இங்கிருந்து தம்மை ஒரு முலிம் சந்நியாசியாக மாற்றிக் கொண்டார். தினந்தோறும், ஒரு சந்நியாசி செய்ய வேண்டிய தொழுகை முதலியவைகளையெல்லாம் தவறாமல் ஒழுங்காகச் செய்து வந்தார். யாருடனும் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கமாட்டார். அப்படி யாராவது பேச்சுக் கொடுத் தாலும் கடவுள் நாமத்தைச் சொல்லுங்கள்; வேறு வார்த்தைகள் சொல்வது வீண்தானே? என்று சொல்லி பேச்சை நிறுத்திக் கொண்டுவிடுவார். கான்ட்டாண்டிநோபிளிலிருந்து கெய்ரோ, கெய்ரோவி லிருந்து பம்பாய், பம்பாயிலிருந்து கொளும்பு, கொளும்புவிலிருந்து கடலூருக்கு வந்தார். கப்பலிலேயே புதுச்சேரிக்கு நேரே போக வில்லை. புதுச்சேரி, அப்பொழுது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற அரசியல் தியாகிகளின் புகலிடமாயிருந்தது. அரவிந்த கோஷ் இங்கே வந்து தங்கியிருந்தார். இவர் வருவதற்குச் சுமார் இரண்டு வருஷங் களுக்கு முந்தியே - 1908ஆம் வருஷத்தில் - சுப்பிரமணிய பாரதியார் வந்து சேர்ந்திருந்தார். இங்கிருந்து கொண்டு இந்தியா என்னும் வாரப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். ஐயர், லண்ட னில் இருந்த போது எழுதி வந்த கட்டுரைகள் முதலியன இதில்தான் வெளி வந்து கொண்டிருந்தன. அரசியல் தியாகிகள் பலருக்கும் அடைக்கலம் கொடுத்து வந்த மண்டயம் ஸ்ரீனிவாஸாசாரியார் இங்குதான் இருந்தார். இன்னும் பலர் இருந்தனர். இவர்களுக்குப் போலீ கண்காணிப்பு மிக அதிகமாயிருந்தது. இதனால் ஐயர் தாம் புதுச்சேரியில் கப்பலில் சென்று இறங்கினால், போலீசாரின் அனாவசியமான கண்காணிப்புக்குட்பட வேண்டியிருக்குமென்று கருதி, கடலூரில் இறங்கி அங்கிருந்து கால் நடையாக புதுச்சேரி வந்து சேர்ந்தார். இவர் இங்ஙனம் புதுவை வந்து சேர்ந்தது 1910ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம். ஐயர், ஒரு முலிமின் நடை உடை பாவனைகளுடனேயே புதுச்சேரியை அடைந்தார். நேரே மண்டயம் ஸ்ரீனிவாஸாசாரி யாரின் வீட்டை அடையாளங் கேட்டுக் கொண்டு சென்றார். இதற்குமேல் ஸ்ரீனிவாஸாசாரியாரே சொல்லட்டும்:- அவர் (ஐயர்) என் வீட்டுக்கு வந்தபோது பாரதியாரும் என்னோடு இருந்தார். யாரோ மகம்மதியர் வந்திருப்ப தாகவும், தனியாகப் பேச விரும்புவதாகவும் என் மூத்த மகள் வந்து சொல்லவே, நான் மாடியிலிருந்து வந்து அவரைக் கண்டேன். ரோமாபுரியிலிருந்து தாம் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்தனவா என்று கேட்டார். மாடிக்கு அழைத்துச் சென்று நாங்கள் மூவரும் பேசியதிலிருந்து விஷயம் புரிந்தது. இது முதற்கொண்டு ஐயர், பாரதியார், ஸ்ரீனிவாஸாசாரியார், அரவிந்தர் முதலியோரிடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. சுமார் ஆறு மாத காலம் வரை, ஐயர், யாருக்கும் தெரியாமல் நண்பர்களுடைய ஆதரவிலேயே இருந்து வந்தார். பிறகுதான் ஐயர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது போலீசாருக்குத் தெரிந்தது. பின்னர் ஐயருடைய குடும்பத்தினரும் இங்குவந்து சேர்ந்தனர். ஐயர், புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த பிறகும் போலீசாருடைய தொந்தரவு விடவில்லை. இவரை எப்படியாவது அகப்படுத்தி பிரிட்டிஷ் எல்லைக்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டுமென்று வெகு பிரயத்தனப்பட்டனர்; கீழ்மக்களைக் கொண்டு இவருக்குப் பல இம்சைகளை விளைவித்தனர். இப்படியிருக்கையில் 1911ஆம் வருஷம் திருநெல்வேலி ஜில்லா கலெக்டராயிருந்த ஆஷ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கும் புதுச்சேரியிலிருந்த தியாகிகளுக்கும் ஏதோ தொடர் பிருக்கவேண்டுமென்று அரசாங்கத்தார் சந்தேகித்தனர். ஐயர் முதலாயினோர்க்குப் போலீ தொந்தரவுகள் அதிகரித்தன. ஒருநாள் ஐயர் ஒரு தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தார். சில போக்கிரிகள் இவரைப் பின் தொடர்ந்தார்கள். இவரைப் பல வந்தமாகத் தூக்கிக் கொண்டுபோய் பிரிட்டிஷ் எல்லையில் விட்டுவிட வேண்டுமென்பது இவர்கள் எண்ணம். ஐயருக்கு இது தெரிந்தது. ஒரு சந்துக்குள் வேகமாகச் சென்றார். அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அதற்குள் நுழைந்து. அங்கிருந்த விக்கிரகத்தின் பின்னால் மறைந்துகொண்டார். பின் தொடர்ந்த போக்கிரிகளுக்கு இவர் போன இடம் தெரியவில்லை. இரவு பூராவும் விக்கிரகத்தின் பின்னாலேயே இருந்துவிட்டு மறு நாட்காலை வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இன்னொரு நாள் ஐயர், ஒரு நண்பருடைய வீட்டுக்குச் சென்று அங்கேயே பேசிக் கொண்டிருந்தார். போலீசார் ஏவலின்பேரில் வந்த சில போக்கிரிகள் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு, ஐயரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். வெளியிலே தலை நீட்டினால் உயிருக்கு ஆபத்து. என்ன செய்வார் ஐயர்? சுமார் அரை மணி நேரங் கழித்து, வீட்டிலிருந்து ஒரு சவத்தைத் தூக்கிக் கொண்டு சிலர் வெளியே வந்தனர். ஐயோ பாவம்! வீட்டில் சாவல்லவோ ஏற்பட்டு விட்டது என்று அனுதாபப்பட்டுக் கொண்டு, விஷமம் செய்யவந்த போக்கிரிகள் கலைந்து போயினர். சிறிது தூரம் சென்றதும், பிணம்போலிருந்தவர் ஐயரானார்! முகத்தில் கொஞ்சங்கூட கலக்கம் காட்டவில்லை. மற்றொரு நாள் இரவு சுமார் எட்டரை மணி இருக்கும். ஐயர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தெருப்பக்கத்துக் கதவு உள்பக்க மாகத் தாழ்ப்பாளிடப்பெற்றிருந்தது. குழந்தை சுபத்திரா தொட்டி லில் தூங்கிக் கொண்டிருந்தது. போலீசாரால் ஏவப்பட்ட கீழ் மக்கள், வீட்டைச் சூழ்ந்து கொண்டு ஐயரே, வெளியிலே வா; உன்னை வெட்டிப் போடுகிறோம்; குத்திப் போடுகிறோம், என்று அட்டகாசம் செய்ய ஆரம்பித்தார்கள். ஐயர், ஏதேனும் ஆபத்து நேரிடக்கூடுமென்று உணர்ந்தார். சாப்பாட்டை முடித்துக் கொண்டு, முக்கியமான சில சாமான்களை எடுத்துக் கொண்டார்; வீட்டு மேற்கூரையின்மீதேறி நான்கு வீடு தள்ளியிருந்த தமது நண்பருடைய வீட்டிற்குள் சென்று அவைகளை வைத்தார்; அவரிடத்தில் உள்ள நிலைமையை விளக்கிச் சொன்னார்; மறுபடியும் அதே வழியாகத் தமது வீட்டுக்குள் திரும்ப வந்து, மனைவியையும் குழந்தையையும் கூட்டிக்கொண்டுபோய் அந்த நண்பருடைய வீட்டில் விட்டார். திரும்ப தமது வீட்டுக்கு வந்து, கூட்டத்தின் முன் நின்றார். என்ன சொல்லுகிறீர்கள்? இப்பொழுதே அப்புறம் போகிறீர்களா? இல்லையா? என்று சொல்லிக்கொண்டே தம் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தில் ஒரு வேட்டு விட்டார். அவ்வளவுதான். ஒரு நொடியில் கூட்டம் கலைந்துபோய் விட்டது. இப்படி ஒரு தொந்தரவா, இரண்டு தொந்தரவா? எத்தனையோ தொந்தரவுகள்! போலீசார் இவரை எப்படி எப்படி யெல்லாமோ சிக்க வைக்க முயன்றனர். ஒரு மந்திரவாதியைக் கொண்டு இவருக்குச் சூனியம் வைக்க ஏற்பாடு செய்தனர். பலிக்க வில்லை. ஒரு சமயம் இவர் வசித்துக்கொண்டிருந்த வீட்டின் கிணற்றில், மேலே நன்றாக இறுக்கிக் கட்டியிருந்த ஒரு பானை விழுந்து கிடந்தது. ஐயருடைய மனைவியாரும், வீட்டில் வேலை செய்து வந்த பெண்பிள்ளையும் அகமாத்தாக இதைப் பார்த் தார்கள். கிணற்றுக்குள் இதை யார் போட்டார்கள்? இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஐயரைக் கூப்பிட்டுக் காட்டினார்கள். ஐயர் அதை மெதுவாக மேலே எடுத்துத் திறந்துபார்த்தார். அதில், பலாத்காரத்தைத் தூண்டி எழுதப்பெற்ற ஒரு துண்டுப் பிரசுரம், காளிதேவியின் உருவப்படம் ஒன்று, இப்படிச் சில காகிதங்கள் கிடந்தன. துண்டுப் பிரசுரத்தில், புதுச்சேரியிலுள்ள அரசியல் தியாகிகள் பலருடைய கையெழுத்துக்களும் காணப்பெற்றன! இது போலீசாருடைய சூழ்ச்சியென்பதை ஐயர் அறிந்து கொண்டார். உடனே தமது நண்பர்களுக்கும் அறிவித்தார். அவர்களைக் கூட்டிக் கொண்டு பானையுடன் பிரெஞ்சு அதிகாரிகளிடம் சென்று எல்லா வற்றையும் காட்டினார். நிம்மதியாக வாழ்க்கையை நடத்த விரும்பு கின்ற எங்களைப் போலீசார், இப்படியெல்லாம் சிக்க வைத்துத் தொந்தரவு கொடுக்கின்றனர். எங்களுக்கும் இந்தத் துண்டுப் பிரசுரத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆகையால் எங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரினார். அதிகாரிகளும் அப்படியே உறுதி கொடுத்தனர். ஐயர் வீடு திரும்பினார். போலீசார் உடனே வந்தனர். வீட்டைப் பரிசோதனை செய்யப் போவதாகக் கூறினர். தாராள மாகச் செய்து கொள்ளுங்கள் என்றார் ஐயர். வீட்டைப் பரிசோதனை செய்தனர். ஒன்றும் அகப்படவில்லை. கிணற்றுக்குள் ஏதேனும் கிடைக்குமோ என்று சந்தேகித்து, கிணற்றிலுள்ள தண்ணீரை யெல்லாம் இறைத்துப் பார்த்தனர். ஏதும் அகப்படவில்லை. இதற்குப் பிறகுதான், ஐயர் தங்கள் சூழ்ச்சியைக் கண்டு பிடித்து முன் ஜாக்கிரதையுடன் இருந்ததை அறிந்துகொண்டனர்; ஏமாற்றத் துடன் திரும்பினர். ஐயர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தாள் பர்வதம் என்ற ஒரு பெண்மணி. இந்த அம்மாளிடமிருந்து, ஐயருடைய ரகசியங்களை யெல்லாம் தெரிந்து கொள்ள போலீசார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் இந்த அம்மாள் நன்றி விசுவாசமுடையவள். ஐயருடைய குடும்பத்தின் சுகதுக்கங்களில் பூரண பங்கெடுத்துக் கொண்டவள். போலீசார் வீசிய நப்பாசை வலையில், அசந்து மறந்துகூட விழாத மன உறுதி படைத்தவளாயிருந்தாள். கார்ல் மார்க் குடும்பத்திற்கு லென்சென் என்ற ஒரு பெண்மணி எப்படி வாய்த்தாளோ1 அப்படியே ஐயருடைய குடும்பத்திற்கு பர்வதம்மாள் வாய்த்தாள். வாழ்க பர்வதம்மாளின் நன்றி! 1914ஆம் வருஷம் ஆகட் மாதம், முதல் உலக மகாயுத்தம் மூண்டது. செப்ட்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் எம்டன்2 என்ற ஒரு ஜெர்மானியக் கப்பல் வங்காளக் குடாக்கடலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது; சென்னையிலும் சில குண்டுகளைப் பொழிந்தது. இந்த எம்டன் கப்பலுக்கும், புதுச்சேரியிலுள்ள அரசியல் தியாகி களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டுமென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சந்தேகப்பட்டனர். ஒரு சந்தேகம், பல சந்தேகங் களைக் கிளப்பு மல்லவா? அரவிந்தர், ஐயர், பாரதியார் முதலியவர் களுக்குப் போலீசார் கொடுத்த தொந்தரவுகள் பல. பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த அல்ஜீரியா3 என்ற பிரதேசத்திற்குத் தேசப் பிரஷ்டம் செய்து விடுவதாகப் பயமுறுத்தச் செய்தனர். ஒன்றும் பலிக்கவில்லை. இங்ஙனம் ஐயரைச் சூழ்ந்துகொண்டு வந்த துன்ப மேகங்கள் பலவும் ஒன்றன்பின்னொன்றாக விலகிக் கொண்டு வந்தன. இவை களைப்பற்றி இவர் சிறிது கூட கவலைப்படவில்லை; செயலற்று நின்றதுமில்லை. இலக்கியக் கடலில் திளைத்துக் கொண்டிருப் பதில் இன்பம் நுகர்ந்தார். எம்டன் கப்பல் வட்டமிட்டுக் கொண்டிருந்ததன் விளைவாக, தாம் எந்தக் கணத்திலும் தேசப் பிரஷ்டம் ஆதல் கூடுமென்ற நிலைமையில் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் செய்யுள் வடிவமாக மொழி பெயர்த்தார். இதற்கு ஆங்கிலத்தில் நீண்டதொரு முகவுரை எழுதினார். ஐயருடைய தமிழ்மொழிப் பற்றுக்கும், பரந்த புலமைக்கும் இந்நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சுருக்கமாகச் சொல்ல விழைகிறோம். இந்த மொழிபெயர்ப்பு நூலை, சுமார் ஐந்து மாதத்திற்குள் எழுதி முடித்தார். எம்டன் தொல்லை ஒருவாறு அகன்றது. ஆனால் உலக மகாயுத்தம் முடிகிற வரையில் தாம் புதுச்சேரியிலேயே வசிக்கும்படி யாக இருக்குமென்று உணர்ந்தார் ஐயர். எனவே இலக்கியப் பணி யில் தீவிரமாக ஈடுபட்டார். சில அன்பர்களுடைய ஒத்துழைப்பைக் கொண்டு கம்ப நிலையம் என்ற ஒரு தாபனத்தைத் தோற்றுவித் தார். அதன் வாயிலாகச் சில நல்ல நூல்கள் வெளிவரத் தலைப் பட்டன. ஆனால் இவற்றோடு ஐயர் திருப்தியடையவில்லை. தொன்மையான தமிழ் மொழியின் அருமை பெருமைகளைப் பிற மொழியினர் அறியும்படி செய்ய வேண்டும், இந்திய வரலாறு தேசீயக் கண்கொண்டு எழுதப்பட வேண்டும், தமிழில் நல்லதொரு மாதப் பத்திரிகை தொடங்கி நடத்த வேண்டும், இப்படித் தமிழ் மொழிக்கு ஆக்கந்தேடும் முறையில் என்னென்னவோ கனவுகள் கண்டார்; திட்டங்கள் வகுத்தார்; சில நூல்களும் எழுதினார். தமது நோக்கத்தைத் தெளிவுறக் காட்டி, தமிழன்பர்கள் பலருக்குச் சுற்றறிக்கைகள் விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்தபடி பலன் ஏதும் கிட்டவில்லை. தமது நோக்கம் ஒருவாறு நிறைவேற இவர் எதிர் பார்த்ததெல்லாம் சுமார் மூவாயிரம் ரூபாய்தான். ஆனால் இந்தச் சொற்பத் தொகை கிடைப்பதும் அரிதாயிருந்தது. இந்தக் காலத்தில் இவர் எண்ணிய எண்ணங்கள், வகுத்த திட்டங்கள், ஆக்கிய இலக்கியப் படைப்புக்கள், இனிச் செய்ய உத்தேசித்திருக்கும் காரியங்கள் இன்ன பலவற்றையும், சிறிது காலத்திற்குப் பிறகு, தம் நண்பரொருவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்தக் கடிதம் ஒருமாறு:- அன்புள்ள ஐயா, தங்கள் 17 - 10 - 20இல் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் தாங்கள் கூறும் உபசார வார்த்தைகளுக்கு நான் அருகனில்லையென்று எனக்கு நன்றாகத் தெரியுமானாலும், தாங்கள் எழுதிய கடிதத்துக்கு மனமார்ந்த நன்றி கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஏன்? ஆங்கிலம் கற்ற சகோதரர்கள் நம் தெய்வீக பாஷை மீது அன்பு வைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று காட்டுகிறது. இந்தச் சந்தோஷகரமான செய்தியை எனக்கு அறிவித்துப் புதிய உற்சாகம் உண்டாக்கியதற்காக நான் தங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழனுக்காகத் தாங்கள் செய்யவேண்டும் என்கிற காரியங்களில், பெரும்பாலானவற்றைச் செய்ய வேண்டும் என்று நான் சங்கற்பித்துக் கொண்டிருக்கிறேன் என்பது இக்கடிதத்துடன் வரும் விளம்பரங் களினின்று தெரிய வரும். ஆனால் அவ்விளம்பரங்களை வெளிப் படுத்திச் சுமார் ஒரு வருட காலமாகியும், அவற்றுள் தெரிவித்திருக்கிற ஏற்பாட் டில் சுமார் முப்பது பேர்களே சேர்ந்திருக்கிறார்கள். ஆதரவாளர் குறைவினால்தான், உத்தேசித்த காரியங்களைச் செய்து முடிக்க முடியவில்லை. சந்திரகுப்த சக்கரவர்த்தி சரித்திரத்தைத் தவிர, மற்ற நூல்களெல்லாம் முதல்பதிப்பி லேயே நிற்கின்றன. அவற்றை வாங்க ஐந்நூறு பேர் முன்வர வில்லை. அதனால்தான் இறகினைக் கொண்டே ஜீவிக்க வேண்டியிருப்பதால், ஆங்கில நூல்கள் வெளிப்படுத்த உத்தேசித்துள்ளேன். குறுந்தொகையிலும் கலித்தொகை யிலும் சில செய்யுள்கள் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன். கம்ப ராமாயணத்தை மொழிபெயர்ப்ப தாக விளம்பரம் செய்யவில்லை. அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விமரிசனம் எழுதி, இன்றியமையாத கட்டங் களை மட்டும் சாத்தியமான அளவு மொழி பெயர்த்து, கம்பரானவர், ஹோமர், விர்ஜில், தாந்தேக்களைவிட மாத்திரமில்லை, வால்மீகி, வியாசர் இவர்களைவிடச் சில அம்சங்களில் பெரியவர் என்றும், மற்றவர்கள் இணையானவர்கள் என்றும் காட்டி, தமிழர் அல்லாதார்க்கும் அநியாயமாய் நேர்ந்து விட்டதைப் பற்றி ஆங்கிலம் கற்ற தமிழருக்கும், தமிழரின் பெருமையை ஒருவாறு வெளிப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து; ஆனால் என் விருப்பம் இந்நூல்களில் ஆழமாக வில்லை. உலகத்தில் அறியக் கூடிய, அனுபவிக்கக்கூடிய சகல அறிவுகளையும், சுவைகளையும் ஆங்கிலம் முதலிய அன்னிய பாஷைகளுக்குச் செல்லாமல், தமிழ் மூலமாகவே ஒவ்வொரு வரும் அறியும்படிக்கும் அனுபவிக்கும்படிக்கும் செய்துவிட வேண்டியது நம் போன்ற தேசபக்தரது கடமை. அந்தப் பிரதான காரியத்தைச் செய் வதற்கு வேண்டிய சீவனமும் செலவும் வேறுமாதிரி சம்பாதிக்க இயலாமலே ஆங்கில நூல் களை இடையிடையே எழுதி வெளியிடுகிறேன். தற்பொழுது, தொமிதோவின் சரித்திரம் மொழி பெயர்த்துத் தயாராக இருக்கிறது. கோர்னியின் மித் அரைவாசி முடிந்திருக்கிறது. பிருதிவிராஜனுடைய சரித்திரத்தை, அந்த ராஜபுத்ர சிங்கத்தின் காம்பீர்யத்திற்கும், போகா தூரத்துக்கும், பரிதாப கரமான முடிவுக்கும் ஏற்றபடி எழுதுவதற்கு வேண்டிய சாமக்கிரியைகள் சேர்த்திருக்கிறேன். கம்ப நிலைய நூல்கள் சாதாரணமாகச் செலவாக ஆரம்பித்துவிட்டால் இவையெல் லாம் சடுதியிலேயே வெளிவந்து விடும். தவிர எனது சினேகிதரும் கூட்டாளியுமான ஸ்ரீ. ஸ்ரீ. ஆச்சாரியார் என்பவர், ரவீந்திர அடிகளின் சில கதைகளை வங்காளியினின்றே நேரே தர்ஜுமா செய்து வருகிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி மாத்திரமில்லை, சங்க நூல்கள் யாவும், கம்பன் பால காண்டத்தைப் போலவே பதிப்பித்து வெளியிடவேண்டும் என்ற சுவப்பனமும் இருந்து வருகிறது. எங்களுடைய பத்திரிகையைப் பற்றி விமர்சனத்தில் குறித்திருக்கிறேன். பார்க்கக் கோருகிறேன். எல்லாவற்றையும் விட ஒரு பெரிய நோக்கம் வைத்திருக் கிறேன். அதாவது, தூமா, பிரஞ்சு சரித்திரமனைத்தையுமே கற்பனைக் கதை களாகச் செய்து சரிபண்ணிப் பிரஞ்சுக் காரனையும் தன் தேச சரித்திர விஷயத்தில் கற்றவனாயும் உற்சாகியாயும் ஆக்கிவிட்டதைப்போல, தமிழ்நாட்டுச் சரித்திரமனைத்தையும் கற்பனைக் கதைகளாகச் செய்ய வேண்டுமென்றிருக்கிறேன். பாரியும் நன்னனும், கபிலரும் நக்கீரரும், கரிகாலனும் செங்குட்டுவனும், ராஜராஜனும் ராஜேந்திரனும், விஜயாலயனும், சுந்தரமூர்த்தி நாயனார் முதலிய சைவநாயன்மார்களும், குலசேகரன், ராமானுஜன், தேசிகர் முதலிய வைஷ்ணவ ஆச்சாரிய மகான்களும் நமது கதைத்தொடரில் நாயகர்களாக விளங்கி, காம்பீர்யம் முதலிய பௌருஷமான ரசங்களுக்கு நிலையமாக நின்றால், அடுத்த தலைமுறை முதல் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்ச் சரித்திரத்தையும் யார் அவமதிப்பார்? அது சாத்யமானால், இப்பேர்ப்பட்ட வீர தீரர் பிறந்து வளர்ந்து இறந்த நாட்டில் நாம் பிறக்கச் செய்த புண்யமே புண்யமென்றும், நாம் அவர்களுக்கேற்ற சந்ததியாகக் கடவோம் என்றும் எண்ணங்கள் தமிழருள் தோன்றி மற்ற மாகாணங்களில் பிறந்துகொண்டிருந்தும் (உபயோகமில்லாததுபோல்) தீரயுகம் பிறக்க வழிகாட்டியாக நாம் அமைந்துவிடுவோம். இந்த நோக்கத்துடனேயே மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகளை வெளிப்படுத்திய தோடு, லைலா மஜ்னூன், அனார்கலி முதலிய கதைகளும் கைப் பழக்கத்துக்காக எழுதி வருகிறேன். நாளாவட்டத்தில் பெரிய சரித்திரத்தை எழுதும் நிலைமைக்கு வரும் என்று நினைத்தே சிறுகதைகளை எழுதி வருகிறேன். இதற்கெல்லாம் நமக்குத் தமிழ்ப்பத்திரிகை அவசியம். வங்காளியில் ப்ரவாசி யென்றும் ஆங்கிலத்தில் மாடர்ன் ரிவ்யூ என்றும் மாதப் பத்திரிகைபோல் ஒன்று இருந்தால், தங்களைப் போன்ற தமிழபிமானிகளுடன் ஒன்று சேர்ந்து உழைத்துத் தமிழில் எல்லாத் துறைகளிலும் இலக்கியங்கள் உண்டாக்கலாம். ஆனால் இதற்குக் குறைந்தது ரூபா மூவாயிர மாவது முதல் வேண்டும். முப்பது பேர் ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் ஒரு பங்கு எடுத்துக்கொண்டால் போதும். இந்த வருஷம் முயன்றதில் நான்கு பேர்தான் யோசிப்பதாகச் சொல்லி யிருக்கிறார்கள். விஷாதமடைவது என் வழக்க மில்லை. ஆகையால் காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை யோடு இருக்கிறேன். ஆனால் பெரிய விஷயம் நிறைவேறுகிற வரையில் எதிரிலுள்ள சிறு காரியங்களைப் பாராமலிருப்பது தவறு என்று மேலே சொல்லியவாறு முயற்சி செய்திருக் கிறோம். தமிழருக்குள்ளே கம்ப நிலையம் செய்கிற சிறு வேலை அபிமானிக்கப்படவில்லை என்பதில்லை என்பதற்குத் தாங்களும் மாண்டலே, ரங்கூன், சேலம், முதலிய ஊர்களில் சில நண்பர்களும் எனக்கு அன்புடன் எழுதி ஊக்குவிக்கி றார்கள். காலக்கிரமத்தில் நாம் எண்ணியவையெல்லாம் நிறைவேறும் என்று நம்புவோம். மத்தியில் கம்பநிலைய ஏற்பாட்டில் சேர்ந்தோ, அல்லது சேராமலோ, கம்பநிலைய நூல்களை ஆதரிப்போரின் தொகை புதுக்கோட்டையில் எண்ணத்தக்கதாக இருக்கும் படி தாங்கள் செய்து வரவேண்டும். நான் வேண்டுவது மிகையானாலும் வேண்டுகிறேன் என்று எழுதிவிட்டேன். மன்னித்துவிடுக. அன்புள்ள, வ. வே. ஸு. ஐயர் முதல் உலக மகாயுத்தம் 1918ஆம் வருஷம் நவம்பர் மாதம் முடிந்தது. புதுச்சேரியில் இருந்து வரும் தேச பக்தர்களின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் கிளர்ச்சி செய்தன; சில தலைவர்களும் முயன்றார்கள். இவற்றின் விளைவாகச் சுப்பிர மணிய பாரதியார் 1918ஆம் வருஷம் கடைசியில் புதுச்சேரியி லிருந்து வெளி வந்தார். அரவிந்தர் அங்கேயே தங்கிவிட்டார். ஐயர் 1920ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் வெளி வந்தார். வெளி வந்ததும், சுமார் நாலைந்து மாத காலம் இந்தியா முழுதும் யாத்திரை செய்தார். ஹரித்துவாரத்திற் கருகில் காங்கிரி என்ற இடத்தில் சுவாமி சிரத்தானந்தருடைய முயற்சியில் நடைபெற்று வந்த குருகுலம், ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனம், காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் முதலியவைகளைச் சென்று பார்த்தார். தமிழ்நாட்டில் ஒரு குருகுலத்தை தாபிக்க வேண்டுமென்று இந்த யாத்திரையின் போது சங்கற்பம் செய்து கொண்டார். மற்றும் இந்த யாத்திரையின் போது திலகர் என்ன, காந்தியடிகள் என்ன இப்படிப் பல தலைவர் களையும் கண்டு பேசினார். யாத்திரையிலிருந்து திரும்பி வந்ததும் ஐயர் 1920ஆம் வருஷம் ஜூலை மாதம் கடைசி நாளன்று தேசபக்தன் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து, சுமார் பதினான்கு மாதகாலம் அரும்பணியாற்றினார். அப்பொழுது இவர் எழுதிய கட்டுரைகள் பலவும், சத்தியாக்கிரக இயக்கத் திற்கு ஆக்கந் தருவனவாகவும், சுயராஜ்யம் அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுப்பனவாகவும், பொதுவாக நமது பாரத தேசத்தின் பண்பாட்டை விளக்குவனவாகவும் இருந்தன. சுருக்கமாக, இவருடைய பல துறைப் புலமைக்கு, இந்தக் கட்டுரைகள் சிறந்த சான்றாக விளங்கின. தவிர, பத்திரிகாசிரியராக இருந்த காலத்தில், தமிழ் நாட்டில் குருகுலமொன்றை தாபித்து அதை நல்ல முறையில் நடத்த வேண்டுமென்ற எண்ணம் இவரிடம் வலுத்துக்கொண்டு வந்தது. இதற்கு ஓரளவு ஆதரவும் தேடி வரலானார். இஃது இப்படியிருக்க, தேசபக்தன் பத்திரிகையில் 1921ஆம் வருஷம் மே மாதம் ஆறாந்தேதி அடக்கு முறை என்ற பெயரால் ஒரு தலையங்கம் எழுதப் பெற்று வெளி வந்தது. ஐயர் இதை எழுதவில்லை. அப்பொழுது இவர் ஊரிலேயே இல்லை. மேற்படி தலையங்கக் கட்டுரை அரசாங்கத்தின்மீது துவேஷம் உண்டு பண்ணக் கூடியதாக இருக்கிறதென்று சொல்லி, சென்னை அரசாங்கத்தார், தேசபக்தன் பத்திரிகையின் பொறுப்பாளிகளா யிருந்த ஐயர் உள்பட நால்வரை 1921ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் கைதி செய்தனர். வழக்கு நடை பெற்றது. ஐயர், கட்டுரைக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டு ஒன்பது மாதச் சிறைவாசத் தண்டனை விதிக்கப் பெற்றார். இந்த வழக்கு சம்பந்தமான சில விவரங்களை வாசகர்கள் அறிந்துகொள்வது நல்லது. ஏனென்றால், ஐயரின் மனத் தூய்மையையும் மனிதப்பண்பையும் அறிந்து கொள்ள இவை ஓரளவு உதவியாயிருக்கும். 1921ஆம் வருஷம் மே மாதம் ஆறாந்தேதி தேசபக்தன் பத்திரிகையில் வெளியான அடக்கு முறை என்ற கட்டுரை சம்பந்த மாக ஸ்ரீமான்கள் (1) வெ. ராஜகோபாலாச்சாரியார் (2) வ. வே. ஸு. ஐயர் (3) டி. மகாலிங்க ஐயர் (4) எ. நாகேசுவர சாதிரி ஆகிய நால்வர் மீதும் இ. பி. கோ. 124 ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப் பட்டு விசாரணை, சென்னை பிரதம மாகாண மாஜிட்ரேட் ஸ்ரீ பி. சி. லோபோ முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீமான்கள் வெ. ராஜகோபாலாச்சாரியார், டி. மகாலிங்க ஐயர், எ. நாகேசுவர சாதிரி ஆகிய மூவரும், மேற்படி கட்டுரை சம்பந்தமாகத் தாங்கள் எவ்வித குற்றம் செய்திருந்தபோதிலும், அதற்காகச் சென்னை அரசாங்கத்தாரிடமும், வழக்கை நடத்தும் நீதிதலத்தாரிடமும் வருத்தந் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், இனி இம்மாதிரியான குற்றங்களைச் செய்வ தில்லையென்று உறுதி கூறுவதாகவும் அரசாங்கத்தாருக்கு எழுதிக் கொடுத்தார்கள். இது மாஜிட்ரேட்டுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்பேரில் மாஜிட்ரேட் சிறுவர்களாகவுள்ள இம்மூவரும் புத்திசாலித்தனமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக் கிறார்க ளென்றும், இவர்கள் இனி இம்மாதிரி யான குற்றங்களைச் செய்யா திருப்பதுடன், தாங்கள் ஏற்கனவே செய்திருக்கும் விஷயத்தைப் பிரசுரிக்க வகை தேடுவார்களென்று நம்புவதாகவும் கூறி மூவரையும் விடுதலை செய்துவிட்டார். ஐயர் மீது மட்டும் வழக்கு நடத்தப்பட்டது, மாஜிட்ரேட், இ. பி. கோ. 124 ஏ பிரிவின்படி ஐயர் மீது குற்றப் பத்திரிகை படித்தார். பின்னர் ஐயர் 17 - 9 - 21 - இல் ஒரு வாக்குமூலத்தைச் சமர்ப்பித்தார். அதன் சாரம் வருமாறு:- 1. இந்தியாவின் பாரமார்த்திகப் பெருமையை நிலை நாட்ட முயற்சி செய்து வரும் ஆயிரக்கணக்கான ஜனங்களுடன் நானும் சேர்ந்து உழைத்து வருகிறேன். இத்தேசத்திற்குச் சுயராஜ்யம் ஏற்படுகிற வரையில் அத்தகைய பாரமார்த்திக விழிப்பு ஏற்பட முடியா தென்று நான் நம்புவதால் ராஜீயத்துறையிலும் நான் உழைத்து வருகிறேன். 2. எனது தேசம் சுயராஜ்யம் பெற இது வரையில் செய்துவந்த பலவித கிளர்ச்சிகளும் பயனற்றுப் போய்விட்டதால், காங்கிர மகா சபையின் கட்டளையை அனுசரித்து அரசாங்கத்துடன் ஒத்துழையாமை தர்மத்தைக் கைக்கொண்டிருக்கிறேன். எனது தாய்நாடு விடுதலை பெற அதுவே மார்க்கமென்பது எனது நம்பிக்கை. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கும் சம்பந்தத்தை வைத்துக் கொள்வதும் விட்டு விடுவதும் இங்கிலாந்தையே பொறுத்தது. 3. இந்தக் கோர்ட்டில் தலைமை வகித்துவரும் மாஜிட்ரேட், நிஷ்பட்ச பாதமானவராயினும், விசாரணையிலுள்ள விஷயங்களில் எனக்குள்ள சம்பந்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர, வேறு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள நான் இஷ்டப்படவில்லை. கோர்ட்டார் இஷ்டப்பட்டால் அவை உண்மையா வென்று விசாரித்துக் கொள்ளலாம். 4. 1920ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் ஐந்தாந் தேதிவாக்கில் 1, 4 - ஆவது எதிரிகள் (வெ. ராஜகோபாலாச்சாரியும் எ. நாகேசுவர சாதிரியும்) தேசபக்தனையும் பிரிட்டிஷ் இந்தியா அச்சுக் கூடத்தையும் ஸ்ரீமான் எம். எ. காமத்தினிடமிருந்து வாங்கினார்கள். நான் அக்காலத்தில் தேச பக்தன் ஆசிரியராக இருந்தேன். 1, 4 எதிரிகள் என்னுடன் ஆசிரிய ஹோதாவைப்பற்றி எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. நான் முன்போலவே பத்திரிகைக்கு எழுதி வந்தேன். 5. இவ்வருஷம் (1921) பிப்ரவரிமாதம் ஒன்பதாந்தேதி தேசபக்தன் பத்திரிகை பிரசுரமாகாமல் நின்றுவிட்டது. கூட்டுச் சொந்தக்காரர்களான 1, 4 எதிரிகள், என்னை ஆசிரிய பதவியி லிருந்து விலக்கி, அச்சுக்கூடம் முதலியவற்றைப் பதிவு செய்ய மூன்றாவது எதிரியின் (டி. மகாலிங்கஐயர்) மூலமாக பிரசிடென்சி மாஜிட்ரேட்டுக்கு விண்ணப்பம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. 6. இதைப்பற்றி எனக்கு ஒன்றுஞ் சொல்லவில்லை. மறுபடி பத்திரிகை பிரசுரமாக ஆரம்பித்ததும், முன்போலவே நான் ஆசிரிய வேலை செய்து வந்தேன். ஐந்தாவது பாராவில் கண்ட விஷயங்கள் எனக்கொன்றும் தெரியாது. 7. ஜூன் மாதக் கடைசி வரையில் மற்ற எதிரிகள் ஆசிரிய போர்டு விஷயமாக என்னைக் கலந்து கொள்ளவில்லை. இந்தச் சமாசாரம் தெரிந்தவுடனே 1, 4 - ஆவது எதிரிகளை அதற்கு என்ன அர்த்தமென்று கேட்டேன். ஆசிரியர் போர்டானது உத்தேசிக்கப் பட்டபடி அனுஷ்டானத்திற்கு வரவில்லையென்றும், பாரதா பிரிண்ட்டிங் அண்ட் பப்ளிஷிங் கம்பெனி டைரெக்ட்டர்களின் அடுத்த கூட்டத்தில் அதை ரத்து செய்துவிடும்படி தீர்மானம் கொண்டு வருவதாகவும் 1 - ஆவது எதிரி எனக்கு உறுதி கூறினார். 8. 1, 4 எதிரிகள் தேசபக்தனை வாங்கிய கால முதலாகவே, என்னுடைய சேவை தேவையாயிருந்தால் என்னை ஆசிரியராக நியமித் திருப்பதாக உத்தரவு கொடுக்கும்படி கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்யாமல் ஒத்திப் போட்டுக் கொண்டு வந்தார்கள். பிறகு ஜூலை மாத ஆரம்பத்தில், எந்தெந்த நிபந்தனைகளின் பேரில் நான் ஆசிரியராக இருக்க முடியுமென்று எழுதி முதலாவது எதிரியிடம் அதைக் கொடுத்தேன். அதில் சில ஷரத்துக்களை அவர் அடித்துவிட்டார். அவை முக்கியமானவை யென்று நான் கருதியதால், அடித்த பாகங்களை மீண்டும் சேர்க்க வேண்டுமென்று கடிதம் எழுதினேன். அவர், சட்ட நிபுணரிடம் கலந்து யோசிப்பதற்காக அதை 4 - வது எதிரியிடம் கொடுத்தார். 9. ஆயினும் 1, 4 - ஆவது எதிரிகளுக்குள் அபிப்பிராய பேத மேற்பட்டது. அதை ராஜி செய்து வைக்க நான் செய்த முயற்சிகளை, முதலாவது எதிரி தப்பாக அர்த்தம் செய்துகொண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதிவாக்கில் எனக்கு ஒரு நோட்டீ கொடுத்தார். அதில் நான் ஆசிரியரென்று குறிப்பிடவில்லை. 10. அன்றுதான், மற்றொரு சொந்தக்காரர் என்னை ஆசிரிய ராக நியமித்திருப்பதாக எழுத்து மூலமான உத்தரவு கொடுத்தார். 1, 4 எதிரிகள் தேசபக்தனை ஒப்புக்கொண்ட காலமுதல், முதன் முதலாக அந்த உத்தரவுதான் எனக்குக் கிடைத்திருக்கிறது. 11. ஆயினும், 1, 4 எதிரிகளுக்குள் அபிப்பிராய பேதம் பெருகி வருவதாக உணர்ந்து தேசபக்தனிலிருந்து நான் விலகிவிட வேண்டுமென்று நினைத்து, அதற்கடுத்த நாள் சட்டபூர்வமாக மானேஜரான 1- ஆவது எதிரிக்கு நோட்டீ கொடுத்தேன். 12. அந்த நோட்டீபடி ஆகட் மாதம் 16ஆம் தேதி தேச பக்தனிலிருந்து நான் விலகிவிட்டேன். அன்றைய பத்திரிகைகளிலும் இவ்விஷயம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 13. இந்த வழக்கிற்கு ஆதாரமான வியாசத்தை நான் எழுதவில்லை. உய்யக்கொண்டான் சிறுவயதிலிருந்து வந்திருந்த அழைப்புக்கிணங்கி நான் மே மாதம் முதல் தேதி சென்னையை விட்டுப் புறப்பட்டுச் சென்று, மே மாதம் 2, 3 தேதிகளில் வருஷாந்தக் கூட்டத்தில் தலைமை வகித்தேன். 4, 5-ஆம் தேதிகளில் காரைக்குடி யில் பிரசங்கங்கள் செய்தேன். திருச்சிராப்பள்ளியில் சில தினங்கள் தங்கிவிட்டு மே மாதம் 9ஆந் தேதி வரையில் நான் தேசபக்தனுக்கு ஒன்றும் எழுதவில்லை. 14. 6ஆம் தேதி பிரசுரமான வியாசத்தின் அசல் லிங்கி செட்டித் தெரு 307ஆம் நெம்பர் வீட்டிலிருக்கும் ஸ்ரீஎம். கே. சீனிவாசனிடத் தில், 1, 2, 4, எதிரிகள் கைது செய்யப்பட்ட பிறகு ஒப்புவிக்கப்பட்ட தாக நான் அறிகிறேன். அரசாங்கத்தார், நீதித்தவறு ஏற்படாம லிருக்க விரும்பினால் அவரை விசாரித்துக் கொள்ளலாம். 15. பிரதாப விஷயத்தை நான் இப்பால் வாசித்துப் பார்த்தேன். அதில் இ. பி. கோ. 124 ஏ பிரிவின் படியாவது வேறு பிரிவுகளின்படியாவது வரக்கூடியது எதுவுமில்லை. மொழி பெயர்ப்பும் பல இடங்களில் சரியாக இல்லை. அரக்க வம்சத்திற்கு அரக்க ஜாதி என்று பொருள்படும்படி ஜெனரல் டயரைப்பற்றி பிரதாபிக்குமிடத்தே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 16. எனவே பிரியாதில் கண்ட குற்றங்களை நான் செய்ய வில்லை. ஆயினும் நான் குற்றவாளியென்று கோர்ட்டார் அபிப்பிராயப்படும் பட்சத்தில் எனக்குக் கொடுக்கப்படும் சிட்சையை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த வாக்குமூலத்தை ஐயர் சமர்ப்பித்த பிறகு, அரசாங்கத் தரப்பில் ஆஜராயிருந்த வக்கீல், ஐயர் கட்டுரையை எழுதவில்லை யென்று சொன்னாலும் பொறுப்பு அவருக்கு உண்டு என்று வாதம் செய்தார். பிறகு மாஜிட்ரேட் 19 - ஆம் தேதி (19 - 9 -21) தீர்ப்புக் கூறினார். தீர்ப்பில் சில முக்கியமான பகுதிகள் வருமாறு:- நான் பிரதாப வியாசத்தை மிகுந்த ஜாக்கிரதையுடன் படித்துப் பார்த்தேன். அடக்கு முறைகள் தாண்டவமாடுவ தாக அவர் வர்ணித்து, ஒத்துழையாதார்கள் அஹிம்சா தர்மத்தினாலேயே அவைகளை எதிர்க்க வேண்டுமென்று மனப்பூர்வமாகச் சொல்லியிருப்பதாகவே நான் அபிப்பிராயப் படுகிறேன். அவைகளுக்கு எதிர் நின்று போராட நம்மிடம் சங்கநாதம் செய்துகொண்டிருக்கும் கைராட்டினங்களே இருக்கின்றன வென்று மூன்றாவது பாராவின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. சங்கநாதத்தை அர்த்தமின்றி இந்த இடத்தில் பிரதாபித்துவிடவில்லை. கோயில்களி லிருந்து சுவாமியை எடுத்துக்கொண்டு போகுங் காலங்களி லும், ஹிந்துக்களுடைய பிரேதங்களைக் கொண்டு போகை யிலும் சங்கநாதம் வழக்கமாக நடந்து வருகிறது. ஒத்துழை யாதார் கைராட்டினங்களே மேன்மை தரத்தக்கதென்று கருதி இருக்கிறார்களென்பது நன்றாகத் தெரிந்த விஷயம். இந்த அர்த்தத்தில், அடுத்தாற்போலுள்ள பாராவிலிருந்து கட்டுரை எழுதியவருடைய கருத்து நன்றாகப் புலப்படுகிறது. அந்நியர் களுடைய தோற்றத்தில், ஒத்துழையாதாரே பல வீனர்க ளென்று தோன்றலாம். மன உறுதியினாலேயே இரு தரத் தினருக்கும் உள்ள வேற்றுமைகளைப் போக்கடிக்க வேண்டும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே மிருக சக்தியை நம்பாமல், மன உறுதியையே நம்பி இருக்க வேண்டு மென்று, இந்தக் கட்டுரை எழுதியவர், மறைபொரு ளாகத் தமது நேயர் களை வேண்டிக் கொள்கிறார். இதுதான் அவருடைய உண்மையான கருத்தென்று கடைசி பாராவி லிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. ஃ ஃ ஃ இனி சிட்சையைப் பற்றிக் கவனிக்க வேண்டும். குற்றம் செய்யப்பட்ட காலத்திலும், அதற்குச் சமீபமாகவும் இருந்து வந்திருக்கும் நிலைமையை உத்தேசித்து, இந்த விஷயத்தை நான் வெகு ஜாக்கிரதையுடன் கவனித்தேன். இரண்டாவது எதிரியை (வ. வே. ஸு. ஐயரை) ராஜத் துரோகமான வாசகங்களுக்காகச் சிட்சிக்க வேண்டியிருக் கிறது. ஆனால் அஹிம்ஸா தர்மத்தை கொஞ்சமும் தயக்க மன்னியில் அவலம்பித்திருப்பதையும் கவனிக்க வேண்டும். ததா வேஜுகளிலுள்ள சாட்சியத்திலிருந்து இந்தக் கட்டுரை மூலமாக அரசாங்கத்திடம் வெறுப்பையும் அதிருப்தியையும் உண்டு பண்ணச் செய்திருக்கும் முயற்சியானது, சமீபகாலத் தில் அதிக்கிரமத்தில் கொண்டுபோய்விடக் கூடுமென்று நான் நினைக்க முடியவில்லை. பிரதாப பத்திரிகையைப் படிப்போருடைய நிதான புத்தியை உத்தேசித்தே நான் இவ்விதம் கூறுகிறேன். ஒன்பது மாத சிட்சை விதித்தால் போதுமானதென்று எனக்குத் தோன்றுகிறது. குற்றத்தின் தன்மையையும், அதனால் ஏற்படக்கூடிய பலா பலன்களை யும் கவனிக்கையில் வெறுங்காவலே போதுமானது. மாஜிட்ரேட் தீர்ப்பை வாசித்து முடித்ததும் ஸ்ரீ வ. வே. ஸு. ஐயர், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்றுக்கொண்டு இது பாரத மாதாவின் சங்கற்பம் என்று கூறினார். ஐயரை முதலில் சென்னைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல கோர்ட்டுக்கு வெளியே கொண்டு வந்ததும், அங்குக் கூடியிருந்த நண்பர்கள் பலரும் அவருக்கு மாலை சூட்டினர். ஐயருடைய தர்மபத்தினி ஸ்ரீமதி பாக்கியலட்சுமி அம்மாள் தமது கணவனாருக்கு மாலை சூட்டி தேசத்தொண்டு செய்வதற்காகத் தங்களைச் சந்தோஷத்துடன் சிறைக்கு அனுப்புகிறேன் என்று சொன்னார். ஐயருடைய பெண் செல்வி சுபத்ரா, தம் தந்தை யாருக்குச் சாஷ்டாங்க நமகாரம் செய்து, அவருடைய சிறை வாசத்தினால் சுயராஜ்யம் சீக்கிரம் கிட்டும் என்று தான் நம்புவதாகக் கூறினார். கூடியிருந்த நண்பர்களின் வந்தேமாதர கோஷத்துக் கிடையே ஐயர், முகத்திலே புன்சிரிப்பு தவழ, சிறைக்குச் சென்றார். சென்னைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயர், ஓரிரண்டு நாட்களுக்குப் பின்னர், பெல்லாரி சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் அதிகாரிகள் இவரை மிகவும் கண்ணியமாகவே நடத்தினார்களென்று சொல்லவேண்டும். படிப்பதற்கும் எழுதுவதற்கும் வேண்டிய எல்லா வசதிகளையும் இவருக்குச் செய்து கொடுத்தனர். இதன் விளைவாக, கம்ப ராமாயணத்தைப்பற்றி ஓர் ஆராய்ச்சி நூல் ஆங்கிலத்தில் எழுதி முடித்தார். இந்த நூல் கம்பனையும் வால்மீகியையும் அறிவதற்கு ஒரு திறவுகோலாயிருக்கிறதென்று சுருக்கமாகச் சொல்லலாம். 1922ஆம் வருஷம் ஜூன் மாதம் பெல்லாரி சிறையிலிருந்து வெளி வந்ததும், ஐயர், தமது முழுக் கவனத்தையும், குருகுலத்தை தாபிக்கும் விஷயத்தில் செலவழிக்கத் தொடங்கினார். இடை யிடையே இலக்கிய சேவையும் அரசியல் சேவையும் செய்து வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த சேரமா தேவியில் பாரத்துவாஜ ஆசிரமம் என்ற பெயரால் குருகுலம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஐயர் இதற்காகத் தமது சக்தி யனைத்தையும் செலவழித்தார் என்று சொல்லவேண்டும். பால பாரதி என்ற ஒரு மாதப்பத்திரிகையும் இங்கிருந்து வெளிவரத் தொடங்கியது. மேல்நாட்டு இலக்கியங்களையும் கீழ்நாட்டு இலக்கி யங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டு மென்ற ஐயருடைய ஆவல் இதன்மூலம் சிறிது சிறிதாக நிறைவேறி வந்தது. ஆனால் தமிழ் நாட்டின் துரதிருஷ்டம் இந்தக் குரு குலம் நீடித்து நடைபெறவில்லை. இங்கு ஜாதி வேற்றுமை பாராட்டப் படுவதாகத் தமிழ்நாட்டில் சிலர் கிளர்ச்சி செய்தனர். ஐயர் இதற்காகப் பெரிதும் வருந்தினார். தமது நல்லெண்ணத்தையும் உயர்ந்த நோக்கத்தையும் பல வகையாலும் எடுத்துக் காட்டினார். ஆயினும் என்ன? அழிவுச் சக்திகள் தலைதூக்கியே நின்றன. ஆக்குவது கடினம். அழிப்பது சுலபமல்லவா? 1925ஆம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாந்தேதி, குருகுலத்துப் பிள்ளைகளுடன் ஐயர், பாபநாசம் அருவியில் நீராடச் சென்றார்; கூட மகள் சுபத்ராவும் சென்றாள். சுபத்ரா, அருவியின் ஓரிடத்தைக் கடக்க முயன்றாள். முயலுகையில் கால் சறுக்கி அருவியில் விழுந்து விட்டாள். அவளைத் தாவிப் பிடிக்க ஐயர் குதித்தார். அந்தோ! தந்தையும் மகளும் அருவிக்கு இரையானார்கள். IaUila xnu kf‹ t.nt.ஸு. கிருஷ்ண மூர்த்தி, தந்தையை இழந்த தனயனானார். ஐயர், வீர மரணமே எய்தினாரென்றாலும், அஃது - அவருடைய மரணம் - தமிழ்நாட்டுக்குப் பெருநஷ்டம்; தமிழ் மொழிக்குப் பெரு நஷ்டம். வஜ்ரமான தேகம்; கூர்மையான அறிவு; உறுதியான மனம்; இவைதான் ஐயர். விசுவாமித்திரரையும் வசிஷ்டரையும் படிக்கி றோம். ஆனால் ஐயரிடத்தில் இவ்விருவரையும் பார்க்கலாம். நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்கள், பாலபாரதி பத்திரிகையில் எழுதிய பின்வரும் ஒரு பாட்டின் மூலம் ஐயரை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்:- முழுமதி மயிர்த்தா லன்ன முகந்திகழ் கருணை நோக்கும் மூர்க்கரும் நேரிற்கண்டால் முகந்திடும் சாந்த வீச்சும் குழலினும் இனிய தான குழந்தையின் மழலைப் பேச்சும் குவிந்திடும் உதட்டின் மீதும் கூத்திடும் சிரிப்பின் கூட்டும் தழலினும் தூய வாழ்வும் தாயினும் பெரிய அன்பும் சத்திய நிலையும் முன்னாள் தவமுனி இவனே என்னப் பழகிய பேயும் போற்றும் படித்தொரு வடிவந் தன்னைப் பாரிடை இனிமேல் வேறு யாரிடைப் பார்ப்போ மைய்யா! ஐயர் பிரிவு கேட்டு பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் லோகோபகாரி பத்திரிகையில் பின் வருமாறு புலம்பினார்:- 1. அருவிநீ ராடச் சென்றீர்! அருவியில் கலந்து விட்டீர்! பெரிதும்யாம் துயர முற்றோம்! பேசொணாத் துயர முற்றோம்! திருவுடை மகளும் நீரும் தேவர்க்கு விருந்தாய் விட்டீர்! வருதுயர் கருதினீர் கொல் வண்டமிழ் நாட்டுக் கெல்லாம். 2. வையகத் தெழிலின் மிக்க மாண்புயர் பாவ நாசத் தெய்விகக் காட்சி நோக்கிச் சேரமா தேவி சென்றீர் உய்வழி செய்வீ ரென்றிங் குறுதியில் வாழ்ந்தோம் உள்ளம் நைவழி புரிந்து விட்டீர்! நன்றுகொல்? நவிலுவீரே. 3. பைந்தமிழ் மறந்தீர் கொல்லோ? பாட்டினை மறந்தீர் கொல்லோ? செந்தமிழ்க் கம்பனார் தம் தீங்கவி மறந்தீர் கொல்லோ? அந்தரம் புகுந்து கம்பன் அருகிருந் தவன்வாக் கெல்லாம் சிந்தையில் உவகை பொங்கக் கேட்டீரோ? செப்புவீரே. 4. வீரத்தை வளர்க்க வந்தீர்! வீரரை ஆக்க வந்தீர்! வீரத்தை உணர்த்த வந்தீர்! வீரவாழ் வெய்தி நின்றீர்! வீரத்தில் வாழ்ந்த கன்னி வீழ்ச்சியில் வீழ்ந்த போது வீரத்தில் பாய்ந்து விட்டீர் வீரர்கள் பெரிய வாழ்வே! 5. செத்தவர் உடலம் சாகச் சீவன்சா வின்றி யென்றும் புத்துடல் பெற்று மீளும் என்பர்கள் புலமையோர்கள் எத்தனை வேலை உண்டு நாட்டிலே? அன்பர் கோவே! புத்துடல் பெற்று வாரீர் விரைவிலே! புவியில் வாழ்வீர்! 1.Madame Cama. 1.Curzon Willy. 2. Madanlal Dingra. 3. Jackson, 1.Amsterdam. 1. Brazil. 2. Dante 3. Divine Comedy 1. விவரங்களுக்கு இந் நூலாசிரியர் எழுதிய கார்ல் மார்க் ஏழாவது அத்தியாயத்தைப் பார்க்க, 2.Emden 3. Algeria தியாக சீலர் அவரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். தம்மைப் பெற்றுக் கொடுத்த நாட்டினிடத்தே அவர் வைத்துக் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று, அந்தப் பற்றை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட விரதம் - செய்த தியாகம், ஹிந்து தர்மத்தினிடத்தில் அவருக்கிருந்த களங்க மில்லாத பக்தி, அந்தத் தர்மத்தின் சாசுவதத்தன்மையில் அவருக்கிருந்த நம்பிக்கை, தர்ம சாதிரங்களில் அவருக்கிருந்த புலமை, ஹிந்து தர்மத்தை மெருகு கொடுக்க அவ்வப்பொழுது அவதரித்த மகான் களிடத்தில் அவர் வைத்திருந்த மதிப்பு, இவை களையெல்லாம் பற்றி நான் எவ்வளவு எவ்வளவோ கேள்விப் பட்டிருந்தேன். கேள்விப்பட கேள்விப்பட அவரைத் தரிசிக்க வேண்டு மென்ற ஆவலும் எனக்கு அதிகரித்தது. ஆனால் அவரைப்பற்றிச் சொன்னவர்கள், அவரைப்பற்றிப் பயமுறுத்தியும் வைத்திருந் தார்கள். நிரம்பக் கண்டிப்பான பேர்வழி; வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத்தான் பேசுவார். அவருடைய வெள்ளை உள்ளத்தைக் காண்பதற்கு முன்னர் அவருடைய கடுத்த சொல்லைக் கேட்டுக் கொள்ள நீங்கள் தயாராயிருக்க வேண்டும் என்று இப்படியெல்லாம் எனக்கு எச்சரிக்கை செய்து வைத்திருந்தார்கள். இருந்தாலும், என் ஆவல் முதிர்ந்து, அவரைக் காணக்கூடிய பக்குவத்தை எனக்கு அளித்தது. துணிவு கொண்டேன். துணிவை வளர்த்துக் கொடுத் தார் எனது அருமந்தன்ன தோழர் வாசுதேவய்யர். கண்டுகொண்டேன் சுப்பிரமணிய சிவனாரை. வாழ்க வாசுதேவ ஐயர்! சிவனாரைக் கண்டதுமே அவரிடத்தில் என்னையறியாத ஒரு பக்தி ஏற்பட்டது. ஆனால் இந்தப் பக்திக்கு அடிப்படையில் ஒருவித அச்சம் அமைந்துவிட்டது. அவரிடம் ஜாக்கிரதையாகப் பழகவேண்டு மென்று முதலிலேயே தீர்மானித்துக் கொண்டேன். கடைசி வரை அப்படியே பழகி வந்தேன். வாழ்க சிவனாரின் திருநாமம்! மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கருகில் உள்ள பிச்சுப்பிள்ளை தெரு. பன்னிரண்டாம் இலக்கமிட்ட சிறிய, பழைய மாதிரியான வீட்டில் சிவனார் வசித்துக் கொண்டிருந்தார். 1918ஆம் வருஷம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஒரு நாள் காலை. சுமார் ஏழு மணி இருக்கும். சிவனாரைச் சென்று காண பிச்சுப்பிள்ளை தெருவிற்குச் சென்றேன். தெருவின் முகப்பில் சிவனார் வீடு. வீட்டிற்கு எதிர்ப்பக்கத்தில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தார்கள். நான் சிவனாரின் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டதும், இருவரின் உரையாடல் நின்றது. அவருள் ஒருவர், வீட்டு வாயிலின் முன் பக்கம் வந்து சிறிது தள்ளினாற்போல் நின்றுகொண்டு நானும் சிவனாரும் என்ன பேசுகிறோமென்பதைச் செவிகொடுத்துக் கேட்கத் தொடங்கினார். போலீ உளவாளிகளின் நிழலில் சிவனாரின் அன்றாட அலுவல்கள் நடைபெறுகின்றன என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நான், அவர் வீட்டுக்கு எதிரில் இருவர் இருந் ததையும், அவ்விருவரில் ஒருவர் எங்கள் பேச்சைக் கேட்க முன்வந்து நின்றதையும் கண்டு ஆச்சரியப்படவில்லை. வீட்டுக்குள் நுழைந்தேன். சிவனாரைக் கண்டேன். முதன் முதலாகக் கண்டது அப்பொழுதுதான். பிச்சுப் பிள்ளை தெருவில் வசித்த சிவனார், பிச்சனாகவே அப்பொழுது எனக்குத் காட்சி யளித்தார். நெற்றியிலே திருநீறு; முகத்திலே கனல் வீசும் கண்கள்; தாடி மீசை; உடலை ஒரு வெண்போர்வை மூடிக் கொண்டிருந்தது. அவருக்கு முன்னால் ஒரு மேஜை. அந்த மேஜையின்மீது காகிதங்கள், புத்தகங்கள் முதலியன ஒழுங்கின்றிப் பரவிக் கிடந்தன. ஒரு பக்கத்தில் அச்சுத்தாள்கள் சில அவரது எழுதுகோலின் உறவைப் பெற்று அச்சகத்திற்குச் செல்லக் காத்துக் கொண்டிருந்தன. நான் சென்ற சமயம், சிவனார், என் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுபோல், மேஜைக்குப் பின்னாலிருந்த நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார். நமகாரம். வாருங்கள்; உட்காருங்கள், யாரென்று தெரிந்து கொள்ளலாமா? என் பெயர் சாமிநாதன் என்று சொல்வார்கள். ஓ ஓ! வாசுதேவன்1 சொல்லியிருந்தானே, அவர்தானா? தேசபக்தன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருப்பதாகச் சொன்னான். எங்கே ஜாகை? மயிலாப்பூரில் தானே? ஆமாம்; ஆடம் தெருவில் இருக்கிறேன். வாசுதேவய்யர் வீட்டுக்குச் சமீபத்தில்தான். பெற்றோர்கள்? இருக்கிறார்கள். தகப்பனார் பி.எ. ஹைகூலில் ஆசிரிய ராக இருக்கிறார். அப்படியா? ரொம்ப சந்தோஷம். இங்கே அடிக்கடி வந்து போகலாமே? அடிக்கடி வந்து போக வேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் போதிய அவகாசம் கிடைப்பதில்லை. அவகாசம் கிடைக்காமற் போகாது. என்னை வந்து பார்க்கப் பயம்; இல்லையா? இப்படிச் சொல்லிக் கேலியாகச் சிரித்தார். பயம் ஒன்றுமிலை. எனக்கு சி.ஐ.டி. போட்டிருக்கிறார்கள்; தெரியுமோ இல்லையோ? தெருப்பக்கம் இரண்டு பேர் இருக்கிறார்கள், பாருங்கள் ஆமாம்; பார்த்துக் கொண்டேன். அவர்களும் நம்மைப்போல் மனுஷ்யர்கள்தான். நம்மைப் போல் அவர்களுக்கும் குடும்பமுண்டு; ஆசாபாசங்களுண்டு; நல்ல இதயம்கூட உண்டு. ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக இந்த உத்தியோகத்திற்கு வந்திருக்கிறார்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்வது! மௌனமாக இருந்தேன். இந்தச் சமயத்தில் ஓர் ஆள் வந்தான். அச்சகத்திலிருந்து வந்தவன் என்று தெரிந்தது. சிவனார் அவனுடன் ஏதோ பேசத் தொடங்கினார். நானும் விடைபெற்றுக் கொண்டேன். எனது முதல் சந்திப்பு இதனோடு முற்றுப்பெற்றுவிட்டது. இதற்குப் பிறகு, சிவனார், தேசபக்தன் காரியாலயத்திற்கு ஏக தேசமாக வந்து போவார். அவருக்கும் கலியாண சுந்தர முதலியாருக்கும் ஏற்கனவே இருந்த லேசான பரிச்சயம், சிறிது சிறிதாக நட்பாக வளர ஆரம்பித்தது. இதன் விளைவாக, உதவி ஆசிரியர் சிலருக்கு அவர் - சிவனார் - நெருங்கியவரானார். நானும் அவர் இல்லத்திற்குச் சமயம் வாய்த்தபோது சென்று அவருடன் பேசும் பேறு பெற்றேன். ஆயினும் அவர் உள்ளத்தோடு என்னால் ஒன்றுபட முடிய வில்லை. அவர் வாழ்ந்த உலகம் வேறாகவும் நான் வாழ்ந்த உலகம் வேறாகவும் இருந்ததுதான் இதற்குக் காரணம். அநேகமாகக் காலை நேரங்களில்தான் சிவனாரைச் சென்று காண எனக்கு அவகாசம் கிடைக்கும். சென்ற பொழுதெல்லாம் முதல் கேள்வியாக உங்கள் அன்னை பெசண்ட் சௌக்கியமா? என்று குத்தலாகக் கேட்பார். அதற்கு ஒவ்வொரு தடவையும் நான் சௌக்கியம் என்ற ஒரே மாதிரியான பதிலை புன்சிரிப்புடன் கூறு வேன். என்னை நோக்கி இந்த வினா அம்பை ஏன் எய்கிறார் என்பதைச் சிறிது காலத்திற்குப் பிறகு நான் தெரிந்து கொள்ளாம லில்லை. பெசண்ட்டம்மையாரின் தலைமையில் அப்பொழுது நாடெங்கணும் ஹோம்ரூல் கிளர்ச்சி தீவிரமாக நடைபெற்று வந்தது. தேசபக்தன் பத்திரிகை, தமிழ்நாட்டில் அக்கிளர்ச்சிக்கு உரமிட்டு வந்தது. ஹோம்ரூல் இயக்கத்தைப் பொறுத்தமட்டில் தேசபக்தன் பத்திரிகை, பெசண்ட்டம்மையாரின் தமிழ்க்குரலாக ஒலித்ததென்று சொல்லலாம். இந்தியாவின் சுதந்திர சரித்திரத்தில் தேசபக்தனுக்கு நிரந்தரமான ஒரு தானம் உண்டு. இந்தப் பத்திரிகைதான், தமிழ்நாட்டில் தேசீய உணர்ச்சியை நேரிய முறை யில், தமிழ்ப் பண்போடு கலந்து ஊட்டியதென்று சொன்னால், அது சரித்திர உண்மைக்கு எவ்விதத்திலும் புறம்பானதாகாது. ஹோம்ரூல் இயக்கத்திற்கு பெசண்ட்டம்மையார் தலைமை பூண்டிருப்பதையும், அவர் தலைமையை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதையும் சிவனார் விரும்பவில்லை. அன்னிய ஆதிக்கத்தினின்று விடுதலை பெற நாம் முனைந்திருக்கிறோம். அதற்கு ஓர் அன்னிய திரீயின் உதவியை நாடுதல் எங்ஙனம் பொருந்தும்? அது பாரத ஜாதியின் தன்மதிப்புக்குக் குறைவல்லவா? என்று சிவனார் கட்சி பேசுவார். தேசபக்தன் பெசண்ட்டம்மையாரைப்பற்றி எழுதுகிற போதெல்லாம் அன்னிபெசண்ட் என்று குறிப்பிடாது; அன்னை பெசண்ட் என்றே குறிப்பிடும். பெசண்ட்டம்மையாரின் சொல் வன்மையிலும் செயல்திறனிலும் தேசபக்தனுக்குப் பெருமதிப்பு உண்டு. இந்த மதிப்பை அடிப்படையாகக் கொண்டே பெசண்ட் டம்மையாரைப் பற்றிய அதன் எழுத்துக்கள் மிளிர்ந்தன. சிவனாருக்கு இது பிடிப்பதில்லை. அன்னை பெசண்ட் என்ன ஐயா, அன்னை பெசண்ட்!! அன்னிய பெசண்ட் என்றல்லவோ அழைக்க வேண்டும்? என்று ஆத்திரத்தோடு கூறுவார். ஒரு வெள்ளைக்கார திரீ உங்களுக்குச் சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்துவிடப் போகிறா ளாக்கும்? என்று எங்களைப் பார்த்துக் கேலி செய்வார். தேசபக்தன் காரியாலயம் போதரும்போதெல்லாம் அவருடைய வாக்கில் அன்னை பெசண்ட் என்ற பெயர் அன்னிய பெசண்ட்டாக மாறி அவருடைய சாபத்தைப் பெறாமற்போவதில்லை. தமிழ்நாட்டில் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவம் முதலியோர் திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்; அவரிடத்தில் பரம பக்தி பூண்டவர்கள். அவர் மறைவுக்குப் பிறகு இவர்கள் தீவிர அரசியலி லிருந்து ஒதுங்கிவிட்டார்களென்றே சொல்லவேண்டும். தேசபக்தன் திலகரைப் போற்றியும் அவருடைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்துமே எழுதி வந்தது. அந்த வகையில் சிவனாருக்குத் திருப்தி தான்; அதற்காக ஆசிரியர் கலியாண சுந்தரனாரை அடிக்கடி பாராட்டவும் செய்வார். ஆனால் பெசண்ட்டம்மையாரை ஆதரித்து எழுதி வந்தது தான் அவருக்குப் பிடிக்கவில்லை. சிவனார், திலகரிடத்தில் கொண்டிருந்த பக்திக்கறிகுறியாகவே சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை, திலகர் கட்டமாக இன்று பெயரெடுத்திருக்கிறது. சென்னையில் முந்தியெல்லாம் பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதற்கு வசதியான இடங் களில்லாமலிருந்தது. இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத் தில், அகில இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர்கள் பேச இருக் கின்ற கூட்டங்களாயிருந்தால், இவை பெரும்பாலும், இப்பொழுது பழக்கடை இருக்கிறதல்லவா, இதற்குத் தெற்குப்பக்கமாகவுள்ள பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மைதானத்தில் நடைபெறும்; சில சமயங்களில் ஹைகோர்ட்டுக்குக் கிழக்கிலுள்ள கடற்கரை யிலும் நடைபெறுவதுண்டு. அங்கு முந்தி சவுக்குத் தோப்பு இருந்தது. முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு சில பொதுக்கூட்டங்கள், ராயப்பேட்டை கௌரி விலா மைதானத்தில் நடைபெற்றன. இந்த இடம் முந்தி ஜடி மணி ஐயருக்குச் சொந்தமாயிருந்தது. 1918ஆம் வருஷம் மார்ச்சு மாதம் சென்னை போந்த திலகர் கோஷ்டிக்கு பகிரங்க வரவேற்பளிக்கப்பட்டது இந்த மைதானத்தில் தான். ஸ்ரீமதி சரோஜனி தேவி முதலியவர்கள் பேசியது இந்த மைதானத்தில்தான். அப்பொழு தெல்லாம் ஒலிபெருக்கிச் சாதனம் கிடையாதென்பதைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. விபினசந்திர பாலர் போன்றவர்கள் பேசுவதாயிருந்தால் கூட்டம் அதிகமாயிருக்கும் இதனால் இக்கூட்டங்கள் திருவல்லிக் கேணிப் பக்கத்திலுள்ள கடற்கரையில் நடைபெற்றன. பாலருடைய கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர்களுள் முக்கியமானவர் சுப்பிர மணிய பாரதியார். பின்னர் பல பொதுக்கூட்டங்களை இந்த இடத்தில் நடத்தினார் சிவனார். இதற்குத் திலகர் கட்டமென்று பெயரிட்டவரும் சிவனார்தான். தேசீய இயக்கத்திற்குக் காந்தி யடிகள் தலைமை தாங்க முற்பட்டது முதல், பொதுவாக எல்லா அரசியல் கூட்டங்களும் இந்த இடத்திலேயே நடைபெற்று வருகின்றன. இது நிற்க. தேசபக்தன் பத்திரிகையின் முதற்பக்கத்தில், சுயராஜ்யப் போர் முனையிலிருந்து - ஒரு போர்வீரன் எழுதுவது என்ற தலைப்புக் கொண்ட பகுதியை நான் நிரப்பி வந்தேனல்லவா,1 அதில் அன்னிபெசண்ட்டைப் பற்றிப் பிரதாபம் வரும்போதெல்லாம், பெசண்ட்டம்மையார் என்றாவது, அன்னைபெசண்ட் என்றாவது குறிப்பிட்டு வந்தேன். இப்படிக் குறிப்பிட வேண்டுமென்பது முதலியாரின் விருப்பமாயிருந்த போதிலும் எனக்கும் இப்படிக் குறிப்பிடுவது தான் திருப்தியாயிருந்தது. அந்த அம்மையாரின் பரந்த அறிவிலும், சலியாத உழைப்பிலும் எனக்கு அதிக மதிப்பு. அவரிடத்தில் ஒரு பிரமையும் கொண்டிருந்தேன். அவருடைய மேதைக்கும் உழைப்புக்கும் ஒரு சிறிய உதாரணம். இந்திய அரசியல் சீர்திருத்தத்தைப் பற்றிய மாண்டேகு – செம் போர்ட் அறிக்கை 1918ஆம் வருஷம் ஜூலை மாதம் வெளியாயிற்று. சாதாரணமாக இந்த மாதிரியான முக்கிய அறிக்கைகள், குறிப்பிட்ட நாளில்தான் வெளியிடப்பெற வேண்டுமென்ற எச்சரிக்கையுடன், வெளியாக வேண்டிய நாளைக்கு முந்தின நாள் பத்திரிகைகளுக்கு மட்டும் அனுப்பப்படுவது வழக்கம். இந்த வழக்கத்தையொட்டி, மேற்படி மாண்டேகு - செம்போர்ட் அறிக்கை, வெளியிடப் பெற வேண்டிய நாளுக்கு முந்தின நாள், நியு இந்தியா பத்திரிகைக்குக் கிடைத்தது; தேசபக்தனுக்குக் கிடைக்க வில்லை. காரணம், அரசாங்க அறிக்கைகளைப் பெறக்கூடிய பத்திரிகைகளின் ஜாபிதாவில் இன்னும் தேசபக்தன் சேர்த்துக் கொள்ளப்படாமலிருந்ததுதான். இதனால் நியு இந்தியா பத்திரிகை யிலிருந்து மேற்படி அறிக்கை அச்சாக அச்சாக, ப்ரூப் தாள்கள் முந்தின நாள் மாலையிலிருந்து தேசபக்தன் காரியாலயத் திற்கு வந்துகொண்டே யிருந்தன. மறுநாள் காலை எட்டு மணிக்குமேல் இது வெளியிடப்படவேண்டுமென்பது ஏற்பாடு. எனவே உதவி ஆசிரியர்களாகிய நாங்கள் இரவு பூராவும் உட்கார்ந்து, நியு இந்தியாவிலிருந்து ப்ரூப்புகள் வரவர மொழிபெயர்த்து அச்சகத் திற்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். மறு நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் நியு இந்தியாவும் தேசபக்தனும் மேற்படி அறிக்கையைத் தாங்கி வெளிவந்தன. ஆனால் நியு இந்தியா பத்திரிகையின் விசேஷமென்ன வென்றால், அறிக்கையோடு அதைப் பற்றி பெசண்ட்டம்மையாரின் கருத்தும் வெளியாகியிருந்ததுதான். சுமார் இருபது மணி நேரத்திற்குள், இந்தியாவின் அரசியல் போக்கைத் திருப்பிவிட்ட இந்த அறிக்கை பூராவையும் படித்து ஜீரணித்துக்கொண்டு, அதைப்பற்றித் தமது திடமான அபிப் பிராயத்தை எழுதி அச்சிடச் செய்து வெளிக்கொணர்வதென்றால், அது லேசான காரியமல்ல; மகத்தான சாதனை. பத்திரிகைத் துறையில் உள்ளவர்களுக்குத்தான் இந்தச் சிரமம் தெரியும். அறிக்கையுடன் பெசண்டம்மையாரின் அபிப்பிராயமும் சேர்ந்து வெளி வந்ததைக் கண்டு, அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப் பட்டனர். இஃது இப்படி யிருக்கட்டும். தேசபக்தன் பத்திரிகையின் முதற்பக்கத்தில் சுயராஜ்யப் போர்முனையிலிருந்து எழுதும் போர்வீரன் நான்தான் என்பது சிவனாருக்குத் தெரியும். அதில் நான் பெசண்ட்டம்மையாரைப் போற்றி எழுதி வந்தது அவருக்குப் பிடிக்கவில்லையென்பது எனக்குத் தெரியும். பெசண்ட்டம்மையாரிடத்தில், முதலியாரைக் காட்டிலும் நான் அதிக பக்தி விசுவாசமுடையவன் என்று அவர் கருதிவிட்டார். இதனால்தான் என்னைக் காணும் போதெல்லாம் உங்கள் அன்னை பெசண்ட் சௌக்கியமா? என்று குத்தலாகக் கேட்டு வந்தார். இதற்காக அவர்மீது எனக்குச் சிறிதுகூட வருத்தம் உண்டாகவில்லை. அவருடைய களங்கமற்ற தேசபக்தியில் எனக்குப் பெருமதிப்பு இருந்து வந்ததுதான் காரணம். பெசண்ட்டம்மையார்மீது சிவனார்காட்டிய விரோத மனப்பான்மை யானது சிறிது ஆழமாயிருந்ததென்றே சொல்லவேண்டும். இது காரணமாக வோ என்னவோ, அந்த அம்மையாருடைய நற்பணிகளைப் போற்றி எழுதிவந்த முதலியார்மீதும் என்மீதும் அதிருப்தி காட்டினார் போலும். எங்களிடமே இத்தகைய மனப் பான்மை கொண்டிருந்த அவர், அந்த அம்மையாரை எழுத்துப் பிசகாமல் பின்பற்றி வந்தவர்களின் நடவடிக்கைகளில் அதிகமான விரோத மனப்பான்மை காட்டி வந்ததில் ஆச்சரியமென்ன இருக்கிறது? சிவனாரைப்போல் பெசண்ட்டம்மையாரிடம் விரோத மனப்பான்மை கொண்டிருந்த முக்கியதர்களுள் ஒருவர், மயிலாப்பூர் மேலண்டை மாடத் தெருவில் வசித்து வந்த டாக்டர் எம். சி. நஞ்சுண்டராவ்; வைத்தியத் துறையில் பெரிய நிபுணர்; சிறந்த தேசபக்தர்; திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்; ஆனால் பகிரங்கமாக அரசியலில் தலையிட்டுக் கொள்ளவில்லை. ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை என்ற நூலை நான் வெளியிடுதற்கு முந்தி இவரைக்கண்டு இவருடைய ஆதரவைக் கோரினேன். இத்தகைய நூல்கள் தமிழில் வெளிவர வேண்டுமென்றும் இவையே மக்களின் தேசீய உணர்ச்சியை எழுப்பக் கூடியவையென்றும், நூல் வெளி யீட்டுக்காக ஐம்பது ரூபாய் நன்கொடை அளிப்பதாகவும் கூறி என்னை உற்சாகப்படுத்தினார். ஆனால் இவருடைய நன் கொடையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. ஏன் இவரைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டி யிருக்கிறதென்றால் இவருக்கும் சிவனாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததனால்தான். இவர், சிவனாருக்குச் சிகிச்சை செய்து வந்த வைத்தியராக மட்டும் இல்லை; அவருக்குப் பல வழிகளிலும் உதவியாயிருந்த நண்பராகவும் விளங்கினார். சிவனாரும் இவரிடத் தில் பரம விசுவாசம் வைத்திருந்தார். பெசண்ட்டம்மையாரைப் பற்றிச் சிவனார் பேச்சுக் கொடுக்கிற போதெல்லாம் நான், அந்தப் பேச்சை வேறு விதமாகத் திருப்பிவிட வேண்டுமென்பதற்காக, ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர், விவேகானந்தர் முதலியோரைப்பற்றி லேசாகப் பிரதா பிப்பேன். அவ்வளவுதான்; ஆரம்பித்துவிடுவார் நயாகரா1 நீர் வீழ்ச்சி மாதிரி; அவர்களுடைய உபதேசங்கள், நாட்டின் நல்வாழ்வுக்கு எவ்வளவு அவசியமானவை என்பதைப்பற்றிக் காலம்போனது தெரியாமல் பேசுவார். அப்பொழுது அவருடைய பரந்த புலமையும் ஞான முதிர்ச்சியும் நன்கு புலனாகும். ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங் களையும் விவேகானந்தருடைய சொற்பொழிவுகளையும் படிக்குமாறு எனக்கு உபதேசம் செய்வார். அந்த இரு மகான் களிடத்திலும் என்னை அதிகமாக ஈடுபடச் செய்தது சிவனார்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய உபதேசங்களில் உலக அனுபவம் எப்படிச் செறிந்துகிடக்கிறதென்பதை அறிந்து வியந்தேன். இருந்தாலும் அப்பொழுது எனக்கேற்பட்டிருந்த மனப்பக்குவத்திற்கியைய விவேகானந்தருடைய சொற்பொழிவுகளே என்னை அதிகமாகக் கவர்ந்தன. அவைகளைப் படித்தால் ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சியுண்டாகுமென்றும், தேசபக்திக்கனலை நமது உள்ளத்தில் மூட்டி விடக்கூடிய சக்தி அவைகளுக்கு உண்டென்றும், நமது நாட்டுப் பண்டைய கலாசாரங்களைத் துலக்கிக் காட்டும் விளக்கங் களாய் அவை அமைந்திருக்கின்றனவென்றும் சிவனார் சொல்லி வந்தது எவ்வளவு உண்மை, எவ்வளவு பொருத்தமென்பதை, அந்தச் சொற் பொழிவுகளைப் படிக்கப் படிக்க உணரலானேன். திரும்பத் திரும்ப அந்தச் சொற்பொழிவுகளைப் படித்தேன். பிற்காலத்தில் நான் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப்பற்றியும் விவேகானந்தரைப்பற்றியும் நூல்கள் எழுதத் துணிந்தேனென்றால் அதற்குச் சிவனார் விதைத்த ஆசை விதைதான் காரணம். சிவனார், நாட்டு முன்னேற்றத்திற்காகத் தாம் அனுபவித்த துன்பங்களையும், செய்த தியாகங்களையும் பற்றி அதிகமாகச் சொல்ல மாட்டர். நான் சில சமயங்களில், அவருடைய சிறை அனுபவத்தைப் பற்றிச் சொல்லுமாறு உரிமையோடு கேட்பேன். அவர், தமது அனுபவங் களில் சிலவற்றை, மனம் வருந்திக் கூறமாட்டார்; நகைச்சுவை ததும்பக் கூறுவார். சிவனார் நகைச்சுவையற்றவர் என்று சிலர் நினைக்கக்கூடும். அப்படியில்லை. சிலரைப்போல் எப்பொழுதும் நையாண்டி செய்து கொண்டிருக்கத் தெரியாதென்றாலும், பட்டவர்த்தனமாகப் பேசிச் சிரிக்க வைப்பார்; தாமும் கூடவே சிரிப்பார். அவர் சிரிப்பது நான்கு பேருக்குக் கேட்கும்; அவ்வளவு உரத்த சிரிப்பு. அதைக்கொண்டு அவருடைய உள்ளத்தின் கல்மஷமற்ற தன்மையை நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம். ஒரு நாள் காலை அவருடைய வீட்டுக்குச் சென்று கண்டேன். வாருமையா, வாரும்; அன்னை பெசண்ட்டே என்று சிரித்துக் கொண்டே முகமன் கூறி என்னை வரவேற்றார். நான், புன் சிரிப்புடன் நமகாரம் என்று சொல்லிக்கொண்டே, அவருக்கு எதிர்ப்புறத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். உமக்கு என்னென்ன கறிகாய்கள் பிடிக்கும்? என்று கேட்டார். திடீரென்று கேட்ட இந்தக் கேள்வி என்னைச் சிறிது திகைக்கச் செய்தது. ஆனால் ஏன் இந்தக் கேள்வி என்று கேட்கும் துணிச்சல் எனக்கு உண்டாக வில்லை. எல்லாம் பிடிக்கும் என்றேன். முள்ளங்கி பிடிக்குமா? என்றார். பிடிக்கும் என்றேன். அப்படியானால் ஒரு தடவை யாவது ஜெயிலுக்குப் போய் விட்டு வாரும்என்று சொல்லிச் சிரித்தார். எனக்கேதும் புரியவில்லை. ஜெயிலுக்கும் முள்ளங்கிக்கும் அதிக சம்பந்தம் உண்டு என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. ஜெயிலுக்கா? என்றேன். ஆமாமையா, ஆமாம். ஏன்? ஜெயிலென் றால் பயமாயிருக்கிறதோ? பயப்படவே தேவையில்லை. அங்கே போனால், தினந்தோறும் முள்ளங்கி சாப்பிடலாம்; முள்ளங்கி மட்டுமல்ல, அதன் கீரையையும் சாப்பிடலாம் என்று சொல்லி, ஜெயிலுக்குள்ளேயே கைதிகளைக் கொண்டு முள்ளங்கி முதலிய பலவகைக் காய்கறிகள் விளைவிக்கப்படுவது பற்றியும், இவற்றில் முள்ளங்கியைமட்டும் கைதிகளுக்கு அதிகமாக உபயோகப் படுத்துவது பற்றியும் விவரமாகக் கூறினார். இன்னொரு நாள் பேச்சில், நரக வேதனையை அனுபவிக்க வேண்டுமானால், ஜெயிலில் ஒருதடவை க்ஷவரம் செய்து கொண்டால் போதுமென்று சொல்லிச் சிரித்தார். ஏன் அவ்வளவு கஷ்டமா? என்று கேட்டேன். ஞாயிற்றுக்கிழமைதோறும் கைதிகள் க்ஷவர வேதனையைக் கட்டாயம் அனுபவித்தாக வேண்டுமென்று கூறி, அந்த வேதனையைப் பற்றிச் சிறிது விதரித்துக் கூறினார். எனக்கு மயிர்க்கூச்செறிந்தது; உடம்பு ஒரு குலுங்கு குலுங்கியது. கேட்ட மாத்திரத்தில் இப்படிப் பயப்படுகிறீர்களே! அனுபவித்தால் செத்தே போய்விடுவீர்கள் போலிருக்கிறதே என்று சொல்லிச் சிரித்தார்.1 அந்தக் காலத்தில் சிறைப்பட்ட தேசபக்தர்கள் என்னென்ன மாதிரியான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்ததென்பதைப் பற்றிச் சிவனார் வாயிலாகவே நான் தெரிந்துகொண்டேன். செக்கிழுத்தல், மாவு அரைத்தல், கம்பளி நெய்தல், துணி நெய்தல், இவைபோன்ற வேலைகளே கொடுக்கப்பட்டன என்று கேட்டுத் திடுக்கிட்டேன். தேசபக்தர்கள், பொதுஜனங்கள் மத்தியில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக மதிக்கப்பட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மாகச் சிறையிலே அவமதிக்கப்பட்டார்களென்பதையும் தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட தியாக வீரர்களை நாம் மறக்க லாகுமா? அவர்களை வருஷத்திற்கொரு தடவையாவது நினைவு படுத்திக் கொள்ள வேண்டாமா? சிவனார் ஒழுக்கத்தில் நெருப்புப் போன்றவர். ஒழுக்கந் தவறியவர்கள் என்று தெரிந்துவிட்டால் போதும், அவர்களைக் காற்றிலே அடிபட்ட சருகுமாதிரி ஆக்கிவிடுவார்; சிறிது ஆத்திரம் தணிந்த பிறகு அவர்களுக்கு இதோபதேசங்கள் பல செய்வார். ஒழுக்கமென்றால், சிவனாருடைய கருத்தில், பிறன்மனை விழையாமை மட்டுமல்ல, பொதுவாக, மனிதனுடைய எல்லா நற்பண்பு களும் சேர்ந்ததே ஒழுக்கம் என்று அவர் கொண்டார். பொதுவாக, அறவோர் என்றும், சான்றோர் என்றும் நம்மால் கொண்டாடப்படுகின்ற அனைவரும், இந்த விரிந்த பொருளில்தான் ஒழுக்கம் என்ற சொல்லைக் கையாண்டும் நடைமுறையில் கொண்டு வந்தும் இருக்கின்றனர். ஒருவனுக்குப் பணமோ, பொருளோ, பட்டமோ, பதவியோ ஆதியன்று; அவனுடைய ஒழுக்கந்தான் ஆதி என்பதே இந்தச் சான்றோர் கடைப்பிடித்த கொள்கை. சிவனாருக்கு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாது; தமது கருத்தைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுவார். அந்தக் கருத்து, ஆழ்ந்த சிந்தனையையும் உலக அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும். மற்றவர்களுடைய தயை தாட்சண்யத்தைப் பொருட்படுத்தமாட்டார். யாரிடத்திலும் முக துதியாகப் பேச அவருக்குத் தெரியாது. ஒருவருடைய உதவியை நாடுகிறபோதுகூட, தம்முடைய கொள்கைக்கு அவர் கொள்கை மாறுபட்டிருக்குமானால், அதை அவர் முகத்திற்கு முன்னாலேயே சொல்லி விடுவார்; அவருடைய உதவியை நாடுகிறோமேயென்று கவலைப்படமாட்டார். சிவனார், சில சமயங்களில் நவசக்தி காரியாலயத்திற்கு முதலியாரின் உதவியை நாடி வருவார். முதலியார், தமது கருத்துக் களை, வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி வெளியிடுவதில்லையென்பது சிவனார் குறை; இதற்காக அவர்மீது சிறிது வருத்தமும்கூட. விளக்கெண்ணெயை யும் வெண்டைக்காயையும் சேர்த்துக் குழைத்து, அதில் தமது பேனாவைத் தோய்த்து எழுதுகிறார் முதலியார் என்று சொல்லுவார். இந்த மாதிரி யாரிடம் சொல்லுவார்? முதலியாரிடமேதான். புறங்கூறல் என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. நவசக்தி காரியாலயத்திற்குச் சிவனார் வருவதும் போவதும் ஒரு தனிக் காட்சியாகவே இருக்கும். அவருடைய தோள் அளவுக்கு வரும் ஒரு நீண்ட தடி; முழங்கால் வரை வரும் நீண்ட அங்கி; தலையில், சிறிது கோணலாகக் கட்டியிருக்கும் தலைப்பாகை. தடியை லொட்லொட் என்று ஓசைப்படுகிற விதமாக ஊன்றிக் கொண்டுதான் வருவார். உள்ளே நுழையும்போதே, சிவனார் வருகிறார் என்று உதவி ஆசிரியர்களாகிய எங்களுக்குத் தெரிந்து விடும். உள்ளே வந்து முதலியாரைப் பார்த்ததும் என்ன,. விளக் கெண்ணெய் முதலியார்! சௌக்கியமா? என்று சொல்லிக் கொண்டே அவர் இருக்கும் அறைக்குள் பிரவேசிப்பார். பிரவேசித்து, எவ்வித பீடிகையுமில்லாமல் எனக்கு இப்பொழுது பத்து ரூபாய் தேவை என்று கேட்பார். முதலியாரும் மலர்ந்த முகத்துடன் இவரை வரவேற்று உட்காரச் செய்து, இவர் தேவைக்கான தொகையைக் கொடுக்கச் செய்வார். இப்படிப் பல தடவை முதலியாரின் உதவி பெற்றிருக்கிறார் சிவனார். ஒரு தடவைகூட முதலியார் இல்லை யென்று சொன்ன தில்லை; கேட்ட தொகைக்குக் குறைச்சலாகக் கொடுத்ததுமில்லை. சிவனாரும், தமது குறைந்த தேவைக்குத்தான் கேட்பார்; அதிகப்படியாக ஒரு காசுகூட அவர் விரும்பியதுமில்லை, அப்படிக் கொடுத்தாலும் அதைக் கண்டிப் பாக மறுத்து விடுவார். முதலியாருக்கு இது நன்றாகத் தெரியும். மற்றும், தாம் கொடுக்கும் தொகை, சிவனாரின் சொந்த உபயோகத் திற்குக் குறைவாகவும், பொதுநலப்பணிக்கு அதிகமாகவும் செலவிடப்படுமென்பதும் முதலியாருக்குத் தெரியும். இங்ஙனம் சிவனாருக்குப் பணவுதவி செய்ததை - சிவனாருக்கு மட்டுமென்ன, யாருக்குச் செய்த உதவியையும் - முதலியார் ஒரு சமயங்கூட பெருமையாக எண்ணியதில்லை; யாரிடமும் சொல்லிக் கொண்டதுமில்லை. சிவனாரும், உதவி பெற்றதைச் சிறுமையாகக் கருதியதில்லை; பெறுவது தமது உரிமையென்றும், கொடுப்பது முதலியாரின் கடமையென்றும் எண்ணினார் என்று சொல்லலாம். சிவனார், ஒரு சமயம் விளக்கெண்ணெய் முதலியார் என்று சொல்லிக்கொண்டு வருவார்; இன்னொரு சமயம் வெண்டைக்காய் முதலியார் என்று சொல்லிக் கொண்டு வருவார்; பிறிதொரு சமயம் வழவழ முதலியார் என்று சொல்லிக்கொண்டு வருவார். இப்படி முதலியாரின் எழுத்து காரசாரமாக, வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இல்லையென்ற தமது உள்ளக்கருத்தைத் தெள்ளத் தெளியச் சொல்லி விடுவார். முதலியாரின் உதவியை நாடி வந்திருக்கிறோமேயென்பதைச் சிறிதுகூட யோசிக்கமாட்டார்; தாம் இப்படிச் சொன்னதனால், முதலியார் மனவருத்தம் கொள்ள மாட்டார், உதவி மறுக்கமாட்டார் என்பது சிவனாருக்கு நன்கு தெரியும். முதலியாருடைய பெருந்தகைமையில் சிவனாருக்கு எப்பொழுதும் நல்ல மதிப்பு உண்டு. சிவனார், இந்த மாதிரி உதவிக்கு எல்லோரிடமும் செல்ல மாட்டார். யாருடைய உதவி பெறுவதனால், தமது தன்மதிப்புக்குப் பங்கம் வராதோ அவரிடம் மட்டுமே செல்லுவார் என்று சுருக்க மாகச் சொல்லலாம். இன்னும் பணம் படைத்திருப்பதன் காரண மாகவோ, பதவி வகிப்பதன் காரணமாகவோ பெரிய மனிதர்களாகக் கருதப்படுகிறவர்கள் அனைவரும் குணச்சிறப்புடையவர்களென்று சொல்ல முடியாதென்பது சிவனாருக்கு நன்கு தெரியும்; அப்படிப் பட்டவர்கள் முகத்தைக்கூட பார்க்கமாட்டார். இவருடைய பெருமையை உணர்ந்து இவருக்குப் பலவகையாலும் உதவியவர் களில் குறிப்பிடப்பட வேண்டியவர் ஏற்கனவே சொல்லப்பெற்ற டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ். சிவனார், அநேகமாக மாலைநேரத்தில் தான் நவசக்தி காரியாலயத்திற்கு வந்து போவார். முதலியார் இல்லாமற்போனால், உதவி ஆசிரியர் சிலருடன் சிறிது நேரம் அளவளாவிவிட்டுச் செல்வார். உதவி ஆசிரியர்களுள் ஒருவராக ஸ்ரீ ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) இருந்தார். அவர், அன்றைய பத்திரிகை அலுவல் முடிந்த தும், கீழே தரையில் அமர்ந்து கைராட்டினத்தில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். கைராட்டினமும் கதரும் மிகவும் உற்சாகத் துடன் பரவி வந்த காலம் அது. சிவனாருக்குக் காந்தீயக் கொள்கை களில் அதிக பற்றுதல் இல்லை. ராட்டை சுற்றுவதனால் சுய ராஜ்யம் வந்து விடுமா? என்று கேலி செய்வார். ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து என்ன கயிறு திரிக்கிறீர்களா? கயிறு திரித்தால் சுயராஜ்யம் வந்துவிடுமா? என்று ஏளனம் செய்வார். முந்நூறு வருஷ காலமாக நிலை கொண்டுவிட்ட வெள்ளைக்காரன், உங்கள் கைராட்டையைக் கண்டு பயந்து ஓடிவிடுவானாக்கும் என்பார். சில சமயங்களில் என்மீதும் அவருடைய பரிகாச பாணங்கள் விழும். என்ன சர்மா, நீர் கயிறு திரிக்கவில்லையா? என்று கேட்பார். வீட்டிலே ராட்டை இருக்கிறது. அங்கு நூற்பதுதான் என் வழக்கம் என்பேன், ஏன்? நாலுபேர் அறிய ராட்டை சுற்றுவதற்கு வெட்கமாயிருக் கிறதோ? என்று கேலியாகக் கேட்பார். ராட்டை சுற்றுவதில் வெட்கமென்ன இருக்கிறது? என்று நிதானமாக நான் பதில் கூறுவேன். சுற்றுங்கள்; சுற்றுங்கள்; இந்தக் கயிற்றைக்கொண்டு வெள்ளைக்காரனைக் கட்டி சீமையிலே கொண்டுபோய் போட்டு விடுங்கள் என்று கூறுவார். இப்படிக் கைராட்டினம், கதர் முதலியவை விஷயத்தில் பிடித்தமில்லாதவரா யிருந்தபோதிலும், சிவனார் சுதேசி துணி களையே உடுத்தி வந்தார்; நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள் களையே பெரும்பாலும் உபயோகித்து வந்தார். 1906ஆம் வருஷம் வங்காளப் பிரிவினையையொட்டி நடைபெற்ற சுதேசி கிளர்ச்சி காலத்தில், சிவனார், அந்நிய சாமான் பகிஷ்கார இயக்கத்தைத் தீவிரமாக நடத்தி வந்தாரென்பது நாடறிந்த விஷயமன்றோ? சிவனார், வ. உ. சிதம்பரம் பிள்ளையிடம் மிகுந்த விசுவாச முடையவர், உண்மையில், திலகருக்கு அடுத்தபடியாக வ. உ. சிதம்பர னாரை மதித்து வந்தார். 1906 - 07ஆம் வருஷத்து சுதேசிக் கிளர்ச்சிக் காலத்தில் இருவரும் சேர்ந்தே தேசீயப் பிரசாரம் செய்தனர்; சேர்ந்தே கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் தெற்குப்பகுதி களில் இருவருக்கும் அபரிமிதமான செல்வாக்கு இருந்தது. இதற்கு முக்கிய காரணம். ஒன்று, இவர்களுடைய தியாகம்; மற்றொன்று இவர் களுடைய பேச்சு வன்மை. சிவனாருடைய மதிப்பில், சிதம்பரனாருக்குச் சமதையான தானத்தில் சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்தார். உண்மையில் பாரதியாருக்குப் பூதவுடம்பை அளித்தது சின்னசாமி ஐயர்; புகழுடம்பை அளித்தது சிவனார், இப்பொழுது நாம் பாரதியாரின் திருநாளைக் கொண்டாடுகிறோமென்றால், அதற்கு மூல புருஷராய் நின்றவர் சிவனார்தான். பாரதியாரை மற்றவர்கள் சரியாக அறிந்துகொள்ளா திருந்த அந்தக் காலத்தில், சிவனார் அவருடைய அதிமேதையையும் கவிதா சக்தியையும் அறிந்து போற்றினார். அவருடைய கவிதைகளே, மக்களின் நாட்டுப்பற்றை ஊக்கிவிட்டு அந்நிய ஆதிக்கத்தின் இரும்புப் பிடியினின்று விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு வழிகாட்டும் என்பதை உணர்ந்திருந்தார். அவருடைய கவிதைகள் தமிழ்நாடெங்கணும் பரவ வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துக் கொண்டார். பாரதியார் அமரரான பிறகு சென்னையில் அவருடைய திருநாளைக் கொண்டாட வேண்டுமென்று முதன்முதலாக ஏற்பாடு செய்தவர் சிவனார்தான். திருவல்லிக்கேணியில் இப்பொழுது தேசீயப் பெண் பாடசாலை இருக்கிறதல்லவா, அது முந்தி தென்னந் தோப்பாயிருந்தது. அந்த இடத்தில் 1924ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் பாரதியார் அமரரான திருநாளன்று ஒரு பொதுக்கூட்டம் கூட்டினார். கூட்டத்திற்குச் சுமார் நூறு பேரே வந்திருந்தனர். கூட்டத் தொடக்கத்தில் ஸ்ரீ ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) பாரதியாரின் வந்தேமாதர மென்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குது மென்போம் என்ற தொடக்கத்துப் பாடலையும் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற தொடக்கத்துப் பாடலையும் பாடினார். பிறகு திரு வி. கலியாண சுந்தர முதலியார் வீராவேசத்துடன் பேசினார். இஃது என் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சு, சிவனாரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. நன்றியுரை கூறுகையில், பாரதியாரின் அற்புத கவிதா சக்தியைச் சிறிது விளக்கிக் கூறிவிட்டு, முதலியாரின் வீராவேசப் பேச்சைப் பெரிதும் பாராட்டிப் பேசினார். முதலியாரின் பேச்சைப்போல் எழுத்து வேகமாக, அதாவது காரசார மாக இல்லையே யென்பது தான் சிவனாரின் குறை. சிவனாருக்கென்று ஒரு சிஷ்ய கோஷ்டி அமைந்தது. இவர் களிற் பலரும், தங்கள் பெயருடன் பாரதியென்ற பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு செய்தார். பாரதி என்ற பெயர் நிலைத் திருக்க வேண்டுமென்பது இவர் அவா. தமிழைத் தவிர, வடமொழியிலும் ஆங்கிலத்திலும் சிவனாருக்கு நல்ல புலமையுண்டு. ஞான நூல்களை நன்கு பயின்றவர். பரம வேதாந்தி. இவர் எழுதிய சச்சிதானந்த சிவம் என்ற நூலில் இவர் அடைந்திருந்த ஞான பரிபக்குவத்தை நன்கு காணலாம். இருந்தா லும் இவருக்குப் பராசக்தியிடம் பக்தி அதிகம். எல்லாம் அன்னை யின் ஆணை என்றே அடிக்கடி பேசுவார்; கடிதங்களிலும் அப்படியே எழுதுவார். தம் இளைய சகோதரர் ஸ்ரீவைத்தியநாத சர்மா என்ப வருக்கு இவர் எழுதிய கடிதங்களில் ஒன்றிரண்டைப் பாருங்கள்:- ஓம் (முகாம்) திருவல்லிக்கேணி 24-6-24 மகாசக்தி யருள்க என்னை அரசாங்கத்தார் ராஜத்துரோகத்திற்காக 124 ஏ. பிரிவின்படி கைது செய்து ஜாமீனில் வந்திருக்கிறேன். 27 ஆம் தேதி முதல் வழக்கு முறையே நடைபெறும். கவலைப்படு வதற்கு ஒன்றும் இல்லை. மகாசக்தியின் அருள் எப்படியோ, அப்படித்தான் எல்லாம் நடக்கும். பிற பின் அன்புள்ள சுப்பிரமணிய சிவம் ஓம் ஸ்ரீ பாரதாச்ரமம் (முகாம்) திருவல்லிக்கேணி 8-9-24 மகாசக்தி யருள்க உனது கடிதம் கிடைத்தது. எனது வழக்கு முடிந்ததும், வட இந்திய யாத்திரை புறப்பட வேண்டுமென்றுதான் கருதியிருக்கிறேன். எனது அன்னையின் ஆக்ஞை எவ்வாறாகுமோ? அன்புள்ள சுப்பிரமணிய சிவம் ஓம் ஸ்ரீ பாரதாச்ரமம் (முகாம்) திருவல்லிக்கேணி 11-11-24 மகாசக்தி யருள்க உன்னுடைய கார்டு கிடைத்தது. இன்று நான் இங்கிருந்து புறப்பட்டுவிடுகிறேன். பாப்பாரப்பட்டியை விட்டுப் புறப்பட்டு, ஒரு வருடத்திற்கு மேலாகிறபடியால், நேரே அங்கு செல்கிறேன். ஆனால் சீக்கிரம் அங்கிருந்து புறப்பட்டு, நமது தேசம் முழுதும் சுற்றிவிட்டுத்தான் திரும்புவது என்ற சங்கல்பத்துடன், பிரயாணம் ஆரம்பிக்கப் போகிறேன். மார்ச்சு மீ சமயத்தில் தான் நான் அந்தப்பக்கம் வரும்படி நேரிடும் என்று தோன்றுகிறது. எல்லாம் அன்னையின் ஆக்ஞை. அன்புள்ள சுப்பிரமணிய சிவம் இவரது உடலை நோய் தின்றுகொண்டு வந்த காலத்திலும், இவரது உள்ளத்தை, கவலை அரித்துக்கொண்டு வந்த காலத்திலும், இவர் தேவியையே சரணாக அடைந்தார். கூறுகிறார் ஓரிடத்தில்:- இரக்தாக்ஷி வருஷம் தை மாதம் இரண்டாம் தேதி. இரவு பதினோரு மணி. கண்ணீர் தாரை தாரையாக ஒழுகி விட்டது. பித்துப் பிடித்தவன் போலாய்விட்டேன். அழுது தாயைப் பின் வருமாறு பிரார்த்தித்தேன்:- அம்மா தாயே! அருள் புரிவாயே! 1. அல்லும் பகலும் அறுபது நாழியும் - இந்தக் கொல்லும் வியாதி எனைக் குத்திக் குடையுதே. 2. பிச்சைக்காரனெனப் பிறர்பலர் சொல்லவோ - இச் சொச்சை வார்த்தைகளை நான் சுகமெனக் கருதவோ 3. நாடி நரம்பெலாம் நமன்பற்றி ஈர்க்கிறான் - அடி ஓடி வந்துன்பதத்தை உருகிப் பிடித்தேண்டி 4. குற்றமெது செய்தாலும் குணமுடையோய் நீதான் பெற்ற தாயலையோ பிழைபொறுக்க வேண்டாமோ? 5. நம்பினேன் நம்பினேன் நம்பினேன் நம்பினேன் அம்பிகையே உனையேதான் அபயமென நம்பி விட்டேன். சிவனாரின் இளைய சகோதரர் ஸ்ரீ வைத்தியநாத சர்மாவைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்குச் சொல்ல வேண்டியது அவசிய மாகும். இவர் குரோதி வருஷம் ஆவணி மாதம் ஐந்தாந்தேதி (13-9-1889) பிறந்தவர். சுமார் இருபத்தைந்து வருஷ காலம் காசிவாசியா யிருந்து அங்குப் பல நற்பணிகள் புரிந்திருக்கிறார். அங்குள்ள பிரம்மஞான சங்கத்தில் 1923ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு வரை உத்தியோகம் பார்த்தார். அங்குள்ள தென்னிந்திய சங்கத்தின் காரியதரி சியாக 1928ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரை இருந்தார். இவர் சிறந்த ஓவிய நிபுணர்; வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்களை நன்கு அறிந்தவர். சிறந்த தேசபக்தர்; தமது தமையனாரிடத்தில் அதிக பக்தி விசுவாசம் பூண்டவர்; தமது தமையனாரை - சிவனாரை - த் தமிழ்நாடு சரியாக அறிந்து போற்ற வேண்டுமென்று, சிவனாரை அறிந்த நண்பர்கள் அனைவரும் விரும்புவதுபோல் இவரும் விரும்பியது சகஜந்தானல்லவா? பாரதியாரின் திருநாளை இப்பொழுது நாம்கொண்டாடுகிறோம். அதுபோல், அவருடைய சம காலத்தவர்களாகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவம், வ. வே,ஸு. ஐயர் முதலியவர்களுடைய திருநாட்களையும் கொண்டாட வேண்டியது அவசியமாகும். இவர்கள் நாட்டு விடுதலைக்காகமட்டும் உழைத்தவர்களல்ல; சிறந்த கல்வி மான்கள்; அநேக நூல்கள் எழுதி மக்களின் அறிவை வளர்த்துக் கொடுத்த தோடு மட்டுமல்லாமல், இதயத்தையும் பண்படுத்திக் கொடுத்தவர்கள். இவர்களைத் தமிழகம் என்றும் நினைவிலிருத்திக் கொண்டிருக்க வேண்டுமென்பது என் பிரார்த்தனை. சிவனார், தமக்கென வாழாத பெருந்தகை; நாட்டு நலனுக்காக உயிருள்ளளவும் உழைத்த உத்தமர்; சுதந்திர தேவியைத் தரிசனம் செய்யவேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்த தியாக சீலர்; தமது உள்ளத்தைப் பின்வரும் அகவற்பாவின்மூலம் எப்படித் திறந்து காட்டுகின்றார், பாருங்கள். இது தேசபக்தன் பத்திரிகையின் சித்தார்த்தி வருஷ அனுபந்தத்தில் வெளியாயிற்று:- நித்தியா னந்தனே! நின்மல நாதனே! சத்தியம் ஒன்று சாற்றுவன் கேண்மோ அடியுடன் என்னை அர்ப்பணம் செய்தேன் படிதனில் எனக்குப் பந்துக்க ளில்லை உனையே நம்பினேன் உலகில் துணையென வினையே விதிதான் விதியே வினைதான் ஆயினும் உன்றன் அருள்சக்தியினால் காயினும் சரியே கனியினும் சரியே நீயே என்ற நிலையை நம்பினேன் தாயே போல்வாய் தண்ணருள் புரிவாய்; அடியேனுக்கொரு ஆசையிங்குண்டு படிதனில் எந்தன் பாரத தேசம் பெரியோ ரெல்லாம் பிறந்த தேசம் சிறியோ ரெல்லாம் சீர்படும் தேசம் நல்லோ ரெல்லாம் நாடிய தேசம் பொல்லார் தாமும் புகழும் தேசம் செழித்துக் கொழுத்துத் திகழ்ந்த தேசம் அழித்தும் அழித்தும் அக்ஷய தேசம் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் முண்டர் தமக்கும் உணவிடும் தேசம் சத்தியம் பொறுமை சாந்தம் தைர்யம் நித்தியமாக நின்றிடும் தேசம் அவனி தனக்கு ஆத்ம ஞானத்தை தவநிலை நின்று சாற்றும் தேசம் துஷ்டர்களுக்கும் சுகத்தைக் கொடுத்து இஷ்டப்பட்டதை ஈயுந் தேசம் இந்தத் தேசம் இப்பொழு திருக்கும் பந்தப் பாங்கைப் பார்த்திடும் போழ்து சொந்தப் பிள்ளைகள் சோறில்லாமல் மந்தை மந்தையாய் மாய்ந்து போவதை எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் அந்தோ! என்றன் ஆவி யுலையுது வந்தோ ரெல்லாம் வயிற்றி லடிக்கிறார் அனைவ ரிழவுக்கும் அழுபவர் நாமோ? மனமோ உடையுது வயிறோ எரியுது நாவோ குளறுது நானென் செய்கேன் ஆவோ வென்று அலறுதல் அல்லால்? அலறினேன் அலறினேன் ஐயகோ வென்று கலகம் செய்வான் கருதினா னென்றே அதிகார வர்க்கம் ஆக்ஞை யிட்டதால் சிறைதனை ஏற்று சிந்தை நோகாது ஆறு வருடம் அடைபட் டிருந்தும் ஏறு மென்மனம் இடிபட வில்லை எந்தன் தேசம் எந்தன் உயிரே நொந்தும் எந்தன் நுண்ணிய மனந்தான் திடமுற்றேதான் தெளிந்ததே யன்றி மடமுற்றேதான் மயங்கியதில்லை. வெளியில் வந்தேன் விடுதலை யடைந்து களியில் மனிதரைக் கண்ணால் கண்டேன் வறுமை வியாதி மரணம் பஞ்சம் சிறுமை இவற்றால் சீரழிகின்ற தமிழாம் மக்களைத் தட்டி யெழுப்பி அமிழ்தாம் ஞான ஆனந்த மூட்டி வீரம் ஆண்மை வெற்றி பெருமை தீரம் முதலாம் தேசு புகுத்தி சிறந்தோர் என்றே சீரியர் செப்ப அறந்தான் செய்ய அன்புடன் முயன்று பத்திரிகை புத்தகம் பலவழியாக உரிமை வேண்டி உரிமை வேண்டி இரவும் பகலும் எழுதி எழுதி வரவும் என்கை வலிக்குது ஐயோ மனமும் உடைந்தது மார்பும் நோகுது இனமும் இல்லை இனியென் செய்கேன் கொடியதோர் வியாதி கொல்லுது என்னை படிதனி லிருந்தும் பயன்தா னென்னை? ஆதலால் இப்பொழு தொன்று ஈங்குனை வேண்டுவல் தப்பாம லீந்து தயவுடன் காப்பாய் எந்தன் ஜனங்கள் ஏற்ற மடைந்து சொந்த தேசத்தில் சுகமாய் வாழணும் கண்ணியமாய் நாம் காவல் புரியணும் அரசு புரியணும் அருள்பெற வேண்டும் முரசு அடிக்கணும் முழங்கணும் பேரிகை பயமே இல்லை பயமே இல்லை ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய வென்றே இந்திய ரனைவரும் இன்பப் புணரியில் முந்த வீழ்ந்து மூழ்கிக் குளித்து தீதெலாம் அகன்று சீர்பெற வேணும் ஈதெலாம் செய்தல் ஈசநின் கடனே. 1. இவர் பற்றிய விவரங்களுக்கு 93ஆம் பக்கம் பார்க்க. 1. 97ஆம் பக்கம் பார்க்க. 1. Niagara Falls. அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கும் கனடாவுக்கும் நடுவேயுள்ளது. உலகத்து அதிசயக் காட்சிகளுள் ஒன்று. 1. சிவனார், தம் சிறை அனுபவத்தைப்பற்றி எழுதியுள்ள குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது:- கைதி சிறைக்குள் சென்றதும் முழு மொட்டையாக க்ஷவரம் செய்து கொண்டுவிட வேண்டும். அங்குச் சாதாரணமாகக் கைதியின் சரீரத்தின் எந்தப் பாகத்திலும் அரையங்குலத்துக்கு மேல் நீளமுள்ளதாக ரோமம் வளரவிடக் கூடாதென்பது வைத்திய விதி. ரோமம் அதிகமாக வளர்ந்துவிட்டால் அழுக்குப் படிந்து நோய் உண்டாகிவிடுமாம்! க்ஷவரம் செய்வதற்கு உபயோகிக்கப்படும் கத்திகள் சாணைபார்க்காத வெறும் இரும்புத் தகடுகள். க்ஷவர தினத்தன்றுபடும் கஷ்டம் இவ்வளவென்று சொல்லி முடியாது. அதிலும் என்னைப் போன்ற முரட்டு ரோமங்கள் உள்ளவர்கள்............................................! க்ஷவரம் செய்துகொள்வதைவிட எந்த வேலையும் செய்யலாம்; மரண வேதனையும் அனுபவிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைதோறும் க்ஷவரம் செய்துகொள்ளும்போது என் சரீரம் செத்துப் பிழைக்கும். க்ஷவரம் செய்பவர்களில் தண்டனையடைந்த அம்பட்ட ஜாதியினர் ஒரு சிலருடன் பறையர், சக்கிலியர், ஒட்டர் முதலியோரும் உண்டு. ஆ ஆ! க்ஷவரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் சிறைவாசத்தைப்போல் சுகவாசம் இல்லவே இல்லை என்று சொல்லுவேன். ஒவ்வொரு கைதியும் ஞாயிற்றுக் கிழமைதோறும் க்ஷவரம் செய்து கொள்ளத் தவறக்கூடாதாம். ஒன்றையும் கேட்காதே; கைம்மாறாக ஒன்றை யும் விரும்பாதே. நீ கொடுக்க வேண்டியதைக் கொடு; அது உன்னிடத்தில் திரும்பி வரும். - ஆனால் இப் பொழுது அதைப்பற்றி நினைக்காதே. அஃது ஆயிரம் மடங்கு அதிகரித்துத் திரும்பி வரும். - ஆனால் கவனம் அதன்மேல் இருக்கக் கூடாது. ஆயினும் கொடுக்கும் சக்தி உனக்கிருக்கட்டும். கொடுக்க மாத்திரம் செய். ஜீவிய காலம் முழுமையும் ஈகையே என்று அறிந்து கொள். நீ கொடுக்கும்படி இயற்கை உன்னைப் பலவந்தம் செய்யும். ஆகையால் மனப்பூர்வமாய்க் கொடு. - சுப்பிரமணிய சிவம் சுப்பிரமணிய சிவம் மதுரை ஜில்லாவில் வத்தலகுண்டு என்று ஒரு கிராமம். இங்குப் பிறந்து வாழ்ந்தவர்களில் எத்தனையோ பேர் சான்றோ ரெனச் சிறப்பெய்தியிருக்கலாம். ஆனால் இருவர் பெயர் மட்டும் தமிழ்நாட்டின் நினைவில் என்றும் நிலைபெற்றிருக்கும். ஒருவர் பி. ஆர். ராஜம் ஐயர்; கமலாம்பாள் சரித்திரம் என்ற தலையாய நவீனத்தை எழுதிப் புகழ் பெற்றவர்; பரம வேதாந்தி. ஆங்கிலத்திலும் வேதாந்தத்தைப்பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். நாற்பது வயதை எட்டிப் பார்க்கு முந்தியே இறைவனடியைப் பார்க்கச் சென்று விட்டார். மற்றொருவர், இக்கட்டுரை நாயகரான சுப்பிரமணிய சிவனார். இவரும் நளின சுந்தரி அல்லது நாகரிகத்தின் தடபுடல் என்ற நவீனத்தின் ஆசிரியர்தான்; பரம வேதாந்திதான். என்றாலும் இவருடைய அறிவு, உழைப்பு எல்லாம் நாட்டின் விடுதலை நாடிச்சென்றன. நாட்டிற்காகவே வாழ்ந்தார்; நாட்டிற்காகவே துறவியானார். நாட்டுக்கு உழைத்ததன் மூலம் தமிழ்மொழிக்குச் சேவை செய்தார்; ஞான மார்க்கத்தில் கம்பீரமாக நடந்து சென்ற யாத்திரிகர்களில் ஒருவராக விளங்கினார். இன்றைய தலைமுறை யினர் இவருடைய உருவத்தை, ஏன்? பெயரைக்கூட மறந்துவிட் டிருக்கலாம்; ஆனால், சென்னைக் கடற்கரை முதல் திருநெல்வேலிச் சீமை வரை இவர் எழுப்பிய சுதந்திர முழக்கம் காலத்திற்கப்பாலும் சென்று ஒலித்துக்கொண்டிருக்கும். சுப்பிரமணிய சிவனார் வத்தலகுண்டில் பிறந்து வளர்ந்தவ ரானாலும், இவரை அவ்வூர்வாசிகள் வெகுகாலம் வரையில் சுப்பிர மணிய சிவம் என்ற பெயரால் அறியமாட்டார்கள்; முனீசுவரன் என்ற பெயராலேயே அறிவார்கள். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? கேளுங்கள் காரணத்தை. வத்தலகுண்டு கிராமத்தில், நடுத்தரக் குடும்பமொன்றைச் சேர்ந்த ராஜம் ஐயர் - நாகலட்சுமி அம்மாள் தம்பதிகளுக்கு தாரண வருஷம் புரட்டாசிமாதம் இருபதாந் தேதிக்குச் சரியான 4-10-1884-இல் சுப்பிரமணிய சிவனார் பிறந்தார். பெற்றோர்கள் இவருக்குச் சம்பிரதாயப்படி சுப்பராமன் என்று நாமகரணம் செய்தனர். குழந்தைக்கு ஆறு மாதம். திடீரென்று ஒரு நாள் மாந்த வலிகண்டது. இறந்துபோய்விடுமோ என்று குடும்பத்தினர் கலக்க மடைந்தனர். அப்பொழுது குழந்தையின் பாட்டியார் - ஞானம்மாள் - நாட்டுவைத்திய முறைப்படி, கதூரி மஞ்சளைச் சுட்டு நெற்றியில் சூடிட்டார். சூடிட்டும் குழந்தை அழவில்லை. உடனே வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் முனீசுவரனை நோக்கி, குழந்தைக்கு உயிர்ப் பிச்சை தரும்படி வேண்டிக்கொண்டார் அந்த அம்மையார். வேண்டுதல் பயனளித்தது. குழந்தை வீலென்று அழ ஆரம்பித்தது. இனி உயிருக்குப் பயமில்லையென்று குடும்பத்தினர் கவலை நீங்கினர். அது முதற்கொண்டு குழந்தையை முனீசுவரன் என்று அழைக்கலாயினர். ஊராரும் அப்படியே அழைத்து வந்தனர். பின்னர் இவருக்கு ஒன்பதாவது வயதில் உபநயனம் நடைபெற்ற காலத்தில் சுப்பிரமணிய சர்மன் என்ற பெயரிடப்பட்டது. சுப்பிரமணிய சர்மன், காலக்கிரமத்தில் சுப்பிரமணிய சிவமானார். குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் தாயார், குடும்ப அசௌகரியம் காரணமாக, தன் தந்தையார் வீட்டில் வசிக்க வேண்டி நேரிட்டது. அனந்தய்யர் என்ற அவர், அய்யம் பாளையம் என்னும் கிராமத்தில் கிராம முனிசீப்பா யிருந்தார். சுற்றுப்புற கிராமங் களில் அவருக்கு நல்ல செல்வாக்கு. தமது உத்தியோக அலுவல்களைச் சரிவரக் கவனித்துக் கொண்டு வந்தா ரெனினும், தாமரையிலைத் தண்ணீர் போல் வாழ்க்கையை நடத்தி வந்தார். இதனால் அரசாங்க உத்தியோகதர் சிலர் அவரிடத்தில் நல்ல மதிப்பு வைத்திருந்தனர். அந்தப் பகுதியில் அப்பொழுது ஜில்லா முனிசீப்பாயிருந்த டி. சதாசிவய்யர் - பிற்காலத்தில் சென்னை உயர்தர நீதிமன்றத்தின் நீதிபதியாக விளங்கியவர் - அனந்தய்யரை வேதாந்தி அனந்தய்யர் என்றே அழைத்து வந்தார். இத்தகைய பெரியாரிடத்தில் சிவத்தின் குழந்தைப் பருவம் கழிந்த படியால், இவர், கடவுள் பக்தி மிக்கவராகவும், உலகியற் பொருள்களில் பற்றற்றவராகவும் வளர்ந்து வரலானார். சிவபெருமான் உருவம் அமைந்த மரப்பாவையொன்றை வைத்துக்கொண்டு அதற்குத் தினந் தோறும் பூஜை செய்வார். தமக்குக் கொடுக்கப் பெறும் தின்பண்டங்களை அதன் முன்னர் வைத்துக் காட்டிவிட்டுப் பின்னரே தாம் உண்பார், பாட்டனார், புராண இதிகாசக் கதை களை அவ்வப்பொழுது சொல்ல, அவற்றைக் குழந்தை சிவம் பயபக்தியுடன் கேட்டு மனத்தில் பதிய வைத்துக்கொள்வார். இதனாலேயோ என்னவோ, எல்லோரிடத்தில் பணிவுடையவ ராகவும் பயந்த சுபாவமுடையவராகவும் இருந்தார். சிவம், பன்னிரண்டு வயது வரையில் மதுரையில் படித்தார். இந்தக் காலத்தில் இவருடைய குடும்பம் மிகவும் வறுமைக்குட் பட்டது. எனவே இவர், தம் பெற்றோர்களுடன் திருவனந்தபுரம் சென்று, அங்கே இலவசமாக உணவு கிடைக்கும் ஊட்டுப் புறை களில் சாப்பிட்டுக் கொண்டு, மேற்படிப்பு படித்து வந்தார். இவரது புத்திகூர்மையைக் கண்டு ஆசிரியர் பலர் இவரை மெச்சத் தொடங் கினர். அநேக பரிசுகளும் இவருக்குக் கிடைத்தன. ஆனால் இந்தக் காலத்தில் இவரிடமிருந்த பயந்த சுபாவம் போய்விட்டது; முரட்டுப் பிள்ளையானார். திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு வருஷகாலம் கோயம்புத்தூரில் சென்று படிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அங்குப் படித்துக் கொண்டிருந்தபோது இவருடைய முரட்டுச் சுபாவம் அதிகமாயிற்று. ஆசிரியர்களைப் படாதபாடு படுத்திவிட்டார். கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்த பொழுது, கோடைகால விடுமுறைக்காக இவர், திண்டுக்கல்லில் இருந்த இவருடைய தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கு, இவருடைய வாழ்க்கையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. இவருடைய ஒன்று விட்ட மாமனாகிய சித்த புருஷர் ஓத சுவாமிகள் என்ற சுப்பைய்யா சுவாமிகள் அங்கே அப்பொழுது அவதூதராய்ச் சுற்றிக்கொண் டிருந்தார். சிவனாருக்கு இவரிடத்தில் விசேஷ பற்றுதல் ஏற்பட்டது; இவரோடு சுற்றித் திரிவதிலே தனி ஆனந்தம் கொண்டார். சுவாமிகளும் சிவனாரைப் பலவிதத்திலும் பரிசோதித்துப் பார்த்து, இவருடைய பக்குவ நிலையை ஒருவாறு உணர்ந்து கொண்டார். ஒருநாள் நடுநிசியில் சிவம் தங்கியிருந்த வீட்டுக்கு இந்த சுப்பைய்யா சுவாமிகள் வந்து, சிவத்தையும் வீட்டிலுள்ள எல்லோரை யும் தட்டி எழுப்பினார்; இரவில் வீட்டிலுள்ள எல்லோரும் சாப்பிட்டபிறகு மிகுதிப் பட்ட சோற்றைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்தார்கள்; அதை எடுத்து வந்து தமக்குப் போடச் சொல்லி வயிறார உண்டார். சில நிமிஷங்கள் கழிந்தன. வீட்டில் ஒரே ஒரு மாம்பழம் இருந்தது. சுவாமிகளுக்கு இஃது எப்படித் தெரிந்ததோ தெரியாது. அதைக் கொண்டுவரச் செய்தார். அதைக் கடித்துச் சுவைத்துப் பார்த்தார். நன்றாயிருந்தது. அருகிலிருந்த சிவத்துக்கு அதைக்கொடுத்து உண்ணச் செய்தார். என்ன பாக்கியமென்று எண்ணி, சிவம் அதை மகிழ்ச்சியோடு உண்டார்; எச்சி லென்று சிறிது கூட அருவருப்புக் காட்டவில்லை. இது முதற்கொண்டு இவர் புதிய சக்தி பெற்றவரானார். பேசுந் திறமையும் மன உறுதியும் இவருக்கு ஏற்பட்டன. எச்சில் மாங்கனியைச் சிறிது கூட முகங்கோணாமல் சிவம் உண்டதைக் கண்ட சுப்பைய்யா சுவாமிகள், இவரை, அடே, பாளையங்கோட்டையான்! இங்கே வா என்று அழைத்து அருகே அமர்த்தி வைத்துக்கொண்டு, பட்டினத்தடிகளின் பின்வரும் பாடலை, காதோடு காது வைத்து இரண்டு முறை கூறினார்:- கட்டி யணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரத்தைப்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் கொட்டி முழக்கி யழுவார் மயானங் குறுகியப்பால் எட்டி யடிவைப்பரோ இறைவா கச்சி யேகம்பனே. இந்தப் பாடலையே தமக்கருளப்பட்ட உபதேசமாகக் கொண்டார் சிவனார். சிவனாரைப் பார்த்து பாளையங்கோட்டையான் என்று ஏன் சுவாமிகள் அழைத்தார்? பிற்காலத்தில் சிவம், பாளையங் கோட்டையில் சிறிது காலம் வசிக்கும்படி நேரிடுமென்பதை முன்கூட்டியே தெரிந்துகூறினார் போலும், இப்படித்தான் ஊகிக்க வேண்டியிருக்கிறது. ‘V‹ ghisa§ nfh£ilah‹ v‹W miH¤Ô®fŸ? என்று அப்பொழுது யாரும் சுவாமிகளைக் கேட்கத் துணிவு கொள்ளவில்லை. கோயம்பத்தூரில் சிறிது காலம் படித்துவிட்டு, திரும்பவும் திருவனந்தபுரமே வந்து சேர்ந்தார் சிவனார். சட்டம்பி நவநீத கிருஷ்ணய்யர் என்ற ஒருவர், அங்கு அப்பொழுது இளைஞர் களுக்கு, மல்யுத்தம், சிலம்பவித்தை முதலியவைகளைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று மேற்படி வித்தை களில் பயிற்சி பெற்றார் சிவனார். பழவங்காடிப் பயில்வான் என்று எல்லோரும் இவரை அழைக்க ஆரம்பித்தார்கள். பழவங்காடி என்ற ஒரு தெருவில் இவர் அப்பொழுது குடியிருந்தார். அதனால் தான் இந்தப் பட்டப் பெயரைப் பெற்றார். சுப்பையா சுவாமிகள் அளித்த மனோபலமும், நவநீத கிருஷ்ணய்யர் அளித்த தேகபலமும் சேர்ந்து சிவனாரைப் புதிய மனிதனாக்கின. பேச்சு, செயல் எல்லாவற்றிலுமே ஒருவித மிடுக்கு காணப்பட்டது. வீரச் செயல்களைச் செய்யாதவன் ஆண்மக னல்லன் என்பார்; முரடனையும் மூர்க்கனையும் பலத்தாலேயே வெல்ல வேண்டும் என்பார்; பலவீனனுக்கும் எளியவனுக்கும் அபயம் கொடுத்து உதவ வேண்டும் என்பார். இந்த மாதிரி தோரணையிலேயே இந்தக் காலத்தில் பேசி வந்தார். பள்ளிப்படிப்பு ஒருவாறு முடிந்தது. குடும்பப் பொறுப்பை உணரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏதாகிலும் ஓர் உத்தி யோகத்தைச் சம்பாதித்துக்கொள்ளும்படி தந்தையார் வற்புறுத் தினார். முதன்முதலாக இவருக்குக் கிடைத்த உத்தியோகம் போலீ இலாகாவில்! ஆனால் அதுவே கடைசி உத்தியோகமுமாகிவிட்டது. திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த சிவகாசியில் ஒரு போலீ உத்தியோகதராகச் சேர்ந்தார். ஒரு சில நாட்களுக்குள் இந்த உத்தியோகம் இவருக்குக் கசந்துவிட்டது; உதறித் தள்ளினார். சுதந்திர வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் அடிமைத்தளைக் குட்படுவரோ? பிற்காலத்தில் இதே திருநெல்வேலி ஜில்லாவில்தான் இவருடைய அரசியல் செல்வாக்கு ஓங்கி நின்றது; போலீசாரின் அதிகமான கண்காணிப்புக்குட்படலானார். இது வேடிக்கையாக இல்லையா? சிவனாருக்குச் சுமார் பதினைந்து வயது இருக்கும், மீனாக்ஷி அம்மை என்ற ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நடை பெற்றது. ஆனால் பிற்காலத்தில் இவருடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையவில்லையென்று சொல்லவேண்டும். காரணம், தம்பதிகள் ஒருமித்த மனம் படைத்தவர்களாயில்லையென்று சொல்லப் படுகிறது. என்றாலும், சிவனார் இளமையிலிருந்தே, அதாவது ஏறக்குறைய பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது நடந்து கொண்டிருக்கையிலேயே, குடும்பப் பற்றற்றவர் போல வாழ ஆரம்பித்துவிட்டார். இதற்கேற்றாற்போன்ற சூழ்நிலையும் இவருக்கு அமைந்தது. 1902ஆம் வருஷம். சிவனாருக்குச் சுமார் பதினெட்டு வயது. அப்பொழுது திருவனந்தபுரத்தில் வசித்துக்கொண்டிருந்தார். அங்கு, சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகி ஒருவர் வந்தார். அவரைச் சிவனார் சந்தித்தார். அவருடைய அருள்பெற்றார். ஏற்கனவே சுப்பைய்யா சுவாமிகளின் அருள் பெற்றிருந்தவரல்லவா? சதானந்தரைப் பின்பற்றிச் செல்லலானார் சிவம். அவரிடம் சிறிது காலம் ராஜயோகம் பயின்றார். வீட்டுக்கு வந்துபோவ தென்பது நின்றுவிட்டது. இவருடைய உறவினர் யாராவது இவர் இருக்குமிடம் தெரிந்து இவரை வீட்டுக்கு அழைத்துப் போக வந்தால், அந்த இடத்தி லிருந்து வேறு இடத்திற்குச் சென்றுவிடுவார். உறவினருடைய கண்களுக்குப் படாமல் இருந்த நாட்களும் உண்டு. இங்ஙனம் சுமார் நான்கு வருஷங்கள் சென்றன. சதானந்தரிடத்தில் சிவத்திற்கு எவ்வளவு தீவிரபக்தி ஏற் பட்டதோ அவ்வளவு தீவிர அன்பு சிவத்தினிடத்தில் சதானந் தருக்கும் ஏற்பட்டது. தமது அன்பை வெளிப்படுத்துமுகத்தான் அவர், இதுகாறும் சுப்பிரமணிய சர்மா என்று அழைக்கப்பட்டு வந்தவரை சுப்பிரமணிய சிவம் என்று அழைக்கலானார். அவர் தான் முதன் முதல் சிவம் என்று அழைத்தார். இந்தப் பெயரே பின்னர் தமிழ்நாடெங்கணும் பிரபலமாயிற்று. பின்னொருகால், அதாவது 1921ஆம் வருஷம் கும்பகோணத் தில் நடைபெற்ற மகாமகத்தின்போது, இவருடைய இளைய சகோதரர் இவருக்கு சுதந்திரானந்தர் என்று பெயரிட்டார். இதற்குக் காரணம் அப்பொழுது இவர் தமிழ்நாடெங்கணும் சுதந்திர முழக்கம் செய்து வந்ததுதான். சிவனார் பிற்காலத்தில் எழுதிய மோட்ச சாதன ரகசியம் முதலிய சில நூல்களில் சுதந்திரானந்தர் என்ற பெயர் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த மகாமக சமயத்தில், சிவனார், ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர் களுடைய நல்லாசியைப் பெறும் பேறுபெற்றார். சிவம் என்ற பெயர் மேலும் ஊர்ஜிதமடைந்தது. மகாமகம் முடிந்ததும் ஸ்ரீ ஆச்சாரிய சுவாமிகள் பட்டீச்சுரம் என்ற தலத்தில் முகாம் செய்திருந்தார். சிவனார் சில தொண்டர்களைச் சேர்த்துக்கொண்டு, மகாமகத்தில் அரிய சேவை செய்துவந்ததை ஆச்சாரிய சுவாமிகள் நன்கு அறிந்திருந்தார். சாரணர் குழாங்கள் பலவும் அருந்தொண் டாற்றி வந்தன. இவர்களுடைய சேவையைப் பாராட்டுகின்ற முறையில் இவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார் ஆச்சாரிய சுவாமிகள். அப்பொழுது சிவத்தையும் நேரில் காணவேண்டு மென்று ஆவல் கொண்டார். எனவே, கும்பகோணத்தில் தீவிர தேசபக்தராக விளங்கிய பந்துலு வேங்கடராமய்யரிடம் சொல்லி சிவத்தைப் பட்டீச்சுரத்திற்கு வரவழைத்து உபசரித்தார். அது மட்டுமா? அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்துப் பின்வருமாறு பேசினார்:- உலகத்தில் தன்னலம் காட்டாது, தன் சரீரத்தில் ஏற்பட்டிருக்கும் கொடிய நோயையும் பொருட்படுத்தாமல், அன்னிய அரசாங்கத்தினர் இழைக்கும் இடையூறுகளையும் மற்றக் கொடுமைகளையும் சிறிதும் லட்சியம் செய்யாமல், அல்லும் பகலும் சுதந்திரகோஷம் செய்து கொண்டு, நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்ற நோக்கம் நிறைவேறு வதற்காக, இளைஞர் களை சுயநலமற்ற தேசத்தொண்டில் ஈடுபடுத்தி வரும் வியக்தியை இன்று நாம் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. உண்மையில் இன்று ஒரு சுபதினம். தமக்குக் கிடைக்கக்கூடிய எதனையும் உடனே தம்முடனிருப்பவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார். மறு நாளைக்கு இல்லையென்ற கவலைப்படார். உண்மைத் தியாகி. பாரத தேசத்தின் அடிமைத் தனத்தைப்பற்றிய கவலையைத் தவிர வேறொன்றுமே இவரைப் பாதிக்கவில்லை, இவரே சிவம். சிவமும் இவரே. இவருடைய தாயே தாய். இத்தகைய உண்மைத் தியாகிகளை நம் தேசத்துத் தாய்மார்கள் பெறுவார்களாயின் அவர்களுக்கு இதைவிட வேறு பெருமை வேண்டியதில்லை. சதானந்தருடைய அன்பைப்பெற்ற சிவத்திடமிருந்து சங்கராச்சாரி யாருடைய அருள்பெற்ற சிவத்திடம் வந்துவிட்டோம். வாசகர்கள் மன்னிக்க. திரும்பவும் சதானந்தருடைய சிவத்திடம் வருவோம். காடோ செடியோ கடற்புறமோ கனமே மிகுந்த நாடோ நகரோ நகர்நடுவோ நலமே மிகுந்த வீடோ புறந்திண்ணையோ என்ற பட்டினத் தடிகள் வாக்குக்கிணங்க சிவனார் ஊர்சுற்றிக்கொண் டிருக்கையில், இவர் தந்தையார் நோய்வாய்ப்பட்டுவிட்டார். மகனைக் காண முடிய வில்லையே என்ற ஏக்கம்; காணவேண்டு மென்ற ஆவல். மரண காலமும் நெருங்கிவிட்டது. அப்பொழுது திடீரென்று தாடி மீசையுடன் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். இவரை வீட்டிலுள்ள யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. உள்ளே சென்றவர் மரணப்படுக்கையிலிருப்பவரிடம் சென்று அப்பா என்று ஆதுரத்துடன் அழைத்தார் சுப்பிரமணிய சிவமான சுப்பையா! வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப்பட்டதில் ஆச்சரியமில்லை. அப்பா என்று அழைத்த சிவம், தந்தையின் தலையைத் தம் மடிமீது வைத்துக் கொண்டார். அவரும் நல்ல நினைவுடனிருந்தபடியால் மகனைக் கண்ணெடுத்துப் பார்த்தார்; காணவேண்டுமென்று கொண்டிருந்த ஆவல் நிறைவேறியதான திருப்தி அந்தப் பார்வையில் பிரதிபலித்தது. உடனே உயிரும் உடலைவிட்ட கன்றது. உற்றாரும் உறவினரும் ஆச்சரியமடைந் தனர்; தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளைச் செலுத்தத் தக்க காலத்தில் வந்த தனயன் என்று சிவனாரைப் புகழ்ந்தனர். சிவனார் திருவனந்தபுரத்தில் வதிந்த காலத்தில் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றது. இதைக்கொண்டு இவருடைய நேர்மைக் குணத்தை ஒருவாறு கண்டுணரலாம். திருவாங்கூர் ராஜ்யத்தில் அப்பொழுது சக்கரம், பணம் முதலிய நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. ஒரு ரூபாய்க்கு இருபத்தெட்டரை சக்கரம் அல்லது ஏழு பணமும் அரை சக்கரமும். சக்கரத்தில் அரைச் சக்கரமென்றும் கால் சக்கரமென்றும் உண்டு. சிவனாருக்கு ஒரு நாள் ஒரு ரூபாய்க்குச் சில்லரை தேவையா யிருந்தது. அப்பொழுது அகமாத்தாக ஒரு நம்பூதிரியைச் சந்தித்துச் சில்லரை கேட்டார். அவரும் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவர் போன பிறகு, சிவனார் சில்லரையை எண்ணிப் பார்த்தார். அதில் அரைச்சக்கரத் திற்குப் பதில் அதே அளவுள்ள ஒரு பொற்காசு இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். சக்கரங்கள் புத்தம் புதிய நாணயங்களாயிருந்த படியால் அவை பொன்னிறத்தில் இருந்தன. சில்லரை கொடுத்தவர், இதை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியவில்லை போலும்; இதனாலேயே செப்புக்காசுக்குப் பதில் பொற்காசைக் கொடுத்துப் போய் விட்டார். இந்தப் பொற்காசைக் கண்ட சிவனார் ஆச்சரியமடைந்ததோடு மட்டுமல்லாமல், அதைத் தொட்ட மாத்திரத்தில் இவர் கை நடுக்க முற்றது. உடனே சில்லரை கொடுத்த நம்பூதிரியின் பின்னாலேயே ஏ திருமேனி! V âUnkÅ! என்று கூவிக்கொண்டு சென்று, அவரை நிறுத்தி, அவர் கொடுத்த பொற்காசை அவரிடம் திருப்பிக் கொடுத்து, சமாசாரத்தைக் கூறினார். நம்பூதிரியும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, அதற்குப்பதில் அரைச் சக்கரத்தைக் கொடுத்துவிட்டு, சிவனாரின் நேர்மைக்காக இவரை வாழ்த்திவிட்டுச் சென்றார். இது சிறிய விஷயந்தான். ஆனால் சிறிய விஷயங்களில்தானே ஒரு மனிதனுடைய பெருந்தன்மைகள் மிளிர்கின்றன. இஃது இப்படியிருக் கட்டும். சிவனார், திருவனந்தபுரத்தில் வசித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் அரசியலில் தீவிரமாகப் பிரவேசிக்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டது. 1906, 1907ஆம் வருஷங்களில் வங்காளப் பிரிவினை, அரவிந்தர், திலகர் முதலியோர்மீது பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தொடுத்த வழக்குகள், லாலா லஜபதிராய் நாடு கடத்தப்பட்டது முதலியவை காரணமாக இந்தியாவெங்கணும் பரபரப்பு உண்டாயிற்று. இதன் விளைவாக ஜனங்களின் சுயராஜ்ய தாகம் அதிகரித்தது. தென்னாட்டிலும் தேசீயக் கிளர்ச்சி எழுந்தது. இந்த நிலையில், ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த தாகூர் கான் சந்திர வர்மா நாடெங்கணும் சுயராஜ்யப் பிரசாரம் செய்துகொண்டு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். பல கூட்டங்கள் கூட்டுவித்து நாட்டு நிலைமையைப் பற்றி விவரித்துப் பேசினார். இந்தக் கூட்டங்களுக்குச் சிவனார் தவறாமல் சென்று வந்தார். இவர் உள்ளத்தில் நாட்டுப்பற்று கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. நாட்டின் விடுதலைக்காக, தமது சர்வத்தையும் அர்ப்பணம் செய்வ தாகச் சங்கற்பம் செய்துகொண்டார். உடனே தர்ம பரிபாலன சமாஜம் என்ற பெயரால் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். இதன் கூட்டங்கள் தமது வீட்டிலேயே நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்தார். தேசீய உணர்ச்சியைத் தூண்டிவிடக்கூடிய பல பத்திரிகை களை வரவழைத்து இளைஞர்களைக் கூட்டிப் படிக்கச் செய்தார். அக்கம் பக்கத்திலுள்ள சிறுவர் சிறுமிகளைக் கூட்டுவித்து தேசீய கீதங்கள் பாடச் செய்தார். சட்டம்பி நவநீத கிருஷ்ணய்யருடைய தலைமையில் சிறுவர்களுக்குக் கஸரத்து, பகி முதலியவைகளைப் பயிலுவித்தார். இந்த தர்ம பரிபாலன சமாஜ வேலைகளைத் தவிர, தாமே வெளியிடங்களில் பொதுக்கூட்டங்கள் கூட்டிப் பேசினார். மக்களுக்கு உணர்ச்சியுண்டாகும் முறையில் நாட்டின் அவல நிலையை விளக்கிக் கூறினார். இவரது பேச்சுக்கள், செயல்கள் முதலியன, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் நிழல்போலிருந்த திருவாங்கூர் சமதானத்திற்குப் பிடிக்குமோ? இவரை, சமதானத்திலிருந்து வெளியேறும்படி செய்துவிட்டார்கள். இதற்காகச் சிவனார் மனங்கலங்கவில்லை. சமதான எல்லைக்கு வெளியே வந்துவிட்டார். ஆனால் சும்மாயிருக்க முடியுமோ இவரால்? கால்நடையாக ஊர்தோறும் சென்று சுய ராஜ்யப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். எங்குச் சென்றபோதிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி இவரது சொற்பொழிவு களைச் செவிமடுத்தனர். இவருடைய பிரசாரத்தின் பயனாகத் தென்பாண்டி நாட்டில் மக்கள் புதியதொரு வாழ்வு பெற ஆவல் கொண்டார்கள். ஊர்தோறும் பிரசாரம் செய்துகொண்டு வந்த சிவனார் திருநெல்வேலி போந்து அங்குச் சில நாட்கள் தங்கிப் பிரசங்கங்கள் செய்துவிட்டு தூத்துக்குடி போய்ச் சேர்ந்தார். தூத்துக்குடியில் வ. உ. சிதம்பரனாருக்கு அப்பொழுது நல்ல செல்வாக்கு. சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்து அதைப் பல எதிர்ப்புக்களுக்கிடையே நடத்தி வந்தார். இவரைப்பற்றி விரிவாகச் சொல்லவேண்டும். ஆனால் இஃது ஏற்ற இடமன்று. சுருக்கமாக, தென்னாட்டில் சுதேசி இயக்கத் திற்கு இவர் நடுநாயகமாக விளங்கினார். தூக்குக்குடி சென்ற சிவனார், சிதம்பரனாரைச் சந்திக்காம லிருப்பரோ?1 இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டாயிற்று. இருவரும் சேர்ந்து பல பொதுக்கூட்டங்களில் பேசினர். கேட்க வேண்டுமா மக்களின் உணர்ச்சி, வெள்ளம்போல் பெருக்கெடுத் தோடியதற்கு? இந்தச் சந்தர்ப்பத்தில் தெய்வத் திருவருள் கூட்டி வைத்தாற்போல், கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் திருநெல்வேலிச் சீமைக்கு வந்து சேர்ந்தார். சிவனாருக்கும் பாரதியாருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பாரதியாருடைய கவிதாசக்தியில் சிவனார் ஈடுபட்டார்; சிவனாருடைய பேச்சு வன்மையில் பாரதியார் ஈடுபட்டார். ஒரு சமயம், சிவனாருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பாரதியார், உணர்ச்சி மிக்குற்றவராய் சிவாஜி என்று உரக்கச் சொல்லிக்கொண்டே சிவனாரைக் கட்டித்தழுவிக் கொண்டா ரென்றால், இவருடைய பேச்சில் பாரதியார் எவ்வளவு ஈடுபட்டவரா யிருந்திருக்க வேண்டுமென்று ஒருவாறு புலனாகும். இங்ஙனமே பாரதியாரின் பாடல்களை பாடச் செய்தும், பாடக்கேட்டும் சிவனார் தம்மை மறந்து நின்ற சந்தர்ப்பங்கள் பல உண்டு. இது நிற்க. தூத்துக்குடியில் சிதம்பரனாரும் சிவனாரும் சேர்ந்து செய்து வந்த சொற்பொழிவுகள், அவ்வூரிலிருந்த ஆங்கிலேயர்களுக்குப் பீதியை உண்டு பண்ணியது. மக்கள் கொண்டிருந்த தேசவெறியின் விளைவாகத் தங்களுக்கு எந்தச் சமயத்தில் என்ன நேரிடுமோ என்று அஞ்சினர். எனவே, கரைக்குச் சிறிது தொலைவில் ஒரு கப்பலைக் கொண்டு வந்து நங்கூரம் பாய்ச்சச் செய்து, தினந்தோறும் இராப் பொழுதை அதில் கழித்தனர். சுமார் மூன்று மாத காலம் இப்படி நடந்ததென்றால், வெள்ளையர் கொண்டிருந்த அச்சமும், மக்கள் கொண்டிருந்த தேசவெறியும் எவ்வளவு உச்ச நிலையில் இருந்தன வென்பது ஒருவாறு புலனாகும். இந்த நிலையில் அரசாங்கத்தார் சும்மா யிருப்பரோ? கிளர்ச்சித் தலைவர்களென்று கருதப்பட்ட சிதம்பரனார்மீதும் சிவனார்மீதும் நன்னடக்கை ஜாமீன் வழக்கு தொடுத்தனர். அப்பொழுது திருநெல் வேலி ஜில்லா கலெக்டராயிருந்தவர் வின்ச் என்ற ஆங்கிலேயர். இவர், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில், சிதம்பர னாரையும் சிவனாரையும் தனியே சந்தித்துப் பேசினார். இவர்க ளுடைய நாட்டுப்பற்றைப் போற்றுவதாகவும், சுதேசி இயக்கத்தைத் தாம் மெச்சு வதாகவும், ஆனால் இவ்வியக்கத்தின் விளைவாக இவர்களுடைய எதிர்கால வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படக்கூடு மென்றும், ஆகவே இவ்வியக்கத்தையும் சுதேசி கப்பல் கம்பெனி முயற்சியையும் விட்டுவிட்டு வேறு இடத்திற்குப் போய்விடச் சம்மதிப்பதாயிருந்தால், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விடாமல் ஏற்பாடு செய்வதாகவும் பலவாறு பேசினார். இவற்றிற்கு இணங்குவரோ இவ்விருவரும்? இப்படியிருக்க, அரசாங்கத்தார், இவ்விருவர்மீதும் நன்னடக்கை ஜாமீன் வழக்குத் தொடர்ந்துவிட்டனரே யெனினும், இதனைத் தங்களுக்குச் சாதகமாக முடிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்பதைச் சீக்கிரத்தில் உணர்ந்தனர். எனவே, வேறு ஆதாரங்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டி யிருந்தது. இதற்காகச் சிறிது காலம் பிடிக்குமல்லவா? போதுமான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டனர். பதினெட்டு நாட்கள் கழித்து இவர்களை விடுதலை செய்வதுபோல் செய்து, வேறொரு குற்றஞ் சாட்டி, அதாவது ராஜத்துவேஷக் குற்றஞ் சாட்டி அதன் பிரகாரம் சிறை வாசலிலேயே இவர்களை மறுபடியும் கைது செய்தனர். வழக்கு நடைபெற்றது. சிதம்பரனாரும் சிவனாரும் எதிர்வாதம் செய்தனரென்பதைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. முடிவில் சிதம்பரனாருக்கு இருபது வருஷமும் சிவனாருக்குப் பத்து வருஷமும் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை இருவரும். சென்னை உயர்தர நீதி மன்றத்தில் அப்பீல் வழக்கு நடத்தினர். இதன் விளைவாக இருவருக்கும் ஆறுவருஷக் கடுங்காவல் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது. சிவனாருடைய சிறைவாச அனுபவத்தைச் சிவனார் வாக்கு மூலமாகவே சொல்லிக்காட்ட விரும்புகிறோம்,- 1908ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந் தேதியி லிருந்து 1912ஆம் வருஷம் நவம்பர் மாதம் இரண்டாந்தேதி வரையில் நான் திருச்சினாப்பள்ளி சிறைச்சாலையிலும் சேலம் சிறைச் சாலையிலுமாக அடைபட்டுக் கிடந்தேன். என்னைத் தண்டித்த மறுநாளைக் கடுத்த நாள் ஒன்பதாந்தேதி என்னைத் திருநெல்வேலி சிறைச்சாலையிலிருந்து திருச்சிராப்பள்ளி சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டார்கள். எனக்கு விதித்தது கடுங்காவல் தண்டனையல்லவா? ஆதலால் அடுத்த நாள் பத்தாந்தேதிமுதல் எனக்கு வேலை கொடுக்கப்பட்டது. முதலில் கம்பளிச்சரடு நூற்கும் வேலையிலும், சுமார் பத்து நாட் களுக்குப் பின் கேழ்வரகு அரைக்கும் வேலையிலும் போட் டார்கள். அந்தச் சமயத்தில் சுமார் நாற்பது ஐம்பதுபேர்களை அடைக்கும் கொட்டறையிலிருந்து என்னைத் தனிக்கொட் டறையில் கொண்டு போய் பூட்டிவிட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள்தான் கேழ்வரகு அரைத்தேன். அதன்பின் சிறைச்சாலைத் தொழில்களிலேயே கடுமையான தொழி லாகிய கம்பளிரோமம் அடிக்கும் தொழிலில் என்னைப் போட்டார்கள். மெத்தை தலையணைகட்குப் பருத்தியை வில்பிடித்துப் பஞ்சாக அடிப்பதுபோல், கத்தை கத்தையாகச் சுண்ணாம்பில் தோய்த்துக் காய்ந்து வரும் கம்பளி ரோமத்தை வில்பிடித்து அடித்துச் சன்னமாக்க வேண்டிய இத்தொழில், எத்தகைய சரீரக் கட்டுடையவனுடைய சுகத்தையும் பாதிக்க வல்லது. ஒரு வாரம் இந்தத் தொழில் செய்தபின் எனக்கு இருமல் உண்டாய் விட்டது. பிரதம வைத்தியர் எனக்கு வேறு வேலை கொடுக்கும்படி சிபார்சு செய்யவே, என்னைக் கம்பளி நெய்யுந் தொழிலிலே போட்டார்கள். மறுநாள் என்னை வெறுங்காவல் கைதிபோல் பாவிக்குமாறு உத்தரவுவரவே, நான்கு மாத காலம் வெறுங்காவலில் கழித்தேன். பழைய படியும் கடுங்காவல்; ஆகவே துணி நெய்யும் வேலை செய்ய நேரிட்டது. சேலம் சிறைக்கு மாற்றப்படும் வரை இதே தொழில்தான். என்னை இப்பொழுது பிடித்துள்ள வியாதி அப்போது ஆரம்ப திதியில் இருந்தது, இந்த வியாதியும் ஒரு சிறிது உதவியாகவே இருந்தது. அதனால் எனக்குக் கடுமை யான வேலைகள் கொடுக்கப் படவில்லை. அதிகாரிகளின் தயவால் எனக்கு எழுது கருவிகளும் காகிதமும் புத்தகங்களும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அப்போது நான் எழுதினவற்றில் வெளியான புத்தகங்கள் மூன்று. அவை யாவன: 1. சச்சிதானந்த சிவம். 2. ஞான ரத்தினம். 3. பகவத்கீதா சங்கிரகம். நான் செய்து வந்த வேலைக்கும், என் நன்னடத்தைக்கும், ஜார்ஜ் சக்ரவர்த்தியவர்களுடைய மகுடாபிஷேகக் கொண் டாட்டத்திற்காகவும் தள்ளுபடியாகச் சுமார் ஒரு வருடம் எட்டு மாதம் எனக்குத் தள்ளிக் கொடுக்கப்பட்டன. மிகுதி நான்கு வருஷங்களும் நான்கு மாதங்களும் சிறைச்சாலை யிலே கழித்துவிட்டு வந்தேன். 1912ஆம் ஆண்டுக் கடைசியில், சிவனார், கூட்டிலிருந்து விடுபட்ட சிங்கம்போல் சிறைவாசத்திலிருந்து விடுதலை பெற்றுச் சென்னை போந்து மயிலாப்பூரில் வசிக்கத் தொடங்கினார். வசித்தா ரென்றால் ஒரு செயலும் புரியாமலா? இவரால் அப்படியிருக்க முடியுமா? 1913ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஞானபானு என்ற ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வரலானார். அப்பொழுது கவிஞர் சுப்பிரமணிய பாரதியார், வ. வே. ஸு. ஐயர் முதலிய தமிழ்நாட்டுத் தேசபக்தர்கள் புதுச்சேரியில் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருந்தனர். சுப்பிரமணிய பாரதியார் ஞானபானுவில், தமது சொந்தப் பெயராலும் வேறு பல புனைபெயர்களாலும், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் முதலியவற்றை எழுதி வந்தார். இவருடைய எழுத்துக்களை வெளியிட மற்றப் பத்திரிகைகள் அஞ்சிய காலம் அது. ஆனால் சிவனார், இவற்றைத் தமது பத்திரிகை யில் துணிந்து வெளியிட்டு வந்தார். ஞான வீரரல்லவா? உண்மையில் ஞானபானு பத்திரிகை அறியாமை இருளை அகற்றும் அறிவு ஒளியாகவே பிரகாசித்தது. ஆனால் இது நீடித்து நடைபெறவில்லை. நடைபெறவிடவில்லை அரசாங்கத்தார். இதற்குப் பிறகு சிவனார் பிரபஞ்சமித்திரன் என்ற ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். அதில் பழைய நாரதர் என்ற புனைபெயரில், நகைச் சுவை நிறைந்த அநேக அரிய கட்டுரைகளை எழுதி வந்தார். ஆனால் இதனையும் தொடர்ந்து நடத்த முடியாதவ ராய் வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டியவரானார். இதன் பிறகு 1919ஆம் வருஷத்தில் இந்திய தேசாந்திரி என்ற ஒரு வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். இதுவும் சிறிது காலத்திற்குப் பிறகு நின்றுவிட வேண்டியதாயிற்று. இங்ஙனம் இவர் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருந்த காலத்தில், இவர் முழுத்துறவியாக வேண்டியவரானார். அதாவது இவருடைய தர்ம பத்தினியாக அமைந்த மீனாட்சி அம்மையார் 1915ஆம் ஆண்டில் ஆண்டவன் திருவடி நீழலெய்தினர். இந்தக் காலத்திலிருந்து, சிவனாருடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றும் நாட்டிற்குச் சொந்தமாயின. சென்னையில் சிவனார் வசித்துக்கொண்டிருந்த காலத்தில் அடிக்கடி மாலை நேரங்களில் திருவல்லிக்கேணி கடற்கரைப் பக்கம் செல்வார். அப்படிச் செல்லும் சில நாட்களில், தம்முடன் ஒரு வேலை யாளையும் அழைத்துப் போவார். அவன் ஒரு நாற்காலியையும் ஒரு மேஜையையும் தூக்கி வருவான். அவற்றை ஓரிடத்தில் போடச் செய்வார் சிவனார். மேஜையின் மீது நின்றுகொண்டு வந்தேமாதரம் என்று உரக்கச் சொல்லி, தம் கையிலிருக்கும் நீண்ட கழியைக் கொண்டு மேஜையைத் தட்டுவார். மாலை நேரத்தில் பொழுது போக்குக்காக வந்திருப்பவர்களில் சிலர், இந்தச் சப்தத்தைக் கேட்டு சிவனார் இருக்குமிடத்தை நாடி வந்து அமர்வர். உடனே இவர் சகோதரர்களே! சகோதரிகளே! என்று பிரசங்கம் செய்யத் தொடங்கிவிடுவார். பிரசங்கம் என்பது என்ன? அன்றைய நாட்டு நிலைமையை எளிய முறையில் விளக்கிக் காட்டி நாட்டுப் பற்றை ஊட்டுவதுதான். பிரசங்கம் முடியுந் தறுவாயில், இதே இடத்தில் இன்ன தேதியில் அடுத்த கூட்டம் நடைபெறுமென்று தாமே அறிவித்தும் விடுவார்; துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் வெளியிடச் செய்வார். இவர் பேசிய இடமே இப்பொழுது திலகர் கட்டமென்ற பெயரால் சிறப்புற்று விளங்குகிறது. இந்தப் பெய ரிட்டது சிவனார்தான் என்பதை இங்குத் திரும்பவும் அன்பர்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை யல்லவா? 1919ஆம் ஆண்டிலிருந்தே சிவனாருடைய உடல் நிலை வரவர சீர்கெட ஆரம்பித்தது. நோய்வாய்ப்பட்ட காலங்களில் இவரை மிக அன்புடன் உபசரித்து வேண்டிய உதவிகளைச் செய்தவர் டாக்டர் நஞ்சுண்டராவ். இவர், சிவனாரை சிவாஜி என்றே அழைப்பார். தமக்குற்ற நோயைப் பொருட்படுத்தாமல் சிவனார், எப்பொழுதும் போல் தேசத்தொண்டில் ஈடுபட்டு வந்தார். ஈடு படாமல் இவரால் சும்மாயிருக்க முடியாது. இதன் விளைவாக, 1921ஆம் வருஷத்திலும் 1922ஆம் வருஷத்திலும் 1924ஆம் வருஷத் திலும் இவர்மீது அரசாங்கத்தார் நடவடிக்கை எடுத்துக்கொண் டனர். ஆனால் ஒரு முறைதான் இவர் சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டியவரானார்; மற்ற இரு முறைகளிலும் சிறையைக் காண வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. 1921ஆம் வருஷம் தைப்பொங்கலன்று சிவனார், தமது அன்னையின் ஆசி பெற்ற அவருடைய முன்னிலையிலேயே, தமது குருநாதரையும் பராசக்தியையும் தியானஞ் செய்த வண்ணம் காஷாய உடை தரித்துக்கொண்டார். அதே சமயத்தில், பாரதாசிரமம் என்ற பெயரால் ஒரு தாபனத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தமது முழு நேரத்தையும் தேச சேவையிலேயே செலவழிப்பதென்றும் சங்கற்பம் செய்துகொண்டார். இந்தச் சங்கற்பத்தை நிறைவேற்றுகின்ற முறையில், முதலில் சென்னையிலிருந்து சேலத்துக்கடுத்த பாப்பாரப்பட்டி என்னும் ஊருக்குத் தமது வாசதலத்தை மாற்றிக்கொண்டார். இங்கே, அன்பர் பலருடைய உதவியின் பேரிலும் ஒத்துழைப்பின்பேரிலும், பாரதமாதா கோயிலொன்று நிர்மாணஞ் செய்யத் திட்டமிட்டார். இந்தக் கோயிலுக்கு தேசபந்து சித்தரஞ்சன் தாஸர் 23-6-23இல் அதிவாரக் கல் நாட்டினார். இந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட வேண்டி சுமார் இரண்டு ஏக்கரா விதீரணமுள்ள பூமி சிவனார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பிரதேசத்திற்கு பாரதபுரம் என்று நாமகரணஞ் சூட்டப்பட்டது. இங்கேயே பாரதாசிரமம் என்ற தாபனமும் அமைந்தது. பாரதமாதா கோயிலையும் பாரதாசிரமத்தையும் என்றும் நிலைத் திருக்கச் செய்ய, சிவனார் ஒரு நிதி திரட்ட முனைந்தார். இதற்காகச் சிறிது காலம் சென்னையில் வந்து தங்கினார். அப்பொழுது, அன்பர் பலருக்கு, தமது நோக்கத்தை எடுத்துக்காட்டி ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஆங்கில மொழியில் அமைந்த அந்த வேண்டுகோளின் தமிழ் வாசகம் வருமாறு:- ஸ்ரீ பாரதாசிரமம் (முகாம்) திருவல்லிக்கேணி மதரா......... 24 அன்புள்ள ஐயா, ஸ்ரீ பாரத மாதாவுக்காக நான் ஒரு கோயில் கட்டி வருகிறே னென்பதைப் பத்திரிகைகள் வாயிலாக நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஜாதி மத வித்தியாசமில்லாமல் எல்லோரும் இந்தக் கோயிலில் அனுமதிக்கப்படுவர். தேச பந்து ஸ்ரீமான் சி. ஆர். தா தென்னிந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்து வந்தபோது 23-6-1923இல் இந்தக் கோயிலுக்கு அதிவாரக்கல் நாட்டினார். தவிர, ஸ்ரீ பாரதாசிரமம் என்ற பெயரால் நான் ஓர் ஆசிரமத்தை நடத்தி வருகிறேன். இங்கு இளைஞர்கள், அவரவர்களுடைய சுபாவத்திற் கேற்றபடி, பொதுவாழ்க்கை யின் பல துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படுவார்கள். தாய் நாட்டின் சேவைக்கு அவர்கள் பயனுள்ள தொண்டர்களாக விளங்க வேண்டுமென்பதே நோக்கம். தற்போது பதினைந்து இளைஞர்கள் இந்த ஆசிரமத்தில் இருக்கிறார்கள். இவர்கள், நமது நாடு சுயராஜ்யம் அடைகிற வரையில், அதன் சேவையில், தங்கள் வாழ்நாள் பூராவையும் ஈடுபடுத்துவதாகப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் இங்ஙனம் பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், வீதிதோறும் தேசீய கீதங்களைப் பாடிக் கொண்டு பஜனை ஊர்வலமாகச் செல்கிறார்கள். இப்படிச் சென்று, நமது நாட்டின் முற்காலப் பெருமையையும், தற்கால இழிநிலைமையையும் மக்கள் உணரும்படி செய்கிறார்கள். நமது நாடு சுய உணர்ச்சி பெறவேண்டும், சுயதேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்பதே நோக்கம். எனவே, என்னுடைய நோக்கம் நிறைவேறக் கூடிய வகையில் உங்களாலான உதவியைச் செய்யுமாறு புனிதமான, ஆனால் தற்போது தாழ்வுற்றிருக்கும் நமது தாய்நாட்டின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். உண்மையுள்ள (ஒப்பம்) சுப்பிரமணிய சிவா இந்த வேண்டுகோளினால், எதிர்பார்த்த பலன் உண்டாக வில்லையென்றே சொல்லவேண்டும். சிவனார் விரும்பியபடி பாரதமாதா கோயில் பூரணமாக அமையவில்லை; பாரதாசிரமமும் தொடர்ந்து நடைபெறவில்லை. சிவம், பாப்பாரப்பட்டிக்குத் தமது வாசதலத்தை மாற்றிக் கொண்ட சிறிது காலத்தில, அதாவது 1923ஆம் வருஷம் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் ஏகாதசியன்று காசியம்பதியில் இவருடைய தாயார் ஈசன் அடியிணை சேர்ந்தார். இவருடைய ஆத்மா சாந்தி யடையும் பொருட்டு சிவனார் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து ஆத்ம திருப்தியடைந்தார். சிவனாருடைய உடல் நிலை வரவரச் சீர்கேடடைந்து வந்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இவர் தமது அன்பர் குழாத் துடன் ஊர்ஊராகச் சென்று தேசீயப் பிரசாரம் செய்து வந்தார். இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாடகங்கள் நடத்தப்பட்டன. சிவாஜி, தேசிங்குராஜன் முதலிய சில நாடகங்களை இவரே எழுதி நடிக்கச் செய்தார்; தாமும் சேர்ந்து நடித்தார். இந்த நாடகங்களைப் பார்த்த மக்கள் வீர உணர்ச்சி பெற்றனர். ஆனால் அரசாங்கத்தார் இந்த நாடகங்கள் நடிக்கப்படுவதை அவ்வளவாக விரும்பவில்லை. சில இடங்களில் இந்நாடகங்களுக்குத் தடையுத்தரவு விதிக்கப் பட்டது. தவிர, இவர் ஊர்ஊராகச் சென்று தேசீயப் பிரசாரஞ் செய்து வருவதை விரும்பாத அரசாங்கத்தார், இவர் இனி ரெயிலில் பிரயாணஞ் செய்யக்கூடாதென்று தடையுத்தரவு போட்டனர். ஆனால் சிவனார் இதற்காகச் சோர்வடையவில்லை. கால்நடையாகவும் கட்டை வண்டி மூலமாகவும் ஊர்தோறும் சென்று தேசீயப் பிரசாரஞ் செய்ய லானார். இஃது இவருடைய உடல்நிலையைப் பாதித்துவிட்டது. எனவே, இவர் சில நண்பர்களின் உதவியினால் பாப்பாரப்பட்டிக்குச் சென்றார். அங்குச் சென்று சில நாட்களுக்குள் 23-7-25 வியாழக் கிழமை விடியற்காலை சுமார் ஐந்து மணிக்கு சிவத்தோடு கலந்தார். அப்பொழுது இவருக்கு நாற்பத்தோரு வயது. இந்த நாற்பது வருஷ காலத்திற்குள் இவர் சாதித்த காரியங்கள் அனந்தம். சிறை வாசத்தையோ, உடல் நோயையோ பொருட்படுத் தாமல் ஊர்தோறும் சுற்றி மக்களுக்குத் தேசீய உணர்ச்சியை ஊட்டி வந்த தோடு, இடையிடையே நூல்கள் பல எழுதி வந்தார். சுமார் முப்பதுக்கு மேற்பட்டநூல்கள் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சில வருமாறு:- சச்சிதானந்த சிவம், மோட்ச சாதன ரகசியம், ராமானுஜ விஜயம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரமும் உபதேசங்களும், விவேகானந்தர் சரித்திரமும் உபதேசங்களும், சங்கர விஜயம், நெட்டாஜி வீரரத்தின பாஜிப் பிரபு, சிவாஜி, தேசிங்கு ராஜன், நளினசுந்தரி அல்லது நாகரிகத்தின் தடபுடல் முதலியன. சிவனார் சிவத்தோடு கலந்த செய்தி கேட்டு, காசி வாசியும் சிவனாரிடம் பக்தி பூண்டவர்களில் ஒருவருமான பா. ஆதிமூர்த்தி பின்வருமாறு புலம்பினார்:- 1. இடியொரு மலைமேல் நின்று மிடித்தெனத் தருமங் கூறி அடிமையைத் தகர்த்தங் கெய்தும் அருஞ்சிறைப் போகம் துய்த்தாய் கடமையும் துயரும் ஒன்றாய்க் கலந்தனு பவத்தில் கொண்ட சுடருடைச் சிவமே யுன்போல் தொண்டரிவ் வுலகி லுண்டோ. 2. ஆயுதம் கரத்தில் கொள்ளேன் அமரிலென் றன்று காந்தி கூயபோ தொன்னார் வீழக் கொல்படை யெடுப்பே னென்று நீயலா தெவரே சொன்னார் நெடுங்கடற் பரத நாட்டில் தூயமா தவனே எங்கள் சுப்பிரமணிய தேவே. 3. வம்பராம் பகைவ ருன்றன் மனநிலை மாற வேண்டித் துன்புறு நோயிற் பற்றித் துயர்ச்சிறை யடைத்த ஞான்றும் அன்பெலாம் நாட்டிற் கீந்தே யனுபவித் தசையா நெஞ்சோ டிம்பரி லுலகோர் போற்ற இருந்தவம் புரிந்து நின்றாய். 4. மாரத வீர ராகி வழிவழி யடிமை பூண்ட தேரறி வுடையோர் தம்மைத் தெய்வமாய் என்றும் போற்றப் பேரெழிற் கோவில் காண்பான் பிழையறு பணிமேற் கொண்டு பாரத புரியும் கண்டாய் பகைவரும் துணுக்கம் கொள்ள 5. வாழிநீ சிவமே யுன்றன் வழிவரு பரத நாடும் பாழியந் தடந்தோளனும் பணிமொழிப் பாவைமாரும் தாழுறா தடிமை நீங்கிச் சமரச முயர்ந்து நீண்ட ஊழிநா ளுலகம் போற்ற வுயர்ந்தறி வோங்கி மாதோ. 1. இருவரையும் சந்திக்கச் செய்தது, பரலி. சு, நெல்லையப் பரின் மூத்த சகோதரர் பரலி. சண்முகசுந்தரம் பிள்ளை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. கவிகுலக் கோன் பாரதியாரைப்பற்றிப் பேசப் புகுமுன் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவரை நேரில் பார்ப்பதற்கு முன்னர், அவருடைய தோற்றம், பேச்சு. கவிதாசக்தி முதலியவை என்னுடைய கற்பனையில் மிகவும் உயர்ந்து நின்றன. அவர் ஒரு சிறந்த கவிஞர் என்று பரலி நெல்லையப்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். நெல்லையப்பரும் நானும் தேசபக்தன் பத்திரிகையில் பணியாற்றியவர் களென்பதை அன்பர்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை. கவிஞர் என்றால். வாட்டஞ் சாட்டமாயிருப்பார், வைதிக கோலத்துடன் விளங்குவார், கலகலத்துப் பேசவோ சிரிக்கவோமாட்டார், லேசாக ஒரு புன்முறுவல், ஏகதேசமாக இரண்டொரு வார்த்தை இவற்றைத்தான் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று இப்படியெல்லாம் என் கற்பனை உழன்றுகொண்டிருந்தது. ஆனால் அவரை நேரில் பார்த்த பிறகு என் கற்பனைக்கோயில் சரிந்துவிட்டது. இங்ஙனம் அவர் என் கற்பனையில் முதலில் ஏறிநின்றதற்கும் பின்னர் இறங்கிவிட்டதற்கும் அவர் காரணமல்ல; என்னுடைய அறியாமை தான் காரணம். கவிதையினுடைய சக்தி என்ன, கவிஞனுடைய லட்சணமென்ன, இவைகளைப்பற்றி அப்பொழுது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்பொழுது மட்டுமென்ன? உண்மைக் கவிஞர்களைப்பற்றி அறிந்துகொள்வதென்பது அவ்வளவு எளிதன்று என்ற அளவுக்கு இப்பொழுது தெரிந்துகொண்டிருக் கிறேன். மகாகவி களுடைய கவிதைகளை மானிட சமுதாயம் இன்னும் படிக்க வில்லை. ஏனென்றால், மகாகவிகள்தான் அவைகளைப் படிக்க முடியும் என்ற ஓர் அறிஞனுடைய வாக்கு எவ்வளவு உண்மை! எவ்வளவு உண்மை!! 1919ஆம் வருஷம் மார்ச்சு மாதம். பாரதியார் ஒரு நாள் காலை சுமார் பத்தரை மணிக்கு தேசபக்தன் காரியாலயத்திற்கு வந்தார். அப்பொழுதுதான் நான் அவரை முதன்முதலாகப் பார்த்தது. சுங்குத் தலைப்பாகை; நெற்றியில் குங்குமப் பொட்டு; நறுக்கு மீசை; ஓப்பன் கோட்; கழுத்தில் நெக் டை; காலருக்குப் பதிலாக நீலநிறத் துண்டு; குழிந்த கன்னங்கள்; ஆனால் ஒளி வீசும் கண்கள்; வாயில் நீண்ட சுருட்டு; இந்தக் கோலத்துடன் அவர் அப்பொழுது இருந்தார். ஏற்கெனவே நண்பர் நெல்லையப்பர் இன்று பாரதியார் நமது காரியாலயத்திற்கு வரக்கூடும் என்று சக உதவி ஆசிரியர் களாகிய எங்களுக்குத் தெரிவித் திருந்தபடியால், அவர் வருகையை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தோம். வந்ததும் அவர் நேரே ஆசிரியர் முதலியார் இருக்கும் அறைக்குச் சென்று சிறிது நேரம் அளவளாவிவிட்டு, பிறகு உதவி ஆசிரியர்களாகிய நாங்கள் இருக்கும் முன்கூடத்திற்கு வந்தார். முதலியாரும், கூட வந்து எங்கள் ஒவ்வொருவரையும் அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். என்னிடம் வந்ததும் இவர்தான் சாமிநாத சர்மா என்றார் முதலியார். ஓ! இவர்தான் போர்வீரரோ என்று சொல்லிக் கொண்டே, வாயிலிருந்த சுருட்டை எடுத்துவிட்டு, உரக்கச் சிரித்தார் பாரதியார். அவர் வாயிலிருந்து வெளிவந்த சுருட்டுப் புகை என் முகத்தில் படர்ந்தது. இப்படி அவர் சிரித்ததும், என் முகத்தில் படரும் படியாகப் புகை விடுத்ததும் எனக்கு ஒருமாதிரியாகப் பட்டது. நான் அவமானத்திற்குள்ளானதாக உணர்ந்தேன். என் உணர்ச்சியை நண்பர் நெல்லையப்பர் தெரிந்துகொண்டார். பாரதியார் சிறிதுநேரம் இருந்துவிட்டுப் போய் விட்டார். அவர் போனதும் நெல்லையப்பர் என்னிடம் வந்து, அவர் சிரித்ததன் காரணத்தை விளக்கிக் கூறினார். தேசபக்தன் முதற்பக்கத்தில், சுயராஜ்யப் போர் முனையிலிருந்து என்ற தலைப்பின்கீழ் நான் ஒரு போர் வீரனாகத் தோன்றி எழுதிக் கொண்டிருந்தேனல்லவா, அதைப் பாரதியார் படித்திருக்கிறார். அந்தப் பகுதியை ரசித்தார் போலும். இந்தப் போர்வீரர் யாரென்று, தமது அருமந்தன்ன சீடரும் நண்பருமான நெல்லையப்பரைக் கடித மூலம் விசாரித் திருக்கிறார். பாரதியாருக்கும் நெல்லையப்பருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதும், இருவரும் கடிதங்கள் மூலம் அடிக்கடி பேசிக் கொள்வர் என்பதும் அன்பர் பலருக்குத் தெரிந்திருக்கலாம். பாரதியாரின் சுதேச கீதங்களை முதன்முதலாகத் துணிந்து வெளி யிட்டவர் நெல்லையப்பர் தான். இதனால் இவரிடத்தில் பாரதியாருக்கு விசேஷ பிரீதியுண்டு. தம்பீ என்று உரிமையோடு இவரை அழைப்பார். இவர்மூலம் பாரதியார் என்னைப் பற்றி ஒருவாறு தெரிந்துகொண்டிருந்தார். ஆனால் என் உருவத்தை அவர் பார்த்ததில்லை. இந்தப் போர் வீரன் அவருடைய கற்பனையில் எப்படித் தோன்றியிருந்தானோ தெரியாது. என்னை நேரில் பார்த்ததும் அவருக்குச் சிரிப்புண்டானதில் வியப்பில்லை. ஏனெனில், ஒரு போர்வீரனுக்கு நேர்மாறான உருவத்திலல்லவோ என்னைக் கண்டார்? என்னுடைய எழுத்துக்கள் விறுவிறுப்பாக அவருக்குப்பட்ட போதிலும், என்னுடைய உருவம் அவருடைய நகைக்கு இலக்காகியது. என் உடலைப் பேணி வளர்க்க வேண்டுமென்று எனக்கு அறிவுறுத்துகின்ற முறையிலேயே அவர் என்னைப் பார்த்து உரக்கச் சிரித்தாரே தவிர வேறொன்று மில்லை. அவர் கள்ளமற்ற உள்ளம் படைத்தவர். இதனால் அவர் எப்பொழுதுமே யாருடனும் கலகலத்தே பேசுவார்; உரக்கவே சிரிப்பார். இப்படியெல்லாம் விவரித்துக் கூறி எனக்கு ஆறுதல் அளித்தார் நண்பர் நெல்லையப்பர். பாரதியர், ஓரிடத்தில் தேவியை நோக்கி வரங்கேட்கின்றார்:- தோளை வலியுடைய தாக்கி - உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி வாளைக் கொண்டுபிளந்தாலும் - கட்டு மாறா உடலுறுதி தந்து - சுடர் நாளைக்கண்டதோர் மலர்போல் - ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து - மத வேளை வெல்லுமுறை கூறித் - தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும். இதிலிருந்து பாரதியாரின் உள்ளக்கிடக்கை ஒருவாறு புலனாகிற தல்லவா? அவர் என் உருவத்தை நோக்கி உரக்கச் சிரித்தது குறித்து நான் ஏன் தலை குனிய வேண்டும்? ஆக, பாரதியாரைப்பற்றி நான் எப்படிக் கற்பனை செய்துகொண்டிருந்தேனோ அப்படியே அவரும் என்னைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது. இந்த ஒரு சிறிய விஷயத்திலாவது, பாரதியாரோடு என்னை இணைத்து வைத்துக் கொண்டு பார்க்கிறேன்! ஆனால் இஃதெப்படி எனக்குப் பெருமை யளிக்கும்? கவிகுலக்கோனாகிய அவர் எங்கே? எழுத்துலகத்தில் சிறுநடை பயிலும் நான் எங்கே? அவர் உயர்ந்த இமயம்; நான் ஒரு சிறு மண்மேடு. 1920ஆம் வருஷம் நவம்பர் மாதம் அவர் சென்னை போந்து சுதேசமித்திரன் உதவி ஆசிரியர்களுள் ஒருவராக அமர்ந்ததுமுதல் 1921ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் அமரரானவரை அவருடன் ஒருவாறு பழகியிருக்கிறேன். ஆனால் நெருக்கமான பழக்கமென்று சொல்ல முடியாது. அந்தக் காலத்தில் அவருடைய மேதாவிலாசம் எனக்குப் புலப்படவில்லை. எல்லோரையும்போல் தான் அவர் எனக்குப் புலப்பட்டார். எனக்கு மட்டுமென்ன, என்னைப்போன்ற இளைஞர் பலருக்கும் அவருடைய அருமை பெருமைகள் அந்தக் காலத்தில் புலப்படாமல்தான் இருந்தன. அவரை ஒரு பித்தரென்று கூட சிலர் கருதியதுண்டு. உண்மையில் அவர் ஒரு பித்தர்தான். ஆனால் கடவுட்பித்தர்; நாட்டு வெறிகொண்டவர். இந்த உண்மை அவருடைய பிற்காலத்திலன்றோ பலருக்கும் புலனாகியது? சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமானால், மகான்களென்றும் தீர்க்க தரிசிகளென்றும் யாரார், அவர்களுடைய பிற்காலத்தவரால் போற்றப்படுகின்றார்களோ அவர்கள், அவர்களுடைய சமகாலத்த வரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லையென்ற உண்மையைக் காண்போம். பாரதியார் விஷயத்தில் இஃது உண்மை யாகவே இருந்தது. உண்மைப் பொருளினை உலகினுக்கு எடுத்தோதிய மகாகவி களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூர்ந்து நோக்கினோமானால், ஒன்று, அவர்கள் பித்தர் போலவே இருந்து வந்திருக்கிறார்கள்; அல்லது அவர்களுடைய வாழ்க்கை துன்ப மயமாக இருந்திருக் கிறது. மேலெழுந்தவாரியாக இப்படித் தோன்றியபோதிலும் உண்மையில் அவர்களை ஜீவன் முக்தர்களென்றே சொல்லவேண்டும். அவர் களுடைய வாழ்க்கை தும்பை மலர் போன்றதென்பதில் ஐயமில்லை. ஜீவன் முக்தர்களுடைய லட்சணமென்ன? ஜீவன்முக்தர்கள், சுகத்திலே சந்தோஷப் படுவதில்லை; துக்கத்திலே சோர்வு கொள்வதுமில்லை. கடமைகளை ஒழுங்காகச் செய்வர். ஆனால் எதிலும் பந்தம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஜாதி மத பேதங்களைக் கடந்தவர்கள். எல்லாரிடத்திலும் அன்பாகவும் வினய மாகவும் நடந்து கொள்வர். விருப்பு வெறுப்பு என்பது அவர்களுக்கு இல்லை. நிறைந்த சந்தடியின் மத்தியில் அமைதியை இழக்காமலிருப்பர். இந்த லட்சணத்திற்குப் பொருந்தியவராகவே பாரதியார் திகழ்ந்தார். 1921ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் பதினோராந்தேதி பாரதியார் அமர நிலையடைந்த பின்னரே, அவருடைய அருமை பெருமைகளைத் தமிழ்நாடு அறியத் தொடங்கியது. சிறப்பாக இளைஞருலகம் அவருடைய தேசீய கீதங்களில் ஈடுபட ஆரம்பித்தது. என்னைப் பொறுத்த மட்டில் சொல்லிக் கொள்கிறேன். அவருடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் அவைவெளியான அந்தந்தக் காலங்களில் படித்து வந்ததன் விளைவாக, அவர் நம்மெல்லோரை யும்போல் ஒரு சாதாரண மனிதர் அல்லர் என்பதை உணரத் தலைப்பட்டேன். என் சிற்றறிவையும் குறுகிய இதயத்தையும் லேசுலேசாகத் துலக்கிக்கொண்டு பார்க்கிறபோது அவர் என் மதிப்பிலே படிப்படியாக உயர ஆரம்பித்தார். அவரிடம் பக்தியே கொண்டேன். அவர் பலகோணங்களில் வைத்து மதிப்பிடப்பட வேண்டிய வைரம் என்பதை உணர்ந்தேன். இப்பொழுது அவரை ஒரு மகாகவியாக வழிபடுகிறேன். 1920ஆம் வருஷம் பாரதியார் சென்னை போந்த காலத்தில், சத்தியாக்கிரக இயக்கமும் கிலாபத் கிளர்ச்சியும் மும்முரமாக இருந்தன. முலிம்கள் காங்கிரஸில் அதிக பங்கெடுத்துக் கொண் டிருந்தார்கள். காந்தியடிகளின் செல்வாக்கு உச்சத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்தக் காலத்தில் அரசியல் சம்பந்தமான பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் திலகர் கட்டத்திலேயே நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டங்களில் நாட்டுப் பற்றும் தியாக உணர்ச்சி யும் மேலிட்டிருக்கும். கூட்டங்கள் மாலையிலேயே நடைபெறும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், முலிம் சகோதரர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிடும். அதற்காகக் கூட்டத்தின் நடவடிக்கைகள் சிறிது நேரம் தள்ளி வைக்கப்படும். ஆனால் கூட்டம் கலைந்து போகாது. அதாவது, முலிம் சகோதரர்கள் தவிர, மற்றவர்கள் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அந்தச் சமயத்தில் உணர்ச்சியூட்டக் கூடிய தேசீயப் பாடல்கள் பாடப்பெறும். இவற்றுள் பாரதியாரின் தேசீயப்பாடல்தான் அதிகமாக இருக்கும். பாரதியாரே சில சமயங் களில் பாடுவார். ஒரு சமயம் அல்லா, அல்லா, அல்லா என்ற தொடக்கத்துப் பாடலைப் பாடினார். அஃது இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு சமயம் பாரத சமுதாயம் வாழ்க வாழ்கவே என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாடினார். அதுவும் என் உள்ளத்தில் உறுதியாக நிலைத்திருக்கிறது. இந்தக் காலத்தில் பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் அலுவல்களை முடித்துக்கொண்டு, கடற்கரைக் கூட்டங்களுக்கு வந்துவிடுவார். கால் நடையில் தான். அப்பொழுதெல்லாம் வாகன வசதிகளும் அதிகமில்லையல்லவா? அவருடைய எழுத்து நடை எவ்வளவு எளிமையுடையதா யிருக்குமோ அவ்வளவு வேகமாக இருக்கும் அவருடைய கால்நடை காரியாலயத்தை விட்டு நேரே பூக்கடைக்குச் செல்வார். ஒரு செண்டு அல்லது கட்டு மல்லிகைப்பூ வாங்குவார். வாங்கி இரண்டு மூன்று துண்டுகளாக்கி, பெரிய துண்டை கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொள்வார். மற்ற இரண்டு துண்டுகளை இரண்டு காதுகளில் அணிந்து கொள்வார். அங்கிருந்து, அதாவது பூக்கடையிலிருந்து நேரே கடற்கரைக் கூட்டத்திற்கு வருவார். கூட்டங்கள் நடைபெறுகிற காலத்தில் மட்டும் இப்படி வருவார் என்பதல்ல. மற்ற நாட்களிலும் பூக்கடைப் பக்கம் போகாமலிருக்க மாட்டார். புஷ்பங்களிடத்தில் அவருக்கு வெகு பிரியம். கவியல்லவா? என்னைப் போன்றவர்கள், அவர் ஒரு பிறவிக்கவி என்பதை அப்பொழுது உணர்ந்துகொள்ளவில்லை யானாலும், அவரென்னவோ ஒரு கவியாகத்தான் வாழ்ந்துகொண் டிருந்தார். ஏன்? கவிதையாக, ஒரு காவியமாக வாழ்ந்து கொண் டிருந்தார் என்று சொல்லவேண்டும். கவிதை எழுதுபவன் கவியன்று; கவிதையாக வாழ்வோன், வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்கிறான் ஒரு கீழ் நாட்டு அறிஞன். இந்த உண்மையான வாசகத்தின் உட்கருத்துக்குப் பொருத்தமாகவே பாரதியார் வாழ்ந்து வந்தார். ஆனால் இதை அவருடைய பிற்காலத்திலேயே, அதுவும் அவருடைய எழுத்துக்களைப் படிக்கப் படிக்கத்தான் என்னைப் போன்றவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது. பாரதியார், இனிமையான சாரீரம் படைத்தவரல்லர்; ஆனால் உணர்ச்சி யோடு பாடுவார்; கேட்டுக் கொண்டிருக்கிறவர்களையும் உணர்ச்சி வசப்படுத்திவிடுவார். காரணம், அவர் உணர்ச்சிமயமா யிருந்தார். ஒரு கவிஞனிடத்திலேயுள்ள உணர்ச்சிதான், பிறருடைய உணர்ச்சிகளுக்கு ஊற்றுக்களமாயிருக்கிறது என்பது ஒரு மேனாட்டு அறிஞனுடைய வாக்கு. ஒருவனுடைய கவிதை சிரஞ்சீவி யாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டுமானால் அதற்கு அடிப்படை யில் உணர்ச்சி அமைந்திருக்க வேண்டுமென்று அறிஞர்கள் சொல்லிப் போயிருக்கிறார்கள். உணர்ச்சி எங்கிருந்து பிறக்கும்? தூய்மையான உள்ளத்திலிருந்து. பாரதியார் தூய்மையான உள்ளம் படைத்தவ ரென்பதைப் பற்றியும் அதனால்தான் அவர் கவிஞருலகத்தில் அமரராக வாழ்ந்துகொண்டிருக்கிறாரென்பதைப் பற்றியும் இங்கு அதிகம் பிரதாபிக்கத் தேவையில்லை. பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீ ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாண சுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து விட்டது. முருகா, முருகா, முருகா என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின்மீது லேசாகப் படிந்து, முருகனுடைய திருவுருவத்திற்குத் தனிச்சோபை கொடுத்தது. வருவாய் மயில்மீதினிலே வடி வேலுடனே வருவாய் என்ற சரணத்தை அவர் பாடி அதையே திரும்பத் திரும்பச் சொன்ன போது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவதுபோலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்க ளானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார். தேசபக்தன் பத்திரிகைமீது பாரதியாருக்குத் தனி அன்பு உண்டு. அதன் கருத்துக்களும் தமிழ் நடையும் அவருக்குப் பிடித்திருந்தன. இதற்காக, முதலியாரைக் காணும்போதெல்லாம் அவரைப் பாராட்டுவார். பாரதியாரின் கவிதாசக்தியைப்பற்றி, அவருடைய கவிதை களில் காணப்பெறும் அழகு, இனிமை, எளிமை கருத்து முதலியவை களைப் பற்றி, அவருடைய தெளிவான உரைநடையைப்பற்றி எவ்வளவோ பேசலாம்; எவ்வளவோ எழுதலாம்; அப்படிப் பேசியும் எழுதியும் பாரதியாரின் அதிமேதையை உலகத்திற்கு அறிமுகப் படுத்தி வைக்க வேண்டுவது அவசியமுமாகும். அந்த அரும்பணியைச் செய்ய முன்வரவேண்டுமென்று அதிமேதையர்களான தமிழ்ச் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாரதியாரின் கவிதைகளும் வசனங்களும் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இருப்பதால் அவருக்குத் தமிழ்மட்டுமே தெரியும் போலும் என்று சிலர் கருதலாம். அப்படியில்லை. அவருக்கு ஆங்கிலம், வடமொழி, ஹிந்தி முதலிய மொழிகளிலும் நல்ல பரிச்சயம் உண்டு. ஆங்கிலத்தில் சில கவிதைகள் இயற்றி யிருக்கிறார். வடமொழியில் சில கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார். உதாரணமாக, பூலோக குமாரி ஹே அம்ருத நாரி - தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே என்பன போன்ற சில கீர்த்தனைகளைச் சொல்ல லாம். அவருடைய கவிதைகள் பலவற்றில் வேத உபநிஷதங்களின் செவ்விய கருத்துக்கள் மண்டிக் கிடப்பதைக் காண்கிறோம். பகவத்கீதையை இனிய தமிழில் கொடுத்திருக்கிறார். காசிமாநகரில் படித்துக் கொண்டிருந்தபோது ஹிந்தியில் நல்ல பயிற்சி பெற்றார். ஒரு கவிஞனுடைய லட்சணங்களை நாம் சரியாகத் தெரிந்து கொண்டுவிட்டோமானால், பாரதியாரை நாம் சுலபமாகப் புரிந்து கொண்டு விடலாம். எவன் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் எளிமையும் இனிமையும் கலந்த மொழிகளால் அலங்கரித்துக் காட்டி அவைகளை வழிபாட்டுக்குரியனவாக ஆக்கி விடுகின்றானோ அதே சமயத்தில் பிற நாடுகளையும் பிறமொழி களையும் அவைகளுக்குரிய மதிப்புக் கொடுத்துப் பேசுகின்றானோ, எவன், வேற்றுமைகளுக் கெல்லாம் அப்பாற்பட்டவனாய் நின்று காட்சியளிக்கின்றானோ, அதே சமயத்தில் சமுதாயத்தின் ஒற்றுமையை நாடுகின்றானோ, எவன், கடவுட் படைப்புக்குட்பட்ட அனைத்தை யும் தன் அன்பினால் அணைத்துக் கொள்கின்றானோ, எவன். வாக்கு மனமெட்டாத பரம்பொருள்மீது அழியாத நம்பிக்கை யுடையவனா யிருக்கின்றானோ அவன்தான் கவிஞன். இந்த லட்சணங்களுக்கு முற்றிலும் பொருந்தியவராக பாரதியார் திகழ்ந்தார் என்பதை, அவருடைய கவிதை களைக்கொண்டே நாம் அறிந்துகொள்ளலாம். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம் என்று பெருமையோடு பேசுகின்ற அவர் சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று பேசி, தெலுங்கு மொழியைப் பெருமைப்படுத்துகின்றார். தமிழ் நாட்டையும் ஆரிய பூமியையும் போற்றுகின்ற அவர், பெல்ஜியத் திற்கும், ருஷ்யாவுக்கும், இத்தலிக்கும் எவ்வளவு பரிவு காட்டு கின்றார்! வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில் மானுடர் வேற்றுமை யில்லை. எண்ணங்கள் செய்கைகளெல்லாம் இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர் என்றும், ஒன்றென்று கொட்டு முரசே! அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக்கெல்லாம் என்றும் அவர் கூறுவதை உலகம் செவிமடுக்கும் நாளன்றோ உலகம் உய்யும்நாள். அவர் வாக்கினின்று மலர்ந்த ஒவ்வொரு கவிதையிலும் அவருடைய தெய்வ நம்பிக்கை ஒளி விடுவதை நன்கு காணலாம். அவருடைய அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கைதான் அவருடைய தேசபக்தியை உரமிட்டு வளர்த்தது என்று சொல்வது மிகையாகாது. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று சொல்வார்களே அந்த மாதிரிதான் பேசுவார் பாரதியார். உரைநடையாக அவர் எழுதிய எழுத்துக்களிலே இந்தத் தன்மையைப் பரக்கக் காணலாம். நண்பர் களிடத்தில் பேசும்போதாகட்டும், முன்பின் பரிச்சயமில்லாத வர்களிடத்தில் பேசும்போதாகட்டும், தம் உள்ளத்தில் என்ன தோன்றுகிறதோ அதைப்பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுவார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதென்பது அவருக்குப் புறம்பான விஷயம். இப்படி ஒளிவு மறைவின்றிப் பேசி யார் மனத்தையும் நோகச் செய்யமாட்டார். அவர் பேச்சைக் கேட்டு மனம் நொந்தவர்கள் யாருமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். மற்றும் அவர், சளசளவென்று பேசமாட்டார்; அர்த்த மில்லாத வார்த்தைகளை அடுக்கிக்கொண்டு போகமாட்டார். என்ன பேசவேண்டும், எவ்வளவு பேசவேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. சில வார்த்தைகளே பேசினாலும் அதில் ஆழ்ந்த கருத்து இருந்தது. அந்த ஆழ்ந்த கருத்தை, கேட்கின்றவர்கள் உடனுக்குடன் உணர முடியாது; சிறிது பொறுத்து சிந்தித்துப் பார்த்தால்தான் அதை உணர முடியும். ஒரு சமயம், சென்னை திலகர் கட்டத்தில் பொதுக்கூட்ட மொன்று நடந்துகொண்டிருந்தது; சத்தியாக்கிரக இயக்க சம்பந்த மான கூட்டந்தான். ஹிந்து பத்திரிகையின் ஆசிரியராயிருந்த ஸ்ரீ எ. கதூரி ரங்க ஐயங்கார், கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது பாரதியார், வழக்கம் போல், கழுத்திலும், இரு காதுகளிலும் மல்லிகை மலர்களணிந்து கொண்டு வந்தார். எப்படி வந்தார்? சாதாரணமாக, கடற்கரைக் கூட்டங்களுக்கு வரும் முக்கியதர்கள், கூட்டம் ஆரம்பித்துவிட்ட பிறகு வரும்படி நேரிட்டால், கூட்டத்தைச் சுற்றிக்கொண்டு மேடைக்குப் பின்புறமாக வந்து, மேடையின்மீதோ, மேடைக்குப் பக்கத்திலோ அமர்வார்கள். இவர்கள் வந்து அமர்வது, கூட்டத்தி லுள்ளவர்களுடைய கவனத்தை அதிகமாக ஈர்க்காது. பாரதியார் இந்த மாதிரி வரவில்லை. மேடைக்கு முன்னால் இருக்கும் ஜனக் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு, அதாவது, உட்கார்ந்திருப்பவர் களைத் தள்ளித் தள்ளிவிட்டுக்கொண்டு வந்தார். தலைவருடைய பேச்சை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இது சிறிது சங்கடமாகவே இருந்தது. ஆனாலும் யாரும் வாய்திறக்க வில்லை. நான் அப்பொழுது தேசபக்தன் பத்திரிகையின் பிரதிநிதி யாகச் சென்று கூட்டத்தின் நடவடிக்கைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். மேடையாக இணைக்கப்பட்டிருந்த பெஞ்சு களில் ஒன்றே எனது மேஜையாக இருந்தது. கீழே மணல் தரையில் அமர்ந்திருந்தேன். இப்படித்தான் எல்லாப் பத்திரிகைப் பிரதிநிதி களும் அமர்ந்து குறிப்பெடுப்பது வழக்கம். அன்று கூட்டமிகுதி யினால், பத்திரிகைப் பிரதிநிதிகள் அனைவரும் நெருக்கமாக, ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு உட்கார்ந்து தங்கள் கடமையைச் செய்துகொண்டிருந்தார்கள். கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வந்த பாரதியார், என்னையும், என் பக்கத்தில் என்னோடு உராய்ந்தாற்போல் உட்கார்ந்திருந்த ஹிந்து பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருந்த வாசுதேவய்யர் என்பவரையும் சிறிது தள்ளிவிட்டு நடுவில் உட்கார்ந்தார். எனக்குச் சிறிது ஆத்திரம் வந்தது. அவரை முறைத்துப் பார்த்தேன். என்ன, முறைத்துப் பார்க்கிறீர்? என்று கேட்டார். ஒன்றுமில்லை. கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு இப்படிக் குறுக்காக வந்தீர்களே? சுற்றிக் கொண்டு வரக்கூடாதா? என்று சொன்னேன். நாம் சுற்றுவழி செல்லமாட்டோம்; நேர்வழிதான் செல்வோம் என்று உரக்கச் சொல்லிக்கொண்டே, என் ஒரு துடைமீது ஓங்கி ஓர் அறை அறைந்தார். அன்பினாலும் பரிச்சயத்தினாலும் கொடுத்த அறை தான். அறைந்து விட்டு ஹ ஹ வென்று சிரிக்கவும் செய்தார். நான் வாய் திறக்கவில்லை. ஏதாவது பேச முடியுமா அப்பொழுது? ஆனால் தலைமை வகித்துப் பேசிக்கொண்டிருந்த கதூரிரங்க ஐயங்காரும், மேடைமீது அமர்ந்திருந்த சிலரும் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். எனக்கு, ஏன் அவரைக் கேட்டோம் என்றிருந்தது. அவர் இவ்வளவு உரக்க பதில் சொல்வார் என்று எனக்குத் தெரியாது. என் துடை மீது அறை விழும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை. கூட்டத்தின் அமைதியைக் குலைக்கின்ற முறையில் இப்படி உரக்கப் பேசுகிறாரே என்று வருத்தப்பட்டேன். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் என் மனத்தில் பதிந்து விட்டன. சிறிது காலத்திற்குப் பிறகு அவை என் சிந்தனையைக் கிளற ஆரம்பித்தன. நாம் சுற்றுவழி செல்லமாட்டோம்; நேர்வழிதான் செல்வோம். இந்த இரண்டு வாக்கியங்களையும், மனிதர்கள் தங்களுடைய சொந்த விவகாரங்களிலாகட்டும், பொது விவகாரங்களி லாகட்டும் நடைமுறையில் கொண்டு வந்து விடுவார்களானால், கடவுள் ராஜ்யம் என்பது இந்தப் பூவுலகில் வந்து இறங்கிவிடு மென்பதில் என்ன சந்தேகம்? இந்த இரண்டு வாக்கியங்களையும் பற்றி வெகுவாக வியாக்கியானம் செய்துகொண்டு போகலாம். அன்பர்களே! இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் உங்கள் சிந்தனை யில் சிறிது இடங் கொடுங்கள். பொதுவாக, கவிஞர்கள் ஒரு பொருளின் ஆழத்தில் சென்று பார்க்கக்கூடியவர்கள். இந்த ஆற்றல் இருப்பதனால்தான் அவர்கள் கவிஞர் களாகப் பிரகாசிக்கிறார்கள். அவர்கள் சர்வ சாதாரணமாகச் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆழ்ந்த பொருள் பொதிந் திருப்பதற்குக் காரணம் இதுதான். அவர்கள் சிந்தனையின் பெட்டக மாக இருக்கிறார்கள். அந்தப் பெட்டகத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் பிறருடைய சிந்தனையைத் தூண்டிவிடுவ தாயிருக் கிறது. இப்படியே அவர்கள் உணர்ச்சி மயமாயிருக்கி றார்கள். அந்த உணர்ச்சியிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் மற்றவர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுவதாயிருக்கிறது. பாரதியாருடைய பாடல்கள், எத்தனை பேருடைய சிந்தனையைத் தூண்டிவிட்டு அவர் களைக் கர்மவீரர்களாக்கியிருக்கின்றன என்பதைப் பற்றி இங்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. கவிஞர்கள், ஆழத்திலே பார்க்கிற சக்தியுடையவர்களாயிருப்ப தனால் தான் ரவி பாராத இடத்தை யெல்லாம் கவி பார்ப்பான் என்ற வசனம் எழுந்தது. சாதாரண நிலையிலுள்ள நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அதன் ஒரு பக்கம்தான் நமக்குத் தெரிகிது. அதற்குப் பல பக்கங்கள் உண்டென்று நம்மால் நினைக்கக் கூட முடிவதில்லை; அதனுடைய தன்மைகள், சக்திகள் முதலிய எல்லாம் நமக்கு எங்கே புலனாகப் போகின்றன? உதாரணமாக, சூரியனை எடுத்துக் கொள்வோம். தினந் தோறும் அவன் காலையில் தோன்றி மாலையில் மறைவதைப் பார்க்கிறோம். ஆனால் அவன் லட்சணமென்ன, அவன் என்னென்ன செய்யவல்லான் என்பதைப் பற்றிச் சிறிது சொல்லுமாறு நம்மைப் பார்த்து யாராவது கேட்டால், நாம் யோசிக்கவே செய்வோம். அதே பாரதியாரைப் பார்த்துக் கேட்கட்டும்? உடனே பதில் சொல்வார்:- தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை ஓதி யுணர்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணை இனிதென்று உரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி விண்ணை அளக்கும்ஒளி மேம்படுமோர் இன்பமன்றோ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தைசெய்யும் மேலவரும் அஃதோர் விரியும் ஒளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞானமிசை ஒப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினை காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன். இங்ஙனம் ஒரு பொருளின் ஆழத்தில் சென்று காண்பதோ டல்லாமல், பிறருக்குக் காட்டுவதும் கவிஞர் பரம்பரைக்குரிய தனிப்பண்பாகும். கவிஞர்கள் ஆழத்திலே சென்று பார்க்கிறவர்கள் மட்டுமல்ல, தூரத்திலே சென்று பார்க்கிறவர்கள்கூட; காலத்தையும் இடத்தை யும் கடந்து சென்று காணும் ஆற்றல் படைத்தவர்கள். கவி என்ற சொல்லுக்கு, முக்காலத்தையும் அறிந்தவர்கள் என்றே பொருள் கூறிப்போந்தனர் வடமொழியாளர். எங்குமாய் யாவுமாய் நின்ற முழு முதற்பொருள், கவி என்ற சொல்லாலேயே அழைக்கப்பட்டது. இதனாலேயே, கவிஞர்களைத் தீர்க்கதரிசிகளென்று அழைப்பது மரபா யிருந்து வருகிறது. அவர்கள், வருங்காலத்தில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சூட்சுமமாகச் சொல்லிவிடு வதில் வல்லவர்களா யிருக்கிறார்கள். பாரதியார் இத்தகைய தீர்க்க தரிசிகளில் ஒருவராக விளங்கினார் என்பதை, அவருடைய எழுத்துக்களிலிருந்தே பலவகையாக எடுத்துக் காட்டலாம். 1918ஆம் வருஷம் முடிவுற்ற முதல் மகாயுத்தத்தின்போது, வினாவிடை ரூபமாக அவர் கூறியுள்ள சில கருத்துக்களைப் பாருங்கள்:- வினா:- இந்த யுத்தம் முடிந்த பிறகு ஐரோப்பாவில் என்ன மாறுதல்கள் தோன்றும்? விடை:- தொழிலாளர்களுக்கும் திரீகளுக்கும் அதிக அதிகாரமேற்படும். வியாபாரிகளுக்குக் கொஞ்சம் சிரமம் ஏற்படும். கிழக்கு தேச மதக் கொள்கைகள் ஐரோப்பாவில் கொஞ்சம் பரவலாம். வினா:- சர்வதேச விதிக்கு வலிமை அதிகமாய் இனிமேல் இரண்டு தேசத்தாருக்குள் மனதாபங்கள் உண்டானால், அவற்றைப் பொது மத்தியதர் வைத்துத் தீர்த்துக்கொள்வதே யன்றி, யுத்தங்கள் செய்வதில்லையென்று கொள்கை ஊர்ஜிதப் படாதோ? விடை:- நிச்சயமில்லை: அந்தக் கொள்கையைத் தழுவி ஆரம்பித்திலே சில நியதிகள் செய்யக் கூடும். பிறகு அவற்றை மீறி நடக்கவும் கூடும், ஐரோப்பிய சரித்திரத்தையும், சர்வதேச சங்கம் தோன்றி மறைந்த வரலாற்றையும் கூர்ந்து நோக்குகிறவர்களுக்கு, இவை யனைத்தும் எவ்வளவு உண்மையாக நடைபெற்றனவென்பது நன்கு புலனாகும். பாரதியார், உயிரோடிருந்த காலத்தில், அவரைத் தமிழ்நாடு சரியாக அறிந்துகொண்டு ஆதரிக்கவில்லை யென்றும் அவரை வறுமையிலே வாடவிட்டதென்றும் சிலர் கருதுகின்றனர். பாரதியார் மீதுள்ள அன்பினாலும் மதிப்பினாலுமே இவர்கள் இப்படிக் கருதுகிறார் களென்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. உண்மையில், இவர்கள் கருதுகின்றபடி அவர் ஆழ்ந்த வறுமையில் வாடி யிருக்கவில்லை; ஆனால் பொருளாதார வசதி மிகுந்தவராகவும் இருக்கவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலே அவரை வைத்து அவருடைய வாழ்க்கை நிலையைப் பார்க்கவேண்டும். அவருடைய கவிதா சக்திக்கு மலர்ச்சி ஏற்பட்டு வந்தபொழுது, தமிழ்நாட்டில் தேசீய இயக்கம் அரும்பு விட்டுக்கொண்டிருந்தது. அரசியல் மேடையில் ஆதிக்கஞ் செலுத்தி வந்தவர்கள், தேசீய இயக்கத்தைப் பகிரங்கமாக ஆதரிக்க அஞ்சினர். அறிஞர்களென்று கருதப் பட்டோரிடையே, ஆங்கில மொழிக்கு அதிக மதிப்பு இருந்தது; ஆங்கில ஆட்சியின் நிருவாகத் திறமையிலும் ஒரு வித பிரமை இருந்தது. இத்தகைய சூழ்நிலையிலிருந்து கொண்டுதான், பாரதியார் தமது வாழ்க்கையை நடத்தவேண்டியதாயிருந்தது. எல்லோரையும் போல் அவர் ஒரு சாதாரண மனிதராக, அதாவது அறிவு, உணர்ச்சி, கொள்கை, குறிக்கோள் இவற்றுள் ஏதொன்றும் இல்லாத வராக வாழ்க்கையை நடத்தியிருப்பாரானால், அந்த வாழ்க்கை வேறு விதமாக இருந்திருக்கும். அவர் உயிரோடிருக்கிற வரையில் அவருடைய உற்றாரும் உறவினாரும் அவரைச் சூழ்ந்து கொண்டிருப்பர்; ஆனால் இப்பொழுது நம் நினைவிலே இருந்து கொண்டிருக்கமாட்டார். பாரதியார், கவிஞராகப் பிறந்தார்; கவிஞராகவே வாழ்ந்தார். இதனால்தான் உலகியற் செல்வங்களில் அவர் மனம் நாடவில்லை; அவற்றில் தம்மைப் பறிகொடுத்துவிட அவர் மறுத்துவிட்டார். அவரையும் மீறி, அவரையும் அறியாமல் அவருக்குப் பொன்னும் பொருளும் கிடைத்திருக்குமானால், அவற்றை வைத்துக் காப்பாற்றி யிருக்கமாட்டார்; அந்த வித்தையை அவர் கற்றுக்கொள்ளவில்லை; கற்றுக் கொடுத்திருந்தாலும் கற்றுக் கொண்டிருக்கமாட்டார்; அப்படிக் கற்றுக் கொண்டிருந்தால், அவருடைய கவிதை ஊற்று அடைத்தல்லவோ போயிருக்கும்? பொதுவாக, நிலையான புகழ்படைத்த கவிஞர்களிற் பெரும் பாலோருடைய வாழ்க்கையை நாம் பரிசீலனை செய்து பார்த்தோ மானால், அவர்கள் உலகியற் செல்வத்திலே திளைத்துக் கொண் டிருந்ததாகத் தெரியவில்லை; அதனை நாடிச் சென்றதாகவும் தெரிய வில்லை. இதனால், அவர்கள் வறுமையிலே உழன்று கொண்டிருந் தார்களென்று சொல்லிவிட முடியுமா? அவர்கள், பொருளில்லாக் குறையை ஒரு குறையாகவே கருதவில்லை. மற்றவர்கள், அவர் களைப் பொருட்குறைவுடையவர்களென்று கருதியிருக்கலாம்; அதற்காக ஏசிப் பேசியும் இருக்கலாம். அது வேறு விஷயம். அவர்களை - அதாவது கவிஞர்களை - அவர்களுடைய நிலையில் வைத்தன்றோ பார்க்க வேண்டும்? கவிஞர்கள் வாழும் உலகம் வேறே. அந்த உலகத்தை நாம் வாழும் உலகத்தைக் கொண்டு கணித்துப் பார்ப்பது பொருந்தாது. எவை எவை இல்லாவிட்டால் வாழ்க்கை நடைபெறா தென்று நாம் நினைக்கிறோமோ அவை இல்லாமலேயே கவிஞர் களுடைய வாழ்க்கை, சர்வ சுலபமாக, சர்வ சரளமாக நடைபெறுகிறது. அதுபோல, அவர்களுக்கு வேண்டுவனவெல்லாம் நமக்கு - கவிஞர்கள் - எல்லாரையும்போல் வாழ்க்கையை நடத்த விரும்புவதில்லை. பாரதியாரே கூறுகிறார் ஓரிடத்தில்:- தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? கவிஞர்கள், குறைந்த தேவையைக் கொண்டு நிறைந்த வாழ்க்கையை நடத்துகின்றவர்கள். இதனால் அவர்கள் வாழ்க்கை யில் ஆசாபங்கம் அடைவதில்லை. பொருளை விரும்பியோ, புகழை நாடியோ அவர்கள் செல்வதில்லை. இதனால், மற்றவர்கள் தங்களை ஆதரிக்கவில்லையென்றோ, போற்ற முன் வரவில்லை யென்றோ ஏங்குவதில்லை. கவிஞர்கள், உலகத்தாரிடையே வாழ்ந்த போதிலும், உலகத்தாரோ டொட்டி வாழ்வதில்லை. அவர்களுக்கு, உலகத்தில், எது நித்தியம், எது அநித்தியம் என்பது நன்கு தெரியும். நித்தியத்தை நாடிச் செல்கின்ற அவர்கள், அநித்தியத்தை நாடி, வியர்க்க வியர்க்க ஓடுகின்றவர்களோடு போட்டி போடுவதில்லை; அந்த வித்தையைக் கற்றுக்கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. இதனால், உலகத் தினர், தங்களைப் பித்தரென்றும் பேயரென்றும் பேசுகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளாமலில்லை; ஆனால் அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இப்படிச் சொன்னதனால், கவிஞர்கள், உலக அனுபவ மில்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்களைப்போல் உலக அனுபவம் அறிந்தவர்கள், உலகத்திலே உழன்றுகொண் டிருக்கிறவர்களில் யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களுடைய சிருஷ்டிகளில், அவர்களுக்குள்ள உலக அனுபவத்தை பரக்கக் காணலாம். ஆனால் இந்த உலக அனுபவங்கள், தங்களுடைய தனித்துவத்தைத் தொட்டுக் கறைப்படுத்திவிடாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்; தற்காத்துக் கொள்ளுஞ் சக்தி அவர்களுக்கு நிரம்ப உண்டு. பாரதியாருடைய உலக அனுபவத்திற்கு நாம் வேறெங்கும் செல்லத் தேவையில்லை. அவருடைய பாஞ்சாலி சபதம் ஒன்றே போதும்; கட்டுரைகளிலிருந்தும் அநேக உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். தவறி விழுபவர் தம்மையே தாயும் சிரித்தல் மரபன்றோ? - நண்ணும் விருந்தினர்க்கன்றியே நம்முள் நாம் உபசாரங்கள் செய்வதோ? இப்படி ஓரிரண்டு உதாரணங்களைக் கொண்டு இங்குத் திருப்தி யடையலாம். மற்றும், கவிஞர்களை, அவர்களுடைய சமகாலத்தவர் சரியாக அறிந்துகொள்வதில்லை; கவிஞர்களும், தங்களை அறிவித்துக் கொள்வதில்லை; அறிவித்துக் கொள்ளவும் மாட்டார்கள். அப்படி அறிவித்துக் கொள்கிறவர்கள், சமகாலத்தவரால் மதிக்கப்பட மாட்டார்கள்; வருங்காலத்தில் புகழுடம்பு அவர்களுக்குக் கிட்டாது. அலைகடலோ, வானத்து இடியோ ஓசை கொடுத்து நம்முடைய கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டுவிடுவதுபோல், கவிஞர்களும், தங்களுடைய கவிதா சக்தியை வெளிப்படுத்துவதன் மூலம், தம்முடைய கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டு விடுகிறார்கள். பாரதியாரைப் பொறுத்தமட்டில், அவர், இல்லாமையை உணரவில்லை; அவரோடு சேர்ந்து வாழவேண்டிய அவசியத்துக் குட்பட்டிருந்தவர்கள், இந்த இல்லாமையை உணர்ந்திருக்கலாம்; அவருடைய பரந்த அன்பு, அவர்களை அநேக சந்தர்ப்பங்களில் தர்ம சங்கடமான நிலையில் வைத்திருக்கலாம். ஆனால் பாரதியாருக்கு இவையெல்லாம் புறம்பான விஷயங்கள். அவர் எப்பொழுதும் நிறைந்தவராகவே வாழ்ந்தார். அவருடைய சூழ்நிலையானது, உலகரீதியான சில குறைகளின் பக்கம் அவரை எப்பொழுதாவது இழுத்துச் சென்றாலும், அவர், அந்தப் பக்கத்திலிருந்து வெகு சடுதியில் திரும்பி வந்துவிடுவார்; எங்கும் நீக்க மற்ற நிறைகின்ற பொருளின்மீது நாட்டஞ் செலுத்தத் தொடங்கி விடுவார். அப்பொழுது உலகம் அவருக்குப் புதிய சோபையுடன் காட்சியளிக்கும்; அந்தக் காட்சியிலிருந்து கவிதைக் கதிர்கள் தோன்றும். இல்லாமையை உணராத பாரதியார், பிறர் தமக்கு உதவி செய்யவில்லையேயென்று ஒருபொழுதும் ஏங்கி நின்றதில்லை. எந்த ஒரு காரணத்திற்காகவும் ஏக்கம் அவரை ஆட்கொண்டதில்லை. சில சமயங்களில், தம்முடைய தேவையை, தம்முடைய நண்பர்கள் சிலருக்குத் தெரிவித்திருக்கலாம். அப்படித் தெரிவிப்பது தமது கடமை யென்று அவர் கருதினார். அந்தத் தேவை, அந்த நண்பர்கள் மூலமாகவோ, வேறு விதமாகவோ பூர்த்தியானால் சரி; சந்தோஷப் படுவார்; நன்றி செலுத்துவார். இல்லையானால், யார்மீதும் வருத்தப்படமாட்டார்; தம்மையும் நொந்துகொள்ளமாட்டார். யாருடைய தயவையும் எதிர் பார்த்து அவர் வாழ்க்கை நடத்தியது கிடையாது. பாரதியார் வாழ்ந்த காலத்தில், தேசீய இயக்கம் குழந்தைப் பருவத்திலேயே இருந்தது. அதனை ஆதரித்தவர்களில் அநேகர், பொருள் பலமில்லாதவர்களாகவோ, சமுதாயத்தில் அதிக செல்வாக்கில்லாத வர்களாகவோ இருந்தார்கள். இந்த நிலையிலும், பாரதியாருக்குச் சில நண்பர்களிடமிருந்து அவ்வப்பொழுது உதவி கிடைத்துக் கொண்டு தானிருந்தது. இந்த உதவி, பெரிய அளவில் இல்லை யென்றாலும், சிறிது சிறிதாகக் கிடைத்துக் கொண்டிருந்த தென்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் காலத்தில் அவருடைய அருமை பெருமை அறிந்தவர்கள் ஒரு சிலரே, மிகமிகச் சிலரே இருந்தனர். அவர்களில், பொருள் வசதி படைத்த சிலர், அவருக்குத் தங்களாலான உதவியைச் செய்யத் தயங்கவில்லை. பாரதியார் அவர்களிடத்தில் எப்பொழுதும் நன்றியுடையவராகவே இருந்தார். பாரதியார், ஒரு தேசீய கவி மட்டுமல்ல; உலககவி. இடத்தை யும் காலத்தையும் கடந்து சாசுவதமாக நிற்கும் பல உண்மைகள், அவருடைய படைப்புக்களில் அடங்கிக் கிடக்கின்றன. அவற்றை உலகத்தார் அறிய வேண்டும்; அறியச் செய்யவேண்டியது தமிழர் கடமை. மனதி லுறுதி வேண்டும்; வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கின பொருள் கைப்படவேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும். - சுப்பிரமணிய பாரதியார் சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921) திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளது எட்டையபுரம். இது சமதானமாக விளங்கி வந்த காலத்தில், தமிழ்ப் புலவர்களுக்கும் மற்றக் கலைஞர்களுக்கும் இங்கு நல்ல ஆதரவு இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி பகுதியில், இந்தச் சமதான அதிபருடைய அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார் சின்ன சாமி ஐயர் என்ற அறிஞர். இவருக்கு வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தாள் லட்சுமி அம்மாள் என்ற உத்தமி. மனமொத்து வாழ்ந்து வந்த இந்தத் தம்பதி களுக்கு மூத்த புதல்வராகப் பிறந்தவர்தான் நமது கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். இவர் பிறந்தது 1882ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதினோராந்தேதி. தமிழ்க் கணக்குப்படி சித்திர பானு வருஷம் கார்த்திகை மாதம் இருபத்தேழாந் தேதி மூல நட்சத்திரம். குழந்தைக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டனர் பெற்றோர்; செல்லப் பெயராக சுப்பைய்யா என்று அழைத்து வந்தனர். குழந்தை எல்லா வகையிலும் வசீகரத் தோற்றமுடையதா யிருந்த போதிலும், இதன் கண்களில் அலாதியான ஓர் ஒளி வீசியது. குறுகுறுத்த நடை; நறுக்குத் தரித்தாற்போல் பேச்சு. கேட்க வேண்டுமா உறவினரும் ஊராரும் விசேஷ அன்பு செலுத்தியதற்கு? சுப்பைய்யாவுக்கு ஐந்து வயது. தாயார் லட்சுமி அம்மாள் ஈசன் இணையடி சேர்ந்துவிட்டாள். தாயற்ற சேயாகிவிட்ட குழந்தை, சிறிதுகாலம் தாய்வழிப் பாட்டனார் வீட்டில் மிகவும் செல்வமாக வளர்ந்து வந்தது. தமது தாயின் பிரிவு குறித்து பாரதியார் பிற்காலத்தில் என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண்ணெய்திய தாய்தனை என்று கூறுகிறார். லட்சுமி அம்மாள் காலமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சின்னசாமி ஐயர், குடும்ப நிருவாகம், சுப்பைய்யாவின் பராமரிப்பு இவைகளை உத்தேசித்து, வள்ளியம்மாள் என்ற பெண்ணை இரண்டாந்தாரமாக மணந்துகொண்டார். இந்தத் திருமணத்தின்போது சுப்பைய்யாவுக்கு உபநயனமும் செய்யப் பட்டது. இதற்குப் பிறகு. தந்தையின் பாதுகாப்பு நிழலிலேயே வளர்ந்து வரலானார் சுப்பைய்யா, வள்ளியம்மாளும் இவரை அன்போடு நடத்தி வந்தாள். சுப்பைய்யாவுக்கும் இவளிடத்தில் விசேஷ மதிப்பு ஏற்பட்டது. சுப்பைய்யா, ஆங்கிலக் கல்வி பயின்று முன்னுக்கு வரவேண்டு மென்பது சின்னசாமி ஐயரின் ஆசை. சுப்பைய்யாவுக்கோ, தமிழ் பயின்று, கம்பனையும் வள்ளுவனையும்போல், தான் ஒருவனாக வேண்டு மென்பது விருப்பம். இந்த நிலையில், தகப்பனாரின் வற்புறுத்தலுக் கிணங்க, எட்டையபுரத்திலேயிருந்த ஓர் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று வந்தார் சுப்பைய்யா. சென்று வந்தாரே தவிர, ஒழுங்காகப் படித்தார் என்று சொல்ல முடியாது. சிறிது காலத்திற்குப் பிறகு, திருநெல்வேலி ஹிந்து காலேஜில் சேர்ந்து படிக்க அனுப்பப்பட்டார் சுப்பைய்யா. அங்குச் சுமார் மூன்று வருஷ காலம் படித்தார். என்றாலும் இவர் மனமெல்லாம், தமிழ் இலக்கிய வானிலும் கவிதை உலகத்திலுமே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. சுப்பைய்யா, எட்டாவது பிராயத்திலிருந்தே, தமிழ்க் கவிதை களை வெகு சுலபமாக இயற்றும் ஆற்றல் படைத்திருந்தார். இதனால், எட்டையபுரம் சமதானத்திலிருந்த புலவர்களுக்கு இவரிடத்தில் ஒருவித அச்சமும் அதே சமயத்தில் பொறாமையும் ஏற்பட்டன. ஒரு சமயம், சுப்பைய்யாவின் கவித்திறனைப் பரிசோதிக்க எண்ணி, புலவர்கள் பலர் ஒரு சபையாகக் கூடினர். ஒரு செய்யுளில் ஓரிரண்டு அடிகளைக் கொடுத்து அதைப் பூர்த்தி செய்யும்படி சொன்னார்கள். இப்படிப் பலர் கொடுத்த அடிகளையும் உடனுக் குடன் பூர்த்தி செய்து செய்யுட்களாக ஒப்புவித்தார் சுப்பைய்யா. இதைக்கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள் புலவர்கள்; இவருக்கு பாரதி என்ற பட்டப் பெயரும் சூட்டினார்கள். அதுமுதற்கொண்டு, சுப்பைய்யா, சுப்பிரமணிய பாரதியானார். தகப்பனாரின் வற்புறுத்தலுக்கிணங்க, சுப்பைய்யா, திருநெல்வேலி சென்று ஆங்கிலக் கல்வி பயின்றாரெனினும், அந்தக் கல்வி முறையில் இவருக்கு உள்ளூர வெறுப்பு இருந்தது. இந்தக் கல்விமுறை பரவுவதால் இந்திய மக்களின் தன்மதிப்பு உணர்ச்சி அடியோடு குன்றிவிடுமென்பதை அந்தச் சிறுவயதிலேயே இவர் உணர்ந்தார் போலும். இதனால்தான் பிற்காலத்தில் மனம் குமுறிக் கூறுகின்றார்:- நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன் நேருமாறெனை எந்தை பணித்தனன். செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது; தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன; நலமொ ரெட்டுணையுங் கண்டிலேனிதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன். பாரதியாருக்குப் பதினைந்தாவது வயது நடந்து கொண் டிருக்கையில், இவருக்கும் கடையம் செல்லப்பா ஐயரின் குமாரத்தி செல்லம்மாளுக்கும் வெகுசிறப்பாக விவாகம் நடைபெற்றது. இந்த விவாகம் நடைபெற்ற மறு வருஷம், சின்னசாமி ஐயரை வறுமை வந்து மூண்டு கொண்டுவிட்டது. இவர் நடத்தி வந்த தொழில்நஷ்டமேற்பட்டு அதனால் மனமுடைந்து போனார். இதைப்பற்றிப் பாரதியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:- ஈங்கிதற்கிடை யெந்தை பெருந்துயர் எய்தி நின்றனன், தீய வறுமையான்; ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன். மற்றும் தமது தந்தையார், அதிக நுண்ணறிவும் திண்ணிய மனமும் படைத்தவரென்றாலும் பொருளில் அதிக நாட்ட முடையவராயிருந்தபடியால்தான் வறுமை யெய்தினரென்று பிறிதோரிடத்தில் கூறுகிறார்:- தேசத்தார் புகழ் நுண்ணறிவோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சினனாயினும் நாசக் காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன். மனமுடைந்துபோன சின்னசாமி ஐயர் அதே வருஷத்தில் காலமானார். பாரதிக்கு அப்பொழுது வயது பதினாறு. இனி என்ன செய்வது, எங்கே இருப்பது என்ற கேள்விகள் பிறந்தன இவரது வாழ்க்கையில். இவரது தந்தையாரின் சகோதரி குப்பம்மாள் என்பவள் காசிமாநகரில் வசித்துக் கொண்டிருந்தாள். பாரதியார் அங்குச் சென்று சிறிது காலம் வசித்தார். அங்குத் தங்கியிருந்தபோது, அலகாபாத் சர்வகலாசாலை பிரவேசப் பரீட்சைக்காகப் படித்துத் தேறினார். சம்கிருதம், ஹிந்தி ஆகிய இரு பாஷைகளையும் கற்று அவைகளில் புலமையும் பெற்றார். பின்னர் எட்டையபுரம் மன்னரின் அழைப்புக்கிணங்க, எட்டையபுரம் போந்து சமதானத்தில் சுமார் இரண்டு வருஷ காலம் உத்தியோகம் பார்த்தார். என்ன உத்தியோகம்? சம தானாதிபதிக்கு ஒழிந்த நேரங்களில், அவருக்கு அன்றாடம் வரும் பத்திரிகைகளைப் படித்துக் காட்டல், சில நல்ல நூல்களை அவருக்குப் படித்துக் காட்டி அவைகளுக்கு விளக்கங் கூறுதல், அவருடன் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருத்தல் இவைதாம் இவருடைய அலுவல்கள். சுதந்திர உணர்ச்சியுள்ள பாரதியாருக்கு இந்த உத்தியோகம் பிடிக்குமா? அலுப்புத் தட்டி விட்டது. உத்தியோகத்தினின்று விலகிக்கொண்டார். பின்னர் மதுரை சென்று அங்குச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சுமார் மூன்று மாத காலம் தமிழ்ப் பண்டிதராக அலுவல் பார்த்தார். தமிழ்ப் பண்டிதருக்குச் சம்பளம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? ஐந்துவராகன்; அதாவது பதினேழரை ரூபாய்! இந்தத் தமிழாசிரியர் வேலையிலும் பாரதியார் மனம் பூரணமாக ஈடுபடவில்லை. இந்த நிலையில் சென்னை சுதேசமித்திரன் பத்திரிகையில் ஓர் உதவி ஆசிரியர் உத்தியோகம் இவருக்குக் கிடைத்தது. 1904 - ஆம் வருஷம் நவம்பர் மாதம் சென்னை போந்து இப்பதவியை ஏற்றுக் கொண்டார். 1905ஆம் வருஷம் இந்தியா வெங்கணும் வங்காளப் பிரிவினை சம்பந்தமான கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக, எங்குப் பார்த்தாலும் தேசீய உணர்ச்சி தலைதூக்கி நின்றது. இந்த உணர்ச்சி, கவிஞராகப் பிறந்திருக்கிற பாரதியாரைத் தாக்காமலிருக்குமா? அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். ஆனால், அரசியல் சம்பந்தமாக இவர் கொண்டிருந்த தீவிரமான கருத்துக்களை வெளியிட சுதேச மித்திரன் பத்திரிகையில் வாய்ப்பு ஏற்படவில்லை. இதனால் பெரிதும் மன வேதனைப்பட்டார். இவருடைய மன வேதனையை உணர்ந்த இவரது நண்பர்கள் சிலர், இந்தியா என்னும் பெயரால் ஒரு வாரப்பத்திரிகையை நடத்த ஏற்பாடு செய்தனர். பாரதியாரும், சுதேசமித்திரன் பத்திரிகையிலிருந்து, சுமார் ஒன்றரை வருஷகாலச் சேவைக்குப் பிறகு விலகிக் கொண்டார். இந்தியா பத்திரிகையின் முதல் இதழ் 1906ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் தோன்றி யது. பாரதியார் இதில் வந்து சேர்ந்துகொண்டார். ஆசிரியப் பொறுப்பனைத்தையும் இவரே ஏற்று நடத்தி வந்தார். அரசியல் கட்டுரைகள் என்ன, கவிதைகள் என்ன, சிறுகதைகள் என்ன இப்படிப் பலவற்றையும் பாரதியார் இதில் எழுதி வந்தார். வங்கப் பிரிவினை சம்பந்தமான கிளர்ச்சி தொடங்கிய காலத்தி லிருந்தே பாரதியார் காங்கிர மகாசபைக் கூட்டங்களுக்கு வருஷந் தோறும் சென்று வந்தார். 1905ஆம் வருஷம் காசியில் நடை பெற்ற காங்கிரஸுக்கும் 1906ஆம் வருஷம் கல்கத்தா காங்கிரஸுக்கும் 1907ஆம் வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் சென்று வந்தார். இங்ஙனம் காங்கிர கூட்டங்களுக்குச் சென்று திரும்புகையில் ஒருசமயம், கல்கத்தாவில், சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரைத் தமது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். பாரதியார் இந்தியா பத்திரிகையில் அலுவல் பார்த்து வந்ததோடு, சென்னையில் வேறு பல தேசீய வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். விபினசந்திர பாலர் சென்னை போந்தபோது கடற்கரையில் அவருடைய பிரசங்கங்களுக்கு ஏற்பாடு செய்தவர் பாரதியார். சென்னை ஜனசங்கம் என்ற பெயரால் ஒரு தேசீய சங்கமொன்றைத் தோற்றுவித்தவர் பாரதியார். சுதேசி சாமான்கள் மட்டும் விற்பதற்கு ஒரு கடையை ஆரம்பித்தவர் பாரதியார். பாரதியார் இந்தியா பத்திரிகையில் சேவைசெய்து வந்த காலத்தில் அநேக தேசீய கீதங்களை இயற்றியிருந்தார். அவைகளை நூல் வடிவாக வெளிக்கொணர ஆசைப்பட்டார். ஆனால் இதற்குப் போதுமான பணம் இவரிடம் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், அப்பொழுது மிதவாதத் தலைவர்களில் ஒருவராயிருந்த வி. கிருஷ்ண சாமி ஐயரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜி. ஏ. நடேசன் என்பவர். பாரதியார் கிருஷ்ணசாமி ஐயரைச் சந்தித்து, தாம் இயற்றிய தேசீயப் பாக்கள் சிலவற்றைப் பாடிக்காட்டினார். கிருஷ்ணசாமி ஐயர் இவற்றைக் கேட்டுப் பரவசமெய்தியவராய், இந்தப் பாடல் களை அச்சிட்டு இனாமாக வழங்க ஏற்பாடு செய்தார். இதற்குப் பிறகு வதேச கீதங்கள் என்ற பெயரால் ஒரு தனி நூல் வெளி யாயிற்று. இதுவே முதன்முதலாக வெளிவந்த பாரதியாரின் நூல் என்று சொல்லப்படுகிறது. 1908ஆம் வருஷம் நாடெங்கணும் சுயராஜ்யக் கிளர்ச்சி வலுத்து நின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான அடக்கு முறையைக் கையாண்டது. லோகமான்ய பாலகங்காதர திலகர், வ.உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவனார் முதலியவர்கள் சிறைவாசிகளாயினர். இந்தியா பத்திரிகையைச் சும்மா விட்டு வைப்பார்களா அரசாங்கத்தார்? அதன் சொந்தக்காரராகப் பதிவு செய்துகொண்டிருந்த சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். பாரதியாரையும் கைது செய்ய உத்தரவு பிறந்தது. இதையறிந்த இவரது நண்பர்கள், இவரைப் புதுச்சேரிக்குத் தப்பிச் செல்லுமாறு தூண்டி, அப்படியே அங்கு இவரை அனுப்பி விட்டார்கள். 1908ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் பாரதியார் புதுச்சேரி சேர்ந்தார். இவர் சேர்ந்த சுமார் ஒருமாத காலத்திற்குள் இந்தியா பத்திரிகையும் அதன் அச்சகமும் ரகசியமாகப் புதுச்சேரி வந்து சேர்ந்தன. 1908ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியா பத்திரிகையின் கடைசி இதழ் சென்னையில் வெளிவந்தது; அக்ட்டோபர் மாதம் இருபதாந்தேதி புதுச்சேரியி லிருந்து மீண்டும் வெளிவரத்தொடங்கியது. இதிலிருந்து 1910ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பன்னிரண்டாந் தேதி வரை சுமார் ஒன்றரை வருஷகாலம் இதனைத் திறம்பட நடத்தி வந்தார் பாரதியார். இதன் செல்வாக்கும் அபரிமிதமாக வளர்ந்தது. br‹idÆš ïJ njh‹¿a fhy¤âÈUªJ òJ¢nrÇÆš ïJ ËWnghd tiuÆš - ïilÆš á¿J fhyªjÉu - ïj‹ y©l‹ ÃUguhf ïUªjh® t.nt.ஸு. ஐயர் என்பதை இங்கு வாசகர்கள் அறிய விரும்புகிறோம். பாரதியார் இந்தியா பத்திரிகை நடத்திக்கொண்டு வந்த காலத்தில் விஜயா என்ற பத்திரிகையையும் கர்மயோகி என்ற பத்திரிகையையும் நடத்திவந்தார். ஆனால் இவையெல்லாம் 1910 - ஆம் வருஷம் இறுதிக்குள் நின்று போகும்படியான நிலைமை ஏற்பட்டது. பத்திரிகைகள் நின்றுபோன குறையை நிவர்த்தி செய்து கொடுக்கின்ற முறையில், பாரதியாருக்கு இந்த ஆண்டில் சில அரிய நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. அரவிந்த கோஷும் t.nt.ஸு ஐயரும் இந்த ஆண்டில் புதுச்சேரி வந்து சேர்ந்தனர். இவர்களும் பாரதியாரும் தினந்தோறும் சந்தித்து அளவளாவுவார்கள். இவர் களோடு ஏற்கனவே புதுச்சேரியில் வந்து சேர்ந்திருந்த மண்டயம் ஸ்ரீனிவாஸாச்சாரியாரும் சேர்ந்துகொள்வார். இவர் மேற்படி தேசபக்தர்களுக்குப் பல விதங்களில் உதவியாயிருந்தவர்; கல்விச் செல்வம் நிரம்பியவர். பாரதியாருக்குப் புதுச்சேரியில் அநேக சிஷ்யர்களும் சேர்ந்தார்கள். பரலி சு. நெல்லையப்பர், திருப்பழனம் வ. ராமசாமி ஐயங்கார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், அமுதன் என்கிற ஆராவ முதய்யங்கார், பாரதிதாசன் என்கிற கனகசுப்புரத்தினம் முதலியவர் களைக் குறிப்பிடவேண்டும். இவர்களில் குவளையூர் கிருஷ்ணமாச் சாரியார், குவளைக் கண்ணன் என்ற பெயரால் பாரதியாரின் பாடல்கள் சிலவற்றில் இடம் பெற்றிருக்கிறார். பாரதியார் இவரிடம் தனியன்பு காட்டி வந்தார். இவர்கள் தவிர, பாரதியார் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை, கூடியமட்டில் சிரமமில்லாமல் நடைபெறுவதற்குப் பலவிதங் களிலும் உதவி செய்தவர்கள் பலர், இவர்களில், சிறப்பாக, சிட்டி குப்புசாமி ஐயங்கார், சுந்தரேச ஐயர், கிருஷ்ணசாமி செட்டியார், பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களைக் குறிப்பிட வேண்டும். பாரதியாரின் தூய்மையான உள்ளம், பரந்தநோக்கம், கவிதா சக்தி முதலியவைகளினால் கவரப்பட்ட இவர்கள், அவருக்கு உதவியா யிருப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்கள். பாரதியாரும் இவர்களிடத்தில் விசேஷ அன்பு செலுத்தி வந்தா ரென்பதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. பாரதியாருடைய வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தாள் அம்மாக்கண்ணு என்ற பெண்மணி. இவள், பாரதியாரின் இல்லாமை பொல்லாமைகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து, அந்தக் குடும்பத் திற்குச் சகல விதங்களிலும் உறுதுணையாயிருந்து வந்தாள். பாரதியார், பத்திரிகைகள் நின்றுபோனதும், தம் கவனத்தை நூல்களெழுதுவதில் செலுத்தினார். பகவத்கீதை மொழிபெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நான்கு நூல்கள் 1912ஆம் ஆண்டில் உருக்கொண்டன. மற்றும் சுப்பிரமணிய சிவனார் சென்னையிலிருந்து நடத்தி வந்த ஞானபானு என்ற மாதப்பத்திரிகையில் தொடர்ந்தாற் போல் கவிதைகள், கதைகள் முதலியன எழுதிவந்தார். இவற்றுள் பல, இவரது சொந்தப்பெயரால் வெளிவரவில்லையென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது, சாவித்திரி என்ற நிருபநேயர் - நித்தியதீரர் - ஓர் உத்தம தேசாபிமானி - இப்படிப் பல புனைபெயர்களில் இவை வெளிவந்தன. பாரதியார் புதுச்சேரியிலிருந்தபோது சிறிது காலம் தாடி மீசை வளர்த்து வந்தார். நாலாயிரப் பிரபந்தத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. வைஷ்ணவ ஆழ்வார்களிடத்தில் பரம பக்தி. அவர் களைப்போலவே திருநாமம் தரித்துக் கொண்டார். இந்தக் காலத் தில் எடுத்த புகைப்படங்களில் இவர் இந்தக் கோலத்துடனேயே காட்சியளிக்கிறார். புதுச்சேரி வாசத்தின்போது, பாரதியார், தமிழ் நூல்களைத் தவிர ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் எழுதி வந்தார். பொதுவாக, 1910ஆம் வருஷத்திலிருந்து 1915ஆம் வருஷம் வரை பாரதியாருடைய வாழ்க்கை சிரமமான வாழ்க்கையென்றே சொல்ல வேண்டும். ஒழுங்கான வருவாய் கிடையாது; நண்பர்களின் உதவியை அடிக்கடி நாடவேண்டியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்து ஏவலாட் களின் தொல்லை ஒருபுறம். இல்லாமை காரணமாக, பிணி, கவலை முதலியன அடிக்கடி இவரையும் இவர் குடும்பத்தையும் வந்து தாக்கின. ஆனால் இந்தக் காலந்தான், இவருடைய சிறந்த இலக்கிய சிருஷ்டிகளுக்கு உகந்த காலமாயிருந்தது. இதை நோக்குகிறபோது, வேதனையிலிருந்தே சிருஷ்டி என்ற உண்மை புலனாகிறது. 1915ஆம் வருஷம் இடைக்காலத்தில் பாரதியாரைச் சூழ்ந்து கொண்டிருந்த துன்பமேகம் லேசாக அகல ஆரம்பித்தது. இதற்குக் காரணமாயிருந்தது சுதேச மித்திரன் பத்திரிகை. இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்ட பிறகு பாரதியாருக்கு சுதேசமித்திரன் தொடர்பு இல்லாமற்போய்விட்டது. 1915ஆம் வருஷம் ஜூன் மாதத்திலிருந்து தான் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இதற்குக் கட்டுரைகள் எழுதி வந்தார். மாதம் முப்பது ரூபாய் விகிதம் மேற்படி பத்திரிகையி லிருந்து இவருக்குக் கிடைத்து வந்தது. மற்றும் இவருடைய பாடல் தொகுதிகள் சில வெளிவந்தன. இவை யெல்லாம் இவருக்கு ஓரளவு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தனவென்று சொல்லவேண்டும். 1918ஆம் வருஷம் நவம்பர் மாதம் முதல் உலக மகாயுத்தம் முடிந்தது. புதுச்சேரியில் அஞ்ஞாதவாசம் செய்து வரும் தேச பக்தர் களுக்கு விடுதலையளிக்க வேண்டுமென்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் கிளர்ச்சி செய்தன. சில தலைவர்களும் இதற்காக முயன்றார்கள். இந்தக் கிளர்ச்சி, முயற்சி இவைகளின் விளைவாக, அரவிந்தரைத் தவிர மற்றப் புதுச்சேரி தேச பக்தர்கள் சுதந்திர புருஷர்களாகத் தமிழ்நாட்டின் மண்ணை மிதித்தார்கள். 1918 - ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம் பாரதியார் விடுதலை பெற்றார். விடுதலை பெற்றதும் நேரே கடயம் சென்று அங்குச் சிறிது காலம் வசித்தார். பிறகு திருவனந்தபுரம், எட்டையபுரம் முதலிய ஊர்களிலும் சிறிது சிறிது காலம் வசித்தார், செட்டிமார் நாட்டிலும் சிறிது காலம் தங்கினார். ஆங்காங்குச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி னார்; தமது கவிதைகளால் ஆயிரக் கணக்காண மக்களை மகிழ் வித்தார். இடையிடையே தமிழ் நூல்களை வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்து வந்தார். பாரதியார் புதுச்சேரியிலிருந்து வெளிவந்த பிறகு முதல் தடவையாக 1919ஆம் வருஷம் மார்ச்சு மாதம் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கினார். அப்பொழுது,விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஸர் எ. சுப்பிரமணிய ஐயர் தலைமையில் வேதாந்த விஷயமாக ஆங்கிலத்தில் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அப்பொழுது சென்னைக்கு வந்திருந்த காந்தியடிகளைச் சந்தித்தார். காந்தியடிகளின் பெருமையையும் அவர் தென்னாப்பிரிக்காவில் செய்த அரிய சேவை களையும் பற்றி பாரதியார் 1908ஆம் வருஷத்தி லேயே அறிந்து போற்றினாரென்றாலும், 1919ஆம் வருஷத்தில்தான் அவரை நேரில் கண்டு அளவளாவினார்; அவருடைய சத்தியாக்கிரக இயக்கத்துக்கு ஆசி கூறினார். சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்த பாரதியார், கடயம் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு, திரும்பவும் 1920ஆம் வருஷம் நவம்பர்மாதம் சென்னை போந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்பொழுது பாரதியாருக்குக் கொடுக்கப்பட்டு வந்த சம்பளம் மாதம் நூறு ரூபாய். சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றி வந்த காலத்தில், பாரதியார், தமது நூல்களை வெளியிடுவதற்கான முயற்சிகளில் மீண்டும் இறங்கினார். சென்னையில் அப்பொழுது நடைபெற்று வந்த தமிழ் வளர்ப்புப் பண்ணை என்ற ஒரு தாபனத்தின் பெயரால் ஒரு விளம்பரம் வெளியிடச் செய்தார். அதில் பாரதியாரின் நூல்கள் நாற்பது புத்தகங்களாக அச்சிடப்படுமென்றும், ஒவ்வொரு புத்தகமும் பத்தாயிரம் பிரதிகள் விகிதம் அச்சடிக்கப்படுமென்றும் இந்த நான்கு லட்சம் பிரதிகளும், தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் சர்வ சாதாரணமாகவும் அதிக சீக்கிரமாகவும் விற்பனையாகுமென்றும் காணப்பட்டிருந்தன. இது தவிர, தம் பெயரால், ஆங்கிலத்திலும் தமிழிலும் சில சுற்றுக் கடிதங்கள் எழுதி, நண்பர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் அனுப்பிவந்தார்; தனிப்பட்ட முறையில் சில நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். ஏதும் பயனில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பாரதியாரின் இந்தப் பிரசுரத் திட்டம், அவர் விரும்பியபடி, அவர் ஆயுட்காலத்தில் நிறைவேறவில்லை. தமிழ் மக்களின் ஆதரவு இல்லாததுதான் காரணம். பாரதியார் அனுப்பிய ஒரு சுற்றுக் கடிதத்தின் தமிழ் வாசகம் வருமாறு:- ஓம் சக்தி சுதேசமித்திரன் ஆபீ ஜி. டி. மதரா..................... 192 அன்புள்ள................................... நான் பன்னிரண்டு வருஷ காலம் சுதேசத்தினின்று அகன்றிருக்கையில் எழுதிய என்னுடைய எல்லாக் கையெழுத்துப் பிரதிகளும் புதுச்சேரியிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அவைகளை நாற்பது புத்தகங்களாகப் பிரித்து ஒவ்வொரு புத்தகமும் முதற்பதிப்பாக பதினாயிரம் பிரதிகள் விகிதம் அச்சிடுகிறேன். இதற்கு எனக்கு ஆரம்பச் செலவாக இருபதினாயிரம் ரூபாய் பிடிக்கிறது. புத்தகங்கள் வெளியான ஒரு வருஷத்திற்குள், அதிக பட்சம் போனால் இரண்டு வருஷத்திற்குள் நிகர லாபமாக ஒன்றரை லட்சம் ரூபாய் நிச்சயமாகக் கிடைக்கும். வெளியிடுவதற்காக நான் தெரிந்தெடுத்திருக்கும் பலவும், உரை நடையிலான கதைகள்; உணர்ச்சி தரத்தக்கவை; இலக்கிய நயம் வாய்ந்தவை; எளிய, தெள்ளிய, இனிய நடையில் அமைந்தவை; எக்காலத்திலும் இருக்கக் கூடியவை. தவிர, தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழைப் படிக்கிற ஆண் பெண் குழந்தைகள் அதிகப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். மற்றும், கீழ்நாடு உடனடியாக புனருத்தாரணம் பெறவேண்டுவது அவசியம்; இதற்கு முதற்படியாக தமிழ் நாடு புனருத்தாரணம் அடைய வேண்டும். இதற்கு என்னுடைய நூல்கள் அவசியமாயிருக்கின்றன. இன்னும் என்னுடைய பதிப்புக்களின் அச்சு, அமைப்பு ஆகிய எல்லா வற்றிலும், அமெரிக்க முறையைப் பின்பற்றி அநேக அபிவிருத்திகளைச் செய்ய உத்தேசித்திருக்கிறேன். மேலும், கதைகளில் வரும் சம்பவங்களையொட்டி இடையிடையே அழகான படங்களைப் புத்தகங்களில் சேர்க்கப்போகிறேன். இவை, பொது ஜனங்களுக்கு ஆச்சரியமாகவும் அதே சமயத் தில் கவர்ச்சிகரமாகவும் இருக்கும். இவற்றோடு, புத்தகங் களின் விலையும் குறைவாக இருக்கும். எப்படியென்றால், வசன நூல்கள் ஒவவொன்றும் எட்டணா விகிதமும் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் கூடிய மட்டில் நான்கணா விகிதமும் விலை வைக்க உத்தேசம். ஏற்கனவே நான் வெளியிட்டிருக்கிற நூல்களினால் தமிழ்நாட்டில் எனக்கு நிகரில்லாத கீர்த்தி ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்திருக்கிற காரணத் தினால், என்னுடைய நூல்கள் நிறைய விற்பனையாகி வெற்றி கிட்டுமென்பது நிச்சயம். ஆகையால், தயை செய்து, அச்சுச் செலவு வகைகளுக் காக, உங்களால் முடிந்த ஒரு தொகையைக் கடனாக அனுப்புங்கள். உங்களிடமிருந்து குறைந்த பட்சம் நூறு ரூபாய் எதிர்பார்க்கிறேன். உங்களுடைய நண்பர்களில் இருபது பேரையாவது, இந்தத் தொகையையோ, முடிந்தால் இன்னும் அதிகமான தொகையையோ அனுப்புமாறு செய்யுங்கள். உங்களிடமிருந்தோ உங்கள் நண்பர்களிடமிருந்தோ நான்பெறும் தொகைகளுக்கு டாம்பு ஒட்டின புரோ நோட் எழுதிக் கொடுக்கிறேன். பெறும் தொகைகளுக்கு, மாதத்திற்கு இரண்டு சத விகிதம் தாராள வட்டி கொடுக்கிறேன். உங்க ளுடைய பதிலையும், உங்கள் மூலமாக இருபதுக்கணக்கான மணியார்டர்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு நீண்ட, இன்பகரமான வாழ்நாட்களை அளிக்கு மாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் அன்புள்ள ஒப்பம்................................... பாரதியார், சுதேசமித்திரனில் சேர்ந்த சிறிது காலத்திற்குப் பிறகு, திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். அப்பொழுது தினந்தோறும் பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவார். கோயிலிலிருந்து பிரசாதமாகப் பெறும் தேங்காய் பழம் முதலியவைகளைக் கோயில்யானைக்குக் கொடுத்து மகிழ்வார். இப்படித் தினந்தோறும் அதனருகிற்சென்று கொடுத்து வந்ததனால், யானைக்கும் இவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. எல்லா ஜீவராசிகளையும் தம்மைப்போல் கருதுகின்ற ஜீவன்முக்தரல்லவா? மகாகவியல்லவா? இப்படியிருக்கையில் ஒரு நாள், யானைக்கு மதம் பிடித்து விட்டது. பாரதியாருக்கு இது தெரியாது. வழக்கம்போல் இவர் அன்று யானையிடம் தேங்காய் பழங்களைக் கொடுத்தார். அது, தன் துதிக்கையை வீசியது. அடுத்த கணத்தில், அதன் காலடியில் மூர்ச்சித்து விழுந்துவிட்டார் பாரதியார். இது தெரிந்து, குவளை கிருஷ்ணமாச்சாரியார், எங்கிருந்தோ ஓடி வந்து பாரதியாரை எடுத்துக்கொண்டுபோய் வீட்டில் சேர்த்தார். பாரதியாருக்கு உடம்பெல்லாம் ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. நண்பர்கள் கூடி சரியானபடி சிகிச்சை செய்வித்தார்கள். சிறிது காலத்திற்குப்பிறகு குமடைந்தார் பாரதியார். வழக்கம்போல் பத்திரிகாலயம் சென்று தமது அலுவல்களைக் கவனித்து வந்தார். வெளியூர்களுக்குச் சென்று சில சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். ஆனால் ஆண்டவன் திருவுள்ளம் வேறு விதமாக இருந்தது. யானையினால் அடிபட்ட அதிர்ச்சியோ என்னவோ, அதற்குப் பிறகு உடம்பு தேறவே இல்லை. வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுத் துன்புற்றார். கடைசியில் 1921ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் பதினோராந் தேதி இரவு சுமார் ஒரு மணிக்கு, பூதவுடலை நீத்துப் புகழுடம்பு பெற்றார். அப்பொழுது அவருக்கு முப்பத்தொன்பது வயது. பாரதியாருக்கு, தங்கம்மாள் என்றும், சகுந்தலை என்றும் இரண்டு பெண்கள் உண்டு. தமிழ் மொழியிலே இனிமை இருக்கிற வரையில், கவிதை யிலே உணர்ச்சி இருக்கிற வரையில், நாட்டிலே பெண்மைக்கு மதிப்பு இருக்கிற வரையில் பாரதியார் வாழ்ந்துகொண்டிருப்பார்.  Aristotle கி.மு. 384-321. Alexander the Great கி.மு. 356-323. Julius Caeser கி.மு. 100-44. Mussolini 1883-1945. Virgil கி.மு. 70-19. Dante 1265-1321. St. Francis of Assisi 1182-1226. Savonarola 1452-1498. Otto the Great 912-973. Frederick the Great 1712-1786. Hilter 1889-1945. Third Reich. Martin Luther 1433-1546. Goethe 1749-1832. Bohemia. இதுவே 1914-18ஆம் வருஷ யுத்தத்திற்குப் பிறகு ஜெக்கோலோவேகியா நாடாக மாறியது. John Zizka 1360-1424. Huang Ti கி.மு. 256-210. Confucius கி.மு. 551-479. Socrates கி.மு. 470-399. Water, Damn, Thank you. Lao-Tse கி.மு. 604-531. Heracleitus. கிரேக்க தேசத்திலே இத்தகைய சிரிக்கிற ஞானி ஒருவன் இருந் திருக்கிறான். டெமாக்ரீட்ட (Democritus) என்பது இவன் பெயர். கி.மு. 460-370. அத: 4-11. 42ஆம் பக்கம் பார்க்க. 28ஆம் பக்கம் பார்க்க. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் தாபிதமானது 1-5-1897. 34ஆம் பாக்கம் பார்க்க. தனுஷ்கோடியில் மகோததியும் ரத்னாகரமும் சந்திப்பதை இங்கே வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இவர் பிறந்தது: 5-9-1872; மறைந்தது: 18-11-1936. தாயார்: பரமாயி அம்மாள்; தந்தையார்: வ. உலகநாத பிள்ளை. இவர் பிறந்தது: 1893ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இரண்டாந் தேதி. தாயார் - ஞானம்மாள்; தந்தையார்:- வேங்கடேசுவர ஐயர். தேசபக்தன் ஆசிரியக்கூடம் இதுபோழ்து புலனாகிறது. உதவி ஆசிரியரெல்லாம் இளைஞர். அவர் ஊதியத்துக்கென்று உழைத்தவரல்லர்; தேசபக்தி மேலீட்டான் சேவை செய்ய வந்தவர். அவர் தம் முகங்கள் என் முன்னே மலர்ந்து நிற்கின்றன. என் அறையின் எதிரிலே அவர் வரிசையாக அமர்ந்து தொண்டு செய்யும் காட்சியை என் கண்கள் காண்கின்றன. அத்திருக் கூட்டத்தை - தொண்டர் குழாத்தை - இளைய உருவங்களை - என் நெஞ்சம் மறக்குமோ? - திரு வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள் - பக்: 265 - 266. இவர், ஜவுளிக்கடை நடேச முதலியார் என்ற பெயரால் பிரசித்தி பெற்றவர். வியாபாரத்தில் நாணயத்தையும் நேர்மையையும் கடைப் பிடித்தவர். இவர் பிறந்தது உத்தேசமாக சித்திரபானு வருஷம் - 1882ஆம் வருஷம். இவர் சொந்த ஊர். கூவத்திற் கருகிலுள்ள களாம்பாக்கம். தாயார்: அங்கமுத்து அம்மாள். தந்தையார் : சபாபதி முதலியார். இவர் பிறந்தது 1894ஆம் வருஷம் செப்ட்டம்பர் மாதம் எட்டாம் தேதி. சொந்த ஊர்: செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த திருக்கச்சூர் கிராமம். தாயார்: பாக்கியம்மாள்; தந்தையார்: கு. வேதாசல முதலியார். ஸ்ரீ தியாகராய முதலியாரின் சமயத்தொண்டு ஆரவாரமும் ஆடம்பரமுமற்றது. ராயப்பேட்டை ஸ்ரீ பால சுப்பிரமணிய பக்தஜன சபை, சைவ சித்தாந்த மகா சமாஜம், ராயப் பேட்டை சித்தி புத்தி விநாயகர் தேவதானம் முதலிய தாபனங் களில் இவர் தொண்டு பரிமளித்தது. 1957ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினாறாம் தேதி இவர் இறைவனடி சேர்ந்தார். இவர், வட ஆறுகாட்டில், 1889ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதின்மூன்றாந் தேதி பிறந்தவர். தாயார்: மீனாட்சி அம்மாள்; தந்தையார்: துரைசாமி முதலியார். பத்தொன்பதாவது வயதில் திருமணம். மனைவியார்; கமலாம்பாள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. கமலாம் பாள் அம்மையார், சண்முகானந்தரது இருபத்தாறாவது வயதில் இறைவனடி சேர்ந்தார். மனைவியை இழந்த பிறகு, சண்முகானந்தர் மனத்துறவு பூண்டவராய், கன்னியாகுமரி முதல் இமயம் வரை கால் நடையாக யாத்திரை செய்தார். சில ஆண்டுகள் ரிஷிகேசத்தில் தங்கினார். திரு. வி. க. வுடன் தொடர்பு கொண்ட பிறகு அரசியலில் ஈடுபட்டு ஐந்து முறை சிறை சென்றார். ஹிந்தி மொழிப் பிரச்னை சம்பந்தமாக இரண்டு தடவை சிறை வாசம் அனுபவித்தார். இந்நூலாசிரியர்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் திரு. வி. க. வின் இறுதிக் காலம் வரை என்னால் இயன்ற தொண்டினை அவருக்குச் செய்து, திரு. வி. க வினால் மனமுவந்த வாழ்த்தும், சிறந்த ஒருவர்க்குத் தொண்டு செய்தோம் என்ற மனத்திருப்தியும் அடைந்தேன் என்று குறிப்பிடுகிறார். 2 . இவர் தென்னாறுகாடு ஜில்லா பெண்ணாகடம் என்னும் ஊரில் 1908ஆம் வருஷம் டிசம்பர் மாதம் இருபதாந் தேதி பிறந்தவர். தாயார்: தையல்நாயகி அம்மாள்: தந்தையார்: முனிசாமி முதலியார். 1925ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து திரு. வி. க. வின் சாது அச்சுக்கூடத்தில் பணியாற்றி வருகிறார். திரு. வி. க.வின் கண்ணொளி மங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, அவரது நூல்கள் பலவும் இவரது பொறுப்பிலும் மேற்பார்வை யிலுமே வெளிவந்தன என்று சுருக்கமாகச் சொல்லலாம். பரலி. சு. நெல்லையப்பர் திருநெல்வேலிக்கு எட்டுமைல் தொலை விலுள்ள பரலிக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். இந்த ஊரின் முதல் மூன்று எழுத்துக்களே இவருடைய பெயருக்கு முன்னால் கட்டியங் கூறிக்கொண்டு நிற்கின்றன. இவர் பிறந்தது விரோதி ஆண்டு புரட்டாசித் திங்கள் ஐந்தாம் நாள். (18-9-1889). இவர் தந்தையார்: சுப்பிரமணிய பிள்ளை; தாயார்: முத்துலட்சுமி அம்மையார். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரால் தம்பி என்று உரிமையோடு அழைக்கப்பெற்று அவருடைய பேரன்பைப் பெற்றவர். அவருடைய நாட்டுப் பாடல்கள், கண்ணன் பாட்டு முதலியவைகளை முதன்முதலாகத் துணிந்து வெளியிட்டவர், கவிதைகள் பல இயற்றியுள்ளார்; உரைநடை வல்லுநருங்கூட. Shakespeare - 1564 - 1616. Racine - 1639 - 1699. Madame Cama. Curzon Willy. Madanlal Dingra. Jackson, Amsterdam. Brazil. Dante Divine Comedy விவரங்களுக்கு இந் நூலாசிரியர் எழுதிய கார்ல் மார்க் ஏழாவது அத்தியாயத்தைப் பார்க்க, Emden Algeria இவர் பற்றிய விவரங்களுக்கு 93ஆம் பக்கம் பார்க்க. 97ஆம் பக்கம் பார்க்க. Niagara Falls. அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கும் கனடாவுக்கும் நடுவேயுள்ளது. உலகத்து அதிசயக் காட்சிகளுள் ஒன்று. சிவனார், தம் சிறை அனுபவத்தைப்பற்றி எழுதியுள்ள குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது:- கைதி சிறைக்குள் சென்றதும் முழு மொட்டையாக க்ஷவரம் செய்து கொண்டுவிட வேண்டும். அங்குச் சாதாரணமாகக் கைதியின் சரீரத்தின் எந்தப் பாகத்திலும் அரையங்குலத்துக்கு மேல் நீளமுள்ள தாக ரோமம் வளரவிடக் கூடாதென்பது வைத்திய விதி. ரோமம் அதிகமாக வளர்ந்துவிட்டால் அழுக்குப் படிந்து நோய் உண்டாகிவிடுமாம்! க்ஷவரம் செய்வதற்கு உபயோகிக்கப்படும் கத்திகள் சாணை பார்க்காத வெறும் இரும்புத் தகடுகள். க்ஷவர தினத்தன்றுபடும் கஷ்டம் இவ்வளவென்று சொல்லி முடியாது. அதிலும் என்னைப் போன்ற முரட்டு ரோமங்கள் உள்ளவர்கள்............................................! க்ஷவரம் செய்துகொள்வதைவிட எந்த வேலையும் செய்யலாம்; மரண வேதனையும் அனுபவிக்கலாம். ஞாயிற்றுக் கிழமைதோறும் க்ஷவரம் செய்துகொள்ளும்போது என் சரீரம் செத்துப் பிழைக்கும். க்ஷவரம் செய்பவர்களில் தண்டனை யடைந்த அம்பட்ட ஜாதியினர் ஒரு சிலருடன் பறையர், சக்கிலியர், ஒட்டர் முதலியோரும் உண்டு. ஆ ஆ! க்ஷவரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் சிறைவாசத்தைப்போல் சுகவாசம் இல்லவே இல்லை என்று சொல்லுவேன். ஒவ்வொரு கைதியும் ஞாயிற்றுக் கிழமைதோறும் க்ஷவரம் செய்து கொள்ளத் தவறக் கூடாதாம். இருவரையும் சந்திக்கச் செய்தது, பரலி. சு, நெல்லையப்பரின் மூத்த சகோதரர் பரலி. சண்முகசுந்தரம் பிள்ளை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.