தொழில் நுட்ப வரலாறு நூற்களஞ்சியம் - தொகுதி பத்து தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக் கலை -1 சாத்தன்குளம் அ. இராகவன் சிதைந்து போகும் நிலையில் இருந்த கையெழுத்துப்படியினைப் பெற்று இந்த நூலை முதன்முதலாக வெளியிடுகின்றோம். அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி பத்து தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை - 1 | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 2007 | தாள் : 16 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 8 + 304 = 312 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 290 | படிகள் : 1000 | நூலாக்கம் : மலர், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல்களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன்குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். உங்கள் கைகளில் தவழும் தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை எனும் இந்நூல் கையெழுத்துப் படியாக நூலாசிரியர் இராகவன் அவர்களின் மகனார் இரா.மதிவாணன் அவர்களிடம் இருந்தது. எங்களுடைய வேண்டு கோளை ஏற்று மனமுவந்து கையெழுத்துப் படியினை கொடுத்து உதவினார். இதனை முதன் முதலாக வெளியிடுகின்றோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க் கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளிவரு கின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப்போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள்ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரிய தாகும். நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல் களையும், வெளிவராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங் களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதி களாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்து விட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், திருமதி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன்,இல.தருமராசு, ரெ. விஜயகுமார் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர் களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) பொருளடக்கம் பதிப்புரை iii உரிமையுரை vi 1. தோற்றுவாய் 3 2. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் 34 3. கட்டிடக் கலை 54 4. சிந்து வெளி அகழ் ஆய்வு 72 5. தமிழ் நாட்டுக் கட்டிடக்கலை - இலக்கியச் சான்றுகள் 92 7. கட்டிடக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் 114 8. அக நாழிகை (கர்ப்பக் கிரகம்) 134 9. குடைவரைக் கோயில் 162 10. மண்டபங்கள் 207 11. தூண்கள் - கால்கள் 216 12. ஒருமைப்பாடுடைய கட்டிடக் கலை 235 13. மாமல்லபுரம் மாதிரிக் கோயில்களும் கற்றளிகளும் 249 14. கலைப் பண்புக் கூற்றின் வளர்ச்சி 266 15. வரலாறும் கோயில்களின் ஒழுங்கும் 278 தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை - 2 கோயிற் பிரிவுகள் கோயில் என்றால் கடவுள் இல்லம் என்று பொருள்படும். கோ என்றால் அரசன் என்றும் பொருள்படும். எனவே ஆதியில் கோயில் என்னும் பதம் அரசன் இல்லத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. அப்பால் கோயில் என்னும் இறைவன் உறையும் இல்லிற்கே உரிய தனி உரிமை வாய்ந்த பதமாக அகராதிகளிலும், நிகண்டுகளிலும் உலக வழக்கத்திலும் நிலை பெற்ற பதமாக எழுந்துள்ளது. முற்காலத்தில் கோயில் என்ற பதத்திற்குப் பதிலாக மக்கள் தெய்வ உறையும் இடத்திற்குப் பள்ளி, பாழி, தெய்வ இல், தேவர் கோயில், ஆலயம், கற்கோட்டம், சினகரம், சேதிமம், தளி, தேவகுலம், தேவிநகர், நிகேதனம், நியமம், நிலயம், பீடரம், மந்திரம், வானவருறையுள், விமானம், என்று பல்வேறு பெயர்கள் வழங்கப் பட்டு வருகின்றன. (கர்ப்பக்கிரகத்திலும்) அதனுள்ளிருக்கும் இலிங்க வடிவங் களிலும் பல்வேறு வடிவங்களிலும் பாவங்களிலும் நிலைகளிலும் சிலை களிலும் செம்புப் படிமங்களிலும் சுவர்களின் மீதும் தூண்களின் மீதும், வெகு நுட்பமான அழகு வேலைப்பாடுகளிலும் நன்கு புலப்படுகின்றன. விளக்கமாகக் கூறுவதானால் இந்த வேற்றுமைகள் திருக் கோயில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் தெள்ளத் தெளிவாக - மிகத் துலாம்பரமாகக் காணப்படுகின்றன.1 இந்திய நாட்டிலுள்ள திருக்கோயில்களை நல்ல அறிவியல் நோக்கோடு - ஆராய்ச்சிக் கண்ணோடு ஆழ்ந்து நோக்கிச் சிந்தனை செய்பவர் களுக்குக் கட்டிடங்களின் மேற்போந்த பகுதிகளிலும் மட்டுமல்ல அடிப்படையிலே அல்லது அமைப்பு முறை அனைத்திலுமே, வேற்றுமைகள் தோற்றம் அளிக்கின்றன. எனவே நமது நாட்டிலுள்ள திருக்கோயில்கள் பொதுத் தோற்றத்தில் மட்டுமல்ல கலைப் பணியின் முழு அம்சத்திலும் அடிப்படை வேற்றுமைகள் உண்டு என்று நமது நாட்டில் உள்ள சிற்பத்துறையில் சீரிய புலமை மிக்கவர் என்று கூறப்பெற்றவர்கள் கூறுகின்றனர். இது தவறு என்று மறுப்பார் பலர் உண்டு. பொதுவாக நமது கட்டிடக் கலையைச் சிற்ப வல்லுநர்கள் மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார்கள். சிலர் இந்தியப் பாணி, தக்காணப்பாணி, தென் இந்தியப் பாணி என்று மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார்கள். சிலர் வரட்டி வரட்(பாரர்) பங்காளி என்றும் கூறுவர். வரட்டி, வரட் (பாரர்) நாட்டினின்றும் கலிங்கி கலிங்க நாட்டினின்றும் பங்காளி வங்காள நாட்டினின்றும் அரும்பியது என்றும் கூறப்படும். பொதுவாக இவைகள் அனைத்தையும் இணைத்து இந்தியப்பாணி, சர்வ தேசீகப் பாணி என்றும் கூறுவாரும் உண்டு. ஆனால் கட்டிடக் கலை அது அரும்பிய நாடு அல்லது பகுதி ஆகியவற்றில் வாழும் மக்களின் தொன்மை அறிவு தட்ப வெப்ப நிலை, நாகரிகம் முதலியவைகளுக்கேற்ப பல வேற்றுமைகள் உடையதாக இருக்கிறது. கட்டிடக் கலையில் காணப்படும் அடிப்படையான வேற்றுமைகள் சாதாரணமாக வீட்டுக் கட்டிடங்களில் மட்டுமின்றி அரண்மனை, மாளிகை அரசாங்க நிலையங்கள், கல்லூரிகள் போன்றவைகளிலும் கோயில்கள், கோட்டைகள் போன்றவைகளிலும் தெளிவாகப் புலப்படுகின்றன. ஏன்? இவைகளின் ஒவ்வொரு உறுப்புகளிலும் வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த வேற்றுமைகள் சிறப்பாகக் கோயில்களிலும் அதன் நடுவில் உள்ள திரு உண்ணாழிகையிலும் இடம் பெற்றிருப்பதை திரு. எ. கிருஷ்ண சாமி ஐயங்கார் அவர்கள் இந்தியக் கழகத்தின் கீழ் நாட்டுக் கலை இதழ் என்று வங்க நாட்டினின்று வெளிவந்த கலை வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகக் கலையில் - சிறப்பாகக் கட்டிடக் கலையில் ஒரு நாட்டின்வளம், செல்வச் சிறப்பு, நிலப்பரப்பு, மக்கள் எண்ணிக்கை நிலத்தின் தன்மை, அங்கு கிடைக்கும் கல், மண், மரம் முதலியவைகளின் இயற்கை மக்களின் குணங்களும், அறிவும் சிற்பிகளின் திறமும் அமைந்துள்ளன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த விதிகளுக்கேற்ப நமது கோயில்களில் காணப்படும் மூலப்பிரிவினையை வைத்து நமது சிற்ப மேதைகள், பாரத நாட்டில் உள்ள கோயில்களை (1) நாகரம் (2) வேசரம் (3) திராவிடம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார்கள். பாரத நாட்டில் உள்ள விந்திய மலைக்கு வடக்கில் உள்ள கோயில்கள் பெரும்பாலும் நாகரம் என்றும் விந்திய மலைக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடையில் உள்ள - தெக்காணத்தில் உள்ள கோயில்களை வேசரம் என்றும் கிருஷ்ணா நதியினின்று குமரி முனை வரையும் உள்ள தமிழகக் கோயில்களை (ஆந்திரம், கேரளம், மைசூர் பிரதேசங்களில் உள்ள கோயில்களை) திராவிடம் என்றும் கூறுகின்றார்கள். நாகரம், வேசரம் என்ற வார்த்தைகள் திராவிடம் என்ற வார்த்தையின் தோற்றம் தெளிவாகத் தெரியவில்லை. சிற்ப நூற்களின் மூல கிரந்தங்களையும் எழுதியவர்கள் விளக்கமான அறிக்கையின் மூலம் இவைகளுக்குப் பிரதேச முக்கியத்துவம் எதுவும் இருப்ப தாகத் தெரியவில்லை. இந்த வார்த்தைகளின் தோற்றம் எப்படி இருப்பினும் இப்பொழுது அவைகளைப் பற்றி ஒரு வித முடிவிற்கும் வர முடியாது என்று விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அவைகள் சந்தேகத்திற்கிடமின்றி கலை சம்பந்தப் பட்ட பெயராகும். சிற்ப நூற்கள்தான், இந்தக் கலை இலக்கணப் பெயர்களின் பொருள்களை விளக்கும் பிரமாண நூற்களாகும்; இந்த வார்த்தை களுடைய தோற்றங்களைப் பற்றி நாம் கொண்ட கருத்துகள் தவறாக இருக்கலாம். அல்லது நல்ல விளக்கமாக இருக்கலாம்; ஆனால் இந்தப் பதங்களுக்கு சிற்பிகள் கொண்ட கருத்து வேறாக இருக்க கட்டிடக் கலை, படிமக்கலை ஆகியவைகளைத் துலக்கு வதற்கு அத்யாவசியமான பதங்களாக இவ்விருவார்த்தைகள் மட்டும் உண்டு என்று சொல்வதற்கில்லை1 என்று கூறுகின்றன. எண்ணற்ற பலர், இதைப் போன்ற பழக்கமான பதங்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அவர்களுடைய கருத்துக்களை, அதிகார பூர்வமான நூற்களில் காணும் மேற்கோள்கள் மூலம் அறிய முடிகிறது. ஆனாலும் நாம் சம்பந்தப்பட்டவரை அவ்விருபதங்களின் தோற்றத்தை இன்னும் தெளிவாக அறிய முடியாதவர்களாகவே இருக்கின்றோம். எடுத்துக் காட்டாக பிண்டி, பெரம் என்ற பதங்கள் இலிங்கம், பிண்டி, பெரம் என்ற மூன்று பதங்களோடு இணைந்த பதங்களி லிருந்து வந்தவைகள் என்று தெரிகிறோம். நிச்சயமாக இத் தொடர்வாக்கியத் தினின்று இலிங்கம் சிவனுடைய சின்னத்தின் ஒப்பனையாக நாம் உணர்ந்து கொள்ளக் கூடும். பிண்டி, பீடமாக அல்லது இலிங்கம் இருக்கும் சிலையினடியாகவும் பெரம் படிம வடிவின் முழு உருவமாக உணர்ந்து கொள்ள முடியும். நாகரா என்ற பதம் நாகரி என்ற வரி வடிவங்களோடு மட்டும் தொடர் புடையதாகத் தெரிகிறது. வாத்சாயனரின் காம சூத்திர நூலில் நாகரா பெண்களில் ஒரு வகுப்பாக கூறப்பட்டிருக்கிறது. கட்டிட அமைப்புகளைப் பற்றிய பிரிவுகளை சில்பரத்தினம் மயமதம் ஆகிய நூற்களில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இஃதன்றி சிவாகமங்களிலும், சிற்ப நூற்கள் சிலவற்றிலும் இவைகளைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. என்றாலும் காமிகா ஆகமம் கட்டிட அமைப்புகளுக்கு ஒரு அரிய பிரமாண நூலாகத் திகழ்கிறது. கட்டிட அமைப்புகளின் அடிப்படையான அம்சங்கள் அனைத்தும் இதனுடைய பல்வேறு அத்தியாயங்களில் விரிவாகக் கூறப் பட்டுள்ளன. இவைகளில் நாகரத்திற்கும் திராவிடத்திற்கும், வேசரத்திற்கும் இடையேயுள்ள வேற்றுமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் அமைப்புகளின் பிரிவுகளின் நோக்கம் நாட்டை மூன்று பாகமாகப் பிரிப்பதேயாகும். அதாவது இமயந் தொட்டு விந்திய மலை வரை ஒரு பகுதியாகவும், விந்திய மலையினின்று கிருஷ்ணா நதிவரை இன்னொரு பகுதியாகவும், கிருஷ்ணா நதி தொட்டு குமரி முனைவரை மற்றொரு பகுதியாகவும் பிரிப்பதாகும். இந்தக் கோயிற் பிரிவுகள் மூன்று தெளிவான தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகத் தெரிகிறது. அதாவது சத்வம் ரசம், தாம்சம் எனப்படும். நாகரம், வேசரம் திராவிடம் என்ற பிரிவுகள் சிறிய வேற்றுமைகளைக் கொண்டு எழுந்ததாகும். இவைகள் மூன்றையும் சேர்த்து சர்வதேசிக அமைப்பு என்ற கண்ணோட்டத்தோடே நமது கட்டிடக் கலையை ஆராய வேண்டும் என்று திரு. எ கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்ற அறிஞர்கள் நமக்கு வற்புறுத்தி கூறியுள்ளார்கள். நாட்டின் எல்லைப் புறங்களை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் கலிங்கா, வரதா என்ற மற்றும் இரு பிரிவினைகளைக் கூட நாம் காண முடியும். நாகர அமைப்புக் கட்டிடங்கள் சாத்வீகக் குணம் சிறப்பாகத் துலங்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. வேசர அமைப்புக் கட்டிடத்தில் தாம்ச குணங்கள் பிரதிபலிக்கிறது. திராவிடக் கட்டிட அமைப்பில் ராஜச குணங்கள் சிறப்புற்று ஒளிர்கிறது. மற்றும் இரு பிரிவாகிய கலிங்க வரதப் பிரிவுக் கட்டிடங்கள் சாத்வீகம், ராஜசம் ஆகிய இரு குணங்களும் கலந்து காணப்படுகிறது. ஒரு வேளை சமமான அளவில் இருந்தாலும் இருக்கலாம். பொதுவாகக் கட்டிடங்களின் அமைப்புகள், கட்டிடக் கலையின் குணங்களைக் கொண்டு நோக்கினால் மக்கள் குடியிருக்கும் வீடுகள் அரண்மனைகள் கோயில்கள் போன்றவை களை ஆராய்ந்து பார்த்தால் எட்டுப் பிரிவுகள் உடையதாகக் காணப்படுகிறது. அதாவது (1) மூலம் (அடிப்படை) (2) மசுக்கரம் (உபதளம்), (3) ஜங்கா (torso) (4) கபோதம் அல்லது சிகரம் (5) கலம் (கழுத்து), (6) இதன் மேல் உள்ள அமல சாரமும், இதனைச் சுற்றியுள்ள பகுதியும் (7) கும்பம் (குடம்) (8) சூலம் (கூரை முகட்டு) ஒப்பனை வேலைப்பாடு முதலியவைகளாகும். இந்த எட்டுப் பகுதிகளின் பல்வேறு அமைப்புகளையும் பல விதமான அலங்காரங் களையும் பொறுத்தே கட்டிடங்களுக்கிடையயேயுள்ள பிரிவுகள் உணரப்படுகின்றது. ஆனால் நாகரப் பிரிவுக் கட்டிடங்கள் விமான அமைப்பு வேறு விதமாகக் காணப்படுகிறது. நாகரப் பிரிவுக் கட்டிடங்கள் எட்டுக் கலப்பான பகுதிகள் உடையதாக இருக்க வேண்டும். அவைகள் சோடி சோடியான இரதங்கள் அலங்கரிக்கப் பட்டு ஒவ்வொன்றிற்கும் எதிராக நிலை நாட்டப் பெற்றிருக்கும். பத்திரகா (Portico - mouldings ) ஒன்று மற்றொன்றிற்கு மேலாக உயர்ந்திருக்க வேண்டும். அதை மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது கோணங்கள் தெரியுமாறு அமைக்க வேண்டும். அதோடு முன்பக்கம் சிறிது துருத்தியிருக்குமாறு அமைத்து அதில் பறவைகள் தங்கி இருக்கக் குழிகள் அடைக்க வேண்டும். ஒரு பிரதாரத்தினின்று மற்றொரு பிரதாரம் மேலே படிகளில் ஒவ்வொரு பாகத்திலும் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓஹா (Moulding) பிரத்தியுகாவில் சிகரங்களோடு தனியாக அல்லது சோடியாக கலங்களோடு அல்லது அஃதன்றி அமல சரத்தோடு சுற்றி இருக்க வேண்டும். முன்பக்கமும் பின்பக்கமும் பக்க வாட்டில் இருப்பது போல் சுகானசி (தலைவாயில்) என்று கூறப்படும் மண்டபங்கள் கூட அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் கீழ்ப்படியிலும் கூட அமைக்கலாம். இந்த அழகு உறுப்புகள் கட்டிடக் கலைஞர்களின் சாதுரியத்திற்கேற்ப வேறுபட் டிருக்கலாம். அது நல்ல தோற்றத்தை தருவதற்குத் துணையாக இருக்கும். திராவிடப் பாணியில் கட்டப் பெற்றிருக்கும் கட்டிடங்கள் முதல் எட்டுப் பகுதிகளும் தெளிவாகக் காட்டப் பட்டிருப்பதோடு, நல்ல அங்கப் பொருத்தத்தோடு பகுதி பகுதிகளாகப் பிரிக்கப்பட்டும் சம தூரமாக அளவிடப்பட்டு நிலை நாட்டப்பட்டிருக்கும் தூண்களுக்கு இடையே இடையேயுள்ள சுவர்களின் மீதும் தூண்களின் மீதும் அலங்காரப் பணிகளோடும் அடித்தளத்தின் மீதும் நன்றாக அமைக்கப்பட்ட ஒரு குறிகாட்டும் சதுரக் கல் கட்டிடத்தைக் காட்டி நிற்கும். பத்திரகா (தோரண வாயில்) இந்தக் கட்டிடங்களில் குறிக்கப்பட்ட அளவிற்கு வெளியில் மூலைகளில் அமைக்கப்பட வேண்டும். தூண்களுக்கு இடையில் உள்ள தூரங்கள் சமமாக இருக்க வேண்டும். பிரதாரங்களுக்கு (Entablatiures) இடையில் உள்ள இடைவெளிகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். வெளியே தண்ணீர் செல்வதற்கு குழாய்கள் அமைத்திருக்க வேண்டும். இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள உருவங்கள் மாலைகளோடு அலங்கரிக்கப்பட்டிருப்பதோடு மேலே மணிகளை அமைப்பதற்காக பலகைகளைத் தாங்கிக் கொண்டும் இருக்க வேண்டும். விளிம்பில் பள்ளங்கள் இருக்கப்பட வேண்டும். அவைகளுக்கு முக்கிய வாயில் பிரமத்துவாகம். கொடிகள் இலங்கும் முக மண்டபத்திற்கு வழியாக இலங்கும் பின்புறமுள்ள மகா மண்டபத்தில் பதின் மூன்று பிரிவுகள் கொண்டதாக இருக்கும். சிறிய மண்டபங்கள் பன்னிரண்டு பிரிவுகள் கொண்டிருக்கும். அவைகள் ஆறு அல்லது ஏழு மாடிகள் உடையதாய் இருக்கும். அவைகள் பதினைந்து அல்லது இருபத்தொரு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய அமைப்புகள் வீடுகளில் எட்டு அல்லது ஒன்பது மாடிகளாகக் கூடக் கட்டியிருக்கலாம். மற்ற அமைப்புகள் ஒன்பது, பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு பகுதிகளாகப் பிரிக்க வழக்கமான ஆறு விதமான அமைப்பில் ஒவ்வொரு பகுதியும் அழகுப் பணிகளோடு சிறப்பிக்கப் பட்டிருக்கும். எத்தகைய சிறிய அமைப்பும் அணி செய்யப்பட்ட விமானத்தின் நடுவிலிருந்து வெளியே வளைந்திருக்க வேண்டும். திராவிடப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள் திராவிடப் பாணி துலங்க விமானங்களில் சிறந்த அணிகள் விலங்க அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். திராவிட அமைப்புக் கட்டிடங்கள் நாகரத்தின் வேலைப்பாடு களுடனன்றி, நாகரம் அல்லது திராவிட அமைப்பின் சிறப்பான சாயலைப் பெற்றதாய் மேற் கூரைகள் பல பகுதிகளாய் பிரிக்கப் பட்டோ அல்லது பிரிக்கப்படாமலோ யிருந்து மேல் அமைப்புகள் உயர்ந்து இருக்கும்; பருமனுக்கேற்பச் சுருங்கியும் இருக்கும். இத்தகை அழகு அமைந்த அணி பெறும் விமானங்களை யுடைய கட்டிடம் வேசரம் எனப்படும். கட்டிடம் அடித்தளத் தினின்று ஒன்றிற்கு மேல் ஒன்றாகத் தொடர்ந்து உயர்த்தப்படும். அதில் தூண்கள் அணி செய்யப்பட்டும் தோரண வாயிலின் அச்சுகள் கழுத்திற்கேற்றதாய், மேல் தட்டுகளும், தூபிகளும் உயர்த்தப் பெற்று, பத்திரகாக்களுடன் பல்வேறு பகுதிகளுடன் அணி செய்யப் பெற்று உட்புறம் அழகு செய்யப் பெற்றிருக்கும். தூண்கள் உருவத்திற்கேற்ப அணி செய்யப் பட்டிருக்கும் பிரதாரத்தினின்று இறுதிப்பகுதி முன்னே துருத்திக் கொண்டு இருக்கும். இவ்வாறு அணி செய்யப்பட்ட கட்டிடங்கள் வேசரம் என்ற பிரிவைச் சேர்ந்தது என்று கூறப்படும். மூன்று வகைக் கோயில்கள் கோயில்களை நமது முன்னோர்கள் பலவகையாகப் பிரித்திருக்கிறார்கள். சிற்ப நூற்களிலும் சிவாகமங்களிலும் இந்தக் கோயில் வகைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஆகமங்கள் கோயில் வகைகளைப் பற்றி மட்டும் கூறியதோடு நின்றுவிடவில்லை. ஒவ்வொரு வகைக் கோயிலும் எப்படி இருக்கவேண்டும் என்றும் தெளிவாகக் கூறியுள்ளன. காரணாகமம் என்ற சிவாகமம் நாகரம், திராவிடம், வேசரம் என்ற மூன்று வகைக் கோயிலைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளது. இந்தப் பிரிவுகள் விமானங்கள் உண்ணாழிகை போன்றவைகளை வைத்து எழுப்பப் பெற்றதாகும். மேலும் காரணாகமத்தில் நாகரம் திராவிடம் வேசரம் என்ற பிரிவில், பூமி மட்டத்தினின்று தூபி வரை நான்கு மூலையுள்ள சதுரமான கோயில் அமைப்பிற்கு நாகரம் என்றும், மேடையிலிருந்து எண்கோண வடிவில் அமைக்கப்படும் கோயிலுக்கு திராவிடம் என்றும் கூறப்படும். கர்ண கூடத்திலிருந்து வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட கோயிலுக்கு வேசரம் என்று பெயர் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு சதுரம் எண் கோணம் வட்டம் என்ற மூன்று அமைப்புகளையுடைய கோயிலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. நமது நாட்டில் பூமிமட்டத்தினின்று தூபி வரை நான்கு மூலையிலுள்ள நாகர அமைப்புக் கோயிலைப் பெரிதும் காணமுடியும். கர்ண கூடத்திலிருந்து விமான உச்சி வரை வட்டவடிவமுள்ள வேசரம் என்ற அமைப்புள்ள கோயிலையும் காணலாம். ஆனால் மேடைக்கு மேல் எண் கோண வடிவமாக விமான உச்சிவரை அமைந்துள்ள திராவிடம் என்ற பெயருள்ள கோயிலைக் காண்பதரிது என்ற சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலர் நாகரம் நருமதை ஆற்றுக்கு வடக்கே அமைக்கப்பட்டவை. வேசரம் பௌத்த சமயத்தாரால் வளர்ச்சி செய்யப்பட்டவை. சாஞ்சி, கயா முதலிய இடங்களில் அமைக்கப் பட்டவை. திராவிடம் கிருஷ்ணா ஆறு முதல் குமரிமுனை வரை அமைக்கப்பட்ட திராவிடக் கோயில் அமைப்பு என்றனர். சிவபெருமானுக்குத் திராவிட அமைப்பு முறையும் அம்மனுக்கு நாகர அமைப்பு முறையும் முருகனுக்குத் திராவிட அமைப்பு முறையும் பிள்ளையாருக்கு வேசர அமைப்பு முறையும் ஏற்படுவதற்குக் காரணம் உண்டு. இப் பிரிவுகள் வடமொழிச் சிற்பப் பிரிவினை. ஆனால் தென்னாட்டில் வேறொரு பிரிவினை உண்டு. சதுரக் கருவறை அரைவட்டக்கருவறை என்பன என்று முன்னாள் அற நிலையப் பாதுகாப்புக் கழக ஆணையாளர் திரு. சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சிவாகமங்களை நன்கு பயின்ற அறிஞர்கள் நமது ஆகமங்களில் திராவிடம், நாகரம் வேசரம் ஆகிய மூன்று அமைப்புள்ள கோயில்களும் கூறப்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள். திரு. ம. வெ. மு. நாகராசக் குருக்கள் அவர்கள் உயிர்நிலை போன்ற மூலவர் எழுந்தருளும் திரு உண்ணாழிகையின் அமைப்பு முறை களைக் கொண்டு நாகரம் திராவிடம் வேசரம் என்ற பெயருள்ள மூவகைப்பட்ட கோயில் தோற்றங்களை ஆகமங்கள் கூறுகின்றன அவையாவன. நாகரம் திராவிடம் சைவ வேசரம் சதிரி தாப வேத் பௌமாதி தூபிபர் யந்தம் யுகாச ரம் நாகரம்ப வேத் வேதிப்ர பிருதி சாஷ்டாசிரம் திராவிடம் சேதி கீர்த்திதம் கர்ணப்ர பிருதி விருத்தம் யத்வத் வேசரம் பரிகீர்த்திதம் - ஆகமப் பிரமாணம் காரணம் இதன்பொருள் நாகரம் திராவிடம் வேசரம் எனும் மூவகை கோயில்கள் உண்டு. அடி முதல் முடி வரை நான்கு மூலையுள்ள சதுர வடிவமான கோயிலுக்கும் நாகரம் என்றும், வேதி (மேடை) யிலிருந்து எண் கோண வடிவில் அமைக்கப்படும் கோயிலுக்கு திராவிடம் என்றும் கர்ண கூடத்திலிருந்து வட்ட வடிவமாக இருக்கும் கோயிலுக்கு வேசரம் என்றும் கூறப்படும்.1 எனவே தமிழகத்தில் நாகரம் வேசரம் என்ற இரு அமைப்புள்ள கோயில்களையும் எளிதில் காணலாம். திராவிட அமைப்புள்ள கோயில் அறிதாகக் காணப்படுகிறது. எழுவகைக் கோயில் இஃதன்றி ஆகமத்திலும் சிற்ப நூற்களிலும் விஜயம் ஸ்ரீபோகம், ஸ்ரீவிலாசம் காந்த காந்தம் ஸ்ரீகரம் ஸ்ரீஹதி பிருஷ்டம், கேசரம் என்ற ஏழுவகையான கோயில்களைப் பற்றிக் கூறுப்படுகின்றன. இதனை அப்பர் அடிகள் முறையே கரக் கோயில், கொகுடிக் கோயில் பெருங்கோயில், மணிக் கோயில் இடங்கோயில் ஆலக்கோயில் ஞாழற் கோயில் என்று தமிழ்ப் பெயர் அளித்துள்ளார். இவைகளில் ஸ்ரீ விஜயம் (கரக்கோயில்) வட்டமான விமானத்தையுடைய கோயில் இது திருக் கடம்பூர் அமிர்தகடேசர் கோயில் திருக்கடம்பந்துரை கடம்பவனநாதேசுரர் கோயிலாகும் என்றும், (2) ஸ்ரீபோகம் (கொகுடிக்கோயில்) வட்டமான சிகரமும் கர்ணக் கூடும் உடைய கருப்பறியலூர் தலை ஞாயிறு குற்றம் பொறுத்த நாதேசுவரர் கோயில் என்றும் (3) ஸ்ரீவிலாசம் (பெருங்கோயில்) நடுவில் பத்திர வரிசையுடன் கூடிய செய்குன்றின் மீது எழுப்பப்பெற்ற அம்பர் நகர், நன்னிலம் (மதுவனேசர் கோயில்) கோயில் போன்றவைகளாகும் (4) கந்த காந்தம் (மணிக் கோயில்) 6 அல்லது 8 பட்டைகளையுடைய சிகரத்தையும் கழுத்தையும் உடைய நாங்கூர், திருவிடை மருதூர் முதலிய ஊரிலுள்ள கோயிலாகும் (5) படுஉகரம் (இளங்கோயில்) நான்கு படையான விமானத்தையுடையது. திருமீயச்சூர் கடம்பூர் முதலிய ஊர்களில் உள்ளது. (6) ஹதிபிருஷ்டம் (ஆலக் கோயில்) யானை முதுகு போன்ற விமானத்தையுடையது திருகச்சூர், பெண்ணாடகம் முதலிய ஊர்களில் உள்ளது (7) கேசரம் (ஞாழற் கோயில்) நீண்ட சதுரமான விமானத்தையுடையது திருப்பாதிரிப் புலியூர் திருக் கடைஞாழல் ஆள்வார் என்னும் சிவன் கோயில் என்றும் கூறுகிறார்கள். (இக் கோயில் முன் இருந்தது இப்பொழுது இல்லை என்று கூறுவாரும் உளர்.) தமிழகத்தில் இந்த அப்பர் கண்ட ஏழுவிதக் கோயில்களும் இன்னும் பல மாடக் கோயில்களும் எங்கும் காணப்படுகின்றன. அப்பர் காலத்திற்கும் ஏன்? கோச்செங்கணான் காலத்திற்கும் அதாவது கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழகத்தில் இந்த ஏழுவிதக் கோயில் எழுப்பப் பெற்றன. அஃதோடன்று அக் கோயில்கள் பல மிகுந்த அபிவிருத்தி அடைந்தும் வந்துள்ளன. பதினொரு வகைக் கோயில்கள் ஒரிசாவில் உள்ள சிறந்த சிற்ப நூலாகிய புவனப் பிரகாசா என்னும் ஓலைச் சுவடியில் பல்வேறு வகைக் கோயில்களும் அதன் பெயர்களும் படங்களும் அளவைகளும் அளிக்கப்பட்டுள்ளன. அது பூமி கோவிந்த மகாராணா என்பவரின் மகன் சிரி பாசி மகாராணா அவர்களுக்கு உரியது துரதிர்ஷ்டவசமாக இந்த ஏடுகள் நொந்தும் நைந்தும் சீரற்றுக் காணப்படுகிறது என்றாலும் அறிஞர்கள் இயன்ற அளவு முயன்று அடியில் கொடுக்கப்பட்ட பதினொரு கோயில்களின் பெயர்களைத் தந்துள்ளார்கள். அவைகள் அடியில் வருமாறு. 1. மகா மேரு 2. மந்தாரம் 3. கைலாசம் 4. பத்திரம் 5. கேசரி 6. சிரிவத்சா 7. நந்தி 8. இடபம் 9. அம்சம் 10. கருடன் 11. இலகு விமானம் வட இந்தியாவில் உள்ள கோயில்களின் தலைப்படங்கள் எல்லாம் நீண்ட சதுர வடிவாகவே காணப்படுகின்றன. அக்கினி புராணத்தின் ஒவ்வொரு கோயிலின் தலைப்படமும் சமசதுரம் உடையதாகவே இருக்கவேண்டும் என்று கூறுகிறது. ஒரிசாவில் உள்ள தாரின் இராச போச இராமார்த்தாண்டர் என்ற சிற்ப நூலிலும் அங்குள்ள இதர சிற்ப நூற்களிலும் பதினாறு விதமான கோயில் அமைப்புகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஒரிசாவிலோ அதை வேறு எந்த நாட்டிலோ இருக்கும் தமிழ் நாட்டில் உள்ள கோயில்களைப் போல் சதுரம், நீண்ட சதுரம், வட்டம், அரை வட்டம், ஆறுபட்டம் எட்டுப்பட்டம் முதலிய பல்வேறு கோயில் அமைப்புகள் பலவற்றைக் காணமுடியவில்லை. சிற்பங்கள் வாய்ந்த எழில் மிக்க கோயில்களையும் காணமுடியவில்லை. பதினாறு வகைக் கோயில்கள் வட இந்தியாவில் காணக்கிடக்கும் சிற்ப நூற்கள் பல்வேறு வகையான கோயில்களையும், விண்முட்டும் உயரமான கோயில் களையும் அதிகமான நிலப்பரப்புள்ள கோயில்களைப்பற்றியும் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பெருங்கோயில்கள் ஒன்றைக் கூட வட இந்தியாவில் காணமுடியவில்லை. ஒரிசாவில் உள்ள இராசமார்த்தாண்டனார் என்ற சிற்ப நூல் (1) ஆயத்தா, (2) சதுரரா (3) விருத்தம் (4) பத்திரசனா (5) சக்கரம் (6) விசும வாகு (7) திரிகோணம் 8 சகதாகிருதி (9) தண்டம் (10) பனவாசிதானம் (11) முராச (12) விர்கான் முக (13) வியாசன (14) குர்மாருப (15) தனு (16) சுர்ப்பா என்று பதினாறு வகைக் கோயில்களைப் பற்றிக் கூறுகின்றது. இதன் விளக்கம் அடியில் வருமாறாகும். 1. அயத்தா - அகலத்தைவிட நீளம் அதிகமான ஆலயம் 2. சதுரரா - அகலமும் நீளமும் ஒருப்போல உள்ள சதுர ஆலயம் 3. விருத்தம் - வட்டமான பெருங்கோயில் 4. பத்திரசனா - அகலத்தை விட நீளம் அதிகமானதும் நடுவில் சதுரமான முற்றமும் உள்ள கோயில் 5. சக்கரம் - வட்டவடிவமான தட்டு வடிவமான சிறு கோயில் 6. விசுமவாகு - வரிசையாக நீண்டு ஒடுங்கிய இரு இறக்கை களோடு கூடிய ஆலயம் 7. திரிகோணம் - முக்கோண வடிவமுடைய திருக்கோயில் 8. சகடாகிர்தி - நாற்கோணமும் நடுவில் முக்கோணமும் உடையதாய் இருக்கும் கோயில் 9. தண்டா -தண்டு போல் நீண்டு ஒடுங்கிய பாசறை போன்ற கோயில். 10. பனவாசிதானம் - பனவா என்ற இசைக்கருவியைப்போல நாற்கோணம் உடையதாய் எதிர்ப்பக்கம் தட்டையான வளைவு களையுடைய கோயில் 11. முரசா - முரசு என்ற இசைக் கருவி போன்ற கோயில் 12. விரகன முகா - அகன்ற முகப்பை உடைய கோயில் 13. வியாசனம் - இருதயம் அல்லது பனையால் செய்யப்பட்ட விசிறி வடிவமான கோயில் 14. குர்மாருப - வட்டமான ஐந்து புடைப்புடையது ஆமை போன்ற நாலு கால்களையும் தலையையும் நீட்டிக் கொண்டிருப்பது போன்ற தோற்றமுடைய கோயில் 15. தனுசு - வில்லைப் போன்ற அமைப்புடைய கோயில் 16. சர்ப்பா - குதிரைலாடம் அல்லது முறம் போன்ற அமைப்புடைய அரைவட்டக் கோயில். இந்தப் பதினாறு வகைக் கோயில்களில் சிற்ப நூற்களில் ஒன்றிரண்டு புதிய பேர்களும் குறிப்பிடப்படுகின்றன. இருபது வகைக் கோயில்கள் வட இந்தியாவில் உள்ள வட மொழிச் சிற்ப நூற்கள் பலவிதமாக கோயில் அமைப்புகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றன. வராக மிகிரர் என்பவர் எழுதிய பிருகத்சம்கிதை என்னும் நூலில் கோயில் கட்டும் நிலம் அதன் பரப்பு கோயில்களின் அமைப்பு வாயிலின் அமைப்பு மண்டபங்களின் அமைப்பு, உண்ணாழிகையின் அமைப்பு முதலியவைகளைப் பற்றி விவரமாகக் குறிப்பிடுகின்றன. அது அடியில் வருமாறு; (1)மேரு, (2) மந்தாரம், (3) கைலாசம் (4) விமானம் (5) நந்தனம் (6) சமுட்கா (7) பத்மம் (8) கருடன் (9) நந்தின் (10) வர்த்தனா (11) குஞ்சரம் (12) குகராசன் (13) இடபம் (14) அம்சம் (15) சர்வோத பத்திரம் (16) கடம் (17) சிம்மம் (18) ரோட்முண்ட (19) சதுர்ப்புசம் (நாற்கோண வடிவம்) (20) எண்டோள் (எண் கோணம் - Quadrangle) இதன் விளக்கத்தையும் வட இந்தியாவில் உள்ள சிற்ப நூற்கள் தந்துள்ளன. அது அடியில் வருமாறாகும். 1. மேரு: இது அறு கோண அமைப்புடையது (Sexangular) பன்னிரண்டு நிலைகளையுடையது. நாலு வாயில்களையும் பல பல கணிகளையும் உடையது. முப்பத்திரண்டு முழ அகலம் உடையது. 2. மந்தாரம்: பத்து நிலைகளையும் பத்து சிகரங்களையும் உடையது. 30-முழ அகலம் உடையது. 3. கைலாசம்: எட்டு நிலைகளையுடையது. 28 முழம் அகலமுள்ளது. 4. விமானம்: இருபத்தொரு முழம் அகலமும், பல கிராதிகளாலான பல கணிகளையுமுடையது. 5. நந்தனம்: இது ஆறு நிலைகளையுடையது. பதினொரு கபோலங்களைக் கொண்டது. 32-முழ அகலமுள்ளது. 6. சமுக்கம்: இது வட்ட வடிவமான அமைப்பையுடையது. 7. பத்மம்: இந்தக் கோயில் தாமரை பூ போன்று எட்டு முழ உயரமான ஒரு தூபியையும் ஒரு நிலையையும் உடையது. 8-9. கருடன்: கருடன் நந்தின் இந்த அமைப்புள்ள கோயில்கள் சூரிய கழுகு போன்ற வடிவத்தில் 24 முழ அகலமும் ஏழு நிலைகளும் இருபது கபோலங்களும் கொண்டது. 10. குஞ்சரம்: இது யானையின் முதுகு போன்ற உருவத்தை உடையது. பதினாறு முழம் அகலம் கொண்டது அடி அகன்று முடி குறைந்து இருக்கும். 11. குகராசன்: இது மேற் கூறிய கோயிலைப் போன்று 16 முழம் அகலமும் ஒரே விதமான மேற்கூரையும் பலகணிகளும் உடையது. 12. இடபம் (காளைமாடு): இது ஒரு மாடியும் ஒரு தூபியும் வட்டவடிவமாய் அமைந்துள்ளது. பன்னிரண்டு முழம் அகலம் உள்ளது. 13. அம்சம் (அன்னம்): இது அன்னப் பறவை வடிவில் அமைந்துள்ளது. இதன் அகலம் தெரியவில்லை. 14. கடம் (குடம்): இது குடம் போன்ற வடிவம் அமைந்தது. 8-முழம் அகலம் வாய்ந்தது. 15. சர்வ தோபத்திரம்: இது நான்கு வாயில்களையுடையது. பல சிகரங்களையுடையது. பல பலகணிகளையுடையது. 5 மாடிகளையுடையது. 25-முழம் அகலம் உள்ளது. 17-20. எஞ்சிய நான்குவிதக் கோயில்களும் (ரோட்குண்டா, சதுர்ப்புசம், எண்புசம் (எண்கோணம்) பதினாறு புசம் (பதினாறு கோணம்) நாம் நன்கு விளங்கக் கூடியதாக இல்லை. சதுர்ப்புயம் ஐந்து கபோலங்களும், ஏனையவைகள் ஒரு போலமும் பெற்றிருக்கும். இத்தகைய விமானத்தையுடைய கோயில்கள் இந்தியாவில் எங்கும் இல்லை. எங்கும் இருந்ததாகவும் தெரியவில்லை. இப்பொழுது இந்தியாவில் இருக்கும் கோயில்கள் நான்கு விதமான பிரிவுகளை உடையதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அது அடியில் வருமாறு: 1. ஒரிசா முறை - இது ஒரிசா மாநிலத்தில் காணப்படுகிறது. 2. வங்காள முறை - இது வங்க மாநிலத்தில் காணப்படுகிறது. 3. குசராத் முறை - இது குசராத் மாநிலத்தில் காணப்படுகிறது. 4. திராவிட முறை - இது தென் இந்தியாவில் காணப்படுகிறது. சுக்கிர நீதி என்னும் சிற்ப நூலிலும் பதினாறு விதமான கோயில்களைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் எழில் மிக்கதாய் வட்டம் சதுரம் நீண்ட சதுரம், அரைவட்டம் போன்ற முறையிலும், மண்டபங்கள் சுவர்கள், கோபுரங்கள், வாயில்கள் அகலத்தை விட உயரம் இரண்டு மூன்று பங்கு உயரம் உடையதாய் அழகிய படிமங்கள் உடையதாய் நன்றாக வண்ணந் தீட்டப் பட்டதாய் விளங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. சிற்ப நூற்கள் எடுத்துக் காட்டும் பதினாறு விதமான கோயில்களின் பெயர்களும் அதன் தூபிகளின் உயரம் அகலம் முதலியவைகளும் அடியில் வருமாறு உளது. எண் பெயர் தூபிகள் கற்கள் உயரம் அகலம் முழம் முழம் 1. மேரு 1,000 125 1,000 1,000 2. மந்தாரம் 875 110 875 875 3. இரிக்சுமா 766 96 766 766 4. இடையுமணி 670 84 670 670 5. சந்திர சேகரம் 586 74 586 586 6. மலையன் 513 65 513 513 7. பரிசத்திரா 449 57 449 449 8. இரத்தின சீசா 393 50 393 393 9. தட்டுமன் 344 44 344 344 10. பத்ம கோசம் 301 36 301 301 11. புட்பகாசா 263 32 263 263 12. சிகரம் 230 28 230 230 13. சுவத்திகா 201 25 201 201 14. மகா பதுமம் 176 22 176 176 15. பதும கூடம் 154 19 154 154 16. விசயா 135 17 135 135 சுக்கிர நீதி, பிருகத் சம்கிதை முதலிய நூற்களில் கொடுக்கப் பட்ட கோயில் பட்டியலைப் பார்த்தால் இத்தகைய பெருங் கோயிலான மேரு மந்தாரம் முதலிய கோயில்களை நாட்டில் காண்பதே அரிதாக இருக்கும். சுக்கிர நீதி, மேரு, ஆயிரம் தூபிகளையும் நூற்றியிருபத்தைந்து நிலைகளைக் கொண்டதாகவும் ஆயிரம் முழம் அகலமும் ஆயிரம் முழம் உயரமும் உடையதாகும். கோயிலுக்கு மண்டபமும் அல்லது பெரிய அறையும் கோயில் உயரத்தை விட நாலில் ஒரு பங்கிற்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இராச மார்த்தாண்டம் என்னும் சிற்ப நூல் பல்வேறு விதமான வீடுகளைப் பற்றியும் கோயில்களை பற்றியும் கூறுகிறது. அகலத்தை விட நீளம் அதிகமாக வைத்துக் கட்டப்பட்ட வீடு உடையவனுக்கு வெற்றியை அளிக்கும், நீண்ட சதுரமான வீடும் முற்றமும் இருந்தால் வீட்டுக்காரனின் எல்லா ஆசைகளும் நிறைவேறும் வட்டமான அமைப்புடைய இல்லம் நலத்தையும் செல்வத்தையும் அளிக்கும், இளம்பிறை போன்ற இல்லம் வறுமையை வளர்க்கும், முன்கோணமுடைய மனை வீட்டுக் குடையவனை நாட்டுக்குடையவனாக்கும், வண்டி போன்ற தோற்ற முள்ள மனை செல்வத்தைத் தேய்க்கும் நீண்ட தடி வடிவமுள்ள மனை, கால் நடைகளுக்காகாது, பாண வடிவமான மனை பார்வையை இழக்கச் செய்யும் முரசு வடிவமான மனை இல்லாளுக் காகாது, அகன்ற முகப்புள்ள அகம் செல்வத்தை அளிக்கும், விசிறிவடிவமான வீடு உத்தியோகத்திற்காகாது. ஆமை வடிவமான மனை திருட்டுப் பயம் உண்டாக்கும். வில் வடிவம் குதிரை லாட வடிவம் போன்ற மனைகளும் நலந்தராது. இஃதன்றி நகர் அமைப்பைப் பற்றியும் ஊர் அமைப்பைப் பற்றியும், மக்கள் மன்னர் வாழும் இடங்களைப் பற்றியும் விளக்கம் அளித்துள்ளது. ஊர் ஏழு, எட்டு, ஒன்பது சமபங்காக நீளமும் அகலமும் பிரிக்கப்பட வேண்டும். மத்திய பங்கு பிரமா என்று அழைக்கப் படும். இது தெய்வத்தை அடுத்திருக்கும். தெய்வத்திற்கு அணித்தே மக்களும் அதற்கு வேளியே பேயும் (பைசாசமும்) இருக்கும். அந்தணர்கள் பிரம நிலையிலும் தெய்வப்பகுதியிலும் இருப்பர். சிற்பிகள், தொழிலாளர்கள் துவிசர்கள் கல்லாதவர்கள் பைசாசப் பகுதியில் இருப்பார்களாம். ஊருக்கு வெளியே தெற்கில் கால் நடைகளுக்குத் தொழுவங்கள் அமைக்கலாம். வடக்கே நந்தவனங்கள் நிர்மாணிக்கலாம். மேற்கில் சமூகப் பிரஷ்டர்கள் வசிக்கலாம். கிழக்கில் குதிரைலாயங்களும் படை வீரர்களின் இல்லங்களும் அமைக்கலாம். நகரத்தினுள்ளே தெற்கில் வணிகர் வாழும் இடம் அடுத்தாற்போல் உழைப்பாளி இல்லங்கள் இடம் பெறலாம். கிழக்கில் அல்லது வடக்கில் செங்கல் சுடுபவர்கள் இல்லங்களும் இதற்கருகில் அம்பட்டர்கள் மனைவி களும் இருக்கலாம். இங்கு சிற்பிகளும் ஏனைய கைத் தொழிலாளர் களும் வசிக்கலாம். வட மேற்கில் மீன் பிடிப்பவர்களும் மேற்கில் மீன் விற்பவர்களும் குடியிருக்கலாம். வடக்கில் எண்ணெய் வாணியர்களும் இருப்பார்கள். நகரில் எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிணறு, குளம், சுனை, ஆறு வாய்க்கால் ஆகியவை களிலிருந்து வழங்கப்பட வேண்டும். நகரில் நான்கு இனத்தவர்களும் வாழலாம். நகருக்கு கிழக்கே அல்லது மேற்கு முகப்பில் அரசன் அரண்மனையை அழகுற அமைத்துக் கொள்ள வேண்டும். அரசன் வாழும் அரண்மனைக்கு வட கிழக்கில் அந்தணர்களும் அமைச்சர்களும் புண்ணியதலங் களும் நீரும், நெருப்பும் இருத்தல் வேண்டும். தென் கிழக்கில் நெருப்புத்தலமும் யானைகட்டும் இடமும் பண்டக சாலையும் அமைக்க வேண்டும். இஃதன்றி நகரில் கிழக்குப் பகுதியில் அரச குலத்தவர்களும் சிற்பிகளும் வசிக்கலாம். வாசனைப் பொருள்கள், பூக்கள், தானியங்கள் மது ஆகியவைகளை விற்போர்களும் வாழலாம். தென் கிழக்குப் பகுதியில் பானை வனைவோர்களும் பணம் கொடுக்கல் வாங்கல் செய்வோர்களும் பல்வேறு பண்டங்களை விற்போர்களும் வணிகர்களின் கடைகளும் இருக்க வேண்டும். தென் கிழக்குப் பகுதியில் பண்டக சாலைகளும் ஆயுதச் சாலைகளும் இருக்கும். தெற்கில் நகர மக்கள் குடியிருப்புகள் அமையலாம். கூல வணிகர்களும், செய் பொருள்களை விற்பவர்களும் இராணுவத் தலைவர்களும் காவலர்களும் மீன் விற்போர்களும் மதுரசம் அதிரசம் விற்பவர்களும் வசிக்கலாம். அண்மையில் நடனமாடுபவர் களும், இசைப்புலவர்களும், பரத்தையர்களும், வணிகர்களும் இடம் பெறலாம். மக்களும், தொழிலாளர்களும் வணிகர்களும், அரசர்களும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க இந்த அமைப்புகளை சிற்பிகள் ஏற்படுத்தியுள்ளார். இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. Journal of the Indian Society of Oriental Art Vol II No I. June - 1934 2. Principles of Indian silpasastra- Prof. Phanindra Nasa Bose M.A. (LAHORE) 1926 3. Beginings of the traditions of the South Indian Temple Architecture - P.R. Srinevasan M.A 1959. 7. சுக்ர நீதி - மகிபாலன் பட்டி கதிரேசன் செட்டியார் மொழியாக்கம். 8. தேவாரம் - அப்பர் அடிகள். 9. காரணாகமம் 10. திருக் கோயில் (திங்கள் வெளியீடு) - ம. வெ. மு. நாகராசக் குருக்கள் கட்டுரை. ஆகட் 1963 4. An Outline of Indian Temple Architecture Madras-1950 5. South Indian shrine. P.U. Jegadisa Iyer. Madras-1922 6. Temple of India - Publication Division Govt of India 1968. கோயில் வகைகள் 1. பெருங்கோயில் முன்னுரை பண்டைக் காலத்தில் இந்தியாவில் புகழ் பெற்ற சிற்ப வல்லுநர்கள் பலர் இருந்தனர். அவர்களால் எழுதப் பெற்ற சிற்ப நூற்களும் பல இருந்தன. இந்தியாவில் ஆங்காங்கே வாழ்ந்த சிற்பிகள் தங்களின் திறமைக்கும் பட்டறிவிற்கும் நாட்டிற் கிடைக்கும் மூலப் பொருள்களுக்கும் ஏற்ப சிற்ப நூற்களைப் பின்பற்றிக் கட்டிடக் கலைகளை உருவாக்கி வந்தனர். எடுத்துக் காட்டாக மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் கற்கோயில்களையே பெரிதும் விரும்பிக்கட்டி வந்தனர். மலைகள், குன்றுகள், பாறைகள் அதிகம் கிடையாத பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மண்கட்டியாலும், சுடுமண் செங்கல்லாலும் சுவர்கள் எழுப்பி கட்டிடங்கள் எடுப்பித்து வந்தனர். சிற்சில இடங்களில் இதற்கு மாறாக நிகழ்வதும் உண்டு மலையோ, பாறையோ அதிகம் இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளியிடங்களிலிருந்து கற்களை உடைத்துக் கொண்டு வந்து தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் திருப்புவனம் போன்ற ஊர்களில் கற்கோயிலைக் கட்டி வானளாவிய விமானங்களை எழுப்பி உலகப் புகழை ஈட்டியதும் உண்டு. மலைகளும் குன்றுகளும் மலிந்த கேரள நாட்டில் கற்கோயில்களை அதிகம் எடுப்பிக்காது அழகிய சிற்பச் சிறப்பு மிக்க சுடுமண் செங்கற்களால் கோயில்களை எழுப்பி மேற்பூச்சாக சுண்ணம்பூசி வண்ணந்தீட்டி எழில் பெற்றிலங்கும் கோயில்களைக் கட்டி பேரும் பெரும் பெருமையும் ஈட்டியதுண்டு. பொதுவாக நமக்கு கோயில் மட்டுந்தான் தெரியும். கோயில் வகைகளைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டதும் இல்லை; கண்டதும் இல்லை ஆராய்ந்து அறிந்ததும் இல்லை. ஆனால் நமது ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் நமக்குப் பலவகையான கோயில்கள் கூறப்பட்டுள்ளன. நமக்கு வடமொழிப் பயிற்சி இல்லாததால் அதை அறிய முடியாமற் போய்விட்டது. வடமொழிப் பயிற்சியுள்ள சிலருக்கு கோயில் வகைகளை அறிவதில் அக்கறை எழவில்லை. ஆனால் வடமொழியில் எழுதப் பெற்ற சிற்ப நூற்கள் சிலவற்றில் இருபது வகையான நூற்கள் கூறப்பட்டுள்ளன. அவைகளின் பெயர்கள் அடியில் வருமாறு: 1. மேரு 11.குஞ்சரம் (யானை) 2. மந்தாரம் 12. குகராச 3. கைலாசம் 13. விர்ச (இடபம்) 4. விமான உருவம் 14. அன்ச (அன்னம்) 5. நந்தனா 15. சர்வோதபத்திரம் 6. சமுட்கா (வட்டமானபெட்டி) 16. கட்ட (கடம்) 7. பத்மா (தாமரை) 17. சின்க (சிம்மம்) 8. கருடா (கருடன்) 18. ரோட்டுண்ட 9. நந்தின் (ஞாயிறு) 19. சதுர்ப்பட்டம் 10. வர்த்தனா 20. அட்டகோணம் இவைகளைப் பற்றி விளக்கி ஒவ்வொன்றும் எவ்வாறு இருக்கவேண்டும் எத்தனை மாடங்களையுடைய விமானங்கள் அமைக்கவேண்டும் என்றும் விரிவாக பிருகத் சம்ஹிதை என்னும் நூலில் வராகமிகிரர் எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால் இத்தகைய கோயில்கள் எங்கும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆனால் சுக்கிரநீதி என்னும் சிற்ப நூலில் மேற்கண்ட கோயில்கள் இருப்பதில் ஒன்றிரண்டைச் சேர்த்தும் பலவற்றை நீக்கியும் புதிதாக பலவற்றைச் சேர்த்தும் பதினாறு வகைக் கோயில் களின் பெயர்களையும் மாடங்களின் எண்ணிக்கை நீளம் அகலம் முதலியவைகளையும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளின் பெயர்கள் அடியில் வருமாறு: கவிகையிடம் மாடிகள் உயரம் அகலம் (DOMES) (Stonecs) முழம் முழம் 1. மேரு 1000 125 1000 1000 2. மந்தாரம் 875 110 875 875 3. இரிக்சமா 766 96 766 766 4. டைய்மாரி 670 84 670 670 5. சந்திர சேகரர் 586 74 586 586 6. மலையவன் 513 65 513 513 7. பரிசத்திரா 449 57 449 449 8. இரத்ன சிசா 393 50 393 393 9. தட்டுமன் 344 44 344 344 10. பத்மகோசம் 301 36 301 301 11. புடபகாசா 263 32 263 263 12. சிகரம் 230 28 230 230 13. சுவத்திகா 201 25 201 201 14. மகாபத்மம் 176 22 176 176 15. பத்மகூடம் 154 19 154 154 16. விசயா 135 17 135 135 மேற்கூறிய பட்டியல்களில் கண்ட கோயில்களில் சுக்கிர முனிவரும் வராக மிகிரரும், மந்தாரம், பத்மம் (மகாபத்மம்) என்ற இரு கோயில் வகைகளை மட்டும் பொதுமைக் கருத்தோடு குறிப்பிட்டுள்ளார்கள். சுக்கிர நீதி, மேரு என்ற கோயில் அமைப்பைப் பற்றி கூறுவதாவது: மேரு ஆலயம் ஆயிரம் கவிகை மாடங்களை (Domes) உடையது; நூற்றி இருபத்தைந்து நிலைகளை (Stories) உடையது; ஆயிரம் முழம் உயரமும் ஆயிரம் முழம் (Cubits) அகலமும் உடையது என்று கூறுகிறது. இத்தகைய கோயில்கள் எதுவும் நமது நாட்டில் எங்கும் இல்லை. அமைப்பதும் எளிதன்று. அதே போன்று சுக்கிர நீதி குறிப்பிடும் கோயில் வகைகள் எதையும் நாம் அமைத்து விடலாம் என்று இன்று அல்ல - என்றும் எண்ணுவதற்கு முடியாததாக இருக்கிறது. ஒரிசாவில் உள்ள ஒரு சிற்ப நூலில், 1 மகாமேரு, 2மந்தாரம், 3 கைலாசம், 4 பத்ரா, 5 கேசரி, 6 சிரிவத்சா, 7 நந்தி, 8 விர்சா, 9அம்சா, 10 கருடா, 11 இலகு விமானா என்று பதினொரு வகைக் கோயில் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. இவைகள் எல்லாம் அக்காலத்தில் சிற்பத்துறையில் ஈடுபட்ட அறிஞர்களின் அறிவாற்றலை அறியக் கூடியதாக இருக்கிறதே யொழிய நடைமுறைக்கேற்றதாக இல்லை. ஆனால் ஆகமங்களிலும் சிற்பநூற்களிலும் சில அறிஞர்கள் நாட்டின் நிலைக்கும் மக்களின் பொருளாதார இயல்புக்கும் நடை முறைக்கும் ஏற்ப இந்தக் கோயில் வகைகளைக் குறைத்து ஏழு வகைகள் ஏற்றது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவைகள் அடியில் வருமாறு 1. சிரி விலாசம் 2. சிரி விசயம் 3. சிரிகரம் 4. சிரிபோகம் 5. கேசரம் 6. ஸகந்தகாந்தம் 7. கஜப்பிருஷ்டம் இந்த ஏழுவகையான அமைப்புகளைக் கொண்ட கோயில்கள் நாட்டிற்கேற்றது; நடைமுறைக்கு உகந்தது. காமிகாகமத்தில் இதன் சிறப்பு விதந்து ஓதப்பெருகிறது. தமிழ் நாட்டில் இந்த ஏழுவகையான கோயில்களும் கட்டப்பட்டன. தமிழர்கள் இந்த ஏழு வகையான கோயில்களின் அமைப்பையும் மிகவும் ஆவலுடன் ஏற்றுக் கொண்டனர். ஏழு என்ற எண்ணே மிகச் சிறப்புடைய எண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறைவனுடைய ஏழுவகைத் தாண்டவமும், ஏழுவகையான இசையும், ஏழு கடல்களும், ஏழுலோகமும், ஏழு மாதாக்களும் பிறவும் ஏழாக அமைந்திருப்பதே ஒரு சிறப்பானதாகக் கருதப்பட்டது. கி.பி. 1000-ஆம் ஆண்டிற்குப்பின் தமிழர்கள் அதிகமான வடமொழியைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். தாங்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் நல்ல தமிழ் சொற்களுக்குப் பதிலாகக் கூட வடமொழியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக சோறு என்பதற்கு அன்னம், சாதம் என்றும் கோயிலுக்கு ஆலயம், மரத்திற்கு விருட்சம் கயல் கண்ணிக்கு மீனாட்சி- இறைவனுக்கு-பகவான், ஞாயிறுக்கு சூரியன் நாளுக்கு-தினம் என்று எல்லாவற்றிற்கும் வடமொழியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் தங்கள் நாட்டில் எங்கும் காணப்படும் கோயில் வகையை வடமொழியில் சொல்லாதிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் அந்தப் பெயர்களையே கேள்விப் பட்டதே இல்லை. ஒரு சிலர் கஜப்பிருஷ்டம் என்பதைக் கேள்விப் பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அதை அதிகமாகப் பயன் படுத்துவதே இல்லை. தூங்கானைமாடக் கோயில் என்றே கூறி வருகின்றார்கள். கஜப்பிருஷ்டவிமானக் கோயிலைத் தவிர ஏனைய ஆறுகோயில்களின் பெயரையும் நாம் அதிகமாகக் கேள்விப்படவே இல்லை. அதோடு இதுவரை வடமொழிப் பெயருக்கு ஏற்ற தமிழ்ப் பதத்தை நமக்கு எவரும் இதுவரை எடுத்துக்காட்டியதும் இல்லை. இருள் சூழ்ந்த தமிழகத்திற்கு ஒளியூட்டி நம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் நமக்கு ஒரு நெறியும் ஒரு மொழியும் ஒரு தெய்வமும் உண்டு என்று நிலை நாட்டியவர் சைவ சமய குரவர்களில் மூத்த வராய் விளங்கிய அப்பர் அடிகள் ஆவார். அவர் தமிழர்களின் தனிப் பெருங்கலைகளாய் விளங்கிய இயல் இசை நாடகம் நாட்டியம் ஓவியம் மருத்துவம் படிமம், கட்டிடக் கலை முதலியவைகளுக்குப் புத்துயிரும் புத்தொளியும் புது வாழ்வும் அளித்தவர். அவர் பிற சமயங்களையும் பிறமொழிகளையும் பிற கலைகளையும் நன் குணர்ந்தவர். அவர் துறவியாய் தம் வாழ் நாளிற் பெரும்பகுதியை அறிவு ஆராய்ச்சியில் செலவிட்டவர். அவர் வடமொழி வல்லுநர்; தமிழ்க் கலைக்காவலர். அத்தகைய பெருமான், பேரருளாளர் தமிழகத்தின் கோயில் வகைகளைப் பற்றிக் கூறியுள்ளார். அவர் வடமொழிப் பெயர்களைக் கூறாது, அல்லது அதன் பொருளைத் தரும் தமிழ்ச் சொல்லைத் தராதுக் கோயில் வகைகளுக்கு முதன் முதலாக நமக்குப் புதிய பெயர்களை ஈய்ந்து நமக்கு அக்கோயில் களின் வகைகளை அறிமுகஞ் செய்து வைக்கின்றார். அது அடியில் வருமாறு: பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும் கரக்கோயில் கடிபொழில் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே இவ்வாறு அப்பர் அடைவு திருத்தாண்டகத்தில் பெருங் கோயில், கரக்கோயில் ஞாழற்கோயில், கொகுடிக்கோயில் இளங்கோயில் மணிக் கோயில் ஆலக் கோயில் என்று ஏழுவிதமான கோயில்களின் பெயர்களை நமக்கு எடுத்துக்காட்டியுள்ளார். காமிகாகமத்திலும் சிரிவிலாசம், சிரிவிசயம், சிரிகரம் சிரிபோகம் கேசரம் கந்தகாந்தம், கஜப்பிருஷ்டம் என்று ஏழுவகையான கோயில்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. சிற்ப நூற்களிலும் இந்த ஏழுவிதமான கோயில்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எவரும் வடமொழிப் பெயர்களால் கூறப்பட்ட ஏழு கோயில்களுக்கும் தமிழில் எவரும் பெயர் கூறவில்லை. ஆனால் அப்பர் அடிகள் மட்டும் இந்த ஏழு வகைக் கோயில்களுக்கு ஏழுதமிழ்ப் பெயர்களை வழங்கியுள்ளார். ஆனால் அப்பர் பெருமான் கூறிய பெயர்களுக்கு நமக்கு நல்ல விளக்கம் தெரியவில்லை. வடமொழிப் பெயருள்ள எந்தக் கோயிலுக்கு எந்தத் தமிழ்ப் பெயரைக் குறிப்பிடுகிறார் என்று நம்மால் நன்குணர முடியவில்லை. இதைப் பற்றி அதிகமான தமிழ் அறிஞர்கள் கருத்தைச் செலுத்த முன்வரவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் களான திருவாளர்கள் வை.சதாசிவபண்டாரத்தார், க.வெள்ளை வாரணனார், சே.எம். சோமசுந்தரம்பிள்ளை போன்றவர்கள் தம் நூலில் இப்பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் நல்ல விளக்கம் எதுவும் தந்தார் களில்லை. தமிழ் நாட்டிலுள்ள தமிழ் அறிஞர்கள் கருத்தைக் கலைத் துறையில் செலுத்தாதலால் நமக்கு இதைப் பற்றி ஒரு விளக்கமான கருத்துக்கள் கிடைக்க முடியவில்லை என்றுதான் எண்ணுகிறேன். கலைவளர்ந்த தமிழகத்தில் கலைஞர்களைக் காண்பதே அறிதாய் இருக்கிறது. பழைய மரபில் வெளிவந்த கலைஞர்கள் இன்று பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், செதுக்குகிறார்கள், வார்க்கிறார்கள், வரைகிறார்கள், ஆனால் அவைகளைப் பிறருக்கு விளக்கிக் கூறமுடியாதவர்களாய் இருக்கிறார்கள். தமிழகத்தில் கலை ஆராய்ச்சித்துறையில் ஈடுபட்டிருப்பவர் களையே காண்பது அறிதாக இருக்கிறது. நான் அறிந்த அளவில், கலைத்துறையில் ஈடுபட்டவர்கள் காலஞ் சென்ற என் மதிப்பிற்குரிய சோழர் திரு. தொ. மு. பாகரத் தொண்டை மானும் இன்று கலைத் தொண்டாற்றி வரும் பெரியார் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுமேயாம். இவர்களில் நண்பர் தொண்டைமான் படிமங்களைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து வந்தார். கல்கியில் பல கட்டுரைகளும் வரைந்து வந்தார். ஆனால் கட்டிடக்கலையைப் பற்றியோ ஓவியக் கலையைப்பற்றியோ இசைக் கலையைப் பற்றியோ அவர் எள்ளளவும் சிந்தித்ததே இல்லை. படிமக்கலையைப் பற்றிக் கூட அவர் ஆழ்ந்து ஆராயவில்லை. அதோடு என் போன்றவர் களிடம் உங்களின் ஆழ்ந்த ஆராய்ச்சியை, யார் உணரப்போ கிறார்கள். ஒரு சில விசயங்களை மேற் போந்தவாறாக ஆய்ந்து எளிய நடையில் கூறவேண்டும். அதுதான் பயனுள்ள பணி என்பார். ஆனால் மதிப்பிற்குரிய நண்பர் திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் கலைத்துறைகள் பலவற்றிலும் ஈடுபடுபவர். தம் இறுதி மூச்சுள்ள வரை படிக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர். ஆனால் அவரது வறுமையும், ஆங்கில அறிவுக்குறையும், வடமொழி அறிவுக் குறைவும் கலைத்துறையில் வளர்ச்சி பெறமுடியவில்லை. என்றாலும் என்போன்றவர்களுக்கு அவரே முன்னோடியாய் விளங்குகிறார் என்று கூறிக் கொள்ளப் பெருமைப்படுகிறேன். தமிழர் வளர்த்த அழகுக் கலை என்ற நூலே எழுவிதக் கோயில் களைப் பற்றி ஆராய வேண்டும் என்ற ஆசையை மூட்டி விட்டது என்பதை என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை. அதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். தமிழகத்திலே முதன்முதலாக அப்பர்கண்ட எழுவிதக் கோயிலைப்பற்றி ஆராயமுற்பட்டவர் அவர்தான். அப்பரின் அடைவு திருத்தாண்டகத்தில் கூறப்பட்ட பெருக்காறு சடைக் கணிந்த என்ற பதிகத்தை எடுத்துக்காட்டி அப்பர் ஆறு வகையான கோயில்களைக் கூறுவதாக தமிழர் வளர்த்த அழகுக்கலை என்ற நூலில் முதற்பதிப்பில் 1956-இல் குறிப்பிட்டுள்ளார். அப்பர் பெருமான் குறிப்பிடும் பெருங்கோயிலை, கோயில் வகைகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளத்தவறிவிட்டார் எடுத்துக்காட்டாக அவர் அப்பர் பாடிய பாடலைக் குறிப்பிட்டுவிட்டு, கீழே, இப்பாடலிலே சோழன் செங்கணான் கட்டிய எழுபத் தெட்டுக் கோயில்களைக் கூறிய பின்னர், கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில் இளங்கோயில் ஆலக்கோயில் என்று ஆறு வகையான கோயில்களைக் கூறுகிறார்,1 என்று எடுத்துக்காட்டி யுள்ளார். இது புதிதாக கலைத்துறையில் ஈடுபட்ட மாணவர்களைத் திசை திருப்பிவிடுவதாக இருக்கிறது என்பதற்கு இதை இங்கு எடுத்துக்காட்ட முன் வந்தேன். சமய விரோதிகள் அப்பருக்குச் சிலை அறிவுதான் உண்டு; கலை அறிவு இல்லை என்று பிதற்று வதற்குக்கூட நண்பரின் ஆராய்ச்சி இடம் அளித்துவிட்டது என்பதை இங்கு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளேன். அப்பால் அவர் மூன்றாம் பதிப்பில் அதைத் திருத்திக் கொண்டார். கோயில்களைப் பற்றி நமது நாட்டு அறிஞர்களும், மேனாட் டறிஞர்களான சோவியோ துப்ரயல், பெர்கூசன், டெல்லா கிராமரிஷ் போன்றவர்களும் பலகட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். ஆனால் அவர்களில் எவரும் கோயில் வகைகளைப் பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடவில்லை. பெரிய கோயில் களின் அமைப்பு, அதன் உறுப்புகள், உயர்ந்த விமானங்கள் பெரிய கோபுரங்கள் முதலியவைகளைப் பற்றித் தான் பெரிதும் குறிப் பிட்டுள்ளார்கள். துப்ரயல் அவர்கள் மட்டும் கோயில் வகைகளில் ஒன்று என்ற கருத்தில் இல்லாது ஒரு சிறந்த கோயில் அமைப்பு என்ற முறையில் திருத்தணி தூங்கானை மாடக் கோயிலைப் பற்றி தனது நூலில் ஆராய்ந்துள்ளார். ஆனால் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள்தான் முதலில் நமக்கு ஏழுவகைக் கோயில் அமைப்பை நிறைவாக ஆராயாது விட்டாலும் ஓரளவு ஆராய்ந்து இவ்வாராய்ச்சித் துறைக்கு அடிகோலியுள்ளார். நிற்க அப்பர் அடிகள் திருத்தாண்டகத்தில் முதன்முதலாகப் பெருங்கோயிலையே குறிப்பிட்டிருந்தாலும் நண்பர் வேங்கடசாமி அவர்கள் பெருங்கோயிலையே கவனியாது விட்டுவிட்டதாலும் இங்கு நாம் முதன்முதலாக பெருங்கோயிலைப்பற்றி ஆராய முற்படுவோமாக. சம்பந்தர் தம் தேவார திருப்பதிகத்தில், பெருங்கோயில் ரத திருப்பதிகத்தில், மலை நிலாவிய மைந்தனம் மலையினை யெடுத்தலு மரக்கன்றன் தலையெலாநெரிந் தவறிட வூன்றினா னுறைதரு கீழ்வேளூர்க் கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக் கோயிலுள் நிலை நிலாவிய வீசனை நேசத்தா வினையவல் வினைபோமே - சம்பந்தர் 8. என்று கூறிய பாவின் மூலம் கீழ்வேளூர்க் கோயிலை பெருங்கோயில் என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அவர் பெருந்திருக் கோயில் என்று குறிப்பிடுவது பெரிய கோயிலை அல்ல எழுவகைக் கோயிலான பெருங்கோயிலையே என்பது தெளிவாகத் தெரிகிறது. இஃதன்றி அம்பர் நகர்ப் பெருங்கோயில், நன்னிலத்துப் பெருங் கோயில் திருக்குடவாயில் பெருங்கோயில், பெண்ணாடகம் பெருங்கோயில் புகலியூர்ப் பெருங்கோயில், பூந்தராய்ப் பெருங் கோயில், திருக்கோளிலிப் பெருங்கோயில் முதலிய கோயில்கள் தேவாரத்தில் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளன. இவைகள் பெரிய கோயில்கள் என்ற கருத்தில் சிறப்பித்துப் பாடப் பெறவில்லை. யானை புகமுடியாதவாறு கட்டுமலை மீது எடுப்பிக்கப்பட்டுள்ள உயரமான கோயில்களாகும். அதோடு வடமொழி நூலில் குறிப்பிட்டுள்ள சிரிவிசாலம் என்பது பெருங்கோயில் என்று நன்கு தெரிகிறது. அப்பர் அடிகள் தம் தேவாரத்தில் பெருங்கோயில் எழுபதினோடு எட்டு என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அப்பர் காலத்தில் பெருங் கோயில்கள் எழுபத்தெட்டு இருந்தன என்று நன்கு தெரிகிறது. அப்பர் எழுபதினோடு டெட்டு என்று குறிப்பிடுவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட கோச் செங்கணான் என்னும் சோழ அரசன் கட்டிய எழுபது கோயில்களையும் அவனுக்குப் பின்னர் ஏனையோர் எடுப்பித்த எட்டுக் கோயில் களையும் சேர்த்தே எழுபதினோடெட்டு என்று எடுத்துக்காட்டி யுள்ளனர். அப்பர் அடிகள் ஏழாவது நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது காலத்திற்கு முன்பே தமிழகத்தில் சிவன்கோயில்களும் திருமால் கோயில்களும், சைவமும் வைணவமும் அடியார்களும் இருந்தனர். பௌத்தமும் சமணமும் தலை நிமிர்ந்து நின்ற காலத்தில்கூட கோச்செங்கண்ணான் பல கோயில்களை எடுப்பித்தான் என்பதை அப்பர் அடிகள் மட்டுமல்ல திருமங்கை ஆழ்வார் போன்றவர்களும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோழீசற்கு எழில்மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் என்றும், செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே என்றும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருமாலுக்கும் சிவனுக்கும் எழுபது கோயில்கள் கோச் செங்கணான் கட்டியதாகக் கூறுகிறார்கள். அதோடு, கோச் செங்கணான் கட்டிய கோயிலைப் பெருங்கோயில் என்றும் மாடக் கோயில் என்றும் இவர்கள் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட மாடங்களையுடைய கோயில்களை மாடக் கோயில் என்று முற்காலத்தில் கருதப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கண்ணான் எடுப்பித்த பல மாடங்களையுடைய கோயிலை மாடக் கோயில் என்றும் அவைகளில் சில பெரிதாக அதாவது அகலமும் நீளமும் உள்ளதாகப் பெரிதாக இருந்ததால் பெருங்கோயில் என்றும் கூறப்பட்டன. செங்கணான் எடுப்பித்த மாடக் கோயில் மிகப் பெரிதாக மலையென உயர்ந்து நின்றதால் மக்கள் அதனை நெடுமாடக் கோயில் என்றும் நீண்ட மாடங்களைப் பெற்றிருந்த தால் நீணிலை மாடக் கோயில் என்றும் ஆதிகாலத்தில் தமிழர்கள் மலைகள் மீது கோயில் எழுப்பியதை உன்னியோ ஒரு காலத்தில் தங்களின் கோயில்களுக்குள் யானைகள் புகுந்ததை எண்ணியோ யானைகள் உட்புகமுடியா வண்ணம் உயர்ந்த கட்டுமலைகளை எழுப்பி அதன் மீது பெருங்கோயிலை எழுப்பினர். இதனால் இக் கோயிலுக்குப் பெருங்கோயில் என்று பெயர் நிலைத்தும் இருக்கலாம். ஆதியில் தமிழர்கள் திரு உண்ணாழிகை மீது, உள்ளிருக்கும் மூலவருக்கு மகுடம் வைத்தாற் போன்று தட்டுத்தட்டாக பல நிலைகளையுடையதாய் விமானம் எழுப்பினர். இதைத்தான் விமானம் என்று வழங்கப்பட்டது. கோச் செங்கணான் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் மாடக் கோயிலும் பிறவகைக் கோயில்களும் இருந்துள்ளன. சங்க நூற்களில் ஏழுவகை மாடங்கள் காணப்படுவதே இதற்கு நல்ல சான்றாகும். ஆனால் தமிழகத்தில் கிறிதவ சகாப்தத்திற்குமுன் எழுந்த ஒரு கோயிலைக் கூட நாம் இன்று காட்ட முடியாத நிலையில் இருக்கின்றோம் என்பதை மறுக்க முடியாதவர் களாய் இருக்கிறோம். ஆனால் தமிழ் அறிஞர்கள் சிலர் மாடக் கோயில்கள் இருந்தன. அவைகள் சுடுமண்ணாலும் சுதையாலும் மரங்களாலும் கட்டப் பட்டிருந்ததால் விரைவில் அழிந்து வந்தன. அதன் பயனாக பழைய கோயில்கள் அழித்துக் குடவரைக் கோயில்களும், கற் கோயில்களும் எடுப்பிக்கப் பெற்றன. இறைவன் அழிவில்லாதவன்; அழிவில்லாத இறைவனின் இல்லமும் அழிவில்லாததாய் இருக்க வேண்டும் என்ற தத்துவ அடிப்படையிலே பழைய கோயில்களை இடித்துப் புதிய கற் கோயில்கள் எழுப்பப் பெற்றன என்று கூறுகிறார்கள். இதனை ஏற்றுக் கொள்வதில் எவருக்கும் ஆட்சேபனையில்லை பழங்கோயிலை பார்த்து ஆராய விரும்புபவர்களுக்கு இந்த முடிவு ஈடு செய்யமுடியுமா? முடியாது. மாடக் கோயில் பெருங்கோயில் என்று கூறப்படுபவைகள் இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறு கோயிலா? தேவாரத்தில் மாடக் கோயில் என்றும் பெருங் கோயில் என்றும் ஏன் பிரித்துக் கூறப்படுகிறது என்று சிலர் வினவுகின்றார்கள். இதற்கு நல்ல சான்று காட்டி நம்மால் பதில் கூற முடியாதிருக்கிறது. ஆனால் முற்காலத்தில் சாதாரண மக்கள் மாடங்கள் உள்ள எல்லாக் கோயில்களையும் மாடக் கோயில் என்றுதான் கூறி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்பால் அறிஞர்கள் பெரிய விமானமுள்ள கோயில்கள் விசாலமாக இருப்பதை பெருங் கோயில் என்றும் அஃதின்றி உயர்ந்த கோபுரங்கள் உள்ளதை மாடக் கோயில் என்றும் அழைத்தனர். அப்பால் விமானக் கோயில்களில் காணும் அழைப்பு களைக் கவனித்துத் தூங்கானை மாடக் கோயில், மணிமாடக் கோயில் என்ற பிரிவுகளைக் கண்டிருக்கலாம் என்று எண்ணு கிறேன். இதனால் மாடக் கோயிலுக்கும் பெருங் கோயிலுக்கும் சிறிய வேற்றுமைதான் உண்டு என்று தெரிவித்துக் கொள்வதோடு அப்பர் போன்ற பெரியார்கள் பெருங்கோயிலையே கோயில் வகைகளில் முதலாவதாகக் கொண்டு பாடியிருப்பதோடு நாயன்மார்கள் நன்னிலத்துப் பெருங்கோயில் கம்பர் நகர்ப் பெருங் கோயில் கீழ் வேளூர்ப் பெருங்கோயில் வைகல் மாடக்கோயில், தேவூர் மாடக்கோயில் என்றும் பிரித்துக் கூறுவதைக் கொண்டும் ஏழுவகைக் கோயில்களில் ஒன்றை பெருங்கோயில் பெயரை சிறப்பாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. திருநாவுக்கரசர் முதலில் கோச்செங்கணான் எழுபது பெருங் கோயிலைக் கட்டியவன் என்று தம் அடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார். கோச்செங்கணான் கட்டிய அப்பால், அந்த எழுபது கோயில்களில் ஒன்றான வைகல் கோயிலை தம்திருப்பதிகத்தில் மாடக் கோயில் என்று கூறப்படுவதும் அதன் சிறப்பு நிலையைப் பற்றிக் கூறப்படும் பொழுதும் பெருங்கோயில் மாடக்கோயில் என்று கூறப்படுவதும் நடைமுறை உண்மையாகும். கோச் செங்கணான் கட்டிய எழுபது கோயிகளில் ஒன்றாகக் கூறப்பட்ட வைகல் கோயிலை திருஞானசம்பந்தர், துளமதி யுடைமதி தோன்று கையினர் இளமதி யணிசடை யெந்தை யாரிடம் உளமதி யுடையவர் வைக லோங்கிய வளமதி தடவிய மாடக் கோயில் என்று கூறுகின்றார். இதன் மூலம் மாடங்கள் வைத்து அமைக்கப் பட்ட கோயில்கள் எல்லாம் பொதுப்பட மாடக் கோயில் என்றும் பெருங் கோயில் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம். அதன் பின்னர் மாடக் கோயில் வேறு பெருங்கோயில் வேறு என்று பிரிக்கப்பட்டிருக்கலாம் என்ற எனது எண்ணம் உறுதிப்படுகிறது. இதன்படி தஞ்சை பிரகதீசுவரர் கோயிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கங்கை கொண்ட சோழேச்சுரமும் பிற. மாடங்களுள்ள கோயில் என்று கூறமுடியும். காஞ்சிபுரம் பரமேச்சுவர விண்ணகரத்தையும் உத்திரமேரூர் சுந்தரவரதராசப் பெருமாள் கோயிலையும் பெருங்கோயில் என்று கூறலாம். காஞ்சி பரமேச்சுவர விண்ணகர் என்ற பெருங்கோயில் மூன்று மாடிகளைக் கொண்டது. இதை எட்டாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் பரமேசுவர வர்மன் எடுப்பித்தான். உத்திரமேரூர்க் கோயில் மூன்று நிலையுள்ள பெருங்கோயிலாகும். இக்கோயில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவ மன்னன் நந்திவர்மன் என்பவனால் கட்டி முடிப்பிக்கப்பெற்றது. இஃதன்றி கற்கோயில் எடுப்பிக்கப் பெற்ற ஆரம்ப காலத்தில் மாதிரிக்காகப் பல மாடக் கோயிலை மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் சிறுகுன்றுகளை ஒரே கல்லில் கோயில்களாக அமைத்தனர். அவைகளில் அர்ச்சுனரதம் என்று இன்று கூறும் மாதிரிக்கோயில் இருநிலை மாடக் கோயிலுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. தர்மரா சரதம் என்று கூறப்படுவது மூன்றடுக்கு மாடக் கோயிலுக்கு எடுத்துக்காட்டாக இலங்குகிறது. இந்த மாதிரிக் கோயில்கள் ஏழாம் நூற்றாண்டின் நடுவில் எடுப்பிக்கப் பெற்ற மாதிரிக் கோயிலாகும். இவை களெல்லாம் எனது சொந்த அபிப்பிராயமாகும். இவைகளுக்கு தேவாரத்தில் இருந்து சான்றுகள் எதுவும் காட்டமுடியவில்லை. ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டு ஆராய்ச்சித்துறை அறிஞராய் இருந்த காலஞ்சென்ற வித்துவான் உயர்திரு. தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள், பெருங் கோயிலைப் பற்றி சில அபிப்பிராயங்கள் கூறியுள்ளார். அவைகள் சிந்திக்கத்தக் கனவாகும். அவைகள் பின் வருமாறு: பெருங்கோயில்கள் எல்லாம் செய்குன்றுகள் மேல் எடுப்பிக்கப் பெற்றவை. இவற்றை மலைக் கோயில்கள் என்றும் கூறலாம். சம்பந்தப் பெருமான் திருநல்லூரில் உள்ள பெருங் கோயிலை மலை மல்கு கோயில் என்று கூறியிருப்பது அதன் அமைப்பை ஒருவாறு உணர்த்துவதாகும். நன்னிலத்துப் பெருங்கோயில், குடவாயில் பெருங்கோயில் வைகல் மாடக் கோயில் தண்டலைச் சேரி மாடக் கோயில் முதலியன காண்க. மாடக் கோயில், பெருங்கோயில் எனினும் ஒக்கும். மாடக் கோயில் என்பது யானை ஏறாத வண்ணம் பூமிமட்டத்திற்கு மேல் மிகவும் உயரமாகப் படிக்கட்டுகள் அமைத்துக் கட்டப்பெற்றதாகும். இத்தகையவை கோச் செங்கணான் எடுப்பித்தவையாகும்.1 பேரறிஞர் கூறிய மேற்பட்ட முடிபும் மாடக் கோயில்கள் இது வென்றும் பெருங்கோயில்கள் இதுவென்றும் திட்டவட்ட மாகக் கூறும் நிலையில் இல்லை. எனவே நாம் ஒருகாலத்தில் மாடமுள்ள பெரிய கோயில்களையெல்லாம் மாடக் கோயில்கள் என்றும் பெருங்கோயில்கள் என்றும் சாதாரணமக்கள் அழைத் திருக்கலாம் என்றும் அக்காலத்தில் அறிஞர்கள்கூட அப்பெயர் களைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அப்பால் கோயில் வகைகள் பெருகியகாலத்தில் சிற்ப விதிகளை அனுசரித்து சில கோயில்களைப் பெருங்கோயில் (சிரி விலாசம்) என்றும் சில கோயில்களை மாடக் கோயில் என்றும், சில கோயில்களை மணிமாடக் கோயில்கள் என்றும் சிலகோயில்களை தூங்கானை மாடக் கோயில்கள் என்றும், சிலவற்றை நெடுமாடக் கோயில்கள் என்றும் பலவிதப் பெயர் சூட்டியிருக்கலாம் என்று நமது அபிப்பிராயமே சரி என்ற முடிவிற்கு வரவேண்டியதாக இருக்கிறது. பெருங்கோயில் எது என்று நாம் ஒருவாறு நமது ஊகத்தால் ஒரு முடிவுக்கு வந்தாலும் வடமொழியில் கூறப்படும் சிரிகரம், சிரிவிலாசம் சிரிபோகம், சிரிவிசயம், கந்தகாந்தம், கேசரியம், கஜப்பிருஷ்டம் என்று கூறப்படும் பெயர்களில் எது பெருங் கோயிலைக் குறிக்கும் பெயர் என்று இதுவரை எவரும் திட்டவட்ட மாகக் கூறவில்லை. கட்டிடக் கலையைப் பற்றி பல்லாண்டுகளுக்கு முன்னரே ஆராயமுன்வந்த அறிஞர் இராவ் பகதூர் திரு.சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் பி.ஏ.பி.எல். அவர்கள், கோயில்களின் வகைகளிலே, சிற்ப வகைகள், புராண வகைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். சிற்ப வகைகளில் நிலக் கோயில் மாடக் கோயில் என இருவகைப்படும். சம நிலத்தில் கட்டுவது இயல்பாக ஏற்பட்டதே. ஆனால் பல அடிகளைக் கொண்ட மாடம் எழுப்பி அதன் பேரில் கட்டுவது சிறப்பானது. சோழ நாட்டில் கோச்செங்கணான் 70 கோயில்கள் யானைபுகாதபடி மாடக் கோயில்களாகக் கட்டினதாக வரலாறு உண்டு. அவைகளில் சில பெருங்கோயில்கள் என்று வழங்கும்.. அவைகளில் சில வைகல், நல்லூர், குடவாசல் நன்னிலம் அம்பர் ஆக்கூர் சாய்க்காடு, பழையாரை, வடதளி, திருவழுந்தூர், தலைச்சங்காடு, கீழ்வேளூர், தண்டலை நீணெறி, வலிவலம், திருநறையூர் என்பன. வைணவத்தில் அப்படிப்பட்டவை கச்சி, அத்திகிரி, சீவில்லிப்புத்தூர் என்பன1 என்று கூறியுள்ளார். மேற்கூறிய அபிப்பிராயத்தினின்று மாடக் கோயிலில் பெருங்கோயில் என்ற ஒரு பிரிவு எழுந்தது என்று தெரிகிறதே யொழிய சிற்ப நூற்களில் பெருங்கோயிலுக்கு என்ன வடமொழிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் இவரை விட சிறிது தெளிவாக நமது முடிவைத் தழுவி அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வித்துவான் வெள்ளைவாரணனார் அவர்கள் தம் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். அது அடியில் வருமாறு கோச் செங்கட் சோழர் அமைத்த மாடக் கோயில்கள் முன்னுள்ள திருக்கோயில்களைக் காட்டிலும் அளவிற் பெரியவை யாக அமைந்தமையால் அவை பெருங்கோயில் என வழங்கப் பெற்றன. நன்னிலத்திற் கோச்செங்கட் சோழராற் கட்டப் பெற்ற மாடக் கோயிலை நன்னிலத்துப் பெருங்கோயில் என்று நம்பியாரூரர் குறித்துப் போற்றுவதால் மாடக் கோயிலைப் பெருங்கோயில் எனவும் வழங்கும் வழக்கம் உளது என்பது நன்கு புலனாகும் என்று குறிப்பிட்டிருப்பது ஆராயதக்கது. ஆனால் அவரது கூற்று சிற்ப நூற்களைத் தழுவியதாக இல்லை. விசாலமான மாடக் கோயில்தான் பெருங்கோயில் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம் என்று எண்ணலாம். பெயரை வைத்து, பொதுவில் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால் இந்த சிரிவிலாசம் என்னும் கோயில் அமைப்பு ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது என்பதை நாம் ஆராயவேண்டும். ஆகமங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வடமொழிப் பெயர்களில் சிரிவிலாசம் என்பதே பெருங்கோயிலாகக் கருதவேண்டும் என்ற நமது முடிவு உறுதியான ஆதாரம் ஆக முடியாது. ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் சிரிவிலாசத்திற்கு வகுக்கப்பட்ட இலக்கணத்தை வைத்தே நாம் ஒரு தெளிவான - ஏன்? ஒரு திட்டவட்டமான முடிபிற்கு வரமுடியும். முற்காலத்தில் தமிழகத்தில் பெருந்திருக்கோயில் மட்டுமல்ல சிறுதிருக்கோயில் என்று ஒருவகைக் கோயிலும் இருந்தது. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தில் கொள்ளிடம் என்னும் ஆற்றங்கரையில் வடபுறம் உள்ள எரும்பூர் என்ற உருமூர் ஒரு பண்டைக் கால ஊராகும். அது பிற்காலத்தில் விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள கோயிலில் காணப்படும் சாசனங்களில், கடம்பவனே சுவரர் கோயிலை சிறு திருக்கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.1 ஆகவே அகலமும் நீளமும் உயரமும் உள்ள விசாலமான கோயில் பெருந்திருக்கோயிலாகவும் அகலம் நீள உயரம் குறைவான கோயிலைச் சிறு திருக்கோயில் என்றும் பொதுப் படக்குறிப்பிடப் பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் நாம் இங்கு பெருந் திருக்கோயில் என்று கூறுவது வடமொழியில் ஸ்ரீ விலாசம் என்று குறிப்பிடும் கோயிலேயாகும். மேலும் பெருந்திருக் கோயிலுக்கு ஸ்ரீ விலாசம் என்று பெயர் இருப்பது போல சிறு திருக்கோயிலுக்கும் வடமொழியில் ஒரு பெயர் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். பெருங் கோயில் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று நமக்குத் தெரியாது. எனவே சிற்ப நூற்களிலோ ஆகமங்களிலோ பெருங்கோயில் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் கூறுவதை முதலில் ஆராய வேண்டும். நாம் இதனை உன்னிப்பாக உற்றுநோக்கும்பொழுது தேவார ஆசிரியர்கள் பாடல்களும் அதற்கு உரைகண்ட ஆசிரியர்கள் கருத்தும் நினைவிற்கு வருகிறது. தேவார ஆசிரியர்கள் தம் திருப்பதிகங்களில், பெருங் கோயில் கட்டுமலைமீது உண்ணாழிகை யும் விமானமும் இருக்க வேண்டும். அடிப்பகுதி சதுரமாகவும் விமானம் வட்ட வடிவமானதாகவும் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. மேலும் பெருங் கோயிலுக்கும் மாடக் கோயிலுக்கும் அவர்கள் பாக்களின் மூலம் நமக்கு வேற்றுமை காணமுடியவில்லை. மாடக் கோயில் மாடங்களையுடைய கோயில் என்று பொது வாகத் தெரிகிறது. ஆனால் பெருங்கோயில் கட்டுமலைமீது மாடங்களின் எண்ணிக்கையைக் கவனியாது வேறு சில அமைப்பு களைச் சிறப்பாக வைத்து அமைக்கப்பட்ட பெரியதிரு உண்ணாழிகையும் விமானமும் உள்ள கோயிலாக இருக்கலாம் என்று தெரிகிறது. என்றாலும் திட்டவட்டமாக பெருங்கோயிலின் இலக்கணம் நமக்குப் புலப்படவில்லை. என்றாலும் சமய குரவர்கள் எந்தக் கோயிலைப் பெருங்கோயில் என்று பாடி இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து ஒருவாறு பெருங்கோயிலைக் கண்டுபிடிக்கலாம். எனவே அவர்கள் எந்தெந்தக் கோயிலைப் பெருங்கோயில் என்று பாடியுள்ளார்கள். அவைகள் ஆகமவிதிப்படி இருக்கிறதா என்று ஆராய்வோம். கீழ்வேளூர்ப் பெருங்கோயில் கீழ் வேளூர் கீவளூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் திருவாரூர் நாகூர் இருப்புப் பாதையில் இருக்கிறது. கீழ்வேளூர் ஒரு புகைவண்டி நிலையம். கோயில் புகைவண்டி நிலையத்திலிருந்து ½ கல் தொலைவில் இருக்கிறது. இவ்வூர் ஓடம் போக்கியாற்றின் தென்கரையில் இருக்கிறது. திருவாரூர் நாகபட்டினம் பேருந்து வண்டிகள் இவ்வூர் வழியாகச் செல்லுகின்றன. இவ்வூர் முருகப் பெருமான் சிவபெருமான் வழிபட்ட இடம் ஆதலால் கீழ்வேளூர், புள்ளிருக்கும் வேளூர் திருச்சேய்ஞலூர் என்றெல்லாம் அழைக்கப் படுகிறது. வேள் என்னும் பதம் முருகனைக் குறிக்கும் தேவலோகத்தில் முருகன் இருக்குமிடம் மேல்வேளூர் (தேவகந்தபுரம்) பூலோகத்தில் முருகன் இருக்குமிடம் கீழ்வேளூர் என்று புராணங்கள் கூறுகின்றன. முருகன் சூரபதுமனைக் கொன்ற பழி நீங்க சிவபெருமானை இத்தலத்தில் வழிபட்டதால் இதற்குப் பூசரணிபுரம் என்று பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வூர் பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் இவ்வூர் போந்து இங்கு கோயில் கொண்டிருக்கும் அட்சயலிங்கேசுவரரை வழிபட்டுப் பாடியுள்ளார். அவரது பாடலில் இக் கோயில் பெருங்கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது அடியில் வருமாறு: வெண்ணிலா மிகுவிரி சடையரவொடு வெள்ளெருக்க மலர்மத்தம் பண்ணிலாவிய பாடலோ டாலர் பயில்வுறு கீழ்வேளூர் பெண்ணிலாவிய பாகனைப் பெருந்திருக் கோயிலெம் பெருமானை யுண்ணிலா நின்றுளகிய சிந்தையாருலகினுள்ளாரே இவரது இப்பாடலைக் கொண்டு கீழ் வேளூரில் உள்ள அட்சயலிங்கேசுவரர் கோயில் பெருங்கோயில் என்று அறியப்படும். இங்கு இணைக்கப்பட்ட படம் பெருங்கோயில் எவ்வாறு இருக்கும் என்பதை நம் உள்ளத்தில் உருவகப்படுத்திக் காண ஏற்ற சான்றாக மிளிர்கின்றன. இக்கோயில் கோச்செங்கணான் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டியது என்று இக்கோயில் உள்ள சான்றுகள் உறுதிப்படுத்து கின்றன. திருக் கோயில் கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டிருக்கிறது; நான்கு திசைகளிலும் நான்கு வாயில்கள். கிழக்கு வாயிலில் உள்ள இராமர்கோபுரம் மிகப் பெரியது; எழில் மிக்கது இக்கோயிலில் இரண்டு சுற்றுகள் (பிரகாரங்கள்) உண்டு. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே புகுந்ததும் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது. அதைக் கடந்து மெய்க்காவல் கோபுர வழியாய் உள்ளே சென்றால் உட்பிரகாரம் காணப்படும். முன்னால் உள்ள மகாநந்தி, சந்நிதியை விட்டுத் தென்பக்கம் சிறிது விலகி இருக்கிறது. கற்புடைய பெண் ஒருவளுக்காக இறைவன் நந்தியைச் சற்று விலகி இருக்கும்படி செய்ததாகத் தல புராணம் கூறுகிறது. நந்திக்கு வடபுரம் மூவர் மண்டபமும் முருகப் பெருமான் சந்நிதியும் சபாநாயகர் சந்நிதியும் காணப்படும். தென்புறம் கட்டுமலைக்குச் செல்லும் பாதையில் அணியொட்டிக்கால் மண்டபம் அழகுற அமைந்திருக்கிறது. கட்டுமலைக்கேறும் படிக்கட்டுகளின் இருமருங்கினும் கொடுங்கை விநாயகர் சந்நிதி காணப்படுகிறது. வடக்கே இளமுருகன் தவக்கோலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இக் கோயிலுக்குச் செல்லும்படிகளில் ஏறி, உச்சியை அடைந்ததும் எதிரே சோமகந்த சுகாசன மூர்த்தி காட்சி அளிக்கிறார். இவரைத் தேவநாயகர் என்று கூறப்படுகிறது. இதற்கு வடபுறம் உண்ணாழிகையில் மூலவர் இலிங்கவடிவில் காட்சி அளிக்கிறார். இவரது திருப்பெயர் அட்சயலிங்கர், கேடிலியப்பர் என்றெல்லாம் கூறப்படும். கட்டுமலையின் மீது எழுப்பப் பெற்ற திருவுண்ணாழிகையின் விமானத்தைச் சுற்றிவலம் வர ஒரு சிறு பிரகாரம் இருக்கிறது. தெற்கு உட்பிரகாரத்தில் விசுவநாதர் அறுபத்து மூவர் முதலியோர்கள் வீற்றிருக்கிறார்கள். கோஷ்டத்தில் தென்முகக் கடவுள் (தட்சணாமூர்த்தி) காட்சி அளிக்கிறார். மேற்கு உட்பிரகாரத்தில் அகத்தீசுவரர் ஆளுங்கோவேசுரர் விசுவநாதர் மகாலட்சுமி, சம்புகேசுவரர், கைலாசநாதர் சந்நிதிகள் உள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் ஏகாம்பரேசுவரர் அண்ணாமலையீசுவரர், பிரகதீசர் சண்டேசுவரர் சோளீசுவரர் காயாரோகணேசர், காளத்தீசர் போன்றவர்களின் சந்நிதிகள் உள்ளன. இங்கு குபேரனுக்குக் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் வடமேற்கு மூலையில் அம்பிகையின் கோயில் காணப்படுகிறது. அம்பிகையின் திருப்பெயர் வனமுலை நாயகி, பதரிவன மூலநாயகி, சுந்தரகுசாம்பாள் என்றெல்லாம் கூறப்படும். உட்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் பத்திரகாளி சந்நிதி இருக்கிறது. இங்கு இளமுருகன் இறைவனை நோக்கித் தவம் இயற்றும் பொழுது அவருக்கு இடையூறு எதுவும் எழாவண்ணம் இறைவி நான்கு திக்குகளையும் காத்து நின்றாராம். அதனால் அம்பிகைக்கு அஞ்சுவட்டத்தம்மன் என்ற பெயர் ஏற்பட்டது என்று புராணம் கூறுகிறது. வெளிப்பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் விநாயகர் கோயில் ஒன்றும் தென் கிழக்கு மூலையில் சுந்தரகணபதி சந்நிதியும் உள்ளது. இங்கு சிவபெருமான் வலது காலைத் தூக்கி மாறியாடி அகத்திய முனிவருக்குக் காட்சி கொடுக்கும் வலது பாதத் தாண்டவக் காட்சி குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தலவிருட்சம் இலந்தைமரம். இங்குள்ள பெருங்கோயில் கட்டுமலை மீது இருக்கிறது பெருங்கோயிலுக்குச் செல்லும்படிகள் சந்நிதிக்கு நேராக இல்லை. தென்புரம் சற்றுத்தள்ளி இருக்கிறது. இது பெருங்கோயிலின் இலட்சணம் என்று சிலர் கூறுகின்றார்கள். இப் பெருந்திருக்கோயில் செங்கட் சோழன் கட்டிய எழுபது பெருங்கோயில்களில் ஒன்று. திருஞானசம்பந்தர் கீழ்வேளூர், பெண்ணிலாவிய பாகனைப் பெருந்திக்கோயிலெம் பெருமானை என்று தம் திருப்பதிகத்தில் பாடியிருப்பதைக் கொண்டு இது திட்டவட்டமாக பெருங் கோயில் என்று தீர்மானிக்க முடிகிறது. இக்கோயில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் கருங்கல்லால் எழுப்பப்பெற்றுள்ளது. இதனால் பல்லவர்கள் காலத்திற்கு முன்பும் தமிழகத்தில் கற்கோயில் இருந்தது என்பதை இது மெய்ப்பிக்கிறது. விமானம் கோயிலின் வகைகள் அதன் திருஉண்ணாழிகையின் அமைப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. விமானங்களின் அமைப்பைக் கொண்டே இது இவ்வகையைச் சேர்ந்த கோயில் என்று தீர்மானிக்கப்படும். விமானத்திற்குரிய பாகத்தை எட்டுப் பங்காகப் பண்ணி அதில் ஒருபங்கு அதிர்ஷ்ட்டானம், இருபங்கு பாதவரிசையும் பிரதரம் ஒருபாகமாகவும் கண்டம் ஒருபங்காகவும் சிகரம் ஒரு பங்காகவும், தூபி ஒருபங்காகவும் அமைக்கப்பட்டு நடுவில் பத்திரம் என்ற பூசணத்துடன் அமைந்திருந்தால் அது ஸ்ரீ விசாலம் (பெருங்கோயில்) என்றும் அழைக்கப்படும் என்று காமி காகமம் கூறுகிறது. (60:5-10) திருவுண்ணாழிகை மீது திகழும் விமானம் போன்று கோயில் அருகில் கீழ்கோபுரத்திற்குத் தென்புறம் தரைமீது பெருங்கோயில் விமானத்தைப் போன்று கருங்கல்லில் கட்டப் பெற்றிருக்கும் ஒரு விமானம் வனப்பு மிக்கது சிற்பச் செழுமை வாய்ந்தது. பிரகாரத்தின் மதிற் சுவர்கள் ஓங்கி உயர்ந்து ஒளிர்கின்றன. வெளிப்பிரகாரச் சுவர்கள் மீது அற்புதமான பொற்புறு சிற்பங்கள் மிளிர்கின்றன. பல்லக்குத் தூக்கிச் செல்லும் பான்மை, கடவுள்மீது காமன் கணைவிடுதல் கண்ணப்பர் கடவுளுக்குக் கண்ணைப் பிடுங்கிக் காணிக்கை வைப்பது, சீதை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்ய முயல்வது, கண்ணன் குழல் மீட்டல் போன்ற காட்சிகளின் சிற்பங்களோடு மீன் யானை, ஒட்டகம், இடபம், குஞ்சரம், மயில் முதலியவைகளின் உருவச் சிற்பங்கள் கண்கொள்ளாக் காட்சியாய் கவின் பெறத் துலங்குகின்றன. சாசனங்கள் இத்திருக்கோயில்கள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கோச் செங்கட் சோழனால் கட்டப் பெற்றது. இக்கோயிலில் ஒருகல்வெட்டு முதலாம் இராச ராச சோழன் காலத்தில் (கி.பி. 985-1014-இல்) வெட்டப்பட்டுள்ளது. இன்று இது சிதைந்த நிலையில் சீரற்றுக் கிடக்கின்றது. மூன்றாம் இராச ராசனின் கி.பி. 1213-ஆம் ஆண்டையக் கல்வெட்டு ஒன்று அரசன் கோயிலுக்கு அளித்த நிலதானத்தைக் குறிப்பிடுகிறது. வடக்குக் கோபுரமண்டபத்தில் அஞ்சுவட்டத்து அம்மன் சந்நதி சாளரத்திற்கு அருகில் கி.பி. 1715-ஆம் ஆண்டில் தஞ்சையில் ஆட்சி செய்து வந்தது கோஜி என்னும் மராட்டிய மன்னன் செய்த அறங்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டு ஒன்று தமிழில் தீட்டப் பட்டுள்ளது. இம்மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டளையை வெங்கடபதியாபிள்ளை என்பவர் பார்த்து வந்திருக் கின்றார். அவரும் அவர் சந்ததியார்களும் பல திருப்பணிகளும், திரு ஆபரணங்களும் இக்கோயிலுக்குச் செய்து வந்துள்ளனர். கி.பி. 1758-ஆம் ஆண்டில் லாலி என்பவன் படையெடுப்பில் இக் கோயிலுக்கு சில அழிவுகள் எழுந்தது. மேற்குப் பிரகாரத்தில் உள்ள சுவரில் மராட்டிய மொழியில் தீட்டப் பெற்ற கல்வெட்டு தஞ்சையைக் கி.பி. 1763 முதல் 1767-வரை ஆண்டு வந்த ஜாஜ்மன்னன் 1775-இல் பிரகாரத்தைக் கட்டியதாகக் குறிப்பிடுகின்றது. ஆடவல்லானின் அருட்சந்நிதி மண்டபத்தை கி.பி. 1859-இல் வெங்கடபதிப்பிள்ளை அவர்களின் வழிவந்தவர்களே கட்டியதாக மற்றொரு கல்வெட்டுக் கூறுகிறது. தெற்குக் கோபுரத்திலுள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 1813-இல் தெற்குக் கோபுரத்தை திருகுமாரசுவாமிப் பிள்ளை என்பவர் கட்டியதாகக் குறிப்பிடுகிறது. கொடிமர அறம் 1902-இல் நாகை துரைசாமிப் பிள்ளை செய்துள்ளதாகத் தெரிகிறது. நன்னிலம் மதுவனேசர் கோயில் நன்னிலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் நன்னிலம் வட்டாரத்துத் (தாலுகாவின்) தலைமை நகராக இருக்கிறது. இந்நகர் மாயவரம் - காரைக்குடி இருப்புப் பாதையில் உள்ள ஒரு புகை வண்டி நிலையத்தில் உள்ளது. புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் மூன்றுகல் தொலைவில், நகரும் திருக்கோயிலும் உள்ளன. நாகை திருவாரூர் மயூரம் கும்பகோணம் திருத்துறைப்பூண்டி முதலியவற்றிற்கு இவ்வூர் வழியாக நேர் உந்துவண்டிகள் (பகள்) போகின்றன. இவ்வூருக்கு நன்னிலம் என்ற பெயர் மட்டுமல்ல, மதுவனம் பிருகற்புரம், சுந்தராவனி, தேவாரண்ணியம் போன்ற பெயர்களும் உண்டு. இக்கோயில் பாடல் பெற்ற ஒரு திருத்தலமாக மதிக்கப் பெறுகிறது. இங்குள்ள தெய்வத்திற்கு மதுவனேசர் என்றும் தேவிக்கு மதுவன நாயகி என்றும் கூறப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் மூர்த்தி பிரகேசுவரர் என்றும் கூறப்படுவார். இங்குள்ள திருக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப் பெற்றது. இக்கோயில் கிழக்கு நோக்கி இருக்கிறது. திருவாயிலில் பஞ்சமூர்த்திகள் சுந்தரமூர்த்தி நாயனார் முதலியவர்களின் அழகிய சுதை சிற்பங்கள் அற்புதமாகக் காட்சி அளிக்கின்றன. இது கட்டுமலைக் கோயில், கீழே தரையை ஒட்டி ஒரு பிரகாரமும் கட்டுமலை மேல் ஒரு பிரகாரமும் உள்ளன. மேற்கில் உள்ள பிரகாரத்தில் கிழக்கில் உள்ள பிரகாரத்திலும் பிள்ளையார் முருகன் கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. கட்டுமலை மீது ஏறி உயரே சென்றது முதன்முதலில் கண்ணுக்குப் புலப்படுவது கவின் பெறும் கணபதியின் சிற்பத்திரு உருவமாகும். இதனை வாதாபிக் கணபதி சந்நிதானம் என்று கூறுகிறார்கள். திருவுண்ணாழிகையில் எழுந்தருளி இருக்கும் சுயம்மூர்த்தி மதுவனேசுரர் என்று கூறப் பெறுகிறது. உண்ணாழியின் (கருவறையின்) தென்புறம் சோம கந்தக, சனமூர்த்தியின் திருஉருவம் திகழ்கிறது. கட்டுமலையின் முன்புறம் கீழே கிழக்கு நோக்கி அத்தியலிங்கம், பிரமலிங்கம் ஆகியவைகளும் வடகிழக்குப் பிரகாரத்தில் தேவியின் திருஉருவமும் காணப்படுகின்றன. விமானம் இக்கோயிலின் விமானம் கட்டுமலை மீது அழகுறப் பொலிகிறது இதுப் பொதுவாக மாடக் கோயில் என்று கூறப்பட்டாலும் விமான அமைப்பை உற்று நோக்கிய சிற்ப வல்லுநர்கள் இது ஆகமங்களில் கூறப்பெறும் ஏழு வகைக் கோயில்களில் ஒன்றான ஸ்ரீவிலாசம் என்று கூறுகின்றனர். ஸ்ரீவிலாசம் என்ற வடமொழிப் பெயருக்கு ஏற்ற தமிழ்ப்பதம் எதுவும் ஆகமங்களிலோ சிற்ப நூற்களிலோ காண முடியவில்லை. ஆனால் சுந்தரமூர்த்தி அடிகள் இந்த மதுவனேசர் திருக்கோயிலை நன்னிலத்துப் பெருங்கோயில் என்று கூறுவதைக் கொண்டு ஸ்ரீவிலாசம் என்ற வடமொழிப் பெயருக்கு பெருங்கோயில் என்று அக்காலத்தில் வழங்கப்பட்டது என்று நன்கு தெரிகிறது. சுந்தரர் தம் தேவாரத்தில் தண்ணியல் வெம்மையினான் றலையிற் கடை தோறும் பலி பண்ணியன் மென்மொழியாரிடம் கொண்டுழல் பாண்டரங்கன் புண்ணிய நான்மறையோர் முறையாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே என்று பாடியிருப்பதைக் கொண்டு இது ஏழுவகைக் கோயில் வகைகளில் ஒன்றான பெருங்கோயில் என்று நன்கு தெரிகிறது. மேலும் சுந்தரர் வேறு ஒரு பதிகத்தில் கோடுயர் வெங்களிற்றுத் திகழ்கோச் செங்கணான் செய் கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில்1 என்று குறிப்பிடுவதை ஆராயும் பொழுது இந்தக் கோயில் 5-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட கோச் செங்கட் சோழன் என்பவனால் கட்டப் பெற்றது என்று நன்கு தெரிகிறது. இஃதன்றி திருஞானசம்பந்தரும், திருமங்கை ஆழ்வாரும் சோழன் செங்கணான் 5ஆம் நூற்றாண்டிற்குமுன் பலமாடக் கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றார்கள். அப்பர் அடிகள் கோச் செங்கணான் எழுபது பெருங்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறார். கோயிலுக்கு வெளியே உள்ள திருக்குளத்திற்கு மது தீர்த்தம் தேவதீர்த்தம் சூலதீர்த்தம் என்று கூறப்படுகின்றது. இதன் அருகே சக்கர குளம் என்று ஒன்று உண்டு. அது சக்கர தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் தலவிருட்சம், செண்பகம், மாதவி, கோங்கு, வேங்கை என்று கூறப்படுகிறது. தேவர்கள் தேனீக்கள் வடிவில் இறைவனை இத்தலத்தில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக இங்குள்ள முருகன் சந்நிதியில் உள்ள தேன்கூடுகள் காட்டப்படுகின்றன. கைவல்லிய நவநீதம் என்ற நூலை இயற்றிய தாண்டவராய அடிகள் நன்னிலத்தில் உதித்தவர். அப்பர் அடிகள் கொடுங்கோளு ரஞ்சைக் களஞ்செங் குன்றூர் கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும் நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியம நல்லூர் இடும்பாவனமெழுமூர் ஏமூர் தோமூர் எரும்பியூர் ஏராரு மேம கூடங் கடம்மை யிளங்கோயில் தன்னிலுள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே 2 - (அப்பர்) என்று கூறும் சேத்திரக் கோவையின் திருப்பாடலால் இந் நகர் நெல்லி மரங்கள் அடர்ந்த சோலையாக இருந்தது என்று தெரிகிறது. அதோடு அப்பர் அடிகள் கடம்பையில் உள்ள இக் கோயிலையும் தம்பாடலில் குறிப்பிட்டுள்ளார். திரு அம்பர் திரு அம்பர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூருக்கு பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்தில் (அதாவது அறந்தாங்கி இருப்புப்பாதை உள்ளது) இறங்கி இரண்டு கல் தூரம் செல்ல வேண்டும். சுவாமி கட்டுமலை மீது இருக்கிறார். இக் கோயிலைக் கோச் செங்கட் சோழன் கட்டினான். இவன் திருவானைக்கா முதல் அம்பர் ஈறாக 70 பெருங் கோயிலை உள்ளடக்கி எழுபது மாடக் கோயில் கட்டியுள்ளான். இவனது காலம் கி.பி. 450-500 ஆகும். இங்குள்ள சுவாமியின் பெயர் பிரமபுரீசுவரர்; தேவியின் பெயர் பூங்குழல் அம்மை. இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற புனித இடமாகப் போற்றப் பெறுகிறது. பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் பீலிகொண்டுழல்வாரும் கண்ட நூலரும் கடுந்தொழி லாளருங் கழற நின்றவர் மேய வண்டுலாம் பொழி லரிசிலன் வடகரை வருபுனன் மாகாளம் பண்டு நாஞ் செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே என்று ஏற்றப் பெறுகிறது. கோயில் தேவார ஆசிரியர்கள் இக்கோயிலை மிகச் சிறப்பித்து அம்பர் பெருந்திருக் கோயில் கிழக்கு நோக்கி இருக்கிறது. கிழக்கு வாயிலில் மூன்று மாடங்களையுடைய கோபுரம் இத் திருக் கோயிலை அணி செய்கின்றது. கீழே ஒரு பிரகாரமும் கட்டுமலைமேல் ஒரு பிரகாரமும் அமைந்திருக்கின்றன. இக்கோயிலின் தல விருட்சம் புன்னைமரம். அருகே புன்னை வனநாதர் - சிவலிங்க வடிவில் மேற்கு நோக்கிய சந்நிதியில் அமர்ந்திருக்கிறார். எதிரே தீர்த்தக் கிணறு உள்ளது. அதனை அன்னமரம் பொய்கை என்று கூறுகின்றனர். சந்நிதியின் முன் சுதையினால் செய்யப் பெற்ற நனிசிறந்த நந்தி உருவம் காணப்படுகிறது. கட்டுமலையின் கீழ் தென் கிழக்கில் படிக்காசு விநாயகர் சந்நிதி காணப்படுகிறது. கட்டுமலை மீது ஏறிச் செல்வதற்கு தெற்கிலும் வடக்கிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக் கோயிலை மாடக் கோயில் என்றும் கூறுகின்றனர். இது யானை புகமுடியாத வாயில்களையுடைய கட்டுமலைக் கோயில் என்று புகழ்ந்தேற்றப்படுகிறது. இவ்வூரை அம்பல் என்றும் அழைக் கின்றனர். இந்தப் பெருங்கோயிலின் திரு உண்ணாழிகை (கர்ப்பக் கிரகம்) மிக அழகியது. மேலிருக்கும் விமானம் சிறப்புமிக்கது. இந்த விமானத்தின் விசாலமான அமைப்பைக் கொண்டே இது பெருந் திருக்கோயில் என்று கூறப் பெறுகிறது. வம்பின் மலர்க் குழலுமையாள் மணவாளன்காண் மலரவன் காண்பரிய மைந்தான் தான்காண் கம்பமதக் களிபிளிற வுரிசெய்தோன்காண் கடல் நஞ்ச முண்டிருண்ட கண்டத்தன் காண் அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான்காண் அயவந்தி யுள்ளான் காண் ஐயாறன்காண் செம்பொன் எனத் திகழ்கின்ற வுருவத் தன்காண் சிவனவன் காண் சிவபுரத் தெஞ் செல்வன் தானே. திருஉண்ணாழிகையில் மூல லிங்கமூர்த்தியான பிரமபுரீசர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இவருக்கு அம்பரீசர், மாரபுரீசர் என்ற பெயர்களும் உண்டு. மூல இலிங்கத்தின் பின்புறம் சோமகந்த சுகாசனமூர்த்தி எழுந்தருளி இருக்கிறார். திருஉண்ணாழிகைக்குத் தென்புறம் சோமகந்த சுகாசனமூர்த்தியின் உற்சவப் படிமம் திகழும் சந்நிதியும் வடகிழக்கே ஆடவல்லான் அமர்ந்திருக்கும் சந்நிதியும் திகழ்கின்றன. கட்டு மலையைச் சுற்றி கீழே வரும் பிரகாரத்தில் பிள்ளையார் முருகன், திருமகள் சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் பள்ளத்தில் சம்புக்கேசர் சந்நிதி இருக்கிறது. தெற்கு நோக்கி தேவியின் சந்நிதி திகழ்கிறது. தேவிக்கு சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழல் நாயகி, சுகந்தவனநாயகி வண்டமர் பூங்குழலி முதலிய பல பெயர்கள் உண்டு. இங்கு அன்னமாம் பொய்கை இந்திரதீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன. அன்னமாம் பொய்கை கோயில் உள்ளே இருக்கும் கிணறு இந்திரதீர்த்தம் கோயிலுக்குக் கீழ்பக்கம் உள்ள குளம் இக்கிணறு நான்முகன் அன்ன வடிவங் கொண்டு உண்டாக்கிய தென்பது ஐதீகம். ஞான சம்பந்தர் இந்தப் பெருமான் மீது ஒருபதிகம் பாடி யுள்ளார். அதில் அம்பர் மாநகர், பெருநகர், நெடுநகர் என்றெல்லாம் கூறியிருக்கிறார். அதனால் இவ்வூர் அக்காலத்தில் ஒரு பெரும் நகராக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது ஆனால் இன்று சிற்றூராகவே காட்சி அளிக்கிறது. குரிசில் செங்கண்ணன் கோயில், செம்பியர் செய்திய கண்ணிறை செய்த கோயில், செம்பியர் செறிகழலிறை செய்த கோயில் என்று கோச் செங்கட்சோழன் இக் கோயிலைக் கட்டியதை எடுத்துக்காட்டியுள்ளார். இப்பதியிலே அறுபத்து மூவரில் ஒருவரான சோமாசி நாயனார் பிறந்தார். அவர் அடியார் அமுதளித்தல் அஞ்செழுத்தோதல் முதலிய அறப்பணி செய்து வந்தார். இவர் சுந்தரமூர்த்திநாயனாரின் நண்பர்களுடன் பெரிதும் புகழ்ந்து பாடப் பெற்றவர். இதற்கு தலபுராணம் உண்டு. பாடியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. கீழ்வேளூர் (கீவளூர் - பெருங்கோயில் (ஸ்ரீ விலாஸம்) நாகபட்டினம் வட்டாரம், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணிலா மிகுவிரிசடையர வொடு வெள்ளெருக்கமலர்மத்த பண்ணிலா விய பாடலோடாடலர் பயில்வுறு கீழ் வேளூர் பெண்ணிலாவிய பாகனைப் பெருந்திருக்கோயிலெம் பெருமானை உண்ணிலாவி நின் றுள்கிய சிந்தையா ருலகினி லுள்ளாரே சம்பந்தர் - தேவாரம் கீழ்வேளூர் 105.3- பெருங்கோயில் (ஸ்ரீவிலாஸம்) கீழ் வேளூர் கீழ் வேளூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகபட்டினம் வட்டாரத்தில் திருவாரூர் - நாகூர் இருப்புப் பாதையில் இருக்கிறது. கீழ்வேளூர் இன்று மக்களால் கீவளூர் என்று அழைக்கப் பெறும். இங்கு புகைவண்டி நிலையம் இருக்கிறது. புகைவண்டி நிலையத் தினின்று அரைக் கல் தொலைவில் கோயில் உள்ளது. இவ்வூர் ஓடம் போக்கியாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. திருவாரூர் - நாகபட்டினம் பேருந்து வண்டிகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன. தலப் பெருமை கீழ்வேளூர், முருகன் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்ற திருவிடம் எனவே இவ்வூர் கீழ்வேளூர் புள்ளிருக்கும் திருவிடம், புள்ளிருக்கும் வேளூர், திருச்சேய்ஞலூர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. வேள் என்னும் பதம் முருகனைக் குறிக்கும் ஒரு உயரிய தமிழ்ப் பதம். தெய்வலோகத்தில் முருகன் குடி கொண்ட இடம் மேல்வேளூர் - அதாவது தேவகந்தபுரம் எனப்படும். எனவே பூலோகத்தில் முருகன் உவந்து உறையும் இடம் கீழ்வேளூர் என்று புராணங்கள் புகல்கின்றன. முருகன் (சுப்பிரமணியன்) சூரபதுமனைக் கொன்ற பழிநீங்கச் சிவபெருமானை இத்திருத்தலத்தில் வழி பட்டான். எனவே இத்தலத்திற்கு பூசரணிபுரம் என்று பெயர் வந்தது. இத் திருத்தலம் பாடல் பெற்ற தலம். எனக்கு மிகப் பெருமை அளிக்கப்படுகிறது. அப்பர் அடிகள், ஆளான அடியவர்கட்கன்பன் தன்னை ஆளஞ்சும் ஆடியை நான் அபாயம் புக்க தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச் சந்தனமும் குங்குமமுஞ் சாந்தும் தோய்ந்த தோளானைத் தோளாத முப்பத் தொப்பானை தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த கீளானைக் கீழ்வேளூ ராளுங்கோவைக் கோடிலியை நாடுமவர் கேடிலாரோ என்று தம் 6-ஆம் திருமுறையில் திருத்தாண்டகத்தில் பாடியுள்ளார். சம்பந்தப் பிள்ளை திருக் கீழ்வேளூரை நினைப்பவர்க்கு வினையில்லை, வீடுண்டு, அவர் பெயர் கேடிலியப்பர் என்று தம் 241-ஆம் பதிகத்தில், மின்னுலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரபொடும் பன்னுலாவிய மறை யொலி நாவினர் கறையணி கண்டத்து பொன்னுலாவிய கொன்றையந்தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர் உன்னுலாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே - சம்பந்தர். தேவா. கீழ் வேளூர். 241:1 மூலவர் அட்சயலிங்க ஈசுவரர். கேடிலியப்பர் என்றும் கூறப்படும் தேவியார்: வனமுலைநாயகி அம்மை. சிவ பெருமானை முருகன் வழிபட்டதால் இது சிறப்பானதலமாக மதிக்கப்படுகிறது. முருகனுடைய பூசைக்கு இடையூறு எழாதவாறு அம்பிகை, பத்திரகாளி (துர்க்கை) வடிவில் தோன்றி விண்ணிலிருந்து நான்கு திசைகளிலும் எட்டுத் திக்கிலும் இருந்து இடையூறு வராமல் காவல் புரிந்ததால் தேவிக்கு அஞ்சுவட்ட அம்மை என்று பெயர் வந்தது. இங்கு அம்மன் சந்நிதி முதல் பிரகாரத்தில் வடபக்கத்தில் உள்ளது. இது சிறப்பான சந்நிதியாக எண்ணப்படுகிறது. தலச்சிறப்பு அகத்தியர் அம்பலவாணனது திருவடிகளைத் தரிசித்து இன்புற்ற பதி இது. இங்கு குபேரனுக்குத் தனியாகக் கோயில் உள்ளதால் அவனும் இறைவனைப் பூசித்து பேறு பெற்ற பெருந்தலமாக மதிக்கப்படுகிறது. இதற்கு அப்பர் பதிகம் ஒன்றும் சம்பந்தர் பதிகம் ஒன்றும் உண்டு. தீர்த்தம் : இங்கு ஒரு அழகிய சரவணப் பொய்கை உண்டு. குளக் கரையின் மேற்குப் பகுதியில் ஒரு சிவாலயம் உண்டு. தலவிருட்சம்: இத்திருக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை. இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. இது பெரிய - பழையமரம். இங்கு அகத்தியனுக்கு அம்பலவாணன் (நடராசன்) வலது பாதக் காட்சி அளித்தார். அகத்தியன் பூசித்த இலிங்கம் இலங்கை மரத்திற்கு அண்மையில் இருக்கிறது. பிரகாரத்தில் குபேரன் சந்நிதியும் சுந்தர கணபதியும் உள்ளன. இங்கு இந்திரன் குபேரன் இவர்களுடைய சிலைகள் உள்ளன. கோயில் கீழ்வேளூர் கோயில், தமிழ்நாட்டில் எழுந்துள்ள சாதாரணக் கோயிலைப் போன்றதல்ல. ஓர் ஒரு ஒப்பற்ற உயரிய கோயில் அமைப்பாகும். இது கி.பி. 5-ஆம் நூற்றாண்டிற்கு முன் கி.பி. 4ஆம் நூற்றாண்டை அடுத்து வாழ்ந்த சோழப் பேரரசன் எடுப்பித்த திருக்கோயில் எழுபத்தெட்டில் ஒன்றாக எண்ணப்படுகிறது. அப்பர் பெருமான் பெருக்காறு சடைக் கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும் என்று கூறுவதைக் கொண்டு அப்பர் அடிகள் வாழ்ந்த ஆறாம் நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் எழுபத்தெட்டுப் பெருங்கோயில் இருந்தன என்று புலனாகின்றன. மேலும் கடைச் சங்க காலத்திற்குப் பின் வாழ்ந்த சோழப் பேரரசர்களில் தலைசான்ற சோழன் செங்கணான் சிவபெருமா னுக்கும் திருமாலுக்குமாக எழுபதிற்கு மேற்பட்ட கோயிலைக் கட்டினான் என்பதை வைணவ ஆழ்வார்களில் சிறப்புற்று விளங்கிய திருமங்கையாழ்வார், இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோளீசற்கு எழில்மாடம் எழுபது செய்துலக மாண்ட திருக்குலத்து வளச் சோழன்................ என்று கூறியது ஆறாம் நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் பல பெருங்கோயில் இருந்ததை வலியுறுத்தும். பெரும்பாலும் கோயில் வகைகளைப் பற்றி ஆய்வில் ஈடுபடாத தமிழ் உலகிற்கு 1956. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற உயரிய ஏட்டின்மூலம் ஏழுவகைக் கோயிலை எனது மதிப்பிற்குரிய நண்பர் மயிலை சீனி வேங்கடசாமி அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றி. தமிழ் உலகம் அவரது பணிக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது. அவரது நூல், ஏழுவகைக் கோயிலைப் பற்றி தமிழகத்திற்கு நினைவூட்டிய முதல் நூல் என்று கூறலாமேயொழிய ஒரு நிறைவான நூல் என்று கூறுவதற்கில்லை. காரணம் கோயில் வகைகளைப் பற்றிக் கூறும் ஆகமங்கள் வடமொழியில் உள்ளன. சிற்ப நூற்களும் வடமொழியிலே உள்ளன. இன்னும் தமிழிலோ ஆங்கிலத்திலோ மொழியாக்கம் செய்யப் பெறவில்லை. அவைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் வரை கோயில் வகைகளைப் பற்றி தமிழர்கள் நிறைவான நூலை எதிர்பார்ப்பதற்கில்லை. பெருங்கோயில்: சம்பந்தப் பிள்ளை தம் தேவாரத்தில் கீழ்வேளூர் திருக் கோயிலைப் பற்றிச் சிறப்பாகப் பாடியுள்ளார். அதில் கீழ்வேளூரில் சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில் பெருங்கோயில் என்று பாடியுள்ளார். அப்பாடல் அடியில் வருமாறாகும். சீலாவிய தலையினர் நிலையிலா வமணர்கள் சீவரார் வீறிலாத வெஞ் சொற்பல விரும்பன்மின் கரும்பமர் கீழ் வேளூர் ஏறுலாவிய கொடியனை யேதமில் பெருந்திருக்கோயிலின் மன்னு பேறுலாவிய பெருமையன் றிருவடி பேணுமின் றவமாமே சம்பந்தர் தேவாரம் 105 என்று பாடிய பாடல் மூலம் கீழ்வேளூர் சிவன் கோயில் பெருங்கோயில் என்பதை உறுதிப்படுத்துகிறது. இஃன்றி சுந்தரர் சம்பந்தர் முதலிய நாயன்மார்களும் தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் சென்றும், இது பெருங்கோயில், இது ஆலக் கோயில், இது தூங்கானை மாடக் கோயில் இது கரக் கோயில் இது கொகுடிக்கோயில் இது இளங்கோயில் இது மணிக்கோயில் என்றுபாடியிருப்பதன் மூலம் நாம் இந்தக் கோயில் வகைகளை எளிதில் கண்டு கொள்ளலாம். நமது நாயன்மார்களின் திருப்பாசுரங்கள் மூலம் 1 அம்பர் நகர்ப் பெருங்கோயில், 2 நன்னிலத்துப் பெருங்கோயில் 3 குடவாயில் பெருங்கோயில் 4 பெண்ணாடம் பெருங்கோயில் 5 புகலியூர்ப் பெருங்கோயில் 6 திருப்பூந்தராயப் பெருங்கோயில் 7 திருக்கோளிலிப் பெருங்கோயில் போன்றவைகளை எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தத் தேவாரத் திருப்பாசுரங்கள் கிடைக்காமல் போயிருந்தால் தமிழர் கட்டிடக் கலைக்குச் சீரும் சிறப்பும், பேரும் பெருமையும் அளிக்கும் பல்வேறு அமைப்புகளையுடைய கோயில்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும். இன்றும் ஏழுவகைக் கோயில் அமைப்பில் ஒன்றாகிய ஞாழற் கோயில் அமைப்பை எவரும் கண்டுபிடிக்கவில்லை. ஆகமங் களிலும் சிற்ப நூற்களிலும் வடமொழி அமைப்பான கேசரம் எங்குள்ளது என்று கூறவில்லை. தேவாரத்திலும் ஞாழற்கோயிலைப் பற்றிய பதிகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அமைப்பு பெருங்கோயில் அமைப்பு தமிழர்கள் ஆதிகாலத்தில் மலைத் தெய்வ வழிபாட்டையுடையவர் என்பதை வலியுறுத்தும். மிகமிகத் தொன்மையான காலத்தில் முதன்முதலாகச் சிவபெருமான் மந்திரமலையில் (மகேந்திரமலையில்) நான்கு மறைகளை அருளிச் செய்தான். அது முதல் தமிழர் தமிழர்கள் சிவகிரி, மகாலிங்கமலை, இமயமலை, எருசலேகம் மலை மீது கடவுளை வழிபட்டனர். பெரிய மலைகள் இல்லாத இடங்களில் கட்டுமலைகளை எழுப்பி உச்சியில் பெரிய கோயிலை எழுப்பி உண்ணாழியினுள்ளே திருஉருவம் வைத்து வழிபட்டனர். இந்த மரபு வழக்கத்திற்கு பிறந்ததே பெருங்கோயில். கீவளூர் பெருங்கோயிலும் பிற இடங்களில் எழுப்பப்பட்ட பெருங்கோயிலும் கட்டுமலை மீது மட்டிலா உயரத்தில் கருங்கற்களால் கட்டியெழுப்பிய பெருங்கோயிலேயாகும். தூபி அழகிய கருங்கல்லால் எழில் பெறக் கட்டி எழுப்பப் பெற்றுள்ளது. கோயில் மிகப் பெரியது. சமீபத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. பொதுவாக விமானத்தை வைத்தே கோயில் இன்ன வகைப் பட்டது என்று நிர்ணயிக்கப்பெறுகிறது கீழ்வேளூர் விமானம் காமிகாகமவிதிப்படி ஸ்ரீவிலாசம் என்னும் பெருங்கோயிலாக கைதேர்ந்த தபதிகளால் விதிமுறை பிறழாவண்ணம் அமைக்கப் பட்டதாக சிற்ப வல்லுநரால் சிறப்பித்துக் கூறப்படுகிறது. முற்காலத்தில் இரவு வேளைகளில் கோயில்களில் காட்டு யானைகள் கோயில்களுக்குள் புகுந்து சேதம் விளைத்தும் வந்ததால் யானை புகாவண்ணம் கட்டுமலைக் கோயில்கள் கட்டுவது சிறப்பானதாகக் கருதப்பட்டது என்று சில அறிஞர்கள் கருது கின்றனர். பெருங்கோயில் நன்னிலம் கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங்கேழற்பின் கானவனாய் அமர்பயில் வெய்தியருச் சுனற் கருள் செய்த பிரான் தமர் பயில் தண்விழவிற் றகுசைவர் தவத்தின் மிக்க தமர்பயில் நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே சுந்தரர் - தேவாரம் நன்னிலத்துப் பெருங் கோயில் நன்னிலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டாரத்தில் மாயவரம் - காரைக்குடி இருப்புப் பாதையில் நன்னிலம் புகைவண்டி நிலையம் உள்ளது. இங்கு அப்பர் அடிகளால் பெருக்காறு சடைக்கணிந்த பெம்மான் சேரும் பெருங்கோயில் எழுபது என்று கூறப் பெற்ற பதிகத்தில் குறிப்பிடப்பெற்ற ஸ்ரீவிலாஸம் என்று சிற்ப நூற்கள் சிறப்பித்துக்கூறும் கட்டுமலைக் கோயில் - பெருங்கோயில் உள்ளது. இப்பெருந்திருக்கோயிலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசன் கோச் செங்கண்ணான் எடுப்பித் துள்ளான். கோச் செங்கணான் செய்கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் என்று ஒன்பதாம் திருமுறை சான்று தருகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற சமய குரவர்கள் தோன்றும். முன்னரே தமிழ்நாட்டில் சைவம் தோன்றி தழைத்துக் கிளைத்து வளம் பெற்றிருந்தது. சேரர் சோழர் பாண்டியர் என்னும் முப்பெரும் தமிழ் வேந்தர்களும் சிவனெறியைச் சார்ந்து நாடெங்கும் பல கோயில்களை எழுப்பி வந்தனர். கிறித்துவ ஊழி கிளைத் தெழுவதற்கு முன்பே சைவம் குமரி தொட்டு இமயம் வரை - ஏன்? கடல் கடந்து எகிப்து எல்லம், சுமேரியா, கிரீட், அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பரவி நின்றது. அதனாலே மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் தென்னாடுடைய சிவனேபோற்றி என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி என்று போற்றியுள்ளார். இறைவனே என் அப்பன் என்று அருளும் ஏற்றம் பெற்ற அப்பர் அடிகள் உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே என்று உலக மக்களுக்கு உரிய தெய்வமாகப் போற்றியுள்ளார். உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியவன் என்று உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் போற்றற்குரியவன் என்றார். திருஞான சம்பந்தப்பிள்ளை தம் இரண்டாந் திருமுறையில் விண்ணானே விண்ணவ ரேத்தி விரும்புஞ்சீர் மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கெல்லாம் கண்ணானே........................................ என்று ஏற்றிப் போற்றியுள்ளார். உலகிலே தோன்றிய சமயங்கள் எல்லாம் கடவுளைத் தங்களின் நாட்டுத் தெய்வமாகவும், தங்களின் குலத்துத்தெய்வமாகவும் கொண்டுள்ளன. தெய்வங்கள்கூட தங்களை அந்தச் சாதித் தெய்வங்களாகச் சொல்லி வந்ததை அந்தச் சமயநூற்களில் இன்றும் நன்கு காணலாம். ஆனால் தென் இந்தியாவில் தமிழர் கண்ட சிவபெருமான் இமயமலையில் வாழும் கயிலாச மலைக் கடவுளாக சைவசமய குரவரில் ஒருவராகிய திருஞான சம்பந்தர். கலையானே கலைமலி செம்பொற் கயிலாய மலையானே மலையவர் மும்மதின் மாய்வித்த சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில் நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாயே - சம்பந்தர் - தேவாரம் - திருக்காரு மலை 5 தமிழர் பத்தாயிரம் ஆண்டிற்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள மந்திரமலையில் (மகேந்திரகிரியில்) கண்ட தெய்வத்தை ஆறாயிரம் ஆண்டிற்குமுன் சிந்துவெளி மக்களின் தெய்வமாகவும் ஆக்கினர். அதனைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குழந்தைக் குரவராக - பள்ளியில் பயிலாத பரமஞானிகள் பலரினும் சிறப்புடைய பாவாணராய் (பால்குடிமாறாப் பச்சிளம் பாலகவியாய்) விளங்கிய சம்பந்தர் தமிழ்நாட்டுத் தெய்வமாக மட்டுமின்றி வடஇந்திய மக்களும் வழிபடும் கயிலாயமலையானே என்று ஏற்றி வழிபடுவது தமிழர் கிறித்தவ ஊழிக்கு முன்பே தம் சமயத்தை தமிழ்நாட்டில் மட்டுமின்றி அயல் நாட்டிலும் பரப்பி வந்தனர் என்பதற்கு நல்ல சான்றாக உள்ளது. இன்று சிந்துவெளி அகழ் ஆய்வில் சிவன், ஆடவல்லான் உமாதேவி உருவங்களும் சிவலிங்கங்களும் கிடைத்திருப்பது சம்பந்தர் கருத்தை அரண் செய்வது போல் திகழ்கின்றது. சிந்துவெளி அகழ் ஆய்வு சைவ நெறியும், சிவனும், பெருங்கோயிலும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, சிந்துவெளியிலும் சுமேரியாவிலும் நிலவி இருந்தது என்று இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சிந்துவெளியில் அகழ் ஆய்வு செய்த அறிஞர்கள் கன்மலை மேலும் கட்டுமலை மேலும் மெசபொத்தாமியாவிலும் பிற விடங்களிலும் கோயில்கள் எழுப்பி இருப்பதைக் கண்டுபிடித்து அவைகள் கீழ்வேளூர் நன்னிலம், அம்பர் முதலிய இடங்களில் கட்டப்பெற்ற பெருங்கோயில் அமைப்பைத் தழுவிக் கோயில் எடுப்பித்து அதற்கு சிகரத் என்று பெயரிட்டுவந்ததை அறிந்தனர். சிந்து வெளியில் அகழ் ஆய்வு நடத்தி இந்திய மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறையினரின் தளபதி சர். சாண் மார்சல் யூத மதம் கிறிதவ சமயம், இலாமிய நெறி, பௌத்த சமயம் சமணசமயம் உலகில் கரு உருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே இந்திய முழுவதிலும் பரவி, எகிப்து எல்லம், சுமேரிய முதலிய பலநாடுகளிலும் பரவிய பழம்பெரும் சமயம் என்று கண்டார். அவர் தாம் எழுதிய மொகஞ்சதாரோவும் சிந்துவெளி நாகரிகமும் என்ற மாபெரும் நூலின் முன்னுரையில் சைவ சமயத்தின் பழமை கல்லும் மண்ணும் செம்பும் கலந்த சால் கோலிதிக் ஊழியின் (Chalcolithic Age) வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டது அல்லது அதற்கும் முற்பட்ட பழங்கல் ஊழியில் எழுந்தது என்று கூறலாம். உலகில் உயிருடன் உலவும் மிகத் தொன்மை சமயம் இது என்று உறுதியாக உரைக்க முடியும். மொகஞ்சதாரோவிலும் அரப்பாவி லும் எழுந்த பல புரட்சிகரமான செய்திகளில் நமக்குப் பல அரிய களஞ்சியங்கள் உள்ளன என்று மிக அழகாக எடுத்துக் காட்டி யுள்ளார்.1 நன்னிலம் என்ற இவ்வூர் பிருகற்புரம், சுந்தராவளி, தேவாரண்ணியம் போன்ற பெயர்களைப் பெற்றுள்ளது. இவ்வூர் பாடல் பெற்ற ஒரு சிறந்த திருத்தலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் மதுவனேசர் என்றும் இறைவியை மதுவனநாயகி என்றும் அழைக்கப் பெறுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் மற்றொரு மூர்த்தி பிரகேசுவரர் என்று போற்றப்படுகிறார். இங்குள்ள பெருந்திருக்கோயில் கிழக்கு நோக்கி இருக்கிறது. திருவாயிலில் பஞ்சமூர்த்திகளும், சுந்தரமூர்த்தி நாயனாரும் அழகிய சுதை சிற்பங்களாக அற்புதமாகக் காட்சி அளிக்கின்றார்கள். பண்டையத் தமிழர்கள் பழங்காலத்தில் மலை முகடுகளில் இறைவனைக் கண்டு வழிபட்டார்கள். அப்பால் மலைகளில் உள்ள குகைகளில் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். பின்னர் இரும்பு ஊழியில் குடைவரைக் கோயில்களை உருவாக்கி இலிங்க வழிபாடு இயற்றிவந்தனர். அப்பால் மக்கள் மலைகளுக்குச் சென்று குடைவரைக் கோயில்களில் வழிபடும் சிரமங்களை எண்ணில பல ஊர்களின் நடுவே கட்டு மலைக் கோயிலை எழுப்பி மேலே இறைவன் உறைவதற்கேற்ற திருஉண்ணாழியை உருவாக்கி அதில் திருஉருவங்களை அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தக் கோயில் அமைப்பே பிற்காலத்தில் பெருங்கோயில் என அழைக்கப்பெற்றது. நன்னிலத்து நற் பெருங்கோயில் மேற்கில் உள்ள பிரகாரத்திலும் கிழக்கில் உள்ள பிரகாரத்திலும் பிள்ளையார் முருகன் யானைத் திருமகள் (கஜலட்சுமி) சந்நிதிகள் உள்ளன. கட்டுமலை மீதேறி கோயில் உள்ளே புகுந்தது முதன் முதலில் காணப்படுவது பிள்ளையாரின் திருஉருவமேயாகும். இது வாதாபி கணபதியின் சந்நியதானம் என்று கூறப்பெறுகிறது. திரு உண்ணாழிகையின் உள்ளே காட்சி அளிக்கும் சுயம்பு மூர்த்தியைத் தான் மதுவனேசுவரர் என்று கூறப் பெறுகிறது. உண்ணாழிகையின் தென்புறம் சோமகந்த சுகாசன மூர்த்தியின் திரு உருவரும் எழில் பெற்றிலங்குகிறது. கட்டு மலை மீது முன்புறம் கீழே கிழக்கு நோக்கி அகத்தியலிங்கம், பிரமலிங்கம் ஆகியவைகளும் வடகிழக்குப் பிரகாரத்தில் தேவியின் திருஉருவமும் திகழ்கின்றன. விமானம் உண்ணாழிகையின் மீது எழுப்பப் பெற்ற உயரமான கட்டிட அமைப்பே விமானம் எனப்படும். இந்த விமானம் உண்ணாழிகை யின் உள்ளிருக்கும் இறைவனுடைய மணிமுடியாக எண்ணி அயலூரில் இருந்து வருவோர் விமானத்தைக் கண்டதும் இறைவனை எண்ணி வழிபடுவர். வாயிலின் மேலே அமைந்திருக்கும் உயரமான கட்டிட அமைப்பு கோபுரம் என்று கூறப்படும். இது பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கவர்ந்த நாயக்கர் காலத்தில் எழுந்த புதிய அமைப்பேயாகும். இதனை மக்கள் இராயர் கோபுரம் என்று கூறுவர். தமிழர் கோயில் அமைப்பில் வாயிலில் ஒரு சிறு கோபுரமும் பெரிய விமானமும் அமைக்கப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாகத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கூறலாம். முற்காலத்தில் கோயில் பெரிய நிலப்பரப்பில் நாற்புரம் திருமதில்கள் எழுப்பி நடுவே உண்ணாழிகையை எழுப்பி வந்தனர். உண்ணாழிகையே கோயில் என்று அழைக்கப்பட்டது. அப்பால் முகமண்டமும் அந்தராளமும் முகமண்டபம் மணிமண்டபம் மாமண்டம், நூற்று கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம் போன்றவை எழுந்தன. நன்னிலத்துப் பெருந்திருக்கோயிலில் கட்டுமலைக் கோயிலின் கீழே தரையை யொட்டி ஒரு பிரகாரமும் (சுற்றும்) கட்டுமலை மீது ஒரு சுற்றும் ஆக இரண்டு பிரகாரங்கள் உள்ளன. நன்னிலத்து மதுவனேசர் கோயிலைச் சிலர் மாடக் கோயில் என்று கூறுகின்றனர். ஆனால் அது கட்டுமலைமீது ஏனைய பெருங்கோயில் அமைப்பினை யொத்து அமைக்கப்பட்டுள்ளதால் ஆகமங்கள் கூறும் ஸ்ரீவிலாசம் என்னும் பெருங்கோயில் அமைப்பு என்று எண்ணுவதில் எள்ளளவும் தவறில்லை. சைவ சமய குரவர்களில் ஒருவரான நம்பி ஆரூரன் என்னும் சுந்தரர் தம் தேவாரத் திருப்பதிகங்களில் மீண்டும் மீண்டும் நன்னிலத்து மதுவனேசர் திருக்கோயிலை பெருங்கோயில் என்று எடுத்துக் காட்டியுள்ளார். தண்ணியல் வெம்மையினான் றலையில் கடைதோறும் பலி பண்ணியன் மென்மொழியாரிடம் கொண்டுழல் பாண்டரங்கன் புண்ணிய நான்மறையோர் முறையா லடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே - சுந்தரர் தேவாரம் என்று அவரது பல பாடல்களில் காணப்படுவதைக் கொண்டு நன்னிலத்துக் கோயில் பெருங்கோயில் என்பதை ஐயமற அறியலாம். மேலும் ஒரு பாட்டில் கோடுயா வெங்களிற்று திகழ் கோச் செங்கணான் செய்கோயில், நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் என்று குறிப்பிடுவதை ஆராயும் பொழுது இந்தக் கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் செங்கோல் செலுத்து கோச் செங்கணான் என்னும் சோழப் பேரரசன் எடுப்பித்த திருக்கோயில் என்று நன்கு தெரிகிறது. மேலும் கோச் செங்கட்சோழன் தன் காலத்தில் பல சிவன் கோயில்களையும் வைணவக்கோயில்களையும் எடுப்பித் துள்ளார். இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோழீசற்கு எழில் மாடம் எழுபது செய்துல காண்ட திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் ஏற்றித் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே என்றும், செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே என்றும் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் எடுத்துக் காட்டியுள்ளார். இதனால் கோச் செங்கட் சோழன் பல சிவன் கோயில்களையும் சிவ வைணவர்களின் கோயில்களையும் கட்டி முடித்துள்ளான் என்று நன்கு தெரிகிறது. நன்னிலம், இயற்கை எழில் ஒழுகும் பொன்னிலமாகப் போற்றற் குரியது. நகரைச் சுற்றிலும் நன்மரங்களும் பூங்காக்களும் பொலியும் செந்நிலமாகும். அங்கு கோங்கையும் வேங்கையும், சண்பகமும், மாதவியும் பவளமல்லிகையும் அடுக்குமல்லிகையும் அணியாய் அழகுற மணமுறத் திகழ்வதைக் காணலாம். எங்கும் பச்சைப் பசேரெனப் பாங்குறத் திகழ்ந்தது. சோலைகளின் நடுவே கட்டுமலை மீதுள்ள பெருந்திருக் கோயிலில் இறைவன் கோயில் கொண்டுள்ள காட்சியை வியந்து, குளிர்தரு திங்கள் கங்கை குரவோ டரக் கூவிளமும் மிளிர்தரு புன்சடைமேலு டையான் விடையான் விரைசேர் தளிர்தரு கோங்கு வேங்கை தடமாதவி சண்பகமும் நளிர்தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே என்று சுந்தரர்பாடிப் பரவி நின்றார். கோயிலுக்கு வெளியில் உள்ள திருக்குளத்திற்கு மது தீர்த்தம் தேவதீர்த்தம் சூலதீர்த்தம் என்று கூறப்படும். இதன் அண்மையில் சக்கரகுளம் என்று ஒரு நீர் நிலை உண்டு. இது சக்கர தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. இக் கோயிலின் தல விருட்சம் செண்பகம் மாதவி என்றெல்லாம் கூறப்படுகின்றன. முதுவாயோரி கதறமுதகாட்டெரி கொண்டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீசூடும் மலையான் கேடன் மணவாள கதுவாய்த் தலையிற் பலிநீகொள்ளக் கண்டாலடியார் கவலாரோ அதுவே யாமா றிதுவோ, கச்சூர் ஆலக் கோயிலம்மானே சுந்தரர் தேவாரம்11:1 திருக்கச்சூரில் சுந்தரர் செங்கற்பட்டுக்கு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஏறக்குறைய இரண்டு கல்தொலைவில் இருக்கிறது திருக்கச்சூர். இயற்கை வளம் பொருந்திய அழகிய சிற்றூர் ஊருக்குத் திருக்கச்சூர் என்றும், இறைவன் அமர்ந்து அருள் பாலிக்கும் திருக்கோயிலுக்கு ஆலக்கோயில் என்றும் பெயர். ஆயிரத்திநூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஓர் அற்புத நிகழ்ச்சியால் இந்த ஊர் சரித்திரப் பெருமை பெற்று எல்லோராலும் போற்றி வணங்கும் ஒரு புண்ணிய திருத்தலமாக விளங்குகிறது. தமிழுக்குத் தெய்வத் தமிழ் என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. அந்தத் தமிழின் இனிமைக்காக அருவமாக எங்கும் நிறைந்த பரம்பொருள் உருவம் தாங்கி, புண்ணியபாதம் மண்ணில் பதிய நடந்து வந்து நிகழ்த்திய அற்புதங்கள் பல. கண்ணுதற் பெருங்கடவுளாகிய சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரின் வாயிலாக பண்ணுற இனிக்கும் பசுந்தமிழைக் கேட்க திருமணத்தைத் தடுத்து, அவரை ஆட்கொண்டு, வழக்குரையாடி, அவருக்கு வன்றொண்டன் என்னும் திருநாமத்தைச் சூட்டி, அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ்ப் பாடுக என்று திருவாய் மலர்ந்து அவர் உன்னை திட்டிய வாயால் என்ன சொல்லிப் பாடுவேன் என்று வருந்திய போது பித்தா என்று அடியெடுத்துக் கொடுத்து, முதன் முதல் அவரைத் திருவெண்ணை நல்லூரில் பாடச் செய்தார். அவருடைய பக்தி நிறைந்த செந்தமிழ் இசைப் பாடலுக்கு உருகி, தன்னை அவருக்கு தோழனாகத் தந்து, அவர் விரும்பிய விருப்பத்தை அறிந்து, திருவாரூரில் பரவை நாச்சியார் திருமணத்தை முடித்து வைத்தார். அதேபோல் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் பிணைத்து வைத்தார். சங்கிலியை மணந்த செய்தியை அறிந்த பரவையார் திருவாரூருக்கு வந்த சுந்தரரைச் சேர்த்துக் கொள்ள மறுத்த போது, எம்பெருமான் மறுபடியும் பரவையாருடன் அவரைச் சேர்த்து வைக்க ஒருமுறைக்கு இரண்டு முறை, பொன்னார் திருவடியை மண்ணில் பதித்து திருவாரூர் தெரு வழியே பரவையார் இல்லத்திற்கு தூது சென்றார். இப்படியே சுந்தரருக்காக குண்டையூர் கிழார் மூலம் நெல்லை மலைபோல் குவித்து வைத்தார் எம்பெருமான். குவித்த நெல் மலையை மனிதர்களால் கொண்டு வந்து நிரப்ப முடியாது என்று அறிந்த சுந்தரர். கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுபெற்றேன் ஆளில்லை எம்பெருமான் அவை அட்டித் தரப் பணியே என்று வேண்ட இறைவன் அந்த நெல் மலையை பூதகணங்களை விட்டு பரவையார் இல்லத்தையும், திருவாரூர் முழுவதையும் நிரப்பி விட்டார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு சமயம் திருப்புக் கொளியூர் அவிநாசி என்ற ஊரில் வந்து கொண்டிருந்த போது, ஒரு வீட்டில் மங்கல ஒலியும், மறுவீட்டில் அழுகை ஒலியும், ஒலிப்பதைக் கேட்டு ஏரிக் கரைக்குக் குளிக்கச் சென்ற, இரண்டு அந்தணப் பிள்ளை களில் ஒருவனை முதலை விழுங்கிவிட்டது. மற்றவனுக்கு இப்பொழுது பூணூல் கல்யாணம் நடக்கிறது என்று கேள்விப் பட்டு, பிள்ளையை இழந்த பக்தி நிறைந்த பெற்றோர்களின் துயரைத் துடைக்க ஏரிக் கரைக்குச் சென்று, நீரை உண்டாக்கி நீரில் முதலையை வரவழைத்து. புரைக்காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே காரைக்கால் முதலையை பிள்ளை தரச் சொல்ல காலனையே என்று வேண்ட, இறைவன் அந்த பிள்ளையை இறந்த பல ஆண்டையும் சேர்த்து வளர்ந்த பிள்ளையாக முதலை வாயினின்றும் கக்கச் செய்தார். இப்படிச் சுந்தரர் செந்தமிழுக்காக பல அற்புதங்களை நிகழ்த்திய பெருமான் திருக்கச்சூர் ஆலக் கோயிலிலும் காத்துக் கொண்டிருந்தார். நல்ல பகற் பொழுது, சுந்தரர் திருக்கச்சூர் வந்து ஆலக்கோயில் அண்ணலை வழிபட்டு, வெளியே வந்தபோது பசி அவரை வருத்தத் தொடங்கியது. தமக்கு உணவளிக்க அங்கு யாரும் முன்வரவில்லை என்பதை அறிந்து நீரற்ற பயிர் துவள்வது போல் வாடி கோயில் மதில் புறத்தே அமர்ந்தார். அப்பொழுது ஒரு முதிய அந்தணர் தோன்றி அப்பா! உனக்கு பசி களைப்புபோல் இருக்கிறது. நீர் எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இரும். நான் இல்லங்கள் தோறும் சென்று அன்னப் பிச்சை எடுத்துக் கொண்டு வந்து அளிக்கிறேன் என்று சொல்லி அந்த ஊரில் தெருத் தெருவாகச் சென்று இல்லங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு வந்து, சுந்தரர்க்கு அளிக்க அவர் மகிழ்ச்சியுடன் உண்டு களித்திருந்த போது வந்த முதியவர் மறைந்துவிட்டார். சுந்தரர் வந்தவர் சிவபெருமான் என்றறிந்து பரம் பெருளே! அடியேனுக்காக மனமிரங்கி, மானுடச் சட்டைத் தாங்கி, மண்ணில் வந்து, தெருத் தெருவாகத் திரிந்து பிச்சையெடுக்கும்படி நேர்ந்து விட்டதே, என்று வருந்தி, கதுவாய் த்தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவுலாரோ என்று முதுவாயோரி என்ற பாடலில் தம் மனநெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்படி இறைவனுடைய திருப்பாதம் பதிந்த இடம் தான் திருக்கச்சூர். பெருந்திரு விழாவில் திருக்கச்சூர் தியாகராஜர் நடனம் காணத் தகுந்த காட்சியாகும். 1-8-79இல் சுந்தரர் திரு நாளையொட்டி அவரது வரலாற்றை யும். திருக்கச்சூரையும் நினைவு கூர்வோமாக! தூங்கானை, மாடக்கோயில் (கஜ பிருஷ்டம்) பெண்ணாடகம் (திருக்கடந்தை) பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண், டேலிருங், கூற்றகல் மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்சுடர்க் கொழுந்தே அப்பர் - தேவாரம் 2:1 ஒருங்கும் பிறவி பிணிகேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்த அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிகளடி நி ழற்கீழாளாம் வண்ணம் கிடங்கும் மதிலும் சுவாவியெங்கும் கெழுமனைகடோறு மறையின்றொலி தொடங்குங் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடந்தொழு மின்களே சம்பந்தர் தேவாரம் திருத்தூங்கானை மடாதிபதி எண். 59 மணிக்கோயில் (காந்தகாந்தம்) திருநறையூர் தஞ்சை மாவட்டம் தொன்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை - சிறுமடல் செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழு நீரோடு மிடைந்து கழனி திகழ்ந் தெங்கும் மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே! - திருமங்கை மன்னன் அழகும் இனிமையும் நிறைந்த தமது அழகு தமிழ்ப் பாடல் களினாலே பக்தியைப் பெருக்கி, புனிதம் விளைந்த ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த வைணவத் திருப்பதிகள் 108-இல் ஏறக்குறைய பதிமூன்று தலங்கள், சோழ வளநாட்டிலே சீர்காழிக்கு அருகிலேயே அமைந்துள்ளன. காவிரி பாய்ந்து, இயற்கை எழில் கூட்டும் சோழ வளநாட்டின் புனிதப் பதிகளில் மிகவும் சிறப்பானது, திருநாங்கூர்த் திருப்பதிகள் - தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்கருகில் ஏழு மைல் தொலைவிலே இவைகள் அமைந்துள்ளன. இவை யாவுமே திருமங்கை மன்னனால் பாடப்பெற்ற பெருமைக்குரியன. திருமங்கை மன்னன் பிறந்த திருக்குறையலூர் என்ற ஊரும் அவர் பரமனிடம் அருள் பெற்ற திருவாலி திருநகரியும் நாங்கூருக்கு அருகிலேதான் உள்ளது. சீர்காழியிலிருந்து திருவெண்காடு - பூம்புகார் செல்லும் பஸில் ஏரி மங்கைமடம் என்ற ஊரில் இறங்கி, மேற்கே செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை மைல் நடந்து சென்றால் திருநாங்கூர் வந்தடையலாம். இவ்வூரிலேயே ஆறு வைணவத் தலங்கள் அருகருகேயே அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சம். உண்மை மிகு மறையொடு நற்கலைகள் நிறைந்த, பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலிந்த நாங்கூர் வைகுந்த விண்ணகரம் என ஆழ்வார் அற்புதமாகப் பாடிப் பரவும் வைகுந்த விண்ணகரம் என்ற கோயில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. நாங்கூரின் இயற்கை எழிலையும், அங்கு கற்றவர்கள் பலர் சிறப்புடன் வாழ்ந்திருந்தனர் என்றும் ஆழ்வார் அழகு தமிழ்ப் பாசுரங்களிலே குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல - வளங் கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர், என்று அதன் வளமான நிலையினையும் தெரிவிக்கிறார். ஆனால் இன்றோ - இங்குள்ள கோயில்கள் அத்தனை வளத்தோடு காணப்படவில்லை. இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் மதில் சுவர்கள் சூழ நடுவில் கோவில் சதுர வடிவமாக அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் ஆதிசேஷன் மேல் அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். சீதேவி, பூதேவி - நீளாதேவி ஆகியோரும் அமர்ந்துள்ளனர். உற்சவரும் தாயாரும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள் இந்த வைகுந்த நாதனை திருமங்கை ஆழ்வார் பத்துப் பாடல்களிலே பாடி மகிழ்ந்திருக்கிறார். வங்கமலி தடங்கலுள் வானவர்களோடு மா முனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி, எங்கள் தனி நாயகனே எமக்கருளல் என்றும் ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் செங்கயலும் வாளைகளும் செந்நிலிடைப் பகுதிப்பச் சேலுகளும் செழும் பணை சூழ்வீதி தொறும் மிடைந்து மங்குல் மதிய கடுரிஞ்சு மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே! என்பது அவரது அறிவுரை. இந்த வைகுந்த நாதனுக்குத் தாமரைக் கண்ணன் என்ற திருநாமமும் உண்டு. உபரிசரவசு மன்னனுக்கும், உதங்க மகரிஷிக்கும் பிரத்தியட்சம் என்பது புராண வரலாறு. இவ் வைகுந்த விண்ணகரத்து தாமரைக் கண்ணனை, கவிஞர் பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாடிப் பரவியுள்ளார். வணங்கேன், பிறதெய்வம், மால் அடியார் அல்லாக் குணக் கேடர் தங்களுடன் கூடேன், இணங்கி நின்று வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன்; ஈது அன்றோ வைகுந்த விண்ணகர வாழ்வு என்பது அவரது பாடல் நாமும் இந்த திருநாங்கூர் வைகுந்த நாதனையும், வைகுந்த வல்லியையும் வணங்கி, இவ்வுலகிலேயே வைகுந்த விண்ணகர வாழ்வினைப் பெறுவோமே. கொகுடிக் கோயில் - ஸ்ரீபோகம் திருக்கருப்பறியலூர் - தலை ஞாயிறு (தஞ்சை மாவட்டம்) நீற்றாறு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானை கருப்பறியலூர்க் கூற்றானைக் கூற்றுதைத்த கோன்வளை யானவளொடு கொகுடிக் கோயில் ஏற்றாளை மனத்தினால் நினைந்த போதவர் நமக்கினியவாறே சுந்தரர் தேவாரம் - 12:2 2. கரக்கோயில் கரக் கோயில் என்பதற்கு வடமொழியிலுள்ள ஆகமத்தில் விஜயம் என்று பெயர் கூறப்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து. விமானத்திற்குரிய பாகத்தை எட்டுப்பங்காகச் செய்து அதில் ஒரு பங்கு அதிர்ஷ்டானமும் இருபங்கு பாதவரிசையும் பிரதாரம் ஒருபங்காகவும் தூபி ஒருபங்காகவும் அமைக்கப்பட்டு கண்டமும் சிகரமும் வட்ட வடிவமாக அமைந்திருந்தால் அதை விஜயம் என்று கூறலாம் என்று காரண ஆகமம் (60: 5-10) கூறுகிறது. மேலக் கடம்பூர் கோயிலை அப்பர் அடிகள் கரக் கோயில் என்றுதம் தேவாரத் திருப்பதிகத்தில் பாடியிருக்கிறார் அதோடு எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் திரு. மயிலை சீனிவேங்கடசாமி அவர்களும் அதை படமிட்டுக் காட்டி ஏற்றுக் கொண்டுள்ளார். கரக் கோயில் கரக் கோயில் என்றால் என்ன என்று மிகத் திட்டவட்டமாக எவரும் இதுவரைக் குறிப்பிட்டுக் கூறவில்லை பொதுவாக, கரக் கோயில் என்றால் வட்ட வடிவமான கோயிலல் என்று எண்ணப் படுகிறது. அதாவது கரம் என்றால் கை என்று பொருள்; இரு கைகளையும் கோர்த்தால் வட்டவடிவம் வருகிறது எனவே வட்டவடிவமான கோயிலுக்கு கரக் கோயில் என்று கூறப்பட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். சில அறிஞர்கள் கரம் என்ற பதம் சக்கரம் என்ற பதத்தின் சுருக்கம் சக்கரம் வட்டமாக இருப்பதை எண்ணிவட்டமான கோயிலுக்குச் சக்கரக் கோயில் என்று ஆதியில் கூறப்பட்டு அப்பால் சக்கரம், கரம் என்று திரியுற்று கரக்கோயில் என்று வழங்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணு கின்றார்கள். சிலர் கற் கோயில் என்ற சொல்லின் திரிபே கரக்கோயில் என்றாயிற்று என்று மொழிகின்றார்கள். குதிரைபூட்டிய தேர் போன்ற சக்கரங்களுடன் அமைந்த சக்கரக் கோயில் என்று வித்துவான் வெள்ளைவாரணார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கரக் கோயில் என்பது தேர் வடிவமாகச் சக்கரங்களோடு அமைக்கப் பெற்ற கோயிலாகும் என்று வித்துவான் திரு.தி.வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் கூறியுள்ளார்கள். விஜயம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டிட அமைப்பு கரக் கோயிலாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. வட்டமான விமானத்தையுடைய (சிகரத்தை யுடைய) கோயில் கட்டிடத்திற்கு விஜயம் என்று சிற்ப நூற்கள் பெயர் கூறுகின்றன என்று மதிப்பிற்குரிய நண்பர் திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் கூறுகின்றார்கள். மேற்கூறிய அபிப்பிராயங்களெல்லாம் வெறும் யூகங் களேயொழிய நல்ல சான்றுகள் கொண்டு உறுதியாகக் கூறும் முடிவான அபிப்பிராயம் அன்று. இவைகளை வைத்துக் கொண்டு இதுதான் கரக் கோயில் என்று நாம் திட்டவட்டமாகத் தீர்மானித்து விடுவதற்கில்லை. ஆனால் ஆகமங்களில் சிரிவிஜயம் என்னும் கோயில் வட்ட வடிவமான சிகரமும் வட்டவடிவமான கர்ணக்கூடும் அமைந்ததாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளன என்று வடமொழிப் புலவர்கள் கூறுகின்றார்கள். இதுதான் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய உயர்ந்த நற்சான்றாக இருக்கின்றன. சமய ஆராய்ச்சியும் பலகலைப் பயிற்சியும் பெற்ற திருநாவுக்கரசர் திருக்கடம்பந்துறை கடம்பவன நாதேசுவரர் கோயிலுக்குப் போய் அக் கோயிலை நன்கு ஆராய்ந்து அங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனை போற்றி, நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்துகி டப்பதே (தேவாரம்) என்று பாடியுள்ளார். இதன் மூலம் திருக்கடம்பந்துறை கடம்பவன நாதேசுவரர் கோயில் அமைப்பு கரக்கோயில் அமைப்பு என்று நாம் ஒருவாறு முடிவுக்கு வர முடியும். ஆனால் ஒரு சிலர், அப்பர் காலத்தில் இருந்த கரக்கோயில் அவரது காலத்திற்குப் பின் அழிவுற்று வேறு கோயில் அமைப்பில் இக் கோயில் எடுப்பிக்கப் பெற்றிருந்தால் நாம் கரக் கோயில் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு வேறு கோயில் அமைப்பாகப் போய்விடும் என்று கூறுகின்றார்கள். அவர்கள் கூறும் அபிப்பிராயம் நாம் எளிதில் தள்ளி விடுவதற்கில்லை. அதை நன்கு ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டியதாக இருக்கிறது. சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவராகிய சுந்தரர் திருக்கடம்பூர் அமிர்த கடேசர் கோயிலுக்குப் போய் அந்த விமான அமைப்பை நன்கு ஆராய்ந்து அங்குள்ள அமிர்தகடேசுவரரையும் மின்னம்மையையும் வழிபட்டுப் பாடியுள்ளார். அதில், பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர் புலால்வா யன்பே யொடு பூச் சொழியீர் எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் என்றிரங் குவேன்எல் லியும் நண் பகலும் கல்லால் நிழற்கீழ் ஒருநாட் கண்டதும் கடம்பூர்க் கரக்கோ யிலின்முன் கண்டதும் அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே (தேவாரம்) என்று கூறியிருப்பதும் நமக்கு நல்ல சான்றாகும். அப்பர் பாடிய திருக்கடம்பூர் கோயில் விமானமும் சுந்தரர் பாடிய திருக்கடம்பந்துறைக் கோயில் விமானம் ஒன்றாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்து ஒருமுடிவிற்கு வர முடியுமல்லவா? கடம்பூர் - கர்க்கோயில் கடம்பூரை மேலக் கடம்பூர் என்றும் திருக்கடம்பூர் என்றும் கூறுவார்கள். இவ்வூர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. விழுப்புரம் மாயவரம் இருப்புப் பாதையில் உள்ள காட்டு மன்னார் கோயில் (காட்டு மன்னார் குடி) புகை வண்டி நிலையத்தினின்று 1 1/2 கல் தொலைவில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 15 கல் தொலைவில் இருக்கிறது. இவ்வூருக்கு பேருந்து வண்டியின் மூலம் போகலாம். இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனுடைய பெயர் அமிர்த கடேசுவரர். இறைவியின் பெயர் சோதி மின்னம். இத் தலம் இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற இடம் இத் தலத்தின் பெருமையை எண்ணி இந்திரன் இத்தலத்தை அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்ல எண்ணினான். அவனது எண்ணம் ஈடேறவில்லை. அவன் பாதாளம் வரை தோண்டியும் அடியோடு பெயர்த்தெடுக்க முடியவில்லை. அத்தலம் அதற்கு அப்பாலும் ஊடுருவிப் போயிருப்பதை உணர்ந்து அஞ்சி அதை அப்படியே இருக்கும்படியே செப்பனிட்டுவிட்டு சிவபெருமானிடம் அமிர்தம் வேண்டித் தவம் இயற்றி அதைப் பெற்றுச் சென்றான் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன. இங்குள்ள அமிர்த கடேசுவரர் கோயில் ஒரு அழகிய தேர் வடிவிலே காணப்படுகிறது. தேருக்குரிய நான்கு சக்கரங்களும் தேரின் அடியில் பொருத்தப்பட்டிருப்பது போல் இந்தக் கோயிலின் உபபீடத்தையொட்டி கல்லில் அழகிய சக்கரங்கள் சிற்பச் சிறப்பு மிக்கதாய் செய்து இணைக்கப்பட்டிருக்கின்றன. அப்பர் அடிகள் அழகிய வேலைப்பாடுகளுடன் மிளிரும் இந்தச் சக்கரங்களை வைத்தே கரக்கோயில் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளார் போலும். சிற்ப நூல்களில் கோயில் பெயர்கள் அதன் விமானத்தின் அமைப்பை வைத்தே முடிபு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் கரக்கோயில் எல்லாம் தேர் வடிவில் நான்கு சக்கரங்களை யுடையதாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிற்ப நூற்களில் கோயிலின் விமானம் வட்டவடிவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது காவிரி வடகரைத் தலங்களுள் 34-வது தலமாகும். இது பாடல் பெற்ற திருத்தலம் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் இத்தலத்திற்குப் பதிகம் பாடியுள்ளார்கள். சுந்தரரும் தம்பாடலில் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் சோழ மன்னன் முதலாம் பராந்தகனால் (கி.பி. 907-953) அடிப்படையிட்டது. இவனுக்குப்பின் இவ்வூர் வீர நாறாயணபுரம் அல்லது வீர நாராயணசதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப் பட்டது. இவனுக்கு வீர நாராயணி என்றொரு மனைவியும் இருந்தாள். எனவே முதலாம் பராந்தகனே தனது மனைவியின் பெயரால் வீரநாராயணசதுர்வேதிமங்கலம் என்ற ஊரை அமைத் திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். இவனுக்கு வீர நாராயணன் என்ற பெயர் உண்டு. இவனுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் இவன் பெயரால் வீர நாராயண சதுர்வேதி மங்கலம் என்று அழைத்திருக்கலாம் என்றும் எண்ணப்படுகிறது. இந்தக் கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அதில் இவ்வூர் உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இக்கோயில் உத்தமசோழன் காலத்திற்கு முந்தியது என்று கூறலாம். முதலாம் குலோத்துங்கனின் 43-ஆம் ஆண்டில் அதாவது கி.பி. 1113-ஆம் ஆண்டில் பழுது பார்க்கப்பட்டு மறுமலர்ச்சி யடைந்தது. இக் கோயிலை ஏழாவது நூற்றாண்டில் வாழ்ந்த சைவசமய குரவர்களில் ஒருவராகிய அப்பர் அடிகள் இவ்வூரைக் கடம்பூர் என்றும் இங்கு கோயில் கொண்டிருக்கும் சுவாமியை அமிர்தகடே சுவரர் என்றும் அவரைக் கடம்பூரிலுள்ள கரக் கோயிலில் குடி கொள்பவர் என்றும் பாடியிருக்கிறார். எனவே இக்கோயில் அப்பர் காலத்திற்கு அதாவது ஏழாவது நூற்றாண்டிற்கு முன்னர் பழஞ்சோழர்களால் சிற்ப நூலிலும் சிவாகமங்களிலும் குறிப்பிடப் பெற்றிருக்கும் விதிகளை அனுசரித்து, எழுப்பப் பெற்ற கரக்கோயில் என்று திட்டவட்டமாகக் கூறலாம். இந்தக் கரக் கோயிலைத்தான் சிற்ப நூற்களில் விஜயம் என்று கூறப்பட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இத் திருக்கோயில் கிழக்கு நோக்கிய வண்ணம் சிறந்த சிற்ப நூலறிவும் கைவண்ணமும் வாய்ந்த சிற்பியால் எழிலுறக்கட்டப் பட்டுள்ளது. கோயிலினுட்புகுந்து தெற்குப் பிரகாரத்தை அடைந்தால் அடி முதல் முடிவரை அழகுற மூல வடிவம் அணுவளவும் மாறாது கெம்பீரமாய் நிற்கும் சிலைகளைக் கண்டோர், மெய்மறந்து ஆச்சரியம் அடைந்து நிற்பர். இது ஒரு உண்மையான உயரிய கலைக்கூடம் போல் காட்சி அளிக்கிறது. இது ஏனைய பல கோயில்களினின்று ஒரு சில நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளதாய் மிளிர்கின்றன. இதன் பழம்பெரும் அழகு பெரிதும் மாற்றப் பட்டிருக்கிறது. இங்கு பிற்காலத்தில் எழுப்பப் பெற்ற ஓர் அழகிய மண்டபம் இருக்கிறது. அதில் பல அழகிய செம்புப் படிமங்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சுவரில் மங்கை பங்கன், தமிழ்முனிவன் உருவங்கள் காணப் படுகின்றன. அதன் அடியில் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக் கோயில் சக்கரங்களோடு நிற்கும் தேர் (இரதம்) வடிவம் கெம்பீரமாக விளங்குகிறது. கோயிலின் இருபக்கங்களிலும் நான்கு அழகிய சக்கரங்கள் காணப்படுகின்றன. கோயிலுக்கு முன்பக்கத்தில் முன்கால்கள் இரண்டையும் தூக்கி பாய்ந்து பரந்து ஓடும் நிலையில் நிற்கும் இரு அழகிய குதிரைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த தெய்வலோகக் குதிரைகள் இறைவனோடு விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மா மன்னர்கள், ராணிகள் மட்டுமின்றி மக்களும் கோயில்களுக்குப் பல மானியங்கள் விட்டிருப்பதாக இங்குள்ள கல்வெட்டுகள் மெய்ப்பிக் கின்றன. இத் திருத்தளியில் விளக்கு எரிக்க, விருதராஜ பயங்கர வளநாட்டிலுள்ள முக்காட்டுக் கடம்பூரில் உள்ள மகேசுவரர் திருக்கோயிலுக்கு இரையூர் கிழான் என்ற இறையூரில் உள்ள எரமன் சாணான் என்பவரால் ஆறு காசு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த இரையூர் என்ற ஊர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள ஊற்றுக்காட்டுக் கோட்டத்தில் உள்ள வெளிமானாட்டில் உள்ளது. இந்த ஆலயத்தின் அணி சிறந்த அமைப்பு அதிஷ்டானத்தில் அமைந்துள்ளது. அங்குதான் தேரின் உறுதியான அழகிய சக்கரங்கள் உள்ளன. அதற்கு மேலே உபபீடம் உறுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது உபபீடத்தின் மீது அதிர்ஷ்டானத்தில் சிற்ப விதிகள் வழுவாத முறையில் உபானம், பதுமம், கண்டம், குமுதம் அக்ரப்பட்டியல் ஆகியவைகள் கவின்பெறக் காட்சி அளிக்கின்றன. அர்த்தமண்டபம், கருவறை ஆகியவைகளில் பிரதான சுவர் களில் மூன்று தேவ கோஷ்டங்கள் திகழ்கின்றன. இதன் மாடங்களின் தட்சணாமூர்த்தி (தெற்கு) திருமால் (மேற்கு) நான்முகன் (வடக்கு) ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தேவ கோஷ்டத்தின் வாயிலில் இரு தூண்கள் அழகு பொலிய நிற்கின்றன. இது அழகிய பூவேலைப்பாடுகள் நிறைந்த கூடுகளையுடையது கார்னி (Carnic) உடையதாக இருக்கிறது. கார்னி மேலே வளைந்த வாலையுடைய யாழிகள் காணப்படு கிறது. ஒவ்வொரு தேவ கோட்டத்தின் உச்சியிலும் அணிசெய்யப் பட்ட கூடு சிம்மல்லாடம் (கீர்த்திமுகம்) உடையதாய் இயங்குகிறது. ஒவ்வொரு பெரிய கூடும் ஒரு அழகிய மாடம் போல் ஒரு தூபிபோன்ற பஞ்சாரம் உடையதாய் இருக்கிறது. அதில் ஒரு தெய்வ உருவம் காணப்படுகிறது. கூட்டின் உச்சி இரண்டாவது தளத்தின் கார்னிஸைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. கூட்டிற்குபின் இரண்டாவது தளத்தில் மாடத்தில் உயர்ந்த சிங்கம் ஒவ்வொரு பக்கத்திலும் காவலாக நிற்கிறது. அர்த்த மண்டபத்தின் வெளிச்சுவரின் மீது இன்னும் இருதேவ கோஷ்டங்கள் தூண்களின் மீது முன்னே தள்ளிக்கொண்டு அழகுடன் விளங்குகின்றன. இந்த மாடங்களில் மங்கை மங்கனும் ஆலிங்கன மூர்த்தியும் அழகுடன் காணப்படுகிறார்கள். சிற்பிகளின் செய் நேர்த்தி சிலாகித்துப் போற்றத்தக்கது. கருவறையின் சுவர்களிலும் அர்த்த மண்டபத்தின் அடியிலும் பலசிலைகள் காணப்படுகின்றன. அர்த்த நாரீசுவரர் கோஷ்டத்தின் பக்கத்தில் பிள்ளையார், தமிழ் முனிவன் உருவங்கள் உள்ளன. பிள்ளையார் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். வடபக்கத்தில் பிட்சாடனர் ஆலிங்கனமூர்த்தி கங்காதரமூர்த்தி துர்க்காதேவி ஆகிய தெய்வங்களின் சிலைகள் காணப்படுகின்றன. இங்குள்ள சிலைகளின் அமைப்புகளையும் செய்முறைகளையும் உற்று நோக்கினால் இவைகள் அனைத்தும் ஒரேகாலத்தில் தோன்றப் பட்டதாகத் தெரிய வெவ்வேறு யுகத்தில் தோன்றபட்டதாகக் காணப்படுகின்றன. இங்குள்ள சிலைகளின் அடியில் 12-ஆம் நூற்றாண்டில் வழங்கி வந்த தமிழ் கிரந்த எழுத்துக்களில் அவைகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டு அறிஞர்கள் வியந்து பாராட்டு கின்றார்கள். திரேதாயுகத்தில் உரோமைய மகரிஷி (உரேமபாதர்) தேவேந்திரன், சூரியன், சந்திரன் ஆகியவர்களும் துவாபரயுகத்தில் பர்வதராஜன், அஷ்டகுல பர்வதங்களும் கலியுகத்தில் பதஞ்சலிதேவருமாக தோன்றியதாக எழுதப்பட்டுள்ளன கருவறையின் மீதுள்ள இரண்டாவது தளம் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது பழஞ்சோழர் கோயில்களில் இரண்டாவது தளத்தின் முகப்பின் மீது சாலைகள் என்று கூறப்படும் பெட்டகக் கோயில் (Shrines) உண்டு. அதாவது இருபக்கங்களிலும் நடுவில் கூண்டுகளும் (நீண்ட சதுர வடிவில் வண்டி கூண்டுகள்) வளைவான சிகரமுள்ள சதுரப் பெட்டகக் கோயிலும் இருபக்கங்களிலும் உண்டு. ஆனால் இக் கோயிலினுள் அத்தகைய சிறிய பெட்டகக் கோயில்கள் இல்லை. ஆனால் நான்கு மாடங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. (கோஷ்ண்டங்கள் காணப்படுகின்றன). ஒவ்வொரு முக்கிய முனையிலும் நான்கு பஞ்சாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. (ஒரு தளத்தில் கார்னீ, கிரீவா, சிகரம் போன்ற கபோலம் வட்டவடிவமான தூபியோடுள்ள வாயில் காணப்படுகிறது.) கோஷ்டங்களிடையே நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு பஞ்சாரம் உண்டு. பஞ்சாரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மேலே ஒரு சிங்கம் காணப்படுகிறது இரண்டாவது தளத்தின் அமைப்பு தனியாகவும் திராவிடக் கட்டிடக் கலையின் சிறந்த அபிவிருத்தியைக் குறிப்பிடுவ தாகவும் திகழ்கிறது இரண்டாவது தளத்தின் கார்னீ ஒரு தொகுப்புள்ள நிறைவாகவும் எட்டுப்பட்ட வடிவிலும் உள்ளது. மற்றொரு யாழியின் ஒரு பக்கத்தில் மட்டும் மழமழப்பாக கிரீவா இருக்கிறது. இஃதன்றி அங்கு நான்கு மாடங்களும் திக்குப்பாலர் சிலைகளும் உள்ளன. சிகரம் வட்டி வடிவில் முக்கியமான முனைகளில் நான்கு கூடுகளோடு காணப்படுகின்றன. உச்சியில் அழகான செம்பு தூபி எழிலுடன் இலங்குகின்றன. அடித்தளம் அழகிய பூவேலைப்பாடுகள் உள்ளதாக அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு மேலே இரண்டு வரிசையான ஒரு சிலைச் சட்டம் உண்டு. முடிவில் இரு வரிசைகளுள்ள மூன்று மகுடமுள்ள பூதங்களும் மற்றொரு சட்டத்தின் தொகுப்பில் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி இலிங்கோற்பவமூர்த்தி போன்ற சிலை உருவங்கள் உண்டு கலசத்தின் மேற்பூச்சுகூட எட்டு பட்டத்தில் உள்ளதாக அழகுற அமைந்திருக்கிறது. அதைப் போலவே கூடுபதுமமும், பலகையும் அமைந்திருக்கிறது கூட்டுச் சேர்ந்து இசைக் கருவிகளை மீட்டி எழிலுற ஆடும் நாட்டிய நங்கைகளும் கொஞ்சம்தள்ளி கார்னிஸக்கும் பலகைக்கும் இடையே இடை வெளியுள்ளதாகக் காணப்படுகிறது. மொத்தத்தில் இத் திருக்கோயிலின் கட்டிடம் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். இதில் காணப்படும் சிலைகளும், செம்புப் படிமங்களும் கவின் பெறக் காட்சி அளிக்கிறது என்று தைரியமாகக் கூறலாம். இரண்டாவது தளம் ஒரு புதிய சாயலைப் பெற்றிருக்கிறது. நடுவில் கோஷ்டங்களும் சிகரத்தின் நான்கு மூலைகளிலும் கபோலம் போல் பஞ்சாரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் புதிய அமைப்பு இக்கோயிலில் தமிழர் கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஒளிர்கிறது இங்கு கட்டிடக் கலையும் சிலைகளும் குலையாத நிலையால் உருவாக்கப் பெற்றுள்ளது. முதலாம் குலோத்துங்கன் காலத்தில் துளிர்த்த தளிகளில் இது ஒன்றே மிக அழகியதாய் நிலவுவதோடு மிகவும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளது. இரத வடிவில் மேலக்கடம்பூர் அமிர்த கடேசுவரர் அழகிய தளியைப்போல் தாராசுரத்திலும், நாகபட்டினத்திலும் சிதம்பரத் திலும் திருவாரூரிலும் ஆந்திர நாட்டில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி அழிபாடுகளிலும் அசையாது வித்தால கோயிலின் தென்மேற்கில் நிற்கும் கல்தேர் கோயிலும் இன்றும் பொன்னானது நின்று புகழ்பெற்றிலங்குகிறது. ஒரிசா மாநிலத்தில் கதிரவனுக்கு தேர்வடிவில் அமைக்கப் பட்ட ஒரு பெரும் கோயில் உண்டு. அதன் சக்கரங்களில் செய்யப் பெற்ற சிற்ப வேலைப்பாடுகள் மிக அற்புதமானவைகள் அக்கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது. இன்று இடிந்து வீழ்ந்து பாழ்பட்ட நிலையில் உள்ளது. இவைகள் எல்லாம் கரக் கோயில் அமைப்பிற்குட்பட்டனவா என்பதை அறிஞர்கள் ஆய்ந்து முடிவிற்கு வர வேண்டும். 3. ஞாழற் கோயில் விமானத்திற்குரிய பாகத்தை எட்டுப் பங்காகச் செய்து ஒரு பங்கு அடி (அதிர்ட்டானம்), இருபங்கு உடல் (பாதவரிசை), ஒருபங்குதோள் (பிரதாரம்) ஒருபங்கு கழுத்து (கண்டம்), இரு பங்கு தலை (சிரசு) ஒரு பங்கு முடி (தூபி) ஆகவும் நடுவில் பத்திரத்துடன் கூடியதாகவும் சிகரத்தில் கோஷ்டமும் நாளியும் அமைந்து வட்டமான கழுத்தும் தலையும் அமைந்தது கேஸரம் என்று காரணாகமும் கூறுகிறது. கேஸரம் என்று காரணாகமம் கூறு வடமொழிப் பெயருள்ள விமானத்தைத் தமிழிற் ஞாழற் கோயில் என்று கூறலாம் என்பது என் கருத்து. ஆகமம் கூறும் விதிப்படி ஞாழற் கோயில் இது என்று இதுவரை எவரும் திட்டவட்டமாக எடுத்துக் காட்டவில்லை. சைவ சமய குரவர்களின் திருப்பாசுரங்களில் ஞாழற் கோயில் என்று எந்த ஊரில் உள்ள கோயிலையும் அவர்கள் பாடியதாகப் புலப்பட வில்லை. ஞாழல் என்றால் குங்கும மரம் என்று பொருள்; எனவே ஞாழற் கோயில் என்றால் குங்கும மரத்தாற் கட்டப்பட்ட கோயில் என்று பொருள் கொள்ளலாம் எனச் சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இது தவறு என்பது எனது கருத்து. குங்கும மரத்தால் கோயில் கட்டுவது எங்கும் வழக்கில் இல்லை. குங்குமமரத்தால் கோயில் கட்டவேண்டும் என்று எந்த ஆகமத்திலும் எந்தச் சிற்ப நூலும் சொல்லப்படவில்லை. அதோடு குங்கும மரம் கோயில் கட்டுவதற்கு ஏற்ற உறுதியான மரமும் அன்று இதற்கு முன் நாம் கூறிய ஆலக் கோயில் என்பதை ஆல மரத்தாற் கட்டப்பட்டது என்றும், கொகுடிக் கோயில் என்றால் முல்லைக் கொடியால் கட்டப்பட்டது என்றோ எவரும் கூறவில்லை. ஆலக் கோயில், கொகுடிக் கோயில், ஞாழற் கோயில் என்பன அப்பர் அடிகள் கூறிய இடுகுறிப் பெயரேயொழிய காரணப் பெயரன்று. மேலும் ஞாழல் என்பது புலி நகக் கொன்றை மரம் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராய் இருந்த சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அப்பர் அடிகள் புலி நகக் கொன்றை மரத்தின் அடியில் காணப்பெற்ற கேஸரம் என்ற விமான அமைப்புள்ள கோயிலை ஞாழற் கோயில் என்று கூறியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். கேஸரம் என்ற கோயில் சில இடத்தில் தேக்குமரத்தடியின் கீழே இருக்கலாம், சில இடத்தில் கோங்குமரத்தின் அடியிலும் இருக்கலாம். அதேபோல் ஞாழற் கோயில் (கேஸரம்) கருங்காலிமரத்தாலும் கட்டப்பட்ட, வேங்கை மரத்தாலும் கட்டப்படலாம். அதைப்பற்றிக் கவலை இல்லை. கேஸரம் என்ற ஞாழற் கோயில் அமைப்பு ஆகம விதியின் படி அமைக்கப்பட்டிருக்கிறதா என்றே கவனிக்கவேண்டும். அப்பர் பெருமான் தம் திருத்தாண்டகத்தில் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற் கோயில் என்று குறிப்பிட்ட ஒரு இடத்தைத் தவிர வேறு எந்தத் தேவாரத்திருப்பதிகங்களிலும் ஞாழற் கோயில் என்ற பதம் இடம் பெறவில்லை திருஞான சம்பந்தப் பிள்ளையாரோ சுந்தரரோ, மணிவாசகப் பெருமானோ ஞாழற் கோயில் என்று எந்தக் கோயிலையும் பாடவில்லை, எனவே நாம் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் என்று திருக்கடப்பந் துறையில் கரக் கோயில் உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். பெண்ணாடகத்துப் பெருங்கோயில் சேர் என்று சம்பந்தர் பெண்ணாடகத்தில் உள்ள பெருங்கோயிலைக் குறிப்பிட்டுள்ளார். கருப்பறியலூர் கூற்றானைக் கூற்றுதைத்துக் கோள்வளை யாளவணொடும் கொகுடிக் கோயில் ஏற்றானை என்று சுந்தரமூர்த்தி நாயனார் கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலைப் பாடியுள்ளார் என்று எளிதில் கூறமுடியவில்லை. மேலும் பல அறிஞர்களும் தேவாரத்தின் துணை கொண்டோ திருவாசகத்தின் துணை கொண்டோ ஞாழற் கோயில் எங்களது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். அறிஞர் திரு. வெள்ளைவாரணார் அவர்கள் ஞாழல் என்பது புலிநகக் கொன்றைதான் என்று தம் பன்னிரு திருமுறையில் கூறிவிட்டார்கள். டாக்டர் மா. இராசமாணிக்கனார் எம்.ஏ.பிஎச்.டி. அவர்கள் திருப்பாதிரிப் புலியூர் சிவன் கோயிலில் உள்ள இறையவர் பெயர் திருக்கடைஞாழல் ஆழ்வார்; திருக்கடை ஞாழல் பெருமான் அடிகள், திருக்கடை ஞாழலுடைய மகாதேவர், தோன்றாத்துணை ஆளுடையார், தோன்றாத் துணை ஆண்டார், திருப்பாதிரிப் புலியூர் ஆண்டார் என்று பலவகையாக அமைந்துள்ளது. ஞாழல் என்பது புலிநகக் கொன்றை மரம். சிவலிங்கம் முதலில் ஞாழல் மரத்தடியில் இருந்தமையால் ஞாழல் பெருமான், ஞாழல் ஆழ்வார் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று கி.பி. ஏழாம் நூற்றாண்டினரான திருநாவுக்கரசர் இக்கோயிற் கடவுளைப் பாடுகையில் தோன்றாத்துணையாய் இருந்தனன் தன்னடி யோர்களுக்கே என்று பாடினார் அதனால் அப்பெருமான் தோன்றாத்துணை ஆளுடையார் என்றும் தோன்றாத் துணையாண்டார் பெயர் பெற்றார் என்று திருக்கோயில் என்ற திங்கள் இதழில் குறிப்பிட்டுள்ளார்.1 சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிஞர். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள், ஞாழற் கோயில் என்பது திருப்பாதிப்புலியூரில் கோயில் என்று கல்வெட்டுகள் உணர்த்து கின்றன என்று கூறி அடியிற் கண்ட கல்வெட்டு ஒன்றை எடுத்துக்காட்டி தனது அபிப்பிராயத்தையும் கொடுத்துள்ளார். அது அடியில் வருமாறாகும்: வதி ஸ்ரீ மதுரை கொண்ட கோயில் பரகேசரி வன்மர்க்கியாண்டு பதினெட்டாவது வடகரைத் தேவதானம் பாதிரிப் புலியூர்த் திருக் கடை ஞாழற் பெருமான் அடிகளுக்கு (2)த் திருவுண் ணாழிகைக் கணப்பெருமக்கள் வழி தென்கரைத் தேவதானம் பெருமாக்களூர் ஆவலாபன சூத்தரத்து .....................................nfh¤juj¤J நாராயணஞ்(3) சேந்தனிடையொடு திருவமிர்துக்கு வேண்டும் முதல்வனிடைக் கொண்டோம். இது சந்திராதித்த வல் செலுத்துவோமானோந் திருவுண்ணாழிகைக் கணப் (4) பெருமக்களோம்.1 இக்கல் வெட்டினால் திருப்பாதிப் புலியூரிலுள்ள கோயில் முற்காலத்தில் ஞாழற் கோயில் என்று வழங்கப்பெற்றிருத்தšவேண்டு«என்பJவெளியாகின்றது. அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானும் ஞாழற்பெருமானடிகள் என்று இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பது உணரற்பாலது ஞாழல் என்பது ஒரு மரத்தின் பெயர் அம்மரத்தின் அடியில் எழுந்தருளியுள்ள பெருமான் ஞாழல் பெருமான் என்று வழங்கப்பெற்றனராதல் வேண்டும் திரு வாழுங்கடை ஞாழற் சினையமரும் என்று வரும் மற்றொரு கல்வெட்டுப் பகுதியிலும் இச்செய்தி வலியுறுத்தப் பெற்றுள்ளது. எனவே ஞாழல் மரத்தின் கீழ் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலை ஞாழற் கோயில் என்ற வழங்கி இருப்பது சாலப் பொருந்தும் என்க.2 âருப்பாதிரிப்புலியூர்க் கோயில் ஞாழற் nகாயில்vன்பதற்குKதல்jரமானrன்று»டைத்துள்ளதுnமலும்fல்வெட்டில்âருப்பாதிரிப்புலியூரில்nகாயில்bகாண்டிருக்கும்bபருமானைPழற்bபருமான்vன்றுTறுவதோடுnதான்றாத்Jணைaண்டார்vன்றும்Tறுகிறது. mப்g® அடிகளும் தம் தேவாரத் திருப்பதிகத்தில் என்றான் இமையவர்க்கன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடியோர் களுக்கே எனக் கூறியிருப்பதும் ஞாழற் பெருமானைத் திருப்பாதிரிப்புலியூர் தோன்றாத்துணைநாதர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இறைவி தோகை நாயகி எனப்படுவார். இவற்றின் மூலம் ஞாழற் கோயில், என்பது அப்பர் அடிகள் ஆகமங்களில் கூறும் கேசரம் என்ற கோயிலுக்கு, அந்தக் கோயிலை அவர் முதன்முதலாகக் காணும்பொழுது ஞாழற் மரத்தின் கீழோ அல்லது அண்மையிலோ கண்டதால் ஞாழற் கோயில் என்று அவர் வைத்த இடுகுறிப் பெயரே யொழிய கேசரம் என்ற வடமொழிப் பெயர் வாய்ந்தகோயிலுக்கு அதன் அமைப்பினை ஆய்ந்து அப்பொருள் பொலியும் வண்ணம் வைத்த பெயரே அல்ல. இதற்குமுன் அவர் கஜப்பிருஷ்டக் கோயிலுக்கு ஆலக் கோயில் என்றும் ஸ்ரீபோகம் என்ற கோயிலுக்கு கொகுடிக்கோயில் (முல்லை அரும்புக் கோயில்) என்றும் எந்த அடிப்படையில் பெயர் வைத்தாரோ அதே அடிப்படையில் கேஸரம் என்ற கோயிலுக்கு ஞாழற் கோயில் என்று பெயர் வைத்தார் என்று தெளிக. திருப்பாதிரிப் புலியூர் - ஞாழற் கோயில் திருப்பாதிரிப் புலியூர் தென் ஆற்காடு மாவட்டத்தில் மாயவரம் - விழுப்புரம் இருப்புப் பாதையில் உள்ளது. கடலூர் புது நகர் (N.T.) புகைவண்டி நிலையத்திலிருந்து 1/4 கல் தொலைவில் கோயில் உள்ளது. சுவாமியின் பெயர் தோன்றாத்துணைநாதர் பாடலேசுவரர் என்றும் கூறுவார்கள் தேவியின் பெயர் பெரிய நாயகி. தலவிருட்சம் பாதிரி. இதை வட மொழியில் பாடலம் என்று பகர்வர். திருநாவுக்கரசரைச் சமணர்கள் கல்லிற்கட்டி கடலில்தள்ள அவர் சொற்றுணை வேதியன் என்ற திருப்பதிகத்தைப் பாடி கரையேறினார். கடலில் மூழ்கவில்லை. எனவே அவ்வூர் கரையேறி விட்ட குப்பம் என்று அழைக்கப்பட்டது. அவர் கரையேறி இப்பதிக்கு முதலில் வந்தபோது ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார் இத்தலத்திற்கு திருஞான சம்பந்தர் பாடியபதிகமும் உண்டு. இவ்வூருக்கு சிதம்பரநாதமுனிவர் இயற்றிய தலப்புராணம் உண்டு. தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் உண்டு. இவைகள் அச்சிடப்பட்டு வெளி வந்துள்ளன. இத்தலத்தை வியாக்கிரமபாதர் வழிபட்டமையால் இது வடபுலியூர் என அழைக்கப்படும். மங்கண முனிவர் என்பவர் முடங்கிய காலுடைய முயல் வடிவமாகச் சாபமிடப் பெற்றார் அவர் இத்திருத்தலம் போந்து தோன்றாத்துணைநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். இச்செய்தி முன்னம் நின்ற முடக்கான் முயற்கருள் செய்து என்ற சம்பந்தர் திருவாக்கால் நமக்கு நன்கு தெரிகிறது. இக் கோயிலில் பாதிரி மரங்கள் பல உள்ளன. இக் கோயில் மேலே தகடுகள் சாத்தி இருக்கின்றார்கள் இங்குள்ள கோயில் மிகப்பெரியது. வானளாவிய கோபுரம் மிகக் கெம்பீரமாக நிற்கிறது. விமானம் அத்துணை பெரியதாக இல்லை. செட்டிநாட்டுச் செல்வர்களின் திருப்பணி மோகத்தினால் இக் கோயில் புதுமைப் பொலிவுடன் காணப்படுகிறது. ஆகவே நாம் காண விழையும் ஞாழற் கோவில் அதாவது திருக்கடைஞாழல் ஆழ்வார் கோயில் திருப்பணி என்னும் பெயரால் மாற்றம் பெற்று விட்டது என்ற ஐயம் எழுந்துள்ளது. அதைப் பல அறிஞர்கள் உறுதிப்படுத்தியும் உள்ளனர். இதுவரை நாம் ஆராய்ந்த அளவில் நற்சான்றுள்ள திருப்பாதிரிப் புலியூர் ஞாழற் கோயில் மாற்றப்பட்டு விட்டது என்று தெளிவாய்த் தெரிகிறது. கடில் பொழில் சூழ் ஞாழற்கோயில் என்று அப்பர் பாடிய பாட்டே எஞ்சி நிற்கிறது. மேலும் ஞாழற் கோயில் நிலவிய திருப்பாதிரிப்புலியூரும் நிலைத்து நிற்கிறது. ஏன்? ஞாழல் பெருமானையும் காணலாம் ஞாழற்கோயில்தான் மறைந்துவிட்டது. ஞாழற்கோயில் ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே திருப்பாதிரிப் புலியூரில் உள்ளது. அதனால் அப்பர் பெருமான் அதைக் குறிப்பிடவும் கல்வெட்டுகளில் இந்த எழிற்கோயில் இடம் பெறவும் வாய்ப்பு எழுந்தது. ஏழாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் சமண சமயம் நிலவி இருந்தது. இவ்வூரில் புகழ் பெற்ற சமண மடமும் சமணப்பாளிகளும் நிறைந்திருந்தன. கி.பி. 5, 6 - ஆம் நூற்றாண்டு களில் இங்குள்ள சமண முனிவர்கள் இங்கிருந்து பல வடமொழி நூற்களை எழுதி எங்கும் பரப்பியுள்ளனர். சமண சமயத்தின் செல்வாக்கு மிகுதியால் இவ்வூர் பாடலிபுத்திரம் என்ற பெயரைப் பெற்றது. திருநாவுக்கரசர் இளம் பருவத்தில் சமண நெறியைத் தழுவி இங்குள்ள மடத்தில் பல்லாண்டுகள் வதிந்தார். தமிழும் வடமொழியும் பயின்று சமண சமயக் கொள்கைகளைக் கசடறக் கற்று தருமசேனர் என்னும் பெயரும் சூட்டப்பெற்றார். அப்பால் தருமசேனர் அவரது அக்கை திலவதியாரின் முயற்சியால் சமணந் துறந்து சைவந்தழுவினார். சமணர் அவருக்கு ஆற்றிய கொடுமைகளை யெல்லாம் பொறுத்துக்கொண்டு சமண மன்னன் மகேந்திரவர்மனையும் சைவநெறியைத் தழுவச் செய்தார். இங்குள்ள சமண மடம் அழிக்கப் பட்டது. சிவன்கோயில் எழுந்தது. இங்குள்ள பெருமான் பெயர் பாடலீசுவரர். இன்று அக்கோயிலும் பல கல்வெட்டுகளும் உள்ளன. ஞாழல் பெருமான் திருப்பாதிரிப் புலியூரில் உள்ள சிவன் கோயிலில் குடி கொண்டிருக்கும் இறைவர்க்கு, திருக்கடைஞாழல் ஆழ்வார் திருக்கடை ஞாழல் பெருமான் அடிகள், திருக்கடை ஞாழலுடைய மகாதேவர், தோன்றாத்துணை ஆளுடையார், தோன்றாத்துணை ஆண்டார் திருப்பாதிரிப்புலியூர் ஆண்டார் என்று பல பெயர்கள் உண்டு. ஞாழல் என்பது புலிநகைக் கொன்றை மரம். சிவலிங்கம் முதன்முதலாக இங்கு ஞாழல் மரத்தின் அடியில் அமைந்திருந்தால் இந்தச் சிவலிங்கப் பெருமானை ஞாழல் ஆழ்வார் ஞாழல் பெருமான் ஞாழல் உடைய தேவர் எனப்பெயர் வழங்கப்பெற்றது. திருப்பாதிரிப்புலியூர் முதற்பராந்தகன் காலத்தில் கோயிலுக்கு விடப்பட்ட தேவதான ஊராக இருந்தது. பின்பு இரண்டாம் இராசேந்திரன் காலத்தில் பரநிருபகேசரி சதுர் வேதிமங்கலம் என்றும் பெயர் வாய்ந்த பிரமதேய ஊராக மாற்றம் பெற்றெழுந்தது. அதனால் அச்சதுர்வேதி மங்கலத்துச் சபையார் ஊர் ஆட்சியையும் கோயில் ஆட்சியையும் செய்து வந்தனர். திருப்பாதிரிப்புலியூர் முதன்முதலாக இராசேந்திர சோழ வளநாட்டுப் பவித்திர மாணிக்க நாட்டைச் சேர்ந்திருந்தது. அப்பால் வளநாட்டுப் பெயரும் நாட்டுப் பெயரும் மாற்றப்பட்டன. எனவே இராசராச வளநாட்டுப் பாட்டன் பாக்கைநாட்டுத் திருப்பாதிரிப் புலியூர் எனப் பெயர் பெற்றது. பாட்டன் பாக்கை என்பது இன்றுள்ள பட்டாம் பாக்கம் என்னும் ஊரேயாகும். திருப்பாதிரிப்புலியூர் சிவன் கோயிலில் பொது நிர்வாகத்தைத் திருநட்டக் கணப்பெருமக்கள் என்ற குழுவினர் கவனித்து வந்தனர். திருஉண்ணாழிகை - அதாவது கருவறை சம்பந்தமான காரியங்களைக் கவனித்து வருபவர் திருஉண்ணாழிகைக் கணப் பெருமக்கள் என்று அழைக்கப்பட்டனர். அரையன் இளவரையன் பேரரையன், மும்முடிச் சோழன் என்பன சோழர்கால அரசாங்க அலுவலர்கள் பெற்றபட்டங் களாகும். மூவேந்தவேளான் பிரம்மாதிராசன் என்னும் பட்டங்கள் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்குரிய பட்டங் களாகும் அரசாங்கத்தில் உயர்நிதி பதவிகள் வகிப்போர்களும் கோயில் நிருவாகத்திலும் திருப்பணியிலும், திருத்தொண்டிலும் பங்குபெற்று வந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.1 கல்வெட்டுகள் இக் கோயிலில் 21-கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. கோயில் புதுப்பிக்கப்பட்ட பொழுது அவைகள் அகற்றப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் 19 சோழமன்னர்களுடையதாக இருக்கின்றன. இக்கல்வெட்டுகள் 10 -ஆம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரைப் பொறிக்கப்பட்டனவாக உள்ளன. இத் திருக்கோயில் கல்வெட்டுகள் சோழ மன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராசராசகேசரி வர்மன் (முதலாம் இராசராசன்) இராசகேசரிவர் மனாகிய உடையார், வீரராசேந்திரதேவன், இராசகேசரி வர்மனாகிய உடையார் இராச மகேந்திர தேவன், முதற் குலோத்துங்கன், விக்கிரம சோழதேவன் இவர்கள் காலங்களிலும் பாண்டியர்களில் பெருமான் விக்கிரம பாண்டியன் காலத்திலும் விசயநகர பரம்பரையினரில் வீரவிருப்பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் இறைவர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகள், திருக்கடை ஞாழல் ஆழ்வார், திருக்கடை ஞாழல் உடையார், தோன்றாத் துணை ஆளுடையார் என்னும் பெயர் களால் குறிக்கப் பெற்றுள்ளன. இவ்வூர்ப் பெயர் மதுரை கொண்ட கோப்பரகேசரிபன்மரின் கல்வெட்டு வடகரை தேவதானம் திருப்பாதிரிப்புலியூர் எனவும் இராசகேசரிபன்மரான உடையார் இராச மகேந்திரதேவர் கல்வெட்டு வடகரை இராசேந்திர சோழ வள நாட்டு மேல் கால் நாட்டுப் பிரம்மதேயம் திருப்பாதிரிப் புலியூர் எனவும், விக்கிரமசோழதேவர் கல்வெட்டு இராசராச வளநாட்டுப் பட்டான் பாக்கை நாட்டுத் திருப்பாதிரிப்புலியூர் எனவும், வீர இராச மகேந்திர சோழ தேவர் கல்வெட்டு இராசேந்திர சோழ வளநாட்டுப் பவித்திர மாணிக்க வளநாட்டுப் பிரம்மதேயம் பரநிருபபராக்கிரம சதுர்வேதிமங்கலம் எனவும் கூறுகின்றன. மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் கல்வெட்டு வடகரை தேவதானம் பாதிரிப் புலியூர் திருக்கடை ஞாழல் பெருமான் அடிகளுக்கு எனவும், கோவிராசகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராசமகேந்திர தேவரின் கல்வெட்டு வரை இராசேந்திர சோழவளநாட்டு மேல் கால நாட்டுப் பிரம்மதேயம் பாதிரிப் புலியூரான பரநிருப பராக்கிரம சதுர்வேதிமங்கலத்து உடையார் திருக்கடை ஞாழலுடையாருக்கு எனவும் முதற் குலோத்துங்க சோழன் கல்வெட்டு திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கடை ஞாழல் உடைய பெருமான் அடிகள் எனவும் குறிப்பிடு கின்றன. எனவே இவ்வூரின் பெயர் திருப்பாதிரிப்புலியூர் எனவும் கோயிலின் பெயர் ஞாழற் கோயிலாகவும் கொள்ள வேண்டும். நாவுக்கரசுப் பெருந்தகையார் கடிபொழில் சூழ் ஞாழற் கோயில் என்று அடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டிருக்கும் கோயில் இப்பாதிரிப் புலியூர்க் கோயில் என்பதை மேற்கண்ட கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.1 மேலும் இக்கல்வெட்டுக்கள் எல்லாம் நுந்தாவிளக்கெரிக்கவும், திருவமிர்துக்கும், பூந்தோட்டத்திற்கும் நிவந்தங்கள் அளித்த செய்திகளையே குறிப்பிடுகின்றன. இவ்வூர்க் கல்வெட்டுகளில் திருநாவுக்கரசு நாயனார் பரசமய கோளரி மாமுனி எனக் கூறப் பெற்றிருப்பதோடு அவர்மீது புராணம் இயற்றிய புலவர்க்கு இரண்டு மாநிலம் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப் பட்டுள்ளது. இச்செய்தி முதற் குலோத்துங்க சோழதேவன் (கி.பி. 1070 - முதல் 1120) வரை நாற்பத்தொன்பது ஆண்டுகளைப்பற்றிய வரலாற்றுச் செய்தியாகும். விறுவிறுப்பான உடையார் கல்வெட்டு இவ்வூரில் புஷ்பகிரி மடம் என்று ஒன்று இருந்ததைக் குறிப் பிடுகிறது.2 கல்வெட்டுகள் இக்கோயிற் சுவர்களிலும் கீழேயுள்ள பாவுகல்லிலும் உள்ள கல்வெட்டுகளை அரசாங்கக் கல்வெட்டு ஆராய்ச்சித்துறையினர் படியெடுத்துப் படித்து நூல் வடிவமாக்கியுள்ளனர். அக்காலத்தில் அரசர்கள் அரசியல் அலுவலர் வணிகர்கள், நிலக்கிழார்கள் பொது மக்கள் முதலியோர்கள் கோயிலில் விளக்கெரிப்பதற்கும் கோயில் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் திருஆபரணங்கள் செய்வதற்கும் ஆடுகள், பசுக்கள் நிலங்கள், காசுகள், பொற்கட்டிகள் அணிகலன்கள் மணிகள் நிபந்தம் அளிப்பதுண்டு. அவைகளைப் பற்றிய விவரங்களே இந்தக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுகளில் அக்காலத்தில் ஆட்சி புரிந்த அரசர்களின் பெயர்களும் அரசர்களின் வீரச் செயல்களும் அக்கல்வெட்டுகள் எழுவதற்குக் காரணமாக இருந்த அறங்கள் பற்றிய விவரங்களும் பொறிக்கப்படுதல் அக்கால வழக்கம் அக்கல்வெட்டுகளில் காணப்படும் விவரங்களாவன: அரசர் 1. பராந்தகன் I கி.பி. 907-955 2. இராசராசன் I கி.பி. 985-1014 3. இராசேந்திரன் I கி.பி. 1012-1044 4. இராசேந்திரன் I I கி.பி. 1052-1064 5. வீர ராசேந்திரன் கி.பி. 1063-1069 6. குலோத்துங்கன் I கி.பி. 1070-1120 7. விக்கிரம சோழன் கி.பி. 1118-1135 8. மாறவர்மன் விக்கிரமபாண்டியன் கி.பி. 1258-1281 9. வீரவிருபண்ணவுடையார் கி.பி. 1465-1485 காஞ்சியும் ஞாழற் கோயிலும் காஞ்சிபுரத்தை, தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் சைவ நெறிக்கும், தமிழ்ப்பண்பாட்டிற்கும் புத்துயிரும் புது வாழ்வும் அளித்து மறுமலர்ச்சி பெறச் செய்த மாவீரர் திருநாவுக்கரசர் ஆவர் (சமணர்களாலும், சமணர்களின் அரசாலும் நீரில் ஆழ்த்தியும் நெருப்பிலிட்டும் புடமிடப்பட்டபத்தரை மாற்றுப் பசும் பொன் தியாகாக் கினியில் குதித்தெழுந்த மாவீரன். அவர் காஞ்சிபுரத்தைக் கல்விக் கரையிலாத காஞ்சி என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். காஞ்சி தமிழும் வடமொழியும் பாலிமொழியும் பலகலையும் பரவி நின்ற நாடு. தொண்டை மண்டலத்தின் தலைநகரான காஞ்சி உலகப்புகழ் பெற்ற மாநகர். இந்த நகர் அமைப்பு மிகச் சிறந்ததாகும். இந்த நன்னகர் இந்தியாவில் உள்ள ஏழு புனித நகரங்களில் ஒன்றாக எண்ணி மக்கள் யாத்திரை தலமாக (pilgrimage)¥ பாவித்து வருகின்றார்கள். இந்நகர் தென் இந்தியாவில் செங்கற்பட்டு அரக்கோணம் இருப்புப்பாதையில் நிலநடுக் கோட்டிற்கு அருகில் உள்ள மண்டலப்பகுதியில் (latitude) வடக்கில் 120 500 தீர்க்காம்சரேகைக்கு கிழக்காக 790 46, இல் இருக்கிறது. புனித ஆறு வேகவதி நகரிற்கு மேற்கில் செல்கிறது. இந்நகர் சிவன் கோயில்கள் மட்டுமின்றி திருமால் கோயிலும் சிறப்பாக இடம் பெற்று சைவ நாயன்மார்களாலும் வைணவ சமய ஆழ்வார்களாலும் சிறப்பித்து பாடப்பெற்ற பெருந்தலமாகும். காஞ்சிக்குப் போனால் கஞ்சிக்கு கவலைப்படவேண்டாம் என்பது ஒரு பழங்காலப் பழமொழியாகும். ஏனெனில் அங்கு ஏராளமான சத்திரங்கள் உள்ளன எல்லோர்க்கும் இல்லை என்னாது சோறு போட்டு வந்தார்கள். காஞ்சிபுரம் ஒருகாலத்தில் சோழர்களின் முக்கிய நகரமாக இருந்தது. அப்பார் பல்லவர்களின் கோநகராய் வல்லவர் நாடு என்ற பேற்றை எய்தியது. ஒரு காலத்தில் இந்நகரைச் சமணர்கள் கைப்பற்றி, இந்தியாவில் காஞ்சி சமணர்களின் கேந்திர நிலையமாய் அவர்களின் கட்டிடக் கலைக்குத் தலை சிறந்த இடமாய் மிளிர்ந்தது. சமணம் சார்ந்த பல்லவர்கள் சைவ நெறியைப் பின்பற்றியதும் சமணம் மக்களுக்கு தவாத மண்டூக நெறி என்று இழித்துக் கூறியும் அவர்களின் கோயில் சிவன் கோயிலாக மாற்றியும் பேரழிவைச் செய்தும் காஞ்சிக்கு அண்மையிலுள்ள திருப்பருத்திக் குன்றம் என்ற ஊரில் சில சமணக் கோயில்கள் ஒரு காலத்தில் நாங்கள் தொண்டை நாட்டில் அரசு ஓச்சிய நெறியாய் இருந்தது என்பதற்குச் சான்றாக நிற்கின்றது. இங்கு ஏராளமான கோயில்கள் உண்டு. அவைகளில் அளவில்லாத கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உள்ளன. எனவே பல்வேறு சமயங்களையும் பல்வேறு துறைகளையும் சார்ந்த பழம்பெரும் இந்து அரசர்களில் வரலாறுகளைப் பற்றி நன்கு உணர்வதற்கான பொன்றாச் சான்றுகள் இன்றும் கிடைத்து வருகின்றன. இந்துக்கள் இந்தியாவில் சபதபுரி ஏழு புனித நகர்கள் உள்ளன என்று போற்றுவார்கள். அவைகள் காஞ்சிபுரம் அயோத்தி (ழுரனா) மதுரா (Mattra) மாயா (Haridwar) காசி (Varanasi) அவந்திகா, துவாரகா எனப்படும். இந்த ஏழு நகரங்களில் மூன்று சிவபெருமான் உறையும் புனித இடம் மூன்று திருமாலுக்குரிய நன்னகர், இவைகளில் காஞ்சிபுரம் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் புனிதத் தலமாக எண்ணப்பெற்ற பெரும் பேற்றை பெற்ற பெருந்தலமாகும் இந்தமாநகர் சென்னைக்குத் தென்மேற்காக 45-கல்தொலைவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பழம் பெரும் நகரின் அழிபாடுகளில் தென் இந்தியாவின் நிறைவான வரலாற்றை உருவாக்கிப் பார்ப்பதற்கான பௌத்த, சமண சைவ, வைணவ சமயங்களின் கட்டிடக் கலைகள் பல இன்னும் எஞ்சி நிற்கின்றன. அவைகளின் தனிப்பண்புக் கூறுவாய்ந்த சிறப்பியல்புகளை நன்கு ஆய்வதற்கு ஏற்ற இடமாக இது மிளிர்கின்றது. ஒரு காலத்தில் இவ்வூர் 108 சைவத்திருக்கோயில்களையும் 18 திருமாலின் திருக்கோயில் களையும் பெற்றொளிர்ந்த கோயில் மாநகராய்ப் பொலிவும், வலிவும் பெற்றிருந்த புகழூராய் இலங்கியது.1 7-ஆம் நூற்றாண்டில் சீனப் பயணி (Chinese pilgrim) ஹி.யூஎன் சாங் (Hiuen isang) இந்தியாவைப் பார்வையிட வந்தார். அவர் வரும்பொழுது காஞ்சியில் பௌத்த நெறி நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தது என்று அவரே எடுத்துக்காட்டுகின்றார். காஞ்சியிலும் அந்நகரிற்கு அண்மையிலும் நூற்றுக்கணக்கான சங்காரமா (Sangharamas) என்னும் பௌத்த மடங்களும் பௌத்த துறவிகளும் அங்கு வாழ்ந்து வந்தனர். திராவிட நாட்டின் தலைநகராய் காஞ்சி விளங்கியது என்று எடுத்துக்காட்டியுள்ளார். காஞ்சி ஆறுகல் சுற்றளவுள்ளதாய்த் திகழ்ந்தது. மக்கள் அறிவாளிகளாயும் உயர்ந்தவர் களாயும் உறுதியான உள்ளம் உடையவர்களாயும் இருந்தனர். அவர் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துப் பல்வேறு மக்களைச் சந்தித்துப் பழகியவர். சைவ சமய மறுமலர்ச்சியால் பௌத்தமும் சமணமும் அழிந்தது. அப்பர் அடிகளுக்கு பௌத்தர்களும் சமணர்களும் அளித்த கொடுமை அவர்களின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது. பௌத்தமும், சமணமும் வீழவே சங்கராச்சாரியும் இராமாநுச ஆச்சாரியும் தலை தூக்கினர். சமணர்களையும், பௌத்தர்களையும் விரட்டியடித்த மகேந்திரவர்ம பல்லவன் சங்கராச்சாரியையும், அவரது வர்ணாச்சிரமக் கொள்கையையும் ஒழிக்கத் தவறிவிட்டான் என்று பிற்காலத்துச் சைவ சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர். காஞ்சி சைவ சமயத்திற்கு ஒரு புனிதமான இடம். திரு நாவுக்கரசு சுவாமிகள் இங்கிருந்தே சமணர்கள் இழைத்த கொடுந் துன்பங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்று இறுதியாக தனது பொறுமையாலும் தியாகத்தாலும் மகேந்திர வர்மன் என்னும் காஞ்சி பேரரசன் உள்ளத்தை மாற்றி அப்பர் அடிகளில் அவனது மணி முடிதாழப் பணிந்து அவரது கையால் திருநீறு பெற்று சிவபக்தனாக மாறி சைவ நெறி புத்துயிர் பெற்றெழுந்த புனித பூமி காஞ்சிபுரத்தை சைவக் காஞ்சி சிவ காஞ்சி என்று கூறினும் பொருந்தும்; மூவர் தேவாரம் பெற்ற முது நகர் - பட்டினத்தடிகள் போற்றிய திருத்தலம். முதல் ஆழ்வார்கள் மூவரில் முதன்மையான பொய்கை ஆழ்வாரும், வைணவ சமய குருவாகிய கடைசி ஆச்சாரியரான வேதாந்த தேசீகரும் பிறந்த பெருந்தலமாகும். இன்னும் வைணவ சமய ஞானிகள் பலரும் பிறந்தும் வழிபட்டும் அருள் பெற்றும் உயர்ந்த பெருந்தலமாகும். வைணவர்கள் போற்றும் வரதராசப் பெருமாள், விளக்கொளிப் பெருமாள் போன்ற சுவாமி கோயில் கொண்ட திருத்தலமாகும். சாக்கிய நாயனார் முக்தி பெற்ற திருத்தலம் போதி நாதன் தவப் பெருமையால் அறவண அடிகள் பால் அறம் பயின்று மணிமேகலை துறவறம் பெற்ற இடம். நாலாந்தா போன்று பௌத்தர்களின் பல்கலைக் கழகம் நிலவிய இடம். நாலாந்தா பல்கலைக் கழகத்தின் முதல்வர் தர்மபாலா பிறந்து கல்வயீன்றஇடம், அவருக்கு முன்னிருந்த பௌத்த முனிவரும் காஞ்சி, பௌத்த பல்கலைக் கழகத்தில் பயின்று நாலாந்தா பௌத்த பல்கலைக் கழகத்தின் முதல்வர்களாய் (பிரின்பாலாக) வந்தவர்கள் பிறந்த பெயர் பெற்ற இடம். ஹியூன் சாங் 640-லும் பாஹியான் 425 லும் வந்த இடம் பல சீன மாணவர்கள் பௌத்த நெறியை நாலாந்தாவில் பயின்றதோடு காஞ்சி வந்து பௌத்த நெறியைப் பயின்றுள்ளார்கள். உலகில் உள்ள பௌத்த நெறியான ஹீனயான பௌத்தத்திற்குக் காஞ்சி தான் தலைமைப் பீடமாக இருந்தது. காஞ்சி சமணர்களின் தலைமைப் பதி காஞ்சி அரசே பல்லவ அரசாக மாறியது. நூற்றுக்கணக்கான சமணக் கோயிலும் ஆயிரக் கணக்கான சமணத் துறவிகளும் வாழ்ந்து வந்தனர். இங்கு தான் சமணத்திற்கும் சைவத்திற்கும் பெரும்போர் நிகழ்ந்தது. சைவம் வென்றது சமணம் வீழ்ந்தது. அகளங்கஜின் குருவாகிய சைனா பௌத்தரை வென்ற இடம். ஹஜரத் ஹமீம் அவுலியா தவங் கொண்ட முலிம்களின் புனித தலம். கி.பி.4-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர் ஆட்சி எழுந்து திருப்பணிகள் பல செய்தது. 8-முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை சோழர் ஆட்சியும் நிலவிய பூமி. விஜய நகர நாய்க்கர் ஆட்சியும் முலிம் ஆட்சியும் நிலவிய இடம். காஞ்சி காம கோடி பீடம் சங்கராச்சாரியின் தலைமைப் பீடம் உள்ள இடம். காஞ்சி ஞாழ் கோயில் அப்பர் அடிகள் கல்விக் கரையிலாத காஞ்சி என்று அன்று பாடினார். கல்விக்குக் கரையிலாது இருந்தமையால் கரையற்ற குளம் போல் கல்வி என்னும் அறிவு நீர். அயலிடங்களுக்குச் சென்று கரையுள்ள குளம் போல் திகழ்ந்த சென்னைக்கும் மதுரைக்கும் பிற இடங்களுக்கும் போய் அங்கு அங்கு நிலைத்து நிற்கின்றது என்று எண்ணுகின்றேன். இன்று நான், எண்ணற்ற கோயில் நிறைந்த காஞ்சி என்று சொல்ல விரும்புகிறேன். காஞ்சிபுரத்தில் (1) காமாட்சி கோயில் மதுரை மீனாட்சி கோயிலுக்குப் போட்டியாக எழுந்தது போல் சிறப்புற்று நிற்கின்றது. இஃதன்றி (2) வரதராசப் பெருமாள் கோயில் (3) ஏகாம்பரர் கோயில் (4) கயிலாச நாதர் கோயில் (5) வைகுண்டப் பெருமாள் கோயில் (6) சத்திய விர தேசுவரர் கோயில் (7) சித்திர குப்தர் கோயில் (8) அஷ்ட புஜம் கோயில் (9) சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் (10) விளக் கொளிப் பெருமாள் கோயில் (திருத்தண்கா) (11) அஷ்ட புஜப் பெருமாள் கோயில் (12) ஐராவதனேசுவரர் கோயில் (13) முக்தேசுவரர் கோயில் (14) மதங்கேசுவரர் கோயில் (15) அனகாத்தன் காவாடம் கோயில் (16) பாண்டிய பெருமாள் கோயில் (17) அனந்தன் கோயில் (18) சந்திரப் பிரபைக் கோயில் போன்ற கோயில்களைப் பற்றி பல அறிஞர்கள் காஞ்சிக் கோயில் என்றும் காஞ்சி மலர் என்றும் பல நூல்கள் எழுதியிருப்பதைப் படித்துள்ளேன். அவைகள் எதிலும் நான் விரும்பும் முக்கியமான இரு கோயில்களைப் பற்றி எவரும் ஒருவார்த்தை கூட எழுதவில்லை. அதிர்ஷ்டவசமாக நமக்கு இன்றியமையாத கோயில்கள் (1) தெய்வத் தானேசுவரர் கோயில் (2) ஜ்வர ஹரேசுவரர் கோயிலும் ஆகும். ஆனால் சமீபத்தில் எனது மதிப்பிற்குரிய மங்கை நல்லாள் காலஞ் சென்ற பேராசிரியை டாக்டர். சி. மீனாட்சி அம்மாள் எம்.ஏ.பி.எய்ச்டி அவர்கள் காஞ்சி என்ற தம் நூலில் தெய்வத்தானேசுவரர் கோயிலைப் பற்றி எழுதா விடினும் ஜ்வர ஹரேசுவரர் கோயிலைப் பற்றி 19 வரிகள் எழுதியிருப்ப தோடு காஞ்சியில் மக்கள் பார்க்க வேண்டிய கோயில்களின் பெயர்கள் 24- ஐ குறிப்பிட்டுள்ளார். அந்த இருபத்து நாலில் கூட நான் இன்றியமையாததாகக் கூறும் தெய்வத் தானேசுவரர் கோயிலைக் குறிப்பிடாது விட்டு விட்டார். ஏன் என எனக்குப் புலப்பட வில்லை. என்றாலும் காஞ்சி என்ற தம் ஆங்கில நூலில் இறுதியில் அனுபந்தம் என்ற தலைப்பில் 20 நூற்களை எடுத்துக் கொண்டு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகள் எவை சோழர் காலத்தில் கட்டப் பட்டவைகள் எவை விசய நகர நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகள் எவை என்றும், அவைகள் எத் தெய்வத்திற்கு எந்த அரசன் எந்த ஆண்டில் கட்டினான் என்று விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளான். அவை அடியில் வருமாறாகும்: காஞ்சியில் கோயில்கள் பல்லவர்கள் காலம் எண் . கோயில் தெய்வம் கட்டியவர் கட்டியகாலம் 1. கயிலாச நாதர் சிவன் இராசசிம்மன் 700-720 2. மகேந்திரவர் சிவன் மகேந்திரன் 720-735 மேசுவரக்கிரகம் 3. வைகுண்டப் திருமால் பல்லவமல்லன் 755-790 பெருமாள் 4. வாலீசுவரன் சிவன் தெரியவில்லை 700-740 5. ஐராவதா சிவன் தெரியவில்லை 720-740 னேசுவரர் 6. முக்தேசுவரர் சிவன் பல்லவ மல்லனின்அரசி 730-753 7. மதேங்கேசுவரர் சிவன் இராசசிம்மன் 700-720 8. ஐராவதேசுவரர் சிவன் தெரியவில்லை 710-720 9. திரிசு சுராந்த சிவன் தெரியவில்லை 700-720 கேசுவரர் 10. ஜலாந்தேசுவரர் சிவன் தெரியவில்லை 700-720 சோழர் காலம் 1. சோக்கீசுவரர் சிவன் பரகேசுவரி 850-900 2. அனககாத தாங்கவாடம் சிவன் குலோத்துங்கன் I 1070-1120 3. பாண்டவப் பெருமாள் திருமால் குலோத்துங்கன் II 1070-1120 4. ஜ்வரஹரேசுவரர் சிவன் குலோத்துங்கன் III 1178-1210 5. அனந்தன் ஆலயம் ஆழ்வார் குலோத்துங்கள் III 1212 விசய நகர் காலம் 1. ஏகாம்பரேசுவரர் தெற்குக் கோபுரத்தில் கிருஷ்ண தேவராயன் 1520 2. ஏகாம்பரேசுவரர் கலியாண மண்டபத்தில் 1520-1530 3. விமான மண்டபம் அரிஹரன் II 1393 4. அம்மை மண்டபம் தெரியவில்லை 1500 5. வரதராசர் தூண் மண்டபம் தெரியவில்லை 1531 செல்வி டாக்டர். சி. மீனாட்சி 1940- மார்ச் மாதம் காலஞ் சென்று விட்டார். அவர் பெங்களூர் மகாராணி மகளிர் கல்லூரியில் துணைப் பேராசிரியராக இருந்து வரலாற்றுத் துறையைப் பயிற்று வித்து வந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் மகளிரில் முதன் முதலாக பி.எய்ச். டி (Ph.D) பட்டம் பெற்றவராவர். பல்லவர்கள் நாட்டையும் பல்லவர்கள் ஆட்சி முறையையும் பல்லவர்கள் கட்டிய கோயில்களின் வரலாற்றை ஆய்வதிலும் ஒரு தனி ஆர்வம் கொண்டவர். அவர் தமிழ், ஆங்கிலம் வடமொழி (Sanskrit) முதலிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்ற பன்மொழிப்புலவர். வரலாற்றுத் துறை, தொல்பொருள், நடனம், தாண்டவம் முதலியவைகளைப் பயின்று பல அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் பல்லவர்கள் ஆட்சியின் சமூக வாழ்வும், நிர்வாகமும்1 என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அதைச் சென்னைப் பல்கலைக் கழகம் 1939-இல் வெளியிட்டுள்ளது. மேலும் காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயிலின் வரலாற்றுப்புகழ் பெற்ற சிலை வடிவங்கள்2 என்ற நூலை எழுதியுள்ளார். அதை 1941-இல் இந்தியத் தொல் பொருள் ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ளது. இவரது மறைவு வரலாற்றுத் துறைக்கு பெரும் இழப்பாகும். இவர் நமது சுரஹரேசுவரர் கோயிலைப் பற்றி எழுதியுள்ளார். அது இவரால் எழுதப் பெற்ற காஞ்சி கட்டிடக் கலைக்கு ஒரு முன்னுரை3 என்ற ஒரு சிறு நூலில் ஒரு சிறு குறிப்பு மட்டும் எழுதியுள்ளார். சுரஹரேசுவரர் ஞாழற் கோயில் சிவ மூர்த்தங்கள் 64-இல் சுரஹரேசுவரர் மூர்த்தமும் ஒன்று.4 சுரஹரேசுவரர் மூர்த்தங்கள் பல கோயில்களில் உள்ளன. எங்கும் இம்மூர்த்தி மூன்று தலை நான்கு கைகள் ஒன்பது கண்கள் மூன்று கால்களுடன் காட்சி அளிப்பார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் சந்நிதித் தெருவில் மேல்புறம் இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு நேராக அமைந்துள்ள சுரஹரேசுவரர் கோயில் என்ற தலத்தில் சிவபெருமான் இலிங்கத் திரு உருவில் கோயில் கொண்டுள்ளார். இது காஞ்சித் தலபுராணத்தில்1 கூறப்பட்டுள்ள சிவ தலங்களுள் ஒரு சிறப்பான தலமாகும். இங்குள்ள கோயிலின் உண்ணாழிகை முட்டைவடிவில் உள்ளது. இதில் இறைவனின் இலிங்கத் திருமேனி எழிலுற இலங்குகிறது. இந்த மூர்த்தியின் திரு உருவம் தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டதாகக் கூறப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சுர நோயால் துன்பமுற்ற தேவர்கள் இறைவனின் ஆணைப்படி இத் திருத்தலத்திற்கு வந்து சுரஹரேசுவரர் தீர்த்தத்தில் மூழ்கி சுரஹரேசுவர மூர்த்தியை முறையாக வழிபட்டு சுரம் நீங்கி சுகம் பெற்றதாகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது. தாரகன் என்னும் அசுரன் மூவுலகையும் தன் வயப்படுத்தி முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு காலத்தில் தாரகன் செய்யும் இன்னல்களைப் பொறுக்க முடியாமற் தேவர்கள் சிவ பெருமானை நாடி, தாங்களுறும் துன்பங்களைத் துடைக்க ஒரு சேனாதிபதியை உருவாக்கித் தருமாறு கேட்டனர். அக்காலத்தில் கயிலாய மலையில் இமவானின் மகளாகப் பார்வதி தோன்றிச் சிவ பெருமானைப் பதியாக அடையத் தவம் இயற்றி வந்தாள். தேவர்கள் சிவ பெருமானை இமவானின் மகளை மணந்து ஒரு மகனை உலகிற்கு அளித்தால் அவரால் தங்கள் துன்பம் அகலும் என்பதைச் சிவ பெருமானுக்கு உணர்த்தினர். யோக நிலையில் இருந்த சிவ பெருமான் மீது காமனை ஏவி மலர்க்கணைகளை விடுக்கத் தேவர்கள் தூண்டினர். காமன் கடவுளின் நெற்றிக் கண் நோக்கினால் எரிக்கப்பட்டான். என்றாலும் சிவ பெருமான் அம்பிகையின் மீது அருள் கொண்டு அவளை மணந்து அவளுடன் ஏகாந்தத்தை நாடினார். உடனே தேவர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். உலோக மாதாவாகிய தாய் கருவுற்றால், உலகம் தாங்காது. என்று உணர்ந்தார்கள். எனவே தேவர்கள் கூடி மீண்டும் சிவ பெருமானைப் பிரார்த்தித்தார்கள். சிவ பெருமான் சினங் கொண்டார். நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதினின்று ஆறு பொறிகள் தோன்றின. அப்பொறிகள் ஆறும் சரவணப் பொய்கை யில் உள்ள தாமரை மலரில் வீழ்ந்து ஆறு முகனாய், கார்த்திகேயனாய் உருவாயிற்று. அந்த ஆறுமுகனை ஆறு நிருத்திகாக் கன்னியர்களால் வளர்க்கப்பட்டது. இறைவன் கோபத்திற்கு ஆளான தேவர்கள் அம்பிகையின் சாபத்திற்கும் ஆளானார்கள். அதனால் தேவர்கள் கொடிய சுர நோய்க்கு ஆளானார்கள். சுரம் தாங்க முடியாமல் தேவர்கள் மீண்டும் சிவ பெருமானிடம் கொடிய சுர நோயைத் தாங்க முடியவில்லை. தங்களை இந்தக் கொடிய நோயினின்று விடுவிக்க வேண்டும். என்று வேண்டினர். இறைவன் இரக்க முற்று அவர்களுக்குக் காட்சி அளித்து சுராக்கன் என்னும் அசுரனை அழிக்கும் பொருட்டுத் தாம் நிறுவிய சுரகேசுவரம் என்னும் காஞ்சிபுரத்திலுள்ள திருத்தலத்தை அடுத்து இருக்கும் சுரகரதீர்த்தத்தில் மூழ்கி சுரகரேசுவரம் வந்து தம்மை வழிபட்டால் சுர நோய் அகலும் என்றார் (சுரகர் தீர்த்தம் இன்று வெப்பேறி தீர்த்தம் என்று கூறப்படும்) தேவர்கள் இறைவனின் ஆணைப்படி காஞ்சி வந்து சுரஹ ரேசுவர தீர்த்தத்தில் மூழ்கி சுரகரேசுவர தலத்தில் சிவ பெருமானை - சுரகரேசுவர மூர்த்தியை வணங்கி சுர நோயினின்று மீண்டு நலமுற்றனர். கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள சுரஹரேசுவரர் கோயில் பேரும் பெருமையும் சீரும் சிறப்புமுள்ள கோயிலாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயில் சிறியது. ஆனால் அரிய கலையழகு வாய்ந்தது. சோழர்காலக் கட்டிடக்கலைக்கு ஒரு ஏற்ற எடுத்துக் காட்டாக எடுப்பிக்கப் பெற்றுள்ளது. இந்தக் கோயில் அப்பர் அடிகள் எடுத்துக் காட்டிய ஞாழற் கோயிலுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகிறது. ஆகமம் கூறும் கேசரம் என்ற திருக்கோயிலில் இலக்கண வரம்பின்படி அமைக்கப்பட்ட திருக்கோயிலாகத் திகழ்கிறது. காஞ்சியில் உள்ள இத்திருக் கோயிலில் பிற கோயில்களை விட பேரழகும் பெருஞ்சிறப்பும் வாய்ந்ததாய் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலே மிகச் சிறந்த சிற்பச் சிறப்பையுடைய அற்புதப் படைப்பான கோயிலாகத் திகழ்கிறது. இதைப் போன்ற அழகிய கோயிலைத் தமிழகத்தில் எங்கும் காண முடியாது. கள்ளழகர் கோயிலும், நார்த்தாமலை விசயால சோழீச் சுரமும் வட்டவடிவான கோயிலாக இருந்தாலும் இந்தக் கோயிலில் காணப்படும் சிற்பச் சிறப்பை அவற்றில் காண முடியாது. இந்த சுரகரேசுவரர் கோயில் வட்டவடிவமான அதிஷ்டானமும் (அடியும்) வட்டவடிவமான பாதசாரமும் (உடலும்) வட்டவடிவமான மஞ்சமும் (தோளும்) வட்டவடிவமான கண்டமும் (கழுத்தும்), வட்டவடிவமான பண்டிகையும் (தலையும்) வட்ட வடிவமான தூபியும் (முடியும்) உள்ள ஒரு அரிய கோயிலை எங்கும் காண முடியாது. அதிஷ்டானம் முதல் தூபி வரை நன்றாகக் கருங்கற்களால் அழகுற கைதேர்ந்த சிற்பிகளால் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இக்கோயில் கவனிப்பாரின்றிக் கிடந்தமையால் மைய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. இந்த அற்புதமான சிற்பச் சிறப்பு வாய்ந்த பொற்புறும் புனிதமான கோயிலைப் போல் மைசூர் மாநிலத்தில் இரண்டும், கேரளத்தில் இரண்டும் தமிழகத்தில் இரண்டும் உள்ளன. அவைகளை தனியாக வட்ட வடிவக் கோயில் என்ற தலைப்பில் இதற்குப்பின் உள்ள ஒரு தனி அத்தியாயத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். அவைகளை நன்கு ஆய்ந்து எதை இந்த எழுவகைக் கோயில்களில் சேர்த்துக் கொள்வது என்பதை அறிஞர்கள் முடிவின் மீது சேர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளேன். வட்டக் கோயில்கள் எத்தனை இருப்பினும் சுரகரேசுவரர் கோயில் அமைப்பிற்கு எதையும் ஈடாக எடுத்துக் காட்ட இயலாது. சுரகரேசுவரர் ஞாழற் கோயில் ஒரு தனிச் சிறப்பும், தனிப் பண்பும், தனிச் சிற்ப நயமும் வாய்ந்த நவிலுதற்குரிய அரிய படைப்பாகும். சுரஹரேசுவர மூர்த்தி கோயில் கொண்டுள்ள நலம் பல வாய்ந்த நயமுறும் ஞாழற்கோயில் அழகிய வட்ட வடிவான அதிஷ்டானத்தின் நடுவில் வெளியே வட்ட வடிவமான பாதக்கிரமும் உடலும் உள்ளே கோழிமுட்டை (குக்குடாண்ட) அமைப்புள்ள அக நாழிகையும் (உண்ணாழிகையும் பிரணவாகார விமானத்தையும் பெற்று எழில் பொலிய ஏற்றமுற அமைக்கப் பெற்றுள்ளது. கருவறை என்ற பெயருக்கேற்ப அக நாழிகை முட்டை வடிவில் அமைக்கப் பட்டிருப்பதை இதன் முன்னர் அதிஷ்டானங்களின் அமைப்பைக் கூறும் இடத்தில் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வர் தபதி வை. கணபதி B. A. அவர்களின் விளக்கத்தை எடுத்து காட்டி யுள்ளேன். தமிழகத்திலே முட்டை (குக்கிலாண்ட) வடிவிலான கோயில் இது ஒன்றே உளது என்று நம்புகிறேன். இக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் நுண்ணிய சிற்ப நயம் வாய்ந்தனவாகும். சுற்றிலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் உள்ளத்தைக் கவர்வனவாய் கண்களுக்னிய காட்சியாய் கட்டழகு வாய்ந்ததாய் கவின் பெறத் திகழ்கின்றன. பெரும்பாலும் உண்ணாழிகையில் பல கணிகள் வைக்கப்படுவதில்லை. இங்கு மூன்று பல கணிகள் பாங்குறத் திகழ்கின்றன. அவைகளும் நுட்பமான வேலைப்பாடுகள் உள்ளதாய் எடுப்பிக்கப்பட்டுள்ளன. திருஉண்ணாழிகையோடு இணைந்த இடை நாழிகையும் ஏனைய திருக்கோயில்கள் நீண்ட சதுரமாக அமைக்கப்பட்டுள்ளது. முக மண்டபமும் நீண்ட சதுரமாகவே அமைக்கப்பட்டுள்ளது. மைசூர் மாநிலத்திலுள்ள கவிகங்காதீசுரர் வட்டக் கோயில்களில் இடை நாளிகையே முக மண்டபமோ காணப்படவில்லை. சிருங்கேரி கோப்பா வட்டாரம், சிக்மகலூர் மாவட்டம் சிவன்கோயில் வித்தியாசங்கரர் நினைவாக கி.பி. 1338-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது இதன் சிறிய வட்டவடிவான அக நாழிகையும் விமானமும் பெரிய வட்டவடிவான முகமண்டபமும் வட்டவடிவில் கட்டப்பட்டவைகளேயாகும். அற்புதமான சிற்பப் படைப்புகளே யாகும். நமது காஞ்சி சுரகரேசுவரர் ஞாழற் கோயிலில் உள்ள விமானம், தூண்கள், கொடுங்கைகள், கர்ணக் கூடு முதலியவை களில் காணப்படும் சிற்ப நுட்பங்கள் சிற்ப அறிவுள்ள அறிஞர்கள் கண்டு சுவைப்பதற்குரியது. அறிஞர்களுக்கு நல்ல கலை விருந்தாகக் காட்சி அளிக்கின்றது. மகர தோரண சிற்ப நுணுக்கங்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இந்த விமானத்தைச் சிற்ப வல்லுநர்கள் பிரணவ கார விமானம் என்று விதந்தோதுகின்றனர். இத்தகைய விமான அமைப்புக் காண்பதற்கரியது. திருவரங்கத்திலுள்ள விமானம் இதைப் போன்று அழகுடன் அமைந்திருந்தாலும் இந்த விமானத்தின் மேல் அமைப்பில் பல நுணுக்கமான மாறுதல்களும் நல்ல வேலைப்பாடுகளும் உள்ளன. இந்த அற்புதமான அரிய விமானம் பிரணவ வடிவத்தையொட்டி விமானத்தின் உச்சியில் மூன்று கவின் பெறு கலயங்களைத் தாங்கி நிற்கின்றது. திரு உண்ணாழிகையில் சுரகரேசுவரப் பெருமானுடன் இந்திரன் குபேரன் முதலியவர்களின் படிமங்களும் உள்ளன. உற்சவமூர்த்தி அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றார். இதன் முகமண்டபம் சிறிது அக நாழிகையைப் போல் விமானத்தைப் போல் அத்துணை சிறப்பாகக் காணப்படவில்லை. நல்ல எடுப்பாகவும் காணப்படவில்லை. இதன் வாயிலும் நடுவிலின்றி ஒரு பக்கமாக அமைந்துள்ளது. இடைநாழிகையும் அக நாழிகைகளில் சிறப்பிற் கேற்றதாக இல்லை. இதன் முன்னர் வெளியிட்ட செல்வி டாக்டர். சி. மீனாட்சி அவர்கள் அளித்த அனுபந்தப்படி இத் திருக்கோயில் எழுபத்து மூன்றாம் குலோத்துங்கன் காலம் 1178 - 1216 என்றும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதோடு, டாக்டர் மீனாட்சி அம்மாள் காஞ்சி என்ற நூலில், இந்தக் கோயில் சிவனுக்காக (சுரகரேசுவரருக்காக ஏகாம்பரர் கோயிலுக்கும், பாண்டவப் பெருமாள் கோயிலுக்கும் இடையே பிற கோயிலினின்று இந்தக் கோயிலை ஒரு தனிப்பண்பில் வட்ட வடிவில் திரு உண்ணாழிகை அமைத்துள்ளனர் என்றும் இத் திருக்கோயில் சிமெண்டை உபயோகியாது நன்றாக உளியால் செதுக்கப்பட்ட கருங்கல்லால் ஆதியிலே கட்டப்பட்டது. இப்பொழுது இந்திய மைய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இக்கோயில் கவனிப்பாரின்றிக் கிடக்கிறது என்று இதைக் கைப்பற்றி பழுது பார்த்து தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டுள்ளனர். இக் கோயிலை பிற்காலச் சோழர்கள் பழுது பார்த்து புதிய பாணியில் கும்பபஞ்சரம் போல சிற்சில சிற்ப வடிவங்களால் அணிபெறச் செய்துள்ளனர். தாரங்க போதிகை போன்ற சில புதிய அமைப்புகள் காணப்படுவது புதிய பாணியில் எழுந்ததாகும். கோயிலும் மகாமண்டபமும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (1178-1276) எடுப்பிக்கப் பெற்றிருக்கலாம்1 என்று எடுத்துக்காட்டி யுள்ளார். இப்பெருந்திரு ஞாழற் கோயிலைப் பற்றியும் பல்லவர் களைப்பற்றியும் அவர்களின் கோயில் திருப்பணிகளைப்பற்றியும் நல்லபுலமை வாய்ந்த டாக்டர். சி. மீனாட்சி அம்மாள் அவர்கள் கூட இதற்குமேல் எடுத்துக்காட்டவில்லை என்று வருத்தத்துடன் கூறிக் கொள்கின்றேன். இத்துணை உயர்ந்த கோயிலைப் பற்றி காஞ்சிக் கோயிலைப்பற்றி எழுதப்பெற்ற நூலில் இவ்வளவுதான் எழுத முடிந்துள்ளது. இவரும் கூட தம்நூலில் காஞ்சியில் உள் சிவதானேசுவரர் (தூங்கானை மாடக்கோயிலை எழுதாமலே விட்டுவிட்டார்.) சாசனங்கள் திருக்கோயிலின் வரலாறு அதன் செல்வங்கள் சொத்துக்கள் இன்னோரன்ன எண்ணிலாக் காரியங்களை அக் கோயில்களின் கல்வெட்டும் செப்பேடுகளும் எடுத்துக் காட்டுவனவாய் அமைந் துள்ளன. விஜய கண்ட கோபாலன் என்னும் மாமன்னன் காலத்தில் வெட்டப்பெற்ற கல்வெட்டு ஒன்றில் இந்த சுரஹரேசுவரரின் ஞாழற் கோயிலுக்குப் பல்லவர்களின் தலைவன் ஒருவன் அளித்த நிவந்தங்களின் விவரம் ஒரு கல்வெட்டில் விளக்கமாக வெளியிடப் பட்டுள்ளன. விக்கிரம சோழ மன்னனின் (கி.பி. 1118-1135) காலத்தில் தீட்டப் பெற்ற கல்வெட்டு ஒன்றில் இந்தத் திருக்கோயிலுக்கு ஒரு மண்டபம் சுந்தர சோழ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்பெற்றுள்ளது. அதைச் சோழ மன்னன் மேற்பார்வை செய்து வந்ததாகவும் சொல்லப் படுகிறது. மேலும் விசய நகர நாயக்க மன்னன் கம்பண்ண உடையார் கி.பி. 1369-ஆம் ஆண்டில் இந்தக் கோயிலின் மேற்பார்வை உரிமையை அழகிய சிற்றம்பல முடையார் என்பவரிடம் ஒப்புவித்து திருக்கோயிலைக் கவனித்து வரும்படி செய்துள்ளதாகத் தெரிகிறது. இத் திருக்கோயிலை நன்கு நோட்டமிட்ட சிற்பவிற்பன்னர்கள் இதிலுள்ள எழிலொழுகும் சிற்பங்களின் அற்புதமான நுட்ப வேலைப்பாடுகளின் அமைப்பையும் நுணுக்கமான பிற தன்மைகளையும் நன்கு உணர்ந்து இவற்றில் பிற்கால சோழர்களின் கலை நயம் ஒளிர்கிறது என்று கூறுகின்றார்கள் எடுத்துக்காட்டாக இதனுடைய கும்ப பஞ்சரம் தரங்கு போதிகைகள் முதலியவைகளை எடுத்துக்காட்டுகின்றார்கள். இந்தக் கோயிலின் மகாமண்டபமும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் (கி.பி. 1178-1216)ல் கட்டப்பெற்றிருக்கலாம் என்று இந்திய அரசாங்க வெளியீடாக வெளிவந்த காஞ்சி என்ற நூலில் செல்வி டாக்டர் சி. மீனாட்சி அம்மாள் எடுத்துக் காட்டியுள்ளார். இந்தக் கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் இக்கோயிலுக்கு ஒரு அழகிய மண்டபம் சுந்தர சோழ மன்னனால் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதைப் பார்க்கும் பொழுது இந்தக் கோயில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. இஃதன்றி இத் திருக்கோயில் எந்த மன்னனால் எந்த ஆண்டில் அடிப்படை இடப்பட்டது என்று திட்டவட்டமாக இன்னும் முடிபு கட்டப்படவில்லை. இதன் சிற்பநுட்ப வேலைப்பாடுகளை உற்று நோக்கும் பொழுது பல்லவர்களின் சிற்ப அமைப்பு என்றோ அல்லது பிறர், பல்லவர்களின் சிற்ப முறையைத் தழுவி அமைத்துள்ளனர் என்றோ திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. இது முற்றிலும் பிற்காலச் சோழர்களின் சிற்பப் பாணியை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது என்று எவரும் எளிதில் கூறிவிடும் நிலையில் உள்ளது. அப்பர் அடிகள் கண்ட எந்த விதக் கோயிலிலும் சிறப்புற்ற காஞ்சியிலுள்ள இந்த ஞாழற் கோயிலும் மற்றும் ஒரு உயர்ந்த பலமாட்சிகளையுடைய தூங்கானை மாடக் கோயிலான சிவதானேசுவரர் கோயிலும் இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. இந்த திருக்கோயில் இயற்கை எழிலுடன் மிகக் கம்பீரமாய்த் திகழ்கிறது. இதற்குப் பெரிய சுற்று மதில்கள் இல்லை. சுமார் ஏழு அடி உயரமுள்ள சிறிய மதில்களே உள்ளன. சுற்றிலும் தென்னை மரங்கள் அழகுடன் பொலிகின்றன. இத்திருக்கோயிலை படம் எடுக்கும் பொழுது இத் தென்னை மரங்களின் ஓலைகள் மறைப்பது என் போன்றோர் உள்ளத்தில் மிக வேதனை தருவதாக இருக்கிறது. இதன் எழிலை மறைக்கவிடாது தென்னையின் இலைகள் அகற்ற பட்டிருந்தால் மிக நல்லது என்று எண்ணுகிறேன். எழில் நலம் வாய்ந்த இந்தக் கோயில், தூண்டாமணி விளக்கமாக மக்களின் கவனித்திற்கு உரியது ஆகாமல் இருப்பதை என்னும் பொழுது உள்ளம் வேதனையுறுகிறது. இது நீண்ட நாளாகவே கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. சமீபத்தில் இந்திய அரசாங்கம் தொல்பொருள் துறை இதனை பார்த்து வருந்தி பழுது பார்த்துப் பராமரித்து வருவதாக அறிந்து மகிழ்கின்றேன். இதன் சுற்றுப்புறங்களில் உள்ள சிறுசெடிகொடிகள் அகற்றபட்டு நல்ல தளமிடப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும். தமிழகத்திலுள்ள அழகிய ஞாழற் கோயிலுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இது காணப்படுகிறது. இது பாடல் பெற்ற திருக்கோயிலாக இல்லாவிடினும் புனித நகரமாகிய காஞ்சியில் உள்ள புராணப் பிரசித்திப் பெற்ற கோயிலாக இருக்கிறது. தமிழகம் இதனை உணர்ந்து இத்திருக்கோயிலை சீர்பெறச் செய்து பாதுகாக்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. இத்திருக்கோயிலை இந்திய அரசாங்க, தொல்பொருள் துறையினர் இரு கோணத்தினின்று படம் எடுத்துள்ளனர். இரு படங்களும் இந்தக் கோயிலின் சிறப்பை நன்குணர்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. 4. கொகுடிக் கோயில் கொகுடி என்பது ஒருவகை முல்லை என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்பர் அடிகள் இத்திருக்கோயிலைக் காணும் பொழுது ஏராளமான கொகுடிச் செடிகள் இதன் அருகே நின்றதால் கொகுடிக் கோயில் என்று கூறி இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் இறைவனை கொகுடிக் கோயில் உறைபவன் என்று பாடி இருக்கலாம். கொகுடி கோயில் என்பது ஆகமத்தில் ஸ்ரீ போகம் என்று கூறும் எழுவகைக் கோயிலில் ஒன்றாகக் கொள்ளலாம் என்பது எனது கருத்து. ஆகமத்தில் விமானத்தை எட்டுப் பங்காகப் பகுத்து ஒரு பங்கை அதிட்டானம் என்றும் இரண்டு பங்கு பாத வரிசை என்றும் ஒரு பங்கு பிரதாரம் என்றும் ஒரு பங்கு கட்டம் என்றும் இரண்டு பங்கு சிகரம் என்றும் ஒரு பங்கு கண்டமும் சிகரமுமாகப் பகுத்து வட்டமான சிகரத்தை காணக் கூடத்துடன் அமைந்திருந்தால் ஸ்ரீபோகம் என்று கருதலாம் என்று கூறப் பெற்றள்ளது. (காரணாகமம். 60: 5-10) இதோடு அப்பர் அடிகள் கூறிய கொகுடிக் கோயில் கருப்பறியலூரில் சிறு குன்று போல் இருப்பதாகப் பாடியதை திருஞானச் சம்பந்தப் பிள்ளை கருப்பறியலூரிற்குச் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள குற்றம், பொருத்த நாதரையும் இறைவி கோல்வளை நாயகியையும் பாடிப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இத் திருக்கோயிலுக்குச் சுந்தரரும் சென்று இறைவன் மீது பாடிக் களித்துள்ளார். இவ்வூர் மாயவரத்திற்கு அண்மையில் உள்ளது. இன்று மக்கள் இவ்வூரை தலை ஞாயிறு என்று கூறி வருகின்றார்கள். இதைத் தவிர வேறு எங்கும் கொகுடிக் கோயில் என்ற பெயரில் கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. கொகுடி என்பது ஒரு மரத்தின் பெயர் என்றும் கொகுடி மரத்தாற் கட்டப்பட்ட கோயிலுக்குக் கொகுடி என்று பெயர் வந்தது என்று கூறுவாரும் உளர். கொகுடி என்பது ஒருவகை முல்லையாதலின் அம்முல்லை செறிந்துள்ள ஓரிடத்தில் அமைந்த பெருங்கோயில் கொகுடிக்கோயில் என்று வழங்கப் பெற்றது என்று திரு.தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் கூறியுள்ளார்கள். அப்பர் அடிகள் திருக்கருப்பரியலூரில் உள்ள பெருங் கோயிலையும் அதன் உயர்ந்த விமானங்களையும் கண்டு அக மகிழ்ச்சி பெற்று அங்குள்ள இறைவனை வழிபட்டு அவர் மீது படிகம் பாட எண்ணிப் பாடியிருக்கலாம். அப்பொழுது கோயிலின் அருகே கொடி வீசிப்படர்ந்து பச்சைப் பசேரென கண்ணிற்கு இனிமையாக விளங்கும் இலைகளையும் அவரது மூக்கிற்கு இன்பம் ஊட்டும் நறுமணம் நல்கும் பூக்களை யுடைய கொகுடியும் காவிரிப் பெருக்கென அவரது நாவினின்று பொங்கியெழும் திருப்பதிகத்தில் கொகுடிக் கோயில் என இடம் பெற்றிருக்கலாம் என்று எண்ணுகிறேன். இந்தக் கொகுடிக் கோயில் சிற்ப நூற்களில் ஸ்ரீபோகம் என்று கூறப்பட்டிருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். நண்பர் திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், இந்தக் கோயிலின் விமான அமைப்பு எப்படி இருந்ததென்று திட்டமாகச் சொல்வதற் கில்லை. ஆயினும் ஸ்ரீபோகம் ஸ்ரீவிலாசம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டிடங்களில் ஒன்றாகக் கொகுடிக் கோயில் இருக்கக் கூடும் என்று ஊகிக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் திட்ட வட்டமாக கொகுடிக் கோயிலைச் சிற்ப நூற்களில் என்ன பெயரால் அழைக்கப் படுகிறது என்று சொல்லத் தயங்கி ஸ்ரீபோகம் அல்லது ஸ்ரீவிசாலமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். நாம் ஏற்கெனவே பெருங்கோயில் ஸ்ரீவிசாலம் என்று கூறிவிட்டோம். மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் காட்டிய இரு பெயரில் எஞ்சி நிற்கும் ஸ்ரீபோகமே அப்பர் சுட்டிக் காட்டிய கொகுடி என்று நான் எண்ணுகிறேன். கருப்பறியலூர் - கொகுடிக் கோயில் நீற்றாரு மேனியராய் நினைவார் தம் முள்ளத்தே நிறைந்து தோன்றுந் காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்பறியலூர்க் கூற்றானைக் கூற்றுதைத்த கோள்வளை யாள் வளொடுங் கொகுடிக் கோயி லேற்றானை மனத்தினால் நினைந்த போதவர் நமக்கினிய வாறே என்று சுந்தர மூர்த்தி நாயனார் தம் தேவாரத் திருப்பதிகத்தில் கருப்பறியலூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் திருக்கோயிலைக் கொகுடிக் கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். குற்றமறியாத பெருமான் கொகுடிக் கோயிற் கற்றென் விருப்பது கருப்பறிய லூறேஎன்று திருஞான சம்பந்தப் பெருமான் தம் கருப்பறியலூர்ப் பதிகத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் கூறியதை நமக்கு உறுதிப்படுத்திக் கூறுவது போல் எடுத்துக் காட்டியுள்ளார். இவ்விருவர் பாடிய திருப்பதிகத்தாலும் கொகுடிக் கோயில் கருப்பறியலூரில் உள்ளது என்று திட்டவட்டமாக நம்மால் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வர முடிகிறது. கொகுடிக் கோயில் எங்கு உள்ளது எப்படி இருக்கும் என்பதற்கு இதைவிட நமக்கு ஏற்ற சான்றுகள் இல்லை. மேலும் கொகுடிக் கோயிலைப் பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எவராது குறிப்பிட்டாரா என்பது நமக்குப் பெருஞ் சந்தேகமாக இருக்கிறது. அது மட்டுமல்ல அச்சுவாகனம் வந்த பின்னர் கூட கொகுடிக் கோயிலைப் பற்றி யாராவது ஒரு நல்ல விளக்கம் தந்துள்ளாரா? என்றால் என்னால் மிகத் தைரியமாக இல்லை! என்று விடை கூற முடியும். நான் இந்நூல் குறிப்பிட்டுள்ள இரண்டு மூன்று ஆசிரியர்களைத் தவிர வேறு எவரும் கொகுடிக் கோயில் இருக்கும் ஊர்ப் பக்கமே திரும்பிப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். நல்ல வேளையாக அறிஞர் சதா சிவப்பண்டாரத்தார் அவர்கள் கொகுடிக் கோயிலை நான் நேரில் போய்ப் பார்த்துள்ளேன் என்று தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வட்டமான சிகரமும் வட்டமான கர்ணக்கூடும் இணைந்த விமானமும் உடைய கோயில் ஸ்ரீபோகம் என்று அழைக்கப் பெறும் என காமிகாகமத்தில் ஏக பூமியாதி வீதி படலத்தில் கூறுவதால் இந்த விதி கொகுடிக் கோயிலுக்கு ஒத்ததாக இருக்கிறது என்று எண்ணுகிறேன். தலை ஞாயிற்றை - கருப்பறியலூரைத் தவிர வேறு எங்கும் கொகுடிக் கோயில் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அப்பர் பெருமான் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டு உளதென்று குறிப் பிட்டுள்ளார். சம்பந்தர் அம்பர் நகர்ப்பெருங் கோயில், கீழ்வேளூர்ப் பெருங்கோயில், குட வாயில் பெருங்கோயில் பெண்ணாடகத்துப் பெருங்கோயில் புகலியூர்ப்பெருங்கோயில், பூந்தராய்ப் பெருங் கோயில் என்றும் பல பெருங்கோயில்களைத் தம் திருப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே மணிக் கோயில் மருகல், மணிமாடத் திருத்தோணிபுரம் என்று மணிக்கோயில்களையும் அப்பர் பெருமான் மீயச்சூர் இளங்கோயிலையும், கடம்மை இளங்கோயில்களையும் தம் திருப்பதிகங்களில் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அவ்வாறு சுந்தரர் ஒருவர் மட்டும் கருப்பறியலூர் கொகுடிக் கோயில் என்று தம் திருப்பதிகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதைத் தவிர சுந்தரர் வேறு எந்தக் கொகுடிக் கோயிலைப்பற்றியும் தம் திருப்பதிகத்தில் குறிப்பிடவில்லை. இஃதன்றி திருநாவுக்கரசரோ திருஞான சம்பந்தரோ தம் திருப்பதிகத்தில் ஒரு கொகுடிக் கோயிலைப் பற்றியும் பாடியதாகத் தெரியவில்லை. அதனால் பாடல் பெற்ற கொகுடிக் கோயில் திருக்கருப்பறியலூர் குற்றம் பொருத்த நாதர் கோயில் கொண்டிருக்கும் கோயிலைத் தவிர வேறு கோயில் எதுவும் இல்லை என்று திட்ட வட்டமாகக் கூறலாம். அஃதன்றி பாடல் பெறாத கொகுடிக் கோயிலோ அல்லது ஆழ்வார்களால் பாடப் பெற்ற கொகுடிக் கோயிலோ எங்காவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இதுவரை நம்மால் காண முடியவில்லை. இதைத் தவிர வேறு எந்த அறிஞரும் பிறிதோர் கொகுடிக் கோயிலைக் கண்டதாகத் தெரியவில்லை. திருக் கருப்பறியலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூர் இன்று தலைஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இது மாயவரம் - விழுப்புரம் இருப்புப்பாதையில் வைத்தீசுவரன் கோயில் புகைவண்டி நிலையத்திலிருந்து 5-கல் தொலைவில் உள்ளது. திருப்புன்கூர் போகும் வழியில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது. இத்தலம் காவிரி ஆற்றின் வட கரைத் தலங்களுள் ஒன்று. இவ்வூரின் இருபக்கமும் விநாயக நதி பிரிந்து செல்கிறது. இவ்வூருக்கு யூதிகாவனம் கன்மநாசபுரம் ஆதித்தபுரம் மேலைக்காழி என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள கொகுடிக் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் குற்றம் பொறுத்த நாதர். இறைவி கோல்வளை நாயகி. இஃதன்றி கர்ப்பஞானேசுவரர் கர்ப்பஞான பரமேசுவரி, சட்ட நாதர் முதலிய தெய்வப்படிமங்களும் இங்குண்டு. சீர்காழியைப் போலவே சட்டை நாதர் இங்கும் மலையுச்சியில் எழுந்தருளி இருக்கிறார். இங்கு அழகான சிற்பங்கள் காட்சி தருகின்றன. இவ்வூருக்கு மேலைக்காழி என்ற சிறப்புப் பெயர் உண்டு. புராணக்கதைகள் ஆதிசேடனும் வாயுவும் ஒரு காலத்தில் சண்டை இட்டுக் கொண்டனர். அப்பொழுது ஆதிசேடன் தன் படங்களால் கயிலைச் சிகரங்களை அமுக்கிக் கொண்டான். வாயு பெரும் புயலாக மாறி சிகரங்களைப் பிய்த்தெறிந்து தன் வலிமையைக் காட்டினான். அவ்வாறு எறியப்பட்ட சிகரங்களும் இம்மலையும் ஒன்று. ஞாயிறு தேவன் தக்கன் யாகத்திற்குப் போய் பங்கு கொண்ட பாதகத்தால் உக்கிர வீர பத்திரர், பல்லை உடைத்தார். அதனால் ஞாயிறு ஒளி மங்கியது. உலகு இருண்டது. இந்திரனாதியர், பகலவன் துயர் போக வேண்டில் கருப்பறியலூரில் சென்று இறைவனை வழிபட்டுப் பல் பெற்று ஒளி பெறுக எனக் கூறினர். பகலவன் அவ்வாறே சென்று வழிபட்டான் இறைவன் தன் சந்நிதியில் ஒரு புஷ்கரணியைப் பாதாளத்திலிருந்து மேல் எழுந்து வரும்படி செய்து ஞாயிறைப் பார்த்து நீ இதில் மூழ்குவையாயின் உன் உடற்பிணி ஒழிந்து நீ ஒளி பெறுவாய் என்றனர் ஞாயிறு அவ்வாறே செய்து இங்கு இறைவனை வழிபட்டு பல்பெற்று ஒளியுற்றான். ஆகையால் இத்தலத்து நீரில் மூழ்குவோர் தொழுநோயாய் இருந்தாலும் நோய் நீங்கி இன்புறலாம் என்ற ஐதீகம் உண்டு. சூரனுடைய கொடுமைக்குப் பயந்து இந்திரன் வேணு புரத்து மூங்கிலாய் மறைந்து அஞ்சிக் கிடந்தான் அப்போது அவன் இறைவனை வழிபடுவதற்காக ஒரு பூந்தோட்டம் அமைத்திருந்தான். இந்திரனைத் தேடித்திரிந்த சூரன், இந்திரன் இருக்குமிடம் மழைவளம் பெற்று செழிப்பாக இருக்கும் என்று மேகங்களைச் சிறையிட்டான். அதனால் இந்திரன் பேணி வளர்த்த பூங்கா வாடியது. அதனால் இந்திரன் கணபதியை வேண்ட அவர் அகத்தியரின் கமண்டல நீரைப் பெருகி வரும்படி செய்தார். அது இவ்வூரின் மேல்பாலும் வடபாலும் சூழ்ந்து வந்தது. இது விநாயகரால் உண்டாக்கப் பெற்றதாதலால் விநாயக நதி எனப் பெயர் எழுந்தது. முன், ஒரு நாள் இராவணன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாய மார்க்கமாகச் சென்றான். திடீரென்று விமானம் இயங்காது நின்றது. எனவே அவன் சினந்து கீழே இறங்கினான். கீழே திருக்கருப் பறியலூர்க் கொகுடிக் கோயிலைக் கண்டான். களிப்புற்றுக் காரணம் உணர்ந்தான். இறைவனை வழிபட்டு இன்பம் எய்தினான். அங்கு கோயில் கொண்டுள்ள குற்றம் பொறுத்த நாதரை வேண்டி உய்ந்தான். அவ்வாறே இந்த தலத்தில் அனுமான விசித்திராங்கதன் போன்றோர்கள் வழிபட்டு நலம் பல பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அவ்வமயம் பூதவடிவில் இறைவன் அவன் முன் தோன்றினார். இந்திரன் இதை அறியாது அவர் மீது தனது வச்சிராயுதத்தை எறிந்தான். இறைவன் இந்திரனுக்கு தான் யார் என்பதை அறிவுறுத்தினார். அப்பால் இந்திரன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். குற்றம் பொறுத்த காரணம் பற்றி இறைவனுக்கு குற்றம் பொறுத்த நாதர் என்று பெயர் வந்தது. கல்வெட்டுகள் இத் தலத்தைப் பற்றி பதினெட்டு கல்வெட்டுகள் உள்ளன. அவைகள் 1927-ஆம் ஆண்டில் படி எடுக்கப்பெற்றுள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரின் 13-ஆம் ஆண்டு 280-ஆம் நாள் 14-ஆம் ஆண்டு 35-ஆம் நாட்களிலும் கோனேரின்மை கொண்டானின் 7-ஆம் ஆண்டு 13-ஆம் நாள் 10-ஆம் ஆண்டு 334 -ஆம் நாட்களிலும் திரிபுவனச் சக்கிரவர்த்தி இராசராச தேவரின் மூன்று இருபது ஆண்டுகளிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் விசய நகர அரசர்களில் பிரதாப கிருஷ்ண தேவராயரின் சகம் 1489-இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் அரசன் பெயர் குறிப்பிடாமல் உள்ள சில கல்வெட்டுகளும் இருக்கின்றன. ஊர்ச் சபை உறுப்பினர்கள் ஆவதற்குரிய சட்ட திட்டங்கள் இக்கோயிலின் வடபுறச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ளன. இதைக் கொண்டு முற்காலத்தில் தமிழகத்தில் சோழநாட்டில் அரசியல் எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதை அறிவதற்கு இந்தக் கல்வெட்டுக்கள் துணை புரிவனவாய் இருக்கிறது. மகாமண்டபம் விக்கிரம சோழவேளாளரால் எடுப்பிக்கப்பெற்றது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இவ்வூர் தனி நாயகச் சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. அப் பெயரே மருவித் தலை ஞாயிறு என்று கூறப்பட்டது என்றும் தெரிகிறது. இவ்வூர் தனிநாயகச் சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழ குலத்தைச் சேர்ந்த மங்களாதிராசர் இக் கோயிலின் விமானத்தைச் சீர்பட வைத்தவர் என்று தெரிகிறது. இக் கோயிலின் பள்ளியரை நாச்சியாரை எழுந்தருள வைத்தவர் வில்லவரையர் என்பவராவார். திரிபுவன சக்கரவர்த்தி இராச ராச சோழ தேவர் மூன்றாம் ஆண்டில் திருஞானம் பெற்ற பிள்ளையாருக்கு காலைச்சந்திக்கும் உச்சியம் போதைக்கும் திரு அமுது செய்விக்க நிவந்தம் நல்கப்பட்டுள்ளது. இங்கு வழிபடவரும் மாகேவரர் களுக்கும் கூத்தப் பெருமானைத் திருவாதிரையில் எழுந்தருளச் செய்வதற்கு மானியங்கள் விடப்பட்டுள்ளன.1 5. இளங்கோயில் இளங் கோயிலைச் சிலர் பாலாலயம் என்று கூறுவர்; அது தவறு. இளங் கோயில் அப்பர் பாடிய எழுவகைக் கோயில்களில் ஒன்று. இளங் கோயில் என்பது ஆகமத்தில் வடமொழியில் ஸ்ரீ கரம் என்று கூறப்பெற்றுள்ளது. ஆகம விதிப்படி அதிர்ஷ்டானம் பாதவரிசை, பிரதரம் கண்டம் சிகரம் தூபி அமைத்து கண்டமும் சிகரமும் நான்கு பட்டையுடையதாய் அமைந்திருந்தால் அது இளங்கோயில் எனப்படும். மாமல்லபுரம் திரௌபதை யம்மன இரதம் என்று கூறப்படும் ஒற்றறைக் கல் தேரை இளங் கோயில் என்று கூறலாம். பூதத் தாள்வார் இரண்டாம் திருவந்தாதியில் வெள்ளத் திளங்கோயிலைக் கூறுகின்றார் சோழ நாட்டு மீயச் சூரில் உள்ள இளங் கோயிலை அப்பர் பாடுவதினின்று அதை எழுவகைக் கோயிலில் ஒன்றாக உறுதியாகக் கொள்ளலாம். மீயச்சூர் என்பது இன்று பேரளம் என்று வழங்கப்படுகிறது. கடம்பூர் இளங்கோயிலும் கயிலாய நாதனையே காணலாமே தேவாரத்தில் கூறப்பெற்றுள்ளது. அக்கோயில் இன்று பழுதுற்ற நிலையில் உள்ளது. கடம்பூரில் கரக்கோயில் உள்ளது. அது சிறப்பான நிலையில் உள்ளது. முதலாம் இராச ராசன் சாசனம் ஒன்றில் கடம்பூர் இளங்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன் (கி.பி. 1254 - 1264) காலத்துச் சாசனம் ஒன்றில் திருவாலீசர் முடைய நாயனார் திருக்கயிலாயமுடைய நாயனார் என்னும் இரண்டு கோயில்களும் இளங்கோயில் என்று சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளது. கொடும்பாளூர் மூவர் கோயிலும் இளங் கோயிலேயாகும். இளங் கோயில் இளங்கோயில் என்ற வார்த்தையை வைத்து இளம் கோயில் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடுவதற்கில்லை. இளங் கோயில் என்றால் சிறுகோயில், அழகிய கோயில் என்றெல்லாம் பொருள் கூறலாம். அவ்வாறு கோயில்களுக்கு வழங்கும் பெயர்களைக் கொண்டு கோயிலின் அமைப்பை நிர்ணயித்து விட முடியாது. அது நம்மை ஒரு தவறான முடிபிற்கு இட்டுச் சென்று விடும். இளங் கோயில் என்றால் சிலர் பாலாலயம் என்று கூறுகின்றனர். ஒரு கோயில் பழுதுற்ற நிலையிலோ அல்லது வேறு காரணத்தினாலோ அதை இடித்து புதிய கோயில் கட்டுவது வழக்கம் அத்தகைய நிலையில் மூலக் கோயிலில் உள்ள இலிங்கத்தைத் தற்காலிகமாகக் கட்டப்பட்ட ஒரு இடத்தில் வைப்பதுண்டு. அந்த இடத்தைப் பாலாலயம் என்று கூறப்படும். இளங் கோயில் என்பது அத்தகைய தற்காலிகக் கோயிலாகிய பாலாலயம் என்று கூறப்படுவது தவறாகும். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறை வித்துவான் திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள், பழைய கோயிலைப் புதுப்பிக்குங்கால் அதற்குச் சமீபத்தில் இறைவனை எழுந்தருளிவித்து வழிபாடு புரிந்த கோயில் இளங் கோயிலாகும் என்று இளங் கோயில் தற்காலிகக் கோயிலாகக் கருதப்படும் பாலாலயம் என்ற கருத்துப்பட எடுத்துக் காட்டியுள்ளார்.1 இதனை உறுதிப்படுத்தும் முறையில் இந்து அறநிலையப் பாதுகாவற் கழகத்தின் ஆணையாளராயிருந்த இராவ்பகதூர். சி. எம். இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் பீ. ஏ. பி.எல். அவர்கள் பழைய கோயில் பழுதுபடப் புதுப்பித்ததற்கு முன் பாலாலயம் செய்வதுண்டு. ïj‰F ïs§ nfhÆš v‹W bga® vd¡ T¿íŸsh®.* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்துவான். திரு. க. வெள்ளை வாரணார் அவர்களும் மேற்கூறிய இருவர்களின் கருத்தையும் தழுவி, பழைய திருக்கோயிலைப் பிரித்துத் திருப்பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்ட பொழுது அதன் திருப்பணி நிறைவேறும் வரையிலும் இறைவனுடைய நாள் வழிபாடும் திருவிழாவும் தவறாது நடைபெறும் பொருட்டு இடைக்காலத்திற் கெனச் சிறியதாக அமைத்துக் கொண்ட கோயில் இளங்கோயில் எனப்படும். இதனைப் பாலாலயம் எனவும் வழங்குவர். இவ் விளங்கோயில் திருப்பணி நடைபெறும் பழைய கோயிலை யொட்டியே அமைக்கப் பெறும் என்று கூறியுள்ளார்.1 இந்த அபிப்பிராயம் தவறானது. இளங்கோயில் ஒரு நிலையான கோயில். ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் கூறப்பெற்ற எழுவகைக் கோயில் வகைகளில் ஒன்று. அது தற்காலிகக் கோயில் என்று எண்ணுவது சரியன்று. அது தற்காலிகக் கோயிலாக இருந்தால் அப்பர் சுவாமிகள் எழுவகைக் கோயில்களில் ஒன்றாகச் சேர்த்து தமது அடைவு திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். திரு. தி. வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள், பிற்காலத்தில் பாலாலயம் வேறு இளங்கோயில் வேறு என்ற அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டார்கள். மேலும் அவர்கள், கும்பகோணத்திலுள்ள நாகேசுவரர் ஆலயம் என்று வழங்கப்பெறும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் முதற்பிரகாரத்தில் செம்பியன் பல்லவராயன் என்ற தலைவன் திருப்புறம்பயமுடைய பெருமானை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்குப் பதினேழாயிரம் பொன் அளித்தனன் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. புறம்பயமுடைய பெருமானுக்கு அத்தலைவன் கட்டுவித்த சிறு கோயிலை நாகேசுவரர் ஆலயத்தில் இன்றும் காணலாம். இத்தகைய கோயில்களையும் இளங்கோயில்கள் என்று கூறுவது பொருத்தமுடையதேயாம் என்று கூறியுள்ளார்.2 இளங்கோயில் சிறிய அமைப்பாக இருந்ததால் இவை கோயில்களின் உட்பிரகாரத்தில் பரிவாரக் கோயிலாக எடுப்பிக்கப் பெற்றது. இதனால் இதைச் சிலர் பாலாலயம் என்று கருத முற் பட்டனர். கோயில் வகைகளைப் பற்றி அறியப் பெரிதும் பாடுபட்ட அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் பாலாலயத்தை இளங் கோயில் என்று கூறுவது தவறு என்பதை ஆணித்தரமாக மறுத்து எழுதியுள்ளார். அவர் கூறுவதாவது:- நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் உள்ள ஒரு வடமொழிச் சாசனம் எளங்கோயில் ஒன்றைக் கூறுகிறது. இளங் கோயிலைத்தான் வடமொழிச்சாசனம் எளங்கோயில் என்று கூறுகிறது.1 சிலர் கருதுவது போல் இளங் கோயில் பாலாலயமாக இருந்தால் இந்த வடமொழிச் சாசனம் வடமொழிச் சொல்லாகிய பாலாலயம் என்பதையே கூறி இருக்கும். ஆனால் இளங்கோயில் என்று கூறுகிறபடியால் இளங்கோயில் பாலாலயம் அன்று என்பதும், கோயில் அமைப்பில் ஒருவகையானது என்றும் ஐயமறத் தெரிகிறது.2 இளங் கோயில் என்று கூறப்படும் மீயச்சூர் அகில புவனேசுவரர் ஆலயமும், திருக்கடம்பூர் கயிலாச நாதர்கோயிலும் குடந்தை கீழ்க் கோட்டம் நாகேசுவரர் கோயில் பிரகாரத்தில் இருக்கும் இளங்கோயிலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கோயில் அனைத்தும் சிறிதாகவும் நான்கு பட்டையான விமானத்தை யுடையதாகவும் இருக்கிறது. அதோடு தமிழகத்தில் விசாலமானதும் பெரிய மாடங்களையுடையதுமான கோயிலைப் பெருங்கோயில் என்றும் பெருந்திருக்கோயில் என்றும் அழைத்தது போல் மிகச் சிறிய உருவில் எடுப்பிக்கப் பெற்ற இளங்கோயில் சிறு திருக்கோயில் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் எண்ணுகிறேன். ஆகமச்சான்று ஆகமங்களில் கோயில் வகைகளைப் பற்றி விரிவாகக் கூறும் காமிகாகமம் ஸ்ரீ கரம் என்னும் விமானம் நான்கு பட்டையான விமானத்தை (சிகரத்தை)யுடையது என்று கூறுகிறது. சிற்ப நூற்களிலும் சிரிகரம் நான்கு பட்டையான விமானத்தையுடையது என்றே தெரிகிறது. சிற்ப நூற்களும் அதை ஆதரிக்கின்றன. அப்பர் அடிகள் பாடிய இளங்கோயிலும் பிற இளங்கோயிலும் ஆகமம் கூறும் சிரிகரக்கோயிலைப் போல் இருப்பதால், சிரிகரத்தையே அப்பர் பெருமான் இளங்கோயில் என்று பெயர் தந்துள்ளார் என்று அறிகிறோம். அதோடு, மகாபலிபுரத்து திரௌபதை அம்மன் இரதம் என்று கூறப்படும் கொற்றவை கோயில் அமைப்பு ஸ்ரீகரம் அமைப்பைப் போல் இருப்பதால் அதை இளங்கோயில் அமைப்பிற்கு எடுப்பிக்கப் பெற்ற மாதிரிக்கோயில் வடிவம் என்றே கருத முடியும். இதைப் பல அறிஞர்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள். திருமீயச்சூர் இளங் கோயில் மீயச்சூர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இது மாயவரம் - காரைக்குடி இருப்புப் பாதையில் உள்ளது. மீயச் சூருக்கு பேரளம் புகைவண்டி நிலையத்தில் இறங்க வேண்டும், புகை வண்டி நிலையத்திலிருந்து கோயில் ½ கல் தொலைவில் இருக்கிறது. இது பாடல் பெற்ற தலம். தேவாரப் பாடல் பெற்ற ஒரு கோயிலுக்குள் வேறு தேவாரம் பாடல் பெற்ற கோயில்களைக் காண்பது அரிது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் பாடல் பெற்ற கோயில்களுக்குள் மேலும் பாடல் பெற்ற கோயில்கள் மூன்று இருக்கின்றன. அவைகள் (1) திருவாரூர்ப் பூங்கோயிலுள் இருக்கும் திருவாரூர் அரநெறி. (2) திருப்புகலூர்க் கோயிலுள் இருக்கும் திருப்புகலூர் வர்த்த மானீச்சுரம் (3) திரு மீயச்சூர் மேகநாதர் தூங்கானை மாடக் கோயிலினுள் இருக்கும் அகில புவனேசுவரர் இளங்கோயில் எனப்படும். இளங்கோயில்களைப் பற்றி நமது அறிஞர்களுக்குள் இருக்கும் ஒரு குறைவான எண்ணம் இன்னும் நீங்கியபாடில்லை. இளங்கோயில் கோயில்வகைகளில் ஒன்றல்ல. ஒரு கோயில் திருப்பணி நடக்கும் பொழுது அங்குள்ள மூல மூர்த்தியைக் கலாகர்ஷணம் செய்து ஒரு பாலாலயத்தில் வேறொரு மூர்த்தியில் ஆவாகனம் செய்து பூசிப்பது ஆகம முறை. திருமீயச்சூரைத் திரு ஞானசம்பந்தர் பாடியுள்ளார். அப்பர் மூலக் கோயிலைப் பாடாது பரிவாரக் கோயிலாகிய இளங்கோயிலைப் பாடியுள்ளார். நாவுக்கரசர் இத்தலம் போகும் பொழுது மூலக் கோயிலின் திருப்பணி நடந்து கொண்டிருக்க வேண்டும். எனவே அவர் மூலக்கோயிலுக்குப் பதிகம் பாடாது இளங்கோயிலுக்குப் பதிகம் பாடியுள்ளார் என்றும் சம்பந்தர் இளங்கோயிலுக்குப் பதிகம் பாடாது மூலக்கோயிலுக்குப் பதிகம் பாடி இருப்பது ஏன் என்றும் கூறித் தம் கருத்தை நிலை நாட்டி வருகின்றார்கள். மூலக் கோயிலுக்கு அப்பர் அருளிய பாடல்கள் நமக்குக் கிடையாமற் போய் இருக்கலாம். சம்பந்தர் அங்கு செல்லும் பொழுது இளங்கோயில் எழாதிருந்திருக்கலாம். அல்லது சம்பந்தர் இளங்கோயிலுக்கு அருளிய பாடல்கள் நமக்குக் கிடையாது போயிருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். ஏனெனில் இளங்கோயிலை தற்காலிகமாகப் பயன்படுத்தும் பாலாலயமாக எண்ணுவது தவறு. இளங்கோயில் வேறு. பாலாலயம் வேறு. ஒரு கோயிலின் திருப்பணி நடைபெறுவதற்கு முன் மூலக் கோயிலினின்று மூலவரை அகற்றி கலாகர்ஷணம் செய்து ஒரு பாலாலயத்தில் வேறொரு மூர்த்தியில் ஆவாகனம் செய்து வழிபடுவதில் நமக்கு எள்ளளவும் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் பாலாலயமும் இளங்கோயிலும் ஒன்று என்று கூறுவதில் தான் நமக்குக் கருத்து வேறுபாடு. பாலாலயம் தற்காலிகமாகப் பயன்படுத்தும் ஒரு கோயில். இளங்கோயில் நிலையான கோயில். எழுவிதக் கோயில்களில் ஒன்று. ஆகமங்களில் கூறும் நிலையான ஏழு கோயில்களில் ஒன்றான ஸ்ரீகரமே அப்பர் பெருமானால் இளங்கோயில் என்று தமிழ்ப் பெயர் தாங்கிய ஒரு சிறு திருக்கோயில். அப்பர் அடிகளால் தம் திருத்தாண்டகத்தில் (1) பெருங்கோயில் (2) கரக்கோயில் (3)ஞாழற்கோயில் (4) கொகுடிக்கோயில் (5) இளங்கோயில் (6) மணிக்கோயில் (7) ஆலக்கோயில் என்று போற்றும் ஏற்றம் பெற்ற கோயில். ஏழுவகைக் கோயில் அமைப்பில் இது ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் இடம் பெற்ற திருக்கோயில் என்று வலியுறுத்திக் கூறுகின்றோம். அப்பர் பெருமான் தேவாரத் திருப்பதிகத்தில், தோற்றுங் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள் மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர் புன்ச டையர்க் கேற்ற கோயில் கண்டீர் இளங்கேயிலே என்று போற்றிப் பெருமைப்படுத்தப்பட்ட திருக்கோயில். மேலும் பாலாலயத்தை சமய குரவர்கள் இத்துணை தூரம் ஏற்றிப் பாடியிருக்க மாட்டார்கள் என்பதும் எனது உறுதியான எண்ணம். திருநாவுக்கரசு நாயனாரால் திருப்பதிகம் பாடப் பெற்ற மீயச்சூர் இளங்கோயில் சகல புவனேசுவரர் - மேகலாம் பிகையம்மை கோயில் கொண்டிருக்கும் இளங்கோயிலாகும். இது அங்குள்ள மூலக் கோயிலான முயற்சி நாதேசுவரர் சௌந்திர நாயகி வீற்றிருக்கும் ஆலக்கோயிலின் உண்ணாழிகைக்கு வடபுறத்தில் இருக்கும் ஒரு பரிவாரக் கோயில். இந்த இளங்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானை காளிதேவி வழிபட்டயிடமாக கருதப் படுகிறது. மூலவராகிய முயற்சி நாதரை பகலவன் (சூரியன்) வழிபட்டுப் பேறு எய்தியதாகக் கூறப்படுகிறது. இக் கோயிலுக்கு திரு ஞானசம்பந்தரும் பதிகம் பாடியுள்ளார். இளங்கோயிலின் கோட்டத்தின் மீதுள்ள எல்லாப் படிமங்களும் எழில் பெற்று ஏற்றமுற்றதாய் இலங்குகின்றன. இங்கு இறைவன், இறைவியின் முகவாய்க் கட்டையைத் தன் திருக்கரத்தால் பிடித்து இன்முகங்காட்டி கொஞ்சி உரையாடிக் கொண்டிருக்கும் இன்ப நிலையில் காணப்படுகிறார். இளங்கோயிலில் உள்ள கோட்டத்தில் உள்ள சதுர் முகச் சண்டேசுவரர் படிமமும் பாங்குறத் திகழ்கின்றது. திருக் கோயில் திருக்கோயில் ஊரின் நடுவே கிழக்கு நோக்கிய சந்நிதியை உடையதாய்க் காணப்படுகிறது. கிழக்கு வாயிலில் ஐந்து நிலைகளை யுடைய இராச கோபுரம் உயர்ந்து நிற்கிறது. இக் கோயிலுக்கு இரு பிரகாரங்கள் உண்டு. இரண்டாவது பிரகாரத்திற்குள் செல்லும் வாயில் ஒரு சிறிய மூன்று நிலைக் கோபுரம் உள்ளது. இங்குள்ள மூலக் கோயிலில் உள்ள மூர்த்தியின் பெயர் முயற்சி நாதர். மேக நாதர் என்றும் அழைப்பர். தெற்கில் உள்ள உட்பிரகாரத்தில் வாயுலிங்கமும் விநாயகர் சந்நிதியும் உள்ளன. இத் திருக் கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் முருகன், திருமகள் சந்நிதிகள் உள்ளன. மேகநாதர் திருவுண்ணாழிகைக்கு வடபுறம் இளங்கோயில் இருக்கிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் திருப்பெயர் சகலபுவனேசுவரர். இவரை அகிலபுவனேசுவரர் என்றும் அழைப்பர். இறைவியின் பெயர் மின்னுமேகலையாள் என்பதாகும். தேவியின் சந்நிதி அருகில் தெற்கு நோக்கி இருக்கிறது. வடக்குப் பிரகாரத்திலுள்ள உட்பிரகாரத்தில் சண்டேசுவரர் அருணாசலேசுவரர் ஆடவல்லான் சந்நிதிகள் உள்ளன. மேக நாதர் சந்நிதிக்கு எதிரில் வடபுறமாக பாதாளலிங்க மும் வடகிழக்கே ஆகாசலிங்கமும் காணப்படுகின்றன. வடகிழக்கில் வெளிப் பிரகாரத்தில் மேகநாத நாதரின் தேவியாராகிய சாந்த நாயகியின் தனிக் கோயில் தெற்கு நோக்கி உள்ளது. இத்தேவியை லலிதாம்பிகை, சவுந்தர நாயகி என்றெல்லாம் போற்றப்படுகிறது. தெற்குப் பிரகார மதிலில் ஒரு வாயில் உள்ளது. அதன் வழியே தேவியை தரிசிக்கலாம். தேவி நின்ற கோலத்தில் அழகு அருளும் கனியும் திருமுகத்தோடு காட்சியளிக்கின்றார். கிழக்கிலுள்ள வெளிப்பிரகாரத்தில் உள்கோபுரத்தின் தென்புறம் விசுவநாதர் சந்நிதியும் தென்கிழக்கே வசந்த மண்டபமும் இருக்கின்றன. கோயிலுக்கு வெளியே இராச கோபுரத்திற்கு வடபுறம் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. கோயிலுக்குக் கிழக்கேயுள்ள குளக் கரையில் பிள்ளையார், பகலவன் கோயில்கள் உள்ளன. இறைவனைப் பகலவன் இங்கு வழிபட்ட தாகக் கூறப்படுகிறது. ஆண்டு தோறும் சித்திரைத் திங்கள் 20-ஆம் நாள் முதல் 27-ஆம் நாள் வரை பகலவன் கதிர்கள் மேகநாதர் திருஉருவின் மீது விழுகின்றன. கோயிலின் தல விருட்சம் வில்வம், மந்தாரமரம் ஆகியவை களாகும். இத்தலத்தின் தீர்த்தம் சூரிய புஷ்புகரணி தைத்திங்கள் இரத சப்தியை அடுத்து பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. வடமொழியில் இத்தலத்திற்கு ஒரு தலபுராணம் எழுதப் பெற்றுள்ளது. தமிழிலும் உரைநடையில் எழுதப் பெற்றிருக்கிறது. அச்சாகவில்லை. அருணன் மோகினி அவதாரம் எடுத்து வாலி சுக்கிரீவர் ஆகியவர்களைப் பெற்றதும் அருணன், திருமகள் ஆகியோர் மேகநாதரை வழிபட்டதும் இத்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சாசனம் மீயச்சூர் திருக்கோயிலின் சந்நிதித் தூண்களிலும் உட்கோபுர வாயிலின் தென்புறத்திலும் வடக்குப் பிரகாரத்திலும் சுவாமி சந்நிதி மண்டபத்தின் வடக்குச் சுவரின் வெளிப்பக்கத்திலும் தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களான பரகேசரிவர்மன் இராச கேசரி வர்மன், பாண்டிய மன்னர்களான மாறவர்மன் குலசேகரன் சடாவர்மன் சிரி வல்லபதேவன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாக இத்தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் சோழ வேந்தர்களும் பாண்டிய மன்னர்களும் பல நில தானங்கள் அளித்ததையும் விளக்கு எரிப்பதற்காக பல நிலங்கள் மானியமாக விடப்பட்டதையும் குறிப்பிடுகின்றன. ஒரு கல்வெட்டு வணிகன் ஒருவன் விளக்கெரிக்க நிலதானம் அளித்ததை அறிவிக்கிறது. குடந்தை இளங்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்குடந்தை என்னும் திருத்தலம் உள்ளது. இங்கு எண்ணற்ற கோயில்கள் உள்ளன. இவ்வூரை கும்பகோணம் என்றும் கூறுவார்கள். மாயவரம் தஞ்சாவூர்ப் புகைவண்டிப் பாதையில் கும்பகோணம் புகைவண்டி நிலையத்தில் இருந்து கோயில் 1 கல் தொலைவில் உள்ளது. இந்நகரின் நடுவில் திருக்குடந்தைக் கீழ்கோட்டம் என்னும் இடத்தில் நாகேசுவரர் - பெரிய நாயகி கோயில் உள்ளது. கோயில் மிகப் பெரியது. சிவபெருமானை ஞாயிறு தேவன் பூசித்த இடமாக இது கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திங்கள் 11, 12, 13 - ஆம் நாட்களில் காலையில் கதிரவன் கிரகணம் சுவாமி மீது படுகிறது. இங்குள்ள கணபதி, மங்கைபங்கன் பிரளயகால உருத்திரர் படிமங்கள் சிறப்பு வாய்ந்தவைகளாகும். இக் கோயிலின் முதற் பிரகாரத்தில் செம்பியன் பல்லவராயன் என்ற தலைவன் திருப்புறம் பயமுடைய பெருமானை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்குப் பதினேழாயிரம் பொன் அளித்தான் என்று அங்குள்ள கல்வெட்டுகளால் அறிகின்றோம். புறம்பயமுடைய புனிதனார்க்கு அத்தலைவன் கட்டுவித்த சிறு கோயிலை நாகேசுவரர் கோயில் பிரகாரத்தில் இன்றும் காணலாம். இக்கோயிலையும் இளங்கோயில் அமைப்போடு இணைத்துப் பார்ப்பது பொருத்தமானது என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டு ஆராய்ச்சித்துறைப் பேரறிஞராகப் பணியாற்றி காலஞ் சென்ற பெரியார் திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் கூறியுள்ளார்கள்.1 திருக்கடம்பூர் இளங்கோயில் திருக்கடம்பூர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தில் உள்ளது. இது விழுப்புரம் மாயவரம் இருப்புப் பாதையில் உள்ள காட்டு மன்னார் கோயில் புகைவண்டி நிலையத்திலிருந்து 1½ கல் தொலைவில் உள்ளது. சிதம்பரத் திலிருந்து 15 கல் தொலைவில் இருக்கிறது. பேருந்து வண்டியிலும் போகலாம். இவ்வூரை மேலக்கடம்பூர் என்றும் கூறுவார்கள். இவ்வூரில் அமிர்த கடேசுவரர் கோயில் கொண்டிருக்கும் கரக்கோயில் ஒன்றும் உள்ளது. இதைப்பற்றி நாம் விரிவாக கரக்கோயில் என்ற தலைப்பில் எடுத்துக்காட்டியுள்ளோம். இங்கு இளங்கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. திருக்கடம்பூர் இளங்கோயிலைப் பற்றி இராசராசன் காலத்து பட்டயம் ஒன்று நமக்கு நினைப்பூட்டுகிறது.2 இது இளங்கோயிலைப் பற்றி நாம் நன்கறியவும் அதைப்பற்றி நாம் ஒரு முடிவிற்கு வரவும் துணை செய்வதாக இருக்கிறது. பாண்டியன் சடவர்மன் (கி. பி. 1254 - 1264) எழுதிய இரண்டு சாசனங்களில் இளங்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளில் எங்கும் பாலாலயம் என்று குறிப்பிடப்படாது இளங்கோயில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இருபட்டயங்களில் ஒன்று திருவாலீசுரமுடைய நாயனார் கோயில் பட்டயமாகும். மற்றொன்று திருக் கயிலாயமுடைய நாயனார் கோயில் பட்டய மாகும்.3 இஃதன்றி ஆந்திர நாட்டில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி வட்டத்தில் உள்ள திருச்சோகினூரி லும் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லூரிலும் கிடைத்த பட்டயங்கள் மூலம் அங்கும் இளங்கோயில்கள் பல இடம் பெற்றிருந்தன வென்று நன்கறியக் கிடக்கின்றன.4 திருக்கடம்பூர் பாடல் பெற்ற தலம். அப்பர் பெருமான் தம் சேத்திரக் கோவையில் இங்குள்ள இளங்கோயிலைக் குறிப் பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அது அடியில் வருமாறு: கொடுங்கோளூர் அஞ்சைக் களம்செங் குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரங்குக் காவும் நெடுங்களம் நன்னிலம் நின்றியூர் நீடூர் நியம நல்லூர் இடுமபா வனமெழுமூர் ஏமூர் தேமூர் எறும்பியூர் ஏராரும் ஏம கூடம் கடம்பை யிளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாய நாதனையே காணலாமே என்று கூறியிருப்பதும் ஆராய்ந்து பார்த்தால் நமது நாட்டில் பல இளங்கோயில்கள் இருப்பது நன்கு தெரிகிறது. 6. மணிமாடக் கோயில் 1. திருநறையூர் - மணிமாடக் கோயில் 2. சீர்காழி - மணிக்கோயில் 3. தஞ்சை - மாமணிக் கோயில் 4. திருவாரூர் - மணிக்கோயில் 5. திரு நீடுர் - மணிக்கோயில் திருநறையூர் - மணிக் கோயில் முன்னுரை ஒப்பிலாப் பெருமை படைத்த அப்பர் பெருமான் சைவ சமய நாயன்மார்களில் மூத்தவர். சிவநெறியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். பிறசமயங்களை நன்குணர்ந்தவர். சிவநெறியை வளர்க்க முன்வந்த அவர் சமணர்களால் இயற்றப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் தாங்கியவர். சிவ நெறிக்காக எல்லாத் தியாகங்களை யும் செய்தவர் அவர் சமண அரசன் மகேந்திரவர்மன் ஆட்சியில் நடைபெற்ற எல்லாச் சோதனைகளிலும் தேரி - ஏன்? அக்கினிப் பரீட்சையிலும் தேரி - பகைவர்களால் பத்தரைமாற்றுப் பசும்பொன் என்று போற்றப் பெற்றவர். பல்லவப் பார்வேந்தன் மகேந்திரவர்மன் அப்பரின் அருள் நிலையை ஐயமுற அறிந்து அவரது அடியில் வீழ்ந்து முடிசாய்ந்து சிவனெறியைத் தழுவினான். தியாகச் செம்மலாம் அப்பர் அடிகள் தம் தேவாரத்திருப்பதிகத்தில் சிவன் கோயில்களை மட்டும்பாடாது திருமால் நெறிக்குரிய திருநறையூர் மணிக்கோயிலையும் சேர்த்துப் பாடியிருப்பது சிந்திக்கத்தக்கது. அதோடு திருநறையூர் மாமணிக் கோயிலை சிவ பக்தனான சோழ அரசன் கோச்செங்கணான் எடுப்பித்துள்ளான் என்று வரலாறு கூறுவதும் சிந்திக்கத்தக்கது. திரு நறையூர் திருநறையூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. கும்பகோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அழகுற அமைந்துள்ளது. இவ்வூரை திருநறையூர் அல்லது திருநாறையூர், சுகந்தகிரி என்றும் அழைப்பர். இதனை திருநறையூர் சித்தீச்சுரம் என்றும் கூறப்படும். இவ்வூருக்கு அண்மையில் 1-கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார் கோயில் என்னும் புகழ்பெற்ற வைணவர்களின் புனித இடம் (விஷ்ணு தலம்) உள்ளது. இது ஆதியில் சிவநெறியாளர்களின் புனித இடமாக இருந்தது. இன்றும் இவ்வூர் சிவதலம் போன்று திகழ்கிறது. கும்பகோணத்திற்கு வடகிழக்கே குடவாசலுக்குச் செல்லும் கற்சாலை மார்க்கத்தில் சுமார் 10-கிலோ மீட்டர் தொலைவில் திருநறையூர் அமைந்துள்ளது. சோழ நாட்டில் உள்ள வைணவர்களின் புனித இடங்கள் (திவ்விய சேத்திரங்கள்) நாற்பதில் இது ஒன்றாகும். பன்னிரண்டு சித்தி சேத்திரங்களில் இது தலையாயது. ஆரிடம், பௌராணிகம், சுவயம், வியக்தம், திவ்விய தேசம் என்று வடமொழியாளர் புகழும் எல்லாப் பெருமையும் கொண்டது. வரலாற்றுப் புகழும், புராணப்புகழும் சிவபக்தியும் பெற்ற சோழப் பேரரசன் கோச் செங்கணான் எழுபது திருக்கோயிலை இறைவனுக்கு எடுப்பித்ததோடு திருமாலிடம் வாள் பெற்ற (சேர பாண்டியர்களை வெல்ல) திருத்தலமும் திருநறையூரேயாகும். திருமங்கையாழ்வார் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் என்று இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார் மண்ணில் இதுபோல் நகரில்லை என்று புகழ்ந்தேந்தப் பெற்றது இந்த திருமால்குடி கொண்ட ஊர். திருவாகிய இலக்குமிக்கு (திருமகளுக்கு) தேனினும் இனிய ஊர் என்றும் சோலைகளிலிருந்து நறுந்தேன் பாய பாய நறுமணம் நாற்றிசையும் பரவ நின்ற நீடூர் என்னும் பொருளில் நறையூர் என்று புலவர்கள் புகழ்ந்து போற்றிப் பாடும் ஊர். திருநறையூரின் இயற்கை எழிலின் ஏற்றமிகு தோற்றத்தை ஆழ்வார் அழகாக எடுத்துக் காட்டுகிறார். நறவார் பொழில் சூழ் நறையூர் என்று அங்குள்ள நறுமணம் வீசும் சோலைகளையும் எண்ணற்ற வண்ண மலர்களையும் கண்டு நுகர்ந்து களிகொண்டு பாடுகிறார். மலங்கு வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு நலங்கொள் நறையூர்.......... என்று நீர் நிரம்பப் பெற்று, மீன்கள் துள்ளும் வயல் சூழ்ந்த வளமார்ந்த நன்னகரை நற்றமிழால் பாடுகின்றார். நீர் வளம், நிலவளம், இவற்றோடு நாட்டுவளம், நகர் வளம் ஆகியவற்றையும் இணைத்தும் பாடுகிறார். அடுக்கடுக்காய் அமைந்து நெருங்கி ஒழுங்காக ஒளிரும் துகில்களால் சமைத்த கொடிகள் மாளிகை களின் மீது பரவி விண்ணைக் காணமுடியாதவாறு மறைத்து நிற்கும் செல்வம் செழித்து நிற்கும் நறையூர் என்று பாராட்டுகிறார். நகரின் நீண்டு அகன்ற தெருக்களிலே வேளும் சேயும் (காமவேளும், இளம் முருகனும்) அனையாரும் வேற்கணாரும் பயில்கின்றார்கள். பெடையோ டன்னம் பெய்வளையார் தம்பின் சென்று நடையோடியலி நாணி யொளிக்கும் நறையூர் என்று அவ்வூரிலுள்ள அன்னம் பெடைகளோடு அங்குள்ள மங்கையர்கள் நடையழகைக் கண்டு தாமும் அவ்வாறே நடக்க விரும்பி அவர்களைப் பின்பற்றிச் செல்லும் என்கிறார். அந்த நடையழகு அவற்றிற்கு வராமையால் நாணமுற்று நிற்கும் ஊரின் வளமெல்லாம் நாட்டில் உள்ள மறையாளர் வளர்க்கும் ஓமத்தீயால் தான் என்று மிகைப்படுத்திப்பாடுகிறார். வேள்வும் விழவும் வீதியில் என்று மருத ஊர் என்று அவ்வூர்த் தெருக்களில் வேள்வியும் விழாவும் நடந்து வந்தன என்கிறார். வேதநான்கு, ஐந்து வேள்வி அங்கமாறு இசையேழ் நடையா வல்ல அந்தணர் வாழ்கின்ற நறையூர் என்று ஏற்றப்படுகிறது. சிவநெறியின் மறுமலர்ச்சிக்கு அடிப்படையிட்டு அதைக் கட்டி வளர்த்த செப்பற்க்கரிய தீரமும் வீரமும், அருளும் நிறைந்த சம்பந்தரால் ஈண்டு மாடம் எழிலார் சோலை இலங்கு கோபுரம் தீண்டு மதியம் திகழும் நறையூர் சித்தீச சரத்தாரீர் என்று பாடல் பெற்று உயர்ந்த, புனித தலம் இங்குள்ளது. முடையடர்ந்த சிரமேந்தி மூவுலகும் பலிதீர்வோன் இடர் கெடுத்த திருவாளன். என்று ஆழ்வார்கள் பாசுரம்பாடிய மூதூர் சிவபெருமானுக்கு கபால விமோசன சித்தி இத் திருத்தலத்தில் எழுந்தது. இதனால் சிவன் பெருமான் சீத்தீசர் என்று பெயர் பெற்றார். இதனை ஆழ்வார் பெருமைப்படுத்தி எடுத்துக்காட்டியுள்ளார். நறையூர் கோயிலில் குடிகொண்டு இருக்கும் நம்பியை ஆழ்வார் அகங்குளிர, கண்குளிரக் கண்டு நான் சென்று நாடி நறையூரிற் கண்டேன் என்று களித்துப் பாடுகின்றார். உன்னை யெங்கனம் நான் விடுகேனே என்றும், சொல்வாயுனை யான் வணங்கித் தொழுமாறே என்றும் பிறவாமை யெனைப் பணி என்றெல்லாம் நறையூர் நம்பியெம் பெருமானை ஆழ்வார்கள் அழகொளிரும் அமுதத் தமிழில் பாடுகின்றார். மேலும் நம்பி, ஆழ்வார்க்கு இனிமையாய்த் திகழ்கின்றார் அதனால் தீங்கரும்பின் தெளிவு ஆகத் திகழ்கின்றார். இத் திருத்தலத்தில் வஞ்சுளவல்லி நாச்சியாருக்குச் சீரும் சிறப்பும் முதலிடமும் ஏற்பட்டதால் நாச்சியார் கோயில் என்று பெயர் எழுந்தது என்றும் வைணவ அறிஞர்கள் கூறுவர். கோயில், கட்டுமலை மேல் திட்டென அமைந்துள்ளது. அரச கோபுர வாயிலில் அடியெடுத்து வைத்து நின்றால், உண்ணாழிகையில் (கர்ப்பகிருகத்தில்) உள்ள நம்பியெம் பெருமான் பார்வை பாங்காக ஏற்படுவதால் மணிமாடக் கோயில் என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஒருசிலர் கருதுவர். புராணக் கதை திருநறையூர், பிரமாண்ட புராணத்திலும் பவிஷ்யோத்திர புராணத்திலும் புகழ்ந்து போற்றப் பெற்றுள்ளது. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனிடம் பிணங்கிய திருமகள், திருநறையூர் புட்கரணி மணிமுத்தாற்றின் தென்கிழக்கு மூலையில் உள்ள கன்னிப் பெண்ணாக கானகத்தில் உள்ள பூங்காவில் உலாவி நின்றான். அங்கு வாழ்ந்த மேதாவி முனிவர் திருமகளைக் கண்டு தம்மிடம் அழைத்து வந்து அவளைத் தம்மகள்போல் ஆசிரமத்தில் வளர்த்து வந்தாள். அவளை முனிவர் நாச்சி என்று நவின்று வந்தார். வஞ்சுளா மரங்கள் அடர்ந்த காட்டில் காணப்பட்டதால் அவளை முனிவர் வஞ்சுளா என்று அழைத்து வந்தார். விண்ணுலகை விட்டுத் திருமகள் மண்ணுலகம் போந்ததால் அமரர்களுக்குத் தோல்வியும் துன்பமும் துயரமும் மேலிட்டன. அமரர்களின் அல்லல் அகற்ற திருமால் பஞ்ச வியூக வடிவில் கொண்டு கருடன் குறிப்புணர்த்த, மேதாவி முனிவரின் ஆச்சிரமத்தில் திருமகளாகிய வஞ்சுள வல்லி நாச்சியாரைக் கண்டு அவரைத் திருக்கைப்பற்றி நின்றார். பார்ப்பனன் வடிவில் போந்த ஒருவன் தன் மகள் வஞ்சுள வல்லியைக் கைப்பற்றிக் களித்து நிற்பதைக் கண்டு முனிவர் கடுஞ்சினங்கொண்டு சபிக்க முன் வந்தார். உடனே வஞ்சுளாவைக் கைப்பற்றி நின்ற இளைஞன் தன் உண்மையான வடிவில் காட்சி அளித்தார். வஞ்சுளாவைக் கைப்பற்றி நின்ற காளை கமலக் கண்ணன் என்று முனிவர் கண்டு களித்தார். கண்ணன் வஞ்சுளாவை மணஞ் செய்து தருமாறு முனிவரை வேண்டினார். முனிவர் அதை ஏற்றுக் கொண்டு சில நிபந்தனைகள் விதித்தார். முதல் நிபந்தனை, பெருமான் பஞ்சமூர்த்திகளோடு திருமாலும் திருமகளும் மணக் கோலத்தில் காட்சி அளிக்கவேண்டும் இரண்டாவது நிபந்தனை, அவ்வூர் இது முதல் நாச்சியார் பெயரால் அழைக்கப் பெறல் வேண்டும். அவர் ஆணைக்குட்பட்டுத் திருமால் நடக்கவேண்டும் என்பவைகளாகும். திருமால் முனிவர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வஞ்சுளாவை மணந்து அங்கு பஞ்சமூர்த்திகளோடு காட்சி நல்கி வருகின்றார். கோயிலே இல்லாத நான்முகன்கூட நறையூரில் பெருமான் பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறார். இவ்வூர் வஞ்சுள வல்லித் தாயாருக்கு எல்லாச் சிறப்பினையும் தந்து நாச்சியார் கோயில் என்ற புகழை ஈட்டியுள்ளது. திருமண காலம் முதல் இங்கு கருடனுக்கு புகழ் ஏற்பட்டுள்ளது. இங்கு இந்திரனும் இடம் பெற்றுள்ளான். சித்தீசுவரன் என்ற பகுதியில் சிவபெருமானும் இடம் பெற்றுள்ளார். மேலும், கதிரவன், வாயு முதலியவர்கள் அருள் பெற்ற திருத்தலமாயும் விளங்குகிறது இங்கு கருடன் வைரமுடியை எடுத்துக் கொண்டு பூமிக்குப் போந்து கொண்டிருந்தான். அப்பொழுது அம்முடியினின்று ஒருமணி சிதறிதிருநறையூரில் வீழ்ந்தது. அந்த இடம் மணிமுத்தாறாக விளங்கியது. சிந்திய முத்தை எடுத்து வைரக் கிரீடத்தைத் திருநறை சீனிவாசகப் பெருமாளுக்குச் சமர்ப்பித்துத் தானும் அவர் அண்மையில் நின்றுவிட்டார். கோயிலில் கருடன் சிலையுள்ளது. அது கருடாழ்வார் மண்டியிட்டு இரு கைகூப்பி, திருமாலை வழிபடும் கோலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கருடாழ்வாரைப் பிரார்த்தித்து மக்கள் நலம் பெறுவார்கள் என்று கூறப்பெறுகிறது. அமுதகலசம் என்ற பிரசாதம் கருடாழ்வாருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த நைவேத்தியம் மிகுந்த சுவையுடையது என்று சொல்லப்படுகிறது. திருநறையூரில் கோயில் கொண்டிருக்கும் திருமால் நம்பி என்று அழைக்கப்படுகிறார். நயன் என்ற சொல்லுக்கு நம்பிக்கைக்கு உரியவன் என்று பொருள் கொள்ளப்படும். இப்பதத்திற்கு நம்பினோர் என்றும் கைவிடாதவன் நம்பனே ஆவான். நம்பி என்ற மற்றோர் சொல்லிற்கு சிறந்தவன் என்றும் கூறுவார்கள் பாண்டிய அரசன் ஒருவன் தனக்கு அறிவுடை நம்பி என்று பெயர் சூட்டியுள்ளான். சைவ சமய குரவரில் ஒருவராகிய சுந்தரர் நம்பி ஆருரர் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். தேவாரத் திருமுறைகளை வகுத்துத் தந்தவர்க்கு நம்பிஆண்டார் நம்பி என்ற பெயர் உண்டு. மதுரகவி ஆழ்வார் முதன்முதலில் நம்மாழ்வாரைத் திருகுருகூர் நம்பி என்று பாடினார். வைணவர்கள். திருமலை நம்பி, பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி வங்கிபுரத்து நம்பி என்று சில ஆச்சாரியார் களை அழைத்து வந்தனர். இறைவன் பெயரை ஆச்சாரியார் களுக்கும் இடம் பெற்றன. இதனால் அறியக்கிடக்கின்றது. நாச்சியார் கோயிலில் அமர்ந்திருக்கும் சீனிவாசப் பெருமானின் மெய்யடியாரான திருமங்கை மன்னனுக்கு திருவிலச்சினை செய்து தானும் நம்பி ஆனார். மங்கை மன்னனையும் ஆழ்வார் ஆக்கினார். செங்கட்சோழன் கோச்செங்கணான், மூன்றாம் நூற்றாண்டில் உரையூரைத் தலைநகராகக் கொண்டு செங்கோல் ஓச்சிய சோழப் பேரரசன். இவன் இணையற்ற சிவபக்தன். பெரியபுராணம் புகழ்ந்தேற்றும் மாமன்னன். திருவானைக்காவலில் சிவ பெருமானுக்கு கோயில் எடுப்பித்து ஏற்றம் பெற்றவன். அப்பர் சம்பந்தர், சுந்தரர் முதலிய சைவ சமய நாயன்மார்களால் புகழப்பெற்றவன். தேவாரப் பதிகங்களில் இடம் பெற்றவன். 63 நாயன்மார்களில் ஒருவனாக உயர்த்தப்பெற்றவன். இந்தச் சிவ பக்தனான சோழன் திருமாலிடமும் அன்பு கொண்டவன். திருமாலிடம் கொண்ட அன்பால் திருநறையூர் நம்பிக்குக் கோயில் எடுப்பித்தான். திருமாலடியார் திருமங்கை ஆழ்வாரால் புகழ்ந்தேத்தப் பெற்றவன். பெரிய திருவாய் மொழியெனும் வைணவ மறையில் செங்கணான் இடம் பெற்றவன். இவன் ஒரு முறை கயாவிற்கு சிராத்தம் செய்யச் சென்றிருந்தபொழுது இவனது நாட்டைப் பகைவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இப்பொழுது இவன் செய்வது அறியாது காடுகளில் ஒளிந்து அலைந்து திரிந்தான். அப்பொழுது ஒரு முனிவர் கண்டு திருநறையூர் நம்பியைக் குறித்து தவம் செய்யத் தூண்டினார். அவன் நம்பியிடம் சென்று வணங்கித் தவம் இயற்றினான். அவர் அவனுக்கு அருள்கூர்ந்தார். மணிமுத்தாற்றினின்று தெய்வீகமான வாள் கிடைக்குமாறு திருமால் செய்தார். அவன் அவ்வாளைப் பெற்று பகைவர்களுடன் போரிட்டு வெற்றி எய்தினான். கழல் மன்னர் மணிமுடிமேல் காக மேற தெய்வவாள் வலங்கொண்ட சோழன் என்று இவன் வாள் பெற்றதை ஆழ்வார் அழகாக எடுத்துக் கூறுகிறார். இவன் வாள் பெற்று வெற்றியெய்தியது பெரிய திரு மொழி திருபத்துகளும் திருப்பதிகத்தில் திருமங்கையாழ்வாரால் கூட வியந்து பாராட்டப்படுகிறது. திருக்கோயில் திருநறையூர் நின்ற நம்பியின் மணி மாடக் கோயில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் செங்கோல் ஓச்சிய கோச் செங்கணான் என்ற சோழ பேரரசனால் எடுப்பிக்கப் பெற்றது. இவன் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் எழுபதுக்கு மேற்பட்ட மாடக்கோயில்களைக் கட்டினான். இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோழீசற்கு எழில் மாடம் எழுபது செய்துலகாண்ட திருக்குலத்து வளச் சோழன் என்று திருமங்கை ஆழ்வார் செங்கட்சோழனைப் பற்றிப் பாடி இருப்பது அவன் எழுபது கோயில்களை எடுப்பித்தான் என்பது உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே என்று ஆழ்வார் திரு நறையூரில் திருமாலுக்குக் கோச்செங்கணான் கோயில் எடுப்பித்ததைச் சிறப்பித்துப்பாடியுள்ளார். அது அவன் கட்டிய எழுபது கோயில்களில் ஒன்று என்று தெரிகிறது. இஃதன்றி திருநறையூரில் திருமாலுக்கு அவன் எடுப்பித்த திருக்கோயில் மணிமாடக்கோயில் என்பதும் நன்கு தெரிகிறது. திருநறையூர் நின்ற நம்பியே என்று திருமங்கை மன்னர் மங்கள சாசனம் செய்துள்ளார். திருமங்கை மன்னர் இந்த மூர்த்தியை குருவாகக் கொண்டு முத்திராதனம் பெற்றுள்ளார். இப் பெருமானைப் பற்றி ஆழ்வார் பெரிய திரு மொழியில் பத்துப் பதிகங்கள் பாடியுள்ளார். பெரிய திருமடல், சிறிய திருமடல் என்ற இரு தனிப்பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறார். பெரிய திருமடலில் திரு நறையூர் கோயிலின் மாடம் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளது. இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலை போல் பொன்னியது மாடம் என்று கூறப்பெற்றுள்ளது. சிறிய திருமடலில் தென்னறையூர் மணிமாடக் கோயில் மணாளனை என்று கூறப்பெற்றுள்ளது. திருநறையூர் நம்பி மீது ஆழ்வார் கொண்ட அரிய பக்தி அடங்காக் காதலாக எழுந்துள்ளது. ஆழ்வார் தான் ஆண் என்பதை விடுத்து, நாயகி பாவத்தை ஏற்று, நம்பியை காதலனாகக் கொண்டு இரண்டு மடற் பிரபந்தங்கள் இயற்றியுள்ளார். பெரிய பெருமானே ஆசூயை கொண்டு, ஆழ்வாரை நோக்கி மடலை இங்கே கட்டி, மதிலை அங்கே கட்டக் கூடாதா? என்று கூறியதாகக் கூறப்படுகிறது. பெண்கள் மடலூரும் வழக்கம் தமிழ் இலக்கியங்களில் அதிகம் காணப்படவில்லை. ஆனால் கடவுளை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடும்பொழுது இதற்கு விதிவிலக்கு உண்டு. ஆழ்வார் மடலூர்வன் என்று அச்சுறுத்துகிறாரேயன்றி அது செய்தாரில்லை. நம்பியின் வடிவழகை ஆழ்வார் எடுத்தியம்புவது சாலச்சிறந்த தொன்றாகும். மன்னு மறையூர் திருநறையூர் மாமலைமேல் பொன்னியலு மாடக் கவாடம் கடந்து புக (கு) என்னுடைய கண்களிப்ப நோக்கினான் நோக்குதலும் மன்ன திருமார்பும் வாயும் அடியிணையும் பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்தது போல் மின்னி ஒளிபடைப்ப வீணானும் தோள்வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்ட முடியும் துன்னு வெயில் விரித்த சூளாமணி யமைப்ப மன்னு மகதக் குன்றின் மருங்கோர் இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான் என்று பரசால நாயகியார் தாம் திருநறையூர்க்கோயிலின் சந்நிதியில் சேவிக்கப் பெற்ற காட்சியை விவரிக்கிறார். திருநறையூர் நம்பியின் தாமரை இதழ் போன்ற வாய், திருவடி கரங்கள், கண்கள் இன்னோரன்ன எழில் ஒழுகும் உறுப்புகள் நீல மலைபோல் தாமரைக் காடுபூத்தாற்போன்று பொலிந்து நின்றன. அவரது முடி, தோள்வளை மகரகுண்டலம், மாலை அவற்றின் மேல் பதித்த மணிகள் ஆகியவை பளபளவென்று ஒளிர்கின்றன. நீல வானில் ஒளிரும் மின்னற்கொடிபோல் அவர் அருகில் அழகொளிரும் அணங்கு ஒருவள் அழகுடன் நிற்கின்றாள். அவள் முகத்தில் புன்னகை பொலிகிறது. உடலில் இளமை தவழ்கிறது. அவர்களைக் கண்டதும் ஆழ்வார் நாயகியின் உள்ளமும் கருத்தும் அவரை மீறி அவள் பால் சென்று லயித்துவிட்டது. ஞானங் கனிந்த நலம் என்றபடி ஞானபரிபாக ரூபமான பக்தியின் மூலம் எழும் விரகக் கோளாறுகள் ஆதரிக்கத் தக்கன. வெறும் விசயப் பிராப்தமாக கர்ம மடியாக அஞ்ஞானத்தால் அரும்பும் விரகம் தவறானது. ஆழ்வார் தம்மை மறந்த நிலையில் பரமாத்வான இறைவனிடத்தில் தமது சிவாத்மாவை ஒருமைப்படுத்துகிறார். என்ற கருத்து இங்கு பொலியச் செய்துள்ளது வியத்தற்குரியது. மணிக்கோயில் அமைப்பு மணிக் கோயில் அமைப்பும் இதரகோயில்களின் அமைப்பைப் போல் குளறுபடியுள்ளதாகவே இருக்கிறது. மணிக் கோயில் என்பது விமானம் மணிவடிவாய் இருக்கும் என்று கூறுகின்றார்கள். கோயில்களுக்கு பெயர் சூட்டிய அப்பர் கோயிலின் அமைப்பைப் பார்த்து எக் கோயிலுக்காவது பெயர் சூட்டியுள்ளாரா? என்று கேட்கில், இல்லை என்றே விடை வரும். தேவாரப் பதிகங்களில் குறிக்கப்பெற்ற சில கோயில்களின் பெயர்க் காரணம் என்ற தலைப்பில் தமது நூலில் அறிஞர் ஒருவர் ஏழு கோயில்களைப் பற்றி விளக்கந் தந்துள்ளார். அந்த ஏழு கோயில்கள் முறையே (1) ஈச்சுரம், (2) பெருங்கோயில், (3) ஞாழற் கோயில், (4) கொகுடிக் கோயில் (6) இளங்கோயில் (6) ஆலக்கோயில் (7) தூங்கானை மாடம் என்று குறிப்பிட்டுள்ளாரேயொழிய அப்பரும், பிற தேவார ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ள மணிக்கோயிலும் கரக்கோயிலும் இடம்பெற வில்லை. 1. திரு. க. வெள்ளைவாரணார் அவர்கள் நல்ல மணி முதலியவற்றால் அழகுறப் புனைந்த மணிக் கோயில்களும் என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர மணிக்கோயில் அமைப்பைப் பற்றி ஒரு சிறிதும் எடுத்துக்காட்டவில்லை. ஆனால் மதிப்பிற்குரிய நண்பர் திருமயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப்பட்டையான சிகரம் உள்ள கோயிலாக இருக்கக்கூடும் என்று ஒரு தெளிவான விளக்கந்தந்துள்ளார். அவர் இங்கு சிகரம் என்று குறிப்பிடுவது விமானமேயாகும். ஆறு அல்லது எட்டுப் பட்டையுள்ள விமானங்களையுடைய திருக்கோயிலையே அப்பர் பெருமான் மணிக்கோயில் என்று தமது அடைவுத் திருத் தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். விமான அமைப்பு கோயில் வகை, விமானங்களின் அமைப்பை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. திருநறையூர் நம்பியின் திருக்கோயில் மணிக் கோயில் என்பதற்கு அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும் திருமங்கை ஆழ்வாரும் குறிப்பிடுவதே தக்க சான்றாக மிளிர்கின்றது. ஆகமத்தில் எட்டு அல்லது ஆறு பட்டைகளையுடைய சிகரமும் கண்டமும் யுடையது கந்த காந்தம் என்று கூறப்பெற்றுள்ளது கந்த காந்தம் எனப்படுவது மணிக்கோயில் என்பது எனது கருத்து. அப்பர் அடிகள் மணிக் கோயில் என்று கூறுவது கந்த காந்தமேயாகும். கந்த காந்தம் என்பது மணிக் கோயில் இல்லை என்று எவரும் எடுத்துக் காட்ட முடியும். ஆனால் திருநறையூர் நம்பியின் திருக் கோயில் மணிக் கோயில் இன்றென மறுத்துரைக்க முடியாது. வைணவ ஆழ்வார்களும், சைவ நாயன்மார்களும் இத்திருக் கோயிலை மணிக்கோயில் என்று தம்பாசுரங்களில் கூறும் சான்று முதற்தரமான சான்றுகளாகும். இத் திருக் கோயிலில் திருமங்கை ஆழ்வாரின் சந்நிதி, கொடிக் கம்பத்தின் வடபுறம் இருக்கிறது. கோயிலுக்கு அண்மையில் மணிமுத்தாறு ஓடுகிறது. கோயிலுக்கு முன்புறம் மேதாவி முனிவரின் நந்தவனம் உள்ளது. நடுவே முனிவரின் ஆசிரமத்தின் நடுவே நம்பியின் கோயில் அமைந்திருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. பெருமான் முகம் மலர்ந்ததாக இனிமையுடன் காணப்படுகிறது. அவர் இரண்டு கரங்களுடன்தான் எழுந்தருளியிருக்கிறார். நாச்சியாருக்குத் தனிக் கோயில் இல்லை. நம்பியின் அருகே நாச்சியார் இடம் பெற்றிருப்பது இக்கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பாகும். ஆகமச்சான்று நமது கோயில்களுக்குரிய அமைப்பை விளக்கும் முடிவானதும் அதிகாரபூர்வமான நூலும் சிவாகமங்களேயாகும். காமிகாகமத்தில் எட்டுப்பட்டத்தையுடைய எழில் மிக்க விமானத்தையும், கண்டத்தையும் (கழுத்தையும்) உடையது கந்த காந்தம் என்று கூறுகிறது. ஆறு பட்டங்களை விமானத்தையும் கழுத்தையுமுடையது கந்தகாந்தம் என்று வேறு பாடபேதத்தையும் காமிகாகமம் 60-ஆவது ஏகபூமியாதி விதிப் படலம் கூறுகிறது. எனவே நாம் எட்டு அல்லது ஆறுபட்டை களையுடைய விமானத்தையுடையதை கந்த காந்தம் என்று எண்ணுவதில் தவறு இல்லை என்றே கருதுகிறோம். நாம் நமது யூகத்தால் மணிக் கோயில் என்பது கந்த காந்தம் என்று கண்ட முடிபு சரியாக இருக்குமேயானால் மணிக் கோயில் 6 அல்லது 8 பட்டையுள்ள விமானமேயாகும். மேலும் நமது நாயன்மார்களாலும், நமது ஆழ்வார்களாலும் மணிக் கோயில் என்று கூறும் கோயில்களில் நமது யூகத்தின்படி 8 பட்டையுள்ள அமைப்புகள் காணப்படுவதால் நமது யூகத்திற்கு இந்த சமயப் பெரியார்களும் முத்தாப்பு வைத்திருக்கிறார்கள் என்று எண்ணி வுதை முடிந்த முடிபாக எண்ணுவது தவறில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். வைணவ ஆகம முறைப்படிக்கு இந்தச் சேத்திர விமானம் சீனிவாச விமானம் என்று கூறப்படும். நறையூர் நம்பியின் திருக்கோயில் இன்று எழில்பெற்றிலங்கு கிறது. சமீபத்தில் திருப்பணி செய்யப்பெற்றுள்ளது இக் கோயில் புதுமைப் பொலிவுடன் செறிவுடையதாய்த் திகழ்கிறது. இக் கோயில் 600 - அடி நீளமும் 288 அடி அகலமும் கொண்டதாய்க் காட்சி தருகிறது. கோயில் முகப்பில் 75-அடி உயரமுள்ள இராச கோபுரம் எழிலுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. அடியில் தாமோதரப் பிள்ளையார் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறார். உள்ளே பண்டு சோழன் திருமங்கை ஆழ்வாரைச் சிறையிட்ட இடத்தில் உள்ள திருமங்கை மன்னன் கோயிலும் மற்றும் திருவேங்கட முடையான் ஆழ்வார் ஆசாரியர்கள், இராமன், சக்கரத்தாழ்வான், சேனை முதலியார் சிரிதேசிகன், அனுமான், மணவாளமாமுனிகள், வராகப் பெருமாள், யோக நரசிம்மன், தனிக்கோயில் கொண்ட கருடன், பொன்னி அம்மன் முதலியவர்களுக்கு சிறு கோயில்களும் உள்ளன, வசந்த மண்டபம், கோரதமண்டபம், வாகன மண்டபம், சோழன் கட்டிய திருமண மண்டபம் முதலியன இங்கு ஒழுங்குற அமைந்துள்ளன. உள்ளே அக உண்ணாழிகையில் பெருமாள் மூலவர் வாசுதேவனும் மற்றும் நான்கு திருஉருவங்களும் உள்ளன. மூலவர் பஞ்ச வியூக வீரசேத்திரத்துறை இறைவரானதால் இருகைகளுடன் திகழ்கிறார். கைகளில் சங்கு சக்கரம் தாங்கி நிற்கும் அழகே ஒரு தனிப் பெருமை வாய்ந்தது. உத்சவர் தோற்றம் அழகு மிக்கது. கண்களைக் கவரும் மீளாத மாளாத வடிவழகு ஒளிர்கிறது. ஒரு பொற்பீடத்தில் நாச்சியார் பெருமாளுடன் மூன்று அங்குலம் முன்னின்று தனக்குரிய தனிச்சலுகையைக் காட்டி நிற்கிறார். நாச்சியார் வஞ்சுளவல்லி அருள்வடிவாய் மணக் கோலத்தில் மாட்சி ஆட்சியுறக் காட்சி தருகின்றார். சீர்காழி (தோணிபுரம்) மணிக்கோயில் சீர்காழி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இது விழுப்புரம்-மாயவரம் மார்க்கத்தில் இருக்கிறது. சீர்காழி புகைவண்டிநிலையம் இங்கிருந்து கோயில் 2 மைல் தொலைவில் உள்ளது. சுவாமியின் பெயர் பிரமபுரிசுரர். தேவியின் பெயர் திரு நிலை நாயகி. இவ்வூருக்கு ஸ்ரீகாழி, பிரபுரம், தோணிபுரம், வேணுபுரம், சிரபுரம், புகலி, வெங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, கொச்சை வயம், கழுமலம் ஆகிய பன்னிரண்டு பெயர்கள் உண்டு. இவ்வூர் பெரும்பாலும் சீயாழி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூரில் பிரமன் சிவபெருமானைப் பூசித்ததால் பிரமபுரம் எனவும் பிரளய காலத்தில் தோணிபோல் மிதந்த காரணத்தினால் தோணிபுரம் எனவும் அமரர்கள் புகலிடமாகப் புகுந்த காரணத்தால் புகலி எனவும் இத்தலம் அழைக்கப்பட்டுவருகிறது. இவ்வூர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், காழிக்கங்கை மெய்கண்டர், சீகாழிச் சிற்றம்பல அடிகள், சண்பை ஞானப்பிரகாசர் முதலியோர் பிறந்த பெரும்பதி. திருஞானசம்பந்த சுவாமிகள் குழந்தைப் பருவத்தில் குளக்கரையிலிருந்து அழுத பொழுது சிவபெருமான் தேவியாரோடு காளைவாகனத்தின் மீது தோன்றி ஞானப்பால் ஊட்டிய திருத்தலம். இங்கு கோயில் கொண்டருளியிருக்கும் சுவாமியும் அம்மையும் தன் ஆட் கொண்டதை சம்பந்தமூர்த்தி சுவாமிகள் சிறப்பித்துப் பாடியுள்ளார். திருநீலகண்டப் பெருமானார் திருஞான சம்பந்தப் பெருமானைச் சார்ந்து அவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை யாழில் மீட்டும் பாக்கியம் பெற்ற தலம் சீர்காழி. இங்குள்ள கட்டுமலை உச்சிக் கோயிலில் ஒரு தோணியில் பெரிய நாயகர் பெரிய நாயகி சந்நிதி இருக்கிறது. தோணியப்பர் சிகரத்திற்குத் தெற்குப் பக்கத்தில் சட்டநாதர் கோயில் இருக்கிறது. இங்கு திருஞான சம்பந்தருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. இத் திருத்தலத்தைத் தான் திருஞானசம்பந்தப் பெருமான் தன் பிள்ளைப் பிராயத்தில், பிரமாபுரம் என்று சிறப்பித்துப் பாடினார். தோடுடைய செவி யன் விடை யேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மல ரான்முன நாட்பணிந் தேத்த வருள் செய்த பீடுடைய பிர மாபுர மேவிய பெம்மான் இவனன் றே என்பது அவரது அருள்வாக்கு. தேவாரப் பாடலில் மிகச்சிறப்பாகப் போற்றப்படும் பாடல் இதுவாகும். கோயில் இவ்வூரில், கோயில் நகரின் நடுவே நனி சிறந்திலங்குகிறது. கோயிலைச் சுற்றி பெரிய மதிற்சுவர்கள் அழகாக அரண்போல் திகழ்கின்றன. சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூல இலிங்கத்திற்கு பிரம்மபுரீசர் என்று பெயர். அகநாழிகையில் (கருவறையில்) அகதியர், கங்கா விசர்ஜனமூர்த்தி ஆகியோர்களின் சிலைகள் அணிபெற்றிலங்குகின்றன. கோயிலைச் சுற்றிவந்தால் பின்னால் ஒரு கட்டுமலை இருக்கிறது. அம்மலைமீதுள்ள கோயிலுக்கு ஏறிச் செல்லப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுமலை மீதே தோணி புரேசர் சந்நிதி காணப்படுகிறது. ஒரு காலத்தில் உலகம் அனைத்தும் பெருவெள்ளம் பரவிக் கிடந்தது. எல்லா உயிர்களும் இறைவனுக்குள் அடங்கி ஒடுங்கிக் கிடந்தன. இறைவன் உலகை மீண்டும் உருவாக்க நாடி பிரணவத்தைத் தோணியாகக் கொண்டு நீர்மீது மிதந்து கொண்டிருந்தார். அப்படி மிதந்து கொண்டிருக்கும்பொழுது சீகாழித் தலம் மட்டும் தம்முடன் நீரில் மிதந்து வருவதை இறைவன் கண்டார். எனவே அவர் இதனை மூலாதார சேத்திரமாகக் கொண்டு அன்று முதல் உமா தேவியாருடன் தோணியோடு எழுந்தருளி விட்டார். இதனால் இதற்கு தோணிபுரம் என்ற பெயர் உண்டாயிற்று. நிலையும் பெருமையும் நீதியும்சால அழகுடைத்தாய் அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்ததித் தோணிபுரம் என்று அப்பர் அடிகள் பாடுவது இதற்குச் சான்றாகும். கட்டுமலை, பிரம்மபுரீசுவரர் கோயிலை ஒட்டியிருக்கிறது. மலையின் மீதுள்ள சிவ பெருமான் கயிலை மலைச் சிகரம் ஒன்றை தென் திசையில் வாயுதேவன் மூலமாகத் தோற்றுவித்தார். அச்சிகரம் பெயர்ந்து வந்து இங்கே விழுந்தது என்பது புராணக் கதை. தோணிமலை கயிலை மலையின் சின்னமென்று அதைப் புள்ளினங்கள் தாங்கி நிற்கின்றன என்பது ஐதீகம். பார்கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்று அப்பரின் அருள் வாக்குக் கூறுகிறது. அதற்கேற்ப சுமார் 20 பறவைகள் அக்கட்டுமலையைத் தாங்கி நிற்கின்றன. இத்தலத்திற்கு 71. தேவாரப் பதிகங்கள் உண்டு. அவற்றுள் சம்பந்தர் பாடியவை 67. இங்குள்ள கோயில் கட்டுமலை மீது எழுப்பப் பெற்றிருக்கிறது. இது மாடங்கள் உள்ளதால் மாடக் கோயில் என்றும் மணிக் கோயில் அமைப்பையுடையதாத லால் மணிமாடக் கோயில் என்றும் கூறப்பெறுகிறது. சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராகிய திருஞான சம்பந்தர், காடதணிகலம் காரரவம்பதி காலதனில் தோட தணிகுவர் சுந்தரக் காதினிற் றூச்சிலம்பர் வேட தணிவர் விசயற்குருவம் வில்லுங்கொடுப்பர் பீடத் தணிமணி மாடப்பிரம புரத்தாரே என்று திருப்பிரமபுரப் பதிகத்தில் கூறியுள்ளார். மேலும் அவர் திருத்தோணிபுரம் திருப்பதிகத்தில், காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர் சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும் ஆண்டகையாற் கின்றே சென்றடியறிய வுணர்த்தாயே என்றும் பாடியிருப்பதை ஆராய்ந்தால் சீகாழிக் கோயில் மணிமாடக் கோயில் என்று நன்கு தெரிகிறது. நகரின் நடுவில் நான்கு கோபுரங்களும் சுற்று மதில்களும் உடையதாகத் திருக்கோயில் திகழ்கிறது. இறைவனுடைய பெயர் பிரம்மபுரீசுவரர் இறைவியின் பெயர் திருநிலை நாயகி. வடமொழியில் இறைவியை திரசுந்தரி என்று அழைப்பர். இவர்களுக்கு தனித்தனியே கோயில்கள் உண்டு. அம்மன் கோயிலுக்கு வலதுகைப் பக்கத்திலும் சுவாமி கோயிலுக்கு இடது கைப் பக்கத்திலும் திருஞான சம்பந்தர் கோயில் உள்ளது. அது இருபது பறவைகள் தாங்கிக் கொண்டிருப்பது போல் தோற்றந் தருகிறது. இதனை அப்பர் அடிகள் நாலைந்து புள்ளினம் ஏந்தினவென்று குறிப்பிட்டுள்ளார். இம்மலை ஊழி காலத்து மிதந்த தோணி இதில் உமாமகேசுவரர் எழுந்தருளியுள்ளார். இவர் உருவம் பெரிது. சுதைத் திருமேனி. இறைவன் பெயர் பெரிய நாயகர் இறைவியின் பெயர் பெரிய நாயகி. கல்வெட்டுகள் இத் திருத்தலத்திற்கு 93 - கல் வெட்டுகள் உள்ளன. அவைகளில் 46 - படி எடுக்கப்பட்டவைகள் 47 படி எடுக்கப் படாதவைகள். இவைகளில் இரண்டாம் குலோத்துங்கன் கல்வெட்டு மூன்றும் இரண்டாம் இராசராசதேவனின் கல்வெட்டுகள் ஐந்தும் மூன்றாம் குலோத்துங்கன் சோழன் கல்வெட்டுகள் ஏழும் வீர ராசேந்திரன் கல்வெட்டுகள் மூன்றும் இராசாதி ராச தேவர் கல்வெட்டு ஒன்றும் கோனேரின்மை கொண்டான் என்ற குறிப்பில் இருகல்வெட்டு களும் மூன்றாம் இராசராசதேவர் கல்வெட்டு இரண்டும் கோப்பெருஞ் சிங்கன் கல்வெட்டு நான்கும் பெயர் குறிப்பிடாத பரகேசரி வர்மன் கல்வெட்டு ஒன்றும் இராசகேசரிவர்மன் கல்வெட்டு மூன்றும் வீரவிருப்பண்ண உடையார் கல்வெட்டு இரண்டும் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டது மூன்றும் கிருஷ்ண தேவராயரது கல்வெட்டு ஒன்றும் வேங்கடதேவ மகாராயரது கல்வெட்டு ஒன்றும் பெயர் குறிக்கப்படாத கல்வெட்டு எட்டும் ஆக 46 கல்வெட்டுகள் உள்ளன. இவைகள் 1910 - ஆம் ஆண்டின் 140 எண்ணுள்ளதாக படியெடுக்கப் பட்டு பதியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் மூலம் பண்டைக்கால வரலாறுகளும் பழக்கவழக்கங்களும் நில அளவைகளும் மூர்த்திகளின் அமைப்புகளும் பிறவும் அறியலாம். இங்குள்ள ஆளுடைய பிள்ளையார் கோயிலில் முதன் முதலாக ஆளுடைய பிள்ளையார் திருஉருவத்தை தலத்திற்கு எழுந்தருளச் செய்தவன் மூன்றாம் குலோத்துங்க தேவரின் அடுக்களைப் பெண்டுகளில் மூத்தவள் இராஜவிச்சாதரி என்பாளாகும். அரசர்களுக்கு பட்டத்தரசிகளைத் தவிர அடுக்களைப் பெண்டிர் என்னும் பெயரால் பலரை வைத்திருந்தார்கள் என்று இதன் மூலம் தெரிகிறது. இராசராசன் மாடை என்ற நிறைகல் வழக்கில் இருந்தது என்று கூறப்படுகிறது. இராசராசன் மாடை என்பது அவன் வெளியிட்டகாசு என்று பல காசு ஆராய்ச்சியாளர்கள் கூறு கிறார்கள். நிலைவிலை ஆவணக்களரின் முன்னிலையில் வாங்கப் பட்டது. நிலத்தை விற்பதோடு நீராணிக்கக் காரர்களையும் சேர்த்து விற்கப்பட்டதாகத் தெரிகிறது. பொத்தப்பிச் சோழன் என்பவன் வீரபாண்டியனை வென்று பாண்டிய நாட்டிலிருந்து ஆடவல்லான் படிமத்தையும் கவர்ந்த கொண்டுபோய் சீர்காழியில் வெற்றிப்பரிசாக வைத்து பிரதிஷ்டை செய்து கொண்டான் என்று தெரிகிறது. வீரராசேந்திரன் இவனுடைய ஆறாம் ஆண்டில் தொங்கு விளக்குகள் எரிக்க நிலதானம் அளித்துள்ளான். ஏழாம் ஆண்டில் திருத்தோணிபுரமுடையார் பெரிய நாச்சியார் நிவேதனத் திற்காக சிரிபாத தூளி சதுர்வேதி மங்கலத்திற்குத் தென்பக்கத்துக் கிராமமான கிடாரங்கொண்ட சோழநல்லூரில் நிலம் வழங்கிய செய்தி குறிக்கப்பெற்றுள்ளது. நான்காம் ஆண்டில் சம்பந்தர் தேவாரம் எழுதிவைக்கப்பெற்றிருந்தன. அதனைப் பூசித்துக் கண்காணிக்க விரகர் ஒருவர் நியமிக்கப்பெற்றார். அவரது வேலை ஏடுகள் பழுதடையாமல் பாதுகாத்தல். பழுதடைந்தால் அவற்றை எழுதிப் புதுப்பிப்பதும் பூசிப்பதும் ஆம். அவர் கிராமக் காரியம் பார்ப்பாரை இறையிலியாக நிலம் வேண்டிக் கொள்ள அவர் விருப்பப்படி நிலம் விடப்பட்டது. இங்கு பல்லவர் வம்சத்தை சேர்ந்த கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டும் விசய நகர் நாயக்க மன்னனின் பிரதிநிதியான வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டும் கிருஷ்ண தேவராயர் வேங்கட தேவராயர் கோடல் வசவன நாயக்கன் மகன் இராமப்ப நாயக்கன் கல்வெட்டும் விளக்கெரிக்கவும் திருப்பணி செய்யவும் நிலதானங்களும் பொன்தானங்களும் வழங்கப்பட்ட செய்திகள் பல கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது. இஃதன்றி பல மன்னர்களது விருதுகளும் அவர்களது வெற்றி களும் தானங்களும் காணிக்கைகளும் பிறவும் கல்வெட்டுகள் மூலம் நன்கு தெரிகிறது. ஆனால் சீர்காழித் தலத்தில் பாண்டியர்களின் கல்வெட்டோ அன்றி பாண்டியர்களைப் பற்றிய கல்வெட்டுக்களோ ஒன்றும் இங்கு காணப்படாதது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாமணிக் கோயில் தஞ்சை, தஞ்சாவூர் மாவட்டத் தலைநகர். இது மாயவரம் - திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில் உள்ளது. தஞ்சை ஒரு புகைவண்டி நிலையம். இது ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது. பிற்காலத்தில் சோழ நாட்டைக் கைப்பற்றி மகாராட்டிர மன்னர்களுக்கும் இது தலைநகராய் விளங்கியது. இங்கு 11-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இராசராச சோழன் மாபெரும் விமானத்தையுடைய பிரகதீசுவரர் கோயிலை எடுப்பித்தான். இன்று இக் கோயில்தான் திராவிடச் சிற்பிக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இலங்குகிறது. இது மாடக் கோயில் வகுப்பைச் சேர்ந்தது. இஃதன்றி இங்கு ஒரு வைணவக் கோயில் ஒன்றுண்டு. அது லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலும் வேறு இரு வைணவக் கோயில்களும் உண்டு. லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலை தஞ்சை மாமணிக் கோயில் என்றும் வைணவ ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் என்றும் கூறுவார்கள். இங்கு நீல மேகப் பெருமாள் செங்கமலவல்லித் தாயார் என்ற சுவாமியும் தேவியும் குடிகொண்டிருக்கும் ஒரே திருப்பதிதான் உண்டு என்று கூறுவார்கள் என்றாலும் அங்கு மூன்று வெவ்வெறான வைணவக் கோயில்கள் உண்டு. தஞ்சையாளியைப் பொன்பெயரேன், நெஞ்சமன்றிடந்தவனை என்று பெரிய திருவாய் மொழிப்பாசுரம் (7.3.9) என்பது கூறுகிறது. மற்றொன்றை மணிக்குறைக் கோயில் என்று கூறப்படுகிறது. இம்மூன்று கோயில்களும் வெண்ணாற்றங் கரையில் உள்ளன என்று கேள்விப்பட்டேன். ஆகவே தஞ்சை சென்று இந்த மாமணிக் கோயிலைப் பார்த்து நிழற்படம் பிடித்து மணிக்கோயிலுக்கு முதல் எடுத்துக்காட்டாக இங்கு பொறிக்க வேண்டும் என்றும் அந்தக் கோயிலைப்பற்றி விரிவாக எல்லாத் தகவல்களையும் அறிந்து இதில் விளக்கமாக வெளியிட வேண்டும் என்றும் நீண்ட நாளாக எண்ணியிருந்தேன். ஆனால் இப்பொழுது எனது எண்ணம் ஈடேற வழியில்லை என்று அறிந்துள்ளேன். 1967-ஆம் ஆண்டில் அப்பர்கண்ட ஏழுவிதக் கோயில்களும் அதன் சிற்ப வடிவங்களும் என்ற நூலை எழுதி வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆவலோடு ஏழுவிதக் கோயில்களையும் நேரிற் கண்டு ஆராய்ந்து கோயில்களைப் பற்றிய எல்லா விபரங் களை அறிந்து நிழற்படம் எடுத்து வர எண்ணி எனது நிழற்படக் கருவியுடன் தஞ்சைக்குச் சென்றேன். லட்சுமி நரசிம்மமூர்த்தி கோயில் எங்கிருக்கிறது என்று பலரிடம் விசாரித்தேன். எவரும் அக்கோயில் இருக்கும் இடம் தெரிவித்தார்கள் இல்லை. இறுதியாக வரலாற்றுத் துறையிலும், சிற்பத் துறையிலும் ஆராய்ச்சி மிக்க எனது நண்பரும் கரந்தைப் புலவர் கல்லூரி தமிழ்விரிவுரையாளரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான வித்துவான் சி. கோவிந்தராசனார் அவர் களைக் கண்டு விசாரித்தேன். அவர்கள்தான் எனக்கு இலட்சுமி நரசிம்மமூர்த்தி கோயில் இருந்த இடத்தை காட்டினார்கள். ஆனால் அவர்களால் நான் விரும்பிய இலட்சுமி நரசிம்மமூர்த்தி கோயிலின் விமானத்தைக் காட்டமுடியவில்லை. அக்கோயிலின் இடிந்து போன சுவர்களைக் கண்டு திரும்பினேன். மாமணிக் கோயிலைக் காணமுடியாது திரும்பினேன். அப்பால் அறிஞர் கோவிந்தராசனார் தமிழ் வரலாற்றுச் செய்திகள் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதைப் பார்த்தேன். அதில் அவர்கள் மிகத் தெளிவாக இம்மணிக் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அது அடியில் வருமாறு: எனவே, கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சை மாமணிக் கோயில் தஞ்சையாளி நகர் ஆகியவற்றில் இருந்த திருமால் திருமேனிகள் வெண்ணியாற்றில் இடம் பெற்ற பின்னர் காப்பற்ற நிலையில் சில நூற்றாண்டுகள் செல்லக் கோயில்கள் கட்டழிந்து சிதைந்திருக்கவேண்டும். அவ்வாறு சிதைந்த கோயிலின் எஞ்சிய பகுதிகளைக் கொண்டே சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட திண்மையான கோட்டையும் மதிலும் உருவாகி இருக்கின்றன. இப்பகுதிக்கு அண்மையில் கோயில்கள் இருந்ததாகத் தெரிவதால் கட்டழிந்த கோயில்களின் கற்களைக் கொண்டு சிற்பியர் கோட்டைச் சுவர்களை அமைத்துவிட்டனர். எனவே, தஞ்சை மாமணிக் கோயில் தஞ்சையாளி நகர் ஆகியவற்றுள் அங்கங்களாகத் திகழ்ந்திருந்த வைணவச் சார்புடைய சிற்பக் கற்கள் இஞ்சியில் இடம் பெற்றுள்ளன. இன்று வெண்ணியாற்றங்கரையில் கோயில் கொண்டுள்ள நீலமேகப் பெருமாள் மணிகுன்றப் பெருமாள், நரசிங்கப் பெருமாள் ஆகிய மூன்று திருமேனிகளுள் நீலமேகப் பெருமாளே தஞ்சை மாமணிக் கோயிலில் விளங்கிய மூலவர் என்று வைணவச் சார்புடைய பெருமக்கள் கூறுகின்றனர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அக்கோயில் இருந்த திருமேனிகள் மட்டும் வெண்ணியாற்றில் அகற்றப்பட்டிருக்கவேண்டும் என்பதும் பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை யாண்ட நாயக்க மன்னர் ஒருவரால் கோயில்கள் அமைக்கப்பட்டு அதில் திருமேனிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் இஞ்சியில் இடம் பெற்ற எஞ்சிய சிற்பங்கள் சிதைவடைந்த தஞ்சை மாமணிக் கோயிலுடன் கூடிய திருமால் கோட்டங்களின் பகுதியோடும் என்பது புலனாகும்1 என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது முடிபுப்படி தஞ்சை மாமணிக் கோயில் இன்று தட்டழிந்து கிடக்கின்றன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை தஞ்சையில் திருமால் கோட்டங்கள் தலை நிமிர்ந்து நின்றன. இராசராசேசுவரத்தின் வடமேற்கில் மாமணிக்கோயிலும் தஞ்சையாளி நகர் என்ற விண்ணகரமும் இருந்தன வம்புலாஞ் சோலை மாமதில் தஞ்சை மாமணிக்கோயில் என்று திருமங்கை மன்னர் பாடியுள்ளார். அவரது காலம் 8-ஆம் நூற்றாண்டாகும். எனவே 8-ஆம் நூற்றாண்டில் திருமங்கை யாழ்வார் காலத்தில் மாமணிக் கோயில் நன்னிலையில் இருந்தார். 11-ஆம் நூற்றாண்டில் இராசராசன் காலத்திலும் இருந்துள்ளது. இராசராசன் கல்வெட்டில் இருபத்தைந்தாம் வீடு தஞ்சாவூர் தஞ்சை மாமணிக் கோயில் நக்கன் மாதேவிக்கு பங்கு ஒன்று என்று குறிப்பிடுவதால் அவன் காலத்தில் மாமணிக் கோயில் இருந்துள்ளது என்று தெரிகிறது. இன்று மாமணிக் கோயில் இருந்த அதன் அடிச்சுவடுகள் இல்லை. அது 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் திருமால் கோயிலில் இருந்த திருமேனிகள் கடலிட வாய்ப்பு இல்லாததால் வெண்ணியாற்றில் இடப்பட்டன. அடி வெண்ணி யாற்றங்கரையில் துளிர்த்து மீண்டும் அழிந்துள்ளன. திருவாரூர் - மணிக் கோயில் திருவாரூர் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. திருவாரூர் தமிழகத்தில் உள்ள ஒரு இருப்புப்பாதையின் சந்திப்பு. திருவாரூர் சந்திப்பு புகைவண்டி நிலையத்திலிருந்து கோயில் ஒரு கல் தொலைவில் உள்ளது. சுவாமியின் பெயர் வன்மீக நாதர். தேவியின் பெயர் அல்லியங் கோதை அம்மை. கோயிலுக்கு திருமூலட்டானம் என்று பெயர் மணிக்கோயில் என்றும் பூங்கோயில் என்றும் கூறுவார்கள். இது சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம் திருவாரூர்த் தேரழகு என்பார்கள். திருவாரூரில் கோயில், குளம், செங்கழு நீரோடை இவை ஒவ்வொன்றும் ஐயைந்து வேலி நிலம் என்று கூறுகிறார்கள். திருவாரூர் பாடல் பெற்ற தலம். இங்கு அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்களும் இங்கு போந்து திருப்பதிகம் பாடியுள்ளார்கள். திருவாரூர்க்கு அப்பர் பாடிய பதிகங்கள் பல. அதில் அவர் திருத்தாண்டகம் என்னும் பதிகத்தில் எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண் வம்புந்து கொன்றையந்தார் மாலையான் காண் வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட அம்பொன்றால் மூவெயிலு மெரி செய்தான் காண் அலையடி யான் அஞ்சு மாடினான்காண் செம்பொன் செய் மணிமாடத் திருவாரூரில் திருமூலட்டானத் தெஞ் செல்வன் தானே என்று கூறும் பாசுரத்தைக் கொண்டு திருவாரூர் கோயிலை மணிமாடக் கோயில் என்று சிலர் கூறுகின்றார்கள். இதை மறுப்பாரும் உளர். இத் தலத்திற்கு முப்பத்தேழு பதிகங்களும் வேறு திரு முறைகளில் பல பாடல்களும் இருக்கின்றன. இத் தலத்தில் தேரும் திருவிழாவும் திருக் கோயிலும் திருக்குளமும் இவ்வூர்த் தேவாரங்களில் இணைத்துப்பாடப் பெற்றுள்ளன. தியாகேசர் எழுந்தருளிய ஏழு (சப்த) விடங்கத்தலங்களுள் இது முதன்மை பெற்றது. பஞ்ச பூத தலங்களில் இது பிருதிவி தலமாக உள்ளது. திருமகளால் வழிபடப்பட்ட திருத்தலம் இங்குள்ள தேவாசிரிய மண்டபத்திலிருந்துதான் சுந்தரர் திருத்தொண்டத் தொகையை அருளினார். திரு நீடூர் கலைஞானங் கல்லாமே கற்பித்தானைக் கடு நரகஞ் சாராமே காப்பான் தன்னைப் பல வாய வேடங்கள் தானே யாகிப் பலை வார்கட் கங் கங்கே பற்றானானைச் சிலையாற் புரமெரித்த சீயாடியைத் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை நிலையார் மணி மாடநீடு ரானைநீதனே னென்னே நான் நினையா வாறே என்று திருநாவுக்கரசர் என்று நாம் போற்றும் அப்பர் அடிகள் தேவாரத்திலுள்ள திருப்புன்கூர் பதிகத்தில் திருநீடூரில் உள்ள கோயிலை மணிமாடக் கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். 7. ஆலக் கோயில் ஆலக்கோயில் என்று கூறப்படுவது தூங்கானை மாடக் கோயிலே யாகும். ஆகமங்களிலும், சிற்ப நூற்களிலும் ஆலக் கோயிலை கஜப்பிருஷ்டவிமானக் கோயில் என்றும் ஹதி பிருஷ்ட விமானக் கோயில் என்றும் கூறப்படுகிறது. அப்பர் காலத்திற்கு முன்னர் சிற்ப நூற்களிலும் ஆகமங்களிலும் ஏழுவிதக் கோயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகள் ஸ்ரீ விசாலம், ஸ்ரீபோகம், ஸ்ரீ விஜயம், ஸ்ரீகரம் கேசரம், கந்த காந்தம், கஜப் பிருஷ்டம் எனப்படும். அப்பர் காலத்திற்கு முன்னர் கஜப் பிருஷ்ட விமானக் கோயில் ஒன்றுக்கு மட்டும் தூங்கானை மாடக் கோயில் என்று தமிழ்ப் பெயர் வழங்கப்பட்டது. மற்றக் கோயில்கள் எல்லாம் வடமொழிப் பெயராலே அழைக்கப்பட்டு வந்தது. கஜப்பிருஷ்டம் என்பது யானையின் பின்புறம் என்று பொருள்தரும். அந்த விமானமும் யானையின் பின்புறம் போன்றே இருக்கிறது. எனவே அதற்கு ஆனை (ஆல)க் கோயில் என்று பெயர் சூட்டப் பெற்றது, சிறந்த மொழி பெயர்ப்பாகக் கருதலாம். ஆனால் அப்பர் அடிகள் இந்த ஏழு வடமொழிப் பெயர்களுக்கும் அவர்ப் புதுப் பெயர் சூட்டியுள்ளார். அதாவது பெருங்கோயில், கொகுடிக்கோயில், கரக்கோயில், இளங்கோயில், ஞாழற் கோயில், மணிக்கோயில், ஆலக் கோயில் என்பதாகும். அப்பர் இவ்வாறு பெயர் சூட்டியது வடமொழிப் பெயருக்கு நல்ல மொழி பெயர்ப்பாகக் கருதுவதற் கில்லை. கொகுடி என்றால் ஒருவகை முல்லை என்று பெயர். முல்லைச் செடிப் பக்கத்தில் இருந்த ஸ்ரீபோகம் என்ற விமானக் கோயிலை கொகுடிக் கோயில் என்றும் ஞாழல் (புலிநகக் கொன்றை) மரத்தின் கீழ்காணப்பட்ட கேசரம் என்ற கோயிலை ஞாழற் கோயில் என்றும், ஆலமரத்தின் கீழ் காணப்பட்ட யானை படுத்திருப்பது போல் உள்ளக் கோயிலை ஆலக் கோயில் என்றும் பெயரிட்டார். அவ்வாறே பெரிய தோற்றமுள்ள ஸ்ரீவிலாசத்தைப் பெருங்கோயில் என்றும் மணியைப் போல் காட்சி அளிக்கும் விமானக் கோயிலை மணிக்கோயில் என்றும் தேர் வடிவாய் சக்கரம் இணைக்கப்பட்டு வட்ட வடிவில் உள்ள விமானமுள்ள கோயிலை சூரக் கோயில் என்றும், புதிதாகக் கட்டப்பட்ட சிறு கோயிலை இளங்கோயில் என்றும் குறிப்பிட்டார். அப்பர் கண்ட இக்கோயில் பின் எங்கு காணப்பட்டாலும் இப்பெயர் நிலைத்துவிட்டது. எடுத்துக் காட்டாக கொகுடிக் கோயில் வேப்பமரத்தின் கீழ்காணப் பட்டாலும் கொகுடிக் கோயில் என்றே கூறப்பட்டு வந்தது. அப்பர் பெருமான் ஆனை கோயிலை ஆலக் கோயில் என்று கூறியது தூங்கானை வடிவில் உள்ள கோயில் ஆலமரத்தடியில் காணப்பட்டது. அதை உள்ளத்திற் கொண்டே இதற்கு ஆலக் கோயில் என்று பெயர் சூட்டி விடவில்லை என்று எண்ணுகிறேன். நுண்மாண் நுழைபுலம் பெற்ற நாவுக்கரசர் நற்சிந்தனையில் எழுந்த சீரிய சிறப்புப் பெயராக இதை எண்ணுகிறேன். கஜப்பிருஷ்ட விமானக் கோயிலுக்கு தூங்கானை மாடக் கோயில் என்ற ஒரு நல்ல பெயர் இருக்க அப்பர் ஆலக் கோயில் என்று ஏன் பெயரிட வேண்டும் என்று என் உள்ளத்தைப் பல நாள் கலக்கி வந்தது. நீண்ட நாள் சிந்தித்த பின்தான் பின்வரும் முடிவிற்கு வந்தேன். அப்பர் அடிகள் கஜப்பிருஷ்ட விமானக் கோயிலை ஆலமரத்தின் அடியில் கண்டாரோ காணவில்லையோ நாம் அறியோம். அவர் கஜப்பிருஷ்டத்தை ஆலின்கீழ் கண்டார் என்பது வெறும் ஊகமே யொழிய உண்மையான - உறுதியான சான்றுகளோடு கூறும் முடிவல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். தமிழ்மக்கள் ஆதியில் மலைகளிலே - குறிஞ்சி நிலத்தில் தோன்றி அங்கேயே நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என்று வரலாற்றறிஞர் கூறுகிறார்கள். மலையிலே தோன்றி தமிழ் மக்களின் முன்னோர்கள் அவர்கள் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் காய்கனி களையும், நறுமணத்தை நல்கி உள்ளத்திற்கு இன்பந்தரும் மலர்களையும் தரும் மரங்களை வணங்கி வந்தனர். அப்பால் மரங்களின் அடியில் தங்கள் தெய்வங்களின் சின்னத்தை நட்டி வணங்கி வந்தனர். நீண்ட காலமாகத் தமிழர்கள் ஆலமரத்தடியிலும் வேல மரத்தடியிலும் வேங்கை மரத்தடியிலும் புங்கமரத்தடியிலும் திருஉருவங்களை வைத்து வணங்கி வந்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன் - அதாவது அப்பர் பெருமான் காலத்திற்குமுன் கோச் செங்கணான் காலத்தில் ஆறாவது நூற்றாண்டிலே தமிழகத்தில் பெருங்கோயில்களும் மாடக் கோயில்களும் சுடுமண்ணால் கட்டப் பெற்று விட்டன. இந்த ஆலக்கோயில் 5-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே மிகச் சிறிய வடிவில் ஆனைக் கோயிலாகத் தஞ்சை மாவட்டத்திலும் தென் ஆற்காடு மாவட்டத்திலும் துளிர்க்க ஆரம்பித்துவிட்டன. ஆலக் கோயில் ஆரம்பத்தில் சிறிதாக அரும்பி அப்பால் ஒவ்வொரு நூற்றாண்டிலும் அபிவிருத்தி அடைந்து புதிய புதிய நிலைகளைக் கடந்துள்ளது. இதன் அபிவிருத்தியை ஐந்துகட்டமாகப் பிரிக்கலாம். விமானமின்றி யானை பூமியில் படுத்துக் கிடப்பதுபோல் காணப்படும் அரை வட்டமான கோயில் அமைப்புள்ள ஆலக்கோயில் முதற்கட்ட மாகும். அப்பால் சிறு விமானமுள்ள அரை வட்டவடி வமுள்ள தூங்கானை மாடக் கோயில் இரண்டாவது கட்டமாகும். அதன்பின் கீழே நீண்ட சதுரமான திருவுண்ணாழிகையும் அதன்மீது கொஞ்சம் சிறுத்து உயர்ந்த அரைவட்ட வடிவுள்ள கழுத்தும் அதன் மேலே அகன்ற கழுத்தைவிடச் சற்று பெரிதான அரைவட்ட வடிவமுள்ள சிகரம் உள்ள அரைவட்ட வடிவமான தூங்கானை மாடமுள்ள கோயில் எழுந்தது மூன்றாவது கட்டமாகும். சிறு விமானங்கள் இரண்டு மூன்று மாடங்கள் உடையதாய் அடிப்படையில் இருந்து உச்சிவரை அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட ஆலக் கோயில் 4வது கட்டமாகும். அடிப்படையிலிருந்து உச்சி வரை 4,5 மாடங்களை அரைவட்ட வடிவமாக அமைந்தது ஆலக் கோயிலாகும். இதுதான் இறுதிக் கட்டம் உள்ளது எழில் வாய்ந்த தூங்கானை மாடக் கோயிலாகும். முதற்கட்டமான கோயிலில் விமானம் எதுவும் இல்லை. கோயிற் கட்டிடத்தின் மேற்றளம் யானை முதுகு போல் பின்பக்கம் வளைவாய் கூரையின் உச்சிகுவிந்து இருந்தது. அரை வட்டமான அடிப்படை மீதே அமைக்கப்பட்டுள்ளது. அகநாழிகைக் கட்டப்பட்டது இதனுள்ளே மூலவர் உருவம் உள்ளது. இதுவே திருவுண்ணாழிகையும் ஆகும். இம்முதற்கட்ட அமைப்புள்ள கோயிலை ஆலக்கோயில் என்றும் அப்பால் அபிவிருத்தி அடைந்து விமானமும் ஒன்றுக்கு மேற்பட்ட மாடமுள்ள விமானங்களையுள்ள கோயில் தூங்கானை மாடக் கோயில் என்று கூறுவது பொருத்த மானது என்று நான் எண்ணுகிறேன். ஆலக்கோயில் இங்கு சுடர்ப் பொருளாய் எழுந்தருளிய சுடர்க் கொழுந்தீசர் இலிங்க வடிவாய்க் காட்சி தரும் திருக்கோயில் ஆலக்கோயில் ஆகும். இதனை தூங்கானை மாடக் கோயில் என்றும் அருகே சௌந்திரேசுவரர் அமர்ந்திருக்கும் கட்டுமலைக் கோயில் என்றும் கூறப்படுகிறது. இதனை திருஞானசம்பந்தப்பிள்ளை. மண்ணார் முழவதிரும் மாடவீதி வயற்காழி ஞானசம்பந்தன் நல்ல பெண்ணாடகத்துப் பெருங்கோயில் சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானைமாடம் மேயோன் கண்ணார் கழல்பரவு பாடல் பத்துங் கருத்துரைக் கற்றாருங் கேட்டாரும் போய் விண்ணோ ருலகத்து மேவி வாழும் விதியதுவேயாகும் வினைமாயுமே என்று இருகோயில்களையும் ஒரு பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். பெரிய புராணப் பாடல் ஒன்றில் இதைத் தூங்கானை மாடம் என்றும் அப்பர் அடிகளின் தோளில் சூலக் குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பட்டதை குறிப்பிடப் பட்டுள்ளது. அது அடியில் வருமாறு: நீடுதிருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற ஆடகமே ருச்சிலையான் அருளாலோர் சிவபூதம் மாடொருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில் சேடுயர்மூ விலைச் சூலம் சினவிடையி னுடன் சாத்த என்ற செய்யுளின் மூலம் இங்குள்ள கோயில் ஆலக் கோயில் என்று நன்கு தெரிகிறது. ஆனால் பாக்களில் தூங்கானை மாடக் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு காணப்பெற்ற ஆலமுற்றத் தில் அமர்ந்துள்ள இலிங்கத்தின் அருகில் வெள்ளையானை நின்று பூசித்ததால் யானையின் நான்கு கால்களும் தூண்களாகும். அதன் அடிப்பாகம் திருவுண்ணாழிகையாகவும் நான்கு கால்களுக்கு மேல் உள் யானையின் உடற்பாகம் விமானமாகவும் கருதி முதலில் இதற்குத் தூங்கானை மாடக் கோயில் என்று புலவர்கள் பாடி இருக்கலாம். மாடக் கோயில் எழாத முற்காலத்தில் யானையின் வடிவாய்த் திருவுண்ணாழிகை அமைத்திருக்கலாம். அதனைத் தூங்கானை மாடக் கோயில் என்று கூறியிருக்கலாம் என்று எண்ணுகிறேன். மேலும் அக்காலத்தில் ஆனைக் கோயில் - அதாவது ஆலக்கோயில் என்று கூறும் விமானம் இல்லாத கோயில்தான் எழுந்தது எனவே அதை ஆலக்கோயில் என்றோ தூங்கானை மாடக் கோயில் என்றோ கூறுவதில் எவ்விதப் பேச்சுக்கும் இடம் இல்லை. பிற்காலத்தில் ஆலக்கோயில் மீது ஒன்று இரண்டு மூன்று விமானங்கள் அமைத்து கோயில் எழுப்பிய போதே ஆலக்கோயில் என்றால் மாடங்கள் இல்லாத கோயில் என்றும் தூங்கானை மாடக் கோயில் என்றால் ஒன்றிற்கு மேல்பட்ட விமானங்கள் அமைத்து மேலே யானை தூங்குவது போன்ற உருகாணப் படவேண்டும் என்று தமிழ்நாட்டுச் சிற்பிகள் ஆலக்கோயிலில் இருபிரிவுகளை ஏற்படுத்தினர். ஆனால் இன்றும் சிற்பநூற்களில் இருவித கோயில் களையும் கஜப்பிருஷ்டம் என்றே கூறப்படுகின்றது. எனது கருத்துகளை ஆதரித்து கல்வெட்டு, செப்பேடு ஆகியவைகளைப் பற்றி நன்கு ஆராய்ந்தறிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பெரும்புலவர் உயர்திரு டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் தமது நூலிற் குறிப்பிட்டுள்ளார். கருவறையின் மேலே யானையின் முதுகுபோன்ற வடிவில் கட்டப்பெற்ற விமானத்தையுடைய கோயில் ஆலக்கோயில் என்று கூறப்படும். ஆனால் கருவறையின் மேல் இரண்டு மூன்று மாடங்கள் அமைத்து அதன் மீது யானையின் முதுகுபோன்ற வடிவில் விமானம் அமைத்திருந்தால் அதைத் தூங்கானை மாடக் கோயில் என்று கூறப்படும். ஆனால் சிற்ப நூற்களில் இவ்விரண்டு விதக் கோயில் களையும் கஜப்பிருஷ்ட விமானக் கோயில் என்றே கூறப்படும் என்று எடுத்துக்காட்டியுள்ளார்கள்.1 அவரது கருத்து மிக மிகச் சரியென்றே நான் கருதுகின்றேன். ஆலக் கோயில்களும், தூங்கானை மாடக் கோயில்களும் சோழர் ஆட்சி காலத்திலும், பல்லவர் ஆட்சி காலத்திலும் பலப்பல எழுந்துள்ளன. இவைகள் சோழர்பாணி பல்லவர்பாணி என இருவகையாய்ப் பிரிந்துள்ளன என்றாலும் கோயில்களைப் போலன்றி இந்தக் கோயில் அமைப்புகள் காலத்திற்குக் காலம் வளர்ந்து பல கட்டங்களைத் தாண்டி அணி பெற்றிலங்குகின்றன. கோயில்களின் பெயர்கள் அதன் கூரை அமைப்பை -அதாவது விமான அமைப்பே வைத்தே தீர்மானிக்கப்படும். தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் சதுரம் அல்லது நீண்ட சதுரவடி வாகவே இருக்கும். முற்காலத்தில் கோயில் என்று கூறப்பட்டது திருவுண்ணாழிகையையும் அதைச் சார்ந்த அர்த்த மண்டபமுமே யாகும். நாம் இங்கு ஆராயும் ஆலக்கோயில் அரைவட்டமும் நீண்ட சதுரமும் அமைந்த வடிவம் உள்ளதேயாகும். இன்று நாம் கோயிலாகக் கருதும் பலமண்டபங்களும், பிரகாரங்களும் முற்காலத்தில் கிடையாது. மக்கள் காற்றிலும் வெய்யிலிலும் மழையிலும் தாக்குண்டு இன்னற்படாது இறைவனை வழிபடப் பிற்காலத்தில் கோயிலை - அதாவது திருவுண்ணாழிகையும் அதன் மேலுள்ள விமானமும் தெரியவொட்டாது மறைத்து கற்களைப்பாவி உட்பிரகாரம் வெளிப்பிரகாரம் நூற்றுக்கால் மண்டபம் ஆயிரக்கால் மண்டபம், திருமண மண்டபம், வசந்த மண்டபம், முகமண்டபம், மகா மண்டபம் என அமைத்து மக்கள் கோயிலையும் விமானத்தையும் நன்றாகக் கண்டு வழிபட முடியாது செய்துவிடப்பட்டது. மாடக் கோயில் என்றால் மாடி போல் அமைந்த கோயில் என்று பொருள் ஒன்றின் மீது ஒன்றாக ஒன்பது மாடிகளையுடைய கோயில்களைப்பற்றிச் சிற்பநூற்கள் கூறுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழகத்தில் மாடக் கோயில்கள் எழுந்து விட்டன. பெண்ணாடகத்து சுடர்க் கொழுந்தீசுவரர் கோயில் மேற்பகுதி - அதாவது கூரை அல்லது விமானம் என்று கூறப்படுவது ஒரு யானைபடுத்திருப்பது போன்று அமைக்கப் பட்டது. இக்கோயில் பூமியிலிருந்தே அரைவட்டமும் நீண்ட சதுரமும் இணைந்த வடிவில் அடிப்படையிட்டு மேலே யானைமுதுகு போன்ற கூரை அமைக்கப் பட்டது. எனவே இதனை நாம் ஆலக்கோயில் என்று கூறுகிறோம். தூங்கானை மாடக் கோயில் என்று இதனைக் கூறுவதற்கில்லை. ஏனெனில் இக்கோயிலுக்கு மாடமே இல்லை. நமது சமயப் பெரியார்கள் காலத்தில் ஆலக்கோயில் என்றும் மாடக் கோயில் என்றும் பிரிவு எழாததால் ஆனை வடிவமுள்ள கோயிலை தூங்கானை மாடக் கோயில் என்றும் ஆலக் கோயில் என்றும் அழைத்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். அரைவட்டக் கோயில்கள் அரைவட்டக் கோயில்கள் நான்கு விதமாகக் காணப்படு கின்றன. (1) மாடம் இல்லாத அரைவட்டக் கோயில் (2) மாடம் உள்ள அரை வட்டக் கோயில் (3) நீண்ட சதுர அரைவட்டக் கோயில் (4) மாடம் இல்லாத அரைவட்டக்கோயில். மாடம் இல்லாத அரைவட்டக் கோயில் மாடம் இல்லாத அரைவட்டக் கோயில்கள் தமிழகத்தில் ஒரு சிலவைகள் தான் உள்ளன. அப்பர் அடிகள் தம் தேவாரத் திருப்பதிகத்தில் மாடம் இல்லாத அரைவட்டக் கோயிலை ஆலக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். முற்காலத்தில் இவ்விதமான அரைவட்டக் கோயில் யானைபடுத்திருக்கும் பாணியிற் செய்யப்பட்டதால் இது யானைக் கோயில் என்று அழைக்கப்பட்டது. அப்பர் அடிகள் கண்ட மாடமற்ற யானைக் கோயில் ஆலமரத்தடியில் இருந்ததால் அதை அவர் ஆலக்கோயில் என்று தம் தெய்வப் பாசுரங்களில் பாடி இருக்கவேண்டும். இது எனது சொந்தக் கருத்து. அப்பர் மாடமில்லாத அரைவட்ட யானைக் கோயில்தான் ஆலக் கோயில் என்று பாடப் பெற்றுள்ளது. மாடம் உள்ள ஆனைக் கோயிலை தூங்கானை மாடக் கோயில் என்று பாடியுள்ளார். செங்கற்பட்டிற்கு அண்மையில் உள்ள திருக்கச்சூரில் உள்ள ஒரு கோயிலை சுந்தரர் தம் தேவாரத் திருப்பதிகத்தில் ஆலக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். அது அடியில் வரும் பாவால் தெரிய வருகிறது. முதுவா யோரி கதறமுத காட்டெரிகொண்டாடல் முயல்வானே மதுவார்கொன்றைப் புதுவீசூடும் மலையான் மகன்தன் மணவாளர் கதுவாய்த் தலையிற் பலநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. திருக்கச்சூரில் உள்ள விருந்திட்ட ஈசுவரரும் உமை அம்மையும் குடிகொண்டிருக்கும் மாடம் இல்லாத ஒரு சிறு கோயிலைத்தான் தேவாரத்தில் ஆலக்கோயில் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மாடம் உள்ள ஏனைய ஆனைக்கோயில்களை யெல்லாம் தூங்கானை மாடக் கோயில் என்றே குறிப்பிடப் பட்டுள்ளன. திருவாரூரில் உள்ள பெருமானை அப்பர் அடிகள் சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற்றானைச் சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை என்று போற்றுகிறார். திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருக் கடந்தை என்னும் ஊரிலுள்ள சுடர்க்கொழுந்தீசர் குடிகொண்ட கோயிலை துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே என்று புகழ்ந்தேத்துகின்றார். இதனால், ஆலக்கோயில் என்றும் தூங்கானை மாடக் கோயில் என்றும் தேவார ஆசிரியர்கள் ஆனைக்கோயிலின் இருபிரிவுகளையே குறிப்பிடுகின்றார்கள் என்பது நன்குபுலப்படும். ஆலக்கோயில் திருவேற்காடு என்னும் ஊரில் ஒரு ஆலக்கோயில் இருக்கிறது. இவ்வூர் சென்னை (சென்டிரல்) அரக்கோணம் புகைவண்டிப் பாதையில் உள்ளது. ஆவடி புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே 3 ½ கல் தொலைவில் பூவிருந்த வல்லிக்குப் போகும் வழியில் உள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வண்டியில் இவ்வூருக்குச் செல்லலாம். இங்குள்ள ஆலக்கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம் வேற்காட்டீசுவரர் என்று அழைக்கப்படுகிறார் தேவி, வேற்கண்ணி அம்மையார் என்று கூறப்படுகிறார். இவ்வூர் மூர்க்க நாயனார் பிறந்த புனிதத் தலமாகும். அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி நல்கிய இடம் என்று கூறப்படுகிறது. இங்குள்ள தல விருட்சம் வேலமரம் ஆகும். தலவிருட்சத்தின் பெயரால் இவ்வூர் திருவேல்காடு என்ற பெயரைப் பெற்றுள்ளது. சுப்பிரமணியன் சூரனைக் கொன்றபின் சிவனை வழிபட்ட இடம் என்றும் கூறப்படுகிறது. இவ்வூருக்குச் செல்பவர்கள் கிழக்கேயுள்ள ஆற்றைக் கடந்தால் இந்தத் தலத்தை அடையலாம். திருவேற்காடு ஆலக் கோயில் ஆனைக் கோயிலாகத்தான் காணப்படுகிறது. இக்கோயிலைப் பார்ப்பவர்கள் உண்மையிலேயே ஒரு யானைபடுத்திருப்பதாகவே எண்ணுவார்கள் இங்கு இணைத் திருக்கும் நிலை அக் கோயிலின் படமும் அதை மெய்ப்பிப்பதாகக் காணப்படுகிறது. இது சிறிதும் மிகையன்று. இது மாடம் இல்லாத கோயிலாக இருப்பதால் யானைக் கோயில் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். இத்தகைய கோயிலைத் தான் தேவார ஆசிரியர்கள் ஆலக் கோயில் என்று பாடியுள்ளார்கள். இதைத் தூங்கானை மாடக் கோயில் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. ஆனால் கஜபிருஷ்டக் கோயில் என்று கூறலாம். இத்தகைய மாடம் இல்லாத ஆலக் கோயில் பல தமிழகத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. தூங்கானை மாடக் கோயில் தமிழ்நாட்டில் எண்ணற்ற தூங்கானை மாடக் கோயில்கள் உள்ளன. பாண்டிய நாட்டில் நான் தூங்கானை மாடக் கோயிலைப் பார்த்ததில்லை. பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற தூங்கானை மாடக் கோயில் ஒன்றும் இல்லை. ஆனால் சோழநாட்டில் பல தூங்கானை மாடக் கோயில்கள் உள்ளன. திருச்சி மாவட்டத்தில் விருத்தாசலம் - திருச்சி இருப்புப்பாதை மார்க்கத்தில் பெண்ணாடகம் புகைவண்டி நிலையம் உள்ளது. புகை வண்டி நிலையத்தினின்று பெண்ணாடகம் என்னும் ஊர் 1- கல் தொலைவில் உள்ளது. இவ்வூரை திருக்கடந்தை ஊர் என்றும் கூறப்படும். இவ்வூர் பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள சிவபெருமான் சுடர்க் கொழுந்தீசர் என அழைக்கப்படுகிறார். தேவி கடந்தை நாயகி என்று போற்றப் படுகிறார். தேவகன்னியர் காமதேனு, வெள்ளையானை இந்த இடத்தில் இறைவனைப் பூசித்ததால் பெண்ணாடகம் என்று பெயர் வந்தது. இவ்வூர் அப்பர் அடிகளால் பாடல் பெற்ற தலமாகும். அவர் திருப்பதிகம்பாடி தோளில் சூலக் குறியும் இடபக்குறியும் பெற்றார் என்று அவரது வரலாறு கூறுகிறது. இங்கு தூங்கானை மாடக் கோயிலும் (கஜபிருஷ்ட விமானக் கோயிலும்) பெருங்கோயிலும் (ஸ்ரீவிலாசமும்) உள்ளன. அப்பர் அடிகள் இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பாடி பூதம் ஒன்றின் மூலம் இடபக் குறியும் சூலமுத்திரையும் தம் தோளில் பொறிக்கப்பெற்றார். அதனை அவரது பாடல் அடியில் வருமாறு மெய்ப்பிக்கிறது. பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே - (அப்பர் தேவாரம்) என்பதாகும் இந்த ஊரில் உள்ள தூங்கானை மாடக் கோயிலை சமபந்தப் பிள்ளையாரும், தொடங்கும் கடந்தைத் தடங் கோயில் சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே (சம்பந்தர் தேவாரம்) என்று பாடியுள்ளார். மாடம் இல்லாத அரைவட்டக் கோயில்கள் தமிழகத்தில் சில உள்ளன. அவை ஆதியில் ஆனைக் கோயில் என்று அழைக்கப் பட்டன. அப்பால் ஆனைக்கோயில் என்பது மருவி ஆலைக் கோயில் என்று ஆயிற்று என்றும் சிலர் கருதுகிறார்கள். அரைவட்டமாடக் கோயில் செங்கற்பட்டிற்கு அண்மையில் உள்ள ஒரகடம் என்னும் ஊரில் உள்ள வடமலேசுவரர் கோயிலை அரைவட்ட தூங்கானை மாடக் கோயில் என்று கூறலாம். இது கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் கருவறை அரைவட்ட வடிவாக அமைந்திருப்பதோடு கருவறையின் முன் அர்த்த மண்டபமும் (இடைநாழிகையும்) உள்ளது. மேலே அழகிய சிறு கஜபிருஷ்ட விமானமுள்ளது. விமானத்தின் முன்புறம் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. இது ஒரு நிலை விமானத்தை யுடையதாக மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் அரைவட்ட வடிவான அகநாழிகைப்படம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. திருக்கச்சூர் - ஆலக்கோயில் திருக்கச்சூர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது. சென்னை - செங்கற்பட்டு இருப்புப்பாதையில் உள்ள சிங்கப் பெருமாள் புகைவண்டி நிலையத்திலிருந்து 1½ கல் தொலைவில் திருக்கச்சூர் உள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வண்டிகள் மூலமும் திருக்கச்சூருக்குப் போகலாம். இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவர் பெயர் விருந்திட்ட ஈசுரர். தேவியின் பெயர் உமையம்மை. இது பாடல் பெற்ற திருத்தலம். சைவ சமய நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தரர் இங்கு போந்து இங்குள்ள ஆலக்கோயிலில் அமர்ந்திருக்கும் இறைவனை வழிபட்டுப் பதிகம் பாடியுள்ளார். அது அடியில் வருமாறு: முதுவாயோரி கதறமுதுகாட் டெரிகொண்டாடல் முயல்வேனே மதுவார் கொன்றைப் புதுவீசூடும் மலையான் மகன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக் கண்டாலடியார்கவலாரே அதுவே யாமா றிதுவோகச் சூர் ஆலக் கோயிலம்மானே இப்பாட்டின் மூலம் இக்கோயில் ஆலக்கோயில் என்று நாம் திட்டவட்டமாக அறியலாம். ஆலக் கோயில் எப்படி இருக்கும் என்பதற்கு இக்கோயில் நல்ல எடுத்துக்காட்டாக இலங்குகிறது. இது ஆலக் கோயில் என்பதற்கு சுந்தரமூர்த்தி நாயனாரே உறுதி கூறுகிறார். சம்பந்தர் பெண்ணாடகம் (திருக்கடந்தை) சுடர்க் கொழுந்தீசுவரர் கோயிலை தூங்கானை மாடக் கோயில் என்று தம் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது திருப்பதிகத்தில் தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடந்தொழுமின்களே என்று கூறுகிறார். அதற்கு முத்திரை வைத்தாற் போன்று அப்பர் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே என்று பாடியுள்ளார். ஆகவே நாயன்மார்கள் திருப்பதிகங்களில் கஜப்பிருஷ்ட விமானக் கோயில் சிலவற்றை ஆலக்கோயில் என்றும் சிலவற்றை தூங்கானை மாடக்கோயில் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள் என்பது ஆராயத்தக்கது. பெண்ணாடகம் ஆலக்கோயில் தமிழ்நாட்டில் கோயில் பல இருந்தாலும் சமய குரவர்களால் பாடல் பெற்ற இடங்களை மக்கள் சிறப்பானதாக மதிப்பார்கள். அவ்வாறு தேவாரப் பாடல்பெற திருத்தலங்கள் 274 உள்ளன. அவைகளில் நடுநாட்டில் உள்ள 22 தலங்களில் பெண்ணாடகம் சிறப்புமிக்கது. இது தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் வட்டத்தில் நிவா ஆறு என்னும் வெள்ளாற்றின் வடகரையில் உள்ளது. திருச்சி விழுப்புரம் புகை வண்டிப் பாதையில் பெண்ணாடகம் புகை வண்டி நிலையத்தினின்று ஒன்றரைக் கல் தொலைவில் கோயில் இருக்கிறது. விருத்தாசலம் - பெரம்பலூர் பேருந்து வண்டி செல்லும் மார்க்கத்தில் விருத்தாசலத்திலிருந்து 11-கல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு திருக்கடந்தை, தூங்கானை மாடம், கயராசபதி, புட்பவனம், புட்பாரண்ணியம், மகேந்திரபுரம், பார்வதிபுரம் என்று பலபெயர்கள் உள்ளன. இத்தலத்தில் தேவலோகப் பெண்களும் காமதேனுவும் வழிபட்டதால் பெண்ணாடகம் என்றும் வெள்ளை யானை வழிபட்டதால் திருக்கடந்தை கயராசபதி என்றும் யானை படுத்திருப்பதுபோல மாடம் உள்ளதால் தூங்கானை மாடம் என்றும் பெயர் வந்ததாம். தேவலோகத்து யானை விமானமாக நின்று வழிபட்டதால் தூங்கானை மாடம் என்று பெயர் வந்தது என்று தலப்புராணம் கூறுகிறது. தல விருட்சம் சண்பகமரமாகும். இக்கோயில் 460 அடி நீளமும் 380 அடி அகலமும் உள்ள நிலத்தில் சுற்றிலும் திருமதில் எழுப்பப்பெற்று நடுவில் கோயில் இருக்கிறது. கிழக்கு நோக்கிக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வாயிலில் கோபுரம் இல்லை. இரண்டாவது வாயிலில் சிறு கோபுரம் உள்ளது. உள்ளே இரு சிறு கோயில்கள் உள்ளன. முதலில் மூல இலிங்கம் அமைந்துள்ள ஆலக்கோயிலும் அதன் அருகே கட்டுமலைமேல் அமைந்துள்ள இலிங்கம் உள்ள பெருங்கோயிலும் உள்ளன. கோயிலுக்குப் பின்புறமுள்ள மாடங்களில் விநாயகர் முதலிய தெய்வங்கள் உள்ளன. பிரதான நந்தி கிழக்கு நோக்கி இருக்கிறது. வடபக்கம் அம்மன் சந்நிதி உள்ளது. மூல இலிங்கம் இருக்கும் கோயில் யானை நிற்பது போல் அமைக்கப்பட்டு மேலே ஏழு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் நான்கு சாளரங்கள் உள்ளன. தலச்சிறப்பு இத்தலம் பெண்ணாடகம் என்னும் பெயரைப் பெற்றது பெருமைக்குரியது. இத்தலம் தெய்வலோகப் பெண்களும் காமதேனுவும் வெள்ளையானையும் பூசித்ததால் பெண்+ஆ+கடம் அதாவது பெண் கந்தருவப்பெண்+ஆ காமதேனு என்னும் பசு+கடம் வெள்ளை யானை என்னும் கருத்தமைத்துப் பெயர் சூட்டப்பெற்றுள்ளது. மூல இலிங்கம் பிரணவச் சுயம்பு வடிவம் இறைவனருளால் நந்தி, பிரளய வெள்ளத்தை உண்டதால் மூர்த்திக்கு பிரளயம் காத்த ஈசுவரர் என்று பெயர் எழுந்தது. இத்திருத்தலம் சமய குரவர்கள் இருவர்களால் பாடல் பெற்ற தலம். சமய குரவர்களில் முதலியவரும் சகலகலாவல்லரும் பகைவர்களின் அக்கினிப் பரீட்சையிலும் அஞ்சாது அழியாது குறைவுறாது எழுந்த சைவப் பசும் பொன்னாக எழுந்தவர் திருநாவுக்கரசர். இவரை சிவனடியார் என்பதை ஏற்று இவர் உடலில் சூலக்குறியும் இடபக் குறியும் இத்தலத்தில்தான் இறைவனால் பொறிக்கப்பட்டது என்று சைவசமய நூற்கள் கூறுகின்றன. திருநாவுக்கரசர் இத்திருத்தலம் போந்து பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல் மின்னாடு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே என்று பாடியுள்ளார். இதன் மூலம் இவ்வூரில் திருநாவுக்கரசர் சிவபெருமானால் கையில் சூலமும் இடபமும் குறியாக பொறிக்கப் பட்டார் என்றும் இக்கோயில் ஆலக்கோயில் என்பதும் நன்கு தெரிகிறது. இவரைப் போன்றே சம்பந்தரும் இங்கு போந்து இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு, கல் சூ ழரக்கன் கதறச் செய்தான் காதலியுந் தானும் கருதிவாழும் தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே! பாடியுள்ளார். இவரது பாடலும் இக்கோயில் ஆலக்கோயில் என்பதை வலியுறுத்துகிறது. கலிக் கம்ப நாயனாரும், சந்தான குரவராகிய மெய்கண்ட தேவரும் மறைஞான சம்பந்தரும் பிறந்த இடம் பின்னவர் இருவருக்கும் இங்கு மடங்கள் உள்ளன. இக்கோயில் சேது பந்தன மகராசனால் திருப்பணி செய்யப் பெற்றுள்ளது. இங்கு பல கல்வெட்டுகள் உள்ளன. மூலவருக்கு அதாவது ஆலக்கோயில் அமர்ந்துள்ள அரனார்க்கு சுடர்க் கொழுந்தீசர், பிரளய காலேசுவரர், கைவழங்கீசர் என்றும் கட்டு மலைக் கோயிலில் - பெருங்கோயிலில் எழுந்தருளி இருக்கும் பெருமானுக்கு சௌந்தரேசுவரர் என்றும் பெயர் உண்டு. அம்மனுக்குக் கடந்தை நாயகி அழகிய காதலி அம்மை, ஆமோதனாம்மாள் என்னும் பெயர்கள் உள்ளன. ஊருக்கு மேற்கே பரிமள ரங்கநாதர் என்னும் திருமால் கோயில் உள்ளது. இக்கோயில் 5-வது நூற்றாண்டிற்கு முன் கட்டப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் 7-வது நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சம்பந்தர் ஆகிய சமயகுரவர்களின் பாடல் பெற்றதலமாக இருப்பதால் உறுதியாக ஏழாம் நூற்றாண்டிற்கு முன் தோன்றிய கோயிலாக நம்பலாம். இக்கோயில் 11-ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் பொறிக்கப்பட்ட பல கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளால் இவ்வூர் சோழர்களின் ஆட்சியிலும் பாண்டியர்கள் ஆட்சியிலும் இருந்ததாகத் தெரிகிறது. இந்தக் கோயில் சுவர்களிலும் தூண்களிலும் பெருமாள் கோயிலிலும் 40 கல்வெட்டுகள் உள்ளன. இவைகள் 1928-29-ஆம் ஆண்டுகளில் அரசாங்கக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையினரால் படி எடுக்கப் பெற்று தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி 2-வது பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இவ்வூர் பெண்ணாடகம் என்றும் முடிகொண்ட சோழ மண்டலம் என்றும் இறைவன் பெயர் திருத்தூங்கானை மாடத்துடையார் என்றும் இக்கோயில் கஜப்பிருஷ்ட விமானம் என்று கூறப்பட்டுள்ளது. பெண்ணாடகத்து ஆலக்கோயில்1 மிகத் தொன்மையாது பிற்காலத்தில் எழுந்த தூங்கானை மாடக் கோயிலைப் போல் அத்துணை அழகுடையதாக இல்லை. சிற்பங்களும் கரடு முரடாகவே காட்சி அளிக்கின்றன. மிக நுட்பமான வேலைப் பாடுகள் அதிகம் இல்லை. திருவுண்ணாழிகையில் (கருவறையில்) சாளரங்கள் உள்ளன. பின்புறம் ஒரு சிறுமாடம் அமைத்து அதில் பிள்ளையாரின் படிமம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. கோயில் முழுவதும் செங்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று சிற்ப நூற்கள் கூறுகின்றன. கஜபிருஷ்டம் அல்லது ஹதிபிருஷ்டம் என்னும் கோயில் யானையின் முதுகு போன்ற வடிவில் விமானம் உடையதாய் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கஜம் அல்லது ஹதி என்பது யானை என்றே பொருள்படும் பிருஷ்டம் என்பது பின்பாகம் என்று பொருள்படும். மகாபலிபுரத்திலுள்ள சகாதேவ இரதம் என்னும் ஒற்றைக் கல் கோயில் மூன்று நிலைகளையுடைய மாடக் கோயில் ஏன்? மாடக் கோயிலும் ஆலக் கோயிலு மாகும். தெளிவாகக் கூறுவதானால் இது தூங்கானை மாடக் கோயிலாகும். சிலர் ஆலக்கோயில் என்றால் ஆலமரத்தினால் கட்டப்பட்ட கோயில் என்று கூறுகிறார்கள். இது தவறு ஆலமரம் கட்டிடம் கட்டுவதற்குரிய அவ்வளவு உறுதியான மரமன்று அதை வைத்து கட்டிடம் கட்டும் வழக்கமும் கிடையாது. பெண்ணாடகத்து ஆலக்கோயில் ஒருமுரட்டு யானை படுத்திருப்பது போல் - தெளிவாகச் சொன்னால் ஆப்பிரிக்கக் காட்டுயானை படுத்திருப்பது போல் காணப்படுகிறது. இதில் எவ்விதச் சிற்பச் சிறப்பும் காணப்படவில்லை. இந்தக் கோயில் அமைப்பைத் தழுவியே திருவேற்காடு போன்ற பழம்பெரும் கோயில்கள் காணப்படுகின்றன. தொலைவில் நின்று பார்த்தால் நிலத்தின் மீது ஒருபெரும் யானை படுத்திருப்பது போல் காணப்படுகிறது. பெண்ணாடகத்து ஆலக்கோயிலின் முன்புற அமைப்பும் அத்துணை அழகுடையது என்று சொல்வதற்கு இல்லை. இத் திருக்கோயில் சுமார் 1500-ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருந்தாலும் பழுதின்றி நன்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இது ஆலக்கோயில் அமைப்பில் முதற்கட்டத் தில் எழுந்த கோயிலாகும். திருவேற்காடு ஆலக்கோயிலாகும் இந்தக் கட்டத்தில் சேர்த்து எண்ணக் கூடியதாகும். திருத்தணி - தூங்கானை மாடக் கோயில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் மாவட்டத்தில் - அரக்கோணம் - இரேணு கொண்டா புகை வண்டி மார்க்கத்தில் திருத்தணி என்னும் ஊர் உள்ளது. குன்று தோறாடல் எனப்படும் முருகன் திருவிளையாடல் புரியும் மலைகளில் இவ்வூர் மலையும் ஒன்று முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடு திருத்தணி என்று கூறப்படும். இங்குள்ள முருகன் கோயில் மலைமீது மாண்புற அமைந் துள்ளது. மரங்களும் செடி கொடிகளும் அடர்ந்து இயற்கைக் காட்சி எழில்பெற்றிலங்கும் சூழ்நிலையில் முருகன் கோயில் அமைந் துள்ளது. ஆனால், நாம் இங்கு முருகன் கோயிலைப் பற்றி ஆராய முன்வரவில்லை. நாம் இங்கு எடுத்துக்காட்ட விரும்புவது வீரட்டானேசுவரர் வீற்றிருக்கும் தூங்கானை மாடக் கோயிலை யேயாகும். இக்கோயில் ஒரு பாடல் பெற்ற கோயில் அல்ல. திருத்தணி தூங்கானை மாடக்கோயில், ஆலக்கோயிலின் அபிவிருத்தியில் மூன்றாவது நிலையை அடைந்துள்ளது. முதலாவதாக அடியிலிருந்து முடிவரை அரைவட்டக் கோயிலாக எழுந்த ஆலக்கோயில் சிறிது உயர்ந்த நிலையில் தெளிவான தூங்கானை மாடக் கோயிலாகத் துளிர்த்துள்ளது. அதோடு முன்னவர்கள் அரைவட்ட வடிவிலே அடிப்படையிட்டு வளர்த்து வந்த கோயில் இரண்டாவது நிலையில் மாடமும் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டது. இரண்டாவது நிலையிலே ஆலக்கோயில் தூங்கானைமாடக் கோயிலாக எழுந்தது. ஆனால் மூன்றாவது நிலையில் திருத்தணிக் கோயில் தெளிவான உருவில் தூங்கானை மாடக் கோயில் வடிவம் பெற்றுள்ளது. இதன் அடிப்படை அரைவட்ட வடிவில் இல்லாது நீண்ட சதுரவடிவில் இடப்பட்டு விமானம் சற்று சிறிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்விமானத்தின் முன்புற அமைப்பு திருவாசியின் அமைப்பினை யொத்து வெகு அழகாக அமைக்கப் பெற்றுள்ளது. முகப்பு சிறப்பான வேலைப்பாடுள்ளதாய் சிற்பநுட்பம் உணர்ந்தவர்கள் நன்கு சுவைக்குமாறு செய்யப்பட்டுள்ளது. திருத்தணியில் எழுப்பப் பெற்ற வீரட்டானேசுவரர் தூங்கானை மாடக் கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றது. இத் திருக்கோயில் திருவேற்காட்டில் இருக்கும் ஆலக் கோயிலைவிட அழகாக மிக எடுப்பாகக் காணப்படுகின்றது இது பல்லவர் பாணியில் பாங்குற எழுந்த ஓர் திருக்கோயிலாகும். நமது நாட்டில் எண்ணிக்கையில் அதிகமான கோயில்களை எழுப்பியவர்கள் சோழ மன்னர்களேயாகும். பாண்டிய மன்னர்களுக்கு தமிழ் வளர்த்தவர்கள்; எண்ணிலா இலக்கியங்களை வளர்த்தவர்கள்; என்று கூறப்படுவதைப் போல், சோழர்கள் சைவம் வளர்த்தவர்கள். எண்ணிலாக் கோயில் களை எடுப்பித்தவர்கள் என்று கூறும் பெருமைக்குரியவர்கள் ஆனால் பல்லவர்கள் நமது கட்டிடக் கலையில் ஒரு திருப்பத்தைக் கண்டவர்கள் அதிகமான கற்கோயில் களைக் கட்டிச் சிற்பக் கலைக்குச் செழுமையூட்டியவர்கள். ஆனால் எண்ணிக்கையில் சோழர்களோடு போட்டிபோட முடியாதவர்கள் என்று கூறமுடியும். ஆனால் சோழ நாட்டில் காணப்படும். தூங்கானை மாடக் கோயில் களை விட தொண்டை நாட்டில் அதிகமான தூங்கானை மாடக் கோயில்கள் உள்ளன. பல்லவர்கள் கட்டிடக் கலையில் வல்லவர்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அத்தகைய சான்றுகளில் ஒன்றாகத் திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைப்பையும் நாம் கூறமுடியும். பல்லவர்களின் பாங்கான நல் ஆட்சியினுடைய வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் எடுப்பிக்கப் பெற்ற எழில் மிக்க கோயில் இந்தத் திருத்தணித் தூங்கானை மாடக்கோயிலாகும். இக்கோயில் ஆகம விதிகளை அனுசரித்து சிற்ப விதிகளைச் சீர்பெறச் சிந்தித்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோயில் அமைப்பு இத்திருக்கோயிலின் திருஉண்ணாழிகை (கருவறை) நீண்ட சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலே விமான அரைவட்ட வடிவமும் நீண்ட சதுரமும் இணைந்தாற் போன்று தூங்கானை விமானமாகக் கட்டப்பட்டுள்ளது. விமானம் 14 ½ சதுர அடியாகும். திரு உண்ணாழிகையின் உள்ளே நடுவில் ஒரு இலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திருவுண்ணாழிகையில் பலகணிகள் எதுவும் இல்லை. கிழக்கு நோக்கி ஒரு சிறு வாயிலும் முன்புறம் ஒரு சிறு மண்டபமும் காணப்படுகிறது. புதுச்சேரியில் இருந்த பிரஞ்சுப் பேராசிரியர் ஜி.ஜோவியோ துபரயல் அவர்கள் நமது கோயில்களின் அமைப்பைப் பற்றி நாம் நன்கறியாதிருந்த காலத்தில் முதன்முதலாக 1911-ம் ஆண்டில் இந்தியத் தொல்பொருள் என்னும் திங்கள் இதழில் ஆங்கிலத்தில், திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் ஓர் அற்புதமான சிற்பப்படைப்பு என்றும் கஜபிருஷ்ட விமானக் கோயிலுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகிறது என்றும் எடுத்துக்காட்டினார். அதன்பின் திராவிடச் சிற்பச் சிறப்பைச் சீர்பெற ஆராய்ந்து திராவிடச் சிற்பக் கலையின் மாட்சியைப் பற்றியும் பல்லவர்களின் விலைமதிக்க ஒண்ணாத கலைப் பணியைப் பற்றியும் ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் பல நூற்கள் எழுதி ஐரோப்பாவில் திராவிடச் சிற்பக் கலைக்கு ஒரு பேரும் பெருமை வந்தடையுமாறு செய்தார். அவரது அரிய நூற்களில் திருத்தணி தூங்கானை மாடக் கோயிலைப் பற்றிய ஆராய்ச்சி நிறைந்த பல்லவர்கள் தொல்பொருள் என்னும் கலைக் கருவூலமும் ஒன்றாகும். இது 1918-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளது. மாமல்லபுரம் மாதிரிக் கோயில் (கஜபிருஷ்ட விமானம்) மாமல்லபுரத்தில் ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்ட சகாதேவன் இரதம் என்று கூறப்படும் கட்டிட அமைப்பு தூங்கானை மாடக் கோயிலுக்கு மாதிரியாக (மாடலாக) அமைக்கப்பட்டதாகும். மாமல்லபுரத்தில் எழுப்பப் பெற்ற பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்று கூறப்படுபவைகளும் பிறவும் இரதங்கள் - மாதிரிக் கோயிலாகும். மாதிரிக் கோயில் என்றும் அழியாது இலங்க ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்டது. இதை மக்கள் வழிபடும் கோயிலாக இதை உருவாக்கிய மகேந்திரவர்மனோ அவன் மகன் நரசிம்மவர்மனோ எண்ணவில்லை. ஆதியில் பல்லவர்கள் கற்கோயிலை உருவாக்க முனைந்தபொழுது மற்றவர்களும் இதன் சிறப்பை எளிதில் அறிந்து கொள்ளுமாறு மாதிரிக்கோயிலாக மாமல்லபுரத்தில் சிற்ப விதிகளைத் தழுவி சிறந்த சிற்பிகளைக் கொண்டு சில பாறைகளைச் செதுக்கி நமக்குப் பல கருவூலத்தை என்றும் அழியாது நிலைப் பெற்றிலங்குமாறு செய்துவிட்டுச் சென்றனர். கலைக் கருத்தோடு மாமல்லபுரத்தில் பல்லவ பேரரசர்கள் உருவாக்கிய மாபெரும் மாதிரிக் கோயிலின் மாண்பையறியாது நாம் பஞ்சபாண்டவர்கள் இரதம் என்று இன்றும் கூறி வருகின்றோம். பஞ்சவர்களுக்கும் நமது சிற்பக் கலைக்கும் எள்ளளவும் தொடர்பில்லை இதை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம். மாமல்லபுரம், தூங்கானை மாடக் கோயிலின் மாதிரி அமைப்பு அரைவட்டவடிவில் குதிரைலாட அமைப்பில் காணப்படுகிறது. இந்த மாதிரிக் கோயில் கஜப்பிருஷ்ட விமானக் கோயிலின் அமைப்பிற்கு அடிப்படை என்பதை நன்கு தெரியும்படி இந்த மாதிரிக் கோயிலின் அருகே கல்லில் ஒருபெரும் யானையின் வடிவமும் செதுக்கி நிலைநாட்டியுள்ளார்கள். இந்த மாதிரிக் கோயிலின் திருவுண்ணாழிகை அமைப்பு நீண்ட சதுரமாகவும், அதன் மேலுள்ள விமானம் அதைவிடச் சிறிய நீண்ட சதுரமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் மூன்றாவது நிலையில் விமானம் யானைமுதுகு போன்ற வடிவிலும் அமைத்திருக்கிறார்கள். இதன் முன்புறத் தோற்றம் நன்றாகக் காணப்படுகிறது. இந்த மாதிரிக் கோயிலின் மேற்பகுதி கட்டிடக் கலையின் ஒரு சிறந்த அமைப்பாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மக்களின் கண்ணையும் கருத்தையும் கவுரும் கவினுறும் உருவில் அமைக்கப் பெற்றுள்ளது. பல்லவப் பார்வேந்தர்கள் பரம்பரை பரம்பரையாய்க் கட்டிடக் கலையை வளர்த்து வந்தவர்கள். சமணந்துறந்து சைவந் தழுவிய மாமன்னன் மகேந்திரவர்மன் சிற்பக்கலையைச் சீராகத் தெரிந்தவன். ஓவியக்கலையை ஒழுங்காக உணர்ந்தவன் இணையிலா இலக்கியங் களை கலக்கமறகற்ற அவனும் அவன் மகன் மாமல்லனும் தமிழ் நாட்டில் முதன்முதலாக இல்லாவிடினும் அதிகமான கற்கோயிலை எழுப்பியவர்கள் என்பதில் எவருக்கும் ஆட்சேபனை இல்லை. மாமல்லபுரத்து மலைகளை கலைகளாக ஆக்கியவர்கள். பல்லவ மன்னர்கள் பெற்ற கலை அறிவின் முதிர்ச்சியே மாமல்லபுரத்தைச் சிற்பங்கருவூலங்களாக்கின. எனவே பல்லவர்கள் எடுப்பித்த தணிகை மாடக் கோயிலும் கவின்பெரும் கலைச்சிறப்புடையதாய் மிளிர்கின்றன. தணிகை தூங்கானை மாடக் கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இடம் பெற்றிருக்கின்றார்கள். இவைப் பல்லவ மன்னன் இராசசிம்மன் காலத்தில் பெரிதும் போற்றப் பெற்ற சோமகந்த சுகாசன மூர்த்தியின் திருஉருவை நினைப்பூட்டுவதாக இருக்கிறது. அம்மையப்பர் உருவில் அமைக்கப் பெற்றிருக்கும் தணிகைக் கோயிற் படிமங்கள் பல்லவர்களின் படிமக்கலையின் சிறப்பையும் நாம் அறிவதற்கு ஏற்றதாய் இருக்கிறது. பல்லவ அரசர்களில் அபராஜிதவர்மன் (கி.பி. 872-890) இறுதியாக ஆட்சி செலுத்தியவன். திருத்தணிகைக் கோயில் இவனது இறுதிக்காலத்தில் எழுப்பப்பெற்றதாகும். எனவே திருத்தணிகைத் தூங்கானை மாடக் கோயில் பல்லவர்களின் இறுதியான கட்டிடக் கலை அமைப்பு என்று கூறலாம். திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோயில் பல்லவர்களின் கட்டிடக்கலை அமைப்பில் அபராஜிதன் பாணியில் அமைக்கப் பட்டது என்று சிற்பக்கலை வல்லுநர்கள் கூறுகின்றார்கள். பல்லவ அரசர்கள் கட்டிய கோயில் களில் அபராஜிதன் தனக்கென்று ஒரு புதிய பாணியை ஏற்படுத்திக் கொண்டவன் என்று கூறப்படுகிறது. பல்லவர்கள் கட்டிய கட்டிடங் களை சிற்ப வல்லுநர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். அது அடியில் வருமாறு: I கி.பி. 610 முதல் 640 வரை மகேந்திரவர்மன் பாணி II கி.பி. 640 முதல் 674 வரை மாமல்லன் பாணி III கி.பி. 674 முதல் 800 வரை இராஜசிம்மன்பாணி IV கி.பி. 800 முதல் 900 வரை அபராஜிதன்பாணி தொண்டை நாட்டில் பல்லவர்கள் ஆட்சி நிலவியது. காஞ்சிபுரம் தொண்டை நாட்டின் தலைநகராகவும் - கோநகரமாகவும் மாமல்லபுரம் துறைமுகப்பட்டினமாகவும் இருந்தன. காஞ்சி புரத்திலும் மாமல்லபுரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பெரும்பாலும் மேற்கண்ட நான்கு பாணிகளையும் தழுவிப் பலதளிகள் தளிர்த்துள்ளன. பல்லவர்கள் ஏழாவது நூற்றாண்டிலே சைவந்தழுவியவர்கள். அதற்குப் பின்னரே திராவிடச் சிற்பக்கலையின் நுட்பம் உணர்ந்தவர்கள். ஆனால் இருநூற்றைம்பது ஆண்டு களுக்குள் பல்லவர்கள் திராவிட சிற்பக்கலையில் மகோன்னத நிலையை எட்டிப்பிடித்து விட்டார்கள். தமிழக மன்னர்களில் சிற்பக்கலையைத் திறம்பட வளர்த்து எண்ணற்ற கோயில்களை பல நூற்றாண்டுகளாகக் கட்டி வளர்த்த பாரம்பரியத்துவம் வாய்ந்த சோழர்களைக் கூட பல்லவர்கள் பாணி பெரிதும் வசீகரித்து விட்டது என்று அறிஞர்கள் முடிடகட்டியுள்ளார்கள். அபராஜிதன் கண்ட அரிய பாணியை ஆராய்ந்த அறிஞர்கள் அவனது பாணியில் இராஜ சிம்மன்கண்ட சிற்ப நுட்பமும் இராசராசனின் கட்டிட கலைநுணுக்கமும் கலந்துள்ளதைத் தெளிவாகக் கண்டு களித்துள்ளார்கள். திருத்தணிக் கோயிலிலும் பல்லவர்கள் பாணியும் சோழர் பாணியும் இணைந்து எழுந்த அபராஜிதன் பாணியாய் 9-ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் துளிர்த்தெழுந்துள்ளது. இந்த தூங்கானை மாடக் கோயிலின் சிற்ப நுணுக்கத்தைப் பற்றி நமது மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரியவரான பேராசிரியர் ஜோவியோ துப்ரயல் அவர்கள் நன்கு ஆராய்ந்து அடியில் வருமாறு கூறியுள்ளார். அவர்கள்கண்ட உண்மைகள் முப்பது ஆண்டுகளுக்கு முந்தியது. அவர் நேரிற்கண்டு கலைநுட்பங்களை ஆய்ந்து அறிந்து சுவைத்து வெளியிட்ட உண்மைகளாகும். அவை அடியில் வருமாறு: திருத்தணிகையில் எழுந்துள்ள தூங்கானை மாடக் கோயிலின் கூடு, பழமையான பல்லவர்கள் கட்டிய இதர கோயில்களின் குவிந்து குடைபோன்று விளங்கும் கூடுகளைப் போல் காணப்படவில்லை. கூட்டில் புதிதாக ஒரு சிங்கத்தின் தலை திகழ்கிறது. இறுதியாக இராஜசிம்மப் பல்லவனுடைய பழம் பண்பைக் காட்டும் தலை நிமிர்ந்து உயர்ந்து நிற்கும் சிங்க உருவம் திருத்தணி தூங்கானை மாடக் கோயிலில் காணப்படவில்லை. தூங்கும் யானை உருவில் விமானம் எழுப்பிய ஆலக் கோயிலில் யானையின் கொடிய விரோதியாகிய சிங்கம் இருப்பது சிறப்பன்றென்றோ பொருத்த மன்று என்றோ சிற்பியின் சிந்தனையில் எழுந்துவிட்டது போலும் படிமக் கருத்தோடு பார்த்தால் வீரட்டானேசுரர் கோயில் பல விசேச அம்சங்களையுடையதாய் இருக்கிறது என்று கூறமுடியும். திருஉண்ணாழிகையில் ஒரு இலிங்கம் உள்ளது. அது இலிங்கத்தை ஒத்ததாகக் காணப்படவில்லை. திருவுண்ணாழிகை யின் பின்னால் சோமகந்த சுகாசனமூர்த்தியின் திருஉருவம் எதுவும் காணப்படவில்லை. சுவர்களிலும் எதுவுமில்லை. இங்கு இணைக்கப்பட்ட படம் மின்னும் ஒளியில் நிழற்படக் கருவியின் மூலம் எடுக்கப்பட்டதாகும். எனவே இப்படத்தில் உள்ளே இருக்கும் இலிங்க உருவத்தைக் காண முடியவில்லை. கோயிலின் திருவுண்ணாழிகையின் பின் பகுதியைக் கூட நாம் நன்றாகப் பார்க்கமுடியவில்லை. கோயிலின் உட்புகும் தலைவாயிலின் இருமருங்கினும் இரு துவார பாலகர்கள் உருவம் ஒரு சிறந்த பண்பைக் காட்டும் பான்மையில் நிற்கின்றார்கள். பல்லவர்களின் கலை வல்லமையைக் காட்டும் புதிய சகாப்தத்தை இந்தத் துவார பாலகர்கள் உருவம் நமக்கு நினைப்பூட்டு வதாக இருக்கின்றன. இந்தத் துவாரபாலகர் களின் உருவம் ஏனைய துவாரபாலகர்களின் உருவங்களைப் போலன்றி நான்கு கைகளை யுடையவைகளாய் நல்ல அழகுடையனவாய் விளங்குகின்றன.1 மேற்கூறிய அபிப்பிராயங்கள் தமிழ்நாட்டு சிற்பக் கலையைப் பயின்ற ஒரு தபதியின் வார்த்தை அன்று பிரஞ்சுப் பல்கலைக் கழகப் பேராசிரியரும், கிறிதவரும், வெள்ளையருமான ஒரு பிரஞ்சு நாட்டுக் குடிமகனுடைய வார்த்தை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் இந்தப் பிரஞ்சு நாட்டுப் பேரறிஞர் பாண்டிச்சேரியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராய் இருந்த பொழுது திராவிட நாட்டு மொழிக் கலை முதலியவைகளைப் பற்றி ஆராயமுற்பட்டார். இவர் திராவிட நாட்டின் சந்துபொந்து மூலைமுடுக்குகளையெல்லாம் பார்த்து ஆங்காங்கே கண்ட ஓவியம் படிமம், கட்டிடக்கலை முதலியவைகளையெல்லாம் பார்த்து ஆராய்ந்து அவைகளின் சிறப்பைக் கட்டுரைகள் மூலமாகவும் நூல்மூலமாகவும் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வெளியிட்டு திராவிடக்கலையின் ஏற்றத்தை உலகமெங்கும் பறையடித்துள்ளார். உலகிலே முதன்முதலாக சிற்றண்ணல் வாயில் குகை ஓவியத்தைக் கண்டுபிடித்து இது உலகம் போற்றும் ஒப்பற்ற ஓவியக் கருவூலம் என்று உலாந்தா நாட்டுப் பத்திரிகையிலும் பிரஞ்சு நாட்டின் பத்திரிகைகளிலும் பல கட்டுரைகள் வரைந்தவர். இந்தச் செய்தி பல நூற்களிலும் இடம் பெறச் செய்தவர் இந்தியர்கள் ஓவியக் கலையைப் பற்றி ஒன்றும் அறியார்கள் என்ற எண்ணம் ஐரோப்பாவில் பெரிதும் பரவியிருந்தது. அதைப் போக்கியவர் நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பேரறிஞர் பேராசிரியர் துப்ரயல் அவர்களேயாகும் திராவிடக் கலை வளர்ச்சிக்கு, நமது தமிழ்ப்புலவர்கள், தமிழ்க்கலைஞர்கள், காங்கிரசுகள் கழகங்கள் இயக்கங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அற நிலையங்கள் இன்றுவரை செய்யாத அருபெருங்காரியங் களையெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே அரும்பெரும் பணியாற்றியுள்ளார். அவர் திராவிடக் கலைக்கு, சிறப்பாக தமிழர் கட்டிடக் கலைவளர்ச்சிக்கு கைமாறு கருதாது செய்துள்ள பணியை நாம் என்றும் மறப்பதற்கில்லை. அவருக்கு தமிழ் கலை உலகம் என்றும் நன்றியும் வணக்கமும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. அவரின்றேல் அரிக்கன் மேடு அகழ் ஆய்வே அரும்பியிராது. சிற்றண்ணல் வாயில் ஓவியமே உலகறியாது போயிருக்கும். கல்வெட்டுகள் நிற்க, அணிபெறும் நமது தணிகை ஆலக்கோயிலின் தெற்குச் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது.1 அது தமிழில் வெண்பாவில் எழுதப்பட்டுள்ளது. அதில் இக்கோயிலை நம்பி அப்பி எழுப்பித்த தாகக் கூறப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் அபராஜிதவர்மனின் 18-ஆம் ஆண்டின் ஆட்சியின் போது நம்பி அப்பி நல்கிய நன்கொடையின் மூலம் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.2 இஃதன்றி 9-ஆம் நூற்றாண்டில் தீட்டப் பெற்ற வேறு கல்வெட்டுகளும் ஆண்டுள்ளன. உடையாண்டிரம் பட்டயத்தின் மூலம் முதலாம் பிருதிபதி மூலம் பல்லவன் அபராஜித விக்கிரமவர்மன் மன்னனின் நட்பினனாகவும் கி.பி. 879-ஆம் ஆண்டில் வரகுணபாண்டியனின் பகைவனாகவும் இருந்து அவனைப் போரில் வென்றான் என்றும் தெரிகிறது3 முதலாம் ஆதித்திய சோழன் (கி.பி. 850-907) பல்லவ நாட்டை முற்றுகையிட்டு அபராஜிதவர்மனை வென்று அவன் நண்பன் பிருதிவிபதியைக் கொன்றுவிட்டான்.4 இந்த வெற்றி கி.பி. 900-ஆம் ஆண்டிற்கு முன் கிடைத்ததாகும். இதனால், திருத்தணிகை வீரட்டானேசுவரர் எழுந்தருளிய தூங்கானை மாடக்கோயில் 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டதாகக் கருதமுடியும். இக்கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன. ஆனால் இந்த மகோன்னதமான சிற்பக் கருவூலம் தமிழ் மக்களால் இன்று வரைபுறக் கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இத்திருக் கோயிலைப் பற்றி அரசாங்கத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரும், கல்வெட்டு ஆராய்ச்சித் துறையினரும், அதிக அக்கறை எடுக்கவில்லை. சுதந்திரம் பெற்றபின் அறநிலையப் பாதுகாப்பு ஆணையாளர் இதில் எவ்வளவு அக்கரை செலுத்தி யுள்ளார் என்றும் என்னால் அறியமுடியவில்லை. இக்கோயில் 10 நூற்றாண்டுகளாக பழுதுபடாமல் திருப்பணிசெய்து சிவலோகங் காண நாடும் பணக்கார பக்தர்களின் கண்களுக்குப் புலப்படாமலும் அன்று கண்டமேனி அழியாது வைரக்குன்றென ஒளிவீசி நிற்கிறது. பல்லவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் கலைக்கண்ணர்கள் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும் போற்றும் வண்ணம் இக்கோயில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இதில் ஒளிரும் கலைநுட்பமும் விமானத்தில் விளங்கும் நுண்ணிய வேலைப் பாடுகளும் வளைவுகளும் குலைவுகளும் அணிகளும் பணிகளும் இன்றும் புதுமை மெருகு குன்றாது புகழ்பெற இலங்குகிறது. அபராஜிதப் பல்லவன் அரும்பாணியில் எழுந்த ஆலக்கோயில் ஞாலம் போன்றும் நற்புகழுடன் ஒளிவீசி நிற்கின்றது. கோயிலின் மேலே எடுப்பித்த விமானத்தின் முன்புறம் பிறைவடிவில் அழகு பொலிய அணிபெறச் சிற்பி தன்கைவண்ணம் அனைத்தும் காட்டி பல்லவன் உள்ளதைக் கவர்ந்துள்ளான். ஏன்? - புதுச்சேரி திராவிடக் கலைவாணர் சோவியோ துப்ரயல் அவர்களின் உள்ளத்தையும் தமிழர் உலகத்தையும் கவரும் வண்ணம் திறம்படப் படைத் துள்ளான். திருத்தணிகை வீரட்டானேசுவரர் ஆலக்கோயிலைத் தான் காணமுடியும். இந்தக் கோயிலின் உண்ணாழிகையில் சோமாகந்தர் காணப்படவில்லை. இலிங்கம் இடம்பெற்றுள்ளது. உண்ணாழிகையின் வாயிற் காவலர்கள் நான்கு கைகள் உடையவர்களாய் இருப்பது ஆராயத்தக்கது. இந்தக் கோயிற் தூண்களின் அடியில் உட்கார்ந்திருக்கும் சிங்கங்கள் இல்லை. இராச சிம்மன் சகாப்தத்தில் உள்ளதைப்போல் போதிகைகள் அமைந்திருக் கிறது. திருத்தணிகைக் கோயில் தெளிவான உருவில் தூங்கானை மாடக்கோயிலாகத் திகழ்கிறது. இது அடிப்படை நீண்ட சதுரவடிவாக அமைக்கப்பட்டது. மேலே விமானம் குதிரை லாட வடிவில் அரைவட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. விமானம் சிறிது. முன்புறம் திருவாசியின் அமைப்பில் அழகாக அமைக்கப் பட்டுள்ளது. விமானம் 13 அடி 6 அங்குலத்தில் சதுர வடிவில் இருக்கிறது. கிழக்கு நோக்கி ஒரு வாயிலும் முன்புறம் மண்டபமும் காணப்படுகிறது. திருத்தணிகைத் தூங்கானை மாடக் கோயில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட கோயில்களில் அபிவிருத்தி அடைந்த மூன்றாவது நிலைக் கோயிலாகும். இந்த வகைக் கோயிலின் முதல் நிலை அதாவது ஆலக்கோயில் (கஜபிருஷ்ட விமானக்கோயிலின் முதல் நிலை) திருவேற்காட்டில் காணப்படுகிறது. அது வளர்ந்து அபிவிருத்தி அடைந்த நிலையில் திருத்தணிகையில் எழுந்துள்ளது. சோழ நாட்டை விட ஆலக்கோயில் தொண்டை நாட்டில் எண்ணிக்கையில் அபிவிருத்தி அடைந்தும் அமைப்பில் வளர்ச்சியும் அடைந்துள்ளன என்பதற்கு இக்கோயில் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. பாரீ பல்கலைக் கழகப் பேராசிரியர் அறிஞர் சோவியோ துப்ரயல் அவர்கள், திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் ஒரு அற்புதமான சிற்பப் படைப்பு என்றும் இது கஜபிருஷ்ட விமானக் கோயிலுக்கு (தூங்கானை மாடக் கோயிலுக்கு) ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகிறது என்றும் குறிப்பிட்டார். திருத்தணிகைக் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் பல்லவ இறுதி மன்னன் கட்டிய இறுதிக் கோயிலாகும். பல்லவப் பார்வேந்தர்கள் தமிழகத்தில் ஆரம்பித்த கட்டிடக்கலை வரலாறு இத்துடன் முற்றுப் பெற்றது. மீயச்சூர் தூங்கானைமாடக் கோயில் மீயச்சூர் திருமீயச்சூர் என்று அழைக்கப்படும். இது தஞ்சை மாவட்டத்தில் மாயவரம் - காரைக்குடி புகைவண்டி மார்க்கத்தில் பேரளம் என்னும் புகைவண்டி நிலையம் ஆகும். மீயச்சூர் இன்று பேரளம் என்று அழைக்கப்படுகிறது. கோயில் புகைவண்டி நிலையத்திலிருந்து 1½ கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள ஆலக்கோயிலில் வீற்றிருக்கும் தெய்வத்தின் பெயர் முயற்சி நாதேசுவரர்; தேவியின் பெயர் சௌந்திரநாயகி. இது சமயகுரவர் களால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகப் போற்றப்படுகிறது. இங்குள்ள முயற்சி நாதேசுவரர் கோயில் கொண்டிருக்கும் கோயிலே மூலக்கோயிலாகும். இந்த மூலக்கோயிலை தூங்கானை மாடக் கோயில் என்று கூறப்படுகிறது. இந்த மூலக் கோயிலைச் சிறப்பித்துப்பாடாது இக்கோயிலின் பிரகாரத்தில் இருக்கும் இதன் பரிவாரக் கோயிலாகிய இளங்கோயிலைச் சிறப்பித்து தேவார ஆசிரியர் பாடி இருப்பது அறிஞர்களுக்குப் புதிராக இருக்கிறது. மூல மூர்த்தியை முயற்சிநாதர் என்றும் மேகநாதர் என்றும் கூறப்படுகின்றது. இதன் தெற்கு உட்பிரகாரத்தில் வாயுலிங்கம், விநாயகர் சந்நிதிகளும் மேற்குப் பிரகாரத்தில் முருகன் திருமகள் சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தின் உள்பிரகாரத்தில் அருணாசலேசுவரர் சண்டேசுவரர் ஆடவல்லான் சந்நிதிகள் உள்ளன. மேகநாதர் சந்நிதிக்கு எதிரில் சிறிது வடபுறமாக பாதாள இலிங்கமும் வடகிழக்கே ஆகாச லிங்கமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கில் மேகநாதரின் தேவிக்குத் தனிச்சந்நிதி உள்ளது. தேவி அமர்ந்திருக்கும் அழகு கோலத்தில் காட்சி அளிக்கிறார். தேவியின் திருஉருவம் அழகும் அருளும் நிறைந்து காணப்படுகிறது. தேவியை சௌந்திர நாயகி, சாந்த நாயகி, லலிதாம்பிகை என்றெல்லாம் கூறப்படும். இந்தக் கோயிலின் சுவாமி சந்நிதிக்குப் பக்கத்தில் வடபுறம் சகல புவனேசுவரர் - மேகலாம்பிகை வீற்றிருக்கும் இளங்கோயில் உள்ளது. மூலக் கோயில் கிழக்கே பார்த்தசந்நிதி இக்கோயில் நகரின் நடுவில் உள்ளது. கிழக்கு வாயிலில் ஐந்து நிலைகளையுடைய அழகிய இராயகோபுரம் உள்ளது. கோயிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. இரண்டாவது பிரகாரத்திற்குப் போகும் வாயிலை மூன்று நிலை கோபுரம் ஒன்று அணி செய்கிறது. வெளிப் பிரகாரத்தில் உள் கோபுரத்தின் தென்புறன் விசுவநாதர் சந்நிதியும் தென்கிழக்கே வசந்த மண்டபமும் உள்ளன. வடபுறம் பெரிய மண்டபம் உள்ளது. கோயிலுக்குக் கிழக்கே திருக்குளம் இருக்கிறது. அதன் கரையில் பிள்ளையார் கோயிலும், ஞாயிறுக் கோயில் உள்ளன. இங்குள்ள பெருமானையும் தேவியையும் ஞாயிறு தேவன் யானை மீது வைத்து வழிபட்டானாம் அதனால் இக்கோயில் விமானம் யானை உட்கார்ந்தது போன்று திகழ்கிறதாம். இக் கோயிலில் வீற்றிருக்கும் சௌந்திர நாயகி அம்மனும் உட்கார்ந்திருக்கும் கோலத்திலே காணப்படுகிறார். இங்குள்ள மூலவராகிய முயற்சி நாதேசுவரரையும் தேவி சௌந்திர நாயகியையும் ஞாயிறு தேவன் வழிபட்டதால் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திங்கள் 20 ஆம் நாள் முதல் 27-ஆம் நாள் வரை ஞாயிறின் ஒளிக்கதிர்கள் திரு உண்ணாழிகையில் அமர்ந்திருக்கும் மூலவர் திருஉருவின் மீது விழும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்று உண்மையை வெளிப்படுத்த இக் கோயிலைக் கட்டிய சிற்பி சித்திரைத் திங்களில் குறித்த நாள்களில் தவறாது ஞாயிற்றின் ஒளிக்கதிர்கள் திருஉண்ணாழிகையின் உள்ளிருக்கும் மூலவரின் மீது விழுமாறு கட்டியது கோயிலைக் கட்டிய சிற்பியின் அற்புதமான திறமையை நாம் வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இங்குள்ள கோயிலுக்கு வடமொழியில் தலமகாத்மியம் செய்யப்பட்டுள்ளது. தமிழிலும் அது வசன ரூபமாக எழுதப் பட்டுள்ளது. இன்னும் அவைகள் அச்சேறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் தல விருட்சம் வில்வம். தீர்த்தம் சூரிய புட்கரிணி என்று கூறப்படும் இங்குள்ள கோயிலுக்கு அப்பர் அடிகளும் சம்பந்தப் பெருமானும் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார்கள். அப்பர் இளங்கோயில் பாடியுள்ளார். சம்பந்தர் பொதுவில் மீயச்சூர் சிவபெருமான் மீது பாடியுள்ளாரே யொழிய தூங்கானை மாடக்கோயிலில் அமர்ந்துள்ள இறைவன் என்று பாடவில்லை. மீயச்சூர்க் கோயிலுக்கு அப்பர் அடிகளும் திருஞான சம்பந்தப் பெருமானும் வந்து இங்குள்ள பெருமானுக்கு தேவாரம் சூட்டியுள்ளார்கள். எனவே இத் திருக்கோயில் ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே எடுப்பித்திருக்க வேண்டும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. விமானம் கோயில் வகைகளை ஆராய்ந்து கூறுபவர்கள் அதன் விமானம் எப்படி இருக்கிறது என்பதையே ஆராய்ந்து இது இன்ன கோயில் இனத்தைச் சேர்ந்தது என்று கூறுவார்கள். ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் இன்ன வகைக் கோயிலுக்கு இவ்விதமாய் விமானம் இருக்க வேண்டும் என்று விரிவாய்க் கூறப்பட்டுள்ளன. என்றாலும் அவைகளைப் படித்து விமானங்களை நன்கு பார்த்து இது இளங்கோயில் இது மணிக் கோயில் இது ஞாழற் கோயில் என்று கூற வேண்டும். இதில் தவறுகளும் ஏற்படலாம். ஆனால் ஆலக்கோயில் விசயத்தில் எவருக்கும் எவ்விதத்தவறும் எழுவதற்கு வழியில்லை. யானையின் முதுகு போன்ற விமானங்களையுடைய தெல்லாம் தூங்கானை மாடக் கோயில் (கஜபிருஷ்ட விமானக் கோயில்) என்று எவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இக்கோயில் அமைந்துள்ளது. மீயச்சூர் தூங்கானை மாடக்கோயில் ஆலக்கோயிலின் அடுத்தபடியை அடைந்துள்ள விமானங்களையுடையது. பெண்ணாடகம் ஆலக்கோயிலை விட மாடங்கள் பெரிதாக உயர்ந்திருக்கிறது. பெண்ணாடகம் முற்காலத்தில் தமிழர்கள் கண்ட தூங்கானைக் கோயில் வடிவமாகும். அப்பால் மீய்ச்சூரில் யானைக் கோயில் மாடத்தையுடையதாய்த் தூங்கானை மாடக்கோயில் என்று கூறும் பெற்றியையுடையதாய் எழுந்தது. பெண்ணாடகத்து ஆலக்கோயிலை விட மீயச்சூர் தூங்கானை மாடக்கோயில் நல்ல சிற்ப நலம் வாய்ந்ததாய் சீரிய அமைப்புடையதாய் அரிய வேலைப்பாடுடையதாய் விளங்குகிறது. கோயிலைப் பார்த்ததும் அதை உருவாக்கிய சிற்பியின் கைவண்ணம் நமக்கு எளிதில் புலனாகிறது. மீயச்சூர் தூங்கானை மாடக்கோயில் பெண்ணாடகம் தூங்கானை மாடக்கோயிலின் அடிப்படையில் சற்று உயர்ந்து மாடம் உள்ளதாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை அரைவட்ட வடிவும் நீண்ட சதுரவடிவும் இணைக்கப்பட்டதாய்க் காணப்படுகிறது. கீழே இருக்கும் திருவுண்ணாழிகையின் அமைப்பு நீள அகலம் சிறிதும் குறையாத அளவில் மாடம் அமைத்து விமானத்தை முன்புறம் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதாய் விளங்கும்படி செய்யப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறமும் குதிரை லாடம் போன்று இலங்கும் அரைவட்டத்தில் அழகு பொலியும் சிற்பியின் கைவண்ணம் காட்டப்பட்டுள்ளது. மீயச்சூர், தூங்கானை மாடக்கோயில் பெண்ணா டகத்து ஆலக்கோயிலை விட மிக எடுப்பாய் இருக்கிறது. அதைப் பார்த்ததும் அதன் கெம்பீரத் தோற்றம் நம்மைப் பெரிதும் கவர்ந்துவிடுகிறது. ஆனால் மேலேயுள்ள விமானம் பெண்ணாடகம் திருவேற்காடு விமானங்களை விட பெரிதாக இருக்கிறது. இந்த விமானத் தோற்றம் இந்திய யானை படுத்திருப்பதைப் போல் காணப்படவில்லை ஆப்பிரிக்காவிலுள்ள காட்டானைகளைவிட ஒரு பெரிய முரட்டு யானை படுத்திருப்பதுபோல் காணப்படுகிறது. மீயச்சூர் கோயிலை ஆலக்கோயில் என்று கூறுவதைவிட தூங்கானை மாடக் கோயில் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். இக் கோயிலின் கோஷ்டங்களில் உள்ள எல்லா மூர்த்திகளும் எழிலுறக் காணப்படுகின்றார்கள். அம்பாளின் முகவாய்க்கட்டையை சுவாமி பிடித்துக் கொஞ்சுவது போல் காணப்படும் சிலையில் பாவம் நன்கு தெரிகிறது. கல்வெட்டுகள் அம்பாள் சந்நிதித் தூண்களிலும் உட்கோபுரவாயிலின் தென்புறத்திலும் வடக்குப் பிரகாரத்திலும் சுவாமி சந்நிதி மண்டபத்தின் வடசுவரின் வெளிப்பக்கத்திலும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இவைகள் சோழ மன்னர்களான பரகேசரி வர்மன், இராசகேசரிவர்மன் பாண்டியமன்னர்களான மாறவர்மன் குலசேகரன், ஜடாவர்மன் ஸ்ரீவல்லபதேவன் காலங்களில் எழுதப்பட்டவைகள். இவைகள் விளக்கெரிக்கவும் பிறவற்றிற்கு வழங்கிய நிலதானங்களைக் குறிப்பவை யாகும். கோட்டத்தின் மீதுள்ள எல்லாம் படிமங்களும் எழில்பெற்றிலங்கு கின்றன. இங்கு காணப்படும் இறைவன் இறைவியின் முகவாய்க் கட்டையைப் பிடித்து இன்முகங்காட்டிகொஞ்சிப் பேசுவது போல் காணப் படுகிறார். இளங்கோயில் கோட்டத்தில் உள்ள சதுர்முகச் சண்டேசர் படிமமும் பாங்குறப் பொலிகின்றது. கோயில் திருக்கோயில் ஊரின் நடுவே கிழக்கு நோக்கிய சந்நிதியை யுடையதாய் காணப்படுகிறது. கிழக்கு வாயிலில் ஐந்து நிலை களையுடைய இராசகோபுரம் இருக்கிறது. கோயிலுக்குள் இரு பிரகாரங்கள் உள்ளன. இரண்டாவது பிரகாரத்திற்குள் செல்லும் வாயிலில் ஒரு சிறிய மூன்று நிலை கோபுரம் உள்ளது. இங்குள்ள மூலக் கோயிலில் உள்ள மூர்த்தியின் பெயர் மேகநாதர். அவரை முயற்சிநாதர் என்றும் அழைப்பர் தெற்கில் உள்ள உட்பிரகாரத்தில் வாயுலிங்கமும் விநாயகர் சந்நிதியுமுள்ளன. வடமலேசுவரர் கோயில் ஒரத்தூர் கஜப்பிரஷ்டவிமானக் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் சிரிபெரும்புதூர் பகுதியில் ஒரத்தூர் என்ற சிற்றூர் இருக்கிறது. இதை உரத்தூர் என்றும் அழைக்கிறார்கள். சென்னை - விழுப்புரம் இருப்புப்பாதையில் உள்ள கூடுவாஞ்சேரி என்ற புகை வண்டி நிலையத்திலிருந்து மேற்கே நான்கு கல் தொலைவில் இவ்வூர் இருக்கிறது. இங்கு சிவனுக்கு ஒரு கோயிலும் திருமாலுக்கு ஒரு கோயிலும் உண்டு. சிவன் கோயில் ஒரு பிரகாரமுடைய சிறுகோயில் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. கோயிலினுள் புகுந்ததும் இடப்பக்கம் சனிபகவான் சந்நிதி காணப்படுகிறது. சந்நிதிக்கு எதிரில் கொடிமரம் பலிபீடம் நந்தி ஆகியவைகள் காணப்படுகின்றன. நந்தியின் முகம் சுவாமி பக்கமாக இராமல் கிழக்கு நோக்கி இருக்கிறது. இவ்வாறு திருவல்லம், மாத்தூர் மணி மங்கலம் முதலிய ஊர்களில் உள்ள கோயில்களிலும் உள்ளன. கருவறையில் மூல லிங்கமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மேற்குப் பிரகாரத்தில் விநாயகர், அம்பிகை முருகன், சந்நிதிகள் உள்ளன. வடமேற்கு மூலையில் இராமநாதர் பர்வதபத்தினி சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டேசுவரரும் பைரவரும் உளர். வடகிழக்கு மூலையில் உள்ள மண்டபத்தில் ஒரு சுரங்கம் இருக்கிறது. இங்குள்ள சுவாமியின் பெயர் அகதீசர்; அம்பிகையின் பெயர் காமாட்சி; தலவிருட்சம் வில்வமரம். திருவறையின் மேலே உள்ள விமானம் கஜப் பிரஷ்டவிமானம் இதனை ஹதிப் பிருஷ்டம் என்றும் கூறுவார்கள். அப்பர் சுவாமிகள் இத்தகைய கோயிலை ஆலக்கோயில் என்று கூறியுள்ளார். இக்கோயிலின் விமானம் யானையின் பின்புறம் போன்று அமைக்கப் பட்டிருக்கிறது. அதனால் இதனைத் தூங்கானை மாடம் என்றும் தூங்கானை மாடக்கோயில் என்றும் கூறுகிறார்கள். இக் கருவறையின் அடிச்சுவர்களில் தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு கல்வெட்டு கி.பி. 1529-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கல்வெட்டு திருவுண்ணாழிகையின் அடிச்சுவர்களில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இது கி.பி. 1529-இல் விசயநகர மன்னன் வீரப் பிரதாப அச்சுவதேவமகராயர் ஆட்சியில் விக்குருதி ஆண்டில் சாலிவாகன சகாப்தம் 1451-இல் பொறிக்கப்பட்டது. அதில் ஐயங்கொண்ட சோழமண்டலத்து இரண்டாயிரம் வேலிப்பற்று அல்லது செங்காட்டுக் கோட்டத்தில் உள்ள உரத்தூரின் உட்கிராமமான பனைத் தாங்கல் திரு அகத்தீசுவரமுடைய தம்பிரானர் கோயிலுக்கு செல்லப்பர் என்ற வீர நரசிங்கராய நாயக்க சாலுவதண்ணாயக்கரின் நன்மைக்காகத் தானமாக வழங்கப் பெற்றது என்று கூறப்பட்டிருக்கிறது. சந்நிதிக்கு வடபக்கத்தில் தெலுங்குக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. சாலிவாகன சகாப்தம் 1735-கலியுக 4914 (கி.பி. 1813) ஸ்ரீமுக ஆண்டில் உரத்தூர் சிவ விஷ்ணு கோயிலில் உள்ள மண்டபங்கள், கோபுரங்கள், நந்தவனங்கள் முதலியவைகளை அவனிகட்டல பட்டாபிராமுடு என்பவரால் திருப்பணி செய்யப்பட்டதாக அக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மேலும் பல திரு உருவங்களும் பிரதிஷ்டை செய்ததாகத் தெரிவிக்கிறது. திருமால் கோயில் திருமாலின் திருக்கோயில் அகத்தீசர் ஆலயத்திற்கு அருகில் இருக்கிறது. இது கிழக்கு நோக்கிய சந்நிதி. மூர்த்தியின் திருநாமம் பிரசன்ன வெங்கடேசப் பெருமான் ஸ்ரீதேவி பூதேவியான உபய நாச்சியார்களுடன் கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் திகழ்கிறார் திருவுண்ணாழிகை முன் மண்டபத்தில் அனுமானும் கருடாழ்வானும் காட்சி அளிக் கிறார்கள். தாயாருக்கு தனிச் சந்நிதி இங்கு இல்லை. வடகிழக்கு மூலையில் ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்பம் விமானம் கிழக்கு வாயில் கிழக்கு மதில் சுவர் முதலியன அண்மையில் செப்பனிடப் பட்டுள்ளது. கோவூர் தூங்கானை மாடக்கோயில் கோவூர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இவ்வூர் சேக்கிழார் பிறந்த குன்றத்தூருக்கு கிழக்கில் 2 ½ கல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்குச் சென்னையிலிருந்து பேருந்து வண்டிகள் செல்லுகிறது. சென்னையிலிருந்து மேற்கே 12 கல் தொலைவில் இவ்வூர் இருக்கிறது. இவ்வூர் சங்க காலப் புலவராகிய கோவூர்க் கிழார் பிறந்த ஊர் என்று கூறப்படுகிறது. இவ்வூரின் நடுவே திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்றிலும் நான்கு மாடவீதிகள் நலம்பெற எழிலுற அமைந்துள்ளன. இங்குள்ள சுவாமியின் பெயர் சுந்தரேசுவரர், அம்பிகையின் பெயர் சௌந்திராம்பிகை. இறைவன் திருமேனீசுவரர் என்று அழைக்கப் படும். ஊரின் நடுவே திருக்கோயிலும் அதைச் சுற்றி நான்கு அகன்ற மாடவீதிகளும் அமைந்திருப்பது அழகாக இருக்கிறது. கோயிலைச் சுற்றி அழகான திருமதில்கள் எடுப்பிக்கப் பெற்றுள்ளன. இங்குள்ள கோயில் தூங்கானை மாடக் கோயிலாகும். தூங்கானை மாடக் கோயில் மிகச் சிறிதாக எழில் பெற்று இலங்குகிறது. இது மிகவும் கை தேர்ந்த சிற்பியால் ஆகமவிதிகள் அணுவளவும் பிசகாவண்ணம் வெகு அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இத்திருக்கோயிலை எடுப்பித்தவர் இராசராச சோழன் தந்தையும் இரண்டாம் பராகந்தனுமாகிய சுந்தர சோழன் என்று கூறப்படுகிறது. இவ்வூருக்கு அணித்தேயுள்ள மாங்காடு என்னும் ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்றில் கோவூரை சுந்தர சோழ நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கிபி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்டு வந்த இரண்டாம் பராந்தக மன்னனால் இக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடம் தருகிறது. நாம் கொள்ளும் இந்த முடிபு சரியானதாக இருந்தால் இத்திருக் கோயில் ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயிலாக இருக்கும். விமானம் விமானம் மிகச்சிறிது. ஆனால் மிகக் கட்டுச்செட்டாக அழகாய் செவ்விதாயக் கட்டப்பட்டுள்ளது. இது தூங்கானை மாடக்கோயில் . இதன் அக நாழிகைக்குமேல் நான்கு சிறு மாடங்களை மாண்புற அமைத்து மேலே ஐந்து கலயங்களை அமைத்திருக்கிறது. இதன் முகப்பு நல்ல சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுச் சீர்பெற அமைக்கப்பட்டுள்ளது. விமானம் பழுதுற்றதால் மாயவரம் எமது அன்பிற்குரிய நண்பர் திரு இராமையாப்பிள்ளை அவர்கள் பழுது பார்த்து இப்பொழுது அழகாகவும் உறுதியாகவும் செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் பழுதுபார்க்கும் பொழுது தபதி இராமையா பிள்ளை அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்கள் அழைத்துச் சென்று கோவூர் என்னும் சென்னைக்கு அண்மையில் சுமார் 14 கல் தொலைவில் உள்ள குன்றத்தூர் தூங்கானை மாடக் கோயிலைக் காட்டி அதன் விமானத்தின் சிற்ப வேலைப்பாடு களையும் அவரால் விளக்கிக் காட்டும் வாய்ப்பைப் பெற்றேன். கல்வெட்டுகள் இக் கோயிலில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்று சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்த 9-ஆம் ஆண்டில் அதாவது - கி.பி. 965-ஆம் ஆண்டில் கலியன் என்பவருக்கு நிலதானம் அளிக்கப் பட்டதைப் பற்றிக் கூறும். மற்றொன்று இராசராசன் பட்டத்திற்கு வந்த 23-ஆம் ஆண்டில் இக்கோயிலில் நந்தா விளக்கெரிக்க ஒருவர் அளித்த தானத்தைப் பற்றிக் கூறுகிறது. இன்னொரு பட்டயம் காஞ்சியில் உள்ள ஒருவர் கோயில் அர்ச்சகரிடம் 10 பணம் தானம் அளித்ததைக் கூறுகிறது. 8. மாடக் கோயில் கோயில்கள் பலவகையாக அமைக்கப்பட்டுள்ளன. அவை களுக்குத் தனித்தனியாகப் பெயர்களும் அளிக்கப் பெற்றுள்ளன. கோயிலை அதன் விமானத்தை பிரிவு செய்யப்பெறும். விமானங்கள் சதுரம், நீண்ட சதுரம், வட்டம், அரைவட்டம், ஆறுபட்டம், எட்டுப்பட்டம் எனப் பலவடிவங் களில் அமைக்கப்பட்டுள்ளன. இஃதன்றி மாடங்களை வைத்து அமைக்கப்பட்ட விமானங் களையுடைய கோயில்கள் மாடக்கோயில் என்று அழைக்கப் பட்டன. ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளையுடைய மாடக் கோயிலை சிற்ப நூற்கள் சிறப்பித்துக் கூறும். தமிழ்நாட்டில் ஒன்பது மாடங்களையுடைய விமானங்கள் ஒரு சிலவே காணப்படுகின்றன. மூன்று நான்கு மாடங்களையுடைய கோயில்கள் தான் பெரிதும் காணப்படுகின்றன. வீடுகளும் மாடங்களையுடையதாகக் கட்டப் பட்டன. தமிழ்நாட்டில் பல மாடங்களையுடைய வீடுகளும், அரண்மனைகளும், கோயில்களும் இருந்தன. இதற்குத் தமிழ்நாட்டில் உள்ள பழந்தமிழ் நூற்கள் சான்று தருகின்றன. எடுத்துக்காட்டுகள் அடியில் வருமாறாகும்: மாட மோங்கிய மல்லன் மூதூர் ஆறுகிடந்தன்ன வகல் நெடுந்தெருவில் - நெடுநல் 11:29-30 மாமல்லபுரம் மாடக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் மாமல்லபுரத்திலே (மகாபலிபுரத்திலே) ஒற்றைக் கருங்கல்லில் இரண்டு மூன்று நிலையுள்ள மாதிரி மாடக்கோயில்கள் அமைத் துள்ளான். அர்ச்சுனன் இரதம் இரண்டு நிலைகளையுடைய மாடக் கோயில்கள் ஆகும். தருமராசன்ரதம், சகாதேவன் இரதம் ஆகிய இரண்டும் மூன்று நிலைகளையுடைய மாடக் கோயிலாகும். வேறு மாடக்கோயில்கள் கற்றளிகளாக அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வரும் மாடக்கோயில்கள் பல உண்டு. அவைகளில் காஞ்சிபுரத்தில் உள்ள பரமேசுவர விண்ணகரம் உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயிலும் ஆகும். காஞ்சி பரமேசுவர விண்ணகரத்தை (வைகுண்டப் பெருமாள் கோயிலை) பரமேசுர வர்மன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சியில் எடுப்பித்தான். இதனைத் திருமங்கை ஆழ்வார் தம் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். இது மூன்று நிலையுள்ள மாடக் கோயிலாகும். உத்தரமேரூர் மாடக் கோயிலும் மூன்று நிலைகள் உள்ள மாடக் கோயில் ஆகும். இதனை கி.பி. 730 முதல் 795 - வரை அரசகட்டிலில் அமர்ந்திருந்த நந்திவர்மன் என்னும் பல்லவ அரசன் எடுப்பித்தான். இஃதன்றி சோழ அரசர்களான இராச ராசன் இராசேந்திரன் போன்றவர்கள் அமைத்த மாபெரும் மாடக்கோயில்கள் பல உண்டு. அவைகள் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அணி செய்வனவாய் அமைந்துள்ளன. அவைகளில் சிலவற்றை இங்கு ஆராய்வோம்: தஞ்சை மாடக் கோயில் இராசராசன் 1 சோழ வளநாட்டை பேரும், பெருமையும் பெற்று சீரும், சிறப்பும் ஓங்க அரசு ஓச்சிய மாமன்னன் இராச ராச சோழன் ஆவன். இவன் கி.பி. 985- முதல் 1014-வரை தஞ்சையில் இருந்து அரசாண்டவன் தன் மகன் இராசேந்திரன் தலைமையில் சோழ நாட்டுக் கடற்படையை அனுப்பி ஈழம், நக்கவாரம், அந்தமான், கடராம், மலையம், சிங்கபுரம், சாவகம், புட்பகம் முதலிய எண்ணற்ற நாடுகளை வென்று வரலாற்றுப் புகழ் பெற்றவன். அதேபோன்று வடஇந்தியாவிற்கும் தனது படைகளை அனுப்பி ஆந்திரம் கர்னாடகம், கலிங்கம் போன்ற நாடுகளை யெல்லாம் வெற்றிக் கொடி நாட்டியவன். இவன் சிவபக்தன் இவன் சிவபாத சேகரன் என்னும் பட்டந் தாங்கியவன். இவனது இயற்பெயர் அருண்மொழி வர்மன்: இவன் தன் வெற்றியின் நினைவுக் குறியாக தஞ்சாவூரில் பெருவுடையார் கோயில் என்னும் ஒரு மாபெரும் கோயிலை எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுரன் என்னும் தனது பெயரை சூட்ட எண்ணினான். இராசராசன் தான் பட்டத்திற்கு வந்த 19-ஆம் ஆண்டில் கி.பி. 1003-இல் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டத் தொடங்கி 1009-இல் இப்பெரும் திருப்பணியை முடித்துள்ளான். இன்று, இந்த மாபெரும் கோயில், தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை சிறு கோட்டையின் தென்பாதில் இருக்கிறது. இக்கோயிலைக் காண நாடிச் செல்பவர்கள் முதன்முதலாக கோட்டையின் அகழைக் கடந்து, கோட்டைச் சுவரிலுள்ள வளைவுக்குள் நுழைந்து சிறிது தொலைவில் உள்ள சிறு அழகிய வாயில் கோபுரத்தைக் கடந்து சென்றால் மற்றொரு உட்கோட்டையையும் வாயிலையும் வாயில் மேல் திகழும் இன்னொரு சிறுகோபுரத்தையும் கடந்து உள்ளே புகுதல் வேண்டும். உள்ளே நுழைந்ததும் கருங்கல்லாலும், செங்கல்லாலும் பரப்பப் பெற்ற 800 அடி நீளமும் 400 அடி அகலமும் உள்ள ஒருபரந்த வெளியைக் காணலாம். வெளியின் முகப்பில் நந்தியை அதனைப் பாதுகாக்கக் கட்டிய நாயக்கர் மண்டபமும் உள்ளது. அதற்கு அடுத்தாற்போல் பெருவுடையார் திருஉண்ணாழிகை (கருவறை) மீது விண்முட்ட நிற்கும் மாபெரும் விமானமும் அடுத்து அம்பிகையின் கோயிலும் உள்ளது. உட்கோயிலான இறைவன் உறையும் உண்ணாழிகையும் அதை சுற்றியுள்ள பிரதட்சணம் வரும் மண்டபமும் அடுத்து அர்த்த மண்டபமும் தூண்களும், அதன்முன் மகாமண்டபமும் தியாகேசர் சந்நிதியில் உள்ள தாபன மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்று கூறப்படும் ஆறு பகுதிகளும் உள்ளது. கோயிலில் உள்ள ஏழு வாயில்களிலும் 18 அடி உயரமும் 8-அடி அகலமும் உள்ள ஏழு வாயில்களில் இணை இணையாக 14 வாயில்காவலர்களான துவார பாலகர்களின் கெம்பீரமான சிற்பம் உள்ளன. இக் கோயிலுக்கு அண்மையில் கருங்கல்லால் கட்டப்பட்ட முருகன் கோயிலும் உள்ளது. இது பிற்காலத்தில் எடுப்பிக்கப்பட்டது. இக் கோயில்களுக்குச் செல்லும் முதல்வாயில் கேரளாந்தகன் (கேரளர்களுக்குயமன்) என்ற பெயரை உடையது. அடுத்த வாயில் இராசராசன் திருவாசல் என்ற பெயரைப் பெற்றது. மூன்றாவது வாயில் கோயிலின் முன்பு உள்ள வாயில்; இது திருவணுக்கன் திருவாசல் என்னும் பெயரைப் பெற்றது. இக்கோயில் இறைவன் சந்நிதியை அடைய விமானத்தின் தெற்கிலும் வடக்கிலும் வாயில்கள் உள்ளன. இப்பெரும் விமானத்தின் தெற்கு வாயிலுக்கு விக்கிரமன் திருவாசல் என்று பெயர். வாயிற் பக்கத்தில் திருமகள் வடிவமும் கலைமகள் வடிவமும் சிற்ப வடிவில் செதுக்கப் பெற்றுள்ளன. கோயிலின் வெளிச்சுற்று நீட்டளவு 793-அடி. குறுக்களவு 393 அடி. விமானம் இத்திருக் கோயிலின் திருஉண்ணாழிகை மீது எழுப்பப் பெற்றிருக்கும் உயரிய விமானம் சதுரவடிவில் உள்ளது. இது பதின்மூன்று மாடிகள் கொண்டது. உச்சியில் சதுரவடிவும் உள்ள பிரமாந்தரத்தளக்கல்லின் மீது கலசமும் அதன் மீது அழகிய எண்கோணதூபி ஒன்றும் உள்ளது. இப்பெரும் மாடக்கோயிலின் மாபெரும் விமானம் தட்சிணமேரு என்னும் உத்தம விமானம் என்று கூறப்படுகிறது. இது 216-அடி உயரம் உள்ளது. மேலே உள்ள தூபிக்குடம் 12½ அடி உயரமுள்ளது. செம்பினால் செய்யப் பெற்று பொற்றகடு போர்த்தப் பெற்றுள்ளது. செப்புக்குடம் 3083 பலம் நிறை உடையது இதன் மீது போர்த்தப் பெற்ற பொற்றகடு 2926 ½ களஞ்சு எடையுள்ளது. இது மாற்றுக் குறையாத பசும் பொன்னாகும். விமானத்தின் மீது ஏற்றப் பெற்றிருக்கும் பிரமாந்திரக்கல் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்ட சீரிய சிற்ப வேலைப்பாட்டை உடையது. இது இருபத்தைந்தரை அடி சதுரமான ஒரு கருங்கல்; இதன் எடை 80டன் ஆகும். இதனைத் தஞ்சைக்கு 4 கல் தொலைவிற்கு அப்பால் உள்ள சாரப் பள்ளம் என்ற சிற்றூரில் இருந்து சாரம் போட்டு விமானத்தின் உச்சி வரை சாரத்தை நிலவிச் செய்து இந்த 80 டன் எடையுள்ள பிரமாந்தரக்கல்லைப் படிப்படியாய் நகர்த்தி விமானத்தின் மேற்றளத்திற் கொண்டு வந்து நிறுத்தி சிறிதும் விலகாது அளவு பிசகாது உரிய இடத்தில் இருக்கச் செய்துள்ளனர். இந்தக் கல் எப்படி உயரே ஏற்றப்பட்டது என்பது அந்த சிற்றூரின் பெயரை வைத்து ஊகிக்கப்படுகிறது. மேலே உள்ள பிரமாந்தரக் கல்லின் நான்கு மூலைகளிலும் முறையே இரண்டு நந்திகள் உள்ளன. அவை தனித்தனியே 6 ½ அடி நீளமும் 5 ½ அடி அகலமும் உள்ளது. இதையொத்த நந்தி வடிவம் உமாபரமே சுவரியின் (பெரிய நாயகி) சந்நிதிக்கு எதிரே திருச்சுற்று மாளிகையில் இடம் பெற்றுள்ளது. இந்த விமானத்தில் இருக்கும் நந்தி உருவம் பெரிது. விமானத்தின் அடிப்பகுதியில் இருக்கும் நந்தி உருவம் சிறிது. ஆனால் கீழ் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டும் ஒரே அளவில் இருப்பது போல் காணப்படுகிறது. உருவங்கள் உயரத்தில் இருக்கும் போது சிறிதாக இருக்கும். கீழே கண்ணுக்கு எட்டும் தொலைவில் இருந்தால் அதே வடிவில் இருக்கும். இந்த விமானத்தை அமைத்த சிற்பி தன் கணிதப் புலமையால் சுமார் 200 அடி தொலைவில் உயரத்தில் இருக்கும் பெரிய நந்தியும், தன் கண்ணிற்கு சுமார் 25 அடி தொலைவில் உயரத்தில் இருக்கும் நந்தி உருவமும் ஒருப் போலக் காணும்படி செய்துள்ளான் என்று வியப்படையப் படுகிறது. விமானம் முழுவதும் கருங்கல்லால் ஆனது. அதில் அமைத்துள்ள சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பிற்குரிவையாகும். இந்த உயரிய கோயிலின் வடக்கு விமானத் திருவாயிலின் மேற்பகுதியில் மூன்று உருவச் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று அது மார்பளவிற்கு மேல் உள்ளது. ஓர் ஐரோப்பியனுடைய முக அமைப்பில் உள்ளது. அவன் தலையின் மீது இருக்கும் தொப்பியும் ஐரோப்பியர் அணியும் தொப்பிபோல் காணப்படுகிறது. இதைப்பற்றிப் பலரும் பலவிதமான கருத்துகள் தெரிவித் துள்ளார்கள். சிலர் விமானத்தை அமைத்ததற்கு சோழநாட்டை முன்னும் பின்னும் ஆளும் வர்க்கத்தாரை மேற்காட்டிய உருவத்தால் தீர்க்கத் தரிசனத்தால் காட்டியுள்ளான் என்பர் சிலர், தமிழரினும் வேறுபட்ட நிறமும் பண்பாடும் உள்ள மக்கள் உருவை வேடிக்கையாக மக்கள் கண்டுகளிக்கும் பொருட்டு அமைத்துள்ளான் என்பர். பல கோயில் களை எழுப்பி அமைத்த நாயக்கர் பரம்பரையில் 17-வது நூற்றாண்டில் முற்பகுதியிலிருந்த இரகு நாயக்கர் அவையில் செல்வாக்குப் பெற்றிருந்த கிறித்து சமயத்திலுள்ள டேனி ஈட இந்தியக் கும்பினியின் தலைவனான ரோலண்ட் கிரேப் (Roeland grape) என்பவரது உருவம் என்பர். வேறு சிலர் 13-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து சென்ற வெனி நகர வழிப்போக்கன் வடிவம் என்பர். இஃதன்றிச் சிலர் கோயில்கட்டிய காலத்தில் சோழ நாட்டிற்கும் மேனாட்டிற்கும் இருந்த தொடர்பைக் குறிக்க இவ்வுருவம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆதியில் நெல்லையில் உள்ள செப்பறையில் படைப்புத் தாண்டவ முனிதாண்டவத்தை ஆடிக் காட்டிய அம்பலக்கூத்தன் தில்லைப் பொன்னம்பலத்தில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழிலையும் ஒருங்கே ஆடிக் காட்டியுள்ளான். தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்று திருவாசகம் கூறுகிறது. இந்தத் தாண்டவமூர்த்தியிடம் இராசராச சோழனுக்கு அதிகப் பக்தியுண்டு தாண்டவக் கோலங்களை அவன் அறிந்து சுவைத்து மகிழ்ந்துள்ளான். அவன் இராச ராசேசுவரத்தில் இந்த அம்பலக் கூத்தனின் 108 தாண்டவ வடிவங்களையும் நிலைபெறச் செய்து சிற்பிகளுக்கு இவைகளைச் செய்து முடித்துத் தரக் கட்டளையிட்டுள்ளான். சிற்பிகள் இந்த 108 தாண்டவ உருவங்களை செய்துள்ளனர். ஆனால் முழுவதும் செய்து முடிக்கவில்லை. 81 சிற்பங்கள் செய்து முடிக்கப் பெற்றுள்ளன. 82-ஆவது சிற்பம் அரைகுறையாய் இருக்கிறது செய்து முடிக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. ஏன் இப்பணியை முடிக்காது நிறுத்தப் பட்டுள்ளது என்பதுஎவருக்கும் புரியவில்லை. 81-ஆவது சிற்பம் அதாவது இறுதியாய் செய்து நிறைவுற்ற நிலையில் காணப்படும் சிற்பம் சிவபெருமான் நான்கு கைகளுடன் மானாடவும் மழுஆடவும் ஆடும் தாண்டவம் கலைக்கண்ணர் கண்டு களித்துச் சுவைத்து பயன் அடையத்தக்கது. இந்த உருவங்களைச் சிலர் தாண்டவ வடிவம் அல்ல, கரண வடிவங்கள்; இதே 108 கரணங்கள் சிதம்பரம் ஆடவல்லான் கோயில் வாயிலிலும் உள்ளன என்பர். இது தவறு தஞ்சையில் உள்ள திருக்கோயிலின் விமான தளத்தில் அறைகுறையாக செய்வது நிறுத்தப்பட்டிருக்கும் ஆடல் உருவம் சிவபெருமானுடைய திருஉருவங்களாய் இருப்பதால் இவைகள் கரணங்கள் அல்ல; தாண்டவ உருவங்களே என்கின்றனர். இந்தத் திருக்கோயிலின் திருஉண்ணாழிகையில் உள்ள ஆவுடையார் 56 அடி சுற்றளவும் 6 அடி உயரமும் பாணம் 28 ½ உயரமும் உள்ளது. இந்தச் சிவலிங்கத்திற்கு எந்தப் பூசாரியும் கீழே நின்று கொண்டு குடமுழுக்குச் செய்ய இயலாது. பக்கத்திலுள்ள ஏணிமீது ஏறியே முழுக்குச் செய்விக்க வேண்டும். மிகப் பெரிய இலிங்கம். தஞ்சை இராச ராசேச்சரத்தில் எழுந்தருளிய தெய்வத்தின் பெயர் இராஜ ராஜேவரமுடையார் என்று இராசராச சோழனால் இடப்பெற்றது. இதனை ஆங்குள்ள கல்வெட்டுகள் உறுதிப்படுத்து கின்றன. இக்கோயிலின் விமானம் தட்சணமேரு என்று அழைக்கப் பட்டது. இங்கு கோயில் கொண்டிருக்கும் மூர்த்திக்கு தட்சண மேருவிடங்கன் ஆடவல்லான் எனவும் பெயர் வழங்கப்பட்டன. இங்குள்ள சிவலிங்கத்திற்கு ஆடவல்லான் எனப் பெயர் சூட்டப் பட்டது. இராசராச சோழனுக்கு சிதம்பரத்திலுள்ள அம்பலக் கூத்தன்பால் உள்ள பேரன்பைப் புலப்படுத்துவதாக இருக்கிறது. இவன் தட்சிணமேருவிடங்கன் ஆடவல்லான் என்று இரு பெயர்களை இணைத்தது உமா பரமேசுவரி என்று அமைத்தது போலாகும் என்பர். இங்குள்ள இறைவன் திருப்பெயர் பெருவுடையார் எனவும் இறைவிக்கு பெரிய நாயகி எனவும் கூறப்படும். இவை வடமொழியில் பிருகதீவரர் பிருகந்நாயகி எனவும் கூறப்படும் பெருஉடையார் திருஉருவம் சமைக்க நருமதை ஆற்றின் அருகிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது என்று கூறப் படுகிறது. அதற்கு அமைந்த மகாத்மிய ஆதாரமும், சைத்திர விழா அஷ்டக் கொடி நாளில் இராச ராசன் தஞ்சையில் உள்ள அறுபத்து நான்கு மனை வேளாண் செட்டிமார்களின் பேராளர்களை (பிரதிநிதிகளை) அழைப்பித்து சிறப்பித்து வாழ்த்தும் சம்பிரதாய முறையினின்று வழுவாது நடந்து கொண்டாள். இங்கு பிறபல சிவமூர்த்தங்களும், திருமால், நம்பி ஆரூரர் பரவையார், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் சிறுத்தொண்டர் சண்டேசுவரர் முதலியவர்களின் திருஉருவங்களும் இராசராசன் மனைவி லேகாமாதேவியின் படிமங்களும் இடம் பெற்றிருந்தன. அவற்றுள் இப்பொழுது சிலவே உள்ளன. திரு உண்ணாழிகையைச் சுற்றி சுந்தரமூர்த்தி நாயனாரின் கைலாச யாத்திரை அழகிய வண்ண ஓவியமாகத் தீட்டப் பெற்றுள்ளது. நந்தி மண்டபம் இத் திருக்கோயில் முன்னுள்ள நந்தி ஒரே கல்லில் செதுக்கப் பட்டது. இது இறைவன் திருஉருவிற்கு முன்னுள்ள நாயக்கர் மண்டபத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள நந்தி வடிவங்களில் மிகப் பெரியது ஆந்திர நாட்டில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில் இந்துப்பூர் வட்டத்தில் லெபாக்சி கோயிலில் உள்ளது இரண்டாவது நந்தி உருவம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ளது. இதன் உயரம் 12 அடியும் நீளம் 19 ½ அடியும் அகலம் 8 ½ அடியும் உள்ளது. தஞ்சாவூர் நந்தி ஒரு ஒற்றைக் கல்லில் செதுக்கி உருவாக்கப் பட்ட உருவமாகும். இதன் எடை 25-டன் ஆகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர்க்கு அண்மையில் உள்ள பச்சைமலை அடிவாரத்தினின்று தோண்டி எடுக்கப்பட்ட கருங்கல்லினாலானது. சிலர் இதுவும் வட இந்தியாவில் உள்ள நருமதா ஆற்றங்கரையினின்று தோண்டி எடுக்கப்பட்டு வந்தது என்று கூறுவாரும் உளர். இந்த நந்தி காலத்திற்குக் காலம் வளர்ந்து வருவதாக மக்கள் நம்பி வருகின்றார்கள். எனவே இந்த வளர்ச்சியைத் தடைப்படுத்த முதுகின் பின்புறத்தில் ஒரு ஆணி அறைந்ததாக ஒரு கதையும் உண்டு. கோயிலில் வடமேற்குப் பிரகாரத்தில் ஒரு முருகன் கோயில் உள்ளது. அது சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் உடையது. இந்தக் கோயில் பிற்காலத்தது. 17,18 ஆவது நூற்றாண்டில் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் எதுவும் இதனைப் பற்றிக் குறிப்பிட வில்லை. இது தஞ்சையில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர் எடுப்பித்த கோயிலாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஆறுமுகப் பெருமானின் திருஉருவம் எழில் மிக வாய்ந்தது. மா மயிலும் ஆறுமுகனின் அழகிய கோலமும் திருவாகியும் ஒரே சிலையில் காணப்படுகிறது. இக்கோயில் யானை குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு அழகிய தேர் போன்று திகழ்கிறது. இக்கோயிலின் நீளம் 125 அடி அகலம் 35 அடி இதன் சிகரம் 5.5 அடி இது நல்ல கருங்கல்லில் செதுக்கப்பட்டு மெருகிடப்பட்டு பளிங்கு போல் திகழ்கின்றது. இங்கு குடி கொண்டிருக்கும் ஆறுமுகப் பெருமானை அருணகிரி நாதர் புகழ்ந்தும் போற்றியும் தம் திருப்புகழில் மூன்று பாட்டுகள் பாடியுள்ளார்.1 பிள்ளையார் கோயில் பரிவாராலயத்து பிள்ளையார் மேலைச் சுற்றாலயத்து வீற்றிருக்கிறார் இக் கோயில் இராச இராசன் காலத்தில் எடுப்பித்தது அன்று. தஞ்சையைப் பிற்காலத்தில் ஆண்ட மகாராட்டிர மன்னன் சரபோஜி கி.பி. 1803-ஆம் ஆண்டில் எடுப்பித்தது என்று கூறப்படுகிறது. கோயிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது அது தென் கன்னடத்தில் செதுக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் இரண்டாம் சரபோஜி கணபதி கோயிலைக் கட்டி, முன்னிருந்த ஒரு கணபதி திருஉருவை அகற்றி விட்டு அந்த இடத்தில் தான் சமைத்த புதிய கணபதி உருவை இடம் பெறச் செய்தும், தட்சணாமூர்த்தி சந்நிதிக்குப் படிகள் கட்டியும் பெருவுடையார்க்கு வெள்ளியால் நந்தி, யானை, மான் முதலிய வாகனங்களும் பல அணிகலன்களும் அளித்து கோயிலுக்கு தளவரிசைகள் போட்டும் சில திருப்பணிகள் செய்வித்தான் என்று தெரிகிறது. சிவபெருமானின் சொத்துக்களை கண்காணிக்கும் அதிகாரி யாகத் தெய்வ லோகத்தில் இருக்கும் அதிகாரி சண்டேசுவரர். அவர் பெயராலே இவ்வுலகில் கோயில் சொத்துக்கள் இருப்பது வழக்கம். கோயில் வரவு செலவுகள் இருப்பது சொத்துக்கள் விற்பதும் வாங்குவதும் உண்டு. இராசராசனும் பெருவுடையார் கோயில் பிரகாரத்தில் சண்டேசுவர நாயனார்க்குக் கோயில் கட்டுவித்து கோயிலைச் சார்ந்த யாவும் அவர் பெயரால் நடைபெறுமாறு கட்டளையிட்டான். மற்றையப் பிரகாரங்களில் பிற தெய்வங்களின் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. பிற்காலத்தில் கோயிற்பிரகாரங்கள் சிதைவுறவே அக்காலத்தில் தஞ்சையில் ஆட்சிபுரிந்த நாயக்க மன்னன் சேவப்ப நாயக்கன் திருக்கோயிலைப் பழுது பார்த்து தம் ஆட்சியின் தலைநகரைப் பண்படுத்தியுள்ளான். உமா பரமேசுவரி அம்மன் ஆலயம் சிவகங்கைத் தோட்டத்தில் இருந்தது. அதை ஒரு நாயக்க மன்னன் இடித்துவிட்டான். அப்பால் இன்னொரு நாயக்க மன்னன் இப்பொழுது இருக்கும் இடத்தில் உலகம் முழுதுடையாள் என்ற தேவியின் திருஉருவை இடம் பெறச் செய்துள்ளான். இந்த உருவம் இடம் பெற்றுள்ள மூர்த்தி அம்மன் மகாமண்டபம் எல்லப்ப நாயக்கனால் கட்டப்பட்டது. இராசராசேசுரம் நாயக்கர் காலத்தில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது. நிவந்தங்கள் இராசராசசோழன் தனது பெயரால் இராசராசேசுவரம் என எடுப்பிக்கப்பட்ட திருக்கோயிலுக்கு பல நிவந்தங்களை ஏற்படுத்தினான். அவன் ஆற்றிய போர்களில் கொள்ளை கொண்டு வந்த பொருள்கள் அனைத்தையும் இக்கோயிலுக்கே நிவந்தமாக அளித்தான். பலவித அணிகலன்களும் பாத்திரங்களும் நெஞ்சை புஞ்சைகளும் பொன்னும் பொருளும் நல்கியதோடு தீபங்களுக்கு நாள்தோறும் திருவிளக்குகள் ஏற்றி விளக்கு ஒன்றிற்கு உழக்கு நெய் விகிதம் நெய் அளப்பதற்கு ஆடுமாடு எருமை ஆகியவைகளை இடையர்களுக்கு அவைகளின் உணவிற்கு புல் நிறைந்த மேய்ச்சல் நிலங்களையும் அளித்து தனது நிவந்தம் என்றும் நிகழ்வதற்கு ஏற்பாடுகள் செய்தான். இக் கோயிலில் சிறு காலை, உச்சிப்பொழுது இரவு என்ற மூன்று காலத்தும் பூசை நடைபெற்றது. இப்பூசைக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் அவன் எழுதி வைத்த சாசனப் பகுதியில் காணப்படுகின்றன. அதில் பெரும் சண்பகமொட்டு, ஏலம், இலாமிச்சம் வேர் இவைகள் ஊற வைத்த நீரால் திருமஞ்சனம் ஆட்டவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் பழைய அரிசியாற் சமைத்த போனகம், நெய்ச்சோறு, தயிர்ச்சோறு ஆகிய திருச் சோறும் அடைக்காய் அமுதும் கறியமுதும்,பருப்பமுதும் வெள்ளிலையமுதும் விழாக் காலங்களில் பருப்பு, பழைய அரிசி, மிளகு, சீரகம் சர்க்கரை கடுகு, நெய் என்ற இவற்றோடு ஆக்கிய அப்பக்காய்க் கறியமுதும், பொறிக்கறியமுதும், மிளகு, சீரகம், சர்க்கரை, கொள்ளு, வாழைப்பழம், புளி, தயிர் நெய், கடுகு இவை கொண்ட புளியங்கறியமுதும் நிவேதிக்கப்பட்டன. அப்பொழுது நாற்பத் தெண்மர் திருப்பதிகம் செய்ய ஆரியமும் தமிழும் பாடுபவர் பாட கனபாடிகள் சாம கானம் செய்திட பக்க வாத்தியங்களோடும் வீணைகளோடும் காந்தர்விகள் இன்னிசை இயற்றி ஆடல் புரிவர். மொரவியம், வங்கியம் பாடவியம், உடுக்கை, முத்திரைச்சங்கம் உவச்சப்பறை சகடை முதலிய இயங்கள் முழங்கின. நெய் விளக்குகள் எங்கும் தகதகவென ஒளி வீசி ஞாயிற்று வெளிச்சம் போய் கோயிலினுள் யாவும் நன்கு புலனாயிற்று. தஞ்சைப் பெருவுடையார்க்கு இராசராசன் ஒன்பது மணிகளாலும் செய்யப்பெற்ற பொன் அணிகளையும் வெள்ளிப் பாண்டங்களையும் அளித்து அவற்றில் சிவபாத சேகரன் என்றும் ராசராசன் என்றும் செதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கிய மானவை காளங்கள், திருப்பள்ளித் தொங்கல், தவளச்சத்திரம், திருக்கொற்றக் கொடை, ஈச்சோப்பிகை, வெண்சாமரக்கை காளாஞ்சி முதலிய அரச சின்னங்கள் ஆகும். இஃதன்றி பொன்னாலும் வெள்ளியாலும் பல சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த குடம், ஒட்டுவட்டில் கலசம், தட்டம், குறுமடல், கிடாரம் முதலிய பரிகலங்களும் அளிக்கப்பட்டன. கண்ட நாண், பல்லிகைக் கண்ட நாண், பாசமாலை, மாணிக்கத்தாலி, வாகுவலயம் பதக்கம், அரதனவளையல் அரதகை கடகம், பவழக்கடகம், திருக்கைக்காறை, திருப்பட்டிகை அரதன் மோதிரம், நவரத்தின மோதிரம், மாணிக்கத்தின் உமுத்து, வயிர உமுத்து, சோகைச் சிடுக்கின் கூடு, பிருஷ்ட கண்டிகை, ஸ்ரீசந்தம் என்ற மணிகள் இழைத்த அணிகலன்களும், திருமுடி, வீரபட்டம், உதரபந்தனம், இராசா வர்த்தம், வயிர சாயலம், மூன்றாக அடுத்து விளக்கின கண்டத்துடர், புறத்துடர், ஏகாவல்லி, திரிசரம், பஞ்சசரி, திரன்மணிவடம், பொன்னாற்கோத்த மாணிக்கத்தின் திரு, பொன்னின் பட்டக்காறை, திருக்களாவாம், திருமகரம், திருக்குதம்பை, தோடு, வடுக, வாளி, கொட்டி, பட்டை மேற் குண்டு வைத்து விளக்கின வளையல், கைக்கடகம், திருக்கால் வடம், திருவடிக்காறை, திருக்கால் மோதிரம் என்ற பொன் அணிகலன்களும் முத்தின் சூடகம், திருக்காலவடம், வடுகவாளி, ஏகாவலி, முத்தின் சிடுக்கு, முத்து மாத்திரை, முத்துக்கொலுசு, முத்துமாலை, முத்துக் காதணி போன்ற முத்து அணிகலன்களும் நிவந்தம் அளிக்கப் பெற்றுள்ளன. இராசராசன் சமயப் பற்று இராசராசன் சைவசமயப் பற்றும், சிவபக்தியும் உள்ளவன் என்றாலும் பிறசமயங்களை அழிக்கவோ, பிறதெய்வங்களை இகழவோ இல்லை. அவனது உள்ளக் கிடக்கை பெருவுடையார் கோயில் பிரகாரங்களிலும், விமானங்களிலும், திருமதில்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம். திருமதிலின் மேலிருந்து விழுந்து பிறர் எடுத்துச் சென்றவை போக எஞ்சி இன்று நிற்கும் 343 நந்தி உருவங்களும், விமானத்தில் தென்புரம் உள்ள பல சோழ வீரர்களின் உருவங்களும், பிள்ளையார், திருமால், பிச்சாடனர் சூலதேவர், தட்சணாமூர்த்தி, ஆடவல்லான், மார்க்கண்டேயர் முதலியவர்களின் சிலைகளும், மேல்பக்கத்தில் இலிங்கோற்பவமூர்த்தி, மங்கை பங்கன், உருவமும், வடபுறம் கங்காதரர், கலியாண சுந்தரர் மகிடாசூர மர்த்தனி, என்பவர் உருவங்களும் உள்ளன. திருச்சுற்று மாளிகையில் தென்புறம் தவிர மற்றப் பாகங்களில்லை. இலிங்கங்கள், நாக கன்னியர், சமய குரவர், படிமங்கள் முதலியவற்றை உருவாக்கி வைத்தும் எட்டுத்திக்குப் பாலர்களுக்குத் தனித்தனி சுற்றாலயங்கள் எடுப்பித்தும் உள்ளான். கோயிலின் தெற்கு வாயிலின் கீழ்ப்பாகத்தில் பௌத்த உருவச் சிலைகள் சில காணப்படுகின்றன. இராசராசன் கல்வெட்டுகள் மூலம் இராசராசன் உத்தரவுப்படி கடாரநாட்டின் மன்னன் மாற விசயதுங்கவர்மனால் நாகபட்டினத்தில் மூன்று மாடிகளுடன் எடுப்பிக்கப் பெற்ற சூடாமணிவர்ம விகாரம் என்ற பௌத்தப் பள்ளிக்கு பல நிவந்தங்கள் அளித்துள்ளான். இதேபோல் சமணப் பாளிகளுக்கு நிவந்தம் நல்கியுள்ளான். கோயில் ஊழியர் கோயிலில் பணிபுரிபவர்கள் சிரி காரியம் பார்ப்பவர் எனவும், இவர்களைக் கண்காணிப்பவரை சிரி காரியக் கண்ட காணி நாயகம் என்றும் அன்று சோழநாட்டில் அழைக்கப்பட்டு வந்தது. திருக்கோயிலில் தெய்வத்திரு உருவத்தின் முன் தேவாரத் திருமுறை களைப் பண்ணோடு பாடும் இசைவல்லுநர்கள் நாற்பத் தெண்மர் இருந்தனர். இவர்களோடு உடுக்கை அடிப்பவனும், கொட்டிமத்தளம் வாசிப்பவன் ஆகிய இருவரும் சேர்த்து ஐம்பதின்மர் இருந்தனர். இஃதன்றி தமிழிசை பாடுநரும் கனபாடி ஆரியர் பாடுநருமாகச் சிலர் உளர். நாடெங்குமிருந்து நாட்டியம் ஆடும் பதியிலார் என்னும் பாவையர் நானூறு பேர்களைக் கொணர்ந்து இராசேசுவரத்தின் வடக்கிலும் தெற்கிலும் மனைகள் கட்டிக் கொடுத்து ஒவ்வொருவருக்கும் 100-கலம் நெல்விளையும் 1-வேலி நிலமும் அளித்து அவர்களைக் கோயிற்பணிபுரியுமாறு செய்வித்தான்.1 இந்த ஆடும் அரம்பையர்களில் சிலர் ஆடல் பாடல்களில் ஒப்பற்றவர்களாய் விளங்கினர். இவர்களைப் பாடவும் ஆடவும் பயிற்றுவிப்போர் காந்தர்வர் என அழைக்கப்பட்டனர். இவர்களில் எழுபத்தைவர்களுக்கும் நிலமும் பொருளும் அளித்து அரசன் ஆதரித்து வந்தான். மேலும் கொட்டிமத்தளக்காரர் பக்கவாத்தியம் வாசிப்போர், வீணை மீட்டுபவர், மொரவியம், வங்கியம், பாடவியம், உடுக்கை, முத்திரைச் சங்கு முதலிய இசைக் கருவிகளை இயக்குபவர்களுமாகப் பலர் இருந்து வந்தனர். உவச்சப் பறை, சகடை, கரடிகை, தக்கை, தண்ணுமை என்னும் பல பறைகள் வாசிப்பதும் உண்டு. இத்திருக்கோயிலில் பண்டாரிகள் (பொக்கிசதார்) கணக்கர், மெய்க்காப்பார், பரிசாரகர், திருவிளக்கிடுபவர், திருப்பள்ளித் தொங்கல் பிடிப்பவர் (மாலை கட்டுபவர்), வண்ணம் இடுபவர் (கோலம் தீட்டுபவர்), சோதிடர், தச்சர், தட்டார், கண்ணார், குயவர், தய்யார்(தையல்காரர்), நாவிதர் வண்ணார் முதலியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சம்பளமாக நெல் அளந்து கொடுக்கப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் கி.பி.1014-முதல் 1042-ம் ஆண்டு வரை சோழநாட்டில் செங்கோலோச்சி வந்த முதலாம் இராசேந்திரன் என்பவன் தன் தலைநகரை தஞ்சாவூரிலிருந்து மாற்றினார். இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூரை கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஒரு புதிய நகரை நிர்மாணித்தான். இந் நகர்தான் முதலாம் இராசேந்திரன் காலத்தும் அவனுக்குப் பின் வந்த சோழர்கள் காலத்தும் - சோழ மன்னர்களது ஆட்சியின் இறுதிவரை சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராய் விளங்கியது. இராசேந்திரன் குமரி தொட்டு கங்கை நதிபாயும் செழிப்பான நாடுகள் அனைத்தும் வெற்றி கொண்டதன் நினைவுக் குறியாக கங்கை கொண்ட சோழன் என்னும் பட்டப் பெயரைச் சூடிக் கொண்டதோடு தனது பட்டப் பெயரால் ஒரு தலைநகரையும் நிர்மாணித்தான். இதன் மூலம் இவன் தமிழர் வரலாற்றில் பேரும் பெருமையும் வாய்ந்த பேரரசனாய் இடம் பெற்றுள்ளான். இன்று சுமார் 1000 மக்கள் வாழும் சிற்றூராகக் காட்சியளிக்கும் கங்கை கொண்ட சோழபுரம் 900 ஆண்டுகளுக்கு முன் நான்கு சதுர மைல் கொண்ட ஒரு அழகிய நகராகக் காட்சி அளித்தது. இராசேந்திரன் தன் தந்தை இராசராசன் தஞ்சையில் கட்டிமுடித்த இராசராசேச்சுரம் என்ற சிறப்பு வாய்ந்த கோயிலைப் போல , கங்கைகொண்ட சோழபுரத்தின் நடுவில் எழில் மிகுந்த பெருங் கோயில் ஒன்றை நிர்மாணித்துள்ளான். இக்கோயில் நல்ல மேட்டுப்பாங்கான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. நாற்புறம் மலைகளோடு மேடுகளோ, பெரியமரங்களோ இல்லாமையால் இக்கோயில் இருபது மைலுக்கு அப்பாலிருக்கும் பொழுதே நன்கு தெரிகிறது. இங்குள்ள கோயில் இடிந்து கிடக்கிறது. இடிந்து கிடக்கும் அதன் கோபுரம் 80 அடி உயரம் இருக்கிறது. முற்றிலும் கருங்கல்லாற் கட்டப் பெற்றது. காவிரிப் பேரணைக் கட்டிற்கு கல் வேண்டி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வெடிவைத்த பொழுது இக் கோபுரம் இடிந்து விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கும் என்று நாம் கூறமுடியவில்லை. இடிந்து விழுந்த அக்கோபுரத்தின் சிதைவுகள் இன்றுவரை அப்புறப் படுத்தப்படவில்லை. இந்தக் கோயிலில் உள்ள சுவாமி பெயர் பிரகதீசுவரர் அம்பிகை பெயர் பிரகந் நாயகி. சோழர்கள் காலத்தில் எய்திய சிற்பமுதிர்ச்சியின் பலனாக எழுந்த தலைசிறந்த கோயில் தஞ்சாவூரிலுள்ள பெருவுடையார் கோயில் என்றும் அதற்கு அடுத்தபடியாய் சிறப்புற்றோங்கியது. கங்கை கொண்ட சோழேசுவரத்தின் கோயில் என்றும் கொள்ளலாம். இக் கோயில் இராசேந்திரனது வடநாட்டு வெற்றிக்குப்பின் கி. பி. 1025-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக் கோயில்களின் திருமதில்கள் மேற்கிலும், தென்மேற்கு மூலையிலும் அரண்கள் போல் அழகுற எழுந்து நின்றது. இந்தக் கோயிலின் திருமதில் நீளம் 600 அடி அகலம் 450 அடி, கனம் 4 அடி. இத் திருமதிலையடுத்து இரண்டு அடுக்கு திருச்சுற்று மாளிகை இருந்தது. இன்று ஒரு பகுதி மட்டுமே இப்பொழுது காணப்படுகிறது. காவேரிப் பேரணை கட்டுவதற்கு வேண்டிய கற்களை இம்மதிலை இடித்து எடுத்து அதிலுள்ள கருங்கற்களால் அணையைக் கட்டி முடித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியினர் என்று தெரிகிறது. இக் கோயிலின் நீளம் 340 அடி, அகலம் 110 அடி இதனுள் இருக்கும் மகா மண்டபம் 115 அடி நீளம் அகலம் 95 அடி. கர்ப்ப கிரகத்திற்கும் அந்தராள மண்டபத்திற்கும் இடையே அர்த்த மண்டபம் இன்று குலையாது காணப்படுகிறது. தெற்கிலும் வடக்கிலும் அழகிய வாயிற்படிகள் அழகுடன் அமைக்கப் பட்டிருக்கின்றன. கோயிலினுள்ளே புகும் வாயில் கிழக்கேயுள்ளது. இதன் வழியே உள்ளே சென்றால் மகாமண்டபம் அழகாகக் காணப்படுகிறது. இவைகளுக்கு பன்னிரண்டு அடி உயரங்கொண்ட பன்னிரண்டு வாயிற் காவற் சிலைகள் உள்ளன. மண்டபத்திற்கு 150 கற்றூண்கள் எட்டுபந்திகள் கொண்ட வரிசையாக நிற்கின்றது. இதன் நடுப்பந்தி 18 அடி உயரமும் இருபக்கங்களும் 16 அடி உயரமுள்ளதாய் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே கருங்கல்லால் பாவுகல் போடப்பட்டுள்ளது. மகாமண்டபத்தில் திருஞான சம்பந்தப் பெருமான் சிலையும் துர்க்கையம்மன் சிலையும் மிக அழகாகக் காணப்படுகிறது. மண்டபத்தின் மீதுள்ள மேற்கட்டில் காணப்படும் நவக்கிரகங்களின் அமைப்பு வேறு எந்தக் கோயில்களிலும் காணமுடியாத புது அமைப்பையுடையது. சூரியனுடைய தேர், அட்டதிக்குப் பாலகர் மேலே நவக்கிரகங்கள் நடுவில் பதுமபீடம் ஆகிய அனைத்தும் ஒரே வட்டக்கல்லில் தீட்டியிருப்பது பாராட்டற்குரியதாகும். அர்த்தமண்டபத்தின் அழகிய தூண்களுக்கு மேலே பல்வேறு நடனச்சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இலிங்கத்தை நோக்கி எதிரிலுள்ள சுவரின் மீது அழகிய ஆறு வரிசையாக சிற்பங்கள், கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. தடாதகைப் பிராட்டியார் திருமணம் சண்டேசுவரர் வரலாறு, சிவபெருமானும் அர்ச்சுனனும் போரிடல் மார்க்கண்டேயர் எமனை வென்றது போன்ற புராணக்கதைகள் ஓவியமாகத் தீட்டப் பெற்றுள்ளன. மூலதானத்தின் மது கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கும் விமானம் 186 அடி உயரமுள்ளது. இந்த விமானம் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பெற்றது. தமிழகத்தில் இதைப் போன்று கருங்கல்லால் கட்டப் பெற்ற விமானங்கள் தஞ்சை இராசராசேச்வரமும் காஞ்சி ஜினாலயம் ஆகிய இரண்டுமேயாகும். கங்கை கொண்ட சோழபுரத்தின் விமானம் பார்த்ததும் பிரமிப்படையச் செய்யும் தோற்றம் உடையது. மூலக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றின் அகலம் 10 அடியாகும் மூலதானம் பூமி மட்டத்திற்கு மேல் 20 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் அடிப்பாகம் 100 அடி சதுரமானதாகக் காணப்படும். இதன் உயரம் 35 அடிக்குமேல் இரு மாடிகள் அமைந்திருக்கின்றன. இதற்கு 8 மாடிகள் அமைந்திருக்கின்றன. அதன் அடிப்பீடம் போன்று பிரமாண்டமான அடிப்பீடத்தை நாம் வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாது. கர்ப்ப கிரகத்தின் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கங்கைகொண்ட சோழேச்சுவரத்து விமானத்தின் அமைப்பே ஒரு தனிச் சிறப்புடையது. பிற இடங்களிலுள்ள விமானங்களிலும் கோபுரங்களிலும் காணமுடியாத தனித்த அழகுகள் இதில் காணப்படும். பிற கோபுரங்களின் குறுக்குத் தோற்றம் நான்கு பட்டைகளாய் ஒரு நீண்ட சதுரம் போல் காணப்படுகிறது. அதாவது நீளம் அதிகமாயும் அகலம் குறைந்தும் இருக்கும். அடியில் அகலமாயிருந்து நுனிவரை படிப்படியாய் குறைந்து போய் உச்சியின் மட்டமும் நீண்ட சதுரம் போல் காணப்படும். உச்சிமட்டத்தில் பல கலயங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானமும் இந்த விமானமும் ஒரு தனித் தன்மையுடையனவாக இருக்கின்றன. இதன் அடிப்பீடம் நாற்புறமும் ஒத்த சம சதுரமாக இருக்கிறது. மேலே செல்லச் செல்ல கிரமமாகக் குறைந்து உச்சியில் ஒரேயிடத்தில் நான்குபக்கங்களும் ஒன்றாகக் கூடிப் பொருந்து கின்றன. பொருந்தும் இடத்தில் வட்டமான பெரிய கல் ஒன்றைச் சிகரமாக வைத்து அதன் மீது ஒற்றைக் கலயம் ஒன்று வைக்கப் பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள கோயில்களின் தளமட்டம் பெரும்பாலும் பூமியோடு ஒட்டியதாகவே இருந்திருக்கிறது. இப்பொழுது மக்கள் செல்லும் அரசபாதைகள் உயர்ந்துவிட்டதால் கோயில்களின் அடிமட்டம் அரச பாதைகளை விட பள்ளமாகவே காணப்படு கிறது. ஆனால் கங்கை கொண்ட சோழீச்சுரம் அடிமட்டம் பூமியிலிருந்து இருபது அடி உயரத்தில் இருக்கிறது. உபபீடம் பூமிக்கு மேல் ஆறடி உயர்ந்திருக்கிறது. இதன் அகலமும் நீளமும் சுமார் 100 அடி இருக்கும். விமானத்தின் அடிப்பாகம் நாற்புறமும் மூன்று அடி உள்ளே தள்ளியிருக்கிறது. இதன் அடிப்பாகம் பதும வரி, குமுத வரி, யாளவரி, பட்டியல் வரி, மற்றொரு வரி என்னும் பஞ்சாங்க வரிகளை உடையது. இந்த பஞ்ச வரிகளுக்கு மேல்தான் கோயிலின் தரைமட்டம் ஆரம்பமாகிறது. பெரும்பாலும் ஏனைய கோயில்களில் இந்த வரிகள் மிகச்சிறியனவாக இருக்கும். இங்கு அடிப்பீடத்திற்கு ஏற்றாற்போல் மிகப் பெரிதாக அமைக்கப் பட்டிருக்கின்றன. இதன் மேல்தான் கர்ப்பக் கிரகமும் அதன் மேல் விமானமும் கட்டப்பட்டுள்ளன. விமான இரண்டடுக்குகள் ஏனைய கோயில்களைப் போல் செங்குத்தாய் எழுந்து அப்பால் உயரே செல்லச் செல்லக் கிரமமாக கரைந்து உச்சியில் நான்கு பக்கங்களும் ஒன்றாகப் பொருந்துகின்றன. இந்த விமானம் மொத்தம் ஒன்பது நிலைகளைக் கொண்டது. இதன் அடிப்பாகத்தில் உள்ள ஒரு நிலை மட்டும் செங்குத்தாய் எழுந்து மற்றவைகள் அனைத்தும் மேலே போகப்போகக் கிரமமாய்ச் சரிவாய்க் கரைந்து எழுந்து உச்சியில் குவிந்து ஒன்றைக் கலயத்தைத் தாங்கி நிற்கிறது. தமிழகத்திலுள்ள பிற கோயில்களின் விமானத்தினின்று வேறுபட்டதாகும். மற்றக் கோயிலின் விமானங்கள் மேற்பாகும் வெறும் மண்டபமாக இருக்கும். இந்தக் கோயில் விமானமும் தஞ்சைக் கோயிலின் விமானமும் தனிக் கோபுர காட்சி அளிக்கின்றது. தஞ்சை விமானத்தில் அடியிலிருந்து உச்சிக் கலயம் வரை நாற்புறமும் நேராக ஒழுங்காக சரிந்து சென்று நுனி குவிந்து காணப்படுகிறது. விமானத்தின் சரிவோ ஒரே நேர்க் கோட்டில் இராமல் உட்புறம் குழிந்து வளைந்து செல்கிறது. அடிப்பாகத்திலுள்ள செங்குத்தான ஒரு நிலை தவிர ஏனைய எட்டும் உட்குழிந்து மேல்நோக்கி எழுகின்றன. இந்த விமானத்தின் ஒன்பது நிலைகளிலுமுள்ள மூலைகள் நான்கிலும் நந்திகள் வைக்கப் பெற்றுள்ளன. இந்த விமானத்தின் அடிமுதல் நுனிவரை நான்கு மூலைகளிலும் அடுக்கடுக்காய் நந்திகளின் உருவங்கள் ஒரு உட்குழிந்த ஒரு வளைவுக் கோட்டில் அமைந்துள்ளன. நான்கு பக்கங்களிலும் இந்த வளைவும் குழிவும் ஒரே அளவாகத் தெரிகிறது. அடியிலிருந்து உச்சி வரையில் நாற்புறமும் இருநூற்று நாற்பதடி உயரம் வரையில் வளைவுகள் ஒத்திருக்கும்படி கட்டிய சிற்பியின் திறமையை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது இன்றையப் பொறிவல்லார்கள் எத்துணைய நுட்பமான இயந்திர சாதனங் களைக் கொண்டு அளந்து கட்டும் கட்டிடங்களிலும் கூட கோணலும் மாணலுமாய் குறைவுற்று இருக்கு 900 ஆண்டுகளுக்கு முன் எந்த நூதன இயந்திர சாதனங்களும் இல்லாத நிலையில் எவ்விதக் குற்றமும் கூறமுடியாத நிலையில் அச்சில் வார்த்தாற்போன்று இந்த விமானத்தை கட்டிமுடித்தது ஒரு பெரும் அற்புதசாதனையேயாகும். இந்த அற்புத விமானத்தின் சிகரத்திலுள்ள பிரமாந்திரக் கல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானத்தின் உச்சியில் இருப்பதைப் போன்று ஒரு பெரும் ஒற்றைக் கல்லேயாகும். வட்டவடிவமான இக்கல் 34 அடி குறுக்களவு உடையது. தாமரை இதழ்போன்று செதுக்கப்பெற்ற இக்கல்லின் ஓரம் அடியிலிருந்து குறுகி வந்துள்ள விமானத்தின் சிகரத்திலுள்ள நாற்புரத்தையும் சேர்த்துப் பிடிக்கிறது. எத்தகைய இயந்திரச் சாதனங்களுமின்றி இக்கல்லை இத்துணை உயரத்தில் இதன் அடிப்பாகம் அணுவளவும் அலுங்காமற் குலுங்காமல் ஏற்றி வைத்த சிற்பியின் அற்புதத்திறமை போற்றுதற்குரியது. இந்த மாபெரும் கல்லின் மீதுள்ள விமானத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்ட ஒற்றைக் கலசம் சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த 20 -ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக் கலயம் இருந்தது. இப்பால் நீண்டு விழுந்த இடியோசையின் அதிர்ச்சியால் இது கீழே விழுந்துவிட்டது. இக்கலயம் இன்னும் ஏற்றி வைக்கப்படவில்லை. இந்தக் கோயிலின் மூலதானத்தைச் சுற்றியுள்ள சுவர்களின் வெளிப்புறங்களில் சாசனங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவைகள் இன்று வாசிக்கும் நிலையில் இல்லை. இந்தக் கோயில் கிழக்கு நோக்கி இருக்கிறது. கர்ப்பக் கிரகமும் அர்த்த மண்டபமும் சேர்ந்தே கோயிலாகக் காட்சியளிக்கின்றன. இக் கோயிலின் முக்கியமான வாயில் கிழக்குத் திசையில் இருக்கிறது. இக் கோயிலின் அடிமட்டத்தை அடைய தரைமட்டத்திலிருந்து 20 அடி உயரம் கட்டப் பெற்றிருக்கும் கற்படிகளின் மீதேறிச் செல்ல வேண்டும் இப்படிகள் தஞ்சையில் இருப்பது போல் இருபுறமும் பக்கவாட்டில் இருக்கிறது. இருமருங்கிலும் மிகச் கம்பீரமாக நிற்கும் பெரிய வாயிற் காவல் தெய்வங்கள் (துவாரபாலகர்கள்) படிமங்கள் காட்சி அளிக்கின்றன. இக் கோயிலிலுள்ள அர்த்தமண்டபத்தைப் பார்க்கும் பொழுது இக் கோயிலிலுள்ள கர்ப்பக் கிரகத்தையும் விமானத்தை யும் கட்டி முடித்த சிற்பி கட்டியது போல் காணப்படவில்லை. ஆனால் சிலர் அர்த்த மண்டபம் ஆதியில் அழகுடையதாய் கட்டப்பட்டு, பின்னர் ஏற்பட்ட சண்டைகளின் மூலம் அழிந்து போயிருக்கலாம். சமீபத்தில் யாரோ இடிந்து போன கட்டிடத்தைச் செப்பனிட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அது ஏற்றுக் கொள்ளத் தக்கனவேயாகும். இச்சிவன் கோயில் அருகே மன்னன் கோயில் இருந்தது. அது இடிந்து தகர்ந்தது இன்று மண்மேடாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டின் இறுதியில் நமது புதை பொருள் ஆராய்ச்சி இலாக்கா இங்கு போந்து மன்னன் மாளிகை இருந்த மாளிகை மேடு என்ற இடத்தை ஆராய்ச்சி செய்கிறதாகப் பத்திரிகையில் படித்தேன். அவர்களின் ஆராய்ச்சி முடிவை தமிழுலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மாளிகை மேடே சோழ மன்னர்கள் வாழ்ந்த இடமே மிக விசாலமான அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த திருக் கோயிலாகத் திகழ்ந்தது இந்தக் கோயிலின் பெயர் சோழ கேரளன் மாளிகை என்று கூறப்படும் இது கங்கை கொண்ட சோழனது மூன்றாவது மகன் வீரராசேந்திரன் சாசனங்கள் மூலம் வெளிப்படுகிறது. சோழன் கேரளமன்னன் மீது கொண்ட வெற்றியின் நினைவுக்குறியாக மன்னனின் கோயில் பெயர் எழுந்தது போலும். கங்கை கொண்ட சோழன் மகள் வயிற்றுப் பேரன் முதற்குலோத்துங்கன் இந்த மாளிகையில் இருந்தே ஆட்சி புரிந்தான். இந்த மணி மாளிகையிலுள்ள மண்டபத்திலிருந்து தான் குலோத்துங்கன் மீது பாடப்பட்ட கலிங்கத்துப்பரணி அரங்கேற்றப் பட்டது. சோழர்களின் வழிவந்த முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், வீரராசேந்திரன் போன்ற மன்னர்களெல்லாம் வாழ்ந்து இம்மாளிகையோடும் பல்லவராயன், காடுவெட்டி, இராசேந்திர மாவலி, வாணராயன் என்ற பெயர் வாய்ந்த அழகிய அரியணைகள் இந்த மாளிகையைத் தான் அலங்கரித்து நின்றன. இடிந்து போன சோழ மாளிகைகள் சென்ற நூற்றாண்டின் இறுதி வரை நின்றதாம். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினிக் கொள்ளையர்களே இந்த மாளிகையின் எஞ்சிய பகுதிகளையும் இடித்துத் தரை மட்டமாக்கிவிட்டனர் என்று தெரிகிறது. இங்குள்ள கோயில், அரண்மனை வீடுகள் இடிந்து கிடப்பதையும் அருகேயுள்ள தென்வடலாக 16 மைல் நீளமுடைய சோழகங்கம் என்ற பெரிய கடல் போன்ற ஏரியும் நமது பழந்தமிழர் களின் கட்டிடக் கலையின் உயர்ந்த மேதைத் தன்மையை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்ற சான்றாய் இன்றுந் திகழ்கிறது. இக் கோயில் மேல்புறத்திலும் வடபுறத்திலும் ஒரு மைல் தூரம் வரை பரவியிருந்தது என்றும் வடபக்கமுள்ள அணைக் கரையி லிருந்து ஜயங்கொண்ட சோழபுரத்திற்குச் செல்லும் கற்சாலை செல்லும் இடம் இக் கோயிலின் மத்திய பாகமாய் இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்பொழுது காணப்படும் பிரகாரமும் சுற்றுச் சுவரையும் சேர்த்துக் கோயில் 584 அடி நீளமும் 372 அடிஅகலமும் உடையதாகக் குறுகிவிட்டது. முன்னர் இக்கோயில் ஆறு கோபுரங்களைக் கொண்டதாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது கோபுரமே காணப்படவில்லை. கீழ்புறத்துக் கோபுரம் இடிந்து வீழ்ந்து கிடக்கிறது. முற் காலத்திலே மன்னர்கள் நெருக்கடியான கட்டங்களில் இக் கோயில்களை அரண்கள் போல் பாவித்துக் கோயிலினுள் இருந்து போரிடுவதும் உண்டு. அவ்வாறே முலிம்களும், ஆங்கிலேயர்களும் படையெடுத்துவரும் காலங்களில் இக்கோயில் அவர்களது முற்றுகைக் குட்பட்டிருக்கலாம். ஒவ்வொரு போரிலும் இக் கோயிலின் சிற்சில பாகங்கள் சேதமுற்றும் இருக்கலாம் என்று கூறத்தக்க சான்றுகள் காணப்படுகின்றன. ஆனால் எந்தப் போரின் காரணமாகவும் இக்கோயில் பெருஞ் சேதத்திற்கு உட்படவில்லை. ஆனால் நம்மை ஆண்டுவந்த கிறிதுமத பக்திவாய்ந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினியின் ஆட்சியின் போது, கல்லணை என்ற லோயர் அணைக்கட்டை கட்டுவதற்காக வேறு கல் கிடைக்க வில்லை என்று ஒரு போலிக்காரணத்தைச் சொல்லி இங்குள்ள மண்டபங்களை 1836-ஆம் ஆண்டு இடித்துவிட்டார்கள். கொள்ளிடத்தில் அணைகட்ட கல்மண்டபங்களையும், வேறுபல வேலைகளுக்காக கற்றுச் சுவர்களையும் இடித்துக் கொண்டு போய்விட்டனர். அக் காலத்திலுள்ள சைவப் பெருமக்கள் கிளர்ச்சி செய்து அடிமிதியும்பட்டு சிறைதண்டனைக்கு ஆளாயினர். இறுதியாக இடிந்த சுவர்களுக்கு பதிலாக செங்கற்சுவர்களைக் கட்டித்தருவதாகக் கூறி அப்பால் ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடுதருவதாக மொழிந்து இறுதியாக பதினாயிரம் ரூபாய் கொடுத்து ஏமாற்றிவிட்டது. இப்பெரும் பணியை நிறைவேற்ற இச்சிறு தொகை சாரம் போடுவதற்கு மட்டும் சரியாய் போய்விட்டதாம் அப்பால் திருப்பணியைப் பூர்த்தி செய்யப் பணமின்றி வேலை நடவாது போயிற்றாம். படிமங்கள் கங்கைகொண்ட சோழேச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளுக்கு கங்கைகொண்ட சோலழீர் (சோளேச்சுரர்) என்றும் பெரியநாயகர் (பிருஹதீவரர்) என்றும் கூறப்படும். இந்தி பெரிய நகர் இலிங்க வடிவாக்க காணப்படுகிறார். இந்த மூல இலிங்கம் மிகப் பெரியது கோயிலின் தரைமட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இலிங்கத்தின் உச்சிஇருப்பதால் அர்ச்சகரால் பரிவட்டம் சாத்துவது முடியாமல் இருக்கிறது. எனவே எதிரில் ஒரு சாரம் போட்டு அதன்மீது ஏறிநின்று அபிசேகம் செய்துவிட்டு மற்றொரு சாரத்தின்மீது பரிவட்டத்தைச் சாற்றிவிடுகின்றார். கடவுளை இலிங்க வடிவாக வைத்து வழிபடும் சம்பிரதாயம் தமிழகத்தில் எழுந்து உலகமெங்கும் பரவி நின்ற ஒரு பழம்பெரும் சம்பிரதாயம் மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று என்பது முற்காலத்தில் எழுந்த தமிழ்ப்பழமொழி. ஆனால் இந்த இலிங்கத்தின் ஆவுடையாருக்கு ஐம்பத்து நான்கு முழம் ஒரு சுற்று என்றால் இந்த இலிங்கம் எத்துணை பெரிது என்பதை ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம். இந்த இலிங்கம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வடிவத்தில் காட்சி அளிக்கிறது என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். இத்திருக் கோயிலின் வாயிலுக்கு கீழ்புறத்தில் ஒரு அழகு தவழும் செல்வத் திருமகளின் வடிவம் ஒன்று திகழ்கிறது. இதற்கு எதிர்ப்பக்கம் பிட்சாடன மூர்த்தியின் கற்படிவம் காட்சி அளிக்கிறது. வடபுறவாயிலின் கீழ்புறத்தில் கலைமகளின் கவின் பெறும் படிவம் காணப்படுகிறது. மேற்புறத்தில் சண்டேசானுக்கிரக மூர்த்தி திகழ்கிறார். மிகச்சிறந்த சிற்பவடிவில் சிவபெருமான் திருஉருவம் அருகில் இடப்புறமாக அம்பிகை அமர்ந்திருக்கும் காட்சியோடு கவின்பெறக் காணப்படுன்கிறது. சிவபெருமானின் மடக்கி இருக்கும் திருப்பதத்தின் அடியில் கைகுவித்தவாறு சண்டேசமூர்த்தி அமர்ந்திருக்கின்றார். அவரது முடியின் மீது அறக்கடவுள் அவரது அன்பின் அடையாளமாக அவர் அணிந்திருந்த அழகிய மாலையை எடுத்துச் சூட்டுகிறார். வலதுகை மாலையின் மீது இருக்கிறது இடது கை சண்டேசர் முடியின் மீது காணப்படுகிறது. வாயில்களின் இருமருங்கினும் சுவரோடு இருபெரியகாவற் தெய்வங் களின் சிலைகள் சுவரோடு பொருந்தி இருக்கின்றன. இத்துவார பாலகர்களின் உருவம் மிகப் பெரியது. ஆனால் கண்கவர் வனப்புடையன. இங்குள்ள காளியின் படிவம் மிகப்பெரியது. பதினாறு கரங்களையுடைய அழகிய கற்சிலை இதற்கு ஒழுங்காக பூசை நடந்து வருகிறது ஆனால் இங்குள்ள கணபதியின் கோயில் இடிந்து கிடக்கிறது பூசைகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இக் கோயிலின் அம்பிகையாகிய பெரிய நாயகிக்கு ஒரு கோயில்தான் அமைத்திருக்கின்றார்கள். ஆனால் பெரிய நாயகியின் சிலை மிகவும் அழகுடையது. சண்டேச்சுர அனுக்கிரக மூர்த்திக்கு வலப்புறம் கணநாதர் ஆடிப்பாடிக் களித்து நிற்கின்றார். இடப்புறம் பசுக்கள் (வேதங்கள்) நிற்கின்றன. மற்றும் கணங்களும் தெய்வ மகளிர்களும், அரக்கர் கூட்டங்களும் காணும்பொழுது இக் கோயிலின் கம்பீரத்தோற்றத் திற்கு அதிக அழகை அளிப்பதாகக் காணப்படுகின்றன. இங்குள்ள சிற்பங்களில் பெரும்பாலானவை மாமல்லபுரத்து சிற்பங்களைத் தழுவியவைகள் என்று பொதுவாகக் கூறப்படினும் மாமல்லபுரத் திற்கு சிற்பங்கள் அரும்பி மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு அப்பால் எழுந்தது, அதைவிட அதிக வனப்பும் சிற்ப நுட்பமும் சிறந்து விளங்குகின்றன. இக்கோயிலிலுள்ள படிமங்கள் சோழர் காலத்தில் எழுந்த எல்லா படிமங்களிலும் மிகுந்த கவர்ச்சிகரமானது, உறுதி வாய்ந்தன. தனிப்பெருமை வாய்ந்தன. தமிழர்களின் படிமச் சிறப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அன்று ஏன்? இன்றும் புகழுறப் பொலிவுற்று நிற்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் கற்றளியாக அமைக்கப்பட்ட இன்றும் வழக்கில் உள்ள மாடக்கோயில் ஒன்று உண்டு. அது பரமேசுவர விண்ணகம் என்று அழைக்கப்பட்டது. இன்று அது வைகுண்டப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இப் பெருந்திருக் கோயிலை, தொண்டை நாட்டை ஆண்ட பல்லவப் பார்வேந்தன் பரமேசுவர வர்மன் (கி.பி. 710-775) எடுப்பித்தான். இவனுக்கு நந்திவர்மன் 11 என்ற பட்டப் பெயரும் உண்டு. நந்திவர்மப் பல்லவ மல்லன் வைணவபக்தன். இவன் திருமால் மீது கொண்ட பக்தியால் கி.பி. 555 - க்கும் 790-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல்லவர்களின் கட்டிடக் கலையின் சிறப்பிற்கு மற்றொரு எடுத்துக் காட்டாக வைகுண்டப் பெருமாள் மாடக்கோயிலை எடுப்பித்தான். இக்கோயில் அதனை எடுப்பித்த பரமேசுவரப் பல்லவன் பெயரால் பரமேசுவர விண்ணகரம் என்று அழைக்கப்படும். இது காஞ்சிப் புகைவண்டி நிலையத்தின் அண்மையில் நகரின் கிழக்குப் பகுதியின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. இவனை காசக்குடிப் பட்டயம் அரிசரண்பரன் என்றும் தண்டன தோட்டப்பட்டயம் முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் அவன் தலை வணங்க வில்லை என்றும் கூறுகின்றன. திருமங்கை ஆழ்வார் பாடிய நந்திபுர விண்ணகரப் பதிகத்தையும் பரமேசுவர விண்ணகரப் பதிகத்தையும் கொற்றங்குடிப் பட்டயத்தில் பெருமாள் வணக்கமாக உள்ள முதல் இரு செய்யுட்களையும் ஒப்பு நோக்கின் இவ்வரசன் வைணவன் என்பது நன்கு புலனாகும். காஞ்சி பல சமயங்களுக்கும் உறைவிடமாய் இருந்தது. ஆதியில் சைவசமயத்திற்குச் சிறப்பிடமாய் இருந்தது. அப்பால் பௌத்த நெறிக்கும் சமண நெறிக்கும் வாழ்விடமாய் இருந்தது. அப்பால் அப்பர் காலத்தில் மறுமலர்ச்சி பெற்ற சைவ உலகின் அருள் ஊத்தாக இருந்தது. பின்னர் வைணவ நெறிக்கும் சுமார்த்த நெறிக்கும் புகலிடமாய் உள்ளது. இங்கு இன்று சைவ வைணவத் திருப்பதிகள் பல உள்ளன. காஞ்சியில் கயிலையும் வைகுந்தமும் ஒன்றையொன்று நோக்கிய வண்ணம் எல்லையில் உள்ளன என்று அறிஞர்கள் புகழ்ந்து கூறும் வண்ணம் கயிலாசநாதர் கோயிலும் வைகுந்த நாதர் கோயிலும் அமைந்துள்ளன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாழ்வார் களால் காஞ்சி விண்ணகரம் என்று உயர்த்தப் பெற்றுள்ளது. திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை பரமேசுர விண்ணகரம் என்று வியந்து பாடியுள்ளார். முதல் ஆழ்வார் காலத்தில் உள்ள விண்ணகரம் பரமேசுவரப் பல்லவ மல்லனால் திருப்பணி செய்யப் பட்டு பரமேசுவர விண்ணகரம் என்று போற்றப்பட்டுள்ளது. வைகுண்டப் பெருமாள் கோயில் அழகு வாய்ந்தது. சிற்ப நலங்கள் செறிந்தது. கண்டோர் கண்களையும் கருத்தையும் கவரும் எழில் வாய்ந்தது. அங்குள்ள வரலாற்றுச் சிற்பம் வண்மை வாய்ந்தவை. இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் போலத் தோன்றும். இந்த மாநகர், கச்சி, அழகாய கச்சி, தடம் சூழ்ந்த அழகாய கச்சி, மாமதில் சூழ்ந்த அழகாய கச்சி, தடமாமதில் சூழ்ந்த அழகாய கச்சி, கல்வி கறையிலாத காஞ்சி என்று புகழ்ந்து போற்றப்படும். இதை மாடங்கள் மணிமாடங்கள், ஒளிமாடங்கள் பொலி மாடங்கள், புகழ்மாடங்கள் நிறைந்த கச்சி, காஞ்சி என்று சமயப் பெரியார்கள் புகழ்ந்தேத்துகின்றார்கள். கோயில் அமைப்பு காஞ்சிக் கைலாச நாதர் கோவில் கவின்பெறக் கட்டப் பெற்ற கற்றளியாகும். இக்கோயில் விமானம் கயிலாசநாதர் கோயில் விமானத்தை ஒத்ததாக இருக்கும். ஆனால், இதன் தரைப்படம் (Ground plan) வேறு விதமாக இருக்கிறது. இத் திருக்கோயிலைச் சுற்றி எழுப்பப் பெற்றிருக்கும் திருமதில்களும், மாமண்டபத்திற்கு முன்னுள்ள சிறிய மண்டபமும், இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் தேவிக்கு அளிக்கப்பட்ட கோயில் அமைப்பு எல்லாம் பிற்காலத்தில் முக்கிய அமைப்போடு பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைகளாகும். விமானத்தைச் சூழ்ந்து எங்கும் மறைவிடங்கள் பல காணப்படு கின்றன. உட்புறமுள்ள கைப்பிடிச் சுவரில் இருவரிசையாக மிக உயரிய சிற்பக் கலைப்படைப்புகள் காணப்படுகின்றன. இதன் நடுவில் உள்ள பட்டைக் கோடுகள் தனிமுகப்பு உடைய அணியாகப் பிரிக்கின்றன. இந்தச் சிற்பங்கள் பழைய புராணக் கதைகளைச் சித்தரித்துக் காட்டுவதாக முன்னர் எண்ணப்பட்டு வந்தது. ஆனால் பல்லவர்கள் கோயில்களின் பாகுபாட்டையும் சிற்ப நுணுக்கங் களையும் நன்காய்ந்த பிரஞ்சுப் பேரறிஞர் சோவியோ துப்ரயல், இங்கு காணப்படும் சிற்பங்கள் புராணக் கதைத் தொகுதி என்று கூறுவதைவிட வரலாற்றுப் பாங்கானது என்று கூறுவது சிறப்பானதாக இருக்கும். இதில் காணப்படும் சிற்பங்கள் பல வரலாற்று உண்மைகளை உணர்த்துவதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார். அவரது வழியில் இந்தச் சிற்பங்களை நன்காய்ந்த அறிஞர்கள் இவைகள் பல்லவப் பேரரசின் வரலாற்றை எடுத்துக்காட்டும் ஒரு ஈடிணையற்ற சிற்ப சிறப்பு மிக்க ஒரு கலைக்கூடம் என்று கருது கிறார்கள். இந்த சிற்பங்கள் பல்லவர்களின் தோற்றம் தொடங்கி பல்லவர்கள் ஆட்சி காலம் அனைத்தையும் சித்திரிக்கும் - நந்தி வர்மன் காலம்வரை ஒரு கலைக் கருவூலம் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்தச் சிற்பங்களில் காணப்படும் முடிசூட்டும் விழாக்காட்சியை திரும்ப நினைவூட்டுவதாக இருக்கிறது என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது. முடிசூட்டும் விழாவிற்கு முன் மன்னர் தலையில் சங்கு கொண்டு நீர்வார்த்து முழுக்காட்டும் மரபு வழக்கம் இங்கு தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது அப்பொழுது அரசகட்டிலில் அமரப் போகும் அரசன் அணியும், அணிகலன் களும், அரசன் நிற்கும் நிலையும் பிறர் முறையாக நின்று அவ்வைபவத்தில் ஈடுபட்டுள்ள தன்மையும் நன்கு தெரிகிறது. திரு உண்ணாழிகையின் சுவர்களின் மீதுள்ள சிற்பங்களும், உட்புறமுள்ள பகுதியில் திருமாலின் பல்வேறு நிலைகளும் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள அழுத்தமற்ற மணல் அடுக்குக் கல் கால வெள்ளத்தால் துரதிட்டவசமாய் தூள்தூளாக உதிர்ந்து போய்விட்டது. இந்த விமானத்தின் கட்டிடப் பாங்கு மிகவும் சிறந்த தனிநலம் வாய்ந்தது. மேன்மாடத்திற்குச் செல்லும் இரண்டு படிகளின் திசை திரும்பாக் கூறுகளை தூய்மையான கோபுரத்தை அடைத்து வைத்துள்ளது. முதலில் இறைவன் இரங்க நாதன் பாம்பின் மீது சாய்ந்து நாகநாதனாக காட்சி தருகிறான். இரண்டாவதாக திருமால் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். பல்லவர் கட்டிடக்கலையின் இரு மாதிரிக் குறியிடா நிலையில் - சுவரில் உள்ள தூண்களில் அவர்களுடைய சிங்கமூலக்கூறும், யாழிமூலக் கூறும் காணப்படு கின்றன. இவைகள் அழகுபெற அமைத்து நன்றாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன இங்குள்ள வண்ண ஓவியங்கள் கூட்டிலும் இன்றும் விமானத்தில் உள்ள ஏனைய சிறப்புக் கூறுகளிலும் பொன்றாது ஒளிர்கின்றன. இது மூன்று நிலையுள்ள முழு நிறைவான மாடக் கோயில் இரண்டாவது மாடிக்கு மட்டும் படியுள்ளன. மூன்றாவது மாடிக்குப் படிகள் இல்லை. முற்காலத்தில் மாடிகளுக்குச் செல்ல மரப்படிகள் அமைத்துள்ளனர் என்பதை இதன் மூலம் அறியக் கிடக்கின்றது. அர்ச்சுன இரதம் அர்ச்சுனன் இரதம், மாமல்லபுரத்தில் திரௌபதி இரதத்திற்கு அருகில் தென்பக்கத்தில் உள்ளது. இளங்கோயில் அமைப்பை உடையது. இரு நிலைமாடங்கள் உள்ளது. இது சதுரமான அமைப்புடையது. இக்கோயிலைச் சிங்கங் களும் யானைகளும் சுமப்பதுபோல் சிங்கம், யானை ஆகியவைகளின் உருவங்கள் அடிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இது 16 அடி நீளமும் 11 அடி அகலமும் 20 அடி உயரமும் உள்ளது. இந்த ஒற்றைக்கல் கோயிலின் அர்த்தமண்டபம் அழகானது இரண்டு சிங்கத் தூண்கள் முன்புறம் அழகுற நிற்கின்றது. இந்தத் தூண் களைப் பிற்காலத்தில் எழுந்த சைவ வைணவப் போராட்டத் தில் உடைக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது அரசாங்கப் புதை பொருள் ஆராய்ச்சித் துறையினர் அதற்குப் பதிலாகப் புதிதாக இருதூண் களை நிலைநாட்டியுள்ளனர். உண்ணாழிகையில் தெய்வத்திரு உருவங்கள் எதுவும் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்குப் புறங்களில் அழகிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தூண்கள் மரத்தூண் களைப் போல் எழில் பெற்றிலங்குகின்றன. தூண்களுக்கு இடையே யுள்ள கோஷ்ட பஞ்சரங்களில் வெகு அழகான சிற்ப உருவங்கள் புடைசிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மேலே கர்ணக் கூடுகளும் சாலைகளும் பஞ்சரங்களும் பல்லவர் பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நிலையில் உண்ணாழிகை இல்லை. ஆனால் உண்ணாழிகையின் வாயிலைப் போல் நாற்புறத்திலும் வாயில்கள் சிற்ப உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நிலைக்குமேல் எட்டுப் பட்டையுள்ள விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கர்ணக்கூடு, பஞ்சரங்கள் முதலியவைகள் காணப்படுகின்றன. மேலேயுள்ள விமானக் கலயம் கீழே தரையில் இருக்கிறது. இத் திருக் கோயிலின் விமானம் பிற்காலத்தில் எழுந்த சமயப் போராட்டத்தினால் சேதமுற்றிருக்கிறது. இப்பொழுது புதைபொருள் ஆராய்ச்சித்துறை இவ்விமானத்தின் உடைந்து போன பகுதியை பழுது பார்த்து ஒருமைப்படுத்தியுள்ளனர். இப்பொழுது அது நிறைவான நிலையில் எழில் பெற்றிலங்குகின்றது. இது நரசிம்மவர்மன் காலத்தில் எழுந்தது. மாமல்லன் நரசிம்மவர்மன் பாணியில் கட்டப்பட்ட உயர்ந்த கலைக் குன்றாகத் திகழ்கின்றது. இந்த அழகுமிக்க ஒற்றைக் கல்லால் ஆன கலைக்கோயில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டது. இங்கு இலிங்கம் இருந்தது என்று கூறுவதற்குரிய அடையாளங்கள் இன்றும் உள்ளது. இதை அறிஞர் லாங்கர்ட் போன்றவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.1 முன்புறம் தவிர ஏனைய மூன்று புறச்சுவர்களிலும் ஒவ்வொன்றிலும் ஐந்து கோட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கோட்டத்திலும் புடைசிற்பங்களாகத் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடபக்கம் திருமாலும் அவர் அருகில் வாய்பொத்தி நிற்கும் கருடாழ்வாரும் அடுத்து அரசனும் அரசியும் நிற்கின்றன. கிழக்குப்புறச் சுவரின் நடுவில் வெள்ளை யானை மீது வீற்றிருக்கும் இந்திரனையும் தெற்குச் சுவரில் நந்தியுடன் நிற்கும் சிவபெருமானையும் அரசன் அரசி உருவங்களையும் காணலாம். இந்தக் கோயிலுக்கு பூசாமூர்த்தி எதுவும் இல்லை. கணேச இரதத்தின் மீது இருப்பதுபோல சூலத்தின் சிற்பம் இங்கு உள்ளது. தருமராசன் இரதம் தருமராசன் இரதம் என்று கூறப்படும் கோயில் ஒற்றைக்கல்லில் மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட ஓர் அழகிய சிற்பக் கருவூலமாகும். இது நான்கு தட்டுகளைக் கொண்ட அழகிய விமானத்தையுடைய மூன்று நிலைகளையுடைய கோயிலாகும். இது சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்ட திருக்கோயிலாகும். இரண்டாந்தட்டு நன்கு குடைய (தோண்ட)ப்பட்டுள்ளது. ஆனால் சிறியது. இதன் அடியில் சோமகந்தர் உருவம் உள்ளது. இக்கோயிலின் விமானம் (கும்பம்) வளர்ச்சி பெற்று காஞ்சிக் கைலாசநாதர் கோயில் விமானமாகப் பரிணமித்துள்ளது. காஞ்சிக் கைலாச நாதர் கோயில் விமானமே தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானமாக வளர்ந்துள்ளது என்று சிற்ப நுணுக்கம் உணர்ந்த அறிஞர்கள் முடிவு கட்டியுள்ளார்கள். இது 27 அடிநீளமும் 25 அடி அகலமும் 37அடி உயரமும் உள்ளது. கீழ்ப்பகுதியில் உண்ணாழிகை செதுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு மேல் ஒன்றன்மேல் ஒன்றாக மூன்று இரண்டு உண்ணாழிகைகளும் சுற்றிலும் பிரகாரங்களும் நாற்பத்திரண்டு அழகிய படிமங்களும் உள்ளன. இங்கு பல சிவனுடைய உருவங்கள் உள்ளன. கிழக்குக் கோடியில் மங்கைபங்கன் (அர்த்த நாரீசுவரர்) உருவம் இருக்கிறது. அதன் அருகில் நரசிங்கவர்மன் உருவம் உள்ளது. கீழே நான்கு மூலைகளிலும் இரண்டிரண்டு சிற்பங்கள் உள்ளன. மேற்பாகம் சோமாசுகந்தர் உருவம் உள்ள சிவன் கோயில் இருக்கிறது. அதில் இருபக்கங்களிலும் நான்முகன் திருமால் சிற்பங்கள் உள்ளன. மேற்பகுதி சிவபிரானுக்கும் அதற்குக் கீழ் உள்ள நடுப்பாகம் திருமாலுக்கும் அடிப்பகுதி நான்முகனுக்குமாக அமைக்கப்பட்ட மும்மூர்த்தி கோயிலாக எண்ணலாம். மும்மூர்த்தி களுக்கும் தனித்தனியேயும் ஓரிடத்திலும் கோயில் அமைத்த பெருமை நரசிம்மவர்மப் பல்லவனுக்கு உண்டு. இரண்டாவது உண்ணாழிகையினின்று மூன்றாவது உண்ணாழிகைக்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. தூண்கள் சிங்கத்தின்மீது அழகுற அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூலையிலும் ஆண் காவலர்கள் உள்ளனர். இங்கு கல்வெட்டுகள் உண்டு. அவைகளின் மூலம் இது உருவாக்கப்பட்ட காலம் நிர்மாணித்த அரசர் பெயர் துலங்கவில்லை. தர்மராச இரதத்தை முற்காலத்தில் அத்யந்த காம பல்லவேசுவரக் கிருகம் என்று கூறப்பட்டது. இந்தக் கோயில் விமானத்தின் மூன்றாம் நிலையில் அர்ச்சுன இரதம் என்னும் கோயிலில் இருப்பதைப் போல் 8-பட்டையாக விமானம் இருக்கின்றது. எனவே இது தமிழர் கட்டிடக் கலை அமைப்பில் சேர்த்து எண்ணத்தக்கது. எட்டுப் பட்டையான விமானத்தையுடைய கோயிலுக்கு கந்த காந்த என்று காமிகாகமம் கூறுகிறது. இதனைச் சிற்நூற்களும் ஆதரிக்கின்றன. அப்பர் சுவாமிகள் தம் தேவாரத்தில் மணிக்கோயில் என்று தமிழ்ப் பெயர் கொடுத்துப் போற்றியுள்ளார். மணிக்கோயில் தமிழகத்தில் சைவர்களும் வைணவர்களும் கட்டி வழிபட்டு வருகின்றார்கள். எட்டுப் பட்டைகள் உள்ள இந்த விமானத்தின் மீது கலசம் இல்லை. அது பக்கத்தில் கீழே கிடக்கிறது. இக் கோயிலில் காணப்படும் மூன்று தட்டுகளிலும் பல புடைசிற்பங்கள் உள்ளன. சுவர்கள் பல்லவகிரந்த எழுத்தில் நரசிம்மவர்மனுடைய சிறப்புப் பெயர்கள் (அத்யந்த காம பல்லவேசுவரக் கிருகம்) செதுக்கப்பட்டுள்ளன.1 இந்த அழகிய கட்டிட அமைப்பை அனுசரித்து கருங்கல்லில் காஞ்சிபுரத்தில் காணப்படுகிறது. அது வைகுந்தப் பெருமாள் கோயில் என்று இன்று அழைக்கப்படுகிறது. முன்னர் பரமேச்சுவர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. இதனைக் கட்டியவன் பிற்காலப் பல்லவ மன்னனான நந்திவர்மன் ஆகும். இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள் 1. The great temple at Tanjore. J.M. Somasundaram Pillai B.A.B.L. 1935. Madras. 2. The Chola Temples - C. Sivaramamoorthi (New Delhi) 1960. 3. South Indian Inscription Vol II 4. History of sri Vaishnavas - P.Gopinatha Rao. 5. History and Institutions of Pallavas C.S. Srinivasa Chari 6. History of the Pallavas of kanchi - R. Gopalan M.A. 7. Kanchi - Dr. C. Meenakshi M.A.Ph.D. (Delhi) 1954. 8. Kanchi - Publication division - Ministry of Information & Broad casting Govt of India. 1954 9. The seven Pagodas - J.W. Combes- B.A.A.M.S.T (London)1914. 10. Mahabalipuram or seven pagodas - D.R. Hyson (Madras) 1931. 11. காஞ்சிக் கோயில்கள் - டாக்டர் எம்.கே. ஸ்ரீனிவாசன் 1957 சென்னை. 12. தமிழ் வளர்த்த கோயில்கள் - எம். இராதாகிருஷ்ணன் சென்னை. 9. வட்டக் கோயில்கள் சுரகரேசுவரர் கோயில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எனது உறவினரும் தோழருமான v«.V.ã.o. (M.A.B.T) படித்த ஆசிரியர், தோழரே தமிழர்கள் தொன்று தொட்டு நாகரிகம் வாய்ந்த இனத்தவர்கள் என்று கூறுகிறீர்களே, ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், தமிழ் இனத்தவர்களுக்கு வடிவியல் அறிவு (Gemometry knowledge) உண்டா என்று கேட்டார். ஆசிரியர்களே இவ்வாறு இருந்தால் இவர் களிடம் பயின்ற மாணவர்களைப்பற்றிக் கேட்கவா வேண்டும். மேனாட்டறிஞர்கள் பலர் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் இந்தியர் களுக்கு வட்டமான கட்டிடம் அமைக்கத் தெரியாது என்று பலர் எண்ணியதுண்டு. ஓவியக்கலையைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று எண்ணியும் எழுதியும் வந்தனர். முற்காலத்தில் தமிழர்கள் வட்டமான வீடுகள் அமைத்தனர் என்று எடுத்துக் காட்டுகளுடன் நம்மால் பதில் கூறமுடியவில்லை. அரண்மனைகளில் வட்டமான தூண்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக மதுரை திருமலை நாயக்கர் மண்டபத்தையே குறிப்பிடலாம். இன்னும் எண்ணற்ற வட்டமான கோயில் தூண்களைக் காட்டமுடியும். தமிழகத்திலும் கேரள நாட்டிலும், மைசூர் மாநிலத்திலும் முற்காலத்தில் கட்டிய வட்ட வடிவமான திருக்கோயில்கள் பலவற்றைக் காட்டமுடியும். கோயில்கள் வட்டமாயும் சதுரமாயும், நீண்ட சதுரமாயும் அரைவட்டவடிவிலும் பல உள. ஆறுபட்டை (அறுகோணம்) எட்டுப்பட்டை (எண்கோணம்வடிவிலும் பல தூண்களும் விமானங்களும் தமிழகத்திலே உள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட அண்ணல் வாயில் அறிவன் கோயில் ஓவியமும், 1000-ஆம் ஆண்டுகட்குமுன் கொச்சி அரண்மனையில் தீட்டப்பட்ட சுவர் ஓவியமும், கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் தீட்டபெற்றதஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியமும் பழங்கற்காலத்தில் தீட்டப்பட்ட பிம்பர் கார் ஓவியமும் நமக்கு நல்ல எடுத்துக் காட்டாகும். அரிக்கன்மேடு, கொற்கை ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வுகள் 2000 -ம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் பெற்றிருந்த எஃகு நாகரிகத்தையும் ஐரோப்பாவோடு நாம் செய்து வந்த கடல் வணிகத்தை எடுத்துக் காட்டுவதாய் இருந்தன. சிந்துவெளி அகழ் ஆய்விற்குப்பின் 5000 -ம் ஆண்டுகளுக்குமுன் திராவிடர்கள் உலகிலே ஒப்பற்ற நகர் அமைப்புத்திறனும் கட்டிட அமைப்புக் கலையும் நன்கறிந்தவர்கள் என்பது உறுதி செய்யப் பெற்றுள்ளது. உலகிற்கே 5000 -ம் ஆண்டிற்கு முன்னர் நாகரிகத்தை உருவாக்கி உயர்ந்த பண்பாட்டை உருவாக்கி உலகில் கலைவளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் வித்திட்டவர்கள் என்பது மேனாட்டு அறிவியல் பாங்காக பல்வேறு நாட்டறிஞர்களாலும் உறுதி செய்யப் பெற்றுள்ளது. வட்டமான கட்டிடம் சங்க காலத்திற்கு முன்பே தமிழர்களுக்கு வட்டவடிவைப்பற்றி நன்கு தெரியும். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலே தமிழர்கள் ஞாயிறு, திங்கள் முதலிய கோள்களை வழிபட்டு வந்தனர் என்றால் அவர்களுக்கு வட்டத்தைப் பற்றி தெரியாது என்று கூறமுடியுமா? தமிழ்நாட்டு மகளிர் கிறித்தவ ஊழி எழுவதற்கு முன்பே வட்டம் அரைவட்டம், சதுரம் நீண்ட சதுரம் முக்கோணம், ஐங்கோணம் அறு கோணம், எண்கோண வடிவங்களில் வீட்டின் மாக்கோலங்களும் சுண்ணக் கோலங்களும் வண்ணக்கோலங்களும் எண்ணிலாது தீட்டி கைவண்ணம் பெற்றவர்கள். அரங்கு இன்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொழல் இதன் பொருள் அரங்கினை இழையாது வட்டாடினாற் போலும் தான் நிரம்புவதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவர் அவையின் கண் ஒன்றனைச் சொல்லுதல் என்பதாகும். வட்டாடல் வட்டமான ஓடு, அல்லது வட்ட செங்கலை வைத்து விளையாடும் ஒரு வகைவிளையாட்டையே இங்கு வள்ளுவர் வட்டாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு வட்டுச் செய்யத் தெரியும் என்பது இதனாற் புலப்படும். 5000-ம் ஆண்டுகளுக்கு முன்பே உலோக காலத்திலே தமிழர்களுக்கு வண்டிகள் செய்யத் தெரியும் வண்டிகள் சக்கரமின்றி ஓடாது. சக்கரம் வட்டவடிவமானது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆதியில் அரும்பிய தமிழ் எழுத்தே வட்ட எழுத்தாகும். வட்டெழுத்து பனை ஓலையில் எழுதுவதற்கும் கல்வெட்டுகள் பொறிப்பதற்கும் செப்பேடுகளில் எழுதுவதற்கும் எளிதானதாக இருக்கும். மலையாள எழுத்தும், ஆந்திர எழுத்தும், சிங்கள எழுத்தும் இன்றும் வட்டவடிவிலேயே உள்ளன. இன்றையத் தமிழ் எழுத்துக்களை விட வட்டெழுத்துக்கள் எழுதுவதற்கு எளிதானது. விரைவாக எழுதுவதற்கு மிகவும் சாதகமாக இருக்கும். இன்று தமிழர்கள் கையினால் தாளில் எழுதும் பொழுது தமிழ் எழுத்தை வட்டெழுத்துப் போலவே எழுதி வருகின்றனர். வட்டம் வட்டம் (Circle) என்பது குறிப்பிட்ட ஒரு புள்ளியிலிருந்து சமதூரத்தில் ஒரே தளத்தில் உள்ள எல்லாப் புள்ளிகளையும் இணைக்கும் ஒரு முடிவு வளைகோடு ஆகும். படத்தில் என்பது வட்டமையம் (Centre) என்று கூறப்படும். ஒரு வட்டத்தை கம்ப என்னும் கருவியைக் கொண்டுவரையும் பொழுது அக் கருவியில் உள்ள ஊசிமுனை படியும் இடம் வட்டத்தின் மையமாகும். பென்சில் முனை வரையும் வட்டத்தின் எல்லைக்கோடு அதினபரிதி (Circumfrence) எனப்படும். படத்தில் அ, ஆ, இ, ஈ, உ பரிதியாகும். வட்ட மையத்தினின்று பரிதிக்கு இழுக்கப்படும் நேர்கோடும் ஆரம் (Radius) ஆகும். படத்தில் ஒஅ, ஓஆ, ஒஇ என்பன வட்டத்தின் ஆரங்கள் எனப்படும். ஒரு வட்டத்தில் வரையப்பட்ட ஆரங்கள் ஒரே நீளமானவை. முதல்வட்டத்தில் அ, ஒ, இ, என்னும் நேர்கோடு வட்டத்தின் விட்டம் (Diameter) எனப்படும். ஒரே வட்டத்தில் வரையப்படும் விட்டங்கள் அனைத்தும் ஒரே நீளமானவை. வட்டத்தில் ஆரம் விட்டத்தில் பாதியாகும். படத்தில் அ.இ = 20 அல்லது ஒ அ = ½ அ.இ. படத்தில் அஆ, ஆஇ, இஈ, ஈஉ, உஅ என்ற பரிதியின் பாகம் வில் (ARK) எனப்படும். வட்டத்தின் பரிதியிலுள்ள ஏதேனும் இருபுள்ளிகளைச் சேர்க்கும் நேர்கோடு நாண் (Chorch) எனப்படும். படத்தில் ஈஉ ஒரு நாண் ஒரு வட்டத்தில் மையத்திலிருந்து ஒரு நாணுக்கு வரையப்படும் நேர்குத்துக்கோடு அந்த நாணை இரு சமபாகங்களாக்கும் ஒருவட்டத்தில் வரையக் கூடிய மிகப் பெரிய நாண் அதன் விட்டமாகும். ஒரு வட்டத்தை 360 பகுதியாகப் பிரித்து 120 பாகைகளைப் பிரித்து முக்கோணமும் 60 பகுதிகளாகப் பிரித்து அறுகோணமும், 72 பகுதிகளாகப் பிரித்து ஐங்கோணமும் போடுவது போல் எண் கோணமும் பதினாறு கோணமும் பண்டு தொட்டு போடுவது வழக்கம். செம்புத் தகடுகளிலும் தங்கத் தகடுகளிலும் போட்டு அதில் சில எழுத்துக்களைப் பொறித்து பூசைகள் செய்து திருஉருவங்களின் அடியில் யாந்திரிகம் என்று வைப்பது வழக்கம். தாயத்து என்று கழுத்தில் கட்டிக் கொள்வதும் அரையில் கட்டிக் கொள்வதும் வழக்கம் இந்த மரபு 5000 ஆண்டுகளாக சிந்து வெளி நாகரிகத் தினின்று தொடர்ந்து வழக்கில் இன்று வரை இருந்து வருகிறது. எனவே பல்லாயிரம் ஆண்டுகளாய் வட்டமும் முக்கோணமும் அறுகோணமும் தமிழர்களுக்கு நன்கு தெரியும். கள்ளழகர் கோயில் பாண்டிய நாட்டில் மதுரை, திருநெல்வேலி போன்ற நீளமும் அகலமும் உள்ள பெரிய மதில்களை எழுப்பி நடுவே சிறிய அகநாழிகையையும் விமானங்களையும் எழுப்பி இருந்திருக் கிறார்களே யொழிய வட்டம் அரை வட்டம் அறுகோண விமான அமைப்புள்ள கோயில்களையோ எழுவகைக் கோயில்களையோ எழுப்பியதாகத் தெரியவில்லை. காரணம் புலப்படவில்லை. சேரநாட்டில் சோழ நாட்டைப் போல், பல்லவர்களின் தொண்டை நாட்டைப் போல் ஏராளமான வகைக் கோயில்களை எழுப்பா விடினும் ஒரு சில வட்டக் கோயில்களை எழுப்பி யுள்ளார்கள். பாண்டிய நாட்டில் பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத் தலைநகராக விளங்கிய மதுரை மாநகரைச் சுற்றி பெரிய மலைகள் இல்லாவிடினும் சிறு சிறு குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகளில் பலவற்றில் சிவன் கோயில் பல உள. ஆங்காங்கே சமண முனிவர்களும் படுக்கைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இடங்கள் பல இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிராமி எழுத்தில் எழுதிய பல வாசகங்கள்பல இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமுதிர் சோலை மதுரை மாநகருக்கு வடகிழக்கே 15-கல் தொலைவில் பழமுதிர் சோலை அமைந்திருக்கிறது. இதனைக் கள்ளழகர் கோயில் என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் அழகர் கோயில் அழகுற இயற்கை எழில் எங்கும் நோக்கினும் இன்பந்தரும் சூழ்நிலையில் இக் கோயில் காட்சி அளிக்கும் முல்லையாற்றுக் கால்வாய் நீராய் எங்கும் பசுமையாய் பச்சைக் கம்பளம் விரிந்தாற் போன்று பசுமையாய் நெற்பயிர்கள் கண்ணுக்கினிய கவினுறு வனப்பை உடையதாய்த் திகழ்கின்றன. மதுரையிலிருந்து உந்து வண்டியிற் சென்றால் இடை இடையே அப்பன் திருப்பதி கள்ளத்திரி முதலிய சிற்றூர்களைக் காணலாம். இந்த அழகர் கோயில் சோலைமலையை யொட்டி அதன் அடிவாரத்தில் அழகு பொலிய அமைந்துள்ளது. மதுரை நகரிற்குள் ஒரு அழகர் கோயில் இருக்கிறது சிலர் எந்த அழகர் கோயிலுக்கு நீங்கள் செல்லவேண்டும் என்று கேட்பார்கள். அப்பொழுது நாம் கள்ளழகர் கோயில் அல்லது திருமாலிருஞ் சோலை என்று தைரியமாகக் கூறவேண்டும். சோலை மலையை ஒட்டி கோயில் கொண்டிருக்கும் அழகர் கோயில் 300 ஏக்கர் பரப்பளவில் பழம் பெரும் மன்னர்களைப் போல் பெரிய நிலப் பரப்பில் வளம் கொழிக்கும் இடத்தில் இயற்கை இன்பத்தை இனிது நுகர்ந்து இனிது வாழ்கின்றனர். இந்த அழகர் கோயில் தொன்மை வாய்ந்தது. சங்க நூற்களான பரிபாடலும் சிலப்பதிகாரமும் அழகர் மலையை இருங்குன்றம், திருமாலிருங்குன்றம் திருமால் குன்றம் என்றும் போற்றுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை திருமால், கண்ணன் என்று போற்றுகின்றன. பழமுதிர் சோலையும் திருமாலிருஞ் சோலையும் ஒன்றல்ல. வெவ்வேறு சோலைகளாகும் திரு முருகாற்றுப் படை கூறுகிறபடி பழமுதிர் சோலை மலைமேல் இருந்தது. இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் நன்கு எடுத்துக் காட்டுகின்றார். ஆனால் திருமாலிருஞ் சோலைமலை அடிவாரத்தில் இருந்தது எனினும் இவ்விரு சோலைகளும் ஒரே மலையில்தான் அமைந் திருந்தன. இதனைப் பெரியாழ்வார் அருணகிரிநாதர் ஆகியவர்கள் பாக்களின் மூலம் நன்குணரலாம். இந்தக் கோயிலுக்கு மங்கள சாசனம் அருளிச் செய்த ஆழ்வார்கள் அறுவரில் பெரியாழ்வாரும் ஆண்டாளும் இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டுள்ளனர். இவ்விருவரும் பாண்டியன் சிரிமாறன் சிரிவல்லபன் காலத்திலும் அவன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும் வாழ்ந்தவர்கள். இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளிலிருந்து பாண்டிய நாட்டின் 900 ஆண்டு வரலாற்றைக் காணலாம். இங்கு காணப்படும் மிகத் தொன்மையான மகா இராச ராசசோழன் கி.பி. 1007-ஆம் ஆண்டு கல்வெட்டு அக்காலத்தில் பாண்டிய நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஹோய்சாளர் கல்வெட்டு ஒன்று மாமடி போசன் சோமேவரனுக்கு இக்கோயிலில் ஏற்படுத்தப் பட்ட ஒரு சந்நிதியைப் பற்றியும் மற்றொன்று இமமன்னவனைப் பாண்டியர் குலத்தை உயர்த்தியவன் என்றும் கூறுகிறது. இவற்றின் மூலம் அக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கும் ஹோய்சாலர் நாட்டிற்கும் இடையே எழுந்த நட்புரிமை அறியப்படுகிறது. கல்வெட்டுகள் மூலம் பாண்டியர்களும் பிற மன்னர்களும் இக் கோயிலுக்குச் செய்துள்ள பல திருப்பணிகளை நன்கறியலாம். அழகர்மலை ஒருகாலத்தில் மாவலி வாணாதிராயர்கள் ஆட்சியில் இருந்ததாகத் தெரிகிறது. இவர்களும் அழகர் கோயிலுக்குப் பல திருப்பணிகளை ஆற்றியுள்ளார்கள். அழகாபுரி கோட்டையைக் கட்டி அங்கு அவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். மற்றொரு வாணர்தலைவன் மானாமதுரைப் பகுதியில் உள்ள தஞ்சாக்கூரில் ஆட்சி நடத்தியிருக்கின்றான். இவன் தஞ்சைவாணன் கோவைப் பாட்டுடைத் தலைவன். இப்பாணர்கள் நிறுவிய ஊர்தான் வாணவீரமதுரை. அது இன்று மானாமதுரை எனப்படும். விசய நகர வேந்தர்களும் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர். கிருஷ்ண தேவராயர் ஆடித்தேர் விழாவின் போது அழகரை அலங்கரிக்க இரு கிராமங்களை மானியமாக அளித்துள்ளார். அழகரை வழிபடுவதற்கு இன்று செல்லும் பக்தர்கள் அவரது கோயிலை அடையுமுன்னர் மூன்று கோட்டைகளைக் கடந்து உள்ளே புக வேண்டும். வெண்மையும் செம்மையும் கலந்த நாம அடையாளம் திகழும் கோட்டைச் சுவர்களே நம் ஆற்றைக் கண்டாயா அழகரைச் சேவிக்க வந்தாயா? வருக! வருக!! வருக!!! என்று வரவேற்பது போல் உள்ளன. வானுற ஓங்கி வளமார நிற்கும் நெடியமரங்களும் தென்றற் காற்றும் உடலுக்கும் உள்ளத்திற்கும் உவகை ஊட்டுவனவாய் உள்ளன. அங்கு காட்சி அளிக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமிக் கோயிலைக் கடந்து மூன்றாவது கோட்டை வாயிலுக்குள் புகுந்து விட்டால் ஒரு சில இல்லங்களும் கடைகளும் கோயிலும் ஒருங்கே அமைந்துள்ளன. கோயில் மலை அடிவாரத்தில் மலையை யொட்டி அமைந்திருக்கிறது. மலை மேலே நூபுர கங்கை இருக்கிறது அங்கு போகவிரும்புபவர் வெயில் வருமுன் சென்று திரும்புவர். நூபுர கங்கை என்று அழைக்கப்பெறும் தீர்த்தம் சிலமயாறு என்று கூறப்படுகிறது. கோயிலின் வடபுறத்திலுள்ள அரணைக் கடந்து 2-கல் தொலைவு நடந்தால் இந்தத் தீர்த்தக் கரையை அடையலாம். நூபுர கங்கைக்குச் செல்லும் வழியில் இருமருங்கினும் நாமங்கள் தீட்டப்பட்டிருப்பது தீர்த்தத்தை நாடிச் செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி போலிருக்கின்றது வழியில் சிறு குளமும் பூங்காவும் அரச மரத்து அடியில் அமர்ந்துள்ள ஐங்கரனையும் காணலாம். பாதையின் இருமருங்கிலும் மரஞ்செடி கொடிகள் நிறைந்த காடுகளின் வனப்பும் அழகிய பூம்பொழில்களும் நீர் நிலைகளும் கண்களுக்கினிய காட்சியாய் நிற்கின்றன. இலக்கியங்களில் எழிலுற எடுத்துக்காட்டும் சந்தனமரம், செண்பகமரம், மா, பலா, தெங்கு முதலிய மலைவளம் அனைத்தையும் அங்கு கண்டு சுவைத்து இன்புறலாம். குரங்குகளின் காட்சியும் அவைகள் செய்யும் சேட்டைகளும் வியக்கத்தக்கனவாகும். பாண்டகு வண்டினங்கள் பண்கள்பாடி மதுப்பருக தோண்டலுடைய மலைதொல்லை மாலிருஞ் சோலையதே என்ற திவ்வியப் பிரபந்தத்தின் இனியபாக்கள் நினைவில் தோன்றினால் நம்மையறியாமலே வாயைத் திறந்து பாடச் சொல்லும் கருடதீர்த்தத்தைக் கடந்து சென்றால் எதிரே நூபுர கங்கை இருப்பு கம்பிகளில் பாதுகாக்கப்பட்டிருக்கும் மண்டபம் தெரியும். மேலே சிறு கோபுரமும் மண்டபத்தினுள்ளே தீர்த்தத் தொட்டியும் உள்ளது. கோபுரத்திற்குப் பின்னால் ஓர் அம்மன் கோயிலும் சிலநாகர் சிலைகளும் உள்ளன. இவை அனைத்தையும் சுற்றி தீர்த்தமாடிவிட்டு கீழே வந்து இனி நாம் அழகர் பெருமாளைக் கண்டு வழிபடவேண்டும். கீழே வந்ததும் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கு போக முனைந்தால் அடி முதல் முடிவரை வட்டவடிவான உயர்ந்த ஒரு கட்டிடத்தைக் காணலாம். அது அழகுற அழகர் கோயில் என்பதற்கேற்ப அமைந்துள்ளது. அதுகோயில் அல்ல கோயிலின் கூலக் களஞ்சியம் (தானியக் களஞ்சியம்) அதைக் கடந்து சென்றால்தான் அழகரைச் சேவிக்க முடியும். கோயிலின் அதிட்டானம் வட்ட வடிவாக கருங்கல் வேலைப்பாடமைந்த அகநாழிகையை உடையதாய் அமைந்திருக் கிறது. நாற்புறமும் சிறு பிரகாரமும் மண்டபமும் உள்ளது. மண்டபத்திற்கு திருஉண்ணாழியின் மேல் பாதம் வரை நன்கு காணலாம் தோளை நன்கு காணமுடியாதவாறு இரும்புக் கம்பிகளால் திருச்சுற்று மண்டபத்திற்கும் திரு உண்ணாழிகைக்கும் இடையில் உள்ள இடைவெளி வெளியே இருந்து திருடர்கள் உட்புகுந்து விடாதவாறு கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக மாட்டப்பட்டிருக்கிறது. அழகரைச் சேவிப்பவர்களுக்கு இதனால் ஒரு சிரமும் இல்லை. ஆனால் திருஉண்ணாழிகையுடன் விமானத்தையும் கண்டுகளிக்க விரும்பும் கலைச் சுவையை அனுபவிக்க நாடும் ஒரு சிலருக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. இந்தக் கோயிலின் திருஉண்ணாழிகை வட்டமாக இருப்பதோடு இதன் விமானமும் வட்டமாய் அமைக்கப்பட்டிருப்பது அழகிற்கு அழகு செய்வதுபோல் இருக்கிறது. திருஅகநாழிகையின் மேலே அமைக்கப்பட்டிருக்கும் வட்டவடிவான சோமச் சந்தர விமானம் என்னும் பொன்மயமான விமானத்தை இமை கொட்டாது எவ்வளவு நேரமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த விமானம் வட்டவடிவமானது என்று மட்டும் சொல்வதற்கில்லை. நீள் உருண்டை வடிவில் மேலே உருட்டிவிடப்பட்டுள்ளது. சைவப் பற்றுமிக்கார் கண்டால் பொன்மயமான சிவலிங்கம் என்று இரு கன்னத்திலும் போட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு சிவ சிவா என்று ஐந்து வினாடியாவது தன்னை மறந்து நிற்பார்கள். வாயிற் கோபுரத்தைக் கடந்து கோயிலினுள் சென்றதும் பலிபீடமும் தங்கக் கொடி மரமும் அதற்கப்பால் மகர மணிகள் பதித்தாற் போன்ற பசுமையான நெற்பயிர்களின் காட்சியும் உள்ளத்தைவிட்டு என்றும் அகலாக் காட்சியாகும். தங்க விமானம் தகதகவென ஒளிர்விட்டோங்குவதும், பொன்னாலான கொடிமரமும், மலையும் தென்றற்காற்றும் உள்ளத்தை இன்ப சாகரத்தில் மூழ்கச் செய்து விடுகிறது. பக்தர்கள் எளிதில் கோயிலை விட்டு அகல முடியாது. அக நாழிகையில் அமர்ந்திருக்கும் இறைவர்க்கு பரமசுவாமி உற்சவ மூர்த்திக்குச் சுந்தரராசன் என்றும் தாயார்க்கு கலியாண சுந்தரவல்லி என்றும் பெயர். வலது பக்கம் தாயார் சந்நதியும் இடது பக்கம் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன. உற்சவமூர்த்தி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். வலம்புரி விநாயகமூர்த்தி கோயில் ஒன்றும் இங்குண்டு. இங்கு இருமணிகள் வியக்கத்தக்கதாய் அமைந்துள்ளன. கீழே கோயிலினுள் இருந்து கயிற்றை இழுத்து மணிக்கு ஓசை ஊட்டலாம். முன் மண்டபத்தில் நமது திருநெல்வேலிக் கோயிலில் உள்ள இசைத் தூணைப்போல் தட்டினால் சுரம் எழுப்பும் அழகிய வேலைப்பாடுள்ள கல்தூண் களும் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் (திருச்சுற்றில்) அழகான பள்ளியறை அமைந்துள்ளது. முற்றிலும் தந்த வேலைப்பாடு களுள்ள அழகிய சிறு விமானமும் அங்கு அமைக்கப்பட்டு அழகுடன் திகழ்கிறது அந்தந்த விமானத்தில் நல்ல வேலைப்பாடுகள் நிறைந்த சிறு சிறு உருவங்களிலான சிற்பங்கள் மறக்கமுடியாதவை களாய் மாண்புறப் பொலிகின்றன. பள்ளி அறைக்கு வடக்கே ஒரே கல்லில் செதுக்கப்பெற்ற கண்ணன்-விசயன் உருவங்கள் காணப்படுகின்றன. கோயிலுக்கு எதிரேயுள்ள நாயக்கர் மண்டபம் சிற்பச் செல்வங்கள் நிறைந்தது திருமாலின் திரு விக்கிரம அவதாரக் கோலமும் இரதி தேவி கிளியின் மீது வீற்றிருக்கும் அரியகோலமும் மன்மதன் கையில் கரும்பு வில்லை எடுத்து மலர்க் கணைகளை விடுக்க தயாரான நிலையில் நிற்கும் காட்சியும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத தீஞ்சுவைக் காட்சியாகத் திகழ்கின்றன. இங்குள்ள யாழி, குதிரை, நரசிம்ம அவதாரம் போன்ற கண்ணையும் கருத்தையும் கவரும் கவின் பெறும் சிற்பக் கலைக்கருவூலங்கள் அனைத்தும் என்றும் மறக்க முடியாதவை. நாயக்கர் மண்டபத்திற்கு அண்மையில் உள்ள நூல் நிலையமும், காட்சி சாலையும் அமைந்திருக்கிறது என்போன் றோர்க்கு பெரும் விருந்தாக இருக்கின்றன. பொருட்காட்சி சாலையில் சந்தனப் பலகையில் செய்யப்பட்ட விசிறி, சந்தனக் கட்டையால் செதுக்கப்பட்ட அழகிய சாமரம், தந்தத்தால் செய்யப்பட்ட விசிறி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பெற்ற பொற்பதுமைகள் தோளில் அமர்ந்திருக்கும் கிளியும் கையில் வீணையும், ஒருங்கே காணும்பதுமையும் அழகு வாய்ந்தன. இரு மனைவிகளுடன் காணும் மன்னன் திருமலை நாயக்கனின் உருவமும் தழைகளை இடுப்பில் ஆடையாக அணிந்திருக்கும் குறவன்-குறத்தி உருவமும் இங்கேயுள்ளன. இங்கு முகம்மதியர்கள் பாண்டியர்கள் சிம்மாசனத்தில் இருந்து வெளியிட்ட வெள்ளி, செம்பு காசுகள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. சுமார் ஆறடி உயரமுள்ள குத்து விளக்கும் விளக்கைப் பிடித்துள்ள நிலையில் நிற்கும் சில பெண் படிமங்களும் உள. முதற்கோட்டை வாயிலில் உள்ளே வந்ததும் இடிந்து கிடக்கும் அழகிய அரண்மனை ஒன்று காணப்படுகிறது அதன் நடுப்பகுதி மட்டும் சிதைந்து போன நிலையில் அப்படியே பெருமிதத்துடன் நிற்கிறது. வடக்கே திருமலை நாயக்கர் மண்டபம் அவர் சிலை பாழ்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதன் அமைப்பும் சித்திரவேலைப்பாடுகளும் சிறந்து விளங்கு கின்றன. இதைச் சுற்றிப் பல அழிபாடுகளும் காணப்படுகின்றன. திருப்பருத்திக்குன்றம் சமணர்கோயில் திருப்பருத்திக்குன்றம் காஞ்சிபுரத்திற்கு அண்மையில் வேகவதி ஆற்றின் வடகரையில் உள்ளது. ஒருகாலத்தில் சமண காஞ்சி (JAINA KANCHI) என்று அழைக்கப்பட்டு வந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுவரை சமணர்களின் ஒரு பிரிவினராய் விளங்கிய திகம்பரர்களுக்கு இது ஒருபலமான கோட்டையாக இருந்தது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமண சமயத்தைத் தழுவியவனாய் அச்சமயத்தை வளர்க்க எல்லா உதவியும் செய்து வந்தான். சமணக் கோயில்களைக் கட்டினான். திருநாவுக்கரசு நாயனார் போன்றவர்கள் சமண சமயம் துறந்து சைவ சமயம் தழுவிய தற்காக அவருக்காற்றிய கொடுமைகளைப் போல் சமண முனிவர்கள் சொற்படி பல சைவர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளை இழைத்துவந்தான். திருநாவுக்கரசு நாயனாரின் பொறுமையும் சிவபக்தியும் மகேந்திரவர்மனை சைவந் தழுவுமாறு செய்தது. முதலாம் மகேந்திரவர்மன் தலைமையில் நாடெங்கும் சைவப்பிரச்சாரம் எழுந்தது. சமண சமயத்தின் கொள்கைகள் இவ்வுலக வாழ்க்கையும் மக்களின் முன்னேற்றத்திற்கும் நாகரிகத் திற்கும் பண்பிற்கும் உதவாதது என்று விளக்கப்பட்டது. சைவ சமயத்தின் சிறந்த தலைவர்களும் கல்விமான்களும் சைவ சமயப்பிரசாரத்திற்கு ஆதரவளித்தனர். இந்தப் பெருந்தாக்குதல் களும் சூறாவளிப் பிரசாரத்தையும் சிறு குழுவினர்களைக் கொண்ட சமணந்தாங்கச் சக்தியற்று வீழ்ந்தது. என்றாலும் ஒருசில மக்கள் உள்ளத்தில் சமண நெறி நிலைத்து உயிருடன் இருக்கிறது எனலாம். காஞ்சிக்கு அண்மையில் உள்ள சமண கோயில்களில் பழங்காலச் சமணர்கள் ஒருசிலர் இன்றும் சென்று வழிபட்டு வருகின்றனர். சமணர்கள் தங்களுக்குள்ளே தங்கள் சமயச்சடங்குகளைச் செய்து வருகிறார்களே யொழிய வெளியே பிரச்சாரம் செய்ய முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். திருப்பருத்திக்குன்றத்தில் ஒருசிலர் தங்கள் சமய குருவையடுத்து தங்கள் சமய தத்துவ ஞானத்தையும் இலக்கியங்களையும் பாடங்கேட்டு ஏதோ ஒரு அளவு தம் சமயத்தை சாகாது பாதுகாத்து வருகின்றார்கள். பதினான்காம் ஆண்டிற்குமுன் வாழ்ந்த தங்கள் சமய குருவாகிய மல்லிசேனா, வாமனசாசுரி நினைவு நாளாக எல்லாச் சமணர்களுக்கு புனித நாளாகக் கொண்டாடினர். அந்த இடத்தில் அவர்களின் கல்வெட்டுகள் அவர்களின் நினைவுச்சின்னங்களாக நிலைத் துள்ளன. அவருக்குப் பின்னால் வந்த புஷ்ப சேனா என்பவர் அவரது மாணவராய் தனது குருவின் சிறந்த மாணவராய் தன் குருவைப்போல் சிறந்த இலக்கியங்களைப் படைத்து அவருக்கு ஒரு நிலையான சின்னமாக அர்ப்பணம் செய்துள்ளார். அவர் விசய நகர நாயக்க மன்னனின் சிறந்த அமைச்சராய் விளங்கிய இருகப்பாவின் நட்பைப் பெற்றது அச்சமயத்திற்கு மிகப் பயனுள்ளதாய் இருந்தது. திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள கோயிலுக்கு சில புதிய பலத்தையும் புதிய அமைப்பையும் அளித்து அத் திருக்கோயிலைச் சமணர்கள் எங்களின் நொந்தாவிளக்கு இன்றும் கூறும் நிலையில் நிலைத்து நிற்கச் செய்தது.1 இன்றையக் காஞ்சியின் நகர எல்லையினின்று 2 கல் தொலைவில் தான் சமணக் காஞ்சி என்று புகழ்ந்து கூறும் திருப்பருத்திக்குன்றம் உள்ளது. அப்பர் அடிகளை மகேந்திரவர்மன் I, குருவாகக்கொண்டு கோயில்கள் எழுப்பியது போல், இருசமண முனிவர்களான வர்த்தமான, விசபாந்த தீர்த்தங்காரங்களுக்கு முற்காலத்தில் இருந்த காஞ்சிப் பல்லவர்களின் குருவாக விளங்கிய சமண முனிவர்களான வாமனர், மல்லி சேனா (Vamana and Mallishena) என்பவர்கள் விருப்பப்படி எடுப்பிக்கப்பட்ட பாழிகளாகும். இந்தப் பல்லவர் அரசன் முதலாம் மகேந்திரவர்மனைப் போன்றவன் அன்று. மகேந்திரவர்மன், சமண சமயத்திலிருக்கும் பொழுதே சிவபெருமான் மீது பக்தி கொண்டோ அல்லது சைவமக்களின் அன்பைக் கவரவேண்டும் என்று கருதியோ திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள அரசர்களுடைய கல்வெட்டுக்கருகில் உள்ள தூணில், உள்ள கல்வெட்டு சிவலிங்கம் ஒன்றை உருவாக்கிப் பிரதிட்டை செய்தது என்று கூறப்பட்டுள்ளது. அது தனது சொந்தச் செலவில் செய்யப்பட்டது என்று தெரிகிறது. திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள தீர்த்தங்கரர்களின் கோயில்களான வர்த்தமான தேவர் கோயிலும், திரிலேக் கியநாதசுவாமி கோயிலும் இன்றுவரை நன்றாகப் பழுதுபார்க்கப் பட்டு நன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் வட்டவடிவிலானது. மிகப் பெரியது அரிய சிற்ப வேலைகள் நிறைந்தது. காஞ்சி வட்டாரத்தில் உள்ள அழகிய கோயில்களில் இதுமுதல் இடத்தைப் பெறத் தக்கது. இங்கு பல சமண தீர்த்தங்கரர் களின் படிமங்கள் நன்கு பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. இந்த இடத்தில் 17 கல்வெட்டுகளை சென்னையிலுள்ள கல்வெட்டு ஆய்வுத் துறையினர் படியெடுத்து வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. கோயில்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் உபயோகமான செய்திகள் தரத்தக்கவை யாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையுள்ள செய்திகள் இதில் அடங்கியுள்ளன.2 முதலாம் குலோத்துங்க சோழமன்னன் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்ட கி.பி. 1116-ஆம் ஆண்டின் கல்வெட்டு ஒன்றில் திருப்பத்திக் குன்றத்து வர்த்தமான தீர்த்தங்கரர் கோயில் நிலம் சாமுத்தயமுனி அல்லது சமணத் துறவியர்களின் குழு ஒன்று கால்வாய் வெட்டுவதற்காக மன்னனிடம் கேட்டு வாங்கியதாகக் கூறுகிறது. சில ஆண்டுகளுக்குப்பின், விக்கிரம சோழன் காலத்தில் வெட்டப்பட்ட மற்றொரு கல்வெட்டு மூலம் இரண்டு சந்தர்ப் பத்தில் இரண்டு காரியங்களுக்காக இந்த நிலத்தை இனாமாக வாங்கி அரசுக்கான வரியினின்று விதி விலக்கு அளிக்க வேண்டும் இது சமணக் கோயிலுக்காக பயன்படுத்தப்படும் என்று வாங்கப் பட்டதாகத் தெரிகிறது. சமுதாய முனியின் உருவம் இந்தக் கல்வெட்டில் கூடக் காணப்படுகிறது. இந்த ஆதாரத்தின் மூலம் திருப்பருத்திக்குன்றத்து தீர்த்தங்கரர் கோயிலுக்குப் பள்ளிச் சந்தம் அளிக்கப்பட்டுள்ளது இச் சமண கோயிலின் பூசைக்காக ஒரு சிற்றூர் முழுவதும் அதிலுள்ள நஞ்செய் புஞ்செய் நிலங்களும் நிவந்தமாக அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.1 வர்த்தமான தீர்த்தங்கரர் திருக்கோயில் அடியிலிருந்து முடிவரை வட்ட வடிவில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது அதிட்டானம் கல்லில் கவின்பெற வரிகள் வைத்துக்கட்டுள்ளது. பாதக்கிரமத்தில் தீர்த்தகரர் ஒருவரின் திருஉருவம் திகழும் மாடம் ஒன்றும் காணப்படும். தோளிலும் தோளிற்கு மேலும் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு புத்தம் புதிய கோயில் போல பொலிகிறது. இதன் உட்புறமும் அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே பல தீர்த்தங்கரர்களின் திருஉருவங்கள் சிறிதும் பெரிதுமாய் வைக்கப்பட்டுள்ளது. உட்புறம் சுவர்கள் சுத்தமாக வைக்கப் பட்டுள்ளது மேலே உச்சியில் அலங்காரமாக வண்ணந்தீட்டி செடிகளும் கொடிகளும் இலைகளும் தளிர்களும் மலர்களும் ஒளிரும்படி நல்லவண்ணந் தீட்டியுள்ளார்கள். இது நாள் தோறும் வழிபடும் கோயிலாக இருப்பதால் நன்கு கவனிக்கப்பட்டு புனித இடமாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றார்கள். தமிழ் நாட்டில் எழுந்துள்ள சைனர்களின் வட்டக் கோயிலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். விசயால சோழீச்சுரம் தமிழ்நாட்டிலே அரைவட்ட (SEMI CIRCLE) அமைப்புள்ள கோயில்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. காஞ்சிபுரம், செங்கற்பட்டு, தஞ்சாவூர் தென்ஆர்க்காடு மாவட்டங்களில் சுமார் 50-அரை வட்டக் கோயில்கள் பற்பல வகையாக அமைக்கப் பட்டுள்ளன. இந்தக் கோயில் சிலவற்றை அரை வட்டக் கோயில் என்று சொல்லலாம். சிலவற்றை ஆலக்கோயில் என்று சொல்லலாம். பலவற்றைத் தூங்கானைமாடக்கோயில்கள் (கஜபிருஷ்டக் கோயில், ஹதிபிருஷ்டக் கோயில்) எனப் பெறும். இக்கோயில் களைப்பற்றி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்ட மக்களில் பலரக்குத் தெரியாமல் இருப்பது வியப்பன்று. இக்கோயில்கள் மலிந்துள்ள மாவட்டங்களில் வாழும் நமது சமய மக்களில் பலருக்கு தெரியாது. இதாவது சிலருக்குத் தெரிந்திருக்கிறதே என்று மகிழ்ச்சி யடையலாம். ஆனால், கலை ஆராய்ச்சித் துறையில் இறங்கிய பலருக்குத் தமிழ்நாட்டில் வட்டக் கோயில் இருக்கின்றன என்றால் நம்ப மறுக்கிறார்கள். அயல் நாட்டைச் சேர்ந்த சிறப்பாக ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ் நாட்டில் வட்ட அமைப்புள்ள கோயில்களே இல்லை என்று எழுதி வருகின்றார்கள். தமிழ் நாட்டில் வட்டக்கோயில் சில உள்ளன. இங்கு சுமார் 3 வெவ்வேறு வகையான வட்டக்கோயில்களை எடுத்துக் காட்டியுள்ளேன் அவற்றில் இப்பொழுது எடுத்துக் காட்டப் பெறும் வட்டக் கோயில் அமைப்பு ஒரு வியத்தகு வட்டக் கோயில் அமைப்பாகும். வெளியே பார்த்தால் சதுர வடிவாகக் காணப்படும் உள்ளே போய்ப் பார்த்தால் தான் வட்டக் கோயில் என்பது புலப்படும். இக்கோயிலைச் சதுரமாகக் கட்டி நடுவே அக நாழிகையை வட்டவடிவமாக அமைத்து மேல் உள்ள விமானத்தில் எட்டுப் பட்டமும், சதுரமும் உருண்டையுமான பல அமைப்பு களையும் உள்ளடக்கி இக் கோயிலைப் படைத்திருக் கின்றார்கள். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காணப் படவில்லை. சோழர் களின் சிற்பகலையின் சீரிய சிறப்பிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள புதுக் கோட்டைக்குப் பக்கத்தில் நாரத்தாமலை (நகரத்தார்மலை) என்னும் மேல்மலையில் உள்ள விசயால சோழீச்சுரம் என்னும் பிரதான கோயிலே நாம் கூறும் சதுர வடிவான திருச்சுற்றும் வட்டவடிவமான அகநாழிகையும் உடைய கோயிலாகும். இந்தக் கோயில்களின் திருமதில்கள் இருந்த இடம் தெரியாது விழுந்து அழிந்து போய்விட்டன. இத் திருக் கோயிலைச் சுற்றியிருந்த ஏழு பரிவாரத் தெய்வங்களின் கோயில்கள் இப்பொழுது அழிந்தும் அழியாமலும் விரைவில் மறைந்துவிடும் நிலையில் உள்ளன. அதில் காட்டப் பெற்றுள்ள பெயர்கள் பிற்காலப் பாண்டியர்கள் பெயர்களாகக் காணப்படுகின்றன. அவற்றின் மூலம் இந்தக் கோயில் எப்பொழுது கட்டப்பட்டுள்ளது என்று திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. அதனுடைய பெயரைக் குறிப்பிடுவதினின்றே அதனுடைய காலம் அல்லது கோயிலைக் கண்டுபிடிப்பதில் எழுந்துள்ள ஐயத்திற்கு ஒரு காரணமாகும் என்றாலும் இக்கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று உறுதியாகக் கூறுகின்றார்கள். இது சோழ மன்னர்களால் எடுப்பிக்கப்பட்ட கோயில் என்பதில் எவருக்கும் ஐயமில்லை இக் கோயில் மலைமீது மேற்கு நோக்கி இருக்கிறது. இந்தக் கோயில் 1240-சதுர அடியுள்ள நிலப்பரப்பில் இன்றும் பொன்றாது தலைநிமிர்ந்து கவின் பெறப் புதுமைப் பொலிது முழுதும் அழிந்து விடாது நிற்கின்றது. இத்திருக் கோவிலின் அகநாழிகையின் நாற்புறமும் சதுர வடிவில் எடுப்பிக்கப்பட்டிருக்கும் சுவர்கள் 5-அடி கனமுள்ள கட்டியான சுவரால் கட்டப்பட்டுள்ளன. அகநாழிகையின் குறுக்குளவு (விட்டம்) 8 அடி 6 அங்குலம். உயரம் 8-அடியாக இருக்கிறது. அகநாழிகையின் நாற்புறமும் சதுரவடிவில் சுவர் அமைத்து அகநாழிகைக்கும் இந்தச் சுவர்களுக்கும் இடையில் உள்ள பகுதி திருச்சுற்றாக (பிரகாரமாக) அமைக்கப்பட்டிருக்கிறது. அக நாழிகையைச் சுற்றி இருக்கும் சதுர அமைப்பின் சுவர் ஒவ்வொன்றும் 29 அடி நீளமுள்ளது. அகநாழிகையின் வலதுபுறம், இடதுபுறம் பின்புறமுள்ள மூன்று சுவர்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. முன்புற முள்ள அந்தராளம் 6 தூண்களையுடையதாயும் கனமற்ற சுவர்களை யுடையதாயும் உள்ளன. முன்புறமுள்ள இடை நாழிகை (அர்த்த மண்டபம்) 8 தூண்களை உடையதாய் இருக்கிறது இதன்முன்புறம் அகன்ற வாயிலும் 6 தூண்களும் உடையன. மேலே தட்டையான மேற்கூரையும் பெரிய வளைவான எழுதகமும் அணி செய்யப்பெற்ற கூடுகளும் உள்ளன. இடைவெளியில் உள்ள கூடுகளின் உள்ளே மனிதர்களின் தலைகள் போன்ற உருவங்களும் விலங்கு வடிவங்களும் கீழே மூவிலை ஒப்பனையுள்ள இலைகளின் கொத்தணி ஒப்பனைகளும் உள்ளன. கைபிடிச்சுவர்களின் விளிம்பின் மேலே மேற்கூரை முழுதும் வரிசை வரிசையாகப் பஞ்சாரங்கள் உள்ளன. அவைகள் கூரையின் கோணல் வளைவைக் கொண்டதோடு மூலைகளில் கனசதுரஞ் சார்ந்ததாயும் காணப்படுகின்றன. நடுவே நீண்ட சதுரத்தோடு வண்டியின் கூண்டு வடிவான தோற்றமும் காணப்படுகிறது. எல்லாப் பஞ்சாரங்களும் அழகிய மாடங்களை யுடையதாய் அருள் ஒழுகும் முகப் பொலிவு திகழும் ஆடும் அழகிய ஆகும் அரம்பையர்கள் உருவங்கள் அமைந்ததாய் உள்ளன. வட்டவடிவமான அழகிய அகநாழிகையின் மீது தனித் தன்மை வாய்ந்த அழகிய பாணியில் அடியிலிருந்து மேலே படிப்படியாய்க் குறைந்துள்ள மூன்று பகுதிகளையுடைய விமானம் உள்ளது. ஒவ்வொரு பகுதியும் தனக்கே உரித்தான சிறப்பான எழிலார்ந்த எழுத்தையும் கூடுகளையும் உடையதாய்க் காணப்படு கின்றது. கூடுகளின் கீழே இருக்கும் அமைப்பு சதுரமாயும் மேலே இருக்கும் அமைப்பு நல்லவட்ட வடிவிலும் உள்ளன. சிகரம் கிரிவா ஆகியவைகளின் அடிப்பகுதி திறம்பட அமைக்கப்பட்டிருக்கிறது. உச்சியில் தூபி காணப்படவில்லை மேலே வட்டவடிவமான வரிசை அடுக்கின்மேலே நாற்புறமும் நான்கு மூலைகளிலும் சதுரமான அடிப்படையில் நான்கு நந்தி உருவங்கள் வெளியே பார்த்துக் கொண்டிருப்பது போல் திகழ்கின்றன. பல்லவர்கள் பாணியில் சிகரம், வட்டவடிவான வில் மச்சு உடையதாய் எட்டுப் பட்டையுடைய தாய் எழில் பெற்றொளிர்வனவாய் காணப்படுகிறது. கூடுகள் சிம்மமுகம் தாங்கியவைகளாய் முன்புறம் துருத்திக் கொண்டிருப்பது போல் காணப்படுகின்றன. மேலும் அவை கீழே கிரிவாவில் உள்ளமாடத்தில் முகடேறியுள்ளதாய் காணப்படு கின்றன. வாயிலில் இரண்டு வாயில் காப்போர்கள் (துவார பாலகர்கள்) உருவங்கள் மிகக் கெம்பீரமாக நிற்பது போல் காணப்படுகின்றனர். விமானம் சிறிதுதான் என்றாலும் எழிலிற் குறைந்தவை அல்ல. சோழர்களின் விமான அமைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த விமானம் அமைந்துள்ளது அவ்வாறே இந்த வட்டக் கோயிலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டேயாகும். வித்தியாசங்கர் கோயில் வித்தியாசங்கர் திருக்கோயில் மைசூர் மாநிலத்தில் காடூர் மாவட்டத்தில் சிருங்கேரியில் துங்கபத்தரை ஆற்றங்கரையில் உள்ளது. அது மேற்குமலைத் தொடர்ச்சியில் வராக பர்வதத்தின் அடி வாரத்தில் எடுப்பிக்கப்பெற்றுள்ளது. இக் கோயிலைப் பற்றிய புராணக் கதைகள் பல உண்டு. ஜனமேஜய அரசனால் சர்ப்பயாகம் செய்யப்பட்ட இனம் என்றும் சர்ப்பயாகம் செய்த பார்ப்பனர் களுக்கு அளித்த செம்புப் பட்டயத்தில் அருகேயுள்ள சித்தபுஷகர்ணி என்னும் தீர்த்தத்தில் மூழ்கினவர்கள் பாவங்கள் தீரும் என்று கூறப்படுகிறது பத்திராநதியின் வலது கரையில் மார்க்கண்டேய முனிக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மார்க் கண்டமுனிவரின் தந்தை ஒரு பெரும் முனிவராக வாழ்ந்தார் என்றும் அவனைப் அவர் சிவனை வழிபட்டு மார்க்கண்டனைப் பெற்றார் என்றும் பதினாறு வயதில் எமன் அவனைப் பற்றி அவன் உயிரைப் பறிக்க வரும்பொழுது அவன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டதால் எமனால் அவன் உயிரைப் பறிக்க முடியவில்லை. சிவன் தன் காலால் எமனை உதைக்க அவன் தொலைவில் தலைகுப்புற விழுந்து தனது செயலுக்கு மன்னிப்புப் பெற்றான் என்றும் மார்க்கண்டன் என்றும் பதினாறு வயதாக சிரஞ்சீவிப் பட்டான் என்றும் கர்ணபரம்பரையான கதை உண்டு. இத்தகைய கதைகள் திருக்கடவூரிலும் வட இந்தியாவிலும் உண்டு. இந்தக் கோயிலின் அகநாழிகையும் இடைநாழிகையும் மகாமண்டபமும் வட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அகநாழிகை சிறிதாகவும் அதற்கேற்றவிமானமும் அமைத்திருப்பதோடு அதன் அண்மையில் இடைநாழிகைக்குமேல் ஒரு சிறு விமானமும் மகாமண்டபம் பெரிதாகவும் அமைத்திருப்பதோடு எல்லாம் வட்டவடிவிலே எழில் பெற அமைக்கப் பெற்றுள்ளன. மகா மண்டபத்தைச் சுற்றி நாற்புறமும் பல மாடங்களும் உள்ளன. உள்ளே மூலதானத்தில், சிவலிங்கமும் மண்டபத்தைச் சுற்றியுள்ள மாடங்களில் சிவமூர்த்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விமானம், காஞ்சி சுரஹரேசுவரர் கோயிலைப் போல் அழகிய சிற்ப வேலைப்பாடுள்ளதாய்க் காணப்படாவிடினும் மண்டபம் மிக அழகாய் இணையாததாய் சுற்றிலும் எங்குமில்லாதவாறு எண்ணற்ற எழில் மாடங்களும் திருமூர்த்தங்களும் உள்ளதாய் ஒளிர்கிறது இது வித்தியாசங்கரர் நினைவாக கி.பி. 1338-ஆம் ஆண்டில் கட்டப் பட்டுள்ளது. இந்தக் கோயில் திராவிடப் பாணியில் கட்டப் பட்டுள்ளது. இதனுடைய திருச்சுற்றும் வட்டமாக அமைக்கப் பட்டிருக்கிறது. நவரங்கம் என்று கூறப்படும் மையமண்டபத்தின் உயரம் 10 அடி உள்ளது. மண்டபத்தின் உட்புறம் 8 அடி சதுரமான இடத்தில் 4 அடி சதுரத்தில் தாமரை அரும்பு 2 அடி அளவில் ஒரே மையத்தையுடைய 5 பத்தியுள்ள தாமரைப்பூ இதழ்களையும் கீழ் நோக்கி நிற்குமாறு, அழகுற வண்ணந்தீட்டப்பட்டுள்ளது. மலரும்பூ 4 அடியுள்ளதாய் மையமுள்ளதாயும் மைய மலர் 9 சதுர அடியுள்ளதாயும் உள்ளது. இத்திருக்கோயில் மூன்று வாயில்கள் உள்ளதாய் ஒன்று வடக்கிலும் ஒன்று தெற்கிலும் மேற்கிலும் உள்ளனவாய்த் திகழ்கின்றன. திருஉண்ணாழிகையின் சுவர்களில் மூன்று மாடங்கள் உள்ளன தெற்கில் நான்முகனும் கலைமகளும் மேற் திருமகளும் திருமாலும் வடக்கில் உமாமகேவரனுமாக இடம் பெற்றுள்ளார்கள். கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடையே உருவங் களுக்கு நடுவே இந்திரன் கிழக்கதிபதியாய்த் திகழ்கிறார். தென்திசைக் கதிபதியாய் எமன் உருவம் 2 நாய்களோடு இடம் பெற்றுள்ளது மற்றப் பகுதியில் இராமனும் வியாசமுனிவரும் துர்க்கையும் சனியும் இடம் பெற்றுள்ளார்கள். தெற்கு வாயிலும் பிரதட்சனத்திற்கும் இடையே கருடனும் அனுமானும் இலக்குமி நாராயணனும், பிரமன் சரசுவதியோடும் காணப்படுகிறார்கள். தெற்கிற்கும் மேற்கிற்கும் இடையே வாயிலில் திருமாலின் பத்தாவது அவதாரமாக வரப்போகும் கல்கி குதிரைமீது அமர்ந்து வாளைப் பிடித்துக் கொண்டு குதிரையின் லகானைப் பிடித்திழுத்துக் கொண்டு நிற்கிறார். வேணு கோபாலன் பலராமன், பரசுராமன் மிகக் கம்பீரமாய்க் காணப்படுகின்றார்கள். வாமனன் பலி, கூர்ம மத்சய, அரிகரன், இலிங்கத்தை மார்க்கண்டன் தழுவி நிற்றல் எமன் மார்க்கண்டனை பிடித்திழுப்பதும் குறிப்பிடத்தக்கது. அர்த்த நாரீசுவரா, திரிபுர சம்ஹரர்-மன்மதன் சிவபெருமானை மலர்க்கணை தொடுக்க குறிபார்த்து நிற்றல் வடக்கு பிரதட்சணைக்கு வடக்கேயும் வடக்கு வாயிலுக்கும் இடையே சந்திரன் (திங்கள்) ஹயக்கிரீவன், ஒரு பாத்திரத்தோடும் அகப்பையோடும் அன்னபூரணா வடக்கு கிழக்கு வாயில் சுவருக்கும் இடையே கலைமகளும். வடக்கு கிழக்கு வாயில் சுவர்களுக்கு இடையே இந்து சமய சிலை உருவங்களை பார்த்து ஆய்வதற்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. முன் வலது பக்கத்தின் முன் வாயிலில் ஒரு கோணத்தில் நின்று, சங்கராச்சாரியாருக்கு நடுநிலை தவறாத நிலையில் அவருக்கு உபதேசம் அளிக்கும் நிலையில் ஒரு சிலை உருவம் உள்ளது. அவரது கையில் ஒரு ஏடு திகழ்கிறது. விலங்கு ஆட்சியை செய்யும் உருவங்கள் அடங்கியுள்ளன. முன்னுள்ள பெரிய வட்டமாக அமைந்துள்ள மாமண்டபத்தில் மூலைகளில் கல் சங்கிலிகளின் வளையங்களைப் பிடித்து கோயிலைப் பார்க்க வரும் ஐரோப்பியர்கள் அதிசயத்தோடு தொங்கி ஆடிக்களித்து வருகின்றனர். பெரிய நவரங்க மண்டபத்தை 12-கல் தூண்கள் சிங்கங்களின் மீது நிற்பது போல் செய்யப்பட்டு மண்டபத்தைத் தாங்கி நிற்பது போல் சமைக்கப்பட்டுள்ளது. சிங்கத்தின் வாயில் உள்ளே இருக்கும் உருண்டைக் கல் வாயைவிடப் பெரிதாக எடுக்க முடியாதவாறு செய்திருப்பது ஒரு அதிசயம் போல் இருக்கிறது. இது அந்தக் காலத்து கல்தச்சர்களின் வியத்தகு வேலைப்பாடாக இருக்கிறது. இங்கு நிற்கும் 12 தூண்களும் தம் முதுகின் மீது கிரகங்களின் அடையாளத்தைத் தாங்கி, மேடம் இடபம் மிதுனம் முதலிய மாதங்களின் வரிசைப்படி ஞாயிற்றின் கதிர்களை முறைப்படி முற்றாகவீசுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் செய்திருக்குமற்றொரு வியத்தகு வேலைப்பாடாகும். இந்த ஒவ்வொரு தூணும் இராசி மண்டல அமைப்பிற்கேற்ப ஒழுங்குபெறச் செய்து பல்வேறு நவக்கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்களின் மீது சூரியன் மட்டும் எல்லா இராசிகளுக்கும் இறைவன் போல உயர்ந்த தனி முகப்புக் கூறில் உச்சியில் விழுமாறும் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலைக்கு அற்புத சிகரமாக, சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது வித்தியா சங்கர் கோயில். இது துங்கபத்திரா ஆற்றங்கரையில் சாரதா கோயிலுக்கு அண்மையில் ஆதிசங்கரர் உள்ளத்தைக் கவர்ந்த கோயிலாக எழுந்தது மிகச் சிறப்பு. சிவபெருமானைத் திராவிடக் கடவுள் சண்டாளர் கடவுள் என்று எண்ணியும், சிவலிங்க வழிபாடு சிசின தேவர் வழிபாடு என்றும் இழிவாகப் பேசிவந்த ஒரு சிறு குழுவும் அவர்கள் தலைவரும் சிவபெருமானுக்குச் சிறந்த ஒரு கோயில் எழுப்பி சிவலிங்க வழிபாடு இயற்ற வந்தது, சிவ பெருமானின் சிறந்த வெற்றி இத்திருக் கோயிலை திராவிடச் சிற்பக் கலைப்பாணியில் கட்டப்பெற்றது மற்றொரு சிறந்த வெற்றி. இத் திருக்கோயில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. விமானங்கள் தட்டுத்தட்டாக ஒன்றின் மீது ஒன்றாக கட்டப்பட்டுள்ளது. திருஉண்ணாழிகையைச் சுற்றி வித்தியா கணபதி காளியும் இடம் பெற்றிருப்பதோடு நான்முகன் கலைமகளோடும் திருமால் திருமகளோடும், மகேசுவரர் உமாதேவியுடனும் இருப்பது சிவநெறியின் சிறப்பாகும். ஞாயிறு மேடராசியில் இருக்கும் பொழுது ஞாயிற்றின் ஒளி மேசராசித் தூணில் மேல்படியும், ஞாயிறு இடபராசிக்கு வந்தபொழுது ஞாயிற்றின் கிரகணம் இடபராசித் தூணின் மீது ஒளிரும் ஞாயிறு மிதுன ராசிக்கு வந்ததும் ஞாயிற்றின் ஒளி மிதுன ராசித் தூண் மீது வீசியும் இவ்வாறு ஞாயிறு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தூணின் மீதுமாக 12 தூண்கள் மீதும் 12 மாதங்கள் விழுமாறு அமைத்திருப்பதைப் புகழ்ந்து திரு. பி.வி. செகதீச ஐயர் தம் நூலில் வியந்து பாராட்டி இருப்பதைப் பாராட்டி நாம் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளோம்.1 இந்தக் கோயிலில் புராணங்களை விளக்கும் ஓவியங்கள் பல உள. அதோடு பரத நாட்டியக்கலையின் பழைய மரபு வழுவா வண்ணம் பாங்குற எடுத்துக்காட்டும் சிற்பங்கள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் திருமாலின் பத்து அவதாரங்களை யும் சிலைவடிவில் கலை அம்சம் சிறிதும் குன்றாது எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த மண்டபத்தில் மேற்பகுதியில் உள்ள கற்களில் பல்லி, காக்கை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதன் கீழே நின்றுகொண்டு மேலே தண்ணீரை வாரி இறைத்து அந்த நீர் மேலே பட்டால் அந்த உருவங்கள் சம்பந்தப்பட்ட பல்லி தோசங்கள் முதலியவைகள் அகலும் என்று மக்கள் நம்பி வருகின்றார்கள். சிருங்கேரி மடத்திற்கு ஆறுகல் தொலைவில் கிக்கா என்ற சிற்றூரில் ரிஷ்யசிருங்காபுரம் இருக்கிறது. சிருங்கேரி என்பது சிருங்ககிரி என்பதன் மருவு என்று கூறுகிறார்கள். வான்மீகி இராமாயணத்தில் கூறும் புத்திரகாமேஷ்டி யாகத்தை தசரமகா மன்னர் மனைகளுக்குச் செய்து இராமன், லட்சுமணன் பரதன் சத்துருக்கன் நால்வர்களும் பிறக்கும்படி செய்து விட்டு இரிஷ்ய சிருங்கர் நேராக இத்தலத்திற்கு வந்து இங்கே வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவர் தகப்பனார் விபண்டகருடைய ஆச்சிரமம் இங்கேதான் இருந்து வருகிறது. சிரிஷ்ய சிருங்கர் இங்கு வசித்து வருவதால் இவ்வூருக்கு சிரிஷ்ய சிங்கபுரம் என்று பெயர் எழுந்துள்ளது. இந்த முனிவர் வழிபட்டுவந்து பின் அதில் ஐக்கியம் அடைந்த இலிங்கம்தான் இந்தக் கோயிலின் பிரதான மூர்த்தி. இத்தலம் துங்கபத்திரா ஆற்றின் கிளைஆறான நந்தினி ஆற்றின் கரையில் உள்ளது. சிவலிங்க மூர்த்தி உருத்திராக்கம் அணிந்தது போன்று அமைந்துள்ளது. அதன் உச்சியில் ஒரு கொம்பு இருப்பது போல் காட்சி அளிக்கிறது. இக் கொம்புதான் உருசிய சிங்கர் அந்தர்பாவமடைந்ததற்கு அறிகுறி. இறைவனின் இடது பக்கத்தில் சாந்தா தேவியின் சிலை உள்ளது. இங்கு எழுந்தருளிய இறைவனை வழிபட்டால் உடனே மழை பெய்யும் நலம் பல பெருகும் என்று கூறப்படுகிறது. இலிங்கத்திற்கு எதிரில் நந்தி உருவம் சிலை வடிவில் உள்ளது. இதைப்பற்றி இங்கு ஒரு கதை உண்டு. ஒரு தனவந்தரின் வீட்டில் எருது ஒன்று புகுந்து நெல்லை அழித்ததாம். உடனே வீட்டுக்காரர் ஒரு கம்பால் மாட்டை காலிலும் வாலிலும் அடித்தாராம். கடவுள் அவர் கனவில் தோன்றி அந்த நந்தியை அடித்த பாபம் தீர நந்தி உருவம் செய்து வைக்கும்படி சொன்னாராம். அவ்வாறு அந்தச் செல்வர் நந்தி உருவம் செய்து வைத்தாராம். மேலும் அதற்கு நைவேத்தியக் காணிக்கையாக தீபாவளி சமயத்தில் நெல் அளந்து கொடுக்கவும் சொன்னாராம். அதன்படி செய்துள்ளார். இந்த நந்தி உருவத்தின்மீது வெண்ணெய் சாத்தினால் குழந்தைகள் மண் சாப்பிடாதாம். இதன் மீது வடமாலை சாத்தினால் உழவு மாடு ஒழுங்காக வேலை செய்யுமாம். சிருங்கேரி நகரின் நடுவில் ஒரு சிறிய மலையில் 118 படிகள் உள்ள மலஹானிகரேசுவர் ஆலயம் உள்ளது. விபாண்டக முனிவர் மறைந்த இடத்தில் மலஹானிகரேசுவரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இவரை வழிபட்டால் . . . . கவி கங்காதீசுவரர் கோயில் கங்காதீசுவரர் கோயில் மைசூர் மாநிலத்தில் உள்ள பெங்களுருக்கு அண்மையில் உள்ள கவிபுரத்தில் உள்ளது. இதைச் சிலர் கான்புரம் என்று கூறுகின்றனர். இது ஒரு சிவன் கோயில். இங்கு அழகு மிக்க சிவலிங்கம் உள்ளது. இக் கோயில் வட்டவடிவில் அமைந்துள்ளது. திராவிட நாட்டில் அமைந்துள்ள வட்டவடிவான கோயில்களில் இது புதிய பாணியில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. வட்டக் கோயில்கள் நமது நாட்டில் பல உள என்றாலும் அவைகளைத் தனியே அமைத்து அதன் அழகைக் கண்டு மக்கள் களித்து இன்புற்றுச் சுவைக்கவிடாது வட்ட வடிவம் முழுவதையும் மக்கள் காணமுடியாது அந்தாராளமும் முகமண்டபமும், மகாமண்டபமும் கட்டி கோயில் முழு அழகையும் காணவிடாது மண்டபத்தைக் கட்டி இரண்டகம் செய்து விடுகிறார்கள். சிருங்கேரி வித்தியாசங்கரர் கோயில் அக நாழிகைக்குமுன் இடை நாளிகையோ வேறு மண்டபமோ அமைக்காது திருக்கோயிலின் முன்புறம் முகப்பு முழுவதும் மக்கள் கண்டு முகப்பின் எழிலைக் கண்டு எளிதில் இனிது சுவைக்குமாறு கட்டப்பட்டிருப்பினும் பின்புறம் வட்டம் முழுவடிவத்தையும் காணவொட்டாது கருவறையை அமைத்து இடையே இடை நாழிகையும் இணைத்து முன்னிருக்கும் பெரிய வட்ட வடிவமான பெரிய கட்டிடத்தின் சிறப்பைக் கெடுத்துப் பின்புற அழகையும் கெடுத்து தனியே கருவறையையும் விமானத்தையும் எழுப்பி யுள்ளனர். விமானத்தில் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளோ மாடங்களோ அணி மாடங்களோ அழகோ காணப்படவில்லை. திரு உண்ணாழிகையை விட முன்னுள்ள பெரிய வட்ட வடிவமான மண்டபமே சிறப்புடையதாகத் திகழ்கிறது. முன்னுள்ள முகமண்டபமும் அதில் உள்ள மாடங்களும் தெய்வ உருவச்சிலைகளும் வாயில்களும் உட்புறம் அமைக்கப்பட்ட பன்னிரண்டு வீடுகளை காட்டும் பன்னிரண்டு தூண்களும் ஞாயிறு ஒவ்வொரு திங்களிலும் ஒவ்வொரு வீட்டில் (இராசியில்) தங்குவது போல் ஒவ்வொரு தூணில் தன் கிரணங்களைப் பாய்ச்சி வரும் அற்புதமான படைப்பும் எவரும் என்றும் பாராட்டற்குரியதே யாகும். கோயில் என்பது திருஉண்ணாழிகையேயாகும். ஆனால் இங்கு உண்ணாழிகையை விட முகமண்டபம் சிறப்பாய் அமைந்துள்ளது சரியன்று. அதினும் முகமண்டபம் மொட்டை மண்டபமாய் அழகற்றிருக்கிறது. முக மண்டபத்தைக் கருவறையாய் ஆக்கி மேலே விமானம் எழுப்பி யிருந்தால் இக்கோயில் இந்தியாவில் சிறந்த அமைப்புடையது என்ற பெயரைப் பெற்றிருக்கும். இந்த கவிகங்காதீசுவரர் கோயில் அத்தகைய குறைகள் எதுவும் இன்றி பழங்காலத் திராவிடக் கட்டிடக் கலைமுறையைத் தழுவி வட்டமான அகநாழிகையும் அதன் மேலே வட்டமான விமானமும் அழகு தவழுமாறு நன்கு அமைத்திருக்கின்றார்கள். இத்தகைய, திராவிட அமைப்பு முறை சிறிதும் வழுவாத முறையில் அமைத் திருக்கும் ஒரு திராவிட கோயிலை எவரும் எங்கும் கண்டிருக்க முடியாது. திருக்கோயிலின் அதிட்டானமும் (அடிப்பகுதியும் பாதவர்க்கமும் (உடலும்) பிரதாரமும் (தோளும்) கண்டமும் (கழுத்தும்) சிகரமும் (தலையும்) தூபியும் (முடியும்) வட்ட வடிவமாக - கீழேயுள்ள திருஉண்ணாழிகையின் மீது வட்டமான விமானம் அமைத் திருப்பதும் எவரும் இது சிறந்த திராவிட அமைப்புக் கோயில் என்று போற்றத் தக்கமுறையில் அமைந்துள்ளது. என்றாலும், இக் கோயில், உபபீடமும், அதிஷ்டானம் சற்று உயரமாய் பஞ்சவரிகள் அமைத்து கோயில் எடுப்பித்திருந்தால் கோயில் எடுப்பாக இருக்கும். அதோடு அதிஷ்டானத்தில் சிறப்பான வேலைப்பாடுகள் இல்லை. அதோடு வித்யாசங்கள் கோயில் பாத சாரத்தை (உடலை)ப்போல் பெரிதாகவும் கெம்பீரமாகவும் அமைய வில்லை. மஞ்சம் கண்டம் பண்டிகை ஆகியவைகள் அமைப்பு காஞ்சி சுரகரேசுவரர் கோயிலைப் போன்ற சிற்ப அமைப்பு உள்ளதாய் இருந்தால் மிக அழகாக இருக்கும் என்றாலும் பண்டையத் திராவிட அமைப்பு முறையினை அடிப்படையாகக் கொண்டு திருவுண்ணாழிகையையும் விமானமும் உள்ள இந்த ஒரே கோயில் தான் இந்தியாவில் உள்ளது. இந்த அமைப்பைத் தழுவி வேறு வட்டக் கோயில்கள் எழுப்பப் பெற்றிருந்ததால் நமது உள்ளத்தில் உள்ள வட்டமான திராவிட அமைப்புக் கோயில்கள் பல எழுந்திருக்கும். கேரளாவில் 4,5 வட்டக் கோயில்கள் உள்ளன. அதில் பெரும்பழுத்தூர் கோயில் உடைந்து அதன் அதிட்டானம் மட்டும் உள்ளது. நீராமங்காராவில் ஒரு வட்டக் கோயில், வித்யாசங்கரர் கோயிலைப் போல் பெரிதாக வட்டமாக அமைப்பாக எடுப்பிக்கப் பட்டிருப்பினும் விமானம் சிறிதாக உள்ளது. ஏற்றமும் எழிலும் இல்லை. வட்டமாகவும் விசாலமாகவும் அகநாழிகையும், வட்டமான உயரமுள்ள விமானமும் உள்ள கோயில் வலிய உதையாச்ச புரத்தில் 16 - ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பாதமோ, மஞ்சமோ கண்டமோ சீரிய சிற்பவேலைப்பாடு களின்றி அழகற்றதாய்த் திகழ்கிறது. கவி கங்காதீசுவரர் கோயிலில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் இது ஒன்றே பண்டையத் திராவிட மரபு வழி மாறாது, மறவாது கட்டிய ஒரு சீரிய சிற்ப நலம் வாய்ந்த திருக்கோயிலாகும். இந்தியாவிலே இத்தகைய சிறந்த கோயிலை எவரும் காணமுடியாது. பரசுராமர் கோயில் (திருவல்லம்) பரசுராமன் திருக்கோயில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு கேரள நாட்டில் உள்ள திருவல்லம் என்னும் ஊரில் கட்டப்பட்டது. இத் திருக் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள சுரகரேசுவரர் கோயிலைப் போன்று அகநாழிகை வட்டமாகக் கட்டப்பட்டு அதையொட்டி இடைநாழிகையும் அழகுற கட்டப்பட்டுள்ளது. ஆனால் இத்திருக் கோயிலின் விமானம் மிகச் சிறிதாக உள்ளது. சுரகரேசுவரர் கோயிலை போல் அத்துணை எடுப்பாகக் காணப் படவில்லை. மேலும் சுரகரேசுவரர் கோயில் எழிலும் ஏற்றமும் உள்ளதாய்க் காணப்படுகிறது. கேரளத்துக் கோயில்களை எல்லாம் ஆய்ந்து பார்த்தால் உயரமான கோயில்களின் விமான அமைப்பு திராவிடப் பாணிக்கேற்ப நாகரம் திராவிடம், வேசரம் ஆகிய பிரிவுகளின் அமைப்பின்படி முறையே சதுரம் ஆறுபட்டம், வட்டம் ஆகியவைகளே திகழ்கின்றன என்று டாக்டர் டெல்லா கிராமரிஷ் அம்மையார் கூறுகின்றார்.1 திருவாங்கூரில் திராவிடப்பாணியில் கட்டப்பட்ட விழிரும் (9-10 - ஆம் நூற்றாண்டு) கோயிலும், பார்த்தி வாசகராபுரம் கோயிலும் (9-ஆம் நூற்றாண்டு) சுசீந்திரம் கோயிலும் (கி.பி 1546) திராவிடப் பாணியில் கட்டப்பட்ட நாகரப் பிரிவினைச் சேர்ந்த கோயில் என்றும் பனானந்தாதீத கோயில் (18 - ஆம் நூற்றாண்டு) வட்டமான விமானம் உள்ள திராவிடப் பாணியில் அமைக்கப்பட்ட வேசரப் பிரிவைச் சேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது இந்த முக்கியமான திராவிடப் பாணியில் கட்டப்பட்ட கோயில்களின் இந்த முக்கியமான வகைப்படுத்தும் முறையில் நன்கு ஆய்ந்து கட்டி யுள்ளார்கள். ஆனால் இன்று கட்டிடக் கலையைப் பற்றி அறிந்தவர்கள் தவறாகப் பொருள் கொண்டு முறைப்படுத்தப்பட்ட துறை வடிக்காற்றுச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். திருவாங்கூரில் சோழ நாட்டைப் போல் அதிகமான கோயில்கள் காணப்படா விடினும் நாகரம், வேசரம் திராவிடம் என்னும் பகுப்பு முறையில் பல்வேறு வகைக் கோயில்களை எடுப்பித்துள்ளார்கள். கேரளத்தில் ஆரியர் களின் செல்வாக்கு பல்துறைகளில் புகுந்து ஆதிக்கம் பெற்று வந்துள்ளது. மலையாள மொழி ஐயத்திற் கிடமின்றி தமிழின் கிளை மொழியேயாகும். நீண்ட காலமாக அங்கு தமிழர்களின் வட்டெழுத்தே பயன்படுத்தப்பட்டு வந்தது என்றாலும் வடமொழி இலக்கணத்தை தழுவி மலையாள மொழிக்கு இலக்கணம் அமைத்ததோடு எழுத்திலும் வடமொழியைத் தழுவி எழுத்துக்கள் சில மாற்றம் செய்யப் பெற்றன. ஆனால் கோயில்கள் தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடப் பாணியில் நாகரம், திராவிடம், வேசரம் என்ற முறையில் சதுரம் ஆறுபட்டம் வட்டம் முதலிய கோயில்களைக் கட்டியுள்ளார்கள். சோழ நாட்டைப் போல் கேரளத்தில் அதிகமான கோயில்கள் இல்லை. இங்கு கோயில்கள் குறைவுதான். அதோடு, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரத் திரிபுவனம், மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் எடுப்பிக்கப்பட்ட பெரிய கோயில்கள் இங்கு இல்லை. மேலும் சோழ நாட்டில் மலைகள் இல்லை. அங்கு கற்கள் கிடைப்பது அரிது என்றாலும் சோழ நாட்டிற்கு வெளியேயுள்ள பாண்டி நாட்டினின்றோ, கேரள நாட்டினின்றோ கற்களைக் கொண்டு ஏராளமான கற்றளிகளை எழுப்பியுள்ளார்கள். மலைகள் மிகுந்து மலையாளம் என்ற பெயரைப் பெற்ற கேரள நாட்டில் அதிகமான கற் கோயில்கள் காணப்படாதது வியப்பிற்குரியதுதான். ஒரு வேலை முற்காலத்தில் கேரள நாட்டின் பொருளாதாரக் குறைவால் கற்கோயில்கள் அதிகம் எடுப்பிக்கப் பெறாமல் இருந்திருக்கலாம் என்று எண்ணவும் இடமுண்டு. திருவல்லபரசுராமன் கோயில் சிறிதாக இருந்தாலும் தென் இந்தியாவின் சிறந்த வட்டக் கோயில்களில் ஒன்றாக மதிக்கத்தக்கது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும் சிற்ப வேலைப்பாடுகள் குறைவாக இருப்பினும் கோயில் அமைப்பு பழுதின்றி எழில் பெறக் கட்டப்பட்டுள்ளது. கோயில் புனிதமான இடமாக மதித்து துப்புரவாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரசுராமன் கோயில் 14 - ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்ட வட்டக் கோயிலில் சிறந்தது என்பது மட்டுமல்ல வட்டமான அக நாழிகையை ஒட்டி நீண்ட சதுர மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அது நிறைவு செய்யப்படாது. அரை குறையாய் உள்ளது. சில அமைப்புகள் பிறரால் தாமதப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தக் கோயிலில் அமைப்பு மூலம் தபதி சிற்ப விதிகளின் அளவுகளை விகிதம் சரிவரக் கவனித்து செய்யவில்லை என்று தெரிகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். நீராமங்காரக் கோயில் (14 - ஆம் நூற்றாண்டு) இன்றையக் கேரளாவில் நீராமங்காரக் கோவில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றுள்ளது. கோயிலைக் கட்டிய தபதி சிற்ப விதிகளை நன்கு ஆய்ந்து குறைபாடுகள் இன்றி தனது உள்ளுணர்ச்சிகளை யெல்லாம் காட்டும் நடைநயம் பொலியும் நல்லமைப்பில் எழில் பெற இத்திருக்கோயில் எழிலார்ந்த ஆழிவட்ட அமைப்பில் வெளிப்பகுதி சுற்றிலும் வட்ட வடிவு நன்கு திகழக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் ஒரு சாந்தாரப் பிசாதம் (Sandhara Prasada) என்று மலையாளத்தில் கூறப்படுகிறது. இக் கோயிலின் உள்ளே கூடுதலாக ஒரு நடைபாதையும், ஒரு பாகம் திறந்த பகுதியாகவும் உள்ளது. இது வட்டமாக வேலி அடைப்பு சுவருக்குப் பின்னால் உள்ளது. கீழிருந்து மேல் வரை படிகள் உள்ளன. உட்புறமுள்ள வேலி அடைப்பு உட்சுவர் சதுரமாக அமைந்துள்ளது. இது பிரசாதத்தின் (கோயிலின்) இயல் நிலை சார்ந்த சுவராகும். கருவறை மீது ஒரு எட்டு பட்டையுள்ள கவிகை மாடம் (Dome) உள்ள முகடு உள்ளது. சிரிகோயிலின் (அகநாழிகையின்) உட்புறம் இன்று இருப்பதைப்போல் ஆதியில் நன்கு தெரிவதாக இருக்கவில்லை. அதனுடைய முன்பகுதி ஒவ்வொரு பகுதியும் மேற்புறம் வட்ட வடிவில் அமைத்து உட்புறச்சுவர் எல்லை வரை இரண்டு தூண்கள் கட்டப்பட்டுள்ளது. தூண்கள், மேலே உள்ள கவிகை மாடம் வரை உயரமானதாய் இருந்தது. கட்டிடம் முழுவதையும் கூரை மேலேயுள்ள மரச் சட்டவேலையானது ஆதியில் துளையிட்டு பொருத்தி இணைக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. இந்தத் திருக்கோயிலின் கூரையின் வடிவம் கூம்பு வடிவினதாய் வைக்கத்தில் 1539 -இல் கட்டிய கோயில் போன்று வைக்கத்தில் 1539-ல் எடுப்பிக்கப்பட்ட அக நாழிகை போன்றும் உள்ளது. இதில் உள்ளடங்கிய மற்றொரு கட்டிடம் புனிதமான இந்தியக் கட்டிடக் கலையின் மரபிற்கு உரித்தானதாக இருக்கிறது. நிர்மங்காராக் கோயில் நிறைவாகச் செய்து முடிக்கும் பொழுது கூம்புவடிவான கூரையால் மூடப்பட்ட பதின்மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட திருநந்திக் கரைக் கோயிலின் வட்டமான அக நாழிகையின் (சிரிகோயில்) வெளித்தோற்றத்தைப் போல் காணப்படும். வைக்கம் கோயிலைப்போல் பதினாறாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற மாற்றமில்லாக் கட்டிடம் சிரி கோயில் (அகநாழிகை) செயல் முறையில் சிறிதும் மாற்றம் அற்றதாக விளங்கும். கேரள மாநில எல்லைக்குள்ளே இருக்கும் திராவிடக் கோயிலின் கூட்டிணைவு, மலபார் கட்டிடக் கலைஞர்கள் திருக்கோயில் நிறைவான முழு வடிவை மட்டும் காட்டுவ தோடமையாது கட்டிடக் கலைஞர்கள் தங்களின் செயல்திறனையும் காட்டுவது போல்வதாகும். வட்டமான அழகிய கோயில் அமைப்பு நாட்டில் சீர் பெற அமைக்கப்பட்டால் ஏராளமான வீடுகள் நாட்டில் வட்டவடிவில் இடம்பெறும். இன்று நாட்டில் இலட்சத்திற்கு ஒன்று கூட வட்டமான வீடாகத் தமிழகத்தில் இருக்கும் என்று கூட எம்மால் நம்பமுடியவில்லை. வட்ட வடிவமான வீடுகள் சதுர வீடுகளை விட அழகுடையதாய் இருக்கும். வட்டமான வீடுகள் அதிகமாக எடுப்பிக்கப்பட்டால் வட்ட வடிவமான அகநாழிகைகளும் நாட்டில் அதிகம் எழும். வட்டவடிவில் தமிழகத்தில் எழுந்த கோயில் நன்கு விளம்பரப்படுத்தப்படவில்லை. அவைகள் இருக்கும் இடமும் சூழ்நிலையும் இது வட்டமான வடிவுடையது என்று மக்களால் இன்றும் அறியமுடியாத நிலையில் இருக்கிறது. வட்டவடிவில் கோயில் அமைப்பது ஆகமங்களுக்கோ, சிற்ப நூல்களுக்கோ மாறுபட்டதல்ல. தெளிவாகக் கூறினால் வட்டவடிவமான கோயில் களுக்கு ஆகமங்களில் சிறப்பான இடம் அளிக்கப் பட்டுள்ளது. பத்தாவது நூற்றாண்டிலிருந்து பதினாறாவது நூற்றாண்டு வரை திராவிடப் பாணியில் கட்டப்பட்ட கோயில்களில் வட்டக் கோயில்களுக்கும் வட்டமான அகநாழிகைக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளன. மக்கள் வட்டவடிவிலான அகநாழிகையைக் காண அதிக ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். வட்டமான கட்டிடங்களும் ஆறுபட்டையுள்ள கட்டிடங்களும் தெய்வத் தன்மைவாய்ந்தன. மங்களச் சின்னம் என்று மக்கள் நம்பி வருகிறார்கள். இந்தியாவிலே சதுரவடிவான கோயிலே அதிகம். வட்ட வடிவினாலான கோயில் மிகச் சுருக்கம் என்றாலும் கட்டிடச்சிற்ப நூலில் (Vastu sastras) சதுர வடிவில் கட்டும் கோயில்களுக்கு போதிய இடம் அளித்திருப்பதோடு அதற்குச் சிறப்பும் நல்கியுள்ளது. மிகப்பழம்பெரும் கோயில்களுக்கெல்லாம் பழைய கோயில் என்று கூறப்படும் பைரத் (Bairat) என்ற கோயில் வட்டமான கோயிலாகும். திராவிடக் கோயில்களுக்குள் வட்டமான கோயில்களை ஒரு குழுவாக அமைத்து, இவைகள் கேரளநாட்டில் இதோடு சேர்ந்த கோயில்கள் திருவாங்கூரில் ஏராளமாக இருப்பதை எடுத்துக் காட்டவேண்டும். திருவல்லம் கோயிலைத் தவிர பிறவட்டமான பலவகை கோயில்களின் தரைப்படங்களையும் அதன் முகப்புத் தோற்றத்தையும் உட்புறத் தோற்றத்தையும் நன்கு எடுத்துக்காட்ட வேண்டும் திருவல்லம் கோயிலைத் தவிர ஒவ்வொரு வட்டக் கோயிலும் முழு நிறைவு உடையனவாய் தனக்கென்று உரிய உயரிய ஒரு தனித் தன்மை யுடையனவாய் உள்ளன. திராவிட நாட்டில் உள்ள சமகாலத்திய கோயில்களில் உயர்ந்து கோலிய அதன் தகுநயநடைசார்ந்த தோற்றக்கூறு, நிர்மங்காரா அல்லது வாலியாண்டையேசுவரத்தில் உள்ள கோயில்களின் வேலைப் பாடுகள் எளிதில் எவரும் செய்ய முடியாததும், தனிப்பெரும் சிறப்பு வாய்ந்ததுமான உள்ளார்ந்த இன்பச் சுவைமிக்கதாகும். ஆனால் இவைகள் எவையும் ஒரு மேதகும் நினைவுச் சின்னத்தைப் பின்பற்றிக் கட்டப்பட்டதன்று. ஆனால் கோயில்களின் முக்கியமான தன்மையில் சிறிய செயல்மாற்றங்கள் உள. கவர்ச்சித் தோற்றமுடைய நடைமுறை மரபு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவைகள் தன்னுடைய தகுதியான இடத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டன. அவைகள், மற்றவைகளோடு எந்த வன்முறையும் பயன்படுத்துவதில்லை. அவைகள் அங்கு பணியாற்றுபவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உள்ளுற சில நன்கொடைகளை அளிக்கும். பீட அடிப்பகுதியின் வார்ப்படத்தில் காணப்படுபவை நல்ல காட்சியாக விளங்கும். பத்தாவது நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கோயில்களின் வரைபடம் சதுரம் அல்லது வட்டமாக எப்படி இருப்பினும் பீட அடிப்பகுதி வெவ்வேறு வகையாகப் பிரிக்கப் பட்டு கட்டிட மரவேலை முதலியவற்றின் மரவேலைகளை மூன்று மண்டலமாக வகுக்கப் படும். கட்டிடத்தின் உறுதியான பிடிப்பையும் அடிப்படையின் உறுதியையும் தெளிந்து கொள்ளு கிறார்கள். பல்வேறு ஊழிகளையும் தவிர்ப்பதற்கு உரித்தான திராவிடர்களின் வளமான பீடங்களின் உருவை எளிதில் கண்டு பிடிக்கின்றார்கள். திருவாங்கூர் கோயில் அதிகம் இன்மையால் எளிதில் கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்பது முக்கியமான காரணம் அன்று சட்டம் மிகச்சிறிய அளவுள்ள கோயில்களுக்கும் பண்டைக் காலச் சோழர்களுக்கும் - அதாவது புதுக்கோட்டைக்கு அண்மையில் உள்ள கொடும்பாளூர் கோயில் பீடங்களும் தாமரை இதழ் வடிவிலும் ஏனைய சிக்கல்வாய்ந்த முழுமை நிலையிலும், கனமான வட்டமானதுமான, சுற்றிவளைந் திருக்கிற முன்புறதுருத்திக் கொண்டிருக்கிற அடிப்பகுதியை யுடையதுமாகும். பழைய கேரளத்தின் மலபாரின் கட்டிடக்கலை தனது நாட்டுப் பணியில் திராவிடப் பாணியில் திருவாங்கூர் கோயில்களை ஒப்பிட்டுக் கேரள முறையில் கட்டப்பட்டது. நிர்மாங்காரா கோயில் சுவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வைக்கம் சிரிகோயிலும் அதே குடும்பத்தைச் சேர்ந்ததேயாகும். வலிய உதையாதிச்சிபுரம் கோயில் (16-ஆம் நூற்றாண்டு) கேரள மாநிலத்தில் உள்ள வலிய உதையாதிச்சபுரம் கோயில் அடியிலிருந்து முடிவரை (அதிஷ்டானத்திலிருந்து சிகரம் வரை) வட்டவடிவில் கட்டப்பெற்றுள்ளது. கேரளநாட்டில் உள்ள வட்டக் கோயில்களில் இது ஒன்றுதான் பண்டையத் திராவிட மரபினைத் தழுவி அதிட்டானமும் பாதசாரம் மஞ்சம் கண்டம் பண்டைகை தூபி அனைத்தும் வட்டவடிவமாகக் கட்டப்பட்ட கோயிலாகும். அதோடு அடியில் அகநாழிகை அதன்மேல் விமானமும் அமைக்கப்படுவதே பழைய திராவிட அகநாழிகை ஒட்டி முன்னோ மண்டபமோ, அல்லது அகநாழிகையோ அமைப்பது அழகான அமைப்பு அன்று என்று சொல்வதற்கொப்ப இந்த அகநாழிகையின் மேலே வட்டமான விமானம் தோள் கழுத்து தலைமுடி (அதாவது பிரதாரம் கண்டம் சிகரம் தூபி) முறையே அமைத்திருப்பதைப் பாராட்டுவதற்காகும் என்று முன்பே எடுத்துக் காட்டியுள்ளேன். கேரளாவில் எடுப்பித்துள்ள கோயில்கள் எல்லாம் திராவிடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது என்று பக்கம் தவறாது திருவாங்கூர் கலையும் கைப்பணிகளும் (Arts and craft) என்ற நூலில் அந்நூலின் ஆசிரியர்களான டாக்டர் டெல்லா கிராம் ரிஷ் என்ற முன்னாள் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் இந்தியக் கலைத் துறையில் பணியாற்றிய பேரறிஞரும் திருவாங்கூர் அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் திரு ஆர். வாசுதேவ பொதுவாள் பீ.ஏ அவர்களும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அவர்களுக்கு நமது நன்றி உரித்தாகுக. புது தில்லியில் இருந்து வெளிவந்த மைய அரசின் வெளியீடுகளில் கேரளக் கோயில்களில் திராவிடப் பாணியும் சாளுக்கிய பாணியும் கலந்துள்ளது என்று கூறியது கண்டு நான் எள்ளி நகையாடியதுண்டு. இப்பொழுது தென் இந்தியாவின் கோயில்கள் என்று மைய அரசு 1960-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிட்ட நூலின் 50-ஆம் பக்கத்தில் கேரளாவில் காணப்படுகின்ற வட்டவடிவமான கோயில்கள் மாதிரிகளையுடைய கோயில்கள் தென்இந்தியாவிலே எங்கும் நம்மால் காணமுடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.1 இந்த நூலின் ஆசிரியரின் அறியாமைக்கு மிக வருந்துகிறேன். மைய அரசின் வெளியீடாக காஞ்சி என்னும் நூல் 1954-ஆம் ஆண்டு பேராசிரியர் டாக்டர் சி. மீனாட்சி அம்மாள் எம்.ஏ.பி.எய்ச்.டி அவர்களால் எழுதப்பட்டு ஒரு நூல் வெளி வந்துள்ளது. அந்நூலில் காஞ்சிக்கு அடுத்த திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள சமணர்களின் வட்ட வடிவுள்ள விமானக் கோயிலையும் மற்றும் சுரகரேசுவர் வட்டவடிவமுள்ள விமானக் கோயிலையும் எடுத்துக்காட்டி யுள்ளார். (படம் பக்கம் 7,21 - பார்க்க) இஃதன்றி இந்நூலில் மதுரைக்கு அண்மையில் உள்ள திருமுதுகுன்றம் (திருமாலிருஞ் சோலை) வட்டவடிவமான கோயிலை மட்டுமல்ல வட்டமான அதன் வட்டவடிவமான கூலக் களஞ்சியத்தையும் கண்டு தனது தவறைத் திருத்திக் கொள்வாராக.2 நிற்க வலிய உதையாதிச்சபுரம் வட்டக்கோயில் படம் இங்கு வெளியிட்டிருக்கின்றோம் அதே போல் காஞ்சி சுரஹரேசுவரர் கோயில், திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் சிருங்கேரி வித்தியாசங்கரர் கோவில் முதலிய பல வட்டவடிவக் கோயில் களையும் இந்நூலில் வெளியிட்டுள்ளோம். கேரளாவில் உள்ள உதையாதிச்சபுரம் கோயில் கலையழகிலே சிற்பச் சிறப்பிலே இவைகளின் அருகில் நிற்க முடியாததாகும் அதிஷ்டானமும் அகநாழிகையும் விமானமும் அழகென்பதை அறியாதது போல் இருக்கிறது. பொதுவாகக் கேரளாவில் மொத்தக் கோயில்களின் விகிதாச்சாரத்தில் பிற மாநிலங்களைவிட இங்கு கோயில்கள் குறைவென்றாலும் வட்டக் கோயில்கள் அதிகமேயாகும். அவைகளில் அழிந்து கிடக்கும் பெரும்பழுதுர் கோயில் ஒன்றுதான். 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் ஏனைய வட்டக் கோயில்கள் அனைத்தும் 13, 14, 16-ஆம் நூற்றாண்டுகளில் எடுப்பிக்கப்பட்டவைகளேயாகும். கேரளாவில் அதிகமான வட்டக் கோயில் எடுப்பித்திருப்பது மகிழ்ச்சியே. அவைகள் கற்கள் மலிந்த கேரளாவில் கற்களால் அகநாழிகையும் விமானமும் சிற்பச் சிறப்புடன் எடுப்பித்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு எடுப்பிக்கப்படவில்லை என்று எனது உள்ளத்தில் அடிக்கடி எழும் புதிராக உள்ளது. கேரளம் பொருளாதார நிலை குன்றியதுதான் அங்கு கல்லால் பலவகைக் கோயில் எடுப்பிக்கப்படாதிருக்க வேண்டும் என்று எனது உள்ளத்தில் உந்தும் புதிருக்கும் நானே விடையும் கூறிக் கொள்வதுண்டு. நிற்க வலிய உதையாதிச்சபுரம் கோயிலை எடுப்பித்தவர் சில இடங்களில் வட்டமான இடத்தை அகநாழிகை அமைத்து அதனை யொட்டி இடைநாழிகையோ முகமண்டபமோ அமையாது கவிகங்காதீசுவரர் கோயிலைப் போல் திராவிடர்களின் பழம் மரபு மாறாது அகநாழிகையும் மேலே விமானமும் அமைத்தது போற்றத் தக்கதேயாகும். வட்டவடிவில் அல்லது சதுர வடிவில் கட்டப்பட்ட கோயில்களில் பெரும்பழுதூர், திருவல்லம் நீராமங்காராவாலியாதி உதையாதிச்சபுரம் கோயில் மிகப்பெரிய தனிமுறை சிறப்பும் அழகும் நிறைந்ததாய்த் திகழ்கின்றன. மரபு வழியாக நாம் பின்பற்றிவரும் வாது சாதிரம் என்னும் இந்தியக் கட்டிடக் கலையைப்பற்றி விளக்கிக் கூறும் அறிவியல் நூலை கி.பி. ஆறாவது நூற்றாண்டி லிருந்து நாம் நன்கறிவோம். ஆறாவது நூற்றாண்டிலிருந்து இன்றுவரை (20-ஆம் நூற்றாண்டின் முக்கால் பகுதிவரை, வட்டவடிவக் கோயில் அரைவட்டக் கோயில், கிச்சிலிப்பழம் போன்ற பல்வேறு வடிவக் கோயில் வரை கேரள சிரிகுமரா எழுதிய சிற்ப நூல் வரை நாம் நன்கறிவோம். கேரளத்திற்கு வெளியே ஒரு சில வட்டவடிவக் கோயில் இருப்பன என்றாலும் வட்டமான பழங்காலக் கோயில் சுவர்களின் அமைப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு மூலம் ஜெயப்பூர் பாய்ராத் இராசபுதனம் போன்ற மாநிலங்களுக்குத் தெரியாது என்று டாக்டர் டெல்லா கிராம்ரிஷ் கருதுகிறார்.1 கேரளத்திலுள்ள கோயிலினுள்ளே ஒரு திராவிட அமைப் புள்ள கோயிலும் கூட்டிணைவில் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது. இங்கு கோயிலின் உருவம் மட்டும் நிறைவானதாக இருக்கவில்லை. மலபாரில் உள்ள கட்டிடக் கலைஞர்கள் தம் கைத்திறனையும் இங்கு காட்டியுள்ளனர். வட்டமான கோயில் உருவாக்கும் திறனை மட்டும் இங்கு காட்டவில்லை சிரிகோயில் (அகநாழிகை) அமைக்கும் அவர்களது நாட்டுக்குரிய நல்லமைப்பையும் எடுத்துக் காட்டியுள்ளன. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வாலியாண்டையேவரம் திருக்கோயிலின் ஒரு நிறைவான இணைவுச் சிறப்பையும் அதன் தோற்றமும் கட்டிடக்கலையின் தன்மையையும் பார்த்திவா சேகரபுரம் கோயிலின் அமைப்புத் தோற்றம் தோல்வியுற்றதையும் நன்கு காணமுடிகிறது. திருவாங்கூர் கோயிலின் ஆக்கக் கூறுகள் அடிப்படையி லிருந்து உச்சிவரை (1) உபபீடம் (Pedestal) (2) அதிஷ்டானம் (Base) (3) தம்பம் (Plaster) 4 பிரதாரம் (entablature) 5 கிரிவா (mech of the dopme) 6 சிகாரம் (Cupola) (7) தூபா (Pinnacle) என்று பிரிக்கப்பட்டுள்ளது. பிரதாரத்திலிருந்து திராவிடப்பாணியில் தென்கிழக்குக் கடற் கரையிலிருந்து கேரளாக் கோயில்கள் வரை ஆய்ந்து பார்த்தால் அமைப்பு முறையில் வேற்றுமைகள் பல இருப்பதைக் காணலாம். அதாவது மேலேயுள்ள மேற்பகுதியிலே வேற்றுமைகள் கண் களுக்குத் தெரியலாம். கேரளாவில் கோயில்கள் மேற்கூரைகள் மரங்களால் அமைத்து மேலே செம்புத் தகடுகள் போர்த்தப் பட்டிருக்கும் அல்லது ஓடும் போடப்பட்டிருக்கும். செங்குத்து கோடுகளால் அணி செய்யப்பட்டிருக்கும் அல்லது முக்கோண வடிவான மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடுகள் போர்த்தப் பட்டிருக்கும். மலபார் கடற்கரையில் கனத்ததும் அடிக்கடி தொடர்ந்து மழை பெய்வதாலும் திராவிடப் பாணியில் அத்தியாவசியமான சிலமாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன அமைப்பிலும் கூரைகளின் கோணங்களிலும் சிற்பசாத்திரங்கள் கூறப்பட்டுள்ள முறைகளில் கூட சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அவசியம் ஏற்படும் பொழுது சாதிர விதிகளினின்று சில மாற்றங்கள் செய்து கொள்ள சிற்பிகளுக்கு அதிகாரம் அளிக்கப் பெற்றுள்ளது. அதை அவர்கள் மலபாரில் கையாண்டுள்ளார்கள். கேரளத்தில் உள்ள வட்டக் கோயில்களில் வலிய உதையாதிச்சபுரம் கோயில் மிகப் பெரிய வட்டக் கோயிலாகும். மேலும் அது மிக உயர்ந்த விமானத்தையும் உடையது மேலும் அங்குள்ள இதர வட்டக் கோயில்களைப் போல் இரண்டு மூன்று வட்டக் கூரைகளை நிறுவாது ஒரே கூரையை உடையதாய் தமிழகத்திலும் மைசூர் மாநிலத் திலும் உள்ள கோயில்களைப் போல் ஒரே கூரையை உடையதாக இருக்கிறது. அதனுடைய அதிஷ்டானத்தின் சுவர்களை விட அதன் மேற்கோப்பு மிக உயர மாகக் கம்பீரமான தோற்றத்தில் கட்டப் பட்டுள்ளது. கேரளத்தில் வட்டக் கோயில்களில் இதுவே சிறப்பான தாகும். வைக்கத்தப்பர் கோயில் கேரள நாட்டின் வடபகுதியில் - கி.பி. 1539-ஆம் ஆண்டில் வைக்கத்தில் உள்ள வட்டவடிவமான கோயில் கேரளத்திற்கே உரிய தனிப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. தமிழகம், கன்னடம் முதலிய மாநிலங்களில் காணப்படும் வட்டக் கோயிலினின்று இது மாறு பட்டதாய் ஒரு தனித்தன்மையுடையதாய் உள்ளது. வைக்கம் கோயில் வட்டமான அதிஷ்டானமும் பாதசாரமும் வட்டமான கூரை அமைப்பும் உடையது மட்டுமின்றி மேலே ஒரு வட்டமான கூம்பிய நுனியையும் வட்டக் கூரையும் உடையதாய் அமைந்திருக்கும். மேலேயுள்ள கூம்பிய நுனியையுடைய வட்டக் கூரைக்கும் அதிர்ஷ்டானத்தின் மீது அமைந்துள்ள வட்டமான அமைப்பிற்கும் நடுவே இடைவெளியுண்டு. அது கோயிலுக்கும் வெளிச்சத்தையும் தரும். காற்றும் வரும் பல கணியாயும் உள்ளது. இக் கோயிலின் மேற்கூரைகளை அடியில் நிறுத்தப்பட்ட மரத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. மேற்கூரைகள் பலகைகளால் ஆணிவைத்து அடிக்கப்பட்டு அதன்மேலே செம்புத்தகடுகள் போர்த்தப்பட்டிருக்கும் சில கோயில்களில் ஓடுகளும் வேயப் பெற்றுள்ளது. சில கோயில் கூரைகளுக்கு பலகைகள் அடிக்கப்பட்டு அதன் மேலே சதுர ஓடுகள் போடப்பட்டு மேலே சுண்ணச்சாந்து பூசப்பட்டு மழைநீர் உள்ளே இரங்காதவாறு உறுதியாக சாந்து பூசப் பெற்றுள்ளது. இந்தக் கோயில்களின் அடித்தளத்தின் உருவளவும் அதன்மீது எழுப்பப் பெற்ற மேற் கோப்புகளும், உள்நாட்டு முறையில் கட்டப்பட்ட கட்டிடக்கலையின் முறையற்ற வழியில் திராவிடப் பாணியின் விழுமிய அமைப்பைப்போல அதே பண்பு முறையில் அமையாது எடுப்பிக்கப்பட்டகோயில்களும் உள. அவைகள் அடித்தளம் சரியான உயரமாக அமையாது ஆனால் சில கோயில்கள் பெரிய அளவில் கட்டியுள்ளார்கள். வில் முகப்பு முகடு பொதுவாகச் செம்மண்ணால் கட்டப்பட்டுள்ளது ஆனால் மரவேலைப்பாடு நன்றாகவும் சுத்தமாகவும் அவர்களது சொந்த முறையைத் தழுவி நலமுறச் செய்யப்பட்டுள்ளது. எட்டமனூர், வைக்கம் ஆகிய ஊர்களில் எடுப்பிக்கப்பட்ட சிவன் கோயில்கள் இந்தக் கட்டிடப் பாணிகளுக்கு ஏற்ற எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன. பொதுவாகக் கேரளாவில் உள்ள கோயில்கள் மரவேலைப்பாடுகள் மிக நுணுக்கமாகவும், செவ்விதாகவும் செய்யப் பட்டுள்ளன. ஏனெனில் அங்கு பலா, தேக்கு, தோதகத்தி, கோக்கு வேங்கை முதலிய மரங்கள் ஏராளமாக எளிதாய்க் கிடைக்கின்றன. கேரள மாநிலத்தில் உள்ள பழைய கோயில்களில் பதினொரு கோயில்கள் (1) திரிக்கக் காரா (2) திருமுழிக்குளம் (3) திருச்செங்கண்ணூர் (4) திருவனந்தபுரம் (5) திருக்காடித்தானம் (6) திருவானவனதூர் (7) திருப்புலியூர் (8) திருவல்லா (9) திருப்பாதீவரம், (10) திருவட்டார் (11) திரு அரன்மூலா ஆகியவைகள் வைணவர்களின் புனித இடங்களாகும். இங்கு வைணவர்கள் தங்கள் தெய்வகீதங்களைப் பாடி வருகின்றார்கள். இதைப் போன்று ஏராளமான திருக்கோயில்கள் சிவ பெருமானுக்கும் உள்ளன. அவை சுசீந்திரம், பூதப்பாண்டி, வைக்கம் எட்டமனூர் காண்டியூர் திருவிடக் கோட திருநந்திக்காரா போன்ற இடங்களில் உள்ளன. இந்தக் கோயில்களின் அமைப்புகள் காலத்திற்கேற்ப அடிக்கடி மாறுதல்களைப் பெற்றுள்ளன. பொது கோயிலின் மையப் பகுதிகள் தான் மாற்றம் பெறாது இருந்து வருகின்றன. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்ட பார்த்திவாசகபுரம் திருமால் கொண்ட திருக்கோயில் மிகப் பழமையானதும் முக்கியமானதுமாகும். அது கட்டிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று கட்டிடக் கலையில் நல்லபயிற்சி பெற்ற எவரும் சொல்வதற்கில்லை. இந்தத் திருக்கோயிலின் பாணியும் விமானமும் மையக் கோயிலில் அகநாழிகை இடம் பெற்றிருக்கும் இடமும் இந்தக் கோயில் முழுவதும் பார்த்ததும் பழஞ் சோழர்களின் கட்டிடக் கலையின் பாணியை நினை வூட்டுவதாக இருக்கிறது.1 ஆர். வாசுதேவப் பொடுவால் பி.ஏ. அவர்கள் திருவாங்கூரில் 1948-ஆம் ஆண்டு தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் அவர் திருவாங்கூரின் கலையும் கைப்பணிகளும் என்ற ஆங்கில நூலில் 37-ஆம் பக்கத்தில் திருவாங்கூரில் திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ள நீர்மங்காரா வட்டக்கோயில் இலங்கையில் உள்ள வட்டதாடாகவைப் போன்றதாக இருக்கிறது என்று எழுதுகிறார். அவர் அறிவிற்கு இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான வட்டக் கோயிலில் ஒன்றை எடுத்துக்காட்டி அதைப் போன்று இருக்கிறது என்று எழுத முடியாமற் போனதற்கு வருந்துகிறேன். வட்டதாகே ஆலயம் பராக்கிரமபாகுவினால் கட்டப்பட்டது. மகாதூப என்றும் தமிழ் மகசயவென்றும் வழங்கப்படும் தாதுகோபம் முடிவடைய வில்லை. இஃதன்றி இலங்கைத் திலக வட்டதாகே உத்தரராம கல் விகாரை பொத்தல் விகாரை முதலியவையும் பராக்கிரமபாகுவால் கட்டப்பட்டவை. இவன் கட்டிய தூபராம ஆலயம் வட்டகே ஆலயம் திராவிட சிற்ப முறையில் அமைந்துள்ளது. பெலநறுவையில் உள்ள பௌத்த ஆலயங்களின் புறச் சுவர்களிற் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் தென்னிந்தியக் கோயில் சுவர்களிலுள்ள சிற்ப வேலைப்பாட்டை நினைவூட்டுகின்றன. இவ்வாலயங்கள் யாவும் சோழ சிற்ப முறையைப் பின்பற்றியே அமைக்கப்பட்டனவென்பது இரண்டாம் சிவாலயத்தையும் பௌத்த ஆலயங்களையும் ஒப்பு நோக்கி ஆராய்வார்க்கு நன்கு புலனாகும்.1 தூபராம ஆலயத்தைப்பற்றி பெர்சிபிரவுண் என்னும் ஆங்கில கலைப்புலவர் பின்வருமாறு கூறுகின்றார். தூபராம ஆலயம் சோழர்களமைத்த சிவாலயங் களைப் பின்பற்றித் திராவிட சிற்ப முறையில் அமைக்கப் பட்டிருப்பினும் அமைப்பு முறையில் கருங்கற்களாற் கட்டப்படாத வேறுபாடுடையது. இவ் வேறுபாட்டைத் தவிர மற்றெல்லாவிதத் திலும் தூபராம ஆலயம் சோழர் முறையைப் பின்பற்றியதாயினும் சோழர் ஆலயங்களின் சிறப்பு இதன் கண் பொருந்தவில்லை என்றுக் கூறியுள்ளார்.2 மேலும் இலங்கையில் உள்ளமக்கள் அனைவரும் இந்தியாவினின்று குடியேறியமக்கள். அவர்கள் சமயமும் கட்டிடக் கோயிலும் இந்தியக் கோயில் அமைப்பின்படி கட்டப்பட்டவைகள். அதிலும் பௌத்தர்கள் கோயில்கள் அனைத்தும் இந்தியப் பாணியிற்கட்டப்பட்டவைகள். அதினும் சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டபின் உலகில் உள்ள கட்டிடக் கலைக்குத் தாயகம் என்று கூறும்பொழுது அறிஞர் திரு. ஆர். வாசுதேவ பொடுவாள் அவர்கள் நீரமங்கரா சிவாலயம் இலங்கை வட்டதாகே போன்றதாக இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு மிக வருந்துகிறேன். மேலும் திருவாங்கூர் கலையும் கைப்பணிகளும் என்ற நூலில் பேராசிரியர் டாக்டர் டெல்லா கிராமரிஷ் அவர்கள் 20-ஆம் பக்கத்தில் திராவிட கட்டிடங்கள் இன்று திராவிட நாட்டின் நிலையில் மட்டும் நிலவவில்லை ஆனால் தெக்காணத்தின் கன்னட மாவட்டங்களில் கூட நிலவுகிறது அங்கு உண்மையில் கோயில்கள் பல நூற்றாண்டுகள் பல்லவர்களின் மாமல்லபுரம் காஞ்சிபுரம் கோயில்களின் பழைய அமைப்புகளை பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுப்பிக்கப்பட்ட பழைய அமைப்பை உடையது என்று கூறுகிறார்.1 திராவிடர்களின் கட்டிடக் கலையின் தொன்மையைப் பாராட்டுகின்றோம். ஆனால் அவர்கள் கன்னட நாட்டை திராவிட நாடு அல்ல என்பது போல் எழுதியது மிகத் தவறு. 50-ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர்கள் தமிழர், கேரளர், கன்னடர் ஆந்திரர் துளுவர் என்று கூறப்பட்டது இன்று பாக்கிதானில் உள்ள பலுச்சி மக்கள் உள்பட சுமார் 15 நாட்டு மக்கள் திராவிட இனப்பிரிவினர் என்று அறிவியல் ரீதியாக அறிஞர்கள் கூறும்பொழுது நாட்டால், மொழியால், சமயத்தால், நிறத்தால் பண்பாட்டால் உணவால் உடையால் பச்சைத் திராவிடர்களாகிய கன்னடர்களை திராவிடர் அல்லாதவர்கள் போல் அவர்கள் நூலில் எழுதி இருப்பதை அறிந்து வருந்துகிறேன். இந்நூல் அடுத்த பதிப்பில் உறுதியாக இவற்றைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். வைக்கம் கோயில் இந்தியாவில் என்று அழியாப் புகழ் பெற்ற கோயில். இந்தியாவிலே தீண்டத்தகாதவர்களும் பார்க்கத்தகாதவர் களும் என்று சில இந்திய இந்து சகோதரர்களை அவர்கள் நமது சகோதரர்களே அவர்களுக்கு கேரளத்திலுள்ள ஒரு நம்பூதிரிப் பார்ப்பானுக்கு உள்ள எல்லா உரிமையும் உண்டு. பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் 19-ல் வைக்கம் கோயிலுக்குள் தீண்டத்தகாதவர்களும், பார்க்கத்தகாதவர்களுமான இனத்தவர் களை அழைத்து கோயிலுள் புகுவதற்கு தனது துணைவியாரோடும் சத்தியாக்கிரகம் தொடங்கி வெற்றிமாலை சூடியதை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே என்றும் மறக்க முடியாது. இந்திய வரலாற்றில் வைக்கம் சத்தியாக்கிரகம் முதலிடம் பெற்றுள்ளது. நாத்திக இயக்கத்தின் தலைவரைத் தன்னையும் தன் துணைவி யாரையும் பலதாழ்த்தப்பட்ட அமுக்கப்பட்ட மக்களையும் அழைத்துக் கொண்டு வந்ததற்கு வைக்கத்தப்பன் (சிவன்) பெரியாரை அவர் குற்றங்களை மன்னித்து 96 ஆண்டுகள் வாழச் செய்துள்ளார். என்று ஆத்திகர்கள் போற்றுகின்றார்கள். இந்த அதிகாரம் எழுதத் துணையாக இருந்த நூற்கள். 1. தேவாரம் - திருநாவுக்கரச நாயனார் திருமங்கையாழ்வார் அகநானூறு - கடியலூர் உருத்திரங்கண்ணனார். சிலப்பதிகாரம் - உ.வே.சாமிநாத ஐயர் வெளியீடு தேவாரம் - திருஞானசம்பந்தர் பட்டினப்பாலை பொ.வே. சோமசுந்தரனார் விளக்க உரையுடன் 1956. மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1955. மூன்றாம் குலோத்துங்க சோழன் - விரா. இராமச்சந்திர தீட்சிதர் M.A. (சென்னை) 1946. Ancient Historical Manuscripts. Rev. W. Tailor Voe I - P.XIX. Conjeevaram Inscriptions of Mahandravarman G. Jouvean Dubreuil - Pondicherry1919. திருமதில்கள் முற்காலத்தில் அரசன் உறையும் இல் கோயில் எனப்படும். கோயில் என்னும் பதத்திற்கு கோ அரசன்+இல்-வீடு அதாவது கோயில் என்பதற்கு அரசனுறையும் அகம், அரண்மனை என்றெல்லாம் பொருள் கொண்டு வந்தனர். அரசன் வாழும் நகர் கோ நகர் என்றும் தலைநகர் என்றும் பெயர். அரசன் நாட்டிற்குத் தலைவனாகவும் மக்களின் உயிராகவும் மதிக்கப் பெற்றான். மேலும் அரண்மனையில் அரசனுடைய மனைவியும் மக்களும் சுற்றத்தாரும் அவர்களின் அணிகலன்களும் நாட்டின் செல்வமும் அங்கிருந்தன. எனவே அவற்றைப் பாதுகாக்க பெரிய மதில்களும் ஏராளமான படை களும் இரவும் பகலும் கண் துஞ்சாது பாதுகாத்து வந்தனர். கோநகரைச் சுற்றி பெரிய உயர்ந்த மதில்களும் மதில்களின் மீது படைவீரர்களும் இருந்தனர். மதில்களைச் சுற்றி ஆழமான அகழ் வெட்டப்பட்டு அதில் நீர் நிறைக்கப்பட்டிருந்தது. அந்த நீரில் முதலைகள் விடப்பட்டு எதிரிகளோ, அவர்களின் யானைப் படைகளோ குதிரைப் படைகளோ அகழில் இறங்கினால் முதலைகள் அவைகளைப் பிடித்துக் கொன்றுவிடும்; அதோடு மதிலில் பதுங்கி இருக்கும் வீரர்களும் வில்லால் பாணந்தொடுப்பர். வாளை எடுத்து பகைவர் உடலைத் துண்டு துண்டாக வெட்டிவிடுவர். சாதாரண காலத்தில் மக்களும் வண்டிகளும் மன்னர்களும் வெளியே போய் வர 4 வாயில்கள் இருந்தன. அகழைக் கடக்க கனமான மரக்கட்டைகள் போட்டு பாலம் அமைத்திருந்தனர். அதன் வழியாக மன்னர்களும் அவர்களின் யானைப்படைகளும், குதிரைப்படைகளும் தேர்ப் படைகளும், காலாட் படைகளும் வெளியேபோய் வரும். வாயிலில் பெரிய உயரமான கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். கோட்டையின் மூலைகளிலும் காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரவும் பகலும் கோபுரத்தின் மீதிருந்து பகைவர்கள் தொலைவில் வரும் பொழுதே கண்டு மன்னர்களுக்கு அறிவித்து விடுவர். மன்னர்கள் தம் படைகளோடு பகைவர்கள் தலைநகருக்கு வெளியில் வரும் பொழுதே அவர்களைத் தாக்கி விரட்டி அடிப்பர். பகைவர்கள் எண்ணிக்கையில் அதிகமாயும் ஏராளமான ஆயுதங்களோடும் வந்திருந்தால் இவர்கள் பின் வாங்கி கோட்டைக்குள் வந்துவிடுவர். வாயிலில் பாலம் போல் உள்ள மரக் கட்டைகள் எடுக்கப் பட்டுவிடும். பகைவர்கள் அகழியில் தம் யானைகளை இறக்கி யானைகளைக்கொண்டு கோட்டை வாயிலின் கதவுகளை முட்டி மோதி நகரிற்குள் புக முனைவர். நகரைச் சுற்றியிருக்கும் மதிலின் மேல் ஏறிஉட்புக முயற்சிப்பர். பல அரசர்கள் நகரைச் சுற்றியுள்ள அரணுக்குள் இயந்திரப் பொறிகள் அமைத்திருப்பர். அவைகள் அரணைத் தொட்டதும் ஈட்டிகள் போல் எதிரிகள் மீது பாய்ந்து தாக்கும். வாள்கள் வெளியே வந்து வெட்டும். கோபுரத்திலிருந்து காவலர்கள் மழைபோல் எதிரிகள் மீது பாணங்களை விடுவர் இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு நகரிற்குள் பகைவர்கள் புகுவதும் உண்டு. புகுந்த பின் மன்னனும் அவனது வாட் படையும் குதிரைப்படையும், யானைப்படையும் தேர்ப்படையும் பகைவர்களை எதிர்த்து போர் இடும். இதில் பகைவர்கள் அழிவதும் உண்டு. வெற்றி பெறுவதும் உண்டு. முடியுடை மன்னர்கள் தங்கள் தலைநகரையும் இரண்டாவது தலைநகரையும் மதிலரண், நிலவரண், நீர் அரண், காட்டரண், மலையரண் முதலிய ஐவகை அரண்களால் பாதுகாத்து வந்தனர். மதிலரண் மதிலரண், மதில், எயில், இஞ்சி, சோ என நான்கு வகைப்படும். புரிசை என்பது அவற்றின் பொதுப் பெயர். புரிந்திருப்பது புரிசை எனப்படும். புரிதல் வளைதல் அல்லது சூழ்தல் மதில் நகரைச் சுற்றி இருப்பதால் புரிசை எனப்பட்டது. நால்வகை மதிலரண்களும் உயரம் ஒன்றேயுடையது மதில் உயரத்தோடு அகலமும் உடையது. எயில் அவற்றொடு திண்மையும் உடையது, இலஞ்சி அம்மூன்றொடு அருமையும் உடையது. எனவே சோ அரண் தலைசிறந்ததாக இருந்துவந்தது. தமிழர்களின் அரணைப்பற்றி வள்ளுவர், உயர் வலகம் திண்மை அருமை யின்னான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் (திருக்குள் 743) என்று எடுத்துக்காட்டியுள்ளார். நொச்சிப் போரில் வில்லர்கள் அரண்மீது மறைந்து நின்று அம்பெய்வதற்குரிய புழைகளை யுடையது எயில் அரண். அப்பெய்யும் புழை எப்புழை என்னும் ஏவறை என்றும் கூறப்படும். எய்யும் இல்லையுடையது எயில் எனப்பட்டது. செம்பை உருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதில் இஞ்சி எனப்படும். இஞ்சுதல் இறுகுதல் இஞ்சியது இஞ்சி. செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர் - (கம்ப இராமாயணம் கும்பகர்ணன்வதை. 159) செம்பு புனைந்தியற்றிய சேயொடும் புரிசை உவரா வீகைத் துவரா யாண்டு - புறம் 201. என்று கபிலரும் பாடியிருப்பதால் இலங்கையிலும் துவாரகா சமுத்திரம் என்னு துவரை நகரிலும் இஞ்சி அரண் இருந்ததாக அறியப்படும். செம்புக் கோட்டை என்பது இராவணன் கோட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது. மதிலரணைச் சிறப்புச் செய்வது பொறியாதலால் ஏவல் அறைகளும் பொறிகளுமுடைய இஞ்சியே சோவரணாக இருந் திருத்தல் வேண்டும். சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த என்று சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையும் சுழலழலுள் வைகின்ற சோ என்று புறப்பொருள் வெண்பாமாலையும் (228) கூறுவதால் இராவணன் நகரிலுள்ள வாணாசுரன் நகரிலும் சோவரண் இருந்ததாகத் தெரிகிறது. மதுரை மதிலரண் பலபொறிகளைக் கொண்டிருந்ததாக இளங்கோவடிகள் கூறுவதால் அதனை ஒருவகைச் சோவரண் என்று கூறலாம். மதுரைப் புறமதிலில் இருந்த பொறிகளும் கருவிகளும் உறுப்புகளுமாவன:- (1) வளைவிற் பொறி - வளைந்துதானே எய்தும் எந்திரவில் (2) கருவிரலூகம் - கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி (3) கல்லுமிழ் கவண் - கல்லையெறியும் இருப்புக் கவண் - இடங்கணி (4) பரிவுறு வெந்நெய் - காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்தும் நெய். (5) பாகடு குழிசி - செம்புருக்கும் மிடா (6) காய் பொன்னுலை - உருகக் காய்ச்சியெறியும் எஃகு உலை. (7) கல்லிடு கூடை - இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்கும் கூடை. (8) தூண்டில் - அகழியைக் கடந்து மதிலைப் பற்றுவாரை மாட்டி இழுக்கும் தூண்டில் வடிவான பொறி. (9) தொடக்கு - கழுத்திற்பூட்டி முறுக்குஞ் சங்கிலி (10) ஆண்டலையடுப்பு - பறந்து உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப்புள் வடிவமான பொறி வரிசை (11) கவை, (12) கழு (13) புதை (14) புழை (15) ஜயவித்துலாம் (16) கை பெயரூசி (17) சென்றெறிசிரல் (18) பன்றி, (19) பணை (20) எழுவுஞ்சீப்பு (21) கணையம் (22) கோல் (23) குந்தம் (24) வேல் (25) ஞாயில் (26) நூற்று வரைக்கொல்லி (27) தள்ளி வெட்டி, (28) களிற்றுப் பொறி (29) விழுங்கும் பாம்பு (30) கழுகுப் பொறி (31) புலிப் பொறி (32) குடப்பாம்பு (33) சகடப் பொறி (34) தகர்ப்பொறி (35) அரிநூற் பொறி முதலிய பலவகைப் பொறிகளால் நகர் காக்கப் பெற்றது. தலைநகரில் மதில் ஒன்றுமட்டும் இருப்பதில் ஒன்றிற்குப் பின் ஒன்றாக அடுக்கடுக்காகப் பல அரண்கள் இருப்பதுண்டு அகமதில்களைவிட புறமதில்கள் படிமுறையில் அரண் அமைந்து சிறந்திருக்கும். அகமதில் மதில் என்றும் புறமதில் இஞ்சி என்றும் கூறப்பட்டிருத்தல் காண்க. புறமதிலில்தான் மேற்கூறியபலவகைப் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும். மதிலையொட்டி உட்புறத்தில் உள்ள மேடைக்கு அகப்பா என்ற பெயர் உண்டு. பகைவர் வரவைத் தொலைவிலேயே காணும்படி புறமதிலின் மேல் பலதிசையிலும் அட்டாலை என்னும் காவற் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து காவல் செய்வார்க்கு அட்டாலைச் சேவகர் என்று பெயர். ஒவ்வொரு மதிலுக்கும் காவலரும் மதில் நாயன் என்னும் காவல் தலைவனும் இருப்பர். மதிலுள்ள நகர்கள் பெரும்பாலும் கோட்டை புரி, புரிசை, எயில் என்னும் சொற்களுள் ஒன்றைப் பெயராகவோ, பெயரீறாகவோ கொண்டிருந்தன. நிலவரண்: நிலவரண் என்பது பகைவர் அகழி கடந்த உடன் புறமதிலைப் பற்றாமைப் பொருட்டு அதன் புறத்துவிடப்பட்டுள்ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும்போது அகத்தார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை வினைத்துக் கோடற் பொருட்டு புறமதிலின் உட்புறமாக விடப்படும் தண்ணடை நிலமும் என இருவகை. மணநீரும் மண்ணு மலையு மணிநிழற் காடு முடைய தரண். என்னும் குறளில் (742) மண் என்றது நிலவரணை. பரிமேலழகர் அதற்கு வெள்ளிடை நிலமென்று சொல்லுரை கூறி மதிற்புறத்து மருநிலம் பகைவர் பற்றாமைப் பொருட்டு என்று விளக்கவுரை கூறி இருப்பதையும் நாடு கண்டன்ன கணைதுஞ்சு விலங்கல் என்னும் பதிற்றுப்பத்துத் தொடருக்கு (16:2) நெடு நாட்பட அடை மதிற்பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு, வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டாற்கு நாடு கண்டாற் போன்ற....... இடைமதில் என்று அவர் நூலின் பழைய உரையாசிரியர் விளக்கம் உரைத்திருப்பதையும் காண்க. நீரரண்: நீர் அரண் என்பது புறமதிற்புறத்து ஆறும் கடலுமாகிய இவற்றை நீர் நிலையாகவும் அகழியாகவும் அல்லது கிடங்கு என்னும் செயற்கை நீர் நிலையாகவும் இருக்கும் அரண். காட்டரண் - காட்டரண் என்பது படைமரவர் காடுகளிலும் சோலைகளிலும் பகைவர் கண்களுக்குத் தெரியாது மறைந்திருக்கும் அரண். மலையரண் : சிறுகுன்றுகளில் மக்கள் எளிதில் ஏறமுற முடியாத நிலையில் தலைநகரை அமைத்து பகைவர்கள் ஏறிவர முயன்றால் மேலிருந்து கற்களை உருட்டி விடவும் உச்சியில் போதி உணவும் உறையுளும் உடையதுமான அரண். இது பெரும்பாலும் குறுநில மன்னர்க்கே உரியனவாயிருந்தது. எளிய வடிவில் எழுந்த கோயில்கள், மக்களின் பொருளாதாரப் பெருக்கத்தாலும் மன்னர்களின் ஆதரவாலும் பெரிய வடிவில் எழுந்தன. தமிழ் நாட்டு அரசர்கள் வலுப்பெற்று திருக்கோணா மலையிலிருந்து இமயம் வரை வென்று திருக்கோணாமலையில் தங்கள் கொடியையும், இமயமலைமீது தங்கள் குடையையும் நாட்டி வந்தனர். கிழக்காசியாவில் தம் கடற் படையைச் செலுத்தி ஈழகம் அந்தமான் தீவு நிக்கோபார் தீவு, காழகம், மலையகம், சிங்கபுரம், தாய்லாந்து, கம்போசகம் சாவகம், சுமத்ரா, போர்னியோ, பார்லி, இந்தோச் சீனம், போர்னியோ போன்ற பல தீவுகளையும் தீபகற்பங் களையும் வென்று ஏராளமான பொன்னையும் பொருளையும் சூறையாடி வந்தனர். தங்கள் வெற்றிக்குத் துணை நின்ற தெய்வங் களுக்கு பெரியகோயில்கள் எடுப்பித்தனர். ஏராளமான பொன்னையும் நகைகளையும் நிலங்களையும் நிவந்தமாக அளித்தனர். அதே போன்று மன்னர் மனைவிகளும் எண்ணற்ற ஆடு மாடுகளையும் நஞ்செய் புஞ்செய் நிலங்களையும், விளக்குகளையும் தானம் அளித்து நெய் விளக்கிட ஏற்பாடுகள் செய்தனர். பெரும்பாலான சேர சோழ பாண்டிய அரசிகள் கோயில் களுக்கு விளக்குகளும், விளக்குகளுக்கு நெய்யிக்காக ஏராளமான ஆடுகளும் மாடுகளும் ஆடுமாடுகள் மேய்வதற்கு புல் உள்ள நிலங்களும் மானியமாக விட்ட செய்திகளே நமது கல்வெட்டு களிலும் செப்பேடுகளிலும் காணலாம். இவை களைப் பற்றிய விபரம் வேறு அதிகாரங்களில் விளக்கமாகக் கூறுவோம். எளிய வடிவான கோயில்களில் இப்பொழுது திருஉருவம் பொன்னாற் செய்யப் பெற்றது. தெய் உருவங்களுக்கு ஏராளமான எண்ணிக்கையில் நவமணிகள் பதித்த பொன் அணிகளும், வெள்ளி அங்கியும், வெள்ளி வாகமும், பொன் சப்பரமும் பொற்றேர்களும், வெள்ளிரதமும் பொன்னோடுகளும், வெள்ளி ஓடும் இரத்தின அம்பலமும் வெள்ளி விளக்குகளும் நிபந்தமாக அளிக்கப்பட்டன. கோயில்களுக்கு வழிபட வரும் மக்கள் தொகை பெருகின. மன்னர்களும் அமைச்சர்களும் செல்வர்களும் நிலக்கிழார்களும் வணிகர்களும் ஏராளமாக வந்து பொற்காசுகளும் வெள்ளிக் காசுகளும் காணிக்கையாக அளித்தன. கோயில்களில் சிற்பக் கருவூலமும், பொன்னும் மணியும் நிறைய பொற்கருவூலமும் நிறைந்தன. அதன் பழைய பெயர்களாகிய ஆலயம், கற்கி, கோட்டம், சினகரம், தேசிமம், தனி தேவகுலம் நியமம், நிலயம், பள்ளி, பாழி, பீடரம், மந்திரம் வானவருறையுள், விமானம், தெய் இல்லம், தெய்வமனை என்ற பெயர்கள் மறைந்து கோயில் என்ற பெயர் நிலைத்துவிட்டது. இப்பொழுது தெய்வம் பொன்னம்பலத்தில் எழுந்துள்ளான். பொன்னார் மேனியன் என நமது தேவார ஆசிரியர்களாலே போற்றப்பட்டான். பொன்னாற் செய்யப்பட்ட தெய்வஉருவமும், பொன்னும் மணியும் இழைத்துச் செய்யப்பட்ட திருஉருவமும் பெரிய மதிலும் உயர்ந்த கோயிலும் 1008 கால் மட்டமும் உள்ள பெரிய கோயிலுக்கே மக்கள் ஏராளமாகச் செல்லத்தலைப் பட்டுள்ளனர். இன்று சினிமாக்காரர்கள் அதிகமாகச் செல்லும் திருப்பதிக் கோயிலுக்கே இலட்ச இலட்சமாகப் பணம் காணிக்கை யாகச் சேர்கின்றது. கோயிலில் அதிகமான ஐம்பொன் தெய்வஉருவமும் அணிகலன்களும் பிற விலை உயர்ந்த வாகனங்களும் பொற்றேர் களும் வெள்ளிச்சப்பரங்களும் வெள்ளித்தேர்களும் பொற்கூரை களும் ஏற்பட்டதால் அரண்மனையைப் போன்று கோயில்கள் மதிக்கப்பட்டன. பிற அரசர்களும் திருடர்களும் கோயிலில் புகுந்து அங்குள்ள விலையுயர்ந்த அணிகலன்களையும் விலையுயர்ந்த தெய்வத்திருஉருவங்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு போய்விடாமல் இருக்கும் பொருட்டு 20, 30 அடி உயரமுள்ள திருமதில்களும் 100,150 அடி உயரமுள்ள கோபுரங்களும் யானை யாலும் முட்டி உடைத்துவிடமுடியாத கனத்த பலகைகளையும் பெரிய எஃகு ஆணிகளால் தரையப்பட்ட பெரிய கட்டைகளையும் கொண்ட வாயிற் கதவுகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதிலுக்கும் சுற்றுமதில்கள் கல்லால் கட்டி எழுப்பப் பெற்றன. அது கோயிலைக் காக்கும் அரண்களாக அமைந்தன. பெரிய கோயில்களில் புற மதில்கள் அகலமாயும் உயரமாயும் உறுதியாகவும் கட்டப்பட்டன. செங்கல்லாலும் கருங்கல்லாலும் கட்டப்பட்ட மதில்களும் உள்ளன. மதில்கள் ஒன்றுமுதல் பதினொன்று வரை எழுந்தன. இதனைத் தேக அமைப்பிற்கும் அண்ட பிண்ட அமைப்பிற்கு ஈடாக சமய விற்பன்னர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பிள்ளையார் கோயில் முன்னாளில் ஒன்று இருக்கும் இன்று பதினொன்று இருக்கும். மதில்களில் முன்னால் ஒரு வாயிலும் முன்பின் இரண்டு வாயிலும் நாற்புறங்களிலும் நான்கு வாயிலும் இருப்பதுண்டு. மதில்களின் மேலே கோட்டை மதில் போல் பூவேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். மதில்களின் மூலைகளில் நந்தி கருடன் இடம் பெற்றிருக்கும். மதில்கள் எடுப்பித்ததற்கு ஏராளமான கதைகளும் கூறுவார்கள். திருவானைக்காவில் திருநீறுகொடுத்து மதில்கட்டிய தாகக் கதை கூறுவார்கள். திருச்செந்தூர் கோயில் கோபுரத் திருப்பணியை நடத்திய சாமியார் அங்கு வேலை செய்த வேலைக்காரர்களுக்கு விபூதியைக் கொடுத்து வீட்டில் கொண்டுபோய் கையைத் திறந்து பார் என்று சொல்லி அனுப்புவாராம். வீட்டிற்குப் போய் மடக்கிய கை விரல்களைத் திறந்தால் அவர்கள் செய்த வேலைக்குத் தக்க கூலியாக பணம் இருக்குமாம். மகிழ்ச்சியாக உண்டு உடுத்தி மறுநாள் வேலைக்கு வருவார்களாம். இன்று பலமதிகள் அழிந்தும் செடிகொடிகள் படர்ந்து அழியும் நிலையில் இருக்கின்றன. திருக்கோயிலைக் கட்டியவர்கள் தாம் கட்டிய கோயில்கள் அழிந்து போய் விடாதவாறு பழுதுபார்க்க நிலதானம் செய்துள்ளார்கள் என்றாலும் இன்று கவனிப்பாரில்லாது அழிந்துகொண்டே இருக்கின்றன. காளத்தி திருவாலங்காடு முதலிய கோயில்களில் மதில் கட்டின நாயக்கமன்னர்கள் வராகம் (பன்றி) இலட்சினை இட்டிருக்கின்றார்கள். திருவண்ணாமலை வெளிமதிலில் அதனை எடுப்பித்த விசயநகர நாயக்க மன்னர்கள் உருவங்கள் வெளி மதிலில் வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூர் கோயில் அழகுறக் கட்டப்பட்டுள்ளன அதன் வாயிற் கோபுரங்களும் மதில்களும் கட்டப்பட்டு அழிந்து கிடக்கின்றன. கோயில் பிரகாரத்தில் முன்னுள்ள ஒரு மண்டபத்தில் அதனைக் கட்டிய இறுதிக்காலப் பாண்டியன் பராக்கிரம பாண்டியன் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்காசி காசி-விசுவநாதர் கோயிலைக் கட்டிய அந்தப் பராக்கிரமபாண்டியன் அழகிய கோயிலையும் மிகச் சிறந்த சிற்பங்களையும் செய்து ஒரு பெரிய கோபுரத்தையும் அமைத்தான். கோபுரம் இடிந்து வீழ்ந்துவிட்டது. நீண்டகாலமாய் அக்கோபுரம் நம்மைப்பார்த்து அழுது கொண்டிருப்பது போல் பழுதுற்ற நிலையிலே இருந்தது. இப்பொழுது திருப்பணி செய்வதாய் திருப்பணி குழுவர்கள் அதை உடைத்து சமதளமாக்கிவிட்டார்கள். இக் கோயிலைக் கட்டிய இறுதிக் காலப்பாண்டியன் தமிழ்ப்புலவன். அவன் அக்கோபுரத்தின் அடியில் மக்களுக்குச் செய்யுள் வடிவில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளான். அது அடியில் வருமாறாகும். தாரமங்கலத்து ஆலயத்தில் அதை எடுப்பித்த முதலியாரின் சின்னம் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்து ஏகாம்பரர் வெளிமதிலில் புத்த நிர்வாண ஐதீக உருவம் இருக்கிறது. இவ்விதமாகக் கோயிலின் திருமதில்களும் தம் வரலாற்றை கூறும் ஆற்றல் அமைந்ததாய் உள்ளன. சில மதில்களில் உட்புறம் சுற்று மண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது. அது மதிலுக்கு ஆதரவாக அமைந்திருப்பதோடு மக்கள் சிறிது நேரம் தங்குவதற்கும் வசதியாகத் திகழ்கிறது. சில கோயில் அம்மண்டபம் இரட்டை நிலை கொண்டதாய் எழில் பெற்றிலங்கும். சிதம்பரம் முதலிய கோயில் களில் அவ்விட மண்டங்களைக் காணமுடியும் மதில்களிலே நாம் முக்கியமாக உற்றுணர வேண்டியது ஒன்றுண்டு. அதிலே கல்வெட்டுகள் பொறிக்கப் பெற்றிருக்கின்றனவா. கோயில் அதிகாரிகள் அதைக் கவனியாது ஒன்றின் மேல் ஒன்றாகச் சுண்ணம் தீட்டி அதைப்படிக்க முடியாதவாறு செய்திருக்கிறார்களா என்பது சற்று உன்னிப்பாக உற்று உணரவேண்டும். அதில் கோயில் வரலாறும் நாட்டின் வரலாறும் நன்கு அறிய முடியும். ஆகவே மதில்கள் கோயில்களுக்குப் பாதுகாப்பாக மட்டுமின்றி கலைக் கருவூலமாகவும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியது நமது இன்றியமையாத கடமையாகும். தஞ்சை-இராசராசேச்வரம் தஞ்சாவூரைத் தலைநகராக கொண்டு முதலாம் இராசராசன் கி.பி. 985-முதல் 1014-ஆம் ஆண்டு வரை 29 ஆண்டுகள் சோழர்களின் ஆட்சி கட்டிலை அமர்ந்து புகழ் பெற வாழ்ந்தான் வரலாற்றாசிரியர்கள் இவனை மகா இராசராசன் (RAJA RAYA the Great) என்று புகழ்ந்தேத்தினர். பாட்டன் பராந்தகனைப் போல இவனது ஆட்சியில் 19-ஆவது ஆண்டில் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பல நிபந்தங்கள் இயற்றி தில்லைவாழ் அந்தணர்களால் சிவபாத சேகரன் இராச ராசன் என்னும் பட்டங்களை இவனுக்கு அளித்தார்கள் என்று கல்வெட்டு கூறுகிறது. இவனது இயற்பெயர் அருண் மொழித்தேவர் என்பதாம். இவன் காசுகளில் இராஜராஜ என்று தேவ நாகரி எழுத்தில் செம்பு, வெள்ளிப் பொன் காசுகளை வெளியிட்டான். ஒரு காசில் சிவனது பாதங்களையும் வெளியிட்டான். இராசராசன் தன்மகன் இராசேந்திரன் தலைமையில் குமரி முதல் இமயம் முதல் பல மன்னர்களை வென்றும் வெற்றிக் கொடியை நாட்டினான்-புகழ்பெற்ற பெரிய கடற்படையை இராசேந்திரன் தலைமையில் அனுப்பி ஈழம், அந்தமான், நிக்கோபார் கடாரம், மலைநாடு, சிங்கபுரம், தாய்லாந்து கம்போசகம், சாவகம், சுமத்திரா, பாலித்தீவு அன்னாம் முதலிய கிழக்காசிய நாடுகளையெல்லாம் வென்று திரும்பினான். எங்கும் அவனுக்கு வெற்றியும் புகழும் ஓங்கிட நாடு அமைதியுடன் நிலவியது. எனவே தனது கருத்தைக் கோயில் கட்டுவதில் செலுத்தி னான். தஞ்சாவூரில் தனது புதிய பட்டப் பெயரால் இராசராசேச் சுரம் என்னும் பெயரால் ஒரு பெருங்கோயிலை எடுப்பித்தான் சோழமன்னர்கள் எடுப்பித்த கோயில்களுள் தலைசிறந்து விளங்கியது முதலாம் இராசராசன் எடுப்பித்த பெருவுடையார் திருக்கோயில் என்ற புகழ் ஞாலமெங்கும் பரவியது.1 இராச ராசனது பத்தொன்பதாவது ஆண்டாகிய கி.பி. 1003-இல் இக்கோயிலைக் கட்டத் தொடங்கினான். இவன் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றதற்காகப் பொற்பூக்கள் பல இவ்வாலயத்திற்குப் பரமசுவாமிக்குக் கொடுத்தான் என்பதை அவனது தமிழ்ச் சாசனம் ஒன்று தெரிவிக்கிறது. இவனது 22-ஆம் ஆண்டில் பொற்பூவால் இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் இறைவனை அர்ச்சிப்பானாயின் கோயில் வேலைகள் முடிந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. கி.பி. 1009-இல் இக்கோயில் திருப்பணி முடிவுற்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவன் கட்டி முடித்த தஞ்சை இராசராசேச்சரம் இப்பொழுது சிவகங்கை சிறு கோட்டையின் தென்பாதியில் இருக்கிறது. இந்தக் கோயிலை அவன் புதியமுறையில் மன்னன் தலைநகர் போன்று மகாச் சிறப்புடன் அமைத்துள்ளான். முதன்முதலாகக் கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் பெரிய கோட்டையும் கோயிலைச் சுற்றி அகழும் உள்ளே செல்லப் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டைவாயிலில் ஒரு சிறு கோபுரம் காணப்படுகிறது. கோயிலுக்குச் செல்வோர் அகழைக் கடந்து கோட்டைச் சுவரில் உள்ள வளைவுக்குள் நுழைந்து வாயில் கோபுரத்தைக் கடந்து சென்றால் உள்ளே மற்றொரு அக அரணும் வாயிற்கோபுரமும் காணப் படுகிறது. இந்த அரணை அடுத்து அகழ் இல்லை. இரண்டாவது அரண் வாயிலில் கோபுரம் உள்ளது. அதனுட்புகுந்து சிறிது தூரம் சென்றால் மற்றொரு கோபுரவாயிலையும் அரணையும் காண்போம் அதனைக் கடந்து உள்ளே சென்றால் கருங்கல்லாலும் செங்கல்லாலும் பரப்பப்பெற்ற சுமார் 800-அடி நீளம் 400 அடி அகலமும் உள்ள ஒருபரந்த இடத்தில் முன் மேடையில் பெரிய நந்தியும் அதனைப் பாதுகாக்க நாயக்க மன்னர்கள் கட்டிய மண்டபமும் காணப்படுகின்றன. அப்பால் பெருவுடையார் (பிரகதீசுவரர்) வானளாவிய விமானமும் அடுத்துத் தேவியின் திருக்கோயிலும் திகழ்கிறது. உட்கோயில் இறைவன் உறையும் உண்ணாழிகை (கருப்பக்கிரகம்). அதனைச் சுற்றி பிரதட்சண மண்டபம் அர்த்தமண்டபம் இருபுறமும் தூண்களும் வெளி வாசலும் அமைந்த மகாமண்டபமும் தியாகேசர் சந்நிதியுள்ள தாபனமண்டபம்,கோயில் பணியாட்கள் இருக்கும் நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்ற ஏழுபதிகள் உள்ளன. அருகே அழகிய சுப்பிரமணிய சுவாமி மண்டபம் உள்ளது. இது பிற்காலத்தில் விசயநகர நாயக்க மன்னர் கிருஷ்ணதேவராயரால் கருங்கல்லால் கட்டப் பெற்ற கவினுறு சிறு கோயிலாகத் திகழ்கிறது. இக்கோயிலுக்கு மூன்று திருவாயில்கள் திகழ்கின்றன முதற்கோபுர வாயில் கேளாந்தகன் (கேரளர்களுக்கு எமன்) எனப்படும் இரண்டாவது கோபுரவாயில் இராசராசன் திருவாயில் எனப்படும் மூன்றாவது, கோயில் உள்வாயிலாகிய திருவணுக்கன் திருவாயில் ஆகும் இறைவன் சந்நிதியை அடைய தெற்கிலும் வடக்கிலும் வாயில்கள் உள்ளன. வாயிலில் இரு துவாரபாலகர்கள் மிகுந்த வீராப்புடன் காவல் செய்வதைப் போல் காணப்படும். விமானத்தின் தெற்கு வாசலுக்கு விக்கிரமன் திருவாசல் எனப்படும் கீழ்புரம் திருமகள் உருவமும் வடக்குவாயிலின் கீழ்ப்பாகத்தில் கலைமகள் உருவமும் கவினுறக் காணப்படுகின்றன. இக்கோயிலை மாடக் கோயில் என்பர். கோயிலின் வெளிச்சுற்று நீட்டளவு 793 அடி குறுக்களவு 393 அடி. திருஉண்ணாழிகையின் மேலுள்ள விமானம் சதுர வடிவானது 13 மாடிகளை உடையது. உச்சியில் சதுர வடிவிலான பிரமாந்திரத்தளக்கல்லின்மேல் கலயமும் அதன்மேல் அழகிய தூபியும் உள்ளது. இந்த விமானத்தின் பெயர் தட்சணமேரு. உத்தமவிமானம் என்றும் உரைப்பர். விமானம் 216 அடி உயரமுள்ளது. தூபிக்குடம் செம்பினால் செய்யப்பெற்று மேலே பொற்றகட்டால் போர்த்தப் பெற்றுள்ளது. செம்புக்குடம் 3083 பலம் நிறை உடையது. அதன்மீது போர்த்தப்பெற்ற பொன் தகடு 2926 1/2 களஞ்சு நிறை உள்ளது. உச்சியில் உள் பிரமாந்திரக்கல் 25½ அடி சதுரம் உள்ளது. இதன் நிறை 80டன். சதுரக் கல்லின் நான்கு மூலைகளிலும் முறையே இரண்டு நந்திகள் உள்ளன. அவை தனித்தனியே 6 ½ ஆடி நீளமும் 5½ அகலமும் உள்ளன. அவற்றை ஒத்த நந்தி ஒன்று உமாபரமேசுவரியின் பெரிய நாயகி சந்நிதிக்கு திருச்சுற்று மாளிகையில் இருப்பதைக் காணலாம்.1 இங்கு, மன்னர்களின் தலைநகர்போல் பெருவுடையார் கோயிலுக்கு அரண்களும் அகழும் எடுப்பித்திருப்பதை காட்டவே இங்கு இதை எடுத்துக்காட்டினோம். ஏனைய விவரங்கள் மாடக்கோயில் என்னும் அதிகாரத்தில் விளக்கியுள்ளோம். காண்க. சோழர்கள் கட்டிய திருமதில்கள் பல உண்டு. இராசராச சோழன் மகன் இராசேந்திர சோழன் கட்டிய கங்கை கண்ட சோழபுரத்தில் எழுப்பிய கோயில்கள் பெரியது தான். ஆனால் தலைநகர்களில் எழுப்பிய அரண்போல் அடுக்கடுக்காய் மதில்களும் அகழ்களும் எழுப்பப் படவில்லை. பிற சோழர்களோ பல்லவர்களோ, பாண்டியர்களோ சேரர்களோ இத்தகைய அரண் களை எழுப்பவில்லை. சைவ மன்னர்களும் செல்வர்களும் எழுப்பிய கோயில்களின் மதில்கள் சில 30 அடிகள் வரை இருக்கும் எல்லா மதில்களும் சிவப்பு, வெள்ளைப் பட்டைகள் அடிக்கப்பட்டிருக்கும். மதில்களின் மூலைகளில் நந்தியும் பூதங்களும் வேறுபல உருவங்களும் வைக்கப்பட்டிருக்கும். கல்வெட்டுகள் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகள் பல. அவைகள் அக் காலத்தில் பலரும் எழுதுவித்த திருமேனிகள் அவற்றிற்காக அவர்கள் அளித்த விளைநிலைநிலங்கள், பாத்திரங்கள் சின்னங்கள் அணிகலன்கள் முதலியவைகள் விவரமாக எழுதப்பட்டுள்ளன. இராசராசன் கல்வெட்டுகளும் அக்கையார் குந்தவையார் கல்வெட்டு களும் விமானத்தில் நடுவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இராசராசன் மனைவிமார் மக்கள் கல்வெட்டுகளும் திருச்சுற்றுலா மாளிகையில் உள்ளன. இக் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் 64 இராசராசன் காலத்தவை. இராசேந்திரன் காலத்தவை 29. முதல் குலோத்துங்கன் காலத்தவை. விக்கிரம சோழன் காலத்து கோரின்மை கொண்டான காலத்தவை; பிற்காலத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்த நாய்க்கர் மன்னர்களும், மராட்டியமன்னர்களும் சில உண்டு. அவர்களுக்கு பின் வந்த முலிம் கிறிதவர்கள் கல்வெட்டுக்களே கிடையாது. திருக்குளங்கள் கோயில்களுக்குச் செல்வர் கோபுரவாயிலைக் கடந்தும் உடலையும் உடையையும் புனிதப்படுத்திக்கொள்வதற்கும் கோயிலும், அதன் அண்மையிலும் புனிதத் திருக்குளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்குளங்கள் உடம்பைத் தூய்மைப்படுத்துவதற்கும் தெப்ப உற்சவங்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள திருக்குளங்கள், இறைவனது அபிசேகத்திற்கும் கோயிலின் உபயோகத்திற்கும் அவசியமான புனித நீரைப் பெறவும் திருக்குளங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. திருக்குளத்தில் இன்னும் பல இன்றியமையாத தேவைகளையும் உடையனவாய் இருக்கின்றன. கோயிலினுட் புகுந்து உடலைப் புனிதப்படுத்துவது உளப்புனிதத்தையும் உடற்பிணியையும் அகற்றி உள்ளத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை அளிக்கிறது. இறைவன் குடி கொண்டிருக்கும் கோயில்களில் உள்ள நீர்கள் தீர்த்தங்கள் எனப்படும். புனித நீர் நிலைக்கு அண்மையில் அமைந் துள்ளதாலேயே அவை புனித நீர் (தீர்த்தம்) என்று கூறப்படுகின்றன. இறைவனது திருக்கோயிலுக்குள் அண்மையில் புனித நீர் நிலைகள்அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் பிறப்பு இறப்பு எனப்படும் சம்சாரக் கடலைக் கடக்கக் கடவுளே வழி என்பதை உணர்த்தும் என்று சமய அறிவர்கள் கூறுகின்றனர். பொதுவாக முற்காலத்தில் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் கோயில்களை மலை முகட்டிலும் மலை அடிவாரத்திலும் மரம் செடி, கொடி நீர்நிலைகள் நிறைந்த காடுகளிலும், பூங்காக்கள் நிறைந்து இயற்கை எழிலொழுகும் சோலைகளிலும், பெரிய மரங்கள் அடியிலும் கடல் அருகிலும் கோயில்கள் அமைத்தனர். பிருகத்சம்ஹிதை என்னும் சிற்பநூல் பூங்காக்கள் நிறைந்த பழமுதிர் சோலைகளே இறைவன் உறைவதற்கு ஏற்ற இடம் என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிரிசைலம் கோயில் வழிபாட்டின் நடுவிலும் தில்லை பழனி திருமலை மலையுச்சியிலும், திருமாலிருஞ் சோலை, திருப்பரங் குன்றம், திருக்குற்றாலம் பாபனாசம் முதலிய கோயில்கள் மலை அடிவாரத்திலும் உவரி குமரி திருச்செந்தூர், இராமேசுவரம், நாகை, திருமுல்லைவாயில், திருவல்லிக்கேணி, மயிலை முதலியவைகளில் உள்ள கோயில்கள் கடற்கரையிலும் திருநமசிவாய், நாஸாமுகுந்தன், செப்பறை, குருகூர், மதுரை, திருவரங்கம், திருவானைக்கா, திருப்புடை மருதூர், திருநெல்வேலி சிரிரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள் ஆற்றங்கரைகளிலும் தீவுகளிலும் எடுப்பிக்கப் பெற்றுள்ளன. ஆண்டவனின் அருள்தடாகமாக விளங்குபவைகள், திருக்குளங்களும் கடலும் ஆறும், குளமும் உள்ளடக்கியேயாகும். இவைகள் கிடைக்காத மக்களும் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சிறப்பிற்கெல்லாம் காரணமானவரும் எங்கும் நிறைந்து எங்கும் ஒளிரும் இறைவனின் பல கோயில்களும் திருக்குளங்கள் தோண்டி நாற்புறமும் கல்வரிசைகள் வைத்து சுவர் எழுப்பி மக்கள் தாராளமாக இறங்கிக் குளிப்பதற்காகப் படகுத்துறைகளும் குளங்களின் நடுவே நீராழிமண்டபங்களும் கட்டி எழுப்பியுள்ளனர். திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி கோயிலினுள் ஒரு குளம், கோயிலுக்கும், கோயிலினுள் புகும் பக்தர்கள் குளிக்கவும், உடற்றூய்மைசெய்வதற்குமாக, அழகுற அமைத்திருப்பதுபோல் சுவாமி சன்னிதியில் உள்ள பெருஞ் சாலையில் அரைப்பர்லாங்கு தூரத்தில் தெப்ப உற்சவம் நடத்தவும் மக்கள் குளிக்கவும், குடிக்கவும் மற்றும் இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் ஒரு குளம் அமைத் துள்ளார்கள். பழைய இலக்கியங்கள் கோயில்களில் உள்ள திருக்குளங் களின் அமைப்பு முறை, பேறு பெருமை ஆகியவைகள் பற்றி விளக்கமாக எடுத்துக் காட்டுகின்றன. திருக்குளத்திற்குப் பல பெயர்கள் சூட்டியுள்ளார்கள். தெப்பம், தடாகம், வாவி, புஷ்கரணி என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இஃதன்றி திருக்குளங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே பெயர் சூட்டப்பட்டுள்ளன. சில விடங்களில் தெப்பத்திற்கு ஒரு குளமும், தீர்தத்திற்கு ஒரு குளமும் இருப்பதுண்டு மதுரை மீனாட்சி - சோமசுந்தரர் கோயிலில் உள்ள குளத்திற்கு பொற்றாமரைக் குளம் என்றும் பெயர். இக்குளம் வரலாற்றுப் புகழ் பெற்றது. சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இதன் பெருமை பேசப்படுகிறது. சிதம்பரத்திலுள்ள, ஆடவல்லான் கோயிலினுள்ள தெப்பத்திற்கு, சிவகங்கை என்று பெயர். திருவரங்கத்திலுள்ள குளத்திற்கு புஷ்கரணி என்றும், திருமலையில் உள்ள குளத்திற்கு கோனே என்றும் காஞ்சியில் உள்ள குளத்திற்கு கருவ தீர்த்தம் என்றும் திருவாரூரில் உள்ள குளத்திற்கு கமலாலயம் என்றும் திருக்கழுக் குன்றத்துக் குளத்திற்கு சங்கு தீர்த்தம் என்றும் சிற்றேமம் என்னும் இடத்திலுள்ள குளத்திற்கு சொர்ணபுஷ்கரணி என்றும் வயலூரில் உள்ள குளத்திற்கு சரவண தீர்த்தம் என்றும் திருப்பேடு குளத்திற்கு சரவணப் பொய்கை என்றும், இடும்பாவனம் கோயில் குளத்திற்குச் சீத புஷ்கரணி என்றும் திருக்கச்சூர் ஆலக்கோயில்க் குளத்திற்கு கூர்ம தீர்த்தம் என்றும் கஞ்சனூர் கோயிலுக்கு கிழக்கில் அக்கினி தீர்த்தம் என்றும் பல பெயர்கள் இறைவனின் உறைவிடங்கள் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. சில குளங்களில் இறங்கு துறைக்கு மேலாக நந்தி அல்லது சிங்க உருவம் முகத் துவாரமாகச் செய்யப்பட்டிருக்கிறது. இதை பேரூர் அவிநாசி திருச்செங்கோடு முதலிய இடங்களில் காணலாம். சில இடங்களில் தீர்த்த கட்டங்கள் அரைவட்டமாகவும் சில இடங்களில் முழுவட்டமாயும் சில இடங்களில் சதுரவடிவமாயும் சில இடங்களில் நீண்ட சதுர வடிவமாயும் அமைக்கப்பட்டிருக் கின்றன. சில இடங்களில் தீர்த்தங்கள் ஆறுகளிலும் சில இடங் களில் கடல்களிலும் காணப்படுகின்றன. சில தீர்த்தங்களே அந்த இடத்தின் பெயர்களாகவும் அமைந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக திருவையாறு, திருவல்லிக்கேணி முதலியவைகளைக் காணலாம். மகா நிர்வாண தந்திரம் என்னும் நூல் திருக்குளங்கள் அமைப்பு முறையையும் அவற்றின் பெருமையையும் எடுத்துக் காட்டுகிறது. கான்பூரில் கிடைத்த ஒரு கல்வெட்டில் பானு தேவன் என்ற ஓர் அரசன் நாட்டின் பல்வேறு தீர்த்தங்களின் சிறப்புகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளான். இவ்வாறு பல நூல்களும் கல்வெட்டு களும் குளங்களில் உள்ள தீர்த்தங்கள், கடல்களில் உள்ள தீர்த்தங்கள், கிணறுகளில் உள்ள தீர்த்தங்கள் பற்றி விளக்கமாக எடுத்துக்காட்டுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்குளங்களில் கும்பகோணம் மகா மகக் குளம் மாபெரும் சிறப்பு வாய்ந்தது. கோயில்கள் பல நிறைந்த கும்பகோணத்தில் மகாமகக் குளம் தொன்மையும், நன்மையும் முதன்மையும் வாய்ந்தது. வியாழ பகவான் 12 - ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்மராசியில் பிரவேசிக்கும் பொழுது நமது நாட்டிலுள்ள எல்லாப் புனித குளத்துத் தீர்த்தங்களும் இக்குளத்தில் கலப்பதாகக் கூறப்படுகிறது. மகாமகம் என்னும் விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை மாசித் திங்களில் முழுநிலா நாளில் வரும் மகம் என்றும் நட்சத்திரத்தன்று இக்குளத்தில் நீராடினால் பல நலன்கள் கிட்டும் என்று நம்புகிறார்கள். மகாமகக் குளம் பதினாறு கோணங்களாக அமைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மண்டபம் உள்ளது. மக நட்சத்திரத்தில் நகரில் உள்ள முக்கியமான கோயில்களினின்று தெய்வத் திருஉருவங்கள் மகாமகக் குளத்து மண்டபங்களுக்கு எழுந்தருளி வந்து காட்சி நல்குகின்றன. குளத்தையொட்டி சிறு கோயில்களும் சிற்பங்களும் காணப்படுகின்றன. வட இந்தியாவில் நடை பெறும் கும்பமேளா என்னும் விழாவைப் போன்று குடந்தையில் தமிழகத்தில் மகாமகம்என்னும் விழா சிறப்பாக நடை பெறுகிறது. இதேபோன்று திருவாரூர் கமலாலயம் என்னும் திருக்குளமும் சிறப்பு மிக்கது. இத் தடாகத்தை தேவ தீர்த்தம் என்று திருவாரூர்ப் புராணம் கூறுகிறது. சம்பந்தப்பிள்ளையார் தம் தேவாரத்தில், வியந்திடும் பலன்க டம்மை விளைந்திடும் விசிட்டதீர்த்தம் மயம்பல வுண்பா ருருள் ளவமனுனு மொன்று கங்கை தியம்பக னேவ லாலே செந்துருத் தேவதீர்த்தம் துயங்கினர் துரிசு தீர்க்கும் தொழன்துதி சுரரு மரக்கும் தேவதீர்த்தத்தின் சிறப்பை வியந்து போற்றிப் பாடியுள்ளார். தேவர் தீர்த்தம் தோன்றிய வரலாறும் வியத்தகும் அதன் சிறப்பும் தேவாரத் திருப்பதிகத்தில் விளக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இக் குளத்தில் நீராடினால் உடல் தூய்மை உண்டாகும். உள்ளத் தூய்மை எழும், உடல் நோய்கள் அகலும், பாவங்கள் அகலும். இறைவன் திருவருள் கிட்டும் என்று கூறப்படுகிறது. இஃதன்றி இங்கு கயா தீர்த்தம், சரவதி தீர்த்தம் ஆகிய திருக்குளங்களும் உள்ளன. வைத்தீசுவரன் கோயில்குளம் பெரியது; பெயர் பெற்றது. இங்குள்ள கோயிலில் குடிகொண்டிருக்கும் வைத்தீசுவரப் பெருமான், இக்குளத்தில் நீராடி வழிபடுபவர்கள் நோய்களை நீக்குகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி நகரில் உள்ள மலைக் கோட்டையில் குடிகொண்ட பிள்ளையாரை, மலையின் அடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி வழிபட்டால் நன்மைகள் பல எழும் என்று மக்கள் நம்புகிறார்கள். இங்குள்ள தெப்பக்குளம் பிரசித்தி பெற்றது. குளம் நல்லபடிக் கட்டுகளுடனும் நாற்புறம் உயர்ந்த கைபிடிச் சுவர்களுடனும் உள்ள பெரிய நீர் நிலையமாகும். இக் குளத்தில் பல முனிவர்கள் நீராடி பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தெப்போற்சவம் மிகவும் சிறப்புள்ள விழாவாகும். தெப்போற்சவ விழாவில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியோடு கலந்து பெருமானை வழிபடுகின்றார்கள். திருச்சிக்கு அண்மையிலுள்ள திருவானைக்காவல் புகழ்பெற்ற திருத்தலமாகும். இறைவன் நிலம், நீர், நெருப்பு, வாயுவு, ஆகாயம் ஆகிய ஐந்து இயற்கைப் பொருள் இலிங்கவடிவில் காட்சி அளிக்கிறான் என்று சமய நூற்கள் கூறுகின்றன. திருவானைக்காவில் இறைவன் அப்புலிங்க (நீர்க்குறி) வடிவில் காட்சி அளிக்கிறான் என்று கூறப்படுகிறது. இந்தத் திருக் கோவிலில் சம்புக் கேசுவரன் இலிங்க வடிவில் எப்போதும் நீரில் மூழ்கியவாறே காட்சி அளிக்கின்றான். பாண்டிய நாட்டின் இறுதித் தலைநகராக விளங்கிய மதுரை மாநகரம். அங்குள்ள மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. இங்குள்ள பொற்றாமரைக்குளம் புராணப் புகழ் பெற்றது. சங்க இலக்கியங்கள் போற்றும் குளம். வரலாற்றுப் புகழ் பெற்ற குளமும் ஆகும். இந்தக் கோயிலினுள் புகுந்ததும் ஒரு குழுமையான காட்சியாக இக்குளம் காணப்படுகிறது. அழகிய பட்டுகள் மேலிருந்து அடிவரை அமைக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்த பெருமை இக்குளத்திற்கு உண்டு. இதுவன்றி மதுரை நகருக்கு இரண்டு கல் தொலைவில் ஒரு பெருங்குளம் உள்ளது. இது வண்டூர் தெப்பக்குளம் என்று கூறப்படுகிறது. சிலர் இதனை வாண்டையார்குளம் என்றும் கூறுகிறார்கள். மிகப் பெரிய இக்குளத்தின் நடுவில் ஒரு நீராழி மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் திருமலை நாயக்கன் என்னும் மதுரையை ஆண்ட மன்னன் அரண்மனைகட்ட வானம் தோண்டினான். வைகை ஆற்றுப் பெருக்கு பொங்கி எழுந்து வந்து அடிப்படை இடத்தொடங்கிய இடத்தை அழித்து விட்டதாம். அதனால் அந்த இடத்தில் பெரிய தெப்பக் குளத்தை வெட்டுவித்து, இப்பொழுது திருமலைநாயக்கன் மகால் இருக்கும் இடத்தில் அரண்மனையைக் கட்டியுள்ளானாம். அவன் கட்டிய குளம் பிற்காலத்தில் வாண்டையார் குளமாறி இப்பொழுது வண்டூர் தெப்பக்குளமாகக் காட்சி அளிக்கிறது. இராமேசுவரத்தில் பல குளங்கள் உள்ளன. தங்கச்சி மடத்திற்கு அண்மையில் சீதாகுண்டம் என்னும் குளம் ஒன்று உள்ளது. இந்தத் திருக்குளத்தில் நீராடி இராமலிங்கத்தை வழி பட்டால் விரைவில் மங்களச் செல்வங்கள் பெருகும் என்று நம்பப்படுகிறது. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் நீராடுவது சிறப்பானதாம். தங்கச்சி மடத்திற்குக் கிழக்கில் இருப்புப்பாதைக்கு அண்மையில் கடலையொட்டி நல்ல நீர் ஊற்று உள்ளது. இதற்கு வில்லுரணித் தீர்த்தம் என்று பெயர். சீதை தாகத்தை அடக்க அடக்கி இராமன் இந்த இடத்தில் வில்லை ஊன்றி நீர்நிலையைத் தோற்றுவித்தாராம். இதில் குளித்தாலும் பாவங்கள் அகலுமாம். இராமேசுவரத்தை சுற்றி இராமனுடைய கதைக்குத் தொடர்பான பல தீர்த்தங்கள் உள்ளன. குழந்தை பெறாதவர்கள் இங்கு சென்று இராமேசுரவத்தில் உள்ள கடலில் மனைவியும் கணவனும் கைகோர்த்து தீர்த்தமாடினால் மக்கள் செல்வம் பெருமான். பாம்பன் பக்கத்தில் பைரவ தீர்த்தம் உள்ளது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோயிலில் அம்மன் சந்நிதிக்கு அண்மையில் ஒரு புனிதத் திருக்குறளும் கோயிலுக்கு அண்மையில் சாமிச் சன்னிதித் தெருவில் அரை பர்லாங்கு தூரத்தில் ஒரு நீராளி மண்டபத்தையுடைய தெப்பக்குளமும் உண்டு. இந்தக் கோயிலில் ஊஞ்சல் மண்டபத் திற்கு வடபுறம் புண்ணிய தீர்த்தம் உண்டு. இதற்குப் பொற்றாமரைக் குளம் என்று பெயர். இந்தக் குளத்தின் நாற்புறமும் நல்லபடிக் கட்டுகள் உண்டு நாற்புறம் உயர்ந்த கைபிடிச் சுவர்கள் அழகுற அமைக்கப் பெற்றுள்ளன. இங்கு சுற்றுக் கால் மண்டபமும் உண்டு. கோயிலுக்குக் உட்புறமுள்ள பொற்றாமரைக் குளத்தில் ஆண்டுதோறும் மாசிமாதம் மகள நாளில் திருநாவுக்கரசு நாயனார் தெப்பவிழா நடைபெறும், கோயிலுக்கு வெளியில் கீழ்புறம் உள்ள தெப்பக்குளத்தில் தைமாதம் தெப்ப உற்சவம் பெரிதாக நடைபெறும். இந்தக் கோயிலின் மேல் பிரகாரத்தில் கருமாரித் தீர்த்தம் உள்ளது. துருவாச முனிவன் சாபத்தால் யானை வடிவம் பெற்ற இந்திரத் துய்மன் என்ற அரசன் இதில் மூழ்கி மீண்டும் தனது தெய்வ வடிவம் அடைந்ததால் இதற்கு கருமாரித் தீர்த்தம் என்று பெயர் எழுந்தது. இங்கு நான்முகன் (பிரமன்) பொன்மலரால் சிவபிரானை வழிபட்ட புனித இடம் என்று கூறப்படுகிறது. அம்மன் கோயில் வெளி வட பிரகாரத்தில் ஆறுகாலத் தீர்த்த குண்டம் உள்ளது. இந்தக் கோயில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் முழுதுகண்ட ராமனாலும் நின்ற சீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் என்பது முக்கியமான முருகன் கோயில்களில் ஒன்று. சுப்பிரமணியனின் ஆறுபடைவீடுகளில் 2-ஆவது படைவீடு. பெரிய கோயிலையும் பெரிய கோபுரங்களையுடையது. கோயில் கடற்கரையில் கவின்பெற அமைந்துள்ளது. இங்குள்ள சண்முக விலாசமண்டபத்திற்கு அண்மையில் நாழிக்கிணறு என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. இங்கு கோயிலுக்கு மேல்புறம் பெரிய தெப்பக்குளம் உண்டு. குளத்தின் நடுவே மண்டபமும் உண்டு. மாசி மாதத்தில் இங்கு தெப்ப உற்சவம் மிகு சிறப்பாய் நடைபெறும். இஃதன்றி கோயில் அருகேயுள்ள கடற்கரையெல்லாம் தீர்த்தக் கட்டங்களாகவே உள்ளன. சிதம்பரம் - சிவகங்கை தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஆடவல்லான் அருள் தரும் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் உலகப் புகழ்பெற்றது. இங்குள்ள திருக்குளத்திற்கு சிவகங்கை என்று பெயர். இது 315 அடி நீளம் 180 அடிகள் அகலம் வாய்ந்த பெரிய திருக்குளம். இத் திருக்குளத்தில் மூழ்கி ஆடவல்லானை வழி பட்டால் எல்லா நோயும் எல்லாப் பாவமும் அகலும் என்பது மக்களின் நம்பிக்கை. கன்னியா குமரி கன்னியாகுமரி இந்தியாவின் தென் பகுதியில் உள்ளது. இங்கு கோயில் கொண்டிருப்பது குமரிப் பகவதி அம்மையாகும். இது முக்கடலையுடையது. அரபிக்கடல், இந்துமாக்கடல், வங்காள விரிகுடா என்னும் முக்கடலையும் இணைக்கும் இடத்தில் இக் கோயில் உள்ளது. இங்கு சங்கர தீர்த்தம், பாபநாசம் சாவித்திரி சரசுவதி குமரி, தாணு, கணேச, பிக்கு, வீம, மதுர என்னும் பெயர்களையுடைய பல தீர்த்தங்கள் உண்டு. குமரிப் பகவதி அம்மையை இத் தீர்த்தங்களில் மூழ்கி வழிபட்டால் எல்லாப் பேற்றையும் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றனர். சுசீந்திரம் குமரி மாவட்டத்தில் உள்ள கோயில் சிறப்பானதும் அழகியதுமான கோயில் சுசீந்திரம் தாணுமால் அயன் கோயிலே யாகும். இக்கோயில் சிறிதாக இருப்பினும் நல்ல நிறைவுடைய கோயிலாக உள்ளது. நல்ல கோபுரங்களும் தெப்பமும், தேரும் உள்ளன. இங்குள்ள திருக்குளம் சிறப்பானது. இக்குளத்தில் மூழ்கி தாணுமாலயனை வழிபடுபவர் எல்லாப் பாபங்களையும் போக்கி உடற்றூய்மை பெற்று நோய்களின்றிவாழ்வர் என்று மக்கள் நம்புகின்றனர். திருக் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து மேற்கில் 25-கல் தொலைவில் தென்காசிக்குப் பக்கத்தில் உள்ளது. திருக்குற்றாலத்தில் குற்றாலநாதர் கோயில் உள்ளது. கோயிலின் அருவியில் ஒரு பெரிய நீர் வீழ்ச்சியுள்ளது. இஃதன்றி புலியருவி, தேனருவி, செண்பகாதேவிஅருவி முதலிய நீர் வீழ்ச்சியுமுள்ளன. இந்த அருவியில் குளித்து குற்றாலநாதரை வழிபட்டால் உள நோயும் உடற்பிணியும் நீங்கும். பாபநாசம் பாபநாசம் குற்றாலத்திலிருந்து தெற்காக சுமார் 20 - கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி யில் முழ்கி பாவனாசனை வழிபட்டால் சகலபாபங்களும் அகலும், பாபநாசம் அம்பாசமுத்திரத்திற்கு அண்மையில் உள்ள விக்கிரம சிங்கபுரத்திற்கு அருகில் உள்ளது. திருக் குளங்கள் உலகிலே எந்த சமயத்தாரையும் தமிழகத்தில் உள்ள சைவர்களும் வைணவர்களும் திருக்கோயிலை மிக மிகப் புனிதமான இடமாக மதிப்பவர்கள். திருக்கோயிலுக்குப் போகவேண்டுமானால் தங்கள் உடலையும் உடைகளையும் உள்ளத்தையும் தூய்மையுடைய தாக்கித் துப்புரவாகச் செல்லவேண்டும் என்று எண்ணுபவர்கள். எனவே கோயில் வாயிலை அடுத்து பெரிய குளம் அமைத் துள்ளார்கள். இறைவனை வழிபடச் செல்பவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்து உடற்றூய்மை செய்து வேறு புதிய ஆடையோ அல்லது பட்டாடையோ புனைந்து திருநீறோ அல்லது திருமண்ணோ அணிந்து பலிப்பீடத்து அண்மையிற் சென்று தங்களின் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்கள் அனைத்தையும் அகற்றி - அதாவது அப்பலிபீடத்தில் பலியிட்டுச் செல்லவேண்டும் என்பதே ஆகம நெறி; ஐதீகம். இதைப் பற்றி சைவசமய அறிஞர். திரு. ஏ. சொக்கலிங்கம் அவர்கள் தம் நூலில் கூறுவதாவது: தூலான்ம நிலையை முன் கோபுரம் அறிவிப்ப போல் அந்தரான்ம நிலையை அறிவிப்பது மகா பலிபீடம். அந்தரான்ம நிலையிலுள்ள மனிதன் ஊரோடு ஒத்து வாழ முயல்வான். இன்னும் சிற்றின்பப் பிரியனேயாயினும் இப்போது அவன் சுகவாசி. சிற்றின்ப அனுபவங்களுக்காக அவன் அல்லலை வாங்கமாட்டான். அவ்வாறு பெறப்படும் சிற்றின்பங்களை அவன் ஒதுக்கிவிடுவான். காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்களாகும் தன் இச்சை களையே தான் என்று இப்போது அவன் எண்ணி வாழ்வான். தன் இச்சைகள் யாவும் எடுபட்டுப் போனால் தான் என்று ஒன்றுமே இராது என்று எண்ணுவான் சர்வ ஞானோத்தரப் பாட்டில் வாக்கு என்று கூறப்பட்டிருப்பது மனிதனுடைய இச்சையையும் உணர்த்தும். வாக்குக்கும் இச்சைக்கும் மூலம் ஒன்றே யாகையால் இந்த அந்தரான்ம நிலையில், அவன் பலப்பல பிறவிகளெடுத்து இன்பதுன்ப அனுபவங் களாலும் கல்வி கேள்விகளாலும் இச்சைகளே தான் என்ற நம்பிக்கை கொள்கிறான். விலங்கு உணர்ச்சியால் என்றும் துன்பமே தவிர இன்பம் எந்நாளும் பெறப்படுவதில்லையென்றுங் காண்கின்றான். அதன் பயனாக அவன் பலிபீடத்திற்கு இப்பால் விழுந்து வணங்கி தன் இச்சைகளாகிய விலங்குகளை அங்கு பலிகொடுத்துவிட்டு எழுந்து கொடிமரத்தண்டை செல்கிறான். அப்போது அவன் தத்துவ ஆன்ம நிலையை அடைகிறான். அந்நிலையை கோயிலின் அறிகுறியாக விளங்குவதே கொடி மரம், அப்பால், அவன் நந்தியையும் கடந்து மூலத்தான மூர்த்தியைக் காணச் செல்கிறான் என்று கூறப்படுகிறது.1 கல்வெட்டுக்கள் பண்டைக் காலத்துத் தமிழ் மன்னர்களும் சைவ சமய வேளாளப் பிரபுக்களும் - ஏன் இந்த நாட்டைச் சூறையாடி மக்களை அடிமைப்படுத்தி, மக்களின் செல்வத்தைச் சுரண்ட வந்த நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் அளித்த கல்வெட்டுகள் மூலம் அவர்கள் திருக்குளங்கள் வெட்டுவதில் அவர்கள் கொண்ட திருப்பணி ஆர்வம் நன்கு புலனாகின்றது. திருக்கடந்தை நகர் என்னும் பெண்ணாடகத்தில் (விருத்தாசலம் புகைவண்டி நிலையத்தி லிருந்து 11-கல் தொலைவில் உள்ளது) கிடைத்த கல்வெட்டு ஒன்றில் விக்கிரம சோழ தேவன் என்னும் மன்னன் காலத்தில் கருணாகரன் சுந்தரத் தோனுடையான் வல்லவன் பல்லவராயன் என்பவர் சேந்தமங்கலம் என்னும் இடத்தில் ஒரு திருக்குளம் வெட்டும் திருப்பணிக்கு அவன் செய்த உதவி குறிப்பிடப்பட்டுள்ளது. இஃதன்றி செங்கற்பட்டு மாவட்டம், திருப்பாலைவனம் என்னும் இடத்தில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு, கண்ட கோபாலன் என்னும் பணம் படைத்த வணிகர் பெருமகன் அவ்வூரில் கோயில் கொண்ட திருவுடைநாயனார் கோயிலில் புனித நீர்த்துறை நிறுவுவதற்கு அளித்த நிவந்தம் விளக்கமாகக் குறிப்பிடுகின்றது. திருவண்ணாமலை கல்வெட்டு ஒன்று தாண்டவவாணன் ஆவணி மகநாளை மாண்புறக் கொண்டாடி ஒரு மண்டபமும், திருக்குளமும் அருணாசலேசுவரர் திருக்கோயில் அமைக்கத் தீர்மானித்து அதற்கு வேண்டிய செல்வம் அனைத்தையும் அளித்து திரு பெருந்திருப்பணியை நிறைவேற்றினான் என்று சொல்லுகிறது. பாண்டியமன்னன் சுந்தரபாண்டிய மன்னன் கள்ளிக் கோட்டை கல்வெட்டு ஒன்று மலையாள மொழியில் கோயிலன் தாம்பான் என்பவனிடமிருந்து கிடைத்த செல்வத்தைக் கொண்டு ஒரு திருக்குளத்தை வெட்டியதாக எடுத்துக்காட்டுகிறது. திருப்பேரூர்க் குளம் பதினாறு மூலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பெற்றுள்ளது. அதனைத் திருக்கணாம் பிரங்கரையன் மகன் மாறயன் கட்டினார். சிலதீர்த்தங்களில் கட்டினவன் இலட்சினை செதுக்கப்பட்டுள்ளது. தாரமங்கலத்தில் அத்தகைய இலட்சினை உண்டு. சில குளங்களுக்கு இறங்குவழிக்கு மேலே சிங்கம் அல்லது நந்திக்குளம் முகத்துவாரமாக வைக்கப் பட்டிருக்கும். சின்னமனூர் சிறிய செப்பேடு, தடம் பூதம் பூனி கொண்டு தடாகங்கள் பல திருத்தியும் என்று கூறுவதிலிருந்து பாண்டிய அரசன் பூதங்களை ஏவல் கொண்டு அவற்றால் பல ஏரிகளையும் குளங்களையும் திருத்தி அமைத்தான் என்று கூறப்படுகிறது. (பாண்டியன் செப்பேடு, பிற் சேர்க்கை பக்கம் அ.39) பாண்டியன் மாறவர்மன் மகனும், வரகுணன் தன் அண்ணனை வென்று அரச கட்டிலை அடைந்தவனும் வீரநாரணன் கொங்கு நாடு, பொக்கரணி, தென்மாயல், வெண்கை, பராந்தகம் முதலிய இடங்களில் எழுந்த போர்களில் எல்லாம் வெற்றிமாலை சூடி பல ஆறுகளையும், குளங்களையும் வெட்டினான் அளவில்லாத பிரம்மதேயங்கள் அளவற்ற தேவதானங்கள் அளவற்ற தடாகங்கள் இவைகளை உருவாக்கினான். அளவில்லாத செல்வத்தை செலவிட்டு, கலிப்பகை, கண்டருள் கண்டன் மதுராப்புரிப் பரமேசுவரன், மானினி, மதுரகேதன் என்றும் பட்டங்களை உடையவன் என்று தளவாய்புரம் செப்பேட்டின் தமிழ்பகுதி கூறுகிறது.1 தமிழ்நாட்டில் புனிதமும் புகழும் வாய்ந்த எழிலுறும் திருக்குளங்கள் எண்ணில. திருக்குளங்கள் வெட்டுவதற்காக மன்னர்களும் மக்களும் அளித்த செல்வங்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள் பல. தமிழ்நாட்டில் திருக்குளங்களில் நடைபெறும் தெப்போற்சவங்கள் அளவற்றன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திருச்செந்தூர், சுசீந்திரம், மதுரை, சிதம்பரம், திருவாரூர், திருச்சி, கும்பகோணம், இராமேசுவரம், மயிலாப்பூர், மன்னார்குடி மற்றும் பலவாகும். சிற்ப வடிவங்கள் சிற்பக் கலை அற்புதமான சீரிய பொற்புறுங்கலை. நமது நாட்டில், ஏட்டில் அடங்கா அரும்பெரும் கட்டிடக் கலை. கட்டிடக்கலைக்கு அடுத்தபடியாக விளங்குவது சிற்பக்கலை . சில விஷயத்தில் கட்டிடக்கலை சிறப்புற்று விளங்கும்தன்மையது என்றுங் கூறலாம். கட்டிடக் கலையை விட சிற்பக் கலை நுட்பமானது நாட்டின் பெருமையையும் மக்களின் மதிநுட்பத்தை யும் விளக்குவது கலைகளே. அக்கலைகளில் நுண்மான் நுழைபுலம் வாய்ந்த மக்களின் சிறப்பினை அழியாத அடையாளமாக எடுத்துக் காட்டுவது சிற்பக் கலையாம். பழைய குகைகளிலும் அரும்பெரும் கோயில்களிலும் சிற்பக்கலைதான் சிறப்புற்று விளங்கும். இது சுண்ணம், என்பு, மரம், தந்தம், மண், கல், செம்பு, வெள்ளி, பொன், ஐம்பொன் மரகதம், மாணிக்கம் முதலிய பொருட்களால் மனிதன் விலங்கு பறவை, மலை, மரம், செடி, கொடி, கடல் ஞாயிறு, திங்கள் முதலிய இயற்கை உருவங்களையும் தெய்வம், கந்தருவர், அரக்கர் முதலிய கற்பனை வடிவங்களையும் எழில் பெற உருவாக்குவதே சிற்பம் எனப்படும். கவிஞர்கள் தம் கற்பனைத் திறத்தால் ஒரு காவியம் சமைப்பதுபோல கம்மியரும், ஓவியரும் தம் கற்பனைத் திறத்திற்கேற்ப பலவகையான சிற்ப வடிவங்களையும் ஓவிய வடிவங் களையும் அமைக்கிறார்கள். இக்கலை மக்கள் முதிராப் பண்புடைய முதுமக்களாய், காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த பொழுதே எழத் தொடங்கிவிட்டது. சிற்பக் கலைகள் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து உள்ளத் திற்கு உவகையூட்டும் உயரிய கலைகளாகும். இவற்றின் அமைப்பும், பாவங்களும் நிலைகளும் எல்லோர்க்கும் உணர்ச்சியூட்டி இன்பமூட்டும். ஆனால் அவைகள் மீது கருத்தூன்றிக் கவனம் செலுத்துபவர்களுக்கு மட்டிலா மகிழ்ச்சியை ஆழ்ந்த அற்புத தத்துவங்களை உணர்த்தும். இவைகளை கூர்ந்து ஆய்ந்து பார்க்கச் சிறிது கலை உணர்வும் வேண்டும். இக்கலை உணர்வும் பாவ உணர்ச்சியும் வாய்ந்தோர் அவைகளைக் காணுந்தோறும் காணும் தோறும் புதியதோர் இன்ப உலகில் தன்னை மறைந்து களிப்பென்னும் கடலில் நிற்பது போல் தோன்றும். மனிதன் கோடி ரூபாய் செலவு செய்து ஒரு கோயில் கட்டுகிறான். 2000 -ம் அடி அகலமும் 2000 அடி நீளமும் 300 அடி உயரமும் உள்ள விமானமும் அமைந்த கோயிலைக் கட்டுகிறான். மலேசிய நாட்டின் தலைநகரிலுள்ள சிறந்த இசுலாமிய கோயிலைப் போல் (மஜித்தைப் போல்) கீழே நடைபாதைகளிலெல்லாம் இத்தாலி நாட்டு வெள்ளைப் பளிங்குக் கல்லைப் பதித்து ஒரு சிவன் கோயிலைக் கட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். எதற்காக இதையெல்லாம் திருஉண்ணாழிகையில் வைக்கும் ஒரு சிவலிங்கம் என்னும் சிற்ப உருவை வைப்பதற்காக என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நான் இத்துணை பெரிதாக ஒரு பெரிய திருக்கோயிலை எழுதியுள்ளேன். ஒரு சிற்பத்திற்காக திருக்கோயில் என்னும் இத்துணை பெரிய நூலை இரவு பகலாகப் பல்லாண்டாக எனது உடல் நோவினைக் கூடப் பொருட்படுத்தாது எழுதியுள்ளேன். எதற்காக சிற்பத்திற்காக - ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால் கோயிலை விட கோபுரத்தைவிட திருமதிலைவிட திரு உண்ணாழிகையைவிட விமானத்தைவிட மண்டபங்களைவிட அணிகலன்களை, விளக்குகளைவிட சிற்பம் முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்கேயாகும். கோயிலை விட திருஉண்ணாழிகையில் இருக்கும் ஒரு சிற்ப வடிவம் இன்றியமையாதது என்பது யாவருக்கும் தெரியும். ஆனால் சிந்திப்பதே இல்லை. சிந்தித்தாக வேண்டும். நமது முன்னோர்கள் சிந்தித்தனர். நாம் சிந்திக்கவில்லை. 75-லட்சம் பெருமதியுள்ள சிவபுரம் நடராசர் சிலை எவ்வளவு பாதுகாப்புள்ள கோயிலில் இடம் பெற்றிருக்க வேண்டும்? பாதுகாப்புள்ள கோயிலில் வைத்தோமா? இல்லை பலகோயில்களில் 10 லட்சம் இருபது லட்சம் மதிப்புள்ள பொற்படிமங்கள் இருக்கும். அதை ஓர் இடிந்த திருஉண்ணாழிகையும் பூட்டில்லாத அல்லது தாழ்ப்பாளற்ற இத்துப்போன மரக்கதவுகள் உள்ளகோயிலில் வைத்திருப்போம். இராச ராசன் கட்டிய பெருவுடையார் கோயிலை அவன் அகழ்வெட்டி அடுக்கடுக்காய் மூன்று அரண்கள் எழுப்பி எவ்வளவு பாதுகாப்பாக வைத்துள்ளான் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதோடு அவன் காலத்தில் கோயிலுள் புகுந்து திருட மக்கள் எவரும் எண்ணார்கள். அப்படி எவரும் கோயிலுள் புகுந்து திருடினால் அரசன் அந்தக் கொடியோனுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையா விதிப்பான். சிரசைக் கொய்து மக்கள் யாவரும் பார்க்கும் படி பலிபீடத்தில் வைப்பான். எவ்வளவு சாதுவான அரசனாக இருந்தாலும் கோயிலுட் புகுந்து திருஉருவங்களைத் திருடிய கொடியவனுக்கு சித்திரவதை செய்யவேண்டும் என்றே தீர்ப்பளிப்பான். நிற்க அல்லாமா சர். முகம்மத் இக்பால் ஒரு முலிம். அவர் உலகிலே ஒப்பற்ற புலவர்களில் ஒருவர். அவர் எதற்கும் அஞ்சாத வீரர். உலகம் முழுவதும் எதிர்த்தாலும் தனது உள்ளத்தில் உள்ளதை உலகிற்கு உரைக்க அஞ்சாதவர் அவர்கலையைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் பொன் எழுத்தால் எழுதிப் போற்றத்தக்கதாகும். அது அடியில் வருமாறாகும். நாம், இயற்கைக் காட்சிகளில் அழகு நிரந்தரமானது, அன்று அதில் பொலியும் அழகான அம்சம் அனைத்தும் அழியும் தன்மையுடையன. இன்று சிரித்து உள்ளம் காட்டி நிற்கும் முல்லைமலர் நாளையத்தினம் வாடிவிடுகிறது. அந்திப் பொழுதில் அற்புத காட்சி நல்கி நிற்கும் மேகம் இமைப்பொழுதில் மறைந்து விடுகிறது. முல்லை நகை பயிற்றி உள்ளம் பறித்து நிற்கும் உவாமதி முகமுள்ள மங்கையர் திலகம் - எழிலரசி பல்லற்று, தோல் சுருங்கி கிழவியாய் மறைந்து விடுகிறாள். முல்லையிலும் மாலை மேகத்திலும் எழில் ஒழுகும் ஏந்திழையின் வதனத்திலும் காண்பது அழகு. அந்த அழகை நிரந்தரமாக்க முடியாதா? முடியும். அதுதான் கலை வண்ண மலர்கள் கொத்துக் குலுங்கும் எண்ணற்ற செடிகளை ஓவியமாகத் தீட்டிவிடலாம். கவிதையாய் கவினுறப் புனைந்து விடலாம். கவிதையிலே மலரும் மங்கையும் மயிலும், குயிலும் மேகமும் அமரத்துவம் அடைகிறது. அழியும் பொருளை அழியாத அமரத்துவம் ஆக்குவதே அரிய கலை. அழியாத் தன்மை யுள்ளதாக்கும் பொழுது அதில் ஒரு குறிக்கோள் ஒளிரவேண்டும். கலையின் ஆத்மாவில் குறிக்கோளின் உயிர் துடிக்கவேண்டும். கலையின் உண்மைக் குறிக்கோள் வாழ்க்கையை வளமுள்ள தாகவும் அழகானதாகவும் செய்வதாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையை அமரத்துவம் உள்ளதாக்குவதே கலையின் குறிக்கோள். பொருள்களின் உண்மையை உணர்த்தத் தவறுவது கலையன்று. மூஸாவின் ஆஸாவைப் (கைத்தடியைப்) போல் கலை சக்திவாய்ந்து இலங்கவேண்டும் என்றார். இதினின்று ஒரு இலாமியப் புலவர் கலைக்கு அளித்திருக்கும் உயர்வை நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணரலாம். நல்ல ஓவியத்திற்கும் கலை நயம் வாய்ந்த சிலைக்கும் நன்னயம் வாய்ந்த படிமங்களுக்கும் (Bronze க்கும்) அவர் அளித்துள்ள பெருமை நன்கு தெரியும். நமது நாடு 5000 -ம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து கிறிதவர் களின் முன்னோனும், முலிம்களின் முன்னோனும் யூதர்களின் முன்னோனுமாகிய ஆபிரகாமும் ஏன்? ஆதாமும் ஏவாளும் பிறக்குமுன்பே இந்திய நாட்டில் திராவிடர் சுடுமண்ணிலும், கல்லிலும், செம்பிலும் சிற்பங்கள் செய்யவும் எழுதவும் தொடங்கிவிட்டனர் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லி வருகின்றார்கள். நமது நாட்டு சிற்பிகளும் தபதிகளும் சிற்ப நூற்களின் விதிப்படி சிலைகளும், படிமங்களும் ஓவியங்களும் தீட்டி வந்துள்ளனர். 5000-ம் ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளியில் கல்வெட்டி கண்ட சிவனுருவமும் சுடுமண்ணில் செய்த உமாதேவி உருவமும் சுண்ணாம்புக்கல்லில் செய்த ஆடவல்லான் உருவில் செம்பில் வார்த்தெடுக்கப்பட்ட நடனமங்கையின் உருவமும் எண்ணற சிவலிங்க உருவமும் நாம் உலகில் உலோக காலத்திலே ஒப்பற்று விளங்கிய சிற்பிகளின் மகோன்னதமான பரம்பரையில் வந்தவர்கள் என்று சர்வதேச சிற்ப கலைஞர்களின் கருத்தரங்கில் மார்பில் கையை வைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து கெம்பீரமாய்ப் பேச முடியும். கலைக்கு தாயகம் இந்தியா. கலையை உலகம் முழுதும் பரப்பிய கலைத் தூதுவர்கள் திராவிடர் என்பது வரலாறு கூறும் உண்மை. நமது நாட்டின் சிற்ப வரலாற்றை மறுமலர்ச்சி பெறச் செய்ய முன்வரும் நாம் நமது சிற்ப நூற்களையும் ஆகமங்களையும் அடிப்படையாக வைத்தே பணியாற்ற வேண்டுவது இன்றியமையாத கடமையாகும். பழைய தமிழகத்தின் சிலைகளினின்றும் செம்புப் படிமங்களினின்றும் நமது தமிழ்க்கலை வளர்ச்சி செய்வதற்குரிய எல்லா நல்ல அம்சங்களையும் தவறாது பெற்றுக் கொள்ள வேண்டும். நமது கோயில் கட்டிடங்களுக்கும் சிற்பங்களுக்கும் மண்டபங்களுக்கும், விமானங்களுக்கும் கோபுரங்களுக்கும் மதில்களுக்கும் பிறவற்றிற்கும் நமது சங்க நூற்களிலிருந்தும் ஏராளமான சான்றுகளைச் சரளமாகக் கூறமுடியும். நமது நாட்டில் சிற்ப விதிப்படி கட்டப்பட்ட எண்ணற்ற கோயில்களும் கோபுரங்களும், விமானங்களும் சிலைகளும் படிமங்களும் ஓவியங்களும் இன்றும் அழியாது 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன. உலகம் என்றும் கண்டிராத வண்ணம் ஐயாயிரம் ஆண்டிற்கு முன் நிறுவிய சிந்து வெளிச் சீரிய பண்பாடும் நூறாயிரம் ஆண்டுகட்குமுன் தீட்டிய மைய மாநிலப் பிரதேசத்தில் (மத்திய பிரதேசத்தில்) பிம்பட்கா மலைக்குகைகளில் தீட்டிய வண்ண ஓவியங்களும் 60-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள மனிதனின் மண்டை ஓடும் இந்தியத் திராவிட மக்களின் சிறந்த சிற்ப நுட்பங்களுக்குத் தக்க சான்றுகளாக மிளிர்கின்றன. ஆனால் சிற்ப இலக்கணங்களில் பெரும் பகுதி மறைந்துவிட்டன. இதற்கு முக்கிய காரணம், அன்னிய இனத்தவர்களின் ஆட்சியும் சிற்ப நூற்கள் ஏடுகளில் எழுதப்பட்டு அச்சேறாமல் இருந்ததுமேயாகும். சில நூற்கள் வடமொழியில் ஏடுகளிலிருந்து இப்பொழுது அச்சிடப்பட்டுள்ளன. சில இன்னும் அச்சிடப்படவில்லை. சில சிற்பநூற்கள் ஆங்கிலத்திலும் சில தமிழிலும் அச்சாகியுள்ளன. அவைகள் அடியில் வருமாறாகும்: 1. வாது வித்தியா (கட்டிடக் கலை) 1913-இல் திருவாங்கூர் வடமொழிப் பிரசுராலயத்தின் மூலம் 11-அத்தியாயங்கள் வெளி வந்துள்ளன. 2. மனுஷ்யலய சந்திரிகா, 1917-ஆம் ஆண்டில் திருவாங்கூர் அரசு ஏழு அத்தியாயங்களில் வெளிவந்துள்ள இதுவும் கட்டிடக் கலை நூலே. 3. சில்பரத்தினம். இந்நூல் திருவாங்கூர் அரசினரால் 1922-இல் அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் கட்டிடக் கலையையும் சிற்பத்தையும் பற்றி விளக்கப் பெற்ற நூல். இந்நூல் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக . . . . ம் ஆண்டில் மீண்டும் தமிழில் வெளியிடப் பட்டுள்ளது. 4. மயமதம் இந்நூல் 1919-ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசினரால் வெளியிடப்பட்ட கட்டிடக்கலை நூல். இது மீண்டும் தமிழில் தஞ்சாவூர் சரவதி மகால் வெளியீடாக 1964-இல் வெளிவந்துள்ளது. 5. யுக்தி கல்பதரு. இந்நூல் 1917-இல் கல்கத்தா கீழ்நாட்டு பிரசுரலாயம் 23-அத்தியாயங்களை வெளிவரச்செய்துள்ளது. இது மலைஇயலைப்பற்றிய நூல். 6. பிருகத்சம்ஹிதா. வராஹமிஹிர முனிவரால் இயற்றப்பட்ட 57 அத்தியாயங்கள் கொண்ட கட்டிடக் கலை நூல். 7. சமரஞான சூத்திரதாரா. இது கட்டிடக் கலை நூல். இது கணபதி சாதிரி அவர்களால் கேய்க்வார் கீழ்நாட்டு பிரசுரப் பிரசுராலய வெளியீடாக 1924-இல் வெளி வந்துள்ள சிற்ப நூல். 8. விவகர்மப் பிரகாசம். இந்நூல் 1931-ஆம் ஆண்டு பம்பாயில் வெளியிடப்பட்டுள்ளது. சாம்வாதம் என்பது இப்பொருள் பற்றிய மற்றொரு நூல் இதுவும் கட்டிடக்கலை நூலே. 9. மச்சயபுராணம். கட்டிடக் கலையைப் பற்றிக் கூறும் மற்றொரு நூல் இதுவும் வெளி வந்துள்ளது. 10. அக்கினிபுராணம். இதுவும் கட்டிடக் கலைநூல். அச்சேறியுள்ளது. இதோடு கருட புராணமும் வெளிவந்துள்ளது. 11. பவிஷ்யபுராணம். இந்நூல் ஓவியக் கலையைப் பற்றி எழுதப்பட்ட நூல். சித்திரலட்சணம் என்ற திபேத் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. இதை ஜெர்மன் மொழியில் பெர்த்தோல் லாபர் (Berthal Laufer) என்னும் அறிஞர் 1913-இல் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளார். 12. காசியப சில்ப சாதிரம். இந்நூல் தஞ்சாவூர் சரசுவதிமகால் வெளியீடாக 1960-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்துள்ளது. அரிய சிற்ப நூல். 13. சகளாதிகாரம். இந்நூல் தமிழில் 1901-இல் தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீடாக வெளிவந்த சிற்ப நூல். 14. மாளசாரம். இந்நூல் 1963-இல் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக வெளிவந்த ஒரு அரிய சிற்பநூல். 15. சுக்ரநீதி. இது கட்டிடக் கலை நூல் தமிழில் திருகதிரேசன் செட்டியார் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. 16. வெளியீடாக 1960-ல் வெளியான சிற்பநூல். 17. பிராஷ்மீய சித்திரகர்ம சாதிரம் - இந்நூல் தமிழில் 1960-ம் ஆண்டு தஞ்சை சரசுவதி நூலகத்தால் வெளிவந்த சிற்பநூல். இன்னும் எண்ணற்ற சிற்ப நூற்கள் மொழியாக்கம் செய்யப்பெற்று வெளியிடப் பெறவில்லை. அச்சிடவேண்டிய இன்றியமையாத நூற்கள் வங்க நாட்டில் உள்ள கவி. தாகூரின் விசுவபாரதி நூலகத்தில் உள்ளன. மலையாள வரிவடிவில் எழுதப்பெற்ற பிரதிமாலட்சணம் என்ற சிற்ப நூல் முக்கியமாக வெளிவர வேண்டிய நூலாகும். காசியப சம்ஹிதா என்னும் சிற்ப நூலும் பிரதிமாலட்சண விதானம் என்றொரு நூலும் அவசியம் வெளிவரவேண்டிய நூலாகும். மாயாவது என்று ஒரு சிற்ப நூல் உள்ளது. அதைப் படிமத்துறையில் ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் இதுவரை கவனிக்கவில்லை. ஆனால் தெலுங்கில் வெளிவந் துள்ளது. இது மிகச்சிறந்த சிற்ப நூலாகும். இஃதன்றி (1) பிரதிமா - மான - லட்சணம் (2) தசதால நியாக்குரோத பரிமண்டல புத்தலட்சணம் (3) சம்யுத்த பசிட்ட பிரதிமா லட்சண விவரண நாம இம்மூன்று முக்கியமான நூலும் சிற்ப நூல்களாகும். அதன் மூலப்பிரதியே இதுவரை கிடைக்கவில்லை. இவைகள் நேப்பாளத்தில் இருந்தாலும் இருக்கலாம். இந்தியச் சிற்பக் கலைக்கொள்கை இந்திய நாட்டில் இப்பொழுது நமது பழங்காலக் கலைகளைப் பற்றி ஆராயவேண்டும் என்று ஆர்வந் துளித்துள்ளது. பலர் தம் உள்ளத்தில் உதிக்கும் உயரிய கருத்துகளுக்கு உருவந்தீட்ட முயன்று வருகிறார்கள். அந்த மூலாதார தத்துவங்கள் அவர்களுக்கு ஆக்கம் அளித்து ஊக்கம் ஊட்டி நிலைத்து நிற்கத் தொடங்கி யுள்ளது. இந்திய சிற்ப நூற்கள் அதன் முக்கிய கொள்கைகளை மக்களுக்கு நன்கு புரியுமாறு துலாம்பரமாக எடுத்துக் காட்டி யுள்ளது நமது அதிர்ஷ்டவசமேயாகும். இந்த நோக்கங்கள் ஏனைய நாட்டிலுள்ள சிற்பிகளின்று இந்திய சிற்பிகள் பெற்றிருந்த உத்தேக உணர்ச்சியினின்று முற்றிலும் வேறுபடுத்தியுள்ளது. இயற்கையாய் எழுந்த விசயமேயாகும். நாம் ஏனைய நாட்டிலுள்ள கலைஞர்களின் கருத்துகளினின்று இந்தியக் கலைகளின் இலட்சியமும் கருத்தும் வேறுபட்டிருந்தால் அதைக்கண்டு நாம் வியப்படைவதற்கில்லை. இந்தியச் சிற்ப நூல் ஆசிரியர்களும் தமது நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தம் நூற்களில் வற்புறுத்தியுள்ளார்கள். அந்தக் கருத்துக்கள் விஷ்ணு தர்மோத்திரத்திலும் மச்சய புராணத்திலும் விரிவாக விளக்கி இருக்கின்றன. முற்கூறப்பட்டவர்கள், கடவுள் மனிதர்களுக்கு அளித்ததைப் போன்று தங்களுடைய நோக்கமாகிய அர்த்த கர்ம மோட்சமாகிய வைகளைக் கடைப்பிடித்துள்ளார்கள். எனவே எப்பொழுதும் மனிதர்களால் இறைவன் வழிபடுவதற்கு உரித்தானவன் என்று முடிவு கட்டப்பட்டுள்ளது. இந்த உலக வாழ்விற்கு அப்பால் மக்கள் எதை அடைய விரும்புகின்றனர். அவைகள் தர்மம் கர்மம் அர்த்தம் ஆகியவைகளோடு மோட்சம் ஆகிய அதே பொருள்களாகும். வல்லமை வாய்ந்த இறைவன் தம்மை நாடி தக்கமுறையில் வழிபட்டவர்களுக்கு பாவ நிவாரணம் அளித்து தம் கிருபையை அளிப்பார். மக்கள் கடவுளை வழிபடு வதற்கு போதிய காரணம் இருக்கிறது. கடவுளை வழிபடுவதற்கு ஒருவர் தமக்கு வேண்டிய சிலைகளை அல்லது செம்புப் படிமங் களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்தியாவில் சிற்ப வடிவங்களை உருவாக்கும் உன்னதமான கலையின் அவசியம் இதனாலே எழுந்தது. புராதன் புத்த சகாப்தத்தில் புத்தர் உருவத்தைச் செய்வது சாதாரண வழக்கம் அன்று. சிற்பிகள் புத்தரின் உருவ நிலையில் போதிமரம் அல்லது தர்ம சக்கரம் புத்த சின்னம் ஆகியவை களை உருவாக்கினர். வழிபடும் பக்தர்கள் இதே நோக்கத்தோடு தங்களுடைய கடவுளைத் தொழுது வந்தனர். எனவே இந்திய சிற்பிகள் தங்களுடைய சொந்த சுகானுபவங்களுக்காக எந்த உருவங்களையும் உண்டு பண்ணவில்லை. ஆனால் பக்தர்களின் தேவையை நிறைவு செய்யவே திருஉருவம் ஆக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியக் கலைஞர்கள், கலை, கலைக்காகவே என்னும் சித்தாந்தத்தை என்றும் ஏற்றுக் கொண்டதே இல்லை. அவர்கள் கலைக்காகவே ஒரு தேரை நாடினார்கள் அது மதத்தினால் அளிக்கப்பட்டது. கடவுளை வணங்குவதற்கு அவரது புகழைப் பாடுவதே சிறந்த கர்மயோகம் என்றும் அதுவே மக்கள் சமூகத்திற்கு விடுதலை நல்க வல்லது என்றும் கூறுகிறது. சிவநெறியும் தேவாரம் பாடி சிவனை வழிபடுவதே பிறவிக் கடலை நீக்கி இறையின்பத்தை அளிக்கும் என்று கூறுகிறது. இந்தியர்கள் மதவெறி கொண்டவர்களன்று. இன்றும் இலாமியர்கள் புனித பூமியாகிய கஃபாவின் இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிதவர்கள் புகவோ அல்லது தங்கள் மதத்தை இசுலாமியர்களிடம் பிரசாரம் பண்ணவோ அல்லது தங்கள் கோயில்களைக் கட்டவோ முடியாது. நீண்ட காலமாகவே ஐரோப்பிய நாட்டில் இந்து பௌத்த, இசுலாமிய சமயத்திற்கு இடம் அளிப்பதில்லை. அப்படி இடம் அளித்தாலும் பல்வேறு வழிகளில் சமயம் பரவுவதைத் தடுத்துவிடுவார்கள். மொத்தத்தில் இசுலாமியர்களை விட கிறிதவர்கள் பிறசமயப் பிரச்சாரத்திற்கு கொஞ்சம் தாராளமாக இடம் அளித்துள்ளார்கள். இந்தியர்கள் எல்லாச் சமயத்தார்களுக்கும் சமய சுதந்திரம் அளித்துள்ளார்கள். இந்துக்கள் பிறசமயத்தவர்களுக்கு அளித்த சுதந்திரம் மூலம் தாராளமாக இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசவும், நூல்கள் வெளியிடவும் கோயில்களை அழிக்கவும் பாட சாலைகள் அரசாங்கத்தின் வரிப்பணத்தைக் கொண்டு நடத்துவது போல் பாசாங்கு பண்ணிக்கொண்டு இந்து சமயத்தை இழிவுபடுத்தி இந்து மாணவர்களை மதமாற்றம் செய்யவும் இடம் அளிக்கப் பட்டுள்ளது. இந்துக்கள் பணத்தைக் கொண்டு நடத்திவரும் கிறிதவப் பள்ளிகளில் இந்து ஆசிரியர்களுக்கு இடம் அளிப்பதே இல்லை. கிறிதவர்கள் அரசாங்கத்தின் உதவியினால் நடைபெறும் பள்ளிகளில் 100க்கு 2 விகிதம் கூட இந்துக்களுக்கு ஆசிரியப் பதவி அளிக்க மறுக்கிறார்கள். ஒரு முலிம் பெண் பாடசாலையில் சுமார் 15 ஆசிரியைகள் கிறிதவர்கள். நீண்டகாலமாய் அங்குள்ள தலைமை வகிக்கும் கிறிதவ தலைமை ஆசிரியை பலசாக்குப் போக்குச் சொல்லி பிற சமய ஆசிரியைகளுக்கு மட்டுமல்ல முலிம் ஆசிரியைகளுக்கே இடம் அளிக்காது செய்துள்ளார். இப்பொழுது ஒரு முலிம் ஆசிரியை இடம் பெற்றுள்ளார். காஞ்சியில் பல சைவர்களின் கோயில்களில் புத்தரின் உருவத்தை இன்றும் அகற்றாது வைத்துள்ளார்கள். நாகூர் தர்காவிற்கு இந்துக்கள் போய் வழிபட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்துக்கள், கடவுள் ஒருவன் என்றால் அவனைச் சிவன் என்றால் என்ன, அல்லா என்றால் என்ன? எகோவா என்றால் என்ன என்று எண்ணி இதுவரை நடந்துவந்துள்ளார்கள். இந்துக்கள் கிறிதவ சமயத்திற்கும் பிற சமயத்திற்கும் மரியாதை அளித்ததன் பயனாய் அவர்கள் இந்து மதத்தை இழிவுப்படுத்திக் கூறி மதமாற்றம் செய்து கிறிதவ அரசு இந்தியர்களை அடிமைப்படுத்தி வாழும்படி இந்திய நாட்டின் தேசபக்தி ஊறுவித்து வந்ததை நீண்டகாலத்திற்கும் பின்தான் இந்துக்கள் உணர்ந்தனர். காந்தி அடிகள் கிறிதவர்கள், பள்ளிக்கூடம், மருத்துவசாலைகள் முதலியவைகள் நடத்தி இந்துக்களை மதம் மாற்றம் செய்யமுனைவார்களாயின் இந்தியாவி னின்று கிறிதவர்களை விரட்டி விட வேண்டும் என்பது என் முடிவான கருத்து என்று கூறினார். கிறித்தவர்களோ முலிம்களோ இந்துக்கள் மதம் மாற்றம் செய்யும் கருத்துக் கொண்டு இந்துச் சிற்பங்களை திருடுவதோ, அழிப்பதோ, இழிவு படுத்துவதோ செய்தால் புதிய இந்தியா இந்து இந்தியாவாக மாற்றம் பெறச் செய்வதாகும் என்பதை நினைவூட்டிக் கொள்கிறேன். வாகனங்களும் - தேர்களும் முற்காலத்தில் மனிதர்கள் முதிராப் பண்புடைய முதுமக் களாய் வாழ்ந்தனர். அவர்களுக்கு அதிகமான தேவைகளே இல்லை. விளக்கமாகச் சொல்வதானால் அவர்கள் விலங்குகளின் நடுவில் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உணவு ஒன்றே இன்றியமையாத தேவையாய் இருந்தது. அவர்களுக்கு உடையோ, உணவோ எதுவும் தேவை இல்லை. அவர்கள் தொடக்க காலத்தில் காய், கனி, கிழங்கு முதலியவற்றைப் புசித்து வந்தனர். அவைகள் சில காலங்களில் கிடைப்பதற்கு அரிதாய் இருந்தது. அதோடு கொடிய விலங்குகளுக்கு ஆகாரமாகாமல் தப்புவிக்கவும், விலங்குகளோடு போரிட்டு தம் உயிரைப் பாதுகாக்கவும், மரங்களின் உச்சியில் உள்ள பழங்களைப் பெறவும் கூரிய கற்கள் தேவையாய் இருந்தன. ஆகவே மனித சமூகத்தின் தொடக்கத்தில் மக்களுக்கு கல் இன்றியமையாத கருவியாக இருந்தது. நல்ல வலுவான கற்களைத் தேடி மக்கள் ஆயிரக்கணக்கான கல் தொலைவிற்கு காலால் நடந்து சென்றனர். நாளடைவில் முயன்று கூரிய கற்களையும், விற்களையும் கண்டு காய், கனி, கிழங்கு, இலை, கீரை முதலியவற்றை உணவாகக் கொண்டனர். விலங்குகளைக் கொன்று அதன் ஊனைப் புசிக்க முற்பட்டனர். விலங்குகளைப் பழக்கி அதன் பாலைக் குடிக்கவும், தயிர், நெய் முதலியவற்றைச் செய்யவும் பயின்றனர். ஆடு மாடு எருமை குதிரை போன்றவைகளைப் பழக்கி அதை வாகனமாகவும் கொண்டனர். அப்பால் மாடு எருமை போன்றவைகளைப் பழக்கிப் பொதி சுமக்கவும் வண்டி இழுக்கவும், செக்கிழுக்கவும் செய்தனர். பண்டைக்கால உழவர் பெருமக்களின் தெய்வமாகிய கொற்றவை எருமையை ஊர்தியாகவும், சிவன் காளையை வாகனமாகவும் திருமால் ஆடு மாடு மேய்ப்பனாகவும் கண்டனர். கொற்றவையாகிய தாய்த் தெய்வம் சிங்கம், புலி முதலிய கொடிய விலங்குகளை அடக்கி அதை வாகனமாகக் கொண்டதாகவும் கண்டனர். நாளடைவில் தெய்வங்கள் விண்ணைக் கடக்கப் பறவை களைப் பயன்படுத்தியதாக கூறப்பட்டன. முருகனின் வாகனம் மயிலாகவும், திருமாலின் வாகனம் கெருடனாகவும், பிள்ளையாரின் வாகனம் பெருச்சாளியாகவும், நான்முகனின் வாகனம் அன்ன மாகவும், மன்மதன் வாகனம் கிளியாகவும், இந்திரனின் வாகனம் வெள்ளையானையாகவும், பைரவர் வாகனம் நாயாகவும் கொள்ளப் பட்டது. மக்கள் அறிவும் நாகரிகமும் பெற்றெழுந்த காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் கோயில்களும், கோயில்களில் சிலைகளும் செம்புப் படிமங்களும் உற்சவங்களும், ஊர்வலங்களும் எழுந்தன. ஆகமங்கள், சிற்ப இலக்கணங்கள் தோன்றின. தமிழ் நாட்டுத் திருவிழாக்கள் மூன்று வகையாகப் பிரிக்கப் பெற்றன. அதாவது நித்தியம், நைமித்தியம், விசேஷம் எனப்படும். (1) நித்தியம் என்பது நாள்தோறும் காலை முதல் இரவு வரை திருக்கோயிலில் நடைபெறும் சடங்குகளாகும். (2) நைமித்திகம் என்பது ஒரு நிமித்தத்தையொட்டிக் கோயிலில் நடைபெறும் ஒரு சிறப்பான பூசையாகும். (3) விசேஷம் என்பது எப்பொழுதாவது ஆலயங்களில் நடைபெறும் பூசையாகும். பிரமோற்சவம் என்பது ஆண்டிற்கொரு முறை ஒரு பட்சம் முழுவதும் நடைபெறும் விழாவாகும். கொடியேற்ற முதல் 15 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும் சிறப்பான விசேஷம் ஆகும். கோயிலில் உள்ள உற்சவமூர்த்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்குக் காட்சி அளிப்பார். உற்சவங்களுக்கென்று மரம், தந்தம், பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் முதலியவைகளால் சிற்பச் சிறப்பு சீர்பெற இலங்க வாகனங்கள் செய்து வைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் பல உள. அவைகளில் சிறப்பானவை அடியில் வருமாறாகும். (1) சந்திர பிரவை, (2) சூரிய பிரவை (3) காளை (அதிகாரநந்தி) (4) மயில், (5) குதிரை (6) சிங்கம் (7) மூஷிகம் (8) யானை (9) மஞ்சம், (10) காமதேனு (11) கற்பக விருட்சம் (12) கைலாசம் (13) பூதம் (14) ஆடு (15) யாளி (16) கிளி (17) அன்னம் (18) பூதம் (19) ஆஞ்சநேயர் (20) பத்மம் (21) ஆதிசேடன் (22) கருடன் (23) புன்னை மரம் (24) சப்பரம் (25) தேர் (27) தெப்பம் முதலியனவாகும். இந்த வாகனங்கள் மரம், செம்பு, வெள்ளி, பொன் முதலிய வற்றால் எழில் பெற, சிற்ப நுணுக்கமுடன் செய்து திரு உருவங்களை வைத்து ஊர்வலம் வரச் செய்வார்கள். வாகனங்களில் தெய்வ உருவங்களை வைத்து மக்களே சுமந்து செல்வார்கள். தெய்வங்கள் நிலத்திலும், நீரிலும், விண்ணிலும் செல்லக் கூடியவைகள் என்பதை வாகனங்களும், தெப்பங்களும் உணர்த்துகின்றன. தெய்வங்களின் வாகனங்கள் மக்களின் வரலாற்றையும் அவர்களின் அபிலாசைகளையும் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன. தேர் (இரதம்) பண்டைக்கால மக்கள் கண்ட ஊர்திகளில் (வாகனங்களில்) சிறப்பானது தேர் ஆகும். தேர் மக்களின் நாகரிக வளர்ச்சியில் கண்ட ஊர்தியாகும். மக்கள் எருமை, மாடு, குதிரை முதலியவைகளைப் பழக்கி நிலத்தைக் கடக்க வழிகண்டனர். அப்பால் வண்டி தேர் முதலியவைகளை மரத்தாலும், இரும்பாலும் செய்து மாடுகளையும், குதிரைகளையும் பூட்டி அயல் ஊர்களுக்கும் பக்கத்திலுள்ள நாடுகளுக்கும் சென்று மீண்டனர். அப்பால் நீரைக் கடக்கக் மரத்தையும், கட்டு மரங்களையும், தெப்பங்களையும், ஓடங்களையும், வள்ளங்களையும், தோணி களையும், கலங்களையும், நாவாய்களையும் கண்டனர். கி.மு. 1500 - ஆம் ஆண்டளவில் மனிதன் மண்ணையும், நீரையும் மட்டுமின்றி விண்ணையும் கடக்க விண்ணூர்திகளையும் கண்டான் என்று நமது புராணங்கள் கூறுகின்றன. இராவணன் புஷ்பக விமானத்தின் மூலம் சுமேரு மலையை (இமயகிரியை) கடக்க முயன்றான் என்றும் இலங்கையில் உள்ள இராவணனது அரண்மனையின் உப்பரிக்கையின் மீது இராவணனது புஷ்பக விமானம் இருந்தது என்றும் இந்த விமானத்தின் மூலமே இராவணன், சீதையைத் தூக்கிச் சென்றான் என்றும் வான்மீகி இராமாயணம் கூறுகிறது. வான்மீகி இராமாயணம், இராவணனது பகைவனாகிய இராமனது இனத்தவர்களான ஆரியர்களால் இராமனது புகழ்பாடி எழுதப்பட்ட நூல். அதில் இராவணன் விண்ணைக் கடக்கும் புஷ்பக விமானத்தைப் பெற்றிருந்தான் என்று பொய்யாகவோ, மிகைப்படுத்தியோ எழுதப்பட்டது என்று எவரும் துணிந்து கூறமுடியாது. நிற்க, நிலத்தைக் கடக்க மக்கள் கண்ட வாகனங்களில் சிறப்பானது தேர். அதை அக்கால அரசர்கள் பயன்படுத்தி வந்தனர். அப்பால் அது தெய்வங்களுக்கு அர்ப் பணிக்கப்பட்டது. மன்னர்கள், போரில் தேரைப் பயன்படுத்தியது போல் தெய்வங்களும் போரில் தேரைப் பயன்படுத்தி வந்தன என்று புராணங்கள் கூறுகின்றன. தேர்மீது ஏறிப் போர் செய்வது அரிது. அது சிலருக்கே முடியும். தேரேறி போராற்றும் வல்லுநர் அதிரதர், மகாரதர் எனப்படுவர். எட்டுத் திக்கும், விண், மண் ஆகிய பத்துத் திக்குகளிலும் தேரைச் செலுத்துபவர் தசரதர் எனப்படுவர். தமிழகத்தில் சங்க காலத்திலே தமிழ் மன்னர்கள் தேரோட்டி வந்தனர் என்று தமிழ் இலக்கியங்கள் சான்று தருகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுந்ததாகக் கூறப்பெறும் திருக்குறளில் நாவாய், அச்சாணி, தேர், பல்லக்குப் போன்ற ஊர்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முற்காலத்தில் தமிழகத்தில் தேர்கள் சிறப்புற்றெழுந்துள்ளன. தேர் பெரிய வடிவில் செய்யப்பெற்றுள்ளன. தேரில் தேர்ப்பாகன் முரசு மணி போன்றவைகளும் அவற்றை இயக்குபவர்களும் இடம் பெற்றனர். மனித சமுகம் வளர்ச்சி பெறவே தேர்களில் இரண்டு முதல் ஒன்பது வரை சக்கரங்கள் பொருத்தப்பட்டன. சக்கரங்கள் பெருகப் பெருக தேரின் வேலைப்பாடுகள் பெருகின. தேரின் உயரமும் பருமனும் வளர்ந்தன. தேர் இலக்கணமும் தேர் ஓட்டும் முறைகளும் வகுக்கப்பட்டன. பலவகைத் தேர்கள் செய்யப்பெற்றன. இத்தனை சக்கரங்கள் கொண்ட இவ்வித வேலைக்கு ஏற்றது. அதை இயக்குபவர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற முறை களும் வகுக்கப்பெற்றன. நாளடைவில் சமூகம் வளர்ந்தது. அறிவும் நாகரிகமும் எய்தியது. அதன் பயனாய் தெய்வ நம்பிக்கையும் உருவ வழிபாடும், கோயில்களும் எழுந்தன. தெய்வ உருவங்கள் உறையும் திருவறையில் திருவிளக்குகளும், சாம்பிராணி, சூடம், நெய் முதலிய பூசைப் பொருள்களும், ஆடை, அணிகலன்களும் தெய்வ உருவங்கள் தெருவில் பவனிவர வாகனங்களும், சப்பரங்களும், பல்லக்குகளும், தேர்களும், தெப்பங்களும் மன்னர்களும், மக்களும் காணிக்கையாக அளித்தனர். நைவேத்தியங்களாக அப்பம், பொங்கல், புளியோதரை, தயிர்ச் சாதம், சர்க்கரைப் பொங்கல், நெய்வடை, நெய்த்தோசை, முருக்கு, அதிரசம், புட்டமுது படைப்பதற்கு நிலங்களும், நெல்லும், ஆடுமாடுகளும் கோயில்களுக்கு மானியமாக விடப்பட்டது. மக்களிடமும், மன்னர்களிடமும் செல்வம் பெருகவே, பொன் அணிகளும், பொன் சப்பரமும், பொற்றேரும் தெய்வங்களுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டன. இன்றும் கோயில்களில் முற்காலங்களில் அளிக்கப்பட்ட அரிய வேலைப்பாடமைந்த தேர்களைக் காணலாம். தேர்களில் தெய்வ உருவங்களை வைத்து ஊர்வலம் வருவது மிகத் தொன்மையான காலம் முதல் இந்தியாவில் இருந்து வரும் வழக்கமாகும். ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி பாஹியான் புத்தரின் திருஉருவைப் பௌத்த மக்கள் தேரில் ஏற்றி நகர்வலம் வரச் செய்து திருவிழா நடத்தியதைத் தாம் கண்டதாகத் தம் பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் 10, 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற இலக்கியங்களிலும், கல்வெட்டு களிலும் தமிழ் நாட்டில் தேர் விழா நடத்தியது குறிப்பிடப் பட்டுள்ளது. பிற்காலத்தில் தேர் விழா குறைந்துவிட்டது. என்றாலும் விசய நகர நாயக்க மன்னர்கள் காலத்தில் தமிழகத்தில் தேர் விழா மீண்டும் சிறப்புற்றெழுமாறு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெரிய கோயில்களிலும் 10 முதல் 16 நாட்கள் வரை பெரிய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன. இவ்விழாவில் முதன் முதலாக கொடியேற்றம் நடைபெறும். கொடியேற்றம் விழாவின் தொடக்கம் என்பதைக் குறிக்கும். கொடி யேற்றப்பட்டு விட்டால் தமிழர்கள் தங்கள் வீடுகளில் நல்ல காரியங்கள் செய்ய மாட்டார்கள். கொடித் தடை இருக்கிறது என்பர். இக்கோயில் களில் நடைபெறும் பெருந்திருவிழாக்கள் ஆண்டிற்கு ஒரு முறை குறையாது நடைபெறும். 5,7,9 - ஆம் நாட்களில் தெய்வ உருவங்கள் வாகனங்கள் மீது ஏறி ஊர்வலம் வரும். இக்கோயில்களில் நடைபெறும் விழாவில் தேர்விழாவே சிறப்புடையது. தேர்விழாவில் அவ்வூரிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் திரண்டு வருவர். அயலூர்களில் உள்ள மக்களும் வருவர். எல்லோரும் ஒருமித்துத் தேர்வடத்தைத் தொட்டிழுத்து தேரை வலமாக நான்கு வீதிகளிலும் இழுத்து வந்து நிலைக்கு இழுத்து வருவர். தேர் விழாவில் மக்கள் இனவேற்றுமை எதுவும் பாராட்டுவதில்லை. ஒற்றுமையாய் ஒருமனத்தாய் தேர்வடத்தைப் பிடித்து இழுப்பர். செல்வம் மிகுந்த பெரிய கோயில்களான மதுரை, இராமேசுவரம், சிதம்பரம், திருப்பதி, திருவண்ணாமலை முதலிய ஊர்களில் ஆண்டில் பல தடவை தேரோட்டம் நடைபெறுகின்றது. தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் உள்ள தேர்களில் திருவாரூர்க்கோயில் தேர் அழகு வாய்ந்தது. சங்கர நயினார் கோயில், சிரிவில்லிப்புத்தூர் கோயில் களில் உள்ள தேர்களும் சிறப்புடையவைகளே. தேர் இருசின் மேல்பாகம் ஒன்றின் மேல் ஒன்றாகப் பலதட்டுகள் உள்ளன. ஒவ்வொரு தட்டும் 8 முதல் 10 கோணம் உடையதாக இருக்கும். வட்டமான தட்டுகள் உள்ள தேர்களும் இருக்கும். சேலம் மாவட்டத்தில் உள்ள காராமடைத்தேர் வட்டமான தட்டுகளை உடையது. சக்கரங்களின் எண்ணிக்கை பருமன் ஆகியவைகளை வைத்து, தேர்கள் முழுத்தேர், முக்கால் தேர் அரைத்தேர் என்று மதிக்கப்படுகிறது. தட்டுக்களின் மேலே கால்கள் நிறுத்தி அதன் மேல் கோயில் விமானம் போல் ஒரு கோப்புக் கட்டப்பட்டிருக்கும். அடிப்பாகத்தை அனுசரித்தே மேற்பாகம் அமைக்கப்படும். மேலே கலயங்கள் இடம் பெற்றிருக்கும். மேல் உருண்டை வடிவான விமானமும் சில தேர்களில் அமைக்கப் பெற்றிருக்கும். இத் தேர்களின் தோற்றம் சிறிய கோயில் போன்று திகழ்கிறது. கோயில் களுக்குச் சென்று தெய்வத்தைத் தெரிசிக்க முடியாதவர்களுக்கும் தெய்வ உருவங்களைக் கண்டு இறைவனை எண்ணி அவன் மீது பக்தி செலுத்தி அவர்கள் உய்வதன் பொருட்டு கோயில் போன்ற வடிவமுள்ள தேரில் ஏற்றி அவர்கள் வாழும் இடத்திலிருந்து தெய்வத்தை வழிபட்டு உய்யுமாறு உயரமான தேர்களில் எழுந்தருளச் செய்து தெய்வதரிசனம் பெறுமாறு தமிழர்களின் முன்னோர்கள் இத்தேர் திருவிழாவை ஏற்படுத்தி யுள்ளனர். தேர்களில், பூலோக வாழ்க்கை ஆகாய வாழ்க்கை சுவர்க்க வாழ்க்கை போன்றவற்றைச் சித்தரிக்கும் பல உருவங்கள் உள. தேர் அடியில் பூலோக வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது. பூலோக வாழ்க்கையில் அரசன் அரண்மனையில் அமர்ந்து கொலு வீற்றிருக்கும் காட்சியும் நங்கையர்கள் நடனம் செய்யும் காட்சிகளும் காமத்துப் பாலை சித்தரிக்கும் பொம்மையுமுள. ஆகாய வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சியில் கின்னரர் கிம்புருடர் உருவங்கள் காணப் படும். சுவர்க்க லோக வாழ்க்கையில் ஆட வல்லான் திருமால், ஆறுமுகன், கணநாதன் முதலிய உருவங்கள் உள. சிவன்கோயில் தேர்களில் வைணவத் தெய்வமான திருமால் இடம் பெற்றிருக்கும். தேர்களில் சமயப் பூசல் இடம் பெறாமல் செய்யப் பெற்றுள்ளது. தேர்களில் உள்ள விமானம் போன்ற மேற்பகுதி திருவிழாக் களில் பல அழகிய ஓவியங்கள் நிறைந்த வண்ணத்துளிகளால் போர்த்தப்பட்டிருக்கும். அழகிய ஆலவட்டங்கள் தோரணங்களால் அணி செய்யப்பட்டிருக்கும். இஃதன்றி வாழை, இளநீர், நொங்கு, மாங்காய் போன்றவைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். தேர் இழுக்கும் மக்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் முற் காலத்தில் நிலங்கள் மானியமாக விடப்பட்டிருந்தது. இதைக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. தேர் இழுக்கும் பொழுது தேர் இழுக்கும் முரசு கொட்டப் படும். வெடிப் போடப்படும். வெடிப் போட்டதும் மக்கள் தேரை இழுக்கத் தொடங்குவர். தேர் இழுக்கும் பொழுது தேர் நேராகச் செல்வதற்கு அடிக்கடி நிறுத்தப்படும். தேரை நிறுத்த முட்டுக் கட்டை போடுவார்கள். தேரை எளிதாக இழுப்பதற்குப் பின்புற முள்ள சக்கரங்களின் அடியில் இரண்டு பெரிய கட்டைகளைச் செறுகி யானைகளைக் கொண்டு உந்தி தேரை முன்புறமாகச் செல்லச் செய்வர். நிலையை விட்டு தேர் நகர்ந்தும் மக்கள் தொடர்ந்து இழுப்பர். தேர் முற்காலத்தில் சிறப்புற்றிருந்தது. எனவே சிறிய தேர் வடிவில் சிறு கோயில்கள் அமைத்து வந்தனர். இஃதன்றி சிறப்பான பெரிய கோயில்களையும் தேர் வடிவில் கற்களால் அமைத்தனர். அம்பியில் விட்டலாயர் கல்தேரும், திருவாரூரில் கல்தேரும், தாராசுரத்தில் தேர் வடிவில் கல்மண்டபமும், தெற்குக் கடம்பூரில் அழகிய தேர்வடிவில் மிகச் சிறந்த கல்லாலான கரக் கோயிலும் உள்ளன. இவற்றின் சக்கரங்கள் அழகிய வேலைப்பாடுகளை யுடையன. 10-ஆம் நூற்றாண்டிலும் 11-ஆம் நூற்றாண்டிலும், 12-ஆம் நூற்றாண்டிலும் முறையே திருவாரூர், தாராசுரம், சிதம்பரம், கும்பகோணம் விருத்தாசலம் முதலிய ஊர்களில் கல்தேர்கள் செய்யப் பெற்று தமிழ் நாட்டின் சிற்பக்கலையின் சிறப்பு நிலை நாட்டப் பெற்றுள்ளன. ஒரிசா மாநிலத்திலுள்ள கோனார்க்கில் உள்ள கல் இரதம், 14-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. இக்கல் தேர் ஒரிசா மன்னனும் சோழர் அரசனின் பேரனுமான ஒரு கலிங்க மன்னனால் தமிழகச் சிற்பிகளைக் கொண்டு செதுக்கப் பெற்றது. கலிங்கத்து அரசன் தம் தந்தை வழியில் எழுந்த சிற்பச் சிறப்பு கலிங்க நாட்டிலும் சிறப்புற்று விளங்கச் செய்ய எண்ணி இந்தக் கற்றேரை உருவாக்கி புகழ் பெற்றான். இந்தக் கல்தேர் பன்னிரண்டு சக்கரங்கள் உடையதாய் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்ற முழுத்தேராகத் திகழ்கிறது. இக்கல் தேரின் அமைப்பும், செதுக்கு வேலைப் பாடுகளின் நுணுக்கமும் கண் கவர் வனப்புள்ளதாய் மிளிர்கின்றன. தமிழர் கண்ட கல்தேர்கள் 15, 16-ஆம் நூற்றாண்டில் ஆந்திராவிலும் உருப்பெற்று எழுந்துள்ளன. இன்று பெரிய கோயில்களில் மரத்தேர் மட்டுமின்றி வெள்ளித் தேர்களும் பொற்றேர்களும் இடம்பெற்றுள்ளன. வெள்ளித் தேர்களும், பொற்றேர்களும், சிறிதாக இருப்பதால் மாடுகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன. திருச்செந்தூரில் உள்ள பொற்றேர் மாதம் 4,5 முறை கூட ஊர்வலமாக வருகின்றன. மதுரை, திரு வண்ணாமலை முதலிய ஊர்களிலும் வெள்ளித் தேர்கள் பவனி வருகின்றது. தங்க இரதம் கத்தோலிக் கிறிதுமதம் 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியரால் தமிழ் நாட்டில் பரப்பப்பெற்றது. தமிழ் மக்களுக்கு கிறித்தவ சமயத்தை தமிழ் மொழியில் பரப்பவேண்டும் என்று தமிழ் நாட்டில் அச்சுக்கலையையும் துளிர்க்கச் செய்தனர். புத்தகங்களும் உருவாக்கினர். கிறித்து சமயம் கீழ்நாட்டு மதம், அது மேனாட்டுப் பண்புடன் இந்தியாவில் பரப்பப்பெற்றது. பல சமயச் சான்றோர்கள் கத்தோலிக் கிறிது மதம் தமிழ் நாட்டில் தமிழர் பண்புடன் நிலவச் செய்வதே சிறப்பு என்று எண்ணினர் இத்தகைய நற்பண்பிற்கு தத்துவ போதகர் இராபர்ட் - நோபிளி (Roberto De Nobili) தைரிய நாதர் என்னும் வீரமா முனிவரும் அடிப்படை யிட்டனர். இப்பொழுது எங்கும் சமயமும், சமய ஒழுக்கமும், வழிபாடும் இந்திய அடிப்படையில் இருக்கவேண்டும் என்ற உணர்ச்சி பொங்கி வருகிறது. ஆனால் தங்கத்தேர் 1720-ஆம் ஆண்டு தோன்றி தூத்துக்குடி யில் 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உணர்ச்சி தோன்றி தேரில் தேவதாய் பவனிவரும் விழாவை ஆகட் மாதம் ஐந்தாம் நாளைச் சிறப்புடன் கொண்டாடி வந்தனர். அவ்விழா 12-ஆண்டுகளாய் நடைபெறாது இப்பொழுது நடைபெறவிருப்பது போற்றத்தக்கது. என் சம்பந்தப்பட்டில் தேர்த்திருவிழா மட்டுமல்ல தெப்ப உற்சவமும் நடைபெற்றால் சிறப்பாக இருக்கலாம் என்பது எனது பணிவான எண்ணமாகும். தேரும் விழாவும் நிற்க தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பெரிய கோயில்களிலும் தேர் இருக்கும். திருநெல்வேலி, திருச்செந்தூர், சங்கரன்கோயில், சிரிவில்லிப்புத்தூர், மதுரை, திருவாரூர் போன்ற இடங்களில் பெரிய தேர்கள் உண்டு. சிரிவில்லிப்புத்தூரில் உள்ளதேர் பெரிய தேர் என்று கூறுவர். பலர் திருநெல்வேலி, திருச்செந்தூர், சங்கரன் கோயில் முதலிய தேர்களைப் பார்த்திருக்கலாம். தேர் இழுப்பதில் மக்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும் உற்சாகமும் வியக்கத்தக்கது. எனது இளமைப் பருவத்தில், திருவாரூர் தேரழகு திருவிடைமருதூர் தெருவழகு மன்னார் குடி மதிலழகு நான்மாடக் கூடல் நகரழகு என்று கூறப்படும். நீண்டகாலமாக ஓடப்படாதிருந்த சிரி வில்லிப்புத்தூர் தேரும் திருவாரூர்த் தேரும் சில ஆண்டுகளுக்கு இழுக்க முயன்று சிரமத்துடன் தேர் நிலைக்குக் கொண்டுவரப்பட்டு நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர் இழுப்பது என்றால் சுசீந்தரத்தில் ஒரு சிறு தேரை இழுக்கிறார்கள். அதற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏராளமாகக் கூடி வருகின்றார்கள். திருநெல்வேலி, மதுரை போன்ற பேரூர்களில் அம்மன் தேர், சுவாமி தேர், பிள்ளையார் தேர் எனப் பல தேர்கள் இழுக்கப்படுகின்றது. இவைகளில் பெரியது சாமி தேர்தான். சாமிதேர்தான் இழுத்து நிலைக்கு வரச் சிரமம். மற்றையத் தேர்களை எளிதில் இழுத்து நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றனர். பண்டைக்காலத் தமிழரசர்கள் எங்கு போக நேர்ந்தாலும் - அதாவது வேட்டைக்குப் போக நேர்ந்தாலும் நண்பர்கள் திருமணத்திற்குப் போக நேர்ந்தாலும் வண்டியில் போகார். தேரிற் செல்வர். தேர் இத்துணை பெரிதாக இராது. சிறிதாக இருக்கும். முற்காலத்தில் தமிழ்நாட்டில் தேரை மாடுகள் இழுத்துச் சென்றன. பிற்காலத்தில் குதிரைகள் மிக விரைவாக இழுத்துச் சென்றன. மக்கள் அரசர்க்கு, மேலோக தெய்வத்திற்குத் திருக்கோயிலும், அரண் போன்ற மதில்களும் கோபுரங்களும் வாகனங்களும் வசந்த மண்டபமும் ஊஞ்சல் மண்டபங்களும் திருமண மண்டபமும் பள்ளியறையும் வாகனங்களும் அணிகலன்களும் விளக்குகளும் செய்தது போல் தேர்களும் செய்தனர். ஆதியில் மாடுகள் இழுக்கக்கூடிய தேர்களைத்தான் செய்தனர். அப்பால் 4,6 மாடுகள் இழுக்கக் கூடிய தேர்களைச் செய்தனர். பின்னர் 4,6,8 குதிரைகள் இழுக்கக் கூடிய தேர்களைச் செய்தனர். பின்னர் அரசனைவிட தெய்வம் பெரியது என்ற எண்ணம் எழுந்த காலத்தில் அரண்மனையை விட பெரிய அரணும் பெரிய கோயிலும் பெரிய தேர்களும் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இழுக்கும் மிகப் பெரிய தேர்களைச் செய்து கடவுளுக்கு நிவந்தமாக விட்டனர். பதினாயிரக்கணக்கான மக்கள் தேரில் பெரிய வடத்தை கட்டி இழுக்கத் தொடங்கினர். ஆதியில் தேர்களை இழுத்து அப்பால் அதைவிட வேகமாகச் செல்லும் குதிரைகள் இழுத்தன என்பதைச் சுட்டிக்காட்ட இன்றும் தேர்களை குதிரைகள் இழுப்பது போல் மரக்குதிரைகளைச் செய்து அவைகள் வேகமாய்த் தேரை இழுப்பது போல் செய்து மாட்டி இன்று மரத் தேரையும் மரக்குதிரைகளையும் மக்கள் இழுத்துச் செல்கின்றனர். அப்பால் தெய்வங்கள் வேகமாகச் செல்வதற்கேற்ற வாகனங்களாக காளைமாடு, குதிரை, கருடன், மயில், பாம்பு, புலி, சிங்கம், பூதம், காமதேனு, பெருச்சாளி(மூஷிகம்), குரங்கு, யானை, நாய், கிளி, அன்னம், யாழி ஆடு முதலிய வாகனங்களை வெள்ளி யாலும் மரத்தாலும் அமைத்தனர். ஒவ்வொரு பெரிய கோயிலிலும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு - ஏன்? அதற்கு மேற்பட்ட தேர்களும் உள்ளன. தேர் விழாவை இரத மகோற்சவம் என்பர். உற்சவம் என்னும் சொல்லிற்கு உயர்ந்த அறிவையும் அழிவிலாத துறக வாழ்வையும் கொடுப்பது என்று சில அறிஞர்கள் பொருள் கொள்ளுகின்றனர். சிவபெருமான் ஐந்து தொழில்களையும் - அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் - பஞ்ச கிருத்தியங்களையும் செய்து உயிர்களைக் காக்கும் முறையை விழாக்கள் உணர்த்துகின்றன. திருவிழாவில் கொடியேற்றம் முதல் தெப்ப விழாவரை உள்ள கிரியைகள் படைத்தலையும் வாகனத் திருவிழாக்கள் காத்தலையும் தேர்த்திருவிழா அழித்தற் செயலையும் மௌன உற்சவம் மறைத்தலையும் குறிக்கும் என்று சமய விற்பன்னர்கள் கூறுகின்றனர். முதல் நாள் உடலைப் படைத்தலையும் இரண்டாம் நாள் நல்வினை தீவினை ஆகிய இருவினைகளையும் பயன்படுத்தலையும் மூன்றாம் நாள் முக்குணங்களையும் எழுப்புதலையும் நாலாம்நாள் உட்கருவிகளையும், முயற்சித்தலையும் ஐந்தாம் நாள் ஞானேந்திரியங்களை வயப்படுத்தலையும் ஆறாம் நாள் ஆசை முதலிய பந்தங்களை அறுத்தலையும் ஏழாம் நாள் எழுவகை மந்திரங்களைப் பதித்தலையும் எட்டாம் நாள் பாச ஞானம் நீங்குதலையும் ஒன்பதாம் நாள் மும்மலங்களையும் ஒழித்தலையும் பத்தாம் நாள் சிவானந்தத்தைப் பெறுதலையும் குறிக்கும் பத்து நாட்களுக்கு குறையாது திருவிழாக்களை அமைப்பது முறையாகும். முடியாத காலத்தில் அதில் குறைந்த காலத்தையும் இத்தொழில்கள் அமையத்தக்கவாறு வகுத்துக் கொள்ளலாம் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். மகோற்சவ நாள் பத்தினுள் முதல் நாள் விழாவானது தூல நீக்குதற் பொருட்டும் இரண்டாம் நாள் விழாத் தூல சூக்கும் நீக்குதற் பொருட்டும் மூன்றாம் நாள் விழா மூவினையும் முப்புத்தியும், முக்குணமும், மும்மனமும் முக்குற்றமும், முப்பிறப்பும், முப்பற்றும் நீங்குதற் பொருட்டும் நாலாம் நாள் விழா நாற்கரணமும் நால்வகைத் தோற்றமும் நீங்குதற் பொருட்டும் ஐந்தாம் நாள் விழா ஐம் பொற்களும் ஐந்தவத்தைகளும் ஐந்து மலமும் அகலும் பொருட்டும் ஆறாம் நாள் விழா, காமாதிகள் ஆறும் கலையாதி யாறும் வினைக்குணம் ஆறும் பதமுத்தியாறும் நீங்குதற் பொருட்டும் ஏழாம் நாள் விழா, எழுவகைப் பிறப்பும் கலாதிகள் ஏழும் மாயமல குணம் ஏழும் நீங்குதற் பொருட்டும் எட்டாம் நாள் விழா, எண் குணமும் விளக்குதற் பொருட்டும் ஒன்பதாம் நாள் விழா, மூன்றுருவும் முத்தொழிலும் மூன்றிடத்துறைத்தலும் இலையெனற் பொருட்டும் பத்தாம் நாள் விழாப் பரமானந்தமாக் கடலில் அழுத்துதற் பொருட்டும் செயற்படுதலால் சிவோற்சவ காலத்துப் படிக்கலாகாதென்றார். இவைகள் அனைத்தும் விம்ப தந்திரத்திற் சிவோற்சவ படலத்திற் காண்க என்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் தம் நூலில் நன்கு விளக்கியுள்ளார்கள். ஆறுமுக நாவலர் அவர்கள் சைவ நெறியை நன்குணர்ந்தவர்கள். நமது பள்ளிச்சிறார்களுக்கு சைவ சமய அடிப்படையில் பாடப் புத்தகம் எழுதியவர்கள் கிறித்தவ மறையாகிய பைபிளை நன்கு பயின்றவர்கள். சைவ சமய தத்துவ சாத்திரங்களையும் புராணங் களையும் சிறப்பாக சிவஞான போதம் சிவஞான சித்தியார் போன்ற நூற்களைக் கசடறக் கற்றவர்கள். கிறிதவர்கள் சைவ சமயத்தின் மீது சாற்றும் ஒவ்வொரு பழிச் சொல்லையும் கண்டனம் செய்து சைவ தூசண பரிகாரம் என்னும் நூலை எழுதியவர். எனது பாட்டனார் திரு. வீ. வடிவேற்கவிராயர் அவர்களின் உழுவலன்பர் களில் ஒருவர் சமரச சன்மார்க்க நிலையத்தின் நிறுவியர் திரு, இராமலிங்க அடிகள் தம் நூலிற்கு திரு அருட்பா என்று போட்டதை வன்மையாகக் கண்டித்து எதிர்த்தவர். யாழ்ப்பாணத்தில் சைவமும் தமிழும் வளரத் தமிழ் மீது இறுதி மூச்சுள்ள வரைப் பாடுபட்ட சைவ சமயப் பாதுகாவலர் ஆவர். பல்வகைத் தேர்கள் தேர்கள் பலவகைப்பட்டன என்று கூறப்படுகின்றன. என்றாலும் அதன் உருவ அமைப்பின் அதிக மாறுதல்களைக் காண முடியவில்லை. தேரை வட மொழியாளர்கள் இரதம் என்பர். தேர்கள் பெரும்பாலும் மரத்தாலே செய்யப்படும்; மிக அபூர்வமாக வெள்ளித் தேர்களும் பொற்றேர்களும் உண்டு. தேர்களில் தான் தச்சர்களின் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் துலங்கும். தேர்களில் உருளை 4 முதல் 10 வரை இருக்கும். தமிழ் நாட்டில் திருவாரூர்த் தேர் அழகுள்ளது. சிரிவில்லிப்புத்தூர் தேர் மிகப் பெரியது. மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் தேர்களும் பெரியவைகள்தான். தேர் ஓட்டும் கலை சிறப்பானது. எல்லோரா லும் தேர் ஓட்ட முடியாது. தேர் புறப்பட்டபின் நிலைக்குக் கொண்டு சேர்த்தல் மிகச் சிரமம். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்த்து ஒருமித்து தேரின் முன்னுள்ளபெரிய வடத்தைப் பிடித்து இழுக்கவேண்டும். வெள்ளித் தேர் திருவண்ணாமலை பழனி முதலிய இடங்களில் உண்டு. தேர்கள் செய்வது சுலபமானதன்று. நல்ல சிற்பத்திறன் வாய்ந்தவர்கள்தான் இத்தொழிலில் ஈடுபடவேண்டும். தேர் பெரிதும் தாமரை அரும்பு வடிவிலே அமைக்கப்படும். தேர்களில் கொடுஞ்சி என்ற உறுப்பும் அமைக்கப்படும். கொடுஞ்சி கொடுஞ்சி என்பது, தாமரைப் பூ வடிவில் மரத்தைச் செதுக்கி தேர்த் தட்டின் முன்னே நடப்படுவது என்று நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சிக்கு அளித்த உரையில் விளக்கம் தத்துள்ளார். இதனால் தமிழர்கள் தாமரை மலர் வடிவமாகப் பொன்னாற் செய்ததுமன்றி இப்பூ வடிவாக யானை மருப்பாலும் மரத்தாலும் செய்து தேர் ஊர்பவர்கள் கையாற் பற்றிக் கோடற் பொருட்டு இக்கொடுஞ்சியினை பயன்படுத்திவந்தார்கள் என்று தெரிகிறது. நெடுந்தேர்க் கொடுஞ்சி பற்றி நின்றோன் அகம் 110 மணித்தேர்க் கொடுஞ்சி கையாற் பற்றி -மணி 4:40 பூண்ட பொன்னுகக் கொடுஞ்சி . . . . கடுஞ்செலவாழித்திண்டோர் பெருங் உஞ்சை -48 கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர் - பொருநராற்றுப்படை என்று கூறும் நூற்களின் மூலம் கொடுஞ்சி தாமரை மலர் வடிவில் மட்டுமின்றி அதன் அரும்பு வடிவமாகவும், தங்கத்தால் மட்டுமின்றி யானைத் தந்தத்தாலும் செய்யப்பெற்று வந்தன. யானைக் கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரிலே என நச்சினாற்கினியர் பொருநராற்றுப் படையின் மேற்கண்ட அடிக்கு பொருள் கூறுவதும் சிந்திக்கத்தக்கது. இதனால் தாமரைப் பூ வடிவமாகவும் தாமரை முக வடிவமாகவும் கொடுஞ்சி செய்யப்பட்டது பண்டையத் தமிழர் கண்ட மரபு என்பதை அறிக. பூ வடிவினதாயின் இக்காலத்திலுள்ள தாமியங்கி வண்டியினை (மோட்டார் வண்டியை) விரும்பிய பக்கத்திற்குத் திரும்புவதற்காக அதை ஓட்டுபவன் கையாளும் பொருட்டு நடுவே அமைந்திருக்கும் சிறு சில்லினைப் போன்றிருக்கும் போலும். இது ஆய்வதற்குரியது. இக்காலத் தேரை உற்று நோக்கின் தாமரை அரும்பின் வடிவினைப் போன்று கீழே சரிவாயும் நடுவிற் பருத்தும் மேலே குவிந்தும் இருப்பதைக் காணலாம். இதுவும் மிகவும் பொருத்தமாகத் தெரிகின்றது. தாமரைப் பொகுட்டில் தெய்வம் உறைவது போல நடுவண் பருத்திருக்கும் இடத்தில் தெய்வங்களை அணி செய்வித்து இடம் பெறச் செய்வது நன்றாக இருக்கும். எங்கு நுழைந்து பார்ப்பினும் தமிழர்களின் நுண்மான் நுழை நயம் சிறப்புற்று ஒளிர்கிறது. இன்னும் பூ வடிவில் செய்த தேர்களும் உண்டு. இக்காலத்தில் இல்லையெனினும் சிலர் முற்காலத்திருந்தமை தாமரைப் பூ வடிவாகச் செய்த வண்டி அல்லது தேர் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது என்று அறிஞர் உ.வே. சாமிநாதையர் பெருங்கதையில் குறிப்பிட்டுள்ளார். எனது அன்பிற்குரிய அறிஞர் குல சபாநாதன் - தாமரைப் பூ வடிவில் எப்பொருளை நோக்கினும் அப்பொருள் சிறந்தே விளங்கலைக் காணும் தோறும் காணும்தோறும் இம்மலரின் பெருமை அளப்பரிது என்பது நன்கு புலப்படுகிறது என்றார். அற்புதமான சிற்ப வேலைப் பாடுகள் நிறைந்து குன்றென நிமிர்ந்து நிற்கும் தேரின் மேலே கொடிகள் பறக்கும் தேரின் நடுவே சாமி அமர்ந்திருப்பார். பக்கத்தில் பட்டர்கள் நின்று பூசை செய்வார். தேர்கள் துணிகளாலும் பூக்களாலும் வாழை, கமுகு, இளநீர் முதலியவைகளாலும் அணி செய்யப்பட்டிருக்கும். தேரின் பின்புறம் தேர் இழுப்பதற்கு ஊக்க மூட்டுவதற்காக இருக்கும் நகராவை அடிக்கடி அடிப்பர். மக்கள் அடிக்கடி அரகர மகாதேவா! கோவிந்தா, முருகா, வேலாயுதா, என்று அந்தந்தக் கோயிலில் உள்ள தெய்வங்களின் பெயரைச் சொல்லி பெரிய கோசம் எழுப்பித் தேரை இழுப்பர். தேரின் உயரத்திற்கேற்பத் தேருக்கு 4 முதல் 10 சக்கரங்கள் வரை இருக்கும். சக்கரங்கள் உறுதியான மரக்கட்டைகளால் செய்யப் பட்டு கனத்த இரும்புப் பட்டைகளால் செய்யப்பட்டிருக்கும். இந்த சக்கரங்கள் உறுதியான எஃகு அச்சும் அச்சாணிகளையும் உடையனவாய் இருக்கும். முற்காலத்தில் தேர் இழுக்கப்படும் ஊரில் வீட்டிற்கொருவர் கட்டாயம் தேர் இழுப்பதில் பங்கு பெற வேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு பக்கத்து சிற்றூரில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் தங்கள் சொந்த வீட்டு விசேசம் போல் வந்து பங்கு பற்றி தேரை நிலைக்குக் கொண்டு வருவதில் மிகுந்த அக்கறை காட்டுவர். இந்தத் தேர்களில் ஆபாசமான சிற்பங்கள் செய்யப் பட்டுள்ளன. ஏனென்று எமக்குப் புலப்படவில்லை. பழைய தேர்கள் ஓட முடியாத நிலையில் கோயில் அதிகாரிகள் அதை ஏலம் போடுவார்கள். அதை விறகுக் கடைக்காரர்கள் ரூ 100க்கு விலைக்கு வாங்கி அதில் உள்ள பகுதிகளைப் பிரித்து மேனாட்டிற்கு 10,000 20,000 ரூபாய்க்கு விற்றுவிடுகின்றனர். வெளி நாட்டினர் அதிலுள்ள சிற்ப அழகுக்கு ஒவ்வொரு பகுதியையும் 50,100,200 என்று விலைக்கு வாங்கிச் செல்லுகின்றனர். தேரின் உறுப்புகள் 1. பூதப்பார்: அச்சின் மேலுள்ள பாகத்தைப் பூதங்கள் தாங்குவது போன்ற அமைப்பு. 2. கன்னிலப்பா: முதல் வரிசை திருஉருவங்களின் அமைப்பிற்கு ஆதாரமாயமைந்திருப்பது. 3. கபோதப்பார்: திரு உருவங்களின் மேல் அமைப்பாக இருப்பது. கன்னிலப்பாருக்கும் கபோதப்பாருக்கும் இடையில் முதல் வரிசைத் திருஉருவங்கள் உண்டு. ஆனைத் தொட்டிப்பார். திரு உருவ வரிசையிற்சில திருஉருவங்கள் வெளியே நன்கு புலப்படக் கூடியனவாக வைக்கப்பட்டும், சில சிறிது உள்ளே தள்ளி வைக்கப் பட்டிருப்பதையும் காணலாம். இவ்வாறு திருஉருவங்கள் அமைப்பதற்கு ஆதாரமாய் இருப்பது ஆனைத் தொட்டிப்பார். 4. அச்சப்பார்: தேரின் பட்டங்களை அமைப்பதற்காக விருப்பது. 5. அச்சப்பூத்தலைப்பார்: பட்டங்களை அமைப்பதற்கு மேலாக ஆதாரமாய் உள்ளது. 6. பூத்தலைப்பார்: மகரக்காய்கள் பூட்டிய பூத்தலைகளை உடையது. 7. இரண்டாவது நிலம்: முதல் வரிசைத் திருஉருவங்களுக்குப் பின் இரண்டாவது வரிசைத் திருஉருவங்கள் இதில் உண்டு. உட்பக்கம் ஆனைத் தொட்டிப்பார் சேர்த்து திருஉருவங்கள் உள்ளும் புறமும் இருந்து புலப்படக் கூடியனவாய் அமைந்துள்ளன. இதற்கு அசுவதைப்பார் என்றும் பெயர். 8. சிம்மப்பூத்தலைப்பார்: சிங்கத்தின் உருவத்தையும் பூத்தலையையும் கொண்டு இணைத்த அமைப்பு 9. மூன்றாவது நிலம்: உட்பக்கக் கோணங்களையுடைய ஆனைத்தொட்டிப்பார் இணைத்து வெளித்தோற்றத்தில் திருஉருவங்கள் அமைத்துச் செய்யப்பட்டது. 10. நாகத் தலைப்பார்: இது நாகபந்த மாதிரி உள்ள தலைப்புடன் கூடியது. 11. விதாரப்பார்: தேரின் பரப்பைக் குறிக்கின்றது. இந்தப் பாகத்துக்கு மான வாசனம் என்றும் பெயர். 12 தேவாசனம்: தேவர்கள், தேவியை நின்று வழிபடும் இடம் என்ற முறையில் அமைக்கப் பெற்றது. 13. சிம்மாசனம்: தேவி வீற்றிருக்கும் ஆசனம் 14. கம்பங்கள் : ஓவிய வேலைப்பாடமைந்த குத்துக் கால்கள். 15. பண்டிகை : முதற்பண்டிகை, இரண்டாம் பண்டிகை மூன்றாம் பண்டிகை. 16. கர்ண கூடம் 17. மணிமுடி என்பவை தேரின் உறுப்புகள் ஆகும் என்று திரு எ குமாரசாமி ஆசாரி அவர்கள் அளித்த குறிப்புகள்.1 தமிழ்நாட்டிலே 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே வீடு களையும், அரண்மனைகளையும் கோயில்களையும் சுடுமண் செங்கல்லாலும் சுண்ணாம்புச்சாந்தாலும், மரத்தாலும், மண்ணாலும் அமைத்து வந்தனர் நமது சிற்பிகள். இன்றும் கோயில்கள் மரத்தாலே அமைக்கும் வழக்கம் கேரள நாட்டில் இருந்து வருகிறது. நமது நாட்டிலும் சிதம்பரம் முதலிய பழைய கோயில்களிலே மரத்தாலே அமைத்து அதன்மீது உலோகத் தகடுகள் பொதிந்த அடை யாளங்கள் இன்னும் இருந்து வருகின்றன. முற்காலத்தில் நமது நாட்டில் தேக்கு கோங்கு, வேங்கை, கருங்காலி, ஆச்சா முதலிய மரங்கள் செதுக்கு வேலைகளுக்கு பொருத்தமானவைகளாய் இருந்தன. இம்மரங்கள் வைரம் பாய்ந்தவை உரமானவை உறுதி வாய்ந்தவை கரையான் அண்மையில் நெருங்காதவை. அக்காலத்தில் சிப்பிசுண்ணத்தினால் சுவர்களைப் பூசி அரிய சிற்ப வேலைப்பாடு களைச் செய்து வந்தனர். மரத்தச்சர்கள் பதுமைகளையும், மலர் களையும், செடிகொடி,சிலைகளையும் மரத்திற் செதுக்குவதில் கைதேர்ந்தவர்களாய் விளங்கினர். உத்தரங்களிலும் தலைவாயிலின் மேல் உள்ள இடை வெளியின் நடுவில் கஜலட்சுமி இருகுடங்களில் நீரைக் கொண்டு சொரிவது போதிலும் எஞ்சிய இடங்களில் அழகிய மலர்களும் இலைகளும் காய் கனிகளும் சுவர்களிலும் பலகணிகளின் மேற்பகுதியிலும் கதவு நிலைகளிலும், உத்தரங்களிலும் போதிகை களிலும் குறுக்கு விட்டங்களிலும் சட்டங்களிலும் தம் சிற்பத் திறமையைக் காட்டி கைவண்ணம் வாய்ந்தவர்கள் மேலும் அக்காலத்துக் கோயில் களுக்குச் சொந்தமான தேர்களும் யாழிகளும் செய்து கைவண்ணம் வாய்க்கப் பெற்றவர்கள் சிவபெருமானுடைய வாகனமாகிய காளை, பிரமனுடைய வாகனமாகிய அன்னம், திருமாலுடைய வாகன மாகிய கருடன், முருகனுடைய வாகனமாகிய மயில், இந்திரனுடைய வாகனமாகிய வெள்ளையானை, காளியின் வாகனங்களாகிய எருமை, புலி, சிங்கம் பைரவருடைய வாகனமாகிய நாய், விநாயகரின் வாகனமாகிய பெருச்சாளி (மூசிகம்) மன்மதன் வாகனமாகிய கிளி, சிவபெருமானுடைய வாயிற் காப்போனாகிய அதிகார நந்தி, பூமியைத் தாங்கி நிற்கும் ஆதிசேடன் முதலியவைகளுடன் குதிரை, காமதேனும், ஆஞ்சநேயர், கற்பக விருட்சம், பூதம்,ஆடு, யாழி, கைலாசம், புன்னை விருட்சம் ஞாயிறு, திங்கள், பத்மம், பல்லக்கு, மஞ்சம் முதலியவைகள் கொடியேற்றம் முதல் 15 நாட்கள் வரை அதாவது சாந்தி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி மக்களுக்குக் காட்சி அளிப்பதற்காகப் பெரிய கோயில்களில் 15க்கு மேற்பட்ட வாகனங்கள் உண்டு. இந்த வாகனங்களை யெல்லாம் அழகு பெறச் செய்வதற்கு தேர் செய்வதில் பட்டறிவும் சிற்ப நூற் பயிற்சியுமுடைய தபதிகளினாலேதான் முடியும். அவர்களுக்கு ஓரளவு ஆகம விதியும் தெரியும். தேரின் தத்துவம் ஏழாம் நாளிலே, இரதாரோகண காட்சியுண்டாம் இது சில கோயில்களில் ஒன்பதாம் நாளிலும் நடக்கும். ஆதிகாலத்தில் சிவபெருமான் மந்திர கேசரிமலையை அச்சாகவும், ஞாயிறையும் திங்களையும் சக்கரமாகவும், ஆறிருதுக்கள் சந்தியாகவும், பதினான்கு உலோகமும் பதினான்கு தட்டுகளாகவும், ஆகாயம் ஆசனமாகவும், உயர்த்தமலைகள் கூவிரமாகவும், நதிகளும் நதங்களும் கொடிகளாகவும் விண்மீன்கள் விதானமாகவும், மோட்சலோகம் மேல் விரிவாகவும், வேள்விகள் சட்டங்களாகவும் நாள் முதலிய இடுக்கு மரமாகவும், அட்ட மலைகள் தூண்களாகவும், அட்ட யானைகள் தாங்குவனவாகவும், ஏழுகடல்கள் திரைச் சீலை களாகவும், கன்ம ஞானேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், வேதாங்க உபாங்க மநு சாத்திரங்கள் மணி களாகவும், வாயுக்கள் படிகளாகவும், நான்மறைகள் பூட்டப்பெற்ற குதிரைகளாகவும் அமைக்கப்பட்ட தேரிலே எழுந்தருளி கங்கை முதலிய தேவமாதர்கள் சாமர மிரட்டவும், ஊர்வசி முதலிய கணிகை மகளிர் நடனஞ் செய்யவும் மஹா மேருமலையை வில்லாகவும், கலைமகளை வில்லிற் கட்டிய மணியாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலைப் பாணமாகவும், அக்கினி தேவனை அவ்வம்பின் கூர்வாயாகவும், வாயுதேவனை அம்பின் இறகாகவும் கொண்டருளி பிரமனாகிய சாரதி பிரணவமாகிய தூண்டுகோல் கொண்டு செலுத்த திரிபுர அவுணர்களைத் தன் புன்னகையால் நீறாக்கியருளினார் என்னும் வரலாற்றுண்மையைக் காட்டுவதே இவ்விரத சேவைக் காட்சி என அனுமானிக்கப்பட்டு விசுவ ரூபியாயும் விவகாரணராயும் விவ சேவிராயும் விவாந்தியாமியாயும் இருப்பவர் சிவபெருமானே என்பதும் முப்புரம் என்பது ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மல காரியம் எனவும், அத்திரிபுரங்களையும் நீறாக்கி, தாரகாட்சன், கமலாட்சன், வித்துன்மாலி என்னும் மூவர்களையும் அடிமையாகக் கொண்டு அவர்கட்குத் தம்பதம் அருளி இன்பம் அளித்தமை மும்மல காரியங்களைக் கெடுத்து, விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆண்மாக்களையும் அடிமையாகக் கொண்டு திருவடி முத்திகொடுக்கும் உண்மை யெனவும் அறிய நின்றதனால், எல்லாமாய் அவைகட்குக் காரணமு மாய் நிற்கும் சிவபெருமானே ஆன்மாக்களுக்கு மும்மல பந்த வாதனைகளைக் கொடுத்து திருவடிப் பேறாகிய பேரானந்தப் பெருவாழ்வை அளிப்பர் என்பது உணரப்படும். திருமந்திரம் அப்பணி செஞ்சடை யாதி புராதனன் முப்புரம் சென்றனன் என்பர்கண் மூடர்கண் முப்புர மாவது மும்மல காரிய மப்புர மெய்தமை யாரறிவாரே. இங்ஙனமின்றி தேரிலே விளங்கும் ஏக உச்சிக்குடை பிரமரந்திரமாகவும், கலசம் சோடசாந்தத் தானமாகவும், மேலுள்ள முதலாம் அடுக்கு துவாத சாந்தத் தானமாகவும் இரண்டாம் அடுக்கு மதக ஆதித்தனமாகவும் மூன்றாம் அடுக்கு மத்தியத் தானமாகவும் நாலாம் அடுக்கு மதகாந்தத் தானமாகவும் ஐந்தாம் அடுக்கு லலாட மத்தியமாகவும் ஆறாம் அடுக்கு புருவ மத்தியமாகவும் நடுவுள்ள ஏழாம் அடுக்கான முப்பத்திரண்டு குத்துக்கால்கள் முப்பத்திரண்டு தத்துவங்களாகவும், முற்றுறைகளே கண்களாகவும், பிற்றுறைகள் சிகைகளாகவும், பக்கத்துறைகளே இரு செவிகளாகவும் பீட முதற்பகுதி வாயாகவும் இடப்பக்கத்திலுள்ள இரு குதிரை வடிவங்கள் இடப்பாக சூரிய சந்திர கலாவாசிகளாகவும் வலப்பக்கத்துள்ள இரு குதிரை வடிவங்கள் வலப்பாக சூரிய சந்திர கலாவாசிகளாகவும் சாரதி வடிவம் மும்மல ரூபம் வடிவம் நாசி என்பனவாகவும் எட்டாம் அடுக்கிடப் பகுதி அந்தக் கரண சொரூபம் கண்டத்தானம் என்பனவாகவும், அதன் கீழிடப்பகுதி ஐந்தவத்தை, ஐங்கோசம், இராகாதி பதின்முக்கணம் என்பவற்றின் ரூபமாகவும் இருதயத் தானமாகவும் அதன் கீழ்ப்பகுதி தசேந்திரியம், நாபித்தானம் ஆகவும், அதின் கீழுள்ள அச்சு பஞ்ச பூதம் குண்டலி சத்திதானம் ஆகவும் சக்கரங்கள் தசவாயுக்களாகவும் இருகால் களாகவும் கொண்டு சரீர சொருபத்தை விளக்கி பின்னர் சக்கரங் களான தசவாயுக்களையும் நிறுத்த அசைதன் முதலிய வினைகள் ஒழியும் எனவும், அவ்வாறுள்ள சீவன் தன் மனத்தத்துவத்தை முறையே மேலாக விளங்கும் உந்திக் குண்டலத்திலிருந்து தாபிக்கும். அங்கிருந்து முறையே இருதய கண்டத்தானங்களுக்கும் ஏற்றி லயப்படுத்தி அங்கிருந்து மேலாக விளங்கும் வாய் நாசி என்பவைகளுக்கும் ஏற்றி லயப்படுத்தி அங்கிருந்து இருகண்கள் வழியாகவும் மேனோக்கி ஆளும் அடுக்காகிய புருவ மத்தியத்திற்கும் அங்கிருந்து ஐந்தாம் அடுக்காகிய லலாட மத்தியத்திற்கும் அங்கிருந்து மற்றைய அடுக்குகளாகிய மதக அந்தத்தானம், மத்தியத்தானம், ஆதித்தானம், துவாத சாந்த தானம் என்பவைகளுக்கும் அங்கிருந்து மேல் உச்சிக்குடையாகிய பிரமரத்திற்கும் ஏற்றி லயப்படுத்தி அங்ஙனம் சும்மா இருந்தபடி யிருக்கும் நித்திய நிரசதியானந்த ரூபியாயிருக்க வேண்டும் என்பவும் உணரப்படும். இன்னும் தேர் வடிவம், சரீரமாகவும், அதிற்காணப்படும் நான்கு சிங்கவடிவங்கள் ஆன்மாவின் சர்வ வித சீவகாருண்ணிய மில்லா லோபகுரூரம் சர்வவித ஆசைப் பெருக்க சங்கற்ப விருத்தி சகலவித அபிமான கோலாகல விபரீதம், சர்வவித அகங்கார கோபதாப விகாரம் என்னும் இந்நான்கு வித கர்ம விருத்திகளாகவும் எட்டுயாழி உருவங்கள் ஆன்மாவினது அஞ்ஞானம் அபிமானம் ராகாதி குணம் துக்கம் விடய வாசனை நானாவித கன்மம் உபாதி அவதை என்னும் எட்டுவித அநுபவங்களாகவும் கொடி களெல்லாம் தத்துவக் கூட்டங்களாகவும் மணிகளெல்லாம் பீசமந்திர பிரணவாதி சத்தங்களாகவும், குஞ்சங்கள் எல்லாஞ் சீவர்கள் மனோ சலனத்தால் எண்பத்து நான்கு லக்க யோனி பேதங்களாக மாறிமாறித் தோன்றியடையும் மரணாவத்தையாகவுங் கொண்டு, சீவர்கள் சிங்கங்களை யொத்த கர்ம விருத்திகளையும், யாளிக்களைப் போன்ற தத்துவக் குழாங்களையும் மணிகளைப் போன்ற லாக்கொலிகளையும், குஞ்சங்களைப் போன்ற மனசலன தோற்றங்களையும், இல்லையென்னும்படி செய்து, சித்திர தீபம் போல நின்று போன சாட்சாத்கார கோல நிலையில் நிற்க வேண்டும் என்பதும், இந்த லயக்கிரம திதிக்கோலத்தால் அறிவார் நுண்ணுணர்வோர்.1 இந்த அத்தியாயம் எழுத ஆதரவாக இருந்த நூற்கள் 1. மானசாரம் 2. ஆனந்தவிகடன் (மலர்) 3. கல்கி (மலர்) 4. கலைக் களஞ்சியம் 5. நயினாத் தீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோயில் தேர்த் திருப்பணிச் சபை மலர் சுன்னாகம் - 1957 ஆயுதங்களும் அணிகலன்களும் ஆடைகளும் ஆயுதங்கள் மனித சமூகத்தின் குழந்தைப் பருவத்தில் தாயே அவர்களுக்குப் பாலூட்டியும் உணவூட்டியும் வந்தாள். மக்களினம் தொல் பழங் காலத்தில் மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் விலங்குகள் மக்களை எளிதில் கொன்று தின்று வந்தன. மக்களினத்தின் பகைவர்களான சிங்கம், புலி, கரடி, ஓநாய், யானை, காண்டாமிருகம் போன்றவைகளுக்கு உறுதியான உடல் அமைப்பும் வலுவான தோலும், உறுதியான பற்களும் கூரிய நகங்களும், பலமான கொம்புகளும், பருத்த துதிக்கைகளும், கால்களும், இரவில் தெளிவாகப் பார்க்கக் கூடிய கண்களும் பெற்றிருந்தன. அவைகளின் இயற்கையான உடல் அமைப்பே காடுகளில் உள்ள பிற உயிரினங்களை வேட்டையாடுவதற்கு ஏற்றதாக அமைந்திருந்தன. மக்கள் இனத்தின் உடல் அமைப்பு அத்தகைய வலுவுடையதாக அமையவில்லை. அதன் உடல் அமைப்பு உறுதியாக அமைந்திருக்கவில்லை. அதன் உடம்பின் தோல் மெல்லியதாக உள்ளது. அதன் கால்களும், கைகளும், பற்களும் விலங்குகளோடு போரிடுவதற்கு ஏற்றதாக இல்லை. எனவே மனிதன், தன் பகைவர்களாகிய விலங்குகளை வெல்ல சிந்தனை செய்ய முனைந்தான். அவன் அறிவு வளர்ந்தது. விலங்குகளோடு போரிட்டு வெற்றி கொள்ள பல ஆயுதங்களைக் கண்டான். ஆதியில் மக்கள் கண்ட ஆயுதங்கள் கல்லும் வில்லுமே யாகும். கல்லில் கத்தி, வாள், கோடரி போன்ற ஆயுதங்களைக் கையிலேந்திப் போரிட்டு விலங்குகளைக் கொன்றான்; வென்றான்; அப்பால் தொலைவிலிருந்து வில்லில் அம்பை வைத்து விலங்குகள் மீது பாய்ச்சி அவைகளை வீழ்த்தினான். நாளடைவில் .இவைகளை விருத்தி செய்தான். பின்னர் உலோகங்களினால் வாள், கத்தி, அரிவாள், கோடரி, ஈட்டி, வேல், கம்பு முதலியவைகளைக் கண்டு பிடித்து விலங்கு உலகை வென்றான். தொடக்க காலத்தில் தந்தை, வேட்டையாடி உயிர் வாழும் பொருட்டு காடுகளில் அலைந்து திரிந்து வந்தான். அவன் நிலையாக ஓரிடத்தில் நிலைத்து வாழவில்லை. தாயோ மக்களைப் பெறவும், பால் ஊட்டவும், உணவு ஊட்டவும் இன்றியமையாத நிலையில் இருந்ததால் அவள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்து வந்தாள். மக்களைக் காப்பாற்ற விலங்குகளை எதிர்த்து அடிக்கடி போரிட்டு வந்தாள். எனவே அவள் பல்வேறு ஆயுதங்களைப் பெற்றிருந்தாள். தாய் இறந்தபின் அவளைப் புதைத்து, அவளுடைய புதைகுழியில் அவளுடைய ஆயுதங்களை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். இவ்வாறு மக்கள் சமுகத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் ஆயுத வழிபாடும் எழுந்தன. மக்கள் நாகரிகம் பெற்று சிலைகளும், செம்புப் படிமங்களும் எழுந்த காலத்தில், பழங்காலத்தில் அவர்கள் பயன் படுத்திய ஆயுதங்கள் தெய்வங்களின் திருக்கரங்களில் இடம் பெற்றன. மனிதன் தெய்வ உருவங்களை அமைக்கும் பொழுது உலகிலுள்ள உயிரினங்களில் உயர்ந்த அறிவைப் பெற்ற மனித உருவிலே அமைத்தான். அப்பால் தெய்வங்கள் மனிதர்களில் உயர் நிலையில் இருக்கும் குடும்பத் தலைவியாகிய தாயின் உருவிலும், தந்தையின் உருவிலும் தெய்வத் திரு உருவங்களைப் படைத்தான். அப்பால் அரசன் வடிவிலும் அமைத்தான். தாய் தந்தையர் வடிவில் தெய்வ உருவங்களை அமைக்கும் அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் அணிகலன்கள் ஆயுதங்கள் முதலிய வற்றையும் அவ்வுருவங்களில் இடம்பெறச் செய்தான். மக்கள் அறிவு வளர்ச்சியில் தெய்வங்கள் தாயை விட தந்தையைவிட அரசனைவிட அரசியை விட உயர்ந்தது என்பதை உணர்ந்து தெய்வ உருவங்களுக்கு நெற்றிக் கண்ணையும் இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு தலைகளையும், நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு போன்ற எண்ணுள்ள கைகளையுடையதாகக் கண்டான். கண்களும், தலைகளும், கைகளும் தெய்வங்களின் ஆற்றலைக் காட்டுவதாக அமைந்தன. இந்து சமயத்தில் பெருந்தெய்வங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட தலைகளையும், இரண்டிற்கு மேற்பட்ட கைகளையுடையதாகவும் கற்பிக்கப்பட்டது. பௌத்த சமயத்தில் பெருந்தெய்வங்கள் ஒரு தலையையும் இரண்டு கரங்கள் உடையதாயும் சிறு தெய்வங்கள் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து போன்ற பல தலைகளையுடையதாக எண்ணப்பட்டது. கைகளுக்கு ஏற்ப ஆயுதங்களும் அதிகமாக்கப் பெற்றன. சிவபெருமான் பத்துக்கரங்களும், ஆறுமுக நயினார் பன்னிரண்டு கரங்களும் நான்முகன் எட்டுக் கரங்களும், கரங்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி இருப்பதையும் சிற்பத் திருஉருவங்களில் திகழுமாறு செய்யப் பெற்றுள்ளன. சிவன், திருமால், நான்முகன், ஆறுமுகன் முதலிய தெய்வ உருவங்களில் பலவிதமான மகுடங்கள், குண்டலங்கள், உபக்கிரீவம், கிரைவேயம், கடகம், வலயம், கேயூரம், தோள்வளை, மோதிரம், முத்துமாலை, அட்சமாலை, கந்தமாலை போன்ற அணிகலன்களும் அம்பு, வில், வாள், சங்கு, சக்கரம், மழு போன்ற பலவித ஆயுதங்களும் பெற்றிருக்கும் நிலையில் திருஉருவங்கள் அமைக்கப்பெற்றன.1 நமது தெய்வத் திருஉருவங்களின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. அவைகளுட் சில அடியில் வருமாறாகும்: 1. மான், 2. பரசு, 3. சூலம், 4. அங்குசம், 5. பாசம், 6. வச்சிரம், 7. சக்தி, 8. சங்கு, 9. சக்கரம், 10. கதை, 11. வில்லு, 12. அம்பு, 13. வாள், 14. கேடயம், 15. குக்குடம், 16. கொடி, 17. கமண்டலம், 17. தாமரை, 18. நீலோற்பலம், 19. வேல், 20. கட்வாங்கம், 21. நெருப்பு, 22. தமருகம். ஒரு திரு உருவத்தில் திகழும் ஆயுதங்கள் ஏனையத் திருஉருவத்தில் காணப்படுவதில்லை. சத்தி உருவத்தின் கரங்களில் காணப்படும் ஆயுதங்கள் சில சிவனது உருவங்களில் காணப் படுகின்றன. திருமால் உருவங்களில் வேறு ஆயுதங்களும் முருகன் திருக்கரங்களில் வேறு சில ஆயுதங்களும் காணப்படுகின்றன. மான், பரசு, சூலம், கமண்டலம், வாள் ஆகியவை சிவமூர்த்தங்களிலும், சங்கு சக்கரம் கதை என்பன திருமால் வடிவங்களிலும், வச்சிரம், சக்தி, வில்லு, அம்பு, வாள், கேடயம், குக்குடம், கொடி என்பன முருகன் திருக்கரங்களிலும், நீலோற்பலம், தாமரை உமையவள் கைகளிலும் காணப்படுகின்றன. கைகளிலுள்ள ஆயுதங்களைக் கொண்டு திருஉருவங்கள் எந்த மூர்த்தத்தை உடையது என்று தீர்மானிக்க முடியும். வழிபாட்டிற்காகச் செய்யப்படும் சிலைகளும், செம்புப் படிமங்களும் குறிப்பிடப்பட்ட அளவைகளுக்குள் அமைந்த தாயும் பங்கம், முத்திரை, என்பவைகள் பொருந்தியதாகவும் குறிப்பிடப் பட்ட ஆயுதங்கள் தாங்கியதாயும், ஆபரணங்கள் அணிந்த தாயும் ஆகமங்கள் கூறும் பாவங்கள் திகழ்வதாயும் இருத்தல் வேண்டும். நலந்தரும் தெய்வத் திருஉருவங்கள், வழிபடும் மக்களுக்கு துறக்க இன்பம் தருவனவாயும் நலந்தராத தெய்வ உருவங்கள் துறக்க இன்பம் தராதனவாகவும் இருக்கும். தெய்வத் திருஉருவங்கள், நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய திருக்கோலங்களைக் கொண்டு பல பெயர்களைப் பெற்றுள்ளன. அவை தான மூர்த்தி, நிர்த்தன மூர்த்தி, சங்கார மூர்த்தி, சயன மூர்த்தி, வீராசன மூர்த்தி, போகாசன மூர்த்தி, யோகாசனமூர்த்தி என்ற பெயர்களாகும். தானகமூர்த்தி நிற்கும் தோற்றம் உடையது; நிருத்த மூர்த்தி தாண்டவம் ஆடும் தோற்றம் வாய்ந்தது. சங்கார மூர்த்தி, சங்காரஞ் செய்யும் தன்மையை உடையது. அனுக்கிரக மூர்த்தி, உயிர்களுக்கு நன்மை நல்கும் அருள் தன்மையை உடையது. வீராசனமூர்த்தி இடது காலைச் சரிவர நீட்டியும், வலது காலை உயர்த்தியும் மடக்கியும் இருக்கும் அமைப்பு வாய்ந்தது. ஒருகாலின்மீது மற்றொரு காலை வைத்திருப்பது வீராசனமாகும். போகாசன மூர்த்தி, அல்லது சுகாசன மூர்த்தி ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலைச் சரிவாக நீட்டியும் இருக்கும் நிலையில் உள்ளது. யோகாசன மூர்த்தி, பத்மாசன மிட்டிருக்கும் தோற்றம் உடையது. சயன மூர்த்தி கிடக்கும் நிலையில் அதாவது படுத்திருக்கும் நிலையில் உள்ளது. அணிகலன்கள் மக்கள் தொன்று தொட்டு அணிகலன்களை அணிந்து வருகிறார்கள். உலகில் எந்த நாட்டு மக்களையும் விட தமிழ் நாட்டு மக்கள் அதிகமான அணிகலன்களை அணிந்துள்ளார்கள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிட மக்கள் மணிகள் பதித்த பொன் அணிகளை அணிந்து வந்துள்ளார்கள் என்று தெரிகிறது. சிந்துவெளிப் பண்பாட்டில் ஏராளமான பொன் அணிகலன் அணிந்திருந்ததற்கு சான்றுகள் உள்ளன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புதிய கற்காலத்திலே மக்கள் அணிகலன்களை அடையும் உணர்ச்சியைப் பெற்றுள்ளார்கள். மக்கள் உணவிற்காக அங்குமிங்கும் அலைந்து உணவுப் பொருள் களைப் போதிய அளவு சேகரித்து ஒன்று கூடியுண்பார்கள். உணவுப் பொருள்களில் எஞ்சிய பூ, அரும்பு, இலை, கொடி, காய், கொட்டை முதலியவைகளை எடுத்து தம் காதிலும் கழுத்திலும் தலையிலும் புயத்திலும் இடுப்பிலும் கட்டி, ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தனர். உலோக காலத்திலே செம்பு, வெள்ளி, போன்றவைகளால் தோடு, கர்னப்பூ, முருகு, தாழம்பு, கொடி, நெல்லிக்காய் மாலை, கடுகுமணிமாலை, பிச்சிஅரும்பு மாலை, அத்திக்காய் மலை, மிளகு மாலை, கொத்தமல்லிமாலை, ஆலங்காய்க் கொலுசு, அத்திக்காய் கொலுசு போன்ற பொன் வெள்ளி அணிகலன்களை அணிய முற்பட்டனர். அப்பால் வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், கோமேதகம், வைடூரியம், நீலம், முத்துப் பதித்த பொன் அணிகளையும் பவள மாலைகளையும் அணியத் தலைப்பட்டனர். தமிழ் மக்கள் உச்சி முதல் பாதம், விரல்கள் வரை எல்லா உறுப்பு களிலும் பல்வேறு வகையான அணிகலன்களைச் செய்து அணிந்து வரலாயினர். தமிழர்களைப் போல் உலகில் எந்த இனத்தவர்களும் தலை, காது, கழுத்து, புயம், கை, விரல், இடுப்பு, தொடை, பாதம், கால் விரல் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றிலும் பலப்பல விதமான அணிகலன்களை அணிந்து வந்தார்கள் என்று கூறுவதற்கில்லை. மக்கள் அணிந்து வந்த உயரிய அணிகலன்களைத் தேர்ந் தெடுத்து அவைகளைத் தங்கள் தெய்வங்களுக்குக் காணிக்கையாக வழங்கி வந்தனர். தமிழ் நாட்டு அரசர்கள் எண்ணற்ற நகைகளைத் தங்கள் தெய்வங்களுக்கு சமர்ப்பித்தனர் என்பதற்கு கோயில்களில் உள்ள கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இன்றும் என்றும் சான்றாக உள்ளன. தெய்வத் திருஉருவங்களை அழகு செய்யும் பொருட்டு அவற்றிற்கு அணிகலன்கள் சூட்டப்பட்டன. பெரும்பாலும் அரசர்கள் அணியும் விலையுயர்ந்த மணிகள் வைத்து இழைத்த பொன் அணிகலன்களே சூட்டப் பெற்றன. தெய்வங்கள் அரசர்களுக்கும் அரசனாக இருக்கின்றன என்று எண்ணி அரசர்கள் அணியும் விலையுயர்ந்த மணிகள் பதித்த அணிகலன்கள் தெய்வங்களுக்கு அமைக்கப் பெற்றன. அவை, மகுடம், குண்டலம், மாலை, கேயூரம், வாகுமாலை, கங்கணம், யக்ஞோப வீதம், உத்ரபந்தனம் சன்ன வீரம் கடிபந்தனம், கச்ச பந்தனம், அருணோன்மாலை, ஊருமாலை போன்ற பலவாகும். தலை அணிகலன்:- தலையில் தரிப்பது மகுடமாகும். இந்த மகுடம், சடாமகுடம், கிரீடமகுடம், கரண்ட மகுடம், மணிமகுடம், முத்து மகுடம் எனப் பலவகைப்படும். கிரீட மகுடமும் மணி மகுடமும் திருமால் போன்ற போக மூர்த்திகளுக்கும், கரண்ட மகுடம் கணேசர், தேவி முதலியவர்களுக்கும் முத்து மகுடம் அங்கயற் கண்ணி முதலிய தேவிகளுக்கும் சடாமகுடம் சிவபெருமான் முதலிய தேவர்களுக்கும் உரியனவாகும். காதணிகலன்:- குண்டலம் காதில் அணியும் அணிகலனாகும். குண்டலங்கள், பத்திர குண்டலம், மகரகுண்டலம், சங்குபத்திர குண்டலம், மணிகுண்டலம், இரத்தின குண்டலம், பாம்புக் குண்டலம் சர்ப்ப குண்டலம் எனப் பல வகைப்படும். பத்திர குண்டலம் ஓலைச் சுருள், இளந்துளிர்கள் போன்ற காதணி. மகரகுண்டலம் மகரத் தலையையும் பாம்பு உடலையும் உடைய வடிவிலான காதணி, சங்குபத்திர குண்டலம், சங்கின்புரி போன்ற காதணிகலன் மணிகுண்டலம் மணிகளாலும், பொன்னாலும் செய்யப்பட்ட காதணிகலன். பாம்புக் குண்டலம், நாகப்பாம்பு வடிவில் செய்யப்பெற்ற ஒரு குண்டலம். கழுத்தணி:- கழுத்தணிகள் பல வகைப்படும். அவை ஆரம்(ஹாரம்) அல்லது மாலை என்று அழைக்கப்படும். மாலை கழுத்தினின்று மார்பு வரை தொங்கும் ஒரு அணிகலனாகும். வாகு மாலை இரு தோள்களிலும் இருந்து மார்பு வரை தொங்கும் ஆரமாகும். கேயூரம் மேற்கையின் நடுவில் அணியும் அணி கலனாகும். யக்ஞோப வீதம், இடது தோளினின்று வலப்பக்கம் இடுப்பு வரை உடம்பின் இருபகுதிகளிலும் தொங்கும் நூலாகும். யக்ஞோப வீதம் குப்தர் அரசர்கள் காலத்திற்குப் பின் எழுந்த காலத்தில் உருவங்களில்தான் காணப்படுகிறது. சன்னவீரம் யக்ஞோபவிதத்திலிருந்து இடது பக்கம் இடுப்புவரை தொங்கும் அணிகலன் உதரபந்தனம் மார்பிற்கும் வயிற்றிற்கும் இடையில் அணியும் அணிகலன் கடிபந்தனம் இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற அணிகலன். இதன் நடுவில் யாழிமுகம் அல்லது சிங்க முகம் அமைக்கப்பட்டிருக்கும். அருணோன் மாலை, கடிபந்தனத்தினின்று தொங்கும் ஒரு அணிகலன். ஊருமாலை கடிபந்தனத்தினின்று தொடை வரை தொங்கும் ஒரு நீண்ட மாலையாகும். கச்சு பந்தனம், தேவிகளின் திரு உருவங்களில் மார்பின் மீது அணியப்படும் சீலைக் கட்டு ஆகும். ஸ்ரீ சரவதீய சித்திர காம்சாதிரத்தில் , இடது காதில் கர்ணிகை (கர்ணிகை - தாமரை மலரின் நடுவிலிருக்கும் காய் போன்ற வடிவமுள்ள தோடு வடிவில் உள்ள காதணி) அல்லது சங்கபத்திரமும் (சங்கு வடிவிலான அணிகலன்) வலது காதில் மகரகுண்டலம் அல்லது கேசரி குண்டலம் அல்லது வியாள குண்டலமும் அணிந்திருப்பதாம் (மகர குண்டலம், மகர மத்சயம் போன்ற வடிவிலான காதணி கேசரி குண்டலம் - சிங்கம் போன்ற வடிவிலான காதணி வியாள குண்டலம் - பாம்பு போன்ற வடிவமுள்ள காதணி. சடாமகுடம் அல்லது கிரீட மகுடம் தரித்திருப்பது அழகாக இருக்கும். மகுடத்தின் உயரம் 27,27,26,25 அல்லது 23 அங்குல மாகும். இந்த உயரமானது தலையின் உச்சியிலிருந்து கூறப்பட்ட தாகும். மகுடத்தின் அடிப்பக்கமானது தலையின் அகலத்தை விட ½ அங்குலம் அதிக உயரமாக இருக்க வேண்டும். கிரீடத்தின் உச்சியில் அகலமானது அதன் அடியின் அகலத்தைவிட 6,5,4 அங்குலம் குறைந்திருக்க வேண்டும் அல்லது அடியின் அகலத்தில் 6-இல் 1 பங்கு, 5-இல் 1 பங்கு அல்லது 4-இல் 1பங்கு குறைந்திருக்கவேண்டும். கிரீடத்தின் அடியில் முன்பக்கம் பின்பக்கம் வலதுபக்கம் இடது பக்கம் ஆகிய நான்கு பக்கங்களிலும் பூரிமம் என்ற அலங்காரத்துடன் கூடியிருக்கவேண்டும். (பூரிமம் - இலை அல்லது பூ போன்று அழகாகத் தோன்றும் எழிலார்ந்த அமைப்பு.) மகுடத்தின் இடது பக்கத்தில் இளம்பிறை வடிவமும் வலது பக்கத்தில் பாம்பின் வடிவமும் உள்ள பூவினால் அழகு செய்யப் பட்டிருக்கவேண்டும். இடுப்பில் (கீர்த்திமாநத்தில்)அழகுற விளங்கும் அரைஞாண் (கட்டுவால்) இடம் பெற்றிருக்க வேண்டும். (அரைஞாண் முகப்பு சிங்கம் அல்லது யாழி போன்று இருக்கவேண்டும். கேயூரம் (தோள்வளை) அங்கதம் (பாஹுவலயம்) கடகத்திராயம் (மூன்று விதமான அல்லது மூன்று வளையல்) முத்திரிகை (மோதிரம்) உதரபந்தம் (இடுப்பில் கட்டும் வால்) இவைகளினால் அணி செய்யப்பட்டிருக்கவேண்டும். இடுப்பில் அணியும் வாலில் வெளிப் பக்கங்களில் இலைகள் போன்ற அலங்காரங்கள் தொங்கவேண்டும். ஊருதாமத்துடன் கூடிய ஆடை பாதமூலத்திலே பாத ஜாலம் (பாத சரம்) போன்ற அணிகளும் அணியப்பட்டிருக்கவேண்டும். (கேயூரம் - தோள்வளை. இது தோளில் (புயத்தில் அணியும் அணிகலனாகும். அங்கதம் புயவலையம். இது புயத்தில் அணியப்படும் அணிகலனாகும். கடகத்திரயம் - மூன்று அல்லது மூன்று விதமான வளையல்கள். இவைகள் கணுக்கைக்கு மேலே அணியும் அணிகலன்களாகும். முத்திரிகை மோதிரம், நடுவில் நீங்கிய ஏனைய விரல்களில் அணியப்படும் அணியும் அணிகலன். உதரபந்தம் இடுப்பில் இழுத்துக் கட்டும் வார். பத்திரம் இலை வடிவான அணிகலன் இது வாரில் அலங்காரமாகத் தொங்க விடப்படும். ஊருதாமம் தொடையில் தொங்கவிடப்படும் கயிறு அல்லது குஞ்சம். இது ஆடையின்மீது ஒரு பக்கத்திலாவது அல்லது இருபக்கங்களில் தொடை வரை தொங்கவிடப்படும். அணிகலன் பாத ஜாலம் - பாதஸரம்) சன்ன வீரபிரலம்பம் - யக்ஞோபவீதம் -ஹாரம் - கிரைவேயகம், நாகயஞ்ஞ சூத்திரம் - ரத்ன பந்தம் - உபகிரீவம் - நிதாவலி இவைகளால் அணிசெய்யப்பட்டிருப்பதாகும். (சன்னவீர பிரலம்பம் - ஊர்துவகாயத்தில் ஹாரம் முதலியவைகள் பக்கங்களில் தொங்கும் குஞ்சம் முதலியவைகளுடன் கூடிய கேயூரம் (தோள்வளை கடகம் பத்திர பூரிமம் முதலியவைகள். இவைகளின் நடுவில் தொங்கும் மாலைகள் - இவைகளுக்குச் சன்னவீரபிரலம்பம் என்று பெயர் - மானஸாரம்) யக்ஞோப வீதம் - பூணூல் ஹாரம் கழுத்திலிருந்து மார்புக்குக் கீழ் வரை தொங்கும் முத்துமாலை முதலியன. கிரைவேயகம் - கழுத்திலிருந்து மார்புக்கு மேலே தொங்கும் காசுமாலை, காரை, அட்டிகை போன்ற உள் கழுத்தணிகள். நாரயஞ்ஞ சூத்திரம் படத்துடன் கூடிய பாம்பு வடிவமுள்ள பூணூல். ரத்நபந்த முபகிரீவம் - மணிகள் பதித்த உள் கழுத்தணிகள். நிதலாவளி இவைகள் கழுத்திலிருந்து 2 அங்குலம் வரையில் ஒன்றோடொன்று இணைந்து இருப்பவைகளாம்.1 ஆடைகள் அணிகலன்களைப் போன்று தெய்வத் திருஉருவங்களுக்கு அவற்றிற்கு உரிய ஆடைகளும் புனைந்தே உருவங்களைச் சிற்பிகள் அமைக்கின்றார்கள். ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ உருவங் களுக்கும் இன்னின்ன ஆடைகள் இன்னின்ன அணிகலன்கள், இன்னின்ன ஆயுதங்கள் இருக்கவேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறது. தெய்வ உருவங்கள் புனைந்துள்ள ஆடைகளும், ஆயுதங்களும், அணிகலன்களும் அதன் தொன்மையான தோற்றம் அதன் தன்மை முதலியவைகளை குறிப்பிடத்தக்கதாய் காணப்படு கின்றன. மிகமிகத் தொன்மையான காலத்தில் தோன்றிய தாய்த் தெய்வம் ஆடைகளின்றி, நிர்வாணியாய், பல அணிகலன்களையும், ஆயுதங்களையும் உடையனவாய்ப் பயங்கர வடிவில் காணப்படுகின்றாள். தமிழர்களின் பழம் பெருந் தெய்வமாகிய கொற்றவை எருமையை வாகனமாக உடையவள். கைகளில் பலவிதமான ஆயுதங்களையுடையவள், கருப்பு நிறம் உடையவள் எவ்வித ஆடையுமற்றவள் என்று சிற்ப நூற்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் புலித்தோலை ஆடையாகவும் யானைத் தோலைப் போர்வையாகவும் உடையவர் மான், மழு, போன்ற ஆயுதங்களையுடையவர். பாம்பை அணிகலனாகக் கொண்டவர். தலையில் எருக்கம்பூவை அணிந்தவர். மாட்டை வாகனமாகக் கொண்டவர் என்று கூறப்படுகின்றன. முருகன், குழந்தை வடிவினன், மயிலை வாகனமாகவும் வேலை ஆயுதமாகவும் கொண்டவர். சிறிய கௌபீனத்தை ஆடையாகக் கொண்டவர் என்று கூறப்படுகின்றது. திருமால், கருடனை வாகனமாகக் கொண்டவர். சங்கு, சக்கரம் தாங்கியவர். பீதாம்பரத்தை ஆடையாகக் கொண்டவர். மாடு, ஆடுகளைப் மேய்ப்பவர். குழல் ஊதுபவர் என்றெல்லாம் கூறப்படுகின்றன.1 ஓவியங்கள் இசை, நாட்டியம், கட்டிடக்கலை சிற்பம் முதலிய எல்லாக் கலைகளுக்கும் தொன்மை வாய்ந்த நன்மையான கலை ஓவியக் கலையாகும். நமது வரி வடிவக்கலைக்கு அடிப்படையாய் இருந்தது ஓவியக்கலையேயாகும். ஓவியம் என்பதைப் பண்டையத் தமிழர் எழுத்து என்றே கூறினர். இந்தியாவிலே எழுந்த கலைகளில் முதன்மை பெற்றது ஓவியக்கலையேயாகும். பிம்பட்கா ஓவியம் இந்தியாவில் உள்ள மைய மாநிலத்தில் (மத்தியப் பிரதேசத்தில்) கோசங்கபாத்திற்கும் போபாலுக்கும் இடையேயுள்ள பிம்பட்காவில் குன்றுகளில் உள்ள குகைகளில் பல பழங்கால ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குகைகளில் மைய அரசின் தொல் பொருள் ஆய்வுத்துறையினர் சென்று குகைகளில் நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஓவியங்கள் பல கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சமீபத்தில் இங்கு 60,000-ம் ஆண்டுகளுக்கு வாழ்ந்த மனிதனின் மண்டையோடும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது பண்பு அடிப்படையில் வகுத்து உணரப்படும் ஒரு அரும்பெரும் ஊழிப்பிரிவை உருவாக்கும் ஓர் அரிய செய்தி என்று உலகிற்கு உணர்த்தப் பெற்றுள்ளன. இந்தக் குகைகளில் ஒரு சிறப்பான நல்ல சூழலின் காரணமாக வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு பழங்கற்காலத்தில் மக்களின் இடைவிடாத வரிசை முறையான செயல் கூறுகளின் நிலைமாறாதிருக்கும் பண்பாடு பரவலாக நிலவியுள்ளது. அது இன்றும் அதன் தலை பொன்றாது நிலை குன்றாது இருந்து வருகிறது. இப்பொழுது அங்கு நடைபெற்ற அகழ் ஆய்வில் வரலாற்று காலத்திற்கு முந்திய பழங்கால இந்தியாவின் நிறைவான வாழ்க்கைப் படத்தை மீண்டும் இணைத்து உருவாக்குவதற்கு உதவும் என்று அகழ் ஆய்வுத் துறை வல்லுநர்கள் நம்புகின்றனர். இங்கு கண்ட குகை ஓவியங்கள் பல நூறாயிரம் ஆண்டுகள் சென்றும் அதன் அழகு குன்றாது அதன் புதுமை திறம்பாது அதன் பொலிவு மாறாது புதுப்படம் போல் திகழ்கின்றது. பதினாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குமுன் திராவிட மக்கள் யானையையும் மட்டுமல்ல குதிரையையும் அறிந்தவர்கள் அதைப்பழக்கி ஓட்டவும் கஜசாதிரம் அசுவசாதிரம் மட்டுமல்ல ஓவியக்கலையையும் உணர்ந்தவர்கள் என்பதை மெய்ப்பிக்கின்றது. இதனால் என்னால் எழுதப் பெற்று அச்சேறவிருக்கும் தமிழ்நாட்டு ஓவியம் என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன். பதினாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னுள்ள திராவிட மக்கள் தீட்டிய மைய மாநிலத்தில் (மத்தியப் பிரதேசத்தில் உள்ள இராம்கார் மலைத் தொடர்களிலுள்ள சோகிமாரா குகைகளிலும் கர்னாடக மாநிலத்தில் உள்ள சித்தல் துர்க்கத்திற்கு அண்மையில் உள்ள அங்காலமத் என்னும் பெரிய குகையில் ஒருபுலி ஓவியம் கைவண்ணம் பெறாத கரடு முரடான கையால் கரியால் வரையப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வண்ணச்சிமலை ஓவியம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடைய நல்லூருக்கு அண்மையில் உள்ள வண்ணச்சிமலை என்ற திருமலைக் கோயிலில் பாண்டியர் காலத்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தீட்டப்பெற்ற ஓவியங்கள் சில காணப்படுகின்றன. கோயிலின் உள் விதானத்தில் காணப்படும் தெற்குச் சுவரில் காணப்படும் சுவர் ஓவியங்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் அரசகட்டிலில் அமர்ந்திருந்த அவனிய சேகரன் சிரிவல்லபன் (கி.பி. 880-862) காலத்தில் தீட்டப்பட்டன என்று எண்ணப்படுகின்றன. இந்தக் கோயிலில் தீட்டப்பெற்ற சுவர் ஓவியம் இன்று மங்கி மறைந்து விட்டது. இந்த ஓவியத்தை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர் புதுச்சேரியில் இருந்த பிரஞ்சுப் பேராசிரியர் சோவியோதுப்ரயல் 1935-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து உலகிற்கு உணர்த்தினார். இவரது வேண்டுகோளின் மீது தமிழ்நாட்டுத் தொல் பொருள் காட்சிசாலை இயக்குநர் இவைகளை படியெடுத்துள்ளனர். திருமலை புரத்துக் கோயில் ஓவியம் அண்ணல் வாயில் அறிவன் கோயில் ஓவியத்திற்கு ஒப்பானது என்று சொல்வதற்கில்லை என்றாலும் சிறப்புடையது என்று கூறப்படுகிறது. பாண்டிய நாட்டு பழைய ஓவியங்களில் இது ஒன்றே தரமானது என்று கூறக் கூடியது அதோடு இது சைவ நெறியினர் தீட்டிய ஓவியமாகும். இங்கு காணப்படும் ஓவியங்களில் ஆடும் அரம்பையின் அழகிய உருவம் ஒன்றும் மத்தளம் தட்டும் மங்கையின் மங்கிய உருவம் ஒன்றும் செவ்வியதாய்க் காணப்பட்டன. இக்கோயிலில் காணப்படும் எழில் ஓவியங்களில் இதுதான் ஏற்றம் பெற்ற எழில் ஓவியம் என்று கூறத்தக்கது. மற்றொரு ஓவியம் தாடியுடைய முனிவர் உருவமும் அதன் அருகேயுள்ள சில ஆண்பெண் உருவங்களுமாகும். ஒவ்வொரு ஆண் உருவங்களுக்கும் அண்மையில் ஒரு அணங்கின் உருவம் அமைந்துள்ளது. ஒருவேளை இது ஆணும் பெண்ணும் கலந்து ஆடும் ஒருவகை நடமாக இருப்பினும் இருக்கலாம். அதற்கடுத்தாற்போல் காணப்படுவது அழகிய வேலைப் பாடுகளுடன் அணிபெறத் திகழும் பூங்கொடிகளின் கவின்பெறும் ஓவியம். மற்றொரு ஓவியம் ஒரு வாத்தின் ஓவியம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த ஏதோ ஒரு ஒலியைக் கேட்டு பின்னே திரும்பிப் பார்க்கிறது. அதன் அருகே சில மலர்களும் அரும்புகளும் உள்ளன. மற்றொன்று சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் ஒரு பெண் ஓவியமாகும். இது கொற்றவை உருவாக இருக்கலாம். பல ஓவியங்கள் உருத் தெரியாமல் மங்கி மறைந்து போய்விட்டன. திருப்பரங்குன்றத்து ஓவியம் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைக்கு அண்மையில் திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு விசித்திரமான சித்திரகூடம் ஒன்றுள்ளது. பரிபாடலில் குன்றம் பூதனார் என்னும் புலவர் இந்த ஓவியத் திருக்கூடத்தைப் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றார்: ....................................... நின்குன்றத்து எழு தொழில் அம்பலங் காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர் - பரி:18:27-29 இந்தப் பாடலுக்கு உரைகண்ட பேராசிரியர், நின் திருப்பரங் குன்றத்தின் கண் எழுதிய எழில்வாய்ந்த எழுத்து அம்பலம் (திருக்கோயில்) இருக்கின்றது. அது கண்டார்க்கு மேன்மேலும் பெரும் விருப்பத்தைத் தரவல்லது. மன்மதனுக்குரிய அம்புகள் வளர்த்தலால் அது காமவேளின் மலர் அம்புகள் நிறைந்துள்ள ஆயுதச் சாலையை யொக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மலர்களின் நாற்றம் அவற்றின் தொழிலை மக்கள் உள்ளத்தில் புகுந்து ஆசையை வளர்ப்பதாகும். நின் கோயிலிலும் தன்னைக் கண்டார்க்கு அத்தகைய ஆசையை எழுப்புகிறது என்று எடுத்துக்காட்டுகின்றார். திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் விழாக்காலத்து மக்கள் ஆணும் பெண்ணும் செல்வர். அங்கு செல்லும் மக்கள் திருப்பரங்குன்றத்திலுள்ள பாறைகளுக்கிடையே தீட்டப்பட்ட எழுத்து அம்பலத்தையும் கண்டுகளிப்பர். இந்த சித்திரசாலை எழுத்துநிலை மண்டபம் எழுதொழில் அம்பலம் என்று அழைக்கப்பட்டது. இங்கு துருவ சக்கரம் - அதாவது வானில் உள்ள ஒரு ஓவிய வட்டம் ஓவிய வட்டமாகத் தீட்டப்பட்டுள்ளது. அது அசுவினி பரணி முதலிய இருபத்தேழு கோள்களையும் வேறுபல கோள்களை யும் அடங்கியுள்ள வட்டம். இந்த ஒளி வட்டத்தினை ஞாயிறு திங்கள் முதலிய கிரகங்கள் சுற்றி வருவது எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. அடுத்த ஓவியம் காமனும் இரதியும் கூடிக்குலாவி நிற்கும் ஓவியம்:- இங்கு அகலிகையின் சாபம் என்ற புராணக் கதை ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்திரன் காமவெறிகொண்டு முனிவரை ஏமாற்றி அவர் மனைவியின் கற்பைச் சூறையாடி தன்பெருமையை இழந்து பூனையாக ஓடுவதும் கண்களில் கனல் பறக்கும் நிலையில் கௌதம முனிவன் நிற்கும் காட்சியும், காமவேட்டைக்குப் பலியான அகலிகை கல்லாகச் சபிக்கப்பட்ட காட்சியும் காணப்படுகிறது. இது காதலர்கள் உள்ளத்தை உருக்கக் கூடிய ஓவியம் இத்தகைய ஓவியம் பல இருந்தன என்று தெரிகிறது. இந்த எழுத்து நிலைமண்டபம் திருப்பரங்குன்றத்தில் எங்கும் காணப்படவில்லை. இது மறைக்கப்பட்டு விட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் இருந்ததற்குப் பல சான்றுகள் உள்ளன. மதுரை நாயக்கர் கால ஓவியம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டியர்களின் இளவரசர் இருவர்களில் அரசகட்டில் யாருக்கு உரியது என்ற சண்டை எழவே குலசேகர பாண்டியன் பட்டத்தரசியின் மகனுக்கு உதவியாக வந்த டில்லி சுல்தானின் படைத் தலைவன் மாலிக்கபூர் என்பான் அரசு கட்டிலை அடைய முயன்ற இருபாண்டிய இளவரசர் களை விரட்டிவிட்டு மதுரையிலும் பழைய காயலிலுமுள்ள பொன்னையும் மணியையும் ஏனைய விலை உயர்ந்த பொருள் களையும் கொள்ளையடித்து டில்லி சுல்தானுக்கு அனுப்பிவிட்டு மாலிக்கபூர் அரச கட்டிலில் ஏறி மதுரைச் சுல்தானாக ஆட்சி புரிந்தான். தமிழ் நாட்டில் முசுலிம் ஆட்சி நடப்பது திராவிட மக்களுக்கே அவமானம் என்று விசயநாயக்க மன்னர்கள் படை யெடுத்து வந்து சுல்தான்கள் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு பாண்டியர்களின் கட்டிலில் நாயக்கர்கள் அமர்ந்து கொண்டனர். நாயக்கர்கள் ஆட்சியும் அன்னியர் ஆட்சியே என்றாலும் அவர்கள் கோயில்களைப் பழுது பார்த்தனர். புதுக்கோயில்களைக் கட்டினர். கி.பி. 17-ஆம் ஆண்டின் இறுதியில் மதுரை அங்கயற் கண்ணி (மீனாட்சி) கோயில் ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் தேவியின் அட்டதிக்கு விஜயத்தின் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணக் காட்சியையும் ஓவியமாகத் தீட்டியுள்ளனர். ஆனால் அதற்குமுன் தமிழ்நாட்டுச் சிற்பிகள் கல்லில் திருமணக் காட்சியை அழகிய சிற்பமாகச் செதுக்கியுள்ளனர். இந்த நாயக்கர் மன்னர்கள் காலத்தில் தீட்டிய மீனாட்சி சுந்தரர் திருமணக் காட்சி நல் ஓவியமாக உள்ளது என்று கூறப்படு கிறது. இத்திருமணக் காட்சியை நாயக்கர் குல அரசி மங்கம்மாள் ஒரு புறமாக நின்று கண்டுகளிப்பது போல் தீட்டப் பெற்றுள்ளது. அரசி மங்கம்மாள் மதி முக மடந்தை போல திகழ்கின்றாள். அவள் ஓவியத்தின் மேற்புறத்தில் தமிழ் தெலுங்கு வரிவடிவில் மகாராச மானிய மகாராச ராச சிரி மங்கம்மா என்று தீட்டப்பட்டுள்ளது. அவள் அண்மையில் அவள் பேரன் நின்று கொண்டிருக்கிறான். அவன் சிறுவனாக இருப்பதால் அவனது பேராளாகவே (பிரதிநிதியாகவே) மங்கள் ஆட்சி புரிந்து வந்தாள். அவன் எட்டு வயதுச் சிறுவனாக இருக்கும் பொழுதே முடிசூட்டப் பெற்றுள்ளான். அவன் பெயர் மகராசராச கிரி விஜய ரங்க சொக்கநாதர் மீனாட்சி தேவிக்குப் பின்னால் வேறு ஒரு சிறுவன் நிற்கிறான் அவன் பெயர் தளவாய் இராம சுப்பையா. நாயக்கர் காலத்தில் மீனாட்சி கோயிலில் வரையப்பட்ட ஓவியம் அவ்வளவு தரமானதன்று என்றாலும் புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு அறிஞர் படம்பிடித்து ஒரு அழகிய நூலாக வெளி யிட்டுள்ளார்.1 அண்ணல் வாயில் அறிவன் கோயில் ஓவியம் புதுக்கோட்டைக்கு அண்மையில் உள்ள குளத்தூர் வட்டாரத்தில் உள்ள அன்னவாசல். அன்னவாசலில் இருந்து ஒரு கல் தொலைவில் அண்ணல் வாயில் அறிவன் கோயில் குகை ஓவியம் உள்ளது. இது சிறு குன்றைக் குடைந்து சமண முனிவர்களால் செய்யப்பட்ட குடைவரைக் கோயில். இக்கோயில் முழுவதும் நெய்வண்ண ஓவியம் தீட்டப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் ஒப்பற்ற ஓவியக் கருவூலமாக மதிக்கப்படுகிறது. இந்தக் குடைவரைக் கோயிலில் முன்னர் ஒரு சிறு முக மண்டபமும் பின்னர் திரு உண்ணாழிகையும் உள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவந்தழுவிய மகேந்திரவர்மனால் விரட்டியடிக்கப் பட்ட சமணர்களால் இந்தக் குகைக் கோயில் தோண்டப்பட்டு அப்பால் ஓவியம் தீட்டப்பெற்றுள்ளது. அப்பால் இக்கோயில் பழுதுபட்டதும் அபனீப சேகரன் சீவல்லபன் என்ற பாண்டியன் (கி.பி. 830-862) உதவி பெற்று முகமண்டபம் செப்பனிடப் பட்டுள்ளது. கோயிலின் அண்மையில் உள்ள பாண்டியன் கல்வெட்டு இதை உறுதிப்படுத்துகிறது. இக்குகைக் கோயிலின் முகமண்டபத்தில் உள்ள தூண்களில் இடதுபக்கமுள்ள தூணில் இருபெண்கள் நாட்டியமாடும் நிலையில் நெய்வண்ண ஓவியம் உள்ளன. வலது பக்கத்துத்தூணி லுள்ள ஒரு கன்னி கார்மேகம் போன்ற கருங்கூந்தலையுடையவளாய் அணிகலன் களை அணிந்து மலர்சூடி ஆடுவதற்கு அதம் பிடித்து நிற்கின்றாள். இப்பெண்கள் அடிகள்மார் என அழைக்கப் பட்டனர். வலது புறத்திலுள்ள தூணின் உட்புறம் பாண்டியனும் அவன் மனைவியும் ஒன்றாக இணைந்து நிற்கும் எழில் ஓவியம் ஏற்றமுடன் திகழ்கிறது. முக மண்டபத்தின் கூரை ஓவியம் சிறப்புடன் திகழ்கிறது. முகமண்டபத்தில் சமணமுனிவர்களின் புடைசிற்பம் (பார்சுவநாதர் உருவம்) தவக் கோலத்தில் இருப்பதுபோல் உள்ளது இதன் நீளம் 2 அடி அகலம் 1 ½ அடி. திருஉண்ணாழிகை 10 ½ அடி நீளமும் 10 ½ அகலமும் உள்ளது. இதன் வாயில் 5 அடி 7 அங்குல உயரமும் 2 ½ அகலமும் உள்ளது. சுவரில் சமண முனிவர்களின் புடை சிற்பம் உள்ளது. இந்தக் கோயிலின் கூரையில் காணப்படும் தாமரைப் பொய்கையின் ஓவியத்தைக் காதிகா பூமி அதாவது சமணர்கள் துறக்கம் (மோட்சம்) என்று கூறுகின்றனர். இந்தத் தாமரைத் தடாகம் எழில் மிக வாய்ந்தது. இந்தியாவில் சிறந்த ஓவியக் கருவூலமாக மதிக்கப்படும் அஜந்தாவிற்கு ஒப்பானது என்று கூறப்படுகிறது. திருஉண்ணாழிகையில் உள்ள 3 புடைசிற்பங்களும் கூரை மீது தீட்டப்பட்ட அசுமான கிரி விரிப்பு என்ற அழகிய ஓவியமும் கவின்பெறு வண்ணமும் வனப்பும் வாய்ந்தன. 1300 ஆண்டு சென்றும் பலவிதத் தாக்குதலுக்கு ஆளாகியும் புதுமைப் பொலிவு குன்றாது கெம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. பெருவுடையார் கோயில் ஓவியம் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருஉண்ணாழிகையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் முற்காலத்தில் சுந்தரர் சேரமான் கயிலாச யாத்திரை ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் மீது நாயக்க மன்னர் காலத்தில் வெள்ளைச் சுண்ணம் தீட்டப்பட்டது. அப்பால் ஆண்டுதோறும் சுண்ணம் தீட்டப்பட்டு கனத்த தகடு போலாய் விட்டது. ஒரு நாள் அதில் ஒரு பகுதி பொரிந்து கீழே விழுந்துகிடந்தது. அதை அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கண்டு எளிதாக வரும் பகுதிகளை பெயர்த்துப் பார்க்கவே உள்ளிருக்கும் சோழர் கால ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டு இப்பொழுது வெள்ளையடிக்கப் பட்ட பகுதிகள் பாளம் பாளமாக எடுக்கப்பட்டு மூல ஓவியம் கிட்டத்தட்ட முழு உருவமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. I. கயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார் அவரைச் சுற்றி பூத கணங்கள் சூழ்ந்து நிற்கும் காட்சி அருகே நந்தி கால்களை மடக்கி அமர்ந்திருக்கிறது அண்மையில் நிலைவண்ணத்தில் முனிவர்கள் அமர்ந்துள்ளனர். II. சுந்தரர் திருமணம் சிவபெருமான் கிழவேதியர் உருவில் தோன்றி இவன் எனக்கு அடிமை. இவனது பாட்டன் எழுதித் தந்திருக்கிற ஓலைப் பத்திரத்தைக் காட்டுதல். III. குடியானவர்கள் இல்லங்களின் தோற்றம். மகளிர் மட்பானையில் சோறு சமைக்கின்றார்கள் பணியாள் ஒருவன் அண்மையில் பாங்குடன் சென்று உணவு பெறுகிறான். IV. சுந்தரர் வெள்ளையானை மீது சிவபெருமான் ஆணைப்படி கயிலாச யாத்திரை செல்லல். அவருக்கு முன்பாக சேரமான் பெருமாள் வெள்ளைக் குதிரை மீது செல்லுதல் போன்ற அழகிய காட்சி. V. தேவர்களும், தெய்வலோகப் பெண்களும் மலர்தூவி முரசு முழக்கி ஆடிப்பாடி சுந்தரரையும் சேரமான் பெருமாளையும் வரவேற்கும் காட்சி. VI. முனிவர்கள் விண்ணில் கார் மேகங்களின் மீது நின்று விருந்தினரான சுந்தரரையும் சேரமான் பெருமாளையும் பூமாரி சொரிந்து வரவேற்றல். VII. அம்பலக் கூத்தன் அமர்ந்துள்ள கயிலாச மலைக்குச் சென்று அவரது பாதங்களையும் இருவரும் அடைந்து என்றும் பொன்றா இன்பத்தை அடைதல். VIII. சிவபெருமான் முப்புரம் எரித்தல், இதுபோன்ற அழகிய வண்ணங்கள் பொறித்த ஓவியங்கள் சோழர்களின் ஓவியப் புலமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. இவைகள் அழகுமிக்கன. வியத்தகு பெற்றி வாய்ந்தன. காஞ்சி கைலாசநாதர் கோயில் பல்லவர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சோழ நாட்டில் புகுந்தனர் அங்கிருந்த களமரை விரட்டியடித்து காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ அரசன் தம் ஆட்சியை கந்தவர்மன் ஆட்சியை நிறுவினான். கி.மு. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை காஞ்சி சமண காஞ்சியாகத் திகழ்ந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு தொடக்ககாலத்திலிருந்து அதாவது மகேந்திரவர்மன் காலத்திலிருந்து (கி.பி. 600-630) சைவக் காஞ்சியாக எழுந்தது. மகேந்திரவர்மன் காலத்திலும் அவனுக்குப் பின் வந்த மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலும் சைவ சமய எழுச்சிக்குப் பெரும்பணி துவக்கப்பட்டது பல கற்றளிகள் எழுப்பப்பெற்றென சிற்பங்களும் ஓவியங்களும் ஏராளமாக எழுந்தன. பல்லவ மன்னன் இராசசிம்மன் (665-705)இல் கைலாசநாதர் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து சுவர்களின் மீது பல ஒப்பற்ற ஓவியங்களைத் தீட்டினான். அவன் காலத்தில் தீட்டப்பெற்ற ஓவியங்கள் இன்று மங்கி மறைந்து கிடக்கின்றன. உருப்படியான பல்லவர் கால ஓவியம் ஒன்று கூட காஞ்சியில் நமக்குக் கிடைக்கவில்லை. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் (இராச சிம்மேசுவரத்தில்) எஞ்சி நிற்கும் அரைகுறைவான ஓவியங்கள் சிலதான் நமக்குக் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்திருப்பவை ஒரு சிறந்த ஓவியத்தின் சிறு பகுதியேயாகும். எடுத்துக் காட்டாக ஓர் இளங்காளையின் முகத்தில் பாதிதான் புலப்படுகிறது. அதன் அளவு சுமார் இரண்டு அங்குலம் இருக்கும். இந்த ஓவியத்தின் எழில் குன்றி வண்ணங்களின் ஒளி பொன்றி சில கருப்புக் கோடுகள் தான் புலப்படுகின்றன. இதை நாம் ஒரு புனையா ஓவியம் என்று கூறலாம். இந்த ஓவியம் அழியாது இருந்தால் பல்லவர் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியச் சிறப்பு முழுவதையும் நாம் நன்கு சுவைத்து உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்க முடியும். தமிழகத்தின் தவக் குறைவு பல்லவர்கள் காலத்தில் தீட்டிய ஓவியத்தின் முழுச்சிறப்பையும் நம்மால் கண்டுகளிக்க முடியாமற் போய்விட்டது என்று சொல்லலாம். பல்லவ மன்னர்கள் சிவ நெறியைத் தழுவியதன் மேல் தமிழ்க் கலைகள் மறுமலர்ச்சி பெற்று எங்கும் எழுந்தன. அவர்கள் கட்டிடக் கலைக்கு ஆற்றிய தொண்டு உலகப் புகழ்பெற்றுள்ளது. மாமல்லபுரத்தில் எடுப்பித்த ஒற்றைக் கல் தேர்களும் காஞ்சி கற்றளிகளும் ஆங்காங்கே உருவாக்கிய சிற்பங்களும் சிறப்புற்றவைகள். பல்லவ மன்னன் இசைக் கலையின் வளர்ச்சிக்கே அடிப்படையிட்டு விட்டான். அவன் மக்களும் பேரர்களும் அதை வளர்த்துள்ளனர். பனைமலை ஓவியம் பல்லவர்கள் தீட்டிய பனைமலை ஓவியம் அரைகுறை யாகத்தான் நமக்குக் கிடைத்துள்ளது என்றாலும் அதன் சிறப்பை ஓரளவு சுவைக்கக் கூடியதாக இருக்கிறது. பனைமலை தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள விழுப்புரத் தினின்று செஞ்சிக்குச் செல்லும் வழியில், 16-ஆவது கல் தொலைவில் இருக்கிறது. இது அனந்தபுரத்தின் அண்மையில் ஒரு மலை அடிவாரத்தில் பனைமலை என்னும் சிற்றூர் உள்ளது என்று கூறப்படுகிறது. பனைமலையில் பல்லவர்களால் எடுப்பிக்கப்பட்ட பாங்கான கோயில் ஒன்று சிறப்புற்று எழுந்து நிற்கின்றது. இப்பொழுது இக்கோயிலை இந்திய மைய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஒரு பழம் பெரும் சின்னமாக எண்ணி தங்கள் செலவில் பாதுகாத்து வருகின்றனர். தமிழக அரசினர் கோயில்களால் தமிழர்கள் கெட்டுப் போய்விட்டனர். எனவே தமிழர்களின் முன்னேற்றத்திற்கு கோயில்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று கூறிய ஈ.வெ.இராமசாமிப் பெரியார் கையில் அகப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையில் பெரியாரின் உண்மையான சீடர்களே ஆனால் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர்வதற்காக ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற பாட்டைப் பாடிக் கொள்வர். தமிழ் நாட்டுக் கோயில்களைப் பேணுவதிலோ, சிற்பங்களைப் பாதுகாப்பதிலோ பழைய ஓவியக்கலையைச் செம்மை பெற வைப்பதிலோ கடுகளவும் அக்கறை கிடையாது. ஆனால் அவற்றை மைய அரசு எடுத்துப் பாதுகாக்க முற்பட்டால் இது தமிழன் சொத்து; இதைத் தமிழக அரசிடம் ஒப்புவித்துவிட வேண்டும் என்று ஓயாது கூப்பாடு போடுவர். கி.பி. 700-ஆம் ஆண்டில் இரண்டாம் நரசிம்மவர்மன் பனைமலை தாளகிரீசுவரர் கோயிலை எடுப்பித்தான். இதன் விமானம் எழில்வாய்ந்தது. இது சம சதுர திரிதளம் விமானம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. சதுரவடிவான 3 மாடங் களைக் கொண்ட ஓர் சிவன் கோயிலில் அழகிய ஓவியத்தைத் தீட்டச் செய்தான். பின் வந்தவர்கள் அதன்மீது சுண்ணந்தீட்டி மறைத்து விட்டனர். அதிர்ஷ்டவசமாக மேலே தீட்டிய சுண்ணம்பொறிந்து விழுந்து உள்ளே இருக்கும் ஓவியம் நன்கு தெரியத் தொடங்கியது உள்ளிருக்கும் பார்வதி தேவியின் மார்பிற்கு மேற்பட்ட பகுதி தெளிவாகத் தெரிகிறது. பார்வதியின் மணிமகுடமும் கழுத்தில் உள்ள மணிமாலையும் காதுகளில் ஒளிரும் குண்டலமும் குழையும் எழில் பெற்றிலங்குகிறது. பார்வதி தேவி வலது காலை ஊன்றி இடது காலை மடக்கி மிக ஒய்யாரமாக நிற்கும் காட்சியும் இடையில் உள்ள ஆடையும் தோள்மீது துவளும் முந்தானையும் கையில் உள்ள குடையும் குடத்தின் மீது மாண்புறத் திகழ்கின்றது. நீலவண்ணத்தில் குடையும் கறுப்பு நிற மென்கோட்டால் மகுடமும் இள மஞ்சள் வண்ணத்தால் முகமும் இளஞ்சிவப்பு நிறத்தால் மேனியும் சிவப்பும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் மேடையும் வியத்தகு முறையில் அற்புதமாக கலைஞன் இந்த ஓவியத்தை அழகு பெறத் தீட்டி யுள்ளான். ஆடவல்லானின் தாண்டவத்தை பார்வதி தேவி கண்டு களித்துத் தன்னை மறந்து நிற்பது போல் காணப்படுகிறாள். அவளது கண்களைப் பார்த்தாலே இதன் உண்மை நன்கு தெரிகிறது. இந்தக் கவின் பெறும் ஓவியம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தீட்டப் பெற்ற அமராவதி சிற்பத்தையும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் தீட்டப்பெற்ற அசந்தா ஓவியத்தையும் ஒத்ததாகத் தெரிகிறது. பல்லவ மன்னர்கள் தீட்டிய ஓவியங்களில் இது ஒன்றுதான் உருப்படியாக நமக்குக் கிடைத்துள்ளது என்றாலும் முழு உருவமும் நமக்குக் கிடைத் துள்ளது என்று சொல்வதற்கில்லை. பனைமலையில் பல்லவர் களால் பாங்குறத்தீட்டப்பட்ட இந்த ஓவியம் 7-ஆம் நூற்றாண்டில் உள்ளது என்று எண்ணப்படுகிறது. பனைமலைக் கோயிலின் கீழ்புறத்தில் உள்ள அறையில் சிற்பம் ஓவியம் முதலிய கலைகளில் வல்லவர்களான பல்லவர்கள் பார்வதி தேவியின் திருஉருவம் கைலாசநாதர் கோயிலைச் சுற்றியுள்ள சிறுமண்டபங்களில் தீட்டிய ஓவியச் சின்னங்களும் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டு ஓவியன் கையாண்ட வரியின் மென்மைகளையும் அழகையும் நன்கு எடுத்துக்காட்டு கின்றன. பல்லவர்காலத்து ஓவியங்களில் வண்ணங்கள் எவ்வளவு மங்கி மறைந்துவிட்ட போதிலும் அமுது ஒழுகுவது போல் ஒழுகும் வரியின் உயர்வு மாமண்டூர்த் தாமரை மலர் கைலாசநாதர் கோயிலில் உள்ள பாதி முகங்கள் மட்டும் தெரியும் பல உருவங்களும் பனைமலைப் பார்வதி தேவியின் அறைகுறை உருவம் ஆகியவை நம் உள்ளத்தை ஈர்ப்பதாக உள்ளன. என்று பனைமலைப் பார்வதி தேவியின் ஓவியத்தையும் பல பல்லவர்கள் தீட்டிய ஓவியங்களையும் பழம்பாண்டியர் தீட்டிய வண்ணச்சிமலை குடைவரைக் கோயில் ஓவியத்தையும் கண்டு அவற்றின் உண்மையான தரத்தை நேரில் பார்த்தும் பல அறிஞர்கள் அளித்த சான்றையும் கொண்டு இவை ஒப்பிலாத ஓவியம் என்று தீர்ப்பளித்தார், நல்ல ஓவியப்புலமையும் சட்ட அறிவும் மிக்க நமது மதிப்பிற்குரிய நீதிபதி உயர்திரு மே.சு. இராமசாமி அவர்கள், இந்த ஓவியங்களைப்பற்றிக் கூறியவைகளை ஆழ்ந்து படித்தவர்கள் நாமும் ஒருமுறை வண்ணச்சிமலை, காஞ்சி, பனைமலை வரை சென்று பார்த்து வருவோமா என்ற எண்ணத்தை எழுப்பும்.1 சேர நாட்டு ஓவியம் ஏறத்தாழ கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நந்திக்கரையில் உள்ள சிவன் கோயிலில் உள்ள ஓவியங்கள் அற்புதமானவைகள். இன்று அந்த ஓவியங்கள் பாதி தெரிந்தும் பாதி தெரியாமலும் இருக்கும் மனித உருவங்கள் மலர்கள் மேகத் திரைகள் இவற்றினூடேயே கவினுறத் திகழும் கம்பீரமான முகமும் நன்கு தெரிகிறது. முகத்தை ஒரு புறம் சாய்த்து முக்கால் தோற்றத்தில் தீட்டப் பெற்றிருக்கும் இந்த ஓவியம் திட்டவட்டமாகச் சிவபெருமான் உருவம் என்று கூறப்படுகிறது. இது பாண்டிய நாட்டுப் பாங்கில் பண்புறத் தீட்டப்பெற்றுள்ளது. தென் திருவாங்கூரில் உள்ள குடை வரைக் கோயிலின் உட்புறச் சுவற்றின் மீது தீட்டப் பெற்ற ஓவியக் கருவூலம் காலவெள்ளத்தால் மங்கிவிட்டது. கேரளம், பண்டைய முத்தமிழ் நாடான சேர சோழ பாண்டிய நாட்டில் ஒன்றாகத் திகழ்ந்ததாகும். இன்றையத் திருவாங்கூர் மன்னரின் தலைநகரமாயிருந்த திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் 14-ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட சுவர் ஓவியம் ஒன்றுள்ளது. இது ஓவியக் கலைமீது மிகப்பற்றுள்ள திருவாங்கூர் அரசர் ஆதித்தியவர்மன் சர்வங்கநாதன் கி.பி. 137- 1375-இல் கட்டப்பெற்ற கிருஷ்ணன் கோயில் என்னும் உட்புறக் கோயிலில் தீட்டப் பெற்ற ஒண்டொடிகளின் ஒய்யார ஓவியம். இந்த ஒவியத்தில் மகளிர்கள் பல்வேறு விதமான ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந் துள்ளார்கள். இப் பெண்கள் பல்வேறு இசைக் கருவிகளை மீட்டிக் கொண்டுள்ளார்கள். இந்த வண்ண ஓவியங்கள் கண்கவர் வனப்பு வாய்ந்தவைகள். வட திருவாங்கூரில் உள்ள எட்டமனூர் சிவன் கோயிலில் உள்ள கோபுரத்தில் காணப்படும் ஓவியங்கள். இவைகள் கி.பி. 16 ஆம்நூற்றாண்டில் தீட்டப்பட்டவைகளாகும். டாக்டர் ஆனந்தக் குமாரசாமி அவர்கள் இந்தியக் கலைக்கு ஒரு முன்னுரை என்ற நூலில் இது திராவிடர்களின் வண்ண ஓவியக் கலைக்கு ஒரு பழைய எடுத்துக் காட்டாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இது 12 அடி நீளமும் 3 அடி உயரமும் உள்ளது. இங்குள்ள இந்த வட்டக் கோயிலை பழுது பார்க்கும் பொழுது அடித்தளத்தில் கி.பி. 1542 குடமுழக்கு விழாச் செய்யும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. 1539-ஆம் ஆண்டில் வைக்கம் சிவன்கோயில் திருஉண்ணாழிகைச் சுவர்களில் தீட்டிய ஓவியங்கள் சில மங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இஃதன்றி திருவாங்கூரின் பழைய தலை நகரான பத்மநாபபுரம் அரண்மனையில் 17,18 -ஆம் நூற்றாண்டில் தீட்டிய சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் சித்திராள் குன்றிலும் கி.பி. 1725 கிருஷ்ணபுரம் அரண்மனையில் கசேந்திரமோட்சம் என்னும் ஓவியமும் 17-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் சேரநாட்டில் பத்மநாபபுரம் அரண்மனையில் பிள்ளையார் பிள்ளையார் பூசை முதலிய ஓவியங்களும் சாதாவின் ஓவியமும் உள்ளன. திருச்சக்கரபுரத்தில் 18ஆம் நூற்றாண்டின் கிருஷ்ணனும் அவனது பெற்றோர்களும், திருமகள் பார்வதி ஓவியமும் பார்வதியும் சிவனும் நிற்கும் நிலையில் உள்ள ஓவியமும் 18-ஆம் நூற்றாண்டில் மூலக்குளத்தில் பிள்ளையார் உருவ ஓவியமும் திருக்கோதித்தானத்தில் திருமால் ஆதிசேடன் மீது சயனித்திருக்கும் நிலையில் 16 - 18-ஆம் நூற்றாண்டுகளில் தீட்டப் பெற்ற ஒவியமும் பணையங்காவில் தமயந்தி ஓவியமுமாக பண்டையச் சேரநாட்டில் 15 சுவர் ஓவியங்கள் கிடைத்துள்ளன. இஃதன்றி கொச்சி அரசரின் அரண்மனையில் பல சுவர் ஓவியங்கள் கிடைத்துள்ளன. பண்டையக் காலத்தில் சோழநாடு, பாண்டிய தொண்டை நாடுகள் போல் சேர நாட்டில் சிற்பக் கலை வளராவிட்டால் பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இராச ரவிவர்மா மேனாட்டுப் பாணியில் சிற்பக்கலை பயின்று திருமகள், கலைமகள், தமயந்தி, கணபதி, போன்ற கண்கவர் ஓவியங்களைத் தீட்டி இந்தியாவில் இமயந் தொட்டு குமரிவரைப் புகழ் பெற்று ஒவ்வொரு வீட்டிலும் அவர் தீட்டிய படம் இடம் பெற்றுள்ளது. ஓவிய உலகில் இராசரவிவர்மா மங்காத புகழைப் பெற்றுவிட்டார். 1947-க்குப்பின் வங்கத்தின் கவி தாகூரினால் இந்திய ஓவிய உலகில் ஒரு மறுமலர்ச்சி எழுந்தது. அபேனேந்திரதாகூர் முதலிய ஓவிய விற்பன்னர்கள் பலர் வங்கத்தில் எழுந்து இராசரவிவர்மா இத்தாலியப் பாணியில் ஓவியந்தீட்டி நமது பழைய ஓவிய மரபை விட்டு வழி தவறிவிட்டார் என்று குறை நாம் அஜந்தா ஓவியமரபில் இனி ஓவியந்தீட்ட வேண்டும். சுதந்திர இந்தியா ஓவியத்து துறையில் அயல்நாட்டைப் பார்த்து ஓவியந்தீட்டும் அடிமைப் புத்தியை விட்டுவிடவேண்டும். இந்தியா கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை இசைக்கலை, கணிதக்கலை, வானநூற்கலை முதலிய எல்லாக் கலைக்கும் தாயகம் என்று உலக அறிஞர்கள் போற்றிவரும் பொழுது நாம் இராசாரவி வர்மன் வழியில்இத்தாலிய ஓவியக் கலையைப் பின்பற்றுவது அடிமைப்புத்தியை வளர்ப்பதாகும் என்றனர். சுதந்திர இந்தியாவில் அவர்களது வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு அளிக்கப் பெற்று இன்று இந்திய ஓவியக்கலை பழைய மரபு வழியில் முன்னேறி வருகிறது. இந்த அதிகாரம் எழுத துணையாக இருந்த நூல்கள் 1. Studies in Pallava History - The Rev. Heras 2. Pallavas of Kanchi - R. Gopalan. 3. The Pallavas - Prof. I. Dubreil 4. Administration and Social Life under the Pallavas - Dr.C.Meenahkshi 5. Pallavas Antiquities - Prof. I.Dubreil 6. Kanchi - Dr. C. Meenakshi pablication Division Govt of India 7. The Arts and Crafts of - Travancore Dr. St. Krisnesrich London 1948 8. The Great Temple of Tanjore - S. Somasundara pillai - Trichy 1948. 9. சோழர் கோயில் பணிகள் - ஜே. எம். சோமசுந்தரம் சென்னை 1950 10. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி (சென்னை) 1969 11. பல்லவர்கள் வரலாறு - டாக்டர் மா. இராச மாணிக்கம் M. A.Ph.D. 12.மதுரைக் கும்பாபிசேக மலர் - ஓவியம் - மே.சு. இராமசுவாமி B.A. B.L. (மதுரை) 1963. 13. கலைமகள் திங்கள் வெளியீடு (சென்னை) கோயில் வளர்த்த கலைகள் பொதுவாகக் கூறுவதானால் தமிழர்களின் கலைகள் அனைத்தும், கட்டிடக்கலை, சிற்பக்கலை, படிமக்கலை, ஓவியக்கலை, மடக்கலை அணிகலன்களின் முதலிய பல கலைகளையும் வளர்த்தது நமது கோயில்களே என்றாலும் சிறப்பாக நமது கோயில்கள் இசை, இசைக் கருவிகள், நாடகம், நாட்டியம் முதலியவைகளைக் கண்ணெனக் கருதி வளர்த்து வந்துள்ளன என்பது கருத்து உலகில் உள்ள எல்லா சமயத்தினரும், எங்கள் சமயத்தினரும் எங்கள் சமயமும் இசையைக் கண்ணெனக் கருதி வந்துள்ளது என்று சொல்வார்கள். உலகம் அதை ஒப்பாது. ஒப்பினால் நான் எங்கள் தமிழர் நெறி சைவம், வைணவம் ஆகிய இரண்டுமே இசையைக் கண்ணின் கருமணியாகக் கொண்டு எங்கள் கோயில்கள் இசையை இசைக் கருவிகளை, நாடகத்தை நாட்டியத்தைப் பேணி வளர்த்து வந்துள்ளது என்று கூறுவேன். முதலில் எங்கள் சமயம் இசையை எங்கள் கடவுளாய் எடுத்துக் காட்டியிருக்கிறது. நான் சில அந்நிய சமயத்தாரிடம் எங்கள் கடவுள் அன்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று, அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே எங்களின் தமிழ் ஆகமமாகிய திருமந்திரம் சொல்லியிருக்கிறது என்று சொன்னேன். அதற்கு ஒரு சமயி சொன்ன எனது சமயமும் தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று எங்கள் வேதம் கூறுகிறது என்று கூறினார். எங்கள் வேதத்திலும் ஆண்டவன் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறான் என்று எங்கள் புனித நெறி கூறுகிறது என்று கூறி எனது வாயை அடைத்துவிட்டதாக எண்ணிச் சிரித்தனர். நானும் தெய்வம் நம்மீது அன்புடையதாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள் என்றேன்; ஆம் என்றனர். நான் கடவுள் மக்கள் மீது அன்பு செலுத்துகிறவர் என்ற பொருளில் சொல்லவில்லை கடவுளே அன்பு வடிவில் இருக்கிறார் என்று சொன்னேன். விளக்கமாக ஆங்கிலத்தில் T¿nd‹.”There is no ! God but Love” என்ற பொருளில் எங்கள் ஆகமம் கூறுகிறது என்று கூறினேன். அவர் களும் எங்கள் சமயமும் அதே கருத்தில்தான் கூறுகிறது என்றனர். நான் கூறும் கடவுள் வேறு, நீங்கள் கூறும் கடவுள் வேறு என்பது எனது கருத்தல்ல; சமய அறிவர்கள் இறைவனைக் கண்டு உணர்ந்த பொருளில் தான் நாம் வேற்றுமை காண்கின்றோம் என்று கூறி சிவன் எல் அல்லா எகோவா என்று கூறும் சொற்கள் வேறானாலும் ஒருவரைத்தான் வெவ்வேறு பெயர்களில் கூறப்படுகிறது என்று சமய ஒருமைப்பாட்டிற்கு வந்தோம். அதேபோல் தமிழர் நெறியாகிய சைவ நெறியை மறுமலர்ச்சி செய்யத் தோன்றிய சமய குரவரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தம் கடவுளாகிய சிவபெருமானை ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் (7-51-10) என்று தம் தேவாரத் திருப்பதிகத்தில் போற்றிப் பாடியுள்ளார். மேலும், ஏழிசையேழ் நரம்பின் ஓசையை (7-83-6) பாட்டகத்து இசையாகி நின்றானை (7-62-3) என்றும் ஆளுடை நம்பி என்னும் சுந்தரர் தம் தேவாரத் திருப்பதிகங் களில் இறைவன் இசையாய் இருக்கின்றான் என்னும் உண்மையை எடுத்துக் காட்டியுள்ளார். நமது செவிகளுக்கு இன்பந்தந்து உணர்வூட்டும் நாதத்தை ஓசை என்பர். அந்த உணர்வுடன் நற்பொருளை அறிவுறுத்தும் முறையில் மக்கள் உள்ளத்திற்பதியும் செவிப்புலனாம் அணுத்திரளை ஒலியெனவும் பகுத்துள்ளனர். இறைவன் ஓசை ஒலி எனும் இருவகை நுட்பங்களாக பிரிவின்றி இயைந்து நின்று எல்லா உலகங்களை இயக்கி வருகின்றான் இதனை, ஓசை ஒலி யெலாம் ஆனாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே என்ற திருத்தாண்டகம் இனிது உணர்த்துகின்றது. மேலும் இசையாகிய இறைவன் மக்கள் உள்ளத்தை உருக்கி இன்ப அன்பினை பெருக்கும் முறையில் இசையுருவாக விளங்கி தசைகளுக்குப் பலமூட்டி நலம் நல்குகின்றான். இசைக்கு ஏற்புடைத்தாய் விளங்குவது தமிழ் என்றும் இறைவன் பண்ணார் இன்தமிழாகவும் பாட்டகத்து இசையாகவும் விளங்கி இன்பம் நல்குகின்றான் என்றும் பாட்டில் பண்ணாக இயைந்த இறைவன் தன்னை இசையால் பணிந்தேத்தும் அன்பர் களுக்குத் தோன்றாத் துணையாய் வந்து அருள் பாலிக்கின்றான் என்றும் தேவார ஆசிரியர்களாகிய நமது சமய குரவர்கள் பல இடங்களில் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். பழத்தினிற் சுவையும் கண்ணிடை மணியும் போன்று இசை வளர்க்கு உறுதுணையாய் பண்ணிற் கலந்து இசைக்குச் சுவையும் ஏற்றமும் அளிக்கின்றான். இதனை பண்ணினார்ப் பாடலாகிப் பழத்தினில் இரதமாகி கண்ணினாற் பார் வையாகி என்று அப்பர் அடிகளும் பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் (7-229-6) என்று சுந்தர மூர்த்தி நாயனாரும் இறைவனை இசைக்க உவமித்துப் போற்றுவது இனிது விளங்கும். இறை பண்ணாகவும் பண்ணகத்தே இனிய ஓசையை எழுப்பும் தமிழாகவும் திகழ்கின்றான் என்று, பண்ணும்பத மேமும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்ற தொர் சுவையுமுறு தாளத் தொலிபலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ் சுடர் மூன்றும் விண்ணும் முழு தானானிடம் வீழிம் மிழலையே (1-11-4) என்னானவன் இசையானவன் இயலும் இசையானை (1-16-6) பாலின் இசைக் குழகர் (3-46-3) என ஆளுடையபிள்ளையாரும், பண்ணின் ஓசை பழத்தினில் இன்சுவை (5-47-8) பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம் (6:15-1) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மருவற்கினிய பண்ணகத்தான் பத்தர் சித்தத்துள்ளான் (4-12-6) . . . . . . . . கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற பண்ணவன் காண் பண்ணவற்றின் றிறனாவான் காண் (6-52-1) முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (6-23-9) இசையாய் இசைவடிவாய் விளங்கும் இறைவனை தமிழினம் இசையாலே பண்டு தொட்டு வழிபட்டு நிற்கின்றனர். இறைவனது புகழை விரித்தோதும் தோத்திரங்களாகிய இனிய பாடல்களை திருக்கோயிலில் நாள் வழிபாட்டில் இறைவனுக்கு திருமஞ்சனமும் நறுமலரும், திரு அமுதும் தூப தீபமும் நான்மறைமுழக்கமும் இன்றியமையாதது போல் இன்னிசைப் பாடல்களாகிய நால்வர்களின் தேவார திருவாசகப் பாடல்களும் இன்றியமையாதன வாகும். இந்த இனிய இசைத் தமிழ் பாடல்களாகிய தோத்திரங் களைத் தாளத்தோடு யாழ், வீணை, முழவு, மொந்தை, பஞ்சமுக முரசு, குடமுழா, தகை, தண்ணுமை, சாரங்கி, இடக்கை, திமிலை முதலிய இசைக் கருவிகளோடு அடியவர்கள் பாடும் பாட்டிற்கு இறைவன் நொடிப்பொழுது சுணங்காது செவியுற்று அருள்புரிவான் என்பது தமிழகச் சான்றோர் திருவாக்கு. தமிழின் நீர்மைபேசி தானம் வீணை பண்ணி நல்ல முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை யிடம் ஓவார் (1-73-8) என சம்பந்தப் பிள்ளையாரும் யாழின் பாட்டையுகந்த அடிகளே (5-41-5) மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் (6-7-5) என்று அப்பர் அடிகள் அருளிய அருள்பாக்கள் பாடுவோர் அனைவருக்கும் இறைவன் அருள் திறத்தை இனிது புலப்படுத்தும் திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரர் திருமணத்தில் இறைவன் ஒரு முதியவர் வேடத்தில் வந்து ஆருரனே எனக்கு உன் குடி முழுதும் அடிமை என வாதிட்டு ஆவணம் (பத்திரம்) காட்டி ஆரூரனை அடிமை யாகக் கொண்டு, நீ நம்முடன் வன்மொழி பேசினை ஆனதால் வன்றொண்டன் என்னும் பெயரைப் பெற்றாய் - எனவே நீ அன்பினால் நமக்குச் செய்யத்தக்க வழிபாட்டிற்குரிய மந்திரம் இசை நலம் வாய்ந்த தமிழ்ப் பாடல்களேயாகும். எனவே இவ்வுலகில் இயலிசைத் தமிழ்ப்பாடல்களால் போற்றுவாயாக என்றார். இந்நிகழ்ச்சி, மற்றும் நீ வன்மைபேசி வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடு என்றார் தூமறை பாடும் வாயார் (தடுத் 70) எனத் திருந்தொண்டர் புராணத்தில் ஒக்கத் தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது. சமயகுரவர்களாகிய அப்பர் சம்பந்தர் முதலியவர்கள் காலத்தில் கோயில்களில் வழிபாட்டுக் காலத்தில் தமிழ் முதலிடம் பெற்றுள்ளது. இறைவனது அருள்திறம் போற்றும் பக்திப் பாடல்களாகிய இசைத் தமிழ்ப் பாடல்கள் சிறப்பிடம் பெற்றன. இவை கோவில்களுக்கு வரும் மக்கள் உள்ளத்தை உருக்கி பக்தியைப் பெருக்கியது. இனிய இசைத் தமிழ்ப் பாடல்களாகிய தோத்திரங் களை தாளத்தோடும் யாழ், வீணை, சாரங்கி, முழவு, மொந்தை, இடக்கை, தக்கை, தண்ணுமை, திமிலை முதலிய இசைக் கருவிகளோடும் பாடி வந்தனர். இசைப்பாடலை இசைக் கருவிகளோடு பாடுவது இறைவனுக்கு உகந்தது என்று சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் சொல்லிப் போந்தனர். எடுத்துக்காட்டாக, தமிழின் நீர்மை பேசி தாளம் வீணை பண்ணி நல்ல முழவும் மொந்தை மல்கு பாடல் செய்கை யிடம் ஓவார் 1-73-8 வந்தனை நின்னிசை பாடுவார் பால் மன்னினார் 1-8-.5 என சம்பந்தரும் யாழின் பாட்டை யுகந்த அடிகளே பண்ணார்ந்த வீணை பயின்றவனே குழல் கொண்டும் யாழ் கொண்டும் என்று அப்பரும், குழல் வீணை கொடு கொட்டி மணிமு ழாமுழக் கஅருள் செய்த தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி கொக்கரை குடைமுழவி னோடிசை என்று சுந்தரரும், இன்னிசை வீணையர் என்று மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்கள். இதைப்போல் ஆழ்வார்களும், இறைவன் இசைக் கருவிகளோடும் பாடுவதை கேட்டு இன்பம் நல்குபவன் என்று எடுத்துக் காட்டியுள்ளனர். தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழிசையும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளன என்று தமிழ் அறிஞர்கள் கூறிவருகிறார்கள். ஆதியிசைகள் சுமார் 12,000 என்பர் தமிழ் இசைப் புலவர்கள். நாப்படையால் உரைக்கப் பட்ட பதினோராயிரத்து தொள்ளாயிரத்து தொணணூற்றொன்றாகிய ஆதி இசைகள் என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறி இருப்பதைக் கொண்டு பண்டையத் தமிழர் தம் நுண்மாண் நுழைபுலத்தின் சிறப்பால் கண்ட 1199-இல் தமிழர் அரசு வீழ்ந்தமையாலும் தமிழ் இசைப் புலவர்களின் அக்கறை இன்மையாலும் இசையைப் பேணாது அழியும்படி விட்டுவிட்டனர். தேவார ஆசிரியர் காலத்திற்கு முன் 103 - பண்கள் இருந்தன என்று தெரிகிறது. அவைகளிலும் பலமறைந்து விட்டன. தேவார ஆசிரியர் தம் பாடல்களுக்கு பாணர்களைக் கொண்டு பண் அமைத்தனர். அதனால் அப்பர், சம்பந்தர் காலத்தில் 23 - தமிழ்ப் பண்கள் உயிரோடு நிலவின என்று தைரியமாக கூறலாம். சிவநெறி மருதநிலத்தில் தோன்றி தனக்குரிய யாழையும் முரசையும் 23 - தமிழ்ப் பண்களையும் பாடிக் காத்து வந்தது போல் முல்லை நிலத்தில் தோன்றிய திருமால் நெறி முல்லையாழையும் முல்லைப் பறையையும் திருவாய் மொழிக்காக வகுக்கப்பட்ட பண்களையும் பேணிப் பாதுகாத்து வந்தது. திருவாய் மொழிப்பாடல்களின் நூற்பதிப்பினுள்ளே பாடலுக்குரிய பண்ணும் இராகமும் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவாய் மொழியில், தேவாரத்தில் உள்ள 23 - பண்களில் 13 பண்கள் மட்டும் இதில் உள்ளன. இஃதின்றி தேவாரத்தில் குறிப்பிடாத 6 பண்கள் திருவாய் மொழியில் உள்ளன. தேவார ஆசிரியர்கள் மூலமும் திருவாய் மொழி ஆசிரியர்கள் மூலமும் நாம் 29 பண்களின் பெயர்களைக் காண் கிறோம். இந்த 29 பண்களில் 15 தமிழ்ப் பண்களை மரபு வழுவாது பாட தமிழ் நாட்டில் ஆள் உண்டா என்பது ஐயம். திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோயிலில் சாரங்கியும், பாணியும் உள்ளது. மீட்டுவாரில்லை. சாமி சன்னிதியிலும், அம்மன் சந்நிதியிலும் இசைத் தூண்கள் மீட்டுவாரின்றி நின்றன. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எனது உறவினரும் தோழருமான இசைமணி திரு. கா. சங்கரனார் அதைத் தட்டி சுரம் பாடச் செய்து டேப் ரிக்காடும்- இசைப் பதிவும் செய்துள்ளார். திருச்சி வானொலி நிலையம் அதை ஒலி பரப்பியுள்ளது. பலர் அதைக் கேட்டிருக்க மாட்டார்கள். விரைவில் திருநெல்வேலி வானொலி நிலையம் மீண்டும் பதிவு செய்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் கேட்டு இன்புறுமாறு விரைவில் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். நெல்லையப்பர் கோயிலில் பாணி என்னும் தோல் கருவியும் உள்ளது. திருவரங்கம் கோயிலில் இன்றும் பழைய இசைக் கருவிகளில் ஒன்றான தக்கை இருக்கிறது. வாசிக்கப்பட்டும் வருகிறது. தக்கை தேவார ஆசிரியர்கள் காலத்தில் இருந்துவரும் ஒரு பழைய தோற் கருவியாகும். இது இடை சுருங்கிய பறை இனத்தைச் சேர்ந்தது. தக்கை என்னும் தோற்கருவியை இன்றுள்ள பல இசைப் புலவர்கள் கண்டும் கேட்டும் அறியார்கள். இக்கருவி ஒவ்வொரு ஆண்டிலும் திருவரங்கத்தில் திருமால் கோயிலில் கார்த்திகைத் திங்களில் அமாவாசை கழித்த 16 - ஆம் நாளில் கவுசிக் ஏகாதசியில் அரையர் திரு நெடுந்தாண்டவம் சேவிப்பார். அப்பொழுது தக்கை துணைக் கருவியாக வாசிக்கப் படும். மார்கழித் திங்களில் வரும் அமாவாசை கழித்த 14 -ஆம் நாள் வைகுண்ட ஏகாதசியில் அரையர் திவ்வியப் பிரபந்தம் சேவித்து ஆடும் பொழுது தக்கை துணைக்கருவியாக வாசிக்கப்படும். இங்கு தவளை மத்தளமும் துணைக் கருவியாக வாசிக்கப்படுகிறது. ஒத்து முடிந்ததும் பதிகத் தொடக்கத்திற்கு தக்கை வாசிக்கப்படும். பின் அறுதி வைத்து முடிக்கப்படும். அப்பால் சுத்த மத்தளம் தக்கை என மாறி மாறி வாசிப்பது மரபு. இன்று திருவரங்கத்தில் சீதாராமன் மகன் குமாரசாமி தக்கை வாசித்து வருகிறார். வேறு எங்கும் தக்கை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குட முழாவும் பஞ்சமுக முரசும் தமிழ் நாட்டில் பஞ்ச முக முரசைப் பார்ப்பது அரிது. மொத்தத்தில் நாட்டில் நான்கிற்கு மேல் காண்பதரிது. இதனை ஐமுக எழினி என்றும் மத்தளத்தை இருமுக எழினி என்றும் புஷ்கரத்தை மும்முக எழினி என்றும் குடமுழாவை ஒருமுக எழினி என்றும் கூறுவர். பஞ்சமுக முரசு திருவாரூர்க் கோயிலும் திருத்துறைப் பூண்டி, திருவானைக்கா கோயில்களில் உள்ளன. ஒரு பெரிய குதில் போன்ற பெரிய வடிவில் 5 நாளி போன்ற முகத்தில் தோல் கட்டப் பெற்றிருக்கும். இதனைப் பஞ்ச முரசு என்பர். இது முன்னாளில் மண்ணால் செய்யப்பட்டது. இப்பொழுது உலோகத் தகடுகளால் செய்யப்பட்டு இசைக்கப்படுகிறது. இதற்குத் துணைக் கருவியாக குடமுழா வாசிக்கப்படுகிறது. இது சுடு மண்ணாற் செய்யப்பட்டு மேலே தோல் போர்த்தப்பட்டிருக்கும். இசையும் இசைக் கருவிகளும் எனவே தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் வடமொழி மந்திரங்களோடும் தேவாரம், திருவாசக, திருவாய் மொழி முதலிய பக்திப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களில் தேவாரம் தமிழ் பண்களோடு பாடுவதற்கு ஓதுவார்கள் பண்டு தொட்டு பாடுப்பட்டு வருகின்றன. ஓதுவார்களுக்கு கோயிலிருந்து மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பலவிடங்களில் தேவாரம் பாடசாலை நிறுவி மக்களுக்குப் பண்னோடு பாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இஃதன்றி எல்லாக் கோயில்களிலும் நாகசுரம், மேளம், ஒத்து ஊதுதல் தாளக் கருவிகள் மீட்டல் தவறாது நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோயிலில் தேவாரம் ஓதவும், சாரங்கி என்னும் இசைக்கருவியை மீட்டவும், வடமொழி ஆகமங்களை ஓதவும் நெல்லையில் இசைமணி, சா. சுந்தர ஓதுவாரின் முன்னோர்கள் காஞ்சியிலிருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்களின் முன்னோர்கள் வடமொழி ஆகமங்களும் ஓதப் பயின்றிருந்ததால் அவரை ஆகம சைவர் என்று அவர்களுக்குப் பட்டயம் அளிக்கப் பெற்றிருந்தது. நெல்லை திரு. சுந்தர ஓதுவா மூர்த்திகளின் தந்தையார் சாலிவாடீசுவர ஓதுவாமூர்த்தி அவர்கள் தேவாரம் மட்டும் ஓதும் ஓதுவாராக இன்றி இசையும் தமிழ்ப் புலமையும் பெற்றவர்களாவர். சுமார் 100 - ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல்வேலி முத்தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் புலவராயும் இருந்தார்கள். திருசாலிவாடீசுவரமூர்த்தி அவர்களும் அவர்கள் மகன் சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்களும் திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி கோயிலில் பரம்பரையாய்த் தேவாரம் பாடி மானியம் பெற்று வந்த ஓதுவா மூர்த்திகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அம்பா சமுத்திரம், கடையம் முதலிய ஊர்களில் சிறந்த முறையில் தேவாரத்தைப் பண்ணோடு பாடும் ஓதுவார்களாகவும் சாரங்கி மீட்டும் இசைப்புலவர்களாகவும் இருந்து வந்தனர். இப்பொழுதும் ஆங்காங்கே அவர்கள் குடும்பத்தில் பலர் இருந்து வருகின்றனர். ஆனால் கோயிலில் தேவாரம் ஓதும் தொழிலைப் பலர் விட்டு விட்டனர். ஆனாலும் சுந்தர ஓதுவாமூர்த்திகளின் பேத்திமார்கள் இந்திராவும், வள்ளிநாயகியும் இசைப்பயின்று ஆங்காங்கே தேவாரக் கச்சேரி செய்து வருவது சைவ சமயபக்தர்கள், இப்பெண் மக்கள் தங்கள் முன்னோர்கள் கண்ட தேவார இன்னிசை மரபைப் பாதுகாத்து வருவது கண்டுமகிழ்ச்சி அடைந்து வாழ்த்தி வருகின்றார்கள். பஞ்ச வாத்தியம் கேரள நாட்டில் கோயில்களில் நடைபெறும் உற்சவ காலங்களில் பஞ்ச வாத்தியங்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள். பஞ்ச வாத்தியம் தேவ வாத்தியம் என்பர். முன்னாளில் திமிலை, இடக்கை, சங்கு முரளி (முகவீணை) மிருதங்கம் ஆகியவை பஞ்ச வாத்தியம் எனப்படும். பழங்காலத்தில் பஞ்ச வாத்தியத்தின் அங்கமாகப் பாட்டும் இருந்துவந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பஞ்ச வாத்தியங்கள் சிலவற்றை கேரள அறிஞர்கள் மாற்றியுள்ளனர். மிருதங்கத்திற்குப் பதிலாக சுத்த மத்தளமும் முரளிக்குப் பதிலாகப் பாண்டி மேளத்திற்குப் பயன்படுத்தும் கொம்பும் பயன்படுத்தப் பட்டன. பஞ்ச வாத்தியத்தில் திரிபுடதாளம், நான்கு காலமுள்ள ஒருபல்லவி சுரம்பாடுவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பஞ்ச வாத்தியத்தின் தாளக்கட்டு சிட்டைப்படுத்தப் பெற்றுள்ளது. திரிபுடதாளத்தில் நான்கு காலமாக பஞ்சவாத்தியம் இசைக்கப் பட்டது. முதல் காலம் 56 எழுத்துக்களின் காலம், இரண்டாம் காலம் 23 எழுத்துக்களின் காலம், மூன்றாம் காலம் 14 எழுத்துக்களின் காலம், நான்காம் காலம் 7 எழுத்துக்களின் காலம் என்று முறைப் படுத்தியுள்ளனர். இறுதியில் வாத்தியம் ஏக தாளத்தில் முடியும். பஞ்ச வாத்தியத்தை திரிபுடதாளத்தில் மட்டும் வாசிக்கப்பட வேண்டுமா? என்று தமிழ்நாட்டில் ஒரு வினா எழுந்தது. சம்பை ரூபகம் முதலிய தாளத்திலும் வாசிக்கலாம். களிப்பூட்டும் இந்தக் கூட்டு வாத்தியத்தை புது வழிகளில் வாசித்து புதுவழிகளைக் காண்பதில் தவறில்லை பல தமிழ் இசைப் புலவர்கள் கூறியுள்ளனர். இப்பொழுது வாசிக்கும் ஐந்து வாத்தியங்களில் கூட சில மாற்றங்கள் செய்யலாம் எனச் சிலர் கருதுகிறார்கள். பஞ்ச வாத்தியங்களில் கொம்பும் சுத்தமத்தளமும் சேர்த்ததால் ஆசுரமாக மாறிவிட்டது. சுத்தமத்தளத்திற்குப் பதிலாக மீண்டும் மத்தளம் இடம் பெறலாம். சுத்தமத்தளத்தின் நுனியின் முழக்கத்தில் திமிலை யின் காதுக்கு இனிய தகாரமும் தோங்காரமும் இடக்கையின் இனிய சில சமய செவிக்குப் புலப்படாது போய்விடுகின்றன. இனிமையும் மிருதுவுமான தெய்வத் தன்மை வாய்ந்த பஞ்ச வாத்தியத்திற்கு மிருதங்கம் மிகவும் ஏற்புடைத்தது. கொம்புக்குப் பதிலாக நாகசுரத்தைப் பயன்படுத்தலாம். இதில் சங்கு வேண்டாம். அது சுருதிக்காக மட்டும் இருக்கிறது என்று எண்ணப் படுகிறது. அது சரியல்ல. திரிபுடை, சம்பை, ரூபகம் ஆகியதாளங் களில் சங்கை வாசிப்பது நல்லது. திருப்பதிக்கோயில் சங்கைத் திறமையுடன் வாசிப்பதை பலர் அறிந்து பாராட்டி யுள்ளனர் அங்கு சென்று நாமும் அதைக் கற்று வரலாம். இடக்கை, திமிலை, மிருதங்கம், நாதசுரம் , சங்கு ஆகியவைகள் கொண்ட ஐந்து வாத்தியங்கள் இணைந்த கூட்டு வாத்தியம் சிறந்ததென்று கருதப்படுகிறது. இசைக்கருவிகள் தமிழ் நாட்டில் சங்க காலத்தில் 1000த்திற்குமேற்பட்ட தோற்கருவிகளும் நூற்றிற்கு மேற்பட்ட நரம்புக் கருவிகளும் 50க்கும் மேற்பட்ட குழற்கருவிகளும் 15க்கும் மேற்பட்ட கருவிகளும் இருந்தன. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் சுமார் 31 தோற்கருவிகளின் பெயர்களைச் சொன்னார். ஐந்து நிலத்திற்கும் ஐந்து நரம்புக் கருவிகளின் பெயர்களைச் சொன்னார். எட்டு குழல்களையும், 4 கஞ்சக் கருவிகளையும் சிலர் எடுத்துக்காட்டி யுள்ளனர். இசைக் கருவிகள் தமிழகக் கோயில்களில் பூசைக் காலத்துப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே கோயில்களில் இருந்து வந்தன. இதற்கு தேவாரம் திருவாசகம் முதலிய நூற்கள் சான்று பகர்கின்றன. அடியார்க்கு நல்லார் கூறும் 31 - தோற்கருவிகளில் இல்லாத பல தோற்கருவிகளின் பெயர்கள் கூட தேவாரங்களிலும் திருவாசகத்திலும் பிற நான்கு திருமுறைகளிலும் உள்ளன. கோயில்பூசைக்கு அஷ்டாஷ வாத்தியங்கள் 18 பயன் படுத்தப்பட்டுள்ளன. அவை முறையே 1. பேரிகை 2. தமருகம் 3. தவில் 4. துந்தினா 5. துந்துபி 6. காகலம் 7. மத்தளம் 8. மட்டுக்கம் 9. நுபுரா 10. பானகம் 11. படகம் 12. சப்தம் 13. தாளம் 14. தம்புரு 15. துரியம் 16. வேணு 17. வீணை 18. மிருதங்கம் எனப்படும். கோயில் முரசுகள் 26. இலிங்காயத சமய அறிஞர்கள் விவேக சூடாமணி என்னும் நூலில் பஞ்சமகாசப்தம், சிரிங்கா, வம்மலதா, சங்கபேரி செயகோசா என்ற ஒலிகளையுடையது என்பர். கோயில் முரசு 26 இன் பெயர்கள்: 1. பஞ்சமுக வாத்தியம் 2. நகரா 3. தமருகம் 4. உடுக்கை 5. தவண்டை 6. பம்பை 7. கனகதப்பட்டை 8. உடல் 9. பெரிய உடல் 10. சின்ன உடல் 11. வீரவண்டி 12. சூரியப்பிறை, சந்திரப்பிறை 13. திமிலை 14. செண்டை 15. சுத்த மத்தளம் 16. இடக்கை 17. சக்கி, 18. முட்டு 19. தக்கா 20. வீரமத்தளம் 21. தக்கி 22. செய பேரிகை 23. டங்கா 24. டங்கி 25. வீரமல்லாரி 26. தப்புப் பலகை என்பனவாகும். தோற்கருவிகள் பல உள. இவைகளை இறைவனே இசைத் தான் என்று தேவார திருவாசகங்களில் கூறப்பட்டுள்ளன. நரம்புக் கருவிகள் பண்டைக் காலத் தமிழர்கண்ட நரம்புக் கருவிகளில் யாழ், வீணை, கின்னரம், தும்புரு, தம்புரா, குழல்சங்கு, கஞ்சக்கருவி போன்றவைகள் சிறப்பான கருவிகளாகும். யாழ் வீணை குழல் போன்ற கருவிகள் மக்களை மட்டுமல்ல விலங்குகளின் உள்ளத்தையும் ஈர்க்கவல்லது. யாழ் தெய்வத் தன்மை வாய்ந்தது. அதனை அறிஞர்கள் தீஞ்சுவை நல்கும் தெய்வ நல் யாழ் என்றார்கள். சிவ பெருமானே யாழை மீட்டி வந்தார். வீணையை இசைத்து வந்தார் என்று கூறப்படுகிறது. அப்பர் அடிகள் அறை கலந்த முதல் மொந்தை வீணை யாழும் பண்ணொடு யாழ் வீணை பயின்றாய்ப் போற்றி ஏழிசை யாழ்வீணைமுரலக் கண்டேன் பண்ணார்ந்த வீணை பயின்றவனே (அப்பர்) என்று திருப்பாசுரத்தாலும் இறைவன் யாழ்முறிநாதன் என்றும் இறைவி யாழ் மொழியாள் , யாழார் மொழிமங்கை என்று இருத்தலாலும் இறைவன் வீணாதர தட்சணா மூர்த்தியாயும், திருமால் எப்பொழுதும் தம் வாயில் வேய்ங்குழலை வைத்து ஊதிக் கொண்டிருப்பதாலும் உமாதேவிக்கு ஏழிசை வல்லபி என்ற பெயர் இருத்தலாலும் கலைமகள் தம் கையில் வீணையைத் தாங்கி இருப்பதாலும் பிள்ளையார் கூட தம் கையில் வீணையைத் தாங்கி ஆடிக் கொண்டிருப்பதாலும் நமது இசைக் கருவிகள் தெய்வத் தன்மை வாய்ந்தவைகள் என்று அறிவதோடு அன்னியர் ஆட்சியி யாலும் நமது மக்களின் அறிவின்மையாலும் தெய்வீக நல்யாழ் உள்பட நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளை இன்று இழந்த நிலையில் இருக்கின்றோம். மீண்டும் நமது ஆட்சியில் அவற்றை யெல்லாம் உயிர்ப்பிக்க முயல்வோமாக. நாட்டியமும் தாண்டவமும் உமாதேவி ஆடினால் அது வாசியம். சிவபெருமான், ஆடினார் தாண்டவம். ஆண், வேடமிட்டு ஆடுவது நாட்டியம். ஆண் பெண் வேடமிட்டும் பெண் ஆண் வேடமிட்டு ஆடுவதும் நிருத்தம் முற்காலத்தே தமிழகத்தில் ஆங்காங்கே கன்னி மாடம் அமைத்து திருமண வாழ்க்கையை விரும்பாத மகளிரும், இளவயதில் கைமையடைந்த மாதரும், பெண்ணும் இல்லாதவாறு அலியாய் தோன்றிய மாதரும் கன்னிமாடத்தில் சேர்ந்து வாழ்ந்துவந்தார். அங்குள்ள கோயிலும் சைவ மக்களும் அந்த கன்னிமாடத்திற்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தனர். கன்னிமாடம் சைவ மங்கையர்கள் தவிர சமண மங்கையர்களையோ சாக்கிய சமயப் பெண்மக்களையோ சேர்த்துக் கொள்ளாது. தெளிவாகச் சொன்னால் இது சைவசமயக் கன்னியர் மடம் என்று கூறலாம். இவ்வாறு ஆடவர்களுக்கும் தனியே பல ஊர்களில் நமது திருவாடுதுறை திருப்பனந்தாழ், தர்மபுரம் போன்று பல மடங்கள் இருந்தன. கன்னியர் மடத்திலுள்ள பெண்கள் சிவதீட்சை பெற்றவர்கள். அதிகாலையில் எழுந்து நீரில் மூழ்கி கோயிலுக்கு என்று நிறுவப்பட்டுள்ள நந்தவனத்தில் பிச்சி முல்லை இருவாச்சி சம்பங்கி முதலிய மலர்களைக் கொய்து மாலையாகத் தொடுப்பார்கள். திருக்கோயிலை மெழுகுவார்கள். கோலம் போடுவார்கள். மலர் மாலைகளை இறைவனுக்குச் சூட்டும்படி பூசாரிகளிடம் கொடுப்பார்கள். இறைவன்மீது பக்திப்பாடல்களைப் பாடுவார்கள். இறைவன் சந்நிதானத்தின்முன் ஆடுவார்கள். இவர்கள் புனிதமான வாழ்வு நடத்தும் சைவ மகளிர் ஆவர். இவர்கள் மீது எவரும் எவ்வித குற்றமும் கூறார்கள். கூறுவதற்கு அக்காலத்து சைவ நன்மக்களோ அரசோ சிறிதும் இடங்கொடாது அவர்களின் தூய்மையான நடத்தையையும் புனித சைவ உலகம் பாராட்டிவந்தது. தனக்கு மணம் பேசி இருந்த ஒருவர் போரில் இறந்துபட்டார் என்பதை அறிந்த அப்பர் அடிகளின் அக்கையர் திலகவதியார் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று மணவாழ்க்கையைத் துறந்து கன்னிமாடத்தில் சேர்ந்து அணிகலன்களையும் பட்டாடை களையும் பகட்டான ஆடைகளையும் அணியாது எளிய வெண்மை யான ஆடைகளை அணிந்துவந்தார். அவ்வம்மையார்க்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. தம்பி ஒருவர் மருள்நீக்கியார் மட்டும் உண்டு. அவர் இளம் பருவத்திலே இளமையும் யாக்கையும் நிலையாது என்று எண்ணி நல்லறங்கள் பல செய்து வரும்பொழுது சமண சமய முனிவர்களால் பாடலிபுத்திரம் என்ற ஊரில் உள்ள சமண மடத்திற்கு அழைத்து அவரை சமண சமயத்திற்கு சேர்த்து அச்சமய நூற்களை நன்கு பயிற்றுவித்து தரும சேனர் என்னும் சிறப்புப்பட்டமும் அளித்தனர். தருமசேனர் என்ற மருள்நீக்கியார் பௌத்த சமயத்தினரில் ஒருசாராராகிய சேரர்களை வாதில் வென்று சமண சமயத் தலைவர்களில் மேம்பட்டவராய் உயர்ந்து விளங்கினார். திலகவதியார் திருவதிகை திரு வீரட்டானத்திருக்கோயிலை அடைந்து சிவ சின்னங்கள் அணிந்து தம்பி மனம் மாறி சிவ சமயத்திற்கு வருமாறு செய்ய நாடோறும் சிவபெருமானை வேண்டித் தொழுது வந்தார். திருக்கோயிலில் திருவிளக்கிடுதல், சாணத்தால் மெழுகுதல், மலர் கொய்து கொண்டு வந்து மாலைகள் தொடுத்தல் முதலிய திருப்பணிகளை செய்து வந்தார். தரும சேனர் சூலை நோயால் வருந்தி அக்கையிடம் வந்து சேர்ந்தார். திலகவதியார் வதிந்த கன்னியர்மாடத்திற்கு வந்து தமக்கையர் காலில் விழுந்து வணங்கித் தன் நோயை நீக்குமாறு வேண்டினார். திலகவதியார் சிவனை நினைந்து ஐந்தெழுத்தோதி திருநீற்றைக் கொடுத்தருளினார். விடியற்காலையில் திருவதிகை வீரட்டானே சுவரர் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார். இறைவனை வீழ்ந்து வணங்கினார். தமிழ் மாலைகளாகிய திருப்பதிகங்களைப் பாடும் உணர்வு உந்தியெழுந்தது. தன்னைப் பீடித்த சூலை நோய் நீங்கியது. உலகை விட்டு கிட்டத் தட்ட மறைந்து போன சைவ நெறியை முதலில் தொண்டை நாட்டிலும் பரவச் செய்த தருமசேனரை, திருநாவுக்கரசர் என்ற பெயருடன் சைவ சமயத் தொண்டராக்கிய பெருமை ஒரு வேளாளப் பெண்மணியாகிய திலகவதியாரையே சேரும். அதேபோல் பாண்டிய நாட்டில் சமண சமய இருள் நிறைந்து கிடந்த பொழுது பாண்டிய அரசனை சம்பந்தர் மூலம் சுர நோக்கி சைவ ஒளி பரப்பிய பெருமை மங்கையர்க்கரசியாரையே சேரும். தமிழ் நாட்டுப் பெண்கள் பிறநாட்டுப் பெண்களை விட நல்லவர்கள் உறுதியான சமயப் பற்றுடையவர்கள் தூய்மையான ஒழுக்கமும் புனிதமான உள்ளமும் பெற்றவர்கள். தமிழ் நாட்டின் துரதிஷ்டம் நமது புனித கன்னிமடத்தை சில பண்டாரங்களும், பூசாரிப் புல்லர்களும் சிவ வேடம் தாங்கி சிவ பக்தர்களின் இச்சையைத் தீர்ப்பதும் சிவ திருப்பணியில் ஒன்று என்று ஏமாற்றி கன்னிமாடத்தில் உள்ள பெண்களை வஞ்சித்து அவர்களுக்குப் பொன்னும் மணியும் பட்டாடையும் கொடுத்து வஞ்சித்து காந்தியடிகள் கூறியது போல் வழுக்கி விழுந்த மாதர்களாக்கி - அதாவது பொது மகளிராக்கி கன்னிமாடங்களை அழித்து விட்டனர். அவர்கள் திருக்கோயிலுக்குச் செய்யும் பணிவிடையால் தேவடியாள் என்று பெயர் பெற்றனர். தேவடியாள் என்பது தெய்வத் தொண்டு செய்யும் புனிதப் பெண் என்றே பொருள்படும். இதன் சிறப்பை அறிந்தே மாமன்னனாகிய இராசராசசோழன் மனைவி மாதேவடியாள் என்றும் பெயரைத் தாங்கி இருந்தாள். அவள் பதிவிரதை புனிதமான பட்டத்தரசி ஏராளமான செல்வங்களை கோயிலுக்கு மானியமாக அளித்தாள். இன்று அவளது பேத்தியோ அல்லது அவள் வழியில் வந்த ஒரு அரசகுலப் பெண் உலகப்புகழ் பெற்ற மாபெரும் மன்னன் இராசராசன் மனைவியின் சிறந்த பெயரை வைக்க நாணும்படி சைவப் பெருமக்களின் தீச்செயல் தமிழ்மொழியின் பெயரை கெடுத்துவிட்டது. சைவ கன்னிமாடத்தில் உள்ள பெண்கள் எவ்வளவோ கெட்டழிந்து போன காலத்தும் அவர்கள் தமிழிசைக்கும், நாட்டியக்கலைக்கும் ஆற்றிய தொண்டை தமிழுலகம் மறக்க முடியாது. இப்பெண் மணிகள் நம் சமயத்திற்கு பெருந்தொண்டாற்றி அவர்களின் இசைச் சிறப்பாலும் நாட்டியத் திறமையாலும் இன்று கோடி கோடியாய் பணந்திரட்டி எத்தனை மகளிர் கல்லூரிகள், நாட்டியக்கலாசாலை நிறுவியிருக்கமுடியும். சைவ சமய மக்கள் நமது கன்னிமாடப் பெண்களின் கற்பைச் சூறையாடியவர்கள் மடாதிபதிகளாயினும், பூசாரிகளாயினும், தருமகர்த்தாக்களாயினும் அவர்கள் செய்த மன்னிக்கமுடியாத குற்றங்களுக்கு கழுவாய்த் தேடியே தீரவேண்டும். தவறு நமது நாயன்மார்களிடத்திலிருந்தாலும் தெய்வத்திடம் இருந்தாலும் இந்த இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான உலகம் அவர்களின் தீய செயலைக் கண்டு மௌனியாய் இராது மன்னிப்பும் அளிக்காது. நமது திருக்கோயில்களை நமது மக்களும், அரசும் கவனித் திருந்தால் நமது இசை அழிந்திராது 103 பண்களாவது நிலைத் திருக்கும். 1000 - இசைக் கருவிகளாவது கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். தாண்டவமும் லாகியமும் கூத்துகளும் வளர்ச்சி பெற்றிருக்கும். 5000 - ம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தும், மெசபொத்தாமியா முதலிய இடங்களிலும் பர்மா, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, சாவா, பாலித்தீவு, போர்னியோ கிரீட், ஈடர் தீவுகளிலெல்லாம் பரவிய சிவநெறி நமது கன்னியர்களும் ஆண்களான சாமியார்களும் நமது கலைகளின் மூலம் உலகம் அனைத்தும் சிவநெறியைத் தழுவி இருக்குமாறு செய்திருப்பார்கள். யூதர்களுக்கு எருசலேம் போன்று கிறிதவர்களுக்குப் பெத்லேகம் போன்று, முலிம்களுக்கு மெக்கா போன்று சிவனை வழிபடும் சைவர்களுக்கு சிதம்பரமும், மதுரையும், திருநெல்வேலியும் காஞ்சியும் புனிதநகர்களாய் கோடானு கோடி செவ்வந்தியர்களும் நீக்ரோவர்களும், மங்கோலியர்களும், ஐரோப்பிய வெள்ளையர்களும் யூதர்களும் பிறரும் வந்து களிக்கும் புனித தலமாக இருந்திருக்கும். ஒரு ஆண்டிற்கு இந்தியாவிற்கு இந்த யாத்திரீகர்களால் 1000 கோடி ரூபாய் வந்து சேர்ந்து வரும். நந்தவனம் திருக்கோயில்களில் அன்றாடம் நடை பூசைகளுக்கும் திரு உருவங்களுக்கும் திருவிளக்குகளுக்கும் மாலைகளும் சரங்களும் பந்துகளும் விடுபூக்களும் தேவையாய் இருந்தன. புட்ப விதியில் குறிப்பிடப்பட்ட மலர்கள் மட்டுந்தான் கோயில்களில் பயன்படுத்தப் படவேண்டும். மிகத் தொன்மையான காலத்திலிருந்து நந்தவனங்கள் கோயில் உள்ளேயும், வெளியேயும் இருந்து வந்தன. நிறைவான பெருங்கோயிலில் கோயில் கட்டும் பொழுதே திருமதில்களுக்கு உட்புறம் நந்தவனத்திற்கென்று தனி இடமும் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்கு கிணறும் தெப்பமும் உண்டு பண்ணியிருந்தனர். நாயன்மார்களில் ஆண்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமய குரவர்களாக உயர்பதவி வகித்த நாயன்மார்களும் நந்தவனத்திற்கு நீர்பாய்ச்சுதல் கோயில்களைச் சுத்தம் செய்தல் முதலிய திருப்பணி விடைகளைத் தவறாது செய்து வந்தனர். திருநாவுக்கரசர் எப்பொழுதும் தனது கையில் புல் செதுக்கும் கருவியைத் தாங்கியிருந்தார். உழவாரப் படை கையிலுடையான் என்று பதினோறாந் திருமுறையில் கூறப்பட்டுள்ளது. அவர் செல்லும் கோயில்களில் புற்களைச் செதுக்கும் திருப்பணியைத் தவறாது செய்துவந்தார். இன்று சுவாமி தெரிசனம் செய்ய ½ பர்லாங்கு தொலைவு செல்ல வெள்ளிப் பல்லக்கில் செல்லும் மடாதிபர்கள் இதைச் சிந்தித்து பார்க்கும்படி பணிவாய்க் கேட்டுக் கொள்கிறேன். நமது சமயத்தை வளர்த்த நாயன்மார்களின் திருப்பணியை நினைந்து அவர் வழியில் செல்வதே உண்மையான பக்தர்களின் கடமையாகும். ஆண் மகனான நாயன்மார்களும் பக்தர்களும் நந்தவனத்திற்கு நீர் இறைத்து பாய்ச்சி வந்தனர். கன்னிமாடத்திலுள்ள மகளிர் பூக்கொய்து மாலைகளும் பூச்சரங்களும் பூச்செண்டுமாக பலவிதமாகப் பூக்களைத் தொடுத்து இறைவனையடைய திருஉருவங்களில் சாற்றும்படி செய்து வந்துள்ளனர். கட்டிடக்கலை, படிமக்கலை, ஓவியக்கலை போன்ற 64 கலைகளில் பூத்தொடுத்தலும் ஒரு கலை. பூத் தொடுக்கும் கலையை கன்னிமாடத்தில் வாழும் மகளிர் நன்கு கற்றிருந்தனர். அதோடு ஆடவும் பாடவும் பயின்றிருந்தனர். நந்தவனங்களில் பூசைக்குதவாத மலர்கள் இடம் பெறாது. பூசைக்குரிய மலர்ச் செடிகளை இனவாரியாக நட்டு நீர்பாய்ச்சி பூத்தபின் விடியற்காலத்திலே அவைகளைப் பறித்துத் தொடுத்து கோயிலுக்குச் கொண்டு போய்ச் சேர்ப்பர். பூப்பறித்து மாலைகள் கட்டும்பணி மிகவும் சிறந்த தொண்டாகக் கருதி பல சைவ வேளாளர்ப் பெண்கள் பக்தி மேலீட்டால் தங்களை இத் தொண்டிற்குத் அர்ப்பணித்துக் கொண்டனர். சைவ சமயத்தில் சிவகாமியாண்டார் என்பவரும் வைணவத்தில் பெரியாழ்வாரும் இப்பணியில் ஈடுபட்ட தொண்டர் ஆவர். சைவ சமயத்தில் உள்ள செல்வமிக்க உயர்குலப் பெண்கள் திருமண வாழ்க்கையை வெறுத்து இத் தெய்வத் திருப்பணிக்கு தங்களை அர்ப்பணித் துள்ளனர். இன்று கத்தோலிக் கிறிதவ சமயத்தில் உள்ள கன்னியர்களைப் போல் சைவ சமயத்திலும் கன்னிமாடங் களிலும் அதில் திருப்பணி செய்யும் பெண்களும் ஏராளமாக இருந்தனர். அவர்கள் எளிய உடையும், எளிய நடையும் உடையவர்கள். தங்கள் செல்வம் அனைத்தையும் நந்தவனங்களை நிறுவவும் கிணறுகளைத் தோண்டவும் மானியமாக அளித்துவிட்டு பிற ஏழை எளிய தொண்டர்களைப் போல் எளிய உடையும் உணவும் பெற்று தெய்வத் திருப்பணியில் ஈடுபட்டு வந்தனர். நந்தவனம் நிறுவவும் கிணறுகள் தோண்டவும் மன்னர்களும் செல்வர்களும் மானியங் களும் அளிப்பதும் உண்டு. பூக்களில் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என நான்கு வகையாகப் பிரிக்கப் பட்டிருந்தன. கோயில்களில் திருவமுது செய்வதற்கு நஞ்செய், புஞ்செய் நிலங்களைத் தானம் செய்ததற்கு பல கல்வெட்டுகளும் செப்பேடு களும் இன்று சான்று தருகின்றன. இந்த நிலங்களில் விளையும் நெல்லும் புல்லும் இதர கூலப் பொருள்களும் நைவேத்தியத்திற்கும் திருப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப் பட்டன. எஞ்சியவைகள் மிகக் குறைந்த விலையில் ஏழைகளுக்கு விற்கப்பட்டன. கோயில்களுக்கு மன்னர்களும், செல்வர்களும் மானியமாக ஏராளமான நஞ்செய், புஞ்செய் நிலங்களை மானியமாக விட்டதால் கோயில்களுக்கு நெல்லும் ஏனைய கூலப் பொருள்களும் வண்டி வண்டியாய் வந்து இறங்கின. கூலப் பொருள்கள் மலைபோல் குவிந்தன. எனவே கோயில்களுக்கென்று கூலக் களஞ்சியங்கள் கட்டப்பட்டன. மதுரையில் உள்ள திருமாலிருஞ் சோலையில் உள்ள அழகர் கோயிலின் கூலக் களஞ்சியம் கோயிலை விடப் பெரியது. வட்டமான வடிவத்தை யுடையது. அழகாக அமைந் துள்ளது. இவ்வாறே தஞ்சாவூரில் உள்ள பல கோயில்களின் கூலக் களஞ்சியங்கள் கோயிலைவிடப் பெரியது. கோயில்களுக்கு ஆடு மாடுகளும் அவைகள் மேய்வதற்கு நிலங்களும் நிவந்தமாக விடப் பட்டிருந்தன. அதனால் நெய் ஏராளமாக வந்தது. நெய் விளக் கெரிக்கவும் கோயிலில் தோசை, வடை, பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், லட்டு முதலியவைகள் செய்யப்பட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் விற்கப்பட்டன. இன்றும் பல கோயில்களில் சோறும் பலகாரங்களும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. வைணவக் கோயிலில் இன்றும் பலகாரங் களும் சிற்றுண்டிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. கல்வெட்டுகளும் செப்பேடுகளும் முற்காலத்தில் நமது முன்னோர்கள் நாட்டு வரலாறு என்று தனியே நூல் எதுவும் எழுதவில்லை. ஆனால் நமது வரலாற்றுச் செய்திகள் பல நமது திருக்கோயில்களில் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. நமது கோயில்களில் நூறாயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் இன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலும், படிக்கட்டுகளிலும், மக்கள் நடந்து செல்லும் பாதைகளிலும் வெட்டப்பட்டுள்ளன. செப்பேடுகள், ஓலை ஏடுகள் போல் செம்புத் தகட்டால் செய்யப் பட்டு அதில் அரச முத்திரைகளும் பதிக்கப் பெற்றுள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் ஆகிய தமிழ்நாட்டு மன்னர்கள் கோயில்களுக்கு அளித்த நிவந்தங்களை செப்பேடுகளில் எழுதி அரசர்கள் முத்திரையும், எழுதியவர் பெயரும், சாட்சிகளும் ஒப்பமிட்டு, இன்று காணப்படும். ஆவணக்களரியில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் போல் அரசு பதிவு (Register) செய்து கோயில்களில் செப்பேடுகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அரசுகளின் மாற்றத்தினாலும், காலக் கொடுமையாலும் மக்களின் அறியாமையாலும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கவனியாது மறைந்து போய்விட்டன. ஆங்கில ஆட்சி நிலவியபொழுது, அரசு தனியாக, கல்வெட்டியல் (Epigraphy Deapartment) என்று ஒரு தனித் துறை நிறுவினர். தொல் எழுத்தியல் (Paleography) என்ற ஒரு ஆய்வுத் துறையை அமைத்து பல்வேறு வரிவடிவங்களில் எழுதப் பெற்றிருக்கும் எழுத்துக்களைப் படிக்க முதன் முதலாக ஆங்கில அறிஞர் புஃலர், இந்தியத் தொல் எழுத்தியல் (Indian Paleograpy) என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதற்கு இந்தியா அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. இந்தத் துறை நீண்டகாலமாக ஆங்கில அறிஞர் தலைமையில் நீலகிரியில் இயங்கி வந்தது. அப்பால் இந்தியர் தலைமையில் மைசூரில் இயங்கி வருகிறது. சுமார் 20,000 - த்திற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் படிக்கப்பட்டு, பல நூல் வடிவம் பெற்று வெளி வந்துள்ளன. இந்தியா உரிமை எய்தியபின் இலட்சத்திற்கு மேற்பட்ட கல் வெட்டுகளும் படிக்கப்பட்டு நூலாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்திய அரசோ தமிழக அரசோ போதிய அக்கறை காட்டவில்லை. இத்துறை ஆமை வேகத்தில் மெதுவாக இயங்கிவருகிறது. ஆனால் மறைந்துவிடவில்லை. இத்துறையை நமது அரசு நன்கு செயல்படச் செய்திருந்தால் நூறாயிரத்திற்கு மேற்பட்ட சாசனங்களும் செப்பேடு களும் படிக்கப்பட்டு நமது நாட்டின் இருண்ட வரலாற்றின்மீது புதிய ஒளி ஊட்டப் பெற்றிருக்கும். சிந்து வெளி அகழ் ஆய்வும் முத்திரைகளும், உலகிலே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், திராவிட மக்களும், சிவனெறியும், உழவர், பரவர், குரவர் போன்ற மக்களின் அரசும், நாகரிகமும் சிறந்து விளங்கியதை எடுத்துக் காட்டியது போல், தென்இந்தியக் கல் வெட்டுகள் தமிழர், கேரளர், ஆந்திரர், கன்னடர் ஒப்பற்ற நாகரிகத்தைக் காணத் துணையாக இருந்திருக்கும். தமிழகத்தில் அரசகட்டிலில் அமர்ந்த தென் இந்திய நல உரிமைச் சங்கமோ, காங்கிர ஆட்சியோ தி.மு.க அரசோ தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றதே யொழிய இத்தகைய நல்ல துறையில் நாட்டம் செலுத்தவில்லை. தொல்லெழுத்தியல் தொன்மையான காலத்தில் எழுதப்பெற்றது. அதனை ஆயும் முறை தொல் எழுத்தியல் என்று கூறப்படும். தொல் எழுத்து என்பது இன்று வழக்கில் இருந்து வரும் எழுத்துக்களின் முந்தைய வடிவங்களும், வழக்கொழிந்த அதன் பழங்கால எழுத்துக்களின் வடிவங்களும் ஆம். தொல் எழுத்துக்களும் அவற்றின் வளர்ச்சியும் ஆய்வு செய்யப் பெற்றுள்ளது. சென்ற நூற்றாண்டில் மேனாட்டு அறிஞர்கள் தமிழ் எழுத்துக்களின் தொன்மையையும் அதன் வளர்ச்சியையும் நுண்ணுணர்வுடன் ஆய்ந்து அதனை அனைத்துலக இயலாக உயர்த்தியுள்ளனர். மக்களின் அறிவு வளர்ச்சிக்கு அடிகோலியது எழுத்து காலத்தையும், நாட்டையும், நாகரிகத்தையும் எடுத்துக் காட்டுவது எழுத்து. பண்டைக் காலத்தில் எந்த நாட்டில் எந்த இன மக்கள் எழுத்தைக் கண்டார்களோ அவர்கள்தான் நாகரிக மக்கள் என்று கருதப்படுகிறார்கள். எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என்பது ஔவைப் பிராட்டியாரின் அமுத மொழி. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்பது வள்ளுவர் வாக்கு. ஓவியங்கள் பண்டைக் காலத்தில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தம் உள்ளக் கருத்தை மற்றவர்களுக்குப் புலப்படுத்த கோல் கொண்டு தரையிலும், மணலிலும் ஓவியந்தீட்டி உணர்த்திவந்தனர். அதன் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்யும் கலை வளர்ந்துவந்தது. ஓவியமே நமது எழுத்திற்கு அடிப்படை. ஓவிய எழுத்தையே உலகில் வாழும் எல்லா மக்களும் முதன் முதலாகக் கண்டுபிடித்துள்ளனர் என்று, இன்று தொல் எழுத்தியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழர்கள் எழுதப் பயின்றிருந்தனர். எழுத்து என்ற தமிழ்ப்பதம் எழுது என்ற வினைச் சொல்லின் அடியாகப் பிறந்த சொல்லாகும். எழுது என்றால் வரை எனப் பொருள் தரும். நிகண்டில் எழுத்து என்பதற்குப் படம் உருவம் ஓவியம் என்று பொருள் கூறப் பெற்றுள்ளது. ஆதியில் தமிழ் மக்கள் தம் வரிவடிவங்களை ஓவியக் குறியீடுகளினின்றே கண்டுபிடித்து அதற்கு எழுத்து என்று பெயர் சூட்டியுள்ளனர். சங்க நூற்களில் ஓவியத்திற்கு எழுத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முற்காலத்தில் திருப்பரங் குன்றத்திலுள்ள முருகன் கோயிலில் ஒரு ஓவிய மண்டபம் இருந்தது. அதனைக் குன்றம் பூதனார் என்னும் புலவர் நின் குன்றத்து எழுதொழில் அம்பலம் காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர் -(பரிபாடல்) என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு, நின்குன்றத்து எழுதிய எழில் தரும் அம்பலம் என்று பரிமேலழகர் பொருள் கொள்ளுகிறார். இங்குள்ள சித்திர மாடத்தில் சில ஓவியங்களை நப்பண்ணனார் என்னும் புலவர் கண்டு அதனை விளக்கிக் கூறும் பொழுது, இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் (பரிபாடல்) என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு, சித்திர மாடத்தை, எழுத்து நிலை மண்டபம் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் முற்காலத்தில் ஓவிய எழுத்துக்கள் இருந்தன. தமிழர்கள் பழங்காலத்தில் பல வகையான எழுத்துக்களைப் பயின்று வந்துள்ளனர். யாப்பருங்கல விருத்தி இலக்கணக் கொத்து முதலிய நூற்கள் மூலம் தமிழ் எழுத்து உருவெழுத்து உணர்வெழுத்து ஒலி எழுத்து தன்மை எழுத்து என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. காணப்பட்ட வுருவமெல்லாம் மாணக் காட்டும் வகையை நாடி வழுவி வோவியன் கைவினை போல எழுதப்படுவது உருவெழுத்தாகும் (யாப்பருங்கல விருத்தி மேற்கோள்) உருவே யுணர்வே யொலியே தன்மை இருவகை யெழுத்து மீரிரண் டாகும் (இலக்கணக் கொத்து - மேற்கோள்) என்று கூறப் பெற்றுள்ளது. சமவயங்க சுத்த என்னும் சமணநூல் கி.மு. முதல் நூற்றாண்டில் எழுந்தது. இதில் 18 விதமான எழுத்துக்களின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இப்பட்டியலில் தமிழி என்று தமிழகத்தில் வழங்கிய எழுத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமி பிறக்கும் பொழுதே தமிழியும் பிறந்தது; வழக்கில் இருந்தது. லலித விதாரம் என்னும் நூலில் 64 வகை எழுத்துக்கள் குறிக்கப் பெற்றுள்ளன. இதில் திராவிடி என்னும் பதமும் காணப் படுகிறது. திராவிடி என்பது தெலுங்கு ,கன்னடம், கிரந்தம் ஆகிய எழுத்துக்களைக் குறிப்பிடுவதாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ் வரிவடிவங்கள் மாற்றம் பெற்றுள்ளன. 1903 -ஆம் ஆண்டில் வரிவடிவ ஆய்வாளர் திரு.வெங்கோபராவ் முதன் முதலில் கீழ்வளவு என்னும் இடத்தில் தமிழ் எழுத்துக்களைக் கண்டுபிடித்தார். 1906 - ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட அதிகாரி (District Collector) கெமைடு என்னும் ஆங்கிலேயர் மறுகால் என்னும் இடத்தில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் ஆண்டிப்பட்டியில் ஈயக் காசில் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பெற்றன. அப்பால் தமிழ் ஆசிரியர் அரச்சலூரில் இராசு என்பவர் தமிழ் வடிவங்களைக் கண்டுபிடித்தார். அப்பால் திருவாத ஊரில் ஐ. மகாதேவனும் கொற்கையில் தமிழகத் தொல் பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்த மஜித்தும், பிறரும் தமிழ் எழுத்துக்களைக் கண்டுபிடித்தனர். மதுரையைச் சுற்றியுள்ள குன்று களிலும், குற்றாலத்திலுள்ள குன்றுகளிலும் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. தொல் எழுத்துக்கள் தமிழ் நாட்டு வரலாறு, கலை, பண்பாடு, அரசியல், நாகரிகம் முதலியவைகளை அறிவதற்குக் கல்வெட்டுகள் அடிப்படைச் சான்று களாகத் திகழ்கின்றன. வரிவடிவங்கள் அரும்புவதற்கு முன்னர் கருத்து வெளியீட்டிற்காக எகிப்து, சுமேரியா, இந்தியா, சீனா முதலிய நாடுகளில் சில முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று இன்று தொல் பொருள் ஆய்வுத் துறையினரும், எழுத்தியல் நிபுணர்களும் பின்வரும் முறைகள் பின்பற்றப்பட்டதாகக் கூறுகின்றார்கள். 1. குறியீட்டு மொழி (Sign Language) பெருவியன் முறை (Perunrium quipus) குழூ உக் F¿fŸ(Joten Signs) 2. ஓவிய எழுத்துமுறை (Pictographs) ஓவிய எழுத்துக்களின் முன்னோடிகள் - வட அமெரிக்க இந்தியர்களின் வாம்பும் கச்சை (Wampum belt) கலுமெட் குழல் (Calumet Peace Pipe) கருத்துப் பரவலே முக்கிய நோக்கமாய் அமைந்தது. 3. கருத்துப் படக் குறியீடுகள். (Pidegrams) 4. சொல் அல்லது எழுத்துக்குப் பதிலாக நிற்கும் பொருள் வடிவம் (Hieroglyphs) சொல் வேறுபாடுகள், ஹீரோ கிளிப்சின் வகைகள். 5. ஆப்புக் குறி எழுத்துமுறை (Cunciforum Writing) 6. சீன எழுத்துமுறை கியாங் சிங் (Hsiang hsing) சிஹ் சிஹ் (Chich Shih) ஆதியில் உலகமெங்கும் மக்கள் தம் கருத்தைத் தெரிவிக்க ஓவியங்களையே பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசத்திலுள்ள பிம்பட்கார் குன்றில் கண்டுபிடிக்கப் பட்ட பீடுற்ற ஓவியங்கள் நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதிராப் பண்புடைய முதுமக்கள் தீட்டிய ஓவியமாகும். மகாதேவ மலையில் உள்ள மங்கா ஓவியங்களும் மீர்சாப்பூரில் கண்ட அரிய ஓவியங்களும், தக்காணத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கொப்பல், பிக்கிளிக்கல், மகி, முதலிய இடங்களில் உள்ள ஓவியங்களும், விந்திய மலைகளில் உள்ள ஓவியங்களும் இந்தியாவில் எழுத்துப் பிறப்பதற்கு ஏற்ற அடிப்படையாய் இருந்தன. ஓவிய எழுத்துக்கள் ஓவியங்கள் எழுத்துக்கள் ஆகா. தீட்டிய உருவை மட்டும் ஓவியம் குறிக்குமேயொழிய வேறு எதையும் குறிக்காது. மக்கள் மலைகளிலும் காடுகளிலும் திரிந்தலைந்ததை விட்டு, ஆற்றங் கரைகளில் பல மக்கள் இணைந்து குடியேறி, பயிர்த் தொழிலை வளர்த்து நகர வாழ்க்கை நடத்தியபொழுது தங்கள் ஆடு மாடு, ஏனைய பொருள்களைக் குறிக்க குறியீடுகளை உருவாக்கத் தெரிந்தனர். மக்கள் தெய்வங்களுக்கு உறைவிடமாகக் கோயில்களை உருவாக்கினர். ஊர்த் தெய்வங்களுக்கு மக்கள் காணிக்கையாக ஆடு மாடு போன்ற வற்றை வழங்கினர். அவைகள் ஏராளமாக பெருகின. அவைகளைக் கணக்கிடப் பல குறியீடுகள் தேவையாயின. எடுத்துக்காட்டாகக் கோயில்களின் சுவர்களிலோ அல்லது கற்களிலோ மாட்டின் உருவங்களைத் தீட்டி பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று என்பதைக் காட்ட கோடுகளைத் தீட்டினர். அக்குறிகள் கோயில்களுக்கு எத்தனை மாடுகள் உள என்பதைத் தெரிவித்தனர். கோடுகள் இன்றி புள்ளிகளும் இடப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். இவற்றை ஓவிய எழுத்து என்றனர். மெசபொத்தாமியாவிற் மண் ஓடுகளில் இத்தகைய ஓவிய எழுத்துக்கள் தீட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மீனோசூன் கிரிடே என்னும் பழம் பகுதியிலும் இந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. கருத்தெழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் வளர்ச்சி பெற்று கருத்தெழுத்துக்களாகப் பரிணமித்தெழுந்தன. எடுத்துக்காட்டாக ஞாயிற்றை மட்டும் குறிக்கும் ஒரு வட்டம் ஓவிய எழுத்து எனப்பட்டது. அதன் தோற்றம், அதன் வெப்ப நிலை முதலியவற்றைக் குறிப்பிடும் குறிகள் கருத்தெழுத்து எனப்பட்டது. இஃதன்றி மாட்டின் கால்களையோ கொம்புகளையோ வரைந்து மாட்டைக் குறிக்க பயன்படுத்தினர் இதனைக் கருத்து எழுத்து (Ideogram) என்பர். ஓவிய எழுத்திலும், கருத்தெழுத்திலும் இடப்பட்ட குறிகள் ஒலிக்கப்படும் அதன் பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஒலி எழுத்துக்கள் மக்கள் நாகரிக வளர்ச்சி பெற்றபின் ஒலி எழுத்தை உருவாக்கினர். ஒரு பொருளுக்கு பெயரும், அதன் ஒலியை எழுத ஒலி எழுத்தும் கண்டனர். ஆதியில் ஒரு விலங்கு, அல்லது பறவை, மரம், வீடு போன்றவற்றிற்கு ஒரே எழுத்தை உருவாக்கியுள்ளனர். எடுத்துக் காட்டாக ஆ=பசு, இ=இது, ஈ=வண்டு, ஊ=ஊன், ஏ=பாணம், ஐ=அரசன், ஓ=மடை, கா=காத்தல், கீ=கிளிக்குரல், கூ=பூமி, கை=கரம், கோ=அரசன், சா=சாவென்னேவில், சீ=இலக்குமி, சே=சிவப்பு, சோ=அரண் என்று பொருள் தரும் முறையில் பல எழுத்துக்கள் உள. தா, தீ, தூ, தே, தை, த, தோ, நா, நீ, நோ, பா, பூ, பே, பை, போ, மா, மீ, மூ, மை, வா, வீ, வே, வை போன்றன. அப்பால் அசை, ஆசை, இசை, ஈகை, உரி, ஊர், எலி, ஏடு, ஜனம், ஒகை, ஓடு, கண், காடு, கிளி, கீரி, குகை, கூடு, கெடு, கேள், கைதை, கொடி, கோடு, கௌரி போன்ற ஈரெழுத்துடைய சொற்கள் தமிழில் எழுந்துள்ளன. இஃதன்றி சூ, சூரியன், மா-மாடு, ஆ-ஆடு என்ற முறையில் முதன்முதலாக எழுத்துக்கள் தோன்றின. இதே போன்று பொருட்களை அதன் உருவங்களை எழுதினர் நாளடைவில் அச் சொற்களின் முதல் ஒலியை மட்டும் குறிக்கவும் தொடங்கினர். இம்முறைக்கு, முதல் ஒலி எழுத்து முறை (Acrophony) என்று பெயர். இது போன்ற வளர்ச்சி களால் ஒலியெழுத்துக்கள் உருப்பெற்றன. ஒலி எழுத்துக்கள் பொருளையோ கருத்தையோ குறியாது குறிப்பிட்ட ஒலியையே குறித்தன. ஒலி எழுத்து எந்த மொழியில் வரையப்பட்டதோ அம் மொழியால்தான் அதை அறிய முடியும். உருவத்திற்கும் ஒலிக்கும் தொடர்பு இன்றி இருந்தாலும் அவ்வுரு அவ்வொலியை மட்டும் குறிக்க எழுந்ததாய் நிலை பெற்றுவிட்டது. இந்த எழுத்து ஒலி எழுத்து (Phonatic Writing) என்ற பெயரைப் பெற்றது. ஒலி எழுத்து அகரவகை எழுத்து, உயிர் எழுத்து என இருவகையாகப் பிரிக்கப்பட்டது. உயிர் எழுத்து, மெய்யெழுத்து என்று ஆங்கிலத்தில் எழுந்தன. தமிழில் உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்எழுத்து, எண்கள் முதலிய நிரல் பெற எழுந்தது. மிகப் பிற்காலத்தில் எழுந்த ஆங்கில மொழி, தமிழ் எழுத்தைப் போன்று ஒழுங்குபெற அமைக்கப்படவில்லை. தமிழில் உயிர் எழுத்து அ, இ, உ, எ, ஐ, ஒ, ஓள என்று ஒழுங்குபெற அமைக்கப் பட்டிருப்பதுடன், நெடில் எழுத்தும் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் V(A) பி (B) சி (C) டி (D) <(E) என்று அமைந்திருக்கிறதேயொழிய ஏ, ஈ, ஐ, ஓ, யூ (A.E.I.O.U) என்று அமையவில்லை. அதோடு ஆங்கிலத்தில் எண் இந்தியாவினின்று கடன் வாங்கப் பெற்றுள்ள எண்ணேயாகும். இந்திய நாட்டில் உள்ள சிந்து வெளியில் கி.மு.3000 - ம் ஆண்டிற்குமுன் எழுத்துக்கள் எழுந்தன. அவை ஓவிய எழுத்துக் களாகப் பிறந்தன. இவை முழுவதும் ஓவிய எழுத்துக்கள் அல்ல. சில ஒலி எழுத்துக்களும் உள. இவற்றை அறிஞர்கள் ஓவிய -ஒலி எழுத்துக்கள் என்று உரைப்பர். சிந்து வெளி சித்திர எழுத்துக்களே இந்திய எழுத்துக்களுக்கு தாய் எழுத்துக்கள் ஆகும். இதினின்று வட பிராமியும், தென் பிராமியும் கரோஷ்டியும் தோன்றின. தென்பிராமியினின்று தமிழ் எழுத்துக்கள் தோன்றின. தமிழகத்தில் நிலவிய தொன்மையான எழுத்து தமிழி எனப் பெயர் பெற்றது. பண்டையத் தமிழ் எழுத்துக்களை தமிழி, திராவிடி என்று பிராகிருதமொழியினர் முற்காலத்தில் அழைத்து வந்தனர். சில அறிஞர்கள் பிராமி தோன்றிய பொழுதே தமிழி எழுத்துக்களும் தோன்றிவிட்டன என்றும், தெலுங்கு, கன்னட, துளுவ எழுத்துக்கள் திராவிடி என்று அழைக்கப்பட்டன என்றும் கூறுகின்றனர். குகை எழுத்துக்கள் தமிழ் நாட்டில் கிறித்தவ ஊழிக்கு முன்னுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் குகையின் மேற்பகுதியில் வெட்டப் பட்டுள்ளன வென்று தெரிகிறது. அரச்சலூரில் உள்ள கல்வெட்டு இசை எழுத்துக்களைக் குறிப்பனவாய் உள்ளது. குகைக் கல்வெட்டுக்கான பானை ஓடுகளிலும் இவ்வெழுத்துக்கள் கிடைத் துள்ளன. அரிக்கன் மேட்டில் பௌத்த சமயத் தொடர்புள்ள எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டியில் கிடைத்த சங்ககால ஈயக் காசுகளில் பிராமி வரி வடிவில் தின்னன் எதிரான் சேந்தன் ஆ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த எழுத்தாக எண்ணப்படுகிறது. தமிழ் எழுத்து கி.பி. மூன்றாண்டிலிருந்து தமிழ் மொழியை எழுத தமிழி எழுத்தையும், வட்டெழுத்தையும் பயன்படுத்தினர். இதனை தமிழ் தொல் பொருள் ஆராய்ச்சித் துறை இயக்குநர் திரு. இரா. நாகசாமி கல்வெட்டியல் என்னும் நூலில் தெளிவாய் விளக்கியுள்ளார். பல்லவர்கள் மன்னன் சிம்ம விஷ்ணு காலச் செப்பேடுகள் தமிழ் எழுத்திலும் கிரந்த எழுத்திலும் எழுதப் பெற்றுள்ளன. முற்காலச் சோழர் கல்வெட்டுகள் தமிழில் அழகாகப் பிழை களின்றி வெட்டப் பெற்றுள்ளன. பிற்காலச் சோழர் கல்வெட்டுகள் அதாவது இராசராசன் காலத்திற்குப் பின்னர் வெட்டிய கல்வெட்டுகள் சிறப்பாகக் காணப்படவில்லை. விசய நகர நாயக்க மன்னர் காலத்துக் கல்வெட்டுக்களும் அழகின்றிப் பிழைகள் மலிந்துள்ளனவாய்க் காணப்படுகின்றன. முதல் பல்லவ மன்னர்களின் செப்பேடுகள் தெலுங்கு, கன்னட, கிரந்த எழுத்துகளில் உள்ளன. பல கல்வெட்டுகள் கிரந்த எழுத்திலும் நாகரிக எழுத்திலும் உள்ளன. மதுரைப் பாண்டியர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 9 - ஆம் நூற்றாண்டுவரை எழுதிய கல்வெட்டுகள் தமிழிலும் கிரந்தத்திலும் உள்ளன. செப்பேடுகள் வட்டெழுத்தில் உள்ளன. சேர நாட்டில் உள்ள பல கல்வெட்டுகள் வட்டெழுத்தில் உள்ளன. அதியர்களின் கல்வெட்டுகள் பல்லவர் கிரந்த எழுத்திலும் வட்டெழுத்திலும் உள்ளன. குற்றால நாதர் கோயில் கல்வெட்டும் வட்டெழுத்திலே உள்ளன. திரு. கோபிநாத் ராவ் திறனுடைய பண்டைய தமிழ் எழுத்தினின்று வட்டெழுத்துத் தோன்றியது என்று கூறியுள்ளார். கோயில்களும் கல்வெட்டுகளும் பண்டைக் காலத்தில் தாள்கள் கிடையாது. இலக்கியங்கள் எல்லாம் பன ஓலைகளிலே கூரிய முனையையுடைய எஃகு எழுத்தாணி கொண்டே எழுதிவந்தனர். ஓலையில் எழுதப்படும் ஏடுகள் ஒரு நூறு ஆண்டுகள் கூட நிலைத்திருப்பதில்லை. வேறு சில நாடுகளில் மரப்பட்டைகளில் எழுதி வைத்திருந்தனர். அதுவும் நீண்ட காலம் நிலைத்து நிற்பதில்லை. சில நாடுகளில் எலும்புகளில் கூட எழுதி வந்தனர். சில நாட்களில் பைப்பிர என்னும் ஒரு வகை நாணற் புல்லில் எழுதி வந்தனர். சில நாடுகளில் தோலில் எழுதி வந்தனர். பெரிய இலக்கியங் களையும் மறைநூற்களையும் 1000 -க்கணக்கான தோல்களில் எழுதும் படி நேர்ந்தது. சாதாரண மக்கள் இத்தகைய தோல் நூல்களை விலை கொடுத்து வாங்க முடியாதிருந்தது. இதுவும் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்க முடியாதிருந்தது. முதன் முதலாக பைபிள் எப்படி எழுதப்பட்டது என்று சிங்கப்பூரி லிருந்து வெளிவந்துள்ள தமிழ் நாள் ஏடொன்றில் படித்தேன். அது, அடியில் வருமாறாகும். அச்சு எழுத்துக்களைக் கண்டுபிடித்த கூடன்பர்க் தான் முதன் முதலாகப் பைபிளை அச்சிட்டு வெளியிட்டார். உலகிலேயே முதன் முதல் அச்சிடப்பட்ட புத்தகமும் பைபிள்தான். இது லத்தீன் மொழியில் அச்சிடப் பெற்றது. அச்சிடப்பட்ட ஆண்டு கி.பி. 1455. மொத்தம் 200 பிரதிகளே அச்சிடப்பட்டன. ஒவ்வொரு பிரதியிலும் 1282 பக்கங்களே இருந்தன. ஒவ்வொரு பக்கமும் 36 வரிகளையுடையதாய் இருந்தன. இந்தப் புத்தகங்கள் காகிதங்களில் அச்சிடப் பெறவில்லை. தாள்கள் கிடையாது. எனவே ஆடுமாடுகளின் தோல்களில் தான் வேதப் புத்தகம் அச்சிடப்பட்டன. அந்த வழக்கப்படி பைபிளும் கன்றுக்குட்டியின் தோலில் தான் அச்சிடப்பட்டது. இதற்காக சுமார் 10,000க்கு மேற்பட்ட கன்றுக்குட்டிகள் கொல்லப்பட்டன. 200 பிரதிகளில் 47 பிரதிகள் (முதலில் தோலில் அச்சிடப்பட்ட சத்திய வேதாகம நூலின் படிகள்) இப்பொழுது செர்மனியில் உள்ள தொல் பொருள் காட்சி சாலைகளில் (Museums) இருக்கின்றன. 5000 -ஆம் ஆண்டுகளுக்கு சுமேரியாவின் களி மண் தகடுகளில் சிறு குச்சுகள் கொண்டு எழுதி பல ஏடுகள் வைத்துள்ளனர். எகிப்து நாட்டில் ஓவிய எழுத்துக்கள் (Hieroghph) என்னும் எகிப்தியர் கண்ட மறை பொருட் குறியீடுகளை கல்லில் தோண்டி வாசித்து வந்தனர். 5000 -ம்ஆண்டுகட்கு முன் சிந்து வெளியில் கல்லில் சில உருவ எழுத்துக்களைத் தோண்டியும் செம்புத் தகடுகளில் கூறிய எழுத்தாணி கொண்டும் எழுதி வந்தனர். தமிழ் நாட்டில் 2000 -ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் திருக்கோயில்களுக்கு விடும் மானியங்களை கல்லில் எழுதியும் செப்பேடுகளில் எழுதியும் உள்ளனர். செப்பேடு இன்றையப் பத்திரப் பதிவு செய்வது போல் ஆவணக் களரியில் பதிவு செய்யப்பெற்றது. அதில் எழுதியவர்கள் பெயர் மானியம் அளித்த அரசனின் முத்திரையும் இடப்பட்டது. அத்தகைய செப்பேடுகள் தமிழகத்தில் நூறாயிரத்திற்கு மேல் உண்டு. அவைகளில் ஒன்றின் உருவப்படத்தை இத்துடன் இணைத்துள்ளோம். படம் காண்க. அக்காலத்தில் எழுதப் பெற்ற கல்வெட்டு சாசனம் ஒன்றின் வாசகமும் இத்துடன் தரப்பட்டுள்ளது காண்க:- நமது நாடு மிகத் தொன்மையானது. இந்நாட்டில் மக்கள் நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள். கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர்தொழிலை வளர்த்தும் கைத் தொழில்கள் பல கண்டுபிடித்தும் பெரிய நகரங்களையும், அகன்று நீண்ட தெருக்களையும் மூன்று நான்கு ஏழு மாடங்களையுடைய வீடுகளையும், மாளிகைகளையும், அரண்மனைகளையும் கோயில் களையும் அமைத்துள்ளார்கள். எஃகுப்போன்ற உறுதியான உயர்ந்த அரண்களை, அமைத்துச் சீர்பெற அமைத்துள்ளார்கள். glF fS«, Xl§fS«, njhÂfS«, Úu khl§fS«, f¥gšfS«, ehthŒfS« f£o Mœflš flªJ maš ehLfSl‹ tÂf« ts®¤J tªJŸsh®fŸ., ஆனால் அவர்கள் தம் நாட்டு வரலாறுகளை எழுதி வைக்கவில்லை. சிந்து வெளி மக்கள் வரலாறு அவர்கள் சிறு கற்களில் தீட்டிய முத்திரை எழுத்துக்கள் மூலம் செம்புத் தகடுகளில் (தாயத்துகளில்) எழுதிய எழுத்து மூலமாயும் ஓரளவு அறிந்து வருகிறோம். தமிழ்நாட்டு வரலாறு அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலமாயும் நமது கோயில்களிலும், பிற இடங்களிலும் கிடைக்கும் கல்வெட்டுகள், செப்பேடுகள், மெய்க்கீர்த்திகள் போன்றவற்றின் மூலம் ஒருவாறு அறியக் கிடக்கின்றன. தமிழ் நாட்டு மன்னர்கள் வடக்கே இமயம் வரை சென்று எதிர்ப்பட்டு அரசர்களையெல்லாம் வென்று இமயமலை மீது தங்களது குடையையும், சின்னங்களையும் பொறித்து வந்துள்ளார்கள். இலங்கை மீது படையெடுத்தபோது திருக்கோணமலை மீது தம் கொடியைப் பொறித்து வந்துள்ளார்கள். இராசராச சோழன் தன் மகன் இராசேந்திர சோழன் தலைமையில் கடற்படையை அனுப்பி கடாரம், மலையம், சிங்கபுரம், தாய்லாந்து, கம்போடியம் சாவகமும், சிரிவிசயம், பாலி, போனியோ போன்ற நாடுகளையெல்லாம் வென்று ஆங்காங்கே கோயில்கள் எழுப்பி கல்வெட்டுகள் பொறித்தும் வந்துள்ளான். தமிழ் நாட்டு மன்னர்கள் தாங்கள் பிற நாட்டின் மீது வெற்றியீட்டிய பொழுதெல்லாம் தம் நாட்டில் பெரிய கோயில்கள் எழுப்பியும், கோயில்களில் பெரிய திருவுருவங்கள் அமைத்தும், தெய்வத் திருஉருவங்களுக்கு வாகனங்களும் அணிகலன்களும், திருவிளக்குகளும், குடங்களும், வழங்கியுள்ளார்கள். அதற்காக ஏராளமான பொன், வெள்ளி, செம்பு, பித்தளை உலோகங்களை வழங்கியுள்ளார்கள். அரசர்களும், அரசிகளும் இளவரசர்களும், அமைச்சர்களும், பிரபுக்களும் ஏராளமான செல்வங்களையும் நிலங்களையும் நிவந்தமாக அளித்துள்ளனர். திருக்கோயில்களில் நெய் விளக்கு எரிக்க ஆடுகளும், மாடுகளும் அளித்துள்ளனர். அவைகள் மேய்வதற்கு புல் நிறைந்த மேய்ச்சல் தரைகளும் நெல் வயல்களும் தானம் அளித்துள்ளனர். கோயில் பணியாட்களுக்கும், கோயிலில் ஆடலும் பாடலும் இயற்றும் தேவதாசிகளுக்கு வீடுகளும், வயல்களும் வழங்கியுள்ளனர். இவைகளைப் பற்றிய விவரங்கள் கோயில் சுவர்களிலும் தரையிலும் உள்ள கற்களில் அக்காலத்தில் வழங்கப்பட்ட எழுத்துக்களில் பொறித்துள்ளார்கள். இன்றையப் பத்திரங்கள் போன்று செப்பேடுகளில் அவர்கள் மானிபமாக வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டு அவற்றில் அரசமுத்திரைகளும், எழுதியவர் பெயரும், சாட்சிகளும் பெயர் களும் எழுதி ஆவணக் களறியில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் பெயர் அவர்கள் ஆட்சி செய்த காலம், வெற்றி பெற்ற நாடுகள், மன்னர்களின் மனைவிகள், மக்கள், சேனாதிபதிகள் பெயர்கள் வெற்றி பெற்ற நாடுகள், தோல்வியுற்ற அரசர்கள், அவர் மனைவி, மக்கள், முதலியவர்களின் விபரங்கள் தெரிகின்றன. மன்னர்கள் கோயிலுக்கு வழங்கிய அணிகலன்கள், வெண்கலம், வெள்ளி, பொன் போன்ற உலோகங்களில் செய்து கொடுத்த குடம், செம்பு, கொப்பரை, கெண்டி, கிண்ணம், தட்டு, தாம்பாளம், கைவிளக்கு, நிலை விளக்கு, குத்துவிளக்கு, கிளை விளக்கு, நந்தா விளக்கு, தூண் விளக்கு, தூக்கு விளக்கு, லட்ச தீபம், போன்றவைகளையும் நில அளவை முறைகளையும் அறியலாம். மன்னர்களின் பெயரையும் பட்டத்தையும், பெருமையையும் அவர்களது மெய்க்கீர்த்திகள் மூலம் அறியலாம். கல்வெட்டுகள் பெரும்பாலும் திருஉண்ணாழிகையின் (கர்ப்பக் கிரகத்தின்) வெளிச் சுவர்களில் வெட்டப்பட்டிருக்கும். சில, தூண்கள், மண்டபங்கள், பக்கச் சுவர்கள், படிக்கட்டுகள், தரையில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் கற்கள் முதலியவற்றில் பொறிக்கப் பட்டிருக்கும். இக்கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களின் மாதிரியைக் கொண்டே கோயில்கள் எழுந்த காலத்தை ஒருவாறு கணிக்க முடியும். கல்வெட்டுகள் வதி ஸ்ரீ என்னும் சொற்றொடரில் தொடங்கப்படுகின்றன. பல்லவர்கள் செப்பேடுகள் சிலவற்றில் ஜிதம்ப கவதா என்ற சொற்றொடர் காணப்படுகிறது. ஆய் மன்னன் அளித்த செப்பேடுகள் சில நமோ நாராயணாய என்று தொடங்குகிறது. சில ஓம் வதி ஸ்ரீ என்று தொடங்குகிறது. வேறு சில, ஹரி நன்றாகக் குருவே துணை. ஹரிசுபமது ஹரி ஸ்ரீ கணபதியே நம, சிவயம் என்றும் தொடங்குகின்றன. அப்பால் கொடை அளிக்கும் அரசனின் முன்னோர்களின் புராண மரபும் வரலாறும் காணப்படுகின்றன. அப்பால் கொடை கொடுக்கும் காலத்தில் ஆட்சிபுரிந்த அரசன், அவன் ஆட்சி அரும்பிய ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளன. சோழர் கல்வெட்டுகளில் அரசன் பெயர், அவன் ஆட்சி தொடங்கிய ஆண்டு, அவனது வெற்றிப் பிரதாபம், பட்டம் முதலியவைகளும் குறிக்கப்படுகின்றன. முதலாம் இராசராசன் காலம் முதல் முதன்முதலாக அரசர்களது மெய்க்கீர்த்தியும் சேர்க்கப் பெற்றுள்ளன. மெய்க்கீர்த்தியில் அரசனின் வீரச்செயல்கள், பட்டத்தரசிகள் பெயர் முதலியவை இடம் பெற்றுள்ளன. நோக்கங்கள் பெரும்பாலான கல்வெட்டுகள் அரசர்கள் கோயில்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கியதும், கோயில்களுக்கு நொந்தா விளக்கு அளித்து, விளக்கு எரிக்கும் நெய்க்காக சாவா மூவாப் பேராடு, பசு அல்லது எருமை வழங்கியதைக் குறிப்பிடுகின்றன. நிலங்கள் கோயிலுக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கோ விற்றால் அந்நிலத்தின் பரப்பு அதன் நாற்புற எல்லைகள், அந்த நிலத்தைச் சார்ந்திருக்கும் பிற பொருள்கள் எல்லாம் குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக இந் நாற்பாற் எல்லைக்கு உட்பட்ட உண்ணிலம் ஒழிவின்றி உடும்பொடி ஆமை தவழும் இடம் அனைத்தும் கீழ்நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும், மீன்படு பள்ளமும், தேன்படு பொதும்பும் புற்றும் தெற்றியும் ஆகிய எல்லாம் விற்கப் படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அதோடு, அளிக்கும் கொடை சந்திர சூரியர் உள்ளளவும் நிலை பெற்றிருக்கும் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. இறுதியில் பன்மாஹேவரர் ரக்ஷை என்று குறிப்பிட்டு விட்டு இந்த அறக்கொடைக்கு தீங்கு நினைத்தாலோ அல்லது இடை செய்தாலோ கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற தோசத்தை அடைவார்கள் என்றோ. இத்தர்மத்திற்கு அகிதம் நினைத்தார் கங்கை இடை குமரியிடை எழுநூற்றுக் காதத்திலும் செய்தார் செய்த பாவத்துப் படுவார் என்றும் இத்தர்மத் திற்கு ஆதாமொருவர் பிசகு பண்ணினால் சிவ துரோகியுமாய் மோவாய் புக்கு முலையெழுத்தானுமாய் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் பிறந்தானுமல்லானாய் கோமாங்கி சத்தை புசிப்பானுமாய், கங்கை யிடை குமரியிடை குரால் பசு கொன்றான் பாவம் கொள்வான் என்றும் கூறப்பெற்றுள்ளது. கல்வெட்டுகளில் அரசன் தேவர், பெருமாள், நாயனார் என்றும் அரசி நம்பிராட்டியார் என்றும் அரசகுலமகளிர் ஆழ்வார், நாச்சியார் என்றெல்லாம் குறிக்கப் பட்டுள்ளன. இறந்துபோன மன்னனைப் புதைக்கும் இடம் பள்ளிப்படை என்று கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளன. அரசனைப் புதைத்த இடத்தில் கோயில்கள் எழுப்பும் பழக்கமும் அக்காலத்தில் உள்ளது. அரசனுடைய ஆணை, திருமந்திர ஓலை என்னும் அதிகாரி எழுதி இறுதியில் திருமந்திர ஓலை நாயகம் என்ற அதிகாரியால் ஒப்பு நோக்கப்படுகிறது. பின்னர் விடையில் அதிகாரி வரி என்ற ஏட்டில் எழுதும் படி ஆணையிடுவார். நடுவிருக்கை அதிகாரி அதை எழுதும் படி செய்வார். புரவு வரிதிணைக்களம், பட்டோலை ஆகிய அதிகாரிகள் ஒப்பமிட்டு கொடை அளிக்கப்பட்ட நிலம் இருக்கும் ஊருக்கு அந்த ஆணை எடுத்துச் செல்லப்படும். மாதிரிக்காக இங்கு சில கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. அவை அடியில் வருமாறு:- இராஜராஜன் கல்வெட்டு (கி.பி. 1010) (இக்கல்வெட்டு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர்ப் பெருவுடையார்) வதி. ஸ்ரீ. ஏதத் விச்வ ந்ருபச்ரேணி மௌலி மாலோபலாலிதம் சாசனம் ராஜேய ராஜகேஸரி வர்மண: திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள காந்தளூர்ச் சாலை கலம் அருத்தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடும், கொல்லமும் கலிங்கமும் எண்திசை புகழ் தர ஈழமண்டலமும இரட்டபாடி ஏழரை இலக்கமும், திண்திறல் வென்றித் தண்டால் கொண்ட தன் எழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதக விளங்கும் யாண்டே, செழியரைத் தோசுகொள் கோ ராஜ கேசரிபந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு இருபத் தாறாவது நாள் இருபதினால் உடையார் ஸ்ரீராஜ ராஜ தேவர் தஞ்சாவூர்க் கோயிலினுள்ளால், இருமடி சோழனின் கீழைத் திருமஞ்சன சாலை தானஞ் செய்தருளாலிருந்து, பாண்டிய குலாசனி வளநாட்டு, தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்வர முடையார்க்கு நாம் குடுத்தனவும், அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும், மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்தில் கல்லிலே வெட்டுக! என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டின. (1) யாண்டு இருபத்தைஞ்சாவது நாள் முன்னூற்றிருபத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர், ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை எண்ணூற்றிருபத் தொன்பதின் கழஞ் சேய் முக்காலேய் மூன்று மஞ்சாடி (2) நாளதினாலேய் குடுத்த பொன்னின் பத்மாசன ஸ்ரீபலித் தாலம் ஒன்று, மேற்படி கல்லால் நிறை தொளாயிரத்துத் தொண்ணூற்றூற்றைங் கழஞ்சரையே நாலு மஞ்சாடி (3) யாண்டு இருபத்தாறாவது நாள் பதினாலில் உடையார் ஸ்ரீராஜ தேவர் குடுத்த பொன்னின் திருப்பட்டம் ஒன்று, ஆடவல்லான், என்னும் கல்லால் நிறை நானூற்றுத் தொண்ணூற்றொன்பதின் கழஞ்சு (4) நாளதினாலேய் குடுத்த பொன்னின் திருப்பட்டம் ஒன்று, மேற்படி கல்லால் நிறை நானூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ் சரையேய் இரண்டு மஞ்சாடி (5) நாளதினாலேய் குடுத்த பொன்னின் திருப்பட்டம் ஒன்று, மேற்படி கல்லால் நிறை நானூற்று எண்பத்து நாற்கழஞ் சே கால். இதை அடுத்து, மேலும், காளங்கள், திருப்பள்ளித் தொங்கல், தவளச் சத்திரம், திருக்கொற்றக்குடை, ஈச்சோப்பிகை, வெண்சாமரக்கை, காளஞ்சி முதலியவைகளும், அணிகலன்களில் சிரி முடி, வீரப்பட்டம், திருஉதரப்பந்தனம் திருவடிக்காரை, திருப்பட்டிகை, சப்தசரி, பஞ்சசரி திருக்குதம்பை, தோடு, இராசவர்த்தம், திரள் மணிவடம், தாலிமணிவடம், சிரிசந்தம் முதலிய பொன் அணிகளும், வடுகவாளி, ஏகவலி, முத்தின் சூடகம், திருக்கால் வடம், முதலிய முத்து அணிகளும், கண்டநாண், புல்லிகைக் கண்டநாண், பாசமாலை, மாணிக்கத்தின் தாலி, சிரிவாகுவலயம், பதக்கம், இரத்தின வளையம், இரத்தின கடகம், இரத்தினமோதிரம், நவரத்தின மோதிரம், பிருஷ்ட கண்டிகை முதலிய மணிகள் பதித்த அணிகலன்களும், ஒட்டு வட்டில், கலசம், குடம், தட்டம், குறுமடல், கிடாரம், முதலிய வெள்ளி பொன் போன்ற தாதுப் பொருள்களால் செய்த பரிகலங்களும் நிபந்தமாக அளிக்கப்பட்டுள்ளன. பல்லவர் செப்பேடு பல்லவ சிம்மவர்மன் (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) இக்கல்வெட்டு தஞ்சை மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டாரம் பள்ளன் கோயில் என்ற ஊரில் கிடைத்த செப்பேடுகள் கோ விசய சிம்ஹவர்மற்கு யாண்டு ஆறாவது வெண்கொற்றக் கோட்டத்துப் பெருநகர நாட்டு நாட்டார் காண்க. நம்நாட்டு அமண் சேர்க்கை பருத்திக்குன்றில் வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச் சந்தமாகக் கொடுத்தோம். தாங்களும் படாகை நடந்து கல்லும் கள்ளியும் நாட்டி அறையோலை செய்து குடுத்துவிடுதக? என்ற நாட்டார்க்குத் திருமுகம் விட, நாட்டாரும் திருமுகம் கண்டு, தொழுது, தலைக்கு வைத்து படாகை நடந்து, கல்லும் கள்ளியும் நாட்டி நாடார் விடுத்த அறையோலைப் படிக்கு எல்லை; கீழ்பால் எல்லை ஏந்த லேரியின் கீழைக்கடற்றின் மேற்கும், நடைக் கொல்லை எல்லை; இன்னும் தென்பால் எல்லை இன்னும் நிலபாடி எல்லை, இன்னும் விலாடன்குற்றேத் தத்து எல்லை; இன்னும் மேல்பால் எல்லை. மாவேத் தத்துவதியின் கிழக்கும், மும்மூலை ஏத்தத்து எல்லை இன்னும் ஆற்றெல்லை; இன்னும் வடபால் எல்லை பெருங் கொல்லையின் தெற்கு இன்னும் பாண்டியன் கயத்து எல்லை. இன்னும் முருக்கங் கேணி எல்லை இவ்விசைத்த பெருநான்கு எல்லையகத்தும் அகப்பட்ட நிலம், நீர் நிலமும் புன்செய்யும் களரும் கன்று மேய்பாழும் காடும் பீடிலிகையும் கிடங்கும் கேணியும் மனையும், மனைப்படப்பும், உடும்போடி ஆமை தவழ்ந்தது எல்லாம் உண்ணிலன் ஒழிவின்றி கோவும் பொறியும் மாற்று, குடிநீக்கி, இவ்வூர் பெற்ற வஜ்ர நந்திக் குரவர்க்கே பள்ளிச் சந்தமாக தாமரிலும் பதினாறரைப்பட்டி நிலம் கொடுத்தோம் இந்நிலத்திற்கெல்லை; கீழ்பால் எல்லை புலிகிழார் பட்டியின் மேற்கும் தென்பால் எல்லை முள்ளை பாத்தெல்லையின் வடக்கும் மேல்பால் எல்லை போக்குவாய்ச் செறுவின் கிழக்கும், வடபால் எல்லை பல்லாங்குளிக் காலின் தெற்கும், இந்நான்கு எல்லையகத்தும் அகப்பட்ட பூமியும் பருத்திக் குன்றின் வஜ்ர நந்திக் குரவர்க்கே பள்ளிச் சந்தமாக பரதத்தி சென்றது, நரபயன் கணத்தியால் ஸித்தம். இராமநாதபுரம் கல்வெட்டு (பழம் பாண்டிய மன்னன் மாறன் சடையன்) (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) 1. ஸ்ரீ கொ மாறஞ்சடையனொடு சோழ நாட்டிடவை யாத் 2. திரை செய்த பராந்தகப் பள்ள வெளானாகின நக் 3. கம் புள்ளன் றன் பெராற் புள்ளனெரி என்று 4. குள மாக்கிக் கற்கொதிக் குமுழி செய்வித்துக் குறை 5. ப்பணி நின்றது முற்றுப் பெறுத்தான் புள்ளந 6. க்கன் னதுசெய்த தச்சன் வடுகங் கூற்றன் அ 7. வன் மகன் குறைப் பணி முற்றுவிக்க புள்ள ந 8. க்கன் அவனுக்குக் காணியாக அட்டின பூமிப் பன் 9. னி நாட் டிரண்டு கூற்றிலும் ஊர்கூளத்துக் கீழ் 10. தரில நீர் பாடு கால் லொரொ வயல் பதக் 11. கு நெல் இராமநாதபுரம் திண்டுக்கல் தாலுகாவில் உள்ளது. திண்டுக்கல் வகையறால் சக்காம்பட்டி ஜமீன்தார் சேகரம் என்று இது மக்கென்சியின் பிரதியில் குறிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு வடபுறம் மந்தையின் படபாறையின் மேல் செதுக்கப்பட்டுள்ளது. (எண் 600 of 1905) இது 10 - ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு, இது - பாண்டியன் மாறன் சடையன் ஆட்சியில் வெட்டப்பட்டது. அரசன் சோழநாட்டைச் சேர்ந்த இடவையின் மீது நடத்திய இராணுவத் தாக்குதலின் பொழுது வரையப்பட்ட கல்வெட்டாகும். பராந்தகப் பள்ளி வேலன் என்ற நக்கன் புள்ளன்; அரசன் மாறன் சடையனோடு, சோழநாட்டிலுள்ள இடவய் மீத எடுத்த படை யெடுப்பில் கலந்து கொண்டான். இவன் தன் பெயரால் புள்ளனேரி குளத்தை வெட்டினான். கற்கள் பதிப்பித்தான். ஊற்றைத் தோண்டினான். ஆனால் அவை நிறைவு பெறவில்லை. ஆனால் அவன் மகன் புள்ள நக்கன் என்பவனால் நிறைவு செய்யப் பெற்றது. கல்தச்சன் வடுக்கன் குற்றன் என்பவன் அந்தப் பணியைச் செய்து முடித்தான். புள்ளன் நக்கன் அவனுக்குக் காணியாக பண்ணி நாடு படக்குநாடு என்ற இருபகுதிகளிலும் வயல்கள் அளித்து இந்தக் குளத்தின் தலைமை பணியிலிருந்து கால்வாய்மூலம் நீர்பாய்ச்சப் பெற்றது. முற்காலத்தில் அரசர்கள், தமிழ் எழுத்திலும் (வட்டெழுத் திலும்) கிரந்த எழுத்திலும், பிராமி எழுத்திலும், வடமொழி எழுத்திலும் முக்கியமான அரசு ஆணைகளை ஓலைகளில் எழுதி வந்தார்கள். அதன் மீது அரச முத்திரைகள் இடப்பட்டு வந்தன. பின்னர் நீண்ட நாள் இருக்கவேண்டிய பத்திரங்களை செப்பேடு களிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுவந்தன. பல செப்பேடுகளை அறியாமையால் அழித்துவிட்டார்கள். பல லெய்டன், பிரிட்டன் முதலிய நாடுகளில் உள்ள தொல் பொருள் காட்சி சாலையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சிலர் கோயில் சுவர்களிலும், படிகளிலுமுள்ள கல்வெட்டுகள், கோயில்களை இடித்துக் கட்டும் பொழுது அதன் அருமை தெரியாது புதைத்தும் அழித்தும் விட்டுள்ளார்கள். கல்வெட்டுக்களை, கல்லில் செதுக்குமுன் மையால் கல்லில் எழுதி, பின்னர் உளிகொண்டு செதுக்குவார்கள். முதலில் சிவப்பு மையால் எழுதுவது மரபு. சில கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் சிவப்பு மை கொண்டு எழுதி எழுத்துக்கள் வெட்டத் தொடங்கி நிறைவு பெறாமல் இருக்கின்றன. சிவப்பு மையால் எழுதிய எழுத்துக்கள் சில வெட்டப்பட்டும் சில வெட்டப் படாமலும் இருக்கின்றன. சிவப்பு மை எழுத்துக்கள் 700, 800 - ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் மழையும், வெயிலும், காற்றும் தாக்கியும் சிவப்பு மை மங்காது மறையாது புத்தம் புதிது போல் திகழ்கின்றன. இப்பொழுது ஒருலட்சத்திற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சுமார் 25 - ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டு களும், செப்பேடுகளும் படியெடுத்து வாசிக்கப் பெற்று நூல்வடிவம் பெற்றுள்ளன. நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் அறிஞர் மெக்கன்சி என்னும் ஆங்கிலேயர் பல கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் தேடி தொகுத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவைகளை நூலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளார். முதன் முதலாக 1892இல் ஆங்கிலத்தில் தென் இந்திய சாசனங்கள் என்னும் பெயரால் டாக்டர் இ. ஹல்ட்ச் பி.எய்ச். டி. (Dr. E. Hultzsch Ph. D) அவர்கள் பல பகுதிகளை வெளியிட்டுள்ளார். திரு. தி. நா. சுப்பிரமணியம் போன்றவர்கள் அரிதின் முயன்று பலசாசனங்களைச் சேகரித்துப் படித்து நூல் ஆக்கம் செய்துள்ளார்கள். (South Indian Temple Inscriprtions) 1929. புதுக் கோட்டை மாவட்டச் சாசனங்களும் மூலம் படிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. திரு. சி. சிவராமமூர்த்தி இண்டியன் எபிகிராபி அண்ட் சவுத் இண்டியன் கிரிப்ட் என்ற நூலின் மூலமாகவும் சில கல்வெட்டுகள் படிக்கப்பட்டு 1966 - இல் நூல் வடிவம் பெற்றுள்ளன. நந்தவனம் அன்றாடம் நடைபெறும் பூசைகளுக்கும் திருவிழாக்களுக்கும் மலர்கள் தேவைப்படுவதால், புஷ்பவிதியில் நியமிக்கப்பட்ட மலர்கள் கோயில்களுக்கு கிடைப்பதற்காக நந்தவனங்கள் ஏற்பட்டுள்ளன. மிகத் தொன்மையான காலத்திலிருந்தே தமிழகத்தில் ஆலயங்களுக்காக நந்தவனங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. நந்தவனங்களில் பூசைக்கு ஆகா மலர்கள் இடம் பெறா. பூசைக்குரிய மலர்ச் செடிகளை வரிசையாக நட்டி நீர்பாய்ச்சி பூத்த மலர்களை விடியற் காலத்திலே பறித்து தொடுத்துக் கோயிலுக்குச் சேர்ப்பிக்கப் படும். பூப் பறித்து மாலைகள் கட்டும் பணி மிகவும் சிறந்த தொண்டாகக் கருதிப் பல பெண்கள் தங்களை இப் பணிக்கு அர்ப்பணித்துள்ளனர். சைவத்தில் சமயத்தில் சிவகாமியாண்டார் என்பவரும் வைணவத்தில் பெரியாழ்வாரும் இப்பணியில் ஈடுபட்ட தொண்டர்களாகும். பூப்பறித்து மாலை தொடுத்தலும் திருக்கோயில் மெழுகுதல், கோலம் போடுதல், தேவாரம் பாடுதல் நடனமாடுதல் என்ற தெய்வப் பணிக்கு பல உயர்குலப் பெண்கள் தங்களை அர்ப்பணித்து இன்று கத்தோலிக்க சமயத்திலுள்ள கன்னியர்கள் போல் இருந்து வந்தனர். ஆண்களிலும் இவ்வறப்பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அடியவர்கள் பலர் உண்டு. நந்தவனங்களை நிறுவி கிணறுகளைத் தோண்டி தண்ணீர் பாய்ச்சி மலர் பறித்த மாலை தொடுக்கும் திருப்பணிக்கு என்றும் தவறாது நடைபெறுவதற்கு வேண்டிய நிலங்கள் மானியம் அளித்த அரசர்களும், வணிகர்களும் உண்டு. பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ, நிர்ப்பூ, நிலப்பூ என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சு வதற்குக் கேணிகளும் தடாகங்களும் ஏற்படுத்த பட்டிருந்தன. சில நந்தவனங்கள் மா, பலா, வாழை, தென்னை, கமுகு முதலிய மரங்களை வைத்து வளர்த்தும்வருவர். கோயில்களில் திருவமுது செய்தவற்கு நன்செய், புன்செய் நிலங்களைத் தானம் செய்ததாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சான்று கூறுகின்றன. இந்த நிலங்களில் விளையும் நெல்லும் இதர தானங்களும் நைவேத்தியங் களுக்கும் திருப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் பிரசாதங் களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தானியங்களைச் சேகரித்து வைக்கப் பெரிய களஞ்சியங்களையும் கட்டுவர். திருக்கோயில்களில் நைவேத்தியங்கள் தயார் செய்ய மடப்பள்ளி களும் உள. இந்த அதிகாரம் எழுத ஆதரவாக இருந்த நூற்கள் 1. பாண்டியன் செப்பேடுகள் பத்து : தமிழ் வரலாற்றுக் கழகம் சென்னை முதற்பதிப்பு 1967. 2. கல்வெட்டியல் ஆசிரியர்: இரா. நாகசாமி, நடன காசிநாதன் மற்றுமிருவர் சென்னை 1972. 3. செங்கம் நடுகற்கள் - இரா. நாகசாமி, சென்னை 1974 4. சோழன் பூர்வ பட்டயம்: சென்னை அரசுக் கீழ்த்திசைக் கழக வெளியீடு எண் V 1950 5. கல்வெட்டு விளக்க உரை - வித்துவான் வை. சுந்தரேச வாண்டையார் உரையுடன் கடலூர் 1955 6. சாசன மாலை வெளியிட்டவர் எ. ராஜம் சென்னை 1966 7. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் - சதாசிவ பண்டாரத்தார் சென்னை 1961 8. South Indian Inscriptions Vol I (Tamil) Edited Translated by E.HULTZS CH. Ph. D. South Indian inscriptions.Vol II ஆலயத்தின் தத்துவ விளக்கம் கோயிலின் தத்துவம் கோயில் உடம்பை விரித்துக் குறிப்பிடுவதால் சரீரப் பிரதாரம் எனப்படும். இருதயத்தை விரித்துக் குறிப்பிடுவதால் இருதயப் பிரதாரம் எனப்படும். இவ்விருவகைப்பட்ட கோயிலில் உடம்பின் பஞ்சகோசம் முதலானவைகளைக் காட்டுவது என்றும் உள்ளத்தில் சொல்லும் பொருளுமாயுள்ள விதத்தைத் குறிப்பித்துக் காட்டுவதும் எனக் கோயில்களை .இருவிதமாக நமது முன்னோர்கள் கண்டனர். தத்துவ நூற்களின் விளக்கம் எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் இலங்கு முயிர் உடலனைத்தும் ஈசன்கோயில் என்றும் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பேராலயம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றும், குறிகளும் அடையாளமுங் கோயிலும் நெறிகளு மலர் நின்றதோர் நேர்மையும் என்றும் தத்துவ ஞானிகள் ஆலயத்தை இறைவன் உறையும் கோயிலாகவும் உயிரை அவனது சந்நிதியாகவும் கூறியுள்ளனர். கோயிலில் கர்ப்பக் கிரஹம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், நான மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என்னும் ஆறு மண்டபங்களும் உடம்பிலுள்ள, 1 மூலாதாரம், 2 சுவாதிட்டானம், 3 மணிபூரகம், 4 அனாகதம், 5. விசுத்தி, 6 ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் உணர்த்துவதாகும். ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் உண்டு. அவைகளில் முதலாம் ஆவரணம் கண்ணுக்குப் புலப்படும் அன்னமய கோசத்தையும் 2ஆம் ஆவரணம் கண்மேந்திரியங்களும் பிராணனுங் கூடி நிற்பதாகிய பிராணமய கோசத்தையும் மூன்றாம் ஆவரணம் ஞானேந்திரியங் களும் மனதுங் கூடியுள்ள மனோமய கோசத்தையும் நாலாம் ஆவரணம் ஞானேந்திரியங்களும் புத்தியுங்கூடியுள்ள விஞ்ஞான மய கோசத்தையும் ஐந்தாம் ஆவரணம் அந்தகரண விருத்தியும் ஆனந்தமும் கூடிய ஆனந்தமய கோசத்தையும் குறிப்பிடுகின்றன. ஏழு பிரகாரங்கள் உண்டு. எனில் அவைகள் தோல், இரத்தம், மாமிசம், மேதை எலும்பு, மச்சை, சுக்கிலம் என்னும் எழுவகைத் தாதுக்களையும் குறிப்பிடுகின்றன என்பதைக் காண்க. கதவுகள் மூடுங்கால் சிவலிங்கத் திருமேனியை மறைப்பதாலும் திறக்குங்கால் சிவதெரிசனம் நிகழ்தலானும் அதுபோல் கோபம், ஆசை ஆணவம் என்பன மறைக்கில் ஆன்மலிங்கம் காணமுடியாது போதலின் அவித்தையோடு அவை நீங்கியவிடத்து ஆன்மலிங்கங் காணப் படலானும் மறைப்பையும் திறப்பையும் காட்டுகின்றன. இராசசபை, தேவசபை, நிருத்த சபை, கனகசபை, சிற்சபை போன்ற சபைகள் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் 5 கோசங்களையுங் குறிப்பிடுகின்றன. தூபி அல்லது கும்பம் இது இருதய கமலமாய் விளங்குவது இதனுடைய கீழிடம் பிருதிவித தத்துவம், மேல் நாளம் அன்பு முதலான இருபத்துமூன்று தத்துவங்களாம்; நாளத்திலுள்ள முட்கள் அமரேசன் முதல் சிகேதன் ஈறாகிய எழுபத்திரண்டு புவனங்களாய், எட்டு இதழ்கள் எட்டுத் தத்துவங்களாம் அறுபத்து நான்காயுள்ளன கேசர வடிவங்களாம். ஈசுரம் சதாசிவம் என்னும் இரண்டு தத்துவங்கள் நாளமாம் பூ என்பவற்றின் நுனி அடிமுடிச்சு ஆகியவைகள் மாயையாம். பொகுட்டு சக்தியாம். அப்பொகுட்டில் தோன்றும் ஐம்பத்தொரு வடிவம் சிவ தத்துவங்களாம். கலசங்கள் சத்திகளாம். இதனால் இருதய கமலத்தில் பரமசிவன் திகழ்கின்ற உண்மை குறிப்பிடப்படுகிறது. உடம்பின் பிரமரந்திர மத்திய கபாலத்துவாரமே உத்தர கோபுரவாயிலாம். காற்பெருவிரலின் முடிபும் கையின் நடுவிரல்களின் முடிபும் குதத்துவாரமும் தக்கணகோபுர வாயிலாம். புருவமத்தியமே அந்தராள கோபுர வாயிலாம் உத்தியே பலிபிடமாம். இருதயம் துவசத் தம்பம், பஞ்சகோசம் அந்தக் கரணம் புருடன் என்றும் கண்டம் நந்தி என்னும் அறிவர் சிவயோகிகள். துவசத் தம்பம் சுமுமுனாநாடியாம் இடைகலை பிங்கலை நாடிகள் இதிற்சென்று அசைவற்றுத் தம்பம் போல் நிற்குந் தன்மை வருதலின் அதற்கொப்பாயிற்று இண்டலிசத்தி போன்றது. துவசத்தம்பம் என்று கூறுவாரும் உளர் . இதை, ஆயபதிதான் அருட் சிவலிங்கம் ஆய பசுவு மடலேறென நிற்கும் ஆய பலிபீட மாகுநற் பாசமாம் ஆய வரனிலை யாய்ந்து கொள்வார்க்கே என்பதனாற் றெளிக. திருவாசி பிரணவ வடிவமாம். இதனால் அனைத்தும் பிரணவத்தினின்று தோன்றி ஒடுங்கும் என்பதும், மற்றும் பிரணவம் எல்லாத் தேவர்களுக்கும் பிறப்பிட மாயும் பரசிவத்திற்கு இருப்பிட மாயும் உள்ள தென்பதும் குறிப்பிடத்தக்கது. இதை, ஓங்காரமே நற்றிருவாசி யுற்றதனி னீங்கா வெழுத்தே நிறை சுடரா - மாங்காந் மற்றா ரறிவரணி யம்பலத்தா னாடலது பெற்றார் பிறப்பற்றார் பின் என்பதனாலும் பிறவாற்றானும் உணர்க. கோயிலில் திருவலகிடல் மணத்தின்பாலுள்ள காமம் வெகுளி முதலான குப்பைகளையும் தொண்ணூற்றாறு தத்துவங்களென்னும் குப்பைகளையும் களைதலைக் குறிப்பிடுகின்றது. இதை, காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும் தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை யாதிகைழ்ந்து போக்கி என்பதனாலும் பொய்த்துறு குப்பை கிளைந் தொணி பொங்கு முத்தை யளித்தென முத்தை தனக்கு என்பதனாலும் பிறவாற்றானாம் உணர்க. திரு மெழுக்கிடல் மேற்கூறிப் போந்தவாறே குப்பைகளைக் களைந்த உடன் தத்துவ ஞானமெனும் நறுஞ் சாணத்தைக் கொண்டு அன்பென்னும் நீருடன் கலந்து மெழுகில், மனோலயந் திகழுமிடத்து தகராசூரவொளியாகிய சிவலிங்கம் இனிது விளங்கும் என்பதைக் குறிக்கிறது. இதை, சின முதலிய மயல்தீர மாற்றுபு வினைதபு வாய்மை மெழுக்கை யன்பெனும் புனலொடு விரவியே பூசி னல்லது மனமெனு மனையிடை வராதி லிங்கமே என்பதனாலும், பொருதிற னமையிருள் நிறத்து மதமுடை யடுசினத்தை வகைக்கடாவும் யாப்பவிழ்த் தகற்றி யம்புகொடு மெழுகி என்பதனாலும், பிறவாற்றானு முணர்க. திருவிளக்கிடல் மனம் என்னும் தகழியில் விவேக மென்னும் நெய்யை வார்த்து உயிர் என்னும் திரியைப் போட்டு பிராணனாகிய காற்றை நிறுத்தி ஆணவமாகிய இருளை நீக்கி சிவஞான ஒளியைப் பரப்புந்தன்மையைக் குறிப்பிடுகின்றது. உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகழியாக மடம்படு முணர் நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி யிடம்படு ஞானத்தீயால் எரிகொளவிருந்து நோக்கிற் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே எனவும் ஞான விளக்கினை யேற்றி எனவும் அருள் விளக்குகளேற்றித் துபை விருளைத் துறந்து முன்புற மெய்யெனும் விதானம் விரித்து எனவும் பிறவும் கூறுமாற்றானறிக. திரைச் சீலைபோல், மாயை என்னும் திரையே சிவத்தை அறிய வொட்டாமல் மறைத் திருக்கின்ற தென்றுணர்ந்து, அதனை அமமாயாவியாகிய பரமசிவனது திருவருளால் (வாளால்) கிழித்தெறிந்து விட்டு ஞானக் கண்ணால் சிவமாகிய இலிங்கத்தை நாடி நோக்கல் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது திரைச்சிலை. இதை, மாயப் படலங்கீறித் தூய ஞான நடனம் பெற்றனள் எனவும் மாயைத் திரையை நீக்கி நின்னை யாரறிய வல்லார் எனவும் பிறர் கூறுமாற்றானறிக. இதனாற் போந்த பொருள் என்னையோ வெனின்? தேவாலயங்களை தேவதைகளாகவே பாவித்து வழிபடல் வேண்டும் என்பதாம். எனவே சிவாலயத்தை சிவமாகவே சிந்தித்துத் தரிசித்து வழிபடல் வேண்டும் என்பது கொள்ளக் கிடந்தமை காண்க.. அற்றாகலின்றே, ஆலயந்தானும் அரனெணத் தொழுமே1 என்று கட்டளை யிடுகின்றது சிவஞான போத்த திருமறையும். எனவே கோயில் என்பது உடல் என்று எண்ணப்படும். கோயில் இறைவன் உறையும் இல்லத்தின் புறச்சின்னமாக எண்ணப் படும். புறச் சின்னத்தை உடல் அமைப்பிற்கும் அதன் தத்துவத்திற்கும் ஏற்ப அமைக்கவேண்டும் என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன. தமிழ் ஆகமம் என்று கூறப்படும் திருமந்திரம் உடலை நடமாடும் கோயில் என்று நயம்பட உரைக்கின்றான். படமாடக் கோயிற் பகவர்க் கொன்றீயில் நடமாடக் கோயில் நம்பர்க் கங்காகா நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில் படமாடக் கோயிற் பகவர்க் காமே சைவ சமய தத்துவம் ஆறாநிலையும் பிண்டவடிவிற் காட்டும் படம் போல் விளங்குவது திருக்கோயில். இது நின்று பயன் அளிக்கும் அருள் நிலையம். சிவனை மாறா நினைவுடன் யாண்டும் இயங்கும் மக்களின் உடல் நடமாடும் நல்ல திருக்கோயில் அவர்தம் மறவர் நினைவிற் குரிய இடங்கள் எட்டு. அவை நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல், மெல்லல், துயிலல், விழித்தல், இமைத்தல் என்பன. மக்கள் உடல் நடமாடும் கோயில் என்று பயனருளும் சிறப்புடைத்தது. இத் திருக்கோயிலுக்குச் செய்யும் சிறப்பு முழுவதும் படம் போன்ற இந்த இல்லில் இருக்கும் பரமனைச் சாரும். ஆனால் படமாடக் கோயில் வழிபாடு ஆண்டே தங்கி நடமாடக்கோயிலை நண்ணுவதில்லை. இவையிரண்டும் முறையே கல் எழுத்தும் கருத்து எழுத்தும் ஆகும். இதன் கருத்து மாடங்களையுடைய கோயிலானது தத்துவங்களைக் காட்டும் படம் போன்ற இல்லில் இருக்கும். ஆதாரங்களாகிய மாடங்களையுடைய நடமாடும் உடம்பான கோயில் இருக்கும். சிற்ப ஆசாரியர் பெருங்கோயில்களையும் விலைமதிக்க ஒண்ணாத கற் சிலைகளையும், வெங்கலப் படிமங்களையும் படைத்த சிற்ப வல்லுநர்கள். இவர்கள் வடமொழியாளர்களால் தபதிகள் (தபதிகள்) என்று அழைக்கப்பட்டனர். சிற்ப ஆசாரியர்களில் பொற்கொல்லர்கள், கன்னார்கள், மரத்தச்சர்கள், கல்தச்சர்கள், இரும்புவேலைசெய்யும் கொல்லர்கள் என்று ஐந்து பிரிவுகள் உண்டு. இவர்களில் கோயில்கள், சிலைகள் வெண்கலப் படிமங்கள் செய்யும் தட்டார்கள் சிற்பிகள் பதிகள் எனப்படுவர். இவர்கள் சிற்ப நூற்கள் பயின்றவர்கள். ஆகமங்களின் நுணுக்கமும் அறிந்தவர்கள். இவர்கள் தமிழர்கள்; பண்டையத் தமிழ்நாட்டில் மக்கள், அவர்கள் வாழும் நிலம் பற்றி, குறிஞ்சி நிலமாக்கள், முல்லை நிலைமாக்கள், மருதநிலமாக்கள், நெய்த நிலமாக்கள் என்று நானில மாக்களாக வகுக்கப் பெற்றிருந்தனர். மருதநிலத்தில், எல்லா மக்களுக்கும் இன்றியமையாத உணவு உற்பத்தி உந்தி எழுந்தது. ஆதியில் இந்நிலமக்கள் கல்லால் நிலத்தைக் கிண்டிக் கிளறி பயிர்த்தொழில் செய்துவந்தனர். இந்நிலத்தில் இரும்பு கிடைத்தது. அதன் பயனாக பல இரும்புக் கருவிகள் செய்யப் பெற்றன. உளி, சுத்தியல், வாள், தமர் ஊசி, அரிவாள், கோடரி, மண்வெட்டி, இழைப்புளி போன்ற கருவிகள் செய்யப் பெற்றன. இரும்புக் கருவிகள் எழுந்ததின் பயனாக உழவுத் தொழில் வளர்ந்து வளம் பெற்றன. அரிவாள், மண்வெட்டி, கலப்பை, கோடரி முதலிய உழுதொழில் செய்தவற்குரிய இரும்பு வேலை செய்யும் கொல்லர் தொழிலும் மரவேலை செய்யும் தச்சர் தொழிலும் எழுந்தது. மக்கள் உழுதல் செய்வதற்கு, மாடுகளைப் பழக்கினர். மாடுகள் உழுவதற்கும், மரம் அடிக்கவும், போர் அடிக்கவும், பொதி சுமக்கவும், வண்டி இழுக்கவும், வாகனமாகவும் பயிற்றப்பட்டன. நாளடைவில் செம்பு, பித்தளை, வெள்ளி, உலோகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆதியில் களிமண்ணால் பானைகளும், சட்டிகளும், குதில்களும் செங்கல்களும் செய்யப்பட்டன. அப்பால் தெய்வ உருவங்களும் இசைக் கருவிகளான மத்தளமும், இடை சுருங்கிய பறைகளும் செங்கல்களும் சுடுமண்ணாற் செய்யப்பட்டு நீண்டநாள் நிலைத்து நிற்க வழிகாணப்பட்டது. நாளடைவில் படிப்படியாய் வெண்கல பாத்திரங்களும், கல் மரவைகளும், கல் சட்டிகளும், கல் விளக்குகளுமாக கன்னார் தொழிலும், கல் தச்சர் தொழிலும் எழுந்தன. உணவுப் பொருள் களும், மட்பாண்டங்களும், வெங்கல பாத்திரங்களும், மரத்தினால் செய்யப்பட்ட மரவைகளும், விளையாட்டுப் பொருளும், உலோகத்தினால் செய்யப்பட்ட உண்ணும் பாத்திரங்களும், உணவுப் பொருள்களையும் நீரையும் சேமித்து வைக்கும் வட்டில், செம்பு, கொப்பரை, அண்டா முதலிய பாத்திரங்களும் கல்லினால் செய்யப் பட்ட பானை, சட்டி, விளக்குகளும் செய்யப்பட்டதால், வணிகம் பெருகின. பிற நிலங்களில் வாழும் மக்களுக்கும், மருத நில மக்களுக்குப் பண்ட மாற்றாக நெல், எள், கம்பு, கேள்வரகு, பயறு, உளுந்து, முதலிய உணவுப் பொருள்களையும், அரிவாள், கோடரி, பானை, சட்டி போன்ற பொருள்களை விற்று வணிகம் வளர்த்தனர். இதன்பின் மருத நிலம் வளம் பெற்று எழுந்தது. அங்கு மாட மாளிகைகளும் கூட கோபுரமும், கோயிலும், அரண்மனையும் தோன்றியது. எங்கும் சிற்றூர்களும், நகரமும், பட்டினமும் எழுந்தன. கடல் கடந்து தொழிலாற்றும் வணிகம் வளர்த்தனர். நிலம் செல்வச் செழிப்புற்றது. கைத் தொழில்கள் பல துளிர்த்தன. மருத நிலத்தில் பல தொழிலாளர்கள் பெருகினர். தொழில் வளர்ச்சியின் பயனாய் மருத நிலம் பொருளாதார வளம் பெற்றது. அங்கு அறிவு வளர்ச்சி எழுந்தது. கல்வி துளிர்த்தது. கலை வளர்ந்தது. சமயம் தோன்றியது சாத்திரங்கள் மலர்ந்தது. இசையும், எழுத்தும் பிறந்தது. அழகுணர்ச்சி அரும்பியது. தெய்வங்கள் திருவிளையாடல் புரிந்தன. பொருளாதாரச் செழிப்பின் பயனாய் கலைகள் கணக்கிலாது கிளர்ந்தெழுந்தன. சிற்பத்திறன் மிக்க வல்லுநர்கள் பலர் தோன்றினர். மண், கல், சுண்ணம், மரம், உலோகம், தந்தம் முதலிய பொருள்களால் எண்ணற்ற கைவினைப் பொருள்கள் செய்யப் பட்டன. செம்பு, பொன், வெள்ளி, பித்தளை, வெண்கலம், ஈயம், நாகம் முதலிய தாதுப் பொருள்களால் பல தெய்வத் திருஉருவங்கள் வார்ப்படத்து வார்த்தும் உழி கொண்டு செதுக்கியும் அழகுறச் செய்யப் பெற்றன. பல உயிர் ஓவியங்கள் உருப்பெற்றெழுந்தன. தெய்வத் திருஉருவங்கள் திறம்படச் செய்தமையாலும், அருள் பொலியும் திருக்கோயில்கள் பல ஆண்டவனுக்கு அமைத்ததின் பயனாகவும் இவர்கள் தெய்வ கம்மியர் எனப் பெயர் பெற்றனர். மயன், விசுவகர்மா போன்ற தெய்வ கம்மியர்கள் இவர்கள் மரபில் தோன்றினர். இவர்களில் மண்ணாற் பாவைகளைச் செய்பவர்கள் மண்ணீட்டாளர் என்று அழைக்கப்பட்டனர். தாதுப் பொருள் களினால் படிமங்களையும் கல்லினாற்சிலைகளையும், செங்கல்லி னாலும், கருங்கல்லினாலும், பளிங்குக் கற்களாலும், வெண்மை யான சுதைகளினாலும், மரங்களினாலும், திருஉருவங்களையும், திருக்கோயில்களையும் சமைப்பவர்கள் கம்மியர், சிற்பிகள், தபதிகள், கல்தச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். கட்டிடக் கலை அமைப்பில் தமிழ் நாட்டில் உள்ள சிற்பிகள் பண்டு தொட்டு உலகிலே ஒப்புவமையற்றவர்கள் என்று கூறலாம். சிந்து வெளியில் இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்டு முன்னர் பெரிய நகரங்களையும், மகோன்னதமான மாபெரும் மாளிகைகளையும், உலகிலே உயர்ந்த உப்பரிக்கைகளையும், மூடுசாக்கடைகளையும், உலகம் கண்டும் கேட்டும் அறியாத செய் குளங்களையும் எடுப்பித்தவர்கள் தமிழகத்துச் சிற்பிகளின் முன்னோர்களேயாவர். விசுவகர்மாவின் வழிவந்தவர்களேயாவர். அவர்கள் திராவிடர்கள் என்று கூறப்பட்டதால் வேறு இனத்தவர்கள் ஆகிவிடமுடியாது. திராவிட சமூகத்தின் முன்னோடிகள் தமிழர் என்று வரலாற்றுப் புலமை மிக்க அறிஞர்கள் சொல்வதின் மூலம் சிந்து வெளி நாகரிகத்தையும் அங்கு காணப்பெற்ற கட்டிடங்களையும் கோயில்களையும், குளத்தையும் சிவன், சிவலிங்கம், உமாதேவி, ஆடவல்லான், நிலத்தெய்வம், நீர்த் தெய்வம் போன்ற திருஉருவங்களையும் படைத்தவர்கள் தமிழ் நாட்டுச் சிற்பிகளின் முன்னோர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. உலகிலே உயர்ந்த நாகரிகமாக சுமார் 4000 ம் ஆண்டிற்கு முன் எழுந்த எகிப்திய நாகரிகமும், பாபிலோன் நாகரிகமும், கிரீட் நாகரிகமும் திராவிட சிற்பத் தொடர்டையது என்றும், சிந்து வெளி நாகரிகத்தை அளித்த ஆரிய மறவர்களே எகிப்து, பாபிலோன், கிரீட் நாகரிகத்தையும் அளித்தார்கள் என்று இன்று பல வரலாற்றுப் புலவர்கள் கூறுவதோடு தமிழர்களும், அவர்களின் தெய்வமாகிய சிவனும், சிவநெறியும் கலையும் ஒருகாலத்தில் உலகம் முழுவதும் பரவியுள்ளது என்பதற்கு சான்று காட்டியுள்ளார். இன்றில்லா விடினும் விரைவில் உலகில் உயர்ந்த கட்டிடக் கலைக்கு அடிகோலியவர்கள் தமிழ் நாட்டுச் சிற்பிகள் என்று உலக வரலாற்றிலும் கட்டிடக்கலை வரலாற்றிலும் முதல் இடத்தில் பொன் எழுத்தால் எழுதப்படும் என்று நம்ப இடம் உண்டு. இன்று, உலகில், சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கிய சிற்பிகளின் வழிவந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஏற்றம் உடையவர்களாய் விளங்குபவர்கள் தமிழ்நாட்டுச் சிற்பிகளேயாகும். அவர்கள் அமைத்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானமும், திருக் கடம்பூர் கரக்கோயிலும், பெண்ணாடகம் தூங்கானை மாடக் கோயிலும், ஆவுடையார் கோயில் கொடுங்கையும், திருவீழில்மிழலை வௌவால் நத்து மண்டபமும், சிதம்பரத்தில் ஆடும் ஆடவல்லானின் அழகு உருவப் படிமும், கோநேரிராயபுரம் ஐம்பொன்னாற் செய்த பெரிய அம்பலக் கூத்தன் படிமமும், மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் உள்ள எண்ணிலா ஒற்றைக்கல் தேர் உருவங்களும், (மாதிரிக் கோயில்களும்) மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் ஆள்வார்திருநகரி, சுசீந்திரம் கோயிலில் உள்ள சிலைகளும் இசைத் தூண்களும், குழல் தூண்களும், அணிவெட்டுக்கால்களும் நல்ல எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலில் இருந்து, சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும், சேரர்களும், விசய நகர நாயக்கமன்னர்களும் தமிழ் நாட்டில் பல கற்கோயில்களை எழுப்பி தமிழ் நாட்டு சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் சந்தர்ப்பத்தை அளித்துள்ளார்கள். அதன் பின்னர் நாட்டில் எழுந்த ஆட்சி யாளர்கள் தமிழ்நாட்டு சிற்பிகளின் திறனைக் காட்டும் வழிகளில் கோயில்களோ மாளிகைகளோ அமைக்கவில்லை. அதனால் சிற்பத் தொழில் குன்றிவிட்டது. சிற்பிகள் வேறு தொழில்களில் ஈடு பட்டுள்ளனர். சிற்பக் கலை வளராது போய்விட்டது. அரிய கலை தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆவிடையார் கோயில் கொடுங்கையில் ஒரு தாளின் (காகிதன்) பருமன் இருக்குமாறு கல்லை மெல்லியதாக, நுணுக்கமாகத் தமிழகச் சிற்பிகள் செதுக்கி இருக்கின்றார்கள். கல்லை மென்மையான உலோகத் தகடு போல் இழைக்கும் நுழைபுலம் வாய்ந்த நுண்ணறிவும் பட்டறிவும், கைவண்ணமும் மெய்வரப் பெற்றவர்கள் தமிழ்நாட்டுச் சிற்பிகள் என்பதற்கு ஆவிடையார் கோயில் கற்பணிகள் சான்று பகர்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவீழி மிழலையில் உள்ள வௌவால் நத்து மண்டபத்தில் உள்ள பெரிய வளைவுகளை அமைத்து மாபெரும் மணிமண்டபத்தை கட்டி முடித்த மகத்தான சிற்ப வல்லுநர்களின் சிறந்த பொறியியல் அறிவு என்றும் போற்றத்தக்கது என்று சிற்பக் கலை வல்லுநர்கள் அனைவரும் போற்றி வருகின்றார்கள். திருவலஞ்சுளியில் உள்ள திருக்கோயிலின் பலகணி வேலை மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தது. அங்கு சிற்பிகள் கல்லை மரம் போல் நூல் இழை எண்ணச் செதுக்கி உலகம் உள்ளளவும் தங்கள் புகழ் மங்காது செய்துள்ளனர். கொங்கு நாட்டில் தாரமங்கலம், தாடிக் கொம்பு என்னும் ஊரில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் அற்புத மானவைகளேயாகும். ஒப்பற்றது, உலகம் கண்டு வியக்கத்தக்கது. இந்தியாவிலே மிகப் பெரிய அதாவது 218 -அடி உயரமுள்ள விமானத்தை கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையில் சோழர்கள் கல்லால் சிற்பச் சிறப்புத் திகழக் கட்டியுள்ளனர். அதன் உச்சியில் உள்ள விமானத்தின் மீது ஏற்றப்பட்டிருக்கும் பிரமாந்திரக் கல் 80 - டன் எடையுள்ளது. நல்ல சிற்ப வேலைப்பாடு நிறைந்தது. 960 -ஆண்டுகளுக்கு முன் பழுவான பொருள்களைத் தூக்கும் பொறிகளை (Crane -I) கண்டும் கேட்டும் அறியாத பழங்காலத்தில் இப்பெருங்கோயிலை அமைத்து, விண்முட்டும் விமானத்தை எழுப்பி ஒரே கல்லினாலான 80 - டன் எடையுள்ள பெருங்கல்லைத் தூக்கி ஒரு நூல் அளவும் விலகாது ஒரு சிறு பகுதியும் உடையாது ஏற்றுவித்துள்ளது சிற்ப வல்லுநர்கள் மூளைக்கு ஒரு புதிராக இருந்து வருகின்றது. இந்தச் சிற்ப வேலைப் பாடுகள் செயற்கரிய நுணுக்கம் வாய்ந்தவை என்று இன்று எல்லாச் சிற்பிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இன்று கோயில்கள் கட்டிவரும் சிற்பிகள் கோயில் கட்டும் செல்வர்களோடு செய்யும் ஒப்பந்தத்தில், திரு வலஞ்சுழிப் பலகணி, திருவீழிமிழலை வௌவால் நத்து மண்டபம், ஆவிடையார் கோயில் கொடுங்கை, தாரமங்கலம், தாழ்க் கொம்பு என்னும் இரு ஊரில் உள்ள சிற்பங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய இக்கோயிலைச் சிறந்த அமைப்பிலும், சிறந்த சிற்ப வடிவிலும் அழகியதாய், உறுதியாய், அமைத்துத் தருகிறோம் என்று உறுதி மொழி கூறி உடன்படிக்கை எழுதி ஒப்பந்தம் செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் மூலம் பண்டைக் காலத்து சிற்பாசாரியர்களின் ஏற்றம் குறிப்பிடப் படுவதை நாம் உணரற்பாலது. இதனைக் கொண்டு இக்கால சிற்பிகள் முற்காலச் சிற்பாசாரியர்களைவிட தொழில் திறமையில் பின்தங்கியுள்ளார்கள் என்று எண்ணுவதற்கில்லை. சந்தர்ப்பம் அளித்தால் நஞ்செந்தமிழ் நாட்டில் வாழும் இன்றையச் சிற்பிகள் தமது முன்னோர்களை விட சிறந்த சிற்ப நுணுக்கம் அறிந்தவர்களாய் உள்ளவர்கள் என்பதைக் காட்டத்தயராய் இருக்கின்றார்கள் பண்டைக் காலச் சிற்பிகளை விட இன்றைய சிற்பிகள் விஞ்ஞான ரீதியான அரும்பெரும் ஆயுதங்களையெல்லாம் பெற்றுள்ளார்கள். சுமார் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கட்டிடக்கலையில் சிறப்புற்றிருந்தனர் என்று பண்டையத் தமிழ்நாட்டுப் புலவர்கள் கூறியுள்ளதை மிகைப்படுத்திக் கூறப்பட்டது. இன்று ஆங்கிலம் பயின்ற வரலாற்று ஆசிரியர்கள் சிலர் மறுத்த போதிலும் மொகஞ்தரோ நாகரிகத்திற்கு முன்னர் அதாவது 5000 -ம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் உயர்ந்த மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டி வாழ்ந்தனர் என்பதை எவரும் மறுக்கார் என்று எண்ணுகின்றேன். பண்டையத் தமிழ் நூற்களில் சிற்பத் தொழிலுக்கு இன்றியமையாத உறுப்புகளாக பத்துப் பொருள்கள் கொள்ளப்பட்டன. அதாவது கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்ட சருக்கரை, மெழுகு ஆகியவைகள் ஆகும். திவாகர சூத்திரம், கல்லு முலோகமும் செங்கலு மரமும் மண்ணுஞ் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன (திவாகரம்) கூறியிருப்பது தமிழர்கள் கண்ட சிற்ப உறுப்பை மெய்ப் பிக்கத் தக்க சான்றாகும். மேலும் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த மாளிகையில் சுடுமண்ணால் கட்டப்பட்ட உயர்ந்த மாடிகளையுடைய இல்லங்களிலெல்லாம் வெண்சுதையால் தீட்டப்பெற்ற உயிர் ஒவியங்களும், மண்ணிணாலும், கல்லினாலும் மரத்தினாலும் செய்யப்பட்ட அழகிய சிற்ப வடிவங்கள் பல அமைக்கப்பட்டிருந்தன. என்று மணிமேகலையில் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு, வம்ப மாக்கள் கம்பலை மூதூர் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதோறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் - மணி மலர் வனம் புக்க காதை 126 - 131 மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க நாள் செய்தல் கோன் வாழும் கோயில்களும் செல்வர்கள் வாழும் மாடங் களும் தெய்வங்கள் உறையும் திருக்கோயில்களும் மண்டபங்களும் சிற்பக் கலையிற் சிறந்த சீரிய புலவர்களால் நாளும் கோளும் நன்கறிந்து நேரறி கயிறிட்டு திசைகளையும் திக்குகளையும் அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் மண்ணையும் அதில் உள்ள செடிகளையும் நகைரராய்ந்து கட்டிடம் அமைக்கும் பணியைத் தொடங்குவர். இடத்தைத் தேர்ந்து படத்தைத் தேர்ந்து அளவைக் கணக்கிட்டு கயிறுகளின் துணையால் நன்களந்து இறைவனை வேண்டி தேங்காய் பழம் பூ முதலியவை படைத்து பூசை செய்து தமது பணியை ஆரம்பிப்பர். ஒருதிறஞ் சாரா வரைநா ளமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்பனை வகுத்து (நெடுநல்வாடை75 - 78) அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று மேலோர் விழையு நூநெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டம் (சிலப். நடுநற்காதை 28 : 222- 225) கலைமுதல்வர்கள் சிற்பக் கலைக்கு மூல முதல்வர்கள் மயன் என்றும் விச்வ கர்மா என்றும் சொல்லப்படுபவர்கள். இவர்கள் வழி வந்தவர்களே தமிழ் நாட்டுக் கம்மியர்கள் என்றும் கூறப்படுபவர்கள். இவர்களே சிற்பக் கலைகளின் மூல நூற்களை யாத்தவர்கள் என்றும் கூறப்படு கிறது. மயன் இவர்களில் மயன் அசுர தச்சன் என்று சிலர் கூறுவர். சில நூற்களில் இவன் தெய்வகம்மியன் என்றும் கூறப்படுகின்றான். காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள உவவனத்தின் பளிக்கறையில் உள்ள புத்த பீடிகையையும் சக்கரவாளக் கோட்டத்தையும் கந்திற்பாவையையும் இவனே இயற்றினான் என்று மணிமேகலை என்ற தமிழ்க் காப்பிய நூல் கூறுகின்றது. பாரதம் இன்னும் வடமொழி இதிகாசத்தில் மயன் காண்டவ வனத்திலிருந்த அர்ச்சுனனால் காப்பாற்றப்பட்டவன் என்றும் இவன் பாண்டவர்களுக்கு இந்திரப் பிரதம் என்னும் நகரையும் பாண்டவர்கள் அரசு வீற்றிருக்கத் தக்க சபா மண்டபத்தையும் கட்டியவன் என்று கூறப்படுகிறது. இவன் திதியின் மகன் என்றும் விசுவகர்மன் மகன் என்றும் விச்சிரவா என்பவன் மகன் என்றும் பலவாறு நூல்கள் கூறுகின்றன. மயனுடைய மக்கள் மாயாவி, துந்துபி, மனு முதலியோர் என்றும் கூறப்படுகிறது. இவன் மகளாகிய மண்டோதரியை இராவணன் மணம் செய்து கொண்டதால் இராவணனுக்கு ஒப்பற்ற அழகிய அரண்மனையையும் கோட்டைகளையும் ஆயுதங்களையும் மயன் ஆக்கிக் கொடுத்தான் என்றும் கூறப்படுகிறது. மயன் நாகர் குலத்தைச் சேர்ந்தவன். நாகத்தை வழிபடுபவன். இராவணன் இயக்கன் சிவனை வழிபடுபவன். இந்தச் சம்பந்தத்தால் நாகர் சமயமும் சிவநெறியும் இணைந்தன. சிவன் நாகத்தை தலைமீதும் கழுத்திலும், கையிலும், இடுப்பிலும் அணிந்து கொண்டார். சிவலிங்கத்தின் மீது ஏழுதலை நாகம் படம் எடுத்து நின்று நிழல் தருகின்றது. பலவித இலிங்கங்களில் நாகலிங்கமும் ஒன்று. நாக நாட்டினின்று (அதாவது இலங்கையில் உள்ள நாகத் தீவினின்று) சிவநெறியைத் தழுவிய நாகர்கள் இன்று தமிழகத்தில் வாழும் கம்மியர்கள் என்று கருதப்படுகிறது. நாகர்கள் சிவ நெறியைத் தழுவி தமிழர்களோடு இரண்டறக் கலந்து விட்டனர். என்றாலும் தமிழகத்தில் வாழும் கம்மியர்கள் இல்லத்தில் நடைபெறும் திருமாள் விழாவில் நாகவல்லிமுளுத்தம் போன்ற சடங்குகள் இருந்து வருவது அவர்களின் பழைய மரபு வழக்கத்தைக் காட்டுவதாக இருக்கிறது என்று எண்ணப்படுகிறது. நாகர் குலமங்கையும் இராவணன் மனைவியுமான கம்மாளர் குல மங்கை மண்டோதரி உலகில் உள்ள 10 பதிவிரதைகளில் முதல் இடத்தைப் பெற்றவர்கள். அவள் சிறந்த சிவ பக்தி வாய்ந்தவள். தேவார ஆசிரியர்களால் ஆர்கலிதுழ் தென் இலங்கை அழகர் மண்டோதரிக்குப் பேர் அருள அளித்த பிரான் என்று போற்றப் பெறும் ஏற்றம் பெற்றவர்கள். இராமன் மனைவி சீதையை விட மண்டோதரி அழகிலும், அறிவிலும், பக்தியிலும், கற்பிலும் குற்றம் கூற முடியாத மாசு மருவற்ற பத்தரை மாற்றுச் சொக்கத் தங்கமாவாள். விச்வகர்மன் விசுவகர்மா மாந்தை நகரில் வாழும் சிற்பிகளின் தெய்வமாகும். விசுவகர்மாவின் ஐந்துமுகங்களினின்று மனு (கொல்லர்) மயன்(தச்சர்) துவஷ்டா(கன்னார்) சில்பா(சிற்பி) விசுவன்னா (தட்டார்) ஆகிய ஐந்து சிற்ப இனத்தவர்களும் தோன்றினார்கள் என்று விசுவ புராணமும், மாந்தைப் பால், விசயதர்ம நாடகம் போன்ற நூற்கள் கூறுகின்றன. இந்தச் சிற்பிகள் முற்காலத்தில் மாந்தையில் ஆட்சிபுரிந்த நாகர் குலத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்தச் சிற்ப குலத்தவர்கள் பேராற்றலும், மிகு பெருமையும் வாய்ந்தவர்கள். இவர்கள் நாக வழிபாடு இயற்றும் நாகர் நெறியைத் தழுவியவர்கள்; நனி சிறந்த நாகரிகம் பெற்றவர்கள். இதனால் இலங்கையில் ஆட்சிபுரிந்த இயக்க அரசர்கள் தங்களின் பட்டத்தரசி களை இந்த மாந்தை நகரில் வாழ்ந்த நாகர்குலத்தில் உள்ள ஓவியர் குடும்பத்தில் உள்ள சிற்பிகளின் பெண்மக்களினின்றே தேர்ந்தெடுத்தனர். இலங்கையில் ஆட்சிபுரிந்த மாபெரும் அசுர அரசன் சூரபன்மனின் (சுப்பிரமணியனால் வென்று கொல்லப்பட்ட அசுரனின்) பட்டத்தரசி பதும கோமளாவும் (தெய்வ கம்மியனின் திருமகளும்) இயக்கர் குலத்தின் இணையற்ற ஏந்தலாய் இலங்கையை ஆண்ட இராவணனின் (இராமனால் வென்று கொல்லப்பட்டவன்) மனைவி மண்டோதரியும் -மயன் என்னும் நாகர் குல அரச மகளிர் களேயாவர். நாகர் அரசனின் (சிற்பகுலத்தவர்களின்) மருமகனாய் இருந்ததால் இலங்காபுரத்தில் இராவணனுக்கு அழகிய அரண்மனையும், உயர்ந்த உறுதியான அரண்களையும், புஷ்பக விமானத்தையும் அமைத்துக் கொடுத்தனர் இராவணனுடைய சிற்றப்பன் குபேரனுடைய மனைவி சித்திரலேகா மற்றொரு தெய்வ கம்மியனின் திருமகள்.1 சிற்பிகளின் மூதாதையராக விச்வகர்மாவின் வழியில் வந்த நாகர்குல ஓவியர்குடும்பத்தினின்று இலங்கையை ஆண்ட இயக்கர்குல அரசர்கள் தங்களின் பெருமைக்குரிய அரசிகளைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொண்டனர். இயக்க அரசர்களின், இலங்காபுரத்திலுள்ள மாந்தை நகர் விசுவகர்மாவின் வழிவந்த அரசிகள் உறைந்த மாநகராய் விளங்கியது. எனவே இந்நகரில் நாகர் குலச் சிற்பிகள் பலர் குடியேறியுள்ளனர். இதனை மாந்தைப் பள்ளும் விசுவவிசயதர்ம நாடகமும் விசுவ புராணமும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. விசுவர்மா இயக்கர் அரசர்க்கு மாந்தையில் இரும்புக் கோட்டைகளை அமைத்துக் கொடுத்தனர். (அ) இருபது கையுடையான் றனக்கு மண்டோதரியை ஈந்தருண் மயனார் பண்ணைப் பள்ளிகளாண்டே (ஆ) சூரபன்மன் மனைவி பதும கோமளை தந்தை சுரர் புனைவற் பணிந்து கூவாய் குயிலே (இ) சித்திர ரேகை யென்னும் தனதின் மகிழ் தேவியே தெய்வ கம்மியன் பெண்ணென்றே கூவாய் குயிலே (மாந்தை பக் 8-24) சொல்லருமடை கடோறும் துலங்கிய மாந்தையெய்தி சித்திர மேடை சூழ்ந்த டில்லிநன் கைரடுத்த உத்திர திக்கின்மிக்க வூசிக் காந்தத்தினாலே சுற்றிலுமகல நாலைந் தோசனை தூரமுள்ள முத்திரை மிகுந்த கோட்டை சிருட்டித்தார் முத்தினத்தில் விசுவபுராணம் பஞ்சகிருத்தியகாண்டம் வி. வி 3, 4. மாந்தை g¡.IX காந்தமலைக் கோட்டை மேவிய காவலன் புகழ் கூறவே -விசயதர்ம நாடகம். காந்த முறுந் தட மதிலும் கழுமலர்ப் பொழிலுமுற்ற மாந்தை நகர் -மாந்தைப்பள் நாகர்களான சிற்பாசாரியர்கள் வரலாறு புராணக்கதைகள் ஆக இருப்பதையுன்னிப் பலர் அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மேனாட்டறிஞர்கள் புராணக் கதைகளை கற்பனைக் கதை (myth) என்ற பொருளில் வைத்து புராணத்தை முதல்தரச்சான்றாகக் கொள்வ தில்லை. ஆனால் தமிழ் நாட்டுச் சிற்பிகளின் பேராற்றலுக்கும், பெருஞ் செயலுக்கும் கலை நயத்திற்கும் கட்டிடக் கலை மேம்பாட்டிற்கும் புராணச் சான்று மட்டுமல்ல வரலாற்று சான்றுமுண்டு. இந்தியாவில் உள்ள சாரனாத பௌத்த பல்கலைக் கழகத்தில் பௌத்த சமய அறிய வந்த ஹிவான் சாங் (Hiouen Ihsang) தென் இந்தியாவிற்கும், வேறு பல இடங்களுக்குஞ் சென்று பௌத்த சமய வளர்ச்சியைப் பற்றி எழுதிய குறிப்புகளில் நாக நாட்டு நங்கையர்களின் அழகும், அவர்கள் அயல் நாட்டுக் கப்பல்காரர்களை ஏமாற்றி அடித்த கடற்கொள்ளைகளையும் சிறப்பாக நாகநாட்டு எஃகு கோட்டையையும் பற்றி கூறியிருப்பது நாக நாட்டின் சிற்பச் சிறப்பிற்கும் நாகரிகத்திற்கும் ஏற்ற எடுத்துக்காட்டாக இருக்கிறது.1 நாகர்கள் எடுப்பித்த எஃகு அரண் இலங்கையின் கடல் வணிக வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதை அறிந்து இலங்கை அரசன் விசயன் அதை அழித்து விட்டான் என்று சீன வழிப்போக்கன் யுவாங் சுவாங் கூறியுள்ளான். 2 கி.பி. முதலாம் நூற்றாண்டில் முற்காலச் சோழ அரசன் கரிகாற் சோழனால் அழிக்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். கரிகாலன் இலங்கையை வென்று மக்களிற் பலரை சிறை பிடித்துச் சென்று காவிரிக் கரையை உயர்த்த மண் சுமக்கச் செய்துள்ளான்.3 கரிகாற் சோழன் ஈழ நாட்டு எஃகு அரணை மட்டுமின்றி தொங்கும் பித்தளை அரணையும், தொங்கும் செம்பு அரணையும் அழித்து கிரேக்கர்கள் கூறும் தாம்பிர பரணி என்னும் ஈழத்தை வென்று செம்பியன் என்னும் பட்டத்தை சூட்டியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். தாம்பிரம் என்பது செம்பு என்று பொருள்படுவதால், தாம்பிரபரணி நாட்டைக்கைப் பற்றி தாம்பிரக் கோட்டையை அழித்து கரிகாலன் செம்பியன் பட்டம் சூடியிருக்கலாம் என்றும் தொங்கும் செம்பு, பித்தளை அரண்களை அவன் அழித்துள்ளதற்குத் தமிழ் இலக்கியச் சான்றுகள் உளதென்றும் சிலர் கூறுகிறார்கள்.1 விசுவகர்மாவின் வழிவந்த சிற்பிகள் பொற்கொல்லர்கள் முற்காலத்தில் மாந்தையில் நாடு நகர் அமைத்து எஃகு செம்பு கோட்டைகள் அமைத்து ஆட்சி நடத்தி வந்துள்ளனர். பிரிதாம் என்னும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார் என்று இதனை தமிழ் இலக்கியங்களும் எடுத்துக்காட்டியுள்ளன. சிற்ப நூற்கள் முப்பத்திரண்டு உண்டென்று கூறப்படும். இவைகள் அனைத்தும் வடமொழியில் எழுதப் பெற்றுள்ளன. சமீபகாலத்தில் சிற்பநூற்கள் சில தமிழில் மொழியாக்கம் செய்யப் பெற்று வெளிவந்துள்ளன. சில ஆங்கிலத்தில் கூட வெளியிடப் பட்டுள்ளன. சிற்ப நூற்களின் பெயர்கள் அடியில் வருமாறாகும். 1. விச்சுவ தருமம் 17. வாது போதம் 2. விச்சுவேசம் 18. விதாரம் 3. விச்சுவசாரம் 19.இந்திரம் 4. விருத்தம் 20 வச்சிரம் 5. தாவட்டம் 21 சவுமம் 6. நளம் 22 விவ காசிபம் 7. மயம் 23 மகதந்திரம் 8. அனுமான் 24 விசாலம் 9. பானு 25 சித்திரம் 10. கற்பாரியம் 26 காபிகாலயூபம் 11. சிருட்டம் 27 நாமசங்கிதை 12. மானசாரம் 28 சாத்திகம் 13. வதுவித்தியாபதி 29 விவபோதம் 14. பாராசரியம் 30 ஆதிசாரம் 15. அரிடிகம் 31 வெகுச்சுருதம் 16. சயித்தகம் 32 மானபேதம் மேற்கண்ட சிற்ப நூற்கள் தமிழ்நாட்டுச் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் சிற்ப நூற்களாகக் கொள்ளலாம். ஆனால் வட இந்திய சிற்பிகளால் பயன்படுத்தப்படும் நூற்கள் சுமார் பத்து ஆகும். அவைகள் அடியில் வருவனவாகும். 1. வாதுவித்தியா 7. சமர ஞான சூத்ரதாரா 2. மனுஷாலயசந்திரிகா 8. விவகர்மப் பிரகாசம் 3. சில்பரத்தினம் 9. மத்சய புராணம் 4. மயமதம் 10. அக்கினி புராணம் 5. யுக்திகல்பதரு 11. சுக்கிர நீதி 6. பிருகத்சம்ஹிதை 12. காசியப சம்ஹிதா சிற்பிகள் மத்சய புராணத்தில் முற்காலத்தில் சிறப்புற்றிருந்த 18 சிற்பிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் அடியில் வருமாறாகும்: 1. பிர்கு 10 பிரமன் 2. அத்திரி 11 குமாரன் 3. வசிஷ்டன் 12 நந்தீசன் 4. விச்சுவகர்மன் 13 சனகன் 5. மயன் 14 காகா 6. நாரதன் 15 வாசுதேவன் 7. நாகன சித்து 16 அனிருத்திரா 8. விசாலக்சா 17 சுகரா 9. புரந்தரன 18 பிருகபதி இவர்களின் சிற்ப தெய்வமாகப் போற்றப்படுபவர்கள் விசுவகர்மாவும், மயனும் ஆவர். சிற்பிகள் கட்டிடங்கள் கட்டுவதற்கு சிற்ப நூற்களில் ஆறுவகை சம்பிரதாயங்கள் கையாளப்பட வேண்டும் என்று கூறப் பெற்றுள்ளது. அவை வருமாறு. 1. விச்சுவகர்ம மதம் 2. விச்வம்பரமதம் 3. பிங்கள மதம் 4. உத்பல மதம் 5. மயதம் 6. பரிமளமதம். புராணங்களிலும் ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் சிற்ப நூலாசிரியர்கள் 18 என்றும் 32 என்றும் 81 என்றும் பலவகைப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிற்பிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் விசுவகர்மாவும் மயனும் ஆவர். விசுவகர்மர் தேவர்களின் சிற்பி மயன் அசுரர்களின் சிற்பி என்றும் கூறப்படும். மய மதம் இப்பொழுது முற்றிலும் ஒரே நூலாக இப்பொழுது கிடைக்கிறது. ஆனால் விசுவகர்மாவினுடைய நூல் பல பகுதிகளாக அந்தந்தப் பகுதிச் சிற்பத் தொழிலாளிக்கென்றே தனியாகத் தொடுக்கப்பட்டுள்ளது. விச்சுவ கர்ம வாது சாதிரம் என்ற நூலை தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளது. மற்றச் சில பகுதிகளும், எளிதில் கிடைக்கும். திருவாங்கூர் அரசு, வாது வித்யர் 2 மனுஷ்யலய சந்திரிகா 3 -ல் பரத்தினம் , 4. மயமதம். 5. யுக்திகல்பதரு, 6. பிருகத் சம்ஹிதை. 7. சமண ஞான ஸசத்ரதார 8. விச்சுவ கர்மப் பிரகாசம் போன்ற நூற்களை வெளியிட்டுள்ளது. தஞ்சை சரசுவதி மகால் வெளியீட்டாளரும், சகளாதி காரம், விவகர்ம வாது சாதிரம், மயமதம், காசியப சில்பம், மானசாரம், சில்பரத்தினம், பிராம்மிய சித்திர காம சாதிரம், போன்ற நூல்களை வெளியிட்டுள்ளனர். இன்னும் அவர்கள் பல நூற்களை வெளியிடும் முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்கள். பஞ்சாப் சமகிருத நூல் வெளியீட்டுக் கழகம் நீண்ட நாள் களாக சிற்ப நூற்களை வெளியிடுவதில் அதிக அக்கறை எடுத்து வருகிறது. வங்காளத்தில் கலை ஆய்வுத்துறை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. அங்கு பல அறிஞர்கள் நன்கு பயின்று இந்தியக் கலை வளர்ச்சிக் கென்று உரூபம் (Rupam) கீழ்க்காட்டுக் கலை (Cercental Art) என்பன போன்ற பத்திரிகைகளை வெளியிட்டும் சிற்ப நூற்களைப் பதிப்பித்தும் சீரிய தொண்டாற்றி வருகின்றனர் சிற்பிகளின் பெயர் நமது நாட்டுச் சிற்பிகளும், புலவர்களும் தம் பெயர்களை முற்காலத்தில் விளம்பரம் செய்து கொள்ள எண்ணியதில்லை. பல உயர்ந்த நூற்களில் எழுதியவர்கள் பெயர்கள் காணப்படவில்லை. சில நூற்களில் ஆசிரியர் பெயர்கள் உள்ளன. ஆனால் அவர்கள் தங்களுக்கு முன்னுள்ள பெரும்புலவர்களின் பெயர்களிலே நூற்களை எழுதியுள்ளார்கள். அதே போன்று நமது நாட்டில் பெருங்கோயில்களையும் உயரிய உப்பரிக்கைகளையும் விண்மூட்டும் விமானங்களையும், விலைமதிக்க வொண்ணாத வெண்கலப் படிமங்களையும் சிலைகளையும் படைத்த சிற்பிகள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடாது வாழ்ந்து மறைந்துள்ளனர். இடைக் காலத்தில் கோயில் கட்டுவதற்குப் பணம் அளித்த மன்னர்களின் பெயர்களும், நிவந்தங்கள் அளித்த அரசர், அரசிகள், அரசிளங்குமரிகள், செல்வர்கள் பெயர்கள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் தீட்டப் பெற்றுள்ளது. ஆனால் சிற்பிகளின் பெயர்கள் காணப்படவில்லை. சமீபத்தில் சில கோயில்களில் உள்ள கல்வெட்டுகளின் மூலம் சில சிற்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள மாதிரிக் கோயில்களை எடுப்பித்த தபதிகளின் பெயர்கள் தென் இந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscription) என்ற நூற்களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் மாமல்லபுரத்தில் உள்ள மகோன்னத சிற்பச் சிறப்பு நிறைந்த சீரிய சிற்பக் கருவூலங்களை தமிழுலகிற்கு அளித்த சிற்பச் செல்வங்களின் திருப் பெயர்களாகக் கருதப்படுகின்றன. அப்பெயர்கள் அடியில் வருமாறு. (1) கேவாத பெருந்தச்சன் (2) குணமல்லன் (3) பய்யமிழிப்பான் (4) சாத முக்கியன் (5) கலியாணி (6) திருவொற்றியூர் அபாசன் (7) கொல்லன் சேமகன்.1 இலலிதாயர் என்னும் சிற்பாசிரியரைப் பற்றி தண்டி என்னும் ஆசிரியர் கி.பி. 8 ஆம் ஆண்டில் எழுதிய அவந்தி சுந்தரி என்னும் சமகிருத நூலில் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். இலலிதாயர் மாமல்லபுரத்து சிற்ப ஆசாரியரில் ஒருவர்.2 கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விக்கிரமாதித்தன் 11, என்ற அரசன் காஞ்சியை வென்று கைப்பற்றி பின் அங்குள்ள சிற்பி குண்டன் என்பவரை அழைத்துக் கொண்டு போய் பட்டக்கல் என்னும் நகரில் பரமனுக்கு ஒரு அழகிய கோயிலை எடுப்பித்தான். இப்பொழுது அக்கோயில் இடபவாகனர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன் சிற்பாசாரியாரைச் சிறப்பித்து திரிபுவனாசாரியர் என்னும் பட்டம் சூட்டினான். இவருக்கு அனவரத ஆச்சாரி என்ற பெயரும் உண்டு. முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் புரிசை நகரில் திருப்படக்காருடைய மாதேவர் கோயில் அடிப்படையிட்டுக் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய சிற்பி சந்திர சேகரன் ரவி என்னும் சோழேந்திர சிம்ம ஆச்சாரி எனப்படும்.3 சோழப் பேரரசில் பேரும் பெருமையும் பெற்று விளங்கிய மாமன்னன் இராசேந்திரன் திருவொற்றியூர் மூலக் கோயிலைப் பழுது பார்த்துப் புதுப்பித்தான். இக்கோயிலைப் பழுதுபார்த்துப் புதுப்பித்த சிற்பியின் பெயர் வீர சோழ தச்சன் (இரவி) என்று அழைக்கப்பட்டார். தில்லை ஆடவல்லான் கோயில் வடக்குக் கோபுரத்தையும் உள் சுவரில் கோபுரத்தை அமைத்த சிற்பியின் பெயரும் உருவமும் எழுத முடிவு செய்து, விருத்தகிரி, கேசவப் பெருமாள் மகன் விசு திருப்பிறைக் கோடை ஆசாரி திருமருங்கன். அவர் தம்பி சாரி என்று எழுதப் பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள பிரமதேசத்தில் உள்ள கலாச நாத சுவாமி கோயில் விசுவகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது தென் இந்திய கோயிற் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.1 இந்த அதிகாரம் எழுதத் துணையாய் இருந்த நூற்கள் 1. South Indian Temple Inscriptions - Edited by I.N. Subramaniam Madras 1954 2. South Indian Inscription - Vol IV and XII 3. Epigraphy Report - 1911 4. Ancient Jaffna - C. Rasanayagam C.C.S (Ceylon) 1926 Madras. 5. Hiowen - M.L.R. Vol I விசுவ புராணம் சிலப்பதிகாரம் மணிமேகலை திவாகரம் நெடுநல்வாடை சிறுபாணாற்றுப் படை. சாத்தான்குளம் அ.இராகவனாரின் வாழ்க்கைச் சுவடுகள் நெல்லையின் எல்லையில் ஏலே! அண்ணாட்சி வந்தாகளா? என்ன சொன்னாக? எனக்குத் தான் அயித்துப் போச்சு? - எங்காவது இந்தத் தமிழைக் கேட்டால் அது நெல்லை மாவட்டத்தார் குரல் என்று தெரிய வேண்டும். இந்த மாவட்டத்தில்தான் குற்றால அருவியின் கொஞ்சும் இசை! கிருட்டினாபுரத்து சிலைகளின் பேரழகு! ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்! தன் பொருநையே நாகரிகத்தின் தலைவாயில் என்று போற்றப்படும் ஆதித்தநல்லூர்! சிவஞான முனிவர், குமரகுருபரர், திருமங்கையாழ்வார், குலசேகரஆழ்வார், நம்மாழ்வார், அதிவீரராமபாண்டியர், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், என்றி ஆல்பர்ட்டு கிருட்டினார், திருகூடராசப்பக் கவிராயர் .. இன்னும் இன்னும்.. புதுமைப்பித்தன், மாதவையா, கா.சுப்பிரமணியனார், வையாபுரியார், பூரணலிங்கனார், சோமசுந்தர பாரதியார், பாரதியார், உமறுப்புலவர்.. இன்னும் இன்னும் தமிழ் மீட்பர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்- போன்ற அறிஞர்களின் அணிவகுப்பு இம்மாவட்டத்தின் சிறப்பேயாகும். ஓ! நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவனாரும் பிறந்து பெருமை சேர்த்தது இம்மாவட்டமே! நாகசுரமும், வில்லுப்பாட்டும் இங்கு புகழ் சேர்க்கும் கலைகளாகும். சாத்தான்குளம் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள ஊராகும். வடிவேற்கவிராயர், கனகசபாபதிக் கவிராயர், குழந்தை வேல்சாமி போன்ற கவிஞர்கள் பிறந்து புகழ்பெற்ற ஊராகும். நுண்கலைச் செல்வர் அ.இராகவனார் அவர்கள் 22.04.1902 ஆம் ஆண்டு தோன்றினார். இவர்தம் பெற்றோர் திருவாளர் அருணாசலக் கவிராயர், திருவாட்டி ஆவுடையம்மாள் ஆவர். இவரது பாட்டனார் வடிவேற்கவிராயர் சிறந்த முத்தமிழ்ப்புலவர். இவரது முப்பாட்டனார் வீரபாகு ஓதுவார் மிகச்சிறந்த கவிஞர்; அதோடு வழக்கறிஞரும் கூட! இவரது முப்பாட்டனாரின் தம்பி அருணாசலக் கவிராயர் திருவனந்தபுரம் அரண்மனைப் புலவராக ஒளி வீசினார் என்பது மட்டுமின்றி குட்டிக் கவிராயர் என்ற அடைமொழியோடும் வாழ்ந்தவர். நுண்கலைச் செல்வரின் பிள்ளைத் திருப்பெயர் இரத்ன இராகவ உதய மார்த்தாண்டன் கவிராயர் என்பதாகும். பின்னர்தான் இராகவன் என்று மட்டுமே அழைக்கப்பட்டார். இளந்தைப் பருவத்தில் பிறந்த சாத்தான்குளத்திலேயே தொடக்கக்கல்வி பயின்றார். நெல்லை அரசினர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியம் பயின்று ஆசிரியரானார். சுப்பிரமணியக் கவிராயரிடம் தமிழ் முடுதறக் கற்றும், தொண்டைமான் பிரம்ம முத்தையனிடம் ஓவியமும் கற்று சிறந்த ஓவியராக விளங்கினார். ஆசிரியத்தின் செழுமையில் 1924-1930 முடிய சமாலியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியப் பணியாற்றினார். ஆழ்வார் அம்மாள் பெண்கள் பள்ளி, இபுராகிம் முசுலீம் பெண்கள் பள்ளி, சமாலியா முசுலீம் பள்ளி, திருநாவுக்கரசு படிப்பகம், புலமாடன் செட்டியார் மேனிலைப்பள்ளி போன்ற பல்வேறு நிறுவனங்களைச் சொந்த ஊரிலேயே தொடங்கிப் பெருமை சேர்த்தார். இயக்கங்களின் வளமையில் சுயமரியாதை இயக்கம் நிகரமைய (சோசலிச) இயக்கம் பேராய இயக்கம் (காங்கிரசு) ஆகிய இயக்கங்களில் பொறுப்பு வகித்தார். நெல்லை மாவட்டப் பேராய உறுப்பினர், திருச்செந்தூர் வட்டப் பேராயச் செயலாளர், தமிழ்நாடு பேராயக் கட்சி உறுப்பினர் என இவர் அரசியலிலும் காலுன்றியிருந்தார். பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நட்பு கிடைத்த பின்னர் ஈரோடு பகுத்தறிவுக் கழக அமைச்சரானார். ஏராளமான பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார். இவரெழுதிய, கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்? “bg©QÇikí« kjK«” v‹w üšfŸ gšyhÆu« gofŸ ɉW ‘ïuhft‹ ah®? என்பதைத் தமிழுலகம் அறியச் செய்தது. குடும்பத்தின் விளைவில் சாத்தான்குளம் அருணாசலக்கவிராயருக்கும் ஆவுடையம்மாளுக்கும் மக்கள் அறுவர். இவரே முதல் மகன். குடும்பத்திற்கும் .. கொஞ்சு தமிழுக்கும் இவரே முதல்வர். 2. குமார வடிவம்மாள் 3. வடிவேல் (இளந்தையிலே மறைந்தார்) 4. குமாரசாமி 5. காந்திமதி ம.பரமசிவன் .. ஒரே ஒரு பெண்மகள். அவர்தாம் ச. வீரலட்சுமி அம்மையார். இராகவனார் தாய்மாமன் மகளையே திருவாட்டி சுந்தரத்தம்மையாரை மணந்து இனிய இல்லறத்தின் நன்கொடையாக மல்லிகா, சுதந்திரா,தமிழரசி, இரா.மதிவாணன் என மூன்று பெண்மக்களையும், ஒரு ஆண்மகனையும் வழங்கினார். தன் மக்களை பலர் மறுத்தபோதும் தமிழ வழிக் கல்வியிலேயே சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். தன் தங்கையார் திருமணம் நீங்கலாக எல்லாத் திருமணங்களையும் சீர்திருத்தத் திருமணமாகவே நடத்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை என்று அடிக்கடி சொல்லியும் தாயும் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். சீவானந்தம், சாந்தம் சுந்தரவடிவேலு- போன்ற இவரோடு நட்புக் கொண்டு தமிழில் கொண்டுள்ள ஐயப்பாடுகளை அறிந்து கொள் வார்களாம். குறள் ஒப்புவித்தால் - காசு கொடுத்து ஊக்கப்படுத்திப் பாராட்டுவது இவரது இனிய வாழ்வியலாகும். அது இளஞ்சிறார் களாயிருத்தல் வேண்டுமாம்! அயலகக் களிப்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயலகங்களுக்குச் சென்று மீண்ட நுண்கலைச் செல்வர் தமிழறிஞர்களான எங்கும் செல்லும் காசு.. கா.சுப்பிரமணியனார், தீந்தமிழ்ப்புலவர் திரு.வி.கலியாண சுந்தரனார், தந்தை பெரியார், தாரூல் இசுலம் ஆசிரியர் பா.தாவூத்சா, இலங்கை முதலமைச்சர் பண்டாரநாயக, கண்டி மேயர் சார்ச்-டி-செல்வா, அமைச்சர் பெரி.சுந்தரம் , மேயர் சரவணமுத்து, தமிழக சமன்மைச் சிந்தனையாளர் ப.சீவானந்தம் போன்றோரோடு நெருங்கிய தொடர்பு அவர்களால் பன்முறை பாராட்டப் பெற்றார். 1935 ஆம் ஆண்டு பெரியாரிடமிருந்து விலகி தோழர் ப.சீவானந்தத்தோடு சேர்ந்து சுயமரியாதை சமதர்மக் கட்சி என்றொரு கட்சியை நிறுவி அறிவு என்னும் திங்களேட்டிற்கம் ஆசிரியரானார். 1932இல் இலண்டன் பகுத்தறிவு சங்கம், விடுதலைச் சிந்தனையாளர் மன்றம், அமெரிக்காவிலுள்ள உண்மை நாடுவோர் கழகம்,போன்ற அமைப்புக் களோடு தொடர்பு கொண்டு உறுப்பினராகி பல்வேறு நூல்களை மொழியாக்கம் செய்து தந்தார். இலங்கையில் மனிதருள் மாணிக்கம் நேரு பெருமகனுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் நினைவு மலர் வெளியிடப் பெரிதும் உதவினார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு என்ற இதழில் தொடர்கட்டுரை எழுதி வர அதன் ஆசிரியா கோ.சாரங்கபாணி வேண்டினார். தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற இவரது நூல் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடநூலாக மதுரைப் பல்கலைக்கழகம் ஏற்றுப் புகழ் கொண்டது. ஆய்வின் கூர்மையில் அவரது ஊருக்கு அண்மையிலுள்ள ஆதித்தநல்லூருக்குச் சென்றும், பல்வேறு பொருள்களைப் பார்வையிட்டும், சென்னை அருங்காட்சியகம் சென்றும் ஆய்வு செய்துதான் ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் என்ற நூலை எழுதியுள்ளார். சிந்து வெளி நாகரிகத்திற்கு ஒப்பிட்டுப் பார்த்து ஏராளமான கருவிகள், பொருள்கள் ஆகியவற்றின் படங்களை, அணிகலன்கள், விளக்குகள் ஆகியவற்றின் படங்களைத் தொகுத்து வெளியிட்டிருப்பது .. இவரது பனிமலை முயற்சிப் பாங்கினை- நமக்கு உணர்த்துகிறது. யாருமே செய்யாத புதுமையாக நுண்கலைச் செல்வர் அவர்கள் தன் மனைவியார் திருவாட்டி சுந்தரத்தம்மையாரைக் கொண்டு கலைநூற் பதிப்பகம் நிறுவி பல நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பணி செய்தார் என்பது உலக வரலாற்றில் புதுமையாகும். தம்மிடமிருந்த ஏராளமான காசுகள், நூல்கள், அரிய பொருள்கள் - ஆகியவற்றைத் திருச்சியிலுள்ள ஈபர் கண்காணியர் கல்வி நிறுவனத் திற்கு வழங்கினர் என்று அறிகிறோம். அவை அரிய கலைப் பொருள்களாகத் துலங்குகின்றன. இலங்கையில் ஒரு சின்ன நூல் அந்தக் காலத்தில் நூறு உரூபா கொடுத்து வாங்கியுள்ளார் எனில் அவரது அறிவுத் தாகம் நமக்குப் புலப்படும். பாராட்டுத் தேன்மழையில் 1966 ஆம் ஆண்டு தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சட்டப் பேரவைத் தலைவர் மாண்பதை செல்லப்பாண்டியனார் தலைமையில் தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்குப் பொன்னாடை போர்த்தி நுண்கலைச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியது. 1937ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முகம்மது நபி உலக சமாதானத்திற்குச் செய்த தொண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றார். 1966-உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்ற போது தமிழ்நாட்டுக் காசுகள் என்ற கட்டுரை மிகச் சிறந்த கட்டுரையாகப் போற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பழங்கால மரக்கலங்கள் 46 வடிவங்களை நெய்மவண்ணத்தில் (Oil paint) வரையப் பெற்றுக் காட்சிக்காக்கி பேரறிஞர் அண்ணாவே பெரிதும் போற்றியும், பாராட்டியும் மகிழ்ந்தார். தமிழ்வளர்ச்சி மன்ற உறுப்பினராகி தமிழ்நாட்டு வரலாறு தொல் பழங்காலம் நூல் வெளியிடும் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது நினைந்த போற்றத்தக்கது. தமிழர் நாகரிகத்தை - பண்பாட்டை விளக்கும் .. ஏராளமான கலை நூல்கள் .. கலைப்பொருள்கள்.. நாணயங்கள், புதிய..ahU« கண்டுபிடிக்காத பழந்தமிழ்ப் பொருள்கள்.. இவர் தேடித் தேடிச் சென்று பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். முடிவின் மடியில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் .. தமிழ்ச் செம்மல்கள் பேரவை நடத்தும் ஐந்தமிழ் விழா.. 7.3.1981 காலை 10.00 மணியளவில் பழந்தமிழர் அணிகலன்கள் .. அரிய பேச்சு .. நூலாக வந்துள்ளது.. ஐயோ.. 8.3.1981 காலை.. 10.00 பழந்தமிழர் சிற்பக்கலை - இது தலைப்பு. நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.இராகவன் என்ற தமிழ்ப் பேரறிஞர்.. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.. உணர்ச்சியுரை.. ஐயோ! மயக்கமாக வருகிறதே என்கிறார். .. மருத்துவமனைக்குச் கொண்டுசெல்கின்றனர்..11மணிக்கு jம்vழுபத்தொன்பதாம்mகவையில்nபராïயற்கைvய்துகிறார்..22.4.1902nyதோன்றியதமிழொளி..08.03.1981 .. மறைகிறது! சாவிலும் தமிழ்ப்படித்தே சாகவேண்டு« -என்ற‹ சாம்பலு«தமிழ்மணந்jவேfவேண்டும்’ என்ற கவிதை வரிகள் இவர்தம் புகழைப் பேசிக்கொண்டேஇருக்கிறது ஆ.முத்துராமலிங்கம் தச்சநல்லூர்  g®£ »ny£l® ngh‹wt®fŸ e‹F És¡»íŸsd®.* 1. Journal of the Indian Society of Oriental Vol. II No1. June 1934 1. திருக்கோயில் (திங்கள் இதழ்) ஆகட் 1963. ம.வெ.மு. ராசக் குருக்கள் சிறுதையூர். லால்குடி. 1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி (1956) சென்னை - பக் 22. 1. தமிழ்ப் பொழில். XV. பக்கம் 83. 1. செயற்கை நலம் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார். பி. ஏ. பி. எல். சென்னை gக்.73-74. 1. Ins 387 of 1913. 1. இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோளீசற்கு எழில் மாடம் எழுபது செய்துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன் - திருமங்கை ஆழ்வார் 1. பெருங்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினொடெட்டு மற்றும் - அப்பர் திரு அடைவு திருத்தார் பக் 5 1. Among the many revolution that Mohenjodaro and Harappa have had in stone for us none perhaps is more remarkable than this discovery that saivaism has a history going back to the chalolethic age or perhaps or even further still and it thus takes its place as the most ancient living faith in the world” - Mohenjo -Daro and the Indus Civilization - Sir John Marshall Vol1. (Preface)PVII. 1. திருக்கோயில் (திங்கள் வெளியீடு) திருப்பாதிரிப் புலியூர் கல்வெட்டுகள் என்ற கட்டுரை - டாக்டர் மா. இராசமாணிக்கனார் எம்.ஏ. எம். ஓ.எல் பி.எச்.டி டிசம்பர் 1965-பக் 138 1. South Indian Inscription Vol VII No.744. 2. (அ) இலக்கண ஆராய்ச்சியும் கல்வெட்டுகளும் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். (ஆ) தமிழ்ப் பொழில் (1939) XV 83 தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் கட்டுரை. 1. கல்வெட்டு அறிக்கை ஏ. ஆர். ஈ. 115-135-1902. தென் இந்தியக் கல்வெட்டு Vol.7:739-759. 1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத் திருப்பதிகங்கள் - இரண்டாவது திருமுறை பக்.170 (தலங்களின் வரலாற்றுக் குறிப்பு) 2. Annual Report on South Indian Epigraphy for the year ending 1902.No.115-135 S.I.I.Vol. VII No. 739-759. 1. South Indian Shrines - P.V. Jegadisa Iyer (Madras)1922. 1. Administration and social life under the Pallavas; Madras University Historical Servies No.13.1939. 2. Historical sculptures of the Vaikundha perumal at kanchi Memories of the Archaelogical survey of India No. 63.1941 3. KANCHI - An Introduction to the Architectures The Publication Division Ministry of Information govt of India Feb. 1954. 4. The Divine Dancer in Pallava sculpture Dr.C.Meenakchi M.A.Ph.D. Indian Art and letters. The India Society London. 1938 - pp.93 - 98. 1. காஞ்சிப்புராணம் 1. This shrine, which is dedicated to the worship of Shiva (“warahareswara literally means the god who wards off fever”), lies between the Ekambardesvara and pandavaperumal temple; it is easily distinguished from the others by circular garbhagraha (அகநாழிகை) originally built of cut granite without cement, it has had to be repaired by the Archacological survey of India. Some of the Characteristie decorative features of later chola art, such as the kumbha panjaram (a kind of plaster with an ornate vase below) and the tarangabodigai (a curved corbel) are found in this temple. Both the Shrine and the mahamandpa may be assigned to the reign of kulottunga 111 (1178 - 1226) - KANCHI An Introduction to its Architecture Miss Dr. C. Meenakshi M.A.Ph.D. (Published by The publication Division govt of India New Delhi. February 1954. 1. S. I.E Annual Report of 1927. No.140-158. 1. தமிழ்ப் பொழில் xx. ப.83 செயற்கை நலம் சி. எம். இராமச்சந்திரன் செட்டியார். பி. ஏ. பி. எல். பக்.74 1. பன்னிரு திருமுறை வரலாறு. வித்துவான். க. வெள்ளை வாரணன் (1962) பக்.686. 2. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுகளும் தி. வை. சதாசிவபண்டாரத்தார். 1961. பக். 83. 1. Epi. Ind. Vol.111.p.136-146 2. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் மயிலை சீனிவேங்கடசாமி சென்னை - 1956.பக். 25. 1. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் திரு. தி. வை சதாசிவபண்டாரத்தார். சென்னை (1961) பக் - 83. 2. S-I-I. Vol II. NO. 66 3. S-I-I. of 1914 4. தமிழ் வளர்த்த அழகுக் கலைகள். சீனி வேங்கடசாமி 1. தமிழக வரலாற்றுச் செய்திகள் சி. கோவிந்தராசனார். பக். 34 -3 1. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுகளும் - டி.வி.சதாசிவப் பண்டாரத்தார். பக்.83-84(1961). 1. The village Pennadam appears in inscription under the names pennagadam and Mudikonda Chadurvedi mangalam and the diety is called Thiruthoonganai Madamudayar apparently from the formation of the Garpagraha in the Gajaprista style which resembles the hind portion is popularly deveved from the tradition that the God here was worshipped by a grandarva lady (pen) a cow (AA) & an alephant (kadam). (பெண்+ஆ+கடம்) South Indian Epigraphy Vol II. 1. Pallava Antiquites by Prof.G.Jouveaw. Dubreul Vol.II Pondicherry (1918) P.22. 1. Inscription No.433. of 1905. 2. Go. No. 492 2nd July 1906. part II No.8. P.691 3. Report for 1906. P.65. 4. The Colas - K.A.N. Sastry P.110-11 Madras.1955. 1. The Great Temple at Tanjore - J. M. Somasundaram Pillai B.A.B.L., (1935) Madras. 1. தென் இந்தியக் கோயிற் சாசனம் 11. பக்கம் 209-359 இராசராசன் 60 - வது சாசனம். 1. Reporting his recovery from the drift sand in the vicinity of what he called a trisula head of Siva, Longhurst Concluded that this was the object of worship in this pratha in the place of Linga. He also referred to the similar head (with a trident) decorating the Southern end of the roof of Ganesa ratha. He was also of opinion that the worship of the trident head was probably a contemporary culb. A guide to Mamallapuram - Miss. P. T. Narayanan B.A.B.T (Madras) -1957 P 48.) 1. In spite of this Mr. Longhurst classifies both caves among those carved in reign of Narasimhavarman I. Perhaps he is led to this conculssion by the short inscription found in the Dharmaraja’s Mandapa, viz. Atyantakama Pallavesvaragrha that is “the temple of the Pallava Lord Atyantakama. Thus on the Dhavarajas Ratha which undoubtedly belongs to be regin of Narasimha Varman Mamallan there are two names Narasimha and Atyantakama the later in floried stye totally different from the style of the first studies in Pallava History - Rev. H. Heras. P.77. 1. KANCHI - An Introduction to its Architecture - D.R.C Meenakshi M.A. Ph.D. New Delhi 1954. 2. EP - Ind. Vol VII PP115 An Rep. on 5-1 Epigraphy No.40-45 of 1890 Nos.188-89 of 1901 - No.97-100 of 1923. Nos 381-88 of 1927. 1. Jainism in South India and some Iaina Epigraphs - P.B. Desai M.A (Sholapur) 1957. P.53,3A. 1. South Indian Shrines - P.V. Jegadisa Iyer. Madras.1922. 1. “According to the shape of the “dopme” of the High temple the Dravida school of Architecture classified its temples as Nagara, Dravida an Vesara the shaps square octagonal and round respectively” - The Arts and crafts Travancore - Dr. Stella Kramrish M.A.Ph.D. Professor of Indian Art in the University of Calcutta (LONDON) 1943. Published by The Roya India Society London and The government of Travan Core P.7. 1. One more variety of Dravidian Temples found in Kerala is the Circular type. We do not find specimens of this type elsewhere in the south” - The Temples of South India” - The Publication Division Ministry of Information and Broad casting government of India” 1960. P.50. 2. Kanchi - An Introduction to the Architecture - Publication Division government of India 1953. (New Delhi). 1. Of great significance and beauty than any of the Dravida Prasadas (temples) built on a square plan are the circular shrines (pl.X-XIII) Vastu Sastra the traditional texts on the science of Indian architecture from about the sixth centre A.D. Treat in detail of the circular temple and their narious types which were built through India from that age. To the sixteenth century when Sri Kumar of Kerala Compiled the “Silpasastra” - Out - side Kerala however very few earliest structural temple yet known (at Barat Jaipur, Raja Putana of the third second century B.C) are circular”. The arts and crafts of Travancore - Dr. Stella Kramrish. (London)1948. P9. 1. The Arts and crafts of Travancore - Chap II Architecture in Travancore by R. Vasudeva Poduval B.A., (London) 1943. 1. இலங்கையிற் கலை வளர்ச்சி - க. நவரத்தினம் (இலங்கை) 1954. 2. Indian Architecture Peray Brown Vol - II 1. Dravida buildings exist today not only in Dravida - desha (country itself but also in the Kanarese districts of Decan where in fact, the temples are several centuries older than the earliest structural temples of the Pallavas in Mamallapuram and Conjeevaram” - The Arts and Crafts of Travancore - (Chap 1. Dravida and Kerala) - Dr. Stella Kramrish (London) 1948 Page.20. 1. The tamil races were perhaps the greatest Temple builders in the world..... the great pagoda of Tanjore..... by far the grandest temple in India”.... “Architecture” - Encyclopaedia of Britanica 9th edition 11. P.396. 1. “The great Temple of Tanjore”. This style arose under the chola or Tanjore kings in 11th century A.D when nearly all the great temples to Siva in South India were built and it continued in use in the 12th and 18th centuries during which the great temples to Vishnu were erected Rep to the begining of the 16th century these temples remained almost unchanged, but at that time all South India became subject to the kings of Vijayanagar and one of these named Krishna Raya (1509-30) re built or added to most of the great temples of the South. The chief feature of the architecture of this later period is the construction of the enormous gopurams which are so conpienos at Kancheepuram Chidambaram and Srirangam. All these were built by Krishna - raya : they do not form part of the original style, but were intended as fortifications to protect the shrines from foreign unvaders and certain plunder and desecration, as the Hindu first discovered on the Muhammadan invasion of 1310 A.D also vide, “Three Main styles of Temple Architecture” - Burnell CA Bulletin of the Madras Museum. 1. ஆலயங்களின் உட் பொருள் விளக்கம். ஏ. சொக்கலிங்கம். சென்னை-1957 1. பாண்டியன் செப்பேடுகள் பத்து - தமிழ் வரலாற்றுக் கழகம் - சென்னை - 1967. 1. எ. குமாரசாமி ஆசாரி அவர்கள் குறிப்புகள் (நயினாத் தீவு கிரி நாக பூசணி அம்மன் கோவில் தேர்த்திருப்பாரிச்சபை சுண்ணாகம் (1957). 1. சிவ ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் - சதாவதானம் நா. கதிரை வேற்பிள்ளை - பக்கம் 88-92. 1. சில்பரத்தினம் - சரவதிமகால் வெளியீடு. கும்பகோணம் - 1961. 1. ஸ்ரீ ஸாரவதீய சித்திரகர்ம சாதிரம் சரசுவதி மகால் வெளியீடு. ஸ்ரீரங்கம் - 1960. 1. 1. சில்பரத்னம் - சரவதி மகால் வெளியீடு - கும்கோணம் - 1961. 2. பிராஹ்மீய சித்ரகர்ம சாதிரம் வெளியீடு - ஸ்ரீரங்கம் - 1960. 3. காசியபசில்ப சாதிரம் வெளியீடு - ஸ்ரீரங்கம் - 1960. 4. மானசாரம் வெளியீடு - திருச்சி - 1963. 5. சகளாதிகாரம் வெளியீடு - திருச்சி - 1961. 6. சரவதீய சித்ரகர்ம சாதிரம் வெளியீடு - ஸ்ரீரங்கம் - 1960. 1. Legende Des geux De eiva a Madura - R Dessigane P.z Pattabiramin et & Pilliazat Pondicherry - 1960. 1. மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிசேக மலர் (கோயில் வளர்த்த கலைகள் - ஓவியம் - கட்டுரை மே.சு. இராமசுவாமி பீ.ஏ.பி.எல் (மதுரை - 1963 பக் - 101. 1. இவைகள் திருவொற்றியூர் தலபுராண சாரம் என்ற நூலில் காசி வாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள் எழுதிய முன்னுரையினிற்றும் எடுக்கப்பட்டது. 1. Ancient Jaffna - Mudaliar C. Rasanayagam C.C.S (Cylon) 1926 Madras. 1. “The Records of the Buddhist religion say:- In the middle of a great iron city of this Ratnadvipa (Pao - Chu) was the dwelling of the Rakohasi women (Lo - l’sa). On the towers of this city they erected two high flagstaffs with lucky or unlucky signals which the exhibited (to allow manners) according to circumstances when merchants came to the island (Ratnadvipa) Then they changed themselves into beautiful women holding flowers and scents, and with the sound of Music they went forth to meet theries and caressingly invited them to enter the iron city then having shared with them all sorts pleasures they shut them up in an iron prison and devoured them at their lesisure” Hiouen M.L.R Vol : i p : 148. 2. Hiomen : M.L.R Vol. I.P 148 3. The iron fort, thich continued to be a great menace to the sea - faring trade of ceylon was destroyed says the chinese traveller Hionen Thsang by vijaya. In all probability, however it was destroyed by karikala chola the greatest of the early chola kings who in the first century A.D. ancient jaffna. Mudaliar C. Rasanayagam C.C.S .19. 1. (அ) துன்னாருட்கும் துன்னருங் கடுந்திறற் றாங்கெயிலெறிந்த துன்னாங்கனோர் - புறம் V.39 (ஆ) வீங்கு தொட் செமபியன் சீற்றம் விறல் விசும்பிற் றூங்கு மெயிலுந் தொலைத்தலால் - பழமொழி - V.49. (இ) தூங்கெயின் மன்றெறிந்த சோழன் காண்ம்மானை சிலப்பதி - வாழ்த்து அம்மானைவரி (ஈ) தூங்கெயிலெறிந்த செம்பியன் - சிறுபாண் 1 : 81 -82. 1. S.I.I Vol. XII. No.23A 2. S.I.I. Vol . IV 3.. Epi Report 1911. P.72. 1. South Indian Temple Inscriptions Vol II P.270.