வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 1 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) மூலம் மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் மொழிபெயர்ப்பு வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 1 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 20 + 212 = 232 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 145/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 எனது நன்றி இது யுக சக்தி. காந்தி இதன் புது புதுமலர். மதுவுண்ணாத தேனீக்கள் நாம். அவர் வாழ்கிறார். நாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம். நாமும் வாழவேண்டாமா? இதுதான் இந்த நூலின் கேள்வி. இந்நூலில் அறுபத்துமூன்று கலைஞர்கள் அறுபத்துமூன்று கோணங்களிலிருந்து காந்தியைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு கோணத் திற்கும் அவர் பொருந்துகிறார். அப்படியானால் நமது கடமையென்ன? இதுதான் இந்த நூலின் கேள்வி. அநுபவ சமுத்திரம்; உறுதிமலை; நகைக் களஞ்சியம்; மனிதத் தன்மையின் நிறைவு; இவைதான் காந்தி. ஆண்டகை; கர்மவீரர்; சேவைக்குச் சேவகர்; பிச்சைக்கார ரல்லாத பிச்சைக்காரர்; மகுடம் தரியாத அரசர்; இவர்தான் காந்தி. இவரை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? இதுதான் இந்த நூலின் கேள்வி. காந்தி, பழமையின் பிரதிநிதி; புதுமையின் சங்கநாதம்; இயற்கையின் தொண்டர்; செயற்கையின் எஜமானர். தாழ்ந்தவர் களுக்குச் சுமைதாங்கி; வாழ்கிறவர்களுக்குக் கலங்கரை விளக்கம். இவரைக் கடவுளாக நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதராக இவரை நாம் பின்பற்ற வேண்டு மென்று உலக அறிஞர்கள் இந்த நூல்மூலம் நமக்கு வலியுறுத்து கிறார்கள். புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகத்தாருக்கு எனது நன்றி. ஏன்? இந்த நூலை மொழிபெயர்க்க எனக்குச் சந்தர்ப்பம் கொடுத்ததற்காக. இந்தச் சந்தர்ப்பம் எனது அறிவில் ஒரு முத்திரை; எனது ஆத்மாவில் ஓர் அசைவு; எனது வளர்ச்சியில் ஒரு படி. விஷு, சித்திரை 12 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்பு கின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்த போது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள் தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்க வேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப் பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழி பெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. பிளாட்டோவின் அரசியல், ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள், ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம், மாஜினியின் மனிதன் கடமை, இங்கர்சாலின் மானிட சாதியின் சுதந்திரம், சன்யாட்சென்னின் சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாண புரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத் தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர் களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல்களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் EiHíK‹... மகாத்மா காந்தி  காந்தியடிகளைப் பற்றிப் படிப்பது இந்திய தேசிய இயக்கத் தையும், இந்திய விடுதலையையும் படிப்பதாகும். இவர் வாழ்ந்து காட்டிய நெறிகளையும், அவர் போற்றி வளர்த்த சிறந்த பண்பாட்டினையும் பின்னோருக்கு நினைவூட்டி நல்வழிப்படுத்துவது எம் வெளியீட்டின் நோக்கமாகும்.  பல்வகைப் பூக்களினின்றும் தேனைக்கொணர்ந்து கூட்டில் சேர்க்கும் ஈயைப்போல, பற்பல இடங்களில் பதுங்கிக் கிடக்கும் உலக அறிஞர்களின் உயரிய கருத்துகளை, ஆழ்ந்த உணர்வுகளை சாமிநாத சர்மா மொழிபெயர்ப்பின் திறமை யால் கண்ணாடி போல் இந்நூலில் காட்டியுள்ளார்.  காந்தியடிகள் யார்? அவர் என்ன கற்பித்தார்? அவர் என்ன அருஞ்செயல் செய்தார்? அவருக்கும், மாந்தவாழ்விற்கும் உள்ள தொடர்பு என்ன? மாந்தப் பிறவியின் விழுப்பமும், யார் மாந்தன் என்பதும், ஒரு மாந்தன் எத்தகைய வாழ்வு நடாத்தல் வேண்டும் என்பதும், மாந்த வாழ்க்கைக்கு இலக்கிய மாக வாழ்ந்து காட்டிய காந்தியடிகளின் இயல்புகள் என்ன என்பதை இந் நூலின் உள்ளே சென்று தெரிந்து கொள் ளுங்கள்.  பயன்கருதாது பணி செய்த வாழ்வு இவர் வாழ்வு; எதனையும் எதிர்பாராது தொண்டு செய்த வாழ்வு இவர் வாழ்வு; உண்மை யையும், அஞ்சாமையையும் உயிரெனக் கொண்ட வாழ்வு இவர் வாழ்வு; துன்பத்திலும் துவளாத வாழ்வு இவர் வாழ்வு. இன்னும் எவ்வளவு? நூலைப் படியுங்கள்.  இளம் தலைமுறை தாங்கள் வாழ்க்கைப் பாதையை அவரைப் போல் அமைத்துக் கொள்வதற்கும், உள்ளத்தைப் பண்படுத்துவதற்கும் முன்வரவேண்டும் என்னும் உணர் வோடு இதனை வெளியிடுகிறோம்.  படித்தவர்கள், பட்டந்தாங்கி, பகட்டான பதவிகளிலும், பணி களிலும் ஈடுபட்டவர்கள் இயக்கமாக இருந்த தேசிய இயக்கம், காந்தியடிகளின் நுழைவிற்குப் பிறகு எளிய மக்களை எப்படிப் பற்றிக்கொண்டது; வலிவும், வனப்பும் பெற்று எப்படி மக்கள் இயக்கமாக மலர்ந்தது; விடுதலை பெற்று 60 ஆண்டுகள் உருண்டோடி விட்டனவே! விடுதலைக்குக் கொடுத்த விலை என்ன? இந்திய விடுதலை வரலாறு இவரைப் பற்றி என்ன சொல்லுகிறது? உள்ளே நுழையுங்கள்...  துன்பங்களும், துயரங்களும் நிறைந்தது இந்திய விடுதலை வரலாறு. இந்த விடுதலைக்காகச் சிந்திய கண்ணீரும், செந் நீரும், கொடுஞ்சிறையும், கசையடியும், குறுந்தடியும், குண்டடியும் பட்டுத் துவண்டு விழுந்த துயர நிகழ்வுகள் நெஞ்சம் சுமக்கும் நினைவுகளாகும்.  தாய்மார்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் இந்திய விடுதலைக்கு ஆற்றிய தொண்டு அளப்பரிது. தனியாத ஆர்வமும், தளராத உறுதியும், குன்றாத உணர்வும் கொண்ட கோடிப் பேர் கூடிப் பெற்ற இந்திய விடுதலைத் தழும்புகளைத் திரும்பிப் பாருங்கள்.  அடைந்த இழப்புகள் கணக்கிலடங்காதவை. வீடு இழந்து, சொத்து இழந்து, இன்ப வாழ்வு இழந்து, உற்றார் - உறவினர் இழந்து, பெற்றோரை இழந்து, வாழ்க்கைத் துணைவரை, மக்களை இழந்து பெற்ற விடுதலை அல்லவா? இந்த விடுதலையை அடைவதற்கு நம் அறியாமையைப் போக்கி அறிவுக்கண்களைத் திறந்து விட்ட காந்தியடிகளின் பண்பு நலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?  தீமையை எதிர்க்கவும், நியாயத்தை நிலைநாட்டவும் புதிய வழியைக் கண்டு காட்டியவர். இவர் அரசியல் வாழ்வில் அருளுலகு அமைவதற்குக் கால்கோலிட்டவர். அறையில் இருந்த அரசியலை அம்பலத்திற்குக் கொண்டு வந்து எளிய மக்களை உயர்த்தியவரின் விடுதலைச் சுவடுகளைப் படியுங்கள்.  மேட்டுக்குடியானவரின் இயக்கமாக இருந்த இந்திய தேசிய இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அதனை எளியவர் களின் கைகளுக்குக் கொண்டு வந்து சேர்த்த வரலாற்று நாயகர். செய் அல்லது செத்து மடி எனும் உயிரோட்ட உணர்வுகளை மக்கள் மனத்தில் விதைத்தவர்.  ஓர் எளிய மாந்தன். ஆனால் உலக அறிஞர்களால் மதிக்கப் பட்டவர். நாவலர்கள் எல்லாரும் அவரின் அமைதிக்கு முன்னர் நாவடங்கி நின்றனர். அவர் நாவசைந்தால் நாடே அசைந்தது. அவருடைய வாழ்த்தினைப் பெறுவதற்கு இந்தியத் தலைவர் களெல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு நின்றார்களே, எதற்காக? அந்த விந்தையினைத் தெரிந்து கொள்ளுங்கள்.  அறவழி நின்று அமைதியின் வலிமையால் வலுவான இந்திய விடுதலை இயக்கத்தைக் கட்டி அமைத்தவர். உலக அரங்கில் அதை உயர்த்தி நிறுத்தியவர். இந்திய மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். ஆங்கில வல்லாண்மையை அசைத்துக் காட்டியவர். உலக நாடுகளின் அறிஞர்களால் இவர் எவ்வாறு கவனிக்கப் பட்டார் என்பதை உற்றுப் பாருங்கள்.  இந்திய மக்களின் நெஞ்சத்தில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர். எந்த நோக்கத்திற்கு இந்திய மக்களை அழைத்துச் செல்ல விரும்பினாரோ அந்த நோக்கத்தை அடைவதற்கு தம் உயிரைத் துரும்பென மதித்தவர். இந்திய மக்களையும் அந்த இலக்கை அடைவதற்கு தம் பின்னே அழைத்துச் சென்றவர்.  இந்திய மக்களுக்கு அஞ்சாமையை நெஞ்சில் புகுத்தி யவர்; இந்திய மக்களை நீதியின் பக்கம் திருப்பியவர். தாம் கொண்ட நோக்கில் பற்றும், உறுதியும் உடையவரா யிருந்தவர்; ஒடுக்கப்பட்ட மக்களின்பால் இரக்கம் காட்டிய ஏந்தல்.  மக்களுக்குத் தொண்டனாக இருக்கிறவன் எவனோ, அவனே அந்த மக்களுக்குத் தலைவன் என்பதை தன் தொண்டின் வாயி லாக நடத்திக்காட்டியவர். தான் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு மற்றவர்களுக்குத் துன்பம் கொடாமல் வாழ்ந்து காட்டிய மா மாந்தர்.  தீண்டாமை என்னும் கொடும் நோயை ஒழிக்க வந்த மருத் துவர். ஈகத்தின் திருவுருவம். உண்மை - அஞ்சாமை என்னும் இரு கருவிகளைத் தாங்கி இந்தியாவின் விடுதலையை வென்றெடுத்தவர்.  வேற்றுமைகளைக் களைந்து இத்துணைக் கண்டத்தை ஒன்று பட்ட நாடாக்க அவர் பட்ட பாட்டையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, சாதி - சமயப் பூசல்களைக் களைந்தெறிந்து இந்தியர்களுக்குப் புத்தொளி காட்டியதை யும் நினைத்துப் பாருங்கள்.  இந்தியப் பெருநிலத்தில் பல பகுதிகளில் வாழ்ந்த மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு நாட்டுப் பற்றையும், தன் னம்பிக்கையையும், விடுதலையுணர்வையும், முன்னேற்ற முயற்சியையும் ஊட்டி வளர்த்த வழிகாட்டி.  நாவன்மையும், தருக்கத்திறமையும் மட்டுமே ஒரு மாந்த னுக்கு பெருமையையும், மதிப்பையும் ஏற்படுத்தாது. ஈக உணர்வும் துன்பத்தை ஏற்கும் துணிவும்தான் ஒருவனுக்கு மாண்பினைத் தரும் என்பதை கற்றுத் தந்த மாண்பாளர்.  மாந்த வாழ்க்கைக்கு ஒரு பெரும் இலக்கியமாகத் திகழ்ந் தவர்; தமக்கென்று வாழாதவர்; பிறர்க்கென்று வாழ்ந்தவர். உண்மையின் நிலைக்களனாய், நேர்மையின் திருவுருவாய் வாழ்ந்து காட்டியவர். கொண்ட கொள்கைக்காக எதனை யும் ஏற்க துணிவு வேண்டும் என்பது இவர் காட்டிச்சென்ற வழிமுறை யாகும்.  வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க! . . . பாரதியார்  இந்தியா ஈன்ற மைந்தருள் ஒருவன். கூர்ஜர நாடன் கூர்த்த மதியினன் தாய்மொழி காத்து நாயக னானவன் தன்னுயிர் போல மன்னுயிர் போற்ற நல்லற மென்னும் இல்லற மேற்றோன் . . . திரு.வி.க.  இந்திய விடுதலையில் தமிழகத்துக்குப் பெருமை தேடித்தந்த பாரதியாரும், திரு.வி.க.வும் போற்றிய மாந்தப் பண்பாளர். உலக அறிஞர்களின் பார்வையில் காந்தியார் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டார் என்பதை இந்நூலில் உள்ளே சென்று நீங்களும் உங்கள் சிந்தனைக் கண்கொண்டு பாருங்கள். இந்தியாவின் தந்தை காந்தியடிகளை உலக அறிஞர்கள் எவ்வாறு கணித்தனர் என்பதை மேனாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி. இராதாகிருட்டினன் ஆங்கிலத்தில் எழுதிய மூல நூலினை வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா தன்னுடைய மொழிபெயர்ப்புத் திறனின் மேன்மையை முழுமை யாகக் காட்டி தமிழாக்கம் செய்துள்ளமை, படிப்பார் உளங் கொள்ளத் தக்கது. பொருளடக்கம் எனது நன்றி iii அணிந்துரை iv சர்மாவின் சாதனைகள் vi பதிப்புரை x நுழையுமுன் xii நூல் 1. காந்தியடிகளின் மதமும் அரசியலும் ஸர் எ. ராதா கிருஷ்ணன் 1 2. மகாத்மா காந்தி - ஒரு மதிப்பு ஹோரே ஜி. அலெக்ஸாந்தர் 38 3. ஒரு நண்பனுடைய காணிக்கை சி. எப். ஆண்ட்ரூ 45 4. காந்தியடிகளின் வாழ்க்கை ஜி. எ அருண்டேல் 54 5. பாரத தாஸன் ரைட் ரேவரெண்ட் வி. எ. அஜரப்பா 58 6. காந்தியடிகள் - ஒரு சமரஸதூதர் எர்னட் பார்க்கர் 61 7. புகழ் நிறைந்த பெயர் லாரென் பின்யன் 66 8. வாழ்க்கை நியதி ஸ்ரீமதி பியர்ல் எ. பக் 67 9. மகாத்மா ஆனந்தா கே. குமாரசாமி 68 10. எனது இரண்டு சந்திப்புகள் லயனல் கர்டி 70 11. காந்தியடிகளும் காங்கிரசும் பகவான் தா 72 12. காந்தியடிகளின் ராஜதந்திரம் ஆல்பர்ட் ஈன்டீன் 81 13. ஒரு சமுதாய விஞ்ஞானி ரிச்சர்ட் பி. க்ரேக் 82 14. தற்கால புருஷர் கெரால்ட் ஹெர்ட் 89 15. காந்தி - சத்தியப்பிரகாசம் கார்ல் ஹீத் 94 16. ஒரு கிருதவனுடைய கண்ணுக்கு - டீபன் ஹாப்ஹவு 98 17. சுதந்திரமும் பொருளும் வில்லியம் எர்னட் ஹோம் 114 18. காந்தியடிகளின் பெருமை ஜான் ஹேய்ன் ஹோம் 116 19. ஒரு தென்னாப்பிக்கருடைய பாராட்டு ஆர். எப். ஹோர்ன்லே 119 20. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் கனம் ஜான் எச். ஹாப்மேயர் 126 21. காந்தியடிகளும் உலக சமாதானமும் லாரென் ஹவுமான் 130 22. சத்தியாக்கிரகக் கொள்கை ஜான் எ. ஹாய்லண்ட் 131 23. ஒரு ராஜதந்திரியின் பாராட்டு ஸர். மிர்ஸா எம். இமெயில் 151 24. ஆத்ம சக்தியின் அதிகாரி சி. இ. எம். ஜோட் 157 25. காந்தியடிகளும் ஆத்ம சக்தியும் ரூப எம். ஜோன் 163 26. காந்தியடிகளும் ஏகாதிபத்தியமும் கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் 168 27. உலக சரித்திரத்தில் காந்தியடிகள் கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் 171 28. பிறந்த நாள் வாழ்த்து ஜார்ஜ் லான்பரி 174 29. காந்தியடிகளின் செல்வாக்கு ஜான் மாக்முர்ரே 175 30. ஒருமுகப்பட்ட வாழ்க்கை டான்ஸால்வடோர் டி மடாரியாகா 177 31. அஹிம்சையின் சக்தி குமாரி எத்தெல் மான்னின் 180 32. காந்தியடிகளும் குழந்தையும் டாக்டர் மேரியா மாண்டிஸோரி 184 33. காந்தியடிகளின் வளர்ச்சி ஆர்தர் மூர் 186 34. காந்தியடிகளின் ஆத்ம சக்தி கில்பர்ட் முர்ரே 194 35. கீழ்நாட்டு யாத்திரிகன் காணிக்கை யோனே நோகுச்சி 197 36. காந்தி - பல அமிசங்களில் பி. பட்டாபி சீதாராமய்யா 201 37. உலகத்திற்களித்த செய்தி குமாரி மாட் டி. பெட்ரி 219 38. காந்தியடிகளின் உபதேசம் எச். எ. எல். போலக் 224 39. ஆத்மாவின் வெற்றி லெவெலின் பவி 229 40. சீனாவின் வணக்கம் எம். குவோ தை-சி 233 41. ஏழை வேஷத்திலுள்ள ஒரு ராஜதந்திரி ஸர் அப்துல் காதர் 234 42. இந்தியாவின் நன்றி ராஜேந்திர பிரசாத் 240 43. கடவுட் பித்தர் ரெஜினால்ட் ரெயினால்ட் 244 44. மேனாட்டிலிருந்து ஒரு காணிக்கை ரோமெய்ன ரோலந்து 249 45. ஓர் ஆங்கிலேய திரியின் காணிக்கை குமாரி மாட்ராய்டன் 253 46. உண்மைத் தலைவர் மகா கனம் வைகவுண்ட் சாமியல் 258 47. வட்ட மேஜை மகாநாட்டில் மகா கனம் வைகவுண்ட் ஸாங்கே 262 48. ஹிந்து தர்மத்தின் கர்த்தர் டி. என். சர்மா 266 49. சிறியவர் - ஆனால் பெரியவர் ஸ்ரீமதி கிளேர் ஷெரிடன் 270 50. அரசியல் முறை மகா கனம் ஜே. சி. மட் 276 51. கவிஞரின் கருத்து ரவீந்திரநாத் தாகூர் 281 52. காந்தியடிகளின் குணமேம்பாடு எட்வர்ட் தாம்ப்ஸன் 282 53. சத்தியாக்கிரக பாதை ஸ்ரீமதி ஸோபியா வாடியா 295 54. ஒற்றுமைக்காக உபவாசம் ரெவரெண்ட் பா வெட்காட் 305 55. காந்தியடிகளின் சமாதான வாதம் ரெவரெண்ட் ஜாக் சி வின்லோ 309 56. தலைமையைப் பற்றிச் சில கருத்துகள் எச். ஜி. வுட் 313 57. நாற்பத்தேழு வருஷங்களுக்குப் பிறகு - ஸர் பிரான்சி யங்ஹபண்ட் 320 58. தேசபக்தியும் பொது நலமும் ஸர் ஆல்ப்ரெட் ஜிம்மர்ன் 323 59. எனது வந்தனம் ஆர்னால்ட் வீக் 328 60. மஹா தியாகி மகா கனம் வைகவுண்ட் ஹாலிபாக் 332 61. ஜீவகாருண்ய சிந்தை அப்டன் சிங்க்ளேர் 333 62. சமாதானத்திற்கு அடிகோலியவர் ஆர்தர் எச். காம்ப்டன் 334 63. சத்தியம் என்றால் என்ன? ஜே. எச். மூர்ஹெட் 335 64. கட்டுரை எழுதினவர்களைப் பற்றி... 337 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி, புலவர் கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய் மெய்ப்பு முனைவர் செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers) இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . காந்தியடிகளின் மதமும் அரசியலும் ஸர் எ. ராதாகிருஷ்ணன் (ஆக்போர்ட் சர்வகலாசாலை) பூலோகத்திலே, மனிதனுடைய சரித்திரத்தில் மிகப்பெரிய விஷயமென்னவென்றால் அவனுடைய லௌகிக சித்திகளல்ல; அவன் கட்டி வைத்த, உடைத்துப்போட்ட ஏகாதிபத்தியங்களல்ல. சத்தியத்தையும் தர்மத்தையும் தேடிக்கொண்டு யுகத்திற்கு யுகம் அவனுடைய ஆத்மா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறதே அதுதான் மிகப்பெரிய விஷயம். இந்த ஆத்ம வளர்ச்சிக்காகப் பாடுபடு கிறவர்கள், மானிட சமுதாயத்தின் ஞான இதிகாசத்தில் நிரந்தர தானம் பெற்றுவிடுகிறார்கள். கால தேவதையானவள் எவ்வளவு சுலபமாக மற்றவர்களை மறந்து விடுகிறாளோ அதைப்போல் வீரர்களையும் புறக்கணித்து விடுகிறாள். ஆனால் மகான்கள் எப்பொழுதும் -காலதேவதையின் ஞாபகத்தில் - திரவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். காந்தியடிகளின் பெருமை, அவர் நடத்திய தீரமான போராட்டங்களைக்காட்டிலும் அவருடைய பரிசுத்த வாழ்க்கையிலே தான் தங்கியிருக்கிறது. உலகத்தில் அழிவுச் சக்திகள் மேலுக்குப் போய்க்கொண்டிருக்கிற ஒரு தருணத்தில், ஆத்மாவுக்குச் சிருஷ்டி சக்தியுண்டு, ஜீவ சக்தியை அளிக்கும் தன்மையும் உண்டு என்று அவர் வற்புறுத்திப் பேசி வருகின்றாரே அதிலேதான் அவருடைய பெருமை இருக்கிறது. 1. அரசியலின் மத அடிப்படை எந்த ஒரு மகத்தான எழுச்சியானது பாரத ஜாதியை அசைத்துக் கொடுத்து, அதன் கட்டுக்களைத் தளர்த்திவிட்டதோ, அந்த மகத்தான எழுச்சிக்கு, மற்றவர்களைக் காட்டிலும் காந்தியடி களே முக்கிய காரணதர். இந்த வகையில்தான் உலகம் அவரை அறிந்து கொண்டிருக் கிறது. பொதுவாக அரசியல்வாதிகள், மதத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், ஒரு ஜாதியின்மீது மற்றொரு ஜாதி அரசியல்ஆதிக்கங்கொள்ளுதல், ஏழைகளையும் பலஹீனர்களையும் பொருளாதாரத்தின் மூலம் சுரண்டுதல் முதலிய அவர்கள் ஈடுபட்டிருக் கிற விஷயங்களிருக் கின்றனவே, அந்த விஷயங்களின் நோக்கம் வேறே; மதத்தின் நோக்கம் வேறே; ஒன்றுக்கொன்று முரண்பாடுடையவை. இதனால் அவர்கள் - அந்த அரசியல் வாதிகள்-மதத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; அல்லது மதத்திற்கு ஒரு தெளிவான, நிர்ணய மான வியாக்கியானம் செய்வதுமில்லை. ஆனால் காந்தியடி களுக்கோ, எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான். அவர் கூறுகிறார்:- : ஒருவன், அகில உலகத்திற்குப் பொதுவானதும், சர்வ வியாபகமா யுள்ளதுமான சத்தியப் பொருளை நேருக்கு நேர் பார்க்க வேண்டு மானால், அவன், சிருஷ்டிகளிலே மிகக் கேவலமா யுள்ளதைக்கூட, தன்னைப் போல் நேசிக்க வேண்டும். அப்படிப்பட்ட நாட்டங் கொண்டவன், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் ஒதுங்கியிருக்க முடியாது. இதனால் தான், சத்தியத்தின்மீது எனக்குள்ள பக்தியானது, என்னை, அரசியல் துறைக்கு இழுத்து விட்டது. எனவே, மதத்திற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமு மில்லையென்று சொல்கிறவர்கள், மதம் என்றால் இன்னது என்று தெரியாதவர்களென்று நான் கொஞ்சங் கூடத் தயக்கமின்றியும், ஆனால் பணிவாகவும் கூறுவேன். மீண்டும் அவர் கூறுவதாவது- அழியக் கூடிய இந்த பிரபஞ்ச சாம்ராஜ்யத்தின்மீது எனக்கு இச்சையில்லை; மோட்ச சாம்ராஜ்யத்திற்காகவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி முயற்சிப்பதானது, ஆத்மார்த்த மான விடுதலை பெறுவதாகும். என்னைப் பொறுத்தமட்டில், முக்திக்கு வழியெங்கே இருக்கிறதென்றால், எனது தேசத்திற்காகவும், மானிட ஜாதிக்காகவும் ஓயாமல்தொண்டு செய்து கொண்டிருப்பதிலே தான். ஜீவப் பிராணிகள் ஒவ்வொன்றினோடும் என்னை ஐக்கியப் படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கீதையிலே சொல்லப்பட்டிருக்கிற மாதிரி, சிநேகிதனுடனும், சத்துருவுடனும் நான் சமாதானமாகவே வாழ விரும்புகிறேன். ஆகையால் என்னுடைய தேசபக்தியானது, எந்த இடத்தில் சுதந்திரமும் சமாதானமும் நித்திய மாகக் குடிகொண்டிருக்கிறதோ அந்த இடத்திற்கு-அந்த மோட்ச சாம்ராஜ்யத்திற்கு-நான் பிரயாணமாகிப் போகின்ற மார்க்கத்தில் உள்ள ஒரு தங்குமிடந்தான். எனவே, என்னைப் பொறுத்தமட்டில், மதமின்றிய அரசியல் இல்லை என்பது நன்கு புலனாகும். மதத்திற்கு, அரசியல் ஒரு துணையாக இருக்கிறது. மதமில்லாத அரசியல், மரணப் பொறிமாதிரி. ஏனென்றால் அந்த அரசியல், ஆத்மாவையே கொன்றுவிடுகிறது. அரசியல் வாதி என்ற முறையில், மனிதன் அதிகமான வெற்றியடைய வில்லையென்று சொன்னால், அதற்குக் காரணம், அவன், மதம் வேறே, அரசியல் வேறே என்று பிரித்துவிட்டதுதான். அப்படிப் பிரித்து விட்டதால் அவன் இரண்டையும் தப்பர்த்தம் செய்து கொண்டிருக் கிறானென்பது தெரிகிறது. காந்தியடிகளுக்கு, மானிட சேவையைத் தவிர்த்து வேறே மதம் இல்லை. இந்தியாவின் தற்போதைய நிலைமையில், காந்தியடிகள், கொடுங்கோன்மையை ஏற்றுக்கொள்ள அல்லது அடிமைத் தனத்திற்கு இணங்க மறுக்கிற ஒர் அரசியல் புரட்சிக் காரராயிருக்க நேரிட்டிருக்கிறதாயினும், மற்றப் புரட்சிக்காரர்களினின்று, அதாவது எந்தப் புரட்சிக்காரர் களுடைய தத்துவங்கள், மனிதர்களை இயற்கைக்கு விரோத மானதும், மனிதத் தன்மை யற்றதுமான காரியங்களைச் செய்யுமாறு நிர்ப்பந்தித்துவிடுகின்றனவோ, அப்படிப் பட்ட, எவ்வித சமரஸ ஏற்பாட்டிற்கும் இணங்கி வராத புரட்சிக்காரர் களினின்று - வேறுபட்டவர். அநுபவபூர்வமாக அவரை நாம் பரிசோதித்துப் பார்க்கிறபோது, அவர் ஒர் அரசியல்வாதியாக மட்டும் இல்லை; ஒரு சீர்திருத்தக்காரராக மட்டும் இல்லை; ஒர் ஒழுக்கசீலராக மட்டும் இல்லை; இவையெல்லாம் சேர்ந்த ஒரு மகா புருஷராகவே அவர் விளங்குகிறார். அவர் சிறப்பாக ஒரு மத புருஷர். மனித குணங்களில் எவை எவை சிறந்தனவோ அவையாவும் அவரிடத்தில் இருக்கின்றன. அவர், தமது சக்தியின் எல்லையை நன்கு உணர்ந்திருக் கிறார். அவரிடத்தில் நகைச்சுவை நிரம்ப உண்டு. இத்தகைய காரணங் களினால், எல்லோருடைய அன்புக்கும் அவர் உரியவராயிருக்கிறார். 2. மதமும் கடவுளும் கடவுளைப் பற்றி நம்முடைய அபிப்பிராயம் எது வேண்டு மானாலும் இருக்கட்டும். ஆனால் காந்தியடிகளுக்கு, கடவுள் என்றால் மிக முக்கியமானதொன்று; உண்மைப் பொருள். கடவுளிடத்தில் அவர் கொண்டுள்ள நம்பிக்கைதான், அவரை ஒரு புதிய மனிதராக்கியிருக்கிறது. அந்தப் புதிய மனிதருடைய சக்தி, ஆவல், அன்பு முதலிய வற்றை நாம் உணர்கிறோம். ஏதோ ஒன்று, தம்முடன் கூடவே இருந்து கொண்டிருப்ப தாக அவர் உணர்கிறார். அஃது, அந்த தெய்விக சக்தி தம்மை முதலில் தொந்திரவு செய்து, பிறகு தயக்கத்திற்குட்படுத்தி, கடைசியில் தம்மையே அதற்கு ஆட்படுத்திக் கொண்டு விடுவதாகவும் அவர் உணர்கிறார். இந்த அநுபவங்களே, அவருக்குக் கடவுளின் உண்மையை உறுதி கூறுவன வாயிருக்கின்றன. தமது மனத்தில் சந்தேகங்கள் உதித்த எத்தனையோ சந்தர்ப்பங்களில், அவர், அவற்றைக் கடவுளின் தீர்ப்புக்கே விட்டுவிடு கிறார். கடவுளிடத்திலிருந்து ஏதேனும் பதில் கிடைக்கிறதா? இல்லை யென்றும் சொல்லலாம்; உண்டு என்றும் சொல்லலாம். இல்லை யென்று ஏன் சொல்லவேண்டுமென்றால், தம்மிடத்தில் யாரோ வந்து ரகசியமாகப் பேசுகிற மாதிரியோ, அல்லது தூரத்திலிருந்து யாரோ பேசுகிறமாதிரியோஅவர் காதுக்கு ஒன்றும் கேட்பதில்லை. உண்டு என்று ஏன் சொல்லவேண்டு மென்றால், நாம் விண்ணப்பித்துக்கொண்ட ஒரு கோரிக்கைக்குப் பதில் கிடைத்து விட்டால் நமக்கு எப்படி ஒருவித மனச்சாந்தியும் திருப்தியும் ஏற்படுமோ அப்படிப்பட்ட மனச்சாந்தியையும் திருப்தியையும் அவர் அடைகிறார். தமக்குக் கிடைக்கிற பதிலின் தன்மையைக் கொண்டு, -அந்தப் பதில் யுக்திக்கநுசரணையாகவும் இருக்கிறது. - அவர், தம்முடைய கனவு களுக்கு, அல்லது பிரமை களுக்குத் தாம் இரையாகிவிடவில்லை யென்பதைத் தெரிந்து கொள்கிறார். விவரிக்க முடியாத, மனித அறிவுக்கு எட்டாத ஒரு சக்தி எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. அதை நான் பார்க்க முடியாவிட்டாலும் அஃதிருப்பதாக நான் உணர்கிறேன். காண முடியாத அந்தச் சக்தி, தான் இருந்து கொண்டிருப்பதாக நமக்கு உணர்த்துகிறது. ஆயினும் (அஃது இருப்பதாக நிரூபித்துக் காட்டுவோ மென்றால், அந்த) நிரூபணத்திற்கெல்லாம் புறம்பாகி நிற்கிறது. ஏனென்றால் , என் இந்திரியங்களின் மூலம் நான் காண்கிற பொருள் களைப் போல் அஃது இல்லை. புறச்சான்றுகளைக் கொண்டு, அந்தச் சக்தியின் உண்மையை ருஜுப்படுத்த முடியாது. ஆனால் யாரொருவர், தங்களிடத்தில் கடவுள் பிரசன்னமாயிருப்பதாக உணர்கிறாரோ அப்படிப் பட்டவருடைய நடவடிக்கையும் குணமும் அடியோடு மாறிவிட்டிருப்பதைக் கொண்டு, கடவுளின் உண்மையை நிரூபித்துக் காட்டலாம். இதற்கு அத்தாட்சி என்ன? எல்லாத் தேசங்களிலும் எல்லாக் காலங்களிலும் அவதரித்துக் கொண்டு வந்திருக்கிற தீர்க்கதரிசிகளென்ன, முனிபுங்கவர் களென்ன இவர் களுடைய வாழ்க்கையின் அநுபவந்தான். இந்த ஆதாரத்தை ஒருவன் மறுப்பானாகில், அவன் தன்னைத் தானே மறுத்துக் கொண்டவனாகிறான்.1 அஃது - அந்தப் பரம் பொருளுண்மை – வாதத்திற் குரியவிஷயமாகாது. தர்க்கத்தின்மூலம் கடவுளுண்மையை தாபிக்க வேண்டுமென்று சொன்னால், நான் தோல்விதான். ஆனால் ஒன்றுமட்டும் உங்களுக்குக் கூறுவேன். அதாவது நீங்களும் நானும் எப்படி இந்த அறையில் உட்கார்ந்திருப்பது உண்மையோ, அதைப் போல், கடவுள் இருக்கிறாரென்பதும் உண்மை. இதை நான் நிச்சய மாக நம்புகிறேன். காற்றும் நீருமில்லாமல் நான் உயிர் வைத்துக் கொண்டிருந்தாலும் இருப்பேன்; ஆனால் அந்தப் பரம் பொருளில் லாமல் என்னால் இருக்கவே முடியாது. என் கண்களை நீங்கள் பிடுங்கி விடலாம்; அஃது என்னைக் கொல்லாது. என் மூக்கை நறுக்கிவிடலாம்; அஃது என்னைக் கொல்லாது. ஆனால் கடவுளின் மீது எனக்குள்ள நம்பிக்கையைப் பிளந்து விடுங்கள்; நான் இறந்துபட்டவன் தான்.2 ஹிந்து தர்மத்தின் பாரமார்த்திக பரம்பரைக் கநுகுணமாக, காந்தியடிகள் உறுதியாகச் சொல்வதென்ன வென்றால், தேக சம்பந்தமான ஆசா பாசங்களினின்று விடுதலை பெற்று, ஆத்ம சுதந்திரம் என்கிற மேல் நிலைக்கு நாம் ஒரு தடவை சென்று விட்டால், அங்கிருந்து - அந்த உயர் நிலையிலிருந்து காணப்படுகிற காட்சி எல்லாருக்கும் ஒன்றாகவே இருக்கிறது. ஒரு மலை மீது ஏறிச் செல்ல வேண்டுமென்றால், பல வழிகள் இருக்கின்றன. நாம் எந்த இடத்தில் தங்கியிருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்துதான் புறப்பட முடியும். ஆனால் அந்த மலையின் மீதுள்ள எதைப் போய் அடைய வேண்டுமோ அஃது ஒன்று தான். இலாம் மதத்தின் அல்லாவும், கிறிதவர்களின் கடவுளும், ஹிந்துக்களின் ஈசுவரனும் ஒன்றுதான். ஹிந்து மதத்தில், கடவுளுக்கு அநேக பெயர்கள் இருக் கிற மாதிரி, இலாம் மதத்திலும் கடவுளுக்கு அநேக பெயர்கள் இருக்கின்றன. இந்தப் பெயர்கள், கடவுளின் தனித்துவத்தைக் குறிப்பிட வில்லை; அவருடைய குணங்களையே குறிப்பிடுகின்றன. கடவுள், குணாதீதராகவும், வருணனைக் கெட்டாதவராகவும், அளவிட முடியாதவராகவும் இருந்த போதிலும் சிற்றறிவுள்ள மனிதன்; தனக்குத் தோன்றியவகையில், அந்தக் கடவுளுக்குப் பல குணங் களைக் கற்பித்து அப்படியே அவரை வருணிக்கிறான். இப்படிப் பட்ட கடவுளினிடத்தில் நமக்கு நிஜமான பக்தி இருக்குமேயானால், எல்லா மதங்களினிடத்தும் நமக்கு ஒரே மாதிரியான மரியாதை உண்டாகும். என்னுடைய மதமே, மற்ற மதங்களைக் காட்டிலும் சிறந்தது; பிற மதத்தினரை என் மதத்தில் சேருமாறு செய்வது நியாயந்தான் என்று நீ நம்புவாயானால், அஃது என்ன காட்டுகிறது? உன்னிடத்தில் மதத்துவேஷம் அதிகமாகக் குடி கொண்டிருக்கிற தென்பதையே காட்டுகிறது. இப்படிப் பிற மதங் களிடத்தில் சகிப்புத் தன்மை காட்டாமலிருப்பது, பலாத்காரத்தின் ஒர் அமிசமாகும்.1 காந்தியடிகள், மற்ற மதங்களிடத்தில் துவேஷங் கொள்ளா மலிருப்ப தோடு நின்று விடுவதில்லை; அவைகளை மனப் பூர்வமாகப் பாராட்டவும் செய்கிறார். யேசுநாதருடைய வாழ்க்கையும், அவர் செய்த சேவைகளும், அஹிம்சா தர்மத்தின் சிறந்த உதாரணங் களென்றே அவர் கொள்கிறார். என்னுடைய வாழ்க்கை நல்வழிப் படுவதற்குத் துணை புரிந்த மகான்களில், யேசுநாதர் ஒருவர். அவர், என் இருதயத்திலே ஒரு முக்கிய தானம் பெற்று விளங்குகிறார். என்பது அவர் வாக்கு. முகம்மது நபி அவர்களுடைய சீலம் தளராத நம்பிக்கை, அநுபவ பூர்வமாகக் காரியங்களைச் செய்யும் திறமை முதலியவற்றையும், அலியினுடைய2 காருண்ய சுபாவம், அவர் பட்ட கஷ்டம் முதலியவற்றையும் காந்தியடிகள் பாராட்டுகிறார், இலாம் மதத்திலே வற்புறுத்திக் கூறப்பட்டிருக்கும் உயர்ந்த உண்மைகளாகிய கடவுளின் மகத்தான கம்பீர சக்தி, வாழ்க்கையில் எளிய தன்மை இருக்கவேண்டுமென்ற நியதி, எல்லோரிடத்திலும், சகோதர பாவத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்ற கருத்து, ஏழைகளிடத்தில் இரக்கங்காட்ட வேண்டுமென்ற கோட்பாடு முதலியன வெல்லாம், மற்ற எல்லா மதங்களினுடைய அடிப்படைக் கொள்கைளாயிருக்கின்றன வென்று அவர் அங்கீகரிக்கிறார். ஆயினும், அவருடைய வாழ்க்கையில் முக்கிய ஆதிக்கம் பெற்றிருப்பது ஹிந்து மதமும், அது, சத்தியத்தைப் பற்றிக் கொண்டுள்ள மனோபாவம் அதன் ஆத்ம நிதர்சனம், அது காட்டுகிற தாராள மனப்பான்மை முதலியனவுமேயாம். எல்லா மதங்களும், மேலானதொரு மதத்தை அடைவதற்குரிய சாதனங்கள் தான். காந்தியடிகள் பின்வருமாறு கூறுகிறார். மதம் என்றால் என்னவென்பதைப் பற்றி நான் சிறிது விளக்கிக் கூறுகிறேன். எல்லா மதங்களையும்விட நான் அதிகமாக மதிக்கிற ஹிந்து மதமல்ல நான் கூறுகிற மதம். நான் கூறுகிற மதம், ஹிந்து மதத்தைக் கடந்து நிற்பது; ஒருவனுடைய சுபாவத்தையே மாற்றுந் தன்மையது; ஒருவனை, அவனிடத்தில் அந்தர்யாமியாக விளங்கும் சத்தியப் பொருளோடு ஐக்கியப்படுத்திவிடக்கூடியது; மனிதனிடத்தில் களங்கங் கள் ஏற்படாத படி எப்பொழுதும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் சக்தியுடையது. மனிதனுடைய சுபாவத்திலேயே ஒருவிதமான சக்தி இருக்கிறது. அது, மனிதனுடைய பூரணத் தன்மையை வெளிப்படுத்த எல்லாவித கஷ்டங் களையும் அநுபவிக்கத் தயாராயிருக்கிறது. ஆத்மா, தன்னைத்தான் அறிந்துகொள்ளாதவரையில், தன்னைப் படைத்த பரம் பொருளைத் தெரிந்து கொள்ளாதவரையில், தனக்கும் அந்தப் பரம்பொருளுக்கும் உள்ள உண்மையான சம்பந்தம் என்னவென்பதைத் தெரிந்து பாராட்டாத வரையில்அந்தச் சக்தி சும்மா இருப்பதில்லை. அப்படிப்பட்ட அந்தச் சக்தியையே நான் மதம் என்று கூறுகிறேன். சத்தியத்தைத் தவிர வேறு கடவுளில்லை. அந்தச் சத்தியத்தை அடையவேண்டுமானால் அன்பு அல்லது அஹிம்சையினால்தான் முடியும். தன்னைத் தான் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் ஒருவன் சத்தியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது; அன்பை அநுஷ் டிக்கவும் முடியாது. இருதய பரிசுத்தமுடையவர்கள் தான் கடவுளைக் காணமுடியும். இருதய பரிசுத்தம் ஏற்படவேண்டுமானால், விருப்பு வெறுப்புக்களினின்று அப்புறமாக வேண்டுமானால், மனோவாக்கு காயங்களில் ஆசாபாசமில்லாமலிருக்க வேண்டுமானால், அச்சம், கர்வம் முதலியவைகளினின்று மீளவேண்டுமானால், சாரீரிக முரண்பாடுகளை யும் (தேக உபாதிகளையும்) மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறதே அதனையும் கடக்க வேண்டும். அப்படிக் கடக்க வேண்டுமானால், தப - அதாவது ஒழுங்கான முயற்சி செய்தல், கண்டிப்பான வாழ்க்கை நடத்துதல் - ஒன்றுதான் வழி. துன்ப மநுபவிப்பதன் மூலம் ஆத்ம பரிசுத்தம் ஏற்படுகிறது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போழ்து, அதிலிருந்து கிளம்பிய விஷத்தைப் பரமசிவன் உட் கொண்டு விட்டார் என்று ஹிந்து புராணங்கள் கூறுகின்றன. கிறிதவர்களுடைய நம்பிக்கைப்படி மானிட சமூகத்தைக் காப்பாற்றும் பொருட்டு கடவுள் தமது மகனையே அர்ப்பணம் செய்துவிட்டார். இவை யெல்லாம் கட்டுக்கதைகளாகவே இருக்கட்டும். ஆனாலும் இந்த நம்பிக்கைகள் ஏன் ஏற்பட்டன? மனிதர்களிடத்தில் இயற்கையாக உள்ள சில எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத்தான். நீ பிறரை எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக நேசிக்கிறாயோ அவ்வளவுக் கவ்வளவு அதிகமாகக் கஷ்டப்படுகிறாய். வரம்பு கடந்த அன்பு என்றால் வரம்பு கடந்த துன்ப அநுபவந்தான். எவனொருவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறானோ அவன் அதனை இழந்து விடுகிறான்.1 இந்தப் பிரபஞ்சத்திலே நாம் கடவுளுக்காக வேலை செய்கிறோம். அவருடைய நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு நமது வாழ்க்கையை உபயோகப்படுத்த வேண்டுமென்பது நமக்கேற்பட்ட கட்டளை. அப்படி நாம் செய்ய மறுத்து, நமது உயிரை (வாழ்க்கையை)ச் செலவழிப்பதற்குப் பதில் அதனைச் சேர்த்து வைக்க முற்பட்டோ மானால், நமது சுபாவத்தையே, அதாவது மனித சுபாவத்தையே நாம் மறுத்தவர்களாகிறோம்; அதனால் நமது வாழ்க்கையையும் இழந்து விடுகிறோம். நமது திருஷ்டிக்குப்படுகிற தூரத்தின் கடைசிக்கு நாம் செல்ல வேண்டுமானால், தூரத்திலிருந்து அழைக்கிற குரலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டுமானால், பிரபஞ்ச ஆசைகள், புகழ், பொருள், இந்திரிய சுகம் முதலிய எல்லாவற்றையும், ஒதுக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஒர் ஏழையை, ஒரு ஜாதி ஹீனனைக் கைதூக்கிவிட வேண்டுமானால், அவனுடைய வறுமையில் நாம் பங்கு கொள்ள வேண்டும். அவனைப் போல நாமும் ஜாதிஹீனர்களாகிவிட வேண்டும்; அதாவது அவனுடை நல்வாழ்வுக்கு நம்மை அர்ப்பணம் செய்துவிட வேண்டும். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் பொருட்படுத்தாமல் எது சரியென்று படுகிறதோ அதைச் சொல்ல வேண்டுமானாலும், செய்ய வேண்டுமானாலும், எல்லோரிடத்திலும் தாராளமாக அன்பு செலுத்த வேண்டுமானாலும், பிறர் குற்றங்களைத் தாராளமாக மன்னிக்க வேண்டுமானாலும், பற்றற்ற மனப்பான்மை இருக்க வேண்டுவது அவசியம். உலகத்திலேயுள்ள ஒரு நுனிப்புல்லைக் கூட தம்முடைய தாக்கிக் கொள்ளாமல், உலகத்தையே அநுபவிக்கி றார்களே அப்படிப் பட்ட பந்தமற்றவர்களுக்குத்தான் சுதந்திரம் உரியது. இந்த விஷயத்தில் காந்தியடிகள் சந்நியாச தர்மத்தையே அநுஷ்டிக்கிறார். சந்நியாசிக்கு நிரந்தரமான ஒருவாசதானங் கிடையாது; வாழ்க்கையை இப்படித்தான் நடத்த வேண்டுமென்ற நிரந்தரமான ஒரு கட்டுப்பாடும் கிடையாது. சந்நியாசிகள் மட்டுமல்ல, மானிட சமுதாயம் அனைத்துமே ஒரு துறவிக்கேற்பட்டுள்ள கடுமையான வாழ்க்கை முறையை அனுஷ்டிக்க வேண்டுமென்று சொல்லப்படுகிற போது, அது கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்வதாகத்தான் இருக்கிறது. உதாரணமாக காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற நியதி எல்லோருக்கும் பொதுவானது; ஆனால் ப்ரஹ்மசரியத்தை அனுஷ்டிக்க வேண்டுமென்ற நியதி ஒரு சிலருக்கே. ஆண் பெண் சேர்க்கை யென்கிற செயல் இருக்கிறதே அது கேவலம் தூல சரீரத்திற்குச் சுகம் கொடுக்கிற செயல் என்று கருதுவதற் கில்லை. அந்தச் செயல் மூலந்தான் ஒருவனுடைய அல்லது ஒருத்தியினுடைய காதல் வெளிப்படுகிறது; ஜீவ சிருஷ்டி உண்டாகிறது. ஆனால் அதே ஆண் பெண் சேர்க்கைச் செயல், கெடுதலென்று எப்பொழுது சொல்கிறோமென்றால், அது பிறருக்குத் தீமை விளை விக்கிற போதுதான்; அல்லது ஆத்ம வளர்ச்சியைப் பாதிக்கிறபோது தான். ஆனால் இந்தக் கெடுதல், அந்தச் செயலில் சேர்ந்திருக்கவில்லை. எந்தச் செயலின் மூலம் நாம் உயிர் வாழ்கிறோமோ, எதன் மூலம் காதல் வெளியாகிறதோ, எதன் மூலம் நமது ஜாதி தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறதோ அந்தச் செயல்- ஆண் பெண் சேர்க்கை-அவமானப்படக் கூடிய செயலல்ல; பாவச் செயலல்ல. ஆனால் பாரமார்த்திக வாழ்க்கையை மேற்கொண்டுள்ள மகாபுருஷர்கள், ஏன் ப்ரஹ்ம சரியத்தை வற்புறுத்திச் சொல்கிறார்களென்றால், சிந்தையை அடக்கிச் சும்மாயிருக்கும் சக்தியானது நமது தேக சம்பந்தமான ஆசைகள் காரணமாக அழியக்கூடாதென்பதற்குத் தான். காந்தியடிகள், எவ்வளவு தூரத்திற்கு முடியுமோ அவ்வளவு தூரத்திற்குத் தம்மை ஒருவித ஒழுங்குக்குட்படுத்திக் கொண்டிருக் கிறார். brhªj¡fhu®fbs‹W«., வேற்று மனிதர்களென்றும், தமது தேசத்தாரென்றும் பிற தேசத்தாரென்றும், வெள்ளையரென்றும், கறுப்பரென்றும், ஹிந்துக்களென்றும் மற்ற மதத்தினராகிய முலீம்கள், பார்சிகள், கிறிதவர்கள், யூதர்கள் முதலியவர் களென்றும் தாம் வித்தியாசம் பாராட்டுவதில்லையென்று காந்தியடி கள் கூறிக் கொள்கிறார். அது சரியென்று, அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அங்கீகரிப்பார்கள். காந்தியடிகள் ஓரிடத்தில் கூறு கிறார்:- இப்படி நான் வித்தியாசம் பாராட்டாமலிருப்பது, என்னிடத் திலே மட்டும் காணப்படு கிற ஒரு விசேஷ குணம் என்று நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அப்படி வித்தியாசம் பாராட்டாம லிருப்பது என் சுபாவத்திலேயே அமைந்திருக் கின்றது; இதற்காக நான் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. ஆனால், அஹிம்சை, ப்ரஹ்மசரியம் முதலிய குணங்களை, நான் தொடர்ந்து அப்பியசித்தே அபிவிருத்தி செய்துகொண்டேன். இருதய பரிசுத்த முடையவர்கள்தான் கடவுளிடம் பக்தி செலுத்தவும், மனிதர்களை நேசிக்கவும் முடியும். பிறர்மீது அன்பு செலுத்துவதன் காரணமாக நாம் துன்பமநுபவிக்கிறோமென்று சொன்னால் - அவர்களுடைய குற்றங்களையெல்லாம் நம்மீது சுமத்திக் கொண்டிருந்த போதிலும்-அதில் நமக்கு ஒரு சாந்தி ஏற்படுகிறது. அது சுயநலங் காரணமாக உண்டாகிற சுகாநுபவங் களில் காணப்படும் சாந்தியைவிட ஆழமானது; உண்மையானது. மற்றவர்களுக்கு ஒரு நிமிஷ நேர சந்தோஷத்தையாவது நம்மால் கொடுக்க முடிந்தது என்ற திருப்தியைக் காட்டிலும் இந்த உலகத் தில் இனிமையானது வேறொன்றில்லை; மற்றவர்களுடைய துயரத்தில் ஒரு சிறிதளவாவது பங்கெடுத்துக் கொண்டோம் என்ற திருப்தியைவிட இந்த உலகத்திலேமதிக்கத்தக்கது வேறொன்றில்லை என்பன போன்ற உணர்ச்சிகள் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் நமக்கு ஏற்படுகின்றன. அகங்காரமில்லாமல், பெருமை கொள்ளாமல், பிறருக்கு நன்மை செய்கிறோமென்ற பெருமை கூடக் கொள்ளாமல் பூரண இரக்கங் காட்டுவதுதான் மதத்தின் சிறப்பியல்பு. 3. மனிதத்தன்மையின் சாரம் பாரமார்த்திகம் என்று சொன்னால், அதற்கு அடையாளமாக இந்த உலக வாழ்க்கையினின்று ஓடிப் போய்விட வேண்டுமென்பது அல்ல; இந்த உலகத்திலிருந்துகொண்டே எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்; எல்லோருக்காகவும் தொண்டு செய்ய வேண்டும். யமின் ஸர்வாணி பூதானி ஆத்மைவாபூத் விஜாநத:1 அதாவது உன்னை நீ நேசிப்பதைப்போல் பிறரையும் நீ நேசிக்க வேண்டும். இதற்கு நிபந்தனையில்லை. இதற்குச் சம அந்ததும் சுதந்திரமும் இருக்க வேண்டும். இந்த நிலைமை ஏற்படவேண்டு மானால், சுதந்திர புருஷர்கள் பலர் அடங்கிய ஒரு தனி சமுதாயம் அமைய வேண்டும். இந்தச் சமுதாயத்தில் உலகத்தின் பல ஜாதி யினரும் அடங்கியிருக்க வேண்டும். இவர்கள் ஜாதி, மதம், செல்வம், அதிகாரம், வகுப்பு, தேசம் முதலிய விஷயங்களில் ஏற்பட்டிருக் கிற தடைகளைக் கடந்தவர் களாயிருக்க வேண்டும். ஒரு பிரிவினரோ, அல்லது ஒரு ஜாதியினரோ, மற்றொரு பிரிவினருடைய அல்லது ஒரு ஜாதியினருடைய அழிவின் மீது தங்களை திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பார்ப்பார் களேயானால், உதாரணமாக ஜெக்கர் களுடைய அழிவின் மீது ஜெர்மானியர் களும், குடியானவர்களுடைய அழிவின் மீது நிலச்சுவான்தார்களும், தொழிலாளர்களுடைய அழிவின் மீது முதலாளிகளும் வாழப் பார்ப்பார்களானால், அவர்கள்-அந்தப் பிரிவினர் அல்லது ஜாதியினர் - ஜனநாயகமற்ற ஒரு முறையை அநுஷ்டிக் கின்றனர் என்று தான் கொள்ள வேண்டும். அவர்கள், தங்களுடைய நியாயமற்ற செயலை, ஆயுத பலத்தின் துணை கொண்டு தான் காப்பாற்றிக்கொள்ளக் கூடும். சமுதாயத்தின் மீது ஆதிக்கஞ்செலுத்திக் கொண்டிருக்கிறபிரிவினர், எங்கே தங்களுடைய ஏகபோக உரிமைகள் இழக்கப்பட்டுப் போகுமோ வென்று அச்சப் பட்டுக்கொண்டிருக் கின்றனர். ஒடுக்கப்பட்ட பிரிவினர், தங்களுடைய நியாயமான கோபத்தை யெல்லாம் அடக்கிவைத்துக் கொண்டிருக் கின்றனர். இயற்கைக்கு விரோதமாயுள்ள இந்த நிலைமையை, நியாயத்தைக் கொண்டுதான் மாற்ற முடியும். அப்படிப் பட்ட நியாயம் எது? எல்லா மனிதர்களுக்கும் சம உரிமையுண்டு என்பதை அங்கீகரிப் பதுதான். இத்தனை நூற்றாண்டு களாகவும் மானிட சமுதாயமானது, மானிட சகோதரத்துவத்தை லட்சியமாகக் கொண்டு சென்றிருக் கிறது. இப்பொழுது, உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் முற்போக் கான பல இயக்கங்கள் தோன்றுகின்றன. நீதியின் லட்சியம் என்னவென்பதைப்பற்றி ஒரு புதிய மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. மானிட சமுதாயத்தின் பெரும்பாலோர், தாங்கள் அதிகமாகச் சுரண்டப் படுவதாக உணர்ந்து வருகிறார்கள். அப்படிச் சுரண்டப் படுவதினின்று விடுதலைபெற்று எல்லோரும் சம அந்தது பெற வேண்டுமென்கிற எண்ணம் இவர்களிடையே வலுத்து வருகிறது. தங்களுடைய தேவைகள் அதிகப்பட்டுக் கொண்டே வருகின்றன என்பதையும் இவர்கள் தெரிந்து கொண்டு வருகிறார்கள். இவை யெல்லாம் எதைக் காட்டுகின்றன? தன்னை முன்னுக்குப் போக விடாமல் பின்னுக்கே இழுத்துக் கொண்டிருக் கிற முரண்பாடான சக்திகள், நிர்ப்பந்தங்கள் முதலியனவெல்லாம் சாசுவதமாக வளர்ந்து கொண்டு வருவதை எதிர்த்து நிற்பதற்காகச் சாதாரண மனிதன் அவ்வப்பொழுது செய்கிற முயற்சிகளையே காட்டுகின்றன. சில விசேஷ சம்பவங்களுக்கு நாம்அதிகமானமுக்கியத்துவம் கொடுத்துப் பேசி விடுகிறோம். இதற்குக் காரணம் அந்தச் சம்பவங் களை நாம் விபரீத திருஷ்டியில் பார்ப்பது தான். மேலே சொன்ன பிற்போக்குகள், முட்டுச் சந்துகள், சேதங்கள் முதலியவற்றை நூற்றாண்டுகள் கணக்காக உலகத்தில் பொதுவாக எந்தப் போக்கின் படி காரியங்கள் நடைபெறுகின்றனவோ அந்தப் போக்கு என்கிற பின்னணி யோடு பொருத்தி வைத்துப் பார்ப்போமானால், அவை - மேற்கண்ட பிற்போக்குகள் முதலியன - இந்தப்பின்னணி யின் ஒரு பாகந்தான் என்பது புலப்படும். ஆனால் இதனை நாம் சரிவரத் தெரிந்து கொள் வதில்லை. மானிட சமுதாயம் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிற முயற்சிகளைப் பற்றுதலின்றிப் பார்ப்போமானால் நாம் ஆச்சரியமும் திகைப்பும் அடைவோம். அடிமைகள் சுதந்திர புருஷர்களாகி வருகிறார்கள். மாறுபட்ட மதக் கொள்கையுடையவர்கள். இப்பொழுது எரிக்கப்படுகிறார் களில்லை. பிரபுக்கள் தங்கள் உரிமை களை ஒப்புக் கொடுக்கிறார்கள். அடிமைகளாகவே வாழ்ந்து வந்தவர்கள், அந்த அவமானகரமான வாழ்க்கையிலிருந்து விடுதலையடை கிறார்கள். பணக்காரர்கள் தங்களிடம் பணம் இருப்பதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டியவர் களாயிருக்கிறார்கள். ஆயுதபலத்தோடுகூடிய ஏகாதிபத்தியங்கள் சமாதானத்தின் அவசியத்தைப் பற்றி முழக்கம் செய்கின்றன. மானிட சமுதாயம் ஒன்று சேரப் போகிற தென்கிற கனவு களும் காணப்படு கின்றன. ஆம், இப்பொழுதுகூட அதிகாரத்திலுள்ளவர் களின் பேராசை, கீழ் மக்களின் வன்ம புத்தி, நயவஞ்சகர்களின் பொய்மைகள், அகங்காரங் கொண்ட ஜாதீய, தேசீய எழுச்சிகள் ஆகியவற்றை உலகத்தில் காண் கிறோம். இப்படியெல்லாம் இருந்தும், அகில உலகத்திலும் பரவிநிற்கும் தன்மையுடைய ஜனநாயக பரம் பரையை நாம் பார்க்காமற்போனால் நாம் குருடர்கள்தான். பரம ஏழை களுங்கூட போதிய அளவு ஆகாரம், வெளிச்சம், காற்று முதலியவற்றை அநுபவிக்க உரிமை பெறவேண்டும்; அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கை, பெருந்தன்மை. அழகு முதலியன விளங்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் நிறைந்த ஓர் உலகத்தைச் சமைக்க அநேக மகான்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டு வருகி றார்கள். அவர்களிலே முதன்மையானவர் சிலர். அவருள் ஒருவர் காந்தியடிகள், சமீப காலத்தில் அழிவு ஏற்படக்கூடும் என்று பயமுறுத்தப்படுகிறபோது அதற்காக எதிர் காலத்தில் ஏதோ நன்மை உண்டாகப் போகிறதென்று சமாதானம் கொண்டு இந்தப் பய முறுத்தலை அவர் எதிர்க்காம லிருப்பதில்லை, உறுதியான கொள்கையுடையவருடன் சேர்ந்து கொண்டு , தீமைகளைப் போக்க வும், ஆபத்துக்களைத் தடுக்கவும், நேரிய முறைகள் என்னென்ன உண்டோ, அவைகளை யெல்லாம் அவர் கையாளுகிறார். அவரைப் பொறுத்தமட்டில், ஜனநாயகம் என்பது சாதாரண ஒரு சொற் றொடரல்ல; அது, சமுதாயத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் ஒரு கருவி. தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் பொதுஜன நன்மைக்காக அவர் செய்திருக்கும் காரியங்களைப் பற்றி நாம் சரியாகத் தெரிந்து கொள்ளவேண்டு மானால் சாதாரண மனிதனிடத்தில் அவர் செலுத்தும் அன்பை அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மனியில், யூதர்களை நாஜிகள் நடத்தும் முறையைக் கண்டு நாகரிக உலகம் கலங்கிப் போயிருக்கிறது. உலகத்தில் மீண்டும் ஜாதித்துவேஷம் கிளம்பியிருப்பதைக் கண்டு தாராள மனப்பான்மை கொண்ட அநேக ராஜதந்திரிகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித் திருப்பதோடு இதனைக் கண்டித்தும் வருகிறார்கள். ஆனால் இதில் ஆச்சரியமானதும், திகைக்கக்கூடியதுமான விஷயம் என்ன வென்றால், பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்தைச் சேர்ந்த ஜனநாயக நாடுகளிலும், அமெரிக்கா ஐக்கிய மாகாணத்திலும் வசிக்கும் அநேக ஜாதியினர், தங்கள் ஜாதி காரணமாக அரசியல் விஷயத்திலும் சமுதாய விஷயத்திலும் பல சங்கடங்களை அனுபவித்துக் கொண்டி ருப்பதுதான். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, அங்கு இந்தியர்கள் பெயரளவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுதந்திரப் பிரஜைகளாக இருந்த போதிலும், அநேக குறைகளுக் குட்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். அங்கிருந்த கிறிதவப் பாதிரிக் கூட்டமும் அரசாங்கமும் சேர்ந்து, ஐரோப்பியரல்லாத மற்ற ஜாதியினருக்குச் சம உரிமை வழங்க மறுத்துவிட்டன. இந்த அநீதமான நிர்ப்பந்தங்களை எதிர்த்துப் போராட காந்தியடிகள் பொதுஜன சாத்வீக மறுப்பியக்கத்தை ஆரம்பித்தார். மனிதர்கள் என்ற முறையில் எல்லோரும் சம அந்ததுள்ளவர்ளே; ஜாதி, நிறம் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைப் பிரிவுகள் அநியாய மானவை, அதருமமானவை என்ற கொள்கைகளை தாபிக்க அவர் போராடினார். இந்திய சமுதாயத்திற்கு அதன் கேவல திதியை விளக்கிக் காட்டினார். தன்மதிப்பும் கௌரவமும் தனக்கு உண்டு என்று அஃது உணரும்படிச் செய்தார். இந்தியர்களுடைய நன்மையைக் குறித்து மட்டும் அவர் பாடுபடவில்லை. ஆப்பிரிக்க சுதேசிகள் சுரண்டப் படுவதையும் அவர்அங்கீகரிக்கவில்லை. அப்படியே இந்தியர்கள் புராதன நாகரிகப் பெருமையுடையவர்கள் என்ற காரணத்திற்காக விசேஷ கௌரவத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் அங்கீகரிக்கவில்லை. இந்தியர் களுக்கு விரோதமாக அநுஷ்டானத்தி லிருந்த சில வெறுக்கத்தக்க சட்டங்கள் இப்பொழுது எடுத்துவிடப் பட்டிருக்கின்றன என்பது வாதவம். இருந்தாலும், இன்னமுங்கூட இந்தியர்கள் சில கேவலமான நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தப்படு கிறார்கள். இந்த நிர்ப்பத்தங்களைச் சகித்துக் கொண்டு போகிற இந்தியர் களுக்கு இது பெருமையும் இல்லை; இவைகளை விதிக்கும் அரசாங்கத் திற்கு இது கௌரவமுமில்லை. இந்தியாவில் காந்தியடிகள் கொண்டுள்ள நோக்கம் என்ன வென்றால், தேசத்திலுள்ள வேற்றுமைகளையும், பிணக்குகளையும் ஒழிக்க வேண்டும்; அவர்கள் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ளுமாறு பாமர ஜனங்களைப் பழக்கப்படுத்தி விட வேண்டும்; அரசியல், பொருளாதாரம், சமுதாயம் முதலிய விஷயங்களில் ஆண்கள் அடைந்திருக்கிற அந்ததிற்குப் பெண்களையும் உயர்த்த வேண்டும்; தேசத்தைப் பல பிரிவுகளுக்குள்ளாக்கி இருக்கிற மதத் துவேஷங்களை அகற்ற வேண்டும்; தீண்டாமையை ஒழித்து ஹிந்து மதத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும். ஹிந்து மதத்திலிருந்து இந்தத் தீண்டாமைக் களங்கத்தை அகற்றும் விஷயத்தில் அவர் அடைந்திருக் கிற வெற்றி யானது, மானிட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அவரால் அளிக்கப் பட்ட மகத்தானதொரு நன்கொடையாகும். தீண்டாதார் என்று சொல்லிக் கொண்டு ஒரு சிலர் இருக்கிறவரையில், அவர்களில் காந்தியடிகளும் ஒருவர். நான் மறு பிறப்பெடுப்பேனாகில், ஒரு தீண்டாதானாகவே பிறக்க விரும்புவேன். அப்பொழுது தான் அவர்களுடைய துயரங்களிலும், துன்பங்களிலும், அவர்களுக்கிழைக்கப்படுகிற அவமானங்களிலும் நான் பங்குகொள்ள முடியும். அப்படிப் பங்கு கொள்வதன் மூலம், என் விடுதலைக்கு முயற்சி செய்வேன்; அவர் களையும், அவர்களுடைய பரிதாபகரமான நிலைமையிலிருந்து விடுதலை செய்வேன். இது, காந்தியடிகளின் வாசகம். காண முடியாத கடவுளிடத்தில் பக்தி செலுத்துகிறோமென்று சொல்லிக் கொண்டு அதே சமயத்தில், அந்தக் கடவுளிடமிருந்தே தோன்றிய மக்களிடத்தில் கொடுமையாக நடந்து கொள்வது முன்னுக்குப் பின் முரணான செயலாகும். காந்தியடிகள், தம்மை ஒருவைதிக ஹிந்து என்று சொல்லிக்கொள்வதிலேதான் பெருமை கொள்கிறார். அப்படி யிருந்தாலும், ஜாதிப் பிரிவினால் ஏற்படுகிற அநேக கட்டுப்பாடுகள், தொந்திரவுகள் முதலியவை களையும், தீண்டாமை யாகிற சாபக் கேட்டையும், கோயில்களில் நடைபெறுகிற அக்கிரமங்களையும், கால்நடைகளுக்கும் மற்றப் பிராணி உலகத் திற்கும் இழைக்கப்படுகிற தீங்குகளையும் கண்டிக்கிறவர் அவரைப் போல் வேறு யாரும் கிடையாது. அவர் கூறுகிறார்- நான் பூரண சீர்திருத்தவாதி. ஆனால் அந்தச் சீர்திருத்தத்திலே எனக்கேற்பட்டுள்ள உற்சாகமானது, ஹிந்து மதத்தின் சாராம்சங்களை ஒதுக்கித் தள்ளிவிடுமாறு என்னைச் செய்யவில்லை. இன்று அவர், சுதேச மன்னர்களின் சுயேச்சாதிகாரத்தை ஏன் எதிர்க்கிறாரென்றால், அந்த மன்னர்களின் ஆட்சிக்குட்படுத்தப் பட்டிருக்கும் லட்சக்கணக்கான பிரஜைகளின் மீது கொண்ட அன்புதான் காரணம். கொஞ்சம் தாராள மனப்பான்மையோடு விஷயங்களை நோக்குகிற யாரும், சுதேச சமதானங்களில் எல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றனவென்று சொல்லமாட்டார். பிரிட்டிஷ் உரிமைகளின் பிரதிநிதியாகக் கல்கத்தாவிலிருந்து வெளியாகும் டேட்மான் பத்திரிகை எழுதியிருக்கும் சில வாக்கியங்களை இங்கு எடுத்துக் காட்டுகிறேன். சுதேச சமதானங் கள் பலவற்றுள்ளும், திடுக்கிட்டுப் போகும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கிறதென்று சொன்னால், அது, தனிப்பட்டவர் களைக் குறை கூறுவதாகாது. மனித சுபாவத்தின் குறைபாடுதான் அது. அங்கு நிலச்சுவான்தார்களாயிருக்கிறவர்கள், அவர்கள் நல்லவர்களா யிருந்தாலும் கெட்டவர்களாயிருந்தாலும் எவ்வித சட்ட திட்டங் களுக்கும் உட்பட்டவர்களல்ல; அவர்களுக்கு, உயிர் கொடுக்கவும், உயிர் வாங்கவும் அதிகாரமிருக்கிறது; அவர்களுடைய பேராசைக் கும் கொடுமைக்கும் எவ்வித தடையும் கிடையாது. எந்த உடன் படிக்கைகள், இந்த அற்பக் கொடியர்களைப் பாதுகாத்து வரு கின்றனவோ, அந்த உடன்படிக்கைகள், திருத்தியமைக்கப்படா விட்டால், பாதுகாப்புக்குத் தகுதியில்லாதவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது தனதுகடமை யென்று மேலரசாங்கம் (பிரிட்டிஷ் அரசாங்கம்) கருதிக் கொண்டிருக்கு மானால், என்றேனும் ஒருநாள், அசைவற்ற ஒரு பொருளை, எதிர்க்க முடியாததொரு சக்தி எதிர்த்து நிற்கும். அப்பொழுது ஏதேனும் ஒன்று தூள் தூளாகிப் போய் விடும். மெதுவான வளர்ச்சிதான் எல்லாப் புரட்சிகளுக்கும் காரணம். காந்தியடிகள், சுதேசமன்னர்களிடம் தாங் கொண்ட ஒரு விசுவாசம் காரணமாக, அவர்களை விழித்துக் கொள்ளு மாறும், அவர்களுடைய விவகாரங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளு மாறும் கூறுகிறார். எனவே சுதேச மன்னர்கள் தங்களுடைய சமதானங் களில் பொறுப்பாட்சி முறையை ஏற்படுத்திக் கொடுப்பதால்தான், தாங்கள் சேஷமமாயிருக்க முடியும், தாங்கள் தப்பிப் பிழைக்கலாம் என்பதை அதிக காலதாமதம் ஏற்படுவதற்கு முன்னர் அறிந்து கொள் வார்களென்று நம்புகிறேன். ஏனென்றால் பிரிட்டிஷ் அரசாங்கங்கூட, அதற்கு எவ்வளவோ பலம் இருந்த போதிலும் மாகாணங்களில் இந்தப் பொறுப்பாட்சி முறையை ஏற்படுத்திக் கொடுக்கும்படியான அவசியத் திற்குட்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது காந்தியடி கள் சாட்டுகிற முக்கியமான குற்றச்சாட்டு என்ன? ஏழை மக்கள் கொடுமைப் படுத்தப்படுவதற்கு அது-பிரிட்டிஷ் அரசாங்கம்-காரணமா யிருந்தது என்பதுதான். சரித்திரம் ஆரம்பித்த காலத்தி லிருந்து இந்தியா, பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ் பெற்றதா யிருந்தது. செழுமையான மண்ணோடு கூடிய ஏராளமான பூப் பிரதேசங்களும், எவ்வளவு எடுத்தாலும் குறையாத மூலப் பொருள் களும் இந்தியாவில் இருக்கின்றன. சரியாகக் கவனஞ் செலுத்தி வேலை செய்வோமானால், ஜனங்கள் தாராளமாக வசிப்பதற்கும், ஆண், பெண், குழந்தைகள் முதலிய எல்லாரையும் போஷிப்பதற்கும் தேவையான யாவும் நம் நாட்டில் இருக்கின்றன. இப்படியிருந்தும் லட்சக் கணக்கான மக்கள் வறுமைக்கு இரையா கிறார்கள். உண்ண உணவும், இருக்க இடமும் அவர்களுக்குப் போதிய அளவு கிடைப்ப தில்லை. அவர்களுடைய வாழ்க்கை, பாலியத்தி லிருந்து வயோதிகம் வரை ஒரே போராட்டமாயிருக்கிறது. கடைசியில் மரணந்தான், அவர்களை மீட்க வந்து, அவதைப் பட்டுக் கொண்டிருக்கும் அவர்களுடைய இருதயத்தைக் குளிர்விக் கிறது. இந்த நிலைமைக்கு, இரக்கமற்ற இயற்கை காரணமல்ல; மனிதத் தன்மையற்ற (பொருளாதார) முறைதான் காரணம். இந்தியாவின் நன்மையை உத்தேசித்து மட்டுமல்ல, உலக நன்மையை உத்தேசித்தும் இந்த முறை அகற்றப்படவேண்டும். 1931ம் வருஷத்தில் லண்டனிலிருந்து அமெரிக்கர்களுக்கு ரேடியோ மூலம் விடுத்த செய்தியில் காந்தியடிகள், 1900 மைல் நீளமும், 1500 மைல் அகலமும் உடைய பூப்பிரதேசத்தில் ஆங்காங்கு புள்ளி யிட்டாற்போல் நிரவியிருக்கும் ஏழு லட்சம் கிராமங்களில் அரைப் பட்டினியோடு வசிக்கின்ற லட்சக்கணக்கான ஜனங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்பொழுது அவர் கூறினார்.- அந்த எளிய கிராமவாசிகள், எவ்வித குற்றமும் செய்யாதவர்களாயிருந்தும் வருஷத்தில் ஆறு மாத காலம் வேலையில்லாமல் சோம்பேறித்தன மாகக் கிடக்க வேண்டி யிருக்கிறது. சமீப காலம் வரையில் ஒவ்வொரு கிராமமும், உணவு, உடை இவைகளைப் பொறுத்த மட்டில் தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து வந்தது. எங்களுடைய துரதிருஷ்டவசத்தினால், கிழக்கிந்தியக் கம்பெனியார், கிராமத் தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலை அழித்து விட்டனர். எந்த முறைகளைக் கையாண்டு அழித்தனர் என்பதைப் பற்றி நான் இங்கு வருணிக்க விரும்பவில்லை உடனே லட்சக்கணக் கான இந்தக் கிராம நெசவுத் தொழிலாளர்கள் - தற்கால யந்திர உதவிகளைக் கொண்டுகூட நூற்கமுடியாத அவ்வளவு நுண்ணிய இழைகளைத் தங்கள் கைத்திறமையினால் இழுத்து உலகப் பிரசித்திபெற்றிருந்த இந்தத் தொழிலாளர்கள்-கௌரவமாகத் தாங்கள் நடத்தி வந்த ஜீவனோபாயம் திடீரென்று போய்விட்டதைக் கண்டார்கள். அப்பொழுதிருந்து, இந்தியா நாளுக்கு நாள் ஏழ்மை திதியை அடைந்து வருகிறது. இதற்கு மாறாக என்ன சொல்லப் பட்ட போதிலும், அஃது ஏழ்மையடைந்து வருகிறதென்பது உண்மை. இந்தியா எங்கே வாழ்கிறது? கிராமங்களில் அதன் நாகரிகம் விவசாய நாகரிகம். ஆனால் அஃது இப்பொழுது யந்திரமயமாகிக் கொண்டு வருகிறது. உலகத்திற்குத் தேவையான உணவுப் பொருள் களை உற்பத்தி செய்கிறவன் எவனோ, சமுதாயத்தின் அதிவாரமா யமைந்திருக்கிறவன் எவனோ, இந்திய நாகரிகத்தின் விசேஷ அமிசமாயுள்ள விவசாயத்தை அப்படியே காப்பாற்றி வைக்க வேண்டுமென்பதில் கவலையோடிருக் கிறவன் எவனோ, அப்படிப் பட்ட இந்திய விவசாயியின் பிரதிநிதி யாகவே காந்தியடிகள் இருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய மகா ஜனங்கள், தங்கள் பழைய சம்பிரதாயங்களை விட்டுக் கொண்டு வருவதையும், அவர்களிடத்தில் யந்திரங்களைத் திறம்படச் செலுத்தும் ஆற்றல், புதிய பொருள்களைக் கண்டுபிடிக்கும் நுண்ணறிவு, தைரியம், முன்னோக்கிச் செல்லும் துணிச்சல் முதலிய வியக்கத்தக்க குணங்கள் இருந்தும் அவர்கள் லௌகிக வெற்றிகளையே பெரிதெனக் கொண்டாடு வதையும், கொழுத்த லாபம் சம்பாதிக்க வேண்டு மென்ற பேராசை யுடையவர்களா யிருப்பதையும், உலகாயத அளவைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறவர்களாயி ருப்பதையும் காந்தியடிகள் கவனித்து வருகிறார். கைத்தொழிற் சாலைகள் நிறைந்துள்ள நமது நகரங்கள், எந்த இயற்கைப் பரப்பி னின்று தோன்றினவோ அதனைக்கூட மிஞ்சிப் போய்விட்டன. அர்த்தமில்லாமல் இந்த நகரங்கள் விசால மடைந்து வருகின்றன. பணமோகம், யந்திர நாகரிகம் ஆகிய சிக்கலான கருவிகளில் அகப் பட்டுக் கொண்டிருக்கிற இந்த நகர வாசிகள் உக்கிரம் மிகுந்தவர் களாகவும் ஓய்வில்லாதவர்களாகவும் யோசனை யில்லாதவர் களாக வும், ஒழுங்கை மீறினவர்களாகவும், எதையும் செய்யக்கூடியவர் களாகவும் இருக்கிறார்கள். தொழிலாளர் சமுதாயமென்று சொன்னால், அதில், குறைந்த கூலிக்கு வேலை செய்து தங்கள் சாரமற்ற வாழ்க்கையைக் கழிக்கிற தாய்மார்கள், வேலை செய்து கொண்டிருக்கும் தாய்மார்களைத் தங்கள் அழுகையினால் தொந்திரவு படுத்தக்கூடாதென்பதற்காக அபினி திணிக்கப்பட்டு உறங்கிக் கிடக்கும் குழந்தைகள், குழந்தைப் பருவத்தின் இனிமையை இழந்துவிட்டு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கட்டாயத்திற் குட்படுத்தப்படுகிற சிறுவர்கள், வேலையில்லாமல் மெலிந்து நோயுற்றுக் கிடக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஆகிய இவர்கள் அடங்கியிருப்பதாகவே காந்தியடிகள் கருதுகிறார். நாம் நாகரிக வலையில் சிக்கிக் கொண்டு அடிமைப்பட்டு வருவதாகவும், ஒருபிடி சோறுக்காக நமது ஆத்மாவை இழந்து வருவதாகவும் அவர் நினைக் கிறார். எந்தச் சக்தி, எந்தக் கலை ஞானம், உபநிஷங்களை அருளிய ரிஷிகளோடும், புத்த பிக்ஷுக்களோடும்,ஹிந்து சந்நியாசி களோடும், முலீம் பக்கீர்களோடும் உயரச் சென்று நின்றதோ, அப்படிப் பட்ட சக்தியும், கலைஞானமும் இப்பொழுது மோட்டார், ரேடியோ, ஜனநாயக அரசியல் முதலியவைகளைக் கொண்டு திருப்தியடைய முடியாது. நமது பார்வை மழுங்கிவிட்டது; நாம் வழி தவறி விட்டோம், நாம் செல்லுகிற தப்பு வழியானது, நமது விவசாய ஜனங்களை உடைமையற்றவர்களாகச் செய்துவிட்டது. தரித்திரர் களாக்கிவிட்டது; அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கி விட்டது; நமது தொழிலாளர்களை நெறி தவறியவர்களாக்கி விட்டது; முரட்டுத்தன்மை யுடையவர்களாகிவிட்டது. விவரந்தெரியாதவர்களாக்கிவிட்டது; சூனிய மான முகம், பஞ்சடைந்த கண். துவண்டவாய் இவற்றோடு கூடிய லட்சக்கணக்கான குழந்தை களை நமக்கு அளித்திருக்கிறது. நாம் தற்போது திகைப்புற்றிருக் கிறோம்; ஆத்திரப்படுகிறோம். ஆனால் இவைகளுக்கு அடிப்படை யில் ஜனங்களிற் பெரும்பாலோருக்கு ஒருவித ஆவல் இருக்கிறது. அ`ஃதென்ன? உண்மையான சுதந்திரத்தை நாம் பெற வேண்டும்; உண்மையான தன் மதிப்பு நமக்கு ஏற்படவேண்டும்; இவையெல் லாம் பழைய கனவாயிருக்கக்கூடாது; தற்போதைய நனவாக வேண்டும். யாரும் பணக்காரர்களில்லை; யாரும் ஏழை இல்லை என்கிற மாதிரி வாழ்க்கை நிலைஅமைய வேண்டும். மிகமிஞ்சின ஆடம்பர வாழ்க்கையும் சோம்பேறி வாழ்க்கையும் இல்லாமற் போக வேண்டும். கைத்தொழிலும் வியாபாரமும் சாதாரண முறையில் நடைபெற வேண்டும். இந்த மாதிரியான ஆவல், ஜனங்களிற் பெரும்பாலோருக்கு இருக்கிறது. யந்திரத்தினால் ஏற்படுகிற சாதகங்களைப் புறக்கணித்து விடக் கூடிய ஒரு குடியானவர் சமுதாயத்தை அமைக்க வேண்டு மென்பது காந்தியடிகளின் நோக்கமல்ல. பெருவாரியாகப் பொரு ளுற்பத்தி செய்யபடுவதற்கு அவர் விரோதமாயில்லை. குடிசைத் தொழில்களும், பெருவாரியாக உற்பத்தி செய்கிற தொழில் தாபனங்களும் ஒத்துப் போக முடியுமாவென்று அவரை ஒருவர் கேட்டதற்கு அவர் சொன்னார்- ஆம். ஒத்துப்போக முடியும்; கிராமங்களுக்கு உதவியளிக்கக்கூடிய விதமாக இந்தத் தொழில் தாபனங்கள் அமைக்கப்பட்டால் ஒத்துப்போக முடியும். மூலாதாரமாயுள்ள தொழில்கள், அதாவது தேசத்தின் தேவை களைப் பூர்த்தி செய்யக்கூடிய தொழில்கள் ஒருமுகப்படுத்தி அமைக்கப் படலாம். என்னுடைய திட்டத்தின் கீழ், கிராமங்களில் என்னென்ன பொருள்கள் திறமையாக உற்பத்தி செய்யப்படுமோ அவையெல்லாம் நகரங்களில் உற்பத்தி செய்யப்படமாட்டா. கிராமப் பொருள்களைச் சரியான முறையில் விநியோகிப்பதற் கேற்ற பண்டக சாலைகளாகவே நகரங்கள் இருக்கவேண்டும்.1 கதர், கைத்தொழிலை மையமாகக் கொண்ட கல்வி முறை ஆகியவற்றை அவர் ஏன் வற்புறுத்துகிறா ரென்றால், கிராமங்களுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டு மென்பதற்குத் தான். இந்தியாவை, அதனுடைய ஒரு சில நகரங்களிலல்ல, எண்ணிறந்த கிராமங்களில் தான் பார்க்க முடியும் என்று அவர் பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறார். இந்திய மகாஜனங்களிற் பெரும்பாலோர், மீண்டும் தங்களுடைய விவசாய நிலத்திற்குச் செல்லவேண்டும்; அந்த நிலத்திலேயே அவர்கள் வசிக்கவேண்டும்; அந்த நிலத்திலுற்பத்தியாகிற பொருள் களைக் கொண்டே தங்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிற மாதிரி அவர்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும். அந்த விவசாயிகள் உபயோகிக்கிற கருவிகள், சாகுபடி செய்கிற நிலம், வாழ்கிற குடிசை முதலியன வெல்லாம் அவர்களுக்கே சொந்தமாகி விடவேண்டும். ஒரு தேசத்தின் கலைஞான வாழ்வு, சமுதாய வாழ்வு, பொருளாதார வாழ்வு, அரசியல் வாழ்வு முதலிய வற்றின் மீது ஆதிக்கஞ் செலுத்தி, அந்தத் தேசத்திற்குச் சீலத்தையும், குணத்தையும், உயர்ந்த லட்சியத்தையும் புகட்டக் கூடியவர்கள் அதிவாரமில்லாத வர்களும் முன் யோசனை யில்லாதவர் களுமான தொழிலாளர்களல்ல; நேரிய மனமுடைய, பேராசைபிடித்த லேவாதேவித் தொழில் செய்யும் வியாபாரிகளல்ல; ஆனால் பொறுப்பு வாய்ந்த விவசாய ஜனங்களும், விவசாயப் பொருள்களை விநியோகிப் பதற்கென்று அமைந்துள்ள சிறுநகரங்களில் வசிக்கும் நிரந்த வாழ்க்கையும் நிதான புத்தியு முடைய ஜனங்களுந்தான். ஆனால் இவையெல்லாம் பழைய முறையில் அமையக்கூடாது. எந்த வாழ்க்கையானது, இந்தியா வின் இயற்கைக்கு ஏற்றதாயிருக்கிறதோ, எந்த வாழ்க்கையானது ஒரு காலத்தில் லட்சியத்தைக் கொண்டதாவும், நம்பிக்கையை யூட்டிய தாகவும், அர்த்தமுடையதாகவும் இருந்ததோ, அப்படிப்பட்ட வாழ்க்கையையே நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். நமது ஜாதி, நாகரிக தசையிலேயே இருக்க வேண்டுமானால் அதற்கு இதுவே வழி. குடியானவர்களுடைய இந்தியா, நாட்டுப்புற வாழ்க்கையை மேற்கொண்ட இந்தியா, தபோ வனங்களும், ஆசிரமங்களும் நிறைந்த இந்தியா, உலகத்திற்கு அநேக பாடங்களைக் கற்பித்திருக்கிறது. ஆனால் அஃது எந்த மனித னுக்கும் துன்பங் கொடுத்ததில்லை; எந்த தேசத்திற்கும் தீங்கிழைத்ததில்லை; எவர் மீதும் ஆதிக்கஞ்செலுத்திய தில்லை. இன்று வாழ்க்கையின் உண்மையான நோக்கம் திரிந்திருக் கிறது. இந்தச் சோர்வு என்னும் சேற்றிலிருந்து இந்தியா எப்படி வெளியேறுவது? அநேக நூற்றாண்டு களாக அடிமைப்பட்டுக் கிடப்பதனால், இதிலிருந்து - இந்தச் சோர்வி லிருந்து - வெளியேற வேண்டுமென்ற இச்சையையும் விருப்பத்தையுங் கூட ஜனங்கள் இழந்து விட்டாற் போலிருக்கிறது. இவர்களுடைய மீட்சிக்கு விரோதமாக வேலை செய்து கொண்டிருக்கும் சக்திகளோ மகா பலமுள்ளவை. இந்த நிலைமையில் ஜனங்களுக்குத் தன்னம்பிக்கையை யுண்டுபண்ணுவதும் தன் மதிப்புணர்ச்சியையூட்டுவதும் அவர்களை நிமிர்ந்து நடக்கச் செய்வதும் சுலபமான காரியமல்ல. அப்படி யிருந்தும் காந்தியடிகள், சோம்பல் நிறைந்த ஒரு ஜாதியை, தமது ஆத்மாவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் விளக்கைக் கொண்டும், தம்மிடத்திலேயுள்ள சுதந்திர ஆவலைக் கொண்டும் தூண்டிவிட முயற்சி செய்திருக்கிறார். சுதந்திர வாழ்க்கையில் தான், ஆணாகட்டும், பெண்ணாகட்டும் தங்களிடத் திலுள்ள சிறந்தவற்றையெல்லாம் வெளியிடுகிறார்கள். அடிமை வாழ்க்கையிலே அவர்கள் இழி வடைந்து போகிறார்கள். சாதாரண ஒரு மனிதனை, அகத்திலும் புறத்திலுமாக அநேக நிர்ப்பந்தங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் அவனுடைய சுபாவம் மாறுபட்டுப் போகிறது. இப்படிப் பட்ட நிலைமையிலிருந்து அவனை விடுதலை செய்விப்பது தான் சுதந்திரத்தின் நோக்கமாயிருந்து வந்திருக்கிறது. மானிட சுதந்திரத் தின் ரட்சகர் என்ற முறையில், காந்தியடிகள், தமது நாட்டை அந்நிய ஆதிக்கத்தினின்று விடுதலை செய்யும் பொருட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார். தேசாபிமானம் என்பது இவ்வளவு பரிசுத்தமா யிருக்கிற போது, அஃது ஒரு குற்றமாகாது; கெட்ட நடவடிக்கை யுமாகாது. இயற்கைக்கு விரோதமாகக் தற்போதுள்ள நிலைமையை மாற்றப் போராடுவது ஒருவனுடைய புனிதமான கடமையாகும். இந்தப் போராட்டத்தில் அவர்-காந்தியடிகள்-ஆத்மார்த்தமான ஆயுதங்களைக் கொண்டுதான் ஜனங்களைச் சுதந்திரத்திற்குப் பழக்குவிக்கிறார்; அந்தச் சுதந்திரத்தைச் சம்பாதித்து அதனை திரமாக வைத்துக் கொள்ளவும் அவர்களைத் தயார்ப்படுத்துகிறார். காந்தியடிகளின் ஒத்துழையா இயக்கத்தைப்பற்றி அப்பொழுது பம்பாய் கவர்னராயிருந்த ஸர் ஜார்ஜ் லாயிட்1 கூறினார்.- உலக சரித்திரத்திலேயே, காந்தியடிகளின் ஒத்துழையா இயக்கம் ஒரு மகத்தான பரிசோதனையாகும். அது வெற்றியடைவதற்கு ஓர் அங்குல தூரமே முன்னேறிச் செல்ல வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துக் கொடுக்கத் தாம் எடுத்துக் கொண்ட முயச்சியில் காந்தியடிகள் தவறிவிட்டாரே யானாலும், தேசத்திலுள்ள பல சக்திகளையும் அவர் கிளப்பி விட்டிருக்கிறார். அந்தச் சக்திகள் இனி வேலை செய்யாமல் சும்மாயிரா. அவர் ஜனங்களை அவர்களுடைய உறக்கத்தினின்று எழுப்பிவிட்டிருக் கிறார். அவர் களுக்கு ஒரு புதிய தன்னம்பிக்கையையும் பொறுப்பையும் ஊட்டியிருக் கிறார். சுதந்திரத்தைப் பெறவேண்டுமென்ற உறுதியில் எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தி விட்டிருக்கிறார். இந்த அளவுக்குத் தேசத்திலே இப்பொழுது ஒரு புதிய விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒற்றுமைப்பட்ட வாழ்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஜனங்களுக்கு உண்டாயிருக்கிறது. தாழ்ந்த வகுப்பாரிடத்தில் ஒருபுதிய மனப்பான்மை காட்டவேண்டுமென்ற உணர்ச்சி ஏற்பட்டிருக் கிறது. இவற்றிற்கெல்லாம் காரணம் காந்தீயத்தின் ஆத்ம சக்திதான். வகுப்புப் பற்றுடனோ அல்லது மாகாணப் பற்றுடனோ, காந்தியடிகள் எதனையும் நோக்குகிறாரில்லை. இந்தியாவின் நாகரிக பரம்பரை, உலகத்தின் கலைஞானப் பெருக்கத்திற்கு உதவி செய்யக் கூடும் என்று அவர் நம்புகிறார். தளர்ந்து வீழ்ந்து போயிருக்கும் இந்தியாவினால், உலகத்திற்கு நம்பிக்கையை ஊட்ட முடியாது. விழிப்போடுகூடிய சுதந்திர இந்தியாதான், பெருமூச்சு விட்டுக் கொண்டு புலம்பிக் கொண்டிருக்கிற உலகத்திற்கு உதவி செய்ய முடியும். நியாயம், சமாதானம், ஒழுங்கு என்பவைகளைப் பிரிட்டிஷார் எந்தத் திருஷ்டியோடு பார்க்கிறார்களோ அது விஷயத்தில் அவர்கள் உண்மை யிலேயே அக்கரை கொண்டவர் களாயிருப்பின், ஆக்ரமிப்பு எண்ணங் கொண்ட வல்லரசுகளை அடக்கி இப்பொழுதுள்ள நிலைமையை அப்படியே பத்திரப் படுத்தி வைப்பது மட்டும் போதாதென்று காந்தியடிகள் வற்புறுத்து கிறார். நமது லட்சியங்களுக்கு விரோதமானதொரு நிலைமை ஏற்பட் டிருந்தால், அதனைச் சீர்திருத்த மறுப்பது ஒருவகை பலாத்காரந் தான். இதனைச் சாத்வீக பலாத்காரம் என்று சொல்லலாம். சுதந்திரம், நீதி இவகைளின் விஷயத்தில் நமக்குள்ள அபிமானமானது, இந்தச் சாத்வீக பலாத்காரத்தையும் புறக்கணித்து விடுகிறது. சுதந்திரம், நீதி முதலிய சக்திகளோடு சேர வாரும் என்று உலகத் தாரைப் பார்த்து நாம் அழைப்பதற்கு முன்னர், எந்த ஏகாதிபத்தியங்கள், பேராசை, கொடுமை, மனிதனைப் பற்றிய கேவல மனப்பான்மை ஆகிய இவைகளைக் கொண்டு அமைக்கப் பட்டனவோ, அந்த ஏகாதி பத்தியங்களை நாம் மாற்றியமைக்க வேண்டும். பலாத்காரம், ஒன்று செயல் புரிந்து கொண்டிருக்கும்; அல்லது செயலற்றிருக்கும். தற்போதைய ஆக்ரமிப்பு வல்லரசுகள், பலாத்காரச் செயல்கள் புரிவதில் இறங்கி யிருக்கின்றன. ஏகாதி பத்திய வல்லரசுகளோ, தங்களுடைய பழைய பலாத்காரச் செயல்களின் மூலம் கிடைத்த அநீதமான சாதகங்களைத் தொடர்ந்து அநுபவிக்க வேண்டு மென்று பிடிவாதங்காட்டுகின்றன. இவைகளும்-இந்த ஏகாதிபத்திய வல்லரசுகளும் - பலாத்காரக் குற்றத்திற்குட் பட்டவைதான். சுதந்திரம், ஜனநாயகம் என்பவைகளுக்கு இவைகளும் விரோதிகள்தான். இந்த விஷயத்தில் நாம் நாணயமாக நடந்து கொள்ளாத வரையில், மேம்பட்டதோர் உலக ஒழுங்கை தாபிக்க முடியாது. அதுவரை யில், உலகம் நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண் டிருக்கும்; யுத்தங்களோ, யுத்த பயங்களோ இருந்து கொண்டுதா னிருக்கும். பிரிட்டிஷாருடைய யோக்கியப் பொறுப்புக்குப் பரிசோதனை என்னவென்றால் இந்தியாவுக்குச் சுய ஆட்சி வழங்குவதுதான். காந்தியடிகள், இப்பொழுதுகூட பிரதி திங்கட் கிழமை தோறும் இருபத்துநான்கு மணி நேரம் உபவாசம் இருக் கிறார். ஏன்? இன்னும் சுய ஆட்சி கிடைக்கவில்லை யென்பதைக் காட்டுவதற்காகத் தான். ஆயினும் பொறுமை இழந்திருக்கும் இந்தியாவை, நிதானிக்கும் படிச் செய்திருக்கும் சக்தி அவருடைய சக்தியே. ஜனங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கும், ஆளும் வர்க்கத்தினராகிய பிரிட்டிஷாருடைய பிடிவாதத்திற்கும் மத்தியில் அவர் இருக்கிறார். இந்தியாவில் சமாதானம் நிலவுகிறதென்று சொன்னால் அதற்கு அவருடைய மகத்தான சக்திதான் காரணம். காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் சத்தியாக் கிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்தில் வந்திறங்கிய சமயத்தில் ஜெர்மனிக்கு விரோதமாக யுத்தம் தொடுக்கப்பட் டிருப்பதை கண்டார். யுத்தம் முடிகிறவரையில் போர் முனையிலுள்ள வைத்தியப் படையில் சேர்ந்து சேவை செய்ய, எவ்வித நிபந்தனையும் கோராமல் தாம் பதிவு செய்துகொள்ள விரும்புவதாக அதிகாரி களுக்கு அறிவித்தார். அதிகாரிகளும் அவருடைய சேவையை ஏற்றுக் கொண்டார்கள். உடனே அவர், ஒர் இந்தியப் படையில் ஒரு பொறுப்புள்ள பதவிக்கு நியமிக்கப் பட்டார். இங்ஙனம் அவர் வேலை செய்து கொண்டிருக்கையில், திறந்த வெளியில் அதிக நேரம் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அவருக்கு இருதய நோய் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமென்று சொன்னார்கள். பிறகு சிகிச்சையின் பேரில் கொஞ்சம் குணமடைந்தார். உடனே உஷ்ணப் பிரதேசமாகிய இந்தியாவுக்குச் செல்ல வேண்டுமென்று வைத்தியர்கள் உத்தரவு போட்டார்கள். அப்டியே அவர் இந்தியா வுக்கு வந்து சேனைக்கு ஆள் திரட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார். இஃது அவருடைய நண்பர்களில் பலருக்கே திகைப்பை உண்டுபண்ணிவிட்டது. யுத்தம் முடிந்த பிறகு இந்தியர்களின் ஏகமனதான எதிர்ப்புக்கிடையே ரௌலட் சட்டம் நிறைவேற்றப் பட்டது. தேசமே அதிர்ச்சியடையும்படியாக பஞ்சாப் மாகாணத் தில் ராணுவச் சட்டத்தின் கீழ் அநேக காரியங்கள் நடைபெற்றன. பஞ்சாப் குழப்பத்தைப் பற்றி காங்கிர மகாசபை ஒரு விசாரனை நடத்தியது. அந்த அறிக்கையைத் தயாரித்தவர்களில் காந்தியடிகளும் ஒருவர். இவையெல்லாம் நடைபெற்றிருந்தும் 1919ம் வருஷம் டிசம்பர் மாதம் அமிருதசரசில் கூடிய காங்கிர மகாசபைக் கூட்டத்தில் மாண்டேகு செம்போர்டு சீர்திருத்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு அதனைச் சட்டரீதியாக வேலை செய்ய வேண்டு மென்று அவர் ஒரு தீர்மானங் கொண்டு வந்தார். இதற்குப் பிறகு 1920ம் வருஷம் ஹண்டர் கமிஷன் அறிக்கை வெளியாயிற்று1. இஃது உத்தியோகதர்களுடைய செயலைக் கண்டிப்பதில் தடுமாற்றத்தைக் காட்டியது. தளபதி டயர் என்பவனுடைய செயலைக் கண்டிக்க லார்டு சபை மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் காந்தியடிகள், தமது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமானதென்று கருதப்படக் கூடிய ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத் தோடு ஒத்துழைக்க மறுத்தல் என்பது. 1920ம் வருஷம் செப்டம்பர் மாதம் காங்கிர மகாசபை பலாத்காரமற்ற ஒத்துழையா இயக்கத்தை நடத்த வேண்டுமென்று முடிவுக்குவந்து அப்படியே ஒருதீர்மானமும் நிறைவேற்றியது. இந்தச் சந்தர்ப்பத்தில், 1920 ம் வருஷம் ஆகட் மாதம் முதல் தேதியிட்ட காந்தியடிகள் ராஜப் பிரதிநிதிக்கு எழுதிய ஒரு கடிதத்தி லிருந்து சில வாக்கியங்களை எடுத்துக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். அதில் அவர் எழுதுகிறார்.- தாங்கள் உத்தியோகதர் களுடைய செயலை லேசாகக் கண்டித்துவிட்டதும். ஸர். மைக்கேல் ஒட்வியரை மன்னித்து விட்டதும், மிடர் மாண்டேகு வின்1 அறிக்கையும், இவைகளுக்கு மேலாக பஞ்சாப் சம்பவங்களைப் பற்றி இங்கிலாந்தில் குடிகொண்டிருக்கும் அறியாமையும், லார்ட் சபையினர் இந்தியர்களுடைய உணர்ச்சியைக் கேவலமாக மதித்து விட்டதும், இவையெல்லாம் சேர்ந்து ஏகாதிபத்தியத்தின் எதிர்கால வாழ்வு எப்படி யிருக்குமோவென்ற சந்தேகத்தை எனக்குக் கிளப்பி விட்டிருக்கின்றன; தற்போதைய அரசாங்கத்தினின்று என்னை அடியோடு பிரித்து விட்டிருக்கின்றன; இதுவரையில் அரசாங்கத் தோடு எவ்வளவு மனப் பூர்வமாக நான் ஒத்துழைத்து வந்தேனோ, அந்த மாதிரியான ஒத்துழைப்பை இனியும் நான் அளிக்க முடியாதபடி செய்து விட்டிருக்கின்றன. மனுக்கள் போடுதல், பேட்டிகள் காணுதல் முதலியவற்றின் மூலமாகக் கிளர்ச்சி செய்யும் முறையைக் கையாண்டு, தற்போதைய இந்தியா அரசாங்கம் இருப்பதைப் போல் பொதுஜன நன்மையைப் பாராமுகப்படுத்திக் கொண்டு நடந்து வருகிற ஓர்அரசாங்கத்தை அசைத்துக் கொடுத்து தன் செயலுக்கு அஃது இரக்கப்படுமாறு செய்ய முடியாது என்பதுவே என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். ஐரோப்பிய நாடுகளில், கிலாபத் அநீதி, பஞ்சாப் படுகொலை போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அவை விஷயத்தில் அங்குள்ள ஜனங்கள் தங்களுடைய கண்டனத்தை எந்த முறையில் தெரிவித்துக் கொள்வார்கள்? ரத்தப் புரட்சியின் மூலமாகத்தான்: தேசீய அழிவு ஏற்படா வண்ணம் எவ்வகையாலும் எதிர்த்துப் போராடியிருப்பார்கள். இந்தியாவில், பாதிப் பேர், பலாத்காரத்தின் மூலம் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடியாத அவ்வளவு பலஹீனர் களாயிருக்கிறார்கள். மற்றப் பாதிப் பேர் அதற்குச் சம்மதியா தவர்காளயிருக்கின்றனர். இதனாலேயே ஒத்துழையாமை என்கிற பரிகார முறையை நான் காட்டியிருக்கிறேன். இதன்படி அரசாங் கத்தோடு ஒத்துழைக்க விருப்பமில்லாதவர்கள் பலாத்காரமின்றியும் ஒழுங்காகவும் தங்கள் இயக்கத்தை நடத்திக்கொண்டு போவார் களானால் அரசாங்கமானது தன் போக்கினின்று பின்னடையும்; தான் இழைத்த அநீதங்களுக்குப் பரிகாரம் தேடும். எந்த அளவுக்கு ஜனங்களை என்னோடு சேர்த்து அழைத்துச் செல்லும் சக்தி எனக்கிருக்கிறதோ அந்த அளவுக்கு ஒத்துழையா இயக்கத்தை நான் நடத்துவேன். அப்பிடியிருந் தாலும், தாங்கள் நீதி வழங்கும் மார்க்கத்தைத் தேடுவீர்கள் என்ற நம்பிக்கையையும் நான் இழந்து விடவில்லை. தற்போதைய பிரிட்டிஷ் ஆட்சி முறையின் கீழ்இந்தியா தனது செல்வத்தை இழந்துவிட்டது; அதன் மனிதத் தன்மை போய்விட்டது; கடவுள் தன்மை அகன்றுவிட்டது; அதனுடைய புதல்வர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் சக்தியை யிழந்துவிட்டார்கள் என்றெல்லாம் காந்தியடிகள் கருதுகிறாராயினும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என்று அவர் நம்புகிறார். பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு விரோதமாக அவர் கிளர்ச்சி செய்கிறார். ஆனால் பிரிட்டிஷ் தொடர்பு வேண்டாமென்று அவர் கூறவில்லை. ஒத்துழையா இயக்கம் உச்ச நிலையை அடைந்திருந்த காலத்தில் பிரிட்டனுடைய தொடர்பை அடியோடு அறுத்துக் கொள்ள வேண்டுமென்று கிளம்பிய இயக்கத்தை அவர் தீவிரமாக எதிர்த்துப் போராடினார். சிநேகப்பான்மையுடனும் சம அந்ததுடனும் பிரிட்டிஷா ருடன் சேர்ந்து வேலை செய்ய அவர் எப்பொழுதும் சித்தமாயிருக்கிறார். ஆனால் பிரிட்டிஷார் இந்தியா விஷயத்தில், தாங்கள் இந்தியாவைக் காப்பாற்ற வந்திருக்கிறவர்கள்; தாங்கள் மேலான ஜாதியார் என்ற மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருகிறவரையில், தற் போதைய நிலைமையில் எந்தவிதமான அபிவிருத்தியும் ஏற்படா தென்பது அவருடைய உறுதியான அபிப்பிராயம். ஆத்திரப்படக் கூடிய அநேக சந்தர்ப்பங்களில்கூட அவர் பிரிட்டிஷாரிடம் துவேஷம் காண்பிக்க வில்லை. இந்தியாவுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தையோ, ஜெர்மனியையோ நான் தொந்திரவுபடுத்த மாட்டேன் என்பது அவர் வாசகம். அமிர்தரச (பஞ்சாப்) பzடுகொலை, அல்லது ஸைமன் கமிஷன் நியமனம் போன்ற சில முட்டாள்தனமான, சந்தர்ப்பப் பொருத்தமில்லாத காரியங்கள் நடைபெற்ற காலத்தில் இந்தியா பொறுமையை யிழந்து விட்டது; தன்னடக்கத்தைத் தள்ளி வைத்து விட்டது; கோபாக்கினி மயமாகிவிட்டது. அப்பொழுது காந்தியடி கள் இந்த அதிருப்தி, இந்தக் கோபம் முதலியவற்றை அன்பு, சமரசம் போன்ற ஒழுங்கான வழியில் திருப்பிவிட்டார். வட்டமேஜை மகாநாட்டின்போது, பிரிட்டிஷாரிடத்தில் தமக்குள்ள நம்பிக்கையையும் மானிட சமுதாயத்தின் நலத்திற்கு மேலும் மேலும் பாடுபட வேண்டுமென்பதில் தமக்குள்ள ஆவலையும் காந்தியடிகள் தெரிவித்துக் கொண்டார். இந்த வட்டமேஜை மகாநாடு களின் விளைவாக, மாகாணங்களுக்கு ஓரளவு பொறுப்பாட்சி முறை வழங்கப்பட்டது. ஜனங்களிற் பெரும்பாலோர் இதனை ஏற்று நடத்த மறுத்துவிட்டார் கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் காந்தியடிகள் சீர்திருத்தத் திட்டத்தை, அதற்கு என்ன மதிப்புண்டோ அந்த அளவுக்கு நடத்திப் பார்க்குமாறு காங்கிரஸை தூண்டினார். அவருடைய முக்கிய நோக்கம், பிரிட்டனோடு சமாதானமாக இருக்க வேண்டுமென்பது தான். ஆனால் அந்தச் சமாதானம், சுதந்திரத்தையும் சம நட்பையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் கூறுகிறார். இந்தியாவின் பிரதிநிதியாக இன்று எவர் இருக்கிறாரோ, அவரிடத்தில் - அந்தத் தலைவரிடத்தில் ஜாதித்துவேஷமில்லை; தனிப்பட்ட குரோதமில்லை; பலாத்காரத்தில் நம்பிக்கையில்லை. தமது ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கிவிடாதபடி அவர் தடுத்து வைத்திருக்கிறார். பொதுஜனப் பிரதிநிதித்துவம் வாய்ந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தாரிடமிருந்து இந்தியாவைப் பிரிக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறாரில்லை. ஆனால் எல்லா நாடுகளும் சம உரிமை யோடு அதில் - அந்தப் பொதுஜனப் பிரதிநிதித்துவம் வாய்ந்த அரசாங்கத்தில் - கலந்துகொள்வதாயிருக்க வேண்டுமென்று அவர் கூறுகிறார். 1939ம் வருஷம் மே மாதம் 19ந் தேதி கானடா தேசத்துப் பார்லிமெண்டில் மன்னர்பிரான் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வரும் வாசகங்கள் காணப்படுகின்றன:- ஒரேமாதிரியான அரசாங்க முறையை அநுஷ்டிக்கிற, சமாதானம், சுதந்திரம் ஆகிய லட்சியங்களிடத்தில் ஒரே மாதிரியான பற்றுதலையுடைய ராஜ மகுடத்திற்குத் தங்கள் ராஜ பக்தியைச் செலுத்துகிற பல நாடுகள் சம உரிமையோடு கலந்திருப்பதுவே இன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மாகப் பரிணமித்திருக்கிறது. இந்த ஒரே மாதிரியான அரசாங்க முறையை இந்தியா விஷயத்திலும் அநுஷ்டிக்க வேண்டுமென்பது காந்தியடிகளின் கோரிக்கை. இந்தியர்கள், தங்களுடைய வீட்டில் தாங்கள் எஜமானர்களாயிருக்க உரிமையுடையவர்கள் என்று அவர் சொல்கிறார். இப்படி அவர் சொல்வது அநியாயமுமல்ல; அதருமமு மல்ல. நல்லெண்ணத்தோடு கூடிய மனிதர்களின் ஒத்துழைப்பைப் பெற்று இருநாடுகளுக்கும் உள்ள சிநேகப்பான்மையை அபிவிருத்தி செய்ய அவர் முனைந்திருக்கிறார். அவருடைய வேண்டுகோளெல்லாம் காற்றோசை போல் பயனற்றுப் போய்விடுவது பெரிதும் வருந்தத்தக்கதுதான் அவர் பல வருஷ காலம் ஓயாமல் உழைத்திருக்கிறார்; மகத்தான போராட்டங் களை நடத்தியிருக்கிறார். ஆயினும் அவருடைய உயர்ந்த லட்சியம் இன்னும் கைகூடாமலேயே இருக்கிறது. அப்படிக் கைகூடாம லிருந்தபோதிலும் அவருடைய திருஷ்டியும் நம்பிக்கையும் குன்றா மலிருக்கின்றன. என்னைப் பொறுத்தமட்டில், பிரிட்டிஷ் பொது ஜன அபிப்பிராயமானது முன்னுக்கு வந்து பேரம் பேசாமல், தடுமாற்ற மில்லாமல், தாமதமில்லாமல், நல்லெண்ணத்தோடு, நம்பிக்கையோடு - அப்படி நம்பிக்கைக்கொள்ளுவதால் சில கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் - சுதந்திரமும், தன்னாட்சி முறையும் நிலவுகிற இந்தியாவை தாபிக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தை வற்புறுத்தும் என்று நம்புகிறேன். காந்தியடிகளின் நியாயமும் கண்ணியமும் நிறைந்த கோரிக்கையைப் பிரிட்டிஷ் பொதுஜன அபிப்பிராயம் புறக்கணித்து விடுமேயானால், நமது இரண்டு நாடுகளுக்குமுள்ள சம்பந்தம் இன்னும் கேவலமாகிவிடும்; பிளவு அகன்றுவிடும். இரண்டு நாடுகளையும் பாதிக்கக்கூடியமாதிரி மனக் கசப்பு வளர்ந்துவிடும். தென்னாப்பிரிக்க அரசாங்கமாயிருந்தாலும் சரி, பிரிட்டிஷ் அரசாங்கமாயிருந்தாலும் சரி, இந்திய மில் முதலாளிகளானாலும் சரி, ஹிந்து மதப் புரோகிதர்களாயிருந்தாலும் சரி, சுதேச மன்னர் களாயிருந் தாலும் சரி, இவர்களில் யாரையேனும் காந்தியடிகள் கண்டித்தாலும், தாக்கினாலும், இந்தக் கண்டனத்திற்கும் தாக்குத லுக்கும் அடிப்படையிலிருப்பது ஒரே மனோபாவந்தான். காந்தி யடிகள் ஓரிடத்தில் கூறுகிறார்:- வாயில்லாத லட்சக்கணக்கான பாமர மக்களின் இருதயத்திலே எந்தக் கடவுள் வீற்றிருக்கிறாரோ அந்தக் கடவுளைத் தவிர நான் வேறொரு கடவுளை அங்கீகரிக்கிறே னில்லை. அவர்கள் - அந்த வாயில்லாத ஜனங்கள் - கடவுளின் வியாபகத்தை உணர்கிறார் களில்லை. ஆனால் நான் உணர்கிறேன். இந்த லட்சக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் சத்தியமாகிற கடவுளை, கடவுளாகிற சத்தியத்தை வணங்குகிறேன்.1 4. சத்தியாக்கிரகம் அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது மகாபாரதத்தின் பிரபல வாசகம். அதனை வாழ்க்கையில் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதைத் தான் சத்தியாக்கிரகம் அல்லது ஆத்ம சக்தியென்று சொல்கிறோம். சத்தியமென்கிற அதிவாரத்தின்மீது இந்த உலகம் நிலைபெற்றிருக் கிறதென்ற கொள்கையை ஆதாரமாகக் கொண்டது இந்த அஹிம்ஸை. அசத்தியம் அல்லது உண்மையற்றது என்றால் இல்லாதது என்று அர்த்தம். சத்தியம் அல்லது உண்மை என்றால் உள்ளது என்று அர்த்தம், அசத்தியம் என்பது இல்லையானால் அதற்கு வெற்றியென்பதும் இல்லை. ஆனால் நித்தியமாயிருக்கிற சத்தியத்தை எப்பொழுதும் அழிக்கமுடியாது. கடவுள் என்பது ஓர் உண்மைப் பொருள். நாம் சுதந்திரம் பெறவேண்டும், எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று ஆவல் கொள்கிற சக்தியிருக்கிறதே அஃது, இந்த உண்மைப் பொருளுக்கு அநுசரணையா யிருப்பது. மனிதன் தன்னுடைய நலனுக்காக, இந்த ஆவலை, இந்த இச்சையை நிராகரித்துவிடுவானாகில் அவன் தன்னையே நிராகரித்துக் கொண்ட வனாகிறான்; அந்த உண்மைப் பொருளுக்கு விரோதியாகிறான், அதனின்றும் ஒதுங்கிவிடுகிறான். இப்படி மனிதன் நிராகரிப்பதானது அவன் தன்னின்றும் தானே பிரித்துக் கொண்டவனாகிறான் என்பதையும், தன்னைப்பற்றிய உண்மையைப் புறக்கணித்தவனாகிறான் என்பதையும் காட்டுகிறது. ஆனால் இதுவே முடிவானதாகவும், கடைசியானதாகவும் இருக்க முடியாது. இவ்விதம் அவன் - மனிதன் - தன்னினின்றும் தானே பிரிந்து கொள்ளுகிற தன்மை யானது, மெய்ப்பொருளை அழிக்க முடியாது. அந்த மெய்ப்பொருள் தன்னையே அழித்துக்கொள்ளாது. நரகவேதனைகள் அங்கு அணுகா; கடவுளைத் தோற்கடிக்க முடியாது. சாதுக்களுக்குத்தான் இந்த உலகம் சுவாதீனப்படுகிறது. தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்கிற முயற்சியில் ஈடுபட்டு அதில் தங்களையே இழந்துவிடுகிறார்களே அவர்களுக்கு இந்த உலகம் சுவாதீனமாவ தில்லை. ஏனென்றால் அவர்கள் பாரமார்த்திகமல்லாத, உண்மையற்ற பொருள்களாகிய பணம், மரணக் கருவிகள் முதலியவைகளிடத் திலேயே நம்பிக்கை வைக் கிறார்கள். கடைசியாக நாம் பார்க்கப் போனால், யார் உண்மையை நிராகரிக் கிறார்களோ, யார் துவேஷங் கொள்கிறார்களோ, யார் ஹிம்ஸையை மேற்கொள்கிறார்களோ அப்படிப்பட்டவர்களால் மனிதர்கள் ஆளப்படுவ தில்லை. ஞானத்தி லும், அன்பிலும் நம்பிக்கை கொள்கிறவர்கள் யாரோ, அகச்சாந்தியி லும் புறச்சாந்தியிலும் நம்பிக்கைகொள் கிறவர்கள் யாரோ, அவர்களால்தான் மனிதர்கள் ஆளப்படுகிறார்கள். சத்தியாக்கிரகம் என்பது உண்மைப்பொருளின் சக்தியிலே, ஆத்மாவின் ஆந்தரிக பலத்திலே வேரூன்றியிருக்கிறது. சத்தியாக் கிரகம் என்றால் பலாத்காரத்தில் ஈடுபடாமலிருப்பது என்கிற எதிர் மறையான சீலம் மட்டுமல்ல, நன்மை செய்யவேண்டும் என்கிற உடன் பாட்டுப் பண்புமாகும். என்னுடைய விரோதியை நான் தாக்கினால், அது பலாத்காரம். ஆனால், நான் உண்மையிலேயே அஹிம்ஸா தர்மத்தை அநுஷ்டிக்கிறவனாயிருந்தால், என்னுடைய விரோதி என்னைத் தாக்குகிற காலத்தில்கூட அவனை நான் நேசிக்க வேண்டும்; அவனுடைய க்ஷேமத்திற்குப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது காந்தியடிகளின் வாக்கு. அன்பு என்பது ஒற்றுமையை நாடுவது. அப்படிப்பட்ட அன்பானது தீமையோடு அதாவது பிரிவினை, இகழ்ச்சி, துவேஷம், தொந்திரவு, கொலை ஆகியவற்றோடு பொருதிக்கொள்கிறது. அது தீமையோடும், தவறிழைப்போடும், அநியாயத்தோடும், சுரண்டு தலோடும் இணங்கிப் போவதில்லை. எந்தத் தீமையையும் அஃது அசட்டை செய்வதில்லை. ஆனால், அஞ்சாமல், தீங்கிழைக்கிறவனை எதிர்த்து நிற்கிறது. அவன் இழைக்கிற தீங்கைத் தீவிர அன்பினாலும், துன்பம் அநுபவிப்ப தினாலும் எதிர்க்கிறது. ஏனென்றால் பலாத்காரத்தின் துணை கொண்டு போராடுவது மனித சுபாவத்திற்கு விரோதம். நம்முடைய சச்சரவுகளை மானிட சாதனங்களாகிய அறிவு, நல்லெண்ணம், அன்பு, சேவை ஆகிய இவைகளைக்கொண்டு தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பம் நிறைந்த இந்த உலகத்திலே, சாந்தி தரக் கூடிய அம்சம் என்னவென்றால், மனிதனாயிருக்க வேண்டுமென்ற முயற்சி யில் ஈடுபடுவதுதான். மரணத்தின் மத்தியில்தான், பிராண சக்தி, தன்னை ஊர்ஜிதம் செய்து கொள்கிறது. அச்சம், வியாகுலம் முதலியனவெல்லாம் உலகத்தில் நிறைந்திருந்த போதிலும், மனிதத் தன்மையை எல்லோரும் அப்பியசிக்கிறார்கள். விவசாயியும், கைக்கோளனும், சிற்பியும், ஞானியும், மடத்திலிருக்கும் துறவியும், சோதனாலயத்திலிருக்கும் விஞ்ஞானியும் ஆகிய எல்லோரும், குமரர் முதல் கிழவர் வரை எல்லோரும், அன்பு செலுத்துகிற போதும் அதற்காகத் துன்பம் அநுபவிக்கிறபோதும் மனிதத்தன்மையையே அப்பியசிக்கிறார்கள். பிராணன் மகத்தானது. பிராணோ விராட் என்பது வாசகம். ஜீவராசிகள், தத்தமது வாழ்க்கைக்காகப் போராடுகின்றன வென்கிற டார்வின்1 தத்துவத்திற்குப் பலாத்காரவாதிகள் விபரீத வியாக்கியானஞ் செய்கின்றனர். அவர்கள், பிராணி உலகத்திற்கும் மனித உலகத்திற்கும் உள்ள அடிப்படையான வித்தியாசத்தை மறந்து விடுகின்றனர்; பிராணி வர்க்கத்திற்கென்றேற்பட்ட ஒரு பொது விதியை மானிட வர்க்கத்தின் விதியாகக் கொண்டுவிடு கின்றனர். பலாத்காரம் என்பது மானிட உலகத்திற்குப் பொருந்தாத விஷயம். அப்படியிருக்க அதனை மானிட உலகத்தில் கொண்டு வந்து பிரயோகித்தால், மனிதனுடைய வாழ்வு மிருக வாழ்வாகி இழி தன்மையடைந்து விடுகிறது. மஹா பாரதத்தில் சண்டைபோடும் சுபாவமுடைய மனிதர்கள் நிறைந்தஉலகத்தை, நாய்க்கொட்டிலோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிறது. முதலில் இரு பக்கத்து நாய்களும் வாலைக் குழைக்கின்றன; பிறகு ஒரு நாய் குரைக்கிறது; அதற்குப் பதிலாக மற்றொரு நாய் குரைக்கிறது; அதற்கப்புறம் ஒரு நாய் மற்றொரு நாயைச் சுற்றி வருகிறது; பின்னர் ஒன்றுக்கொன்று பல்லைக் காட்டுகின்றது; அடுத்தபடி உறுமல்; உடனே சண்டை ஆரம்பம். இப்படியேதான் மனிதர்களும். எவ்வித வித்தியாசமு மில்லை. சண்டையிட்டுக்கொள்கிற வேலையை குரங்குகளுக்கும் நாய்களுக்கும் விட்டுவிடுமாறும், நாமெல்லோரும் மனிதர்களாக நடந்துகொள்ளுமாறும், மௌனமாகத் துன்பமநுபவிப்பதன்மூலம் நியாயத்திற்குப் பாடுபடுமாறும் காந்தியடிகள் நமக்கு உபதேசிக் கிறார். அன்பினால், துன்பமநுபவிப்பதனால், ஒருவன் தன் சத்துருவை வெற்றிகொள்ளலாம். எப்படி? அவனை அழித்துவிட்டல்ல; அவன் மனதை மாற்றி, ஏனென்றால் அவனும் நம்மைப்போல் கோபதாப உணர்ச்சி களுடையவன்தானே. காந்தியடிகள் அடிக்கடி தமது செய்வினைக் கிரங்கி பல காரியங்களைச் செய்கிறார்; தமது தாழ்மையைப் புலப்படுத்தக் கூடிய விதமாக அநேக செயல்களாற்று கிறார். இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? அவருடைய ஒழுக்க மேம்பாட்டைக் காட்டுகின்றன; தமது பாவ நிவர்த்திக்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்ய ஆற்றலுடையவர் என்பதைக் காட்டுகின்றன. அங்குமிங்குமாக ஒரு சிலர், தங்களுடைய சொந்த வாழ்க்கை யில் அன்பு முறையைக் கையாண்டிருக்கின்றனர். ஆனால் காந்தியடிகள் ஒருவரே, இந்த அன்பு முறையைச் சமுதாய விடுதலைக்கும் அரசியல் விடுதலைக்குமான ஒரு திட்டமாகக் கையாள்கிறார். இதுதான் அவருடைய மகத்தான வெற்றி. அவருடைய தலைமையில் தென் னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் அநேக சங்கத்தினர் தங்களுடைய குறைகளுக்குப் பரிகாரந் தேடிக்கொள்ளும் பொருட்டு இந்த அன்பு முறையைப் பெரிய அளவில் கையாண்டிருக்கின்றனர். அரசியல் லட்சியங்களை அடைவதற்காக, எந்த விதத்திலும் பலாத்காரத்தை உபயோகிக்கக் கூடாதென்பது அவருடைய சித்தாந்தம். உலக அரசியல் புரட்சி சரித்திரத்திலேயே இந்தச் சித்தாந்தம் புதிது. இதை அவர் நடைமுறையில் கொண்டுவந்து காட்டியிருக்கிறார். இந்தச் சித்தாந்தம் பாரதநாட்டின் பாரமார்த்திக பரம்பரைக்கு எவ்விதத்திலும் ஊறு விளைவிப்பதாயில்லை. அதற்கு மாறாக மேற்படி பரம்பரையிலிருந்து தான் இந்தச்சித்தாந்தம் உண்டாகிறது. இந்தச் சித்தாந்தம், சாத்வீக எதிர்ப்பு என்கிற பொதுப் பெயர் தாங்கி பலாத்காரமற்ற ஒத்துழையாமை, சட்டமறுப்பு என்பன போன்ற பல முறைகளாகப் பரிணமித்திருக்கின்றது. இந்த ஒவ்வொரு முறையும், தீமையைத் துவேஷிக்க வேண்டும்; தீமை செய்கிறவனை நேசிக்க வேண்டும் என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சத்தியாக்கிரகி, தன் எதிரியினிடத்தில் மரியாதை யோடு நடந்து கொள்கிறான். ஆனால் அந்த மரியாதை, ஒரு வீரன் காட்டுகிற மரியாதை. சட்டத்திற்குக் கீழ்ப்படிய மறுப்பது என்று சொன்னால், அதை மரியாதையாகவும் நாகரிகமாகவும் செய்யவேண்டும். இங்கே மரியாதை என்று சொன்னால், ஏதோ அந்தச் சந்தர்ப்பத்திற்கு மட்டும் பழக்கிக்கொண்டு, மேலுக்கு மரியதையாகப் பேசுவதல்ல; உள்ளூர மரியாதை இருக்க வேண்டும்; எதிரிக்கு நல்லது செய்ய வேண்டு மென்கிற எண்ணம் இருக்க வேண்டும். காந்தியடிகள் நடத்திய அநேக போராட்டங் களில், சத்துரு, ஏதேனும் ஒரு சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தால், அதனின்றும் அந்தச் சத்துருவை மீட்க அவர் பல முறை முயன்றிருக் கிறார். சத்துருவின் தேவையைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளக் கூடாதென்று அவர் பலமுறை கண்டித்திருக்கிறார். பிரிட்டன், ஐரோப்பாவில் சங்கடத்திற்காளாகி யிருக்கிறபோது அதனிடத்தி லிருந்து - பிரிட்டனிடமிருந்து - நாம் லாபம் சம்பாதிக்கப் பார்க்கக் கூடாது. யுத்தத்தின்போது, காந்தியடிகள், ராஜப் பிரதிநிதிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்:- என் நாட்டு ஜனங்களை, அவர்கள் முன்வைத்த காலைப் பின்வாங்கிக் கொள்ளு மாறு சொல்ல என்னால் முடியுமானால் காங்கிர தீர்மானங்கள் எல்லா வற்றையும் திரும்ப வாங்கிக்கொள்ளுமாறு கூறுவேன். யுத்தம் முடிகிறவரையில், சுய ஆட்சி என்றோ பொறுப்பாட்சி என்றோ மூச்சுவிடக்கூடாதென்று சொல்வேன். தளபதி மட் கூட, காந்தியடிகளின் முறைகளில் ஈடுபட்டு விட்டார். அவருடைய காரியதரிசிகளில் ஒருவர் காந்தியடிகளிடம் ஒரு சமயம் கூறினார்:- உங்களுடைய ஜனங்களை நான் விரும்பவில்லை. அவர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற இஷ்டமும் எனக்கில்லை. ஆனால் நான் என்ன செய்வது? எங்களுடைய தேவையான காலங்களில் நீங்கள் உதவி செய்கிறீர்கள். அப்படியிருக்க, உங்கள் மீது நாங்கள் எப்படி கை வைப்பது? வேலை நிறுத்தம் செய்கிற இங்கிலீஷ் தொழிலாளர்கள் மாதிரி, நீங்களும் பலாத்காரத்தில் இறங்கி விட்டிருந்தால், உங்களை எப்படி அடக்குவது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிந்துவிடும். ஆனால் நீங்களோ, உங்கள் சத்துருவுக்குக் கூட கெடுதி செய்யாதவர் களாயிருக்கிறீர்கள். நீங்களே துன்பமநுபவித்து வெற்றி காணப் பார்க்கிறீர்கள். சத்துருவினிடத்தில் எப்படி மரியாதை யாகவும் பணிவான வீரத்தோடும் நடந்துகொள்ள வேண்டுமென்கிற விஷயத்தில் நீங்களாகவே ஓர் எல்லை வகுத்துக் கொண்டு அதனை மீறமாட்டேனென்கிறீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்வதால்தான் எங்களுக்கு என்ன செய்வது என்கிற திகைப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த (1914ம் வருஷ) யுத்தம், யுத்தத்தை ஒழிக்க ஏற்பட்ட யுத்தம் என்று சொன்னார்கள். அது முடிந்து இருபது வருஷங்களுக்கு மேலாகின்றது. மறுபடியும் இப்பொழுது லட்சக்கணக்கான மக்கள் ஆயுத பாணிகளாய் நிற்கிறார்கள். சமாதான காலத்தில்கூட படைகள் திரள்கின்றன; சண்டைக் கப்பல்கள் சமுத்திரத்தில் நிறைகின்றன; யுத்த விமானங்கள் ஆகாயத்தில் கூட்டங் கூட்டமாக வட்டமிடுகின்றன யுத்தமானது எந்தப் பிரச்னைகளுக்கும் பரிகாரம் தேடிக் கொடுப்ப தில்லை; அதற்கு மாறாக அந்தப் பரிகாரம் காண்பதையே கடினமாக்கி விடுகிறது. யுத்தத்திற்குச் சாதகமாகவும், பாதகமாகவும் சொல்லப் படுகிற வாதங்களைக் கேட்டு, அநேக கிறிதவர்கள் மனோ வேதனை அடைகிறார்கள். யுத்தமானது, மானிட சமுதாயத்தையே இழிவுபடுத்து கிற ஒரு குற்றச் செய்கை யென்றும், அநாகரிகமான கருவிகளைக் கொண்டு நாகரிகத்தை காப்பாற்ற வேண்டுமென்று சொல்வது எவ்விதத் திலும் நியாயமாகா தென்றும் சமாதான வாதிகள் கூறு கிறார்கள். நமக்கு எவ்வகையிலும் பகைவர்களாயில்லாத ஆண்கள் மீதும் பெண்கள்மீதும் துன்பத்தைத் திணிக்க நமக்கு உரிமையில்லை. யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிற ஒரு தேசமானது தன்னுடைய சத்துருவைத் தோற்கடித்து அழித்துவிட வேண்டுமென்கிற ஒரே உறுதியுடன் வேலை செய்கிறது. அச்சமும், துவேஷமும் அதனிடத்தில் நிரம்பியிருக் கின்றன. ஜனக் கூட்டம் நிறைந்த ஒரு நகரத்தின்மீது அன்பினாலும், கருணையினாலும் மரண மழையைப் பொழிய முடியாது. யுத்த முறையே சாத்தானை அடக்க சாத்தானை ஏவினதுபோல்தான். இது, யேசுநாதருடைய மனப்போக்குக்கும் அவருடைய உபதேசங்களுக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் நேர்மாறானது. கொலையையும் கிறிதவ தர்மத்தையும் ஒன்று பிணைக்க முடியாது. இனி, யுத்தத்தை ஆதரிக்கிறவர்கள் தங்கள் கட்சிக்கு என்ன நியாயம் சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். யுத்தமானது பயங்கர மான ஒரு தீமைதான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் இரண்டு தீமைகள் நம் எதிரில் நிற்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது எது குறைவான தீமையோ அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்படிப் பார்க்கிறபோது யுத்தந்தான் குறை வான தீமையாகப்படும். அநுபவ ஞானம் என்று சொன்னால் அஃது ஒரு பொருளின் தராதரமறிந்து அதற்குச் சரியான மதிப்பிடுவது தான். சமுதாயத்திற்கும் அதன் அங்கமாகிய ராஜ்யத்திற்கும் நாம் சில கடமைகள்பட்டிருக்கிறோம். அந்த ராஜ்யமானது - அல்லது அரசாங்கமானது - சமுதாய அங்கத்தினர்கள் என்ற முறையில் நமக்கும் நம்முடைய சொத்துக்களுக்கும் பாதுகாப் பளிக்கின்றது; நமக்குக் கல்வி புகட்டுகின்றது; இன்னும் வாழ்க்கையிலே மதிப்பும் சிரத்தையும் உண்டாகுமாறு நமக்கு அநேக சாதகங்களைச் செய்து கொடுக்கிறது. அப்படிப்பட்டதொரு ராஜ்யம் அல்லது அரசாங்கம் - பிறரால் தாக்கப்படுகிறபோது அதனைக் காப்பதும், அதனுடைய பாரம்பர்யப் பெருமை பாதிக்கப்படுகிறபோது அதனின்று அதனைத் தப்புவிப்பதும் நமது கடமை. நமக்குக் துவேஷமில்லாதவர்களைக்கூட அங்க ஹீனர்களாக்கிக் கொல்லுமாறும், காயப்படுத்தி அழிக்குமாறும் நாம் கூறப்படுகிறபோது இந்த மாதிரியான வாதங்களே கிளப்பப்படுகின்றன. மனிதனுடைய முக்கிய கடமை, அரசாங்கத்தின் அங்கத்தினனாயிருப்பதுதான். அவனுடைய நிஜ வாழ்வு, பெருமை, சுதந்திரம் முதலியனவெல்லாம் அந்த அரசாங்கத்தின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதிலேதான் இருக்கின்றன. இது நாஜி ஜெர்மனியினுடைய சித்தாந்தம். ஓர் அரசாங்க மானது தனது பெருமைக்காகத் தனிப்பட்ட நபர்களினுடைய சந்தோஷத்தைப் புறக்கணிக்க உரிமையுடையது. யுத்தத்தின் விசேஷ குணமென்னவென்றால், மனிதன் தன்னுடைய பலஹீனமான தேக திதியில்கூட தனக்குச் சுதந்திரம் வேண்டுமென்று ஆசைப்படுகிறானே அந்த ஆசையை அழித்துவிடுவதுதான். பாசிட் கட்சியின் இருபதாவது வருஷக் கொண்டாட்டத்தின்போது முஸோலினி நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வருமாறு கூறினான்:- இன்றைய சம்பிரதாய மென்னவென்றால், எவ்வளவு பணம் செலவழித்தாவது எந்த முறையைக் கையாண்டாவது அதிகமான கப்பல்கள்,அதிகமான பீரங்கிகள், அதிகமான ஆகாய விமானங்கள் முதலியவைகளைச் சேகரிப்பதுதான். இதற்காக நாகரிக வாழ்க்கையே நாசமாகி விட்டாலும் சரி. சரித்திர காலத்திற்கு முன்னிருந்து ஒரே அழுகை தான், அநேக நூற்றாண்டுகள் வழியாக நமக்குக் கேட்கிறது. அஃதென்ன? நிராயுத பாணிகளுக்கு ஆபத்து. உலக சகோதரத்துவமென்கிற பேச்சை இனியும் நாம் கேட்க விரும்புகிறோமில்லை. ஏனென்றால், ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் உள்ள சம்பந்தம் பலாத்காரத்தை அடிப்படை யாகக் கொண்ட சம்பந்தந்தான். இந்த பலாத்கார சம்பந்தமே நமது கொள்கையை நிர்த்தாரணம் செய் கின்றது. தர்ம நியாயக் கண்கொண்டு இந்தப் பிரச்சினையைப் பார்ப்போமானால், முதல் முதலாகக் கல்விட்டெறிய யாருக்கும் உரிமையில்லை. ஏகாதிபத்திய நிர்மாணம் ஒரு சீட்டாட்டம் மாதிரி. சில வல்லரசுகள் இந்த ஆட்டத்தை, தங்கள் கைவரிசையைத் திறமையாக ஆடிக்காட்டுகின்றன. சிலவல்லரசு களுக்கு இந்தத் திறமை ஏற்படுவதில்லை.ஆட்டத்தில் வல்லஅரசுகள் எல்லா லாபங்களும் தங்கள் சட்டைப் பையில் வந்து விழுந்த பிறகு, மாற்றங்களைப் பார்த்து ஒ சூதாட்டம் மிகவும் கெடுதல் என்று உபதேசிக்கின்றன; தங்களைப் போல் மற்றவர்களும் ஆடத் தொடங்கி விட்டார்களே என்று ஆச்சரியமும் திகைப்பும் அடை கின்றன. ஜாதி மேம்பாடு, அதிகார மோகம், ஆயுத பலம் ஆகிய தேவதைகள் மத்திய ஐரோப்பாவில் மட்டுந்தான் பூசிக்கப்படு கின்றன என்று நினைப்பது தவறு 1939ம் வருஷம் மார்ச் 20ம் தேதியன்று லார்ட் சபையில் கான்டர்பரி பிரதமபாதிரி நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் தர்ம நியாயத்தைக் காப்பதற்காக நாம் ஆயுத பலத்தைத் திரட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறினார்.- இந்த உலகத்தில் சமாதானத்தை விட புனிதமான சில விஷயங்கள் இருக் கின்றன. அவைகளை நாம் காப்பாற்றவேண்டும். இந்த உண்மையை நாம் உணர்ந்திருப்பதனால் தான் யுத்தத்தில் ஈடுபட வேண்டியதவசிய மாகிறது. நாகரிகத்தினுடையவும் மானிட சமுதாயத்தின் முன்னேற்றத்தினுடையவும் மதிக்கத்தக்க விசேஷ அமிசங்களைக் காப்பாற்ற வேண்டுவது சில தேசங்களின் கடமை யாயிருக்குமானால் அது கடவுளின் திருவுளத்திற்கு விரோத மாகாது. காந்தியடிகளிடத்திலுள்ள விசேஷம் என்னவென்றால், ஆவேசமும் தேசப்பற்றும் நிரம்பிய ஒரு கூட்டத்தின் முன்னிலையில் நின்று, சத்தியத்திற்காக - அவசியமானால்இந்தியாவைக் கூட பலி கொடுத்துவிட நான் தயார் என்று சொல்லக்கூடிய தைரியம் அவருக்கிருப்பதுதான். அவரைப்போல் சமயகுரவர்களிலே ஒருவரைக் காண்பதரிது. காந்தியடிகள் கூறுகிறார்- நான் சந்தித்த மத புருஷர்களில் பெரும்பாலோர் உண்மையில் அரசியல்வாதி களாகவே இருக்கின்றனர்: அரசியல்வாதியாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிற நானோ உண்மையில் ஒரு சமயவாதியாகவே இருக்கிறேன். ஒரு மத புருஷனுடைய நோக்கம், இன்றைய தேவை களை அநுசரித்துத் தன்னுடைய லட்சியத்தை தாழ்த்திக் கொள்ளுவ தாயிருக்கக்கூடாது: தனது லட்சியத்தை அநுசரித்து இன்றைய தேவைகளை உயர்த்திக்கொள்வதாயிருக்க வேண்டும். நாம் கொண்டிருக்கும் தேசபக்தியானது மானிட சமுதாயம் அனைத்தும் ஒரு குடும்பம் என்கிற ஒற்றுமை உணர்ச்சியைக் குலைத்து விடுகிறது. மானிட சமுதாயம் என்கிற அந்தக் குடும்பத்தினிடத்தில் நமக்குள்ள பக்தியைக் காட்ட வேண்டுமானால், யுத்தத்தில் இறங்கக் கூடாது. அப்படியே நமது தேசத்தினிடம் நமக்குள்ள பக்தியைக் காட்டிக் கொள்ள வேண்டுமானால், அதனைப் பாரமார்த்திக வழிகளாலும், மானிட நெறிகளாலும் பாதுகாக்க முற்பட வேண்டும். மதாபிமானி களாவது கிறிதுநாதரின் சிஷ்யர்கள் மாதிரி மனிதர்களுக்குக் கீழ்ப்படி தலை மறுத்துக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இப்பொழுது சங்கடமான விஷயமென்னவென்றால், எல்லா நாடுகளிலும் ஜனசமுதாயமானது, தங்கள் கொள்கையை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு ஏற்ற கருவி யுத்தம் தானென்றும், முன்னேற்றம் என்றால் பிறநாடுகளை வெற்றி கொள்வது என்றும் நம்புகிற ஒரு சிலருடைய ஆதிக்கத்தி லிருப்பதுதான். மனிதனிடத்தில் சாந்தமும் கருணையும் குடிகொண்டிருக்கிற போது அவன் சந்தோஷமாயிருக்கிறான். சிருஷ்டியில் எப்படிச் சந்தோஷமிருக்கிறதோ அப்படியே சம்ஹாரத்தில் துயரமிருக்கிறது. சாதாரண போர்வீரர்களுக்கு அவர்களுடைய சத்துருக்களிடத்தில் துவேஷம் கிடையாது. ஆனால் ஆளும் வகுப்பினர் அந்தப் போர்வீரர் களுடைய பயம், தன்னலம், சுயமரியாதை இவைகளைத் தூண்டி விட்டு அவர்களை ஜீவகாருண்யமற்ற செயலில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களோ தங்களுடைய இயற்கையில் இல்லாத கோபத்தினாலும் துவேஷத்தினாலும் தூண்டப்பட்டவர்களாய் ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சாதாரண மனிதர்கள்; பிறருக்குக் கீழ்ப்படியத்தான் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் அவர்கள் குரோதத்துடன் கொல்வதில்லை; ஒழுங்குக்கு கட்டுப்பட்டே அவர்கள் எதை வெறுக்கிறார்களோ அதைச் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். இதன் முடிவான பொறுப்பு, பிடிவாத முள்ள, இரக்கமற்ற அரசாங்கங்களைச் சேர்ந்தது. இந்த அரசாங்கங்கள் சாதாரண ஜனங்களைச் சிறைப்படுத்தி அவர்க ளுடைய மனிதத் தன்மையை குன்றச் செய்கின்றன. எந்த மனிதர்கள் சிருஷ்டியிலே இன்பங் காண்கிறார்களோ அவர்கள்,அழிவு வேலைக் கென்று தயாரிக்கப் படுகிற ராணுவம், கப்பற்படை, ஆகாயப் படை முதலியவை களில் பழக்கப் படுத்தப் படுகிறார்கள். நாம் கொலை செய்வதைப் பாராட்டுகிறோம். கருணை காட்டுவது அவமானகர மான விஷயமென்று கருதுகிறோம். உண்மை உபதேசிக்கப்படுவதைத் தடுக்கிறோம். பொய்கள் பரவவேண்டுமென்று உத்தரவிடுகிறோம். நமது ஜனங்களிடமிருந்தும் மற்றவர்களிட மிருந்தும் அவர்களுடைய ஒழுக்கம், இன்பம், வாழ்க்கை முதலியவற்றை அபகரித்துக் கொள் கிறோம். பெருவாரியான கொலைகளுக்கும் ஆத்மார்த்தமான மரணத்திற்கும் நம்மை நாம் பொறுப்பாளிகளாக்கிக் கொள்கிறோம். எல்லா நாடுகளும் பரபரம் சுதந்திர மனப்பான்மையுடனும், சிநேக மனப்பான்மையுடனும் நடந்துகொள்கிறவரை, செம்மையான சமுதாய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பற்றி நாம் புதியதொரு நோக்கம் கொள்கிறவரை, உலகத்தில் சமாதானம் எற்படாது. இந்தப் பிரபஞ்சத்தில் நாகரிகமும் மனிதத்தன்மையும் நிலவுவது எதைப் பொறுத்திருக்கிறதென்றால், மனிதன் ஆத்மா, சுதந்திரம், நீதி, அன்பு ஆகிய இவைகளுக்குக் கொடுக்கிற மதிப்பை யொட்டியே இருக்கிறது. காந்தியடிகள் மனிதத்தன்மையுடையவரா யிருக்கிறாரென்று சொன்னால் அதற்கு ஜீவநாடியாயிருப்பது இந்த ஆத்மா, சுதந்திரம், நீதி அன்பு ஆகியவைதான். பலாத்காரமும் குழப்பமும் நிறைந்த இந்த உலகத்தில் காந்தியடிகளுடைய அஹிம்ஸைத் தத்துவம், உண்மைதானோவென்று கருதும்படியான அவ்வளவு அழகுடைய ஒரு கனவாக இருக்கிறது. அவரைப் பொறுத்த மட்டில் கடவுள்சத்திய புருஷர்; அன்பு வடிவினர். பலாபலன்களைக் கருதாமல் மனிதர்களாகிய நாம் சத்தியசீலர் களாகவும், அன்புடையவர் களாகவும் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஒரு புத்திசாலியான மனிதன், எதைச் செய்தால் அதிக பணம் கிடைக்கு மென்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதைப் போல் உண்மையான ஒரு சமயவாதியும், எது சரியென்பதைக் கண்டு பிடிக்க அதிக சிரமம் எடுத்துக் கொள்கிறான். அப்படிக் கண்டுபிடிக்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறபோது, அவன், தான் எவை எவற்றைத் தன்னுடைய உரிமைப் பொருள்களாகக் கருதிக் கொண்டுவந்திருக் கிறானோ, அவை தனக்குச் சொந்தமாகவோ, தனது ஜாதிக்குச் சொந்தமாகவோ, தன்னுடைய தேசத்திற்குச் சொந்தமாகவோ, இருந்த போதிலுங்கூட, அவை யெல்லாவற்றையும் துறந்துவிடுகிறான். எவனொருவன் தன்னுடையவும், தன் சமுதாயத்தினுடையவும் சுய நலத்தையெல்லாம் துறந்துவிடுகிறானோஅவனுக்குத்தான் எங்களுடைய நலன்கள் அழியட்டும்; நினது திருவுளப்படி நடக்கட்டும் என்று சொல்லக் கூடிய தைரியமும் பலமும் உண்டாகும். கடவுளிடத்திலும் சத்தியத்தி னிடத்திலும் அன்பு செலுத்துவதும்,பிறரிடத்தில் நியாயமாக நடந்துகொள்வதும், ஒரு சிலரையாவது பாதிக்கும் என்று யாராவது சொன்னால், அதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்கிறாரில்லை. உலகத்தில் வெற்றிக் கொடி நாட்டுபவர்களும், சுரண்டுந் தொழிலில் ஈடுபட்டிருக் கிறவர்களும் கடைசியில் சன்மார்க்க சட்டமென்கிற பாறையின்மீது மோதிக் கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வது நிச்சயம் என்று அவர் நம்புகிறார். ஒழுக்கஹீனனாயிருப்பது சேஷமமானது கூட அல்ல. ஏனென்றால், அதிகார இச்சையிருக்கிறதே அது, தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் சுபாவமுடையது. தேச நன்மை என்று நாம் சொல்வோமானால், வேறு சில தேசங்களின் விஷயத்தில் புறக் கணிக்க முடியாததும் சாசுவதமானதுமான சில உரிமைகள் நமக்கு இருக்கின்றன வென்று சங்கற்பித்துக் கொண்டுவிடு கிறோம். உலகத்தை நாகரிகப்படுத்துவதாகச் சொல்கிறோம்! இந்த உலகம் எத்தனையோ நாகரிகங்களைப் பார்த்தாகிவிட்டது. அந்த நாகரிகங் களின் மீது காலமென்கிற மண்ணும் படிந்தாகிவிட்டது. நகரங்களா யிருந்த பிரதேசங்களெல்லாம் இப்பொழுது காடுகளாகி விட்டன; அங்கே, நிலவொளியில் நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருக் கின்றன. ஒரு மத புருஷனுக்கு நாகரிகம் தேச நன்மை என்று சொல்லப் படுபவைகளெல்லாம் முரண்பாடானவை என்று தோன்று கின்றன. அன்பு என்பது, ஒருகொள்கையைப் பொறுத்த விஷயமல்ல; அல்லது அளந்துபார்க்கக்கூடிய விஷயமுமல்ல. பலாத்காரம் நிறைந்த இந்த உலகத்தினின்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; அல்லது அதிலே ஈடுபட்டு அழிய வேண்டும் என்று ஏக்கத்துடன் கூறுகிறவர்களைப் பார்த்து காந்தியடிகள்என்ன சொல்கிறார்.? நாமெல்லோரும் எளிதில் அடையக்கூடிய மாதிரி அவ்வளவு சமீபத்தில் ஒரு சக்தி இருக்கிறது; அதுதான் அன்பு. அஃது-அந்த அன்புச் சக்தி- எத்தனையோ கொடுமை களை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றலை மனிதனுக்கு அளித்திருக்கிறது; இன்னமும் அளித்துக் கொண்டிருக்கும் என்கிறார். ராட்சதத் தன்மையோடு பகட்டுப் பண்ணிக் கொண்டிருக்கிற எந்த ஒரு சக்தி உண்டோ, அந்தப் பலாத்கார சக்திக்கு முன்னார் காந்தியடிகளின் சத்தியாக்கிரக முறை ஒரு பயனற்றமுறை யென்று சிலர் கருதலாம். ஆனால் இந்தப் பலாத் காரத்தைவிட பெரியதொரு சக்தி இருக்கிறது. அதுதான் அழியாத ஆத்ம சக்தி. ஆரவாரத்தினாலோ, எண்ணிக்கை யினாலோ அந்தச் சக்தியை அழிக்க முடியாது. உலகத்துக் கொடுங் கோலர்கள் பலர், அதனைச் சங்கிலிகள் கொண்டு பிணிக்கப்பார்க்கலாம்; ஆனால் அஃது எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வெளியேறி விடும். 1939ம் வருஷம் மார்ச் மாதம் ஐரோப்பாவில் ஒருநெருக்கடி ஏற்பட்ட போது1 உலகத்திற்கு ஒரு செய்தி அளிக்குமாறு நியூயார்க் டைம் பத்திரிகையின் நிருபர் ஒருவர், காந்தியடிகளைக்கேட்டார். அதற்கு அவர், உலகத்தின் தற்போதைய சிக்கல் தீர வேண்டுமானால், ஜனநாயக வல்லரசுகள் யாவும் ஒரே சமயத்தில் தங்களை நிராயுத பாணிகளாக்கிக் கொண்டுவிட வேண்டுமென்று சொல்லி விட்டு மேலும் கூறியதாவது- அப்படி வல்லரசுகள் செய்யுமானால், அது ஹிட்லரின் கண்களை விழிக்கச் செய்யும்; அவரும் ஆயுதங் களைக் கீழே போட்டு விடுவார். இது நிச்சயம். இதற்குப் பதிலாக அந்த நிருபர் அப்படி நிகழ்ந்தால் அஃதோர் அற்புதமல்லவோ? என்றார். அதற்குக் காந்தியடிகள் கூறினார். ஆம்! அற்புதந்தான். ஆனால், சமீபத்தில் ஒரு மகத்தான கொலை நடைபெறக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறதே அதனின்றும் உலகம் காப்பாற்றப்படு மல்லவா? எந்த ஒரு கெட்டியான உலோகமும், போதிய உஷ்ணம் கொடுக்கப்பட்டால் உருகிப்போய்விடு கிறது. அதுபோல, எவ்வளவு கடினமான இருதயமாயிருந்த போதிலும், அஃது அஹிம்ஸை யென்கிற உஷ்ணத்திற்கு முன்னர் இளகத்தான் வேண்டும். உஷ்ணத்தை உண்டுபண்ணக் கூடிய சக்தி, அஹிம்ஸைக்கு அளவு கடந்து இருக்கிறது. என்னுடைய சென்ற ஐம்பது வருஷ அநுபவத்தில், ஐயோ, உதவியற்றுக் கிடக்கிறேனே; அஹிம்ஸை எனக்குப் பரிகாரமளிக்க வில்லையே யென்று நான் சொல்லக்கூடிய மாதிரி ஒரு சந்தர்ப்பமும் எனக்கு ஏற்படவில்லை. அன்பு என்பது மனித வாழ்க்கையின் சட்ட மாகவும், அதன் இன்றியமையாத் தேவையாகவும் இருக்கிறது. இந்தத் தேவையானது இனி பகிரங்கமாக வெளிப்பட வேண்டிய ஒரு நிலைமையை நாம் அணுகிக் கொண்டுவருகிறோம். மனிதர்கள், இந்தத் தேவையைப் புறக்கணிப்பார்களானால் அல்லது இதற்குக் கீழ்ப்படிய மறுப்பார்களானால், மானிட வாழ்வே இல்லாமற் போய்விடும். வாழ்க்கையை நடத்திச் செல்ல, யுத்தஞ் செய்ய வேண்டு மென்பது அவசியமில்ல. அந்த வாழ்க்கையை நாம் சுயநலப் பற்றின்றி நடத்திச் செல்லாத காரணத்தினால்தான் யுத்தங்கள் ஏற்படுகின்றன. உலகத்தில் சமாதானம் ஏற்படவேண்டுமானால், பிரதி மனிதனும் தன் இருதயத்தில்போராட்டம் நடத்த வேண்டும். அவனிடத்திலே யுள்ள ஆத்ம சக்தியானது அவனுடைய கர்வம், சுயநலம், பேராசை, அச்சம் முதலியவற்றை உடைத்தெறிய வேண்டும்.தேசிய நல்வாழ்வுக் கும், உலக ஒழுங்குக்கும், அதிவாரமாக ஒரு புதிய வாழ்வு அமைய வேண்டும். அந்த வாழ்வானது, எல்லாப் பிரிவாருடையவும், எல்லா ஜாதியாருடையவும், எல்லாத் தேசத்தாருடையவும் நலன்களையும் சேமித்துக் காப்பாற்றுவதாயிருக்க வேண்டும். அவித்தை என்கிற சுயநல சக்திக்குக் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படிய மறுத்து, அதனின்றும் விடுதலை பெற்றிருக்கிற சுதந்திர புருஷர்கள் இருக்கிறார்களே, அவர்களால்தான், உலக சமாதானத்திற்குப் பாடு பட முடியும்; அவர்களால்தான் அந்தச் சமாதானத்தை தாபிக்க முடியும். சமாதானம் என்பது என்ன? அகில உலகத்திற்கும் பொதுவான சில தத்துவங்கள், சில நிர்ணயங்கள் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கை யிலும் நடவடிக்கை களிலும் அநுபவபூர்வமாகக் கொண்டுவந்து காட்டுவது தான். ஒழுக்கத்திற் கென்றேற்பட்டுள்ள மதிப்புக்குப் பங்கம் உண்டு பண்ணாமலும், மனித உயிர்களை அழிக்காமலும் இருக்கிற ஆயுதங் களின் துணை கொண்டு நாம் இந்தச் சமாதானம் ஏற்படுவதற் காகப் போராட வேண்டும். இந்த முயற்சியில்ஈடுபடுகிற நாம், நமது வழியில் என்ன துன்பங்கள் வந்தாலும் அவற்றைச் சகித்துக் கொள்ள தயாராயிருக்க வேண்டும். உலகத்தின் பல பாகங்களிலும் நான் சுற்றுப் பிரயாணம் செய்து பார்த்திருக்கிறேன். சிறந்த ராஜதந்திரிகளுக்கும், தேசத் தலைவர் களுக்கு முள்ள கீர்த்தியைக் காட்டிலும் காந்தியடிகளுக்கு அதிகமான கீர்த்தி எங்கும் ஏற்பட்டிருக்கிறது. அந்த ராஜ தந்திரிகளை, தேசத் தலைவர் களைத் தனித்தனியாக எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அல்லது மொத்தமாக எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அவர் களெல்லோரைக் காட்டிலும், காந்தியடிகளின் மனித சுபாவந்தான் அதிகமாக நேசிக்கப்படுகிறது; அதிகமாகப் போற்றப்படுகிறது. அவருடைய பெயர், எல்லோருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. மானிட சமுதாயத்தின் உற்ற நண்பர் என்று அவரை ஒவ்வொரு குடியானவனும், ஒவ்வொரு தொழிலாளியும் கருதுகிறான். சத்திய யுகத்தை அவர் மீண்டும் தாபிக்கக் கூடுமென்று மேற்படி குடியானவர்களும் தொழிலாளர் களும் கருதுகிறார்கள். ஆனால் அந்த யுகத்தை, போய்க் கொண்டிருக் கிற குதிரை வண்டியை அழைப்பதுபோல் அழைக்க முடியாது. எனென்றால் நாம் அறியா மைக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். அந்த அறியாமையோ, ஒரு தேசத்தினுடைய சக்தியைக் காட்டிலும் அதிகமான சக்தி யுடையது; தோல்வியடைவதனால் உண்டாகிற இழிவைக் காட்டிலும் அதிகமான இழிவுடையது. நல்வாழ்வு நடத்துவதற் கென்று நமக்குப் பலவித சக்திகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் மரணத்திற்கென்று துர்விநியோகப் படுத்துகிறோம். மானிட சிருஷ்டியிலேயே, பிரதி மனிதனும் இன்ப மநுபவிக்க உரிமையுடையவன் என்பது ஊர்ஜித மாகியிருக்கிறது. ஆனால் அந்த உரிமையை நாம் புறக்கணித்து விட்டோம். நமது சக்திகளை, ஒரு சிலருடைய சந்தேகாபதமான திருப்திக்காக, பலருடைய சந்தோஷத்தைப் பலி வாங்குகிற அதிகாரம், செல்வம் முதலியவற்றைப் பின் பற்றிச் செல்வதிலே செலவழிக்கிறோம். நீயும் நானும் எந்தப் பிழைக்குட்பட்டிருக்கி றோமோ அதே பிழைக்குத்தான் இந்த உலகமும் அடிமைப் பட்டிருக்கிறது. ஆதலின், நாம், செல்வத்திற்கும் அதிகாரத் திற்கும் முயற்சிக்கக் கூடாது; அன்பையும், மானிட தர்மத்தையும் தாபிக்க முயற்சி செய்ய வேண்டும். காந்தியடிகள், சுதந்திர வாழ்க்கையின் தீர்க்கதரிசியாக விளங்கு கிறார். தமது விசேஷமான புனிதத் தன்மையினாலும், ஆண்மையினா லும், லட்சக்கணக்கான மக்களைத் தமக்கு ஆட்படுத்திக் கொண்டிருக் கிறார். தற்கால உபதேசகர்கள் என்ன உபதேசிக்கிறார்கள், பொதுவான தொரு நல்லெண்ணம், சம்பிரதாயமான சில ஒழுக்க முறைகள், குறிப்பற்ற ஆனால் மனோகரமான சில பாவனைகள் முதலிய வற்றையே போதிக்கிறார்கள். ஆனால் ஆத்ம பலம், அநுபவ ஞானம் முதலியன நிறைந்த புனிதத் தன்மையை, காந்தியடிகளிடத்தில் காண்பதுபோல் அவர்களிடத்தில் காண முடியாது. உண்மையாயிருக்க வேண்டும்; எளிய வாழ்வு நடத்தவேண்டும்; இருதய சுத்தமும் மனோ சாந்தியும் உடையவர்களாயிருக்க வேண்டும். துக்கத்திலும் ஆபத்திலும், சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கவேண்டும்; வாழ்க்கையை நேசிக்க வேண்டும்; மரணத்திற்குப் பயப்படக் கூடாது; கடவுளுக்குத் தொண்டு செய்யவேண்டும்; இறந்து போனவர்களுடைய ஆவிகைளப் பின்பற்றிச் செல்லக்கூடாது. இந்த மாதிரி உபதேசித்தவர்களோ, இந்த மாதிரி வாழ்க்கையை நடத்திக் காட்டியவர்களோ, உலகம் ஆரம்பித்த காலத்தி லிருந்து இதுவரை யாருமே காந்தியடிகளைப் போல் அவதரித்தது கிடையாது. * * * மகாத்மா காந்தி - ஒரு மதிப்பு ஹோரே ஜி. அலெக்ஸாந்தர் (ஸெல்லிஓக், பர்மிங்ஹாம்) ஓரு மகானுடைய ஜீவிய காலத்தில், அவரைப் பற்றி நிஷ்பட்ச பாதமாக மதிப்பிட்டுச் சொல்வது சுலபமான காரியமல்ல; அவருக்கும் நமக்கும் நேர்முகமான பரிச்சயம் இருந்துவிட்டால், அப்படி மதிப்பிட்டுச் சொல்வது இன்னும் கஷ்டம். ஏனென்றால், ஒரு மனிதனை அவனுடைய உண்மையான தோற்றத்தில் பார்க்க வேண்டுமானால், சிறிது எட்டியிருந்தே பார்க்கவேண்டும். மகாத்மா காந்தியினுடைய சமீபத்தில்கூட நிற்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர் தமது ஹரிஜன் பத்திரிகையின் மூலம் வாரந் தோறும் வெளியிடுகிற எண்ணங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வருவதன் மூலம் அவருடைய ஜீவிய காலத்திலேயே அவருக்குச் சமீபத்தில் இருக்க முயற்சி செய்வதுதான் சிறந்ததென்று நான் கருதுகிறேன். ஆனால், உலகம் அவரைப்பற்றி அடிக்கடி பல கேள்விகள் கேட்கின்றது. அவைகளுக்குப் பதில் சொல்லவேண்டியது அவசியம். காந்தியடிகளைப் பற்றி அவருடைய சமகாலத்தவர் என்ன அபிப்பிராயப் படுகிறார்கள் என்பதைத் தெரிவிப்பதே இந்த நூலின் நோக்கம் என்று நான் கருதுகிறேன். இப்படியாக அவையடக்கம் தெரிவித்துக் கொண்டு, தற்கால உலக அமைப்பில் காந்தியடிகளை நான் எவ்வாறு காண்கிறேன் என்பதைச் சொல்கிறேன். உடைமையற்றவர்கள் - உரிமையிழந்தவர்கள்-பலநாடு களிலும் புரட்சி செய்வதை இந்த யுகத்தில் நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்தப் புரட்சிகள் பல உருவங்களெடுத்திருக்கின்றன. தொழிலாளர் இயக்கமும், பல பிரிவினைகளையுடைய அபேத வாதமும், தொழிலாளர் களின் உரிமைகள் இன்னின்னவையென்று மேனாடு முழுவதிலும் அறிவித்திருக்கின்றன. இந்தப் போராட்டத் தின் முதல் விளைவே சர்வதேசத் தொழிலாளர் தாபனம் போலும். ஆனால் ருஷ்யாவில் இந்த இயக்கம் வெகுதூரம் முன்னேற்ற மடைந்திருக்கிறது. அங்கு - ருஷ்யாவில் - தொழிலாளி, ஏதோ எல்லோரையும்போல் மதிக்கத்தக்க ஒருவன் மட்டுமல்ல; நீ அவனைக் கடுமையாக நடத்தினால் அவன் உன்னைத் திரும்பிக் கடிப்பான் என்கிற மாதிரியான உரிமையோடு கூடியவன் மட்டு மல்ல, அவன், விசேஷமான உரிமைகளோடு கூடிய ஒர் உயர்ந்த தானத்தில் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கிறான். சர்வதேசத் தொழிலாளர் தாபனமோ அல்லது சோவியத் அரசாங்கமோ, தொழி ற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை மட்டும் கவனித்து விட்டு மற்றவர்களைக் கவனியாமலிருக்கவில்லை. அதிக நேரம் வேலை செய்கிற கடை குமாதா, ஏழை விவசாயி, மீன் பிடிக்கிற தொழிலாளி முதலியவர்கள் விஷயத்திலும் கவனஞ் செலுத்துகின்றது. ஆனால் இவர்களுடைய நன்மைக்கென்று செய்யப்பட்ட காரியங்கள் ஏறக்குறைய பின்யோசனையின் பேரில் செய்யப்பட்டவையே. ஜெர்மனியில், ஒரு பெரும் பற்றான புரட்சியில் வெற்றி பெற்றவர்கள் வைதிக அபேதவாதிகளல்ல; தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுமல்ல. புத்திசாலிகளான அல்லது குறைவான நியாய புத்தியுள்ள வேறோரு கட்சியினர் தோன்றி, ஜன சமுதாயத்தில் பெரும்பாலோராயுள்ள கீழ்த்தர மத்திய வகுப்பினருடைய ஆதரவை எப்படிப் பெறலாம் என்கிற வழியைக் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் கூட நம்பிக்கை யிழந்தவர்களாகி விட்டனர். நாணயத்தின் மதிப்பு குறைந்துவிட்டபடியால், அவர்கள் சேர்த்து வைத்திருந்த பொருளெல்லாம் கரைந்துவிட்டன. தவிர, வல்லரசுகளால், மேலும் கீழுமாக வைத்து நசுக்கப்பட்டனர். ஹிட்லருக்கு வெற்றி தேடிக் கொடுத்த முக்கியமான பிரிவினர் இந்தக் கீழ்த்தர மத்திய வகுப்பினர்தான். ஆனால் கார்ல் மார்க்ஸின் சிஷ்யர் கள், இவர்களை - இந்த மத்திய வகுப்பினரை - மறந்து விடுகிறார்கள்; அல்லது புறக்கணித்து விடுகிறார்கள். இந்தியாவினின்று தோன்றிய மகாத்மா காந்தியோ, மேனாட்டில் ஏற்பட்ட இந்தப் புரட்சிகளையெல்லாம் எதிர்த்து நிற்கிறார். அதிகாரத்தை உத்தேசித்துப் போட்டி போடுகிற மேனாட்டுத் தொழிலாளர்கள், கீழ்த்தர மத்திய வகுப்பார், அறிஞர்கள், பெருஞ் சொத்துடையவர்கள் முதலிய பலபிரிவினரும், மனிதன் சாப்பிட வேண்டும் என்கிற அடிப்படையான உண்மையை மறந்து விடுகின்றனர். மனிதன், யந்திரங்களைத் தின்ன முடியாது; வர்த்தகத்தைத் தின்ன முடியாது; பள்ளிக்கூட பாட புத்தகங்களைத் தின்னமுடியாது; கம்பெனிகளில் லாபம் பிரித்துக் கொடுக்கிறார்களே அந்த லாபத்தைத் தின்ன முடியாது. இவை களெல்லாம் இல்லாமலே மனிதன் வாழ முடியும். ஆனால் ரொட்டியோ அல்லது அரிசிச் சாதமோ இல்லாமல்அவன் வாழ முடியாது. தினசரி ஆகாரத்தை ஒரு சம்பிராதய விஷயமாக கருதிக் கொண்டிருக்கிற நாகரிக புருஷன் அல்லது நகரவாசி, இந்தியா, சீனா, கிழக்கு ஐரோப்பா, கானடா, அர்ஜடண்டைன்1, ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் வாய் திறவாமலும், அரை வயிற்றுப்பட்டினியோடும் உழைக்கிற லட்சக் கணக்கான விவசாயிகள் அல்லது குடியானவர்களுடைய தயவையே எதிர் பார்க்க வேண்டியவனாயிருக்கிறான். இந்த நாடுகளில், விவசாயிகள், மனிதனுக்கு இன்றியமையாது வேண்டப்படுகிற ஆகாரத்தை உற்பத்தி செய்ய, சூரியன், காற்று, மழை ஆகிய இவற்றின் உதவியைப் பெரும்பொருட்டு - ஆனால் இந்தச் சூரியன், காற்று, மழை முதலியன விவசாயிகளைப் பார்த்து எத்தனை தடவை பரிகசித்திருக்கின்றது! வருஷந்தோறும் போராடுகிறார்கள். இந்த மாதிரி அவர்கள் தலை முறை தலைமுறையாக ஆயிரக்கணக்கான வருஷங்களாக உழைத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தலைக்கு மேலே யுத்தங்களும் புரட்சிகளும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. எப்படி ஒரு பஞ்சம் அல்லது ஒரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லாவற்றையும் அழித்துவிடுகிறதோ அதுபோல் இந்த யுத்தங்களும், புரட்சிகளும் ஏற்பட்டு விவசாயிகளுடைய உழைப்பின் பலனைத் தற்காலிகமாக வாவது அழித்து விடுகின்றன. அப்படிப்பட்ட விவசாயிகள், கடைசி யாக இப்பொழுது தங்களுக்கு அபயம் கொடுக்கிறமாதிரியான ஒரு குரலைக் கேட்கிறார்கள். அதுதான் மகாத்மா காந்தியினுடைய குரல். கோடிக்கணக்கான இந்திய மக்களிலே, காந்தியடிகளின் பெயரைத் தெரியாதவர் ஒருவர் கூட இல்லை. இந்தியாவிலே வசிக்கும் காட்டு ஜனங்கள்கூட, புராதனக் குடிகள் கூட, அந்த ஏழை பங்காளரை, ஏழை களுக்காகப் பரிந்து பேசுகிற நண்பரைத் தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி செலுத்துகிறார்கள். அவர்- காந்தியடிகள் - ஒரு நியாயவாதியாகவே பயிற்சி பெற்றார்; ஆனால் ஒருவிவசாயியாகவே வாழ்கிறார். விவசாயியைப் போல் எளிய ஆடை தரித்துக் கொண்டு, ஒரு மகாத்மாவினால் கூட சுத்த மாகாத, நாகரிகமடையாத, எங்கேயோ ஒதுக்குப் புறமாயுள்ள ஒரு கிராமத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார். அப்படி வசித்துக் கொண்டிருப்பதனால் மட்டும் - புறவாழ்க்கையில் மட்டும் - அவர் ஒரு விவசாயியாக இல்லை; அகவாழ்க்கையிலும் அவர் ஒரு விவசாயியாக இருக்கிறார். ஒரு விவசாயினுடைய கண்கொண்டு தான் - கூர்மையான ஆனால் நேர்மையான, சில சமயங்களில் முரட்டுத்தனத்தோடு கூடிய, நகைச் சுவையுள்ள, அன்பு நிரம்பிய பொறுமை வாய்ந்த, ஆழ்ந்த மதப் பற்றுடைய ஒரு விவசாயினுடைய கண்கொண்டுதான் - அவர் உலகத்தைப் பார்க்கிறார். ஜீவராசிகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பாராமல் மொத்தமாகவே அவர் பார்க்கிறார். காணற்கரிய சில சக்திகள், நாம் அறிந்து கொள்ள முடியாத வழிகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றனவென்பதை அவர் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் நாம் மௌனமாக இருந்து கேட்கச் சம்மதிப்போமானால் அந்தச் சக்திகளை உணரமுடியும்;அவற்றை அணுகிப் பற்றிக் கொள்ளவும் முடியும் என்று அவர் நம்புகிறார். இந்தியாவில் சுமார் ஆறு மாத காலம் சுற்றுப் பிரயாணஞ் செய்து பிறகு 1928ம் வருஷம் வசந்த காலத்தில், சபர்மதி ஆசிரமத்தில் முதன் முதலாகக் காந்தியடிகளை நான் சந்தித்தேன், அப்பொழுது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகளை நான் மறக்கவே மாட்டேன். என் தாய்நாடாகிய இங்கிலாந்துக்குச் சென்ற பிறகு எனது ஜனங்களுக்கு நான் என்ன சொல்லட்டும் என்று கேட்டேன். எங்களை விட்டு விலகிக் கொள்ளுமாறு நீங்கள் இங்கிலீஷ் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று அவர் பதில் கூறினார். இதில் எவ்வளவு அர்த்தபுஷ்டி யிருக்கிற தென்று பாருங்கள். அடையவேண்டிய லட்சியம் என்ன, அதைஅடை வதற்கான சாதனங்கள் என்ன முதலியவைகளையெல்லாம் இந்த வாசகம் குறிக்கிறதல்லவா? நமது காலத்துப் புரட்சித் தலைவர்களுக்கும் காந்தியடிகளுக்கும் உள்ள வேற்றுமை என்ன? காந்தியடிகள் கொண்டிருக்கும் லட்சியம் ஒன்று மட்டும், மற்ற தலைவர்களினின்று அவரை வேறுபடுத்திக் காட்டவில்லை. அந்த லட்சியத்தையடைய என்னென்ன சாதனங் களைக் கையாள்கிறார் என்பதில் தான் அவர் வேறுபட்டவராயிருக் கிறார். இதுதான் முக்கியமான விஷயம். இந்தியப் பிரச்சினைகளில் பிரவேசிப்பதற்கு முந்தி 1908ம் வருஷம் அவர் ஹிந்த் வராஜ்யம்1 என்று ஒரு சிறிய நூல் எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுகிறார்- அரசர்கள், எப்பொழுதும் தங்களுடைய அரச ஆயுதங்களை உபயோகிப்பார்கள். பலாத்காரம் உபயோகிப்பது அவர்களுக்கு ஆகாரம் சாப்பிடுகிற மாதிரி. விவசாயிகள், எப்பொழுதும் வாள் பலத்தைக் கொண்டு அடக்கப்பட்ட தில்லை; அடக்கப்படவும் மாட்டார்கள். வாளாயுதத்தை எப்படி உபயோகிப்பதென்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால், அதனை மற்றவர்கள் உபயோகித்தாலும் அதற்காகப் பயப்படமாட்டார்கள். ஆகையால், காந்தியடிகளின் லட்சியமாகிய குடியானவர் வராஜ்யத்தை - குடியானவர் சுதந்திரத்தை - அடைய வேண்டுமானால், அந்த லட்சியத்திற்குகந்ததாகவே, அதனை அடைவதற்கான சாதனமும் இருக்க வேண்டும். மனிதர்களை ஆள வேண்டுமென்ற நோக்க முடையவர்கள், வாளாயுதத்தையே உபயோகிக் கிறார்கள். ஆட்சி புரியும் எந்த வகுப்பினருடைய ஆயுதமும் இதுதான். இந்த ஆளும் வகுப்பினருடைய ஆயுதங்களைக் கொண்டே இவர்களை அழித்துப் போட அபேதவாதிகளோ, அல்லது பொது வுடைமை வாதிகளோ, அல்லது நாஜிகளோ அல்லது பாசிடுகளோ முற்பட்டு அதில் வெற்றி காண்பார்களானால் அஃது - அந்த வெற்றி - ஒரு வகுப்பாருடைய தானத்தில் மற்றொரு வகுப்பினர் வந்து அமர்ந்தது போலத்தான். நிலச் சொந்தக்காரர்கள் அல்லது பாங்கிச் சொந்தக்காரர்கள் அல்லது தொழிற்சாலைச் சொந்தக்காரர்கள் முதலியோர்களுடைய கையில் அந்த வாளாயுதம் இருந்தது போய், பொதுவுடமைக் கட்சி, அல்லது பாசிடு கட்சி அல்லது நாஜி கட்சி யினரிடம் வந்து சேர்கிறது. சாதாரண குடியானவனோ எப்பொழுதும் போல் நசுக்கப்பட்டே கிடக்கிறான். ஜனங்களுடைய முதுகின்மீது வேறோர் ஆளும் வர்க்கத்தினர் ஏறிக் கொள்கின்றனர். அவ்வளவுதான். குடியானவர்களுடைய முதுகிலிருந்து, ஆளும் ஜாதியினர் அல்லது வகுப்பினர் என்னும் சுமையை எப்பொழுதுமே இல்லாத படி நிரந்தரமாக இறக்கிவிட வேண்டுமென்கிறார் காந்தியடிகள். ஆனால் இப்பொழுதுள்ளவர்களை இறக்கிவிட்டு வேறொரு பிரிவினரை ஏற்றிவிட்டல்ல. எனவே, அவர், தேகபலமில்லாதவர்களும், தேக பலமுடையவர்களும் எல்லோரும் உபயோகிக்க கூடிய மாதிரி யான ஒர்ஆயுதத்தைத் தயார்ப்படுத்தும் விஷயத்தில் தமது வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறார். இந்தஆயுதத்தை எப்படிப் பிரயோகிப்பதென்கிற பாடத்தை காந்தியடிகளிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலம் குடியானவர்கள் தாங்களே சுயமாக நிமிர்ந்து நிற்கக் கூடிய சக்தியைப் பெறுகிறார்கள்; பெரிய சுமைகளால் அவர்கள் குனிந்து கிடப்பதில்லை. ஜனங்களுடைய முதுகின் மீது ஏற்கனவே அமர்ந்திருப்பவனை அப்புறப்படுத்திவிட்டு வேறொருவனை உட்காரவைப்பதற்குப் பதிலாக காந்தியடிகள்என்னசொல்கின்றாரென்றால்,ஏற்கனவேஜனங் களுடைய முதுகின்மீது அமர்ந்திருக்கிறானே அவனுக்கு எந்தவிதத்தி லும் உதவி செய்யக்கூடாது. அந்த உதவி மறுப்பினால் அவன் எப்படியும் கடைசியில் கீழே இறங்கி வந்துவிடுவான். அவனுடைய சுமை தாங்கிகளும் ஆதரவுகளும் அற்றுப் போய்விடுகின்றன. அவனுக்கு நீ ஆதரவு கொடுத்துக் கொண்டு வராவிட்டால், அவன், உன்னைப் பலவித தண்டனைக்குட்படுத்து வதாகப் பயமுறுத்துவான். தன் பயமுறுத்தலை, அவன் அநுஷ்டானத்திலும் கொண்டு வந்து காட்டு வான். ஆனால், சிறைவாசம், மரணம் ஆகிய இவைகளைப் பார்த்து நீ சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாயானால், அவனுடைய பயமுறுத்தல் கள் -ஏன்? அவனுடைய வாளாயுதம் கூட- உன்னை அசைத்துக் கொடுக்கமாட்டா. எந்தக் காரியம் உன் மனச்சாட்சிக்குக் குற்றமான தென்றுபடுகிறதோ அதைச் செய்யுமாறு உன்னை அவன் பலவந்தப் படுத்த முடியாது என்கிறார். பலாத்காரமற்ற இந்த முறையை அநுஷ்டான பூர்வமாகக் கொண்டு வருவதற்கு முன்னர், மகத்தான அநேக கஷ்டங்களை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. யந்திர பீரங்கிகளுக்கு முன்னர் தைரிய மாக நிற்குமாறு போர் வீரர்களைப் பயிற்சி செய்விப்பது கடினமான காரியம். இதில் அந்தப் போர்வீரர்களுக்குத் திருப்பிச் சுடுகிற உரிமையாவது இருக்கிறது. ஆனால் இதைவிடக் கடினமான காரியம், தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ளாமல் எதிரியின் எந்தவிதமான பலாத்காரத்தையும் ஏற்றுக் கொள்ளுமாறு ஜனங் களைப் பழக்குவித்தல். ஆனால் காந்தியடிகள் முப்பது வருஷங் களுக்கு முன்னரே, சாத்வீக எதிர்ப்பை மேற்கொண்டவர்கள், (இப்பொழுது இவர்கள் சத்தியாகிரகிகள் என்று அழைக்கப்படு கிறார்கள்.) தூய்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும்; வறுமை வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்; உண்மையைப் பின்பற்றி நடக்க வேண்டும் அஞ்சாமையை அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும்; என்று கூறியிருக்கிறார். தோல்வியேயில்லாத, பலாத்கார மற்ற இந்தமாதிரியான வாழ்க்கையின் ரகசியத்தைத் தெரிந்து கொண்ட ஆண்களும் பெண்களுமாகிய பலர் ஒவ்வொரு யுகத்திலும் இருந்திருக்கிறார்கள். ஜெர்மன் சிறைச்சாலைகளில் வதியும் பாதிரிமார் களிடமிருந்து அவ்வப்பொழுது கிடைக்கும் கடிதங்களை நாம் படித்துப் பார்ப்போமானால் மேற்கண்ட குணத்தை-அதாவது தோல்வியே யில்லாத பலாத்காரமற்ற வாழ்க்கையை நடத்துகிற குணத்தை - மேனாட்டிலும் கீழ்நாட்டிலும் வளர்க்க முடியும் என்பது நன்கு புலனாகும். இந்த தன்மையானது பெரும்பாலோரிடத்தில் அமைந்து விடுமானால், மனிதனுடைய உண்மையான சுதந்திரம் அவனுடைய ஒற்றுமை உணர்ச்சி முதலியவைகளெல்லாம் நமது சமீப பார்வைக்கு வந்துவிட்டன போலாகும். தம்முடைய சமாதானப் போர் வீரர்களிடத்திலுள்ள, சுதந்திரப் போர் வீரர்களிடத்திலுள்ள மகத்தான சுய ஒழுங்கில் அல்லது கட்டுப்பாட்டு முறையில் காந்தியடிகள் நம்பிக்கை வைத்திருக்கிறார். அப்படி யிருந்தும் அவர் ஜனங்களை ஒரு பிண்டமாகக் கருதிப் பேசுவதில்லை யென்பது இங்குக் கவனிக்கத் தக்கது. ஏகாதிபத்திய நிர்மாணத் திற்காகவோ, அல்லது புரட்சி நடத்துவதற்காகவோ, பீரங்கிக்கு இரை தேடுகிறவர்கள், மனிதர்களை ஒரு பிண்டமாகக் கருதியே பேசுவார்கள். ஆனால் காந்திடிகளுக்கு, லட்சக்கணக்கான ஜனங்களில் ஒவ்வோர் ஆணும் அல்லது ஒவ்வொரு பெண்ணும் தனித் தனியான வியக்திதான்; தம்மைப்போல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் புனிதமான மனிதத் தன்மை உண்டு என்று அவர் கருதுகிறார். தம்மைப் போல் படித்தவர்களிடத்தில் பழக அவருக்கு எப்படித் தெரிந்திருக் கிறதோ அப்படிப் போலவே, பாமரர்களாகிய விவசாயிகளைச் சிநேகம் செய்து கொள்ள அவருக்குத் தெரிந்திருக்கின்றது. அவரைப் பொறுத்த மட்டில் எந்த ஒர் ஆண் மகனும் எந்த ஒரு பெண் மகளும் சாதாரணர் களல்ல; அசுத்தர்களல்ல. இதனை ஒர் அழகான தத்துவமாக மட்டும் அவர் உபதேசிக்கிறாரில்லை; தம்முடைய தினசரி வாழ்க்கையிலும் இதனை நடத்திக்காட்டுகிறார். பலாத்காரத்திற்கு நல்வாழ்வு ஏற்பட்டிருக்கிற இந்த யுகத்திலே, அதிகமான ஆயுத பலத்தைச் சேகரித்துக் கொள்வதில்தான் தங்களுடைய சேஷமம் இருக்கிறதென்று மேனாட்டிலுள்ளவர்கள் நம்புகிற இந்தக் காலத்திலே, முடிவான சமாதானம் ஏற்படுவதற்கு முதற்படியாக, நியாயத்தின் பக்கம் ஆயுத பலத்தைத் திரட்ட வேண்டுமென்று கிறிதவ மதத்தின் பிரதம பாதிரிகூடச் சொல்லத் தொடங்கிவிட்ட இந்தச் சந்தர்ப்பத்திலே, நமது கண்களுக்கு முன்னர்-ஆம்; நாம் கண் திறந்து பார்ப்போமானால் - ஒரு மனிதர், மெலிந்த தேகத்தினர், நிச்சயமற்ற தேகாரோக்கிய முடையவர், பிரமாதமான திறமைகளில்லாதவர், அப்படிப்பட்ட ஒரு மகான், மனிதனிடத்திலேயுள்ள சக்தியானது, தெய்விக சக்தியினால் தூண்டப்பட்டு எரிகிறபோது, அது, மகத்தான ஆயுதபலத்தைக் காட்டிலும் வலிவுடையது என்பதைத் தமது வாழ்க்கையின் மூலமாகவும், தமது சகோதர இந்தியர்களிடத்தில் மந்திர சக்தி போல் அடைந்திருக்கிற செல்வாக்கின் மூலமாகவும் நிரூபித்துக் காட்டிக் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். சாதுக்கள், இந்த உலகத்தைத் தங்களுடைய உரிமைப் பொருளாக இன்னமும் வீகரிக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தங்களுடைய சாதுத் தன்மையில் நம்பிக்கையிருக்கவேண்டும். ஹிட்லருக்கு அல்லது டாலினுக்குப் பயப்படாமல் அவர்கள், நமது யுகத்தின் உத்தம ஆசாரிய புருஷரிடத்தில் - காந்தியடிகளிடத் தில் - நம்பிக்கை வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு இந்த உலகம் உரிமைப்படும். * * * ஒரு நண்பனுடைய காணிக்கை சி.எப். ஆண்ட்ரூ (போல்பூர், வங்காளம்) இந்தக் கட்டுரை எழுதுவதில் என்னுடைய நோக்கம் மூன்று வகையானது. முதலாவது, மகாத்மா காந்தியின் குண மேம்பாட்டில் ஆழ்ந்த மதக் கருத்துக்கள் என்ன இருக்கின்றனவென்பதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுதல். இரண்டாவது அவரிடத்திலுள்ள மனிதத் தன்மையை விளக்குதல். மூன்றாவது, தற்கால மானிட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அவர் அளித்திருக்கிற இரண்டு நன்கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுதல். 1 சிரேஷ்டமான மத கருமங்கள் - சமய சீலங்கள் - என்று சிலவற்றிற்கு மகாத்மா காந்தி அதிகமான முக்கியத்துவம் கொடுக் கிறார். இவைகளின் மூலமாக இந்த இகலோகத்தில் , கடவுளுக்குப் பயந்து கொண்டு அநித்திய வாழ்க்கை நடத்துகிற மனிதன் சாசுவத மான சிலகாரியங்களைச் செய்ய முடியுமென்று அவர் கருதுகிறார். முதலாவது சத்தியம்; அதாவது உண்மை. இஃதொரு தெய்விக குணம் என்றும் இதைச் சொல்லிலும் செயலிலும்மட்டும் வெளிப் படுத்திக் காட்டினால் போதாதென்றும், ஆத்மாவின் அந்தரங்கத்திலும் இது பிரசன்னமாயிருக்க வேண்டுமென்றும் காந்தியடிகள் கூறுகிறார். பொய் பேசாமலிருப்பது, உண்மையின் ஒரு முக்கியமான அமிச மாயினும் அது மட்டும் போதாது. எல்லா உண்மைகளுக்கும் தலை ஊற்று, இருதயத்திலே தானிருக்கிறதென்பது அவருடைய கொள்கை. சத்தியம் என்பது எவ்வளவு மகத்தானது, எவ்வளவு ஆழ்ந்தது என்பதை, அவர் அரூபமான கடவுளை சத்தியம் என்ற பெயர் கொடுத்து அழைப்பதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். சத்தியமே கடவுள்; கடவுளே சத்தியம் என்ற பிரமாண வாசகத்தை அவர் அடிக்கடி சொல்கிறார். அவருடைய தினசரி வாழ்க்கையை நாம் கவனித்துப் பார்ப்போமானால், அவர் சத்தியத்தை எவ்வளவு தீவிரமாகப் போற்று கிறார் என்பது நன்கு புலப்படும். சத்தியத் தினின்று அணுவளவு பிறழ்ந் தாலும், அஃது ஆதிமூலமாகிய அந்தப் பரம்பொருளின் தொடர்பினின்று விலகிக்கொண்டது போலத் தான். இதனால் மனிதனுடைய தெய்வத் தன்மை வறட்சியடைந்து விடுகிறது. சத்தியத்தினின்று பிறழ்வது, வெளிச்சத்தில் நடப்பதை விடுத்து இருட்டில் நடப்பது போலாகும். இந்த உண்மையை, காந்தி யடிகள் தினசரி நடத்தும் பிரார்த்தனை, மூன்று விதமாக எடுத்துக் காட்டுகிறது. அந்தப் பிரார்த்தனையின் வாசகம் வருமாறு:- வாபாவிக கர்ம விஞ்ஞானத்திலிருந்து சாதிரீய கர்ம விஞ்ஞானத்தில் என்னைச் சேர்க்க, அஞ்ஞானத்தினின்று ஞானத்தில் என்னைச் சேர்க்க; ம்ருத்யுவினிடமிருந்து அமிருதபாவத்தை யடையும்படி என்னைச் சேர்க்க1. சத்தியம் ஜோதி; அசத்தியம் அந்தகாரம்; சத்தியம் அமரத்துவம்; அசத்தியம் ஆத்மார்த்த மரணம். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு முள்ள அடிப்படையான வேற்றுமை இதுதான். இரண்டாவது அஹிம்ஸை. இதுவும் கடவுளையே மூலாதார மாகக் கொண்டது. இந்த அஹிம்சைக்கு நேரான அர்த்தம் ஹிம்ஸை செய்யாமை என்பது தான். ஆனால் மகாத்மா காந்தி இந்த அஹிம்ஸையில், மேற்படி எதிர் மறைப் பொருளைத் தவிர, இன்னும் விசேஷ முக்கியத்துவம் இருப்பதாகக் கொள்கிறார். நல்லது செய்ய வேண்டுமென்கிற உடன்பாட்டுக் குணமும் இந்த அஹிம்சையில் அடங்கியிருக்கிறது. யுத்தம், ரத்தச் சிந்துதல் முதலிய விஷயங்களில் நேரடியாகக் கலந்து கொள்ளக்கூடாதென்பதை இந்த அஹிம்ஸை குறிக்கிறது. இதுமட்டுமல்ல; நமக்குத் தீங்கு செய்தவர்களை நம் பட்சமாக்கிக் கொள்ளும் பொருட்டு எவ்வளவு துன்பங்களை அநுபவிக்க வேண்டுமானாலும் அவற்றை அநுபவிக்கச் சித்தமாயி ருக்கிற மனோ உறுதியையும் இந்த அஹிம்ஸை குறிக்கிறது. எப்படி சத்தியமே கடவுளோ அப்படிப்போல் அஹிம்ஸையே கடவுள். இது தான் அஹிம்சையின் சாரம். அஹிம்ஸா பரமோ தர்ம என்பது மேலோர் வாக்கு. இதனால், மகாத்மா காந்தி தமது வாழ்நாள் முழுவதையும், முக்கிய மதக் கடமையாகிற இந்த அஹிம்ஸையின் இயல்புகளை ஆராய்ந்தறிவதிலும், அதனைச் சத்தியத்தோடு ஒன்றுபடுத்துவதிலும் செலவழிக்கிறார். அஹிம்ஸை யென்றால், அசத்தியத்தைச் சாத்வீக முறையினால் எதிர்ப்பதுமட்டுமல்ல; அதனைக் கிரியாம்சையில் எதிர்ப்பதுமாகும். ஆனால் அப்படிக் கிரியாம்சையில் எதிர்க்கிறபோது, கோபம், வன்ம புத்தி, பலாத்கார உணர்ச்சி முதலியன ஒன்றும் மனதில் இருக்கக்கூடாது. மூன்றாவது ப்ரஹ்மசரியம். இந்த ஒழுக்க விசேஷத்தையும் மகாத்மா காந்தி அதிகமாக வற்புறுத்துகிறார். ப்ரஹ்மசரியம் என்கிற இந்தப் பெயர் கடவுள் என்னும் அர்த்தமுடைய ப்ரஹ்ம என்கிற சமகிருத வார்த்தையினின்று பிறந்ததென்று அவர் சுட்டிக் காட்டுகிறார். ஹிந்துமதத்தின் புராதன அமிசங்களில் இந்த ப்ரஹ்மசரியம் ஒன்றென்றும், ஆண் பெண் உணர்ச்சியை அடக்கி, அதனையே மேலானதொரு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டால், அதிலிருந்து ஒருவித தேஜ உண்டாகிற தென்றும், அதுவே தெய்விக சக்தியாகிற தென்றும், அதன் மகிமை மகா ஆச்சரியகரமான தென்றும் அவர் கருதுகிறார். சத்தியத்தையும் அஹிம்ஸையையும் உண்மையிலேயே கடைப்பிடிக்கிறவன், ப்ரஹ்ம சாரியாகவும் இருக்க வேண்டும். அதாவது, புலனடக்கத்தைப் பூரணமாக அவன் அப்பியசிக்க வேண்டும். விவாகம் என்பது கூட, மனிதனுடைய பலஹீனத்திற்குக் காட்டப்பட்ட ஒரு சலுகை மாதிரி என்பது தான் மகாத்மா காந்தியின் அபிப்பிராயம். இதை வேறு விதமாகச் சொல்லிக் காட்டுகிறேன். ஆணும் பெண்ணும் தத்தமது பாலுக்குரிய செயலைத் துறந்து, அதனைப் பற்றிய எவ்வித எண்ணமுமில்லாதவர்களாய் இருக்கவேண்டும். அப்படியிருப்பதானது ஆத்மீக வாழ்க்கையின் உத்தம அமிசங்களுள் ஒன்றாகும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வோர் ஆணும் பெண்ணும் மேற்சொன்ன உத்தம வாழ்க்கையை அடையக் கூடும். காந்தியடிகள் இந்தத் துறவுத் தத்துவத்தை வெகுதூரம் கொண்டு போய்விட்டாரென்பது என் அபிப்பிராயம். இதே மாதிரிதான், அவர் வரம்பின்றி, தமது காரியம் கைகூடுகிறவரை உபவாசம் இருப்பதை என்னால்அறிந்து கொள்ள முடியவில்லை. நான் அருவருப்புக் கொள்ளக் கூடிய மாதிரி ஏதோ ஒன்று இதில் இருக்கிறது. இதை அவரிடம் அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன். மகாத்மா காந்தி இயல்பிலேயே ஒரு மத புருஷர். கடவுளின் திருவருளின்றியே நாம் தீமையினின்று விலகிக் கொள்ள முடியும் என்று அவரால் நினைக்கக்கூட முடியாது. இதனாலேயே அவர் பிரார்த்தனையை தமது வேலையின் முக்கியாமிசமாகக் கொண் டிருக்கிறார். ஒரு சத்தியாக்கிரகிக்கு அதாவது உண்மை கடைப் பிடிப்பவனுக்கு - அத்தியாவசியமாகத் தேவையாயிருப்பது, அன்பாக வும் அருளாகவும் இருக்கிற கடவுளிடம் நம்பிக்கை. மௌனமான பிரார்த்தனையின்போது உள்ளுக்குள்ளாயிருக்கும் கடவுளின் அழைப்பு கிடைக்குமானால், அதற்கிணங்கி, அவருடைய வாழ்க்கைப் போக்கு முழுவதும் சில கணங்களில் மாறிப் போயிருப்பதை நான் பார்த்திருக் கிறேன். அதி முக்கியமான சந்தர்ப்பங்களில், அவரால் புறக்கணிக்க முடியாத ஓர் உறுதியுடன் ஒரு குரல் அவருடன் பேசுகிறது. இந்தக் குரல் கடவுளின் ஆணையைப் புலப்படுத்துகிற திருக்குர லென்று அவர் மனத்துக்குத் தீர்மானமாகப்பட்டுவிடு மானால் அவரை இந்த உலகத்திலேயுள்ள எந்தச் சக்தியும் அசைக்க முடியாது. பலபேர் முன்னிலையில் அவர் தினந்தோறும் பிரார்த்தனை நடத்துகிறார். இந்தப் பிரார்த்தனையில் கீதா பாராயணமும் ஒன்று. இப்படிப் பாராயணம் செய்வது, பாரமார்த்திகத்திற்கு வழி தேடிக் கொள்ளுவதாகுமென்று அவர் நம்புகிறார். இந்த நம்பிக்கை, மேற் கொண்ட கீதா பாராயணத்தின் மூலம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. அவருடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகிய அநுபவத்தைக் கொண்டு, அவரை நான் சரியாக மதித்திருப்பேனாயின், கடமையைச் செய்யுமாறு கட்டளையிடுகிறவர் கடவுள் என்று கருதுகிற ஒரு பரிசுத்தவானாக அவர் விளங்குகிறார் என்று கூறுவேன். 2 அவருடைய மனித சுபாவத்தைப் பற்றி இப்பொழுது கவனிப்போம். உருக்கமானதும் அன்பு நிறைந்ததுமான தன்மைகள் பலஅவருடைய சுபாவத்துடன் கலந்திருக்கின்றன. மேலே நான் விவரித்துக் காட்டிய துறவுத் தன்மையோடு, இந்தத் தன்மைகளையும் பொருத்தி வைத்துப் பார்க்க வேண்டும். ரோமெய்ன் ரோலந்த் என்ற பேரறிஞர், மகாத்மா காந்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது அவர் நமது காலத்து பால்முனிவர்1 என்றார். இந்த உபமானம் என் மனதிற்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. இதில் ஒரு முக்கியமான உண்மை இருப்பதாகவும் நான் கருதுகிறேன். பால் முனிவரைப் போலவே, காந்தியடிகளும், மத புருஷர்களில் காணப் பெறும் இரு பிறப்பாளர்களில் ஒருவர். அவர் தமது வாழ்க்கையின் முக்கியமானதொரு தருணத்தில், தம்மிடமுள்ள மானிட சக்தியானது - மனிதத் தன்மையானது - அசைத்துக் கொடுப்பதாகிற அநுபவத்தைப் பெற்றார். இதனையே (கிறிதவர் களாகிய) நாம் மத மாற்றம் என்று சொல்கிறோம். அவர், தமது வாழ்க்கையின் ஆரம்ப தசையில், மிக உற்சாகத்துடன் நியாயவாதித் தொழிலை நடத்தி வந்தார். தொழிலில் வெற்றிபெற வேண்டும்; வாழ்க்கையில் மனிதனாக வெற்றி பெற வேண்டும்; தேசீயத் தலைவராக வெற்றி பெற வேண்டும் என்பன போன்ற ஆசைகளே அவருக்கிருந்தன. தென்னாப்பிரிக்காவில் இரண்டு பெரிய வியாபாரிகளுக் கிடையே ஒரு வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில், ஒரு கட்சியின் நியாயவாதியாக இருந்து வேலை பார்க்கவே, காந்தியடிகள் முதன் முதலாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அப்பொழுது அவருக்கு, அங்கிருந்த நிறத்தடைகளைப்பற்றி அதிகம் தெரியாது; இந்த நிறத்தடை காரணமாக, தாமே தாக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டால், அது, தமது வாழ்க்கையில் என்னவிதமான மாற்றத்தை அளிக்கு மென்பதும் அப்பொழுது அவருக்குத் தெரியாது. ஆனால், அவர் டர்பனிலிருந்து புறப்பட்டு மாரிட்பர்க்கை அடைந்ததும், இந்தப் பயங்கர மான அநுபவம், அதன் முழு வரூபத் துடன் அவருக்கு ஏற்பட்டது. அவர் முதல் வகுப்பு டிக்கெட் வைத்துக் கொண்டு பிராயணஞ் செய்த போதிலும், ஒரு ரெயில்வே உத்தி யோகதர், முதல் வகுப்பு அறையி லிருந்து அவரை வெளியே தள்ளிவிட்டார். வண்டியோ அவரை விட்டு விட்டுச் சென்றது. இரவு நேரம். புதிய இடம். ரெயில்வே டேஷனில் ஒருவரையும் அவருக்குத் தெரியாது. தமக்கேற்பட்ட அவமானத்தைச் சகித்துக் கொண்டு குளிர் நடுக்க, அன்றிரவு முழுவதும் ரெயில்வே டேஷனிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். அடுத்த கப்பலில் இந்தியாவுக்குச் சென்றுவிடுவதா அல்லது தமது நாட்டு ஜனங்களைப்போல் தாமும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு கடைசிவரையில் தங்கியிருப்பதா என்பதைப்பற்றி அவர் மனதுக்குள்ளே பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருந்தது. பொழுது புலர்வதற்கு முன், அவருக்கு ஆன்ம விளக்கம் ஏற் பட்டது. கடவுளின் திருவருளைத் துணையாகக் கொண்டு தம்மிடத் திலுள்ள மனிதத் தன்மையை வெளிக் கொணரத் தீர்மானித்து விட்டார். காரியத்தில் இறங்கினார்.; அதனின்று அவர் திரும்பவில்லை. சென்ற வருஷம் (1938) நவம்பர் மாதம், மேற்கண்ட சம்பவத்தைப் பற்றி காந்தியடிகள், டாக்டர் மாட் (Dr.Mott) என்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்தச் சம்பவமே தமது வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணியதென்றும், அதிலிருந்து தமக்குப் புதிய வாழ்வு ஆரம்பித்ததென்றும் மேற்கண்ட சம்பாஷணையின் போது காந்தியடிகள் விளக்கிக் கூறினார். கரட்டு முரட்டுச் சரீரத்தையுடைய அந்த பால் முனிவ ரிடத்தில் காணப் பெற்ற இன்னும் சில விசேஷ குணங்கள் காந்தி யடிகளிடத் திலும் பொருந்தியிருக்கின்றன. மனிதனுக்கு எந்த விதத்திலும் இணங்கிக்கொடாத தெய்வ நம்பிக்கை காந்தியடி களிடத்தில் காணப்படு கிறது. பொதுவாக பாவங்களுக்கு - சிறப்பாக தேக சம்பந்தமான பாவங் களுக்கு - அவர் அஞ்சுகிறார். தாம் யாரை அதிகமாக நேசிக்கிறாரோ,அவர்கள் தாம் எதிர்பார்க்கிற அளவிலிருந்து கிழே போகக்கூடாதென்ற பரம கருணையினால், அவர்களிடத்தில் மிகவும் கண்டிப்பாயிருக்கிறார், இவ்வளவு கண்டிப்பைக்காட்டிய போதிலும், அவர் இளகிய நெஞ்ச முடையவர். இந்த இளகிய நெஞ்சம் உடையவராயிருப்பதானால் தான், தம்மைப் பற்றித் தவறாக நினைக்கிறவர்கள், தம் விஷயத்தில் மனிதர்க்குரித் தான இரக்கம் காட்டக் கூடாதாவென்று ஏங்குகிறார் காந்தியடிகளிடத்தில் இன்னும் சில விசேஷ குணங்கள் இருப்பதால் அவர் பிரான்சி1 முனிவரையும் ஒத்திருக்கிறார். எப்படி யென்றால், பிரான்சி முனிவரைப்போலவே காந்தியடிகளும், வறுமையைத் தம் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டிருக்கிறார். அவரை சேவா கிராமத்துச் சிறிய ஏழைமனிதன் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர் மேற்படி கிராமத்திலேயே, ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளுமான கிராமவாசிகளின் மத்தியில், அவர்களுடைய கஷ்ட நிஷ்டூரங்களைத் தாமும் சேர்ந்து அநுபவித்துக் கொண்டு வசிக்கிறார். பிரான்சி முனிவருடைய உதாரணம், காந்தியடிகள் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறதென்பதை இரண்டு சந்தர்ப்பங்களில் நான் பார்த்திருக்கிறேன். டர்பனுக்கு அருகாமையிலுள்ள போனிக் ஆசிரமம். மாலை வேளை. இருட்டுகிற சமயம். காந்தியடிகள் அன்று முழுவதும் ஏழைகளுக்கான பல சேவைகள் செய்துவிட்டு, மிகவும் அலுத்துப் போய் திறந்த வெளியில் உட்காந்திருந்தார். அந்தச் சமயத்தில்கூட, அவர் தமது தொடையில் ஒரு நோயாளிக் குழந்தையை விட்டுக் கொண்டு, அதற்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அந்தக் குழந்தையோ, அவரை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தது. மகா பரிதாப கரமான காட்சி அது. ஆசிரமத்திற்கு அப்பால் உள்ள மலையின் மீதிருக்கும் பள்ளிக் கூடத்திலிருந்து வந்திருந்த ஜுலு ஜாதிப் பெண் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டிருந்தது. இருள் மூடிக் கொண்டு வருகிறது. அப்பொழுது காந்தியடிகள் என்னைப் பார்த்து, அழைத்துச் செல்! அருட்சோதியே ! என்ற தொடக்கத்துக் கிறிதுவ தோத்திரப் பாடலைச் சொல்லச் சொன்னார். அப்பொழுது அவருக்கு அதிக வயதாகவில்லை. ஆயினும் அவருடைய மெலிந்த தேகம் அநேக கஷ்டங்களை அநுபவித்து விட்டது. அந்த தேகமோ, ஒரு நிமிஷமும் ஒய்வு கொள்ளாமல் வேலை செய்தது. அப்படி யிருந்தும்,மேற்கண்ட பாடலை, நிசப்தமான அந்த நேரத்தில் நான் சொல்லத் தொடங்கியதும், அவருக்குள்ளிருந்த ஆத்மா பிரகாச மடைந்தது. அந்தச் செய்யுள் பின்வரும் இரண்டு அடிகளோடு முடிவடைகிறது:- காலை நேரமானதும், அந்தத் தெய்விகத் திரு முகங்கள் புன்முறுவல் பூக்கின்றன; அவைகளிடத்தில் நீண்டகாலமாக அன்பு செலுத்தி வந்தேன்; இடையில் சிறிது நேரம் காணாதிருந்தேன். செய்யுள் பாடி முடிந்ததும், நாங்கள் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தோம். அப்பொழுது காந்தியடிகள், மேலே குறிப்பிட்ட கடைசி இரண்டுஅடிகளைத் தாமே தமக்குள் சொல்லிக் கொண்டி ருந்தார். மற்றொரு காட்சி ஒரிஸாவில் நிகழ்ந்தது. அந்த இடத்திற்குச் சமீபத்திலிருந்து கொண்டுதான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அப்பொழுது காந்தியடிகள், மரணத்தின் எல்லையை மிதித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு ஒரு வித காய்ச்சல் ஏற்பட்டது. ரத்தக் கொதிப்பு அதிகமாகிவிட்டது. இது சம்பந்தமாக எனக்கு ஒரு தந்தி கிடைத்ததும், உடனே நான், அவர் பக்கத்திலே இருக்க வேண்டுமென்ற ஆவலினால், இரவு முழுவதும் பிரயாணஞ் செய்து, அவரிடம் போய்ச் சேர்ந்தேன். அப்பொழுது காலை நேரம். முந்திய இரவு முழுவதும் அவருக்கு அமைதியில்லாமலிருந்திருக்கிறது. நான் போன தருணத்தில் அவர், சூரியோதயத்தைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தார். நான் சென்று, அவருடன் பேச ஆரம்பித்தேன். அப்பொழுது தீண்டாச் சாதியாருள் மிகத் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த ஒருவன், மிகுந்த பணி வோடு திடீரென்று அவர் முன் வந்து நின்றான். அவனைப் பார்த்தார் காந்தியடிகள். நோயெல்லாம் பறந்து போய்விட்டன. எங்கள் முன், மனிதத் தன்மை அனைத்தையும் இழந்தவனாய் அந்த மனிதன், கீழே விழுந்து வணங்கு வதைப் பார்த்து அவர் மனம் துக்கத்தினால் கலங்கிப் போய்விட்டது. இன்னும் நூறு வருஷங்களுக்குப் பிறகு கூட மகாத்மா காந்தியின் பெயர் நிலைத்திருக்குமென்று சொன்னால் அதற்கு இரண்டு விஷயங்கள் காரணமாயிருக்கும். ஒன்று அவருடைய கதர் திட்டம்; மற்றொன்று அவருடைய சத்தியாக்கிரக அநுஷ்டானம். (1) இந்த நவீன யந்திர காலத்தில் உலகத்து விவசாய மக்களிடையே கிராமத்தொழில்களைப் பெருவாரியான முறையில் முதன் முதலாக அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தவர் காந்தியடி களே. வருஷத்தில் சில மாத காலம் விவசாயிகளுக்கு நிலங்களில் வேலை இருப்பதில்லை. அப்படிப்பட்ட காலத்தில் அவர்களுக்கு ஒரு ஜீவனோபாயமாக இந்த குடிசைத் தொழில்களை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் விவசாயிகள் வருஷத்தில் ஐந்தாறு மாத காலம் வேலையில்லாமல் கிடக்கிறார்கள். முற்காலத்தில் அதாவது யந்திரங்கள் ஏற்படுவதற்கு முன்னர், நூல் நூற்றல், நெசவு நெய்தல், முதலிய கிராமத் தொழில்களில் ஒரு விவசாயினுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் முதியோர் முதல் சிறியோர் வரை எல்லோரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். தினசரி உபயோகத் திற்காகக் கெட்டியான துணிகள் நெய்யப்பட்டு எல்லோருக்கும் கிடைத்து வந்தது. யந்திரத்தில் நெய்யப்பட்ட துணி வந்தவுடன் உலகத்திலுள்ள பாதி ஜனங்களுக்கு வருஷத்தில் சில மாத காலம் வேலையில்லாத நிலைமை ஏற்பட்டதென்று சொன்னால் அது தவறாகாது. ஏனென் றால் யந்திரத்தில் தயாரிக்கப்பட்ட துணிகள் மலிவான விலைக்குக் கிடைக் கின்றன. இதனால் கிராமத் கைத்தொழில்கள் நசித்துப் போய்விட்டன. இந்தக் காலத்திலும் எல்லாவிதமான குடிசைத் தொழில்களை யும் புனருத்தாரணம் செய்ய முடியும் என்ற குன்றாத நம்பிக்கை கொண்டவர் களுள் காந்தியடிகள்தான் முதன்மையானவர். குடிசைத் தொழில்களைப் புனருத்தாரணம் செய்வதன்மூலம் கிராமவாசிகளை, அவர்களுடைய ஆன்மப் பசியினின்றும், தேகப் பசியினின்றும் காப்பாற்றிவிட முடியுமென்பது அவர் நம்பிக்கை. இந்த விஷயத்தில் லட்சக் கணக்கான மக்களுக்கு அவர் ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார். அவரது அதி விவேக சக்தியானது இந்தியாவில் மட்டும் பரவி இருக்கவில்லை. இப்பொழுது சீனாவிலும், யுத்த நெருக்கடியைக் காரணமாக வைத்துக் கொண்டு குடியானவர்கள் முன்போல பருத்தி உற்பத்தி செய்கிறார்கள். நூல் நூற்கிறார்கள்; நெசவு நெய்கிறார்கள்; கெட்டியான துணிகள் உபயோகத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. கானடா முதலிய பிரதேசங் களிலும் குளிர் காலத்தில் விவசாயிகள் வேலையற்றுக் கிடக்கிற போது அவர் களிடையே இந்த மாதிரியான குடிசைத் தொழில்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. (2) காந்தியடிகள் அஹிம்சையைத் தாமே அநுஷ்டித்துக் காட்டுவதன் மூலம் யுத்த பலாத்காரத்தைச் சத்தியாக்கிரகத்தினால் - அதாவது தாமே துன்பத்தை வலிய ஏற்று அநுபவித்தலால் - வெற்றி கொள்ள முடியும் என்பதை இந்தக் காலத்தில் உலகத்திற்கு நிதர்சித்துக் காட்டியிருக்கிறார். இது விஷயத்தில் அவர் தென்னாப்பிரிக்காவில் மகத்தான வெற்றியடைந்திருக்கிறார். ட்ரேகென்பர்க் மலைப் பிரதேசத்தின் மூலமாக ட்ரான்வாலுக்குள் அவர் ஏழை மக்கள் அடங்கிய தமது சாத்வீக எதிர்ப்புச் சேனையை அழைத்துச் சென்ற பிறகுதான் தளபதி மட்1 அவர் கேட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் இணங்கினார். பலாத்காரக் கருவிகளில்லாமல் இந்த மாதிரி தர்ம யுத்தம் நடத்தினால் அதனை யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்பதை தளபதி மட்ஸே ஒத்துக் கொண்டார். இந்தப் பெரிய விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையின் கடைசி பாகத்தில் விளக்கிச் சொல்வது அசாத்தியம். ஆனால் இன்னும் பலர் இந்த நூலில் கட்டுரைகள் எழுதக் கூடும். ஆகவே மேலே நான் எடுத்துக் காட்டிய பிரான்சி முனிவருடைய உதாரணத்தை மீண்டும் எடுத்துக் காட்டி இந்தக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். அந்த பிரான்சி முனிவர் கூட கிராமவாசிகள் நெய்த முரட்டு ஆடையையே தினசரி உபயோகித்துவந்தார். அவர் தமது காலத்திலேயே இந்தக் கை நெசவுக்குக் கௌரவத்தையும் புகழையையும் தேடி வைத்துவிட்டுப் போனார். ஆயுதமேந்திய சாரசேனியர்களுடைய சேனையின் நடுவில் பிரான்சி முனிவர் எவ்வித ஆயுதமும் இல்லாமல் சென்று தமது அன்பு உபதேசத்தைச் செய்தார். இப்பொழுது மகாத்மாகாந்தி எந்த எண்ணங் களைப் போற்றி வளர்த்து வருகிறாரோ அதே எண்ணங்கள்தான் பிரான்சி முனிவருடைய ஹ்ருதயத்திலும் அப்பொழுது குடிகொண்டிருந்தன. இதனாலேயே இருவரையும் நான் ஒற்றுமைப்படுத்திக் கூறுகிறேன். ஆனால் இப்பொழுது மகாத்மா காந்தி இன்னும் முன்னே சென்று விட்டார். அவருடைய மகத்தான இரண்டு சத்திய சோதனை களாகிய கதர், சத்தியாக்கிரகம் என்பவை, மானிட ஜாதியின் சமுதாய வாழ்க்கையில் இடம் பெற்றுவிட்டன. ஏற்கனவே இவை, மானிட சரித்திரத்தில் இது வரையில் காணப்படாத மாதிரி பெருவாரியாக அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக் கின்றன. இந்த வகையாகப் பார்ப்போமானால் இப்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்கள் பலருள்ளும் காந்தியடிகள் ஒருவரே மானிட சமுதாயத் திற்குச் சமாதானத்தையும், நல் லெண்ணத்தையும் வழங்கி வரும் தூதராயிருக்கிறார். * * * காந்தியடிகளின் வாழ்க்கை ஜி. எ. அருண்டேல் (பிரசிடெண்ட், தியசாபிகல் சொஸைடி, அடையாறு, சென்னை.) காந்தியடிகளின் எழுபதாவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பெறும் ஒரு நூலில் கலந்து கொள்ளு மாறு கேட்கப்பட்டிருப்பதை நான் ஒரு பாக்கியமாகக் கொள்கிறேன். இந்தியாவுக்கு அவர் செய்துள்ள மகத்தான சேவைகளை, எந்த ஒரு நூலைக் கொண்டும் ஞாபகப்படுத்தி வைக்க முடியாதென்பது வாதவம். இன்றைய இந்திய மகாஜனங்கள்கூட, அவருடைய சேவை களை ஞாபகப்படுத்தி வைக்க முடியாது. காந்தியடிகள் வாழ்கிற இந்த நிகழ்காலத்தின் விருப்பு வெறுப்புகளில்லாமல், எதிர்கால சந்ததியார் தான் அவருடைய சேவைகளைப் பற்றிச் சரியான தீர்ப்புக் கூறமுடியும். ஆனால் இப்பொழுது வெளியிடப்படுகிற நூலானாது, அவருடைய சமகாலத்தவரின் வேலையானாலும், அவருடைய குன்றாத நம்பிக்கையைப் பற்றின பல அமிசங்களையும் உபயோககரமான விதத்தில் மதிப்பிட்டுச் சொல்லக்கூடும். நான் அவருடைய வாழ்க்கையைத் தொடர்ந்து கவனித்த அளவில், மூன்று விசேஷ குணங்கள் அவரிடம் பொருந்தியிருப்பதைக் காண்கிறேன். முதலாவது, ஆனால் எல்லாவற்றிலும் முதன்மையானது, அவருடைய பரிசுத்த எளிய வாழ்க்கை; இரண்டாவது தம்முடைய மூலாதாரக் கொள்கைகளைப் பற்றி நேர்முகமாகவும் நுண்மையாகவும் போற்றி வருதல். மூன்றாவது கொஞ்சங்கூட கர்வமில்லாத அஞ்சாமை. அவர் எங்கு இருந்தபோதிலும், எளிய ஒழுங்கான வாழ்க்கையை நடத்துகிறார். இந்த மாதிரி, எல்லோரும் - எந்த திதியில் வைக்கப் பட்டிருந்த போதிலும் - வாழக்கூடும். அவர்மீது எப்பொழுதும் புகழ் என்னும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. பிரகாசமயமான அந்த வெளிச்சத்தின் நடுவில் அவர் வாழ்கிறார். அவரைப் போல் நாமும் வாழ முயல்வது நல்லது. அவருடைய ஆத்மா உலகத்திற்குத் திறந்து காட்டப்படுகிறது. அவருடைய பழக்கவழக்கங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியிருக்கின்றன. மௌனத்தினுடைய சக்தியை எப்படி உபயோகிக்க வேண்டுமென்பதை அவர் தெரிந்து கொண்டிருக்கிறார். நம்மிலே ஒருசிலருக்குத்தான், அந்த மௌனத்தை எப்படி உபயோகிப்பதென்பது தெரியும். நாம் பின்பற்றக்கூடிய ஒரு சிறந்த உதாரணமாக அவருடைய தினசரி வாழ்க்கையானது இருக்கிறது. ஏனென்றால், அவருடைய வாழ்க்கையானது, தற்கால உலகத்தின் பலவித சிக்கல்களையும் பின் பற்றாமல், கடவுளால் அளிக்கப்பட்ட எளிமையான இயற்கையான வாழ்க்கையாக இருக்கிறது. இந்த இயற்கை வாழ்வின் மூலந்தான் மானிட வர்க்கத்திற்கும் பிராணி வர்க்கத்திற்கும் நாம் சந்தோஷத்தை யும் சுகத்தையும் அளிக்க முடியும். அவருடைய தினசரி அலுவல்களை, ஓர் எழுத்துக் கூட விடாமல் அப்படியே பின்பற்ற வேண்டுமென்று நான் சொல்ல வில்லை; ஆனால் அவற்றின் நோக்கத்தை நாம் கிரகித்துக் கொண்டு பின்பற்ற வேண்டு மென்றே சொல்கிறேன். தவிர, அவர், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குச் செல்ல எப்படியோ ஒரு வழியைக் காண்பிக்கிறார். வெளிச்சம் எங்கேயிருக் கிறதென்பதை அவர் தெரிந்து கொண்டு, பிறகு அதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். அவர் காட்டுகிற அதே வெளிச்சத்தை நாடி நாமெல்லோராலும் செல்ல முடியாவிட்டாலும், அவருடைய வெளிச்சத்தை நாம் நிச்சயமாகப் பார்க்கிறோம். மற்றவர்களுடைய வெளிச்சம் நம்மினின்று எவ்வளவு வேறுபட்டதாயிருந்தாலும் நம்முடைய வெளிச்சத்தை நாம் காண அது துணையாயிருக்கிறது. கடைசியாகப்பார்க்கப் போனால், வெளிச்சம் என்னவோ ஒன்றுதான். நாம்தான் அதற்குப் பல நிற பேதங்களை ஏற்படுத்துகிறோம். அவருடைய ஒளிக்கிரணங்களில் சிலவற்றை நான் உபயோகிக்க முடியாதவனாயிருக்கிறேன். என் கொள்கைகளை ஊர்ஜிதம் செய்து கொள்ள நான் என் இடத்தையே நோக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர் தாபிக்கிற கொள்கைகளைக் கொண்டு என் கொள்கை களைச் சரியாகக் காண முடிகிறது. இதனாலேயே, அவர் தம்முடைய கொள்கை களைப் பற்றிச் சரியாக உணர்ந்து அவற்றைப் போற்றி வருவதற்காக, அவருக்கு வந்தனை செலுத்துகின்றேன். ஏனென்றால், யாரொருவர் தங்கள் கொள்கைகளைக் காந்தியடிகளைப் போல் விடாமல் தொடர்ந்து பின்பற்றுகிறார்களோ, அவர்கள், மற்றவர்களையும் அவரவர்களுடைய கொள்கைகளை, அவை எவ்வளவு வித்தியாசப்பட்டனவாக இருந்த போதிலும் விடாமல் பின்பற்றுமாறு ஊக்குகிறார்கள், அபிப்பிராயம், அஃது எவ்வளவு அறிவு நிரம்பியதாயிருந்தாலும், முக்கியமல்ல; பளிங்கு போன்ற தூய மனப்பான்மைதான் முக்கியம். கடைசியாக, அவருடைய அஞ்சாமைக் குணம். யதேச்சையாகவே அவருக்கு இந்த அஞ்சாமை இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். அதற்காகவே அதனை அவருடைய அஞ்சாமையை - நான் பாராட்டு கிறேன். எவ்வித பிரமாதமான தயாரிப்பும் இல்லை; கச்சையை வரிந்து கட்டிக் கொள்வதுமில்லை; -ஆம்; அவர் வரிந்து கட்டிக் கொள்ள வேண்டியது ஒன்றுமில்லையல்லவா!- உஷார் படுத்துகிற சடங்குகள் இல்லை; எந்த விதமான தமாஷாக்களும் இல்லை. அஞ்சாமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வேண்டியது தான்; உடனே அவரிடம் அந்த அஞ்சாமை விளக்கு பிரகாசிக்கத் தொடங்கி விடுகிறது அவரிடம் நான் விசேஷமாகப் பாராட்டுவதென்ன வென்றால் அவர் ஒரு பெரிய கூச்சல் போட்டு எல்லோரும் என்னைப் பின் பற்றி வாருங்கள் என்று யாரையும் அழைப்பதில்லை. அஞ்சாமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காரியம் எந்த உருவத்தோடு தோன்றும் என்பதை அவர் அறிவித்து விடுகிறார். அவர், எப்போழுதுமே, எதைச் செய்ய வேண்டுமோ அதைப்பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தவிர அவர் வேறொன்றையும் செய்ய முடியாது. எப்படி மார்ட்டின் லூதர்1 நான் எதைச் செய்தேனோ அதைத்தவிர வேறொன்றையும் செய்திருக்க முடியாது என்று கூறினாரோ, அதைப்போல் காந்தியடிகளும் கூறுகிறார். மேற்கண்ட விதமாக தாம் செய்யப் போகிற காரியத்தைப் பற்றி அறிவித்து விட்டவுடனே, அவர்-காந்தியடிகள் முன்னோக்கிச் செல்கிறார். யாராவது தம்மைப் பின் பற்றி வருவார்களானால் நிரம்ப சரி; ஒருவருமே பின் தொடர்ந்து வரவில்லையானால் அதுவும் சரி. தன்னந்தனிமையாக போகத் தெரிகிறவர்களுக்குத் தான் - அதாவது தம்மைப் பின்பற்றி வருவார் யாருமில்லையென்பதைத் தெரிந்து கொண்டிருந்தும், எப்படியாவது தாம் போய்த் தீர வேண்டு மென்ற லட்சிய முடையவர் களுக்குத் தான்-ஒரு லட்சியத்தை அடையும் பொருட்டுப் பிரமாதமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு புறப்படுகிறவர்களைக் காட்டிலும் அதிகமான வெற்றிகள் கிட்டு கின்றன. காந்தியடிகளின் சுபாவமே அஞ்சாமையோடிருப்பதுதான். இதனால் அவருடைய அஞ்சாமை சுபாவிகமானது. இதனாலேயே இது பெருந் தன்மையுடையதாயிருக்கிறது; தம் வழி மறிப்போர் அனைவரிடத்திலும் மரியாதையாக நடந்து கொள்கிறது. இந்த அஞ்சாமை, எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்ளும்; சத்துருக்களாக்கிக் கொள்ளாது. சமாதானத்தையே உண்டு பண்ணும்; சண்டையை உண்டு பண்ணாது. காந்தியடிகளின் அரசியல் தத்துவங்களைப் பற்றியும் அவருடைய அரசியல் வேலைகளைப் பற்றியும், கணித்துக் கூற இங்கு நான் பிரயத்தனப்படவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவை களை நான் பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் அவை லட்சியங் களல்ல; சாதனங்கள்தான். அவற்றை என் மனச் சாட்சிக் கிசைந்தவாறு எதிர்ப்பது - அப்படி எதிர்ப்பது சரியாகவும் இருக்கலாம், தவறாக வும் இருக்கலாம். அதை யார் சொல்ல முடியும்? - என்னுடைய கடமை யென்று நான் கொள்ளலாம். ஒருவரை நான் எப்படிப் பாராட்டுகிறே னென்றால், அவருடைய மனத் தூய்மை, பக்தி, தைரியம், தன்னல மின்மை, புகழ்ச்சி, இகழ்ச்சி, பொதுஜன அபிப்பிராயம் ஆகியவற்றை லட்சியப்படுத்தாமை, தீங்கு செய்யாமை, சகோதர மனப்பான்மை ஆகிய இவைகளைக் கொண்டுதான். இவைகளை யெல்லாம் யாரொருவர் உலகத்திற்கு அளிக்கிறாரோ, அவர் சட்டம், திட்டம், தத்துவம், கோட்பாடு முதலியவற்றை அளிக்கிறவர்களை விடச் சிறந்தவரே யாவார். இப்பொழுது, உலகத்திற்கு, உலக சகோதரத்துவ உணர்ச்சி நிரம்பிய ஆண்களும் பெண்களும் தேவை. இயற்கை வாழ்வு நடாத்து வதிலே பெருந்தன்மை காண்கிறவர்கள் தேவை. உயிரைக் காட்டிலும் லட்சியமே பிரதானம் என்ற உறுதிப்பாடுடையவர்கள் தேவை. இப்படிப்பட்டவர்கள் சரியாகவும் காரியங்களைச் செய்ய லாம்; தவறாகவும் காரியங்களைச் செய்யலாம். ஆனால் அவர் களுடைய இருதய நாடியானது, கருணை யென்கிற அந்த மகத்தான இசை முழங்குகிறதே அதற்கியைந்தாற்போல் அடித்துக் கொண் டிருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்தான் மகாத்மா காந்தி. இன்னமும் சொல்ல வேண்டுமோ? * * * பாரத தாஸன் ரைட் ரெவரெண்ட் வி.எ. m#uŒah v«.V., டி.சி.எல் (டோர்னகல் பிஷப், இந்தியா) காந்தியடிகளின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மற்றவர்களோடு நானும் சேர்ந்து அவரைப் பாராட்டுகிறேன். இந்திய மகா ஜனங்களுடைய வாழ்க்கையைப் பண்படுத்திக் கொண்டு செல்கிற விஷயத்தில் காந்தியடிகளைப்போல் வேறு யாருமே இந்தத் தலைமுறையில் விசேஷ பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஐரோப்பாவில் இந்தியாவைப் பற்றிப் பிரதாபிக்கிறபோது, பொதுவாக எல்லோரும் காந்தியின் தேசம் என்று தான் சொல்கிறார்கள். ரோமாபுரியிலுள்ள போப் ஆண்டவர் அரண்மனைக்கு நான் சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒர் இத்தாலி ஊழியனுக்கும் எனக்கும் நடைபெற்ற சிறிய சம்பாஷணையை நான் எப்பொழுதும் மறக்க முடியாது. முதலில், எனது பெயரையும் விலாசத்தையும் குறித்து, அவனிடம் கொடுத்தேன். அவன் என்னைப் பார்த்துக் கேட்டான் இந்தியாவா? என்று. ஆம் என்றேன் நான். காந்தி? என்றான் அவன், உடனே. இப்படி அவன் புன் சிரிப்போடு கேட்டதும் ஆம் என்று நான் சொல்ல வேண்டியிருந்தது. அதாவது, காந்தியினுடைய தேசத்திலிருந்து தாங்கள் வந்திருக் கிறீர்களா என்ற அர்த்தத்தில் அவன் கேட்கிறான் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஒன்பது வருஷங்களுக்கு முன்னர் நான் இத்தாலிக்குச் சென்றிருந்த போது, இந்த மாதிரியான அநுபவங்களே எனக்கு அடிக்கடி ஏற்பட்டன. இரண்டு வருஷங்களுக்கு முன்னால், அமெரிக்காவிலுள்ள தெற்கு மாகாணமொன்றில் நான் சுற்றுப் பிரயாணஞ் செய்து கொண்டி ருக்கையில் போகிற வழியிலிருந்த ஒரு நீக்ரோ ஆரம்பப் பாட சாலைக்குள் திடீரென்று நுழைந்தேன், அங்கிருந்த தலைமை ஆசிரியர், குழந்தைகளுக்கு இந்தியாவைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுமாறு எனக்குச் சொன்னார். நானும் அதற்கிணங்கினேன். ஆனால் குழந்தைகளுக்குப் புரிகிற மாதிரி என்ன சொல்வது என்பது எனக்குத் தெரியவில்லை. என்றாலும், நான் எந்த தேசத்தலிருந்து வந்தேன் என்பன போன்ற விஷயங்களைப் பற்றிச் சுருக்கமாக ஐந்து நிமிஷத்திற்குள் சொல்லி முடித்தேன். உடனே தலைமை ஆசிரியர், குழந்தைகளைப் பார்த்து இந்தியாவைப் பற்றி ஏதேனும் கேள்விகள் கேட்பதாயிருந்தால் இவரைக் கேட்கலாம் என்று சொன்னார். மேல் வகுப்பிலிருந்த ஒரு பெண் குழந்தை உடனே எழுந்து நின்று, ஸ்ரீ காந்தியைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டது. இந்தியாவுக்குத் தொலை தூரத்திலுள்ள எங்கேயோ ஒரு பிரதேசத்தில் படிக்கும் ஒரு நீக்ரோ குழந்தையிடமிருந்து இந்த மாதிரி கேள்வி பிறப்பதைக் கேட்டு, நான் எவ்வளவு ஆச்சரியமடைந் திருப்பேன் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். காந்தியடிகளை, இந்தியாவின் மகா புருஷர், அதன் தணிக்கப் படாத சுதந்திர ஆவலின் போஷகர், அதன் திறமை, வாழ்க்கையின் லட்சியம் முதலியவற்றைப் பிரதிபலித்துக் காட்டும் மூர்த்தி என்று அகில உலகமும் போற்றுகிறது. அப்படிப் போற்றுவதுதான் சரி. வாழ்க்கையின் லட்சியம் என்று மேலே சொன்னோமே, அஃது என்னவென்பது, இந்தியாவிலுள்ள நமக்கு நன்றாகத் தெரியும். அமானுஷ்ய சக்தியொன்று இருக்கிற தென்பதை உணர்தல், மனிதன், தனது அன்றாட வாழ்க்கையின் எல்லா அமிசங்களிலும் கடவுளின் ஆதீனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவனாயிருக்கிறான் என்பதை அங்கீகரித்தல், லௌகிக வாழ்க்கையைக் காட்டிலும் பாரமார்த்திக வாழ்க்கைக்குத் தான் முக்கியத்துவம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல், ஆத்மார்த்தமான சித்திகளையடையும் உத்தேசதத்துடன் தேகசம்பந்தமான சுகபோகாதிகளைப் பகிரங்கமாகத் துறத்தல் ஆகிய இவையெல்லாந்தான், இந்தியாவின் வாழ்க்கை லட்சியங்களாயிருக் கின்றன. இந்த லட்சியங்களுக்குள்ள மகத்துவத்தினால்தான், காந்தியடி களுக்குப் பெருமை ஏற்பட்டிருக்கிறதென்பதை, இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ள அனைவரும் அங்கீகரிப்பர். இந்த லட்சியங்களை மீண்டும் இந்திய மக்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்த காந்தியடிகளுக்கு இந்தியா முழுவதும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. இந்த லட்சியங்கள், இப்பொழுது நிராகரிக்கப்படும்படியான ஆபத்திலிருக்கின்றன. இவைகளைப்பற்றி ஆட்சேபங்கள் கிளப்பப்படுகின்றன. பலர் இவற்றைப் பரிகசிக்கிறார்கள். இருந்தாலும் காந்தியடிகள் இவற்றை யெல்லாம் சட்டை செய்யாமல், மேற்படி லட்சியங்களை உலகத் தாரின் கவனத்திற்குக் கொண்டு வந்து காட்டுகிறார். உலகாயத எண்ணங்கள் வளர்ந்து வருகிற இக்காலத்தில், காந்தியடிகள், ஆத்மார்த்த வாழ்க்கையை சிலாகிக்கத்தக்க தொன்றாகவும் அனுஷ் டிக்கத்தக்க தொன்றாகவும் மேன்மையடையச் செய்திருக் கிறார். இந்தியாவுக்கு மற்றொரு மகத்தான சேவையையும் காந்தியடி கள் புரிந்திருக்கிறார். இதற்காக, இந்திய தேசாபிமானிகள் அனை வரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதுதான் தீண்டாதாருக்கு அவர் செய்துள்ள சேவை. முன்னர் அநேக சமயங்களில் கூட மதச்சீர்திருத்தவாதிகள் பலர் ஜாதி முறையைக் கண்டித் திருக் கிறார்கள். ஆனால் யாருமே, காந்தியடி களைப்போல், தீண்டாமை விஷயத்தில் இந்திய மக்கள் கொண்டி ருந்த மனப்போக்கை வெற்றி கரமாக மாற்றவில்லை. இந்தியாவின் பகிரங்கமான புண்-அதாவது தீண்டாமைப்புண் - இன்னும் ஆற்றப்படாமல் பகிரங்கப் புண்ணாகவே இருந்து வருகிறதென்பதை நாம் வெட்கத்துடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சநாதனமான ஹிந்துதர்மத்தோடு இந்தப்புண் சம்பந்தப் பட்டிருப்பதால்தான், இஃது ஆறாமலிருக்கிறது. ஆனால் இப்பொழுது ஹிந்து மதத்தின் மனச்சாட்சி விழித்துக் கொண்டுவிட்டது. ஜாதிக் கோட்டைகள் ஆட்டங்கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் கொஞ்சகாலத்தில் இவை மண்ணோடு மண்ணாகிவிடும். இந்தத் தீண்டாமைக் களங்கத்தைப் போக்கும் விஷயத்தில் காந்தியடிகள் அநுஷ்டிக்கிற முறைகளைப் பற்றி கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். இந்த முறைகளினால் ஏற்பட்ட பலாபலன்களைப் பற்றியும் நன்மை யடைந்தவர்களுள்பட பலரும் வித்தியாசமான அபிப்பிராயங்கள் கொள்ளலாம். ஆனால் தீண்டாமை விஷயத்தில் இந்திய மக்களின் மனப்போக்கு சென்ற இருபது வருஷங்களாக - அல்லது பத்து வருஷங்களாக மாறியிருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு முக்கிய காரணர் மகாத்மா காந்திதான். இன்று அவரை நாம் வாழ்த்துகிறோம். நாம் பரிபூர்ணமாக நேசிக் கிற இந்தியாவுக்கு அவர் இன்னும் பல்லாண்டுகள் தலைமை வகித்துச் சேவை செய்து கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். * * * காந்தியடிகள் - ஒரு சமரஸ தூதர் எர்னஸ்ட் பார்க்கர் எம்.ஏ., டி.லிட். (அரசியல் சாதிர ஆசிரியர், கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலை) காந்தியடிகளைப் பற்றி எனக்கு இரண்டு நினைவுகள் இருக்கின்றன. முதலாவது 1931ம் வருஷம் நவம்பர் மாதம் ஒருநாள் ராத்திரி, என் வீட்டிற்கு வந்து அங்கேயே இரவு முழுவதும் தங்கி யிருந்தார். அப்பொழுது அவர், வட்ட மேஜை மகாநாட்டை யொட்டி இங்கிலாந்துக்கு வந்திருந்த சமயம். இரண்டாவது, 1937ம் வருஷம் டிசம்பர் மாதம் காலை நேரம் - அப்பொழுது , காந்தியடிகள் நோயினின்று மீண்டெழுந்து, தேகாரோக்கியத்திற்காக பம்பாய்க்குச் சிறிது வடக்கில் ஜுஹு என்ற பிரதேசத்தில், தென்னை மரங்கள் நிறைந்த ஒரு பங்களாவில் தங்கியிருந்த சமயம். அவரை பார்ப்பதற்காக ஓர் இந்திய நண்பருடன் நான் அங்குச் சென்றிருந்தேன். காந்தியடிகளின் கேம்பிரிட்ஜ் விஜயத்தைப் பற்றி எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவருடைய அறையில் பிரார்த்தனை நடந்தது. அப்பொழுது, காந்தியடிகளுடனும் ஸ்ரீமதி லேட்1 முதலியவர்களுடனும் நானும் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். அன்று மாலை அவர், தமது ஆகாரத்தை முடித்துக் கொண்டு எங்கள் அறைக்கு வந்து உட்கார்ந்து தமது கைராட்டினத்தைச் சுற்றிக் கொண்டே எங்களுடன் பேச ஆரம்பித்தார். சாதாரண விஷயங்களைப் பற்றிக் கூட நாங்கள் பேசினோம். ஆங்கிலேயர்களுடைய வாழ்க்கையில் உதை பந்தாட்டம் என்ன தானத்தைப் பெற்றிருக்கிற தென்பதைப் பற்றியும், ரக்பி என்ற ஆட்டத்திற்கும் அசோசியேஷன் என்ற ஆட்டத்திற்கும் உள்ள சமுதாய சம்பந்தமான விசித்திர வேற்றுமை களைப் பற்றியும் நான் கூறிய வற்றை அவர் உற்சாகத்தோடு கேட்டு வந்த மாதிரி எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. ஆனால் சில முக்கிய விஷயங்களைப் பற்றியும் நாங்கள் சம்பாஷணை நடத்தினோம். பிளேட்டோ2 வைப்பற்றிப் பேச்சு வந்தது. பிளேட்டோவினுடைய கொள்கையை அநுசரித்து காந்தியடிகளும், அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறவர்கள், சொற்ப சம்பளம் பெற்றுக் கொண்டு ஜீவனம் நடத்த வேண்டுமென்றும், பெரிய சன்மானங்கள் ஒன்றையும் எதிர்பாராமல் சேவை செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்ற அளவோடு திருப்தி அடைய வேண்டுமென்றும் அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்று நான் கருதி இது விஷயமாக அவரிடத்தில் பேசினேன். அரசாங்கம் என்றிருந்தால் அதற்கு ஒரு மதிப்பு இருக்க வேண்டுமென்றும், அந்த மதிப்பைக் காப்பாற்றி கொள்ள ஆடம்பரம், தோரணை முதலியனவும் அதற்கு இருக்கவேண்டு மென்றும் நான் வாதஞ் செய்தேன். ஆனால், இது விஷயத்தில் நாங்கள் ஒற்றுமையான அபிப்பிராயத்திற்கு வந்ததாக எனக்கு ஞாபகமில்லை. என்றாலும், ஒரு தாழ்ந்த நிலையிலிருந்து அவருடன் நான் வாதஞ் செய்து கொண் டிருந்தேன் என்பது மட்டும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்தியா வின் பாதுகாப்பு விஷய மாகவும் நாங்கள் பேசினோம்; தேசத்தில் சமாதானம் நிலவ வேண்டுவது அவசியம்.; கொள்ளைக்காரர்களையும், படையெடுத்து வருவோரையும் எதிர்த்து நிற்க வேண்டுவதும் அவசியம்; இவைகளுக்காக ஒரு பாதுகாப்புப் படை தேவையல்லவா? இந்தப் பாதுகாப்புப் படைக்குத் தேவையான செலவுத் தொகை நிரந்தரமாகக் கிடைத்துக் கொண்டிருக்கு மாறு ஏற்பாடு செய்துவிட வேண்டும். ஓர் இந்தியச் சட்டசபையின் திரமில்லாத ஓட்டுகளை நம்பிக் கொண்டு இந்தப் பாதுகாப்புப் படை இருக்கக் கூடாது. இந்த வகையில் நான் வாதம் செய்துகொண்டு போனேன். இதற்குக் காந்தியடிகள் ஒர் உதாரணத்தின்மூலம் பதில் கூறினார். காட்டு மிருகங்களின் அட்டூழியத்தினால் ஒரு கிராமம் கஷ்டப் படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கருணையுள்ள ஒர் அரசாங்க மானது, ஜனங்களின் உயிர், பொருள் முதலியவற்றிற்குச் சேதம் ஏற்படக்கூடாதென்ற நோக்கத்துடன் கிராமத்தைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிவிடுவதாகச் சொல்லுகிறது. ஆனால், இந்தச் சுவற்றைக் கட்ட பணம் வேண்டுமல்லவா? இதற்காக ஜனங்கள் மீது வரி விதிக்கப்படு கிறது. இந்த வரியோ அளவுக்கு மீறியிருப்பதாகவும், இதுகாரணமாக வாழ்க்கையானது சாரமில்லை என்னும்படியான அவ்வளவு கேவல திதிக்கு வந்து விட்டதாகவும் ஜனங்கள் உணர்கிறார்கள். அப்பொழுது ஐயா! இந்த வரிச் சுமையினின்று எங்களை விலக்கி விடுங்கள்; காட்டு மிருகங்களினால் ஏற்படும் ஆபத்தை நாங்கள் சகித்துக் கொள்ளு கிறோம்; ஏனென்றால் அஃது எங்களுக்கு பஷ்டமாகத் தெரிந்திருக் கிறது. ஆனால், எங்களுடைய சகிப்புத் தன்மையை மீறிய தரித்திர வாழ்க்கை யிருக்கிறதே அதை இனிச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லமாட்டார்களா? இந்த இரண்டு விஷயங்களும், காந்தியடிகள் உபதேசித்துக் கொண்டிருக்கிற உபதேசங்களின் உயரிய நோக்கத்தை எனக்கு நன்கு அறிவுறுத்தின. ஒன்று, எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தி அதன் மூலமாகத் தொண்டு செய்தல்; மற்றொன்று அஹிம்ஸை. இந்தச் சம்பாஷணையின் போது, ஒரு தீர்க்க தரிசியின் முன்னர் இருந்து பேசுவதாகவே நான் உணர்ந்தேன். ஆனால் வட நாட்டு இங்கிலீஷ் காரனுடைய சுபாவ உணர்ச்சிகளை (எல்லா இங்கிலீஷ்காரருடைய சுபாவ உணர்ச்சிகளும் இப்படித்தானிருக்கும்) நான் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கவில்லை. நல்ல வேலைக்கு நல்ல கூலி கொடுக்க வேண்டும். கூலி அதிகமாவதன் மூலம் வேலையும் அதிகமாக நடக்கும். தேசத்தில் சமாதானமும் ஒழுங்கும் நிலவ வேண்டுமானால், யுத்தத்தையும் ஒழுங்கீனத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும். தவிர, மேற்படி ஒழுங்கையும் சமாதானத்தையும் திரமாகப் பாதுகாக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதி இங்லீஷ் காரனும் சுபாவத்திலேயே இந்த மாதிரி அபிப்பிராய முடையவனாக இருக்கிறான். என்னுடைய சுபாவ உணர்ச்சிகளை நான் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை யானாலும் அவற்றைக் காட்டிலும் மேலான உணர்ச்சி களின் முன்னர் நான் இருப்பதாகவே அறிந்தேன். ஆனால், இந்த மேலான உணர்ச்சிகளை மனிதர்கள் மட்டும் அங்கீகரித்துக் கொண்டால்! (ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் என் கொள்கைகளை என்னால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.) காந்தியடிகள் சென்றபிறகு, அவரிடத்தில் யாராருடைய, என்னென்ன சக்தி சேர்ந்திருக்கின்றன வென்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன். வறுமையும், எளிமையும் நிறைந்த வாழ்க்கையை மேற்கொண்டு எல்லா ஜீவராசிகளிடத்திலும் சம திருஷ்டியுடன் அன்பு செலுத்தி வந்த பிரான்சி முனிவராகக் காந்தியடிகள் எனக்குத் தென்பட்டார். அதே சமயத்தில், சிறந்த ஞானியும், உயர்ந்த விஷயங்களைப் பற்றித் திறமையாக வாதிக்கக் கூடிய ஆற்றல் நிறைந்தவருமான தாம அக்வினாஸா1கவும் எனக்குப் புலப்பட்டார். மற்றும், காந்தியடிகள் உலக அநுபவம் நிறைந்தவர். விஷயங்களைச் சர்ச்சை செய்து பிறகு தமது கட்சியை தாபித்துக் கொள்ளக்கூடிய வக்கீல் பயிற்சியும் அவருக்கு உண்டு. அவர் பெரிய ஞானியாக இருந்தாலும் சாதாரண மனிதர்களுக்குப்புத்திசொல்ல அவர்களுடைய நிலைக்கு இறங்கிவரக் கூடியவர். மனிதர்களாகிய நாமெல்லோரும் பலவித சிக்கலான சுபாவ முடையவர்கள் தான். ஆனால், காந்தியடிகள், நம்மெல்லோரைக் காட்டிலும் அதிக சிக்கலான சுபாவங்களுடையவரென்று எனக்குப் பட்டது. அவர், உத்தம குணங்கள் நிறைந்த , ஆனால் பிறரால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத மகா புருஷர். பிரான்சி முனிவரைப் போல் மட்டும் அவர் இருந்து விட்டிருந் தால், அது சாதாரண விஷயமாகப் போயிருக்கும். ஆனால் அப்பொழுது அவர், பொதுவாக உலகத்திற்கும், சிறப்பாக அவர் தேச மக்களுக்கும், உபயோகமுள்ளவராயிருக்க முடியுமா? இருக்க முடியாது என்பது தான் என் அபிப்பிராயம். பல மகான்களுடைய விசேஷ அமிசங்களும் அவரிடத்தில் ஒன்று சேர்ந் திருப்பது தான், அவருடைய வாழ்க்கையின் சாரம். உலகம் அவரை எந்த திருஷ்டியில் நோக்குகிறது, அவரால் உலகத்திற்கு இன்னும் என்னென்ன தொண்டுகள் செய்ய முடியும் என்பவை யெல்லாம், அவர் ஒருவராயில்லாமல் பலராயிருப்பதைப் பொறுத்தே இருக்கிறது. இறுதியாக நான் சொல்ல வேண்டுவதை இங்கு ஊர்ஜிதப் படுத்திச் சொல்ல விரும்புகிறேன். பிரான்சி, தாம அக்வினா முதலியவர்களுடைய அமிசங்களும் உலக அநுபவம், வக்கீல் பயிற்சி முதலிய அமிசங்களும், அவரிடத்தில் ஒன்று சேர்ந்திருக்கின்றன வென்று மேலே கூறியிருக் கிறேன். இதை நான் இன்னும் தெளிவாகவும் சரியாகவும் சொல்ல விரும்பு கிறேன். பக்தியும் ஞானமும் கலந்த பாரத தேசத்தின் மத பரம்பரையும், ஒரு ஜாதியினுடைய வாழ்க்கையில் சமுதாய உரிமைக்கும் அரசியல் உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற மேனாட்டு (லௌகிக) பரம்பரையும் காந்தியடிகளிடத்தில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இந்த இரண்டு பரம்பரைகளும்-அதாவது இரண்டு நாகரிகங்களும்-அவரிடத்தில் கலந்திருப்பதாலேயே அவர் (மேற்படி இரண்டு நாகரிகங்களையும் ஒன்று சேர்க்கக்கூடிய) ஒரு பாலமாயிருக்கிறார். அவர், தமது நாட்டாருக்கு அரசியல் விஷயங்களை லௌகிகக் கண்ணோடு பார்க்கும்படி சொல்கிறாரில்லை; மத பரம்பரையைப் புறக்கணியாமல் அரசியலில் ஈடுபட வேண்டுமென்றே அவர் சொல் கிறார். தாம் சாதாரண ஓர் அரசியல் கிளர்ச்சிக்காரருக்கு மேலானவர் என்றும், தமது தேசத்தின் லட்சியம் வெறும் அரசியல் கிளர்ச்சி செய்து பெற்றுவிடக் கூடியதல்லவென்றும் அவர், தம்மையும், தமது நாட்டின் லட்சியத்தையும் பிரிட்டிஷ் ஜனங்களுக்குத் தெரியப்படுத்துகிறார். இந்திய மக்களையும் பிரிட்டிஷ் மக்களையும் இணைத்து வைக்கிற ஒரு பாலமாகவோ, அல்லது இரண்டு ஜாதிகளை யும் சமரஸப்படுத்தி வைப்பவராகவோ மட்டும் அவர் இல்லை. மேனாட்டாருடைய கவனத்தையும் சிரத்தையையும் அவர் இழுத்திருக் கிறார். பாரமார்த்தி கத்தையும் லௌகிகத்தையும் ஒன்றுக்கொன்று பாதகம் உண்டாகாமல் தம்மிடத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிற ஒருவர், உண்மையில் ஒரு மகான்தான். அப்படிப்பட்ட ஒரு மகானாகவே நான் காந்தியடி களைப் போற்றுகிறேன். கீழ் நாட்டையும் மேனாட்டை யும் ஒன்று சேர்த்து வைக்கும் பாலமாய் அவர் இருக்கிறார். தமது நாட்டு ஜனங்களுக்கு அவசியமான தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றை வற்புறுத்துகிற அந்த மகா புருஷரை நான் மறக்க முடியாது. அவர் தமது நாட்டு மக்களின் தேவையை உணர்ந்திருக்கிறார் என்பதற்கு அடையாளம் அவருடைய கைராட்டினம். இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தை நாம் சென்று பார்ப்போமானால், (இந்தியா, கிராமங்கள் நிறைந்த ஒரு பெரிய தேசம்.) அங்கு வசிக்கும் ஜனங்கள், பூரணமான தொரு வாழ்க்கையை நடத்தவும், தங்களுடைய திறமைகளைக் காட்டக்கூடிய சந்தர்ப்பத்தைப் பெறவும் எவ்வளவு ஆவலுடையவர் களாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பம்பாய்க் கருகாமையில் பருத்தி மில்களையும், கல்கத்தாவுக்கருகாமையில் சணல் மில்களையும் தாபித்துவிடுவதனால் மட்டும் பயனில்லை. கிராமங் களில் கைத்தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான், பொருளாதார வாழ்க்கையில் அவை முன்னேற்றமடையும். காந்தியடி களின் மகத்தான சேவைகளில், கிராமப் புனருத்தாரணத் திற்காக அவர் பாடுபட்டது மிகவும் முக்கியமானதொன்று. நான் காந்தியடிகளைப் பார்த்ததிலிருந்தும், அவரைப்பற்றி படித்தது, கேட்டதிலிருந்தும் மேற்கண்ட எண்ணங்கள்தான் எனக் குண்டாயின. இன்னும் அதிகமாக எனக்குத் தெரிந்தவரையில் காந்தியடிகள் தமது நாட்டாருக்கும் உலகத்தாருக்கும் கீழ்க்கண்ட மூன்று உபதேசங்களைச் செய்திருக்கிறார்:- (1) அன்பின் மூலம் அன்புச் சேவைசெய்தல். (2)பலாத்காரமின்றித் தொண்டுசெய்தல் (3) ஒருவன் தன் திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் பூரண வாழ்க்கையை நடத்த வேண்டுமானால், மூளையை மட்டும் உபயோகித் தால் போதாது; கைகளையும் உபயோகிக்க வேண்டும். அதாவது தேகத்தினாலும் உழைக்க வேண்டும். * * * புகழ் நிறைந்த பெயர் லாரென் பின்யன், சி.எச்,.டி.லிட் (லண்டன்) எனக்கு இந்தியாவைப்பற்றி, அதன் கலை மூலமாகத்தான் கொஞ்சம் தெரியும். அந்த நாட்டுக்குச் சென்று அதன் அரசியல் பிரச்னை களை நேர்முகமாக ஆராய்ந்தாலன்றி, திகைப்புத் தரக் கூடிய மாதிரி யுள்ள அவைகளைப் பற்றி நாம் எவ்வித தீர்ப்பும் சொல் வதற்கில்லை. ஆகையால், காந்தியடிகளின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல இயலாதவனாயிருக்கிறேன். அவருடய கொள்கை களை, எல்லா அமிசங்களிலும் என்னால் பின்பற்ற முடியாது. மனித சமூகத்திற்கே மிகவும் அவமானம் உண்டு பண்ணக் கூடிய காலம் என்று தற்காலத்தை வருங்கால சரித்திரம் கட்டாயம் குறிப்பிடும். அப்படிப் பட்ட இந்தச் சமயத்தில், நான் தினந்தோறும் அதிகமாக உணர்ந்து வருவதென்னவென்றால், மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களும், ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயங்களும், இவ்விரண்டி னின்றும் உற்பத்தியாகி அநுபவ வாழ்க்கையில் என்ன வந்து கலக் கிறதோ அதுவும், அநித்திய மான, சிதறிக்கிடக்கிற இந்த உலகத்தில் மிக முக்கியமானவை யென்பது தான். எல்லாவற்றிற்கும் மத்திய மாயும் நிரந்தரமாயும் இருக்கப்பட்ட இந்த விஷயங்களுக்குத்தான் காந்தியடிகள் பிரதிநிதியாக இருக்கிறார். இதனாலேயே, அவருடைய பெயர் கீர்த்தியோடு பிரகாசிக்கிறது. * * * வாழ்க்கை நியதி ஸ்ரீமதி பியர்ல் எ. பக் (நியூயார்க் நகரம்) காந்தியடிகளின் பெயரானது, அவருடைய வாழ்நாளிலேயே, ஒரு தனிப்பட்ட மனிதருடைய பெயராக இல்லாமல், துன்பங்கள் மலிந்த தற்கால உலகத்தில் எப்படி, மனிதன் வாழ்க்கையை நடத்துவது என்பதற்கு ஒரு வழிகாட்டியாகிவிட்டது. கட்டுப்படாததும், தீமை பயப்பதுமான சக்தியின் நடுவில், அவர், ஒரு லட்சிய வாழ்க்கையை ஊர்ஜிதம் செய்து காட்டுகிறார். இதுவே எனக்கு மிகவும் முக்கியமாகப் படுகிறது. அவர், தமது லட்சிய வாழ்க்கையில் உறுதியாக நிற்கிறார். அப்படி அவர் நிற்பதானது, லட்சக்கணக்கான மக்களைப் போல் எனக்கு ஓர் ஆற்றலை அளித்திருக்கிறது. அந்த ஆற்றல் என்ன? உலகத்தில் வளர்ந்து வரும் அட்டூழியங்களை எல்லாச் சக்திகளைக் காட்டிலும் மகத்தானதும், தோல்வியடையாததும், சஞ்சல மடை யாததுமான மனோ சக்தி இருக்கிறதே அதன் மூலம் எதிர்க்கும் ஆற்றல் தான் அது. என் வந்தனத்தையும், பாராட்டுதலையும் அவருக்குத் தெரிவிக்கிறேன். * * * மகாத்மா ஆனந்தா கே. குமாரசாமி, எம்.ஏ.,டி.எஸ்.சி (சித்திரசாலை, பாடன், அமெரிக்கா) மகாத்மா என்ற பதம் அதிகமான துஷ்பிரயோகத்திற் காளாகி யிருக்கிறது. ஆனால் இந்தப் பதத்திற்குச் சரியான, ஆழ்ந்த பொருள் உண்டு; இதற்குப் பூர்வீக சரித்திரமும் உண்டு. இந்திய மனோதத்துவ சாதிரத்தில் உபயோகிக்கப் பெறும் சில பரிபாஷை களைப் போல் இந்த மகாத்மா என்ற பதமும் ஏதோ கூடார்த்த மாகத்தான் உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணம், தத்துவ சாதிரத்தைப் பற்றி பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் எண்ணங்களைப் பற்றியும் கிறிதுவ மத சம்பிரதாயங்களைப் பற்றியும் நமக்கேற்பட்டுள்ள அறியாமைதான். இந்த அறியாமை யினால் தான் ஆத்மா வேறே, கடவுள் சக்தி வேறே யென்றும், சத்தான வாழ்க்கை வேறே, சாதாரண வாழ்க்கை வேறே யென்றும் பாகுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறோம். மற்றும், பிரதி மனிதனிடத்திலும் வீற்றிருக்கிற புருஷ சக்தி இருக்கிறதே அதனைத் தவறாக உணர்ந்து கொண்டு விடுகிறோம். ஒரு மனிதனிடத்தில் அந்தச் சக்தி யின் மூலமாக வெளியாகும் திறமைகளைப் பார்த்து, அவனை தெய்வ அவதாரமென்று அழைக்கத் தொடங்குகிறோம். தெய்வ சக்தி அவனிடத்தில் பிரகாசிக்கிறதென்று சொல்கிறோமில்லை. இப்படிப் பட்ட மனோபாவங்களை வைத்துக் கொண்டுதான் நாம் மகாத்மா அல்லது பெரிய ஆத்மா வென்று அழைக்கிறோம். கடவுளோடு கலந்தவர் அல்லது அமானுஷ்யர் என்ற அர்த்தத்தில் சொல்கிறோ மில்லை. புத்த மதக் கிரந்தங்களில், மகாத்மாவுக்கும் அல்பாத்மாவுக்கு முள்ள வித்தியாசங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்த ஆத்மாக்கள் கல்யாண ஆத்மா (நல்ல ஆத்மா) வென்றும் பாபாத்மா வென்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த அல்பாத்மாவை அநாத்மா வென்றும் அழைப்பதுண்டு. இந்த அல்பாத்மாவைப் பற்றிச் சொல்கிற போதுதான், இன்ன மனிதன் என்றும் இன்னார் என்றும் சுட்டிக் காட்டிச் சொல்கிறோம். இந்த அல்பாத்மா தாழ்ந்த இச்சைகளுடையது; துக்கம் நிறைந்தது; இதனை அல்பதுக்க விஹாரி என்று சொல்வார்கள். இஃது உருவம், மனோ சக்தி, குணம், முன்னறிகிற சக்தி முதலியவற்றில் வளர்ச்சியடையாமலிருக்கிறது. இதற்கு நோய், மரணம் முதலியன உண்டு. மற்றோர் ஆத்மாவாகிய மகாத்மாவோ எல்லா வரம்புகளையும் கடந்தது. பூரண வளர்ச்சியும், சீலமும், சித்த சுத்தியும், வருங்கால மறியும் ஆற்றலும், கட்டுப்பாடற்ற தன்மையும் உடையவர்களே மகாத்மாக்கள். இதனை புத்த கிரந்தங்கள் பாவிதகாயம், சீலம், சித்தம், பிரக்ஞை, அப்ரரிக்த மஹாத்மா அப்ரமாண விஹாரி என்று வருணிக் கின்றன. அல்பாத்மாவுக்கும் மகாத்மா வுக்கு முள்ள வித்தியாசம் பதி க்கும் பசுவுக்குமுள்ள வித்தியாசம் போன்றது. இந்த வேறுபாடுகளைப் பற்றி சீனக் கிரந்தங்களும் கிறிதவக் கிரந்தங்களும் விவரித்துக் கூறுகின்றன. மகாத்மா என்ற பதத்தில் மகா என்றால் பெரிய என்று அர்த்தம். ஆத்மா வென்பது, மனிதனிடத்திலேயுள்ள புருஷ சக்தியை அதாவது கடவுள் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுதான் உண்மையான மனிதன். இந்த மனிதனை அறியவே நமது முன்னோர்கள் பாடுபட்டி ருக்கிறார்கள். தத்வமஸி என்ற உபநிஷத வாக்கியம் இதனையே குறிப்பிடுகிறது. மகாத்மா வென்று சொன்னால், அது ஜீவன் முக்தனையே குறிக்கிறது. மகாத்மா வென்ற பதத்தின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒரு மகான் என்ற அர்த்தத்திலேயே காந்தியடிகளை எல்லோரும் மகாத்மாவென்று அழைக்கிறார்கள். அவருடைய தன்னலமற்ற தன்மை முதலிய சுபாவங்களினால் அவருக்கு இந்தப் பெயர் ஒருவாறு பொருந்தலாம். ஆனால் எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கேனும் இந்த மகாத்மா பட்டத்தை வழங்கலாமா வென்பதைப் பற்றி நாம் இங்கு ஆராய விரும்பவில்லை. ஏனென்றால், அஃது - அப்படி வழங்குவது-அந்தத் தனிப்பட்ட நபருக்கும் கடவுளுக்கும் உள்ள ரகசிய விஷயமாகும். * * * எனது இரண்டு சந்திப்புகள் லயனல் கர்டி எம்.ஏ. (ஆல் ஸோல் காலேஜ், ஆக்போர்ட்) 1903-ம் வருஷம் முதன் முதலாக நான் காந்தியடிகளைச் சந்தித்தது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்தியர்களின் குடியேற்றப் பிரச்னைகளைப் பற்றிக் கவனிக்கிற அரசாங்க இலாக்காவில் அப்பொழுது நான் ஒரு உத்தியோகதனா யிருந்தேன். அதற்குப் பிறகு, அநேக இந்தியர் களையும் சீனர்களையும் நண்பர்களாக்கிக் கொண் டிருக்கிறேன். ஆனால் கீழ் நாட்டாரில், முதன் முதலாகக் காந்தி யடிகளையே சந்தித்ததாக எனக்கு ஞாபகம். நான் சந்தித்த போது, அவர் ஐரோப்பிய உடைகள் தரித்துக் கொண்டிருந்தார். தலையில் மட்டும் இந்தியக் குல்லாய் இருந்தது. திறமையுள்ள ஒரு வாலிப வக்கீல் என்ற எண்ணமே, அவரைப் பார்த்ததும் எனக்குப் பட்டது, அவர் என்னுடன் சம்பாஷனை தொடங்கியதும், தமது நாட்டாருடைய நல்ல குணங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். அவர்களுடைய உழைப்பு, சிக்கனம், பொறுமை முதலியவற்றைப் பற்றி வற்புறுத்திப் பேசினார். பிறகு நான் கூறினேன்:- மிடர் காந்தி, உங்கள் கட்சியைத் தெரிந்து கொண்டிருக்கிறவர்களிடத்திலேயே நீங்கள் உபதேசம் செய்கிறீர்களே! இந்தியர்களுடைய தீய குணங்களுக்காக இந்த நாட்டிலுள்ள (தென்னாப்பிரிக்காவிலுள்ள) ஐரோப்பியர்கள் பயப்பட வில்லை. அவர்களுடைய நல்ல குணங்களுக்குத்தான் பயப்படுகி றார்கள். இதற்குப் பிறகு, காந்தியடிகளுடன் நான் பலமுறை பழக நேர்ந்தது. அவரிடத்தில் நான் கண்ட சிறந்த குணம் என்னவென்றால் அவருடைய விடாப்பிடியான குணந்தான். இந்த உலகத்தில் இந்த உறுதியான மனப்பான்மை அல்லது விடாப்பிடியான சுபாவம் அவசியம் தேவையா யிருக்கிறதென்றே நான் இப்பொழுது கருத வேண்டியிருக் கிறது. பல வருஷங்களுக்குப் பிறகு, 1916-ம் வருஷம் டிசம்பர் மாதம் லட்சுமணபுரி காங்கிரசின் போது நான் காந்தியடிகளை இரண்டாவது முறை சந்தித்தேன். முதலில் நான் அவரைச் சந்தித்த போது, நல்லுடை தரித்த ஒரு வக்கீலாக இருந்தார். இப்பொழுது அவர், இந்தியாவில் நெய்யப்பட்ட ஒரு முரட்டுத் துணியை உடுத்திக் கொண்டிருந்தார். அவரிடத்தில் வயோதிகம் காணப்பட்டது. அவர் முகத்தில், ஒரு துறவியின் அடையாளங்கள் இருந்தன. நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது காலை நேரம். நல்ல குளிர். ஒரு கணப்புச்சட்டி யருகில் குளிர் காய்ந்து கொண்டே நாங்கள் பேசினோம். ஜாதிப் பாகு பாட்டின் உட்கருத்தைப் பற்றி இந்தியர்களின் மனோபாவம் என்ன வென்பது குறித்து அவர் அப்பொழுது எனக்கு விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார். என்னுடைய தலை முறையில், அதிகமான பேரைத் தமது கோஷ்டியில் சேர்த்துக்கொண்ட வரும், காலப் போக்கில் ஏற்படுகிற சம்பவங்களை வேறுவழியில் திருப்பிவிட்டவரும், ஒரு நாட்டில் மட்டுமல்ல, அநேக நாடுகளிலுள்ள ஜனங்களின் எண்ணத்திலேயே மாற்றத்தை உண்டுபண்ணியவரும் காந்தியடிகளைப் போல் வேறு யாரும் கிடையாது. நான் முதன் முதலாக 1903-ம் வருஷம் சந்தித்த வாலிப வக்கீலிடம், இத்தகைய மகத்தான ஆத்ம சக்தி அடங்கி யிருக்கிறதென்பதை அப்பொழுது நான் தெரிந்து கொள்ளாம லிருந்தது என்னுடைய தவறு என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறேன். * * * காந்திடிகளும் காங்கிரசும் பகவன்தாஸ் எம்.ஏ., டி. லிட் (காசி) இருபதாவது நூற்றாண்டின் முதல் நாற்பது வருஷத்துக் கொந்தளிப்பு நிறைந்த சரித்திரமானது, ஓர் இருபது அல்லது இருபத்தைந்து பேருடைய சரித்திரமே. இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் இப்பொழுது ஜீவிய தசையிலிருக்கின்றனர். காந்தியடிகள் இவர்களிலே ஒருவர் மட்டுமில்லை; இவர்களிலேயே விசேஷிக்கத் தக்கவராயிருக்கிறார்.. ஏனென்றால் அவர் ஒருவர் தான் அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அஹிம்ஸா தர்மத்தைக் கொண்டு புகுத்தினவர். இந்திய சரித்திரத்திலேயே புத்தருக்கு பிறகு, ஆத்ம சக்தி நிறைந்த ஒரு மகானை, காந்தியடிகளைத் தவிர்த்து வேறு யாரையும் சொல்ல முடியாது. எதிர் காலத்துச் சரித்திராசிரியர்கள், காந்தியடிகளுக்குச் சமதையாக வேறு யாரையேனும் குறிப் பிடலாமோ என்னவோ? ஆனால் இப்பொழுது நிகழ்காலத்தில் - மகாத்மா காந்தியின் சக்தி தனித்துவம் பொருந்தியதாயிருக்கிறது. இதனால் இயற்கையாகவே அவரிடத்தில் எனக்கு ஒருவித பக்தி ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தவமகிமையில்-அதாவது அவருடைய அந்தக்கரணத்திலேயுள்ள வேகம், உற்சாகம் , துறவுத் தன்மையோடு கூடிய தூய்மை திடசங்கல்பம், இந்திரிய சுகங்களிலே காட்டும் வெறுப்பு (இவையெல்லாம் சேர்ந்தது தான் தப) ஆகிய இவற்றிலே - நான் ஈடுபட்டிருக்கிறேன். சுகாநுபவங் களைச் சாத்வீக முறையில் துறப்ப தென்ற இந்தத் தவமானது, புராதன பாரத நாட்டாருக்கும், புராதன, மத்திய காலத்துக் கிறிதவர்களுக்கும், பிற்கால முலீம்களுக்கும் தெரிந் திருந்தது. ஏனென்றால் இந்தத் தவமானது, ஆத்ம பலத்தினால் உயர் வடைகிறது. இந்த ஆத்ம பலத்தைக் கொண்டே இந்தியாவின் முன்னேற்றத்தை நாடுகிறார் காந்தியடிகள். மற்றும் இந்தியாவின் அரசியல் விவகாரங்களில் அவர் தலைமை வகித்து நடத்துவதும் எனக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது. அவரிடம் காணப்படும் பரிசுத்தத் தன்மை, எல்லோரிடத்திலும் அவர் காட்டும் கருணை, தன்னடக்கம், முதலியன, அவரிடத்தில் யாரையும் இழுக்கச் செய்கின்றன. அவருடைய பெருந்தன்மை, எல்லோரிடத்தி லும் அவர் காட்டும் மரியாதை, இந்தியாவின் நலனுக்காக அவ ருடைய மனமும் தேகமும் சதா வேலை செய்து கொண்டிருப்பது இவை அனைத்தையும், அவருடைய சத்ருக்களும் பாராட்டுகின்றனர். அது மட்டுமல்ல; அவருடைய வழிக்கு இணங்கியும் வருகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில், அவரை முன்னிலைப் படுத்திச் சில பக்தி மலர்கள் தூவுவதோடு நான் திருப்தியடைய விரும்பவில்லை. இந்த மாதிரி தாம் அர்ச்சிக்கப்படுவதைக் கண்டு, மகாத்மா காந்திக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். ஆகையால், இந்தச் சமயத்தில் நான் சில யோசனைகளைக் கூற விரும்புகிறேன். இந்த மாதிரியான யோசனை களை நான் சென்ற பதினைந்து வருஷ காலமாக அவரிடத்திலும் இந்திய மகாஜனங்களின் முன்னிலையி லும் சமர்ப்பித்திருக்கிறேன். இப்படி நான் யோசனை கூறுவதானது, நான் அதிமேதாவி என்ற எண்ணங்கொண்டல்ல. நமது நாட்டின் புராதன நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு இவற்றைக் கூறுகிறேனேயன்றி வேறல்ல. உலகமும் இந்தியாவும் நான்கு வருஷத்துக் கடுமையான வேதனையிலிருந்து உலகமானது 1918ம் வருஷம் மீண்டெழுந்தது. ஆனால் அது மீண்டும் அந்த யுத்த நரகத்திற்கே சென்று கொண்டிருக்கிறது. பெயின், உள்நாட்டு யுத்தத்தினால் சிதைக்கப்பட்டு விட்டது. பிராங்கோ கட்சியும், பாசிஸமும் அங்கு வெற்றி பெற்று விட்டன. இருப்பதா, இறப்பதா வென்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே, சீனா ஜப்பானுடன் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவோ அடிமைப் பட்டு வறுமைப்பட்டு, ஆன்ம சக்தியிழந்து அரசியல்-பொருளாதாரத் துறையில் அஹிம்ஸா தர்மயுத்தத்தை நடத்தி வருகிறது. ஆனால் இடையிடையே வகுப்புக் கலவரங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்தியத் தலைவர்களுடைய செய்கைகளினாலும், பிரிட்டிஷ் ராஜ தந்திரத்தின் செய்கையினாலும் உண்டான விளைவுகள் இவை. இரண்டு மதங்களினுடையவும் (ஹிந்து, முலீம்) உண்மையான தத்துவங்கள் மறக்கப்பட்டு போனதோடுங்கூட சிதைக்கப்பட்டும் போயின. இதனை பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள், தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள். இரண்டு சமூகத்தினருக்கும் பொதுப் படையான நன்மைகள் ஒன்றுமேயில்லை யென்றும், ஒரு சமூகத்தாரை வீழ்த்தித்தான் மற்றொரு சமூகத்தார் வாழ முடியுமென்றும் சொல்லப் படுகின்றன. இந்த எண்ணங்கள் மேனாட்டு எண்ணங்களின் சாயலைத் தழுவியிருக்கின்றன. இதனால் , இந்தியாவில் பரபர துவேஷமும் சந்தேக மனப்பான்மையும் குடிகொண் டிருக்கின்றன. நியாய புத்தியும் சமாதான நோக்கமுடைய பிரதி ஹிந்துவும் முலீமும் மன நிம்மதியோடு வாழ்க்கை நடத்த முடியாமலிருக் கிறது. காலஞ்சென்ற ஸ்ரீ. கோபால கிருஷ்ண கோகலே, ஹிந்துக்கள், முலீம்கள், பிரிட்டிஷார் என்ற மூன்று கட்சி யினருள், எந்த இரண்டு கட்சியினரும், மூன்றாவது கட்சியினரைக் காட்டிலும் வலுவுள்ளவர் களே: என்று கூறினார். கடைசியில் 1930ம் வருஷத்திலிருந்து 1933ம் வருஷம் வரை லண்டனில் கூடிய மூன்று வட்ட மேஜை மகாநாடு களின் பயனாக, தனித்தேர்தல் தொகுதிகள் திரப் படுத்தப்பட்டன. ஹிந்துக்களும் முலீம்களும் பிரிக்கப் பட்டு விட்டனர். அரசாங்க நிருவாகத்தின் ஒவ்வோர் இலாகாவிலும் வகுப்பு வாத உணர்ச்சி தலை காட்டத் தொடங்கியது. அரசாங்க உத்தியோகங்களில் சேருகிறவர்களோ, சாதாரண ஜனங்களைவிட புத்திசாலிகளாகவும் விஷயம் தெரிந்தவர் களாகவும் இருக்கி றார்கள். இவர்களிடம் அரசாங்கத்தின் அதிகார பலம் வந்து சேர் கிறது. அதிகார பலம் என்றால் அஃது எளியாருக்கு உதவி செய்வ தாக இல்லாமல் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை யாக வல்லவோ உபயோகப்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் இந்தியாவில் வகுப்பு வாரியாகத் தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்திய பிறகு, இந்தியாவில் வகுப்புவாதப் பிரச்னையே முக்கியப் பிரச்னை யாகப் போய் விட்டது. 23-3-39ல் ஓர் அமெரிக்கப் பத்திரிகை நிருபர், டெல்லியில் மகாத்மா காந்தியைப் பேட்டி கண்டு பேசினார். அப்பொழுது மகாத்மாவைப் பார்த்து அந்த நிருபர் உங்களுடைய விருப்பப் படி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு மகாத்மா, நன்கு ஆலோசித்துப் பின் வருமாறு பதில் கூறினார்- ஆம்; அது முன்னேறிக் கொண்டு தான் வருகிறது. ஆனால் சில சமயங்களில் அந்த முன்னேற்றத்தைக் கண்டு எனக்கு அச்சமும் உண்டாகிறது. என்றாலும் அடிப்படையில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஹிந்து - முலீம் வேற்றுமைகள் தான், மிகவும் கஷ்டமான பிரச்னையாக இருக்கிறது. இஃது ஒரு பெரிய முட்டுக் கட்டை. இந்த விஷயத்தில் முன்னேற்றம் இருப்பதாக நான் காண முடியவில்லை. ஆனால் இந்தப் பிரச்னைக்கு ஒரு திருப்திகரமான முடிவு ஏற்படத்தான் வேண்டும். பொதுஜனங்களுடைய மனப்பான்மை யில் எவ்வித கோளாறும் இல்லை. ஏனென்றால், அங்குச் சுயநலம் என்பது இல்லை. இரண்டு சமூகத்தினருடைய அரசியல் குறைகளும் பொருளாதாரக் குறைகளும் ஒன்றுதான். உண்மை. இரண்டு சமூகத்தினருடைய குறைகளும் ஒன்றுதான். அப்படியானால் அவர் - மகாத்மா காந்தி- இந்த உண்மையை இரண்டு சமூகத்தினருக்கும் எடுத்துச் சொல்லி ஏன் ஒன்று சேர்த்து வைக்கக் கூடாது? இந்தப் பிரச்னை தானாகவே தீர்ந்து விடும் என்கிறார். வாதவம். ஆனால் எப்படி? பெயினைப் போலவா? அல்லது சமாதான முறையிலா? சமாதான முறையில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஏதேனும் செய்ய முடியுமா? பொது ஜனங்களுடைய மனப் பான்மை நன்றாக இருக்கிறது. ஏனென்றால் அது சுய நலமற்றது என்கிறார் காந்தியடிகள். இது சரிதானா? இந்தியா, சீனா,ஜப்பான் முதலிய நாடுகளிலும், ஆசியாவின் மற்ற நாடுகளிலும் விவசாயிகளே, ஜனத்தொகையில் பெரும்பான்மை யோராயிருக்கின்றனர். இவர்கள் எங்குமே சுயநல முள்ளவர்களாயிருக் கிறார்கள். சரி, அப்படியே அவர்களுடைய மனப்பான்மை திருப்திகரமாகவும், சுயநல மற்றதாகவும் இருக்கிறதென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தப் பாமர ஜனங்கள் தத்தம் மதத்தின் சாராம்சங்களைப் பற்றியும் சமுதாய அமைப்பின் முக்கியமான சில அமிசங்களைப் பற்றியும் அறிந்து கொண்டிருக்கிறார்களா? அல்லது அறிவிக்கப்பட்டிருக் கிறார் களா? இந்தச் சமூகப் பிரச்சினை, சமாதான முறையில் தீருமா வென்பது சந்தேகப்படக் கூடிய விஷயந்தான். அப்படி இந்தப் பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டுமானால், பாமர ஜனங்களுக்கு, எல்லா மதங்களின் சாராம்சங்களை எடுத்துச் சொல்லியும் சமுதாய உரிமைகளைப் பற்றி விளக்கிச் சொல்லியும் சரியானபடி பிரசாரம் செய்ய வேண்டும். காங்கிரஸின் நிலைமை காங்கிரஸின் அரசியல் பொருளாதாரப் போராட்டம், தூலமாகப் பார்த்தால் அஹிம்ஸா தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதென்பது சரிதான். ஆனால் உண்மையில் அப்படி யில்லை. காங்கிரஸுக்குள்ளேயே பல ஊழல்கள் இருக்கின்றன. காங்கிர உத்தியோகங்களுக்காக ஏற்படும் தேர்தல்களில், ஓட்டுப் பெட்டிகள் களவாடப்பட்டும், எரிக்கப்பட்டும் இருக்கின்றன. தடியடிப் பிரயோகங்கள் நடைபெற்றிருக்கின்றன. பலருக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஓரிருவர் மரணமு மடைந்திருக் கின்றனர். ஹரிஜன் பத்திரிகையில் மகாத்மா காந்தி எழுதிவரும் கட்டுரைகளி லிருந்தே இவை வெளியாகின்றன. வேறு அத்தாட்சி தேவையில்லை. திரிபுரி (மார்ச் 1939) காங்கிரஸில் நிறைவேற்றப் பட்ட ஊழல் ஒழிப்புத் தீர்மானமும் இதற்கு அத்தாட்சியாகும். இதில் நாம் ஆறுதல் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், தொகுதிகளின் விதீரணம், ஓட்டர்களின் அதிகமான எண்ணிக்கை இவற்றை உத்தேசித்து, ஜனநாயகத்தின் இந்த முதற் பரிசோதனையில் துக்கப்படக்கூடிய சம்பவங்கள் இன்னும் அதிகமாக நடைபெறாம லிருந்ததுதான். நோய்க்குக் காரணம் பாமர ஜனங்களின் விழிப்புக்கென்று மகாத்மா காந்தியினால், தொடங்கப்பெற்ற இந்தச் சிறந்த இயக்கங்களெல்லாம் எப்படி வெற்றிபெற வேண்டுமோ அப்படி ஏன் வெற்றிபெறவில்லை? நிச்சய மாக, தலைமை தானத்தில் ஏதோ பெரிய குறை இருக்கிறது. இங்கே ஒருவிஷயத்தை வற்புறுத்திச் சொல்ல வேண்டும். அதாவது, இந்தியா வின் தற்போதைய நிலைமையில் மகாத்மாகாந்தியின் ஒத்துழையா இயக்கம் அல்லது சட்ட மறுப்பு இயக்கம் - எந்தப் பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும் - அதுதான் மிகச் சிறந்தது. இதில் சந்தேகமேயில்லை. இந்த முறையினால், மகாத்மா காந்தி, இந்திய மகா ஜனங்களுக்கு ஒரு மனோ தைரியத்தையும், சரியானதோர் ஆயுதத்தையும் அளித்திருக்கிறார். தவிர, இந்த முறை இந்தியாவின் புராதன தர்மத்தை அநுசரித்ததாகவும் இருக்கிறது. தீங்கிழைத்த வருடைய வாசற்படியில் உட்கார்ந்து, அந்தத் தீங்குக்குப் பரிகாரந் தேடிக் கொடாவிட்டால் இறந்து போவதென்று நிச்சயப் படுத்திக் கொள்வது, மரணம் வரையில் பட்டினி கிடப்பது, சட்டங் களை மறுப்பது, தேசத்தினின்று வெளியேறுவது, அரசனைத் திரகாரஞ் செய்வது, அரசனைப் பகிரங்கமாகக் கண்டிப்பது முதலியவைகளெல்லாம் அஹிம்ஸா தர்ம முறையில் அநுஷ்டிக்கப் படக்கூடிய ஆயுதங்கள் என்று நமது புராதன நூல்களில் கூறப்பட் டிருக்கின்றன. புராதனக் கிரந்தங்களில் ஆயுதந்தரித்த யுத்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டிருக்கிறதேயாயினும் அது விசேஷ சந்தர்ப் பங்களில் தான்; சமாதான முறைகள் கைவிடப்பட்ட பிறகுதான். இந்தச் சிறந்த இயக்கங்களெல்லாம் வெற்றியுறாமற் போனதற்குக் காரணம் ஏதோ ஒரு பெரிய குறை இருப்பது தான். ஔஷதத்தில் முக்கிய மான ஒரு மூலிகை இல்லையானால், அந்த ஔஷதத்தினால் வியாதி தீரமாட்டேனென்கிறது. மாகாண மந்திரிகள், பொது ஜனங்களின் நன்மைக்காக இன்னின்ன விஷயங்களில் சட்ட திட்டங்கள் நிறை வேற்றி அமுலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மகாத்மா காந்தியோ, காங்கிர தளகர்த்தர்களோ ஒரு திட்டம் வகுத்துக் கொடுக்கவில்லை. இனி, கூடப் போவதாகச் சொல்லப்படுகிற அரசியல் நிர்ணய சபை, தங்களுக்காக இந்த வேலையைச் செய்யும் என்று எதிர் பார்க்கிறார்கள். எல்லா மாகாண மந்திரி சபைகளின் விஷயத்திலும் இந்த அதிருப்தி இருக்கிறது. இந்தக் குறைக்குப் பரிகாரந்தேட வேண்டுமென்பதை எங்களிற் சிலர், காங்கிர தளகர்த்தர்களின் கவனத்துக்குக்கொண்டு வந்தோம். ஆனால் எங்கள் முயற்சிகள் வீணாயின. ஆனால் இப்பொழுது காங்கிரஸுக்குள்ளேயே பிணக்குகள் ஏற்பட்டிருப்பதால் தலைவர் களும் பொதுஜனங்களும் இது விஷயத்தில் கவனஞ் செலுத்துவார் களென்று நம்புகிறேன். இந்த உட்பிணக்குகளை வளர்த்துக் கொண்டு போவோ மானால், சென்ற இருபது வருஷ காலமாகக் காங்கிர செய்து வந்த வேலைகளெல்லாம் பயனற்றவையாகி விடும். ஆகையால் தேசத்தில் ஒற்றுமையை நிலவச் செய்வது தலைவர்களின் முதற்கடமையாகும். காங்கிர மந்திரிகள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார் கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மதுபான விலக்கு, கல்வியைப் பரவச் செய்தல், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைத்தல், உள் நாட்டுக் கைத் தொழில்களை ஆதரித்தல், சுகாதார வசதிகளை அதிகப் படுத்துதல், நோய்களைப் பரவவொட்டாமல் தடுத்தல் முதலிய துறை களில் அரிய வேலைகளைச் செய்திருக்கிறார்கள். அரசாங்க நிரந்தர உத்தியோகதர்களின் ஒத்துழைப்பின்மையாலும், காங்கிர கட்சிக்குள் காணப்படுகிற பலஹீனத்தினாலும் காங்கிர மந்திரிகள் இன்னும் அதிகமான வேலைகளைச் செய்து வெற்றிபெற முடிய வில்லை. மற்றும் சுயராஜ்யம் என்னவென்பதைப் பொது ஜனங் களுக்கு எடுத்துச் சொல்லாமலிருப்பது ஒரு பெருங்குறையாகும். மகாத்மா காந்தியோ, பண்டித ஜவஹர்லால் நேருவோ, பாபு சுபாஷ் சந்திரபோஸோ, வேறு எந்தக் காங்கிர தலைவரோ (சி.ஆர்.தாஸைத் தவிர) சுயராஜ்யம் என்றால் என்னவென்பதை இதுவரையில் பொதுஜனங் களுக்கு எடுத்துச் சொல்லவேயில்லை. 1936 அல்லது 1937ம் வருஷம் வரையில், மகாத்மா காந்தி, சந்தர்ப்பம் வாய்த்த போது தம்மைப் பொறுத்த மட்டில் சுயராஜ்யம் என்றால் டொமினியன் அந்தது என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார். மேலே சொன்ன 23-3-39ந் தேதி பேட்டியில், சுயராஜ்யத்தைப்பற்றிப் பத்திரிகை நிருபர் கேட்ட போது அது விஷயமாக நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்பது எனக்கு விளங்கவில்லை என்று கூறினார். எப்படியோ, டொமினியன் அந்தது என்பது, பிரிட்டிஷ் அரசாங்க முறையின் மற்றொரு நகல்மாதிரி. அந்தப் பிரிட்டிஷ் அரசாங்க முறையோ, ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறதே யானா லும் அடிப்படையில் சுயேச்சாதிகாரமாயிருக்கிறது. இந்தியாவில் எந்தவிதமான அரசாங்க முறை இருக்க வேண்டுமென்பதைக் காட்டிலும் இந்தியாவின் சமுதாய அமைப்பு, வருங்காலத்தில் எப்படியிருக்க வேண்டுமென்பதே முக்கியமாகும். இதைப் பற்றி மகாத்மா காந்தி இதுவரையில் ஒன்றுமே சொல்லவில்லை. 1934ம் வருஷம் புனாவில் இந்தச் சமுதாய அமைப்பு விஷயத்தைப் பற்றி மகாத்மா காந்தி கேட்கப்பட்ட போது, அதைப் பற்றி தாம் ஒன்றுஞ் சொல்ல முடியாதென்று மறுத்துவிட்டார். ஆனால் அவர் அடிக்கடி, எனக்கு தூரதிருஷ்டி கிடையாது - என்னைச் சுற்றி இருள் சூழ்ந்திருப்பதைக் காண்கிறேன்- எனக்கு முன்னிருந்த தன்னம்பிக்கை இப்பொழுது கிடையாது - சுயராஜ்ய திட்டம் ஒன்று என்னிடம் இருந்தால் அதை உடனே பொது ஜனங்களுக்குத் தெரிவிப்பேன்- பொதுஜனங்களால் தெரிந் தெடுக்கப்படும் அரசியல் நிர்ணய சபைதான் தீர்மானிக்க வேண்டும் என்பன போன்ற வாசகங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறார். அப்படியானால், இந்தியாவுக்குச் சுயராஜ்யம் தேவையா இல்லையா என்பதைக் கூட அந்த அரசியல் நிர்ணய சபையின் முடிவுக்கு விட்டுவிடலாமே! சுயராஜ்யத்தைப் பற்றி மகாத்மா காந்தி கொண்டுள்ள அபிப்பிராயம், அவருடைய ஹிந்த் சுயராஜ்யம் என்ற புதகத்தில் இருக்கிறது. இதனுடைய சார மெல்லாம் என்னவென்றால், தற்காலிக நாகரிக அமிசங்களாகிய யந்திர வகைகள், ரெயில்வே, கப்பல், ஆகாய விமானம், மின்சாரம் மோட்டார், தந்தி, தபால், ஆபத்திரி, பள்ளிக் கூடங்கள், வைத்திய முறைகள் முதலியனவெல்லாம் கெட்டவை; இவைகளை அடியோடு விலக்க வேண்டும். இவைகளைச் சீர்திருத்தியமைப் பதென்பது முடியாது; கூடாது என்பதுதான். இதனின்று நாம் ஊகிக்க வேண்டிய தென்ன வென்றால் புராதன இந்திய நாகரிக அமிசங்களாகிய கோயில்கள், சித்திர வேலைப்பாடுகள், காவிய ரசனைகள் முதலியனவும் தொலைய வேண்டுமென்பதுதான் அவருடைய அபிப்பிராயம் என்று தெரிகிறது. ஆரம்ப காலத்து விவசாய நாகரிகந் தான் நல்லதென்று அவர்அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது. ஏனென்றால் கடவுளும் இயற்கையும் சேர்ந்து இதைத்தான் மானிட சமூகத்திற்கு அளித்திருக் கிறார்கள். ஆனால் நாகரிகமும் கலைகளும், விஞ்ஞான சாதிரங் களும் இயற்கையின் சிருஷ்டிகள்தானே! தாம் சத்தியத்தைக் காண்பிக்க முடியாதென்றும் சத்திய மார்க்கத்தையே காண்பிக்க முடியுமென்றும் மகாத்மா காந்தி பல முறை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் நமது பாரத தேசத்துப் பண்டைக் கால முனிவரர்கள் சத்திய மார்க்கத்தைக் காண்பித்த தோடு, சத்தியத்தையும் காண்பித்தார்கள். உபநிஷதம், கீதை, மனு மிருதி முதலியவைகளில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதையே மகாத்மா காந்தி, தமது ஹிந்த் சுயராஜ்யம் என்ற நூலில் ஒருவாறு நுகர்ந்திருக்கிறார். வெறும் விவசாய நாகரிகத்திற்குத் திரும்பிச் சென்று விடுதல் போதுமா? வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் நுகர்ந்து பரிசீலனை செய்து, அநுபவித்து விட்ட பிறகு, மனித னுடைய புறத் தேவைகளையும், அகத்தேவைகளையும் பூர்த்தி செய்து விட்ட பிறகு, பழைய வாழ்க்கைக்குச் செல்வ தென்றால் அதில் ஏதோ அர்த்தமிருக் கிறதென்று சொல்லலாம். மகாத்மா காந்தி அடிக்கடி சுயராஜ்யத்தை ராம ராஜ்யத்திற்கு ஒப்பிட்டுப் பேசு கிறார். அந்த ராம ராஜ்யம் எப்படி யிருக்கும் என்றும் அவர் தெளி வாகச் சொல்ல வில்லை. வால்மீக முனிவர் சிருஷ்டித்துப் போயிருக் கிற ராம ராஜ்யம், விவசாய நாகரிகம் கொண்டதாக இல்லையே. அங்கு விவசாய நாகரிகம் பெரும்பாகமாக இருந்த தென்னவோ வாதவம். ஆனால் எல்லாம் கிராமங்களாக இல்லையே; நகரங்களும் இருந்தனவே. வால்மீகியின் அயோத்திமா நகரமும், இலங்கா புரியும் யந்திர நாகரிகம் நிரம்பப் பெற்றதாகவே இருந்தன. இந்தியாவிலுள்ள இளைஞர் கூட்டத்தார், ருஷ்யா வென்றும் போல்ஷ்வெஸம் என்றும் பேசுகிறார்கள். கொஞ்சம் வயதானவர்கள், ஜனநாயகம் என்றும் பிரிட்டனென்றும் பேசுகிறார்கள். ஆனால் யாரும் நாஜீயத்தையும் பாசிஸத்தையும் வெறுக்கிறார்கள். இந்த இஜும் களெல்லாம் தங்களுடைய தீவிரக் கொள்கைகளை விட்டு விட்டுக் கொஞ்சம் பாரமார்த்திக ஞானத்தை ஏற்றுக் கொள்ளுமானால் எல்லா நாடுகளும் எல்லா ஜாதியினரும் வெகு சீக்கிரத்தில் கை குலுக்கிக் கொள்வார்கள். மேனாட்டு இஜும்களையும் ஜனநாயகக் கொள்கைகளையும் மேனாட்டாரே இப்பொழுது வெறுக்க ஆரம்பித்திருக்கின்றனர்; புராதன சமுதாய அமைப்பின் நல்லஅம்சங்களைப் பற்றித் தீவிரமாகச் சிந்தனை செலுத்தி வருகின்றனர். புராதன சமுதாய அமைப்பு இவ்வளவு நல்லதாயிருந்தால், அஃது ஏன் சிதிலமடைந்துவிட்டது என்று சிலர் கேட்கலாம். இதற்குக் காரணம், இந்தச் சமுதாய அமைப்பின் கர்த்தர் களுடைய ஒழுக்கம் குன்றிவிட்டது. இவர் களுடைய நோக்கம் மாறு பட்டுவிட்டது. இதனால் இவர்கள் தவறான வழியில் செல்லத் தொடங்கினர். நல்லஅமிசங்களின் தானத்தில் தீய அமிசங்கள் கொண்டு புகுத்தப்பட்டன. இந்தியா வில் தர்மத்திற்கு யார் கர்த்தர்களாக இருந்தார் களோ, அவர்கள் தன்னல மறுப்பையும் ஞானத்தையும் இழந்து விட்டார்கள். தன்னலத் தியாகிகளில்லாமல், எந்த தேசமும், அல்லது எந்த ஜாதியும் உருப்படியாகாது. அப்படித் தன்னலத் தியாகிகளைச் சிருஷ்டிக்கும் சக்தி பெறாத ஒருநாடு அல்லது ஒரு ஜாதி நாளாவட்டத்தில் அழிந்து போக வேண்டும்; அல்லது யுத்தத்தினாலோ அடிமைப்பட்டோ தன்னுடைய தனித்துவத்தை இழக்க வேண்டியது தான். இந்தக் கடைசி கதி-அதாவது அடிமைப்பட்டுப் பிறருடைய தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு - இந்தியாவுக்கு - இன்னும் ஜீவசக்தி இருக்கிறது. காந்தியடி களுடைய தபோ பலத்துடன் வித்யாபலத்தையும் சேர்த்து இந்தியா வுக்கு ஊட்டினால், அது புதிய வாழ்வு பெறுமென்பது நிச்சயம். நம்மிடையே இன்று அவதரித்துள்ள ஆன்ம சக்தியின் வடிவம், தபசின் சக்தி ஆகிய மகாத்மா காந்தி, இந்தியாவின் சமுதாய அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதைப்பற்றி கொஞ்சம் கவனஞ்செலுத்து வாரானால் இந்தியாவைக் காப்பாற்றினவராவார். மேனாட்டுக்கு, இந்தியா ஓர் உதாரணமாகவும் இருக்கும். இதற்கு முதற்படியாக இந்தியாவுக்கு எந்த விதமான சமுதாய அமைப்பு ஏற்றதாயிருக்குமென்பதைப்பற்றி முதலில் மகாத்மா காந்தியும் காங்கிரஸின் தலைவர்களும் தங்களுக்குள் ஒருமுடிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் கல்வி, ஞானம் படைத்தவர்களும், உழைப்புக்குச் சலிப்புக்காட்டாதவர்களுமான தொண்டர் படை யொன்றைத் தயாரித்து, பகுதி பகுதியாகப் பிரித்து இந்தியாவின் பலபாகங் களுக்கும் அனுப்பி, புராதன இந்தியாவில் சமுதாய அமைப்பு எப்படி விஞ்ஞான ரீதியில் அமைந்திருந்ததென்பதைப்பற்றியும் எல்லா மதங்களின் சாரமும் ஒன்றுதான் என்பதைப்பற்றியும் பிரசாரம் செய்யச் சொல்ல வேண்டும். ஆங்காங்குள்ள காங்கிர கமிட்டிகள், இந்தத் தொண்டர்படைக்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம். இந்தத் தொண்டர்கள், சுதந்திரம் என்றால் உரிமையை உபயோகிப்பது மட்டுமல்ல கடமையைச் செய்வதுங்கூட என்பதை யும் வற்புறுத்தி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். * * * காந்தியடிகளின் ராஜதந்திரம் ஆல்பர்ட் ஈன்டீன் டி.எ.சி (கணித பாடசாலை, ப்ரின்டன் சர்வகலாசாலை, அமெரிக்கா) உலக அரசியல் சரித்திரத்தில், காந்தியடிகள் ஒரு விசேஷமான புருஷர். ஒடுக்கப்பட்ட ஒரு ஜாதியினரை விடுதலை செய்விப்பதற் காக அவர் புதியதும் மனிதத்தன்மை நிரம்பியதுமான ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்து, அதனை மிகுந்த உற்சாசகத்தோடும் சிரத்தையோடும் அநுஷ்டானத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். நாகரிக உலகத்தில் ஆங்காங்கு வசிக்கும் அறிஞர்களின் மத்தியில் அவருக்கேற்பட்டிருக்கும் மகத்தான செல்வாக்கானது-ஒழுக்க ரீதியான செல்வாக்கானது - மிருக பலத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கிற இந்த யுகத்தில் திரமில்லாத தாகத் தோன்றியபோதிலும் எதிர்காலத்தில் ஊர்ஜிதம் பெற்று விளங்கும். ராஜதந்திரிகளின் வேலை எந்த அளவுக்கு நிரந்தரமாக நிலவி நிற்கு மென்றால் அவர்கள், தங்கள் சொந்த உதாரணத்தினாலும், பிறரை நல்வழிப்படுத்துவதற் கென்று உபயோகிக்கிற செல்வாக்கினாலும் ஜனங்களின் ஒழுக்க ரீதியான சக்திகளைத் தூண்டிவிட்டு அவற்றை ஒன்று திரட்டுகிற அளவுக்குத் தான். நாம் வசித்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்திலேயே, நம்மிடையே பிரகாசமான வாழ்க்கையோடு கூடிய ஒரு மகான் தோன்றி யிருக்கிறார். இது விஷயத்தில் நாம் பாக்கியசாலிகள். இதற்காகக் கடவுளுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக் கிறோம். அவர் - அந்த மகான் - வருங்கால சந்ததியாருக்கு வழிகாட்டும் விளக்காக விளங்குவார். * * * ஒரு சமுதாய விஞ்ஞானி ரிச்சர்ட் பி. க்ரெக் (சௌத் நாட்டிக் மச்சாசூடெ,அமெரிக்கா) காந்தியடிகள், யந்திர சம்பந்தமாகக் கொண்டிருக்கும் அபிப்ராயங் களைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு, அதுகாரண மாக அவரை விஞ்ஞான அபிவிருத்திக்கு விரோதியென்று மேனாட்டில் பலர் கருது கிறார்கள் . இது பிசகு. அவர் ஒரு சமுதாய விஞ்ஞானி. ஏனென்றால் அவர் சமுதாய உண்மையை விஞ்ஞான முறைகளாகிய நோக்கல், இப்படித்தான் இருக்கக்கூடுமென்று இயற்கை உணர்வினாலும் செயற்கை உணர் வினாலும் கற்பனை செய்து கொள்ளுதல், பரீட்சித்துப் பார்த்தல் முதலியவைகளைக் கொண்டு பின்பற்றுகிறார். அவர் ஒருசமயம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, மேனாட்டு விஞ்ஞானிகள் பூரணமானவர்களல்லவென்றும், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பரிசோதனைகளைத் தங்கள் விஷயத்தில் செய்து கொள்வதில்லை யென்றும் சொன்னார். அவர் தம்மைப் பொறுத்த மட்டில் எந்தவித மான பரிசோதனையையும் தம்மீதே முதலில் செய்து கொள்கிறார். பிறகுதான் மற்றவர்களைப் பரிசோதனை செய்யச் சொல்கிறார். ஆகார விஷய மாகட்டும் சுகாதார விஷயமாகட்டும், கைராட்டின சத்தியாக் கிரகமா கட்டும் எதுவிஷயத்திலும் அவர் மேற்கண்ட முறையையே அநுஷ்டிக் கிறார். அவர் தமது சுய சரிதத்திற்கு சத்திய சோதனை என்ற பெயரையே கொடுத்திருக்கிறார். அவர் ஒரு சாதாரண விஞ்ஞானிமட்டுமல்ல; சமுதாய உண்மையென்னும் பிரதேசத்தில் அவர் ஒரு சிறந்த விஞ்ஞானியாகவு மிருக்கிறார். அவர் ஏன் சிறந்தவர்? பிரச்னைகளைத் தெரிந்தெடுக்கிற முறை, அவைகளுக்குப் பரிகாரந் தேடுகிற மாதிரி, பரிசோதனை களை அரை குறையாக நடத்தாமல் பூரணமாகவும் உறுதியாகவும் நடத்துகிற விதம், மனித சுபாவத்தைப் பற்றி அவருக்குள்ள அபார ஞானம் ஆகிய இவைகளினாலேயே அவர் சிறந்தவராக - மகானாக இருக்கிறார். அவர் தமது பரிசோதனை முறைகளை, ஜனங்களுடைய ஞான பரம்பரை, அவர்களுடைய எண்ணப் போக்கு, அவர்களுடைய உணர்ச்சி, அவர் களுடைய பொருளாதார கைத் தொழில்கள் சாதனங்கள் முதலியவை களை அநுசரித்தே அமைத்துக் கொள்கிறார். இதனாலேயே, அவர், ஒரு சிறந்த சமுதாய நிர்மாணிகராயிருக்கிறார். இன்னும் என்னென்ன விஷயங்களைப் பரிசோதித்து நிராகரிக்க வேண்டும்; என்னென்ன விஷயங்களைப் பரிசோதித்துச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தில் அவர் காட்டும் பாகுபாட்டு அறிவு இருக்கிறதே அதனாலும் அவர் சிறந்த மகானாக இருக்கிறார். மற்றும், சீர்திருத்த முறைகளைப் படிப்படியாகக் கையாள்வதிலேயும் அவருடைய திறமை இருக்கிறது. ஒரு ஜாதியானது, குறிப்பிட்ட ஒருகாலத்தில் இன்ன அளவுக்குத்தான் மாற்றத்தையடை யும் என்பதை அவர் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார். சில சீர்திருத்தங்கள், நீண்ட காலம் தேசமக்களின் எண்ணத்தில் இருந்த போதிலும், அவை திடீரென்று வெளியே செயல் முறையில் வந்துவிடு கின்றன. இன்னும் சில சீர்திருத்தங்கள், குறைந்தது மூன்று தலை முறைகளுக்குப் பிறகுதான் நடைமுறையில் வரக்கூடியனவாயிருக் கின்றன. இவை சம்பந்தப்பட்ட ஜனங்களுடைய பழக்க வழக்கங் கள் மாறி, புதிய பழக்க வழக்கங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள அதிக காலமாகிறது; இவற்றையும் அவர் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார். அவரிடத்தில் இன்னுமொரு விசேஷமென்ன வென்றால், ஏதாவதொரு சீர்திருத்த முறையை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று முடிவு செய்துவிடுவாரானால், அதற்கு முன்னர் ஒழுங்கான ஒரு தாபனத்தை அமைத்து விடுகிறார். எந்தெந்தத் துறையில் அவர் இதுகாறும் மகத்தான வெற்றியடைந்திருக்கிறாரோ அவற்றைப் பற்றிச் சரித்திரம் தீர்ப்புக் கூறுகிறபோது, அவரை ஒரு பெரிய மகான் என்றே அழைக்கும். அப்படியே, அவர் இப்பொழுது தொடங்கியிருக்கும் துறைகளிலும் ஒரு மகானாக இருப்பார். அவர் விசேஷமாகக் கவனஞ் செலுத்தி வேலை செய்த சமுதாயப் பிரச்னைகள் வருமாறு - (1)வறுமை (2)வேலையில்லாத் திண்டாட்டம் (3) தனிப்பட்ட நபர்கள், ஜாதியினர், தேசத்தினர் ஆகிய இவர்களுக்கிடையே ஏற்படுகிற பலாத்காரம் (4)சமுதாயப் பிரிவுகளிடையே ஏற்படுகிற ஒற்றுமையின்மை, பிணக்கு முதலியன, (5) கல்வி (6) சுகாதாரம், ஆகார நியமம், விவசாயச் சீர்திருத்தம் முதலியன. இவை யாவும் முக்கியமான பிரச்னைகள் என்பதை யாரும் அங்கீகரிப்பர். இவற்றைக் கீழ் வரிசையிலிருந்து கவனிப்போம். பொதுஜன சுகாதார விஷயமாக நாம் ஏதேனும் பலன் தரக் கூடிய நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் ஜனங்களுடைய தரித்திரம் தொலைய வேண்டுமென்று காந்தியடிகள் கூறுகிறார். இருந்தாலும், அவர், தமது ஆசிரமத்தில், சாதாரண விவசாயிகளும் அநுஷ்டிக்கக்கூடிய சில சுகாதார முறைகளைக் கையாண்டுவருகிறார். இது விஷயமாகப் பல தொண்டர்கள் பயிற்சி செய்விக்கப்பட்டு அநேக இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பலவகுப்பினர் பிரிந்து நிற்கக் கூடாதென்றும், அவர்கள், தங்களுடைய வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமைப்பட வேண்டுமென்றும் காந்தியடிகள் கூறி வருவதோ டல்லாமல் இது விஷயத்தில் - சிறப்பாக ஹரிஜன சீர்திருத்த விஷயத் தில் அதிகமான முன்னேற்றத்தையும் அடைந்திருக்கிறார். ஜனங் களே வலிய வந்து இந்த மாதிரியான ஒற்றுமை முயற்சியில் ஈடு படுவதை நான் வேறெந்த நாட்டிலும் பார்த்ததில்லை. ஹிந்து முலீம் பிணக்கு இருக்கிறதே, அஃது, அந்நிய அரசியல் சக்தி களினால் ஏற்படுவது; அதைக் காந்தியடிகளோ வேறு யாரோ தடைப் படுத்த முடியாது. ஆனாலும் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டால், இந்தப் பிரச்னை தானாகத் தீர்ந்துவிடும். அப்படித் தீர்ந்து போவ தற்குக் காந்தியடிகளின் முறைதான் முக்கிய காரணமாயிருக்கும். குழந்தைகளுக்கு போதிக்கப் பெறும் கல்வியானது, ஏதேனும் ஒரு வகைக் கைத் தொழிலை மையமாகக் கொண்டு தான் இருக்க வேண்டு மென்று சமீபத்தில் காந்தியடிகள் ஒரு திட்டம் தயாரித்திருக் கிறார். எதிர் காலத்தில் ஏற்படக் கூடிய ஒரு பொருளாதார நெருக்கடியை உத்தேசிக்கையில் இந்தத் திட்டம் அதிகமான நன்மையைப் பயக்கும். இதன் மூலம் பிள்ளைகள், தங்கள் படிப்புக்கு வேண்டிய பணத்தைத் தாங்களே சம்பாதித்துக் கொள்வார்கள். மற்றும் அரசாங்க உதவி இல்லாமலே, குறைந்த செலவில் ஜனங் களுக்குக் கல்வி வசதிகள் உண்டாகும். தவிர, வாழ்க்கையை அநுசரித்ததாகவும் கல்வி முறை இருக்கும். காந்தியடிகளின் இந்தக் கல்வித் திட்டத்தினால் குழந்தைகளின் மனதுக்கும், கைக்கும், கண்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் ஏற்படும். ஹிம்ஸை, அதற்கான பரிகாரம் என்னும் விஷயங்களைப் பற்றி நான் ஏற்கனவே என்னுடைய அஹிம்சையின் சக்தி என்ற நூலில் விவரித்திருக்கிறேனாதலால், அதைப் பற்றி இங்கு மறுபடியும் நான் விதரிக்க விரும்பவில்லை. காந்தியடிகளுடைய அஹிம்சை முறை, இந்தியாவுக்கு இன்னும் சுதந்திரத்தை வாங்கிக் கொடுக்கவில்லை யென்பது வாதவம். ஆனால், அரசியல் விஷயமாகவும் சமுதாய விஷய மாகவும் இதுகாறும் ஜனங்கள் கொண்டிருந்த மனப்போக்கை அவருடைய அஹிம்ஸை முறை மாற்றி யிருக்கிறது. ஜனங்களிற் பெரும்பாலோருக்கு இப்பொழுது, தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் போய்விட்டது. அதற்குப் பதிலாக அவர்களிடத்தில் தன்னம்பிக்கை, அரசியல் விஷயங்களில் ஒரு வித உற்சாகம், தங்கள் உற்சாகத்தைப் புதிய மாதிரி வெளிக் காட்டுகிற சக்தி முதலியவை யெல்லாம் உண்டாகியிருக் கின்றன. காந்தியடிகளின் முறையினால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்குமென்று நான் உறுதியாக நம்பு கிறேன்; அது மட்டுமல்ல; உலகப் போக்கையே அது மாற்றக்கூடும். வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் காந்தியடிகள் என்ன பரிகாரம் கூறுகிறார்? கையினால் நூல் நூற்றல், கையினால் நெசவு நெய்தல் ஆகிய தொழிலையும் இன்னும் இதர கைத்தொழில்களையும் புனருத்தாரணத்திற்குக் கொண்டுவர வேண்டு மென்கிறார். இந்தப் பரிகார முறையை, மேனாட்டார் பலரும் மேனாட்டு முறையில் கல்வி பயின்ற இந்தியர் பலரும் குறை கூறுகின்றனர். ஆகையால் மேனாட்டாருடைய போக்கை வைத்துக் கொண்டே, இந்த முறை எவ்வளவு உசிதமானதென்பதை இங்கு சிறிது எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு வருஷத்தில் பெரும் பாகம் வெயில் காலம்; சிறு பாகம் மழை காலம். இதனால், விவசாயிகள், வருஷத்தில் சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரையில் எவ்வித வேலையுமின்றிச் சும்மாயிருக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். இந்தியாவில் விவசாய ஜீவனம் நடத்துகிறவர்கள் சுமார் பன்னிரண்டு கோடி பேர். இத்தனை பேரும் ஒரு வருஷத்தில் சில மாத காலம் வேலையில்லாம லிருப்பார் களானால், இஃது எவ்வளவு பெரிய விஷயம்? இதனால் தேசப் பொதுவுக்கு ஏற்படுகிற அழிவும் இழிவும் மகத்தானது. மேனாட்டி லிருந்து மில் துணிகள் வருவதற்கு முன்னர், விவசாயிகள், தாங்கள் சும்மாயிருந்த காலத்தில் தங்களுக்குத் தேவையான துணிகளை உற்பத்தி செய்துகொண்டிருந்தனர்; வேறு பல கைத்தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். இப்பொழுதுகூட இந்தியாவில் உபயோகிக்கப்படுகிற மொத்தத் துணியில் மூன்றில் ஒரு பாகம், கைத்தறியிலிருந்து உற்பத்தியானதுதான். இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாகாணங் களிலும் பருத்தி விளைகிறது. இதற்கு வேண்டிய கருவிகளோ, விவசாயிகளுடைய பொருளாதார நிலைமைக்குத் தகுந்தாற்போல், சொற்பச் செலவில் கிடைக்கின்றன. கைத்தொழில் விஷயத்தில் அவரவர் களுக்கு ஏற்பட்டிருந்த திறமையானது இன்னும் குன்றிப் போகவில்லை. மில் துணியைவிட, கை நெசவுத் துணி அதிக விலையுமில்லை. தாங்களே நூல் நூற்று, அந்த நூலைக்கொண்டு துணி நெய்து கொண்டிருக் கிறவர்களுக்கு இன்னும் குறைவான விலையே ஆகிறது. இந்தியாவில் பெரும் பாலும் ஒரு மனிதனுடைய ஜீவனத்திற்கு என்ன செலவா கிறதோ அதில் ஆறில் அல்லது ஐந்தில் ஒரு பாகம் அவனுடைய துணிக் கென்று ஆகிறது. எப்படியாவது ஜீவனத்தை நடத்திக்கொண்டு போக வேண்டுமேயென்கிற மாதிரி வாழ்கிற ஜனங்களுக்கு அதிக சிரம மில்லாமல் அவர்களுடைய வாழ்க்கைச் செலவில் பத்தில் ஒரு பாகம் மிஞ்சினால் அது பெரிய விஷயந்தானே; ஜீவாதாரமான விஷயந்தானே. இந்த மாதிரியான கைத் தொழில்கள், பொருளாதார அமிசத்தில்மட்டும் லாபகரமானவையல்ல; நீண்ட காலம் வேலை யில்லாமலும் வறுமையினாலும் வாடிக்கிடக் கிறவர்களுக்கு, நம்பிக்கை, தானே ஒரு காரியத்தை ஆரம்பித்துச் செய்கிற ஆற்றல், சுயமரியாதை, உறுதிப்பாடு முதலிய குணங்களை அளிக்கக்கூடியவை. மனச்சோர்வினால் பைத்தியம் போல் அலைகிறவர்களுக்குக் கைத் தொழில்கள், நல்ல குணத்தைக் கொடுக்கின்றன வென்று தற்கால மனோ வியாதி நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்தியாதி காரணங்களி னால், இந்தியாவில் வேலை யில்லாத் திண்டாட்டத்தைப்போக்க காந்தியடிகள் கையாளும் பரிகார முறை கள், முதலில் தோன்றுகிற படி அவ்வளவு மோசமானதல்ல வென்பது நன்கு புலப்படும். இருந்தாலுங்கூட கைத்தொழில்களைப் புனருத்தாரணம் செய்வது என்ற இந்த எண்ணத்தையே பலர் பரிகசிக்கின்றனர். இது, பின்னுக்குப் போவதாகுமென்றும், காலப் பொருத்தமற்றதென்றும், முன்னேற்றத்தைத் தடுப்பதாகுமென்றும், உழைப்பைப் பலரும் பகிர்ந்துகொள்ள வேண்டு மென்ற தத்துவத்தை ரத்து செய்வதா யிருக்கிறதென்றும் இவர்கள் கூறுகிறார்கள். எந்த ஒருவித கைத்தொழில் திட்டமும், அந்தத் திட்டத்தின்கீழ் வாழ்கிற பெரும் பாலான ஜனங்களுக்குப் பயனளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி அந்தத் திட்டம் பலருக்கு நன்மையளிக்கவில்லை யானால், அவர்கள், தங்களுடைய பொருளாதார நிலைமையை உயர்த்திக் கொள்ளக் கூடிய திட்டத்தைக் கையாளுவார்களானால், அஃது அவர்களுடைய குற்றமாகாது. குறிப்பிட்ட ஒரு தொழில் திட்டம், லட்சக்கணக்கான ஜனங்களுக்கு, அவர்களுடைய லௌகிகத் தேவை களைப் பூர்த்தி செய்யாமற்போனால் அஃது - அந்தத் தொழில் திட்டம் - அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு முட்டுச் சந்துதான். இந்த முட்டுச் சந்திலிருந்து வெளியேறுகிற ஒரு மார்க்கத்தை - தங்களுடைய நோக்கப்படி செல்லக்கூடிய ஒரு மார்க்கத்தை - கண்டுபிடிக்காம லிருந்தால் அஃது அவர்களுடைய முட்டாள்தனமாகும். அவர்களைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய பொருளாதாரக் கடியாரம் நின்று விட்டது. அப்படியிருக்க, அவர்கள், தங்களுடைய லௌகிகத் தேவை களைப் பூர்த்தி செய்யக்கூடியமாதிரியான ஒருதொழில் முறையைக் கையாளுவார்களானால், அது, கடியாரத்தைத் திருப்பி வைத்ததாகாது; அதாவது அவர்களுடைய பிற்போக்கைக் காட்டுவதா காது. அதற்கு மாறாக, முற்போக்குக் கடியாரத்தை ஓடச் செய்வதாகும். காலத்தின் முற்போக்கை, நவீன யுத்த முறைகள் தான் கை யந்திரங் களைக் காட்டிலும் அதிகமாகத் தடை செய்கின்றன. ஆயினும் உலகத்து ராஜதந்திரிகள், பெரிய இஞ்சினீர்களுடையவும், படிப்பாளி களுடையவும் அங்கீகாரம் பெற்று யுத்தத்திற்கென்று அதிகமான பணத்தைச் செலவழிக் கிறார்கள். நவீன யந்திர நாகரிகமானது, கைத் தொழில்கள் மட்டும் பெருகியிருந்த காலத்தில் உழைப்புக்கு என்ன மதிப்பு இருந்ததோ அதைக் கேவலப்படுத்தியிருக்கிறது. கைத் தொழிற் காலத்தில் மனிதர் களுக்கிடையே யிருந்த மனோ ஒற்றுமையானது, இப்பொழுது அதிக தூரம் அபிவிருத்தியடையவில்லை. நாம் இப்பொழுது எந்த அளவுக்குப் பிற்போக்கு அடைந்திருக்கிறோ மென்றால் மானிட சமுதாயம் அனைத்தும் ஒற்றுமையுள்ள ஒரு குடும்பம் என்பதையும் இந்த ஒற்றுமையை அநுபவ ரீதியாகக் காண்பிப்பதற் கேற்ற முறைகளையும் கருவிகளையும் நமது தினசரி வாழ்க்கையில் உபயோகிக்க வேண்டுமென்பதையும், நமது மூதாதையர்களும் நாமும் உணராமற்போன அளவுக்குத்தான். கைத் தொழில் முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டுமென்று சொன்னால், உழைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற கொள்கையைக் கைவிடுவது என்பது அர்த்தமல்ல. உண்மையாகப் பார்க்கப்போனால், யந்திர சாதனங்களின் அபிவிருத்திதான், இந்தக் கொள்கையை நழுவ விட்டிருக்கிற தென்று சொல்ல வேண்டும். இந்த யந்திர அபிவிருத்தி காரணமாக, இப்பொழுது பொருள்கள் விற்பனையாகக் கூடிய சந்தைகள் குறைந்துவிட்டன; தொழிலாளர் களுக்கு, அவர்களுடைய ஜீவனத் திற்குத் துணையாயிருக்கக் கூடிய உபதொழில்கள் குறைந்துவிட்டன; தொழிலாளர்களுக்கும் முதலாளி களுக்கு முள்ள ஒற்றுமை குறைந்து விட்டது. உழைப்புச் சக்தி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டுமென்ற தத்துவத்தில் சில சாதகங்கள் இருக்கின்றன வென்பது வாதவம். ஆனால் அந்தச் சாதகங்கள் இப்பொழுது குறைந்துவிட்டன. காந்தியடிகளின் திட்டமானது, யந்திரங்களையோ, விஞ்ஞான சாதிரத்தையோ நிராகரிக்கவில்லை. ஆனால், வேலையில்லாதவர் களுடைய உழைப்புச் சக்தியை, சிறுதொழில்களின் மூலம் உபயோகத் திற்குக் கொண்டு வருகிறது. மற்றும், இந்தத் திட்டப்படி, குறிப்பிட்ட சில கைத்தொழில்கள் ஏன் வற்புறுத்தப்படுகின்றன வென்றால், அவை ஜனங்களிற் பெரும்பாலோருடைய பொருளாதார, சமுதாய நிலைமை களை அநுசரித்ததாயிருக்கின்றன. மற்றும், குறிப் பிட்ட மேற்படி கைத் தொழில்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதால், ஏற்கனவே, சிக்கலாயுள்ள பொருளாதார, சமுதாயப் பிரச்னைகள் இன்னும் அதிகமான சிக்கல்களுக்குட்பட மாட்டா. இப்பொழுது உலகத்தின் எல்லா நாடுகளிலும், அரசாங்கத் தின் பணமானது, ராணுவத் தேவைகளுக்கென்று அதிகமாகச் செலவழிக்கப் படுகிறது. இதனால், ஜனங்களுடைய வாழ்க்கை அந்தது தானாகவே குறைந்துபோகிறது; மற்றும் பொதுஜனங் களுக்குபயோகமாயுள்ள கல்வி, சுகாதாரம் முதலிய விஷயங்களில் செலவழிக்கப்படுகிற தொகையும் குறைந்து போகிறது. பொதுவாக தற்போதைய பொருளாதார முறை கீழ் நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறது. இதன் பலன் என்னவென்றால், மேனாட்டில் சமுதாய வாழ்வானது சீர்குலைந்தும், சிதறுண்டும் போய் வருகிறது; பைத்தியம் பிடித்தல், தற்கொலைகள், குற்றங்கள் முதலியன அதிகரித்து வருகின்றன. மீண்டும் ஓர் உலக யுத்தம் வருமானால், அதற்குப்பிறகு ஜனங்களுக்கு வேலை சம்பாதித்துக் கொடுக்கும் கஷ்ட மானது அதிகரிக்கும். அப்பொழுதுதான், கதர் முதலிய கைத்தொழிற் திட்டங்களின் முக்கியத்துவம் நன்கு புலப்படும். இன்னொரு விஷயத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதாவது எந்தெந்த நாடுகளில் யந்திரத் தொழில்கள் அதிகமாகிக்கொண்டு வருகின்றனவோ அந்த நாடுகளில் ஜனத்தொகையும் சுருங்கிக்கொண்டு வருகிறது. பல அறிஞர்கள் இதைப்பற்றி விதரித்துச் சொல்லியிருக் கிறார்கள். இங்ஙனம் ஜனத்தொகை குறைந்துவருவதனால், பொருளதார சம்பந்தமாக ஏற்படுகிற விளைவுகள், விபரீதமாய் இருக்கும்; உலகத்தையே இது பாதிக்கக்கூடும். இந்தக் காரணத்தினால், பொது வாகக் கைத்தொழில் முயற்சிகளும் சிறப்பாகக் கதரும் மிகவும் உப யோகமாயிருக்கும். இத்தகைய காரணங்களினாலேயே காந்தியடிகள் சமுதாயத்தின் விஞ்ஞானியென்றும், சமுதாயத்தை நிர்மாணஞ் செய்கிறவர் என்றும் நான் உறுதியுடன் கூறுகிறேன். அவர் அடைந்திருக்கிற சித்திகளைப் பார்க்கிறபோது, சமகிருத பாஷையிலுள்ள பழைய வாசகமொன்று என் ஞாபகத்திற்கு வருகிறது. அது வருமாறு:- ஒரு மனிதனுக்கு அதீத மான சில சக்திகள் உண்டாகின்றன. ஏன்? கடினமான காரியங்களை அவன் செய்வதனாலல்ல; பரிசுத்தமான இருதயத்தோடு அந்தக் காரியங்களை அவன் செய்வதனால்தான். இதனால் என்ன தெரிகிற தென்றால், உயர்ந்த நோக்கமும், நிலைத்தகொள்கையும், பக்தி சிரத்தையும் ஒருவருக்கு இருந்தால், அவர் அதியற்புதமான காரியங் கள் பலவற்றைச் செய்யலாம். காந்தியடிகளை அருளியதற்காக ஆண்டவனுக்கு வந்தனம். * * * தற்கால புருஷர் கெரால்ட் ஹெர்ட் (ஹாலிவுட், அமெரிக்கா) செல்வம் படைத்திருப்பதுதான் நாகரிகமாயிருப்பதென்று மேனாடு எப்பொழுது எண்ணத்தொடங்கியதோ, அப்பொழுது, அஃது என்ன கற்பனை செய்து கொண்டதென்றால், தன்னுடைய யந்திரத் திறமை அதிகமாக ஆக, தன்னுடைய நலனும் அபிவிருத்தி யடையும், தன்னுடைய செல்வமும் நிலைத்துநிற்கும், எல்லோருக்கும் அதிகமான பொருள்கள் கிடைக்கு மாதலால் எல்லோரும் சமநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பர், முன்னேற்றமும் எல்லையற்றதாயிருக்கும் என்றுதான். ஆனால் மேனாட்டினுடைய இந்த எண்ணம் வரவர மறைந்து வருகிறது. எல்லா மனிதர்களும் ஒரே நிலையிலுள்ளவர்களென்று இப்பொழுது சொல்வதற்கில்லை. அவரவர்களிடத்தில் அமைந்திருக்கும் சக்திகளுக்குத் தகுந்தாற்போல் பெரிய மனிதர்களும் சிறிய மனிதர் களும் இருக்கிறார்கள். நாகரிகமென்பது முன்னேற்றமடையும் சக்தி யுடையதென்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. அஃது அழிந்து போகவும்கூடும்; அல்லது சிருஷ்டிக்கிற சக்தியுடைய ஒரு மகானால் ஊக்கப்பெற்று புதிய மாறுதல்களையுமடையும். காலந் தாழ்ந்து இந்த நினைவுகள் தோன்றினவென்று சொல்லமுடியாது. எல்லையற்ற சுகம், சௌக்கியம், ஐசுவரியம் முதலியன நிரம்பிய ஓர் எதிர்காலத்தைத் தான் சிருஷ்டித்துக்கொண்டு வருவதாக மேனாடு கருதிக்கொண்டு வந்தது. ஆனால் உண்மையில் அஃது அடிப்படை யான பிரச்னையை தீர்த்துக் கொள்ளத் தவறிவிட்டது. அதற்கு மாறாக, மேற்படி பிரச்னையின் சிக்கலை அதிகரித்துக் கொண்டு விட்டது. அந்தப் பிரச்னையென்ன வென்றால், சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பதற்கு அடிப்படையான நியதி என்னவென்பது தான். பலாத்காரத்தைக் கொண்டுதான் அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட முடியும் என்றால், அந்த அமைதியையும் நீதியையும் காப்பாற்றுகிறவர்களாலேயே அஃது அழிக்கப் படக்கூடாது. பெரிய பெரிய சீர்திருத்தவாதிகளுடைய கவனத்திற்கு இந்தப் பிரச்னை வந்திருக்கிறது. யேசுநாதர், வாளாயுத மேந்த மறுத்து விட்டார். ஆனால் அவருடைய சிஷ்யர்கள், அரசாங்க அதிகாரம் கிடைத்தவுடன் வாளேந்தி விட்டார்கள். பிறருடைய மனதை மாற்றி அதன் மூலமாக மதத்தைப் பரப்ப வேண்டுமென்று முகம்மது நபி அவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் அடக்கு முறையின் மூலமாகத்தான் அது வேகமாகப் பிரசாரம் செய்யப் பெற்றது. யுத்தம் என்பது தர்மமா, அதர்மமா என்கிற பிரச்னை ஒரு பக்கமிருக் கட்டும்; அது ஒன்றினாலேயே காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியுமா வென்றால் இல்லை. அது திறமையுள்ள ஓர் உபகரண மாகாது. யந்திரங்கள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப் படக் கண்டுபிடிக்கப்பட யுத்த தளவாடங்கள், எந்த நோக்கத்தோடு உற்பத்தி செய்யப்படுகின்றனவோ அந்த நோக்கமும் விலகி விலகிப் போகிறது. எவனொருவன் தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ஓர் அபிப்பிராயம் கொள்கிறானோ அவன் எப்பொழுதும் அந்த அபிப் பிராயமுடையவனாகவே இருப்பான் என்கிற பிரச்னை இங்கு எழவில்லை. யுத்தமானது யாரையும் குருட்டுத் தனமாகத் தாக்குகிறது. யுத்த ஆரம்பத்தில் சம்பந்தப்படாதிருந்தவர் களையும் அது முதலில் தாக்கி பின்னர் அவர்களையும் தன்னுள் இழுத்துக்கொண்டுவிடு கிறது. யுத்தம் என்பது ஒரு கொள்கையை திரப்படுத்துவதற்கான கருவியல்ல; அது சமுதாயத்தின் நோய். எனவே, சிருஷ்டிக்கும் சக்திபெற்ற மகான்கள் சிலர், தங்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு சாதனத்தை - சரியானதும் நேர்மையானதும், பயன்தரத்தக்கதுமான ஒரு சக்தியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். அவர்கள் அப்படி முயற்சி செய்துகொண்டிருந்த போது என்ன செய்கிறோம் என்பது தெரியாமலே அந்த முயற்சி யில் ஈடுபட்டவர்கள். இப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் இக்னேஷியலாயலா என்பவர்.1 இவர் யேசுநாதர் சங்கம் என்ற தொரு தாபனத்தை ஆரம்பித்தார். மனோ பரிபக்குவம் அடைந்த பலர்இந்தச் சங்கத்தில் அங்கத்தினர் களாகச் சேர்ந்தார்கள். இவர்கள் அறிவுத்துறையில் மட்டுமல்ல, மனோதத்துவ சம்பந்தமான விஷயங் களிலும் பயிற்சி செய்யப்பெற்றார்கள். கட்டுப்பாடு, மேலதிகாரி களுக்குக் கீழ்ப்படிதல் என்பனபோன்ற விஷயங்களில் இவர்கள் ராணுவ வீரர்களைப் போலவே பழக்கப்படுத்தப்பட்டார்கள். குடும்பம், மனைவி, மக்கள், ஆதி, அந்தது முதலிய புற இன்பங்களை இவர்கள் துறக்கவேண்டியவர்களானார்கள். இங்ஙனம் பல வகையிலும் பண் படுத்தப்பெற்ற இவர்கள், ஒரு மேலதிகாரியின்கீழ் உலகத்தின் பல பாகங்களுக்கும் கிறிதவ தர்மத்தின் பெருமையை - எந்தக் கிறிதவ தர்மமானது சீர்திருத்த இயக்கத்தின்பயனாகச் சோபை யிழந்து கிடந்ததோ அந்தக்கிறிதவ தர்மத்தை - கத்தோலிக்க தர்மத்தை - நிலைநாட்ட அனுப்பப் பெற்றார்கள். இதற்குப் பிறகு, ஆயுத பலத்தைத் துணையாகக் கொள்ளாத மற்றோர் இயக்கம் தோன்றியது. இது புதிய மதம் ஒன்றினையும் காண வேண்டுமென்ற நோக்கங்கொண்டு எழவில்லை. ஆனால் பலாத்காரத்தின் துணைகொண்டே அதுகாறும் தீர்க்கப்பட்டு வந்த சில பிரச்னைகளுக்கு பலாத்காரமற்ற முறையில் பரிகாரங் காண வேண்டுமென்ற நோக்கத் தோடு எழுந்தது. இந்த இயக்கம் தோன்று வதற்கு முன்னர், பைத்தியக் காரர்கள் பலாத்காரத்தின் மூலமே சிகிச்சை செய்யப்பட்டு வந்தார்கள். இந்த இயக்கத்தினர் தோன்றி அன்புமுறையில் சிகிச்சை செய்யவேண்டு மென்பதை வற்புறுத்தினர். இஃது அஹிம்சைக்கு ஒரு வெற்றி. இந்த இயக்கத்தினர் கையாண்ட முறைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு தான், பின்னர் காட்டு மிராண்டி ஜாதிகளை நாகரிகப்படுத்துவது, காட்டு மிருகங்களைப் பழக்குவது, குற்றவாளிகளைச் சீர்திருத்துவது முதலிய விஷயங் களிலும் புதிய முறைகள் கையாளப்பட்டன. இப்படிப்பட்ட இயக்கங்களெல்லாம் பலாத்காரத்திற்கு இசைந்து வராத குறிப்பிட்ட சில மனிதர்களுக்கும், குறிப்பிட்ட சில பிராணி களுக்குமே நன்மை பயப்பதாயிருந்தன. க்வேக்கர்கள்- அதாவது யுத்தம் செய்வது அநியாயமானது; சமுதாய நடவடிக்கைகள் யாவும் அன்பு முறையிலேயே நடைபெற வேண்டும் என்பன போன்ற கொள்கை யுடையவர்கள்-போன்றார் சிலர் ஆங்காங்கு பலாத்காரத் திற்குப் பரிகாரம் தேடி வந்தார்கள். ஆனால் தங்களுடைய பரிகார முறைக்கும், பரிகாரத்திற்குக் காரணமாயுள்ள பிரச்னைக்கும் என்ன பொருத்தம் என்பதை அறியாமலே அவர்கள் முயற்சிகளைச் செய்து வந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படியிருக்கையில், யுத்த முறைகள், கோரமான அழிவைத் தரத்தக்க, இதற்குமுன் கண்டிராத உச்ச நிலையை அடைந்து விட்டன. இவை பயங்கரத்திலும், பயனளிக்காத தன்மையிலும் அதிமாகிக் கொண்டு வரவர, இவற்றிலிருந்து விடுதலையடைய மனிதர்கள் தவறி விட்டார்கள். இதனால் எது சாதனமாயிருந்ததோ அதுவே லட்சியமாகி விட்டது. அதாவது யுத்தத்தினால் சில லட்சியங்களை யடைவது போய் யுத்தமே லட்சியமாகிவிட்டது. யுத்தம் செய்வது தடுக்க முடியாத ஒரு நிலையில் நிர்ப்பந்தமாகச் செய்ய வேண்டிய தென்பது போய், யுத்தம் செய்வதே ஒரு நன்மையான காரியமென்றும், அது போற்றத்தக்க விஷயமென்றும் எல்லோரும் சொல்லத் தலைப்பட்டுவிட்டார்கள். எனவே இரண்டு விதமான பைத்தியக் காரத்தனங்கள் உலகத்தில் நிலவியிருந்தன. முதலாவது கொலைக் கருவிகளின் முன்னர் சுதந்திர மனிதர்கள் கண்மூடித்தனமாகத் தலை வணங்கி வந்தார்கள். இரண்டாவது ஒரு சிலருடைய ஆணைக்கு அஞ்சி நடந்து வந்தார்கள். மேற்கண்ட கொலைக் கருவிகளைக் காட்டிலும் இந்த ஒரு சிலருடைய ஆணைக்குக் கட்டுப் பட்டு நடப்ப திருக்கிறதே, அது மகா பயங்கரமானது. இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப் பத்தில், அந்தக் கொலைக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்களைப் பார்க்கிலும் அதி புத்திசாலித்தனமும், தங்களுடைய ஜனங்களைப் பரபரம் கொலைக்குட்படுத்தி வைக்கிறார்களே அப்படிப்பட்ட தலைவர் களைக் காட்டிலும் அதிகமான சக்தியும் உடைய ஒரு மனிதர் தேவையா யிருந்தது. இப்படிப்பட்ட மனிதர் மோ.க.காந்தி என்பதைச் சரித்திரக் காரர்கள் அங்கீகரிப்பார்கள். இதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் இதற்கு முன்னில்லாதவாறு பிரமிக்கத்தக்க முறையில், குழப்பமான நிலைமையில் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியா, இந்த மனிதரை ஐரோப்பாவுக்கு விரோதமாக (ஐரோப்பா வினிடம்) தமது மகத்தான சக்தியைக் காட்டும்படி ஆப்பிரிக்காவுக்கு அளித்தது. அவருடைய - காந்தியடிகளுடைய அஹிம்ஸா தர்ம மானது, யாருடைய நலனை முன்னிலைப்படுத்திப் பேசுகிறதோ அவர்களுடைய துன்பத்தைப் பரிகரிப்பதோடல்லாமல், தன்னுடைய எதிரிகளுக்கும் அறிவு புகட்டும் தன்மை வாய்ந்ததாயிருக்கிறது. இந்தத்தன்மை, அதன் சுபாவத்திலேயே இருக்கிறது. இந்தியாவில் தோன்றிய இந்த அஹிம்ஸா முறை, முதன் முதலாக ஆப்பிரிக்க கண்டத்தில் பிரயோகம் செய்யப்பட்டது மிகவும் சரிதான். ஏனென் றால், இது மானிட சமுதாயமனைத்திற்கும் பொதுவானது. மற்றும் மானிட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு ஜாதியாரையும் மற்றொரு ஜாதியாரையும் ஒன்று சேர்த்து வைக்கக்கூடியதோடு மட்டுமல்ல; மனிதனையும் அறிவுள்ள எல்லா ஜீவராசிகளையும் ஒன்று பிணைக்குந் தன்மையது. எந்த இந்தியா, இந்த மகா புருஷரை - காந்தியடிகளை (தென்னாப்பிரிக்காவுக்கு) அனுப்பியதோ, அந்த இந்தியாவே பின்னர், அவருடைய அடுத்த பெரிய போராட்டத்தின் மத்தயதலமாய மைந்தது. இந்தப் போராட்டத்திற்காக அவர் தமது வாழ் நாளின் முக்கியமான பாகத்தைச் செலவழித்திருக்கிறார். மானிட சமுதாயத்தைச் சேர்ந்த பல பிரிவினரும், அவர்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்சனை களும் அங்கு இந்தியாவில் இருக்கின்றன. இப்படியிருக்கிற ஒரு நாடு, தன் சுதந்திரத்தையடைவதற்கு, அநுபவ பூர்வமாக எப்படிப் பக்குவ படுத்திக் கொள்ள வேண்டு மென்பதற்கான ஒரு முறையை - இந்தியாவில் தோன்றிய எல்லா மகான்களும் பரம்பரையாகச் செய்தருளியிருக்கிற உபதேங்களின் சாரத்தை - காந்தியடிகள் காட்டியிருக்கிறார். எதிர் காலத்தில் என்ன நடக்கு மென்பதை இப்பொழுது நாம் பார்க்க முடியாது. ஆனால் கால தேசத்தையொட்டி இது மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அதாவது வருங்காலத்தில், சிறப்பாக இந்தியாவில் ஜீவசக்தி களுக்கும் அழிவுச் சக்திகளுக்கும் கடைசிப் போராட்டம் நடைபெறக் கூடும். இதில்ஒரு புறம் அழிவுச் சக்திகள், கோழைகளுக்கும் பணக்காரர் களுக்கும் தாங்கள் தான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று சொல்லும். மற்றொரு புறத்தில் ஜீவ சக்திகளாகிய நிர்மாண சக்திகள், பயிற்சி பெற்றவர்களும் ஒழுங்கு பட்டவர்களும் விஷயந் தெரிந்தவர்களும், மானிட சமுதாயத்தைக் காப்பாற்றக் கூடியவர்களுமான ஒரு கோஷ்டியினர் தோன்றி, மனிதர் களுடைய சொத்துக்களுக்கு மட்டுமல்ல, மானிட ஜாதிக்கே அழிவு ஏற்படாதிருக்கிற மாதிரியான ஒருவெற்றியை யளிக்க முயற்சி செய்வார்களென்று சொல்லும். இந்தப் போராட்டம் எப்படி முடியும் என்பதைப் பற்றி நாம் ஒன்றுஞ் சொல்ல முடியாது. ஏனென்றால் வெற்றி நமது கையில் இல்லை. ஆனால், வெற்றியேற் பட்டாலும் தோல்வி யேற்பட்டாலும் ஒன்று மட்டும் நாம் கூற முடியும். மானிட ஜாதியின் ஹிதத்தைக் கோருகிறவர்களுக்கு இந்த மார்க்கந்தான் -இந்த ஒரே மார்க்கந்தான் அதாவது அஹிம்ஸா மார்க்கந்தான் உண்டு. அந்த மார்க்கம் இப்பொழுது திறந்திருக்கிறது. அதைத் திறந்து விட்டது யார்? எவர்,தமது வாழ்க்கையின் சிகரத்தை யடைந்திருக் கிறாரோ, எவர், மானிட ஜாதிக்குச் சேவை செய்வதாகிற உச்ச நிலையில் நிற்கிறாரோ அவர்தான், அந்த மகான்தான்; காந்தியடிகள் தான். * * * காந்தி - சத்தியப்பிரகாசம் கார்ல் ஹீத் (தலைவர், இந்திய சமரசக் கழகம், லண்டன்) மானிட ஜாதியின் சரித்திரத்தை நாம் கவனித்துப் பார்ப்போ மானால், சன்மார்க்க போதகர்கள் எப்பொழுதும் மகத்தான போராட்டங்களை நடத்த வேண்டியவர்களாயிருந்திருக்கிறார்கள். நான் ஒரு ஜோதியைப் போல் இந்த உலகில் தோன்றியிருக்கிறேன் என்றார் ஒருவர்1. ஆனால் ஞான விளக்கை யேந்தி வந்தவர்களை ஜனங்கள் சுமூகமாக வரவேற்றது கிடையாது. ஏனென்றால் ஜனங்கள் இருட்டைத்தான் விரும்புகிறார்களே தவிர, வெளிச்சத்தை விரும்பு கிறார்களில்லை. அறியாமை, துவேஷம், அசட்டை மனப்பான்மை முதலிய மேகங்கள் தான் தங்களைப் பாதுகாக்கக் கூடியவை என்று கூட இவர்கள் கருதுகிறார்கள். சன்மார்க்க போதகர்கள் இவற்றை யெல்லாம் கடக்க வேண்டிவர் களாயிருக்கிறார்கள். காந்தியடிகளின் வாழ்க்கையை நாம் பரிசீலனை செய்து பார்த்தோமானால், அறியாமை, துவேஷம் முதலியவற்றைக் கடந்து வந்திருப்பதே அவருடைய சிறந்த குணம் என்பது நன்கு தெரியும். காந்தியடிகள் இந்தியாவிலுள்ள மகான்களில் தலை சிறந்தவராக மட்டும் இல்லை. மானிட சமுதாயத்திலுள்ள எல்லாத் தாராள மனப்பான்மையுள்ளவர்களுக்கும் அவர் ஒரு வழிகாட்டியா யிருக்கிறார். ஏன் இப்படிப்பட்ட மகானாக அவர் இருக்கிறா ரென்றால், அவர் மகத்தான தியாகங்கள் செய்திருக்கிறார்; பெரிய போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தொடர்ந்து பிரார்த்தனை கள் செய்திருக்கிறார்; உபவாசங்கள் பல இருந்திருக்கிறார். இவ்வள வெல்லாம் அவர் செய்யாமலிருந்தால் அவர் ஒரு மகானாக இருந்திருக்க மாட்டார். மோகனதா கரம் சந்த்காந்தி பொறுமையிலிருக்கும் ரகசியத்தை நீண்ட காலத்திற்கு முன்னரேயே கற்றுக் கொண்டு விட்டார். பொறுமை யினால் சாந்தி யுண்டாகும் என்ற தாம ஏகெம்பிஸினுடைய2 வாசகத்தின் உண்மையை அவர் தெரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய அந்தரங்க வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் பொது வாழ்வில் அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சம்பந்தா சம்பந்தங்களையும் கூர்ந்து பார்ப்போமானால், மற்றவர் களுடைய மனக்கிளர்ச்சி அவருடைய ரத்தக் கொதிப்பை அதிகப் படுத்தியிருக்குமே தவிர, அவருடைய பொறுமையை மட்டும் இழக்கச் செய்யவில்லை. எதிரிகளிடத்தில் பொறுமை, அந்நிய அரசாங்கத் தினிடம் பொறுமை, தம்மைப்பார்க்க வருவோரிடம் பொறுமை, சில சமயங்களில் தொந்திரவு கொடுக்கும் தமது சிஷ்யர்களிடத்தில் பொறுமை ஆக எல்லோரிடத்திலும் அவர் பொறுமை காட்டுகிறார். பொறுமையாயிருக்கிற இந்தச் சுபாவம் அவருக்குத் தான் விசேஷமானது. பயங்கரமான பல தவறுகள் இழைக்கப்படுகிற காலத்திலும் ஆவேச மூட்டக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிற காலத்திலும் கடவுளின் யந்திரம் மெதுவாகத்தான் அரைக்கிறது என்ற உண்மையை அவர், தமது அந்தக் கரணத்தில் உணர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட யந்திரமொன்றில் தான் காந்தியடிகள் வேலைசெய்கிறார். தாம் தவறு செய்யாதவர் என்று அவர் எப்பொழுதும் பாசாங்கு செய்ததேயில்லை. தாம் அவ்வப்பொழுது செய்திருக்கிற தவறுகளுக்கு அவர் அவ்வப்பொழுது தைரியத்துடன் பகிரங்கமாகப் பிராயச்சித்தம் செய்து கொண்டிருக்கிறார். என்றாலும் அவர் சத்தியத்தின் உபாசகர். மூன்று வருஷங்களுக்கு முன்அவர் எழுதிய போது, சத்தியம் என்பதைத் தவிர வேறெதுவும் என் கடவுளைச் சரியாக வருணித்துக் காட்ட வில்லை யென்று குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய இந்தக் கடவுள் பக்தியானது, அவரைத் தத்துவ விசாரஞ் செய்து கொண்டிருக்கும்படி விடவில்லை; சேவை செய்வதில்ஒரு பற்றுதலை உண்டு பண்ணி விட்டது. ஒருவன் மதபக்தி யுடையவனாக யிருக்க வேண்டு மானால், தன்னை மறந்து, வாழ்க்கை பூராவும் எல்லா ஜீவராசிகளுக்கும் தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டும். இப்படித் தொண்டு செய்வது ஏதோ மேல்நிலையிலிருந்து கொண்டு கீழ் நிலையிலிருக்கப் பட்டவர் களுக்குச் செய்கிற உபகாரமாயிருக்கக் கூடாது. வாழ்க்கை யென்கிற எல்லையற்ற சமுத்திரத்தில் அப்படியே ஈடுபட்டுப் போய்விட வேண்டும்; ஐக்கியப்பட்டுப் போகவேண்டும். சேவையானது வாழ்க்கையின் எல்லாஅம்சங்களிலும் கலந்ததாயிருக்க வேண்டும். சத்தியமென்பதை அநுபவ பூர்வமான ஒரு விஷயமாகவே அவர் கொள்கிறார். எனவே, காந்தியடிகளிடத்தில் வாழ்க்கையின் பரிபூரணத்து வத்தைக் காணலாம். ஆத்மார்த்த வாழ்க்கையினால் தாம் உயர்ந்தவர் என்று கருதிக் கொண்டு அவர் எப்பொழுதும் ஒதுங்கி யிருக்கவில்லை. அவர் ஒரு மகாத்மாவாக இருந்த போதிலும், ஜனங்களிடத்தில் ஜனங்களுடைய மனிதனாகவே அவர் பழகுகிறார். அவர் தூரதிருஷ்டி யுள்ளவர்; கடவுள் முன்னிலையில் மௌனமாயிருப்பவர்; பணிவு என்பதின் வடிவமாயிருக்கப்பட்டவர்; பிரார்த்தனைக்கும் அத்யாத்ம வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற மகா புருஷர். இப்படி யெல்லா மிருந்தாலும், அதிகமான தேக உழைப்பையுடையவர்; எல்லோரும் எளிதில் காணக்கூடியவர்; எல்லோருடைய அன்பையும் பெறுகிறவர்; நகைச்சுவை நிரம்பியவர். மானிட சமுதாயத்தின் ஆத்மீக, மத, சமுதாய, அரசியல் சச்சரவுகளில் நேரடியாக கலந்து கொள்கிறவர். சில சந்தர்ப்பங்களில் அவரைப் பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவர் எளிய தன்மை வாய்ந்தவர்; ஆத்மத் தெளிவுடையவர். ஏனென்றால் அவர் ஆத்ம பரிசுத்தம் நிறைய அடைந் திருக்கிறார். இன்னும், அவர், தமது, தினசரித் தேவைகளை - அதாவது லௌகிக வாழ்க்கையை - மிகவும் எளிமைப் படுத்திக் கொண்டிருக் கிறார்; அதாவது மிகவும் குறைத்துக் கொண்டிருக்கிறார். இதனால், பலதேசத்துப் பல ஜாதி ஆண்களையும் பெண்களையும் அவர் ஆகர்ஷிக் கிறார். இந்த உலகத்தில், தம்முடையதென்று ஒன்றையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தோரு1வைப் போல், எதனையும் தன்னுடையதென்று சொல்லிக் கொள்ளாமல் எல்லா வற்றையும் அநுபவிக்கிறார். அக லட்சிய மொன்றிற்காக - அதாவது சத்திய சோதனைக்காக - சர்வ ஜீவராசிகளுக்கும் தொண்டு செய்வ தென்கிற நிலையெதுவோ, மேல் நிலைக்கு வர வேண்டு மென்று தீவிர மாகப் பாடுபடும் லட்சக்கணக்கான திரீ புருஷர்களுக்கு எது உயிர் நிலையாயிருக்கிறதோஅதுதான் காந்தியடிகள். தென்னாப்பிரிக்காவில், தமது சகோதர நாட்டாரின் பொருட் டும், தமது ஹிந்து சமூகத்திலுள்ள ஹரிஜனங்கள் என்று சொல்லப்படு கிற தீண்டாதாருக்காகவும், இந்திய மகாஜனங்களுக்காகவும், அவர்க ளுடைய சுதந்திரத்திற்காகவும், பொருளாதாரக் குறைவினாலும், கல்வியின்மையாலும் கஷ்டப்படுகின்ற கிராம வாசிகளின் வாழ்க்கை அந்ததை உயர்த்துவதற்காகவும், மலைப் பிரதேசங்களில் வசிக்கும் காட்டு ஜாதியினருக்காகவும் முலீம் -ஹிந்து ஒற்றுமைக்காகவும் சர்வ ஜாதிகளிலுமுள்ள ஆண், பெண் நலனுக்காகவும், பசுப்பாது காப்புப் போன்ற ஜீவப் பிராணிகளின் நன்மைக்காகவும், அவர் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தவிர, உலகத்தில் பரவியிருக்கிற யுத்த உணர்ச்சி இருக்கிறதே அதனை எதிர்த்துப் போராடுகிறவர் களுக்கு வழிகாட்டி மாதிரியுள்ள சாத்வீக எதிர்ப்பு முறையை சிருஷ்டித்துக் கொடுக்கிற விஷயத்திலும் அவர் போராடியிருக்கிறார். இவை யனைத்திலும் அவர் யாரிடத்திலும் துவேஷம் காட்டியதில்லை. இதனால்தான் இந்தியாவினுடையவும் மானிட சமுதாயத்தினுடைய வும் தொண்டன். என்று அவர் சொல்லிக் கொள்வது நியாயமாகப் படுகிறது. காந்தியடிகள் சத்தியாக்கிரக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பது மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. ஏனென்றால், அவரே ஆத்ம சக்தியின் வடிவமாயிருக்கிறார். அவர், அரசியல் விஷயங் களிலும் சமுதாய விஷயங்களிலும் எவ்வளவு தீவிரமாக ஈடுபட்டு வந்த போதிலும், ஆத்மார்த்தமான மனிதராகவே எப்பொழுதும் இருக்கிறார். இதனால்தான் தற்கால உலகினைப் பார்த்து அறை கூவுகிற மாதிரி பேசுகிறார். இது தான் அவரிடத்தில் காணப்படும் மகத்தான சிறப்பு. இதில்தான் அவருடைய தீர்க்க தரிசன சக்தியின் மதிப்பு இருக்கிறது. அவர் பல தொந்திரவுகள் பட்டார்; சிறை சென்றார்; பரிகாசத்துக் குள்ளானார்; தூற்றவும் பட்டார். ஆயினும், மனித வாழ்க்கை யென்னும் ஏணியிலே மேலுக்கு மேல் சென்று கொண்டிருக்கிறார். மனிதர்களிடத்திலும் எல்லா ஜீவராசிகளிடத்திலும் அவர் காட்டுகிற ஜீவகாருண்யம் காரணமான உலகத்தின் பல பாகங்களிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். ஹிந்து,முலீம், கிறிதுவர்,பௌத்தர், பார்சி, யூதர் முதலிய வேற்றுமைகள் அவர் மனத்தில் எள்ளளவும் இல்லை. எல்லோரும், சத்தியம் என்கிற குடும்பத்தின் நண்பர்கள்; அந்தக் குடும்பத்தின் அமிசங்கள். அந்தச் சத்தியம் என்பது தான் கடவுள். எல்லா ஜீவராசிகளிடத்திலும் அஹிம்ஸையை அடிப்படையாகக் கொண்டு தான் தொடர்பு கொண்டிருக்கிறார். இந்த யுகத்தில், அவர்தான், நாகரிகமுள்ள, மனிதத் தன்மையுள்ள மனிதராக விளங்குகிறார். * * * ஒரு கிறிதவருடைய கண்ணுக்கு - டீபன் ஹாப்ஹவு எம்.ஏ (ப்ராக்போர்ன், ஹெர்ட், இங்கிலாந்து) நம்முடைய மதம் அல்லது தத்துவம், புற விஷயங்களை ஒட்டியிருப்பதாக நமக்கு எவ்வளவு தென்பட்டபோதிலும் சிந்தனா சக்தியும் ஆவலும் உள்ள பிரதி மனிதனும், தான் எந்தச் சுற்றுப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கிறானோ அதிலிருந்து கொண்டே, தன் முன்னர் கிடக்கும் சாதனங்களின் துணை கொண்டு ஒரு தனியுலகத்தைச் சமைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய சேதன உலகத்தில் சில வதுக்கள் இருக்கின்றன. அவற்றை சக்திகள் அல்லது தன்மைகள் அல்லது லட்சியங்கள் அல்லது மனிதர்கள் என்று எப்படி வேண்டு மானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அவை, அந்த வதுக்கள் அல்லது சக்திகள், நமது சுபாவத்தின் மத்தியிலுள்ள நாடிகளை, நமது இருதயத்தை, நமது அறிவை தமது பக்கம் ஆகர்ஷித்துக் கொண்டே அசைத்துக்கொடுக்கின்றன. நாம் நமது சுயநிலையில் இருக்கிற சந்தர்ப்பங்களில் மேற்படி சக்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்றும், அவற்றின் மீது அன்பு செலுத்த வேண்டுமென்றும், அவற்றோடு ஐக்கியப்பட்டுப் போகவேண்டுமென்றும், அற்பமான, முக்கியமில்லாத வெறுப்பாயுள்ள, அசுத்தமான விஷயங்களினின்று விலகிக் கொள்ள வேண்டுமென்றும் ஆவல் கொள்கிறோம். மனிதனுடைய கலை சிருஷ்டிகளிலும் விஞ்ஞான அபிவிருத்தி களிலும் சிலர் ஆகர்ஷிக்கப்படுகிறார்கள். நமது கண் முன்னரோ, அல்லது நூல்களிலோ வருகிற, வாழ்க்கையில் பூரணத்துவம் அடைந் திருக்கும் மகா புருஷர்களின் மகத்துவத்தினால் ஆகர்ஷிக்கப்படு கிறவர் களில் நான் ஒருவன், மற்றும், நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கைச் சக்திகள் இருக்கின்றனவே - அதாவது ஆகாயம், பூமி, மற்ற ஜீவராசிகள் முதலியன - அவற்றின் சுபாவமும் நமது அந்தரங்க சுபாவமும் ஐக்கியப்பட்டுப் போகிற சமயத்தில் உண்டாகும் சாந்தியில் லயித்துப் போகிறவன் நான். இந்த இரண்டுவித அநுபவங்கள், எனக்குக் கடவுள் நம்பிக்கையைத் தீவிரமாக ஊட்டியிருக்கின்றன. இதனால், உருவத்திற்கப்பாற்பட்டதாய் ஆனால் உருவமாய், அருட் பெருக்காய், என்னுடைய அந்தரங்கத்திலும், வெளிப்புறத்திலும் உள்ள பல சக்திகளும் விடுதலையடைய வேண்டுமென்றும் விகாசமடைய வேண்டுமென்றும் முயற்சி செய்து கொண்டிருக் கின்றனவே, அந்தச் சக்திகளின் கேந்திர தானமாய் இருக்கிற ஒரு பரம்பொருளைப் பற்றி அறிய ஆவல் கொள்கிறேன். ஆனால், இதனுடன், விகாரமுடையதாயும் பிணக்குகளை யுடையதாயுமுள்ள இருட் சக்திகள், அழிவுச் சக்திகள் அவற்றிற்குச் சுயமாயமைந்த செயல்களின் மூலம், ஒற்றுமையான வாழ்க்கையை - ரம்யமான வாழ்க்கையை - குலைக்கின்றன வென்பதையும் உணர்கிறேன். இந்தச் சக்திகள் இயற்கையின் வெளித் தோற்றமாயிருக்கின்றன. ஆனால் வீரமுள்ள மானிட ஆத்மாவானது இயற்கையின் விரோதத்தைக் கடந்து செல்லக்கூடியது. அல்லது அதனோடு சமரஸப்படுத்திக் கொண்டு போகக் கூடியது. எனவே இயற்கைக்குப் புறமாயுள்ள இந்த அழிவுச் சக்திகள், மனிதனுடைய இருதயத்திலிருக்கிற - சிறப்பாக என்னுடைய இருதயத்திலிருக்கிற சத்துருக்களைக் காட்டிலும் ஆபத்தானவை. உதவியில்லாமற்போனால், நானும் இந்த அழிவுச் சக்திகளின் முன்னர் கதியற்றவனாகிவிடுகிறேன். .இதனால் எனக்குத் துணையாகவும், நான் முக்தியடைவதற்கும் மற்றொரு மனித சக்தியையோ, அல்லது தெய்வீக சக்தியையோ நாட வேண்டியவனா யிருக்கிறேன். நன்மைகளெல்லாம், அழகெல்லாம் குடிகொண்டிருக்கிற எல்லோருடைய இருதயத்திலும் வீற்றிருக்கும் யேசுநாதருடன் சம்பந்தப்பட்ட ஒரு மதத்தில் நான் பிறந்திருக்கிறேன். என்னுடைய சிந்தனை, பிரார்த்தனை, பரம்பரை பிரபாவம் முதலியன வெல்லாம் சேர்ந்து கிறிதுநாதரைப் போல் வேறு அவதார புருஷன் தோன்ற வில்லை யென்ற நம்பிக்கையை எனக்கு அளித்திருக்கின்றன. மேற்படி தெய்விக சக்தியானது, சிறிது குறைந்த பிரகாசத்துடன் இன்னும் பல மகான்களிடத்தில் விளங்குகிறது. இவர்களிற் பலர் நமது ஞாபகத்தி லிருந்தே மறைந்து போய்விட்டார்கள்; இன்னும் சிலருடைய நினைவு கள், நமது ஜாதியின் சரித்திரத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரகாசத்தில், ஆங்காங்கு சில மறுக்கள் இருக்கலாம். ஆனால் இந்த மறுக்கள், பிரகாசத்தைக் குறைக்க வில்லை. இவர்களனைவரை யும் - இவர்களிற் சிலர் கிறிதுநாதரைத் தங்களுடைய கடவுளாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் - அந்தக் கிறிது நாதரின் தூதர்க ளென்றே நான் கருதுகிறேன். யுகந்தோறும்அவதரிக்கும் இந்த மகா புருஷர்களில் மிகப் பெரியவர், அஹிம்ஸை - சத்தயாகிரகத்தின் தூதராகிய மோகனதா கரம்சந்த் காந்தி என்பது என்னுடைய அபிப்பிராயம். நம்முடைய காலத்தில் தோன்றியுள்ள மகாபுருஷர்களில் அவர் சிறந்தவர் என்பது நிச்சயம். பழைய நம்பிக்கைகள், தரும நியாயங்கள் முதலியன மறைந்து போய்விட்டதனாலும், யந்திர சாதனங்களின் கொடுமை யினாலும், நெறி தவறிச் செல்கிற தொழில் முதலாளிகள், ராணுவ அதிகாரிகள் முதலியவர்கள் விஞ்ஞானத்தைத் தீய வழியில் உபயோகப்படுத்தி வருவதாலும், இவர்களுடைய ஆதிக்கத்தை நாம் ஆதரிப்பதாலும் அல்லது பொறுத்துக் கொண்டிருப்பதாலும், உண்மையின் நல்ல அமிசங்கள் பல இப்பொழுது பலருடைய கவனத் திற்குக் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் உலக சரித்திரத்தி லேயே இதற்கு முன்னில்லாதபடியான ஒரு நெருக்கடி ஏற்பட் டிருக்கிறது. மனிதர் களுடைய பேராசை காரணமாக, நாகரிகமே அழிந்துவிடும் போலிருக் கிறது. மலினமடைந்து போயுள்ள நமது சுற்றுப் புறத்திலிருந்து நாம் விடுதலை பெற்று, உண்மையான வாழ்க்கையை நாட வேண்டுமானால் அஹிம்ஸையும் சத்தியாக்கிரகமுமே சரியான மார்க்கம் என்பதை இக்கட்டுரையில் நான் விளக்கிக்காட்ட விரும்புகிறேன். அப்படி விளக்கிக்காட்டுகிறபோது ஐரோப்பிய இதிகாசத்தில், இந்த அஹிம்ஸை சத்தியாகிரகம் என்னும் லட்சியங்கள் எவ்வளவு தூரம் பிரயோகத்திற்கு வந்திருக்கின்றன, இந்த லட்சியங்களைப் பின்பற்றி யவர்கள் எவ்வளவு தூரம் இழிவு செய்யப்பட்டார்கள், புறக்கணிக்கப் பட்டார்கள் என்பவை களைப் பற்றியும் சிறிது கூற வேண்டியவனா யிருக்கிறேன். இந்தியா, சீனா இவற்றின் அஹிம்ஸை சரித்திரத்தைப் பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது. தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கான பலகொலைக் கருவிகளைத் துரிதமாக உற்பத்தி செய்து கொண்டு வரும் மத்திய ஐரோப்பாவில், ஜெர்மன் சிலீஷியா என்றொரு பிரதேசம் இருக்கிறது. இதில், தொழிற்சாலைகள் பலவுள்ள கோர்லிட் என்றொரு நகரம் உண்டு. இந்த நகரத்திற்குச் செல்லும் ஒரு மோட்டார் பாதையில் சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன்னர்தான் ஓர் உருவச்சிலை தாபிக்கப்பட்டது. மகானும், ஆனால் பலருக்குத் தெரியாத வருமான ஜாகோப் போய்மே1 என்பவருடைய உருவச்சிலை அது. அதன் கீழ் அவருடைய பின்வரும் வாக்கியமே பொறிக்கப் பட்டிருந்தது:- அன்பும் அடக்கமுமே நமது வாளாயுதம். இவற்றைக் கொண்டு,கிறிது நாதருடைய முள் மகுடத்தின் கீழ் நாம் போராடக் கூடும் என்ற வாக்கியத்தையும் கூடச் சேர்த்திருந்தால் நன்றாயிருக்கும். போய்மே ஒரு ஞானி; சத்தியமாகிற கடவுளையே அவர் போற்றினார். ஆத்ம விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கடவுளை அறிய வேண்டு மென்று சொன்னதற்காக அவர், தமது வீட்டிலிருந்து பிரஷ்டம் செய்யப் பட்டார். நூற்றாண்டுகள் கணக் காகத் தொடர்ந்து வந்திருக்கிற ஐரோப்பிய சரித்திரத்தில், இந்த அஹிம்ஸைத் தத்துவப்படி வாழ்க்கையை நடத்தியிருக்கிற வீரமுள்ள பல திரீ புருஷர்களை நாம் பார்த்திருக் கிறோம். அவர்கள், தாங்கள் பிறந்த தேசத்தினுடைய சமுதாய, தேசீய அலுவல்களுக்கு இந்த அஹிம்ஸைக் கொள்கை எவ்வளவு முரண்பாடாயிருக்கிற தென்பதைத் தங்கள் காலத்தில் கண்டார்கள். இருந்தாலும், ஒரு சிலர் தைரியத்துடன், விசுவப்பிரேமை என்பதன் மூலமாகத்தான், சமுதாயத்தைச் சீர்திருத்தி யமைக்க முடியும், தற்போதைய உலகத்திற்கு விமோசனம் அளிக்க முடியும் என்று முழக்கம் செய்தார்கள். அவர்கள் இந்த மாதிரி முழக்கம் செய்வதற்கு முன்னர், மறு உலகத்தினைப்பற்றியே ஜனங்கள் அதிகமாகப் பிரதாபித்து வந்தமையால், இகலோகத்தின் அழிவைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. கிறிதவ நாடு என்று தன்னைச் சொல்லிக் கொள்கிற ஐரோப்பா, மற்றநாடுகளுடன் சேர்ந்து கொண்டு, தற்கொலைக் கொப்பானதொரு பெரிய போராட்டத்தில் முனைந்திருக்கிற இந்தத் தருணத்தில், பலவித ஜாதிப் போராட்டங்களினாலும், மதப் பிணக்குகளினாலும் அல்லலுற்றுக் கிடக்கிற இந்தியாவின்கண், மெல்லிய தேகமுடைய ஒரு ஹிந்து மாஜி வக்கீல், வேறொருவிதமான யுத்தத்திற்காக, சத்தியத்தின் பெயராலும் நீதியின் பெயராலும் ஆயிரக் கணக்கான ஆண்களையும் பெண்களையும் திரட்டத் தோன்றியிருக்கிறார். இந்த யுத்தத்தில் சம்பந்தப்படுகிற போர்வீரர்கள், கொலைக் கருவிகளினால் தங்களை கறைப்படுத்திக் கொள்ளாதவர்கள். ஆத்மசக்தி, அஹிம்ஸை, எதிரிக ளிடத்திலும்அன்பு செலுத்துதல், கடவுளிடத்தில் நம்பிக்கை யோடு கூடிய பணிவு முதலிய ஆயுதங்களினால் தான் இவர்கள் போர் புரிகிறார்கள். ஆம், யேசு நாதருடைய முள்ளினாலாய மகுடத்தையும், துன்பமான சிலுவையையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான் போர்புரிகிறார்கள். துன்பமூட்டுகிறவனையும் துன்பமநுபவிக் கிறவனையும் ஒருங்கே கடவுள் முன்னிலையில் உயர்த்துந் தன்மையன இந்தச் சிலுவையும் மகுடமும் என்ற பூரண நம்பிக்கையுடன்தான் இவர்கள் போரில் இறங்குகிறார்கள். அஹிம்ஸா மூர்த்தியை எந்த ஹிந்துமதம் போஷித்து வருகிறதோ அந்த ஹிந்து மதத்தைப் பக்தியோடு பாராட்டுகிறபோது, கிறிதவ மதபரி பாஷையில் நான் பேசுவதற்காக இந்தியர்கள் என்னை மன்னிக்க வேண்டும். தற்போதைய உலகத்தின் பயங்கரமான தோற்றத்திற்கிடையே, உண்மைதானோவென்று சந்தேகிக்கக்கூடிய மாதிரி அவ்வளவு அழகானதொரு கனவாயிருக்கிறது இந்த அஹிம்ஸை.இந்த அஹிம்ஸை இயக்கம்(தலைவரிடத்திலும் அவரைப் பின்பற்று வோரிடத்திலும் உள்ள குறைபாடுகளினால்) தோல்விகள் அடைந் திருக்கலாம்; முரண் பட்டதாகக் காணப்படலாம். ஆனால், நமக்குக் கிடைக்கும் செய்தி களை நம்புவோமானால், ஜீவசக்தியை அளிக்கக் கூடிய ஒரு பொதுஜன இயக்கத்தின் பரிசோதனை, இதோ, முதன் முதலாக நடை பெற் றிருக்கிறதென்பதை அறிந்து கொள்கிறோம். சில மாதங்களுக்கு முன்னர்தான், மகாத்மா காந்தி (மகாத்மாவென்பது தான். அவருடைய இந்தியப் பெயர்; ஆனால் தாம் மகாத்மா வல்லவென்று அவர் சொல்கிறார்). தமது பழைய தோல்விகளையும், ஆசாபாசங் களையும் மீண்டும் ஒருமுறை ஒப்புக் கொண்டதோடு, எதிர்காலத்தைப் பற்றிய தமது அசையாத நம்பிக்கையையும் தெரிவித்துக் கொண்டார். அவர் எழுதுகிறார்:- இந்தியாவின் பல தீமைகளுக்கு பரிகாரமாக அஹிம்ஸையை அளிக்கும் பொருட்டுக் கடவுள் என்னை ஒரு கருவியாகத் தெரிந்தெடுத்திருக்கிறார். நமது தேசத்தின் தேவைகளை யெல்லாம் இந்த அஹிம்ஸை பூர்த்தி செய்வதோடல்லாமல், இதனைச் சரியாக பிரயோகித்தோமானால், இந்தியாவுக்கு வெளியில் நிகழ்ந்து வருவதும், மேனாட்டை அடியோடு கவிழ்த்துவிடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருப்பதுமான ரத்தம் சிந்துதலைத் தடுக்கக்கூடும்1 அந்நிய ஆதிக்கத்தின் கீழுள்ள ஒரு ஜாதியாரிடையே ஒரு தேசீய இயக்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் சந்தோஷத்தோடும் நம்பிக்கையோடும் கீழ்க்கண்ட வாசகங்களை, தங்களுடைய தினசரி கர்ம சூத்திரங்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களென்று சொன்னால், அந்த இயக்கத்தைப் பற்றி நாம் என்ன சொல்லவிருக்கிறது? இந்த வாசகங்கள், மேற்கண்ட இயக்கத்தின் தலைவருடைய எழுத்துக்களி லிருந்தும், பிரசங்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அஹிம்ஸை என்றால் மகத்தான அன்பு. அது தான் உயர்ந்த நெறி. இதன் மூலமாகவே மானிட சமூகத்தைக் காப்பாற்ற முடியும். எவனொருவன் அஹிம்சையில் நம்பிக்கை கொள்கிறானோ அவன் உயிருள்ள ஒரு கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டவனாயிருக் கிறான். வாய்மொழிமூலமாக அஹிம்ஸையைக் கற்பிக்க முடியாது. நமது மனப்பூர்வமான பிராத்தனைக்கிணங்க, அது நமது இருதயத்தில் கடவுளின் திருவருளால் தூண்டப்படுவது. அஹிம்ஸை, ஒரு பலசாலியினுடைய ஆயுதம்; ஒரு வீரனுடைய ஆயுதம். கடவுளிடத்தில் உண்மையான பக்திகொண்டிருக்கிற எவனும், வாளை உபயோகிக்கும் பலத்தைப் பெற்றவனாயிருந்தும், அதை உபயோகிக்கமாட்டான். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும், கடவுளின் பிம்பம் என்பதை அவன் தெரிந்துகொண்டிருக்கிறான். ரத்தம் சிந்தப்படுமானால், அது நமது ரத்தமாயிருக்கட்டும். பிறரைக் கொல்லாமல் இறந்து போகக் கூடிய ஒரு சாந்தமான வீரத்தை நீ பயிற்சி செய்துகொள். அன்பு , மற்றவர்களை எரிப்பதில்லை; தன்னைத் தானே எரித்துக் கொள்கிறது. மரணம்வரையில் அது சந்தோஷமாகவே துன்பத்தை அநுபவிக்கிறது. மனோவாக்கு காயங்களினால் அது வேண்டுமென்றே யாருக்கும், ஓர் இங்கிலீஷ்காரனுக்கும் தீங்கிழைப்பதில்லை. இந்தியா, தன்னை வெற்றிகொண்டவர்களை அன்பினால் வெற்றி கொள்ள வேண்டும். நமக்கு, தேசாபிமானம் என்று சொன்னால் அது விசுவப் பிரேமை போலத்தான். இந்தியாவின் நன்மைக்காக, இங்கிலாந்தையோ ஜெர்மனியையோ நான் தொந்திரவு செய்ய மாட்டேன். அஹிம்ஸையும் சத்தியமும் பிரிக்க முடியாதன. ஒன்றில்லா மல் மற்றொன்று இருக்க முடியாது. சத்தியத்தைக் காட்டிலும் மேலான கடவுளில்லை. அந்தச் சத்தியத்தை அடையவே நாம் பாடுபட வேண்டும். “கடவுளின் திருவுளப்படி நடக்கிற புனிதமான நமது யுத்தத்தில், காப்பாற்றி வைக்கக் கூடிய ரகசிய மெதுவுமில்லை.; தந்திரத்திற்கு வழியில்லை;அசத்தியத்திற்கு இடமில்லை; சத்துருக் களுக்கு முன்னாடியே எல்லாம் பகிரங்கமாகச் செய்யப்படுகின்றன. சத்தியாக்கிரகமானது, தேக சம்பந்தமான ஆசாபாசங்களை யெல்லாம் அறவே ஒழித்துவிட வேண்டுமென்று சொல்கிறது. ஒரு சத்தியாக்கிரகி, தான் எடுத்துக் கொள்கிற ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், எதிரியின் தேவையென்ன வென்பதைக் கவனிக்க வேண்டும். அவனிடத்தில் எப்பொழுதும் அன்பாகவும் பணி வாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அநீதமான சட்டங் களுக்கோ உத்திரவுகளுக்கோ அவன் கீழ்ப்படியக்கூடாது. ஒரு சத்தியாக்கிரகி, நீதி மார்க்கத்தினின்று பிறழ மாட்டான். ஆனால் எப்பொழுதும் சமாதானத்திற்கு ஆவலுடையவனாயிருப் பான். மற்றவர்களிடத்தில் அவனுக்குப் பூரண நம்பிக்கை இருக் கிறது; எதிர் காலத்தைப் பற்றிய திடமான நம்பிக்கையும் இருக்கிறது: மனித சுபாவத்தின் சாரம் ஒன்று தான். ஆதலால், நம்மீது ஆக்கிரமிக்கிற எவனும், நமது அன்புக்குக் கட்டாயம் இணங்கி வந்து விடுவான். அமைதியுள்ள, உறுதியான, கடவுளுக்குப் பயந்த ஒரு ஜாதியார் முன்னேறிச் செல்வார்களானால் அவர்களை, இந்தப் பூலோகத்திலுள்ள யாரும் தடுக்க முடியாது. உலகத்திலுள்ள எல்லா ஆயுதங்களைக் காட்டிலும், அஹிம்ஸை மிகவும் சக்தி பொருந்தியது. கடவுளுக்குப் பயப்படுகிறவர்கள், மரணத்திற்குப் பயப்பட மாட்டார்கள். நமக்கு, யுத்த களத்தில் வீரத்தைக் காட்டுவதென்பது முடியாத காரியம். ஆனால் அஞ்சாமை நமக்கு அவசியம் தேவை. தேக உபத்திரவங்கள் ஏற்படுமே, வியாதி உண்டாகுமே, மரணம் வருமே, சொத்துக்களெல்லாம் போய் விடுமே, குடும்பத்தை இழந்து விடுவோமே, கீர்த்தி போய் விடுமே என்பன போன்ற பயங்களே கூடாது. இந்த உலகத்தில் நம்முடையது என்று எதுவுமில்லை. அஹிம்ஸைக்கு உண்மையான அடக்கம் வேண்டும்; ஏனென் றால் அது தன்மீது நம்பிக்கை கொள்வதல்ல; கடவுள் மீது நம்பிக்கை கொள்வது. உலகத்தின் செல்வத்தில் அநியாயமான தொரு பாகத்தை நாம் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்கிற வரையில், நம்முடைய சகோதரர்களைச் சுரண்டுவதிலும், அவர்கள் மீது ஆதிக்கங் கொள் வதிலும் நாம் திருப்தியடைகிறவரையில், மேற்கண்ட வாசகங்களை அநுசரித்து நடப்பதற்கு நாம் பயப்படவே செய்வோம். ஆனால் நல்லெண்ணத்துடன் கூடிய மனிதனிடத்திலும் கடவுளிடத்திலும் நம்பிக்கை கொண்டு வாழ்கிற, ஆத்மீய உலகத்தின் உண்மையை நம்பி அதில் வாழ்கிற எல்லா ஆண் பெண்களும் இந்த அஹிம்சை இயக்கத்தைக்கண்டு சந்தோஷமேயடையவார்கள். இந்த இயக்கத்தின் கண் என்ன விதமான குற்றங்களும் குறைபாடுகளும் இருந்த போதிலும், மானிட சரித்திரத்திலேயே முதன் முதலாக இதன் மணிக் கொடியிலேயே ஜீவகளையைக் கொடுக்கக் கூடிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த சத்தியாக்கிரக இயக்கமானது, போதுமான தயாரிப்பு இல்லாத ஜனங்களிடத்தில் சட்ட மறுப்பின் மூலமாகப் பிரயோகம் செய்யப் பட்ட காலை, குறைந்தது இரண்டு தடவை ஆபத்தான ஆத்திர உணர்ச்சிகள் கிளம்பிவிட்டன; பலாத்காரச் செயல்கள் தொடங்கி விட்டன. அப்பொழுது அந்த இந்தியத் தலைவர் - காந்தியடிகள் - யாருக்கும் உண்டாகாத ஒரு மனோ தைரியத்துடன், தாம் செய்தது ஹிமாலயத் தவறு என்பதை ஒத்துக் கொண்டு, சட்ட மறுப்பு போராட்டத்தையே நிறுத்திவிட்டார். இப்படி நிறுத்தியது, அவருடைய கட்சியினருக்கே பிடிக்காமலிருந்தும், அநேகருக்குக் கோபங்கூட உண்டாகியும் அவர் அவற்றைப் பொருட்படுத்தாம லிருந்தார். தீமை, பலாத்காரம், கொடுமை முதலியவற்றை எதிர்த்து நிற்கும் காந்தியடிகளின் திட்டத்தோடு இன்னும் பல திட்டங்களும் ஐக்கியப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு சத்யாக்கிரகி, ஏழை மக்களுடன், தாழ்ந்த வகுப்பாருடன், சிறப்பாக இந்தியாவிலுள்ள தீண்டாதாருடன், தன்னை ஒன்று படுத்திக் கொள்ள விரும்புகிறான். சென்ற சில நூற்றாண்டுகளில், மேனாட்டு நாகரிகமும் அதன் அமைப்புகளும் உலகத்தின் பலபாகங்களிலும் பரவியிருக்கின்றன. ஆனால் இவற்றில், யேசுநாதருடைய உயர்ந்த லட்சியங்கள் ஒரு சிறிதளவே புகுத்தப்பட்டிருக்கின்றன. மேனாட்டு நாகரிகமானது, பலஹீனங்களுக்கும், துர்ப்பாக்கிய சாலிகளுக்கும் ஒடுக்கப்பட்டவர் களுக்கும், நீதி, கருணை, துன்ப நிவாரணம் முதலியவற்றை உதவியது; உண்மைக்கும் யோக்கியப் பொறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தது; உலகாயத நாகரிகத்தில் உழன்று கொண்டிருந்த ஜனங்களிற் பெரும் பாலோரை மேல் நிலைக்குக் கொண்டு வந்தது. இவையெல்லாம் உண்மைதான். ஆனால் இந்தத் துறைகளிலெல்லாம் மேற்கண்ட நாகரிகமானது பூரண வெற்றியடைந்ததென்று சொல்ல முடியுமா? முடியாது. கிறிதவ தர்மங்கள் அடியோடு தவறி விட்டன. உதாரண மாக வேலையில்லாத் திண்டாட்டம், தொழில்போட்டி, யுத்தம் முதலிய வற்றை நம்மால் நிறுத்தவே முடியவில்லை. இப்படி நாம் தவறி விட்டதற்குக் காரணம் என்ன? ஏறக்குறைய எல்லாக் கிறிதவர்களும், பக்தியுள்ள கிறிதவர்கள்கூட, தாங்கள் ஷேமமாயிருக்க வேண்டுமென் பதில் தான் அதிக கவனஞ் செலுத்தினார்கள். வெளி விவகாரங்களுக்கு, ஆத்மார்த்தமல்லாத விஷயங்களுக்கு, குவிந்து கிடக்கும் செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். தாங்கள் சமாதானமாக வாழ்வதற்கு, கடவுளையும் அந்தக் கடவுளால் அருளப்பட்ட ஆத்ம சக்திகளையும் அவர்கள் நம்பவில்லை; கொலைக் கருவிகளையே நம்பினார்கள். நாம் ஒரே சமயத்தில் தெய்வத்திற்கும் செல்வத்திற்கும் சேவை செய்யப் பார்க்கிறோம். ஒன்றுந்தெரியாத, மனப்பிடிப்பு இல்லாத தொழிலாளர் களாலும், ஆத்மாவை அழிக்கக் கூடிய யந்திர வகைகளாலும் உற்பத்தி செய்யப்படுகிற ஏராளமான பொருள்களின் மத்தியில் நாம் வாழ்கிறோம். தீமையிலிருந்தும் ஏழைகளிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள் வதற்காக, நமது இளைஞர்களுக்கு, பிறரைக் கொல்ல, காயப் படுத்த, அழிக்க பயிற்சி அளிக்கிறோம் . நமது பேராசையினாலும், சுயநலத் தினாலும், தேவையி லிருப்பவர்களைக் கூட (ஏழைகளைக் கூட) தீமையாளர்களாக்கி விட்டோம். யேசுநாதர் தமது உபதேசங்களினாலும், தாம் நடத்திக் காட்டிய வாழ்க்கையினாலும், தமது மரணத்தினாலும், இந்தப் போலி நாகரிகத்திற்குப் பரிகாரம் என்னவென்பதை நமக்குத் தேடிக் கொடுத்திருக்கிறார். சுகத்தோடு கூடிய வறுமை வாழ்க்கையிலே, (நிர்க்கதியாக்கிவிடுகிற வறுமை வாழ்க்கையைப் பற்றி அவர் ஒன்றுஞ் சொல்லவில்லை.) எளிய வாழ்க்கையிலே திருப்தியடையுங்கள்; கடவுளின் சம்ரட்சணையிலே அவருடைய திருவருளிலே பூரண விசுவாசம் வையுங்கள்; கடவுள், ஆத்மார்த்த சந்தோஷம், நித்திய வாழ்க்கை ஆகிய இவற்றிலே அதிகமான மதிப்பு வையுங்கள்; எல்லா மனிதர்களையும் உங்கள் சகோதரர்களாகக்கருதுங்கள்; தீமையைப் பொறுமையோடும் அன்போடும் எதிர்த்து நில்லுங்கள்; அநீதியைப் பலாத்காரத்தினால் எதிர்க்காமல், அதற்காக நாமே துன்பத்தை அநுபவிப்பது அவசியமானால் இறந்து போவது என்ற நம்பிக்கையில் உறுதி கொள்ளுங்கள்; இப்படிச் செய்வதால், அநீதி இழைத்தவர் களுடைய மனம் மாறுதலடையும்; இதுதான் கெட்டவர்களை நல்லவர்களாக்கக் கடவுள் காட்டுகிற மார்க்கம் என்று அவர் எல்லா ஆண்களையும் பெண்களையும் பார்த்துச் சொல்லுகிறார். துரதிருஷ்டவசமாக, ஆரம்ப காலத்திலிருந்தே யேசுநாதருடைய சிஷ்யர்கள், தீமையை எதிர்த்துப் போராட இந்த முறைகளைக் கையாளவில்லை. பைபிளின் புதிய வேதாகமத்தில்கூட, சில இடங் களில் தீமைகளுக்குத் தண்டனை விதிக்க வேண்டுமென்ற கொள்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதாகமத்தை எழுதியவர்களிற் சிலர், தனிப்பட்ட கிறிதவர்கள் தீமையைத் தீமையால் எதிர்த்துப் போராடக்கூடாதென்றாலும், கடவுளுக்கும் அரசாங்கத்திற்கும் அதாவது பல கடவுளர்களை வணங்குகின்ற பிரஜைகளைக் கொண்ட அரசாங்கத் திற்கும் - கோபங்கொள்வதும் தண்டனை விதிப்பதும் நியாயமான கடமைகளாகும் என்று கருதி எழுதியிருக்கிறார்கள். மதபீடங்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அப்படியே இதனைக் கிறிதவ அரசாங்கத் திற்கும் மாற்றிவிட்டன. விபரீதமான விளைவு ஏற்பட்டது.கடவுளின் திருக்குமாரராய் அவதரித்த யேசுநாதர், நித்திய நரகம் ஒன்று இருக்கிறதென்ற கொள்கையை வலியுறுத்திப்போனாரென்று சொல்வது கிறிதவ தர்மத்திற்கே ஒரு களங்கமாகும். இந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டதனால்தான். சிலுவையின் முழு அர்த்தத்தையும் தெரிந்து கொள்வது நமக்குக் கஷ்டமாகிவிட்டது. கிறிதுவ சாதுக்கள் பலர், யேசுநாதரை மனிதத்தன்மையின் பூரண வடிவம் என்று தொழுதிருக்கிறார்கள்; கடவுள் அன்பு மயமானவர் என்று போற்றியிருக்கிறார்கள். ஆயினும் அவர்கள், தெய்வ இச்சையின் துணை, மானிட சமுதாயத்திற்குத் தேவை யென்பதைத் தெரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள். இவர்களிற் பலர், உண்மையான அஹிம்ஸை யெதுவோ அதனை அநுஷ்டித்து வந்திருக் கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்தக் கிறிதவ மதத் தலைவரும், இந்த அஹிம்ஸை ஒன்றுதான், மானிட சமுதாயத்திற்கு விமோசனம் அளிக்கக்கூடியதென்று பகிரங்கமாகச் சொல்ல வில்லை. கிறிதவர்கள், சமுதாய பலாத்காரத்தில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாதென்று சிலர் சொல்லி வந்தார்கள். இவர்களை மத விரோதி கள் என்று மற்றக் கிறிதவர்கள் அழைத்தார்கள். இந்த மத விரோதிகள் கூட - உதாரணமாக வால்டென்ஸெகள்1 பிரான்சிகர் கள்2 அனபாப்டிடுகள்3, க்வேக்கர்கள்4 கூட கடவுள் கோபமுடையவ ரென்றும் தண்டிக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கிருக்கிற தென்றும், தேசத்திற்குப் பொதுவான யுத்தங்களும்,கொடுமைகளும் அவருடைய இச்சைபடியே நடக்கின்றன வென்றும், பாவமன்னிப்புப் பெறாத பாவிகளுக்குப் பாவத்தைத் தண்டனையாகக் கொடுக்கிறா ரென்றும் நம்பிவந்தார்கள். இவர்களில் ஒரு சிலருடைய உதாரணமாக பீட்டர் செல்ஷிகி5யென்ன, அனபாப்டிட் சாதுக்களென்ன, க்வேக்கர் சாதுக்களென்ன ஜாகோப் போய்மே என்ன, அவருடைய ஆங்கில சிஷ்யரான வில்லியம் லா6 என்ன ஆகிய இவர் களுடைய உபதேசங் களெல்லாம் சமீப காலம் வரையில் காட்டிலே காய்ந்த நிலவாகி விட்டன. இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்; தூஷிக்கப் பட்டார்கள். கடைசியில், மானிட சமுதாயத்தின் தேவையான சமயத் தில் லியோடால்டாய்7 தோன்றினார். எனது இளமைப் பருவத்தில் எனக்கு இவருடைய உபதேசங்கள் வழி காட்டியாயிருந்தன. இவர், தமது கதைகளின் மூலம், ஆயிரக்கணக்கானவர்களுடைய இதயத்தில் பலன்தரத்தக்க சந்தேகங்களைக் கிளப்பினார். இப்பொழுது மகாத்மா காந்தி, யேசுநாதருடைய உபதேசங்கள், அவற்றிற்கு டால்டாய் செய்த வியாக்கியானங்கள், ஹிந்து மதத்தின் புனிதமான கிரந்தங்களிலுள்ள போதனைகள் ஆகிய இவற்றினால் ஊக்கமடைந்தவராய், அஹிம்ஸையை உபதேசிக்கிறார். வாழ்க்கையின் பல துறைகளிலும் அதனை அநுஷ் டானத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். மற்றும், அதனைக் கவர்ச்சி தரும்படியான, தர்க்க ரீதிக் கொத்ததான ஒரு சித்தாந்தமாக்கியிருக் கிறார். இந்தச் சித்தாந்தமானது ஆத்ம தாகமெடுத்திருக்கும் ஆயிரக் கணக்கான பேருடைய ஆவலைப் பூர்த்தி செய்வதாயிருக்கிறது.8 கடவுள், கிறிதவ ஞானிகளுக்கு எப்படி படுகிறாரோ அப்படியே காந்தியடிகளுக்கும் நீதிமானாகவும், பிரத்தியட்ச புருஷராகவும் படுகிறார். இந்த விஷயத்தில் எவ்வித வித்தியாசமு மில்லை. ஹிந்து மதத்தின் முக்கிய அமிசமாகிய மறுபிறப்புக் கொள்கையில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறதென்பதற்காக, அவருடைய அநுஷ்டான பூர்வீக மான உபதேசங்களை எந்தக் கிறிதவரும் ஆட்சேபிக்க முடியாது. கடவுளை, கோபமுடையவரென்றோ, தண்டனை விதிக்கக்கூடியவ ரென்றோ காந்தியடிகள் வருணித்தது கிடையாது. மனிதனுக்குள்ள செல்வச் செருக்கு, சுயநலம் ஆகிய இவைதான், தண்டனையையும் அழிவையும் அளிக்கின்றன. காந்தியடிகள் கூறுகிறார்- அன்பே கடவுள் அவர் க்ஷமையின் வடிவம். கடவுள் இதுவரை உலகம் கண்டிராத ஒரு ஜனநாயக வாதி பாவத்தின் பலன்களைத் தெரிவிப் பதே கர்மம் என்று காந்தியடிகள் வியாக்கியானஞ் செய்கிறார். இந்த விஷயத்தில் போய்மே, லா முதலிய அறிஞர்களும் பால் முனிவரும் கடவுளைப் பற்றி என்ன அபிப்பிராயங் கொள்கிறார் களோ அதே அபிப்பிராயத்தை - அதாவது கடவுள் நிர்க்குணமானவர், நிராகர மானவர் என்ற அபிப்பிராயத்தை -காந்தியடிகளும் கொண்டிருக் கிறார். காந்தியடிகளின் சித்தாந்தப்படி, கெட்டவர்களுக்கும் படிப்படி யாக விமோசனம் உண்டு. ஏனென்றால், அவருடைய கொள்கைப்படி கடவுளோடு மானிட சமுதாய மனைத்தும் ஒன்றுபட்டதாய் இருக் கிறது. அவர் சொல்கிறார்:- நம்மெல்லோருக்கும் ஒரே ஆத்மாதான். ஆகையால் கெட்ட ஆத்மாவிலிருந்து என்னை நான் தனியே பிரிக்க முடியாது. ****ஆதலின், எனது பரிசோதனையில் - அதாவது சத்தியாக் கிரகத்தில் - மானிட ஜாதியனைத்தையும் நான் ஈடுபடுத்த வேண்டும்.1 காந்திடியகளின் கொள்கைகளாகிற பிரஹ்மசரியம், சுதேசியம் முதலியன பொருத்தமற்றவை யென்றும், கிறிதவ தர்மத்திற்கும் ஹிந்து தர்மமாகிய அஹிம்ஸை சத்தியாக்கிரகத்திற்கும் முரண்பட்டவை யென்றும், என்னைப் போல் மேனாட்டுக் கிறிதுவர்கள் கருதுகிறார் கள். இதில் ஆச்சரியமில்லை. இருந்தாலும், இந்தியாவில் கிறிதவ மதப் பிரசாரஞ் செய்யும் பாதிரிமார்கள் உள்பட பல கிறிதுவர்கள், சத்தியா கிரகத்தின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து வருகிறார்கள். ஒரு பாதிரி எழுதுகிறார்:- காந்தியடிகளாலும் அவருடைய சிஷ்யர்களாலும் போதிக்கப்படுகிற, அநுஷ்டிக்கப்படுகிற சத்தியாக்கிரகமானது, கிறிதுவ தர்மத்தின் உபதேச சாரமாகும். தீமையை அன்பினால் வெற்றிக் கொள்ளலாம்; துன்பமநுபவித்தும் பொறுமை காட்டியும் தீய சக்திகளை நல்ல சக்திகளாக மாற்றலாமென்பது போன்ற கருத்துக் களையே சிலுவை தெரிவிக்கிறது. சிலுவையினுடைய உபதேசம், ஜனங்களுடைய பாவ நிவர்த்திக் காகவும் அவர்களுக்கு உயிர் கொடுக்கும் பொருட்டும் யேசுநாதர் ஏற்றுக் கொண்ட மரணம் ஆகிய இவையெல்லாம் மானிட சமுதாயத் திற்கு எவ்வளவு முக்கியமானவை யென்பதை ஒரு கிறிஸ்துவரல்ல., ஒரு சநாதனி ஹிந்து ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்திருக்கிறாரென்பதையும், செல்வம், சுகபோகம், பலாத்கார மனப்பான்மை முதலியவைகளை யெல்லாம் அடியோடு ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த உபதேசத்தை பக்தி சிரத்தையோடு கேட்குமாறு ஆயிரக்கணக்கான மக்களை ஊக்குவிக்கும் சக்தி அவருக்கு அருளப்பட்டிருக்கிறதென்பதையும் வைதிக கிறித வர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமது ஹிந்து பரம்பரைக்கு மகாத்மா பக்தி காட்டுவது இயற்கைதான். ஆனால் இந்தப் பக்தியை செலுத்துவதன் காரணமாகச் சில நிர்ப்பந்தங்கள் ஏற்படுகின்றன. இந்த நிர்ப்பந்தங்கள் இல்லாவிட்டால் அவர், இப்பொழுதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக யேசுநாதருடைய உபதேசங்களை வலியுறுத்தக் கூடும். அதுமட்டுமல்ல அந்த யேசுநாதருடைய வாழ்க்கை, அவருடைய ஆத்ம சக்தி ஆகிய இவை, சத்தியாக்கிரகத்தின் மூலாதார மென்பதையும் நிரூபித்துக் காட்டக் கூடும். இந்தச் சத்தியாக்கிரக உணர்ச்சி, சத்தியாக்கிரக இயக்கம், மானிட சரித்திரத்தில் எந்தவிதமான முத்திரையை இடப்போகிறதென்பதைப் பற்றி நான் சிறிது சிந்தித்துப் பார்க்கிற போது, பின் வரும் எண்ணங்கள் உதிக்கின்றன. சர்வாதிகார நாடுகளின் பலாத்காரக் கொள்கைள், நோக்கங்கள் முதலியன மிகக் கெடுதலானவைதான். ஆனால் தரும சிந்தனையுள்ள யாருக்கும், தற்போதைய உலக நிலையில் பயங்கரமான விஷயங்கள் இரண்டு என்பது புலப்படும். ஒன்று, ஒரு காலத்தில் மானிட ஜாதியை ஆத்மார்த்தமான விஷயங்களில் ஈடுபடுத்தி விட்ட ஜனநாயக நாடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற மேற்கு ஐரோப்பிய நாடுகள், மற்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு, பூப் பிரதேசத்தில் பெரும்பாகத்தையும், மற்ற பொருள்களின் பெரும் பாகத்தையும் விகிதாசாரத்திற்கு விரோதமாக சுவீகரித்துக் கொண்டி ருப்பது; மற்றொன்று, மேற்படி பூப்பிரதேசத்திலும் பொருள்களிலும் ஒருபாகம் தர வேண்டுமென்று கேட்கிற தங்கள் அயலார்களை, மேற்படி பங்கு கேளா வண்ணம் அடக்கி வைக்க, தங்களுடைய சக்தி, பணம் முதலிய எல்லாவற்றையும் செலவழித்து பயங்கரமானதும் அழிவை யுண்டு பண்ணக்கூடியதுமான யுத்தத்திற்குத் தயாராயிருப்ப தாக இந்த மேற்கு வல்லரசுகள் முழக்கம் செய்வது. உலகியற் பொருள்களுக்காகவும் உலக ஆதிக்கத்திற்காகவும் போடப்படுகிற இந்தப் போட்டியும், இயற்கைச் சக்திகளையும், தனிப்பட்ட நபர் களடங்கிய தாபனங் களிடமிருந்து உற்பத்தியாகிற சக்திகளையும் ஒன்று திரட்டி ஆதிக்கங் கொள்ளவும் அழிக்கவும் எவ்வளவு திறமையாக உபயோகப்படுத்தலா மென்கிற விஷயத்தில் அதிக அபிவிருத்தியடைந்திருக்கிற மனிதனுடைய அறிவும் சேர்ந்து கொண்டு என்ன பயனளிக்குமென்றால், குரூரமும் உலகாயதத்தன்மையும் வாய்ந்த கொள்கைகளையும் அநுஷ்டானங்களையும் உடைய பல சர்வாதி கார நாடுகளின் ஆதிக்கத் திற்கு இந்த உலகம் வந்துவிடும். ஏறக் குறைய ஜனநாயக அமைப்புக் குட்பட்ட மற்ற நாடுகள், இந்தச் சர்வாதிகார சக்திகளை ஆயுதபலத்தின் துணைகொண்டு அடக்கி வைக்கப் பார்ப்பதும், சர்வாதிகார நாடுகளுக் குள்ளேயே ஏற்பட்டுக் கொண்டு வருகிற குழப்பங்கள் முதலியனவும் சேர்ந்து, வறுமையை யும், அடக்கு முறையையும் அதிகப்படுத்தும்; பேராசை, அச்சம் முதலியன பெருகும். ஏனென்றால், தற்கால யுத்த பயங்கரத்திற் கிடையே, ஒன்று ஜனநாயக நாடுகள், அவைகளைக் காட்டிலும், திறமையுள்ள பழிக்கஞ்சாத சுபாவமுடைய சர்வாதிகார நாடுகளால் அழிக்கப்பட்டுப்போகும்; அல்லது ராணுவ அமைப்பின் அவசி யத்தை முன்னிட்டு, அந்த ஜனநாயக நாடுகளுக்குள்ளேயே சர்வாதிகாரஆட்சி முறை ஏற்பட்டுவிடும். இதற்குப் பிறகு பழைய ரோம ஏகாதிபத்தியம் மாதிரி கொடுமை யானதும் நாதிகத் தன்மையுடையதுமான ஓர் உலக ஏகாதிபத்தியம் ஏற்படும். பழைய ரோம ஏகாதிபத்தியமானது எப்படி தன்னை எதிர்த்து நின்றவர்களை அடக்கி விட்ட பிறகு நன்மை பயப்பதும் பட்சபாத மில்லாததுமான ஓர் ஏகாதிபத்தியமாக மாறி விட்டதோ அப்படிப் போல, இந்த உலக ஏகாதிபத்தியங்களும் யதேச்சாதிகாரமுடையனவாகவும் உலகாயதத் தன்மை நிறைந்தனவு மாக இருக்கும். ஆனால் முன்போல்அவ்வளவு குரூரம் வாய்ந்ததாக இரா. அதுமட்டுமல்ல; ஜனங்களுக்கு ஹிதம் செய்கிற ஏக சக்ராதிபத்தி யமாகி விடும். இருந்தாலும் இது கொடுங்கோல் ஆட்சிதான். இதற்கு அடிமைப் படவோ, இதன் கருவியாயிருக்கவோ லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் மறுப்பார்கள். இது-இவர்கள் இங்ஙனம் மறுத்துக் கொண்டு வருவது - நாளாவட்டத்தில் அதிகப்பட்டுக் கொண்டு வரும். அப்பொழுது வறுமையினாலும் துன்பத்தினாலும் தூய்மைப்படுத்தப்பட்ட ஒரு தனிக் கோஷ்டி ஏற்படும். இதில் கிறிதவர்கள், பௌத்தர்கள், ஹிந்துக்கள், இலாமியர்கள் முதலிய எல்லா மதத்தினரும் ஒன்று கூடுவார்கள். இவர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படும். ஆனால் இவர்கள் எதனையும் சகித்துக் கொண்டு போவார்கள். (கிறிதவன் என்ற முறையில், உலகத்தில் ஒரு காலத்தில் ஏதேனும் ஒரு வகையான கிறிதவ தர்மம் ஆதிக்கம் பெறவேண்டு மென்ற நம்பிக்கையுடையவரில் நான் ஒருவன். ஆனால், அந்த ஆதிக்கம் ஏற்பட இன்னும் பல நூற்றாண்டுகளாகும்.) மேற்கண்ட கோஷ்டியினர் அரசாங்கத்தின் அடக்குமுறையினின்றும், பொதுஜன பலாத்காரத் தினின்றும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நமது காலத்தில் மகாத்மா காந்தியின் பரிசோதனைகளிலிருந்து பிறந்த உரம் பெற்ற எந்தக் குழந்தை உண்டோ அந்தக் குழந்தையாகிற அஹிம்ஸை-சத்தியாக்கிரகம் என்பதை விதரித்தும் இன்னும் ஒழுங்குபடுத்தியும், தூய்மைப்படுத்தியும், சாதனமாக உபயோகிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு வழிகாட்டி விட்டவர் காந்தியடிகள், அவருக்கு முற்பட்ட டால்டாய் முதலியோர் என்பதை உணர்வார்கள். சிறிது காலம் வரையில் உலக சர்வாதிகாரிகள், வெளிச் சத்துருக்கள் யாரும் இல்லாதவர்களாய் பொதுஜன அபிப்பிராயத்தை, சிறப்பாக வருங்கால சந்ததியைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவர் களாகக் காணப்படுவார்கள். இதனால் அவர்களை அசைப்பது கடினம் என்று தோன்றும். ஆனால் மனிதனிடத்திலுள்ள தெய்வ சக்தியை நீண்ட காலம் அடக்கி வைத்திருக்க முடியாது. ஆளும் வகுப்பினருடைய அதிகாரம் உள்ளுக் குள்ளேயே அழுகிக் கொண்டு வரும். எப் பொழுதுமே தீமைக்கு, தன்னைத் தானே படிப்படியாக அழித்துக் கொள்ளுஞ் சக்தியுண்டு. நல்லெண்ணமுடையவர்கள் பலாத்காரத்தைத் தவறாக அதன் மீது உபயோகியாதிருந்தால் இன்னும் சீக்கிரமாக அது அழிந்துபோகும். எனவே ஆளும் வர்க்கத்தினருக்குள்ளேயே, பிணக்குகள், குழப்பங்கள் முதலியன ஏற்படும். அப்பொழுது ஜனங்களுடைய உதவி இவர் களுக்குக் கிடைக்காது. ஏனென்றால், ஜனங்களில் பெரும் பாலோருக்குச் சத்தியாக்கிரக உணர்ச்சி ஏற்பட்டுவிடும். பலாத்காரம், அநீதி, பேராசை இவைகளுக்கு மனமார ஆட்படுவதைக் காட்டிலும் அவைகளுக்காகத் துன்பத்தை அநுபவிக்கத் தயாராயிருக்கிற லட்சக் கணக்கான ஆண்களும் பெண்களும் தோன்றக்கூடிய காலம் வரும். அடுத்தபடியாக, மேலே சொன்ன பலமதத்தினரும் அடங்கிய சத்தியாக்கிரகிகளின் கோஷ்டி இருக்கிறதே அதிலிருந்து உண்டாகிற நல்லெண்ண சக்தியானது ஆளும் வர்க்கத்தினரிடையிலும், அவர்களை ஆதரிப்பவர்களிடையிலும், சென்று பரவும். யேசுநாதருடைய அல்லது புத்தருடைய அல்லது கிருஷ்ணருடைய அவதாரத்தில் எந்த அன்பு மிளிர்கிறதோ, அந்த அன்பில் நம்பிக்கையுள்ளவர்களிடமிருந்து கிளம்பும் சக்தியாக அஃது இருக்கும். வாதவத்தில் இதுவே சத்தியம்; இதுவே அன்பு, மோட்ச சாம்ராஜ்யம் நமக்குள்ளேயே நம்மிடை யிலேயே ஏற்பட்டுவிடும். இந்த விதமாக ஆளும் வர்க்கத்தினர்கூட நாளாவட்டத்தில் சாந்தமுடையவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். தங்கள் அரசாங்கத்திற்குச் சத்தியாகிரகிகள் எவ்வளவு உபயோகமானவர்கள் என்று தெரிந்து கொண்டு அவர்கள் விருப்பப்படி காரியங்களைச் செய்துகொண்டு போக அநுமதிப்பார் கள். பொருளாதாரத் துறையிலும் இந்த மாதிரியான சுதந்திரம் ஏற்பட்டுவிடுமாதலால் மததாபனங்கள் தங்களுடைய தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும். யந்திர சாதனங்களின் ஆதிக்கம் குறைவுபடும். மனிதனுடைய பூரண வளர்ச்சியைப் பாதிக்காதனவும், இதர ஜீவராசிகளின் சேஷமத்திற்கு விரோதமில்லாதனவுமான யந்திரங்கள் மட்டும் வைத்துக் கொள்ளப்படும். சத்தியாக்கிரகிகளின் எண்ணிக்கையும் அதிமாககிக் கொண்டு வரும். அவர்களே, ஜனங்களிற் பெரும் பாலோராகி விடுவர். அப்பொழுது உலகத்தின் பல நாடுகளிலும் சத்தியாக்கிரகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறையே நடைபெறும். எல்லையில்லாத பொறுமையும், பதிலுக்குப் பதில் செய்யாத சுபாவமுடைய சத்தயாக்கிரக கூட்டத்தின் முன்னர், இந்திரிய சுகங்களில் ஈடுபட்டிருந்தவர்களும், பிறர் மீது ஆதிக்கஞ் செலுத்துவதில் திருப்தி கொண்டிருந்தவர்களும் சலித்துப் போவார்கள். இவர்களின் எண்ணிக்கையும் வரவரக் குறைந்து கொண்டே போகும். அப்பொழுது யேசுநாதர் கூறிய திருவாசகம் - அதாவது சாதுக்களுக்கு இந்த உலகம் சுவாதீனமாகும். அவர்களுக்கு ஆசீர்வாதம் - சித்தியடையும். இந்த லட்சிய வாழ்க்கையை நாம் சித்தரித்துக் காட்டுகிற போது, சமீப காலத்தில் இது நடக்கக் கூடுமாவென்று சிலர் சந்தேகிக்கக்கூடும்; இன்னுஞ் சிலர், இதுநடைபெற யுகக்கணக்காகவல்லவோ ஆகுமென்று சொல்லக்கூடும். ஆனால், நன்மைக்கும் தீமைக்கும் எதிராக நாம் தைரிய மாக நிற்க வேண்டும். கடவுள், ஏதேனும் ஒரு பெரிய ஆபத்தைக் கொண்டு புகுத்தி, அதில் தற்கால சந்ததியைச் சிக்க வைக்கலாம். அப்படியில்லாமல், உலகத்தில் நீதியும் அமைதியும் நிலவக்கூடிய காலம் வருவதற்குமுன்னர், நாம், அதாவது மானிட சமுதாயம், பல முட்டுக் கட்டைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும். கடவுளின் யந்திரம் மெதுவாகத்தான் அரைபடுகிறது. மனித சுபாவம் மிகப் பிடிவாதமுடையது. கடவுள் ராஜ்யம் பூலோகத்தில் தாபிக்கப்படுமானால், மனிதனுக்கும் மனிதனுக்கும் நடைபெறுகிற (மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் நடைபெறுகிற என்று காந்தியடிகள் சேர்த்துக் கொள்வார்) சண்டையும் சச்சரவும் பூலோகத்திலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுவிடுமானால், அப்பொழுது வாழ்க்கையானது ஒரேமாதிரி யாகவும் சாரமற்றதாகவும் போய்விடுமென்று யாரும் கருத வேண்டாம். கடவுளின் படைப்பிலுள்ள மகத்துவத்தை நாம் பூரணமாக நம்புவோமாக. ஆத்மா முற்போக்கான துறைகளைக் கண்டுபிடித்துக் கொண்டு செல்வதற்கும், தெய்வ சிருஷ்டியிலுள்ள ரகசியங்களைக் தெரிந்து கொள்வதற்கும், அந்த தெய்வ சிருஷ்டியிலுள்ள பலதுறை களையும் அன்பினாலும் தியாகத்தினாலும் வெற்றி கொள்வதற்கும் - இந்த அமிசம் இப்பொழுது இந்தியாவில் ஒரு பரிசோதனை நிலையி லிருக்கிறது -அநேக சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். வருங்காலம், துன்பம் நிறைந்ததாயும் இருட்படலம் சூழ்ந்ததாயு மிருக்கக்கூடும். ஆனால் அதில் - வருங்காலத்தில் பிரகாசமும் சந்தோஷமும் கூடவே இருக்கும். சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்னர், லியோ டால்டாய் கூறிய வீர வாசகங்கள் என்னைக் கண் திறக்கச் செய்தனவென்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட விரும்பு கிறேன். அந்தக் காலத்திலிருந்து வறுமை வாழ்க்கையிலும், யுத்த எதிப்பு விஷயத்திலும் தயங்கித் தயங்கிப் பரிசோதனை செய்து பார்த்தேன். எனக்குக் கிடைத்தது என்ன? சிறை வாசத்தின் நீண்டகால அநுபவம்! ஆனால் அந்தக் காலத்திலிருந்து -நாற்பது வருஷங்களுக்கு முந்தியிருந்து - என்னுடைய முயற்சிகள், ஒரே மாதிரியாக இருந்திருந் தால் நன்றாயிருக்கும். என்றாலும், ருஷ்ய மகானாகிய டால்டாயின் தானத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த இந்திய மகாபுருஷர் - காந்தியடிகள் - இருக்கிறாரே அவருக்கு நன்றி செலுத்தக் கூடிய ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதற்காக நான் வந்தனம் செலுத்துகிறேன். நம்மிடையிலிருந்து சமீபகாலத்தில் பிரிந்து போன ஒரு தெய்வீகக் கவி பின்வருமாறு எழுதிவிட்டுப் போனார் :- எந்த வயோதிகனுடைய ஆத்மா கைதட்டிப் பாடாமலிருக்கிறதோ, எவனுடைய மனித சட்டையின் ஒவ்வொரு கிழிசலுக்கும் அந்த ஆத்மா உரத்து உரத்துப் பாடாமலிருக்கிறதோ அந்த வயோதிகன் ஒர் அற்ப விஷயமல்லாது வேறென்? அவன், கம்பியிலே மாட்டப்பட்டிருக்கும் ஒரு கிழிந்த சட்டை. மேற்சொன்ன கவியைப் பாடிய, ஈட்1 என்பார், எனது செய்யுட்கள் எப்பொழுதும் இளமை வாய்ந்தவை என்று கூறுவார். அதைப் போல், ஆத்ம சக்தி உபதேசமானது, உழைப்பினால் நைந்து போயிருக்கிற, வயோதிக மடைந்துவிட்ட மோகனதா காந்தியின் வாக்கிலிருந்து வந்தபோதிலும் இளமையுடன் கூடியதாகவே இருக்கிறது. நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன் அவர் சத்திய சோதனை செய்து கொண்டிருந்த காலத்தில் இருந்ததை விட அஃது - அந்த ஆத்ம சக்தி- இப்பொழுது இன்னும் இளமையோடு கூடியிருக் கிறது. ஏனென்றால், இந்த வருஷங்களில் அவர் கடவுளின், நித்திய யௌவனத்தில் கடவுள் தன்மையினால் ஏற்படுகிற அடக்கத்தில், மனிதர்களுக்கு உன்னதமான வாழ்க்கையை அளிக்கிற தெய்விக வாழ்க்கையில் தம்மைப் படிப்படியாக ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டாரல்லவா? கிறிதவர்கள் அல்லது சமுதாய ஞானிகள் என்ற முறையில் நாம் காந்தியடிகளினுடைய பார்வையின் தெளிவில் ஒர் எல்லையிருப்பதாகக் காணலாம். இருந்தாலும் அவர் நமது காலத்து மகாத்மா. மானிட சமுதாயத்தின் இனிப் பிறக்கப்போகிற உலகத்தின் - இதற்கான பிரசவ வேதனைகள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன - பாலிய தூதர். யேசுநாதருடைய நிழலின் கீழ் நின்று கொண்டிருக்கிற நாம், ஒரே குழுவினைச் சேர்ந்தவர்கள், கடவுள் ராஜ்யத்தின் பிரஜைகள், நமது கனவு ராஜ்யத்தின் குடி மக்கள் என்ற முறையில் காந்தியடிகளுக்கும், மற்றெல்லா உண்மைச் சத்தியாக் கிரகிகளுக்கும் வந்தனை செலுத்து வோமாக! * * * சுதந்திரமும் பொருளும் வில்லியம் எர்னட் ஹாக்கிங் (தத்துவ சாதிர ஆசிரியர், ஹார்வர்ட் சர்வகலாசாலை) தற்கால மனிதன், திகைத்துப் போகக் கூடிய ஒரு நிலைமைக்கு வந்திருக்கிறான். அதாவது பிரதிமனிதனுடைய செயல் சுதந்திரமும், எண்ண சுதந்திரமுங்கூட, அவனைச் சுற்றியுள்ள சக்திகளாலும், அவனுடைய சமுதாய பந்தங்களினாலும் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலைமையிலுள்ள மனிதனுக்கு மகாத்மா காந்தி வழிகாட்டி யிருக்கிறார். மேனாட்டாராகிய நாம், நமது தாபனங்களைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்ப்போமானால், அவற்றிலுள்ள குறைகள் நமக்கு நன்கு புலப்படும். நம்மிலே படித்தவர் எவரும், குறிப்பிட்ட ஒரு மதபீடத்தைச் சேர்ந்திருக்க முடியவில்லை. ஏனென்றால், இப்பொழுதுள்ள எந்த ஒரு கோட்பாட்டையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே மாதிரி எந்த ஒர் அரசியல் கட்சியிலும் நாம் சேர முடியாது. ஏனென்றால், எல்லா அரசியல் கட்சிகளும் முட்டாள் தனத்தினாலும் சுயநலத் தினாலும் கறைபட்டுப் போயிருக்கின்றன. தத்துவ சாதிரத்தில் ஒருவன் பெறுகிற பயிற்சியானது அவனை மேற்படி பந்தங்களினின்றும் விடுதலை செய்யும்; குடும்பம், தேசம் என்ற பந்தங்களையும் அகற்றி விடும். தத்துவ ஞானியாயிருக்கப்பட்டவன், எந்தக் கட்சியையும் சேர்ந்தவனா யிருக்கக் கூடாது. போராட்டதிற்கு மேற்பட்டவனாய் அவன் இருக்க வேண்டும். மதமானது, இந்தப்பற்றற்ற மனப்பான்மையை இன்னும் ஒருபடி முன்னுக்குக் கொண்டு போகிறது; ஒன்றான அந்தப் பரம் பொருளோடு நம்மை ஒன்று சேர்த்து விடுகிறது. அப்பொழுது எல்லா வேற்றுமைகளும் மறைந்து போகின்றன. சித்தாந்த அளவில், மனிதன் பரமாத்மாவாகி விடுகிறான். ஆனால் அதே சமயத்தில், மனிதன் பயனற்றவனாகவும் அர்த்தமற்றவனாகவும் ஆகி விடுகிறான். காந்தியடிகள், தமது கடவுளை சத்தியம் என்ற பெயரால் அழைக்கிறார். இந்தக் கொள்கை, உலகப் பொதுவானது; எல்லாக் கோட்பாடு களுக்கும் மேற்பட்டது. காந்தியடிகள், தமது கடவுளை ராமன் என்ற பெயராலும் அழைக்கிறார். ஒன்றான அந்தப் பரம்பொருளை அடை வதற்கு, அரசியல் மூலம் வழி காண்கிறார். கொள்கை முதலியவற்றில் தம்மினின்று வேறுபடுகிறவர்களிடம் அவர் சம்பாஷிக்கிறபோது, அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து பேசுகிறார். ஆயினும் அவர் ஒரு கட்சி மனிதர்; அவரே ஒரு கட்சி என்று கூடச் சொல்லலாம். தமது கட்சியின் சார்பாக, பிரச்னைகளை வகுத்துக் கூறுகிறார்; நிர்ணயமான திட்டங்கள் போடுகிறார்; ஹரிஜன் முதலிய பத்திரிகைகள் மூலம் வாதஞ் செய்கிறார். பயனற்ற தன்மை, அர்த்த மின்மை என்பவைகளுக்கு நேர் மாறாக இருக்கிறார் அவர். சுருக்கமாகக் கூறப்போனால் ஒரு ராஜதந்திரிக்கு, ஒரு சந்நியாசியினுடைய பற்றற்ற மனப்பான்மை எவ்வளவு இன்றியமை யாதது என்பதை அவர் விளக்கிக் காட்டியிருக்கிறார். தன்னைச் சுற்றி யுள்ள சக்திகளையும், மற்றப் பொருள்களையும் சரியாக உபயோகித்துக் கொண்டால், மனிதன் அதிகமான சுதந்திரமடை கிறானென்பதை அவர் தெரிவித்திருக்கிறார். எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமோ அதைத் தினசரி செய்து கொண்டும், அப்படிச் செய்வதிலே ஒரு சந்தோஷமடைந்து கொண்டுமிருக்கிற ஒருவர், காந்தியடிகளைத் தவிர வேறு யாரும் என் மனதில் படவில்லை. இஃது அவருக்கு ஒரு சிறிய விஷயமே. ஆனால் ஜனங்கள் இதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாததுதான் உலகத்தில் இப் பொழுது துக்கமும் குழப்பமும் ஏற்பட்டிருப்பதற்கு மூலகாரணமா யிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள நாம், நமது சுற்றுப் புறத்திலிருந்து , நமது கடமைகளிலிருந்து குடும்பப் பற்றினின்று, அரசியல் கிளர்ச்சியி லிருந்து, மத தாபனங்களிலிருந்து கடைசியில், நமது மனிதத் தன்மையி லிருந்தே விடுதலை பெறுவதன் மூலம் சுதந்திரத்தைக் காண முயலு கிறோம். ஜனநாயகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாத தகுதி யுடையவர் களுடைய சேவையை நாம் உபயோகிக்காததினால், தான் ஜனநாயகம் தடுமாறி நிற்கிறது. பூர்ணத்துவ மில்லாததின் மகிமையை நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். எவனொருவன், தன் சுற்றுப் புறச் சக்திகளினின்று விடுதலையடையப் பார்க்கிறானோ அவன் தன்னினின்றுமே அதாவது வாழ்க்கையினின்றுமே விடுதலையடையப் பார்க்கின்றான். ஆனால் வாழ்க்கை தான் முக்கியம். நமது ஜாதியினுடைய பெருமையைக் காட்டிலும் வேறு பெருமை யில்லை; நமது எல்லைக்குள் காட்டப்படும் விசுவப் பிரேமையைத் தவிர்த்து வேறு விசுவாசப் பிரேமையில்லை; நமது சுற்றுப்புறத்திற்குள் காணப்படும் சுதந்திரத்தைத் தவிர வேறு சுதந்திரமில்லை. இப்படிப்பட்ட போதனைகளை காந்தியடிகள் நமக்கு அருளியிருக்கிறார். * * * காந்தியடிகளின் பெருமை ஜான் ஹேய்ன் ஹோம் (தி கம்யூனிட்டி சர்ச், நியூயார்க், அமெரிக்கா) சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னர் அமெரிக்க மகா ஜனங்களுக்கு நான் காந்தி தான் உலகத்தில் மிகச் சிரேஷ்டமான புருஷர் என்று எடுத்துச் சொன்னேன். அப்பொழுது எனது நாட்டாருக்குக் காந்தியடிகளைப் பற்றி அதிகமாகத் தெரியாது. அவருடைய பெயர் மேனாட்டில் அப்பொழுதுதான் சிறிது சிறிதாகத் தெரிந்து கொண்டு வந்தது. அதற்குப்பிறகு அவருடைய பெயர் மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஜீவதசையிலுள்ள எந்த மகானுக்கும் இவ்வளவு பிரசித்தி ஏற்பட்டது கிடையாது. காந்தியடிகளை சிரேஷ்ட புருஷர் என்று நான் அழைத்தது சரி என்பதை அமெரிக்கர்கள் இப்பொழுது ஒப்புக் கொள்ளுவார்கள். காந்தியடிகளுக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவம் அவருடைய திறமைக்காகவல்ல; அவருடைய கீர்த்திகாகவுமல்ல; அவர் ஒரு சேனாதிபதியில்லை; எந்த ராஜ்ஜியத்தையும் அவர் ஜெயிக்க வில்லை; அவர் உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு ராஜதந்திரியில்லை; அவர் ஒரு ஞானியில்லை; முனிவருமில்லை; பெரிய நூல்களை அல்லது கவிகளை அவர் எழுதவில்லை. வெளிப்பார்வைக்கு ஒரு தலைவர் என்று கருதும்படியான ஒரு கம்பீரத் தோற்றமும் அவருக்கில்லை. அவருக் கிருக்கும் திறமையெல்லாம் அவருடைய ஆத்ம சக்திதான். இந்த ஆத்ம சத்தியே, அவருக்கு இணையில்லாத ஒரு செல்வாக்கையும் தலைமைப் பதவியையும் அளித்திருக்கிறது. சரித்திர மகா புருஷர்களில் ஒரு சிலரே அடையக்கூடிய சித்திகளை அவர் அடைந்திருப்பதற்கு இந்த ஆத்ம சக்தியே காரணம். இந்தியா சுதந்திரம் பெற்றுவிடுமானால், அதற்கு மற்றவர்களைக் காட்டிலும் காந்தியடிகள் தான் முக்கிய காரண புருஷராயிருப்பார். அவர் இந்திய மகாஜனங்களுடைய புராதன கலைஞானத்தைப் புனருத்தாரணஞ் செய்வித்திருக்கிறார். அவர்களுடைய தன்மதிப் புணர்ச்சியைத் தூண்டிவிட்டிருக்கிறார். அவர்களுடைய சுகவாழ்வை, தன்னடக்கத்திற்கு ஒழுங்குபடுத்தியிருக்கிறார். ஆத்மார்த்தமாகவும் அரசியலிலும் அவர்களுக்கு விடுதலை அளித்திருக்கிறார். இவற்றின் மூலம் இந்திய மகாஜனங்களைச் சுதந்திரத்திற்கு தகுதிப்படுத்தி யிருக்கும் பெருமையும் அவரைச் சேர்ந்ததே. இவையனைத்தைக் காட்டிலும் அவருடைய மகத்தான வேலை, தீண்டப்படாதாரை, அவர் களுடைய துன்ப நிலையிலிருந்து விடுதலை செய்திருப்பதுதான். இந்த ஒரு காரியமே, மானிட விடுதலைக்காகச் சரித்திர காலந்தொடங்கிச் செய்யப்பட்டிருக்கும் பலசேவைகளைக் காட்டிலும் அதிகமாக ஞாபகம் வைக்கக் கூடியதாயிருக்கும். கடைசியானது, ஆனால் முக்கிய மானது, சாத்வீக எதிர்ப்பு விஷயத்தில் அவர் அடைந்திருக்கும் பெரிய வெற்றியைக் குறிப்பிட வேண்டும். உலகத்தில் சுதந்திரம், நீதி, சமாதானம் முதலியன நிலவுவதற்கு இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறையை ஒரு கருவியாகத் தயாரித்திருக்கிறார். இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறையைத் தனிப்பட்ட நபர்கள்தான் கையாள முடியும் என்று இதுவரை பலரும் உபதேசித்து வந்தார்கள். ஆனால் காந்தியடிகள், இந்த முறையை, உலக நன்மைக்கான ஒரு சமுதாயத் திட்டமாக மாற்றியமைத்துவிட்டார். புராதன காலத்து மகான்களனைவரைக் காட்டிலும் காந்தியடி கள் பெரியவர். தேசீயத் தலைவர் என்ற முறையில் அவர், ஆல்பரெட்,1 வாலே,2 வாஷிங்டன்,3 கோஷியுகோ,4 லபாயட்டே,5 ஆகிய இவர் களுக்குச் சமதையானவர். அடிமைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு விடுதலை யளித்தவர் என்ற முறையில் க்ளார்க்ஸன்,6 வில்பர்போர்,7 காரிஸன், 8 லிங்கன், 9ஆகிய இவர்களுக்கு நிகரானவர். சாத்வீக எதிர்ப்பு முறையைப் போதித்தவர் என்ற முறையிலும், அன்புக்குத் தோல்வி யில்லை யென்பதை நிரூபித்துக் காட்டும் வகையிலும் அவர் செயின்ட் பிரான்சி, தோரூடால்டாய் ஆகியோருக்கு இணையானவர். எக்காலத்திலும் சாசுவதமாக விளங்கக் கூடிய மத புருஷர்களான லாவோத்ஸே1, புத்தர், ஜோராடர், யேசுநாதர் ஆகியோருடைய வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர். ஆனால் எல்லோரை யும் விட அவர் - காந்தியடிகள் - ஒரு மனிதர். இந்த மனிதரைப்பற்றி என்னுடைய சமீப வெளியீடான புனராலோசனைக்குரிய மதம் என்ற நூலில் பின் வருமாறு எழுதியிருக்கிறேன்:- அவர் அடக்கமுள்ளவர், சாந்த புருஷர்; குறைபாடில்லாத அன்புடையவர். அவருடைய நகைச்சுவை நிகரற்றது, விவகார ரீதியில் அவர் நடந்து கொள்கிற விதத்தைக் கண்டு யாருமே மயங்கி விடுவர். அவருடைய நடவடிக்கைகள் நிதானமாகவும் நயமாகவும் இருக்கின்றன. ஆனால் அவரிடத்தில், யாராலும் அடக்க முடியாத உறுதியும், இரும்பு போன்ற மனோ தைரியமும் இருக்கின்றன. அவருடைய மனத்தூய்மை பளிங்கு போன்றது. சத்தியத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பக்தி அசைக்க முடியாதது. அவருக்கென்று, இழப்பதற்கு ஒன்றுமில்லை. இதனால் யாராலும் தாக்கப்பட, முடியாத ஒரு நிலையில் அவர் இருக்கிறார். அவர், தம்முடைய எதனையும் தியாகஞ் செய்துவிட்டாராதலால், மற்றவர்களுடைய எதனையும் அவர் கேட்கக்கூடும். லௌகிக விவகாரங்கள், கவலை கள், அபிலாஷைகள் முதலியன, அவருடைய வாழ்க்கையி லிருந்து எப்பொழுதோ அப்புறப் பட்டுப் போய்விட்டன. சத்தியத்திலும் அன்பிலும் பரிணமிக்கிற தெய்வ சக்தி ஒன்று தான் அவரைப் பூராவும் ஆட்கொண்டிருக்கிறது. காந்தியடிகள் சொல்கிறார்.- எனது கோட்பாடு கடவுளுக்குத் தொண்டு செய்வது, அதாவது மானிட சமுதாயத்திற்குத் தொண்டு செய்வது*** தொண்டு என்று சொன்னால் பரிசுத்தமான அன்பு செலுத்துவதுதான். * * * ஒரு தென்னாப்பிரிக்கருடைய பாராட்டு ஆர். எப். ஹோர்ன்லே, எம்.ஏ., டி.லிட். (விட்வாட்டர்ராண்ட் சர்வகலாசாலை, ஜோஹான்னெபர்க், தென்னாப்பிரிக்கா) காந்தியடிகளின் ஆத்ம சக்தி, அவருடைய லட்சியம் முதலியவை களைக் குறித்து உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் பாராட்டுரைகள் பல கிடைத்திருந்த போதிலும், அவற்றில், ஒரு தென்னாப்பிரிக்க வெள்ளையருடைய பாராட்டுரையும் ஒன்றாயிருப்பது மிகப் பொருத்தமாகவே இருக்கும். ஏனென்றால், காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் தான் முதன் முதலாக 1893 - ம் வருஷத்தில் இந்தியர்களின் தலைவராகயிருந்து போராடினார். நான் தினந்தோறும் என்னுடைய கலாசாலைக்கு எந்த வழியாகச் செல்கிறேனோ அந்த வழியிலுள்ள கோட்டையில்-தான் ஜோஹான்ன பர்க்கிலுள்ள அந்தக் கோட்டையில் தான் -அவரும் அவருடைய சகாக்களும், கடின காவல் தண்டனையை அனுபவித்து வந்தார்கள். ட்ரான்வாலுக்கு மீண்டும் சுய ஆட்சி அளிக்கப்பட்ட பிறகு1 குடியேற்ற நாட்டுக் காரியதரிசியாக நியமனம் பெற்ற தளபதி மட்ஸுடன், தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களின் எதிர்கால நிலையைப் பற்றி, அவர் சமரஸப் பேச்சுகள் நடத்தினார். இந்தியர் களின் தலைவர் என்ற ஹோதாவில், பட்சபாதங் காட்டுகிற சட்டங் களை எதிர்த்து, சாத்வீக எதிர்ப்பு முறையை முதன் முதலில் பரி சோதனை செய்து பார்த்தார். தென்னாப்பிரிக்காவிலுள்ள எல்லா இந்தியர் களுடைய வீடுகளிலும், இந்தியர்களுக்குச் சொந்தமாயுள்ள எல்லாப் பொதுக் கட்டிடங்களிலும், காந்தியடிகளின் படம் கௌரவமானதொரு தானத்தில் இடம் பெற்றிருக்கிறது. காந்தியடி களுடனிருந்து போராடித் துன்பமநுபவித்த ஆண்களும் பெண்களு மான பலர் -இந்தியர்களும் வெள்ளையர்களும் - இன்னும் இருக்கி றார்கள். அவருடைய திருக்குமாரர்களில் ஒருவர்2 இந்தியன் ஒப்பினி யன் (இந்திய அபிப்பிராயம்) என்ற பத்திரிகையை, அதன் ஆசிரியராக இருந்து நடத்திக்கொண்டு வருகிறார். அது நேட்டாலிலுள்ள போனிக் ஆசிரமத்திலிருந்து வெளிவருகிறது. தமது ஜனங்களின் முன்னேற்றத் திற்காக காந்தியடிகள் கண்ட பல கனவுகளில், நனவானது ஒன்று இந்த போனிக் ஆசிரமம். ஆம்; காந்தியடிகள், இந்தியாவில் தலைமைப் பதவியேற்கச் செல்வதற்கு முன்னரே தென்னாப்பிரிக்கா வில் அதன் சரித்திரத்திலேயே மறக்க முடியாததொரு தானத்தை அடைந்து விட்டார். காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையைப் பற்றி, அவருடைய ஐரோப்பிய நண்பர்களில் ஒருவரான ஜோஸப் ஜே. டோக் (இவர் ஜோஹான்ன பர்க்கில் ஒரு முக்கிய பாதிரி) என்பவர். மோ.க. காந்தி-தென்னாப்பிரிக்காவில் ஒர் இந்திய தேசாபிமானி என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில், அவர், இந்தியர்களிடத்தில் காந்தியடிகளுக் குள்ள செல்வாக்கைப் பற்றியும் அவரை எதிர்த்து நின்ற வெள்ளையர் களின் மனத்தில் அவர் என்ன மாதிரியான எண்ணத்தை உண்டு பண்ணியிருக்கிறார் என்பதைப் பற்றியும் விதரிக்கிறார். மேற்படி நூலைப் படித்த எனக்குச் சில விஷயங்கள் படுகின்றன. முதலாவது, பலாத்காரத்தை பலாத்காரத்தினாலேயே எதிர்க்க வேண்டுமென்ற அளவுக்குக் கோப மூட்டப்பட்ட நிலைமையிலும், அஹிம்ஸை முறையைக் கையாளக் கூடிய ஒரு மனோதைரியம் காந்தி யடிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. வெள்ளையர்கள், தாங்கள் உயர்ந்த ஜாதியினர் என்பதைக்காட்டிக் கொள்ளும் பொருட்டும், கூலி1 க்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனும், அவரைப் பல முறை உதைத்திருக்கிறார்கள்; அடித்திருக்கிறார்கள்; பல அவமானங் களுக்குட்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர் பலாத்காரத்தின் மூலம் இவற்றிற்குப் பதிலளிக்கவில்லை. பிரசிடெண்ட் க்ரூகரின்2 வீட்டுக்கு முன்னர், தம்மைக் காலால் எட்டி உதைத்த காவலாளியின் மீது வழக்குத் தொடரஅவர் மறுத்துவிட்டார். தமது ஜாதியினரொரு வரால் ரத்தக் காயமடைந்த சமயத்தில் கூட அவர் மேற்படி காய முண்டு பண்ணியவரைத் தண்டனைக்குட்படுத்த வேண்டாமென்று போலீஸாரைக் கேட்டுக் கொண்டார். அவர்கள் தாங்கள் செய்வது சரியென்று கருதிக் கொண்டு தான் செய்கிறார்கள். அவர்களைத் தண்டனைக்குட்படுத்த வேண்டுமென்ற ஆவல் எனக்கு இல்லை என்று அவர் கூறினார். மற்றவர்கள் மீது அவர் ஆதிபத்தியஞ் செலுத்து வதன் ரகசியம் இப்பொழுது தெரிகிறதா? தம்மை ஒரு கட்டுப்பாட்டுக் குட்படுத்திக் கொள்கிற ஒரு சக்தி அவருக்கிருக்கிறது. இரண்டாவது, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விரோதமாக இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்துப் போராட, இந்தியர்களை ஒன்று திரட்டுகிற சமயத்தில், அவர், இந்தியர்களுக்குச் சில உரிமைகள் கிடைத்து விடுவதோடு திருப்தியடையவில்லை. அவர்களுடைய தன்மதிப்புணர்ச்சியை வளர்ப்பதுதான் தமது முக்கிய கடமையென்று அவர் கருதினார். அவர்கள் - இந்தியர்கள் - உணர்ச்சி யற்று, சோர்வுற்றுக் கிடந்தார்கள். எவ்வித தடையும் சொல்லாமல், தங்கள் ஈன திதியை ஒப்புக் கொண்டார்கள். அப்படிப்பட்ட சமயத்தில், காந்தியடிகள், அவர் களுடைய ஆண் தகைமையை எடுத்துக்காட்டினார். ஆண்மையோடு நடந்து கொண்டால்தான் வெள்ளையர்கள் சரிசமானமாக நடத்துவார் களென்று எடுத்துக் காட்டினார். இந்திய சமூகத்தின் எதிர் கால வாழ்வைப் பற்றி காந்தியடிகள் கண்ட கனவை ரெவரெண்ட்டோக் பின் வருமாறு வருணிக்கிறார்:- இந்திய நாகரிகத்தின் கௌரவமான சந்ததியார் என்ற முறையில் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் ஒன்றுபட்டு ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். தென்னாப் பிரிக்காவில் அரசாங்கமானது, தனது கீழ் நாட்டுப் பிரஜைகளைப் பற்றி கௌரவமாகக் கருதி மற்றெல்லாப் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் வழங்கியிருக்கிற மாதிரி சம உரிமை வழங்குமாறு நடந்து கொள்ள வேண்டும். மூன்றாவது, தலைமைப் பதவியையும் பணிவையும் எப்படி ஒன்று படுத்திக் காட்டுவதென்பதை அவர் நன்கு தெரிந்து கொண்டிருந் தார். பணக்கார இந்தியர்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருந்தார். தாம் பெற்ற பணத்தை, அவர், தமது ஜனங்களுடைய நன்மைக்காகத் தாராளத்துடன் செலவழித்தார். ஏழைகளுக்கு மத்தியில் அவர் ஒர் ஏழையைப் போலவே நடந்து கொண்டார். அவர், சுதேச சமதான மொன்றில் மந்திரிப் பதவி வகித்த ஒருவருடைய பிள்ளையாகப் பிறந்தார்; அந்தது,அதிகாரம், செல்வாக்கு, படிப்பு முதலியன நிறைந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்தார். இங்கிலாந்தில் வக்கீல் தொழிலுக்குப் பயிற்சி பெற்றார்; ஜரோப்பியர் களைச் சம அந்ததில் சந்திக்கும்படியான நிலைமைக்கு வந்தார். இவ்வளவெல்லாமிருந்தும் அவர், தமக்கென்று எவ்வித விசேஷ சலுகைகளையும் கோரவில்லை. மற்ற இந்தியர்களைப் போல் தாமும் நடத்தப்பட வேண்டுமென்று தான் விரும்பினார். இந்தியர்கள் கை விரல் அடையாளம் கொடுக்க வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்ட போது, அவர், தாம் விலக்குப் பெற்றுக் கொள்ளலாமாயினும், மற்றவர் களுக்கு வழி காட்டியாயிருக்கும் பொருட்டு முதன் முதலாகத் தாமே கை விரல் அடையாளம் கொடுத்தார். நான்காவது, இந்தியர்களுடைய உரிமைகளுக்காக அவர் போராடி வந்த காலத்தில், பிரஜா உரிமை கோருகிறவர்கள், தேவையான சந்தர்ப்பங்களில் தங்கள் கடமையைச் செய்வதினின்று பின் வாங்கக் கூடாதென்பதை வற்புறுத்தி வந்தார். ஆங்கிலோ -போயர் யுத்தத்தின் போது, அவர் இந்திய சிகிச்சைப் படை யொன்றைத் திரட்டினார். அவருடைய இந்த உதவியை முதலில் அதிகாரிகள் மறுத்த போதிலும், பிறகு ஏற்றுக் கொண்டார்கள். இந்தியர்களும் நல்ல சேவை செய்தார்கள். தளபதி ராபர்ட்1 ஸின் மகன், மேற்படி போயர் யுத்தத்தில் மரண காயமடைந்து விட்ட போது, அவரை, இந்திய சிகிச்சைப் படையினர் தான், ஏழு மைல்களுக்கப்பால் ஷீவ்லே என்ற இடத்திலிருந்து ஆபத்திரிக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். இதே மாதிரி 1906 ம் வருஷத்தில் நடைபெற்ற ஜுலு2 யுத்தத்திலும் இந்தியப் படையினர் சேவை செய்திருக்கிறார்கள். 1904ம் வருஷம் ஜோ ஹான்னபர்க்கில் பிளேக் பரவிய காலத்தில், காந்தியடிகள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிராதிருந்தால், உயிர்ச் சேதம் பலமாக ஏற்பட்டிருக்கும். ஜாதிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு நிலைமையில் சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாண்ட ஒரு மனிதருடைய விசேஷ குணங்கள் இவை. இந்தியர்களுடைய மனச் சாட்சிக்கு விரோதமாக இயற்றப்பட்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிய அவர் மறுத்துவிட்டார். ஆனால் அந்தச் சட்டம் விதிக்கிற தண்டனையை ஏற்றுக் கொண்டு அநுபவித்தார். சாத்வீக எதிர்ப்பு என்ற சொற் றொடரானது, தமது லட்சியம் பூராவையும் விளக்கவில்லையென்பது அவருக்குத் தெரியும்; அப்படியே சொல்லியு மிருக்கிறார். அது-சாத்வீக எதிர்ப்பு-நான் உத்தேசிக்கிற அனைத்தையும் தெரிவிக்கவில்லை. அஃது, ஒரு முறையைத்தான் குறிப்பிடுகிறது. ஆனால் அஃது எந்த அமைப்பின் ஒருபாகமாய் இருக்கிறதோ அந்த அமைப்பை அது தெரிவிக்கவில்லை. உண்மையான அழகு என்ன வென்றால் - அதுதான் என்னுடைய லட்சியம் -தீமைக்குப் பிரதியாக நன்மையைச் செய்வது இந்த விஷயத்தில் சத்துருக்களை நேசிக்க வேண்டும் துவேஷிக்கிறவர் களுக்கு, தொந்திரவு செய்கிறவர்களுக்கு ஹிதம் செய்ய வேண்டும்என் கிற கிறிதவ போதனைகளும், ஹிந்து மத போதனைகளும் ஒன்றாயிருக்கின்றன. சாத்வீக எதிர்ப்பு என்கிற ஆயுதத்தைப் பற்றி எனக்குத் தோன்றுகிற சில கருத்துக்களைத் தெரிவித்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். இது-சாத்வீக எதிர்ப்பு - நிரந்தர தானமொன்றை அடைந்துவிட்டது. இதனைப் பலர் பரிசோதனை செய்திருக்கிறார் கள்; இன்னமும் பரிசோதனை செய்வார்கள் தனிப்பட்டவர்கள் (உதாரணமாக, யுத்தம் கூடாதென்கிற கொள்கையையுடைவர்கள், யுத்த காலத்தில்) இதனை - இந்தச் சாத்வீக எதிர்ப்பை - ஒர் ஆயுதமாக உபயோகிக்கலாம். அரசியல் விஷயத்திலும், ராணுவ விஷயத்திலும் அதிகாரமில்லாத ஜாதியினர் இந்த ஆயுதத்தைக் கையாளலாம். தர்ம ஆயுதம் என்ற முறையில் இஃது, அரசியல் போராட்டத்தை ஓருயர்ந்த நிலையில் கொண்டு வைக்கிறது. இந்த முறையைக் கையாள்கிறவர் கள், தாங்களே வலிய துன்பத்தையும் அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியவர் களாதலினால், அவர்களுக்கு அதிகமான தன்னடக்கமும் மனோ உறுதியும் இருக்கவேண்டியதவசியமாகிறது. யாருக்கு விரோதமாக இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவர்கள், தங்கள் கட்சியில் கொண்டிருக்கிற நம்பிக்கையை இந்த ஆயுதம் இழக்கச் செய்கிறது; அவர்களுடைய தேக பலத்தைப் பயனற்றதாக்கி விடுகிறது; மற்றவர் களுடைய துன்பத்திற்கு நாம்தானே காரணம் என்ற எண்ணத்தை அவர்களுடைய மனத்தில் உண்டாக்கி, அவர்களுடைய உறுதியைக் குலைக்கச் செய்கிறது. ஆனால், மனச்சாட்சியே இல்லாத எதிரி களிடத்தில் இந்த ஆயுதப் பிரயோகம் பயன்படுமா வென்பது எனக்குச் சந்தேகமா யிருக்கிறது. ஜெர்மனியில் நாஜிகளால் கொடுமையாக நடத்தப்படுகிற யூதர்களுக்குக் காந்தியடிகள் ஆலோசனை சொல்கிற போது, சாத்வீக எதிர்ப்பு முறை யைக் கையாளுமாறு கூறினார். அப்படி அவர்கள் கையாண்டி ருப்பார்களானால், நாஜி துருப்புகளுக்கு மனச்சாட்சியே இல்லை யென்பது தெரியவந்திருக்கும். அவ்வளவுதான். தவிர சாத்வீக எதிர்ப்பு என்பது, ஒரு தர்ம ஆயுதம். ஏனென்றால், மனிதனிடத்திலே சுபாவமாயிருக்கிற பிடிவாத குணம், கோபம், துவேஷம் முதலியவற்றை, பொறுமை, சாந்தம், அன்பு ஆகியனவாக மாற்றி, தன்னலமற்ற ஒரு நிலையில் இருப்பதென்பது, எல்லா ஜனங்களாலும் முடியாத காரியம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறை, எந்த அமைப்பின் ஒரு பாகமா யிருக்கிறதோ,அதனின்று பிரிந்து ஒரு தனி முறையாக இதனைக் கையாள முடியாது. அதாவது சத்துருக்களை நீங்கள் நேசிக்க வேண்டும்; தீமைக்குப் பதில் நன்மை செய்ய வேண்டும். ஜனங்களிற் பெரும்பாலோர் இந்த உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமானால், சரியான ஒரு தலைவர் வேண்டும். அவருக்கு அசாதாரணமானதொரு மனோ தைரியமும் உறுதிப்பாடும் வேண்டும். பிரசாரத்தின் மூலமாகவோ ஆயுத பலத்தின் துணை கொண்டோ இந்தக் குணங்களைத் தம்மைப் பின் பற்றுவோருக்குப் புகட்டாமல், தாம் இந்தக் குணங்களை அநுஷ்டித்துக் காட்டுவதன் மூலமாகவே, இவற்றை ஜனங்களுக்குப் புகட்டும் தலைவராக அவர் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தலைவர்கள் தோன்றுவது அபூர்வம். தலை முறைக்கு ஒரு காந்தி அவதரிப்பது கூட கஷ்டம். அந்தக் காலத்தில், தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் காந்தியடி களைக் குறைகூறியது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், சட்டத்தின் மூலமாகவும் சம்பிராயத்தின்மூலமாகவும், இந்தியர்களினும் தாழ்ந்த திதியில் வைக்கப்பட்டிருக்கிற ஆப்பிரிக்க சுதேசிகள், எங்கே, இந்தியர்களைப் பார்த்து சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாளப் போகிறார்களோவென்று வெள்ளையர்கள் பயந்தார்கள் . ஏனென்றால், தென்னாப்பிரிக்கா, ஒரு வெள்ளையர் நாடாகவே இருக்க வேண்டு மென்பது அவர்கள் நோக்கம். இதற்குக் காந்தியடிகளின் பதில் என்னவாயிருந்த தென்றால், கலகம், குழப்பம், ரத்தச் சிந்துதல் முதலியவைகளைக் காட்டிலும், ஆத்மார்த்தமான, இந்தச் சாத்வீக எதிர்ப்பு ஆயுதமே சிறந்த தென்பது தான். இந்த ஆயுதத்தைப் பிரயோகிப்பதென்றால், அதற்கு அடிப்படையாக இந்த ஆயுதத்தை உபயோகிக்கிறவர்களுடைய கட்சி நியாயமான தென்ற நம்பிக்கை இருக்கிறது. அதாவது, எந்தக் கட்சியினர் பக்கம் நியாய மிருக்கிறதோ அவர்கள் தான் ஆத்மார்த்தமான இந்த ஆயுதத்தை உபயோகிப்பர். எனவே ஆப்பிரிக்க சுதேசிகளுடைய கட்சி நியாமா யிருந்து, அவர்களும், சாத்வீக ஆயுத எதிர்ப்பை உபயோகிக்கக் கூடிய அளவு நாகரிகத்தின் உயரத்தில் இருப்பார்களேயானால், அவர் களுக்கு ஓட்டுரிமை வழங்கவேண்டிவரும்; தென்னாப்பிரிக் காவின் பல ஜாதி அமைப்பில் அவர்களுடைய தானம் என்னவென்பதை நிர்ணயிக்க அவர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டிவரும். இப்படியெல்லாம் தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் எண்ணினார்கள். தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பித்து முப்பது வருஷங்களுக்கு மேலாகின்றன. அங்குள்ள இந்தியர்கள், காந்தியடிகளின் தலைமையை புனிதமான ஞாபகத்தோடு போற்று கிறார்கள். ஆனால் அவர், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிட்ட பிறகு அவர்கள் சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாளவில்லை. ஆப்பிரிக்க சுதேசிகளைப் பொறுத்த மட்டில், அவர்கள் பல தடை களையும் எதிர்த்து அதிகமான முன்னேற்றத்தை யடைந்திருந்த போதிலுங்கூட, சாத்வீக எதிர்ப்பைக் கையாளக்கூடிய அவ்வளவு உயர்ந்த நிலைக்கு எப்பொழுது வருவார்களென்பதை இப்பொழுது சொல்ல முடியாது. ஆனால் நிராயுத பாணிகளாயும், தங்களுக் குள்ளேயே பல பிரிவினையுடையவர் களாயும், உதவியற்றவர்களாயும் இருக்கிற அவர்களுக்கு, கடைசி ஆயுதம், இச் சாத்வீக எதிர்ப்பு ஒன்றுதான். ஆனால்ஆப்பிரிக்க சுதேசிகளுக்கிடையே ஒரு காந்தி இன்னும் தோன்றவில்லை. அப்படித் தோன்றாமலேகூடப் போய் விடலாம். ஆனால் தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையோராயுள்ள வெள்ளையர்கள், எல்லா அரசியல், சமுதாய, பொருளாதார உரிமை களையும் தாங்களே சுவாதீனப் படுத்திக் கொண்டிருப்பதில் பிடிவாதங் காட்டுவார்களானால், ஐரோப்பியரல்லாத இதர ஜாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு விரோதிகளாகிவிடுவார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த ஒற்றுமையான கட்சிக்குத் தலைவராக, காந்தியடிகளின் பரம்பரையைப் பின்பலமாகக் கொண்ட இந்தியர்களிடமிருந்து ஒரு தலைவர் தோன்றுவார். * * * தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் கனம் ஜான் எச். ஹாப்மேயர், எம்.ஏ., (சான்ஸலர், விட்வாட்டர்ராண்ட் சர்வகலாசாலை, தென்னாப்பிரிக்கா) சமீபத்தில் (1938ம் வருஷக் கடைசியில்) சென்னைக் கருகாமையி லுள்ள தாம்பரத்தில் அகில கிறிதவர்கள் மகாநாடொன்று நடைபெற்றது. அதை முன்னிட்டு டாக்டர் ஜான் ஆர்.மோட் என்ற பாதிரிப் பெருமான் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். மகாநாடு முடிந்தபிறகு சிவகிராமத் திற்கு வந்து மகாத்மா காந்தியைப் பார்த்தார். அப்பொழுது காந்தியடி களைப் பார்த்து அவர் கேட்டார்:- தங்களுடைய வாழ்க்கையில் புதிய தொரு விகாசத்தைக் கொடுத்த முக்கியமான அநுபவம் எது? இதற்கு மகாத்மா காந்தி அளித்த பதிலை இங்கு எடுத்துச் சொல்வது பொருத்த மாயிருக்கும். இந்த மாதிரியான அநுபவங்கள் பல எனக்கு ஏற்பட்டிருக் கின்றன. ஆனால் நீங்கள் என்னை இந்தக் கேள்வி கேட்பதனால், என்னுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்த ஓர் அநுபவத்தைமட்டும் கூறுகிறேன். நான் தென்னாப்பிரிக்காவில் போய் இறங்கின ஏழாவது நாள் எனக்கு இந்த அநுபவம் ஏற்பட்டது. என்னுடைய சொந்த வேலையை முன்னிட்டே அங்கு நான் சென்றேன். அப்பொழுது தான், இங்கிலாந்தி லிருந்து திரும்பி வந்திருந்தேன். பணம் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசை யிருந்தது. என்னைத் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்ற கட்சிக்காரர், நான் அங்குச் சென்றதும், என்னைத் திடீரென்று டர்பனிலிருந்து பிரிடோரியா வுக்குப் போகச்சொன்னார். அது சுலபமான பிரயாணமல்ல; சார்லடவுன் வரையில் ரெயிலில் பிரயாணஞ்செய்ய வேண்டும்; பிறகு ஜோஹான்னபர்க்குக்கு கோச் வண்டியில் போக வேண்டும். முதல் வகுப்பு டிக்கட் என்னிடமிருந்தது; ஆனால் படுக்கைக்கான டிக்கட் இல்லை. மாரிட்பர்க் டேஷனுக்கு ரெயில் வண்டி வந்ததும், எல்லோருக்கும் படுக்கைகள் கொடுக்கப்பட்டன. ரெயில்வே கார்ட் (என்னிடம் படுக்கை டிக்கெட் இல்லையாதலினால்,) என்னைக் கீழே இறக்கிவிட்டு வேறொரு கம்பார்ட்மெண்டுக்குப் போகச் சொன்னார். ஆனால் நான் வேறொரு கம்பார்ட்மெண்டு க்குப் போக மறுத்தேன். வண்டியோ என்னைக் குளிரில் தவிக்கவிட்டுப் போய்விட்டது. என்னுடைய உயிருக்கே ஆபத்து வருமென்று அஞ்சினேன். பக்கத்திலுள்ள வெயிடிங் ரூமு க்குச் சென்றேன். அங்கே இருட்டாயி ருந்தது. அங்கு ஒரு வெள்ளைக்காரன் இருந்தான். என்னுடைய கடமை யென்ன வென்ற கேள்வி என்னுள்ளத்தில் எழுந்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதா? அல்லது கடவுளையே துணையாகக்கொண்டு எதுவந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராயி ருப்பதாக உறுதிபூண்டு முன்னோக்கிச் செல்வதா? இந்தத் தேதி யிலிருந்துதான் என்னுடைய அஹிம்ஸை, கிரியாம்சையில் ஆரம்பித்தது. ஒரு தென்னாப்பிரிக்காவாசிக்கு, இந்தச் சம்பவத்தை ஞாபகப் படுத்திக்கொள்வதென்றால், அது கொஞ்சம் வருத்தமாகத்தானிருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவம், காந்தியடிகளின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமா யிருந்ததென்பதைத் தெரிவிக்கிறது. ஏனென்றால், சத்தியாக்கிரகம் என்ற தத்துவமானது தென்னாப்பிரிக்காவில்தான் உண்டாக்கப்பட்டது; சாத்வீக எதிர்ப்பு என்ற ஆயுதம் அங்குதான் பிரயோகம் செய்யப்பட்டது. இந்தியா, தனது கடினமான பிரச்னை களில் ஒன்றைத் தென்னாப்பிரிக்காவுக்கு அளித்தது. அதுபோல், தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்குச் சாத்வீக சட்ட மறுப்பு என்ற எண்ணத்தை அளித்தது. இந்தியர்கள், தென்னாப்பிரிக்காவுக்கு வந்தது, வெள்ளையர் களுடைய நலனுக்காகத்தான். ஒப்பந்தக் கூலிகளின் உழைப்பின்றி, நேட்டால் கடலோரப் பிரதேசத்தைச் சுரண்டுவது அசாத்தியமென்று வெள்ளையர்களுக்குப்பட்டது. எனவே இந்தியர்கள் வந்தார்கள். நேட்டாலுக்குச் செழிப்பும் ஏற்பட்டது. அப்படி வந்த இந்தியர்கள், இங்கேயே திரமாகத் தங்கிவிட்டார்கள். இன்னும் பல இந்தியர்கள், ஒப்பந்த முறைக்கு உட்பட்டும் உட்படாமலும் வந்து கொண்டிருந்தார் கள். நாளா வட்டத்தில், ஐரோப்பியர்களுடைய வியாபாரத்திற்கு இந்தியர்களால் போட்டி ஏற்பட்டது. ஏனென்றால், இந்தியர்களுடைய வாழ்க்கை அந்தது மிகக் குறைவாயிருந்தது. இது நிறத் துவேஷத்தை உண்டுபண்ணி விட்டது. இந்தியர்கள் அழையா விருந்தினர்களாகக் கருதப்பட்டார்கள். மேற்சொன்ன நிறத் துவேஷந்தான், மாரிட்பர்க் ரெயில்வே டேஷனில் காந்தியடிகள் ரெயிலிலிருந்து கிழே இறக்கப் பட்டதற்குக் காரணமாயிருந்தது. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் செய்த சேவையைப்பற்றி இங்கு விரித்துச் சொல்வது அநாவசியம். அங்கு நடைபெற்ற பெரிய போராட்டத்தில், காந்தியடிகளுக்கு எதிரியாயிருந்தவர், உலக முக்கிய தர்களுள் ஒருவராக இப்பொழுதிருக்கிற தளபதி மட். இந்த இரண்டு பேருக்கும் பொதுவான விஷயங்கள் பல இருந்தன. ஜோஹான்னபர்க்குக்கு வெளியில், குற்றஞ் செய்து தண்டிக்கப்பட்ட இந்திய, சுதேசி பிள்ளைகளைச் சீர்திருத்துவதற்கென்று ஒரு பாட சாலை இருக்கிறது. இது முன்னர் சிறைச்சாலையாயிருந்தது. சில வருஷங்களுக்கு முன், இந்தப் பாடசாலைக்கு, ஓர் உயர்தர அரசாங்க உத்தியோகதருடன் சென்றிருந்தேன். அவர், அங்குள்ள ஓர் அறையைச் சுட்டிக் காண்பித்து, இங்குதான் முப்பது வருஷங்களுக்கு முன் ஸ்ரீ. காந்தி சிறைவாசத்தை அநுபவித்தார். அப்பொழுது நான் ஒரு கீழ்த்தர மாஜிடிரேட்டாயிருந்தேன். தளபதி மட், தத்துவ சாதிர சம்பந்தமான புதகங்களை என்மூலம் காந்தியடிகளுக்குக் கொடுத்தனுப்புவார் என்று கூறினார். இந்த இரண்டு பேர்களுக்கு மிடையில் பலத்த போராட்டம் நடைபெற்றபோதிலுங்கூட, இரண்டு பேரும் பரபர மதிப்புடனும் சிநேகப்பான்மையுடனுமே நடந்து கொண்டார்கள். இப்பொழுதுகூட இந்த உறவு இருக்கிறது. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் என்ன சாதித்தார்? இந்தியர்களின் ஒப்பந்தக் கூலி முறையை நிறுத்த வேண்டுமென்று தளபதி மட் கொண்டிருந்த நோக்கத்தை இவரால் தடுக்க முடியவில்லை. ஆயினும் குடியிறக்கச் சட்டத்தில் இந்தியர்களின் பெயர் குறிப்பிடாதபடி செய்தார்; ஏற்கனவே அங்கு வசித்துக்கொண்டிருந்த இந்தியர்களுடைய சில்லரைக் குறைகளுக்குப் பரிகாரந் தேடிக் கொடுத்தார். தமக்கும் தளபதி மட்ஸுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, தாம் தென்னாப்பிரிக்கா விலிருந்து வந்துவிட்ட பிறகு, அங்கு ஆசியாக் காரர்களுக்கு விரோதமாயிருந்த துவேஷ மனப்பான்மை மறைந்து போய்விடுமென்று அவர் எண்ணியிருந்திருப்பாரானால் அவருக்குக் கிடைத்திருப்பது ஆசாபங்கந்தான். இந்தத் துவேஷ மனப்பான்மை இன்னும் தென்னாப்பிரிக்காவில் பல தோற்றங்களாக இருந்து கொண்டுதானிருக்கிறது. இது தென்னாப்பிரிக்காவுக்குக் கௌரவம் தரத் தக்கதாயில்லை. காந்தியடிகளின் தலைமையானது தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களிடையே சாசுவதமானதொரு முத்திரையை இட்டிருக் கிறது. இந்தியர்களுடைய ஜாதீய கௌரவத்தை அவர் உயர்த்திக் கொடுத்தார். இந்தியர்களைத் தனியான இடங்களில் வசிக்கச்செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்போது தென்னாப்பிரிக்காவில் கொண்டுவரப்படுகிற சட்டங்களை, இந்தியர்கள், முன்னர் காந்தியடிகளின் தலைமையில் கௌரவமற்ற சட்டங்களை எப்படி எதிர்த்து நின்றார்களோ அப்படியே தீவிரமாக எதிர்த்து நிற்கத் தயாராயிருக்கிறார்கள். முன்னர், காந்தியடிகள் சட்டத்தை மீறி நடந்தபோதும், கைவிரலடையாளம் கொடாமல் ஒரு மாகாண எல்லையிலிருந்து மற்றொரு மாகாண எல்லைக்குச் சென்றபோதும், சிறையிலிருந்து வெளியே வந்தபோதும், அவர் என்ன செய்து கொண்டிருந்தாரென்றால், தன்னல மறுப்பு என்ற கோட்பாட்டைத் தூய்மைப் படுத்திக்கொண்டிருந்தார்; அதனை ஒர் ஆயுதமாக உபயோகித்தால் அதற்கு எவ்வளவு சக்தியுண்டென்பதையும் தெரிந்து கொண்டிருந்தார். எனவே காந்தியடிகளை ஒரு மனிதராகப் பண்படுத்திக் கொடுத்தது தென்னாப்பிரிக்காதான். இப்பொழுது அவர், இந்தியா வுக்கு மட்டும் மகாத்மாவாக இல்லை; உலக சமயாசாரியர்களுள் ஒருவராக இருக்கிறார். ஆனால் இந்தியாவை ஆள்வோர், அவர் எப்படி இந்த திதிக்கு வந்தாரென்பதைத் திருப்தியுடன் நினைவுபடுத்திக் கொள்ள முடியாது. * * * காந்தியடிகளும் உலக சமாதானமும் லாரென் ஹவுமான் (ட்ரீட், ஸோமர்ஸெட், இங்கிலாந்து) தற்போது ஜீவிய தசையிலுள்ள உலக சமாதானவாதிகளில் காந்தியடிகள் தலைசிறந்தவர். சமாதானக் கொள்கையை, அநுஷ் டானத்திற்குக் கொண்டுவந்தால், அஃது உலக அரசியலில் சக்தி பொருந்தியதாயிருக்கும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருக் கிறார். பலாத்காரத்தையும் அடக்கு முறையையும் அடிப்படையாகக் கொண்ட ஒர் அரசாங்கத்தைக்காட்டிலும் இது-இந்தச் சமாதான முறை-வலுவுள்ளதாயிருக்கிறது. காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் பூரண வெற்றியடைந்திருக்கிறார். இந்தியாவில் அவர் அடைந்திருக்கிற வெற்றி மகத்தானது. அவரைப் பின்பற்றுவோர் இன்னும் அதிகம் பேராயிருந்து, பூரண அஹிம்ஸையைக் கைக்கொண்டிருந்திருப்பார் களானால், அவருடைய இந்தச் சமாதானக் கொள்கை மேலும் வெற்றி யடைந்திருக்கும். இங்ஙனம் சமாதானக் கொள்கையை, அநுஷ்டான பூர்வகமாக அரசியலில் கொண்டு புகுத்தியது, சுதந்திரத்திற்காகப் போராடுகிற எல்லா ஜாதி யாருக்கும், எல்லாத் தேசத்தினருக்கும் ஒரு வழிகாட்டி மாதிரியிருக்கும். தீமையைக் களைய பலாத்காரந்தான் சிறந்த பரிகாரமென்று இதுகாறும் கருதப்பட்டு வந்தது. அப்படிப்பட்டதொரு நிலையில் காந்தியடிகள், அஹிம்ஸை முறையினால் வெற்றி கண்டிருப்பது ஒரு பெரிய விஷயம். பல எதிர்ப்புகளுக்கிடையே பெரியதொரு கோஷ்டி யைத் தயாரித்து, அவர்கள் மூலம் அஹிம்ஸைக்குக் காந்தியடிகள் வெற்றி தேடிக் கொடுத்திருப்பது எதைக் காட்டுகிறதென்றால், மனித சுபாவத்திற்கியைந்த ஓர் உண்மையை அவர் உபதேசிக்கிறா ரென்பதையும், பெரிய லட்சியங்களை உத்தேசித்து இந்தக் கொள்கை யைச் சரியான முறையில் பொது ஜனங்களின் முன்னிலையில் வைத்தால், அதனை உடனே அவர்கள் ஏற்றுக் கொள்வார்க ளென்பதையுமே தெரிவிக்கின்றன. இத்தகைய காரணங்களினால், காந்தியடிகளுடைய வாழ்க்கை தற்காலத்திற்கு மிகவும் உபயோகமானது. அவர் இன்னும் இளமை யோடு கூடியிருந்தால், அவருடைய தலைமையானது, உலகத்திற்கு இன்னும் பல வருஷ காலம் பயன்படுமே யென்ற எண்ணத்தோடு, அவருடைய எழுபதாவது பிறந்த நாளன்று என்னுடைய பாராட்டு தலைத் தெரிவிக்கிறேன். சத்தியாக்கிரகக் கொள்கை ஜான் எ. ஹாய்லண்ட் (வுட்ப்ரூக் செட்டில்மெண்டு ஸெல்லி ஒக், பர்மிங்ஹாம்) 1938-ம் வருஷக் கடைசியில், சென்னையில் தற்கால உலகத்திற்குக் கிறிது நாதரின் உபதேசங்களை எவ்வாறு பொருத்திப் பார்க்கலா மென்பதைப்பற்றி ஆலோசிக்க, அகில உலக கிறிதவர்கள் மகா நாடொன்று கூடியது. இந்த மகாநாடு நடைபெறுவதற்கு முந்தி, இந்த மகாநாட்டை உத்தேசித்து வந்திருந்த பிரபல கிறிதவத் தலைவர்கள் பலர், ஒரு ஹிந்து தலைவரைத் தரிசிக்க அதிக தூரம் பிரயாணஞ் செய்தார்கள். கிறிது நாதரைத் தாங்கள் இன்னும் எவ்வாறு திறம்படப் பின்பற்றலாமென்பதைப்பற்றி அவருடைய ஆலோசனையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே இவர்களுடைய நோக்கம். இப்படி இவர்கள் ஆலோசனை கேட்கச் சென்றதிலிருந்தே, கிறிதவ தர்மம், பெரும்பாலும் தற்போதைய கைத்தொழில் நாகரிகம், ஏகாதிபத்திய முறைகள் முதலியவற்றோடு தன்னை இணைத்துக் கொண்டிருப்பதன் காரணமாக இப்பொழுது தவறான பாதையில் சென்று வருகிற தென்ற எண்ணம் எவ்வளவு ஊர்ஜிதமாகியிருக்கிற தென்பது நன்கு புலனாகிறது. தவிர, இந்தியா வில் அவதரித்துள்ள இந்த மகான்-மகாத்மா காந்தி -நம்மை விட அதிகமாகக் கிறிது நாதரின் திருவுளத்தைத் தெரிந்து கொண்டு, அவருடைய உபதேசங்களை அநுஷ்டானத்தில் கொண்டு வந்திருக் கிறார் என்பதைக் கிறிதவர்கள் எவ்வளவு உண்மையாக நம்புகிறார் களென்பதையும் இது காட்டுகிறது. இங்ஙனம் பார்க்கச் சென்ற கிறிதவத் தலைவர்களுடன் காந்தியடிகள் நடத்திய முக்கியமான சம்பாஷணைகளில், அவர் முதலில் பணத்தைப்பற்றிக் குறிப்பிட்டார். அவர் சொன்னதாவது:- கடவுளுக்கும் ஐசுவரிய தேவதைக்கும் ஒரே சமயத்தில் நீங்கள் தொண்டு செய்ய முடியாதென்று நான் நினைக்கிறேன். மேற்படி ஐசுவரிய தேவதையை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, கடவுள் பின்னாடி தங்கி விட்டார் என்று நான் அஞ்சுகிறேன். இதற்காகக் கடவுள் ஒரு நாள் பழி தீர்த்துக் கொள்ளப் போகிறார். ****ஒரு மததாபனம், தனது தேவைக்கதிகமான பணத்தை வைத்துக் கொண்டிருக்குமானால், அது, கடவுளிடத்தில் நம்பிக்கை இழந்து, பணத்தினிடம் நம்பிக்கை வைப்பதாகிறது. பணத்தை முக்கியமாகக் கொண்டு நீங்கள் வாழக் கூடாது. தென்னாப்பிரிக்காவில் நான் சத்தியாக்கிரக இயக்கத்தை ஆரம்பித்த போது, என்னிடத்தில் ஒரு செம்புக் காசுகூட இல்லை. என்னை நம்பி மூவாயிரம் பேர் இருந்தனர். இவர்களை நான் போஷிக்க வேண்டிய வனாயிருந்தேன். பயமில்லை; கடவுளின் திருவருள் இருந்தால், அவர் இந்த இயக்கத்தை நடத்திச் செல்வார் என்று துணிந்து ஆரம்பித்தேன். பிறகு இந்தியாவிலிருந்து ஏராளமாகப் பணம் வர ஆரம்பித்தது. ஆனால் அதை நான் வேண்டாமென்று சொல்ல வேண்டியதாயிற்று. ஏனென்றால், பண வருவாய் அதிகமாக ஆக, என் கஷ்டங்களும் அதிகமாயின. முன்னர் அவர்கள் - என்னைப் பின்பற்றி வந்தோர் - ரொட்டியோடும் சர்க்கரை யோடும் திருப்தி யடைந்திருந்தார்கள். இப்பொழுது எல்லா உணவு வகைகளையும் கேட்க ஆரம்பித்தார்கள்! இன்னும், இப்பொழுது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள (வார்தா) கல்வித் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வித பண உதவியையும் எதிர்பாராமல் இந்தத் திட்டம் நடைபெற வேண்டுமென்று நான் கூறினேன். இல்லா விட்டால் நான் இறந்தபிறகு, இந்தத் திட்டம் சிதறிப் போய் விடும். எந்த நிமிஷத்தில் பண திரம் ஏற்பட்டு விடுகிறதோ, அதே நிமிஷத்தில் அத்யாத்மிக வாழ்க்கையும் காலியாகப் போய்விடுகிறது. இந்தக் கடைசிவாசகம், காந்தியடிகளின் லட்சியத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஒர் இயக்கத்திற்கு, க்ஷேம நிதியோ அல்லது ஒழுங்கான பணவருவாயோ இருக்குமானால், அந்த இயக்கத்தின் ஆன்ம வாழ்வு அழிந்து போகிறது. மனப்பூர்வமாகவும் சுயநலப் பற்றின்றியும் ஓர் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்கள், பின்னர், அந்த இயக்கத்தின் மூலமாகப் பணம் பறிக்கிறவர் களாகிறார்கள்; எந்த இயக்கத்தின் உதவிபெற்று மேன்மை யடைந்தார்களோ, அந்த இயக்கத்தினாலேயே (ஆத்ம) தரித்திரர்களாகி விடுகிறார்கள். அந்த இயக்கத்தையும் அதன் நிதியையும், கறக்கிற ஒரு பசு மாதிரி அவர்கள் கருதிவிடுகிறார்கள். உடனே, மற்றவர்களைவிடத் தான் அதிகமாகக் கறந்துவிட வேண்டு மென்று அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவனும் பிரயத்தனப் படுகிறான். விளைவு என்ன? புரட்டுகள் முதலிய ஒழுக்கஹீனங்கள் இயக்கத்திற்குள் புகுந்துவிடு கின்றன. எல்லாவிதமான நயவஞ்சகங்கள், பொய்கள் முதலியன ஆதரிக்கப்படுகின்றன. பஞ்ச நிவாரணம், யுத்தக் கஷ்ட நிவாரணம் முதலியவை சம்பந்தமான நிதிகளை விநியோகிக்கும் விஷயத்தில், இந்தக் கட்டுரை எழுதுகிற எனக்குப் பல நாடுகளிலும் அநுபவம் உண்டு. காந்தியடிகள் கூறுவது மிகச் சரியென்று எனக்குப் படுகிறது. ஜீவ சக்தியோடுகூடிய ஓர் ஆத்மீய இயக்கம், கூடியவரையில் பணம் தேவையில்லை யென்று தள்ளிவிடும். அதனால் அதற்கு பலம் ஏற்படுமே தவிர, பலம் குறையாது. தனக்கென்று ஒன்றையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்கிற (அபரிக்ரஹ) சித்தாந்தத்தில் பூர்ண நம்பிக்கை யிருப்பதனால்தான், காந்தியடிகள் இந்த மாதிரியான அபிப்பிராயங் கொண்டிருக்கிறார். இது, பிரான்சிகர்களுடைய கொள்கையை அநுசரித்ததாயிருக்கிறது. இதைப் பற்றி காந்தியடிகளின் நெருங்கிய சிஷ்யர் ஒருவர் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்:- நீங்கள் கொண்டுள்ள லட்சியத்திற்கு உங்கள் உயிரை அர்ப்பணம் செய்யத் தயாராயிருந்தால், அந்த லட்சியத்திற் காகப் பணம் வந்துகொண்டிருக்கும். பணமில்லாவிட்டால், உங்கள் காரியம் நின்றுவிடாது. அதற்கு மாறாக, லட்சியத்தை உத்தேசித்த காரியங்கள் நன்றாக நடைபெறும். கிறிதவத் தலைவர்களோடு காந்தியடிகள் பேசிய மற்றொரு முக்கிய விஷயமென்ன வென்றால், பிறநாடுகளை ஆதிக்கப்படுத்தி வைத்திருப்பதிலேயே முனைந்திருக்கிற வல்லரசுகளைப்பற்றி யாகும். இந்த மாதிரியான வல்லரசுகளில் ஒன்றாக, பிரிட்டிஷாராகிய நம்மை, உலகத்து ஜனங்கள் கருதுகிறார்கள் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஞாபகம் வைத்துக் கொள்வது நல்லது. 1919ம் வருஷத்தில் நாம், நமது கொள்ளைப் பொருள்களின் ஜாபிதாவை முடித்துக் கொண்டு விட்டோமென்பதற்காக - அந்த வருஷத்தில் ஒன்பது புதிய நாடுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நிருவாக மேற்பார்வைக்குட்பட்டன- சமீப காலத்திலே சர்வதேசக் கொள்ளையிலே ஈடுபட்டிருக்கிற தேசங்களுக்கு இருக்கிற கொள்ளைக் கூட்டத்தார் என்ற பெயர் நமக்குப் பொருந்தாது என்று மற்ற ஜனங்கள் கருதுவார்களா என்ன? இந்தச் சர்வதேசக் கொள்ளையைப்பற்றி நாம் கொஞ்சம் மனச் சஞ்சலமடைகிறபோது, இது விஷயத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் முதலிய நாடுகள் ஆடுகிற ஆட்டங்களைப்பற்றி நாம் அதிகக் கவனஞ் செலுத்தக் கூடாதென்று, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருக்கும் பிரஜைகள் கருதுகிறார்கள். இந்த அஹிம்ஸா முறையில் ஓரளவு அநுஷ்டான பூர்வகமான அநுபவம் பெற்றுள்ளவர்கள், இந்தச் சர்வதேசக் கொள்ளை முறைகளை, மேற்கண்ட அஹிம்ஸை முறையினாலேயே எதிர்க்க முடியும், அப்படியே எதிர்க்க வேண்டுமென்பதை அங்கீகரிக்குமாறு காந்தியடிகள் வற்புறுத்துகிறார். அவர் கூறுகிறார்:- பலாத்காரத்தை எவ்வளவு நியாயமாக உபயோகித்தாலும், அது கடைசியில் நம்மை ஹிட்லர், முஸோலினி இவர்களுடைய நிலைமைக்கே கொண்டு போய்விடும். பலாத்காரத்தைப் பிரயோகிக்கிற அளவில் தான் வித்தியாசமிருக்கும். அஹிம்ஸையில் நம்பிக்கையுள்ளவர்கள், அதனை நெருக்கடியான நேரத்தில் உபயோகிக்க வேண்டும். கொள்ளைக் கூட்டத்தாரின் மனதைக்கூட நாம் மாற்ற முயல வேண்டும். அப்படி முயல்வது, குட்டிச் சுவரில் போய் முட்டிக் கொள் வதாக நமக்குத் தற்காலிகமாகத் தோன்றினாலும், அதில் நாம் பின்வாங்கக்கூடாது. ஒருவன் தீமையை அஹிம்ஸையினால் எதிர்க்க வேண்டுமென்ற முடிவுக்கு வரக்கூடிய அநுபவம், ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் என்னவென்பதைப் பற்றிப் பிறகு சம்பாஷணை தொடங்கியது. அப்பொழுது, காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவிற்குச் சென்ற ஏழாவது நாள் தமக்கேற்பட்ட அநுபவத்தைப்பற்றி சுருக்கமாகத் தெரிவித்தார்.1 காந்தியடிகள் அடைந்துள்ள சித்திகளில் இரண்டு முக்கிய விஷயங்களை, இந்தச் சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. முதலாவது அவருடைய அஞ்சாமை. ஒரேமாதிரியான இயல்புள்ள ஜாதியார் பெரும்பாலோராகவுள்ள ஒரு மேனாட்டில் வசிக்கிறவர் களுக்குத்தான், ஒரு வெள்ளையனைப் பார்த்து ஓர் இந்தியன் எப்படிப் பயப்படுகிறானென்பது தெரியும். வெள்ளைக்காரனை, வேறோர் உலகத்திலிருந்து வந்திருக்கிறவனென்றும், இயற்கைச் சக்திகளை அடக்கிக் கொண்டு போகக்கூடிய அதீத சக்திகள் அவனிடத்திலிருக் கின்றனவென்றும், அவனுக்கு நாம் அஞ்சி நடக்க வேண்டுமென்றும் ஏழை இந்தியன் - சிறப்பாகக் குடியான இந்தியன்-நிமிர்ந்து நிற்க வேண்டுமென்றும், வெள்ளைக்காரனுடைய முகத்தை எவ்விதத் கலக்கமுமின்றிப் பார்க்கவேண்டுமென்றும், தனதுநாட்டுக்கு விரோத மாக அந்த வெள்ளைக்காரன் ஏதேனும் உத்திரவிடுவானாகில் அதற்குக் கீழ்ப்படிய அவன் மறுக்கவேண்டுமென்றும் காந்தியடிகள் இந்தியர் களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். பயம், ஒரு தொத்து நோய் மாதிரி. அப்படியே அஞ்சாமையும். காந்தியடிகள், தமது அஞ்சாமைக் குணத்தைப் பிறருக்குக் கொண்டு புகுத்தும் ஆற்றல் பெற்றிருக்கிறார். இந்த விவசாயிகளுக்கு, அவர் அநியாயமான நிலவரிகளை-ஜில்லா அதிகாரிகள் என்ன கஷ்டம் கொடுத்தபோதிலும்-செலுத்த வேண்டா மென்று கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்தியாவைப்பற்றித் தெரிந்து கொண்டிருப்பவர்கள், இந்த அச்சத்தைப் போக்கும் விஷயத்தில் காந்தியடிகளுக்கு இருக்கும் மகத்தான சக்தியை நன்கு அறிவார்கள். இரண்டாவது, மேற்கண்ட மாரிட்பர்க் ரெயில்வே சம்பவம் பிறருடைய துன்பங்களை நிவாரணம் செய்ய வேண்டுமானால் நாம் துன்பத்தை அநுபவிக்க வேண்டுமென்ற காந்தியடிகளின் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தது. ரெயில் வண்டியிலிருந்து கீழே இறக்கப்பட்டதும், கோச் வண்டிக்காரனால் தாக்கப்பட்டதும் மிகச் சிறய விஷயங் களாயிருக்கலாம். ஆனால் தன் மதிப்புணர்ச்சியுள்ள ஓர் இளைஞர், இந்த அவமானத்தையும், துன்பத்தையும் மற்றவர்களுடைய நன்மைக் காகப் பொறுத்துக் கொண்டிருந்தார் என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம். இதிலிருந்துதான் காந்தியடிகளின் சத்தியாக் கிரகக் கொள்கை, தத்துவமாக மட்டுமல்ல; அநுஷ்டான பூர்வகமாகவும் பிறந்தது. இந்தச் சத்தியாக்கிரகக் கொள்கை என்ன சொல்கிற தென்றால், துன்பம் அநுபவிக்க வேண்டியிருந்தால் அதனின்றும் ஓடிப்போய் விடாதே; அதில் தைரியமாக இறங்கு. ஆனால் ஒரு துணிச்சலினாலேயோ அல்லது வைராக்கிய மனப்பான்மையுடனோ அல்லது புகழுக்காவோ இறங்காதே. நாம் துன்பமனுவிப்பதனால், மற்றவர்களுடைய துன்பம் நிவாரணமடைகிறது என்ற நேரிய மனப்பான்மையுடன் இறங்கு. தங்களுடைய நாட்டின் எதிர்கால நல்வாழ்வுக்காகச் சுமார் இரண்டைரை லட்சம் இந்தியர்கள், இந்தியாவில் காந்தியடிகளின் தலைமையில் சிறை சென்றார்கள். இதற்குக் காரணம் என்ன? இப்படிச் சிறை சென்றதற்குச் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன்னர், நேட்டாலில் ஒரு இந்திய இளைஞர் (காந்தியடிகள்) அநுபவ வாயிலாகப் பெற்ற அஞ்சாமைதான். எந்த விதமான துன்பத்தையும் அல்லது அவமானத்தையும் நேரிய மனத்துடன் அநுபவித்தோ மானால், அந்த அநுபவத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஏனென்றால், சத்தியாக்கிரக மென்பது, ஒரு தேசத்திற்குச் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் மட்டும் வாங்கித் தருவதல்ல; அல்லது யுத்தத்தில் வெற்றி கொள்வதென்பதுட்டுமல்ல; அல்லது சமுதாய, பொருளாதார அமைப்புகளை ஒழுங்கு படுத்திக் கொடுப்பதென்பது மட்டுமல்ல. இவைகளைவிட ஆழமானது; சிலுவையின் உண்மையை விளக்கிக் காட்டுவது. அந்த உண்மை யென்ன கூறுகிறது? நான் கிறிதுநாதரின் துன்பங்களைப் பூர்த்தி செய்கிறேன் என்று பால் முனிவரோடு சேர்ந்து கூறுகிறது. சத்தியாக்கிரகத்தின் உட்கருத்தை அறிந்து கொண்டிருக்கிறவன், சரித்திரத்தின்ஆரம்ப தசையிலிருந்து பார்ப்பானேயாகில், ஒரு சில மகான்களுடைய தியாகத்தினாலும், துன்ப மநுபவத்தினாலுமே மானிட சமுதாயம் முன்னேற்ற மடைந்து வந்திருக்கிற தென்பதை அறிவான். பெற்றோர் அன்பு, அல்லது சமுதாய ஒத்துழைப்பு முதலிய தத்துவங்கள் நாளா வட்டத்தில் செயலுக்குக் கொண்டு வரப்படு கின்றன. இவற்றிற் கெல்லாம் அடிப்படையாயிருப்பது எது? தன்னல மறுப்பு; மற்றவர் களுடைய நலனுக்காகவும், பிற்கால சந்ததிகளின் நலனுக்காகவும் தான் கஷ்டத்தை அநுபவிப்ப தென்கிற கோட்பாடு. மானிட சரித்திரத்தை ஒருவன் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருவானாகில், இந்தக் கோட்பாடு மெதுமெதுவாக வளர்ந்து பிரகாசித்துக்கொண்டு வருவதைக் காண்பான். சரித்திரத்தின் மூலமும், முன்னேற்றம் கிறிதுநாதருடைய சிலுவையில் (அதாவது தன்னல மறுப்பில்) தொகுப்பாகக் காணப்படுகின்றன. மற்றவர்களுடைய துன்ப நிவாரணத்திற்காக, நாம் துன்பத்தை அநுபவிக்க வேண்டுமென்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக இயக்கத்தைக் காந்தியடிகள் தலைமை பூண்டு நடத்தினார். அப்படி நடத்திக் காட்டியதன் மூலம், எந்தச் சத்தியாக்கிரகக் கொள்கையை, சுய நலப்பற்று நிறைந்த, ஆடம்பரம் மிகுந்த, பண ஆசை பிடித்த மேனாட்டு நாகரிகமானது, நமது பார்வையினின்று விலக்கி யிருந்ததோ அப்படிப்பட்ட சத்தியாக்கிரகக் கொள்கையை உலக தத்துவ மாகப் பகிரங்கத்திற்குக் கொண்டு வந்தார். சென்ற நூற்றைம்பது வருஷ காலமாக கிறிதவமத பக்தர்கள் சிலுவையினுடைய மகத்துவத்தைப் பற்றி உபதேசம் செய்து வந்திருக் கிறார்கள். ஆனால் சுயநலப் போட்டி காரணமாக, இந்தச் சிலுவை யானது வெறும் ஒரு தத்துவமாகவே போய்விட்டது. அல்லது தனிப் பட்டவர்களுக்கே மோட்சத்தை யளிக்க வல்லது என்று கருதப்பட்டு விட்டது. நமது தலைமுறையினுடைய முக்கிய வேலையென்ன வென்றால்-நாகரிகமுள்ள மானிட சமுதாயத்தின் கடைசி தலைமுறை நாம் தான்- சிலுவையின் மூலமாக -அதாவது தன்னலத் தியாகத்தின் மூலகமாக தீமை, பலாத்காரம், யுத்தம் முதலியவற்றை ஒழிக்க முடியு மென்ற உண்மையை நிலைநாட்டுவது தான். சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள் என்று கிறிது நாதர் சொன்னது, மற்றவர்கள் அதனை அநுஷ்டிக்க வேண்டு மென்பதற்காகத்தான் சொன்னாரென்ற உண்மையை நாம் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் எப்படி மற்றவர்களுடைய நலனுக்காகத் துன்பத்தை அநுபவித்தாரோ, மரணத்தைக்கூட ஏற்றுக் கொண்டாரோ அப்படிப் போல வலிய, நாமும் மற்றவர்களுடைய நன்மைக்காக துன்பத்தை அநுபவிக்கவும் அவசியமானால் மரணத்தை ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நாம் துன்ப மநுபவிப்பதும், மரணத்தை ஏற்றுக் கொள்வதும், மானிட சமுதாயத்தைப் பாவத்தினின்றும் தீமையினின்றும் காப்பாற்றும் பொருட்டாயிருக்க வேண்டும்; தவறு செய்தவர்கள் மீது துவேஷம் கொள்ளாமலிருக்க வேண்டும். மற்றும் தன்னடக்கத்துடனும், பொறுமையுடனும், நல்லெண்ணத் துடனும் மேற்படி தியாகத்தைச் செய்ய வேண்டும். ஆனால் கடவுளைப்பற்றி நாம் சரியாகத் தெரிந்து கொண்டால் தான், இந்தத் தன்னல மறுப்புணர்ச்சி ஏற்படு மென்பது, கிறிது நாதருடையவும் அவருடைய சிஷ்யர்களுடையவும் நம்பிக்கையா யிருந்தது. இன்று, காந்தியடிகளின் உபதேசமும் இதே நம்பிக்கையைத் தான்அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நாம் கடவுளின் உண்மையைப் பற்றி ஒரு புதிய விழிப்புக் கொள்ளவேண்டும். கடவுளும், இந்த அஹிம்ஸை முறைப்படிதான், சிலுவையின் மார்க்கமாகத்தான் காரியங்கள் நடத்துகிறார். இந்த அஹிம்ஸை முறை ஒரு சில சமாதான வாதிகளின் விநோதக் கொள்கையென்று கருதிவிடக் கூடாது. பாவத்தையும் தீமையையும் வெற்றி கொள்வதற்கு இந்த அஹிம்ஸை முறைதான் சரியென்பது நித்தியமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற கடவுளின் திருவுளச் சித்தம். சரித்திரத்தின் பூராவிலும், தனிப்பட்டவர்களுடைய வாழ்க்கை பூராவிலும் சிலுவையானது தன் நிழலைப் பரப்பிக் கொண் டிருக்கிறது. கடவுள், எல்லோருக்கும் தந்தையாகவும், வழி தவறிப் போனவர்களை நெறிப்படுத்துபவராகவும் இருக்கிறார். இந்தமாதிரி மற்றவர்களுக்காகத் தான் துன்பத்தை வலிய ஏற்றுக் கொள்வதுதான் கடவுள் நெறி. கடவுள், அன்பு வடிவினர். அந்த அன்பானது பிறருக்காகத் துன்பத்தை அநுபவிக்கு தன்மையது. இபப்டிப்பட்ட கடவுளைத் தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்திலிருந்து யுத்தம், வறுமை முதலியவற்றை ஒழிக்க வேண்டு மானால், இந்தக் கடவுளைத் தான் நாம் தொழவேண்டும். துன்பங்கள், சந்தேகங்கள், முதலியன ஏற்படுகிறபோது, ஆத்மாவுக்குச் சாந்தி தருவது எதுவென்று டாக்டர் ஜான் ஆர். மோட் என்ற பிரபல கிறிதவர் காந்தியடிகளைக் கேட்டதற்கு, அவர் கடவுளிடத்தில் உறுதியான நம்பிக்கை யென்று பதில் கூறினார். கடவுள், தனிப்பட்டவர் களுக்குத் தரிசனம் கொடுத்தோ, அல்லது அவர்களுடன் பேசியோ தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறாரில்லை; அவர்களைக் கொண்டு சில காரியங்கள் செய்வதன் மூலமாகவே தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். இது சம்பந்தமாகக் காந்தியடி கள் பேசுகையில், தீண்டாமையை ஒழிப்பதற்காகத் தாம் மூன்று வாரம் உபவாசம் இருந்த போது தமக்கு ஏற்பட்ட அநுபவத்தைப்பற்றிக் கூறினார். கடவுளின் இச்சைக்கு எவனொருவன் தன்னை ஒப்புக் கொடுத்து விடுகிறானோ, அவன், உண்மையான உபதேசத்தை அறிந்து கொண்டவனாகிறான். என்பது யேசுநாதரின் திருவாக்கு. அற்பமான கொள்கைகளைக்கூட நாம் புறக் கணிக்கக் கூடாதென்கிற உண்மையை, யேசுநாதர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் தமது சிஷ்யர்களின் பாதங்களைக் கழுவியதன் மூலமாக அநுஷ்டித்துக் காட்டினார். அப்பொழுது அவர் கூறினார்:- உங்களுக்காக நான் இதைச் செய்கிறேன். ஏனென்றால் நீங்களும் இப்படிச் செய்ய வேண்டு மென்பதற்காக. நான் உங்களுக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிற மாதிரி நீங்களும் நடந்து காட்டு வீர்களானால் நீங்கள் சந்தோஷ மடைவீர்கள். கிறிதவ தர்மத்தை நாம் வாழ்க்கையில் அநுஷ்டித்துக் காட்டுவதன் மூலமாகவே நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்தவர்களாவோம்; கடவுளின் திருவுளச் சம்மதத்திற்கும் இசைந்தவர்களாவோம். தீமையைப் போக்கக் கூடிய விதமாக ஒருவனுடைய வாழ்க்கை பயனுள்ளதாயிருக்க வேண்டுமானால், அவன் மௌனத்தை அநுஷ்டிப்பது அவசியமாகுமென்று காந்தியடிகள் வற்புறுத்துகிறார். அவர் கூறுவ தாவது:- நான் இப்பொழுது மௌனத்தில் நம்பிக்கை கொண்டவனாயிருக் கிறேன். சமீபத்தில் தான் நான் இரண்டு மாத காலம் பூரண மௌன விரதத்தை அநுஷ்டித்தேன். அதன் வசீகரத் தன்மை இன்னும் என்னை விட்டகலவில்லை. *** பிரதி தினமும் பிரார்த்தனையின் போது நான் மௌனத்தில் ஆழ்ந்து விடுகிறேன். இரண்டு மணிக்கு மேல்தான் பேச ஆரம்பிக்கிறேன். இன்று, உங்களுக்காக, மௌத்தை நிறுத்திக் கொண்டு பேசுகிறேன். இந்த மௌனமானது, எனது லௌகிக வாழ்க்கைக்கும் பாரமார்த்திக வாழ்க்கைக்கும் அவசியமாயிருக்கிறது. ஆரம்பத்தில், வேலைத் தொந்திரவிலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு, இந்த மௌன விரதத்தை அநுஷ்டிக்க ஆரம்பித்தேன். இந்த மௌன காலத்தை (கட்டுரைகள் முதலியன) எழுதுவதில் செலவழித்தேன். சிறிது காலம் இதன் தெய்விகத் தன்மையை உணர ஆரம்பித்தேன். இந்த மௌன காலத்தில் தான் கடவுளோடு நான் தொடர்பு கொள்ள முடிந்தது. இப்பொழுது நான் மௌனத்திற்காகவே உண்டாக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். இந்த வாசகங்கள், காந்தியடிகள் எந்த ஆத்ம சக்தியின் பலத்தைக் கொண்டு வேலை செய்கிறாரோ அதன் அடிப்படை இன்ன தென்பதைத் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. இந்த மாதிரியான மௌன காலத்தில் தான், ஒரு தலைவருக்குத் தேவையான தீர்க்க திருஷ்டி முதலிய சக்திகளை அவர் பெறுகிறார். அவரை நேசிக்கிறவர் களும், பின்பற்றுகிறவர்களும் இந்தச் சக்திகளுக்குத்தான் ஈடுபடு கிறார்கள். மற்றொரு சமயம், மேற்படி கிறிதவத் தலைவர்களின் மற்றொரு சாராருக்கும் காந்தியடிகளுக்கும் நடைபெற்ற சம்பாஷ ணையில், இனி வரக்கூடிய யுத்தக் கொடுமையினின்று மானிட சமுதாயத்தைக் காப்பாற்றுவதெப்படி என்னும் விஷயம் வந்தது. உலக நாகரிகமானது, இப்பொழுது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது.மேனாட்டு நாகரிகம், கிறிதுநாதரின் உபதேசங்களைச் சுமார் இரண்டாயிரம் வருஷ காலமாகத் தனது அடிப்படையில் கொண்டிருந்த போதிலும், அந்த உபதேசங்களை நாளதுவரை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரவில்லை யாதலினால், அஃது-அந்த நாகரிகம் -நமது கண்முன்னர் இடிந்து விழுவதைப் பார்க்கிறோம். உலகத்தில் இப்பொழுது நடைபெறு கிறவைகளைப் பற்றியும் இனி நடக்கப்போகிறவைகளைப் பற்றியும் மேனாட்டில் ஒரு மனக்கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்தக் கிறிதவத் தலைவர்கள், கிறிதுநாதருடைய உபதேசத்தின் சாரத்தை - அதாவது பிறருடைய நன்மைக்காக நாம் கஷ்டங்களை அநுபவிக்க வேண்டுமென்ற உயரிய கோட்பாட்டை வாழ்க்கையில் அநுஷ்டான பூர்வமாகக் கொண்டு வந்து காட்டி, அதன் மூலமாக நைந்துபோன ஓர் உலக ஒழுங்கை புனருத்தாரணப் படுத்தியிருக்கிற ஒருவரிடம் ஆலோசனைகள் கேட்கச் சென்றது மிகப் பொருத்தமா யிருக்கிறது. கிறிதவச் சூழலில்லாத நிலைமையில், இந்த மனிதர், தமது முயற்சியால், கிறிதவச் சிலுவைத் தத்துவத்திற்கு மீண்டும் உயிர் அளித்திருக்கிறார்; இப்படியே, மேனாட்டிலும், இந்தச் சிலுவையின் புனருத்தாரணம் ஏற்பட வேண்டுமென்று நாம் நம்பலாமா? காந்தியடிகளை, தாங்கள் இந்தியாவுக்குச் செய்திருக்கும் தொண்டுகளுக் கெல்லாம் அடிப்படையான நோக்கமென்ன? சமுதாயச் சீர்திருத்தமா, அல்லது அரசியல் சீர்திருத்தமா வென்று மேற்படி கிறிதவ நண்பர்களில் ஒருவர் கேட்டார். அதற்குக் காந்தியடிகள் கூறிய பதில் வருமாறு:- என்னுடைய நோக்கம் மதத்தை அடிப்டையாகக் கொண்டது. மானிட சமுதாயமனைத்தோடும் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாலன்றி நான் மதபுருஷனாயிருக்க முடியாது. அதனால் நான் அரசியலில் ஈடுபட வேண்டியதவசியமா கிறது. மனிதனுடைய காரியங்களை யெல்லாம் நாம் ஒரு தொகுப்பாக வைத்துத்தான் பார்க்க வேண்டும். சமுதாய வேலை யென்றும், அரசியல் வேலையென்றும், மத வேலையென்றும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. மனிதர்களுக்குத் தொண்டு செய்வதைத் தவிர, வேறு கடவுள் தொண்டு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மத அடிப்படையில்லாத எந்த மனித காரியங்களும் வெறும் போலியாகத் தான் முடியும். காந்தியடிகள் தொண்டு செய்வது எந்த நோக்கோடு, அதாவது தமது லட்சியத்தின் மீது கொண்ட பற்றுதலினாலா அல்லது எந்த ஜனங் களுக்காகத் தொண்டு செய்கிறாரோ அந்த ஜனங்களின் மீது கொண்ட அன்பினாலா என்று கேட்கப்பட்டார். ஜனங்களின் மீது கொண்ட அன்பு தான் காரணமென்று அவர் தயக்கமின்றிப் பதில் கூறினார். ஜனங்ளுக்குத் தொண்டு செய்யாமல், லட்சியத்திற்கு மட்டும் தொண்டு செய்ய முடியாது. காந்தியடிகள் தமது வாழ்க்கையின் ஆரம்ப தசையி லிருந்து தீண்டாதாரிடம் அநுதாபங் காட்டியும் அவர் களுடைய முன்னேற்றத்திற்காக உழைத்தும் வந்திருக்கிறார். அவர், சிறுபிள்ளையாயிருக்கிறபோது, ஒரு நாள் அவருடைய தாயார், தீண்டாச் சாதிப் பையனோடு விளையாடக் கூடாதென்று கூறினார். அதிலிருந்து, அவர் தீண்டாதாரைப்பற்றி ஒரு புதிய மனப்பான்மை கொள்ளலானார். மேனாட்டில் காந்தியடிகளின் அஹிம்ஸை முறையைப் பெருவாரியாகவும் பயன்தரத்தக்க விதமாகவும் அநுஷ்டிக்க முடியா தென்பதை உணர்ந்த மேற்படி கிறிதவ நண்பர்கள், அந்த அஹிம்ஸை யைப் பற்றி இன்னும் சிறிது தெளிவாக விளக்கிக் கூறுமாறு கேட்டார்கள். அதற்கு அவர் கூறியதாவது:- அஹிம்ஸை என்பது எந்த விதத்திலும் சும்மா இருப்பதல்ல. உலகத்தில் கிரியா சக்தியோடு கூடியதொன்று இருக்கிறதென்று சொன்னால் அஃது அஹிம்ஸைதான். அஹிம்ஸைதான் சீரிய தர்மம். என்னுடைய ஐம்பது வருஷ அநுபவத்தில் நான் உதவியற்றுக் கிடக்கிறேனென்று சொல்லக் கூடிய சந்தர்ப்பமோ, அல்லது அஹிம்ஸையினால் பரிகாரம் ஏற்படவில்லை யென்ற நிலைமையோ எனக்கு ஏற்படவில்லை. உதாரணமாக யூதர் களுடைய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அஹிம்ஸை முறையைப் பின்பற்றினால், யூதர்கள் தங்களுடைய நிர்க்கதியான நிலைமையை உணரத் தேவை யில்லை. யூதர்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக் கிறார்களென்று நான் ஊகித்துக் கொண்டு இங்ஙனம் அஹிம்ஸையை உபதேசிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கிரியாம்சையில் அஹிம்ஸையை அநுஷ்டிக்கவில்லை. அல்லது சர்வாதிகாரிகள் என்ன அக்கிரமம் செய்த போதிலும், அவர்களிடமே நாங்கள் துன்ப மநுபவிப் போம்; ஆனால் அவர்கள் விருப்பப்படி துன்பத்தை அநுபவிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. இந்த மாதிரி யூதர்களில் ஒருவர் நடந்து காட்டினால் கூட, அஃது அவருடைய சுயமரியாதையைக் காப்பாற்றிய தாகும். மற்றும், மானிட சமூகத்திற்கே இதனால் பெரிய நன்மை ஏற்படும். சீனாவைப்பற்றி என்ன என்று நீங்கள் கேட்கலாம். சீனர் களுக்கு, மற்றவர்கள் மீது ஆதிக்கங் கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லை. நாடு பிடிக்கவேண்டுமென்ற ஆசையும் அவர்களுக் கில்லை. ஆனால் அவர்களிடத்திலே காணப்படுகிற சமாதான மனப்பான்மை, அவர் களிடத்திலேயுள்ள சோர்வையே காட்டுகிறது. எப்படியிருந்த போதிலும், சீனாவின் அஹிம்ஸை, கிரியாம்சையில் இல்லை. ஜப்பானை அஃது எதிர்த்து நிற்பதைக் கொண்டே, அஹிம்ஸையில் அதற்கு மனப்பூர்வ மான நம்பிக்கை யில்லை யென்பதைத் தெரிந்து கொள்ளலாம். அது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே ஜப்பானுடன் போராடுகிறதென்று சொல்வது, அஹிம்ஸைக்குச் சரியான பதிலாகாது. எனவே, அஹிம்ஸைப் பரிசோதனை ஏற்படுகிறபோது, அது தவறி விட்டது. இப்படிச் சொல்வது சீனாவைக் குறை கூறுவதாகாது. சீனர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்பதுதான் என் கோரிக்கை. அது-சீனா-ஒழுங்காகவே நடந்து கொண்டு வந்திருக்கிற தென்று சொல்ல வேண்டும். ஆனால் அஹிம்ஸைத் தத்துவப்படி சீனாவை நாம் பரி சோதனைக்குட்படுத்திப்பார்த்தோமானால், நாற்பது கோடி ஜனத் தொகையுடைய பெரிய தேசமாகிய சீனா, ஜப்பானுடைய முறை களையே பின்பற்றி ஜப்பானைத் தாக்குகிறதென்பது, அவ்வளவு பெரிய தேசத்திற்கு அது கௌரவமில்லை யென்றுதான் சொல்லவேண்டும். என் நோக்கப்படி சீனர்கள் அஹிம்ஸையை அநுஷ்டிப்பார்களானால், ஐப்பான் தன்னுடைய நவீன கொலைக் கருவிகளை உபயோகிக்கச் சந்தர்ப்பமே ஏற்பட்டிராது. ஜப்பானியர்களைப் பார்த்துச் சீனர்கள் சொல்ல வேண்டும்:- உங்களுடைய கொலைக் கருவிகளை யெல்லாம் கொண்டு வாருங்கள்; அவைகளுக்கிரையாக எங்களுடைய ஜனத் தொகையில் பாதியைக் கொடுத்துவிடுகிறோம். மற்றப் பாதிப்பேர் உங்களுக்குப் பணிய மாட்டோம். இப்படிச் சீனர்கள் செய்திருப்பார் களானால், சீனாவுக்கு ஜப்பான் அடிமையாயிருக்கும். அஹிம்ஸைத் தத்துவத்தை இதைவிட அதிகமாக நிர்ணயித்துச் சொல்லமுடியாது. தீமையை யுத்த முறைகொண்டு எதிர்ப்பதென்பது, சாத்தானைக் கொண்டு சாத்தானைத் துரத்துவது போலத்தான். இதனால் தீமையை உலகத்தினின்று அகற்ற முடியாது. அதற்கு மாறாக அஃது அதிகப்படும். ஆக்ரமிப்புச் சக்தியை அன்புச் சக்தியாக மாற்றுவது அன்பினால் தான் முடியும்; பலாத்காரத்தினால் முடியாது. பிறகு காந்தியடிகள் ஷெல்லி1 என்பவனுடைய கவிகளிலிருந்து சிலவற்றை எடுத்துச் சொன்னார்:- நில்லுமின் அமைதியோடும் உறுதியோடும் நெருங்கியும் மௌனமாயுமுள்ள காட்டு மரங்கள் போல் கைகூப்பி தோற்காதபோரின் ஆயுதம்போல் கூர்த்த பார்வையுடன் நில்லுமின்; கொடுங்கோலர்கள் துணிவார்களானால் உங்கள் மீதேறித் துவம்சம் செய்யட்டும்; கொல்லட்டும்; குத்தட்டும்; முடமாக்கட்டும்; விரும்பியபடி வேணதெல்லாம் செய்யட்டும். அவர்கள் கொலை செய்துகொண்டிருக்கிறபோது, அவர்களுடைய கோபம் மரித்துப் போகிறவரை கைகூப்பி நிலையான பார்வையோடு அச்சமே சிறிதுமின்றிஆச்சரியமுங்கொள்ளாமல் அவர்களையே பார்த்துக்கொண்டிருங்கள்; எந்த இடத்திலிருந்து வந்தார்களோ அந்த இடத்திற்கே அவர்கள் அவமானத்துடன் திரும்பிச்செல்வார்கள். அவர்களால் சிந்தப்பட்ட ரத்தம் அவர்கள் கன்னத்திலேயே நாணத்துடன் பேசிக்கொண்டிருக்கும். உறக்கத்தினின் றெழுந்த சிங்கம்போல் பெருந் தொகையினராய் எழுந்து நில்லுங்கள். நித்திரையின்போது உங்கள் மீது விழுந்த பனித் துளிகளை உதறித்தள்ளுவதுபோல் உங்கள் சங்கிலியை உடைத்தெறியுங்கள். நீங்களோ பலர்; அவர் ஒரு சிலரே. பிறகு வேறொரு விஷயமாகச் சம்பாஷணை திரும்பியது. காந்தியடிகள் கூறினார்:- சிலர் கேட்கிறார்கள், அஹிம்ஸைத் தத்துவம், யூதர்களைப் பொருத்த மட்டில் பொருந்தும். ஏனென்றால் அங்குத் தனிப்பட்டவர்களுடைய சம்பந்தம் இருக்கிறது. ஆனால் சீனாவில், ஜப்பான் பீரங்கிகளைக் கொண்டும் ஆகாய விமானங் களைக் கொண்டும் தாக்குகிறது. ஆகாயத்திலிருந்து மரண மழையைப் பொழிகிறவர்கள், யார் கொல்லப்பட்டார்கள், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத வர்களாயிருக்கிறார்கள். ஆகாய விமான யுத்தத்தை எப்படி அஹிம்ஸையினால் தடுக்க முடியும். என்று இந்த வெடிகுண்டுகளை வீசுகிறவர்கள் மனிதர்கள்தான். அவர் களுக்கு மனமுண்டு. பலாத் காரத்தை உபயோகிக்கிறவர்கள், போதிய அளவு பலாத்காரம் உபயோகித்தால், அது தக்க பலனைக் கொடுக்கு மென்றும், அதனால் எதிரி பணியக்கூடுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு ஜாதியார் தங்களைத் தாக்குகிறவர்களுடைய இச்சைப்படி நடக்க மறுத்தும், அவர்கள் கையாளுகிற முறைகளைப் பதிலுக்குப் பதில் கையாளாமலும் இருந்தால், தாக்குகிறவர்கள், இன்னமும் தாங்கள் பலாத்காரத்தை உபயோகிப்பதில் பயனில்லையென்பதை உணர்வார் கள். என்னிஷ்டப்படி என் மனைவியை நடக்குமாறு செய்ய நான் முயற்சி செய்தபோதுதான் அஹிம்ஸைப் பாடத்தைக் கற்றுக் கொண்டேன். அவள், ஒருபக்கம் என் கட்டளைப்படி நடக்க மறுத்து வந்தாள்; மற்றொரு பக்கம் என் முட்டாள் தனத்தைப் பொறுமை யோடு சகித்து வந்தாள். இதனால், என் செய்கையைப்பற்றி எனக்கே வெட்கம் உண்டாகிவிட்டது. அவளை அதிகாரஞ் செய்யவே நான் பிறந்திருக்கிறேனென்ற அகங்கார புத்தியும் ஒழிந்தது. கடைசியில் அவளே எனக்கு அஹிம்ஸையின் ஆசிரியையானாள். நான் தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தியதெல்லாம், ஆரம்பத்தில் அவள் தன் விஷயத்தில் அநுஷ்டித்துக் காட்டியதை யொட்டித்தான். சத்தியாக்கிரகத்தின் மற்றொரு நுணுக்கமான அமிசத்தையும் இங்குத் தெரிவிக்க வேண்டும். அதாவது, இந்த இயக்கத்தில், ஆண் களைப் போல் பெண்களும் சமபங்கெடுத்துக் கொள்ளலாம். இது மட்டுமல்ல. இந்த இயக்கமானது, பெண்களைத் தலைவர்களாகக் கொள்ளக்கூடிய தகுதியுடையது. நூற்றாண்டுகள் கணக்காகப் பார்த்தோமானால், பெண்கள் பொறுமையோடு துன்பமநுபவிப்பதில் சிறந்தவர்களாயிருக் கிறார்கள். மற்றும் பலாத்காரத்தையும் கொடுமை யையும் அஞ்சாமை யுடன் எதிர்த்து வந்திருக்கிறார்கள். இப்பொழுது, உலக க்ஷேமத்திற்காக அவர்கள் மேற்படி கைங்கரியத்தைச் செய்ய வேண்டுமென்று சொல்லப் படுகிறார்கள். சத்தியாக்கிரகத்தின் நான்கு முக்கிய அம்சங்களை இங்கு நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோமாக. முதலாவது, உலகத்தில் அநியாயம் நிறைந்திருக்கிறது. இரண்டாவது, தீமையை ஒழிக்க வேண்டும். மூன்றாவது, தீமையைப் பலாத்காரத்தினால் ஒழிக்க முடியாது. ஏனென்றால் அது தீமையை இன்னும் அதிகப்படுத்தும். நான்காவது, பொறுமையாக நல்லெண்ணத்தோடு துன்பத்தை அநுபவித்தலினால், தீமையை அகற்ற முடியும். அப்படி துன்பமநுபவிக்கிற சத்தியாக் கிரகிக்கு மரணமே கிடைத்து விட்ட போதிலும், அந்தத் துன்பமானது புனருத்தாரண மடைகிறது. இந்த நான்கு அமிசங்களையும், புராதன காலத்திலிருந்து திரீகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்குத்தான் தீமையினுடைய பரிணாமமின்ன தென்பது தெரியும். எனவே இந்தத் தீமையை எப்படியாவது ஒழிக்க வேண்டு மென்று அவள் - அந்த திரீ - தீர்மானித்துவிட்டாள். ஆனால் பலாத்காரத்தினால் இந்தத் தீமையை ஒழிக்க முடியாதென்பது அவளுக்குத் தெரியும். ஏனென்றால் இதனால் ஆண்களுக்கும் பெண் களுக்கு முள்ள தொடர்பு அற்று விடுமென்பதை அவள் அறிவாள். இதனாலேயே, கொடுங்கோலாதிக்கத்தை, வீட்டிலாகட்டும், தேசீய விவகாரங்களிலாகட்டும் அவள் தைரியமாக எதிர்த்தாள்; மற்றவர் களுடைய நலனுக்காகத் துன்பத்தைச் சகித்துக் கொண்டாள். திரீ களுக்கு இயற்கையிலேயே சக்தியாக்கிரகத்தின் நுணுக்கமும் அதன் அருமையும் தெரிந்திருக்கிறது. ஒரு தாயார் வலிய துன்பத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமாகத் தான் குழந்தையைப் பெறுகிறாள்; அப்படியே அன்பினால் அதனை வளர்க்கிறாள். இந்த மாதிரியான விஷயங் களினால் அவளுக்கு இயற்கையிலேயே சத்தியாக்கிரக உணர்ச்சி படிந்து விடுகிறது. எனவே, கிறிது நாதரின் சிலுவைத் தத்துவத்தை-அதாவது தன்னலத்தியாகத்தை-பிரதி மனிதனும் தனது வாழ்க்கையில் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்கிற காந்தியடிகளின் இந்த அழைப்பானது, உலகத்தில் தற்போது மானிட சமூகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் வறுமை, கொடுமை, யுத்த பயங்கரம் முதலியவற்றை ஒழிக்க முன் வருமாறு திரீகளை நோக்கி அழைத்த அழைப்பாகும். இந்த உலகத்திலே இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிறோ மென்று சொன்னால், அதற்குக் காரணம் நம்முடைய தாய்மார்கள் சத்தியாக்கிரக வழியைப் பின்பற்றி நடந்தது தான். அவர்கள் நம்மை நேசித்ததன் காரணமாக, நம் பொருட்டு அநேக துன்பங்களைச் சந்தோஷத்துடன் அநுபவித்தார்கள். இதே மாதிரிதான் ஆண்களாகிய நாமும், மானிட சமூகத்தைக் காப்பாற்றத் துன்பத்தை அநுபவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் திரீகள் நமக்கு வழி காட்டக் கூடியவர்களாயிருக் கிறார்கள். பிறகு சர்வாதிகாரிகளைப் பற்றிச் சம்பாஷணை திரும்பியது. சர்வாதிகார சக்திகள், எவ்வித தரும நியாயத்திற்கும் கட்டுப் படாதவை களாதலால், அவர்களிடத்தில் அஹிம்ஸை முறை பயன்படாதென்ற எண்ணமிருந்து வருவதால், இந்த விஷயத்திலுள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்று இந்தப் பிரச்னை கிளத்தப் பட்டது. காந்தியடிகள் இதற்குத் தெளிவாகப் பின்வருமாறு பதில் கூறினார்:- சர்வாதிகாரிகளைச் சீர்திருத்த முடியாதென்ற எண்ணத்தோடு நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் மனித சுபாவம் எங்கும் ஒரே படித்தாகத்தான் இருக்கிற தென்றும், அஃது அன்புக்கு இசைந்து கொடுக்கக் கூடிய தென்றும் நம்பிக்கை இருந்தால்தான் அஹிம்ஸையில் நம்பிக்கை கொள்ள முடியும். இதுவரையில் சர்வாதிகாரிகள் தாங்கள் உபயோகிக் கிற பலாத்காரத்திற்குப் பலாத்காரத்தையே பதிலாகப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள். ஒழுங்குபட்ட ஒரு சாத்வீக எதிர்ப்பு இயக்கத்தை அவர்கள் இதுவரையில் சந்திக்கவில்லை. அப்படிச் சந்திப்பார்களானால், அவர்கள், தங்களுடைய பலாத்காரத்தை விட சாத்வீக எதிர்ப்பு சிறந்த தென்பதை அறிவார்கள். மற்றும், அஹிம்ஸை யானது தன்னுடைய வெற்றிக்காகச் சர்வாதிகாரிகளின் தயவை எதிர்பார்க்க வேண்டிய தில்லை. ஏனென்றால் ஒரு சத்தியாக்கிரகி, எப்பொழுதுமே கடவுளின் உதவியை நாடுகிறவன். அந்த உதவியில் அவன் கொள்கிற நம்பிக்கை தான் அவனுக்கு வெற்றியையளிக்கிறது. யோசுநாதருடைய லட்சியம் எப்படி தருமத்தை அடிப்படை யாகக் கொண்டிருந்ததோ அப்படியே காந்தியடிகளின் லட்சியமும் தருமத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதென்பது மேற்படி வாசகத்தினால் நன்கு புலனாகும். நாம் நமது லட்சியத்தை அடைய வேண்டுமானால், மற்றவர்களுடைய தொந்திரவுகளினால் ஏற்படுகிற துன்ப அநுபவங்களி லிருந்து ஆரம்பிக்கக்கூடாது; கடவுளிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். கடவுளின் திருவுளச் சம்மதம் என்ன, அவர் எந்தவிதமான கடவுளா யிருக்கிறாரென்று நான் நம்புகிறேன் என்பன போன்ற கேள்விகளை நாமே கேட்டுக் கொண்டு அதற்குப் பதிலளிக்க முயல வேண்டும். கடவுள், நல்லெண்ணமுடையவர், நியாய மனப் பான்மையுடையவர் என்பதே நம்முடைய பதிலானால், உடனே நாம் அந்த அன்புக் கடவுளின் கையைப் பற்றிக் கொள்ள வேண்டும். இப்படிப் பட்ட கடவுளையே, கிறிதவர்கள், யேசுநாதரின் தந்தை யென்று சொல்கிறார்கள். அப்படி அவருடைய கரத்தை நாம் பற்றிக் கொண்டு விட்டோமானால், அஹிம்ஸைப்பாதையில், தன்னலத்தியாக மார்க்கத்தில் நம்மை அவர் அழைத்துச் செல்கிறார். மற்றவர்களுடைய துனபத்திற்குப் பரிகாரந் தேடவே, இந்த மார்க்கத்தில் செல்ல முற்படுகிறோம். நமது தர்க்கங்கள், திட்டங்கள் முதலியவற்றிற்கெல்லாம் அடிப் படையில் கடவுள் உண்மை இருக்க வேண்டும். அவரைவிட்டு விட்டால் நாம் வழி தவறி விடுவோம், அவரை உண்மைக் கடவுளாக நாம் கருதுவோமானால் காந்தியடிகள் மாதிரி அவரை மௌனத்தின் மூலமாகவே அடைய வேண்டும். ஏனென்றால் அப்பொழுதுதான் அவர் காட்டுகிற வழியை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதனால் நமக்குக் குன்றாத ஒரு நம்பிக்கை உண்டாகிறது. அந்த நம்பிக்கை, எல்லா இடர்களையும் தள்ளிக் கொண்டு செல்லும் ஆற்றலுடையது. எனவே நாம் கடவுளிடத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்; கடவுளிடத்திலேயே திரும்பிச் செல்ல வேண்டும். நம்முடைய முறைகள், முயற்சிகள் முதலியன வெல்லாம் நம்முடையனவாயிருக்கக் கூடாது; அவருடை யனவாகவே இருக்க வேண்டும். சர்வாதிகாரிகள், பலாத்காரத்தை உபயோகியாமல், அதனை உபயோகிப்பதாகப் பயமுறுத்தியே தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்களானால், அப்பொழுது எப்படி எதிர்த்து நிற்பதென்று மேற்படி கிறிதவ நண்பர்கள் காந்தியடிகளைக் கேட்டார்கள். இதற்கு அவர் கூறிய பதில் வருமாறு :- உதாரணமாக ஜெக்கர்களுடைய சுரங்கங்கள், தொழிற் சாலைகள் முதலிய எல்லா இயற்கைச் சாதனங் களையும் ஜெர்மானியர்கள் வந்து ஆக்ரமித்துக் கொண்டு விடுகிறார் களென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன விளைவுகள் உண்டாகும்? (1) ஜெக்கர்கள், ஜெர்மானியர்களுடைய உத்திரவுகளுக்குக் கீழ்ப்படியாத காரணத்திற்காக அழிக்கப்பட்டுப் போகக்கூடும். அது, ஜெக்கர்களுக்கு மகத்தான வெற்றியும் ஜெர்மானியர்களுக்குப் பெரிய வீழ்ச்சியுமாகும். (2) ஜெக்கர்கள், தங்களைவிட மிஞ்சின பலாத்கார சக்தியின் முன்னர் ஒழுக்க ஹீனர்களாகி விடுவார்கள். இப்படியாகி விடுவது எல்லாப் போராட்டங்களிலும் பொதுவாக ஏற்படுகிற முடிவுதான். ஆனால் அப்படி ஒழுக்கஹீனம் ஏற்படுவது, அஹிம்ஸை யினாலல்ல; அஹிம்ஸை உணர்ச்சி இல்லாததினால்தான். (3) ஜெர்மனி, தான் புதிதாக ஆக்ரமித்துக் கொண்ட பிரதேசங்களில், தனது நாட்டு ஜனங்களைக் கொண்டு திணிக்கும் பலாத்கார எதிர்ப்பினால் இதைத் தடுக்க முடியாது. எனவே, எப்படிப் பார்த்தாலும், சாத்வீக எதிர்ப்பு தான் சிறந்த தென்பது தெரிய வரும். முஸோலினியோ, ஹிட்லரோ உலக அபிப்பிராயத்தைப் புறக்கணிக்கக் கூடியவர்கள் என்று நான் கருதவில்லை. இன்று இந்தச் சர்வாதிகாரிகள், உலக அபிப்பிராயத்தைத் திரகரிப்பதில் திருப்தி கொள் கிறார்கள். ஏனென்றால் மற்ற வல்லரசுகள் எவையும் களங்கமில்லாதனவாய் அவர்களிடத்தில் செல்ல முடியாது. இந்த வல்லரசுகள், முன்னர்த் தங்களுக்கு அநீதியை இழைத்திருக்கின்றன வென்று இந்தச் சர்வாதி காரிகள் உணர்கிறார்கள். இங்கிலாந்தின் பாவந்தான் நாஜி ஜெர்மனி யென்றும், வார்சேல் உடன்படிக்கை தான் ஹிட்லரைச் சிருஷ்டித்துக் கொடுத்ததென்றும் சமீபத்தில் ஒரு பிரபல ஆங்கிலேயர் என்னிடம் கூறினார். வார்சேல் சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு, மத்திய ஐரோப்பாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது வியன்னா நகரத்தில் தாபிக்க பெற்றிருந்த குழந்தைகளின் ஆபத்திரிகளுக்கு நான் சென்று பார்வையிட்டிருக்கிறேன். குழந்தைகளின் ஆகார உதவிக் கென்று அமெரிக்கர்கள் போட்டிருந்த திட்டம் அப்பொழுது அமுலுக்கு வரவில்லை. மேற்படி ஆபத்திரிகளில், மெலிந்து போன தேகமுடைய குழந்தைகளை நான் கண்டேன். இந்தக்குழந்தைகள், நேசக் கட்சி யினருடைய சாமான் தடுப்புமுறைக்கு இரையானவை. இந்த முறை யினால் மத்திய ஐரோப்பாவில் எண்ணிறந்த வியாதிகள் பரவலாயின. இந்தச் சாமான் தடுப்பு முறையினால், சுமார் பத்து லட்சம் ஆதிரிய ஜெர்மானிய திரீகளும் குழந்தைகளும் இறந்து போனார்கள். 1871ம் வருஷம் பிமார்க் 1 பாரி நகரத்தைக் கைப்பற்றிக் கொண்ட போது,அவன், பட்டினி கிடந்த அந்த நகரத்திற்கு முதலில் உணவுப் பொருள்கள் நிறைந்த ரெயில் வண்டிகளைத் துரிதமாக அனுப்பினான். ஆனால் பிரிட்டிஷாராகிய நாமோ, சமாதான ஒப்பந்தம் நிறைவேறின பிறகு எட்டு மாதங்கள் வரை ஆதிரியாவையும் ஜெர்மனியையும் பட்டினி போட்டோம். நம்மால் வீழ்த்தப்பட்ட சத்துருக்களிடமிருந்து, நாம் கோரும் சமாதான நிபந்தனைகளைப் பெற வேண்டு மென்பதற்காக இப்படிச்செய்தோம். அப்படியே சமாதான ஒப்பந்தமும் கையெழுத் திடப் பெற்றது. இந்த ஒப்பந்தம் கெடுதலானதுதான். ஆனால், எந்த முகாந்திரத்தை வைத்துக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினோமோ அஃது -அந்தச்சாமான் தடுப்புமுறை-மேற்படி ஒப்பந்தத்திலுள்ள எல்லா ஷரத்துக்களைக் காட்டிலும் கெடுதலானது. மேற்படி வியன்னா ஆபத்திரிகளிலுள்ள குழந்தைகளைப் பார்த்ததும் இவைகளுக் கெல்லாம் சேர்த்து ஒரு நாள் பழி வாங்கப்படு மென்று நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். அந்தக் காலம் இப்பொழுது வந்திருக்கிறது. ஆபத்திரிகளிலே கிடந்த அந்தக் குழந்தைகளில் சாகாமல் எஞ்சி நின்றவர்கள், அல்லது அவர்களுடைய சமவயதினர், இப்பொழுது நாஜிப்படையின் முன்னணியில் நிற்கிறார்கள்; நாஜீயத்தின் பிரதம சிஷ்யர்களாயிருக்கிறார்கள். நேசக் கட்சியாராகிய நாம், யுத்தத்திற்குப் பிறகு இத்தாலியை நடத்தியதன் விளைவாகவே முஸோலினி தோன்றினான். நேசக் கட்சி வல்லரசுகள், பதினான்கு நாடுகளை மேற்பார்வை செய்ய வேண்டு மென்று ஏற்பட்ட போது, பிரிட்டன் ஒன்பது நாடுகளின் மேற் பார்வையை எடுத்துக் கொண்டு விட்டது; இத்தாலிக்கு ஒன்று கூடக் கொடுக்கவில்லை. இந்தமாதிரி சர்வதேச அக்கிரமங்கள் நிகழ்த்தப்படுகிற போது, அவைகளுக்குப் பின் விளைவுகள் இருக்கவே செய்யும். சரித்திரம் இந்தப் பாடத்தை நமக்கு நன்றாகக் கற்பித்திருக்கிறது. நாஜிகள், தாங்கள் பட்ட இந்த அவதைகள், அவமானங்கள் முதலியவைகளுக்கெல்லாம் யூதர்களே காரணர்களென்று கருதுகிறார் கள். ஜெர்மானியச் சேனையானது, யுத்தகளத்தில் தீரமாகப் போராடிக் கொண்டிருக்கையில், யூதர்கள் ஜெர்மனியில் உள்நாட்டுக் குழப்பத்தைக் கிளப்பி விட்டார்களென்றும், இதனால் இவர்களையே முதலில் தண்டிக்க வேண்டுமென்றும் நாஜிகள் நம்பி அப்படியே செய்திருக் கிறார்கள். எனவே, இன்று யூதர்கள் அவதிப்படுகிறார்களென்று சொன்னால், அது, நமது அக்கிரமத்தின் விளைவுதான். யூதர்களைக் கொடுமைப் படுத்துகிற நாஜி கொள்கையைக் கண்டிக்க நாம் உரியவர்களல்ல. ஏனென்றால் அது நமது செயலின் விளைவுதான். முதலில் நம்மை நாமே கண்டித்துக் கொள்ள வேண்டும். பின்னர், யூதர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். மேற்படி கிறிதவ நண்பர்களில் ஒருவர் சர்வதேச அமைதி நிலவுவதற்குக் கிறிதவனாகிய நான் என்ன செய்யக்கூடும். சர்வ தேசக் குழப்பத்தை அடக்கி அஹிம்ஸையை எவ்வாறு பயன்படுத்த முடியும்? என்று கேட்டார். அதற்குக் காந்தியடிகள் அளித்த பதில் வருமாறு:- கிறிதவர் என்ற தோரணையில் நீங்கள் அஹிம்ஸை யின் மூலமாகப் பயன்தரத்தக்க காரியங்களைச் செய்யலாமே. அப்படிச் செய்வதினால் உங்களுடைய சர்வமும் போய்விடக் கூடும். எல்லா வல்லரசுகளும் தங்களை நிராயுதபாணிகளாக்கிக் கொண்டா லொழிய உலகத்தில் சமாதானம் ஏற்படாது. இந்த விஷயத்தைப் பற்றி வல்லரசுகள் கவனிக்குமாறு, சிறிது காலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிற சம்பவங்கள் செய்யு மென்று நம்புகிறேன். சுமார் அரை நூற்றாண்டாக அஹிம்ஸா தர்மத்தை அநுஷ்டித்து அநுபவம் பெற்றதன் பயனாக, மானிட சமூகத்தை அஹிம்ஸையின் மூலமாகத் தான் காப்பாற்ற முடியுமென்ற என் நம்பிக்கையானது வலுப்பட்டு நிற்கிறது. பைபிளின் உபதேச சாரமும் இதுதான். சிலுவையின் தத்துவத்தையே காந்தியடிகள் இங்கு வலியுறுத்திக் கூறுகிறார், இதனால்தான் அவர் பர்மிங்ஹாம் நகரத்திலுள்ள எங்களுடைய (வுட்ப்ரூக்) ஆசிரமத்திற்கு விஜயஞ் செய்த போது ஆச்சரியகரமான அந்தச் சிலுவையை நான் பார்க்கிறபோது1 என்ற தொடக்கத்துத் தோத்திரப்பாடலைச் சொல்லச் சொன்னார். இதன் மூலமாக அவர், மானிட சமூகம், சிலுவைத் தத்துவத்தினால்தான், சிலுவையை எடுத்துக் கொள்; என் பின்னாலே வா என்ற யேசுநாதரின் திருவாசகத்தை அப்படியே பின்பற்றுவதால்தான் - அதாவது தன்னலத் தியாகத்தினால் தான் - காப்பாற்றப்பட முடியுமென்பதை ஊர்ஜிதம் செய்தார். நமது மதத்தை நாம் எப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்? அந்த ஹிந்து மகானுடைய வார்த்தைகள், அவருடைய வார்த்தை களைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கை, கிறிதவ உலகத்தில் ஒரு விழிப்பை உண்டு பண்ணு மென்று நாம் நம்புவோமாக. ஏற்கெனவே, ஐரோப்பாவில் கிறிதவ ஜனங்களை அதிகமாகக் கொண்ட ஜெர்மனியில், மததாபனங்கள் தொந்திரவுக்குட்படுத்தப் படுகின்றன; இன்னும் அதிகமான தொந்திரவுகளும் உண்டாகப் போகின்றனவென்று வதந்தி, அப்படியானால், ஜெர்மானியக் கிறிதவர்கள், கிறிதவ தர்மத்தின் புனருத்தாரணத்தை முன்னிட்டும், நாகரிகத்தைக் காப்பாற்றும் பொருட்டும், மேற்படி தொந்திரவுகளைச் சிலுவைத் தத்துவப்படி சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வார்களா? சிறைவாசத்தை அரண்மனை வாசமாகக் கருதுவார்களா? யேசு நாதருக்காகத் துன்பமநுபவிக்கிறோ மென்று பெருமை கொள்வார் களா? இப்படியே, யுத்தத்தையும் வறுமையையும் எதிர்த்துப் போராட வேண்டுமானால் நாம் மேற்படி சிலுவைத் தத்துவத்தையே அநுஷ்டிக்க வேண்டும். கொடுமைகள் அதிகப்பட்டிருக்கிற காலத்தில் தான் நாம் சிலுவையைப் பின்பற்றிச் செல்ல வேண்டுமென்பதில்லை. நமது அன்றாட வாழ்க்கையிலும், ஜனங்களுடைய பசி, பிணி, வறுமை முதலியவற்றைப் போக்கும் விஷயத்திலும் இந்தச் சிலுவையையே நாம் பின்பற்ற வேண்டும். பின்னர் காந்தியடிகள், இந்தியாவின் வட மேற்கெல்லைப்புற மாகாணத்தில் வசிக்கும் வீரம் நிறைந்த ஜாதியார் எவ்வாறு அஹிம்ஸையை அநுஷ்டிக்கிறார்களென்பதைப் பற்றிக் கூறினார்:- அந்த எல்லைப்புற ஜாதியார் அஹிம்ஸையில் தீவிரமான பற்றுள்ளம் கொண்டிருக்கின்றனர். அஹிம்ஸையில் தான் கதிமோட்சம் இருக்கிறதென்று அவர்கள் காண்கிறார்கள். *** இதற்கு முன்னர் அவர்களுடைய வாழ்க்கையில் அந்தகாரமே குடிகொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் இருந்துவந்தன. கூட்டில் வசிக்கிற புலிகளைப் போலவே அவர்கள் இருந்தார்கள். பட்டாணியர்கள் எப்பொழுதுமே கத்தி, ஈட்டி, துப்பாக்கி முதலியவைகள் சகிதம் இருந்து வந்த போதிலும் மேலதிகாரிகளைக் கண்டால் பயந்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால் உத்தியோகம் போய்விடுமேயென்ற பயம். ஆனால் இப்பொழுது எல்லாம் மாறிவிட்டன. குடும்பச் சண்டைகள் குறைந்துவிட்டன. கான் சாஹிப்பினுடைய (கான் அப்துல் கப்பர்கானுடைய) அஹிம்ஸை இயக்கத்தில் ஈடுபட்டவர்களனைவரும் தங்கள் ஜீவனோபாயத்திற்குச் சில்லரை உத்தியோகங்களை நம்பாமல் விவசாயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்னுஞ் சிறிது காலத்தில் கைத் தொழில் களிலும் பிரவேசிக்கக் கூடும். இந்த வாசகங்களைக்கொண்டு காந்தியடிகளுக்கு விவசாயத்தில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதென்பது நன்கு புலனாகும். அவர் 1931-ம் வருஷம் இங்கிலாந்துக்கு விஜயஞ் செய்திருந்தபோது, வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக்கடிக்கவும், கிறிதவ நாகரிகத்தைப் புனருத்தாரணத்திற்குக் கொண்டுவரவும் வேண்டு மென்று கூறினார். இதையே அவர் இந்தியாவிலும் வற்புறுத்துகிறார். ஒவ்வொருவரும் தினந்தோறும் சிறிதளவாவது தேகத்தினால் வேலை செய்ய வேண்டுமென்றும், உதாரணமாகச் சிறு கைத்தொழில்களைச் செய்தல் அல்லது நூல் நூற்றல் முதலியவைகளில் ஈடுபட வேண்டு மென்றும் கூறுகிறார். ஐரோப்பாவில் கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் பழைய நாகரிகம் சிதறுண்டு போனபிறகு ஒரு சிலர், சிறு சிறு கூட்டத் தினராகச் சேர்ந்து கொண்டு, படையெடுப்புகளினால் பாழாக்கப் பட்ட பூப்பிரதேசங்களிடையே சென்று விவசாய ஆசிரமங்களை தாபித்து, நாகரிகத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தார் களென்பதை இங்கு நாம் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ராணுவத் திமிரும் தொழில் போட்டியும் நிறைந்துள்ள இந்தக் காலத்து நாகரிகமும் புதியதோர் உலக யுத்தத் தினால் உடைந்து போதல் கூடும். அப்பொழுது ஜன சமூகத்தின் நன்மைக் காகக் கையினால் வேலை செய்து ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளும் பொருட்டு வழி காட்டக்கூடிய பல தொண்டர்கள் தேவையா யிருக்கும். அப்படியானால் இப்பொழுதே நாம் அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். இங்கிலாந்திலும் வேல் மாகாணத்திலும் வேலை யில்லாதவர்களுக்கென்று அதிகமான சங்கங்கள் தாபிக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் பணக்காரர்கள் அதிகமான பேராகச் சேர்ந்து கொள்ளுதல் நல்லது. பின்னர், மேற்படி கிறிதவ நண்பர்கள் காந்தியடிகளின் பிரார்த்தனை முறையைப்பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் கூறியதாவது:- நாங்கள் தினந்தோறும் காலை 4-20 மணிக்கும் மாலை 7 மணிக்கும் பிரார்த்தனை செய்கிறோம். இது, பல வருஷங்களாக நடைபெற்று வருகிறது. கீதையிலிருந்தும், இன்னும் சில மதக் கிரந்தங்களிலிருந்தும் பொறுக்கி யெடுக்கப்பட்ட சில தோத்திரப் பாடல்களை இசையோடு கலந்தோ, கலவாமலோ பாடுகிறோம். தனிப்பட்ட முறையில் அவரவர்கள் பிரார்த்தனை செய்வதைப்பற்றி நான் இங்கு ஒன்றுஞ் சொல்வதற்கில்லை. ஏனென்றால், அது தொடர்ந்தும் அவரவரறியாமலுமே நடைபெற்றுக்கொண்டுதான் வருகிறது. யாரோ ஒருவர் இருந்து, என் காரியங்களையெல்லாம் கவனிப் பதாகவே நான் உணர்கிறேன். கடவுள், நம்முடைய தேவைகளை முன்னதாகவே தெரிந்து கொண்டிருக்கிறார். என்னுடைய பிரார்த்தனை யைக் கடவுள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எப்படி ஒரு குழந்தைக்கு அதன் தகப்பனுடைய ஆதரவு தேவையாயிருக் கிறதோ அதைப்போல் கடவுளுடைய ஆதரவு நமக்குத் தேவையாயிருக் கிறது. அந்த ஆதரவு நமக்குக் கிடைக்கவும் செய்கிறது. என்னை அந்தகாரம் வந்து சூழ்ந்துகொண்டு விட்ட காலத்திலும், சிறைவாசத்தின்போதும் அவர் - கடவுள் - என் அருகாமையிலேயே இருந்து உதவி செய்திருக் கிறார். கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டதாக நான் ஒரு கணமும் அநுபவித்ததில்லை. காந்தியடிகளைப் பேட்டி கண்டு பேசிய இந்தக் கிறிதவ நண்பர்கள் முன்னர் எந்த மாதிரியான மனப்பான்மையுடையவர்களா யிருந்தார் களென்பதை நினைக்கிற போது, இந்தச் சம்பாஷணை மிகவும் விசேஷமானதென்று சொல்ல வேண்டும். மேனாட்டு புராடெடெண்ட் கிறிதவர்களாகிய நாம், நமக்குத் தான் உண்மை தெரிய வருமென்றும், இந்த உண்மையை உலகத்தில் பரப்பி, ஜனங்களைக் கிறிதவ மதத்தில் சேர்க்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். சிறப்பாக, கீழ் நாட்டில் உண்மை இல்லாத தினால் அங்கு தான் உண்மையை அதிகமாகப் பரப்ப வேண்டு மென்றும் கருதினோம். பிறகு மகா யுத்தம் வந்தது. நிலைமை அடியோடு மாறி விட்டது. ஹிந்து என்று பெருமை யோடு சொல்லிக் கொள்கிற ஒருவர், நம்மைக் காட்டிலும் அதிகமாகக் கிறிதவ தர்மத்தைப்பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு கொண்டோம். எனவே, நமது கிறிதவத் தலைவர்கள் அவரிட மிருந்து - காந்தியடிகளிடமிருந்து - கிறிதவ தர்மமென்றால் என்ன வென்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளச் சென்றது மிகவும் பொருத்தமேயாகும். * * * ஒரு ராஜதந்திரியின் பாராட்டு ஸர் மிர்ஸா எம். இமெயில் கே.சி.ஐ.இ. (மைசூர் திவான், பெங்களூர்) மகாத்மா காந்தியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குக் காணிக்கையாக அளிக்கப்படப் போகும் நூலில் ஒரு கட்டுரை எழுதுமாறு ஸர் எ. ராதாகிருஷ்ணன் கேட்டதற்கு இசைவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. காந்தியடிகளுக்கு எழுபது வயது பூர்த்தியாகிறதென்கிற விஷயம், அவருடைய நண்பர் களுக்கும் பக்தர்களுக்கும் மிகவும் திருப்தி தரத்தக்கது மட்டுமல்ல; அதை விடச் சிறந்ததுமாகும். அந்த நண்பர்கள் - பக்தர்கள் கோஷ்டி யில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வது எனக்குப் பெருமையாயிருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளும், தேச மனைத்தும் சேர்ந்து கொண்டாடத்தக்க திருநாளாகக் கருதப் படுகிறது. சிறப்பாக, இந்த எழுபதாவது பிறந்த தினம், இந்தியா முழுவதிலும் உற்சாகத்தையளிக்கு மென்பதில் சந்தேகமில்லை. ஆசாரியரும் தலைவருமாயிருக்கிற இந்த மகானுடன் எனக்கு எப்படி நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதென்பதைப் பற்றி இங்கு ஞாபகப் படுத்திக் கொள்வது என்னைப் பொறுத்தமட்டில் மிகவும் சந்தோஷகரமான விஷயம். ஏறக்குறைய 1927-ம் வருஷத்தில் மகாத்மா வினுடைய தேக திதி திருப்திகர மில்லாமலிருந்தது. வைத்தியர்கள் அவருக்கு இடமாற்றம் தேவை யென்று சொன்னார்கள். எனவே, சௌகரியமான சீதோஷ்ண திதியுடைய பெங்களூரிலும் அதன் அருகாமையிலுள்ள நந்தி மலையிலும் அவர் வந்து தங்குவதென்று ஏற்பாடுசெய்யப்பட்டது. அப்படியே அவர் வந்து தங்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர், எங்கள் மத்தியில் தங்கியிருந்த சில வாரங்களும், மைசூர் வாசிகளின் மனதில் சந்தோஷகரமான ஞாபக நாட்களாக இருக்கின்றன. அப்பொழுது காந்தியடிகளை நான் அடிக்கடி சந்தித்தேன். அவரிடத்தில் எனக்கு ஒருவித பக்தி விசுவாசம் ஏற்பட்டது. இதுவே நாளாவட்டத்தில் நட்பாக முதிர்ந்தது. அதுமுதல் இந்த நட்பைப் பெரிதாகப் போற்றி வருகிறேன். லண்டனில் கூடிய வட்ட மேஜை மகாநாடுகளின் போது, சிறப்பாக, இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டின் போது - இந்த மகாநாட்டில் தான், காங்கிரஸின் ஏகப்பிரதிநிதியாகக் காந்தியடிகள் பிரசன்னமாயிருந்தார். நான் கழித்த நாட்கள் மிகவும் சந்தோஷகர மான நாட்களாகும். இந்தியாவிலிருந்து ஆஜராயிருந்த பிரதிநிதி களனைவரிலும் காந்தியடிகளே தலை சிறந்தவரா யிருந்தார். அவர் அப்பொழுது நிகழ்த்திய சொற்பொழிவுகள், எங்களுக்கு மின்சார சக்தியை யூட்டினது போல் இருந்தது. இரண்டாவது வட்ட மேஜை மகாநாடு என்னைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இந்த மகாநாட்டின் போது, சமஷ்டி அரசியல் அமைப்புக் கமிட்டி முன்னர் நான் ஒரு திட்டத்தைச் சமர்ப்பித்தேன். சமஷ்டி அரசாங் கத்தில் மேற் சபையாக சமஷ்டி கவுன்சில் ஒன்று இருக்க வேண்டு மென்றும், சமஷ்டியில் சேருகிற பல அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் அங்கத்தினராயிருக்க வேண்டுமென்றும் நான் இந்தத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மேற் சபை, ஆலோசனை சொல்கிற ஒரு சபையாக இருக்க வேண்டு மென்ற நிபந்தனையுடன் காந்தியடிகள் என் திட்டத்திற்கு ஆதரவளித்தார். இதைப்பற்றி, மைசூர் சட்ட சபையில் நான் நிகழ்த்திய சொற்பொழிவிலும் குறிப்பிட்டிருக் கிறேன். இதற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களெல்லாம் சரித்திர விஷயங்களாகும். எதற்காக இந்த விஷயத்தை எடுத்துச் சொல்கிறே னென்றால், இந்தியாவின் வருங்கால அரசியலை ஒழுங்காக அமைக்க வேண்டுமென்கிற விஷயத்தில் காந்தியடிகளுக்கு எவ்வளவு சிரத்தை யிருக்கிறதென்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான். இனி, இந்தியாவின் தவப்புதல்வரான அவருடைய வாழ்க்கையும் சேவையும் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கு எவ்வளவு முக்கியமானதென்பதைப்பற்றிச் சிறிது கூறுகிறேன். சமகாலத்திலே வசிக்கும் மகான்களுக்குச் சிரஞ்சீவிப் பட்டம் கொடுப்பது ஆபத் தென்று சொல்வார்கள். ஏனென்றால், எதிர்காலம் அவர்கள் விஷயத் தில் என்ன விதமான தீர்ப்பு அளிக்குமென்பது யாருக்கும் தெரியா தல்லவா? ஆனால் காந்தியடிகளின் விஷயத்தில் சரித்திரம் பொய்யாகப் போகாது. இதுவரையில் தோன்றின இந்தியர்களில் காந்தியடிகளே தலை சிறந்தவர் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். நான் சமீபத்தில் ஒரு பிரசங்கத்தில் கூறின மாதிரி அவர், பாரத தேசத்தினு டைய ஆத்மாவின் பிரதிநிதியாகவும், அதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குரலாகவும் இருக்கிறார். வேறு யாரும் அவரைப்போல் தெளிவாக இந்தியாவின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்ட முடியாது. எல்லாரிடத்திலும் அவர் காட்டுகிற அன்பு, தமது லட்சியங் களினிடத்தில் அவர் காட்டுகிற உறுதி முதலியவைகளினால் அவர், தமது நாட்டாரின் இருதயத்தில் கொலு வீற்றிருக்கிறார். சேவையிலே பற்றுள்ளங்கொண்ட பலரும் அவரைப் போற்றுகிறார்கள். உலக மகான்களிலே ஒருவராகிய காந்தியடிகள், இந்திய தேசீய வாழ்வைப் பொறுத்தமட்டில் ஒரு விசேஷ தானத்தை யடைந்திருக்கிறார். அப்படி யடைந்திருக்கிற அந்த தானத்தை அவர், தமது தாய் நாட்டின் நன்மைக்காக உபயோகப்படுத்துகிறார். இந்திய மகா ஜனங்களிடையே அவருக்கிருக்கிற அபார செல்வாக்கைக் கொண்டு பார்த்தோமானால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில், அவர் மதிக்கப்பட வேண்டிய ஒரு சக்தி யென்பதை யாரும் அங்கீகரித்துக் கொள்வர். அரசியலென்பது ஓர் அற்பத்தனமான விளையாட்டு என்று சொல்லப்படுவது, கொஞ்சம் குறும்புத்தனமா யிருந்தாலும், அதில் ஓரளவு உண்மையு மிருக்கிறது. அரசியலில், அடிக்கடி மனச் சாட்சி யுடன் சமரஸப் படுத்திக் கொள்ள வேண்டி யிருக்கிறது. எதைச் செய்வதற்கும் பின் வாங்காத சுபாவமுடையவர்களுக்குத்தான் அரசியலில் வெற்றி யென்று சொல்கிறார்கள். ஆனால் இதோ, மகாத்மா காந்தி - மனச் சாட்சிக்கு விரோதமாக ஒரு காரியமும் செய்யாதவர், கண்டிப் புடையவர், நெறிகளையுடையவர் - எல்லாரையும்விட அரசியலில் அதிகமான வெற்றி யடைந்திருக்கிறார். அவர் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; அந்தரங்க வாழ்க்கையில் குறையில்லாதவர்; பளிங்கு போல் சுத்தமான குணமுடையவர்; தீவிர மதப் பற்றுடையவர். அவரை நினைக்கிற போது பழைய காலத்து ஞானிகளும் சாதுக்களும் நமது கவனத்திற்கு வருகிறார்கள். இன்னொரு திருஷ்டியில் பார்த்தால், காந்தியடிகள், புத்துணர்ச்சியுடன் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் நிகரற்ற தலைவரா யிருக்கிறார்; அவர், இந்தியர்களுக்குப் புத்துணர்ச்சியையும், தன் மதிப்புணர்ச்சியையும் ஊட்டி, தங்களுடைய நாகரிகத்தில், அவர்கள் ஒரு பெருமை கொள்ளுமாறு செய்திருக்கிறார். இதனால் அவர் சாதாரண ஓர் அரசியல்வாதியை விட மேலானவர் என்பது தெரிகிறது. அவர் ஒரு தீர்க்கதரிசி; சிறந்த ராஜதந்திரி. பெக்டேட்டர் என்ற பத்திரிகையில் ரிச்சர்ட் ப்ரைண்ட் என்ற அறிஞர் எழுதியிருக்கிற மாதிரி நிதானமில்லாமலும் தற்காலிகமாக வும், ஆனால் தூலமாகத் தெரியக் கூடிய மாதிரியாகவும் இந்திய ஜாதியொன்று உதயமாகிக் கொண்டு வருகிறது; அதற்குச் சிருஷ்டி கர்த்தா காந்தியடிகள். காந்தியடிகள் இங்ஙனம் சாதுவாகவும், அரசியல்வாதியாகவும், ராஜதந்திரியாகவும் இருப்பதுதான் இங்கிலீஷ்காரர்களுக்குப் புரிய மாட்டேனென்கிறது. ஆனால் அவரைப் பின்பற்றுகிற இந்தியர்கள், இந்த நுணுக்கத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டாலும் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக மகான்களில் ஒருவராக மகாத்மா காந்தி எல்லோராலும் புகழப்படுகிறார்; ஆனால் ஒரு சிலரே அவரை அறிந்து கொண்டிருக்கின்றனர். அவர் - காந்தியடிகள் - மதத்தையும் தருமத்தையும் அரசியலில் கொண்டு புகுத்தியிருக்கிறார்; அரசியல் களத்தில் தோன்றுகிற உலகாயத சக்திகளை எதிர்க்க தரும ஆயுதங் களைக் கண்டுபிடித்து அவற்றின்மூலம் அநுபவ பூர்வகமான சித்திகளை யடையப் பார்க்கிறார். அரசியலிலே மதத்தைக் கொண்டு புகுத்தியதைப் போல் அவர் மதத்திலும் அரசியலைக்கொண்டு புகுத்தியிருக்கிறார். வைதிக ஹிந்து மதமானது இதுகாறும் மத சம்பந்தமான விஷயங் களென்று எவை எவைகளைக் கருதி வந்தனவோ, அவைகளை யெல்லாம் காந்தியடி கள் லௌகிக விஷயங்களாகக் கொண்டுவந்து விட்டார். ஹரிஜன முன்னேற்ற விஷயம் இவற்றிலே முக்கியமானதாகும். ஆனால் இங்கே ஒரு விஷயம் - ஹரிஜன முன்னேற்ற இயக்கத்தை ஜீவகாருண்ய இயக்கமாகவே காந்தியடிகள் தொடங்கினாரே தவிர, சீர்திருத்த உற்சாகத்தினாலேயோ அல்லது அரசியல் நோக்கத்துடனோ தொடங்கவில்லை. மகாத்மா காந்தி மகத்தான தன்னம்பிக்கையுடையவர். ஆத்ம சக்தியினிடத்தில் கொண்டுள்ள நம்பிக்கையினால் அவருடைய தன்னம்பிக்கையும் அதிகமாகிறது. அவர், அறிவுத் திறமையினாலல்ல, இருதய பரிசுத்தத்தினாலேயே பிறரை ஆட்கொள்கிறார்; தாமும் ஆட்படுகிறார். உள்ளே அந்தர்யாமியாயிருக்கும் ஒரு சக்தியின் அழைப்பு என்று சொல்லி, அதன் ஆணைப்படி நடக்கவேண்டு மென்று தமது கோஷ்டியினருக்கு அவர் உபதேசம் செய்கிறார். எளிய வாழ்க்கை; உயரிய எண்ணம் என்பதுதான் அவருடைய வாழ்க்கை யின் கோட்பாடு. அவர், தமது உணர்ச்சிகளை, அன்றாடக் காரியங் களை, தேகத்தைக்கூட ஓர் ஒழுங்குக்குட்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரைவிடத் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்; ஆனால் திகைப்பும் அடைந்து போகிறார்கள். தன்னடக்கம் இருந்தால், அரசியலில் ஆதிக்கஞ் செலுத்த முடியு மென்று காந்தியடிகள் கருதுகிறார். அவர் தேக சம்பந்தமான எவ்வித ஆசாபாசங்களுக்கும் இணங்கிப் போவதில்லை. ருசியிலும், பழக்க வழக்கங்களிலும் அவர் மிகவும் கண்டிப்பாயிருக்கிறார். சத்தியமும் அஹிம்ஸையுந்தான் அவருடைய துருவ நட்சத்திரங்கள். அவற்றை நோக்கித்தான் அவர் தமது வாழ்க்கைக் கப்பலைச் செலுத்துகிறார். அப்படியே, காங்கிர கப்பலுக்கும் இந்திய தேசீயக் கப்பலுக்கும் வழி காட்டுகிறார். இந்திய மகா ஜனங்களிடத்தில் அவருக்கு இவ்வளவு அபரிமித மான செல்வாக்கு இருப்பதன் ரகசியமென்ன, காரணமென்னவென்று என்னைக் கேட்டால் அவருடைய மகத்தான அரசியல் திறமையல்ல. அவர் மகா திறமைசாலி என்பதில் ஐயமில்லை. ஆனால் அது காரண மில்லை. இந்தியாவின் பிரச்னைகளுக்குப் பரிகாரமாக அவர் அநுஷ்டிக்கிற முறைகள் ஓரளவு வெற்றியடைந்திருக்கின்றனவே அந்த வெற்றியும் காரணமல்ல. இந்தியர்கள், எப்பொழுதுமே ஒழுக்கத்திற்கு உயர்வு கொடுக்கும் சுபாவமுடையவர்கள். அறிவு மேம்பாட்டைக் காட்டிலும் ஒழுக்க மேம்பாட்டிற்கே எளிதில் இணங்குகிறவர்கள். மகாத்மாவின் தூய உள்ளம், எண்ண பரிசுத்தம், மாசு மறுவில்லாத ஒழுக்கம் முதலியவைதான், அவரைப் பலருடைய நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமாக்கி யிருக்கின்றன. காங்கிரஸில் சேராதவர்கள், அவருடைய எல்லாக் கொள்கைகளையும் அப்படியே அங்கீகரியா தவர்கள், அவருடைய அரசியல் கோட்பாடுகளையும் முறைகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் முதலிய பலரும் அவரிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு இவைதான் காரணம். சுமார் ஐந்து வருஷங்களுக்கு முன்னர், மைசூர் சட்டசபையில் நான் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வருமாறு கூறினேன்:- நமது கஷ்டங்களைச் சமரஸப்படுத்தி வைக்கக்கூடியவரும், சுய ஆட்சிக்கு அடிப்படையாயிருக்கிற சீலத்தை ஒழுங்குபடுத்தி வைக்கக்கூடிய வருமான ஒருவர் இருக்கிறார். மகாத்மா காந்தி, அரசியலிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறவர்களில் நான் ஒருவ னல்லன். இந்தியாவுக்கு ஓர் உண்மையான தலைவர் இப்பொழுது தேவையாயிருக்கிறது. காந்தியடிகள் தற்போதைய தேசீய வாழ்வில் மகத்தானதொரு தானத்தை யடைந்திருக்கிறார். அவர் சமாதானத்தை நேசிக்கிறவர் மட்டுமல்ல; சிறந்த தேசாபிமானி மட்டுமல்ல. தீர்க்க திருஷ்டியுள்ள, நிதான புத்தியுள்ள ஒரு ராஜத ந்திரியுங் கூட. தேசத்திலேயுள்ள பிணக்குச் சக்திகளையெல்லாம் சமரஸப் படுத்தி வைத்து, சுய ஆட்சிப் பாதையில் எல்லாச் சக்திகளையும் ஒருமுகமாகக் கொண்டு செலுத்தும் ஆற்றலுடைய தலைவர் அவரைக்காட்டிலும் வேறொருவர் இல்லை. இந்தியாவுக்கும் கிரேட் பிரிட்டனுக்கும் சந்தோஷகரமான ஒரு சம்பந்தத்தை உண்டு பண்ணி வைக்கத் தகுதியுடையவர் அவரைத் தவிர வேறொருவரு மில்லை. அரசாங்கத் திற்கு அவர் சக்தி வாய்ந்த ஒரு துணைவராகவும், கிரேட் பிரிட்டனுக்கு உண்மையான நண்பராகவும் இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் அரசியலிலிருந்து விலகிக்கொள்வாரானால், இந்திய அரசியல் களத்தை, விஷமிகளும் தீர்க்க திருஷ்டியில்லாதவர் களும் வந்து ஆக்ரமித்துக் கொண்டு அர்த்தமில்லாத வாசகங்களைச் சொல்லி, தேசத்தைத் தவறான பாதையில் அழைத்துக் கொண்டு செல்வார்களென்ற சூசகங்கள் இருக்கின்றன. இந்த வார்த்தைகளை நான் சொன்னதற்குப் பிறகு அநேக சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. சட்டசபைகளுக்குப் பொறுப் பாயுள்ள மந்திரி சபைகள் எல்லா மாகாணங்களிலும் ஏற்பட்டிருக் கின்றன. சமஷ்டி அரசியல் ஏற்படுத்துவதைப்பற்றி இப்பொழுது பிரதாபிக்கப் படுகிறது. காந்தியடிகள் இப்பொழுது காங்கிரஸுக் குள் ஒருவராக இல்லாமல் காங்கிரஸினுடைய ஒருவராக இருக்கிறார். ஆனால் நான் மேலே சொன்ன வாசகங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய விதமான சம்பவங்கள் எவையும் ஏற்படவில்லை. தேசத்திற்கு வழிகாட்ட காந்தியடிகளைத் தவிர வேறு யாருமில்லை. அவர் எப்பொழுதும்போல் இப்பொழுதும் தலைவராயிருந்து கொண்டிருக் கிறார். அரசியலிலே நிதானம், நியாய புத்தி, அநுபவ சாத்தியம் முதலியவைகளைக் குறிப்பிடுகிற சக்தியாக மகாத்மா காந்தி விளங்குகிறார். இந்தியா, அவரை விட்டுவிட்டு, இப்பொழுதும், எப்பொழுதும் இருக்கமுடியாது. காந்தியடிகளுடைய வாழ்க்கை, தொண்டு முதலியன, இந்தியாவிலுள்ள நமக்கு அர்த்த புஷ்டியுடையதாகவும் மதிப்பு வாய்ந்த தாகவும் இருக்கிறதென்றால், யுத்தத்தினாலும் யுத்த பயங்கரத்தினாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற உலகத்திற்கு அதிக அர்த்தமுடையதாக இருக்கிறது. அன்பு, சத்தியம், அஹிம்ஸை என்ற மூன்றனையும் அடிப்படையாகக் கொண்ட அவருடைய அரசியல் முறை, அரசியல் ஒழுக்கம் முதலியன, ராஜதந்திரம், துவேஷம், யுத்தம் ஆகியவற்றின் மூலமாகப் பரபர சம்பந்தம் வைத்துக்கொண்டிருக்கிற தேசங்களுக்கு ஒரு படிப்பினையாகும். காந்தியடிகளை, அவருடைய எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டுப் பாராட்டுகிறேன். அவர் திடகாத் திரத்துடனும் தேகாரோக்கியத்துடனும் இருந்து பொதுவாக உலகத் திற்கும், சிறப்பாக இந்தியாவுக்கும் பயனுள்ள தொண்டுகளை நீண்ட காலம் செய்துகொண்டிருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். * * * ஆத்மசக்தியின் அதிகாரி சி. இ. எம். ஜோட், எம்.ஏ.,டி.லிட். (பர்க்பெக் காலேஜ், லண்டன் சர்வகலாசாலை) மானிட ஜாதியின் விசேஷத் தன்மை எதில் அடங்கியிருக்கிறது? சிலர் ஒழுக்கத்தில் என்பார்கள்; இன்னும் சிலர் கடவுள் தன்மையில் என்பார்கள்; வேறு சிலர் தைரியத்தில் என்பார்கள்; மற்றுஞ்சிலர் தன்னலத் தியாகத்தில் என்பார்கள். அரிடாடல்1 என்பார், விவேகத்தி லென்றார். மனிதனை, மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனிடத்திலுள்ள விவேகந்தான் என்றார் அவர். ஆனால் அரிடாடலுடைய இந்தக் கொள்கை, உண்மையின் ஒரு பாகத்தைத் தான் தெரிவித்திருக்கிறதே தவிர, பூரா உண்மையையும் தெரிவிக்க வில்லை. விவேகத்தினுடைய சாரமெல்லாம், அது வெளி விவகாரங் களை நோக்குகிற மாதிரியிலும் அதனுடைய பற்றற்ற தன்மையிலு மிருக்கிறது. தன்மீது போர்த்தப்பட்டுள்ள போர்வைகளையெல்லாம் அகற்றிவிட்டால், தான் உண்மையை நேருக்கு நேர் காணமுடியும் என்று விவேகம் பெருமைப்படுகிறது. அதாவது, விவேகமுள்ள மனிதன் எதற்கும் அஞ்சமாட்டான். எந்த விஷயத்தையும் அதன் தத்ரூபத்தில் பார்ப்பதற்குப் பின் வாங்கமாட்டான். தன்னுடைய ஆவலையே முடிவாகவோ, அல்லது தன்னுடைய நம்பிக்கையையே தீர்ப்பாகவோ கொண்டு, எதனையும் தனக்குச் சாதகமான கண் கொண்டு பார்க்கமாட்டான். எனவே விவேகமுள்ளவன் பற்றற்றவன். அதாவது அவனுடைய விவேகம் எதைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறதோ அது விஷயத்தில் அவன் பற்றற்றவனாயிருக்கிறான். அப்படியானால் அவன் தன் விஷயத்திலேயே பற்றற்றவனாயிருக் கிறானா? இல்லையென்றுதான் நான் நினைக்கிறேன். அறிஞர்கள் பலர், ரெயில் தப்பிவிட்டால் மிகவும் ஆத்திரமடைவதை நான் பார்த்திருக்கிறேன். விஞ்ஞான சாதிரிகளும், கணித சாதிரிகளும் மன அமைதிக்குப் பெயர் பெற்றவர்களல்லர். நிதான புத்தியுடனிருக்க வேண்டிய தத்துவ ஞானிகள் கூடக் கோபமடைகிறார்கள். இதனால் அரிடாடலின் வாசகம், உண்மையைச் சுட்டிக்காட்டுகிறதே தவிர, உண்மையை விளக்கவில்லையென்று நான் கருதுகிறேன். உண்மை யென்னவென்றால் மனிதன், தன் விஷயத்திலும், தன்னுடைய ஆசைகள், தூண்டுதல்கள், நம்பிக்கைகள் முதலியன விஷயத்திலும் பற்றற்ற தன்மையை அநுஷ்டிக்க வேண்டும். இப்படி அநுஷ்டிப்பது தான் மானிட ஜாதியின் விசேஷ சுபாவம். தன் சொந்த விஷயத்தில் பற்றற்ற மனப்பான்மையும், தன்னுடைய கொள்கைகளைக் கடைப்பிடித்து நடப்பதில் பற்றுள்ளமும் உடையதுதான் மனிதனு டைய சிறப்பியல்பு. இந்தச் சிறப்பியல்பையே ஆத்ம சக்தியென்று நாம் அழைக்கிறோம். தன் விஷயத்தில் பற்றற்ற மனப்பான்மையுடைய வராயிருக் கிறார் காந்தியடிகள். இதுதான் அவருடைய சக்திக்கெல்லாம் மூலக் காரணமாயிருக்கிறது. அவர் தமது தேகத்தை ஒருவித ஒழுங்குக் குட்படுத்திக்கொண்டிருக்கிறார். அஃது அவருடைய பற்றற்ற மனப்பான்மையின் வெளித் தோற்றம். பற்றற்ற மனிதன் எப்பொழுதுமே தன் தேகத்தின்மீது ஆதிக்கஞ்செலுத்துகிறான். எப்படியென்றால், தன்னினின்று தன் தேகத்தை வேறாகப் பிரித்து வைத்துக்கொண்டு, தனக்காக அந்த தேகத்தை ஒரு கருவியாக உபயோகப்படுத்திக் கொள்கிறான். எனவே காந்தியடிகளுக்கு அவருடைய இஷ்டப்படி, தூங்கவும், எழுந்திருக்கவும் முடிகிறதென்பதும், ஆகாரத்தை மாற்றிக் கொள்ளாமலே அவருடைய தேக பலம் கூடவும் குறையவும் செய்கிறதென்பதும் யதேச்சையாக ஏற்படுகிற சம்பவங்களல்ல. மேற்படி குணத்தின் மற்றொரு தோற்றம் என்னவென்றால், லட்சியத்தை அடைகிற விஷயத்தில் அவர் ஓர் உறுதியான முடிவு கொண்டிருக்கிறார். அந்த லட்சியத்தை அடைவதற்கான சாதனங் களின் விஷயத்தில், மற்றவர்களுடன் எவ்வளவு தூரம் ஒத்துப்போக முடியுமோ அவ்வளவுதூரம் ஒத்துப் போகிறார். பற்றற்ற மனப் பான்மையுள்ளவன் பிடிவாதக்காரனாயிருக்கமாட்டான். அவன் தன்னுடைய மார்க்கத்தில் தீவிர பிடிப்புக் காட்டமாட்டான். தன்னுடைய லட்சியத்தில் மட்டும் குறியாயிருப்பான். அந்த லட்சியத்தை யடைவதற்குச் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றார்போல் எந்த மார்க்கத்தையும் கடைப் பிடிக்கத் தயாராயிருப்பான். இப்படிப் பட்டவர்தான் காந்தியடிகள். அவர் ஓர் அரசியல் வாதியாகவும் அதே சமயத்தில் ஞானியாகவும் ஒன்று சேர்ந்திருப்பது அநேகருக்குத் திகைப்பையே உண்டுபண்ணியிருக்கிறது. அவர் சமரஸத்திற்கு எப்பொழுதும் தயாராயிருக்கிறார். சமரஸம் பேசுவதில் திறமையும் காட்டுகிறார். அப்படிக் காட்டுவதில் குழந்தையைப்போல் எளிய சுபாவ முடையவராகவுமிருக்கிறார். தமது லட்சியத்தில் அவர் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார். ஆனால் அதனை அடைவதற்கான சாதனங் களின் விஷயத்தில் பற்றற்ற மனப்பான்மை யுடையவராயிருக்கிறார். இதனால்தான், சட்ட மறுப்பியக்கத்தைத் தொடங்கி நடத்திய அவர், இடையில் அது வெற்றிபெறாதென்று தெரிந்ததும் அதனை நிறுத்தி விடத் தயங்குகிறாரில்லை. தமது ஆத்ம நன்மைக்காக உபவாசமிருக் கிற அவர், அந்த உபவாஸத்தை அரசியலில் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக உபயோகிக்கிறார். தமது அரசியல் கோரிக்கை நிறைவேறியவுடன், தமது உபவாசத்தையும் நிறுத்திக்கொள்கிறார். பிரிட்டிஷாருடைய புதிய அரசியல் திட்டத்தைப் பலமாக எதிர்த்த அவர், அந்தத் திட்டத்துடன் ஒத்துழைக்கத் தயாராயிருக் கிறார். ஆனால் ஒரு நிபந்தனை. திட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி, சுதேச சமதானங்களின் பிரதிநிதிகள் அந்தந்த மன்னர்களால் தெரிந் தெடுக்கப்படாமல் சமதானப் பிரஜைகளால் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்று அவர் வற்புறுத்துகிறார். இந்தியாவிலுள்ள பிரிட்டி ஷாருக்குப் பரம விரோதியாயுள்ள அவர், இப்பொழுது பிரிட்டி ஷாரின்அத்தியந்த சிநேகிதராயிருக்கிறார். அவரால்தான், மீண்டும் சட்ட மறுப்பியக்கம் தொடங்கப்படாமலும், புரட்சி இயக்கங்கள் தோன்றாமலுமிருக் கின்றன. இப்பொழுதாவது பிரிட்டிஷார், இந்தியர்கள் கேட்கிற சில சில்லரைச் சலுகைகளைத் தாமே வலிய அளிப்பார்களா? அல்லது இந்தியாவை, மற்றோர் ஐர்லாந்தாக்கு வார்களா? பற்றற்ற மனப்பான்மையைத்தான் நாம் ஆத்ம சக்தியென் கிறோம். மனிதர்களுக்குத்தான் இந்தச் சக்தியுண்டு. தேக பலமிருக் கிறதே, அஃது எந்தப் பிரச்னையையும் கிளப்பவில்லை. உன்னைவிட பலசாலியா யுள்ள ஒரு மனிதன், உன் விஷயத்தில் எப்படி வேண்டு மானாலும் நடந்துகொள்கிறான். நேர்முகமாக தன் தேக பலத்தை உன்மீது பிரயோகித்து அதன் மூலமாக உன்னைச் சுவாதீனப்படுத்திக் கொள் கிறான். அல்லது அவனுடைய மனோபீஷ்டத்தைப் பூர்த்தி செய்யாம லிருந்தால் அவனால் உனக்கு என்ன விதமான ஆபத்து ஏற்படுமென்ற பயத்தை ஊட்டி உண்னைத் தன் வசப்படுத்திக் கொள்கிறான். தேக பலமுள்ளவன்தான் அதிகார சக்தியைப் பெறுகிறான். ஆனால் ஆத்ம சக்தி யிருக்கிறதே அஃது எந்தவிதமான தண்டனைகளையும் விதிப்ப தில்லை. நான் ஆத்மசக்தியை எதிர்த்து நின்றால் அதற்காக நான் துன்புறுவ தொன்றுமில்லை. அப்படி யிருந்தும் அதற்கு நான் ஏன் கீழ்ப்படிகின்றேன்? இதற்குப் பதில் சொல்வது கடினந்தான். ஆனால் அதன் சக்தியை நான் உணர்கிறேன். அது சரியென்றும், நான் தவறென்றும் எனக்குப்படுகிறது. நான் ஓர் ஆத்மா, என்னைவிட மேலான ஆத்மா அது என்பன போன்ற எண்ணங்கள் என் மனதில் படுகின்றன. எனவே ஆத்ம சக்தியானது அதிகாரத்தை உபயோகிப் பதில்லை; செல்வாக்கைத்தான் உபயோகிக்கிறது. இந்த ஆத்ம சக்தியைக் கொண்டுதான், காந்தியடிகள் ஆயிரக்கணக்கான பேரைச் சிறைக்குச் செல்லுமாறு தூண்டினார். இதே ஆத்ம சக்தியைக் கொண்டுதான் ஆயிரக் கணக்கானபேரை, எவ்விதத் தற்காப்பும் செய்து கொள்ளாமல் அடிவாங்கும்படி தூண்டினார். ஆத்ம சத்தியினால் தூண்டப்பட்ட சட்டமறுப்பியக்கம், மேனாட்டுக்கு முக்கியத்துவம் பொருந்திய ஒரு விஷயமாயிருக்கிறது. தான் சேமித்து வைத்த (ஆத்ம) பொக்கிஷத்தை யெல்லாம், கொலைக் கருவிகளைத் தயாரிப் பதிலும், அவற்றைக் கொண்டு மற்றொரு நாட்டாரை அழிப்பதி லுமேயா, தற்கால நாகரிக சமூகம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறது? சச்சரவிட்டுக் கொண்டி ருக்கிற இரண்டு நாடுகள், தங்களுடைய சச்சரவுகளை பரபரம் ஒரு நாட்டுப் பிரஜைகளை மற்றொரு நாடு கொல்லாமல் தீர்த்துக் கொள்ள முடியாதா! மேனாட்டிலே கேட்கப்படுகிற இந்தக் கேள்வி களுக்குப் பதில் தேவையாக இருக்கிறது. நமது தலைமுறையினர், பரம்பரையாக வந்துகொண்டிருக்கும் ஒரு தோரணையில்லாமல் வேறொருவிதமாக மேற்படி கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால், மேனாட்டு நாகரிகம் அழிந்து போவது நிச்சயம். மேற்கண்ட வேறொருவிதமான பதிலைத் தயாரித்து அதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவந்த பெருமையும் ஆற்றலும் காந்தியடி களைச் சேர்ந்ததாகும். கிறிதுவும் புத்தரும் சரியான மார்க்கத்தைக் காட்டியிருப்பதாக அவர் சொல்கிறார். இரண்டு பேர் சேர்ந்தால்தான் சண்டையுண்டாகிறது. அந்த இருவரில் நீ ஒருவனாக இருக்க மறுத்து விடு. அப்பொழுது ஒருவரும் உன்னோடு சண்டைக்கு வரமாட்டார்களே. பலாத்காரத்தை பலாத்காரத்தினால் எதிர்க்காதே. அதனால் அந்தப் பலாத்காரத்தை நீ தோற்கடிப்பதோடல்லாமல், அதன் பயனற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறாய். இந்த முறையைத்தான் காந்தியடிகள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். உயர்ந்த கற்பனைகளென்று நாம் கருதி வந்ததை உண்மையென்று நிரூபித்துக்காட்டுகிற ஆபத்தை அவர் இஷ்டத் துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய இந்தச் சாத்வீகமுறை, காலப் போக்குக்கு முற்பட்டதென்பதில் சந்தேகமில்லை. சம்பிரதாயத் தைப் பின்பற்று கிறவர்களுக்கு அவருடைய இந்த முறையானது ஒரு திகைப்பை உண்டுபண்ணுகிறதென்பதிலும் ஆச்சரியமில்லை. அவருடைய முறையானது ஏகபோக உரிமைக்காரர்களுடைய எண்ணங்களை அறைகூவி அழைக்கின்றது; அவர்களுடைய மனதிலே சஞ்சலத்தை உண்டுபண்ணியிருக்கிறது; அவர்களுடைய தரும ரீதியிலே ஒருவித அச்சத்தை விளைவித்திருக்கிறது. இதனால் தான் அவர் - காந்தியடிகள் - எல்லா மகான்களையும்போல் தூற்றப்படு கிறார். கலைகளின் விஷயத்தில் சம்பிரதாயத்திற்கு விரோதமாகச் செல்வது குற்றமென்று கருதப்படுகிறது. அதே மாதிரி, அரசியலிலோ தரும விஷயங்களிலோ சம்பிரதாயத்திற்கு விரோதமாகச் செல்வது, சமுதாயத்தின் அதிவாரத்தையே அசைத்துவிடக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, தர்ம விஷயங்களில் சம்பிரதாயத்தை மீறி முன்னேறிச் செல்கிறவன், பல எதிர்ப்புகளையும் கடந்து செல்ல வேண்டியவனாயிருக் கிறான். கலை விஷயங்களில் புதிதாகச் சிருஷ்டிகளை உண்டுபண்ணு கிறவன், பட்டினியால் வருந்தும் படியே விடப்படுகிறான்; தர்ம விஷயத்தில் சிரேஷ்டமாயிருக்கப் பட்டவன், சட்ட அங்கீகாரம் பெற்ற தொந்திரவுகளுக்காளாகிறான்; கடைசியில் கொல்லவும் படுகிறான். சரித்திரங்களிலே வரும் சட்ட ரீதியான விசாரணைகளை நாம் கவனித்துப் பார்ப்போமானால் அது நமக்கு ஆச்சரியமானதொரு படிப்பினையாயிருக்கும். ஸாக்ரடீ1 என்ன, கியோர்டானோ ப்ரூனோ2 என்ன, ஸெர்வேடஸ்3 என்ன, இவர்களெல்லோரும் தங்கள் காலத்தில் அதிகாரத்திலிருந்தவர் களுக்குப் பிடிக்காத அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார்களென்ற காரணத்திற்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டார்கள். ஆனால் இப்பொழுது உலகம் அவர்களைக் கௌரவிக்கிறது. அதிமேதாவி அல்லது மகானுடைய லட்சணம் என்னவென்றால் ஷெல்லியின் வாக்குப்படி எதிர்காலத்தை நிகழ்காலத்தில் காண்கிறவன்; அவன் எண்ணுகிற எண்ணங்கள், தற்காலத்திய மலர்கள் பழங்கள் முதலிய வைகளுக்கு வித்துக்களாயிருக்கின்றன. வாழ்க்கைக்குச் சுயமாயமைந்த நோக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ஆன்ம உலகத்திலே, மனோ உலகத்திலே சிருஷ்டிக்கப்பட்டவனே மகான் என்றும் சொல்லலாம். அவன், வாழ்க்கையினுடைய முன்னேற்ற சக்தியின் பிரதிநிதியாக இருக்கிறான். அவன் புதிய எண்ணங்களையும், புதிய தரும நியாயங்களையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிற வகையிலே பழைய எண்ணங்களையும் தரும நியாயங்களையும் அழிக்கிறான். இந்த மகான், முதலில் எந்த நிலையிலிருந்து தனது உபதேசங்களைச் செய்தானோ அந்த நிலைக்கு, சமுதாயம் பிற்காலத்தில் வந்து சேர்கிறது. இதனால் தான், ஒரு தலைமுறையில் தருமத்திற்கு விரோதமா யிருந்தவை மற்றொரு தலைமுறையில் தரும நியாயமாகப் போய் விடுகிறது. இந்த அமிசத்திலேதான் நாம் காந்தியடிகளை தருமரீதியான ஒரு மகானென்று அழைக்கிறோம். பரபர சச்சரவுகளைத் தீர்த்துக்கொள் வதற்கு அவர் ஒரு புதிய வழியை அறிவிக்கிறார். அதுதான் பலாத்கார வழிக்குப் பதிலாக ஏற்படப் போகிறது. மற்றும் மனிதர்கள் அழிவு வேலையில் ஆக்கமுடையவர்களாக ஆக, நாகரிகமென்பது அழிந்து போகாமலிருக்கவேண்டுமானால், அவருடைய சாத்வீக முறையைத் தான் உலகம் பின்பற்றியாகவேண்டும். இந்தச் சாத்வீக முறை இப்பொழுது தவறிவிட்டதென்பது வாதவம். தம்மால் முடிந்ததைக் காட்டிலும் அதிகமாக நிறைவேற்றி வைப்பதாக அவர் - காந்தியடிகள் - கூறியதும் உண்மை. ஆனால் எந்த மகானும் இதுவரையில் கிரியாம்சையில் நிறைவேற்றக் கூடியதைக்காட்டிலும் அதிகமாக வாக்குக் கொடுத்திராவிட்டால், உலகம் இப்பொழுது க்ஷீணதசையி லிருக்கும். ஏனென்றால் அடையப்படாத லட்சியத்தின் குழந்தை தான், இப்பொழுது அடையப்பட்டிருக்கிற சீர்திருத்தம். காந்தியடி கள் தன்னம்பிக்கையுடையவர்; இதனால்தான் உலகம் அவரை நம்புகிறது. உலகத்திலுள்ள எந்தப் பெரிய மனிதருடைய சக்தியைக் காட்டிலும், அவருடைய சக்திதான் - பலாத்காரத்தின் பின் பல மில்லாத அவருடைய சக்திதான் - மகத்தானதென்று அங்கீகரிக்கப் படுகிறது. * * * காந்தியடிகளும் ஆத்ம சக்தியும் ரூப எம். ஜோன், டி.லிட். (ஹாவர் போர்ட் காலேஜ், ஹாவர்போர்ட், பென்சில்வேனியா) மகாத்மா காந்தியையும் அவருடைய கோஷ்டியையும் ஆமதா பாத்திலுள்ள அவருடைய ஆசிரமத்தில் சென்று பார்த்த என்னைப் போன்ற பாக்கியசாலிகள் யாரும் அவருடைய எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பெறும் நூலுக்கு ஒரு கட்டுரை எழுதச் சந்தர்ப்பம் கிடைத்ததைக் குறித்துச் சந்தோஷமேபடுவார்கள். என்னுடைய வாழ்க்கைத் தத்துவத்திலும், வாழ்க்கை நியதியிலும் அவருடைய செல்வாக்கு அதிகம் படிந்திருக்கிறது. என்னுடைய ஜீவிய காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த மகானுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். இதைப் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்வது எனக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. 1905 - ம் வருஷத்தில் நான் பிரான்சி முனிவருடைய வாழ்க்கை யைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அதுமுதல் அவர் என்னுடைய தலைவராயிருக்கிறார். காந்தியடிகளும், அந்த பிரான்சி முனிவரை ஒத்தவராகவே எனக்குப் படுகிறார். 1926 - ம் வருஷம் நான் காந்தியடி களைச் சந்தித்தபோது, அவருக்கு பிரான்சி முனிவரைப்பற்றிய வரலாறுகள் அதிகம் தெரியாமலிருந்ததைக் குறித்து ஆச்சரிய மடைந்தேன். அப்பொழுது அவருக்கு, மேற்படி முனிவருடைய வாழ்க்கையிலிருந்து சில முக்கிய சம்பவங்களைச் சுருக்கமாகச் சொன்னேன். சிறப்பாக பூரண சந்தோஷம் என்பதைப்பற்றியுள்ள கதையையும் சகோதரர் கைல்1 என்பவரும் பிரான் மன்னராகிய செயிண்ட் லூயி2 என்பவரும் எப்படிச் சந்தித்து ஒருவருக்கொருவர் தழுவி முத்தமிட்டுக் கொண்டார் களென்பதையும், பிறகு இருவரும் பேசாமலே முழந்தாள் மண்டியிட்டு விட்டு மௌனமாகப் பிரிந்து சென்றார்களென்பதையும் எடுத்துச் சொன்னேன். ஏனென்றால் அவர்கள் பேசுவதே அநாவசியமென்று கருதினார்கள். சகோதரர் கைல் கூறினார்:- நாங்கள் இரண்டுபேரும் வாய்மொழியால் பேசிக் கொள்வதைக்காட்டிலும், இருதயத்தின் மூலமாக அதிகம் பேசிக் கொள்ள முடியும். வார்த்தைகளின் மூலமாகவல்லாமல் இருதயத்தைப் படிக்கிற அநுபவம் எப்படிச் சகோதரர் கைல்ஸுக்கு ஏற்பட்டதோ அதைப்போல், தற்கால மகானாகிய காந்தியடிகளின் முன்னர் உட்கார்ந்திருந்தபோது எனக்கும் ஏற்பட்டது. அந்த மகானோ, ஒன்பதா வது லூயி மன்னனைப்போல் எவ்வித ராஜ உடையும் தரித்துக் கொண்டிருக்கவில்லை. பதினெட்டாவது நூற்றாண்டிலே வாழ்ந்த க்வேக்கர்களில் தலை சிறந்தவரும் ஆத்ம சக்தி கைவரப்பெற்றவருமான ஜான் வுல்மான் என்ற மகானைப்பற்றியும் காந்தியடிகளுக்குப் பூரணமாகத் தெரிய வில்லை யென்பதையும் நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த வுல்மானைப் போலவே காந்தியடிகளும் இருந்தார். அமெரிக்காவின் மேற்குப் பாகத்திலிருந்த சூகுவே-ஹன்னா இந்தியர்கள், அங்குக் குடியேறியிருந்த வெள்ளையர்களை ஹதம் செய்து விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்களென்று வுல்மான் கேள்விப் பட்டார். உடனே, அவர்களை அன்பு முறையில் சந்திக்கச் சென்றார். அவர்களோ யுத்த கோலத்துடன் வந்து கொண்டி ருந்தார்கள். அவர்களை உடனே ஒரு கூட்டமாகக் கூட்டுவித்து, தாம் அவர்களைக் கண்டு பேச வந்திருப்பதன் நோக்கத்தைத் தெரிவித்து விட்டு ஒரு பிரார்த்தனையும் நடத்தினார். கூட்டம் கலைந்தது. ஒரு சிவப்பு இந்தியன் இந்த வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றனவோ அந்த இடத்தை நான் நேசிக்கிறேன் என்று கூறினான். இந்தத் தோரணையில்தான் காந்தியடிகளும் வேலை செய்கிறார். அவருடைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும் காட்டிலும் அவருடைய மௌனமான அன்பு முறைதான் அதிக பயனளிப்பதாயிருக்கிறது. காந்தியடிகளின் வாழ்க்கைத் தத்துவமாகிற சத்தியாக்கிரகம் அல்லது அஹிம்ஸை என்பதைப் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். மேற்படி வாசகம் எதிர் மறைப் பொருளில் அமைந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அது கிரியா சக்தியுடையது. காந்தியடிகள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தாம் தென்னாப்பிரிக்காவில் வசித்துக் கொண்டிருந்த காலை, க்வேக்கர் தாபனத்தைச் சேர்ந்த மைக்கேல் கோட் என்பவர், எங்ஙனம் கிறிது நாதரின் மலைப்பிரசங்கத்தைத் தமக்கு அறிமுகப்படுத்தி வைத்தாரென்பதை யும், அதன் மூலமாகத் தாம் எவ்வாறு கிறிதுவின் அன்பு உபதேசங் களைச் சரிவரத் தெரிந்து கொள்ள முடிந்த தென்பதையும் எடுத்துக் கூறினார். காந்தியடிகளின் வாழ்க்கை பண்படுவதற்கு வழி காட்டியா யிருந்தவர்கள் பலர். இவர்களில் முக்கியமானவர்கள் டால்டாய், ரகின்,1 தோரூ, எட்வர்ட் கார்ப்பெண்டர்2 ஆகியோரென்று காந்தியடிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார். மின்சார யந்திரத்திலிருந்து கொண்டு, சத்தியானது எப்படி பயனளிக்கும் முறையில் வேலை செய்கிறதோ அதைப்போல், வேலை செய்யக்கூடிய சக்தியின் பரிணாமந்தான் சந்தியாக்கிரகம் என்று காந்தியடிகள் கூறுகிறார். மேற்படி யந்திரமே சக்தியை உற்பத்தி செய்வதில்லை. தன் மூலமாகச் சக்தியை ஏற்று வேலை செய்விக்கிறது. அது போலவே, ஆத்ம சக்தியை வெளிப்படுத்துகிற ஒரு புருஷனும் இருக்கிறான். அவனுடைய சாதாரண சக்திக்கு மீறி ஒரு சக்தி அவனிடத்தில் இருக்கிறது. அதுவே ஆத்ம சக்தி. இந்தச் சக்தியானது, மகத்தானதொரு வாழ்க்கைக்கும் சக்திக்கும் அந்தப் புருஷனைக் கொண்டு போய்விடுகிறது. அவன், அன்பு, சத்தியம், ஞானம் ஆகியவற்றிற்கு ஊற்றுக்களமா யிருக்கிறான். உபநிஷதங்கள் கூட எல்லையற்ற பரம புருஷனொருவன் மனிதனிடத்தில் வீற்றிருக் கிறான் என்று முழங்குகின்றன. அதாவது, மனிதனிடத்திலே அதீதமானதொரு சக்தியிருக்கிறதென்பது இதனால் தெரிகிறது. இந்த மகத்தான சக்தியை வெளிக்குக் கொணரும் மார்க்கத்தைக் கண்டு பிடித்து விட்ட மகா புருஷன், எப்பொழுதும் சாந்தத்திற்கும் நிதானத் திற்கும் நிலைக்களனா யிருக்கிறான். ஆனால் அதே சமயத்தில் எல்லோரிடத்திலும் வீரமான அன்பு செலுத்துகிறான்; முன்னேறிச் செல்வதிலேயே நோக்கமுடைய வனாயிருக்கிறான். ஜீவ சக்தியை உண்டாக்கும் படியான காரியங் களையே செய்து கொண்டிருக் கிறான். இந்த மாதிரியான சக்தியொன்றைத் தான் காந்தியடிகள் ஆத்ம சக்தியென்று சொல்கிறார். இந்த ஆத்ம சக்தியை அவர் அநுஷ் டித்தும் காட்டியிருக்கிறார். செயலற்ற நிலையிலிருந்து கொண்டு செயலாற்றும் திறனுடையதுமட்டுமல்ல இந்தச் சக்தி. அதற்கு மேலானதுங் கூட. இந்த உலகத்தின் சிக்கல்களை உத்தேசித்தும், அவர் அடைந்தி ருக்கிற எத்தனையோ ஆசாபங்கங்களை, உத்தேசித்தும், இன்னும் ஆத்ம சக்தியில் நம்பிக்கையிருக்கிறதாவென்று நான் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்டேன். அதற்கு அவர் கூறினார்:- ஆம்; அன்பு சத்தியம் என்பன எப்படியாவது வெற்றியடைந்தே தீரும் என்ற நம்பிக்கை என்னோடு ஒட்டினதாகவே போய்விட்டது. இந்த நம்பிக்கையை என்னிடமிருந்து அகற்ற உலகத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இப்படிச் சொல்லிக் கொண்டே அவர், தமது விலாப் பக்கத்தில் விரல்களை வைத்துக் காட்டினார். அதாவது மலின மடைந்து போயிருக்கிற தமது தேகத்தை அவர் தொட்டுக்காட்ட வில்லை. ஆனால் ஆத்ம விகாசத்தையே சுட்டிக்காட்டினார். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக்கொண்டேன். காந்தியடிகளுக்குத் தெரிந்திராவிட்டாலும் அவரைப்போல் ஆத்மீய வாழ்க்கையை - அன்பு வாழ்க்கையை - நடத்திய சிலரைப் பற்றி இங்குச் சொல்ல விரும்புகிறேன். பதினேழாவது நூற்றாண்டில் க்வேக்கர் தாபனத்தைச் சேர்ந்த ஜேம் நேய்லர் என்ற ஒருவர் இருந்தார். இவர், தேவதூஷணை செய்கிறவர் என்று மிகக் கடுமை யாகத் தண்டிக்கப் பட்டார். ஓர் இரும்புக் கம்பியை பழுக்கக்காய்ச்சி இவர் நாக்கின் வழியாகத் துளையிட்டார்கள். ஒருவித வேதனா யந்திரத்தில் இரண்டு மணிநேரம் வைத்திருந்தார்கள். லண்டன் வீதிகளில் சவுக்கடிகொடுத்தே அழைத்துக் கொண்டு போனார்கள். இவர் நெற்றியில் தேவ தூஷணை செய்கிறவன் என்ற சொற் றொடரின் முதலெழுத்து எழுதப்பட்டது. ப்ரிடல் என்ற நகரத்து வீதிகளின் வழியே, இவரைக் குதிரையின் மீது ஏற்றுவித்து, குதிரை யின் வால்பக்கமாக உட்காரச் சொல்லி, ஊர்வலமாக அழைத்துச் சென்று, கடைத்தெருவில் நிறுத்திவைத்து சவுக் காலடித்தார்கள். பிறகு, ப்ரைட்வெல் சிறையில் தனிக்காவலில், மசிக்கூடு, காகிதம் ஒன்றும் கொடாமல் இவரைப் போட்டு வைத்தார்கள். கடைசியில், பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அநுசரித்தே இவரை விடுதலை செய்தார்கள். மனிதனுடைய மிருகத் தன்மையை யெல்லாம் சகித்துக் கொண்ட இந்த மனிதர், இறுதியாக, தனக்குத் தீங்கிழைத்த இந்த உலகத்தைப் பார்த்து என்ன கூறினார் தெரியுமா? என்னிடத்திலே ஒரு சக்தியிருப்ப தாக நான் உணர்கிறேன். அந்தச் சக்தியானது, பிறருக்குத் தீங்கு செய்யாம லிருப்பதிலேயோ அல்லது பழி வாங்காமலிருப்ப திலேயோ ஒரு சந்தோஷத்தை யடைகிறது; எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு போவதிலே ஒரு சந்தோஷத்தை யடைகிறது. கோபம், போராட்டம், கொடுமை செய்வதிலே ஒரு சந்தோஷம் முதலிய மனித சுபாவத்திற்கு விரோதமான உணர்ச்சிகளை யெல்லாம் கடந்துநிற்க வேண்டுமென்று அந்தச் சக்தி கோருகிறது. ஆசாபாசங் களின் எல்லைக்கு அப்புறமாய் அது நிற்கிறது. தன் விஷயத்திலேயே அஃது எவ்வித தீய எண்ணத்தையும் வைத்துக்கொள்ள வில்லை யாதலால், பிறர் விஷயத்திலும் அது தீங்கு நினைப்பதில்லை. தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களிடத்தில் அது பொறுமையாக நடந்து கொள்கிறது. ஏனென்றால் அது, கடவுளின் திருக் கருணையிலே பூரண நம்பிக்கை கொண்டு அதிலேயே வாழ்கிறது. பணிவே அதன் மகுடம்; அன்பே அதன் வாழ்க்கை. தன் ராஜ்யத்தை அஃது அடக்கத்துடன் தான் வீகரித்துக்கொள்கிறது; போராட்டத்தின் மூலமாகவல்ல. அப்படியே, தன்னடக்கத்தின் மூலமாகவே அந்த ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொள்கிறது. கடவுளிடத்திலே தான் அது மகிழ்ச்சி கொள்கிறது. அது, துயரத்திலே பிறந்து, இரக்கங்காட்டுவார் எவருமின்றி வளர்ந்தது. துக்கத்தையும், கொடுமையையும் கண்டு அது முணுமுணுப்பதே கிடையாது. துன்பத்திலே தான் அஃது இன்பங் காண்கிறது. ஏனென்றால், உலகத்தின் சந்தோஷத்திலே அது கொலை செய்யப்படு கிறது. அஃது, எல்லோராலும் புறக்கணிக்கப் பட்டுத் தனித்து நிற்கிறது. குகைகளிலும், தனித்த இடங்களிலும் வாழ்ந்து, மரணத் தின் மூலமாகப் புனித வாழ்க்கையை யடைந்தவர்களுடன் தான் எனக்கு உறவு. இஃது, ஆத்ம சக்திக்கு ஒரு சிறந்த உதாரணமல்லவா? பதினெட்டாவது நூற்றாண்டில், வில்லியம் லா என்ற ஓர் ஆங்கிலேய சாது இருந்தார். மேற்படி ஜேம் நேய்லர் அநுபவித்த அளவு இவர் துன்பம் அநுபவிக்க வில்லையாயினும், இவரும் அநேக கடின மார்க்கங்களைக் கடந்தே செல்ல வேண்டி யிருந்தது. ஆத்ம சக்தியைப் பற்றி இவர் மிகவும் அழகாகச் சொல்லி யிருக்கிறார். அதில் ஒரு பாகம் வருமாறு:- அன்பானது, சன்மானத்தையோ கௌர வத்தையோ, பாராட்டு தலையோ எதிர்பார்க்கிறதில்லை. தன்னை விரித்துக் கொண்டு போவதில் தான் அதற்கு ஆசை. தன்னை வேண்டுவோரை அஃது ஆசீர்வதிக்கிறது; அவர்களுக்கு மகிழ்ச்சியை யளிக்கிறது. எப்படி இருட்டை, வெளிச்ச மானது சந்தித்து அந்த இருட்டைப் போக்கடிக்கிறதோ, அப்படிப் போல, அன்பானது, கோபதாபத்தையும், துவேஷத்தையும், எதிர்ப்பையும் சந்தித்து அந்தக் கோபதாபங்களை யெல்லாம் போக்கடிக்கிறது. எந்த விதமான சக்தியையும் நீ அன்போடு சந்திப்பாயானால் அந்தச் சக்தி யானது, உனக்கு ஆட்பட்டதாகிவிடும். ஒரு சத்துருவினுடைய கோபம், ஒரு நண்பனுடைய துரோகம் முதலிய எதனையும் நீ அன்புடன் பார்ப்பாயானால், உன் வாழ்க்கை வெற்றியடைந்ததாகிவிடும். எனவே, நீ பரிபூரணத்தை யடைய வேண்டுமானாலும், ஆனந்தத்தை யடைய வேண்டுமானாலும் எல்லாம் அன்பின் மூலமாகத்தான் முடியும். ஏனென்றால், கடவுள் அன்பு மயமானவர்; நல்லெண்ணங் களுக் கெல்லாம் ஊற்றுக்களமா யிருக்கப்பட்டவர். ஆதலால் இந்த நல்லெண்ணத்துடன் வாழாத எந்த ஜீவனும் துக்கப்பட வேண்டியது தான். அன்பின் ஆதாரம், சுபாவம், பூரணத்துவம் எல்லாம் மேற் சொன்னவைகளே. காந்தியடிகளும் ஏகாதிபத்தியமும் ஏ. பெர்ரீடேல் கீத். எம்.ஏ., டி.லிட்., எல்.எல்.,டி.,எப்.பி.ஏ. (எடின்பரோ சர்வகலாசாலை) நம்மில் சிலர், காந்தியடிகளுடைய வாழ்க்கையின் முக்கியத்துவம் எதில் அடங்கியிருக்கிறதெனக் கருதுகிறார்களென்றால், எத்தனையோ இடையூறுகள் ஏற்பட்டபோதிலும் அவைகளையெல்லாம் பொருட் படுத்தாமல், அவர் தமது லட்சியத்தையே நாடிச் செல்கிறாரே அதில் தான் என்று கருதுகின்றனர். லட்சியத்திற்கு விரோதமாகப் பல சக்திகள் நிறைந்துள்ள உலகத்தில், லட்சியத்தை நாடிச் செல்வோருக்கு இடையூறுகள் ஏற்படத்தான் செய்யும். ஆயினும் அவர் பல உருப்படி யான காரியங்களைச் செய்திருக்கிறார். மனிதனுடைய தனித்துவத்தை, அதாவது அவனிடத்திலேயுள்ள மனிதத் தன்மையை அங்கீகரிக்க வேண்டு மென்பதற்காகத் தென்னாப்பிரிக்காவில் அவர் செய்த சேவைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சரித்திரத்தில் முக்கிய இடம் பெறக் கூடியனவாகும். அரசியல் விவகாரங்களிலாகட்டும், மத விஷயங் களிலாகட்டும், ஐரோப்பியரல்லாத ஜாதியினருக்கு, ஐரோப்பியரைப் போல் சம உரிமை கிடையாதென்று மறுக்கப்பட்டு வந்த தென் னாப்பிரிக்காவிலே, அவர், மனிதர்களுக்கு மனிதர்கள் சமமானவர்களே, ஜாதி, நிறம் முதலிய செயற்கைப் பிரிவினைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு சம உரிமை வழங்க மறுப்பதெல்லாம் அநியாயம், அதருமம் என்ற கொள்கையை தாபிப்பதற்காகப் போராடினார். அவரை எதிர்த்து நின்ற சக்திகளின் பலத்தைக் கணித்துப் பார்த்துக்கொண்டு, அதே சமயத்தில் அவர் அடைந்திருக்கும் வெற்றிகளையும் கணித்துப் பார்ப்போமானால், அவருடைய தென்னாப்பிரிக்க வெற்றி விசேஷமான தென்பதை நன்கு அறிவோம். இந்த வெற்றியினால், அவருடைய ஜனங்களின், அதாவது இந்தியர்களின் அந்தது வெகுவாக உயர்ந்தது. இந்தியர்களுடைய அந்ததைப் பற்றிய பிரச்னையானது, ஒரு புதிய திருஷ்டியுடன் கவனிக்கப்பட்டது. காந்தியடிகள், இந்தியாவுக்குச் சென்றுவிட்டபிறகு, தென்னாப்பிரிக்கா வில் குறுகியதொரு ஜாதீய மனப்பான்மை மீண்டும் ஆதிக்கம் பெற்றுவிட்டது விசனிக்கத்தக்கது. ஆனால் இந்தியர்களுடைய எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகியிருக்கிறது. ஏனென்றால் காந்தியடிகள் இந்தியர்களிடையே சுய மதிப்புணர்ச்சியை நன்கு ஊட்டியிருக்கிறார். ஒரு சிலருடைய பேராசை பூர்த்தியடைவ தற்காக, ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு ஜாதியையோ எப்பொழுதும் சுரண்டிக் கொண்டிருக்க முடியுமென்ற எண்ணத்தை யும் அவர் அகற்றி விட்டார். அவருடைய லட்சியம், இப்பொழுது சிறிது அடங்கி ஒடுங்கியிருக்கலாம். ஆனால் அஃது அடியோடு மறைந்து போகாது. கெனியாவிலும் ஜான்ஜிபாரிலுமுள்ள பிரிட்டிஷ்காரர்கள், இங்கிலாந்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை உபயோகப்படுத்தி, இந்தியர்களுடைய உரிமைகளைக் கவனி யாமலே மேற்படி மாகாணங்களின் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. இதற்குக் காரணம் இந்தியர்களுடைய எதிர்ப்புத்தான். இந்தியர் களுக்கு நன்மை செய்கிற அளவோடு காந்தியடிகளின் சேவை நிற்க வில்லை. ஆப்பிரிக்கர்களுடைய நன்மையை முன்னிட்டும் அவர் வேலை செய்தார். இந்தியர்கள், புராதன நாகரிகமுடையவர் களென்பதற் காக விசேஷ சலுகைகளை எதிர்பார்க்கக்கூடா தென்றும், ஐரோப்பியர்களோடு சேர்ந்துகொண்டு ஆப்பிரிக்கச் சுதேசிகளைக் கேவலமாக நடத்தக்கூடாதென்றும் அவர் போதனை செய்தார். மனிதனுக்கு மனிதன் சமம் என்ற சித்தாந்தத்தைக் காந்தியடிகள் இந்தியாவிலும் உபதேசித்திருக்கிறார். இதன் காரணமாக அவர், தமது சகோதர இந்தியர்களிடத்திலும் சில சங்கடங்களை உண்டு பண்ணி யிருக்கிறார். ஏனென்றால், இந்தியர்களுடைய புராதனக் கிரந்தங்கள் மனிதனுக்கு மனிதன் சமமில்லையென்றும், அது தெய்வ சம்மத மென்றும் போதிக்கின்றன. இஃது, இந்த நம்பிக்கை, இந்தியர்கள் சுய ஆட்சி பெறுவதற்கு ஒரு தடையாக இருந்தது. இதனை, காந்தியடிகள் அப்புறப்படுத்திவிட்டார். அவர், தீண்டாதாருக்காகச் செய்திருக்கிற சேவையும், அதில் அவர் அடைந்திருக்கிற வெற்றியும் சரித்திரத்தில் பெரிதும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும். அரசாங்கத்தோடு சாத்வீக முறையில் ஒத்துழையாமை நடத்த வேண்டுமென்ற சித்தாந்தமானது வாதப் பிரதிவாதமான விஷயமாகும். மனிதனிடத்தில் சாதாரணமாக இருக்கும் சுபாவத்தைக்காட்டிலும் அதிகமானதொரு சுபாவத்தை இந்தச் சித்தாந்தம் எதிர் பார்க்கிறது. மனிதன் எப்பொழுதுமே போராட்டச் சுபாவமுடையவன். சாதாரண மாக அஹிம்ஸையில் ஆரம்பித்தவர்கள், கடைசியில் அநாகரிக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள். சரித்திரத்தை நாம் பார்க்கிறபோது, பிரிட்டிஷ் அரசாங்கமானது, எப்பொழுதுமே, தன் நிருவாகத்திற்கு இடையூறாக ஏதேனும் எதிர்ப்புகள் இருக்குமானால், அந்த எதிர்ப்புகளுக்கு இணங்கிக் கொடுத்திருக்கிறது; நியாய பூர்வமாகக் கேட்கப்படுகிற கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறது. எனவே, காந்தியடிகள் அஹிம்ஸை முறையை - அந்த முறையானது பலாத்காரச் செயல்களை விளைவிக்குமென்று தெரிந்திருந்தும் - கையாள்வாரானால் இந்தியாவுக்கு ஜீவாதாரமாயுள்ள லட்சியத்தை யடைவதற்காகவே அந்த முறையைக் கையாள்கிறார். இந்திய மாகாணங்களில் பொறுப் பாட்சி முறை நடை பெற்றுக் கொண்டிருப்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சரித்திரத்திலேயே முக்கியமானதொரு விஷயமாகும். இந்தப் பொறுப் பாட்சி முறை ஏற்படுவதற்குக் காரண புருஷர்களாயிருந்தவர்கள் பலர். இவர் களிலே முக்கியமானவர் காந்தியடிகள். சமகிருத பாஷையில், அர்த்தபுஷ்டியுள்ள பல சுலோகங்கள் இருக்கின்றன. இவற்றைப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் சிறு வயதில் கற்றுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சுலோகமொன்றை காந்தியடிகள் தமது இளமையில், நன்றாக மனப்பாடம் பண்ணி யிருக்க வேண்டும். ஏனென்றால் அந்த சுலோகமானது, அவருடைய வாழ்க்கை எந்த லட்சியத்திற்காக அர்ப்பணம் செய்யப்பட்டிருக் கிறதோ அதனை நன்கு விளக்குகிறது. அந்த சுலோகம் வருமாறு:- அயம் நிஜோ பரோவேதி கணானா லகுசேதஸம் உதார சரிதாணாம் து வசுதைவ குடும்பகம். இதன் கருத்து என்னவென்றால், அற்ப ஞானமுடையவர்கள் தான், ஒருவனைத் தன் உறவினனென்றும் அந்நியனென்றும் கருதுவார்கள். மகான்கள், உலக மனைத்தையும் தங்கள் குடும்ப மாகக் கருதுவார்கள் என்பதுவேயாம். * * * உலக சரித்திரத்தில் காந்தியடிகள் கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் (டார்ம்டாட், ஜெர்மனி) மனிதனுடைய சரித்திரத்திலேயே, இதுகாறும் இல்லாத ஒரு நெருக்கடியான காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். மனிதன் இப்பொழுது இடத்தையும் காலத்தையும் வெற்றி கொண்டு விட்டான். இதனால், மனிதன் தனித்து வாழ முடியுமென்பது இனி ஒரு கனவுதான். பாமர ஜனங்கள் அல்லது ஜனத்தொகையில் பெரும் பாலோர் (1914 - ம் வருஷ யுத்தத்திற்கு முன்னர், ஜனத்தொகையில் சிறுபான்மையோரா யிருந்தோரே - அவர்கள் எத்தகைய கொள்கை யினராயிருந்தபோதிலும் - ஒவ்வொரு நாட்டு அரசியல் நிருவாகத்தை யும் ஏற்று நடத்தி வந்தனர்.) அரசியல் ஆதிக்கத்தையும் சமுதாய ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டனர். இதனால் எண்ணிக்கைக்கு இப்பொழுது ஒரு முக்கியத்துவமும் தனிக் கொள்கையும் ஏற்பட்டு விட்டது. எப்படி மின்சாரத்தில் இரண்டு விதமான சக்திகள் பரபர சம்பந்தமுடையனவாகவும், ஒரு சக்தியி லிருந்து மற்றொரு சக்தி உற்பத்தியாவதாகவும் இருக்கிறதோ, அதைப் போல், வாழ்க்கையும், எதிருக்கெதிராயுள்ள இரண்டுவித சக்திகளின் சம்பந்தத்தையுடையது. மேலே சொன்ன மாறுதல்களினால் - அதாவது சிறுபான்மையோரிட மிருந்து பெரும்பான்மையோர் கையில் அரசியல் ஆதிக்கம் முதலியன வந்துவிட்டதனால் - இதுவரையில் கேள்விப் பட்டிராத சக்திகள் உதயமாகி, பரபர சம்பந்தத்துடன் வேலை செய்கின்றன. ஒவ் வோரியக்கமும் எந்தக் கொள்கையுடன் வேலை செய்கின்ற தென்பது நமக்கு இங்கு முக்கியமல்ல. ஏனென்றால், பெயரிலும் உருவத்திலும் விசேஷமொன்றுமில்லை. தவிர, குறிப்பிட்ட கொள்கை களோடு ஆரம்பிக்கப்பட்ட எந்த இயக்கமும், அந்த இயக்கம் வளர வளர அதன் கொள்கைகளும் மாறிவிடுகின்றன. இப்படித்தான் சரித்திரம் நமக்குச் சாட்சி கூறுகிறது. இப்பொழுது உலகத்தில் தோன்றியிருக்கும் பல இயக்கங்களும் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பெயருடன் பொருந்தியிருக்கிறதாவென்று பார்த்தால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்திற்காக, அல்லது அபேத வாதத்திற்காக அல்லது சுதந்திரத்திற்காக அல்லது நாதிகத்திற்காக போராடுவதாகச் சொல்லும் எந்த நாடும், சொல்கிறபடி நடக்கத் தயாராயில்லையென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. தங்களுக்குத் தெரியாத ஒரு லட்சியத்தை நாடி இவை இருட்டிலே சென்று கொண்டிருக்கின்றன. இவை, வளர்ச்சியடைந்த பிறகுதான் இவற்றின் முழு உருவமும் தெரியும். இப்பொழுது மனிதர்கள் எந்த லட்சியங்களுக்காகச் சண்டை போடுகிறார்களோ அந்த லட்சியங் களில் ஒன்றாவது, இறுதியான வெற்றியை யடையமுடியாது. இப்பொழுதுள்ள சக்திகளையெல்லாம் சமரஸப்படுத்தி ஒன்று கூட்டினால்தான், உலகத்தில் நிதானமான நிலையொன்று ஏற்படும். அதுவரையில் உலகத்தில் நெருக்கடிகள் இருந்துகொண்டுதா னிருக்கும்; அதிகார பலத்தினால், மனிதர்கள் வேற்றுமைப்பட்டுத்தா னிருப்பர். இப்பொழுது உலகத்திலேயுள்ள சக்திகளில், எது நீண்டகாலம் நிலைத்திருக்கும், எது அகில உலகத்தின்மீதும் ஆதிக்கங்கொள்ளும் என்பதை நிர்ணயித்துச் சொல்ல முடியாது. ஆனால் இரண்டு விதமான சித்தாந்தங்களை நாம் தெரிந்துகொண்டு விட்டோமானால், இது விஷயத்தில் உத்தேசமான ஒரு முடிவைச் சொல்லக்கூடும். முதலாவது சித்தாந்த மானது, புராதன சீனாவினால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, எந்த ஓர் இயக்கமும் பகிரங்கமாகத் தோன்றுவதற்கு இருபத்தைந்து வருஷங் களுக்கு முன்னரேயே உதயமாகிவிடுகிறது. அதாவது இன்று குழந்தைகளாயிருக் கிறவர்கள்தான், இன்னும் இருபத்தைந்து வருஷங் கழித்து உலகத்தை ஆளப்போகிறார் களென்பதுவே இதன் கருத்து. வருங்காலம் எப்படி யிருக்கப்போகிற தென்பதை, இப்பொழுது குழந்தைகளிடம் காணப்படும் உணர்ச்சி களைக் கொண்டு ஒருவாறு நிதானிக்கலாம். இரண்டாவது சித்தாந்த மென்னவென்றால், இப்பொழுது நிலவிக்கொண்டிருக்கும் எந்த ஒரு சக்தியும் ஓர் அளவுக்கு மிஞ்சினால், அதற்கு எதிரிடையான மற்றொரு சக்தியைத் தூண்டிவிடும். ஓர் இயக்கமானது, ஒருதலைப் பட்சமாகவே சென்று கொண்டிருக்கு மானால், அதற்கு விரோதமான மற்றோர் இயக்கம் தோன்றுவது நிச்சயம். இந்த அமிசத்தில்தான் மகாத்மா காந்தி யின் முக்கியத்துவம் இருக்கிறது. எந்த யுகத்திலுமில்லாத அளவுக்கு இப்பொழுது பலாத்கார உணர்ச்சி உலகத்தில் பரவியிருக்கிறது. ஜனங்களிற் பெரும்பாலோர், பலாத்கார முறையைச் சர்வ சாதாரண முறையாக ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள். இன்னும் நூற்றாண்டுகள் கணக்காகப் போராட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போலிருக்கிறது. இப்படியிருப்பதால், பலாத்காரமற்ற சக்திக்கு - அதாவது அஹிம்ஸா சக்திக்கு - ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. நாளாவட்டத்தில் இந்தச் சக்தி வளரக்கூடும். லட்சியங்களுக்கியைந்தாற் போலவே சாதனங்களும் இருக்க வேண்டுமென்று காந்தியடிகள் கூறுகிறார். இந்த விஷயத்தில் காந்தியடிகள் சிரஞ்சீவியாகிறார். அதாவது அவருடைய இந்த முறை நீண்டகாலம் போற்றப்படும். எந்தவிதமான சாதனங்களைக் கொண்டேனும் லட்சியத்தையடைய வேண்டுமென்று சொன்னால், உலகத்திற்கு க்ஷேமம் உண்டாகாது. துவேஷத்திற்குத் துவேஷமே பதிலானால் அதற்கு முடிவுதான் எங்கே? என்பது புத்தர் பெருமானின் வாக்கு. இப்பொழுது உலகத்தில் நிலவிவரும் ஆக்ரமிப்பு எண்ணத் திற்கு எதிரிடையாகத் தோன்றியுள்ள ஒரு சக்தியின் அவதாரமாயிருக்கிறார் காந்தியடிகள். அமைதியாயிருந்த சீனாவானது இப் பொழுது எப்படித் தற்காப்பு நிமித்தம் போராட்டத்தில் இறங்கி யிருக்கிறதோ அப்படிப் போல், போர்க்குணமுள்ள பல ஜாதி யினரைக்கொண்ட இந்தியாவிலும் அநேக மாறுதல்கள் ஏற்படலாம். ஆனால் காந்தியடிகள் ஒருவர்தான், மேற்சொன்ன அஹிம்ஸை சக்தியின் பரிசுத்த சின்னமாக, எல்லாருக்கும் தெரிகிற சின்னமாக விளங்குகிறார். அவர் ஒருவர்தான் பொதுஜன இயக்கத்தின் சார்பாக நிற்கிறார். ஹிந்துக்களின் லட்சியத்திற்கு இந்த அஹிம்ஸை மிகவும் பொருந்தியிருக்கிறது. தவிர மகாத்மா காந்தி, ஒரு சரித்திர புருஷராக எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருப்பார். இதற்குக் காரணம் வேறு ஒன்றுண்டு. அதாவது, இரண்டுவிதமான தன்மைகளுக்குப் பிரதிநிதி யாக அவர் இருக்கிறார். ஒன்று, அவர், இந்தியாவில் பரம்பரையாகத் தோன்றிக்கொண்டு வரும் லட்சிய புருஷர்களில் ஒருவராக - ஞானியாக - இருக்கிறார். மற்றொன்று, தற்காலத்திற்கேற்ற ஒரு ஜனத் தலைவராகவுமிருக்கிறார். வருங்காலத்தில் மனிதன், வெறும் ஞானியாகமட்டும் இருந்தால் போதாது; உலக விவகாரங்கள் தெரிந்தவனாகவுமிருக்கவேண்டும். இந்தமாதிரியான உதாரண புருஷரின் பெயர்தான் காந்தியென்பது. * * * பிறந்தநாள் வாழ்த்து ஜார்ஜ் லான்பரி, எம்.பி. (லண்டன்) மகாத்மா காந்தியின் பிறந்த நாள் 1939 - ம் வருஷம் அக்டோபர் மாதம் கொண்டாடப்படும். அதுபோல் இன்னும் பல பிறந்த நாட்கள் அவருக்கு வரவேண்டுமென்று பிரார்த்திக்கிற லட்சக்கணக்கான பேரில் நான் ஒருவன். மகத்தான ஒரு லட்சியத்திற்காக, மகத்தான தொரு வாழ்க்கையை அவர் நடத்திக் காட்டியிருக்கிறார். தீமைக்கும் தவறுக்கும் பரிகாரமாகச் சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாள வேண்டுமென்பதை அவர் தமது வாழ்க்கையில் அநுஷ்டித்துக் காட்டியிருக்கிறார்; இன்னும் லட்சக்கணக்கானபேரை அநுஷ்டிக்க வும் செய்திருக்கிறார். தருமத்திற்காக, நியாயத்திற்காக அவரைப் போல் பாடுபட்டிருக்கிறவர், இந்தத் தலைமுறையில் வேறு யாரு மில்லை. கீழ்நாட்டு ஆண், பெண்களை மட்டுமல்ல, அகில ஜனங் களையும், அன்பு, ஒத்துழைப்பு, சேவை ஆகிய இவற்றின் துணை கொண்டு, உலக சமாதானம் என்ற லட்சியத்திற்கு அழைத்துச் செல்ல, இன்னும் அவர் பல்லாண்டுகள் வாழ்ந்துகொண்டிருப்பாராக. * * * காந்தியடிகளின் செல்வாக்கு ஜான் மாக்முர்ரே எம்.ஏ. (யூனிவர்சிடி காலேஜ், லண்டன்) கீழ் நாடு கீழ் நாடுதான்; மேனாடு மேனாடுதான். இரண்டும் சந்திக்க முடியாது என்று சென்ற தலைமுறையில் (ருட்யார்ட்கிப்ளிங் என்ற) ஓர் ஆங்கிலக் கவி எழுதிவிட்டுப் போனார். இந்த வரிகள் எழுதப்பட்ட காலத்தில், இதைப்பற்றிப் பிரமாதமாக வாதம் செய்யப் பட்டது. ஆனால் இப்பொழுது இஃதொரு பரிகாசமாகப் போய் விட்டது. இதற்குக் காரணம், போக்குவரவு சாதனங்களினால், மானிட சமுதாயம் ஒன்றுபட்டுப் போயிருப்பதுதான். உலகத்துப் பல திறப் பட்ட அறிஞர் களையும் இப்பொழுது சுலபமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தப் பிரபலதர்களில் எத்தனை பேர் நீண்ட காலம் புகழோடு பிரகாசிக்கப் போகின்றனர், எத்தனை பேர் வருங்கால சந்ததியாருடைய இருதயத்தில் நிரந்தர வாசம் செய்யப் போகின்றனர் என்பது சந்தேகாபதமான பிரச்னை. ஆனால் காந்தியடிகளின் பெயர்மட்டும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கு மென்பதில், யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டுவதில்லை. மனிதனுடைய பெருமைக்கு நீளம், அகலம், ஆழம் எல்லாம் உண்டு. ஆனால் அந்தப் பெருமை நிலைத்திருக்க வேண்டுமானால், அஃது அதிக ஆழமுடையதாயிருக்க வேண்டும். சரித்திரத்தில் வருகிற மகா புருஷர்களில் பலர், ஆழமான புருஷ சக்தியுடையவர்களா யிருந் திருக்கிறார்கள். இவர்களுடைய விசேஷ அமிசமென்ன வென்றால், இவர்கள் பலராலும் பலதரமாக வியாக்கியானம் செய்யப் படக் கூடியவர் களாயிருக்கிறார்கள். உதாரணமாக ஸாக்ரடீஸின் பெருமை எதில் அடங்கி யிருக்கிறதென்றால், அவர் .இறந்துபோன அடுத்த தலைமுறையிலேயே அவர் சித்தாந் தங்களைப்பற்றிப் பலவித வியாக்கியானங்கள் செய்யக் கூடிய அநேக கோஷ்டிகள் தோன்றி விட்டன. இப்படிப்பட்ட மகான்கள் சிறந்த எழுத்தாளர்களல்ல; சிறந்த கர்ம வீரர்களுமல்ல. ஆனால் எழுத்தாலும், சேவையினாலும் பிறர்மூலம் தங்கள் பெருமையை வெளிப்படுத்துகிறார்கள். தங்க ளிடத்திலேயுள்ள புருஷ சக்தியை, பிறர்மீது செலுத்தி அவர்களை அடியோடு மாற்றிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட மகான்தான் மகாத்மா காந்தி. மற்றவர்களிடத்திலே யுள்ள மனிதத் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதில்தான் அவருடைய பெருந்தன்மை இருக்கிறது. அவரை ஒரு சித்த புருஷரென்றோ, ராஜதந்திரியென்றோ, சமாதான வாதியென்றோ, ஜனநாயக வாதியென்றோ, சமுதாயப் புரட்சிக்காரரென்றோ, வைதிக மனப்பான்மை யுடையவரென்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த ஒவ்வோர் அமிசத்திற்கும் அவருடைய வாழ்க்கையிலிருந்து ஓர் உதாரணம் காட்டலாம். ஆனால் இந்த வியாக்கியானங்களில் எதைக் கொண்டும் அவருடைய செல்வாக்குக்கு என்ன காரணமென்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. நான் காந்தியடிகளைப் பக்தி சிரத்தையோடு பாராட்டுகிறே னென்றால், அதற்குக் காரணம், அவருடைய நோக்கத்தையும் கொள்கை களையும் நான் அங்கீகரிக்கிறேன், அல்லது நிராகரிக்கிறேனென் பதற்காகவல்ல. அவரைப்போன்ற மகான்களின் விஷயத்தில், அவர் களுடைய கொள்கைகளை நாம் அங்கீகரிக்கிறோம், அல்லது நிராகரிக் கிறோ மென்பது முக்கியமான விஷயமல்ல. இந்த உலகத்தில் மகாத்மா காந்தி ஒருவர்தான், சாதுத் தன்மைக்குச் சிருஷ்டி சக்தியுண்டென் பதையும், ஆத்ம சக்தியானது நிஜ வது என்பதையும் பெரிய அளவில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். பௌதிக சக்திகளிலே நம்பிக்கை கொண்டு அது காரணமாக மேனாட்டு நாகரிகமானது சிதறிப் போய்க் கொண்டு வருகிற இந்தச்சமயத்திலே, மானிட சமுதாயமனைத்தும் ஒரு குடும்பம் என்பதெல்லாம் வெறுந் தத்துவமே தவிர, மேற்படி பௌதிக சக்திகளின் முன்னர் அது - அந்த தத்துவம் - வலிவிழந்து நிற்கிறதென்று எண்ணப்படுகிற இந்தக் காலத்திலே, அவர் - காந்தியடிகள் - தமது ஆத்ம சக்தியினாலும், பணத்தினாலும் ஆயுத பலத்தினாலும் தங்களை ஒழுங்குபட அமைத்துக்கொண்டிருக்கிற சக்திகளை எதிர்த்து நிற்கிறார். அவருக்கு வெற்றி ஏற்படுமா, தோல்வி ஏற்படுமாவென்பதை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்லமுடியாது. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். அவர், தமது சக்தியினால், லட்சக் கணக்கான இந்தியர்களை ஒன்றுகூட்டி விட்டிருக்கிறார். அதே சமயத்தில், மேற்படி இந்தியர்களின் தலை விதியை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற காந்தியடிகளின் ஆத்ம சக்தியில் நம்பிக்கை கொள்ளாத மேனாட்டு நாகரிகம் சிதறிக் கொண்டு போய் வருகிறது. காந்தியடிகள், அதிகார பலமில்லாமலே அதிகாரஞ் செலுத்தி, ஜன சக்தியைத் திரட்டி யிருக்கிறார்; இந்தியாவை ஒரு சாதியாக்கியிருக்கிறார். அவர் தமது நீதிபலத்திலே தோன்றும் எளிய தன்மையின் மூலமாகத் தமது ஜனங்களுக்குத் தன் மதிப் புணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறார்; அவர்களுடைய மனிதத் தன்மையிலே அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி யிருக்கிறார். இதனால், அவர் சரித்திரத்தின் போக்கையே மாற்றி விட்டவராகவும் மானிட ஜாதியின் பெரும்பாலோருடைய எதிர் காலத்தை நிர்ணயித்து விட்டவராகவும் இருக்கிறார். * * * ஒருமுகப்பட்ட வாழ்க்கை டான் ஸால்வடோர் டி. மடாரியாகா, எம். ஏ. (லண்டன்) எந்தக் கலையானது, எல்லாக் கலைகளைக் காட்டிலும் கடினமானதோ, மனிதனால் கடைசி பட்சமாகத் தழுவிக் கொள்ளப்பட வேண்டிய கலை எதுவோ, அந்தக் கலையானது - அதாவது ராஜ்ய நிருவாகக் கலையானது - இந்த யுகத்தில், குகையில் வாழ்ந்து கொண்டி ருக்கிற நிலையிலிருந்து வெளியே வந்திருக்கிறது. பிற்காலத்தில், மானிட ஜாதியானது இந்த மாதிரிதான் இந்த யுகத்தைக் கணிக்கும். அரசாங்கக் கலை சம்பந்தமாக நமக்குப் பின்னாலிருப்பனவும், நமது கண் பார்வையிலிருப்பனவும் எல்லாம் காட்டுமிராண்டித்தனமாக இருக் கின்றன. ராஜ்ய நிருவாகக் கலை சம்பந்தமான விசாரமே ஜனங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. இந்த ராஜ்ய நிருவாகக் கலையின் உத்தேசம் என்னவென்றால், வாழ்க்கை நியதியில், தனி மனிதனையும் சமுதாயத்தை யும் நிறைவுபடுத்தி வைப்பதுதான். புராதன ஜாதியினரின் சம்பிரதாயங்கள், அவர்களுடைய தலைவர் களின் கொடுமையான பழக்க வழக்கங்கள், ஆசியா கண்டத்து அரசர் களின் ஆடம்பரங்கள், ரோம சக்ரவர்த்திகளின் பயங்கரமான பகட்டுகள், ரோமாபுரி போப்பரசர்களின் வரங் கொடுக்கிற, ஆனால், அதே சமயத்தில் பறிக்கிற கைகள், மத்திய காலத்து வீரமுள்ள, ஆனால், களங்கம் வாய்ந்த யுத்தங்கள், ஏகாதிபத்திய நிர்மாணிகர்களின் பேராசைகள், ஆணைக்குப் பயந்து நடப்பதிலிருந்து மனமொப்பி நடத்தல், மனமொப்பி நடத்தலிலிருந்து சுய அறிவு கொண்டு நடத்தல் ஆகிய சட்டத்தின் படிப்படியான விகாசம், எங்கேயோ ஒரு மூலையில் நடைபெறுகிற ஒரு சிறிய சச்சரவுக்காகச் சமுதாயமே சீர்குலைந்து போகக்கூடிய நிலைமைக்குக் கொண்டு வந்து வைக்கிற தொழிலாளர் களின் வேலை நிறுத்தங்கள் அல்லது முதலாளிகளின் கதவடைப்புகள் முதலியவை களோடு தொழிற் சண்டைகள், சர்வ தேச சங்கத்தின் தோற்றம், அதன் முதல் (கடைசியல்ல) வீழ்ச்சி, மார்க்ஸீயத்தின் தோற்றம், அதன் முதல் (கடைசியல்ல) வீழ்ச்சி, கொடுமையையே யந்திர மயமாக்கிவிட்ட பாசிஸம், நாஜீயம் ஆகிய இவற்றின் உதயம் முதலியனவும், இன்னும் பலவும், மானிட ஜாதியின் நிரந்தரப் பிரச்னை யின்- அதாவது தனிப்பட்ட மனிதனின் போக்கையும் சமுதாயத்தின் போக்கையும் இயைபு படுத்திக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற பிரச்னையின்- கால தேசங்களுக் கேற்றாற்போல் உண்டாகிற பலவித தோற்றங்கள்தான். தன்னுடைய தூல சரீரத்தைக் கொண்டு மட்டும், மனிதன், தான் தனித்துவம் வாய்ந்தவன், சுதந்திர புருஷன் என்று தவறாகக் கற்பனை செய்து கொண்டுவிடுகிறான். கீழ்நாட்டாரை விட, ஐரோப்பியர்களாகிய நாம் இந்தத் தவறுக்கு அதிகமாக உட்படு கிறோம். ஆனால் பொதுவாக எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய தனித்துவம் வரையறுக்கப்பட்டு விட்டதாகக் கருதுகிறார்கள். தேகக்கூறுபாட்டுத் தத்துவப்படி பார்த்தால் கூட, மனிதன் சஞ்சரிக்கக்கூடிய ஒரு விருட்சமே. தேக சம்பந்தப்பட்ட விஷயங்களில் பார்க்கிறபோது, மனிதன், மற்ற மனிதர்களின் கூட்டுறவின்றித் தனித்து வாழ முடியாது. எப்படி பவழமானது, கடற்பாறையினின்று தனித்திராதோ, எப்படி தேனீயானது, தன் கூட்டத்தினின்று பிரிந்திராதோ அதைப் போல் மனிதனும், மனிதர் களிடமிருந்து பிரிந்திருக்க முடியாது. மனிதன், ஒரு தொகுதியிலுள்ள பகுதி. மனிதனும் அவனால் ஆக்கப்படுகிற சமுதாயமும், தத்தம் பிரச்னைகளைச் சமன் வயப்படுத்திக்கொண்டு செல்லும்பொருட்டு நடைபெறுகிற முயற்சிகள்தான், மானிட இதிகாசத்தில் பல போராட்டங் களாகப் பரிணமிக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட போராட்டம் இப்பொழுது ஏன் மும்முரமாயிருக்கிறது? இதற்குக் காரணம், வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிற மானிட சமுதாயமானது, பிரவிருத்தி மார்க்கத்திலேதான் அதிக கவனஞ் செலுத்தியதே தவிர, நிவிருத்தி மார்க்கத்தில் அதிக கவனஞ்செலுத்த வில்லை. ஆரம்பத்தில் மானிட சமுதாயமானது, ஆத்மீய வாழ்க்கை யில்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் இதன்பலன் விபரீதமாகி விட்டது. மதத்தினால் சண்டை சச்சரவுகள் அதிகமாயின. பிறகு மானிட சமுதாயமானது, தனது லட்சியத்தையடைய அறிவு ஒன்றினை மட்டும் பின்பற்றியது. இதைத்தான் கி. பி. பத்தொன்பதாவது நூற்றாண்டில், மதத்தை விஞ்ஞான திருஷ்டியோடு பார்த்தல் என்றார்கள் அறிஞர்கள். இது பூரண வெற்றியடைந்தது. ஆனால் அழிவையும் அளித்தது. இப்பொழுது, தனிப்பட்ட மனிதர்களும் தனிப்பட்ட ஜாதியினரும் தங்கள் தங்கள் நலனைத் தான் கருதுகிறார் களே தவிர, மானிட சமுதாயத்தின் நலனைக் கருதுகிறார்களில்லை. இதனால், தனி மனிதன், சமுதாயம், உலகம் ஆகிய மூன்றும் ஒற்றுமை யுடன் இயங்க முடியவில்லை. அப்படி இயங்க முடியாத தருணத்தில் தான் ஒன்று, மற்றொன்றின் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கிறது. ஆனால் ஒரு சமுதாயம் முன்னேற்றமடைந்து வருகிறதென்று சொன்னால், அதற்கு அடையாளமாக அது தனது பலாத்கார சக்தியை உபயோகியாம லிருக்கவேண்டும். எனவே, இன்றைய பிரச்னையென்னவென்றால், மனிதர்களாகிய நாம், பிறரை நல்வழிப்படுத்தும் வேலையை விடுத்து, நம்மை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறருக்கு உபதேசித்துக் காட்டுவதைவிட, நாம் வாழ்ந்து காட்டவேண்டும். இப்படி வாழ்ந்து காட்டுகிற மகானாகவே காந்தியடிகள் இருக்கிறார். இதனாலேயே அவர் தற்காலத்து உதாரண புருஷராக விளங்குகிறார். * * * அஹிம்ஸையின் சக்தி குமாரி எத்தெல் மான்னின் (லண்டன்) நான் மகாத்மா காந்தியைச் சந்தித்ததில்லை. நான் ஒரு சமாதான வாதி. அதனால் சமாதானமா, யுத்தமா வென்கிற பிரச்னைக்குப் பரிகாரம் அவருடைய சாத்வீக எதிர்ப்பு முறைதான் என்று நம்பு கிறேன். சமுதாயப் போராட்டத்தில் அநுஷ்டிக்க வேண்டிய புத்தி சாலித்தனமான முறை இதுதான். இந்த மனோபாவத்துடன், காந்தியடிகளை மிகுந்த வணக்கத்துடன் பாராட்டுகிறேன். ஆயுத பலத்தைத் தவிர வேறு பலமில்லையென்று உலகம் கருதிக் கொண்டி ருக்கிற நிலையில், பலாத்காரம், பலாத்காரத்தை அழிப்பதில்லை, அதற்கு மாறாக அதனை அபிவிருத்தி செய்கிறது என்ற பாடத்தை உலகம் கற்றுக்கொள்ள முடியாத தருணத்தில், காந்தியடிகள், 1930-ம் வருஷம் சட்டமறுப்பியக்கத்தை ஆரம்பித்து, அஹிம்ஸையின் ஜீவசக்தியை உலகத்திற்குப் புலப்படுத்தினார். இந்த அஹிம்ஸையைக் காந்தியடிகள் கண்டுபிடிக்கவில்லையென்பது எனக்குத் தெரியும். இஃது - அஹிம்ஸை - இந்தியாவில் நூற்றாண்டுகள் கணக்காக ஒரு மதக் கோட்பாடாக அநுஷ்டானத்தில் இருந்து வருகிறது. ஆனால் காந்தியடிகள், இந்த அஹிம்ஸையை மறுபடியும் ஊர்ஜிதம் செய்து காட்டுகிறார். அப்படி ஊர்ஜிதம் செய்து காட்டுவதன் மூலமாகத் தமது ஜனங்களின் தலைவர் என்ற ஹோதாவில் மகத்தான செல்வாக்கை யடைந்திருக்கிறார். 1930-ம் வருஷம் நடைபெற்ற இந்திய தேசீயப் போராட்டத்தில், காந்தியடிகள், இந்த அஹிம்ஸையை ஒரு மதக் கோட்பாடாகத் தமது சிஷ்யர்கள் பின்பற்றுமாறு செய்துவிட்டார். ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஆத்ம சக்தியிருக்கிற தென்பதையும், இந்தச் சக்திக்கு முன்னர், ஆயுதபலம் நிற்க முடியாதென்பதையும் அவர் பொதுஜனங்களுக்கு எடுத்துக் காட்டினார். அரசியல்வாதிகளும், யுத்த அபேட்சகர்களும், தங்களுடைய பிரசாரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். அதாவது, சுதந்திரத்தில் மனிதன் கொண்டிருக்கிற நம்பிக்கையை அழிக்க முடியாதென்பதை அவர்கள் மறந்து போகிறார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், ஒரு மனிதனுடைய ஆத்மாவை, அல்லது ஒரு ஜாதியினுடைய ஆத்மாவை, துப்பாக்கிகளைக் கொண்டோ, யந்திர பீரங்கிகளைக் கொண்டோ அழிக்க முடியாது. எவனொருவன், தன் ஆத்மாவுக்கு எஜமானனாக இருக்கிறானோ அவனை யாரும் அடிமைப்படுத்த முடியாது. அவனுடைய தேகத்தை அழிப்பது அவனுடைய ஆத்மாவுக்கு அதிக பலத்தைக் கொடுப்ப தாகும். யேசுநாதர், தமது ஜீவதசையிலடைந்த செல்வாக்கைக் காட்டிலும் அதிகமான செல்வாக்கை, சிலுவையிலறையப்பட்ட போது அடைந்தார். பலாத் காரத்திற்கு, பலாத்காரத்தையே பதிலாக அளிப்பது கொடுங்கோலர் களின் செய்கை. ஏனென்றால் அவர்கள், அதிகாரம் அல்லது சக்தி யென்பதற்கு, மரணம் என்றும் அழிவு என்றுந்தான் அர்த்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சாத்வீக எதிர்ப்பு முறை இருக்கிறதே அதுதான் ஜீவசக்தியுடையது. காந்தியடிகள், தமது உபதேசங்களின் மூலமாக, இந்தியாவின் ஆத்மாவுக்கு விடுதலை யளித்தாரென்று சொல்ல வேண்டும். இந்தியர்கள், இப்பொழுது அடிமைகளாயிருப்ப தினின்று மனிதர்களாகியிருக்கிறார்கள்; தலை நிமிர்ந்து பார்க்கிறார் கள்; அவர்களுடைய கண்களிலே ஒருவித நம்பிக்கையொளி பிரகாசிக்கிறது; ஒரு ஜாதியாக ஒற்றுமைப்பட்டு, தங்கள் லட்சியத்தை நாடிச் செல் கிறார்கள். இவ்வளவுக்கும் அவர்கள், தங்களை அடக்கி வைத்திருப் போருடைய இழிவான முறைகளைக் கையாளவில்லை. திரீகள், அடிமைத் தனத்தின் சின்னமாகிய முக மூடியை விலக்கி விட்டு, ரத்தச் சிந்துதலில்லாத சுதந்திரப் போராட்டத் தில் கலந்து கொண்டு, சுதந்திர சேனையுடன் அணிவகுத்துச் சென் றார்கள். எல்லா திரீ புருஷர்களும், தங்களுக்குள்ளேயே ஒரு ஜோதி பிரகாசிக்கிற தென்பதையும், அதனை அறிந்தவர்களுக்குத் தோல்வியே கிடையா தென்பதையும் உணர்ந்தார்கள். அஹிம்ஸை யென்பது அரசியலில் அநுஷ்டான பூர்வகமாகக் கொண்டு வரக் கூடியதென் பதை 1930ம் வருஷத்தில் தேசீய இந்தியா நிரூபித்துக் காட்டிவிட்டது. மற்றும், இந்த அஹிம்ஸையானது, ஆத்ம சக்தியின் பலத்தையும் தெரிவித்து விட்டது. ஆயிரக்கணக்கான பேர் சிறை வாசத்தையும் வேறு வித துன்பங்களையும் அநுபவித்த போதிலும் அவர்களுடைய இந்த ஆத்ம சக்தியை யாராலும் தடுக்க முடியவில்லை. அஹிம்ஸையென்பது, அரசியலிலேமட்டும் பிரயோகிக்ககூடிய ஓர் ஆயுதமல்ல. இதற்கு மேற்பட்டது அது. இதன் உயர்வைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால், காந்தியடிகள், தவம், தியாகம் முதலிய வற்றிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறாரென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அஹிம்ஸையானது, அன்பு, சத்தியம் என்ற இரண்டினோடும் பிரிக்கமுடியாத தொடர்புடையது. உலகத்தை யெல்லாம் நேசிக்கிற தன்மையைத்தான் அஹிம்ஸையென்கிறோம். இந்திரிய சுகங்களை வெறுத்து ஆத்ம வளர்ச்சியை நாடுவதென்கிற இந்த விஷயம் புதிய தத்துவமல்ல. யேசுநாதருடைய போதனைகளில் இதுவுமொன்றாகும். இதனை அன்றாட வாழ்க்கையிலே அநுஷ்டிக்கக் கூடிய ஓர் அமிசமாகக் கொண்டு வந்திருப்பதிலேதான் காந்தியடி களின் மகத்துவம் இருக்கிறது. சச்சரவைத் தீர்ப்பதற்குப் பலாத்காரத்தைக் கையாளு வானாகில் அவன், சத்தியத்தினின்று அப்புறப்பட்டவனாகிறா னென்பது காந்தியடிகளின் கருத்து. வெளிச்சத்துருவைத்தாக்க வேண்டுமென்ற முயற்சியில் உட்சத்துருவை நாம் கவனியாமல் விட்டு விடுகிறோம். காந்தியடிகள் கூறுகின்றார்:- நம்மைத் தொந்திரவு படுத்து கிறார்களென்பதற்காக நாம் திருடர்களைத் தண்டிக்கிறோம். உடனே அவர்கள் நம்மைவிட்டு ஒருகணம் விலகிவிடுகிறார்கள்.ஆனால் வேறொருவனைத் தாக்குகிறார்கள். அவனும், நாமாகவே இருக்கிறோம். அதாவது இரண்டுபேரிடத்திலும் ஒரேவிதமான ஆத்மாதான் இருக்கிறது. கடைசியில் திருடனைத் தண்டிப்பதைவிட அவனுடைய தொந்திரவுகளைப் பொறுத்துக் கொண்டிருப்பதே நல்லதென்று படுகிறது. நாம் இப்படிப் பொறுமை காட்டினோமானால் அவர்களுக்கு நல்ல புத்தியும் உண்டாதல்கூடும். அதுமட்டுமல்ல; அந்தத் திருடர்கள் நம்முடைய சகோதரர்களே யென்ற உணர்ச்சி ஏற்பட்டு அவர்களைத் தண்டிக்கக் கூடாதென்ற முடிவுக்கு வந்துவிடுவோம். அஹிம்ஸையின் சாரம் இந்த வாசகத்தில்தான் அடங்கியிருக்கிறது. அஹிம்ஸை யென்பது, தினசரி வாழ்க்கைக்கு மட்டுமல்ல; உலகப் பிரச்னைகளுக்கும் பரிகாரமாகுமென்று காந்தியடிகள் கூறுகிறார். அஹிம்ஸா மார்க்கத்தைப் பின்பற்றுவதனால் தொடர்ந்து துன்பத்தை அநுபவிக்க வேண்டி வருகிறது; வரம்பு கடந்த பொறுமையைக் காட்ட வேண்டி யிருக்கிறது. ஆயினும், அதனால் அதிகமான மனச்சாந்தி ஏற்படுகிறது; அதிகமான தைரியம் உண்டாகிறது. எது சாசுவதமானது, எது சாசுவதமற்ற தென்பதை நாம் நிர்ணயித்துக் கொண்டு விடுகிறோம். மேனாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவோருக்கு இது கடினமான விஷயந்தான். ஆனால் துவேஷத்தை அகற்றி, பலாத்காரத்தை வெறுத்து, விசுவப் பிரேமையைக் காட்டினால்தான், மானிட சமுதாயமானது, புற அமைதியை மட்டுமல்ல, அக அமைதியையும் பெறுதல் கூடும். இருபதாவது நூற்றாண்டின் மகான் என்று மகாத்மா காந்தியை நாம் வணங்குகிறோம். அவர் தனிப்பட்டவராகப் பிரகாசிக்கிறார். அவர் தமது உபதேசத்தினாலும், அநுஷ்டானத்தினாலும் உலகத்திற்கு விமோசன மார்க்கத்தைக் காட்டுகிறார். அவருடைய உபதேசங்களைக் கேளாவிட்டால், உலகம் அழிந்து போக வேண்டியதுதான். அவரை ஓர் அரசியல் தலைவராக மட்டும் கருத முடியாது. ஒரு மதபோதகராகவும் அவரைப் போற்ற வேண்டும். அவர் அரசியலில் ஈடுபட்டிருக்கிறா ரென்று சொன்னால், அஃது அவருடைய நீதி நெறியின் விளைவுதான். ஒரு மகானுடைய மகத்துவத்தைப் போற்ற வேண்டுமென்று சொன்னால், அதற்காக அவருடைய நீதி முறைகளையெல்லாம் நாம் அங்கீகரிக்க வேண்டுமென்பது அர்த்தமல்ல. அஹிம்ஸைக்கு அவர் செய்கிற வியாக்கியானமானது, உலகாயத தத்துவத்திற்கு விரோதமா யிருக்கிறதென்று தோன்றினாலும், ஆன்ம உலகத்தில் அதற்கு - அஹிம்ஸைக்கு - அதிகமான சக்தியுண்டென்பதை நாம் அங்கீ கரிக்க வேண்டும். எல்லா மதங்களிலிருந்தும் மகான்கள் தோன்றியிருக் கிறார்கள். இன்றைய உலகத்தில் காந்தியடிகள் ஒரு வழி காட்டி விளக்காயிருக்கிறார். அவருடைய ஞானோபதேசம் எக்காலத்திற் கும் எல்லாருக்கும் ஏற்றது. * * * காந்தியடிகளும் குழந்தையும் டாக்டர் மேரியா மாண்டிஸ்ஸோரி எம்.ஏ., டி.லிட் (லண்டன்) காந்தியடிகளின் சமீபத்திலிருந்துகொண்டு வாழ்கிறவர்கள், அவரைப்பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறமாதிரி வேறே; தூர இருக்கும் ஐரோப்பியர்களாகிய நாம் அவரைப்பற்றித் தெரிந்து கொண்டிருக்கிற மாதிரி வேறே. இரவில் ஆகாசத்திலுள்ள நட்சத்திரத் தைப் பார்த்தால், அது மினுக்மினுக்கென்று பிரகாசிக்கிற ஒரு வதுவாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதனருகே சென்று பார்த்தோமானால், வர்ணமும் வெளிச்சமும் நிறைந்த பெரியதோர் உருவமாகத் தோன்றும். நமக்கு, காந்தியடிகள் ஒரு சாதாரண மனிதராக, ஒற்றையாடையணிந்து கொண்டிருக்கிற ஒரு மனிதராகத் தோன்றுகிறார். ஐரோப்பாவின் எந்த மூலை முடுக்குகளிலும் அவருடைய பெயர் தெரிந்திருக்கிறது. அவருடைய படத்தைப் பார்த்தவர் கள் யாரும் அவர்களுடைய சுயபாஷையில் இதோ காந்தி என்று சந்தோஷத்துடன் சுட்டிக்காட்டு கிறார்கள். அவரிடமிருந்து எட்டியும், வேறொரு நாகரிகத்திலும் வாழ்கிற நமது ஜனங்கள் காந்தியடிகளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? சமாதானத்தை உபதேசிக்கிற மனிதரென்று அவரைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பாவிலுள்ள சமாதானவாதிகளைப் போலல்ல அவர். நம்முடைய சமாதான வாதிகள் வாதஞ் செய்கிறார்கள்; அங்குமிங்குமாகச் சுற்றுகிறார்கள்; கூட்டங்களுக்குச் செல் கிறார்கள்; பத்திரிகைகளுக்கு எழுதுகிறார்கள். ஆனால் காந்தியடிகளோ எதிலும் அவசரப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் அவருக்குச் சிறைவாசமும் ஏற்பட்டுவிடுகிறது. அப்பொழுது அவர் அதிகமாகப் பேசுவதுமில்லை; உண்பதுமில்லை. ஆயினும் இந்தியாவி லுள்ள லட்சக்கணக்கான பேர் அவரைப் பின்பற்றுகிறார்கள்; ஏனென்றால் அவருடைய ஆத்ம சக்தியை உணர்ந்திருக்கிறார்கள். அவருடைய சக்தியானது அனைவரையும் ஒற்றுமைப் படுத்தும் ஆற்றலுடையது; ஜனங்களுடைய அக உணர்ச்சி களை வெளிக்குக் கொணர்வது, இந்தச் சக்தி, அன்பு என்ற பெயரால் அழைக்கப்படு கிறது. மனிதர்களுக்குள்ளே உண்மையானதோர் உறவை ஏற்படுத்திக் கொடுக்கவல்லது இந்த அன்பு ஒன்றுதான். இஃதில்லா விட்டால், மேலுக்குத்தான், லௌகிக சௌகரியத் திற்குத் தான் ஜனங்கள் ஒன்றுபட்டவர்களாகத் தென்படுவார்கள். அன்பில்லாத இந்த உறவு ஆபத்தானது. ஆத்ம சம்பந்தத்தினாலும், லௌகிக தாபனங்களா லும் ஜனங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும். சில வருஷங்களுக்கு முன்னால், காந்தியடிகள் ஐரோப்பாவுக்கு விஜயஞ் செய்தபோது ரோமாபுரிக்கு வந்திருந்தார். அப்பொழுது நான் மேற்கண்ட உண்மையை நன்கு உணர்ந்தேன். காந்தியடிகளிடத்தில், அறிய முடியாததொரு சக்தி பிரகாசிப்பதை அப்பொழுது அறிந்தேன். அவர் லண்டனிலிருந்தபோது, என்னுடைய பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் அவரை வரவேற்று உபசரித்தார்கள். அவர் வந்து கீழே உட்கார்ந்து மௌனமாக நூல் நூற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகளெல்லோ ரும் அவரைச் சுற்றி மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்; மற்றப் பெரியவர்களும் மௌனமாகவே இருந்தார்கள். எல்லோரும் ஒன்று கூடியிருத்தலே போதுமானதல்லவா? பாட்டு, பேச்சு முதலியன வெல்லாம் எதற்கு? தவிர, விடியற்காலை நாலரை மணிக்கு காந்தியடிகள் நடத்தும் பிரார்த்தனைக்குச் சில பெரிய குடும்பத்து திரீகள் சென்றிருந்ததும் என் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. அவர் ரோமாபுரிக்கு வந்திருந்த போது, ஒரு கிராமத்தில் ஒதுக்குப் புறமாயிருந்த வீட்டில் தங்கியிருந்தார். அப்பொழுது ஒருநாள் காலை, ஒரு பாலிய திரீ அவர் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந் தாள். காந்தியடிகளுடன் தனிமையில் பேச வேண்டுமென்பது அவள் ஆவல். அவள் யார்? இத்தாலி மன்னருடைய கடைசிப் பெண் மேரியா! இந்த ஆத்ம சக்தியின் வசீகரத் தன்மையைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டும். இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் உலகத்தைக் காப்பாற்றவல்லது. இந்த ஆத்ம சக்தியே, நம்மைச் சுற்றியிருக்கின்றது. இதனை நாம் விசேஷ கருவிகளின் மூலம் பார்க்க முடியும். ஆனால் சிலர் நினைக்கிறபடி இந்தக் கருவிகள் அவ்வளவு லேசானவையல்ல. இந்தக் கருவிகள் யாவை? குழந்தைகள்! குழந்தை களிலிருந்து நமது ஆத்மா எட்டியிருக்குமானால், அவைகளின் தேகத்தை மட்டுந்தான் நாம் பார்க்கமுடியும். குழந்தைகளைச் சுற்றியிருக்கும் விசேஷ சக்தியை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இதனைத் தெரிந்து கொண்டுவிட்டால், உலக சகோதரத்துவமென்பது தானாக ஏற்பட்டுவிடும்; உலக அமைதியும் உண்டாகும். தம்முடைய பிறந்த நாளின்போது, இந்தியாவிலும் அகில உலகத்திலுமுள்ள குழந்தைகளைக் கௌரவிக்கும் படி காந்தியடிகளை நான் கேட்டுக் கொள்கிறேன். அவருடைய சிஷ்யர்களும் குழந்தைகளிடத்தில் நம்பிக்கை கொள்வார்களாக. * * * காந்தியடிகளின் வளர்ச்சி ஆர்தர் மூர் (ஆசிரியர், டேட்மான், கல்கத்தா,) காந்தியடிகளுக்கு இப்பொழுது எழுபது வயதானாலும் உணர்ச்சியில் நாற்பது வயதானவர்களைக் காட்டிலும் இளைஞராகவே இருக்கிறார். ஏனென்றால் அவர் இப்பொழுதும் அநேக புதிய விஷயங் களைக் கற்றுக்கொண்டும், பரிசோதனை செய்து கொண்டும் வருகிறார். அவருக்குச் சில கோட்பாடுகள் உண்டு. ஆனால் அந்தக் கோட்பாடு களுக்கு அவர் கண்டிப்பான ஓர் எல்லை வகுத்துக் கொள்ளவில்லை. சத்தியத்தை நாடுவதே தமது முக்கிய வேலை என்று அவர் கொண்டிருக் கிறார். அதை வெளிப்படுத்துவதும் அந்தச் சத்திய மார்க்கத்தில் பிறரை அழைத்துக் கொண்டு செல்வதும் இரண்டாம் பட்சந்தான். நீண்ட காலம் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கிக்கொள்ளவும் அவர் தயாராயிருக் கிறார். ஏனென்றால், அந்தக் காலத்தில் அதிகமான ஞான ஒளியைப் பெறவேண்டுமென்பது அவருடைய ஆவல். 1924ம் வருஷம் செப்டம்பர் மாதம் டெல்லியில் முதல் முதலாக அவரை நான் சந்தித்தேன். அப்பொழுது அவர் ஹிந்து முலீம் ஒற்றுமைக்காக 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்குப் பிராண ஹானி ஏற்பட்டுவிடுமோ என்று அவர் நண்பர்கள் அஞ்சினார்கள். டெல்லியில் சர்வகட்சி மகாநாடொன்று கூட்டத் தீர்மானித்தார்கள். இதற்கு வருமாறு மௌலானா முகம்மதலி எல்லாருக்கும் தந்தி கொடுத் திருந்தார். தமது உபவாசமானது இரண்டு சமூகத்தினரையும் ஒற்றுமைப் படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியையாவது தூண்டி விட்டிருக் கிறதே என்று காந்தியடிகள் ஆறுதல் கொள்ள வேண்டு மென்பது, அவருடைய நண்பர்களின் ஆவல். மேற்படி மகா நாட்டிற்கு நான் சென்றிருந்தேன். டெல்லிக்கு நான் போய்ச் சேர்ந்தவன்று காலையில் நான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு மௌலானா முகம்மதலி வந்தார். வந்து என்னைக் காந்தியடிகளிடம் அழைத்துக் கொண்டு போனார். அப்படியே நானும் சென்று காந்தியடிகளைப் பார்த்தேன். அவர் பலஹீனமாயிருந்தார். ஆனால், முகத்தில் புன் சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஸ்ரீ ஆண்ட்ரூ முதலானவர்கள் அவருக்குச் சிச்ருஷை செய்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் மகாத்மா காந்தியினால் அதிகம் பேச முடியவில்லை. என்றாலும் அந்தக் காட்சி என் மனத்தில் நன்றாகப் பதிந்திருக்கிறது. அன்று ஏற்பட்ட தொடர்பு, வர வர வளர்ந்து கொண்டே வருகிறது. அதற்குப் பிறகு காந்தியடிகளை ஆறு ஏழு முறைதான் சந்தித் திருப்பேன். ஆயினும், எங்கள் நட்பு குறையவே இல்லை. பத்திரிகாசிரியன் என்ற முறையிலும், இந்தியா சட்ட சபை அங்கத்தினன் என்ற தோரணையிலும் அவருடைய கொள்கைகளை நான் பலமுறை எதிர்த்து வந்திருக்கிறேன். எங்களுக்கிடையே அடிக்கடி கடிதப் போக்கு வரத்துகளும் நடைபெறும். என் கட்சியை நான் நன்றாக எடுத்துச் சொல்லுவேன். அவரும் தம் கொள்கைகளைக் குறித்து எழுதுவார். இவ்வளவெல்லாம் இருந்தும் எங்களுக்கிடையே இருந்த அந்நியோந்நிய பாவம் சிறிதும் குன்றவேயில்லை. 1927ம் வருஷத்திலும், 1929ம் வருஷத்திலும் முறையே, அவருடைய சுய சரிதமானது சத்திய சோதனை என்ற பெயருடன் இரண்டு பாகங்களாக வெளி வந்தது. இதைப்பற்றி நான் மதிப்புரைகள் எழுதினேன். இந்த நூல் இலக்கியச் சுவை நிரம்பியது. இதனைப் படித்த பிறகு காந்தியடிகளைப் பற்றி நான் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய மனப் போக்கு சுலபமாக அறிந்து கொள்ளக் கூடியதல்ல. ஆயினும், அவர் இந்த நூலை மிகத் தெளிவான நடையிலேயே எழுதி இருந்தார். நேரடியானதுமான காரியங்களைச் செய்கிறார். அவருடைய அறிக்கைகள் பட்டவர்த்தனமாகவே இருக்கின்றன. ஆனால், இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவருடைய மனப்போக்கும், தர்க்கரீதியும் சுலபத்தில் அறிந்து கொள்ளக் கூடியதாயில்லை. காந்தியடிகள் இரண்டு வகையான வாழ்க்கையை நடத்துகிறார். அதாவது அவர் அரசியல் தலைவராகவும் அதே சமயத்தில் மதத் தலைவராகவும் இருக்கிறார். தேசீயத் தலைவர் என்ற முறையில் தமது ஜனங்களின் தேசீய உணர்ச்சியையும், தன் மதிப்புணர்ச்சியையும், சீல சுபாவத்தையும் எழுப்பி விட்டிருக்கிறார். அவர் ஜனங்களிடையில், சந்தோஷகரமாகத் தியாகம் செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தையும் உண்டு பண்ணி இருக்கிறார். தவிர, அவர் தம் சொந்த விவகாரங்களில் ஒரு துறவியாகவே நடந்து கொள்கிறார். துறவுக்குக் கீழ் நாட்டில் அதிகமான செல்வாக்குண்டு. சிறப்பாக, இந்தியாவில் நீண்டகாலமாக வறுமையும், வைராக்கியமும் மோட்சத்திற்குரிய மார்க்கங்களென்று போதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. காந்தியடிகள் தமது சுயசரிதத்தில் சத்திய சோதனைக்காகத் தாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான் தமது வாழ்க்கையிலேயே முக்கியமானவை என்றும், தமது அரசியல் அனுபவங்கள் யாவும் இரண்டாம் பட்சமே என்றும் கூறியிருக்கிறார். 1927-ம் வருஷம் வரையில் அவருடைய வாழ்க்கைப் பிரயாணமானது தோல்வி மயமாகவே இருந்திருக்கிறது. கடவுளை நேருக்கு நேர் காணவும் மோட்சத்தையடையவும் அவர் முப்பது வருஷத்திற்கதிக மாக முயன்றிருக்கிறார். இதற்காக அவர் அஹிம்ஸை, ப்ரஹ்மசரியம், புலாலுண்ணாமை முதலிய பல வகைத் துறவு முறைகளைப் பரிசோதனை செய்துபார்த்திருக்கிறார். ஒரு கத்தியின் கூர்முனையில் நடப்பதைப் போல் அநேக குறுகிய கடினமான பாதைகளில் சென்றிருக் கிறார். இவ்வளவு பிரயத்தனப்பட்டும் இத்தனை வருஷங்களுக்குப் பிறகு சத்திய வடிவமாயுள்ள அந்தக் கடவுளை ஜாடையாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்ததாகச் சொல்லுகிறார். அவர், கடவுளைக் காணவில்லை. சத்தியத்தை அடையவில்லை. ஆனால், கடவுள் ஒரு நிஜவது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு விட்டார். மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்ற கிறிதவ மதக் கோட்பாட்டின் உண்மையைக் காந்தியடிகள் ஒப்புக்கொள்கிறார். வாழ்க்கையானது சுகபோகங்களை அநுபவிப்பதற்கல்லவென்றும், பிறர் நலத்திற்காகத் தன்னைத் தியாகம் செய்வதே என்றும் மற்ற மகான்களைப்போல் அவரும் கூறுகிறார். மனிதனுடைய சங்கடங் களுக்கெல்லாம் மூலகாரணமாயிருப்பது அவன் ப்ரஹ்மசரிய விரதத்தை அநுஷ்டியாமலிருப்பதுவே என்றும், புலனடக்கம் மிக மிகத் தேவை என்றும் வற்புறுத்திச் சொல்லுகிறார். அவருடைய இந்தச் சித்தாந்தம் தற்கால மனோ தத்துவ சாதிரத்திற்கும் வைத்திய சாதிரத்திற்கும் மாறுபட்டதாயிருக்கிறதென்று சொல்ல வேண்டும். துறவுக்கு எல்லையே இல்லை என்று அவர் கூறுகிறார். தாம், பால் அருந்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்டதைக் குறித்துக்கூட அவர் வருத்தப்பட்டிருக்கிறார். ஏனென்றால், அது ப்ரஹ்மசரியத்திற்கு பங்கம் விளைவிக்கிறதாம். பழம், கொட்டை முதலியனவே ஒரு ப்ரஹ்மசாரிக் குரிய உணவாகுமென்றும், ஆனால் அதைவிடச் சிறந்தது முடிந்த வரையில் உபவாசமிருப்பதே என்றும் அவர் கருதுகிறார். சாதாரண ஜனங்களால் அநுஷ்டிக்கப்பட முடியாத இந்த லட்சியங் களை அவர் கொண்டிருந்தபோதிலும் அவர் சில கிறிதவத் துறவிகளைப் போல் கொடுமையானவராக இல்லாமலிருப்பது ஆச்சரியமான விஷயம். காந்தியடிகள் தமது சொந்த வாழ்க்கையை மிகக் கடினமாக்கிக் கொண்டுவிட்டிருந்த போதிலும், அவர் எல் லோரிடத்திலும் எளிய முறையில் அன்பு செலுத்துகிறார். அவருடைய இந்த அன்புதான் அவருக்கு மகத்தான சக்தியை அளித்திருக்கிறது. சத்தியத்தின் ஒளியைக் காண வேண்டுமென்கிற ஆவல் அவருக்கு நிரம்ப இருக்கிறது. ஆயினும் மனிதனுடைய உயர்ந்த சுபாவங்கள் பல அவரிடத்தில் குடிகொண்டிருக் கின்றன. ஒருபுறத்தில் அவர் கொடுமையையும் அடக்கு முறையையும் எதிர்க்கிறார். அதே சமயத்தில் மற்றொரு புறத்திலுள்ள அழுக்கையும் நோயையும் வெறுக்கிறார். அவர், தமது வாழ்க்கையின் ஆரம்பத்தி லிருந்து உலக சுகங்களை வெறுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக் கிறார். அவர் இங்கிலாந்தில் மாணாக்கராக வசித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு, ஹிந்துமதத்தின் பெருமை நன்கு தெரிந்தது. அங்கேதான் முதன் முதலாகக் கீதையைப்பற்றித் தெரிந்துகொண்டார். ராஜகோட்டை சத்தியாக்கிரக இயக்கத்தின் போது ஏற்பட்ட அநுபவங்களைக் கொண்டு தமக்குப் புதிய ஒளி கிடைத்திருப்பதாகச் சமீபத்தில் காந்தியடிகள் தெரிவித்திருக்கிறார். இந்த ஒளி எப்படிப் பட்டதென்பது இப்பொழுது வெளியாக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் முக்கியமான விஷயம். காந்தியடிகளுக்கு, ஹிந்து ஜன சமுதாயத்தினிடையே எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதென்பதைப் பற்றியோ, சமீப கால இந்திய சரித்திர நிர்மாணத்தில் அவர் எவ்வளவு முக்கியமான பங்கெடுத்துக் கொண்டிருக்கிறாரென்பதைப் பற்றியோ யாரும் சந்தேகப் பட முடியாது. அவர் இரண்டு அகில இந்திய சட்ட மறுப்பு இயக்கங் களுக்குத் தலைவராயிருந்து நடத்தினார். இந்த இயக்கங்களினால் தேசத்தில் ஒரு குழப்பமும் அதிகாரிகளுக்கு ஒரு திகைப்பும் ஏற்பட்டன. இந்த இயக்கங்களின் பின் விளைவுகள் இப்பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கின்றன. காந்தியடி களுக்குக் காங்கிர தாபனங்களிடத்திலும் பாமர ஜனங் களிடத்திலும் அபரி மிதமான செல்வாக்கிருக்கிறது. இப்படிப்பட்ட தொரு சந்தர்ப்பத்தில் அவர் தமது முதிர்ந்த வயதில் இது காறும் அவர் உபதேசித்து வந்த கோட்பாடுகளில் அடிப்படையான மாற்றம் செய்திருப்பாரானால் அஃதொரு முக்கியமான விஷயமாகும்; அஃது இந்தியாவையும் உலகத்தையுமே பாதிக்கக் கூடியதாகும். சாத்வீக ஒத்தழையா இயக்கமானது ஆத்மார்த்தமான போராட்டம் என்று சொல்லப்படுவதை நான் பலரைப் போல் கண்டித்திருக்கிறேன். ஏனென்றால், அஃது - அந்த ஒத்துழையாத் தத்துவம் - தேக சம்பந்தப்பட்ட பலாத்காரமென்றும் மன சம்பந்தப் பட்ட பலாத்காரமென்றும் வேற்றுமைப்படுத்திக் காட்டுகிறது. நிராயுத பாணியான ஜனங்கள் அநுஷ்டிக்க வேண்டிய ஒரு போராட்ட முறை அது. பகிஷ்காரம், வேலை நிறுத்தம் முதலியவை போலத்தான் இந்த இயக்கமும். உபயகட்சிகளில் எந்தக் கட்சியினுடைய தாபனம் வலுத்திருக்கிறதோ அதைப் பொறுத்திருக்கிறது இந்த இயக்கத்தின் வெற்றியும் தோல்வியும். தவிர எந்தப் பிரச்னைக்காக இந்த இயக்கம் தொடங்கப்படுகிறதோ அந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தையும் பொறுத்திருக்கிறது. ஆயுத பலத்தைக் கொண்டு ஏற்படுகிற கலகம் அல்லது யுத்தம் இவைகளுக்கு என்ன புனிதத் தன்மை உண்டோ அதைவிட அதிகமான புனிதத்தன்மை இந்த ஒத்துழையா இயக்கத் திற்கு இல்லை. மனதிலே தீய எண்ணங்களை எண்ணுவதுகூட பாவச் செயல் என்று கிறிதவர்களாகிய நாம் நம்புகிறோம். இந்த எண்ணத்தின் வெளித் தோற்றம்தானே செயல். காந்தியடிகள் தமது ஒத்துழையா இயக்கத்திற்குப் பலம் கொடுக்கும் பொருட்டு ஜனங்களை பலாத்கார தோரணையில் எண்ணும்படிச் செய்து விட்டார். பிரிட்டிஷாருக்கு விரோதமாகவும் அந்நியச் சாமான்கள் இறக்குமதியா வதற்கு விரோதமாகவும் நடைபெற்ற பிரசாரத்திற்கு ஆதரவு கொடுத்தார். இந்த ஆதரவைக் கொண்டு அவருடைய சிஷ்யர்கள் வெகு தூரம் சென்றுவிட்டார்கள். பத்திரிகைகளிலும், பிரசங்க மேடைகளிலும் துவேஷம் தீவிரமாகத் தலை காட்டியது. எல்லாம் அஹிம்ஸை இயக்கத்தின் போது! பலாத்கார எண்ணங்கள் வளர்ந்து வந்ததோடு பலாத்காரச் செயல்களும் நிகழ்ந்தன. இந்தப் பலாத்காரச் செயல்களைப் பற்றிப் பிரிட்டிஷார் குறை கூறவில்லை; ஆனால், இந்த அஹிம்ஸா இயக்கம் ஆத்ம சக்தியை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப்படுவதையே ஆட்சேபித்தார்கள். லங்காஷைரில் உற்பத்தியாகும் பொருள்களை பகிஷ்கரிப்பது என்றால் அதன் நோக்கமென்ன? இந்தியாவிலுள்ள ஜனங்களுக்கு வேலை, கூலி, உணவு முதலியன அளிக்கும் பொருட்டு இங்கிலாந்திலுள்ள ஜனங்களுக்கு வேலை, கூலி, உணவு முதலியன இல்லாமற் செய்துவிட வேண்டு மென்பது தானே! ஒருவனைப் பட்டினி போடுவதும் அல்லது அவனைக் கொன்று விடுவதும், ஆன்ம திருஷ்டியில் பார்க்கப்போனால் ஒன்றுதான். 1914ம் வருஷ யுத்தத்தில் ஜெர்மனியை, சாமான் தடுப்பு முறையினால் பட்டினி போட்டோமே அதற்கும், பகிரங்க யுத்தத்திற்கும் தர்ம ரீதியான வித்தியாசம் இருக்கின்றதென்று நியாய புத்தியுள்ள எந்த ஆங்கிலேயனும் ஒப்புக்கொள்ள மாட்டான். அப்படி வித்தியாசமிருக்கு மானால், அது பகிரங்க யுத்தத்தைவிட சாமான் தடுப்பு முறை இழிவானது என்ற அளவில் தான். ஒத்துழையா இயக்கத்தின் பயனாக, பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்து விட்டால் அதற்குக் காந்தியடிகளின் பரிகாரம், தாமே உபவாச மிருப்பது. சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு அதற்குப் பரிகாரமாக அவர் எட்டு நாள் உபவாசமிருந்தார். பிறகு அவருடைய உபவாச நோக்கங்கள் விதரிக்கப்பட்டன. 1924-ம் வருஷத்தில் ஹிந்து முலீம் ஒற்றுமைக்காக இருபத்தோரு நாள் உபவாச மிருந்தார். இரண்டாவது முறை சட்ட மறுப்பியக்கம் நடைபெற்றபோது, சிறைக்கு அனுப்பப் பெற்றார். உபவாசமிருந்து விடுதலை பெற்றார். வகுப்புத் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டுமென்பதற்காக மீண்டும் உபவாச மிருந்தார். ராஜகோட்டை சம்பந்தமாக இருந்த உபவாசமுள்பட அவருடைய பிந்திய உபவாசங்களெல்லாம், பிராயச்சித்தத்தன்மையை இழந்து விட்டன. இவையெல்லாம், பலாத்கார சம்பந்தப்பட்டவை களென்று அவருடைய சிஷ்யர்களும் கருதினார்கள். அஹிம்ஸை, ஒத்துழையாமை, உண்ணாவிரதம் முதலியன வெல்லாம் ஆத்மார்த்தமானதொரு மகத்துவமுடையவை யென்று சொல்லப்படுவதை யாராவது ஆட்சேபித்தால் அந்த ஆட்சேபங்களை யெல்லாம் காந்தியடிகள் முன்பு பொருட்படுத்தாமலிருந்தார்: தன்னிடத்திலே அந்தர்யாமியாயுள்ள ஒரு சக்தியானது, இவையெல்லாம் ஆத்மார்த்த மான மகத்துவமுடையவை யென்று சொல்வதாகவும், அப்படிச் சொல்வதுதான் சரியென்றும் அவர் சாதித்து வந்தார். தம்முடைய இயக்கங்களெல்லாம் தோல்வியடைந்து வந்த போதிலும், அவை, வெற்றிகளே என்றும் சொல்லிக் கொண்டு வந்தார். இதன் விளைவாக என்ன ஏற்பட்டு விட்டதென்றால், இந்தியாவின் பல பாகங்களிலும், இதற்காக உபவாசமிருக்கிறேன், அதற்காக உபவாசமிருக்கிறேன், இதற்காகச் சத்தியாக்கிரகம் செய்கிறேன், அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பலர் கிளம்பிவிட்டார்கள். ஆனால் இப்பொழுது ஒரு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. காந்தியடிகளுக்குப் புதியவெளிச்சம் தோன்றியிருக்கிறது. தமது நோக்கங்களிலேயே அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. தாம் ஆத்மார்த்தமான வேலையைச் செய்துகொண்டு வருவதாக நம்பிக் கொண்டு வந்தபோதிலும், அரசியல் சித்திகளையும் லௌகிக சித்தி களையும் அடைவதற்காகவே தாம் வேலை செய்துகொண்டிருப்ப தாக அவர் இப்பொழுது உணர்கிறார். ராஜகோட்டை சம்பந்தமாகத் தாம் உபவாசமிருந்தது, ஹிம்ஸையினால் கறைபட்டுப் போயிற் றென்றும், தமது ஆயுதங்களையெல்லாம் கீழே போட்டுவிட்டதாகவும் இப்பொழுது அவர் சொல்கிறார். அவர், தாம் ஆத்ம பரிசுத்தம் அடைய வேண்டு மென்று எவ்வளவோ பாடுபட்டிருக்கிறார்; வருஷக் கணக்காகத் துறவி போல் வாழ்ந்து வருகிறார்; தமது எதிரிகளிடம் அன்பு செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இவ்வளவெல்லாம் இருந்தும், இந்த அஹிம்ஸை - சத்தியாக்கிரக முறைகளை உபயோகிக்கத் தமக்கு இன்னும் தகுதி ஏற்படவில்லை யென்று கருதுகிறார். அப்படி யிருக்க சாதாரண ஜனங்கள் இந்த முறைகளை ஒழுங்காக அநுஷ்டிப் பார்களென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இதைவிட இன்னொரு முக்கிய விஷயத்தில், காந்தியடிகள் முன்னேறியிருக்கிறாரென்று நான் கருதுகிறேன். இப்படி முன்னேற்ற மடைந்திருப்பதன் பலாபலன்கள், இந்தியாவிலும் உலகத்திலும் அதிகமாயிருக்கும். காந்தியடிகள், அநேக வருஷ காலமாக, கிறிதவ மதத்தைத் தழுவிக்கொள்ளக் கூடிய ஒரு நிலையிலிருந்து வருகிறார். அவர் சமீபத்தில் பேசியிருப்பவைகளைக்கொண்டு பார்த்தால், புத்த மதத்திலும் கிறிதவ மதத்திலும் உள்ள அழகுகளை அவர் உணர்ந்து வருகிறாரென்பது தெரிகிறது. ஒத்துழையாமையைவிட ஒத்துழைப்பி லேயே அதிக சாதகம் இருப்பதாக அவர் இப்பொழுது உணர்கிறார். இப்பொழுது உலகத்தில் பலாத்காரம் நிறைந்திருக்கிறதென்பதுண்மை. மனிதர்களுடைய மனப் போக்கை மாற்றக்கூடிய ஓர் உத்வேக சக்தி தேவையென்பதும் உண்மை. எல்லா நாடுகளிலும் இந்தத் தேவையை ஜனங்கள் உணர்ந்து வருகிறார்கள். இந்தச் சக்தி உதயமாவதற்குப் பூர்வாங்கமாக இப்பொழுதே சில இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்திருக் கின்றன. இப்படிப்பட்டவைகளில் காந்தியடிகளுடையதும் ஒன்று போலும். நம்மைத் தயக்கத்திற்குட்படுத்தியிருக்கிற தற்காலப் பிரச்னை களிலொன்று என்னவென்றால், யுத்தத்தைப்பற்றி நாம் எந்த விதமான கொள்கையை அநுஷ்டிக்க வேண்டுமென்பது. தற்காப்பு நிமித்தம் யுத்தம் செய்வதுகூடத் தவறு என்றும், தீமையைத் தீமையினால் எதிர்க்கக் கூடாதென்கிற கிறிதவ தர்மோபதேசமானது, ஒரு தனி மனிதனுக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் பொருந்துமென்றும் அநேக கிறிதவர்களும், பௌத்தர்களும் இன்னும் பலரும் கருதுகிறார்கள். என்னைப் பொறுத்த மட்டில் - இதை நான் பஷ்டமாகத் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன் - காந்தியடிகளால் பின்பற்றப்படுகிற டால் டாயின் சித்தாந்தமானது, தத்துவ ரீதியான ஒரு புரட்சியென்று தான் படுகிறது. தற்காப்பு நிமித்தம் படைகள் தேவையில்லை யென்று சொன்னால் போலீபடைகளும் தேவையில்லையல்லவா? இதற்குச் சரியாக இதுவரை யாரும் பதில் கொடுக்கவில்லை. ஒரு தனி மனிதன், தன்னை எவன் தாக்குகிறானோ அவன் மீது கொண்ட அன்பினால் அவன் இயற்றுகிற கொடுமைகளைச் சகித்துக்கொண்டிருப்பதன் மூலம் அவன் மனதை மாற்றலாம். ஆனால் ஒரு ஜாதியில் அடங்கியிருக்கிற தனிப்பட்ட நபர்கள், தனிப்பட்ட முறையில் எதிரியினால் எவ்வித துன்பத்தையும் அடையாமலிருந்தபோதிலும், அந்த எதிரியைத் தங்களிலே ஒரு சிலரை இஷ்டப்பிரகாரம் தாக்க அநுமதிப்பார் களானால், அவர்களுடைய செய்கை அன்பில்லாத செய்கையென்று தான் நான் கருதுகிறேன். தர்மாநுஷ்டான விஷயத்தில் தாங்கள் கொண்டிருக்கிற ஒரு சிரத்தை காரணமாக, மேற்படி சித்தாந்தத்தைப் போதிக்கிறவர்கள், தங்களுடைய சொந்த விவகாரங்களில் அடக்கத்தை அப்பியசித்துக்கொள்வதோடு திருப்தியடையாமல், பிறர்மீதும் குறிப் பிட்டதோர் ஒழுக்க ரீதியைச் சுமத்தப் பார்க்கிறார்கள். ஒரு மனிதன் தன்னைத் தாக்குகிறவர்கள் விஷயத்தில் தர்ம ரீதியான கோபத்தை யடைகிறான். அதாவது தர்ம மார்க்கத்தில் அவன் நடக்கவில்லையே யென்று ஆத்திரப்படுகிறான். ஆனால் தன்னைத் தாக்குகிறவர்கள், தன்னைப் போல் மனிதர்கள் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள முடியாத வனாகித் தன்னடக்கத்தை இழந்துவிடுகிறான். இன்னொரு மனிதன், தன்னடக்கத்தில் தீவிர பற்றுள்ளங்கொண்டவனாய் சத்துருக் களிடம் அடக்கத்தைக் காட்ட வேண்டுமென்று மற்றவர்களுக்கு உபதேசிக்கிறான். இந்த இரண்டு வகைப்பட்ட மனிதர்களும் அதிக வித்தியாசப் பட்டவர்களில்லை. இந்த இரண்டு வகையினரும் சொல்லாளர்களே தவிர செயலாளர்களல்ல. இவர்கள், தாங்கள் பொதுவான மானிட சமுதாயத்தின் தனிப்பட்ட வியக்திகள் என்பதை மறந்துவிடுகிறார்கள். தீமையைத் தீமையினால் எதிர்க்கக்கூடாதென்று சொல்கிறவர் களுடைய இஷ்டப்படி காரியங்கள் நடைபெறுமானால், தீமைகள்தான் அதிகமாகும். இவர்களுடைய பின் சந்ததியார், ஞானிகளாக இருக்க மாட்டார்கள்; அடிமைகளாயிருப்பார்கள். அடக்கம் நிலவாது; அடிமைத்தனந்தான் நிலவும். அடிமைப்பட்ட ஒரு ஜாதியில் எங்காவது ஓர் ஆத்மாதான், உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்க முடியும். மற்றப் பொது ஜனங்கள், முகதுதி செய்தல், ஒளித்து வைத்துக் காரியங்கள் செய்தல், தந்திரங்களைக் கையாளல் முதலிய கலைகளையே பயில வேண்டும். தீமையைத் தீமையினால் எதிர்க்கக் கூடாதென்கிற சமாதான வாதிகளின் வாதமானது, அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் உபதேசித்த பகவத் கீதையின் மூலமாகத் தகர்க்கப்பட்டு விட்டது. மூன்று வருஷங் களுக்கு முன்னர், காந்தியடிகளிடம் இதைப்பற்றி நான் பிரதாபித்தேன். ஆனால் கீதையிலே சொல்லப்படுகிற யுத்தக் கதையானது, உண்மை யாக நடந்ததல்லவென்று தாம் கருதுவதாக அவர் கூறினார். ஆனால், ராஜகோட்டை சம்பவத்திற்குப் பிறகு, காந்தியடிகள் ஒரு புதிய மகாத்மாவாயிருக்கிறார். தமது சேவையினால், தம்மை ஒழுங்குக்குட்படுத்திக் கொண்டிருக்கிறவரும், துறவுத் தன்மை பூண்டிருக்கிறவரும், ஆத்ம பரிசுத்தமடைந்திருக்கிறவருமான ஒருவரை நாம் போற்றவேண்டும். அவர் இப்பொழுது ஒரு புதிய ஒளியைப் பெற்றிருக் கிறாரென்று சொன்னால், அந்த ஒளியானது எந்தக் கண்ணாடியைத் தயார் செய்ய அவர் வருஷக் கணக்காகச் சிரமப்பட்டிருக்கிறாரோ அந்தக் கண்ணாடியின் மூலமாக இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கும். ஒரு தனிப்பட்ட மனிதரின் மூலமாகத்தான், உலகம் உத்தாரணம் அடைகிறது. ஒவ்வொருவரும் தம் சொந்த விஷயத்திலேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆத்மா நம்மோடு பேசுகிற போது நாம் மௌனமாயிருக்கக்கூடிய ஒரு சக்தியைப் பெறவேண்டும். இல்லாவிட்டால் நாம் வழி தவறிச் சென்றுவிடுவோம். ஏற்கனவே உலகத்தில், தங்கள் மௌனத்தில் உரத்துப் பேசுகிறவர்கள் அதிகமாயிருக் கிறார்கள். தங்களுடைய மௌன வாக்கைக் காது கொடுத்துக் கேட்பதற்குப் பதிலாக, மற்றவர்களைத் தங்கள் கட்சிக்குச் சேர்த்துக் கொள்வதில் சிரத்தை காட்டுகிறார்கள். ஆனால், இந்தியாவில், மௌனத்தில் உண்மையான தோர் அமைதி உண்டாகுமென்பதைத் தெரிவிக்கக் காந்தியடிகள் தோன்றியிருக்கிறார். * * * காந்தியடிகளின் ஆத்ம சக்தி கில்பர்ட் முர்ரே எம்.ஏ., டி.சி.எல். (ஆசிரியர், ஆக்போர்ட் சர்வகலாசாலை) தேசங்களை ஆட்சிபுரியும் கூட்டத்தினர் பலாத்காரத்தின் துணையையே அதிகமாக நாடி வருகின்ற தற்போதைய உலகத்தில், சட்டம், சகோதரத்துவம் முதலியவைகளை மறுப்பதாகிற ஓர் அரசாங்க முறையினிடம், தேசங்கள், தங்கள் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் ஒப்படைத்திருக்கின்ற இந்தக் காலத்தில், காந்தியடிகள், தனிப்பட்ட ஒரு புருஷராகவும் எல்லாருடைய இதயத்திலும் பதியக் கூடிய ஒரு புருஷராகவும் விளங்குகிறார். அவர் ஓர் அரசர். லட்சக்கணக்கான ஜனங்கள் அவருக்குக் கீழ்ப்படிகிறார் கள். ஏன்? அவருக்குப் பயப் பட்டுக்கொண்டல்ல; அவரை நேசிப்பதனால். ஏராளமான செல்வம் இருக்கிறது, ரகசியப் போலீ இருக்கிறது, யந்திர பீரங்கிகள் இருக்கின்றன என்பதற்காக அவரை யாரும் எஜமானராகக் கொள்ளவில்லை. அவர் ஆத்ம சக்தி நிறைந்த ஒரு மகான் என்பதற்காகவே அவரை அனைவரும் போற்றுகிறார்கள். ஆத்ம சக்தியானது, ஒருமுறை ஊர்ஜிதம் செய்து கொண்டு விடுமானால், அதன் முன்னர், லௌகிக உலகத்தின் பிரயோஜனங் கள் வலிவிழந்து நிற்கின்றன. நம்மிடத்திலேயுள்ள ஆத்ம சக்தி யானது, எதிரியினிடத்திலுள்ள ஆன்ம உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், மனிதன், எவ்வளவு மிருகத் தன்மையுடையவனாக நடந்துகொள்ள வேண்டுமென்று பிரயத்தனப் பட்டபோதிலும், தன்னுடைய மனிதத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டு விடுகிறான். இருபது வருஷங்களுக்கு முன்னர், காந்தியடி களைப் பற்றி நான் எழுதுகிறபோது பின்வருமாறு குறிப்பிட்டேன்:- வலுவுள்ள உலகாயத சக்திகளை எதிர்த்து, மனித ஆத்மாவானது, எவ்வித உதவியுமின்றிப் போர்புரிகிறது. கடைசியில், உலகாயத சக்திகள், தங்களுடைய கட்சியைத் துறந்துவிட்டு ஆத்ம சக்தியின் பக்கம் வந்து சேர்கின்றன. ஆத்ம சக்தியானது எப்பொழுதுமே சரியான வழி காட்டுமென்று நாம் சொல்லமுடியாது. அஃது அடைந்திருக்கிற சாதனைகள், நோக்கங் கள் முதலியன ருஜுவுக்குக் கொண்டு வர முடியாதவை. இந்த ஆத்ம சக்தியை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவந்து காட்டுகிறவர்கள், மனிதர்கள்தான். மனிதர்களிடத்தில் உள்ள குறைபாடுகள் இவர் களிடத்திலும் இருக்கின்றன. எப்படி சுயேச்சாதிகாரிகள், அதிகார வசப்பட்டுக் களங்கமடைந்து போகிறார்களோ அப்படியே மேற்படி ஆத்ம சக்தி கைவரப் பெற்றவர்களும் களங்கமுடையவர்களாகி விடலாம். ஆனால், இந்த ஆத்ம சக்தியுடைய மகா புருஷர்களில் காந்தியடிகள் தனிப்பட்டதொரு வியக்தியாயிருக்கிறார். முதலாவது, அவர் ஒரு சித்தாந்தத்தை வலியுறுத்திப் பேசவில்லை; அல்லது உத்திரவிடுகிற மாதிரி பேசவில்லை. தமது கொள்கையை விண்ணப் பித்துக் கொள் கிறார். நம்மிடத்திலேயுள்ள ஆத்ம சக்தியை அறை கூவி அழைக்கிறார். தாம், எதை உண்மையென்று நம்புகிறாரோ அதையெடுத்துக் காட்டு கிறார். ஆனால், மற்றவர்கள் வேறு பாதை களில் சென்று உண்மையைக் கண்டுபிடிப்பார்களானால் அவர்களைக் கண்டிக்கிறாரில்லை. இரண்டாவது, அவருடைய போர் முறை தனிப்பெருமை வாய்ந்ததாயிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களின் உரிமைக்காக அவர் பதினைந்து வருஷ காலம் போராடிய விதத்தி லிருந்தே இது தெரியும். அவரும், அவருடைய சகாக்களும் அடிக்கடி சிறை வாசத்திற்குட்படுத்தப்பட்டார்கள்; குற்றவாளிகளோடு சேர்த்து வைக்கப்பட்டார்கள்; மிருகங்கள் மாதிரி நடத்தப்பட்டார்கள். ஆனால், காந்தியடிகள், தம்மை இந்த மாதிரியெல்லாம் நடத்திய அரசாங்க மானது, பலஹீனமான நிலைமையிலோ, சங்கடமான நிலைமையிலோ அகப்பட்டுக்கொண்டுவிட்டால் அப்படிப்பட்ட தருணத்தில் உடனே உதவியளித்திருக்கிறார். அரசாங்கத்தின் பலஹீனத்தைத் தமக்குச் சாதகமாக அவர் உபயோகித்துக் கொண்டதே கிடையாது. தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷார் ஒரு யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, காந்தியடிகள் ஒரு சிகிச்சைப் படையைத் தயார்ப்படுத்தி அதன் மூலம் உதவி செய்தார். இந்தியாவில் ஒத்துழையா இயக்கம் பலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ரெயில்வே தொழிலாளர்கள், வேலை நிறுத்தஞ் செய்வதாகப் பயமுறுத்தினார்கள். ஆனால், காந்தியடிகள், அரசாங்கத்திற்கு எவ்வித தொந்திரவும் கொடுக்கக் கூடாதென்பதற்காக வேலை நிறுத்தத்தைத் தடுத்துவிட்டார். அவர் சொற்படி எல்லோரும் கேட்டனர். இந்த மாதிரியான போர் முறையின் முன்னர், மனிதத் தன்மையுள்ள எந்த எதிரியும் நிற்க முடியாதல்லவா? மூன்றாவது, தாம் குற்றங்குறைகளில்லாதவர் என்று அவர் சொல்லிக் கொண்டதே கிடையாது. லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படுகிற ஒரு தலைவரிடம் இந்த மாதிரியான குணம் இருப்பது மகா கடினம். இப்பொழுது அவர் தமது ஒத்துழையா இயக்கத்தை நிறுத்தி வைத்திருப்பதாக அறிகிறேன். தாமும், தமது சத்துருக்களும், தத்தம் நிலைமைகளைப் பற்றிச் சிந்திக்க அவகாசம் கொடுக்க வேண்டு மென்பதே அவர் எண்ணம். எவ்வித ஆயுதங்களுமில்லாமல் ஒரு தனி மனிதர், பெருவாரி யான ஜனங்களின் மீது ஆத்மீகமான அதிகாரம் செலுத்துகிறா ரென்பதே ஆச்சரியகரமான விஷயம். அந்த மனிதர், பலாத்காரத்தை அடியோடு துறந்தவராய், தமது சத்துருக்களின் தேவையில் உதவி செய்கிறார். ஆனால் அதே சமயத்தில் தமது குறைபாடுகளையும் உணர்கிறார். இப்படிப்பட்ட மனிதர், உலகத்தினரால் வியந்து பாராட்டப்படுகிறா ரென்று சொன்னால் அது சகஜந்தானே. நான், ஒரு தூர தேசத்திலிருக் கிறவன்; இந்திய நாகரிகத்திற்குப் புறம்பானதொரு நாகரிகத்தைச் சேர்ந்தவன்; அநுஷ்டான பூர்வகமான சில பிரச்னைகளில், காந்தியடி களுடைய அபிப்பிராயத்திற்கு மாறு பட்டவன்; எந்த ஐரோப்பாவிலே இப்பொழுது, மனிதனுடைய மனச் சாட்சியும் அறிவும், அறியாமை முன்னரும், மிருக பலத்திற்கு முன்னரும் சக்தியிழந்து நிற்கின்றனவோ, எந்த ஐரோப்பாவில் பல முன்னணி இயக்கங்கள் சலித்துப்போன தோரணையில் தோன்றிக் கொண்டிருக்கின்றனவோ அந்த ஐரோப்பாவிலிருந்து கொண்டிருக் கிறேன். இந்த நிலைமையிலுள்ள நான் அந்த மகானுக்கு, அவருடைய சிஷ்யர்கள் உரிமையோடு சொல்கிற மகாத்மா காந்தி என்ற பட்டத்தைச் சூட்டி அவரைப் பணிவோடு வணங்குகிறேன். * * * கீழ்நாட்டு யாத்திரிகன் காணிக்கை யோனே நோகுச்சி (கையோ சர்வகலாசாலை, டோக்கியோ, ஜப்பான்) நான், 1935ம் வருஷம் டிசம்பர் மாதம் கடைசியில், நாகபுரியி லிருந்து பம்பாய்க்குப் போகிற வழியில் வார்தாவில் இறங்கினேன். இஃது ஒரு சிறிய கிராமம் மாதிரி இருக்கிறது. ஆனால் இதுதான் காந்தியடிகளின் ஆன்மீய இயக்கத்திற்கு மத்திய தானம். இங்கே ஆசிரமம் மாதிரி இருக்கப்பட்டதோரிடத்தில் காந்தியடிகள் இருந்தார். அவரைப் பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. காந்தியடிகள், பழையகாலத்து முனிவர்களைப் போலல்லாமல், இங்கு, தமது ஜாதியின் நம்பிக்கை, துன்பம் இவற்றின் ஒவ்வொரு துடிப்புக் கும் எதிரொலி கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் பார்த்த சமயத்தில் அவருக்கு உடல் நிலை சரியாயில்லை. இரண்டு மாடிகளுள்ள ஒரு வீட்டின் மேலே ஒரு கூடாரமடித்து அதில் அவர் படுக்கவைக்கப் பட்டிருந்தார். அவருடைய உடைந்துபோன பற்கள் தெரியும் வண்ணம் அவர் புன்சிரிப்புச் செய்துகொண்டிருந்தார். கிரிக்கெட் ஆட்டக் கழியைப்போல் மெல்லியதாயும், எஃகுக் கம்பி போல் உறுதியாயும் இருந்த தம்முடைய இரண்டு கால்களையும் நீட்டிக் கொண்டிருந்தார். அவற்றை, அவருடைய சிஷ்யர்களில் ஒருவர் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சிறிய, எளிய மனிதரை யும், இவருடைய உபவாசங்களினால் மகத்தான இங்கிலாந்தின் ஆத்மாவே அச்சத்தினால் நடுநடுங்கிவிட்டதென்பதையும் பொருத்திப் பார்ப்பது முதலில் எனக்குச் சிறிது கடினமாகவே இருந்தது. ஒரு துணியில் ஏதோ ஒன்றை வைத்து அவர் தலையில் சுற்றியிருந்தார்கள். அஃதென்னவென்று காந்தியடி களை நான் கேட்டேன். அஃது ஈர மண்ணென்றும், ரத்தக் கொதிப்புள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தென்று தமது வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்களென்றும் அவர் கூறினார். பிறகு, குறும்புத்தனமும் ஞானமும் கலந்த ஒரு புன் சிரிப்புடன் அவர் இந்திய மண்ணிலிருந்து நான் உற்பத்தியானேன். அதனால் இப்பொழுது இந்திய மண்ணே எனக்கு மகுடமாக விளங்குகிறது என்று வியாக்கியானஞ் செய்தார். பிறகு அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கீழே இறங்கினேன். காந்தியடிகளின் மூன்று நான்கு சிஷ்யர்கள், எனக்கு ஆசிரமத்தைச் சுற்றிக் காண்பிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தார் கள். முதலில் தேனீ வளர்ப்பு இடத்தைப் பார்த்தேன். பிறகு, நல் லெண்ணெய்ச் செக்கு ஒன்றை ஒரு மாடு இழுத்துக் கொண்டி ருப்பதைக் கண்டேன். அப்புறம், காகிதம் உற்பத்தி செய்யப்படுகிற இடத்தைக் காண்பித்தார்கள். ஒருவர் கூறினார்:- காகிதம் செய்வது எவ்வளவு சுலபமான காரியம்! இந்தக் காகித உற்பத்தித் தொழில் மட்டும் ஓர் உப தொழிலாக நமது நாட்டில் பரவிவிடுமானால், ஏராளமான பொருள் நமது நாட்டிலேயே தங்கிவிடும். கைராட்டினந்தான் ஆசிரமத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதென்பதை நான் சொல்லத் தேவை யில்லை. காந்தியடிகள், சிறையிலிருந்த போழ்து, ஒழிந்த நேரங்களில் கண்டுபிடித்த ஒரு சிறு கைராட்டினத்தை எனக்குக் கொண்டு வந்து காட்டினார்கள். இதனை நீங்கள் ஒரு சிறு கைப் பெட்டியில்கூட வைத்துக் கொண்டு போகலாம். ரெயிலில் பிரயாணஞ் செய்து கொண்டிருக்கிற போது, அவகாச நேரங்களில் இதனைச் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்றார் ஒருவர். மேலும் அவர் கூறியதாவது:- காந்தியடிகள் ஒரு விஞ்ஞான சாதிரி. அவருக்கு நிறையப்பொறுமை இருப்பதால், அவர் எதைக் கண்டுபிடித்தாலும் அதை வெற்றி கரமாகவே கொண்டு முடிக்கிறார். கடிகாரத்தொழிலில் அவர் ஈடுபடு வாரானால், உலகத்திலேயே சிறந்த கடிகாரத்தை அவர் செய்யக்கூடும். அதே மாதிரி ரணவைத்தியராகவோ, அல்லது நியாயவாதியாகவோ அவர் இருந்திருப்பாரானால், அந்தத் தொழில்களிலும் அவர் வெற்றியடைந் திருப்பார். ஆனால், 1922ம் வருஷம் நடைபெற்ற வழக்கில், அவர் தம்மை விவசாயி என்றும் நெசவுத் தொழிலாளர் என்றும் சொல்லி, கையினால் செய்யப்படுகிற ஒரு வேலைக்குப் புனிதத் தன்மையை உண்டாக்கினார். கைத் தொழில்களில், நெசவுத் தொழிலுக்கே அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். ஏனென்றால், அது பொருளாதார சம்பந்தமாக நல்ல பலனை அளிப்பது ஒருபுறமிருந்தாலும், நிர்ணய புத்தியும், மனோ பரிபக்குவமும் அந்தத் தொழிலின் மூலம் மனிதனுக்கு ஏற்படுகிற தென்று அவர் கருதுகிறார். பொருள்கள் வீணாக்கப்படுவதை காந்தியடிகள் வெறுக்கிறார். கையினால் செய்யப்படுகிற தொழில்களின் மூலமாகத் தான் இந்தியாவுக்குப் புது வாழ்வு ஏற்படுமென்று அவர் நம்புவதால், சர்க்காவையே தமது சொந்த சின்னமாகக் கொள்கிறார். இந்தச் சின்னத்தின் கீழ் இருந்துகொண்டு, சுதந்திர வாழ்க்கையை நடத்துமாறு அவர் தமது ஜனங்களுக்குக் கூறுகிறார். காந்தியடிகளின் இயக்கம், பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு விரோதமாக ஏற்பட்ட ஒரு புரட்சியாகத் தென்பட்ட போதிலும், உண்மையில், அந்த இயக்கத்திலுள்ள கிரியா சக்தி, மனித வாழ்க்கையானது மண்ணோடு ஒட்டியிருக்கிற தென்ற விஷயம் முதலியனவெல்லாம் உலகத்திற்குக் கற்பிக்கப்படுகிற ஒரு சிறந்த பாடமாகும். தூரத்திலுள்ள ஒரு லட்சியத்தை உத்தேசித்துத் தடவிக் கொண்டு செல்வதைக் காட்டிலும், தம்மைச் சுற்றியுள்ளவர் களுக்குச் சேவை செய்வது சிறந்தது என்ற கொள்கை - அதாவது சுதேசியம் - இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கும் எல்லாக் காலத்திற்கும் பொதுவானதுதான். ஏழைகளுக்குத் தொண்டு செய்து, அவர்களோடு ஐக்கியப்பட்டு விடுவது என்பவைகளைத் தவிர வேறு சிறந்த கடவுள் தொண்டு இருப்பதாகக் காந்தியடிகள் கருதவில்லை. அவர், ரெயிலில் மூன்றாவது வகுப்பில்தான் பிரயாணஞ் செய்கிறார். ஏனென்றால், மனிதத் தன்மையும் அன்பும் யாரிடத்தில் அதிகமாயிருக்கிறதோ அப்படிப் பட்ட சமுதாயத்தின் கீழ்ப்படியிலுள்ளவர்களோடு தம்மை ஒன்று படுத்திக் கொள்ள வேண்டுமென்பது அவர் எண்ணம். உழைத்துப் பிழைக்கிற ஜனங்களுடன், தமது வாழ்நாளின் பெரும்பாகத்தைக் கழித்து விட்டவராதலால் அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கப்பட்டவராதலால், காந்தியடிகள் இந்த கைராட்டினமே, தம்முடைய தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய, திருப்தி கொள்ளக் கூடிய ஒரு வாழ்க்கையை நடத்துவதற்கு உறுதுணை யாயிருக்கிறதென்று கூறுகிறார். நான், ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டு பம்பாய்க்கு ரெயிலில் போய்க் கொண்டிருந்தபோது, அடிக்கடி காந்தியடிகளின் திருவுருவம் என் மனக் கண் முன்னர் வந்து நின்றது. ஒரு சமயம் சுயேச்சையாக வறுமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளுதல் என்ற அவருடைய கட்டுரையொன்றைப் படிக்கும் படியான பாக்கியம் எனக்குக் கிட்டியது. அதில், அவர், தம்முடையன வல்லவென்று துறந்து விட்ட பிறகு, தமக்கேற்பட்ட மகிழ்ச்சியைப் பற்றி விதரித்திருக்கிறார். இந்தியாவில் எவனொருவன் தன் தேவைக்கதிகமான பொருள்களை வைத்துக் கொண்டு வாழ்கிறானோ அவன் ஒரு கொள்ளைக்காரன் என்பது காந்தியடிகளின் கருத்து. உடம்பின் மீது ஒரு துணியுமில்லா மல் திறந்த வெளியில் தூங்குகிறவனைப் போல் நீ வாழ்க்கையை நடத்தினாலன்றி, இந்தியாவையும் இந்தியர்களையும் காப்பாற்றப் போகிறேனென்று சொல்ல உனக்கு உரிமை கிடையாது. காந்தியடிகள், எவ்வளவு தேவையோ அவ்வளவு துணியைத்தான் உபயோகிக்கிறார் என்று எனக்குச் சொன்னார்கள். எனவே காந்தியடிகள் ஒரு துறவியா யிருப்பதில் ஆச்சரியமில்லை. ஆத்ம பரிசுத்தத்திற்குச் சோபானமாக, ஐம்புலன்களையும் அடக்கியாள்வதென்பது இந்தத் துறவினாலேயே சாத்தியமாகும். காணாத ஒரு வெற்றியையடைய ஒரு போர் வீரன் அதோ, மோட்சலோகத்திற்கருகாமையில் யுத்த களத்தில் நிற்கிறான். நரகத்தின் கடைசி எல்லையிலும் எதிரொலி கொடுக்கும்படியாக அவன் சங்கநாதம் செய்கிறான். அவன் ஒரு தனி வீரன். எதிர்காலத்தை அறை கூவி அழைக்கிறான். நைந்து, மெலிந்து போயிருக்கிற அவன் சரீரத்தில் மகத்தானதோர் ஆத்மா குடிகொண்டிருக்கிறது. அதைக் கண்டு உலகமே அச்சத்தினால் ஆடுகிறது. அசுத்தமாக்கப்பட்டும் புறக் கணிக்கப்பட்டு முள்ள அன்பானது, சிதறி வீழ்ந்து போயிருக்கிற மானிட சுதந்திரமானது, கௌரவமும் மதிப்பும் இழந்துபோன உழைப்புச் சக்தியானது. இந்த மனிதன் மூலம், கொடுங் கோன்மைக்கு விரோதமாக முழக்கஞ் செய்கின்றன. கடவுளின் நியாயத்திற்கு நாம் வந்தனை செய்வோமாக! பூமாதேவியோடு சேர்ந்து பாடுகிற கருணை நிறைந்த பாடகன் இவன். இவனைப்போன்ற தேசாபிமானி வேறு யார் இருக்கிறார்? சுகபோகங் களைத் துறந்துவிட்டு, சத்தியத்தை நாடிச்செல்கிறவன் இவன். இவனைப் போல், தீர்க்கதரிசி வேறு யார்? பசி, துயரம் என்ற முடிவில்லாப் பாதையில் செல்லும் யாத்ரிகன் இவன். * * * காந்தி - பல அமிசங்களில் பி. பட்டாபி சீதாராமய்யா பி.ஏ., எம்.பி.சி.எம். (மசூலிப்பட்டணம், இந்தியா) 1. காந்தி அவதார புருஷர் இந்திரிய சுகங்களைக் கருதாதவனும், சௌக்கியம், புகழ், அந்தது முதலியவற்றைப் புறக்கணிக்கிறவனும், ஆனால் தனக்குச் சரியென்று பட்டால் அதன்படி நடக்கத் தீர்மானித்து விட்டவனு மான மனிதனிடத்தில் ஜாக்கிரதையாக நடந்துகொள். ஏனென்றால் அவன் ஓர் ஆபத்தான மனிதன்; உன்னால் சமாளிக்க முடியாத ஒரு சத்துரு. அவன் தேகத்தை நீ வெற்றி கொண்டு விடலாம். ஆனால் அவன் ஆத்மாவை நீ விலை கொடுத்து வாங்கவே முடியாது. - கில்பர்ட் முர்ரே உலகம், ஒவ்வொரு காலத்திலும் மகான்களை உற்பத்தி செய்திருக்கிறது. ஒவ்வொரு ஜாதியிலும் சாதுக்கள், தியாகிகள், வீரர்கள், கவிஞர்கள், யுத்த களத்தில் புகழ் படைத்தவர்கள், ராஜ தந்திரிகள் இப்படியாகப் பலர் தோன்றியிருக்கிறார்கள் இந்தியாவில் நாம் மகான்களை அவதாரபுருஷர்களென்று அழைக்கிறோம். துஷ்டர் களை நிக்ரஹம் செய்து சிஷ்டர்களைப் பரிபாலிக்கும் பொருட்டு தெய்வாமிசத்துடன் மேலேயிருந்து கீழே இறங்குகிறவர் களை இப்படி நாம் அழைக்கிறோம் இப்பொழுது நம்மிடையே காந்தியடிகள் ஓர் அவதார புருஷராக விளங்குகிறார். அவர், அன்றாட உலக வாழ்க்கையில் அஹிம்ஸையை அநுஷ்டானபூர்வமாகக் கொண்டு வந்து காட்டியிருக்கிறார். 2. காந்தி - திதப் பிரக்ஞர் காந்தியடிகளுடைய அபிப்பிராயத்தில் சுயராஜ்யமென்று சொன்னால், அது வெள்ளையர்களடங்கிய அதிகார வர்க்கத்தை அப்புறப் படுத்தி விட்டு அந்த தானத்தில், பழுப்பர்கள் (அதாவது இந்தியர்கள்) அடங்கிய ஓர் அதிகார வர்க்கத்தை தாபிப்பதல்ல. அது வாழ்க்கையையே திருப்பி அமைப்பதாகும். இந்தியாவை மீண்டும் வெற்றி கொள்வதாகும். மாகாணங்களென்றும், சுதேச சமதானங்களென்றும் பிரதேசவாரியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை யும் ஹிந்துக்களென்றும், முஸல்மான்களென்றும், கிறிதவர் களென்றும் வகுப்புவாரியாகப் பிரிக்கப் பட்டிருப்பதையும், கிராம வாசிகளென்றும் நகரவாசிகளென்றும் தொழில் வாரியாகப் பிரிக்கப் பட்டிருப்பதையும், மாகாண அரசாங்க நிருவாகத்திற்குட் பட்ட பிரதேசங் களென்றும், புறம்பான பிரதேசங்களென்றும் மூலைக்கொன்றாகப் பிரிக்கப்பட்டிருப்பதையும் ஒன்றுசேர்க்க வேண்டுமென்பதுதான் அவர் எடுத்துக்கொண்டுள்ள பிரச்னை. அவர் எடுத்துக்கொண்டுள்ள மற்றொரு வேலை என்னவென்றால், தேசத்தின் கலாசாரத்தை மீண்டும் தாபிதம் செய்ய வேண்டு மென்பது. நவீன நாகரிகத்திலிருந்து என்னென்ன அமிசங்களை எடுத்துக்கொள்ளலாமோ அவற்றையெல்லாம் எடுத்து நமது கலாசாரத்தில் புகுத்த வேண்டுமென்று அவர் கருதுகிறார். மனித வாழ்க்கையின் லட்சியம், சேவையென்ற கொள்கையைப் புதுப்பிக்க வேண்டும்; தற்கால நாகரிகத்திலிருந்து உண்டாயிருக்கும் சுயநல எண்ணத்தை ஒழித்துவிட்டு, அதன் இடத்தில் ஏழைகளுக் கிரங்க வேண்டுமென்ற எண்ணத்தைப் புகுத்தவேண்டும்; உயர்ந்த செல்வத் தினாலும் தாழ்ந்த வறுமையினாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற சமுதாயத்தில், கீழானவர்களை மேலுக்குத் தூக்கிவிட வேண்டும்; ஒரு சிலருடைய வாழ்க்கை அந்ததை மட்டும் உயர்த்திக் கொடாமல், எல்லோருக்கும் போதுமான அளவு, உணவு, உடை முதலியன கிடைக்குமாறு செய்யவேண்டும். இவையெல்லாம் அவருடைய நோக்கங்கள். இந்த நோக்கங்களுக்காக அவர் தமது வாழ்க்கையையே ஒரு சேர்மானமாகச் செய்துகொண்டிருக்கிறார். ஹிந்து தர்மத்தின் நான்கு வர்ணங்களும் நான்கு ஆசிரமங்களும் அவரிடத்தில் ஒன்று பட்டிருக்கின்றன. அவர், தரும நீதிகளை வகுத்துக் கொடுப்பதிலே ஒரு பிராமணராகவும், இந்தியாவின் பாதுகாப்பாளர் என்ற முறையில் க்ஷத்திரியராகவும், தேசத்தின் செல்வத்தைத்திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதிலே வைசியராகவும், ஜனங்களுக்கு உணவும் உடையும் உற்பத்தி செய்வதிலே சூத்திரராகவும் இருக்கிறார். (1922ம் வருஷத்து) பிரபல வழக்கில் அவர் தம்மை ஒரு விவசாயி என்றும் நெசவுத் தொழிலாளி யென்றும் சொல்லிக்கொண்டார். தவிர, அவர் ஒரு கிரகதராயிருந்தபோதிலும், ப்ரஹ்மசரிய விரதத்தை அநுஷ்டிப் பதினாலே ப்ரஹ்மசாரியாகவும், தமது தரும பத்தினியோடு சேர்ந்து கொண்டு மானிட சமுதாயத்திற்குத் தொண்டு செய்வதனாலே வானப் பிரதராகவும், மானிட சமூகத்தின் நலனுக்காகத் தமது எல்லா வற்றையும் கொடுத்து விட்டதனாலே உண்மையான சந்நியாசியாகவும் அவர் விளங்குகிறார். இவ்வளவெல்லாமிருந்தும் அவர் அமானுஷ் யரல்லர்; தம்மிடத்தில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக அவர் சொல்லிக் கொள்வதுமில்லை. அவர் ஒரு வியாபாரியாகவும், ஞானத்தை நகைச்சுவையின் மூலமாகப் புகட்டும் விகட கவியாகவும் இருக்கிறார். அவர் குழந்தைகள் மத்தியிலே குழந்தை; வயதானவர்கள் மத்தியில் ஒரு சந்தோஷகரமான நல்ல மனிதர்; மானிட சமுதாயத்தின் மத்தியில் ஒரு சாது அல்லது ஞானி; எல்லாருக்கும் வழிகாட்டி; போதகர்; நண்பர். பிரகாசமான அவர் வதனத்திலே ஒளி கொடுக்கும் இரண்டு கண்கள் இருக்கின்றன. தமது இருதயத்தையே வெளிக்குக் கொணர்ந்து காட்டுவது போல் அவர் சிரிக்கிறார். அவர் எதிலும் பட்டவர்த்தனமாக இருக்கிறவர். ஒருவரைப் பற்றி மற்றொருவர் குற்றஞ் சாட்டினால் அதை அவர் அப்படியே காது கொடுத்துக் கேட்பதில்லை. குற்றஞ் சுமத்தினவர்கள் முன்னிலை யிலேயே அவர் குற்றவாளியை விசாரிக்கிறார். நீங்கள் சொல்கிற காரணங்களை அவர் ஏற்றுக் கொள்கிறார்; உங்கள் வார்த்தைகளை உண்மையென்று நம்புகிறார். அவர் நுட்பமாகப் பேசுகிறார். தாம் விதிக்கிற நிபந்தனைகள், தமது கொள்கைகள் முதலிய வற்றை அநுசரித்தே தமது அறிக்கைகளுக்குப் பொருள் கொள்ள வேண்டு மென்று அவர் எதிர் பார்க்கிறார். ஆனால் ஜனங்களிற் பெரும் பாலோர், அவர் கூறும் நிபந்தனைகளை மறந்துவிட்டு, பின் சொன்ன கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். இதனால், பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாமல், பலன்களை மட்டும் எதிர்பார்க் கிறார்கள். அவருடைய எழுத்து நடையே தனிப்பட்ட தோரணையுடையது; விஷயப் பொருத்தமுடையதாகவும் ஆனால் எதிரியைத் தாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர், உபநிஷதத்திலே கூறப்பட்டிருக்கிற பூரண புருஷர். அவரைத் தெரிந்து கொள்வது ஒரு பெருமை. அவரோடு சேர்ந்து வேலை செய்வது ஒரு பாக்கியம். அவர், பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிற தித பிரக்ஞர் - அதாவது திர புத்தியுடையவர். அவர், தன்னடக்கத்தினாலும், துறவினாலும், தம்மீதும் வெற்றி காண்கிறார்; உலகத்தையும் வெற்றி கொண்டவராகிறார். 3. இருவகை வேலைத் திட்டம் சத்தியாக்கிரகி என்ற முறையில் காந்தியடிகள் தோல்வியை யறியாதவர். தேசமானது, எதிரியைத் தாக்கிச் சலித்துப் போயிருக்கு மானால், நிர்மாண வேலைகளை நிறைவேற்றும்படி அது கூறப்படு கிறது. ஒரு தொழிற்சாலையில், யந்திரத்தோடு பூட்டப்பட்டிருக்கும் ஒரு தோல்பட்டையானது எப்படி வேகமாகச் சுழன்று கொண்டிருப்ப தினின்று திடீரென்று நிறுத்தப்பட்டுத் தளர்த்திவிடப்படுகிறதோ அது போல, காந்தியடிகளும் தமது போராட்டத்தைத் திடீரென்று நிறுத்தி, அந்தப் போராட்டச் சக்திகளை நிர்மாண வேலைகளுக்காக உப யோகிக்கிறார். அதே வேகத்துடன் மறுபடியும் சட்ட மறுப்பி யக்கத்தைத் தொடங்குகிறார். அது புயற்காற்று மாதிரி அல்லது சமுத்திர அலை மாதிரி பரவுகிறது. அவருடைய போர் முறைகள் எத்தகையன வென்பதை உலகம் நன்கறிந்து கொண்டிருக்கிறது. பொதுஜன சட்டமறுப்பியக்கம் எப்படியிருக்குமென்பது அவருக்கே தெரியா மலிருந்தது. ஆனால் அது சாத்வீகமாக மட்டும் இருக்கு மென்பது அவருக்குத் தெரியும். அவருடைய இயக்கங்களில் எப் பொழுதுமே ஆத்மார்த்தமான தொடர்பு இருக்கிறது. மேற்பார்வைக்கு இது சாதாரண விஷயமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இதன் பலன் நீடித்த தாயிருக்கிறது. அமிருதசர (பஞ்சாப்) படுகொலைக்கு அரசாங்கத்தார் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அவர் சொல் கிறார். கிலாபத் அநீதியென்பது, வெகு தூரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமானாலும், அதன் பயனிலும் செல்வாக்கிலும் சமீபித்ததாகவே இருக்கிறது. உப்பு வரி யென்பது சிறிய தொகை தான். ஆனால் அது பாவமான வருமானமல்லவா? காந்தியடிகள், தோல்வியடைந்து விட்டாரென்று உலகம் கருதுகிற சமயத்தில், அவர் ஒரு வாக்கியத்தில் அதனை வெற்றியாக மாற்றிவிடுகிறார். காந்தியடிகளின் நிர்மாண திட்டத்திற்குத் தேசத்தில் போதிய ஆதரவு ஏற்படவில்லை. அவருடைய கதர்த் திட்டம், ஏழைகளின் துன்பத்தைப் பரிகரிக்கும் அருமருந்து; கடன் சுமையினாலும் வரிச் சுமையினாலும் இறுக்கப்பட்டிருக்கிற குடியானவனுக்கு ஊன்றுகோல் போன்று உதவுகிற ஓர் உபதொழில். யந்திரத் தொழி லென்பது சரியான வேலைக்காரன்; ஆனால் கெட்ட எஜமானன். அதற்கெதிரிடையாகக் கதர் நிற்கிறது. இந்தியாவின் கிரியா சக்திச் சின்னமாகவும், இந்தியத் தொழிலாளர்களுடைய சுதந்திர உணர்ச்சியின் பிரதி பிம்பமாகவும் தூய்மை, குடும்ப ஒற்றுமை இவற்றின் அடையாள மாகவும் கதர் விளங்குகிறது. இந்திய தேசீயப் போர்வீரனுடைய உடை கதர். இந்திய தேசீய விடுதலையின் சின்னம் கதர். காந்தியடிகள், கதர்த்திட்டம் ஊர்ஜிதம் பெறுவதற்காக ஐந்து வருஷம் வேலை செய்திருக்கிறார். இதன் மூலமாக மற்றக் கிராமக் கைத்தொழில்கள் புணருத்தாரண மடைய வேண்டுமென்பது அவர் நோக்கம். காந்தியடிகளின் நிர்மாணத் திட்டம் மூன்று வகைப்பட்டது. அவருடைய கதர்த் திட்டம் பொருளாதார சம்பந்தமுடையது; தீண்டாமைத் திட்டம் சமுதாயத் தொடர்புடையது; மதுவிலக்குத் திட்டம் ஒழுக்கத்தின் பாற்பட்டது. முதல் திட்டத்தை நிறைவேற்றி வைத்த பிறகு இரண்டாவதாகிய தீண்டாமைத் திட்டத்தை எடுத்துக் கொண்டார். இது சம்பந்தமாக 1932ம் வருஷம் செப்டம்பர் மாதம் அவர் உண்ணாவிரதம் இருந்த விஷயம் உலக சரித்திரத்தில் பிரசித்த மானதாகும். மூன்றாவதாகிய மதுவிலக்குச் சட்டத்தை, மாகாணப் பொறுப்பாட்சியின் கீழ் மந்திரிமார்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் காந்தியடிகள், தமது சகாக்கள் இந்த மதுவிலக்குத்திட்ட நிறைவேற்ற விஷயத்தில் மெது வாகச் சென்றுகொண்டிருப்பதுபற்றித் தமது வருத்தத்தைத் தெரி வித்தார். ஏனென்றால், இந்தியாவிலிருந்து மதுபான வழக்கத்தை மூன்றரை வருஷத்திற்குள் அகற்றிவிட வேண்டுமென்று அவர் ஓர் எல்லை வகுத்திருக்கிறார். காந்தியடிகளின் நான்காவது திட்டம் தேசீய முறையில் கல்வியைக் கற்பிப்பது. இதற்காக ஒரு திட்டம் தயாரிக்கப் பட்டு - வார்தா திட்டம் - அதனை நடைமுறையில் கொணர ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் கல்வியானது தேசத்தின் வாழ்க்கையோடு ஒட்டியதாயிருக்கவேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படையான நோக்கம். நிறை வேற்றப்படவேண்டிய சீர்திருத்தம் ஒன்று இன்னும் பாக்கி இருக்கிறது. அதுதான் சமூக ஒற்றுமை; சிறப்பாக ஹிந்து - முலீம் ஒற்றுமை. இரண்டு சமூகத்தினருடைய நல்லெண்ணத்தினால் இந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டும். இங்ஙனம் தேசத்தின் கவனமும், உழைப்பும், யுத்த சந்நாகத்திலேயோ யுத்தத்திலேயோ ஈடுபட்டிருக்கிறபோது வெற்றி என்றும், தோல்வி என்றும் சொல்லுவதற்கு இடமில்லையல்லவா? காந்தியடிகளின் அபிப்பிராயப்படி பிரிட்டனோடு செய்கிற சண்டை தர்ம ரீதியானது. ஏனென்றால் பிரிட்டிஷார் தங்கள் அதிகாரக் கோயிலைச் சுற்றி எழுப்பி இருக்கும் ஏழு பிராகாரங் களும் தர்மத்தின் (அல்லது அதர்மத்தின்) பாற்பட்டவை. உத்தி யோகவர்க்கம், சட்ட சபைகள், நீதி தலங்கள், கல்லூரிகள், தல தாபனங்கள், வியாபாரம், பட்டதாரிகள் ஆகிய இந்த ஏழு சுவர்களையும் ஒன்றன்பின்னொன்றாக, கடைசியில் எல்லாவற்றை யும் அழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் காந்தியடி களின் ஒத்துழையா இயக்கம் தொடங்கப் பெற்றது. இந்தத்திட்டத் தின் ஓர் அமிசந்தான் சட்டசபை, நீதி தல கல்லூரி பகிஷ்காரம். ஒரு சமயம் உத்தியோகவர்க்கத்தினரும், ராணுவத்தில் உள்ளோரும் கூடத் தங்கள் வேலையை விட்டு விடும்படி சொல்லப்பட்டது. இந்த மாதிரியாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் மீதிருந்த மோகம் அகற்றப்பட்டது. அதன் உறுதி குலைக்கப்பட்டது. 4. காந்தியும் சத்தியாக்கிரகமும் பலாத்காரமும் யுத்தமும் நிறைந்திருக்கிற இந்த யுகத்தில் சத்தியாக்கிரகம் என்பது ஒரு புதுமையாகவே இருக்கிறது. ஜனங்கள் இதனை அறிந்து கொள்கிறார்களில்லை; நம்புகிறார்களில்லை; பார்க்கிறார் களுமில்லை. தென்னாப்பிரிக்காவில் இந்தச் சத்தியாக் கிரகப் போராட்டம் நடைபெற்றதை எடுத்துச் சொன்னால் சிறிய அளவில் தான் இந்த இயக்கத்தை நடத்தலாமே தவிர, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய தேசத்தில் இதனை நடத்த முடியாதென்று சொல்லித் தள்ளி விட்டார்கள். சாம்பரான், கெய்ரா, போர்ஸாத் முதலிய இடங்களில் நடைபெற்ற இயக்கங்களும் இப்படியே ஒதுக்கித் தள்ளப்பட்டன. ஆனால், இப்பொழுதோ எல்லாச் சந் தேகங்களும், எல்லாக் கஷ்டங் களும் மறைந்து போயின. இன்றைய பிரச்னை என்னவென்றால், சத்தியம் அஹிம்ஸை என்ற எல்லைக் குள் சத்தியாக்கிரகத்தை இருத்தி வைக்க வேண்டுமென்பது தான். சத்தியமும், அஹிம்ஸையும் சும்மா இருக்கிற சக்திகளல்ல; சதா சலித்துக் கொண்டேயிருக்கின்றவை. எதிரிகளின் மனதைக் குழப்பி யும் அதனால் அவர்கள் மனதை மாற்றியும் உங்கள் கட்சிக்கு அவர் களை இழுததுக் கொள்வதன் மூலம் அவர்கள் மீது நீங்கள் வெற்றி கொள்கிறீர்கள்; சத்தியாக்கிரகிகள் என்ற முறையில் நீங்கள் ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்படுகிறீர்கள்; உங்களுடைய மனமும் உணர்ச்சி களும் வேலை செய்கின்றன; தைரியம், தியாகம், பொறுமை முதலியன உங்களுக்குண்டாகின்றன; அதிகமான மூலபலம் இன்றி பெருவாரியான முறையில் நீங்கள் எதிர்க்கிறீர்கள். இப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்டது சத்தியாக்கிரகம். இதனால் இஃது எதிர்க்க முடியாத சக்தியுடையது. இதன் மூலமாக நாம் அடைந் திருக்கும் அநுபவங்களைக் கொண்டு இஃது எத்தகைய நல்ல பலனை அளிக்கக் கூடியதென்பது நன்கு புலனாகும். சத்தியத்தைப் பற்றியும், அஹிம்ஸையைப் பற்றியும், காந்தியடி கள் என்ன கொள்கையுடையவராயிருக்கிறார் என்பதை ஒரு சிலரே அறிவர். சத்தியமும் அஹிம்ஸையும் எதிர் மறைப்பொருளும் உடன் பாட்டுப் பொருளுமான இரண்டு கூறுகள் உடையன. ஒரு சமயம், சாம்பரான் ஜில்லா கலெக்டர் காந்தியடிகளுக்குக் கடுமையான பாஷையில் ஒரு கடிதம் எழுதினார். பின்னர் அவர், தமது தவறை உணர்ந்து அந்தக் கடிதத்தை வாப வாங்கிக் கொண்டு விடுவதாகவும் அதனைத் திருப்பி அனுப்பிவிட வேண்டுமென்றும் காந்தியடிகளைக் கேட்டுக் கொண்டார். இதற்குப்பிறகு காந்தியடிகளின் சிஷ்யர்களிற் சிலர் இதே மாதிரி செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், அதே சமயம் வாப வாங்கிக் கொள்ளப்பட்ட கடிதத்தின் நகல் ஒன்று எடுத்து வைத்துக் கொண்டார்கள். இதைக் காந்தியடிகள் கண்டித்தார். வாப வாங்கிக் கொள்ளப்பட்ட ஒரு கடிதத்தின் நகல் உங்களிட மிருக்குமானால், அந்தக் கடிதம் வாப வாங்கிக் கொள்ளப்பட்டதாக எப்படி ஆகும்? இது சத்தியத்திற்குக் கொடுக்கப்படுகிற ஒரு புது வியாக்கியானம். இதே மாதிரி காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்படுகிற காலத்தில், இந்திய அரசாங்கத்தின் உள் நாட்டுக்காரியதரிசியாக இருந்த ஸ்ரீ எமர்ஸன் என்பவர், காந்தியடிகளுக்குத் தூஷணையாக ஒரு கடிதம் எழுதி இருந்தார். பின்னர் அவரே அந்தக் கடிதத்தை வாப வாங்கிக் கொண்டு விட்டார். இப்பொழுது இந்தக் கடிதத்தின் நகலை காங்கிர ததாவேஜு களில் காண முடியாது. அதற்குக் காரணம் இதுதான். வாப வாங்கிக் கொள்ளப்பட்ட ஒரு கடிதத்திற்கு நீங்கள் நகல் எடுத்து வைத்திருக் கிறீர்கள் என்று சொன்னால் அந்தக் கடிதத்தின் வாசகங்களை உங்கள் ததாவேஜுகளில் மட்டுமல்ல, உங்கள் இருதயத் திலும் பதியவைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம். இது சத்தியத்திற்கும் அஹிம்ஸைக்கும் விரோதம். மறைமுகமாகத் தூண்டப்படுகிற பலாத்காரத்தைக்கூட காந்தியடிகள் சகிக்கிறாரில்லை. 1921-ம் வருஷம் அலி சகோதரர்கள் நிகழ்த்திய சில பிரசங்கங்கள் பலாத்காரத்தைத் தூண்டுவனவாயிருக் கின்றனவென்று காந்தியடிகள் மனதில் பட்டதும் , அவர், மேற்படி அலி சகோதரர்களைக்கொண்டு தங்களுக்கு எவ்வித பலாத்கார எண்ணமும் இல்லையென்று சொல்லி ஓர் அறிக்கையை வெளியிடும் படி செய்தார். ஆனால் அதே அலி சகோதரர்கள் 1921ம் வருஷம் அக்டோபர் மாதம் கராச்சியில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவுக்காகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். காந்தியடிகள் இந்தப் பிரசங்கத்தின் வாசகத்தை திருச்சியில் அப்படியே திருப்பிச் சொன்னார்; ஆயிரக்கணக்கான மேடைகளிலிருந்து சொல்லும்படி செய்தார். அவர் செய்வதெல்லாம் ஒரு பரிசோதனைதான். அதாவது பேச்சு முழுவதிலும் அஹிம்ஸை உணர்ச்சி பரவி இருக்கிறதா இல்லையா என்பதுதான் அவர் கையாள்கிற பரிசோதனைமுறை. அஹிம்ஸை யைப்பற்றி அவர் இந்த மாதிரியான அபிப்பிராயங் கொண்டிருப்ப தனால்தான் சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், 1921ம் வருஷம் நவம்பர் மாதம் பிரிட்டிஷ் அரசிளங்குமரர் விஜயம் செய்த போது 53 பேர் இறந்து போனதையும் 400 பேர் காயமடைந்ததையும் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார். இதற்குப் பிராயச்சித்தமாக ஐந்து நாட்கள் உபவாஸமிருந்தார். இதற்குப் பின்னர் இருபத்தோரு நாட்கள் என்றும், இருபத்தெட்டு நாட்கள் என்றும், சாகும் வரை என்றும் அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். காந்தியடிகள் ஒத்துழைக்க வேண்டுமென்பதற்காகத்தான் ஒத்துழையாமை தொடங்குகிறார். ஆனால் தமது மூலாதாரக் கொள்கைகளாகிற சத்தியத்தையும் அஹிம்ஸையையும் அவர் எப் பொழுதுமே விட்டுக் கொடுத்தது கிடையாது. 1-2-1922 தேதியிட்டு லார்ட் ரெடிங்குக்கு எழுதிய கடிதத்திலிருந்தே இது புலனாகும். அதில் ஒரு பாகம் வருமாறு:- பார்தோலி வாசிகள் பொதுஜன சட்ட மறுப்பியக்கத்தைத் தொடங்குவதற்கு முன்னர், தாங்கள், இந்தியா அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் தங்கள் கொள்கையைத் திருத்திக்கொள்ள வேண்டுமென்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தவிர கிலாபத்துக்காகவோ, பஞ்சாப் அநீதிக்காகவோ, சுயராஜ்யத்திற் காகவோ அஹிம்ஸை முறையில் வேலை செய்ததற்காகத் தண்டனை அடைந்திருக்கிறவர்களும், விசாரணையிலிருக்கிறவர்களுமான ஒத்துழையாதாரை விடுதலை செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொள் கிறேன். பத்திரிகைகளை நிருவாக ஆதிக்கத்தினின்றும் விடுதலை செய்து அவைகள் செலுத்தியிருக்கும் அபராதத் தொகையையும், பறிமுதல் தொகையையும் திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நாகரிக அரசாங்கத்தின்கீழ் இருப்பதாகச் சொல்லப்படும் எந்த நாட்டிலும் செய்யப்படுகிற ஒரு காரியத்தையே தாங்களும் செய்யவேண்டுமென்று சொல்கிறேன். இந்த அறிக்கை வெளியான ஏழு நாட்களுக்குள் தாங்கள் இது சம்பந்தமாக ஒரு தாக்கீது பிறப்பிப்பீர்களாயின் அந்தத் தாக்கீதுப்படி விடுதலை யடைந்த தொண்டர்கள் தேசத்தின் தற்போதைய நிலைமையை புதிய திருஷ்டி கொண்டு பரிசீலனைசெய்து பார்க்கிறவரையில் சட்ட மறுப்பியக்கத்தை நிறுத்தி வைத்திருக்குமாறு எனது சகாக்களுக்கு ஆலோசனை கூறுவேன். 5. சில முரண்பாடுகள் காந்தியடிகளின் சித்தாந்தங்கள் அநுபவசாத்தியமானவை யல்லவென்று மிதவாதிகள் கூறுகிறார்கள். அவருடைய திட்டங்கள் தீவிரப்போக்குடையனவாக இல்லையென்று தீவிரவாதிகள் சொல்கி றார்கள். இருசாராரும் அவரிடத்தில் பல முரண்பாடுகள் இருப்ப தாகச் சாற்றுகிறார்கள். ஆனால், அவரோ இந்த மதிப்பு அவமதிப்பு இவைகளுக்கு மத்தியில் தம்மீது வந்து விழுகிற புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் பொருட்படுத்தாமல் கற்பாறை போல் உறுதியாக நிற்கிறார். அவர், தமது வாழ்க்கையின் வழிகாட்டியாக பகவத்கீதையி லுள்ள கீழ்க்கண்ட சுலோகத்தையே கொண்டிருக்கிறார்:- இன்பம், துன்பம்; இழவு பேறு; வெற்றி, தோல்வி; இவற்றை நிகரெனக் கொண்டு நீ, போர்க் கொருப்படுக. இவ்வண்ணம்புரிந்தால் பாவமெய்தாய். - 2 அத்: 38வது சுலோகம். 1896ம் வருஷம் காந்தியடிகள் புனாவுக்குச் சென்று, திலகரிடமும், கோகலேயிடமும், அரசியலின் ஆரம்ப பாடங்களைக் கற்றுக் கொண்டார். திலகர், இமயமலை போல் உயரமாகவும், ஆனால் எளிதில் அணுக முடியாதவராகவும் அவருக்குப் பட்டார். கோகலேயோ, கங்கா நதியைப் போல் இருப்பதாகவும் அதில் தாம் சுலபமாக நானம் செய்ய முடியுமென்றும் அவர் கருதினார். இப்பொழுது, இந்த 1939ம் வருஷத்தில், காந்தியடிகள் உயரமுள்ள இமயமலையாகவும், ஆழமும் பரிசுத்தமும் உள்ள கங்கா நதியாகவும் விளங்குகிறார். ஒரு காலத்தில் சத்தியாக்கிரகம் என்பது சாத்வீக எதிர்ப்பு என்று அழைக்கப்பட்டு வந்தது. அஃது இன்ன தென்று பலருக்குப் புரியாமலே இருந்தது. ஆனால், 1909ம் வருஷம் கோகலே அஃதின்ன தென்று பின் வருமாறு வகுத்துக் காட்டியிருக்கிறார்:- சத்தியாக்கிரகம் என்பது சுபாவத்திலேயே தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளும் தன்மையது. அஃது ஆத்மார்த்தமான ஆயுதங்களைக் கொண்டே போர் புரிகிறது. ஒரு சத்தியாக்கிரகி துன்பத்தைத்தானே வலிய ஏற்றுக் கொண்டு அநுபவிப்பதன் மூலம் கொடுங்கோன்மையை எதிர்க் கிறான். மிருக பலத்திற்கு முன்னே ஆத்ம பலம் , மனிதனிடத்திலே யுள்ள மிருகத் தன்மை முன்னர், மனிதனிடத்திலேயுள்ள தெய்வத் தன்மை; அடக்கு முறைக்கு எதிரே சகிப்புத்தன்மை; தேக பலத்திற்கு முன்னர் மனச்சாட்சி; அநீதிக்கு முன்னர் நம்பிக்கை; தீமைக்கு முன்னர் நன்மை; இப்படியாக ஒன்றுக்கெதிரே மற்றொன்றைக் கொண்டு வந்து நிறுத்துகிறான். 1939ம் வருஷத்தில், சத்தியாக்கிரகம் என்பது எல்லோரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு வார்த்தையாகிவிட்டது. ஒடுக்கப் பட்ட பிரஜைகள் அநுஷ்டிக்கக்கூடிய ஒரு திட்டமாகவும் அங்கீ கரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை ஜெர்மானியர்களுக்கு விரோதமாக யூதர்களும், ஜப்பானியர்களுக்கு விரோதமாகச் சீனர்களும் அநுஷ்டிக்கலாமென்று சிபார்சு செய்யப்படுகிறது. 1913ம் வருஷம், கராச்சியில் நடைபெற்ற காங்கிர மகாசபை யில், தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் செய்த சேவையையும், தியாகத்தையும் பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே கராச்சியில் 1931ம் வருஷம் நடைபெற்ற 45வது காங்கிர மகா சபையில், முப்பத்தைந்து கோடி மக்களின் விடுதலையை உத்தேசித்து, சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கியதற்காக காந்தியடிகள் தேச மக்களின் பாராட்டுதலைப் பெற்றார். 1914ம் வருஷம், காந்தியடிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ராஜ விசுவாச முள்ள ஒரு பிரஜை என்ற ஹோதாவில், எப்படி தென்னாப்பிரிக்காவில் ஜூலூகலகத்தின் போதும், போயர் யுத்தத்தின் போதும் அரசாங்கத்திற்கு உதவி செய்தாரோ அதுபோல், யுத்தத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டார். 1918ம் வருஷம் ஆகட் மாதத்தில் கூட எவ்வித நிபந்தனையும் இன்றி, பிரிட்டிஷாருக்கு ஆள் சேர்த்துக் கொடுக்க வேண்டுமென்று கூறினார். ஆனால் 1938ம் வருஷம் செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் யுத்த மேகங்கள் கவிந்து கொண்டிருந்த சமயத்தில், இந்த யுத்த நிலைமையை இந்தியாவுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளக் கூடாதென்றும், ஆனால், அதே சமயத்தில், யுத்தம் ஏற்படுமானால் அதில் எந்த விதத்திலும் இந்தியா கலந்து கொள்ளக் கூடாதென்றும் கூறினார். இந்த இரண்டு விதமான போக்குகளைக் கூர்ந்து ஆராய்ச்சி செய்தல் அவசியமாகும். 1919ம் வருஷம், திலகர் மீது ஓர் உத்திரவு சாதரா செய்யப்பட்டது. அதாவது, ஜில்லா மாஜிடிரேட்டின் முன் அநுமதியின்றி அவர் எங்கும் பிரசங்கம் செய்யக் கூடாதென்பது அந்த உத்திரவு. இந்த உத்திரவு கிடைப்பதற்கு ஒரு வாரம் முன்னர் அவர் - திலகர் - சேனைக்கு ஆள் திரட்டும் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும், தமது நன்னடத்தைக்கு ஜாமீனாக ஐம்பதினாயிரம் ரூபாய் செக் ஒன்றை மகாத்மா காந்திக்கு அனுப்பி, தாம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால், மேற்படி தொகையைப் பறிமுதல் செய்து விடலா மென்று தெரிவித்திருந்ததாயும் சொல்லப்படுகின்றன. இஃதொரு பந்தயம் மாதிரி. அதாவது, இந்தியர் களுக்கு ராணுவத்தில் உயர்தர உத்தியோகங்கள் கொடுப்பதாக அரசாங்கத்திடமிருந்து காந்தியடிகள் உறுதி பெறுவாரானால், தாம், மஹாராஷ்டிரத்தில் மட்டும் ஐயாயிரம் பேரைச் சேனைக்குச் சேர்த்துக் கொடுப்பதாகத் திலகர் கூறினார். ஆனால், காந்தியடிகள், பேரம் பேசுகிற முறையில் உதவி செய்யக் கூடாதென்று சொல்லி, மேற்படி செக்கைத் திருப்பி யனுப்பி விட்டார். 1938ம் வருஷம் காங்கிர காரியக் கமிட்டியானது டெல்லியில் கூடி, ஐரோப்பிய யுத்த நிலைமையைப் பற்றி ஆலோசித்து வந்தது. இந்தியாவின் உரிமைகளென்ன வென்பதைப் பற்றிப் பிரிட்டனுடன் ஓர் ஏற்பாடு செய்து கொண்டு பின்னரே யுத்தத்திற்கு உதவி செய்ய வேண்டுமென்று ஒரு கட்சியும், எவ்விதத்திலும் யுத்தத்திற்கு உதவி செய்யக் கூடாதென்று மற்றொரு கட்சியும் ஆக இரண்டு கட்சிகள் காரியக் கமிட்டியில் இருந்தன. காந்தியடிகள் இந்த இரண்டாவது கட்சியைச் சேர்ந்திருந்தார். 1918ம் வருஷம் அவர், எவ்வித நிபந்தனையுமின்றி பிரிட்டனுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கூறினார். ஆனால் 1938ம் வருஷம் எந்த நிபந்தனை களுடனும் உதவி செய்யக் கூடாதென்று சொன்னார். 1918ம் வருஷம், காந்தியடிகள், பொதுவாக அநேக இயக்கங்களிலும், சிறப்பாக ரௌலட் சட்டத்தை எதிர்ப்பதிலும் ஈடுபட்டிருந்தார். இப்பொழுது, அந்த ரௌலட் சட்டத்தைப் போன்ற பல சட்டங்கள், திருவாங்கூர், ஜெயப்பூர், ராஜகோட்டை, லிம்பிடி, தென்கானல் முதலிய சுதேச சமதானங்களில் அமுலிலிருப்பதை எதிர்த்துப் போராடுகிறார். அவருடைய நோக்கம், வேலைத் திட்டம் முதலியவைகளைப் பற்றி இந்தியா அரசாங்கத்துப் பிரசுரமாக 1919ம் வருஷம் வெளியான அறிக்கை கூறியிருப்பதை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமாயிருக்கும் :- ஸ்ரீ காந்தி, டால்டாயைப் போல் உயர்ந்த லட்சியங் களுடையவ ரென்றும், கொஞ்சங்கூடச் சுய நலமில்லாதவரென்றும் கருதப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காகப் போராடியதிலிருந்து, அவர் இந்தியாவில் ஒரு மதத்தலைவராகப் போற்றப்படுகிறார். அவருக்கு இன்னோர் அனுகூலமும் இருக்கிறது. அதாவது அவரைப் பின்பற்று வோர், குறிப்பிட்ட எந்த மதத்தினையும் சேர்ந்தவரல்லர். அவர், ஆமதாபாத்தில் வாசஞ் செய்யத் தொடங்கியது முதல் சமுதாயத் தொண்டுகள் பலவற்றில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு தனிப்பட்டவருடைய உரிமைக்காகவோ, அல்லது ஒரு வகுப்பினுடைய உரிமைக்காகவோ அவர் போராடத் தயாராயிருப்ப தனால், அவர் தமது நாட்டு மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறார். சிறப்பாக பம்பாய் மாகாண முழுவதிலும் ஒரு தெய்வம் போலவே அவர் கொண்டாடப்படுகிறார். உலகாயத சக்தியைவிட ஆத்ம சக்தி வலுவுடைய தென்று அவர் நம்புகிறார், இதனால்தான், தென்னாப் பிரிக்காவில் பயன்தரத்தக்க முறையில் தாம் பிரயோகித்த சாத்வீக எதிர்ப்பு முறையை, இந்தியாவிலும் ரௌலட் சட்டத்துக்கு விரோதமாகப் பிரயோகிக்கிறார். மேற்படி ரௌலட் மசோதா சட்டமாக அமுலுக்குக் கொண்டு வரப்படுமானால், தாம் சத்தியாக் கிரக இயக்கத்தைத் தொடங்கப்போவதாக அவர் 24-2-1919ல் ஓர் அறிக்கை விடுத்தார். இஃதொரு முக்கியமான விஷய மென்று இந்தியா அரசாங்கத்தாரும் இந்திய அரசியல்வாதிகளும் கருதி னார்கள். இந்த இயக்கத்தினால் ஏற்படக்கூடிய பின் விளைவு களைப்பற்றி, இந்தியா அரசாங்கச் சட்ட சபையிலுள்ள மிதவாத அங்கத்தினர்களும், ஸ்ரீமதி பெஸண்ட்டும் பெரிதும் அஞ்சினார்கள். ஸ்ரீமதி பெஸண்ட், காந்தியடிகளுக்கு எச்சரிக்கையும் செய்தார். ஆனால், மேற்படி இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்னர், காந்தியடிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளக் கூடியவிதமாக அவர் நடந்து கொள்ள வில்லையென்பதை இங்குக் குறிப்பிட வேண்டும், சாத்வீக எதிர்ப்பு என்பது எதிர் மறையான முறை; உடன்பாட்டு முறையல்ல. ஆயுத பலத்தை உபயோகிக்கக் கூடாதென்று காந்தியடிகள் பஷ்டமாகத் தெரிவித்திருக்கிறார். சாத்வீக சட்ட மறுப்பின் மூலமாக, ரௌலட் சட்டத்தை ரத்து செய்து விடும்படியாக அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியுமென்று அவர் கருதினார். ரௌலட் சட்டத்தை எதிர்க்கிறவர்கள் ஓர் உறுதி மொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென்று சொல்லி அவர் 18-3-1919 ல் கீழ்க்கண்ட (உறுதி மொழிப்பத்திர) அறிக்கையை வெளி யிட்டார்:- இந்தியக் குற்றச் சட்டத் திருத்த மசோதா (நெ. 1-1919)வும், குற்றச் சட்ட அவசர அதிகார மசோதா (நெ. 2-1919)வும் அநீதியானவை யென்றும், சுதந்திரம், நீதி என்ற தத்துவங்களுக்கு விரோதமானவை யென்றும், தனிப்பட்ட நபர்களுடைய எந்த மூலாதாரமான உரிமை களின் மீது இந்தியாவினுடைய க்ஷேமமும், ராஜ்யத்தினுடைய க்ஷேமமும் இருக்கிறதோ அந்த மூலாதார உரிமைகளை அழிப்பதா யிருக்கிற தென்றும் நாங்கள் மனப்பூர்வமாக அபிப்பிராயப்படுவதால், மேற்படி மசோதாக்கள் சட்டமாகும் பட்சத்தில், அவை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிற வரையில், மேற்படி சட்டங்களுக்கும், கமிட்டியார் கூறுகிற மற்றச் சட்டங்களுக்கும், கீழ்ப்படிய மறுப்பதாக இதன் மூலம் உறுதி செய்து கொள்கிறோம். மற்றும் இந்தப் போராட்டத்தில் உண்மை யாக நடந்து கொள்வதாகவும், உயிர், பொருள் முதலியவை விஷயத்தில் பலாத்காரத்தை உபயோகிக்க மாட்டோமென்றும் பிரதிக்ஞை செய்து கொள்கிறோம். அரசாங்கத்தாரும் நண்பர்களும் ஆலோசனை கூறியதன் பேரில், காந்தியடிகள் 1919ம் வருஷம் (ஜூலை மாதம் 21ந் தேதி) சட்டமறுப்பியக்கத்தை நிறுத்தினார். அப்படியே 1934ம் வருஷம் (ஏப்ரல் மாதம்) தமது சொந்தத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்கள் விஷயத்தில் சட்டமறுப்பியக்கத்தை நிறுத்திவிட்டார். 1919ம் வருஷம் அவர் கூறினார் :- நான், திடீரென்று, தீக்குச்சியைப் பற்ற வைத்து எறிவதாக என்மீது குற்றஞ் சொல்கிறார்கள். எப் பொழுதாவது ஒரு முறை நான் எதிர்ப்புக் காட்டுவது, தீக்குச்சியை எறிவதாகுமானால், ரௌலட் சட்டமும் அதனைச் சட்ட புத்தகத்தில் ஊர்ஜிதம் செய்து வைத்துக் கொண்டிருப்பதும் ஆயிரம் தீக்குச்சி களை இந்தியா முழுவதிலும் விட்டெறிவதாகும். சட்டமறுப் பியக்கத்தை நான் நிறுத்திக் கொள்ள வேண்டுமானால், அரசாங்கத் தார் மேற்படி ரௌலட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 1934ம் வருஷம், சட்ட மறுப்பியக்கத்தை நிறுத்துவதற்கு முன்னர் 7-4-1934 தேதியிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார் :- சத்தியாக் கிரகத்தின் முழுச் செய்தியையும் பாமர ஜனங்கள் வாங்கிக்கொள்ள வில்லையென்று நான் உணர்கிறேன். ஏனென்றால் அவர்களிடம் போய்ச் சேருவதற்கு முன்னர், அது பலவித கலப்புடன் கூடியதாகி விடுகிறது. ஆத்மார்த்தமான கருவிகள், உலகாயதத்தின் மூலம் உபயோகிக்கப் பட்டால், அந்தக் கருவிகள் கேடடைகின்றன. ஆத்மார்த்தமான செய்திகள் சுயமாகப் பரவக் கூடியவை. சுயராஜ்யத்திற்காகவோ, குறிப்பிட்ட சில குறைகளுக்குப் பரிகாரமாகவோ சட்டமறுப்பியக்கத்தைத் தொடங்கு வதென்பதை நிறுத்தி வைக்க வேண்டுமென்று காங்கிரகாரர்களுக்கு நான் யோசனை கூறுகிறேன். அந்தப் பொறுப்பை - சட்டமறுப்பு நடத்தும் பொறுப்பை - எனக்கே அவர்கள் விட்டுவிடவேண்டும். இந்தச் சட்டமறுப்புத் தத்துவத்தைப் பற்றி என்னைவிட அதிகம் தெரிந்தவர் களும், எல்லோருடைய நம்பிக்கைக்கு உரியவர்களா யிருப்பவர்களு மான யாரேனும் தோன்றினாலன்றி, வேறு யாரும் என் ஜீவியகாலத்தில் என் மேற் பார்வையில்லாமல் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கக் கூடாது. சத்தியாக்கிரகத்தின் சிருஷ்டிகர்த்தா என்ற ஹோதாவில் இதனைச் சொல்கிறேன். ஆகையால் இனி யாரும் சட்டமறுப்பியக்கத்தைத் தொடங்கக்கூடாது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு இதுதான் தகுந்த மார்க்கமென்று நான் கருதுகிறேன். மானிட சமுதாயத்தின் கையில் இந்த சட்டமறுப்பு ஆயுதம் இருக்கவேண்டி யதன் அவசியத்தை அதிதீவிரமாக உணர்கிறேன். இதே அறிக்கையில், காந்தியடிகள், பல பேர் சேர்ந்து செய்த இந்தச் சட்டமறுப்பியக்க மானது, பயங்கரவாதி களின் மனதையோ, ஆள்வோரின் மனதையோ மாற்றவில்லையென்று வருத்தப்பட்டிருக்கிறார். ஆனால் இன்று, மேற்படி சட்ட மறுப்பியக்கத்தில் ஈடுபட்டுச் சிறைவாசத்தை அநுபவித்து விடுதலை பெற்றவர்களில் சுமார் 2500 பேர், அஹிம்ஸையில் தங்களுக்குப் பூரண நம்பிக்கை யிருப்பதாக, காந்தியடிகளுக்குத் திருப்தி தரக்கூடிய விதமாகத் தெரிவித்திருக் கிறார்கள். பலாத்காரத்தை அஹிம்ஸை யினால் வெற்றி கொள்ள முடியுமென்ற அத்தாட்சிக்குச் சிரோ பூஷணமாக, சர்தார் ப்ருத்விசிங் என்பவர், பலாத்காரத்தில் நம்பிக்கை யிழந்து அஹிம்ஸையில் பற்றுக் கொண்டவராய், காந்தியடிகளிடம் தம்மை ஒப்புக் கொடுத்தார். இவர் ஒரு பெரிய பயங்கரவாதி. இவர் இறந்து விட்டதாகவே எல்லோரும் கருதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பதினேழு வருஷகாலம் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கு மாகத் திரிந்து கொண்டிருந்தார். ஒரு சமயம் பாதுகாப்புடன் இவர் அழைத்துக் கொண்டு வரப்படுகிற போது ஓடுகிற ரெயிலிலிருந்து குதித்துவிட்டார். அரசாங்கத்தார் இவரை வலைபோட்டுத் தேடிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் இவர் காந்தியடிகளிடம் சரணாகதி யடைந்தார். அடிகளார், இவரை அதிகாரிகளிடம் ஒப்புவித்துச் சிறைக்கனுப்பினார். இப்பொழுது இவருடைய விடுதலைக்காகப் பெரிதும் முயன்று கொண்டிருக்கிறார்.1 1919ம் வருஷம் காந்தியடிகள் சட்டமறுப்பியக்கத்தை நிறுத்தியதும், பஞ்சாபில் நடைபெற்ற சம்பவங்களைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். தாம் ஹிமாலயத் தவறு செய்து விட்டதாக ஒத்துக் கொண்டார். 1919ம் வருஷத்து அரசியல் திட்டம் அமுலுக்கு வந்ததும், அதனை நடத்திக் காட்டும் விஷயத்தில் அரசாங்கத்தாரும் ஜனங்களும் ஒத்துழைக்க வேண்டுமென்று காந்தியடிகள் கூறினார். ஆனால் 1937ம் வருஷத்தில் மாகாணப் பொறுப்பாட்சியின் கீழ், கவர்னர்கள் தங்கள் விசேஷ அதிகாரங்களை உபயோகிக்கமாட்டார் களென்று அரசாங்கத்தார் உறுதி மொழி கொடுக்க வேண்டுமென்று அவர் கேட்கிறார். அமிருத சர காங்கிரசின் போது, காந்தியடிகள், அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனத்திற்குப் பதில் பொறுமை காட்ட வேண்டுமென்று கூறினார். இப்பொழுது ராஜகோட்டை முதலிய சமதான அரசாங்கங்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிற போது, ஜனங்கள் நிதான புத்தியுடையவர்களாயிருக்க வேண்டுமென்று கூறுகிறார். முதலில் சமுதாயத் தொண்டிலே ஈடுபட்டிருந்த காந்தியடிகள், பின்னர் மதத்தின் மூலமாக அரசியலில் ஈடுபட்டார். இப்பொழுது மீண்டும் சமுதாயத் தொண்டில் ஈடுபட்டிருக்கிறார். அவரைப் பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்று தான். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் இந்த இரு வகைத் தொண்டுகளையும் அவர் கருதுகிறார். ஒத்துழையாமை யென்பதே லட்சியமல்ல வென்றும், அது லட்சியத்தை யடைவதற்கான ஒரு சாதனமேயென்றும் காந்தியடிகள் கருதுகிறார். தேசீய கௌரவ மென்பது மட்டும் பாதிக்கப் படாம லிருந்தால், அவர், தமது எதிரியுடன் எப்பொழுதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறார். 1920ம் வருஷத்தில் அவர் இதே நிலைமையி லிருந்தார். இப்பொழுதும் இதே நிலைமையிலிருக்கிறார். 1920ம் வருஷத்தில் அவருடைய ஒத்துழைப்பு புறக்கணிக்கப்பட்டது; இப்பொழுது இதே ஒத்துழைப்பை, அரசாங்கத்தார் விரும்புகின்றனர். பூரண சுதந்திரம் என்னும் விஷயத்தைப் பற்றிக் காந்தியடிகள் 1921ம் வருஷத்தில் கொண்டிருந்த அபிப்பிராயத்தையும் 1929ம் வருஷத்தில் கொண்டிருந்த அபிப்பிராயத்தையும் இங்கு ஒப்பிட்டுப் பார்த்தல் நல்லது. 1921ம் வருஷம் அவர் ஆமதாபாத்தில் பேசிய போது பின் வருமாறு குறிப்பிட்டார்:- இந்தச் சுதந்திர தீர்மானத்தைப் பற்றி நீங்கள் லேசாக நினைத்து விட்டது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் பொறுப்பை இன்னும் உணரவில்லை யென்பதையே இது காட்டுகிறது. நாம் பொறுப்புள்ளவர்கள் என்ற முறையில் நாகபுரி காங்கிர காலத்திற்கும் கல்கத்தா காங்கிர காலத்திற்கும் செல்ல வேண்டும். 1928ம் வருஷம் மீண்டும் இந்தச் சுதந்திரப் பிரச்னை கிளம்பிய போது, அவர் கூறினார்:- முலீம்கள் எப்படி அல்லாவின் பெயரை உச்சரிக்கிறார்களோ, ஹிந்துக்கள் எப்படி கிருஷ்ணன், ராமன் இவர்களுடைய பெயர்களை உச்சரிக்கிறார்களோ அதைப் போல் நீங்களும் சுதந்திர சப்தத்தை வாயால் உச்சரித்துக் கொண் டிருக்கலாம். இந்த உச்சாரணத்திற்குப் பின் பலமாக நமக்கு ஒரு நம்பிக்கை இருந்தாலன்றி, இதற்கு மதிப்பே கிடையாது. உங்கள் வார்த்தைகளின்படி நீங்கள் நடவாவிட்டால், உங்களுடைய சுதந்திரம் என்னவாகும்? வார்த்தைகளைக் கூட்டிக் குறைத்துப் பேசுவதனால் சுதந்திரம் வந்துவிடாது. அது, வார்த்தைகளைவிடக் கடுமையான வதுவினால் ஆக்கப்பட்டது. இங்ஙனம் கூறிய காந்தியடிகள், 23-12-1929ல் லார்ட் இர்வினுடன் சம்பாஷணை நடத்திக் கொண் டிருந்த போது, இந்தியாவைப் பரிபூர்ண சுதந்திரத்திற்குத் தயார்ப் படுத்தப் போவதாக அறை கூவினார். 1920ம் வருஷத்தில் அரசாங்கமானது, ஒத்துழையா இயக்கத்தைப் பொது ஜனங்கள் நிராகரிப்பார்களென்று நம்புவதாக வும் அந்த இயக்கத்தினால் தேசத்தில் குழப்பமே உண்டாகு மென்றும் என்னென்னவோ கூறிப் பரிகாசம் செய்தது. ஆனால் இப்பொழுது அதே அரசாங்கமானது, அந்த இயக்கத்தை தாபித்த தலைவருடன் சமரஸம் பேச முன் வந்திருக்கிறது. 1921ம் வருஷம், காந்தியடிகள் லார்ட் ரெடிங்குடன் சமரஸம் பேசுகையில் - இந்தச் சமரஸப் பேச்சுக் கள் பின்னர் முறிந்துபோயின - அவரை, அநுஷ்டான பூர்வகமாகச் செய்து காட்ட முடியாதவ ரென்று பலரும் கூறினார்கள். ஆனால் அதே காந்தியடிகள், 1931ம் வருஷம் லார்ட் இர்வினுடனும், 1937ம் வருஷம் ஜுன் மாதம் லார்ட் லின்லித்கோவுடனும் சமரஸப் பேச்சுகள் நடத்துகையில், அவருடைய விட்டுப் பிடிக்கிற குணம், எது முக்கிய மானது, எது முக்கிய மற்றது என்பதைப் பாகுபடுத்திக் கொள்வதில் காட்டும் நுண்ணறிவு, தீர்க்க திருஷ்டி முதலியவைகளைக் குறித்துப் பலரும் அவரைப் பாராட்டிப் பேசினார்கள். 1922ம் வருஷம் சௌரி-சௌராவில் பலாத்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இருபத்தோரு போலீ கான்டேபில்களும் ஒரு சப்-இன்பெக்டரும் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். உடனே காந்தியடிகள் சட்ட மறுப்பியக்கத்தை நிறுத்திவிட்டார். அதே மாதிரி, 1939ம் வருஷம் ஒரிஸா மாகாணத்திலுள்ள ரணபுரியில் பாஸெல் கெட்டே (Bazelgette) என்ற ஐரோப்பிய உத்தியோகதர் கொலை செய்யப்பட்ட போது, மேற்படி மாகாண வாசிகள், தொடங்கியிருந்த சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிட வேண்டு மென்று காந்தியடிகள் ஆலோசனை கூறினார். 1924ம் வருஷம் காந்தியடிகள் சிறையிலிருந்து விடுதலையானதும், சட்ட சபைப் பிரவேசமும் ஒத்துழையாமையும், முரண்பட்டவை யென்று கூறினார். ஆனால், 1934ம் வருஷம் சட்ட மறுப்பியக்கம் நிறுத்தப்பட்டு சட்டசபைப் பிரவேசப் பிரச்னை ஆலோசனைக்கு வந்த போழ்து, அதனை அவர் ஆதரித்தார். அவருடைய அங்கீகாரத்தின் பேரிலேயே 1937ம் வருஷம் காங்கிர கட்சியினர் மந்திரிப் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். காந்தியடிகள், 1934ம் வருஷம் சுதேச சமதானங்களின் விஷயமாக என்ன அபிப்பிராயங் கொண்டிருந்தாரோ, அந்த அபிப்பிராயத்தை 1939ம் வருஷத்தில் மாற்றிக் கொண்டு விட்டார். ஏனென்றால் சுதேச சமதானங்களிலுள்ள நிலைமை மாறிவிட்டது. சமதானப் பிரஜைகளிடத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரு புதிய விழிப்பைக் கண்டு, அவர், தம்மாலான உதவிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்வதாக உறுதி பூண்டார். அதன் பயனாக இப்பொழுது ஸ்ரீமதி கதூரிபாய் காந்தி ராஜகோட்டை சிறையிலிருக்கிறார். சுதேச மன்னர்கள், ஒன்று, தங்கள் பிரஜைகளுக்குப் பொறுப்பாட்சி அளிக்க வேண்டும், அல்லது அவர்கள் இல்லாமலே போய் விட வேண்டு மென்று அவர் கூறுகிறார். 6. காந்தியடிகளின் சுய அறிவு சத்தியமும் அஹிம்ஸையும் மனிதனுடைய உயர்ந்தஅநுபவங் கள். சங்கீதத்தையும் கணிதத்தையும் கதராடைகளையும் வகுப்பு ஒற்றுமையையும் பாராட்டி அநுபவிக்க எப்படி ஒரு சக்தி தேவையாயிருக் கிறதோ அதைப்போல் சத்தியத்தையும் அஹிம்ஸையை யும் பாராட்டி அநுபவிக்க ஒரு சக்தி தேவையாயிருக்கிறது. அப்பியாசத் தின் மூலமாகவே இந்தச் சக்தி கிடைக்கிறது. இந்த மாதிரியான ஒரு சக்தியின் மூலமாகவே காந்தியடிகள் ஒரு விஷயத்தை நிர்ணயிக் கிறாரே தவிர அறிவைக் கொண்டு மட்டுமல்ல. மற்றும் இந்தச் சுய உணர்ச்சி யின் மூலமாக அவர் சத்தியத்தைக் காண்கிறார். இங்ஙனம் அவர் கண்ட உண்மையை, அவருடைய சிஷ்யர்கள் பல வியாக்கி யானங் களுடன் பிரசாரஞ் செய்கிறார்கள். இந்தச் சுய உணர்ச்சியின் பிரேரணையின் பேரில்தான் காந்தியடிகள் 1922ம் வருஷம் பார்தோலியில் சத்தியாக்கிரகத்தை நிறுத்தினார்; 1930ம் வருஷம் உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார்; 1934ம் வருஷம் சட்ட மறுப் பியக்கத்தை நிறுத்தினார்; சமதானங்களைப் பற்றித் தாம் கொண்டிருந்த அபிப்பிராயத்தை 1939ம் வருஷம் மாற்றிக் கொண்டார். திடீரென்று அவருக்கு ஒளி உண்டாகிறது. அந்த ஒளி கிடைக்காத தருணத்தில் அதற்காகப் பிரார்த்தனை செய்கிறார். ஒளி கிடைத்ததும் உடனே ஒரு முடிவு செய்கிறார். அந்த முடிவு அவருடைய சிஷ்யர்களுக்கு விபரீதமா யிருக்கிறது. ஒரு சமயம் அ. இ. கா. கமிட்டி கூட்டத்தின் போது, ஒரு பைத்தியக்காரன் வந்து ரகளை செய்தான். அவனை அப்புறப்படுத்தத் தொண்டர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் காந்தியடிகள், அதனைத் தடுத்து, முந்நூறு பேரடங்கிய கூட்டத்தை, மேற்படி பைத்தியக் காரனுக்காகத் தள்ளி வைத்தார். சீரளா - பேரளா என்னும் நகரங்களில் அரசாங்கத்தார் நகர சபைகளைப் பலவந்தமாக தாபித்த போது, அந்நகரங்களைக் காலி செய்து விடுமாறு காந்தியடிகள் நகரவாசி களுக்கு யோசனை கூறினார். அவர்களும் அப்படியே செய்தார்கள். பார்தோலியிலும் செர்ஸாதாவிலும் வரிகொடா இயக்கம் தொடங்கப் பட்ட போது, அந்த ஊர்வாசிகளை, பரோடா சமதானத்திற்குச் சென்று விடும்படி காந்தியடிகள் யோசனை கூறினார். அவர்களும் அப்படியே செய்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம், எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள முடியாமல் பின் தங்கி விட்டது. இப்படியே ஒரிஸா மாகாணத்தில் ஒரு சமதான மன்னர் தமது பிரஜைகளுக்குத் தீங்கிழைத்து வந்த போது, அந்தச் சமதானத்துப் பிரஜைகளை வெளியேறி விடும்படி யோசனை கூறினார். இந்த மாதிரியான விஷயங்களில் வெற்றி ஏற்பட்டதற்குக் காரணம், ஜனங்களுடைய பொறுமையும் மனத் தூய்மையுந்தான். காந்தியடிகளின் சிஷ்யர்கள், எப்பொழுதுமே அவரோடு ஒன்றுபட்ட அபிப்பிராயங் கொள்வ தில்லை. அடிக்கடி அவருடைய முடிபுகளை எதிர்த்திருக்கிறார்கள். 1922ம் வருஷம் (பிப்ரவரி) பார்தோலியில் சத்தியாக்கிரகம் நிறுத்தப் பட்டபோது, அதனை அவருடைய சிஷ்யர்கள் எதிர்த்தார் கள். 1924ம் வருஷம் ஆமதாபாத்தில் கூடிய சர்வ கட்சி மகா நாட்டில், பலாத்காரச் செயலைத் தமது சிஷ்யர்களில் சிலர் ஆதரிப்பதைக் கண்டு காந்தியடிகள் அழுதுவிட்டார். காந்தியடிகளின் சுபாவம் எப்பொழுதுமே நெருப்போடு விளையாடுவது. ஆனால் ஒவ்வொரு சமயமும், எவ்வித காயமும் அடையாமல், அந்த நெருப்பிலிருந்து வெளியேறி விடுகிறார். அவர் பல முறை சிறை சென்றிருக்கிறார். இதனால் அவர் மனோ உறுதி அதிகமாயிருக்கிறது. தமது ஜனங்களின் பைத்தியக்காரச் செயல்களுக் காக அவர் பல முறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படியே காங்கிரஸும் செய்யவேண்டுமென்று வற்புறுத்துகிறார். எங்கேயோ பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்துவிட்டன வென்பதற்காக அவர் பலமுறை சட்ட மறுப்பியக்கத்தை நிறுத்தியிருக்கிறார். காந்தியடிகளின் வேலைகள், அவர் பேசுகிற காலத்தில் விட, மௌனமாயிருக்கிற காலத்தில்தான் அதிக பயன் தரத்தக்கனவா யிருக்கின்றன. 1925ம் வருஷம் கான்பூரில் அவர் அரசியல் மௌனம் பூண்டார். 1926ம் வருஷம் கௌஹதியில்தான் இந்த மௌனத்தி லிருந்து வெளிவந்தார். இந்த மௌன காலத்தில் அவருடைய உள்ளத்தில் பெரிய திட்டங்கள் உருக் கொள்கின்றன. இங்ஙனம் மௌனத்திலேயே கழித்த நீண்ட காலம் 1925ம் வருஷத்திலிருந்து 1928ம் வருஷம் வரையிலாகும். பிறகு 1929ம் வருஷம் லாகூர் காங்கிரசின் போதுதான் அவர் மௌனத்தி லிருந்து வெளிக் கிளம் பினார். காந்தியடிகள், தமது எதிரிகளை எப்படி பரிசோதனைக் குட்படுத்துகிறாரோ அப்படியே தமது சிஷ்யர்களையும் பரிசோதனைக் குட்படுத்துகிறார். தமது பரிசோதனையில் அவர்கள் வெற்றி பெறு வார்களானால், அவர்களுடைய எண்ணங்களைத் தம்முடையன வாக்கிக் கொண்டு, அவற்றை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிறார். அவருடைய பரிசோதனையில் தவறிவிட்டவர் கள், அவரிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டியது தான். சட்ட மறுப்பு, பூரண சுயேச்சை, சுதேச சமதானங்கள் முதலியவை சம்பந்தமான பிரச்னைகளின் போது, அவர் இவ்வாறு தான் நடந்து கொண்டார். இப்பொழுது அவர் சுதேச சமதானங்களின் விஷயத் தில் அதி மும்முரமாயிருக்கிறார். இஃது, அவருடைய கோஷ்டி யினருக்கு அதிக ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்கிறது. காங்கிரஸிலுள்ள இளைஞர் கூட்டத்தினர், சமஷ்டி விஷயமாகப் பிரிட்டிஷ் அரசாங்கத் தாருடன் அவர் ஒரு சமரஸ ஏற்பாட்டிற்கு வந்து விட்டாரென்றும், அதனாலேயே அவர் இப்படி மாறி விட்டாரென்றும் குறை கூறுகிறார்கள். காந்தியடிகளின் ராஜதந்திர மெல்லாம், சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது. அஹிம்ஸையே அவருடைய ஆயுதம். ஹரிஜனங்களுக்குத் தனித் தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், ஹிந்து சமூகத்தைப் பல துண்டுகளாக்கி விடுவதாயிருந்தால், அதனைத் தம் உயிர் கொடுத்தாவது எதிர்ப்பதாக அவர் இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் கூறினார். இதைப் பின்னர் பல முறை வற்புறுத்தி யிருப்பதோடு, தாம் சொன்னபடி செய்தும் காட்டினார். 20-9-1932ல் அவர் மரண பரியந்தம் உண்ணா விரதமிருக்கத் தொடங்கி னாரல்லவா? இப்பொழுது சமதானங்கள் விஷயமாக மற்றொரு பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறார். சமஷ்டியை உடைத்தெறிவதாகக் கூறினார். கடவுளின் திருவுளச் சம்மதம் அதுவானால், இதுவரையில் நான் நடத்திய போராட் டங்களைக் காட்டிலும் மகத்தானதொரு போராட்டத்தை நடத்தக் கூடிய சக்தி என்னிட மிருக்கிற தென்று நான் உணர்கிறேன் என்று அவர் முழக்கம் செய்கிறார். மேற்போக்காகப் பார்க்கிறபோது, காந்தியடிகளின் வாழ்க்கை முரண்பாடுகள் நிறைந்ததாகத் தோன்றும். ஆனால் அநுஷ்டான பூர்வகமாயுள்ள ஒரு மத புருஷருடைய வாழ்க்கை இப்படித் தானிருக்கும். காந்தியடிகள், லட்சியத்தோடு அநுஷ்டானத் தையும், துணிச்சலோடு நிதானத்தையும், புரட்சி மனப்பான்மையோடு வைதிக மனப்பான்மையையும், எதிர் காலத்தோடு இறந்த காலத்தை யும், தேசீயத்தோடு உலக சகோதரத்துவத்தையும் பொருத்திக் காட்டுகிறார். சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் ஒன்றுபடுத்தி அதிலிருந்து ஒரு புதிய மானிட சமுதாயத்தை அமைத்துக் காட்ட அவர் முயல்கிறார். அஃது எப்படியிருக்கிற தென்றால் இஞ்சினோடு ரெயில் வண்டிகளைப் பிணைப்பது போல் இருக்கிறது. இஞ்சினோடு கூடிய ரெயில்தான் மேடு பள்ளங்களையெல்லாம் கடந்து செல்ல முடியும். இந்தியா இப்பொழுது புகழடைந்ததாயிருக்கிறது. ஏன்? மனிதருக்குள்ளே மனிதராக விளங்கும் ஒருவர் அதற்குத் தலைவராயிருக்கிறார். அவர் மெலிந்த தேகத்தினர். ஆயினும் அவர் ஒரு திதபிரக்ஞர் (திர புத்தியுடையவர்); அவதார புருஷர். இவ்வாறு அவர் காணப்படுவது, தற்கால உலகத்திற்கு ஒரு பிரமிப்பாகவே இருக்கிறது. அவர், மதத்திற்குள்ள புனிதத் தன்மையைப் போல் அரசியலையும் புனிதமாக்கி யிருக்கிறார்; சமுதாய முரண்பாடு களில், தரும நியாயத்தையும் ஜீவகாருண்யத்தை யும் கொண்டு புகுத்தியிருக்கிறார். மானிட ஜாதியின் ஒன்றுபட்ட வாழ்வையும், சர்வதேசங்களும் ஒரு சங்கமாகச் சேர வேண்டிய காலத்தையும் அவர் துரிதப்படுத்தி வருகிறார். * * * உலகத்திற் களித்த செய்தி குமாரி மாட் டி. பெட்ரி (டார்ரிங்டன், ஸஸெக், இங்கிலாந்து) நான் ஓர் ஆங்கிலேய த்ரீ. நான் யாரைப் பற்றி இப்பொழுது எழுதுகிறேனோ அவர் எனது நாட்டின் குணத்தையும், நட வடிக்கையையும் நன்றாகக் கண்டித்திருக்கிறார்; அதற்கு விரோதமாக வும் வேலை செய்திருக்கிறார். அப்படியிருந்தாலும் இந்த நூலுக்கு ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்று சொல்லப்பட்ட போது நான் அதற்கு உடனே சம்மதித்தேன். ஏனென்றால், மகாத்மா காந்தி தமது ஜனங்களின் நன்மைக்காக வாழ்க்கையைச் செலவழித்திருக் கிறாராயினும், அதைவிட விரிந்த தொரு லட்சியத்திற்காக, அதாவது, மானிட சமுதாயத்தின் நன்மைக்காகப் பல சேவைகள் செய்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இதனால், ஒவ்வொரு நாட்டினுடைய லட்சியத் திற்காகவும் அவர் வேலை செய்தவராகிறார். ஒரு தனி மனிதனுக்கு இரண்டு வித கடமைகள் இருப்பதுபோல் ஒரு தேசத்திற் கும் இரண்டு வித கடமைகள் உண்டு. முதலாவது, ஒரு தேசம் தனது பரம்பரைப்படி வாழ்க்கையை நடத்தவும், தனது சொந்த நன்மையை முன்னிட்டு, தனது விவகாரங்களைத் திறம்பட நடத்திச் செல்லவும் வேண்டும். இரண்டாவது, மானிட சமுதாயம் என்ற பெரிய தொகுதி யில் தான் ஒரு பகுதி என்ற எண்ணத்துடன், தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டாவது கடமையை வற்புறுத்தும் விஷயத்தில் தான் மகாத்மா காந்தி தீர்க்கதரிசியாகவும், தலைவராகவும் இருக்கிறார். இதனாலேயே எனக்கு அவருடைய அரசியல் வாழ்க்கை அவ்வளவு முக்கியமானதல்ல என்று படுகிறது. மனிதனிடத்திலே இருக்க வேண்டிய தன்னல மறுப்பு உணர்ச்சி, உலக சகோதரத்துவம் முதலிய குணமேம்பாடுகளை அவர் வற்புறுத்தி வருவதுதான் முக்கியமான விஷயம். இதற்காகவே அவரை எதிர் காலம் போற்றும். நான் அரசியலில் ஏன் பங்கெடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னால், ஒரு பாம்பானது எப்படி ஒருவனைச் சுற்றிக் கொண்டு விடுகிறதோ, எப்படி அவன் அந்தக் கட்டினின்றும் தப்பிக்க முடியாதவனாயிருக்கிறானோ, அதைப் போல, நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அரசியலினின்றும் நாம் தப்பிக்க முடியாதவர் களாயிருக்கிறோம். நான், பாம்போடு போராடிக் கொண்டிருக்கிறேன். ***அரசியலில் மதத்தைக் கொண்டு புகுத்த முயற்சி செய்து கொண் டிருக்கிறேன் என்று காந்தியடிகளே சொல்லியிருக்கிறார். மானிட சமுதாயத்தின் ஆத்ம புனருத்தாரணத்திற்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணம் செய்து விட்டிருக்கிற ஒருவர், சுய நலம், போட்டி, கொடுமை ஆகியவற்றை க்ஷமை, ஒத்துழைப்பு என்பன வாக மாற்றிவிட்ட ஒருவர், இவற்றிற்குப் பிரதியாக என்ன எதிர் பார்க்கக் கூடும்? ஆசாபங்கம், அவமானம், தோல்வி ஆகிய இவற்றைத் தான். காந்தியடிகள் மகத்தான சித்திகளை அடைந்திருந்த போதிலும், மகத்தான தோல்வியையும் அடைந்திருக்கிறார். இதுவே என் அபிப்பிராயம். சாதாரணமாகவே சீர்திருத்த நோக்கமுடையவர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறுவதற்கு முன்பே இந்த தூல தேகத்தை விட்டுப் பிரிவதற்குத் தயாராயிருக்க வேண்டும். மோஸ முனிவர்1 மாதிரி அவர்கள் (வாக்களிக்கப்பட்ட ராஜ்யத்தை) லட்சியத்தைப் பார்க்கலாம். ஆனால், அதனை அடைய முடியாது. அதனை நீ பார்க்குமாறு செய்து விட்டேன். ஆனால், நீ அங்கே செல்லக் கூடாது.2 முடியாத தென்று எது சொல்லப் படுகிறதோ, அதனை, முடியு மென்று தமது வாழ்க்கையிலேயே அநுஷ்டான பூர்வகமாகக் கொண்டு வந்து காட்டுவதுதான் ஒரு சீர்திருத்தக்காரருடைய வேலை யென்று காந்தியடிகளே கூறியிருக் கிறார். அந்த சீர்திருத்தக்காரர், தமது சிறுமையையும், எல்லையையும்` நினைக்கிற போது ஆச்சரியப் பட்டுப் போகிறார். ஆத்மார்த்தமான லட்சியங்களை அநுஷ்டானத்தில் கொண்டு வந்து காட்டுகிறபோது, தேக தத்துவத்திற்கும் ஆத்ம தத்துவத்திற்கும் இடைவிடாத போராட்டம் நடைபெறுகிறது; ஆத்மார்த்தமான முயற்சிக்குக் களங்கம் ஏற்படுகிறது. லட்சியமானது மங்கலடைகிறது. லட்சியவாதியோ மனிதர்களுடைய கோப தாபங்களாகிய போர்க் களத்திற்கு இழுக்கப்படு கிறார். விவேகமுள்ள திட்டங்களை விவேகமில்லாதவர்கள் நிறைவேற்று கிறார்கள். லட்சிய வாதியின் முயற்சிகள், மனிதர்களுடைய சுயநல எண்ணத்தினால் களங்கமடை கின்றன. இதுவரையில், இந்தப் போராட்டம் தோல்வியடைந்தே வந்திருக்கிறது. ஆயினும், எப்படி கொத்தனால் நிராகரிக்கப்பட்ட செங்கற்கள், புதிய ஜெருசலேம் நகரத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையாயிருந்தனவோ, அதைப்போல, இந்தத் தோல்விகள், புதிய வாழ்வைச் சிருஷ்டிக்க உபயோக மாயிருக்கும். வாக்களிக்கப்பட்ட ராஜ்யத்திற்கு மோஸ செல்லவில்லை யென்பதுண்மை. ஆனால் அந்த ராஜ்யத்தை அவர் பார்த்தார். அந்த ராஜ்யமும் அங்கே இருந்தது. அவர் அங்கே சென்றதும், செல்லாம லிருந்ததும், இரவேல் ராஜ்யத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கவில்லை. மற்றவர்கள் அந்த ராஜ்யத்தின் எல்லையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பார் கள். அவரோ அந்த எல்லையில் மரணமடைந்தார். ஆகையால், காந்தியடிகளின் வாழ்க்கையைக் கணித்துப் பார்க்கிறபோது, அவருடைய தோல்விகளையும் கணித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தோல்விகள் ஏற்படுவது சகஜம், ஆனால் இவை பயனுள்ளவையாயு மிருக்கின்றன. காந்தியடிகள் எந்தெந்தப் போராட்டத்தில் என் னென்ன விதமான தோல்விகளடைந்திருக்கிறாரென்பதைச் சிறிது கவனிப்போம். முதலாவது யந்திர வகைகளோடு போராட்டம். கையிலே கத்தியோ பீரங்கியோ வைத்துக் கொள்ளாமல் ஒரு கைராட்டினத் துடன் அவர் இந்த யுத்தத்தில் இறங்கினார். இது வீண் முயற்சியென்று அவருடைய சிஷ்யர்களே கூறினார்கள். தோல்வி நிச்சயம். ஆனால் அந்தக் கைராட்டினமானது, நாம் இதுகாறும் மறந்து விட்டிருந்திருக் கிற ஓர் உண்மையை நமது காதிலே போட்டு விட்டது. யந்திரமானது, நமது மனிதத் தன்மையைப் போக்கடித்துவிட்டது; நம்மை அஃது ஆட்கொண்டு விட்டது. இந்தியாவிலுள்ள அத்தனை பேரும் கைராட்டினத்தைச் சுற்றினால் கூட, யந்திரத்தை வெற்றி கொள்ள முடியாது. ஆனால் இந்தக் கைராட்டினமானது, நமது அடிமைத் தனத்தை நமக்கு உணர்த்தும்; இயற்கை வாழ்க்கையின் பெருமையை நமக்கு அறிவுறுத்தும். யந்திரத்திற்கு நாம் அடிமையாவது போய், அதனை நமது அடிமை யாக்கிக் கொள்வோம். நமது தேக நலனையும் ஆத்ம நலனையும் அது பாதிப்பதாயிருந்தால், அதனை ஒரு வரம்புக்குட்படுத்தி வைப்போம். காந்தியடிகளின் இரண்டாவது போராட்டம், மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இழைக்கப்படுகிற கொடுமைகைளைப் பற்றியது. இது விஷயத்தில் அவர், தமது நாட்டு மக்களின் எதிர்ப்பையே சமாளிக்க வேண்டியிருந்தது. எல்லா ஜீவராசிகளுடனும் மனிதன் ஒன்றுபட்டவன் என்பதை அவர் அடிக்கடி எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. காந்தியடிகளின் மூன்றாவது போராட்டம், பிறர் மீது ஆதிக்கங் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்கும் பலாத்கார எண்ணத்திற் கும் விரோதமாக நடத்திய போராட்டமாகும். கோலியத்துக்கு விரோதமாக டேவிட்1 எப்படி நிராயுதபாணியாகச் சென்றாரோ அதுபோல் காந்தியடிகளும் அஹிம்ஸை என்ற ஒரே ஆயுதத்துடன் பலாத்காரம், பேராசை என்பவைகளை எதிர்த்திருக்கிறார். இது விஷயத்தில் அவர் அடிக்கடி தோல்வியுமடைந்திருக்கிறார். அவருடைய நண்பர்கள்கூட அவரைக் கைவிட்டிருக்கிறார்கள். ஆயினும் அவர், பலாத்காரத்தை அஹிம்ஸையினால்தான் வெற்றி கொள்ள முடியுமென்று சாதித்து வருகிறார். யங் இந்தியா பத்திரிகை யைப் புரட்டிப்பார்த்தால், காந்தியடிகளின் வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகள் கிளம்பினவென்பது தெரிய வரும். இந்த அஹிம்ஸை விஷயத்தில், காந்தியடிகள் தோல்வியே வெற்றி யென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஏனென்றால், இதுவரையில் இந்த அஹிம்ஸை அனுஷ்டானத்தில் கொண்டுவரப்படவேயில்லை யென்று அவர் கருதுகிறார். ஆத்ம பக்தியைப் பரிசோதனை செய்து பாருங்கள். நாம் அதனை-ஆத்ம சக்தியை-தேகபலத்தினால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிற வரை அதன் பலத்தை நாம் சரியாக அளந்துசொல்ல முடியாது என்பது காந்தியடிகளின் வாக்கு. அவர் இன்னோரிடத்தில் கூறுகிறார்:- கொடுங்கோலர்களுடைய வாளாயுதத்தின் முனையை மழுங்கவைப்பதே என் முயற்சி. எப்படி? அதைவிடக் கூர்மையான ஓர் ஆயுதத்தைக் கொண்டல்ல. என்னுடைய தேகபலத்தைக் கொண்டு நான் தாக்குவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களல்லவா, அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமற் போகும்படிச் செய்துவிடுவதன் மூலமாகத் தான். நான் உபயோகிக்கிற ஆத்மசக்தி ஆயுதத்தைக் கண்டு அவர்கள் ஏமாற்றமடையக்கூடும். முதலில் அவர்கள் இந்த ஆயூதத்தைக் கண்டு பிரமித்துப் போவார்கள். ஆனால் பின்னர், இதனை அங்கீகரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படும். அவர்களுடைய இந்த அங்கீகாரமானது அவர்களை உயர்த்துமே தவிர தாழ்த்தாது. இஃது ஒரு லட்சியமென்று சொல்லப்படக்கூடும். அது வாதவம்.1 இந்த வாசகங்களைப் படிக்கிறபோது, காந்தியடிகள் தோல்வி யுற்றாலும் நம்பிக்கையை இழக்கவில்லை என்பது நன்கு தெரிய வரும். அவருடைய லட்சியம் அநுபவத்தில் கொண்டு வரப்பட வேண்டிய காலம் இன்னும் வரவில்லை போலும். அப்படியானால் காந்தியடிகள் தமது உபதேசங்களையும் லட்சியத்தையும் அநுபவ உலகத்திற்குக் கொண்டு வந்து அவை தோல்வியடைந்துவிட்டன என்று கருதும் படியாகச் செய்துவிட்டாரே என்பதற்காக நாம் விசனிப்பதா? இதற்கு ஆம் என்றும் கூடாது என்றும் பதில் சொல்லலாம். ஏன் விசனிக்க வேண்டுமென்றால் மனிதனுடைய உயர்ந்த லட்சியங்கள் தோல்வி யடையக் கூடியன என்று காட்டுவது தவறு. மற்றும் ஒரு மகான் இந்த உலக வாழ்க்கையில் சிக்கிக்கொள்வது கூடாது. ஏன் விசனிக்கக் கூடாதென்று கேட்டால், இப்பொழுது உலகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிற போராட்டங்களின் விளைவாக ஜனங்கள், இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த லட்சியம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த லட்சியத்தை முன்னிலைப் படுத்திக் காட்ட வேண்டியதாயிருக்கிறது. அப்படி நாம் காட்டாவிட்டால் அந்த லட்சியமானது ஒரு சிலரிடத்தில் மட்டும் தங்கிப் போய்விடும்; எங்கும் பரவாது. பணிவு, கொடை என்பவை களை ஜனங்கள் மறுப்பதற்கு முன்னர் அவற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். நாம் காயமடையாமல் சண்டை செய்ய முடியாது. அப்படியே நம்முடைய முறை வருகிறபோது நமது எதிரி களை காயப்படுத்தாமலும் இருக்க முடியாது. இதனால் காந்தியடி களின் அரசியல் போராட்டத்தில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. இப்பொழுது உலகத்தில் காணப்படுகிற போட்டிகளுக்கும் பிணக்குகளுக்கும் மத்தியில் உலகமனைத்தும் ஏற்கக்கூடிய ஓர் உபதேசத்தை, கீழ் நாட்டுக்கும் மேனாட்டுக்கும் பொருந்துகிற ஓர் உபதேசத்தை, கிறிதவ பரிபாஷையில் சொல்லப்படுகிற ஒரு ஹிந்து தார்மிக உபதேசத்தைக் கேட்கிறோம். இதனாலேயே காந்தியடி களை, அவரைச் சூழ்ந்து கொண்டிருக்கும் தேசீயக் கொள்கைகள் முதலியன வற்றையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, எல்லாத் தேசங்களின் பெயராலும் அவரை ஓர் உலக புருஷரென்று நான் போற்றுகிறேன். * * * காந்தியடிகளின் உபதேசம் எச்.எ.எல். போலக் (லண்டன்) சில வருஷங்களுக்கு முன்னர், டாக்டர் மாட் ராய்டன்1 என்ற அம்மையார் உபதேசகராயிருந்த காலத்தில் லண்டன் கில்ட் ஹவுஸில் நவீன எண்ணப் போக்கின் சிருஷ்டிகர்த்தர்கள் என்ற தலைப்பின் கீழ் தொடர்ச்சியாகச் சில பிரசங்கங்கள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாகக் காந்தியடிகளின் பெயரும் சேர்க்கப்பட்டி ருந்தது. இன்று, மகான்களென்று கருதப்படுகிறவர்களை, வருங் காலத்தவர் மதிப்பிட்டுப் பார்க்கிறபோது, இந்தியாவின் தலைவ ராகப் போற்றப்படுகிறவருடைய பெயர் முன்னணியில் வந்து நிற்கும். ஜனங்களினால் அடிக்கடி உச்சரிக்கப்பட்டு வருகிற இன்னும் பல தலைவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் தலைவர்களல்ல; மரணத்தின் தலைவர்கள். அவர்கள், மேலுக்கு அழைத்துக் கொண்டு போகிற தலைவர்களல்ல; பள்ளத் திற்கு அழைத்துக் கொண்டு போகிற தலைவர்கள். அவர்கள் அன்பு, அஹிம்ஸை இவற்றின் தலைவர் களல்ல; துவேஷம், பலாத்காரம் இவற்றின் தலைவர்கள்.அவர்கள் உயர்ந்த நாகரிகத்திற்கு அழைத்துக் கொண்டு போகிற தலைவர்களல்ல; அநாகரிகத்திற்கு அழைத்துக் கொண்டு போகிற தலைவர்கள். எல்லா ஜனங்களும் ஆண்டவனுடைய பாதுகாப்பின் கீழ் சகோதரர்களென்ற லட்சியத்திற்கு அழைத்துக் கொண்டு போகிற தலைவர்களல்ல; ஜாதி உயர்வு என்ற கொள்கைக்கு அழைத்துச் செல்கிற தலைவர்கள். சரித்திரத்தை ஆராய்ந்து அதனின்று பாடங்கற்றுக் கொண்ட யார்தான், காலக் கிராமத்தில், காந்தியடிகளின் அஹிம்ஸை போதனை தான் வெற்றியடையுமென்பதில் சந்தேகங் கொள்ள முடியும்? அவர் கண்டிருக்கிற வெற்றிகளெல்லாம் ஆன்ம உலகத்திலே. அவர் மானிட சமுதாயத்தின் புனருத்தாரணத்திற்காக விதையூன்றியிருக்கிறார். மேலே சொன்ன தலைவர்களுடைய வெற்றியெல்லாம் பௌதிக உலகத்திலே தான். அவர்கள் சென்றிருக்கிற மார்க்கத்தில் கண்ணீரும் ரத்தமும் சிந்திக் கிடக்கின்றன. காந்தியடிகள், தாம் துன்பநுபவிப்பதன் மூலம் எதிரியை வெற்றி கொள்கிறார். அவர்களோ, தங்களை வழி மறிப்போர் அனைவரையும் அழித்தே வெற்றி காண்கிறார்கள். சில வருஷங்களுக்கு முன்னர், காந்தியடிகள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நான் அரசியலிலே அதிகமாக ஈடு பட்டிருக்கிற ஒரு ஞானியென்று ஜனங்கள் என்னைச் சொல்கிறார் கள். உண்மையில் நான், ஞானியாக வேண்டுமென்ற அதிதீவிர ஆவலுடைய ஓர் அரசியல் வாதி யென்று கூறினார். மனிதனிடத் திலே குறைகளிருக்கின்றன வென்பதை அங்கீகரித்துக் கொண்டு, அவற்றிற்குப் பரிகாரந்தேடுவதிலே ஈடுபட்டு, காலக் கிரமத்தில் பூரணத்துவத்தையடைய முயற்சி செய்து கொண்டிருக்கிற ஒருவருடைய வார்த்தைகள் இவை. சத்திய சோதகர் என்ற முறையில், ஐம்பது வருஷ காலம் வாழ்க்கையாகிற யாத்திரையைச் செய்திருக்கிற அவர், தமது குறைபாடுகளை நன்கு உணர்ந்திருக்கிறா ரென்பதை இந்த வாசகங்கள் காட்டுகின்றன. ஒரு நிலைமையைப் பற்றி அவர் சொல்கிற வியாக்கியானத்தையோ அல்லது அதற்குச் சொல்கிற பரிகார முறையையோ நாம் அங்கீகரியா விட்டாலும், சத்தியத்தைத் தவிர வேறு மதமில்லை யென்று அவர் உறுதியுடன் கூறுவதை யாரும் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் எப்பொழுதும் லட்சியத்திலேயே திருஷ்டியுடையவராயிருக்கிறார்; அதில் அவர் உறுதியான நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார். மனிதன், தான் போகிற வழியில் இடறி விழுவானாகில், அவை யெல்லாம் அவனுக்கு ஏற்படக் கூடிய அநுபவங்கள் தானே? மனிதன் இங்ஙனம் தவறி விடுவானாகில் அதை அவன் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, வேறுபாதையில் திரும்பி லட்சியத்திலேயே பார்வை யுடையவனாய்ச் செல்ல வேண்டும். அவர், தமது வாழ்க்கைப்பிரயாணத்தில் அநேக அநுபவங் களையடைந்திருக்கிறார். இவையனைத்தையும் அவர் அநுபவஞான மாகச் சேகரித்துக் கொண்டிருக்கிறார். வெறும் மந்திரங்களை முணு முணுப்பதில் அவர் திருப்தி கொள்வதில்லை. மனிதனுடைய அன்றாட வாழ்க்கைக்கு அவை பயன்படுவதாயிருக்க வேண்டும். தவிர, அவை உலகனைத்திற்கும் பொதுவானவையா யிருக்க வேண்டும். அப்படி யில்லாவிட்டால் அவை அபத்த மானவை. அஹிம்ஸை, வாழ்க்கையில் அநுபவ ரீதியாகக் கொண்டு வர வேண்டிய விஷயமென்று அவர் சொல்கிறார். அவர் கூறுகிறார்:- சத்தியத்தின் முதிர்ந்த பழமாகிய அஹிம்ஸையை, ஒருவன், மற்றவர்களுடன் பழகுகிற போது பிரயோகம் செய்து காட்டாமல், பெரிய விஷயங்களிலேயே பிரயோகம் செய்ய வேண்டுமென்று கருதுவானாகில் அது தவறு. அஹிம்ஸை யென்பது, குடும்பத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அஹிம்ஸை அவசியமாயிருக்கு மானால், தேசத்திற்கும் அஃது அவசியமானதாகும். ஒருவன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் விஷயத்தில் மட்டும் அஹிம்ஸையை அநுசரித்துக் கொண்டு, மற்றவர்கள் விஷயத்தில் ஹிம்ஸை முறையைக் கையாள முடியாது. இப்படியிருக்க முடியாவிட்டால், அவன், தன்னைச் சுற்றி யுள்ள வர்கள் விஷயத்தில் அஹிம்ஸையை அநுஷ்டிக்கவில்லை யென்பது தான் அர்த்தம். பலாத்காரம் உங்கள் முன்னிலையில் நிறுத்தப்படுகிற போதுதான், உங்கள் அஹிம்ஸை பரிசோதனைக் குள்ளாகிறது********* பரபர க்ஷமை காட்டுவதுதான் அஹிம்ஸை. அஹிம்ஸையே வாழ்க்கையின் சட்டமென்று உங்களுக்குப் பட்டுவிட்டதானால், உடனே அதனை நீங்கள் நடைமுறையில் கொணர வேண்டும். உங்களிடத்தில் பலாத்காரம் காட்டுவோரிடத்தில் நீங்கள் அஹிம்ஸை யைக் கையாள வேண்டும். தனிப்பட்ட நபர்களுக்கும் தேசங்களுக்கும் இந்தச் சித்தாந்தம் பொதுவானது. அஹிம்ஸைக்கு, பயிற்சி தேவைதான். ஆரம்பத்தில் எதுவும் சிறிய அளவாகத் தானிருக்கும். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை மட்டும் இருந்துவிடுமே யானால், மற்றவை யெல்லாம் தாமே வந்து சேரும். உங்களுடைய வாழ்க்கை நிலையை நீங்கள் திரப்படுத்திக் கொள்ளுங்கள்; மற்றவை தாமே வரும் என்ற அவருடைய பழைய வாசகத்தையே, மேற்கண்ட வாக்கியங்கள் வியாக்கியானப்படுத்திக் கூறுவனவாயிருக்கின்றன. இந்தியாவுக்கும் பாலதீனத்திற்கும் புராதனமாயுள்ள இந்த உபதேசம், உலகத்திற்குப் புனிதமாயுள்ள பல பொருள்களை அழித்துக் கொண்டு வருகிற தற்கால சர்வாதிகாரிகளுக்கும், பலாத்காரத்திற்கும் பேராசைக்கும் இரையாகியுள்ள ஜனங்களுக்கும் பைத்தியக்காரத் தனமாகத் தோன்றும். என்றாலும், துவேஷத்தை அன்பினால்தான் வெல்ல முடியும். மனிதனுக்கு மனிதன் அன்புகாட்ட வேண்டுமென்று உபதேசித்த பெரியோர்களும் அவர்களின் வழித் தோன்றலாகிய காந்தியடிகளும் சரியான படி நடக்கிறார்களென்பதை யாரேனும் மறுக்க முடியுமா? சிறப்பாக, விஞ்ஞான முன்னேற்றங்கள் பல அடைந்துள்ள தற்போதைய உலகத்தில், இந்த நவீன தீர்க்கதரிசி, நவீன பாஷையில் சொல்கிற உபதேசங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டியது எவ்வளவு அவசியமாயிருக்கிறது? மற்றவர்களை நாம் தலைவர் என்று அழைக்கிறோம். ஆனால் காந்தியடிகளை மகாத்மாவென்று அழைக்கிறோம். முப்பது வருஷங் களுக்கு முன்னரே அவர் கூறினார்:- ஆத்ம சக்தி நிகரற்றது. பலாத்காரத்தைவிட அது மேலானது. அப்படியிருக்க, அதனைப் பலஹீனர்களுடைய ஆயுதமென்று எப்படிச் சொல்லமுடியும்? தேகபலத்தை உபயோகிக்கிறவர்களுக்கு ஒரு சத்தியாக்கிரகியினுடைய பலம் தெரியாது. எவனொருவன் மரணத்தைத் தன் சிநேகிதனாகக் கொண்டுவிடுகிறானோ அவன்தான் உண்மையான வீரன். மனதை அடக்கியாள்கிற மனிதன் சுதந்திரம் பெற்றவனாகிறான். அவன் பார்வை பட்டமாத்திரத்தில் சத்துரு அழிந்து போகிறான். இதனால்தான் அவர் உறுதியாகக் கூறுகிறார்:- எனது நம்பிக்கை கொஞ்சங்கூட அசைய வில்லை. ஒரு சத்தியாக்கிரகி, கடைசிவரையில் தன் லட்சியத்தை விடாமலிருப்பானாகில், அவனுக்கு வெற்றியேற்படுவது நிச்சயம். இன்றைய சர்வாதிகாரிகள், ஒலி பெருக்குக் கருவிகளின் மூலம் உத்திரவுகள் போடுகிறார்கள். இந்த உத்திரவுகளுக் கிடை யிடையே வெடிகுண்டுகளையும் விஷக்காற்றையும் வீசுகிறார்கள். மற்ற தேசங்களை வெற்றி கொண்டு விட்டதாகப் பெருமைப் படுத்திக் கொள் கிறார்கள். அழிந்துபோயிருக்கிற சுதந்திரத்தின்மீது தடுமாறிச்செல் கிறார்கள். ஜனங்களோ, அந்தச் சர்வாதிகாரிகள் கர்வப்படுவதற்குரிய கருவியாகவும், அவர்களுடைய பலாத்காரத் திற்கு இரையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே சமயத்தில் ஓர் இந்திய மகான், தமது நிதானமான பேச்சினால், மனிதனுடைய ஆத்ம சக்தியையும், அன்பு, சமாதானம், சகோதரத் துவம் என்பனவற்றையும் வற்புறுத்தி உபதேசம் செய்து வருகிறார். இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது? எப்பொழுதும் போல் இப்பொழுதும் கீழ்நாட்டி லிருந்துதான் நமக்கு நவயுக உபதேசம் கிடைத்திருக்கிறது. நாம் இதனைக் கேட்டு அறிவு பெறு வோமா? தாம் ஏதோ புதிய உபதேசத்தைச் செய்வதாகக் காந்தியடி கள் சொல்லவில்லை. அவர் தமது சுயசரிதத்தில் கூறுகிறார்:- எந்த மகான் சத்திய தரிசனம் அடைந்தாரோ, அவர், தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் ஹிம்ஸைகளுக்கு நடுவில் அஹிம்ஸை பிரகாசிப் பதைக் கண்டு, ஹிம்ஸை அநித்தியமானது; அஹிம்ஸையே நித்தியமானது என்று முழக்கஞ் செய்தார். மதமென்பது, அறியாமை, மூடநம்பிக்கை ஆகிய இவைகளின் குழந்தையென்று சொல்வது இப்பொழுது இளைஞர்களுக்குள்ளே ஒரு நாகரிகமாகப் போய்விட்டது. இந்தியாவிலும் இப்படிப்பட்ட இளைஞர் களிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் புராதன முனிவரர்கள் என்ன உபதேசம் செய்துவிட்டுப் போயிருக்கிறார் களென்பதைக் கவனித்தல் நல்லது. அப்படிப் புராதன காலத்து உபதேசங்களைக் கேட்க அவர் களுக்கு மனமில்லையானால், தங்களுடைய தற்போதைய தேசீயத் தலைவருடைய உபதேசங் களையாவது கேட்பார்களாக. காந்தியடிகள் கூறுகிறார்:- மதமென்பது நமக்குப் புறம்பானதல்ல; நம்மினின்றுமே அது பரிணமிப்பது. அது நம்மிடத்திலேயே இருப்பது. சிலருக்குத் தெரிந்தும், சிலருக்குத் தெரியாமலும் அஃது எல்லோரிடத்திலுமிருக்கிறது. புறச்சாதனங்களின் துணைகொண்டோ அல்லது அக வளர்ச்சியினாலோ அந்த மத உணர்ச்சியைத் தூண்டி விடவேண்டும். எந்த விதமாகத் தூண்டிவிட்டாலுஞ் சரிதான்; தூண்டிவிட வேண்டியதென்னவோ அவசியம். அப்பொழுதுதான், நாம் சாசு வதமானதொரு காரியத்தைச் சரியானபடி செய்யமுடியும். இப்படியே அஹிம்ஸையைப்பற்றிக் கூறுகிறபோது, அது சத்தியத் தின் ஆத்மாவென்றும், அதுவே உயர்ந்த மதமென்றும் கூறுகிறார். உனது அன்பை-அஹிம்ஸையை-உனது எதிரியின் மனதில் படும்படியாக நீ செலுத்துவாயானால், அவன் அதே மாதிரி உன்னிடம் அன்பு காட்டக் கடமைப்பட்டிருக்கிறான் என்பது அவருடைய வாசகம். டால்டாய்க்குப் பிறகு இவ்வளவு சீக்கிரத்தில் மானிட சமுதாயத்தின் நண்பராகிய ஒரு மகான் தோன்றியிருக்கிறார். அவருடைய காலத்தில் வாழ்வது நமக்கொரு பாக்கியம். ஞானிகளும், தீர்க்கதரிசிகளும், தங்களைச் சுற்றி எவ்வளவு அந்தகாரம் சூழ்ந்திருந் தாலும், அதன் நடுவே ஒரு பிரகாசத்தை எவ்வளவு தெளிவாகக் காட்டு கிறார்கள்? நமது ஆத்மாவைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளவும், நம்மிடத்திலே யுள்ள தெய்வ சக்தியை அறிந்துகொள்ளும்படிச் செய்யவும், யுகத்திற்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை இப்படிப் பட்ட மகான்கள் தோன்றாவிட்டால் நாம் என்ன கதிக்கு ஆளாகி யிருப்போம்? ஒலிவா ஷ்ரீனர்1 என்ற அம்மையார், தாமியற்றிய உரைப் பாட்டொன்றில், சத்தியமாகிற பறவையைத் தேடிக்கொண்டு ஒருவன் சென்றதாகவும், அவன் ஒரு மலைமீதேறிச் சென்றபிறகு, அந்தப் பட்சியின் இறகொன்று கீழே விழுந்துவிட்டதாகவும், அந்த இறகைத் தழுவியவண்ணம் அவன் இறந்துவிட்டானென்றும் வருணிக்கிறார். அதுபோல், காந்தியடிகளால் அவருடைய எழுபதாவது வயதில் அளிக்கப் படுகிற உபதேசமும் ஓர் இறகாக இருக்கட்டும். அதை நமதாக்கிக் கொண்டும், அதனைத் தழுவிக்கொண்டும் நாம் இறப்போமானால் அதுவே நமது பெரிய பாக்கியமாகும். * * * ஆத்மாவின் வெற்றி லெவெலின் பவி (க்ளாவாடெல், தேவாப்ளாட், விட்ஜர்லாந்து) நான் எதையும் பகுத்தறிந்து பார்க்கும் கொள்கையுடையவன்; உலக வாழ்க்கையில் விருப்பங்கொண்டவன். அப்படியிருக்க, மகாத்மா காந்தி இப்பொழுது நம்மிடையே அவதரித்திருப்பதைக் குறித்து என் மனதில் எழும் எண்ணங்களை எடுத்துச் சொல்வது சுலபமான காரியமல்ல. சந்தை இரைச்சல் போன்ற இந்த உலகத்தில் அவர் நம்மை வசீகரித்திருக்கிறார். தினசரிப் பத்திரிகைகளில் அவருடைய படத்தைப் பார்ப்பதே நமது ஆத்மாவைத் தூண்டி விடுவது போலிருக்கிறது. சீனாவில் வெண்மை நிறமுள்ள வௌவால் களிருப்பதாகச் சொல் கிறார்கள். அதனைப் படத்தில் பார்த்தால் எவ்வளவு ஆச்சரியப்படு கிறோமோ அதைப்போல் காந்தியடிகளின் படத்தைப் பார்த்தாலும் நாம் ஆச்சரியப்படுகிறோம். அவருடைய கண்கள் வாழ்க்கையின் அந்த காரத்திலுள்ள ரகசியங்களைத் தேடுவன போலிருக்கின்றன. அவருடைய அகன்ற காதுகள் அவரிடத்திலிருக் கும் இனிய சுபாவத்தைத் தெரிவிக் கின்றன. நம்முடைய காலத்தில் வேறெந்த மகானும், காந்தியடிகளைப் போல் அன்பினுடைய சக்தியை விளக்கிக் காட்டவில்லை. அவர் உபதேசிக்கிற அன்பு கீழ்த்தரமான அன்பல்ல; கிறிதவ ஞானிகளும் ஹிந்து ஞானிகளும் உபதேசித்துச் சென்ற அன்பு. இயற்கைக்குப் புறப்பான சக்திகளில் நம்பிக்கை யில்லாதவர்களுக்கு, காந்தியடிகள் அவ்வப்பொழுது வெளியிடும் கருத்துக்கள் சில அர்த்தமில்லாதன வாகவே படும்; எதற்கெடுத்தாலும் தெய்வத்தின் உத்திரவு என்று சொல்லிக்கொண்டிருக்கிற புரோகிதர் களின் மனப்போக்கை யொட்டிய தாகவே காணப்படும். காந்தியடிகள் இளைஞராயிருந்தபோது, பாம்பு பயம் பிடித்தவராயிருந்தார். அப்படிப்பட்ட அவர், இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் வசித்தபோது, பிரார்த்தனைக் கூட்டங்களிலும் பஜனை கோஷ்டிகளிலும் கலந்து கொண்டார். அர்த்த மில்லாமல் அவர் இவற்றில் கலந்துகொள்ளவில்லை. அவருடைய அறிவு அடிக்கடி மோட்சலோகத்தைத் திரும்பிப் பார்க்கிறதாயினும், அவருடைய இருதயம் எப்போதுமே நிதானமாகவும், கருணைநிறைந்த தாகவும், கௌரவம் வாய்ந்ததாகவு மிருக்கிறது. காந்தியடிகளின் சுயசரித்திரத்தை நாம் படித்துப் பார்ப்போ மானால், தேகத்தின் மீது ஆத்மா வெற்றிகொள்ள முடியுமென்பது நன்கு வெளியாகிறது. ஆத்மத் தெளிவையடையத் தாம் வெகு பிரயத்தனப் பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். எவ்வளவு கூர்மை யான முனையில் அவர் நிதானத்துடன் நிற்கிறார்! சுதந்திர இருதய முள்ள காந்தியடிகளின் புனிதமான மூளையில் விடுகதைகள் மாதிரி எத்தனை பிரச்னைகள் கிளம்புகின்றன! அவர் பசும்பாலைக் குடிக்கக் கூடாதென்று விரத மெடுத்துக் கொண்டு விடுகிறார். பின்னர் ஆட்டின்பாலை அருந்த நேரிடுகிற போது, தம்முடைய விரதத்திற்குப் பங்கம் நேரிடுமோ வென்று தயங்குகிறார். தீர்க்க முடியாத ஒரு வியாதியினால், கன்றுக்குட்டி யொன்று அவதைப் படுகிறது. அதன்மீது கொண்ட கருணையினால் அதனைக் கொல்லலாமா? விவசாய நிலங்களைப் பாழாக்கும் குரங்குகளை, எப்படி அவை களுக்குத் தொந்திரவு உண்டாக்காமல் அப்புறப்படுத்துவது? வாயில்லாப் பிராணிகளை மனிதன் காப்பாற்றக் கடமைப் பட்டிருக் கிறானென்றதோர் உயர்ந்த சித்தாந்தத்தை அநுஷ்டான பூர்வமாகக் கொண்டுவர வேண்டு மென்ற ஆவலினாலேயே காந்தியடிகளுக்கு இந்தத் திகைப்புகள் ஏற்படு கின்றன. மற்றும், இந்த ஜீவகாருண்ய சித்தாந்தமானது, ஹிந்து மதத்தின் விரிந்த கோட்பாடாகும். இதனால் தான், பிராணிகளை அறுத்துப் பார்த்துப் பரிசோதனை செய்வதென்ற விஷயத்தை அவர் பலமாகக் கண்டிக்கிறார். இப்படிப்பட்ட இந்தப்புனித ஆத்மாவை - மகாத்மா காந்தியை - ஐரோப்பியர்கள் எப்படி நடத்தினார்களென்பதை நினைக்கிற போது, நமக்குப்பெரிய அவமானம் உண்டாகிறது. தென்னாப்பிரிக்கா வில் அவர் வசித்த காலத்தில் அவர் துன்புறுத்தப்பட்டார்; அச் சுறுத்தப்பட்டார்; பல தீங்குகளிழைக்கப்பட்டார். ஆயினும் அவர் இவைகளுக்காக மனக் கசப்புக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாகத் தம்முடைய அஹிம்ஸை நெறியில் உறுதியுடன் சென்றுகொண்டிருந் தார். இவ்வளவு மெலிந்த தேகத்தில் எங்ஙனம் பெரிய ஆத்மா வாசங் கொள்ளக்கூடும்? அவர் இந்த உலகத்தின் புகழ்ச்சியையும் இகழ்ச்சி யையும் பொருட்படுத்துவதே யில்லை. தம்முடைய தூல தேகத்திற்கு எந்தவிதமான அவமானங்கள் இழைக்கப்பட்டபோதிலும், அவை களினால் தமது சுய மரியாதை போய்விட்டதாக அவர் கருதவில்லை. இங்கு மங்குமாக அலக்கழிக்கப் பட்டாலும், ரெயில் வண்டியிலிருந்து கீழே இறக்கப்பட்டாலும், கசுமலங் களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாலும், தம் சொந்த உறவினர் போல் தீண்டாதாரைக் கருதி அவர்களுக்குச் சேவை செய்துகொண்டிருந் தாலும், அவருடைய எளிமையும், நல்ல சுபாவமும் கொஞ்சங்கூட பாதிக்கப்படுவதே யில்லை. மேனாட்டு லட்சிய வாதிகள் சிலரிடத்தில் ஒரு கர்வ குணம் காணப்படுகிறது. அஃது அவரிடத்தில் கிடையாது. உண்மையென்று அவருக்குப்படும் பட்சத்தில் அவர் தமது அபிப் பிராயத்தையோ, அல்லது பழக்க வழக்கத்தையோ ஒருநாளில் மாற்றிக் கொண்டு விடக்கூடியவர். அவர் லட்சிய வாதியாயிருந்தாலும் உலக ஞானம் நிரம்பவுடையவர். இந்த அநுபவ ஞானமும் சுயநலப் பற்றின்மையும் சேர்ந்து அவருக்கு, எதனையும் சமாளிக்கக்கூடிய ஓர் ஆற்றலை அளித்திருக்கிறது. அவர் எங்குச் சென்றாலும் அவருக்கு எல்லாம் ஆட்பட்டுவிடுகின்றன. யேசுநாதருடைய வாழ்க்கையின் ரகசியத்தை இந்த ஹிந்து மகான் அநுஷ்டானத்தில் காட்டியிருக்கிறார். இதனால்தான், யேசுநாதருடைய வாசகங்களை அவர் அடிக்கடி சொல்கிறார்போலும். கிறிதவ தர்மத்தின் சாரமாகிய தன்னலத் தியாகமும், யேசுநாதரின் மலைப் பிரசங்கமும் அவருடைய வாழ்க்கையில் ஆழ்ந்த முத்திரையை இட்டிருக்கின்றன. உலகத்தில் ஒரே ஒரு கிறிதவர்தான் தோன்றினார். அவர் சிலுவையிலே அறையப்பட்டு இறந்து போனார் என்று நீட்ஷே1 கூறினான். உன்மத்தம் பிடித்த இந்த அறிஞன் இன்னும் சிறிது காலம் வாழ்ந்துகொண்டிருந் திருப்பானாகில், மேற்கண்ட வாசகத்தை மாற்றிக்கொண்டிருப்பான். தென்னாப்பிரிக்காவில் ஜூலு கலகம் நடந்ததே அது மன்னிக்க முடியாத ஒரு மனித வேட்டை.அந்தக் கலகத்தில் நோய் வாய்ப்பட்டவர் களையும் காயமடைந்தவர்களையும் காந்தியடிகள் கருணையோடு கவனித்து அவர்களுக்குச் சிகிச்சை செய்தார். அப்பொழுது அவர் ஆப்பிரிக்காவின் பல பாகங்களும் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில்தான் அவர் ப்ரஹ்மசரிய விரதம் பூண்டார். காந்தியடிகளைப் போலவே யேசுநாதரும், எவனொருவன் கடவுளின் நண்பனாயிருக்க விழைகிறானோ அவன் தனியாகவே இருத்தல் வேண்டும் என்ற திருவாசகத்தை மனத்தில் உட்கொண்டவராய் குடும்பத்தினின்று வெளியேறி விட்டாரல்லவா? காந்தியடிகளின் இந்தத் திருவாக்கைக் கேளுங்கள்:- எவனொருவன் தனது பாததூளிக்கும் தாழ்ந்தவன் என்று தன்னைக் கருதிக் கொள்கிறானோ அவனுக்குத்தான் கடவுள் துணை செய்கிறார். பலஹீனர்களுக்கும் கதியற்றவர்களுக்குந்தான் தெய்வத் திருவருள் சுரக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் மானிட சமுதாயத்தின் எதிர்கால வாழ்வு எப்படி அமையும் என்பதை இப்பொழுது நிர்ணயித்து சொல்வது கடினம். யேசுநாதருடையவும், காந்தியடிகளினுடைய வும் புனிதமான உபதேசங்களின் மூலமாகவே இந்த உலகம் க்ஷேமம் அடையும் போலும். தென்னாப்பிரிக்காவில் கடுமையான பிளேக் நோய் பரவி யிருந்த காலத்தில் காந்தியடிகள் அபூர்வமான பல சேவைகள் செய்தார். அப்பொழுது அவரிடத்தில் நான்கு இந்திய குமாதாக்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். என்னோடு சேவை செய்ய நீங்களும் வருகிறீர்களா வென்று அவர்களைப் பார்த்து காந்தியடிகள் கேட்டார். தாங்கள் எங்குச் சென்றாலும் அங்கு நாங்கள் வருவோம் என்று அவர்கள் கூறினார்கள். உலகமும் அவர்களைப்போல் சொன்னால் நன்றாயிருக்கும். காந்தியடிகளின் தெய்விக சாந்தமானது, ஐரோப்பிய மகா யுத்தத்தின் பரிணாமம் என்று சொல்லக்கூடிய மாதிரி தளபதி டையரினால் அமிர்தசரஸில் நிகழ்த்தப்பட்ட படுகொலை இருக்கிறதே அந்தப் படுகொலைக்காக - சிறு யுத்தத்திற்காக - இங்கிலீஷ்காரரை இரக்கப்படும்படி செய்திருக்குமானால் அதுவே அவரால் நமது நாட்டிற்குச் செய்யப்பட்ட சேவையாகும். அச்சத்தைக்கொண்டு உலகத்தை ஆள முடியாதென்பதையும், வாள் பலத்தைவிட மேலான ஒரு பலம் இருக்கிறதென்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியவராவார். ஒரு சில பலாத்கார வாதிகளினுடைய செயலினால், நமது ஆங்கிலேய ஜாதியினுடைய நற்பெயருக்குக் களங்கம் உண்டாகும்படி நாம் பார்த்துக் கொண்டிருக்கலாமா? அற்பத்தனமான, யந்திரங்களில் நம்பிக்கை வைத்திருக்கிற, பொன்னாசையும் அதிகார ஆசையும் நிறைந்த, வாழ்க்கையின் அற்பத்தனமான அமிசங்களுக்கு மதிப்பு வைத்திருக்கிற, நிரபராதிகளான பிராணிகளைக் கொலைசெய்வதன் மூலம் இயற்கையோடு உறவாடுகிற, மன ஒருமைப்பாடு என்பதையே யறியாத, வாழ்க்கையைச் சுற்றியிருக்கும் இனியசங்கீதத்தைத் துரும்பு போல் பார்க்கிற மேனாட்டு நாகரிகத்தினூடே காந்தியடிகள் தமது கூர்மையான பார்வையை நன்றாகச் செலுத்துகிறார். 1922ம் வருஷம் சௌரிசௌராவில் பொது ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கிவிட்டார்கள். உடனே காந்தியடிகள், சட்ட மறுப்பியக்கத்தை, நிறுத்திவிட்டு, உபவாசமிருக்கத் தொடங்கினார். இதுவே மகாத்மாக்களின் லட்சணம். கி. பி. பதினான்காவது நூற்றாண்டில் வெளியான பியர் ப்ளோமான் என்ற நூலில் அருமையான ஒரு வாசகம் காணப்படுகிறது. அதனை, தயங்கித் தயங்கி எழுதியிருக்கிற என்னுடைய இந்தப் பாராட்டுதல் மொழி களுக்கு இறுதியில் எடுத்துச்சொல்வது பொருத்தமாயிருக்கும். ஜீவசக்தியோடு துடித்துக்கொண்டிருப்பதும், ஊசி முனையைப் போல் கூர்மையாயிருப்பதுமான நினது அன்பானது, ரத்தமாமிசத்தோடு கூடிய ஓர் உருவமாக அமைந்துவிடுகிறபோது, அஃது - அந்த அன்பு - அரச இலையைவிட லேசாயிருக்கிறது. * * * சீனாவின் வணக்கம் எம். குவோ தை - சி (சீனாவின் தூதர், லண்டன்) நம்முடைய காலத்தில் சீனா முழுவதிலும் சமுதாய, அரசியல் புனருத்தாரணத்திற்காக என்னென்ன சக்திகள் வேலை செய் கின்றனவோ, அந்தச் சக்திகள் ஆசியா கண்ட முழுவதிலும் வேலை செய்கின்றன. அந்தச் சக்திகளைக், கொண்டு செலுத்த நமக்குத் தலைவர்கள் ஆச்சரியகரமானவிதமாகத் தயாராயிருக்கிறார்கள். ஒவ்வொரு தேசமும், தனது புனருத்தாரணத்திற்காக எந்தவிதமான மார்க்கங்களில் சென்றபோதிலும், அவை அரசியலை தார்மிகக் கண்கொண்டு பார்க்கவேண்டும். இதுவே ஆசியா கண்டத்தின் தேவை. இந்தத் தேவையை உருவகப்படுத்திக் காட்டுவதுபோல் இரண்டு தலைவர்கள் தோன்றி யிருக்கிறார்கள். ஸன் - யாட் - ஸென்னின் பக்தன் என்ற ஹோதாவில், காந்தியடிகளின் எழுபதா வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின்போது, அவருக்கு வணக்கஞ் செலுத்துவதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். * * * ஏழை வேஷத்திலுள்ள ஒரு ராஜதந்திரி ஸர். அப்துல் காதர் (இந்தியா மந்திரி சபையின் அங்கத்தினர்) சில வருஷங்களுக்கு முன்னர் நான் வியன்னா சென்றிருந்தேன். அப்பொழுது ஜெர்மனியுடன் ஆதிரியா இணைக்கப்படவில்லை. ஒரு நாள், எனது பகற் போஜனத்திற்காக ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு அதிக ஜனக்கூட்டம். இதனால் எனக்கு இடம் கிடைப்பது கஷ்ட மாயிருந்தது. அப்பொழுது ஒரு பரிசாரகன் என்னிடம் வந்து, எனக்கு என்ன தேவையென்பதைக் கேட்பதற்குப் பதிலாக தாங்கள் காந்தி தேசத்திலிருந்து வந்தவர்களா வென்று கேட்டான். ஆம்; நான் இந்தியாவிலிருந்து தான் வந்திருக்கிறேன். காந்தியைப் பார்த்திருக் கிறேன். அவரோடு சில சமயங்களில் பேசியுமிருக்கிறேன் என்று சொன்னேன். இதைக்கேட்டு அவன் சந்தோஷப்பட்டு இனி நான் காந்தியை பார்த்த ஒருவரைச் சந்தித்தேனென்று சொல்லிக்கொள்ள முடியும் என்று கூறினான். காந்தியடிகளின் புகழ் உலகெங்கும் பரவியிருக்கிறதென்பதை நான் அறிவேன். ஆனால் இந்தியாவிற்குத் தொலைதூரமாயுள்ள நாடு களில் வசிக்கும் சாதாரண ஜனங்கள் கூட, அவருடைய பெயரைத் தெரிந்துகொண்டு அவரைப் போற்றுகிறார்களென்பதை நான் இதுகாறும் அறியவில்லை. 1931ம் வருஷம் லண்டனில் இரண்டாவது வட்டமேஜை மகாநாடு நடைபெற்றது. அதற்குக் காந்தியடிகள் ஆஜராயிருந்தார். நானும் அப்பொழுது அங்கிருந்தேன். காந்தியடிகள் இந்த மகாநாட்டிற்கு வந்திருக்கக் கூடாதென்றும் இதனால் அவருக்கேற் பட்டிருந்த மதிப்புக் குறைந்துவிட்டதென்றும் சிலர் கருதினார்கள். நான் இப்படிக் கருதவில்லை. இந்த விஜயத்தினால் அவர் இங்கிலாந்திலுள்ள அறிஞர் களின் இதயத்தில் ஆழ்ந்ததொரு முத்திரையை இட்டுவிட்டார்; இந்த நாட்டிலுள்ளவரையில் அவர், தமது நாட்டுக்குப் பூரண சுதந்திரம் வேண்டுமென்பதை வற்புறுத்திப் பேசினாலும், இந்த நாட்டு மக்களிடத்தில் ஒரு சிநேகப்பான்மையை உண்டுபண்ணினார். அவர் உடையைப்பற்றிச் சிலர், கண்டிக்கிற தோரணையில் பேசினார்கள். ஆனால் அவர் அவற்றைப் பொருட் படுத்தவில்லை. அவருடைய புருஷத்துவமும் வட்ட மேஜை மகாநாட்டுக்கு அவர் ஆஜராயிருந்த தனாலேற்பட்ட முக்கியத்துவ மும் சேர்ந்து அவர்மீது சொல்லப்பட்ட குறைகளை அகற்றி விட்டன. தமது மனச்சாட்சிக்கு எது சரியென்று படுகிறதோ அதன்படி காந்தியடிகள் நடக்கத் துணிந்துவிடுகிறார். பிறகு அதைப்பற்றி யார் என்ன கூறினாலும் அதை அவர் பொருட்படுத்துவதேயில்லை. இதனால் தான், அவர், இந்தியாவில் பல வருஷங்களாக எந்த உடையைத் தரித்துக் கொண்டிருந்தாரோ அதே உடையையே இங்கிலாந்திலும் தரித்துக் கொண்டிருந்தார். இடுப்பிலே ஒற்றை வேஷ்டி, மேலே ஒரு போர்வை ஆகிய இந்த உடையுடன்தான் அவர் இங்கிலாந்து, பிரான் முதலிய இடங்களில் தங்கி எல்லா அலுவல்களையும் கவனித்தார். வட்டமேஜை மகாநாட்டின் கூட்டம் செயிண்ட் ஜேம் அரண்மனை யில் நடைபெற்றது. இதற்கு வெளியார் அநுமதிக்கப்படவில்லை. ஏனென்றால், மகாநாட்டு மண்டபத்தில் எல்லோருக்கும் இடம் போதாது. நான், எப்படியோ முயன்று, இந்த மகாநாட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். லார்ட் ஸாங்கே தலைவர் தானத்திலமர்ந்திருந்தார். அவருடைய வலது பக்கத்தில் இந்தியா மந்திரியாயிருந்த ஸர் ஸாமியல் ஹோர் அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் வரிசையாகப் பார்லி மெண்டரி பிரதிநிதிகள் உட்கார்ந்திருந்தார்கள். லார்ட் ஸாங்கேக்கு இடது பக்கத்தில் முதல் தானம் காந்தியடிகளுக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. அவருக்குப் பக்கத்தில் மற்ற இந்தியப் பிரதிநிதிகள் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். காந்தியடிகள் லார்ட் ஸாங்கேயிடம் காட்டிவந்த மரியாதை போற்றத் தகுந்ததாயிருந்தது. உடை விஷயத்தில் காந்தியடிகள் சம்பிரதாயத்திற்குக் கட்டுப்படவேயில்லை. வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதிகளுக்குப் பிரிட்டிஷ் மன்னர் தம்பதிகள் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு விருந்து நடத்தினார்கள். காந்தியடிகள் தமது வழக்கமான உடையுடனேயே இந்த விருந்திற்குச் சென்றிருந்தார். பக்கிங்ஹாம் அரண்மனை, இதற்குமுன், இந்த மாதிரியான ஒரு விருந்தினரைப் பார்த்தேயிராது; மற்றும், வேறு யாருக்கும் உடை விஷயத்தில் சம்பிரதாயத்தை மீறுகிற உரிமையும் கிடைத்திராது. இங்கே இரண்டு பிரச்னைகள் எழுகின்றன. ஒன்று, காந்தியடி கள் ஏன் இந்த உடையுடனிருக்கிறார்? இரண்டு, அநுஷ்டான பூர்வகமாக வந்துகொண்டிருக்கும் சில சம்பிரதாயங்கள் விஷயத்தில், அவரைப் பொறுத்தமட்டிலும் விதி விலக்குகள் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய அவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தை அவர் எப்படி அடைந்தார்? சத்திய சோதனை என்று பெயரிட்டழைக்கப் படுகிற அவருடைய சுயசரிதையைப் படித்தவர்களுக்குச் சில விஷயங்கள் புலனாகாமற் போகாது. அதாவது அவர் பாரிடர் பரீட்சைக்குப் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு வந்திருந்த போது, ஒரு நாகரிக புருஷனுடைய லட்சணங்களை யெல்லாம் நன்கு தெரிந்து கொண்டிருந்தார். பணக்காரர்களுக்கு உடை தைத்துக் கொடுக்கிற வெட் எண்ட்1 தையற்காரர்களிடமிருந்தே தமது உடைகளைத் தைத்துக் கொண்டார். பாரிடர் பரீட்சையில் தேறிவிட்டு இந்தியா திரும்பியதும், சிறிது காலங் கழித்து ஒரு வழக்குச் சம்பந்தமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். பின்னர் அங்கேயே அவர் தங்கும்படியாகிவிட்டது. அப்பொழுது தான் அவருடைய லட்சிய வாழ்க்கை உருக்கொண்டது. தென்னாப்பிரிக்காவில் குடியேறி யுள்ள இந்தியர்களின் நன்மைக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணஞ்செய்தார். இந்திய மக்களின் துயரமும் துன்பமும் அவருக்கு அதிகமாகத் தெரியத் தெரிய, அவருடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த நாட்டில் செய்த அரிய சேவைகள் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இதற்குப் பிறகு, அவர் இந்தியாவுக்குத் திரும்பிவந்து, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்ததும், வக்கீல் தொழிலை நடத்துவதென்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டார். அரசியல், சமுதாயத் தொண்டுகளில் தம்மை அர்ப்பணஞ் செய்துவிட உறுதி கொண்டார். இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஒற்றையாடை யுடனேயே தான் இருக்கப்போவதாகத் தீர்மானித்தார். தன்னலத் தியாகத்தின் வெளித் தோற்றமாகவும், தமது வாழ்க்கை அந்ததை மிகவும் குறைத்துக்கொண்டிருப்பதற் கறிகுறியாகவும் இங்ஙனம் செய்தார். ஏழை மக்களின் உடைக்கும் காந்தியடிகளின் உடைக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்க முடியாது. நான் லண்டனில் ஒரு மாணாக்கனாகப் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, மதத்தின் உயர்ந்த அமிசம், துறவு தான் என்ற கொள்கை என் மனத்தில் அதிகமாகப் பதிந்திருந்தது என்று அவர் தமது சுய சரிதத்தில் கூறுகிறார். பாலியத்தில் அவருடைய உள்ளத்தில் ஊன்றிக்கொண்ட இந்த விதையானது, இப்பொழுது மரமாகிப் பழந் தரத் தொடங்கியிருக்கிறது. உடை விஷயமாக முதலில் எழுப்பப்பட்ட பிரச்னைக்கு மேலே கண்ட விடையளிக்கப்பட்டதைக் கொண்டே, இரண்டாவது பிரச்னைக்கும் விடையளிக்கப்பட்டாகிவிட்டது. அவருக்கென்று எதுவும் தேவையில்லை. இதில்தான் அவருடைய பலம் அடங்கியிருக் கிறது. அவர் தமது வாழ்க்கையில் பல இன்ப துன்பங்களை அநுபவித் திருக்கிறார். கடுங்காவல் தண்டனையும், ஜெய் சப்தத்தோடு கூடிய ஊர்வலங்களும் அவருடைய வாழ்க்கையில் மாறி மாறி ஏற்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இவை யனைத்திலும் அவருக்கு தான் என்ற அகங்காரம்மட்டும் ஏற்பட்டதே கிடையாது. அல்லது பட்டம், பதவி, வருமானம் ஆகிய எண்ணங்களும் அவருக்குண்டானது கிடையாது. அவருடைய வாழ்க்கையில் காணப்படுகிற இந்தத் துறவு அமிசந்தான், அவருடைய நண்பர்களையும் எதிரிகளையும் அவர் பக்கம் ஆகர்ஷித் திருக்கிறது. இந்தியாவின் வருங்காலத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்னை களைப் பற்றி அவருடன் மனங் கலந்து பேச கவர்னர்களும், ராஜப் பிரதிநிதிகளும் அவரை அழைக்கிறார்கள். சுதேச மன்னர்கள் அவரைக் கலந்தாலோசிக்கிறார்கள். மந்திரிமார்கள் அவருடைய ஆலோசனை களைக் கேட்டு நடக்கிறார்கள். நமது இந்திய மகாகவியாகிய ஸர் முகம்மது இக்பால்1 ஓரிடத்தில் பாடுகிறார்:- (தனக்கென்று) பிச்சை யெடுக்காத ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தமாத்திரத்தில், ஓர் அரச னுடைய இருதயம் நடுங்குகிறது. இந்த இரவாமை (பிச்சை யெடாமை) தான், சொந்தத் தேவை யென்பதில்லாத நிலைதான், காந்தியடிகளுக்கு மகத்தானதொரு செல்வாக்கைக் கொடுத்தது. மகாத்மா காந்தி, இங்கிலாந்தில் (வட்டமேஜை மகாநாடு நடை பெற்ற போது) வசித்துக்கொண்டிருந்த காலத்தில், லண்டன் ஈட் எண்டி”லுள்ள2 கிங்லி ஹாலில் தங்கியிருந்தார். வட்டமேஜை மகாநாட்டுக் கூட்டங்களுக்காகச் செலவழித்த நேரம் போக மற்ற நேரத்தை ஏழைகளின் மத்தியிலேயே அவர் செலவழித்தார். ஏழை மக்களின் மத்தியில் வசிக்கிறபோதுதான் அவர்களுடன் தமக்கு ஆத்மத் தொடர்பு ஏற்பட்டுவிட்டதான ஒரு சந்தோஷத்தை அவர் அடைகிறார். அவர் விரும்பியிருந்தால், லண்டனிலுள்ள விசாலமானதொரு ஹோட்டலில் தங்கியிருக்கக்கூடும்; அல்லது அவருடைய பணக்கார நண்பர்களுடைய விருந்தினராக இருக்கமுடியும். ஆனால் அவர், ஸ்ரீமதி முரியல் லெடர் என்ற அம்மையாருடைய விருந்தினராகவே தங்கினார். இந்த அம்மையார் கிங்லி ஹால் என்ற தாபனத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தொழிலாளருக்குச் சேவை செய்து வருகிறார். இந்த இடத்தில் தொழிலாளர்கள் அடிக்கடி கூட்டங் கூடுவார்கள். இங்கே சொற்பச் செலவில் தங்கியிருப்பதற்கான வசதிகளும் இருக் கின்றன. உணவு, வாடகை முதலியனவெல்லாம் சேர்ந்து வாரத்திற்கொரு பவுன் வீதமே செலவழியும். காந்தியடிகள், வட்டமேஜை மகாநாட்டுக்கு இந்தியாவின் பிரதிநிதி யென்ற தோரணையில், இங்கு ஒரு சிறு அறையில் தங்கியிருந்தார். இந்த அறையை நான் பார்த்திருக்கிறேன். இதை இப்பொழுது காந்தி அறை யென்று அழைக்கிறார்கள். இதனை அந்த தாபனத்திலுள்ளவர்கள், எல்லோருக்கும் பெருமையோடு காட்டு கிறார்கள். காந்தியடிகள் எங்கே தங்கியிருந்தபோதிலும் அங்கே அன்புச் சக்தியை உண்டுபண்ணிவிடுகிறார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர் களின் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, ஐரோப்பியர் களுட்பட்ட ஒரு கோஷ்டியைச் சேர்த்துக்கொண்டார். இந்தியா விலும் அவருக்கென்று ஒரு பெரிய கோஷ்டி ஏற்பட்டது. 1931 - ம் வருஷம் அவர் இங்கிலாந்துக்கு விஜயஞ் செய்தபோது அவருக்கு ஏற்கனவே இருந்த நண்பர்களைக் காட்டிலும் அதிகமானபேரை நண்பர்களாக்கிக்கொண்டார். வட்டமேஜை மகாநாடு முடிந்து அவர் இந்தியா திரும்பியதும் சிறை வாசத்தை அநுபவிக்கும்படி ஏற்பட்டது. அப்பொழுது சிறைக் காவலர்கள், அவரிடம் அன்பு செலுத்தினார்கள். அவர் ஆபத்திரியில் நோயாகப் படுத்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு உபசாரஞ் செய்துவந்த நர்கள் அவருடைய இனிய சுபாவத்தினால் ஆகர்ஷிக்கப் பட்டார்கள். உடம்பு குணமாகி அவர் ஆபத்திரியிலிருந்தது வெளியேறிய தற்காக அவர்கள் விசனித்தார்கள். இதில் என்ன விசேஷமென்றால், அவருடைய வெளித்தோற்றம் யாரையும் ஆகர்ஷிப்பதில்லையாயினும், அவருடைய ஆத்மாவின் அழகு - அந்தரங்க சுத்தம் - யாரையும் அவர் வசம் இழுக்கிறதென்பது தான். மதத்திலே அவருக்குள்ள பற்றும், கடவுளிடத்திலே அவர் கொண்டிருக்கிற ஆழ்ந்த நம்பிக்கையுமே அவருடைய அன்புக்கு ஊற்றுக்களமாயிருக்கின்றன. அவருடைய மதப்பற்று, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகிற வாக்கியங்கள் பல, அவருடைய சுய சரிதத்தில் காணப்படுகின்றன. உதாரணமாக மானிட சமுதாயமானது, எந்த விதமான லட்சியத்தைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்று அவர் சொல்கிறபோது, பூரணத்துவம் அடைய முயற்சி செய்வது, ஒவ்வொருமனிதனுடைய உரிமையாகும். இதனுடைய பலன், இதனிடத்திலேயே இருக்கிறது. மற்றவை யெல்லாம் கடவுளின் கையில் என்று குறிப்பிடுகிறார். தென்னாப் பிரிக்காவில் நாம் வசித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தம்முடைய மத பக்தியானது, ஜீவ சக்தியுடன் கூடியதாகிவிட்டது என்று இன்னோரிடத்தில் வலியுறுத்துகிறார். அந்தக் காலத்திலிருந்து அவருடைய வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறவர்கள், மத பக்தியானது அவருடைய வாழ்க்கையின் முக்கிய அமிசமாய் இருந்து வந்திருக்கிறதென்பதையும், அதன் மூலமாகவே அவர் உயர்ந்த தானத்தை யடைந்திருக்கிறா ரென்பதையும் நன்கு அறிவார்கள். தாய்நாடு, மதம், மானிட ஜாதி ஆகிய இவற்றின் சேவைக்காகவே அவர் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணஞ் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த வாழ்க்கையில் எழுபது வயது இப்பொழுது பூர்த்தியடைந் திருக்கிறது. இந்தச் சமயத்தில் அவர் பல இடங்களிலிருந்து ஆசிச் செய்திகள் பெறுவார். அப்படி ஆசிச் செய்திகள் அனுப்புவோரிற் பெரும் பாலோர், அவரோடு சேர்ந்து வேலை செய்தவர்களாகவும், அல்லது அவரை நன்றாகத் தெரிந்தவர்களாகவுமிருப்பார்கள். நான் அவரை ஓரளவுக்குத்தான் பார்த்திருக்கிறேன். அவருடைய கொள்கைகளையோ, முறைகளையோ நான் அப்படியே எப்பொழு தும் அங்கீகரித்தது கிடையாது. ஆனால் அவருடைய உயர்ந்த சீலம், அவர் தாய்நாட்டுக்குச் செய்திருக்கிற சேவை இவைகளை அவருடைய நண்பர்கள் பாராட்டுவதுபோல் நானும் பாராட்டு வதில் சிறிதுகூடப் பின்வாங்க மாட்டேன். இந்தியாவில் இப் பொழுது பாமர ஜனங்களிடத்திலே ஒரு விழிப்பு ஏற்பட்டிருக்கிற தென்று சொன்னால், அதற்கு வேறெந்த ஜீவிய புருஷரைக்காட்டி லும் காந்தியடிகளே முக்கிய காரணதர். உலகாயதத் தன்மை மிகுந்த இந்த உலகத்தில், ஆத்ம சக்தி எப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்ததென்பதை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதனாலேயே அவருடைய நாட்டு ஜனங்கள் அவரை மகாத்மா வென்று அழைக் கிறார்கள். * * * இந்தியாவின் நன்றி ராஜேந்திர பிரசாத், எம். ஏ. (தலைவர், இந்திய தேசீய காங்கிர, பாட்னா, இந்தியா) இந்திய அரசியலுக்காக மகாத்மா காந்தி செய்திருக்கிற சேவை மகத்தானது. அவர் 1915 - ம் வருஷம் தென்னாப்பிரிக்காவிலிருந்து கடைசி முறையாகத் திரும்பி வந்தபோது, இந்திய தேசீய காங்கிர ஏற்பட்டு முப்பது வருஷமாகிறது. அது, தேசீய உணர்ச்சியை ஓரளவு உருவகப்படுத்தி வைத்ததென்னவோ வாதவம். ஆனால் அந்த உணர்ச்சியானது, ஆங்கிலம் படித்த மத்திய வகுப்பாரோடு தான் நின்று விட்டது; பாமர ஜனங்களிடத்தில் செல்லவில்லை. காந்தி யடிகள் தான் இந்தத் தொண்டைச் செய்தார். காங்கிரஸைத் தேசீய இயக்கமாக்கினார். காந்தியடிகளின் இயக்கம் குறுக்கும் நெடுக்கு மாக வேலை செய்தது. அரசியல் சம்பந்தமில்லாத பிரச்னைகளில் இவர் அடிக்கடி சம்பந்தப் பட்டிருக்கிறார். ஆனால் அவை பாமர ஜனங்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள். சாம்பரான் ஜில்லாவி லுள்ள விவசாயிகள், நூறு வருஷங் களுக்கு மேலாகத் தோட்டச் சொந்தக்காரர்களுடைய நன்மைக்காகவும் அவர்களுடைய பலவந்தத்தின்பேரிலும் அவுரி பயிரிட்டு வந்தார்கள். காந்தியடிகள், இவர்களுடைய நன்மைக்காகச் சத்தியாக்கிரக இயக்கம் நடத்தினார். இதுவே, பின்னர் இந்தியா முழுவதிலும் பொதுஜன இயக்கமாகப் பரவியது. கெய்ரா ஜில்லாவில் நிலவரியைத் திருத்தியமைக்கும் நோக்கத்துடன் அவர் ஆரம்பித்த சத்தியாக்கிரகமானது, பாமர ஜனங் களுக்கு ஓர் உணர்ச்சியை உண்டுபண்ணியது. இந்தக் காலத்தி லிருந்து, காங்கிர அரசியலானது, அரசாங்க உத்தியோகங்களில் அதிகமான பங்கு வேண்டுமென்று கேட்பதுடனோ, கவர்னரின் நிருவாக சபைகளில் இந்தியர் களுக்கு தானம் கொடுக்கப்பட வேண்டுமென்பதுடனோ நிற்கவில்லை. அவதிப்படுகிற பாமர ஜனங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது; அவர்க ளுடைய துன்பத்திற்கு நிவாரணம் தேடிக்கொடுப்பதில் வெற்றியு மடைந்தது. 1917, 1918 - ம் வருஷங்களுக்குப் பிறகு, இதேமாதிரி வேறு பல இயக்கங்களும் தேசத்தில் நடைபெற்று வந்திருக் கின்றன. எல்லாம் பாமர ஜனங்களுடைய நன்மையை முன்னிட்டே நடைபெற்றிருக்கின்றன. பிரிட்டிஷ் ஏகபோக உரிமை களையோ பிரிட்டிஷ் அரசாங்கத்தையோமட்டும் எதிர்த்து காந்தி யடிகள் போராடுகிறாரில்லை; இந்திய ஏகபோக உரிமைகளையும் துவேஷங் களையும் அதே தீவிரத்துடன் எதிர்த்துப் போராடுகிறார். உதாரணமாக, இந்தியத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் எவ்வளவு கஷ்டங் களைச் சகித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறதென்பதை அவர் கவனித்து வேண்டுவன செய்தார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிவந்து அவர் முதன் முதலாகக் கவனித்த பல காரியங்களுள், ஆமதாபாத் தொழிலாளர் களுக்கு அதுகாறும் அவர் களுக்குக் கிட்டாமலிருந்த சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தாழ்ந்த வகுப்பாரின் பரிதாபகரமான நிலையைக் கண்ட அவர், ஹிந்துக் களிடத்தில் தீண்டாமைக் களங்கம் ஒழிய வேண்டுமென்பதற்காக அரும்பாடு பட்டார். தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போலிருந்த காலத்தில்கூட அவர் தமது முயற்சியில் சலித்தாரில்லை. காங்கிர தாபனமும் இந்தியா முழுவதிலும் விரிந்தது. இப்பொழுது லட்சக் கணக்காண பேர் அதில் அங்கத்தினரா யிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கு, இந்த எண்ணிக்கையினால் ஏற்பட்டிருக்கிற செல்வாக்கைக் காட்டிலும் அதிகமான செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் செல்வாக்கு எவ்வளவுதூரம் ஜனங்களிடத் தில் பதிந்திருக்கிற தென்பது பலமுறை பரிசோதிக்கப்பட்டு, அதில் வெற்றியுமடைந் திருக்கிறது. காங்கிரஸின் அழைப்புக்கிணங்க, அநேகர் அநேக கஷ்டங்கள் பட்டிருக்கிறார்கள்; அநேக தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். காந்தியடிகளின் பலபட்ட சேவைகளில், அவர் இந்திய மகாஜனங்களுக்கு ஒரு விழிப்பு ஏற்படும்படி செய்ததுமட்டும் முக்கியமானதல்ல. என்னுடைய அபிப்பிராயத்தில், இந்தியாவுக்கும், அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் மானிட சமுதாயத்திற்கும் அவர் செய்திருக்கிற மகத்தான சேவை யென்னவென்றால், தீமையை எதிர்க்க ஒரு விசேஷமான முறையை வகுத்துக் கொடுத்திருக்கிறாரே அதுதான். வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எவ்வாறு ஆயுதமில்லாமல் எதிர்க்க முடியுமென்பதை அவர் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். யுத்தத்திற்குப் பதிலாக வேறோர் ஆத்மார்த்தமான பரிகாரத்தை நமக்கும் உலகத்திற்கும் அவர் அளித்திருக்கிறார். அரசியலென்றால், புரட்டும் பொய்யுமென்றே கருதப்பட்டது. அதன் தாழ்ந்த நிலைமையும் உயர்ந்த நிலைமையும் சூழ்ச்சி மயமாகவே இருந்தன; அல்லது ராஜதந்திர மார்க்கத்தில் சுற்றிச் சுற்றி வருவதாயி ருந்தது. ஆனால் காந்தியடிகள், அரசியலை இந்த நிலையிலிருந்து ஒரு லட்சிய நிலைக்குத் தூக்கிவிட்டார். நமது லட்சியம் தூய்மையாய் இருக்குமானால் அதனை அடையக்கூடிய மார்க்கங்களும் தூய்மையா யிருக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். அரசியலில் கூட சத்தியத்தை, அதற்குரிய உன்னத தானத்தில் வைத்துப் போற்றினார். அப்படிப் போற்றுவது அவர் எடுத்துக்கொண்டுள்ள காரியத்திற்குத் தற்காலிகமாக பாதகம் உண்டாவதாயிருந்தாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. எதையும் அவர் பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுகிறார். நம்மிடத்திலேயுள்ள குறைபாடுகளை அல்லது பலஹீனங் களை வேண்டுமென்றே சத்துருக்களுக்கு எடுத்துக் காட்டு கிறார். இவைகளினால் அவருடைய நண்பர்களும் எதிரிகளும் திகைத்துப் போகிறார்கள். ஆனால் அவர் கூறும் சமாதானம் என்னவென்றால், நம்முடைய பலஹீனங்களை நாம் மறைத்து வைப்பதிலே நமது பலம் இல்லையென்றும், அவற்றை அறிந்து அவற்றோடு போராடி வெற்றி கொள்வதிலேதான் நமது பலம் இருக்கிறதென்றும் அவர் சொல்கிறார். அஹிம்ஸையை கண்டிப் பாக அநுஷ்டிப்பதனால் தற்காலிகமான சில சாதனங்கள் நமக்குக் கிடைக்கவில்லையானாலும் நாளாவட்டத்தில் அதுதான் ஒழுங்கானதும் புத்திசாலித்தனமானதுமான மார்க்கமென்று அநுபவத்தினால் நமக்குத் தெரிகிறது. அவருடைய உபதேசங்களில் காணப்பெறும் அறநெறியும், ஆத்ம சக்தியுமே ஜனங்களிடத்தில் அவரை வசீகரிக்கச் செய்து விட்டிருக்கின்றன. அவர்கள், தங்களைச் சுற்றி எங்கும் அந்தகாரம் குடிகொண்டிருக்க, தங்களைத் துன்பத்தி னின்றும், அடிமைத் தனத்தினின்றும் கரையேற்றி விட்டவர் மகாத்மா காந்திதான் என்று அவரைப் போற்றுகிறார்கள். பலஹீனர் களாகி விட்டோ மென்று நாம் உணர்ந்த ஒரு சமயத்தில், சத்தியத்தின் மூலமாகவும் அஹிம்ஸையின் மூலமாகவும் நமது பலத்தை நாம் உணரும்படிச் செய்தவர் காந்தியடிகள்தான். மனிதன் பிறக்கும் போது ஆயுதத்தோடு பிறப்பதில்லை. புலிநகமோ, காட்டெருமை யின் கொம்போ அவனுக்கில்லை. ஆத்மாவோடும் தெய்விக சக்தி யோடும் அவன் பிறக்கிறான். அப்படி யிருக்க அவன் தன்னுடைய பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் இந்தப் புறசாதனங்களை - ஆயுதங்களை ஏன் துணையாகக் கொள்ள வேண்டும்? அவற்றின் துணையை நாம் நம்பியிருப்போமானால் நமக்கு மரணமும் அழிவும் நிச்சய மென்றும், நம்மிடத்திலேயுள்ள தெய்விக சக்தியைத் தூண்டி விட்டோமானால் வாழ்க்கையின் சுதந்திரம் நம்முடை யனவே யென்பது நிச்சயமென்றும் காந்தியடிகள் நமக்குப் போதனை செய்திருக்கிறார். அந்தச் சக்தியை ஒருமுறை நாம் எழுப்பி விடுவோமானால், மேலே சொன்ன புறசாதனங்களின் துணையை நாம் கொள்ளா திருப்போமானால், தன்னம்பிக்கை உணர்ச்சியை நாம் அபிவிருத்தி செய்து கொண்டு விடுவோமானால் உலத்திலே யுள்ள எந்த அதிகார சக்தியும் நம்மை அடிமையாக்கி வைத்துக் கொண்டிருக்க முடியாது. இந்தியா மெதுமெதுவாக, ஆனால் நிச்சயமாக, ஒழுங்காக ஆத்ம சக்தி பெற்றுக்கொண்டு வருகிறது. அதுவோ எதிர்க்க முடியாத ஒரு சக்தியாகிக் கொண்டு வருகிறது. மகாத்மா காந்தியின் தலைமையில் ஏற்படுத்திக் கொண்ட இந்த நேரான ஆனால் குறுகிய சத்தியம் - அஹிம்ஸை என்கிற பாதையினின்று இந்தியா நழுவிச் செல்லாதவாறு கடவுள் கிருபை செய்வாராக. இந்திய அரசியலுக்கு மகாத்மா காந்தி அளித்துள்ள மகத்தான நன்கொடை இதுதான். உலக விடுதலைக்கு இந்தியா அளிக்கிற நன்கொடையும் இதுதான். * * * கடவுட் பித்தர் ரெஜினால்ட் ரெயினால்ட் (லண்டன்) நான் இந்தியாவுக்குச் செல்வதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் 1929 - ம் வருஷம் விசுவபாரதி பத்திரிகையில் டப்ளியூ. ஜி. ஹோல் என்பவர் கடவுட் பித்தர்கள் என்ற தலைப்பிட்டு ஒரு செய்யுள் எழுதி யிருந்ததைப் படித்துப் பார்த்தேன். அதன் ஆரம்ப வாசகம் பின்வருமாறு இருந்தது:- கடவுள் தமது பித்தர்களை விதவிதமான வேஷங்கள் தரிப்பித்து இந்த உலகத்திற்கு அனுப்புகிறபோது, அவர்களுக்குப் பின் வருமாறு உபதேசித்தார்:- செல்லுங்கள் உலகத்திற்கு; காலத்திற்கு ஒவ்வாத ஞானோபதேசத்தைச் செய்யுங்கள்; துன்பங்களை அறிந்து அநுபவியுங்கள்; மாறுதலுக்கான வழியைத் தயாராக்குங்கள். இந்தச் செய்யுள் அதிகப் பிரசித்த மடைந்திராவிட்டாலும் என்னுடைய இருதயத்தில் அழியாத ஒரு முத்திரையை இட்டு விட்டது. இந்தச் செய்யுளிலே காணப்படும் மகத்துவம் மட்டும் இதற்குக் காரணமல்ல. நான் சந்திக்கப் போகிற ஒன்றை முன் கூட்டி யறிவித்ததாகவும் இஃது எனக்குப் பட்டது. இந்தச் செய்யுளில் கடவுள் தமது பித்தர்களுக்கு மேலும் கூறுகிறார்:- செவிடர்களாகப் போங்கள்; யாருக்கும் இணங்காதீர்கள்; எது புத்திசாலித்தனமான மார்க்க மென்று சொல்கிறார்களோ, அதனை எப்பொழுதும் ஒதுக்கிவிட்டுச் செல்லுங்கள். அப்படியே அவர்கள் உலகத்திற்குச் செல்கிறார்கள். சுகபோகத்திலே வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு உழைப்பை அளிக்கிறார்கள்; தாகத்தை உண்டு பண்ணுகிறார்கள். இதனால் எல்லா ஜனங்களும் அந்தப் பித்தர்களை இன்று சபிக்கிறார்கள். ஆனால் நாளை ஆசீர்வதிப் பார்கள். ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டு மென்ற எண்ணத்தினால் அந்தப் பித்தர்கள் ஜனங்களுடைய அங்கீகாரத்தையும் புகழையும் துச்சமாகக் கருதுகிறார்கள். கடைசி யில் தன்னம்பிக்கையுடைய அவர்கள் ஜனங்களுக்கு, அவர்கள் அரசர்களாகும்படியான ஒளியைக் கொடுக்கிறார்கள். தர்ம ரீதியாகக் காரியங்களைச் செய்யும் ஆற்றலை அளிக்கிறார்கள். மேற்கண்ட செய்யுளைப் பார்த்த சில மாதங்களுக்குப் பிறகு பகிரங்கப் பித்தர் நெ. 1 மகாத்மா காந்தியை நான் சந்தித்தேன். இப்படி நான் அவரை அழைப்பது அவரிடத்திலே எனக்குள்ள மரியாதையினால் தான். மேலே சொன்ன செய்யுளுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்பதை நான் அறிந்து கொண்டேன். காந்தியடிகள் புத்திசாலி என்று யார் என்ன வாதம் செய்த போதிலும் அவர் புத்திசாலியல்ல வென்பதே எனது அபிப்பிராயம். பத்து வருஷங்களுக்கு முன்னால் முதன் முதலாக அவரை நான் சந்தித்தபோது அவருடைய வார்த்தைகளும் செயல்களும் குறைபாடுகள் நிறைந்தன வாகவே எனக்குக் காணப்பட்டன. மகாத்மா யாருக்கும் தீங்கு செய்யாதவர் என்று அவரைப் போற்றுகிறார்களே அப்படிப்பட்ட குருட்டுப் பக்தர்களில் நான் ஒருவன் அல்லன். ஒரு தேவ தூதராகவோ, அல்லது அவதார புருஷராகவோ நான் அவரைக் கருதவில்லை. அரசியல் ஞானத்திலும் அவர் சிறந்தவரல்லர். வேறு நிறுவைகளைக் கொண்டுதான் நாம் அவரைக் கணித்துப் பார்க்க வேண்டும். காந்தியடிகளின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்ல வேண்டு மானால், ஹிந்து மதத்தின் சரித்திரத்தை ஆரம்பத்திலிருந்து நாம் ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகிறது. ஒவ்வொரு மதமும் வளர்ச்சி யடைந்து கொண்டு வருகிறகாலத்தில் அவ்வப்பொழுது அநேக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஒவ்வொரு மதத்திற்குள்ளும் அழிவுத் தத்துவங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த அழிவுத் தத்துவங்கள் தலைதூக்கி நிற்கிற காலத்தில் ஜீவ சக்தியுள்ள புதிய விதைகள் அந்த மதத்திற்கிடையே தெளிக்கப்படு கின்றன. இதனால் அர்த்தமில்லாத கோட்பாடுகள் அழிந்து போகின்றன. மதத்தின் உண்மையான தத்துவம் மட்டும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. ஒரு சமயம், பெரிய அமெரிக்கப் பாதிரி யொருவர், காந்தியடி களின் சிஷ்யர்களில் ஒருவரோடு சம்பாஷணை செய்து கொண்டி ருந்ததை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். மகாத்மாவுக்குக் கண் திறந்துவிட்ட நூல் எது? என்று அந்தப் பாதிரி கேட்டார். கீதை என்று அவர் உடனே பதில் அளித்தார். பைபிளின் புதிய வேதாகமமும், டால்டாய், ரகின் முதலியோருடைய நூல்களும் அவருடைய வாழ்க்கை பண்படுவதற்குத் துணை செய்திருக்கின்றன. என்றாலும், அவர் ஹிந்து மதச் சீர்திருத்த வாதிதான். ஆனால் அவர் ஒரு வெறும் ஹிந்து மட்டுமல்ல, ஹிந்துக்களாலும், முலீம்களாலும் ஒருங்கே போற்றப்பட்ட கபீரின் பிரதிநிதி என்று அவரைச் சொல்லலாம். ஹிந்து - முலீம் ஒற்றுமைக்கு அடிகோலியவர் கபீர். அவர் ஒரு முலீமாயிருந்தாலும் ராமானந்தர் என்ற ஒரு ஹிந்துவினிடம் உபதேசம் பெற்றார். கபீருக்கும் காந்தியடிகளுக்கும் எப்படிப் பொருத்தம் இருக்கிறதென்பதை கபீரின் பாடல்கள் ஒன்றிலிருந்து எடுத்துக் காட்டு கிறேன். அவர் ஓரிடத்தில் கூறுகிறார்:- உனது அறிவை அப்புறப்படுத்திவை. வெறும் வாய் வார்த்தை களினால் கடவுளோடு நீ ஐக்கியப்படமுடியாது. வேத ஞானம் நிரம்பி இருக்கிறதென்று சொல்லி உன்னை நீ ஏமாற்றிக் கொள்ளாதே. அன்பு என்பது இவை எல்லாவற்றையும்விடத் தனியானது. எவனொருவன் இந்த அன்பைத் தேடிக்கொண்டு செல்கிறானோ அவன் இதனை நிச்சயமாக அடைகிறான். மதத் தலைவர் என்ற ஹோதாவில் காந்தியடிகள் செய்கிற உபதேசங்களின் சாரமெல்லாம் கபீரின் மேற்கண்ட வாசகத்தில் அடங்கி இருக்கின்றன. இப்பொழுது நான் காந்தியடிகளை ஒரு மதத் தலைவர் என்றுதான் கணித்துப் பார்க்க விரும்புகிறேன். இந்திய அறிஞர் ஒருவர் ஒரு சமயம் கீதை வைதிகத்தை ஆதரிக்கிறதா? என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். (இது பின்னர் ஆரியன் பாத் என்ற பத்திரிகையில் 1933 - ம் வருஷத்து மார்ச்சு மாத இதழில் வெளியாயிற்று.) அவர், காந்தியடிகளின் பார்வைக்கு அதை அனுப்பியிருந்தார். அதற்கு மகாத்மா ஏரவாடா மத்திய சிறையிலிருந்து 11.01.1931 தேதியிட்டு எழுதியிருந்த பதில் இங்குக் குறிப்பிடத்தக்கது:- கீதையைப்பற்றித் தாங்கள் எழுதி இருந்த கட்டுரை களை ஜாக்கிரதையாகப் படித்துப் பார்த்தேன். அவை சுவையுள்ளன வாயிருக்கின்றன. கீதையைப்பற்றித் தாங்கள் எந்த முடிவுக்கு வந்திருக் கிறீர்களோ அதே முடிவுக்குத்தான் நானும் வேறோரு வழியாகச் சென்று வந்திருக்கிறேன். தங்களுடைய வழி பண்டித வழி. என்னுடைய வழி அப்படிப்பட்டதல்ல. மேற்படி பண்டிதரும், கடவுட் பித்தரும், கீதை வைதிகத்தை ஆதரிக்கவில்லை என்ற ஒரே முடிவிற்கு வந்தார்கள். காந்தியடிகள் தமது முடிவுக்கு வந்தது வெறும் புத்திசாலித் தனத்தினால் மட்டு மல்ல என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. காந்தியடிகளை மனத்திற் கொண்டுதான் கபீர் பின்வரும் பாடலைப் பாடினாரோ என்னவோ? சத்தியத்தைத் தேடிக்கொண்டு செல்கிறவன் செய்கிற யுத்தம் மகா கடினமானது: சலிப்புத் தரக்கூடியது. ஏனென்றால், சத்தியத்தைத் தேடிச் செல்கிற ஒருவனுடைய பிரதிக்ஞை, ஒரு யுத்த வீரனுடைய பிரதிக்ஞையைக் காட்டிலும், அல்லது ஒரு ஸதியினுடைய பிரதிக்ஞையைக் காட்டிலும் கடினமானது. எப்படியென்றால் ஒரு யுத்த வீரன் செய்கிற யுத்தம் சில மணி நேரத்திலும், ஒரு ஸதியினுடைய போராட்டம் பதிகமனத்துடனும் முடிந்துவிடுகின்றன. ஆனால் உண்மையை நாடிச் செல்வோன் தன் வாழ்நாள் முழுவதும் இரவு பகலாகப் போராட வேண்டியிருக்கிறது. வாழ்க்கையைப்பற்றியும், மரணத்தைப்பற்றியும் கபீர் மற்றோரிடத்தில் அழகாகக் குறிப்பிடுகிறார்:- உங்களுடைய ஜீவிய காலத்திலேயே உங்கள் தளைகள் அறுக்கப்படாவிட்டால், மரணத்திற்குப் பின்னர் அவை அறுபடும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது? தேகத்தினின்று ஆத்மா பிரிந்த பிறகே அது கடவுளோடு ஐக்கியப்படுகிறது என்பதெல்லாம் வெறுங்கனவே. இப்பொழுது நாம் கடவுளைக் கண்டால்தான், பின்னரும் அவரை நாம் காணமுடியும். இப்பொழுது நாம் காணா விட்டால் நமக்கு நரகப் பிராப்திதான். காந்தியடிகளின் மத பரம்பரை இந்தச் செய்யுளில் நன்கு தொனிக்கிறதல்லவா? கிறிதவ மதத்தின் கத்தோலிக்க புராடெடெண்ட் அமிசங்களில் பலவற்றை உலகத்தின் எல்லா மதங்களிலும் ஒரு மாதிரியாகக் காணலாம். இந்த ஒவ்வொரு மத பரம்பரையும் சில குற்றங்களையும் செய்திருக்கின்றன; அதே மாதிரி சித்திகளையும் அடைந்திருக்கின்றன. புராடெடெண்ட் மதத்தின் வெற்றியை சில ப்யூரிட்டன் 1 களினுடைய வாழ்க்கையில் நன்கு காணலாம். இவர்கள் எதையும் துறக்க வேண்டு மெனக் கூறி வந்தார்களென்று இப்பொழுது நாம் கூறலாமாயினும், அந்தக் காலத்தில் இவர்கள் எவ்வளவு இடையூறுகளைச் சமாளிக்க வேண்டி யிருந்த தென்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். நோய்வராமல் தடுக்கக்கூடிய சில வைத்தியர்களைப் போல் இந்த ப்யூரிட்டன்கள் இருந்தார்கள். இதுவே அவர்களுடைய கடமையாகவும் இருந்தது. பெரிய சீர்திருத்த இயக்கங்கள் அல்லது புரட்சி இயக்கங்கள் தோன்றுகிற காலத்தில் அவற்றோடு ஒருவித துறவு மனப்பான்மையும் தோன்றுவதைக் காணலாம். ஜனங்கள், தங்களுடைய சக்திகளனைத்தை யும் ஒரு முகமாகக் கொண்டு செலுத்த வேண்டியவர்களாக இருப்பதனால் அவர்கள் மற்றவற்றைத் துறக்க வேண்டியவர்களாகிறார் கள். எனவே, தற்கால இந்தியாவின் தலைவர்களில் பெரும்பாலோர் துறவிகளா யிருப்பதையும், இந்தத் துறவிகளின் தலைவர் பெருந் துறவியா யிருப்பதையும் ஏதோ திடீரென்று ஏற்பட்ட ஒரு சம்பவம் என்று நாம் சொல்ல முடியாது. சரித்திர ரீதியாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கும் சம்பவங்களிலே இதுவும் ஒன்று. ஏகாதிபத்தியத் திற்கு விரோதமாகப் புரட்சி நடைபெறுவதற்கு முன்னர், இந்திய மகா ஜனங்களை அறியாமை யிலும், சோம்பேறித் தனத்திலும், ஜாதிக் கட்டுப்பாட்டிலும், மூடநம்பிக்கை களிலும் அழுத்தி வைத்திருக்கிற தளைகள் அறுத்தெறியப்பட வேண்டும். காந்தியடிகள், புரோகிதர் களின் அதிகாரத்தையும், தீண்டாமையையும் திரீகளுக்குச் சம அந்தது கொடுக்கப்படாமலிருப்பதையும், பாலிய விவாகத்தையும், பொதுஜன சுகாதாரத்தில் ஏற்பட்டிருக்கிற கவனக் குறைவையும், மதத் துவேஷத்தையும், விவாகத்தின் போது வீண் செலவுகள் செய்யப்படு வதையும், அபினி உபயோகத்தையும், பொதுவாக அரசியல் மந்தத்தை உண்டு பண்ணுகிற சமுதாய ஊழல்கள் அனைத்தையும் எதிர்க்கிறார். இதனாலேயே அரசியல் இயக்கத்திற்குத் தலைமை பூண்டு நடத்து கிறார். வைதிக ஹிந்துக்களின் எதிர்ப்புகளுக் கிடையே காந்தியடி கள் வெற்றி பெற்று வந்திருக்கிறாரென்று சொன்னால் அதற்குக் காரணம் இந்தியாவில் தொடர்ந்து வந்திருக்கும் ஒரு சீர்திருத்தப் பரம்பரை அவருக்குத் துணை செய்திருப்பதுதான். காந்தியடிகளின் காலத்திற்கு முன்னரேயே இந்தியாவில் அநேக கடவுட்பித்தர்கள் இருந்திருக்கிறார்கள். சிறப்பாக வங்காளத்தில் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த ஹிந்துக்களும் முலீம் களுமாகப் பலர் தோன்றினார்கள். இவர்களுக்கும், கபீருக்கும் ஒருவித பாரமார்த்திக சம்பந்தம் இருப்பதாகச் சொல்லலாம். இவர்கள் மதக்கிரந்தங்களையும், கோயில்களையும் நிராகரித் தார்கள். இவர்களில் ஒருவர் பாடுகிறார்:- ஆண்டவனே! நினது வழியை மசூதிகளும், கோயில்களும் மறைத்துக் கொண்டிருக்கின்றன. நினது அழைப்பை நான் கேட் கிறேன்; ஆனால் புரோகிதரும், குருவும் வழிமறித்துக் கொண்டிருக் கிறார்களே! இவர்கள் வறுமை வாழ்க்கையிலும், தன் மதிப்போடி ருத்தலிலும், சுய அறிவு பெறுதலிலும் திருப்திகண்டார்கள். இவர் களுடைய கடவுள், மனக்கோயிலில் வீற்றிருக்கும் குருநாதன்தான். இப்படிப்பட்ட திருக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான், என் போன்றார்க்கு - தங்களது சிற்றறிவைக் கொண்டு எண்ணிற் கடங்காத பரம்பொருளை நிதானித்துப் பார்க்க விரும்புவோருக்கு எச்சரிக்கை யாகப் பின் வரும் செய்யுளைச் சொல்லியிருக்கிறார் போலும்:- ஒரு தட்டான் ஒரு தடாகத்திற்குள் பிரவேசித்தான். அவன் அங்குப் பூத்திருக்கும் ஒரு தாமரையைத் தன்னுடைய உறை கல்லில் தேய்த்து அதனை மதிப்பிடப் பார்க்கிறான். தட்டானுடைய மதிப்புப்படி அந்தத் தாமரை மதிப்பற்ற பொருள்தானே. அதில் அவன் எப்படி ஏமாற்றமடைந்தானோ அதைப் போல கடவுட் பித்தர்களைப் பற்றி மனித அறிவைக் கொண்டு மதிப்பிடத்தொடங்குவோமானால் நாமும் ஏமாற்றமடைவோம். * * * மேனாட்டிலிருந்து ஒரு காணிக்கை ரோமெய்ன் ரோலந்து (வில்லா ஓல்கா, வில்லெனாவ், விட்ஜர்லாந்து) இந்திய தேசீய சரித்திரம் பிற்காலத்தில் எழுதப்படுமானால் அதில் மகாத்மா காந்தி ஒரு தேசீய வீரராகமட்டும் போற்றப்பட மாட்டார். யுக சரித்திரத்தில் அவருடைய பெயர் புனித ஞாபகத் துடன் போற்றப்படும். இந்திய மகா ஜனங்களின் ஒற்றுமை உணர்ச்சியையும், அவர்களுடைய சக்தியையும், அவர்களுடைய சுதந்திர இச்சையையும் பிரதிபலித்துக் காட்டும் கிரியா சக்தியாக அவர் விளங்குகிறார். மேனாட்டார் மறந்துவிட்ட அல்லது புறக் கணித்துவிட்ட யேசுநாதரின் உபதேசத்தை மீண்டும் அவர் புதுப்பித்துக் கொணர்ந்திருக்கிறார். மானிட சமுதாயத்தின் முனிவர்கள், சாதுக்கள் முதலியோர்களுடைய வரிசையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டு விட்டது. உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் அவருடைய உருவத்தின் ஒளிவீசுகிறது. அவர் தோன்றியதை ஏதோ ஓர் அற்புதச் செயல் நிகழ்ந்திருப்பதாகவே மேனாட்டார் கருதினார்கள். அப்படிப் பட்ட ஒருகாலத்தில்தான் அவர் தோன்றினார். அப்பொழுது ஐரோப்பிய மகா யுத்தம் நான்கு வருஷம் கோரமாக நடைபெற்று முடிந்திருந்த காலம். அந்த யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளும், மனக் கசப்புகளும் மறையவில்லை. அதற்கு மாறாக அவை வேரூன்றிக் கொண்டு வந்தன. அதே சமயத்தில் இன்னும் கடுமையான யுத்தங் களுக்கு விதைகளும் தெளிக்கப்பட்டு வந்தன; மற்றும் அநேக நாடு களில் புரட்சிகள் ஏற்பட்டு சமுதாயத் துவேஷங்களை அதிகப்படுத்திக் கொண்டு வந்தன. இவையெல்லாம் சேர்ந்து தேசங்களின் மனத்தை அரித்து வந்தன. ஐரோப்பா துக்கமும் ஏக்கமும் நிறைந்த ஓர் இரவு போல் இருந்தது. எங்கும் ஒளியின் ரேகை கூடக் காணப்படவில்லை. இப்படிப்பட்ட தருணத்தில், மெலிந்த தேகத்தினரும் அரை நிர்வாணமாயுமுள்ள ஒரு சிறிய மனிதர் தோன்றினார். அவர்தான் காந்தியடிகள். அவர் பலாத்காரத்தைப் புறக்கணித்தார். நியாய புத்தியும் அன்புமே அவருடைய ஆயுதங்கள். அவருடைய சாந்த சுபாவம் - ஆம், உறுதி யான சாந்தசுபாவம் - இப்பொழுதே தனது முதல் வெற்றிகளை அடைந்து வந்திருக்கிறது. இதுகாறும் தனித்தியங்கிக் கொண்டு வந்த மேனாட்டு எண்ணம், பரம்பரை முதலியவை களுக்கெல்லாம் விரோதமாக ஏற்பட்டிருக்கிற இந்த வெற்றியானது, ஒரு பெரிய புதிராகவே பலருக்கும் தோன்றியது. ஆனால் இந்த வெற்றியானது, ஏக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்கும் மானிட ஜாதிக்கு ஓர் ஒளி போல் இருந்தது. முதலில் யாரும் இதனை நம்பவில்லை. இப்படிப் பட்ட ஒரு மகான் தோன்றியிருக்கிறா ரென்பதைப் பலரும் நம்பச் சிறிது காலமாயிற்று. அவருடைய பெருமையை என்னைத் தவிர வேறு யாரறிவார்? ஏனென்றால் மகாத்மாவின் உபதேச உயர்வை முதன் முதலாகக் கண்டுபிடித்து அதனைப் பரப்பிய மேனாட்டார் பலருள் நான் ஒருவன். இந்தியாவின் ஆத்மீகத் தலைவரான அவருடைய நிதானமானதும் ஆனால் நிச்சயமானதுமான வேலைப்பாடுகளின் விளைவுகள் தெரிந்த பிறகே, மேனாட்டினர் பலரும் அவரை அங்கீகரிக்கவும் அவரிடம் நம்பிக்கைகொள்ளவும் ஆரம்பித்தார்கள். கிறிது நாதரே மீண்டும் தோன்றியிருக்கிறாரென்று பலரும் கருதினர். சுயமாகச் சிந்திக்கிற வேறு பலர், மேனாட்டு நாகரிகம் ஒழுங்கீனமான முறையில் சென்று வருவதைக் கண்டும், தன்னுடைய விஞ்ஞான அறிவைக்கொண்டு தானே அழிந்து போய்க்கொண்டு வருவதைப் பார்த்தும் மன முடைந்தவர்களாயிருந்த சமயத்தில், அவர்களுக்குக் காந்தியடிகள் தோன்றியிருப்பது, மீண்டும் ரூஸோவும்1 டால்டா யும் அவதரித்திருப்பதாகவேபட்டது. இந்த ரூஸோவும் டால்டா யும், தற்கால நாகரிகத்தினாலேற்பட்டிருக்கிற மயக்கங்களையும் குற்றங் களையும் கண்டித்து மனிதர்கள் இயற்கை வாழ்வுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று கூறினார்களல்லவா? அரசாங்கங்கள் காந்தியடி களைப் புறக்கணித்தன; இகழ்ந்தன. ஆனால் ஜனங்கள் அவரைத் தங்கள் சகோதரராகவும் நண்பராகவும் கொண்டார்கள். விட்ஜர் லாந்தில் வசிக்கும் விவசாயிகள் முதலிய ஏழை மக்கள், அவரிடத்தில் எவ்வளவு பக்தி விசுவாசம் வைத்திருக்கிறார்களென்பது எனக்குத் தெரியும். யேசுநாதருடைய மலைப்பிரசங்கத்தைப் போல் காந்தியடிகளின் அன்பும் ஞானமும் நிறைந்த உபதேசங்கள் லட்சக்கணக்கான நன் மக்களின் இருதயத்தைத் தொட்டிருக்கிறதேயானாலும், தம்முடைய உபதேசத்தினால் மட்டும், யுத்தத்திற்கும் அழிவுக்கும் தன்னை அர்ப்பணம் செய்துவிட்டிருக்கிற ஓர் உலகத்தின் போக்கை மாற்ற முடியுமென்று அவர் கருதவில்லை. அஹிம்ஸையை அரசியலில் அநுஷ்டிக்க வேண்டுமானால், அதற்கு இப்பொழுது ஐரோப்பாவில் எந்த ஒழுக்க நிலையுண்டோ அதற்கு வேறுபட்டதோர் ஒழுக்க நிலை வேண்டும். அப்படி அஹிம்ஸை வெற்றியடைய வேண்டுமானால், மனிதன், தான் என்ற அகங்காரத்தை ஒழிக்க வேண்டும். ஆனால் இந்த நிலை ஏற்படுமா? ஏனென்றால் இப்பொழுது உலகத்தில் சர்வாதிகார ஆட்சி முறை உக்கிரத்தோடு பரவி வருகிறது. இந்த ஆட்சி முறை யானது, லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தில் தன் அடையாளத் தைப் பொறித்துவிட்டுப் போயிருக்கிறது. இங்ஙனம் ஜனங்கள் செய்கிற தியாகமானது, இப்பொழுது ஒரு நல்ல பலனைக் கொடுக்கு மென்று சொல்வதற்கில்லை. எப்பொழுதோ ஒரு காலத்தில், ஜனங்கள் அதிக மான கஷ்டத்தையடைந்த பிறகு வெற்றி காணலாமோ என்னவோ? ஜனங்கள் இங்ஙனம் கஷ்டப்படுவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல், காந்தியடிகளுக்கிருக்கிற நம்பிக்கை யைப்போல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டால்தான் உண்டாகும். அதுதான் கடவுள் நம்பிக்கை. இந்தக் கடவுள் நம்பிக்கை இப்பொழுது மேனாட்டு ஜனங்களிடத்திலும் தலைவர் களிடத்திலுமில்லை. பலாத்கார இயக்கத்தின் சந்ததிகளாகத்தான் தேசீய இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் தோன்றுகின்றன. பாசிட் நாடுகளும், ஜாதீய மேம்பாட்டை முக்கியமாகக் கொள்ளும் நாடுகளும் சேர்ந்திருக்கிற ஏகாதிபத்தியங்கள், ஐரோப்பிய மகா ஜனங்களுடைய சுதந்திரம், உயிர் முதலியவற்றை அழித்து வருகின்றன. இந்த அழிவு வராமல், மேற்படி ஐரோப்பிய மகா ஜனங்கள் எந்த முறையைக் கைப்பற்றியேனும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிக் கில்லாமல் இவர்கள், தங்கள் அரசியல் பொறுப்பைத் துறந்து விடுவார்களானால், அதனால் நூற்றாண்டுகள் கணக்கில் மானிட சமுதாயம் அடிமைப் பட்டுக் கிடக்கும். எனவே, காந்தியடிகளின் சித்தாந்தத்திற்கு நாம் எவ்வளவு தூரம் மதிப்புக் கொடுத்த போதிலும் அதனை அநுஷ்டிக்கு மாறு மேனாட்டு ஜனங்களுக்கு நாம் சிபார்சு செய்ய முடியாது. ஐரோப்பிய சரித்திரத்தின் மத்திய காலத்தில், கிறிதவ மதத்தைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் சில இயக்கங்கள் தோன்றின. அவை, பெரிய சமுத்திரத்தின் மத்தியில் காணப்படுகிற தீவுகள் போல் இருந்தன. அவை, நாகரிகத்தின் ஒழுக்க மேம்பாட்டையும், சமாதானம், அன்பு இவைகளையும் ஆத்மாவின் உயர்வையும் பற்றி உபதேசித்தன. இந்த இயக்கங்கள் எந்த தானத்தைப் பெற்றிருக்கின்றனவோ அந்த தானத்தையே காந்தியடிகளின் இயக்கமும் பெறும். இது சிறந்த தானந்தானே. மேற்படி கிறிதவச் சீர்திருத்த இயக்கங்களை தாபித்த செயிண்ட் ப்ரனோ, செயிண்ட் பெர்னார்ட்,1 செயிண்ட்பிரான்சி முதலியோர்களைப் போல், காந்தியடிகளின் ஆத்ம சக்தியும், இப்பொழுது மானிட சமுதாயம், எந்தக் கடுமையும் நெருக்கடியுமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறதோ அந்தப் பாதையில் அன்பையும் சாந்தியையும் புகுத்துமாக. படித்த கூட்டத்தைச் சேர்ந்த நாம், நம்முடைய சக்திக் கியன்றவளவு கடவுள் ராஜ்யத்தை தாபிக்க முயன்றுகொண்டி ருக்கும் நாம், வரப்போகிற மானிட சமுதாயம் எப்படியிருக்க வேண்டு மென்பதைத் தமது மனத்தினால் நினைத்தும், செயலால் காட்டியும் வருகிற நமது குருநாதரும் தலைவருமான காந்தியடி களுக்கு நமது வணக்கத்தைச் செலுத்துவோமாக. * * * ஓர் ஆங்கிலேய திரீயின் காணிக்கை குமாரி மாட் ராய்டன் எம்.ஏ., டி.டி. (ஸெவன் ஓக், கெண்ட், இங்கிலாந்து) இப்பொழுது உலகத்திலே சிறந்த கிறிதவர், ஒரு ஹிந்துவா யிருக்கிறா ரென்பதைக் குறித்து நம்மைப்போன்ற பல கிறிதவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். காந்தியடிகளின் வேலைப் பாடுகளைப் பார்க்கப் பார்க்க, அவருடைய உபதேசங்களைக் கேட்கக் கேட்க அவர் கிறிதவர் என்பதையே நான் ஊர்ஜிதம் செய்து கொள் கிறேன். யேசுநாதர், பூரணத்துவம் பெற்ற மகா புருஷர் என்று நான் சொன்னால் அதனைக் காந்தியடிகள் ஒரு குறையாக எண்ண மாட்டார் என்று கருதுகிறேன். யேசுநாதரின் சிஷ்யர்களில் இன்று காந்தியடிகளைத் தவிர முக்கியமானவர் வேறு யாருமில்லை யென்பது என்னுடைய அபிப்பிராயம். ஹரிஜன் பத்திரிகை வாரா வாரம் எனக்கு வந்து கொண் டிருக்கிறது. அதனைப் படிப்பது, உஷ்ணமும் வறட்சியுமுள்ள ஒரு பாலை வனத்திலிருந்துகொண்டு சுத்தமான ஜலத்தைக் குடிப்பது போலிருக்கிறது. ஐரோப்பாவின் இன்றைய அரசியல் நிலைமை யானது, சமாதானத்திற்கு உழைக்கக்கூடியவர்களைக்கூட தயங்கிடச் செய்கிறது. நீதியைப் பலவந்தமாக தாபிப்பது இப்பொழுது சாத்தியமென்றும், அதனால் உலக சமாதானம் உண்டாகுமென்றும் சிலர் நினைக்கிறார்கள். பல வருஷங்களுக்கு முன்னர், (1915 - ம் வருஷம்) போலந்து நாடு பல துண்டுகளாக்கப் பட்ட காலத்தில் ஒரு பத்திரிகையில் படமொன்று வெளியாகி யிருந்தது. அதில், ஒரு திரீ கை கட்டப்பட்டும், வாயடைக்கப் பட்டும் பூமியிலே வீழ்த்தப்பட் டிருப்பது போலவும், அவளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிற ஒரு மனிதன். வார்ஸாவில் (போலந்தின் தலைநகரம்) எல்லாம் அமைதி யாயிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்ப தாகவும் சித்திரிக் கப்பட்டிருந்தது. 1914ம் வருஷ யுத்தத்திற்குப் பிறகு ருஷ்யா பல முகங்களிலும் தாக்கப்பட்டது. இதனால் அங்கே போல்ஷ்வெக்க அரசாங்கம் ஊர்ஜிதமாயிற்று. ஜெர்மனியை நாம் தாக்கியதானது ஹிட்லரைப் பதவியில் ஏற்றிவைத்தது. யுத்தத்தை ஒழிக்க நடை பெற்ற யுத்தம் முடிந்த இருபது வருஷங்களுக்குப் பிறகு இன்னொரு பயங்கர யுத்தம் இப்பொழுது வந்துகொண்டிருக்கிறது. இந்தமாதிரியான சந்தடி, குழப்பம் முதலியவைகளுக்கு மத்தியில் ஹரிஜன் பத்திரிகையைப் படிப்பது, சுத்தமான, தெளிவான காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. இவை - இந்த ஹரிஜன் வாசகங்கள் போராட்டத்தினால் எழுகிற தூசுகளுக்கு மேற்பட்டு நிற்பதால் தெளிவாகவும் சத்தியத்தை லட்சியமாகக் கொண்டு உபதேசிக்கப்படுவதால் சுத்தமாகவும் காணப்படுகின்றன. காந்தியடிகள் எதனையும் கூடமாகப் பேசுகிறாரென்று சிலர் குறை கூறுகிறார்கள். அப்படி நான் கருதவில்லை. மகாத்மாவை நோக்கிப் பலர் பல கேள்விகள் கேட்கிறார்கள். அவைகளுக்கு அவர் விடையளிக் கிறார். இந்த வினா விடைகள் ஹரிஜன் பத்திரிகையில் வெளியா கின்றன. அவற்றை நான் முதலில் கவலையோடுதான் படித்துக் கொண்டு வந்தேன். இப்பொழுது நான் அவற்றைச் சந்தோஷத்துடனும் நம்பிக்கை யோடும் படித்துக் கொண்டு வருகிறேன். ஏனென்றால் அவர் எந்தக் கேள்வியையும் அசட்டை செய்கிறாரில்லை, புறக்கணிக் கிறாரில்லை யென்பது எனக்குத் தெரியும். எந்தவிதமான கேள்விகள் கேட்கப்பட்ட போதிலும் அவற்றிற்கு அவர் சிரத்தையோடு பதிலளிக் கிறார். அரசியல் துறையிலும் மதத்துறையிலும் பல வருஷ காலம் உழைத்து நான் அநுபவம் பெற்றிருக்கிறேன். இப்படி அநுபவம் பெற்ற பிறகு, காந்தியடிகளிடம் காணப்பெறுகிற மனத்தூய்மையும் உண்மை யும் மோட்சலோகத்துக் காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. வட்ட மேஜை மகாநாட்டை யொட்டிக் காந்தியடிகள் இங்கிலாந்துக்கு விஜயஞ் செய்திருந்த போது, கில்ட்ஹவு மண்டபத் தில்வலிய ஏற்றுக் கொள்ளப்படும்வறுமை வாழ்க்கையைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தார். மண்டபம் நிறையக் கூட்டம். நூற்றுக்கணக்கான பேர் வெளியிலே கூட நின்று கொண்டிருந்தார்கள். வறுமை வாழ்க்கை என்கிற உயர்ந்த வாழ்க்கையைத் தமது சொந்த விஷயத்தில் அநுஷ்டித்துக் காட்டி வருகிற ஒருவர் என்ன சொல்கிறாரென்பதை அனைவரும் கவனித்துக் கேட்டனர். பிரசங்கத்திற்குப் பிறகு அவரைப் பல கேள்விகள் கேட்டார்கள். இவைகளுக்கு மகாத்மா நின்று நிதானித்துப் பதில் கூறினார். தாம் சொல்லுகிற பதில் சரியானதாயிருக்க வேண்டு மென்பதற்காகவே அவர் இங்ஙனம் நிதானித்து நிதானித்துப் பதில் கூறினார்:- நமக்கென்று எதனையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று சொன்னால், நம்முடைய தேகத்தின் மீதுள்ள துணியைக்கூட அப்புறப்படுத்தி விட வேண்டு மென்பது அர்த்தமல்ல; ஆனால் நமது எலும்புகளின் மீது சேர்ந்திருக்கும் சதையை அப்புறப்படுத்தி விடுவது போல என்பதுவே அர்த்தம். நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்கலாம்:- என்ன மிடர் காந்தி, உங்கள் மீது ஒரு துணியைப் போர்த்துக் கொண்டிருக் கிறீர்களே; அப்படியிருக்க என்னுடையதென்று ஒன்று மில்லையென நீங்கள் எப்படிச் சொல்லலாம்? அது சரியான கேள்விதான். ஆனால், என் தேகம் இருக்கிற வரையில் நான் அதனை ஏதேனும் ஒன்றினால் மூடி வைத்துக் கொள்ளவேண்டுமல்லவா? இங்குள்ள யாராவது (தமது போர்வையைச் சுட்டிக் காட்டி) இந்தத் துணி தேவையென்று விரும்பினால் , தாராளமாக அவர்கள் இதை எடுத்துக் கொண்டு போகலாம். அதற்காக நான் போலீஸாரைக் கூப்பிடமாட்டேன். காந்தியடிகளின் பந்தோபதுக் கென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் நியமனம் செய்யப்பட்டு மேற்படி கில்ட் ஹவுஸில் ஆஜராயிருந்த போலீஸார் உள்பட கூட்டத்தி லிருந்த அனைவரும், மேற்கண்ட கடைசி வாசகத்தைக் கேட்டு இடி இடியென்று சிரித்தனர். மகாத்மா நம்மைப் போலவே சிரிக்கிறார்; நம்மைப் போலவே அவருக்கும் நிறைய நகைச்சுவை இருக்கிறது என்று சொல்லி இங்கிலீஷ்காரர்கள் மகாத்மா விஷயத்தில் அதிக ஆச்சரியமடைந்தார் கள். ஒருநாள் என்னுடைய மோட்டார் வண்டியில் அவரை அழைத்துக் கொண்டு கொஞ்சதூரம் போகும்படியான பாக்கியம் கிடைத்தது. வழியில் அவர் உங்களுடைய பெயருக்கு பின்னால் டி. டி. என்ற பட்டம் இருக்கிறதே; அஃதென்ன வென்று கேட்டார். அது கிளாகோ சர்வகலா சாலையாரால் எனக்களிக்கப்பட்ட பாரமார்த்திக ஞானபண்டிதை என்ற பட்டம் என்று நான் பதில் கூறினேன். ஓ! அப்படியானால் உங்களுக்குப் பாரமார்த்திகத்தைப் பற்றி எல்லாம் தெரியும் போலும்! என்றார் அவர். மற்றொரு சம்பவத்தையும் என்னால் மறக்க முடியாது. மேற் படி கில்ட் ஹவு மண்டபத்தில் பிரசங்கம் முடிந்தபிறகு வேறோர் அலுவல் நடைபெறும் இடத்திற்கு என் வண்டியிலே வருவதாக மகாத்மா சொல்லியிருந்தார். அப்படியே கில்ட்ஹவு கூட்டம் முடிந்ததும் மண்டபத்திற்கு வெளியே வந்தார். அவரை ஏராளமான ஜனங்கள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். என்னுடைய மோட்டார் எங்கேயிருக்கிற தென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு எதிரில் ஒவ்வொரு வண்டியும் வந்து வந்து போகிறது. தங்களுடைய வண்டியில் மகாத்மா ஏறிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அந்த மோட்டார் சொந்தக்காரர்களுக்கு. அன்று நிரம்பக் குளிர். அதிகமான உடைகளையும் மகாத்மா தரித்துக் கொண்டிருக்க வில்லை யென்பது எனக்குத் தெரியும். அவரை அதே இடத்தில் அதிக நேரம் தாமதித்து வைத்திருக்கக்கூடாது என்பதையும் அறிந்து கொண்டேன். உடனே நான் அவரிடம் அகப்பட்ட வண்டியில் போய்விடுங்கள்; என்னுடைய வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று சொன்னேன். இல்லை; உங்களுடைய வண்டிக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார். ஹா! அந்த வார்த்தைகள், எனக்கு மகுடாபிஷேகம் செய்தன போலிருந்தன. அவருக்கென்று ஒன்றுமில்லை; ஆனால் எல்லாம் அவருடையனவே என்ற யேசுநாதரின் சிஷ்யர் ஒருவருடைய வாசகம் எனக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. காந்தியடிகளுக்கென்று ஒரு மோட்டார் கிடையாது. ஆனால் அவரை ஏற்றிக்கொண்டு செல்ல அவரைச் சுற்றி எத்தனை மோட்டார்கள்! இன்றைய உலகத்திற்குக் காந்தியடிகள் முக்கிய புருஷரா யிருப்பதற்குக் காரணம் அவருடைய அஹிம்ஸைக் கொள்கைதான். இந்த அஹிம்ஸையில் அவருக்குப் பூரண ஞானமும் அநுபவமும் இருக்கின்றன. இந்தியாவையும் உலகத்தையும் இதன் மூலமாகத் தான் காப்பாற்ற முடியுமென்று அவர் நம்புகிறார். இந்த நம்பிக்கை அவருக்கு நாளுக்கு நாள் அதிகப்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த அஹிம்ஸை விஷயமாக அவரைப் பலர் கேள்விகள் கேட்பதும், அவைகளுக்கு அவர் பதில் சொல்வதுமே எனக்கு அதிக உற்சாகத்தையளிக்கின்றன. நான் ஒரு திரீ என்ற ஹோதாவில் காந்தியடிகளிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன். ஒரு திரீ கற்பழிக்கப்படுவதாகப் பயமுறுத்தப் பட்டால் அவள் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்வியை ஹரிஜன் பத்திரிகையிலும் பலர் கேட்டிருக்கிறார்கள். இதே கேள்வியை இங்கும் (இங்கிலாந்திலும்) பலர் கேட்டார்கள். மேற்கண்டவிதமாகப் பயமுறுத்தப்படுகிற திரீ, மரண பரியந்தம் எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் வேறெவ்விதமான பலாத் காரத்தையும் உபயோகிக்கக்கூடாது என்று காந்தியடிகள் பதில் கூறுகிறார். இதற்காக, திரீகளின் சார்பில் அவருக்கு நான் வந்தனஞ் செலுத்துகிறேன். திரீகளின் மானம் வேறே, புருஷர் களின் மானம் வேறேயென்ற தவறான போதனைகளெல்லாம், இந்தப் பதிலினால் உடைபட்டுப்போகின்றன. ஒரு திரீ ஒரு புருஷனா லேயோ, அல்லது ஒரு புருஷன் ஒரு திரீயினாலேயோ மானபங்க மடையக்கூடாது. நாம்தான், நம்மை மானபங்கப்படுத்திக் கொள்ள முடியும். மரணத்தைவிட கேவலமானது மானபங்கம். ஆனால் அது பிறரால் நமக்கு இழைக்கப்படுவதல்ல; நமக்கு நாமே இழைத்துக் கொள்வது. மேலே சொன்ன மாதிரியான பதிலை காந்தியடிகளிட மிருந்து தவிர வேறு யாரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்? இதற் காக அவருக்கு எல்லா திரீகளும் வணக்கஞ் செலுத்த வேண்டும். உலகம் அவர் வழிப்படுமா? மேனாட்டில் இப்பொழுது அதிக மாகப் பரவியிருக்கும் பலாத்கார சக்தியானது, மகாத்மாவின் செல் வாக்கை, அவருடைய நாட்டு மக்களிடத்திலேயே குலைத்து விடுமோ வென்று நினைக்கிறபோதே ஒரு பயம் உண்டாகிறது. அப்படி ஏற்படு மானால், அஃது இந்தியாவுக்குமட்டுமல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் திற்கும் உலகத்திற்குமே பெரிய கெடுதல். ஐரோப்பாவிலே மட்டுமல்ல, அமெரிக்காவிலே, ஜப்பானிலே, சீனாவிலே இப்பொழுது பலாத்கார எண்ணங்கள் வலுத்து வருகின்றன. இந்தியாவேனும் அஹிம்ஸையில் பற்றுள்ளங் கொண்டு நிற்குமா? போராட்டம் நிறைந்த இந்த உலகத்தில், அஃது - அந்த இந்தியா - சத்தியத்தைக் கடைப்பிடித்துச் சென்று நமக்கெல்லாம் வெளிச்சங் காட்டுமா? அப்படி அது செய்தால்தான் உலகம் காப்பாற்றப்படும். இல்லாவிட்டால் - ? ஓ! இந்தியாவே! தவறிவிடாதே! * * * உண்மைத் தலைவர் மகா கனம் வைகவுண்ட் சாமியல் ஜி.ஸி.பி., ஜி.பி.இ., டி.சி.எல். (லண்டன்) சில சமயங்களில் காந்தியடிகள் செய்வதும் சொல்வதும் எனக்குக் கோபத்தை உண்டு பண்ணுகின்றன; அவை நியாய மற்றவையாயும், முரண்பட்டனவாயும் எனக்குப்படுகின்றன. எப்பொழுதுமே அவருடைய எதிர்க்கட்சியில் நான் சேர்ந்தவன் என்ற எண்ணமே எனக்கு உண்டாகிறது. இவ்வளவெல்லாம் இருந்தாலும், அவர், நல்ல லட்சியங்களுக்காக எந்தப் பாதை அகப்பட்டாலும் அதில் செல்ல வேண்டுமென்ற ஆவலுடையவர். இது விஷயத்தில் அவர் காட்டும் உண்மையும், செய்யும் தியாகமும் மகத்தானவை. உலகம் மகான்களை அங்கீகரிப்பதாக! உலகம், தனக்குச் சேவை செய்கிறவர்களிடத்தில் நன்றி காட்டுமாக! இறந்து போனவர்களுக்கு ரோஜா மலர்கள்; உயிர் உள்ளவர்களுக்கு முட்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், நாம், சில சந்தர்ப்பங் களில் உயிருள்ளவர்களுக்கும் - அவர்கள் தகுதியுடையவர்களா யிருந்தால் - ரோஜா மலர்களை அளிப்போமாக! காந்தியடிகள் தமது வாழ்க்கையில் இந்தியாவுக்கும் இந்தியாவின் மூலமாக மானிட ஜாதிக்கும் மகத்தான சேவைகள் செய்திருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்கவை மூன்று. கீழ்நாட்டு மக்களுக்கு எப்பொழுதுமே, கீழ்ப்படிந்து போகிற சுபாவ முண்டு. சிறப்பாக, இந்திய மகாஜனங்கள், பிறரால் வெற்றி கொள்ளப் பட்டு ஆளப்படுவதும், பிற்போக்கடைந்தவர்களா யிருப்பதும், கல்வியறிவு இல்லாதவர்களாயிருப்பதும், மூட நம்பிக்கைகள் நிரம்பியவர்களா யிருப்பதும், வறுமையிலே அழுந்திக் கிடப்பதும், தங்களுடைய விதிப்பயன் என்று கருதுகிறார்கள். இங்ஙனம் கருதுவதற்கு, அவர்களுடைய பூர்விக சரித்திரமும், அவர் களால் எதிர்க்க முடியாத நிகழ்கால சக்திகளும் துணை செய்கின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்கக் காந்தியடிகள் தோன்றினார். சிறியதும் நிச்சயமற்றதுமான ஓர் இயக்கத்தை ஆரம்பித்து அதற்குத் தலைமைபூண்டு நடத்தினார். அவருடைய குண விசேஷங்கள் அவருக்கு ஒரு புகழை அளித்தன. அவரிடத்தில் ஆத்ம ஒளியும், அனுபவஞானமும் ஒன்று கலந்திருந்தபடியால், அவரால் பாமர ஜனங்களை அசைத்துக் கொடுக்க முடிந்தது; அநேக வெற்றி களையும் அடைய முடிந்தது. இந்தியர்களுக்கு வளைந்து போயிருக் கும் முதுகை நிமிர்த்திக் கொள்ளவேண்டுமென்றும், பார்வையை உயர்த்திக்கொள்ள வேண்டு மென்றும், அவ்வப்பொழுது ஏற்படுகிற நிலைமைகளை உறுதியோடு சமாளிக்க வேண்டு மென்றும் அவர் கற்றுக் கொடுத்தார். வாழ்க்கையைப் பின் பக்கத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்; முன் பக்கத்தில் நடத்த வேண்டும் என்று ஒரு வாசகமுண்டு. அப்படிப் போல், காந்தியடிகள், தமது ஜனங்களுக்கு, அவர்களுடைய புராதனத்தைத் தெரிந்து கொள்ளுமாறு கூறினார். ஏன்? அதிலேயே ஈடுபட்டுவிடு வதற்காகவல்ல; அதிலிருந்து பாடங் கற்றுக் கொள்வதற்காக. நிகழ் காலத்தை நாம் உறுதியாகக் கைப் பற்றிக்கொண்டால்தான், வருங் காலத்தை நாம் ஒழுங்காக நிர்ணயிக்க முடியுமென்ற உண்மையை அவர் உபதேசம் செய்தார். தமது ஜனங்கள் முன்னோக்கி வாழ வேண்டு மென்று அவர் போதித்தார். இந்தப் பெருமையிலே, இந்த முயற்சியிலே, இந்திய திரீ களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். பிரிட்டிஷார் சுயமரியாதையுடையவர்கள். இந்தக் காரணத் திற்காகவே, அவர்கள் சுயமரியாதையுடையவர்களை மரியாதை செய்கிறார்கள். அநேக நூற்றாண்டுகளாக இந்தியாவுடன் பிரிட்டிஷார் சம்பந்தம் வைத்துக்கொண்டிருந்தபோதிலும், சமீபகாலமாக இந்திய மகாஜனங்களிடத்தில் பிரிட்டிஷார் அதிகமான மரியாதை காட்டு கிறார்களென்று நான் நிச்சயமாகக் கூறுவேன். மானிட ஜாதியில் ஆறில் ஒரு பங்கு பேர் இந்தியாவில் வசிக்கிறார்கள். இந்தப் பெரும் பாலோரான ஜனங்களின் அந்ததையும், சக்தியையும் உயர்த்திக் கொடுக்க, காந்தியடி களைப் போல் வேறு யாரும் உதவி செய்யவில்லை. இதற்காக இந்தியா அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்; பிரிட்டனும் நன்றி செலுத்த வேண்டும்; அவரால் ஏற்படுகிற நன்மைகளை மறைமுக மாகவும் இறுதி யாகவும் அநுபவிக்கிற உலகமும் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும். அவருடைய ஒத்துழையா இயக்கம், அநேக பலாத் காரச் செயல் களினால் கறைபட்டுப் போயிருக்கிறது. ஆனால் காந்தியடிகளின் தூண்டு தலினாலல்ல. அவருடைய உபதேசங்களை மீறி நிகழ்ந்த செயல்களே இவை. இரண்டாவதாக அவர் அடைந்திருக்கிற சித்தியென்ன வென்றால், சுதந்திர லட்சியத்தையடைய அஹிம்ஸை வழியை வெற்றிகரமாகக் கடைப்பிடித்திருப்பதுதான். முதலில் கண்டனம் செய்து பாருங்கள்; பிறகு உங்கள் கட்சியின் நியாயத்தை எடுத்துச் சொல்லி அதற்கு இசையும் படிச் செய்யுங்கள்; கடைசியில், அவசியம் ஏற்பட்டால், விதிக்கப்படுகிற உத்திரவுகளுக்கு, சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிடுங்கள். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பலாத்காரத்தை உபயோகிக் காதீர்கள்; எதிரிகளைக் கொல்லாதீர்கள்; அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்; கலகஞ் செய்யாதீர்கள். இதுதான் அவருடைய உபதேசம். இந்த மாதிரி யான உபதேசங்கள், இந்திய மகாஜனங் களுடைய மனப்பான்மைக்குப் பொருந்தியதா யிருக்கின்றன. இந்த உபதேசத்தை அநுஷ்டானத் திற்குக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கு அதிகமாகத் தியாகம் செய்யவேண்டிய தவசியமாகிறது. தியாகஞ் செய்ய இந்தியர்கள் எப்பொழுதுமே தயாராயிருக்கிறவர்கள். அவர்களுடைய நியாய புத்திக்கு இந்த உபதேசங்கள் பொருந்தியனவாகவே இருக்கின்றன. உயர்ந்த மதத்தத்துவம் இந்த உபதேசங்களில் அடங்கியிருக்கின்றது. அவருடைய இந்த உபதேசங்கள் பயனை யளித்திருக்கின்றன. பெரும்பாலோரான ஜனங்கள், அஹிம்ஸை வழியில் உற்சாகத்துடன் செல்வதைக் கண்டு, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற இயற்கைக்கு விரோதமான எதிர்ப்புகள் பலவீனமடைந்து போயிருக்கின்றன. மூன்றாவதாகக் காந்தியடிகள் அடைந்திருக்கிற சித்தி யென்ன வென்றால், தாழ்ந்த வகுப்பினருடைய நலனுக்காகத் தீவிரமாகப் பாடுபட்டிருப்பது. தாழ்ந்த வகுப்பினருடைய பிரச்னையை அவர், இந்திய அரசியலின் முன்னணியில் கொண்டு வந்தார். அதனை வெற்றி மார்க்கத்தில் கொண்டு விட்டிருக்கிறார். தீண்டாச்சாதியார் நடத்தப் படுகிற விஷயம், இந்தியாவின் சமுதாய, மதச் சரித்திரத் திலேயே களங்கமான ஓர் அமிசமாகும். பெரும்பாலான மக்களை, அவர்களுடைய குற்றம் எதுவுக்குமல்லாமல் ஒதுக்கி வைத்திருக்கிற மதம் என்ன மதம்? மனிதனுடைய ஆத்மாவை உயர்த்திக் கொடுப்பதுதான் மதத்தின் கடமையே தவிர, அதனை அடக்கி ஒடுக்குவதல்ல. இவைகளை யெல்லாம் காந்தியடிகள் நன்கு அறிந்தும் உணர்ந்துமிருக்கிறார். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அவர் தீண்டப்படாதாரின் நலனுக்காக அரும்பாடு பட்டிருக்கிறார்; இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த களங்கத்தைப் போக்கி, அதனை நாகரிக முன்னனியிலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இப்பொழுது இந்தத் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் வெகு தூரம் முன்னேறியிருப்பதை அவர் காண்கிறார்; அதன் இறுதியான வெற்றியிலே அவருக்கு நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. காந்தியடிகளைத் தவிர்த்து ஜீவிய தசையிலேயுள்ள வேறெந்த மகான், தமது எழுபது வருஷத்து சேவைகளைத் தொகுத்துப் பார்க்கிற போது, மேற்கண்டவிதமான சித்திகளை யடைந்திருப்பதாகச் சொல்ல முடியும்? அவர் ஒரு பெரிய ஜாதியின் தன் மதிப்புணர்ச்சியை உயர்த்திக் கொடுத்திருக்கிறார்; பலாத்காரப் பிரயோகமில்லாமல், மனித சக்தி களைக் கொண்டே பொதுஜன வாழ்வில் மகத்தான பலன்களையடைய முடியுமென்பதை இன்றைய உலகத்திற்கும், வருங்கால உலகத்திற்கும் எடுத்துக்காட்டியிருக்கிறார். அவர் நூற்றாண்டுகள் கணக்காகத் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வகுப்பாரை மேலுக்குக் கொண்டு வந்திருக்கிறார். தாம் அடைந் திருக்கிற இந்தச் சித்திகளைக் கண்டு காந்தியடிகள் திருப்தி கொள்ள முடியும். அவர் மாதிரி, மற்றவர்களும் சேவை செய்ய முன்வருவார் களாக. அவர் எத்தனையோ தடவை முட்களால் வடுக்கள் உண்டா கும் படியாகக் குத்தப்பட்டிருக்கிறார். இப்பொழுது நாம், நமது நன்றியாகிற ரோஜா மலர்களை அவருக்கு சமர்ப்பிப்போமாக! * * * வட்ட மேஜை மகாநாட்டில் மகாகனம் வைகவுண்ட் ஸாங்கே எம்.ஏ., டி.சி.எல். (லண்டன்) இந்தக் கட்டுரையில் காந்தியடிகளின் வாழ்க்கையைப்பற்றி நான் வியாக்கியானஞ் செய்யப்போவதில்லை; அல்லது அவருடைய சமுதாய, அரசியல் கொள்கைகளைப்பற்றி விமரிசனம் செய்யப்போவது மில்லை. அவரைப் பின்பற்றுவோர் அவரைப் பெரிதும் புகழ்ந்து பேசு கிறார்கள்; அவரை எதிர்ப்போர் அவரைப் பலமாகக் கண்டிக்கிறார்கள். இதனால் அவர் ஒழுக்கத்திலே சிறந்தவர் என்பது நன்கு புலனாகிறது. அவருடைய கொள்கைகளனைத்தையும் அங்கீகரியாதவன் நான். ஆனால் அவரை நான் சொந்த ஹோதாவில் உயர்வாகப் பாராட்டுகிறேன். அந்தப் பாராட்டுதலுக்கறிகுறியே இந்தக் கட்டுரை. காந்தியடிகளை நான் முதன்முதலாக 13-9-1931ல் சந்தித்தேன். வட்டமேஜை மகாநாட்டின் சமஷ்டி அமைப்புக் கமிட்டியில் நாங்களிருவரும் பக்கத்துக்குப் பக்கத்தில் மணிக்கணக்காக, நாள் கணக்காக உட்கார்ந்து வேலை செய்தோம். மகாநாட்டு வேலை முடிந்த தும் அவர் இந்தியா திரும்பிவிட்டார். வட்ட மேஜை மகாநாட்டில் பல கடினமான பிரச்னைகள் அலசி ஆராயப்பட்டன. பிரதிநிதிகளிடத்தில் பல விதமான கவலைகள். இவைகளுக்கு மத்தியில் ஒரு மனிதரோடு நாம் பழகுவோமானால் ஒன்று அவர் மீது விருப்பாவது ஏற்படும்; அல்லது வெறுப்பாவது ஏற்படும். ஆனால் நான் காந்தியடிகளின் நண்பன் என்று என்னைச் சொல்லிக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். லண்டனில் டோர்செடர் ஹோட்டலில், நான் அவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டேன். அவருடைய வருகையை எதிர் பார்த்து, ஏற்கனவே அந்த ஹோட்டலைச் சுற்றி ஏராளமான ஜனங்கள் கூடியிருந்தார்கள். காந்தியடிகள் சிறிய உருவத்தினர். வெண்மையான ஆடை தரித்திருந்தார். ஆனால் அவரையறியாமலே அவரிடத்தில் பெருந்தன்மையும் புகழும் அவரோடு சேர்ந்து பிரகாசித்தன. அவரைப் பார்த்ததும் அவரிடத்தில் எனக்கு ஒரு மரியாதை உண்டாயிற்று. சிறப்பாக அவருடைய இரண்டு கண்களும் எனக்கு அதிக வியப்பைத் தந்தன. அந்தக் கண்களைப் பார்த்து, அவருடைய எண்ணங்களும் கொள்கைகளும் இன்னவையென்று நீங்கள் நிர்ணயித்துவிடலாம். அவரை நான் முதன் முறையாகச் சந்தித்தபோது, அவரோடு நான் சிறிது தனித்துப் பேசவேண்டியிருந்தது. ஏனென்றால், வட்டமேஜை மகா நாட்டின் சமஷ்டி திட்ட அமைப்புக் கமிட்டியின் தலைவனாக நான் நியமிக்கப்பட்டிருந்தேன். அந்த முறையில், அவருடன், நடைபெற வேண்டிய விஷயங்களைப்பற்றிப் பேசவேண்டியிருந்தது. இதனாலேயே அவரும் நானும் தனித்துப் பேசினோம். அவர் தமது அபிப்பிராயங் களை விதரித்துக் கூறினார். மகாநாட்டில் இந்தியாவுக்குத் தாழ்ந்த அந்தது கொடுக்கப்பட்டிருப்பதைக் குறித்துப் பெரிதும் வருந்தினார். ஆனால் அவருடைய முக்கிய குறை, மகாநாட்டினால் ஏற்படுகிற அதிகச் செலவைப் பற்றியேயாகும். ஏனென்றால் இந்தச் செலவெல்லாம் ஏழை மக்களின்மீது வரியாகவல்லவோ சென்று விழுகிறது.அவருடைய சம்பாஷணையில் பெரும் பாகம் ஏழை மக்களைப்பற்றியே. கிராமங் களில் வசிக்கும் ஜனங்களைப்பற்றி அவர் பெரிதும் வருந்தினார். இந்தியாவில் யந்திரத் தொழில்கள் பெருகுவது, ஏழை மக்களுக்கு அதிக கஷ்டம் என்று கூறினார். சத்தியாக்கிரகத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வலியுறுத்திப் பேசினார். அப்பொழுது தேசத்தை எவ்விதம் பாது காப்பது என்கிற பிரச்னை வந்தது. அஹிம்ஸை முறையினாலேயே பாது காக்க முடியுமென்ற தமது அபிப்பிராயத்தை உறுதியுடன் தெரிவித்தார். இங்ஙனம் பல விஷயங்களைப் பற்றி அவருடன் பேசி விட்டு நான் திரும்புகையில், அவரைப்பற்றி நான் ஓர் உறுதியான அபிப்பிராயம் கொள்ளாமலிருக்க முடியுமா? அவருடைய சம்பாஷணை முழுவதிலும், ஒருமத புருஷரிடத்தில் காணப்படும் உற்சாகம் நிரம்பியிருந்தது. அவரைப்பற்றி நான் மூன்றுவிதமான முடிவுகளுக்கு வந்தேன். முதலாவது, அவர், டால்டாயின் உபதேசங்களில் அதிகமாக ஈடுபட்டவர். சமுதாயத்திலே படிந்திருக்கிற தீமைகளுக்கெல்லாம் பரிகாரம் எளிய வாழ்க்கையை நடத்துவதுதான். இரண்டாவது, அவர் ஒரு தேசாபி மானியாக எனக்குப் புலப்பட்டார். அவருடைய தேச பக்தி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. தமது நாட்டின் பெருமையையும் கீர்த்தியையும் உயர்த்திக்காட்ட வேண்டுமென்ற ஆவல் அவரிடம் தீவிரமாகக் காணப்பட்டது. தவிர, ஏழை மக்களிட மும், ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடமும் அவர் காட்டிய இரக்கம் எல்லை கடந்தது. மூன்றாவதாக அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவராக எனக்குப் புலப்பட்டார். ஏனென்றால், அவர், தமது லட்சியத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்ததோடு, அதனை அடையக் கூடிய சாதனங்கள் இன்னவையென்கிற விஷயத்திலும் நிர்ணயமான அபிப்பிராயமுடைய வராயிருந்தார். சமஷ்டி திட்ட அமைப்புக் கமிட்டியின் முதற்கூட்டம் 14-9-1931ல் லண்டன் செயிண்ட் ஜேம் மாளிகையில் கூடியது. அன்று அவருடைய மௌன தினம். அதனால் அன்று அவர் ஒன்றும் பேச வில்லை. மறுநாள் 15ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று, கமிட்டியில் தமது முதலாவது பிரசங்கத்தைச் செய்தார். அப்பொழுது நான் எழுதி வைத்திருந்த குறிப்பை இங்கு எடுத்துக் காட்டினால் ருசிகரமாயிருக்கு மென்று நினைக்கிறேன். மிடர் காந்தி, மெதுவாகவும் நிதான மாகவும், நிமிஷத்திற்கு 57 வார்த்தைகள் வீதம் பேசினார். கையில் எவ்விதக் குறிப்புமில்லாமல் அவர் இங்ஙனம் ஒரு மணி நேரம் பேசினார். அவர் பேசுவதற்கு முன்னர் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து வைத்துக் கொள்கிறார். அப்பொழுது பிரார்த்தனை செய்கிற மாதிரியிருக்கிறது. அவர் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அவர் காலில் பாதரட்சையும், இடுப்பிலே ஒரு வேஷ்டியும், மேலே ஒரு வெள்ளைச் சால்வையும் அணிந்திருந்தார். அவர், தமது பிரசங்கத்தில், இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டு மென்றும், ராணுவ நிருவாகமும் பொக்கிஷ நிருவாகமும் ஜனப்பிரதிநிதிகள் கையி லிருக்க வேண்டு மென்றும் குறிப்பிட்டார். மகாநாட்டினால் ஏற்பட்ட சிரமத்தை அவர் எப்படிச் சமாளித்துக் கொண்டு வந்தாரென்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. தினந்தோறும் மகாநாடு ஆரம்பிக்கிற போது வந்து, முடிவு வரையில் இருப்பார். சில நாட்களில் மகா நாட்டில் எண்பதினாயிரம் வார்த்தைகளுக்கு மேல், எல்லாப் பிரதிநிதிகளும் சேர்ந்து பேசியிருக்கிறார்கள். ஆனால் காந்தியடிகளின் உண்மையான வேலை, மகாநாடு முடிந்த பிறகுதான் ஆரம்பித்த தென்று சொல்ல வேண்டும். அதி காலை யிலிருந்து நடுராத்திரி வரையில், பலதிறப்பட்ட கொள்கை யினரும் பலதரத்தினரும் அவரைப்பார்க்க வந்து கொண்டே யிருந்தார்கள். அவரும், சலிப்படையாமல் எல்லோருக்கும் பேட்டி கொடுத்துப் பேசினார்; தமது கொள்கைகளுக்கு மற்றவர்களை இணங்கும்படிச் செய்தார். அரசாங்கங்களின் பிரதம மந்திரிகளும், சர்வாதிகாரிகளும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை ஜனங்கள் மீது திணிக்க அநேக சாதனங் களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காந்தியடிகளைப் போல் வேறு யாரும் தங்களுடைய ஜீவிய காலத்திலேயே, தங்களுடைய முயற்சி யினாலும் உதாரணத்தினாலும் லட்சக்கணக்கான மக்களைத் தங்களது கொள்கைகளுக்கு இணங்கும் படிச் செய்திருக்கிறார்களா வென்பது சந்தேகந்தான். வட்ட மேஜை மகாநாட்டின் போது, இந்தியாவிலிருந்து வந்திருந்த பிரபலதர் பலரையும் சந்திக்கும்படியான பாக்கியம் எனக்கேற்பட்டது. அவர்களனைவரும் காந்தியடிகளிடத்தில் விசேஷ மரியாதை காட்டி வந்தனர். காந்தியடிகள், தமது உள்ளிருக்கும் ஒரு சக்தியின் மூலமாகவே அடிக்கடி பேசுகிறாரென்று எனக்குப் பட்டது. உலக சரித்திரத்தில் தோன்றிய மகான்கள் இந்த மாதிரி அநுபவங்களை அடைந்திருக்கிறார்களென்று நாம் படிக்கிறோம். உதாரணமாக சாக்ரடீஸும், பால் முனிவரும் அவர்களிடத்தில் அந்தர்யாமியா யிருந்த ஒரு சக்தியின் மூலமாகவே பேசினார்களென்று தெரிகிறது. அவர்கள், பித்தர்களைப் போல் பிதற்றினார்களோ அல்லது சக்தி நிறைந்தவர்களாய் பேசினார்களோ நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களுடைய உபதேசங்களிலே மக்கள் ஈடுபட்டுவிட்டார்கள். காந்தியடிகள் ஓர் அரசியல் ஞானி. சில சந்தர்ப்பங்களில் அவரை அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் அவர் எப்பொழுதும் மத புருஷராகவே இருக்கிறார்; இந்தியாவுக்கும் ஏழை மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆவலுடைய வராயிருக்கிறார். காந்தியடிகளின் அரசியல் வாழ்க்கையைப்பற்றி நான் ஒன்றுங் கூறுவதற்கில்லை. அரசியல் வாதிகள் எப்பொழுதும் அதிகமான கண்டனங் களுக்குட் படுகிறவர்கள். மந்திரிமார்களை நாம் பத்து நிமிஷ நேரம் சந்தித்துப் பேசினால், அவர்கள் மௌனத்தைக் காட்டிலும் குறைவான வார்த்தைகளினாலேயே நமக்குப் பதில் சொல்வார்கள் என்று ரகின், தான் எழுதிய ஒரு நூலில் குறிப்பிடுகிறார். ரகின் ஓர் அரசியல் தலைவரா யிருந்தால் என்ன செய்திருப் பாரோ நமக்குத் தெரியாது. ஆனால் மேனாட்டு அரசியல் வாதிகள், காந்தியடிகளின் அரசியல் வாழ்க்கையைக் கடுமையாகத் தாக்கு கிறார்கள். அப்படித் தாக்குகிறபோது, கண்ணாடி வீட்டுக்குள்ளி ருக்கிறவர்கள் பிறர்மீது கல்லெறியக் கூடாதென்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளுதல் நல்லது. காந்தியடிகள், தமக்கென்று சில உயர்ந்த லட்சியங்களை வரையறுத்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. ஆனால், அவருக்கு, இந்தியாவின் பல தரப்பட்ட மக்கள் மீது அதிகாரஞ் செலுத்தும்படியான சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டால் என்ன செய்வா ரென்பது சந்தேகாபதமான விஷயம். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஓர் அரசியல்வாதி பலவிதமான உபாயங்களையும் சாதனங்களையும் கையாளவேண்டி யிருக்கிறது. ஆனால் மகான்கள் உபாயங்களைப் பற்றியும் சாதனங்களைப் பற்றியும் கவலைப் படுவதே கிடையாது. இறுதியாகப் பார்க்கப் போனால், அரசியல் வாதிகளை மகான்களே வெற்றி கொள்கிறார்கள். காந்தியடிகளின் வாழ்நாள் முடிந்த பிறகு அவரைப்பற்றி நாம் மதிப்பிட்டுப் பார்ப்போமானால், அவர் தமது முயற்சியினால், தாம் பிறந்த போது இந்த உலகத்தை எப்படிக் கண்டாரோ அதைவிடச் சிரேஷ்டமான ஒரு நிலையில் இந்த உலகத்தை வைத்துவிட்டுப் போனார் என்பது நன்கு தெரியவரும். இதுவே என்னுடைய அபிப்பிராயம். * * * ஹிந்து தர்மத்தின் கர்த்தர் டி.எ. சர்மா, எம்.ஏ (பச்சையப்பா கல்லூரி, சென்னை) ஓர் அமெரிக்க யாத்திரிகர் மூன்று விஷயங்களைப் பார்க்கவே தாம் இந்தியாவுக்கு வந்திருப்பதாகவும், அந்த மூன்றும் முறையே ஹிமாலயம், தாஜ்மகால், மகாத்மா காந்தி யென்றும் கூறினார். இந்தியாவிலுள்ள நாம் மகாத்மா காந்தியின் வெகு சமீபத்திலிருக் கிறோம். இதனால், அவருடைய புருஷ சக்தியைச் சரியான அளவு கொண்டு பார்க்கவும் அவர் நடத்துகிற சத்திய சோதனையானது, மானிட இதிகாசத்தில் எவ்வளவு முக்கியத்துவமுடையதென்பதை அறிந்து கொள்ளவும் முடியாது. தமது உபதேசங்கள், இந்தியாவில், இந்திய அரசியல் பாஷையில் சொல்லப்பட்ட போதிலும், அவை அகில உலகத்திற்கும் பொதுவானவை யென்று அவரே கூறியிருக் கிறார். ஆனால் மானிட ஜாதியை உயர்ந்ததோர் ஒழுக்க நிலைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்ற லட்சியமுடையவர்கள், எவ்வளவுக் குத் தேவையோ அவ்வளவுக்குத்தான் அரசியலிலே ஈடுபடுகிறார்கள். நாம் நமது காலத்தில் ஆகாயவிமானப் பிரயாணம் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறதென்பதை நன்கு காண்கிறோம். நிலத்தை யும் நீரையும் கடந்து ஆயிரக்கணக்கான மைல் தூரம் ஒரு கண்டத்தி லிருந்து மற்றொரு கண்டத்திற்கு, எவ்வித விபத்துக்களையும் பொருட்படுத்தாமல் பலர் ஆகாய விமானங்களில் பறக்கிறார்கள். யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் இந்த ஆகாயவிமானங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதனால் சரித்திரத்தில் ஒரு புதிய ஏடு திறக்கப்பட்டிருக்கிறதென்று சொல்லவேண்டும். ஆனால் காந்தியடிகள் கண்டுபிடித்திருக்கும் புதிய கருவி மானிட சமுதாயத்திற்கு, ஆகாய விமானத்தைக் காட்டிலும் அதிகமான நன்மை தரக்கூடியது; வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையில் ஆழ்ந்த முத்திரையிடுந் தன்மையது. ஏனென்றால் அவருடைய சத்தியாக்கிரகமானது, ஆன்ம உலகத்தில் சஞ்சரிக்கக்கூடிய ஆகாய விமானம் மாதிரி. இதனை நாம் சரியாகத் தெரிந்துகொண்டு ஒழுங்காக அநுஷ்டிப்போமானால், தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல, தேசங்கள்கூட, தங்களிடத்திலே குடிகொண்டி ருக்கும் மிருக சக்தியினின்று விலகி, அத்யாத்மிக சக்தியின் பூரணத்துவம் என்று நாம் எதைச் சொல்கிறோமோ, அதுவாகிய கடவுளிடம் பறந்து செல்லக்கூடும். காந்தியடிகளின் அஹிம்ஸை அல்லது ஆத்ம சக்தி தத்துவத்தைக் கண்டு இன்று பலர் பரிகசிக்கக்கூடும். யந்திர பீரங்கிக்கு முன்னரோ, வெடிகுண்டுக்கு முன்னரோ இந்தச் சக்தி என்ன செய்யும் என்று அவர்கள் கேட்கக்கூடும். இங்ஙனம் கேட்கிறவர்கள், கிறிதவ தர்மத்தை அறியாதவர்களென்றுதான் சொல்லவேண்டும். ரெயில்வே இஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், ஒரு பார்லி மெண்டு அங்கத்தினர் அந்த இஞ்சின், பாதையில் சென்று கொண்டிருக்கிறபோது, கோபமுள்ள ஒரு பசு அதனை முட்டினால் அஃது என்ன செய்ய முடியும் என்று கேட்டார். அதுபோல், இன்றைய மனிதன், ஆத்ம உலகத்தில் ஒரு குழந்தை மாதிரி இருக்கிறான். இன்னும் நூறு வருஷங்கள் கழித்தோ, அல்லது ஆயிர வருஷங்கள் கழித்தோ, இன்றைய ஐரோப்பாவிலுள்ள சர்வாதிகாரி களும் அவர்களைப்போல் எண்ணுகிறவர்களும், அவர்கள் குவித்து வைத்திருக்கிற ஆயுதங்களும் மண்ணோடு மண்ணாகிப் போய் விட்டபிறகு மெலிந்த தேகத்தினையுடைய இந்த ஹிந்துவால் தயாரிக்கப் பட்டிருக்கிற ஆத்மீக ஆயுதம் இருக்கிறதே அதனையே உலகம் ஏற்றுக்கொள்ளப்போகிறது. அப்பொழுது உலகத்திலுள்ள எல்லா நாடு களும் தங்களுக்கு ஒரு சிறந்த வழியை, மனிதத் தன்மைக்கொத்த வழியைக் காண்பித்த அவரை ஆசிர்வதிக்கும். அப்பொழுது அவரை ஒரு தேவ தூதர் என்று எல்லாரும் அங்கீகரிக்கப் போகிறார்கள். அவருடைய உபதேசங்கள், புத்தர், கிறிது, முகம்மது நபி முதலியோருடைய உபதேசங்களைப்போல் ஒரு நாடுக்கோ ஒரு ஜாதிக்கோ இல்லாமல் சர்வ உலகத்திற்கும் பொதுவானவையென்று ஒப்புக்கொள்ளப்படும். தற்போது உலகத்தில் நிலவுகின்ற மதங்களில் ஹிந்து மதம் மிகப் புராதனமானது. சுமார் நாற்பது நூற்றாண்டுகளாக அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. புதிய தத்துவங்களை வெளியிடுகிற சக்தி அதற்கு இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது கூட அது புதிய கோட்பாடுகளையும் புதிய திட்டங்களையும் வெளி யிட்டுக் கொண்டே இருக்கிறது. அதிலிருந்து புதிது புதிதாக அவதார புருஷர்கள் தோன்றிக் கொண்டே யிருக்கிறார்கள். சுருக்கமாச் சொல்லப்போனால், ஹிந்து மதம், சத்தியத்தையடையும் பொருட்டு படிப்படியாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. இப்பொழுது, அதனுடைய வாழ்க்கையில் ஒரு விகாசம் ஏற்பட்டுவருகிறது. அதனுடைய சரித்திரத்தில் புதியதோர் அத்தியாயம் சேர்க்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி, ஹிந்து தர்மத்தைச் சரியாகப் பிரதி பலித்துக் காட்டும் உத்தம புருஷர்; முற்கால ரிஷிகளின் வழித் தோன்றல். அவர், ஹிந்து தர்மத்தின் நித்தியமான உண்மைகளைப் புதிய முறையில் வியாக்கியானஞ் செய்து, தற்கால உலகினுக்குப் பொருந்துமாறு அவற்றை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து காட்டியிருக்கிறார். ஹிந்து தர்மத்தின் அடிப்படையான கொள்கை யாகிற அஹிம்ஸையே, தேசீய விவகாரங்களிலும் சர்வதேசீய விவகாரங்களிலும் பிரயோகிக்கப்படுகிறபோது, சத்தியாக்கிரகம் என்ற பெயர் பெறுகிறதென்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். இந்தச் சத்தியாக்கிரக சக்தியானது, மனிதனிடத்திலேயுள்ள தெய்வ சக்தியை வெளிப்படுத்துகிறது. அப்படி வெளிப்படுத்திக் காட்ட வேண்டுமானால், அதற்குப் பின்னணியில் ஒரு மத உணர்ச்சி வேண்டும். அந்த மாதிரி மத உணர்ச்சியுள்ள நாடு இந்தியாதான். இதனாலேயே அவர், இந்தியாவில் தமது சத்தியாக்கிரக பரிசோதனையைச் செய்ய ஆரம்பித்தார். அஹிம்ஸையின் மூலமாக சுயராஜ்ய சித்தி அடைய வேண்டுமென்று அவர் கூறுகிறார். அப்படிப்பட்ட சுயராஜ்யத்தில் எல்லா மதத்தினரும், எல்லா வகுப்பினரும் சமமான உரிமைகளையும் சலுகைகளையும் அநுபவிப்பார்களென்று அவர் சொல்கிறார். அதாவது, ஹிந்து மதத்தின் கோட்பாடாகிய ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி1 (சத்தியப் பொருள் ஒன்று; அதனை அறிஞர்கள் பல பெயரிட்டழைக்கிறார்கள்) என்ற வாசகத்தை, அரசியல் பாஷையில் அவர் சொல்கிறார். உலகத்திலேயே பொதுவுடமைத் தத்துவத்தைச் சிறந்த முறையில் வெளிப்படுத்திக் காட்டுவது வர்ணாசிரம தருமமே யென்பது அவர் கொள்கையாத லினால், அவர் தீண்டாமையையும், தற்போதைய ஜாதிப் பிரிவுகளினால் ஏற்படுகிற வித்தியாசங்களையும் ஒழிக்க வேண்டு மென்று கூறுகிறார். இந்திய நாகரிகத்தின் சிறப்பியல்பு களை நமக்கு ஞாபகப்படுத்து வதற்காகவே அவர், நூல் நூற்க வேண்டு மென்றும், நெசவுத் தொழிலைப் பரப்ப வேண்டுமென்றும் மது விலக்கை அநுஷ்டானத் திற்குக் கொண்டுவர வேண்டு மென்றும் அவர் கூறுகிறார். ஏனென்றால் இந்திய நாகரிகத்தை, அதன் புனிதத் தன்மை கெடாமல் அப்படியே காப்பாற்றி வைக்க வேண்டுமென்பது அவருடைய ஆவல். தவிர, அரசியல், சமுதாயப் பிரச்னைகள் அனைத்தையும் மத திருஷ்டி கொண்டு பார்ப்பதும், வாழ்க்கையின் எல்லா அமிசங்களிலும் சத்தியத்தையும் அஹிம்ஸையையும் அநுஷ்டிக்க வேண்டு மென்பதும், எல்லா ஜீவராசிகளிடத்திலும் ஒரே கடவுள்தான் வீற்றிருக்கிறார் என்ற உண்மையை, அன்றாட வாழ்க்கையில் அவலம்பித்துக் காட்ட வேண்டு மென்பதும் ஹிந்து மதத்தின் பல அமிசங்களேயாம். தற்போதைய உலகத்தில், நமது இந்திரியங்களை அசுத்தப்படுத்திவிட எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் அவர், தமது கண்டிப்பான பழக்க வழக்கங்களினாலும், உபவாசம் முதலியவைகளினாலும் ஹிந்து தர்மத்தின் கோட்பாடுகளாகிய ப்ரஹ்மசரியம், தவம், வைராக்கியம் முதலியவற்றை மீண்டும் தாபிதம் செய்திருக்கிறார். வருங்கால ஹிந்து தர்மம் எப்படியிருக்க வேண்டுமென்பதை மகாத்மா காந்தி தமது உபதேசத்தினாலும் அநுஷ்டானத்தினாலும் எடுத்துக் காட்டுகிறார். ஹிந்து மதத்தின் சரித்திரத்தில் கிரியா சக்தி நிரம்பவுடைய மகா புருஷர்களில் ஒருவராக அவர் போற்றப்படுவார். அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும், ஹிந்து மதத்தின் புனிதக்கிரந்தங்களாகக் கௌரவிக்கப்படும். * * * சிறியவர் - ஆனால் பெரியவர் ஸ்ரீமதி. கிளேர் ஷெரிடன் (லண்டன்) உருவத்திலே சிறிய, ஆனால் உயர்விலே பெரிய மகாத்மா காந்தியை நேரில் சந்திக்காதவர்கள் யாரும் அவருடைய பெருமை யைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது. இங்கிலாந்தில், பத்திரிகைகள் வேண்டுமென்றே அவர் சம்பந்த மான விஷயங்களைத் திரித்துக் கூறுகின்றன. அவரைப்பற்றிய செய்திகள் சரியானபடி பத்திரிகைகளில் வெளிவருமானால், சர்வாதி காரிகளைப்போல் அவருக்கும் பிரபலம் ஏற்பட்டிருக்கும். உலக மக்கள் ரேடியோவைத் திருப்பி வைத்துக் கொண்டு யாரோ ஒருவருடைய அச்சமுறக்கூடிய, திடுக்கிடக்கூடிய பேச்சுக்களைக் கேட்பதை விடுத்து, மகாத்மா காந்தியின் உயரிய உண்மைத் தத்துவங் களைக் கேட்டுச் சாந்தியடைவார்களானால், எவ்வளவு நன்மையா யிருக்குமென்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. உண்மைகளை அவர் எவ்வளவு தெளிவாக எடுத்துக் கூறுகிறார்? மனித வாழ்க்கையின் லட்சியத்தை எவ்வளவு அழகாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார்? அவரிடத்தில் துவேஷமோ பலாத்கார எண்ணமோ கிடையாது. லார்ட் லண்டன்டெரி ஒரு சமயம், காந்தி நம்மெல்லோரையும் துவேஷிக்கிறாரில்லையா? என்று கேட்டார். அஃது எனக்கு ஆச்சரியத்தையே உண்டாக்கியது. காந்தியடிகளால் ஒரு தனிப்பட்ட மனிதரையோ ஒரு ஜன சமூகத்தையோ துவேஷிக்க முடியும் என்று நினைப்பவர்கள், அவரைப்பற்றித் தவறாக அறிந்து கொண்டிருக்கிறார் களென்றே நான் கருதுகிறேன். வட்டமேஜை மகாநாடு நடைபெற்ற காலத்தில் எனக்கு அவரை நெருங்கிப் பார்க்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. என்னுடைய சிநேகிதை ஸ்ரீமதி சரோஜினி தேவியின் மூலமாக, அவரைப்போல் உருவச்சிலை அமைத்துக்கொள்ள அவர் எனக்கு அநுமதியளித்தார். ஆனால் அது சுலபமான காரியமாக இல்லை. அவர், என்னுடைய விருப்பப்படி உருவச்சிலை அமைத்துக் கொள்வதற்கு என் எதிரில் உட்கார்ந்து கொள்ள மறுத்துவிட்டார். அது, தன்னடக்கத்தி னாலேயோ, அதிக வேலையினாலேயோ, சித்திரக்கலையில் அவருக்கு ஆர்வம் இல்லாத தினாலேயோ அல்லது மூன்றும் சேர்ந்தோ என்னவோ தெரியவில்லை. அப்பொழுது எனக்கு லெனினுடைய ஞாபகம் வந்தது. 1920 - ம் வருஷம் லெனினுடைய உருவச்சிலை அமைக்கும்பொருட்டு நான் ருஷ்யாவில் க்ரெம்லின் என்ற அவருடைய வாச தலத்திற்குச் சென்றேன். அவரும் காந்தியைப் போலவே, சும்மா உட்கார மறுத்து விட்டார். இஃது ஒரு விசித்திரமான ஒற்றுமை. இவ்விருவரும் பலாத்காரத்தை எவ்வளவு தூரம் பிரயோஜனப் படுத்திக் கொள்ளலா மென்ற வகையில் வேறுபட்டவர்களா யிருக்கலாம். ஆனால் இரண்டுபேரும் லட்சிய புருஷர்கள். முதன் முதலாக, மகாத்மாவிடம் போய் நான் உங்கள் உருவத்தை அமைக்க வேண்டும். கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் லெனின் சொன்னது போலவே உங்களுக் காக நான் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. நான் என் பாட்டில் வேலை செய்து கொண்டிருப்பேன். உங்கள் திறமையைக் கொண்டு நீங்கள் சித்திரம் வரைந்து கொள்ளலாம் என்று சொன்னார். காந்தியடிகள் தரையில் உட்கார்ந்துகொண்டு கைராட்டினம் சுற்ற ஆரம்பித்தார். லெனினோ தமது உத்தியோக நாற்காலியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு சமயங்களிலும் நான் மௌனமாகவே இருக்கவேண்டியதாயிற்று. ஆனால் பின்னர் இருவரும் என்னிடம் பரபர நட்புக் காட்டினர். ஒருநாள் காந்தியடிகள் லெனினைப் போலவே பரிகாசமாகச் சிரித்துக்கொண்டு ஓ! வின்டன் சர்ச்சிலுடைய சகோதரரின் பெண்ணா தாங்கள் என்றார். சர்ச்சிலின் உறவினர் ஒருவர் அவருடைய பரம சத்துருவுடன் சிநேகம் கொள்வதா! மேற்கண்ட வாக்கியத்தைச் சொல்லிவிட்டு அவர் மேலும் கூறினார்:- அவர் (சர்ச்சில்) என்னைப் பார்க்க மறுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் நான் உங்களைப் பார்த்ததில் எவ்வளவு சந்தோஷ மடைந் திருக்கிறேனென்பதை எனக்காகத் தாங்கள் அவரிடம் சொல்லுங்கள். சொல்லுகிறீர்களா? இதேமாதிரிதான் லெனினும் உங்களுடைய சிறிய தகப்பனாரி டம் சொல்லுங்கள் என்று சொன்னார். சிலை அமைப்பில், லெனினுடைய தலைப்பாகத்தையும் காந்தியினுடைய தலைப்பாகத்தையும் பூர்த்தி செய்து முடித்துவிட்டு முறையே, இந்த உருவ அமைப்பைப்பற்றி உங்களுடைய அபிப் பிராயம் என்ன? என்று இருவரையும் கேட்டேன், இரண்டு பேரும் ஒரேவிதமான பதிலைத்தான் கொடுத்தார்கள்:- எனக்குத் தெரியாது. என்னுடைய முக விஷயமாக நானே தீர்ப்புச்சொல்ல முடியாதல்லா? சித்திரக் கலையைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது. ஆனால் உங்கள் வேலைப்பாடு நன்றாக இருக்கிறது. இந்த இரண்டு மகா புருஷர்களில் யார் உலகத்தில் தங்கள் வாழ்க்கையின் முத்திரையை அதிகமாக இட்டுச் செல்வார்கள் என்பதைப்பற்றி நான் அவ்வப்பொழுது யோசித்துப் பார்ப்பதுண்டு ருஷ்யாவைப் பொறுத்தமட்டில் லெனின் எவ்விதமான முத்திரையை யும் இட்டுச் செல்லவில்லை என்றுதான் தெரிகிறது. அவருடைய தூல தேகம்மட்டும் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அடக்கம் செய்து வைத்துக் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் அவர் விஷயத்தில் இவ்வளவு சீக்கிரமாகத் தீர்ப்புக் கூறிவிடவும் முடியாது. கிறிவ தர்மம், ஜனங் களுடைய மனதில் படிய சுமார் இருநூறு வருஷங்களுக்கு மேலா யிற்றல்லவா? காந்தியடிகளோ இன்னும் சுறு சுறுப்பாக வேலைசெய் கிறார். அவருடைய உழைப்பு இப்பொழுது தான் பலனளிக்க ஆரம்பித் திருக்கிறது. இந்த இரண்டு மகா புருஷர்களும், உலகத்திற்கு, என்றும் அழியாத ஒரு செய்தியைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்களும், மனஞ் சோர்ந்து போனவர் களும் அவர்களுடைய செய்திகளைக் கேட்டு உற்சாகம் பெறுகிறார்கள்; தலை குனிந்தவர்கள் தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள்; உலகத் தில் தங்களுக்கும் ஒரு தானம் உண்டு என்ற தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள். காந்தியடிகளின் உபதேசத்தில் ஒருவித பாரமார்த்திகம் ஒளிர் கிறது. அதனால் அந்த உபதேசம் மகத்துவத்தையடைகிறது. லெனினு டைய இயக்கத்திற்காக மடிந்தவர்களை வீரர்களாகக் கொள்ளலாம்; ஆனால் காந்தியடிகளின் இயக்கத்தின் பொருட்டு உயிர் துறந்தவர்களை வீரமும், தியாகமும் உடையவர்களாகப் போற்ற வேண்டும். காந்தியடிகளின் தலைப்பாகத்தை மாத்திரம் உருவஞ் சமைத்த ஜோ. டேவிட்ஸன் என்ற அமெரிக்க சித்திரக் கலைஞரோடு நான் சம்பாஷித்திருக்கிறேன். அவர் உலகத்துப் பிரபலதர்கள் எல்லோரை யும் உருவஞ் சமைத்திருக்கிறார். இந்தப் பெரிய மனிதர்களை யெல்லாம் முதலில் சந்திக்கிற போது இவ்வளவுதானா என்ற அலட்சிய புத்தி படும். ஆனால் காந்தியடிகளோ அப்படிக்கில்லாமல் எல்லா மகா புருஷர்களைக் காட்டிலும் பெருமையுடையவராக எனக்குத் தென்படு கிறார். முழங்கால் வரையில் ஆடையுடுத்தி, மேலுக்குக் கதர் சால்வை போர்த்து, மிக எளியவராகக் காணப்படும் அவரிடத்தில் நிரம்பிய பெருமை இருக்கிறது. அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரிடத்தில் நமக்கு ஒருவித பக்தி ஏற்படுகிறது. நான் கடைசியாகப் பிரிகிறபோது அவர் கைக்கு முத்தம் கொடுத்தேன். என்னை நிரம்ப நேசிப்பதாகவும் நண்பர்களைத் தாம் ஒருபோதும் மறப்பதில்லையென்றும் அவர் கூறினார். சம்மணம் கட்டிக்கொண்டு கைராட்டையில் நூல் நூற்பது போன்ற அவருடைய உருவம் என்னுடைய மேஜையை அலங்கரிக் கிறது. உண்மையில் அவர் நூல் நூற்பதிலேயே ஆழ்ந்த கவனம் செலுத்து கிறார். ஆனால் அவர் எனக்குச் சாந்த நிலையிலுள்ள புத்தர் பெருமானைப்போல்தான் அவ்வுருவத்தின் மூலம் காட்சியளிக்கிறார். அவர் லண்டனில் தங்கியிருந்தபோது அவருடைய வாச தலம் ஒரு தனி உலகமாகவே இருந்து வந்தது. பிரதி தினமும், காலை பத்து மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை பல பேருக்குப் பேட்டி அளித்து அன்புடன் பேசிக்கொண்டிருப்பது அவர் வழக்கம். அனைவரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று கேட்ட கேள்விகளுக் கெல்லாம் இனிமையாகவும், கண்டிப்பாகவும் பதில் கூறி வந்தார். ஆனால் நூல் நூற்கும் காரியத்தைப் பங்கம் வராமல் செய்துவந்தார். ஒரே ஒரு சமயம் அவர் ஒருவரை வரவேற்பதற்கு எழுந்து நின்றார். அவர்தான் சர்ச் ஆப் இங்கிலாந்தின் பாதிரி. மேற்படி பாதிரியார் காந்தியடிகளிடம் நாங்கள் உண்மையான கிறிதவர்களாவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைச் சுருக்கமாக எழுதிக் கொடுங்கள் என்று விண்ணப்பித்துக்கொண்டு ஒரு புதகத்தை நீட்டினார். சாதாரணமாக வீணில் பேச வருபவர்களை நல்ல தனமாகவே அவர் சமாதானம் சொல்லி வெளியே அனுப்பி வந்தார். ஒரு சமயம் தென்னாப்பிரிக்காவிலிருந்தே தமக்குக் காந்தியடிகளைத் தெரியு மென்று சொல்லிக்கொண்டு ஒரு நண்பர் வந்தார். மிடர் காந்தி, தென்னாப்பிரிக்காவில் நாம் பேசிக்கொண்டி ருந்தது ஞாபகமில்லையா? ஆம்; தென்னாப்பிரிக்கா ஞாபகமிருக்கிறது - டர்பனிலுள்ள அந்த ஹோட்டலின் தோட்டம் உங்களுக்கு ஞாபகமில்லையா? தோட்டத்திற்குச் செல்லக்கூடாதென்ற நிபந்தனையின்பேரில் அந்த ஹோட்டலுக்குள் அநுமதிக்கப்பட்டேன். ஹோட்டலின் அறைக்குள்ளேயே ஒரு ஹிந்துவாகிய நான் இருக்க ஒப்புக்கொண்ட தனாலேயே என்னை அநுமதித்தார்கள். ஆனால் இவையெல்லாம் என்ன சுவாரயமான விஷயங்கள்! மிடர்..... உங்களைப் பார்த்தது நிரம்பச் சந்தோஷம். அதிக நேரம் உங்களை நான் தாமதித்து வைக்க விரும்பவில்லை. இந்தமிடர்....க்காக நான் நிரம்ப விசனப்படுகிறேன். அவர் மௌனமாகத் திரும்பிப் போய்விட்டார். இவருக்குப் பிறகு நன்றாக உடை உடுத்த ஓர் ஆங்கிலேயர் வந்தார். இங்ஙனம் வருவோர், ஊர்வலத்தைப்போல் வரிசைக்கிரமமாக வந்துகொண்டிருந்தனர். இந்த ஆங்கிலேயர் யாரென்றால், காந்தியடி கள் வயிற்றுக் கோளாறினால் (புனா) ஆபத்திரியில் படுத்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு, மெழுகுவர்த்தி தீபத்தில் சதிர சிகிச்சை செய்தவர். இவருக்குப் பிறகு, ஒரு பிரெஞ்சு திரீ வக்கீல், நீக்ரோ ஜாதியைச் சேர்ந்த பிரபல நாட்டியக்காரராகிய பால்ரோபெஸனின் மனைவி, ஒரு தீவிரவாதப் பத்திரிகையின் ஆசிரியர், ஒரு ஜெர்மானியதிரீ, கனம் ஆகாகானிடமிருந்து ஒருதூதர், இப்படி வரிசைக் கிரமமாக வந்து கொண்டிருந்தனர். எல்லோருக்கும் அவரவர் களுக்குத் தகுந்தபடி நகைச்சுவையோடுகூட பதில் சொல்லியனுப்பினார்காந்தியடிகள்.ஒரு ஹிந்து இளைஞர், தமது அமெரிக்க மனைவியுடன் வந்து காந்தியடிகளைத் தரிசித்தார். காந்தியடிகள், அந்தத் தம்பதிகளை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு, இந்தியாவுக்கு உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு போக உத்தேசமா? என்றார். அவர் கொஞ்சம் தயக்கத்துடன் ஆம் என்றார். அந்த அமெரிக்க திரீ உடனே, மகாத்மா, தாங்கள் அமெரிக்காவுக்கு எப்பொழுது வரப்போகிறீர் கள்? என்று கேட்டார். காந்தியடிகள் அதற்கு கண் சிமிட்டிக்கொண்டு புன்னகையுடன் நான் அங்கு வந்தால் என்னை மிருகக்காட்சி சாலைக்கன்றோ கொண்டு போய் விட்டுவிடுவார்கள் என்றார். அங்கிருந்தோரனைவரும் கொல்லென்று சிரித்தார்கள். இந்தச் சமயத்தில் சி. எப். ஆண்ட்ரூ அங்கு வந்து அடுத்த நாள் காந்தியடிகள் கவனிக்கவேண்டிய விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் சரி, சரி என்றார் காந்தியடிகள். இன்று மாலை நிகழ்ச்சியை மறந்துவிடப்போகிறீர்கள். பாதிரிமார்கள் உங்களைச் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார் களல்லவா? சரியாக ஏழு மணிக்கு லண்டன் பிரதம பாதிரியும் உங்களைச் சந்திக்க வருகிறார் என்றார் ஆண்ட்ரூ. அப்படியானால் மாலைப் பிரார்த்தனையை என்ன செய்வது? என்றார் காந்தி. அதற்கு ஸ்ரீ ஆண்ட்ரூ அதை முன்னேயா வது செய்து முடித்துவிட வேண்டும்; அல்லது பின்னுக்காவது தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்றார். அதெல்லாம் முடியாது. போகிற போதே மோட்டார் வண்டியில் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு விடுவோம் என்றார் மகாத்மா கண்டிப்பாக. ஒருநாள் மாலைப் பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கையில் எங்களைப் பார்த்து காந்தி சொன்னார்:- உங்களில் யாருக்காவது விடியற்காலை மூன்று மணி பிரார்த்தனைக்கு வர விருப்பமிருந்தால் தாராளமாக வரலாம். ஆனால் அவரவர்களும் தங்கள் கம்பளிப் போர்வைகளைக் கொண்டுவர வேண்டும். இங்கு நாங்கள் எல்லோரும் ஏழைகள். அப்படியே ஒரு நாள் நான் அவருடைய வாசதலத்திற்குக் காலைப் பிரார்த்தனைக் காகச் சென்றேன். மீராபாய் எனக்கு வழிகாட்டி வேண்டியன உதவிபுரிந்தார். வழக்கம் போல் பிரார்த்தனை நடந்தது. காந்தியடிகள் ஒரு சிறு விரிப்பின்மீது உட்கார்ந்துகொண்டு பிரார்த்தனையை நடத்தினார். அப்பொழுது ஏதோ ஒரு கனவு உலகத்தில் இருப்பதாக நான் எண்ணினேன். பிரார்த்தனை முடிந்ததும் நான் தூங்கப் போய் விட்டேன். சரியாக ஐந்து மணிக்கு மீராபாய் என்னை வந்து எழுப்பி னார். ஏனென்றால் அதுதான் காந்தியடிகள் உலாவப் போகும் சமயம். அவருடன் நெருங்கிப் பேசுவதற்கு நல்ல சந்தர்ப்பம். எனக்கும் அவருடன் தனியாகச் சம்பாஷணை செய்யவேண்டுமென்ற ஆசை. நல்ல மூடுபனி. வேறு யாருக்கும் இந்த இங்கிலாந்தின் சீதோஷ்ண திதி ஒத்துக் கொண்டிராது. ஆத்ம சக்தியுள்ள ஒருவரால்தான் இந்த சீதோஷ்ண திதியைத் தாங்கிக் கொண்டிருக்க முடியும். எனக்கோ முதல் நாளிரவு தூக்கமில்லை. மிகவும் சோர்ந்து கிடந்தேன். ஆயினும் காந்தியடிகளைப் பின்தொடர்ந்து நடந்தேன். ஆனால் காந்தியடி களோ மிகவும் வேகமாக நடந்தார். நானும் மற்றவர்களும் பின்னால் ஓடவேண்டியதாயிற்று. அவரைச் சதா நிழல்போல் தொடர்ந்து வந்து கொண்டிருந்த துப்பறியும் உத்தியோகதர்களோ மேல்மூச்சுக் கீழ் மூச்சு வாங்க ஓடிக் கொண்டு வந்தனர். முன்பின் அறியாத வழியில் எவ்வளவு வேகமாகச் சென்றார் காந்தியடிகள்! அவர் போகிற வழி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. மீராபாயோ என்னை முன்னுக்குத் தள்ளி அவருடன் பேசு; பேசு என்று கூறினார். அவருடன் நான் என்ன பேசுவது? அவருடன் கூட இருப்பதிலேயே நமக்கு ஒருவித சாந்தி ஏற்படுகிறது. அவர் பக்கத்தில் இருந்து தியானிப்பதில் ஒரு நிம்மதி உண்டாகிறது. அவரைச் சந்தித்து இப்பொழுது ஏறக்குறைய ஏழு வருஷங் களுக்கு மேலாகியும் அந்தச் சந்திப்பு இன்னும் ஒரு கனவுபோல் என் மனக்கண்முன் உலவிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாக்கியம் மறுபடியும் கிடைக்காதா என்ற ஆவல் ஏற்படுகிறது. அந்தச் சந்திப்பிற்குப் பிறகு நான் ஒரு புதிய சக்தி பெற்றவளாயிருக்கிறேன். * * * அரசியல் முறை மகா கனம் ஜே.சி. ஸ்மட்ஸ் எம்.ஏ., எல்.டி., டி.சி.எல். (கேப் டவுன், தென்னாப்பிரிக்கா) சுமார் ஒரு தலைமுறைக்கு முன்னர் காந்தியடிகளுக்கு எதிரியாயிருந்த நான், இப்பொழுது அவர் எழுபதாவது வயதை அடைந்திருக்கிற தருணத்தில், அவரை ஒரு வீரராக வழிபட முன் வந்திருப்பது மிகவும் பொருத்தமாயிருக்கிறது. இன்னும் அவர் பல்லாண்டுகள் உலகத்திற்குப் பயனுள்ள தொண்டைச் செய்து கொண்டு மன நிம்மதியுடன் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். இந்தப் புத்தகத்தில் கட்டுரை எழுதுகிற பல அன்பர்களுடன் நானும் சேர்ந்து கொண்டு அவருடைய பொதுநலச் சேவையையும் அவருடைய மனித குணங்களையும் பாராட்டுகிறேன். அவரைப்போன்ற மகான்கள், நம் போன்றவர்களைச் சாதாரண நிலையிலிருந்து உயர்த்துகிறார்கள்; நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருப்பதில் நாம் சிறிது கூடச் சலிப்படையக்கூடாதவாறு நமக்கு ஊக்கமளித்துக்கொண்டு வருகிறார்கள். தென்னாப்பிரிக்காவில் அவருக்கும் எனக்கும் நிகழ்ந்த போராட்டத்தைப்பற்றி அவரே விளக்கிச் சொல்லியிருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கூட அது. அந்தக்காலத்திலேயே அவரிடத்தில் எனக்கு விசேஷ மதிப்பு இருந்தது. அப்படிப்பட்டவரை நான் எதிர்த்து நிற்க வேண்டியவனாயிருந்தேன். தென்னாப்பிரிக்கப் போராட்டத்தின் போது, காந்தியடிகளிடம் சில விசேஷ குணங்கள் காணப்பட்டன. இந்தக் குணங்கள், பின்னர் அவர் இந்தியாவில் விரிவான முறையில் போராட்டத்தை நடத்துகிறபோது, இன்னும் அதிகமாகப் பிரகாசித்தன. தாம் எடுத்துக்கொண்ட காரியத்தைச் சாதிப்பதற்காக அவர் எல்லாக் கஷ்டங்களையும் அநுபவிக்கத் தயாரா யிருந்தபோதிலும், அவர் தமது மனித சுபாவத்தைமட்டும் எப்பொழுதும் துறக்கவேயில்லை; கோபமோ துவேஷமோ கொண்டதில்லை. மிகுந்த நெருக்கடியான சந்தர்ப்பங்களில்கூட, தமது நகைச்சுவையை அவர் இழந்தது கிடையாது. தற்கால உலகத்தில் முடுகி நிற்கும் பலாத்கார சக்திக்கு நேர் விரோதமான சாந்தகுணம் அந்தக் காலத்திலேயே அவரிடத்தில் காணப்பட்டது. அந்தக் காலத்தில் அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள், எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தனவென்பதை நான் ஒத்துக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. மற்றத் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு தென்னாப்பிரிக்காவிலுள்ள மாகாணங்களை ஒன்று சேர்ப்பிக்கிற வேலையிலும், தேசீய நிருவாகத்தை அமைக்கிற விஷயத்திலும், போயர் யுத்தத்தினால் ஏற்பட்டிருந்த சீரழிவிலிருந்து ஒரு புதிய ஜாதியைச் சிருஷ்டிக்கிற முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். இது பெரிய வேலை. என்னுடைய ஒவ்வொரு நிமிஷத்தையும் இதில் நான் செலவழிக்க வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் காந்தியடிகள் திடீரென்று கஷ்டமான ஒரு பிரச்னையைக் கிளப்பி விட்டார். அப்பொழுது தென்னாப்பிரிக்காவில் இந்தியர் பிரச்னை யென்ற ஒரு பிரச்னை இருந்தது. டிரான்வால் மாகாண அதிகாரிகள், இந்தியர்கள் தங்கள் மாகாண எல்லைக்குள் ஓர் அளவுக்குட் பட்டே வரலாம் என்று கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். கரும்புத் தோட்டங் களில் ஒப்பந்தக் கூலி முறையில் வேலை செய்ய வந்திருந்தவர்கள், ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டு மென்பதற்காக, நேட்டால் மாகாண அரசாங்கத்தார் இந்தியர்களுக்குத் தலைவரி விதித்திருந்தனர். இந்த மாதிரியான பிரச்னைகளைக் காந்தியடிகள், புதிய ஓர் ஆயுதங்கொண்டு எதிர்த்தார். இந்த ஆயுதத்தையே அவர் பின்னர், இந்தியாவில் பெருவாரியான முறையில் பிரயோகித்து உலகப் பிரசித்தியாக்கினார். வேண்டுமென்றே சட்டத்தை மீறுவது என்பதுதான் அவர் கையாண்ட ஆயுதம். ஆட்சே பணைக்குக் காரணமாயிருக்கிற சட்டத்தை எதிர்த்து நிற்பதற்காக, ஜனங்களை ஒன்று திரட்டி ஒரு பொதுஜன இயக்கமாக அவர் ஆரம்பித்தார். மேற்கண்ட இரண்டு மாகாணங்களிலும் பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு விட்டது சட்டத்தை மீறி நடந்ததற்காக இந்தியர் களிற் பலரைச் சிறைக்கனுப்ப வேண்டிய தாயிற்று. காந்தியடிகள்கூட, சிறையில் சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டியிருந்தது. அவரைப் பொறுத்தமட்டில், அவர் போட் டிருந்த திட்டப்படியே எல்லாக் காரியங்களும் நடைபெற்றன. என்னைப் பொறுத்தமட்டில் நான், சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்ற வேண்டியவனாயிருந் தேன். இதனால் சட்டத்தை - பொதுஜன ஆதரவை அதிகமாகப் பெறாத ஒரு சட்டத்தை - அமுலுக்குக் கொண்டு வர வேண்டியவனா யிருந்தேன். அவருடைய ஏற்பாடுகளெல்லாம் வெற்றிகரமாக நடைபெற்றன. ஆனால், அவருடைய எந்தக் காரியத்திலும் ஒருவித மனிதத் தன்மை குடிகொண்டிருந்ததையே இங்கு வற்புறுத்திக்கூற விரும்புகிறேன். அவர் சிறையிலிருந்தபோழ்து என்னுடைய உபயோகத் திற்கென்று ஒரு ஜதை மிதியடிகளைத் தயாரித்து, விடுதலையானவுடன் எனக்குச் சன்மான மாக அளித்தார்! அதனை அநேக காலம்வரை நான் உபயோகித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த மகானால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின் மீது நான் நிற்கத் தகுதியுடைய வனல்லன் என்ற உணர்ச்சி மட்டும் எனக்கு இருந்து கொண்டிருந்தது. இந்த மாதிரியான மனப்பான்மையுடன்தான் நாங்கள் போராடி னோம். எங்களிருவருடையிலும் துவேஷமோ, மனக் கசப்போ ஏற்பட்டது கிடையாது. இருவரும் மனிதத் தன்மையோடுதான் நடந்து கொண்டோம். இதனால், போராட்டம் முடிந்தவுடனே, இருவரும் சமாதானம் செய்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டது. நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பார்லிமெண்ட் அங்கீ கரித்தது. இதனால் இரண்டு ஜாதியினருக்குமிடையில் நீண்ட கால சமாதானம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கப் போராட்டம் முடிந்த பிறகு காந்தியடிகள், இந்திய சரித்திரத்திலேயே இது காறும் இல்லாத ஓர் அளவுக்கு, பெரியதொரு போராட்டத்தை நடத்த இந்தியாவுக்குச் சென்றார். அங்கு அவர் அநுஷ்டித்த முறைகள் யாவும், தென் னாப்பிரிக்கப் போராட்டத்தில் அநுஷ்டித்த முறைகளைப் போன்றே இருந்தன. தென்னாப்பிரிக்கப் போராட்டம் அவருக்கு ஒரு பயிற்சி யாகவே இருந்தது. இந்தியாவில் அவர், ஒத்துழையாமை என்ற புதுப்பெயரிட்டு அழைக்கப்பட்ட பழைய சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாண்ட தோடு கூட, பயனளிக்கக்கூடிய விதமாக மற்றொரு முறையையும் கையாண்டார். அதுதான் உபவாசமிருந்து, எதிர்க் கட்சியின் மனதை மாற்றுவது. எங்களுடைய அதிர்ஷ்டவசமாகத் தென்னாப்பிரிக்காவில் இந்தமுறை கையாளப்படவில்லை. தென்னாப்பிரிக்காவில் அநாவசிய மாக உயிர்கள் மடிவதை யாரும் விரும்புவதில்லை. இந்தியாவில் இந்த உபவாசமுறை வெற்றிபெற்றது. இதன் மூலமாகக் காந்தியடிகள் அமோகமான சித்திகளை யடைந்தார். இந்தப் புதியமுறை - உபவாசமுறை - இதுவரையில் அரசியல் உலகத்தில் அநுஷ்டிக்கப்பட வில்லை. ஆதலின் இதைப் பற்றிச் சிறிது சிந்திப்பது அவசியமாகும். இங்கிலாந்தில், அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத் தாரை நம் வழிப்படுத்தும் பொருட்டு, பட்டினி கிடப்பார் என்பதை நான் நினைக்கக்கூட முடியவில்லை. இந்தியாவுக்கு இந்த உபவாசமுறை புதிதல்ல. கடன் கொடுத்தவன், தனது கடனை வசூலிக்க, கடன் வாங்கினவன் பட்டினி போடாமல் தானே பட்டினி கிடப்பது வழக்கம். கடன்காரனை சிவில் ஜெயிலில் வைத்துப் பணத்தை வசூலிப்பது மேனாட்டு வழக்கம். இந்தியாவிலோ, கடன் வாங்கினவன் வீட்டிலேயே கடன் கொடுத்தவன், தன் கடன் வசூலாகும் வரையில் பட்டினி கிடப்பான். காந்தியடிகள், இந்த முறையைத்தான் விசாலமான ஓர் அளவில் பிரயோகம் செய்து பார்க்கிறார். அரசாங்கத்தையோ அல்லது ஜன சமுதாயத்தில் ஒரு பிரிவினரையோ நல் வழிப்படுத்த வேண்டுமானால், காந்தியடிகள் பட்டினி கிடக்கிறார். இதன் மூலமாக, எதிரியின் பய உணர்ச்சிகளை, அவமான உணர்ச்சி களை, செய்வினைக்கு இரங்குகிற உணர்ச்சிகளை, அநுதாப உணர்ச்சி களை, மனித உணர்ச்சிகளை, இப்படிப் பலவகை உணர்ச்சிகளையும் கிளப்பி, அவர்களைத் தம் வழிக்கு இணங்கும் படிச் செய்கிறார். மேனாட்டில், ஜனங்களுடைய அறிவைத் தூண்டி விடாமல், அவர் களுடைய உணர்ச்சிகளைக் கிளப்பிவிடக்கூடிய மாதிரியாகச் செய்யப்படுகிற பிரசார முறைக்கும், மேற்கண்ட முறைக்கும் அதிகமான வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் எப்படி மேனாட்டில், இந்தப் பிரசார முறை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதோ அதைப் போல் இந்தப் பட்டினி கிடக்கும் முறையும் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். ஒரு லட்சியம் உயர்ந்ததாகவும் இருக்கலாம்; அல்லது கீழானதாகவும் இருக்கலாம். ஆனால் அவர் லட்சியத்தை யடைவதற்காக அநுஷ்டிக்கப் படுகிற இந்த உபவாச முறை மிகவும் ஆபத்தானது; மனிதனிடத்திலே யுள்ள புருஷ சக்திக்குப் பங்கம் விளைவிப்பது. காந்தியடிகளின் உபவாச முறைக்கும், மேனாட்டுப் பிரசார முறைக்கும் முக்கியமானதொரு வித்தியாச மிருக்கிறது. காந்தியடிகளின் முறையானது, தான் துன்ப மநுபவிப்பதன் மூலம், எதிரிகளின் அநுதாப உணர்ச்சிகளைக் கிளப்பிவிடுந் தன்மையதோடு கூட, அவர்களுடைய கவனத்தையும் தன் பக்கம் இழுக்க வல்லது. அதாவது, தான் துன்ப மநுபவிப்பதன் மூலம் மற்றவர்களைத் தூய்மைப் படுத்துவதென்கிற உயர்ந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. கிறிதவ தர்மத்தின் முக்கிய அமிசமும் இதுதான். யேசுநாதர், சிலுவையில் அறையப்பட்டுத் துன்பமநுபவித்ததன் மூலம், எண்ணிறந்த பேரின் இதயத்தை மாற்றியும் சுத்தப் படுத்தியும் விட்டாரல்லவா? இந்த மாதிரியான துன்பம நுபவிக்கிற தத்துவத்தைக் கொண்டுதான் காந்தியடிகள், தமது சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்குகிறார். தமது லட்சியங்களுக்காக மற்றவர் களை இணங்கும்படிச் செய்ய, தாம் துன்பமநுபவிக்க அவர் சித்தமாயிருக் கிறார். சாதாரண அரசியல் முறைகளை அநுஷ்டிப்பதனால் பயனுன்டாகா தென்று தெரிந்ததால் அவர், இந்தியாவிலும் கீழ்நாட்டிலும் பரம்பரையாக அநுஷ்டிக்கப் படுகிற இந்த உபவாச முறையைக் கையாள்கிறார். இதனைப் பற்றி அரசியல் அறிஞர்கள் சிந்தித்தல் நலம், அரசியல் கிளர்ச்சியில், இந்த உபவாச முறை, காந்தியடிகளின் தனிப்பட்ட தொரு கொடையாகும். அவரை உண்மையாகப் பாராட்டுகிற பலர் கூட, அவருடைய எண்ணப் போக்கிலும், செயல் போக்கிலும் வேறு விதமான அபிப்பிராயங் கொள்ளுதல் கூடும். அவர் எந்தக் காரியத்தைச் செய்த போதிலும் அது தனிப் போக்காவே இருக்கிறது. எல்லா மகான்களின் விஷயத்திலும் இப்படித்தான் நாம் காண்கிறோம். காந்தியடிகளின் விஷயத்தில் நாம் எந்த விதமான அபிப்பிராய வேற்றுமையுடையவர் களாயிருந்த போதிலும், அவருடைய பரிசுத்த உள்ளம், சுயநலமற்ற தன்மை, சர்வ ஜீவராசிகளிடத்திலும் காட்டுகிற கருணை ஆகிய இவற்றை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். அவர் எல்லா மக்களிடத்திலும் சிறப்பாக ஏழை மக்களிடத்தில் பரம கருணை யுடையவராயிருக்கிறார். ஜாதி, சமூகம், மதம் முதலிய வேற்றுமை களொன்றுமின்றி அவர் யாரையும் சம திருஷ்டியுடன் பார்க்கிறார். ஐரோப்பா மிகவும் குழப்பமடைந்துள்ள இந்தக் காலத்தில், ஆசியா, முன்னேறிக் கொண்டு வருவது ஆச்சரியமாகவே இருக் கிறது. இன்றைய உலக மேடையில் மிகப் பெரிய மனிதர்களாக விளங்குகிற இரண்டு பேரும் ஆசியா வாசிகளே. அவர்களே காந்தி யடிகளும், சியாங் - கை - ஷேக்கும். எந்தக் கிறிதவ தர்மத்தை மேனாடு, வாயால் மட்டும் சொல்லிக் கொண்டு அநுஷ்டானத் திற்குக் கொண்டு வராமல் இருக்கிறதோ அந்தக் கிறிதவ தர்மத்தின் வழிப்படி, திரளான ஜனக் கூட்டத்தை மேற்சொன்ன இரண்டு மகா புருஷர்களும் அழைத்துச் செல்கிறார்கள். * * * கவிஞரின் கருத்து ரவீந்திரநாத் தாகூர் (சாந்திநிகேதன், போல்பூர், வங்காளம்) அரசியல் மேடையில் ஏகதேசமாகச் சரித்திர புருஷர்கள் தோன்று கிறார்கள். இவர்களடைந்திருக்கிற மனோ பரிபக்குவம், சாதாரண ஜனங்களடைந்திருக்கிற மனோபரிபக்குவத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாயிருக்கிறது. இவர்களிடத்தில் பிரகாசிக்கும் அதிகார சக்தியானது, பலாத்காரத்தை விட அதிகமான சக்தியுடையதாய், மற்றவர்களை எளிதில் இணங்கும்படிச் செய்கிறது; மனிதனிடத்திலுள்ள குறைபாடுகளாகிய பேராசை, அச்சம், கர்வம் முதலியவற்றைத் தோண்டியெடுக்கிறது. மகாத்மா காந்தி தோன்றி, இந்தியாவின் சுதந்திர பாதையைத் திறந்துவிட்டபோது, அவர் கையில் எந்தவிதமான அதிகாரக் கருவியும் இல்லை; எந்தவிதமான அடக்கு முறைச் சக்தியும் கிடையாது. ஆனால் அவருடைய புருஷத்துவத்தி லிருந்து உதயமான சக்தியோ, சங்கீதத்தைப் போல், அழகைப்போல் வருணிக்கமுடியாதது. அஃது-அந்தச் சக்தி-மற்றவர்களைத் தன்வசம் எளிதில் ஆட்படுத்திக் கொண்டுவிட்டது. ஏனென்றால் அது, தன்னையே பிறருக்கு அளிக்குந் தன்மையது; அப்படி அளிப்பதிலே ஒரு சந்தோஷத்தையும் அடைகிறது. இதனால்தான், காந்தியடிகளின் அறிவு விசேஷத்தைப்பற்றி இந்தியர்கள் அதிகமாக வற்புறுத்திப் பேசவில்லை. அவருடைய குணவிசேஷத்தில் சத்தியமானது, மிக எளிய தன்மையில் பிரகாசிப்பதையே பெரிதும் பாராட்டுகிறார்கள். இதனாலேயே அவர் அரசியல் துறையிலேயே அதிகமாக ஈடுபட்டி ருந்தபோதிலும் அவரை, எந்த மகான்கள் அகில உலகத்திடமும் அன்பு பூண்டொழுகுகிறார்களோ, எவர்கள் ஜனங்களின் மனதை உலகாயத எண்ணத்தினின்று திருப்பி ஞான மார்க்கத்தில் கொண்டு விடுகிறார்களோ அப்படிப்பட்ட மகான்களில் ஒருவராக ஜனங்கள் கொண்டாடுகிறார்கள். * * * காந்தியடிகளின் குண மேம்பாடு எட்வர்ட் தாம்ப்ஸன் (ஆக்போர்ட், இங்கிலாந்து) ஆரம்பத்திலேயே என்னுடைய குறைபாட்டைத் தெரிவித்துக் கொண்டுவிடுகிறேன். எனக்குக் காந்தியடிகளை நன்றாகத் தெரியாது. தவிர, அவருடைய சமீப கால நடவடிக்கைகள், அவரைப்பற்றி இந்தியாவிலிருந்து வரும் செய்திகள் முதலியன வெல்லாம் சேர்ந்து என் மனத்தில் ஒருவித சஞ்சலத்தை உண்டாக்கி யிருக்கின்றன. ஆனால் அதிருஷ்ட வசமாக, அவர், தாம் ஒரு சரித்திர புருஷராகப் பிற்காலத்தில் பிரகாசிப்பதற்கான பல காரியங்களை ஏற்கனவே செய்து விட்டிருக்கிறார். மற்றும், அவர் எழுதியுள்ள சுய சரித்திரத்திலிருந்து அவருடைய குண விசேஷங்களை நாம் ஒருவாறு மதிப்பிட முடிகிறது. அவர் ஒரு குஜராத்தி. பொதுவாக குஜராத்தியர்கள் யுத்த மனப்போக்கு இல்லாதவர்கள். அவர்கள் பலரால்-சிறப்பாக மஹாராஷ்டிரர்களால்-அடிக்கடி தாக்கப்பட்டும் கொள்ளையடிக்கப் பட்டும் வந்திருக்கிறார்கள். காந்தியடிகளின் பூர்விக குடும்ப வரலாறு களைப் பற்றி மேனாட்டில் அதிகமாகச் சொல்லப்படு வதில்லை. அப்படிச் சொன்னாலும் மேனாட்டினருக்கு அவற்றைப் பற்றித் தெரியாது. ஆனால் இந்தியாவில் இந்தக் குடும்ப வரலாறுகள் மறக்கப்படுவதே யில்லை. காந்தியடிகள் அஹிம்ஸையைப்பற்றி அதிகமாக வற்புறுத்து வதன் காரணம், அவர், யுத்த மனப் போக்கில்லாத ஒரு ஜாதியில் பிறந்ததுதானென்று சிலர் கூறுகின்றனர். மஹாராஷ்டிரர் கள், தாங்கள் மஹாராஷ்டிரர்களென்பதை மறப்பதேயில்லை; அதே மாதிரி, காந்தியடிகள் ஒரு குஜராத்தியென்பதையும் அவர்கள் மறப்பதில்லை. அவருடைய சித்தாந்தங்கள், மஹாராஷ்டிரர்களிடத் தில் எடுபட வில்லை. ராஜபுத்திரர்களும் இப்படித் தான் நினைக்கிறார் கள். மத்திய இந்தியாவிலுள்ள ஒரு சுதேச மன்னர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது, ராஜ புத்திர ஜாதியைச் சேர்ந்த எனக்கு, அஹிம்ஸையென்பது நினைக்கக்கூட முடியாததாயிருக்கிறது. பிறரைக் கொல்வதும், யுத்த கோலத்துடன் இருப்பதும் ஒரு ராஜ புத்திரனுடைய கடமையல்லவா? என்று கூறினார். இவ்வளவெல்லா மிருந்தாலும், காந்தியடிகளுடைய உபதேசங்களின் ஜீவநாடியாயி ருப்பது அஹிம்ஸை. இந்தத் தத்துவத்தை அவர், பிறர் மீது பலவந்தமாகத் திணித்துத் தம் கட்சிக்கு பலம் தேடிக் கொண்டார். அவருடைய மகத்தான வெற்றிகள் பலவற்றிற்கு இதுவே காரணமாயிருந்திருக்கிறது. இதைப் பின்னரும் விரித்துக் கூறுவேன். யாருமே, தன்னுடைய வமிச பரம்பரை, தொட்டில் பழக்கம் முதலியவைகளினின்று விடுபடுவதில்லை. காந்தியடிகள் பிறந்தது அரசியல் போக்கும் யுத்த மனப்போக்குமில்லாத ஒரு ஜாதியில்; வளர்ந்தது, அப்படிப்பட்ட ஜாதியாரையே பெரும்பான்மை யோராகக் கொண்ட ஒரு சிறிய, முக்கிய மற்ற சுதேச சமதானத்தில். இவை காரணமாக அவரிடத்தில் சில குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. ஒவ்வோர் அரசனும் தன் பிரஜைகளில் யாருக்கேனும் தீங்கு நேரிட்டால் அதனை நேரில் கவனிக்க வேண்டுமென்ற கோட்பாடு இந்தியாவில் நீண்டகாலமாக இருந்துவந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது உலகத்திலேயுள்ள எல்லா அரசாங்கங்களும், அவற்றின் அரசியல் பொருளாதார முறைகளும் அடியோடு மாறிப்போனாலன்றி, மேற்கண்ட கோட்பாடு, பழைய கோட்பாடு என்றுதான் ஒதுக்கித் தள்ளப்படும். பெரிகிளி1 ஆண்ட ஏதென் ராஜ்யத்திலும், காந்தியடிகள் வளர்ந்த போர்பந்தர் சமதானத்தி லும், அரசன் எல்லாப் பிரஜைகளையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டுமென்பது சாத்தியமாயிருந்திருக்கலாம். இதனால் காந்தியடிகளின் அரசியல் திருஷ்டியானது, ஒரு கிராம நிருவாகத் திற்குப் புறம்பாகச் செல்ல முடிவதில்லை. உதாரணமாக, சர்வாதிகாரிகள் மலிந்துபோய்விட்ட இந்த உலகத்தில், இந்தியாவின் பாதுகாப்பு விஷயம் முக்கியமான பிரச்னையல்லவா? சிறு சிறு தொகுதியினராகவுள்ள ஜன சமூகத்தினரின் குறை நிறைகளைப் பற்றிய அளவோடுதான் காந்தியடிகளின் அரசியல் திருஷ்டி செல்லுகிறதே தவிர சிக்கல்கள் நிறைந்த தற்கால உலகின் அளவுக்கு அவருடைய அரசியல் திருஷ்டி செல்லக் காணோம். தனிப்பட்ட மனிதருடைய விஷயந்தான் அவருக்கு முக்கியமாகப்படுகிறது. ஆனால், ஜனங்களை ஒரு பிண்டமென்றும், இந்தப் பிண்டமானது, உலுக்கியவுடன் வரியாக உதிர்க்கும் ஒரு மரமென்றும், அல்லது பீரங்கிகளின் இரையென்றும் கருதுவதைவிட, மனிதர்கள் தனித் தனி வியக்திகள் என்று கருதுவது விசேஷமல்லவா? ஆனால், இந்தியா காப்பாற்றப்பட வேண்டுமானால், தனித்தனி மனிதர் களைச்சீர்திருத்துகிற முறைகளைக் கைவிட்டு விட்டு, பெருவாரி யான முறையில் திட்டங்களை வகுத்துச் செயலில் கொணர வேண்டும். கடவுள் இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகவும் நல்ல வராயிருக்கிறார். காந்தியடிகளுக்குப்பின் ஒரு நேரு - ஜவஹர்லால் நேரு, தமது தலைவரான காந்தியடிகளிடம் என்னென்ன நல்ல அமிசங்களுண்டோ அவற்றை யெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளும் ஆற்றலுடையவர்; அதே சமயத்தில் அந்தக் காந்தியடி கள் எந்த உலகத்திடம் அவநம்பிக்கை கொள்கிறாரோ அந்த உலகத்திலேயே, தாம் திரட்டி வைத்திருக்கும் நல்ல அமிசங்களை யெல்லாம் அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரும் ஆற்றலுமுடையவர். வரம்பிட்ட ஒரு திருஷ்டியில் விஷயங்களைப் பரிசீலனை செய்து பார்க்கிற சுபாவம் காந்தியடிகளிடம் இருந்ததால்தான் அவர், வட்டமேஜை மகாநாட்டில் ஒரு பாதகமான நிலைமையிலிருந்தார். தமது எதிர்க்கட்சியினர் எந்த நிலையிலிருந்து பேசினார்களோ அந்த நிலைக்கு அவர் போகமுடியவில்லை. அந்த எதிர்க்கட்சியினரோ, மனிதர் களைத் தொகுதியாகவும், பிண்டமாகவுமே கருதிப் பேசி வந்தனர். இன்றைய உலகில் ஒவ்வொரு வல்லரசும், மற்றொரு வல்லரசை அழிப்பதற்காக, சிறிய ராஜ்யங்களை ஒன்று கூட்டுவித்து அவற்றைக் கொலைக் கருவிகளாக உபயோகப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட உலகத்தில் காந்தியடிகள் ஒரு பாதகமான நிலைமை யிலேயே இருக்கிறார். அவருடைய அஹிம்ஸை ஆயுதம், அவருடைய கையில் இருந்தபோது, கூர்மையாகவும் வலுவாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அது முனை மழுங்கிப் போயிருக்கிறது. மகாத்மா காந்தி, வட்டமேஜை மகாநாட்டை முன்னிட்டு லண்டனுக்கு வந்திருந்த காலத்தில் என் வீட்டில் ஒரு தர்க்கவாதம் நடைபெற்றது. அப்பொழுது இந்தப் பேச்சு வந்தது. அஹிம்ஸையானது ஒரு கத்தரிக்கோல் போன்ற தென்றும், எப்படி கத்தரிக்கோலுக்கு இரண்டு இறக்கைகள் தேவையா யிருக்கிறதோ அதைப்போல் அஹிம்ஸைக்கும், தன் கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டு இறக்கை கள் தேவையாயிருக்கின்றனவென்றும் அப்பொழுது சொல்லப் பட்டன. இந்தியாவில் இந்த அஹிம்ஸை வெற்றிபெற்ற தென்று சொன்னால் அதற்குக் காரணம், அங்கே, அரசாங்கமானது-அஃது எவ்வளவு குறைபாடுடையதாக இருந்த போதிலும்-அடக்கு முறைக்கு ஒரு வரம்பு உண்டென்பதையும், தன் சத்துருவினிடத்தில் மனிதத் தன்மையும் விட்டுக்கொடுக்கிற மனப்பான்மையும் இருக்கிற தென்பதையும் அங்கீகரித்துக் கொண்டது தான். இந்திய தேசீய வீரர்கள், போலீஸாருடைய தடியடிகளை ஏற்றுக்கொள்ள வரிசை வரிசையாக வந்து நிற்பதையும், இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டிஷார் வெட்கிப் போனதையும், அமெரிக்கப் பத்திரிகை களின் நிருபர்கள், இவைகளைக் கண்டு சகிக்கமாட்டாதவர் களாய்த் தங்கள் கோபத்தைத் தெரிவித்துத் தங்கள் பத்திரிகைகளுக்குச் செய்திகள் அனுப்பியதையும் பார்த்த இந்தியா அரசாங்கத்தார் வேறு வழியின்றி இணங்கிப் போயினர். ஆனால் அஃது அந்தக் காலம். உங்களுக்குக் கடைசி வரையில் பொறுமையாக இருக்கக் கூடிய சக்தி இருக்குமானால், நீங்களும் காப்பாற்றப்படலாம்; உங்களுடைய லட்சியமும் காப்பாற்றப்படலாம். ஆனால் அந்தக் காலம் இப்பொழுது இல்லை. அப்படிப் பட்டதொரு காலம் நடை பெற்றதா வென்று கூட நம்மால் இப்பொழுது நினைக்க முடியாது. அபிசீனியர்கள், அஹிம்ஸையை அநுஷ்டித்திருப்பார்களானால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்களென்று காந்தியடிகள் கூறினார். இதற்கு விடையாக, மேற்படி கத்திரிக்கோல் உதாரணம் எடுத்துக் காட்டப்பட்டபோது, அது பொருத்தமில்லை யென்று அவர் தள்ளிவிட்டார். ஆனால் எப்படியும் அவருடைய அஹிம்ஸைத் தத்துவமானது, சரித்திரத்தில் குறிப்பிட்டு வைக்க வேண்டிய விஷயமாகப் போய்விட்டது. அவர், ஒரு பாசிட் ஆட்சி முறையையோ அல்லது நாஜி ஆட்சி முறையையோ எதிர்த்து நிற்பாரானால், அல்லது இந்தியாவை, மேற்படி பாசிட் படைகளோ நாஜி படைகளோ தாக்கி, ஆகாய விமானங்களி லிருந்து குண்டுகளைப் போட்டோ அல்லது, யுத்தக் கைதிகளை பீரங்கி வாயில் வைத்துச் சுட்டோ நகரம் நகரமாக அழித்து விட்டிருக்குமானால், அப்பொழுதேனும் அவருடைய அஹிம்ஸைக்கு ஒரு வரம்பு இருக்கிற தென்பதை நாம் உணர்ந்து கொண்டிருக்க மாட்டோமா? இப்பொழுது இந்திய தேசீய காங்கிரசில், இந்த அஹிம்ஸையைப் பற்றி இரண்டுபட்ட அபிப்பிராயங்கள் இருக் கின்றனவென்பதில் ஆச்சரியமில்லை. அதேபோல், இந்த அஹிம்ஸை ஆயுதம், பழைய காலத்து ஆயுதங்களைப் போல் பொருட்காட்சியில் வைக்கப்பட வேண்டிய ஆயுதமென்று இளைஞர்கள் நினைப்பதிலும் ஆச்சரியமில்லை. இவையெல்லாம் எதைக் காட்டுகிறதென்றால், காந்தியடிகள் எப்பொழுதும் மாறுபடாத ஒரு சமாதான வாதியாக இருக்கிறார். நான் அப்படியில்லை. இன்னும் நூறு வருஷங் கழித்துக்கூட அவரைப் பற்றியும் அவருடைய தத்துவத்தைப் பற்றியும் ஜனங்கள் திகைத்த நிலையில் தானிருப்பார்கள். பத்து வருஷங்களுக்கு முன்னர், காந்தியடிகள், புகழின் உச்சதானத்தை யடைந்திருந்தார். அவர் மீது உலகத்தின் கவனம் அதிகமாகச் சென்றது. ஆனால் அவர் செய்து கொண்டு வந்த காரியங்களைப் பற்றி யாரும் அதிகமான கவனஞ் செலுத்தவில்லை. அவருடைய அன்புக்குணம், எல்லாரிடத்திலும் ஒன்றிப் பழகு கிற சுபாவம் முதலியவைகளைப் பற்றியே ஜனங்கள் அதிக கவனஞ் செலுத்தினார்கள். அவர், தம்மைப்பற்றிப் புகழப்படுகின்ற யாவற்றையும் தமாஷாகவே எடுத்துக் கொண்டார். அவருடைய வரலாற்றைக் கொண்டு அவர் கணிக்கப்படவில்லை. இங்கிலாந்து மன்னனாகிய மூன்றாவது ஜார்ஜிடம் ஒரு சமயம் ஜார்ஜ் வில்க்1 என்ற அரசியல் அறிஞன் பேசிக் கொண்டிருந்தபோது, சக்ரவர்த்திப் பெருமானே! நானே எப்பொழுதும் வில்க் வாதியாக இருந்ததில்லை யென்று கூறினான். அதைப் போல், காந்தியடிகள், எப்பொழுதுமே காந்தியவாதியாக இல்லை. அவர், தம்முடன் கூடவே இருந்து கொண்டி ருக்கும் சகாக் களைப் பற்றி அசட்டையாகவே கருதி வந்தார். தம்முடைய சிஷ்யர்கள், தமது லட்சியத்திற்காக வேலை செய்யவில்லை யென்பது அவருக்குத் தெரியும். அவர் எப்பொழுதும் நகைச்சுவையு டையவர். இதனால்தான் அவர் எப்பொழுதும் சந்தோஷ முடையவரா யிருக்கிறார். உங்களுடைய சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்கிற முறையில் நீங்கள் அவரோடு தாராளமாகச் சம்பாஷணை செய்ய முடியும். அந்தச் சம்பாஷணையையும் நீங்கள் லேசாகச் செய்து கொண்டு போவீர்களாயின் உங்களுடைய சுய மரியாதைக்குப் பங்கமே ஏற்படாது. அவர் தற்பெருமையுடையவரல்லர். உங்களை அவர் பரிகாசம் செய்வார்; அதே மாதிரி அவரையும் நீங்கள் பரிகாசம் செய்யலாம். கற்பனை சக்தியுடையவர்கள், படிப்பாளிகள் முதலியவர்கள் விஷயத்தில் அவருக்கு எப்பொழுதுமே சந்தேகம் உண்டு. தமக்குப் பிடிக்காத ஓர் அபிப்பிராயத்தை யாராவது சொன்னால், அதைப் புன்சிரிப்போடு ஹா! நீங்கள் ஒரு கவியல்லவா என்பதுபோல் ஏதாவது சொல்லி ஒதுக்கித் தள்ளிவிடுவார். அவருக்கும் ரவீந்திர நாத் தாகூருக்கும் ஏற்பட்டுள்ள தொடர்பு மிகவும் ஆழமானது; அசைக்க முடியாதது. ஆனால் இருவரும் வேறு வேறு மாதிரியானவர்கள். இந்த இருவருடைய போக்கையும் இந்தியா, பல வருஷ காலமாகக் கவனித்துக் கொண்டு வந்திருக்கிறது. இங்ஙனம் கவனித்துக் கொண்டு வருவதனால், பொது ஜனங்கள் ஒரு படிப்பினையையும் பெற்று வருகிறார்கள். இந்த இரண்டு மகான்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவசியமானவர்கள். மற்றவர்களுக்குக் கோபமூட்டும்படியாகவும் சில சமயங்களில் காந்தியடிகள் நடந்துகொள்கிறார். அவரைச் சந்தித்தவர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையில் இந்தக் குறையைச் சொல்லியிருக் கின்றனர். ஆனால் அந்தக் குறையை அன்போடு சொல்கின்றனர். அவர் ஆயிரம் மைல்களுக்கப்பாலுள்ள ஒரு நண்பரைத் தந்திகொடுத்து வரவழைப்பார். முக்கியமான விஷயங்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறபோது, திடீரென்று சம்பாஷணையை நிறுத்தி விட்டு, தம்முடைய ஆசிரமத்திற்கு வந்திருக்கும் நோயாளிகளைக் கவனிக்கச் சென்றுவிடுவார். இதனை ஒரு சிறிய உதாரணமாகவே இங்கு எடுத்துக் காட்டுகிறேன். என் வீட்டில் தர்க்கம் நடைபெற்றதென்று மேலே நான் சொன்னேனல்லவா? அப்பொழுது மாடர் ஆப் பால்லியல், கில்பர்ட் முர்ரே, ஸர் மைக்கேல் ஸாட்லர், பி. சி. லையன் ஆகிய அறிஞர்கள், சுமார் மூன்று மணி நேரத்திற்கதிகமாகக் காந்தியடிகளை, பல விஷயங் களைப்பற்றிக் கேள்விகள் கேட்டார்கள். இவையனைத்திற்கும் காந்தியடிகள் கொஞ்சங்கூட மனக்கலக்கம் கொள்ளாமல் பதில் சொல்லிக் கொண்டுவந்தார். இதைப் பார்த்ததும், ஸாக்ரடீஸுக்குப் பிறகு, தன்னடக்கமும் நிதான புத்தியுமுடையவர் காந்தியடிகளைத் தவிர வேறு யாருமில்லையென்ற உறுதி எனக்கேற்பட்டது. தவிர ஸாக்ரடீஸுக்கு ஏன் ஏதென் வாசிகள் விஷத்தைக் கொடுத்துக் குடிக்கச் செய்தார்களென்ற காரணமும் புலப்பட்டது. ஸாக்ரடீஸைப் போலவே காந்தியடிகளிடத்தில் ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தி பேசத் தொடங்கிவிடுமேயானால், அவர் எந்தவிதமான ஆபத்துக்கும் அல்லது வாதத்திற்கும் அசைத்துக் கொடுப்பதேயில்லை. இந்த மாதிரியான மன அடக்கம் அவரிடத்திலிருப்பதினால்தான், ஆங்கில பாஷையின் சொற்றொடர் களை அவர் மிகவும் லாவகமாக உபயோகிக்கிறார். வட்டமேஜை மகாநாட்டின்போது இதனை நான் கண்டுகொண்டேன். அப்பொழுது அவர் தமக்காக இரண்டு மூன்று அறிக்கைகள் தயாரித்துத் தரும்படி என்னைக் கேட்டார். நான் மிகவும் ஜாக்கிரதையாகவே தயாரித்துக் கொடுத்தேன். அவற்றை அவர் மேற்போக்காகப் பார்த்துவிட்டு ஓரிரண்டு இடங்களில் சிறிய வார்த்தைகளை மாற்றிவிட்டார். இதனால் அர்த்தமே மாறிவிட்டது. காந்தியடிகள் ஒரு வக்கீல். வக்கீல்கள் சாதாரணமாகப் பிறரைப் கோபமூட்டுந் தன்மையர்கள். சர்வதேச சங்கத்தில் பிரிட்டனுடைய பிரதிநிதிகளாகச் சென்றவர்கள் அத்தனை பேரும் வக்கீல்களாயிருந்த போழ்து, அவர்களுடைய இந்தத் தன்மை வெளிப்பட்டதல்லவா? எந்த நாட்டிலேனும் புரட்சி ஏற்பட்டு, பின்னர், பொதுமக்கள் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொள்வார்களானால், அவர்கள் முதலில் செய்கிற சீர்திருத்தம், எல்லா வக்கீல்களுக்கும் மரண தண்டனை விதித்து விடுகிறார்கள். இந்த ஒரு சீர்திருத்தந்தான், ஜனங்களால் பிற்காலத்தில் விசனிக்கப்படாத சீர்திருத்தம். ஒரு வக்கீலை, அதிலும் இங்கிலீஷ் பாஷையின் சூட்சுமங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டுள்ள வரும், தம்மைப்பற்றிக் கொஞ்சங்கூட பயமும் கவலையும் அடையாத வரும், வாதத்தின்போது சிறிதும் கோபங் கொள்ளாதவருமான ஒருவரை எதிர்த்து நிற்கிறபோது, இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் என்னதான் செய்ய முடியும்? தவிர, அப்படி எதிர்த்து நிற்கிற மனிதரும், தம்முடைய நகைச்சுவையின் மூலமாகத் தமது முக்கியமற்ற தன்மையை நாம் அங்கீகரிக்குமாறு நம்மைச் செய்துவிடு கிறார். இதனால் அவரைக் கொண்டே அவரைத் தாக்க முடியாமல் போய்விடுகிறது. தவிர, அவர், கீழ்நாட்டின் சுபாவ குணங்களாகிய பொறுமை, தன்னைப்பற்றிய அலட்சிய புத்தி, எதனையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் முதலிய வற்றோடு கூடியவரா யிருந்தால் அவரோடு போராடுவது இன்னுங் கடினந்தானே. உண்மையில், அந்தக் காலத்தில் இந்தியாவின் கதி மோட்சம், அஹிம்ஸையை அநுஷ்டிப்பதிலேயே இருந்தது. ஏதோ ஒருவித சக்தி யினால் தூண்டப்பட்டுத்தான் காந்தியடிகள், இந்த உண்மையை, மற்றவர்களுக்கு முன்னரேயே உணர்ந்து கொண்டார். எந்த எதிரி யினாலும் எதிர் பார்க்கப்படாத இந்த ஆயுதமானது, பிறரால் தாக்கப் படுமே தவிர, பிறரைத் தாக்காது. இப்படிப்பட்ட ஆயுதத்தைக் கண்டு எதிரிகள் திகைத்துப் போய் விட்டனரென்பது உண்மை. பலஹீனமாயும் நிராயுதபாணியாயுமுள்ள இந்தியாவுக்கு இஃதொரு நல்ல ஆயுதமே! உங்களிடத்திலேயுள்ள ஆயுதமெல்லாம் வில்லும் அம்புமேயானால், அதனைக் கொண்டு யந்திர பீரங்கிகளை எதிர்க்க முற்படுவது மூடத் தனமாகு மல்லவா! உங்களுடைய அற்ப ஆயுதத்தை உபயோகிப்ப தனால், எதிரிகள், தற்காப்பு என்று சொல்லிக் கொண்டு உங்கள் மீது யந்திர பீரங்கிகளை உபயோகிக்க இடங்கொடுத்து விடுகிறீர்கள். மேற்படி வில்லையும் அம்பையும் நீங்கள் உபயோகியாமலி ருந்தால், அந்த எதிரிகள் எந்தவிதமான ஆயுதத்தையும் உங்கள் மீது உபயோகிக்க வெட்கப்படு வார்களல்லவா? அஹிம்ஸை இன்று எவ்வளவு பயனற்றதாயிருந்தாலும், அந்தக் காலத்தில் அது பயனுடையதாகவே இருந்தது. இப்படிப்பட்ட தொரு நிர்க்கதியான நிலைமையில் காந்தியடிகள் மற்றொரு முறையையும் கையாண்டார். அதுதான் உபவாசம் கிடப்பது. இதனை தாரணை யென்றுஞ் சொல்வர். இஃது இந்தியாவின் பழைய சம்பிரதாயம். இது, கிழக்கிந்திய கம்பெனியார் காலத்தில் அநுஷ்டிக்கப் பட்டு வந்தது. கடன் கொடுத்தவர்கள், தங்கள் கடன் திரும்பி வருகிற வரை, கடன்காரர்கள் வீட்டில் பட்டினி கிடப்பார்கள். அதே மாதிரி, தீங்கிழைக்கப்பட்டவர்கள், தங்கள் தீங்குக்குப் பரிகாரம் கிடைக்கிற வரையில் தீங்கிழைத்தவருடைய வீட்டில் மரண பரியந்தம் பட்டினி கிடப்பர். அப்படியே இறந்து விட்டார்களானால், அவர்களுடைய ஆத்மா, தீங்கிழைத்தவர்களுடைய வீட்டில் குடி கொண்டிருக்கு மென்பது நம்பிக்கை. இந்தியாவின் இந்தப் பரம்பரைச் சம்பிரதாயத் தையே காந்தியடிகள் அநுஷ்டிக்கின்றார். இந்த தாரணை முறையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நுழை வாயிலில் சுமார் நாற்பது வருஷ காலமாகக் காந்தியடிகள் கையாண்டிருக்கிறார். ஓரிரண்டு சமயங்களில் அவருடைய ஆத்மாவின் நிழல் நம்மைச் சாரும் போலிருந்தது. அஹிம்ஸையை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழையாமை! இந்தியாவில் ஒத்துழையாமை தொடங்கப்பட்ட காலத்தில், ஐர்லாந்தில் இளைஞர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக வெடிகுண்டுகளையும் துப்பாக்கி களையும் உபயோகித்து வந்தனர். இதனை இந்திய இளைஞருலகம் கவனத்தோடு பார்த்துவந்தது. ஆனால் இதைவிட அதிகமான கவனத்துடனும் அநுதாபத்துடனும் இந்திய இளைஞர்கள் ஐர்லாந்தி லுள்ள கார்க் நகரத்தின் மேயரான மாக்வீனி1 என்பவர் உண்ணா விரதமிருந்து இறந்துபோனதை நோக்கி வந்தார்கள். இதே மாதிரிதான் 1929ம் வருஷம் ஓர் இந்திய மாணாக்கர், அரசியல் கொலை செய்யப் பட்டதற்காகத் தண்டிக்கப்பட்டார். அவர் சிறை யில் உண்ணாவிரத மிருந்து இறந்துபோனார். அவருடைய பிரேதம் பஞ்சாபிலிருந்து கல்கத்தாவுக்கு மிக ஆடம்பரத்தோடு கொண்டு வரப்பட்டதை எளிதில் மறக்க முடியாதல்லவா? இந்தக் காலத்தில், இந்தியாவிலுள்ள அந்நிய அரசாங்கம், இந்திய ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆயுதங் கள் ஏற்கனவே, மேனாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு வெற்றியும் அடைந்திருக் கின்றன. உதாரணமாக, நான் கன்பர்மிட் சாத்வீக எதிர்ப்பாளர் களையும்,2 திரீ சுதந்திரத்திற்காகப் போராடியவர் களையும்3 ஐர்லாந்து வீரர்களில் பலரையும் சொல்லலாம். மேற் கண்ட உதாரணங்கள், மரணபரியந்தம் அஹிம்ஸை அநுஷ்டிக்கப் பட்டதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. காந்தியடிகளைப் பற்றி என்னிடம் ஓர் இந்தியர் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு நீதிமானே தவிர, அத்யாத்மிக புருஷரல்லவென்று குறிப்பிட்டார். மற்றோர் இந்தியர் அவர் எதிலும் அகப்பட்டுக் கொள்ளாத ஒரு தந்திரக்காரர். ஆனால் மிகச் சிறந்த உண்மையாளர் என்று கூறினார். காந்தியடிகள், வட்ட மேஜை மகாநாடு விஷயமாக லண்டனுக்கு விஜயஞ் செய்திருந்த போது, அவரைப் பார்த்த பலர் ஆசாபங்க மடைந்தார்கள். அவர் ஒரு சாது வல்ல என்று ஆச்சரியத்துடன் கூறினார்கள். வாதவம்; அவர் ஒரு சாது இல்லைதான். கொஞ்சம் பட்டவர்த்தனமாகச் சொல்லப் போனால், அவர் சாதுவா இல்லையாவென்பதைப்பற்றி நான் விசாரப்படுவதே கிடையாது. அவர், சாதுக்களுக்கிருக்கிற உறுதியைக் காட்டிலும் அதிகமான உறுதியுடையவர். இப்பொழுது உலகத்தில் ஜனங்கள் நிராசையுடையவர்களாயிருக் கிறார்கள். நிராசை நிறைந்த காலமாகவே இஃது இருக்கிறது. இப்படிப் பட்ட காலத்திற்கு, சாதுக்களை விட மேம்பட்டவர் ஒருவர் தேவை. அவர்தான் மகாத்மா காந்தி. அவர் சிறந்த உண்மையாளர் என்று மேற்படி நண்பர் கூறினாரல்லவா? ஆம்; அவர் பெருந்தகைமையின் சிகரத்திற்குச் செல்லும் ஆற்றல் படைத்தவர். தென்னாப்பிரிக்காவில், இந்தியர்கள், சகிக்க முடியாத அநீதியை எதிர்த்து நின்று போர் புரிந்தார்களல்லவா, அந்தப் போராட்டத்தின் மையமாகவும், முன்னணியாகவும் (எல்லா மாகவும்) இருந்தவர் காந்தியடிகள். அந்தப் போராட்டத்தைப் புகழ்வது, என் சக்திக்கு மீறிய செயலாகும். காந்தியடிகள் அபார தைரிய முடையவர்; அது மட்டுமல்ல; தாராள மனப்பான்மை யுடையவர். இந்தியர்களுடைய தாராள மனப்பான்மை யைப்பற்றி நான் நினைக்கிற போது, எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் ஆச்சரியத்தினால் நிரம்பிவிடுகிறது. அவர்கள், தனிப்பட்டவர்கள் என்ற முறையிலும், ஜாதியினர் என்ற முறையிலும், மற்றவர் களுடைய வெறுப்பைக் கடந்து நிற்கக் கூடியவர்கள். அவர் களுடைய தானத்தில் ஆங்கிலேயனாகிய நான் இருந்தால், மற்றவர்களுடைய வெறுப்பைக் கடந்து நிற்க முடியாது. காந்தியடி கள், தமது வாழ்நாள் முழுவதும் பிரதி ஆங்கிலேயனையும் வெறுக்க வேண்டியவர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! அதற்கு மாறாக, எட்மண்ட் காண்ட்லர் என்ற அறிஞர் கூறிய மாதிரி, ஆங்கிலேயர்களை அவர் விரும்புகிறார். தென்னாப்பிரிக்காவில் நேட்டால் மாகாணத்தில் ஜுலு கலகம் கிளம்பியது. ஆரம்பத்தில் பன்னிரண்டு ஜுலுக்கள் தூக்கு மேடையில் ஏற்றுவிக்கப்பட்டார்கள். பின்னர், இது, பெரிய கலகமாகிவிட்டது. பல ஜுலுக்கள் சுடப்பட்டார்கள்; சவுக்காலடிக்கப்பட்டார்கள். காந்தியடிகள் தாம் பிரிட்டிஷாருக்கு விரோதியில்லை யென்பதைக் காண்பித்துக் கொள்ளவும், ஆங்கிலேயர்களுக்குத் தொந்திரவு ஏற்படுகிறபோது, அதை நிவர்த்திக்கும் முறையில் இந்தியர்களும் பங்கெடுத்துக் கொள்ளச் சித்தமாயிருக்கிறார்க ளென்பதைக் காண்பித்துக் கொள்ளவும் சிகிச்சைப் படையில் சேர்ந்துழைக்கத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார். அப்பொழுது ராணுவச் சட்டம் அமுலில் இருந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் பல ஜுலுக்கள் சவுக்கடி கொடுக்கப்பட்டார்கள். இங்ஙனம் அடிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்யும்வேலை, காந்தியடிகளின் தொண்டர்படைக்குக் கொடுக்கப்பட்டது. இஃது இவர்களுக்கு நல்ல பயிற்சிதான். எப்படி யென்றால், அரசாங்கங்கள் பயமடைந்திருக்கிற போது, என்னென்ன காரியங்களைச் செய்யக்கூடும் என்பதை இவர்கள் எதிர்பார்த்து அது விஷயத்தில் உறுதி கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இவர்களுக்கு ஏற்பட்டதல்லவா! ஆனால் இது விஷயத்தில் மட்டுந்தான் இந்தியர்களின் மனம் உறுதிப்பட்டுப் போயிற்று. வேறு விஷயத்திலல்ல. ஓர் ஆங்கிலேயனுக்கு, புத்தி பூர்வகமாக விஷயங் களை எடுத்துச் சொல்லி, அவனுடைய பட்சபாதமற்ற தன்மைக்கு விண்ணப்பித்துக் கொண்டோமானால் அவன் இணங்கி வருவா னென்ற நம்பிக்கை காந்தியடிகளுக்கு இருந்தது. 1919ம் வருஷம் ஏப்ரல் மாதம் தளபதி டையர், அமிருதசரஸிலுள்ள ஜலியன் வாலா பாக்கில் சுமார் இரண்டாயிரம் பேரைச் சுட்டு வீழ்த்தினார். அப்பொழுது காயமடைந்தவர்கள், அன்றிரவு முழுவதும் அந்தத் தோட்டத் திலேயே அவதைப் படும்படி விடப்பட்டார்கள். இந்த ஜலியன் வாலா பாக் சம்பந்தமாகப் பிரிட்டிஷ் பார்லிமெண்டின் இரண்டு சபைகளிலும், இந்தியர்களின் மனம் புண்படும் படியான விதத்தில் வாதங்கள் நடைபெற்றன. தளபதி டையரின் பாராட்டு நிதி யென்று சொல்லி இருபத்தாறாயிரம் பவுன் சேர்த்துக் கொடுத்தார்கள். இந்த பஞ்சாப் சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணை செய்து ஓர் அறிக்கை தயாரிக்கும்படி, காங்கிர மகா சபை கமிட்டியை நியமித்தது. இதில் காந்தியடிகளும் ஸ்ரீ எம்.ஆர். ஜயகரும் அங்கத்தினர்களா யிருந்தார்கள். மேற்படி அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு, இந்த இருவரிடமும் ஒப்புவிக்கப்பட்டது. தளபதி டையர், ஜனங்களை ஏமாற்றி மேற்படி ஜலியன் வாலாபாக் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே அவர்களைச் சுட்டுக் கொன்றாரென்பதற்கு, அநேக சாட்சியங்களும், ஆதாரங்களும், காங்கிர விசாரணைக் கமிட்டியின் முன்னர் ஆஜர் செய்யப்பட்டன. அப்பொழுது, ஜனங்களுக்கு இருந்த ஆத்திரமும், அவர்கள் அநுபவித்த துன்பங்களும் சொல்லி முடியாது. இப்படிப்பட்ட தருணத்தில் மேற்படி ஆதாரங்களை யாருமே நம்பக் கூடும். ஆனால் காந்தியடிகள் இவற்றை நம்ப முடியாது; காங்கிர கமிட்டி அறிக்கையில் இது விஷயத்தைக் குறிப்பிடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.1 அப்பொழுது அவர் காட்டிய மனோ உறுதி அவருக்கு ஒரு பெரிய வெற்றியாகும். மற்றும், மேற் கூறப்பட்ட நிலைமையில் அவர் இந்த மாதிரி நடந்து கொண்டது, அவருக்கு ஒரு பெரிய ஆத்ம வெற்றி. சென்ற மகாயுத்தத்தின் போது, ஆத்திரம், தேச பக்தி முதலியவைகளை யெல்லாம் அப்புறப்படுத்தி விட்டு நியாய புத்தியுடன் விஷயங்களை நோக்குவது எவ்வளவு கடினமாயிருந்ததென்பதைப் பலரும் அறிந்திருப்பர். ஆனால் காந்தியடிகள் இந்தக் கடினமான காரியத்தைச் சாதித்திருக் கிறார். எந்த ஆங்கிலேயனும் அநுபவித்திராத பல அவமானங்களுக்குட்படுத்தப் பெற்று வீழ்த்தப்பட்ட ஜாதியினர் என்ற நிலையிலிருந்து கொண்டு, இந்தக் கஷ்டமான சாதனையை அவர் சாதித்திருக்கிறார். இதுதான் உண்மையின் உயர் நிலை. சொல்லளவிலே மட்டுமல்ல, செய லளவிலும் காந்தியடிகள் உண்மையின் உயர்வை நிலை நிறுத்தி விட்டார். என்னுடைய கடைசி உதாரணமாக, 1922ம் வருஷம் காந்தியடிகள்மீது தொடுக்கப்பட்ட வழக்கைப் பற்றிச் சிறிது கூறு கிறேன். இந்தச் சம்பவமானது, காந்தியடிகளும் அவருடைய எதிரிகளும் எவ்வளவு கௌரவமான நிலையிலிருந்து போராடினார் களென்பதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. மனிதனிடத்திலேயுள்ள நாகரிகத் தன்மையை இது நிரூபித்துக் காட்டுகிறது. இந்த மாதிரி யான சம்பவம் இதற்குமுன் நடைபெற்றதில்லை யென்று சொல்ல லாம். இரண்டு கட்சியினரிடத்திலுமிருந்த நியாய மனப் பான்மையை இந்தச் சம்பவம் விளக்கிக் காட்டுகிறது. இந்த வழக்கினால், இந்தியாவி லுள்ள பிரிட்டிஷாரின் திருஷ்டி (மனப்போக்கு அல்ல) மாறிவிட்ட தென்று சொல்லவேண்டும். காந்தியடிகள், தங்களை எவ்வளவு தூரம் கோப மூட்டினாலும் அவர், மரியாதைக் குகந்தவர் என்பதை இந்தியாவிலுள்ள ஆங்கிலேயர்கள் இந்த வழக்கிற்குப் பிறகு உணர்ந்து கொண்டு விட்டார்கள். தவிர, இந்த வழக்கானது, காந்தியடிகளின் சீலம், வீரம், பற்றற்ற தன்மை முதலியவைகளையும் எடுத்துக் காட்டியது. இந்த வழக்கிற்குப் பிறகுதான், அவர் பிரிட்டிஷ் ஆதிக்கத்தோடு மட்டும் சண்டை செய்யவில்லை: யந்திர மயமாகி, மனித வளர்ச்சியைத் தகைந்து விட்ட தற்கால நாகரிக உலகத்தோடும் சண்டை செய்கிறா ரென்பதைஆங்கிலேயர்களாகிய நாம் தெரிந்து கொண்டோம். அவர், நம்மோடு போடுகிற சண்டை, நாம் நினைத்ததை விட இன்னும் அதிக ஆழமான கருத்துடையது. அவருடைய தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரேயே, அவருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக (12-1-1924ல்) சிறையிலிருந்து விடுதலை செய்யப்பெற்றார். சிறையில் வயிற்றுத் தொந்திரவினால் அவதைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், உங்களுடைய விருப்பப்படி ஆயுர்வேத வைத்தியரையோ வேறு யாரையோ வேண்டு மானாலும் வரவழைத்துச் சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்று சிறை அதிகாரி தெரிவித்தார். ஆனால் காந்தியடி கள், தமக்கென்று எவ்வித விசேஷ சலுகையும் காட்டப்படக்கூடா தென்றும், சிறை அதிகாரியின் கையில் தம்மை ஒப்புவித்திருப்பதாயும் கூறினார். உடனே ஆங்கிலேயே டாக்டர் ஒருவர் வரவழைக்கப்பட்டு, சதிர சிகிச்சை நடைபெற்றது. நடுவில், மின்சார விளக்கு அணைந்து போயிற்று. பக்கத்திலிருந்த நர் வேறொரு ஹர்ரிகேன் விளக்கை ஏந்தி நிற்க, சிகிச்சை முடிந்தது. நோயாளியான காந்தியடிகள் அப்பொழுது இறந்துபோயிருந்தால், இந்தியாவும் உலகமும் என்ன சொல்லியிருக்குமென்பதை ஆங்கிலேயர்களாகிய நாம் அறிவோம். குமாரி மேயோ தான் எழுதிய நூலில் இந்தச் சம்பவத்தை ஏளனமாகக் கூறியிருக்கிறாள். காந்தியடிகள் இந்தச் சம்பவத்தை சிறை அதிகாரி களுக்கும் எனக்கும் கௌரவந்தரக்கூடிய புனிதமான அநுபவம் என்று கருதுகிறார். உண்மையில் இதுவே சரி. சந்தோஷகரமற்ற பல சம்பவங்கள் நடைபெறுகிற இந்த உலகத்தில் இந்தச் சம்பவம் வேறொரு வகைப்பட்டதல்லவா? காந்தியடிகளின் சர்க்கா தத்துவத்தைப் பற்றிப் பேச இப்பொழுது அவகாசமில்லை. இது, புத்திசாலித்தனமானதும் நியாயப் பொருத்த முள்ளதுமான ஒரு திட்ட மென்று எனக்குப் படுகிறது. ஆனால் சில சமயங்களில் இந்தத் தத்துவம் வரம்பு மீறி வற்புறுத்தப்படுகிறது. உதாரணமாகக் காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூரை, தினந்தோறும் நூல் நூற்குமாறு சொல்வதைப் பாருங்கள்! காந்தியடிகளிடத்தில் காணப்படும் மற்றொரு விசேஷ அமிச மென்னவென்றால், மற்றவர்களுடைய துன்பத்திற்குப் பிராயச்சித்த மாகத் தாம் துன்பத்தை அநுபவிக்கிற சுபாவம். உதாரணமாக, தீண்டாச்சாதியாருக்கிழைக்கப்படுகிற தீங்குக்குப் பிராயச்சித்தமாக அவரே சில சமயங்களில் குப்பை கூட்டுகிறார். பசுக்களுக்கு இழைக்கப்படும் தீங்குக்குப் பிராயச்சித்தமாக ஆட்டுப் பாலை அருந்துகிறார். மற்ற மனிதர்களை நிதானிப்பதில் காந்தியடிகள் கைதேர்ந்தவர். .அவரிடத்தில் காணப்பெறும் ஜீவகாருண்யமானது, சரித்திரத்திலே காணப்பெறாத அவ்வளவு ஆழமுடையது. பொதுவாக எல்லா ஜாதி யாரிடத்திலும் சிறப்பாக ஏழை மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் முதலியோரிடத்திலும் அவர் இரக்கங் காட்டுகிறவர்; அன்பு செலுத்து கிறவர். அவர் ஒரு நிஷ்காம கர்மயோகி. அவர் எல்லா திரீ புருஷர் களையும் சமதிருஷ்டியுடனேயே பார்க்கிறார். அவருக்குத் தமது சொந்த மகனும், ஒரு குப்பை கூட்டுவோனுடைய மகனும் ஒன்றுதான். அவர் அஞ்சாமையுடையவர்; தம்மைப் பற்றிக் கவலை கொள்ளாதவர். நகைச்சுவை, அன்பு, பிடிவாதம், தைரியம் ஆகிய எல்லாக் குணங்களும் அவரிடத்தில் கலந்திருக்கின்றன. இந்தியா பல பகுதிகளாகவும் தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்கள், உடைந்து போனவர்களாகவும், சிதறிப் போனவர்களாக வும், ஒட்டுப் போட்டவர் களாகவும் இருக்கிறார்கள். உலகத்தில் வேறெந்த நாட்டு ஜன சமுதாயமும் இப்படி இல்லை. ஆனால், புத்தர் காலத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் இந்தியாவின் மூலை முடுக்குகளையும் அசைத்துக் கொடுக்கிற ஓர் அசைவை ஜனங்கள் உணர்கிறார்கள்; ஒரு மூச்சை நுகர்கிறார்கள்; ஒரு குரலைக் கேட்கிறார்கள். அந்தக் குரலின் - அந்த வார்த்தைகளின் - அர்த்தத்தை அவர்கள் தெரிந்துகொள்ளாமலிருக் கிறார்களென்று சொன்னால் அது வேறு விஷயம். இந்திய தேசீய இயக்கத்தில் நாவன்மை படைத்த பலர், அறிவு நிரம்பிய பலர் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு மனிதர்தான், பாமர ஜனங்களில் தாமும் ஒருவர் என்று அந்த ஜனங்கள் நம்பும்படியாக நடந்துகொண்டிருக்கிறார்; தீண்டப்படாத ஜாதியாரிடத்தில் ஒரு நம்பிக்கையை உண்டுபண்ணியிருக்கிறார். தாங்களும் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அந்தத் தீண்டப்படாதவர்கள் கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். ஓர் அரசியல் கட்சியினால் ஏற்படக்கூடிய உணர்ச்சி, நம்பிக்கை இவை களைக் காட்டிலும் விசாலமான உணர்ச்சிகளையும் நம்பிக்கை களையும் அவர் கிரியாம்சையில் கொண்டு வந்திருக்கிறார். வருங் காலத்தை முன்னிட்டு, பாரத மக்களின் வழிப்போக்கை வேறொரு மார்க்கத்திற்கு நிச்சயமாகத் திருப்பிவிட்டிருக்கிறார். இவைகளைத் தவிர அவர் இன்னும் அதிகமாகவும் செய்திருக்கிறார். அவருடைய அரசியல் போக்கை நான் கண்டித்திருக்கிறேன். ஆனால் நான் எழுதியுள்ள வேறொரு நூலில் கூறியுள்ள வண்ணம், அவர், ஒரு யுகத்தின்மீது எண்ணம் என்கிற முத்திரையை இட்டு விட்டுப் போகிற மகான்களில் ஒருவர். காந்தியடிகள் பதியவைத்திருக்கிற எண்ணம் அஹிம்ஸை. இந்த அஹிம்ஸை எண்ணமானது, அநேக நாட்டு ஜனங்களுடைய அநுதாபத்தை இழுத்திருக்கிறது. மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத் தாருடைய அடக்குமுறைக் கொள்கையில் கூட, பரபரம் நன்மைக்கு நன்மை செய்யவேண்டுமென்ற எண்ணத்தை உண்டுபண்ணியிருக் கிறது. இந்தியாவில் நடைபெற்ற தேசீயப் போராட்டத்துடன் ரத்தச் சிந்துதலும் வேறு பல கொலைகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. இரு தரப்பினரும் - அதாவது தேசீயக் கட்சியினரும் அரசாங்கக் கட்சியினரும் - தங்கள் தங்கள் கட்சிக்குச் சாதகமாக என்னென்ன நியாயங்களெடுத்துச் சொல்கிறார்களோ அவற்றையெல்லாம் கேட்டபிறகு, இந்தத் தேசீயப் போராட்டத்தின் விளைவாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஒரு நாகரிகமான தொடர்பு ஏற்படுமென்று நிச்சயமாகக் கூறலாம். அந்த மாதிரியான விளைவு ஏற்படுகிற காலத்தில், இப்பொழுது உலகத்தை அலக் கழித்துக்கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனமெல்லாம் மறைந்து விட்டபிறகு, என்னுடைய தாய் நாடாகிய இங்கிலாந்தும், இந்தியாவும் இந்த மனிதரை - காந்தியடிகளை - சிறந்த தொண்டரென்றும் அரிய மகானென்றும் முறையே கொண்டாடும். இந்தியாவுக்கும் இங்கிலாந் துக்கும் ஏற்பட்டிருக்கிற போராட்டத்தை முக்கியாம்சங்களில் ஒரு குடும்பப் போராட்டமாகவே அவர் வரையறுத்து நடத்தி வந்திருக் கிறார். குடும்பங்களில் அடிக்கடி மனதாபங்கள் ஏற்படுவதுண்டு தான். ஆனால் அவை தீர்க்கமுடியாத மனதாபங்களாவது மிக அருமை. சத்தியாக்கிரக பாதை ஸ்ரீமதி ஸோபியா வாடியா (பம்பாய்) காந்தியடிகள் அநுபவரீதியான ஒரு ஞானி. அவருடைய வாழ்க்கைச் சித்தாந்தங்களும், அரசியல் வேலைத் திட்டங்களும் ஆயிரக்கணக்கான பேருக்கு ஊக்கந் தருவன வாயிருக்கின்றன; கோடிக் கணக்கான மக்களுக்குப் புதிராயிருக்கின்றன. மனிதன், அத்யாத்மிக வாழ்க்கையை நடத்த வேண்டுமென்ற அவருடைய சித்தாந்தத்தை எந்த புத்திசாலியான மனிதனும் அறிந்து கொள்ளக் கூடும்; மனோதிட முள்ளவர்கள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரக்கூடும். ஆனால், இந்தியாவின் புராதன சரித்திரப் பரம்பரையின் பரிணாமமாகவும், இந்தியாவின் தற்கால சரித்திரத்தை எந்தெந்த சக்திகள் சேர்ந்து ஆக்கிக்கொண்டு வருகின்றனவோ அந்தச் சக்தி களின் உருவகமாகவும் காந்தியடிகள் தோன்றியிருக்கிறாரென்று ஜனங்கள் மதிக்கிறவரையில், அவருடைய அரசியல் வேலைத் திட்டமானது ஒரு புதிராகவே இருக்கும். ஈரானைப் போலவும், எகிப்தைப் போலவும் பழைய மண்ணின் மீது தோன்றிய புதிய நாகரிகமென்று தற்கால இந்தியாவைச் சொல்ல முடியாது. இந்த இருபதாவது நூற்றாண்டில் இந்தியாவில் ஜீவ சக்தியோடு ஓடிக்கொண்டிருக்கும் அறிவுப் பெருக்கானது, அநேக ஆயிர வருஷங்களாகவே தொடர்ந்து வந்திருக்கும் ஒரு பெருக்குத் தான். இந்தியாவில் பூமியிலிருந்து தோண்டியெடுக்கப் படும் புராதன சின்னங்கள்கூட புதிய அர்த்தமுள்ளனவாகவும் புதிய பிரயோஜன முடையனவாகவும் இருக்கின்றன. இந்த மாதிரி சீனாவில் மட்டுந்தான் காணலாம். உதாரணமாக, பிரமிட் கோபுரங்கள், இறந்து போன ஓர் எகிப்தின் புகழைத்தான் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியாவில் மோஹென்ஜோதாரோ என்னுமிடத்தில் அகப்பட்ட சின்னங்கள் தற்போதைய இந்தியாவின் ஜீவகளையோடு கூடிய கலாசாரத்தின் ஒரு பகுதி. எந்த அர்த்தத்தில் நவீன ஈரானென்றும், நவீன எகிப்தென்றும் சொல்கிறோமோ அதே அர்த்தத்தில் நவீன இந்தியாவென்று சொல்ல முடியாது. பழைய ஜனங்கள் புதியவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள் ஜப்பானில். அப்படிப்பட்ட ஜப்பானைப் போலவும் இந்தியாவைச் சொல்லமுடியாது. நவீன இந்தியா என்று சொன்னால் அஃது எங்கோ சில பெரிய நகரங்களில், அதுவும் ஓரளவுக்குத்தான் இருக்கிறது. ஆங்கிலம் படித்த இந்தியர்களிடத்தில், இந்தியா, நவீன நாகரிக பாதையில் இன்னும் வேகமாகச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் இருந்து வருகிறது. துரதிருஷ்டவசமாக இந்த எண்ணம் வலுத்தும் வருகிறது. ஆனால், இந்த எண்ணத்தைக் காந்தியடிகள் தமது எழுத்தினாலும் நடத்தையினாலும் தகைந்துகொண்டு வருகிறார். அவருடைய உபதேசங்கள் நிராகரிக்கப்படுகிற காலத்தில்தான், அவருடைய அரசியல் முறைகள் பயனற்றவையென்று தள்ளப் படுகிற காலத்தில் தான் நவீன இந்தியா உதயமாகும். ஆனால், அந்த மாற்றமானது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஒரு பெரிய ஆபத்தாயிருக்கும். புத்தருடைய சித்தாந்தங்களை இந்தியா நிராகரித்து விட்டதனால் ஏற்பட்ட ஆபத்தைக்காட்டிலும் இந்த ஆபத்து பெரிதாயிருக்கும். புத்தருடைய சித்தாந்தங்களை நிராகரித்து விட்டதனால் இந்தியாவின் கலைஞான வளர்ச்சி தகையப்பட்டது. அதனால், இந்தியா, உலகத்துக்கு அதிகமான சேவையைச் செய்ய முடியவில்லை. அவ்வளவுதான். ஆனால், இந்தியாவின் கலாசாரம் அடியோடு அழிந்துபடவில்லை. இந்திய சரித்திரத்தின் வளர்ந்துகொண்டு போகிற, ஆனால் இன்னும் முடிவுபெறாத ஓர் அத்தியாயம் என்ற திருஷ்டியில் தான் காந்தியடிகளின் வாழ்க்கையை நாம் கணித்துப் பார்க்கவேண்டும். நமது இந்திய சரித்திரத்தை உண்டுபண்ணியவர்கள் அத்யாத்மிக வாழ்க்கை நடத்திய மகான்களேயாவர். கலைச் செல்வமும், இலக்கியச் செல்வமும் நிறைந்த பெரிய ராஜ்ஜியங்கள், மேற்படி மகான்களினால் போஷிக்கப்பட்ட ஞான வேர்களிலிருந்துதான் உற்பத்தியாகி வளர்ச்சி யடைந்திருக்கின்றன. உதாரணமாக அசோகனுடைய ஏகாதிபத்திய மும், அஜண்டா குகைச் சித்திரமும், ஒரு பெரிய விருட்சத்தினின்றும் பிரிந்த ஒரு கிளையில் பழுத்த பழங்கள். அந்தக் கிளைதான் கௌதம புத்தர். அந்தக் கிளையைப் போல் பல கிளைகள் அந்த மரத்திற்கு உண்டு. அந்த மரத்தின் வேர்கள் புராணங்களில் சகத்வீபமென்றும், ச்வேதத்வீப மென்றும் சொல்லப்படுகிற புராதன மண்ணில் பரவி இருக்கின்றன. லட்சக்கணக்கான வருஷங்களைத் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருக்கும் பின்னணிப் படுதாவின் முன்னே வந்து நிற்கும் இருபதாவது நூற்றாண்டின் மகான் என்ற திருஷ்டியில் காந்தியடிகளை நாம் பார்த்தல் அவசியமாகும். நமது சரித்திரத்தில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டு நடித்திருக்கிற அத்யாத்மிக மகான்கள் அத்தனைபேரும் பூரண புருஷர் களாயிருந்திருக்கிறார்கள்; கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்றும் ஒன்றுபட்டே அவர்கள் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்திருக்கின்றன. அவர்கள் வெளிப்பகட்டினாலல்ல, அந்தரங்க சுத்தத்தினால் தங்கள் தாய் நாட்டிற்குச் சேவை செய்திருக்கிறார்கள். அவசியம் ஏற்படுகிறபோது அவர்கள் ராஜ உடையையும் அணிந் திருக்கிறார்கள். இதற்கு ராமபிரானுடைய வாழ்க்கை சிறந்த உதாரணம். இன்னொருபுறத்தில் சித்தார்த்தர், மன்னர் குலத்துதித்த வராயினும் தமது செங்கோலைத் துறந்து அதற்குப் பதில் பிட்சா பாத்திரத்தை ஏந்திக்கொண்டார். இந்த இரண்டு பேரும்-ராமரும் சித்தார்த்தரும்-பூரண புருஷர்கள். இதேமாதிரி பலர் தோன்றிச் சேவை செய்திருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவின் தருமத்தை, இந்தியாவின் ஆந்தரிக வாழ்க்கையை வெளியுலகத்திற்குப் பிரசாரஞ் செய்திருக்கிறார்கள். இப்படி நான் சொல்லிக்கொண்டு போவது என்னுடைய கற்பனையேயென்றும், சரித்திரத்திற்கு முரண்பட்ட தென்றும் சிலர் கருதலாம். மேனாட்டு அறிஞர்கள் புராதன இந்தியர்களுக்குச் சரித்திர ஞானம் கிடையாதென்று குறை சொல்லு கிறார்கள். சரித்திரத்தைத் தாங்கள் எந்த திருஷ்டியில் பார்க்கிறார் களோ அந்தத் திருஷ்டியில் இந்தியாவின் சரித்திரம் இல்லை யென்பதுதான் அவர்கள் குறை. மேனாட்டு அறிஞர்கள் சரித்திரத்திற் குச் செய்யும் வியாக்கியானத்தைப்பற்றி காந்தியடிகள் பின்வருமாறு கூறுகிறார்:- சரித்திரம் என்பது என்ன? உலகத்தில் அன்புச் சக்தி அல்லது ஆன்ம சக்தி தொடர்ந்தாற்போல் செய்துகொண்டுவருகிற வேலைகளைத் தடைப்படுத்துகிற சம்பவங்கள்தான் சரித்திரமா கின்றன. ஆன்ம சக்தி மனித இயற்கையானதால் அது சரித்திரத்தில் குறிப்பிடப்படுவதில்லை. இந்த எதிர்மறை திருஷ்டியில் பார்க்கப் போனால் நமது புராதன நூல்கள் சரித்திரங்கள் அல்லதான். ஏனென்றால் அவை பெரும்பாலும் மனிதனுடைய அத்யாத்மிக வாழ்க்கையைப் பற்றியே வற்புறுத்திச் சொல்லுகின்றன. இந்த அத்யாத்மிக திருஷ்டியில் நமது புராணங்களெல்லாம் சரித்திரங்களே. தற்கால மேனாட்டுச் சரித்திர ஆசிரியர்கள், காந்தியடிகளுக்கு அரசியல் ஞானமில்லை யென்று சொல்கிறார்கள். அரசியல் ஞானம் என்றால் அஃது ஒரு வழியில்தான் செல்லக்கூடும் என்பது தற்கால அரசியல் வாதிகளுடைய அபிப்பிராயம். முற்காலத்தில் அரச சபை களில் வீற்றிருந்த பிராமண முனிவர்கள் - உதாரணமாக தசரதருடைய சபையில் வசிஷ்டர் - சிறந்த அரசியல் வாதிகளாயிருந்தனர். ஆனால், இன்று அவர்களுடைய சந்ததியார் ஒரு மேனாட்டு பார்லிமெண்டில் அங்கத்தினராக வேண்டுமென்று விரும்பினால் அவர்களுக்குப் போதிய ஓட்டுகள் கிடைக்காது. காந்தியடிகள் முரண்பாடுள்ளனவும் அநுபவ சாத்தியமில்லா தனவுமான கொள்கைகளை யுடையவர் என்று சிலர் கூறுகிறார்கள். இதைப்பற்றி நாம் சரிவரத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவரை ஓர் அத்யாத்மிக புருஷர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும். அவர் தமது அறிவுக்காக இருதயத்தையும், இருதயத்திற் காக அறிவையும் முறையே விட்டுக்கொடுக்கிறவரல்லர். தமது மனச்சாட்சியை மீறி நடக்க மறுக்கிறவர். தாம் ஆன்ம விளக்கம் பெற வேண்டுமென்றும், மற்றவர்களுக்கு ஆத்மார்த்தமான சேவை செய்ய வேண்டுமென்றும் கருதியே அவர் எல்லா விஷயங்களையும் நோக்குகிறார். இவைகளை யெல்லாம் நாம் புறக்கணித்துவிட்டு, அவர் வெறும் முரண்பாடுள்ளவர் என்று சொன்னால் அதில் அர்த்த மில்லை. அவர் தமது சித்தாந்தத்தை அநுஷ்டித்துக் காட்டுகிறார்; தமது கொள்கைகளை நடத்தையில் கொணர்கிறார். இதனால்தான் சமரஸ மனப்பான்மையுள்ள பலருக்கும் அவர் ஒரு புதிராயிருக்கிறார். காந்தியடிகள் (1) ஓர் அரசியல் வாதியல்ல; ஒரு தத்துவ ஞானியுமல்ல; ஆனால் ஓர் அத்யாத்மிக சீர்திருத்த புருஷர்.(2) ஆரிய தர்மத்தை பிரதி பிம்பித்துக் காட்டுகிற ஒரு மகா புருஷர். இந்த இரண்டு அமிசங்களில் தான் அவர் இந்திய சரித்திரத்தைப் புதிதாக எழுதிக்கொண்டு வருகிறார். அவருடைய வாழ்க்கையின் இந்த இரண்டு அமிசங்களையும் நாம் மனதில் வைத்துக்கொண்டு, அவருடைய பலதரப்பட்ட வேலைகளைக் கவனித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவின் அரசியல் தலைவர் என்ற தோரணையில்தான் காந்தியடிகளை உலகத்தினர் நன்கு அறிந்து கொண்டிருக்கிறார்கள். மத சம்பந்தமாக அவர் கூறுவன யாவும் அவருடைய இரண்டாம் பட்சத்து வேலையே என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், இப்படிக் கருதுவது அவரைச் சரியாக அறிந்து கொள்ளாததே யாகும். மதமின்றி அரசியல் இல்லை யென்பது அவருடைய சித்தாந்தம். என்னுடைய தேசபக்தி எனது மதத்துக்குக் கீழ்ப்பட்டதுதான் என்று அவர் ஓரிடத்தில் வலியுறுத்திச் சொல்கிறார். இந்தியாவின் விரோதிக்கு அவர் தீங்கு செய்யாதவர். ஏனென்றால் அப்படித் தீங்குச் செய்வது மதத்திற்கு விரோதம் என்பது அவர் கருத்து. எனவே, காந்தியடிகளின் மதக் கோட்பாடு என்னவென்பதை நாம் அறிதல் அவசியம். அவர் தம்மை ஒரு ஹிந்து என்று சொல்லிக் கொள்கிறார். அகில உலகத்திற்கும் பொதுவான உபதேசங்களைச் சொல்லுகிற ஹிந்து மதத்தை அவலம்பிக்கிறவர் என்ற அர்த்தத்தில் தான் அவர் ஒரு ஹிந்து. அவர் கூறுகிறார்:- தருமம் அல்லது மதம் என்று சொன்னால் ஹிந்து மதம், இலாமிய மதம், கிறிதவ மதம் ஆகிய அனைத்தையும் தன்னுட் கொண்டிருப்பதோடுகூட, அவைகளுக்கு மேற்பட்டதுங் கூட. அந்த மதத்தை நீங்கள் சத்தியம் என்ற பெயரிட்டும் அழைக் கலாம். அந்தச் சத்தியம் அழிவற்றது; மாற்றமில்லாதது. *** மதம் என்பது எனக்கு மிகவும் புனிதமானது. இந்தியாவில் இப்பொழுது மதப்பற்று குறைந்து கொண்டு வருகிற தென்பது என்குறை. இங்கே மதம் என்று நான் சொல்கிறபோது ஹிந்து மதத்தையோ, முகம்மதிய மதத்தையோ, ஜாரதுஷ்டிர மதத்தையோ மனத்தில் கொண்டு பேசுகிறேனில்லை. எல்லா மதங்களுக்கும் அடிப்படையா யுள்ள ஒரு மதத்தையே நான் கூறுகிறேன். என்னுடைய குறை, கடவுளிடத்திலிருந்து நாம் விலகிக்கொண்டு போகிறோமென்பது தான். காந்தியடிகள் கடவுளைப் பற்றிக் கூறுகிற போது சர்வ வியாபகமாயும் வருணனைக் கெட்டாததாயுமுள்ள ஒரு சக்தி என்று சொல்லி விட்டு, மேலும் சொல்கிறார்:- என்னைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களும் மாற்றமடைந்து கொண்டும் அழிந்து கொண்டும் போவதை நான் பார்க்கிறேன். ஆனால் அந்த மாற்றத்திற் கெல்லாம் அடிப்படையிலே மாற்றமில்லாத ஒரு ஜீவ சக்தி இருந்து கொண்டு, சிருஷ்டித்தும் அழித்தும், மீண்டும் சிருஷ்டித்தும் வருவதைக் காண்கிறேன். அந்த ஜீவ சக்திதான் கடவுள் அந்தக் கடவுளே சச்சிதானந்தப் பொருள். சத்தியம் என்பது சத் என்னும் சொல்லினடி யாகப் பிறந்தது. சத் என்று சொன்னால் உள்ளது என்று அர்த்தம். உண்மையில் சத்தியத்தைத் தவிர வேறு இல்லை. எங்குச் சத்தியம் இருக்கிறதோ அங்கு சித் அதாவது ஞானம் உண்டு. ஞானம் உள்ள இடத்தில் ஆனந்தம் இருக்கிறது. சச்சிதானந்தப் பொருளாகிய அந்தக் கடவுள் நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறார். பிரதியொருவனும் கடவுளின் பிம்பம். எனவே, நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் சச்சிதானந்தம் குடி கொண்டிருக்கிறது. ஆனால், ஓரளவுக்குத்தான் விகாசமடைந்திருக் கிறது. ஏனென்றால், அஃது அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது. அந்தக் கடவுட் சக்தியைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்றுதான் காந்தியடிகள் கூறுகிறார். மிருகத்திற்கு மேலான மனிதன் தெய்வ இச்சையைப் பூர்த்தி செய்ய வேண்டியவனாக இருக்கிறான். நாம் உலகத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறோம்; ஆனால், நம்மிடத்திலே யுள்ள மோட்ச லோகத் திற்குப் புறம்பானவர்களாயிருக்கிறோம். அப்படியானால், மனிதனுடைய உயர்ந்த லட்சியம் என்ன? ஞானத்தின் மூலமாகச் சத்தியத்தை அடைவது. அப்பொழுதுதான் நித்தியமான ஆனந்தம் உண்டாகும். சத்தியத்தைப் பூரணமாகக் காண்பது என்று சொன்னால் அது தன்னைத்தான் தெரிந்து கொள்வதாகும்; கடவுளையும் தெரிந்து கொண்டதாகும்; அதாவது, பூரணத்துவம் அடைந்ததாகும். ஆனால், மனிதனிடத்தில் கீழ்த்தரமான மிருக சுபாவம் குடி கொண்டிருக்கிறது. ஆகையால் மனித தேகம் எந்த மண்ணிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டதோ அந்த மண்ணில் குறைபாடு என்ற முத்திரை இடப்பட்டிருக்கிறது. எனவே, நாம் முதல் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன வென்றால், நம்மிடத்திலே திரமாயுள்ள பூரணத்துவத்தையும், அதைச் சுற்றியிருக்கும் அபூரணத்துவத்தின் செயல்களையும் கண்டு கொள்வதுதான். நம்மிடத்திலேயுள்ள இருதரப்பட்ட சக்திகளை - தெய்வ சக்தி, பைசாச சக்தி - நாம் நேருக்கு நேர் சந்திக்கிற போது நாம் செய்ய வேண்டிய வேலை யென்ன வென்பதைப் பற்றி காந்தியடிகள் பின் வருமாறு கூறுகிறார்:- என்னுடைய அபூரணத்துவத்தை அதாவது எனது குறைபாடுகளை நான் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறேன். அப்படி உணர்ந்திருப்ப திலேதான் என்னுடைய பலம் இருக்கிறது. ஒருவன் தன்னுடைய சக்தியின் எல்லையைத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். நம்முடைய சக்திகளின் எல்லையை நாம் தெரிந்து கொள்ளாத தினால் நம்மிடத்திலேயுள்ள தெய்வத் தன்மையையும் உணர முடியாதவர்களா யிருக்கிறோம். நம்முடைய பலஹீனத்தை நாம் தெரிந்து கொண்டோ மானால், அதைப் போக்கும் மார்க்கத்தைத் தேடுவோம். அதுதான் ஆத்மசோதனை. ஆத்ம சோதனையினால் ஆத்ம சக்தியின் பிரபாவம் நமக்குப் புலப்படுகிறது. நம்முடைய பலஹீனங்களின் மீது நாம் வெற்றி கொள்வதுதான் வாழ்க்கையில் வெற்றி காண்பதாகும். நம்முடைய குறைபாடுகளை அகற்றிக்கொண்டு, நம்மிடத்திலே யுள்ள பூரணத்துவ சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் காந்தியடிகள் ஒருவழி கூறுகிறார்:- நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிற அஹிம்ஸா சக்தியை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். நம்மிடத்திலேயுள்ள சக்தியை வெளிப் படுத்திக்காட்ட வேண்டு மானால், நாம் முயற்சி செய்தாகவேண்டுமென்பதை அவர் எவ்வளவு அழகாக வலியுறுத்திக் காட்டுகிறார்? இந்த முயற்சியை எப்படிச் செய்வது? காந்தியடிகள் கூறுகிறார் - மனிதன் தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறானென்று சொன்னால், அது தான் அஹிம்ஸை என்கிற சங்கல்பம். ஹிம்ஸையின் நடுவில் வசிக்கிற அவன், இருதய சுத்தத்தோடு, அஹிம்ஸைதான் என்வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்லக் கடவன். அவன், அஹிம்ஸையை எவ்வளவு தூரம் அப்பியசிக்கிறானோ அவ்வளவு தூரம் அவன் மானிட ஜாதியை அழகுபடுத்தியவனாகிறான். மனித னுடைய சுபாவம் ஹிம்ஸையல்ல; அஹிம்ஸைதான். ஒருவனுடைய தேகத்தைப் பார்த்து மனிதன் என்று சொல்கிறோமில்லை; அவனுடைய ஆத்மாவையே மனிதன் என்று சொல்கிறோம். ஆத்ம தரிசனம் பெறு வதற்கான ஒரு கருவியாகவே, மனிதன் தன் தேகத்தை உபயோகிக் கிறான். மனிதன், தனது சங்கல்பத்தை எப்படி உறுதியாகக் கடைப் பிடிப்பது? ஒருவன், தன் மனத்தை அந்தர்முகமாகச் செலுத்தத் தொடங்குவானாகில், தன்னிடத்தில் நன்மையும் தீமையும் கலந்திருப் பதைக் காண்கிறான். நல்ல மனமென்றும், தீய மனமென்றும் இரண்டு மனங்கள் அவனிடத்தில் வேலைசெய்கின்றன. இவற்றைத் தெரிந்து கொள்ள மனிதனுடைய மனச்சாட்சிமட்டும் போதாது. மனச் சாட்சி யென்பது எல்லோருக்கும் ஒன்றாயிருப்பதில்லை யென்று காந்தியடிகள் கூறுகிறார்:- அப்படியானால் அந்த மனச்சாட்சிக்கு வழிகாட்டக் கூடியது எது? காந்தியடிகள் கூறுகிறார்:- குற்றங் குறைகளில்லாத ஒரு வழிகாட்டி எனக்கிருப்பதாக நான் சொல்ல வில்லை. மனிதன், குற்றங் குறைகளில்லாதவன் என்று சொன்னால் அதில் அர்த்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய அநுபவமும் அப்படித்தான் கூறுகிறது. ஆனால், நமக்கு வழி காட்டியே இல்லையென்று சொல்வதற்கு மில்லை. உலகத்து மகான் களின் அநுபவங்கள், நமக்குச் சிறந்த வழிகாட்டியாயிருக்கின்றன. மற்றும் உண்மைகள் பல இல்லை; ஒரே ஓர் உண்மைதான் இருக்கிறது. அதுதான் சத்தியப் பொருளாகிய கடவுள். அதனையே அஹிம்ஸை என்ற பெயரிட்டழைக்கின்றனர். ஒரு முடிவுக்குட்பட் டிருக்கிற மனிதர்கள், முடிவில்லாத சத்தியம், அன்பு இவற்றின் முழு வரூபத்தை அறிய முடியாது. ஆயினும் நமக்கு வழிகாட்டிச் செல்லக்கூடிய அளவுக்கு அந்தச் சத்தியத்தையும் அன்பையும் பற்றித் தெரிந்துகொண்டிருக்கிறோம். சத்தியத்தையும் அன்பையும் பிரயோகம் செய்கிறபோது, நாம் தவறிவிடலாம்; சிலசமயங்களில் கேவலமாகவும் தவறிவிடலாம்; ஆனால் மனிதன் சுதந்திர புருஷன். சுதந்திரம் என்று சொன்னால் தவறு செய்யவும் செய்த தவறைத் திருத்திக்கொள்ளவும் உரிமையுண்டல்லவா? காந்தியடிகள் தவறுகள் செய்திருக்கிறாரா? ஆம்; எல்லா மனிதர்களுந்தான் தவறு செய்கிறார்கள். ஆனால், எத்தனை பேருக்குத் தங்கள் தப்பை உணர்ந்து கொள்ளும் சக்தி இருக்கிறது? அப்படி உணர்ந்தாலும் அதனைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளக் கூடிய தைரியம் எத்தனைபேருக்கு இருக்கிறது? காந்தியடிகள் பூரண புருஷர் என்பதற்கு அடையாளமென்னவென்றால், அவர் தமது தப்பை ஒப்புக்கொள்வது தான். மற்றும், அவர் தமது சகாக்களின், தமது குடும்பத்தாரின், தமது அரசியல் கட்சியினரின் குற்றங்களையும் குறைபாடுகளையும் தைரியமாக வெளியிட்டுவிடுகிறார். ஹிந்து மதம் எவ்வளவு க்ஷீணதசையடைந்து போய்விட்டதென்பதை அவர் ஹிந்து மதத்தினருக்கு எடுத்துக் காட்டுவதில் பின்வாங்குகிறாரில்லை. தம்மிடத்திலேயுள்ள சாத்தான் சக்திகளைப் பகிரங்கமாக வெளியிடத் தயங்காத ஒருவர், ஒரு மகத்தான ஏகாதிபத்திய அரசாங்கத்தை சாத்தான் அரசாங்கம் என்று சொல்ல ஏன் தயங்குகிறார்? மேலே எடுத்துக் காட்டப்பட்ட காந்தியடிகளின் வாசகத்தி லிருந்து, அவர், சுய ஆட்சி என்பதற்கு என்ன பொருள் கொண்டிருக் கிறார் என்பது தெரிய வரும். எவன், தன்னைத்தான் ஆண்டு கொள்கிறானோ அவன் தான் உயர்ந்த சீர்திருத்த வாதி யென்பது, அவருடைய சித்தாந்தத்திற் கெல்லாம் அடிப்படையான தத்துவமா யிருக்கிறது. மனிதனுடைய சுய திருத்தத்தின் விரிவுதான், பொருளாதார அரசியல், சமுதாய, மதச் சீர்திருத்தங்கள். பொருளாதார சீர்திருத் தத்தைப் பற்றிக் காந்தியடிகள் கூறுகிறார்:- இந்தியப் பொருளாதார சுதந்திரம் என்று சொன்னால், பிரதி மனிதனும் மனப்பூர்வமான தனது சுய முயற்சியினால் பொருளாதார உயர்வை அடைவதுதான். ஒவ்வொரு மனிதனும் மனப்பூர்வமாக இந்த முயற்சியில் இறங்குவா னாகில் அவன், தான் வசிக்கிற சமுதாயத் தோடு தொடர்பு கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். இந்திய தேசீயப் பொருளாதாரப் பிரச்னையைப் பற்றிக் காந்தியடிகள் பின்வருமாறு கூறுகிறார்:- உண்மையான அபேதவாதத்தை நமது முன்னோர்கள் நமக்கு அருளிப்போயிருக்கிறார்கள். பூமி முழுவதும் கோபாலனுக்குச் சொந்தமானது. அப்படியிருக்க, உனது பூமியென்றும் எனது பூமி யென்றும் எல்லை வகுத்துக் கொள்வதெப்படி? அப்படி எல்லை வகுத்துக் கொள்கிறவன் மனிதன். எனவே, அவனே அந்த எல்லையை ரத்து செய்துவிட வேண்டியவன். கோபாலன் என்ற வார்த்தைக்கு இடையன் என்பது அர்த்தம். அது - கோபாலன் என்ற வார்த்தை - கடவுளையும் குறிக்கிறது. நவீன பாஷையில், கடவுள் என்பது ராஜ்யத்தையே அதாவது ஜனங்களையே குறிக்கிறது. இன்று, பூமி, ஜனங்களுக்குச் சொந்தமாயிருக்கவில்லை யென்பதுண்மைதான். ஆனால் இந்தக் குற்றம், நமது பெரியோர்களின் உபதேசத்திலில்லை. அந்த உபதேசப்படி வாழ்க்கையை நடத்தாதது நமது குற்றம். சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் உள்ள தொடர்பு குடும்பத் தொடர்பு போன்றது. குடும்பத்திற்கு ஒரு நீதி; தேசத்திற்கொரு நீதி என்பது கூடாது. பொதுஜன சத்தியாக்கிரக விஷயத்தில் நாம் பரிசோதனை செய்ய வேண்டுமானால், அதற்குக் குடும்ப விவகார மொன்றை உதாரணமாக வைத்துப் பார்க்க வேண்டும். அதாவது, பொதுஜன விவகாரங்களில் ஈடுபடுகிற ஒரு மனிதன், மானிட சமுதாய மனைத்தையுமே ஒரு குடும்பமாகக் கவனிக்க வேண்டும். அப்படி யானால், ஒரு கிரகதன், திருடர்கள், போக்கிரிகள் முதலியோர் விஷயத்தில் எப்படி நடந்து கொள்வது? இதற்கு விடை பலாத்காரமில்லாத புரட்சியைச் செய்வதுதான். ஒரு தனி மனிதனோ, அல்லது ஒரு தேசமோ, பிறரால் ஆதிக்கங் கொள்ளப்படுகிற போதுஅவன், அல்லது அந்தத் தேசம் சும்மாயிருக்கலாமா? இந்தக் கேள்விக்கு விடை யளிக்குமுகத்தான், காந்தியடிகள் மானிட ஜாதிக்கு மகத்தான சேவையைச் செய்திருக்கிறார். அவ்வப்பொழுது பலவிதமான சந்தர்ப்பங்கள் எழுவதுண்டு. சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு அஹிம்ஸையை அநுஷ்டிக்க வேண்டுமானால், அதற்குப் போதிய ஞானம் வேண்டும். இந்த ஞானம் பெறுவது கடினமானதுதான். ஆனால் தனிப்பட்டவர்கள் விஷயத்தி லேயே இது கடினமா யிருக்கிறபோது, ஒரு தேசம் பூராவுக்கும் இதனை - அஹிம்ஸையை - அநுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டுமானால் அஃது எவ்வளவு கடினமான காரியம்? தென்னாப் பிரிக்காவிலும் இந்தியாவிலும், அஹிம்ஸையை அநுஷ்டானத் திற்குக் கொண்டுவரக் கூடிய பலசந்தர்ப்பங்கள் காந்தியடிகளுக்குக் கிடைத்திருக்கின்றன. இதனால், அவர் இந்த அஹிம்ஸை முறையை - சத்தியாக்கிரக தத்துவத்தை - எப்படிக் கையாள்வதென்பதை நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார். சத்தியாக்கிரக தத்துவத்தின் புறச் சின்னமாகவே அவர் கைராட்டினத்தை உபயோகிக்கிறார். நவீன நாகரிகப் போக்கானது, அஹிம்ஸை - சத்தியாக் கிரகத்திற்கு அநுசரணையா யிருக்கவில்லை; இருக்கவும் முடியாது. ஆனால் இந்த நவீன நாகரிகமானது, பல அமிசங்களிலும் தவறிப் போயிருக்கிறது. இதனை மீட்க வேண்டுமானால், இதனுடைய பழைய முறைகள், சம்பிரதாயங்கள் முதலியவற்றை மாற்றியமைக்க வேண்டுமென்று சீர்திருத்த அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியானால் அந்த அறிஞர்கள் என்ன செய்யவேண்டும்? சத்தியாக்கிரக பாடம் பயில வேண்டும். அப்படிப் பயிலுவதன்மூலம் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தனி மனிதர் களிடத்திலே மட்டுமல்ல; அகில உலகத்திலும் மூன்று விதமான தீய சக்திகள் இருக்கின்றன. அவைதான் காமம், குரோதம், லோபம் என்பன. இந்தச் சக்திகள் உலகத்தைப் பல பிரிவுகளாகச் சீரழிக் கின்றன. ஆனால், தனி மனிதனிடத்தில் இந்தச் சக்திகள் இருப்பதால் தான், இவை உலகத்தில் செழித்து வளர்கின்றன. இந்த மூன்று தன்மைகளையுமுடைய மனிதன், உலகத்தோடு சமாதானமாக வாழ முடியாது. உண்மையான ஒவ்வொரு சத்தியாக்கிரகியிடமும் முக்கியமாக இருக்க வேண்டியது அஞ்சாமை. ஒருவன், தன்னிடத்திலுள்ள கீழான சுபாவங்களோடு போராடும் விஷயத்தில் மட்டுமல்ல, பிரபஞ்ச ஆசைகளின் விஷயத்திலும் அஞ்சாமையோடு எதிர்த்துப் போராட வேண்டும். நமது வாழ்க்கையில் ஒவ்வோர் அடியெடுத்து வைத்து முன்னேறுகிற போதும், நமக்கு ஆத்ம தைரியம் வேண்டும். அந்தத் தைரியமானது, நம்மிடத்திலே அந்தர்யாமியாயுள்ள சக்தியோடு நாம் ஒன்றுபடுகிற போதுதான் நமக்கு உண்டாகும். ஒரு கோழையினுடைய பாதையில் ஒரு சத்தியாக்கிரகி செல்லமுடியாது. இதனைக் காந்தியடிகள் பின்வருமாறு வலியுறுத்திக்கூறுகிறார்:- இந்தியா தனது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள தனது ஆயுத பலத்தை உபயோகித்தால் அதனை நான் சகித்துக்கொள்ள முடியும். ஆனால், தன் மானம் அழிக்கப்படுகிறபோது அதனை நிராதரவுடன் கோழைத் தனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதை நான் சகித்துக் கொண்டிருக்க மாட்டேன். *** நம்மையும், நமது திரீகளையும், நமது தேவாலயங் களையும் அஹிம்ஸையின் மூலமாகப் பாதுகாத்துக் கொள்ள நமக்குத் தெரியாவிட்டால், நாம் மனிதர்களாயிருக்கும் பட்சத்தில், சண்டை போட்டாவது இவைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வாசகங்கள் மேனாட்டார் பலருக்கு ஒரு குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. சிறிது காலத்திற்கு முன்னர் சீன - ஜப்பானிய யுத்த சம்பந்த மாகச் சில சீனர்கள் காந்தியடிகளைப் போய்ப் பார்த்த போது, அவர் கூறியதன் கருத்துக்கள் என்னவென்றால், சீனாவில் இனியும் அஹிம்ஸையைப் பெருவாரியான முறையில் அநுஷ்டிக்க முடியாது. ஏனென்றால் அதற்குக் காலாவதியாகிவிட்டது. சமாதான சேனையை ஒரு நாளில் நிர்மாணிக்க முடியாது. துப்பாக்கியை உபயோகிக்கக் கற்றுக்கொள்வது சுலபம். ஆனால் அஹிம்ஸையில் பயிற்சி பெறுவது மிகக் கடினம். சீனாவில் தனிப்பட்ட நபர்கள்தான் அஹிம்ஸையை அநுஷ்டிக்க முடியும்: இப்படி அநுஷ்டிக்கிறவர் களின் தொகை பெருகுகிற போது, அவர்களின்மூலம் சீனா காப்பாற்றப்படலாம். ஒரு ஜாதியின் கலாசாரம், அதன் ஜனங் களுடைய இருதயத்திலும் ஆத்மாவிலுமே குடிகொண்டிருக்கிறது. *** ஜப்பான் துப்பாக்கி முனையின் துணைகொண்டு, சீனர்களின் வாயில் லாகிரி வதுக்களை திணிக்க முடியாது. சீனர்களுக்கு அவர் அளித்த செய்தியாவது:- சீனர்களுடைய ஆத்மாவை ஜப்பானியர்கள் கறைப்படுத்த முடியாது. சீனாவின் ஆத்மாவுக்கு ஊறு ஏற்படுமானால், அது ஜப்பானால் இராது. எல்லாத் தேசங் களுக்கும் இந்த வாசகம் பொருந்தும். சிறப்பாக, பிரிட்டன் இது விஷயத்தில் கவனம் செலுத்துதல் நல்லது. சமாதான சேனையைத் திரட்டும் சக்தி அதற்கிருக்கிறது. பிரிட்டனின் ஆயுதச் சேகரிப்புத் திட்டத்தை மற்ற நாட்டினர் பின்பற்றுகிறபோது, அது சத்தியாக் கிரக சேனையைத் தயார்ப்படுத்துமானால் அதனையும் மற்ற நாட்டார் பின்பற்றமாட்டார்களா? கடவுள் நெறியைப் பின்பற்றி, பிரிட்டன், சமாதான சேனையைத் தயார்ப்படுத்துமாக. ஒற்றுமைக்காக உபவாசம் ரெவரெண்ட் பாஸ் வெஸ்ட்காட் எம்.ஏ., எல்.எல்.டி (இந்தியாவின் பிரதம பாதிரி, கல்கத்தா) காந்தியடிகளின் வாழ்க்கை அமிசத்தில் ஏதேனுமொன்றைக் குறித்து எழுதுமாறு நான் கேட்கப்பட்டிருக்கிறேன். எதைப்பற்றி எழுதுவது என்கிற கேள்வி எழுகிறபோது, 1924-ம் வருஷடம் செப்டம்பர் மாதம் அவர் இருபத்தோருநாள் உபவாசம் இருந்தா ரல்லவா, அதற்கான காரணங்களைப்பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் எழுதுவது சாலப் பொருத்தமாயிருக்கு மென்று என் மனத்தில்பட்டது. டெல்லிக்கருகாமையில் வசித்து வந்த முலீம்களிடையே சுவாமி சிரத்தானந்தருடைய தலைமையில் நடைபெற்ற சுத்தி இயக்கத்தின் ஓரளவு காரணமாக மேற்படி 1924 - ம் வருஷத்து இடைக்காலத்தில் ஹிந்து - முலீம் பிணக்கு பயப்படும்படியான விகிதத்திற்கு வளர்ந்து விட்டது. இந்தச் சமூகப் பிணக்கானது, காந்தியடிகளுக்கு அதிக மனோ வேதனையை உண்டுபண்ணியது. ஏனென்றால் சென்ற முப்பது வருஷ காலமாக அவர் ஹிந்து - முலீம் ஒற்றுமைக்காக வெகு பிரயாசைப் பட்டிருக்கிறார். ஹிந்து - முலீம் கலகங்கள் ஆங்காங்கு ஒன்றன் பின்னொன்றாகக் கிளம்பின. இதனால் காந்தியடிகளின் மனோ வேதனை அதிகமாயிற்று. கடைசியில் 17-09-1924 -ல் இருபத்தோரு நாள் உபவாசமிருப்பதாக முடிவு செய்தார். இதைப்பற்றி அவர் அப்பொழுது குறிப்பிட்டார்:- இஷ்டத்திற்கு விரோதமாகச் செய்யப்பட்ட பாவங்களை மன்னிக்க வேண்டுமென்று ரத்தங் கசிந்த என் மனம் பிரார்த்தனை செய்கிறதே அந்தப் பிரார்த்தனைதான் இந்த உபவாசம். இதன்மூலமாக அவர் ஹிந்துக்களின் குற்றச்செயல்களுக்குத் தம்மைப் பொறுப்பாளி யாக்கிக்கொண்டார். ஒருவர் மதத்தை மற்றொருவர் தூற்றுவதும், பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதும், பொய்சொல்வதும், நிரபராதிகளின் மண்டைகளை உடைப்பதும், கோயில்களையோ, மசூதிகளையோ சீரழிப்பதும், கடவுளை மறுப்பதாகும் என்பது அவருடைய வாசகம். அவர் தாம் உபவாசமிருக்கப் போவதாகத் தீர்மானித்திருப்பதைத் தமது நண்பர்களுக்குத் தெரிவித்தார். நண்பர்கள், உண்ணாவிரதமிருக்க வேண்டாமென்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை. ஸ்ரீராமபிரா னுடைய உதாரணத்தை எடுத்துக்காட்டி, தாம் செய்துகொண்டுள்ள முடிவினின்று மாறமுடியாதென்று தெரிவித்துவிட்டார். அப்படியே 18.09.1924 - லிருந்து உபவாசமிருக்கத் தொடங்கினார். அதே தினத்தில், ஹகீம் அஜ்மல்கான், சுவாமி சிரத்தானந்தர், மௌலானா முகம்மதலி ஆகியோர் சேர்ந்து கையெழுத்திடப்பெற்ற ஓர் அறிக்கை இந்தியாவி லுள்ள பிரபலதர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் ஒரு சமாதான மகாநாடு கூடப்போவதாகவும், அதற்கு பிரபல ஹிந்து, முலீம், ஐரோப்பியத் தலைவர்களும், பல கட்சிப் பிரதிநிதிகளும் வரவேண்டு மென்றும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சுமார் முந்நூறு பேர் இந்த அழைப்புக் கிணங்கினர். இத்தைனைபேர் அழைப்புக் கிணங்கியதற்குக் காரணம், இந்தியாவிலுள்ள பல வகுப்பினரும் காந்தியடிகளிடம் பரம விசுவாசம் பூண்டிருந்ததும் அவரை ஒரு தேசீய பொக்கிஷமாகக் கருதி வந்ததுமேயாம். அப்படிப்பட்டவர் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய விதமாக உபவாசம் இருப்பதற்குக் காரணம் எதுவோ அதனை அகற்ற ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டு மென்று அனைவரும் கருதினார்கள். காந்தியடிகளே, தமது நண்பர் களிடத்தில் கூறினார்:- இறந்துபோவதற்காக நான் உபவாசமிருக்கத் தீர்மானித்தேனில்லை. தேசத்திற்கும் கடவுளுக்கும் தொண்டு செய்வதற்கு, இன்னும் உயர்வானதும், தூய்மையானதுமான வாழ்க்கையை நடத்த வேண்டு மென்பதற்காகவே இந்த உபவாசத்தை ஆரம்பித்திருக்கிறேன். நான் இறந்துபோகக்கூடிய ஒரு நெருக்கடி ஏற்படுமானால் (மனித யத்தனத்தில் அந்த மாதிரியான நெருக்கடி ஏற்படாதென்று நான் நினைக்கிறேன்.) நான் நிச்சயமாக என் உபவாசத்தை நிறுத்திக்கொண்டுவிடுவேன். சமாதான மகாநாடு, 26 . 09 . 1924 - ல் டெல்லி சங்கம் தியேட்டரில் கூடியது. மேடையின் ஒரு புறத்தில், சிலுவையிலறையப்பட்ட யேசுநாதரின் படமும், மற்றொரு புறத்தில் காந்தியடிகளின் படமும் வைக்கப்பட்டிருந்தன. மேடைக்கு முன்னால், கூட்டத்தினர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். உபசரணைக் கூட்டத் தலைவர் என்ற ஹோதாவில் மௌலானா முகம்மதலி, அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில், மகாநாட்டின் நோக்கமென்ன வென்பதைக் குறிப்பிட்டார். சமூக சச்சரவுகள் ஏற்படுவதற்கு மத சம்பந்தமான காரணங்களென்ன வென்பதை அறிந்து அவற்றிற்குப் பரிகாரந்தேடுவது தான் மகாநாட்டின் முக்கிய நோக்கம். மற்ற அரசியல், பொருளாதாரக் காரணங்களைப் பற்றிப் பின்னர் பரிசீலனை செய்து பார்க்கலா மென்று கருதப்பட்டது. மகாநாட்டின் தலைவராக பண்டித மோதிலால் நேரு, ஏகமனதாகத் தெரிந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் சில பிரசங்கங்கள் நடை பெற்றதும், மகாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டுவரப் பட வேண்டு மென்பதைப்பற்றி நிர்ணயிக்க, எண்பது பேரடங்கிய ஒரு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது. மகாநாட்டுக்குக் காந்தியடிகள் ஒரு செய்தியனுப்பியிருந்தார். அதில், அவர், மன ஒற்றுமைதான் தேவை யென்றும், அவரவரும் தாம் தாம் பார்த்த வண்ணம் உண்மையைக் கூற வேண்டு மென்றும், பரபரம் தொழுகை தலங்கள் அழிந்துபட்டுப் போனாலும் உண்மையையே சொல்லவேண்டுமென்றும் வந்திருப்போருடைய உண்மையான மனப்பான்மை, தமக்குத் தெரிய வேண்டுமென்றும் துரதிருஷ்டமான இந்த நாட்டுக்குச் சமாதானமே கிடையாதென்று அப்பொழுது தாம் தெரிந்துகொண்டு விடுவதாகவும் குறிப்பிட்டி ருந்தார். மத விஷயத்தில் அவரவர் மனச் சாட்சிப்படி நடக்கப் பூரண உரிமை இருக்க வேண்டுமென்ற காந்தியடிகளின் கொள்கையை ஆதரிப்பதாகவும், தொழுகை தலங்கள் சீரழிக்கப்படுவதைக் கண்டிப்ப தாகவும், யாரொருவர் தம் மனச்சாட்சிப்படி மதம் மாறுகிறார்களோ அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாதென்றும், பலவந்தமாக யாரையும் மதத்தில் சேர்க்கக் கூடாதென்றும் குறிப்பிட்டு ஒரு தீர்மானம் தலைவரால் பிரேரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வெறும் தீர்மானங்களை நிறைவேற்றுவதனால் மட்டும் ஹிந்து - முலீம் ஒற்றுமை ஏற்படா தென்றும், மன மாற்றம் ஏற்பட வேண்டு மென்றும் மகாநாடு தொடங்கப் படுவதற்கு முன்னர் எங்களுக்கு ஞாபக மூட்டப்பட்டது. மகாநாடு நடைபெற நடைபெற இந்த உண்மை எங்களுக்கு நன்கு புலனாயிற்று. மகா நாட்டில் கொண்டு வரப்பட வேண்டிய தீர்மானங்களைப் பற்றி விஷயாலோசனைக் கமிட்டியில் வாதம் நடைபெற்றபோது, பிரதிநிதிகளுக்குள் ஒரு வித மனக்கசப்பும் சந்தேக மனப்பான்மையும் நிலவியிருந்தன. பரபர நல்லெண்ணத்தில் பிரதிநிதிகள் சந்தேகங் கொள்ளலானார்கள். ஆனால் கூட்டத்தின் ஐந்தாவது நாள் பிரதிநிதிகளிடத்தில் ஒரு மன மாற்றம் ஏற்பட்டது. மௌலானா அபுல்கலாம் அஜாத் நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்பொழுது அவர் காட்டிய நாவன்மையையும், அதில் காணப் பெற்ற தாராள மனப்பான்மையை யும் பலர் வியந்து பாராட்டினார்கள். இவ்வளவு தாராள மனப் பான்மை நீங்கள் காட்டுகிறீர்களே; இதற்குப் பிரதியாக நீங்கள் என்ன பெறப் போகிறீர்கள்? என்று ஒரு நண்பர் அவரைப் பார்த்துக் கேட்டபோது, அந்த நண்பரை, எல்லோரும் கூச்சலிட்டு அடக்கி உட்கார வைத்துவிட்டார்கள். பேரம் பேசுகிற மனப்பான்மை போய், பரபரம் அவரவருடைய பழக்க வழக்கங் களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. ஆரம்ப தினங் களில் பிரதிநிதிகள் தங்கள் உரிமைகளை வற்புறுத்திப் பேசினார்கள்; பிந்திய நாட்களில், பொறுப்புக்களை உணர்ந்து பேசினார்கள். உபவாசத்தின் பதினோராவது நாள், காந்தியடிகளின் தேக நிலை கவலைக்கிடமாகி விட்டது. மகா நாடு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீ சி. எப். ஆண்ட்ரூஸிடமிருந்து உடனே வருமாறு எனக்கு ஒரு சீட்டு வந்தது. அப்பொழுதே நான் புறப்பட்டுச் சென்றேன். போகிற வழியில் டாக்டர் அப்துல் ரஹ்மானை அழைத்துக் கொண்டு சென்றேன். அவரும், அன்று மாலை, காந்தியடிகளைப் பரிசோதனை செய்வதாகச் சொன்னார். இதற்காக, நாங்கள் காந்தியடிகள் தங்கி யிருந்த வீட்டில் அதிக நேரம் தாமதிக்க வேண்டியிருந்தது. அப் பொழுது மாலை நேரம். காந்தியடிகள், என்னையும் ஸ்ரீஆண்ட்ரூஸை யும் அழைத்து, தமது மாலைப் பிரார்த்தனையின் போது, தமக்குகந்த கிறிதவ மதத் தோத்திரப்பாடலாகிய அழைத்துச் செல்; அருட் சோதியே! என்ற பாடலைச் சொல்லச் சொன்னார். அப்படியே நாங்கள் சொன்னோம். அப்பொழுது காந்தியடிகளின் மெலிந்த உருவம் சாய்வாகப் படுத்துக்கொண்டிருந்தது. அறையில் குறைவான வெளிச்சமிருந்தது. அந்தக் காட்சி எங்கள் மனதை உருக்கிவிட்டது. கடைசியில் டாக்டரின் அறிக்கை கிடைத்தது. அஃது எங்களுக்கு நம்பிக்கையை யூட்டியது. மகாநாடும் முடிவுற்றது. இது நல்ல பலனையே கொடுத்த தென்று எல்லோரும் அங்கீகரித்தார்கள். ஆனால் ஹிந்து - முலீம் ஒற்றுமை அநுஷ்டான பூர்வகமாக ஏற்படுவதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்குமென்று எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். ஹிந்து - முலீம் ஒற்றுமை நாள் என்று 08.10.1924-ல் இந்தியாவெங்கும் கொண்டாடப் பட்டது. அப்பொழுது கல்கத்தா டேட்மான் பத்திரிகையில் ஓர் அன்பர் எழுதியிருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது:- நியாயத்திற்கேற்ற அரசியல் வாதங்கள் பயனளிக்காத சமயத்தில், காந்தியடிகளின் உபவாசத்தினால் உண்டுபண்ணப்பட்ட மத உணர்ச்சிகள் நற்பயனை அளித்தன. மத விஷயத்தில் ஒருவருக்கொருவர் சமரஸ மனப்பான்மை காட்ட வேண்டுமென்கிற கடினமான வேலைதான் பாக்கியிருக்கிறது. ஆனால், இந்த வேலை, பின்னர் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிகளினால் சுலபமாக நடைபெற முடியவில்லை. காந்தியடிகள் எந்த நோக்கத்துடன் உபவாசத்தை ஆரம்பித்தாரோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டு மாயின், எல்லோருக்கும், தங்கள் இதயத்தில் கடவுள் கொலுவீற்றிருக் கிறாரென்ற நம்பிக்கை விழவேண்டும். அப்பொழுதுதான் எங்கும் சமாதானம் உண்டாகும்; திருவருட் சக்தியின்கீழ் எல்லோரும் ஒன்று பட்டு வாழ்வர். * * * காந்தியடிகளின் சமாதான வாதம் ரெவரெண்ட் ஜாக் சி. வின்லோ (லண்டன்) மகாத்மா காந்தியின் குணவிசேஷத்திலிருந்தும் அவருடைய உபதேசங்களிலிருந்தும் நானடைந்த உற்சாகத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். அவரோடு நான் பழகி யிருக்கிறே னென்பதே, என் வாழ்க்கையில் ஒரு பெரிய பாக்கியமாகும். ஆனால் இந்தச் சிறிய கட்டுரையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். அஃதென்ன வென்றால், யுத்தத்திற்குப் பதிலாக உலகத்தில் எந்தவிதமான சமாதான முறை நிலவவேண்டுமென்று காந்தியடிகள் கூறுகிறாரென்பதுதான். மேனாட்டில் விவகரிக்கப்படுகிற சமாதானவாதமானது, யுத்த முறையை மாற்றியமைக்க முடியாது. யுத்தத்தை மறுக்கிற அளவுக்கும், யுத்தத்தின் விளைவாக வெற்றி யடைகிறவர்களுக்கும் தோல்வி யடைகிறவர்களுக்கும் ஒரே மாதிரியான சீரழிவு ஏற்படுகிற தென்பதை வலியுறுத்திக் காட்டுகிற அளவுக்கும் சமாதான வாதம் சரிதான். அஹிம்ஸை வழியைக் கடைப்பிடிக்க வேண்டு மென்கிற போதும் அது சரிதான். ஆனாலும் இந்த மேனாட்டுச் சமாதானவாத மானது, தீமையை எதிர்த்துப் போராடும் விஷயத்தில், வலிவு குறைந்து நிற்கிறது. இதனால் வாசா கைங்கரியத்தோடு அது திருப்தியடைய வேண்டியி ருக்கிறது. தீங்குகளிழைக்கப் படுகிறபோது அவற்றைக் கண்டு ரத்தங் கொதிக்கிறவர்களும், பலாத்கார ஆக்ரமிப்பை ஏதேனும் ஒரு வழியாக அடக்கிப் போட வேண்டுமென்று ஆவல் கொண்டுள்ளவர் களும், இந்தச் சமாதான வாதிகளை, பலாத்கார ஆக்ரமிப்புக்கு முன்னர், செயலற்று நிற்கிறவர்களென்றுதான் கருதுகிறார்கள். இப்படி அவர்கள் கருதுவதில் நியாயமில்லாமற் போகவில்லை. உதாரணமாக, இத்தாலி, அபிசீனியாவைப் படையெடுத்த காலத்திலும், ஜெர்மனியில், யூதர் களுக்கு விரோதமாக நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்திலும் சமாதான வாதிகளால் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. இதனாலேயே மேனாட்டுச் சமாதான வாதமானது, ஒழுக்க முறையில் சிறந்த தென்று அங்கீகரிக்கப்பட்டாலும், உண்மைக் கிறிதவர் களிடத்திலேகூட அது போதுமான ஆதரவைப் பெறவில்லை. தான் வலியுறுத்துகிற ஒழுக்க நிலை மிக உயர்ந்ததாயிருப்பதால்தான், அதனைப் பெரும்பாலோரான ஜனங்கள் பின்பற்றவில்லை யென்று சமாதான வாதிகள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அவர்கள் வலியுறுத்துகிற ஒழுக்க நிலை மிகக் குறைவாயிருப்பதால்தான், பெரும்பாலோர் அதனைப் பின்பற்றவில்லை. தீமையை எதிர்ப்பதற்கு உயர்ந்த சீல சுபாவமும், அன்பும் தேவை. ஆனால் சமாதானவாதிகள், தீமையை எதிர்க்கும் விஷயத்தில் காட்டுகிற மனப்பான்மையானது, ஒருவித அசட்டை மனப்பான்மையாக இருக்கிற தென்று பல கிறிதவர்கள் நினைக்கிறார்கள். எந்த விதமான தீமையும், தெய்வ சக்தியின் சாயல் போன்ற தொரு சக்தியைக் கொண்டு எதிர்க்கப்பட வேண்டு மென்றே ஜனங்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில்தான், காந்தியடிகளின் சமாதானவாதமானது, மேனாட்டுச் சமாதான வாதத்தைவிடச் சிறந்ததாயிருக்கிறது. காந்தியடிகள், தீமையைத் தீவிரமாக எதிர்த்துப் போராடுகிறார். அவருடைய சத்தியாக்கிரகமானது, அஹிம்ஸையைத் தன்னகத்தே கொண்டிருப்ப தோடு கிரியா சக்தியையும் உடையதாயிருக் கிறது. காந்தியடிகள் எழுதுகிறார்:- அஹிம்ஸை யென்று சொன்னால், அஃது அன்பு, நீதி என்பது அர்த்தம். உடன்பாட்டு அர்த்தத்தில் அஹிம்ஸையைக் கவனிப்போமானால், அது, விசுவப்பிரேமை, விசால நீதி என்பனவாகப் பரிணமிக்கிறது. ***என்னைப் பொறுத்த மட்டில், கடவுளைத் தெரிந்து கொள்வதற்கு அஹிம்ஸை ஒன்றுதான் வழி. சத்தியாக்கிரகத் தின் சாரமென்ன வென்றால், பலாத்காரத்தில் ஈடுபடாமலிருப்பது மட்டுமல்ல; எதிரியினிடத்தில் எண்ணத்தின் மூலமாகப் பலாத் காரத்தையோ துவேஷத்தையோ காட்டக்கூடாது. அந்த எதிரியை, அன்பினாலும், தான் துன்பமநுபவிப்பதினாலும் மாற்ற முயற்சி செய்ய வேண்டும். ஆனால் சத்தியாக்கிரகத்திற்கு எதிர்க்கிற சக்தியும் உண்டு. அதுதான் ஆத்ம சக்தி. தீமையை எதிர்க்க, இந்தச் சக்தியைத் தீவிரமாக உபயோகிக்க வேண்டும். அப்படி உபயோகித்து வெற்றி பெறுகிற வரையில் அது சும்மாயிராது. இதற்காக, மரண பரியந்தம் துன்பமநுபவிக்க அது தயாராயிருக்கும். இந்தியாவின் மீது பிரிட்டிஷார் செலுத்தும் ஆதிக்கமானது, இந்தியாவுக்கும் பிரிட்டிஷாருக்குமே தீமை பயப்பதென்று காந்தியடிகள் கருதி, பிரிட்டிஷ் ராஜ்யத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட, தமது ஆத்ம சக்தி யனைத்தையும் உபயோகித்தார். அந்நியர்களிடத்தில் அவருக்குத் துவேஷமில்லை; அதற்கு மாறாக அவர்களிடத்தில் அன்பும் நல்லெண்ணமும் கொண்டிருக்கிறார். ஆயினும், தமது சத்தியாக்கிரகக் கொள்கைக் கிணங்க, அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கிறார். மேனாட்டு ஆதிக்கத்தினா லேற்படுகிற தீயொழுக்கங்களை எதிர்த்துப் போராடாமல் சும்மாயிருக்க வேண்டு மென்று அவர் தமது நாட்டு ஜனங்களுக்கு உபதேசிக்கவில்லை. பலாத்காரத்தைவிட சும்மா யிருக்கிற அடிமை மனப்பான்மை மிகக் கேவலமான தென்று கருதியே, இந்த அடிமை மனப்பான்மையை உடைத்தெறிய அவர் முயல்கிறார். அவர் தமது பலாத்காரமற்ற ஒத்துழையா இயக்கத்தின் மூலம், இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறும் வழியைக் காட்டிக் கொடுத்திருக்கிறார். இந்த வழியின் மூலம் தீமையை எதிர்க்க முடியும்; ஆனால் எதிரியினிடம் துவேஷமும் இராது. அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமாகத் தொடுக்கப் படுகிற பலாத்கார யுத்தத்தைக் காட்டிலும் இந்தச் சத்தியாக்கிரக யுத்தம் உக்கிரமானது. ஆனால் அதே சமயத்தில், இந்தச் சத்தியாக்கிரக யுத்தத்தில் ஈடுபடுகிறவர்களிடம், ஆத்ம ஒழுங்கு, துன்பஅநுபவம், அன்பு முதலியன அதிகமாக இருக்க வேண்டும். இந்தச் சத்தியாக்கிரக வழியானது, கிறிதவ தர்மத்தை அநுசரித்ததாகவே இருக்கிறது. காந்தியடிகளே, யேசுநாதரை சத்தியாக்கிரகிகளின் அரசன் என்று போற்றியிருக்கிறார். யேசுநாதர், ரோமாதிபத்தியத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை யென்பதுண்மை. அவருக்கு ரோமாதிபத்தியத்தின் தீமையைக் காட்டிலும் தமது ஜனங்களினிடத்திலும், அவர்களின் தலைவர் களினிடத்திலு முள்ள தீமை அதிகமென்று அவருக்குப் புலப்பட்டது. இந்தத் தீமைகளை அவர் - யேசுநாதர் - தீவிரமாக எதிர்த்துப் போராடினார். இதற்காக மரணத்தையும் அடைந்தார். ஆனால் இந்தத் தீமைகளுக்குக் காரண மாயிருந்தவர்கள் யாரோ, பாவச் செயல்களுக்குக் காரணமாயிருந் தவர்கள்யாரோ அந்த ஜனங்களிடத் தில் அவர் தீவிரமான அன்பு செலுத்தினார். அவர்கள் கையினாலேயே சந்தோஷத்துடன் மரணமடைந்தார். ஏன்? அவர்களையும் அகில உலக ஜனங்களையும் பாவத்தினின்று மீட்பதற்காக. இந்தச் சத்தியாக்கிரக தத்துவத்தை யேசுநாதரின் மலைப் பிரசங்கத்திலிருந்தும் டால்டாயிடமிருந்தும் (தமது ஹிந்து மதக் கிரந்தங்களிலிருந்தும்) காந்தியடிகள் கற்றுக்கொண்டார். இதுவே இன்றைய ஐரோப்பாவுக்கும் இன்றைய உலகத்திற்கும் மிகவும் தேவையாயிருக்கிறதென்பது என் உறுதியான நம்பிக்கை. சத்தியாக் கிரகமென்கிற இந்தச் சமாதான வாதமானது, சாந்தமாய் இருப்பதில் பயனில்லை; தற்போது மானிட சமூகத்தைச் சீரழித்துக்கொண்டு வரும் பல தீய சக்திகளைத் தீவிரமாக எதிர்த்துப் போராடுஞ் சக்தியுடைய தாயிருக்க வேண்டும். ஐரோப்பா இன்றுள்ள நிலைமையில் இந்தச் சத்தியாக் கிரகத்தை அநுஷ்டிப்பதென்பது சுலபமான காரியமல்ல. உதாரண மாக ஜெர்மனியிலும், ஆதிரியாவிலுமுள்ள யூதத் தலைவர்கள், தங்களுடைய ஜனங்களை ஒன்றுபடுத்தி அஹிம்ஸை முறையில் எதிர்க்கச் செய்வதென்பது சிரம சாத்தியமான காரியம். அப்படிச் செய்ய முயலுவார்களானால், அவர் களிற் சிலருக்கு மரணம் சம்பவிக்கலாம். ஆனால் அவர்களுடைய மரணமானது, உலகத்திலே முக்கியமான விளைவுகளை உண்டு பண்ணக் கூடுமல்லவா! சத்தியாக் கிரக தத்துவத்தை அநுஷ்டான பூர்வக மாகக் கொண்டுவருவது மிகவும் கடினமான விஷயமே யானாலும், அஃதொன்றுதான், பைத்தியக்கார வீட்டிலுள்ள நம்மை, நியாயம், சமாதானம் என்கிற மைதானத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய நிச்சயமான சாதனமா யிருக்கிறது. இன்றைய உலகம், ஒரு பைத்தியக்கார வீடுமாதிரிதானே. மகாத்மா காந்திக்கு வயதாகிவிட்டது. அவர் தமது ஆயுதத்தைக் கீழே போட்டு விட்டு, தமது அந்திமகாலப் பிரயாணத்திற்குத் தயார்ப் படுத்திக் கொள்ளும் பொருட்டு சந்நியாசம் பூண அவருக்கு இனி உரிமை உண்டு. ஆனால் அவர் விஷயத்தில் எனக்கு இன்னும் ஓர் ஆசை இருக்கிறது. அஃதென்னவென்றால், தமது வாழ்க்கையின் சிகரம் போலிருக்கக் கூடிய விதமாக, தலைவரில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மகாஜனங்களுக்குத் தலைமை பூண்டு அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்ல மாட்டாரா வென்பது தான் அந்த ஆசை. ஏனென்றால் இன்றைய ஐரோப்பிய மகாஜனங்கள், சச்சரவில்லாமல், துவேஷ மில்லாமல் நிரந்தரமான ஒரு சமாதானத்தை ஆவலோடு எதிர்பார்க் கிறார்கள். அப்படிப்பட்ட சமாதானத்தை மேனாட்டாராகிய நாம் அடைய வேண்டு மானால், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், நாம் என்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பவற்றை யெல்லாம் தெரிவிக்கக் கூடியவர் மகாத்மா காந்திதான். * * * தலைமையைப் பற்றிச் சில கருத்துகள் எச்.ஜி. வுட், எம்.ஏ., டி.டி. (வுட்ப்ரூக், ஸெல்லிஓக், பர்மிங்ஹாம்) பூமாலை தொடுப்பதென்பது இந்தியக் கலைகளில் ஒன்று. அப்படி யிருக்க, ஆங்கிலேயனாகிய நான், ஒரு பெரிய தலைவருக்கு எவ்வளவு மரியாதையாகவும் பாராட்டுதலோடும் புகழ் மாலையைச் சூட்டினாலும், அந்த முயற்சியில் தவறிவிடக் கூடும். கொஞ்சம் ஒதுங்கினாற் போலிருந்து, நிதானமாக அவரைப் பாராட்டி நான் எழுதுவேனாகில், மனப் பூர்வமாக நான் அவரைப் புகழவில்லை யென்று சொல்வார்கள். அல்லது அதீதமாகப் புகழ்ந்துவிட்டால், அப் பொழுதும் மனப் பூர்வமாகப் பாராட்டவில்லை யென்று சொல்வார் கள். என்னுடைய காணிக்கை, எவ்வளவு எளிமையாகவும், பயனற்ற தாகவும் இருந்தபோதிலும், அவருடைய எழுபதாவது பிறந்த நாளின் போது அவரை மற்றவர் களோடு சேர்ந்து நானும் பாராட்ட வேண்டு மென்று அழைக்கப்படுகிற போது, அந்த அழைப்பை நான் மறுக்க முடியாது. இங்ஙனம் பாராட்டுகிற முறையில், அவர் இந்திய மகா ஜனங் களுக்கு வழிகாட்டி வருகிற விதத்தைப் பற்றி என் மனத்தில் உதிக்கும் எண்ணங்களை வெளியிட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஒரு மனிதன் அடைந்திருக்கிற செல்வாக்கு எத்தகையது, அதன் சுபாவமென்னவென்பதைக் கொண்டு அவனுடைய பெருமை கணிக்கப்படுவதில்லை. ஆனால் அவனுடைய செல்வாக்கு எவ்வளவு காலம் நீடித்திருக்கிறது, எவ்வளவு தூரம் விதரித்திருக்கிற தென்பவை களைக் கொண்டுதான் அவன் பெருமை கணிக்கப்படு கிறது. சரித்திரக் காரர்கள் இப்படித்தான் பெருமையை அளந்து பார்க்கிறார்கள். சாதாரண ஜனங்கள், இந்தமாதிரி மதிப்பிட்டுப் பார்ப்பதில்தான் திருப்தி கொள் கிறார்கள். இந்த அளவு கொண்டு பார்க்கிறபோது இன்றைய உலகத்தில் பெரிய மனிதர்களாயிருக்கப் பட்டவர்கள் ஹிட்லர், டாலின், முஸோலினி போன்ற சர்வாதிகாரி கள்தான். இவர்களில் சிறப்பாக ஹிட்லர் ஒரு ராட்சதன் மாதிரி உலகத்தில் உலவிவருகிறார். மனிதர்களுடைய மனதை அதிகமாக ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறவர் அவர்தான். இங்ஙனம் அநேக ஜனங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய ஒருவரிடத்தில் உண்மையிலேயே ஒருவிதமான பெருமை இருக்கிறது. ஆனால் உண்மைக் கிறிதவர்களுக்கு, இந்த மாதிரியான பெருமை நிரந்தர மானதுமல்ல; பாராட்டத் தக்கதுமல்ல. யேசுநாதருடைய காலத்தில், மஹா அலெக்ஸாந்தர் ஒரு பெரிய மனிதனாகப் போற்றப் பட்டான். ராணுவ நிபுணன், ஏகாதிபத்திய அரசன் என்ற வகையில் அவனுடைய நட்சத்திரப்பிரகாசம் போன்ற வாழ்க்கையில் ஜனங்களின் மனம் ஈடுபட்டுவிட்டது; அவர்களுடைய ஆசைகளையும் தூண்டி விட்டது. ஜுலிய சீஸர்,1 முப்பத்து மூன்றாவது வயதில் பெயின் தேசத்தில் ஓர் அதிகாரியாயிருந்தான். மஹா அலெக்ஸாந்தர்2 புகழின் உச்ச நிலையை யடைந்து எந்த வயதில் இறந்துவிட்டானோ அந்த வயதைத் தான் அடைந்தும், இன்னும் தான் புகழ் தேடிக்கொள்ள வில்லையே யென்று அவன் - அந்த ஜுலிய சீஸர் - மன வருத்த மடைந்தான். யேசுநாதர் காலத்தில், எந்த ஜாதியார் அதிகமான நாடு களைச் சீரழித்து, அதிகமான ஜனங்களைத் தங்கள் ஆதிக்கத்திற்குட் படுத்திக் கொண்டனரோ அந்த ஜாதியினர்தான் பெருமைவாய்ந்த ஜாதியினர் என்று கருதப்பட்டனர். ஆனால் யேசுநாதர், வேறு மாதிரியான அளவை களைக்கொண்டு ஜனங்களின் பெருமையை அளந்து பார்த்தார். எவனொருவன் உங்களுக்குத் தொண்டனாயிருக்கிறானோ அவன்தான் உங்களிலே பெரியவன் என்று அவர் சித்தாந்தப்படுத்திவிட்டுப் போனார். ஆயினும் பெருமையை எப்படிக் கணித்துப் பார்க்கவேண்டு மென்பதைப்பற்றி மனிதர்கள் கொண்டுள்ள அபிப்பிராயம் இன்னும் அடியோடு மாறவில்லை. இப்படி அடியோடு மாறாவிட்டாலும், கிரேக்க - ரோம ஏகாதிபத்தியத்து ஜனங்கள் மஹா அலெக்ஸாந்தரை வியந்து பாராட்டியதைப்போல், பத்தொன்பதாவது நூற்றாண்டு ஐரோப்பிய மகா ஜனங்கள் நெப்போலியனைப்3 பாராட்டவில்லை யென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. யேசுநாதர், படை வெற்றிகொண்ட வனுடைய புகழுக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டார். ஒரு தொண்ட னுடைய அந்ததை உயர்த்திவிட்டார். யேசுநாதரின் உபதேசங்களுக்கு ஆட்பட்டவர்களைப் பொறுத்தமட்டில், உண்மையான பெருமை, எஜமானத்துவத்திலே இல்லை; ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர் களுக்காகவும் செய்யப்படுகிற சேவையிலேதான் இருக்கிறது. குஷ்டரோகிகளின் நலனுக்காகப்பாடுபட்ட டாமீன் பாதிரியும்,4 ஆப்பிரிக்காவின் முன்னேற்றத்திற்காகத் தமது உயிரையே அர்ப்பணஞ் செய்துவிட்ட டேவிட் லிவிங்டோனும்1 உண்மையான பெரிய மனிதர்களென்று அங்கீகரிக்கப்படுகிறார்கள். நமது சமகாலத்தவர் களில் லாப்ரடார் தீவில் உழைத்துக் கொண்டிருக்கும் டபிளியு டி. கிரென்பெல்லும்2 ஜப்பானைச் சேர்ந்த டி. ககாவாவும்,3 மேற்கு ஆப்பிரிக்காவில் தொண்டாற்றிய ஆல்பர்ட் ஷ்வீட்ஸரும்4 உண்மை யில் பெரிய மனிதர்களாக எப்பொழுதும் போற்றப்படுவார்கள். காந்தியடிகள் இரண்டுவகையிலே பெருந்தன்மை வாய்ந்தவரா யிருக்கிறார். அரசியல் துறையிலே முக்கியதர் என்ற வகையிலும், பராமார்த்திகத் துறையிலே முக்கியதர் என்ற வகையிலும் அவர் போற்றப்படுகிறார். இந்த இரண்டு வகைப் பெருந்தன்மைகளும் அநேகமாக ஒன்று சேர்வதில்லை. பொதுஜன வாழ்விலும், இந்தியாவுக்கும் கிரேட் பிரிட்டனுக்குமுள்ள சம்பந்தத்திலும் காந்தியடிகள் அதிகமான பிரபாவத்தை உண்டுபண்ணியிருக்கிறார். இதனால், நம் காலத்திய அரசியல் வாழ்வில் அவர் ஒரு முக்கிய தானம் பெற்றிருக்கிறார். தவிர, அவர் இந்த மாதிரி ஒரு முக்கிய தானம் பெற்றிருப்பது இந்திய மகா ஜனங்களுக்கும் ஒரு பெருமை. ஏனென்றால் அவர்கள் உண்மையான தலைவர் இன்னாரென்பதை அறிந்துகொண்டு அவரை உண்மையாகப் பின்பற்றி வந்திருக்கிறார் கள். காந்தியடிகளின் தலைமையிலே காணப்படுகிற பெருமை யென்னவென்றால், மற்ற நாடுகளில் தோன்றியிருக்கிற கடுமையான தேசீய இயக்கங்களைப் போலில்லாமல், இந்திய தேசீய இயக்கத்தை அவர் ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினார். தற்போதைய மேனாட்டு நாகரிகத்தைச் சீரழித்துக்கொண்டு வருகிற அரசியல் ஒழுக்க ஹீனங்களுக்கு மாற்றுப்போல், அவர், இந்திய தேசீய இயக்கத்தை இந்த மாதிரி செய்திருக்கிறார். ஹிட்லரும் முஸோலினியும் சுயநலமுள்ள தேசீய இயக்கங் களின் பிரதிநிதிகளாயிருக்கிறார்கள். தங்கள் ஜாதியாருடைய நலனுக்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராயிருக்கிறார்கள். இது விஷயத்தில் தரும நியாயமென்பது இருப்பதாக அவர்கள் கருதுவதே யில்லை. ஒவ்வொரு நாட்டினுடைய தேசீய இயக்கமும் இந்தமாதிரி யான அதி தீவிர நிலைக்குப் போயிருப்பதையே நாம் காண்கிறோம். இதனால்தான் ஒவ்வொரு நாட்டு ஜனங்களுடைய சுதந்திரப் போராட்டமும் பலாத்காரச் செயல்கள், அரசியல் கொலைகள் முதலியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஐரிஷ் சுதந்திரப் போராட்டம் இதற்குச் சாட்சி. பலாத்கார வாதிகள் எப்பொழுதுமே, தாங்கள் எந்த லட்சியத் திற்கு உதவி செய்வதாகக் கருதுகிறார்களோ அந்த லட்சியத்தைத் தாழ்வுபடுத்திவிடுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய பலாத்காரச் செயல்தான். ஒரு நாட்டில் தேசீய உணர்ச்சி வலுத்து நிற்கிற காலத்தில், ஜனங்களோ, தலைவர்களோ, தங்கள் நாட்டு நலனுக்காக எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறார்கள். இந்திய தேசீய இயக்க சம்பந்தமாக, பலாத்காரச் செயல்களும் அட்டூழியங்களும் நடைபெறாம லில்லை. ஆனால் அந்த இயக்கத்தின் தலைவர் இவற்றைக் கண்டித்து வந்தார். இன்று ஜெர்மானியர்களுக்கும் இத்தாலியர்களுக்கும் தலைமை பூண்டு நடத்துகிறவர்களை, பட்சபாதமில்லாமல் பார்த்தால், யாரும் அவர்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள். அவர்களுடைய வார்த்தையில் யாரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்திய தேசீய இயக்கத்தை நடத்திச் செல்கிற தலைவரின் நோக்கங் களை யாரும் கௌரவிக்கிறார்கள்; அவருடைய உண்மையில் எவரும் சந்தேகப்படுவதில்லை. இதனால், இந்திய தேசீய இயக்கத்தை விரும்பாதவர்களும் எதிர்க்கிறவர்களுங்கூட அதனைக் கௌரவிக் கிறார்கள். இந்தியாவின் மத பரம்பரைக்கும், தரும பரம்பரைக்கும் அடிப்படைத் தத்துவமாயுள்ளது எதுவோ அந்த அஹிம்ஸைதான், காந்தியடிகளின் பலாத்காரமற்ற ஒத்துழையா இயக்கத்தின் முக்கிய சித்தாந்தமாயிருக்கிறது. இது சம்பந்தமாகக் காந்தியடிகள் கூறி யுள்ள வாசகங்கள், இந்தியாவின் ஆத்மார்த்த பரம்பரையைப் பிரதி பலித்துக் காட்டுவனவாயிருக்கின்றன. இந்தியாவில் அஹிம்ஸைக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அந்த முக்கியத்துவம் மேனாட்டில் கொடுக்கப்படவில்லை. அப்படிக் கொடுக்கப்படு மென்று எதிர்பார்ப்பதும் முடியாது. ஏனென்றால், அது மனித வாழ்க்கைக்கு நாம் அளிக்கிற முக்கியத்துவத்தைக் காட்டிலும், மனிதனிடத்திலேயுள்ள புருஷத்துவத்திற்கு அதிக மதிப்புக் கொடுக்கிறது. ஆனால் இந்த அஹிம்ஸைத் தத்துவம் இந்திய அரசியல் வாழ்வில் புகுத்தப்பட்ட பிறகு மேனாட்டார் இந்தியாவின் மனப்பான்மையை நன்கு தெரிந்து கொண்டிருக் கின்றனர். ஒத்துழையாமை சம்பந்தமாகக் காந்தியடிகள் செய்துவரும் இந்த அஹிம்ஸைப் பரிசோதனையானது இந்தியாவின் பரம்பரையை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லை; தீமையை எதிர்க்கவும் நியாயத்தை நிலைநாட்டவும் ஒரு புதிய வழியைக் காண்பித்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த அஹிம்ஸைக் குள்ள மகத்து வத்தை நாம் மிகைப்படுத்திச் சொல்வது கூடாது. இந்த அஹிம்ஸை யின் அடிப்படையான கோட்பாடு என்னவென்றால், தான் துன்பத்தை அநுபவித்து மற்றவர்களுக்குத் துன்பம் கொடாமல் இருப்பது. அநுபவ ரீதியாகப் பார்க்கப்போனால் இந்த இரண்டாவது நிபந்தனை - அதாவது மற்றவர்களுக்குத் துன்பம் கொடாமலிருப்பது - மகா கடினமானது. இந்த ஒத்துழையாமை யின் முக்கியமான அமிசங்களில் ஒன்று பொருளாதார பகிஷ்காரம். இந்தப் பகிஷ்கார முறையைக் கையாள்கிறபோது, மற்றவர் களுக்குத் துன்பம் கொடாம லிருக்க முடியாது. தவிர, பலாத்காரத்தை விட, அஹிம்ஸை உடனே பயன்தரக்கூடிய தென்பதற்காக அதனை அனுஷ்டிக்கவும் முடியாது. ஏனென்றால் இந்த உலகத்தில் இப்பொழுது சிலர், பலாத்காரத்தை ஒருவித ஒழுங்குக் குட்படுத்தி அதனை ஒரு முறையாகக் கையாண்டு வருகின்றனர். அவர்களெதிரில் அஹிம்ஸையை அநுஷ்டித் தால் அப்படி அநுஷ்டிக்கிறவர்கள் பிரயோஜனமின்றி மரண மடைய வேண்டியவர்கள்தான். ஆனால் இவ்வளவெல்லாம் சொல்லப் பட்ட பிறகும், யுத்தத்தின் மூலமாகப் பெருவாரியான ஜனங்களை அழிப்பதைக் காட்டிலும், பலாத்காரமற்ற ஒத்துழையா முறைதான் பலவிதத்திலும் பரிசுத்தமானது; பெருந்தன்மை வாய்ந்தது. தீமையை எதிர்த்து நிற்பதற்கும், அந்தத் தீமைக்குப் பரிகாரந் தேடுவதற்கும், மிருக பலத்தைத் தவிர நவீன யுத்தக் கருவிகளைவிட வேறு வழியில்லையா வென்றுதான் காந்தியடிகள், தற்போதைய உலகத்தை அறைகூவிக் கேட்கிறார். அப்படி ஒரு வழி இருக்குமானால், அதனை மானிட சமுதாயத்தின் நன்மையை நாடுகிறவர்கள் தேடிக் கண்டுபிடித்துக் கையாள வேண்டாமா? சிறப்பாக, சிலுவையிலறையப்பட்ட யேசு நாதரிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள், இந்த வழியைப் பின்பற்றாமலிருக்கலாமா? இதனால்தான், காந்தியடிகளின் கோட் பாடானது, யுத்த பயத்தினாலும், யுத்தத் தயாரிப்பு பயத்தினாலும், தடுமாறிக் கொண்டிருக்கிற உலகத்திற்கு ஓர் அறைகூவலாகவும், நம்பிக்கை ரேகையாகவும் இருக்கிறது. சர்வாதிகாரிகளை விட ஓர் உயர்ந்த தானத்தில் காந்தியடிகள் இருக்கிறாரென்று சொன்னால், அதற்குக் காரணம், அவர், அரசியல் கிளர்ச்சியில் தரும ரீதிகளைக்கொண்டு புகுத்தி யிருக்கிறா ரென்பதற்காக மட்டுமல்ல; மகான்களுக்கு யேசுநாதர் என்ன மதிப்புக் கொடுத்திருக் கிறாரோ அந்த மதிப்பைக் கொண்டு பார்க்கிறபோது, அவர், ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தொண்டரா யிருப்பதற்காகவுங்கூட. இந்தியாவின் வறுமையை ஒழிக்க வேண்டு மென்பதற்காகத்தான் அதற்குச் சுயராஜ்யம் தேவையென்று சொல் கிறார் காந்தியடிகள். அவர், பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கண்டனம் செய்கிறா ரென்று சொன்னால் அதற்குக் காரணம், அது பிரிட்டிஷ் அரசாங்க மாகவும், அந்நிய அரசாங்கமாகவும் இருக்கிறதே யென்பதற்காக மட்டுமல்ல; அது ஏழைகளைப் புறக்கணித்து விட்டது என்பதற்காகத் தான். ஏழைகளின் மனிதத் தன்மையை உயர்த்த வேண்டும்; கிராம வாழ்க்கையைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும்; தீண்டப்படாதாரை, ஹிந்து சமுதாயத்தில் ஐக்கியப் படுத்திவிட வேண்டும்; இவை தான் காந்தியடிகளின் முக்கிய கவலைகள். இந்த விஷயத்தில், ககாவா, ஷ்வீட்ஸர் ஆகியோரைப் போலவே காந்தியடிகள் இருக்கிறார்.அவர்கள் எந்த இடத்திலிருந்து தங்கள் தொண்டுக்கு உற்சாகம் பெற்றோர்களோ அதே இடத்தி லிருந்துதான் தாம் பெற்றதாக அவரே ஒப்புக்கொள்வார். கடவுளின் திருவருள் துணைகொண்டுதான் அவர் தமது சேவைகளைச் செய் கிறாரென்பது பஷ்டமான விஷயம். இங்ஙனம் அவர் சுரண்டப் படுகிறவர்களுடைய நன்மைக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய நன்மைக்காகவும், தன்னலத் தியாகம் செய்திருக்கிறாரே, அதுதான், அவருக்கு அழியாத புகழை அளிக்கக்கூடியது. மற்றோர் உயிருக்கு ஊறு செய்யக்கூடாதென்கிற அஹிம்ஸை யும், ஆத்ம சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ள சத்தியாக்கிரகமும் உன்னதமான கோட்பாடுகள். அரசியல் முறைகளில் இவை ஒரு புதிய உணர்ச்சியை உண்டு பண்ணி யிருக்கின்றன. ஆனால் இந்தக் கோட்பாடுகள், பாவ மன்னிப்பு என்பதோடு சேர்ந்தால்தான், அவற்றின் முழு அர்த்தம் விளங்குகின்றது; அந்தக் கோட்பாடுகளும் விகாசமடை கின்றன. அரசியலுக்கு உண்மையான அதிவாரம் அமைய வேண்டு மானால், நியாயமான சர்வ தேசீய விவகாரம் ஏற்பட வேண்டுமானால், நாம், நமது குறைபாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்; மற்றவர் களுடைய குறைகளை மன்னிக்கிற மனப்பான்மையும் நமக்கு ஏற்பட வேண்டும். காந்தியடிகளின் சத்தியாக்கிரகம், இந்தப்பாவ மன்னிப்புச் சித்தாந்தத்தை ஒருவாறு தழுவியிருக்கிற தென்று சொல்லலாம். ஆனால், பாவ மன்னிப்புச் சித்தாந்தமே, சத்தியாக்கிரகம் என்று சொல்ல முடியாது, எவ்வித முன்னேற்பாடுகளுமில்லாமல் ஏதோ யதேச்சையாக இந்தியாவும் கிரேட் பிரிட்டனும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக ஆச்சரியப்படும் விதத்தில் ஒற்றுமைப் பட்டிருக்கின்றன. இந்தியாவில் பிரிட்டிஷார் செய்திருக்கிற காரியங் களில் பல, மன்னிக்கப்பட வேண்டியவை. ஏகாதிபத்திய முறைதான், பிரிட்டிஷ் மகா ஜனங்களுக்கும் இந்திய மகா ஜனங்களுக்குமுள்ள சம்பந்தத்தை விஷப்படுத்தியிருக் கிறது. இந்த இரு சாராருக்குமுள்ள தொடர்பை அடியோடு அறுத்து விட்டால்தான், இந்த விஷமும் அகலும் போலும்! இந்தியா, தனது தலை விதியை, தன்னால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கீழிருந்து நிர்ணயித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. அப்படி மேற்படி இருசாராரும் பிரிவதாயிருந்தால், பரபர மன்னிப்புக் காட்டியும், பொறுமை காட்டியும் பிரியக்கூடாதா? இந்தியர்களும் பிரிட்டி ஷாருமாகிய நாம், பாவ மன்னிப்பு என்ற கோட்பாட்டை உண்மை யாகவே நம்புவோமானால், நாமிருவரும் பிரிந்துதான் ஆக வேண்டுமா? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், பலாத்கார மற்ற ஒத்துழையாமையும் மறைந்து, அவற்றின் தானத்தில் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில், கீழ் நாட்டுக்கும் மேனாட்டுக்குமிடையில் ஒற்றுமையான தோர் உணர்ச்சி நிலவுமானால், தேசீய அகங்காரத் தினால் சலித்துப் போயிருக்கும் இந்த உலகத்திற்கு அஃது எவ்வளவு நம்பிக்கை யூட்டுவதாயிருக்கும்? பிரிட்டிஷ் மகா ஜனங்களுக்கும், இந்திய மகா ஜனங்களுக்கும் நிரந்தரமான சிநேகம் இருக்க வேண்டு மானால், இருசாராருடைய இதயத்திலும் க்ஷமை என்கிற உணர்ச்சி உதயமாக வேண்டு மென்பது என் பிரார்த்தனை. அப்படிப் பிரார்த்தனை செய்வதன் மூலந்தான், காந்தியடிகளின் எழுபதாவது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். அவர் செய்திருக்கிற சேவைகளுக்காகக் கடவுளை வந்தனை செய்ய விழைகிறேன். * * * நாற்பத்தேழு வருஷங்களுக்குப் பிறகு... ஸர். பிரான்சி யங்ஹபண்ட் கே.சி.எ.ஐ. (லண்டன்) மகாத்மா காந்தி இன்று உலகப் பிரசித்தராயிருக்கிறார். எப்படி? ஜனங்களுடைய இதயத்திலே பயத்தையும் சந்தேகத்தையும் உண்டு பண்ணி அவை மூலமாக, யுத்த தளவாடங்களை எல்லா நாட்டினரும் அதிகப்படுத்திக்கொண்டு வருகிறார்களே அப்படி யல்ல. அவர், தமது நாட்டு ஜனங்களிடத்தில் அஞ்சாமையை உண்டு பண்ணியிருக்கிறார். அவர்களை நீதி மார்க்கத்தில் திருப்பிவிட் டிருக்கிறார். இவைகளினால் தான் அவர் பிரசித்தியடைந்திருக் கிறார். அவர் ஆங்கிலம் படித்த மரியாதையான ஒரு சாதாரண இளைஞராயிருந்தார். ஐரோப்பாவில் படிக்கும் பொருட்டு ஆயிரக் கணக்கில் வரும் இந்திய இளைஞர் களுக்கும் அவருக்கும் அணு வளவு வித்தியாசமும் அப்பொழுது காணப் படவில்லை. அப்பொழுது அவருக்கு முப்பது வயதுக்குக் குறைவாக இருக்கும். மற்றவர்களைப் போல் அவர் ஐரோப்பிய முறையில் உடை உடுத்தியிருந்தார். அவரிடத்தில் விசேஷமொன்றும் அப்பொழுது காணப்படவில்லை. நான் அவரை முதன் முதலாகத் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பன் நகரத்தில் நாற்பத்தேழு வருஷங்களுக்கு முன்னர் சந்தித்தேன். அப்பொழுதே அவர், தம்முடைய நோக்கத்தில் ஒருவித பற்றும் உறுதியுமுடையவராயிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களிடத்தில் ஆச்சரியகர மான இரக்கத்தைக் காட்டி வந்தார். இந்த இரண்டு சுபாவங்களும், சென்ற நாற்பத்தேழு வருஷ காலத்தில் அதிகமாக வளர்ச்சியடைந் திருக்கின்றன. அப்பொழுது நேட்டாலில் இந்தியர்கள் குடியேறுகிற பிரச்னையே முக்கிய பிரச்னையாயி ருந்தது. நேட்டால், அப்பொழுது தான் வளர்ச்சியடைந்துகொண்டு வருகிற ஒரு குடியேற்ற மாகாணமாகிக்கொண்டு வந்தது. இந்தியர் கள் ஓரளவு அங்குக் குடியேற, அந்த மாகாண அரசாங்கத்தார் சம்மதித்தனர். ஆனால் அதிகமான பேரை, அநுமதிக்க அவர்கள் இஷ்டப்படவில்லை. அந்த மாகாணத்தைத் தென்னாப்பிரிக்கர் களே தாபித்தார்கள்; இதனால் தென்னாப்பிரிக்கர்களுடைய மாகாணமாகவே அஃது இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். எனவே, இந்தியர்கள் அங்குப் பெரும்பா லோராகக் குடியேற ஆரம்பித்தபோது, அவர்களைத் தடுக்க நேட்டாலியர்கள் தீர்மானித்தார்கள். இந்தப் பிரச்னையை ஒருவாறு சமரஸமாகத் தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியர் களுக்குப் பெரிதும் வருத்தத்தை உண்டுபண்ணிய தென்னவென் றால், அவர்கள் கேவலமாக நடத்தப்பட்டதுதான். பணக்காரர் களும், ஏழைகளும், படித்தவர்களும் படிக்காதவர்களும் எல்லோரும் கூலிகள் என்றே அழைக்கப்பட்டார்கள். காந்தியடிகள் ஒரு கூலி. பணக்கார வியாபாரிகள் கூலிகள். எல்லா இந்தியர்களும் கூலிகள். எப்படி சீனாவில் எல்லா ஐரோப்பியர்களும் அந்நியப் பேய்கள் என்று அழைக்கப்படுகிறார்களோ அப்படியே தென் னாப்பிரிக்காவிலும் இந்தியர்கள் கூலிகள் என்று அழைக்கப் பட்டார்கள். அந்தக் காலத்தில் காந்தியடிகள் ஓர் இளைஞராயிருந்த போதிலும், இந்தியர்களின் தலைவராயிருந்து, இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அப்பொழுது அவர் டர்பன் நகரத்தில் ஆங்கிலேய முறையில் அமைந்திருந்த ஒரு பங்களாவில் வாசஞ்செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம், தமது பங்களாவில் நடைபெற்ற விருந்துக்கு லண்டன் டைம் பத்திரிகையின் நிருபன் என்ற ஹோதாவிலிருந்த என்னை அழைத்திருந்தார். அப்பொழுது அவர் விவேகியும் படிப்பாளியுமான ஓர் இளைஞராக எனக்குத் தென்பட்டார். ஆனால் பின்னர் அவர் அடைந்த வெற்றிகளைப் பார்க்கிற போது, வெறும் விவேகமும் படிப்பும் தவிர, அவரிடத்தில் வேறு விதமான சக்திகளும் இருந்திருக்க வேண்டு மென்று எனக்குப் பட்டது. அப்பொழுது தென்னாப்பிரிக்காவில் ஜாதீய உணர்ச்சி மிகவும் வலுத்திருந்தது. போயர்களும் பிரிட்டிஷாரும், தென்னாப்பிரிக்கர் களும் நீக்ரோவர்களும், பிரிட்டிஷாரும் இந்தியர் களும் எதிரெதிர்க் கட்சிகள் போலிருந்தார்கள். இந்த வேற்றுமைகளை ஒரு வாலிப வக்கீல் எதிர்த்து நின்றாரென்றால், அவரிடத்தில் மகத்தானதோர் அஞ்சாமை யும், சீல சுபாவமும் இருந்திருக்க வேண்டுமென்பது நன்கு புலனாகிறது. அவர் தமது வக்கீல் தொழிலைத் துறந்துவிட்டார்; சிறை சென்றார்; இந்தியர்களின் உரிமைகளுக்காகப் பலவித அவமானங் களை அடைந்தார். இதனால்தான் அவர் இந்தியர்களின் நன் மதிப்பைப் பெற்றார். இந்தியர்கள் கடைசியில் அவரை ஒரு தெய்வ மாகக் கொண்டாடினார்கள். ஆனால் அவர், தமது தாய் நாட்டில்தான் மகத்தான வேலையைச் செய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் வசித்திருந்த காலத்தில் ஒரு தலைவருக்கு வேண்டிய, மற்றவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு வேண்டிய லட்சணங்க ளெல்லாம் இருந்தன. இந்தியாவுக்குச் சென்றதும், அங்கு அவருடைய சக்திகள் விரிவான முறையில் பிரயோகிக்கப்பட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இந்தியாவை அந்நியர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். காந்தியடிகளின் நோக்கம் இந்தியர்கள் இந்தியாவை ஆளவேண்டு மென்பது; இந்தியாவுக்குள்ளே இரு பிரிவினராகப் பிரிந்திருக்கும் ஹிந்துக்களும் முலீம்களும் ஒன்றுபட வேண்டு மென்பது. அவர் பிறந்த ஹிந்து சமுதாயத்திலேயே, தீண்டாதாரின் நிலைமை, திரீகளின் அந்தது, கிராமங்களின் ஏழ்மை முதலிய சமுதாய ஊழல்களைக் களைய வேண்டுமென்று அவர் பாடுபடுகிறார். ஆனால் இந்தக் குறைகளை யெல்லாம் உட்புறமாகச் சீர்திருத்த வேண்டு மென்பதையே அவர் முக்கியமாகக் கொள்கிறார். அவர், அரசாங்கத்தையே எதிர்த்து நின்றார். அரசாங்கச் சட்டங்களை மீறி நடந்ததற்காகத் துன்பமநுபவித்தார். மரணமடையக் கூடிய நிலைவரையில் உபவாசமிருந்தார். நாடு முழுவதும் சுற்றினார். மூலை முடுக்குகளிலேயுள்ள பிரதேசங்களையெல்லாம் சென்று பார்த்தார். சாதாரண ஜனங்களைப் போல் வாழ்க்கையை நடத்தத் தொடங்கினார். தீண்டப்படாதாரில் தாமும் ஒருவர் போலிருந்து அவர்களுடன் ஒன்றுபடுகிறார். நாட்டிற்காக அவர் பல தியாகங் களைச் செய்திருக்கிறார். அவருடைய இந்தத் தியாக வாழ்க்கையானது, இந்திய மகா ஜனங்களுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அவருடைய புருஷத்துவம், அவருடைய தேச பக்தி, அவருடைய ஜீவகாருண்யம் முதலியனவெல்லாம் அவருடைய நாட்டாருக்கு உணர்ச்சியூட்டியிருக்கின்றன. அவரை ஒரு மகானாக இந்தியர்கள் போற்றுகிறார்கள். அவருடைய தரும ரீதியான நடவடிக்கைகள் இன்று வெற்றியடைந்திருக்கின்றன. அவர்; தமது நாட்டை மற்றவர்கள் மதிக்கும்படியாகச் செய்திருக்கிறார். பிரிட்டிஷாராகிய நாம், இந்தியா, என்றும் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்குள்ளேயே இருக்க வேண்டுமென்றுதான் விரும்புவோம். அப்படி அஃது இருக்குமானால், தன்னிச்சைப்படிதான் இருக்க வேண்டு மென்பது என் கோரிக்கை. இந்தியா இப்பொழுது ஒரு சுயமரியாதை அடைந்திருக்கிறது. அந்த மரியாதையுடன் அதனை நாம் நடத்துவோமாக. * * * தேச பக்தியும் பொது நலமும் ஸர் ஆல்ப்ரெட் ஜிம்மர்ன் எம்.ஏ. (ஆசிரியர், ஆக்போர்ட் சர்வகலாசாலை) ஐரோப்பாவின் அரசியல் எண்ணப் போக்கானது, இந்தியாவின் மீது அதிகமாகப் படிந்திருக்கிறது. இருந்தாலும் 1939ம் வருஷத்து ஐரோப்பாவானது, ஆப்பிரிக்காவைத் தவிர்த்த மற்ற எல்லாக் கண்டங் களைக் காட்டிலும் அரசியலில் பிற்போக்கடைந்திருக்க வில்லையா? அரசியலின் நற்பிரயோஜனங்களான நியாயமும் சுதந்திரமும், இன்று ஐரோப்பாவின் பெரும்பாகங்களில் காலால் போட்டு மிதிக்கப்பட வில்லையா? இன்று மேற்படி நியாயமும் சுதந்திரமும் மிகுந்த கேவலமாக மதிக்கப்படுவது, ஐரோப்பிய அரசியல் அறிஞர்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பு இல்லையா? இதனால், ஐரோப்பாவிலிருந்து அடித்துக் கொண்டு வரும் அரசியல் காற்றை இந்தியா மிகுந்த ஜாக்கிரதையோடு நுகர வேண்டுமென்பது வெளிப்படவில்லையா? ஓரிரண்டு வருஷங்களுக்கு முன்னால் பிரசிடெண்ட் ரூவெல்ட் ஓரிடத்தில் மானிட ஜாதியில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமாதானத்தை விரும்புகின்றனர் என்று கூறினார். இந்த எண்ணிக்கை, குறைவு என்று தோன்றுகிறது. அப்படி நூற்றுக்குத் தொண்ணூறு பேர், சமாதானத்தைக் கோருகிறவர்களாயிருந்தால், இன்றைய உலகம் ஏன் ஒரு கொந்தளிப்பான நிலையிலிருக்கிறது? மேற்படி தொண்ணூறு பேரும், கொந்தளிப்புக்குக் காரணமாயுள்ள பத்து பேர் மீது தங்கள் அபிப்பிராயத்தைத் திணித்து, உலகத்தில் ஏன் சமாதானத்தை நிலை நாட்டக்கூடாது? இப்படி முடியாம லிருப்பதற்குக் காரணம், நமது சிந்தனையில் ஏதோ தவறு இருப்பது தான். மேற்கண்ட தொண்ணூறு பேரிடத்திலும் பல தவறுகள் இருக்கின்றன. இவர்களிற் சிலர் சோம்பேறிகள்; இன்னுஞ் சிலர் கோழைகள்; வேறு பலர் சுயநலவாதிகள். இவையெல்லாமிருந்தாலும் இவைகளினால் மட்டும் உலகம் சீரழிந்து கொண்டு போகிறதென்று சொல்ல முடியாது. இவைகளுக்கெல்லாம் அடிப்படையாக, எண்ணு வதிலே ஒரு குழப்பம்-அதாவது அறிவுக் குழப்பம்- ஏற்பட்டிருப்பது தான் இன்றைய உலகச் சீரழிவுக்கு முக்கிய காரணம். இந்தக் குழப்பம் இருப்பதனாலேதான். சமாதானவாதிகள் ஒன்றுபட்டு உருப்படியான ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை. இதனாலேயே, உலகக் கொந்தளிப்புக்குக் காரணமாயுள்ள மேற்சொன்ன பத்து பேரும் சேர்ந்து, தொண்ணூறு பேரைக் கீழ்த்தரமான முறையில் நடந்து கொள்ளுமாறு ஆட்டிவைக்கின்றனர். இன்றைய அரசியல் பிரச்னையை ஒரு நகரத்தின் உதாரணத்தைக் கொண்டு-லண்டன் அல்லது டெல்லி நகரத்தின் உதாரணத்தைக் கொண்டு-நிர்ணயித்துப்பார்க்க முயலுவோம். இன்றைய ஐரோப்பாவை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டுவரும் மனிதனைப் போல் ஒரு மனிதன் மேற்படி நகரத்தில் இருப்பானாகில் அவன் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்பது நம்மெல்லோருக்கும் தெரியும். அவனை முதல் நெம்பர் பகிரங்க விரோதி யென்று எல்லாப் பிரஜைகளும் கருதுவார்கள். எனவே தேகவலுவுள்ள அனைவரும் தங்களை அதிகாரி கள் வசம் ஒப்புக் கொடுத்து, நகரத்தில் அமைதியை நிலை நாட்டுவார்கள். பெரும்பாலோரான மக்களின் பொதுநல உணர்ச்சி காரணமாக, சிறுபான்மையோருடைய அட்டூழியங்கள், வளரவிடாதபடி தகையப் படும். இதே முறையை, ஐரோப்பா கண்டத்திலும் நாம் ஏன் பின்பற்றக் கூடாது? சிறிய ராஜ்யங்கள் ஏன் எப்பொழுதும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்? சில ராஜ்யங்கள், பூகோள படத்திலேயே இல்லாமற் போகும்படி ஏன் ஆக வேண்டும்? இதற்குக் காரணம், இன்றைய உலகத்திலே, சிறப்பாக ஐரோப்பாவிலே, போதிய அளவு பொதுநல உணர்ச்சி இல்லை. ஆனால் ஐரோப்பியர்கள், ஒருவர்கூட விலக்கில்லாமல் எல்லோரும் தேசபக்தியுடையவர் களில்லையா? அவர்கள், தங்கள் தாய்நாட்டுக்காக, ஒரே கூட்டமாக வேண்டுமானாலும் மரணமடையச் சித்தமாயில்லையா? ஒரு தலைமுறைக்கு முன் அவர்கள் இதே மாதிரி செய்யவில்லையா? ஆம்; இவையெல்லாம் உண்மைதான். ஆனால் பொதுநல உணர்ச்சி என்பது, தேச பக்தியைப் போன்றதன்று. லண்டனிலோ டெல்லியிலோ நடைபெறுகிற கொள்ளையானது அந்த நகரத்திலுள்ள ஜனங்களின் பொதுநல உணர்ச்சியினால் நிறுத்தப்படுகிறது. இந்த மாதிரியான பொதுநல உணர்ச்சி, இன்றைய உலகத்தில், இன்றைய ஐரோப்பாவில் இருக்கிறதா? அதாவது, உலக சமுதாயம் அல்லது ஐரோப்பிய சமுதாயம் என்பது ஒன்று இருக்கிறதா வென்பதுதான் மேற்படி கேள்வியின் அர்த்தம். இந்தக் கேள்விக்கு இல்லையென்ற பதில்தான் கிடைக்கும். நகரத்தில் கொள்ளைக்காரர்கள், தங்கள் கொள்ளையை ஜரூராக நடத்துகிறார்களென்று சொன்னால், அதற்குக் காரணம், ஒவ்வொரு வீட்டாரும் தங்கள் வீட்டை, தங்கள் குடும்பத்தை, தங்கள் சொத்தைப் பாதுகாக்கவும், அதற்காக இறக்கவும் தயாராயிருக்கிறார்கள். ஆனால் ஜனங்களிடத்தில், எல்லாரும் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்ற பொதுநல உணர்ச்சி இல்லை. இதனால், கொள்ளைக் காரர்கள் வீடு வீடாகப் புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் நாளா வட்டத்தில் இந்தக் கொள்ளைக்காரர்கள், கொள்ளை யடிப்ப தினால் மட்டும் தாங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல முடியா தென்பதையும், தங்கள் போட்டிருக்கிற திட்டமே தவறென்றும் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அப்படியே, இருபதாவது நூற்றாண்டு உலகத்தில் ஆட்சி நடத்துவோர், வெறுங் கொள்ளைத் தொழிலினால் மட்டும் ஜீவித்திருக்க முடியாது. சமுதாயத்திற்கு விரோதமான முறைகளைக் கையாண்டு அவர்கள் நீடித்த காலம் ஆட்சி செலுத்த முடியாது; ஜனங்களுடைய நம்பிக்கை, நாணயம்; பரபர சம்பந்தம் இவற்றை அவர்கள் புறக்கணித்து விட முடியாது. ஆனால் இப்பொழுது நாம், கொள்ளைக்காரர்களுடைய அரசியல் சிந்தனையைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். காலக்கிரமத்தில் அவர்களுக்குச் சிந்தனைத் தெளிவு ஏற்பட்டுவிடும். ஆனால் நமது கவலையெல்லாம், மேற்படி கொள்ளைக்காரர்களின் ஆகாரப் பொருள்கள் போலிருக்கிற பெரும்பாலான மக்களின் அரசியல் சிந்தனையைப் பற்றித்தான். தனிப்பட்ட நபர்கள் ஒரு சமுதாயத்தின் பிரஜைகள் என்ற ஹோதாவில் நினைக்கவும் நடக்கவும் முடியாதவர்களாகிப் போயிருப்பதற்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று ஊறிப் போயிருக்கிற பழக்கம்; மற்றொன்று எண்ணப் போக்கு. முதலாவது பழக்கத்தை யெடுத்துக்கொள்வோம். ஓர் ஊரிலே பெல்ஜியக்காரர்களும் டச்சுக்காரர்களும் வசித்து வருகிறார்களென்று வைத்துக்கொள்வோம். பெல்ஜியக்காரர், தாங்கள் பெல்ஜியம் வாசி களென்றும் டச்சுக்காரர் தாங்கள் ஹாலந்து வாசிகளென்றுமே நினைக் கிறார்கள்; தாங்கள் இருவரும் ஒரே நகரத்தில் வசிக்கிற பிரஜை களென்று உணர்வதில்லை. இந்த விஷயத்தில் பழக்கமென்று சொன்னால் அது நீண்ட நாள் பழக்கமல்ல. ஏனென்றால் பெல்ஜியம் நாடு தனி நாடாக உருக்கொண்டு ஏறக்குறைய ஒரு நூறு வருஷந்தானா கிறது. இதனால்தான் அவர்களிடத்தில் தேசீய உணர்ச்சி வலுத்து நிற்கிறது. அவர்கள் ஒரு தொகுதியினராக, ஒரு வீட்டினராகத் தனிப் பட்டு வாழ ஆவலுடையவர்களாயிருக்கிறார்கள். இங்கே ஆவல் என்ற பதத்தை நான் உபயோகித்திருக்கிறேன். சுய உணர்ச்சி என்றும் நான் சொல்லியிருக்கலாம். இனத்தை இனம் நாடும் என்கிற உணர்ச்சி, மனித சுபாவத்திலேயே வேரூன்றியிருக்கிறது. இந்த உணர்ச்சியானது, தன் இனத்திற்குப் புறம்பானவற்றையெல்லாம் அந்நியம் என்று அப்புறப்படுத்தி விடுகிறது. ஜனங்கள் பிரஜா உணர்ச்சிபெறுவதற்கு, இந்த இன உணர்ச்சி தடையாயிருக்கிறது. மனோ தத்துவ ரீதியாகப் பார்த்தாலும், பரம்பரை ரீதியாகப் பார்த்தாலும், ஒரு சமுதாயம் சிறிதா யிருக்கும் பட்சத்தில், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், தேசபக்தி நிறைந்தவர்களாயிருப்பது சுலபம். ஏனென்றால் தேசபக்தியென்பது, எல்லாச் சுபாவங்களுக்கும் ஏற்றதாயிருக்கிறது. ஆனால் பொதுநல உணர்ச்சியுடனிருப்பது மகா கடினம். அகிலத்தையெல்லாம் தன்னைப் போல் பார்ப்பதென்கிற உணர்ச்சி நமது சுபாவங்கள் அனைத்தாலும் அங்கீகரிக்கப்படக் கூடிய உணர்ச்சியல்ல. இனி, எண்ணப்போக்கைச் சிறிது கவனிப்போம். இன்றைய ஐரோப்பாவில் நிலவிவரும் அரசியல் தத்துவங்களெல்லாம், தற்காலத் திற் கொவ்வாதவை. எந்த ஓர் அரசியல் கோட்பாடும், முடிவான தென்றோ, புனிதமானதென்றோ கொள்ளப்படவில்லை. அரசியல் பிரயோஜனங்களான நியாயம், சுதந்திரம் என்பவைகளை நோக்கமாகக் கொண்டுதான் எல்லா அரசியல் சித்தாந்தங்களும் நிர்த்தாரணம் செய்யப்படுகின்றன. ஆனால் இன்றைய ஐரோப்பாவின் துரதிருஷ்டம் என்ன வென்றால், உள்ள நிலைமைக் கொவ்வாத அரசியல் சித்தாந்தங்களே அநுஷ்டிக்கப்படுகின்றன. ஜனங்களுடைய எண்ணத் தில் இந்தச் சித்தாந்தங்கள்தான் ஊர்ஜிதம் பெற்றிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் வியக்தியும், தன்னுடைய நலத்தையே நாடக்கூடிய தாயும், பொருளாதார விஷயத்தில் தன்னுடைய தேவையைத் தானே பூர்த்தி செய்துகொள்ளக் கூடியதாயுமிருந்த காலத்தில் ஏற்படுத்தப் பெற்ற சித்தாந்தங்களே இன்று நடைமுறையிலிருக்கின்றன. எந்த அரசியல் சொற்றொடரானது, இன்றைய ஐரோப்பிய ராஜதந்திரிகளாலும் பார்லிமெண்டரி வாதிகளாலும் அன்போடு உச்சரிக்கப்படுகிறதோ அந்தச் சொற்றொடரான அரசு என்பது, பதினாறாவது நூற்றாண்டில் ஏற்பட்டது. அப்பொழுது இந்தச் சொற்றொடரானது புதிதாகவும் புரட்சிகரமாகவும் இருந்தது. அந்தக் காலத்திற்கு இது பொருத்தமா யிருந்தது. இன்றைக்கு இது பொருத்தமில்லை. ஐரோப்பாவிலே குடிகொண்டிருக்கிற தேசபக்தியென்ற உணர்ச்சியின் மற்றோர் அமிசமானது, ஜாதீய பக்தி. இஃது அவ்வளவு புராதனமானதன்று. பதினெட்டாவது நூற்றாண்டின் கடைசி பாகத்தில் தான் ஐரோப்பாவில் இந்த ஜாதீய பக்தியென்பது ஏற்பட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்குச் சில வருஷங்களுக்கு முன்னர்தான், அரசியல் அறிஞர்கள், ராஜ்யத்தையும் ஜாதியையும் ஒன்றுபடுத்திப் பார்க்க ஆரம்பித்தார்கள். இதைத்தான் முன்னேற்றக்கட்சியினரெல்லோரும் முக்கிய அமிசமாகக் கொண்டார்கள். ஆனால் இஃது ஐரோப்பாவுக்கு ஏற்றதல்ல வென்பதை அரசியல் வாதிகள் கருதவேயில்லை. இன்றைய ஐரோப்பிய வீதியில் பெரிய மாளிகைகளும் சிறிய குடிசைகளும் கலந்திருக்கின்றன. பெரிய மாளிகைகளை வல்லரசுகள் என்றும், சிறிய குடிசைகளை சின்ன அரசுகள் என்றும் அழைக்கிறோம். ஆனால் மாளிகைகளிலும் குடிசை களிலும் வசிக்கிற எல்லோருக்கும் பாதுகாப்பு தேவையாயிருக்கிறது. இவர்களெல்லோருக்கும் பொதுவானதொரு போலீபடை, தீயணைப்புப் படை, ரதா முதலியனவெல்லாம் தேவையல்லவா? இவைகளை யெல்லாம் இவர்கள் பெறவேண்டு மானால் இவர்களுக்குப் பிரஜா உணர்ச்சி தேவை. இப்பொழுது தான் இந்த உணர்ச்சி, பல வகைத் துன்பங்களை அநுபவித்தபிறகு ஏற்பட்டிருக்கிறது. இந்த இருபதாவது நூற்றாண்டில், வாழ்க்கையை நல்லவிதமாக நடத்த வேண்டுமானால், பிரஜா உணர்ச்சி அவசியம் தேவையா யிருக்கிறது. இந்த உணர்ச்சியைப் பெற்றிருக்கிற வகையில் வட அமெரிக்காவும், இந்தியாவும் ஐரோப்பாவைக் காட்டிலும் முன்னேறியிருக்கவில்லையா? வட அமெரிக்க வாசிகள், தற்கால நிலைமையை ஒட்டி வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்தியர்கள், விசுவப் பிரேமை என்கிற திருஷ்டியில் விஷயங்களை நோக்குகிற தலைவர்களின் உபதேசங்களினால் நன்மையடைந்திருக் கிறார்கள். மகாத்மா காந்தி, நமது தலைமுறையில் மகானாக வந்திருக்கிறா ரென்றால், அதற்குக் காரணம், இந்தியாவுக்குப் புறம்பாயுள்ள கோடிக்கணக்கான மக்களின் நன்மைக்காக உழைக்கிறார் என்பது தான். அவர் இந்திய தேசீயத்தையும் உலக சகோதரத்துவத்தையும் ஒன்றுபடுத்திக்காட்டியிருக்கிறார். இதனால்தான், மெலிந்த தேகத் தினையுடைய அவரின் உபதேசங்கள், நியாயம், சுதந்திரம் என்பவை களுக்குப் புதிய அர்த்தத்தைக் கொடுத்துப் பிரகாசிக்கின்றன. எனது வந்தனம் ஆர்னால்ட் ஜ்வீக் (ஹைபா, கார்மெல் மலை, பாலதீனம்) 1914ம் வருஷ மகா யுத்தத்தினின்று நாம் மீண்டு வந்த பிறகு, உலகத்தில் எல்லையில்லாத ஓர் ஆவல் குடி கொண்டது. இந்த யுத்தத்திற்கு முன்னர் ஏற்பட்டிருந்த ரத்த வெறி, யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட திகைப்பு, பலாத்காரத்தின் விளைவு முதலியன வெல்லாம் இனி மறைந்து போகுமென்று கருதப்பட்டது. பொது ஜன வாழ்வை ஏற்று நடத்தவேண்டுமென்ற உணர்ச்சி பொது ஜனங்களிடத்தில் ஏற்பட்டது. இனி உலகத்திலே நியாயம், சமரசம், ஜீவகாருண்யம் முதலிய உணர்ச்சிகள் நிலவுமென்று கருதப்பட்டது. சிறப்பாக, மத்திய ஐரோப்பாவிலுள்ள நாடுகளான ஜெர்மனி, ஜெக்கோ லோவேகியா, ஆதிரியா, போலந்து முதலிய நாடுகளில் மேற்கண்ட மாதிரியான உணர்ச்சிகள் ஊர்ஜிதம் பெறும் என்று அறிஞர்கள் எண்ணினார்கள். ஏனென்றால் அந்த நாடுகளின் ஜனங்கள் அவ்வளவு கஷ்டப் பட்டார்கள். அதிகமான ரத்தச் சிந்துதலுக்குப் பிறகு, சமுதாய அமைப்பே, ருஷ்யாவில் ஏற்பட்டதைப்போல் அடியோடு மாற வேண்டுமென்றும், அப்படி மாறா விட்டாலும், பலாத்கார யுகத்திற்கு முற்றுப் புள்ளியிட்டு விட்டு, பரபர நல்லெண்ண வாழ்வாவது ஆரம்பமாகுமென்றும் ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் காந்தியடிகள் தோன்றினார். அஹிம்ஸையை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருதல் சாத்திய மென்று காட்டினார். எப்படி ருஷ்யாவில் டால்டாயும், குரோபோட் கினும்1 கிறிதவ தர்மத்தின் பழைய சித்தாந்தங்களைப் புதுப்பித்துக் காட்டினார்களோ, அதே முறைகளை அநுசரித்துத்தான் காந்தியடிகளும் மானிடசமுதாயத்தைத் திருத்தி யமைக்கப் பார்க்கிறார். ஜெர்மனியிலும் இதே மாதிரி நம்பிக்கையுடையவர் களான குர்ட் ஈனர், கடவ் லாண்டௌர், கார்ல் வான் ஒஸீட்கி, எரிக் மூஷாம், தியாடோர் லெஸிங் முதலியோர்1 இருக்கிறார்கள். காந்தியடிகள் இந்தியாவில் வெற்றி பெற்றிருக்கிற போது, ஜெர்மனியில் இவர்கள் வெற்றி பெற முடியாதா என்ன? ஆனால், இவர்கள், தங்களுடைய சித்தாந்தத்தை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் செய்கிற போது, அந்த முயற்சிகளின் விளைவு என்ன ஆகியிருக்கின்றது என்பது நமக்குத் தெரியும். பலாத்காரத்தை எதிர்த்து நின்ற மேற் குறிப்பிட்ட பெரியார்கள், மரணத்தை யடைந்திருக்கிறார்கள். ஒஸீட்கி என்பவர், கொலையாளியின் குண்டுக்கிரையாவதற்குப் பதிலாக, க்ஷய ரோகத்திற்கிரையானார். கொலை செய்தவர்கள் இன்று பெருமையும் புகழும் அடைந்திருக் கிறார்கள். உதாரணமாக (ஜெர்மனியில்) ராத்தெனாவ் என்பவரைக் கொலை செய்தவர்களும், (இத்தலியில்) மாட்டியோட்டியைக் கொலை செய்யத் தூண்டியவர்களும் இன்று புகழடைந்திருக்க வில்லையா? பக்குவமடையாத ஆன்ம சக்தி ஆதிக்கஞ் செலுத்திக் கொண்டிருந்த தானத்தில் இன்று, பலாத்காரம் புகழப்படுகிறது; அதன் தொழுகை நடக்கிறது; அதனை தாபிதம் செய்ய முயற்சிகளும் நடைபெறு கின்றன. இயற்கைக்கும், இயற்கைப் பொருள்களுக்கும் விபரீத வியாக்கியானஞ் செய்தும், வாழ்க்கைப் போராட்டமென்பதற்கு ஒரு தலைப்பட்சமான வாதஞ் செய்தும் ஜெங்கிகான்2களைப் போல் பலர் வளர்க்கப் படுகிறார்கள். இந்தப் பலாத்கார தத்துவமாகிய விஷயத்தை வருஷந் தோறும் வளர்ச்சியடைகிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு ஊட்டி வருகிறார்கள். ஹாம்முராபி3 என்பவன் மெஸபொடோமியா வில் சட்டங்களை வகுத்த காலத்திலேயே இந்தப் பலாத்கார தத்துவம் பொய்யாகப் போய் விட்டது. பலாத்கார வாதிகளின் தத்துவங்களும் இயற்கையைப்பற்றி அவர்கள் செய்கிற வியாக்கியானங்களும் தவறானவை என்பதற்கு நாம் அதிகமான விஞ்ஞான ஆதாரங்களை எடுத்துக் காட்ட வேண்டிய தில்லை. இப்பொழுது நாம் செய்யவேண்டியது, காந்தியடிகள் இந்தியாவில் பிறந்து இந்தியாவிலே வாழ்கிறாரென்பதற்காகவும், மத்திய ஐரோப்பாவில் வசிக்கும் பெயர்வழிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் - ஆங்கிலேயர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டுடிருக் கிறாரே யென்பதற்காகவும் அவரைப் பாராட்டுவது தான். மத்திய ஐரோப்பாவில் இன்று யார் ஆதிக்கஞ் செலுத்துகிறார் களோ அவர்கள்-அந்த மிருகங்கள்-காந்தியடிகளின் மனிதத்தன்மைக்கு மரியாதை செலுத்துவார்களென்று நாம் எதிர் பார்க்கவே முடியாது. ஆயினும் அவருக்கு நாங்கள் துக்கத்தோடு, ஆனால் மனப்பூர்வமாக எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இருபது வருஷங் களுக்கு முன்னர் அவருக்கேற்பட்ட புகழின் பிரகாசமானது, உலகத்தில் ஒரு புதிய யுகம் உதயமாகிவிட்டதற்கறிகுறியென்று நாங்கள் கருதி னோம். ஆனால் இன்று, 1914ம் வருஷ யுத்தத்தோடு முடிந்து போன யுகத்தின் அதமனப் பிரகாசம் அது என்று நினைக்க வேண்டியிருக் கிறது. இந்த யுக அதனமத்திற்குப் பிறகு தான், நினைக்க முடியாத அநாகரிகக் கொடுமைகள் நடைபெற்றிருக்கின்றன. யூத தீர்க்க தரிசிகளும், கிறிதவ தர்மத்தின் புனித தாபகரும் எந்தெந்த இடங்களில் வசித்தும் உலவியும் வந்தார்களோ அந்தந்த இடங்களி லெல்லாம் இப்பொழுது, பயங்கர ஆட்சி நடைபெறுகிறது; நிரபராதி களினுடையவும் பலஹீனர் களினுடையவும் ரத்தம் சிந்தப்படுகிறது; பலாத்காரம், அரசியல் ஆயுதமாக உபயோகிக்கப்படுகிறது. இப்பொழுது பெயினிலும் சீனாவிலும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஜனங்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனை உலக வல்லரசுகள் சகித்துக் கொண்டு வருகின்றன. பெயினுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்டுள்ள கதி, மத்திய தரைக் கடல் நாடுகளுக்கும் ஏற்படுமோ என்னவோ? அபிசீனியாவில், இத்தாலிய ஆகாய விமானிகள், வெடிகுண்டு வீசி எறிவதை ஒரு சந்தோஷகரமான காரியமென்று கருதி அதில் பெருமை கொண்டார்கள். இந்த மாதிரி யான மனப்பான்மை, எந்த நாகரிகம் பதினெட்டாவது நூற்றாண் டிலும் பத்தொன்பதாவது நூற்றாண்டிலும் பிறந்து ஐரோப்பாவில் வெற்றியடைந்து வந்ததோ அந்த நாகரிகத்தைப் பற்றிக் கொண் டிருக்கிறது. இனி என்ன நடைபெறப் போகிறதென்பது நமக்குத் தெரியாது. ஆனால் எங்களுடைய வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள், பலாத்காரத்தில் ஈடுபடாமல் வாழ்க்கையைக் கழித்துவிட்ட நாங்கள், சமுத்திரத்திற்கப்பாற்பட்ட காந்தியடிகளை உரத்த குரலில் வாழ்த்துகிறோம். எங்களுடைய தவறுகளை எடுத்துக் காட்டியதற் காகவும், தமது உருவத்தினாலும் வாழ்க்கையினாலும் எங்களுடைய தலைமுறையைப் பரிசுத்தப்படுத்தியதற்காகவும் அவருக்கு வந்தனஞ் செலுத்துகிறோம். எங்களுடைய தவறு என்னவென்றால், இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பா காந்தியடி களின் தூய சித்தாந்தங்களைப் பின்பற்றுந் தகுதியுடையதென்று நினைத்ததுதான். சர்வாதிகாரிகளி னுடையவும், அவர்களுடைய சில்லரைத் தேவதை களினுடையவும், அவர்களுடைய பூட்களை நக்குகிற அடிமைச் சேனை யினுடையவும் வெற்றிப் பிரதாபங்களைப் பின்பற்றுவதைக்காட்டிலும், நாகரிகத்தின் தவறான போக்குகளைப் பின்பற்றுவதே நல்லது. காந்தியடிகள் தமது எழுபதாவது வயதில், மானிட ஜாதி உற்பத்தி செய்து கொடுத்திருக்கிற உயர்ந்த சக்திகளால் ஊக்கம் பெற்று விளங்குகிறார். தமது வாழ்க்கையில் எதை ஆரம்பித்தாரோ அதனைச் செய்து முடிக்கும் முயற்சியில் சலிப்புக் காட்டாமல் உழைக்கிறார். அவருடைய சிஷ்யர் களாக நாங்கள் இருப்போம் என்பதை அவர் உறுதியாகக்கொள்ளலாம். * * * மஹா தியாகி மகாகனம் வைகவுண்ட் ஹாலிபாக்ஸ் எம்.ஏ.,டி.சி.எல். (பிரிட்டிஷ் அந்நிய நாட்டு மந்திரி, லண்டன்) காந்தியடிகளைப் பற்றி தாங்கள் (அதாவது ஸர். ராதா கிருஷ்ணன்) தயாரித்துவரும் புதகத்தில் ஒரு கட்டுரை எழுதும்படி எனக்கு விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க வேண்டுமென்பது என் ஆவல். தங்களுடைய புதகத்தை, தற்கால இந்தியாவைப்பற்றித் தெரிந்து கொண்டுள்ளவர்களும் இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களும் மிகுந்த சிரத்தையோடு படிப்பார்கள். ஆனால் என்னுடைய வேலை மிகுதியினால் கட்டுரை எழுதியனுப்ப முடியாதவனாயிருக்கிறேன். இந்திய தேசீய இயக்கமானது, காந்தியடிகளின் புருஷத்து வத்தில் ஓரளவு அடங்கியிருக்கிறது. இதற்கு முன் எந்தத் தேசீய இயக்கத்திலும் இந்த மாதிரி இருந்ததில்லை. காந்தியடிகள், தமது லட்சியத்தில் சிரத்தையுடையவர்கள்; அதற்காக எவ்வித தியாகத்தையும் செய்யச் சித்தமாயிருக்கிறவர். இதனால்தான், தமது நாட்டு மக்களின் இருதயத்தில் ஓர் உன்னத தானத்தைப் பெற்றிருக்கிறார். ஒரு சமரஸ வழியைக் காண நாங்களிருவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்த நாட்கள் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கின்றன. அவருடைய எண்ணப் போக்குக்கும் என்னுடைய எண்ணப்போக்குக் கும் எவ்வளவு வித்தியாசங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், அவரிடத் தில் ஒளிர்கிற ஆத்ம சக்தியை அங்கீகரிக்க நான் எப்பொழுதும் மறுத்ததில்லை. தாம் எந்த லட்சியத்தில் நம்பிக்கை வைத்திருக் கிறாரோ அந்த லட்சியத்திற்காக எவ்வித தியாகத்தையும் செய்ய அவர் சித்தமாயிருப்பதையும் நான் பாராட்டாமலிருக்க முடியாது. * * * ஜீவகாருண்ய சிந்தை அப்டன் சிங்க்ளேர் (பாஸதேனா, காலிபோர்னியா) காந்தியடிகளின் மனிதத் தன்மை, அவருடைய தொண்டு, இவற்றைப் பாராட்டுகிற பலருடனும் நானும் சேர்ந்து கொள்வது எனக்கு ஒரு சந்தோஷமாயிருக்கிறது. அவருடைய எண்ணப் போக்கு களனைத்தையும் நான் அங்கீகரிக்க முடியாது. நாங்கள் இரண்டுபேரும், எதிருக்கெதிரான உலகங்களில் வசிப்பதால், எங்களுடைய கருத்துகள் ஒன்றாயிருக்குமென்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் அவரிடத்திலுள்ள உயர்ந்த ஆத்மசக்தி, ஜீவ காருண்ய சிந்தனை முதலிய வற்றால், அவர், உலகத்திலேயுள்ள எல்லா தயாள புருஷர் களுடைய அன்புக்கும் உரியவராயிருக்கிறார். * * * சமாதானத்திற்கு அடிகோலியவர் ஆர்தர் எச். காம்ப்டன், பி.எச்., எல்.எல்.டி. (விஞ்ஞான சாதிர ஆசிரியர், சிகாகோ சர்வகலாசாலை) காந்தியடிகளின் வாழ்க்கை, உலகத்திற்கு எவ்வளவு முக்கிய மானதென்பதைக் குறித்து நான் அதிகம் பாராட்டுகிறேன். எனது இந்தப் பாராட்டுதலை, தங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்குங்கால் அவருக்குத் தெரியப்படுத்தினால் நன்றாயிருக்கும். மனிதர்களுடைய கவனத்தின் முன்னணியில் வந்து நிற்கும் பல பிரச்னைகளைச் சமாதான முறைகளினால் தீர்த்து வைக்க வேண்டிய காலம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டதொரு காலத்தில், காந்தியடிகள் இந்திய மகா ஜனங்களுக்கு, அவர்களுடைய ஆத்மாவைக் காணும் மார்க்கத்தைக் காட்டியிருக்கிறார். இந்தச் சமாதான முறைகள் எவ்வளவு பயனுள்ளவையாயிருக்குமென்பதை நிரூபித்துக் காட்டியவர் மகாத்மா காந்திதான். * * * சத்தியம் என்றால் என்ன? ஜே.எச். மூர்ஹெட், எப்.பி.ஏ., எல்.எல்.டி. (தத்துவ சாதிர ஆசிரியர், பர்மிங்ஹாம் சர்வகலாசாலை) நமது சமகால சரித்திரத்தில் ஒரு பிரகாசத்தை உண்டுபண்ணி யிருக்கிற ஒரு மகா புருஷரைக் கௌரவிப்பதற்காக வெளியிடப் பெறும் ஒரு நூலில் கட்டுரை-ஒருசில வரிகளேயாயினும்-எழுதக்கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது ஒரு பாக்கியம். அந்த மகா புருஷர் முப்பது கோடி பேராகிய தமது நாட்டுமக்களை உயர்த்தி விட்டிருக்கிறார்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அசைத்துக் கொடுத்திருக்கிறார்; மனிதர் களுடைய அரசியல் வாழ்வில் சென்ற இரண்டாயிரம் வருஷகாலமாக இல்லாதபடி சக்தி பொருந்திய ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் என்று ரோமெய்ன் ரோலந்து, அவரைப்பற்றி வருணித்திருக்கிறார். உலகத்தின் மற்றப் பாகங்களில், தலைவர்கள், மானிட நீதியென்று ஒன்று இருக்கிறதென்பதையும், அல்லது உலகத்தை தர்ம ரீதியாக ஆட்சிபுரிய முடியுமென்பதையும் மறுத்துக் கொண்டு வருகிறார்கள்; அல்லது ஒரு வகுப்பைத் துன்புறுத்தி மற்றொரு வகுப்புக்கு நன்மை செய்யப்பார்க்கிறார்கள். இதே சமயத்தில், காந்தியடிகள், இந்தியாவை அந்நிய ஆதிக்கத் தினின்று விடுதலை செய்யும் முயற்சியிலும், இந்தியாவிலேயே ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கஞ் செலுத்தப் பார்க்கிறார்களே அதைத் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்து வருகிறார். மானிட சமுதாயத்தின் ஒற்றுமை என்பதின் பெயராலும், இந்த உலகத்திற்குப் புறம்பான மற்றொரு சாம்ராஜ்யத்தின் பெயராலும் அவர் உழைக்கிறார். இவை யெல்லா வற்றையும்விட அவர் செய்திருக்கும் முக்கியமான தொண்டு, மதங்களுக்கெல்லாம் அடிப்படையான ஒரு மதமிருக்கிறதே அந்த மதத்தை நாடியே மனித ஆத்மா செல்ல வேண்டு மென்று அவர் செய்து வரும் உபதேசங்கள்தான். நித்தியமான உண்மையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஏற்படுத்தப்பெற்ற சுப்பிரமணிய ஐயர் தாபன நிதியின் சார்பாக, பிரிட்டிஷ் தத்துவ சாதிர ஆராய்ச்சிக் கழகத்தில் ஸர்வேபல்லி ஸர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் ஓர் உபந்நியாசம் செய்தார். கூட்டத் தலைவர், ஸர் ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுகையில், மேற்படி நிதியின் தாபகர், சத்தியத்தைப் பற்றிக் கொண்ட கருத்தையும் அபிப்பிராயத்தோடு உண்மையை ஒட்டிப் பார்த்தல்தான் சத்தியம் என்கிற சாதாரண கருத்தையும் பொருத்திப் பார்ப்பது மிகவும் சிரமமாயிருக்கிறதென்று குறிப்பிட்டார். இதற்கு ஸர் ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், மேனாட்டு இலக்கியங்கள் சத்தியத்திற்கு என்ன விதமான வரம்பு கட்டி வைத்தபோதிலும் அதே சத்தியத்தை, கிறிதவ ஞானிகளும், சுவிசேஷ கர்த்தர்களும் விரிந்த பொருளில் உபயோகித் திருக்கிறார்களென்று சொல்லி சத்தியத்தை நீ தெரிந்துகொண்டால் அந்தச் சத்தியம் உன்னை விடுதலை செய்யும் என்ற வாசகத்தை எடுத்துக் காட்டினார். இது சம்பந்தமாகவும், ஹிந்து மதக் கோட்பாடுகள் சம்பந்தமாகவும் அவர் கூறியதைக் கேட்ட கூட்டத்தினர் அவரைப் பெரிதும் பாராட்டினார்கள். ஆனால் சத்தியத்தைப்பற்றி மேற்சொன்ன இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் ஏற்பட்டதற்கு மூலகாரண மென்ன, இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பவைகளைப் பற்றிக் கூட்டத்திலிருந்த சிலருக்குச் சந்தேகம் இருந்துகொண்டே யிருந்தது. சத்தியப் பொருள் எப்படி யிருக்கிறது, அதனை நாம் எப்படித் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஹிந்து தர்மம் விளக்கமாக எடுத்துச் சொல்லவில்லை யென்று நான் என் மனத்திற்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். இந்திய ஞானிகள் இந்த வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளாமலில்லை; ஆனால் இதை அலட்சியமாகக் கருதிவிட்டார்களென்றுதான் நான் கருதினேன். சத்தியத்தைப்பற்றி யார் என்ன விதமாகச் சொன்னபோதிலும், நம்மைச் சுற்றியுள்ள எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு பூண் டொழுகுவதன் மூலமாக நாம் சத்தியத்தைப்பற்றி அறிந்து கொள் கிறோமென்பது நிச்சயம். மனிதன், பட்சி, மிருகம் முதலிய அனைத்தையும் எவனொருவன் அதிகமாக நேசிக்கிறானோ அவன்தான் என்னை அதிகமாகப் பிரார்த்திக்கிறான் என்பது கிறிதவ வாசகம். * * * கட்டுரை எழுதினவர்களைப் பற்றி... ஸர் எ. ராதா கிருஷ்ணன் சென்னை, மைசூர், கல்கத்தா சர்வ கலாசலைகளில் முறையே தத்துவ சாதிர ஆசிரியராயிருந்தவர். ஆந்திரா சர்வ கலாசாலையின் உப அத்தியட்சகராயிருந்தவர். இப்பொழுது காசி ஹிந்து சர்வ கலாசாலையின் உப அத்தியட்சகராயிருக்கிறார். ஆக் போர்ட் சர்வ கலாசாலையிலும் தத்துவ சாதிர ஆசிரியராயிருக்கிறார். ஹிந்து தர்மத்தை விளக்கிப் பல நூல்கள் எழுதியிருக்கிறார். மேனாள் குடியரசுத் தலைவர். ஹோரே ஜி. அலெக்ஸாந்தர் இவர் இங்கிலாந்திலுள்ள க்வேக்கர் தாபனத்தைச் சேர்ந்த பிரபல அறிஞர். காந்தீயத்தை நன்கு ஆராய்ச்சி செய்து அதனைப் பிரசாரம் செய்து வருகிறார். சி. எப். ஆண்ட்ரூ டெல்லியிலுள்ள டீபன் காலேஜிலும் விசுவ பாரதி சர்வ கலாசாலையிலும் ஆசிரியராயிருந்தவர். ரவீந்தரநாத் தாகூரிடத்தில் பெரிதும் ஈடுபட்டவர். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சத்தியாக் கிரகம் நடத்திய காலை, அவருடன் சேர்ந்துழைத்தவர். தீண்டாச்சாதியாருடைய உயர்வுக்காவும், வெளிநாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்களின் நலனுக்காகவும் பெரிதும் பாடு பட்டவர். இந்தியாவைப் பற்றிப் பல நூல்கள் எழுதியிருக்கிறார். இவர் 1939ஆம் வருஷம் காலமாகிவிட்டார். ஜி. எ அருண்டேல் காசி செண்டிரல் ஹிந்து காலேஜில் சரித்திராசிரியரா யிருந்தவர். பல பாஷைகளில் விற்பன்னர். இந்தியால் 1917 ஆம் வருஷம் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் டாக்டர் அன்னி பெசண்டுடன் சேர்ந்து வேலை செய்தவர். இப்பொழுது தியசாபிகல் சங்கத்தின் தலைவர். பல நூல்களை யெழுதியிருக்கிறார். வி. எ. அஜரப்பா தேசீய மிஷனரி சங்கத்தின் தாபகர். டோர்னகல் பிஷப். கிறிதவ சமூகத்தில் இவருக்கதிகமான செல்வாக்குண்டு. எர்னட் பார்க்கர் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையில் அரசியல் சாதிர பண்டிதராக இருந்தவர். லண்டன் கிங்க் காலேஜின் தலைவராயிருக்கிறார். லாரென் பின்யன் ஒரு கவிஞர்; சித்திர நிபுணர். பிரிட்டிஷ் பொருட் காட்சி சாலையில் தலைவராயிருந்தார். லண்டன் இலக்கியக் கழகத்தில் ஓர் அங்கத்தினர். ஸ்ரீமதி பியர்ல் எ. பக் அமெரிக்க எழுத்தாளர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர். இவருடைய புலமைக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. ஆனந்தா கே. குமாரசாமி இலங்கை வாசி. புத்தமத ஆராய்ச்சியில் சிறந்தவர். கலை நிபுணர். அமெரிக்காவிலுள்ள பாடன் சித்திரப் பொருட் காட்சி சாலையில் ஒரு பொறுப்பான பதவியை வகிக்கிறார். லயனல் கர்டி இந்தியா அரசாங்கத்தின் அரசியல் இலாகாவில் ஓர் உத்தியோகதராயிருந்தார். ரவுண்ட் டேபிள் என்ற பத்திரிகையின் ஆசிரியராயிருந்தவர். பிரபல அரசியல் நிபுணர். இந்தியாவில் இரட்டை ஆட்சி முறைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர். பகவான் தா ஆங்கிலம், வடமொழி, பாரசீகம், உருது ஆகிய பாஷைகளில் மகா பண்டிதர். அநேக நூல்கள் இயற்றியிருக்கிறார். உத்தமமான வாழ்க்கை யுடையவர். ஆல்பர்ட் ஈன்டீன் பிரபல கணித நிபுணர். ஜெர்மானிய யூதரான படியால், ஜெர்மனியில் ஹிட்லர் ஆதிக்கத்திற்குப் பிறகு அந்நாட்டிலிருந்து வெளியேறி இப்பொழுது அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார். உலக மேதாவிகளில் ஒருவராய் போற்றப்படுகிறவர். ரிச்சர்ட் பி. க்ரேக் அமெரிக்காவிலே ஒரு பெரிய வக்கீல்; பெரிய பொருளாதார நிபுணர். 1925-26ஆம் வருஷங்களில், சபர்மதியில் காந்தியடிகளுடன் தங்கி யிருந்தார். சர்க்கா தத்துவத்தைப் பற்றியும் சத்தியாக்கிரக தத்துவத்தைப் பற்றியும் விரிவான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். கெரால்ட் ஹெர்ட் அமெரிக்கா அறிஞர். சில நூல்களை வெளியிட்டிருக்கிறார். கார்ல் ஹீத் க்வேக்கர் இயக்கத்தைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் அரசியல் விவகார நிபுணர். டீபன் ஹாப்ஹவு கிறிதவ சமாதான வாதிகளில் ஒருவர். இதற்காகப் பல கஷ்டங்களை அநுபவித்திருக்கிறார். இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு அச்சான காலத்தில் ப்ரூப் முதலியன பார்க்கும் வகையில் அதிக உதவி புரிந்தவர். டப்ளியூ. எர்னட் ஹாக்கிங் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் சர்வ கலாசாலையில் தத்துவ சாதிர போதகாசிரியர். ஆர். எப். ஹோர்ன்லே தென்னாப்பிரிக்காவிலுள்ள விட்வாட்டர் ராண்ட் சர்வ கலாசாலையில் தத்துவ சாதிர ஆசிரியர். அங்குள்ள ஜாதீய சம்பந்தக் கழகத்தின் முக்கியதர். ஜான் எச். ஹாப்மேயர் தென்னாப்பிரிக்க அரசியலில் பெரிதும் ஈடுபட்டிருக்கிறவர். அரசாங்க மந்தியாகவும் சிலகாலமிருந்தார். விட்வாட்டர் ராண்ட் சர்வகலாசாலையின் அத்தியட்சகர். பிரபல அறிஞர். லாரென் ஹவுமான் பிரபல ஆங்கில ஆசிரியர்; அநேக நாடகங்கள் எழுதி யிருக்கிறார். ஜான் எ. ஹாய்லண்ட் இந்தியாவில் நாகபுரி கலாசாலையில் சரித்திராசிரியராக இருந்தவர். பொதுநல சேவையில் பெரிதும் ஈடுபட்டவர். ஸர் மிர்ஸா எம். இமெயில் மைசூர் சமதானத்தில் பல வருஷ காலம் சேவை செய்திருக்கிறார். ஹைதராபாத் சமதானத்திலும் திவான் பதவியை வகித்தவர். சி.இ.எம். ஜோட் லண்டர் சர்வகலாசாலையைச் சேர்ந்த பர்க்பெக் காலேஜில் தத்துவ சாதிர ஆசிரியர் சமுதாய, அரசியல் சம்பந்தமாகப் பல நூல்களெழுதியிருக்கிறார். ரூப எம். ஜோன் பிரபல தத்துவ சாதிரப் பண்டிதல். அமெரிக்கன் ப்ரெண்ட் ப்ரஸெண்ட்டே பேப்பர் என்ற பத்திரிகைகளின் ஆசிரியராயிருந்தவர். எ. பெர்ரீடேல் கீத் எடின்பரோ சர்கலாசாலையில் சமகிருதபண்டிதராகவும் தத்துவ சாதிரப் பண்டிதராகவும் இருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அரசியல் விவகாரங்களில் ஒரு பெரிய நிபுணராகக் கவுரவிக்கப்படுகிறவர். கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் ஜெர்மனியிலுள்ள டார்ம்டாட் நகரத்தில் ஞானக் கழகம் என்ற ஒரு பள்ளிக்கூடத்தை தாபித்து நடத்திவருகிறார். பிரபல ஜெர்மானிய அறிஞர்களில் ஒருவர். ஜார்ஜ் லான்பரி பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் தலைவராகப் பலவருஷ காலம் இருந்தவர். உல சமாதானவாதிகளில் ஒருவர். எல்லா அரசியல் கட்சியினரும் இவரைக் கௌரவித்து வந்தார்கள். ஜான் மாக் முர்ரே லண்டன் சர்வகலாசாலையில் தத்துவ சாதிர ஆசிரியராயிருக்கும் பிரபல அறிஞர். டான் ஸால்வடோர் டி. மடாரியாகா பெயின் தேசத்து அறிஞர். மேற்படி நாட்டின் பிரதிநிதி யாகச் சர்வதேசச் சங்கத்தில் அங்கத்தினராயிருந்தவர். பிரான்சிலும், அமெரிக்காவிலும் பானி அரசாங்கத் தூதராயிருந்தவர். குமாரி எத்தெல் மான்னின் பிரபல நூலாசிரியை. நாவல்கள் எழுதுவதிலே கைதேர்ந்தவர் என்ற பெயர் இவருக்குண்டு. டாக்டர் மேரியா மாண்டிஸோரி இத்தாலி தேசத்தைச் சேர்ந்த இந்த அம்மையார், குழந்தை களுக்குக் கல்வி போதிக்கிற முறையைப் புதிதாகக் கண்டு பிடித்தவர். இந்தக் கல்வி முறை இப்பொழுது உலகப் பிரசித்தி யடைந்திருக் கிறது. ஆர்தல் மூர் இங்கிலாந்திலுள்ள பிரபல பத்திரிகைகளாகிய லண்டன் டைம் டெய்லி கிரானிகல் டெய்லி நியூ மான்செடர் கார்டியன் முதலிய பத்திரி கைகளுக்கு துருக்கி, அல்பேனியா, பர்ஷியா, ருஷ்யா, பெயின் முதலிய நாடுகளில் விசேஷ நிருபராகச் சென்று வேலை பார்த்தவர். கல்கத்தாவில் வெளியாகும் டேட் மான் பத்திரிகையின் ஆசிரியராயிருந்தவர். இந்திய அரசியல் விஷயங்களைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்திருக்கிற அறிஞர்களில் ஒருவர். கில்பர்ட் முர்ரே ஆக்போர்ட் சர்வகலாசாலையில் கிரேக்க பாஷா நிபுணர். உலக மேதாவிகளில் ஒருவர். அநேக கிரேக்க நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். யோனே நோகுச்சி ஜப்பானியக் கவிகளில் பிரசித்தமானவர். ஜப்பானிய காவியங்கள் சிலவற்றை ஆங்கில பாஷையில் மொழி பெயர்த்திருக்கிறார். பி. பட்டாபி சீதாராமையா பிரபல காங்கிரவாதி, காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்த பிறகு பலமுறை சிறை சென்றிருக்கிறார். கூட்டுறவு முறையில் பல தாபனங்களை ஆரம்பித்து நடத்தியவர். குமாரி மாட் டி. பெட்ரி பிரபல ஆங்கில நூலாசிரியை. எச்.எ.எல். போலக் இவர் ஒரு பாரிடர். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சத்தியாகிரக இயக்கத்தில் சேர்ந்து சிறைசென்றவர். லெவெலின் பவி இவர் பல வருஷகாலம் அமெரிக்காவில் பத்திரிகாசிரியரா யிருந்தவர். இப்பொழுது விட்ஜர்லாந்தில் வசிக்கிறார். பிரபல அறிஞர். எம். குவோதை-சி லண்டனில் சீன அரசாங்கத்தின் தூதராயிருந்தவர். 1941-ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் சீன அரசாங்கத்தின் அந்நிய நாட்டு மந்திரியாக நியமனம் பெற்றவர். ஸர் அப்துல் காதல் பஞ்சாப் மாகாணத்தில் இரட்டையாட்சியின் கீழ் அமைக்கப்பட்ட சட்டசபைக்கு முதல் தலைவராயிருந்தவர். சர்வதேச சங்கத்திற்கு இந்தியாவின் பிரதிநிதியாக ஒருமுறை சென்றிருந்தவர். இந்தியா மந்திரிசபையில் ஓர்அங்கத்தினர். ராஜேந்திர பிரஸாத் இந்திய தேசீய காங்கிர தலைவர். பேரறிஞர். தியாகி. ஒத்துழையா இயக்கத்திலீடுபட்டுப் பலமுறை சிறை சென்றிருக் கிறார். (1946-ம் வருடம்) இந்திய இடைக்கால அரசாங்கத்தின் உணவு மந்திரி. அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவர்; இந்தியாவின் முதன் ஜனாதிபதி. ரெஜினால்ட் ரெயினால்ட் அபேதவாத சம்பந்தமாக நுண்ணிய ஆராய்ச்சிகள் செய்து அநேகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1939-ம் வருஷம் சட்ட மறுப்பியக்கம் தொடங்கப்பட்ட போது, இந்தியாவில் இருந்தவர். திறம்பட எழுதுவதில் நிபுணர். ரோமெய்ன் ரோலந்து பிரபல பிரெஞ்சு எழுத்தாளர். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். காந்தியடிகளைப் பற்றியும், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் முதலியோரைப் பற்றியும் நூல்களெழுதியிருக்கிறார். குமாரி மாட் ராய்டன் லண்டன் சிட்டி டெம்பிள் மாதாகோயிலில் உதவி உபதேசகராயிருந்தவர். சமுதாயத் தொண்டுகளில் பெரிதும் ஈடுபட்டவர். லார்ட் சாமியல் பிரிட்டிஷ் அரசியலில் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர். அரசாங்கத்தில் அநேக சந்தர்ப்பங்களில் பல முக்கியமான பதவிகள் வகித்திருக்கிறார். இந்தியாவுக்கு விஜயம் செய்து, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் கண்டு பேசியிருக்கிறார். லார்ட் ஸாங்கே பிரிட்டிஷ் அரசாங்கத்தில் 1929ம் வருஷத்திலிருந்து 1935ம் வருஷம் வரை லார்ட் சான்ஸலரா யிருந்தவர். கல்வித்துறையில் பெரிய நிபுணர். வட்டமேஜை மகா நாட்டுக்கு தலைவராயிருந்தவர். டி.எ. சர்மா சென்னை பிரசிடென்சி காலேஜில் ஆங்கில ஆசிரிரா யிருந்தவர். தத்துவ சாதிர நிபுணர். சென்னை பச்சையப்பா கலாசாலையின் தலைவராயிருந்தவர். ஸ்ரீமதி கிளேர் ஷெரிடன் சிற்பக் கலையில் பெரிய நிபுணை. ஜே.சி. மட் பிரசித்த தென்னாப்பிரிக்க ராஜதந்திரி. தென்னாப்பிரிக்க யூனியன் அரசாங்கத்தின் பிரதம மந்தியாயிருந்தவர். ரவீந்தரநாத் தாகூர் நமது இந்திய நாட்டுக்குப் புகழ் தேடிக் கொடுத்த மகா கவி. விசுவபாரதி சர்வகலாசாலையின் தாபகர். நோபல் பரிசு பெற்றவர். எட்வர்ட் தாம்ப்ஸன் ரவீந்திரநாத் தாகூரின் ஜீவிய சரிதத்தை எழுதியுள்ள ஓர் ஆங்கில அறிஞர். இந்தியாவின் சரித்திர சம்பந்தமாக அநேக நூல்கள் எழுதியிருக்கிறார். சாந்தி நிகேதனத்தில் சிறிதுகாலம் வசித்து வந்தவர். ஸ்ரீமதி ஸோபியா வாடியா சமாதானவாதிகளில்ஒருவர். பம்பாயில் வெளியாகும். ஆரியன் பாத் என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பிஷப் பா வெட்காட் இந்தியாவின் பிரதம பாதிரி. இந்தியாவின் அரசியல் லட்சியங்களிலே அநுதாபமுடையவர். ஜாக் சி வின்லோ புனாவில் தாபிக்கப் பட்டிருக்கும் கிறிதுவ ஸேவா சங்கத்தில் ஒரு பிரபல அங்கத்தினராயிருக்கிறார். இந்தியாவின் மத, அரசியல் போக்குகளில் அதிக அநுதாபமுடையவர். எச். ஜி. வுட் கேம்பிரிட்ஜிலுள்ள ஜீஸ காலேஜில் சரித்திராசிரியரா யிருக்கிறார். பர்மிங் ஹாம் நகரத்திலுள்ள வுட்ப்ரூக் என்ற இடத்தில் ஒரு சேவாசிரமம் தாபிக்கப் பட்டிருக்கிறது. அதன் அத்தியட்ச கராயிருந்தவர். ஸர் பிரான்சி யங்ஹபண்ட் இவர் இந்தியாவில் பிறந்தவர். இந்தியா அரசாங்கத்தின் அரசியல் இலாகாவில் சேவை செய்தவர். காஷ்மீர், இந்தோர் முதலிய சமதானங்களில் ரெசிடெண்டாயிருந்தவர். மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்து பூகோள சம்பந்தமாகப் பல ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறார். ஹிந்து மதக் கிரந்தங்களில் அதிக ஆராய்ச்சியுடையவர். ஸர் ஆல்ப்ரெட் ஜிம்மர்ன் ஆக்போர்ட் சர்வகலாசாலையில் சரிந்திர ஆசியர். உலக அரசியல் விவகாரங்களில், சிறப்பாகச் சர்வ தேச சங்க விஷயங்களில் பெரிய நிபுணர். ஆர்னால்ட் ஜ்வீக் பிரபல ஜெர்மன் நாவலாசியார். சென்ற மகா யுத்தம் சம்பந்த மாக இவர் 1929ஆம் வருஷம் ஒரு நாவல் எழுதி வெளியிட்டார். அதிலிருந்து இவருக்கு உலகப் பிரசித்தி ஏற்பட்டது. லார்ட் ஹாலிபாக் இந்தியாவின் ராஜப் பிரதிநிதியாக (1926-1931)வும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அந்நிய நாட்டு மந்திரியாகவுமிருந்தவர். இப் பொழுது அமெரிக்காவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தூதரா யிருக்கிறார். அப்டன் சிங்க்ளேர் பிரபல அமெரிக்க எழுத்தாளர். முதலாளித்துவத்தைத் தாக்கி பல நாவல்கள் எழுதியிருக்கிறார். இவருடைய நாவல்களில் எடுத்துக் காட்டப்பட்ட ஊழல்கள் பல. அமெரிக்கா அரசாங்கத்தாரால் கவனிக் கப்பட்டு, அவைகளைச் சீர்திருத்த அநேக சட்டங்களியற்றினர். ஆர்தர் எச். காம்ப்டன் பிலபல அமெரிக்க விஞ்ஞான சாதிரி. வாஷிங்டன் சர்வ கலாசாலையிலும், சிகாகோ சர்வ கலாசாலையிலும், விஞ்ஞான சாதிர ஆசிரியராயிருந்தவர். எக்ரே ஆராய்ச்சியில் விசேஷ நிபுணர். நோபல் பரிசு பெற்றவர். ஜே. எச். மூர்ஹெட் பர்மிங்ஹாம் சர்வ கலாசாலையில் தத்துவ சாதிரத்திற்கும், அரசியல் பொருளாதார சாத்திரத்திற்கும் ஆசிரியராயிருக்கிறார். தத்துவ சாதிர சம்பந்தமாக அநேக நூல்கள் எழுதியிருக்கிறார். 