கவியரசர் முடியரசன் படைப்புகள் 10 பாட்டு பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 320 = 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 210/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்தஇப்பரிசிலுக்குயான்ஓர் வாணிகப்பரிசிலன்அல்லேன்........ ................ முற்றிய திருவின் மூவரேஆயினு«பெட்பின்¿ஈதšயா«வேண்டலமே’ என்னும் சங்கப் புலவர்களின்வைரவரிகளுக்குச்சான்றாகப்பெருமிதவாழ்வுவாழந்தவர்.சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய cலகில்áங்கமெனcலவியவர்.ïUgjh« நூற்றாண்டின் கவிதையுலகில் òதுமைóத்தkரபுக்fவிஞர்mHF«, இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25 இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் மகனுரை திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றிப் புகழப்பட்டவர் கவியரசர் முடியரசனார். மிகப்பெருங் கவிஞராகத் தமிழுலகத்தால் அறியப்பட்டாலும் தமிழர்கள் அவரைச் சரிவர வெளிக்காட்டவில்லை. அவரும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. விளம்பர வெளிச்சம் அவர் மீது வீசவில்லை. அவரும் விளம்பரத்தை விரும்பவில்லை. குடத்திலிட்டவிளக்காகவேவாழ்ந்தார்.வறுமைவாட்டியபோதுவணங்காமுடியரசராகவாழ்ந்தார்.பெருமைவாய்த்தபொழுதுஏழைத்தமிழாசிரியராகவேநடந்தார்.உண்டாலம்மஇவ்வுலகம்....v‹D« சங்கப்பாடலுக்கு¢சான்றாக¤திகழ்ந்தார். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ யாரிடத்தும் வளைந்ததில்லை. வளமான வாழ்வு நாடியோ, வசதியான பதவி தேடியோ எவரிடத்தும் பணிந்ததில்லை. தன்னலத்திற்காகத் தன் மானத்தை இழந்த தில்லை. அவரது சிந்தனை, சொல், கவிதை எல்லாமே தமிழ், தமிழர், தமிழ்நாடே. தமிழே அவரது மூச்சு. கவிதையே அவரது வாழ்வு. தமிழ் பாடுங்குயிலாகக் கவிதை கீதமிசைத்த அக்கவி வானம்பாடி வாழ்வில் வசந்தத்தைக் கண்டதில்லை; சோகத்தைச் சுவைத்ததுண்டு. வல்லூறென வாட்டுங் கவலைகள் வட்ட மிட்டதுண்டு. சுழன்றடிக்கும் வேதனைப் புயல்கள் வீசியதுண்டு. எதனையும் எதிர்கொண்டு வாய்மையே சிறகாய்க் கொண்டு கவிபாடிப் பறந்தது அந்தப் பாட்டுப்பறவை. பாட்டுப் பறவையின்வாழ்க்கைப்பயணம்என்னும்இத்தன்வரலாற்றுüலைvன்jªதையார்1990ஆம்ஆ©oல்எழுâ முடித்âருந்தார்.அவ்வh©L Kதல்1998இல் இயற்கைvŒதும்வuநோÆ‹தன்iமயால்mவர்படுக்fநிyக் குள்ளhdர்.nநாயுருவதற்கு¥ gšyh©டுகட்குமுன்பிருªnதஅவரதுgலபlப்புfŸவெளிவராkšமுடங்கிக்கிlªதன.இitபற்றியெšyh« mt® v‹Ålம்ஏJ«கூறியதிšலை. mவரதுஇறுதிக்fhy¤âšjh‹ mவற்றைeன்f©ணுறeர்ந்தது.அt‰iw நூல்களாக bவளியிடKனைந்தேன்.mt® வாழுங் காலத்திலேயே அவற்றை வெளிக்கொணர vன்னால்ïயலவில்லை.mtÇ‹ மறைவுக்குப் பிறகே அப்படைப்புகளைப் படித்துத் தொகுத்து mரும்பாடுபட்டு tரலாறுjவிரkற்றmனைத்தையும்üல்களாகbவளிக்bகாணர்ந்தேன்.mt‰iw இருந்து எந்தை கண்டு மகிழாமல் போய்விட்டாரே என்று எண்ணுந்தோறும் என்விழிகள் பொழிகின்றன. என் தந்தையார் வாழ்வில் நானறிந்த செய்திகளைக் கூறும் பொருட்டும், இத்தன் வரலாற்றில் அவர் என்னைச் சாடியுள்ளது குறித்து என்னிலை விளக்கம் அளிக்கும் முகத்தானும், மகனுரை என்ற (பதிப்புரை, முன்னுரை, அணிந்துரை போன்று) ஒன்றை எழுதி அதனை இந்நூலில் சேர்த்து வெளியிடலாம் என்று எண்ணி இத்தன் வரலாற்றை மட்டும் வெளியிடாது வைத்திருந்தேன். ஆனால், என் அன்னையும் நோயுற்று படுக்கைக்காளானமை, என் குடும்பச் சூழல், அலுவலகப் பணிச்சுமை, பொதுப்பணிகள், இன்னோரன்னவற்றால் என்னால் மகனுரை எழுத இயலாமல் காலச் சக்கரம் உருண்டோடியது. என் நண்பர், பதிப்பகத்தார் எனப் பலர் இந்நூலை வெளியிடத் தரும்படிப் பலமுறை என்னிடம் வேண்டியும், மகனுரை எழுத இயலாமல் இருந்ததால் எவரிடமும் கொடுக்க இயலவில்லை. எந்தை என்னைச் சாடியுள்ள பகுதிகளை நீக்கிவிட்டு இந்நூலை வெளியிடலாம் என என் உடன்பிறப்புகள், உறவுகள், கேண்மையர் வற்புறுத்தியும் நான் உடன்படவில்லை. ஏனெனில் அது தந்தைக்குச் செய்யும் இரண்டகம் எனவும், எழுதுவது அவர் உரிமை, அதில் கை வைக்க நமக்கேது உரிமை எனவும் கூறி நீக்க மறுத்து விட்டேன். இந்நூலைப் படிப்பார் அதனை உணர்வர். எனக்குச் சிறுமை வரினும் எந்தை எழுத்துக்குப் பெருமையெனில் அது எனக்குந்தானே. இந்நிலையில் திரு.இளவழகன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு முடியரசனார் படைப்புகள் முழுமையும் ஒருசேர பதிப்பிக்க விழைவதாகவும் நூல்கள் அனைத்தையும் தொகுத்துத் தரும்படியும் வேண்டினார். அவர் மொழி, இனம், நாடு எனும் குறிக்கோளை முன்னிறுத்திப் பெருந்தமிழ்ச் சான்றோர்களின் அரிய தமிழ்க் கருவூலங்களைப் பதிப்பித்துத் தமிழ் மண்ணுக்களித்து வரும் மொழிக் காவலர் என்பதாலும், தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடே (1999) முடியரசன் நூல்கள் என்பதாலும், அவர் மீது எனக்குப் பற்றும் பாசமும் உண்டு. மேலும் எந்தையின் செம்மொழிச் செல்வங்கள் அனைத்தும் தமிழ்மண் பதிப்பகம் வழி தமிழுலகிற்குக் கிடைப்பது எனக்கு மகிழ்ச்சி என்பதாலும் அவரது வேண்டுகோளை ஏற்று, தந்தையின் படைப்புகள் முழுமையும் தொகுத்து இத் தன்வரலாற்றையும் தமிழ்மண்ணுக்குத் தந்தேன். உடனடியாக மேற்கூறிய மகனுரை யை எழுத வேண்டிய கட்டாயத்தால் என் நினைவுக்கு வந்த செய்திகளை அவசர கோலத்தில அள்ளித் தெளித்து, ஏறத்தாழ 150 பக்கங்கள் கொண்ட உரையையும் திரு.இளவழகனார்க்கு விடுத்தேன். ஆனால் அவ்வுரை ஒரு நூல்போல் அமைந்துவிட்டதால், அதனை தந்தையின் தன் வரலாற்று நூலுடன் சேர்க்காமல் தனி வெளியீடாகத் தரலாம் என்று அவர் கூறினார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு, மகனுரை எனுந்தலைப்பை மாற்றி, பார்ப்பின் குரல் என்று தலைப்பிட்டேன். அதனைத் தனி வெளியீடாகத் தரும் அவருக்கென் நன்றி. எந்தை, தன் வரலாற்றில் தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, தன் வாழ்க்கையைப் பற்றி வெள்ளை உள்ளத்தினராக, குழந்தை மனத்தினராக ஒளிவு மறைவின்றி உள்ளத்தாற் பொய்யாதொழுகியுள்ளதை இந்நூலைத் துய்ப்போர் உய்த்துணரலாம். தனக்குப் பெருமை சேருமென்றோ சிறுமை சாருமென்றோ எச்செய்தியையும் பிறழ்ந்து கூறினாரல்லர். எடுத்துக்காட்டாக, என் திருமணம் பற்றிக் கூறுமிடத்துத் தன் மகனான என்னைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஆனால் அவருக்குப் புகழ் சேர்த்த பல நிகழ்வு களை ஏனோ கூறாது விடுத்தார். அவர், ஈரோட்டுப் பெரியாரின் இனவெழுச்சிப் போராட்டப் பாசறைக்குள் போய்ச் சேர்ந்த நாள் முதலே, நீர்க்கோல வாழ்வினிலே நெடிதே துயருறினும் போர்க்கோலம் மாறவில்லை. வெந்துயரம் உற்றாலும் கேட்டுக்குக் கேடு பல கிளர்ந்தெழுந்து தாக்கிடினும் கோட்டுக்குக் கோடு தாவும் கவியாகவில்லை. ஓங்கும் விளம்பரங்கள் உற்ற துணை புரிந்து, தாங்கும் சாதி சனம் கண்டதில்லை இறுதி வரை; ஏக்கம் அதனாலேயே எள்ளளவும் கொண்டதில்லை. மானந்தனை யிழந்து மாற்றாரின் தாள் பணிந்து கூனல் மனத்தராய்க் கொள்கையை விற்றதில்லை. வீட்டை நினைந்தறியார்; நாட்டை மறந்தறியார். அல்லல் எது வரினும் அச்சம் சிறிதுமின்றித் துச்சம் எனத் தூக்கியெறிந்து விட்டுத் தன் மானப்பாட்டிசைத்துச் செந்தமிழே கோலோச்ச, முத்தமிழே முடிசூட, மூத்த தமிழ் அரசாள, பைந்தமிழே பாராள நல்ல தமிழ்நாட்டைப் போராடி மீட்டெடுக்க, வீரக்கவிபாடி பாட்டுப் பறவையெனப் பாடிப் பறந்தவர் தாம் எம் தந்தை முடியரசன். அவர் பாட்டைப் படியுங்கள்; அவர் பாட்டைச் செல்லுங்கள். வெல்லும் நமது தமிழ் ஈதுறுதி. - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x பாட்டு பறவையின் வாழ்க்கைப் பயணம் ( தன்வரலாறு) என்னுரை 17 காணிக்கை 19 தமிழ் வாழ்த்து 20 1. பயிலும் பூவை 21 2. கூண்டுக்கிளி 57 3. இணைபிரியா அன்றில் 102 4. அன்புப் பார்ப்புகள் 115 5. வலைப்படா மயில் 125 6. மணிக்குயில் 138 7. வானம்பாடி 146 8. புகழ்ச் சிட்டு 159 9. தோழமைப் புறா 207 10. குயிலும் குஞ்சும் 236 11. அரங்கக் குயில் 261 12. அளிபெறு தும்பி 287 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் கவியரசர் முடியரசன் - வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி தோற்றம் : 7.10.1920 பிறந்த ஊர் : பெரியகுளம் வாழ்ந்த ஊர் : காரைக்குடி இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேச பண்டிதம்-மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934-39). வித்துவான்-கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர்-முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளி, சென்னை (1947-49). மீ.சு. உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி (1949-78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக்கலப்புமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள் மருமக்கள் பெயரர் குமுதம் பாண்டியன் திருப்பாவை பாரி பூங்கோதை ஓவியம் அன்னம் சற்குணம் செழியன், இனியன் குமணன் தேன்மொழி அமுதன், யாழிசை செல்வம் சுசீலா கலைக்கோ, வெண்ணிலா அல்லி பாண்டியன் முகிலன் இயற்றிய நூல்கள் - வெளிவந்த ஆண்டு 1. முடியரசன் கவிதைகள் (கவிதைத் தொகுதி) 1954 2. காவியப் பாவை (கவிதைத் தொகுதி) 1955 3. கவியரங்கில் முடியரசன் (கவிதைத் தொகுதி) 1960 4. பாடுங்குயில் (கவிதைத் தொகுதி) 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே (கவிதைத் தொகுதி) 1985 6. மனிதனைத் தேடுகிறேன் (கவிதைத் தொகுதி) 1986 7. தமிழ் முழக்கம் (கவிதைத் தொகுதி) 1999 8. நெஞ்சிற் பூத்தவை (கவிதைத் தொகுதி) 1999 9. ஞாயிறும் திங்களும் (கவிதைத் தொகுதி) 1999 10. வள்ளுவர் கோட்டம் (கவிதைத் தொகுதி) 1999 11. புதியதொரு விதி செய்வோம் (கவிதைத் தொகுதி) 1999 12. தாய்மொழி காப்போம் (கவிதைத் தொகுதி) 2001 13. மனிதரைக் கண்டு கொண்டேன் (கவிதைத் தொகுதி) 2005 14. பூங்கொடி (காப்பியம்) 1964 15. வீர காவியம் (காப்பியம்) 1970 16. ஊன்றுகோல் (காப்பியம்) 1983 17. இளம்பெருவழுதி (நாடகக்காப்பியம்) 2009 18. அன்புள்ள பாண்டியனுக்கு (கடித இலக்கியம்) 1999 19. இளவரசனுக்கு (கடித இலக்கியம்) 1999 20. முடியரசன் தமிழ் இலக்கணம் (இலக்கணம்) 21. எக்கோவின் காதல் (சிறு கதைகள்) 1999 22. எப்படி வளரும் தமிழ் (கட்டுரை) 2001 23. சீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் (கட்டுரைத்தொகுதி) 1990 24. பாடுங்குயில்கள் (கட்டுரைத் தொகுதி) 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு) 2009 தேடிவந்த சிறப்புகள் (விருது/பட்டம்/பரிசு - வழங்கியது/இடம் - ஆண்டு)  அழகின் சிரிப்பு என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950  திராவிட நாட்டின் வானம்பாடி பட்டம் - பேரறிஞர் அண்ணா - 1957  கவியரசு பட்டம், பொற்பதக்கம் - குன்றக்குடி அடிகளார், பாரி விழா பறம்புமலை - 1966  முடியரசன் கவிதைகள் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966  வீரகாவியம் நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973  நல்லாசிரியர் விருது, பதக்கம் - கே.கே.சா, ஆளுநர், தமிழ்நாடு அரசு - 1974.  சங்கப் புலவர் பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974.  பாவரசர் பட்டம், பொற்பேழை - மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர் - 1979  பொற்கிழி பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி - 1979  பொற்குவை - ரூ. 10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள் காரைக்குடி - 1979  பொற்கிழி - பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு, சிவகங்கை  கவிப் பேரரசர் பட்டம், பொற்கிழி ரூ. 10,000/- மணி விழா எடுப்பு - கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. மாநில இலக்கிய அணி, சென்னை - 1980  தமிழ்ச் சான்றோர் - விருது. பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983  கலைஞர் விருது என்.டி. இராமாராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. முப் பெரும் விழா, தேசிய முன்னணி தொடக்க விழா, சென்னை - 1988  பாவேந்தர் விருது (1987 க்குரியது) பொற்பதக்கம், - கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு சென்னை - 1989  பொற்கிழி - விக்கிரமன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993  சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில், வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ. 50,000/ அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993.  இராணா இலக்கிய விருது பொற்குவை ரூ.10,000/- இரண்டாம் புரட்சிக் கவிஞர் எனும் பட்டம் தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994  கல்வி உலகக் கவியரசு விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் - 1996  பொற்கிழி - பழைய மாணவர் பாராட்டு விழா. கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச் சிவபுரி - 1997  கலைமாமணி விருது, பொற்பதக்கம் - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர் - கலைஞர் மு. கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998. பிறகுறிப்புகள்  இளம்பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள்.  20 ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939)  21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி,நாடு, இயற்கை இவற்றையே பாடி வந்தார் (1940)  21M« mfitÆš ïa‰¿a ‘rhâ v‹gJ ek¡F Vndh? என்ற கவிதையே முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாடு இதழில் வெளியிடப்பட்டது (1940)  தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940)  தன்மான இயக்கத் தொடர்பால் வித்துவான் தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப் பட்டார் (1943).  புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலை மறைவாக இருந்து படித்து வித்துவான் பட்டம் பெற்றார் (1947)  நவாபு டி.எ. இராசமணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி, அங்கிருந்த சிறை வாழ்க்கை யும், மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார். (1944)  பெரியார், தலைமையில், அண்ணா முன்னிலையில் நடைபெற்ற மகநாட்டுத் தீர்மானம் காரைக்குடி திராவிடர் கழக மநாட்டில், இவர் முன் மொழிய அன்பழகன் வழி மொழிதல், மாநட்டில் பேரறிஞர் அண்ணாவுடன் முதல் நேரடிச் சந்திப்பு (1945).  சென்னையில் தமிழாசிரியர் பணி - பல்வேறு இதழ்களில் இலக்கியப் பணி - பொன்னி இதழில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் - திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49)  தான் கொண்ட கொள்கைக்காகக் கைம்பெண் - சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளத் தாயாரிடம் வேண்டுதல். ஒரே மகன் என்பதால், இசைவு தரத் தாயார் மறுத்தல் (1948).  சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள் என அன்னையாரிடம் வேண்டுதல். பெற்றோர் இசைதல். பெற்றோர் மூலம் கலைச்செல்வி எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளல் (1949)  திருமணமான ஆண்டே துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949).  சாதி மறுப்பு மணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்து விடாமல் தாமும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார்.  காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார் (1949).  என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாரட்டப் பெற்றார் (1950).  குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர் பிழைத்தார் (1955).  மூன்றாவது மகவான ஆண் மகவு பிறத்தல், செய்நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்கு சுப்பிரமணியன் எனப் பெயரிட்டார் (1955).  சுப்பிரமணியன் என்ற அம்மகன் மறைவு, கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959).  சென்னை சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டார். கண்ணாடி மாளிகை என்ற திரைப்படத்திற்குப் பாடல். உரையாடல் எழுதினார். திரைத்துறையில் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்று தம் இயல்புக்கும். கொள்கைக்கும், அத்தொழில் சிறிதும் ஒத்து வராததால் திரைத் துறையிலிருந்து வெளியேறினார் (1961).  மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் பணி (1962).  இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965).  பூங்கொடி நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடை செய்ய ஏற்பாடு (1966).  ஆட்சிமாற்றத்தால் பூங்கொடி தடை ஏற்பாடு விலக்கம் (1967).  தமிழாசிரியப் பணி ஓய்வு (1978).  மதுரைப் பல்கலைக்கழகம் தமிழியற் புலத்தில் நாடகக் காப்பியப் பணி (1985).  திராவிட நாடு, முரசொலி, முத்தாரம், குடியரசு, விடுதலை. போர்வாள், முல்லை, எழில், தென்றல், மன்றம், அழகு, முருகு, பொன்னி, குயில், கதிரவன், நம்நாடு, வாரச் செய்தி, பிரசண்ட விகடன், தமிழ்ப்பாவை, காதல், தாமரை, புது வாழ்வு, தனியரசு, சங்கொலி, வாழ்வு, தோழன், திராவிட மணி, தமிழ்ச்சுவை, தமிழ், போர்முரசு, பாசறை, இன முரசு, இன முழக்கம், நித்திலக் குவியல், செந்தமிழ்ச் செல்வி, கலைக் கதிர், அமுத சுரபி, கழகக் குரல், மறவன் மடல், சமநீதி, உரிமை வேட்கை, தென்னரசு, தென்னகம், தமிழ் முரசு, தமிழ்நாடு, அலை ஓசை, தமிழ்நேசன் (மலேசியா) கவிதை, முல்லைச் சரம், தமிழரசு, குங்குமம்,தினமணி கதிர், தினமணி ஆகிய இதழ் களிலும் மற்றும் பல்வேறு இதழ்களிலும் கவிஞர் தமது எழுத்தோவியங் களைத் தீட்டியுள்ளார்.  கவிஞரது கவிதைகள் பல சாகித்திய அகாதமியால் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.  கவிஞரின் நூல்கள் பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளி களில் பாட நுல்களாக வைக்கப்பட்டுள்ளன.  கவிஞரின் நூல்கள் குறித்துப் பலர், பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆய்வேடுகள் அளித்து முனைவர் (P.hd), இளமுனைவர் (M.Phil) பட்டங்கள் பெற்றுள்ளனர்.  கவிஞரின் படைப்புகள் பற்றி பல ஆய்வு நூல்களும், கட்டுரைகளும், வெளிவந்துள்ளன. கவிஞர் பற்றி பல்வேறு இதழ்கள், சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளன.  கவிஞரது படைப்புகள் தமிழ் நாட்டரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. (2000).  இந்திய இலக்கியச் சிற்பிகள் எனும் வரிசையில், முடியரசன் வாழ்க்கை வரலாற்றை சாகித்திய அகாதமி வெளி யிட்டுள்ளது. (2005)  கவியரசர் முடியரசன் அவைக்களம், கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம் கவிஞர் முடியரசன் இலக்கிய மன்றம் எனும் அமைப்புகள் முறையே, காரைக்குடி, ஈரோடு, குடந்தை ஆகிய ஊர்களில் தமிழ்த்தொண்டு ஆற்றி வருகின்றன.  காரைக்குடியில் ஒரு பெரிய நெடுஞ்சாலைக்குக் கவியரசர் முடியரசன் சாலை எனக் காரைக்குடி நகராட்சி மன்றம் பெயர் சூட்டிச் சிறப்பித்துள்ளது. பெற்ற பாராட்டுகள் பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக் கவிஞர், கவி மா மன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் கவிமுடியரசர், கவியுலக முடியரசர், சுய மரியாதைக் கவிஞர், தமிழிசைப் பாவலர். மரபின் மைந்தர். தமிழ் தேசீயக் கவிஞர் வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர். திமிர்ந்த ஞானச்செருக்குடைய சங்கப்புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப் பிழையார், ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், பகுத்தறிவாளர், நன்றி மறவாதவர், நட்புப்பெரிதென வாழ்ந்தவர், மனிதநேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், சமயம் கடந்தவர் பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ்கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர், குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி வாழ்வினர், குறிக்கோள் வாழ்வினர். இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்க மாக, தன்மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக, கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர், பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும், அரசவைப் பதவிகள் நாடி வந்தபோதும் அவைகளைப் புறக்கணித்தும் வளையா முடியரசர் என்றும் வணங்கா முடியரசர் என்றும் புகழ்பெற்றவர், தன்மானக் கொள்கையால், மைய மாநில அரசின் அரிய பல விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் வீறும் வேட்கையும் பெறச் செய்தவர். கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதா சனைத் தந்தையாகவும் கருதிக் குலமுறை கிளத்தும் கொள்கை யுடையவர். தமது வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே. புகழ் மாலை கவிஞன் யார்?.... என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா, பகுத்தறிவுக் கவிஞர் முடியரசனய்யா. - தந்தை பெரியார். திராவிட நாட்டின வானம்பாடிக் கவிஞர் முடியரசன் - பேரறிஞர் அண்ணா. தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற மான் துள்ளும் வேகத்தைக் கவிதையினால் வான்பெய்யும் கோடைமழைபோலப் பொழிகின்ற முடியரசர் முன்னாள் தொட்டு இந்நாள்வரை இருக்கின்ற நம்கவியரசர் தன்மானக்குன்றம் - கொள்கை மாறாச்சிங்கம் - திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் - திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் - 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கு மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிற தென்றால்... அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம் - தலைவர் கலைஞர் கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி- புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியர சனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர் களிடையே ஓர் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார். - பேராசிரியர் க. அன்பழகன். என்மூத்தவழித்தோன்றல்முடியரசனே.... எனக்குப்பிறகு கவிஞன்...முடியரசன்... - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந் தீத்திறக்காyதெËமருந்j-மூத்jமுடியரrரின்¿மொழிவனப்பு¢செய்யு«முடியரச‹செய்யு©முறை. - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார். - முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர், கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது ïருக்கிறார்களா?எனத் bதரியவில்லை.- jவத்திருFன்றக்குடிmடிகளார்.ghl¥ பிறந்த பழஞ்சபை kணவன்_டப்gழக்கஞ்rடியgவலன்ïலக்கியம்Ãலமாïலக்கணம்mரணாக்fவிதைnகாலாக்fற்பனைbகாடியாbவல்கjமிழெனும்Éறற்கொடிbபாறியாaப்புப்gடையாeல்லணிJணையாப்òரட்சிKரசாப்òதுமைJடியாத்jமிழைïகழ்வார்jன்னுயிர்ப்gகையாmல்மொழிâணிப்பார்tல்வரbவதிர்த்துத்bதாடுமொழிப்nபாரில்Jம்பைNடியோன்bமாழியரnசாச்சும்Kதல்முடிaரசன்Fடியரசுnபாற்றுங்bகாள்கைnahnd - முனைவர் வ.சுப. மாணிக்கனார். முடியரசர் இவரென்றால் மக்க ளெங்கே? முன்னோடும் பரி எங்கே? படைக ளெங்கே? முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே? முத்தமிழில் ஒருதமிழ்தான் முடியோ! மற்ற இடைத்தமிழ்தான் அரசோ! மூன் றாவதான எழிற்றமிழ்தான் முரசோ! X!சரிதான் இந்த முடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம் முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்! மும்முடியை ஓர் தலையில் முடித்த முடியரசர் எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர் தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார் தாய்த்தமிழே! அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார். - கவிஞர் கண்ணதாசன் வளையாத முடியரசன் வைரத் தூண்தான்! வளமார்ந்த பெரியாரின் கொள்கை வாள்தான்! தளையறுத்து தமிழ்ப்பகையின் தலை யறுக்கும் தளைதட்டா வெண்பாக்கள் இவரின் தோட்டா குலைஇளநீர் கொட்டியதாய் இனிமைப் பேச்சு! குடியறியாச் சிந்தனைகள்! தமிழே மூச்சு! அலைகடலாய் கருத்துமனம்! பெரியார் அண்ணா ஆழ்மனத்தில் வைத்திருந்த புதையல் காடு எவரெவரோ எழுதுகின்றார்! இவரைப் போன்றே எழுந்தவர்யார் எழுத்தாலே? பாவேந் தர்தம் தவப்புதல்வர்! தமிழ்ப்புலவர்! இவரின் பாட்டு தன்மான இயக்கத்தின் தளிர்தா லாட்டு யுகப்புரட்சி எழுத்தாளா! தமிழர் கைக்கு உயிர் நூற்கள் படைப்பாளா! உன்றன் தொண்டை அகங்குளிர நினைக்கின்றேன்! உருவம் கூட அகலவில்லை! அடடாநீ! எங்கே போனாய்? - உவமைக் கவிஞர் சுரதா கொட்டிக் கொடுத்தாலும் கோமான்கள் அழைத்தாலும் எட்டியே பார்க்காத இளம்போத்துச் சிங்கமாய் அட்டியின்றி பணத்தாசை அணுவளவும் இல்லாமல் சுட்டி உரைக்கும் சுடர்க்கவியாய் கவியுலகில் பாடிப்பறந்த பறவையாம் கவியரசர் முடியரசர். - தமிழாகரர் தெ. முருகசாமி கவிஞரின் மறைவிற்காகத் தினமணி நாளிதழ் தீட்டிய அஞ்சலித் தலையங்கம் - 5.12.98 புதுமை பூத்த மரபுக் கவிஞர் இறைவனின் படைப்புகளில் சிகரம் போன்றவன் மனிதன். மனிதனின் படைப்புகளில் சிகரம் மொழி; மொழியின் சிகரம் கவிதை. அது மொழியின் பூரணப் பொலிவும் கூட. தமிழ் இலக்கியம் நீண்ட மரபுடையது. மரபு வழுவாமல், புதுமை களைப் புகுத்தி, தற்காலத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மகாகவி பாரதியார் - பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலத்துக்கே உண்டு. இக்கவிதா மண்டலத்தைச் சேர்ந்த புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதலாவது இடத்தைப் பெற்றவர் கவிஞர் முடியரசன். எனது மூத்த வழித்தோன்றல் முடியரசனே என்று பாவேந்த ராலேயே பாராட்டப் பெற்ற பெருமையுடையவர். ஆழ்ந்த புலமை மிக்க இக்கவிஞர் அழகும் இனிமையும் புதுமையும் கொஞ்சிக் குலவும் ஏராள மான கவிதைகளை எளிய நடையில் இயற்றித் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். பொதுவாக கவிஞர்களின் உள்ளம் தனித்தன்மை வாய்ந்தது. பார்வையும் தனி - கோணமும் தனி - உணர்வும் தனி - எல்லாமே தனி. அதனாலேயே, தனித்து நின்று இலக்கிய உலகுக்கு தனி முத்திரை பதிந்த கவிதைகளைக் கவிஞனால் வழங்க முடிகிறது. இலக்கியவாதிகளில் பத்தோடு பதினொன் றாகக் கவிஞனைக் கருதமுடியாது. இலக்கிய உலகில் சிங்கம் போல உலவக் கூடியவர்கள் உண்மையான கவிஞர்கள், அந்த அபூர்வ இனத்தைச் சேர்ந்த கவிஞர் முடியரசன் எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க்காத ஆண்மை யாளர், தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை மனிதரிடையே பேதா பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்து வத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து, தம் கவிதைகள் மூலம் ஓயாத அறிவுப் போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என்பதைக் கவிதைகளால் முரசறைந்தவர். அரசவைக் கவிஞர் என்ற பதவி மட்டும் இருந்திருக்குமானால் அதில் அமர்ந்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதற்கான தகுதிகள் அனைத்தும் உடையவர். அவருடைய மறைவின் மூலம் தமிழ் உலகம் ஓர் அபூர்வப் படைப்பாளியை இழந்து விட்டது. மரபு வழுவாமல், அதே சமயத்தில் புதுமை பூத்த இனிய கவிதைகளைச் சொரிந்து வந்த தமிழ்ப் பொழில் மறைந்து விட்டது. அதிலும், உரைநடைக்கே கவிதைபோல வேடமிட்டுக் காட்டும் நவீன கவிஞர்கள் மலிந்து வரும் இக்காலத்தில் தரம்மிக்க மரபுக் கவிதைகளைக் காலத்தின் தேவைகளுக்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் சுரந்து அளித்துவந்த செந்தமிழ் ஊற்று முடியரசன். தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர்களின் படைப்புகளை அரசுடைமை ஆக்கும் சீரிய திட்டம் ஒன்றைத் தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கவிஞர் முடியரசனின் படைப்புகளையும் அரசுடைமையாக்கிச் சிறப்பிப் பதன் மூலம் இந்த அற்புதக் கவிஞனுக்குத் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான அஞ்சலியைப் பிரதிபலிக்க முடியும். என்னுரை வாழ்க்கை ஒரு போராட்டந்தான்; வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நிலையிலும் தொல்லைகள் எத்தனை! துயரங்கள் எத்தனை! இடர்ப்பாடுகள் எத்தனை! இடையூறுகள் எத்தனை! தடைக்கற்கள் எத்தனை! அடேயப்பா! கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதை தான் அது. தொல்லையாலும் துயரத்தாலும் தடைகளாலும் இடையில் ஏற்படும் ஊறுகளாலும் இன்னாதம்ம இவ்வுலகம் எனக் கவன்று, துவண்டு விழுவோர் பலர். இன்னா வுலகத்து இனிய காண்குவமென அவற்றை எதிர்த்துப் போராடி, வெற்றி கண்டு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று போர்ப்பாட்டுப் பாடி வீறு நடையிடுவோர் சிலர். என் வாழ்க்கைப் பயணத்தில் நான் துவண்டும் விழுந்துளேன். துணிந்தும் நடந்துளேன். எப்படியோ எழுபது கற்களைக் கடந்து வந்து விட்டேன். கடந்து வந்த பின் திரும்பிப் பார்த்தேன்; மனக் கண்ணுக்குப் புலனாகிய காட்சிகளையெல்லாம் ஒன்று திரட்டி, நூலாக வடித்துக் காட்டியுள்ளேன். (1990 இல் நான் நோய் வாய்ப் படுமுன் இதனை எழுதிமுடித்தேன்) என்னைப்பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி நானே எழுதுவதால், தற்பெருமையெனவோ செருக்கெனவோ பிறர் எண்ணிவிடல் கூடாதென்ற அச்சவுணர்வோடும் அடக்கவுணர்வோடுந்தான் எழுதி முடித்தேன். எங்கேனும் அவ்வுணர்வுகள் மீறப்படுவது காணப் பெறின், இது கவிஞன் இயல்பெனக் கருதி விடுக. என் வரலாற்றை நானே எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. செயற்கருஞ்செயல்கள் செய்தவர் களுக்குத்தானே வரலாறு தோன்றும். யான் அத்தகு செயலொன்றும் செய்திலேன் என்பது எனக்கு நன்கு தெரியும். தெரிந்து வைத்திருந்தும் எழுதுவதற்குச் சில காரணங்கள் உள : ஒன்று : நண்பர் கவிஞர் அரு. சோமசுந்தரத்திடம் உரை யாடும் பொழுதெல்லாம் வரலாறெழுதுமாறு அவர் என்னை வற்புறுத்தியது. இரண்டு : என்னைப்பற்றித் தவறாகக் கருதிக் கொண்டிருக்கும் உலகிற்கு என் உண்மை நிலையுணர்த்துவது. மூன்று : என் நூல்களை ஆய்வு செய்யும் மாணாக்கர்க்கு உறுதுணையாகும் எனக் கருதியது. நான்கு : உடுக்கையிழந்தவன் கைபோல என் இடுக்கண் களைந்தவர் பலர். அவர்களை நினைவு கூர்வது. இக்காரணங்களைத் தவிர, வரலாறு எழுத வேண்டும் என்ற உந்தார்வத்தை எழுப்பிய மற்றொரு காரணமும் உண்டு. கவிஞர் மன்னர் மன்னன் எழுதிய கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் தான் அவ்வார்வத்தை உசுப்பி விட்டது. என் வாழ்க்கை வரலாறுதான் இது; முழுமையுடையதன்று; குறைபாடுடையதே. உமியில்லாத நெல் இல்லை. அது போலக் குறையில்லாத மனிதனும் இல்லை. ஆதலின் என்பாற் குறையிருத்தல் இயல்பே. உமியை விலக்கி அரிசியை மட்டுந் தந்துளேன். உமியால் யாது பயன்? முனை முரிந்த அரிசியும் உடைபடு குறுநொய்யும் இருத்தல் கூடும். அவற்றைக் களைந்து முழுமை காணல் உங்கள் கடன். என் நினைவிற்கு வந்தனவற்றை மட்டுந் தொகுத்துத் தந்துள்ளேன். என் எழுபதாம் அகவை வரை நிகழ்ந்தவற்றை அசை போட்டுப் பார்க்கின்றேன். அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை. திரும்பிப் பார்க்கிறேன் என்றுதான் இந்நூலுக்குப் பெயர் வைத்தேன். பாவலர் மணி பழநி பெயர் மாற்றம் செய்தனர். அன்புள்ள, காரைக்குடி, முடியரசன் 10.10. 1990 காணிக்கை செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும் தீங்குயிலே! நானுனக்குத் தெய்வ மென்றால் சிந்தையினை ஆண்டுகொண்ட நீயே எற்குத் தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன். இந்நூல் என் துணைவியார் கலைச்செல்விக்குக் காணிக்கை - முடியரசன் தமிழ் வாழ்த்து வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே - முடியரசன் (கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை) . 1 பயிலும் பூவை பிறப்பு முகில் தவழும் முகடுகளையுடைய மேற்குத் தொடர்ச்சி மலை மேற்றிசையில் அரண் செய்யும்; பனிப்படலம் தவழ்ந்து விளையாடும் கோடைக்கானல் மலை வட திசையில் அணி செய்யும்; வெற்றிலைக் குன்றுக்கு (வத்தலக்குண்டுக்கு)ச் செல்லும் சாலை கீழ்த்திசையிலும் தேனி, கம்பம், கூடலூர் செல்லும் சாலை தென்றிசையிலும் அமைந்துகிடக்கும் இந்நான் கெல்லைகட்கு நடுவில் அமைந்த நகர்தான் பெரியகுளம் என்னும் ஊர், இது மதுரை மாவட்டத்தைச் சோந்தது. ஊருக்கு நடுவில் வராக நதி என்னும் பெயர் கொண்ட ஒரு சிற்றாறு ஓடும். அவ்வாற்றின் வடதிசையில் அமைந்த குடியிருப்பு வடகரை என்றும் தென்றிசையில் அமைந்த குடியிருப்பு தென்கரை என்றும் அழைக்கப்படும். தென்கரையில் வாணக்காரப் பிள்ளைத் தெருவில் சிறிய ஓட்டு வீட்டில் நாச்சியார் அம்மாள் என்னும் மூதாட்டி வாழ்ந்து வந்தார். அவருக்குத் துரைசாமி என்ற மகனும் சீதாலட்சுமி என்ற மகளும் இருந்தனர். நாச்சியார் அம்மாள் எளிய குடும்பத்தைச் சேர்ந்த வராயினும் மக்களைச் சீருடனும் சிறப்புடனும் வளர்த்து வந்தார். அண்ணன், தங்கையிடம் அளவிலா அன்பு செலுத்தி வந்தார். உரிய பருவத்தில் சீதாலட்சுமிக்கும் திண்டுக்கல் சுப்புராயலு என்பவர்க்கும் திருமணம் நடந்தேறியது. சீதாலட்சுமி நான்கு மக்களை ஈன்றெடுத்தும் ஒன்று கூட இம் மண்ணுலக வாழ்வை விரும்பவில்லை. பிறந்தவுடன் விடை பெற்றுக் கொண்டன. ஐந்தாவதாக ஓர் ஆண் மகவு 7.10.1920 இல் பிறந்தது. அம் மகவு நிலைத்து விட்டது. நான்கையிழந்த பெற்றோர், ஒன்றாவது நிலைத்ததே என்று அக்குழந்தையைக் கண்போலப் பேணி வளர்த்தனர்; பெற்றோர் வளர்த்தனர் என்பதை விடத் தாய்மாமன் துரைசாமி வளர்த்தார் என்பதே பொருந்தும், பெரும்பாலும் மாமன் வீட்டில் தான் அக்குழந்தை வளர்ந்தது. அக்குழந்தைதான் துரைராசு என்ற முடியரசன். மறுபிறப்பு பிள்ளைப் பருவத்திலேயே இடையூறு பல ஏற்பட்டு, அவற்றினின்று தப்பிப் பிழைத்திருக்கிறேன். ஒரு நாள் ஆற்றுக்குக் குளிக்கச் சென்ற என் அன்னை, என்னைப் படிக் கட்டில் அமர வைத்துவிட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது படிக்கட்டிலிருந்து குனிந்து குனிந்து நீரிற் கைவிட்டு விளையாடிக் கொண்டிருந்த நான், ஆற்றில் விழுந்து விட்டேன். ஆற்றுநீர் இழுத்துச் சென்று, அடுத்த துறையில் துவைத்துக் கொண்டிருந்த ஒர் அம்மையார் காலடியில் விட்டது. அவ்வம்மையார் பதறிப்போய் என்னைத் தூக்கிக் காப்பாற்றினார். கல்விப் பயிற்சி துரைராசாக வளர்க்கப்பட்ட எனக்கு அகவை ஐந்தானவுடன் தெற்கு அக்கிரகாரத்தில் உள்ள ஓட்டுப்பள்ளிக் கூடத்தில் அக்கால வழக்கப்படி சேர்க்கப்பட்டேன். பெற்றோர் யாது கருதியோ அங்கிருந்து, வாகம்புளி என்ற இடத்திலிருந்த கூரைப் பள்ளியிற் சேர்த்து விட்டனர். அங்கு எத்தனை ஆண்டுகள் படித்தேன், எந்த வகுப்பு வரை படித்தேன் என்பது நினைவில் இல்லை. இன்பவுணர்வு நான் அடிக்கடி நண்பர்களுடன் விளையாடச் சென்று விடுவேன். கோலிக்குண்டு விளையாடுவதிலும் பம்பரம் ஆட்டுவதிலும் ஆர்வம் மிகுதியும் உண்டு. ஆற்றிற்குச் சென்று மீன் பிடித்து விளையாடுவதிலும், மீனைக் கொணர்ந்து, சட்டியில் நீரூற்றி வைத்து அதை வளர்ப்பதிலும் பேர்ஆர்வம் காட்டுவதுண்டு. ஏழெட்டு அகவை யானவுடன், ஊரின் மேற்கே உள்ள பெரிய குளம் என்ற பெயருடைய குளத்துப்பக்கம் தோழர் களுடன் மாலை வேளையில் விளையாடச் செல்வேன். உயர மான குளக்கரையில் அமர்ந்த வண்ணம், குளத்தையொட்டி யிருக்கிற கரடுகளையும் கரடுகளுக்குப்பின் தொடர்ந்திருக்கும் மலைகளையும் அம்மலை களின் பின், கதிரவன் மெல்ல மெல்ல மறைவதையும் சிவந்து தோன்றும் வான்வெளியையும் பார்த்துக் கொண்டேயிருப்பேன். அப்பார்வை என் உள்ளத்தில் ஏதோ ஓரின்பவுணர்ச்சியை வளர்த்துக் கொண்டிருந்தது. அக்குளத்தில் மீன்கள் துள்ளித் துள்ளிக்குதிக்கும் போது என் உள்ளமும் குதித்துக் குதித்து ஆடுவது போன்ற ஓர் உணர்வு தோன்றும். வலப்பக்கத்தில் குரங்குகள், பள்ளிக் குழந்தைகள் விளையாடுவது போல விளையாடும். மேயச் சென்ற பசுக் கூட்டம், கழுத்திற் கட்டிய மணியோசையுடன் வரிசை வரிசை யாகப் பக்கத்து நெடுஞ்சாயில் அணிவகுத்துச் செல்லுங் காட்சி, குளக் கரையில் அமர்ந்திருக்கும் என் கண்களுக்குப் பெருவிருந்தாகும். ஏனைய நண்பர்கள் ஓடியாடி விளையாடும் பொழுது நான் மட்டும் தனித்திருந்து, இவ்வெழிற்கோலங் களைக் காண்பதில் இனம் புரியாத ஓர் இன்பம் எனக்குத் தோன்றுவதுண்டு. அச்சவுணர்வு இவ்வாறு அடிக்கடி நீண்ட நேரம் விளையாடச் சென்று விடுவதால், என் பாட்டி, மாமா தேடித் தேடி அலைவார்கள். பல முறை கண்டித்துப் பார்த்தும் பயனில்லை. என் மாமா சில கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவார். அங்கே ஒரு பிள்ளையைத் திருடன் பிடித்துக் கொண்டு போய் விட்டான்; இங்கே ஒரு பிள்ளையின் நகைகளைக் கழற்றிக் கொண்டு, கொன்று கற்றாழையில் போட்டு விட்டான் என்று கூறி எனக்கு அச்சவுணர்ச்சியை ஊட்டுவார். பிள்ளைப் பருவத்தில் ஊட்டிய இவ்வுணர்வு நன்கு வேரூன்றி விட்டது. இன்றும் அச்சவுணர்வு என் மனத்தில் நிழலாடிக் கொண்டே இருப்பதற்குக் காரணம் அதுதான். கவிதையுணர்வு என் மாமனுக்குத் திருமணமாகி, மக்கள் இருவர்க்குத் தந்தையான பின்னரும் என்னிடத்தில் தான் பேரன்பு செலுத்துவார். எங்குச் செல்லினும் என்னையே அழைத்துச் செல்லுவார். வைகறையில் எழுந்துவிடுவது அவர் வழக்கம் ஊரின் எல்லைப் புறத்தே சென்று, காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, ஆற்றில் வந்து நீராடி விட்டு வருவார். என்னையும் உடன் அழைத்துச் சென்று அப்படியே பயிற்றுவார். செல்லும் பொழுது பற்பல அறவுரைகள் சொல்லிக் கொண்டே செல்வார். புலருமுன் எழுந்த அவர், என்னையும் துயில் எழுப்பி அருகில் அமர்த்திப் பாடல்கள் பாடி என்னையும் பாடச் சொல்வார். அவர் இரண்டாம் வகுப்பு வரைதான் படித்தார். குடும்ப நிலை கருதி இளமையிலேயே பாத்திரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். எனினும் இலக்கண இலக்கியங்களைத் தாமே பயின்று பாடல் எழுதும் ஆற்றலும் பெற்றார். பெரிதும் இசைப் பாடல்களே புனைவார். குரலும் இனிமையாக இருக்கும். அடிக்கடி என்னிடம் அவரியற்றிய பாடல்களைப் பாடிப் பாடிக் காட்டுவார். அதனோட மையாது, ஆறுமுகா, வேலவா வாவா, ஆறு படை வீடுடையாய் வாவா என்று பாடி, ஆறுமுகா, ஆறுபடை என்னும் இரண்டு சொல்லிலும் முதலெழுத்து ஆ என வந்திருப்பது மோனை என்று சொல்லுவார். இரண்டாம் எழுத்து று என்று வந்திருப்பது எதுகை என்று சொல்லு வார். ‘ntš KUfh’ vd KjÈš mikªjhš mL¤J ‘khš kUfh’ vd mik¤jš nt©L«; KUfh kUfh v‹W brhšY« bghGJ mHfhf ïU¡»w jšyth? என்று விளக்குவார். எனக்கு ஒன்றுமே விளங்குவதில்லை. ஆனால் கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் சொல்லிக் கொண்டேயிருப்பார். மேலும் அடிக்க இராமாயணம், பாரதம் போன்ற நூல்களிலிருந்து பாடல்களைப் பாடிப் பாடி விளக்குவார். அஞ்சிலே ஒன்று பெற்றான் என்னும் பாடல் இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கோம்பை, போடிநாயக்கனூர், கம்பம் போன்ற ஊர்களிலிருந்து, கவிராயர் பலர் என் மாமனைத் தேடி வருவார்கள். அவர்களுடன் திண்ணையிலமர்ந்து இலக்கியவுரை யாடல்கள் நடத்துவார். என்னையும் அருகில் அமர்த்திக் கொண்டு தான் பேசுவார். விளங்கினும் விளங்கா விடினும் நானும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். வருவோரிடமெல்லாம் என்னைக் காட்டி என் தங்கை மகன்; நல்ல அறிவாளி என்று அறிமுகம் செய்து வைப்பார். இச்சூழல், எப்படியோ என்னுள்ளத்தில் கவிதையின்பத்தை வளர்த்து விட்டது. சுருங்கக் கூறின் கவிதையுணர்வு என்ற வேல், எனக்கு என் பிள்ளைமைப் பருவத்திலேயே என் தாய் மாமனால் வழங்கப்பட்டது எனலாம். மேலும் என் அன்னையார் தமது இனியகுரலிற்பாடும் தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு உருகியிருக்கிறேன். அடிக்கடி பக்கத்து வீட்டுப் பெண்களைக் கூட்டி, அல்லி அரசாணி மாலை, புலந்திரன் களவு மாலை, பஞ்சுபாண்டவர் வனவாசம், பவளக்கொடி போன்ற பாடல் நூல்களையும் விக்கிரமாதித்தன் கதை போன்ற நூல்களையும் பாடிக் காட்டி, படித்துக்காட்டி மகிழ்வார். அருகிலிருந்து நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். மதுரைக்குச் செல்ல நேர்ந்தால் புது மண்டபத்துக்குச் சென்று புத்தகம் வாங்குவதுதான் அவர் வேலை. சாதி மதங்கள் எங்கள் வீட்டைச் சுற்றிலும் வாணியர் தெரு, மறவர் தெரு, இசுலாமியர் தெரு சூழ்ந்திருக்கும். மூன்று தெருவினரும் எங்களுடன் நெருங்கிப்பழகுவர். அண்ணன், தங்கை, மாமன், மச்சான் என்று உறவு கூறிக்கொள்ளும்அளவிற்கு நெருக்கமான வர்கள். என் பாட்டியின் பரிவும் என் மாமனின் நல்லொழுக்கமும் அறிவும் அவர்களையெல்லாம் உறவாக்கி விட்டன. என் பாட்டி காலத்தில் தொடங்கிய அவ்வுறவு மூன்றாந்தலைமுறையைச் சேர்ந்த என் காலத்திலும் இன்றும் நிலவி வருகிறது. இன்று வரை எவ்வகையான வேறுபாட்டுணர்வையும் நான் கண்டதில்லை. இவ்வாறு பழகிய பழக்கந்தான், பிற்காலத்தில் என் உள்ளத்தில் சாதியுணர்வோ மதவுணர்வோ வேரூன்றாமைக்குக் காரணமாயிற்று எனலாம். அன்று கண்ட ஒன்றிப் பழகும் உறவுணர்வை இன்று நாட்டிலே காண முடியவில்லையே! எங்கோ அரிதாகக் காணப்படுகிறதே தவிரப் பெரும்பாலும் காண இயலவில்லை. காரணம் தம்மையே நினையும் நினைவு வளர்ந்து, செழித்துப் படர்ந்து விட்டதுதான் என்று கூறலாம். பிறர் நலம் பேணும் பெற்றிமை குறைந்து,தம் நலம் காக்கும் குறுவட்டத்திற் சிக்கிக் கொண்டது மாந்தரினம்; பண்பாட்டுத் தலைவரும் அருகினர். போலிமை, வெளி வேடம், கவர்ச்சி இவை தலை தூக்கி நிற்கின்றன. நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால் என்று நல்லோர் நெஞ்சங்கள் குருதி நீர் சிந்துகின்றன. யானையும் நானும் நான் ஐந்தாறு அகவை வரை, யானையைக் கண்டதில்லை. ஒருமுறை போடிநாயக்கனூருக்குச் சென்றிருந்த பொழுது, கடைத் தெருவுக்குச் சென்று திரும்பினேன். நாங்கள் தங்கி யிருந்த வீட்டிற் கருகில் வந்து விட்டேன். எதிரில் யானை யொன்று வருவதைத் திடீரென்று பார்த்தவுடன் அப்பேருருவம் என்னை அலறியடித்துக் கொண்டு ஓடச் செய்து விட்டது. அன்று பதிந்து விட்ட அச்சம் இன்றுவரை அகலவில்லை. யானைக் கருகில் இப்பொழுதும் செல்வ தில்லை. பெரிய குளத்து ஆற்றில் அடிக்கடி யானையை நீராட்டு வார்கள். யானை ஆற்றின் நடுவில் அழகாகப் படுத்துக் கொண்டு, தன் துதிக்கையால் நீரெடுத்துத் தன்மேல் இறைத்துக் கொண்டிருக்கும். சிறுவர்கள் யானை மீதேறி விளையாடுவர். கரையில் நின்ற வாறே அக்காட்சியைக் கண்டு மகிழ்வேனேயன்றி ஒருநாளும் அருகிற் சென்றதில்லை. திண்ணைப்பள்ளி பின்னர் என் பெற்றோர் பிழைப்பின் பொருட்டுச் செட்டி நாட்டில் வேந்தன் பட்டி என்ற ஊருக்கு வந்து விட்டனர். வேந்தன் பட்டிக்கு வடபால் ஓர் ஊருணி உண்டு. அதையடுத்த பகுதிக்கு மேலைச்சிவபுரி என்று பெயர். வேந்தன்பட்டியில் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பில் மீண்டும் சேர்க்கப்பட்டேன். அதன் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தவர் வேங்கடராமையர். ஆசிரியன் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். இடையில் ஒரு கதராடை; தோளில் ஒருதுண்டு; (அது பெரும்பாலும் நாற்காலியில்) மார்பில் தடித்த பூணூல்; உச்சியில் சிறு குடுமி; வலக்கையில் இரு விரல்களுக் கிடையே பொடி, விரைந்த நடை; உயர்ந்த உருவம்; மாணவர்களை உருவாக்கும் அக்கறை இவை யனைத்தும் சேர்ந்த மொத்தவுருவமே வேங்கட ராமையர். இவரிடந்தான் மண்ணில் விரலால் எழுதும் பயிற்சி பெற்றேன்; எண் சுவடி, கீழ்வாயிலக்கம் கற்றுக் கொண்டேன். எழுத்து வடிவம் அழகாக அமையவும் ஒலி வடிவத்தைப் பிழையின்றி ஒலிக்கவும் மாணவர்க்குப் பயிற்சி தருவதில் அவர் காட்டிய அக்கறை நினைந்து நினைந்து மகிழத்தக்கது. மணலில் மாணவர் எழுதும் பொழுது, வடிவம் கோணலாக அமைந்து விட்டால். சீறியெழுந்து, விரல்களுக்கிடையே இருக்கும் பொடியை வேகமாக உறிஞ்சிவிட்டு, ஐந்து விரல்களையும் விரித்துக் கொண்டு டெலே யென்று கத்திய வண்ணம் முதுகில் ஓரடி கொடுப்பார். எழுத்து, சரியாக நிமிர்ந்து கொள்ளும். எனக்கு அப்பேறு பல முறை கிடைத்த துண்டு. எழுதுதல், ஒப்பித்தல், பார்த்துப் படித்தல் எல்லாம் முடிந்த பிறகு எங்களைத் தரையில் அமரச் செய்து, பெரியபுராணம், திருவிளை யாடல் முதலிய நூல்களிலிருந்து கதைகள் கூறி இடையிடையே பாடல்களும் சொல்லி விளக்குவார். பாடல் சொல்லும் பொழுது மெய்ப்பாடு தோன்ற உருகி உருகிச் சொல்லுவார். நாங்களும் கேட்டு உருகுவோம். ஆறேழு பக்கம் கதை, கட்டுரை எழுதித் தந்து, மனப்பாடம் செய்யச் சொல்லிப் பயிற்சி தந்து, ஆவணி மூலத்திரு நாளில் கோவில் வாயிலில் கூட்டங் கூட்டுவித்து, இரண்டு, மூன்றாம் வகுப்பிற் பயிலும் மாணவர் களைப் பேசச் செய்து மகிழ்வார். நானும் இரண்டு மூன்று முறை அவ்வாறு பேசியிருக் கிறேன். நிகண்டும் அப்பொழுதே மனப்பாடம் செய்யச் சொல்வார். அப்பெருந்தகை, ஈடுபாட்டுடன் ஊட்டிய இலக்கிய வுணர்வு என் கவிதையுணர்வு என்ற வேலைக் கூர்மைப் படுத்தியது எனலாம். ஆசிரியர் பாராட்டு நாற்பதாண்டுகளுக்குப் பின் நான் ஆசிரியரான பின் ஒரு நாள் மேலைச்சிவபுரித் தமிழ்க் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கல்லூரி முதல்வர் என்னை வரவேற்று, இருக்கையில் அமருமாறு கூறினார். அருகில் என் ஆசிரியர் வேங்கடராமையர் இருந்தமை யால் இருக்கையில் அமர நான் தயங்கினேன். அதனைக் கண்டு சும்மா, உட்காரப்பா என்று கையைப் பிடித்து அமரச்செய்தார் என் ஆசிரியர். அமர்ந்த பின்னரும் ஆசிரியர் அருகில் இருப்பதால் என் நடுக்கம் ஓயவில்லை. அவ்வளவு மதிப்பும் மரியாதையும் ஆசிரியர்கள்பாற் கொண்டிருந்தோம். பின்பு என் கவிதையை வெகுவாகப் பாராட்டினார் துரைராசு! வானொலிக்கவியரங்கில் உன் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம், நம்ம பிள்ளை இவ்வளவு அருமை யாகப் பாடுகிறானே என்று நான் பூரித்துப் போவேன். உன் பாடல்கள் வெகு அருமை; நீயும் எங்கள் இனத்தைத் திட்டித் தான் பாடுகிறாய்; ஆனால் நாகரிகமாகத் திட்டுகிறாய் என்று கூறினார். ஐயா, நான் சாதிகளைச் சாடுவேனே தவிர எவரையும் திட்டிப் பாடுவதில்லை என்றேன். ஆமாப்பா, அதனாலே தான் நாகரிகமாகத் திட்டுகிறாய் என்றேன் என்று சிரித்துக் கொண்டார். பிறிதொருகால் அங்குச் சென்றிருந்த பொழுது அவரைக் காணச் சென்றேன். கண்டு உரையாடிய பின் பேருந்தில் ஏற்றி விட அவரும் உடன் வந்தார். அப்பொழுது மிகவும் தளர்ந் திருந்தார். பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் மறுத்துங்கூட கடைக்கு ஓடித் தேநீர் வாங்கி வந்து பருகுமாறு தாயன்புடன் தந்தது என் உள்ளத்திற் பசுமையாகப் பதிந்திருக்கிறது. தலயாத்திரை என் பெற்றோர் பக்தி மனப்பான்மை மிக்கவர். அதனால் அடிக்கடி தலயாத்திரை செல்வது வழக்கம். ஒரு நாள் பல ஊர்களுக்கும் சென்று திருவாரூர்க்கு வந்தனர். அங்கே கமலாலயம் என்னும் மிகப்பெரிய குளம், கோவிலுக்கு அருகில் உண்டு. அக்குளத்தில் புனித நீராடினோம். சிறுவனாக இருந்த நானும் நீராடினேன். படியில் வழுக்கி நீருள் மூழ்கி விட்டேன். படித் துறையில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீருட் குதித்து என்னைக் காப்பாற்றி விட்டார். முதலில் ஒரு முறை ஆற்றினின்றும் காப்பாற்றப் பட்டேன் இஃது இரண்டாம் முறை. சன்மார்க்கசபை நுழைவு திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு முடிந்து, ஐந்து, ஆறாம் வகுப்பு மேலைச் சிவபுரியிலுள்ள சன்மார்க்க சபையிற் சேர்க்கப் பட்டேன். ஆறாம் வகுப்பு வரை தான் அங்குண்டு. அச்சபையில், மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வுக்காகத் தமிழ் கற்பித்து வந்தனர். சங்கச் சான்றோர் எண்ணத்தக்க மு. அருணாசலம் பிள்ளை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஐந்து ஆறாம் வகுப்பிற் பயிலும் எனக்கு ஆங்கிலமும் கணக்கும் நடேசையர் என்பார் கற்பித்தார்; நளவெண்பா, தேவாரம் முதலிய இலக்கியங்களை மல்லிங்கசாமி என்பார் கற்பித்தார். ஆறுமுக நாவலர் இலக்கண வினாவிடை சங்கர நாராயணப்பிள்ளையாற் கற்பிக்கப்பட்டேன். மாணவர்தம் உள்ளங்களிற் பதிய வைக்கவும் விளங்க வைக்கவும் வல்லவர்கள் அவ்வாசிரியப் பெருமக்கள். தமிழ் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன். செருக்கறுதல் இங்குப் பயிலுங்கால் என் மாமனுக்கு அடிக்கடி மடல் எழுதுவேன். எதுகை, மோனை வருமாறு எழுதுவேன். அங்கு வரும் பெரியவர் களிடமெல்லாம் படித்துக் காட்டிப் பெரு மகிழ்வு கொள்ளுவார் என் மாமன். விடுமுறையில் பெரிய குளத் திற்குச் சென்றிருந்த சமயம் மாமா பணிபுரியும் கடைக்குச் சென்றேன். அனுமந்தப்பட்டி யிலிருந்து வந்த பெரியார் ஒருவர் அவருடன் உரையாடிக் கொண்டி ருந்தார். என் தங்கை மகன் துரைராசு இவன்தான் என்று என்னை அவருக்கு அறிமுகஞ் செய்து வைத்தார். அப்பெரியவர் முகமலர்ந்து என் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே தம்பி உன்னைப் பற்றி மாமா அடிக்கடி என்னிடம் கூறுவார். நீ எழுதும் கடிதங்களையும் காட்டுவார்; படித்து மகிழ்வேன். உனக்குச் சரசுவதி கடாட்சம் நன்றாக அமைந்திருக் கிறது; ஆனால் கல்வி வளர வளர இன்னொன்றும் வளரும். அதைக் கருவம் என்று சொல்வார்கள். விழிப்பாக இருந்து, அந்தக் கருவம் வளர விடாமல் தடுத்துக் காத்துக் கொள் தம்பி, அதுதான் புத்தி சாலித்தனம் என்று அறிவுரை கூறினார். அவர் என் முதுகில் தட்டிக் கொண்டே கூறிய அறிவுரை, ஆணியடித்தாற் போன்று என் உள்ளத்தில் அழுந்தி விட்டது. இன்றும் அவ்வறிவுரைப்படியே அடக்கவுணர்வுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வுணர்வு, சான்றோர் பலருடைய பேரன்பை நான் பெறுதற்குக் காரணமாக - துணையாக அமைந்து விட்டது. எனினும் என் பாடல்களில் உணர்ச்சி வேகம் பொங்கிக் கொண்டு வரவேண்டிய விடத்திற்கூட, வேகங் குறைந்தும் பிறழ்ந்தும் வரக் காரணமாகவும் அமைந்து விட்டது. வேகமாகப் பாடிவிடின், படிப்போர் என்னைத் தருக்கன் என வெறுப்பரோ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. எனினும் அடக்கவுணர்வு நிலை பெற்றுள்ள மைக்குக் கழிபேருவகை கொள்கின்றேன். பிரவேச பண்டிதம் மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வுக்காகப் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்ற வகுப்புகளைச் சன்மார்க்க சபையார் நடத்தி வந்தனர். பயிலும் மாணவர்க்கு உண்டியும் உறையும் உறையுளும் அவர்களே வழங்கி வந்தனர். தம் கைப் பொருளை வழங்கி இக்கல்விப்பணி செய்து வந்தனர். நான் ஆறாம் வகுப்பில் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். அதற்காக ஆறுமுக நாவலர் நன்னூற்காண்டிகை யுரை பரிசிலாகவும் பெற்றேன். இதனையறிந்த மு. அருணாசலனார், உங்கள் பையனுக்குத் தமிழ் நன்றாக வருகிறது. அவனைத் தமிழ்க் கல்வியிற் சேர்த்து விடுங்கள் என்று என் தந்தையாரிடம் கூற, அவரும் இசைந்து, என்னைப் பிரவேசபண்டித வகுப்பிற் சேர்த்து விட்டார். அப்பொழுது என் அகவை பதினான்கு. நான்காண்டுகள் பயின்றேன். அவ்வகுப்பிற் பெற்ற தமிழறிவுதான் என்னையும் ஒரு புலவனாக மிளிரச் செய்தது. என் வணக்கத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகை மீ. முத்துசாமிப்புலவர் இலக்கண இலக்கியங்களைத் திரும்பத்திரும்பக் கற்பித்து, நன்கு விளங்க வைத்து என் மனத்திற் பதிய வைத்தார். இச்சபை, பண்டிதமணி. மு. கதிரேசனார் கண்காணிப்பில் இயங்கி வந்தது. அதனால் ஆண்டு தவறாமல் நிகழும் ஆண்டு விழாக்களில் அன்று வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் அனைவரும் வருகை தந்து சொற்பொழிவாற்றுவர். அச்சொற்பொழிவுகளை யெல்லாம் விடாது கூர்ந்து கேட்டுச் சுவைப்பேன். வருகை தந்த பண்டிதமணி கதிரேசனார், இரா. இராகவையங் கார், விபுலாநந்த அடிகள், தமிழவேள் உமாமகேசுரனார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை போன்ற சான்றோர்க்கு வேண்டிய பணிவிடைகள் செய்து மகிழ்வேன். அவர்கள் தனித்திருக்கும் பொழுது, அவர்கள் சொல்வதெல்லாம் கேட்டு மனத்திற் பதித்துக் கொள்வேன். விபுலானந்தர், கவியரசு இவர்கள் காட்டிய அன்பு இன்றும் பசுமையாக இருக்கிறது. ஆண்டு தோறும் இப்பெரு மக்கள் சொற்பொழிவுகளைக் கூர்ந்து கேட்டது, என் தமிழறிவிற்கு நல்லுரமாக அமைந்தது. பிரவேச பண்டித வகுப்புத் தேர்வில் இலக்கணம், இலக்கியம், கட்டுரை இவற்றிற்குத் தனித்தனியே தேர்வுத்தாள் இருப்பது போலச் செய்யுளியற்றலுக்கும் தனித் தேர்வுத் தாளுண்டு. அதன் பொருட்டுப் பாடற்பயிற்சியளிப்பர். ஒரு கருத்தைக் கொடுத்துப்பாடச் சொல்வதுண்டு; இன்ன எழுத்திற்றொடங்கி இன்ன எழுத்தில் முடியுமாறு பாடுக என்பதுமுண்டு. முறிப்படி தந்து பாடச் சொல்வது முண்டு. பயிற்சியிலும் வகுப்புத் தேர்விலும் என் பாடற்கே முதலிடம் கிடைக்கும். இவ்வகுப்பிற் பெற்ற பயிற்சிதான், என் கவிதையுணர் வாகிய வேலுக்குப் போர்ப் பயிற்சியாக அமைந்தது. கடவுட் பாடல்களே அப்பொழுது பாடுவது வழக்கம். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தேர்வு நடந்த பொழுது, மீனாட்சி யம்மன் மீது ஒரு நேரிசை வெண்பாவும் சிவஞான முனிவர் வரலாறு பற்றி 20 வரிகளில் ஒரு அகவற்பாவும் பாடப் பணித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடுதல் வேண்டும். அங்கு நான் பாடிய அகவற்பா நினைவில் இல்லை. வெண்பா மட்டும் நினைவிற்கு வருகிறது. நீல மணிநிறத்தாய் நின்மலன்றன் பாகத்தாய் கோல வுருவுடையாய் கொண்டல்மீன் - போல விழியுடையாய் என்றன் விழுமங்கள் யாவும் அழிவுறவே நல்குன் அருள் இதுதான் அவ்வெண்பா. வித்துவான் வகுப்பு 1939 இல் பிரவேச பண்டிதத் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் புகுமுக வகுப்புத் தேர்வும் எழுதி வெற்றி பெற்றேன். பின்னர் சபையில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி யொன்று தொடங் கப்பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நானும் வித்துவான் முன்னிலை (பிரிலிமினரி) வகுப்பிற் சேர்ந்து பயின்றேன். மீ. முத்துசாமிப்புலவர், மல்லிங்கசாமி, வை. சுப்பிரமணிய ஐயர், வீர. செல்லப்பனார், பு.ரா. மீனாட்சி சுந்தரனார் போன்ற ஆசிரியப் பெருமக்கள் எனக்குப் பாடங்கற்பித்தனர். என் நெஞ்சில் தமிழ் கொலுவிருக்கச் செய்தவர் முத்துசாமிப் புலவரே. நல்லுள்ளம் வாய்க்கத்துணை நின்றவர் வீர. செல்லப்பனார். இயல்பிலேயே கூச்சப்படும் தன்மையுடைய எனக்கு ஓரளவேனும் கூச்சத்தை நீக்க உதவியவர் பு.ரா. மீனாட்சி சுந்தரனார். முத்துசாமிப்புலவர், இலக்கியமோ இலக்கணமோ நடத்தும் பொழுது பலமுறை திருப்பித்திருப்பிச் சொல்வார். நாங்கள் நன்கு விளங்கிக் கொண்டோம் என்பதை எங்கள் முகக் குறிப்பால் தெரிந்து கொண்டபின்புதான் அடுத்த பகுதி நடத்தத் தொடங்குவார். அன்று நாங்கள் விளங்கிக் கொள்ள வில்லை யென்று நினைத்தால் மறுநாளும் அதே பாடந்தான். இவ்வாறு மனத்தில் அழுந்தக் கூறித் தெளியவைப்பார். கற்றமுறை 1934 முதல் 1939 வரை அவரிடம் நின்ற வண்ணமே பாடங் கேட்டோம். நடத்தப்பட்ட இலக்கண இலக்கியங்களை நாடோறும் ஒப்பித்தல் வேண்டும்; உரையுடன் ஒப்பித்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் நான் பிழையின்றி ஒப்பித்து நல்ல பெயர் வாங்கி விடுவேன். ஆனால் வார இறுதியில் அவ்வாரம் நடைபெற்ற பாடங்களில் மூலத்தை மட்டும் ஒப்பித்தல் வேண்டும். அன்று தான் தடுமாறு வேன். ஒவ்வொரு நாளும் வாங்குவது நல்ல பெயர். வாரக் கடைசியில் வாங்குவது நல்ல அடி. மனப்பாடம் செய்யும் ஆற்றல் என்னிடம் குறைவு. இன்று கேட்டதை நாளை அப்படியே ஒப்பித்து விடுவேன். ஆனால் மறுநாள் மறந்து விடுவேன். மூல பாடங்கள் தாமாக என் மனத்தில் நின்றாலொழிய நான் வற்புறுத்தி நிறுத்த மாட்டேன். மனப்பாடஞ் செய்யாமல் விட்டது எவ்வளவு பெரிய தீமை யென்று இப்பொழுதுதான் தெரிகிறது! அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி என மாணவர்க்குக் கூறப்பட்ட இலக்கணப்படி, புலவரிடம் அஞ்சித்தான் ஒழுகு வோம். இஃது அன்றைய நிலை. ஆசிரியர்களும் அப்படியிருந்தார்கள். அதற்கேற்ப மாணவர்களும் அஞ்சி நடந்தார்கள். இன்று அந்நிலை காண்டல் அரிது. இது சுதந்திர நாடல்லவா? புதுமை நோக்கிச் செல்லும் உலகம் பழைமையைப் புறக்கணிக் கிறது! சுதந்திரம், புதுமை, பழைமை இவற்றிற்குச் சரியான உண்மையான பொருளைக் கண்டு கொள்ளாமல் தடுமாறு கிறது உலகம்! உனக்கு அகவை நூறாண்டு என வைத்துக் கொள். முதலிருபது ஆண்டுகள் அடிமையாக இரு; பின் எண்பது ஆண்டுகள் உரிமை யுடன் வாழலாம். முதலிருபதில் உரிமை யாக வாழ விரும்பினால், பின்னைய எண்பதும் அடிமையாகவே இருக்க வேண்டிவரும் என ஓரறிஞர் கூறியதாக நினைவு. இன்றைய இளைஞனுக்குத் தொடக்கமே சுதந்திர உணர்வு தானே மேலோங்கி நிற்கிறது. அதனால் கால மெல்லாம் அடிமையாகிச் சாகிறான்! உரிமை அடிமை என்னுஞ் சொற் களுக்கு உண்மைப் பொருள் தெரிந்து கொள்ள முயலாமை யால் வந்த விளைவு! உளங்கவர்ந்தவர் 1939 இல் தமிழ்க் கல்லூரியாக மாறியதும் வீர. செல்லப் பனார் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பின் மாணவர்கள் பலகையில் அமர்ந்து பாடங்கேட்கும் நிலை பெற்றோம். செல்லப்பனார் அமைதியின் வடிவமானவர். எப்பொழுதும் படிப்பார்வங் கொண்டவர்; அன்பாகப் பழகும் இயல்பினர்; எவ்வகையாலும் மேல் கீழ் என்ற வேறுபாடு கூடாதென்பவர்; தூயவுள்ளத்தினர்; உலகம் இதுவெனக் காட்டி யுணர்த்தியவர்; வரலாறுகள், சான்றோர் வாழ்க்கைகள் இவற்றை எடுத்தெடுத்துக் கூறி எம்மைத் தெளிவித்தவர்; எமதுள்ளங் களை விரிவுபடுத்தியவர்; என் வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக இருந்து உதவியவர். அவர்தம் இனிய மனமும் அமைதியான வாழ்க்கையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதனால் அவரிடம் பெரு மதிப்புக் கொண்டேன். அவர்தம் இல்லத்தாருடன் பழகும் வாய்ப்பும் பெற்றேன். அக்காலத் திலேயே குழந்தைகளிடம் எனக்கு ஈடுபாடு உண்டு. அவருக்குக் காந்தி என்ற அழகிய குழந்தையுண்டு. அக்குழந்தையை அடிக்கடி எங்கள் இல்லத்துக்கு எடுத்து வந்து கொஞ்சி விளையாடுவேன். அவர் உடல் நலங்குன்றியிருந்த பொழுது, நான் என் தந்தைக்குச் செய்வது போலப் பணிவிடைகள் செய்து, அவர் நலம் பெறும் வரை உதவி நின்றேன். அதனால் என்னிடத்தில் அக்குடும்பமே பேரன்பு செலுத்தியது. இன்றும் அவ்வன்பு நிலைத்து நிற்கிறது. கம்பம் புதுப்பட்டிதான் அவர் வாழும் ஊர். அவர் முதுமை எய்தி, எழுத இயலா நிலையிலும் கூட அண்மையில் எனக்கு நான்கு பக்க மடல் எழுதினார். பழைய நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைவு கூர்ந்து, என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் எழுதியிருந்தார். என் கண்ணிற் படலம் படர்ந்து, பார்வை மங்கியிருந்த நேரம் அது எனினும் அவரிடம் கொண்ட பெருமதிப்பால் காரைக் குடியிலிருந்து கம்பம் சென்று, அவரைக் கண்டு மகிழ்ந்து திரும் பினேன். என்பாற் கொண்ட பழைய அன்பு அப்படியே புதுமை யாகவே இருப்பதைக் கண்டு வியந்தேன். என் மகள் திருமணத்துக்குத் தமது முதுமை கருதாது வந்து பெருமை செய்தார். அது மட்டுமன்று என்னுடன் பயின்ற மாணவர்கள் கந்தசாமி, நாராயணசாமி இருவரும் புதுக்கோட்டையிலும் தேவ கோட்டை யிலும் ஆசிரியராக இருந்தனர். தாமே நேரிற் சென்று அவர்களைப் பார்த்து வந்தார். இத்தகு நல்லாசிரியர்களை யெல்லாம் பெற்ற பேற்றை நினைந்து நினைந்து உருகி உருகி மகிழ்கின்றேன். கடவுட் கொள்கை என் தாய்வழிப்பாட்டனார் வைணவக் கோட்பாடுடையவர்; எந்நேரமும் அவர் நெற்றி, திருமண்ணாற் பொலிவு பெறும்; எப்பொழுதும் ஆழ்வார் வாய்மொழிகளை ஓதிக் கொண்டே யிருக்கும் அவர் வாய், என் மாமன் முருகனிடத்தில் ஈடுபாடு கொண்டவர். திருநீறுதான் அணிவார். நானும் முருகனிடத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன். திருநீறணியாமல் இருந்ததில்லை. அப்போது முருகன் மீது பாடல்கள் மிகுதியாகப் பாடியிருக் கிறேன். என் ஆசிரியப் பெருமக்கள் பாராட்டும் பெற்றிருக் கின்றன அப்பாடல்கள். நாடோறும் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் உண்டு. பலரும் வரும் நேரங்களிற் செல்லேன். அர்த்த சாமப் பூசை நடைபெறும் வேளையிற் சென்று முருகன் முன்னர் அமர்ந்து, கண்ணை மூடி, நாளென் செயும் வினைதானென் செயும் என்னும் பாடலைப் பலமுறை வாய்க்குட்பாடிப்பாடி வணங்கி வருவேன். கார்த்திகை தோறும் மேலைச்சிவபுரியிலிருந்து குன்றக்குடிக்கு நடந்து வந்து முருகனை வழிபட்டுச் செல்லுவேன். நடந்து வந்தால் தானே புண்ணியம்; அப்படியொரு நினைப்பு அப்பொழுது. கடவுட் பற்று உடையேன் எனினும் கண்ணன் முதலிய கடவுளி டத்தில் ஈடுபாடு ஏற்படவில்லை. கடவுட் கதைகளை ஆசிரியப் பெருமக்கள் கூறக் கேட்ட பொழுதும் புராணப் பாடங்களைப் படித்த பொழுதும் பிற கடவுளர் செயல்களில் ஈடுபாடு தோன்ற வில்லை. மாறாக அருவருப்பே தோன்றியது என் இளையவுள்ளத்தில். முருகன் வீரமும் வள்ளியைக் கலப்புமணம் செய்து கொண்டமையும் எனக்கு ஈடுபாட்டை ஏற்படுத்திவிட்டன. சீலை திருடியது, வெண் ணெய் திருடியது. இந்திரன் பழி தீர்த்தது மாபாதகந் தீர்த்தது போன்ற நிகழ்ச்சிகள் பிற கடவுளர் மீது இனம் புரியாத ஓர் அருவருப்பை ஏற்படுத்தி விட்டன. வீரப்புலவர் வீர. செல்லப்பனார்க்குப் பின்னர், பு.ரா. மீனாட்சி சுந்தரனார் என்பவர் முதல்வரானார். இருவர் தம் இயல்பும் நேர் மாறானவை. எனினும் மாணவர்களிடம் எளிமையாகப் பழகுவார். உரிமை யோடு எவரையும் டே என்றுதான் அழைப்பார். அதிகார தோரணை அவரிடம் சிறிது உண்டு. இவர் காலத்தில் மா. குருசாமி என்பவர் ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் உடன் பிறப்பாகவே எங்களிடம் பழகுவார். கல்லூரியில் மாணவர் நன்னெறிக்கழகம் என்னும் பெயரில் மாணவர் மன்றம் ஒன்று உண்டு. கிழமை (வாரம்) தோறும் கூட்டம் நடைபெறும். மாணவர் ஒரு சிலரே அக்கழகத்திற் பேசுவர். பு.ரா.மீ. வந்தவுடன் அனைவரும் பேச வேண்டும் என ஆணை பிறப்பித்து விட்டார். மாணவர் வருகைப் பதிவேட்டில் உள்ள வரிசைப்படி இவ்விருவர் பேசுதல் வேண்டுமென வழியும் வகுத்துத் தந்து விட்டார். வரிசைப்படி என்முறை வந்தது. நான் மேடையில் அதுவரை பேசிப் பழகாதவன்; கூச்சமுடையவன்; எழுந்து நின்றால் கைகால்கள் நடுங்கும். இவற்றை யெல்லாம் எடுத்துக் கூறிப் பலகால் மன்றாடினேன். முதல்வர் உடன்படாது, பேசித்தான் தீரவேண்டும் என உறுதிசெய்து விட்டார். வேறு வழியின்றிப் புலவர் வீரம் என்னுந்தலைப்பில் ஒருவாறு பேசி விட்டேன். முதல்வர், டே, இங்கே வாடா என்று அழைத்தார். பேசத் தெரியாது பேசத் தெரியாது என்று ஒப்பாரி வைத்தாயே; நீதான் நன்றாகப் பேசுகிறாயே! இனி அடிக்கடி பேசுதல் வேண்டும். என ஊக்கமூட்டி வீரப்புலவர் என்ற விருதும் அளித்தார். அதன் பின்னர், வீரப்புலவர் முடியரசன் என்றே அறிக்கைகளிற் குறிப்பிடுவார். மாணவர் கழகம் நடத்திய இரண்டு ஆண்டு விழாக்களில் என்னையே பேசுமாறு பணித்தார். புலவர் உள்ளம் கிழவர் உள்ளம் என்ற தலைப்புகளிற் பேசினேன். அவ்விழாக்களிற் சொற் பொழி வாற்றிய சி. இலக்குவனார், கரந்தைக் கவியரசு போன்ற பெருமக்கள் என்னைப் பாராட்டி ஊக்குவித்தனர். என் கல்வி வாழ்க்கையில் மூன்றே மூன்று முறைதான் மேடையில் பேசினேன். நடிப்புத்துறை கல்லூரி நாடகங்களில் நடித்துப் பரிசிலும் பெற்றிருக்கிறேன். நகைச்சுவை நடிகனாக, கதைத்தலைவனாக, படைத் தலைவனாக நடித்துளேன். கதைத்தலைவன் கண்ணனாக நான் நடித்த ஒரு நாடகத்தில் இளம்பருவத்துக் கண்ணனாக இராம. பெரியகருப்பன் என்ற தமிழண்ணல் நடித்தார். இன்று அவர், மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலை வராக விளங்குகிறார். அன்று முதல் இன்று வரை ஒன்றியவுணர்ச்சியால் உடன்பிறப் பாகவே என்னுடன் பழகி வருகிறார். கல்வி, செல்வம், பதவி இவற்றால் உயர்நிலை பெற்ற பின்னரும் அவரை வருக என அழையாது, வா என ஒருமை வாய் பாட்டில் தான் இன்றும் அழைப்பேன்; அவரும் அதையே பெருமை யாகக் கருதுகிறார். அவ்வளவு எளிமையுடையவர். பணியுமாம் என்றும் பெருமை என்னும் குறட் பகுதிக்கு விளக்கமானவர். பெயர் மாற்றம் கல்லூரியிற் பயின்று வருங்காலத்தே திருப்புத்தூரில் (முகவை மாவட்டம்) அறிஞர் அண்ணா சொற்பொழிவாற்றுகிறார் என்ற செய்தியறிந்து திரண்டு சென்றோம். தமிழுணர்வு குறைந்துள்ள நிலையை விளக்கிப் பேருரையாற்றினார் அண்ணா. அவர் மேடையில் நின்று பேசினும், கேட்பார் உள்ளங்களிற் புகுந்து அங்கிருந்து பேசுவது போலப் பேசினார். சுருங்கக் கூறின் கேட்டாரைப் பிணித்து விட்டார். நான் சொக்கிப் போனேன். மறு நாளே துரைராசு என்ற நான் முடியரசன் ஆகி விட்டேன். (துரை - அரசன்; ராசு - அரசன்; துரைராசு - அரசர்க்கரசன் அதாவது முடியரசன்) கருத்து மாற்றம் அடுத்து அதே ஊரில் பாவேந்தர் பாரதிதாசன் பேசினார். வழக்கம் போல் நாங்களும் சென்றோம். பண்டிதமணி, மறை மலையடிகள் போன்ற பெரும் புலவர்கள், பாரதிதாசன் பேச்சிற் பட்டபாடு - அடேயப்பா! எழுதவே கை நடுங்குகிறது. இந்தப் புலவர், எழுதியதையே எழுதி, சொன்னதையே சொல்லி வருகிறார்களே தவிரப் புதுமையாக என்ன எழுதுகிறார்கள்? புதுமையாக என்ன சொல்லுகிறார்கள்? பழைய சிந்தனைகளைத் தானே அசைபோடு கிறார்கள் என்று கடுமையாகச் சாடிய பாரதிதாசன்தான் குடும்ப விளக்கு என்னும் நூலின் இரண்டாம் பகுதியை, நிறை தமிழாய்ந்த மறைமலையடி களார்க்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்தார். மறை மலையடிகளின் பழஞ் சிந்தனையைச் சாடினார்; தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த பெருமைக்குப் பணிந்து விட்டார் என்று தான் கொள்ள வேண்டும். பாரதிதாசன் பேச்சைக் கேட்ட பிறகு தான் நாடு, மொழி, இனம் பற்றிப் பாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சுயமரியாதைக் காற்று அப்பொழுது மேலைச்சிவபுரியில் மருத்துவர் ஒருவர்க்குக் குடியரசு விடுதலை திராவிட நாடு இதழ்கள் வரும். அவர் எங்களிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லுவார். குடியரசு, விடுதலை இதழ்களில் வெளிவரும் கருத்தும் திராவிட நாடு இதழில் அண்ணாவின் மொழி நடையும் (வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருப்பினும்) எங்கள் உள்ளத்திற் புகுந்து கலக்கத் தொடங்கின. அறிவுக் கண்கள் மெல்ல மெல்ல மலரத் தொடங்கின. ஓ! நாமும் மாந்தரினந்தான்; அதிலும் நாகரிகத் தொன்மை வாய்ந்த தமிழரினம்! நமக்கென ஒரு மொழியுண்டு; நாடுண்டு; நயத்தக்க நாகரிகப் பண்பாடுண்டு என்ற ஒளி படரத் தொடங்கியது. ஆம்; சுயமரியாதைக் காற்று எங்கள் மனமென்னும் மேடையில் வீசத் தொடங்கியது. மேடையிலே வீசிய அம்மெல்லிய பூங்காற்றின் நலம் நுகர்ந்து இன்புற்றோர் கு. கந்தசாமி, இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) நான் ஆகிய மூவருந்தாம். பின்னர் நலம் நுகர வந்தோர் பலர். எனினும் உறுதியாக நின்று, இன்றுவரை அந்நலத்திற் றோய்ந்து வாழ்ந்து கொண்டிருப்போர் கு. கந்தசாமியும் நானுமே. எது துவேஷம் நாங்கள் பயின்று கொண்டிருந்த தமிழ்க்கல்லூரியில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர் பலர் வந்து தங்கிப் பயின்று வந்தனர். புதுக்கோட்டையிலிருந்து இருவர் வந்து பயின்றனர். ஒருவர் கூத்தப்பன் என்னும் பெயருடையார். மற்றவர் சிகாகிரீசு வரன் என்னும் பெயரினர். முன்னவர் தமிழ்ப் புலவர் குடும்பத்தைச் சார்ந்தவர். பின்னவர் வடமொழிப் புலவர் மகன். ஒரு நாள் நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, சிகாகிரீசுவரன், கூத்தப்பனை நோக்கி ஏங்காணும் உமக்கு இந்தப் பாஷைத் துவேஷம்? eld rghgâ v‹w mHfhd rkÞ»Uj¥ ngiu¡ T¤j¥g‹ v‹W kh‰¿ bt¢R‹O®; ïJ e‹dhÆU¡nfh? என்று சொல்லி விட்டார். கூத்தப்பன் மறு மொழி கூறுமுன் நான் வெகுண்டெழுந் தேன். ஏண்டா! எதுடா துவேஷம்? தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த நீ குடுமியான் மலையப்பன் என்ற நல்ல தமிழ்ப் பெயரை, சிகாகிரீ வரன் என்று மாற்றிக் கொண்டது துவேஷமா? தமிழன் தன் தாய் மொழியில் பெயர் வைத்துக் கொள்வது துவேஷமா? உன் புத்தியைக் காட்டி விட்டாயே. தமிழைத் துவேஷிக்கிற நீ எங்கள் மீதே பழியைப் போடுகிறாயே! எனச் சீறியெழுந்தேன். சார் சார், சும்மா தமாஷாப் பேசினதை இவ்வளவு பெரிசா எடுத்துண்டேளே என்று நடுங்கி விட்டான் அவன். இப்படித்தான் வேடிக்கையாகவும் வினையாகவும் தமிழனை அழுத்திக் கொண்டிருக்கிறார்கள். கெஞ்சினால் மிஞ்சுவது; மிஞ்சினால் கெஞ்சுவது- என்பது அவர்களுக்கு இயல்பாகி விட்டது. தமிழ் மன்ணுக்கு உரிமை பூண்ட ஒரு தமிழன் தமிழ் என்று சொன்னால் பாஷைத் துவேஷம் என்று பழிதூற்றுவர். பிறப்பால் ஏற்றத்தாழ்வு வேண்டாம்; என்னைத்தாழ்வாக எண்ணாதே; சரிநிகர் சமமாக வாழ்வோம் என்றால் ஜாதி துவேஷம் என்று பறை சாற்றுவர். பகுத்தறிவு வேண்டு மென்றால் பகவத் துவேஷம் என்று கதை மாற்றுவர். அதை நம்பித் திரியும் தமிழனும் இருக்கின்றானே. எது சரி? எது தப்பு? என்று சிந்தித்து நோக்கும் ஆற்றலை யிழந்து விட்டானே தமிழன்! யார் ஏமாற்றுகிறார்கள்? யார் ஏமாறு கிறார்கள்? என்பதும் தெரியாமல் வாழ்கிறானே! அவனை க்கி உயர்வு கொள்ளும் அயலான் பசப்பு மொழிகளை நம்பி நம்பிப் பாழ்படுகிறானே! புதியதோர் உலகு காண, தமிழ் நாடு உலகோடு சமமாகத் தலை நிமிர்ந்து வாழ, புதுமையும் பொதுமையும் கொண்ட சமுதாயம் படைக்க, அதன் தடைகளை உடைக்க முனைந்தெழுவ தெக்காலம்? தமிழ்ப்பெரியார் திரு.வி.க. நாங்கள் பயிலுங்காற் சான்றோர் அணிமையிலுள்ள ஊர்களிற் சொற்பொழிவாற்றுகின்றனர் எனத் தெரிந்தாற் போதும்; நண்பர்கள் சேர்ந்து புறப்பட்டு விடுவோம். பெருமக்கள் பொழியும் பயன்தரும் பேச்சுகளைச் செவிமடுப்பதில் அவ்வளவு ஆர்வங் கொண்டிருந்தோம். காரைக்குடியில் நிகழுங் கம்பன் திருநாளுக்கு ஆண்டு தோறும் பெரும்பாலும் சென்று வருவோம். ஒருகால், காரைக்குடி இந்து மதாபிமான சங்க வெள்ளி விழா நடைபெற்றது. தமிழ்ப் பெரியார் திரு. வி.க. தலைவர், ஈ.த. இராசேசுவரி அம்மையார், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தம் முதலான பெருமக்கள் சொற்பொழி வாற்றினர். விழா மூன்று நாள் நிகழ்ந்தது. நானும் நண்பர்களும் சென்று பயன் பெற்றோம். விழா நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் ஒவ்வொரு நாளும் அமராவதி புதூர் அறிஞர். சொ. முருகப்பனார் நடத்தி வந்த மகளிர் இல்ல த்தில் திரு.வி.க. தங்குவது வழக்கம். நாங்களும் அங்குச்செல்வோம். அமைதியின் சின்னமாக விளங்கிய அப்பெரு மகனாரை ஓய்வாக இருக்க விடுவதில்லை. ஐயவினாக்கள் விடுப்போம். அவர் முதல் நாள் நிகழ்த்திய பேச்சிலிருந்தும் வினாக்கள் தொடுப்போம். பொதுவான செய்திகளும் பேசுவோம். அனைத்துக்கும் அமைதியாக விளக்கந் தருவார். இடையிடையே குறுக்கு வினாக்களும் உண்டு. மறுப்பும் உரைத்து நிற்போம். பொறுமையாகக் கேட்டு அருமையாக விளக்கி நிற்பார். சில வேளைகளில் மட்டும், திங்களுள் தீத் தோன்றி யாங்கு அவர்தம் இனிய முகத்திற் சினக்குறிப்புத் தோன்றுவ துண்டு. அவ்வேளையில் இப்படிப்பட்ட இளைஞர்களை நாயக்கர்தான் கெடுத்து விட்டார் எனப் பெரியாரைக் கடிந்து கொள்வார். எனினும் வெகுண்டெழாது. எம்மைச் சிறுவர்தாமே என எண்ணி இகழாது, அரவணைத்துப் பேசுவார்; தெளிவு படுத்துவார். பண்டை ஆசான்மார் மாணாக்கரைத் தெருட்டுதல் போல் தாயன்புடன் எமக்குத் தெளிவுரைகள் ஈந்து உவந்தார். கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நாங்களும் கண்ணுங் கருத்துமாக அவற்றைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தோம். நற்பயனும் பெற்றோம். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் அவரே என்பதில் ஐயமில்லை. அத்தகு சான்றோரைக் கண்டு, அவர்தம் வாய் மொழி கேட்டு அவருடன் பழகி அவர் தந்த அறிவுப்பாலை அருந்திப் பயன் கொள்ளும் பேறு பெற்றமையை இன்றும் எண்ணி யெண்ணி இறும்பூது கொள்கின்றேன். மூன்றாம் நாள், பேச்சின் முடிவில் எமக்கு நல்கிய அறிவுரை ஒன்றுண்டு. v«ik neh¡» ‘Ú§fŸ mHfhf ïU¡f ÉU«ò »Ö®fsh? என வினவினார். அழகை விரும்பா இளைஞரும் உண்டோ? நாங்கள் அனைவரும் ஒரு சேர ஆம் எனத் தலையசைத் தோம். அழகை நீங்கள் விரும்புவது உண்மை யெனின் திருவாசகம் ஓதுங்கள் என்றார். எங்களுக்கு ஒரே வியப்பு! என்ன இது? புதுமையாக இருக்கிறதே! திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று தானே கூறுவர்! திருவாசகம் படித்தால் அழுகை தானே வரும்; அழகா வரும்? என்று மனத்துள் நினைந்து கொண்டு, அவரையே உற்று நோக்கினோம். ஆம்; ஐயம் வேண்டா; மேலை நாட்டில், படித்தால் அழகு தரும் நூல்கள் எனச் சில நூல்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவ்வடிப்படையில் படித்தால் அழகு தரும் நூலொன்று தமிழில் உண்டா என ஆயின், அத்தகு நூல் திருவாசகம் ஒன்றே என்பது புலனாகும். ஆதலின் பயில்க! ïilawhJ gÆšf! என அன்பு தவழக்கூறிப் புன்னகை செய்தருளினார். அப்புன்னகை முகம் அப்படியே என் மனத்திற் பதிந்துள்ளது. 1943 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள் ஆத்தங்குடி யென்னும் ஊரில் ஒரு பெரு விழா. அன்பும் பண்பும் இணைந்து ஓர் உருக் கொண்டாற் போன்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கட்குப் பாராட்டு விழா. அரண்மனை எனத்தக்க அழகும் தோற்றமும் கொண்ட ஒரு மாளிகையில் அவ்விழா நடைபெற்றது. செட்டிநாட்டரசர் அண்ணாமலையார் பொன்னடை அணிவித்துப் பாராட்டினார். சுவைஞர் மணி டி.கே. சிதம்பர நாத முதலியார் தமக்கே உரிய பாங்கில் நெஞ்சுருகப் பாராட்டிப் பேசினார். தில்லைப் பதியுடையான் சிற்றம்பலந் தன்னில் என்ற கவிமணியின் ஒரே பாடலைப் பற்றி, ஏறக்குறைய ஒரு மணிநேரம் சுவைத்துச் சுவைத்து எம்மையும் சுவைத்து மகிழ வைத்துப் பாராட்டுரை நிகழ்த்தினார். அப்பொழிவு இன்றும் பசுமையாக என் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அமராவதி புதூர்ப் பிச்சப்பா சுப்பிரமணியம் அவர்கள் பாராட்டுரை நிகழ்த்தும் பொழுது, கவிமணி பாடலிலுள்ள எளிமை, இனிமை, சுவை முதலியவற்றை எடுத்தியம்பினார். சொ. முருகப்பனாரின் மகளிர் இல்லத்து மாணவச் சிறாரைக் கொண்டு ஓரங்க நாடகங்கள் நடத்திக் காட்டப் பட்டன. அச்சிறார் தம் நடிப்பு அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தது. குறிப்பாகக் குகன் வேடம் புனைந்த சிறுவன் நடிப்பு, அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்து விட்டது. சுருங்கக் கூறின், பண்டை வேந்தர் தம் அரசவையில் பாவலர்க்குச் சிறப்புச் செய்தது போல அக்காட்சி அமைந்திருந்தது. இறுதியில் கவிமணியார் எழுந்து நன்றியுரை நவின்றார். அந் நன்றியுரை சடங்கு முறையில் இல்லாது, அவர் தம் உள்ளத்தி லிருந்து பொங்கி வெளிவந்தது. இங்கு அனைவரும் என்னைப் பாராட்டிப் பெருமைப்படுத்தினர். செட்டி நாட்டரசர் அவர்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்துப் பெருமை செய்தார்கள். இத்தனைப் பெருமைக்கும் தகுதியில்லாத என்னை இப்படியெல்லாம் பாராட்டினார்கள். யானைக்குப் போர்த்த வேண்டிய முகபடாம் இந்த ஆட்டுக் குட்டிக்குப் போர்த்தப்பட்டு விட்டது என்று கருதுகிறேன். இப்பெருமையெல்லாம்என்தமிழ்த்தாய்க்கே...................? கவிமணிக்குப் பேச்சு எழவில்லை. கண்கள் ததும்பி விட்டன. அவர் கண்கள் மட்டுமா? அவையிற் கூடியிருந்த அத்துணைப் பேர் கண்களும் குளமாயின அழுகையை அடக்கிக் கொண்டு, கவிமணி பிறகு பேசத் தொடங்கினார். ஆனால் உணர்ச்சி வயப்பட்டுத் தேம்பிக் கொண்டிருந்த என் செவிகளால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதுமகர், மூதறிஞர், கவிமணி என்று கற்றோரால் அழைக்கப்பட்ட அந்தணாளர்; eட்டார்òகழுக்குeயகமாகÉளங்கியவர்.v›tsî gராட்டினும்mவ்வளவுghராட்டுக்கும்தFதிபiடத்தtர்.அ¥bgUkfdh® தம்மை ஆட்டுக்குட்டி என அடக்கமாகக் கூறிக் கொண்டார் என்றால் அப்பேருளத்தை - பெருந்தன்மையை - அடக்கப் பண்பை எப்படித்தான் புகழ்வது? ஒரு சிறு பாராட்டைப் பெற்று விட்டாற் கூடச்சில ஆட்டுக் குட்டிகள் யானை போலப் பெருமித நடைபோடும் இக்காலத்தை என்னென்பது? இவ்வுணர்ச்சி மிக்க காட்சி, என் உள்ளத்திற் பதிந்து, பின் பாடல்களாக வெளிப்பட்டன. வளர்ந்த முறை பெருஞ்செல்வக் குடியிற் பிறந்திலேன் எனினும் அக்குடியிற் பிறந்தேன் போலவே வளர்க்கப்பட்டேன். ஒரே மகனல்லவா? எந்நேரமும் மடிப்புக் குலையாத உடையுடன் தான் இருப்பேன். செட்டிநாட்டுப் பகுதியானமையால் விலையுயர்ந்த துணி களாகவே இருக்கும். பேழை நிறைய ஆடைகள் இருக்கும்; அணிந்துள்ள ஆடை சிறிது கசங்கியிருப்பினும் என் அன்னையார் மாற்றி விடுவார். கடுக்கண், மோதிரம், கழுத்துச் சங்கிலி, கைச்சங்கிலி எல்லாம் அணிந்திருப்பேன். இவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் என்னைக் கண்டித்து வளர்ப்பதில் தயங்கமாட்டார்கள். நானும் கட்டுப்பட்டு அஞ்சியே ஒழுகுவேன். நான் தந்தையான பின்னரும் என் தந்தையிடம் கட்டுப் பட்டே நடந்து வந்தேன். தந்தையாரிடம் பேச மாட்டேன். அவர் பேசும் பொழுதுதான் அவரிடம் பேசுவேன். நான் மாணவனாக இருக்கும் பொழுது அவரிடத்தில் அன்பைக் கண்டதேயில்லை. அன்னைதான் அன்பு காட்டுவார். எதுவும் வேண்டுமெனில் அன்னையிடம் வேண்டித்தான் பெறுவேன். என் மாணவப் பருவத்தில் என்னைத் தணித்துக் காண்ப தரிது. நண்பர் புடை சூழவே எப்பொழுதும் இருப்பேன். அருகில் உள்ள வலம்புரிக்குத் திரைப்படங் காணச் செல்லினும், சிற்றுண்டிக் கடைக்குச் செல்லினும், புறத்தே உலவச் செல்லினும் நண்பரின்றிச் செல்லேன். அடிக்கடி எங்கள் இல்லத்திற்கும் அழைத்து வருவேன். அனை வர்க்கும் அங்கே தான் உணவு; உண்ணாது செல்ல என் அன்னையார் விடமாட்டார். அவர்களையும் தம் பிள்ளை போலவே கருதி அன்பு செலுத்துவார். அவருட் சிலர் தாமே வலிய வந்து, உரிமையுடன் உண்டு. செல்வதுமுண்டு. Kjš ehŸ v§fŸ ïšy¤âš ï‹d FH«ò v‹W bjǪjJ«, ‘V«kh, vd¡F¢ brhšÈ Élšny? என்று புலந்து கொள்வாரும் உண்டு. திரைப்படங்களுக்குச் செல்லுங்கால், நண்பர்கள் சட்டை கசங்கியிருந்தால், உடனே என் சட்டைகளைக் கொடுத்து, அணிந்து கொள்ளச் செய்வார் என் அன்னை. அவ்வளவு அன்புள்ளங் கொண்ட அன்னையார், சில வேளைகளிற் கையிற் கிடைத்தது கொண்டு என்னை வெளுத்துக் கட்டியதும் உண்டு. ஒரு நாள் அரிவாளை யெடுத்து வெட்டுதற்கே வந்து விட்டார். அந்த அளவிற்கு முன் கோபமும் உண்டு. படிப்பார்வங்குன்றல் நான் திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுதியும் ஆர்வங் காட்டுவேன். ஆர்வம் என்பதைவிட வெறி என்றே சொல்லலாம். ஏனெனில், பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் அஞ்சி நடக்கும் நான், அவர்கள் தடுத்தும் கட்டுப்படுத்தியும் கூட அவர்களை ஏமாற்றி விட்டுச் சென்று விடுவேன் என்றால் அதனை வெறி யென்று தானே சொல்ல வேண்டும்? இதன் பொருட்டு ஆசிரியர் கண்காணிப்பிலும் விடப்பட்டேன். ஒன்றும் பயனில்லை. மேலும் தன்மானக் காற்றின் நலம் நுகர்ந்தமையால், பொழு தெல்லாம் அதே பேச்சு, அதே சிந்தனை, அதே செயல், இதழ்கள் படிப்பதிலும் மாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் செல்வதிலும் நேரங்களைச் செலவிட்டேன். தன்மான இயக்கத்திலும் வெறி கொண்டலைந்தேன். புராணங்கள், இதிகாசங்கள் போன்ற நூல்கள் எங்கட்குப் பாடங்களாக வைக்கப்பட்டிருந்தன. அவை என் தன்மானக் கொள்கைக்கு மாறாக அமைந்திருந்தன. தொல்காப்பியப் பொருள திகாரவுரைகளிலும் சங்க இலக்கியவுரைகளிலும் சாதி வேற்றுமைகள் மலிந்து காணப்பட்டன. அதிலும் உரையாசிரியர் நச்சினார்க் கினியர் உரையென்றால் சொல்ல வேண்டுவதில்லை. வலிந்து சாதிப் பாகுபாடுகளைப் புகுத்தி எழுதுவார். இவற்றை யெல்லாம் பாடங் கேட்கும் பொழுது என் மனம் புழுங்கும். அதனால் அவற்றில் வெறுப்பும் ஏற்பட்டு விட்டது. திரைப்பட வெறி, தன்மான இயக்க வெறி, உரையாசிரியர்களால் புராணங்களால் ஏற்பட்ட வெறுப்பு அனைத்துங் கூடி என் படிப் பார்வத்தைச் சிதைத்து விட்டன. படிப்பில் நாட்டமின்றித் திரிந்த என்னை ஆசிரியர், பெற்றோர்,நண்பர் அனைவரும் கண்டித்தும் கடிந்தும் பேசினர். என் எதிர்கால வாழ்வு கருதி அவர்கள் கழறியன எனக்குக்கைப்பாகவே இருந்தன. கைப்பினும் அவற்றை மனத்துள் ஏற்றுக் கொண்டு பயிலத் தொடங்கினேன். தீபாவளி கொண்டாடுவதும் அதை யொட்டிக் கவுரிவிரதம் என்ற நோன்பு எடுப்பதும் எங்கள் வீட்டு வழக்கம். 1941 ஆம் ஆண்டு நான் தீபாவளி கொண்டாடவும் நோன்புக்கயிறு கட்டிக் கொள்ளவும் மறுத்து விட்டேன். என் தாய் தடுத்தும் அக் கொள்கையில் உறுதியுடன் நின்றேன். அடுத்த ஆண்டு வந்தது; என் அன்னை புதுத்துணிகள் எடுக்கச் சொன்னார். ‘e«k igand kh£nl§ »wh‹; ek¡F k£L« ÔghtË V‹? என்று என் தந்தை கூறி விட்டு விட்டார். என் அன்னையும் தீபாவளியை விடுத்து, நோன்பு மட்டுங் கொண்டாடினார். அதற்கடுத்த ஆண்டு அதுவும் தானே போயிற்று. என் தன்மான இயக்கவுணர்வுக்குக் கிடைத்த முதல் வெற்றி! சீரங்கநாதனும் தில்லை நடராசனும் தமிழர் திருநாளை முன்னிட்டு, மாணவர்கள் ஒன்று கூடி, வெளியிடத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, என்னைத் தலைமையேற்கச் செய்தனர். மாணவர் பலர் பேசினர். பேராயக் கட்சியைச் சார்ந்த தி.பொ. நாராயணசாமி பாரதி யென்பார் பேசும் பொழுது, ஒருவன் வளமனையில் வாழ்வது கண்டு பொறாமை கொள்வது தவறு. ஓரினம் நன்றாக வாழ்கிறது என்றால் அதுபோல நாமும் வளர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டுமே தவிர, அந்த இனத்தைக் கண்டு பொறாமைப் படுவதும் திட்டுவதும் குற்றமாகும் என இனவுணர்வு கொள்வதைச் சாடினார். nkY«, ‘jÄÊd« eh¤âf¤ij neh¡»¢ brštJ f©o¡f¤ j¡fJ; ‘Óu§fehjidí« âšiy eluhridí«, Õu§» it¤J¥ ãsªbj¿t bjªehnsh? என்ற பாரதி தாசன் பாடலை மாணவர் பாடித்திரிவது வெறுக்கத்தக்கது. கடவுளைப் பிளந்தெறியச் சொல் வதும் ஒரு பாடலா? அதற்குச் செவிசாய்ப் பதும் முறையா? என்று உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். ஊர்ப் பெரியவர்களும் அங்கிருந் தனர்; இப்பேச்சை, ஆரவாரித்து வரவேற்றனர். தலைமைப் பொறுப்பேற்ற நான், அதற்கு மறுப்புரையாக விளக்கங் கூறினேன். பொறாமை கொள்வது தவறு என்று நாரா யணசாமி குறிப்பிட்டார். நான் முழுமையாக அதை வரவேற் கிறேன். அழுக்காறு கொள்வது அறிவுடைமையாகாது என்பதில் கருத்து வேற்றுமையே கிடையாது.இது தனி மனித வாழ்க்கைக்குப் பொருந்துமே அன்றி ஓர் இனத்தின் வாழ்க்கைக்குப் பொருந்தாது. என் முந்தையர் தேடி வைத்த என் வளமனையில் மனமிரங்கி ஒருவனைக் குடி புக விட்டேன். காலஞ் செல்லச் செல்ல என்னை வஞ்சித்து. அவன் அதைக் கைப்பற்றி, என் உரிமையைப் பறிக்க முயல்கிறான்; விழித்துக் கொண்ட நான், எனக்குரிய வளமனை யைப் பெற முயல்கிறேன்; இதனை அழுக்காறு என்றால் இதைவிட அறியாமை பிறிதொன்றில்லை. விழித்துக் கொண்ட தமிழினத்தை நோக்கிப் பொறாமைப்படுகிறது என்று நாராயணசாமி கூறுவதில் பொருள் இருக்கிறதா? என்று எண்ணிப் பாருங்கள் என்று நான் கூறிய கருத்தையும் அவை யோர் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஒன்றை இகழ்ந்து கூறினும் கைதட்டுவர்; புகழ்ந்து கூறினும் கைதட்டுவர் நம் மக்கள்; எண்ணிப் பார்த்து, எது சரி என உணர்ந்து, அதனை வரவேற்கும் இயல்பறியார். அடுத்து; நாத்திகப் பாடல் பற்றியும் விளக்கினேன்; சீரங்க நாதனையும் எனத் தொடங்கும்பாடல் பாரதிதாசன் பாடலன்று என்பதை நாராயணசாமி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளைப் பீரங்கியால் பிளந்தெறிந்து விட முடியும் என்று அஞ்சத் தேவையில்லை. கடவுளை அவ்வளவு எண்மையாகக் கருதவும் வேண்டுவதில்லை. பிறப்பால், செல்வத்தால் ஏற்றத் தாழ்வுகளைக் கடவுளர்தாம் படைக்கின்றனர் என்றால் அக்கொள் கையை உடைத் தெறிய வேண்டும் என்ற கருத்தில் பாடப்பட்டதே தவிரக் கடவுளை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்திற் பாடப் படவில்லை. சீரங்க நாதனும் நடராசனும் தான் கடவுள் என்று நாராயணசாமி நம்பு வாரானால், அவ்வுருவங்களை உடைக்கலாமே தவிர உண்மையான கடவுளை உடைக்க முடியாது என்று பேசிமுடித்து விட்டேன். மறுநாள், கல்லூரியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். கழுத்தில் உருத்திராக்கமணியும் உடலில் திருநீற்றுப் பூச்சும் உடைய ஒருவர் வெகுண்டு வந்து ஏண்டா! சாமியைப் பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும் என்று கூறினாயாமே என்று பதறினார். நான் மறுமொழி தரும் வரை அவர் காத்திருக்க வில்லை. ‘c‹id¥ Õu§»ahš ãsªjh by‹d? என்றார். முடிந்தால் முயலுங்கள் என்று கூறினேன். உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சீற்றத்துடன் வெளியேறி விட்டார். எங்கெங்கே பற்ற வைக்க வேண்டுமோ, அங்கெல்லாம் வைத்து மீண்டார். முதல் தோல்வி 1943 ஆம் ஆண்டு வித்துவான் வகுப்புத் தேர்வு எழுதினேன். பல்கலைக் கழகத் தேர்வில் முதன்மை பெறும் மாணவர்க்குத் திருப்பனந்தாள் குமரகுருபரர் பெயரால் அமைந்த திருமடத்துச் சார்பில் ஆயிரம் வெண்பொன் பரிசிலாகப் பல்கலைக் கழகம் தந்து வருகிறது. அப்பரிசில் எனக்குக் கிடைக்கும் என்று என் ஆசிரியப் பெருமக்களும் கல்லூரி நடத்துவோரும் நம்பிக் கொண்டிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளி வந்தன. தேடித் தேடிப் பார்த்தும் என் எண் காணப்படவில்லை. என் எண் மட்டும் அன்று, என் தோழர் கு. கந்தசாமி எண்ணும் காண வில்லை. என் தன்மான இயக்கவுணர்க்குக் கிடைத்த முதல் தோல்வி! பல்கலைக்கழகத்திற் செல்வாக்கு மிக்க பெரியவர் களிடம் சீரங்கநாதனும் தில்லை நடராசனும் சென்று சேர்ந்தமையால் நேர்ந்த விளைவு இதுவென என் ஆசிரியர் மீ.முத்துசாமிப்புலவர் கூறக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தோல்வியால் மனந்துவண்டு விடவில்லை. நாடகத்துறை கலைத்துறையில் ஆர்வம் மிகுந்திருந்தமையால், எம்.கே. தியாகராச பாகவதர், கலைவாணர், தி.க. சண்முகம், நவாப் இராசமாணிக்கம் போன்றவர்களுக்கு மடல் எழுதினேன். பாகவதரி டமிருந்து மறுமொழியே வரவில்லை ஏனையோரிட மிருந்து மடல்கள் வந்தன. அவற்றைக் கீழே அப்படியே தருகிறேன். மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா டி.கெ. ஷண்முகம் இடம் : ஈரோடு தேதி : 7.2.44 அன்புடையீர், வணக்கம் தங்கள் 4.2.44 இலிகிதம் கிடைத்தது. விரிவான மறுமொழி விடுக்க நேரமில்லை. இன்றைய நிலையில் நாடகத்துறையில் தங்களைப் போன் றோர் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்லவென்பதே சுருக்கமான மறுமொழி. அன்பு டி.கெ.ஷண்முகம் Asoka Films N.S. Krishnan Coimbator 9.2.1944 Dear Duraj Raj தங்கள் 4 தேதிய கடிதம் கிடைத்தது. நிற்க; தற்சமயம் நாங்கள் படம் எடுக்கும் தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் இல்லை. ஆகையால் எங்களிடம் முயற்சி செய்வதைவிட வேறு எந்தத் தொழிலுக்காவது முயற்சி எடுத்து வெற்றி பெறவும். எங்களிடம் வேலையில்லாமைக்கு வருந்துகிறேன். இப்படிக்கு M. Thiruvengadam. ஸ்ரீறாம பாலகானவினோத சபா காரைக்குடி. 12.2.1944 7.2.44 கடிதம் வந்தது. தான் இடத்திற்கு நேரில் வந்தால் தன்னைப் பார்த்துத் தெரிந்து கொண்டுதான் கம்பேனியில் சேர்த்துக் கொள்ள வேணும். நேரில் வந்து பார்க்கவும். V.Rm. Annamalai For S.R.S. Saba 12.2.44 The Madura Devi Bala Vinotha Sangeetha Saba No. 208/44 Camp : கொல்லம் Dated : 9.2.44 Nawab T.S.Rajamanikam உ தமிழன்பரே! நலன். கடிதம் கிடைத்தது. கல்வித் துறையிலிருந்து கலைத்துறையிற் பிரவேசிக்கக் கருதி மிகத் தீவிர ஆவலுடன் எழுதியிருக்கிறீர்கள். இத்துறையில் ஆரம்ப காலத்தில் ஏதும் பலன் கிடைக்காது. நன்கு பழகித் தேர்ந்தால் எமது தொழிலுக்குப் பயன்படும் நிலையடைந்தால் திறமைக்குத் தக்க ஊதியம் கிட்டும். அதுவரையில் உணவுடை சவரக்ஷணை களைத்தான் எதிர்பார்க்கலாம். உண்மையன்பும் உழைப்புமிருந்தால் யாவும் தானே வந்தெய்தும். சம்மதமாயின் மூன்றாண்டுக்கு உடன்படிக்கை எழுதித் தர வேண்டி யிருக்கும். நேரில் இக்கடிதத்துடன் கொல்லத்துக்கு வரவும். பிற பின்னர் தங்கள் டி.என். துரைசாமி (சபைக்காக) நவாபு இராசமாணிக்கம் குழுமத்திலிருந்து வந்த மடல் என் மனத்தைக் கவர்ந்தது. என் அன்னையார், விட்டுப் பிரிய மனமின்றி, அழுது புலம்ப, நான் கொல்லத்துக்குப் புறப்பட்டு விட்டேன். அங்கே துரைசாமி என்ற நல்லன்பர் மேலாளராக இருந்தார். tunt‰W, ïÅJ ngá, ‘c§fS¡F¥ ghlš vGj ïaYkh? என்றார். எழுதுவேன் என்றேன். அப்படியானால், தேவி மேல் ஓர் எண்சீர் விருத்தமும் ஓர் இசைப்பாடலும் எழுதித் தருக என்றார். அங்கேயே எழுதிக் கொடுத்தேன். பார்த்து மகிழ்ந்த அவர், அங்கிருந்த ஒருவரை அழைத்துப் பாடச் சொன்னார்; பாடல், இசைக்குப் பொருந்தி வந்தது. வாத்தியார் ஈரோட்டுக்குச் சென்றிருக்கிறார்; வந்த பின் அவரைப் பார்க்கலாம் என்று அங்கே தங்க வைத்து இரவு நாடகத்துக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் எம்.என். நம்பியார் நாடகத்திலிருந்து விலகித் திரைப்படவுலகிற்குச் செல்கிறார். வாத்தியார் பற்று ஈரோட்டு நாடக மாநாட்டுக்குச் சென்றிருந்த நவாபு திரும்பி வந்தார். அவரை, வாத்தியார் என்றுதான் அங்குள்ளோர் அழைப்பர். மேலாளர் துரைசாமி மாடியிலிருந்த அவரிடம் என்னை அழைத்துச் சென்றார். பாடல்களைக் காட்டி என்னை அறிமுகஞ்செய்து வைத்தார். நான் எழுதிய பாடல்களைப் படித்துப் பார்த்து மலர்ந்த முகத்துடன், சரி, நீங்கள் போய் வாருங்கள் என்று கூறி எனக்கு விடை கொடுத்தார். நான் கீழேவுள்ள அலுவலகத்தில் வந்து அமர்ந்திருந்தேன். துரைசாமி வந்தார். வாத்தியாருக்கு உங்களிடம் மிகுந்த பற்று ஏற்பட்டு விட்டது. காரணம் உங்கள் பாடல் மட்டுமன்று. உங்கள் எழுத்து எ.டி.சுந்தரத்தின் (திரைப்படத்துறையர்) எழுத்து மாதிரியே இருப்பது ஒரு காரணம். வாத்தியார், சுந்தரம் இங்கிருக்கும் போது பிள்ளை மாதிரி வைத்திருந்தார். தமிழ்க் கல்லூரியிற் கூடப் படிக்க வைத்தார். என்றெல்லாம் கூறிவிட்டு, உடன்படிக்கை எழுத வேண்டாம் என்றும் நீங்கள் நடந்து கொள்வதைப் பார்த்து அடுத்த மாதமே சம்பளம் போட்டுக் கொடுக்கும் படியும் வழக்கப்படி சிறிது சிறிதாகவுயர்த்தாமல் தொடக்கத்திலேயே கணிசமான ஒரு தொகை போட்டுக் கொடுக்கும் படியும் வாத்தியார் சொல்லி விட்டார். நீங்கள் பாடல் எழுதலாம்; நாடகம் எழுதித்தரலாம்; நடக்கும் நாடகங்களைத் திருத்தலாம்; விரும்பினால் நடிக்கவும் செய்யலாம்; எல்லாவுரிமைகளும் உங்களுக்கு வழங்கி விட்டார் என்று துரைசாமி கூறினார். மிகப்பெரிய வீடு, அலுவலகம் அங்கேதான். நடிகர்கள் தங்குதல், உணவு கொள்ளுதல், நீராடுதல்,நடிப்பு ஒத்திகை பார்த்தல் எல்லாம் அங்கேதான். அவ்வளவு பெரியவீடு வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். எனக்கும் அனைத்தும் அங்கே தான். வைகறையில் எழுதல், தலை நிறைய எண்ணெய் வைத்துக் கொண்டு நீராடல், தேவியை வணங்குதல், உண்ணல், இரவில் நாடகத்துக்குச் செல்லுதல் இவை நாடோறும் நடைபெறும் பழக்கம். எனக்கு மட்டும் வாத்தியார் அறையில் வழிபடும் உரிமையளிக்கப்பட்டது. ஏசு நாதர் நாடகம் அப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு நடித்துக் கொண்டிருந்த எம்.என். கண்ணப்பா (திரைப்பட நடிகர்), வெள்ளைச்சாமி என்பவர். கைகேயியாக நடித்தவர் (பெயர் நினைவில்லை) இம்மூவரும் என்னுடன் பகற்பொழுதில் உரையாடி மகிழ்வர். கண்ணப்பா ஐயா! Iah! என்று அழைப்பதே இனிமையாக இருக்கும். நல்ல தமிழில் பேச அளவுகடந்த ஆர்வம் காட்டுவார். அவர் பேச்சில் இனிமை, அழகு, பணிவு அனைத்தும் தாண்டவ மாடும். அருமையான நடிகர். வெள்ளைச்சாமி எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தார். அன்னையை வீட்டுப் பிரிந்த துயர் என் அடிமனத்தில் வருத்திக் கொண்டேயிருந்தது. அளவிற் பெரிய செவ்வரிசி தான் அப்பொழுது அங்கு கிடைக்கும். அதனாலான சோறு எனக்கு ஒத்துக் கொள்ள வில்லை; வலிந்து மேற்கொண்ட தேவி வழிபாடு வேறு எனக்குக் குழப்பத்தையுண்டாக்கியது. பத்து நாள்வரை அங்கிருந்தேன். அன்னையாரின் நினைவு, செஞ்சோறு, வழிபாடு அனைத்தும் சேர்ந்த என்னைப் பிடர்பிடித்துத் தள்ளின. துரைசாமி எவ்வளவோ சொல்லியும் மேலைச்சிவபுரிக்கு வந்து விட்டேன். மயிலம் தமிழ்க்கல்லூரி பின்னர் எப்படியும் வித்துவான் வகுப்புத் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும் என்று எண்ணி, மயிலம் தமிழ்க் கல்லூரிக்குச் சென்றேன். துரைசாமி ஐயர் முதல்வராக இருந்தார். அடிகளாசிரியர், சிவலிங்கனார் போன்ற பெருமக்கள் விரிவுரை யாளர்களாக விளங் கினர். சில நாள் பாடங்கேட்டேன். மாணவர்க்கு அடிகளார் இருக்கும் குன்றில்தான் உணவு. முதல் நாள் சென்ற போது, அடிகளார் வடமொழி கூறி வழிபட்டுக் கொண் டிருந்தார். அஃது என் மனத்தில் எதையோ எழுப்பி விட்டது. பின்னர் மாணவர் சிலர் உண்டனர்; சிலர் வெளியில் இருந்தனர். ஏன்? என்றேன். வீர சைவ மாணவர் உண்ட பின்னரே பிறர் உண்ணுதல் வேண்டும் என்ற விடை வந்தது. அதுவும் தனியிடத்தில் உண்ணுதல் வேண்டும் என்பது விதி. மறுநாள் முதல்வரைக்கண்டு அது பற்றி உசாவினேன். அவர் என்னைப் புரிந்து கொண்டார். நாள் சில கழிந்ததும் கல்லூரியிலிருந்து விலகி ஊருக்குச் செல்ல ஒப்புதல் கேட்டேன். முதல்வர், உங்கள் உள்ளத்தை அன்றே தெரிந்து கொண்டேன்; நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று உணர்ந்தே வருகைப் பதிவேட்டில் உங்கள் பெயரை எழுதவில்லை; நீங்கள் சென்று வரலாம் என்று விடை தந்தார். உடனே மேலைச்சிவபுரிக்கு ஓடி வந்து விட்டேன். பெரியார் சிக்கனம் திருச்சி தேவர் மன்றத்தில் 16.7.1944 இல் பதினாறாவது சுய மரியாதை மாநாடு, பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. வழக்கம் போல் நண்பர்களை அழைத்து மாநாட்டிற்குச் சென்றேன். பகலுணவுக்கு மாநாடு கலைந்தது. அப்பொழுது தந்தை பெரியார் மன்றத்தின் முன் பகுதியில் குடியரசு வெளியீடுகள் விற்பனையாகிக் கொண்டிருந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அருகிற் சென்று அப்பெருமகனார் தோற்றம், செக்கச் சிவந்த மேனி, கூரிய மூக்கு ஒளியுமிழும் விழிகள், வெண்ணிறத்துத் தாடி, அள்ளிச் சுருட்டிப் போட்டுக் கொண்ட மேலாடை இவற்றை யெல்லாம் பார்த்துப் பார்த்து வியந்து நின்றோம். இவர் உலகச்சிந்தனையாளருள் ஒருவர் என்ற எண்ணத்தை, எங்களுக்கு அவர் தோற்றம் உண்டாக்கியது. கையொப்பச் சுவடியில் பெரியார்தம் கையொப்பம் பெற விழைந்து, என் நண்பர் ஒரு சுவடியை நீட்டினார். அப்பொழுது ஐயா கையொப்பமிடப் பணம் வாங்குவதில்லை. அச்சுவடியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு இது எவ்வளவு சாமி? buh«g ešyh ïU¡F! என்றார். என் நண்பர் த்ரி ரூபீ என்று பெருமிதத் துடன் சொன்னார். பொழைக்கத் தெரியாத பிள்ளை. btW§if baG¤J th§f _Q %ghia ‘åzh¡fyhkh? என்று பெரியார் சலித்துக் கொண்டே கையொப்பமிட்டார். அடுத்து என் சுவடியை நீட்டினேன். அதையும் பார்த்து விட்டு இது எவ்வளவு சாமி? என்றார் மூன்றணா என்று கூறியதும் ம்ம்ம்; இது கெட்டிக்காரப்பிள்ளை என்ற நற் சான்றிதழ் கொடுத்து விட்டார். எதிலும் எவரிடத்தும் சிக்கனத்தை எதிர்ப்பார்ப்பவர் பெரியார். பெரியார் என் சிக்கனத்தைப் பாராட்டினும் என் செல்வநிலைக்கேற்ப நான் வாங்கினேன் என்பது அவருக்குத் தெரியாதல்லவா? திராவிடர் கழக மாநாடு அடுத்துத் தென்னூரில் திராவிடர் கழக மாநாடு, அண்ணாவின் பொறுப்பிலும் தி.பொ. வேதாசலம் பொறுப்பிலும் நடை பெற்றது. அம்மாநாட்டுக்கும் சென்றேன். அம்மம்மா! எவ்வளவு பெருங்கூட்டம்! தொண்டர்கள் குடும்பங் குடும்பமாக வந்து குழுமியிருந்தனர். விரிந்து பரந்த பந்தலில் நூற்றுக் கணக்கான தொட்டில்கள் கட்டி விடப்பட்டிருந்தன. குழந்தைகள் தொட்டிலில் படுத்தவாறு, தலைவர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தன. உணர்ச்சி வெள்ளம் பெருக் கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. கடலனைய மக்கள் கூட்டத்திற் சிறிது பேச்சொலியெழுந்தது; ஐயா, அமைதிப்படுத்திப் பார்த்தார். அமைதியுண்டாகாது, சலசலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மேடையில் அமர்ந்திருந்த ஐயா, வெகுண்டு, தம் மடியில் வைத்திருந்த சிறு பெட்டி, தாள்கள் அனைத்தையும் மேசைமேல் தூக்கிப் போட்டு விட்டு, மாநாடு இந்த அளவில் முடிவு பெறுகிறது; நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டு அமைந்து விட்டார். கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது. ஒரு சிற்றொலி கூட எழவில்லை. அமைதி நிலை கொண்டது. மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. அவ்வளவு கட்டுப் பாடாக விளங்கிய திராவிட இயக்கம் இன்று சிதறுண்டு கிடக்கும் நிலையை எண்ணினால், நெஞ்சில் நெருப்புப்பட்டது போலச் சுடுகிறது! இனவுணர்வு அந்த அளவிற்கு மழுங்கி விட்டது! இன்னும் பெரியார் பலர் இந்தத் தமிழினத்திற்குத் தேவைப்படுகின்றனர்? வித்துவான் முற்றுப் பெறாமுன், குழிபிறையென்ற ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியனாக அமர்ந்தேன். 1945 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் எட்டாம் நாள், காரைக்குடியில் ஒரு திரைப்பட அரங்கில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. நானும் சென்றி ருந்தேன். சேலம் மாநாட்டுத் தீர்மானத்தைப் பேராசிரியர் க. அன்பழகன் முன்மொழிந்து பேசினார்; நான் வழி மொழிந்து பேசினேன். nkilÆš mk®ªâUªj m©zh, ‘ït®jh‹ Koaurdh? என்று வியப்புடன் வினவினார். அக்கிழமை வெளிவந்த திராவிட நாடு இதழில் என் பாடலொன்று வெளிவந் திருந்தது; கொச்சியில் திவானாக இருந்த அறிஞர் ரா.க. சண்முகனார் கருத்தை மறுத்துப்பாடியிருந்தேன். அண்ணா எழுதிய குறிப்புடன் அப்பாடல் வெளியிடப் பட்டிருந்தது. அதை மனத்திற் கொண்டு தான் அண்ணா வினவினார். திராவிட நாடு இதழில் இரண்டாவதாக வெளி வந்த பாடல் இது. இதற்கு முந்திய இதழில் சாதி என்பது உனக்கேனோ? என்ற எனது இசைப்பாடல் வெளிவந்தது. இதுவே அச்சில் வெளிவந்த எனது முதற்பாடல். மாநாட்டில் மாற்றுக்கட்சியினர் பலர் வந்து, பல வினாக்கள் விடுத்தனர். அவற்றுள் ஒன்று நினைவிற்கு வருகிறது. ஆரியர் திராவிடர் என்று சொல்கிறீர்களே, அனைவரும் ஒன்றாகக் கலந்து விட்டனர். MÇa® âuhÉl® v‹gij v›thW m¿ªJ bfhŸtJ? என்பது வினா. அதற்கு ஐயா தந்த எளிமை யான விடை, அருமையினும் அருமையென்று பாராட்டப்பட்டது. இதோ விடை; நேரே கோவிலுக்குப் போ; தங்குதடையில்லாமல் எவன் கடவுள் சிலை வரை போகிறானோ அவன் ஆரியன்; உள்ளே செல்ல முடியாமல் அர்த்த மண்டபத்திலேயே எவன் நிற்கிறானோ அவன் திராவிடன். இவ்விடையைக் கேட்டவுடன் கொட்டகையே அதிர்ந்து விட்டது. இயற்கைச் சிந்தனை வாழ்க்கையை ஒட்டிய சிந்தனை ஐயாவின் சிந்தனை! தலைமறைவு வித்துவான் தேர்வை முடிக்காமல் கட்சி கட்சியென்று திரிந்து கொண்டிருந்த என்னைப் பெரியசாமி என்ற அன்பர் அழைத்து, தம்பி உன் கொள்கைகளையோ கட்சியையோ நான் குறை சொல்ல வில்லை; இக்கொள்கைகள் நாட்டிற்குத் தேவையென்று நம்புகிறாய்; நீ மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது ஒரு பட்டம் பெற்ற வனாக இருந்து சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள்; இல்லை யென்றால் படிக்காதவன் சொல்கிறான் என்று, எந்த நல்ல கொள்கை யையும் ஒதுக்கி விடுவார்கள்; அதனால் படி, பட்டம் பெறு, பிறகு உன் கொள்கை யைப்பேசு என்று அறிவுறுத்தினார். அறிவுரை சரியென எனக்குத் தோன்றியது. அதனால் பொறை யாறு என்னும் ஊருக்குச் சென்று தலைமறைவாகத் தங்கியிருந்து, வித்துவான் முடிக்காமல் அங்கு ஆசிரியர் பணி புரிந்து வந்த நாகராசன் என்ற நண்பருடன் சேர்ந்து, நாங்களே சமைத்துக் கொண்டு, படித்து வந்தோம். நான் அங்கிருப்பது எவருக்குமே தெரியாது. தஞ்சையில் தேர்வெழுதிவிட்டு, வீட்டிற்குச் செல்லாமல், சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு முருகு என்னும் இதழ் நடத்தி வந்த அறிவழகன் என்ற நண்பர் உதவியுடன் தங்கியிருந்தேன். பின்னர், டி.என். இராமன் நடத்தி வந்த குயில் இதழில் சேர்ந்தேன். அங்கேதான் தமிழ் ஒளி, கோ. சண்முக சுந்தரம், புத்தனேரி சுப்பிரமணியம் போன்ற வருடன் தொடர்பு ஏற்பட்டது. குயில் நிறுத்த வேண்டிய நிலை வந்ததும் கல்கி யில் சேர்த்து விடுவதாக, இராமன் கூறினார். கொள்கை காரணமாக மறுத்து விட்டேன். பிராமணாள் சாப்பிடுமிடம் ஒரு நாள், திருவல்லிக்கேணியில் ஓர் உணவு விடுதிக்கு டி.என். இராமன் திருவாரூரைச் சேர்ந்த சிங்கராயர் நான் மூவரும் உண்ணச் சென்றோம். இராமன் சிவந்த மேனியர்; தோற்றப் பொலிவுடையவர். பார்வைக்குத் தஞ்சாவூர் ஐயர் போலவே இருப்பார். சிங்கராயர் சரியான கருப்பு. உண்மைத் திராவிடர். இலைபோடப்பட்டது. மூவரும் அமர்ந்தோம். பரிமாறுவோன் வந்தான். சிங்கராயரைப் பார்த்தான். அவரிடம் வந்து, சார், இங்கே பிராமணாளுக்கு மட்டுந்தான் சாப்பாடு; நீங்க ஏந்திரிச்சிடுங்கோ என்றான். சிங்கராயர், தம் பெயருக்கு ஏற்ப மாறினார். ஏண்டா, பாப்பாரப் பயலே! நாங்க கொடுக்கிறது காசில்லையோ? போடுடா சோத்தை; இல்லே பிச்சுப் போடுவேன் பிச்சு என்று முழக்கமிட்டார். விடுதி முதலாளி ஓடி வந்து சார்! சார்! பொறுத்துக்கோங்க சார்; நீங்க உக்காருங்க சார் என்று கெஞ்சி, பரிமாறுவோனை அழைத்து, டேய், முதல்லே இவாளுக்குச் சாதத்தைப் போடுடாஎன்று கூறி அவரும் பரிமாறத் தொடங்கி விட்டார். உண்டு விட்டு வெளியில் வந்த இராமன், ஓய் சிங்க ராயரே, ஒழுங்கா எனக்குச் சோறு போட்டுக் கொண்டிருந்தான்; நீர் கலாட்டாப் பண்ணிக் கெடுத்து விட்டீர் என்று சிரித்துக் கொண்டார். அண்ணாவின் பெருந்தன்மை திராவிட நாட்டில் ஆலையூரார் உபதேசம் என்ற தலைப்பில் அண்ணா எழுதிய தொடர் கட்டுரைகளை, நூல் வடிவில் கொணர விரும்பிய இராமனுக்கு, அண்ணா இசைவு தந்திருந் தார். அக் கட்டுரைகளை வாங்கி வர, இராமன் மடலுடன் காஞ்சிக்குச் சென்றேன். திராவிட நாடு அலுவலகத்துள் நுழைந்தேன். ஓரறையில் இடப்பக்கம் ஒரு பலகையின் மேல் அகநானூற்றுச் சொற்பொழிவுகள், குறுந்தொகைச் சொற்பொழிவுகள் என்ற நூல்கள் விரித்த வண்ணம் வைக்கப்பட்டிருந்தன. சுருட்டி வைக்கப்பட்ட இலையுடன் உணவுச் சட்டி வலப்பக்கம் உறங்கிக் கொண்டிருந்தது. எதிரில் அண்ணா எழுதிக் கொண்டிருந்தார். எழுதி முடிக்கப்பட்ட தாள்கள் ஒவ்வொன்றாகச் சிதறிக்கிடந்தன. அண்ணா, சுவர்ப்பக்கமாகத் திரும்பி வெற்றுடம்புடன் தரையில் அமர்ந்து, துடையின் மேல் வைத்து, எழுதிக் கொண்டிருந்தார். என் காலடி ஓசை கேட்டுத் திரும்பிய அண்ணாவிடம் இராமன் மடலைக் கொடுத்தேன். முன் பக்கம் உட்காருங்கள்; இதோ வந்துவிடுகிறேன் என்று எழுதிக் கொண்டே சொன்னார். முன் பகுதிக்குச் சென்று சாய்வு நாற்காலியில் அமர்ந்த நான், சிறிது நேரத்திற் கண்ணயர்ந்து விட்டேன். விழித்துப் பார்க்கும் பொழுது, அருகில் இருந்தவர் கூறியது கேட்டுப் பதறிப் போனேன். அண்ணா வந்தவுடன் உங்களை எழுப்ப முயன்றேன். அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் அவரை எழுப்பாதே என்று அண்ணா சொல்லி விட்டு எழுதச் சென்று விட்டார் என்று கூறினார். நேர்ந்து விட்ட தவறுக்காக வருத்தப்பட்டுக் கொண்டு, அந்த அறைக்குச் சென்றேன். சிறிது நேரத்தில் என்னைப் பார்த்துவிட்டு அண்ணா. அங்குச் சிதறிக் கிடந்த நூல்கள், எழுதப்பட்ட தாள்கள், அப்படியே இருந்த உணவுச்சட்டி - அவற்றைச் சுட்டிக்காட்டி, இதோ பாருங்கள்! மேதின மலருக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன்; நேரமே கிடைக்கவில்லை; திராவிட நாடு இதழ்களைத் தேடி எடுக்க வேண்டும்; பிறகு எடுத்து அனுப்பி வைக்கிறேன்; இராமனிடம் சொல்லுங்கள் என்று கூறினார். திரும்பி விட்டேன். பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. என் தேர்வு எண்ணும் வெளியாகியிருந்தது. வெற்றி பெற்ற மகிழ்ச்சி யுடன் அறிவழகனிடம் விடை பெற்றுக் கொண்டு, மேலைச் சிவபுரிக்குப் புறப்பட்டு விட்டேன். வழியில் மயிலாடுதுறையில் எனக்கு வேண்டியவர் வீட்டிற் சில நாள் தங்கியிருந்தேன். சென்னையை விட்டுப் புறப்படுமுன் அங்குள்ள முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளிக்கு, தமிழா சிரியர் பணி வேண்டி விண்ணப்பித்து வந்தேன். 2 கூண்டுக்கிளி சென்னையில் ஆசிரியப் பணி மயிலாடு துறையில் நான் தங்கியிருக்கும் பொழுது, சென்னையி லிருந்து நா. அறிவழகன் மடல் வந்தது. அம்மடலில், முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப்பள்ளியில் எனக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்திருப் பதால் உடனே புறப்பட்டு வருமாறு எழுதியிருந் தார். மேலும் தாம் தொடங்கும் அழகு என்னும் மாத இதழுக்கு உறுதுணையாக இருக்கலாம் என்றும் எழுதியிருந்தார். பத்திரிகைத் துறையிலோ திரைப்படத்துறையிலோ பணியாற்ற வேண்டும் என எண்ணியிருந்த நான், எண்ணியெண்ணி ஒரு முடிவுக்கு வந்தேன். ஆம்; ஆசிரியப் பணி புனித மானது என எண்ணி, அதனை ஏற்கச் சென்னைக்குச் சென்றேன். 1947 ஆம் ஆண்டு சூன் மாதம் பணியில் அமர்ந்தேன். மாதச் சம்பளம் ஐம்பது உரூவா. மு.ரா. பெருமாள் முதலியார் தலைமை யாசிரியராக இருந்தார். அங்குத் தமிழாசிரியராக இருந்த முனைவர் மா. இராசமாணிக்கனார் விலகி, விவேகானந்தா கல்லூரிக்கு ஆசிரியராகச் செல்லும் நேரத்தில் நான் பணியிற் சேர்கிறேன். தலைமைத் தமிழாசிரியராகச் சதாசிவ நாயக்கர் பணியாற்றிக் கொண்டிருந்தார். எங்களிடம் பேரன்பு செலுத்தும் பெற்றியர். அங்குத் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தில்லை. தா. அழகு வேலன், திருமாவளவன் எனக்கு உற்ற நண்பராயினர். எம்மை மூவேந்தர் என்றே அழைப்பர். எந்நேரத்திலும் எவ்விடத் திலும் மூவரும் சேர்ந்தே இருப்போம். ஒத்த கருத்தும் ஒன்றிப் பழகும் இயல்பும் உடைமையால் இணைபிரியாதிருந்தோம். ஆசிரியப் பணி புனித மானது என்று நான் விரும்பி ஏற்றுக் கொள்ளினும் என்னைப்பொறுத்த வரை அஃது ஓர் அடிமைத் தொழில் போலவே தோன்றியது. உரிமையுணர்வுடன் பறந்து திரியவே என் உளம் அவாவியது. அந்த அவாவுக்குத் தடைகள் இருத்தல் போல, ஓர் உணர்வு என்னுள் எழுந்த வண்ணமாகவே இருந்தது. எனக்கு மேல் தலைமையாசிரியர் ஒருவர். அவர்க்கு மேலே கல்வி அலுவலர், பள்ளிச் செயலர், பள்ளித் தலைவர் என்று பற்பலர். மேலும் நடைமுறைச் சட்ட திட்டங்கள். எல்லாஞ் சேர்ந்து, என்னைச் சூழ்ந்துள்ள கம்பிகளாக உணர்ந்தேன். அதனால் கூண்டில டைபட்ட கிளிபோலப் பணி புரிந்து வந்தேன். எனினும் கடமையைச் செவ்வனே ஆற்றி வந்தேன். சிறப்பு விருது மாணவர்களிடம் எந்த அளவு கண்டிப்புடையவனாக இருந்தேனோ அந்த அளவு அன்பும் உடையவனாக இருந்தேன். அதனால் மாணவர் என்னிடம் ஈடுபாடு மிகுதியுங் கொண் டிருந்தனர். மாணவர் எவரேயாகினும் சரிசமமாகவே அன்பு செலுத்துவேன்; அக்கறைகாட்டுவேன். வேறுபாட்டுணர்வு தோன்றுவதேயில்லை. வகுப்பிற்குள் நான் நுழைவேன்; மாணவர் எழுந்து நிற்பர். நான் என் இருக்கையை அடைந்ததும் வெல்க தமிழ் என்று ஒரே குரலில் முழங்கி அமர்வர். பின்னரே பாடம் நடைபெறும். ஆசிரியர் களுக்கு ஒவ்வொரு சிறப்புப் பெயர் சூட்டி, தமக்குள் குறிப்பிட்டுக் கொள்வது மாணவர் வழக்கம், அம்முறையில் வெல்க தமிழ் வாத்தியார் என்று எனக்கு சிறப்புப் பெயர் சூட்டியிருந்தனர். அப்பொழுது வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன. வடமொழி வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், அங்குள்ள கரும் பலகையில் வெல்க தமிழ் எனப் பெரிதாக எழுதி வைத்து விடுவர். வடமொழி ஆசிரியர், அதைக் கண்டு, வெகுண்டு சீறி விழுவார். இதற்கு நான் தான் காரணம் என்பது அவர் நினைப்பு. என்னைக் குலப்பகை யாகக் கருதுவார். கடித்துக் குதறிவிடுவது போலப் பார்ப்பார். பார்வையில் நெருப்புப் பொறிகள் சிந்தும். விழிகள் நச்சுமிழும். பள்ளிச்செயலர் ஒரு தெலுங்கர்; வடமொழிப் பற்று மிக்கவர். என்னைப் பற்றிய செய்திகள், வடமொழி ஆசிரியர் வழியாக நாடோறும் செயலரைச் சென்றடையும். தலைமையாசிரியரிடமும் முறையிடுவார். தலைமையாசிரியர் என்னிடம் கூறுவார். நான் மாணவர்களைக் கண்டிப்பேன். வடமொழியாசிரியரும் தமிழ் நாட்டுக்காரர் தானே? தமிழைக் கண்டால் ஏன் வெறுக்கிறார்? நாங்கள் எழுதத்தான் செய்வோம் என்று மாணவர் எழுச்சி கொள்வர். தம்பிகளே! நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்நாட்டுக்காரன் தான் தமிழுக்குப் பகையாக இருக்கிறான்! என் செய்வது? நீங்கள் அப்படி யெழுதினால் நான்தான் தூண்டி விடுகிறேன் என்று கருதுவர். எனக்கு அப்படியொரு கெட்ட பெயர் வரவேண்டும் என்று விரும்பினால் எழுதுங்கள் என்று சொன்னேன். வடமொழி மாணவர் அனைவரும் இனி எழுத மாட்டோம் என்று உறுதி கூறினர். அவ்வாறே நடந்துங் காட்டினர். மாணவர் அன்பு முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளியிலிருந்த தம்பு செட்டித் தெருவில் ஆர்.எ.எ. சங்கமும் கூடுவதுண்டு. என் மாணவர் சிலர் அங்கே செல்வதுண்டு. என்னைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்திருக்கிறது. அம்மாணவர் என்னிடம் வந்து, ஐயா, உங்கள் தலையை எடுத்து விடுவதாக ஆர்.எ.எ. காரர்கள் கூறுகிறார்கள் என்று முறையிடுவர். காந்தியைக் கொன்றவர்களுக்கு என் தலையை எடுப்பது எளிது தானப்பா; அதனால் எனக்குப் பெருமைதான்; நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறுவேன். நாங்களும் உறுப்பினர்கள் தான்; ஒரு நாளும் அப்படி நடக்க விட மாட்டோம் என்று உணர்ச்சிவயப்பட்டுக் கூறினர். கூறியோர் பார்ப்பன மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு இறதியில் வகுப்புகள் தோறும் மாணவர்கள் ஆசிரியர் களுக்கு விருந்தளித்துத் தம் நன்றியைப் புலப்படுத்திக் கொள்வது வழக்கம். இரண்டாம் ஆண்டிறுதியில் நடந்த அந்நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். புலவர் தா. அழகு வேலன் உரையாற்றும் பொழுது முடியரசன் அடுத்த ஆண்டு உங்களுக்கு ஆசிரியராக இருக்க மாட்டார். விலகிச் செல்ல முடிவு செய்து ள்ளார் என்று கூறி அழுது விட்டார். மாணவர்கள் கண் கலங்கி விட்டனர். பூச்சக்கரவர்த்தி என்ற மாணவன் எழுந்து, நாங்கள் செல்லவிட மாட்டோம். மறியல், செய்து தடுத்துவிடுவோம் என்று ஓ வென்று அழுது விட்டான். மற்ற மாணவரும் அழுது விட்டனர். பொங்கி வந்த உணர்ச்சி என்னையும் பேச விடாது தடுத்து விட்டது. சிறிது நேரம் அமைதி. பின்னர் என் நிலைமையை விளக்கிக் கூறிய பின்புதான் இசைந்தனர். அன்புப் பிழம்பாகிய அம் மாணவர்களை நினையுந்தோறும் என் உள்ளம் பூரிக்கிறது. இத்தகு மாணவச் செல்வங்கள் வாய்த்தமையை எண்ணியெண்ணி இன்றும் மகிழ்கிறேன். மற்றொரு நிகழ்ச்சியும் நினைவிற்கு வருகிறது. காரைக் குடியில் ஆசிரியர் பணியேற்றுப் பல ஆண்டுகளுக்குப் பின், சென்னைக்குச் சென்ற நான் தாம்பரத்தில் இறங்கி, மின் வண்டியில் ஏறினேன். ஒரே கூட்டம்! நிற்கவும் இடமில்லா நெருக்கடி. கருப்புக் குப்பாயத்தைக் கையில் தொங்க விட்டுக் கொண்டு அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த ஓரிளைஞர் எழுந்து ஐயா, உட்காருங்கள் உட்காருங்கள் என வற்புறுத்தினார். நன்றி, நான் நிற்கிறேன். நீங்கள் அமருங்கள் என்று நான் சொல்லியும் கையைப் பற்றி அமர்த்தி விட்டார். இளைஞர் மனப்பாங்கை என்னுள் வியந்து கொண்டேன். ஐயா! v‹id¤ bjÇ»wjh? என்றார் இளைஞர். நான் விழித்தேன்; யாரென்று சரியாகத் தெரியவில்லையேயென்றேன். உங்கள் மாணவன்தான்; முத்தியாலுப் பேட்டைப் பள்ளியில் படித்தேன்; வக்கீலாத்துக் குழந்தை! இங்கே வாடா? என்று என்னை அழைப்பீர்கள் என்றார். அவர் சொல்கிற பொழுது வகுப்பறையில் பார்த்த அந்த முகம் தோன்றியது. அட! நீயா தம்பி! என்று அணைத்துக் கொண்டேன். என்ன செய்கிறாய்? என்றேன். வழக்கறி ஞராகப் பணியாற்றுகிறேன் என்றார். ஆசிரியர் மாணவர் உறவு தந்தை மகன் என்ற முறையில் இருந்தது அன்று! இன்று உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை; ஒரோவிடங்களிற் பகையிருப்பதைத் தான் காண முடிகிறது! குற்றச்சாற்று xU Kiw jiyikaháÇa®, v‹id miH¤J, ‘tF¥ãš ïªâ ba⮥ò¥ãurhu« brŒ»Ö®fshnk? என்று வினவினார். இல்லை யென்றேன். கல்வியமைச்சர் அவினாசிலிங்கனாரிட மிருந்து மடல் வந்திருக்கிறது என்று கூறினார். கையிலிருந்த பாடப் புத்தகத்தில் ஒரு பாடத்தைச் சுட்டிக் காட்டி, இந்தப் பாடத்தை நடத்துகிறேன். ஏனைய பாடங்களை நடத்துவது போலவே இதையும் மாணவர் உள்ளத்திற் பதியுமாறு நடத்துகிறேன் என்று கூறினேன். m¥ghl« ïªâ TlhJ vd m.கி. பரந்தாமனார் எழுதிய பாடம். jiyikaháÇa® mij¥ go¤J É£L, ‘rhâ kW¥ò¥ ghliy¡ fU«gyifÆš vGJ»Ö®fshnk? என்று மீண்டும் வினா எழுப்பினார். அதே பாடப் புத்தகத்திலிருந்த வள்ளலார் பாடலைக் காட்டி, இதைத்தான் எழுதுகிறேன் என்று விடை கூறினேன். சரி, சரி; நான் பார்த்துக் கொள்ளுகிறேன்; சுயமரியாதைக் காரர்களை உன் பள்ளியில் வைத்து வளர்க்கிறாயாமே என்று கல்வியமைச்சர் என்னைக் கேட்டார்; இக்குற்றச்சாற்று, நான் கல்வியதிகாரியாகப் பதவியுயர்வு பெறுவதற்குத் தடையாக அமைந்து விட்டது என்று கூறினார். உங்கள் உயர்வுக்குக் குந்தகம் ஏற்படுகிற தென்றால் நானும் விழிப்பாக நடந்து கொள்கிறேன் என்று கூறி விடை பெற்றேன். கல்வியமைச்சர் கலந்துரையாடல் கல்வியமைச்சரால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சமூக அறிவு பாடம் பற்றிக் கலந்துரையாட விழைந்து, அவினாசி லிங்கனார் ஆசிரியர்களை அழைத்திருந்தார். கூட்டம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளிக் கட்டடத்தில் நடைபெற்றது. அமைச்சருக்கு எதிரில் போடப்பட்டிருந்த பலகையில் நான், அழகுவேலன், திருமாவளவன் மூவரும் அமர்ந்தோம். வலப் பக்கத்தில் திருஞான சம்பந்த முதலியார் என்ற பெரியவர் திரு நீறு பொலியும் நெற்றியுடன் அமர்ந்திருந்தார். தலைமையாசிரியர்கள், ஆங்கிலம் முதலிய பாடங் கற்பிப்போரெல்லாம் பின் வரிசையில் அமர்ந்தனர். முன் வரிசையில் அமர வேண்டாமென எம்மையும் அச்சுறுத்தினர். நம் அமைச்சர் முன் அமர ஏன் அஞ்ச வேண்டும்? என்று கூறி நாங்களும் அமர்ந்து விட்டோம். ஆங்கிலத்திற் பேசவா? jÄʉ ngrth? என அமைச்சர் வினவினார். ஆசிரியர் எவரும் வாய் திறக்கவே இல்லை. மீண்டும் அவர் வினவ, நான் எழுந்து, தமிழிற் பேசுமாறு வேண்டி னேன். தெலுங்கு பேசுவோர் இருப்பார்களே அவர்களுக்குத் தமிழ் தெரியாதே என்றார். எனக்கு ஆங்கிலந் தெரியாதே என்றேன். ‘bfhŠr§ Tl¤ bjÇahjh? என்றார். ஆம்; தெரியவே தெரியாது. இஃது என் விடை. ‘Ú v‹d MáÇa®? - அவர் வினா. தமிழாசிரியர் - என் விடை. ‘v§nf ntiy gh®¡»whŒ? அமைச்சர் வினா. முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் - என் மறுமொழி. ‘vªj C®? - அமைச்சர். பெரியகுளம் - நான். அதற்குள் அழகு வேலன், எனக்கு இந்தி தெரியும், இந்தியிற் பேசுங்கள் என்றார். அழகு வேலனுக்கு இந்தி தெரியாது. வேண்டு மென்று அவ்வாறு கூறினார். அமைச்சர், எனக்கு இந்தி தெரியாதே என ஏளனமாகக் கையை விரித்துக்காட்டினார். பின்புறம் நின்றவர்கள் (ஆசிரியரல்லர்) கை கொட்டிச் சிரித்து விட்டனர். சினந்தெழுந்த அமைச்சர், இது என்ன நாடகக் கொட்டகையா? கைகொட்டிச் சிரிக்க? உடனே வெளியேறுங்கள் என்று முழக்க மிட்டார். பின் வரிசையில் நின்றோர் வெளியேறத் தொடங்கினர். போகாதீர்கள்; அங்கேயே நில்லுங்கள் அமைச்சரின் மறு ஆணை இது. வெளியிற் செல்லாது அங்கேயே நின்றனர். நான் எழுந்து, ஐயா நீங்கள் எந்த மொழியிற் பேசினாலும் நாங்கள் கேட்கக் காத்திருக்கிறோம். எந்த மொழியிற் பேச வேண்டுமென நீங்கள் வினவியதால் தான் தமிழிற் பேசுமாறு வேண்டினேன். உங்களுக்கு எது விருப்பமோ அம்மொழியிற் பேசுங்கள் - என்று கூறினேன். (அவினாசிலிங்கனார் உண்மை யான தமிழ் நெஞ்ச முடையவர். பள்ளியில் திருக்குறள் புகுந்தது அவரால் தானே! தமிழாசிரியர் நிலை உயர்ந்ததும் அவரால் தானே! தமிழிற்கலைக் களஞ்சியம் கொண்டு வந்தவர் அவரல்லவா, சுயமரியாதைக் கொள்கை அவருக்குப் பிடிக்காது அவ்வளவு தான்) தமிழிலேயே பேசத் தொடங்கினார். அமைச்சர் பெருந்தன்மை பேச்சு முடிந்ததும் ஐயங்களிருந்தால் கேட்கலாம் என்றார் அமைச்சர். நான், அழகுவேலன், திருஞான சம்பந்த முதலியார் மூவரும் எழுபத்தைந்து விழுக்காடு வினாக்கள் எழுப்பினோம். அமைச்சர் சூடாக அமைதியாக, மகிழ்ச்சியாகப் பல்வேறு வகைகளில் விடை தந்தார். திருஞான சம்பந்த முதலியார்க்கு விடை சொல்லும் போது, அவரை நீ, நீ என்று பலமுறை சொல்லி விட்டார் கல்விய மைச்சர். மூன்று முறை பொறுத்துப் பார்த்த திருஞான சம்பந்தர் வெகுண் டெழுந்தார். நீ கல்வியமைச்சராக இருக்கத் தகுதியற்றவன்; உன் வயதென்ன? என் வயதென்ன? வயதுக்குக் கூட மதிப் பளிக்கத் தெரியாமல் என்னை நீ யென்று ஒருமையிற் பேசு கிறாயே? Ú xU mik¢rdh? என்று பொரிந்து தள்ளி விட்டார். கூட்டத்தில் அச்சமும் அமைதியும் நிலவியது. என்ன நடக்குமோ? என்றஞ்சினோம். அங்கேதான் அவினாசிலிங்கனார் தமது பெருந்தன்மையைக் காட்டி நின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள்; நான் அமைச்சன் என்ற முறையிலோ, உங்களைக் குறைத்து மதிப்பிட்டோ பேசவில்லை, பேச்சுவாக்கில் பேசி விட்டேன். உங்கள் மனத்தைப் புண்படுத் தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர், கூறியவுடன் அனைவரும் உருகிவிட்டோம். பிற அமைச்சராக இருப்பின், காவலரை அழைத்து, இவனைக் கட்டி வைத்துத் தோலை உரியுங்கள்; செத்து விட்டால் தற்கொலை என்று சொல்லி விடுங்கள் என ஆணையிட்டிருப்பர். இவர் பண்பாள ராதலின் மன்னிப்புக் கேட்டார். மாலையில் வழக்கம் போல விடுதலை அலுவலகம் சென்றோம். அரங்கண்ணல், தவமணி ராசன் இருவரும் அப்பொழுது அங்குப் பணியில் இருந்தனர். ஐயா வரப் போவதாக யாரோ வந்து சொன்னதும் விரைந்தெழுந்து அங்கங்கே கிடந்த வெட்டுத் துண்டுக் காகிதங்களைப் பொறுக்கி யெடுத்து வைத்தார்கள். பயன்படாத இவற்றை ஏன் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைக்கிறீர்கள்? என்றோம். ஐயா வந்தால் இப்படி வீணடிக் கிறீர்களே யென்று திட்டுவார் என்று கூறினர். வெட்டுத்துண்டு தானே எதற்குப் பயன்படப்போகிறது? என்றேன். மாநாட்டு நுழைவுச் சீட்டு அச்சடிக்க ஐயா பயன் படுத்துவார் என்ற வுடன் ஐயாவின் சிக்கனத்தை எண்ணி யெண்ணி நகைத்தோம். விடுதலை இதழ் அச்சாகி, மேசைக்குக் கொண்டு வரப்பட்டது. முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில், முத்தியாலுப் பேட்டைப் பள்ளிப் புலவர்களுக்கு உலையா? Xiyah? என அச்சிடப் பட்டிருந்தது. உள்ளே அமைச்சருக்கும் எனக்கும் நடந்த உரை யாடல் வெளியாகியிருந்தது. என்ன! இப்படி வெளியிட்டு விட்டீர்களே! என்று கேட்டேன். அமைச்சர் கேட்ட தோரணையைப் பார்த்தால் உங்கள் வேலைக்கு ஆபத்து வரும் போல் தோன்றியது; உங்கள் பாதுகாப்புக்காக இப்படி வெளியிட்டோம் என்றனர். வெல்க தமிழ்! வெல்கதமிழ்! எங்கள் பள்ளியின் நூற்றாண்டு விழா நடை பெற்றது. முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும் கல்வியமைச்சர் அவினாசிலிங்கனாரும் வருகை தந்தனர். வட மொழியாசிரி யரின் திட்டப்படி, பள்ளிச் செயலரின் துணையுடன், வட மொழியில் கடவுள் வணக்கம் பாடப்பட்டது. கேட்டதும் நாங்கள் நெருப்பின் மேல் நிற்பது போன்ற உணர்வுடன் நின்றோம். பாடல் முடிந்ததோ இல்லையோ மாடியில் நின்ற மாணவர் அணி வெல்க தமிழ்! வெல்க தமிழ்! வெல்க தமிழ்! என மும்முறை வெடி முழக்கம் செய்தனர். கல்வியமைச்சர் ஏறிட்டுப் பார்த்தார். மலர்ச்சி தவழ்ந்தது அவர் முகத்தில். எவரும் சொல்லித் தராமலேயே மாணவர் தாமே உணர்ச்சியால் உந்தப்பட்டு முழக்கமிட்டது, நூறுகுடம் குளிர்புனலை எங்கள் தலையில்வார்த்தது போன்றிருந்தது. பின்னர் முதலமைச்சர் பகவத்கீதையில் திளைத்தெழுந்து, அதன் பெருமைகளை யெல்லாம் விளக்கினார். எம் நெஞ்சில் பெரும் பாறையை ஏற்றி வைத்தது போல் இருந்தது. அடுத்து, கல்வியமைச்சர் திருக்குறளின் அருமை பெருமைகளை விளக்க மாகப் பேசி மகிழ்ந்தார். எம் நெஞ்சில் ஏற்றி வைக்கப் பட்ட பாறை அகற்றப் பட்டது போன்றவுணர்வு பெற்றோம். இந்த நாட்டுக்கு - இந்த நாட்டு மக்களுக்கு எது தேவையோ? அதைப் பேசினார் கல்விய மைச்சர். எங்கள் தாத்தா தமிழ் நெறிக் காவலர் மயிலை சிவ.முத்து அவர்கள் இல்லம் (மாணவர் மன்றம்), விடுதலை அலுவலகம், கடற்கரை இம் மூன்றிடங்களில்தான், பள்ளிநேரம் போக ஏனைய நேரங்களில் எங்களைக் காணலாம். தமிழ் நெறிக் காவலரை ஐயா என்றுதான் அனைவரும் அழைப்பர். நான் உரிமையுடன் அவரைத்தாத்தா என்றழைத்தேன். அன்று முதல் அதே பெயர் நிலைத்துவிட்டது. தொண்டு என்றால் என்ன? என ஒருவர் கேட்டால் தாத்தாவைக் காட்டினாற் போதும்; அப்படித் தொண்டாற்றுவார்? வாழ்நாட் பணியே அதுதான். அவர் தம் உறவினர் ஒருவர், இரத்தின முதலித்தெருவிலுள்ள அவரில்லத்தில் இறந்துவிட்டார். பள்ளியிலிருந்த எனக்குத் தாத்தா உடனே செய்தி விடுத்தார். பள்ளி முடிந்தபின் மாலையில் அழகு வேலனிடம் கூறினேன். இருவரும் தாத்தா வீட்டிற்குச் சென்றோம். காலையிலேயே ஏன் வரவில்லையென்று அழகு வேலனைத் தாத்தா கடுமையாகக் கண்டித்தார். எனக்கு இப்பொழுதுதான் முடியரசன் சொன்னார். உடனே வந்து விட்டேன் என்றார். jh¤jh v‹id neh¡f ‘V‹ clnd tunt©lhkh? என்று நான் நடுங்கும் படியாக உரத்துப் பேசினார். சீற்றத்தின் எல்லையில் நின்று பேசிய அவர், சிறிது தணிந்து, என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே என்ன! அஞ்சி விட்டீர்களா? இன்னுங் குழந்தை மாதிரியிருக் கிறீர்களே? இதெல்லாந் தெரிந்து கொள்ள வேண்டும். மனத்தில் உங்களுக்குப் பட வேண்டுமென்பதற்காகத் தான் சும்மா கோபமாகப் பேசினேன். வருத்தப்படவேண்டாம் என்று அணைத்துக் கொண்டார். அடிக்கடி பேராசிரியர் பலரைக் காணவேண்டி என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள் புறப்பட்டோம். வார இதழ்கள் அடைத்து வைக்கப்பட்ட பை யொன்று கையில் தொங்கும்; பணப்பையும் அதனுள் இருக்கும்; ஊன்றாக் கோலொன்றும் கையில் தொங்கும். இக்கோலத்துடன் புறப்பட்டார். தாத்தா! முகம் வழித்துக் கொள்ள வில்லையா? என்றேன். ‘V‹? என்றார். பெரியவர்களைப் பார்க்கச் செல்வதால் வழித்துக் கொள்ளலாமே என்றேன். அவ்வளவுதான்; எவன் பெரியவன்? அவனுக்காக நான் முகம் வழிததுக் கொள்ள வேண்டுமோ? அப்படி அவனைப் பார்க்கத் தேவையில்லை என்று கூறிச் சினத்தராகிப் பையை ஒரு பக்கம் எறிந்தார்; கோல் ஒரு பக்கம் பறந்தது; துண்டு வீசி யெறியப்பட்டது. எனக்குக் கைகால்கள் நடுங்கி விட்டன. அறையை விட்டு வெளியில் வந்தேன். அவர் தமக்கையார், ஏம்ப்பா இதெல்லாம் அவர்கிட்டே சொல்றே; அவர் குளிக்க மாட்டார்; போட்ட சட்டையைக் கழற்ற மாட்டார்; முகம் வழித்துக் கொள்ள மாட்டார். நாங்களே நேரம் பார்த்துத்தான் சொல்லுவோம்? என்று எனக்கு அறிவுரை கூறினார். சரி! நாளைக்குப் போவோம்; நாளை வாருங்கள் என்று சொல்லி விடை கொடுத்தார். மறுநாள் சென்றேன். முகம் வழித்துக் கொண்டு சட்டையையும் மாற்றிக் கொண்டு, அமர்ந் திருந்தார். முடியரசன்! இப்பொழுது சரிதானே? நீங்கள் சின்ன வயதுப் பிள்ளை; நான் கிழவன்தானே! எனக்குத் தெரியவில்லை என்று என் தோளை அணைத்தவாறு புறப்பட்டார். அன்று முதல், எங்காவது புறப்படுமுன், என்ன முடியரசன்! ïªj¢ r£il nghJkh? என்று கேட்டுக் கொள்வார். எனக்காகவே ஒழுங்காக முகம் வழித்துக் கொள்வார். எனக்குத் திருமணமான மறு கிழமையே சென்னைக்கு வந்து பணியில் ஈடுபட்டு விட்டேன். பள்ளிக்கு ஒன்பது நாள் விடுமுறை வந்தது. தாத்தா வீட்டிற்குச் சென்றேன். ‘c§fŸ CU¡F¢ bršy v›tsî f£lz«? என்றார். ஒன்பது உரூவா என்றேன். உடனே இருபது உரூவா எடுத்து என் பையில் திணித்து, ஒரு வாரமாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு வாருங்கள்; இன்றிரவே புறப்படுங்கள் என்று பணித்தார். ஊருக்குச் சென்று வந்த பின்பு தான், என் பிரிவுத்துயரை மாற்றுதற்கு இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். தந்தை பெரியார், தமிழ்ப் பெரியார் திரு.வி.க போன்றவர் களுடன் தாத்தா நெருக்கமான நட்புடையவர்; திரு.வி.க. வாழ்க்கை வரலாற்றில் குறிக்கப் பெற்றவர். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொண்டு செய்தவர்; இவர் தமக்கையார் மலர் முகத்தம் மையார் போராட்டத்திற் சிறை சென்றவர். அண்ணாவால் நன்கு மதிக்கப்பட்டவர். பல குடும்பங்களுக்குப் பல்லாற்றாலும் உதவியவர். இவர் தொடர்பு, நான் பெற்ற பேறுகளுள் ஒன்று. நான் சென்னையில் வாழ்ந்த இரண்டாண்டும் என்பாற் பேரன்பு செலுத்தி வளர்த்தவர். அண்ணன் அழகுவேலன் தில்லை. தா.அழகுவேலன் எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்; எடுத்த எடுப்பில் சினம் வந்துவிடும். எதையும் துணிந்து செய்து விடுவார். எந்நேரமும் மடியில் கத்தி இருக்கும். நான் சற்று அமைதி யானவன். முடியரசன்; நீங்கள் எப்பொழுதும் அழகு வேலனுடன் இருக்க வேண்டும் அவர் நெருப்பு; நீங்கள் நீர் என்று தாத்தா அடிக்கடி கூறுவதுண்டு. நான் அவரை அண்ணன் என்றே அழைப் பேன். அண்ணியும் அன்பும் அமைதியும் நிறைந் தவர். வீட்டில் இடியப்பம் செய்து விட்டால் ஆனைகவுணி என்ற இடத்திலிருந்து எடுத்துக் கொண்டு நான் தங்கியிருக்கும் தம்புச் செட்டித் தெருவுக்கு ஓடி வருவார். என்னைத் தம்பியாக ஏற்றுக் கொண்டு உரிமையுடன் பழகியமைக்கு ஒரு எடுத்துக்காட்டே போதும். ஒரு நாள் முகம் வழித்துக் கொள்ளும் பொழுது மீசை ஒழுங்குபட அமையாமற் போனமையால் முழுவதும் எடுத்து விட்டேன். பள்ளியில் ஒருவகுப்பை முடித்துவிட்டு அடுத்த வகுப்பிற்காக மாடிப் படியில் ஏறிச் செல்கிறேன். mt® ïw§» tU»wh® ‘Ûiria V‹ vL¤J É£lhŒ? என்று அதட்டினார். நான் காரணம் சொல்லு முன் ஓங்கி அறைந்து விட்டுச் சென்று விட்டார். அவர் வீட்டில் பலநாள் நான் தங்கியிருக்கிறேன். அப்பொழு தெல்லாம் காலையில் குடங்குடமாக நீர் கொண்டு வந்து, தலையில் ஊற்றி, அவரே நீராட்டி விடுவார். உரிமையும் அன்பும் ஒத்த நிலையில் செலுத்துவார். ஒருநாள் முனைவர் மா.இராசமாணிக்கனாரை அடுத்த வீட்டிலிருந்த அரசு அலுவலர் ஒருவர் கீழ்த்தரமாகப் பேசி விட்டார். எவனாவது, தமிழையோ தமிழாசிரியரையோ பழித்து விட்டால் அழகுவேலண்ணனுக்கு நெற்றிக் கண் திறந்துவிடும். பள்ளி முடிந்ததும் அன்று மாலையே நாங்கள் (திருமாவளவன், நான், அண்ணன்) மூவரும் சென்று அவ்வலுவலரை அடித்து விட்டோம். அலுவலருக்கு எங்களை யாரென்று தெரியாது; தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் சிலர், அடையாளஞ் சொல்லி விட்டனர். அடிபட்ட அலுவலர், காவல் நிலையத்தில் எழுதி வைத்து விட்டார். இரவு ஒரு மணிக்கு இராசமாணிக்கனார், நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து, என்னை யெழுப்பி, நிலைமையை விளக்கி விட்டு, நீங்களொன்றும் கவலைப்பட வேண்டாம்; என் மைத்துனர் புலவர் செல்வராசிடம் கூறியிருக்கிறேன்; எதற்கும் நீங்களும் விழிப்பாக இருங்கள்; ஒரு வேளை காவல் நிலையத் தார் உங்களிடம் கேட்டால் நான் சொல்வது போலச் சொல்லி விடுங்கள் என்று வழியும் சொல்லித் தந்தார். புலவர் செல்வராசின் முயற்சியால் வழக்கில்லாமற் போய்விட்டது. முடியரசனுக்கு முட்டுக்கட்டை கவிஞர் தமிழ்ஒளி, குயிலன் என்னும் நண்பர் இருவரையும் அடிக்கடி சந்திப்பதுண்டு. என்பால் அன்புடையவர்தாம்; எனினும் முடியரசன் என்ற என் பெயர் அவர்களுக்கு எரிச்ச லூட்டிக் கொண்டேயிருக்கும். அப்பெயர்பற்றி என்னிடம் கடுமையாக வாதிடுவர். துரைராசு என்ற பெயரை அப்படியே தமிழாக்கிக் கொண்டேனே தவிரக் குடியரசுக் கோட்பாடு களுக்கு மாறாக வைத்துக் கொள்ளவில்லையென்று எவ்வளவு அமைதி கூறினும் ஏலாது எரிந்து விழுவர். அவர்கள் பொதுவுடைமைக் கருத்துடையவர்களாதலின் முடியரசன் என்ற பெயரைக் கேட்டவுடன் சார் மன்னன் கண்ணூக்குத் தோன்றி விடுகிறான். அதனால் காய்ந்து குதித்தார் கள். சிந்தனைக்கு இடங்கொடாது, அவர்கள் கொண்ட முடிபே சரி யென்று வாதிடும் இயல்பினர். தயரதனைப் போற்றுவர், இராமனைப் புகழ்வர், ஆனால் தமிழ் முடியரசனை மட்டும் விழையார். பொதுவுடைமைக் கொள்கைக்கே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட பா.சீவானந்தம் அவர்களிடமும் பழகியிருக் கிறேன். அவர் என் பெயரைக் குறை கூறியதில்லை. பிறிதொருகால், அ.இளங்கோவனும் நானும் பகீரதன் என்ற எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது, இளங்கோவன், இவர் முடியரசன் என என்னை அறிமுகஞ் செய்து வைத்தார். clnd mt®, ‘Koaurdh? இந்தப் பெயர் அக்ளியாக இருக்கிறதே, என்று முகஞ்சுளித்தார். முடி என்றவுடன் தலையில் முளைக்கும் முடிதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அக்ளி என்று கூறி விட்டார். என்ன ஐயா! இப் பெயரை அக்ளி என்கிறீர்களே! பூவராகன் (நிலப்பன்றி) வராக மூர்த்தி (பன்றிவடிவன்) என்றெல்லாம் பெயர்கள் இருக்கின்றனவே; அவை உங்களுக்கு அக்ளியாகத் தோன்ற வில்லையா? அது கிடக்கட்டும் உங்கள் இயற்பெயர் மகாலிங்கம் அல்லவா? லிங்கம் என்றால் குறி என்று பொருள், மகாலிங்கம் என்றால் பெரிய குறி என்றல்லவா பொருள். இது உங்களுக்கு அக்ளியாகத் தோன்றவில்லையா? என்று நான் விளக்கினேன். அவருக்கு முகம் சுருங்கிவிட்டது. என்ன இருந்தாலும் இந்தக் காலத்துக்கு ஏற்ற பெயரில்லை என்று மழுப்பினார். சரி, சக்கரவர்த்தி என்றும் ராஜாஜி என்றும் பெயர் வைத்துக் கொள்கிறார்களே அவை மட்டும் இக்காலத்துக்கு ஏற்ற பெயர் களோ? தமிழ்ப் பெயர்கள் மட்டும் ஏற்றதாகாவோ? என்று நான் உரைத்தேன். வாயடங்கினார். வடமொழியில் எவ்வளவு இழிவான பொருள் தரும் பெயர் களாயினும் தலை வணங்கிச் சூட்டிக் கொள்கின்றனர். தமிழ் என்றால் அவர்களுக்குக் கசக்கிறது. அஃது அவர்கள்மேற் குற்றமன்று. பிறமொழிகளில் ஊறிப்போன அடிமை மனம் உடையராதலின் பேதைமையால் அவ்வாறு பிதற்றுவாராயினர். இதனாலேதான் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று பாரதியார் வேதனைப்படுகிறார். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற தலைப்பிற் கதை ஒன்று எழுதிப் போர் வாள் இதழில் வெளியிட்டேன். பேராசிரியர் பலராற் பாராட்டப்பட்டது. கற்பனை, எழுதப் பட்டுள்ள முறை, நடை ஒவ்வொன்றையுஞ் சுட்டிக் காட்டித் தாத்தா மிகுதியும் பாராட்டினார். மேலும் மேலும் எழுதத் தூண்டினார். இக்கதை வெளிவந்தது முதல், போர்வாள் ஆசிரியர் மா.இளஞ்செழியன் என்னைக் கண்டாற்போதும்; கதை வேண்டு மென்று வற்புறுத்துவார். அவரைக்கண்டால் நான் மறைந்து கொள்வது முண்டு. கவிதை எழுதுவது எனக்கு எளிது; கதை யெழுதுவது பெருந்தொல்லை. நீண்ட நேரம் இருந்து எழுத வேண்டு மல்லவா? எனினும் அடிக்கடி போர்வாள் இதழில் எழுதிவந்தேன். கூண்டோடு சிறை தில்லியில் பொது ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்த சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், சென்னைக்கு வருகை தருவதை எதிர்க்கும் பொருட்டுத் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அரசு, அங்கேயே அனைவரையும் சிறை செய்து விட்டது, சிறை செய்யப் பட்டதைக் கண்டிக்கும் வகையில், தீவுத்திடலில், தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. நான், அழகுவேலண்ணன், திருமாவளவன் மூவரும் கருப்புச் சட்டையுடன் மேடையேறினோம். சிறை செய்யப்படாமை யால் வெளியிலிருந்த பேராசிரியர் க.அன்பழகன், குஞ்சிதம் அம்மையார் (குத்தூசி குருசாமியின் துணைவியார்) இருவரும் கூட்டத்திற் கலந்து கொண்டனர். உணர்ச்சி கொந்தளிக்கும் மக்கள் கூட்டம் கடல் போலத் திரண்டது. திரு.வி.க. பேசத் தொடங்கினார். காவல் துறை ஆணையர் (போலீ கமிஷனர்) கூட்டத்திற்குத் தடைவிதித்த ஆணையைத் தலைவரிடம் கொடுத்தார். தலைவர் ஆணையை வாங்கிப்பாத்து விட்டு, தடை வரும் என அறிவேன்; மாலை நான்கு மணி வரை எதிர்பார்த்தேன்; வாராமையால் அதன் பின்னரே நான் இங்கு வந்தேன்; கூட்டத்தைப் பாருங்கள்; பொங்கியெழும் உணர்ச்சியைப் பாருங்கள்; இப்பொழுது தடையாணை தரின் எவ்வாறு நிறுத்த இயலும்? Éisî ntwh»ÉL«? என்றார். ஐயா, தங்கள் வீடு எனக்குத் தெரியாது தேடியலைந்து விட்டுத்தான் இங்கு வந்தேன்; தயவு செய்து கூட்டத்தை நிறுத்தி விடுங்கள் என்று ஆணையர் கெஞ்சினார். ‘v‹ ålh bjÇa Éšiy? என்று நகைத்துத் கொண்டார் தலைவர். அன்பழகனும் குஞ்சிதம் அம்மை யாரும் கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் நம்மை வேண்டு மானால் சிறை செய்யட்டும் என்று தலைவரிடம் மன்றாடினர். தலைவர் அவர்களுக்கு அமைதி கூறிவிட்டு, ஆணையரை நோக்கி, ஐயா, இவ்வளவு பெருங்கூட்டத்தைத் திடீரென்று கலைத்தால் குழப்பம் நேர்ந்து விடும். அதனால் நான் அவர் களுக்கு விளக்கம் கூறித்தான் கூட்டத்தை நிறுத்தஇயலும்; விரும்பினால் என்னைப் பேச விடுங்கள்; இல்லையென்றால் எங்களைச் சிறை செய்யுங்கள் என்றார். ஆணையர் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, வேறு வழியின்றி, இசைந்தார். தலைவர் பேசத் தொடங்கியதும் கூட்டத்தில் ஒரே அமைதி. அரசை எவ்வளவு கண்டிக்க முடியுமோ அவ்வளவு கண்டித்துப் பேசிவிட்டு, பெரியார் ஈ.வே.ரா. வன்முறை விரும்பார். சட்டத்தை மதிக்கும் இயல்பினர். அவரை நீங்கள் மதிப்பது, அவர்தம் சொல்லுக்குக் கட்டுப்படுவது உண்மை யெனில் அமைதி யாகக் கலைந்து செல்க என உருக்கமுடன் கேட்டுக் கொண்டார். தமிழ்ப் பெரியார் ஆணைக்குக்கட்டுப் பட்டு, மக்கள் வெள்ளம் அமைதியாகக் கலைந்து நெடுஞ் சாலையை அடைந்தது, கூட்டம் நிறுத்தப்பட்டதால் ஆணையருக்கு மகிழ்ச்சி; அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து விட்டமையால் எங்களுக்கு மகிழ்ச்சி. கூட்டம் சாலையிற் செல்லும் பொழுது, அவ்வழியிற் சென்ற - பாரத தேவி என்னும் செய்தித் தாள்களையேற்றி வந்த உந்துவண்டியின் மேல் மக்கள் தம் உணர்ச்சியைக் காட்டி விட்டனர். இந்து இதழ் அலுவலகத்தின் மேலும் உணர்ச்சி வெள்ளம் பாய்ந்தது. பொதுக்குழு கூண்டோடு சிறை செய்யப் பட்டதைக் கண்டித்து பாடல் எழுதித்தர வேண்டும் என்று இளஞ் செழியன் வேண்டினார். உணர்ச்சிப் பாடல்கள் எழுதித் தந்தேன். போர்வாள் இதழில் ஆசிரியவுரைக்குப் பதிலாக என் பாடல்கள் அச்சேறின. ஆனால் மறுநாளே பொதுக்குழு விடுதலை செய்யப் பெற்றமையால் பாடல்கள் எடுக்கப் பட்டு, வெற்றிடமாக அப்பகுதி வெளி வந்தது. இதழ்களின் தொடர்பு சென்னையிலிருக்கும் பொழுதுதான், நிலவு பற்றிய என் பாடல், பொன்னியிதழில் பாரதிதாசன் பரம்பரை என்ற பகுதியில் வெளிவந்தது. பொன்னியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அதனால் பொன்னியின் செல்வன் என்று சிலர் என்னைக் குறிப்பிடுவர். பொன்னியில் வந்த பாடல்களால், என்பால் ஈடுபாடு கொண்ட சுவைஞர் பலரை இன்றும் நான் காண்கிறேன். திருவையாறு அரசர் கல்லூரிக்குப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் சின்ன அண்ணாமலை என்பவரும் சென்றிருந்த பொழுது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சி, சுயமரியாதை மாணவர்களால் நிகழ்ந்த தென்று கருதி, கல்லூரியை மூடிவிட வேண்டும் என்ற கருத்தில் மூடித் தொலையுங்கள் என்னும் ஆசிரியவுரை (தலையங்கம்) வெள்ளி மணி என்னும் இதழில் எழுதப்பட்டிருந்தது. நான் தொடர்பு கொண்டிருந்த அழகு என்னும் இதழில், உங்கள் திருவாயை மூடுங்கள் என்னுங் கருத்தில் மூடித் தொலையுங்கள் என்று அதே தலைப்பில் ஆசிரியவுரை எழுதினேன். பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், பேராசிரியர் அன்பு கணபதி முதலான பெருமக்கள் நேரிற் பாராட்டுரைத்தனர். ‘KUF’ v‹D« ïjÊš ‘mʪJ ÉLnkh? என்ற தலைப்பில் ஒரு கற்பனைக் கதையெழுதினேன். அது முழுக்க முழுக்கப் பாரதிதாசன் புராணப்படங்களுக்குப் பாடல், கதை எழுது வதைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. ஆனால் அவரை வெறுத்து எழுதவில்லை, அவர் போக்கை மாற்றிக் கொள்ளும் வகையில் எழுதினேன். அக்கதையில் பாரதிதாசனையே மறுத்து எழுதிய என் துணிவு, பலராலும் பாராட்டப்பட்டது. சென்னையில் இருக்கும் போது பல்வேறு இதழ்களில் கதை, கவிதைகள் எழுதினேன். பிரசன்ட விகடன் இதல் துணையாசிரியராக இருந்த அ.இளங் கோவன் என் நெருங்கிய நண்பரானார். நல்ல பண்பாளார்; படிப்பறிவு மிகுந்தவர். ஒழுக்க மிக்கவர். மாக்சிம் கார்க்கி யெழுதிய அன்னையென்ற புதினத்தைக் கொடுத்தார். அதை இருமுறை படித்தேன். அந்நூல் என் உள்ளுணர்ச்சியைத் தூண்டி விட்டது. அவ்வுணர்ச்சி எக்கோவின் காதல் என்ற கதையாக உருவெடுத்துப் பிரசண்ட விகடனில்உலா வந்தது. புலவர் வாரம் நான் சென்னையிற் பணிபுரியுங்காலத்து, அரசியற் கூட்டமோ இலக்கியக் கூட்டமோ அது எங்கு நடந்தாலும் சென்று செவிச் செல்வம் பெற்று வருவேன். ஒரு சமயம் புலவர் வாரம் கொண் டாடப்பட்டது. சில நாள் அங்குச் சென்று கேட்டவற்றை நாள் குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். அன்று சான்றோர் சிலர் பேசியவற்றின் குறிப்புகளை அப்படியே ஈண்டுத் தருகின்றேன். 1948ஆம் ஆண்டு சனவரி 28ஆம் நாள் தொடங்கிப் புலவர் வாரங் கொண்டாடப்பட்டது. அந்த ஒரே ஆண்டுதான் நானும் நாள் குறிப்பு எழுதி வைத்துள்ளேன். அதுவும் அரைகுறையாக. தொடர்ந்து ஆண்டுதோறும் எழுதியிருப்பின் பல செய்திகள் இன்று தெரிந்திருக்கும். இயல்பாக என்பாலமைந்த சோம்பலால் அதனைச் செய்யாது விடுத்தேன். புலவர் விழா, தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில், நக்கீரர் கழகத்தாரால் நடத்தப் பட்டது. துரைக்கண்ணு முதலியாரவர்கள் தலைமையேற்றார்கள். பேராசிரியர் துரை.அரங்கனார், கோ.வடிவேலுச் செட்டியாரைப் பற்றிப் பேசினார். அப் பேச்சின் சுருக்கம். செட்டியார் மளிகைக் கடை வைத்திருந்தார். இவர் தமது 27ஆம் அகவையில்தான் கல்வி கற்கத் தொடங்கினார். எளிமை யாகப் பழகும் இயல்புடையவர் என்று கூறிவிட்டுக் கடவுள்கள் கற்பனை யென்று தத்துவ முறைப்படி விளக்கிக் கூறினார். பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியாரைப் பற்றிப் பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரணதுரைக்கண்ணன் பேசினார். அதன் சுருக்கம்; முதலியார், இளமையில் வறுமை நிலையில் வாழ்ந்தவர். அச்சுக் கோக்கும் தொழில் பார்த்து வந்தார். இத் தொழிலில் இருந்து கொண்டே தமது அயரா உழைப்பால், புலவராகவும் செல்வராகவும் உயர்ந்தார். தமிழ்ப் புலவரொருவர் செல்வராகவும் பலவீடுகளுக்கு உரிமையாளராகவும் ஊர்தியுடையவராகவும் விளங்கியமை பெரும் வியப்பிற்கும் பாராட்டுக்கும் உரியது. அவர்தம் இல்லங்களுக்கு நெய்தலகம், கடலகம், காவேரி எனப் பெயர்கள் வைத்திருந்தார். நீலகிரியிலும் ஒரு வளமனை இருந்தது. இப் பெருமகனார்க்கு நினைவுச்சின்னம் எழுப்புவது நம் கடமையாகும். அவ்வாறு செய்யின் தமிழர் சமுதாயத்திற்கே நன்மை தரும் என்று கூறினார். தமிழவேள் உமாமகேசுரனாரைக் குறித்துச் சக்கரபாணி நாயகர் என்பார் உரையாற்றினார். உண்மைகளை அப்படியே எடுத்து மொழிவதில் அஞ்சாமை யுடையவராக இருந்தார். அவர் குறிப் பிட்டவை: தமிழவேள் பார்ப்பனரை வெறுப்பவர். மொழி, நாடு இவற்றின் முன்னேற்றத்தைத் தடுப்போர் பார்ப்பனர். இவர்களைக் குறும்பர் கூட்டம் என்று குறிப்பிடுவார். அவர்களை எதிர்த்து அடக்குவதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பார். பார்ப்பனர் செயல்களை வெறுக்கும் இயல்புடையராயினும் தமிழுக்குத் தொண்டு செய்தோரைப் போற்றுவார். டாக்டர். உ.வே.சாமி நாத ஐயர் போன்ற பெருமக்களைப் பாராட்டத் தவறார். வடநாட்டில் காந்தியடிகள் எவ்வாறு வழக்கறிஞர் தொழில் நடத்தினாரோ அவ்வாறே தென்னாட்டில் தமிழவேள் அத்தொழிலை நடத்தினார். தமிழுக்காக உண்மையில் பாடுபட்ட பெரியோர் களில் தமிழவேளும் ஒருவர் எனக்குறிப்பிட்டார். உ.வே.சாமிநாத ஐயரைப் பற்றிச் சுப்பிரமணிய ஐயர் பேச இசைந்திருந்தார். ஆனால் அவர் வருகை தந்திலர். ஆதலின் தலைவரே உ.வே.சா.வின் புத்தகப் பதிப்பைப் பற்றிப் பாராட்டிப் பேசினார். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் குறித்துப் ப.இராம நாதப் பிள்ளை விரிவுரை நிகழ்த்தினார். ஞானியாரடிகளின் புலமை, சொல்வன்மை, தூயவாழ்க்கை, பல தமிழறிஞர்களை உருவாக்கியது முதலான செய்திகளை விரித்துரைத்தார். நேரம் மிகுதியாகி விட்டமையால் நான் கூட்டம் முடியுமுன்னர் எழுந்து விட்டேன். 1948 பிப்பிரவரி நான்காம் நாள் நிகழ்ந்த புலவர் விழாவிற்குச் சென்றேன். விபுலானந்த அடிகள் பற்றி மயிலை. சீனி.வேங்கட சாமி பேசினார். பேராசிரியர் கா.சுப்பிரமணியப் பிள்ளையைப் பற்றியும் பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிந்தோர் பெயர் நாள் குறிப்பில் எழுதப்படவில்லை. பொதுவாக இருவரும் பார்ப்பனீயத்தின் கொடுமைக்கு ஆளான வர்கள் என்றும் கா.சு.பிள்ளை பேராசிரியர் பதவியினின்றும் நீக்கப்பட்டார் என்றும் தந்தை பெரியார், துணைவேந்தராக இருந்த கே.வி.ரெட்டி அவர்களிடம் பரிந்துரை செய்து, மீண்டும் பேராசிரியர் பதவியில் அமர்த்தினார் என்றும் கூறப்பட்டது. மயிலை சீனி வேங்கடசாமி பேசும்பொழுது, நூல் நிலையத்துக் காக 1500.00 உரூவா விபுலாநந்தர் வேண்டிய பொழுது, அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பார்ப்பனர் ஒருவர் தடுத்துவிட்டார் என்றும், தமிழர் எழுதிய நூலைப் பாடத் திட்டத்தில் அமைக்க மறுத்துப் பார்ப்பனர் எழுதியதையே பாடமாக வைத்தனர் என்றும் குறிப்பிட்டார். அகிலத்தமிழர் மாநாடு 1948 பிப்பிரவரி பதினான்காம் நாள் மாலை, அகிலத் தமிழர் மாநாடு நடைபெற்றது. நான் சென்றிருந்தேன். பசுமலை நாவலர். ச.சோமசுந்தரபாரதியார் தலைமை ஏற்றார். அப்பொழுது தமிழ் நாட்டுச் சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்த சிவசண்முகம் பிள்ளையவர்கள், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க வந்திருந்தார். படத்தைத் திறப்பதன் முன் உரையாற்றினார். கருத்து வேறுபாடுடைய பல கருத்துகளை எடுத்துக் கூறிய தோடு, வள்ளுவர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். அப்பொழுதே கூட்டத்திற் சலசலப்பு ஏற்பட்டு விட்டது. பின்னர் அரசியல் பேசத் தொடங்கி விட்டார். திராவிட நாடு பிரிவினை பற்றித் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்திற் சிறு குழப்பம் ஏற்பட்டது. தலைவர் பாரதியார் அரசியற் பேச்சை நிறுத்துங்கள், வள்ளுவரைப் பற்றிப் பேசுங்கள் என்று இரண்டு மூன்று முறை கூறியும் அவர் விடவில்லை. மேலும் அதையே சாடத் தொடங் கினார். கூட்டத்திற் பலர் எழுந்து நின்று திராவிட நாடு திராவிடர்க்கே என முழக்க மிட்டனர். அப்பொழுதும் அவர் பேச்சைநிறுத்தவில்லை. பாரதியார் சற்று வலிந்து அவர் பேச்சை நிறுத்தினார். பின்னர் அரைகுறையாகப் பேச்சை முடித்து விட்டு வள்ளுவர் படத்தைத் திறக்க முயன்றார். ‘gl¤ij¤ âw¡fhnj! என்று கூட்டத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வள்ளுவர் உருவமா? இல்லை, இல்லை, அதனால் திறக்காதே? என்று காரணத்துடன் முழங்கினர். குழப்பத்துடன் முடிந்தது அந் நிகழ்ச்சி. அடுத்துச் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் படத்தைத் திரு.வி.க திறந்து வைத்தார். அவர் சொற்பொழிவில், கல்வி யமைச்சர் அவினா சிலிங்கனார். திருக்குறளிற் காமத்துப் பால் தேவையில்லாதது என்று பேசி வருகிறார். அவர்க்கு விடை சொல்ல வேண்டுமென்று விழைந்து வந்தேன். ஆனால் அவர் பேசி விட்டு எழுந்து சென்று விட்டார். எனினும் உங்களுக்குப் புகல்கின்றேன்- என்று கூறிக் காமத்துப் பாலின் இன்றியமையா மையை வற்புறுத்தியும் அது தமிழர் பண்பாடு என்பதை நிலை நிறுத்தியும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலான நூல்களைச்சான்று காட்டியும், தமது கருத்தை நிறுவினார். இறுதியில், தென்னாட்டுப் பிரிவினை இயக்கத்தை எவராலும் அழித்தல் இயலாது. தமிழர், தெலுங்கர், மலையாளி என இன்று தனித்தனியே பிரிந்திருப்பினும் நாளை ஒன்று பட்டே ஆதல் வேண்டும். அதற்குரிய சூழ்நிலையும் உருவாகத் தான் செய்யும். அன்று தென்னாடு பிரிந்தே தீரும் - என அழுத்தமாகக் கூறினார். தமிழரசுக்கழக மாநாடு சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானகிராமணி அவர்கள் தமிழரசுக் கழகம் என்னும் பெயரில் இயக்க மொன்று நடத்தி வந்தார். அதன் மாநாடு சென்னையில் நிகழ்ந்தது. மாநாட்டுக்குத் திரு.வி.க.வும் அழைக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் எவரோ ஒருவர் சில வினாச்சீட்டுகள் எழுதிக் கொடுத்தார். விடை வருமென ஆவலுடன் இருந்தார். ஆனால் மாறாகத் தடை வந்தது; அடியும் வந்தது, வெகுண்டெழுந்த தமிழரசுக் கழகத் தொண்டர்கள் அவரைப் பிழிந்தெடுத்து விட்டனர். குருதி சொட்டச் சொட்ட வெளியில் வந்து விழுந்தார் அவர். திரு.வி.க. தமக்கே உரிய முறையில் அழகு தமிழிற் பேசினார் அவர் பேச்சின் முடிவில் முதலில் தமிழ் நாடு; அடுத்தது திராவிட நாடு; அதன் பின் இந்தியா, இறுதியில் உலகம் என்ற கோட்பாடு வளர்க எனப் பேசி முடித்தார். சிலம்புச் செல்வர் உரையாற்றும் பொழுது, திரு.வி.க அவர்கள் திருவாசகத் தேனில் மூழ்கிக் கிடக்கும் ஒரு வண்டு. அத்தேனை மிகுதியாகக் குடித்து விட்டமையால் அந்த வண்டு மதி மயங்கிப் பேசுகிறது என நயமாகத் தாக்கி விட்டார். இந்தி எதிர்ப்பு மாநாடு பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடொன்று கூட்டினார். பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். கருப்புச் சட்டைக்குரிய பெரியார், காவியுடை யுடுத்த மறைமலையடிகளார்க்குத் தலைமைப் பொறுப்பை யளித்தார். திரு.வி.க. பாரதிதாசன், அண்ணா, ம.பொ.சி. நாரண துரைக்கண்ணன் முதலானோர் சொற்பொழிவாற்ற அழைக்கப் பட்டிருந்தனர். திரு.வி.க. அவர்கள் பேசும் பொழுது, தமிழ் அமைதி தரும் மொழி. இந்தி கொலை வெறி பிடித்த மொழி, காந்தியடிகள் வடநாட்டிற் பிறந்தமையாற்றான் கொலை செய்யப்பட்டார். அவர் தமிழ் நாட்டிற் பிறந்திருப்பின் அந்நிலைக்கு ஆளாகியிரார் என்பது என் துணிபு என்ற கருத்தை வெளியிட்டார். ம.பொ.சி அவர்கள் உரை நிகழ்த்துங்கால் ஓர் அருமையான கருத்தை உண்மைத் தமிழன் சொல்ல வேண்டிய கருத்தை எடுத்து மொழிந்தார். அஃது இன்னும் என் செவிகளில் வெண்கல மணியொலியென ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அம்மணி யொலியாவது: தமிழ்மொழி கருப்புச் சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; காவிச்சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; கதர்ச்சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; தமிழ் நாட்டில் உடற்சட்டை யெடுத்த ஒவ்வொரு வருக்கும் சொந்தம். அதனால் தமிழைக் காக்க வேண்டியது தமிழர் அனைவர்க்கும் கடமையாகும் என்பதாகும். ஒவ்வொரு தமிழனும் இப்படிக் கருதிவிடின் தமிழ் நாட்டில் எங்களுக்குத் தமிழிற் பாடஞ் சொல்லிக் கொடு எனக் கெஞ்ச வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்குமா? ஆங்கிலம் நம்மை அடிமையாக்கியிருக்குமா? இந்திதான் கோலோச்ச முந்துமா? உணர்வற்ற மாந்தராக - நாமமது தமிழரெனக் கொண்டு வாழ்வோமா? என் சொல்லி இரங்குவது? மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் நிறைந்திருந்தது. அப்பொழுது வலுத்தமழை கொட்டி விட்டது. அண்ணா உடனே எழுந்தார். தோழர்களே! வெளியூரிலிருந்து வந்த பலர் வெளியில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளேயிருக்கும் உள்ளூர்த் தோழர்கள் வெளியிற் சென்று நின்று கொண்டு, அவர்களை உள்ளே வர விடுங்கள். நீங்கள் நனைந்தால் வீட்டிற்குச் சென்று உடை மாற்றிக் கொள்ளலாம். அவர்கள் நனைந்தால் எங்கே போவார்கள்? என்று கூறி முடிக்குமுன் உள்ளிருந்தோர் வெளியேறினர்; வெளியில் நின்றோர் உட்புகுந்தனர். படைத் தலைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் படை மறவரை நினை வூட்டினர் அத்தொண்டர்கள். அன்று தொண்டர்கள் நிலை அது! கருஞ்சட்டைப் படைக்குத்தடை 1948 ஆகத்து 15 துக்கநாள் எனப் பெரியார் அறிவித்தார். அதை இன்பநாளாகக் கருதி நாமுங்கலந்து மகிழ்வது நல்லது என அண்ணா எழுதி விட்டார். இதனால் இருவர்க்கும் கருத்து வேறுபாடு தோன்றி இருவரும் தனித்தனியே ஒதுங்கி நின்றனர். அப்பொழுது கருஞ்சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டது. பெரியார் கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். திரு.வி.க.வும் கலந்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக அண்ணாவை அழைக்கவில்லை. எனினும் என்றுங் கருஞ் சட்டையணியாத அண்ணா, நாவலர் நெடுஞ்செழியனு டையை கருப்புச் சட்டையை வாங்கியணிந்து கொண்டு தாமே மேடைக்கு வந்துவிட்டார். பலரும் பேசினர். அண்ணாவின் பேச்சை எதிர்பார்த்துக் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதனையறிந்து கொண்ட ஐயா, தம் கைத்தடியால் மேடையில் தட்டி, பொறுத் திருங்கள். அண்ணாதுரை பேசுவார். இப்பொழுது மற்றவர்கள் பேசட்டும் என்று கூறினார். ஒரே ஆரவாரம். பலரும் பேசிய பின் திரு.வி.க.அண்ணாவைப் பேச அழைக்கும் போது, தமிழ்ச் சிங்கம், தமிழ் அரியேறு எனக் குறிப்பிட்டார். புகழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள இயலாத அண்ணா, நாவைக் கடித்துக் கொண்டு நாணித் தலை குனிந்தார் பின்னர் அண்ணா பேசினார் அண்ணாவின் பேச்சில் கனல் சிந்தியது. தமிழாசிரியர் கழகம் தமிழாசிரியர் நிலைமையைக் குறிக்கும் வகையில், சென்னையில் பேட்டை தோறும் துக்க வாரம் என்ற பெயரில் தாத்தா மயிலை. சிவமுத்து கூட்டங்கள் நடத்தினார். நானும் நாவலர் நெடுஞ் செழியனும் முத்தியாலுப்பேட்டையிற் பேசினோம். மற்றொரு பேட்டையில் நடந்த கூட்டத்தில் தலைமை தாங்கிய எ.எ. அருணகிரிநாத முதலியார், கல்வியமைச்சரைக் கடுமையாகத் தாக்கிப் பேசிவிட்டார். இது கல்வியமைச்சருக்கு எட்டி விட்டது. தாத்தா, கல்வியமைச்சரிடம் வேண்டுகோள் அறிக்கை தரும் பொருட்டுச் செவ்வி (பேட்டி)க்காகக் காத்திருந்தார். தமிழாசிரியர் கழகத்தலைவர் என்றவுடன், என்னைக் கண்டபடி திட்டியவனைப் பார்க்க முடியாது என்று அமைச்சர் மறுத்து விட்டார். கூட்டத் தலைவர் அருணகிரிநாதர் பேசியதைத் தமிழாசிரியர் கழகத் தலைவர் என்று தவறாகப் புரிந்து கொண்டு அவ்வாறு சொல்லி விட்டார். தாத்தா சலிப்படையவில்லை. சின்னாட் சென்றபின் மறுமுறையும் சென்றார். மயிலை.சிவ.முத்து என்ற பெயரைப் பார்த்ததும் அமைச்சர் உள்ளே அழைத்தார். இவ்வளவு நல்ல பெயருடைய நீங்கள் அன்று என்னைத் தாறுமாறாக ஏன் திட்டினீர்கள்? என வினவ, நான் தமிழாசிரியர் கழகத்துக்குத் தலைவர்; கூட்டத் தலைவர் பேசியதை நான் பேசியதாகக் கருதி விட்டீர்கள் என்று கருதுகின்றேன். அவரும் அப்படியொன்றும் திட்டவில்லை; சிறிது உணர்ச்சி வயப்பட்டு வேகமாகப் பேசினார். அவ்வளவுதான் என்று தாத்தா மறுமொழி தந்தார். சரி, அது போகட்டும், தமிழுக்கோ தமிழாசிரியர்க்கோ நான் தீமை செய்து விடுவேன் என்றா கருதுகிறீர்கள்? நானும் தமிழன் தானே! கனவிலும் தீமை செய்ய நினைக்கமாட்டேன் என் சொல்லை உறுதியாக நம்பி நீங்கள் போய் வரலாம் என்று விடை யளித்த அவர், இன்னொன்றும் உங்களுக்குச் சொல்கிறேன்; சிவ.முத்து என்ற நல்ல பெயருடைய நீங்கள், உங்கள் கழகத்தில் சுயமரியாதைக் காரன் எவனாவது இருந்தால் சொல்லுங்கள்; நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். தாத்தாவா காட்டிக் கொடுப்பார்? அப்படி யெல்லாம் யாருமே எங்கள் கழகத்தில் இல்லையே என்று கூறி மீண்டார். உடனே பட்டதாரி ஆசிரியர்க்கு நிகராகத் தமிழாசிரியர்க்கும் சம்பளம் கொடுக்க ஆணை பிறப்பித்துத் தம் வாக்குறுதியை நிறைவேற்றினார். விளங்கிக் கொள்ளும் ஆற்றலுடையோர் அமைச்சரானால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதை மெய்ப்பித்துக் காட்டி விட்டார். இந்தி எதிர்ப்பு மறியல் உடல் நலக்குறைவால் 1948 ஆகத்து எட்டாம் நாள் மேலைச் சிவபுரிக்குப் புறப்பட முடிவு செய்திருந்தேன். மாலை புலவர் த.மா.திருநாவுக்கரசு வந்து, நாளை முதல் பள்ளிகளுக்கு முன் இந்தியெதிர்ப்பு மறியல் போராட்டந் தொடங்குகிறது. அண்ணா, முதல் சர்வாதிகாரி, இது பெரியார் ஏற்பாடு என்றார். கேட்டதும் உடல் நன்றாகி விட்டது. உடனே கடைக்குச் சென்று கருப்புத் துணியெடுத்து, இரவோடிர வாகச் சட்டை தைத்துக் காலையில் அணிந்து, பள்ளிக்குச் சென்றோம். தலைமையாசிரியர் முதல் அனைவரும் மருண்டு மருண்டு பார்த்தனர். jiyikaháÇa® ‘v‹d ï¥go! என்றார். நாங்கள் தமிழாசி ரியர்கள். தமிழுக்குத் தீங்கு வருகிறது. எங்கள் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளவே தவிர, வேறு எந்த நோக்கமு மில்லை. அதுவும் ஒரு நாள் மட்டுந்தான் என்ற விடை கேட்டு, அவரும் பேசாதிருந்து விட்டார். மொழியாசிரியர் மாநாடு மொழியாசிரியர் மாநாடொன்று தாத்தாவால் கூட்டப் பட்டது. தந்தை பெரியார் தலைவர். அவர் காலடியில் நான் அமர்ந்திருக்கிறேன். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உரையாற்றும் பொழுது, தமிழ் மக்களுக்குத் தமிழன்தான் தலைவனாக இருக்க வேண்டும். ஒரு தெலுங்கனோ, மலையாளியோ, கன்னடியனோ தலைவனாக இருத்தல் கூடாது என்று உரை யாற்றிக் கொண்டிருந்தார். பெரியார் உடனே மேசை மேல் இருந்த தாளையெடுத்துத் தமிழ் ஒழிக என்று பெரிய எழுத்தில் எழுதி வைத்துக் கொண்டார். முத்தமிழ்க்காவலர் பேச்சின் நோக்கமும் பெரியார் எழுதி வைத்த நோக்கமும் எனக்கு விளங்கவில்லை. இடையில் அழகு வேலன், திருமாவளவன், நான் மூவரும் இந்தியெதிர்ப்புப் போரில் நாங்கள் ஈடுபடவும் அதனால் ஏற்படும் எவ்வகை ஈகத்தையும் (தியாகத்தை) ஏற்கவும் அணிய மாக (தயாராக) உள்ளோம் என எழுதிக் கையொப்பமிட்டு ஒப்புதலுக்காக ஐயாவிடம் கொடுத்தோம். முத்தமிழ்க் காவலர் உரையாற்றிய பின் ஐயா பேசத் தொடங்கினார். முதலில் தமிழ் ஒழிய வேண்டும், மலையாளம், கன்னடம், தெலுங்கு எல்லாமே ஒழிந்து, ஆங்கிலந்தான் ஆள வேண்டும். m¥nghJjh‹ ïªj¤ jÄH‹ cU¥gLth‹! தமிழன் தலைவனாக இருக்க வேண்டும் என்று சொல் கிறார்கள். எந்தத் தமிழனுக்கு யோக்யதை இருக்கிறது? இருந்தால் வரட்டுமே. eh‹ V‹ ïªj¥ ghLgl nt©L«? என்று பேசிவந்தவர், தணிந்து, தமிழ் ஒழிய வேண்டும் என்று வேகத்தில் பேசி விட்டேன். தமிழ் இல்லை யென்றால் இந்தத் தமிழன் உருப்பட முடியாது. தமிழைக் காப்பாற்ற இந்தியை நாம் ஒன்று கூடி ஒழித்தே ஆக வேண்டும். இப்போது கூட இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் எந்தத் தியாகமும் செய்யக் காத்திருப்பதாகவும் இங்கே மூணு பிள்ளைகள் எழுதிக் கொடுத்தார்கள். என்னைக் கேட்டால் வேண்டா மென்றுதான் சொல்லுவேன் என்று பேசிக் கொண்டிருந்தார். அருகிலிருந்த நான் இந்தியை எதிர்க்க எந்தத் தமிழாசிரியன் வந்தான்? என்று நாளை, தமிழாசிரியர்களைக் குறை கூறுவீர்களே என்றேன். நான் குறை சொன்னது அந்தக் காலத்துப் பண்டிதர் களை, இப்ப இருக்கிற பிள்ளைகள், நாம எட்டடி தாண்டினால் பத்தடி தாண்டுகிற பிள்ளைகள். நீங்கள் வெளியிலே வந்து தொண்டு செய்வதைவிட, உள்ளேயிருந்து தொண்டு செய்வது தான் நல்லது. நீங்கள் வந்து விட்டால் வேறொருத்தன் அந்த இடத்திலே உட்கார்ந்து கொள்ளுவான். நாங்கள் சமுதாயத்தைச் சுத்தப் படுத்திக் கொண்டேயிருப் போம். அவன் மாணவர் மனத்தை அழுக்காக்கியே அனுப்பிக் கொண்டிருப்பான். இப்படியே போனால் சமுதாயம் எப்போது சுத்தமாவது? அதனால் நாங்கள் வெளியிலிருந்து சுத்தப் படுத்து கிறோம். நீங்கள் உள்ளேயிருந்து சுத்தமாக்கி மாணவர்களை அனுப்பிக் கொண்டிருங்கள். அதுதான் சமுதாயத்துக்கு நல்லது. என்ற மணி மொழிகளை உதிர்த்தார். திருக்குறள் மாநாடு அந்நாளில் திருக்குறள் மாநாடு ஒன்று பெரியார் கூட்டு வித்தார். நீண்ட பந்தல்; நுழைவுக் கட்டணம் இரண்டு உரூவா; கட்டணம் வைத்துங்கட்டுக் கடங்காத கூட்டம். ehty® nrhkRªjughuâah®, âU.É.f., சாத்தூர் வழக்கறிஞர் கந்தசாமி முதலியார் மூவர் தலைமையிலும் மூன்று நாள் நடைபெற்றது. தலைவர்கள் வருகிறார் களெனத் தெரிந்ததும் பெரியார் மேடையிலிருந்து இறங்கி வாயிலுக்கு ஓடி அவர்களை வரவேற்று அழைத்து வந்த காட்சி, பெரியாரின் எளிமை, பணிவு, தொண்டுள்ளம் இவற்றை விளக்கிக் காட்டியது. திருக்குறள் மாநாடென்று பெயர் சூட்டி, நுழைவுக் கட்டணமாக இரண்டு உரூவா வைத்தும், இவ்வளவு பெருங் கூட்டம் திரண்டு வந்துள்ளதென்றால், இஃது என் கெழுதகை நண்பர் ஈ.வே.ரா. ஒருவரால் மட்டும் இயலுமே தவிரப் பிறரால் இயலாது எனத் திரு.வி.க. புகழ் மாலை சூட்டினர். அண்ணா பேசும் பொழுது திருக்குறளின் அருமை பெருமைகளை யெடுத்துக் கூறிவிட்டு, தமிழனுக்கு உகந்த இத்திருக்குறள் நூலை இவ்வளவு காலம் ஏன் நாங்கள் பரப்பவில்லையென்று நீங்கள் எண்ணலாம். நாங்கள் தொட்டிருந்தால், சுயமரியாதைக் காரன் தொடுகிறான்; இதில் ஏதோ ஆபத்திருக்கிறது என்று மக்கள் எண்ணி விடுவர். திருக்குறள் பரவாமற் போய்விடும், இப்போது கல்வியமைச்சர் அவினாசி லிங்கனார் தொட்டு விட்டதால், நாங்கள் தொடுகிறோம் என்று நகைச்சுவைபடப் பேசினார். திருக்குறளை, அவினாசிலிங்கனார் பள்ளிகளுக்குள் நுழைய வழி வகுத்தார், பெரியார், மக்கள் மன்றத்திற் பரவ வழியமைத்தார். திருமண முயற்சி 1948 சனவரி 25ல் தைப் பூசத்தை முன்னிட்டுத் திருவொற்றி யூருக்கு, உறவினர் அழைப்பையேற்று அழகுவேலன் சென்றார். என்னையும் உடனழைத்துச் சென்றார். m§nf mt® cwÉdÇ ilna RURU¥òl‹ cyÉtU« ïs« bg©iz¢ R£o¡ fh£o ‘ï¥ bg©iz¥ gh®¤jhš v‹d Ãidî njh‹W»wJ? என்றார், அழகான பெண், துடிப்புள்ள பெண், அறிவுள்ள பெண் என்று நான் சொன்னேன். ‘ï‹D« VnjD« njh‹W»wjh? என்றார். எனக்கொன்றும் தோன்றவில்லை என்றேன். வயது எவ்வளவு மதிக்கலாம் என்றதும் 17 அல்லது பதினெட்டிருக்கும் என்றேன். அவள் ஒரு விதவை என்று அண்ணன் கூறியதும் துடிதுடித்து விட்டேன். அப்பொழுதே என் நெஞ்சத்துடிப்பை, வேதனையைப் பாடலாக வடித்து வைத்தேன். புதருள் கனி என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. பின்னர் மறுமணத்தை வற்புறுத்திக் கண்மூடி வழக்கம் என்ற தலைப்பிற் கதையொன்றெழுதி வெளியிட்டேன். ghliyí« fijiaí« go¤j m©z‹, ‘ï¥gobašyh« vGJ« Ú braȉ fh£L thah? என்று வினவினார். அப்படியானால் திருவொற்றியூரில் பார்த்த அப்பெண்ணைத் திருமணஞ் செய்து கொள்கிறாயா? என்றார். பெண், பெண்ணின் பெற்றோர், இசைய வேண்டாமா? என்றேன். அவள் அடுத்த வீட்டுப் பெண், நீ எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் உன்னைப் பார்த்திருக்கிறாள். உன்னை விரும்புகிறாள். பெற் றோரிடமும் கூறி விட்டாள். அவர்களுக்கும் உடன்பாடுதான். என்றவுடன் முழுமனத் துடன் நானும் இசைந்தேன். ஆனால் பெண் வீட்டார் என் சாதகம் கேட்டதால் அஃது அன்றோடு நின்று போயிற்று. g¢ira¥g‹ fšÿÇ¥ nguháÇa® xUtU« mt® e©gU« fl‰fiuÆš v‹Dl‹ ciuaho¡ bfh©oU¡F« bghGJ ‘Ú§fŸ v‹d rhâ? என வினவ, நான் சாதியில் லாதவன் என்றேன். நல்ல வளமான இடத்தில் பிறந்த அழகான ஒரு பெண்ணுக்கு மணமகன் வேண்டும். அவர்கள் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். c§fis ‘KjÈahuh? என்று அவர்கள் கேட்டால் ஆம் என்று சொல்லுங்கள். சொல்லவிரும்பாவிடில் தலையை அசைத்துக் காட்டினால் மட்டும் போதும். பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றனர். பொய் சொல்லித் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. துணிந்து சாதி பாராமல் வந்தால் செய்து கொள்ளு வேன் என்று கூறி விட்டேன். அதுவும் நின்று போயிற்று. வாணியண்ணன் (கவிஞர் வாணிதாசன்) சென்னைக்கு வரும் போதெல்லாம் என் திருமணம் பற்றியே பேசுவார். குடும்பம் நொடித்து விட்டதால் திருமணத்துக்குப் பணமில்லை என்று சொன்னேன். பெண்ணுக்கு ஏற்பாடு செய். பணம் நான் தருகிறேன்? என்று கூறினார். தாத்தா மயிலை.சிவ.முத்துவிடம் முடியரசன் இன்னுங் குழந்தையாகவே இருக்கிறார்; பெண் பாருங்கள், நாம் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைப்போம் என்று வாணி கூறியிருக் கிறார். தாத்தாவும் டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும் ஏதோ ஏற்பாடு செய்து விட்டனர் வழக்கம் போல் ஒரு நாள் தாத்தா என்னைத் தருமாம்பாள் அம்மையார் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சென்று, நான் சொன்ன பிள்ளை இவர்தான். பெயர் முடியரசன் என்று அறிமுகப் படுத்தினார். இந்தப் பிள்ளையைத்தான் நான் அடிக்கடி பார்த்திருக் கிறேனே. நல்ல பிள்ளையாச்சே. நம்ம மணிமேகலையை ஏற்பாடு செய்து விடுவோம். நம்ம நடராசனிடம் சொல்லி விடுகிறேன் என்று அம்மையார் சொன்னார்கள். மணிமேகலை யார்? நடராசன் யார்? என்பதெல்லாம் எனக்கு இன்றும் தெரியாது. அதற்குள் புதுக்கோட்டையில் பெண் பார்த்திருப்பதாக என் நண்பர் எழுதியிருந்தார். வாணியண்ணனுக்கு எழுதினேன். நூறு உரூவா எனக்கு விடுத்து, உடனே சென்று முன்னேற்பாடுகளைச் செய், அதற்குள் அறுவடை முடிந்து விடும். பிறகு பணம் தருகிறேன் என்று எழுதியிருந்தார். 1949 பிப்பிரவரியில் திருமணம் நடந்தது. மார்ச்சு மாதம் என் துணைவி கலைச்செல்வியைச் சென்னைக்கு அழைத்து வந்தேன். நண்பர்கள் இல்லத்தில் தங்கியிருந்தோம். அப்பொழுது தங்கசாலைத் தெருவிலுள்ள, பள்ளி முன், மணியம்மையார் தலைமையில் மகளிர் மட்டும் இந்தி யெதிர்ப்பு மறியல் நடத்தினர். என் துணைவி, அழகு வேலன் துணைவி, திருமாவளவன் துணைவி மூவரும் மறியற் போராட் டத்திற் கலந்து கொண்டனர். பணி விலகல் திருமணத்திற்குப் பின் ஒரே திங்கள்தான் சென்னையில் ஆசிரிய ராகவிருந்தேன். என் அன்னையார் வற்புறுத்தலால் விலக முடிவு செய்து விட்டேன். பலர் தடுத்தும் இசைந்திலேன். இங்கிருந்தால் உங்கள் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் ஏற்படும். ஊருக்குச் சென்றால் இந்த அளவு வளர்ச்சியிராது. பொருட்பற்றாக் குறை யேற்படின் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் தாத்தா எடுத்து ரைத்துங் கேட்கவில்லை. மார்ச்சு மாத இறுதியில் விலகல் மடல் பள்ளியிற் கொடுத்து விட்டுப் பயணமானேன். அழகு வேலண்ணனும் தொடர் வண்டி நிலையத்திற்கு வந்திருந் தார். பிரிவு வேதனையுடன் உரையாடிக் கொண்டிருந் தோம். வண்டிபுறப்பட அறிவிப்பு மணியடிக்கப்பட்டது. அண்ணன் சட்டைப்பையிலிருந்து ஒரு மடலை என்னிடம் கொடுத்தார். அது விலகல் மடல். என்ன அண்ணே இப்படிச் செய்து விட்டீர்கள்! என்றேன். ‘Ú Æšyhj ïl¤âš vd¡ bf‹d ntiy? எனக் கூறி ஓவென அழுது விட்டார். அத்துயரக் காட்சி, என் கண்ணிற்படக் கூடாதென்று வண்டி புறப்பட்டு விட்டது. விருத்தாசலம் வழியே செல்லும் விரைவு வண்டிக்குச் சீட்டு வாங்கியிருந்தோம். கும்பகோணத்திற்கும் தஞ்சைக்கும் இடையில் செல்லும்போது நன்றாக விடிந்து விட்டது. வண்டி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. இது என்ன கட்டை வண்டி மாதிரி மெதுவாகப் போகிறதே என்றேன். ஆம் இது கட்டை வண்டி தானே; கட்டையாற் செய்த வண்டிதானே என் நகைச்சுவைபட என் மனைவி கூறினார். தஞ்சாவூரில் வண்டி நின்றது. அடடா! இது என்ன தஞ்சா வூருக்கு வந்திருக்கிறோம் என்று பதறினேன். அருகிலிருந்தவர் என் பயணச்சீட்டை வாங்கிப் பார்த்து, நீங்கள் காடு லைன் வழி செல்லும் எக்சுபிரசுக்கு டிக்கெட் வாங்கியிருக்கிறீர்கள். இது மெயின் லைனில் செல்லும் பாசஞ்சர் வண்டி என்றார். அப்பொழுதுதான் வண்டி மாறியநிலை தெரிந்தது. அண்ணனைப் பிரியும் வேதனைக் குழப்பம் இப்படி மாற்றி விட்டது. பின் தஞ்சையில் இறங்கி மேலைச் சிவபுரி வந்து சேர்ந்தோம். வேலை தேடும் படலம் சென்னையிலிருந்து விலகி வந்ததும் வேலை கிடைக்காமல் எட்டுத் திங்கள் ஊர் ஊராக அலைந்தேன். பெரியகுளம் மீ.சு.இளமுருகனார் என் வேலைக்காகப் பெருமுயற்சி யெடுத்துக் கொண்டார். தம் கைப்பொருளைச் செலவிட்டு அவரும் அலைந்தார். வேலையின்றிப் பெரியகுளத்தில் என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்த நாளெல்லாம் பா.கு.இராமசாமி, இலக்கணன் என்ற நண்பர்கள் புரிந்த உதவிகள் என்றும் நினைவு கூரத்தக்கன. வேலை யின்மையால் வேதனை எய்தி ஐந்நூறு உரூவா கொடுங்கள், பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன் என்று பா.கு.இராமசாமி யிடம் வேண்டினேன். அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்; வேலை கிடைக்கும் வரை குடும்பத் துடன் என் வீட்டில் தங்குங்கள்; வேண்டிய உதவிகளை யெல்லாம் நான் செய்கிறேன் என்று அன்பு படர மொழிந்தார். கடைசியில் மி,சு.இளமுருகனார் பெரு முயற்சியால் பெரிய குளத்திலேயே மாவட்டக்கழகப் (டிட்ரிக்போர்டு) பள்ளியில் வேலை கிடைத்தது. ஆணையில் 45உரூவா சம்பளம் குறிக்கப் பட்டிருந்தது. நேரிற் சென்று, சென்னையில் 64 உரூவா வாங்கிக் கொண்டிருந்தேன்; இவ்வாணையில் 45 என்றிருக்கிறது. சம்பளத்தை மிகுதிப்படுத்துமாறு வேண்டினேன் தவறுதலாகத் தட்டச்சு செய்யப்பட்டுவிட்டது என்றார் தலைமையாசிரியர். எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்றேன். நாற்பதுதான் உங்களுக்குரிய சம்பளம் என்றதும் வேலை வேண்டாமென வந்து விட்டேன். அழகின் சிரிப்பு மணப்பாறைக்கு அருகிலுள்ள மறவனூரில் சுப.சண்முக சுந்தரம் என்ற நண்பர் இல்லத்திற் சில நாள் தங்கினேன். அப்பொழுது கோவையில் முத்தமிழ் மாநாடு கூட்டப்பட்டது. பாட்டுப் போட்டியும் வைத்திருந்தனர். அழகின் சிரிப்பு எனும் தலைப்பிற் பாடல் வேண்டுமெனக்குறித்திருந்தனர். பாடல் வந்து சேர வேண்டிய இறுதி நாளும் குறிக்கப்பட்டிருந்தது. சண்முக சுந்தரம்,போட்டிக்குப் பாடல் எழுதுமாறு வற்புறுத் தினார். சரி, சரி யென்று நாளைக் கடத்தினேன். பாடல் எழுதாமலேயே ஒரு நாள் மாலை பெரிய குளத்துக்குப் புறப்பட்டேன். பாடல் எழுதவில்லையே என நண்பர் வருத்தப் பட்டுக் கொண்டார். சரி, தாளும் எழுது கோலுங்கொடு; தொடர் வண்டியில் எழுதி, நாளை அஞ்சலிற் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னேன். ‘Mkh, ï¤jid ehŸ vGjÉšiy; bjhl® t©oÆšjh‹ vGj¥ ngh»whnah? என்று சலிப்புடன் கூறித் தாளும் எழுது கோலுங் கொடுத்தார். மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் வரும் வரை, தொடர் வண்டியில் எழுதாமலே வந்து விட்டேன். இரவு, திண்டுக் கல்லிலிருந்து பெரியகுளம் செல்லும் கடைசிப் பேருந்து சென்று விட்டது. காலை நான்கு மணிக்குத்தான் வண்டியென்று கூறினர். இரவு முழுவதும் விழிப்பு, எவ்வளவு நேரந்தான் விழித்துக் கொண்டிருப்பது? பாடல் எழுதலாமே என்று அங்கிருந்த விளக்குக் கம்பத்தின் கீழ் அமர்ந்து எழுதினேன். அப்பொழுது பேருந்து நிலையம் வெறும் பொட்டலாகத் தான் இருக்கும். எழுதி முடித்து அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தேன். மணி நான்காயிற்று. பேருந்தேறிப் பெரியகுளம் அடைந்தேன். காலைக்கடன்களை முடித்து, பாடலுக்குப் படியெடுத்துக் கொண்டு மணி பதினொன்றுக்கு மேல் அஞ்சல் நிலையம் சென்றேன். கட்டு எடுத்து விட்டசெய்தியறிந்து வருத்தத்துடன் மீண்டேன். மறுநாள், போட்டியின் கடைசி நாள். வழியில் மீ.சு.இளமுருகனாரைக் கண்டேன். செய்தியைக் கூறினேன். பாடலைப் படித்துப் பார்த்தார். இது பரிசில் பெறத் தகுந்த பாடல் என்று கூறி, கூடு வாங்கி வந்து ஒட்டி, வெற்றிலைக் குன்று (வத்தலக்குண்டு) அஞ்சலிற் சேர்த்து விடுமாறு, பேருந்து நடத்துநர் ஒருவரிடம் கொடுத்து விட்டார். 1950இல் மாநாடு நடைபெற்றது. முதற்பரிசில் என் பாடலுக்கும் இரண்டாம் பரிசில் வாணியண்ணனுக்கும் (வாணி தாசன்) கிடைத் திருப்பதாகத் திராவிட நாட்டிற் படித்தேன். ஆனால் பரிசில் வந்து சேரவில்லை. பிறகு சிவகங்கையில் நடந்த தி.மு.க. மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன், ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசிலாக அளித்தார். சிலநாளில் அதையும் திருடன் கவர்ந்து சென்று விட்டான். கண்ணீர்த்துளி 1949இல் திராவிடர் கழகத்திலிருந்து கண்ணிர்த்துளிகள் பிரிந்து செல்லும் நேரம், நானும் ஒரு கண்ணீர்த்துளி, பொன்னி யிதழில் கண்ணீர்த்துளியில் நான் எழுதியதும் வெளி வந்தது. அப்பொழுது புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தி லிருந்து பிரியாதிருந்த தோழர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது. முதலிற் பிரிந்து வந்து மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்து கொண்ட தோழர் இராம. கலியாணசுந்தரம் வீட்டில் அக்கூட்டம் நடைபெற்றது அந் நிகழ்ச்சிக்கு என்னைத் தலைவராகப் போட்டார்கள். நான் தலைமை யேற்றுப் பேசும்பொழுது பிரிந்து வந்த என் தலைமையில், பிரிந்து வராத தோழர்களுக்குப் பாராட்டு நடைபெறு கிறது. காரணம் அமைப்பு முறையில் நான் பிரிந்தாலும் உள்ளத்தால் ஐயாவைப் பிரியவில்லை. ஐயாவை மறந்தவர், தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விடுவோன் ஆகிவிடுவான். தலைவர்கள் இன்று பிரிந்திருக்கிறார்கள். நாளை ஒன்று கூடினும் கூடலாம். தொண்டர்களாகிய நம்முட் பிரிவுணர்ச்சி தலைகாட்டுதல் கூடாது. நமக்கு ஐயாவும் வேண்டும். அண்ணாவும் வேண்டும். அண்ணா அணியைச் சேர்ந்தோர் ஐயாவையோ, ஐயா அணியைச் சேர்ந்தோர் அண்ணாவையோ பழித்துப் பேசுதல் கூடாது. பேசினால் திராவிட இனத்துக்குத் தீங்கு செய்தவராவோம் எனப் பேசினேன். அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தாரே தவிரக் கடைசி வரையில் ஐயாவைப் பிரியவே இல்லை. ஐயா கூட அண்ணாவை இழி சொற்களால் திட்டியதுண்டு. அண்ணா மறு மொழியே சொன்னதில்லை. நம்மைப் பண்படுத்தவே ஐயா அவ்வாறு பேசுகிறார் என்று கூறுவார். பிரிந்த பொழுது, ஐயா படத்தை வீடுகளிலிருந்து கழற்றியவர் பலருண்டு. தலைவர் படங்களை மாட்டாதிருந்த நான், பிரிந்த பின்புதான் ஐயா படத்தை என் வீட்டில் மாட்டி வைத்தேன். அப்பொழுதும் அண்ணா படம் மாட்டவில்லை. நேரு காலத்தில் தி.மு.கழகத்தைத் தடைசெய்யப் போவதாக ஒரு செய்தி வந்தது. அப்பொழுது பல தோழர் இல்லங்களில் அண்ணா படம் மறைக்கப் பட்டது. அந் நேரத்தில்தான் அண்ணா படத்தைத் தேடி வாங்கி என் இல்லத்தை அழகு படுத்தினேன். மீண்டும் ஆசிரியப்பணி காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியப் பணியாற்றிய ஞானவேல், இராம.பெரியகருப்பன் (தமிழண்ணல்) இருவர் வாயிலாக அப்பள்ளிக்குத் தமிழாசிரியர் தேவை என்பதறிந்து, முயன்று 1949 இறுதியில் அங்குப் பணியில் அமர்ந்தேன். பணியிற் சேர்ந்த மறுநாளே, மீ.சு.உயர் நிலைப் பள்ளியில் ஒரு கருப்புச் சட்டைக்காரர் வந்திருக்கிறாராமே என்று ஒரு குரல் வந்தது. குரலுக்கு உரியவர் கம்பனடிப் பொடி யென்ற சா.கணேசன்தான். ஆனால் நாளடைவில் அவர், என்பால் அன்புபூண்டொழுகினார். அன்று முதல் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை, பல்வேறு எதிர்ப்புக்குரல்களைக் கேட்டுக் கொண்டுதான் வாழ்ந்து வந்தேன், குரல்கள் தோற்றனவேயன்றி என் கொள்கைகள் தோற்கவில்லை. எங்கள் பள்ளியில் வழிவழியாகப் பார்ப்பன ஆசிரியர்களே தொண்ணூற்றைந்து விழுக்காடு பணியிலிருப்பர். அதனால் அவர்தம் கை ஓங்கியிருக்கும். தந்திரமாகச் சில குறும்புகள் செய்வர். முளையிலேயே அவற்றைக் கிள்ளி யெறிந்து விடுவோம். தமிழையோ தமிழனையோ அவர்களுக்குரிய புத்தி சாலித் தனத்தோடு இகழ்ந்த அறிகுறி தெரிந்தாற் போதும்; நானும் தமிழண்ணலும் புலிப் போத்தாக மாறிவிடுவோம். ஓராசிரியர், முதலமைச்சர் பக்தவத்சலனாரை அவன், இவன் என்று பேசிவிட்டார். உடனே போர்க்கோலம் பூண்டு விட்டேன். ஆசிரியர் சிலர் தடுத்தமையால் அவர் அடிபடாமல் தப்பினார். நஞ்சு பூசப்பட்ட வஞ்சக வலைகளுக்கு இடையில் நின்றுதான் பணிபுரிந்து வந்தோம். நாங்கள் இருவரும் அமைதியானவர் கள்தாம். ஆனால் எவரேனும் சீண்டிவிட்டால், உறங்கும் புலியை உசுப்பிவிட்ட நிலைதான். எனினும் அனைவரும் ஒரு குடும்பவுணர் வுடன்தான் பணிபுரிந்து வந்தோம். தலைமையாசிரியர் கே.ஆர்.சீனிவாச ஐயர் எங்கள் பால் அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். எங்களுக்குப் பொருட் பற்றாக்குறை ஏற்படின் அவர்தான் துணை நிற்பார். அவருடைய அறைக்குள் நுழையு முன்னே என்ன K.S.D. (கா.சு.துரைராசு என்ற என் பெயரை ஆங்கிலத்திற் சுருக்கி அவ்வாறழைப்பர்) பாத்துக் கேளுங்கோ; ரொம்பக் கேட்டுறாதேள் என்பார். அதிகம் தேவையில்லை; ஒரு முப்பது போதும் என்போம் அப்படியா! டே காசி! (ஏவலர் பெயர்) ஆத்துக்காரியண்டை போய். K.S.D.¡F முப்பது ரூபா வேணும்ன்னு சொல்லி வாங்கிண்டு வாடா என்பார் பணம் வந்து சேரும். பாடங்கள் வாயிலாக மட்டுமின்றி, மாணவர் மன்றம் வாயிலாகவும் மாணவர்க்குத் தமிழுணர்வூட்டுவோம். அவர்கள் ஆர்வத்தையும் வளர்ச்சியையும் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதன் வாயிலாகக் காட்டுவர். ஒரு நாள் தலைமை யாசிரியர் என்னை யழைத்தார். பசங்க இங்கிலீஷ்லே ரொம்பக் குறைச்சலா மார்க்கு வாங்குறாங்க; கொஞ்சம் பாத்துக்கங்கோ என்றார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆங்கில ஆசிரியர்களை அழைத்துச் சொல்லுங்கள் என்றேன். ‘mJ rÇ; gr§f jÄœ¥ ghiõny buh«g m¡fiw fh£wh§nfh, mij¡ bfhŠr§ bfhw¢R¡f§nfh? என்றார். ‘m¥goahdhš v‹ flikia¡ Fiw¤J¡ bfhŸs¢ brhš»Ö®fsh? என்றேன், இல்லேயில்லே! பசங்ககிட்டே இங்கிலீஷை நன்னாப் படிக்கச் சொல்லுங்கோ; நீங்க சொன்னாக் கேப்பாங்க என்றார். பிள்ளைகளின் தமிழுணர்வு அவர் களுக்கு ஏதோ அச்சத்தை உண்டாக்கி விட்டது. ஒரு முறை, என் மனைவி ஆண் மகவொன்று பெற்றார். இல்லத்திற் பெரியவர்கள் துணையின்மையால், விடுப்பெழுதித் தலைமையா சிரியர்க்கு விடுத்தேன். பெற்றுக்கொண்ட அவர், சனியன்; சனியன் இதே எழவாப் போச்சு என்று சொல்லியிருக்கிறார். (இந்த இரு சொல்லும் அவர் வாயில் இயல்பாக வரும்) இதை யறிந்த நான், விடுப்பு வேண்டாமென்று பள்ளிக்குச் சென்று, வழிபாட்டுக் கூடத்தில் ஆசிரியர்களுடன் நின்றேன். v‹id¥ gh®¤J É£l jiyikaháÇa®, ‘v‹d K.S.D.ä› nf£oUªnjns! என்றார். ஆம். விடுப்புக் கேட்டேன்; நீங்கள் சொன்ன சொற்கள் எனக்கு வேதனையைத் தந்தன; பள்ளிக்கு வந்து விட்டேன். என்று, வகுப்பு நடத்த மாடிப் படிகளில் ஏறிக் கொண்டி ருந்தேன். பின் தொடர்ந்து வந்த அவர், இடையில் நீங்கள் ஆத்துக்குப் போங்கோ, தயவு செய்து மன்னுச்சுக்கங்கோ; உங்க காலப்புடுச்சுக் கேக்கிறேன் என்று கால்களைப் பிடித்து விட்டார். அவ்வளவு பெரியவர் இப்படிச் செய்ததும் இளகிவிட்டேன். பின்வீட்டிற்குச் சென்றேன். என் இனிய மாணவர்கள் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ளு வேன். கடுஞ்சொற்களால் திட்டி விடுவேன். சில வேளை அடித்தும் விடுவேன். பொறுத்துக்கொள்வர். அந்த அளவிற்கு அன்புஞ் செலுத்துவேன். பாடநூல்கள் வாங்காதிருந்தால் கடுமையாய்ப் பேசி விடுவேன். அவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தால் பள்ளியில் வாங்கிக் கொடுப்பேன். (பணம் என் சம்பளத்திற் பிடித்துக் கொள்ளப்படும்) படிப்பில் மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கண்காணிப்பேன். பொத்தான் மாட்டாமல் வகுப்பில் நுழைதல் கூடாது; தலையை ஒழுங்காக வாரி வருதல் வேண்டும். வேட்டியை மடித்துக் கட்டுதல் கூடாது. பெண் குழந்தைகள் மஞ்சள் பூசி வர வேண்டும் என்றெல் லாங்கட்டுப் படுத்துவேன். அவர்களும் அப்படியே நடந்து கொள்வர். ஒருநாள், ஓரம்மையார் பள்ளிக்கு வந்து, என்பிள்ளையை மஞ்சள் பூசிக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிக்கிறீர் களாமே! எங்கள் பிள்ளையை மஞ்சள் பூசாமல்தான் அனுப்பு வோம் என்று சண்டைக்கு வந்து விட்டார். அன்று முதல், மஞ்சளை மறந்தே விட்டேன். பிள்ளைகளை, ராசா என்றும் ராசாத்தி என்றும் அழைப்பது என் வழக்கம். பிள்ளைகள் என் இல்லத்திற்குத் தாராளமாக வந்து செல்வர். வேண்டும் உதவிகளையும் செய்து மகிழ்வர். சிலர், தாம் எழுதிய கதை, கட்டுரை, கவிதைகள் கொணர்ந்து செப்பஞ் செய்து கொண்டும், ஐயங்களை அகற்றிக் கொண்டும் செல்வர். அவர்கள் இன்று அரசியல் துறை வல்லுநராக, தனித்தமிழ் ஆர்வலராக, பேராசிரியர்களாக, வழக்குரைஞர்களாக, திரைப்படத் துறைப் புகழராக விளங்குதல் கண்டு மகிழ்ந்து வருகிறேன். அவர்தம் பெயர்களை அவர்கள் சொல்ல வேண்டுமே தவிர, நான் கூற விரும்பவில்லை. பார்ப்பன ஆசிரியர் சிலர், மாணவர் சாதி பார்த்து மதிப்பெண் வழங்குவதுண்டு, ஒரே விடை எழுதியிருப்பினும் தன் சாதிப் பிள்ளைக்கு மிகுதியாகவும் பிறருக்குக் குறைவாகவும் வழங்குவர். என்னைப் பொறுத்தவரை அவ்வேறுபாடே கிடையாது. அனைவரும் என் பிள்ளைகள் என்று கருதியே சரிசமமாக நடத்துவேன். அவ்வுலகம் ஒரு தனி உலகம், இன்ப மயமான வுலகம். பள்ளிக்குள் நுழைந்து விட்டாற்புத்துணர்வு பெறுவேன். ஆசிரியர் மாணவர் -என்ற இருநிலைதான் என் மனத்தில் நிற்கும். கணேசன் என்ற தலைமை ஆசிரியர், மாணவர் ஒருவரைத் திட்டி விட்டார் என்பதற்காக ஒரு சமயம் மாணவர் மறியல் செய்தனர். தலைமையாசிரியர், பிற ஆசிரியர்கள் சொல்லியும் கேட்கவில்லை. பள்ளித் தாளாளர் தொலை பேசியில் என்னை யழைத்து நீங்கள் கட்டுப் படுத்துங்கள் என்றார். நான் மாணவரி டையே சென்று வகுப்பிற்குச் செல்லுமாறு பணித்தேன். தலைமையாசிரியர் திட்டிவிட்டார்; வகுப்பிற்குச் செல்ல மாட்டோம் என்று அடம் பிடித்தனர். மாணவர் தலைவனைப் பார்த்து, ஏண்டா! ஒருநாள் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, செருப்பால் அடிப்பேன் என்று நான் திட்டினேனே, அப்போது வராத மானவுணர்ச்சி இப்பொழுது எப்படி வந்தது? என்றேன். நீங்க எங்க அப்பா மாதிரி திட்றீங்க என்று கொஞ்சுதலாகச் சொன்னான். உணர்ச்சி வயப்பட்டுக் கண் கலங்கி விட்டேன். மாணவரும் கலங்கி விட்டனர். சரி, என்னை அப்பா மாதிரி கருதுவது உண்மை யானால் வகுப்பறைக்குச் செல்லுங்கள் என ஆணை யிட்டேன். தலைமையாசிரியர் மன்னிப்புக் கேட்டால் செல்கி றோம் என்றனர். தலைமையாசிரியர் மன்னிப்புக் கேட்டால் அவர்க்குக் கீழே பணிபுரியும் நானும் மன்னிப்புக் கேட்டதாகத் தான் பொருள்படும். அதனால் நான் மன்னிப்புக் கேட்கவா என்றேன். அவ்வளவு தான் அனைவரும் ஓடி வகுப்பறைக்குள் புகுந்து விட்டனர். இவர்களை எண்ணும் பொழுதெல்லாம் இப்படிப்பட்ட நன்மாணாக்கரைப் பெற்றிருந்தோமே யென்று உருகி விடுவ துண்டு. 1965இல் நாடுதழுவிய இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடை பெற்றது. எங்கள் பள்ளி மாணவரும் வெளியில் நின்று மறியல் செய்தனர். உணர்ச்சி வயப்பட்டுக் கல்லெறிந்து குழப்பம் விளைத்தனர். காவலர் வந்து விரட்டி விரட்டித் துரத்தினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, பேராயக் கட்சியினர், பொதுவுடைமையர் தலைமையாசிரியர்க்கு உதவி புரிவதாகக் கூறிக் கொண்டு, பள்ளிக்குள் நுழைந்து வீர நடை போட்டனர். மாணவர் உணர்ச்சி வேகத்தைக் கண்டு, என்ன நிகழுமோ? என்று அஞ்சிக் கொண்டிருந்த நான், தலைமை ஆசிரியர் ஆராவமுது ஐயங்காரை அழைத்து, இவர்களை வெளியேற்றுங்கள். இவர்கள் மாற்றுக் கட்சிக் காரர்கள். இவர்களைக் கண்டால் மாணவர் கொதித்தெழுவர். விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று விடும். உங்கள் ஒப்புதல் பெறாமல் எப்படி உள்ளே நுழைத்தனர்? என்றேன், என்னை நன்கு புரிந்து கொண்டவராதலின் தலைமையாசிரியர், அவர்களை வெளியேற்றி விட்டார். நான் தலைமையாசிரியரை அழைத்துக் கொண்டு மாணவரி டையே சென்று சிலரை அழைத்து உள்ளே வரச் சொன்னேன். ‘v‹d Iah, ïªâ v⮡F« Ú§fns v§fis¤ jL¡»Ö® fns? என்று உரிமைக்குரல் தந்தனர். நான் எதிர்ப்பது வேறு செய்தி; நான் ஆசிரியன்; உங்களைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அங்கே காவலரைப் பாருங்கள்; உங்களை அடித்துக் கை, கால்களை முறித்து விட்டால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா? மேலும் நான் தூண்டிவிட்டதாக என்மேற் பழி போடுவர். அதனால் வகுப்புக்குச் செல்லுங்கள். விருப்ப மில்லை யென்றால் உங்கள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ள விரும்பினால் வகுப்புச் செல்லாமல் ஒன்று கூடி விளையாட்டுத் திடலில் அமர்ந்து விடுங்கள் என்று கூறினேன். உடனே ஆயிரத்தின் மேலான மாணவர் அவ்வாறே வந்து அமர்ந்து விட்டனர். உரிமைக்குத் தடையா? நான் விடுமுறை நாள்களிலும் எனக்குரிய சிறு விடுப்பு நாள் களிலும் அருகிலுள்ள ஊருக்குச் சொற்பொழிவாற்றச் செல்வ துண்டு. தமிழண்ணலும் வருவார். இலக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வேன். அரசியல் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. மிதி வண்டியிற் சென்று தமிழுணர்வைப் பரப்பி வருவேன். அப்பொழு தெல்லாம் ரேட் கேட்கும் பழக்கமில்லை. எங்கள் பணியாகக் கருதிச் செய்து வந்தோம். ஒரு முறை 1954 இல் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிர மணியனார்அழைத்திருந்தார். நாங்களே செலவு செய்து கொண்டு சென்றோம். தமிழ் படும் பாடு என்னுந்தலைப்பிற் பேசினேன். நல்லுணவாலும் உயர் பழங்களாலும் எங்களைப் பேணிய முறை எமக்கு வியப்பைத் தந்தது. வரும் பொழுது பத்து உரூபா தந்தார். நாங்கள் மறுத்தும் விடவில்லை. முதல் முறை யாகப் பணம் பெற்ற கூட்டம் அதுதான். அதன் பின்னரும் நாங்கள் கேட்டதில்லை; அவர்களே தந்தால் பெற்றுக் கொள்வோம். இன்றேல் வந்து விடுவோம். ஒரு நாள் தலைமையாசிரியர் ஆராவமுது ஐயங்கார் என்னை யழைத்து, நீங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு அடிக்கடி, கூட்டங் களுக்குச் செல்வதாக ஊருக்குள் பேசிக் கொள்கின்றனர். அதனால் கூட்டங்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் என்றார். ஆணையாக அன்று; அன்பாகவே கூறினார். எனினும் விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இயல்புடைய எனக்கு, என் உரிமை பறிக்கப்படுவது போன்ற உணர்வேற்பட்டது. உடனே விடுதலை வேண்டும் என்ற தலைப்பிற் பாடலொன்று பாடி வைத்தேன். ஒரு நாள் மாவட்டக் கல்வி அலுவலர் எபநேசர் என்பார் பள்ளி ஆய்வுக்காக வந்தார். நான் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத் தலைமையாசிரியர் அறைக்குட் புகுந்தேன். பள்ளியில் கா.சு. துரைராசு என்ற என் இயற்பெயரிலுள்ள கா.சு.து. என்ற எழுத்துகளை கே.எ.டி. என்று ஆங்கிலத்தில் அழைப்பர். புகுந்தவுடன் கே.எ.டி. இங்கே வாங்க என்றார் தலைமையாசிரியர். நீங்க தி.க. மெம்பரா? தி.மு.க. bk«guh? என்றார். திடீரென்று இப்படிக் கேட்கிறாரே! என்று திகைத்து நின்றேன். என்ன? ngrhkÈU¡»Ö®fŸ? என்றார். என்னைப் பற்றி... உங்களுக்குத் தெரியுமல்லவா? என இழுத்தேன். அது சரி; எனக்குத் தெரியும்; மெம்பரா? bk«gÇšiyah? என்றார். இல்லை யென்றேன். டி.இ.ஒ. வந்ததும் முடியரசன் என்ற டி.எம்.கே. ஆசிரியர் இங்கே இருக்கிறாராமே என்று கேட்டார். அதனால் தான் கேட்டேன். அவர் கேட்டால் நீங்கள் பதில் சொல்லத் தயாராக இருங்கள் என்று கூறினார். நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் - என்றேன். ‘v‹d brhšå®fŸ? என்றார் தலைமையாசிரியர். அவர் எப்படிக் கேட்கிறாரோ அப்படிச் சொல்கிறேன் - என்றேன். வேண்டாம் வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, வகுப்பிற்குச் செல்ல விட்டார். முதற் பிரிவேளையே என் வகுப்பிற்குள், தலைமையாசிரியரும் கல்வி அலுவலரும் நுழைந்தனர். இவர்தான் மிடர் முடியரசன் என்று தலைமை ஆசிரியர் அறிமுகம் செய்து வைத்தார். பாடம் நடத்துமாறு அலுவலர் பணிக்கப் பாடம் நடத்தினேன் 15 மணித் துளிகள் இருந்து, கேட்டுச் சென்று விட்டனர். பின்னர்த் தலைமையாசிரியர், மாலையில் நடைபெறுங் கூட்டத்தில் டி.இ.ஒ. பேச்சுக்கு நீங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் என என்னிடம் கூறினார். நான் மறுத்தும் விட வில்லை. கூட்டத்தில் கல்வியலுவலர் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; நான் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் என் தலை முடி ஒன்று கூட நரைக்கவில்லை என்று கூறி, நல்லுரைகள் பலவும் எடுத்து மொழிந்தார். நான் நன்றி கூறும் பொழுது, நம் மாவட்டக் கல்வியலுவலர் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறித் தம் தலை முடியின் கருமையைச் சான்று காட்டினார். முடி, கருமையே தவிர உள்ளம் செம்மையானவர். கீழே செம்மையும் மேலே கருமையும் உடையவர். கருப்பும் சிவப்பும் சேர்ந்தால் அது மகிழ்ச்சிக்கு அறிகுறி என்பதை நமக்கு விளக்கிக் காட்டினார் என்று கூறினேன். தலைமையா சிரியரும் பிறரும் என் கருத்தைப் புரிந்து கொண்டு கைதட்டி வரவேற்றனர். அலுவலரும் அகம் மகிழ்ந்தார். பள்ளித்துணை ஆய்வாளர்தான் என்னைப்பற்றி மாவட்டக் கல்வி அலுவலரிடம் கோள்மூட்டியிருக்கிறார் என்பதைத் தலைமை யாசிரியர் வாயிலாக அறிந்து கொண்டேன். மறுநாள் அந்த ஆய்வாளர் பள்ளிக்கு வந்திருந்தார். நான் பள்ளிக்கு வெளியே வந்து, காலில் அணிந்திருந்ததைக் கையில் எடுத்துக் கொண்டு நின்றேன். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர், உள்ளே சென்று, நிலைமையைக் கூறியிருக்கிறார். அஞ்சிய ஆய்வாளர், தலைமை யாசிரியரிடம் முறையிட, தலைமையாசிரியர் என்னையழைத்து, அமைதிப்படுத்தி கே.எ.டி.யிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று ஆய்வாளரிடம் சொன்னார். அவர் தலைமையாசிரியரிடம் மன்னிப்புக் கேட்டார். என்னிடம் கேட்டு என்ன பயன்? அவரிடம் கேளுங்கள் என்று சொல்ல என்னிடம் மன்னிப்புக் கேட்டார். மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிப்படி மறந்து விட்டேன். என்ன செய்யப் போகிறீர்கள்? கண்டனூரில் பழைய மாணவர் சங்கம் ஆண்டு விழாவிற்கு, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. தலைமை தாங்குகிறார் எனக் கூறி என்னைப் பேச வருமாறு அழைத்தனர். ‘v‹d brŒa¥ ngh»Ö®fŸ? என்ற தலைப்பிற் பேச இசைந்தேன். விழாவிற்குச் சென்றேன். முத்தமிழ்க் காவலர் வர இயலாமையால் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை யேற்றிருந்தார். முதலில் மெய்யப்பன் என்ற இளைஞர் பேசினார். பேசுங்கால் பாரதிதாசன் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். தமிழுணர்வு அவர் பேச்சில் தலைதூக்கி நின்றது. அவர் பேச்சிற்குக் கருத்துரை வழங்கிய அடிகளார். இளைஞர்கள் வழிதவறிச் செல்வதை, மெய்யப்பன் பேச்சு மெய்ப்பிக்கிறது. இவ்வாறு தடம் புரண்டு செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்னுங் கருத்துப்படப் பேசி முடித்தார். இவ்விளைஞர் தவறாக ஒன்றும் பேசி விடவில்லை. ஏன் அடிகளார் இவ்வாறு மொழிகின்றார் என நான் நினைந்து, நான் பேச எண்ணி வந்த கருத்தை மாற்றிக் கொண்டேன். தமிழ் நிலை குறித்துப் பேசத் தொடங்கினேன். மாணவ இளைஞர்களே! நம் தாய் மொழியின் தாழ் நிலையைப் பாருங்கள். இசையரங்கில் தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற்றுளதா? அரசு மன்றங்களில், கல்லூரி மன்றங்களில், நம் இல்லங் களிலே நிகழ்கின்ற திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலே தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற்றுளதா? நாம் வழிபடச் செல்கின்ற திருக்கோவில்களிலே - நம்நாட்டுக் கோவில்களிலே - நம்மால் எழுப்பப்பட்ட கோவில்களிலே - கசிந்து கண்ணீர் மல்கி, நெக்குருகித் தமிழால் வழிபடத்தான் முடியுமா? இளைஞர்களாகிய நீங்கள் இந்நிலை நீடிக்கட்டும் என்று கருதி உண்டு, உறங்கி வாழ எண்ணுகிறீர்களா? அன்றி இவ்விழி நிலையை மாற்றியமைக்க வேண்டுமென்று கருதுகிறீர்களா? மாற்றம் கருதினால் அதன் பொருட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நம் தவத்திரு அடிகளாரவர்களைப் பணிவுடன் ஒன்று வேண்டு கிறேன். அடிகளார் அவர்களே! உங்கள் பொறுப்பில் ஐந்து திருக்கோவில்கள் உள்ளன. அங்கே எம் மொழியால் வழிபாடு நடைபெறுகிற தென்பதை நீங்கள் அறிவீர்கள். அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என வேண்டிக் கொண்ட இறைவன் முன்னே வட மொழிக்கே தொடர்ந்து இடந்தரப் போகிறீர் களா? அன்றி, நால்வர் போற்றிய நற்றமிழை - தெய்வத்தன்மை பொருந்திய தீந்தமிழைக் கோவிலுக்குட் புகவிட விழைகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நான் மனந்திறந்து பேசிய மர்ந்தேன். அடிகளார் கருத்துரை கூற எழுந்து உணர்ச்சி பொங்கப் பேசினார். அவர்தம் பேச்சை வெளியிலிருந்து கேட்போர் நாவலர் நெடுஞ் செழியன் தான் பேசுகிறாரோ? (அந்தக் காலத்து நாவலர்) என்று ஐயுறுவர். அவ்வளவு உணர்ச்சி வயப்பட்டுப் பேசினார். இறுதியாக நீங்கள் ஒன்று கூடிக் கோவிலின் முன் மறியல் செய்யுங்கள். உங்களுக்கு உரிமையுண்டு. பாலகவி இராமநாதன் செட்டியார், சா. கணேசன் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு, திட்டமிட்டு மறியல் செய்யுங்கள். தமிழ் வழி பாட்டிற்கு ஆவண செய்கிறோம் என்று பொழிந்தார். அன்று முதல் அடிகளாரிடம் ஈடுபாடு கொண்ட நான், இன்று வரை அதனை வளர்த்து வருகிறேன். மொழி வெறியா? ஒரு சமயம் இராமநாதபுரத்தில் ஒரு கூட்டத்திற்குப் பேசச் சென்றிருந்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை யேற்றார். வளையாபதியடிகள் என்ற ஒருவரும் சொற்பொழி வாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது, சங்கஇலக்கியப் பாடல்கள் சிலவற்றைக் கூறி, இதெல்லாம் ஒரு தமிழ்நடையா? கரடு முரடான நடையைக் கட்டியழுகிறார்களே! மொழி வெறி பிடித்துத் திரிகிறார்கள். இந்த மொழி வெறி தொலைய வேண்டும் என்ற கருத்துப்படக் கிண்டல் செய்து பேசி விட்டார். தமிழைப் பழித்தால் அதுவும் சங்க இலக்கியங்களை இகழ்ந்தால் நான் உணர்ச்சி வயப்படக் கூடியவன். என் மனந்துடிக்கிறது. இந்நிலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுந்து, வளையாபதி அடிகள் கூற்றை வழி மொழிவது போலப் பேசி விட்டு, மொழி வெறி கூடாது என்ற கருத்துப்படப் பேசி விட்டார். எனக்குத் துடிப்பு மிகுந்துவிட்டது. நம் அடிகளாருமா இப்படிப் பேசுகிறார்! ஏன் இப்படிப் பேசுகிறார்? என ஒன்றும் விளங்காத நிலையில் துடித்துக் கொண்டிருந்தேன். அடிகளார் தமது கருத்துரையை முடித்துக் கொண்டு, என்னைப் பேச அழைத்தார். எழுந்தேன். நம் மதிப்பிற்குரிய வளையாபதியடிகள் சொற்பொழிவை முன்னர் ஒருகால் பெரிய குளம் என்னும் ஊரிற் கேட்டு மகிழ்ந்தவன் நான். அன்று தமிழின் அருமை பெருமைகளை யெல்லாம் எடுத்து விளக்கினார். சாதிச் சழக்குகள் கூடாது என்று சாடினார். சாதி யொழிய நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வழிகள் கூறினார். அத்தகு தமிழ் மகனா? அத்தமிழ் நெஞ்சமா? இன்று சங்க இலக்கிய நடையைச் சாடுகிறது? இஃது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. அன்று அப்படிப் பேசியவர் இன்று இப்படிப் பேசுகிறாரே! ஏன்? இடத்திற்குத் தகுந்தவாறு பேசுகிறாரா? அப்படிப் பேசுவது வளையாபதி அடிகள் போன்றார்க்கு அழகாகுமா? அன்றி முதுமையால் முரண் படப் பேசுகிறாரா? ஒன்றுமே விளங்க வில்லையே. சரி, போகட்டும்; மொழி வெறிகூடாது என்று கூறுகிறாரே; அறிவுள்ளவன் எவனாவது இந்த நாட்டிலே மொழி வெறி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? குன்றக்குடி அடிகளாரும் இங்கு மொழி வெறி இருப்பது போலப் பேசுகிறாரே! நெஞ்சிற் கைவைத்துச் சொல்லுங்கள், இந்த நாட்டில் மொழி வெறி இருக்கிறதா? என்று. மொழி வெறி மட்டும் இங்கே இருந்திருக்குமானால் அரியணை ஏற அயல் மொழிகள் படையெடுத்து வர நினைக்குமா? துறை தோறும் துறைதோறும் தமிழ் மொழி வேற்றுமொழிகட்கு ஆட்பட்டுக் கிடக்கும் நிலை வருமா? அதிகம் கூறுவானேன்; தமிழிலும் வழிபாடு செய்ய உரிமை வேண்டும் என்று குன்றக்குடி அடிகளார் கெஞ்சிக் கேட்கும் நிலை வந்திருக்குமா? மொழிவெறி இல்லாத ஒரே காரணத் தாற்றானே தமிழுணர்வு முடமாகிக் கிடக்கிறது. இந்நிலையில் மொழி வெறி கூடாது என அறிவுரை கூறுவது முறையாகுமா? தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழ் வேண்டும் என்றால் இந்த நாட்டில் மொழி வெறி தோன்றித்தான் ஆக வேண்டும் என்று உணர்ச்சி வயப்பட்டுப் பேசி விட்டேன். குன்றக்குடி அடிகளார் விழிகள் சிவந்தன. முடிப்புரை கூற எழுந்தார். உணர்ச்சி வயப்பட்டுப் பேசினார். நண்பர் முடியரசன் கூறியதை நூற்றுக்கு நூறு வரவேற்கிறேன். இந்த நாட்டில் தமிழுக்கு அத்தனை தடைகள் இருக்கின்றன. அத்தடைகளை உடைத்தெறிய மொழி வெறி வேண்டும் எனக் கூறி முடித்தார். ஒரு நாள்,மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராக இருந்த முனைவர் மா. இராசமாணிக்கனாரைக் காணச் சென்றேன். அவர் தமது கல்லூரிக்கு ஆசிரியராக வருமாறு அழைத்தார், பள்ளிப் பிள்ளைகளுடன் பழகும் இன்பத்தைக் கண்ட நான், அங்கு வர மறுத்தேன். இந்த விண்ணப்பத்திற் கையொப்ப மட்டும் போடுங்கள் என்று பலகால் வற்புறுத்தியும் இசையாது வந்து விட்டேன். சென்னையிலும் காரைக்குடியிலும் பெருந்தன்மை மிக்க தலை மையாசிரியர்களிடமும் தகுதியுந்திறமையும் இல்லாத தலைமை யாசிரியரிடமும் பணியாற்றியிருக்கிறேன். காரைக் குடிப் பள்ளித் தாளாளர் பெருஞ்செல்வர். என்னிடம் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தார். நல்லாசிரியர் விருது கா.ச. துரைராசாகிய எனக்கும் பிற ஆசிரியர் சிலர்க்கும் நல்லாசிரியர் விருது கிடைத்து. தேவகோட்டையில் நகரத்தார் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்டக் கல்வி யலுவலர் இராசா கூட்டுவித்தார். தலைவர், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி இராமச்சந்திரன், கூட்டம் தொடங்குமுன் ஒரு தனியறையில் தேவகோட்டை இராம. வெள்ளையன், அமைச்சர், நான் மூவரும்உரையாடிக் கொண்டிருந் தோம். நேரமாகிறதே, கூட்டத்தைத் தொடங்கலாமே என்றேன் நான். எல்லா ஆசிரியர்களும் வந்து விட்டார்கள் துரைராசுங்கிற ஆளைத்தான் இன்னுங் காணோம் என்று வெள்ளையன் கூற, நான் தான் துரைராசு என்றேன். அட! என்ன அண்ணே! எனக்குத்தெரியாதே!? என்றார் வெள்ளையன்.அமைச்சருக்கும் முடியர சனைத்தான் தெரியும். துரைராசைத்தெரியாது. அவரும் வியப்பில் ஆழ்ந்தார். பின்னர்க் கூட்டம் தொடங்கியது. அமைச்சர் பொன்னாடை போர்த்துச் சிறப்புச் செய்தார். நல்லாசிரியர் சார்பில் நன்றி கூறுமாறு என்னைப் பணித்தனர். நல்லாசிரியர் யாரெனத் தேர்ந்தெடுத்து இவ்விருதுகொடுக்க¥படுவதில்லை;அகtமுதிர்ந்தவர்களை¤தேர்ந்தெடுத்துத்தா‹கொடுக்கப்படுகிறது. அதனால் இதை நான் பெருமைக்குரிய தாகக் கருதவில்லை. ஏனென்றால் என்னையும் அகவை முதிர்ந்த வனாகக் கருதிவிடுவார்களல்லவா? (நான் எப்பொழுதும் இளைஞன் என்று சொல்லிக் கொள்பவன்) என நகைச்சுவையாகப் பேசினேன். கல்வியலுவலர் இராசா, கூட்டம் முடிந்ததும்உங்கள்கவிதைக்குக்கிடைக்கும்சிறப்பைவிடஇவ்விருதுதான்சிறந்ததுஎன்றுகூறி kகிழ்ந்தார்.ï›ÉUJ vd¡F¡கிடைத்jâனால்அவருக்கு¤ தான்பெUமகிœச்சி. மற்றொரு சமயம், அழகப்பர் கல்லூரியில் என் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் gண்ருட்டியாரும்fலந்துbகாண்டார்.m¥bghGJ, சேரா, சோழா, பாண்டியா, பல்லவா எனப் பேருந்துகளுக்குப் பெயர் வைக்கப் போவதாகச் செய்தித் தாளில் படித்தேன். நான் பேசும் பொழுது, தமிழிற் பெயர் சூட்டுவது கண்டு மகிழ்கிறேன். ஆனால் சேரா, சோழா என்பது தமிழ் மரபன்று. தமிழாக இருப்ப தோடு தமிழ் மரபும் காக்கப்பட வேண்டும். இராமச்சந்திரன் என்ற பெயரை நிலவழகனாக மாற்றிக் கொண்ட நீங்கள் - கலைஞரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவையில் இருக்கும் நீங்கள் தமிழ் மரபையும் காக்க வேண்டாமா? சேரா, சோழா என்பதில் ஒரு புள்ளி மட்டும் வைத்தாற் போதும் சேரர், சோழர் எனத் தமிழாகிவிடும். அரசுக்கும் செலவு அதிகமாகாது - எனக்குறிப்பிட்டேன். அமைச்சர் பேசும்பொழுது, தமிழ் மரபு காக்கப்பட வில்லையே எனக்கவிஞர் வருத்தப்பட்டுக் கொண்டார். அரசுக்குச் செல வில்லாமல் வழியும் சொல்லி விட்டார். சென்னைக்குச் சென்றதும் முதல்வேலையாக இதை நிறை வேற்றுகிறேன் என்று உறுதி அளித்தார். அவ்வாறே சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஊர்தோறும் உலா வந்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றினார் அன்று! கூட்டம் முடிந்தவுடன் அங்கு வந்திருந்த மாவட்டக் கல்வியலுவலர் இராசா என்னையழைத்து என்ன! mik¢riu ï¥go¥ ngá É£O®fŸ! என்று வருத்தப்பட்டார். நான் இந்நாட்டு குடி மக்களுள் ஒருவன். அமைச்சரிடம் வேண்டிக் கொள்ளும் உரிமை யும் உண்டு. அவரே ஒப்புக் கொண்டு விட்டாரே - என்றேன். இருந்தாலும் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மீண்டும் சொன்னார். சரி, சரி இவரை விளங்க வைக்க முடியாது என்று பேசாதிருந்து விட்டேன். விடுதலை விடுதலை 1974 - 75இல் மாணவர்கள் நிலை மாறி விட்டது. எனக்கும் கண்ணிற் படலம் படர்ந்து பார்வை மங்கியது. அன்றைய தலைமை யாசிரியர் போக்கும் சரியில்லை. அதனால் பள்ளிப் பணியிலிருந்து விலகிக் கொள்ள முயன்றேன். இதனையறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஒ.) சாமுவேல் அடிக் என்பவர் உங்களைப் போன்றவர்கள் விலகுதல் கூடாது. சும்மா பணியில் இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தடுத்து விட்டார். 1966 ஆம் ஆண்டு என் பூங்கொடிக் காப்பியத்துக்குத் தடை விதித்து, என்னையும் பணியிலிருந்து நீக்கி விட அரசு முயன்று, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டது. 67இல் அரசு மாறி விட்டமையால் அனைத்துக் கோப்புகளும் மூடி வைக்கப் பட்டன. தடை செய்யப்பட்டிருந்தால் எவ்வளவோ நன்மையாக இருந்திருக்கும். அப்பேறு கிட்டவில்லை. 1978 இல் பணியிலிருந்து விடுதலை பெற்றேன். ஆசிரியப் பணி உயரிய பணிதான். மாணவர்களை நன் மக்களாக உருவாக்கும் பணிதான். தீமை செய்யாமல் நன்மை செய்தற்கேற்ற பணிதான். எனினும் என் இலக்கியப்பணிக்கு என் உரிமையுணர்வுக்குத் தடையாக இருப்பது போன்ற வுணர்வு ஊடாடிக் கொண்டே யிருந்தது. அதனால் ஓய்வு பெற்றவுடன், மகிழ்வு பொங்கித் திறந்தன கதவுகள் என்ற தலைப்பில் விடுதலைப் பாடல் பாடினேன். மிகுதியாக எழுதலாம் எனத் திட்டமிட் டிருந்தேன். ஆனால் கட் படலம் படர்ந்து, பார்வை மங்கி, எழுதவும் படிக்கவும் இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. எட்டாண்டுகளை வீணே கழித்தேன். ஓய்வுச் சம்பளம் முந்நூறு கிடைக்கவில்லையென்றால் என் நிலை யாதாகியிருக்குமோ? கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. ஆயினும் எவரும் என்னை வளமானவன் என்றே எண்ணிக் கொண் டிருக்கின்றனர். வறுமை தோன்றாமல் அரசன் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்படி? நண்பர்களின் துணை தான். உடலுழைப்பாலோ, பொருளாலோ ஓருதவியும் எவர்க்கும் செய்தறியேன். எனினும் ஏன் எனக்கு இப்படி உதவுகிறார்கள்? என் நெஞ்சிற் கொலுவிருக்கும் என் தமிழன்னைதான் விடை தர வேண்டும்! 3 இணைபிரியா அன்றில் திருமண முயற்சி மேலைச்சிவபுரிக்கு அருகிலுள்ள வலம்புரி என்னும் ஊரில் அழகிற் சிறந்த பெண் ஒருத்தியிருந்தாள். அப்பெண் வீட்டார் எங்கள் இல்லத்துக்கு அடிக்கடி வந்து செல்வர். நாங்களும் சென்று வருவோம். நன்கு அறிமுகமான குடும்பம். அப்பெண் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய செய்தி எனக்குக் கிடைத்தது. என் அன்னையிடம் கேட்டு முடிவு சொல்கிறேன் எனக் கூறிவிட்டேன். பின் என் அன்னையிடம் கேட்க, ஒரேயடியாக மறுத்து விட்டார். அந்த அளவில் அது நின்று விட்டது. புதுக்கோட்டையில் அறிவு வளர்ச்சிக் கழகம் நடத்தி வந்த இராம. கலியாண சுந்தரம் என்பாரிடம் கலப்பு மணம் செய்து கொள்ளப் பெண் வேண்டும் என்று கூறியிருந்தோம். கலப்பு மணந்தான் செய்து கொள்வேன்; இல்லையென்றால் திருமணமே வேண்டாமென்று உறுதியாகக் கூறிவிட்டமையால் என் பெற்றோரும் இசைந்து விட்டனர். நான் சென்னையில் ஆசிரியராகப் பணி புரிகின்ற பொழுது, இராம. கலியாணசுந்தரம், பெண் பார்த்திருப்பதாகவும் உடனே புறப்பட்டு வருமாறும் மடல் எழுதியிருந்தார். அன்றே பெண்ணுக்குத் தந்தையாரும், நேரே அவர் வீட்டிற்கு வருமாறு மடல் எழுதியிருந் தார். அவர் இரண்டு திரைப்படக் கொட்ட கையின் உரிமையாளர் என்பதை, அவர் மடல் வாயிலாக அறிந்து, செல்வராக இருப்பார் என எண்ணி, அவருக்கு மடல் எழுதினேன். என்னைப் பற்றித் தோழர் கலியாணசுந்தரம் உங்களிடம் கூறியிருப்பார் என எண்ணுகிறேன். என் குண நலன்களை மட்டும் அவர் கூறியிருக்கலாம். என் குடும்ப நிலையைக் கூறியிரார். வீடு, நிலம் முதலான எந்தச் சொத்தும் எங்களுக்குக் கிடையாது. தமிழ் ஒன்றுதான் என் சொத்து - இதற்கு விருப்ப மானால் எழுதுங்கள்; வருகிறேன் - என்று எழுதிவிட்டேன். மறுமொழியே வரவில்லை. சில நாள் சென்ற பின், புதுக்கோட்டைக்குச் சென்று கலியாண சுந்தரத்திடம் செய்தியைச் சொன்னேன். அட, போங்க முடியரசன்; இப்படியா சிறு பிள்ளைத்தனமா எழுதுவது? அவன் என்ன நினைப்பான், ஒன்றுமே இல்லாதவன் என்று தானே எண்ணி யிருப்பான்? அதுதான் அந்த ஆளை இந்தப் பக்கமே காணோம். சரி, வேறிடம் பார்ப்போம் என்று கூறி விட்டார். இந்த அளவில் இது நின்று விட்டது. திருமணம் அவர், பிறிதோரிடத்தில் பெண் பார்த்து என் அன்னையாரை அழைத்துக் காட்டியிருக்கிறார். அன்னையார்க்கு அப்பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. நான் விடுமுறையில் மேலைச் சிவபுரிக்கு வந்தேன். பெண்ணைப் பார்க்க என்னை அழைத்தார். இந்தி யெதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது திருமணம் வேண்டாமென்று சொன்னேன். சென்னைக்குப் போகும் போதாவது இறங்கிப் பார்த்து விட்டு, அங்கிருந்தே சென்னைக்குப் போ என்று அன்னையார் கூற நானும் இசைந்து, அன்னையுடன் சென்றேன். என் அன்னைக்கு அருகில் பெண் அமர்ந்தாள். நல்ல சிவப்பான அழகு மிக்க பெண்ணைத் திருமணஞ் செய்து கொள்ள வேண்டு மென்று கற்பனை செய்திருந்தேன். ஆனால் இந்தப் பெண்ணோ நிறம் குறைவு; அழகும் ஓரளவு தான். ஆனாலும் என்அன்னையிடம் அப்பெண் நடந்து கொண்ட முறை, அமைதியான தோற்றம், சிரித்த முகம், இவற்றைக் கண்டு, அம்மா குணத்துக்கு ஏற்றவள் தான் என முடிவு செய்து, ஒப்புதல் கொடுத்து விட்டேன். பெண் வீட்டாருக்கும் என்னைப் பிடித்து விட்டது. ஆனாலும் பெண் விருப்பத்தை நன்கு தெரிந்து, ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டுச் சென்னைக்குச் சென்று விட்டேன். பெண்ணின் விருப்பத்தை அவள் வீட்டார் கேட்க, மணமகன் பருமனாக இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறாள். அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை என்று பெண்ணின் தமக்கை யார் சொல்லியிருக்கிறார். உண்மையில் அப்போது நான் சற்றுப் பருமன்தான். இரண்டாம் முறையாக மணமகனைப் பார்க்கப் பெண் விரும்புவதாக எழுதி, என்னை வரவழைத்தனர். அப்போது கடுமையான காய்ச்சலால் வாடி வதங்கி மெலிந்து வந்திருந்தேன். பெண் மறைவாக இருந்து பார்த்து, ஒல்லியாகத்தானிருக் கிறார் என்ற இசைந்து விட்டாள். எனினும் நான் பெண்ணின் தோழி வீட்டாரிடம் சென்று, பெண்ணுக்கு முழு விருப்பந்தானா என்பதை வினவித் தெரிந்து கொண்டேன். அவள் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த வி.சு. திருநாவுக்கரசிடம் பெண்ணின் குண நலங்களைத் தெரிந்து கொண்டேன். கலப்பு மணம் என்றவுடன், காதல் மணம் என எண்ணி விடுகின்றனர். âU¢áuh¥gŸË thbdhÈ Ãiya¤âš v‹id¢ br›É (ng£o) f©lt® Tl ‘fhjȤJ¡ fÈahz« brŒJ bfh©O®fsh? என ஒரு வினா எழுப்பினார். கலியாணஞ் செய்து கொண்டு தான் காதலித்தேன் என மறுமொழி தந்தேன். காதல் என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. பேராசிரியர் க. அன்பழகன் இல்லத்தில் அண்ணாவைச் சந்தித்துத் திருமணத்துக்குத் தலைமை தாங்க வேண்டினோம். குடந்தையில் மணியம்மையார் தலைமையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, நான் எப்படி வர முடியும்? எந்த நேரத்திலும் நாங்கள் சிறை செய்யப்படலாம் எனக் கூறி அண்ணா மறுத்து விட்டார். பின்னர், தாத்தா மயிலை சிவ. முத்து அவர்கள் தலைமையில் 1949 பிப்பிரவரி, இரண்டாம் நாள் எனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடைபெற்றது. பூவாளூர் பொன்னம்பலனார். காஞ்சி மணிமொழியார், டி.கே. சீனிவாசன், கவிஞர் வாணிதாசன், அழகுவேலன் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர். அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்த இராவண காவியம் அழகு வேலனால் பரிசிலாக வழங்கப்பட்டது. கலைஞர். மு. கருணாநிதியும் வாழ்த்துரை வழங்குவதாக அச்சிடப்பட்டிருந்தது. அப்பொழுது கலைஞரை எனக்குத் தெரியாது. பார்த்தது கூட இல்லை திருவாரூர் அண்ணன் சண்முகம் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கலைஞர் சென்னைக்குச் செல்வ தால் வர இயலவில்லையென மடல் எழுதிவிட்டார். திருமண ஏற்பாடுகளை, இராம. கலியாண சுந்தரமும் பொன்னி நிறுவனத் தாரும் கவனித்துக் கொண்டனர். திருமண அழைப்பு மிகமிகச் சிறியது. திருமண அழைப்பில் மணமக்களே கையொப்ப மிட்டிருந் தோம். இடப் பக்கத்தில், வண்ணப்பூவும் மணமும் போலே மகர யாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே - எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ என்ற பாவேந்தரின் பாடல் வரிகளை வெளியிட்டிருந்தேன். இன்று வரை நாங்கள் அவ்வாறே வாழ்ந்து வருகிறோம். திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய கலியாண சுந்தரம், நான்கு ஆண்டுகள் கழித்துத் தான் மகப்பேறு நிகழ வேண்டும் எனக் கூறினார். என் 29 ஆம் அகவையில் திருமணம் நடை பெறுகிறது. அதனால் நான்காண்டு என்ற கால வரம்பை இரண்டாண்டாகக் குறைத்துக் கொள்ள வேண்டினேன். ஆனால் அடுத்த ஆண்டே ஒரு பெண் மகவுக்குத் தந்தையானேன். குழந்தைக்குப் பெயர் சூட்ட, நாள் குறித்து என் மைத்துனர் காரைக்குடிக்கு மடல் எழுதியிருந்தார். குழந்தைக்குப் பூங்கொடி எனப்பெயர் சூட்ட எண்ணிக் குறித்த நாளில் புதுக்கோட்டைக்குச் சென்றேன். ஆனால் முதல் நாளே, ஐயரை அழைத்து வந்து புஷ்பவல்லியென்று பெயர் வைத்து விட்டார்கள். நான் தடை செய்வேன் என்று கருதி, நாளை மாற்றி யெனக்கு எழுதிச் சூழ்ச்சி செய்து விட்டனர். கடுமையாகச் சினந்து கொண்டேன். நடந்தது நடந்து விட்டது. புஷ்பவல்லி என்றாலும் பூங்கொடி யென்றாலும் ஒன்றுதானே, நீங்கள் பூங்கொடி யென்று மாற்றிக் கொள்ளுங்கள் என அண்ணன் சண்முகம் அமைதி கூறினார். ஐயர் வந்து வடமொழியில் பெயர் வைப்பது? அதன் பிறகு அதை நான் மாற்ற வேண்டுமோ? முடியாது, குமுதம் என்றுதான் அழைப்பேன் என்று அப்பெயரையே சூட்டி விட்டேன். காரைக்குடிக்கு வந்த பின்புதான் அதுவும் வட சொல் எனத் தெரிந்து வருந்தினேன். துணைவியின் குணநலன் திருமணமாகி, எங்கள் வீட்டிற்கு வரும்போது, என் துணை வியார், கண்ணாடிச் சட்டமிட்ட பெரிய முருகன் படமொன்று கொணர்ந்து, சுவரில் சார்த்தி வைத்திருந்தார். என்ன இது? என்றேன். முருகன் படம், இந்த முருகன் தான் உங்களை எனக்குக் கணவராகத் தந்தார் என்று உருக்கமாக மொழிந்தார். என்னை உனக்குக் கணவராக்கியவர் கலியாண சுந்தரமா? முருகனா? முருகன் என்றால் ஏன் கீழே வைத்திருக்கிறாய்? ஆணியடித்து மேலே மாட்டி வை என்றேன். ‘V‹; c§fS¡F¥ ão¡f Éšiyah? என்றார். உன் உரிமையில் தலையிட மாட்டேன். உனக்கு விருப்பமெனில் தாராளமாக வைத்துக் கொள். யாரேனும் பார்த்தால் முடியரசன் ஊருக்குச் சொல்கிறான்; வீட்டைத் திருத்த முடியவில்லை யென்று ஏளனமாகப் பேசுவார்கள். அவ்வளவு தான். உன் விருப்பப்படி செய் என்று சொல்லிச் சென்றேன். மறுநாள் முருகன் படத்தையே காணோம். இறைப்பற்றுடையராகினும் கோவில், குளம் என்று எங்கும் செல்வ தில்லை. ஒருவர்க் கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் பிணக்கேது? பிளவேது? என் அன்னையார், தம் மருமகளைத் தன் பிள்ளை போலவே கருதி அன்பு செலுத்தி வந்தார். நாளாக நாளாக மாறியது. எங்களுக்கு வேண்டியவர் எவரேனும் வருங்கால், என்னம்மா! தம்பிக்கு இப்படிச் செய்து விட்டாய்? எவ்வளவோ வசதியான இடங்களில் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு சொல் சொல்லியிருந்தால் அங்கு முடித்திருக்கலாமே. இப்பொழுதுதான் என்ன வந்துவிட்டது. நீ மட்டும் சரியென்று சொல், கொடைக்கானல் பெண்ணைச் செய்து விடலாம். சீர் வரிசைகள் நல்லாச் செய்வார்கள் என்று சொல்லிச் சொல்லி, என் அன்னையின் மனத்தை மாற்றி விட்டார்கள். எனக்கு மீண்டுமொரு மண முடிக்க முயற்சி மேற்கொண்டனர். சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்து கொண்ட நான், மனைவியிருக்க, குழந்தையிருக்க இரண்டாம் மணம் முடித்தால், சுயமரியாதைக் கொள்கைக்குப் பழி வந்து சேரும்; மேலும் நம் செல்வ நிலையும் இடந்தராது என்று மறுத்து, உறுதியுடன் இருந்து விட்டேன். இது முதல், அன்னையார் என்னைக் குலப்பகைவன் போலக் கருதி விட்டார். அன்பு வடிவமாக இருந்த அன்னை, மருமகளிடம் மாறி நடக்கத் தொடங்கி விட்டார். மனம் மாறினும் என்னைத்தான் குறை கூறுவார்களே தவிர மருமகளை நல்லவள் என்றுதான் வருவோரிடம் கூறுவார்கள். அன்னையார்க்கு வீம்பும் பிடிவாதமும் மிகுதி. அதனால் இறுதி வரை என்னுடன் பகையாகவேயிருந்தார். திருமணச் சீலை; நகைகள்அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டார். வீட்டிலிருந்த பொருள்களையெல்லாம் விற்கத் தொடங்கி விட்டார். எனக்கு ஒன்றும் வைக்கக் கூடாதென்று அப்படி நடந்து கொண்டார். எனக்கு மீண்டும் மணமுடிக்க முயன்றது, மனம் மாறியது, பொருள்களை விற்றது எதுவுமே என் மனைவியின் மனத்தைத் தாக்கவில்லை. அவர் ஒரு குழந்தையுள்ளம் கொண்டவர். உலகமே தெரியாதவர். எனக்கு மட்டும் உலகம் தெரிந்து விட்டது என்று எண்ணிவிட வேண்டாம். நானும் அப்படித் தான் எனினும் ஐந்து மதிப்பெண்ணாவது எனக்கு மிகுதியாகக் கிடைக்கும். அகவை, கல்வியைத் தவிர பிற அனைத்தும் ஒத்தவையே. நான் சில வேளைகளில், அறியாமையால் துணைவியாரைச் சினந்து பேசினும் கடிந்து கூறினும் சிறிதும் சினவார், வருத்தார். அத்தகைய பொறுமை வடிவமானவர். பின்னர் நானே என்னை நொந்து கொள்ளுவேன். பகுத்தறிவுவாதியென்றுசொல்லிக் கொண்டு இப்படிப் பேசி விட்டோமே! நிலையிற் கீழிறங்கி விட்டோமே! என்று கண்கலங்குவதுமுண்டு. எவ்வளவு சுடு மொழி கூறினும் அடுத்த நொடியே, என்னங்க என்று பேச வந்து விடுவார். எங்கள் வாழ்க்கையில், நாங்கள் ஒரு பொழுது கூடப் புலந்து பேசாதிருந்த தில்லை. அன்பால் பிணைக்கப் பட்ட மையால் எங்கள் வாழ்க்கையை இன்ப மயமாக்கிக் கொண்டோம். செல்வநிலையிற் பின் தங்கியவன் நான். அதனால் பற்றாக் குறை ஏற்படும் பொழுது, என் துணைவியின் கை, காது, கழுத்து, மூக்கில் இருந்த அணிகலன்களையெல்லாம் விற்று விடுவேன். ஏன்! தாலியைக் கூட விற்றிருக்கிறேன். எதையும் முகங் கோணாது தந்து விடுவார். இந்நிலையிலும் எங்கள் அன்பிற் குறைபாடே நேர்ந்ததில்லை. இந்நன்றியுணர்வை மனத்திற் கொண்டு தான், கம்பர் விழாவில் ஆறு என்ற தலைப்பிற் பாடும் போது முப்பது நாள் தமிழ்சொல்லிப் பள்ளிக் கூட முதல்வர்தரும் ஊதியத்தைக் கடனுக் கெல்லாம் ஒப்படைத்துப் பதினைந்து நாள்கள் ஓட்டி ஒழிந்த சின்னாள் என்செய்வேன் என்ற எண்ணம் கப்பிடநீ அருள்சுரந்துன் அன்னை தந்த காப்பளித்துக் காப்பளித்தாய்! அதுபோல் வானம் தப்பியதால் பெருக்கற்றும் ஊற்று நீரால் தரணியினைக் காக்கின்ற ஆறு காண்க என்ற பாடலைப்பாடினேன். ஒரு நாள், கானாடுகாத்தான் வை.சு. மஞ்சுளாபாய் அம்மை யார் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தார். என் மனைவியின் கோலத்தைப் பார்த்து விட்டுக் கண் கலங்கி, என்ன தம்பி! பிள்ளையை இப்படி வைத்திருக்கிறாய்? காது, கழுத்து, கையிலே ஒன்றுமே இல்லையே! gh®¥gt®fŸ v‹d Ãid¥gh®fŸ? என வருந்தினார். நகைகளை வைத்தா மதிப்பிடுகிறார்கள்? நடத்தையை வைத்துத்தானே எடை போட வேண்டும்? - என்று நான் கூறினேன். ‘ngh j«ã;cd¡F cyfnk bjÇaÉšiy’ vd¡ T¿, ‘ï¥bghGJ ifÆš v›tsî ïU¡»wJ? என வினவ, முப்பது உரூபா இருக்கிற தென்று விடை பகர்ந்தேன். அதைப் பெற்றுக் கொண்டு சென்ற அம்மையார் இருபத் தெட்டு உரூபாவுக்கு வாங்கிய தோட்டுடன் வந்து செல்வியின் காதுக்கு அணி செய்தார். இடையில் என்தாயும் தந்தையும் வாத நோயால் தாக்குண்டு, ஒன்பது ஆண்டுகள் படுக்கையிற் கிடந்தனர். ஒன்பதாண்டுகளும் அவர்களுக்கு வேண்டிய பணிவிடை அனைத்தும் என் மனைவி செய்து வந்தார். தவழுங் குழந்தைக்கு ஒரு தாய் செய்யும் அனைத்துப் பணிகளும் செய்து வந்தார். தற்கொண்டானைப் பேணுவதிற் குறைபாடிருப்பினும் மாமன், மாமியைப் பேணிக் காப்பதிற் கண்ணுங் கருத்துமாக இருப்பார். ஒரு நாள் கூட முகஞ்சுழிந்தது கிடையாது. தன்கடமையாகவே செய்து வந்தார். என் அன்னைக்கு வேண்டுவன செய்கிறாய்; சரி, தந்தைக்குச் செய்யும் போது உன் மனங் கூசவில்லையா? என்று வினவினேன். அவர் கூறிய மறுமொழி, என்னை மலைக்க வைத்து விட்டது. மூன்று குழந்தையோடு, இது நாலாவது குழந்தை என்று நகைத்துக் கொண்டு நின்றார். அன்று முதல்,என் மனத்துள் மனைவியாக இடம் பெற்றிருந்த அவர், மனைவியின் உயர்ந்த நிலையைப் பெற்று விட்டார். அக்குறிப்பை, மதுரை - தியாக ராசர் கல்லூரிப் பாட்டரங்கிற் பாடும்பொழுது, செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும் தீங்குயிலே நானுனக்குத் தெய்வ மென்றால் சிந்தையினை ஆண்டு கொண்ட நீயே எற்குத் தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன் என்னும் பாடலால் வெளிப்படுத்தினேன். என் பிணிக்குப் பாகற்காய், கீரை முதலிய ஏற்ற உணவுகள் என்று, தனியே சமைத்து வைத்திருப்பார். பகலுணவு முடிந்த பிறகு, சில மணிக்குப் பின், ஐயையோ! பாகற்காய் வைக்க மறந்து விட்டேனே என்று பதறுவார். இரவுப்போதில் உண்ணக் கூடாதென்பதால் அது வீணே எறியப்படும். எனக்குப் பிடிக்காத குழம்பு வைக்கப்படும் நாளில், பருப்புத் துவையல், அரைக்கச் சொல்லுவேன். உண்ணும்போது முதலில் துவையலிட்டுப் பிசைந்து உண்பேன். அடுத்துச் சாறு (ரசம்) ஊற்றாமல், குழம்பூற்றி விடுவார். என்ன செல்வி! இந்தக் குழம்பு கூடாதென்பதற்குத்தானே துவையல் போட்டுக் கொண்டேன். நீ அதையே ஊற்றுகிறாயே! என்பேன். அதன் பிறகுதான் அவருக்கு நிலைமை புரியும். சில நாள், காலையில் இரண்டு இட்டலி தட்டில் வைத்திருப் பார்.நான் உண்டபின், எத்தனை இட்டலி வைத்தாய்? என்பேன். ஐந்து என்பார். இல்லையே! வயிறு நிரம்பிய மாதிரித் தோன்ற வில்லையே! என்பேன். தட்டில் எண்ணி வைத்து ஐந்து கொண்டு வந்தேன் இதோ பாருங்கள் என்று பக்கத்திலுள்ள வெறுந் தட்டைக் காட்டுவார். சரியென்று நம்பியெழுந்து வந்து முகப்பில் ஏதேனும் எழுதிக் கொண் டிருப்பேன். திடீரென்று ஓடிவந்து, ஐயையோ! v©Â it¤j ï£lÈ _‹W mL¥goÆnyna kwªJ it¤J É£nl‹! என்று விழிப்பார். பின் எழுத்துப் பணி நிற்கும்; மூன்று இட்டலி தட்டிலிருந்து வயிற்றுக்கு மாறும். இப்படி ஒரு நாளா? இரு நாளா? இன்றும் அப்படியேதான். எப்படியோ இரண்டு குழந்தைகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன! ஒரு நாள் முருங்கைக்கீரை விற்றுக் கொண்டு வந்தார் ஓர் அம்மையார். என்று துணைவியார் விலை கேட்டார். துட்டுக்கு ஒரு கட்டு எனது விடை வந்தது. (துட்டென்றால் நான்கு காசு. mzhî¡F _‹W J£L) v‹ JizÉah® ‘K¡fhyzhî¡F ïu©L f£L¤ jU»whah? என்றார். கட்டாதம்மா! அணாவுக்கு மூணுகட்டு வேணும்னா எடுத்துக்கங்க என்றார். எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. நான் அந்த அம்மையாரைக் கட்டு என்ன விலை? என்றேன் ஒரு துட்டு என்றார். துட்டுக்கு எத்தனை காசு? என்றேன். நாலுகாசு என்றார். இரண்டு கட்டு எவ்வள வென்றேன். எட்டுக்காசு என்றார். எட்டுக்காசு என்று நீ விலை சொல்கிறாய், ஒன்பது காசுக்கு (முக்காலணாவுக்கு) இரண்டு கேட்டால், நீ கட்டாதென்கிறாயே என்றேன். அணாக் கணக்கெல்லாம் தெரியாதையா; துட்டுக் கணக்கிலே எடுத்துக்கிறதாயிருந்தா எடுத்துக்கங்க; இல்லேன்னா விடுங்க என்று போய் விட்டார். என் குடும்பத் தலைவியின் திறமை இவ்வளவு தான்; நல்லவர். ஆனால் வல்லவரல்லர். எனது இயல்பு என் திறமையையும் சொல்கிறேன். பாவலர்மணி பழநி வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது கீரை விற்றது. பெரிய பெரிய இலையுடன் பச்சைப் பசேரென்றிருந்தது. அரையணாவுக்கு ஒரு கட்டு. நாலணாவுக்கு அள்ளிக் கொண்டு வந்தேன். எனக்கு அது தான் முதல் தடவை. பெருமிதத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன். என் துணைவி யார், இவ்வளவு அள்ளிக் கொண்டு வந்திருக் கிறீர்களே என்றார். கையில் வாங்கிப் பார்த்துவிட்டு, ஐயையே! இது சமையலுக்கு உதவாதே. xnu K‰wš? என்றதும் என் பெருமிதம் ஓடி விட்டது. பாதியைப் பக்கத்து வீட்டாருக்குக் கொடுக்க, இதை மாடுகூடத் தின்னாது; வேண்டாம் என்று கூறி விட்டனர். கீரை குப்பை மேட்டிற்குப் போயிற்று. உங்களுக்கெதுக்கு இந்த வேலை என்று துணைவியார் சொன்னது முதல், காய்கறிக்கடைப் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை. நான் என்னை மறந்து வாழும் நேரந்தான் மிகுதியாக இருக்கும். என் இயல்பாக அது அமைந்து விட்டது. அதைப் பாடலாகவடித் துள்ளேன். மண்ணில் நடப்பது சிறுநேரம் - நானோ வானிற் பறப்பது நெடுநேரம் நண்ணும் மகிழ்ச்சிகள் சிறுநேரம் - நெஞ்சம் நையுந் தளர்ச்சிகள் நெடுநேரம் வீட்டை நினைப்பது சிறுநேரம் - மனைவி வேட்கை யிருப்பதுஞ் சிறுநேரம் நாட்டை நினைப்பது நெடுநேரம் - கவிதை நயந்து தொடுப்பதும் நெடுநேரம் இத்தகைய என் இயல்பால் நிகழ்ந்த வேடிக்கையான நிகழ்ச்சிகள் சிலவற்றை ஈண்டுத் தருகிறேன். ஒருநாள் நானும் பாவலர் மணியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறோம். நான், உண்ணும்பொழுது, நடக்கும் பொழுது, இருக்கும் பொழுது, உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது கூட வேறு உலகத்திற்குச் சென்றுவிடுவேன். அப்பொழுது நடக்கும் பிற செயல்கள் எதுவும் எனக்குத் தோன்றா. அவ்வாறு வேறு உலக நினைவில் நடந்து கொண்டிருக்கிறேன். எதிரில் யாரோ ஒரு பெண்மணி காய்கறி வாங்கிக் கொண்டு, இடுப்பிற் குழந்தையுடன் வருகிறார். வருகிறவர் எம்மை நோக்கிச் சிரித்துக் கொண்டே வந்தார். பதிலுக்கு நாமும் சிரிக்க வேண்டும்; யாரென்று தெரியாமல் எப்படிச் சிரிப்பது? என்று கருதிப் பழநி! பழநி! இந்த அம்மா யார்? எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே! என்றேன். உடனே பழநி, சட்டென்று என்னை நிறுத்தி, அண்ணி அண்ணி! அண்ணன் உங்களை யாரென்று கேட்கிறார் என்று சொன்ன வுடன் அந்தப் பெண் மேலும் சிரிக்க, அதன் பின்னரே சிரித்தவர் என் மனைவி யெனத் தெரிந்து கொண்டேன். இன்னும் பழநி இதைச் சொல்லிச் சொல்லி நகையாடுவார். இப்படி என்னை மறந்த நிலை பலமுறை ஏற்பட்டிருக்கிறது. தனியாக ஒரு முறை சிற்றுண்டிக்கடைக்குச் சென்று சிற்றுண்டி யருந்தி விட்டுக் காசு கொடுக்காமல் வந்து விட்டேன். வெளியில் வந்தபிறகுதான் கையில் சீட்டு இருப்பதைக் கண்டு, திரும்ப ஓடிக் காசு கொடுத்து வந்தேன். கடைக்காரர் தெரிந்தவர் ஆனதால் முதலில் வெளியே வரும்போது பேசாது விட்டு விட்டார். இல்லை யென்றால்...? புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு வருவதற்காகப் பேருந்தில் ஏறியமர்ந்தேன். el¤Je® ‘vªj CU¡F? என்றார். நான் புதுக்கோட்டைக்கு என்றேன். kWgoí« ‘vªj CU¡F? என்று வேறு குரலிற் கேட்டார். புதுக்கோட்டைக்கு என்று நானும் உரத்துச் சொன்னேன். ‘Ú§f, ï¥g v§nf ïU¡Ñ§f? என்றவுடன் தான் என் நினைவு மீண்டது. காரைக்குடிக்கு என்று கேட்டுச் சீட்டு வாங்கினேன். இருவரும் சிரித்துக் கொண்டோம். என் பேதை மையை எண்ணி நான் சிரித்தேன்; அவர் எதையெண்ணிச் சிரித்தாரோ தெரியவில்லை. என் மகள் குமுதத்திற்கு மணமகன் பார்க்கக் காரைக் குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு வருவதாகச் சொல்லியனுப் பிருந்தேன். மணமகன் வீட்டாரும் பலருக்கு அழைப்பு விடுத்து, அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு செய்திருந்தனர். நான் காரைக்குடியில் என் வீட்டருகே உள்ள நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு நின்றேன். புதுக்கோட்டை வழியாகத் தஞ்சாவூருக்குச் செல்லும் உந்து வந்தது. நிறுத்தும் படிக் கையைக் காட்டினேன். ஓட்டுநர் நிறத்தாமற் சென்று விட்டார். வண்டியில் ஐந்தாறு பேர்தான் இருந்தனர். எனினும் நிறுத்தவில்லை. அடுத்த வண்டியில் சென்றிருக்கலாம். அந்த அளவிற்கு எனக்குப் பொறுமையில்லை. நாம் நிறுத்தச் சொல்லியும் நிறுத்த வில்லையே என்ற சினத்துடன் வீடு திரும்பி விட்டேன். மறுநாள் புதுக் கோட் டைக்குச் சென்றேன். பலரும் வந்து காத்திருந்தது, உணவு ஏற்பாடு செய்தது - அனைத்துங் கூறி, மணமகன் வீட்டார் வருத்தப் பட்டனர். இவ்வாறு என் இயல்பு, மற்றையோர் இயல்பினும் மாறு பட்டதாகி விளங்குவதும் உண்டு. பல வேளைகளில் இவ்வாறு தான் நடந்து கொள்கிறேன். இதைப் பிள்ளைமைத்தனம் என்பதா? கிறுக்குத் தனம் என்பதா? ஒன்றும் தெரியவில்லை. என் உலகமே வேறு! பெரும்புலவர்கள் வருகை ஒரு நாள் ஒருவர், என் இல்லத்துக்கு வந்தார். வரவேற்று அமரச் சொன்னேன். அமர்ந்து, தாமாகவே சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கொன்றும் விளங்கவில்லை. ‘eh‹ ah® bjÇíkh? என்றார். தெரியவில்லையே! என்றேன். உங்களுக்குத் தெரியாது; யாருக்குமே தெரியாது; நான் தான் போன பிறவியில் பாரதியாராகப் பிறந்திருந் தேன் என்றார். சரி, சரி, இவர் விரைவில் வெளியேறினால் நல்லது என்று மனத்துள் எண்ணிக் கொண்டேன். நல்ல வேளை! விரைவில் தாமாகவே எழுந்து, சிரித்துக் கொண்டே போய் விட்டார். இரண்டொரு நாளில் மற்றொருவர் வந்தார். புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனாரை எனக்குத் தெரியும்; உங்களையும் அடிக்கடி அங்கே பார்த்திருக்கிறேன். போன பிறவியில் கம்பனாகப் பிறந்த நான் இந்தப் பிறவியில் இப்படியலைகிறேன் என்றார். அப்படியா? மிக்க மகிழ்ச்சி; என்ன வேண்டும்? என்றேன் சாப்பிட வேண்டும் என்றார். உண்டபின் அவரும் விடை பெற்றுக் கொண்டார். மற்றொரு நாள் இன்னொருவர் வந்தார். உங்கள் பாடலைத் திருக்குறள் விழாவிற் கேட்டேன். மிகவும் நன்றாகப் பாடுகிறீர்கள். திருவள்ளுவர் வேறு யாருமில்லை. நான் தான் என்றார். அடடே! திருவள்ளுவரா? சரி, வந்தது என் கருதியோ? என்றேன். ‘x‹W Äšiy, R«kh gh®¤JÉ£L¥ nghfyhbk‹W tªnj‹! எனச்சொல்லிச் சென்றார். இவ்வாறு பாரதியார், கம்பர், வள்ளுவர் தொடர்ந்து வந்தமை யைக் கண்ட என் துணைவியார், என்ன? ஒரு மாதிரியான ஆளெல்லாம் உங்களைத் தேடியே வருகிறார்களே என்று வினவ, அதுதான் எனக்கும் விளங்கவில்லை! என்றேன். ‘xU ntis, c§fisí« mt®fis¥ nghynt fUâÆU¥gh® fnsh? என்று இரட்டுற மொழிதலாக மொழிந்தார். (பைத்தியம், கவிஞன்) எனக்கேற்ற - என் கருத்திற்கேற்ற - மனம் நிறைந்த துணைவி தான். எனினும் ஒரே ஒரு குறை. அவர் என் பாடல்களைப் படித்துச் சுவைத்ததே கிடையாது. நான் என்னென்ன நூல்கள் எழுதியிருக்கிறேன் என்பதே தெரியாது. இரவு 12 மணிவரை அடுப்படிதான் குடியிருப்பு. என்றாலும் நான் கற்பனை உலகிற் புகுந்து விட்டால், எனக்கு இடையூறாக அந்தப் பக்கமே வரமாட்டார். என் எழுத்துப் பணிக்கு எவ்வகைத் தொல்லையும் தந்ததே இல்லை. மக்கட்பேறு : குழந்தைகளென்றால் அளவுக்கு மீறி அன்பு காட்டுவேன். குழந்தைகளைக் கொஞ்சும் பொழுது, நல்ல கவிதையைச் சுவைப்பது போன்ற உணர்வும் இன்பமும் பெறுவேன். அவ்வின்பத்தைப் பல கவிதைகளாக வடித்திருக்கிறேன். எனக்கு முதன் மகள் குமுதம், அடுத்தவன் பாரி. மூன்றாமவன் சுப்பிரமணியன் பின்னர் அன்னம், குமணன், செல்வம், அல்லி என நால்வர் பிறந்தனர். சுப்பிரமணியன் பெயர்க்காரணம் பின்னர்க் கூறுவேன். அவன், ஐந்து அகவை முடியுமுன் முடிந்து விட்டான். 4 அன்புப் பார்ப்புகள் குமுதம் திருமணம் நான் கலப்பு மணம் செய்து கொண்டது போலவே என் மக்களுக்கும் கலப்பு மணம் செய்து வைக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தேன். சாதியை ஒழித்து விடலாம் என்ற நம்பிக் கையில்தான் அப்படி உறுதி பூண்டேன். என் மூத்த மகள் புலவர் குமுதத்துக்கு மணமகன் தேடும் பொருட்டுப் பலரிடமும் சொல்லி வைத்தேன். வை.சு. மஞ்சுளா பாய் அம்மையாரிடமும் சொல்லியிருந்தேன். சாதி ஒழிய வேண்டும் என்று மேடைதோறும் பாடி வந்த ஒருவரின் மகள் வீட்டில் மணமுடிக்கக் கருதி, அம்மையார் தொடர்பு கொண்டார். நம்ம சாதியிலேயே பாருங்கள் என்று அவர்கள் சொல்லி விட்டனர். இதையறிந்து ஏமாற்றத்துக்கு ஆளானேன். இருப்பினும் தளரவில்லை. புதுக்கோட்டையைச் சார்ந்த கொப்பனாபட்டி என்ற ஊரில் என் தலைமையில் ஒரு சீர்திருத்தத் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது சாதிப் பிளவுகளைக் கண்டித்துப் பேசிவிட்டு, என் மகள் கதையையும் கூறி, என் மகளுக்குக் கலப்பு மணந் தான் செய்வேன். மணமகன் கிடைக்கவில்லை யென்றால் என் மகளைக் கிணற்றில் எறிந்து கொல்வேனே தவிர, ஒரு சாதிக்குள் செய்து கொடுக்க மாட்டேன் என்று உணர்ச்சி வயப்பட்டுப்பேசி விட்டேன். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றேன். தற்செயலாக இராம. கலியாண சுந்தரத்தைச் சந்தித்தேன். முடியரசன்! இங்கே ஒரு மணமகன் பார்த்திருக் கிறேன். புலவர் அன்பு. fzgâ, v«.V., ã.v£., v‹w jÄHháÇa® ïU¡»wh®; mt® kf‹ gh©oa‹ v«.V., ã.v£., படித்திருக்கிறார். அவர்களிடம் சொன்னேன். அவர்களும் இசைந்துள்ளனர். பெண் பார்க்க அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்றார். அவ்வாறே ஒரு நாள், மணமகன் வீட்டாருடன் கலியாண சுந்தரம் வந்தார். பெண்ணைப் பார்த்தார்கள். பிடித்தமாகி விட்டது. புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் தலைமையில், ஒப்பந்தம் எழுதப்பட்டது. கலைஞர் தலைமையில் திருமணம் நடத்த விழைந்து, அவர் ஒப்புதல் பெறச் சென்னைக்குச் சென்றேன். அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த க. வீரையாவும் வந்திருந்தார். புதுக்கோட்டையில் கூட்டுறவு வங்கிப் பொன் விழாவிற்குத் தலைமையேற்கக் கலைஞரை வேண்டினார். என்ன ஐயா,செயல் வீரர் கூட்டத்திற்கு வரும் போது வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பது நமது மரபு. ïJ c§fS¡F¤ bjÇahjh? என்று கூறி அவ்விழாவிற்கு இசைவு தர மறுத்து விட்டார். என்னை நோக்கி, கவிஞர்! Ú§fŸ tªj brŒâ v‹d? என்று வினவினார். என் மகள் குமுதம் திருமணத்துக்குத் தலைமை தாங்க வேண்டும் என்றேன். கலைஞர் மறுமொழி தருமுன் வீரையா இடைமறித்து, ஆமாங்க, திருமணத்தையும் பொன்விழா மேடை யிலேயே வைத்துக் கொள்ளலாம்; ஒரே நேரமாகப் போய் விடும் என்று கூறினார். கலைஞருக்குச் சினம் தலைக் கேறி விட்டது. என்னய்யா விளையாடுகிறாயா? யார் வீட்டுத் திருமணத்தை யார் வீட்டு மேடையில் வைத்துக் கொள்வது? செயல் வீரர் கூட்டம் நடக்கும் நாளில் மற்ற நிகழ்ச்சிகளிற் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறேன். மீறிமீறிக் கேட்கிறாயோ? இவர் நம்ம முடியரசன் என்பதால் ஒத்துக் கொண்டேன். போ, எல்லாக் கூட்டத்தையும் ரத்து செய் என்று வெகுண்டு பேசி விட்டு, எழுந்து, அறைக்குள் போய் விட்டார். வெல வெலத்துப் போய்விட்டார் வீரையா. நம் வேண்டு கோளும் வீண் தான் என்று நான் கருதிக் கொண்டிருந்தேன். உள்ளே சென்ற கலைஞருக்கு அவர் துணைவியார் தயாளு அம்மையார், பருக எதோ கொணர்ந்து கொடுத்தார். ஒன்றும் வேண்டாம் போ என உரத்துக் கூவினார். சினம் இன்னும் ஆறவில்லை. சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளிவந்து, கவிஞர்! 8.6.75 காலை 9 மணிக்குத் திருமணம் நடைபெறும். அழைப்பிதழில் அச்சிட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு, வீரையாவை நோக்கி முடியரசனார் வீட்டுத் திருமணம், செயல் வீரர் கூட்டம் இரண்டு நிகழ்ச்சிதான் என்று கூறிப்புறப்பட்டு விட்டார். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அச் சமயத்தில் கலைஞர் செல்லுமிடமெல்லாம் அ.தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டிக் கொண்டிருந்தனர். புதுக்கோட்டைக்கு வரும் போதும் கருப்புக் கொடி காட்ட அக்கழகத்தினர் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். அதையறிந்த வீரையா அது நடைபெறா மலிருக்க மாற்று ஏற்பாடு செய்து விட்டார். இந்நிலையில் அ.தி.மு.க. தலைவர் ம.கோ. ïuhk¢rªâudh® (v«.Í.M®.), கலைஞர், கவிஞர் முடியசரன் வீட்டுத் திருமணத்துக்கு வருவதால், அ.தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார். அதனால் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. நான் காரைக்குடியில் இருப்பதால் புதுக்கோட்டைக்கு வந்து எவ்வித ஏற்பாடும் செய்ய இயலாமையால், புதுக்கோட்டை அழகப்பா நிழற்பட நிலைய உரிமையாளர் சுப. அழகப்பன் என்ற நண்பரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன். கலைஞர் வருவதால் மேடையை மலர் வண்ணமாக்கி அழகு படுத்தி விட்டார். என் நண்பர்கள் தான் அனைத்து உதவிகளும் செய்து துணை நின்றனர். 8.6.75இல் புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. தலைமை தாங்கிய கலைஞர், செயல் வீரர் கூட்டத்திற் கலந்து கொள்ளும் பொழுது, பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் கூடாது என்பது எங்கள் மரபு. முடியரசனார் நெஞ்சத்தி லிருக்கும் தமிழுக்காகவும் கொள்கை உறுதிக்காகவும், அம்மரபிலிருந்து நெகிழ்ந்து இந்நிகழ்ச்சியிற் கலந்து கொள்ளுகிறோம் என்று கூறினார். நான் நேரிற்கண்டு அழையாதிருந்துங் கூட நாவலர் நெடுஞ் செழியனும் வந்து வாழ்த்திப் பெருமைப்படுத்தினார். பேராசிரியர் அன்பழகன் வந்திருந்து வாழ்த்திச் சிறப்பித்தார். அமைச்சர் மாதவனும் வந்திருந்தார். எங்களை நன்றி கூற விடாமல், அமைச்சராக இருந்த அன்பில் தருமலிங்கம் நன்றி கூறினார். அப்பொழுது, கழகம் ஒரு குடும்பம் என்பது மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோளையும் மறுத்து, மரபிலிருந்தும் நெகிழ்ந்து, கலைஞர் என் வேண்டுகோளை ஏற்று வந்து மகிழ்வித்த பெருந்தன்மை, என்பால் வைத்துள்ள ஈடுபாட்டை எண்ணியெண்ணி மகிழ்கிறேன். சீரும் சிறப்புமாக நடைபெற்ற இத்திருமண நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றோர், அமைச்சர்கள் பேசும் பொழுது என்பாற் கொண்ட அன்பைப் புலப்படுத்தியதைக் கேட்டோர் ஒரு கதை கட்டி விட்டனர். திருமணச் செலவு முழுமையும் கலைஞர் ஏற்றுக் கொண்டதாகவும், மேலும் இருபத்தையாயிரம் உரூபா வுக்குக் காசோலை எனக்களித்தாகவும் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் நடந்தது வேறு. கலைஞர் தலைமையில் திருமணம் நடந்தமையால் ஆட்சிகலைக்கப்பட்டவுடன் குமுதம் கணவன் பாண்டியனுடைய வேலை பறிக்கப்பட்டது தான் மிச்சம். திருமணச் செலவைக் கலைஞர் ஏற்றுக் கொண்டார் என்பதும், காசோலை தந்தாரென்பதும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், திருமணத்துக்காக நான் பட்டது எனக்குத்தானே தெரியும்? கையிற் காசில்லாமல்தான் திருமணத்துக்கு முடிவு செய்தேன். என் நண்பர் களுக்கு மடல் எழுதினேன். பணம் இவ்வளவு வேண்டும். உடனே கேட்பு வரைவோலை (டிராப்ட்) எடுத்து அனுப்புக என்றெழுதினேன். பணிந்துதான் எழுதிக் கேட்க வேண்டும். அதைவிடுத்து உரிமையுடன் எழுதினேன். ஆனால் அவரவர் தகுதிக்கேற்பத் தொகையும் குறித்து எழுதினேன். எவருமே மறுக்கவில்லை. உடனுக்குடன் வந்து சேர்ந்தது. சிலர், உங்கள் உத்திரவுப்படி பணம் அனுப்பியுள்ளோம் என்று எழுதி யிருந்தனர். அவர்கள் செய்தது, காலத்தாற் செய்த உதவி. புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார், ஈரோட்டு சு.அ. நடராசன், சீர்காழி ந. துரைராசன், கும்பகோணம் பி.வி. நாதன், பாம்பே ஆனந்தபவன் உரிமையாளர் ஆனந்த குமார், வலம்புரி என்.எம். அண்ணாமலை, திரைப்பட இயக்குநர், சுப. முத்துராமன். அண்ணா எவர்சில்வர் உரிமையாளர் செந்தில், பழ. கருப்பையா போன்றோர் நல்கிய பொருளுதவியாலேதான் திருமணம் நடந்தேறியது என்பதை ஈண்டுக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அன்னம் திருமணம் அடுத்து இரண்டாம் மகள் அன்னத்துக்குத் திருமணம் செய்ய வேண்டும். கலப்பு மணத்திற்கு ஆள் வேண்டுமே! எண்ணிப் பார்த்தேன்! விடுதலை அலுவலகத்திற் சுயமரியாதைத் திருமணச் சங்கத்தில் பத்துப்பன்னிரண்டு முகவரிகள் பெற்று அவர்களை அணுகினேன். திராவிடர் கழகத்தைச் சார்ந்த சிலர், எங்கள் சாதியாக இருந்தால் நல்லது என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டனர். வெளிப்படையாகச் சொல்லக் கூசிய சிலர், பிறபிற காரணங்கூறி விடுவித்துக் கொண்டனர். திருச்சியிலிருந்த சிவலிங்கம் என்ற ஒருவர் மட்டும் (பொது வுடைமைக் கருத்துக் கொண்டவர்) இசைந்து வந்தார். அவர் தம் மகளுக்குக் கலப்பு மணம் செய்து காட்டியவர். வேலை பார்க்கும் பெண்ணாக வேண்டுமென்று பையன் விரும்புகிறான். ï‹iwa bghUshjhu Ãiy¡F mJjhnd cfªjJ? என்று கூறி அவரும் ஒதுங்கிக்கொண்டார். மற்றொருவர், திராவிடர் கழகத்தலைவர் ஒத்து வந்து பெண் பார்த்து விட்டுச் சென்றார். ஐயா கொள்கைப்படி சிக்கனமாகத் திருமணம் முடிக்கலாமென்று நான் கருதுகிறேன். உங்கள் விருப்ப மென்ன? என்று எழுதினேன். எங்களுக்கு ஒரே பையன், அதனால் சீரும் சிறப்புமாக நடத்த விரும்புகிறோம் என்று விடையெழுதி ஒதுங்கிக் கொண்டார். அதாவது மணக்கொடை எதிர் பார்த்திருக்கிறார்கள். அந்த அளவில் அப்பேச்சும் நின்று விட்டது. அண்ணன் இராம. R¥igah (K‹dhŸ nkyit cW¥ãd®) mt®fS« ehD« âUbth‰¿ôÇš gÂòÇí« m.r‰Fz« o.ï.ï., (ã.<.,) என்பவரைக் கண்டு பேசி அவரையே மணமகனாக உறுதி செய்தோம். திருமணம் உறுதியாயிற்று. பணம் வேண்டுமே? என் செய்வது? பெங்களூரில் உலகத்தமிழ்க் கழகத்தினர், பாவேந்தர் விழாவிற்கு என்னை அழைத்துப் பாராட்டிப் பணப்பேழையும் அளித்தனர். பெற்றுத் திரும்புகையில் ஈரோட்டில் வந்து தங்கினேன். அங்கு என் நண்பர் சு.அ. நடராசன், நண்பர் மணி இருவரும் கூடிப்பேசி, ஒவ்வொருவரும் இவ்வளவு தொகை போட்டு, வேண்டியவர் சிலரிடம் பணம் வாங்கித் திருமணத்தை நடத்தி விடுவது என உறுதி பூண்டனர். அவர்கள் என்னை முழுமையாக உணர்ந்தவர்கள் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என என்னையும் உடனழைத்துச் சென்றனர். வேண்டிய நண்பர் களிடம் விவரத்தைக் கூறி, உதவி வேண்டினர். அவர்களும் மனமுவந்து, செய்து விடுவோம் என அழுத்தமாகக் கூறினர். வெற்றிக்களிப்புடன் மீண்டேன். ஆனால் கடைசி நேரத்தில் நண்பர்கள் கை வரவில்லை. கலக்க முற்றேன். ஏன் அவர்களிடம் உதவி வேண்டினோம்? என என்னை நானே வெறுத்துக் கொண்டேன். நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற சமயமாதலின், பணிக் கொடை (கிராச்சுவெட்டி) வந்து சேர்ந்தது. அதனைக் கொண்டு திருமணம் நடத்தி விட்டேன். தலைமை தாங்குமாறு தவத்திரு குன்றக்குடி அடிகளாரை வேண்டினேன் அதே நாளில் பிறிதொரு நிகழ்ச்சிக்கு இசைந் திருப்பினும் அதை ஒத்திப்போடச் சொல்லிவிட்டு, என் வேண்டு கோளை ஏற்றார். என்பால் அன்பும், என் பாடலில் ஈடுபாடும் கொண்டவராதலின் இசைந்தார். 6.9.79 அன்று அடிகளார் தலைமையில் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பாரி திருமணம் அதன் பின் என் மகன் பாரிக்குப் பெண் பார்த்தோம். கவிஞர் மீரா மற்றும் நா. பழநி வேலு என்பவர் வாயிலாகப் பெண் பார்த்தோம். கோவையில் ஒரு பெண் அமைந்தது. மடல் வாயிலாகவே கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது. பெண் முதலாக அனைவர்க்கும் உடன்பாடுதான். ஆனால் தந்தையார் இசைவு தராமையால், வேறிடத்திற் பெண் பார்த்துக் கொள்ளுமாறு எழுதி விட்டனர். நான் என்ன செய்வது? வேறிடத்தில் பெண் பார்த்து, உறுதியும் செய்து விட்டேன். நாளும் குறிக்கப்பட்டு விட்டது. இடையில் பழநிவேலு என்ற நண்பர் வாயிலாகத் தொடர்பு கொண்டு, கோவைப் பெண் வீட்டார் இசைவைப் பெற்றிருக்கிறான் என் மகன். கோவைப் பெண்ணைத்தான் மணம் செய்து கொள்ளுவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான். அவர்கள் மறுத்துவிட்ட பின்புதானே வேறிடத்திற் பெண் பார்த்தேன். நானா வேண்டாமென்று சொன்னேன்? என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அவன் உறுதிப் பாட்டை முன்னரே சொல்லியிருந்தால், மற்றோரிடத்தில் பெண் பார்த்திருக்க மாட்டேன். உங்கள் வற்புறுத்தலுக்காக நீங்கள் சொல்லுமிடத்தில் திருமணம் செய்தாலும் குடும்பம் நடத்த மாட்டேன் என்று சொல்லி விட்டான். அதனால் உறுதி செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. பலர் பகைக்கும் வெறுப்புக்கும் ஆளாகினேன். நானே செய்துவிட்ட தவறு, என் மனத்தில் மாறா வடுவாகி விட்டது. பின்னர்த் திருமணம் பற்றிய எம் முயற்சியும் மேற் கொளா திருந்தேன். அதன் பின் என் நண்பர் ஈரோட்டு நடராசன், என் மனத்தை மாற்றிக் கோவைக்கு அழைத்துச் சென்றார். பெண்ணின் பெற்றோர் நா. வேங்கடாசலம், அவர் துணைவி யார் வடிவு- திராவிடர் கழகத்தினர்; பெண்ணுக்குக் கலப்பு மணமே செய்ய வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தனர்; உறவினருடைய ஏளனம், வெறுப்பு எதையும் பொருட்படுத்தாது உறுதியுடன் நின்றனர். குறிப்பாக வடிவு அம்மையாரின் உறுதிப் பாடும் முற்போக்கு எண்ணமும் பாராட்டத்தக்கன. திருமணம் முடிவு செய்யப்பட்டது. தாலி கட்டுவது பற்றிப் பேச்செழுந்தது. சிலர் வேண்டுமென்றும் சிலர் வேண்டா மென்றும் கருத்துரைத்தனர். பெண்ணின் கருத்தை அறிந்து கொள்ள, அப் பெண்ணிடமே கேட்டேன். தாலி கட்டிக் கொள்வது,தனக்கு உடன்பாடன்று எனவும், நீங்கள் விரும்பினால் கட்டிக் கொள் கிறேன் எனவும் மறுமொழி தந்தனள். சரி, அந்த நேரத்தில் பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்யப் பட்டது. திருமணத்திற்கு விடுதலை ஆசிரியர் வீரமணியை அழைக்கும் பொறுப்புப் பெண் வீட்டாரிடமும் கலைஞரை அழைக்கும் பொறுப்பு என்னிடமும் ஒப்படைக்கப்பட்டது. fiyP® fhiu¡Fo¡F tUif jªj bghGJ, x¥òjš nf£nl‹ ‘vªj¤ njâ it¤âU¡»Ö®fŸ? என்றார். நீங்கள் சொல்லும் தேதிதான் என்றேன். நான் சொல்லும் தேதி பெண் வீட்டாருக்கு ஒத்து வர வேண்டுமல்லவா? அதனால் பெண் வீட்டாருடன் கலந்து பேசி இரண்டுதேதி குறிப்பிட்டெழு துங்கள். எனக்கு வாய்ப்புள்ள நாளில் வருகிறேன் என்றார். பின்பு, பெண் வீட்டாரைக் கேட்டேன். வீரமணி ஒத்துக் கொண்ட தேதியைச் சொன்னார்கள். திசம்பர் 29, கலைஞருக்கு எழுதினேன். அன்பளாவிய அவர்தம் மறுமொழி இதோ! திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் கோபாலபுரம் மு. கருணாநிதி சென்னை - 86. 7.12.1983 அன்புள்ள கவிஞர் அவர்களுக்கு, வணக்கம், தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அன்புச் செல்வனின் திருமண விழாவிற்காக 29.12.83 கோவை நகருக்கோ, 1.1.84 அன்று காரைக்குடி வரவேற்பு நிகழ்ச்சிக்கோ வரவேண்டு மென்று எழுதியிருக்கிறீர்கள். 29.12.83 அன்று சென்னையில் துறைமுகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகக் கலாநிதி எம்.பி. ஒரு மாதத்திற்கு முன்பே தேதி வாங்கி விட்டார். 1.1.84 அன்று மாவட்டக் கழக மாநாடு இருக்கிறது. fyhÃâ v«.ã., அவர்களிடம் தங்கள் கடிதம் கிடைத்த அன்றே கூறி, அந்தத் தேதியை மாற்றிக் கொள்ள இயலுமா என்று கேட்டிருந்தேன். எப்படியும் நம் இல்லத்து நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் சென்னைத்துறை முகத்து நிகழ்ச்சியில் சுப்பிரமணியசாமி, ஜார்ஜ் பெர்னாண்ட போன்ற வர்களுடன் கலந்து கொள்ள வேண்டுமென்றும், அவர் களுக்குத் தேதியை மாற்றுவதற்கு இயலவில்லை என்றும் கலாநிதி இன்றுதான் தெரிவித்தார். எனக்குத் தங்களுக்கு எப்படிச் சமாதானம் எழுதுவ தென்றே தெரியாத நிலையில் தான் இக்கடிதம் எழுதுகிறேன். தங்களின் விழைவினை நிறை வேற்ற முடியாமைக்கு வருந்து கின்றேன். தங்கள்அன்புள்ள, மு. கருணாநிதி. கலைஞர் இவ்வாறு எழுதிய பின் நான் என்னசெய்ய இயலும்? பெண் வீட்டார் சொன்ன நாளிலேயே நடத்த முடிவு செய்தேன். என் மகன் மறுத்தான். தேதியை மாற்றுங்கள். கலைஞர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றான். பெண் வீட்டார் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருப்பர். எப்படி நாளை மாற்றுவது? என்றெண்ணி அதே தேதிதான் என்று முடிவு செய்தேன். இவனோ, கலைஞர் வராத வருத்தத்தில் திசம்பர் 27வரை திருமணச் சட்டை தைத்துக் கொள்ள மறுத்து விட்டான். âUkz ehs‹W thuhJ kW¤J ÉLthndh?என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அதனால் இத்திருமணமும் நின்று விடுமோ? என அச்சம் தோன்றிவிட்டது. அவனுக்கு நெருக்கமான மருத்துவர் பழநியாண்டியிடம் சொன்னேன். பழநியாண்டி எனக்கு மகன் போன்றவர். விடுப்பு எடுத்துக் கொண்டு அவரும் அவர் துணைவி சுந்தரியும் பெரு முயற்சி செய்து கோவைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். 1983 திசம்பர் 29இல் மானமிகு. கி. வீரமணி தலைமையில் திருமணம் நடந்தேறியது. தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற வில்லை. என் துணைவியார், வீட்டுக்கு வந்த பின்பு தாலி போட்டு விடலாம் என்றார். கட்ட விரும்பினால் மேடையிலேயே கட்டியி ருக்கவேண்டும். மேடையில் ஒரு நெறி; வீட்டில் ஒரு நெறியா? கொள்கை வழி நடப்பது எனக்காகவா? ஊருக்காகவா? என்றவுடன் அவரும் இசைந்து விட்டார். பலர் வாழ்த்துரைத்தனர். எதிர்பாராவகையில் இருவர் வந்து வாழ்த்தினர். இத்திருமணத்திற் கலந்து கெள்ளக் கலைஞருக்குப் பெரு விருப்பம்இருந்தும் சூழ்நிலை காரணமாக அவர் வர இயலவில்லை. அவர் சார்பில் எம்மிருவரையும் சென்று வரப் பணித்துள்ளார் எனக்கூறி வாழ்த்தினர். அவ்விருவருள் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன். மற்றொருவர் மு. இராம நாதன். நான் கலைஞரை அழைத்து வரவில்லையே என்று, என் மகன் என் மேல் இன்னும் வருத்தமாகவே இருக்கிறான். கலைஞரவர்கள் தம் சார்பில் பேராளர் இருவரை வரவிடுத்த துடன் அமையாது வாழ்த்தும் எழுதியிருந்தார். அவ்வாழ்த்து இதோ: அன்புள்ள கவிஞர் அவர்களுக்கு, தங்கள் செல்வன் பாரியின் மணவிழா அழைப்பு கிடைத்தது. மகிழ்ச்சி. நான் வரஇயலாமைக்கான காரணங்களை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். மணமக்கள் வளமெலாம் பெற்று வாழ்ந்திட இதயமார்ந்த வாழ்த்துகள். அன்புள்ள, மு. கருணாநிதி 25.12.83 குறிப்பு : மணவிழாஅழைப்பில் சாதி பேதம் நீக்கிட அண்ணா கூறிய மொழிகளும் இடம் பெற்றிருக்கலாம். நான் ஒவ்வொரு திருமண அழைப்பிதழிலும் சாதி வேற்றுமை கூடாது என்பதற்குப் பலர்தம் பொன் மொழிகளை அச்சிடுவது வழக்கம். அம்முறைப்படி, இவ்வழைப்பிதழிலும் வள்ளுவர் முதல் பெரியார் வரையிலுள்ள பெரு மக்கள் வாய் மொழிகளை வெளி யிட்டிருந்தேன். அண்ணாவின் மொழிகள் இடம் பெற வில்லையே எனக் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். நம் திராவிட இயக்கத்தின் சார்பில் ஐயாவின் மொழிகளை வெளியிடின் அனைவரும் அதனுள் அடங்குவர் என்ற கருத்தில் அவ்வாறு வெளியிட்டேனே தவிர வேறொன்றும் இல்லை. எப்படியோ என் மக்கள் மூவருக்கு என் கொள்கைப்படி கலப்பு மணம் செய்து வைத்து விட்டேன். எஞ்சிய மூவருக்கும் (குமணன், செல்வம், அல்லி) அவ்வாறே செய்து விடின் என் இல்லத்தில் ஆறு சாதிகளைச் சார்ந்தோர் இருப்பர், அவர் யாவருங் கேளிர் ஆகிவிடுவர், சாதியை நாட்டில் ஒழிக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் இருப்பினும் என் வீட்டிலாவது சாதி ஒழிந்ததே என்ற பொந்திகை (திருப்தி)யுடன் இருப்பேன். பொதுவாக என் மக்கள் நல்லவர்தாம். எனினும் என்னியல்பு களுக்கு முழுவதும் ஒத்துப் போகார். ஆம்; நான் ஆத்திசூடி கற்றுத் தந்த திண்ணைப் பள்ளியிற் படித்தவன். அவர்களோ அறிவியல், ஆங்கிலங் கற்றுத்தந்த பெரிய கட்டடங்களிற் படித்தவர்கள். இரு தன்மையும் ஒத்துப் போவது அரிதுதானே! 5 வலைப்படா மயில் வீண் பழிகள் என்பாற் பயின்ற திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாணவரும் பேராயக் கட்சியைச் சேர்ந்த பெற்றோர் சிலரும் கூடி, என் மேற் சில குற்றங்களைப் புனைந்து, அப்பொழுதிருந்த முதலமைச்சர் பக்தவத்சலனாருக்கு எழுதிவிடுக்க, அதனை அவர், மண்டலக் கல்வி அலுவலருக்குத் திருப்பி விடுக்க, அவர், எங்கள் மாவட்டக் கல்வி அலுவலருக்குத் திருப்பி விட்டார். அவர், 31.3.67 நாளிட்ட கமுக்க அறிக்கை (இரகசிய அறிக்கை) யொன்றை, எங்கள் பள்ளித் தாளாளருக்கு உய்த்தார். அவ்வறிக் கையில் என்மேற் சுமத்தப்பட்ட குற்றங்கள் வருமாறு : 1. தமிழாசிரியர் திரு. முடியரசன் 26, 27.11.66 தேதிகளில் காரைக்குடியில் நடைபெற்ற இந்தி யெதிர்ப்பு மாநாட்டை நடத்துவதற்கு உதவி செய்தமை, அம்மாநாட்டில் கலந்து கொண்டமை. 2. வகுப்புகளில் இவ்வாசிரியர் வகுப்பு நேரங்களில் அரசியலைப் பற்றி மாணவர்களுக்குக் கூறுதல். 3. வகுப்பு நேரத்தில் மாணவர்களைக் கொண்டே தான் எழுதும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதச் சொல்லி அவற்றை அஞ்சலில் அனுப்ப ஏற்பாடு செய்தல். 4. பாடங்களைச் சரிவரக் கற்பிக்காமல் பிறகாரியங்களில் முழுக்கவனத்தையும் முயற்சியையும் செலுத்துதல் 5. சில அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாக வகுப்பறையில் பேசுவது. தாளாளர் என்னைத் தமது இல்லத்திற்கு அழைத்து, கல்வியலு வலர் விடுத்த கமுக்க அறிக்கையையும், முதலமைச்சருக்கு எழுதப்பட்ட மடலின் படியையும் என்னிடம் காட்டினார். கையொப்ப மிட்டோர் யார் யார் எனத் தெரிந்து கொண்டேன். என் மேற் சுமத்தப் பட்டவை வீண் பழிகளே என்றேன். முன்பிருந்த தலைமையாசிரியர்கள் சீனிவாசஐயர், ஆராவமுது ஐயங்கார் என்னைப் பற்றித் தங்களிடம் சொல்லியிருப்பார்களே என்றேன். அதற்குத் தாளாளர் ஆராவமுது ஐயங்கார் உங்களைப் பற்றி, பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் என்று என்னிடம் சொல்லி யிருக்கிறார். உங்களைப் பற்றி நான் நன்றாக அறிவேன். கல்வியதி காரிக்கு நான் பதில் எழுத வேண்டுமல்லவா? அதனால் பேருக்கு விசாரணை செய்கிறேன்; நீங்கள் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். மீண்டும் நான், மாணவர்களைக் கூட அழைத்துக் கேட்டால் என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே என்றேன். தலைமையாசிரியர் கணேசனிடம் சொல்லியிருக் கிறேன். அவர் மாணவர்களை அனுப்புவார். கேட்கிறேன். என்று கூறி, தாளாளர் விடை கொடுத்தார். பார்ப்பன மாணவர்களைத் தேர்ந்தெடுத்துத் தலைமை யாசிரியர் கணேசன் செட்டியார் அனுப்பியிருக்கிறார். தாளாளர் அவர்களிடம் வினவ, எங்கள் தமிழ் வாத்தியார் ரொம்ப நல்லவர்; அரசிய லெல்லாம் பேச மாட்டார். எங்களைத் திட்டு வார், கண்டிப்பார், அடிப்பார், நன்றாகப் படிக்கச் சொல்லுவார், அவர் எங்களுக்கு அப்பா மாதிரி, தெய்வம் மாதிரி, கவிதை யெல்லாம் எங்களை எழுதச் சொல்ல மாட்டார். நாங்கள் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தால் அப்பொழுது அவர் ஏதாவது எழுதுவார் என்றெல்லாம் சொல்லி யிருக்கின்றனர். கல்வியலுவலர் விசாரணை மற்றொரு நாள் மாவட்டக் கல்வியலுவலர் ஐடி என்பவர் பள்ளிக்கு வந்து, தனியறையில் அமர்ந்து, என்னை யழைத்து உசாவினார். அவர் : இந்தியெதிர்ப்பு மாநாடு நடத்தினீர்களா? நான் : மாநாட்டுக்கே நான் போகவில்லை; நடத்தியவர் யாரென்பதும் எனக்குத் தெரியாது. அவர் : விடுமுறை நாள் தானே, போயிருக்கலாமே? நான் : ஆம், கட்டாயம் போயிருப்பேன், என் குழந்தைக்கு அம்மை வார்த்திருந்தது; பாடநூல் ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன்; வெளியீட்டாளரும் கும்ப கோணத்திலிருந்து வந்திருந்தார். அதனால் போக இயலவில்லை அது மட்டுமன்று. எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே நடந்த, கலைஞர் எழுதி நடித்த காகிதப்பூ நாடகத்திற்கும் செல்லவில்லை. அவர் : வகுப்பறையில் அரசியல் பற்றிப் பேசுவதுண்டா? நான் : உள்ளபாடங்களை நடத்தவே 40 மணித் துளிகள் போதவில்லை. அரசியல் பேச நேரம் ஏது? சாதி, மொழி பற்றிப் பாடங்களில் வந்திருந்தால் இரண்டும் பற்றிப் பல மேற்கோள் காட்டுவேன். அவர் : உங்கள் கவிதைகளை எழுதுமாறு, வகுப்பறையில் மாணவர்களிடம் கூறுவீர்களா? நான் : கவிதை யார்வமுள்ள பிள்ளைகளிடம் எழுதச் சொல்லுவேன், அதுவும் வீட்டில் எழுதி வருமாறு கொடுப்பேன். அவர் : அஞ்சலில் சேர்க்குமாறு மாணவர்களிடம் சொல்வீர் களா? நான் : பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொழுது வழி யிலுள்ள அஞ்சற் பெட்டியிற் போடச் சொல்லுவேன். அவர் : பாடங்களைச் சரியாக நடத்துவதில்லையாமே? நான் : நான் நடத்தவில்லையென்றால் பிள்ளைகள் மிகுந்த மதிப்பெண்கள் எப்படிப் பெற முடியும்? அவர் : சில அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாக வகுப்பறையில் பேசுவதுண்டா? நான் : மேடையில் கூட அரசியல் பேசுவதில்லை. மற்றொன்றையும் கூட நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று நீங்கள் கல்வியலுவலர். இரண்டாண்டுக்கு முன் பரமக்குடியில் நீங்கள் தலைமையாசிரியர். அங்குள்ள மற்றொரு பள்ளியில் நடந்த மாணவர் கூட்டத்தில், உங்கள் தலைமையில், முக்கனி என்ற தலைப்பில் நான் பேசினேன். அங்குத் தடுப்பாரும் இல்லை. அஞ்சவேண்டிய தேவையுமில்லை. அவ்வாறிருந்தும் ஏதாவது அரசியல் பேசினேனா? முடிவுரையில் என் கருத்தைப் பாராட்டி நீங்கள் பேசியதை நினைவு கூர வேண்டுகிறேன். அவர் : அடே! அவர் தானா நீங்கள்! சரி; நீங்கள் மாணவர் களைத் தூண்டிவிடுவதுண்டா? நான் : மாணவரிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ளும் இயல்புடையவன் நான். இன்று தூண்டிவிட்டால், நாளை என் சொல்லுக்கு மதிப் பளிக்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிந்துள்ளமையால் அவ்வாறு செய்ய மாட்டேன். ஆனால் நான், உண்மையிலேயே இந்தியெதிர்ப்புக் கொள்கையுடையவன்தான். அதற்குச் சான்று என் நூல்கள். அவ்வகையில் என் மேல் வழக்குத் தொடர்ந்தால் பெருமைப்படுவேன். எவ்வகைத் தண்டனையும் ஏற்றுக் கொள்வேன். தூய ஆசிரியத் தொழிலை மாசுபடச் செய்வதற்கு நான் வெட்கப் படுகிறேன். மறுநாள் என் நூல்களைக் கொணரச் சொல்லிப் படித்தார். அதன் பிறகு குற்றம் மெய்ப்பிக்கப் பெறாமையால் கோப்புகள் மூடப்பட்டன. 1965இல் நாடு தழுவிய இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடை பெற்ற பொழுது, கல்லூரி மாணவர்கள், இந்தி ஒழிக பூங்கொடி தந்த முடியரசன் வாழ்க என்றெல்லாம் வழியெங்கும் எழுதி வைத்தனர். அது கண்ட பேராயக்கட்சியினருள் சிறுமையாளர்தாம், இவ்வாறு பழி சுமத்தினர் என்பதைத் தெரிந்து கொண்டேன் . துரைராசு தமிழாசிரியர். முடியரசன் தி.மு.கழகத்தான். இருவரையும் ஒன்று சேர விடாமல் தான் வாழ்ந்து வந்தேன். என் கருதியோ இப்படியெல்லாம் தொல்லை தந்து விட்டனர். எனினும் உறுதி குலையவில்லை. கையொப்பமிட்டு அனுப்பிய திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த என் மாணவனை அழைத்து, தம்பி, நான் வேலையிலிருந்து விலக்கப்பட்டாலோ சிறை செய்யப் பட்டாலோ என் குடும்பம் என்னாவது? ஏன் இப்படிச் செய்தாய்? உனக்கென்ன தீங்கு செய்தேன்? தந்தை பெரியார் தமிழனைக் கெடுப்பதற்கா இவ்வளவு பாடுபடுகிறார். என்றேன். சார்! ஐயா கிட்டே உங்களுக்கு இவ்வளவு ஈடுபாடு இருக்குங் கிறது எனக்குத் தெரியாது, காங்கிரசுக் காரங்க பேச்சைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டுட்டேன் என்றான். ஐயாவிடம் நான் கொண்டிருக்கும் ஈடுபாடு உனக்கே தெரிய வில்லை யென்றால், நான் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவ்வளவு கட்டுப்பாடாக நடந்திருக்கிறேன் என்று தானே பொருள். அப்படிப் பட்ட நான் எப்படி அரசியல் பேசியிருக்க முடியும்? என்றேன். பின்னர், தவறுக்காக அவன் வருந்தினான். திராவிடர் கழகம் பேராயக்கட்சியுடன் இணைந்து பணியாற்றிய நேரம் அது. தமிழர், தம்மையுணராது, தமக்குட்பகைத்துத் தம்மைத் தாமே அழித்துக் கொள்வது நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் இயல்பு. தமிழர் தம்மையுணர்ந்து, தம்முள் இணைந் திருந்தால் பெயரளவில் தமிழ் நாடாக இன்றி, உண்மைத் தமிழ் நாடாகி இருக்குமே! சிறை செய்யச் சூழ்ச்சி அழுக்காறுற்ற - பேராயக்கட்சியினர் சிலர், காவற் கூடஞ் சென்று, சிறை செய்ய வேண்டியவர் பட்டியலில் என் பெயரையும் சேர்த்துள்ளனர். என்னைச் சிறை செய்ய முடிவு செய்யப்பட்டு விட்டது. இதனை யறிந்த தி.மு.க. செயலாளரும் நகர்மன்ற உறுப்பினரும் என்னைத் தலைமறைவாகி விடும்படி செய்தி விடுத்தனர். நான் கொலை செய்தேனா? கொள்ளையடித் தேனா? ஏன் தலைமறைவாக வேண்டும்? என்று மறுத்து விட்டேன். புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார், என்னைச் சிறை செய்யப்போகும் செய்தியறிந்து, ஓடோடி வந்து, ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? c§fis¢ áiw¥ gL¤âdhš FL«g« v‹dhtJ? என்று பரிவுடன் மொழிந்தார். நான், பூங்கொடிக் காப்பியம் எழுதிய குற்றத்தைத்? தவிர, எக்குற்றமும் செய்யவில்லை. குடும்பத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. உங்களால் காப்பாற்றப் படாமல், நோயால் இறந்திருந் தால், குடும்பம் என்ன செய்யும்? அதை இப்பொழுது செய்து கொள்ளட்டும் - என்றேன். இப்படித்தான் விதண்டா வாதம் செய்வீர்கள். சரி அப்படி ஏதாவது நடந்து விட்டால் உடனே எனக்குத் தெரிவியுங்கள். நான் வந்து பொறுப்பில் எடுத்து விடுகிறேன் என்று சொல்லிச் சென்றார். நான் அடிக்கடி, புதுக்கோட்டைக்குச் செல்வதுண்டு. செல்லும் பொழுதெல்லாம் உளவறிவோர் என்னைப் பின் தொடர்ந்துள்ளனர். பல முறை தொடர்ந்தும் பயனில்லாமல், அலுத்துப் போய் அவர், தம் நண்பரிடம் என்னய்யா! முடியரசன் என்று ஒரு வாத்தியாரை ஃபாலோ பண்ணச் சொன்னாங்க. நானும் பலதடவை புதுக்கோட் டைக்குப் போனேன். அந்த ஆளு ஆபத்திரிக்கும் டூடியோவுக்கும் போயிட்டு வர்ராறே தவிர, வேற ஒரு எழவையுங் காணோம் என்று சலிப்புடன் சொல்லியிருக்கிறார். அவர் நண்பர் ஓர் ஆசிரியர், பால்ராசு என்பது அவர் பெயர். அவர் எனக்கும் வேண்டியவர். அனைத் தையும் என்னிடம் கூறிவிட்டார். சிறை செய்வார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்தேன். சிறையிலிருந்து கொண்டே வீரகாவியம் என்ற நூலை எழுதி முடித்து விடலாம் என்றும் கோட்டை கட்டியிருந் தேன். ஆனால் கோட்டை தகர்க்கப்பட்டது. பேராயக் கட்சியைச் சார்ந்த - செல்வாக்கு மிக்க - என்னை நன்கு அறிந்த ஒருவர் முயற்சியால் பட்டியலிற் சேர்க்கப்பட்ட என் பெயர் நீக்கப்பட்டது. தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலைமை தாண்டவ மாடியது. யாரைப் பிடிப்பது, யாரை நொறுக்குவது, யாரைக் கொல்வது என்று கண்கால் தெரியாமல், வல்லாண்மை (சர்வாதிகாரம்) தலைவிரித்தாடிய நேரம். வழக்கம் போல், பேராயக் கட்சியினரால், சிறை செய்ய வேண்டியோர் பட்டியலில் என் பெயரும் சேர்க்கப் பட்டது. இரங்கத்தக்கோர் சிலர், தலைமறைவாகி விட்டனர். அப்பொழுது கோட்டாட்சித் தலைவராக இருந்தவர் ஆளப்பப் பிள்ளை என்பவராம். அவரை நான் முன்பின் பார்த்த தில்லை. அவர் என் பெயரை, கவிதைகளை நன்கு அறிந்தவராம். அதனால் அன்பு கருதியோ? பரிவு கருதியோ? குற்றம் அறியேன் என்று கருதியோ? என் கருதியோ என் பெயரை ஒதுக்கி வைத்து விட்டார் என்று அங்குப் பணிபுரியும் அலுவலர் வாயிலாகப் பின்னர்த் தெரிய வந்தது. இந்நேரத்தில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட கலைஞருக்கு மடல் எழுதினேன். பலர் தடுத்தும் துணிந்து எழுதினேன். பொன், புட மிட்டால் மேலும் ஒளிசிறக்கும், சந்தனம், தேய்க்கத் தேய்க்க மேலும் மணம் பிறக்கும் சங்கு சுட்டாலும் வெண்மை கொடுக்கும் என்று எழுதியிருந்தேன். இம்மடல் அரசின் பார்வைக்குட்பட்டுக் கலைஞரை அடைந்தது. வல்லாண்மையர், அவரை, அவர் குடும் பத்தைப் படுத்திய பாடுகளை நினைத் தாலே நெஞ்சு நடுங்கும். விடுதலை பெற்ற நாட்டின் அருமை பெருமை - களையெல்லாம் அப்பொழுது அறிந்து கொண்டேன். கலைஞர், ஒரு போராட்டச் சித்தர் என்பதால், அரசு தந்த வேதனைகளில் தம் உள்ளத்தை ஒட்ட விடாது, தனித்து நின்று சித்து விளையாடல் புரிந்து வந்தார். அந்த நிலையிலும் மறுமொழி எழுதினார். மு.கருணாநிதி சென்னை, தலைவர் 26.2.76 திராவிட முன்னேற்றக்கழகம் அன்புடையீர், வணக்கம், தங்கள் கடிதம் என் நெஞ்சுக்கு இதமாக இருந்தது. அண்ணாவின் கொள்கைகளுக்கு என்றுமே அழிவில்லை. அந்த உறுதியுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அன்புள்ள, மு.கருணாநிதி கலைஞர் சந்திப்பு 1971ஆம் ஆண்டு, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக் காகப் பாடுங்குயில்கள் என்ற துணைப் பாட நூலொன்று எழுதிக் கொடுத்தேன். விடுதலைக் குயில் (பாரதியார்) புரட்சிக் குயில் (பாரதிதாசன்) இசைக்குயில் (வேதநாயகம்) மணிக்குயில் (கவிமணி) என்ற தலைப்புகளில் எழுதியிருந்தேன். நான்காண்டுகள் பாடநூலாக வைத்திருந்தனர். அதிற் சில மாற்றங்கள் செய்ய வேண்டி, 1976 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் 7,8 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தனர். இலக்கணப்புலவர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை தலைமையில் கூட்டம் நிகழ்ந்தது. தில்லியிலிருந்த நம் தமிழ்ப் பேராசிரியர்கள், சில மாற்றங்கள் கொடுத்திருந்தனர். சிலவற்றை மாற்றிக் கொடுத்தேன். சிலவற்றை மாற்ற இயலாதென்று கூறிவிட்டேன். தமிழ் நாட்டுக்க விஞர்கள் மட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளனர். வடநாட்டுக் கவிஞர் இடம் பெறவில்லை என்ற குறிப்பொன்றிருந்தது. என்ன ஐயா! வேடிக்கையாக இருக்கிறது? அந்தந்த மாநிலங் களில் அந்த அந்த மொழிக் கவிஞர்களைப் பற்றி யெழுதுவது ஒரு குறையா? என்றேன். வடநாட்டில் நம் ஔவையைப் பற்றி எவனாவது எழுதச் சொல்லியிருக்கிறானா? நம்ம மடையன் தான் இப்படியெல்லாம் சொல்லுவான் என்று வருத்திக் கூறினார் வேணுகோபாலபிள்ளை. கைநடுங்க நா நடுங்கப் பேசிய அவ்வளவு பெரிய முதியவர், இக்கடுமையான சொல்லைப் பயன் படுத்தினார் என்றால் அவர் மனம் எவ்வளவு புண் பட்டிருக்க வேண்டும்! தமிழன் அடிமையாகவே இருந்து, பழகி இன்பங் கண்டவன். ஆனால் இன்னும் அடிமையாகவே இருக்க விழைகிறான். சொன்னால் விரிந்த மனப்பான்மை என்பான். தமிழ் மாநிலத் தானுக்கு மட்டுந்தான் விரிந்த மனப்பான்மை வேண்டுமோ? ஏனைய மாநிலத்தானுக்கு மட்டும் சுருங்கிய மனப்பான்மை இருக்கலாமோ? எது விரிந்த மனம்? சுருங்கிய மனம்? என வேறு பாடறியாதவன் தமிழன்! எட்டாந்தேதி கூட்டத்திற்குச் செல்லவேண்டும்; ஆனால், நான் கலைஞர் இல்லத்திற்குச் சென்றுவிட்டேன். நுழைந்ததும் திகைத்துப் போனேன். எந்நேரமும் நெருக்கடியாகவே அவ்வில்லம் பொலியும். நான் சென்ற பொழுது அம்மனையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. பொலிவிழந்து நிற்கக் கண்டேன். நெருக்கடி (எமர்ஜென்சி) அரசு இருந்தமையால் இங்கே நெருக்கடி இல்லை. அப்பொழுது கலைஞர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். என்றும் போல் மலர்ச்சியாகத்தான் இருந்தார். வணக்கம் என்றேன். வணக்கம், வாருங்கள், எப்பொழுது வந்தீர்கள்? என்றார் கலைஞர். இரண்டு நாள் ஆகிறது என்றேன். வண்டியில் ஏறுங்கள் பேசிக் கொண்டே போகலாம் என்றார். ஏறியதும், மகிழுந்து புறப்பட்டது. கயல் தினகரனும் உடனிருந்தார். அவர், கலைஞரின் அன்புக்குரியவர். கலைஞர் மலர்ந்த முகத்துடன் பல செய்திகள் சொல்லிக் கெண்டே வந்தார். கூட்டங்களுக்குச் செல்வது, அங்கே நடப்பது, அரசின் திருவிளை யாடல்கள் முதலியன பேச்சில் இடம் பெற்றன. வழக்கு! வழக்கு! என்று ஒரு நாளைக்கு எத்தனை வழக்கு! இப்பொழுது கூட அது சம்பந்தமாகத் தான் போகிறேன் என்றவர், திடீரெனப் பேச்சை நிறுத்தி, ஆமா நீங்கள் என்ன வேலையாக வந்தீர்கள்? அது தெரியாமல் பேசிக் கொண்டே வருகிறோமே! எங்கே போக வேண்டும்? கொண்டு போய் விடுகிறேன் என்றார். பாடநூல் தொடர்பான கூட்டத்திற்கு வந்தேன். உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலால் இன்று இங்கு வந்து விட்டேன். அரசின் செலவிலேயே உங்களையும் பார்க்க வந்தேன். போக வேண்டிய இடத்திற்கு வண்டிபோகட்டும் என்று கூறிச் சிரித்தேன். அடஅட! c§fS¡F VjhtJ Mg¤J tªJÉl¥ ngh»wJ! எனக் கூறி ஒரு வெற்றிலை வாணிகர், தமக்கு விருந்தளித்தமைக்காக அவ்வணிகருக்கு அரசு தந்த தொல்லை களைக் கூறினார். வந்தால் வரட்டும் என்று நான் கூறி முடிக்குமுன் வண்டி ஒரு வீட்டில் நின்றது. அது பாளையங்கோட்டை வழக்கறிஞர் சண்முகம் வீடு. கலைஞர் இறங்கி நான் வருகிறேன் நீங்கள் போய் வாருங்கள், கவிஞர் என்று உள்ளே சென்றார். எதையும் பொருட் படுத்தாமல் ஏன் கலைஞரைக் காணச் செல்ல வேண்டும்? இத்தமிழினத்திற்குத் தமிழ் நாட்டிற்குக் கலைஞர் கருணாநிதியும் திராவிடர் கழக வீரமணியும் தேவை யென உறுதியாக நம்புவதால் அத்துணிவு வந்தது. வலிய வந்த வழக்கு 1979 ஆம்ஆண்டு, எதிர்பாரா வகையில் சென்னை உயர் - முறை மன்றத்திலிருந்து (ஹைகோர்ட்) ஓர் அறிக்கை எனக்கு வந்தது. முறை மன்றத்தை அவமதித்ததாக அரசு வழக்கறிஞர் என் மீதுவழக்குத் தொடர்ந்திருந்தார். எனக்கு ஒன்றுமே விளங்க வில்லை. நமக்குத் தொடர்பில்லாத செய்தியாக இருக்கிறதே! என்று கலங்கி விட்டேன். நான் இதற்கு முன் எவ்வழக்கும் அறியேன். எதிர் வழக்காடற்கேற்ற பொருள் வளமும் பெற்றிலேன். அறிக்கைக்குப்படியெடுத்து நான் வரும் நாளையுங் குறித்து மடலொன்றும் எழுதிக் கலைஞருக்கு விடுத்தேன். குறித்த நாளிற் சென்னைக்குச் சென்று கட்சி அலுவலகத்துள் நுழைந்தேன். என் மடலை மேசையின் மேல் வைத்துக் கொண்டு, என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் கலைஞர். ‘V‹ ï›tsî neu«? என்று வினவி விட்டு விவரங் கேட்டார். நான் எந்த விவரத்தைச் சொல்வது? ஒன்றும் தெரியாதென்றேன். ‘T£l¤âš VjhtJ mtkâ¤J¥ ngáÜ®fsh? என்றார். இல்லையென்றேன். ‘fÉijÆš VnjD« Fiw T¿¥ghoÆU¡»Ö®fsh? என்றார். சில ஆண்டுகளாகக் கவிதையே எழுதவில்லை யென்றேன். என்றும் மலர்ச்சியாக விளங்கும் கலைஞர் முகம், அப்பொழுது வாடிப் போயிருந்தது. உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மறு மொழியில்லை. அச்சமயம் பேராசிரியர் அன்பழகன் வந்தார். பொருளாளர் சாதிபாட்சாவும் அங்கிருந்தார். இங்கே பாருங்கள்! நம்ம கவிஞர் நல்ல மனிதர்; இவரை வம்புக் கிழுக்கிறது அரசு, பாளை. சண்முகத்துக்குப் ஃபோன் செய்தேன். அவர் வீட்டில் இல்லை என்று சாதிக்கிடம் சொல்லி விட்டு, மீண்டும் கலைஞர், தொலைபேசியிற் பேசினார். பேராசிரியர் அன்பழகன், அடே! எடுத்த எடுப்பிலேயே முடியரசன் பெரிய வழக்கைச்சந்திக்கிறாரே என்று நகையாடினார். அவர்அரசியலில் பல வழக்குகளைச் சந்தித்தவர். நகைச்சுவையாகப் பேசினார். எனக்கு இது முதல் வழக்கு;இன்னதென்று புரியாத வழக்கு. என் நடுக்கம் எனக்குத் தானே தெரியும். சிறிது நேரத்தில் என்.வி.என். சோமு வந்தார். அவரிடம் அந்த அறிக்கையைக் கலைஞர் கொடுத்து, இதன் விவரம் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று சோமுவிடம் கொடுத்தார். மறுநாள் காலை அலுவலகம் சென்றேன். சோமு, மகிழுந்தொன்றில் வந்து என்னை யழைத்துச் சென்றார். செல்லும் பொழுது, என்னிடம் உண்மை கூறுமாறு வினவினார். ‘Úâgâ ïÞkhÆY¡F Ú§fŸ VjhtJ foj« vGâÜ®fsh? என்றார். அவரை எனக்குத் தெரியவே தெரியாது. நான் எழுதவும் இல்லை - என்றேன். நேற்று கோர்ட்டுக்குச் சென்று விவரங்களைத் தெரிந்து கொள்வதற்குள் கலைஞர், இரண்டு முறை ஃபோன் செய்து, என்ன? என்ன? என்று பதறிக் கொண்டே கேட்டார். c§fË l¤âš ï›tsî m‹ò it¤ âU¡»whnu! என வியந்தார். முன்னாள் சட்டமன்றப் பேரவைத்துணைத் தலைவர் கணபதியும் என்.வி.என் சோமுவும் என் பொருட்டு வழக்குரை யாடினர். வழக்கு சனவரி 24க்கு ஒத்திப் போடப்பட்டது. வழக்கறிஞர் கணபதி, நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் யாருக் காவது எழுதிய கடிதங்கள் கிடைக்குமா? அதுவும் அஞ்சலட்டை, அல்லது உள் நாட்டுக்கடிதமாக இருக்க வேண்டும் என்றார். தற்செயலாகப் பாரி நிலையம் சென்றிருந்த நான் அதன் உரிமையாளர் செல்லப்பனிடம் செய்திகளைச் சொன்னேன்: அவர் கோப்புகளைப் பார்த்தார். பத்துப் பன்னிரண்டு மடல்கள் கிடைத்தன. அவற்றைப் பெற்று வந்து கணபதியிடம் கொடுத்து விட்டு ஊருக்கு வந்து விட்டேன். 24ஆம் தேதி சென்னைக்கு வந்து, முறை மன்றத்திலுள்ள கணபதி அறைக்கு வந்து விட்டேன். கருப்புக்குப்பாயம் அணிந்த மூவர் வணக்கம் என்று கூறிய வண்ணம் வந்தனர். நானும் வணக்கம் கூறி மூன்றாவதாக வந்திருப்பவர் யாரெனத் தெரியாது விழித்தேன். அப்பொழுது எனக்குப் பார்வை மங்கியிருந்த நேரமுங்கூட. _‹whkt® ‘v‹id¤ bjÇ»wjh? என்றார். குரலைக் கேட்டதும் கூர்ந்து நோக்கி சாதிக் பாட்சா எனத் தெரிந்து கொண்டேன். அட ஓ! இந்தக் கோலத்தில் உங்களைப் பார்த்ததில்லை. அதனால் சட்டென்று தெரிந்து கொள்ள முடிய வில்லையென்றேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்காக இந்த ஆடை அணிகிறேன். கலைஞர்தான் என்னையும் வரச் சொன்னார். என்றார். கலைஞரின் அப்பேரன்புக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்? நெகிழ்ந்து விட்டேன். சாதிக் பாட்சா வழக்காடினார். நடுவர் இசுமாயிலுக்கு எழுதப் பட்ட மடலில் உள்ள கையொப்பத்தையும் என் பழைய மடல்களில் உள்ள கையொப்பத்தையும் காட்டி, இரண்டிலும் உள்ள மாறு பாட்டை விளக்கிப் பேசினார். நடுவர்கள் வழக்கைக் கேட்டுக் கொண்டு சனவரி 27க்கு ஒத்திப் போட்டனர். இடையில் இரண்டு நாளே இருந்தமையால் ஊருக்குச் செல்லாமல் தங்கிவிட்டேன். மறுநாள் 25ஆம் நாள் இந்தி யெதிர்ப்பு ஊர்வலம், கலைஞர் தலைமையில் பெரியார் திடலிலிருந்து புறப்பட்டது. அவ்வூர் வலத்தில் நானும் கலந்து கொண்டேன். நான் தடுமாறிச் செல் வதைத் தெரிந்து, கழக வழக்கறிஞர் இராதா கிருட்டிணன் ஊர்வல உந்தில் (வேன்) ஏற்றி விட்டார். 27ஆம் தேதி வழக்கு நடந்தது. தலைமை நடுவர் இராம பிரசாது ராவ் என்னிடம் சில வினவினர். நான் விடை தந்தேன். வழக்குத் தள்ளுபடி யென்று தீர்ப்புக் கூறப்பட்டது. வழக்குத் தள்ளுபடி யென்றதும் என் வழக்குத் தோற்றுவிட்டதென்று கருதி, கணபதியிடம், இனி யென்ன செய்வது? என்றேன். அரசு தொடுத்த வழக்குத் தள்ளுபடியாயிற்று. நமக்கு வெற்றி. நீங்கள் ஊருக்குப் போகலாம்? என்று கணபதி விளக்கிக் கூறினார். எனக்கு ஒரு காசு செலவில்லை. எனக்குத்தான் கணபதி அறையில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. கலைஞர் செய்த இவ்வுதவி, என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில் நிலைத் திருக்கும். எந்த வழக்கிற்கும் கலங்காத கலைஞர், என் வழக்கைக் கண்டு கலங்கி விட்டாரென்றால், என் மேற்கொண்டுள்ள அன்பு அளவிடற் பாற்றோ? இது பற்றி இதழ்களில் வெளி வந்த செய்திகள் கீழே தரப்படுகின்றன, ஹைகோர்ட் நீதிபதிக்குப் புத்திமதி கூறிக் கடிதம் எழுதிய தமிழ்க் கவிஞர். சென்னை.பிப் -2 சென்னை ஹைகோர்ட்டில் இரண்டு பேர் களுக்கிடையே ஒரு சிவில் வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கை நீதிபதி எம்.எம்.இமாயில் விசாரித்து வருகிறார். ஒரு நாள் நீதிபதி இமாயிலுக்கு, டைப் அடிக்கப்பட்டு முடியரசன் என்று கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. தனக்குப் பட்டப் பெயராக கவியரசு அறிவரசன் என்ற அந்தக் கவிஞர் அதில் குறிப்பிட்டிருந்தார். இவர் இராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தமிழாசிரியராக வேலை பார்க்கிறார். இக்கடிதத்தில் இந்த சிவில் வழக்கை எப்படி விசாரித்து என்ன தீர்ப்பு வழங்கலாம் என்பது பற்றி, அவர் நீதிபதிக்குப் புத்திமதி கூறியிருந்தார். இவர் மீது அரசாங்க அட்வகேட் ஜெனரல், கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இதற்குப் பதிலளித்த கவிஞர் முடியரசன், தான் அவ்வாறு எந்தக் கடிதமும் எழுத வில்லை என்றும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப் பினரையும் தனக்குத் தெரியாதென்றும் நீதிபதி இமாயி லையும் தனக்குத் தெரியாது என்றும் பதில் அளித்திருந்தார். நீதிபதிக்கு வந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து தனக்குரி யதல்ல என்றும் யாரோ தனது பெயரை விஷமம் செய்யப் பயன் படுத்தி இருக்கிறார்கள் என்றும் தனது பதிலில் அவர் கூறி யிருந்தார். கோர்ட் அவமதிப்பு வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தலைமை நீதிபதி ராமபிரசாத் ராவ், நீதிபதி வி.ரத்தினம் ஆகியோர் முடியரசனின் வாதத்தை ஏற்றுக் கொண்டு கோர்ட் அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தனர். சுயலாபத்துக்காகவும் விஷமத்தனமாகவும் இம்மாதிரி போலிப் பெயர்களில் கடிதம் எழுதுவது சகஜமே என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர். தினமலர் - 3.2.79. இந்தியன் எக்சுபிரசு இதழில் வெளிவந்த செய்தியின் மொழி பெயர்ப்பு: உயர் நீதிபதிகள் பிரதிவாதியாகிய திரு.முடியரசனின் எதிர் மனுவை ஏற்றுக் கொண்டு, முதல் ஒப்பு நோக்கிலேயே வழக்கிற்குக் காரணமான கடிதத்திற் காணப்படும் கையொப்பமும் எதிர்மனுவில் காணப்படும் பிரதிவாதியின் கையொப்பமும் ஒன்றல்ல என்று தெரிகிறது. பிரதிவாதி ஒரு சிறந்த அறிஞரும் பொறுப்பு மிகுந்தவருமாக இருப்பதால் அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருக்க முடியாது என்று அறுதியிட்டுக் கூற முடியும். எனவே யாரோ ஒருவர் அவர்பெயரைப் பொறுப் பற்ற முறையில் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தியுள்ளார் என்று தீர்ப்பளித்தார்கள். அந்த வழக்குத் தள்ளுப்படி செய்யப்பட்டது. இவ்வாறே இந்து என்ற ஆங்கில இதழிலும் செய்தி வெளி வந்தது. காசில்லாமல் நல்ல விளம்பரம். 6 மணிக்குயில் பறித்து நடுதல் நான் ஓய்வு பெற்ற பின், சிலர் என்னிடம் வந்து, உங்களுக்கு மணி விழா நடத்தி எங்களால் முடிந்த பணமும் வழங்க எண்ணுகிறோம் என்றனர். வந்தவர்கள், என்பாற் பயின்று, எங்கள் பள்ளியிலேயே ஆசிரியராக இருப்போர். அதை, நான் விரும்ப வில்லை. உங்களன் புக்கு நன்றி, வெளியில் பணம் தண்டுவீர்கள், அஃது எனக்கென்னவோ இழுக்கு என எண்ணு கிறேன் என்னை விட்டு விடுங்கள் என்றேன். இல்லை ஐயா, நாங்களே எங்களால் முடிந்ததைப் போட்டு, விழா நடத்த விரும்புகிறோம் எங்களைத் தடுக்க வேண்டாம் இஃது எங்கள் விருப்பம். உங்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை. வரவேண்டும் என்று அழைக்கிறோம். என்றனர். சரி, உங்கள் அன்புக்குக் கட்டுப்படுகிறேன் - என்று சொல்லி விட்டேன். ஒரு ஐந்நூறாவது சேர்த்துத் தருவார்கள்; ஆசிரியர்களால் அவ்வளவு தானே இயலும்? என்று எண்ணிக் கொண்டேன். என் நண்பர், பாவலர் மணி-பழநியைச் செயலாளராகக் கொண்டு, ஆசிரியர் குழு இயங்கியது. என்ன நடை பெறுகிறது? எப்படிச் செய்கிறார்கள்? என்பதெல்லாம் எனக்குச் சொல்லவே இல்லை. ஒரு நாள் பழநி என்னிடம் வந்தார். ஓர் அச்சிட்ட அறிக்கையை என்னிடம் தந்தார். கவியரசு முடியரசனார் பாராட்டு விழா பேரன்புடையீர், வணக்கம். நிகழும் 7.10.79 ஆம் நாள் ஞாயிறு காலை 9.30மணியளவில் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில், கவியரசு முடியர சனார் அவர்களின் தமிழ்த் தொண்டையும், ஆசிரியப் பணியையும் பாராட்டிப் பொற்கிழி வழங்கும் விழா நடைபெறும். விழாவில் சான்றோர்களும் அறிஞர் பெருமக்களும் கவிஞரைப் பாராட்டிச் சிறப்பிக்க இருக்கிறார்கள். அன்பர்கள் விழாவில் கலந்து கொண்டு, தமிழின்பம் நுகர்ந்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இங்ஙனம் பழைய மாணவர்கள் மீ.சு.உயர்நிலைப்பள்ளி காரைக்குடி. நிகழ்ச்சி நிரல் தமிழ் வாழ்த்து வரவேற்புரை: புலவர் திரு.பழ.பழநியப்பன் அவர்கள், தலைவர் முன்னுரை: தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், பொன்னாடை அணிவித்துப் பொற்கிழி வழங்குதல் : திரு.நா.மெய்யப்பன் அவர்கள், ஆடிட்டர், காரைக்குடி. பாராட்டுரை: புலவர் திரு.படிக்கராமு அவர்கள், கோயிற்பட்டி புலவர் திரு.சா.மருதவாணன் அவர்கள், கோவை பேராசிரியர் அ.சங்கரவள்ளி நாயகம் அவர்கள், கோயிற்பட்டிதிரு.இராம.பெரிய கருப்பன் அவர்கள், தாளாளர்,இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி.திரு.டாக்டர். தமிழண்ணல் அவர்கள், மதுரைப்பல்கலைக்கழகம், மதுரை. ஏற்புரை : கவியரசு முடியரசனார் அவர்கள் தலைவர் முடிவுரை: நன்றியுரை : புலவர்.ஆ.பழநி அவர்கள் இதனைத் தந்துவிட்டு, அண்ணன்! பத்தாயிரம் வரை சேர்ந்திருக் கிறது? என்றார். அடே! ஐந்நூறு உரூவா வரும் என எண்ணியிருந் தேன். எப்படிப் பத்தாயிரம் சேர்த்தீர்கள்? என்று வியந்தேன். எப்படியோ சேர்த்தோம். உங்களுக்கென்ன அதைப்பற்றி? பணம் வருகிறதேயென்று முன்கூட்டியே கடன் வாங்கி விடாதீர்கள். பணத்தை உங்களிடம் தரமாட்டோம். உங்களைத் தெரிந்துதான் இப்படிச் சொல்கிறேன். ஓய்வு பெற்ற நீங்கள் அல்லியின் திருமணத் துக்கு என்ன செய்வீர்கள்! அதனால் இதை வங்கியில் போட்டு விடுவோம். திருமணத்தின் போது எடுத்துக் கொள்ளலாம் - என்று சொல்லிச் சென்றார். என் வாழ்க்கையில் அவர் கொண்டுள்ள அக்கறையும் அன்பும் என்னை உருக்கி விட்டன. இத்தகையோர் அன்பைப் பெறாதிருப்பின் என் வாழ்க்கை வறண்டு போயிருக்கும்! அறிக்கையிற் கண்டவாறு, தவத்திரு அடிகளார் தலைமையில் விழா நடைபெற்றது. புலவர் மருதவாணனும் முனைவர் தமிழண்ணலும் வர இயலவில்லை. என் முன்னாள் மாணவர்கள் முனைவர் வெ.சு.அழகப்பனும் புலவர் யூ.கா.அமீதும் நிறைவு செய்தனர். என்பாற் பேரன்புடைய அடிகளார், மனந்திறந்து பாராட்டி, வாழ்த்திவிட்டு, என்னை நாத்திகனென்று குறிப்பாகக் கூறினார். பத்தாயிரம் என எழுதப்பட்ட காசோலை வழங்கிப் பொன்னாடை போர்த்துச் சிறப்பித்தார் என் முன்னாள் மாணவர் மெய்யப்பன். படிக்கராமு, நான் பாடங்கற்பித்த முறை, பாடற் சிறப்பு, என் இயல்புகள் முதலியனவற்றை எடுத்து மொழிந்து என் உயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனாரையும் குறிப்பிட்டு அனை வரையும் உருக வைத்து விட்டார். இவரும் பேராசிரியர் சங்கர வள்ளி நாயகமும் முன்னர் அறிமுகமில்லாதவர்கள். எனினும் தாமே வலிந்து வந்து பாராட்டுரை வழங்கினர். அவர்தம் தமிழ் நெஞ்சங் களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. சங்கர வள்ளி நாயகம், திறனாய்வு முறையில் பாராட்டுரை வழங்கினார். பிறர் என்னியல்புகளை எடுத்துரைத்தனர். ஏற்புரைக்காக நான் எழுந்தேன். ஏற்புரை எனக் கூறுவதை நான் விரும்பவில்லை. நான் முடியரசன். முடியரசனா ஏற்பது? வேண்டு மானால் எடுப்புரை என்று கூறலாம் எனக் கூறினேன். (அனைவரும் நகைத்தனர்) பொற்கிழியெனக் கூறிப் பத்தாயிரம் கொடுத்தனர். ஏதோ எனக்குப் பத்தாயிரம் கொடுத்து விட்டதாக அவையோர் எண்ணிவிட வேண்டாம். எல்லாம் நாடகம். விழா முடிந்ததும் மேடையிலிருந்து நான் இறங்கு முன் பறித்துக் கொள்வார்கள். என்றேன். இன்று மேடையில் நான் உயிரோடிருந்து உங்கள் பாராட்டு களைப் பெறுகிறேன் என்றால் அதற்குக் காரணம் அண்ணல் சுப்பிரமணியனார் தான். முதலில் அவருக்கு நன்றி கூறி வணங்கு கிறேன் என்று உணர்ச்சி வயப்பட்டு விட்டேன் மேடையி லிருந்த படிக்கராமு விம்மி விம்மி அழுது விட்டார். வணக்கத்திற்குரிய அடிகளார் அவர்களே! என்னை நாத்திகன் என்று குறிப்பால் உணர்த்தினீர்கள், என்ன அளவு கோல் கொண்டு, நாத்திகன் என மதிப்பிடுகிறீர்கள்? கடவுள் இல்லை யென்று பாடியிருக்கிறேனா? பேசியிருக்கிறேனா? நீங்கள் முருகனைச் சிவனைக் கடவுள் என்கிறீர்கள். நான் தமிழைக் கடவுள் என்கிறேன். நான் எப்படி நாத்திகனாக முடியும்? எல்லாம் கடவுள் என்று முன்னோர் பாடவில்லையா? மூவா முதலே முழுமைபெறுஞ் செம்பொருளே, சாவா வரமெனக்குத்தா எனத் தமிழன்னையை வேண்டிப்பாடியிருக்கிறேன். வரம் யாரிடம் கேட்பது? கடவுளி டந்தானே கேட்க முடியும்? தமிழன்னையை மூவா முதலே எனவும் முழுமை பெறும் செம் பொருளே எனவும் குறிப்பிடுந் தொடர்கள் கடவுட்டன்மையைச் சுட்ட வில்லையா? என நான் கூறியதும் அடிகள் மூரல் பூத்தனர். என் முன்னை மாணவர்கள், பழைமை நினைந்து, என்பால் அன்பு கொண்டு, எனக்குப் பாராட்டுச் செய்தனர். என் நாளைய நிலையறிந்து, அதன் பொருட்டுப் பத்தாயிரம் திரட்டியும் வழங்கினர். இவர் தம் அன்புக்கு எவ்வாறு நன்றி சொல்வேன்? பெற்ற பிள்ளைகள் செய்ய வேண்டிய ஒன்றை என்பாற் கற்ற பிள்ளைகள் செய்துள்ளனர் எனக் கண்கலங்கி விட்டேன். பின், அடிகளார் தம் முடிப்புரையில் நண்பர் முடியரசன் நாத்திகர் என்று நான் குறிப்பிட்டத்தைப் பற்றிக் கூறினார்கள். ஒருவர் உள்ளத்தை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமையால் நேர்ந்து விட்ட தவறு இது. அதனால் உள்ளத்தைப் புரிந்து கொண்டு பழகுவது நன்மை தரும் எனக் கூறினார். இந் நிகழ்ச்சியைப் பாராட்டு விழா எனக் கூறுவதை விட உணர்ச்சி விழா என்றே சொல்லலாம். அவையோர் கருத்தும் அது தான். இறுதியில் பழநி, தமது நன்றியுரையில், அண்ணன் முடியரசன் இப் பத்தாயிரத்தையும் நாங்கள் பறித்துக் கொள்வோம் என்றார். உண்மைதான். அண்ணன் கையில் கொடுத்து விட்டால் அது என்னாகும் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் பறித்துக் கொள்கிறோம். நான் வேளாண்குடியிற் பிறந்தவன். அதனால்தான், பறித்து நட்டால் பயன் தரும் என்று கருதிப் பறித்துக் கொள்கிறோம் - என்று கூறினார். அடிகளார் உட்பட அனைவரும் கைதட்டி வர வேற்றனர். அவர் கூறியவாறே பறித்துக் கொண்டார். பத்தாயிரத்தில் இரண்டாயிரம் அவர் கைக்கு வந்து சேரவில்லை. மனமிரங்கி ஆயிரம் எனக்குக் கொடுத்தார். எஞ்சிய ஏழாயிரமும் வங்கியில் நடப்பட்டு வளர்ந்து வருகிறது. சென்னையில் மணி விழா எனக்கு அறுபதாம் அகவை நிரம்பியது. அதன் பொருட்டு என் மகள் குமுதமும் மருமகன் பாண்டியனும் எனக்கும் என் துணை வியார்க்கும் புத்தாடைகள் கொணர்ந்து கொடுத்தனர். அவற்றையுடுத்துச் சுவையுணவுகள் உண்டு மகிழ்ந்தோம், மறுநாள் முரசொலியில், இன்று முடியரசன் பிறந்தநாள். மணி விழா அவரில்லத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது என்று செய்தி வந்தது. இதைப்பார்த்தும் நான் வியப்படைந் தேன். இவர்களுக்கு எப்படிப் பிறந்த நாள் தெரியும்? என்று. இரண்டொரு நாளில் மதுரை முரசொலி அலுவலகத் திலிருந்து, நிருபர் வந்தார். உங்கள் வாழ்க்கைக்குறிப்பு, உருவப் படம் முதலியன வேண்டும் என்றார். ஏன்? என்றேன். பேராசிரியர் அன்பழகனார் முரசொலியில் வந்த செய்தியைப் படித்து விட்டு, நம் முடியரசன் மணி விழாச் செய்தியை இப்படியா வெளியிடுவது? நல்ல முறையில் வெளிவிட வேண்டாமா? என்று கடிந்து கொண்டார். அதனால் மறுபடியும் வெளியிடுவதற்கு வாங்கி வரச் சொன்னார்கள் என்றார். அப்படியானால் முதலில் வந்த செய்தி நீ கொடுத்ததுதானா? என்றேன். அதற்குள் அருகிலிருந்த என்மகன் பாரி நான் தான் எழுதிப் போட்டேன் என்றான். பின்னர்ப் படமும் செய்தியும் ச.அமுதன் எழுதிய வாழ்த்தும் வெளிவந்தன. 1980 நவம்பர் 16 ஆம் நாள் தி.மு.க. தலைமை மாநில இலக்கிய அணி விழாவும் என் மணிவிழாவும் சென்னையில் இலக்கிய அணியின் சார்பில் நடைபெறவிருப்பதாகக் குறிப்பிட்டு என்னை வருமாறு எழுதியிருந்தனர். நான் செல்ல அணியமாகிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வந்திருந்த ஈரோட்டு நடராசன், மணி விழா என்றால் நீங்கள் மட்டுமா செல்வது? குடும்பத்துடன் புறப்படுங்கள் என்று முந்நூறு உரூவா தாமே கொடுத்து வற்புறுத்தி வண்டி யேற்றி விட்டா. விழா, மயிலையில் உள்ள ஒப்பனை செய்த யோகலட்சுமி திருமண மண்டபத்தில் தா.அழகு வேலனார் தலைமையில் நடந்தது. கலைஞர், பேராசிரியர் அன்பழகன், சாதிக்பாட்சா கவிஞர். பொன்னி வளவன், கவிஞர் குடியரசு, ஆற்காடு வீராச்சாமி, க.சுப்பு, கவிஞர் நா.காமராசன் பலரும் வாழ்த்துரை வழங்கினர். தலைமை தாங்கிய அண்ணன் அழகுவேலன் நாங்கள் கலந்து கொண்ட இந்தியெதிர்ப்பு மறியல் போராட்ட நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைவுபடுத்தினர். பின்னர் ஒவ்வொரு வரும் தத்தமக்குத் தெரிந்த வற்றை எடுத்துரைத்தனர். நா.காமராசு, கலைஞரின் கால்தூசியை வணங்குவதாகவும், கலைஞரின் கவிதைநடைபெருக வேண்டும் எனவும், கலைஞர் ஆணை யிட்டால் ஆயிரம் ஆயிரம் இளைஞரைக் காலடியிற் கொணர்ந்து சேர்ப்பதாகவும் முழங்கினார். இடையில் கலைஞர், காசோலை எடுத்து வருமாறு சாதிக் பாட்சாவிடம் கூற அந்நேரத்தில் அலுவலகம் சென்று உடனே எடுத்து வந்தார். கலைஞர் எனக்குப் பொன்னாடை போர்த்து, மிகப் பெரிய வாழ்த்து மடலொன்றும் வழங்கி, பத்தாயிரம் உரூவா வழங்கினார். கவிஞர் முடியரசனாருக்குப் பத்தாயிரம் வழங்குகிறோம்; இது, அவருக்குப் பத்தாத ஆயிரந்தான். எனினும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வழங்கினார். எனது நன்றியுரையில், தி.மு.கழக வரலாறு எழுதப்பட வேண்டு மென்று வேண்டிக்கொண்டேன். அண்ணன் அழகு வேலனார் முன்னை நிகழ்ச்சிகளையெல்லாம் எடுத்துக்கூறக் கேட்டமையும் மலர்க்கோலம் பூண்ட இவ்வழகிய திருமண மண்டபத்தைக் கண்டமையும் என் பழைய நினைவுகளை யெல்லாம் கண்முன் கொண்டு வந்து சேர்த்தன என்றேன். கவிஞர் பொன்னி, கவிஞர் குடியரசு போன்றோர் தமது வறிய நிலையை எடுத்துக் காட்டினர். நானும் அவ்வரிசையில் இடம் பெறுபவன்தான். எனினும் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறோம்? எங்கள் நலனை விட இனத்தின் நலனையே பெரிதாகக் கருதுகிறோம். நம் இனத்திற்கு தி.மு. கழகத்தால் நலம் உண்டாகிறது என நம்பியே ஒட்டிக் கொண்டிருக் கிறோம் என்று குறிப்பிட்டேன். நம் தலைவர்களை ஐயா, அண்ணா என உறவுமுறையால் அழைத்தது போலக் கலைஞரையும் சின்ன அண்ணா என அழைத்தல் வேண்டும் எனவும் அவையை வேண்டிக் கொண்டு அமர்ந்து விட்டேன். கலைஞர் பேசும் பொழுது, கவிஞர் முடியரசனார் தமது உரையில் என்னைச் சின்ன அண்ணா என அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நமக்கு ஒரு அண்ணா போதும். சின்ன அண்ணா பெரியண்ணா வேண்டாம். அப்படி உறவு முறையில் அழைக்கவிரும்பினால் நான்தான் உடன்பிறப்பே என்று அழைக் கின்றேனே. அதில் உறவு முறையில்லையா? முடியரசன் இத்திருமண மண்டபத்தைப் பார்த்ததும் தமக்குப் பழைய நினைவுகளெல்லாம் வருகின்றன என்று குறிப்பிட்டார். அந்தப் பழைய நினைவுகளிலே மயங்கி, உடன் பிறப்பே என நான் சொல்வதை மறந்து விட்டார் போலும் என்றதும் அவையே அதிர்ந்தது. கழக வரலாறு வேண்டினேன். அதற்கு மறுமொழியில்லை. இன்றும் அவ்வேண்டுகோளை விடுக்கிறேன். அதன் இன்றிய மையாமை கருதி நாளை வரும் இளைஞர்க்குத் திராவிட இயக்கத்தின் அருமை பெருமைகள் தெரிய வேண்டாவா? இப்பொழுதே சில உண்மைகள் திரிபுபட எழுதப்படுகின்றன. நாளை, மறுநாள் என்னாகும்? கழக வரலாறு பற்றி, ஒரு நூல் வந்திருப்பினும் அது போதாது ஆதலின் கழக வரலாறு தோன்றியே ஆக வேண்டும். சென்னையில் நடைபெற்ற மணி விழாவையறிந்த, நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த டார்பீடோ ஏ.பி. சனார்த்தனம் வாழ்த்து எழுதி, உங்கள் சுயமரியாதை உணர்வுகளுக்கு கிடைத்த பாராட்டு இது என்று குறிப்பிட்டுத் தில்லியிலிருந்து மடல் விடுத்தார். பிறிதொருகால் அவர் என் இல்லத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது பாவலர் மணி பழநியும் உடனிருந்தார். என் கருத்தை மாற்றும் நோக்கிற் பலப் பல எடுத்து மொழிந்தார். நானும் பழநியும் ஒவ்வொன்றையும் மறுத்துப் பேசினோம். ஐயாவும் அண்ணாவும் பாடுபட்டுப் பரப்பிய சுயமரியாதை உணர்வு அழிக்கப்பட்டு விட்டதே என வருந்திக் கூறினோம். அவர், இல்லை இல்லை இந்த ஆட்சி சுயமரியாதை ஆட்சி தான் என வாதாடினார். சுய மரியாதை என்பதற்கு எப்பொருள் கொண்டு வாதிட்டாரோ தெரியவில்லை. பாராட்டத் தக்க - அத்தகைய சுயமரியாதை வீரர்களெல்லாம் சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு மாறி விட்டனரே எனப் பெரிதும் வருந்தினோம். 7 வானம்பாடி யான் எழுத அமர்ந்து விடின் என்னை முழுமையாக மறந்து விடுவேன்; இல்லத்தை மறந்து விடுவேன்; என்னைச் சுற்றி நிகழ் வனவும் அறியேன். அப்பொழுது யான் பறந்து திரியும் உலகம் வேறு. எந்நேரத்திலும் எழுதுவேன்; எவ்வளவு நேர மானாலும் எழுதுவேன். எழுதி முடித்து எழும்பொழுது தான் தெரியும் என் கால் வலியும் இடுப்பு வலியும். எழுத்தளிக்கும் இன்பம் அறிந்தமையான் யானறியேன் இடுப்போடிருகால் வலி இடுப்பு வலியின்றி மகப்பேறு நிகழுமோ? அவ் வலியைத் தாங்கிக் கொண்டு ஈன்றெடுத்த மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய், ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் அன்றோ? எழுதும் பொழுது இவ்வாறு வலியறியாது, கற்பனை வானிற் பறந்து கொண்டிருந்த காரணத்தினாற்றான், பேரறிஞர் அண்ணா அவர்கள் முடியரசன் திராவிட நாட்டின் வானம் பாடி எனக் குறிப்பிட்டனர் போலும். வானம் பாடியாகப் பறந்து திரிந்து பாடிய நூல்கள் பற்றிச் சில குறிப்புகளை ஈண்டுத் தருகின்றேன். என் இலக்கியப் பணி பெரிது எனச் சுட்டிக் காட்ட இயலா விடினும் படைப்பாளர் வரிசையில் எனக்கும் ஓரிடம் உண்டு என்பது உண்மை. நமக்குத் தொழில் கவிதை என்ற கோட் பாடுடையவன் நான். அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சி களுக்கும் சூழ்நிலைகளுக்கும் கவிதை வடிவங் கொடுப்பேன். தமிழகமெங்கணும் உள்ள பல நகரங்களில் நிகழ்ந்த இலக்கிய விழாக்களில், வானொலியில், உலகத்தமிழ் மாநாட்டில் நடைபெற்ற கவியரங்குகளில் பங்கு கொண்டுள்ளேன். பாடல் எழுதுவதன்றி, அவற்றை நூல் வடிவிற் கொணர வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியதில்லை. முடியரசன் கவிதைகள் என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழண்ணலுக்கு, என் பாடல்களை நூல் வடிவிற் கொணர வேண்டுமென்ற ஆர்வந் தோன்ற, என் பாடல்களை யெல்லாம் தொகுத்து, வகைப் படுத்தி, அச்சுக்குக் கொடுத்தார். அச்சகத்திற்குக் கடன்; தாளும் கடன் வாங்கினார். முடியரசன் கவிதைகள் எனப் பெயர் சூட்டினார். என் பெயரை நூலுக்குச் சூட்டக் கூசிய நான், பாரதிதாசன் பாதையில் எனப் பெயர் வைக்கலாமென்று கூறினேன். அதனை மறுத்து முடியரசன் கவிதைகள் என்றே சூட்டி விட்டார். அணிந்துரை அவர் எழுத வேண்டும். ஆனால் நூல் அச்சாகி முடிவு பெற்ற நிலையிலும் அவர் எழுதவில்லை. அப்பொழுது கலைமகள் அச்சகத்திலிருந்த சாமி. பழநியப்பன், அணிந்துரை தருகிறீர்களா? mšyJ eh‹F g¡f§fis x‹WÄšyhJ É£L, ïWâÆš jÄH©zš v‹W m¢ro¤J Élth? என்று சிரித்துக் கொண்டே சொன்னார். தமிழண்ணல் அப்பொழுதே அச்சகத்தில் அமர்ந்து, நான்கு பக்கங்கள் அணிந்துரை எழுதிக் கொடுத்தார். வாழையடி வாழை யென்ற தலைப்பில் எழுதிக் கொடுத்தார். அச்சாகி வெளி வந்தது. காண்போரெல்லாம் என்னிடமே, என் கவிதையைப் பாராட்டுவதற்கு மாறாக, அவர் அணிந்துரையைத் தான் பாராட்டியுரைப்பர். அவ்வளவு சிறப்புற அமைந்திருந்தது. என் கவிதைக்கும் பெருமை. அவர் பொதுப்படையாக எழுதியிருப்பினும் சிலருடைய வெறுப்பையும் பெற்றது. தம்மைச்சாடியிருப்பதாக அவர்கள் கருதியமையால் நேர்ந்த விளைவு அது. மேலும் சிலர், அவரைச் சாடியிருக்கிறார், இவரைச் சாடியிருக்கிறார் என்று தூண்டி விட்டுக் கொண்டும் இருந்தனர். இந்நூல் தமிழ் நெறிக் காவலர் மயிலை. சிவ.முத்து அவர்களுக்குக் காணிக்கையாக்கப் பட்டது. ஒரு நாள், தமிழுலகில் நிகரற்று விளங்கிய, அளப்பரும் பெருமைக் குரிய, சான்றோராகிய ஞா.தேவநேயப் பாவாணர், மிகச் சிறிய என் மனைக்கு எழுந்தருளியிருந்தார். அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையானார். அக்காலை என் முதற் றொகுதியைக் கொடுத்தேன். bg‰wîl‹ ‘fÉij v‹w tlbrhšiy V‹ tH§»Ü®fŸ? என்றார். என்னைத் தணலில் தூக்கி எறிந்தது போலிருந்தது. உடனே அப்பெரு மகனார் ம் ம், குற்றமில்லை; பயில்வார் தம் நெஞ்சத்தைத் தன்பாற் கவிய வைப்பது கவிதை ஆதலின் தமிழ்ச் சொல்லாகக் கொள்ளலாம்; கவலற்க - என ஆறுதல் கூறினார். அதன் பிறகு கவிதையென்ற சொல்லைத் துணிந்து பயன்படுத்தி வருகின்றேன். அப்பெருமகனார், காட்டுப்பாடி சேர்ந்ததும் ஓர் அஞ்சலட்டை விடுத்தார். வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்கும் தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த முடியரசரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுண் முறை. என்ற பாடலைத் தாங்கி வந்தது அவ்வஞ்சலட்டை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை காரைக்குடிக்கு வந்து தங்கியிருந்த பொழுது, அவரைக் காணும் பொருட்டுச் சென்றோம். என் முதற்றொகுதியைத் தந்தோம். th§»¥ go¤J É£L ‘kÆiy át.K¤Jit c§fS¡F v¥go¤ bjÇí«? என்று வினவினார். நான் எங்கள் தொடர்பை விளக்கிக் கூறினேன். பின்னர், பாரதி தாசனைப் பற்றி நான் பாடிய பாடல்கள் முழுமையும் படித்தார். அப்பொழுது பூவாளூர் பொன்னம் பலனார் சில மாத்திரைகள் கொடுக்க, அவற்றை வாங்கி யுண்டார். உண்டதும் அண்ணா! ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பொன்னம் பலனார். ஆம், களைப்பாக இருக்கிறது என்று கூறிக் கால்களை மடக்கியவாறு படுத்துக் கொண்டார். நன்றாகக் கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள் அண்ணா என்றார் பொன்னம்பலனார். அண்ணா அப்பொழுதும் கால்களை மடக்கிக் கொண்டே படுத்திருந்தார். நாங்கள் கால் மாட்டில் அமர்ந்திருப்பதால் கால்களை மடக்கிக் கொண்டார். என்ற குறிப்பைத் தெரிந்து கொண்டோம். உடனே நாங்கள் எழுந்து, அண்ணா நன்றாகப் படுத்துக் கொள்ளுங்கள் என்றோம், பின்னர் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டார். நாங்கள் சிறியவர்கள். அவரோ நாட்டின் தலைவர். எனினும் கால்களை மடக்கிக் கொண்டார். அப் பெருந்தகையின் அடக்கவுணர்வை எத்தலைவரிடம் காணல்கூடும்?. அந்த ஆண்டு வெளிவந்த `திராவிட நாடு பொங்கல் மலரில் என் கவிதைகள் சிலவற்றை மேற்கோள் காட்டிக் கட்டுரை யெழுதி யிருந்தார். அடுத்தடுத்து வந்த மலர்களிலும் குறிப்பிட் டிருந்தார். பிறிதொருகால், மொழிப் போராட்டத்தை அடிப் படையாகக் கொண்டு, நான் எழுதிய பூங்கொடிக் காப்பியமும் கொடுத்தேன். அந்நூல் பற்றி அண்ணா ஒன்றும் எழுதவில்லையே! அப்பேறு பெற்றிலோமே! என வருந்துவதுண்டு. நானாவது வேண்டிப் பெற்றிருக்கலாம்; என் கூச்சவுணர்வு தடையாக அமைந்து விட்டது. அடுத்து, என் பாக்களிற் சில ஒரு நூலாகத் தொகுக்கப் பட்டு, அதே பெயரில் வெளியிடப்பட்டது. இந்நூல், புதுக்கோட்டை மருத்துவப்பேரறிஞர் வி.கே.இராமச்சந்திரனாருக்குக் காணிக்கை யாக்கப்பட்டது. பின்னர் இரண்டும் ஒரே தொகுதியாகப் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இது 1966 ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிசிலைப் பெற்றது. சில பாடல்கள், சாகித்திய அகாதெமியால் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. காவியப்பாவை அப்பொழுதெல்லாம் பெரும் புகழ் பெற்ற இசை வாணர்கள், இசையரங்குகளிற் பிற மொழிப் பாடல்களே பாடிவதைப்பர் (இப்போதும் அப்படித் தானே) கேட்டுக் கேட்டு மனம் நொந்த நான், இசை நுணுக்கம் அறியா விடினும் நானே ஓர் ஓசையை அமைத்துக் கொண்டு சில பாடல்களைப் புனைந்து, காவியப் பாவை என்ற பெயரில் வெளியிட்டேன். தமிழிசைத் தொண்டு புரிந்த செட்டிநாட்டரசர்க்குக் காணிக்கையாக்கினேன். nguháÇa® ïy¡Ftdh® Tl, ‘VnjD« ga‹ fU⢠br£o eh£lur®¡F¡ fh¡if ah¡»Ü®fsh? என்று வினவினார். எனக்கு அஃது அருவருப்பாக இருந்தது. சொந்த மொழியிசையைச் சூழ்ந்த பனியகல வந்த பரிதியென வந்தமையால் - சிந்தித்துப் பண்ணால் அமைநூல் படைத்து மகிழ்கின்றேன் அண்ணா மலைமன் அடிக்கு. என்ற என் வெண்பாவை மட்டுங் காட்டினேன். இந்நூலில் வரும் பாடல் சில, சாகித்திய அகாதெமியால் மொழி பெயர்க்கப் பெற்றன. கவியரங்கில் முடியரசன் அரங்கேறிய பாடல்கள் சில தொகுக்கப்பெற்றுக் கவியரங்கில் முடியரசன் என்ற நூலாகத் திருச்சி முத்துப்பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் எனக்குத் தமிழறிவுறுத்திய மீ.முத்துசாமிப் புலவர்க்குக் காணிக்கையாக்கப்பட்டது. செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார் இந்நூலுக்கு முன்னுரை ஈந்தனர். அதனைப் படித்துப் பார்த்த தமிழண்ணல், அதன் அருமை பெருமைகளை உணர்ந்து, முன்னுரை என்பதைப் பொன்னுரை யெனத்திருத்தி வெளியிட்டார். முன்னுரையில் சிதம்பரநாதர், முடியரசன் மாணவருள் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டி ருந்தார். என் உள்ளமே சிலிர்த்து விட்டது. அப் பெருமகனா இச் சிறியனை இவ்வாறெழுதுவது? என்று நாணினேன். செந்தமிழ்க் காவலரை ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. என்னைப் பற்றி அதிகமாகவே எழுதி விட்டீர்கள் என நெகிழ்ந்து கூறினேன். உங்களைப் பற்றியொன்றும் எழுத வில்லையே; உங்கள் கவிதை பற்றித்தான் எழுதியிருக்கிறேன் எனப்பட்டென்று கூறிவிட்டார். அத்தூய தமிழ் நெஞ்சங்களை யெல்லாம் எண்ணும் பொழுது உருகி விடுகிறேன். வீரகாவியம் முனைவர் மா.இராசமாணிக்கனார், மாத்யூ அர்னால்டு என்பார் கவிதை வடிவில் ஆங்கிலத்தில் எழுதிய பாரசிகக் கதை யொன்றைத் தந்து, இதனைக் காப்பியமாக எழுதுக எனப் பணித்தனர். எனக்கு ஆங்கிலமே தெரியாது. பிறர் துணையால் எழுதலாமென எண்ணி, அக்கதை முழுமையும் தெரிந்து கொள்ள வேண்டி, பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு எழுதினேன். சில விளக்கங்கள் அவர்களால் கிடைத்தன. நாகசாமி ஐயர் என்பவர், ஆங்கிலக் கவிதையைப் படித்துப் பொருள் சொல்லக் கேட்டுத் தமிழ் மரபிற் கேற்ப, அக் கவிதையைத் தழுவி, எழுதி வீரகாவியம் எனப் பெயரிட்டேன். இதனைப் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார், தமது வள்ளுவர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுதவினார். இந் நூலும் தமிழக அரசின் பரிசில் பெற்றது. இந்நூலை, கோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த நஞ்சக் கவுண்டன் பாளையத்திலுள்ள நஞ்சப்பக் கவுண்டர் இல்லத்தி லிருந்து எழுதி முடித்தேன். பெரும் பரப்புள்ள ஒரு தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளது அப்பேரில்லம். வணக்கத்திற்குரிய வேலம் மையார் அவர்கள் தந்த சுவையுணவும் அவர்தம் மக்கள் காட்டிய பேரன்பும் பதினெட்டு நாளில் அக் காப்பியத்தை முற்றுப் பெற வைத்தன. அரை மணி நேரத்திற்கொரு முறை, அம் மூதாட்டியார், நான் எழுதிக் கொண்டிருக்கும் இடந்தேடி வந்து, குளம்பி (காபி) தருவார்கள். என் உடல் நலங்கருதி, அதற்கேற்ற உண்டியும் அறிவுரையும் வழங்கித் தாயன்பு காட்டுவார். வெண்ணெய் நல்லூர்ச் சடையன் தந்த சோற்றுச் செருக்காலன்றோ, கம்பன் அத்துணைச்சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறான்! என்ற உண்மையை அப்பொழுது உணர்ந்து கொண்டேன். என் வரலாற்று நூலைக் கூட, ஈரோட்டிலிருந்துதான் எழுதிக் கொண்டிருகிறேன். நட்பாக அரும்பி, மைத்துனக்கேண்மை யாக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் பேரன்பர் சு.அ.நடராசன் இல்லத்தில்தான் எழுதிக் கொண்டிருகிறேன். வெந்நீர் வைத்துக் கொடுத்தல், துணி துவைத்துக் கொடுத்தல் போன்ற அனைத்து உதவிகளும் செய்து தருகிறார் கடைக்கு வந்த நண்பர் ஒருவர், அவரை அழைக்கிறார். இருங்க, இந்தக் குழந்தைக்கு வேண்டிய தெல்லாம் செய்து கொடுத்து விட்டு வருகிறேன் என்கிறார். 67 அகவை நிரம்பிய என்னைக் குழந்தை யாகக் கருதித் துணை செய்கிறார் எனில் அவர்தம் அன்புள்ளத்தை என்னென்பேன்? பாவலர் ஈவப்பனார் என்னைக் காண வந்தார். எனக்கு நடராசன் செய்யும் உதவிகளை யறிந்து, அவரை நோக்கி நீங்கள் பேறு பெற்றவர்கள் என்று வியந்தார். அதெல்லாம் எனக்கு ஒண்ணுந் தெரியாதுங்க; 40 ஆண்டா அவர் எனக்கு நண்பர்; நண்பர் என்ற முறையில் செய்கிறேன் என்று நடராசன் மறு மொழி பகர்ந்தார். நட்பின் இலக்கணத்துக்கு எளிதாகப் பொருள் சொல்லி விட்டார்! இவர் மட்டுமா உதவினார்? இவர் தம் துணைவியார் என் உடன் பிறவாத் தங்கை தங்கம்மாள், அவர் தம் மக்கள், மருமக்கள் அனைவருமே என்னைப் பேணிக் காக்கின்றனர். பூங்கொடி பிரவேச பண்டிதம் படித்துக் கொண்டிருந்த பொழுது, சாத்தனார் எழுதிய மணிமேகலை எங்களுக்குப் பாடமாக அமைந்திருந்தது. பயிலுங்கால் அதனுட்கூறப்பட்ட புனைவு நிகழ்ச்சிகளும் சமையக் கோட்பாடுகளும் பிடிக்காவிடினும், மணிமேகலையின் தொண் டுள்ளமும் துறவுள்ளமும் என் அடிமனத்தைத் தொட்டன. சமைய வாழ்வுக்காக இல்லற வாழ்வைத் துறந்த மணிமேகலை போலத் தமிழ் வாழ்வுக்காக இல்லறவாழ்வைத் துறந்திடும் பெண்ணொருத்தி வேண்டுமே யென ஏங்கினேன். ஏக்கம் செயற்படத் தொடங்க. ஒருத்தியைப் படைத்து அவளைக் கதைத் தலைவியாக்கிக் காப்பியம் எழுதினேன். என் காலத்தில் தமிழ்த்தொண்டாற்றிய பற்பல சான்றோரை மாற்றுருவில் உலவ விட்டேன். தமிழுக்காக உயிரீகம் செய்த தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டேன். என் மகளுக்குச் சூட்ட எண்ணியிருந்த பூங்கொடி யென்ற பெயரை அவளுக்குச் சூட்டினேன். உலகமெலாஞ் சுற்றிவரச் செய்தேன். திருமணம் செய்து வைக்காமலேயே தமிழ்த் தொண்டாற்ற வைத்தேன். தமிழுக்காகச் சிறை புகவைத்தேன். இறுதியில் என் இனிய கற்பனை மகளை இறக்க வைத்தேன். எழுதத் தொடங்கிப் பல ஆண்டு இடைவெளி விட்டுப் பின், தொடர்ந்து எழுதி முடித்தேன். இறுதிப்பகுதியை ஒரு நாள் இரவு முழுமையும் விழித்திருந்தெழுதி, வைகறை ஆறு மணிக்கு முடித்தேன். முடித்தவுடன் எனக்கேற்பட்ட இன்பம் அளவிடற் கரியது. அண்ணல் சுப்பிரமணியனாரே இதனையும் வெளியிட்டார். இந்நூல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு, இந் நூலைத் தடை செய்யவும், என்னைப் பணியிலிருந்து நீக்கவும் ஏற்பாடு செய்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் பூங்கொடி அப்பேற்றையிழந்தனள். புதுமலர் என்ற தலைப்பில் இக்காப்பியம் பற்றிப் புதுக் கோட்டையிற் பேசிய தமிழண்ணல், இந்நூல் உலக ஒருமைப் பாட்டுக் காப்பியம் என்று குறிப்பிட்டார். nkY« mt® TWifÆš, ‘rh¤jdh® Tl kÂnkfiyÆ‹ mHif¡ F¿¥ãL« nghJ, ‘Mlt® f©lhš mfwY« c©nlh? எனக் கூறுகிறார். அது நமக்குச் சற்றுத்தூய்மைக் குறைவாகவே படுகிறது; ஆனால் பூங்கொடியின் எழில் சுட்டப் படும் இடங்களில், தூய்மை மேலோங்கி நிற்பதைத் காணுகிறோம் என எடுத்து மொழிந்தார். திரைப்படத்துறையில் ஈடுபட்டிருந்த வெ.தருமராசன் என்ற என் நண்பர், தமது செலவில், சென்னையில் பூங்கொடி வெளியீட்டு விழா வொன்று நடத்தினார். விழாவின் தலைவர் செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார். பன்மொழிப்புலவர் கா.அப்பா துரையார், முனைவர் மு.வரதராசனார், முனைவர் மா.இராசமாணிக் கனார், தமிழ் நெறிக் காவலர் மயிலை, சிவ.முத்து, தமிழண்ணல், க.த.திருநாவுக்கரசு முதலான சான்றோரும் பேராசிரியர் க.அன்பழகன், சட்டமன்றப் பேரவைத் தலைவர் செல்லப் பாண்டியன் போன்ற அரசியல் தலைவர் களும் விழாவிற் கலந்து சிறப்புரையாற்றினர். தலைவர் முதல் அனைவரும் பூங்கொடிக் காப்பியத்திற் பேரீடு பாடு கொண்டு பேசினர். மு.வ. 103 டிகிரி காய்ச்சலுடன் வந்து, உயிர்ப்பான இடங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டினார். பேராயக் கட்சியினரான செல்லப்பாண்டியன், பொன்னாடை போர்த்து விட்டுக் காப்பியத்தில் வரும் கலப்பு மணத்தை வலியுறுத்திப் பேசினார்; அரசின் விடுதலை ஆணையைப் பொருட்படுத்தாது, தானே, உயிர் விடுதலை பெற்ற பூங்கொடியைப் பாராட்டினார். இறுதியில், நம் தமிழுக்குக் குழப்பம் விளைவிக்கும் எந்த மொழியா யினும் அதனை யெதிர்த்துப் போரிட வேண்டியது கடமைதான் என்று வலி யுறுத்திப் பேசினார். இக்காப்பியம் இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்டதே; எனினும் ஓரிடத்திற் கூட இந்தி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக அயல் மொழி, பிறமொழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தந்திருந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பெரியவர், தாமரைச் செல்வர், வ.சுப்பையா பிள்ளை, தாம் நடத்தவிருக்கும் நீலகேசிக் காப்பிய வெளியீட்டு விழாவிற் பாராட்டுச் செய்யக் கருதி என்னையழைத்தார். விழாத் தலைவர், பேராசிரியர் ஔவை.சு. துரைசாமிப்பிள்ளை பூங்கொடி பற்றிப் பெரிதும் பாராட்டிப் பேசினார். பொன்னாடை போர்த்துச் சிறப்புச் செய்தவர் முறைமன்ற நடுவர் சதாசிவம் அவர்கள். நான் நன்றி கூறுகையில், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், தி.மு.கழகத்தைச் சேர்ந்த என்னைப் பாராட்டியதில் வியப்பில்லை. கழகம், கழகத்தானைப் பாரட்டுவதில் என்ன வியப்பிருக்கிறது? இக் கழகத்தை, நூல்கள் வெளியிடுங்கழக மாக நான் எண்ணவில்லை. ஆக்சுஃபோர்டு பல்கலைக்கழகமாக நினைக்கிறேன். அப்பல்கலைக் கழகத்துக்கு நன்றி கூறி மகிழ்கிறேன். சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொன்னாடை போர்த்துப் பாராட்டியதால், என் பூங்கொடி சொல்லும் மொழிக் கொள்கைகள், சட்ட மன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டன என்று பொருள். முறை மன்ற நடுவர், பொன்னாடை போர்த்து வரவேற்றதால், முறை மன்றமும் ஒத்துக் கொண்டது என்று பொருள் என்று கூறி முடித்தேன். பாடுங்குயில் கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, எந்த நிலைக்கும் கட்டுப்படாமல், மனம்போன போக்கில், எதை யெதையோ எழுதி, தமிழுக்குப் புதுமை செய்வதாக எண்ணிக் கொண்டு, கவிதையென்ற பெயரால் இன்றைய இளைஞர் சிலர், வெளியிட்டு வருகின்றனர். இதனைக் கண்டு வருந்தி, இளைஞர் களுக்கு ஒரு வழி காட்டியாக அமையட்டும் என நினைந்து பழைய முறை தவிர்த்துப் புதுமுறையில் ஓசையை அடிப்படை யாக வைத்துச்சில பாடல்கள் எழுதிப் பாடுங்குயில் என்ற பெயரால் ஒரு நூல் வெளியிட்டேன். இதனைச் சிவகங்கையில் அகரம் அச்சகம் நடத்தி வரும் கவிஞர் மீரா வெளியிட்டுதவினார். ஊன்றுகோல்: பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் நூற்றாண்டு விழா வந்தது. மதுரைப் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் பண்டித மணியின் நூல்களையும் அவரைப் பற்றிய நூல்களையும் நூற்றாண்டு விழாவில் வெளிக் கொணர முனைந்து, பண்டிதமணியின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பிய மாக்கித் தருமாறு என்பாற் கூறினார். நானும் ஒருவாறிசைந்து காப்பியமாக்கிக் கொடுத்தேன். அந்நூலுக்கு ஊன்றுகோல் எனப் பெயரிட்டு சன்மார்க்க சபையின் வாயிலாக வெளியிட்டார். எளிதில் எவருக்கும் அணிந்துரை எழுதும் இயல்பினரல்லாத அவர், சிறப்புப் பாயிரம் தாமாகவே எழுதி வெளியிட்டார். தமிழண்ணல், திறனாய்வு முறையில் மிகச் சிறந்த அணிந்துரை யொன்றெழுதி, எனக்கு அடியார் வண்ணம் பூசித் தம் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார். வ.சுப.மா.எழுதிய சிறப்புப் பாயிரமும் தமிழண்ணல் எழுதிய திறனாய்வும் நூலுக்கு அணி சேர்க்கின்றன. மனிதனைத் தேடுகின்றேன் மக்கட் பண்பு அருகிவருவது கண்டு, மனம் நொந்து பாடிய என் பாடல்களைத் தொகுத்துக் கருவூர்த் தோழர்கள் மனிதனைத் தேடுகிறேன் என்ற பெயரால் ஒரு நூல் வெளியிட்டனர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் வெளியீட்டு விழாவும் நடத்தினர். முடியரசன் குறிப்பிட்ட ஒரு கட்சியில் உறுதியாக நிற்பதால் அரசு அவரைச் சிறப்பிக்கவில்லை. நீங்கள் அவருக்குச் சிறப்புச் செய்யுங்கள். இவர் என்னைவிடப் படித்தவர். நான் எழுதியதை விட நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார். என்னை விடச் சிறந்த கவிஞர். ஆனால் எனக்கு விளம்பரம் அதிகம். அவருக்கு அது குறைவு என்று கவிஞர் சுரதா பேசினார். நெஞ்சு பொறுக்கவில்லையே நாட்டில் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை நடை பெறும் தீமைகளைக் கண்டு, மனம் வருந்திப் பாடியவற்றை நெஞ்சு பொறுக்கவில்லையே என்ற நூலாக என் செலவில் வெளியிட்டேன். ஆனால் அவை என் இல்லத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. அன்புள்ள பாண்டியனுக்கு திருக்குறட் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, கடித வடிவில் எழுதப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு. இந்நூல் பாட நூலாக வெளிவந்தது. காப்பிய நாடகம் மதுரை - காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் தம் முயற்சியால், ஆங்குள்ள தமிழியற் புலத்தில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் என்னைப் பணியில் அமர்த்தினார். 1985-ஆம் ஆண்டு, அப்பணியேற்றுக் காப்பிய நாடகமொன்று, எழுதித் தந்தேன். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பற்றி நான் எழுதிய புனை கதையைக் கருவாகக் கொண்டு எழுதப் பட்டது அந்நூல்; போர் மறுப்பை மையமாகக் கொண்டது; சற்று அரிய நடையில் அமைந்தது. அந்நூல் அச்சு வடிவம் பெறாமல் தூங்குகிறது. என் சிறுகதைத் தொகுப்பு எக்கோவின் காதல் என்ற பெயரில் அச்சேறியது ஆனால்நூல் வெளிவரவில்லை. கறையான் சுவைத்தது. மற்றும் வள்ளுவர் கோட்டம், ஞாயிறும் திங்களும், மேடை மலர்கள், தாய்மொழி காப்போம் நெஞ்சிற் பூத்தவை என்ற கவிதை நூல்கள் மற்றும் இளவரசனுக்கு எப்படி வளரும் தமிழ் என்ற கட்டுரை நூல்கள் எழுதினேன். ஆனால் அவை, கையெழுத்து வடிவிலேயே பேழையில் தவஞ் செய்கின்றன. ஒரு படைப்பாளன் தன் படைப்புகள், மக்கள் மன்றத்திற்கு வராமலிருந்தால், அவன் படைப்பார்வம் எவ்வாறு வளரும்? இன்றைய இலக்கிய வுலகம், ஆரவாரங் களைத் தானே விரும்புகிறது! ஆர்வம் குன்றினும் அவ்வப் பொழுது என் கடமையைச் செய்து வருகிறேன்; எனக்குப் பின்னராவது அவை உலாவரும் என்ற நம்பிக்கையால். முனைவர் சி.பாலசுப்பிரமணியன், முனைவர் எழில் முதல்வன், முனைவர் தமிழண்ணல், முனைவர் சாலை இளந்திரையன், முனைவர் மு.வ. பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. போன்றோர் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் என் நூல்கள் இடம் பெறு கின்றன. முனைவர் நிலாமணி யென்பார் சாத்தனார் மணி மேகலையையும் என் பூங்கொடிக் காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். என் நூல்களிற்சில அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பாடநூலாக அமைந்துள்ளன. பாடல் பல, பல்கலைக் கழகங் களிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் தமிழ்ப் பாடநூல்களிற் சேர்க்கப் பட்டுள்ளன. பெங்களூரில் பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் வீரகாவியத்திலுள்ள தமிழ் வாழ்த்துப் பாடல் சேர்க்கப் பட்டுள்ளது. திருச்சியிலுள்ள த.பா.இந்தி பிரசார சபை வெளியிட்ட தமிழ்ப் பாட நூல்களில் என் கட்டுரை, கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் என் நூல்கள் பல்கலைக் கழகங்களிற் பட்டம் பெறுவதற்குப் பலரால் ஆய்வு செய்யப் பெற்றுள்ளன. ச.சார்லுசு என்பார் 1968ஆம் ஆண்டு, கேரளப் பல்கலைக் கழகத்தில் முடியரசன் படைப்புகள் ஒரு திறனாய்வு என்னுந் தலைப்பில் தமிழ் முதுகலைப் பட்டத்திற்காக ஆய்வு செய்து ள்ளார். சா.நாகராசன் என்பார், 1980 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் கவிஞர் முடியரசனின் பூங்கொடி - ஒரு திறனாய்வு என்னுந் தலைப்பில், v«.ஃãš பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். ப.நீலகண்டன் என்பார், கவிஞர் முடியரசனின் பூங்கொடி - ஓர் ஆய்வு என்னுந் தலைப்பில் 1980 ஆம் ஆண்டு, மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தில் v«.ஃãš பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். ப.இராமசாமி என்பார் முடியரசனின் இரு காப்பியங்கள் என்னுந் தலைப்பில் 1980-ஆம் ஆண்டு, மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தில், v«.ஃãš பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். வீ.உண்ணாமலை என்பார், 1982ஆம் ஆண்டு, அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் முடியரசனின் பூங்கொடி - ஒரு திறனாய்வு என்னுந்தலைப்பில் v«.ஃãš பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். ஸ்ரீ குமார் என்பார், 1987 ஆம் ஆண்டு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், முடியரசன் படைப்புகள் என்னுந் தலைப்பில் முனைவர் (டாக்டர்) பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். ச.நாகராசன் என்பார், 1985 ஆம் ஆண்டு, திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் முடியரசன் கவிதைகளில் சமுதாயத் தாக்கம் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். மேலும் மதுரை மீனாகுமாரி, அண்ணாமலை நகர் உண்ணா மலை, சென்னையன்பர், நாகர் கோவிலன்பர், வேலூர் அன்பர் முதலியோர் குறிப்புகள் கேட்டிருந்தனர். அவர் பெயர் முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. சில பாடல்கள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சில, செக் மொழியிலும் உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. மேகாலாயாவைச் சேர்ந்த சில்லாங்கு என்னும் நகரில் வருமான வரித் துறை ஆணையராக இருக்கும் கிட்காரி என்பார், இந்திய மொழிகளில் உள்ள பாடல்களைத் தொகுத்து மகிழ்வதை ஒரு பொழுது போக்காகக் கொண்டு மகிழ்கிறார். அவ்வம்மொழிப் பாடல்களை அவ்வம் மொழியிலேயே பாடலாசிரியர் தம் கையால் எழுதப்பட்ட இரு பாடல்களைத் தமக்கு விடுக்குமாறு வேண்டினார். என்னையும் வேண்டினார். ‘v¥go¥ bghW¥ng‹? என்ற பாடலையும் மீண்டும் வருமா? என்ற பாடலையும் 30.4.73 எழுதி உய்த்தேன். பெற்றுக் கொண்ட அவர் எழுதிய மடலின் மொழி பெயர்ப்பு: உங்கள் உடல் நலம் குன்றியிருப்பதறிந்து வருந்துகிறேன். இப்பொழுது இலக்கியப் பணி செய்து நிண்ட நாள் வாழ, இறைவன் அருள்வாராக என இந்திய மக்களின் சார்பில் வேண்டுகிறேன். 8 புகழ்ச் சிட்டு 1950ஆம் ஆண்டு, கோவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. கவிதைப் போட்டியும் வைத்திருந்தனர். அழகின் சிரிப்பு என்பது தலைப்பு. நாவலர் சோமசுந்தர பாரதியார், பன்மொழிப்புலவர் கா.அப்பா துரையார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மூவரும் நடுவர்கள். என் பாடல் முதற் பரிசிலுக்குரியதெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிசிலுக்குரியதென முடியரசன் கவிதைகள் முதல் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது என உலகம் சுற்றிய தமிழர் சோம.லெ.நம் தமிழண்ணலுக்கு மடல் எழுதியிருந்தார். ஆனால் பரிசு கிடைத்திலது. எனக்கு மிகவும் வேண்டியவர் முயற்சியால் தடுக்கப்பட்டு விட்டது. முடியரசன் ஒரு தி.மு.க. அதனால் அவருக்குப் பரிசில் கொடுக்க வேண்டாம் என்று எனக்கு வேண்டியவர் கூறினார். நடுவராக இருந்த ஆங்கிலப் பேராசிரியர் சாமிநாதன் என்பார், பரிசு கொடுப்பது கட்சிக் காகவா? fÉij¡fhfth? என மறுமொழி கூறினார். நெடுநேரம் சொற்போர் நடந்து, அந்த ஆண்டு எவருக்கும் பரிசு கொடுக்கப்படாமற் போயிற்று. ஆங்கிலப் பேராசிரியர் சாமிநாதன், என் நூலுக்கு ஏன் பரிசில் கொடுக்க வேண்டும் என்பதற்கு, அவர் எழுதிய குறிப்பு முடியரசன் கருத்து டென்னிசன் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதுதான். பின்னர் இரண்டு தொகுதிகளும் சேர்த்து ஒரே தொகுதியாகப் பாரி நிலையம் வெளியிட்டது. அந் நூலுக்கு 1966 ஆம் ஆண்டு முதற் பரிசில் கிடைத்தது. முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் தாம் பரிசில் வழங்கியவர். தமிழ் வளர்ச்சிக் கழக அறிக்கைகளில் நான் பரிசிலுக்குரியவன் எனக்குறிப்பிடப் படவில்லை. முடியரசன் கவிதைகள் ஆசிரியர் தமிழண்ணல் என்றே குறிப் பிடப்பட்டது. வானொலியிலும் தமிழண்ணல் பெயர்தான் அறிவிக்கப்பட்டது. நல்ல வேளை! காசோலை மட்டும் எனக்கு வழங்கப்பட்டது! பரிசு பெற்று இறங்கி வரும்போது, ஒரு முதியவர் என்னை நோக்கி, உங்கள் பாடல்கள் நன்றாகவுள்ளன. காப்பியம் எழுதத் தக்க ஆற்றல் உங்களிடம் உண்டு என்ற குறிப்பு, அப்பாடல் களால் தெரிகின்றது. நல்ல காப்பியமொன்று எழுதுங்களேன். நான் தான் உங்களுக்குப் பரிசில் கொடுத்தேன் என்று பாராட்டினார். அடுத்துப் பேராசிரியர் ஒருவரும் பாராட்டு மொழிந்தார். இருவரும் யாரென அறியேன். அருகிலிருந்த பாரி நிலைய உரிமையாளர் செல்லப்பன் அம்முதியவர் uh.ஸ்ரீ.njáf‹, மற்றவர் க.பெருமாள், அவ்விருவரூம் இப்போட்டியின் நடுவர்கள் என்றார். 1973ஆம் ஆண்டு, வீரகாவியம் என்னும் நூல் தமிழக அரசின் இரண்டாம் பரிசு பெற்றது. என்னிடம் நெருங்கிப் பழகிய நண்பர் ஒருவர் முயற்சியால் அந்நூல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டது.என் நூலொன்று சாகித்திய அகாதெமியின் பரிசிலுக் குரியதெனத் தேர்ந்தெடுக்கப் பட்டதாகப் பேராசிரியர் க.தா.திருநாவுக்கரசு, நண்பர் தமிழண்ணலுக்கு மடல் எழுதி யிருந்தார். ஆனால் வானொலியில் வேறுபெயர் அறிவிக்கப்பட்டது. nguháÇa® ‘v‹d ï¥go kh¿ÆU¡»wnj? என்று நடுவர் தலைவரை வினவ,அவர், நம்ம முடியரசனுக்கு வேறு பரிசில்கள் எவ்வளவோ கிடைக்கலாம். அதனால் மாற்றி விட்டேன் என்று பெருந் தன்மையுடன் கூறியிருக் கிறார். இவரும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாக எழுதலா மென எண்ணி, காரைக்குடிக் கம்பனடிப்பொடி சா.கணேசனை அணுகிச்சில செய்திகள் வேண்டினேன். எவ்வெந்நூல்கள் அதற்குப் பயன்படும் என்று, சில நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். என்ன முடியரசன்! c§fŸ fÉijÆny FUnjt® ka§»¥ nghÆU¡»whnu! என்று வியந்தார். (தெ.பொ.மீ.யைக் குரு தேவர் என்பது வழக்கம்) எனக்கென்ன தெரியும்? என் கவிதையில் மயங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? என வினவினேன். ஞான பீடப் பரிசுக்காக குரு தேவரும் நீதிபதி மகராசனும் உங்கள் கவிதைக்குப்பரிந்துரை செய்தனர். அப்பொழுது தெரிந்து கொண்டேன் தெ.பொ.மீ.யின் ஈடுபாட்டை என்று மறுமொழி தந்தார். மகிழ்ச்சி யென்றேன். அவர்கள் பரிந்துரைத் தனர். நான்தான் வேண்டாமென்று சொல்லி விட்டேன் என்றார் கம்பன் அடிப்பொடி . என்னுள் தோன்றிய மகிழ்ச்சி, அரும்பிய அப்பொழுதே வாடி வதங்கி உதிர்ந்து விட்டது. வேண்டாம் என்பதற்கு என்ன காரணம் கூறினீர்கள்? என்றேன். இன்னுங் கொஞ்சம் தரம் உயரட்டும். பிறகு பார்த்துக் கொள்வோம் என்று சொன்னேன் என்றார். அவர் கருதிய தரம் எத்தகையது என இன்னும் எனக்கு விளங்க வில்லை! கம்பர் விழாவின் பொருட்டுக் காரைக்குடிக்கு வந்திருந்த பேராசிரியர் அ.சீனிவாசராகவன் அவர்களும் நானும் நாட்டரசன் கோட்டைக்கு அவர் வண்டியிற் சென்று கொண்டிருக்கும் பொழுது, இந்த ஆண்டு ஞான பீடப் பரிசிலுக்கு உங்கள் நூலைப் பரிந்துரைத் திருக்கிறேன் என்றார். எந்த அன்பர் முயன்றாரோ தெரியவில்லை; அதுவும் நின்றது. தமிழக அரசின் பாவேந்தர். பரிசுக்கும் முதலிலேயே என் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, என் நண்பர் சாமி பழனியப்பனால் நிறுத்தப் பட்டது. அவரே இதை என்னிடம் கூறினார். காரணம் வினவினேன். சீனியாரிட்டி என்றார். அப்பொழுது பரிசில் பெற்றவரினும் நான்தான் மூத்தவன். நான்பணியிலிருந்ததால் இளைஞன் எனக் கருதி விட்டார். நிலைமை தெரியாமல் நடந்து விட்ட தவறு. மீண்டும் என் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்டு, உரிய இடத்திற்குச் சென்றது. ஆனால்........? தமிழ் நாட்டில் ஓரிலக்கம் பரிசில் (இராசஇராசன் விருது) தரும் பல்கலைக் கழகம் ஒன்றில் தட்டச்சு செய்யப்பட்ட தாளில் என் பெயர் இருந்ததாகப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கூறினார். பின்னர், பல்கலைக் கழகம் அனைத்துக்கும் தொடர்புடைய அலுவலர் ஒருவர் காரைக்குடிக்கு வந்திருந்த பொழுது, அவரும் இச்செய்தியைக் கூறினார். ஆனால் வல்லான் வகுத்த வாய்க் காலில் அந்தத் தாள் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. (1990 ஆம் ஆண்டு) இவ்வாறு பல்வேறு நிலைகளில் எனது நூல் தேர்ந் தெடுக்கப் படினும் எனக்கு வேண்டியவர்களாலேயே தடை செய்யப்பட்டது ஒரு தனிச் சிறப்புத்தானே! 30-4-1966இல் பறம்பு மலையில் நடந்த பாரி விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், கவியரசு என விருது வழங்கிப் பொன்னாடை போர்த்து, உரூபா நூற்றொன்றும் வழங்கிச் சிறப் பளித்தார். முதல் விருது பெறும் பேறு எனக்குக் கிடைத்தது. இங்கே ஒரு வேடிக்கை நடந்தது. பறம்பு மலைக்குச் சென்ற வுடன் அங்கிருந்த சாமி. பழநியப்பன், கவிதை வடிவில் நான் நன்றி கூற வேண்டும் எனக் கூறினார். உடனே அவரிடமே தாளொன்று பெற்றுக் கோவில் வாயிலில் இருந்த வேப்பமரத் தடியில் அமர்ந்து பாடல் எழுதிக் கொண்டிருந்தேன். மரத்தின் அருகிலிருந்த மண்டபத் துள்ளிருந்து சீறும் முழக்கமொன்று கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். கோழியைக் கண்டு அஞ்சிய யானையின் பிளிறல் அது. யானையைக் கண்டபின் எனக்குக் கவிதையா வரும்? எழுதிக் கொண்டிருந்த தாள் பறக்க, அமர்ந் திருந்த என் தாள்களும் (கால்கள்) பறந்தன. நான் நன்றி கூறும் பொழுது, அடிகள் அறம் வேறு; என் அறம் வேறு. அவர் கடவுள் அடியார்; நான் அக்கொள்கையில் கருத்து வேறுபாடுடையவன். அவர் நெற்றியில் திருநீறு பொலியும்; என் நெற்றியோ அவ்வாறன்று. எனினும் என்னையழைத்து, கவியரசு என முதல் விருது தந்து பெருமைப் படுத்தினார் என்றால், என்ன காரணம்? அவர் தம் நெஞ்சிலும் என் நெஞ்சிலும் நிலைத் திருக்கும் தமிழ்தான் அதற்குக்காரணம். தமிழால் ஒன்றுபடின் தமிழர்க்குள் வேறுபாடு ஏது? என்றேன்.மேலும் கவியரசு என்றால் கரந்தை வேங்கடாசலம் பிள்ளை ஒருவரைத்தான் குறிக்கும். அப்படி, அவருக்கு இயற்பெயர் போலாகி விட்டது. அப்பெருமகனார் பெயர் எனக்குச் சூட்டப் பட்டதை, என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பட்டத்தையே வெறுக்கிறேன் என்று கருதி விடுதல் வேண்டா. அத்தகு துறவுள்ளம் உடைய வனல்லன். வேறு பெயர் வழங்கியிருக்கலாம் என்றேன். விருது வழங்குவது எங்கள் விருப்பத் தைப் பொறுத்தது என அடிகளார், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். கவிதைப்பணிக்குக் கிடைத்த பரிசு இது. அடுத்த ஆண்டு முதல், விருது தருவதுடன் பொற்பதக்கமும் அளித்து வந்தார். சில ஆண்டுகட்குப் பின்னர் நடந்த விழாவில், அடிகளார் என்னையும் அழைத்து அச்சிறப்பினைச் செய்தார். விழாத்தலைவர் கலைஞர்தான் பொன்னடை போர்த்துப் பொற் பதக்கமும் சூட்டினார். N£L« bghGJ, ‘fÉaunr! இது அசல் தங்கமா? Kyh« ór¥g£ljh? என்று நகைத்துக் கொண்டே வினவினார். நான் அறியேன் என்று நான் கூறுமுன், அடிகளார், இல்லை! இல்லை! அசல் பவுன், அசல் பவுன் என்று பதறியவுடன் அனைவரும் குலுங்கச் குலுங்கச் சிரித்தோம். ஆசிரியப் பணியிற் சிறந்த முறையில் கடமையாற்றிய ஆசிரியர் களுக்குத் தமிழக அரசால் வழங்கப் படுகிற நல்லாசிரியர் விருது (ஆண்டுநினைவில் இல்லை) கா.சு.துரைராசு என்ற பெயருடன் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கும் கிடைத்தது. நல்லாசிரியர் எனப் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் மேதகு ஆளுநர் கே.கே.சா என்பவரால் வழங்கப் பட்டன. ஆசிரியப் பணிக்குக் கிடைத்த பரிசு இது. தமிழகப் புலவர் குழு, தனது வெள்ளி விழாவை யொட்டிச் சேலத்தில் 8-10-1983இல் நடந்த விழாவில் தமிழ்ச் சான்றோர் என்னும் விருதினை எனக்கு வழங்கியது. அப்பொழுது நான் கண் அறுவை மருத்துவம் செய்து கொண்டு, மருத்துவமனையில் இருந்தமையால் நேரிற் சென்று பெற இயலவில்லை. பின் அதற்குரிய பட்டையமும் பொன்னாடையும் சான்றிதழும் என்பால் வந்தடைந்தன. நெய்வேலியில் உள்ள பாவாணர் தமிழ்க் குடும்பத்தார், என்னை வரவழைத்து ஒவ்வொரு குடும்பத்தினரும் என்பாற் பொழிந்த பேரன்பை என்னென்பேன்! என்னையும் அவர்தம் குடும்பத்துள் ஒருவனாக ஆக்கிக் கொண்டனர். குறிப்பாக அன்புவாணன், அறவாழி, தமிழரசியார், மீனாட்சி சுந்தரம், ஓட்டுநர் ஒருவர் இவர்கள் என்னை அன்பாற் பிணித்து விட்டனர். அப்பொழுது ஒரு நாள் தமிழரசி அம்மையார் தலைமையில் அவர்தம் இல்லத்தில் விருந்தொன்று நடத்தினர். முடியரசன் அவர்கள் ஏழ்மையில் வாடுவதாக நாங்கள் அறிகிறோம். அதனால் திங்கள் தோறும் ஒரு தொகை அனுப்புவோம். மறுக் காது பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம் என்றார். நானெழுந்து, என்னை ஏழை என்றா எண்ணி விட்டீர்கள்? என்னைக் காணுங்கால் அவ்வாறா தோன்றுகிறது? என் நெஞ்சில் தமிழ் இருக்கும் வரை நான் ஏழையல்லன். அதனால் பணம் அனுப்புதல் வேண்டா, தேவைப்படின் நானே வாங்கிக் கொள்ளு வேன். வாங்கிக் கொள்வேன் என்பதை விட வந்து எடுத்துக் கொள்வேன் என்று உணர்ச்சி வயப்பட்டுக் கண்கலங்கிப் பேசினேன். ஓட்டுநர் முதல் பலரும் அழுது விட்டனர். பெங்களூரிலுள்ள உலகத் தமிழ்க் கழகத்தினர், என்னை யழைத்துப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துப் பணம் வைத்த சந்தனப் பேழையும் வழங்கிச் சிறப்பித்தனர். அங்கே தமிழ்ச் சங்கம் கண்ட சுப்பிரமணியனார், பேராசியர் கு.பூங்காவனம், செல்வம், மனோன்மணி - இவர்கள் காட்டிய அன்பு என்றும் நினைத்தற் குரியது. இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் தம் தூண்டுதல்தான் காரணமெனப் பின்பு அறிந்து மகிழ்ந்தேன். தமிழகமெங்கணும் பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்டது. சிவகங்கையில் கவிஞர் மீரா, அவ்விழாவை மூன்று நாள் சிறப்பாகக் கொண்டாடினார். ஒரு பெருங்கவிஞருடைய நூற்றாண்டு விழாவில் உயிருள்ள ஒரு கவிஞருக்குச் சிறப்புச் செய்ய வேண்டு மென்ற நோக்கில், என்னையழைத்து, குன்றக்குடி அடிகளார் தலைமையில் ஆயிரம் வெண்பொன் நல்கினார். கோயிற்பட்டியில், திருவள்ளுவர் மன்றம் என்னும் பெயரில் மன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பேராசிரியர் சங்கர வள்ளி நாயகம் தலைவராகவும் புலவர் படிக்க ராமு செயலாளராகவும் இருந்து, செவ்வையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்து வருகின்றனர். திங்கள் தோறும் தமிழுக்குப் புதுமை படைத்து வருகின்றனர். இவர்தம் பணியைச் சான்றோர் பலரும் புகழக் கேட்டு மகிழ்ந் துளேன். 1979ஆம் ஆண்டு, தற்கால நூல்களின் திறனாய்வு என்ற தலைப்பில், திங்கள் தோறும் பேராசிரியர் பலரைக் கொண்டு திறனாய்வு செய்தனர். அவ்வரிசையில் பூங்கொடி என்ற என் காப்பியமும் 26-8-79 பேராசிரியர் வளனரசு என்பவரால் திறனாய்வுப் பொழிவு நிகழ்த்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஒரு புதுமை செய்தனர். உலவும் பாவலர் களின் உலவாப்படைப்புகள் என்ற தலைப்பில் திங்கள் தோறும் நூல்கள் மக்கள் முன் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் பொழுது, நூலாசிரியரை வரவழைத்துப் பாராட்டும் செய்வர். இவ்வரிசையில் என் வீரகாவியம் என்ற நூல் 22-2-87இல் அவையில் பேராசிரியர் சங்கர வள்ளி நாயகம் அவர்களால் ஆய்வுப் பொழிவாற்றப் பட்டது. சென்னையில் தி.மு.கழகம் செப்தம்பரில் முப்பெரும் விழா நடத்துவது வழக்கம். அவ்விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது என்னும் விருதுகள் மூவர்க்கு வழங்கப்படும். 16-9-1988 இல் நிகழ்ந்த முப்பெரும் விழாவில் கலைஞர் விருது எனக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினைக் கலைஞர் வழங்கினார். விருது அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது வி.பி.சிங், சுர்சித்சிங் பர்னாலா மற்றும் வடமாநிலத் தலைவர்கள் வாழ்த்தினர், தலைமைக் கழகச் சார்பில் சால்வை போத்தப்பட்டது. ஆந்திர முதல்வர் என்.டி.இராமராவ் அவர்கள் தமது சார்பில் பொன்னாடை போர்த்தினார். 1989 சனவரியில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாகை சூடியது, பிப்ரவரியில் கலைஞர் முதல்வரானார். ஏப்ரல் 29ஆம் நாள், பாவேந்தர் விழா அரசின் சார்பிற் கொண்டாடப் பட்டது. 1987ஆம் ஆண்டுக்குரிய பாவேந்தர் விருது எனக்கு வழங்கப்பட்டது. மாண்புமிகு கல்வியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் தலைமையில், கலைவாணர் அரங்கில் மாண்பு மிகு முதல்வர் கலைஞர் அவர்கள், எனக்குப் பொன்னாடை போர்த்து பொற்பதக்கம் அணிவித்து, பத்தாயிரம் உரூவாவும் வழங்கிச் சிறப்பித்தார் தகுதியுரை என்ற தலைப்பில் பாராட்டு மடலும் வழங்கப்பட்டது. என் நூல்கள், பாக்கள் பலரால் மடல் வாயிலாகப் பாராட்டப் பட்ட பகுதிகளிற் சிலவற்றைத் தொகுத்து தருவது நன்றெனக் கருதுகின்றேன். பாடல் வடிவிலும் உரைநடை வடிவிலும் பாராட்டுகள் வந்தன. கைக்குக் கிடைத்தவற்றிலிருந்து சில தரப்படு கின்றன. பலர் பாராட்டியிருப்பினும் மாணவர் சிலர் பாராட்டிய வற்றை நான் பெருமையாகக் கருதுகிறேன். என் எழுத்து இளமுள்ளங் களையும் தொட்டு, அவர்களுக்கு உணர்வும் மகிழ்வும் ஊட்டியது, எனக்கும் பெருமகிழ்வைத்தருகிறது. ஆதலின் மாணவர் பாராட்டு முதன்மை பெறுகிறது. தாங்கள் இயற்றியுள்ள அன்புள்ள பாண்டியனுக்கு என்ற உதவி நூல், எங்களுக்குப் பாடமாக வந்துள்ளது. எங்களுக்கு (மாணவர் களுக்கு) இவ்வளவு அரிய பாடத்தை மிகவும் தெளிவாக, வீரத்துடன் இனிமையாக இயற்றியிருக்கிறீர்கள். மாக்களாகப் பிறந்த இச்சமுதாயத்தை மக்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு எங்களைப் போன்ற மாணவர்களால் நன்றி சொல்லும் அளவிற்குக் கூடத் தகுதி யில்லை......... எப்பொழுது தான் தமிழ் மொழி உலக அரங்கில் ஏறுவது? க.வெ.இராசகோபால் சத்திய மங்கலம் எட்டாம் வகுப்பு அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி. 18.1.1971  சென்ற ஆண்டு ஒன்பதாம் வகுப்பில், உங்கள் முகில் விடு தூது என்னும் பாடலைத் படித்தேன். பாரதி தாசன் போன்ற சீர்மிகு கவிஞர் வரிசையிலே சிறந்து நிற்கின்றீர்கள். திறமையுள்ள வர்களை உலகம் போற்ற வேண்டும். ஆனால் தாங்களோ தங்கள் புகழோ அதிகமாக உலகிற்கு இன்னும் விளம்பரமாகவில்லை என்றே நினைக்கிறேன். தங்கள் புகழ் குன்றின் மேலிட்ட விளக் காய்த் திகழ எல்லாம் வல்ல முருகப் பெருமானை வேண்டுகிறேன். திருவில்லியுத்தூர். கே.மணிவண்ணன் 26.7.75 பத்தாம் வகுப்பு சி.எம்.எ.உயர்பள்ளி.  நான் தங்கள் கவிதைக்கு அடிமையாகி விட்டேன். ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். தங்கள் முகில் விடு தூது என்ற கவிதை யைப் பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன். ஆனால் காலம் கிட்டவில்லை. காலம் கிட்டவில்லை யென்றால் கடிதம் கூடவா கிட்டாமல் போய் விடும்?. இன்றுதான் எங்கள் தமிழாசிரியர், தங்கள் கவிதையைக் கற்றுக் கொடுத்தார். மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கற்றேன். உடனே கடிதம் எழுத நினைத்தேன். முடித்தேன். மலரில்லம். ஜே.இராச சேகரன் பொன்மலை. 7.1.76.  தங்களுடைய கவிதையான முகில் விடு தூது என் மனத்தைக் கவர்ந்தது. கம்பளியை விற்றுக் கடன் கழித்தேன் என்ற வரி, தலைவியினுடைய வறுமையை அளந்து காட்டுகிறது. நான் தங்களுடைய மாணவனாக இருந்திருந்தால் உங்களைப் பார்த் திருப்பேன், பேசியிருப்பேன்; கேள்விகள் கேட்டு உங்கள் கருத்தைத் தெரிந்து கொண்டிருப்பேன். இப்பொழுதும் நான் உங்களை என் ஆசிரியராகவே மதித்து இக்கடிதத்தை எழுதுகிறேன். eh‹ j§fis neÇš fhQ« thŒ¥ò thœehËš xUKiw naD« »£lhjh? 8.3.1985 ப.விசயநாதன் அரசினர் மாணவர் விடுதி, அனந்தபுரம், செஞ்சி வட்டம். இவ்விளைய உள்ளங்களில் கவிதை ஈடுபாடு, அதைப் பாராட்ட வேண்டுமென்ற எண்ணம், சமுதாய மறுமலர்ச்சியில் அக்கறை, தமிழிற் கொண்டுள்ள ஈடுபாடு, எழுத்து நடை, தம்மிற் பெரியரைக் காண வேண்டுமென்ற துடிப்பு, வாழ்த்த விழையும் அன்பு இவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன், முளை நன்றாக இருந்தால் விளையும் பயிர் செழிக்குமல்லவா? இனி, என் பாட்டுக்கு வழிகாட்டியாக அமைந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தம் மருமகன் (வசந்தாவுக்குக் கணவர்) மா.தண்டபாணி அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, என் கவிதைகள் பற்றிக்கூறிய மொழிகளைத் தண்ட பாணி அவர்களே தருகிறார்கள். புரட்சிக் கவிஞருடனேயே தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் நிழலாக இருந்த என்னிடம் பாவேந்தர், பலரைப் பற்றியும் பல கருத்துகளையும் பல நிலைகளில் சொல்லி யிருக்கிறார். இன்று அக்கருத்துகள் எந்த அளவு நிலை பெற்றுள்ளன என்பதை நினைக்கும் போது, அவர் தொலைநோக்கு எவ்வளவு உயர்ந்தது என்பதை நான் எண்ணி வியப்பதுண்டு. தங்கள் கவிதையொன்றைப் பொன்னி இதழில் படித்த பாவேந்தர் இது நல்லா இருக்குது. எனக்குப் பிறகு இவன்தான் கவிஞன் என்றும், பிறிதொரு சமயம் தங்களின் மற்றொரு கவிதை யைப் படித்த பாவேந்தர், இலக்கணத்தோடு ஒழுங்கா எழுதணும்; இதைச் செய்திருக்கிறது நம்ப முடியரசன் தாம்பா என்றும் பாராட்டினார் -மா.தண்டாபனி, 28-4-88 எனக்குத் தமிழறிவுறுத்திய - வணக்கத்திற்குரிய - ஆசிரியப் பெருந்தகை மீ.முத்துசாமிப் புலவர் பூங்கொடி வெளியீட்டு விழாவிற்காகத் திருவுளங்கொண்டு எழுதியருளியவை. கவிஞர் முடியரசன் நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். புலமை நலத்திற் கேற்ற குண நலம் சான்றவர். இவர் பழைய மரபுகளைத் தழுவியும் புதிய மரபுகளைப் போற்றியும் கவிதைகள் செய்யும் திறனுடையவர். இவர் கவிதைகள் அனைத்தும் செவ்விய இனிய செந்தமிழ்ச் சொற்களால் ஆக்கப் பெற்றவை. விழுமிய பல்வேறு வகையவாய பொருள்களைக் கொண்டவை. இம்மியள வேனும் இலக்கண நெறியை இகந்து செல்லாதவை. சொன்னலம் பொருள் நலங்களால் கற்போருக்குக் கழிபேருவகை பயப்பவை. இத்தகைய கவிதைகளால் இவர், தமிழ் கூறும் நல்லுலகின் பாராட்டுதற்கு உரியராயது வியப்பன்று மீ.முத்துசாமி பிள்ளை, அண்ணாமலை நகர் தமிழ் விரிவுரையாளர். 10.12.1964. அண்ணாமலைப்பல்கலைக்கழகம். தாத்தா, தமிழ் நெறித் காவலர் மயிலை, சிவமுத்து அவர்கள் முடியரசன் கவிதைகள் என்னும் நூலைப் பாராட்டி எட்டுப் பக்கங்கள் எழுதியுள்ளார். சில பகுதிகள் மட்டும் இங்கே தரப்படு கின்றன. பாரதி தாசனார் பரம்பரையில் வந்த கவிஞர் வாணிதாசன் அவர்களைத் தமிழ் நாட்டுத் தாகூர் என எழிலோவியத்தில் யானே முன்னர் மொழிந்துள்ளேன். இப்போது அதே நிலையில் கவிஞர் முடியரசன் அவர்களையும் பாராட்டுங் கடப்பாடுடையேன். கவிஞர், அழகமைந்த இடங்களையும் அழகு கெட்ட இடங் களையுஞ் சுட்டிக் காட்டி, நாட்டுப் பற்றூட்டிப் புத்தம் புதிய அழகிய உவமைகளையும் அழகின் சிரிப்பில் அளித்துள்ளார். நீயும் உன்றன் அனைமொழியால் பேசு! பாடு! jL¥gt® ah®? என உரிமையும் உறுதியும் உள்ளத் திண்மையும் ஊட்டுகிறார் உயர் கவிஞர். பொதுவுடைமை ஆட்சி புரியும் புது உலகம் காண, முழு மதியர் ஆட்சி வேண்டும் இவர், களங்கம் உன்பால் இருக்கின்ற தென ஒருவன் இயம்பினானே என்பதிலும், மதியுடையார் பேசு வதைக் கேட்டல் நன்று என்பதிலும் சொல்லழகு, பொருளழகு நிறைந்து நிலவு ஒளி வீசுகிறது. காப்பளித்துக் காப்பளித்தாய் என்பதில் சொல் நயத்தையா காண்பர் அறிவுடையோர்? வாழ்க்கைப் படமன்றோ அச் சொற் களில் பிடிக்கப்பட்டுள்ளது? உன்னுருவே தோன்றுதடி என்பதில் எங்கெங்குக் காணினும் சக்தியாடா என்ற சாயல் படிந்து, பாரதி தாசன் பாதையில் ஏறெனச் செல்கிறார். கோழை மன அச்சத்தார் முட்புதராய் அதனடுவே கனியானாள், என விதவை நிலைக் கிரங்கி, விதவை யெனும் கொச்சை மொழி இல்லாமற் செய்திடுவேன் என்றுறுதி கொள்ளச் செய்கிறார். தொழிலுலகு கவிஞரின் தனியுலகு. மூச்சடக்கி முத்தெடுப் பவனுக்கு மூச்சிருக்க வழியில்லை; தங்கத்தைக் கொடுப்ப வனின் அங்கத்தில் ஒன்றுமில்லை என்று கூறுவதில் வேதனைக் குரலையும் உள்ளக் கனலையும் அறிய முடிகிறது. தொழிலாளி தொடக்கூடாச் சாதி யென்றால் அத்தகைய உலகம் தொலைக என மொழிந்து, வேற்று நாட்டில் கூலிகளாய்ப் பாடுபடும் பாழ்நிலையைப் போக்கக் களங்காண வேண்டாமோ? ஏனின்னும் பாழுறக்கம்? என்று கேட்டு விழிப்புணர்ச்சி ஊட்டுகிறார். முடியரசன் கவிதைகள் தமிழ்க்கனல் என்று கூறலாம். முடியரசன் என்ற பெயரோடு ஒப்பிட்டுக் கூறுவதானால் பாண்டியன் அறிவுடை நம்பி என்றே கூறலாம். சென்னை மயிலை சிவ.முத்து 15-9-1954 தலைவர்.தமிழாசிரியர் கழகம்,  சமுதாய நலனையும் தமிழ் வளர்ச்சியையும் அடிப் படையாகக் கொண்ட பாடல்களே உள்ளத்தைக் கவர்கின்றன. இத்துறையில் நீங்கள் ஆழமாகப் படிந்திருக்கிறீர்கள். உயர்ந்த கருத்துகள் - சிறந்த தமிழ் நடை இலக்கண வரம்பு இம்மூன்றும் உங்கள் கவிதைகளை மிக உயர்த்திக் காட்டுகின்றன. திரு ஔவை.சு.அவர்களும் பிற தமிழாசிரியர்களும் (எங்கள் கல்லூரியில்) உங்களை உளமாரப் போற்றுகின்றனர். தியாகராசர் கல்லூரி மா.இராசமாணிக்கனார் மதுரை - 16-8-1954 தமிழ்த்துறைத்தலைவர்.  தங்களுடைய கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பகுதியைப் படிக்கும் பேறு கிட்டியது சுருக்கமாகச் சொல்லின், இக்கவிதைத் தொகுப்பு ஓர் பூக்காடு, இதிலே சிரித்துக் குலுங்கும் கவிதைகள் யாவும், நறுமணம் வீசும் வண்ண மலர்கள். உள்ளத்திற்கு இனிப்பு உடலுக்குத் தென்பு - அறிவுக் கத்திக்குச் சாணை எல்லா வுணர்ச்சிகளையும் ஒரே சமயத்தில் பெற முடிகிறது, இக்கவிதைகளைப் பருகி அறந்தாங்கி அ.வேதாசலம் 29-12-1955 அஞ்சல் நிலையம்.  நான் வகுப்பில் நுழைந்ததும் மாணவர்கள், ஐயா, அன்புள்ள பாண்டியனுக்கு நடத்துங்கள் என்று குரல் கொடுக்கிறார்கள். காரணம் ஒவ்வொரு கட்டுரையும் தேன் போன்று சுவை தருகிற தன்மைதான். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொன்றை விஞ்சுகிறது. உதாரணமாகக் கூறவேண்டுமானால் திருவள்ளுவர் தம் கருத்தை எப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒன்றை யொன்று விஞ்சுகிறாற் போல எழுதியுள்ளாரோ அதுபோல ஐயா, நான் ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும் போதும் அதை நடத்தும் போதும் என் உடல் புல்லரிக்கிறது. அதிலும் தாய் மொழி பேண் என்னும் கட்டுரை என் நெஞ்சத்தைத் தொட்டு விட்டது கீழப்பெருமறை (தஞ்சை) பெ.நமசிவாயம் 30.1.1971. ஆசிரியர். பாரதி யுகத்துக் கவிஞர்களிலே ஒரு குறிபிட்ட சிறப்பான இடம் தங்களுக்கு உண்டு சென்னை நா.பார்த்தசாரதி 16-12-64 கல்கி. இனி, உருசிய நாட்டுத் தமிழறிஞர் செம்பியன் எனப் பெயர் சூட்டிக் கொண்டவரும் ஆன ரூதின் என்பார். ஈரோட்டு நண்பர் சீ.ப.சுப்பிரமணியத்துக்கு எழுதிய மடலிலிருந்து ஒரு பகுதி அப்படியே கீழே தரப்படுகிறது: இலெனின் கிராது 26-1-61 ............ முடியரசன் கவிகள் பலவற்றையும் இன்றே படித்துச் சுவைத்தேன். மொழியாய்வாளனாகிய என் மனத்தைக் கவர்ந்தது அவர் மொழி, அவர் நடை. தூய்மை யாயிருந்த போதிலும், தொன்மைநாடி நன்மை விடும் முறையில் இயற்றிய தல்ல அவர் கவிதை......... தங்கள் செம்பியன் (S.G. Rudin) தோழர் செம்பியன் என் பாடல்களைப் பாராட்டினார் என்பதை விடத் தமிழ் மரபு கெடாமல் தமிழில் அழகாக எழுதினார் என்பதே எனக்கு இன்பந்தந்தது. லெனின் கிராடு என்பதை, இலெனின் கிராது என எழுதியிருப்பதை நம் நாட்டுத் தோழர்கள் மனங்கொள் வாராக. தாங்கள் ஓய்வு பெற்ற நிலையில் நோய்வாய்ப் பட்டிருப்பது எனக்கு வேதனையளித்தது. தங்களை நான் நேரிற் கண்டே னில்லை. தங்கள் புகைப் படமும் கண்டிலேன். என்றாலும் தங்கள் பெயரை மட்டும் 1951 முதலே அறிவேன் அப்பொழுது பொன்னி இதழில் முதலில் தங்கள் கவிதையைக் கண்டேன், படித்தேன் களித்தேன் அ.லூர்து சாமி, திண்டுக்கல் -26-4-85  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் வெளியிடப் பட்ட மனிதனைத் தேடுகிறேன் என்ற தங்களின் நன்னூல் எங்கள் பார்வைக்குக்கிட்டியது. நாகரிகம் என்ற பெயரால் இன்றைய சமுதாயம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்தத் தங்களின் நூல் ஒரு அவசியத் தேவையாகும். காலம் அறிந்து தாங்கள் எழுதியுள்ள இந்நூல் நம்மவர் அனை வரும் படித்துத் திருந்திடப் பெரிதும் உதவும். கு.செந்தில் குமார். சலகண்டபுரம் -8-7-86  தங்கட்குக் கவிவரம் பிறப்பிலே உண்டான திரு-கருவின் திரு என்பதை இந்தப் புதுப்படைப்பு எடுத்தோதுகின்றது....... காவியப்பாவை கிடைத்தனள். வலிமையான நல்ல நூல். மிக எளிய முறையில் அரிய பெரிய கருத்தைத் தெரிவிக்கும் ஆற்றல், தங்கள் பால் கருவிலே உண்டான திரு. பார்த்ததும் பெரிதும் வியந்தேன்... மறவர் நாடு - என்பதைப் படித்தேன் அப்பாடல் பழம் வரலாற்றுப் பிழிவு. தாங்கள் தமிழ் நாட்டுக்குரியவர். தமிழுக்குரியவர். இறைவன் நம்மைத் தாங்குவாராக. பசுமலை முனைவர்.வீ.ப.கா.சுந்தரம், இசைத் தமிழ் ஆய்வுப்பேரறிஞர்  இத்திங்கள் குறளிய ஏட்டில்,ஊது மறவா ஊது என்ற பாடலில், சுமையாக வாழாமல் சோற்றுக்கே சாகாமல், சூடேற்றித் தோளேற்றித் தமிழா நீ வாவென்று - கொம்பூதி கொம்பூது மறவா எழுதியிருந்த வீர வரிகள் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே உள்ளன. வெறும் புகழ்ச்சியில்லை; மிகையில்லை முற்றிலும் உண்மை. ஈரோடு புலவர் தி.மு.அரசமாணிக்கம் 25.9.87 ஆசிரியர்.  தங்களைக் கண்டதில், தங்களோடு பழகியதில் எங்கட் கெல்லாம் பெருமகிழ்ச்சி. பாவேந்தர் பரம்பரையில் மூத்த பாவலரைக் காணுகையில், அந்தத் தமிழ் உணர்வுகளை மறு முறையும் பெறுகின்றோம். அந்தப் புரட்சிப் போக்கை, திராவிட மரபுணர்வை மறுமுறையும் உணர்கிறோம். பாவேந்தர் கருத்தரங்கிற் பேசிய தங்கள் பேச்சு, உணர்வுள்ள பேச்சு என்பதை விட உணர்வின் உணர்வுகள் என்றே சொல்லலாம். அதை என்றும் புதுவை மறக்காது. தங்களைப் போன்ற பெரியோர்களைத் தமிழகம் சரிவரப் போற்றாமையாற்றான் இந்நாள் தமிழர்க்கு ஏற்றமில்லை. எழுச்சிப் பாவலர் இலக்கியன், புதுவை - 2-6-87 காலத்தால் அண்ணா எழுதிய எந்த எழுத்தும் நிற்கவில்லை. அந்தந்தக் காலத்தோடு அது இறந்து விட்டது. அவர் எழுதிய ஒரு புத்தகத்தைக் கூட இப்போது படிக்க முடியாது என்று கவிஞர் கண்ணதாசன், சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதற்கு மறுப்புரைக்கும் வகையில், தமிழ் மறவன் என்பவர், 1973 மார்ச்சு 5-இல் உரிமை வேட்கை என்னும் இதழில் கட்டுரை எழுதி யிருந்தார். அக்கட்டுரையில் கண்ணதாசன் குழப்ப வாதங்களையும் நிலையற்ற போக்கையும் முரண்பாடு களையும் விளம்பரத் தன்மையையும் சுட்டிக் காட்டி எழுதிய திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி கீழே தரப்படுகிறது. தமிழ் நாட்டில் தலைசிறந்த, புகழ் வாய்ந்த கவிஞர்களாக இன்றைக்குக் கவிஞர் முடியரசன், கவிஞர் சுரதா, புலவர் பொன்னி வளவன் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இவரைப் போல் இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் சமயத்திற்கும் ஏற்றாற்போல எழுதக் கூடியவர்களாக இருந்தால் எவ்வளவோ விளம்பரம் பெற்றிருப்பார்கள். அவர்களெல்லாம் பாரதி தாசனைப் போலக் கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் கல்வி அறிவு ஒழுக்கமும் உடையவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக முறையான இலக்கியப் பயிற்சியும் பண்பாடும் உடையவர்கள். வெறும் அரசியல் விளம்பரங்களை வைத்துக் கொண்டு திரைப்பட உலகைக் கவரவில்லை. திரைப்படக் கவர்ச்சியைக் கொண்டு அரசியல் உலகை ஏமாற்றிக் கொண்டிருக்க வில்லை. அவர்கள் கொள்கையிழந்து அரசியல் பண்ணத்தெரியாத வர்கள். ஒரு கவிஞன் எதை எதைப் பாடுகிறான் என்பதனால் பெருமை பெறுவதை விட, எதை எதைப் பாடாமல் பிடிவாதமாக இருக்கிறான் என்பதனாலும் நிலையான பெருமை பெறுவான். அதிலே அவனுடைய கம்பீரமும் தெரியும். புரட்சிக் கவிஞருக்கும் கவிஞர் முடியர சனுக்கும் கவிஞர் சுரதாவுக்கும் கவிஞர் பொன்னி வளவனுக்கும் அத்தகைய நிலைத்த பெருமையும் கம்பீரமும் உண்டு. அவர்கள் தங்கள் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டவர்கள் அல்லர். தமிழ்க்கவிஞன் என்றாலே கொள்கை யற்றவன் என்று தமிழர்கள் முகஞ்சுளிக்க வைக்கக் கூடிய செயலை இந்தப் பெருங் கவிஞர்கள் செய்யவில்லை. தமிழ்க் கவிஞர்களின் பெருமையை உயர்த்திக் கொண்டிருக்கும் இப்புகழ் வாய்ந்த கவிஞர்களைத் தமிழகம் வாழ்த்திக் கொண் டிருக்கிறது 1965-ஆம் ஆண்டு, மலேசியாவில் தமிழ் நேசன் இதழில் என் கவிதைகளும், வீரகாவியம் என்ற என் காப்பியமும் தொடர்ந்து வெளிவந்தன. வெளிவருமுன், அவ்விதழில் என் உருவப்படத்துடன் வெளியான விளம்பரம் அப்படியே கீழே தரப்படுகிறது. பாரதி தாசன் வழித்தோன்றல் கவிஞர் முடியரசன் தீட்டும் தீஞ்சுவைக் கவிதைகள் அடுத்த வாரம் முதல் வெளிவரும் கவிஞரைப் பற்றி * பொன்னி பத்திரிகையில் இடம் பெற்ற பாரதி தாசன் பரம்பரையில் அறிமுகமானவர். * திராவிடக் கவிஞர் அணியில் தனிப்பெரும் புகழுடன் திகழ்பவர். * தமிழகத்து ஏடுகளில் எண்ணிறந்த கவிதைகளைப் பாடிக்குவித்தவர் * முத்தமிழ் நாட்டின் தமிழ் வித்தகர்கள் ஒருங்கே போற்றிப் புகழும் பேறு பெற்றவர் * தமிழன்னைக்கு இதுவரை இவர் சூட்டியுள்ள பாமாலைகள்- 1.முடியரசன் கவிதைகள், 2. காவியப்பாவை, 3.கவியரங்கில் முடியரசன் 4. பூங்கொடி. * கடந்த 17 ஆண்டுகளாகத் தமிழாசிரியப் பணி புரிந்து வரும் இவரின் கவிதைகள், காரைக்குடிக் கம்பன் திருநாளில் ஆண்டு தோறும் முதலிடம் பெறுவது வழக்கம். அடுத்த வாரம் ஞாயிறு பதிப்பு கவிஞரின் கவிதைச் சோலை. இனிப் பாடலாற் பாராட்டப் பெற்ற பகுதிகளிற் சில காண்போம்: மூன்றாண்டு கட்குமுனம் தங்க ளோடு முடங்கலினால் அடிக்கடிநான் தொடர்பு கொண்டேன்; ஆண்டபுகழ் முடிவேந்தர் மூவர் தம்மை அறிந்ததுண்டு வரலாற்றில்; அவரே இங்கு மீண்டுவந்து கவிபாடும் ஆற்றல் பெற்ற மேன்மைதனை நின்பாக்கள் வாயி லாக ஈண்டறிந்த நாள்முதலா அரசே நின்றன் அடியொற்றி யான்பாடும் ஆவல் கொண்டேன். த.மனோகரன், பசுபதி பாளையம் - 18.5.73 என் கண்ணிற் படலம் படர்ந்திருந்த பொழுது மனம் உருகித்தம் அன்புப் பெருக்கை வெளிப்படுத்திக் காவியப் பாவை யென்னும் கவிதையேட்டின் ஆசிரியர் புலவர் கபிலவாணன் விடுத்த பாடல் களிற் சில: மாசிலாப் பிளாட்டி னம்நீ மறக்கமுடி யாத வன்நீ கூசிடும் வெளிச்சம் நின்றன் குளிர்தமிழ்ப் பாட்டு: வைரம் தூசியால் போர்த்தப் பட்டால் தூக்கியார் எறிவார் ஐயா? பூசிடும் சந்த னம்மே போற்றினேன் வணக்கம் ஏற்பீர். முடியரசன் என்னும் பாட்டு முழக்கமே, குடித்து விட்டா வடிக்கிறீர் கவிதைத் தேனை? வழுக்கிநீர் விழுந்த துண்டா? நொடியேனும் கொள்கை மாறி நுண்ணறி விழந்த துண்டா? கொடிநிகர் ஒழுக்கத் திற்குக் கொழுநரே வருந்த வேண்டா: கண்ணிலோர் வளர்ச்சி என்று(எ)ன் கண்களைக் குளமாய்ச் செய்தீர்: புண்ணுக்கு மருந்துண் டண்ணா பொன்உங்கள் நெஞ்சக் குன்றம்! எண்ணத்தில் படைத்துத் தந்த இலக்கிய மணியி லெல்லாம் புண்ணுண்டா? புலமைக் கண்ணில் புரையுண்டா வருந்த வேண்டா பாவையின் மூச்சி ருந்தால் பாவைத்த பெரியோய் நின்றன் நாவையே புகழ்ந்து போற்றி நல்விழா எடுப்பாள்! பாட்டுப் பூவையே அணியும் நங்கை புகழுச்சி ஏற்றிப் பார்ப்பாள்; பாவைக்கந் நாள்கி டைக்கும் பாவல வணக்கம் ஐயா! ஆசிரியர் அன்பிற்கலந்த இளவல் காவியப்பாவை கபிலவாணன் 28.12.74 என் உயிர்காத்த அண்ணல் சுப்பிரமணியனாரைப்பற்றிப் பாடிய பாடல்களைத் தென்றல் ஏட்டில் வெளியிட்டிருந்தேன். அப்பாடலில் மயங்கிய அன்பர் விடுத்த பாடல்களிற் சில: புதுக்கோட்டைத் தமிழ்ப்பெரியோன் சுப்ரமண்யப் புரவலனின் உயர்பண்பை, ஈகைப் போக்கை மதுக்கோப்பை யெனமயக்கும் சொற்கூட் டத்தால் வடித்துவிட்டாய்; செய்ந்நன்றி உன்றன் நெஞ்சில் எதுக்களித்து நிற்கும்நிலை கண்டு கொண்டேன் இதயத்தை வெளித்திறந்து காட்டி விட்டாய் புதுப்புனலின் நடைபோலக் குதிக்கும் உன்றன் பொற்கவிதைத் திரள்கண்டு பூரித் தேன்நான். தமிழ்பாடித் தமிழுக்கே பாடு பட்டுத் தமிழறிஞர் பலரிங்குத் தமிழர் நாட்டில் உமியாகி மண்ணாகி மடிந்தார்; ஆனால் உயிர்வாட்டும் பெருந்துன்பம்உற்ற போது தமிழாளா! உன்னுடைய துயரம் போக்கித் தண்ணிழலும் பேரன்பும் தந்து நின்ற தமிழ்ப்பெரியோன் தனைப்புகழ்ந்து பாடல் சாலும்! தக்கவனைப் புகழ்ந்துரைத்த நீயும் சான்றாய்! தேனி க.அனந்தப்பன்(அமரன்) 20.1.59 சுயராச்சிய பவனம்  அழகின் சிரிப்பை அமுதத் தமிழில் பழகுதமிழ்ச் சொல்லால் பகர்ந்தான் - விழையுமன்பன் எங்கள் முடியரசன் ஏத்துங் கவியரசாய் மங்களமாய் வாழ்க மகிழ்ந்து அன்பு. கருணையானந்தா, 23.1.51  என்றும் பழகற் கினியான் எனதுள்ளத் தென்றும் குடிகொண் டினிதுறைவான் - என்றுமெனைத் தன்மனத்தே வைத்தளிப்பான் தக்க துரைராச மன்னனிவன் வாழ்க மகிழ்ந்து th.».ஸ்ரீÃth[‹ முகவை. என் பூங்கொடி பால் மனத்தைப் பறி கொடுத்த நற்றமிழன்பர் அறிவுமணியென்பார் விடுத்த அறுபது வரிப் பாடலிற் சில வரிகள்: பூங்கொடி யென்னும் பொலிவுறு பாவியம் பாங்குற அருளிய உயர்முடி யரசே! யாங்ஙனம் நும்மைப் பரவுதல் என்றே ஈங்கு யானும் மிகவிழிக் கின்றேன்; தமிழ்த்தாய் புரிந்த தவத்தி னாலோ தமிழ்நாட் டவரின் நற்பேற் றாலோ தமிழ்மொழிக் கென்றே தனித்த பாவியம் அமிழ்தினும் இனிதாய் அருளினீர் நீரே! எடுத்தேன் பூங்கொடி யாளைக் கையில் விடுத்தேன் அல்லேன் இறுதி வரையில் முடித்தேன் என்னும் அளவும், அவள்பால் குடித்தேன் தமிழாம் உயர்பால் விருப்பால்! எப்படித் தான்யான் என்சிறு நாவால் செப்பிடு வேனோ சீர்பூங் கொடியின் ஒப்பிலாத் தமிழ்மொழித் தொண்டினை? ஓ! ஓ! இப்பார் தனில்இலை இதற்கிணை யாதுமே! ......beŠir யள்ளும் சிலப்பதி காரம் விஞ்சு புகழினைப் பெற்றது போல கொஞ்சு பூங்கொடி யாளும் உலகில் மிஞ்சு புகழினை மேவுதல் வேண்டும் .................................. அரிசிப் பாளையம் அ.அறிவுமணி சேலம் - 19-9-69 செயலர் - முத்தமிழ் மன்றம்.  தாங்கள் யாத்த பூங்கொடி நங்கையை மாங்குயில் கூவிடும் மதுரையிற் கண்டனம்: துறவறம் பூண்ட தூயோள் அவளை நறவெனச் சுவைத்தே நன்மகிழ் வுற்றனம்: தமிழினைக் கற்கத் தழைத்த பூங்கொடி தமிழினைக் காக்க அமிழ்தென வந்தாள்: சீத்தலைச் சாத்தன் திகழுற மீண்டும் நாத்திறங் கொண்டே நாடினன் கொல்லோ! பூங்கொடி வாசம், பொன்மலர் நாற்றம் தாங்கிய தென்னத் தகைமை சான்றது! .................................. பண்ணைக்காடு புலவர் சண்முகம் 24-1-75 ஆசிரியர்  அன்புப் புலவர் அழகு முடியரசன் என்றும் தமிழென் உயிரென்போன் - நன்றே தமிர்காக்கும் நற்கவிஞன் தன்னுழைப்பால் ஓங்கும் அமிழ்தன்னான் வாழ்க வளர்ந்து புலவர் தா.அழகுவேலன் சென்னை, 13-12-64  ஓடி வருஞ்சொற்கள் உற்றஇடத் தேயமர்ந்து கூடிப் பொருள்கொழிக்குங் கோலத்தால் - பாடிப் பெருங்காப் பியமளிக்கும் பெம்மான் முடியரசன் தருங்காப் பியமே தவி ரா. நடராசன்,பி.ஏ ஆசிரியர் காரைக்குடி  என் மணிவிழாவின் பொருட்டுத் தெசிணி அவர்கள் தாம் நடத்தும் கவிதை என்னும் ஏட்டின் முகப்பில், என்றுமுள தென்றமிழ் போல் என்றும் இளைஞர் முடியரசன் வாழி என்றெழுதி, என் உருவப் படமும் வெளியிட்டு வாழ்த்துப் பாவும் எழுதியிருந்தார். வளைந்திருக்கும் மேற்குமலைத் தொடர்ச்சி, மேலே மேய்ந்துதிரி கின்றமுகில் வரிசை; கீழே விளைந்திருக்கும் வயற்காடும், இமைவா னத்தே விடுதலையாய்ப் பறந்திருக்கும் புள்ளும்; சற்றே கலைந்திருக்கும் மேகலைபோல் ஓடும் ஆறும்; அதில்துள்ளும் கயற்கொண்டை மலர்கள் கூட்டம் முளைத்துவரும் துரைராசன் இவற்றைக் கண்டான் முடியரசன் எனுங்கவியைத் தமிழ்த்தாய் பெற்றாள் மாமதுரைப் பெரியகுளம்ஈன்ற இந்த மணிக்கவிதைச் சிறுமீனை இலக்கியத்துப் பாமதுரத் தீஞ்சாற்றைப் பருக வைத்துப் பருக்கவைத்தார் துரைசாமி அம்மான்காரர்! தீமைகனைத் தீய்க்கவந்த ஈரோட்டாரோ தேமதுரக் கவியிவரைத் தன்பால் ஈர்த்தார் ஆமதுவே முடியரசன் போக்கை, வீழ்ந்த சமுதாயத் தின்மேலே போக்கிற்றாங்கே! எதையுரைக்க, எதைவிடுக்க? ஆதி நாளில் கலப்புமணங் கொண்டானே அதையா? பின்னர் அதைப்போன்றே தன்மக்கள் அனைவருக்கும் செய்வித்தா னேஅதையா? வந்த இந்தி அதைஎதிர்த்துத் துணைவியோடு சென்றதையா? ஆசானாய் ஆல்போல விரிந்த தையா? கதையல்ல, எல்லாமே கவிஞன் வாழ்ந்து காட்டியவை; ஆம்எடுத்துக் காட்டு வாழ்வு! பொன்வையைச் சங்கத்துப்புலவர் பாட்டே பாட்டாகும் என்றுரைக்கும் இவரோ, சொந்தக் கண்ணைப்போல் தமிழ்த்தாயைப் பாட்டால் காக்கும் கருத்துடைய வலுவுடைய காவற் காரர்; கண்மூடித் தூங்குகையில் கனவின் போதும் கவிபாடும் இவராற்றல் வியப்பே! எண்ணித் தன்னைமறிந் தோருலகில் தோய்ந்து நிற்கும் தமிழ்க்கவியாம் முடியரசன் இளைஞர் வாழ்க! மணிவிழாவை முன்னிட்டு இலக்கிய அணிச் செயலர் ச.அமுதன் 26-10-80 இல் முரசொலியில் எழுதிய வாழ்த்து. பெரியாரின் தோட்டத்தில் பூத்திட்ட புதுமலரே பாவேந்தர் வழித்தடத்தைப் பாட்டோர்க்குக் காட்டிவரும் பாண்டித் திருநாட்டின் பாவரசே! பண்பரசே! மூத்த தமிழுக்கு முறையாகக் கிடைத்திட்ட மூத்தோனே, முடியரசே! மணிவிழாக் காணுகின்ற மரபுவழிக் கவிவேந்தே! K¤J¤ jÄbHL¤J KGÃyÉ‹ j©ikÆid kÂK¤J¡ fÉijfËš khdtÊ kh‰whkš kd«gâa¤ jªjtnd!, பிழைப்புக்குப் பாடாமல் பிறந்திட்ட மண்ணுக்கும் பெற்றதமிழ் அன்னைக்கும் பகுத்தறிவுப் பூங்காவில் புரட்சிமலர் பூத்திடவும் காஞ்சித் திருமகனின் கருத்துவழி காத்திடவும் கலைஞர் காட்டும் வழிப் பயணத்தில் மாறாமல் தனிவாழ்வில் புயற்காற்றும் பொதுவாழ்வில் புலிக்குணமும் பெருமையுடன் தான்கொண்டு பத்தரைப் பொன்னணியாய் ஒளிர்ந்து வரும் சுடர்விளக்கே உனக்கிந்நாள் மணிவிழா! சொல் வீரம் காட்டாத செயல்மறவன் நீயேதான்! வயதென்ன உனக்கு? வாலிபன் நீ மனவளத்தால் மனந்தளராக் கவிவேந்தே மாதமிழின் காவல் நீ! தளர்ச்சி உனக்கில்லை தாய்த் தமிழைக் காக்கும் வரை இன்பத் தமிழ்ப்படையாம் இலக்கிய அணியென்றும் நீயாத்த கவிதைகளை நித்தம் சுமந்துவந்து நிரந்தரமாய்ப் புகழ் சேர்க்கும்! காரைக் குடி வாழும் காவியக் குயிலேநீ குந்திக் குரலெடுத்துக் கூவிடுக பல்லாண்டு! வாழுங் கவிஞர்களில் வற்றாத நதிநீயே; வாழ்விலும் நீபெற்ற ஈரோட்டுப் பேரறிவும் காஞ்சிப் பள்ளியதன் புகழ்காக்கும் பெரும்பொறுப்பும் உன்னிதயச் சொந்தங்கள்; உனக்குநிகர் காட்டுதற்கு ஒரு பெயரே நானறிவேன் ஒப்பில்லா அப்பெயர்தான் ஓங்குபுகழ் முடியரசன் நிறைவாழ்வும் நீடுபுகழ் நெஞ்சத்தாற் பெருவாழ்வும் உன்மனையில் குவிந்திருக்க உயர் தமிழே; வாழ்க! வாழ்க! நெஞ்சம் திறந்துன்னை நிறைவோடு வாழ்த்துகிறேன். ச.அமுதன் குறளியம் என்ற ஏட்டில் பொய்த்தவாய்மொழி போதும், என்னுந் தலைப்பில் வெளிவந்த என் பாடலைக் கண்டு களித்துச் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்க்கொண்டல் இர.திருஞானசம்பந்தர் என்பார் எழுதிய பாடல்:- உலகம் போற்றும் உயர்தமி ழதனை நிலவச் செய்யும் நீள்புகழ்ப் பாவல! பூங்கொடி படைத்த ஓங்குபுகழ்ச் செம்மால்! பூங்குன்றன் அன்ன உயர்தமிழ்ப்புலவ! செஞ்சொற் பாட்டாம் அஞ்சலார் பாட்டு நெஞ்சிற் கொஞ்சி நாளும் நிற்கிறது. எண்ணில் நூல்கள் வண்ணமாய் இயற்றிய கண்ணிய மிக்க கவினார் அண்ணலார் அறநெஞ் சுடனே குறளியம் தன்னில் மறமிகும் ஆட்சிக் கறைபடி கையர்க்கு பொய்த்த வாய்மொழி போதும் போதும் மெய்யாய்ப் புகல்வன் மெய்ஞ்ஞானத் தமிழினைக் கைதவத்தீர் கைவைத்தீரேல் நைவீர் நைவீர் என்றே அறைந்தீர் நன்றே புவியரசு போற்றும் முடியரசன் நீர்தாம் புவிபோற்ற நூறாண்டு புகழுடன் வாழியே -இர. திருஞானசம்பந்தம் தமிழ் என் மனைவி என்னும் என் பாடலைத் தமிழில் வெளியிடவும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிடவும் தேசியப் புத்தகக் குழு (NATIONAL BOOK TRUST INDIA) என்னிடம் ஒப்புதல் பெற்றது. குடும்பம் ஒரு காவியம் என்ற எனதுபாடலைத் தமிழில் வெளியிடத் தென்னிந்திய மொழிகள் புத்தகக்குழு (SOUTHERN LANGUAGES BOOK TRUST) என் இசைவு பெற்றது. மனத்தூய்மை என்னும் தலைப்புடைய என் பாடலைத் தமிழில் வெளியிட சாகித்திய அகாதெமி (SAHITYA AKADEMI) என்பால் இசைவு பெற்றது. என்நூல்கள் பற்றிப் பல பெருமக்கள் திறனாய்வு செய்துள்ளனர். இலக்கிய வரலாறுகளில் குறிப்பிட்டுள்ளனர். இதழ்கள் பல, மதிப்புரைகள் எழுதியுள்ளன. எனக்குக் கிடைத்தவற்றுட் சில ஈண்டுத்தரப்படுகின்றன. 4-12-54இல் வெளிவந்த தென்றல் ஏட்டில் செவ்வி (பேட்டி) கண்டு எழுதிய கட்டுரையொன்று வெளிவந்தது. கண்டு எழுதியவர் தமிழண்ணல். சிலவினாக்கள் வினவினார். விடை களைக் கேட்டுக் கொண்டு நீண்ட கட்டுரை வரைந்து வெளி யிட்டார். அதிலிருந்து சில பகுதிகள்: முடியரசன் பாரதிதாசனை வழிகாட்டியாகக் கொண்டுள்ள முற்போக்குக் கவிஞர்.ஆம், வழிகாட்டியாகக் கொண்டுள்ளவர் என்று சொன்னேன். அவரைப் பார்த்து எழுதுகிறவர் அல்லர், முன்னோர் வழி நின்று தனிப்போக்கில் தனிப்பாங்கில் தமிழ் மரபுக்குக் கட்டுப்பட்டுக் கவிதையெழுத வேண்டுமென்பதே அவர் கொள்கை. முடியரசன் கருத்துக் கருவூலமாகக் காட்சி தருகிறார். இயற் கையினைப் பாடும்போதும் அவருக்கு மொழியுணர்ச்சியும் புதுமைக் கருத்துகளுமே மேலோங்கி நிற்கின்றன. அதனால் இவரைப் புதுமைக் கவிஞர் எனலாம். முடியரசன் விரைவாகவும் எளிமையாகவும் பாடுகிறார். காரில் செல்லுகையிலும் கால் நடந்து உலாவுகையிலும் பந்தாடும் போதும், பலருடன் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் போதுங் கூட அவரால் பாடமுடிகிறது. ஆனால் ஒன்று. அவர் மனநிலை சரியாக இருக்க வேண்டும். பெரும்பாலும் அடித்தல் திருத்தலின்றிப் பாடுவார். பாடியபின் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொற்களை மட்டுமே மாற்ற முனைவார். நண்பர்களிடம் பாடிக் காட்டித் திருப்தி தருகிறதா என ஆய்வார். சிலர் கவிதை பாடும் போது பிரசவ வேதனைப் படுவதுண்டு. முடியரசனுக்கோ எண்சீர் விருத்தம், வெண்பா, அகவல் முதலிய பாவகைகள் பாடுங் கால் வேதனைப் பட்டதாகவே அறிந்ததில்லை. ஒரு பாடல் விறுவிறுப்பேறும்; கருத்துமிகும்; சொற்கள் வளம் பெறும்; அவர் முகமும் மலரும். உள்ளம் உவகையூற்றின் உச்சியிலே களித்துக் கிடக்கும். இதைப் பார்த்த பிறகுதான் அவரை உண்மையிலேயே கவிஞரெனக் கூற என் மனம் ஒப்பியது. அவர் மேடை ஏறித் தோற்றது கிடையாது. முடியரசன் கவிதைகளைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கருத்துப் பொலிவு, சுவை மலிவு, எளிய சொற்கள், இனிய ஓட்டம், தமிழ் வளம், சொற்பொருள் நயம் இவை கலந்து மொழியுணர்ச்சியைத் தம் வாழ்க்கையுடன் ஒட்டி உறவாடும் அனுபவங்களின் படப்பிடிப்புகளாக, அவலச் சுவை யிலே பிறந்து, ஆத்திரத்தை மூட்டுவனவாக, சிரிக்க வைத்து இடித்துக்கூறுவனவாக அவைகள் விளங்கு கின்றன. முடியரசனிடம் இரண்டு பண்புகளை நான் கண்டேன். ஒன்று அவரைக் கவிஞராக மற்ற ஒன்று நடிகராக. கல்லூரியிற் படித்த போது அவர் நாடகங்களில் நடித்திருக்கிறார். இனிமையாகப் பாடவும் தெரியும், ஆயினும் அவர் ஏனோ பண்ணொடு மேடை களிற் பாடுவதில்லை? முடியரசருக்குக் குடும்பப் பற்றுக்குறைவு என்று சிலர் என்ணு கின்றனர். அவரைவிடக் குடும்பப்பற்று மிக்கவர் இல்லை யென்பது என் துணிவு. ஆனால் குடும்ப நிலைமையால் அவர்மன முடைந்து வாழ்கிறார். அவர் வறுமையிலும் துன்பங்களிலும் சருக்கி விடாமல் காப்பது - தமிழ், ஆம், தமிழேயாகும். - தென்றல் 4-12-54 தாமரை யென்னும் இதழில் எழில்முதல்வன் என்பார் எழுதிய திறனாய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்; கட்டுரையின் தலைப்பு தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதிதாசன் பரம்பரை என்பது. தற்காலக் கவிதை உலகத்தில் முடியரசன் தன் பெயருக்கேற்ப முடியரசனாகவே திகழ்கிறார். இவருடைய பாடல்களைத் தமிழ்க் கனல் என்று சொல்லலாம். பழைய மரபைக் கட்டிக் காப்பதிலே இவர் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். கவிஞரின் மொழியுணர்ச்சி கங்கு கரையற்றது. தமிழை வணங்கும் தனிக் கொள்கை, சமுதாயச் சீர்திருத்த நாட்டம் இரண்டுமே அவரது கவிதைகளில் அடிநாதமாக ஒலிக்கிறது. ஆழ்ந்த நுட்பமான உணர்வுகளைக் கலை வடிவமாக்கி வெளிப் படுத்தும் ஆற்றல் இவரிடத்தில் இயற்கையாக அமைந்திருக்கிறது. ‘MODERNITY’ என்று சொல்லப்படுகிற தற்காலத்தன்மை இவரது பாடல்களில் உண்டு. தான் வாழுங்காலத்தின் சமுதாயக் கொடுமைகளை அவர் கண்ணாடியாகநின்று காட்டுகிறார். ஏழைகள், தொழிலாளிகள் ஆகிய எல்லோர் மீதும் அவரது பரி வுணர்ச்சி பெருக்கெடுத்தோடுகிறது. இவரிடத்தில் கற்பனை விண்ணளாவித் திகழ்கிறது. தமிழிசை இயக்கத்திற்கு முடியரசன் செலுத்தியிருக்கும் பங்கு மிகப் பெரியது. ஆவி கலந்த அழகி ஆடினாள் போன்ற பாடல்கள் முத்துத்தாண்டவர், கோபால கிருஷ்ண பாரதியார், கவிகுஞ்சர பாரதியார் போன்ற கீர்த்தனாசிரியர்களை நமக்கு நினைவூட்டு கின்றன. முடியரசன் சாதனைகளில் முடிமணியாகத் திகழ்வது பூங்கொடி என்னுங் காப்பியமாகும். இருபதாம் நூற்றாண்டில் எழுந்த புதிய காப்பியங்களில் இதற்குத் தனியிடம் உண்டு. தமிழ் நாட்டில் எழுந்த இந்திப் போராட்டத்தைப் பின்னனியாகக் கொண்டு இது புனையப்பட்டது. இக்காவியத்தை உலகத்தின் மூன்றாவது தேசியக் காப்பியம் எனலாம். உலகத்தின் முதல் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரம். இரண்டாவது போர்த்துக் கீசிய நாட்டுக் காவியம். மூன்றாவது இந்தப் பூங்கொடி. ஒரு காவியத்திற்குரிய தன்மைகள் அனைத்தும் இதன்கண் அடங்கி உள்ளன. மணிமேகலையைத் தழுவிச் செல்வது என்ற ஒரு குறையைத் தவிர வேறொன்றும் இதில் சொல்வதற்கில்லை. ஒரு நாற்பதாண்டுக்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றினை அது சுவைபட எடுத்துக் காட்டுகிறது. இக்காவியம் தமிழுக்குக் கிடைத்த ஒரு பெறற்கரும் செல்வம் எனலாம். - தாமரை ஏப்பிரல் 67 கு.சின்னப்ப பாரதி என்பார், தாமரை இதழில் முடியரசன் கவிதைகள் என்ற தலைப்பில் எழுதியிருந்த திறனாய்வுக் கட்டுரையி லிருந்து சில பகுதிகள்: பாரதிக்குப் பின் நீண்ட கிளைகளையும் விழுதுகளையும் விட்டு நிற்கிற பெரும் மரம் பாரதிதாசன்தான். அந்த விருட்சத்தில் நீண்ட படர்ந்த கிளைகள் ஏராளம். அவற்றில் மனத்தைக் கவரும் கிளைகள் சுரதா, முடியரசன், கண்ணதாசன், வாணிதாசன் ஆகிய நான்கு என்று எனக்குத் தோன்றுகிறது. அவருக்குக் கைவந்த யாப்பு முறை எண்சீர் விருத்தமாகும். எண்சீர் விருத்தம் அமைப்பதில் கவிஞர் பாரதிதாசனுக்கு ஈடு கொடுத்து நிற்பவர் இளங்கவிஞர்களில் கவிஞர் முடியரசன் முதல்வர் என்பது எனது கருத்தாகும். ஆனால் ஏனோ அறுசீர் விருத்தங்களில் கவிஞர் தோல்வியே கண்டுள்ளார். உவமை நயம் சிறக்கப் பாடுவதிலும், இயற்கையழகை ரசித்து நமக்குச் சொல்வதிலும் வல்லவராக, பாரதிதாசனின் சிறந்த வாரி சாக நமக்குக் காட்சியளிக்கிறார். கவிஞர் இலக்கண விஷயத்தில் மிகக் கண்டிப்புள்ளவர். அதனைத் தமது கவிதைகளின் மூலம் பல இடங்களில் வற்புறுத்திக் கூறியுள்ளார். இரண்டாவது இயற்கை உலகத்துக்கு கவிஞருக்குப் பாராட்டு வாங்கிக் கொடுக்கக் கூடிய கவிதைகள் இதிலும் தொழில் உலகம் என்னும் பிரிவிலுந்தான் இருக்கின்றன. இயற்கை உலகில் முடியரசனுள் பாரதிதாசன் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்தக் (ஆறு) கவிதையைப் படித்து முடித்தவுடனேயே நமக்கு ஒரு நிறைவு கவிஞரிடத்தில் ஏற்படுகிறது. ஆற்றின் மூலமாகச் சமூகச் சுரண்டலை, தீண்டாமைக் கொடுமையை, ஆட்சியாளர் போக்கை, அனைத்துக்கும் மேலாக மனிதனின் பேராற்றலை நமக்கு எடுத்துக்காட்டும்பொழுது இந்தக் கவிதை மூலம் ஒரு புதுமை விளைத்துள்ளார் என்றுதான் நமக்குக் கூறத் தோன்றுகிறது. ஆறு என்கிற இந்தக் கவிதை முடியரசனின் சிறந்த, நிலைத்து நிற்கக் கூடிய படைப்பு என்பது என் அபிப் பிராயம். பொதுவாகக் கவிஞர் இயற்கைக் காட்சிகளைப் பற்றிப் பாடியிருப்பவைகள் எல்லாம் சமூக உண்மைளை இணைத்துப் பிணைத்த ஒரு கலவைக் காட்சியாகத் தான் நம் முன் காட்சி யளிக்கிறதே அன்றி, வெறும் அழகு நுகர்ச்சிப் போக்கில் பிண்டப் பிரமாணமாக இல்லை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதுதான் அவருடைய தனிச் சிறப்பாகும். காதல் வாழ்வின், மனை வாழ்வின், குழந்தை ஈன்ற கூட்டு வாழ்வின் மாண்பு மிக்க அம்சங்களைப் பண்பு குலையாது நமக்கு எடுத்துக் காட்டியிருப்பது அவருடைய பண்பினை நன்கு எடுத்துக் காட்டுகிறது. கவிதை சம்பந்தப்பட்டவரையில் பாரதிதாசன் பரம்பரையைச் சார்ந்தவர். அரசியல் சம்பந்தப்பட்டவரையில் இவர் தி.மு.கவைச் சார்ந்தவர். தி.மு.க. என்னும் கானல் நீரை நம்பித் தனது வேட்கை யைத் தணித்துக் கொள்ள அவரது நெஞ்சம்தாவித் தாவிச் சென்றாலும் அவரது சிந்தனை யோட்டங்களின் வெள்ளப் பிரவாகமெல்லாம், பல சந்தர்ப்பங்களில் ஒரு மனிதாபிமான நிலையில் கவிஞனின் உணர்வோடுதான் செயல்பட்டிருக்கிறது. பாரதி வெளிச்சத்தில், பாரதிதாசன் வழியில் தமிழில்தான் சகலமும் என்னும்தாரக மந்திரத்தைத் தூக்கிப் பிடித்து நிற்பவர். இந்தியோ கன்னடமோ ஆங்கிலமோ எதைப் பற்றியும் கவலை யில்லை. என்னுடைய தமிழ் சகல துறைகளிலும் உரிய அந்ததைப் பெறவேண்டும் என்றே அவருடைய மனசாட்சி இந்தப் பகுதியில் முழங்குவதைக் காணுகிறோம். தமிழை நன்கு கற்றுத் தெளிந்தபின் பிற மொழிகள் யாதாகினும் தெரிந்து கொள்வதில் பிழை இல்லை என்று கூறுவதையும், தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிகள் நாட்டாண்மை செய்வதைக் கண்டு மனம் வெதும்புவதையும் பார்க்கிறோம். .............. தமிழே இந்தநாடாள வேண்டுமென உறுதி கொள்வீர் என்று உறுதியாகத் தமிழ்தான் தமிழ் மாநிலத்தில் அரசு புரிய வேண்டும் என்பதை டான் என்று அந்த முகாமில் இருந்து ஒருவர் கூறுகிறார் என்றால், விருப்பு வெறுப்பற்ற முறையில் மொழியை அணுகும் முடியரசனின் முற்போக்கு நிறைந்த மனிதாபிமானத் தன்மையைப் போற்று வதில் பொருள் இருக்கிறதல்லவா? பல்வகை உலகத்தில் வளரக் கெடும், காவலும் களவும் ஆகிய இரண்டு கவிதைகளும் உவமையுடன் கூடிய உயர்ந்த கருத்தை விளக்கும் சிறந்த பாடல்கள். இவைகள் அவருடைய தனித்தன்மைக்குச் சிறந்த சான்றுகளாகும். ஒட்டு மொத்தத்தில் கவிஞர் பாரதிதாசன் பரம்பரையில் தலை சிறந்தவர் கவிஞர் முடியரசன் என்பது ஐயமில்லை. பாரதிதாசன் அவர்கள் தனது முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் எப்படிப் புரட்சிக் கவிஞராக மலர்ந்தாரோ அதுபோலக் கவிஞர் முடியரசன் அவர்கள் தனது முதல் தொகுப்பின் மூலம் சிறந்த கவிஞராக மலர்கிறார். அவருடைய பார்வையில் சில கோணல் மாணல்கள் நேர்ந் திருந்த போதிலும் மாற்றமுடியாத சமூக நியதியான பொதுவு டைமை என்கிற இலட்சியத்துக்கு முரணாக அவருடைய பேனா ஒரு வாக்கியத்தைக் கூட நானறிந்த வரையில் அவருடைய கவிதைக் தொகுப்புகளில் எழுதியிருக்கவில்லை. அந்த வகையில் கவிஞர் நம் முன் மிக உயர்வாகவே காட்சியளிக்கிறார். கவிஞரின் படைப்புகள் பழைய வேகத்தில், புதிய உணர்வில் வெளிப்படவேண்டும். எதிர்காலம் மிகப் பிரகாசமாகக் காத்துக் கிடக்கிறது. ஏற்பதும் துறப்பதும் கவிஞரின் விருப்பம். கவிஞரிடத்தில் எல்லோர்க்கும் கிடைத்தற்கரிய கவித்துவம் என்கிற வாள் கிடைத்திருக்கிறது. அதை எப்படி வேண்டு மானாலும் சுழற்றலாம். சுழற்றக் கூடிய முறையில் சுழற்றினால் தான் போர்க்களத்தில் வெற்றி கிட்டும். வீரன் என்கிற புகழும் கிடைக்கும் இல்லையேல்............! நம் விருப்பமெல்லாம் கவிஞரின் தேக்கநிலை உடைபட்டு, மேலும் மேலும் என்கிற சத்தியத்தின் இயக்க நிலையை எதிர் பார்க்கிறது. வரவேற்கிறது. பின்குறிப்பு: (இக்கட்டுரை 1-8-63ல் எழுதப்பட்டது. அந்தக் கால கட்டத்துக்குப் பின்னர் தி.மு.க. தனது உயிர் மூச்சான திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டது. ஆகவே முடியரசன் அவர் களுக்கு நாட்டின் புதிய தேவைகளை உணர்ந்து புதுமைக்கலை - இலக்கியத்துக்குத் தன் பணிகளைப் புரிவதற்குக் காலம் விரிந்து கிடக்கிறது. கவிஞர் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டு மென்பது எனது பனிவன்பான வேண்டுகோள்) -தாமரை சோபகிருது - தை 1964 இளந்தமிழன் எனும் இதழில் செ.பக்தவத்சலம் என்பார். முடியரசன் கவிதை முத்துக்கள் என்னுந் தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: குவலயமெங்கும் குடியரசு கோலோச்சும் இந்நாளில், கவியரசு முடியரசன் என்ற பட்டமும் புனைபெயரும் பூண்ட பைந்தமிழ்க் கவிஞரின் கவிதைகள் உருண்டு திரண்டு ஒளி வீசும் ஒரு பெரும் முத்துக் குவியலாகவே காட்சி தருகின்றன. இக்காலத்தில் இயற்கை முத்துக்களின் அருமையை அறிய வொட்டாமல் செயற்கை முத்துக்கள் மலிவாகக் கடைகளில் கிடைக்கின்றன! ஒரு சிறிய முத்துக்காக வீண் சிரமப்படு வானேன் என்பதைப் போல, போலி முத்துக்கள் ஒரு புது நாகரிக மலைப் பையே கூட மனத்தில் தோற்றுவிக்கின்றன. இன்றைய தமிழ்க் கவிதை உலகின் நிலையும் இதுதான். இதில் தம் பெயரிலுள்ள பழமையைப் போலவே தம் கவிதை களிலும் மரபைக் கட்டிக் காக்கும் கவிஞர்களுள் முதன்மை யாகக் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் முடியரசன். பொன்னி என்னும் தன்னிகரற்ற இலக்கியத் திங்களிதழில் தான் கவிஞர் முடியரசனும் பாரதிதாசன் பரம்பரையினராக முதன்முதல் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்விக்கப் பெற்றார். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனைப் போலவே தனித்தமிழில் இனித்த கொள்கைகளை எடுத்துரைத்தல், இசைத் தமிழை இயன்றவரை வளர்த்தல், காவியங்கள் இயற்றல் ஆகிய முத்துறை களிலும் முனைந்து மேலும் வெற்றி பெற்றுள்ளார் முடியரசன். முடியரசனின் இலக்கண அமைதி நிறைந்த கவிதைகள் திரு.வி.கவின் தெள்ளிய நடையைப் போல் விழுமிய புலமை கெழுமிய ஒரு வகை மிடுக்குடன் மிளிர்கின்றன. தம் பாட்டுத்திறம் முழுவதையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காகச் செலவிடும் இச்சுயமரியாதைக் கவிஞரை, காரைக்குடியில் தொடர்ந்து கம்பன் விழா நடத்திப் பெருமை பெறும் திரு.சா.கணேசன் அவர்கள், கம்ப ராமாயணக் கவியரங்கிலும் அடிக்கடி அழைத்துப் பங்கேற்கச் செய்துள்ளார். தி.மு.க.வினரிடையே கம்பனின் இலக்கிய நயங்காட்டுங் கவிஞராகவும் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப் போரிடையே முன்னேற்றக் கருத்துகளை முழங்கும் திறம் கொண்ட கவிஞராகவும் விளங்கி இருதிறத்துப் பாராட்டு தலையும் ஒருங்கே பெற்றுள்ள உயர்கவிஞர் முடியரசன். முடியரசனின் முதிர்ந்த கவிச்சுவையின் பயனாகப் பிறந்துள்ளது. வீரகாவியம். இந்நூல் சொன்னலமும் பொருள் நயமும் இன்ன பல பன்னலமுங் கொண்டு, கன்னலென இனிக்கும் கற்கண்டுக் கவிதைகளின் சொற்கண்டாய்த் திகழ்கிறது. பெற்றமகன் தளிருடலைப் பஞ்சின் மென்மை பெற்றிருக்கும் கைவிரலால் பூப்போல் தொட்டுக், கற்றுணர்ந்த சான்றோரின் பாடலுக்குள் கரந்திருக்கும் உட்பொருளை உணர்ந்தார்போல மகிழ்ச்சியுற்றுச் சொக்கிக் கிடக்கும் பெற்ற மனத்தின் பெற்றியினைப் பாடுங் கவிஞரின் நற்றமிழைக் கண்களில் ஒற்றிப்போற்றிக் கற்றிடுவோம். -இளந்தமிழன்மே - 1973 1966 - 67இல் வெளிவந்த ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி (திருப்பத்தூர்) ஆண்டு மலரில் முனைவர் இரா. இராச கோபாலன் என்பவர் மறுபடி பிறந்த மணிமேகலை என்ற தலைப்பில் பூங்கொடி பற்றி எழுதிய கட்டுரையில் சில பகுதிகள்: முடியரசனைத் தெரியாதவர் தமிழகத்தில் இருக்க முடியுமா? இன்றைய கவிஞர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய முன்னணிக் கவிஞர்களில் - நடுநாயகமானவர். சமுதாயச் சிந்தனை, முற் போக்கில் முனைப்பு, இயல்பாக இதயத்தோடு துடிக்கும் தமிழ் ஆர்வம், அமைதியான - ஆனால் நிலை பேறுடைய செயல் வன்மை - இவைதாம் கவிஞர் முடியரசன். சங்ககாலப் பாடல்களின் பெருமிதமும் தூய்மையும் தன்மை நவிற்சியும் முடியரசன் பாடல்களில் காணப்படும் தனிச்சிறப்பு. அவர் நிறைந்த சொல் வளம் படைத்தவர். பிற கவிஞர்களைக் காட்டிலும் சொற்களை அளவோடு ஏற்ற இடத்தில் ஆளும் ஆற்றல் படைத்தவர். இத்தகைய இன்கவிஞர் இயற்றிய நன்முறைக் காப்பியமே பூங்கொடி. மொழிக் கொரு காப்பியமாக காப்பிய அமைதியோடு புதுவது புனைந்த பொற்புடன் பூங்கொடி வந்துள்ளது. கண்ணியம், கடமை, கட்டுப்பாடு, என்ற மூன்று பண்புகளின் வடிவம்தான் பூங்கொடி, தமிழ்மீது கொண்ட அன்பை பூசை நேரத்தில் புரியும் அருச்சனையாகவோ, மேடை நேரத்தில் முழங்கும் கூக்குரலாகவோ இல்லாமல் அமைதியான ஆனால் ஓய்வின்றி இறுதிமூச்சு வரை ஆக்கப் பணிபுரியும் இலக்கியத் திருவுருவம் பூங்கொடி. இத்தகைய காப்பியத்தை இயற்றிச் சிறந்த துணிவினைக் காட்டியுள்ளார் கவிஞர் முடியரசன். இன்னும் பல இதனினும் சிறந்த காப்பியங்களை இயற்ற விருக்கும் தம் எழுத்தாண்மைக்கு, இதன் மூலம் கொடி உயர்த்தி யுள்ளார் கவிஞர் முடியரசன் என்று நாம் நம்பி மகிழ்கிறோம். கதையில் வரும் பலரும் நூற்றுக்கு நூறு நல்லவராக இருப்பது மானிட இயற்கையில்லை என்பது உண்மையே. ஆனால் மானிட இயற்கை என்ற பெயரால் அருவருக்கத்தக்க காட்சிகளைச் சிறுகதையிலும் புதினத்திலும் படித்துப் புண்படும் நெஞ்சிற்கு இந்தத் தூய நறுமணமலர்களை அள்ளியள்ளி நுகர்ந்து ஆறுதல் பெற முடிகிறது. பரந்து கிடக்கும் உலகமெலாம் தமிழர் விரிந்து உலா வர வேண்டும். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவவும், திறமையான புலமையால் வெளிநாட்டாரை வணக்கவும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்குச் சேர்க்கவும் வேண்டும். அந்தப் பனிகள் பூங்கொடியில் செவ்வனே அரும்பி எழில் காட்டுகின்றன. பூங்கொடி பல தேயங்கட்குச் சென்று ஆங்காங்குள்ள தமிழறிஞரோடு சொல்லாடுகிறாள். சான்மார், கமீல்சுவல பெல்ரூதின் அவருள் தலையாயவர். தமிழ்காக்கக் கல்லடிபட்டு, சொல்லடி ஏற்றும் வெஞ்சிறையுற்றும், வேதனைப் பட்டும் வீரம் விளைக்கும் உரவோர் பலர் இந்நூலில் வருகின்றனர். மீனவன், வடிவேல், முத்துக் கூத்தன் முதலிய மொய்ம் பினரின் செயல்கள், நம் கண்முன் எழுந்து மடிந்த நற்றமிழ் வீரரை நினைவுபடுத்துகின்றன. மறியல், உண்ணாமை அறப் போர், சிறைபுகல் முதலிய துணிவினைகளும் நாம் கண்டு கேட்டு மெய்சிலிர்த்த காட்சிகளின் ஓவியங்களே. ஆசிரியர் முடியரசன், இயற்கையும் செயற்கையுமான காட்சி களில் எல்லாம் புதிய உவமைகளை உருவாக்கியுள்ளார். கதிரவன் உதயம் செய்கின்றான். உவமையும் உதயமாகின்றன. கொடும்பரின் ஆட்சி நெடும்பகல் நில்லாது மடம்படு மாந்தர் மதியொளி பெறுங்கால் படும்படும் அந்தக் கெடும்பரின் ஆட்சி, உயிர்வரின் உக்குறள் ஓடுதல் போலக் கதிர்வர வறிந்து காரிருள் ஓடிப் பதுங்கி மறைந்தது; பகலவன் வளர்ந்தான் இப்பகுதியில் படும்படும் என்ற அடுக்கு மொழியின் அழுத்தம், ஆசிரியர் வரும் பொருள் உரைக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று காட்டுகிறது. யாதும் ஊரே என்றால் தனக்கென வீடும் வேண்டாவா என்று வாதிடுகிறாள். தமிழரின் பெருந்தன்மைக்கும் ஏமாளித் தனத்திற்கும் இடையே கோடிட்டுக்காட்டுகிறார். சோறா? மானமா? என்ற அடிப்படைக் கேள்வி எழுந்து, அதற்குரிய விடையும் சோர்வின்றி விளக்கம் பெறுகின்றது. பல மொழி பயில்கிறாள் பூங்கொடி. பல மொழியும் படிக்க ஆர்வம் எழுப்புகிறாள். ஆனால் அதே நேரத்தில் ‘vG¤J« m¿ah® go¥ò« czuh® fG¤âš ãwbkhÊ f£Ljš e‹nwh? என்று எதிர்த்துக் கேள்வி போடுகிறாள். அவரும் வீரர் பலரும் வியக்கத்தக்க துணிவு காட்டுகின்றனர். கருணை மறவர்களின் செயல்கண்டு நமக்குக் கண்ணீர் அரும்பா நின்றது. இறுதியில் சிறைப்பட்ட பூங்கொடி விடுதலை பெற ஆணை வருகிறது. அந்நேரம் என்ன நடக்கிறது? விடுதலை ஆணைத் திருமுகம் ஏந்தி நெடுமகன் ஒருவன் நின்றனன் ஆங்கண்; மருத்துவர் ஆங்கே மனமுவந் தோடி ஒருத்தியின் முகத்தை உற்று நோக்கினர் விடுதலை விடுதலை விடுதலை என்றனர்; உடலெனுஞ் சிறையுள் ஒடுங்கிக் கிடந்து படுமுயிர் சென்றது விடுதலை பெற்றே நம் கண்கள் நீர்முத்துக்களால் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதயம் நின்று விட்டது போன்ற ஒரு பிரமை உண்டாகின்றது ஆண்டுமலர் 1966-67 பேராசிரியர் மது.ச.விமலானந்தம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி; முடியரசன் (துரைராஜ்) கருத்தில் தெளிவு, கவிதையில் துணிவு, உவமையில் புதுமை; உணர்வில் ஆழம், முற்போக்கின் முனைப்பு, சீர்த்திருத்தத்தில் சீர்மை, காதற் குழைவு, அறநெறி ஆர்வம், தத்துவத்துடிப்பு அத்துணையும் மிக்க சத்தான கவிதை வடித்திடும் கவிதைச் சிற்பி. கனல் தெறிக்கும் கவித்துவம்.... பூங்கொடி தமிழ் இயக்கப் போராட்ட வரலாற்றினைப் பீடு நடையில் பாடும் தமிழ்த் தேசியக் காப்பியம் - தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் பக்க 571-572 சாகித்திய அக்காதெமி வெளியிட்ட தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் மு.வரதராசனாரின் குறிப்பு: முடியரசன் என்னும் கவிஞர், புலவர் மரபை ஒட்டிப் பாடல்கள் இயற்றியுள்ளார். தமிழ் உணர்ச்சி அவருடைய கவிதைகளில் மேலோங்கி நிற்கும். - தமிழ் இலக்கிய வரலாறு பக்.343 பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, சாகித்திய அகாதெமியால் வெளியிடப் பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் எழுதியுள்ளபகுதி கிடைத்திலது. தமிழ்க்கல்ச்சர் என்ற ஆங்கில ஏட்டில் தனிநாயக அடிகளார் எழுதியதும். செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதர் எழுதியதும் கைக்குக் கிடைத்தில. முனைவர் மு.தமிழ்க்குடிமகன் எழுதிய பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் என்னும் நூலில் வரலாற்றுப் பெயர்களை மட்டுந் தாங்கி, முற்றிலும் கற்பனைப் புனைவுகளையே கொண்டு பெரு மிதச் சுவை மிளிருமாறு விளங்குகின்ற காப்பியம் வீரகாவியம் என்று குறிப்பிட்டுள்ளார். வாழையடி வாழை என்னும் நூலில் முனைவர் சி.பால சுப்பிர மணியம் எழுதிய பகுதியிற் சில வரிகள்: கவிஞர் முடியரசன் தரமான கவிதைகளைத் தமிழ்க் கவிதை யுலகிற்குத் தருபவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பயின்றவர். மென்மையான மனமும் அதில், நுண்மையான கருத்துக்களும் கொண்டவர். ஆழ்ந்த உணர்ச்சி களை அடிமனத்தில் தேக்கி நிறுத்திப் பின்னர் அவ்வுணர்ச்சி களை நினைவிற்குக் கொண்டு வந்து, கவிதைவடிக்கும் கலை கைவரப் பெற்றவர். பழமையைப் போற்றும் உள்ளமும், தமிழை வணங்கும் தனிக் கொள்கையும் சமுதாயச் சீர்திருத்தத்திலே ஆர்வமும் கொண்டவர் கவிஞர் முடியரசன் ஆவர். பாரதியையும், பாரதிதாசனையும் பின்பற்றிப் பெருநடை போடும் கவிஞரின் கவிதையழகினை இனிக் காண்போம். ’fhÉa¥ghit’ என்ற இசைத் தமிழ்த் தொகுதியால் இசைத் தமிழிற்குத் தொண்டும் இனிமையுற ஆற்றியுள்ளார். .K‹nd‰w¡ கருத்துகளை மிகவுடைய இக்கவிஞரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டிற்குத் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த நல்ல சொத்துகளாகும். - வாழையடி வாழை. இனி என் நூல்கள் பற்றிப் பல்வேறு இதழ்களில் வெளிவந்த மதிப்புரைகளிற் சில தரப்படுகின்றன. முடியரசன் கவிதைகள் என்னும் நூல் பற்றி வந்த மதிப்பு ரைகள்: முடியரசன் கவிதைகள் மூலமாக நமக்கு அருமையான திறமைகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு சிறந்த கவிஞர் அறிமுகமாகிறார். இன்னும் பரந்த நோக்கமிருப்பின் நிலையாக உள்ளுயிரை நெகிழ்த்தக் கூடிய கவிதைகளை அவர் தமிழ் இலக்கியத்திற்குக் கொடுக்க முடியும். ஏழ்மையிடத்தில் இருந்துbவளிப்படும்Jaரமும்உ¤nவகமும்இக்fவிதைத்தெhFப்பின்முதல் கவிjÆன்பிற்பகுâÆல்காணப்பLகிறது.இந்தஉa®î ï¥ò¤தகம்முழுkயும்காண¥படுகிwJ.செறிவுÄக்f bkhழித்திண்மையும்கவி¢சா‹wண்மையு« மென்kயுங்கொண்ltராய்இக்கவிஞ®விளங்குகிwhர்.இவரின்கÉijfŸ go¡f¥படிக்க ïன்பம்gaக்கின்றd-இந்து  பாடல்கள் Éறுவிறுப்பாகச்bசல்கின்றன.ešy உதாரணங்கள்கையாளப்பெறுகின்றன. gயில்வோர்க்கு vளிமையதாய்ப்gடல்கள்miமந்துஉŸளன.ஆáÇa® jம்ctமைகள்gற்றற்குரியன.jhÊyhË என்ற பகுதியில் இன்றைய சமுதாயத்தில் தொழிலாளர் படும் அவதிகள் சிலவற்றைச் சித்திரித்திருக் கிறார். மறைந்த திரு.வி.க அவர்களைப் பற்றிப்பாடும் பாடல் உளமு ருக்கும் பாடலாகும். பாடல்கள் சில பயில்வார் உள்ளத்தைத் தொடுவனவாக அமைந்துள்ளன - 17-10-1954 - சுதேசமித்திரன் அ.மு.பரமசிவானந்தம்  எல்லோரும் மானிடராவரோ? இப்புவியில் கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாமோ? என்று என் தந்தையார் அடிக்கடி சொல்வது வழக்கம். அவரிறந்து அனேக ஆண்டுகளாயினும் அதே ஆப்த வாக்கியத்தின் உண்மை, முடியரசன் கவிதை களை ஒருமுறை வாசித்தபின் என் மனத்தில் உதிக்கிறது. பாட்டுப்பாட்டு என்று பலரும் பாடும் இந்த நாளில், பாங்கான பாடல்களைப் படிப்பது பரமானந்தம் ஆகும். அதிலும் பழமையைத் தழுவியும் புதுமையைப் புகட்டியும் இனிய எளிய நடையில் இயற்றப் பெறும் பாக்கள் எத்துணைப் பேரின்பம் பயக்குமென்று இங்கு எடுத்துக் கூற வேண்டிய தில்லை. அத்துணைச் சிறந்த பாடல்கள்தாம் முடியரசன் கவிதைகள் என்ற முக்காலுந் துனிந்து கூறலாம்........? - ஈழகேசரி -8-8-54 வாரச் செய்தி ஏடு எழுதிய மதிப்புரையின் பகுதி: தலைசிறந்த கவிஞர் சிலர் நீங்கலாக ஏனையோர் இயற்றும் கவிதைகள் ஆவேசப் பாடல்களாகவே உள்ளன. இலக்கணப் பயிற்சி சிறிதுமின்றிப் பாடத் தொடங்குகின்றனர். இலக்கிய அறிவில்லாத ஆசிரியர்கள் இவற்றைத் தம் இதழ்களில் அச்சிட்டு, இலக்கணப் பிழைகள் மலிந்த பாடல்களைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் முடியரசன் கவிதைகள் வெளி வந்திருக்கிறது. செந்தமிழ்ச் சொற்செறிவும் இலக்கண அமைதியும் இத் தொகுப்பி லுள்ள பாடல்களில் உள்ளன. ஆசிரியருடைய பரந்த உலகிய லறிவு, தமிழார்வம், உவமைச் சிறப்பு முதலியன போற்றத் தக்கவை. கவிஞரின் கற்பனைத்திறனும் பொருளாதாரக் கொள்கை யும் இவற்றால் புலனாகின்றன. கருத்துக்கள் காலப்போக்குக்கு ஏற்ற வையாக உள. தமிழ்த் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர், அமைச்சர் ஆகியோரிடம் முன்னுரை வாங்குவோர் சிலர். பிறருடைய நூல்களைச் சிறிது புரட்டிப் பார்க்க ஓய்வு நேரமோ விருப்பமோ இல்லாத பேரறிஞர்களிடம் முன்னுரை வாங்குவோர் பலர். இவ்வாறு படிப்பவர்களை ஏமாற்ற முயல்வது இக்கால எழுத்தாளரிடம் பரவியுள்ள புதிய நோயாகும். இவ்வாறின்றி இக்கவிஞர்தம் உடனாசிரியர், இனிய நண்பர் ஒருவருடைய அணிந்துரையைப் பெற்றிருப்பது, இந்நூலுக் கொரு சிறப்பு. தமிழண்ணல் அணிந்துரையைப் படிப்பவர்க்குப் பத்திரிகை மதிப்புரைகள் வெற்றுரைகளே - சோம.லெ.28-7-54 திருச்சி வானொலி நிலையம் புத்தக விமர்சனம் என்னுந் தலைப்பில் முடியரசன் கவிதைகள் என்னும் நூல் பற்றி 8-11-54இல் ஒலி பரப்பிய பகுதியில் ஒரு பகுதி: புது உலகத்தை சிருஷ்டிக்க நினைக்கும் இருபதாம் நூற்றாண்டுக் கவிகளில் ஒருவர் முடியரசன். புதருள் கனியில் விதவை மறுமணத்தைப் பற்றி இங்கித மாகப் பிரதாபிக்கிறார். புதுமைப் பெண்ணில் கட்டாயக் கல்யாணத்தை வெறுக் கிறார். தொழிலாளி விறகு வெட்டி, குதிரை நினைத்தால்.......? முதலிய பாட்டுக்களில் முதலாளித்துவ ஒழிப்பை ஆதரிக் கிறார். இயற்கையை வருணிக்கும் கவிதைகள் அழகின் சிரிப்பு, ஆறு, கடல் முதலியவை. உயரிய கவிதை மணம் இவற்றில் வீசுகிறது. கற்பனைகள் ஊற்றுப் பெருக்குப்போல் வருகின்றன. - மகாலிங்க சாதிரி கவிதை என்னும் ஏட்டின் 1-12-71 இதழில், பண்ணரசன் என்பார் முடியரசனின் இயற்கை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் பகுதி: கற்பனையில் மிக்கவராய்க் காலத்தை வென்ற பாரதியின் வழிவந்தவராய் வாழையடி வாழையென விளங்கி, கனியிடைச் சுளையெனக் கவியாக்கும் ஆற்றல் பெற்று விளங்குபவர் கவிஞர் முடியரசன், பாவேந்தர் அடியொற்றிப் பாடுவதில் மிக வல்லவர். இயற்கையினைச் சுவைப்பதில் ஈடு இணையற்றவர். இவரின் கவிவளத்தை எல்லாம் தெரிந்திடற்கு நிறையப் படியுங்கள் எனயானும் கூறிடுதல் இனிக்கின்ற கற்கண்டை, இன்கரும்பை, சுவைத்தேனைச் சுவைப்பதற்கு வாருங்கள் என்பது போலாகிவிடும். பாரதியின் புரட்சி உரு,பாவேந்தர் பீடு நடை, தேவியவர் உள்ளம்போலத் தெளிந்த உயரறிவு இத்தனையும் மொத்தமென இன்றுள்ளார் முடியரசன் - பண்ணரசன். காவியப்பாவை என்னும் என் இசைப்பாடற்றொகுதி பற்றி இதழ்களின் மதிப்பீடுகளிற் சில: 7-10-55 முரசொலி எழுதிய மதிப்பீடு; தோழர் முடியரசன் பாரதிதாசனுக்குப்பின் தோன்றிய கவிஞர்களில் முன் வரிசையில் நிற்போரில் முக்கியமானவர். அவரது காவியப்பாவை என்னும் சமீபத்துக்கவிதைத் தொகுப்பு சர்க்கரைப் பொங்கலென இனிக்கிறது. பாடுவதென்றால் தமிழினில் பாடு வணக்க மென்று சொன்னால் வாய் நோகுமோ போன்ற கவிதைகள் இசையோடு பாடும்போது பேரின்பம் தரும் வகையில் அமைந்திருக்கின்றன. தென்றல் ஏடு 15-10-55இல் எழுதிய மதிப்புரை இதோ, தென்மொழியாம் தேன்மொழியின் தமிழ் மொழியின் சிறப்பையும் மேம்பாட்டையும் மறுப்போர்க்கு - மறந்தோர்க்கு நினை வூட்டும் மலர்க் கொத்து இந்த நூல் (காவியப்பாவை) நல்ல நல்ல பாடல்கள் நம் நெஞ்சைத் தொடும் பாடல்கள் நூலில் நிறைந்து காணப்படுகின்றன. என்னைப் பழிப்பவனை - நான் ஏதும் நினைப்பதில்லை உன்னைப் பழிப்பவனை - பகையா உள்ளம் நினைக்குதம்மா. இதுபோல உயிர்க்கு நேரான தமிழ் மொழியை எண்ணி எழுதப்பட்டிருக்கும் பாடல்கள் படிப்போர் மனத்தைப் பெரிதும் கவர்கின்றன. 16-10-55இல் வெளிவந்த திராவிட நாடு இதழ், தோழர் முடியரசன் அவர்களின் அருமையான பாடல்கள் அடங்கிய நூல். பாடுவதற்கேற்ற கருத்துள்ள நல்ல பாடல்கள் உள்ளன என்று எழுதியது. 1956 பிப்பிரவரியில் வெளிவந்த சாந்தி என்ற இதழ் ஏந்தி வந்த தாக்குதல்: பெரும்பாலும் பழங்கால மன்னர் பெருமையைத் தற்காலத் தமிழர் சிறுமையோடு ஒப்பிட்டு மனம் வெதும்பு கிறார் கவிஞர் (உம்) இமயம் வென்றானே - இன்று ஏற்றங் குறைந்தானே பழந் தமிழர் பண்பாடு அனைத்தும் மூவேந்தர் படைப்பு என்பது கவிஞர் கருத்துப் போலும்.......? மூவேந்தர் ஆட்சிக் காலத்தையும் அவர்கள் காலத்துச் சமூக அமைப்பையும் கவிஞர் மறுபடியும் வருந்தி அழைக்கிறார். வரலாற்றுப்பெருமையிலே மூழ்கி நமது சகோதர மொழி பேசும் மக்கள் மீது குரோதத்தைக் கிளப்புகிறார்..... உழைப்பின் உயர்வைப் போற்றும் பழம் புலவர் பரம்பரை இக்கவிஞருக்கு இல்லை. கவிதையின் உருவமும் மிக மிகச் சாதாரணம். கலைமன்றம் என்னும் ஏடு குறிப்பிடுவதாவது. உயிருள்ள கவிதை நூல், ஆசிரியர் தமிழன்னையைக் காவியப் பாவையாக்கி, வாழ்வு நெறிக்குரிய அனைத்தையும் பகுதி களிட்டுப் பிரித்து, இனிய சொற்களால் கவிதை களாக்கித் தரும் காவியப்பாவை ஒரு வழி நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மு.அருணா சலம்பிள்ளை அவர்கள் எழுதிய மடல். நமது காவியப் பாவையைக் கண்டு களி கூர்ந்தேன். நம் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர் முதல் செந்தமிழ்ப் புலவர் ஈறாகவுள்ள பலரும் படித்துச் சுவைத்துப் பாராட்டற்குரிய பல்வகைக் கருத்துகள் செறிந்த இன்னிசைப் பாடல்கள் ஏந்தி வந்துள்ளாள். ஒவ்வொரு பாடலும் உள்ளத்தைத்தன் பாலீர்த்து உணர்ச்சி யூட்டா நிற்கிறது. இப்பாவைமகள் தமிழ் நாடெங்கணும் தடை யின்றிச் சென்று எல்லோரையும் இன்புறுத்துவாளாக. - மு.அருணாசலம் பிள்ளை 6-10-55 வாரச் செய்தி என்னும் ஏட்டில் வந்த மதிப்புரை: கவிஞர் முடியரசன் தரும்விருந்தாகிய காவியப்பாவை தமிழிசையை வலியுறுத்தும் நோக்குடன் ஆசிரியரின் கருத்து அமைந்திருப்பதற்கு ஒரு செயலாக்கமாகத் திகழ்கிறது.. இந்நூல் மூலம் தமிழுக்கும் தமிழிசைக்கும் தொண்டு செய்ய முன்வந்த கவிஞரைப் பாராட்டுகிறோம். -எழில் சுதேசமித்திரன் நாளேட்டில் வந்த மதிப்புரை: தாய்நாட்டிடத்தும் தமிழ்மொழியிடத்தும் உள்ளம் பறி கொடுத்த ஆசிரியரின் ஆசையும் ஆவேசமும் பொங்கும் பாடல் களின் தொகுதி இந்நூல் (காவியப்பாவை). திருக்குறளை ஒரு நூல் என்னுந்தலையங்கம் கொடுத்து அதன் பெருமையைக் கவிஞர் பாடுகிறார். வருநூல் அனைத்தும் வாரிவாரிக் கொள்ளும் திருநூல், பண்பினைத் தருநூல் உலகில் ஒரு நூல் எனும் வரிகள் திருக்குறளின் உண்மை இயல்பை உரைக்கின்றன..... தமிழிசையில் ஆர்வமுள்ளார் காவியப் பாவையை ஆவலுடன் வரவேற்பர் - சொக்கன் இனி பூங்கொடிக் காப்பியம் பற்றி வந்த மதிப்புரைகளைக் காண்போம் தமிழ் நாடு 19-10-65இல் எழுதிய மதிப்புரை: இலக்கியம் வாழ்க்கை முழுவதும் விளக்கும் கண்ணாடியாக அமையா விடினும் கவிஞன் வாழும் காலக் கண்ணாடியாக அமைவதே சிறப்பு. அதனுடன் கவிஞன் காணும் வாழ்க்கையும் இணைந்து, இலக்கியம் பிறக்கும் போது புது மெருகேறும். ஒரு கவிஞன் எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு காணவேண்டும் என்ப தில்லை. குறிப்பிட்ட சில சிக்கல்களுக்குக் கவிஞன் முடிவு காணாமல் விட்டு விடக் கூடாது. பூங்கொடி மொழிக்கொரு காப்பியம் என்று பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தாழ்வுற்ற நசிந்த தமிழருக்குப் புதிய எழுச்சியையும் உணர்ச்சியையும் ஊட்டக் கவிஞர் விழைந் துள்ளார். பூங்கொடி முழுக்க முழுக்க மணிமேகலையின் சாயலைக் கொண்டு தான் பிறந்துள்ளாள். தமிழ் சிறக்க இளமையைத் துறந்து, துயரினை ஏற்கிறாள். பூங்கொடியின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள் தற்காலத்தைக் கருத்தில் கொண்டு தீட்டப் பட்டுள்ளன. - உ.சு திருச்சி வானொலியில் 4-9-65இல் ஒலிபரப்பான மதிப்புரையின் பகுதி: தமிழுக்காகவே வாழ்ந்து மடிகின்ற பெண் ணொருத்தியின் வரலாற்றைச் சிறந்த முறையில் உயர்ந்த கவிதை நடையில் எதுகைமோனை அழகுகள் பொருந்திவர ஆசிரியர் இயற்றியுள்ளார். துறவுள்ளம் இளமையிலேயே மேற்கொண்டு, குன்றுறை அடிகளார் குறளகம் புகுந்து, தமிழ்த் தொண்டு கலைத் தொண்டு ஆகியன செய்து, தமிழுக்கெனவே மறியல் செய்து, சிறைப்பட்டு மடிகின்றவள். காவியத்தின் தலைவி பூங்கொடி, இந்நூலினுள் உவமைகள் பாங்குற எடுத்தாளப் பட்டுள்ளன. ஓசை நயம் மிகுந்த பகுதிகள் பல இந்நூலகத்து உண்டு. இயற்கைக் காட்சி வர்ணனைகள் எழிலுறத் தரப் பட்டுள்ளன. பூங்கொடி தவிர எழிலி, சண்டிலி, மீனவன், தாமரைக்கண்ணி, அருள்மொழி ஆகிய பாத்திரங்களும் நன்கு படைக்கப்பட்டுள்ளன. மானவுணர்ச்சி, சாதி ஒருமை, கலப்பு மணம் ஆகியவற்றைக் கவிஞர் வலியுறுத்துகின்றார். உள்ளத்தை அள்ளும் இக்காப் பியத்தில் ஒன்றிரண்டு பெருங்குறைகளும் காணப்படுகின்றன. பிற மொழிகளைக் குறை கூறுவதாகவும் உள்ளது. காலப் போக்குக்கும் நாட்டு நடப்புக்கும் இவை ஒவ்வாதன - வி.ரெங்கராஜன் முத்தாரம் என்ற ஏடு 1-5-68இல் எழுதிய மதிப்புரைப் பகுதி: மணிமேகலையின் வாழ்க்கையினை மனத்திற் கொண்டு அவளைப் போலவே ஒரு காவிய நாயகியைப் படைத்து வெற்றி கண்டிருக்கிறார் கவிஞர் முடியரசன். இப்பூங்கொடி வாயிலாகக் கவிஞர் முடியரசன் தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் நூல்களான தொல்காப்பியம் திருக்குறள் போன்ற நூல்களின் சிறப்பைப் பூங்கொடி வாயிலாக எடுத்து விளக்கியிருப்பதின் மூலம் பூங்கொடிக் காப்பியத்தையும் அழியாத இலக்கிய வரிசையில் சேர்த்து விட்டார். கவிஞர் தம் காவிய நாயகியைத் தமிழுக்குத் தொண்டாற்ற வைத்துத் தமிழகத்தின் மொழிப்பற்றுடையார் மாநாட்டினைக் கூட்டி, அறப்போர் தொடுத்து, அதன் காரணத்தால் சிறை சென்று, வாடி அல்லற்பட்டுச் சிறையில் உயிர்துறக்கச் செய்திருப்பது படிப்போர் விழிகளிலிருந்து அருவியை வரவழைக்கிறது. காவிய நயத்துடனும் கவிதை மணத்துடனும் அமைந்துள்ள இந்நூல் முடியரசனைக் கவியரசனாக்குகிறது. ஒருமுறை படித்து முடித்த பிறகு எழுதப் பட்டிருக்கும் நயத்துக்காக - சொல்ல ழகிற்காக இன்னொரு முறைபடிக்க வேண்டுமெனத் தோன்று கிறது. தினமணி நாளேடு 26-10-85இல் தந்தமதிப்புரை: ஒரு குறிப்பிட்டநோக்கங் கொண்டு வரையப்படும் எந்த நூலும் கால வெள்ளத்தை எதிர்த்து நீந்தி நிற்காது என்பது திண்ணம்.... மணிமேகலையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, வரிவரியாகக் காட்சிகாட்சியாக அதைத் தொடர்ந்து செல்லு கின்ற இந்தக் கவிஞரின் அகவலில் ஓர் இன்பம் பெருகு கின்றது. சிறந்த சொல்லாட்சி மிளிர்கின்றது கவிதையுள்ளம் பேசுகின்றது. ஆனால் தமிழ்ப் பெருமையைப் பரப்புவதற்கே உற்ற கருவியாய் இந்தக் காப்பியம் அமைந்து விட்டது.... தற்காலத் தமிழர் கிளர்ச்சியில் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் என்பதற்கு ஐயம் இல்லை. சில ஆண்டுகள் கழித்து வரலாற்றுக் கண்ணோடு பார்க்கிறவருக்கு இந்நூல் பயன்படக் கூடும். அதுவும் ஒரு பணிதானே! அந்தி மாலைச் சிறப்பைப்பற்றி இவர்தரும் சித்திரம் நம் மனத்தை விட்டு அகலாது. இயற்கை யெழிலில் இவர் ஈடுபடு கிறார். இந்த இலக்கியயாழ் முழுவதும் இன்பமாய் ஒலிப்பது நம் தமிழணங்கின் தெய்வக்குரல்தான். அக்குரலினுக்குச் செவி சாய்த்துத் தமிழ்த்தேவியை நாம் வணங்குவோமாக -uh.ஸ்ரீ.njáf‹. கொழும்பு - வீரகேசரி 8.8.65இல் எழுதிய மதிப்புரையில் ஒரு பகுதி: கவிஞர் முடியரசன் ஏற்கனவே தமிழ் மக்களுக்குப் பரிச்சய மானவர். துள்ளும் நடையில் எழுதப்பட்டுள்ள சுவை நிறைந்த (பூங்கொடிக்)காவியம் படிக்கப்படிக்க இன்பம் கூட்டுகிறது. அன்று மணிமேகலை வாயிலாகப் பௌத்த மதத்தைப் பரப்பச் சீத்தலைச் சாத்தனார் முன் வந்தார். இன்று, இப்பூங்கொடி வாயிலாகத் தமிழ் மொழியைப் பாரெங்கும் பரப்பக் கவிஞர் முடியரசன் முன் வந்துள்ளார் - என்று பதிப்பாசிரியர் கூறும் வார்த்தை பலிக்கவேண்டும். பலித்தால் உலகத்தவர் பூங்கொடியை ஒரு சிறந்த காவியமாக மதிப்பார் என்பதில் ஆட்சேபணை இல்லை - தியாகி சுதேசமித்திரன் ஏட்டில் 16-6-65இல் வெளிவந்த மதிப்புரையின் ஒருபகுதி: இது ஒரு புதுமைக் கதை,மொழி வளர்ப்பிற்கென்றே ஒரு தனிக்காப்பியம் இயற்ற வேண்டும் என்ற ஆசிரியரின் ஆர்வத்தில் உரம் பெற்று விளைந்திருக்கின்றது இது. தமிழ்த் தெய்வ வணக்கத்துடன் தொடங்கித் தமிழணங்கின் உணர்ச்சி மொழி யுடனும் விடுதலை மொழிகளுடனும் முடிவு பெறுகின்றது இந்நூல். புதுமை வழிகளிற் செல்லாது, பண்டைத் தமிழ் மரபை ஒட்டி அமைந்திருக்கும் இந்நூலும் இன்றைய தமிழுக்கு ஒரு நல்ல அணிதான் -ã.ஸ்ரீ தமிழ்ப் பாவை என்னும் ஏட்டில் 17-1-65 வெளிவந்த மதிப்பு ரையிற் சில பகுதிகள்: தமிழைக் காக்க அறப்போர் புரிவோரும் சிறைப்படு வோரும் உயிர் தருவோரும் பலராவர். இவர்களனை வரையும் நினைப் பூட்டி இப்பணிகள் அனைத்தையும் ஒன்றுபடுத்திப் பூங்கொடி என்ற பெண்ணாக உருவகித்து, இவ்விருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுக் காப்பியமாக மொழி காக்கும் மொழிக் காப்பியமாகத் தந்துள்ளார் கவிஞர் முடியரசன். இத்தமிழ்ப் பூங்கொடி காற்றோடு கலந்தாள்; நீரோடிணைந் தாள்;நெருப்பில் நீறானாள்: தாய் நாட்டு மண்ணிற் புதை யுண்டாள்; தமிழ் ஒளி தவழும் நீலவான் ஆனாள். அக்கோல மாமயில் தமிழர் தம் நெஞ்சமெல்லாம். நடமாடும் நாளே நன்னாளாகும் இம் மலர்க் கொடியாள் உள்ளமெல்லாம் வேரூன்றி, உரை யெல்லாம் கொடியோடிச் செயலெல்லாம் மணம் பரப்பும் செந்தமிழ்த் திருநாள் வருவதாகுக! சித்திரத்தில் பார்ப்போம் சிலை செய்து கும்பிடுவோம். புத்தகத்தில் என்றென்றும் போற்றிப் படித்திடு வோம் என்னும் படியாகத் திகழும் இப்பூங்கொடிப் பெண்ணாள் தமிழர் தம் உள்ளமெல்லாம் இல்லமெல்லாம் இடம் பெறு வாளாக. இக்காப்பியத்தின் பயன் கன்னித் தமிழைக் காக்க ஒரு கன்னியை இழக்கின்றோம். முத்தமிழைக் காக்க ஒரு சித்திரத்தைப் பலியிடுகிறோம். இறந்த கலைகளை உயிர்ப்பிக்கப் பிறந்த ஒரு மகள் உயிர் விடுகிறாள். ஆம்; தன்னல மறுப்பால் தான் தமிழ் வாழும். தன்னல நினைவு உள்ளவரை தமிழை விட்டுக் கொடுக்கத் தான் தோன்றும். தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் காட்டும் ஆர்வம் போதாது. ஆரவார உரைகள் போதா. தன்னல மறுப் பென்னும் நெருப்பினில் மூழ்க வேண்டும் என்று நம்மை யெல்லாம் கூவி அழைக்கின்றாள் பூங்கொடி நல்லாளாகிய நம் உடன் பிறப்பாட்டி, தன்னைத் துறந்து தமிழைக்காக்கின்ற செயல் நெறியே இவள் நமக்கு உணர்த்திச் செல்லும் தத்துவ மாகும் - தமி செந்தமிழ்ச் செல்வி 1965 சனவரி இதழில் வெளியிட்ட குறிப்பு: கவிஞர் முடியரசன் அவர்களின் இப்புதிய காப்பியப் படைப்பு தமிழுக்கு மறுமலர்ச்சி அளிக்கும் ஒரு சீரிய பணியாகும். தமிழகத்தின் பெருங்காப்பிய நூல்களுள் ஒன்றாகிய மணிமே கலையைக் கருவூலமாகக் கொண்டு பூங்கொடி என்னும் புது இலக்கியச் செல்வத்தைத் தமிழகத்துக்குத் தந்துள்ளார் நம் கவிஞர். இக்காப்பியத் தலைவியாகிய பூங்கொடி தமிழகப் பெண்டிர்க்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளாள். இக்காப்பியம் இலக்கிய இலக்கண வளஞ் செறிந்து, உவமை நலத்தால் சிறப்புற்று விளங்குகிறது. கவியரங்கில் முடியரசன் என்னும் கவிதைத் தொகுப்புக்குச் சுதேசமித்திரன் எழுதிய மதிப்புரையில் ஒரு பகுதி: கவிதைகள்யாவும் பட்டை தீட்டப் பெற்ற பளிங்குக் கண்ணாடி போலவே பல்வேறு கோணங்களிலும் கவித்துவக் காட்சி தருகின்றன. எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கவிதையிலும் எழுச்சி மட்டுமா தோள் தட்டுகின்றது? கூடவே இயற்கையாக அமையும் சொல்வண்ணம், இன்னிசையாகவே அமையும் சந்த நயம், எண்ணச் சிறப்பாகவே மலரும் உவமையின்பம் அத்தனையும் கவிதை ஒவ்வொன்றுடனும் நடை போட்டுச் செல்கின்றன. அவை மட்டுமன்று. குறிப்பாக இன்னும் ஒன்றைக் கூற வேண்டும். தடம் புரண்டு தம் போக்காய் எழுதுவதுதான் தற்காலக் கவிதை இலக்கியம் என்னும் தவறான கருத்துக் கொண்டிருக்கும் இன்றைய எழுத்துலகில், தமிழ் மரபு வழுவாமலும் தரம் குறையா மலும் கவிதைகளை ஆக்கித் தந்துள்ளார் கவிஞர். மற்றும் கவிதைகள் முழுவதிலும் ஆசிரியரின் பழந்தமிழ்ப் புலமையும் பாட்டுத்திறனும் ஒருங்கே பரவிக் கிடக்கின்றன - என்றாலும் மிகையன்று. உண்மையில் பேராசிரியர் டாக்டர் அ.சிதம்பரநாதனார் தந்துள்ள முன்னுரை இந்நூலுக்குப் பொன்னுரையாகவே பொலிந்து அழகு செய்கிறது - தமிழழகன் வீரகாவியம் என்னுங்காப்பியம் குறித்து 1971 பிப்ரவரி வெளிவந்த நித்திலக்குவியல் என்னும் திங்கள் இதழில் எழுதப் பட்ட மதிப்புரை; வாழுங் கவிஞர்களில் சிறப்பாகத் தனக்கெனத் தனித்திறனும் தனி நடையும் பெற்றுள்ள முன்னணிக் கவிஞரான திரு.முடியரசன் இவ்வீரகாவியத்தை இயற்றியிருக்கிறார். பழந்தமிழ்ச் சமுதாயத்தின் இரு கண்களான வீரமும் காதலும் இக்காவியத்தில் பூத்துச் சிரிக்கின்றன. சூரியன் மறைவதனை ஓரிடத்தில் காதலனும் காதலியும் கருத்தொருமித்துக் கலந்தபோது நாமேன் தடையாக இடையில் இருக்கவேண்டும் என நினைந்தான் போல் கதிரவன் மறைந்தான் என்று அழகாகக் கூறுவதோடு நில்லாமல் இன்னும் சிகரம் வைத்தாற்போல அந்தக் கதிரவன் உலகியலின் திறமுணர்ந்தோர் செயலே செய்தான் - என்று கூறுவது நெஞ்சில் பதிகிறது. காளையும் கன்னியும் முதலிரவில் கூடுகின்றனர். அதனை ஆசிரியர். நூலறியார் கலிநுகரப் புகுதல் போல நுழையினும்பின் சொலற்கரிய இன்பங் கண்டார் - என்ற நயமான நுட்பமான உவமையால் உணர்த்து கின்றார். இந்நூல் மிக விரைவான, தெளிவான நடையோடு உணர்ச்சிச் சுழியிட்டு ஓடுகின்றது. கவியுலக வரலாற்றுப் பொன்னேட்டில் தனது வெற்றிச் சுவட்டினைத் தெளிவாகப் பதித்துள்ளவர்தான் முடியரசன். என்றாலும் இந்நூல் அச்சுவட்டினை இன்னும் அழுத்தமாகப் பதித்துள்ளது - புலவர் பொன்னரசன். 9 தோழமைப் புறா தோழமையுள்ளம் இளமையிலிருந்தே நட்பைப் பேணிக்காக்கும் இயல்பு எனக் குண்டு. தொடக்கப் பள்ளித் தோழர்களும் இன்றுவரை, இடையறாது பழகி வருகின்றனர். அவருள் து.வெள்ளைச்சாமி, கு.கந்தசாமி, சுப.சண்முகசுந்தரம், க.நாகராசன் முதலியோர் தலைசிறந்தோராவர். இன்றும் என்னை ஒருமையில்தான் அழைப்பர். அவ்வளவு உரிமை எங்களிடம் வளர்ந்துள்ளது. வெள்ளைச்சாமி, சண்முகசுந்தரம் இருவரும் வணிகத் துறையில் ஈடுபட்டுவிட்டனர். புலவர் கந்தசாமி அழுத்தமான திராவிட இயக்கப் பற்றுடையவர். பயில்கின்ற காலத்திலேயே அச்சிட்ட கடிதத்தாளில் கு.கந்தசாமி ஐயர் (திராவிடர்) என அச்சிட்டிருப்பார். தமிழனுக்குத்தான் ஐயர் என்று போட்டுக் கொள்ளத் தகுதியுண்டு என வாதிடுவார். புலவர் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த பொழுது பல்வேறு காரணங்களாற் படிப்பிற் சற்றுக் கவனக்குறைவாக இருந்தேன். நன்கு படிக்கவில்லையே என்று பலரும் என்னைக் கடிந்துரைப்பர். அதன்பொருட்டு, மனம் வருந்திக்கட்டளைக் கவித்துறைப் பாடலொன்று பாடினேன். (அப்பொழுது நான் முருகனிடத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன்) அப்பாடல் இதோ, பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம் கற்றானிலை, சீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச் சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே. இப்பாடலில் உயிரென நட்டார் என நண்பர்க்கு மட்டும் அடைமொழி தந்து, பிறர்க்கு அடைமொழி தராது பாடியதி லிருந்தே நட்புக்கு நான் கொடுத்திருந்த மதிப்புப் புலனாகும். நட்புக்கு என்னுளத்தில் எத்தகைய இடமிருந்தது என்பதற்குப் பிறிதொரு சான்றும் கூறுதல் ஏற்புடைத்தாகும். எனக்குத் திருமணமாயிற்று. முதலிரவு நிகழ்தல் வேண்டும். அவ்விரவில் வீட்டில் என்னைக் காணாது தேடுகின்றனர். அவ்வ மயம் என் அன்னையார் பள்ளிக்கு முன்னே நிற்கும் மரத்தடியின் கீழுள்ள பலகைக் கல்லில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப் பான். சென்று பாருங்கள் என்று கூற அவர்களும் அவ்வாறே அங்கே வந்து என்னை இழுத்துச் சென்றனர். காதலைவிட - காதல் மனையாளை விட நண்பர்களையே மிகுதியும் விழைபவன் நான். இன்றும் அப்படியே. கவலையால் மனச் சோர்வுற்றிருக்குங்கால் நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்து மனத்தை ஆற்றிக் கொள்ளுவேன். என் கவலைப் பிணிக்கு ஓர் அருமருந்தாகும் நட்பு. இப்பொழுது பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர், தனிமைத் துயர் என்னை வாட்டிவதைக்கும். கவலைகளும் என்னைத் தின்னும். கவலைக் கடலுள் ஆழ்ந்து விடுவேன். அப்பொழு தெல்லாம் ‘J‹g« ne®ifÆš ahbHL¤J Ú ï‹g« nr®¡f kh£lhah? என்ற பாவேந்தர் பாடலை எனக்குள் பாடிக் கொள்வேன். அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்டமாட்டாயா? என்ற வரிகளைப் பாடும்பொழுது கடலுள்ளிருந்து சற்றே மேலெழுவேன். ‘ïiwtdhÇ‹ âU¡FwËny xU brhš ïa«ã¡ fh£l kh£lhah? என்ற வரி வரும்பொழுது மேல்மட்டத்துக்கு வந்துவிடுவேன். குறளிலே ஒரு சொல் என்றவுடன் இடுக்கண் வருங்கால் நகுக என்ற குறள் நினைவிற்றோன்றும். அவ்வேளையில் நண்பர்கள் என் இல்லத்திற்கு வந்துவிடின், அப்புணையை எளிதில் விட்டுவிட மாட்டேன். அப்புணையின் துணையாற் கரை சேர்வேன். என் வாழ்க்கையில் நட்பு அவ்வளவு உயர்ந்தது. இளமையிலேயே என்னுளத்தில் முளைத்தெழுந்த நட்புணர்வு வேர் விட்டுக் கிளை விட்டு, நன்கு செழித்துத் தழைத்து, முற்றி முதிர்ந்து வளர்ந்தது. அம்முதிர்ச்சியால் பழகியோரை நண்பராக மட்டுமின்றித் தந்தை அண்ணன், தம்பி, அக்காள், மைத்துனர் என்ற உறவு முறையாற் பழகி வருகிறேன். அவர்களுடைய பெருங் கிழமையாலும் பெருகிய அன்பாலும் வளர்ந்து வரும் பறவையாக நான் வாழ்ந்து வருகிறேன். எவ்வகை வேறு பாடுமின்றி, உள்ளத்துடன் ஒன்றி, நட்பாகி, உறவாகி என் உயிரோடும் உணர்வோடும் கலந்து நிற்போருட் சிலரையேனும் ஈண்டு நினைவு கூர்தல் என் கடப் பாடாகும். கம்பம் துரை கம்பம் என்னும் ஊரில் சுருளி என்ற துரை என்பவர் என் பிள்ளைமைப் பருவத்திலிருந்தே பழகியவர். எம் இருவர் குடும்பமும் எங்கள் பாட்டியார் காலத்திலிருந்து உறவு முறையிற் பழகிய குடும்பம். துரை, எனக்கு மைத்துனர் முறையிற் பழகிய நண்பர். சிறு பிள்ளையில் எங்களைக் காணவில்லை என்றால் எங்கள் வீட்டார் ஆற்றுக்குத்தேடி வந்துவிடுவர். அங்கே இருவரும் மீன் பிடித்துக்கொண்டிருப்போம். அதற்குரிய அடியும் வாங்கிக் கொள்வேன். நோகாமல் மீன் பிடித்து வந்து வீட்டிற் சட்டியி லிட்டு வளர்ப்பதிலே எனக்குப் பேரின்பம். ஆனால் மறுநாட் காலை வெறுஞ் சட்டிதான் காணப்படும். காகம் கொத்திச் சென்றுவிட்ட தென வீட்டார் ஆறுதல் கூறுவர். பல்வேறு உதவிகள் செய்து, அன்பு பொழிந்து என்னை வளர்த்த வருள் ஒருவர் துரை. இறுதி வரை திராவிடர் கழகத்திலேயே பணியாற்றி அணிமையில் இயற்கை எய்தினார். தில்லை அழகுவேலன் சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடன் தில்லை.தா.அழகுவேலன், திருமாவளவன் என்னும் புலவரிருவர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவ்விருவரும் அண்ணனாகவும், தம்பியாகவும் என்னுடன் பழகினர். அழகுவேலன் ஒல்லியான உடலுடையவர்; முரட்டுக் குணமு டையவர். திருமாவளவன் அமைதியன மெல்லிய குரலிற் பேசுவார். குத்துச் சண்டை, சிலம்பம் முதலிய விளையாடல்கள் கற்றவர். இருவரிடத்திலும் தமிழையோ தமிழாசிரியரையோ பழித்துப் பேசிவிடின் பேசியவன் எளிதிற்றப்ப முடியாது. வாய் பேசாது; கைதான்பேசும். கடற்கரையோ, பொதுக்கூட்டமோ, சிற்றுண்டிக் கடையோ யாண்டு நோக்கினும் எங்களை (மூவரை) ஒன்றாகக் காணலாம். அதனால் எம்மைக் காண்போர் மூவேந்தரென்றே அழைப்பர். போராட்டமாயினும் மூவரும் சேர்ந்தே செல்வோம். என் எழுத்துப் பணிக்கு அழகுவேலன் தூண்டுகோலாக விளங்கி வந்தார். ஒருநாள் கடற்கரையில் உரையாடிக் கொண் டிருந்தோம். flYŸ khŒªj ïs« bgUtGâ ba‹w ghntªjid¥ g‰¿ ciu ÃfG§fhš ‘ïs« bgUtGâ nghÇš njh‰wikahš flÈš ÉGªJ j‰bfhiy brŒJ bfh©oU¥ghndh? என அழகுவேலன் ஐயுற்றார். தமிழன் மறத்தை அவ்வாறு இழிவாகக் கருதல் வேண்டா. தற்கொலையாக இருப்பின் கடலில் மாய்ந்த என்றுதான் அமைந் திருக்கும். கடலுள் மாய்ந்த என்றிருப்பதால் எதிர் பாராமல் நிகழ்ந்த நிகழ்ச்சியாகத் தானிருக்கக் கூடும். என்று நான் மறுமொழி தந்தேன். அட நீ சொல்வது நன்றாக இருக்கிறது. இதை வைத்து ஒரு கதை எழுது என்று பணித்தார். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியென்ற கதை, போர்வாள் இதழில் வெளியாயிற்று. இவ்வாறு பலமுறை தூண்டித் தூண்டி என் எழுத்தாற்றலை வளர்த்தவர் அண்ணன் அழகுவேலன். கவிஞர் வாணிதாசன்: பிரசண்ட விகடன் துணையாசிரியராக இருந்த அ.இளங் கோவன் அவர்களும் சென்னையிற் பணியாற்றிக் கொண்டிருந்த நானும் புதுச்சேரியைச் சேர்ந்த பாகூருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தோம். அங்கே ஒல்லியான - உயராமான ஒருவர், எங்கள்பாற் பேரன்பு காட்டி, இல்லத்திற்கு வற்புறுத்தி அழைத்தார். இருவரும் சேலியமேட்டிற்குச் சென்றோம். அன்பாற் பொலிந்த அவர்தான் வாணிதாசன் என அறிமுக மானார். அவர் கவிதை எழுதி வைத்திருந்த கையெழுத்துப்படியை என்னிடம் தந்தார். படித்துப் பார்த்து, இயற்கையழகுகள் அருமை யாகப் புனையப்பட்டுள்ளன எனப் பாராட்டினேன். இதை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என்று கொடுத்தார். நான் சென்னைக்கு வந்ததும் ஒரு பாடலை எடுத்தெழுதிப் பொன்னி இதழில் வெளியிட அனுப்பினேன். அது பாரதிதாசன் பரம்பரையில் வெளியாகியது. அன்று முதல்கவிஞர் வாணிதாசன் எனத் தமிழகத்திற்கு நன்கு அறிமுகமானார். எங்கள் அன்பு நாளுக்கு நாள் வளர்மதியாகியது. உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டும்? வாங்கி வருகிறேன் என்று அடிக்கடி மடல் எழுதுவார். நான் ஒன்றும் வேண்டாமென்று எழுதிவிடுவேன். எனினும் அவர் சென்னைக்கு வருங்கால், சட்டைத் துணி வாங்கி வந்து தருவார். பின்னர், அவர் ஆசிரியராக இருந்து கொண்டே தமிழ் வித்துவான் தேர்வுக்குப் பயின்று கொண்டிருந்தார். எனக்கு விடுமுறை என்றால் சேலிய மேட்டிற்கு நான் செல்வேன். அவர்க்கு விடுமுறையென்றால் சென்னைக்கு அவர் வந்துவிடுவார். தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந் தொகை பெரியபுராணம் முதலிய நூல்களைப் பாடஞ் சொன்னேன். எளிதிற் பற்றிக் கொள்ளும் ஆற்றல் அவர்பாலுண்டு. தேர்வில் வெற்றி பெற்று வித்துவான் வாணிதாசன் ஆனார். எனக்கோ அண்ணன் வாணிதாசன் ஆனார். என்னைத் தம்பி என்று ஏற்றுக்கொண்டு ஒருமையில் அழைக்கத் தொடங்கினார். முடியரசன் இன்னும் குழந்தைத் தனமாகவே இருக்கிறான். நாம்தான் பெண் பார்த்து, அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தாத்தா மயிலை. சிவமுத்துவுக்கு வாணியண்ணன் மடல் எழுத, பெண் பார்க்கும் படலம் நடந்தது என்னிடம் நூறு உரூவாவைத் தந்து, முதலில் பெண்ணுக்கு ஏற்பாடு செய்க; அறுவடை முடிந்ததும் திருமணச் செலவுக்குப் பணம் தருகிறேன் என்று கூறி, என் திருமணத்துக்குக் கால்கோள் செய்தவர் அவரே. அவர்தம் பேரன்பைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி. வெளியூருக்குச் சொற்பொழிவாற்றச் சென்ற அண்ணன், என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.தில்லை. தமிழாசிரியர் த.முருகேசனாரும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து தொடர் வண்டி நிலையத்தில் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். நள்ளிரவாதலின் எனக்கு உறக்கம் வந்துவிட்டது. அண்ணன் தம் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ளுமாறு கூறினார். அவ்வளவு தாயன்பு காட்டுவார். தாயன்பை அவர் பாற் பலமுறை கண்டு மகிழ்ந்திருக்கிறேன். நாங்கள் இரட்டைக் கவிஞராகவே அன்று திகழ்ந்தோம். அன்று வரும் பொங்கல் மலர்களில் எங்கள் இருவர் கவிதைகளும் இடம் பெறும். கோவை முத்தமிழ்.மாநாட்டில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் நாற்பத்தொன்பதின்மர் கலந்து கொண்டனர். போட்டியில் எங்கள் இருவர் கவிதைகளுக்குத் தான் பரிசிலும் கிடைத்தது. அவர் மறைவுக்குப் பின்னரும் அவர்தம் குடும்பத் தொடர்பு இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணனை நினைதொறும் நினைதொறும் உணர்ச்சி வயப்படுகிறேன். இத்தகைய அன்புடைய அண்ணன் எக்காரணத்தாலோ அவருடைய வரலாற்றுக் குறிப்பில் என் பெயரைச் சுட்டாது விடுத்தனர். அறிஞர் தமிழண்ணல் எனக்குத் திருமணம் ஆகியவுடன் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றேன். அங்கே தமிழண்ணலும் (முனைவர். இராம.பெரியகருப்பன்) ஆசிரியராக இருந்தார். கல்லூரியில் பயிலும் நாளிலேயே நாங்கள் தொடர்பு கொண்டிருந் தமையால் எங்கள் நட்பு எளிதிற் பற்றிப் படரத் தொடங்கியது. நட்பின் முதிர்ச்சி, அவரை என் தம்பியாக்கிற்று. கல்லூரியில் நடந்த நாடகமொன்றில் கதைத் தலைவன் கண்ணனாக நான் நடித்தேன். அவர் இளங்கண்ணனாக நடித்தார். அன்றே நாங்கள் அண்ணன் தம்பிதான். அவர் இன்று பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்குகிறார். எனினும் அவரை ஒருமையில் தான் இன்றும் அழைத்து வருகிறேன். அவ்வளவு எளிமையாகப் பழகி வருகிறார். என்னுள் மறைந்து கிடந்த கவிதையுணர்வைத் தூண்டித் தூண்டி வளர்த்தவர் அவரே. அதனால் என் கவிதையுணர்வுக்குச் செவிலி யென்று நான் அவரைக் குறிப்பிடுவதுண்டு. என் பாடல்களைத் தொகுத்து, நூலாக்கி முதன்முதல் அச்சு வடிவிற் கொணர்ந்தவர் அவர்தான். அதன் பின்னரே நான் கவிஞர் முடியரசன் ஆனேன். அவர்க்கும் எனக்கும் இடையிடையே பிணக்கு வருவதுண்டு. ஆனால் கணவன் மனைவியரிடையே ஏற்படும் ஊடல் போல விரைவில் மறைந்துவிடும். ஒரு கால் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, என்னுடன் பிணங்கிச் சில நாள் பேசாதிருந்தார். அப்பொழுது நாங்கள் பயின்ற மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையின் பொன்விழா மலருக்கு என்னிடம் பாடல் வேண்டினர். தமிழண்ணலிடம் கட்டுரை வேண்டினர். எங்கள் பிணக்கை மனத்திற்கொண்டு பிரிந்த நண்பன் என்னுந்தலைப்பில் உருக்கமாகப் பாடல்கள் எழுதித் தந்தேன். மலர் அச்சாகி எனக்கு வந்தது. படித்துப் பார்த்தேன். என் பாடல் தலைப்பு பிரியா நண்பன் என அச்சாகியிருந்தது. இது யார் செய்த வேலை? என்று சினந்து கொண்டேன். தமிழண்ணல் தான் திருத்தினார் என்று விடை வந்தது. மலரைப் புரட்டினேன். தமிழண்ணல் கட்டுரையைப் படித்தேன். என் பாடற்றிறனைப் பாராட்டிக் கட்டுரையெழுதியிருந்தார். நாங்கள் பிணங்கியிருந்தோம் பேசாதிருந்தோம். ஆனால் எங்கள் நட்பு, பிணங்காது பேசிக் கொண்டுதான் இருந்தது எழுத்தோவியத்தில். மீண்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இன்று வரை நீடிக்கிறது. அண்ணன் இராம சுப்பையா காரைக்குடி அண்ணன் இராம.சுப்பையா என்றவுடன், ஓயாது ஓடியோடி உழைத்துக் கொண்டிருக்கும் ஓர் உருவம் தான் கண்முன் தோன்றும். உழைப்பு ஓர் உருவம் பெற்று, அது ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் அதிசயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையானால் இராம.சுப்பை யாவைப் பாருங்கள். அந்த உழைப்புப் பெற்ற உருவந்தான் அவர் என்று கலைஞர் கூறியது நினைவிற்கு வரும். எளிமையானவர், இனிமையானவர், அன்பானவர், அவர், தமிழ்நாடு - சட்ட மன்ற மேலவை உறுப்பினராக இருந்த போதும் அந்த எளிமை, இனிமை, அன்பு அவரைவிட்டு விலகவில்லை. 1949ஆம் ஆண்டு, நான் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தது முதல் எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. அவரைக் கண்டதும் கட்சியின் பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்து நினைத்து உரையாடு வோம். அவ்வாறு உரையாடுவதில் அவருக்கு ஒரு தனிஇன்பம். எனக்கு ஒரு மாதத்திற்குரிய சத்து - தெம்பு ஏற்படும். நட்பு எங்கள் அளவில் நிற்காது. குடும்பத்தொடர்பாக மலர்ந்தது. அவர்தம் துணைவியார் விசாலாட்சி அவர்கள் என்பாற் பேரன்பு காட்டி வந்தார். மக்கள் என்பால் அன்பும் மதிப்பும் கொண்டு ஒழுகி வருகின்றனர். அவரை அண்ணனாகவே மதித்து வருகிறேன். எங்கள் நட்பைப் பற்றி அண்ணல் இராம. சுப்பையாவே கூறுவதைக் கேளுங்கள். இலக்கிய விழாக்களிலேயும் வேலை செய்ய ஆரம்பிச்சதாலே நம்ப கட்சியிலே பற்றுதலுள்ள தமிழாசிரியர்கள் பலர் நண்பர்கள் ஆனாங்க. அதுவே முக்கிமா பெரியகுளத்திலேயிருந்து, எங்க ஊர்ப் பள்ளிக்குத் தமிழாசிரியரா வந்திருந்த துரைராஜைப் பத்திக் கொஞ்சம் சொல்லணும். அந்த நண்பர் துரைராஜ்தான், கவிதைத் துறையில் புகழ்பெற்ற கவியரசு முடியரசன். கவிஞர் முடியர சனுக்கும் எனக்கும் இடையில் இருந்தது வெறும் நட்பு மட்டுமில்லே. அதைச் சகோதரப் பாசம் தான் சொல்லணும். பொதுவாழ்க்கையில் மட்டுமில்லாம, தனி வாழ்க்கையிலும், ரெண்டுபேரும் ஒருத்தரோடஒருத்தர், எல்லா விஷயங்களையும் மனசு விட்டுப் பகிர்ந்துக்கிட்டிருக்கோம். நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுப்பழக ஆரம்பிச்சு, நண்பர்களாகிப் பல வருஷங்கள் ஆச்சு, இன்னிக்கும் அதே பாசத்தோடதான் ரெண்டு பேரும் வாழ்ந்துக் கிட்டிருக்கோம். நானும் என் திராவிட இயக்க நினைவுகளும் இராம. சுப்பையா : அண்ணன் இராம சுப்பையா அவர்கள் தம் வாழ்க்கைத் துணைவியாருடன் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உழைத்தவர். அவர் தம் இல்லம் சமதர்ம விலாசத்தில், திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் வந்து தங்கியுள்ளனர். பேரறிஞர் அண்ணா, கலைஞர், அ.பொன்னம்பலனார். எவி. லிங்கம், ஈவிகே. சம்பத்து முதலானோரை அவ்வில்லத்திற் கண்டு மகிழ்ந் துள்ளேன். அவ்வில்லத்தை எங்கள் இயக்கத்தின் புனித இல்லமாகக் கருதி வருகிறேன். அண்ணா மறைந்த செய்தியை வானொலியிற் கேட்டவுடன் அழுது, புலம்பித் திகைத்துப் போன நான், அண்ணன் வீட்டிற்குத் தான் ஓடிச்சென்று ஓவென்று அலறினேன். அண்ணனும் அண்ணியும் என்னை அமைதிப்படுத்தினர். அப்பொழுதே நானும் அண்ணனும் சென்னைக்குச் சென்றோம். இந்நிகழ்ச்சியை அண்ணன் இராம.சுப்பையா அவர்கள் தாம் எழுதிய நானும் என் திராவிட இயக்க நினைவுகளும் என்னும் நூலில் உருக்கத்துடன் குறிப்பிடுகிறார். 1969 பிப்ரவரி 3ஆம் தேதி காலையிலே (அண்ணா மறைந்தார் என்று) அந்த இடி தலையில் விழுந்தது. அண்ணா இறந்து போயிட்டார்ங்கிற செய்தியைக் கேட்டு நிலை குலைஞ்சு நின்னுக் கிட்டிருந்தப்போ, கதவைத் திறந்துக்கிட்டு, அழுதபடியே உள்ளே வந்தார் கவிஞர் முடியரசன், ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தவுடனே ஓ என்று சத்தம் போட்டு அழுதிட்டோம். நானும் அவரும் மட்டுமா? தமிழ் நாடு பூராவும் அன்னிக்கு அழுதது. அன்னிக்கே நானும் முடியரசனும் பஸோ லாரியோ பிடிச்சு சென்னைக்கு வந்தோம். கடைசி ஊர்வலத்திலே கலந்துக் கிட்டு கடற்கரையிலே அண்ணாவை விட்டுவிட்டு. அதை கண்ணோடு ஊருக்குத்திரும்பினோம் என்னையும் என் குடும்பச் சூழலையும் நன்குணர்ந்தவர் அண்ணன். அதனால் அடிக்கடி என்னைக் காணும் போதெல்லாம், தம் சட்டைப் பையில் கையை விடுவார். ஏழுஉரூவா, ஒன்பது உரூவா ஐம்பது காசு, ஐந்து உரூவா கிடக்கும். அழுத அப்படியே என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வார். நான் மறுப்பினும் விடார். அடிக்கடி எனக்கு ஆறுதல் கூறுவார் கவலைப்படா தீர்கள்! எதிர்காலத்தில் உங்கள் காலடியில் ஆயிரம் ஆயிரமாகக் கொண்டு வந்து கொட்டுவார்கள் இவ்வாறு கூறுவார். அவர் சொற்படி கொட்டுவது உண்மைதான். பணம் அன்று. பற்றாக் குறை யென்னும் தேள்தான் கொட்டுகிறது. என் மனத்துக்குத் தேறுதல் கூற அவ்வாறு கூறுவார். என் மகள் திருமணத்திற்கு வந்திருந்த பேராயக் கட்சித் தோழர் ஒருவர், அண்ணன் எளிமையைக் கண்டு வியந்து, மேலவை உறுப்பினராக இருந்தும் இவ்வளவு எளிமையாகப் பழகுகிறாரே எனப் பாராட்டினார். பாவேந்தர் பாரதிதாசன் இயல்பு ஊரறிந்த செய்தி, திடீரென்று வெகுளியின் உச்சியிலே நிற்பார். அடுத்த கணமே குழுந்தையாகி விடுவார். அவருடன், அழலின் நீங்கான் அணுகான் அஞ்சிப் பழகுதல் வேண்டும். அவர்க்கும் அண்ணனுக்கும் நெருக்கமான தொடர் புண்டு. அதனால் அவருடைய இயல்பு களை அண்ணன் நன்கு தெரிந்து வைத்திருந்தார். என்னுடன் அண்ணன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். என்னுடன் அவர் சரிசமமாகப் பழகினும் நான் அவரை என் மூத்த அண்ணன் என்ற முறையிலே மதித்து நடந்து வருபவன். பாவேந்தருக்கும் எனக்குமுள்ள இயல்பு வேறுபாட்டை நன்குணர்ந்த அண்ணன், தமதுநூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். இப்படியெல்லாம் பாவேந்தரோட புத்தகம் சம்பந்தமா பல அனுபவங்கள் உண்டு. ஆனா, எழில் பத்திரிகையிலே, கவிஞர் முடியரசனோட ஏற்பட்ட அனுபவங்கள் வேற மாதிரி! முடியரசன் கவிதைகளிலே வேகம் இருக்குமே தவிர, நடை முறை வாழ்க்கையிலே ரெம்ப அமைதியானவர். பாரதிதாசன் வழிவந்த கவிஞர்களிலே முடியரசன் முக்கியமான கவிஞர். ஈரோட்டு நடராசன் என் வாழ்க்யில் முதன்மையிடம் பெறுவது ஈரோடு. எனக்கு ஒப்பிலாத் தலைவரையும் உற்றுழியுதவும் தோழரையும் தந்தது அத்திருநகரமே. சு.அ.நடராசன் பொதுவுடைமைக் கட்சித் தோழர்.நான் என் கொள்கையில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறேனோ அது போல அவர், பொதுவுடமைக் கொள்கையில் அவ்வளவு உறுதியானவர். இவர் 1948இல் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது மேலைச்சிவபுரித் தமிழ்க் கல்லூரியிற் பயின்று கொண்டிருந்த ந.இராமலிங்கம் என்ற தோழருடன் வந்து தங்கியிருந்தார். அன்று ஏற்பட்ட எங்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து உறவு முறையாகக் கனிந்திருக் கிறது. மைத்துனர் என்ற உறவு முறையிற்றான் பழகி வருகின் றோம். மற்றவர்கள் போல் இவரும் என்னை மதித்துப் பழகினும் சில வேளைகளிற் கண்டித்துப் பேசவும் கிண்டலாகப் பேசவும் உரிமை படைத்தவர். என்னுடன் பழகக் தொடங்கிய காலத்தில் எளிய தொழிலாளி, இன்று நல்ல செல்வ வளமுள்ள முதலாளி. தொழிலாளியாக இருக்குங்கால் என்னிடம் எவ்வாறு அன்பு செலுத்தினாரோ எவ்வாறு மதித்தாரோ, அதே அன்பு அதே மதிப்பு முதலாளியான பின்னரும் எள்ளளவும் குறையவில்லை. அதனாற்றானே இந்த முடியரசனும் பழகி வருகின்றேன். அடிக்கடி ஈரோட்டுக்கு என்னை அழைத்துச் சென்று விடுவார். பலநாள் அங்கே தங்குவேன். ஒரு குறையுமின்றிக் கவனிக்கப்படு வேன். அன்பால் நீராட்டப் படுவேன். அவர் துணைவியார் - என் உடன்பிறவாத் தங்கை - தங்கம்மாள், மக்கள், மருமக்கள், பேத்திகள் அனைவர்க்குமே நான் அயலான் அல்லன், உறவினனே. அத்தகு உரிமையும் அன்பும் கொண்ட குடும்பம் எனக்குப் புகலிடமாவுள்ளது. தளர்ந்த நிலையடைந்த எனக்கு அனைத்துப் பணிவிடை களும் அங்கே நிகழும். ஒரு குழந்தையைப் பேணிக் காப்பது போல என்னைப் பேணிக் காப்பர். நான் அங்குத் தங்கியிருக்கும் நாளில் என் துணிகளையும் அவரே துவைத்துத் தருவார் என்றால் அவ்வன்பின் அளவை எவ்வாறு எடுத்தியம்ப இயலும்? தொழிலாளியாக இருக்குங்கால் அவர் இதனைச் செய்திருப்பின் அது பெரிதாகத் தோன்றாது; முதலாளியாக இருக்கும்போது தானே அது பெருமை பெறுகிறது. ஒருமுறை நானும் அவரும் புதுக்கோட்டைக்குச் சென்ற பொழுது என் பெட்டியை அவர் எடுத்து வந்தார். அதனைக் கண்ட நண்பர் அழகப்பன், பெட்டியை நீங்கள் ஏன் எடுத்து வருகிறீர்கள்? m©z‹ ifÆnyna bfhL¤J Él nt©oaJ jh‹? என்றார். ‘mij¤ö¡» tu¡ bfhL¤J it¡f nt©Lnk! என்று மறுமொழி தந்தார். இஃது என் மேல் அவர் வைத்துள்ள மதிப்புக்கு ஓர் அளவுகோல். சில வேளைகளில் நானோ என் மனைவியோ முகம் வாடியிருப் பின் ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறீர்கள்? எதற்கும் கவலைப் படாதீர்கள்; என் உயிர் இருக்கும் வரை உங்களை வாடவிட மாட்டேன் என்று தெம்பூட்டுவார். இஃது எங்கள் குடும்பத்தில் அவர் வைத்துள்ள பற்றுக்கு எடுத்துக்காட்டு. இவ்வரலாற்று நூலின் பெரும்பகுதியை அவர் இல்லத் திலிருந்துதான் எழுதினேன். அவ்வமயம் அங்கு வந்திருந்த புலவர் அரச மாணிக்கனார், கவிஞர் இங்கிருந்து எழுத நீங்கள் உதவுவது உங்களுக்கு வாய்த்த ஒரு பேறுதான் என வியந்தார். பேறோ கீறோ எனக்குத் தெரியாது நாங்கள் பழகிவிட்டோம் அந்தப் பழக்கத்திற் செய்ய வேண்டியதைச் செய்கிறேன் என்று மறுமொழி தந்தார் நடராசன், இது நட்பின் ஆழத்தை உணர்த்துகிறது. அவர் தம் முதல் மகன் பாரதியின் திருமணத்துக்குச் சென்றி ருந்தேன். அப்பொழுது பெண் வீட்டாரை அழைத்து, இவர் என் மூத்த மைத்துனர் என என்னை அறிமுகப்படுத்தினார். இஃது என்பால் வைத்துள்ள உறவு முறையை உறுதிப்படுத்துகிறது. கொள்கையளவில் நாங்கள் இரு வேறு துருவங்கள். ஆனால் உள்ளத்தால் ஒன்றுபட்டு, நட்பென்னும் உலகில் ஒரே நெறியில் நடந்து கொண்டிருக்கிறோம். மெய்க் காதலுக்கும் உண்மை நட்புக்கும் சாதி எது? மதம் ஏது? கட்சிதான் ஏது? தம்பி சுப்பிரமணியன் புதுக்கோட்டை, துணிக்கடையிலிருந்த சீ.ப.சுப்பிரமணியம், நண்பர் ந.இராமலிங்கத்தின் வாயிலாக அறிமுகமானவர், மென்மையான இயல்புடையவர். உரத்துப்பேசவே மாட்டார். என் இயல்பும் அவரியல்பும் ஒரே தன்மையன. உயர் பண்பு களுக்கு உறைவிடமானவர். அதனால் எளிதில் விரைவில் பழகி விட்டோம். உள்ளங்கள் ஒன்றின. அண்ணன் தம்பியாக மாறி விட்டோம். இயல்பால் ஒத்திருந்தது பேலவே உருவத்தாலும் ஒத்திருப் போம். காண்போர் என் இளவல் என்றே அவரைச் சொல்வர். அந்த அளவிற்கு உருவ ஒற்றுமையுண்டு. என்பால் நெகிழ்ந்து பழகுவார். புதுக்கோட்டையிலிருந்து வரும்பொழுதெல்லாம் எனக்குச் சட்டைத் துணிகள் கொணர்வார். ஒரு சமயம், குழந்தையாக இருந்த என் மகள் கழுத்துச் சங்கிலியை மாற்றிச்செய்ய ஒருவரிடம் கொடுத்திருந்தேன். மாற்றிச் செய்பவர் ஏமாற்றிச் சென்றுவிட்டார். அப்பொழுது வந்திருந்த என் மனைவியின் அன்னையார் நான்தான் விற்று விட்டேன் என்று, என் மீது வருத்தப்பட்டிருக்கின்றார் சீ.ப.சுப்பிர மணியமும் அதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றேன். குழந்தையின் கழுத்திற் சங்கிலி இருக்கக் கண்டு உன் அன்னையார் வாங்கி வந்தாரா? என என் மனைவியை வினவினேன். இல்லை, மாற்றிச் செய்ய வாங்கியவர் கொடுத்தாரென்று நம் சுப்பிரமணியம் கொண்டு வந்து கொடுத்தார் என்று மனைவி கூறினார். சுப்பிரமணியம் அவ்வாறே கூறினார். சில நாள் சென்றபின் நானும் சுப்பிரமணியமும் ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தோம். கடைக்காரர் என்ன? சங்கிலி பிடித் திருந்ததா? வீட்டார் என்ன சொன்னார்கள் என்று வினவ, சுப்பிர மணியம் விழித்தார். நான் துருவித் துருவி வினவியபின் உண்மை வெளியாயிற்று. என் மாமியார் வருந்தியது கேட்டுப் பொறாமல் சுப்பிரமணியமே சங்கிலி வாங்கிக் கொடுத்திருக் கிறார். நான் கவிதையெழுத அமர்ந்துவிடின் அதற்கு வேண்டிய அனைத்தும் முன் கூட்டியே ஏற்பாடு செய்துவிடுவார். அவர் தொடர்ந்து என்னுடன் இருந்திருப்பின் எவ்வளவோ எழுதியிருப்பேன்; நான் எழுதுவதெனில் தூண்டுகோல் வேண்டும். அவர் செவ்வையான தூண்டுகோல். அவர் காதல் மணம் செய்து கொண்டவர். இருவரும் உடன் போக்காக வந்து காரைக்குடியில்தான் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். என் இல்லத்தில் தங்கியிருந்தனர். அவர் துணிக்கடை தொடங்கினார். வணிகம் நன்கு நடைபெறாமை யால் நிறுத்தி விட்டார். அவர் மனைவி மேரிக்கு ஆசிரியர் வேலைக்காக அலைந்தோம். கிட்டவில்லை. அது கிடைத்திருப் பினும், இங்கேயே தங்கி எனக்குத் தூண்டுகோலாக இருந்திருப் பார். வணிகமும் நடைபெறவில்லை. வேலையும் கிடைக்க வில்லை. அதனால் ஈரோட்டிற்கே சென்றுவிட்டார். அவர் மனைவி மேரி இடைநிலையாசிரியர் பணியிலிருந்து கொண்டே புலவர், முதுகலை, இளங்கல்வியியல், இந்தி, உருசிய மொழி முதலிய தேர்வுகள் எழுதிப் பட்டம் பெற்றுள்ளார். மேரி தேர்வுகள் எழுத முழு முயற்சி, ஒத்துழைப்பு, தூண்டுகோல் அனைத்தும் சுப்பிரமணியமே. சுப்பிரமணியம் அன்பு கனிந்த நெஞ்சினர். உதவும் உளப்பாங்கு பெற்றவர். தொண்டு செய்வதில் வல்லவர். நான் ஒரு முறை ஈரோட்டிற்குச் சென்று இருந்தபொழுது, உடல் நலங்குன்றியது. இருபத்திரண்டு நாள் படுத்து விட்டேன். அப்பொழுது தாய் போல என்னைப் பேணிக்காத்தார். நேரம் அறிந்து மருந்து தருவதிலும், காலம் உணர்ந்து ஏற்ற உணவு கொடுப்பதிலும் இவர் நிகரற்றவர். இவரை உண்மையான கடமை தவறாத செவிலி என்றே சொல்லலாம். வெ.தருமராசன் புதுக்கோட்டை ஆசிரியர் வெ.தருமராசன், அழகப்பா நிழற்பட நிலைய உரிமையாளர் சுப.அழகப்பன் இருவரும் என் தம்பியராகப் பழகிய நண்பர்கள். நான் குருதி உமிழும் கொடு நோய்க்கு ஆளாகிப் புதுக்கோட்டையில் மருத்துவம் செய்து கொண்ட பொழுது எனக்குப் பேருதவிகள் புரிந்துள்ளனர். பகலிரவு உணவுகள் தருமராசன் கொணர்வார். காலை மாலை சிற்றுண்டிகள் அழகப்பன் பொறுப்பு. நான் நீராட வெந்நீர் வைத்துத் தருவதும் அழகப்பன் பணியே. இருவரும் உற்ற துணையாக நின்று என்னைப் பேணிக் காத்தனர். அந் நல்லுள்ளங்களை என்றும் நினைவு கூர்வதுண்டு. தருமராசன் சென்னையிலிருந்தபொழுது என் பூங்கொடிக் காப்பிய வெளியீட்டு விழாவை அவரே முன்னின்று பொருட் செலவு செய்து சிறப்பாக நடத்தி வைத்தார். என்னைத் தலைசிறந்த கவிஞனாகக் காண வேண்டும் என்பது அவருடைய பேராவல். அண்மையில் இயற்கை எய்திவிட்டார். அழகப்பன் எனக்குப் பல்வேறு உதவிகள் புரிந்துள்ளார். வளமான வாழ்வில் திளைக்கும் அவர், இன்னும் என் தம்பியாகவே விளங்கி வருகிறார். பாவலர் மணி பழநி நான் பள்ளியிற் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இடையில் தமிழாசிரியராகச் சேர்ந்த பழநி, என் உயிர் நண்பர்களில் ஒருவர். இவர் இருமுறை செத்துப் பிழைத்தவர் வேலூர் மருத்துவ மனையில் உடல்முழுவதும் அறுவைசெய்யப் பட்டவர். இன்றும் அவர் உடல் முழுவதும் பள்ளங்கள் விரவிக் கிடப்பதைக் காணலாம். அவர் இறந்துவிட்டதாகவே வேலூர் மருத்துவனை யிலிருந்து காரைக் குடிக்குச் செய்தி வந்தது. அவர் அண்ணனும் மைத்துனரும் இறுதிச் சடங்கை, அங்கேயே செய்ய எண்ணிச் சென்றனர். ஆனால் அவர் மீண்டும் பிழைத்துக் கொண்டார். அவருக்கு எதுவும் ஆகியிருந்தால் ஒரு தலைசிறந்த பாவலனைத் தமிழகம் இழந்திருக்கும். நான் ஓர் உண்மையான நண்பனை இழந்திருப்பேன். உடல் முழுவதும் அறுவை செய்யப்பட்டமையால் திருமணத்தை மறுத்து விட்டார். அவரை நினையும் பொழுதெல்லாம், முதுமையிற் றுணையின்றி எவ்வாறு வாழப் போகிறாரோ? எனக் கவல்கிறேன். தமிழன்னை அவர்க்கு நல்வாழ்வு தரவேண்டும். உடல்நிலை காரணமாக முப்பத்தைந்து அகவைக்கு மேற்றான் பணியிற் சேர்ந்தார். சேர்ந்தது முதல் என் உயிர் நண்பராகி விட்டார். இவர்க்கும் ஏனைய நண்பர்க்கும் ஒரு வேறுபாடுண்டு. எவரும் என்பாற் சுடுமொழி கூறத் தயங்குவர். இவரோ அம்மொழி கூறத் தயங்கார். என் மென்மையான உள்ளம், பலநாள் வேதனைப்பட்ட துண்டு. ஆனால் அம் மொழிகள் என் நலங்கருதி உதிர்க்கப் பட்டனவே. நோதக்க நட்டார் சொலின் அது பெருங்கிழமை என்றுணர்ந்து பொறுத்துக் கொள்வேன் நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு என்பது வள்ளுவமன்றோ! நகச் சொல்வார் பலர், அதன் பொருட்டு மிகச் சொல்வார் பலர், இடித்துரைத்துச் செவியிற் புகச் செய்வார் சிலரே. அச்சிலருள் இவரும் ஒருவர். சுடுசொற்கள் எங்கள் நட்பிற்கு ஊறாக ஒருபோதும் நின்ற தில்லை. ஒருகால் ஏதோ காரணத்திற்காக என்னுடன் பிணங்கிப் பேசாதிருந்தார். ஆனால் எங்கள் வாய் பேசவில்லையே தவிர, உள்ளங்கள் பேசிக் கொண்டுதானிருந்தன. ஒருசமயம் நான் உடல்நலக்குறைவால் மிகச் சோர்ந்திருந்தேன். நடக்கும்பொழுது தடுமாறுவேன். (இத்தடுமாற்றந்தான் என்னைக் குடிகாரன் என ஊராரை எண்ணச் செய்தது) பள்ளிக்குள் மெதுவாக நுழைவேன். இதைப் பார்த்த பழநி என்பால் வந்து என்ன அண்ணே செய்கிறது? நல்லமருத்துவரிடம் காட்டுங்கள், நான் பணம் தருகிறேன் என்று சொன்னார். பிறிதொருகால் பாளையங்கோட்டைப் பேராசிரியர் பா.வளனரசு அனிச்சவடி என்னும் காப்பிய நாடகம் எழுதிய பழநிக்குப் பாளையங்கோட்டையில் பாராட்டுவிழா நடத்த வேண்டும் என்றார். வெறும் பாராட்டுச் செய்யாமல் ஏதாவது விருது (பட்டம்) வழங்குங்கள் என்றேன். என்ன விருது வழங்கலாம் என்று நீங்களோ சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். பாவலர் மணி என்று திடீரென்று சொன்னேன். பாளையங்கோட்டையில் என் தலைமையிலேயே, விருது வழங்குவிழா நடைபெற்றது. அன்று முதல் பாவலர் மணி பழநி என அழைக்கப்படுகிறார். மேற்குறித்த இரு நிகழ்ச்சிகளும் நாங்கள் ஊடிக்கொண்டு, பேசாதிருந்த நாளில் நடைபெற்றன என்பதாற் குறிப்பிடுகின் றேன். என் பாடலை அவரிடம் காட்டுவேன், அவர் பாடலை என்னிடம் காட்டுவார். திருத்தங்களிருப்பின் முழுமனத்துடன் ஏற்றுக் கொள்வோம். ஆணவத்தால் திருத்தங்களை ஏற்காதிருப்பின். தமிழுக்கன்றோ இழுக்கு? இவ்வெண்ணந்தான் திருத்தங்களை ஏற்கச் செய்தது. அனிச்சவடி என்னும் காப்பிய நாடகம் என்னிடம் படித்துக் காட்டப் பட்ட பின்னரே அச்சேறியது. போட்டியிற் பரிசிலும் பெற்றது; பாராட்டும் பெற்றது; பல்கலைக்கழகங்களிற் பாடநூலாகவும் வைக்கப் பட்டது. அனிச்சவடிப் புகழ் என அடைமொழிக்கும் உரியவரானார் பழநி. இதனைப் படித்துக் காட்டிய பொழுது அதன் சிறப்பிலும் இன்பத்திலும் தோய்ந்து திளைத்த என்னைக் கனவிலும் பாட வைத்ததெனில், அந்நூலின் பெருமையை விளக்க வேண்டுமோ? அப்பாடல்கள் பாட்டென்ற பேரால் பழுதுபட்ட சொற்றொடரைக் கேட்டென்றன் நெஞ்சங் கிறுகிறுத்தேன்-வேட்டெழுந்து நாடகமாம் நன்மருந்தை நண்பன் பழநி யெனும் பாடல் வலான் தந்தான் படைத்து. தேன்கலந்து தந்தனனோ? தெள்ளமுதந்தந்தனனோ? நான்கலந்தே இன்புற்றேன் நாடோறும் -வான்பறந்தேன் வாட்டுந் துயர்துறந்தேன் வையம்தனை மறந்தேன் பாட்டை அவன்படிக்கக் கேட்டு. கூற்றமிலா வாழ்வு கொடுத்த தமிழ்த்தாயே ஏற்றவரம் இம்மகற்கும் ஈந்தருள்வாய் - சாற்றுக் கனிச்சுவையை விஞ்சும் கவிமாலை நின்றன் அனிச்சவடிக் கீந்தான் அவன். இந்நூலுக்குப் பரிசில் தந்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நூல் வெளியீட்டு விழா நடத்த நினைந்து முதலமைச் சராக விருந்த கலைஞர் அவர்களை அணுகியது. அதே நாளில் திருவண்ணாமலை மாநாட்டுக்குக் கலைஞர் இசைவு தந்து விட்டமையால் மறுத்து விட்டார். நான் சென்னைக்குச் சென்றேன். பெரியவர் வ.சுப்பையா பிள்ளையும் நானும் கலைஞரிடம் சென்றோம் பெரியவரைக் கண்டதும் நான்தான் அன்றே சொல்லிவிட்டேனே. âUt©zh kiy kheh£L¡F x¤J¡ bfh©likahš c§fŸ Ãfœ¢á¡F tu ïayhJ, v‹W T¿É£L, v‹id¥ gh®¤J, ‘v‹d§f fÉP®? என்றார். பழநி என் நண்பர். நம் இயக்கத்தவர். அனிச்சவடி அருமை யான நூல்; கவிதையென்றால் உங்களுக்கு விருப்பமான துறையாயிற்றே. நீங்கள் வந்து....... என்று கூறிமுடிக்குமுன், கலைஞர் செயலரை அழைத்தார். திருவண்ணாமலை மாநாட்டை ஒத்தி வைக்குமாறு தந்தி கொடுத்துவிடு என்று ஆணையிட்டுவிட்டு சரி உங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என இசைந்துவிட்டார். கலைஞர் இசைந்த மையையும் என்பாற் கொண்டுள்ள அன்பையும் நினைந்து மகிழ்ந்தேன். பழநியவர்கள் பாவலர் மணி என்னும் பெயருக்கு ஏற்பப் பாடல் புனைவதில் வல்லவர்; நல்ல நாவன்மை படைத்தவர்; பட்டிமன்றங் களிலோ கருத்தரங்குகளிலோ பேசுங்கால், கை தட்டலுக்காகக் கதையளக்கமாட்டார்; கருத்தாழமிக்க பேச்சாகவே அமையும், திறனாய்வில் வல்லுநர், உலகியலை நன்கு புரிந்தவர். பலதுறைகளிலும் தேர்ந்தவர். இக்காரணங்களால் இவரை நான் என் இளவலாக ஏற்றுக் கொள்ளவில்லை. பல்துறைவல்ல பாவலன் ஒருவன் என் தமிழன் னைக்குக் கிடைத்தானே! என்று பெருமிதங்கொண்டு மகிழ்கிறேன். இம் மகிழ்வுதானே எனக்குப் பெரிது? இவர், என்னை அண்ணன் என்றுதான் அழைப்பர்; என் மக்களும் அவரைச் சித்தப்பா என்றுதான் விளிப்பர். எனினும் நான் தம்பி என்று இன்னும் சொல்லவில்லை. நான் பணியாற்றிய காலமெல்லாம், பள்ளி முடிந்து வரும் பொழுது தவறாது சிற்றுண்டிக் கடைக்குள் நுழைவோம், எதிர்ப்படு வோரையும் அழைப்பேன். உண்டி முடிந்துவரும் பொழுது, பணம் பழநிதான் தருவார். பெரும்பாலும் நான் தந்த தில்லை. என் சட்டைப் பையில் பணமிருந்தால்தனே நான் தர முடியும்? எந்தக் காலத்தில் என்பையில் பணமிருந்தது? நான் பணியிலிருந்து விடுபட்ட பிறகுதான் அவரை விட்டிருக்கிறேன். கூப்பிய கரங்கள் சுப்பையா ஆயுள் காப்பிட்டுக் கழகத்தில் விரிவாக்கத் துறை அலுவலராகப் பணிபுரியும் சுப்பையா என்பவர் நல்ல நண்பர். தொடக்கத்தி லேயே மைத்துனரென்னும் உறவு முறையிற் பழகி விட்டவர். அவர் செய்த உதவிகள் என்னாலும் என் மக்களாலும் என்றும் மறக்க இயலாதன. பள்ளியிற் பிடித்தங்கள் பிற கடன்கள், போக மீதியுள்ள சம்பளத்துடன் தான் இல்லத்துக்கு வருவேன். அதைக் கொண்டு இல்லறம் இருபது நாள் ஓடும். பின்னர் அது நிற்கும். சற்று அருகிலிருக்கும் நண்பர் சுப்பையாவை நாடிச் செல்லுவேன். என் முகங்கண்டதும் குறிப்பால் உணர்ந்து கொண்டு தமது பணப் பையிலிருந்து இருபந்தைந்து உரூவா எடுப்பார். முதலிற் போய் அரிசி வாங்கிக் கொடுத்து விட்டு வாருங்கள்; பிறகு உரையாடுவோம் என்று பணம் கொடுத்து விரட்டுவார். அதன் பின்னர் எனது மாளிகையிற் சமையல் நடக்கும். இப்படி ஒரு முறையா? இரு முறையா? பல முறைகள் இந்நிலைதான். எத்தனை முறை இவ்வாறு என் வாழ்க்கையில் நிகழினும் ஒரு நாளேனும் பட்டினி கிடந்தது கிடையாது. அஃதே ஒரு பெருமையன்றோ? பதினோராம் வகுப்பிற் பயின்று கொண்டிருந்த என் மகன் பாரி, ஒழுங்குறப் பயிலாமல் திரிந்தமையால் என் இல்லத்தி லிருந்து துரத்தி விட்டேன். அப்பொழுது அவனைச்சுப்பையா தான் அரவணைத்துக் காத்தார். அவரினும் அவர் துணைவியார் விமலா காட்டிய அன்பு பசுமையாகவே திகழ்கிறது. இருவரும் தம் மகனை வளர்ப்பது போல வளர்த்துப் பதினோராம் வகுப்புத் தேர்வு எழுத வைத்து, வெற்றி பெற்ற பின்னரே அவனை என்பாற் கொணர்ந்து விடுத்தனர். அவ்வண்ணம் என்நண்பர்கள் ஆற்றிய உதவிகள் என் உள்ளத்திற் புகுந்து உயிருடன் கலந்து, உணர்வு மயமாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்றன. பொறியர் துரைராசன் சீர்காழி நா.துரைராசன் என்ற நண்பர் ஒரு நல்ல நேர்மையான பொறியர். உண்மை, உழைப்பு, அன்பு, இரக்கம், இவர்தம் சொத்து. பொதுப்பணித் துறையில் துணைப் பொறியராகச் சேர்ந்த இவர், உழைப்பாலும் நேர்மையாலும் இன்று மாநில தலைமைப் பொறியராக (C.E.) உயர்வு பெற்றுள்ளார். இவர் குடும்பமும் என் குடும்பமும் நெருங்கிப் பழகி, உறவு முறை கொண்டுள்ளன. இவர் எனக்குத் தம்பியாக விளங்கி வருகின்றார். காரைக்குடியில் என்னுடன் எவ்வளவு எளிமையிற் பழகினாரோ அதே எளிமை இன்றும் மிளிர்கிறது. இவர் ஆற்றிய உதவிகள் பல. எனினும் ஒன்று கூறுவேன். பாடநூல் எழுதிய எனக்கு நான்காயிரம் உரூவா கிடைத்தது. அதைக் கொண்டு எனக்கு ஒரு வீடு வாங்க நண்பர்கள் முயன்றனர். அம்முயற்சியில் எனக்கு விருப்பம் இல்லை. அப்பொழுது நண்பர் துரைராசனார், தம் கைப்பணம் ஆயிரம் உரூவாவை முன்பண மாகக்கொடுத்து, வீடு வாங்கச் சொல்லி விட்டுப் பணி மாற்றம் பெற்று வேற்றூர் சென்றுவிட்டார். என்னைச் சிக்க வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டதால், இப்பொழுது நானிருக்கும் வீட்டை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இன்றும் என் வளர்ச்சியிலும் நலத்திலும் அக்கறை கொண் டிருக்கிறார் முழு உரிமையுடன் அவர்தம் இல்லத்தில் நானும் பழகி வருகிறேன். பிரிந்த சம்பந்தன் புலவர் முத்து.சம்பந்தன் என்னுடன் பணியாற்றியவர். தம்பி முறையில் பழகியவர். என் மக்களுக்கு உடல் நலமில்லை யென்றால் சித்தப்பாவைக் கூப்பிடுங்கள் என்றுதான் அடம் பிடிப்பர். அவர் வந்த பின்புதான் மருந்து உட்செல்லும்; பத்திய உணவும் உள்ளே புகும், அந்த அளவிற்கு நெருக்கமானவர். என் எழுத்துப் பணிக்குப் பேரூதவியாக நின்றவர். இளம் பருவத்திலேயே என்னைப்புலம்ப விட்டுப் பிரிந்து விட்டார். கவிதை நூல்கள் எழுதிப் பரிசில் பெற்றவர். சோம்பலறியா வாழ்க்கையர்; அடக்கமிக்க செயலினர். ஒரு நல்லாசிரியர். குறள் கந்தசாமி காரைக்குடி அஞ்சல் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கந்தசாமி என்னும் இனிய நண்பர். இவர் என்பாற் பேரன்பும் பெருமதிப்புங் கொண்டவர். என் பெயரைச் சொல்லுதற்கே கூச்சப்படுவார். பத்து மணித்துளி இவருடன் உரையாடிக் கொண்டி ருந்தாற்போதும், பேச்சின் இடையில் நான்கைந்து குறட்பாக்களேனும் சொல்லிவிடுவார். இதனால் இவரை அஞ்சலகத்தில், குறள் கந்தசாமியென்றே அழைப்பர். தமிழார்வம் மிக்கவர்; சுயமரியாதைக் கொள்கையில் அழுத்த மான பற்றுடையவர்; எளிமையானவர்; புறக் கோலத்தைப் புறக்கணிப்பவர். அகக் கோலம் அமையப் பெற்றவர். பெரி யாரையோ, அண்ணாவையோ, கலைஞரையோ எவேரனும் குறை கூறிவிடின் எளிதில் விடார். நாட்டின் இன்றைய நிலையை நினைந்து நினைந்து உருகுவார். மூலை முடுக்குகளில் நின்றுகொண்டு,சுயமரியாதைக் கொள்கை களை முழக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்; போவோர், வருவோர் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அஞ்சல் நிலையத் தலைவராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது வரும் இளைஞர்களிடம் ஏதேனும் வினாக்கள் விடுப்பார். அவர்களைச் சிந்திக்குமாறு அறிவுரை கூறுவார். பெரியவர்களிடம் விளக்கம் கூறிப்பகுத் தறிவூட்டுவார். ஒரு சமயம் வைகறையில் பால் வாங்கச் சென்றிருந்தார். ஓர் ஐயரும் வந்திருந்தார். இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கந்தசாமி அவரை நோக்கி ஆமா நம்ம ஊர்லே மாரியம்மன் திருவிழா நடக்கிறதே; அதற்கு நான் கோழி நறுக்கு வதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேண்டிக் கொண்டது கோழியா? ஆடா? என்றார். clnd Ia® ‘v‹d§fhQ« eh‹ ãuhkz‹; v‹Ål¤âny ï¥go¡nf£»nwŸ? என்று விடையிறுத்தார். அட! எனக்குத் தெரியாதா என்ன? நீங்கள் பக்தராச்சே! அதனால் கேட்டேன் என்றார் கந்தசாமி. எங்களவா அதெல்லாம் செய்யமாட்டா என்றார் ஐயர். என்னங்க இது! நானும் இந்து, நீங்களும் இந்து. உங்களுக்கு ஒரு முறை; எங்களுக்கு ஒரு முறையா? eh§fŸ brŒtij V‰W¡ bfhŸS« khÇa«k‹ Ú§fŸ brŒtij V‰W¡ bfhŸs kh£lhsh? என்று சொன்னார் கந்தசாமி. போங்காணும், உம்ம கூடப் பேசமுடியாது என்று அகன்று விட்டார் ஐயர். விறகுக் கடைக்குச் சென்றாலும் காய்கறிக் கடைக்குச் சென்றாலும் பணியிருந்தாலும் இவ்வாறே பகுத்தறிவுக் கொள்கைதான் பேசுவார். xUKiw v‹Dl‹ cuaho¡ bfh©o¡F«bghGJ ‘xUt‹’ rh⥠g‰¿šyhj‹ v‹gij v¥go¤ bjǪJ bfhŸtJ? என்று வினவினார். நீங்களே சொல்லுங்கள் என்று நான் மறுமொழி தந்தேன். ஒருவனுடைய சாதியைமற்றவன் இகழ்ந்தோ புகழ்ந்தோ பேசும் பொழுது மனத்திற் பாதிப்பு ஏற்படாமல் இருப்பவன் எவனோ அவனே சாதிப் பற்றில்லாதவன் என அருமையான விளக்கம் தந்தார். சாதியொழிப்புத் துறையில் எனக்கு ஆசான் ஆனார். எனக்குக்குருதியழுத்தம் உண்டென்பதை அவர் அறிவார். அதனால் நான் உணர்ச்சி வயப்படுதல் கூடாதென அறிவுறுத்த எண்ணி, ஒருவன் தந்தை இறந்து விட்டார் என்று தந்தி வருமானால், அப்படியா? என்று தந்தியை வாங்கி மேசையின் மேல் வைத்து விடுதல் வேண்டும். இரத்த அழுத்தமுள்ளவர்கள் இந்த மனநிலை பெறுதல் வேண்டும் என ஒரு மருத்துவர் போல அறிவுரை நல்குவார். இவ்வாறு வாழ்க்கையுடன் ஒட்டிய நிகழ்வுகள் பல கூறி, நல்ல அறிவுரைகள் வழங்குவார். நல்லமைச்சர் போன்ற சான்றான்மை மிக்க நண்பர் இவர். அறிஞர் நடராசனார் காரைக்குடிப் பள்ளியில் நான் சேர்ந்த நாள் முதல் தொடர் புடையவர் இரா.நடராசனார் என்பவர். இவர் வரலாற்றாசிரியர். ஆங்கிலமும் தமிழும் நன்குணர்ந்தவர். எங்கள் நேரு, பிரிக்கப் பட்ட இந்தியா. தாகூரின் சதானா போன்ற நூல்களை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர். தமிழில் பாடல்கள் எழுதும் ஆற்றலும் படைத்தவர். திருக்குறளில் நன்கு பயிற்சிப் பெற்றவர். என் நினைவிற்கு வராத குறட்பாக்களை உடனே அவர் கூறுவார். தேவாரம் திருவாசகம் போன்ற நூல்களில் ஈடுபாடுடையவர். கவிதையை உணர்ந்து, சுவைக்கும் அருமையான சுவைஞர். என் பாடல்களில் தோய்ந்து தோய்ந்து சுவைத்துச் சுவைத்து மனம் விட்டுப் பாராட்டுவார். சுவையுணர்வை அவர் வெளிப்படுத்தும் பொழுது கவிதைக்குள் திளைத்துத் திளைத்து மிதப்பதைக் காணலாம். என்பாடலிற் சில அவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர். என் இன்ப துன்பங்களில் முழுப் பங்கு கொண்டு கண்ணீர் மல்கக் காட்சி தருவார். இன்பத்தில் மகிழ்ச்சிக் கண்ணீர். துன்பத்தில் துயரக் கண்ணீர். என்பால் ஆழமான அன்பு பூண்டவர். நாங்கள் சந்திக்கும் நேரம் எல்லாம் ஆங்கிலக் கவிஞர். தமிழ்ப்பாவலர் எங்கள் முன் நிற்பர். அவர்களைப் பற்றியே உரையாடல் நிகழும். நான் இப்பொழுது குருதியழுத்தத்தாலும் பார்வை மங்கியமை யாலும் தளர்ச்சியாலும் புறச் செலவொழித்து, இல்லத்துள் அடை பட்ட பறவையாக வாழ்ந்து கொண்டிருக் கிறேன். நடராசனாரோ என்னினும் முதியவர். என்னைக் காணவேண்டும் என்று அவா எழுமேல், நெடுந்தொலைவில் உள்ள அவரில்லத்தில் இருந்து என் இல்லம் நோக்கித் தளர் நடையுடன் வருவார். வந்து என்னைக் கண்டு அளவளாவிய பின், இருவரும் இலக்கியவானில் பறந்து பறந்து மகிழ்வோம். மழலைக் கவிச் செம்மல் வள்ளியப்பா குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, அன்பும் அடக்கமும் கொண்ட நற்றோழர். என்பாற் பேரன்பும் பெருமதிப்பும் உடையார். இவர் 1948 முதல் தொடர்புடையவர். சென்னையி லிருந்து அவரும் காரைக்குடிக்கு மாற்றப்பட்ட பின்னர், தொடர்பு நெருக்கமாகியது. நான் எங்கேனும் செல்ல வேண்டியிருப்பின், அவருடைய மகிழுந்து என் இல்லத்திற்கு முன்வந்து நிற்கும். அந்த அளவிற்கு உரிமை கொண்டு பழகினோம். அவர்தம் இயல்புகள் என்னுளத்தைக் கவர்ந்தன. என் வாழக்கையில் ஒன்றியோர் சிலரைத் தவிர எளிதாக எவரையும் பாடாத இயல்புடைய நானே வலியமுன் வந்து அவரைப் பாடினேன். அவருடைய பாராட்டு விழாவில் மழலைக் கவிச் செம்மல் என்ற பட்டமும் வழங்கினேன். எவர் மனமும் புண்படப் பேசார். கருத்து வேறுபாடுகளுக்காக எவரையும் விட்டுவிடாது அரவணைத்துச் செல்வார். பிறரும் வளர வேண்டும் என்ற பரந்த மனங் கொண்டவர். குழந்தை யெழுத்தாளர் சங்கம் ஒன்று நிறுவிப்பலரும் முன்னேற்றம் பெறச் செய்து வருபவர். என் நூலுக்குப் பரிசில் கிடைக்க வேண்டுமென்று அவருள்ளம் எவ்வளவு துடிக்கிறது என்பதை அவருடைய மடலே சான்றுபகரும். j§fS¡F இப்பரிசு கிடைத்தால், என்போன்ற எத்தனையோ நண்பர்களின் உள்ளம் மகிழுமல்லவா? அத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்களின் ஆற்றலை உணர்ந்தும் நேர்மை யில்லாமல் நடந்து கொண்டதே..... அரசு! v‹w Fiwiaí« Ãiwî brŒayhk‹nwh? - அழ.வள்ளியப்பா. அமீது, சத்தி மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் புலவர் யூ.கா.அமீது, திருச்சி அரசினர் கல்லூரிப் பேராசிரியர் ந.சத்திவேலு இவ்விருவரும் என் இருகண் போன்றவர்கள். இருவரும் என்பாற் பேரன்புடையராகிப் பெருமதிப்புடன் பழகி என்னை உடன் பிறப்பாகவும் தந்தையாகவும் கருதி வருகின்றனர். இவ்விருவரும் என்பாற் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் வைத்து என் மாணவர்கள் எனப் பல ஆண்டுகள் கருதி வந்தேன். அண்மையில்தான், அவர்கள் என் மாணவரல்லர்; நான் பணி யாற்றிய பள்ளியிற் பயின்றோர் என்னும் உண்மையை உணர்ந்தேன். என் துணைவியார், கையில் அடிபட்டு மதுரை மருத்துவ மனையில் இருக்கும் பொழுது அமீது, அவர் துணைவியார், தங்கை, மக்கள் அனைவரும் எனக்கும் என் துணைவியார்க்கும் ஆற்றிய தொண்டுகள் நினைந்து நினைந்து வியக்கத் தக்கன. பெற்ற பிள்ளைகள் கூட மனங்கோணாமல் அப்படிப்பணிபுரியார். அமீது என்னை அண்ணன் என்றே அழைப்பார். அவர்தம் மக்கள் பெரியப்பா என்று என் மனங்குளிர வாயார அழைப்பர். நான் மதுரைக்குச் செல்ல நேரின் அங்கே என் வீடொன்று உளது என்ற உரிமையுணர்வுடன் செல்வேன். திருச்சிக்குச் சென்றாலும் அப்படியே. சத்திவேலு, என்னை ஐயா என்றுதான் அழைப்பார். அவர் மனைவி கார்த்திகாயினி மாமா என்றும் பிள்ளைகள் தாத்தா என்றும் அழைப்பர். கார்த்திகாயினி என் விருப்பைக் கேட்டறிந்து கொண்டுதான் சமையலே தொடங்குவார். என் கண்ணிற் படர்ந்திருந்த படலம் அகல இருமுறை அறுவை மருத்துவம் செய்து கொள்ளத் திருச்சி மருத்துவ மனையில் தங்க நேர்ந்தது. அவ்விரு முறையும் கல்லூரியில் விடுப்பெடுத்துக் கொண்டு என்னுடனேயே தங்கித்தாயினும் சாலப் பரிந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் சத்திவேலு ஆற்றி வந்தார். சில வேளைகளில் வாந்தியெடுத்துவிடுவேன். சிறிதும் அறுவருப் பின்றி அதனைத் தூய்மை செய்து நின்று என் மனத்தைக் கவர்ந்து கொண்டார். அவர் உறங்கும் போது வாந்தி வந்தால் தனியே சென்றுவிடுவேன். உடனே அவர் விழித்துக் கொண்டு ஏன் எழுப்பவில்லையென்று வருத்தப்படுவார். அவ்வளவு அன்புள்ளம். ஒவ்வொரு நாளும் அவரில்லத்திலிருந்தே உணவு வந்துவிடும். இவ்வன்புள்ளங்களுக்கு யாது கைம்மாறு செய்யவல்லேன்? திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் க.ப.சண்முகம் என்னும் நண்பர், இலக்கிய ஆர்வலர்; மொழிப் பற்றுடையார். இனிய பண்பாளர். என்பாற் பேரன்பு பூண்டவர். பக்தி என்றே சொல்லலாம். என் வாழ்வு மலர வேண்டுமென்பதில் அளவிலா அக்கறை கொண்டவர். நான் உடல் நலங்குன்றித் தளர்ச்சியுற்றிருப்பதை ஒருகால் எழுதியிருந்தேன். அதற்கு அவர் தந்த மறுமொழியால் அவர் தம் அன்பின் ஆழத்தை நன்கு அறியலாம். அம்மடலில் ஒரு பகுதி; நானும் தளர்ந்துவிட்டேன் என்று எழுதியிருந்தீர்கள். இதைப் பார்த்ததும் நான் தவித்துப் போய்விட்டேன். குழந்தை யுள்ளமும், கொஞ்சு தமிழும் என்றும் தளராது. இவை இரண் டையும் கொண்டுள்ள தாங்கள் தளரவே கூடாது என வேண்டு கிறேன். - க.ப.சண்முகம் 22.4.88 புதுச்சேரி நண்பர்கள் பாவேந்தர் விழாவை முன்னிட்டுப் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் அழைப்பை ஏற்று அங்குச்சென்றிருந்தேன். அப்பொழுது கவிதைச் செல்வர் கல்லாடன் இல்லத்தில் சில நாள் தங்கினேன். அவரும் அவர் துணைவியார் கோப்பெருந்தேவியும் அளவு கடந்த அன்பு காட்டினர். அவர் தம் மக்களும் அப்படியே. தொடக்கத்திலேயே அன்பின் ஆழத்தைக் காட்டிவிட்டமையால் அப்பொழுதே அவர் தம்பியாகிவிட்டார். ஆனால் இது புதுமையாக ஏற்பட்ட உறவன்று. அவர் கவிஞர் வாணிதாசன் இளவல். அதனால் எனக்கும் இளவலானார். அண்ணனுக்கும் எனக்கும் ஏற்பட்ட இடைவெளி கல்லாடனால் நிறைவு செய்யப் பட்டு, மீண்டும் அக்குடும்பத் தொடர்பு தொடர்கிறது. அவர் மனைவி கோப்பெருந்தேவி கவிதை நெஞ்சங் கொண்டவர். கவிதையைச் சுவைப்பதிலே கை தேர்ந்தவர். இலக்கிய ஆர்வலர். வாணியண்ணன் தங்கை ஆண்டாளின் திருமகளும் ஆவார். என்னை அண்ணனாக ஏற்றுக் கொண்ட ஆண்டாளின் மகளாதலின் எனக்கும் மருமகளானவர். எந்நேரமும் இலக்கியப் பேச்சுத்தான். துடிதுடிப்புடன் பேசுவார். என்னை மாமா என அழைப்பார். கல்லாடன் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார்; கவிதை ஊறும் நெஞ்சம்; இனியன பேசும் வாய்; புன்னகை தவழும் இதழ்; அன்பு தவழும் விழி; மெல்லிய குரல்; அடக்கமான செயல் இவற்றின் கூட்டே கல்லாடன். இவர்தம் உறவினராகிய எழுச்சிப் பாவலர் இலக்கியன் அன்பானவர் அமைதியானவர், செயற் புரட்சியாளர், அளந்து பேசுபவர், தனித்தமிழ் ஆர்வலர். நான் புதுவையில் தங்கியிருக்கும் பொழுது நிழல்போல உடனிருந்து உதவியவர். இம்மூவரும் என்னைப் பொன்னேபோற் போற்றிப் பேணி வருகின்றனர். கவிச் சித்தர் இளம் வழுதி இரண்டாம் முறை புதுவைக்குச் சென்ற பொழுது கடலூரைச் சார்ந்த கவிச் சித்தர் க.பொ.இளம் வழுதி நண்பரானார். கவிவளங் கொண்டவர். அரசு அலுவலகத்திற் பணிபுரிந்து கொண்டே தமிழால் ஈர்க்கப்பட்டுக்கவிதை நூல்கள் பல எழுதியுள்ளார். இனிய இயல்புள்ளவர். புரட்சிச் சிந்தனையாளர். எளிமையானவர். என்னைஅவரில்லத்திற்கு அழைத்துச் சென்று பலரையுங் கூட்டு வித்து, அவரிடையே உரையாடச் செய்து, பொன்னாடை பல அணிவித்து, வீடியோ படமெடுத்துப் பாராட்டினர். துணைவேந்தர் தொடர்பு பாவேந்தர் பாரதிதாசன் தொண்ணுற்றேழாம் பிறந்த நாள் விழா, 29,30-ஏப்பிரல் 1987ஆம் ஆண்டு புதுச்சேரிப்பல்கலைக் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது, அவ்விழாவில் தொடக்கவுரை யாற்ற நான் அழைக்கப் கொண்டாடப்பட்டது, அவ்விழாவில் தொடக்கவுரையாற்ற நான் அழைக்கப் பட்டிருந்தேன். அப் பொழுது துணைவேந்தர் முனைவர். கி.வேங்கடசுப்பிரமணியன் அவர்களுடைய தொடர்பு ஏற்பட்டது. இவர் பழகற்கினியர், நல்ல பண்பாளர், நாவன்மை படைத்தவர், முற்போக்குக் கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர், பாரதி, பாரதிதாசன் இருவரிடத்தும் ஈடுபாடு கொண்டவர். பல்கலைக் கழகத்தின் வாயிலாகத் தமிழுக்கு ஆக்கந் தேடி முனைவயவர். செயலாற்றுந்திறன் மிக்கவர் நான் உரையாற்றும் பொழுது பல்கலைக் கழகம் ஆற்ற வேண்டிய பணிகளாகச் சில வேண்டுகோள்களை முன் வைத்தேன். துணை வேந்தர், நன்றி கூறும் பொழுது என் வேண்டுகோள் களைவரவேற்று, அவற்றைச் செய்துமுடிக்க முயல்வேன் என்றும் உறுதி கூறினார். அதனோடமையாது தாங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் கருத்திற் கொண்டு, அவற்றைச் செயற்படுத்த ஆவண செய்வோம் என 12-5-87ல் மடலும் எழுதியிருந்தார். அவர் என்பாற் கொண்ட அன்பையும் மதிப்பையும் அள விட்டறிய அவர்தம் இருமடல்கள் சாலும். பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய அறிஞர் பெருந்தகை கவியரசு முடியரசன் அவர்கட்கு. வணக்கம். நலம். நலமறியப் பேரவா. தாங்கள் புதுவைப் பல்கலக் கழகம் நடத்திய புரட்சித் கவிஞர் பாரதிதாசனாரின் 97ஆவது பிறந்த நாள் விழாவிற் கலந்து கொண்டமைக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வருகையால் எங்கள் கருத்தரங்குசிறப்புப் பெற்றது. தங்கள் கருத்துகளால் எங்கள் அரங்கு வலிமை பெற்றது. எனவே பல்கலைக்கழகச் சார்பிலும் என் சார்பிலும் உளமார் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி. என்றும் தங்கள் கி.வெங்கடசுப்பிரமணியன். இம் மடல், விழாவிற் கலந்து கொண்டோர் அனைவர்க்கும் பொதுவாக விடுக்கப்பட்ட தட்டச்சு மடல். இம்மடலின் ஓரத்தில் என்றும் தங்கள் ஆசியை வேண்டுகிறேன் கி.வே. எனத் தாமே கையால் எழுதிய வரிகள் தாம் அவருடைய அன்பைப் புலப்படுத்து கின்றன. மற்றொரு மடல். தங்கள் 7-10-87 நாளிட்ட மடல் பெற்றேன். 27-8-87 அன்று மேதகு ஆளுநரைச் சந்திக்கச் சென்று அவருடன் ஒரு மூன்று மணி நேரம் இருக்க நேர்ந்தது. முன்பே தாங்கள் வருவ தாகச் சொல்லியி ருந்தால் ஆளுநரைக் கூட முடியரசருக்காகப் புறக் கணித்திருக்கலாம். நீங்கள் அடுத்த முறை புதுவைக்கு வரும்போது அவசியம் முன்பே எழுதிவிட்டு வரவும். தங்களைச்சந்திப்பதை ஒரு பெரும் பேறாகக்கருதுகிறேன். நன்றி. - கி.வெங்கடசுப்பிரமணியன் அக்டோபர் 8,1987 இவர் வைத்துள்ள அன்பும் மதிப்பும் அளவிடற்பாலனவோ? தொடர்பு கொண்ட நாள் சிறிது; தொடர்போ பெரியது! பெரிதினும் பெரிது. சென்னையில் கயல் அச்சகவுரிமையாளர் தம்பி தினகரன், பாளையங் கோட்டை அஞ்சலகத்திற் பணியாற்றும் தமிழ் ஆய்வாளர் - இனிய நண்பர் சி.சு.மணி, பேராசிரியர் பா.வளனரசு, தம் வாழ்க்கையைக் குறளாயத் தொண்டுக்காகவே ஒப்படைத்துக் கொண்ட ஈர நெஞ்சினர் குறளீயம் வேலா இராசமாணிக்கனார் பழமை மறவாப் பேராசிரியர் உ.பாலசுப் பிரமணியம் அன்பின் குழைவாக விளங்கும் புலவர் அரசமாணிக்கனார் இவ்வாறு எண்ணிலவர் என்பால் அன்பு கொண்ட பெருமக்கள். இவருள் எவரை விடுவது, எவரை எழுதுவது? எழுதப் புகின் அஃது ஒரு தனி நூலாகும். ஆதலின் சிலரே நினைவு கூரப்பட்டனர். இவ்வாறு என் நண்பர்கள் காத்தளிக்காதிருப்பின் என் வாழ்வு என்னாகும் என்று எண்ணிப் பார்க்கிறேன். மலையுச்சியினின்று பாதாளத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு பெறுகிறேன். இத்தகு நண்பர்கள் வாய்க்கவில்லையெனில் கொள்கையில் நான் இவ்வாறு உறுதியாக நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்க இயலுமா? எப்பொழுதோ உருக்குலைந்து போயிருப்பேன். ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை..... ஆருளர் களைகண் அம்மா எனத் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது எனக்கு முற்றும் பொருந்தும். உறவினர் எவரும் இல்லையே எனப் பலகால் ஏங்கியதுண்டு. நண்பர்கள் உறவினராகி என் ஏக்கத்தைக் களைந்து களைகண்ணாக நின்று காத்து வரும் அரணாக விளங்கி வருகின்றனர். இத்தோழர்கள் ஆற்றிய உதவிகளையெல்லாம் ஓய்ந்து கிடக்கும் என் உள்ளம் ஒரு நாள் நினைந்து நினைந்து உருகியது. உள்ளம் உருகிடின் பாடல் தானே உருவாகும்! அப்பாடல் இதோ: எனது வாழ்க்கை எழில்மலர்க் காவென மனத்தில் என்னவோ மற்றவர் எண்ணினர்; வண்ணமும் மணமும் வாரி இறைக்கும் எண்ணில் மலர்கள் நண்ணுபூங் காவென இலங்கிட வேண்டும் ஈதென் ஆவல்; கலங்கிய மனத்தின் கற்பனைக்கனவிது; நீரே அறியா நிலமென் வாழ்க்கை யாரே அறிவார்? ஆகினும் உண்மை, காய்ந்தஅந் நிலத்திற் கண்கவர் சிலசெடி வாய்ந்ததும் உண்டு வண்ணமும் மணமும் தோய்ந்த மலர்கள் துளிர்த்ததும் உண்டு; நெருங்கிப் பழகியோர், நெஞ்சிற் பழுத்த பரிவும் அருளும் உரிமையுந் தாங்கி ஊற்றிய புனலால் தோற்றிய மலரவை; ஆற்றிய உதவியை ஆருயிர் உளவரை போற்றிப் போற்றிப் புகழ்த லன்றி ஏற்ற கைம்மாறு யானறியேனே! இவ்வாறு, பலருடனும் நட்புப் பூண்டு குடும்பத் தொடர்பு கொண்டிருந்தமையால் என்னை யாதவர் என ஓதுவர் சிலர். நாயுடு என நவில்வர் சிலர்; ஆசாரியார் என அறைவர் சிலர்: இசை வேளாளர் என இசைப்பர் சிலர்: முதலியார் முக்குலத்தோர் என மொழிவர் சிலர்; செட்டியார் ரெட்டியார் எனச் செப்புநரும் உண்டு. சாதியற்ற எனக்கு இத்தனைச் சாதியா? 10 குயிலும் குஞ்சும் பாவேந்தர் பாரதிதாசனுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் சிலவற்றை ஈண்டுக்குறிப்பிடுகின்றேன். பெரியாரிடம் கொண்ட பெருமதிப்பு திருச்சி தேவர் மன்றத்தில் பதினாறாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. 1943 அல்லது 1944 ஆம் ஆண்டு அம்மாநாடு நடைபெற்றது என்று கருதுகிறேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் மாநட்டுத் தலைவர். முதன்முதலாகப் புரட்சிக் கவிஞரைக் காணும் பேறு அப்பொழுதுதான் எனக்கு வாய்த்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள், பாவேந்தர் பாடல் பலவற்றை எடுத்துக் கூறிவிட்டுத் தென்றலின் குறும்பு பற்றிய பாடலைத் தமக்கே உரிய பாங்கில் விளக்கிக் கூறும்பொழுது, அவையில் பெருஞ் சிரிப்பு எழுந்தது. மதர்த்த பார்வையுடைய புரட்சிக் கவிஞரே சிரித்துவிட்டார். அக்காட்சி என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது. தலைமையுரையாற்றிய கவிஞர், பெரியார் அவர்கள் என்னைத் தலைவராக இருக்கச் சொல்லிவிட்டார்கள். அவர்களே என்னைத் தலைவராக்கிவிட்டதனால் எனக்குச் செருக்கு வந்துவிடப் போவதில்லை. பெரியாரவர்களிடம் வைத்துள்ள மதிப்பு என்றும் குறைந்துவிடப் போவதுமில்லை. எப்பொழுதும் சுயமரியாதை இயக்கத் தொண்டனாகவே இருப்பேன் என்று மிகப் பணிவாகப் பேசிவிட்டுப் பழமைக் கருத்துகளை, மூடப்பழக்க வழக்கங்களை வழக்கம்போற் சாடினார். கவிஞர் மிகப் பணிவாகப் பேசியதைக் கேட்டதும் எங்களுக்கு ஒரே வியப்பாக இருந்தது. அரியேறு போன்ற தோற்றம், வணங்கா முடிப் பாண்டியன் அன்ன பார்வை, பொறிபறக்கும் பேச்சு - இவற்றிற்கு உரியராகத் திகழும் இவரா இவ்வளவு அடக்கமாகப் பேசுகிறார்? பெரியாரிடம் எவ்வளவு பக்தி வைத்திருக்கிறார்! என்று வியந்து கொண்டோம். கவிஞர், தொடர்ந்து பேசும்பொழுது, நான் முதலில் மயிலம் சுப்பிரமணியரைப் பற்றித்தான் பக்திப் பாடல் பாடிக் கொண்டிருந் தேன். ஒரு பாடல் பாடுகிறேன் கேளுங்கள் என்று இசையோடு ஒரு பாடலைப் பாடிக்காட்டினார். பேசும்பொழுது, குரலில் இருந்த கரகரப்பும் கனமும் பாடும் பொழுது காணப் படவில்லை. பிசிரில்லாத மெல்லிய இனிய குரலாக இருந்தது. வேறு யாரோ பாடுவது போலத் தோன்றியது. பாடலைப் பாடி முடித்ததும் இப்படிப் பாடிக் கொண்டிருந்தவன் தான் நான். பின்னர்ச் சுயமரியாதை இயக்கந்தான் என்னை மாற்றிவிட்டது. சமுதாயத்தைப் பாடவைத்தது; பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாட வைத்தது என்று உரையாற்றினார். தேவர் மன்றத்தில் கவிஞர் பேசிய பேச்சு, என் கருத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது, கடவுட்பாடல் பாடிக் கொண்டிருந்த என்னை, நாடு, மொழி, இனம் பற்றிப் பாடுமாறு தூண்டியது. அவருடைய தோற்றம், ஒரு வகையான பெருமிதவுணர்வை உண்டாக்கியது. கொள்கையில் விடாப்பிடியான ஓர் உறுதிப் பாட்டை உள்ளத்திற் பதிய வைத்தது. அதையடுத்து, திருச்சி - தென்னூரில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அளப்பரிய பெருங்கூட்டம்; ஐயா தலைமையிற் மாநாடு தொடங்கியது. அண்ணா, நாவலர், பட்டுக்கேட்டை அழகிரி, நடிகவேள், முதலானோர் கலந்து கொண்டனர். நம் புரட்சிக் கவிஞரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இடையில் நம் கவிஞர் எழுந்து வெளியில் வந்தார். அருகிற் சென்று அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று எனக்கோர் ஆர்வம். திரைப்பட நடிகரைக் காண்பதில், இக்கால இளைஞர் களுக்கு எவ்வளவு ஆவலோ அதைவிடப் பன்மடங்கு ஆவல், கவிஞரைக் காண்பதில் எனக்கிருந்தது. அதனால் நானும் எழுந்து அவரைப் பின் தொடர்ந்தேன். பந்தலுக்கு வெளியே வந்து நின்றார். வேறு சிலரும் உடன் நின்றனர். கட்டம் போட்ட கோட்டுப் பைக்குள் கையைவிட்டு வெளியே எடுத்தார். தீப்பெட்டியும் வெண்சுருட்டும் கையில் வந்தன. அவர், எடுத்துப் பற்ற வைத்தார், அவர் வெண்சுருட்டு பிடிப்பதே தனிவகையாக இருக்கும். மற்றவர் பிடிப்பதுபோல் இராது. எல்லா விரல்களையும் மடக்கி வைத்துக் கொள்வார். இருவிரலிடையே வெண்சுருட்டுப் புகுந்திருக்கும். கட்டை விரல் பக்கம் வாய் வைத்து உறிஞ்சுவார். இவ்வாறு மூச்சடக்கி, ஒரு தடவை உறிஞ்சி ஊதிவிட்டுப் பக்கத்தில் நின்றாரை நோக்கி, சிகரெட்டுக் குடிக்கணும்னு தோணுச்சு, உள்ளே குடிச்சா நம்ம கிழவன் சத்தம் போடுவாரு, கிழவனுக்குப் பயந்து வெளியே வந்திட்டேன் என்று சொன்னார். பெரியாரைத்தான் நம்ம கிழவன் என்று குறிப்பிட்டார். தேவர் மன்றத்திலும் தென்னூரிலும் நிகழ்ந்த இருநிகழ்ச்சிகளாலும் புரட்சிக் கவிஞர், பெரியாரிடம் எவ்வளவு மதிப்பும் பற்றும் வைத்திருந்தார் என்பதை உணர்ந்துகொண்டேன். இம் மாநாட்டிலும் கவிஞர் பேசினார். புராணக் கதைகளையெல்லாம் பிய்த்து உதறி விட்டார். புரட்சிக் கவிஞரின் பேச்சு என் பாட்டு ணர்வில் ஒரு புதிய ஒளியைத் தோற்றுவித்தது. அப்பொழுதுதான் கவிஞரை, எனக்கு வழிகாட்டியாக ஒரு திருப்பு முனையாக என் மனத்திற் பதிய வைத்துக் கொண்டேன். 1944ஆம் ஆண்டு மயிலம் தமிழ்க் கல்லூரிக்குப் பயிலச் சென்றிருந்தேன். என் கொள்கையைத் தெரிந்துகொண்ட அவர்கள்; என்னைச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர். இவ்வளவு தொலைவு வந்தோம்; புரட்சிக் கவிஞரைப் பார்த்து விட்டுச் செல்வோம் என்று கருதிப் புதுச்சேரிக்குச் சென்றேன். கவிஞரின் இல்லத்துக்குச் சென்று ஐயா என அழைத்தேன். உள்ளிருந்து ஒரு சிறுமி வர, கவிஞரைப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். அப்பா வெளியூர் போயிருக்கிறார் என்ற விடை வந்தது. வருத்தத்துடன் திரும்பினேன். இருங்கள் சாப்பிட்டு விட்டுப் போகலாம்; அதற்குள் அப்பா வந்தாலும் வந்துவிடுவார் என்று சிறுமியிடமிருந்து அன்பழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், கவிஞரைக் காணப் பெறா வருத்தத்துடன் மீண்டுவிட்டேன். என்னை உணவருந்தச் சொன்ன அச்சிறுமி தான் இன்றைய வசந்தா தண்டபாணி. 1947-49ஆம் ஆண்டுகளில் சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நான் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்ருந்தேன். அப்பொழுது புதுக்கோட்டையில் முருகு சுப்பிர மணியம் அவர்களும் பெரியண்ணன் அவர்களும் பொன்னி என்னும் மாத இதழை மிகச் சிறந்த முறையில் நடத்தி வந்தனர். அவ்விதழில் அடிக்கடி எழுதி வந்தேன். ஒரு சமயம் நிலவு பற்றிச் சில பாடல்கள் எழுதிப் பொன்னிக்கு விடுத்தேன். அப்பாக்களைப் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் வெளியிட்டனர். பின்னர், பாரதிதாசன் மணிவிழா மலருக்காக பாரதிதாசன் என் தந்தை என்ற தலைப்பில் பாடல் எழுதுமாறு வேண்டினர். பொன்னி மலரில் அப்பாடல்கள் வெளிவந்த நாள்முதல், பாட்டுலகில் பாரதிதாசனைத் தந்தை யாகவே கருதி எழுதிவருகிறேன். பரம்பரையில் வெளிவந்த பாடல்களில் இரண்டே கிடைத்தன. முகிலிடை நிலா பாம்பொன்று நினைவிழுங்கும் என்று சில்லோர் பகர்ந்திடுவார் அதைநம்பார் அறிவில் நல்லோர் வேம்பன்னார் எமைவீழ்த்த இனைய சூழ்ச்சி விளைத்தார்கள் தொலைத்தார்கள் தமிழர் ஆட்சி; கூம்புவதேன் தாமரைகள் உன்னைக் கண்டு குடைந்துதேன் அருந்தமலர் சென்ற வண்டு தேம்புவதைக் காணாயோ சிறையிற் பட்டு? சென்றிடுவாய் வெளியில்விடச் சொல்லி விட்டு ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர் போல அழகிழந்தாய் உனையடைந்த மேகத் தாலே நாரியரின் முகங்கண்டு நாணி உள்ளே நண்ணினை நீ என எண்ணி நகைத்தாள் முல்லை வேறினத்தார் நாடாள வீணன் அல்லேன் வேலெடுத்துப் போர்தொடுப்பேன் வெற்றி கொள்வேன் சீரழிப்பேன் எனக்கிளம்பும் வீரன் போலச் சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே. பொழுதெல்லாம் கவிதையுணர்வு புரட்சிக் கவிஞர் கவிதையெழுதுவதற்கென்று நேரம் ஒதுக்கிக் கொண்டு எழுதுபவரல்லர். எந்த நேரமும் கற்பனையிலே மூழ்கித் திளைத்து மிதந்து கொண்டிருப்பார். உலகியல் உணர்வுகள், அவர் மனத்தில் நீர் மேற் பாசி போலத் தான் மிதக்கும். கற்பனை யுணர்வு, வேர்விட்டு விழுதுவிட்டு நிற்கும் ஆல் போல் நிலைத் திருக்கும். இதைப் பலமுறை கண்டிருக்கிறேன். சென்னையில் பலமுறை கவிஞரைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுது டிராம் என்ற வண்டிகள்தாம் நகருக்குள் ஓடும். அந்த வண்டியில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வண்டியில் அமர்ந்தும் சில வேளைகளில் நின்றும் பயணம் செய்வார். அப்பொழுதெல்லாம் அருகில் இருப்பவருடன் பேசியதையோ சிரித்ததையோ பார்த்த தில்லை. ஏதோ கற்பனை செய்து கொண்டு, படம் பார்த்துக் கொண்டிருப்பவர் போல அசையாமல் இருப்பார். வண்டியிலிருந்து இறங்கும்போது ஒரு காலைத் தரையில் ஊன்றி இறங்கமாட்டார். குழந்தைகள் குதிப்பது போல இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு அப்படியே குதிப்பார். ஒருமுறை கவிஞர் வாணிதாசனைக் கண்டு வரப் புதுச் சேரிக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர் வா வாத்தியாரைப் பார்த்து வரலாம் என அழைத்தார். (புரட்சிக் கவிஞரை, வாத்தியார் என அழைப்பது புதுவை மக்கள் பழக்கம்) நான் உடன்வரத் தயங்குவதைக் கண்டுகொண்ட வாணியண்ணன் வா சும்மா போய் வருவோம் என்றார். நான் வர மறுத்தேன். ஏன் என்று வற்புறுத் தினார். முருகு என்ற இதழில் நான் ஒரு கதை எழுதினேன். அதைப் பாரதிதாசன் பார்த்திருக்கக் கூடும். அதனால் நான் வர விரும்ப வில்லை என்றேன். கதைக்கும் அவரைப் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்? சும்மா வா போய் வருவோம் என்றார். அண்ணே, புரட்சிக்கவிஞரைப் பற்றித்தான் கதை எழுதியிருக் கிறேன். புராணக் கதைகளையெல்லாம் கண்டித்து - கடிந்து பேசி நமக்கெல்லாம் ஒரு புதுநெறி காட்டிய நம் கவிஞர், புராணக் கதைகளுக்கு - அந்தத் திரைப்படங்களுக்கு உரையாடல், பாடல் எழுதிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வேதனை தருகிறது. அவ்வேதனை அடிப்படையில், அவர் போக்கை எதிர்த்து, அழிந்து விடுமோ? என்ற தலைப்பில் கதையெழுதி யிருக்கிறேன். புரட்சிக் கவிஞரை எதிர்த்து எழுதியதால் பலருக்கும் விளம்பரம் ஆகிவிட்டது. கவிஞரும் அதைப் படித்திருக்கக் கூடும். அவர்தான் முரட்டுப் போக்குடைய வராயிற்றே. நம்மைச் சீறினும் சீறலாம். அதனால் அங்கு வர எனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னேன். அதெல்லாம் வாத்தியாருக்கு நினைவிருக்காது, நீ வா என்று அழைத்துச் சென்றார். இருவரும் புரட்சிக் கவிஞர் இல்லத்துக்குச் சென்றோம். வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு கவிஞர், பென்சிலைத் தீட்டிக் கொண்டிருந்தார். வணக்கம் - என்றோம். தீட்டிக் கொண்டே ம்ம் என்றார். நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. சிறிது நேரம் இருபாலும் பேச்சே இல்லை. பின்னர், வாணியண்ணன் என்னைச் சுட்டிக் காட்டி, இவர் கவிஞர் முடியரசன் என்று அறிமுகப்படுத்தினார். ஓ தெரியுமே சென்னை முத்தியாலுப்பேட்டையில் தானே வேலை பார்க்கிறாய்? என்றார் பென்சிலைத் தீட்டிக் கொண்டே. எனக்கு வியர்த்துவிட்டது. கதையைப் பற்றித்தான் பேசப் போகிறார், என்ன நடக்குமோ? என்று நடுங்கிக் கொண்டே ஆம் என்றேன். உன் கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்; நன்றாக எழுது கிறாய், நம்ம குயிலுக்குப் பாட்டெழுது, போடுவோம். இயற்கையைப் பற்றி எழுது, அழகின் சிரிப்பை அவர் கூடச் சொன்னாரா இல்லையா? யாருமே தமிழில் இப்படிப் பாடவில்லை. இயற்கையைப் பாடுவது எளிதில்லை, என்று மனந்திறந்து அவர் பேசியதுதான் தெரியுமே - எனத் தீட்டியவாறே பேசிக் கொண் டிருந்த கவிஞர், ம்ம்ம், அதெல்லாம் தமிழ்ச் சோலைக்குள்ளே புகுந்தவனுக்குத் தானே வரும், நீ எழுது என்று கூறிக் கொண்டே திடீரென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டார். mj‹ ãwFjh‹ vd¡F eL¡f« ËwJ ‘mH»‹ áÇ¥ò’ mt® brh‹dh®, ït® brh‹dh® v‹W Vnjnjh brh‹dhnu v‹d brh‹dh®?, என்று அண்ணனிடம் மெதுவாக வினவினேன். நாவலர் சோமசுந்தர பாரதியார், அழகின் சிரிப்பு என்ற கவிஞரின் நூலைப் பற்றிப் பாராட்டிப் பேசியதைத்தான் குறிப்பிடுகிறார் என்று அண்ணன் சொன்ன பிறகு தான் எனக்கு விவரம் தெரிந்தது. பார்த்தியா, கதையை வாத்தியார் மறந்திட்டார், என்று சொல்லிச் சிரித்தார் வாணி. உள்ளே சென்ற கவிஞர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அப்பொழுது கவிஞர் மகன் கோபதி (மன்னர் மன்னன்) வெளியில் வந்தார். அவரைப் பார்த்து, அப்பா என்ன செய்கிறார் என்றோம். கவிதையெழுதிக் கொண்டிருக்கிறார் என்று கூறிப் போய்விட்டார். அப்பொழுதுதான் எனக்கு உண்மை புரிந்தது. திண்ணையில் அவர் அமர்ந்திருந்த தோற்றம் என் கண் முன் தெரிந்தது. கால்களை மடக்கிக் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, இடக்கையைத் திண்ணையில் ஊன்றியவாறு கவிழ்ந்த வண்ணம், அமர்ந்திருக்கிறார். விரல்கள் பென்சிலைத் தீட்டிக் கொண்டே யிருக்கின்றன. வாய் எம்முடன் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் மனம் மட்டும் இங்கில்லை. கற்பனை வானில் பறந்து கொண்டே இருந்திருக்கிறது. கவிதை உருவாகி விட்டது. உடனே உள்ளே ஓடிச் சென்று எழுதியிருக்கிறார். இப்படி நினைந்த வாறு வாணியண்ணனைப் பார்த்துச் சிரித்தேன். வாத்தியார் எந்த நேரமும் இப்படித்தான் என்றார். ஆம், பிறவிக் கவிஞர்கள், எப்பொழுதும் தம்மை மறந்து, கற்பனையில் மிதந்து கொண்டு தானேயிருப்பர்! வந்தே மாதரம் பற்றி கோபதி, மறுபடியும் வெளியில் வந்து, அப்பா கூப்பிடு கிறார் என்றார்; உள்ளே நுழைந்தோம். மேசைக்கருகில் அமர்ந் திருந்த கவிஞர், உட்காருங்கள் என்று எதிரில் பலகையைக் காட்டினார். அமர்ந்தோம். அவரே மிகுதியாகப் பேசினார். அனைத்தும் நினைவிற்கு வரவில்லை; இரண்டொன்று மட்டும் நினைவில் நிற்கின்றன. அப்பொழுது திராவிடர் கழகத்திலிருந்து பேரறிஞர் அண்ணா வெளியேறிய நேரம். அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த கவிஞர். இந்த அண்ணாத்துரை ஏன் வெளியேறணும்? அச்சகம், சொத்து எல்லாவற்யும் பறித்துக் கொண்டு கிழவனை வெளியேற்ற வேண்டியதுதானே! இதெல்லாம் யார் சொத்து? பொதுச் சொத்துத்தானே என்றார். சிறிது நேரம் பேசி விட்டு, குலுங்க குலுங்கச் சிரித்தார், ஏன் சிரிக்கிறார் என்று எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவரே சொன்னார். அந்தக் காலத்திலே காங்கிரசுக்காரங்க வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று சொல்லுவாங்க, நம்ம பெரியாரு சொல்லுவாரு வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று அவுங்க சொல்றது, வந்து ஏமாத்றம் வந்துஏமாத்றம் என்று சொல்லறது போல நமக்குக் கேக்குது, அப்படின்னு பெரியார் சொல்வாரு என்று சொல்லிக் கொண்டே சொல்லுக்குச் சொல் வாய்விட்டுச் சிரித்தார் கவிஞர். அப்பொழுது அவர் சூதுவாது தெரியாத ஒரு குழந்தை போலக் காட்சியளித்தார். படப்பிடிப்பு: படம் பிடிக்குங் கருவியுடன் நான் சென்றிருந்தமையால் கவிஞரையும் படம் பிடித்துக் கொள்வோம் என்று கருதி வாணி யண்ணனிடம் கூறினேன். இரு இரு அவரைக் கேட்டுக் கொண்டு படம் பிடிப்போம் என்றார். சிறிது நேரம் சென்றது. வெளிச்சம் போவதற்கு முன் எடுத்தால்தான் உருவம் விழும், இல்லையென்றால் பயன்படாது. என்றேன். வாணியும் துணிந்து கவிஞரிடம் ஒப்புதல் கேட்டார். ஓ, நல்லாப் புடிச்சுக்கலாமே என்றார். நான் விரைவாகப் படக் கருவியை எடுத்தேன். நில்லு நில்லு; இப்ப எடுத்துறாதே என்று நிறுத்திவிட்டுக் கோபதி, இங்கே பாருப்பா மேசையை, புத்தகமெல்லாம் கலைஞ்சு கிடக்குது. அவுங்க என்ன நினைப்பாங்க. படத்திலே அசிங்கமாகத் தெரியுமே! இதை ஒழுங்கா அடுக்கு, நான் தலைவாரிக்கிறேன் என்று கூறிக் தலைவாரிக் கொள்ளச் சென்றார். அதற்குள் மேசை ஒழுங்குபடுத்தப் பட்டது. வந்து அமர்ந்தார். நிமிர்ந்து பார்த்தார் ம்ம், இப்பப் புடிங்க என்றார். இவ்வளவும் நடந்து முடிவதற்குள் வீட்டுக்குள் வெளிச்சம் குறைந்து விட்டது. வேறு வழியின்றிப் படம் பிடித்தேன். பின்னர் விடைபெற்று மீண்டோம். சென்னைக்குச் சென்று படச்சுருளைக் கழுவிப் பார்த்தால், கவிஞர் படத்தைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்தன. பேசும் முறை நம் கவிஞர், மேடையில் பேசும் போது மேடைப் பேச்சாக இராது, தனியே ஒருவருடன் எப்படிப் பேசுவாரோ அதுபோல நடைமுறைப் பேச்சாகவே இருக்கும். ஜிப்பா என்று சொல்லப் படுகிற முழுக்கைச் சட்டையணிந்து கொண்டு மேடையில் பேசும்போது அடிக்கடி கைகளை உயர்த்திக் கொண்டும் சட்டைக் கையைச் சுருட்டிச் சுருட்டி விட்டுக் கொண்டும் பேசுவார். பார்ப்பவர்களுக்கு கவிஞர் சண்டைக்கு வருவது போலத் தோன்றும். எவரையாவது தாக்கிப் பேச நேர்ந்தால் (தாக்குதல் இல்லாத பேச்சு ஏது?) எதிரில் அவர் இருப்பது போலவும், அவரிடம் இவர் நேரே பேசுவது போலவும் அமைந் திருக்கும். அவையில் இருப்பவர்க்குக் கூறுவது போல் இராது. சென்னையில் மறைமலையடிகளார் தலைமையில் இந்தி யெதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் அம்மா நாட்டைக் கூட்டுவித்தார். 17-7-1948ஆம் ஆண்டு நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண. Jiu¡f©z‹, áy«ò¢ bršt® k.bgh .á., முதலான பெருமக்கள் மாநாட்டிற் சொற்பொழிவு ஆற்றினர். நம் புரட்சிக் கவிஞரும் பேசினார். அப்பொழுது அவினாசிலிங்கனார் கல்வியமைச்சராக இருந்தார். கல்வியமைச்சர், மாநாட்டில் கவிஞருக்கு எதிரில் இருப்பது போலவும், அவரை நோக்கிக் கவிஞர் அறிவுரை கூறுவது போலவும் கவிஞரின் பேச்சு அமைந்திருந்தது. நீ ஏன் பயப்படணும்? துணிஞ்சு சொல்லு வடக்கே இருக்கிறவனுக்கு. எங்க நாட்டு மக்கள் - தமிழர்கள் இந்தியை விரும்பல்லே; அதனாலே இங்கே இந்தி வேண்டாம். அப்படின்னு தைரியமாச் சொல்லேன். அவன் என்ன உன் தலையையா கொண்டு போயிடுவான்? எங்களை எல்லாந் தாண்டித்தானே ஓங்கிட்ட வரணும்? நாங்க பார்த்துக் கிறோம். போ! துணிச்சலாகச் சொல்லு இப்படிப்பேசினார் கவிஞர். பெண்மையை மதித்தல்: காரைக்குடி அழகப்பர் கல்லூரிக்கு நம் கவிஞர் ஒரு முறை வருகை தந்திருந்தார். நான் அப்பொழுது காரைக்குடியிற் பணி யாற்றிக் கொண்டு இருந்தேன். கல்லூரியில் கவியரங்கம் நடை பெற்றது. நானும் கலந்து கொண்டேன். நம் கவிஞர் தலைவர். வெங்கடாசலம் என்ற அன்பர் கவியரங்கேறினார். நீண்ட நேரம் கவிதை படித்துக் கொண்டிருந்தார். பாவேந்தர் பொறுமை யிழந்தார். ஏம்பா! ï‹d« v›tsî neu« go¡f¥ nghnw? என்றார் இதோ முடித்து விடுகிறேன் என்று வேங்கடாசலம் விடை தந்து விட்டுப் படிக்கத் தொடங்கினார். பாடலில், கல்லூரி மாணவர்கள், மாணவிகளைக் கேலி செய் வதாக அமைத்திருந்தார். இப்பகுதியைக் கேட்டதும் பாவேந்தர் நிமிர்ந்து அவரைப் பார்த்து, இந்தாப்பா நீ பாடினது போதும், நிறுத்து; உட்கார் என்று வெகுண்டு கூறினார். பாடியவர் நிறுத்தி விட்டு அமர்ந்தார். பாவேந்தர் பேசத் தொடங்கினார். v‹d âÄU ïUªjh gr§f v«ãŸisfis¡ nfÈ brŒth§f?, இந்தாம்மா! உங்களுக்குச் சொல்றேன், ஆளுக்கொரு கத்தி வச்சுக்குங்க; எவனாவது கேலி கிண்டல் பண்ணினா கத்தியைஎடுத்து ஒரே சொருகு சொருகுங்க. அப்பத்தான் அடங்குவாங்க - எதிரில் இருந்த மாணவிகளை நோக்கிக் கனல் தெறிக்கப் பேசினார். அவர் பேசும்போது இடையிலிருந்து கத்தியெடுப்பது போலவும் கையை ஓங்கிச்சொருகுவது போலவும் நடிப்புணர்ச்சி யுடன் பேசினார். அவையில் ஒரே அமைதி. எவ்விடத்திலும் துணிந்து பேசுவார்; எதையும் எண்ணிப் பாரார். சரியென்று பட்டதை வெடிக்கத் தயங்கார். இஃது அவருக்கு இயல் பாகவே அமைந்த பண்பு. தடையும் வேகமும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னமராவதி என்ற ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி, நம் கவிஞரை அழைத்திருந்தனர். தற்செயலாக நான் அங்குச் சென்றிருந் தேன். மாணவர்கள் சிலர் வந்து, கவிஞர் கடுமை யாகப் பேசிவிடப் போகிறார்; எங்களுக்குத் தொல்லைகள் நேரினும் நேரலாம்; அதனால் சற்று அமைதியாகப் பேசச் சொல்லுங்கள் - என்று என்னிடம் வேண்டினார். கவிஞர் இயல்பு எனக்குத் தெரியும். அதனால் முதலில் நான் மறுத்தேன். மாணவர் கெஞ்சியதால் அவர்களுடைய நிலைக் கிரங்கி இசைந்தேன். கவிஞர் வந்தவுடன் மிகவும் பணிவாக அவ் வேண்டுகோளைக் கூறினேன். ம்ம், பார்ப்போம் என்றார். கவிஞர் மேடையேறினார். பேசத் தொடங்கிப் பல கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துமொழிந்தார். அனைவர்க்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி, பேச்சு அமைதியாக அமைந்து விட்டதே என்று. இறுதியாகத் தமிழுணர்வு பற்றிப் பேசத் தொடங்கினார். பள்ளி களில் அந்நாளில் ஒரு குழப்ப நிலையிருந்தது. மாணவர் வருகையைப் பதிவு செய்யும்போது ஆசிரியர், மாணவர் பெயரை அழைப்பார். மாணவர்கள் பிரசண்ட் சார் என்று கூறுவது வழக்கம். தமிழுணர்வுள்ள மாணவர்கள் உளேன் ஐயா என்பர். ஆங்கில வகுப்பு ஆசிரியர்களுக்குத் தமிழிற் சொல்வது பிடிக்காது; கண்டிப்பார் இப்படியொரு நிலையிருந்தது அப்போது. இச்செய்தி பாவேந்தருக்கும் எட்டிவிட்டது. தமிழுணர்வு பற்றிப் பேசிக் கொண்டே வந்தவர். கடுமையாகப் பேசவேண்டா மென்று எங்கிட்ட வந்து சொல்றானே, எப்படிப்பேசாமலிருக்க முடியும்? v« ãŸis, cns‹ Iah v‹W jÄÊny brh‹dh, brhšy¡ TlhJ‹D f©o¡»wtid¢ nrh£lhny mo¡fhk, mt§ »£l mikâah v¥go¥ ngrwJ? என்று சீறி விட்டார். ஆசிரியர் முகங்கள் சுருங்கிவிட்டன. நாங்கள் ஒன்றும் சொல்லா திருந்தால் பேச்சு அமைதியாகவே சென்றிருக்கும். கடுமையாகப் பேச வேண்டாமென்று தடை கூறியதால் அவர் பேச்சு, திசை திரும்பிவிட்டது. உண்மைக் கவிஞனுடைய உள்ளப் போக்குக்கு - உணர்ச்சிக்குத் தடைவிதித்தால், அத் தடையை உடைத்து எறியும் வேகம் பிறந்துவிடும் என்னும் உண்மையை அன்று அறிந்து கொண்டேன். பாவேந்தரும் உலக நடைமுறையும் உலக நடைமுறைக்கும் பாவேந்தருக்கும் வெகு தொலைவு. 1947ஆம் ஆண்டு என்று கருதுகிறேன். சென்னையில் பிராட்வே என்றழைக்கப்பட்ட பிரகாசம் சாலைக்கு அடுத்த தெருவிலுள்ள ஒரு வீட்டில் பாவேந்தர் தங்கி இருந்தார். அப்பொழுது கவிஞர் மு.அண்ணாமலையும் அவருக்குத் துணையாக உடனிருந்தார். நானும் நா.அறிவழகன் என்பவரும் தொடர்பு கொண்டிருந்த அழகு என்னும் இதழில் வெளியிடுவதற்காகப் பாவேந்தரிடம் கவிதை பெற்று வரச் சென்றோம். கவிதை வேண்டினேன். இதழை அனுப்பு; பார்த்துவிட்டுக் கவிதை தருகிறேன் - என்று கூறிவிட்டார். அவ்வமயம், கல்கியிதழில் குயில் விளம்பரம் வெளியிடும் பொருட்டு, விளம்பரம் ஒன்று எழுதி, இதைக் கல்கியிடம் கொடுத்து வா என்று அங்கிருந்தவரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அவர், அங்கேயே தயங்கி நின்றார். ஏன் நிற்கிறாய்? என்று கவிஞர் வினவ, பணம்...... என்று தயக்கத் துடன் இழுத்தார். ‘vj‰F¥ gz«? அதெல்லாம் ஒண்ணுங் கேக்கமாட்டான்; பாரதியைப் பற்றி எழுதனும்னு என்னைக் கேட்டிருக்கான். சும்மா கொண்டு போய்க் கொடு, நான் சொன்னேன்னு சொல்லிக் கொடு, அப்படி மீறிக்கேட்டால் இதை அவன் முகத்திலே வுட்டுக்கடாசு என்று பத்து உரூவாத் தாளொன்றை வீசியெறிந்தார். பணம் இல்லாமல் யாராவது விளம்பரம் வெளியிடுவார்களா? அதுவும் பத்து உரூவாவுக்கு வெளியிடுவார்களா? கல்கி இதழோ மிகப் பெரிய அளவில் விற்பனையாகும் இதழ். அவ்விதழில், பணம் பெறாமல் வெளியிட முன் வருவார்களா? என்றெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியவில்லை கவிஞருக்கு! நாடு நமக்குச்சொந்தம்; நாட்டில் உள்ளவை அனைத்தும் நமக்குச் சொந்தம்; நாம் சொன்னது நடக்க வேண்டும் என்ற கற்பனை உரிமை கொண்டவர்கள் கவிஞர்கள். பாட்டுத் திறத் தாலே வையத்தைப் பாலிக்கும் வேந்தர்களல்லவா கவிஞர்கள்? ஆம், இவரும் பாவேந்தர்தானே. அதனால் காசில்லாமல் விளம் பரம் வெளியிடுமாறு ஆணையிடுகிறார். கவியரங்கொன்றிற் கலந்துகொள்ளுமாறுதிருச்சிவானொலிநிலையத்தார்பாவேந்தருக்குஅழைப்புவிடுத்தனர்.பெற்றுக் கொண்ட கவிஞர், இருநூறு உரூவா தந்தால் வருவேன் என்று மறுமொழி எழுதிவிட்டார். இருநூறு கொடுப்பது வானொலியார் கணக்குக்கு ஒத்து வராது, கவிஞருக்கு இதை எழுதி இசைய வைக்கவும் இயலாது. என்ன செய்வதென்று அவர்களுக்கு ஒன்றுந் தெரியவில்லை. இறுதியாகக் கூடிச்சிந்தித்துஒருமுடிவுசெய்துஇருநூறுதருவதாகஎழுதிவிட்டுப்பதிவுசெய்துகொள்வதற்காகப்பாரதியாரைப்பற்றிப் nபசntண்டும்எ‹றும்tண்டிக்fhண்டனர்.கவிPU« இசைவளித்து É£டார். 14-1-1957-ïš கவியரங்கம், தலைவர், செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதச் செட்டியார். அவ்வரங்கில் யோகி சுத்தானந்த பாரதியார் முதலானோர் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டேன். பாவேந்தர் பாடி முடித்துக் கீழே அமர்ந்தார். அடுத்து சுத்தானந்த பாரதியார் பாட எழுந்து சுதிப் பெட்டியை தோளில் மாட்டிக் கொண்டு, சுதி போடத் தொடங்கினார். கீழே அமர்ந்திருந்த பாவேந்தர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். அப்பார்வையில் எவ்வளவு பொருள் நிறைந்திருந்தது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். சுத்தானந்த பாரதியார் இசையுடன் பாடத் தொடங்கினார். பாவேந்தர் நெற்றி சுருங்கியது. முகம் மாறுபட்டது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார். தலைமை தாங்கிய செந்தமிழ்க் காவலரிடம் வளைந்து நின்று வெளியிற் செல்ல ஆசிரியரிடம் மாணவர் ஆள்காட்டி விரலை மடக்கிக் காட்டி ஒப்புதல் கேட்டார். தலைவர் சரி என்பது போலத் தலையசைத்தார். வெளியிற் சென்ற கவிஞர் திரும்பி உள்ளே வரவே இல்லை. கவியரங்கம் நிறைவு பெற்றது. கலைந்து சென்றோம். கவிஞர் ஓர் அறையில் வெண்சுருட்டுப் புகையினூடே அமர்ந் திருந்தார். ‘v‹d Iah ï§nf jÅna mk®ªâU¡»Ö®fŸ? என்றேன். ஆமாப்பா, அந்த ஆளு சுதிப் பெட்டியைப் போட்டுக்கிட்டு வீச்சு வீச்சென்று கத்துறான். அதுனாலேதான் வெளியே வந்திட்டேன் என்றார். பின்னர், எதையோ நினைந்து கொண்டவர் போல் இந்தாப்பா, ரேடியோக் காரங்க செக் தருவாங்க, வாங்கிக்கோ, நீ பாட்டுக்குப் போயிடாதே என்று கூறினார். தம்மையே மறந்து விடும் அவர். எனக்கு இப்படி அறிவுறுத்தினார். நீங்கள் வாங்கிக் கொண்டீர்களா என்றேன்? இல்லை இனிமேல் தான் வாங்கணும், பாரதியாரைப் பற்றி நான் பேசணூமாம், அதைப் பதிவு செய்துக்கப் போறாங்களாம். அதுக்காக எதிர் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று அமைதியாகப் பேசினார். சிறிது நேரத்தில் பாவேந்தர் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டார். வானொலி நிலையத்தில் பணியாற்றும் மாறன் அங்கு வந்தார். அவர் சொன்னார், கவிஞருக்கு எழுதிக் கேட்டோம். இருநூறு கொடுத்தால்தான் வருவேன் என்று விடையெழுதி விட்டார். எங்கள் நிலைய விதிப்படி இருநூறு கொடுக்க இயலாது அவரையும் விட்டுவிட எங்களுக்கு மனமில்லை. அதனால் பாரதி யாரைப் பற்றிப் பேசுமாறு வேண்டிக் கொண்டோம். அவரும் இசைந்துவிட்டார். கவிதைக்கும் பேச்சுக்கும் இருநூறு என்பது எங்கள் கணக்கு, ஆனால் கவிதைக்கு மட்டும் இருநூறு, பேச்சு இலவசம் என்பது கவிஞரின் நினைப்பு, எப்படியோ எங்களுக்குச்சிக்கல் இல்லாமல் காரியம் முடிந்துவிட்டது, என்று பெருமிதப்பட்டுக் கொண்டார். பாவேந்தருக்கும் உலக நடைமுறைக்கும் எவ்வளவு தொலைவு என்பது இந்நிகழ்ச்சியால் நன்கு தெளிவாகிறதல்லவா? வேகக் கட்டுப்பாடு 1947-1949ஆம் ஆண்டுகளில் நான்சென்னையிற் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது பல முறை பாவேந்தரைக் காணும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். சில நிகழ்சசிகள் நினைவிற்கு வருகின்றன. தமிழாசிரியர் கழகத்தை இயக்கி வந்த தமிழ் நெறிக் காவலர் மயிலை சிவ.முத்து அவர்களுடன் மாணவர் மன்றத் தலைவர் டாக்டர். தருமாம்பாள் இல்லத்திற்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. பாவேந்தரும் அங்கு அடிக்கடி வருவார். தமிழா சிரியர் கழகச்சார்பில், கல்வியமைச்சர் அவினாசி லிங்கனாரிடம் ஓர் அறிக்கை தருவதற்காகத் தமிழ் நெறிக் காவலர், பெருந் தன்மையுடன் ஓர் அறிக்கை எழுதித் தருமாம்பாளிடம் காட்டு வதற்காகச் சென்றார். நானும் உடன் சென்றேன். அங்கே பாவேந்தரும் அமர்ந்திருந்தார். அறிக்கையைப் பாவேந் தரிடம் முதலிற் காட்டினார். தமிழ் நெறிக் காவலர் சிவ. முத்து அவர்கள் எவர் மனமும் புண்படப் பேசார்; சிறிய ராகினும் பெரியராகினும் மதிப்புடன் தான் பேசுவார். அத்தகைய இயல்பின ராகிய தமிழ் நெறிக் காவலர் எழுதிய அறிக்கை - அதுவும் அமைச் சருக்கு எழுதிய அறிக்கை எவ்வாறிருக்கும் என்பதைக் கூற வேண்டு வதில்லை. பாவேந்தரின் இயல்பு நமக்குத் தெரியும். வேகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர். அறிக்கையை அமைதியாகப் படித்துப் பார்த்த கவிஞர் அமைச் சருக்கு எழுதும் அறிக்கையில் இவ்வளவு வேகம் கூடாதே; தமிழா சிரியர் கழகம் கொடுக்கும் அறிக்கை யல்லவா? சிலசில இடங்களில் மாற்றிக் கொள்ளுங்களேன் என்று அறிவுரை புகன்றார். வேகத்தை அவரால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை யென்றாலும், மற்றவர் வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவற மாட்டார். அவ்வேகத்தால், நன்மைக்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற இரக்கவுணர்வே, அவரை அவ்வாறு தடை விதிக்கச் செய்தது. 31-12-1955ஆம் ஆண்டு, காரைக்குடி அழகப்பர் கல்லூரிக் கவியரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க வருகை தந்தார் பாவேந்தர். காலையிலேயே வந்துவிட்டார். மாடியில் ஓர் அறையில் தங்கியிருந்த அவரை காணப் பேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரும் மற்றும் நண்பர் சிலரும் சென்றோம். நாங்கள் உள்ளே நுழையும் போது பாவேந்தர், இடக்கையை மடக்கித் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்திருந்தார். வணக்கம், வணக்கம் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு வராக நுழைந்தோம் ம்ம், ம்ம், என்று சொல்லிக் கொண்டே படுத்திருந்தவர் பலர் வருவதைக் கண்டு எழுந்து அமர்ந்தார். பாருப்பா, அங்கே யிருந்து வரச் சொன்னவங்க தலைக்கு ஏதாச்சும் வேணூமான்னு கேட்கலே; விட்டுட்டுப் போயிட்டாங்க, கையை மடக்கிப் படுத்துக் கொண்டேன், கை வலிக்குது என்று சலிப் புடன் கூறினார். அவருக்கு அருகிலிருந்த மேசை மேல் ஒரு தோற் பெட்டியும் அதன் மேல் தலையணையுடன் கூடிய சமுக்காளமும் இருப்பதை நான் சுட்டிக் காட்டி ஐயா, இதையெடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டிருக்கலாமே என்றேன். அட ஆமாப்பா, நான் கொண்டு வந்ததுதான். மறந்துட்டேன், என்று சிரித்துக் கொண்டார். சிரிப்பில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அவரே கொணர்ந்த தலையணையை மறந்து விட்டார். எதிரில் இருந்தும் பாராமல் இருந்திருக்கிறார். கை வலிக்கப் படுத்துக் கொண்டிருக்கிறார். வலியெடுத்த பின்னரும் நினைவு கொள்ளாமல் தம்மைக் கவனிக்கவில்லை என்று மற்றவர் களைக் குறையும் கூறுகிறார். இந்தக் குழந்தையுள்ளத்தை-தம்மை மறந்த நிலையை, இவரைத் தவிர வேறு எவரிடங்காண இயலும்? மாலையிற் கவியரங்கம் நடைபெற்றது. எண்ணம் என்ற தலைப்பில் நான் பாடினேன். நிகழ்ச்சி முடிந்தது. தனியே சந்தித்தோம். என்னை miH¤J¥gh£L நல்லா இருந்தது, இவ்வளவு வேகம் வேண்டாம், கொஞ்சம் குறைப்பது நல்லது, பிரின்சிபால் (ஏ. என். தம்பி) மலையாளியா இருந்தாலும் தமிழுக்கு உதவியாய் இருக்கிறாரு, நீ வேகமாகப் பாடி, அதனாலே அவருக்கு ஏதாவது தொந்தரவு வரக்கூடாது இல்லையா? கொஞ்சம் கட்டுப்படுத்திக்கோ என்று அறிவுரை கூறினார். நான் அப்படியொன்றும் வேகமாகப் பாடிவிட வில்லை. எனினும் பிறருக்குத் தொல்லைகள் வரக்கூடாதே என்ற உயர் எண்ணத்தால் அந்த எரிமலை, இந்தச்சிறிய தீப்பொறிக்கு அமைதி பற்றிக் கூறியது. சேரதாண்டவம் சேரதாண்டவம் பற்றிய செய்தி, பாவேந்தருடன் நேரடித் தொடர்பு உடையதன்று; எனினும் இங்கே நினைவு கூரக் கடமைப் பட்டுள்ளேன். சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு மாடி வீட்டில் தங்கி, டி.என். இராமன் அவர்கள் குயில் இதழை நடத்திக் கொண்டிருந்தார். நானும் கவிஞர் தமிழ் ஒளியும் அதில் பணி யாற்றிக் கொண்டிருந்தோம். பாவேந்தருக்கும், இராமனுக்கும் மாறுபாடு ஓங்கி நின்ற காலம் அது. இருவரும் இணைந்திருந்த பொழுது சங்க நூலில் வரும் ஆட்டனத்தி, ஆதிமந்தி பற்றித் தாம் புனைந்த கற்பனைக் கதையைப் பாவேந்தர், இராமனிடம் கூறியிருந்தார். அதை அப்படியே நினைவில் வைத்திருந்த இராமன் காப்பியமாக்கிக் தருமாறு என்னிடம் வேண்டினார். இது பெருங்குற்றம், பாவேந் தருக்குச் செய்யும் வஞ்சனை என்று கூறி மறுத்துவிட்டேன். தமிழ் ஒளி பாடித்தர இசைந்துவிட்டார். பாவேந்தரிடம் சிறிது காலமாவது பயின்ற நீங்கள் இதற்கு ஒப்பலாமா? என்று தமிழ் ஒளியைக் கடிந்து கொண்டேன். நல்ல வேளையாகப் பாவேந்தரே அக்கதையைச் சேரதாண்டவம்என்ற நூலாக வெளியிட்டு விட்டார். கவிதையும் இலக்கணமும் சமுதாயத்தில் மறுமலர்ச்சி காணத் துடிதுடிக்கும் புரட்சிக் கவிஞர் கவிதையில் இலக்கண நெறி பிறழ்தல் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பவர். கவியரங்குகளில் அடிக்கடி இதனை அழுத்தமாக வற்புறுத்திக் கூறுவார். நடந்த நிகழ்ச்சி யொன்றைக் கூறி, அவருடைய உறுதிப்பாட்டை விளக்குவது பயனுடையதாகும். திராவிடகழகத்தில் உறுதியான பற்றுடைய போராசிரியர் ஒருவர் புதுக்கோட்டையில் தங்கியிருந்தார். தமிழ்மொழிக்காகப் பல போராட்டங்கள் நிகழ்த்திப் பல இன்னல் களுக்கு ஆளானவர். பாவேந்தரிடம் நீங்காப் பற்றுடையவர். இருவரும் நன்கு அறிமுகம் ஆனவர்கள். பேராசிரியர் தமக்கு நேர்ந்த இடர்ப்பாடுகளை ஒரு சிறு கவிதை நூலாக்கி, அதற்கு மதிப்புரை வாங்கிவருமாறு, கரந்தைக்கு வந்திருந்த பாவேந்தர்பால் ஒருவரை விடுத்தார். சென்றவர், பாவேந்தரைச் சந்தித்து, நூலைத்தந்து மதிப்புரை வேண்டினார். கவிஞர் அந் நூலைப்படித்துப் பார்த்தார். குற்றியலுகரம் பிரிக்கப்பட்டு, அஃது ஓர் அசையாகவும் அலகிடப்பட்டிருந்தது. இலக்கண நெறி கெட்டி ருப்பது கவிஞருக்குப்பிடிக்கவில்லை. இது யார் எழுதினது? என்று அதட்டினார். மதிப்புரை பெற வந்தவர், நூலாசிரியர் பெயரைக் கூறினார். எவன் எழுதினா லென்ன? எழுதியிருக்கிற அழகுக்கு மதிப்புரை வேறு வேண்டுமோ? என்று தாளைத் தூக்கி எறிந்துவிட்டார். தமக்கு வேண்டியவர் என்று கூடப்பாராமல் இவ்வாறு கடிந்து கொண்டார். கவிஞருக்குத் தமிழின் நலந்தான் முதன்மையே தவிர, வேண்டியவர் வேண்டாதவர் என்பது பற்றிக் கவலையில்லை. மற்றொரு சமயம் பாவேந்தருடன் உரையாடிக் கொண் டிருந்த பொழுது அக்காலை வெளி வந்து கொண்டிருந்த கவிதை களைப் பற்றிச் சில கருத்துகளை வெளிப்படுத்தினார். டீல் விட ஆசைப் படுகிறான்; ஆனா, சின்ன நூல் கண்டை வச்சிக்கிட்டு டீல் விட ஆசைப்படுகிறான். நூல் கண்டு பெரிசா இருக்கனு மேன்னு கவலைப்படமாட்டேங்கிறான் என்று கூறினார். இளமையில் காற்றாடிக் கலையில் வல்லவராதலின், கவிதை புனைவார்க்கு அந்த உவமை வாயிலாக அறிவுரை கூறியிருக் கிறார் என எண்ணி மகிழ்ந்தேன். இலக்கியப் படைப்பில் ஈடுபடுவோர்க்கு இது நல்ல அறிவுரை. நூல் கண்டு பெரிதாக இருந்தால்தான் காற்றாடி உயரத்தில் பறக்கும். மற்றவருடன் போட்டி போட்டு வெற்றி பெறவும் முடியும். சிறிய கண்டாக இருப்பின் மற்றவருக்கே வெற்றி கிட்டும். அதுபோலப் பிறரினும் மேம்பட்ட கவிஞனாகி வெற்றி வாகை சூட வேண்டுமெனில் போட்டி மனப்பான்மையுடையவன், நிறைந்த நூலறிவு பெறுதல் வேண்டும் என்பதை அவ்வாறு சுட்டியிருக்கிறார். காற்றாடிக்காரன் வெற்றி பெற நூலறிவு மிகுதியாக வேண்டும் என்பது பாவேந்தருடைய உள்ளக்கிடக்கை. குழந்தை மனங் கொண்டவர் காரைக்குடி அருகில் உள்ள கானாடுகாத்தான் என்னும் ஊரில், வை. சு. சண்முகம் செட்டியார் என்னும் பெருமகனார் வாழ்ந்தார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். குறுநில மன்னர் போன்ற தோற்றமும் குரலும் உடையவர். கவிஞர் பலருக்கும் பல்லாற்றானும் உதவி செய்யும் இயல்பினர். அவர்தம் இல்லம் அரண்மனை போல இருக்கும். அதற்கு இன்ப மாளிகை என்று பெயர். அவர்க்கு எதிரே சிறிய மேசை இருக்கும். அதன்மேல் மணி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். பெரிய வீடாதலின் எவரையும் அழைக்க விரும்பினால் அதைப் பயன் படுத்துவார். அடிக்கடி பயன்படுத்துவார். பலமுறை உரத்த குரல் கொடுத்து அழைக்க இயலாமையால் அதன் துணை அவர்க்கு இன்றியமையாதது. ஒரு முறை மணி யடித்தால் ஒருவர்; இரு முறையொலித்தால் மற்றொரு வர்; மூன்று முறையென்றால் மற்றொருவர் வருவர். இவ்வாறு பயிற்சியளித் திருந்தார். அம்மாளிகைக்குச் சுப்பிரமணிய பாரதி யார் வந்திருக் கிறார். நம் பாவேந்தரும் அடிக்கடி வருவதுண்டு. சண்முகனார் குடும்பத்துடன் ஒன்றிப் பழகும் நானும் அடிக்கடி செல்வதுண்டு. ஒரு நாள் நான் அங்குச் சென்றிருந்த பொழுது பாவேந்தரும் அங்கிருந்தார். இன்ப மாளிகையின் முகப்புப் பகுதியில் நீண்டு அகன்ற உயரமான பெரியகூடம் ஒன்றிருக்கும். நடுவில் மிகப் பெரிய ஊஞ்சலொன்று தொங்கும். சுவரில் எதிர் எதிராக மிகப் பெரிய நிலைக்கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும். ஊஞ்சலில் ஆடும் பொழுது முழு உருவமும் அக்கண்ணாடிகளில் தெரியும். பாவேந்தர் அவ்வூஞ்சலில் அமர்ந்து மகிழ்ச்சியாக ஆடிக்கொண் டிருந்தார். நானும் உடன் வந்த தமிழண்ணலும் ஓரத்திலிருந்த பத்தியில் அமர்ந்து கொண்டோம். ஆடிக்கொண்டிருந்த பாவேந்தர், புகையிலைக் கற்றை யொன்றை எடுத்துத் தாமே சுருட்டிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு நாங்கள் வியப்புற்றோம். எதற்காகச் சுருட்டிக்கொண் டிருக்கிறார் என்பது விளங்கவில்லை. சிறிது நேரத்தில் அது சுருட்டாக உருவெடுத்தது. அதைப் பற்ற வைத்துக் கொண்டார். ஐயா, முன்பெல்லாம் சிகரெட் மட்டுந்தானே பிடிப்பீர்கள்? என்று வினவினேன். ஆமப்பா, கடைசியா சார்மினார் சிகரெட்டுக் குடிச்சுக் கிட்டு இருந்தேன். குடிச்சுக் குடிச்சு அதிலே காட்டமே தெரியலே, சுருட்டு வாங்கிக் குடிச்சேன். அதிலேயும் காட்டம் இல்லாமல் போச்சு, இப்ப, புகையிலை வாங்கி நானே சுருட்டிக்கிறேன், என்றார். அளவிற்கு மேல் பயன்படுத்துவதால் காட்டம் குறைந்தது போல் அவருக்குத் தோன்றியிருக்கிறது. அவற்றில் காட்டம் எப்பொழுதும் போலவே இருக்கும். இவருக்குக் காட்டம் போதவில்லை அதனால் சுருட்டில் காரம் குறைந்து விட்டது என்று கூறுகிறார். பின்னர், திருக்குறள் பற்றிப் பேச்சு எழுந்தது. பல குறட் பாக்களுக்கு புதிய உரை கூறினார். சிலவற்றிற்கு மறுப்புரைத் தோம். மறுத்தவுடன் வேகங்கிளம்பி விட்டது. ம்ம், அப்படிக் கேளு என்று கூறிக்கொண்டே தொங்கவிட்ட கால்களை மடக்கிக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கூறினார். உரை கூறிய குறட்பாக்கள் நினைவில் நில்லாது போயின. அப்பொழுது அவர் மேற்கோள் காட்டிய பாடல்களும் திவாகர நிகண்டுப் பகுதிகளும் அளவிறந்தன. இவ்வளவு மனப்பாடம் செய்திருக்கிறாரே என்று வியப்படைந் தோம். ‘Óu§f ehjidí« âšiyel uhridí« Õu§» it¤J¥ ãs¡F«ehŸ vªehnsh? என்ற பாடற்பகுதி, அக்காலத்தே எங்கும் பேசப்பட்டது. இது பாவேந்தர் பாட்டென்பது பலர் எண்ணம். பேராசிரியர் ஆ.முத்து சிவன் என்பார் தமது நூலொன்றில், இப்பாடல் பாவேந்தர் பாடலென்று கூறித்தாக்கியெழுதியிருக்கிறார். பாரதிதாசன் நூல்களில் இப்பாடல் யாண்டும் இடம் பெறவி ல்லையென்பதை நான் அறிவேன். எனினும் பாவேந்தரிடம் கேட்டுப் பார்ப்போம் எனக்கருதி, ஐயா, சீரங்கநாதன் எனத் தொடங்கும் பாடல் உங்களு டையதா? என்று வினவினேன். அது என் பாட்டில்லப்பா, எவனோ நல்லாப்பாடியிருக்கிறான் என்று சிரித்துக் கொண்டார். இது 1956ஆம் ஆண்டு நிகழ்ந்ததென்று கருதுகின்றேன். ஆண்டு பல ஆகிவிட்டமையால் மீண்டும் ஒரு திங்களுக்கு முன் கவிஞர் மன்னர் மன்னனுக்கு எழுதிக்கேட்டேன். சீரங்கநாதரையும்.... என்று தொடங்கும் பாடல் வரி பாவேந் தருடையதன்று. நாகை அம்மையப்பன் பாடலில் வருகிறது. அப்படி இது குறித்தும் நான் ஆதாரம் தேடி இருக்கிறேன், என்று 26-7-1987ல் மன்னர் மன்னன் மறுமொழி எழுதியிருந் தார். பாவேந்தர் பாடல்களிற் காணப்பெறும் வேகத்தையறிந்த பலரும், கடவுளர், பீரங்கியால் பிளக்கப்படும் பாடலும் அவருடையதாகத்தானே இருக்கும் என்று மயங்கிவிட்டனர். சிலருக்கு இன்னும் அம்மயக்கந் தீரவில்லை. பிறகு ஒரு பதிப்பகத்தாரைப் பற்றிப் பேசத்தொடங்கினார். கவிதை நூல்களை அழகாக வெளியிட வேண்டும்; அப்போது தான் கவிதையின் பெருமையும் அதிகமாகும். மோசமான தாளில் அச்சிட்டு வெளிவந்தால், எவ்வளவு நல்ல பாட்டாக இருந்தாலும் எடுபடாது. நம்ம பிள்ளை ஒருவன் நம்ம புத்தகங் களை நல்லா-அழகா வெளியிடுகிறான் என்று மகிழ்ந்து கொண்டார். நூல்கள் நல்லதாளில் அழகாக அச்சிடப்பட்டு, நன்கு கட்டடமும் அமைந்திருந்தால் பாவேந்தர் மிகவும் மகிழ்வார். நம்ம பிள்ளை என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பது அப்போது எங்களுக்கு விளங்கவில்லை. உணவுக்குப் பின் மாடிக்குத் துயிலச் சென்றோம். வை.சு.சண்முகனார் கீழ்வீட்டில் படுத்துக்கொண்டார். இரவெல்லாம் துயிலை மறந்து, கவிஞருடன் உரையாடிக் கொண்டிருந்தோம். அஃது எங்களுக்குக் கிடைத்தற்கரிய பேறு; எங்கள் வாழ்நாளில் ஒரு பொன்னாள். மனம் விட்டுப் பேசினார், பழகினார். எம்மை இளைஞர்தாமே என்று கருதவில்லை. அவரும் எம்மையொத்த அகவையினர் போலவே மகிழ்ந்தும் சிரித்தும் பேசிப் பழகினார். ஒரு குழந்தையுடன் பழகுவது போன்ற உணர்வுதான் எங்களுக்கு ஏற்பட்டது. குடியரசு இதழ் பற்றி பிற செய்திகள் பற்றியும் பேச்சுத்தொடர்ந்தது. இரவு 12 மணியாகி விட்டது. கீழேயிருந்து மணியொலித்தது. ஏம்பா இன்னுந் தூங்கல்லையா? பேசினது போதும்; படுத்துத் தூங்குங்க என்ற உரத்த குரலும் மணியொலியைத் தொடர்ந்து வந்தது. இதோ படுத்துவிட்டோம் என்பது மறுமொழி. கவிஞர், சிரித்த வண்ணம், வாயைப் பொத்திக்கொண்டு மெதுவாய்ப் பேசுவோம் என்றார். தாழ்ந்த குரலில் பேசினோம். இடையில் கவிஞரிடம் ஒரு வினா எழுப்பினேன். ‘Iah, gh®¥gÅa v⮥㚠nknyh§» ÉF« Ú§fŸ ghuâjhr‹ v‹W bga® it¤J¡bfh©lJ V‹? என்றேன். சிரித்துக் கொண்டே, நல்லாக்கேட்டே! அந்தக் காலத்திலே அதே சாதியில் பிறந்த ஒருவன் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று துணிந்து பாடினானே! அவனுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் தாசனாயிருக் கலாமே! இது ஒண்ணு போதாதா அவன் சாதிக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்ல? அதனாலேதான் துணிச்சலா, பாரதிதாசன் என்று பேர் வைத்துக் கொண்டேன், என்று விடை தந்தார். அப்பொழுது அவர் முகத்தில் உணர்ச்சி பளிச்சிட்டுப் படர்ந்தது. எங்கள் பேச்சொலி கீழ்வீட்டுக்குச் சென்றுவிட்டது. உடனே மணியொலி வந்தது. இன்னும் தூங்கலையா? ஒரு மணிக்கு மேல் ஆகுது! இன்னும் என்ன பேச்சு? ï¥g¥ gL¡»Ö§fsh ïšiyah? என்ற அதட்டலும் தொடர்ந்து வந்தது. படுத்துட் டோம், படுத்துட் டோம் இது கவிஞர் குரல். சிறிது நேரம் அமைதி. மீண்டும் கவிஞர் பேசத்தொடங்கினார். மெதுவான குரலில் பாரதியாரைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. பாரதியாரிடம் பாவேந்தர் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருக் கிறார் என்பதை அப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டோம். புதுச்சேரியில் பாரதியார் தங்கியிருந்தபொழுது ஒருநாள் காகிதங்களை வைத்துக் கொளுத்திப் பால் காய்ச்சிய விதத்தையும், புகை மண்டலத்தின் ஊடே பட்ட பாட்டையும், கடைசியில் பால் புகை நாற்றம் அடித்துக் குடிப்பதற்குத் தகுதியில்லாமற் போனதையும் சொல்லிசொல்லிச் சிரித்தார். அப்பொழுது பாரதியார், பெண்களின் அருமைப் பாட்டையுணர்ந்து பெருமையுறக் கூறியதாகவும் பாவேந்தர் எம்மிடம் உரைத்தார். பிறகு கவிஞரின் பேச்சு, கவிதையுலகம் திரும்பியது. பயன் படத்தக்க அறிவுரைகளை எங்களுக்கு அறிவுறுத்தினார். கவிதை எழுதுறதுக்கு முன்னாலே நிறையப் படிக்கனும். சில பேர் படிக் காமலே கவிதை எழுதுறான். எதிர்பாராமல் இரண்டொன்று நன்றாக அமைந்து விடுவதும் உண்டு. அதற்காக அவனைப் பாராட்டிவிட முடியாது. தேங்கிய தண்ணீரிலே ஒரு பூச்சி திரியும்; வண்டு மாதிரிக் கருப்பாக இருக்கும்; அது எப்போதும் வேகமாக வட்டமிட்டு வட்டமிட்டுச் சுழன்று சுழன்று ஓடிக் கொண்டே யிருக்கும். சில வேலைகளில், அது சுழல்வது தண்ணீர் மேலே அ. இ. என்று எழுதுவது போலக் காணப்படும். அதைப் பார்த்துவிட்டு ஓ! இந்தப் பூச்சி, அ.இ. என்று எழுதுகிறது பார் என்று யாரும் வியந்து பாராட்டுவதில்லை. அதுபோலவே படிக்காதவன் பாட்டும் தற்செயலாக அமைந்து விடுகிறது. அதை வைத்துக்கொண்டு பாராட்டுவது அறிவுடைமை யாகாது. கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடையார் - என்று குறள் கூறுகிறதே. என விடாது பேசிக் கொண்டிருந்தார். உச்ச நிலைக்குச் சென்ற பாவேந்தரின் குரல், மீண்டுங் கீழ் வீட்டிற்குச் சென்றுவிட்டது. வை.சு. சண்முகனார் வேகமாக நான்கைந்து முறை மணியடித்தார். அதட்டியும் உரத்தும் குரல் கொடுத்தார். கவிஞரே, இப்போ தூங்கிறீரா இல்லையா? eh‹ nky tuQkh? என்று கத்தினார். மடியில் தலையணையை வைத்து அதன் மேல் முழங்கைகளை ஊன்றிப் பேசிக் கொண்டி ருந்த பாவேந்தர், மடியிலிருந்த தலையணையை மெத்தைமேல் வீசி எறிந்தார், தாவி, அப்படியே குப்புற விழுந்தார். தலை யணையில் முகத்தைப் புதைத்துப்படுத்துக் கொண்டார். பெற்றோர்க்கு அஞ்சிப்படுத்துக் கொள்ளும் ஒரு குழந்தை போலக் காணப்பட்டார் அப்பொழுது, பின்னர் அருமையான உறக்கம், அவர்க்கும் எங்களுக்கும். பொழுது புலர்ந்தது; கவிஞர் விழிகளும் மலர்ந்தன. எழுந்து மெத்தையில் அமர்ந்து கொண்டார். பல பேசினார். இரண் டொன்றே நினைவு கொள்ள முடிகிறது. ஒன்று. புத்தகம் வெளியிடுகிற பசங்களுக்குக் கொள்ளையடிக்கிறதே தொழிலாப் போச்சு. நம்ம புத்தகத்தை வெளியிடுறதாச் சொல்லி, ரொம்பப் பணத்தைத் தின்னுட்டான், என்று சலிப்புடன் பேசினார். யாரை முதல்நாள், நம்ம பிள்ளை என்று உரிமை கொண்டாடி னாரோ அதே பிள்ளையைத் தான், கொள்ளையடிக்கிறான் என்று விடிந்த பிறகு சொல்கிறார். புத்தகம் அழகாக வெளி யிடுகிறான். அந்த அளவில் நம்ம பிள்ளை பணத்தைச் சுரண்டுகிறான் - அந்த நிலை வரும்போது கொள்ளைக்காரன் ஒருவனைப் பற்றிப் பாவேந்தர் தீர்ப்புக் கூறினால் அந்தந்த நேரத்திற்கு ஏற்றபடிதான் இருக்கும். ஏற்றபடிதான் என்று சொன்னவுடன் பாவேந்தர் கூறிய இலக்கணக் குறிப்பொன்று நினைவிற்கு வருகிறது சொன்னபடிச் செய்தான் என்று சிலர் எழுதுகின்றனர். அது தப்பு. சொன்னபடி செய்தான் என்றே எழுதவேண்டும். படி என்ற சொல், அப்படிச் செய்தான், எப்படிச்செய்தான் எனச் சுட்டெழுத்து வினா வெழுத்தை அடுத்து வரும்போது மட்டும் வல்லினம் வந்தால் மிகுந்து வரும்; மற்ற இடங்களில் மிகாது என விளக்கிக் கூறினார். அதன் பின்னர், தமிழனுக்கு இனவுணர்வே அற்றுப் போய் விட்டது என்றும் அவ்வுணர்வு மீண்டும் தழைத்தோங்க வேண்டு மென்றும் ஈடுபாட்டுணர்வுடன் எடுத்துக்கூறினார். அப்பொழுது அவர் கூறிய மொழிகள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன. அவர் கூறிய மொழிகள்: அடுத்த தெருவில் ஒரு தமிழன் அடிபடு கிறான் என்றால் இந்தத் தெருவில் உள்ள தமிழன் துடித்துக் கொண்டு ஓட வேண்டாமோ? ஓடி உதவி செய்ய வேண்டாமோ? அதல்லவா இனவுணர்வு! இப்போது எவன் ஓடுகிறான்? எங்கே ஓடுகிறான்? nto¡if gh®¤J¡ bfh©L jhnd ngh»wh‹! இம்மொழிகளை மனம் நொந்து கூறினார் கவிஞர். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள், புதுக்கோட்டை, திருக்குறட் கழகத் தலைவர் அண்ணல். பு.அ.சுப்பிர மணியனார்க்கு மணிவிழா நடைபெற்றது. அண்ணார் அவர்கள் கல்வித் தொண்டே கடவுள் தொண்டு என்ற குறிக்கோள் வாழ்வினர்; குறள் நெறி வழுவாச் சான்றோர், புலவர் பலர்க்கும் கவிஞர் சிலர்க்கும் சடையப்ப வள்ளலாக விளங்கியவர். இவர்தம் பொருட்கொடையாற் பயின்று முன்னேறியோரும் அவரணைப் பால் வாழ்வு பெற்றோரும் கூடி அண்ணலார்க்கு மணிவிழா வெடுத்து மகிழ்ந்தனர். விழாவில் தமிழகத்துச் சான்றோர் பலரும் கவிஞர்களும் அறிவு விருந்தளித் தனர். ஓர் இலக்கிய மாநாடென்று சொல்லும்படி, விழா அவ்வளவு சிறப்புற நிகழ்ந்தது. அவ்விழாவில் கவியரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குமாறு பாவேந்தரை வேண்டினோம். தலைமையுரை கவிதை வடிவில் அமைதல் வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம். கவிஞரும் ஒப்புதல் அளித்துவிட்டார். கவியரங்கில் நானும் பங்கேற்றேன். அறிக்கைகள் சுவரொட்டிகள் வெளியிடப் பட்டன. முதல்நாள் இரவு ஒரு குழப்ப நிலை உருவாகிவிட்டது. பேரறிஞர் அண்ணாவைப் பற்றிப் பாவேந்தர், தமது தாளி கையில் தரக் குறைவாக - இழிமொழிகளால் தாக்கியெழுதி யிருந்தார். அதைப்படித்த புதுக்கோட்டைத் தோழர்கள் கிளர்ந் தெழுந்து விட்டனர். பாவேந்தர்க்கு எதிர்ப்புக் குரல் எழுப்புவதென முடிவும் செய்துவிட்டனர். இச்செய்தி என் செவிக்கெட்டியது. அண்ணாவைப் பற்றி அவ்வளவு இழிவாக எழுதியிருந்தது எனக்கும் வேதனைதான். எனினும் பாவேந்தர்க்கு எதிர்ப்பு நிகழ்ந்துவிடக் கூடாதே என்றஞ்சித் தோழர்களிடம் ஓடிச் சென்று கெஞ்சினேன். தோழர்கள் சினம் அடங்கவில்லை. இறுதியாக ஒன்று சொன்னேன். அண்ணலார் யார்? அனைவராலும் மதிக்கத்தக்க சான்றோர். திருக்குறள் கழகத்தாலும் அவர் தம் தொண்டாலும் புதுக் கோட்டைக்கே புகழ்தேடித் தந்தவர். அவருடைய மணி விழாவிற்குப் பாரதிதாசன் வருகிறார். அங்கே குழப்பம் நடந்தால் சுப்பிர மணியனார் மணிவிழாவில் குழப்பம் என்றுதானே செய்தி வரும். வந்தால், அண்ணலார் மனம் எவ்வளவு புண்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? நம் விழாவிற்கு வந்த கவிஞர் பெருமானுக்கு இப்படி யொரு நிலை நேர்ந்துவிட்டதே! என்று வருந்தி, விழாவிற்கு வர அண்ணலார் இசையமாட்டார். இந்த நிலை உருவாக வேண்டு மானால் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளுங்கள் என்று கூறி நகர்ந்தேன். இதைக் கேட்டதும் தோழர்களுக்குச் சினம் ஆறியது. குழப்பமோ எதிர்ப்போ எதுவும் நிகழவில்லை. காலையில் பாவேந்தர் நீராடி ஆடையணிந்து விழாவிற்குப் புறப்படுமுன் தமது பெட்டியில் எதையோ தேடிக் கொண்டிருந் தார். ஐயா, என்ன தேடுகிறீர்கள்? என்றோம். கவிதை எழுதி வரச் சொன்னாங்க, அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்; காண வில்லை என்றார். எழுதிய கவிதையை வீட்டிலேயே போட்டு விட்டு வந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரியவே, ஐயா, கவிதையில்லையென்றாலும் குற்றமில்லை, உரைநடை யாகவே பேசிவிடலாம் என்று கூறி அழைத்துச் சென்றோம். மணிவிழா நாயகர் அண்ணல் சுப்பிரமணியனாரை ஊர்வலமாக அழைத்து வந்தோம். ஊர்வலத்தில் நம் பாவேந்தர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பர நாதனார், முனைவர் மா. இராச மாணிக்கனார். முனைவர் சி.இலக்குவனார் போன்ற சான்றோர் புடை சூழ அண்ணலார் வந்தார். பாவேந்தர், பூவேலைப் பாடமைந்த செந்நிறச்சால்வையொன்றை அணிந்து அரியேறு போலப் பீடு நடையுடன் வந்த காட்சி, மணிவிழா நாயகர் பாவேந்தரா? சுப்பிர மணியனாரா? என்ற ஐயத்தை உண்டாக்கியது. கவியரங்க மேடையில் இருபுறமும் கவிஞர்கள் புடைசூழ நடுவில் பாவேந்தர் வீற்றிருந்த கோலம் பண்டைப் பாண்டி மன்னன் ஐம்பெருங்குழு, எண்பேராயம் புடை சூழ வீற்றிருந்த திருவோலக்க மண்டபத்தை நினைவூட்டியது. அப்படியொரு கண்ணிறைந்த காட்சியாக இருந்தது. தலைமையுரையில் இலக்கணம் பற்றிய பேச்சே மிகுந்திருந்தது. யாப்பமைதியின்றிப் பாடுங் கவிதைகளைச் சாடினார். அவர் சாடும் பொழுது, குகையிலிருந்து வெளிவரும் அரியேற்றின் முழக்கம் போல இருந்தது. அடுத்த நிகழ்ச்சி தொடர்ந்தது. இந் நிகழ்ச்சிக்குச் செட்டிநாட்டரசர் முத்தையா செட்டியார் தலைமையேற்றார். நிகழ்ச்சி முடிந்தது. செட்டி நாட்டரசர் எழுமுன் பாவேந்தர், முத்தமிழ்க் காவலர் முதலானோர் வேகமாக மேடையேறினர். பாவேந்தர் தமது சால்வையை எடுத்து, இடையிற் கட்டிக் கொண்டு, பணிந்து நின்று பேசினார், மிடுக்கான பார்வையும் நிமிர்ந்த தோற்றமும் கொண்ட பாவேந்தர், இப்படிப்பணிந்து நின்று பேசியதை நான் கண்டதே இல்லை. யாரும் பார்த்திருக்கவும் இயலாது. பாவேந்தர் இவ்வளவு அடக்கவுணர்வுடன் என்னதான் சொல்கிறார் என்று நானும் அருகில் சென்று கேட்டேன். அப்பொழுது தேவநேயப் பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர்தம் மொழிக் கொள்கையில்மாறுபாடு கொண்ட சிலர் அவரைப் பணியிலிருந்து விலக்கிவிடச் சூழ்ச்சிகள் செய்தனர். செட்டி நாட்டரசர் அச்சூழ்ச்சிக்கு ஆட்பட்டுப் பாவாணரை விலக்கிவிடக் கூடாதே என்ற அச்சவுணர் வுடன் கூடிய இரக்கவுணர்வே அவ்வாறு பணிந்து நின்று பேசச் செய்தது. செட்டிநாட்டரசர் கூர்மதியாளர். பாவேந்தர் என்ற வில் வளைகிறது. நாம் விழிப்பாக இருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று கருதிப் பாவாணரைப் பணியிலிருந்து விலக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். பாவேந்தர் பூரிப்போடு மேடை விட்டு இறங்கினார். பாரதிதாசன் ஒரு பிறவிக் கவிஞர், அஞ்சாத் துணிவினர், பெரியார் தொண்டர். பொழுதெல்லாம் கற்பனையுலகில் பறந்து திரியும் வானம்பாடி. கனல் தெரிக்கப் பேசும் போர் மறவர், பெண்மையைப் போற்றும் பெட்பினர், தடைகளை மீறிப் படர்ந்து செல்லும் ஆற்று வெள்ளம், சூதுவாதறியாப் பச்சைக் குழந்தை, உலக நடை முறைகளுக்கு அப்பாற்பட்ட ஒளிக்கற்றை. இலக்கண மணிகள் நிறைத்து வைக்கப்பட்ட பொற்பேழை, வேகந்தடுத் தாளும் வித்தகர், பெருமிதங்குன்றாப் பீடு நடையார், பிறர் நலங்காக்கப் பணிந்துபோகும் பெற்றியர், பாட்டுச் சுரக்கும் வற்றா ஊற்று - என்று இன்னோரன்ன இயல்பு களை, அவருடன் தொடர்பு கொண்ட சில நிகழ்ச்சிகளால் நான் தெரிந்து கொண்டேன். 11 அரங்கக் குயில் தமிழகத்து மாவட்டங்கள் அனைத்திலும் நிகழ்ந்த பாட்டரங்கு களிலும் வானொலிக் கவியரங்குகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டிருக்கிறேன். தலைமை ஏற்றும் பாடியிருக்கிறேன், பிறர் தலைமையிலும் பாடியிருக்கிறேன். அரங்கேறிய முடியரசன் பாடல்களில் ஒன்றும் சோடை போனது கிடையாது எனத் தமிழண்ணல் குறிப்பிடுவார். பாராட்டும் புகழும் கிடைத்தது உண்மைதான் என நான் கூறுதலினும் பிறர் கூறுதலே பொருத்த முடைத்து. எனினும் நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. அஃது என்ன? அப்புகழினும் பிறிதொரு புகழ் எனக்குக் கிட்டியது என்பதைக் குறித்தற் பொருட்டேயாகும். பல அரங்குகளில் நிகழ்ந்தனவற்றுட் சிலவற்றை ஈண்டுக் காண்போம். குடியரசு நான் தலைமைப் பொறுப்பேற்ற அரங்குகளில் பாடிய பாவலர் என்னை விளிக்கும் பொழுது குடி அரசே! காரைக் குடியரசே என நயம்பட விளித்துப் பாடுவார். இதனைச் செவி யேற்ற மக்கள் குடி என்னும் சொற்குப் பிறிதொரு பொருள் கொண்டு, நான் குடிகாரன் என்று முடிவு கட்டி விட்டனர். அக்காலங்களில் உடல் நலங் குன்றி யமையால் தடுமாற்றத்துடன் நடந்து செல்லும் என்னைக் கண்டோர், குடிகாரன் என்பதை உறுதிப் படுத்தி விட்டனர். அயலூர்களில் என் நண்பர் பழநியிடம் பலர் வந்து, நம்ம முடியரசன் எந்த நேரமும் ஏன் குடித்துக் கொண்டு கெடுகிறார்? என்று வருந்தியுள்ளனர். நண்பர் மறுத்துக் கூறியும் அவர்கள் நம்பவில்லை. நல்லகவிதைகளை எழுதுகிறார்; குடிக்காமல் இருக்க முடியாதே; உங்களுக்குத் தெரியாமற் குடிப்பார் போலும் என்று கூறியிருக்கின்றனர். குடித்தாற்றான் நல்ல கவிதை வரும் என்பது அவர்கள் வகுத்துக் கொண்ட இலக்கணம். வெள்ளி முடி மதுரைத் திருவள்ளுவர் கழகச் சார்பில் நிகழ்ந்த பாட்டரங்கில் நான் தலைமையேற்றேன். பாவலர் ஒருவர் பாடுங்கால், வெள்ளி முடியரசே என விளித்துப் பாடினார். என் தலைமுடி நரைத்துள்ள மையை நகைச் சுவையாக அவ்வாறு சுட்டினார். வெள்ளிமுடி மட்டுமன்று; தங்க முடியுடையேன் என்று நான் கூறினேன். தங்கத்தால் ஆகிய முடி என ஒரு பொருள். தலையில் தங்கமுடியு டையவன் என மற்றொரு பொருள். நரைத்தாலும் உதிர்ந்துவிட வில்லை என்பது கருத்து. அவ்வரங்கில் வள்ளல் வெள்ளைச்சாமி நாடாரும் அமர்ந்திருந் தார். திருக்குறள் நன்கு பயின்றவர்; திருக்குறள் பரவ வேண்டு மென்றும் கருதுபவர். ஆதலின் அவரைப் பாராட்டக் கருதி, இவர் பொருளை நாடமாட்டார்; புகழை நாடமாட்டார்; குறளை நாடுவார் என்ற பொருளில், இந்நாடார் பொருள் நாடார், புகழ் நாடார், குறள் நாடுவார் என நகைச்சுவையாகக் குறிப் பிட்டேன். அதற்கு அவர் தலைவர் என்னைப் பொருள் நாடார், புகழ் நாடார் என்று குறிப்பிட்டார். அது முழுப் பொய்; நான் பொருளை நாடுபவன், புகழை நாடுபவன், குறளையும் நாடுபவன் என்று சுவைபட மொழிந்தார். நானும் விட்டுவிடவில்லை. நானும் மறுமொழி தந்தேன். வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் குறிப்பிட்ட பொருளில் நான் கூறவில்லை. பொருளுடைய நாடார். புகழுடைய நாடார் என்று தான் குறிப்பிட்டேன் என அவையை நோக்கி நான் கூறியதும் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம். காரைக்குடியில் நிகழ்ந்த அண்ணாவிழாவில் நான் தலைமை ஏற்ற பொழுது மீண்டும் ஒருவர் வெள்ளி முடியரசே என விளித்தார் என்னை வெற்றி முடியரசே என விளித்து எள்ளி நகையாடினார். அடுத்த ஆண்டு, தலைமை தாங்கத் தலைமையேற்று வருவேன் (தலை + மை) என்றேன். மை தடவி விடின் வெள்ளி முடியெனச் சொல்ல முடியாதல்லவா? முக்கோட்டு நாமம் தஞ்சையில் கம்பர் விழா. கம்பன்வளர்ந்த கதை என்பது தலைப்பு. தான் வளர்ந்த கதையைக் கம்பன் கூறுவதாகக் கவிதை புனைந்திருந்தேன். உள்ளம் விரும்பி ஒவ்வோர் இடங்களிலே, வள்ளல் சடையப்பன் வளர் பெயரைப் பொறித்திருந்தேன், பொறித் திருந்த காவியத்தைப் பூவுலகோர் ஏற்பதற்கு, நெறித் துறையில் அலைமோதும் நீளரங்கத்தலத்துறையும். முக்கோட்டு நாமத்தார் முன் வைத்தேன் என்று கம்பன் புகல்வதாகப் பாடினேன். அவை நடுவில் ஒருவர் எழுந்தார். குடுமித்தலையர்; திருமண் நெற்றியர்; கல்லூரிப் பேராசிரியர். அவர் சிவந்த விழிகளுடன், முக்கோட்டு நாமம் என்றால் என்ன? என்றார். மூன்று கோடுகளைக் கொண்ட நாமம் என்று நெற்றியில் கோடிட்டுக் காட்டினேன். அதை அவ்வாறு சொல்லியிருப்பது தவறு என்று பேராசிரியர் மறுத்துரைத்தார். தலைமை தாங்கிய சா. கணேசன் அவர்கள் எழுந்து அது கவிஞரின் விருப்பம். உங்களுக்குத் தடையெழுப்ப உரிமையில்லை. விருப்பமிருந்தால் இருந்து கேளுங்கள். இல்லையென்றால் எழுந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார். பேராசிரியர் அமர்ந்துவிட்டார். தலைவர் என்னைப் பாடுக என்றார். இவ் வெதிர்ப்புக்கும் கம்பன் கூறுவதாக அமைந்திருந்த அடுத்த வரிக்கும் மிகவும் பொருத்தமாகிவிட்டது. ‘m‹nw v⮤jh® v⮥ò¡fh mŠáLnt‹? என்ற வரியை நான் பாடியதும் ஒரே சிரிப்பு! ஒரே கை தட்டல். நாமத்தார் எழுந்து வெளியேறிவிட்டார். அப்பாடல் சில வரிகள் நீக்கப்பட்டுக் கம்பன் குரல் என்ற தலைப்பில் முடியரசன் கவிதைகளில் வெளியாகியுள்ளது. (ï¥ghlÈš ‘o.nf.á., சொ.முருகப்பர், சா.கணேசன், பேரறிஞர் அண்ணா முதலியோர் என் தோழர்கள் என்று கம்பன் கூறுவதாகக் குறிப்பிட் டுள்ளேன். இப்பகுதியைப் படித்துவிட்டுக் கவியரசர் உள்ளத்தை முடியரசர் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளார் என முடியரசன் உள்ளத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என ஆனந்த விகடனில் ã.ஸ்ரீ அவர்கள் மதிப்புரை எழுதியுள்ளார்) முருகன் என் தாய் குன்றக்குடியில் விசாகத் திருநாள். கவியரங்கம் ஏற்பாடாகி யிருந்தது. முருகன் என் தாய் என்னும் தலைப்பிற் பாட அழைப்பு வந்தது. நான் மறுத்துவிட்டேன். அப்பொழுது இராமகாதை பதிப்பிற்காகச் சொ.முருகப்பனாருடன் அமராவதிபுதூரில் இருக் கிறேன். கவியரங்கத்துக்கு ஒத்துக் கொண்டீர்களா என்று முருகப் பனார் வினவினார். மறுத்துவிட்டேன் என்றேன். ஏன்? என்றார். என் கொள்கைக்கும் தலைப்புக்கும் ஒத்து வராது. அதனால் மறுத்தேன் என்று மறுமொழி கூறினேன். உங்களைப் பெருங்கவிஞர் என்று எண்ணியிருந்தேன். இனி அக்கருத்தை மாற்றிக் கொள்கிறேன் என்று என் மானவுணர்ச்சியைத் தூண்டி விட்டார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று நான் வினவ, ஆமாம், எந்தத்தலைப்பைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு தன் கருத்திற்கேற்ப அதைப் பாடுபவன் தானே பெருங் கவிஞன் என்றார். அவர் கூறியது சரியான அறைகூவலாக எனக்குத் தோன்றியது. உடனே அழைக்க வந்தவரிடம் ஒப்புதலை அறிவித்து விட்டேன். எனக்கேற்பப் பாடிக் கொண்டு, பாடலுடன் குன்றக் குடிக்குச் சென்றேன். அரங்கு தொடங்கிவிட்டது. உள்ளே புகுந்தால் முருகன் திருவுருவத்தின் முன் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.சுப்பிரமணிய பிள்ளை, கலைமகள் ஆசிரியர் கி.வா.சகன்னாதன் போன்ற பெருமக்கள் அரங்கில் சட்டை யணியாமல் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்துப் போனேன். நானும் சென்று வரிசையில் நின்றேன். எதிரில் நின்று கொண் டிருந்த தவத்திரு அடிகளார், தம் உடம்பைத் தொட்டுக் காட்டிச் சாடை செய்தார். எனக்கொன்றும் விளங்கவில்லை. மற்றொருவர் வந்து, சட்டையைக்கழற்றுமாறு சாமி சொல்லுது என்றார். வெற்றுடம்புடன் கூட்டத்தில் நிற்கக் கூச்சப்படுவேன். சிற்பச் சிறப்புடைய கோவிலைக் காண நண்பர்களுடன் செல்லுங்கால், சட்டை கழற்ற வேண்டுமென்று எவரும் கூறினால், நான் மட்டும் வெளியில் நின்றுவிடுவேன். கூச்சந்தான் காரணம். சிறுபிள்ளை முதல் இப்படியே பழக்கப்பட்டவன் நான். அதனால் அரங்கினின்று வெளியேறிவிட்டேன். புலவர் அன்பு கருணையானந்தர் என்னைத் தொடர்ந்து வந்து அமைதி கூறி உள்ளே வருமாறு அழைத்தார். நான் இசைந் திலேன். அவரும் விடவில்லை. கெஞ்சிக் கெஞ்சி என்னை உடம் படுத்தி விட்டார். அவர் தோளில் இருந்த பெரியகதர்த்துண்டைத் தந்து, இதைக் கட்டிக் கொண்டாவது வாருங்கள் என்று கெஞ்சியதும், அதை வாங்கி நீராடச் செல்லும் மகளிர் கட்டிக் கொள்வது போலக் கட்டிக் கொண்டு சென்று பாடினேன். அடிகளார் அகம் மகிழ்ந்தார். அரங்கிற்பாடிய மூவரும் மனம் விட்டுப் பாராட்டினர். அப்பாடல்கள் இயற்கைத்தாய் என்ற தலைப்பில் என் கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளன. இத்தலைப்பில் வரும் தென்றல் எனும் தொட்டி லிலே என்னும் பாடல் சாகித்திய அக்காதமியால் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. முருகப்பர் தூண்டியிரா விடின், இயற்கைத்தாய் தோன்றியி ராள். வெண்தாடி வேந்தர் காரைக்குடிக் கம்பன் திருநாளில் ஆடவர் என்னுந் தலைப்பிற் பாடினேன். கம்பனும் நானும் கற்பனை உலகிற் பறந்து செல்வது போலவும் கம்பன் ஒவ்வோராடவனையும் காட்டி, விளக்கந் தருவது போலவும் பாடி இருந்தேன். கம்பன் திருநாட் கவியரங்கில் என் கருத்தை எப்படியாவது குறிப்பால் உணர்த்துவது வழக்கம். bjhl¡f¤ânyna f«gid neh¡», eh‹, mªj ‘bt©jho ntªj® ah®? என்று வினவக் கம்பன், தயரதன்தான் என்று விடை கூறினான். அரங்கிற்கருகில் அமர்ந்திருந்த. கி.வா.சகன்னாதன் அவர்கள் தயரதனுக்கு வெண்தாடி இல்லையே என்றார். அதற்கு நான் ஈண்டு வெண்தாடியெனக் குறிப்பிட்டது நிறத்தையன்று; முதுமையைச் சுட்டிற்றென்க - என விடை கூறினேன். அவர்க்கருகில் இருந்த விஞ்ஞானி nf.vÞ.கிU£od® அவர்கள் துள்ளிக் குதித்துவிட்டார். எங்கே இன்னொரு முறை சொல்லுங்கள், இன்னொரு முறை சொல்லுங்கள் என மூன்று முறை அப்பகுதியைச் சொல்ல வைத்து மகிழ்ந்தார். கம்பன் இந்தியெதிர்ப்பு 1965ஆம் ஆண்டு, தமிழகம் தழுவிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரம். கம்பன் திருநாள் வந்தது. கம்பன் புகழ் பெற வாழ்தல் என்னுந் தலைப்பு எனக்குக் கொடுக்கப் பட்டது. இந்தி எதிர்ப்புணர்ச்சியை நான் வெளிப்படுத்த இயலாமல் தவித்துக்கொண்டிருந்தேன். (அரசியற் கூட்டங்களுக்குச் செல்லும் வழக்கமும் இல்லை) நல்ல வாய்ப்பு எனக் கருதிக் கம்பன் திருநாளில் கலந்து கொண்டேன். அண்ணா, கலைஞர் இருவருடன் இந்தியையும் மையமாகக் கொண்டு பாடல் புனைந்தேன். நேரடியாகக் குறிப்பிடவில்லை. என் வழக்கப்படி குறிப்பால் உணர்த்தினேன். இராமகாதையில் வரும் இராமன், இலக்குவன், சூர்ப்பனகை இம்மூவரையும் அண்ணா, தம்பி, அரக்கி எனக் கொண்டு என் உணர்ச்சிகளை யெல்லாம் கொட்டிவிட்டேன். கூட்டத்திலிருந்த பேராயக் கட்சியினர் சிலர் குழப்பம் விளை வித்தனர். அருகிருந்த மற்றையோர் அடக்கினர். தலைமையேற்ற தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார், முடியரசன் நன்றாக மாட்டிக் கொண்டார் என்று கூறினார். நானா மாட்டிக் கொண்டேன்? இராமன், இலக்குவன், சூர்ப்பனகை தாம் மாட்டிக் கொண்டனர் என்றேன். நிகழ்ச்சி முடிந்தபின், சா.கணேசன் அவர்கள், இவ்வளவு வெளிப்படையாகப் பாடியிருக்க வேண்டாமே என்றார். வெளிப் படையாக நான் பாடவில்லையே; குறிப்பாலுணர்த்தினேன். நான் சொன்ன நிகழ்ச்சிகளில் மறுப்புரைக்க ஏதேனும் இட முண்டா? என்றேன். மறுக்க முடியாதது தான் உண்மைதான்; ஆனால் எதைச் சொல்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறதே! கொஞ்சம் கட்டுப் படுத்தியிருக்கலாம் என்று கூறினார். தேர்தல் திருவிழா: மதுரைத் தியாகராசர் கல்லூரியில் ஒரு கவியரங்கம் என் தலைமையில் நிகழ்ந்தது. தேர்தல் திருவிழா என்பது தலைப்பு பேராயக் கட்சி ஆட்சியிலிருந்த காலம் அது. என் பாடலில் முத்தால் ஒளி படைத்த மூதூர் என மதுரையைக் குறிப்பிட்டேன். பாண்டிய நாடு முத்துடைத்து என்பதைக் குறிப்பது ஒரு பொருள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முத்தால் புகழ் கொண்ட மூதூர் என்பது குறிப்புப் பொருள். மதுரை முத்து என்றால் அனைவரும் அறிவர். குறிப்புப் பொருளை உணர்ந்து கொண்ட மாணவர் கையொலி எழுப்பினர். பேராயக் கட்சியைச்சார்ந்த மாணவர்க்கு ஒரே எரிச்சல். என் பாடலில் தேர்தலையும் திருவிழாவையும் ஒப்பிட்டுப் பல கருத்துகள் சொன்னேன். அவற்றுள் ஒன்று திருவிழாவுக்குப் பத்தர்களும் வருவர்; முடிச்சவிழ்க்கும் திருடரும் வருவர்; அது போலத் தேர்தலுக்கு நல்லவரும் வருவர். தீயவரும் வருவர். மக்கள் தாம் விழிப்பாக இருத்தல் வேண்டும் என்று குறிப் பிட்டேன். யார் நல்லவர்? யார் தீயவர்? என்று குறிப்பிட வில்லை. பொதுவாக நல்லவர் என்றுதான் கூறினேன் ஆளுங்கட்சியைத் தான் தீயவர் என்று குறிப்பிடுவதாகக் கருதிக் கொண்டு பேரயாத்தார் மேலும் உணர்ச்சி வயப்பட்டனர். என் தலைமைப் பாடலுக்குப் பிறகு வாக்காளர், ஆளுங் கட்சி எதிர்க்கட்சி என்னும் தலைப்புகளில் பலர் பாடினர். பாடினோர் அனைவரும் பத்து மணித் துளிக்குக் குறையாமற் பாடினர். ஆளுங்கட்சி என்னும் தலைப்பைப் பாடியவர் ஒரே மணித்துளியில் பாடி அமர்ந்து அனைவரையும் திகைப்புக்கு ஆளாக்கிவிட்டார். அடுத்து எதிர்க்கட்சி என்பது பாடப்படவேண்டிய தலைப்பு. அத்தலைப்பிற் பாடவேண்டியவரை அழைக்க நான் எழுந்து, ஆளுங்கட்சி இவ்வளவு விரைவில் ஒதுங்கும் என்று நான் கருத வில்லை. எதனாலோ ஒதுங்கிவிட்டது. இனி எதிர்க்கட்சிக்கு வரவுரை கூறுவோம் என்று நகைச்சுவையாக நான் குறிப்பிட்டதும், பேராயத்தார் வெகுளிச் சுவையை வெளிப்படுத்திவிட்டனர். ஒரே ஆரவாரம்! மேசைகள் நாற்காலிகள் முழங்கின! கூச்சல் குழப்பம்! பேராசிரியர் இலக்குவனார் எழுந்து அமைதிப்படுத்தியபின் அரங்கம் தொடர்ந்தது. பேராயத்தார் என்னைத் தாக்குவது என்று முடிவு செய்திருந்த செய்தியைப் பின்னரே அறிந்தேன். அந்நல்வாய்ப்பு எனக்குக் கிட்டாது போயிற்று, முருகா! முதல்வா! தஞ்சை சரபோசி மன்னர் கல்லூரியில் ஒரு கவியரங்கம், தவத்திரு அடிகளார் தலைவர். வாழையடி வாழை என்னும் பொதுத்தலைப்பிற் பாவலர் பலரைப் பற்றிக் கவிஞர்கள் பாடினர். எனக்குப் பாரதியார் என்னும் தலைப்பு வழங்கப் பட்டது. அனைவரும் பாடியபின் இறுதியில் நான் பாடினேன். தொடக் கத்தில், முருகா! முதல்வா என்று பாடி நிறுத்தினேன். பேராசிரியர்கள், அடிகளார். உடன்பாடியோர் அனைவரும் திகைத்து என் முகத்தையே உற்று நோக்கினர். முடியரசன் முருகனைப் பாடுகிறானே! என்பதுதான் அவர்கள் திகைப்புக்குக் காரணம். ஒருவேளை அடிகளார் தலைவராக இருப்பதால் முருகனைப் பாடியிருக்கலாமோ? என்பது அவர்கள் நினைப்பு. அவருடைய திகைப்பும் நினைப்பும் அகலு மாறு முருகா கல்லூரி முதல்வா என்று நான் கூறியதும் அரங்கமே குலுங்கியது அவர்கள் கை தட்டும் ஒலியால். கல்லூரியின் முதல்வரின் பெயர் முருகையன். அதனால் முருகா கல்லூரி முதல்வா எனக் குறிப்பிட்டேன். அரசியல் அறிஞர்: விளம்பி ஆண்டுப்பிறப்பன்று திருச்சி வானொலி நிலையத்தார் கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். தலைவர், பேராசிரியர் அ.சீனிவாசராகவன் அவர்கள். என் தலைப்பு அரசியல் அறிஞர் என்பது. அரங்கம் தொடங்கியது. பாவலர் பாடினர். ஒவ்வொருவரும் தலைவர்க்கு வணக்கம் சொல்லும் முறையில் பாடினர். நான் தலைவருக்காக ஒரு வரி கூடப்பாடாது சென்றிருந்தேன். மற்றவர்கள் பாடியதும் என் தவற்றை உணர்ந்து, அப்பொழுது இரண்டு சொற்களை மட்டும் சேர்த்துத் தூத்துக்குடி முத்தே என விளித்தேன். அவ்விரு சொற்கள் பேராசிரியர் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டன என்பதை அவர் தம் முடிப்புரையால் தெரிந்து கொண்டேன். நானும் மனைவியும் உரையாடுவதாகப் பாடல் புனைந்திருந் தேன். புத்துலகம் காணப் பாடல் புனையத் தொடங்கி விட்டீர்! மகிழ்ச்சிதான்! eh£il¥ òJ¥ã¡f tÊ brhšY« Ú§fŸ å£il¥òJ¡f tÊ fhzhJ ïU¡»‹Önu! என்று வறுமை நிலையைச் சுட்டுகிறாள். நான் வெகுண்டு, நேற்றே விளம்பி நெடுமூச்சு வாங்கவைத்தாய் இன்று விளம்பி எடுக்காதே என்னுயிரை என்று பாடினேன். நேற்றும் விளம்பினாய், இன்றும் விளம்பி என்னை வருத்தாதே - என்ற பொருளில் அவ்வரிகள் அமைந்துள்ளன. அவ்வரிகளில் நேற்று ஏ விளம்பி ஆண்டு, இன்று விளம்பி ஆண்டு என்னுங் குறிப்பு அமைந்துள்ளமையை அறிந்து கொண்ட தலைவரும் அவையினரும் பெரிதும் மகிழ்ந்தனர் பேரறிஞர் அண்ணாவை மனத்திற்கொண்டே அரசியல் அறிஞரைப் படைத்திருந்தேன். ஆயினும் பெயர் சுட்டவில்லை அந்த அரசியல் அறிஞரின் பெயரைச் சொல்லுங்களேன் என்று என் மனைவி வினவுகிறாள். இந்த இடத்தில் வெளிப்படையாகப் பெயர் சொல்லுதல் கூடாது என்று காதோடு சொன்னேன் என்று பாடலை முடித்து விட்டேன். அரங்கம் நிறைவு பெற்றது. நான் அறிஞர் என யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது தலைவர்க்குத் தெரிந்திருப்பினும், அந்த அறிஞர் பெயரை என் காதோடு சொல்லலாமா என நகைத்துக் கொண்டே வினவினார். மனைவி காதில் மட்டும் தான்சொல்லலாம், மற்றவர் காதில் சொல்லுதல் கூடாது. சொல்லிவிட்டால் அது மறைமொழி (இரகசியம்) ஆகாது என்றேன். வெடித்த சிரிப்பு... பின்னர் அனைவரையும் நிலைய இயக்குநர் ஈசுவரதாசு என்பாரிடம் அழைத்துச் சென்றனர். தலைவர் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொண்டு வருகையில் என்னை அறிமுகம் செய்து, என் தலைப்பையும் கூறினார். ஓ அரசியல் அறிஞரா? ஆபத்தான தலைப்பாயிற்றே! எப்படிப் பாடினார்? என்று இயக்குநர் ஆங்கிலத்தில் வினவினார். இல்லை இல்லை நீங்கள் நினைப்பது அரசியல் வாதியை. இவர் பாடியது அரசியல் அறிஞரை (Statesman). அஞ்சுதற் கொன்றும் இல்லை எனத் தலைவரும் ஆங்கிலத்தில் விளக்கம் தந்தார். செங்கோட்டுக் கந்தப்பன் திருச்செங்கோட்டில் கண்ணகி விழா மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. பேராயக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காளியண்ணன் என்பார் அதனை நடத்தி வந்தார். அவர் உயர்ந்த மனிதர். வியக்கத்தக்க பண்பாளர், ஆண்டுதோறும் நானுங் கலந்து கொள்ளுவன். கவியரங்கிற்கு ஒருமுறை சென்றிருந்தேன். கவியரங்கத் தலைவர் கி.வா.சகன்னாதன் அவர்கள். கோவலன் பிரிவில் கண்ணகி என்பது என் பாடல்தலைப்பு. நான் பாடத் தொடங்கி, (திருச்) செங்கோட்டை நம் கோடாகச் செய்த கந்தப்பா! வணக்கம் என்று தொடங்கினேன். இரண்டு மூன்று தடவை திரும்பத் திரும்பப் பாடினேன். மூன்றாம் முறை கூறும் பொழுது தான் என் குறிப்பை அவையோர் விளங்கிக் கொண்டனர். தலைவர் திகைக்கிறார்; அருகிலிருந்த சிலம்பொலி செல்லப் பனாரிடம் என்ன! முடியரசன் கந்தனுக்கு வணக்கம் சொல்கிறார்! அதுவும் இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொல்கிறார்! v‹d r§fâ? என்று வினவுகிறார். அண்மையில் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற கந்தப்பனை மனத்திற்கொண்டு அவ்வாறு பாடுகிறார் எனச் செல்லப்பனார் விளக்கம் தந்தார். பிரிவில் வாடும் கண்ணகி, அழுதழுது சிவந்த கண்ணளாகி விட்டாள். கோவலனுடன் உறையும் பொழுது கருப்பாக இருந்த விழி சிவந்துவிட்டது. இவ்வாறு கருப்பும் சிவப்பும் கலந்த கண்கள் கண்ணகியின் கண்கள், பேராயக் கட்சிக்காரர் நடத்தும் விழாவில் கருப்பும் சிவப்பும் கலந்த கொடி நினைவூட்டப்பட்டது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் காளியண்ணன் அவர்கள் பெருந்தன்மையைச் சுட்டவே. இஃது இலக்கிய விழா. வருவோர் புலவர். அவர்கள் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். இதில் குறுக்கிட நமக்கு என்ன உரிமை? என்பது அவர் கருத்து. அதனால் தொடர்ந்து நான் அழைக்கப்பட்டேன். அன்று நான் பாடிய பாடல்களில் இலக்கியச் செறிவு மிகுந் திருந்தது. முடிப்புரை வழங்க எழுந்த தலைவர் உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்து விட்டது. அன்று அவர் பேச்சு, உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது. என் பாடல்களைப் பாராட்டிப் பாராட்டிப் பேசினார். பலமுறை அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். அன்றமைந்தது போற் பிறவிடங்களில் அமைந்ததாகத் தோன்ற வில்லை. கவியரங்கிற் கற்றூண்கள் சேலத்தைச் சேர்ந்த அரூர் என்னும் ஊரில் காந்தி நூற்றாண்டு விழாக் கவியரங்கிற்குத் தலைவராக என்னை அழைத்திருந்தனர். என் கருத்திற்கு உகந்த காந்திய நெறிகளைப் பாடலாக்கிச் சென்றிருந்தேன். அமைப்பாளர்கள் நல்லன்பர்கள். மாலை ஆறு மணிக்கு அரங்கம் தொடங்குகிறது. அமைப்பாளர், பாவலர், நான் அனைவரும் மேடையேறி விட்டோம். ஆறுமணி, ஆறரை மணி, ஏழு மணி, ஏழரை மணி என்று நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஒருவர் கூடக் கூட்டத்துக்கு வர வில்லை. நாங்களும் எவ்வளவு நேரந்தான் ஒருவர்க்கொருவர் உரையாடிக் கொண்டேயிருப்பது? அமைப்பாளரை அழைத்தேன். கூட்டத்தை நிறுத்தி விட்டா லென்ன? என்றேன். இல்லங்க கூட்டம் கொஞ்ச நேரத்தில் கூடிவிடும் என்றார். அவரும் விடுவதாக இல்லை. நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவோம் என்றார் அமைப்பாளர். என்ன ஐயா, ஆளே வரவில்லை எப்படிக் கூட்டம் நடத்துவது என்றேன். கூட்டந் தொடங்கிட்டா, கூட்டந் தானே வந்து சேர்ந் திடுங்க என்றார். கூட்டந் தொடங்கிற்று. நான் தலைமைப் பாடலைப் பாடினேன். பாடலில் உயிரே இல்லை. உள்ளத்தில் உணர்ச்சியும் இல்லை. அவை கூடினாலன்றோ நமக்கும் உணர்ச்சி தோன்றும்? உணர்ச்சியுடன் பாடினால் அன்றோ பாடலில் உயிரிருக்கும்? அவையில்லை, உணர்ச்சியில்லை. அதனால் பாடலில் உயிருமில்லை. பாடலைப் படித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஒரு பத்துப் பேராவது வந்திருக்க வேண்டுமே, ஒருவர் கூட வரவில்லை. பாவலர்கள் அரங்கேறித் தம் பாடல்களை முழங்கினார். பாட்டரங்கு முடிந்தது. செயலாளர் நன்றியுரை நவின்றார் (எங்களுக்குத்தான்). நன்றி கூறி மகிழ்ச்சியோடு என்னருகில் வந்தார். நல்ல வேளை! அதோ சற்றுத் தொலைவில் ஏழெட்டுப் பேர் விலகி விலகி நின்று நம் கவியரங்க நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர். அவர்களுக்கும் நன்றி கூறியிருக்கலாமே என்றேன். இல்லங்க அதெல்லாம் கல்லுக்காலுங்க என்றார் அவர். கவியரங்கில் கண்ணீர் தேவகோட்டையிலும் காந்தி நூற்றாண்டு விழா நிகழ்ந்தது. கவியரங்கிற்கு நான் தலைவர். காந்தியடிகளுடன் தலைவர் பலரை ஒப்பிட்டுப் பாடினர் பாவலர் பலர். காந்தியும் அண்ணாவும் என்ற தலைப்பில் சொ.சொ.மீ.சுந்தரம் என்னும் அன்பர் பாடினார். இவர் பிற துறையிற் பட்டம் பெற்றவர். எனினும் அழகாகக் கவிதை பாடும் இயல்பினர். அவர் ஒவ்வொரு பாடலிலும் இருவர்க்கும் உள்ள ஒற்றுமைகளை எல்லாம் பாடிவிட்டு, இறுதியில் அண்ணாவின் இயல்புகளைப் பாடினார். அவர் காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டவர். எனினும் அண்ணாவைப் பாடும் பொழுது மாணிக்க வாசகராகி விட்டார். அவரும் உருகினார். கேட்போரையும் உருக வைத்து விட்டார். நான் மேடையில் தேம்பித் தேம்பி அழுதுவிட்டேன். முடிப்புரை சொல்ல வாயெடுத்தேன். பேச்சு வெளிவரவில்லை. சிறிது நிறுத்தி மீண்டும் முயன்றேன். ஒரு சொற்கூட வெளி வந்திலது. பேச்சின்றிக் கவியரங்கம் நிறைவு பெற்றது. m.â.K.fÉd® ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அரசின் சார்பில் அண்ணா விழா நடத்தினர். தலைவராக என்னை அழைத்தனர். முத்துலிங்கம், முத்துராமலிங்கம், நா.காமராசன், புலமைப்பித்தன் முதலியோர் ஒவ்வொரு தலைப்பிற் பாடினார். அமைச்சர் பெருமக்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். முத்துலிங்கம் பாடும்பொழுது தலைப்பை விடுத்து, இலக்கணம் பாடலுக்கு இன்றியமையாதது என்ற பொருளிற் பேசிவிட்டார். அடுத்துப் பாட வந்த காமராசன் மறுப்புரைத்தார். நான் இடையில் எழுந்து தலைப்பில் நின்று பாடுங்கள், பேச்சு வேண்டா மென்றேன் மறுப்பை நிறுத்திவிட்டுக் காமராசன் தமிழர்க்குள் ஒற்றுமையில்லையே என வருந்தினார்; கலைஞர் கவிதையெழுது வதைக் கடிந்து பேசினார்; முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களைப் புகழ்ந்தார். தமிழ் நாட்டின் படகோட்டிக்குத் துடுப்புப் போடத் துணை செய்வோம் நீங்களும் வாருங்கள் என எனக்கு அழைப்பும் விடுத்தார். பேசி முடித்தார். நான், உடனே அவர்க்கு மறுமொழி பகர்ந்தேன். நண்பர் காமராசன் தமிழர் பால் ஒற்றுமையில்லாமை கண்டு மிக வருந்திக் கூறினார். அது நூற்றுக்கு நூறு உண்மை. பிளவுபட்டுக் கிடப்போரை ஒன்றுபடுத்தவும் விழைகிறார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் அதற்காக மேற்கொண்ட வழி சரியாகத் தோன்ற வில்லை. சோழனைத் தாக்குகிறார். சேரனைத் தூக்குகிறார். இதனால் எவ்வாறு ஒற்றுமை காண இயலும்? (ஒரே கை தட்டல்) என்றேன். துடுப்புத் தள்ளத் துணையாக வருமாறு எனக்கு அழைப்பும் விடுத்தார். மகிழ்ச்சி. ஆனால் கிளைக்குக் கிளை தாவும் குணம் எனக்கில்லையே. என் செய்வது? என்றேன். அடுத்து முத்துராமலிங்கம் என்பவரைப் பாட அழைத்தேன். அவர் அரங்கேறிப் பாடாமல் பேசத் தொடங்கி விட்டார். முதலிற் பேசிய முத்துலிங்கத்தை மறுத்து இலக்கணம் தேவையில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். தலைவர் என்ற முறையில், நானெழுந்து, பேச வேண்டாம்; பாடலைப் படியுங்கள் என்றேன். அவர் பேச்சை நிறுத்தவில்லை. பின்னர் இருமுறை சொன்னேன். அடங்கவில்லை, அண்ணன் முடியரசன் மிரளுகிறார் போலும் என்று அவர் சொன்னார். நானெழுந்து, முடியரசன் மிரண்டதாக வரலாறே இல்லையே என்றேன். அப்பொழுதும் அவர் அடங்கவில்லை. முடிப்புரையில் இதற்கெல்லாம் விடை பகர்வோம் எனக் கருதி, மேலொன்றும் பேசாமலிருந்து விட்டேன். அவர் மேலும் பேசிக் கொண்டிருந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் வீரப்பன் அவர்கள் ஒருவரையனுப்பி தலைவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் பாடு வதானால் பாடுங்கள் இல்லையென்றால் அமருங்கள் எனச் சொன்ன பின்னரே அவர் தலைப்புக்கு வந்தார். அரங்க நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த காவற்றுறைத் தலைவரே வருந்தினார். என்னங்க அவர் இப்படி நடந்து கொண்டார்? நீங்கள் சொல்லியும் கேளாமல் நடந்து கொண்டது விரசமாக இருந்தது என்று கூறினார். என் செய்வது? விழாவில் அண்ணாவின் பெயர் மட்டும் பயன் பட்டதே தவிர அவர் கூறிய கட்டுப்பாடும் கண்ணியமும் காணப் படவில்லை. இறுதியில் புலமைப்பித்தன் பாடினார். அவர்தம் பாடல்கள் உள்ளத்தைத் தொட்டுவிட்டன. உணர்ச்சிப் பெருக்கைத் தூண்டி விட்டன. அவர் பாடி முடித்ததும் அவையோர் கண் கலங்கி விட்டனர். நான் அழுதேவிட்டேன். முடிப்புரை சொல்ல எழுந்த எனக்கு நாவே எழவில்லை. உணர்ச்சி வயப்பட்டு இதுதான் கவிதை என்று மட்டுங் கூறி அமர்ந்துவிட்டேன். ஐந்தாண்டுப் பருவத்தனாகிய என் இளைய மகன் என்னை விட்டு மறைந்தான். அண்ணா நம்மைவிட்டுப் பிரிந்தார். என் உள்ளங் கவர்ந்த இருவரையும் இன்றும் நினைந்து உருகி விடுகிறேன். இக்கவியரங்க நிகழ்ச்சியால், என் கவிதைக்கும் எனக்கும் கிடைக்க வேண்டிய பல சிறப்புகள் தடுக்கப்பட்டன.சிறப்புப் பெரிதா? கொள்கை பெரிதா? கொள்கையிழந்து சிறப்புப் பெறுவது எனக்குச் சிறுமையாகத்தான் தோன்றுகிறது. அடிகளார் அழுதார் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஆண்டு தோறும் கலைவிழா மிகச் சிறந்த முறையில் நிகழ்வுறும். கவியரங்கமும் நிகழும். ஒருமுறை கவியரங்கிற்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையேற்றார். கவிஞர் எண்மர் கலந்து கொண்டோம். பண்டைய வள்ளல் எழுவரைப் பற்றி எழுவர் பாடினர். எட்டாம் வள்ளலென அழகப்பரை நான் பாடினேன். பல்வேறு அணிகள் அமையப் பாடினேன். பாடல்களின் வயப்பட்டார் அடிகளார். இறுதியில், அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடலினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ! உள்ளதென ஒருபொருளும் இல்லாப் போதும் உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான் என்ற பாடலைப் பாடியமர்ந்தேன் அடிகளார் முடிப்புரை கூற எழுந்தவர் உணர்ச்சிவயமாகி அழுதுவிட்டார். பேச நா எழவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்து, கவிதை இவ்வாறு தான் இருத்தல் வேண்டும், உள்ளத்தை உயர்த்துவதாக - உணர்ச்சி ஊட்டுவதாக அமைதல் வேண்டும் என்றார். மேலும் முடியரசன் அழகப்பரின் வள்ளன்மையை ஒவ்வொன்றாகக் கூறி, அழகப்பர் நோய்வாய்ப் பட்டதையும், மறைந்தமையையும், உடலினை நோவுக்கீந்தான், உயிரைச் சாவுக்கீந்தான், என வள்ளன்மையாகக் குறிப்பிட்ட பாங்கு நினைந்து நினைந்து மகிழற்குரியது எனப் புகழ்ந்து மகிழ்ந்தார். ஈண்டு மற்றொரு செய்தியையும் குறிப்பிடுதல் வேண்டும். நிகழ்ச்சி முடிந்து இறங்கியவுடன் அப்பொழுது கல்லூரி முதல் வராக இருந்த அலக்சாந்தர் ஞானமுத்து அவர்கள், என் பாடலைப் பாராட்டி விட்டுக் கையிலிருந்த வெண்சுருட்டை (சிகரெட்டு) நீட்டினார். உடனே ஒன்றையெடுத்துக் கொண்டேன். தொடர்ந்து தீக்குச்சியைப் பற்ற வைத்து அதையும் நீட்டினார். பற்ற வைத்துக் கொண்டேன். அருகிலிருந்த பேராசிரியர் முனைவர் வ.சுப.மாணிக் கனார். ‘Ô e£ngh? என மொழிந்தார். முதல்வர் சிரித்துவிட்டார். தீயால் ஏற்பட்ட நட்பு தீய நட்பு - என இரு பொருள்படக் கூறிய நயத்தை நினைந்துமகிழ்ந்தேன். யானையும் கோழியும் பறம்பு மலையில் நிகழ்ந்த பாரிவிழாவில் (1966) கவியரசு என எனக்கு விருது வழங்க அடிகளார் அழைத்திருந்தார். சென்றிருந்த பொழுது கவிதை வடிவில் நன்றி கூறுக என அங்கிருந்த சாமி. பழனியப்பன் கூறிவிட்டார். தாளும் எழுது கோலும் வாங்கிக் கொண்டு அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு எழுதிக் கொண்டிருந்தேன். ஐந்தாறு பாடல்கள் எழுதிவிட்டேன். அப்பொழுது திடீரென்று சீறுவது போன்ற ஒரு பேரிரைச்சல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். கட்டப்பட்டிருந்த யானை என் கண்ணிற் பட்டது. விரைந்து எழுந்தேன். அதற்குள் கோழியொன்று யானைக் கருகே வர மீண்டும் பிளிறல், யானையென்றால் இன்னும் அஞ்சுவேன். கதறும் களிற்றைக் கண்டால் கவிதையா வரும்? அவ்வளவு தான் மூச்சு வாங்கஓடினேன். கோழிக்கு யானை அஞ்சியது. யானைக்கு யான் அங்சினேன். அஞ்சிய நெஞ்சில் அரும்புமா கவிதை? பாடல்நின்று விட்டது. வணங்கா முடியரசன் தருமபுரத்தில் திருமடத்தின் சார்பில் வள்ளுவர் ஈராயிரத் தாண்டு விழாக் கவியரங்கம் தலைவர் மு.ரா.பெருமாள் முதலியார். பாவலர் களுடன் விருந்தினரில்லத்தில் தங்கியிருந்தேன். திருமடத்துத் தலைவரைக் காணும் பொருட்டுப் புறப்பட்ட பாவலர்கள் என்னையும் அழைத்தனர். மடத்து நடைமுறை களுக்கும் எனக்கும் ஒத்துவராது; அடிகள் காலில் வீழ்ந்து வணங்குதல் போன்ற முறைகளை நான் விரும்பாதவன். அதனால் நான் வாரேன் என மறுத்தேன். உடனிருந்த புலவர் ப.அரங்கசாமி என்பார் அதெல்லாம் அங்குக் கட்டாயமில்லை. நானும் அது செய்யேன். நீங்கள் துணிந்து வரலாம் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். நானும் அவரை நம்பிச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் முதலில் அரங்சாமிதான் காலில் வீழ்ந்தார். பின்னர் மற்றையோர் வீழ்ந்தனர். எனக்கு அறத் தடுமாற்றமாகி விட்டது. எனினும் வழக்கம்போல நின்றவாறு வணக்கம் என்றேன். mofŸ 圪jt®¡F¤ âUÚW tH§»¡ bfh©nl, v‹id Vw ïw§f¥ gh®¤J ‘mt® ah®? என்றார். உடனிருந்தோர் கவியரங்கிற்கு வந்துள்ள முடியரசன் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தனர். அடிகள் முறுவலித்தவாறு வணங்கா முடியரசரோ? என்று கூறினார். அரங்கத் தலைமைக்கு ஒப்புக் கொண்ட பெருமாள் முதலியார் வரவில்லை. அதனால் அங்கு வந்திருந்த பெ.தூரன் அவர்கள் அப்பொறுப்பு ஏற்றார். அடிகளும் வந்தமர்ந்து, ஆர்வத் துடன் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். என் முறை வந்ததும் நானெழுந்து சைவத் திருமடம் பெருமானுக்குத் தலைமை தந்தது. பெருமாள், தூரன் ஆகினர். தூரனோ அருகராகினர். அருகரை வணங்கிப் பாடுகிறேன் என்று கூறிப் பாடலைப் பாடி முடித்தேன். (பெருமாள் - மு.ரா.பெரு மாள் முதலியார், திருமால்; தூரன் - தூரத்திலிருப்பவர். பெ.தூரன்; அருகர் - அருகிலிருப்பவர். அருகசமையத்தவர் என இரு பொருள்படல் காண்க) அரங்கம் நிறைவு பெற்றது. பாவலர்க்குப் பணம் வைத்த உறைகளை மேலாளர் வழங்கினார். மேலாளரை அடிகள் அழைத்துக் காதில் ஏதோ மெதுவாகச் சொன்னார். அவர் விரைந்து சென்று திரும்பி வந்து ஓர் உறையை அவரிடம் கொடுக்க அடிகள் வாங்கித் தம் திருக்கைளால் எனக்கு வழங்கினார். ஏனைப் பாவலர்க்கு வழங்கிய தொகையினும் இரண்டு மடங்கு மிகுதியாக இருந்தது. வணங்கா முடியரசரோ என்னும் வினா எழும்பிய உள்ளத்தை என் பாடல்கள் மாற்றிக் குளிர வைத்தமையை எண்ணி மகிழ்ந்தேன். அடிகள் அருளுள்ளம் அடுத்த ஆண்டும் தருமபுரம் என்னை அழைத்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைவர். மறுப்புரையாது இசைந்தேன். குடந்தை வரை சென்ற நான் உடல் நலங் குன்றியமையால் வண்டியொன்று அனுப்புமாறு தொலைபேசி வாயிலாகத் தருமபுரத்திற்குத் தெரிவித்தேன். குடந்தையிலிருந்தே வாடகை வண்டி எடுத்துக் கொண்டு வருக; இங்கே வாடகை கொடுத்து விடலாம் என மறு மொழி வந்தது. அவ்வாறே சென்றேன். அரங்கம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. நேரே மேடைக்குச் சென்றுவிட்டேன். கவியரங்கு முடிந்தவுடன் தருமபுரம் திருமடத்து அடிகள் என்னை அருகில் அழைத்து உடம்புக்கென்ன என வினவினார். உடல்நிலையை உரைத்தேன். உடனே அருகிலிருந்தவரிடம் ஏதோ கூற அவர் ஒரு மருந்து (மாத்திரை) கொணர்ந்து தந்தார். அடிகள் வாங்கி இதையருந்துங்கள் சிறிது நேரத்திற் குணமாகிவிடும் என்று மாத்திரையும் வெந்நீரும் அருளினார். பின்னர் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், நீங்களெல்லாம் நீண்ட நாள் வாழவேண்டும் என்று வாழ்த்தினார். கருத்து வேறுபாடிருப்பினும் அதை ஒதுக்கி விட்டு வாழ்த்துக் கூறிய பேருள்ளத்தை அருளுள்ளத்தை எண்ணி மகிழ்ந்தேன். வாழ்த்துப் பெறக் காரணமாக இருந்த என் தமிழன்னையை நினைந்து வணங்கினேன். மதப்போக்கு போடி நாயக்கனூரில் வள்ளுவர் ஈராயிரத்தாண்டு கொண் டாடப்பட்டது. கவியரங்கிற்கு என்னைத் தலைவராக அழைத் திருந்தனர். வள்ளுவரும் ஏசுவும், வள்ளுவரும் முகமது நபியும், வள்ளுவரும் காந்தியும், வள்ளுவரும் அண்ணாவும் என இவ்வாறு தலைப்புகள் தந்திருந்தனர் ஒவ்வொருவராகப் பாடி வந்தனர். வள்ளுவரும் முகமது நபியும் என்ற தலைப்பிற்பாட அழைப்பிதழில் இருந்த பெயரைக் கூறிய ழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. மற்றொருவர் வந்து பாடினார். நிகழ்ச்சி முடிந்தபின் இம்மாற்றத்திற்குக் காரணம் உசாவினேன். முகமது நபியை மற்றவர்கள் பாடக் கூடாதாம். இசுலாமியர் தான் பாட வேண்டுமாம் என்று இசுலாமியப் பெருமக்கள் கூறிவிட்டார்கள். அதனாற்றான் இம்மாற்றம் என்ற விடை வந்தது. திடுக்கிட்டுப் போனேன். மக்களுக்காக மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட துயர்ப்பட்ட ஒரு தலைவரைப் பிறர் பாராட்டிப் பாடக் கூடாது; அம்மதத்தவரே பாட வேண்டுமென்றால் அது மதப்பற்றா? மத வெறியா? மனத்தைப் பற்றிய பேதைமை நெறியா? ஒன்றும் விளங்கவில்லை. மதம் எக்காலத்தும் மனிதனைப் பிரித்து வைக்குமே தவிர, ஒன்றுபடுத்த உதவாது என்பதுதான் உறுதியாகிறது. தமிழைத் தமிழன்தான் பாராட்ட வேண்டுமா, ஆங்கிலத்தை ஆங்கிலேயர்தான் பாராட்ட வேண்டுமா? மற்றவன் பாராட் டினால் குற்றமா? ஒரு மதத்தை அம்மதத்தவன்தான் பாராட்ட வேண்டுமா? பிறன் பாராட்டுவது குற்றமா? v‹nd ngijik! அமைச்சரும் அரசரும் சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் தலைவர். அக்கவியரங்கில் நானும் பாடினேன். நான் எழுந்து, முதற்பாடலில் நற்றலைவர் ஓர் அமைச்சர், நானோ இந்த நாடறிந்த முடியரசன் என்று கூறியதும் கொட்டகையே அதிர்ந்துவிட்டது. சட்டப் பேரவைத் துணைத் தலைவராக இருந்த கணபதி அவர்கள் இன்றும் என்னைக் காணின், அவ்வரிகளைச் சொல்லிப் பாராட்டுவார். இது குடியாட்சிக் காலமாதலின், அரசர் அமைச்சர் என்ற வேறுபாடில்லை என்பதை உணர்த்தவே பாடுகிறேன் என்று பாடினேன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று மேடைதோறும் முழங்கு முழங்கென்று முழங்கி வந்த தி.மு.க. நண்பர் சிலர்,அமைச்சரானவுடன், இலக்கிய விழாக் களுக்கு அழைத்தால் வருவதில்லை. ‘v‹d Iah ïy¡»a¡ T£l«? என்று சலிப்பாகவும் பேசிவந்தனர். அச்செய்தி எனக்கு வேதனையாக இருந்தது. இவ்வேதனையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பென்றெண்ணி, தமிழால் கழகம் வளர்ந்தது. கழகத்தால் தமிழ் வளர்ந்தது. ஒன்றை யொன்று மறந்தால், புறக்கணித்தால் எதுவும் வளர வழியில்லை என்னும் பொருள் படப் பாடினேன். அவையி லிருந்த பேராசிரியர் சி.இலக்குவனார், மேடைக்கு ஓடோடி வந்து, சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்திற் றுணிந்து சொன்னீர்கள் என்று கையைப் பற்றிக் கொண்டு பாராட்டினார். கவியரங்கேறாக் கால்கள் அண்ணா விழா நடத்த எண்ணியுள்ளோம் கவிஞர் கண்ண தாசன் கலந்து கொள்கிறார். இடம் அண்ணாவின் கல்லறை. நீங்களும் கவிதை பாடவேண்டும் என முரசொலியிலிருந்து அழைப்பு விடுத்தனர். நான் அண்ணாவிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவன்; தமிழை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவன். என்னைப் பழிப்பவனை - நான் ஏதும் நினைப்பதில்லை (தமிழே) உன்னைப் பழிப்பவனைப் - பகைபோல் உள்ளம் நினைக்குதம்மா என்றும் பாடியிருப்பவன். அதனால் நான் கவியரங்கிற்குச் செல்ல மறுத்து விட்டேன். நான் எழுதிய மறுமொழி. என் நெஞ்சில் நிலைத்திருக்கும் அண்ணாவையும் நான் வணங்கும் தமிழையும் இழித்தும் பழித்தும் பேசும் ஒருவர் கலந்து கொள்ளும் கவியரங்கில் ஏற என் கால்கள் இசையா, அண்ணாவின் சந்தனப் பேழையில் சாக்கடை நீரைப் பாய்ச்சத் தொடங்கி விட்டீர்களா? என்பதுதான். இம்மடல், கவி அரங்கு நிகழும் இடத்தை மாற்றியது. பிறி தோரிடத்தில் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. (அவர், அண்ணாவைப் பழித்ததையும் தமிழை இழித்ததையும் நாடு நன்கறியும்) என் மடல் சிலருக்கு வருத்தத்தைத் தரினும் என் உறுதிப் பாட்டை உணர்ந்து கருத்தை மாற்றிக் கொண்டனர். கடவுள் நம்பிக்கை திருவானைக்காவலில் மனிதன் என்னும் தலைப்பில் ஒரு கவியரங்கம் நிகழ்ந்தது. தலைமைப் பொறுப்பு என்னுடையது அன்பர் பலர் பாடினர். அவருள் கவிஞர் அரு. சோமசுந்தரமும் ஒருவர் அவர் பாடும் பொழுது மனிதன் கடவுளை நினைக்க மாட்டான். துன்பம் வந்தால் உடனே நினைப்பான். கடவுள் நம்பிக்கையில்லாத தலைவர் (முடியரசன்) கூட நோய் வாய்ப்பட்ட பின்புதான் கடவுளை நம்பியிருப்பார் என்று கூறினார். நான் முடிப்புரையில், ஆம் நான் குருதியுமிழும் கொடுநோய்க்கு ஆளானதும் உண்மை. என்னைக் காப்பாற்றிய சுப்பிரமணியத்தையும், இராமச்சந்திரனையும் நம்பியதும் உண்மை என்று கூறினேன். சோமசுந்தரத்திற்கு முகம் மலர்ந்தது. முடியரசன் நம்ம வழிக்கு வந்துவிட்டாரே என்பது அவர் நினைப்பு. மீண்டும் பேசினேன். நான் கூறிய சுப்பிரமணியமும் இராமச் சந்திரனும் சோமசுந்தரம் நினைக்கும் கடவுளர் அல்லர். புதுக் கோட்டைத் திருக்குறள் கழகத் தலைவர். பு.அ.சுப்பிர மணியனாரும் மருத்துவப் பேரறிஞர் வி.கே.இராமச்சந்திரனாரும் ஆவர். அவர்களை நம்பினேன். அவர்கள் என்னைக் காப்பாற்றினர் என நான் கூறியதும் சோமசுந்தரம் ஏமாற்றம் அடைந்தார். அரங்கில் அவ்வை மதுரை எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கில் நான் கலந்து கொண்டேன். அந்நாளில் வணக்கம் என்று சொன்னாற் போதும். சொல்வோரைத் தி.மு.க என்று கூறிவிடுவர். தி.மு.க என்றால் இந்நாட்டில் இருக்கத்தகாதவர்கள் போலவும் தமிழ் அவர்களுக்கு மட்டும் சொந்தம் போலவும் பலர் கருதி வந்தனர். இக்கருத்தை மனத்திற்கொண்டு வணக்கம் என்றால் உடனே தி.மு.க. என்கிறீர். முத்தமிழும் தி.மு.க. சொத்தா என்ன? முளைத்தபிற கட்சிகளில் தமிழ ரில்லை? என்று வினாப் பொருளிற் பாடினேன். எதிரில் அமர்ந் திருந்த பேராசிரியர் அவ்வை. சு.துரைசாமிப்பிள்ளையவர்கள், உணர்ச்சி வயப்பட்டு எழுந்து பிற கட்சிகளில் தமிழர் இல்லை, தமிழர் இல்லை என்று உரத்துக் கூவிவிட்டார். அண்ணாவின் அடக்கவுணர்வு மதுரை எழுத்தாளர் மன்றத்தில் மற்றோர் ஆண்டும் தலைமைப் பொறுப்பேற்றேன். பேரறிஞர் அண்ணாவும் மேடையில் அமர்ந்திருந்தார். அதனால் அண்ணாவைக் குறித்துப் பாட வேண்டியிருந்தது. அண்ணா! நினக்கு அண்ணாதுரை எனப் பெயர் சூட்டிய வாயை வாழ்த்துகிறேன். அப்பெயர் சூட்டிமையாலன்றோ நாங்கள் அண்ணா அண்ணா என அழைக்கின்றோம். துரையென்றால் அரசன் எனப் பொருளுண்டு. நீ அரசன்தான், திராவிட நாடு உன்னுடையது. எழுதுகோலே செங்கோல். தமிழர் நெஞ்சமே அரியணை. நெடுஞ்செழியன், சிற்றரசு, தென்னரசு, முடியரசன் உனக்குக்கப்பம் கட்டும் சிற்றரசர். உன் எழுத்தெல்லாம் நின் ஆணைகள் எனக்கூறும் வரை அமைதி யாக இருந்த அண்ணா, பட்டத்து ராணி உண்டு என்று கூறியதும் நாவைக் கடித்துத் கொண்டு நாணித் தலை குனிந்தார் (அண்ணாவின் துணைவியார் பெயர் ராணி என்பதாகும்) அண்ணாவைப் புகழ்ந்தால் தாங்கிக் கொள்ளமாட்டார். ஐயாவைப் புகழ்ந்தால் வாங்கிக் கொள்ள மாட்டார். லால்குடியார் மயக்கம் திருமலைராயன் பட்டினத்திற் கம்பர் விழா. தலைவர் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன். கம்பன் இன்றிருந்தால் என்னும் பொதுத் தலைப்பில் வெம்புவான் என்ற தலைப்பில் நான் பாட அழைக்கப் பட்டேன். வழக்கபோல் என் கருத்திற் கேற்ப ஏன் வெம்புவான்; எவற்றைக் கண்டு வெம்புவான் என்னும்; முறையிற் பாடினேன். கேட்டுக் கொண்டிருந்த லால்குடி நடேச முதலியாரவர்கள் துள்ளியோடி வந்து என்னை அப்படியே மார்போடு அணைத்துத் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்துவிட்டார். இறுக அணைத்துத் தூக்கியதால் அவர்க்குத் தொந்தி வலித்ததோ, இல்லையோ எனக்கு வலிக்கத் தொடங்கி விட்டது. அவர் முதியவர், நான் காளைப் பருவத்தினன். என்னைத் தூக்கிக் கொண்டு ஆடுவதென்றால், என் பாடலில் எவ்வளவு மயங்கியிருக்க வேண்டும்? கவி வெறி, கள் வெறி போன்றது என்பான் பாரதி. அவ்வெறிதான் அம் முதுபெரும் புலவரை ஆட வைத்திருக்கிறது. என் கவிதைகளுக்கு உரிய பாராட்டு, நாடு வழங்க மறுப்பினும் இத்தகு முது பெரும் புலவர்கள் தம் உளங்கனிந்த பாராட்டும் கிடைத்ததே! அது போதும். வாராப் புகழ் காரைக்குடியிற் கம்பன் திருநாள். தலைமைப் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. கவியரங்கம் நிறைவு பெற்றபின் வெளியில் வந்தேன். வாயிலில் நின்று கொண்டிருந்த ஒருவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு உங்கள் கவிதைகள் அருமையாக இருந்தன. நேற்றிரவே நான் சென்னைக்குச் செல்ல வேண்டியவன். நம்ம ஞானசம்பந்தம் வற்புறுத்தி இருக்கச் செய்துவிட்டார். காலையில் முடியரசன் கவிதைகளைக் கேட்டு விட்டுப் போகலாம். அவ்வளவு அழகாகப் பாடுவார் என்று கட்டாயப் படுத்தி விட்டார். இருந்தது நல்லதாகப் போய்விட்டது. இதோ ஊருக்குப் புறப்படுகிறேன் என்று அளந்தும் விரைந்தும் பேசினார், மிக்க மகிழ்ச்சி. உங்களை யாரெனத் தெரிந்து கொள்ளலாமோ? என்றேன். தினமணியிலிருக்கிறேன். சிவராமன் என்று வரைந்து விட்டார். ஆம். தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் அவர்கள் தாம். சென்னைக்குச் செல்ல வேண்டியவர், பயணத்தை நிறுத்தி விட்டுத் தங்குகிறார் சிவராமன். தங்கிச்செல்லுமாறு வற்புறுத்து கிறார் பேராசிரியர் அ.ஞானசம்பந்தனார். இருவரும் என் கருத்திற்கு எந்த அளவு ஒத்து வருபவர்கள்? அவர்கள் பாராட்டுகின்றனர்; புகழ் கின்றனர் என்றால் அது வாராப் புகழ்தானே! போர் தொடுத்த பூவையர் தஞ்சையில் ஒரு கவியரங்கம். திரு.வி.க. நாள் கொண்டாடப் பட்டது. அந்நாளை மகளிர் நாளாகக் கொண்டாடினர். பெண் ணுரிமைக்காகப் பாடுபட்ட பெருமகனார் நாள் மகளிர் நாளாகப் கொண்டாடப்பட்டது பொருத்தமே. கவியரங்கம், கருத்தரங்கம் என ஏற்பாடுசெய்திருந்தனர். கவியரங்கு என் தலைமையில் நிகழ்ந்தது. கருத்தரங்கு இராசம் மாள் தேவதாசு (கோவைஅவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்) என்னும் அம்மையார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற்றன. திரு.வி.க. அவர்கள் எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூலை நன்கு படித்துவிட்டு, அவர்தம் கருத்துகளை மனத்திற் கொண்டு என் தனிக் கருத்தை அமைக்காது அவர்தம் கருத்து களையே அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் புனைந்திருந் தேன். நல்ல வரவேற்பும் இருந்தது. கவியரங்கம் முடிந்தது. மேடையை விட்டுக் கீழே வந்துவிட்டோம். கருத்தரங்கு தொடங்கியது, தலைமை தாங்கிய அம்மையார், என்னைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அருகிலிருந்த பதுமாவதி சீவானந்தம் (பொதுவுடைமை இயக்கத்தலைவர் சீவானந்தம் துணைவியார்) அவர்கள், கை தட்டி கைதட்டிப் பாராட்டினார். ஒரே ஆர்ப்பாட்டம்! எனக்கொன்றும் விளங்கவில்லை. நான் கூறியவை அனைத்தும் திரு.வி.க.வின் கருத்துகள். என்னை ஏன் தாக்க வேண்டும்? ஒருவேளை என்பாடலில் வரும் கருத்துகள் ஏதேனும் அம்மை யாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவதாக இருக்குமோ என்று கருதிக் கொண்டேன். என் அருகிலிருந்த தலைமையாசிரியர் இளங்கோவன் (பின்னே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) பொருமிக் கொண்டேயிருந்தார். பேசிக்கொண்டே இருந்த அம்மையார் செண்ட் மணம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. தமிழ் மணம் அறிந்திருக்க வேண்டும் என்று என்னைத் தாக்கியவுடன் இளங்கோவன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேடைக்குத் தாவினார். உடனே அவரைப் பற்றியிழுத்து அமைதிப்படுத்தினேன். இங்கே மற்றொரு வேடிக்கையும் நிகழ்ந்தது. இவ்விழாவை நடத்தியவர் ஒரு தமிழாசிரியர். நானும் தமிழாசிரியர். அவரும் தமிழர் நானும் தமிழன் ஆனால் அவர் திராவிடர் கழகம். நான் திராவிட முன்னேற்றக் கழகம். கழக வேறுபாட்டினால் இரவு உணவுக்கு என்னை அழைக்காது சென்று விட்டார். கொள்கையில் அவ்வளவு தீவிரம் நெல் பெற்ற பாராட்டு ஒருமுறை திருச்சி வானொலி நிலையத்தில், பொங்கல் கவியரங்கம் நிகழ்ந்தது. நெல் என்னும்தலைப்பிற் பாட என்னை யழைத்திருந்தனர். வேளாண்மைத்துறையில் ஈடுபட்ட ஒருவரிடம் நெல் பற்றிய குறிப்புகள் பலவற்றைக் கேட்டறிந்துகொண்டு, அந்த அடிப்படையிற் பாடல் புனைந்திருந்தேன். பாடல் பெரிதும் பாராட்டப்பட்டது. எனினும் ஒத்திகை பர்க்கும் பொழுது என் பாடலில் சூரியன் என்ற சொல்லை எடுத்துவிட வேண்டும் என்றனர். பொங்கல் நாளில் சூரியனைச் சொல்லாமல் இருக்க முடியுமா? மற்றவர் பாடல்களில் சூரியன் வருகிறதே! அதை யெடுக்கச் சொன்னீர்களா? என்றேன். அவர்கள் சூரியன் என்று சொல்வதற்கும் நீங்கள் சூரியன் எனச் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. நீங்கள் சொல்லும்பொழுது வேறு பொருளைத் தந்துவிடும் என்று வானொலியார் கூறினர் (உதயசூரியனை நினைத்துக் கொண்டு அவர்கள் அவ்வாறு கூறினர்). சூரியன் என்றால் ஒரு பொருள்தான். அவர்கள் சூரியன் வேறு. என் சூரியன் வேறு என்றில்லை. எல்லாம் ஒரே சூரியன்தான் என்று கூறிஎடுக்க மறுத்துவிட்டேன். ஒரு கட்சியின் சின்னம் என்பதற்காகப் பொங்கல் திருநாளில் சூரியனை விரட்டிவிட முடியுமா? சூரியன் என்ன ஒருவர்க்கு மட்டுந் தனியுடைமையா? மாந்தர் அனைவர்க்கும் பொதுவுடை மையன்றோ? சூரியன் ஒருசிலர்க்கு மட்டும் வெளிச்சம் தருகிறதா? பிறரைப் புண்படுத்துகிறதா? நாட்டில் சுதந்திரம் இப்படிச் சீர்கெட்டுக் கிடக்கிறது. கவியரங்கிற்குப் பின்னர், வானொலி மாறன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. நெல் பாடலுக்கு நூற்றுக்கணக்கான பாராட்டுக் கடிதங்கள் வந்துள்ளன என்று கூறி மகிழ்ந்தார். பக்திக்குக் கிடைத்த பரிசு பிறிதொரு கால் பக்தி என்னுந் தலைப்பிற் பாடத் திருச்சி வானொலியார் என்னையழைத்திருந்தனர். கலைஞர் தலைவர். x¤âif elªjJ x¤âif KoªjJ« ‘ï‹D« bfhŠr« ntfkhf¥ ghoÆU¡fyhnk? என்று மாறன் கூறினார். வானொலிக் கவியரங்கம் ஆதலின் அடக்கமாகப் பாடினேன் என்று நான் மறுமொழி கூறினேன். கவியரங்கம் தொடங்கி முடிந்தவுடன் கலைஞர், இவ்வளவு வேகம் வேண்டியதில்லையே; கொஞ்சம் வேகத்தைக் குறைத்திருக் கலாம் என்று கூறினார். எதிர்பாராமல் மதுரையில் மாறன் அவர்களைச் சந்தித்தேன் நெல்லுக்கு வந்த கடிதங்களை விட இரண்டு மடங்கு அதிகமான கடிதங்கள் உங்கள் பக்திப் பாடலுக்கு வந்துள்ளன என்றார். மகிழ்ச்சியென்று நான் பெருமைப்பட்டேன். அவர் சொன்னார்:, நெல்லுக்கு வந்தவை பாராட்டுக் கடிதங்கள். பக்திக்கு வந்தவை வசவுக் கடிதங்கள் என்றார். நெல்லுக்குப் புகழ்ச்சி! பக்திக்கு இகழ்ச்சி! நானும் ஒரு முதலாளி கருவூரில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. தலைமைப் பொறுப்பு என்னுடையது. அங்குப் பாடிய பாவலர் ஒருவர் என்னைக் குறிப்பிடும் பொழுது சீர், தளை, முதலியவற்றுக்கு முதலாளி என்று குறிப்பிட்டார். நான்அவர் பாடலைப் பாராட்டும்பொழுது இவர் பாடல்கள் என்னை மகிழ்வித்ததை விட, என்னை முதலாளி என்று விளித்தது என்னை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்திவிட்டது. பற்றாக்குறை வாழ்வில் கிடக்கும் எனக்கு முதலாளி என்ற சொல், மகிழ்வைத் தராமலிருக்குமோ? என்று நகைச்சுவைபடக் கூறினேன். இறுதியில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். கவிஞர் முடியரசன் தோற்றத்தில் அண்ணாவைக். காண்கிறேன். பேச்சில் பேராசிரியர் அன்பழகனைக் காண்கிறேன் என என்னைப் பாராட்டி விட்டு நான் உள்ளே நுழையும் போது கவிஞர் அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு இவர் ஒரு டெக்டைல்சு முதலாளியாகத் தான் இருக்க வேண்டும் என்று நானுங் கருதினேன் என்று முதலாளியை உறுதிப்படுத்தினார். (இன்றுங் கூட என் தோற்றத்தை வைத்துப் பலர் அப்படித்தான் கருதிக்கொண்டிருக் கின்றனர்) 12 அளிபெறு தும்பி அண்ணலார் புதுக்கோட்டைத் திருக்குறட் கழகத் தலைவர் அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார், போற்றிப் பாராட்டத்தக்க மீமிசை மாந்தர். குறள் நெறி வழுவாக் கோமான். கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனுங் குறிக்கோளுடன் வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுட் பலர் இவர் உதவியால் கற்று முன்னேறி யுள்ளனர். பெரும்புலவர் பலர்க்குப் புரவலராக வாழ்ந்தவர். நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர் எனினும் தம் வருவாயில் பெரும் பகுதியை ஏழை மாணவர் கல்விக்காக நல்கியவர். இவர்தம் உதவியால் மருத்துவப் பேரறிஞர்கள், பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள் பிறபிற துறை வல்லுநர்கள் உருவாகியுள்ளனர். சுருங்கக் கூறின் புதுக்கோட்டையே இவரால் புதுமை பெற்றது என்னலாம். பிறர்க்கென வாழும் பெற்றியர். இற்றைநாளில் இவரனையாரைக் காண்டல் அரிது. எழுபதாம் அகவை வரை நான் உயிருடன் வாழ்ந்து, என் வரலாற்றையும் எழுதுகிறேன் என்றால் அதற்குக் காரணராக இருந்த பெருமகனார் அண்ணல் சுப்பிரமணியனார்தாம். அவர்தம் தலையளி எனக்கு வாய்க்கப் பெறவில்லையென்றால் முடியரசன் இறந்து முப்பத்தைந்து ஆண்டுகளாகியிருக்கும். என் முப்பத்தைந்தாம் அகவையில் குருதி உமிழும் கொடிய நோய்க்கு ஆளாகினேன். நடக்க வியலாது; பேச இயலாது; சிரிக்கவும் இயலாது. அந்த அளவிற்கு நோயின் கடுமை மிக்கிருந்தது. இந்நிலையில் என்னை அழைத்துப் புதுக்கோட்டையிலேயே தங்க வைத்து, முழுச் செலவும் தாமே செய்து, மருத்துவப் பேரறிஞர் விகே. இராமச்சந்திரனாரைக் கொண்டு, என் பிணியை அகற்றி விட்டார். அன்று முதல் அப்பெருத்தகையைத் தந்தைக்கு நிகராகக் கருதி வருகிறேன். மருத்துவ மனையில் நான் இருக்கும் பொழுது என் துணைவியார் ஆண்மக வொன்றை ஈன்றெடுத்தனர். அம்மகவுக்கு அவர்தம் திருப்பெயரையே, சுப்பிரமணியம் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தேன். அது கடவுட் பெயராகவும் பிறமொழிச் சொல்லாகவும் இருந்துங்கூட, என்கொள்கைக்கு மாறாக இருந்துங்கூட என் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ள அப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன். என் நன்றியுணர்ச்சிக்குச் சான்றாக விளங்கிய அம்மகன் ஐந்தாண்டுகளே என்னுடன் வாழ்ந்தான். அதன் பின்னர் என்னைப் பிரிந்தேபோய் விட்டான். இவரைக் காண வருவோர் எவரேனும் கிடைத்தற்கரிய கனிகள் கொணர்ந்து கொடுப்பின் அவற்றை யெடுத்துக் கொண்டு, என்னிடம் ஓடி வந்து எனக்குத் தந்து விடுவார். என் உடல் நலத்துக்கேற்பச் சுவையான உணவுக்கு அவரே ஏற்பாடு செய்திருந்தார். வேளை தவறாமல் மருத்துவ மனைக்கு வந்து என் நலம் உசாவிச் செல்வார். அலுவல் காரணமாக ஒரு வேளை மறந்து விட்டால், தமது இல்லத்திலிருந்து தம் தம்பி மகனை என் பால் விடுத்துப் பார்த்து வரப் பணிப்பார். வாராமைக்கு வருந்தி மன்னிப்பு வேண்டுகோளும் விடுப்பார். என்னைக் காணவரும் போதெல்லாம் சிறிது பணத்தை என் சட்டைப்பையில் திணித்துச் செல்வார். மருத்துவமனையில் சுப்பிரமணியனார் காட்டிய பேரன்பு என்னைக் கவர்ந்து விட்டது. தாயினும், தந்தையினும் சாலப் பரிந்து பேரளி காட்டி என்னைப் பேணிக் காத்தமை இன்றும் என் மனத்துள் பசுமையாகவே இருக்கிறது. எனக்கும் ஓர் அதியன் என்ற தலைப்பில் அவரைப் பற்றி நான் பாடிய பாடலில் வரும் அன்னாய் என்னுயிர் அன்னாய் என்கோ? தந்தாய் என்னுயிர் தந்தாய் என்கோ? என்கோ என்கோ - என்ற அடிகளை அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. என்னை முற்றுகை யிட்டுவரும் பற்றாக்குறை, இன்று அப்பெருந் தகையையும் சுற்றிவருகிறது. இந்நிலையிலும் திங்கள் தோறும் திருக்குறட் கழக நிகழ்ச்சிகளை நடத்த இயலவில்லையே! புலவர் களுக்கு உதவ இயலவில்லையே என ஏங்குகிறார். ஒரு முறை எனக்கு மடல் எழுதியிருந்தார். அம்மடலில், தங்களைப் போன்ற புலவர்களுக்கு உதவி செய்ய முடிய வில்லையே! ï¤jifa thœî« vd¡F¤ njitjhdh? என்று வாழ்வையே வெறுத்து எழுதியிருந்தார். மடல் தோறும் நாடு, மொழி, இளைஞர் உலகம் சீர் கெட்டு விட்டனவே என வருந்தி வருந்தி எழுதுவார். ஆரவாரத் தன்மை வாய்ந்த இவ்வுலகில், ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோராக வாழும் இப் பெருந்தகையின் அளியைப் பெற யான் என்ன பேறு பெற்றேனோ என நினைந்து நினைந்து பூரிக்கின்றேன். அடிகளார் கிறித்து சமயப் பெருந்தகையாகிய வேதநாயகம் பிள்ளை, சைவத் திருமடமங்கட்குச் செல்வதையும்திருமடத்தில் உள்ள தலைவர்கள் இவரிடம் அன்பு செலுத்துவதையும் பயிலுங்கால், நான் பெரு வியப்படைவதுண்டு, வேறுபட்ட சமயத்தினர் பகைமை கருதாது, அன்பும் நண்பும் பூண்டொழுகி வருகின்றனரே! இஃது எவ்வாறு இயல்கின்றது? என அடிக்கடி எண்ணுவதுண்டு. அவர்கள் சந்திக்கும் பொழுது, இருவரிடையேயும் சமயம் என்ற சிறிய திரை விலகி விடுகிறது. மாந்தநேயம் என்னும் பேருணர்வு தோன்றி விடுகிறது. மேலும் அவ்விருவரும் சமயத்தால் வேறு படினும் தமிழினத்தவர்தாமே; தமிழுணர்வு இருவரையும் ஒன்றுபடுத்தி விடுகிறது-என்று எனக்கு நானே விடை தந்து அமைதி கொள்ளுவேன். தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள இடையறாத தொடர்புக்குக் காரணம் மேற்கூறிய இனவுணர்வும் மொழியுணர்வுமே. அவரோ சமயத் தலைவர்; நானோ திராவிட இயக்கத்தவன். எனினும் என்பால் தலையளி காட்டுகிறார்; சோமசுந்தரப் பெருமான் சுந்தரமூர்த்தி நாயானாரிடம் எத்தகைய அன்புணர்வை-தோழமையுணர்வைக் காட்டினாரோ அத்தகைய உணர்வை என்னிடம் காட்டுகிறார். ஏன்? சோம சுந்தரப் பெருமாள் சுந்தரரிடம் வேண்டிய அந்தச் சொற்றமிழ் தான் காரணம் அடிகளார் என்பால் தண்ணளி கொண்டமைக்கு எடுத்துக் காட்டொன்று தருவது ஏற்புடைத்தாகும். பண்டிதமணி மு.கதிரே சனாரின் வாழ்க்கை வரலாற்றை ஊன்றுகோல் என்னுந் தலைப்பிற் காப்பியமாக எழுதியிருக்கிறேன். இக் காப்பியத்தில் ஓரிடத்தில், பண்டிதமணியார் அடிகளைக் காண வந்த செய்தியையும் பண்டித மணியார் கீழே அமர்ந்திருந்ததையும் அவரைக் காண அடிகள்தாமே மாடியிலிருந்து இறங்கி வந்த செய்தியையும் குறிப்பிட்டு விட்டுச் சிவபெருமான் தமிழுக் காகப் பனிமலை (இமயமலை)யிலிருந்து இறங்கி மதுரைக்கு வந்தார், அதுபோலச் சிவனடியாராகிய அடிகளாரும் தமிழை (பண்டிதமணியை)க் காண மேலிருந்து இறங்கி வந்தார் எனப் பாடியிருந்தேன். அதனைப் படித்துப் பார்த்த அடிகளார் இப்பொழுதும் அப்படித் தானே என்றார். முதலில் எனக்கொன்றும் விளங்க வில்லை. பின்னர் அவரே விளக்கினார். நீங்கள் வந்தாலும் மாடியிலிருந்து நான் தானே இறங்கி வருகிறேன்; உங்களை மாடிக்கு அழைப்பதில்லையே, தமிழுக்காக இன்னும் இறங்கி வருகிறேன் என்று விளக்கினார். ஒரு நாள் குன்றக்குடி மடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த பணியாளர் வழக்கத்திற்கு மாறாக என்னை மாடிக்கு அழைத்துச் சென்று விட்டார். அடிகளார் என்னைக் கண்டதும் பதறிப் போய்ப் பணியாளரைக் கடிந்து கொண்டார். அதன் பின், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார் என்றால் அந்தத் தமிழுள் ளத்தை என்னென்பது! அத்தமிழ் நெஞ்சத்திற்கு நான் அடிமை யாகாமல் இருக்க இயலுமா? ஒருமுறை, பறம்புமலையில் நிகழ்ந்த கவியரங்கிற் கலந்து கொண்டு, அவர் வண்டியிலேயே வந்தோம். tU«bghGJ, ‘v‹d Koaur‹, thœ¡ifbašyh« v¥goÆU¡»wJ? என்று வினவினார் அடிகளார். ஒவ்வொரு மாதமும் பிடித்துத் தள்ள வேண்டியுளது. வாழ்க்கை இயல்பாக எளிதாக நகரவில்லை என்றேன். உடனே அடிகள், கண்கலங்கி விட்டார். தமது மடியிலிருந்த பணத்தை அப்படியே எடுத்து என் பையில் வைத்து விட்டார். இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமா? இன்னும் எத்தனையோ முறை பணம் தந்து உதவி யிருக்கிறார். நான் வேண்டிக் கொள்ளாமலே குறிப்புணர்ந்து சூழ்நிலையறிந்து உதவிகள் பல செய்துள்ளார். என் மகன் குமணன் இன்று பணியில் இருக்கிறான் என்றால் அவர், தாமே எடுத்துக் கொண்ட முயற்சிதான் காரணம். 1990 மார்ச்சு மாதம் 21-ஆம் நாள் பக்கவாத நோய் என்னைத் தாக்கியது. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். இதனை யறிந்து அடிகளார் மனமுருகித் தம் செயலரிடம் பணம் தந்து விட்டார். மேலும் பிள்ளையார்பட்டி மருத்துவரையும் என் பால் விடுத்து மருத்துவமும் பார்க்கச் செய்தார். அவர் தம் அருள் உள்ளத்தில் எனக்கும் ஓர் இடம் உண்டு என எண்ணி யெண்ணிப் பெருமிதம் அடைவதுண்டு. தவத்திரு அடிகளாரை உள்ளுதொறும், உள்ளுதொறும் நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கை தொழுவேன் என்ற சுந்தரர் பாடல் வரிதான் என் மனத்துள் தோன்றிக் கூத்திடுகிறது. பார்வதி நடராசன் பாரதியைப் புரந்த வள்ளலும் பாவேந்தர் பாரதிதாசனுக்கு உற்ற துணைவரும் ஆன சீர்த்திருத்தச் செம்மல் கானாடுகாத்தான் வை.சு.சண்முகனார் தம் இன்ப மாளிகைக்கு நான் அடிக்கடி காரைக்குடியிலிருந்து செல்வதுண்டு. என்பால் அவர் உரிமை யுணர்வுடன் பழகுவார். உனக்கு எதுவும் தேவையென்றால், காரைக்குடியிலுள்ள அக்காவிடம் (பார்வதி நடராசன்) சொல் என்று அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. பார்வதி நடராசன், சண்முகனார் தம் திருமகள் ஆவார். பாரதியார், திரு.வி.க.போன்ற பெருமக்களிடத்தில் ஈடுபாடு கொண்டவர். அவர்தம் எழுத்தெல்லாம் அம்மையார்தம் நெஞ்சத்தில் கல்வெட்டாகப் பதிந்திருக்கும். அன்பின் உறைவிடம். அடக்கத்தின் பிறப்பிடம், கூர்த்த மதியினர். சீர்த்த பண்பினர். ஈத்துவக்கும் இன்பம் அறிந்தவர். எதுவும் தேவையென்றால் அக்காவிடம் சொல் என்று வை.சு. சண்முகனார் என்னிடம் கூறியிருப்பினும் நான் இவர்களிடம் எதுவுமே சொன்னதில்லை. எனினும் அவர்களே முன் வந்து எனக்குப் பேருதவிகள் பல செய்துள்ளார். சண்முகனார் பாரதியைப் புரந்தார்; பாரதிதாசனுக்கு உறுதுணை செய்தார்; இன்னுங் கவிஞர் பலர்க்கும் காப்பரணாக விளங்கினார். அவரைப் போலவே அவர்தம் மகளாரும் என் போன்றார்க்குப் பேருதவியாளராக விளங்கிவருகிறார். எனக்கு உடன் பிறந்தார் இலையே என்ற மனக்குறையை நீக்கி விட்டார். உடன் பிறவாத தமக்கையாக நின்று என் வாழ்க்கையில் எனக்கு ஓர் ஊன்று கோலாக விளங்கி வருகிறார். எங்கள் இல்லத்தில் நிகழும் திருமணச் செலவு, கல்விச் செலவு மருத்துவச் செலவு, பிறசெலவு எவ்வகைச் செலவாயினும் தமக்கையாரின் பங்கு உறுதியாக வுண்டு. அவர்களே வலிய முன் வந்து மனமுவந்து உதவுவார்கள். என் மகள் mšÈÆ‹ கல்லூரிப் படிப்புக்கான செலவை அவரே ஏற்றுக் கொண்டார். அவர் சென்னையிலிருந்து ஒரு முறை மடல் எழுதி யிருந்தார். அதில் அவருடைய அன்புணர்வையும் உரிமை யுணர்வையும் பெருந்தன்மையையும் புலப்படுத்திருந்தார். தம்பி! நம் அல்லிக்குக் கல்லூரிக் கட்டணம் கட்ட வேண்டுமே; காலங் கடந்து விட்டதென்று கருதுகிறேன். நான் மறந்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்களாவது நினைவு படுத்தி எழுதியிருக்கலாமே. உங்கள் இயல்பு எனக்குத் தெரியும். நீங்கள் கேட்க மாட்டீர்கள். என்னை வித்தியாசமாகக் கருதி விட்டீர்களா? உங்களுக்கு முற்பிறப்பு, மறுபிறப்பு இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லை. எனக்கு நம்பிக்கை யுண்டு. போன பிறவியில் நாம் அக்கா, தம்பியாகப் பிறந்திருப்போம் என்று என் மனம் எனக்குச் சொல்கிறது. அதனால் கூச்சப் படாமல் எனக்கு எழுதலாம் தம்பி. உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு நிறையச் செய்ய வேண்டு மென்பது என் ஆசை. என் பொருளாதாரம் இடங் கொடுக்க வில்லையே என்று வருந்தி யெழுதியிருந்தார். இத்தகு தாயுள்ளத்தை -தலையளியை என்னென்பது? வலிந்து வந்து எனக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எவ்வாறு தோன்றிற்று? என்னை ஆட்கொண்ட தமிழன்னைதான் அவர்தம் தண்ணளியைப் பெற வைத்தனள் என்று கருதுகின்றேன். தனித்துப் பிறந்து தவிக்கும் என்னை இனித்த மொழியால் இனிய முகத்தால் உள்ளுறும் அன்பால் உடன்பிறப் பாக்கி அள்ளி யுதவி அரவணைத் தளிக்கும் பார்வதி தேவியைப் பணியும் புகழும் ஓர்தமிழ் உணர்ந்தஎன் உயர்சிறு நாவே பண்டை நாளில் புலவரைப் போற்ற வள்ளல்கள் இருந்தனர் என்று படித்துளேன். இன்று புலவரைப் போற்றும் புரவலர் உளரோ இலையோ யானறியேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அண்ணலார், அடிகளார், பார்வதி நடராசன் போன்றோர் கைம்மாறு கருதாப் புரவலராக விளங்குவதைக் கண்கூடாகக் காண்கின்றேன். இவர்களைப் பற்றி விரிவாக எழுத எண்ணியிருந்தேன். பாழும் நோய் வந்து என்னைத் தாக்கியதால் அவ்வாறு எழுத இயலவில்லை. எனினும் சிறுசிறு குறிப்புகளாக எழுதியுள்ளேன். இப்பெருமக்களை என் வழிவழி வருவோர் நினைந்து வணங்கக் கடமைப் பட்டுளர். நோய் வாய்ப்பட்டு மருத்துவனையிற் சேர்க்கப்பட்ட பொழுதும் தவத்திரு அடிகளார், பார்வதி நடராசன், இன்னும் பலர் பத்தாயிரம் வரை பொருளுதவி செய்து என்னைக் காப்பாற்றினர். நான் நோய் வாய்ப்பட்ட செய்தியை யறிந்த தமிழக முதல்வர் மாண்புமிகு முதல்வர் கலைஞர். மு: கருணாநிதி யவர்கள் மாவட்டச் செயலர் த. கிருட்டினன் அவர்கள் வாயிலாகப் பத்தாயிரம் உரூவா தந்து உய்த்தனர். அப்பெருந்தகை என்பால் என்றும் பேரன்புடையவர். நான் பொருளற்றவனாயினும் என்னையும் பொருட் படுத்திப் பொருளுதவி செய்து காத்த இப்பேருளங்களுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது? தனித்துப் பிறந்த எனக்கு இத்தகு பேரளுளாளர் கிடைத்தனரே என எண்ணி யெண்ணி, உவகைக் கண்ணீர் உகுப்பது தவிர என்னால் வேறென்ன செய்ய இயலும்? என் வாழ்க்கை பற்றி நானெழுதிய பாடலைக் கீழே தந்துளேன். அதனைப் படித்தால் நான் நடந்து வந்த பயணத்தின் அருமைப் பாட்டை நன்குணர்ந்து கொள்ளலாம். எத்தகு இடையூறு நேரினும் என் கொள்கையிற் பிறழ்ந்திலேன்; பெருமிதமுங் குன்றிலேன். அந்த நிலைக்கு என்னை ஆளாக்கிய என் நெஞ்சிற் கொலுவிருக்கும் தமிழன்னைக்கு நன்றி செலுத்தி வணங்குகிறேன். இதோ அப் பாடல். உற்றவள் ஒவ்வோர் நாளில் உலையிட அரிசி யில்லாச் 1சொற்றனை என்பாற் சொல்லத் துவண்டுளஞ் சோர்ந்து செல்வேன்; பற்றுளங் கொண்ட நண்பர் பரிந்துகை கொடுப்பர்; ஆனால் உற்றெனை ஏழை யென்றால் உளத்தினுள் அதனை ஏலேன் உடுத்திடும் உடைக்குக் கூட ஒரோவழித் தவித்த துண்டு துடித்திடும் அற்றை நாளில் துணிபல தந்து துன்பம் துடைத்துநல் லன்பு காட்டித் தோழர்கை கொடுத்து நிற்பர்; நடப்பிது வெனினும் ஏழை என்றெனை நவில மாட்டேன். பிணியெனைப் பற்ற நெஞ்சம் பேதலித் துழலுங் காலை தணியவே வந்து தாய்போல் தண்ணருள் சுரந்து காக்கும் 2 அண்ணலார் உதவ மெய்யில் ஆருயிர் தங்கு மேனும் எண்ணவும் செய்யா துள்ளம் ஏழையாம் இழிந்த சொல்லை. மக்களின் கல்விக் காக மனம்மிக மாழ்கும் போது தக்கவர் அன்போ டந்த மயக்கினைத் தவிர்ப்ப துண்டு சிக்கனம் அறியா என்றன் சிந்தனை கலங்கு மேனும் பொக்கையாய் ஏழை யென்று புகலுதல் அறவே செய்யேன். வாழ்வினில் துயர வெள்ளம் அலைத்திட வந்து பன்னாள் சூழ்வதும் உண்டு; பண்பர் தூயநற் றொண்டர் அன்பர் தாழ்விலா அளியர் என்னைத் தாங்கிடத் தாமே வந்து சூழ்பவர் உண்டென் றாலும் சொல்லிடேன் ஏழைச் சொல்லை. பணவரு வாயிற் பற்றாக் குறையெனைப் பற்றும் போது துணையென நட்டார் வற்றா அருளுடன் தோள்கொ டுப்பர்; தணலென நிரப்பு வந்து தனியெனைத் தகைத்துத் தாக்க அணுகினும் ஏழை யென்றால் அரசன்யான் ஏற்ப தில்லை. (நிரப்பு - வறுமை) கவியரசர் முடியரசன் படைப்புகள் fÉijfŸ தொகுப்பு 1 முடியரசன் கவிதைகள் 1954 நெஞ்சிற் பூத்தவை 1999 தொகுப்பு 2 காவியப்பாவை 1955 பாடுங்குயில் 1983 தொகுப்பு 3 கவியரங்கில் முடியரசன் 1960 தமிழ் முழக்கம் 1999 தொகுப்பு 4 நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 மனிதனைத் தேடுகிறேன் 1986 மனிதரைக் கண்டுகொண்டேன் 2005 தொகுப்பு 5 தாய்மொழி காப்போம் 2001 புதியதொரு விதிசெய்வோம் 1999 தொகுப்பு 6 வள்ளுவர் கோட்டம் 1999 ஞாயிறும் திங்களும் 1999 காவியம் தொகுப்பு 7 பூங்கொடி 1964 வீரகாவியம் 1970 தொகுப்பு 8 ஊன்றுகோல் 1983 இளம்பெருவழுதி புதிய நூல் 2008 இலக்கணம் தொகுப்பு 9 தமிழ் இலக்கணம் 1967 பாடுங்குயில் 1975 தொகுப்பு 10 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு) புதிய நூல் கடித இலக்கியம் தொகுப்பு 11 அன்புள்ள பாண்டியனுக்கு 1999 அன்புள்ள இளவரசனுக்கு 1999 சிறுகதை + கட்டுரை தொகுப்பு 12 எப்படி வளரும் தமிழ்? 2001 எக்கோவின் காதல் 1999 தொகுப்பு 13 சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990