கவியரசர் முடியரசன் படைப்புகள் 9 தமிழ் இலக்கணம் பாடுங்குயில்கள் (உரைநடை) முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 256 = 272 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 170/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்த இப்பரிசிலுக்கு யான்ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன்........ முற்றிய திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி -630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25 இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x 1. தமிழ் இலக்கணம் முன்னுரை 3 தேசீய கீதம் 5 1 எழுத்து 6 2 சொல் 16 3. பொது 76 4. புணர்ச்சி 88 5. பொருள் 106 6. யாப்பு 117 7. அணி 123 1. தமிழ் இலக்கணம் 1. செய்தித் தாள்களுக்குச் செய்திப்பத்திகள் எழுதியனுப்புதல் 130 2. வருணனைக் கட்டுரைகள். 131 3. விளக்கக் கட்டுரைகள் 133 4. கருத்தியல் கட்டுரைகள் 133 5. எடுத்தியம்பும் கட்டுரைகள் 134 6. வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள் 135 7. நடைமுறைச் சமுதாயவியல் - பொருளியல் கல்வியியல் கட்டுரைகள் 136 (ஆ) நடைமுறைப் பொருளியல் கட்டுரைகள் 136 8. பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுதல் 137 9. பிறர் வானொலிப் பேச்சைக் கேட்டுக் குறிப்புகள் எடுத்தல் 138 10. வானொலிப் பேச்சக் குறிப்புக்களைப் பின் விரித்து எழுதுதல் 139 11. கொடுத்த தலைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுதல் 140 12. கொடுக்கப்பட்ட மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டல். 141 13. பொருள் வகையாலும், நடைவகையாலும் சிறந்த கடிதங்கள் எழுதுதல். 142 14. அரசியல் அலுவலகங்களுக்கும் ஊராட்சி நகராட்சிக் கழகங்களுக்கும் குறித்த பொருள்கள் பற்றி விண்ணப்பங்கள் எழுதுதல். 143 15. கற்பனைக் கட்டுரைகள் 144 16. நிறைவேறிய தீர்மானகங்களை உரிய இடங்களுக்கு அனுப்பிவைத்தல். 147 17. ஒருபொருள் அல்லது சூழ்நிலை பற்றி ஒட்டியும் வெட்டியும் உரையாடல் அமைத்தல். 147 18. நூல் மதிப்புரை எழுதுதல் 150 19. செய்யுள் திரண்ட பொருள் எழுதுதல் 151 20. கூட்டங்கள் - மாநாடுகளுக்கு வரவேற்புரை எழுதுதல் 152 21. பிரிவுரை எழுதுதல் 154 22. வெள்ளி விழாக்காலப் புகழுரையும் மறுமொழியும் 155 23. நாடகக் காட்சி அமைத்தல் 157 24. மாணவர் மன்றங்களுக்கு விதிகள் அமைத்தல் 159 மொழிப் பயிற்சி 1. வாக்கியம் - பலவகைகள் 161 2. வாக்கிய அமைப்பு 164 3. ஒரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளியிடுதல் 165 4. பத்தியமைப்பு (விரிவாக) 166 5. நடை (விரிவாக) 168 6. வழூஉச் சொற்களும் திருத்தமும் 172 7. விலக்குதற்குரிய இழி வழக்குக்கள் 173 8. நிறுத்தற்குறிப் பயிற்சிகள் 173 9. மரபு 173 10. உவமைகளும் பழமொழிகளும் வைத்தெழுதுதல். 174 11. உவமை உருவக மாற்றம் 176 12. வல்லெழுத்து மிகும் இடங்களும் மிகா இடங்களும் (விரிவாக) 177 13. இடம் விட்டெழுதுதலும் சேர்த்தெழுதுதலும் 183 14. சொற்களை இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் 184 2. பாடுங்குயில் 1. இசைக்குயில் வேதநாயகர் (கி.பி. 1826 - 1889) 189 2. மணிக்குயில் தேசிக விநாயகம் (கி.பி.1876 -1954) 207 3. விடுதலைக்குயில் பாரதியார் (கி.பி. 1882 - 1921) 222 4. புரட்சிக்குயில் பாரதிதாசன் (கி.பி. 1891 - 1964) 238 தமிழ் இலக்கணம் முன்னுரை தமிழகஅரசின் புதிய பாடத் திட்டடத்தின்படி இவ்விலக்கண நூல் பதினோராம் வகுப்பிற்கு எழுதப்பட்டுள்ளது; மாணவர்க்கு ஏற்ற வகையில், எளிதிற் புரிந்து கொள்ளுமாறு விளக்கி எழுதப் பட்டுள்ளது. கட்டுரையும், மொழிப்பயிற்சியும் இதனுடன் இணைக்கப் பட்டுள்ளன. பதினோராம் வகுப்பு மாணவர்க்கு இந்நூல், இலக்கணத் துணைவனாக மட்டுமின்றிக் கட்டுரை நண்பனாகவும், மொழிப் பயிற்சி ஆசானாகவும் நின்றுதவவல்லது. இந்நூல், நல்ல முறையில் உருவாகத் துணை செய்த புலவர் ஆ. பழநி, ந. சக்திவேல், B.A.,B.T. வித்துவான் இராம. சிதம்பரம் ஆகிய மூவர்க்கும் நன்றி செலுத்துங்கடப்பாடுடையேன். இந்நூலைத் தமிழகத்துப் பள்ளிகளில் உலா வரச் செய்யும் ஆசிரியப் பெருமக்கட்கு என் உளங்கனிந்த நன்றி. காரைக்குடி இங்ஙனம், 11.12.1967 ஆசிரியர். தேசீய கீதம் ஜன கண மன அதிநாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா த்ராவிட உத்கல வங்கா விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா தவ சுப நாமே ஜாகே தவசுப ஆசிஷ மாஹே காயே தவஜய காதா ஜன கண மங்கள தாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா ஜயஹே ஜயஹே ஜயஹே ஜய ஜய ஜய ஜயஹே. நாட்டு வணக்கம் இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான் மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய். நின்திருநாமம், பஞ்சாபையும் சிந்துவையும் குஜராத்தையும் மஹாராஷ்டிரத்தையும், திராவிடத்தையும் ஒரிஸாவையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது; அது விந்திய ஹிமாலய மலைகளில் எதிரொலிக்கிறது; யமுனை கங்கை நதிகளின் இன்பநாதத்தில் கலக்கிறது; இந்தியக் கடல் அலைகளால் ஒலிக்கப்படுகிறது; அவை நின் ஆசியை வேண்டுகின்றன; நின் புகழைப் பாடுகின்றன; இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி. 1 எழுத்து 1. எழுத்துக்களின் பிறப்பு - இடம், முயற்சி (பிறப்பின் பொதுவிதி) அகர முதல வெபத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. எழுத்துக்களுக்கு ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இரண்டு உண்டு. நாம் இங்கு எழுத்துக்களின் ஒலி வடிவம் பற்றிய பொதுப் பிறப்பைக் காண்போம். மேலே உள்ள திருக்குறளைப் பன்முறை நன்றாக வாய்விட்டுப் படியுங்கள். அங்ஙனம் படிக்கும்பொழுது, அக்குறட்பாவில் உள்ள எழுத்துக்களின் ஒலிகளைச் செவி சாய்த்துக் கேளுங்கள். ஒவ்வொரு எழுத்தும் ஒலி வடிவம் பெறும்பொழுது, ஒன்றற்கொன்று ஒலிய மைப்பில் வேறுபடு வதை உணர்வீர்கள். அக் குறட்பாவில் உள்ள அ-த்-ன்-ல் என்ற எழுத்துக் களைத் தனித்தனியே ஒலித்துப் பாருங்கள். உயிரெழுத்தாகிய அ என்பது, கழுத்தைப் பிறப்பிட மாகக் கொண்டு, வாய் திறத்தலாகிய முயற்சியினால் பிறப்பது தெரிய வரும். வல்லின மெய்யெழுத்தாகிய த் என்பது மார்பைப் பிறப்பிட மாகக் கொண்டு, மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கு நுனி பொருந்தும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும். மெல்லின மெய்யெழுத்தாகிய ன் என்பது மூக்கைப் பிறப்பிட மாகக்கொண்டு, மேல்வாயை நாக்கு நுனி மிகப் பொருந்தும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும் இடையின மெய்யெழுத்தாகிய ல் என்பது கழுத்தைப் பிறப் பிடமாகக்கொண்டு, மேல்வாய்ப் பல்லினடியை, நாவோரமானது தடித்து நெருங்கும் முயற்சியினால் பிறப்பது தெரியவரும். எனவே, எழுத்துக்களின் ஒலி வடிவப் பொதுப் பிறப்பிற்கு இடம், முயற்சி என்ற இரண்டும் காரணமாக அமைகின்றன என்பது தெரியவரும். இலக்கண விதி: ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் சிறிதும் குறைவின்றி நிறைத் உயிரினது முயற்சி யினால், உள்ளே நின்ற உதானன் என்னு காற் றானது எழுப்ப, அதனால் எழுகின்ற செவிப் புலனாம் அணுக் கூட்டம், மார்பும், கழுத்தும், தலையும், மூக்கும் ஆகிய நான்கு இடங்களையும் பொருந்தி, உதடும், நாக்கும், பல்லும், மேல்வாயும் ஆகிய நான் கனுடைய முயற்சிகளால் வெவ்வேறு ஒலி எழுத்துக்களாகத் தோன்று தல் அவற்றின் பொதுப் பிறப்பாகும். நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெபத்தொலி யாய்வரல் பிறப்பே (நன்னூல்-நூற்பா 74.) 2. முதலேழுத்துகளின் இடப் பிறப்பு அமைச்சர் - ஆட்சி கத்தரி - வற்றல் மூன்று - சங்கம் யாழ் - நூல் மேலே உள்ள சொற்களை ஒலித்துப் பாருங்கள். உத்தியி லிருந்து வரும் உதானன் என்னும் காற்று, கழுத்தை அடைந்தவுடன், அ-ஆ என்ற உயிர் எழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும். அக் காற்று, மார்பை அடைந்தவுடன் த்-ற் என்ற வல்லின மெய்யெழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும். அக் காற்று, மூக்கை அடைந்தவுடன் ன்-ங் என்ற மெல்லின மெய்யெழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும். அக் காற்று, கழுத்தை அடைந்தவுடன் ழ்-ல் என்ற இடையின் மெய்யெழுத்துக்கள் பிறத்தல் தெரியவரும். ஆ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓள என்ற பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும். க், ச், ட், த், ப், ற் என்ற வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும், மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும். ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும், மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கும். ய், ர், ல், வ், ள், ழ் என்ற இடையின மெய்யெழுத்துக்கள் ஆறும், கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும். இலக்கண விதி: உயிர் எழுத்துக்களுக்கும் இடையின மெய் எழுத்துக்களுக்கும் பிறப்பிடம் கழுத்தாகும். வல்லின மெய் எழுத்துக் களுக்குப் பிறப்பிடம் மார்பாகும். மெல்லின மெய் எழுத்துக் களுக்குப் பிறப்பிடம் மூக்காகும். அவ்வழி,- ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. (ந-நூற்பா 75.) 3. உயிரெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு (அ, ஆ இவற்றின் முயற்சிப் பிறப்பு) அரசன் - ஆண்டி இச்சொற்களில் உள்ள அ-ஆ என்ற உயிரெழுத்துக்களை ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிப்பதற்கு வாய் திறத்தலாகிய முயற்சி மட்டும் போதும் என்பது தெரியவரும். இலக்கண விதி: அ-ஆ என்ற உயிரெழுத்துக்கள் இரண்டும், முன்பு கூறப்பட்ட நால்வகை முயற்சிகளுள், அண்ணத்தின் தொழி லாகிய வாய் திறத்தலால் பிறக்கும். அவற்றுள்,- முயற்சியுள் அஆ அங்காப் புடைய. (ந-நூற்பா 76.) (இ, ஈ, எ, ஏ, ஐ இவற்றின் முயற்சிப் பிறப்பு) இலை, ஈட்டி, எருது, ஏணி, ஐந்து இச்சொற்களில் உள்ள இ, ஈ, எ, ஏ, ஐ என்ற ஐந்து உயிரெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிப் பதற்கு வாயைத் திறத்தலுடன், மேல்வாய்ப் பல்லை அடி நாக்கின் ஓரங்கள் பொருந்துதலாகிய முயற்சி வேண்டும் என்பது தெரிய வரும். இலக்கண விதி: இ, ஈ, எ, ஏ, ஐ என்ற உயிரெழுத்துக்கள் ஐந்தும், வாய் திறத்தலுடன் மேல்வாய்ப் பல்லை அடி நாக்கின் ஓரங்கள் பொருந்தும் முயற்சியால் பிறக்கும். இஈ எஏ ஐஅங் காப்போடு அண்பல் முதல்நா விளிம்புற வருமே. (ந-நூற்பா 77.) (உ, ஊ, ஒ, ஓ, ஔ இவற்றின் முயற்சிப் பிறப்பு) உருண்டை, ஊசி, ஒன்பது, ஓடம், ஔவை இச்சொற்களில் உள்ள உ, ஊ, ஒ, ஓ, ஔ என்ற ஐந்து உயிரெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிப் பதற்கு உதடுகளைக் குவிக்கும் முயற்சி வேண்டும் என்பது தெரிய வரும். இலக்கண விதி: உ, ஊ, ஒ, ஓ, ஔ என்ற உயிரெழுத்துக்கள் ஐந்தும், உதடுகளைக் குவித்து ஒலிக்கம் முயற்சியால் பிறக்கும். உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ் குவிவே. (ந-நூற்பா 78.) 4. மெய்யெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு (க, ங, ச, ஞ, ட, ண இவற்றின் முயற்சிப் பிறப்பு) மக்கள் அரசாங்கம் மிச்சம் பிஞ்சு கட்டம் மண் இச்சொற்களில் உள்ள க், ங், ச், ஞ், ட், ண் என்ற மெய்யெழுத்துக்களை ஒலித்துப் பாருங்கள். அவற்றுள், க், ங் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், அடிநாக்கு மேல்வாயின் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. ச், ஞ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், நடுநாக்கு மேல்வாயின் நடுப்பகுதியைப் பொருந்தும் முயற்சியால் பிறக் கின்றன. ட், ண் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும், நுனிநாக்கு மேல்வாயின் நுனிப் பகுதியைப் பெருந்தும் முயற்சியால் பிறக் கின்றன. இலக்கண விதி: க், ங் என்ற மெய்யெழுத்துக்களும் அடிநாக்கு மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்தும் முயற்சி யாலும், ச், ஞ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் நடுநாக்கு மேல்வாயின் நடுப்பகுதியைப் பொருந்தும் முயற்சியாலும், ட், ண் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் நுனிநாக்கு மேல்வாயின் நுனிப் பகுதியைப் பொருந்தும் முயற்சியாலும் பிறக்கும். கஙவும் சஞவும் டணவும் முதலிடை நுனிதா அண்ண முறமுறை வருமே. (ந-நூற்பா 79.) (த, ந- இவற்றின் முயற்சிப் பிறப்பு) சத்தம் சந்தம் இச்சொற்களில் உள்ள த், ந் என்ற இரண்டு மெய் யெழுத்துக் களையும் ஒலித்துப் பாருங்கள். அவை மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி சென்று பொருந்தும் முயற்சி யால் பிறத்தல் தெரியவரும். இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி சென்று பொருந்தும் முயற்சியால், த், ந் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும். அண்பல் அடிநா முடியுறத் தநவரும். (ந-நூற்பா 80.) (ப,ம இவற்றின் முயற்சிப் பிறப்பு) அப்பா அம்மா இச் சொற்களில் உள்ள ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத் துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேலுதடும் கீழு தடும் பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரியவரும். இலக்கண விதி: மேலுதடும் கீழுதடும் பொருந்தும் முயற்சி யால் ப், ம் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக் கும். மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும் (ந-நூற்பா 81.) (ய, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு) தாய் சேய் இச் சொற்களில் உள்ள ய் என்ற மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அஃது, அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். இலக்கண விதி: அடி நாக்கு மேல்வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால், ய் என்ற மெய்யெழுத்துப் பிறக்கும். அடிநா வடியண முறயத் தோன்றும். (ந-நூற்பா 82.) (ர, ழ இவற்றின் முயற்சிப் பிறப்பு) நீர் அமிழ்து இச்சொற்களில் உள்ள ர், ழ் என்ற இரண்டு மெய்யெழுத்துக் களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால் பிறத்தல் வெளிவரும். இலக்கண விதி: மேல்வாயை நுனி நாக்குத் தடவும் முயற்சியால், ர், ழ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும். அண்ண நுனிநா வருட ரழவரும். (ந-நூற்பா 83.) (ல, ள இவற்றின் முயற்சிப் பிறப்பு) வெல்லம் வெள்ளம் இச்சொற்களில் உள்ள ல், ள் என்ற இரண்டு மெய் யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவற்றுள். ல் என்ற மெய்யெழுத்து, மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரமானது தடித்துப் பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். ள் என்ற மெய்யெழுத்து, மேல்வாயை நாக்கின் ஓரமானது தடித்துத் தடவும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரமானது தடித்துப் பொருந்தும் முயற்சியால், ல் என்ற மெய் யெழுத்தும், மேல்வாயை நாக்கின் ஓரமானது தடித்துத் தடவும் முயற்சியால், ள் என்ற மெய்யெழுத்தும் பிறக்கும். அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். (ந-நூற்பா 84.) (வ, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு) நவ்வி தெவ்வர் இச் சொற்களில் உள்ள வ் என்ற மெய்யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அது, மேல் வாய்ப் பல்லைக் கீழுதடு சென்று பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும். இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு சென்று பொருந்தும் முயற்சியால், வ் என்ற மெய்யெழுத்துப் பிறக்கும். மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (ந-நூற்பா 85.) (ற, ன இவற்றின் முயற்சிப் பிறப்பு) நாற்று தென்னை இச்சொற்களில் உள்ள ற், ன் என்ற இரண்டு மெய் யெழுத்துக் களையும் ஒலித்துப் பாருங்கள். அவை, மேல்வாயை நாக்கு நுனி நன்கு பொருந்தும் முயற்சியால் பிறத்தல் தெரிய வரும். இலக்கண விதி: மேல்வாயை நாக்கு நுனி நன்கு பொருந் தும் முயற்சியால், ற், ன் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் பிறக்கும். அண்ண நுனிநா நனியுறிற் றனவரும். (ந-நூற்பா 86.) 5. சார்பெழுத்துக்களின் இட முயற்சிப் பிறப்பு அஃது இஃது இச் சொற்களில் உள்ள ஆய்த எழுத்தை ஒலித்துப் பாருங்கள் ஃ என்ற ஆய்த எழுத்தை ஒலிக்கும் பொழுது, உதானன் என்ற காற்று தலைக்குச் சென்று வாய் வரியாக வெளி வருகின்றது. எனவே, ஆய்த எழுத்திற்குப் பிறப்பிடம் தலையும், முயற்சி, வாய் திறத்தல் மட்டுமே என்பதும் தெரியவரும். திருக்குறள் திருவள்ளுவர் இச் சொற்களில் உள்ள தி என்ற வல்லின உயிர் மெய் யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். தி என்ற வல்லின உயிர் மெய் யெழுத்து மார்பு கழுத்து ஆகிய இரண்டு இடங்களையும் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டு பிறப்பது தெரியவரும். தி என்ற உயிர் மெய்யெழுத்தில் (த்+இ=தி) த் என்ற வல்லின மெய்யெழுத்தும் இ என்ற உயிரெழுத்தும் உள்ளன. த் என்ற வல்லின மெய்யெழுத் திற்குப் பிறப்பிடம் மார்பு. இ என்ற உயிரெழுத்திற்குப் பிறப்பிடம் கழுத்து. எனவே, தி என்ற வல்லின உயிர் மெய்யாகிய சார்பெழுத்து, தன் முதல் எழுத்துக்களுக்குரிய பிறப்பிடங்கள் இரண்டினையும் தனக்குப் பிறப்பிடங்களாகக் கொண்டு பிறப்பது தெரியவரும். முயற்சிப் பிறப்பில் த் என்ற வல்லின மெய்யெழுத்து, மேல் வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி சென்று பொருந்தப் பிறக்கம். இ என்ற உயிர்மெய்யெழுத்து மேல்வாய்ப் பல்லை அடி நாக்கின் ஓரங்கள் பொருந்தும் முயற்சியால் பிறக்கும். எனவே, தி என்ற வல்லின உயிர் மெய்யெழுத்து, தன் முதல் எபத்துக்களுக்குரிய இருவகை முயற்சிகளையும் தனக்கு முயற்சிப் பிறப்பாகக் கொண்டு பிறத்தல் தெரியவரும். இங்ஙனமே, பிற உயிர்மெய்யெழுத்துக்களாகிய சார் பெழுத்துக் கள், தத்தம் முதல் எழுத்துக்குரிய பிறப்பிடங்களை யும், முயற்சி களையும் தத்தமக்குரியனவாகக் கொண்டு பிறக்கும். இலக்கண விதி; சார்பெழுத்துக்களில் ஒன்றான ஆய்த எழுத்து, தலையைப் பிறப்பிடமாகக் கொண்டு பிறக்கும். அதற் குரிய முயற்சி வாய்திறத்தல் மட்டுமே ஆகும். ஆய்தம் ஒழிந்த உயிர்மெய் முதலான மற்றைச் சார்பெழுத்துக்கள், தத்தம் முதல் எழுத்துக்களுக்குரிய பிறப்பிடம், முயற்சி ஆகியவற்றையே தாமும் கொண்டு பிறக்கும். ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. (ந-நூற்பா 87.) பயிற்சி வினாக்கள் 1. பொதுவாகத் தமிழ் எழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன? 2. முதல் எழுத்துக்கள் எவை? அவை பிறக்கின்ற இடங்கள் எவை? 3. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஐ, ஔ - என்ற உயிரெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பைப் கூறுக. 4. க், ங், ச், ஞ், ட், ண் என்ற மெய்யெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பைக் கூறுக. 5. த், ந் என்ற மெய்யெபத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன? 6. மேலுதடும், கீழுதடும் பொருந்தும் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்கள் எவை? 7. ர, ழ, ல, ள என்ற மெய்யெழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன? 8. ற், ன் என்ற மெய்யெழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கின்றன? 9. ஆய்த எழுத்திற்குரிய இடப் பிறப்பையும் முயற்சிப் பிறப்பையும் கூறுக. 10. உயிர்மெய் முதலான சார்பெழுத்துக்கள் எங்ஙனம் பிறக்கும்? 2 சொல் தனி மொழி - தொடர் மொழி - பொது மொழி 1. தனிமொழி (ஒரு மொழி) நிலம் (பகாப்பதம்) நிலத்தன் (நிலம்+த்+த்+அன் - பகுபதம்) மேலே உள்ள எடுத்துக்காட்டுக்களில் நிலம் என்ற சொல் பகுதிவிகுதிகளாகப் பிரிக்க முடியாத பகாப்பதமாகும். அது, தனித்து நின்று ஒரு பொருளைத் தருகிறது. எனவே அது, தனி மொழி (ஒரு மொழி) எனப்படும். நிலத்தன் என்ற சொல் பகுதிவிகுதிகளாகப் பிரிக்கக் கூடிய பகுபதமாகும். அது, தனித்து நின்று ஒரு பொருளைத் தரு கிறது. எனவே, அதுவும் தனி மொழி (ஒருமொழி) எனப்படும். நாடு தில் நாடன் மன் நட தவ நடந்தான் நனி மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில் நாடு, நாடன், நட, நடந்தான் என்ற பெயர் - வினைப்பகாப்பதங்களும், பகுபதங் களும் தனித்து நின்று தத்தம் ஒரு பொருளைத் தருகின்றன. தில், மன், என்ற இடைச் சொற்கள் தனித்து நின்று தத்தம் ஒரு பொருளைத் தருகின்றன. தவ, நனி என்ற உரிச்சொற்கள் தனித்து நின்று தத்தம் ஒரு பொருளைத் தருகின்றன. இங்ஙனம் பகாப்பதமும், பகுபதமும் தனித்து நின்று தத்தம் பொருளைத் தருமானால், அவை தனிமொழி (ஒரு மொழி) எனப்படும். 2. தொடர்மொழி (அல்வழி) நிலம் வலிது அது கொல் சாலப் பகை மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில் நிலம் என்ற பகாப் பதமும், வலிது என்ற பகாப்பதமும் தம்முள் தொடர்ந்தும் அது என்ற பகாப்பதமும், கொல் என்ற பகாப்பதமும் தம்முள் தொடர்ந்தும், சால என்ற பகாப்பதமும், பகை என்ற பகாப்பத மும் தம்முள் தொடர்ந்தும், அல்வழியில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருகின்றன. இரண்டு முதலிய பல பொருளைத் தருதலாவது: நிலம் வலிது என்ற தொடரில் உள்ள நிலம் என்பது, பூமி என்ற பொருளையும், வலிது என்பது, வலிமையுடையது என்ற பொரு ளையும், நிலம் வலிது என்பது, பூமி வலிமையுடையது என்ற பொருளையும் தருதலாகும். (வேற்றுமை) நிலங் கடந்தான் நிலத்தைக் கடந்தான் நிலத்தைக் கடந்த நெடுமால் மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில், நிலம் என்ற பகாப் பதமும், கடந்தான் என்ற பகுபதமும் தம்முள் தொடர்ந் தும், நிலத்தை என்ற பகுபதமும், கடந்தான் என்ற பகுபதமும் தம்முள் தொடர்ந்தும், வேற்றுமையில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருகின்றன. நிலத்தைக் கடந்த நெடுமால் என்ற எடுத்துக்காட்டில் நிலத்தை என்ற பகுபதமும், கடந்தான் என்ற பகுபதமும், நெடு என்ற பகாப்பதமும், மால் என்ற பகாப்பதமும், தம்முள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து நின்று, வேற்றுமையில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருதல் காண்க. 3. பொதுமொழி எட்டு, தாமரை, வேங்கை எழுந்திருந்தான், வந்திருந்தான் இவ் வெடுத்துக் காட்டுக்களில் எட்டு தாமரை வேங்கை, என்பன ஒரு மொழியாய் நின்று எட்டு என்ற எண்ணிக்கையையும், நீர்ப் பூவையும், புலியையும் உணர்த்தி ஒரு பொருள் தருகின்றன. எழுந்திருந்தான் என்பது, எழுந்தான் எனவும், வந்திருந்தான் என்பது, வந்தான் எனவும் ஒரு மொழியாய் நின்று ஒரு பொருள் தருதல் காண்க. இனி எட்டு என்பது எள்+துஎனத்தொடர் மொழியாய் நின்று, எள்ளை உண்பாய் எனவும்,தாமரை என்பது தா+மரை எனத் தொடர் மொழியாய் நின்று, தாவுகின்ற மரை எனவும், வேங்கை என்பது வேம்+கை எனத் தொடர் மொழியாய் நின்று, வேகின்ற கை எனவும் தொடர்மொழி களாய்ப் பல பொருள் தருதல் காண்க. (த-உண்பாய். மரை-மான்) எழுந்திருந்தான் என்பது எழுந்து+இருந்தான் எனத் தொடர் மொழியாய் நின்று, எழுந்து பின் இருந்தான் எனவும், வந்திருந் தான் என்பது வந்து+இருந்தான் எனத் தொடர் மொழியாய் நின்று, வந்து பின் இருந்தான் எனவும் தொடர்மொழிகளாய்ப் பல பொருள் தருதல் காண்க. இலக்கண விதி: ஒருமொழிகளாவன, (தனிமொழி களாவன) பகாப்பதமேனும், பகுபதமேனும் ஒன்று நின்று தத்தம் ஒரு பொருளைத் தருவனவாம். தொடர்மொழிகளாவன, அவ்விருகைப் பதங்களும் தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கில் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து நின்று, இரண்டு முதலிய பல பொருள்களைத் தருவனவாம். பொது மொழிகளாவன, ஒன்றாய் நின்று ஒரு பொருள் தந்தும், அதுவே தொடர்ந்து நின்று பல பொருள் தந்தும், இவ்விரண்டிற்கும் பொதுவாய் நிற்பனவாம். 2. பொதுப் பெயர் (தான்-தாம்-எல்லாம்) (பொதுப் பெயர்) சாத்தன்-சாத்தி இவற்றுள், சாத்தன் என்ற முதற்பெயரை உயர்திணையில் ஆண் மகனுக்கும் பெயராக இட்டு வழங்கலாம்; அஃறிணையில் காளைக்கும் பெயராக இட்டு வழங்கலாம். சாத்தி என்ற முதற் பெயரை உயர்திணையில் பெண் மகளுக்கும் பெயராக இட்டு வழங்கலாம்; அஃறிணையில் பசுவுக்குப் பெயராக இட்டு வழங் கலாம். எனவே, இவை இருதிணைப் பொதுப் பெயர்கள் எனப் படும். இங்ஙனமே, முடவன், முடத்தி என்ற சினைப் பெயர் களையும், முடச்சாத்தன், முடச்சாத்தி என்ற சினைமுதற் பெயர் களையும், தந்தை தாய் என்ற முறைப் பெயர்களையும், எல்லாம் தாம், தான் என்ற பெயர்களையும் உயர்திணைக்கும், அஃறிணைக்கும் பொதுவாக வழங்கலாம். முதற்பெயர் நான்கும், சினைப்பெயர் நான்கும், சினைமுதற் பெயர் நான்கும், முறைப்பெயர் இரண்டும், தன்மைப் பெயர் நான்கும், முன்னிலைப் பெயர் ஐந்தும், எல்லாம், தாம், தான் என்பனவும், இவை போல்வன பிறவும் பொதுப் பெயர்களாகும் . இவற்றுள், தான், தாம், எல்லாம், என்ற பொதுப் பெயர் களைப் பற்றி இனிக் காண்போம். (தான்) அவன்தான் சென்றான். அவள்தான் சென்றாள். அதுதான் சென்றது. மேற்கண்ட தொடர்களில் உள்ள தான் என்பது பொதுப் பெயர்ச் சொல்லாகும். அவன்தான் சென்றான், அவள்தான் சென்றாள் என்ற தொடர்களில், தான் என்பது உயர்திணை ஒருமையில் வந்துள்ளது. அதுதான் சென்றது என்ற தொடரில், தான் என்பது அஃறிணை ஒருமையில் வந்துள்ளது. எனவே, தான் என்பது இங்ஙனம் இருதிணைக்கும் பொதுவாக வந்தமையால் பொதுப்பெயர் எனப்படும். (தாம்) அவர்தாம் சென்றனர். அவைதாம் சென்றன. மேற்கண்ட தொடர்களில் உள்ள தாம் என்பது பொதுப் பெயர்ச் சொல்லாகும். அவர்தாம் சென்றனர் என்ற தொடரில், தாம் என்பது உயர்திணைப் பன்மையில் வந்துள்ளது. அவைதாம் சென்றன என்ற தொடரில், தாம் என்பது அஃறிணைப் பன்மையில் வந்துள்ளது. எனவே, தாம் என்பது இங்ஙனம் இருதிணைக்கும் பொதுவாக வந்தமையால் பொதுப் பெயர் எனப்படும். (எல்லாம்) அவர் எல்லாம் சென்றனர். அவை எல்லாம் சென்றன. மேற்கண்ட தொடர்களில் உள்ள எல்லாம் என்பது பொதுப் பெயர்ச் சொல்லாகும். அவர் எல்லாம் சென்றனர் என்ற தொடரில் உள்ள எல்லாம் என்பது, உயர்திணைப் பன்மையில் வந்துள்ளது. அவை எல்லாம் சென்றன என்ற தொடரில் உள்ள எல்லாம் என்பது, அஃறிணைப் பன்மையில் வந்துள்ளது. எனவே, எல்லாம் என்பது இங்ஙனம் இருதிணைக் கும் பொதுவாக வந்தமையால் பொதுப்பெயர் எனப்படும். யாம் எல்லாம் வந்தோம் - (தன்மையிடம்) நீர் எல்லாம் சென்றீர் - (முன்னிலையிடம்) அவர் எல்லாம் வந்தனர் - அவை எல்லாம் வந்தன - (படர்கையிடம்) இவற்றுள், எல்லாம் என்ற பொதுப்பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங்களுக்கும் பொதுவாக வந்துள்ளது. தான் என்பது, அவன்தான் அவள்தான், அதுதான் என ஆண் பால், பெண்பால், ஒன்றன் பாலுக்குப் பொதுவாக வரும். தாம் என்பதும், எல்லாம் என்பதும் அவர்தாம், அவை தாம், அவரெல்லாம், அவையெல்லாம் எனப் பலர் பாலுக்கும், பலவின் பாலுக்கும் பொதுவாக வரும். தான், தாம், எல்லாம் என்பன திணைப்பொதுவே அன்றிப் பாற் பொதுவாகவும் வரும். அவற்றுள், எல்லாம் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங் களிலும் வரும். இலக்கண விதி: முதற்பெயராகிய நான்கு பெயரும், சினைப்பெயராகிய நான்கு பெயரும், சினைமுதற் பெயராகிய நான்கு பெயரும், முறைப்பெயராகிய இரண்டு பெயரும், தன்மைப் பெயராகிய நான்கு பெயரும், முன்னிலைப் பெயராகிய ஐந்து பெயரும், எல்லாம், தாம், தான் என்னும் மூன்று பெயரும், இவைபோல்வன பிறவும் இருதிணைக்கும் பொதுப் பெயர் களாகும். முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்குஞ் சினைமுதற் பெயரொரு நான்கு முறையிரண்டுந் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர். (ந.நூற்பா 282.) 3. ஆகுபெயர்-அன்மொழித்தொகை வேறுபாடு (ஆகுபெயர்) ஒரு பொருளுக்கு இயற்கையாய் அமைந்துள்ள பெயர், அதனோடு தொடர்புடைய வேறு பொருளுக்குச் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். அவ் வாகுபெயர், பொருளாகுபெயர், இடவாகுபெயர், காலவாகுபெயர், சினையாகுபெயர், குணவாகுபெயர், தொழிலாகு பெயர் முதலியனவாகப் பலவகைப்படும். தாமரை போலும் முகம் - இங்கே தாமரை என்ற முதற் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய சினையாகிய மலருக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது பொருளாகுபெயர் அல்லது முதலாகு பெயர் எனப்படும். உலகம் மகிழ்ந்தது-இங்கே உலகம் என்ற இடத்தின் பெயர், அவ்விடத்தோடு தொடர்பு கொண்டு வாழ்கின்ற மக்களுக்கு ஆகி வந்துள்ளது. எனவே இஃது இடவாகுபெயர் எனப்படும். கார்த்திகை பூத்தது - இங்கே கார்த்திகை என்னும் காலத்தின் பெயர், அக் காலத்தில் மலர்ந்த பூவுக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது காலவாகுபெயர் எனப்படும். வெற்றிலை நட்டான் - இங்கே வெற்றிலை என்னும் சினைப் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய கொடி என்னும் முதற்பொருளுக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது சினையாகு பெயர் எனப்படும் (சினைப்பெயர், முதற்பெயருக்கு ஆகிவந்தால், அது சினையாகுபெயர் எனப்படும். முதற்பெயர், சினைப் பெயருக்கு ஆகிவந்தால், அது முதலாகுப்பெயர் அல்லது பொரு ளாகு பெயர் எனப்படும்) வெள்ளை உழுதது - இங்கே வெள்ளை என்னும் நிறப்பெயர், அந் நிறத்தினை உடைய காளைக்கு ஆகி வந்துள்ளது. எனவே, இது குணவாகுபெயர் அல்லது பண்பாகுபெயர் எனப்படும். பொங்கல் உண்டான் - இங்கே பொங்குதல் என்ற தொழிலின் பெயர், அத்தொழிலை அடைந்த உணவுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, இது தொழிலாகுபெயர் எனப்படும். இங்ஙனமே மேலும் பல ஆகுபெயர்கள் வரும். வரும் வழிக்கண்டுகொள்க. (அன்மொழித் தொகை) வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமத்தொகை, உம்மைத்தொகை ஆகிய இவற்றில் ஒன்றனடி யாகப் பிறந்து, இவையல்லாத வேறு சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை எனப்படும். அன்மொழித்தொகை = அல் + மொழி + தொகை - அல்லாத மொழிகளும் தொக்கு நிற்பது.) வளைக்கை வந்தாள் இங்கே, வளைக்கை என்பது வளையலை அணிந்த கையை உடையவளாகிய பெண் வந்தாள் என விரியும். அங்ஙனம் விரியும் பொழுது, ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபுடன், பெண் என்ற பிற சொல்லும் முன்பு மறைந்து நின்றமை தெரியவரும். எனவே, இஃது இரண்டாம் வேற்று மைத் தொகைப் புறத்துப பிறந்த அன்மொழித் தொகையாகும். இங்கு, வளைக்கை என்பது, வந்தாள் என்ற சொல்லால் பெண் என்பதை உணர்த்தி அன்மொழித் தொகையாகியது. இங்ஙனமின்றி வளைக்கை என்பது தனித்து நின்று, வளையலை அணிந்த கை என்ற அளவில் விரியுமானால், அப்பொழுது அஃது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இங்ஙனமே பிற தொகைகளும் அமையும். இங்ஙனம், இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையுள்ள, ஆறு வேற்றுமைத் தொகைகளின் புறத்தே, அன் மொழித் தொகை பிறக்கும். தாழ்குழல் பாடினாள் - இது, தாழும் தாழ்ந்த-தாழ்கின்ற குழலினை உடைய பெண் பாடினாள் என விரியும். எனவே, இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். (குழல் கூந்தல்) கருங்குழல் சென்றான் - இது கருமையாகிய கூந்தலை யுடைய பெண் நின்றாள் என விரியும். எனவே, இது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். துடியிடை நின்றாள் - இது, துடிபோலும் இடையினை உடைய பெண் நின்றாள் என விரியும். எனவே, இஃது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யாகும். (துடி உடுக்கை.) தகரஞாழல் - இது, தகரமும் ஞாழலும் கலந்துண்டாகிய சாந்து என விரியும். எனவே, இஃது உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். (தகரஞாழல்-மணப் பொருள் கள்) ஆகுபெயருக்கும்-அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு 1. ஆகுபெயர், ஒரே சொல்லாக இருக்கும். அன்மொழித் தொகை, பல சொற்கள் சேர்ந்ததாக இருக்கும். 2. ஆகுபெயர், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் முதலாயவற்றின் அடியாகப் பிறக்கும். அன்மொழித் தொகை, வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகையின் அடியாகப் பிறக்கும். 3. ஆகுபெயர், தொன்று தொட்டுத் தொடர்புடைய ஒன்றற்கு ஆகிவரும். அன்மொழித் தொகை, இடத்திற்கு ஏற்பப் புதிது புதிதாக அமைக்கப்பட்டு வரும். 4. பொதுவினைகள் கண்டேன் - சென்றேன் வாழ்க - உண்க கண்டேன், சென்றேன் என்ற வினைச்சொற்களில் இறந்த காலமும், தன்மை இடமும் தெரிகின்றன. ஆனால், திணையும் பாலும் தெரியவில்லை. எனவே, இவ்வினைச் சொற்கள் இரு திணைப்பொது வினைகளாகும். வாழ்க அவன்-அவள்-அவர்-அது-அவை உண்க யான்-யாம்-நீ-நீவிர் மேற்கண்டவாறு வாழ்க, உண்க என்னும் வியங்கோள் வினை முற்றுச் சொற்கள், இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும், ஒருமை பன்மைக்கும் பொதுவினைகளாக வரும். இங்ஙனம் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும், ஒருமை பன்மைக்கம் பொதுவாக வரும் வினைச்சொற்களும், முக்காலங் களுக்கும், தன் வினை பிறவினைக்கும், உடன்பாட்டு வினை எதிர் மறைவினைக்கும், செய்வினை செயப்பாட்டு வினைக்கும், பெய ரெச்சம் வினையெச்சத்திற்கும் பொதுவாக வரும் வினைச் சொற்களும் பொதுவினைகள் எனப்படும். தன்மை ஒருமை வினைமுற்றுக்களும், தன்மைப் பன்மை வினைமுற்றுக்களும், முன்னிலை ஒருமை வினைமுற்றுக்களும், வியங்கோள் வினைமுற்றுக்களும், வேறு-இல்லை-உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றுக்களும், பெயரெச்சங் களும், வினை யெச்சங்களும், செய்யும் என்னும் முற்றும், யார், எவன் என்னும் வினாவினைக்குறிப்பு முற்றுக்களும், மேலும் சில வினைச் சொற்களும் பொது வினைகளாக வரும். இனி, அவற்றைப்பற்றி விரிவாகக் காண்போம். (தன்மை ஒருமை வினைமுற்றுக்கள்) (இருதிணைப் பொதுவினை) யான் உண்டு (உண்டேன்) யான் வந்து (வந்தேன்) இறந்தகாலம் யான் சென்று (சென்றேன்) யான் உண்கு (உண்பேன்) யான் வருது (வருவேன்) எதிர்காலம் யான் சேறு (செல்வேன்) இங்கே, கு-டு-து-று என்னும் குற்றியலுகர விகுதிகளை ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. யான் உண்பல் (உண்+ப்+அல்) உண்பேன். இங்கு, அல் என்னம் விகுதியை ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொல், எதிர்கலத்தில் இருதிணப் பொதுவினையாக வந்துள்ளது. யான் உண்டனன் யான் உண்டனென் இறந்தகாலம் யான் உண்டேன் யான் உண்ணாநின்றனன் யான் உண்ணாநின்றனென் நிகழ்காலம் யான் உண்ணாநின்றேன் யான் உண்பன் யான் உண்பென் எதிர்காலம் யான் உண்பேன் இங்கு, அன்-என்-ஏன் என்னும் விகுதிகளை ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், மூன்று காலங்களிலும் இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. யான் தானினன் யான் தாரினென் குறிப்பு வினைமுற்று யான் தாரினேன் இங்கு, அன்-என்-ஏன் என்னும் மூன்று விகுதிகளையும் ஈற்றிலே உடைய தன்மை ஒருமைக்குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. இலக்கண விதி: கு-டு-து-று என்னும் குற்றியலுகர விகுதி களும், அல்-அன்-என்-ஏன் என்னும் நான்கு மெய்யீற்று விகுதிகளும் ஆகிய இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியிலே உடைய சொற்கள், இருதிணை யிடத்தனவாகிய ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் மூன்று பால்களுக்குப் பொதுவாகிய, தன்மை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றும், குறிப்புமுற்றுக்களும் ஆகும். (இவை இருதிணைப் பொதுவினைகளாகும்) (தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள்) (இருதிணைப் பொதுவினை) உண்டனம்-உண்கின்றனம்-உண்பம் யாம்- உண்டாம்-உண்கின்றாம்-உண்பாம் யானும் நீயும் இங்கு, அம்-ஆம் என்ற விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், முன்னிலையை உளப்படுத்தியும் மூன்று காலங்களிலும் இரு திணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. உண்டனெம்-உண்கின்றனெம்-உண்பெம் யாம் உண்டேம்-உண்கின்றோம்-உண்பேம் யானும் உண்டோம்-உண்கின்றோம்-உண்போம் அவனும் இங்கு, எம்-ஏம்-ஓம் என்ற விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், படர்க்கையை உளப்படுத்தியும் இரு திணைப் பொது வினைகளாக வந்துள்ளன. தாரினம் தாரினாம் யாம்-யானும் நீயும் இங்கு, அம்-ஆம் என்னும் விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச்சொற்கள், தனித்தும், முன்னிலையை உளப்படுத்தியும் இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. தாரினெம் தாரினேம் யாம்-யானும் அவனும் தாரினோம் இங்கு, எம்-ஏம்-ஓம் என்னும் விகுதிகளை இறுதியாக உடைய தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், படர்க்கையை உளப்படுத்தியும் இருதிணைப் பொது வினைகளாக வந்துள்ளன. உண்டும (உண்டோம்) வந்தும் (வந்தோம்) (இறந்த காலம்) யாம்- சென்றும் (சென்றோம்) யானும் நீயும் அவனும் உண்கும் (உண்போம்) வருதும் (வருவோம்) (எதிர்காலம்) சேறும் (செல்வோம்) யாம்-யானும் நீயும் அவனும் இங்கே, கும்-டும்-தும்-றும் என்ற விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிநிலை வினை முற்றுச் சொற்கள், தனித்தும், முன்னிலையையும் படர்க்கையை யும் உளப்படுத்தியும், இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும், இருதிணப் பொது வினைகளாக வந்துள்ளன. உண்டனம் உண்டாம் யானும் அவனும் உண்டனம் உண்டாம் யானும் நீயும் அவனும் இங்ஙனம், அம்-ஆம் என்னும் விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மை வினை முற்றுச் சொற்கள், படர்க்கையை உளப்படுத்தியும், முன்னிலையையும் படர்க் கையையும் ஒருங்கு உளப்படுத்தியும் இருதிணைப் பொது வினைகளாக மயங்கி வருதலும் உண்டு. இலக்கண விதி: அம்-ஆம் என்னும் இருவிகுதிகளை இறுதியாக உடைய சொற்கள் முன்னிலை யாரையும், எம்-ஏம்-ஓம் என்னும் விகுதிகளை இறுதியாக உடையசொற்கள் படர்க்கை யாரையும், கும்-டும்-தும்-றும் என்னும் விகுதிகளை இறுதியாக உடைய சொற்கள் முன்னிலை, படர்க்கை என்னும் ஈரிடத்தாரையும், தன்னடன் கூட்டும் உளப்பாட்டுத்தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களும், குறிப்பு வினைமுற்றுச்சொற்களு மாகும். இவை இருதிணைக்கும் பொதுவினைகளாகும். மேலும், பெயருடனே அன்றி, உண்டு வந்தேன், உண்டும் வந்தேம், என வினையுடன் முடியும் தன்மை ஒருமை - பன்மை வினைமுற்றுக்களும், நீயும் அவனும் உண்டீர் என முன்னிலை யுடன் படர்க்கை கூடியபொழுது வரும் முன்னிலை வினை முற்றுக் களும், இருதிணைப் பொதுவினைகளேயாகும். (முன்னிலை ஒருமை வினைமுற்றுக்கள்) (இருதிணைப் பொதுவினை) உண்டனை-உண்டாய்-உண்டி (இறந்தகாலம்) உண்கின்றனை-உண்கின்றாய்-உண்ணாநின்றி (நிகழ்காலம்) நீ உண்பை-உண்பாய்-சேறி (எதிர்காலம்) இங்கு, ஐ-ஆய்-இ என்னும் மூன்று விகுதிகளையும் இறுதி யாக உடைய முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினை முற்றுச் சொற்கள், இருதிணைக்கும் பொதுவிணைகளாக வந்துள்ளன. வில்லினை - வில்லாய்-வில்லி (நீ) இங்கு, ஐ-ஆய்-இ என்னம் மூன்று விகுதிகளையும் இறுதி யாக உடைய முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதிணைக்கம் பொதுவினைகளாக வந்துள்ளன. நட-வா-கேள்-அஃகு நடவாய்-வாராய்-கேளாய்-அஃகாய் நீ மேற்காட்டியவாறு விகுதி குன்றியும், குன்றாமலும் நிற்பன வாகிய இருபத்து மூன்று ஈற்று முன்னிலை ஏவலொரு மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களும் இருதிணைப் பொதுவினை களாகும். உண்ணல்-உண்ணேல்-மாறல் (நீ) இங்ஙனம், அல்-ஏல்-ஆல் என்ற விகுதிகளை ஈற்றிலே உடைய எதிர்மறை ஏவலொருமை வினைமுற்றுச் சொற்களும் இருதிணைப் பொதுவினைகளாகும். இவ்வெதிர்மறை ஏவலொருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதி எனவும் வரும். அவையும் இருதிணைப் பொதுவினைகளாகும். இலக்கண விதி: ஐ, ஆய், இ என்னும் மன்று விகுதிகளை இறுதியில் உடைய சொற்களும், விகுதி குன்றியும், குன்றாதும் ஏவலிலே வரும் இருபத்து மூன்று ஈற்றுச் சொற்களும், ஒருவன், ஒருத்தி, என்று என்னும் மூன்று பால்களுக்கும் குறிப்பு முற்றுக்களும் ஆகம். (இவை இருதிணைப் பொதுவினை களாகும்.) (முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள்) (இருதிணைப் பொதுவினை) உண்டனிர்-உண்டீர் (இறந்தகாலம்) உண்கின்றனிர்-உண்கின்றீர் (நிகழ்காலம்) நீவிர் உண்பிர்-உண்பீர் (எதிர்காலம்) இங்கு, இர்-ஈர் என்ற இரண்டு விகுதிகளையும் இறுதியில் உடைய முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றச் சொற்கள், இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. குழையினிர் - குழையீர் (நீவிர்) இங்கு, இ-ஈர் என்ற இரண்டு விகுதிகளையும் இறுதியில் உடைய முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், இருதிணைப்பொதுவினைகளாக வந்துள்ளன. உண்மின்-உண்ணீர்-உண்ணும் (நீவிர்) இங்கு, மின்-ஈர்-உம் என்ற விகுதிகளை இறுதியில் உடைய முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்றுச் சொற்கள், இருதிணைப் பொதுவினைகளாக வந்துள்ளன. இலக்கண விதி: இர்-ஈர் என்ற இரண்டு விகுதிகளையும் இறதியில் உடைய சொற்கள் இருதிணைக்கும் பொதுவாகிய முன்னிலைப் பன்மைவினை முற்றும், குறிப்பு முற்றுமாகும். மின் விகுதியை இறுதியில் உடைய சொற்கள் முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்றாகும். (வியங்கோள் வினைமுற்றுக்கள்) (இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினை) வாழ்க வாழிய அவன்-அவள்-அவர்-அது-அவை வாழியர் யான்-யாம்-நீ-நீவிர் இங்கு, க-இய-இயர் என்பவற்றை இறுதியிலே உடைய வியங்கோள் வினைமுற்றுச் சொற்கள், மூன்றிடங்களிலும், ஐம்பால் களிலும் வரும் பொதுவினைகளாகும். இலக்கணவிதி: க, ய என்னும் இரண்டு உயிர் மெய் களையும், ரகர ஒற்றினையும் இறதியாக உடைய வியங்கோள் வினைமுற்றுக்கள், மூன்று இடங்களிலும் ஐம்பால் களிலும் வரும். (வேறு-இல்லை-உண்டு) (இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினை) வேறு இல்லை அவன்-அவள்-அவர்- அது- அவை உண்டு யான்-யாம்-நீ-நீவிர் வேறு - இல்லை-உண்டு என்ற மூன்று குறிப்பு வினை முற்றுச் சொற்கள், ஐம்பால்களிலும், மூன்று இடங்க ளிலும் வரும் பொது வினைகளாகும். நீ போதல் வேண்டும் சோறு உண்ணத்தகும் வஞ்சரை அஞ்சப்படும் மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள வேண்டும்- தகும்-படும் என்ற சொற்கள் தேற்றப் பொருளில், ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாகிய பொதுவினைகளாக வரும். இலக்கண விதி: வேறு - இல்லை - உண்டு என்னும் மூன்று குறிப்பு வினைமுற்றுக்கள், ஐம்பாலுக்கும், மூவிடத்திற்கும் உரியன வாம். (பெயரெச்சவினை வினைக்குறிப்புக்கள்) (இருதிணைப் பொதுவினை) உண்ட-உண்கின்ற-உண்ணும்-சாத்தன் (வினைமுதல்) உண்ட-உண்கின்ற-உண்ணும்-கலம் (கருவி) உண்ட-உண்கின்ற-உண்ணும்-இடம் (நிலம்) உண்ட-உண்கின்ற-உண்ணும்-ஊண் (தொழில்) உண்ட-உண்கின்ற-உண்ணும்- நாள் (காலம்) உண்ட-உண்கின்ற-உண்ணும்-சோறு (செயப்படுபொருள்) மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் செய்த செய்கின்ற-செய்யும் என்னும் வாய்ப்பாட்டில் அடங்கும், அறுவகைப் பொருட் பெயர்களும், எஞ்ச நின்ற, உண்ட-உண்கின்ற-உண்ணும் என்ற முக்காலப் பெயரெச்சங்களும் இருதிணைப் பொதுவினை களாகும். கரிய குதிரை, மக்கள் உண்ணாத மக்கள்,குதிரை இல்லாத பொருள், மக்கள் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் உள்ள கரிய என்ற குறிப்புவினைப் பெயரெச்சமும் உண்ணாத என்ற எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சமும், இல்லாத என்ற எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சமும் இரு திணைப் பொதுவினை களாகும். இலக்கண விதி: செய்த-செய்கின்ற-செய்யும் என்ற மூவகைப் பட்ட சொல்லின்கண், முறையே இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களும் தோன்றி, வினை முற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாது, அப்பாலுடன் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் அறுவகைப் பொருட் பெயரும் ஒழிய நிற்பன, பெயரெச்சவினை வினைக்குறிப்புக் களாகும். (இவை இருதிணைப் பொதுவினைகளாகும்.) (வினையெச்சவினை வினைக்குறிப்புக்கள்) (இருதிணைப் பொதுவினை) உண்டு வந்தான்-வந்தது (உடன்பாடு) உண்டு வாரான்-வாராது (எதிர்மறை) மேற்கண்டவாறு உடன்பாட்டிலும், எதிர்மறையிலும்; வருகின்ற உண்டு என்னும் தெரிநிலை வினையெச்சம், இரு திணைக்கும் பொதுவினையாக வரும். அருளின்றி செய்தான்-செய்தது (உடன்பாடு) அருளின்றி செய்யான்-செய்யாது (எதிர்மறை) மேற்கண்டவாறு உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வருகின்ற அருளின்றி என்னும் குறிப்பு வினையெச்சம், இருதிணைக்கும் பொது வினையாக வரும். இங்ஙனமே, செய்து-செய்பு என வருகின்ற வினையெச்ச வாய்பாட்டுள் அடங்கும் வினையெச்ச சொற்கள் எல்லாம் இரு திணைப் பொதுவினைகளாகும். இலக்கண விதி: செய்பு, செய்து முதலியவாக விதந்து சொல்லப்படும் வாய்பாடுகளிலே தொழிலங்காலமும் விளங்கி, வினை முற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாமல், அப் பாலுடனே வினை ஒழிய நிற்பன, வினையெச்சவினை வினைக் குறிப்புக்களாகும். இவை இரு திணைப் பொதுவினை எனப்படும். (செய்யும் - என்னும் வாய்பாட்டு வினைமுற்று) (படர்க்கை நான்கு பாலுக்கும் பொதுவினை) அவன் உண்ணும் - அவள் உண்ணும் அது உண்ணும் -அவை உண்ணும் இங்கே, செய்யும் என்னும் எச்சத்தால் வந்த செய்யும் என்னும் வாய்பாட்டுள் அடங்கும் உண்ணும் என்ற வினைமுற்றுச் சொல், பலர் பால் ஒழிந்த படர்க்கை நான்கு பால்களிலும் இரு திணைப் பொதுவினையாக வந்துள்ளது. இலக்கண விதி: செய்யும் என்னும் எச்சத்தால் ஆகம் செய்யும் என்னும் முற்றானது, உயர்திணைப் பன்மைப் படர்க்கை யிலும், முன்னிலையிலும், தன்மையிலும் வாராது. எனவே, பலர்பால் ஒழிந்த படர்க்கை நான்கு பால்களிலும் வந்து இரு திணைப் பொதுவினையாகம். (யார்-என்னும் வினாவினைக் குறிப்புமுற்று) (உயர்திணை முப்பாற் பொதுவினை) அவன் யார்- அவள் யார்-அவர் யார் இங்கு, யார் என்னும் வினாவினைக் குறிப்பு முற்று, உயர்திணை முப்பால்களுக்கும் பாற்பொதுவினையாக வந்துள்ளது. அஃதி யார் - அவை யார் யான் யார் - யாம் யார் நீ யார் - நீவிர் யார் இங்கு, யார் என்னும் வினாவினைக் குறிப்பு முற்று, புதியன புகுதலாக அஃறிணை இரு பால்களிலும், தன்மை முன்னிலை ஆகிய ஈரிடத்திலும் பொதுவினையாக வந்துள்ளது. எனவே, யார் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, புதிய வழக்குப்படி திணை பால் இடங்களுக்குப் பொது வினையாகும். இலக்கண விதி: வினாப் பொருளைத் தரும் யார் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, உயர் திணை முப்பால் களுக்கும் பொதுவினையாக வரும். புதியன புகுதலாக அஃறிணை இருபால்களிலும், தன்மை, முன்னிலைகளிலும் பொதுவினையாக வரும். (எவன்-என்னும் வினாவினைக் குறிப்புமுற்று) (அஃறிணை இருபாற் பொதுவினை) அஃதெவன் - அவையெவன் இங்க, எவன் என்னும் வினாவினைக் குறிப்பு முற்று, அஃறிணை இருபால்களுக்கும் பொது வினையாக வந்துள்ளது. எவன் என்பது, என்-என்ன-என்னை என விகாரப்பட்டும் பாற்பொதுவினையாக வரும். இலக்கண விதி: வினாப் பொருளைத் தரும் எவன் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, அஃறிணை இருபாலுக்கும் பொது வினையாக வரும். குறிப்பு: வேறு-இல்லை-உண்டு என்னும் மூன்று குறிப்பு வினை முற்றுக்களும், யார்-எவன் என்னும் இரண்டு வினாவினைக் குறிப்பு முற்றுக்களும் பின்னீடும் விளக்கப்பட்டுள்ளன. (முக்காலங்களுக்குமுரிய பொதுவினைகள்) உண்ப-உண்ணும்-உண்ணா உண்ப என்னும் பகர விகுதி வினைச்சொல், உண்பார்-உண்டார் என எதிர்காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் பொது வினையாக வரும். உண்ணும் என்ற செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று விகுதி, நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பொது வினையாக வரும். உண்ணா என்னும் எதிர்மறை, முக்காலத்திற்கும் பொது வினையாக வரும். (தன் வினைக்கும்-பிறவினைக்கும் பொதுவினை) வெளுத்தான் என்பது, தான் வெளுப்படைத்தான் என்றும், தான் பிறிதொன்றை வெறுப்படையச் செய்தான் என்றும், தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவினையாக வரும். (உடன்பாட்டிற்கும் - எதிர்மறைக்கும் பொதுவினை) சாவான் என்பது இறப்பான் என்றும், இறக்க மாட்டான் என்றும் உடன்பாட்டிற்கும், எதிர்மறைக்கும் பொதுவினையாக வரும். (செய்வினைக்கும்-செயப்பாட்டுவினைக்கும் பொதுவினை) புலி கொன்ற யானை என்பது, புலியைக் கொன்ற யானை என்றும், புலியால் கொல்லப்பட்ட யானை என்று செய்வினைக்கும், செயப்பாட்டுவினைக்கம் பொதுவினையாக வரும. (பெயரெச்சத்திற்கும், வினெயெச்சத்திற்கும் பொதுவினை) தேடிய சாத்தன் - தேடிய வந்தான் என்பவற்றிலுள்ள தேடிய என்பது, பெயரெச்சம், வினையெச்சம் இரண்டிற்கும் பொதுவினை யாக வந்துள்ளது. இவை போல்வன பிறவும் பொதுவினைகளாக வரும். 5. உருபு மயக்கம் மன்னனை மாலையிட்டாள். இந்நகர்க்கே வாழ்கின்றோம் மன்னனை மாலையிட்டாள் என்ற தொடர், மன்னனக் மாலையிட்டாள் என்று இருக்க வேண்டும். இங்கே, கு என்ற நான்காம் வேற்றுமை உருபு இருக்க வேண்டிய இடத்தில், ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மயங்கி வந்துள்ளது. இந் நகர்க்கே வாழ்கின்றோம் என்ற தொடர், இந் நகரின் கண் வாழ்கின்றோம் என்று இருக்க வேண்டும். இங்கே, கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபு இருக்க வேண்டிய இடத்தில், கு என்ற நான்காம் வேற்றுமை உருபு மயங்கி வந்துள்ளது. இங்ஙனம், ஒரு வேற்றுமை உருபு இருக்க வேண்டிய இடத்தில், வேறொரு உருபு மயங்கி வந்தாலும், பொருள் மாறுபடாமல், எந்த வேற்றுமை உருபு இருக்க வேண்டுமோ, அந்த வேற்றுமை உருபின் பொருளையே தருவது உருபு மயக்கம் எனப்படும். இதனை வேற்றுமை மயக்கம் எனவும் கூறுவர். இலக்கண விதி: ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமை உருபால் சொல்லப்பட்டாலும், அப் பொருள் சென்ற வழியே அவ் வேற்றமை உருபு சேரும். 6. காலங்காட்டும் உறுப்புக்கள் (இடைநிலை-விகுதி-பகுதி) (இறந்தகால இடைநிலைகள்) நடந்தான், உண்டான், சென்றான், உறங்கினான் மேற்கண்ட வினைச்சொற்கள் எல்லாம் இறந்த காலத்தை உணர்த்துகின்றன. இச் சொற்களில் இறந்த காலத்தைக் காட்டும் உறுப்புக்கள் இடைநிலைகள் ஆகும். அவை த், ட், ற், இன் என்பன. நடந்தான் (நட+த்(ந்)+த்+ஆன்) என்பதில் த் இடையில் இறந்த காலம் காட்டுகிறது. உண்டான் (உண்+ட்+ஆன்) என்பதில் ற் இடைநிலை இறந்தகாலம் காட்டுகிறது. சென்றான் (செல்+ற்+ஆன்) என்பதில் ற் இடைநிலை இறந்த காலம் காட்டுகிறது. உறங்கினான் (உறங்கு+இன்+ஆன்) என்பதில் இன் இடை நிலை இறந்த காலம் காட்டுகிறது. த், ட், ற், இன் என்ற இவ்விடைநிலைகள், ஐம்பால் மூவிடங்களிலும் இறந்தகாலம் காட்டும். வந்தான்-கண்டான் த்-ட்-ற்-இன் என்ற இறந்தகால இடை நின்றான்-தும்மினான் நிலைகள், படர்க்கை ஆண்பாலில் வந்துள்ளன வந்தாள்-கண்டாள் த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால இடை நின்றாள்-தும்மினாள் நிலைகள், படர்க்கைப் பெண் பாலில் வந்துள்ளன. வந்தார்-கண்டார் த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால இடை நின்றார்-தும்மினார் நிலைகள், படர்க்கைப் பலர் பாலில் வந்துள்ளன. வந்தது-கண்டது த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால இடை நின்றது-தும்மினது நிலைகள், படர்க்கைப் ஒன்றன் பாலில் வந்துள்ளன. வந்தன-கண்டன த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால இடை நின்றன-தும்மின நிலைகள், படர்க்கைப் பலவின் பாலில் வந்துள்ளன. இங்ஙனம், த்-ட்-ற்-இன் என்ற இடைநிலைகள், படர்க்கை ஐம்பால்களில் இறந்த காலம் காட்டும் இடைநிலைகளாக வரும். வந்தேன்-கண்டேன் த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால நின்றேன்-தும்மினேன் இடைநிலைகள், தன்மை ஒருமையில் வந்துள்ளன. வந்தேம்-கண்டேம் த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால நின்றேம் - தும்மினேம் இடைநிலைகள், தன்மை பன்மையில் வந்துள்ளன. இங்ஙனம், த்-ட்-ற்-இன் என்ற இடைநிலைகள், தன்மை ஒருமையிலும், பன்மையிலும் இறந்த காலம் காட்டும் இடை நிலைகளாக வரும். வந்தாய்-கண்டாய் த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால நின்றாய்- தும்மினாய் இடைநிலைகள், முன்னிலை ஒருமையில் வந்துள்ளன. வந்தீர்-கண்டீர் த்-ட்-ற்-இன் என்ற இறந்த கால நின்றீர்- தும்மினீர் இடைநிலைகள், முன்னிலை ஒருமையில் வந்துள்ளன. இங்ஙனம், த், ட், ற், இன் என்ற இடைநிலைகள், முன்னிலை ஒருமையிலும், பன்மையிலும் இறந்த காலம் காட்டும் இடை நிலைகளாக வரும். சிறுபான்மை இன் இடைநிலை, எஞ்சியது என்ற சொல்லில் (ன்) கடைக் குறைந்தும், போனது என்ற சொல்லில் (இ) முதல் குறைந்தும் வரும். இலக்கண விதி: தகர டகர றகர மெய்களும், இன் என்னும் குற்றொற்றும், ஐம்பால், மூவிடங்களிலும் இறந்த காலத்தைக் காட்டும் வினைப்பகுபதங்களினுடைய இடை நிலைகளாகும். தடறவொற் றின்னே யைம்பான் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை. (ந-நூற்பா 142.) (நிகழ்கால இடைநிலைகள்) உண்ணாநின்றான் - உண்கின்றான் - உண்கிறான் மேற்கண்ட வினைச்சொற்கள் நிகழ்காலத்தைக் காட்டு கின்றன. இச் சொற்களில் நிகழ்காலத்தைக் காட்டும் உறுப்புக்கள் இடைநிலைகளாகும். அவை, ஆநின்று, கின்று, கிறு என்பன. உண்ணாநின்றான் (உண்+ஆநின்று+ஆன்) என்பதில் ஆநின்று நிகழ்கால இடைநிலையாகும். உண்கின்றான் (உண்+கின்று+ஆன்) என்பதில் கின்று நிகழ்கால இடைநிலையாகும். உண்கிறான் (உண்+கிறு+ஆன்) என்பதில் கிறு நிகழ்கால இடைநிலையாகும். ஆநின்று, கின்று, கிறு என்ற இவ்விடைநிலைகள், ஐம்பால் மூவிடங்களிலும் நிகழ்காலங்காட்டும். நடவா நின்றான்-நடக்ககின்றாள்-நடக்கிறாள் இவற்றில், ஆநின்று, கின்று, கிறு என்ற நிகழ்கால இடை நிலைகள், படர்க்கை ஆண்பாலில் வந்துள்ளன. நடவா நின்றாள் - நடக்கின்றான்- நடக்கிறார் இவற்றில், ஆநின்று, கின்று, கிறு என்ற நிகழ்கால இடை நிலைகள், படர்க்கைப் பெண் பாலில் வந்துள்ளன. நடவா நின்றார் - நடக்கின்றார்- நடக்கிறார் இவற்றில், ஆநின்று கின்று கிறு என்ற நிகழ்கால இடை நிலைகள், படர்க்கைப் பலர் பாலில் வந்துள்ளன. நடவா நின்றது - நடக்கின்றது - நடக்கிறது நடவா நின்றேன் - நடக்கின்றேன்- நடக்கிறேன் நடவா நின்றோம் - நடக்கின்றோம்- நடக்கிறோம் இவற்றில், ஆநின்று கின்று கிறு என்ற நிகழ்கால இடை நிலைகள், தன்மை ஒருமையிலும், பன்மையிலும் வந்துள்ளன. நடவா நின்றாய் - நடக்கின்றாய்- நடக்கிறாய் நடவா நின்றீர் - நடக்கின்றீர்- நடக்கிறீர் இவற்றில், ஆநின்று கின்று கிறு என்ற நிகழ்கால இடை நிலைகள், முன்னிலை ஒருமையிலும், பன்மையிலும் வந்துள்ளன. இலக்கண விதி: ஆநின்று எப்தும், கின்று என்பதும், கிறு என்பதும் ஐம்பால் மூவிடங்களிலும் நிகழ்காலத்தைக் காட்டும் வினைப் பகுபதங்களினுடைய இடைநிலைகளாகும். ஆநின்று கின்று கிறுமூ விடத்தின் ஐம்பா னிகழ்பொழு தலைவினை யிடைநிலை. (நா.நூற்பா 143.) (எதிர்கல இடைநிலைகள்) உண்பான்-செல்வான் மேற்கண்ட வினைச்சொற்கள் எதிர்காலத்தைக் காட்டு கின்றன. இச் சொற்களில் எதிர்காலத்தைக் காட்டும் உறுப்புக்கள் இடைநிலைகளாகும். அவை ப்-வ் என்பன. உண்பான் (உண்+ப்+ஆன்) என்பதில் ப் இடைநிலை எதிர்காலம் காட்டுகிறது. செல்வான் (செல்+வ்+ஆன்) என்பதில் வ் இடைநிலை எதிர்காலம் காட்டுகிறது. ப்-வ் என்ற இவ்விடைநிலைகள் ஐம்பால் மூவிடங்களிலும் எதிர்கலங் காட்டும். நடப்பான்-நடப்பாள்-நடப்பார் நடப்பது-நடப்பன இவற்றில், ப் என்ற எதிர்கால இடைநிலை படர்க்கை ஐம்பாலில் வந்துள்ளது. வருவான்-வருவாள்-வருவார் வருவது-வருவன இவற்றில், வ் என்ற எதிர்கால இடைநிலை படர்க்கை ஐம்பாலில் வந்துள்ளது. நடப்பேன்-வருவேன் இவற்றில், ப்-வ் என்ற எதிர்கால இடைநிலை தன்மைப் ஒருமையில் வந்துள்ளது. நடப்போம்-வருவோம் இவற்றில், ப்-வ் என்ற எதிர்கால இடைநிலை தன்மைப் பன்மையில் வந்துள்ளது. நடப்பாய்-வருவாய் இவற்றில், ப்-வ் என்ற எதிர்கால இடைநிலை முன்னிலை ஒருமையில் வந்துள்ளது. நடப்பீர்-வருவீர் இவற்றில், ப்-வ் என்ற எதிர்கால இடைநிலைகள் முன்னிலை பன்மையில் வந்துள்ளதுள்ளன. இலக்கண விதி: பகர மெய்யும், வகர மெய்யும் ஐம்பால் மூவிடங்களிலும் எதிர்காலத்தைக் காட்டும் வினைப் பகுபதங் களினுடைய இடைநிலைகளாகும். இம் முக்கால இடைநிலைகள், சில முற்றுவினை எச்சவினைகட்கு இலவாம். பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில (ந-நூற்பா 144.) (காலங்காட்டும் விகுதிகள்-பகுதிகள்) இதுவரை, வினைச்சொற்களில் இடைநிலைகள் காலங் காட்டுவதைப் பார்த்தோம். இனி, விகுதிகளும், ஒரு சில பகுதிகளும் காலங்காட்டுவதைப் பற்றிப் பார்ப்போம். நான் சென்று (நான் சென்றேன்) நாம் சென்றும் ( நாம் சென்றோம்) நான் சேறு ( நான் செல்வேன்) நாம் சோறும் (நாம் செல்வோம்) இங்கு று என்ற தன்மை ஒருமை விகுதியும், றும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் காட்டின. நான் வந்து (நான் வந்தேன்) நாம் வந்தும் (நாம் வந்தோம்) நான் வருது (நான் வருவேன்) நாம் வருதும் (நாம் வருவோம்) இங்கே, து என்ற தன்மை ஒருமை விகுதியும், தும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் இறந்த காலத்தையும், எதிர்கலத்தையும் காட்டின. நான் உண்டு (நான் உண்டேன்) நாம் உண்டும் (நாம் உண்டோம்) இங்கு, டு என்ற தன்மை ஒருமை விகுதியும் டும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் இறந்த காலங் காட்டின. நான் உண்கு (நான் உண்பேன்) நாம் உண்கும் (நாம் உண்போம்) இங்கு, கு என்ற தன்மை ஒருமை விகுதியும் கும் என்ற தன்மைப் பன்மை விகுதியும் எதிர் காலங் காட்டின. நீவிர் உண்மின் நீவிர் உண்ணுதிர் (நீவிர் உண்பீர்) நீவிர் உண்ணீர் நீவிர் உண்ணும் நீ உண்ணாய் (நீ உண்பாய்) இங்கு, மின்-இர்-ஈர்-உம் என்ற முன்னிலை ஏவற் பன்மை விகுதிகளும், ஆய் என்ற முன்னிலை ஏவலொருமை விகுதியும் எதிர்காலம் காட்டின. அவன் வாழ்க அவன் வாழிய அவன் வாழியர் அவள் வாழ்க அவள் வாழிய அவள் வாழியர் அவர் வாழ்க அவர் வாழிய அவர் வாழியர் அது வாழ்க அதுவாழிய அது வாழியர் அவை வாழ்க அவை வாழிய அவை வாழியர் இங்கே,க-இய-இயர் என்னும் வியங்கோள் விகுதிகள், இருதிணை ஐம்பாலிலும் எதிர்கலம் காட்டின. நான் வாழ்க நான் வாழிய நான்வாழியர் நாம் வாழ்க நாம் வாழிய நாம் வாழியர் இங்கே,க-இய-இயர் என்னும் வியங்கோள் விகுதிகள், தன்மை ஒருமையிலும், பன்மையிலும் எதிர்கலம் காட்டின. நீ வாழ்க நீ வாழிய நீ வாழியர் நீவிர் வாழ்க நீவிர் வாழிய நீவிர் வாழியர் இங்கே,க-இய-இயர் என்னும் வியங்கோள் விகுதிகள், முன்னிலை ஒருமையிலும், பன்மையிலும் எதிர்கலம் காட்டின. நீ சேறி (நீ செல்வாய்) அவர் சென்மார் (அவர் செல்வார்) இங்கு, இ என்ற முன்னிலை ஒருமை விகுதியும், மார் என்ற பலர் பால் விகுதியும் எதிர்கலம் காட்டின. நீ வருதி (நீ வருகின்றான்) என இகர விகுதி சிறுபான்மை நிகழ்காலமும் காட்டும். அவர் உண்ப (அவர் உண்டார், அவர் உண்பார்) இங்கே, ப என்ற பலர் பால் விகுதி இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் காட்டியது. அவன் உண்ணும் (அவன் உண்கிறான்) அவள் உண்ணும் (அவள் உண்கிறாள்) அவன் உண்ணும் (அவன் உண்பான்) அவள் உண்ணும் (அவள் உண்பாள்) இங்கே, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் வரும் உம் என்ற விகுதி, நிகழ்காலமும், எதிர்காலமும் காட்டியது. உண்ணா (உண்+ன்+ஆ) தின்னா (தின்+ன்+ஆ) முக்காலம் இங்கு, ஆ என்னும் எதிர்மறை விகுதி முக்காலமும் காட்டும். இதுவரைப், வினைச்சொற்களில் விகுதிகாலங்காட்டு வதைப் பார்த்தோம். இனி, ஒரு சில பகுதி இரட்டித்துக் காலங்காட்டு வதைப் பார்ப்போம். புக்கான் (புகு+ஆன்) புகு-புக்கு தொட்டான் (தொடு+ஆன்) தொடு-தொட்டு பெற்றான் (பெறு+ஆன்) பெறு-பெற்று இங்கே, புகு என்ற பகுதி புக்கு எனவும், தொடு என்ற பகுதி தொட்டு எனவும், பெறு என்ற பகுதி பெற்று எனவும், பகுதியில் உள்ள க்-ட்-ற் என்ற ஒற்றெழுத்துக்கள் இரட்டித்து இறந்த காலம் காட்டின. எனவே, கு-டு-று என்னும் மூன்று உயிர் மெய்யிற்றுச் சில குறிலிணைப் பகுதிகள், தம் ஒற்று இரட்டித்து இறந்தகாலங் காட்டும். இவை தவிர, வேறு சில இடைநிலைகள் இறந்த காலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் காட்டும். அவை வருமாறு; போயது (போ+ய்+அ+து) உண்ணாகிடந்தான் (உண்+ஆகிடந்து+ஆன்) உண்ணாவிருந்தான் (உண்+ஆவிருந்து+ஆன்) இங்கு, ய் என்ற இடைநிலை இறந்தகாலமும், ஆகிடந்து, ஆவிருந்து என்னம் இடைநிலைகள் நிகழ்காலமும் காட்டின. என்றிசினோர்-என்மர்-என்மனார் இங்க, என்றிசினோர் என்பதில் உள்ள இசின் என்பது, இறந்தகால இடைநிலையாகவும், என்மர் என்பதில் உள்ள ம் என்னும் மகர மெய்யும், என்மனார் என்பதில் உள்ள மன் என்பதும் எதிர்கால இடைநிலைகளாகவும் செய்யுளில் வரும். மேலும், காண்டும் (காண்+டும்) என்ற சொல்லில் உள்ள டும் என்னும் விகுதியும், செய்கேன் (செய்+க்+ஏன்) என்ற சொல்லில் உள்ள க் என்ற இடைநிலையும், காண்போம், செய்வேன் என எதிர்காலத்தை உணர்த்தியும் வரும். இலக்கண விதி: வினைச்சொற்களில் இறந்த கால நிகழ்கால எதிர்கால இடைநிலைகளே அன்றி, விகுதியும் பகுதியும், வேறு இடைநிலையும் காலங்காட்டும். அவை:று-றும் என்ற விகுதிகள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும், து-தும் என்ற விகுதிகள் இறந்த காலத்தையும் எதிர்காலத் தையும், டு-டும் என்ற விகுதிகள் இறந்த காலத்தை யும், கு-கும் என்ற விகுதிகள் எதிர்காலத்தையும், (மின்-இர்-ஈர்உம், ஆய்)என்னும் ஏவல் விகுதிகளும், (க-இய-இயர்) என்னும் வியங்கோள் விகுதிகளும் எதிர்காலத்தையும், இ-மார் என்னும் விகுதிகள் எதிர்காலத்தையும், ப விகுதி இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும், செய்யும் என்னும் வாய்ப்பட்டு உம் என்னும் முற்றுவிகுதி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும், எதிர்மறை ஆகார விகுதி மூன்று காலங்களையும் உணர்த்தும். றவ்வொ டுகர வுமைநிகழ் பல்லவுத் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல் வியங்கோ ளிம்மா ரெதிர்வும் பாந்தஞ் செலவோடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே. (ந-நூற்பா 145.) 7. சினைவினை - முதல்வினை இராமன் விழுந்தான். இராமன் கால் முறிந்தது. இராமன் கால் முறிந்து விழுந்தது. இராமன் கால் முறிந்து விழுந்தான். இராமன் விழுந்தான் என்ற தொடரில், விழுந்தவன் யார்? இராமன். எனவே, இராமன் என்பது முதற்பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகும். விழுந்தான் என்பது அம் முதற்பொருளின் தொழிலைக் குறிக்கும் வினைச் சொல்லாகும். இங்கு விழுந்தான் என்பதிலுள்ள விழுதல் முதற்பொருளின் தொழிலைக் குறிக்கும் வினையாதலால், அது முதல்வினை எனப்படும். இராமன் கால் முறிந்தது என்ற தொடரில், முறிந்தது எது? கால். எனவே, கால் என்பது சினைப்பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். முறிந்தது என்பது அச் சினைப்பொருளின் தொழிலைக் குறிக்கும் வினைச் சொல்லாகம். இங்கு, முறிந்தது என்பதிலுள்ள முறிதல் சினைப்பொருளின் தொழிலைக்குறிக்கும் வினையாதலால், அது சினைவினை எனப்படும். இராமன் கால் முறிந்து விழுந்தது என்ற தொடரில், முறிந்து என்ற வினை எச்சத்தில் உள்ள முறிதல் சினையாகிய காலினுடைய தொழிலாகும். எனவே, அது சினைவினை எனப்படும். இங்க, விழுந்தது என்பது வினைமுற்றாகும். அவ் வினைமுற்றில் உள்ள விழுதல் என்ற தொழிலும், சினையாகிய காலினுடைய தொழிலே யாகும். எனவே, அதுவும் சினைவினை யே யாகும். மேலும் இத்தொடரில், முறிந்து என்ற சினையின் வினை எச்சம், விழுந்தது என்ற சினையின் வினை முற்றைக் கொண்டு முடிந்திருக்கிறது. எனவே, இத்தொடரில் சினை வினை, சினை வினையைக் கொண்டே முடிந்துள்ளமை தெரியவரும். இராமன் கால் முறிந்து விழுந்தான் என்ற தொடரில், முறிந்து என்ற வினையெச்சத்தில் உள்ள முறிதல் சினையாகிய காலினுடைய தொழிலாகும். அது, சினைவினை எனப்படும். இங்கு, விழுந்தான் என்பது வினைமுற்றாகும். அவ் வினை முற்றில் உள்ள விழுதல் முதல் வினையின் தொழிலாகும். அது, முதல்வினை எனப்படும். மேலும் இத்தொடரில், முறிந்து என்ற சினையின் வினை எச்சம், விழுந்தான் என்ற முதற்பொருளின் வினைமுற்றைக் கொண்டு முடிந்திருக்கிறது. எனவே, இத்தொடரில் சினைவினை, முதல் வினையைக் கொண்டு முடிந்துள்ளமை தெரியவரும். இலக்கண விதி: முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும் என்று சொல்லப்பட்ட வினை எச்சங்கள், சினைவினையாயின், சினை வினையைக் கொண்டு முடிதலேயன்றி, முதல்வினையை யும் கொண்டு முடியும். (சினை-உறுப்பு) 8. பொதுவினை (வேறு-உண்டு-இல்லை-யார்-எவன்) அவன் வேறு-அவன் உண்டு-அவன் இல்லை அவள் வேறு-அவள் உண்டு-அவள் இல்லை உயர்திணை அவர் வேறு-அவர் உண்டு-அவர் இல்லை அது வேறு-அது உண்டு-அது இல்லை அஃறிணை அவை வேறு-அவை உண்டு-அவை இல்லை மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் உள்ள வேறு-உண்டு-இல்லை என்னும் வினைமுற்றுக்கள், தொழிலையும், காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தாமையால் குறிப்பு வினைமுற்றுக் களாகும். அவை, இங்க இருதிணை ஐம்பாலுக் கும் பொதுவாகப் படர்க்கையில் வந்துள்ளன. அவ் வினைமுற்றுக்கள் தன்மை முன்னிலையிலும் வரும். அவை வருமாறு: நான் வேறு-நான் உண்டு-நான் இல்லை (ஒருமை) நாம் வேறு-நாம் உண்டு-நாம் இல்லை (பன்மை) இவ்வெடுத்துக்காட்டுக்களில் வேறு- உண்டு-இல்லை என்னம் குறிப்பு வினைமுற்றுக்கள். தன்மை ஒருமையிலும், பன்மையிலும் வந்துள்ளன. நீ வேறு-நீ உண்டு-நீ இல்லை (ஒருமை) நீவிர் வேறு-நீவிர் உண்டு-நீவிர் இல்லை ( பன்மை) இங்கு, வேறு-உண்டு-இல்லை என்னும் குறிப்பு வினை முற்றுக்கள், முன்னிலை ஒருமையிலும், பன்மையிலும் வந்துள்ளன. இலக்கண விதி: வேறு-இல்லை-உண்டு என்னும் மன்று வினைக்குறிப்பு முற்றுக்கள், ஐம்பாலுக்கும் முவிடத்திற்கும் உரியன வாகும். வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன (ந-நூற்பா 339) (பாற் பொதுவினை) (யார் என்னும் வினாவினைக் குறிப்பு முற்று) அவன் யார்? அவள் யார்? அவர் யார்? இவ்வெடுத்துக்காட்டுக்களில் உள்ள யார் என்பது வினாப் பொருளைத் தரும் வினைமுற்றாகும். அது, தொழிலை யும், காலத்தையும், வெளிப்படையாக உணர்த்தாமையால், வினா வினைக் குறிப்பு முற்றாகும். அவ் வினைமுற்று, இங்கு உயர்திணைப் படர்க்கையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்று பால்களிலும் வந்துள்ளமையால், முப்பாற் பொதுவினை எனப்படும். (குறிப்பு: அஃதி யார்? அவை யார்? என அஃறிணை இரு பாலிலும், நான் யார்? நாம் யார்? எனத் தன்மை ஒருமை-பன்மை யிலும், யார் என்னும் வினா வினைக் குறிப்பு முற்று, புதிய வழக்காக வழங்கி வருதலும் உண்டு. நானார் (நான்+ஆர்) என, யார்-ஆர் என, மருவி வருதலும் உண்டு.) இலக்கண விதி:வினாப் பொருளைத்தரும் யார் என்னும் வினைக்குறிப்பு முற்று, உயர்திணை முப்பால்களுக்கும் பொது வினையாக வரும். யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால் (ந-நூற்பா 349.) (எவன் என்னும் வினா வினைக் குறிப்பு முற்று) அஃதெவன், அவையெவன் இவ் வெடுத்துக்காட்டுக்களில் உள்ள எவன் என்பது, வினாப் பொருளைத் தரும் வினைமுற்றாகும். அது, தொழி லையும், காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தா மையால், வினா வினைக் குறிப்பு முற்றாகும். அவ்வினைமுற்று, இங்கு அஃறிணை ஒன்றன் பால், பலவின் பால் ஆகிய இரண்டு பால்களிலும் வந்துள்ளமையால் இரபாற் பொதுவினை எனப்படும். (எவன்-என்னும் வினா வினைக் குறிப்பு முற்று, என்-என்ன-என்னை என விகாரப்பட்டு வருதலும் உண்டு.) அவற்றிக்கு எடுத்துக்காட்டுக்கள் வருமாறு: நீ படித்ததன் பயன் என்? நீ கூறியது என்ன? நி கூறியதன் பொருள் என்னை? இவற்றில், எவன் என்னும் வினா வினைக்குறிப்பு முற்று என்-என்ன-என்னை என விகாரப்பட்டு வந்துள்ளன. இலக்கண விதி: வினாப்பொருளைத் தரும் எவன் என்னும் வினைக்குறிப்பு முற்று, அஃறிணை இருபாலுக்கம் பொதுவினையாக வரும். (வினைக்குறிப்புமுற்று=குறிப்புவினைமுற்று) எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால் (ந-நூற்பா 350.) 9. எல்லாவிடத்தும் வரும் அசைச் சொல் நான்தான் - நீதான் - அவன்தான் நாம்தாம் - நீவிர்தாம் - அவர்தாம். இவ்வெடுத்துக்காட்டுக்களில் உள்ள தான்-தாம் என்ற இடைச்சொற்கள், அசைச் சொற்களாகும். இவை, தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் அசைநிலைப் பொருளில் வருவதால், எல்லாவிடத்தும் வரும் அசைச் சொற்கள் எனப்படும். இவையேயன்றி, இவைபோலவன பிறவும் உள. அவை வருமாறு: யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், தான், கின்று, நின்று என்பனவாகிய இவ் விருபது இடைச்சொற்களும் தன்மை, முன்னிலை படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் அசைநிலைப் பொருளில் வரும். எனவே, இவை எல்லா இடத்தும் வரும் அசைச்சொற்கள் எனப்படும். யா பன்னிருவர் மாணாக்கர் - யா இவளிவட் காண்டிகா - கா ஆயனை யல்ல பிற - பிற பிறக்கதனுட் செல்லான் - பிறக்கு இருங்குயி லாலுமரோ - அரோ பிரியின் வாழா தென்போ - போ விளிந்தன்று மாதவர்த் தெளிந்த - மாது கண்டிகு மல்லமோ கொண்க - இகும் ஈங்கா கியவா லென்றிசின் - சின் அதுபெறலருங் குரைத்தே - குரை அஞ்சுவ தோரு மறனே - ஓரும் வருந்தினை போலும் - போலும் நனவென் றெழுந்திருந்தேன் - இருந்து நெஞ்சம் பிளந்திட்டு - இட்டு அவன் சேவடி சேர்துமன்றே - அன்று பணியுமாம் என்றும் பெருமை - ஆம் நீர்தாம் - தாம் நீதான் - தான் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேன் - கின்று நின்றார் நிழலடைந்தே - நின்று வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேன் என்ற தொடரில் உள்ள, ஆசைப்பட்டிருக்கின்றேன் என்பது, ஆசைப்பட்டேன் என இறந்த காலப்பொருளில் வந்துள்ளது. எனவே, இங்கு உள்ள கின்று என்பது நிகழ்கால இடைநிலை யன்று; அசைச் சொல்லாகும். இலக்கண விதி: யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், இருந்து, இட்டு, அன்று, ஆம், தாம், தான், கின்று, நின்று என்னும் இவ் விருபது இடைச் சொற் களும் எல்லா இடங்களிலும் வரும் அசைச்சொற்களாம். யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் சின்குரை ஓரும் போலும் இருந்திட் டன்றாத் தாந்தான் கின்றுநின் றமைமொழி. (ந-நூற்பா 441.) 10. பெயர்-வினை-இடை-உரிச்சொற்கள் (1) பெயர்ச் சொல் மரம்-பனை அணி-முடி இங்கு, மரம்-பனை என்பன இடுகுறிப்பெயர்களாகும். மரம் என்றும் பனை என்றும் பெயர்கள் ஏற்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரியவில்லை. அவை, தொன்று தொட்டு இட்ட குறியாய் வழங்கி வருகின்றன. எனவே, மரம், பனை என்பன இடுகுறிப் பெயர்களாகும். அணி-முடி என்பன காரணப் பெயர்களாகும். அணியப்படுதலின் அணி என்றும், முடியில் சூட்டப்படு தலின் முடி என்றும் பெயர் பெற்றன். எனவே, அணி-முடி என்பன காரணப் பெயர் களாகும். இங்ஙனம், இடுகுறியும் காரணக் குறியுமாகிய, இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் மரபினையும் ஆக்கப்பாட்டினை யும் தொடர்ந்து வரும். அங்ஙனம் வரும்பொழுது வினையால் அணையும் பெயர் மட்டும் காலங் காட்டும். மற்றவை காலங் காட்டா. எட்டு வேற்றுமைக்கும் இடமாகி, இருதிணை ஐம்பால் மூவிடத்து ஒன்றனை ஏற்பனவும் பலவற்றினை ஏற்பனவுமாகி வருவம். பொதுவாக இங்ஙனம் வருபவை எல்லாம் பெயர்ச் சொற்கள் எனப்படும். இனி, இங்ஙனம் வருகின்ற பெயர்ச் சொற்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மா-தென்னை (இடுகுறி மரபுப் பெயர்கள்) விலங்கு-பறவை (காரணக்குறி மரபுப் பெயர்கள்) இட்ட குறியாக வழங்கும் மா-தென்னை என்னும் இடுகுறிப் பெயர்கள், இடையே ஒருவரால் ஆக்கப்பட்டன அன்றி, மா மரத்திற்குரிய இயல்போடும், தென்னை மரத்திற்குரிய இயல் போடும் தோன்றிய பொருள்களுக்கெல்லாம், தொன்று தொட்டு மரபுபற்றி வருதலின் இடுகுறி மரபு தொடர்ந்த பெயர்களாகும். இடையே ஒருவரால் ஆக்கப்பட்டன அன்றி, குறுக்கே முதுகெலும்பை உடைய காரணத்தால் விலங்கு என்றும், பறக்கின்ற காரணத்தால் பறவை என்றும் பெயர் பெற்ற விலங்கு-பறவை என்ற காரணப் பெயர்கள், குறுக்கே முதுகெலும்பை உடைய எல்லா வற்றிற்கும், பறக்கின்ற எல்லாவற்றிற்கும் தொன்றுதொட்டு மரபு பற்றி வருதலின், காரணக்குறி மரபு தொடர்ந்த பெயர்களாகும். மானவேல் முட்டைக்கு மாறாய தெள்வர்போம் கானவேல் முட்டைக்கும் காடு. என்ற, பொய்யாமொழிப் புலவர் பாடலில் வேட்டுக்கு மரன் தன்பெயர் முட்டை என்று கூறியது இடுகுறி ஆக்கம் ஆகும். பொன்னன் என்பது காரணக்குறி ஆக்கம் ஆகும். இங்கு, முட்டை என்ற இடுகுறிப்பெயரும், பொன்னன் என்ற காரணப்பெயரும், மரபுபோலத் தொன்றுதொட்டு வருதலின்றி இடையே ஒருவரால் ஆக்கப்பட்டு அப் பொருள்களுக்குப் பெயர் களாக வருவதால், அவை முறையே இடுகுறி ஆக்கமும், காரணக் குறி ஆக்கமும் தொடர்ந்த பெயர்களாகும். முட்டை என்ற இடுகுறிப் பெயரை, வேட்டுக் குமரன் தனக்குப் பெயராக ஆக்கிக் கொண்டமையால், அஃது இடுகுறி ஆக்கம் ஆயிற்று. பொன்னை உடைய காரணத்தால் வரும் பொன்னன் என்ற காரணப் பெயரை, ஒருவன் தனக்குப் பெயராக ஆக்கிக் கொண் டால், அப்பெயர் காரணக்குறி ஆக்கம் ஆகும். நடந்தவனைக் கண்டேன் இங்க, நடந்தவன் என்ற வினையால் அணையும் பெயர், வினையால் அணையும் காரணக்குறியாகும். அஃதாவது, நடத்த லாகிய வினை காரணமாக, அஃது அத் தொழிலைச் செய்த வனுக்குப் பெயராக வந்துள்ளது. நடந்தவனை - (இறந்தகாலம்) நடக்கின்றவனை - (நிகழ்காலம்) நடப்பவனை - (எதிர்காலம்) இங்ஙனம், பெயர்ச் சொற்களிலே வினையால் அணையும் பெயர் மட்டும் காலங் காட்டும். மற்றவை காட்டா. (பெயர்ச்சொல் வேற்றுமைக்கு இடனாதல்) முருகன் வந்தான் - முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை) முருகனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ) முருகனால் கட்டப்பட்டது-மூன்றாம் வேற்றுமை (ஆல்) முருகனுக்கக் கொடுத்தேன் - நான்காம் வேற்றுமை (கு) முருகனின் மூப்பு யான் - ஐந்தாம் நாம் வேற்றுமை (இன்) முருகனது கை - ஆறாம் வேற்றுமை (அது) முருகனின் கண் இருக்கின்ற பேனா - ஏழாம் வேற்றுமை (கண்) முருகா வா-எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை) இங்கு, முருகன் என்ற பெயர்ச்சொல் எட்டு வேற்றுமைப் பொருள்களுக்கும் இடமாகியது போலப் பிற பெயர்ச்சொற்கள் எல்லாம், எட்டு வேற்றுமைப் பொருள்களுக்கும் இடமாகி வரும். இனி, இருதிணை ஐம்பால் மூவிடத்து ஒன்றணை ஏற்பனவும், பலவற்றினை ஏற்பனவுமாகிய பெயர்களைப் பற்றிப் பார்ப்போம். உயர்திணை ஆண் - பெண் - பலர்பாற் பெயர்கள் (பொருளால் வருபெயர்கள்) தமன்-நமன்-நுமன்-எமன்-(ஆண்பால்) தமள்-நமள்-நுமள்-எமள்-(பெண்பால்) தமர்-நமர்-நுமர்-எமர்-(பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகி கிளை, எண் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பால்களில், பொருளால் வருபெயர்களாகும். (இடத்தால் வருபெயர்கள்) வெற்பன் - எயினன்- ஆயன் மகிழ்நன் - துறைவன் - கருவூரான் - (ஆண்பால்) குறத்தி - எயிற்றி - ஆய்ச்சி உழத்தி - பரத்தி - கருவூராள் - (பெண்பால்) குறவர் - எயினர் - ஆயர் உழவர் - பரதவர் - கருவூரார் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய திணை, ஊர் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண்-பெண்-பலர் பால்களில், இடத்தால் வருபெயர்களாகும். (காலத்தால் வருபெயர்கள்) மூவாட்டையான் - வேனிலான் - ஆதிரையான் -(ஆண்பால்) மூவாட்டையாள் - வேனிலாள் - ஆதிரையாள் - (பெண்பால்) மூவாட்டையார் - வேனிலார் - ஆதிரையார் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய ஆண்டு, பருவம், மாதம், நாண்மீன் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண்-பெண்-பலர்பால்களில், காலத்தால் வருபெயர் களாகும். (சினையால் வருபெயர்கள்) குழைக்காதன் - நெடுங்கையன் - (ஆண்பால்) குழைக்காதாள் - நெடுங்கையாள் - (பெண்பால்) குழைக்காதர் - நெடுங்காதர் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய தோள், குழல், மார்பு, கண், காது, கை முதலிய உறப்புக்கள் பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பாலில், சினையால் வருபெயர்களாகும். (குணத்தால் வருபெயர்கள்) பெரியன் - கரியன் - கூனன் - (ஆண்பால்) பெரியள் - கரியள் - கூனி - (பெண்பால்) பெரியர் - கரியர் - கூனர் - (பலர்பால்) இவையும், இவை போல்வனவுமாகிய அளவு, அறிவு, ஒப்பு, வடிவு, நிறம், கதி, சாதி, குடி, சிறப்பு முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பாலில், குணத்தால் வருபெயர்களாகும். (தொழிலால் வருபெயர்கள்) ஓதுவான் - ஈவான் - (ஆண்பால்) ஓதுவாள் - ஈவாள் - (பெண்பால்) ஓதுவார் - ஈவார் - (பலர்பால்) இங்ஙனம், ஓதல், ஈதல் முதலியன பற்றிய பெயர்கள் எல்லாம், உயர்திணை ஆண் - பெண் - பலர்பாலில், தொழிலால் வருபெயர்களாகும். இவை அனைத்தும் பொருளாதி ஆறன் அடியாகப் பிறந்த, இரு திணையில் உயர்திணையையும், ஐம்பால்களில் ஆண்பால், பெண் பால், பலர்பால்களையும் தனித்தனியே ஏற்று நின்ற பெயர் களாகும். இவை தவிர, உயர்திணை ஆண்-பெண்-பலர்பாற் பெயர்களாக வருவனவும் உள. அஃறிணை ஒன்றன்பாற் பெயர்கள் எது-ஏது-யாது } துவ்விகுதி வினாப் பெயர்கள் அது-இது-உது } துவ்விகுதி சுட்டுப் யெர்கள் குழையது - (பொருள்) நிலத்தது - (இடம்) மூலத்தது - (காலம்) துவ்விகுதி பெற்ற கோட்டது - (சினை) பொருளாதி அறுபெயர்கள் குறியது - (குணம்) ஆடலது - (தொழில்) அஃது இஃது சுட்டுடன் கூடிய ஆய்தம் பொருந்திய உஃது துவ்விகுதிப் பெயர்கள் ஒன்று எண்ணாகு பெயர் மேற்கண்ட துவ்விகுதி பெற்ற வினாப்பெயரும், சுட்டுப் பெயரும், பொருளாதி அறுபெயரும், சுட்டுன் கூடிய ஆய்தம் பொருந்திய பெயரும், ஒன்று என்னும் எண்ணாகு பெயரும், பிறிது, மற்றையது என அஃறிணை ஒருமைப் பொருள் குறித்து வருவனவும், பிறவும் அஃறிணை ஒன்றன் பாற் பெயர்களாகும். இவை, இருதிணையில் அஃறிணைக்கும், ஐம் பால் களில் ஒன்றன்பாலுக்கும் உரியனவாகும். அஃறிணைப் பலவின்பாற் பெயர்கள் எவை - ஏவை - யாவை - வினாப்பெயர்கள் அவை - இவை - உவை - சுட்டுப் பெயர்கள் நெடியவை - கரியவை - வை விகுதிப் பெயர்கள் பொருள பொருளன பொருள் அகத்த அகத்தன இடம் மூலத்த மூலத்தன காலம் கோட்ட கோட்டன சினை கரிய கரியன குணம் ஓதுவ ஓதுவன தொழில் இவை, அன் சாரியை பெற்றும், பெறாமலும் வந்த அகர விகுதிப் பெயர்கள். அவ் இவ் வகர மெய்யீற்றுச் சுட்டுப் பெயர்கள் உவ் யானைகள் கள் என்னும் பகுதிப்பொருள் விகுதியீற்றுப் குதிரைகள் பெயர்கள் இரண்டு மூன்று எண்ணாகு பெயர்கள் உள்ள-இல்ல, பல்ல-சில்ல, உள-இல, பல-சில என்பன குறிப்பு வினையால் அணையும் பெயர்களாகும். மேற்கண்ட வினாப் பெயர்களும், சுட்டுப்பெயர்களும், வை விகுதிப் பெயர்களும், பொருளாதி ஆறன் அடியாகப் பிறந்த அகர விகுதிப் பெயர்களும், வகர மெய்யீற்றுச் சுட்டுப் பெயர்களும், கள் என்னும் பகுதிபொருள் விகுதியீற்றுப் பெயர்களும், இரண்டு, மூன்று முதலிய எண்ணாகு பெயர்களும், உள்ள, இல்ல, பல்ல, சில்ல, உள, இல, பல, சில என்னும் குறிப்பு வினையாலணைந்த எட்டுப் பெயர்களும், இவை போல்வன பிறவும் அஃறிணைப் பலவின்பாற் பெயர்களாகும். இவை, இருதிணையில் அஃறிணைக்கும், ஐம்பால்களில் பலவின்பாலுக்கும் உரியவையாகும். இதுவரை, திணபைல்களில் ஒன்றனை ஏற்கும் பெயர்களைப் பார்த்தோம். இனி, திணைபால்களில் பலவற்றினை ஏற்கும் பெயர் களைப் பார்ப்போம். அஃறிணை இருபாற் பொதுப்பெயர் யானை வந்தது யானை வந்தன மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன இங்கு, யானை, மரம் என்பன பால் பகுக்கப்படாத அஃறிணைப் பெயர்களாகம். எனவே அவை, அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் இரண்டிற்கும் பொதுவாயின. இவை, பால்பகா அஃறிணைப் பெயர் எனவும் படும். இங்ஙனம் வரும் பால்பகா அஃறிணைப் பெயர்கள் எல்லாம் அஃறிணை இருபாற் பொதுப் பெயர்களாகும். இருதிணைப் பொதுப்பெயர் சாத்தன் இவன் சாத்தன் இவ்வெருது ஆண்மை முதற்பெயர் சாத்தி இவள் சாத்தி இப்பசு பெண்மை முதற்பெயர் கோதை இவன் கோதை இவள் ஒருமை முதற்பெயர் கோதை இது கோதைகள் இவர் கோதைகள் இவை பன்மை முதற்பெயர் ஆண்மை முதற்பெயர், பெண்மை முதற்பெயர், ஒருமை முதற்பெயர், பன்மை முதற்பெயர்கள் நான்கும் இருதிணைக்கும் பொதுவாயின. முடவன் இவன் முடவன் இவ்வெருது ஆண்மைச் சினைப்பெயர் முடத்தி இவள் முடத்தி இப்பசு பெண்மைச் சினைப்பெயர் செவியிலி இவன் செவியிலி இவள் ஒருமைச் சினைப்பெயர் செவியிலி இப்பசு செவியிலிகள் இவர் செவியிலிகள் இவை பன்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர், பெண்மைச் சினைப்பெயர், ஒருமைச் சினைப்பெயர், பன்மைச் சினைப்பெயர்கள் நான்கும் இருதிணைக்கும் பொதுவாயின. முடக்கொற்றன் இவன் முடக்கொற்றன் இவ்வெருது ஆண்மைச் சினை முதற்பெயர் முடக்கொற்றி இவள் முடக்கொற்றி இப்பசு பெண்மைச் சினை முதற்பெயர் கொடும்புற மருதி இவன் கொடும்புற மருதி இவள் ஒருமைச் சினை முதற்பெயர் கொடும்புற மருதி இது கொடும்புற மருதி இவர் கொடும்புற மருதி இவை பன்மைச் சினை முதற்பெயர் ஆண்மை - பெண்மை - ஒருமை - பன்மைச் சினைமுதற் பெயர்கள் நான்கும் இருதிணைப்பொதுவாயின. தந்தை இவன் தந்தை இவவெருது ஆண்மை முறைப்பெயர் தாய் இவள் தாய் இப்பசு பெண்மை முறைப்பெயர் ஆண்மை - பெண்மை முறைப் பெயர்கள் இரண்டும் இரு திணைக்கும் பொதுவாயின. யான் நம்பி யான் நங்கை யான் பூதம் யான்-நான் என்ற தன்மை ஒருமைப் நான் நம்பி பெயர்கள் நான் தங்கை நான் பூதம் யாம் மக்கள் யாம் பூதங்கள் யாம்-நாம் என்ற தன்மைப் பன்மைப் நாம் மக்கள் பெயர்கள் நாம் பூதங்கள் யான், நான், யாம் நாம் என்ற தன்மைப் பெயர்கள் நான்கும் இருதிணைக்கும் பொதுவாயின. நீ நம்பி நீ நங்கை முன்னிலை ஒருமைப் பெயர் நீ பூதம் நீர் மக்கள் நீர் பூதங்கள் எல்லீர் மக்கள் எல்லீர் பூதங்கள் நீர், எல்லீர், நீயிர், நீவிர் என்ற நீயிர் மக்கள் முன்னிலைப் பன்மைப் பெயர்கள் நீயிர் பூதங்கள் நீவிர் மக்கள் நீவிர் பூதங்கள் நீ, நீர், எல்லீர், நீயிர், நீவிர் என்ற முன்னிலைப் பன்மைப் பெயர்கள் ஐந்தும் இருதிணைப் பொதுவாயின. அவர் எல்லாம் அவை எல்லாம் எல்லாம் அவர் தாம் அவைதாம் தாம் அவன்றான் அவடான் தான் அதுதான் எல்லாம், தாம், தான் என்பன இருதிணைக்கும் பொதுவாயின. இதுவரை, இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்ச் சொற்களைப் பற்றிப் பார்த்தோம். இனி, மூவிடப் பெயர்களையும், மூவிடப் பொதுப்பெயரையும் பார்ப்போம். மூவிடப் பெயர்கள் யான்-நான்-யாம்-நாம் இவை நான்கும் தன்மை இடத்திற் குரிய ஒருமை-பன்மைப் பெயர்களாகும். நீ, நீர், எல்லீர், நீயிர், நீவிர் இவை ஐந்தும் முன்னிலை இடத்திற்குரிய ஒருமை-பன்மைப் பெயர்களாகும். தன்மைப் பெயரும், முன்னிலைப் பெயரும் ஒழிந்த, அவன், அவள், அவர், அது, அவை என்பனவற்றை உள்ளிட்ட பிற பெயர்கள் எல்லாம் படர்க்கை இடத்திற்குரியன. மூவிடப் பொதுப்பெயர் யாம் எல்லாம் - தன்மையிடம் நீர் எல்லாம் - முன்னிலையிடம் அவர் எல்லாம் - அவை எல்லாம் - படர்க்கையிடம் எல்லாம் என்பது தன்மை - முன்னிலை - படாக்கை ஆகிய மூன்று இடத்திற்குப் பொதுப்பெயராக வந்துள்ளது. இதுவரை பார்த்தவற்றிலிருந்து பெயர்கள், இருதிணை ஐம்பால் மூவிடங்களில், ஒன்றனை ஏற்பனவும், பலவற்றினை ஏற்பனவுமாய் வந்தமை தெரியவரும். இலக்கண விதி: இடுகுறியும் காரணக்குறிப்புமாகிய பெயர்கள், மரபினையும் ஆக்கப்பாட்டினையும் தொடர்ந்து வர, வினையாலணையும் காரணக்குறிவாய், எட்டு வேற்றுமை களும் சார்தற்கு இடமாகி, இருதிணை ஐம்பால் மூவிடத்து ஒன்றனை ஏற்பனவும், பலவற்றினை ஏற்பனவுமாய் வருவன பெயர்ச் சொற் களாகும். இடுகுறி காரண மரபோ டாக்கம் தொடர்ந்து தொழிலை காலந் தோற்றா வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன் றேற்பவும் பொதுவு மாவன பெயரே. (ந-நூற்பா 275.) 2. வினைச்சொல் (1) தெரிநிலை வினை சேணியன் ஆடை நெய்தான் இத்தொடரில் நெய்தான் என்னும் வினைச்சொல், நெய்தலாகிய தொழில் முற்றுப் பெற்றதையும், இறந்த காலத்தையும் உணர்த்துகிறது. எனவே. நெய்தான் என்பது தெரிநிலை வினை முற்றாகும். காலம் வெளிப் படையாகத் தெரிய நிற்கும் வினை, தெரிநிலை வினை எனப்படும். இங்ஙனம் வருகின்ற தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்ற ஆறனையும் தரும். (1) செய்பவன் - (சேணியன்) (2) கருவி - (நூல்) (3) நிலம் - (வீடு - இடம்) (4) செயல் - (நெய்தல்) (5) காலம் - (இறந்தகாலம்) (6) செயப்படுபொருள் - (ஆடை) நெய்தான் என்ற தெரிநிலை வினைமுற்றுச் சொல்லானது, சேணியனாகிய நெய்பவனையும், நெய்தற்கு முதற்கருவி துணைக் கருவிகளாகிய நூல், தறி முதலியனவற்றையும், நெய் தற்கு இடமாகிய வீட்டையும், செயலாகிய நெய்தலையும், இற ந்த காலத்தையும், செயப்படுபொருளாகிய ஆடையையும் உணர்த்துகின்றது. இங்ஙனம் வருகின்ற தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், பகுதியால் செயலையும், விகுதியால் செய்பவனையும், இடை நிலையால் காத்தையும் உணர்த்தும். மற்றைய மூன்றையும் இவற்றின் தொடர்பால் உணரமுடியும். ஒரு சில தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் செய்பவன் முதலிய ஆறும் வராமல், குறைந்து வருவதும் உண்டு. அஃதா வது, செயப்படுபொருள் குறைந்து வரும். கண்ணன் வீட்டிற்குச் சென்றான் இத் தொடரில் உள்ள சென்றான் என்பது தெரிநிலை வினைமுற்றுச் சொல்லாகும். இங்கே, செல்லுதலாகிய தொழிலைச் செய்பவன் உயர்திணை ஆண்பாலாகிய கண்ணன் என்பதும், செல்லுதற்கக் கருவி கால்கள் என்பதும், சென்ற இடம் வீடு என்பதும் தெரிவதுடன், செல்லுதலாகிய தொழி லும், இறந்த காலமும் தெரிகின்றன. ஆனால், செயப்படு பொருள் மட்டும் தெரிய வில்லை. இங்கச் செயப்படுபொருள் இல்லை. எதை நெய்தான்? என்று வினாவினால், ஆடையை என்று விடை வருகின்றது. எனவே, ஆடை செயப்படுபொருளாகும். எதைச் சென்றான்? என்று வினவினால், அதற்கு விடை இல்லை. எனவே, சென்றான் என்ற வினைக்குச் செயப்படுபொருள் இல்லை. எனவே, தெரிநிலைவினை செயப்படுபொருள் பெற்றும், பெறா மலும் வரும். செயப்படுபொருள் பெற்ற வினை, செயப் படுபொருள் குன்றாவினை என்றும், செயப்படுபொருள் பெறாத வினை, செயப்படு பொருள் குன்றியவினை என்றும் கூறப்படும். உண்டான், படித்தோம், கண்டேன் இவையும், இவை போல்வனவுமாகிய வினைச்சொற்கள் செயப்படுபொருள் குன்றாவினை எனப்படும். நடந்தான், வந்தான் பறந்தது இவையும், இவை போல்வனவுமாகிய வினைச்சொற்கள் செயப்படுபொருள் குன்றியவினை எனப்படும். இலக்கண விதி: கருத்தாவும், கருவியும், இடமும், செயலும், காலமும், செயப்படுபொருளுமாகிய அறுவகைப் பொருளையும் தருவது தெரிநிலைவினைச் சொல்லாகும். செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம் செய்பொரு ளாறுந் தருவது வினையே. (ந-நூற்பா 320) (2) குறிப்புவினை இவன் பொன்னன் அவன் கண்ணன் இவ் வெடுத்துக்காட்டுக்களில் உள்ள பொன்னன், கண்ணன் என்பன வினைமுற்றுக்களாகும். ஆனால், இவை கருத்தாவை மட்டும் உணர்த்தித் தொழிலையும் காலத்தையும் வெளிப்படை யாகக் காட்ட வில்லை. எனினும், பொன்னை உடையவனாக இருந்தான்; இருக்கின்றான்; இருப்பான் எனவும் கண்ணை உடைய வனாக இருந்தான்; இருக்கின்றான்; இருப்பான் எனவும் பொருள் தரும்பொழுது, குறிப்பால் முக்காலத்தையும் காட்டும். இங்ஙனம், கருத்தாவை மட்டும் உணர்த்திக் திழிலையும், காலத்தையும், பிறவற்றையும் வெளிப்படை யாக உணர்த்தாமல், குறிப்பால் உணர்த்துவன குறிப்புவினை எனப்படும். அக் குறிப்பு வினை, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகப் பிறக்கும். குழையன்-பொருள் அடியாகப் பிறந்த குறிப்புவினை (குழைகாதணி) ஊரன்-இடம் அடியாகப் பிறந்த குறிப்புவினை ஆதிரையான்-காலம் அடியாகப் பிறந்த குறிப்புவினை செங்கண்ணன்-சினை அடியாகப் பிறந்த குறிப்புவினை கரியன்-பண்பு அடியாகப் பிறந்த குறிப்புவினை இன்சொல்லன்-தொழில் அடியாகப் பிறந்த குறிப்பு வினை. குறிப்பு வினைகளில், விகுதியினால் செய்பவன் (கருத்தா) மட்டுமே விளங்கும். ஏனைய குறிப்பாகவே விளங்கும். இலக்கண விதி: பொருள், இடம் , காலம் சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகத் தோன்றிச் செய்பவன் முதலாகிய ஆறனுள், செய்பவனாகிய கருத்தாவை மட்டும் வெளிப்படையாக விளக்குவது குறிப்பு வினையாகும். பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. (ந-நூற்பா 321.) (3) வினைச்சொற்களின் வகைகள் (தெரிநிலை வினைமுற்று) கண்ணகி வந்தாள் இங்கு, வந்தாள் என்ற வினைச்சொல், பகுதியால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும், விகுதியால் திணைபாலையும் வெளிப்படையாகக் காட்டுகிறது. எனவே, வந்தாள் என்பது தெரிநிலை வினைமுற்றாகும். (தெரிநிலைப் பெயரெச்சம்) படித்த பெண் இங்கே, படித்த என்ற வினைச்சொல், பகுதியால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும், வெளிப்படை யாக உணர்த்து கிறது. திணைபால் உணர்த்தும் விகுதி இன்மையால் படித்த என்ற சொல் முற்றுப் பெறவில்லை. எனவே, படித்த என்பது எச்சவினை யாகும். அது, பெண் என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, படித்த என்பது தெரிநிலைப் பெயரெச்ச மாகும். (தெரிநிலை வினையெச்சம்) படித்துத் தேறினாள் இங்கே, படித்து என்ற வினைச்சொல், பகுதியால் தொழிலையும், இடைநிலையால் காலத்தையும் வெளிப்படை யாக உணர்த்துகிறது. திணைபால் உணர்த்தும் விகுதி இன்மையால் படித்து என்ற சொல் முற்றுப் பெறவில்லை. எனவே, படித்து என்பது எச்சவினையாகம். அது, தேறினான் என்ற வினைச் சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, படித்து என்பது தெரிநிலை வினையெச்ச மாகும். இங்ஙனம், தெரிநிலை வினைமுற்று, தெரிநிலைப் பெய ரெச்சம், தெரிநிலை வினையெச்சம் எனத் தெரியநிலை வினை மூன்று வகைப்படும். (குறிப்பு வினைமுற்று) அவன் நல்லவன் இங்கு நல்லவன் என்பது தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தாமல், குறிப்பாக உணர்த்திக் திணை பால் காட்டும் விகுதியுடன் முற்றுப் பெற்றுள்ளது. எனவே, நல்லவன் என்பது குறிப்பு வினை முற்றாகும். (குறிப்புப் பெயரெச்சம்) நல்ல பையன் இங்கு, நல்ல என்பது தொழிலையும் காலத்தையும் குறிப்பாக உணர்த்திப் பையன் என்ற பெயரைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, நல்ல என்பது குறிப்புப் பெயரெச்சமாகும். (குறிப்புவினையெச்சம்) மெல்லச் சென்றான் இங்கே, மெல்ல என்பது தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்தி, சென்றான் என்ற வினைச்சொல்லைச் சார்ந்து முற்றுப் பெறுகிறது. எனவே, மெல்ல என்பது குறிப்பு வினையெச்ச மாகும். இங்ஙனம், குறிப்பு வினைமுற்று, குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் எனக்குறிப்பு வினை மூன்று வகைப் படும். இலக்கண விதி: மேலே கூறப்பட்ட தெரிநிலை குறிப்பு என்ற வினைச் சொற்கள், வினை முற்றும், பெயரெச்சமும், வினை யெச்சமும் ஆகித் திணைபால் இடங்களில் ஒன்றற்குச் சிறப்பாய் வருவனவும், பலவற்றிற்குப் பொதுவாய் வருவனவும் ஆகும். அவைதாம்- முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். (ந-நூற்பா 322) 3. இடைச் சொல் பண்டு காடுமன் - எமக்கு அருளமன் மற்று அறிவாம் - மற்று என்னை ஆள்க இங்கு, மன் என்னும் இடைச்சொல் காடு என்ற பெயர்ச் சொல்லுக்குப் பின்னும், அருளும் என்ற வினைச் சொல்லுக்குப் பின்னும் வந்துள்ளது. மற்று என்னும் இடைச்சொல் அறிவாம் என்ற வினைச் சொல்லுக்கு முன்னும், என்னை என்ற பெயர்ச் சொல்லுக்கு முன்னும் வந்துள்ளது. இங்ஙனம், தனித்து இயங்காமல் பெயர் வினைகளைச் சார்ந்து, அவற்றின் முன்னும் பின்னும் அகத்துறுப்பாயும், புறத் துறுப்பாயும் ஒன்றும் பலவும் இடைசொற்கள் வரும். அவை, வேற்றுமை உருபுகள், இடைநிலைகளும் விகுதி களுமாகிய வினை உருபுகள், சாரியைகள், உவம உருபுகள், தத்தம் பொருள் உணர்த்தும் சொற்கள், இசைநிறை, அசைநிலை, குறிப்பால் பொருள் தரும் சொற்கள் என எட்டுவகையினவாய் வரும். இவ்விடைச்சொற்கள், பெயர்ச் சொற்களுமாகாமல் வினைச் சொற்களுமாகாமல், அவற்றின் வேறுமாகாமல் இடை நிகரனவாய் நிற்றலாலும், பெயர் வினைகளின் இடமாக நடத்தலினாலும் இடைச்சொற்கள் எனப்பட்டன. (1) வேற்றுமை உருபுகள்: ஐ-ஆல்-கு-இன்-அது-கண் என்ற வேற்றுமை உருபுகள் இடைச் சொற்களாகும். (2) வினை உருபுகள்: (இடைநிலைகள்-விகுதிகள்) த்-ட்-ற்-இன் போன்ற இடைநிலைகளும், அன்-ஆன்-அள்-ஆள் போன்ற விகுதிகளும் இடைச் சொற்களாகும். (3) சாரியைகள்: அற்று-அத்து-அன்-ஆன்-அம்-இன் போன்ற சாரியைகள் இடைச்சொற்களாகும். (4) உவம உருபுகள்: போல - புரைய - ஒப்பு - உறழ என்பன போன்ற உவம உருபுகள் இடைச்சொற்களாகும். (5) தத்தம்பொருள் உணர்த்தும் சொற்கள்: ஏ-ஓ-உம்-கொல்-தான்-மன் என்பன போலத் தத்தம் பொருள் உணர்த்தும் சொற்கள் இடைச்சொற்களாகும். (6) இசைநிறை: ஏஎ-ஓஒ என்பன போலத் தமக்கென்ப பொருளின்றிச் செய்யுளின் ஓசையை நிறைக்க வரும் இசைநிறைகள் இடைச்சொற்களாகும். (7) அசைநிலை: கொல் - ஆல்- ஏ- ஓ- அரோ என்பன போல, வேறு பொருளின்றி அசைநிலைப் பொருளில் வரும் அசைநிலைகள் இடைச்சொற்களாகும். (8) குறிப்பால் பொருள் தரும் சொற்கள்: கோவென, சோவென, கடகடென, படபடென என்பன போல ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் சொற்களும், துண்ணென, திடுக்கென என்பன போல அச்சக் குறிப்புப் பொருளைத் தரும் சொற்களும், பொள் ளென, பொருக்கென என்பன போல விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் சொற்களும் இடைச் சொற்களாகும். (1) ஊரை அடைந்தான் ஊரை (ஊர்+ஐ+ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு. (2) அவன் உண்டான் உண்டான் (உண்+ட்+ஆன்) ட்-இடைநிலை, ஆன்-விகுதி. (3) அவற்றைத் தந்தான் அவற்றை (அவ்+அற்று+ஐ) அற்று-சாரியை (4) மயில் போல ஆடினாள் போல-உவம உருபு (5) அவன்தான் சொன்னான் தான்-தேற்றப்பொருள் (தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொல்) (6) ஏஎ இவள் ஒருத்தி ஏஎ-இசைநிறை (7) நாடாமால் ஊராமால் ஆல்-அசைநிலை (8) மழை சோவெனப் பெய்தது சோவென-ஒலிக்குறிப்பு நெஞ்சம் திடுக்கென நடுங்கியது திடுக்கென- அச்சக்குறிப்பு பொருக்கென எழுந்தான் பொருக்கென - விரைவுக்குறிப்பு இவை யாவும் எட்டுவகையினவாய் வந்த இடைச்சொற் களாகும். இனி, அகத்துறுப்பாயும் புறத்துறுப்பாயும் ஒன்றும் பலவுமாகப் பின்னும் முன்னும் வருவனவற்றைப் பார்ப்போம். குழையன் (குழை+அன்) இங்கு, அன் என்ற விகுதியிடைச்சொல் மட்டும், பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளது. நிலத்தினன் (நிலம்+த்+த்+இன்+அன்) இங்கு த்-இன்-அன் என முறையே இடை நிலையும், சாரியையும், விகுதியுமாகிய பல இடைச்சொற்கள் பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளன. உண்ணாய் (உண்+ஆய்) இங்கு ஆய் என்ற விகுதியிடைச்சொல் மட்டும், வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளது. நடந்தனன் (நட+த்(ந்)+த்+அன்+அன்) இங்கு, த்-அன்-அன் என முறையே இடைநிலையும், சாரியையும், விகுதியுமாகிய பல இடைச்சொற்கள் வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளன. அதுமன் - கொன்னூர் இங்கு , மன் என்னும் இடைச்சொல்லும் கொன் என் னும் இடைச்சொல்லும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறப்பாய்த் தனித்து வந்துள்ளன. அது மற்றம்ம - இனி மற்றொன்று இங்கு, மற்று-அம்ம என்ற இடைச்சொற்களும், மற்று-ஒன்று என்ற இடைச்சொற்களும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வந்துள்ளன. வந்தானோ - ஐயோ விழுந்தான் இங்க, ஓ-ஐயோ என்ற இடைச்சொற்கள் வினையின் புறத்துறப்பாய்த் தனித்து வந்துள்ளன. கொன்றான் கூகூ-சீசீ போ இங்கே, கூகூ என்ற இடைச்சொற்களும், சீசீ என்ற இடைச் சொற்களும், வினைக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வந்துள்ளன. தத்தம் பொருள் தரும் இடைச்சொற்கள் தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று என்பன போன்ற பல பொருள்களில் வரும். இனி, நன்னூல் (421) நூற்பாவுள் இன்னன என்றதனால் வரும் இடைச்சொற்களைப் பார்ப்போம். அவன்-இவன்-உவன் அ-இ-உ சுட்டுப் பொருளைத் தருகின்ற இடைச்சொற் களாகும். எது-ஏது-யாது-அவனா-அவனோ எ-ஏ-யா-ஆ-ஓ வினாப்பொருளைத் தருகின்ற இடைச் சொற்களாகும். நக்கீரர் ந-சிறப்புப் பொருளைத் தருகின்ற இடைச்சொல்லாகும். இனிச்செல்வான் - இனி எம்மெல்லை இனி என்பது கால இடங்களின் எல்லைப் பொருளைத் தரும் இடைச் சொல்லாகும். அறிதொறறியாமை சேரி தோறிது தொறு-தோறு என்பன இடப்பன்மைப் பொருள்தரும் இடைச்சொற்களாகும். அந்தோ இழந்தான் அ ஆ என்ன உயரம் அந்தோ, என்னும் சொல் இரக்கப்பொருளையும், அஆ என்னும் சொல் வியப்புப் பொருளையும் தரும் இடைச்சொற் களாகும். வாளா இருந்தான் சும்மா இருந்தான் வாளா-சும்மா என்பன பயனின்மைப் பொருளைத்தரும் இடைச் சொற்களாகும். இவை தவிர, இன்னும் வருவனவும் உள. இலக்கண விதி: ஐ முதலிய வேற்றுமை உருபுகளும், விகதிகளும் இடைநிலைகளுமாகிய வினை உருபுகளும், அன்-ஆன் முதலிய சாரியை உருபுகளும், போலப் புரைய முதலிய உவம உருபுகளும், பிறவாறு தத்தமக்குரிய பொருளை உணர்த்தி வரு வனவும், வேறு பொருளின்றிச் செய்யுளில் இசைநிறைத் தலே பொருளாக வருவனவும், அசை நிலையே பொரளாக நிற்பனவும், வெளிப்படையான் வரும் இவை போலாது, ஒலி, அச்சம், விவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருவனவும் என, எட்டுவகை யினை உடையவாய்த் தனித்து நடத்தலின்றிப் பெயரின் அகத்தும், வினையின் அகத்தும், அவற்றின் புறமாகிய பின்னும் முன்னம் ஆகிய இவ்விடங்கள் ஆறனுள் ஓரிடத்து ஒன்றேனும் பலவேனும் வந்து, அப்பெயர் வினைகளுக்கு அகத்துறுப்பாயும், புறத்துறுப் பாயும் ஒன்று பட்டு நடக்குந் தன்மையது இடைச் சொல்லாகும். வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப் பெயரினம் வினையினும் பின்முன் னோரிடத் தொன்றும் பலவும்வத் தொன்றுவ திடைச்சொல். (ந-நூற்பா 420.) இலக்கண விதி: தெரிநிலையும், தேற்றமும், ஐயமும், முற்றும், எண்ணும், சிறப்பும், எதிர்மறையும், எச்சமும், வினாவும், விழைவும், ஒழியிசையும், பிரிப்பும், கழிவும், ஆக்கமும் இவை போல்வன பிறவும் தத்தம் பொருள என்ற இடைச்சொற்களின் பொருள்களாகும். தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப் பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள். (ந-நூற்பா 421) 4. உரிச்சொல் உறுமீன் வருமளவும் சாலப் பேசினான் இங்கு, உறு என்னும் உரிச்சொல் மீன்என்னும் பெயர்ச் சொல்லைத் தழுவி வந்து, பெரிய மீன் எனப் பொருள் தந்து, பெயரின் பண்பை உணர்த்துகிறது. சால என்னும் உரிச் சொல் பேசினான் என்னும் வினைச்சொல்லைத் தழுவி வந்து, மிகுதியாகப் பேசினான் எனப் பொருள் தந்து, வினையின் பண்பை உணர்த்துகிறது. இங்ஙனம், பெயர்ச் சொல்லையும், வினைச்சொல்லையும் தழுவிவந்து, பல்வேறு வகைப்பட்ட பண்புகளைஸயம் உணர்த்தும் பெயராகி, ஒருகுணம் தழுவியும், பலகுணம் தழுவியும் செய்யுளுக்கே உரியனவாக வருஞ்சொல் உரிச்சொல் எனப்படும். பெயரைத் தழுவி அதன் பண்பை உணர்த்தும் உரிச்சொல் பெயர் உரிச்சொல் என்றும், வினையைத் தழுவி அதன் பண்பை உணர்த்தும் உரிச்சொல் வினை உரிச்சொல் என்றும் வழங்கப் படும். அவ் வுரிச்சொற்கள், ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்றும், பல குணம் தழுவிய உரிச்சொல் என்றும் இரண்டு வகைப்படும். இலக்கண விதி:இசையும், குறிப்பும், பண்பும் ஆகிய பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி, அங்ஙனம் உணர்த்தும் பொழுது, ஒருசொல் ஒரு குணத்தை உணர்த்து வனவும், பலகுணத்தை உணர்த்துவனவுமாய்ப் பெயர் வினைகளை விட்டு நீங்காமல், செய்யுட்கு உரியனவாகிப் பொருட்க உரிமை பூண்டு வருவன உரிச்சொல் எனப்படும். பல்வகைப் பண்பும் பகர்பெயராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒரவா செய்யுட் குரியன வுரிச்சொல். (ந-நூற்பா 442.) (ஒருகுணந் தழுவிய பல உரிச்சொற்கள்) சாலச் சிறந்தது உறு புகழ் தவச்சேய் நாட்டார் நனி வருந்தினை துனி கூர் எவ்வம் கழி கண்ணோட்டம் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் சால-உறு-தவ-நனி-கூர்-கழி என்னும் ஆறு உரிச்சொற்களும், மிகுதி என்ற ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும். இவை, ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் எனப்படும். இன்னும், சொல் என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களும், ஓசை என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் பல உரிச்சொற்களும் உள. இலக்கண விதி: சால-உறு-தவ-நனி-கூர்-கழி என்ற இவ் வுரிச்சொற்கள் ஆறும், மிகுதியாகிய ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும். சால வுறுதவ நனிகூர் கழிமிகல். (ந-நூற்பா 456.) (பலகுணந் தழுவிய ஓர் உரிச்சொல்) கடிநகர்-காவலை உடைய நகரம் (காப்பு-காவல்) கடிவேல்-கூர்மையான வேல் (கூர்மை) கடிமாலை-வாசனை உடைய மாலை (மணம்-நாற்றம்) கடிமார்பன்-விளங்கும் மார்புடையவன் (விளக்கம்) கடிபேய்-அஞ்சத்தக்க பேய் (அச்சம்) கடியரண் - சிறந்த அரண் (சிறப்பு) அம்புகடிவிதும்-அம்பை விரைவில் விடுவோம் (விரைவு) கடிகாற்று-மிகுந்த காற்று (மிகுதி) கடிமணம்-புதுமணம் (புதுமை) கடிமுரசு-ஒலிக்கும் முரசு (ஆர்த்தல்-ஒலித்தல்) கடிமது-நீக்கத்தக்க மது (வரைவு-நீக்குதல்) கடி வினை-திருமண வேலை ( மன்றல்-திருமணம்) கடி மிளகு - கரிக்கின்ற மிளகு (கரிப்பு-காரம்) மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் கடி என்னும் ஓர் உரிச்சொல் காப்பு, கூர்மை, நாற்றம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மன்றல், கரிப்பு என்ற பதின்மூன்று குணத்தையும் உணர்த்தி வந்த பலகுணந் தழுவிய ஓர் உரிச்சொல்லாகும். இலக்கணவிதி: கடி என்னும் உரிச்சொல் காவலும், கூர்மை யும், வாசனையும் விளக்கமும், அச்சமும், சிறப்பும், விரைவும், மிகுதியும், புதுமையும், ஒலித்தலும், நீக்கலும், மணமும், கரிப்பும் ஆகிய பதின்மூன்று குணங்களிலும் வரும். கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்க மச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யார்த்தல் வரைவே மன்றல் கரிப்பி னாகும். (ந-நூற்பா 457.) பயிற்சி வினாக்கள் 1. தனிமொழியாவது யாது? 2. தொடர்மொழியாவது யாது? 3. பொது மொழியாவது யாது? சான்றுடன் விளக்குக. 5. மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் பெயர் எது? 6. ஆகுபெயராவது யாது? 7. பொருளாகு பெயரையும், குணவாகு பெயரையும் விளக்குக. 8. பொங்கல் உண்டான்; கார்த்திகை பூத்தது-இவைஎவ்வெவ் ஆகுபெயருள் அடங்கும்? 9. அன்மொழித் தொகை என்றால் என்ன? அஃது எத்தனை வகைப்படும்? 10. வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை க்குச் சான்று காட்டி விளக்குக. 11. அன்மொழித்தொகைக்கும் ஆகுபெயருக்கும் உள்ள வேறு பாட்டைக் கூறுக. 12. பொதுவினையாவது யாது? 13. இருதிணைப் பொதுவினைகளாக வருபவை எவை? 14. பாற்பொதுவினைகளாக வருபவை எவை? 15. உருபு மயக்கம் என்றால் என்ன? விளக்குக. 16. இறந்தகால இடைநிலைகள் எவை? 17. நிகழ்கால இடைநிலைகள் எவை? 18. எதிர்கால இடைநிலைகள் எவை? 19. இடைநிலைகள் தவிரக் காலங்காட்டும் வேறு உறுப்புக்கள் எவை? 20. று-றும், கு-கும் என்ற விகுதிகள் எவ்வெக் காலங்களைக்காட்டும். 21. செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுவிகுதி எவ்வெக் காலங்களைக் காட்டும்? 22. எதிர்மறை ஆகார விகுதி எவ்வெக் காலங்களைக் காட்டும்? 23. புக்கான், தொட்டான்-இவற்றில் காலங்காட்டும். உறுப்பு எது? 24. சினைவினை, முதல்வினையைக் கொண்டு முடிவதைச் சான்றுடன் விளக்குக. 25. ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? சான்றுடன் விளக்குக. 26. யார், எவன்-இக் குறிப்பு வினைமுற்றுக்கள் எவ்வெப்பால் களுக்குப் பொதுவாக வரும்? சான்று தருக. 27. எல்லாவிடத்தும் வரும் அசைச் சொற்களில் எவையேனும் பத்தை எடுத்தெழுக. அவற்றுள் எவையேனும் ஐந்திற்குச் சான்று தருக. 28. பெயர்ச் சொல்லாவது யாது? 29. பெயர்ச் சொற்கள் எட்டு வேற்றுமை உருபுகளையும் ஏற்று நிற்றற்கு ஒவ்வொர் சான்று தருக. 30. மூவிடப் பெயர்கள் எவை? 31. மூவிடப் பொதுப்பெயர் எது? 32. தெரிநிலை வினையாவது யாது? குறிப்பு வினையாவது யாது? 33. வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? 34. இடைச் சொற்கள் எத்தனை வகையாக வரும். 35. இடைச்சொல் என்று ஏன் பெயர் வந்தது? 36. உரிச்சொல்லாவது யாது? 37. பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல்-விளக்குக. 38. ஒரு குணம் தழுவிய உரிச் சொற்கள் எவை? 39. கடி என்னும் உரிச்சொல் எவ்வெக் குணங்களை உணர்த் தும்? ஐந்திற்குச் சான்று தருக. 3. பொது 1. வினாவகை இச் செய்யுளுக்குப் பொருள் யாது? அஃது அரவோ கயிறோ? மேற்கண்ட தொடர்கள் வினாப்பொருளைத் தருகின்ற மையால் வினாவாக்கியங்கள் எனப்படும். MáÇa®, j« khztid neh¡», ‘ï¢ brŒíS¡F¥ bghUŸ ahJ? என வினவும் பொழுது, ஆசிரியர் அச் செய்யுளின் பொருளை அறிந்து கொண்டு தான் மாணவனை வினவுகின்றார். எனவே, இவ்வினா அறிவினா எனப்படும். khzt‹, j‹ MáÇaiu neh¡», ‘ï¢ brŒíS¡F¥ bghUŸ ahJ? என வினவும்பொழுது, அவன் அச்செய்யுளின் பொருளை அறியாமையால் அதனை அறிந்துகொள்ள எண்ணிக் கேட்கின்றனாதலின், அப்பொழுது இவ்வினா அறியாவினா எனப்படும். ‘m~J munth fÆnwh? என ஒருவர் வினவும்பொழுது, வினவுகின்றனர் என்றிலும் துணிவு பிறவாமல் ஐயமுற்றுக் கேட்கின் றாராதலின், இவ்வினா ஐயவினா எனப்படும். (அரவு-பாம்பு) இங்ஙனம் வருகின்ற வினா ஆறுவகைப்படும். அவை, அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடை வினா, ஏவல்வினா எனப்படும். 1. அறிவினா: ஆசிரியர், மாணவனை நோக்கி எட்டுத்தொகை நூல்கள் யாவை? என வினவுதல், அறிந்துகொண்டு வினவப்படுதலின் அறிவினா எனப்படும். 2. அறியாவினா: khzt‹, MáÇaiu neh¡» ‘v£L¤bjhif {ešfŸ ahit? என வினவுதல், அறியாமையால் அவற்றை அறிந்து கொள்ள எண்ணி வினவப்படுதலின் அறியாவினா எனப்படும். 3. ஐயவினா: ‘m› tot« F‰¿nah kfndh? என ஒருவர் வினவுதல், ஒன்றிலும் துணிவு பிறவாது வினவப்படுதலின் ஐயவினா எனப் படும். (குற்றிமரக்கட்டை) 4. கொளல்வினா: ‘gaW csnjh tÂfnu? என வினவுதல் அதனைக் கொள்ளும் பொருட்டு வினவப்படுதலின் கொளல்வினா எனப்படும். 5. கொடைவினா: ‘rh¤jh cd¡F MilÆšiyah? என வினவுதல், அவனுக்கு ஆடையைக் கொடுக்கும் நோக்கமுடன் வினவப்படு தலின் கொடை வினா எனப்படும். 6. ஏவல் வினா: ‘rh¤jh c©lhah? என வினவுதல், அவனை உண்ணுமாறு ஏவும் பொருட்டு வினவப்படுதலின் ஏவல்வினா எனப்படும். இலக்கண விதி: அறிதலும், அறியாமையும், ஐயுறலும், கொள்ளுதலும், கொடுத்தலும், ஏவுதலுமாகிய அறுவகைப் பொருளையும் நீக்காது, வினா வகையாகக் கொள்வர். அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை ஏவ றரும்வினா வாறு மிழுக்கார். (ந-நூற்பா 385) 2. விடை வகை ‘kJiu¡F tÊ ahJ?’ - ï~J ‘Ú rd« bfhŸthah? - கொள்ளேன் மதுரைக்கு வழி யாது? என வினவும்பொழுது இஃது என வழியைச் சுட்டிக்காட்டி விடை கூறுதலின், அவ்விடை சுட்டு விடை எனப்படும். ‘Ú ád« bfhŸthah? என வினவும் பொழுது, கொள்ளேன் என மறுத்து விடை கூறுதலின், அவ்விடை மறை விடை எனப்படும். இவ்வாறு வருகின்ற விடை எட்டுவகைப்படும். அவை, சுட்டு விடை, மறை விடை, நேர்விடை, ஏவல் விடை, வினாதல் விடை, உற்ற துரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை எனப்படும். 1. சுட்டு விடை: ‘br‹id¡F tÊ ahJ? என்ற வினாவிற்கு இஃது என்று வழியைச் சுட்டிக் காட்டிக் கூறுதல் சுட்டு விடை எனப்படும். 2. மறை விடை: ‘rh¤jh ïJ brŒthah? என்ற வினாவிற்குச் செய்யேன் என்று விடை கூறுதல் மறைவிடை எனப்படும். 3. நேர் விடை: ‘rh¤jh ïJ brŒthah? என்ற வினாவிற்குச் செய்வேன் என்று விடை கூறுதல் நேர்விடை எனப்படும். 4. ஏவல் விடை: ‘rh¤jh c©ghah? என்ற வினாவிற்கு நீ உண் என விடை கூறுதல் ஏவல் விடை எனப்படும். 5. வினாதல் விடை: ‘rh¤jh go¥ghah? என்ற வினாவிற்குப் படிப்பேனா என வினாவெதிர் வினாதலாக விடை கூறுதல், வினாதல் விடை எனப்படும். (இங்கு ஓகார இடைச்சொல் வினாப்பொருளில் வந்துள்ளது.) 6. உற்றதுரைத்தல் விடை: ‘rh¤jh el¥ghah? என்ற வினாவிற்குக் கால் வலித்தது என்று விடை கூறுதல் உற்ற துரைத்தல் விடை எனப்படும். கால் வலிக்கிறது என நிகழ்காலத்தால் கூறினும் அமையும். (உற்ற துரைத்தல்-தனக்கு நேர்ந்ததைக் கூறுதல்.) 7. உறுவது கூறல் விடை: சாத்தா இரவு விழிப்பாயா என்ற வினாவிற்குக் கண் நோகும் என்று விடை கூறுதல் உறுவது கூறல் விடை எனப்படும். (உறுவது கூறல்-தனக்கு இனி நேரக்கூடியதைக் கூறுதல்.) 8. இனமொழி விடை: ‘rh¤jh ngdh csjh? என்ற வினாவிற்குப் பென்சில் உண்டு என்று விடை கூறுதல் இனமொழி விடை எனப்படும். இவ்விடை வகைகளும் சுட்டு விடை, மறை விடை, நேர் விடை மூன்றும் வினாவிற்கு ஏற்ற விடைகளாகும். ஏவல் விடை, வினாதல் விடை, உற்றதுரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்ற ஐந்தும் விடைப்பொருளைக் குறிப்பால் தருவன வாகும். இவ்வைந்துள், வினாதல்விடை ஒன்றும் உடன் பாட்டுப் பொருளையும், ஏனைய நான்கும் எதிர்மறைப் பொருளையும் தரும். இலக்கண விதி: சுட்டும், எதிர்மறுத்தலும், உடன்பட லும், ஏவுதலும், எதிர் வினாவுதலும், உற்ற துரைத்தலும், உறுவது கூறலும், இனத்தைச் சொல்லுதலும் என, விடை எட்டு வகைப் படும். அவற்றுள் இறுதியாக உள்ள ஐந்தும், அவ்விடைப் பொருளைத் தருதலினால் விடைகளாகவே தழுவிக்கொள்வர். கட்டு மறைநே ரேவல் வினாதல் உற்ற துரைத்த லுறுவது கூறல் இனமொழி யெனுமென் ணிறையு ளிறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. (ந-நூற்பா 386.) 3. அடைமொழி - பொருள்கோள் (1) அடைமொழி வெண்டாமரை - வெண்டிங்கள் வெண்டாமரை (வெண்மை+தாமரை) என்ற தொடரில், வெண்மை என்பது நிறத்தையும், தாமரை என்பது பூவையும் குறிக்கும் சொற்களாகும். தாமரைப் பூவிலல்,செந்தாமரை, வெண் டாமரை என்ற இரண்டு வகை உண்டு. அவற்றுள் செந்தாமரையை நீக்கி வெண்டாமரையைக் குறிப்பதற்கு வெண்மை என்ற பண்புச் சொல் அடைமொழியாக வந்துள் ளது. இவ்வாறு ஒற்றற்கு இனமான பிறவற்றை விலக்கிக் குறித்த பொருளைக் காட்டவரும் சொல் அடைமொழி எனப்படும். இவ்வாறு வரும் அடைமொழி இனமுள்ள அடைமொழி ஆகும். வெண்டிங்கள் (வெண்மை+திங்கள் ) என்ற தொடரில், வெண்மை என்னும் பண்புச்சொல் திங்களுக்கு அடைமொழி யாக வந்துள்ளது. வெண்டிங்களுக்கு இனமாகக் கருந் திங்கள் இல்லை. எனவே, வெண்மை என்ற அடைமொழி, இங்க, இனம் விலக்க வரவில்லை; திங்களின் சிறப்பைக் காட்டவே வந்துள்ளது. இவ்வாறு இனம் விலக்க வராமல், ஒரு பொருளின் சிறப்பைக் காட்ட வரும் அடைமொழி இனமில்லா அடைமொழி ஆகும் (திங்கள் -சந்திரன்) எனவே அடைமொழி, இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என இருவகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப் பெயர்களும் இனமுள்ள அடை மொழிகளாகவும், இனமில்லா அடைமொழிகளாகவும் வரும். இனமுள்ள அடைமொழி 1. பொருள் - நெய்க்குடம் (பாற்குடம்-இனம்) 2. இடம் - வயல் நெல் (மலைநெல்-இனம்) 3. காலம் - ஆடிக்கார்த்திகை (தைக்கார்த்திகை - இனம்) 4. சினை - பூமரம் (பழமரம்-இனம்) 5. குணம் - செந்தாமரை (வெண்டாமரை - இனம்) 6. தொழில் - ஆடுபாம்பு (ஆடாத பாம்பு - இனம்) நெய்க்குடம், வயல்நெல், ஆடிக்கார்த்திகை, பூமரம், செந் தாமரை, ஆடுபாம்பு என்ற சொற்றொடர்களில் உள்ள நெய், வல், ஆடி, பூ, செம்மை, ஆடு (தல்) என்ற அறுவகைப் பெயர்களும், இனம் விலக்க வந்த அடைமொழிகளாகும். எனவே, இவை இனமுள்ள அடைமொழிகள் எனப்படும். இனமில்லா அடைமொழி 1.பொருள் - உப்பளம் 2.இடம் - வடவேங்கடம் 3.காலம் - நாளரும்பு இவற்றிற்கு 4.சினை - இலைமரம் இனமில்லை 5.குணம் - செம்போத்து 6.தொழில் - தோய்தயிர் அளம் என்றவுடன் உப்பென்பதும், வேங்கடம் என்றவுடன் வடக்கு என்பதும், அரும்பு என்றவுடன் நாள் என்பதும், மரம் என்றவுடன் இலை என்பதும், போத்து என்றவுடன் செம்மை என்பதும், தயிர் என்றவுடன் தோய்தல் என்பதும் தாமே வந்து இயையும். இவ் அடைமொழிகள் இன்றியும், அளம் முதலியன பொருளாதி ஆறையும் உணர்த்தும். எனவே, உப்பில்லாத அளமும், வடக்கில்லாத வேங்கடமும், நாளில்லாத அரும்பும், இலையில்லாத மரமும், செம்மை நிற மில்லாத போத்தும், தோய்தல் இல்லாத தயிரும் இல்லை. ஆகவே, உப்பு, வடக்கு, நாள், இலை, செம்மை, தோய்தல் என்ற அறுவகைப் பெயரும் இனம் விலக்க வரவில்லை; அளம், வேங்கடம், அரும்பு, மரம், போத்து, தயிர் ஆகியவற்றைச் சிறப்பிக்கவே வந்துள்ளன. எனவே, இவை இனமில்லா அமைடமொழிகள் எனப்படும். இலக்கண விதி: பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களும், ஒன்றற்கு இனமுள்ள அடைமொழிகளாகவும், இனமில்லா அடை மொழிகளாகவும் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும். 2. பொருள்கோள் (ஆற்றுநீர்-கொண்டுகூட்டு- தாப்பிசை-மொழிமாற்று) செய்யுளில் அமைந்துள்ள சொற்களைப் பொருள் பொருத்த முற எடுத்துக்கூட்டி அமைத்துப் பொருள் கொள்ளுதல், பொருள் கோள் எனப்படும். அவை எட்டு வகைப்படும். ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழி மாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், பூட்டுவிற் பொருள்கோள், தாப்பிச் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள், அடிமறி மாற்றுப் பொருள்கோள் எனப் பொருள்கோள் எட்டு வகைப்படும். பொருள்கோள் எட்டனுள், ஆற்றுநீர்ப்பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், தாப்பிச் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள் என்ற நான்கைப் பற்றிப் பார்ப் போம். 1. ஆற்று நீர் பொருள்கோள் சொல்லரும் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே. நெற்பயிர்கள், கருவுற்ற பச்சைப் பாம்பின் தோற்றம்போல மெதுவாகக் கருவுற்று, பின்பு கதிர்களை ஈன்று, கதிர்கள் முற்றாத பொழுது, செல்வம் பெற்ற கீழ்மக்கள் செருக்கித் தலைநிமிர்ந்து நிற்பதைப் போலத் தமது கதிர்களாகிய தலையை வணங்காமல் நேரே நிறுத்தி, கதிர்கள் முற்றியவுடன், உண்மைப் பொருளை ஆராய்ந்து கூறுகின்ற அறநூல்களைக் கற்ற அறிவுடைய சான்றோர் களைப் போலத் தலை வணங்கி விளைந்தனஎன்பது இப் பாடலின் பொருளாகும். இப் பாட்டினுள், நெற்பயிரைக் குறிக்கும் சொல் என்பது எழுவாயாக நிற்க, அதன் தொழிலாகிய கருவிருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்கள் ஒன்றனை ஒன்று கொள்ளு மாறு இடையே அமைத்துக் காய்தத என்னும் பயனிலையை இறுதியிலே தந்து முடித்தமையால், இப்பொருள்கோள், ஆற்று நீர்ப்பொருள்கோள் எனப்படும். ஆற்றுநீர்ப் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள் என்றும், யாற்றுவரவுப் பொருள்கோள் என்றும், ஆற்றொழுக்குப் பொருள்கோள் என்றும் வழங்கவும் படும். (ஆறு-யாறு.) ஆற்று நீர் ஆரம்பத்திலிருந்து இடையீடில்லாமல் தொடர்ந்து செல்லுதல்போலப் பாட்டினுள் எழுவாய் முதலில் அமைய, இடையில் வினையெச்சங்கள் ஒன்றனை ஒன்று கொண்டு முடியு மாறு அமைந்து, இறுதியில் பயனிலை பெற்று முடிவது ஆற்று நீர்ப் பொருள்கோள் எனப்படும். இலக்கண விதி: மொழிமாற்று முதலியபோல், சொற் களைப் பிறழ்ந்து கொண்டு கூட்ட வேண்டாது, ஆற்று நீரொழுக்குப் போல நெறிப்பட்டு, இடையறாது அடிதோறும் சிறந்த பொருள் அங்காங்கு அமைந்து வருவது, ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும். இனி ஒருசாரார், ஏனைய அடிகளை நோக்காது அடிதோறும் பொருள் முடிந்து வருவது, ஆற்று நீர்ப் பொருள்கோள் என்பர். அதற்கு எடுத்துக் காட்டு வருமாறு: அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்; விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்; சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம்; கொலைப்பாலுங் குற்றமே யாம். இப்பாடலில் உள்ள ஒவ்வொர் அடிகளும் தனித்தனியே பொருள் முடிந்துள்ளன. 2. கொண்டு கூட்டுப் பொருள்கோள் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின். கப்பலேறிச் சென்ற தலைவன் வந்தால், மை போன்ற கரிய கூந்தலையுடைள தலைவியின் அழகிய உடம்பில், தேங்காய் போலத் திரண்டு உருண்ட கோரியின் வெண்மை யான முட்டை யை ஊடைத்து ஊற்றியது போன்ற பசலை நிறம் தனியும் என்பது இப்பாடலின் பொருளாகும். இப்பாடலில், வங்கத்துச் சென்றார் வரின், அஞ்சனத் தன்ன பைங்கூந்தல் மாமேனி தெங்கங்காய் போலத் திரண்டு ருண்ட கோழி வெண்முட்டை உடைத்தன்ன பசலை தணிவாம் எனச் சொற்களை எனச் சொற்களை முன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் கொண்டமையால், இது கொண்டு கூட்டுப் பொருள் கோளாகும். இக் கொண்டு கூட்டுப் பொருள்கோளுக்கும், மொழி மாற்றுப் பொருள்கோளுக்கும் உள்ள வேறுபாடு வருமாறு: கொண்டுகூட்டுப் பொருள்கோளில் பல அடிகளில் நின்ற சொற்களை முன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். மொழிமாற்றுப் பொருள்கோளில், ஒவ்வோர் அடியிலும் நின்ற சொற்களை, அவ் வடிக்குள்ளே மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். இலக்கண விதி: செய்யுளடிகள் பலவற்றிலும், இயல்பாகிய ஆற்றுநீர்ப் பொருள்கோளுக்கு ஏலாது அமைந்து கிடந்த சொற்களை எடுத்து, அப் பொருளுக்கு ஏற்றவிடத்துக் கூட்டிப் பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள் கோளாகும். 3. தாப்பிசைப் பொருள்கோள் உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு. இத் திருக்குறளில் , புலால் உண்ணாமையாகிய அறத்திலே தான் உயிர் அடையும் நற்கதி அமைந்துள்ளது; புலால் உண்டால், அங்ஙனம் உண்டவர்களை விழுங்கிய நரகம், அவர்களை உமிழ் வதற்கு வாயைத் திறவாது என்ற பொருள் அமைந்துள்ளது. இத் திருக்குறளில், நடுவே நிற்கும் ஊன் என்ற சொல், ஊன் உண்ணாமை யுள்ள துயிர் நிலை என முன்னும், ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு எனப் பின்னும் சென்று பொருள் தருகின்றது. நடுவே நிற்கும் ஊசல், ஆட்டும்பொழுது முன்னும் பின்னும் சென்று வருதல் போல, நடுவே நிற்கும் ஊன் என்ற சொல், பொருள் கொள்ளும் பொழுது முன்னும் பின்னும் சென்று பொருள் தருகின்றது. எனவே, இது தாப்பிசைப் பொருள் கோள் எனப்படும். (தாம்பு= ஊசல்; தாப்பு என வலித்தல் விகாரம் பெற்றுள்ளது. இசை-சொல்.) இலக்கண விதி: இடையில் நிற்கும் சொல், முதலிலும், ஈற்றிலும் சென்று பொருளைத் தருவது தாப்பிசைப் பொருள் கோளாகும். 4. மொழிமாற்றுப் பொருள்கோள் சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை இப் பாடலில் ஆழ என்னும் பயனிலைக் கேற்ற அம்மி என்னும் சொல்லை, மிதப்ப என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட்டுள்ளது. மிதப்ப என்னும் பயனிலைக் கேற்ற சுரை என்னும் சொல்லை, ஆழ என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட் டுள்ளது. நீத்து என்னும் பயனிலைக் கேற்ற முயல் என்னும் சொல்லை, நிலை என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட் டுள்ளது. நிலை என்னும் பயனிலைக் கேற்ற யானை என்னும் சொல்லை, நீத்து என்னும் பயனிலைக்கு மாற்றிக் கூறப்பட் டுள்ளது. இங்ஙனம் மாற்றிக் கூறியபடி பொருள் கொள்ள முடியாது. எனவே, அம்மி அழ என்றும், சுரை மிதப்ப என்றும் முயற்கு நீத்து என்றும் யானைக்கு நிலை என்றும் மொழி மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். காடுகள் சூழ்ந்துள்ள நாட்டை உடைய தலைவனது மலையின் கண் உள்ள சுனையானது, சுரைக்குடுக்கை மிதக்கத்தக்க இயல்பை உடையது; அம்மி ஆழத் தக்க இயல்பை உடையது; மலை போன்ற யானை கால் ஊன்றி நிற்கத் தக்க இயல்பை உடையது; முயல் நீந்தக் தக்க இயல்பை உடையது என்பதே பொருளாகும். இலக்கண விதி: ஏற்ற இரண்டு பயனிலைகளுக்குப் பொருந்தும் மொழிகளை, ஏலாத பயனிலைகளுக்குத் தனித்தனி கூட்டி ஓரடியுள்ளே கூறுவது, மொழி மாற்றுப் பொருள்கோள் எனப்படும். 4. உவமவுருபுகள் பவளத் தன்ன மேனி பவளம் போன்ற (செந்நிற) உடல் என்பது இத் தொடரின் பொருளாகும். இத் தொடரில் பவளம் உவமை மேனி உவமேயம், அன்ன என்பது உவம உருபு. இவ்வாறு வரும் உவம உருபுகள் பலவுண்டு. அவை போல, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன என்பனவும் பிறவுமாகும். குயில் போலக் கூவினாள் தாமரை புரையுங் காமர் சேவடி தருமனை ஒப்பப் பொறுமை யுடையான் கூற்றுவன் உறழும் ஆற்றலான் மை மானும் வடிவம் மழை கடுக்கும் கையான் கற்கண்டு இயையப் பேசுவான் குன்றி ஏய்க்கும் உடுக்கை துடி நேர் இடை சேல் நிகர்க்கும் விழி வேய் அன்ன தோள் தேன் இன்ன மொழி (பிறவும் உவமத்துருபே என்றதனால், போல், புரை, என்றற் றொடக்கத்து வினையடியாற் பிறத்தற்குரிய மற்றை வினையெச்ச விகற்பங்களும், பெயரெச்ச விகற்பங்களும், பொருவ, ஏற்ப, அனைய, இகல, எதிர, சிவண, மலைய முதலானவையும் உவமவுருபு களாக வரும்.) இலக்கண விதி: போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர என்னும் செயவெனெச்சம் பத்தும், அன்ன, இன்ன என்னம் பெயரெச்சக் குறிப்பு இரண்டும், இவை போல்வன பிறவும் உவமவுருபுகளாம். போலப் புரைய வொப்ப வுறழ மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர நிகர வன்ன வின்ன என்பனவும் பிறவு முவமத் துருபே. (ந-நூற்பா 367.) பயிற்சி வினாக்கள் 1. வினா எத்தனை வகைப்படும்? வகைக்கொரு சான்று தருக. 2. விடை எத்தனை வகைப்படும்? வக்கொரு சான்று காட்டி விளக்குக. 3. இனமுள்ள அடைமொழி என்றால் என்ன? இனமில்லா அடைமொழி என்றால் என்ன? விளக்குக. 4. மோர்ப்பானை, பச்சரிசி, தென்குமரி, புன்செய்ப் பயிர் இவற்றுள் இனமுள்ள அடைமொழிகள் எவை? இனமில்லாம அடைமொழிகள் எவை? இனமுள்ள அடைமொழி களுக்கு இனம் எவை? 5. பொருள்கோள் என்றால் என்ன? 6. ஆற்றுநீர்ப் பொருள்கோளைச் சான்றுடன் விளக்குக. 7. கொண்டு கூட்டுப் பொருள்கோளை விளக்குக. 8. தாப்பிசைப் பொருள்கோளைச் சான்று காட்டி விளக்குக. 9. மொழிமாற்றுப் பொருள்கோள் என்றால் என்ன? ஓர் எடுத் துக்காட்டின் வாயிலாக விளக்குக. 10. எவையேனும் ஐந்து உவம உருபுகளைக் கூறி, அவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களும் தருக. 4. புணர்ச்சி 1.பல, சில, பூ, தெங்கு, மரம், தேன் இவற்றின் புணர்ச்சி 1.பல, சில என்னும் சொற்களின் புணர்ச்சி 1. பல+பல=பலபல 1. சில+சில = சிலசில 2. பல+பல=பலப்பல 2. சில+சில=சிலச்சில 3. பல+பல=பற்பல 3. சில+சில=சிற்சில மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களை நோக்குங்கள். 1. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, அவை பலபல, சிலசில என இயல்பாகவும் புணரும். 2. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்கு முன் சில என்ற சொல்லும் வந்து புணரும் பொழுது, அவை பலப்பல சிலச்சில என வல்லெழுத்து மிக்கும் புணரும். 3. பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, நிலை மொழி ல வில் உள்ள அகரம் கெட நின்ற ல்-ற் ஆகத் திரிந்து பற்பல, சிற்சில எனவும் புணரும். பல+பல=பல்பல சில+சில=சில்சில பல என்ற சொல்லுக்குமுன் பல என்ற சொல்லும், சில என்ற சொல்லுக்குமுன் சில என்ற சொல்லும் வந்து புணரும்பொழுது, நிலை மொழி ல வில் உள்ள அகரம் கெட நின்ற ல்-ற் ஆகத் திரியாமல், ஒரோவழி, பல்பல, சில்சில எனவும் புணரும். (பிற என்ற மிகை விதிப்படி) பல+கலை = பலகலை, பல்கலை சில+படை = சிலபடை,சில்படை பல+நாள் = பலநாள்,பன்னாள் சில+மணி = சிலமணி, சின்மணி பல+யாழ் = பலயாழ், பல்யாழ் சில+வளை = சிலவளை, சில்வளை பல+அணி = பலவணி, பல்லணி சில+அணி = சிலவாயம், சில்லாயம் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களை நோக்குங்கள். பல, சில என்ற சொற்களுக்குமுன் பிற பெயர்களாகிய வல்லினமும், மெல்லினமும், இடையினமும் உயிரெழுத்துக்களும் வந்து புணரும் பொழுது, அவை இயல்பாயும், ல வில் உள்ள அகரம் கெட்டு விகற்ப மாயும் புணரும். (விகற்பமாவது, அகரம் நின்றும், கெட்டும் புணர்வது) பல+படை = பற்படை சில+படை = சிற்படை இங்ஙனம், பல,சில என்பவை பிறபெயர்கள் வந்து புணரும் பொழுது, மேற்கூறிய விதிப்படி அகரம் விகற்பமாய்ப் புணராமல், நிலைமொழி ல வில் உள்ள அகரம் நீங்க நின்ற ல்-ற் ஆகத் திரிந்து புணர்தலும் ஒரோவழி உண்டு. (பிற என்ற மிகை விதிப்படி) இலக்கண விதி: பல சில என்னும் இவ்விரு சொல்லும் தம் முன்னர்த் தாம் வருமாயின் இயல்பாகவும், வல்லினம் மிகுந்தும், நிலை மொழி ஈற்றில் உள்ள அகரம் கெட நின்ற ல்-ற் ஆகத்திரிந்தும் புணரும். இவற்றின் முன் பிறபெயர்கள் வந்து புணரும்பொழுது, ஈற்றில் உள்ள அகரம் கெட்டும், கெடாமலும் விகற்பமாய்ப் புணரும். பலசில வெனுமிவை தம்முன் றாம்வரின் இயல்பு மிகலும் அகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முளபிற. (ந-நூற்பா 170.) 2. பூ என்னும் சொல்லின் புணர்ச்சி பூ+கொடி=பூங்கொடி பூ+தடம்=பூந்தடம் பூ+சோலை=பூங்சோலை பூ+பணை=பூம்பணை மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களுள் பூ என்னும் சொல்லின் முன் கொடி, சோலை, தடம், பணை என்ற சொற்கள் வந்து புணரும் பொழுது, வருமொழியில் உள்ள க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்களுக்கு இனமாகிய ங், ங், ந், ம் என்ற மெல்லெழுத்துக் கள் இடையில் தோன்றியுள்ளன. எனவே, பூ என்னும் பெயர்க்குமுன் வருமொழியில் க, ச, த, ப என்ற வல்லினம் வந்து புணரும் பொழுது, வருகின்ற வல்லின மெய்க்கு இனமாகிய மெல்லின மெய்யெழுத்து இடையில் வந்து தோன்றும். இங்ஙனம் புணர்வதோடல்லாமல், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க, ச, த, ப மிகும் என்ற பொது விதிப்படி, பூ + கொடி = பூக்கொடி பூ + சோலை = பூச்சோலை பூ + தொட்டி = பூத்தொட்டி பூ + பொழில் = பூப்பொழில் என, வரும் வல்லெழுத்தே மிக்குப் புணர்தலும் உண்டு. இலக்கண விதி: பூ என்னும் பல பொருட்பெர்ச் சொல்லின் முன் க, ச, த, ப என்ற வல்லினம் வரின், பொது விதிப்படி மிக்குப் புணர்தலே அன்றி, வருகின்ற வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் இடையே தோன்றப் புணர்தலும் உண்டு. பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும். (ந-நூற்பா 200.) 3. தெங்கு என்ற சொல்லின் புணர்ச்சி தெங்கு + காய் = தேங்காய் தெங்கு என்ற பெயர்ச் சொல்லின் முன் காய் என்ற சொல் வந்து புணரும்பொழுது, நிலைமொழியாகிய தெங்கு என்பதில் உள்ள முதல் எழுத்தாகிய தெ என்பது தே என நீண்டு, ஈற்றில் உள்ள கு என்ற உயிர்மெய் கெட்டுத் தேங்காய் எனப் புணர்ந்தமை அறிக. கெட்டே புணரும் என்று கூறாமையால் தெங்கு + காய் = தெங்கங்காய் (தெங்கு+அம்+காய்) என அம் சாரியை பெற்றுப் புணர்தலும் உண்டு. இலக்கண விதி: காய் என்னும் சொல் வந்து புணரும் பொழுது, தெங்கு என்னும் சொல் முதல் நீண்டு, ஈற்றுயிர்மெய் கெட்டுப் புணரும். தெங்கு நீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின். (ந.நூற்பா 187.) 4. மரப் பெயர்ச் சொற்களின் புணர்ச்சி மா+பூ = மாம்பூ விள+காய் = விளங்காய் கள + கனி = களங்கனி மா, விள, கள என்பன மரத்தைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாகும். அவற்றின் முன் பூ, காய், கனி என்ற வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வரும்பொழுது, அங்ஙனம் வருகின்ற வல்லெழுத்துக்களுக்கு இனமான மெல்லெழுத்துக்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வரும். இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க, ச, த, ப மிகும் என்ற பொது விதிப்படி, வாழை+காய்=வாழைக்காய் பலா+காய்= பலாக்காய் என்பனபோலச் சில இடங்களில் வல்லினம் மிக்குப் புணரும். எனவே, மரப்பெயர்களின் புணர்ச்சி அமைப்பைக் கொண்டு, வல்லினம் மிக்குப் புணர்வதை அறிந்து கொள்க. இலக்கண விதி: சில மரப் பெயர்ச் சொற்களுக்குமுன், பொது விதிப்படி வல்லெழுத்து மிகாமல் அவற்றின் இனமான மெல்லெழுத்து வேற்றுமையில் வரப்பெறுவனவும் உள. (பொது விதிப்படி வல்லினம் மிக்குப் புணர்தலும் உண்டு.) மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே. (ந-நூற்பா. 166.) 5. தேன் என்னும் சொல்லின் புணர்ச்சி (அல்வழி) தேன்+கடிது=தேன்கடிது தேன்+ஞான்றது=தேன்ஞான்றது தேன்+யாது=தேன்யாது தேன்+மொழி= தேன்மொழி, தேமொழி தேன்+குழம்பு=தேன்குழம்பு, தேக்குழம்பு தேங்குழம்பு (வேற்றுமை) தேன்+கடுமை=தேன்கடுமை தேன்+மலிவு=தேன்மலிவு தேன்+யாப்பு=தேன்யாப்பு தேன்+மலர்= தேன்மலர், தேமலர் தேன்+குடம்=தேன்குடம், தேக்குடம், தேங்குடம் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சிகளிலும், தேன் என்ற சொல்லின்முன் மூவின மெய்களும் வரப் புணர்ந்துள்ளமை தெரியவரும். அங்ஙனம் புணரும்பொழுது. தேன்கடிது, தேன்ஞான்றது, தேன்யாது என அல்வழி யிலும், தேன் கடுமை, தேன்மலிவு, தேன் யாப்பு என வேற்றுமை யிலும் மூவினமும் வர இயல்பாகப் புணரும். ஒரோவழி, மெல்லினம் வந்து புணரும் பொழுது, தேன் மொழி என அல்வழியில் இயல்பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டுத் தேமொழி எனவும் புணரும். வேற்றுமையில், தேன் மலர் என இயல்பாகப் புணர்தலே அன்றி, ஈன்று ன் கெட்டுத் தேமலர் எனவும் புணரும். ஒரோவழி, வல்லினம் வந்து புணரும் பொழுது, தேன்குழம்பு என அல்வழியில் இயல்பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டு வருமொழி வல்லினம் மிகப் பெற்றுத் தேக்குழம்பு எனவும், அவ் வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிகப் பெற்றுத் தேங்குழம்பு எனவும் புணரும். வேற்றுமையில், வல்லினம் வந்து புணரும் பொழுது, தேன் கடம் என இயல்பாதலே அன்றி, ஈற்று ன் கெட்டு வருமொழி வல்லினம் மிகப் பெற்றுத் தேக்குடம் எனவும், அவ் வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிகப் பெற்றுத் தேங்குடம் எனவும் புணரும். இடையினம் வந்து புணரும்பொழுது, தேன்யாது என அல்வழியிலும், தேன்யாப்பு என வேற்றுமையிலும் இயல்பாகவே புணரும. இலக்கண விதி: தேன் என்னும் சொல்லின் முன் மூவின மெய்களும் வந்து புணரும்பொழுது அல்வழி வேற்றுமை ஆகிய இருவரிகளிலும் இறுதி னகரம் இயல்பாதலும், மெல்லினம் வரின் இறுதி னகரம் இயல்பாதலே அன்றிக் கெடுதலும், வல்லினம் வரின் இறுதி னகரம் இயல்பாதலே அன்றிக் கெட்டு, வந்த வல்லினமாதல் அதற்கினமாதல் மிகுதலும் ஆம். தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி (ந-நூற்பா 214.) 2. செய்யுள் விகாரம் தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றணைத் தூறு மறிவு. இத் திருக்குளறில் தொட்டது, கற்றது என நிற்கவேண்டிய சொற்கள், தொட்டு, கற்று எனத் தொகுத்தல் விகாரம் பெற்றுள்ளன. இங்ஙனம் செய்யுளில் அடி, தொடை முதலானவைகளை நோக்கிச் சொற்கள் பல விகாரங்களைப் பெற்று வரும். அங்ஙனம் வருவது செய்யுள் விகாரம் எனப்படும். செய்யுள் விகாரம், வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்ற ஆறுடன், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்ற மூன்றும் சேர்த்து ஒன்பது வகைப்படும். அவை வருமாறு: 1. வலித்தல் விகாரம் குறுத்தாட் பூதஞ் சுமந்த குறுமை+தாள்=குறுந்தாள் எனப் புணர வேண்டும். அங்ஙனம் புணராது ந் என்ற மெல்லெழுத்து த் என்ற வல்லெழுத்தாக விகாரப் பட்டுள்ளது. எனவே, வலித்தல் விகாரம் எனப்படும். 2. மெலித்தல் விகாரம் தண்டையி னினக்கிளி கடிவோள் இத் தொடரில் தட்டை எனற்பாலது, தண்டை என ட் என்ற வல்லெழுத்து ண் என்ற மெல்லெழுத்தாக விகாரப்பட் டுள்ளது. எனவே, இது மெலித்தல் விகாரமாகும். (தட்டை-கிளியோட்டும் கருவி). 3. நீட்டல் விகாரம் ஈசன் எந்தை இணையடி நீழலே இத் தொடரில் நிழலே எனற்பாலது நீழலே எனக் குறில், நெடிலாக நீண்டு விகாரப்பட்டுள்ளது. எனவே, இது நீட்டல் விகாரமாகும். 4. குறுக்கல் விகாரம் திருத்தார் நன்றென்றேன் றியேன் இத் தொடரில் தீயேன் எனற்பாலது தியேன் என நெடில், குறிலாக விகாரப்பட்டுள்ளது. எனவே, இது குறுக்கல் விகாரமாகும். 5. விரித்தல் விகாரம் வெதிரி னெல்விளை யும்மே இத் தொடரில் விளையுமே எனற்பாலது விளையும்மே என, இடையே ம் என்ற மெய்யெழுத்து விரிந்து விகாரப்பட்டுள்ளது. எனவே, இது விரித்தல் விகாரமாகும். 6. தொகுத்தல் விகாரம் சிறியிலை வெதிரினெல் இத் தொடரில் சிறியவிலை எனற்பாலவது சிறியிலை என, யகர உயிர்மெய் தொகுத்தல் விகாரப்பட்டுள்ளது. எனவே, இது தொகுத்தல் விகாரமாகும். 7. முதற்குறை மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி இத் தொடரில் தாமரை எனற்பாலது மரை என முதல் எழுத்துக் குறைந்து நிற்கிறது. எனவே, இது முதற்குறை யாகும். 8. இடைக்குறை ஓதி முதுபோத்து இத் தொடரில் ஒந்தி எனற்பாலது ஓதி என இடையில் உள்ள நகரமெய் குறைந்து நிற்கிறது. எனவே, இஃது இடைக்குறை யாகும். 9. கடைக்குறை நீலுண் டுகிலிகை கடுப்ப இத் தொடரில் நீலம் எனப்பாலது நீல் எனக் கடைக் குறைந்துள்ளது. எனவே, இது கடைக்குறை யாகும். இவை தவிர, உரையிற்கோடல் என்ற வகையில், விதியின்றி வருகின்ற தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், எழுத்து நிலைமாறுதல், சொல்நிலைமாறுதல் முதலாயினவும் செய்யுள் விகாரமாகக் கொள்ளப்படும். அவற்றுள் சில வருமாறு: யாது - யாவது என வருவது தோன்றல் விகாரமாகும். கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு என வருவது திரிதல் விகாரமாகம். யானை - ஆணை என வருவது நீளல் விகாரமாகும். பெயர் - பேர் என வருவது நீளல் விகாரமாகும். தசை -சதை என வருவது எழுத்து நிலைமாறுதல் விகாரமாகும். இவ்வாய் - வாயில் என வருவது சொல் நிலைமாறுதல் விகாரமாகம். இலக்கண விதி: மெல்லொற்றை வல்லொற்றாக்கலும், வல்லொற்றை மெல்லொற்றாக்கலும், குற்றறெழுத்தை நெட்டெழுத் க்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்க லும், இல்லாத எழுத்தை வருவித்தலும், உள்ள எழுத்தை நீக்கலும், செய்யுளிடத்து அடி, தொடை முதலானவைகளை நோக்கி அமைக்க வேண்டு மிடத்து வருவனவும் செய்யுள் விகாரமாகும். இலக்கண விதி: அடி, தொடை முதலானவைகளை நோக்கி, ஒரு மொழி முதல், இடை, கடை என மூன்றிடத்தும் குறைந்து வருதலும் செய்யுள் விகாரமாகம். வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல் விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. (ந-நூற்பா 155.) ஒரு மொழி மூவழிக் குறைதலு மனைத்தே. (ந-நூற்பா 156.) 3.ணகர, னகர-யகர,ரகர,ழகர-லகர,ளகர ஈற்றுப்புணர்ச்சி (1) ணகர, னகர ஈற்றுப்புணர்ச்சி (வேற்றுமை) மண்+கலம்=மட்கலம் பொன்+கலம்=பொற்கலம் மண்+குடம்= மட்குடம் பொன்+குடம்=பொற்குடம் இவ்வாறு, வேற்றுமையிலே வல்லினம்வரின், ணகர னகர ஈறுகள் முறையே டகரமாகவும், றகரமாகவும் திரியும். மண்+ஞாற்சி = மண்ஞ்ஞாற்சி =பொன்+ஞாற்சி =பொன்ஞாற்சி மண்+மாட்சி=மண்மாட்சி பொன்+மாட்சி =பொன்மாட்சி இவ்வாறு, வேற்றுமையிலே மெல்லினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்+வன்மை=மண்வன்மை பொன்+வன்மை = பொன்வன்மை மண்+யாப்பு = மண்யாப்பு பொன்+யாப்பு = பொன்யாப்பு இவ்வாறு, வேற்றுமையிலே இடையினம்வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். (அல்வழி) மண்+சிறிது=மண்சிறிது பொன்+சிறிது = பொன்சிறிது மண்+பெரிது=மண்பெரிது பொன்+பெரிது = பொன்பெரிது இவ்வாறு, அல்வழியிலே, வல்லினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்+ஞான்றது=மண்ஞான்றது பொன்+ஞான்றது = பொன்ஞான்றது மண்+மாண்டது=மண்மாண்யாது பொன்+மாண்டது = பொன்மாண்டது இவ்வாறு, அல்வழியிலே, வல்லினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். மண்+யாது=மண்யாது பொன்+யாது=பொன்யாது மண்+வலிது=மண்வலிது பொன்+வலிது=பொன்வலிது இவ்வாறு, அல்வழியிலே, இடையினம் வரின், ணகர, னகர ஈறுகள் இயல்பாகும். (கண்+பொறி-கட்பொறி எனப் பண்புத் தொகையிலும், பொன்+சுணங்கு=பொற்சுணங்கு என உவமைத்தொகையிலும் அல்வழியில், ஒரோவழி ணகர, னகர ஈறுகள் திரிதல் உண்டு. மண்+சுமந்தான்=மண் சுமந்தான், பொன்+சுமந்தான் =பொன் சுமந்தான் என வேற்றுமையிலே, வருமொழி வினை யாயின், ஈறுகள் திரியாமல் ஒரோவழி இயல்பாதல் உண்டு.) இலக்கண விதி:ணகர, னகர ஈறுகள் வேற்றுமைப் புணர்ச்சியிலே வருமொழி முதலில் வல்லினம் வரின், ண்-ட் ஆகவும், ன்-ற் ஆகவும் திரியும்; மெல்லினமும் இடையினமும் வந்து புணரில் இயல்பாகும். அல்வரிப புணர்ச்சியிலே மூவின மெய்கள் வரினும் இயல்பாகும். ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே (ந-நூற்பா 209.) குறிலணைவில்லா ணகர, னகர ஈறுகள் (அல்வழி) தூண்+நன்று=தூணன்று பசுமண்+நன்று=பசுமணன்று அரசன்+நல்லன்=அரசனல்லன் செம்பொன்+நன்று = செம்பொனன்று (வேற்றுமை) தூண்+நன்மை=தூணன்மை பசுமண் + நன்று = பசுமணன்மை அரசன்+நன்மை=அரசனன்மை செம்பொன்+நன்மை = செம்பொனன்மை இவ்வாறு, அல்வழியிலும், வேற்றுமையிலும் தனிக்குறிலைச் சாராத ணகர, னகர ஈறுகளின் முன் வருகின்ற நகரம், முறையே ணகரமாகவும், னகரமாகவும் திரியும் பொழுது, நிலைமொழி ணகர, னகர ஈறுகள் கெட்டுப் புணரும். இலக்கண விதி: குறில் ஒன்றனையும் சாராது, ஒருமொழி தொடர் மொழிகளைச் சார்ந்த ணகர, னகர ஈறுகள், வருமொழிக்கு முதலாக வந்த நகரம் மயக்கவிதி இன்மையினாலே திரிந்தவிடத்துத் தாம் கெடுதலைப் பொருந்தும். குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (ந-நூற்பா 210.) 2. யகர, ரகர, ழகர ஈற்றுப்புணர்ச்சி (அல்வழி) (எழுவாய்த்தொடர்-இயல்பு) வேய்+குறிது=வேய்குறிது வேர்+சிறிது=வேர்சிறிது யாழ்+பெரிது= யாழ்பெரிது இவ்வாறு, அல்வழி எழுவாய்த் தொடரில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க,ச,த,பக்கள் இயல்பாகும். (உம்மைத்தொகை-இயல்பு) பேய்+பூதம்=பேய்பூதம் நீர்+கானல்=நீர்க்கானல் இகழ்+புகழ்=இகழ்புகழ் இவ்வாறு, அல்வழி உம்மைத் தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும். (வினைத்தொகை-இயல்பு) செய்+கடன்=செய்கடன் தேர்+பொருள்=தேர்பொருள் வீழ்+புனல்=வீழ்புனல் இவ்வாறு, அல்வழி வினைத்தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் மூன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும். (பண்புத்தொகை - மிகுதல்) மெய்+கீர்த்தி = மெய்க்கீர்த்தி கார்+பருவம்=கார்ப்பருவம் யாழ்+கருவி=யாழ்க்கருவி இவ்வாறு, அல்வழிப் பண்புத்தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (உவமைத்தொகை - மிகுதல்) வேய்+தோள்=வேய்த்தேர்ள் கார்+குழல்=கார்க்குழல் காழ்+படிவம்=காழ்ப்படிவம் இவ்வாறு, அல்வழிப் உவமைத்தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (யகரவீற்று வினையெச்சம்-மிகுதல்) போய்+கொண்டான்-போய்க் கொண்டான் இவ்வாறு, யகரவீற்று வினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும். (ரகரவீற்று வினையெச்சம்-இயல்பு) உண்ணியர்+போவான்=உண்ணியர்போவான் இவ்வாறு, ரகவீற்று வினையெச்சத்தின்முன் வரும் வல்லி னம் இயல்பாகும். (வேற்றுமையில் வலிமிகல்) நாய்+கால்=நாய்க்கால் தேர்+தலை=தேர்த்தலை யாழ்+கோடு= யாழ்க்கோடு இவ்வாறு, வேற்றுமையிலே யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் மிகும். (வேற்றுமையில் இனத்தோடு உறழ்தல்) வேய்+குழல்=வேய்க்குழல், வேய்ங்குழல் ஆர்+கோடு=ஆர்க்கோடு, ஆர்ங்கோடு பாழ்+தூறுஷ=பாழ்த்தூறு, பாழ்ந்தூறு இவ்வாறு, வேற்றுமையிலே யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் ஒருகால்மிக்கும், ஒருகால் இனமெல்லினத் தோடு உறழ்ந்தும் வரும். நன்னூல் நூற்பாவுள் (224) மேல் என்ற மிகை விதிப்படி, வேற்றுமையில் இயல்பாதலும், அல்வழியில் உறழ்லும், தனிக் குறிலைச் சாராத யகரத்தின் முன் யகரம் வரின், அல்வழி வேற்றுமை இருவழியிலும் நிலைமொழி யகரங்கெடுதலும் கொள்ளுதல் வேண்டும். (வேற்றுமையில் இயல்பாதல்) வாய்+புகுவது=வாய்புகுவது இங்கு, வேற்றுமையில் இயல்பாயிற்று. (அல்வழியில் உறழ்தல்) பாழ்+கிணறு=பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு இங்க அல்வழிப் பண்புத்தொகையுள் உறழ்ந்து வந்துள்ளது. (அல்வழியில்-யகரம் கெடுதல்) காய்+யாது=காயாது இங்க, அல்வழியில் நிலைமொழி இறுதியகரம் கெட்டது. (வேற்றுமையில்-யகரம் கெடுதல்) நோய்+யானை=நோயானை இங்கு, வேற்றுமையில் நிலைமொழி இறுதி யகரம் கெட்டது. இலக்கண விதி: யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் வரின் அல்வழியில் இயல்பாயும் மிக்கும் புணரும். வேற்றுமையில் மிக்கும், வல்லினத்திற்கு இனமான மெல்லினம் உறழ்ந்தும் புணரும். யரழ முன்னர்க் கசதப வல்வழி இயல்பு மிகலு மாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல் (ந-நூற்பா 224.) 3. லகர, ளகர ஈற்றுப்புணர்ச்சி (வேற்றுமை) கல்+குறை=கற்குறை முள்+குறை=முட்குறை இவ்வாறு, வேற்றுமையிலே லகர, ளகர மெய்களின் முன் வல்லினம் வரின், லகரம் றகரமாகவும், ளகரம் டகரமாகவும் திரியும். (அல்வழி) கல்+குறிது=கல்குறிது, குற்குறிது முள்+குறிது=முள்குறிது, முட்குறிது இவ்வாறு, அல்வழியிலே லகர, ளகர மெய்களின்முன் வல்லினம் வரின், ஒருகால் இயல்பாகியும் ஒருகால் திரிந்தும் வரும். (வேற்றுமை) கல்+மாட்சி=கன்மாட்சி முள்+மாட்சி=முண்மாட்சி இவ்வாறு வேற்றுமையிலே லகர,ளகர மெய்களின் முன் மெல்லினம் வரின், லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும். (அல்வழி) கல்+மாண்டது=கண்மாண்டது முள்+மாண்டது= முண்மாண்டது இவ்வாறு அவ்வழியில் லகர,ளகர மெய்களின் முன் மெல்லினம் வரின், லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும். (வேற்றுமை) கல்+யாப்பு=கல்யாப்பு முள்+யாப்பு=முள்யாப்பு இவ்வாறு, வேற்றுமையிலே லகர, ளகர மெய்களின் முன் இடையினம் வரின் இயல்பாகும். (அல்வழி) கல்+யாது=கல்யாது முள்+யாது= முள்யாது இவ்வாறு அவ்வழியில் லகர,ளகர மெய்களின் முன் இடை யினம் வரின் இயல்பாகும். கல்+தீது=கற்றீது முள்+தீது=முட்டீது இவ் வெடுத்துக்காட்டுக்களில், தம்முடன் மயங்காத தகரம் வந்தபொழுது, லகர ளகரங்கள் இயல்பாகாமல் முறையே றகர மாகவும், டகரமாகவும் திரிந்துள்ளன. அல்வழியுள் இங்ஙனம் வரும் திரிபு ஒன்றை மட்டும் ஏற்புழிக்கோடலால் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். இலக்கண விதி: லகர, ளகரமாகிய இரண்டு மெய்யீறுகளும் வேற்றுமையில் வல்லினம் வந்தால், முறையே றகரமாகவும், டகரமாகவும் திரியும். அல்வழியில் வல்லினம் வந்தால் இயல்பாயும் திரிந்தும் வரும். வேற்றுமையிலும் அல்வழியிலும் மெல்லினம் வந்தால், லகர, ளகர ஈறுகள் முறையே னகரமாகவும், ணகரமாகவும் திரியும். வேற்றுமையிலும் அல்வழியிலும் இடையினம் வந்தால், லகர, ளகர ஈறுகள் இயல்பாகும். லளவேற் றுமையிற் றடவு மல்வழி அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி மேவி னணவு மிடைவரி னியல்பும் ஆக மிருவழி யானு மென்ப. (ந-நூற்பா 227.) பயிற்சி வினாக்கள் 1. பல, சில என்னும் இவ்விரு சொற்களும் தம்முன் தாம்வரின் எவ்வாறு புணரும்? 2. பல, சில என்னும் இவ்விரு சொற்களும் தம்முன் பிறவரின் எவ்வாறு புணவரும? 3. பூ என்னும் பெயர் வல்லினம் வர எங்ஙனம் புணரும்? சான்று தருக. 4. தெங்கு என்பதன் முன் காய் என்ற சொல் வரின் எவ்வாறு புணரும்? 5. மரப் பெயர்ச் சொற்களில் சில, வல்லினம் வரும், பொழுது வேற்றுமையில் எவ்வாறு புணரும்? சான்று தருக. 6. தேன் என்னும் சொல்லின்முன் மூவின மெய்களும், வந்து புணரும் முறையை விளக்குக. 7. பிரித்தெழுதுக: பற்பல, சில்வளை, பூங்கொடி, தேங்காய். 8. சேர்த்தெழுதுக: கள+கனி, மா+தளிர், தேக்+குழம்பு, தே+மலர் 9. செய்யுள் விகாரம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எவையேனும் இரண்டிற்குச் சான்று தருக. 10. ணகர,னகர ஈறுகள் வேற்றுமையில் வல்லினம் வர எங்ஙனம் புணரும்? 11. ணகர, னகர ஈறுகள் வேற்றுமையில் மெல்லினமும் இடையினமும் வர எங்ஙனம் புணரும்? 12. ணகர, னகர ஈறுகள் அல்வழியில் மூவினமும் வர எங்ஙனம் புணரும்? 13. தூணன்று - புணர்ச்சி விதி கூறுக. 14. ய ர ழ ஈற்றின்முன் வல்லினம் வரின் அல்வழியில் எங்ஙனம் புணரும்? வேற்றுமையில் எங்ஙனம் புணரும்? ஒவ்வொர் சான்று தருக. 15. லகர, ளகர ஈறுகள் வல்லினம் வரின் அல்வழியில் வேற்றுமையில் எவ்வாறு புணரும்? சான்று தருக. 16. லகர, ளகர ஈறுகள் மெல்லினம் வரின் இருவழியிலும் எங்ஙனம் புணரும்? சான்று தருக. 17. லகர, ளகர ஈறுகள் இடையினம் வரின் இருவரியிலும் எங்ஙனம் புணரும்? 5. பொருள் 1. அகத்திணை அகத்திணை, (அகம்+திணை) அகத்தே நிகழும் ஒழுக்கம் பற்றியது. அகப்பொருள் எனவும்படும். அஃதாவது, ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும், தாம் துய்த்த இன்பத்தைப் புறத்தார்க்க இத்தன்மையது என எடுத்துக் கூற இயலாததாய்த் தம் உள்ளத்தால் உய்த்துணரும் தன்மைய தாகும். எனவே, அகத்திணை எனப் பட்டது. அகத்திணை வகை: குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய் தற்றிணை, பாலைத்திணை என அகத்திணை ஐந்து வகைப்படும். இவற்றுடன், கைக்கிளைத்திணை, பெருந்திணை என்ற இரண்டையும் கூட்டி ஏழு வகையாகவும் கூறுவர். ஐந்திணைக்குரிய பொருள்: மேற்சொல்லப்பட்ட ஐந்திணைகளும் முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்ற மூன்று வகையால் வழங்கப்படும். அவற்றுள் முதற்பொருள், கருப்பொருள் என்ற இரண்டையும் பற்றிக் காண்போம். முதற்பொருள் நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும். 1. நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து வகைப்படும். 1.குறிஞ்சி-மலையும் மலைசார்ந்த இடமும். 2. முல்லை-காடும் காடுசார்ந்த இடமும். 3. மருதம்-வயலும் வயல்சார்ந்த இடமும். 4. நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும். 5. பாலை-தனியாக நிலம் இல்லை. குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும தத்தமக்குரிய தன்மை திரிந்த பகுதி பாலை நிலம் எனப்படும். 2. பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பொழுது இரண்டு வகைப்படும். பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், கார், கூதிர் (குளிர்) முன்பனி, பின்பனி எனப் பெரும்பொழுது ஆறு வகைப்படும். 1. சித்திரை, வைகாசி-இளவேனிற் காலம். 2. ஆனி, ஆடி-முதுவேனிற் காலம். 3. ஆவணி, புரட்டாசி-கார் காலம். 4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர் (குளிர் ) காலம். 5. மார்கழி, தை-முன்பனிக் காலம் 6. மாசி, பங்குனி-பின்பனிக் காலம் சிறுபொழுது காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை எனச் சிறுபொழுது ஆறு வகைப்படும். 1. சூரியன் உதித்ததுமுதல் பத்து நாழிகை வரை (காலை 6 மணி முதல் 10 மணி வரை) உள்ள நேரம் காலை எனப்படும். 2. பகல் பத்து நாழிகை முதல் இருபது நாழிகைவரை (10 மணி முதல் 2 மணி வரை) உள்ள நேரம் நண்பகல் எனப்படும். 3. பகல் இருபது நாழிகை முதல் முப்பது நாழிகை வரை (2 மணிமுதல் 6 மணி வரை) உள்ள நேரம் ஏற்பாடு எனப்படும். (ஏற்பாடு=எல்+பாடு. எல்=சூரியன். பாடு-மறைதல்.) 4. சூரியன் மறைந்தது முதல் பத்து நாழிகை வரை (மாலை 6 மணி முதல் 10 மணி வரை) உள்ள நேரம் மாலை எனப்படும். 5. இரவு பத்து நாழிகைமுதல் இருபது நாழிகை வரை (இரவு 10 மணி முதல் 2 மணி வரை) உள்ள நேரம் யாமம் எனப்படும். (யாமம்=நள்ளிரவு.) 6. இரவு இருபது நாழிகைமுதல் சூரியன் உதிக்கும்வரை (இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை) உள்ள நேரம் வைகளை எனப்படும். (வைகறை = விடியற்காலம்.) ஐந்து நிலங்களுக்கு உரிய பெரும்பொழுதும் - சிறு பொழுதும் 1. குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் என்ற பெரும் பொழுதுகளும், யாமம் என்ற சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக் குரியன. 2. முல்லை கார் காலமாகிய பெரும்பொழுதும், மாலையாகிய சிறு பொழுதும் முல்லை நிலத்துக் குரியன. 3. மருதம் ஆறு பெரும்பொழுதுகளும், வைகறையாகிய சிறுபொழு தும் மருத நிலத்துக் குரியன. 4. நெய்தல் ஆறு பெரும்பொழுதுகளும், ஏற்பாடு எனப்படும் சிறு பொழுதும் நெய்தல் நிலத்துக் குரியன. 5. பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி என்ற பெரும்பொழுது களும், நண்பகலாகிய சிறுபொழுதும் பாலை நிலத்துக் குரியன. கருப்பொருள் ஒவ்வொரு திணைக்கும் உரிய இயங்குதிணையும், நிலத் திணையுமாகிய பொருள்கள், கருப்பொருள்கள் எனப் படும். அவை, தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனப் பதினான்கு வகைப்படும். அவை வருமாறு. குறிஞ்சித்திணைக் கருப்பொருள் 1. தெய்வம் - முருகன் 2. உயர்ந்தோர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி,கொடிச் சி. 3. தாழ்ந்தோர் - குறவர், கானவர், குறத்தியர். 4. பறவை - கிளி, மயில் 5. விலங்கு - புலி, கரடி, யானை, சிங்கம். 6. ஊர் - சிறுகுடி 7. நீர் - அருவிநீர், சுனை நீர் 8. பூ - வேங்கைப் பூ, குறிஞ்சிப் பூ, காந்தட் பூ. 9. மரம் - சந்தனம், தேக்க, அகில், அசோகு, நாகம், மூங்கில். 10. உணவு - மலை நெல், மூங்கிலரிசி, தினை. 11. பறை - தொண்டகப்பறை. 12. யாழ் - குறிஞ்சியாழ். 13. பண் - குறிஞ்சிப்பண், 14. தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைகாத்தல், தேன் எடுத்தல், கிழங்ககழ் தல், அருவியாடல், சுனை யாடல். முல்லைத்திணைக் கருப்பொருள் 1. தெய்வம் - திருமால். 2. உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி 3. தாழ்ந்தோர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர். 4. பறவை - காட்டுக்கோழி 5. விலங்கு - மான், முயல் 6. ஊர் - பாடி. 7. நீர் - குறுஞ்சுனைநீர், கான்யாற்று நீர். 8. பூ - குல்லைப்பூ, முல்லைப்பூ, தோன்றிப் பூ, பிடவம் பூ. 9. மரம் - கொன்றை, காயா, குருந்தம். 10. உணவு - வரகு, சாமை, முதிரை. 11. பறை - ஏறுகோட்பறை. 12. யாழ் - முல்லையாழ். 13. பண் - சாதாரிப்பண், 14. தொழில் - சாமை விதைத்தல், வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல், கடாவிடல், கொல் லேறு தழுவுதல், குழல் ஊதல், குரவைக் கூத்தாடல், கான்யாறாடல், கால்நடை களை மேய்த்தல். மருதத்திணைக் கருப்பொருள் 1. தெய்வம் - இந்திரன் 2. உயர்ந்தோர் - ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி. 3. தாழ்ந்தோர் - உழவர், உழத்தியர், கடை யர், கடைச்சியர். 4. பறவை - வண்டானம், மகன்றில், நா ரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா. 5. விலங்கு - எருமை, நீர்நாய். 6. ஊர் - பேரூர், மூதூர். 7. நீர் - யாற்றுநீர், கிணற்று நீர், குளத்துநீர் 8. பூ - தாமரைப் பூ, கழுநீர்ப் பூ, குவளைப் பூ 9. மரம் - காஞ்சி, வஞ்சி, மருதம் 10. உணவு - செந்நெல்லரிசி, வெண் ணெல்லரிசி... 11. பறை - நெல்லரிகிணை, மணமுழவு 12. யாழ் - மருதயாழ். 13. பண் - மிருதப்பண், 14. தொழில் - விழாச் செய்தல், வயல் களை கட்டல், நெல்லரிதல், கடாவிடுதல், குளத்தில் நீராடல், புதுப்புனலாடல். நெய்தற்றிணைக் கருப்பொருள் 1. தெய்வம் - வருணன். 2. உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன்,பரத்தி, நுளைச்சி. 3. தாழ்ந்தோர் - நளையர், நுளைச்சியர், பர தர், பரத்தியர், அளவர், அளத் தியர். 4. பறவை - கடற்காக்கை. 5. விலங்கு - சுறாமீன் 6. ஊர் - பாக்கம், பட்டினம் 7. நீர் - உவர் நீர்க்கேணி, கவர் நீர். 8. பூ - நெய்தற் பூ, தாழம்பூ, முண் டகப் பூ, அடம்பம்பூ 9. மரம் - கண்டல், புன்னை, ஞாழல் 10. உணவு - மீன், மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள். 11. பறை - மீன் கோட்பறை, நாவாய்ப் பறை, பம்பை. 12. யாழ் - விளரியாழ். 13. பண் - செவ்ழிப்பண், 14. தொழில் - மீன் பிடித்தல், உப்பு விளைத் தல், அவற்றை விற்றல், மீன் உலர்த்தல்,பறவையோட்டு தல், கடலாடல். பாலைத்திணைக் கருப்பொருள் 1. தெய்வம் - துர்க்கை. 2. உயர்ந்தோர் - விடலை, காளை, மீளி, எயி ற்றி. 3. தாழ்ந்தோர் - எயினர், மறவர், எயிற்றியர், மறத்தியர். 4. பறவை - பருந்து, புறா, எருவை, கழுகு. 5. விலங்கு - செந்நாய். 6. ஊர் - குறும்பு. 7. நீர் - நீரில்லாக்குழி, நீரில்லாக் கிணறு 8. பூ - குராஅம்பூ, மரா அம்பூ. 9. மரம் - உழிஞை, பாலை, ஓமை, இருப்பை 10. உணவு - வழியில் பறித்த பொருள்கள், ஊர்களில் கொள்ளையிட்ட பொருள்கள். 11. பறை - துடி 12. யாழ் - பாலையாழ். 13. பண் - பஞ்சுரம் 14. தொழில் - போர் செய்தல், பகற்சூறை யாடல். 2. புறத்திணை ஒத்த அன்புடையவர்தாமே அன்றி எல்லாராலும் துய்த்து உணரக்கூடியதாய் , புறத்தார்க்கும் இத்தன்மைத்தென எடுத்துக் கூறக்கூடியதாய், அறம்பொருள் என்பனவற்றைப் பற்றிப் புறதே நிகழும் ஒழுக்கம், புறத்திணை எனப்படும். (புறம்- வெளி. திணை-ஒழுக்கம்) புறத்திணை, பன்னிரண்டு. அவை வருமாறு:- 1. வெட்சித்திணை: பகைவருடைய பசுக்கூட்டங்களைக் கவர்தல். இதற்கு அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடுதல் மரபு. 2.கரந்தைத் திணை: பகைவர் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங் களை மீட்டல், இதற்கு அடையாளமாகக் கரந்தைப் பூவைச் சூடுதல் மரபு. 3.வஞ்சித்திணை: பகைவருடைய நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுதல். இதற்கு அடையாளமாகக் வஞ்சிப் பூவைச் சூடுதல் மரபு. 4. காஞ்சித்திணை: படை எடுத்து வந்த பகைவர், தம் நாட்டினுள் நுழையாதபடி எதிர் சென்று தடுத்தல். இதற்கு அடையாளமாகக் காஞ்சிப் பூவைச் சூடுதல் மரபு. 5.நொச்சித்திணை: படை எடுத்து வந்த பகைவர், உள்ளே நுழையாதபடி தம் மதிலைக் காத்தல். இதற்கு அடையாளமாகக் நொச்சிப் பூவைச் சூடுதல் மரபு. 6.உழிஞைத்திணை: பகைவருடைய மதிலைச் சுற்றி வளைத்துக் கொள்ளுதல். இதற்கு அடையாளமாகக் உழிஞைப் பூவைச் சூடுதல் மரபு. 7.தும்பைத்திணை:இருதிறத்துப் படைவீரர்களும் போர்க் களத்தில் எதிர்த்து நின்று அதிரப்போர் புரிதல். இதற்கு அடையாள மாக இருதிறத்தாரும் தும்பைப் பூவைச் சூடுதல் மரபு. (இரு திறத்து வீரரும் தத்தம் மன்னர்களுக்கே உரிய சிறப்புப் பூவுடன், வெட்சி முதலாய பூக்களைப் போர் நிகழ்ச்சிகளுக்கேற்ப உடன் சூட்டிக் கொள்வர்.) 8.வாகைத்திணை: பகைவரை வென்றவர், தம் வெற்றியைக் கொண்டாடுதல். இதற்கு அடையாளமாகக் வாகைப் பூவைச் சூடுதல் மரபு. 9.பாடாண்டிணை:(பாடு+ஆண்+திணை) பாடப்படு கின்ற ஆண் மகனது ஒழுக்கம் எனப்பொருள்தரும். அஃதாவது, பாடப்படுகின்ற ஆண்மகனது வீரம், வெற்றி, இரக்கம், ஈகை, புகழ் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடுவதாகும். 10.பொதுவியல்: மேலே கூறியுள்ள புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறுவது. 11. கைக்கிளை: ஒருதலைக் காமம். அஃதாவது ஆண் பெண் ஆகிய இருவருள், ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் அன்பு பற்றியது. 12.பெருந்திணை: பொருந்தாக் காமம். ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிடத்துத் தோன்றும் அன்பு பற்றியது. வெட்சித்திணையும், கரந்தைத்திணையும் ஒன்றற் கொன்று மறுதலைத் திணையாகும். வஞ்சித்திணையும், காஞ்சித்திணையும் ஒன்றற்கொன்று மறுதலைத் திணையாகும். நொச்சித்திணையும் உழிஞைத்திணையும் ஒன்றற் கொன்று மறுதலைத் திணையாகும். பயிற்சி வினாக்கள் 1. அகத்திணையாவது யாது? அஃது எத்தனை வகைப்படும்? அவை யாவை? 2. ஐந்திணைகளுக்குரிய பொருள்கள் எவை? 3. முதற் பொருள்கள் எவை? 4. நிலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? 5. பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை? 6. பெரும்பொழுது எத்தனை வகைப்படும்? விளக்குக. 7. சிறுபொழுது எத்தனை வகைப்படும்? விளக்குக. 8. முன்பனிக்காலத்திற்குரிய மாதங்கள் எவை? 9. பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகளையும், சிறுபொழுதையும் குறிப்பிடுக. 10. கருப்பொருள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? 11. குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்களைக் கூறுக. 12. முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளுக் குரிய பூ, மரம், உணவு வகைகளைக் குறிப்பிடுக. 13. புறத்திணையாவது யாது? அஃது எத்தனை வகைப்படும்? அவை யாவை? 14. உழிஞைத் திணையாவது யாது? அதன் மறுதலைத் திணையை எழுதி விளக்குக. 15. பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை இவற்றின் இலக்கணத்தைக் கூறுக. 6. யாப்பு 1. வெண்பா (குறள்-நேரிசை-இன்னிசை) ஈற்றடி முச்சீராயும் ஏனைய அடிகள் நாற்சீராயும், காய்ச்சீரும் இயற்சீரும் வர, வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் கொண்டு, மற்றைச் சீருந்தளையும் வராமல், செப்பலோசை உடையதாய், இறுதிச்சீர் காசு-பிறப்பு-நாள்-மலர் என்னும் வாய்பாடுகளுள் ஒன்றால் முடிவது வெண்பாவாகும். இது வெண் பாவின் பொது இலக்கணம் ஆகும். வெண்பா-வெள்ளைப்பா-முதற்பா என்பன ஒரு பொருளன. இவ் வெண்பா, குறல் வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா எனப் பல வகைப்படும். (குறல் வெண்பா) குறள் வெண்பா, குறுகிய அடிகளால் (அஃதாவது இரண்டடி யால்) ஆகிய வெண்பாவாகும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு. ( ஒரு விகற்பம்) முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (இரு விகற்பம்) மேற்கண்ட குறல்வெண்பாக்களில் முன்னது, ஓர் எதுகையால் (ஒரு விகற்பத்தால்) வந்துள்ளது, பின்னது, ஈர் எதுகையால் (இரு விகற்பத்தால் வந்துள்ளது) இங்ஙனம், வெண்பாவின் பொது இலக்கணமெல்லாம் அமையப்பெற்று, ஒரு விகற்பத்தாலோ, இரு விகற்பத்தாலோ இரண்டடிகளால் வரும் வெண்பா, குறள் வெண்பா எனப்படும். (நேரிசை வெண்பா) (ஒரு விகற்பம்) கஞ்சி குடியாளே கம்பன்சோ றுண்ணாளே வெஞ்சினங்கள் என்றும் விரும்பாளே நெஞ்சதனில் அஞ்சதலை யாவருக்கம் ஆறுதலை யாவாளே கஞ்சமுகக் காமாட்சி காண். (இரு விகற்பம்) அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று. மேலே உள்ள இரண்டு நேரிசை வெண்பாக்களுள் முன்னது ஒரு விகற்பத்தால் வந்தள்ளது. பின்னது இரு விகற்பத்தால் வந்துள்ளது. நேரிசை வெண்பா, வெண்பாவுக்குரி பொது இலக்கணம் எல்லாம் அமையப்பெற்று, ஒரு விகற்பமாயும், இரு விகற்பமாயும், இரண்டாமடியின் நான்காம் சீர் ஒரூஉத்தொடை பெற்ற தனிச் சொல்லாக நிற்க, நான்கடிகள் பெற்றுவரும். இது நேரிசை வெண் பாவின் இலக்கணமாகும். (இன்னிசை வெண்பா) வெண்பாவின் பொது இலக்கணம் எல்லாம் அமையப் பெற்று, நேரிசை வெண்பாவில் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவது, இன்னிசை வெண்பா எனப்படும். அவை, தனிச்சொல் இன்றி ஒரு விகற்பமாய் வருதலும், தனிச் சொல் இன்றி பல விகற்பமாய் வருதலும், அடி தோறும் தனிச் சொல் பெற்று வருதலும், இரண்டாம் அடியின் இறதிச் சீர் தனிச் சொல்லாய் மூன்று விகற்பமாய் வருதலும், மூன்றாம் அடியின் இறுதிச் சீர் தனிச்சொல்லாய் இரு விகற்பமாயும், பல விகற்பமாயும் வருதலும் எனப் பல வகைப்படும். கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார் வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்காற் பரிவ திலர். இது, தனிச்சொல் இன்றி நான்கடியும் ஒரு விகற்பமாய் வந்த இன்னிசை வெண்பாவாகும். கடற்குட்டம் போழ்வர் கலவர் பகைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில் தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக் குட்டம் கற்றான் கடந்து விடும். இது, தனிச் சொல் இன்றிப் பல விகற்பமாய் வந்த இன்னிசை வெண்பாவாகும். பிறவகை இன்னிசை வெண்பாக்களை வந்த வழிக் கண்டு கொள்க. இன்னிசை வெண்பாவின் பொது இலக்கணம் எல்லாம் அமையப்பெற்று, நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவது இன்னிசை வெண்பாவாகும். 2. ஆசிரியப்பா (பொது) ஆசிரியப்பா, பெரும்பாலும் ஈரசைச்சீர்களையும், அச் சீர்களாலாகிய அளவடிகளையும் கொண்டு, அகவலோசை தழுவி, முன்றடிச் சிறுமையும், பலவடிப் பெருமையும் உடையதாக வரும். ஆசிரியப்பா எனினும், அகவற்பா எனினும் ஒன்றேயாகும். இவ் வாசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா, நிலை மண்டில் ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டில் ஆசிரியப்பா என நான்கு வகைப்படும். (நேரிசை ஆசிரியப்பா) பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியு முண்டீன் டுலகுபுரப் புதுவே. இது நேரிசை ஆசிரியப்பாவாகும். நேரிசை ஆசிரிப் பாவில் (ஈற்றயலடி) ஈற்றடிக்கு முந்திய அடி மட்டும் மூன்று சீர்களைப் பெற்று வரும். (நிலைமண்டில் ஆசிரியப்பா) வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரல் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவன் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. இது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும். நிலை மண்டில ஆசிரியப்பாவில் எல்லா அடிகளும் நான்கு சீர்களைப்பெற்று வரும். மற்ற இரு ஆசிரியப்பாக்களை வரும் வழிக் கண்டுகொள்க. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்: ஆசிரியப்பாவில் பெரும்பாலும் எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்ட அளவடிகளாக வரும். ஈரசைச் சீர்களாகிய இயற்சீரும், சிறுபான்மை பிற சீரும் வரும். நேரொன்றாசிரியத் தளையும், நிலையொன்றாசிரியத் தளையும் பெற்று, அகவலோசை உடையதாக வரும். சிறுபான்மை பிறதளையும் விரவி வரும். இறுதிச்சீர் ஏகாரத்தால் முடியும். மூன்றடிச் சிறுமையும், பாடுவோன் ஆற்றலைப் பொறுத்துப் பலவடிப் பெருமையும் உடையதாக வரும். 3. அலகிடுதல் (சீர் பிரித்து, வாய்பாடு கூறி, தளை, எதுகை, மோனை எடுத்து எழுதுதல்) செய்யுளை அலகிடுதலாவது, முதலில் செய்யுளில் அடி தோறும் உள்ள ஒவ்வொரு சீருக்கும் நேர் நிரை என வருகின்ற அசைகளைப் பிரித்தல் வேண்டும். பிறகு, அங்ஙனம் அசை பிரிக்கப்பட்ட சீர்களுக்கு உரிய வாய்பாடுகளாகிய தேமா புளிமா என்பன போன்ற வாய்பாடுகளைக் கூறுதல் வேண்டும். அதன் பிறகு, நின்ற சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் தட்டு வருகின்ற, இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை என்பன போன்ற தளைகளை எடுத்து எழுதுதல் வேண்டும். இறுதியாக, அடிதோறும் ஒவ்வொரு சீரிலும் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்ற சீர் எதுகை வகைகளையும், முதல் எழுத்து ஒன்றி வருகின்ற சீர் மோனைவகைகளையும், அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்ற அடி எதுகை களையும், அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருகின்ற அடி மோனைகளையும் எடுத்து எழுதுதல் வேண்டும். அலகிடும் முறை வருமாறு: ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்க முடையா னுழை. சீர் பிரித்தல்: நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர் நிரை. வாய்பாடு கூறுதல்: தேமா கருவிளம் தேமா கருவிளம் தேமா புளிமா மலர். தளை எழுதுதல்: தேமா1 கருவிளம்2 தேமா3 கருவிளம்4 தேமா5 புளிமா6 மலர். 1. இயற்சீர் வெண்டளை (மாமுன் நிரை) 2. இயற்சீர் வெண்டளை (விளமுன் நேர்) 3. இயற்சீர் வெண்டளை (மாமுன் நிரை) 4. இயற்சீர் வெண்டளை ( விளமுன் நேர்) 5. இயற்சீர் வெண்டளை ( மாமுன் நிரை) 6. இயற்சீர் வெண்டளை ( மாமுன் நிரை) எதுகை மோனை எடுத்து எழுதுதல்: ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்க முடையா னுழை. முதல்வரியின் முதற்சீரில் க் என்ற இரண்டாம் எழுத்தும், இரண்டாம் வரியின் முதற்சீரில் க் என்ற இரண்டாம் எழுத்தும் ஒன்றி வந்துள்ளது. எனவே இஃது அடி எதுகையாகும். முதல்வரியில், முதற்சீரின் முதல் எழுத்தும், இரண்டாம் சீரின் முதல் எழுத்தும், மூன்றாஞ்சீரின் முதல் எழுத்தும் ஆ-அ-அ என ஒன்றி வந்துள்ளன. எனவே சீர் மோனையாகும். இரண்டாம்வரியில், முதற்சீரின் முதல் எழுத்தும், இரண்டாஞ் சீரின் முதல் எழுத்தும், மூன்றாஞ்சீரின் முதல் எழுத்தும் ஊ-உ-உ என ஒன்றி வந்துள்ளன. எனவே சீர் மோனையாகும். இங்ஙனம், செய்யுளை அசை பிரித்து, வாய்ப்பாடு கூறித் தளையும், எதுகையும், மோனையும் எடுத்து எழுதுவது அலகிடுதல் எனப்படும். பா வகைகளுக்கு ஏற்ப அவ்வவற்றிற்குரிய வாய்பபாடு களையும், தளைகளையும் அறிந்து எழுத வேண்டும். வெண்பாவின் இறுதிச் சீருக்கு வாய்ப்பாடு எழுதும் பொழுது மட்டும் நினைவோடு காசு-பிறப்பு நாள்-மலர் என்ற வாய்பாடுகளில் ஒன்றை அறிந்து எழுத வேண்டும். பயிற்சி வினாக்கள் 1. வெண்பாவின் பொது இலக்கணத்தைக் கூறுக. 2. ஒரு விகற்பத்தால் வரும் குறள் வெண்பாவுக்கு, இரு விகற் பத்தால் வரும் குறள் வெண்பாவுக்கும் சான்று தருக. 3. நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைக் கூறுக. 4. இன்னிசை வெண்பாவிற்கச் இலக்கணம் யாது? 5. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைக் கூறுக. 6. பின்வரும் குறட்பாவை அலகிட்டு வாய்பாடு கூறித்தளை, எதுகை , மோனைகளை எடுத்து எழுதுக. செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. 7. அணி 1. வேற்றுப்பொருள் வைப்பணி அஃதாவது, புலவர் தாம் கூறக் கருதிய பொருளை முன்பு கூறி, அதனை வலியுறுத்துவதற்கு உலகறிந்த வேறு ஒரு பொருளைப் பின்பு எடுத்துக்காட்டிக் கூறுவது, வேற்றுப் பொருள் வைப்பணி எனப்படும். புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச் சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் - மறைந்தான் புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின்றார் யார். இருள் புறங்காட்டி ஓடும்படி அழகிய சக்கரத்தைச் செலுத்திச் சிறந்த ஒளியை வளர்க்கும் தேரை உடைய சூரியன் மறைந்தான்; புறத்தே கடலால் சூழப்பட்ட இவ்வுலகிலே தோன்றி இறவாமல் வாழ்கின்றார் யார்? ஒருவருமில்லை என்பது இப்பாடலின் பொருளாகும். இப்பாடலில் முன் இரண்டடியில் கூறப்பட்ட சூரியன் மறைந்தான் என்ற சிறப்புப் பொருள், உலகத்தில் தோன்றிய யாவரும் இறப்பது உறுதி என்று, பின் இரண்டியில் கூறப்பட்ட பொதுப் பொருளால் வலியுறுத்தப்படுகிறது. எனவே, இது வேற்றுப் பொருள் வைப்பணி ஆகும். இவ்வணி, பொதுப் பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப் பொருளையும் வலியுறுத்திப் பாடப்படும்பொழுது, முழுவதுஞ் சேறல், ஒருவழிச் சேறல் எனப் பல வகையாகப் பாடப்படும். 2. வேற்றுமையணி முதலில், ஒப்புடைய இரு பொருள்களை ஒரு பொருளாக வைத்து ஒப்புமை கூறி, பிறகு பிறிதொரு வகையில், கூற்றினாலாவது குறிப்பினாலாவது அவை தம்முள் வேற்றுமைப் படச் சொல்லுவது வேற்றுமையணி எனப்படும். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்- ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். உதயகிரியில் தோன்றி, உயர்ந்த மக்கள் தொழ விளங்கி, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகின் புற இருளைப் போக்குவது, ஒளியும் அழகும் பொருந்திய ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரை உடைய சூரியனாவான்; பொதியமல்யில் தோன்றி, அறிவுடையோர் தொழ விளங்கி, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களின் அகவிருளாகிய அறியாமையைப் போக்குவது, தனக்கு நிகரற்ற தமிழ் மொழியாகும் என்பது இப்பாடலின் பொருளாகும். இப்பாடலில், சூரியன், தமிழ் ஆகிய இரண்டும் மலையில் தோன்றுவதாலும், உயர்ந்த மக்கள் தொழ விளங்கவதாலும், இருளை அகற்றுவதாலும் ஒரு வகையில் இரண்டுக்கும் ஒப்புமை கூறப்பட்டுள்ளது; ஆனால் சூரியன் புற இருளைப் போக்கும் என்றும், தமிழ் அக இருளாகிய அறியாமையைப் போக்கும் என்றும் கூறுவதால், பிறிதொரு வகையில் வேற்றுமை கூறப்பட்டுள்ளது. எனவே , இப்பாடல் வேற்றுமையணியாகும். 3. இரட்டுற மொழிதல் (சிலேடை அணி) ஒரு வகையாய் நின்ற சொற்றொடர் இரு பொருள் தருமாறு கூறுவது, இரட்டுற மொழிதல் என்னும் அணியாகும். இவ் இரட்டுற மொழிதலுக்குச் சிலேடை அணி என்ற பெயரும் உண்டு. இச் சிலேடை அணி, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். 1. செம்மொழிச் சிலேடை ஒரே வகையாக நின்ற சொற்றொடர்கள், இரு பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்னும் அணியாகும். ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும் நாடும் குலைதனக்கு நாணாது-சேடியே! தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில் தேங்காயும் நாயுமெனச் செப்பு. (இப்பாடல், தேங்காய்க்கும் நாய்க்கும் சிலேடை) தேங்காய்: மேலோட்டைப் பெற்றிருக்கும்; அதன் உட்பகுதி வெண்மையான பருப்பைப் பெற்றிருக்கும்; அனைவராலும் விரும்பப்படும்; குலையில் காய்திருப்பதற்குக் கோணாது. நாய்: விரைவாக ஓடும்; ஓடி இளைத்தால் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கும்; அதன் வாயின் உட்புறம் வெளுத்திருக்கும்; ஆதரிப்பவர் அனைவரையும் விரும்பும்; குரைப்பதற்குக் கொஞ்சங் கூட வெட்கப்படாது. இப்பாடலில் உள்ள சொற்றொடர்கள், பிரிவு படாமல் ஒரே வகையாக நின்று, தேங்காய்க்கும் நாய்க்கும் ஏற்பப் பொருள் கொள்ளுமாறு இருபொருள் தருகின்றன. எனவே, இப்பாடல் செம்மொழிச் சிலேடை எனப்படும். 2. பிரிமொழிச் சிலேடை ஒரேவகையாக நின்ற சொற்றொடர்கள், பிரிவு பட்டு நின்று வேறுபல பொருள்களையும் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும். மன்னீரி லேபிறக்கும் மற்றலையீய லேமேயும் பின்னீச்சிற் குத்தும் பெருமையால்-சொன்னேன் கேள் தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில் மீனும்பே னுஞ்சரி யாம். (இப்பாடல், மீனுக்கும் பேனுக்கும் சிலேடை) மீன், நிலைபெற்ற நீரிலே பிறக்கும். (மன்னீர் = மன் +நீர்) பேன், தலையில் நிலைத்துள்ள ஈரிலே பிறக்கும் (மன்னீர் = மன் + ஈர்) மீன், நீர் அலைகளிலே அங்குமிங்கம் சென்று மேயும். (மற்றலை = மற்று + அலை) பேன், நிலைபெற்ற தலையில் திரிந்து மேயும். (மற்றலை = மன் + தலை) மீன், பின்னால் இருந்தவாறு நீந்தி வந்து இரையைக் குத்தும். (பின்னீச்சு = பின்+நீச்சு) பேன், தலையிலிருந்து வாரி எடுத்த பிறகு ஈச்சு, ஈச்சு என்னும் ஒலிக்குறிப்புடன் குத்தப்படும். (பின்னீச்சு = பின்+ஈச்சு) இப் பாடலில் உள்ள சொற்றொடர்கள் இங்ஙனம் பிரிவு பட்டு நின்று, மீனுக்கும் பேனுக்கும் சிலேடைப் பொருளைத் தருகின்றன. எனவே, இப்பாடல் பிரிமொழிச் சிலேடை எனப்படும். 4. மடக்கணி முதலில் வந்த சொல்லோ, சொற்றொடரோ, அடியோ மீண்டும் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி எனப்படும். மடக்கு எனினும் யமகம் எனினும் பொருள் ஒன்றே. கொடியார் கொடியார் மதின்மூன்றும் கொன்ற படியார் பனைத்தடக்கை நால்வாய்க்-கடியார் உரியார் உரியார் எமையாள ஓதற் கரியார் கரியார் களம். கொடியராயுள்ளவருடைய கொடிகள் பொருந்திய முப்புரத் தையும் எதிர்த்த தன்மையினையுடையார்;பனை போன்ற பெரிய துதிக்கையினை உடைய யானையின், அச்சத்தைத் தருகின்ற தோலை உடையார்; எம்மை ஆண்டுகோடற்குரியார்; யாவராலும் புகழ்தற்கு அரியார்; கரிய மிடற்றினை உடையார் என்பது இப்பாடலின் பொருள். இப்பாடலில் கொடியார் கொடியார். உரியார் உரியார், கரியார் கரியார் என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து வேற பொருள் தருகின்றன. எனவே, இப்பாடல் மடக்கணி எனப்படும். 5. வஞ்சப் புகழ்ச்சி ஒன்றைனைப் புகழ்ந்தாற் போலப் பழித்துரைத்தலும், பழித்தாற்போலப் புகழ்ந்துரைத்தலும் வஞ்சப் புகழ்ச்சி எனப்படும. இவ் வஞ்சப் புகழ்ச்சி அணி, இலேச அணியின் பாற்படும். இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்டிரள்நோன்காழ்திருத்திநெய்யணிந்து கடியுடைவியனகரவ்வேயவ்வே பகைவர்க்குத்திக்கோடுநுதிசிதைந்து கொற்றுறைக்குற்றிலமாதோ....... ............................................ என்ற இப் பாடற் பகுதி, வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு எடுத்துக் காட்டாகும். இப்பாடல், அஞ்சியின் பொருட்டுத் தொண்டை மானிடம் தூது சென்ற ஔவையார் பாடியதாகும். தொண்டைமானின் படைக்கலங்களைக் கண்ட ஔவையார், இப் படைக்கலங்கள் மயிற்பீலி அணிந்து மாலை சூட்டப்பெற்றுக் காம்பு திருத்தி நெய் பூசப் பெற்றுப் புதிதாக உள்ளன என்று புகழ்வது போலக் கூறிக் குறிப்பாக இப் படைக்கலங்கள் போரிற் பயன்படுத்தப் படவில்லை. எனவே, நீயும், உன் வீரரும் போர்ப் பயிற்சி அற்றவர் களாவீர்கள். ஆகவே, அஞ்சியுடன் போர் புரிந்தால் நீ தோற்று விடுவாய் என அவன் ஆற்றலைப் பழித்துக் கூறுகின்றார். அஞ்சியின் படைக்கலங்களோ, பகைவரைக் குத்திக் குத்திக் கங்கும் நுனியும் முறிந்து, பழுது பார்ப்பதற்காகக் கொல்லன் உலைக் களத்தில் உள்ளன என்று பழிப்பது போலக் கூறிக் குறிப்பாக அஞ்சியும், அவன் படை வீரரும் அடிக்கடி போர்செய்து பழக்கம் உடையவர்கள். எனவே அவன், உன்னை எளிதாக வென்று விடுவான் என அஞ்சியின் ஆற்றலைப் புகழ்ந்து கூறுகின்றார். எனவே, இப்பாடலில் புகழ்வது போலப் பழித்தலும், பழிப்பதுபோலப் புகழ்தலும் ஆகிய இரண்டும் ஒருங்கே அமைந் துள்ளன. இது வஞ்சப் புகழ்ச்சியாகும். 6. சொற்பொருட் பின்வருநிலையணி ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும் வருமாயின், அது, சொற்பொருட் பின்வருநிலை அணி எனப்படும். அங்ஙனம் வரும்பொழுது, 1. முன்வந்த சொல்லே பின்னும் பல விடத்தும் வருமாயின், அது சொற்பின் வருநிலையணி எனப்படும். 2. முன்வந்த பொருளே பின்னும் பலவிடத்தும் tருமாயின்,mது‘பொருட்பின்வருநிலையணிvனப்படும்.3. முன்வந்த சொல்லும் பொருளும் பின்னம் பலவிடத்தும் வருமாயின், அது சொற் பொருட் பின்வருநிலையணி எனப்படும். 1. சொற்பின்வருநிலையணி மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ் மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார் - மாலிருள்சூழ் மாலையின் மால்கடல் ஆர்ப்ப மதன்றெடுக்கு மாலையின் வாளி மலர். இப்பாடலில், மால், மாலை என்ற முன்வந்த சொற்களே பின்னும் பலவிடத்தும் வந்துள்ளன. எனவே, இது சொற்பின்வரு நிலையணியாகும். 2. பொருட்பின்வருநிலையணி அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திகழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை. இப்பாடலில், அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்த என்னும் சொற்கள் மலர்ந்தன என்னும் ஒரே பொருளில் திரும்பத் திரும்ப வந்துள்ளன. எனவே, இது பொருட் பின்வரு நிலையணியாகும். 3. சொற்பொருட்பின்வருநிலையணி வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார். இப் பாடலில், வைகல் என்ற முன் வந்த சொல்லே, பின்னும் பலவிடத்தும் வந்து நாள் தோறும் என்னும் ஒரே பொருளைத் தந்தமையின் இது சொற்பொருட்பின்வருநிலை யணியாகும். பயிற்சி வினாக்கள் 1. வேற்றுப்பொருள் வைப்பணியாவது யாது? சான்று தருக. 2. வேற்றுமையணியை ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்குக. 3. இரட்டுற மொழிதலின் இலக்கணத்தையும், அதன் மறு பெயரையும் கூறுக. 4. பிரிமொழிச் சிலேடை அணிக்கோர் சான்று தருக. 5. மடக்கணியாவது யாது? ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்குக. 6. வஞ்சப் புகழ்ச்சி அணியின் இலக்கணத்தைக் கூறுக. 7. பின்வரும் பாடலில் உள்ள அணியைக் கூறி விளக்குக. தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். 8. சொற்பொருட்பின்வருநிலையணி எத்தனை வகையாக வரும்? அவை யாவை? ஏதேனும் ஒன்றிற் எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. கட்டுரைகள் 1. செய்தித் தாள்களுக்குச் செய்திப்பத்திகள் எழுதியனுப்புதல் ஒரு பொருள் குறித்துத் தங்கள் உள்ளத்தில் எழுந்த கருத்துக் களைக் கோவைப்பட எழுதுதலையே கட்டுரை என்கிறோம்.அக் கட்டுரை பல திறத்தன. அவற்றுள், சில கட்டுரைகளை இவண் பயில்வோம். பள்ளியில் நடந்த விழாக்கள் பற்றிச் செய்தித் தாள்களுக்கு எழுதியனுப்ப மாணவர்கள் பயிற்சி பெறுதல் வேண்டும். காட்டாக, பள்ளியில் நடைபெறும் வள்ளுவர் விழா, பாரதி விழா, இலக்கிய விழா, தமிழர் திருநாள் முதலிய விழாக்கள் குறித்து எழுதியனுப்பலாம். எடுத்துக்காட்டுச் செய்திப்பத்திகள்: (அ) காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் 14-8-67 திங்கட்கிழமையன்று இலக்கியத் கழகவிழா நடைபெற்றது. மாணவர் ஒருவர் இறை வணக்கம் பாடக் கூட்டம் தொடங்கியது. பள்ளித் தலைமையாசிரியர் யாவரையும் வரவேற்றார். தலைவரான பண்டாரகர் திரு.வ.சுப. மாணிக்கம் அவர்கள் தம் முன்னுரையில், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், தனித் தன்மையையும் சான்றுகள் காட்டி நிறுவினார். பள்ளி மாணவர்களான அறிவழகனும், வளவனும் சிறு சொற்பொழிவு நிகழ்த்தினர். தலைவர் தம் முடிவுரையில், தாய்மொழி இலக்கியங்கள் தமிழர் யாவராலும் போற்றப் பெற்றுப் புரக்கப் பெறல்வேண்டுமென்றார். கழகச் செயலாளர் நன்றிகூற நாட்டுப் பண்ணுடன் கூட்டம் இனிது நிறைவெய்தியது. (ஆ) மதுரை நகராட்சி உயர்நிலைப் பள்ளி (செனாய் நகர்)யில் 20-6-67 செவ்வாய்க்கிழமை யன்று வள்ளுவர் விழா நிகழ்ந்தது. அவ்விழாவிற்குப் பண்டாரகர் திரு. அ. áj«guehj‹, v«.v., ã.v¢o., அவர்கள், தலைமை தாங்கினார்கள். மாணவர் அறிவுடை நம்பி இறை வணக்கம் பாடக் கூட்டம் தொடங்கியது. மாணவர் தலைவர் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். தலைவர், வள்ளுவப் பேராசானின் வாய்மை மொழிகளை உலக வழக்குடன் ஒப்பிட்டு உணர்த்தினார். சிறப்புப் பொழிவு நிகழ்த்திய திரு. jÄH©zš, v«.V., அவர்கள் மாணவர் நெஞ்சில் வள்ளுவர் என்ற பொருள் குறித்துப் பேசினார். மாணவர் மன்றச் செயலர் நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் கூட்டம் முடிந்தது. 2. வருணனைக் கட்டுரைகள். நம்முடைய காட்சிப் புலத்தால் உணரப்பட்டு உள்ளதை உள்ளவாறே வருணித்து உரைத்தலே வருணனைக் கட்டுரைக ளாகும். அவை ஆறு, கடல், காடு, மலை முதலிய இயற்கைப் பொருள்கள் பற்றியும் அமைக்கப்படலாம்; கல்லோவியங் களாகத் திகமும், மாமல்லபுரம்,காஞ்சீபுரம், மலைக்கோட்டை, செஞ்சிக் கோட்டை போன்றவற்றைப் பற்றியும் எழுதப் படலாம்; வரலாற்றுப் புகழ்பெற்ற வளநகர்களைப் பற்றியும் வருணிக்கப்படலாம். கடற் செலவுகள் வான்வழிச் செலவுகள், விண்வெளிச் செலவுகள் ஆகியவை பற்றியும் எடுத்து மொழியப்படலாம்; இவை யாவும் வருணனைக் கட்டுரையின் பாற்படும். எடுத்துக்காட்டாகத் தமிழ் முனிவர் திரு. வி. கலியாண சுந்தரனார், தம் இலங்கைச் செலவு குறித்து எழுதிய கட்டுரையில் ஒரு பகுதியை இங்கே காண்க. எனது இலங்கைச் செலவு பொழுது செவ்வனே புலர்ந்து. எங்கள் பேறே பேறு! வழிநெடுகப் பசுமை உமிழும் மலைகளின் செறிவும், சூழலும் நிரையும், அணியும் உள்ளத்தைக் கவர்கின்றன. முகிற்குழாய்கள் மூண்டெழுந்து படிப்படியே அசைந்தும், ஆடியும், ஓடியும் மலை முகடுகளிற் சூழ்ந்து தவழ்ந்து பாகைபோல் பொதியுங் காட்சியும்-அம் மலைகளின் உடல் புலனாகாவாறு பசும்பட்டுப் போர்த் லெனப் பொழில்கள் துதைந்துள்ள அழகும்-புலன்களை ஒன்றச் செய்கின்றன. மலையுச்சியினின்றும் தரைவரை நிரைநிரையாகச், சரிந்தும் செறிந்தும் நிற்கும் தெங்கின் பெருக்கும், அவ்வாறே தெங்கை விட்டுப் பிரியாது அணித்தே புடைசூழ்ந்து நிற்கங்கமுகின் உயர்வும், அவைகளுடன் நீக்கமின்றி வாழ்க்கைத் துணையெனச் சுற்றிச் சுற்றிப் பின்னிக்கிடக்குங்கான் பரந்த செடிகொடிகளின் ஈட்டமும், வானுலகேறப் பச்சைப் படாம் விரித்த படிகளெனத் திகழ்கின்றனவோ என்று ஐயுறலாம். புகைவண்டி அப் பசுமை நிலத்தில் பாய்ந்தோடுவதை நோக்குழி, அது பச்சை மரகத மலையைக் கிழத்தோடும் அம்பெனத் தோன்றுகிறது. பசுமைக்காட்சி யில்லாத இடனும் உண்டோ! கண்ணுக்கும் உளத்துக்கும் இனிமை யூட்டும் பசுமையின் பெற்றியை என்னென்றுரைப்பேன்! புகைவண்டியின் விரைவில், இடையிடை யோடுஞ் சிற்றருவி களின் தோற்றம், பசிய வானில் மின்னொளி தோன்றி மறைவது போலப் புலப்படுகிறது. பச்சைப் பசுங்கடலில் சிறு சிறு தீவுகள் நிலவுவதைமான, வரை வேய்ந்த சிறு சிறு குடில்கள் நிலவுகின்றன. அக் குடில்களின் நடுவண் அடவர் மகளிர் குழந்தைகள், காளை மயில் கன்றுகளென நிற்கின்றனர். அவ்விட்டமும், இக்கூட்டமும் இயற்கையோடியைந்த இன்பமாகப் பொலிகின்றன. ஆங்காங்கே, சிற்சில இடங்களில் இக்கால நாகரிகக் கட்டடங்களும் புலனா கின்றன. அவைகளைக் காணுந்தோறும் பொல்லா அரக்கர் குழுவைப் பார்ப்பது போன்ற நிகழ்ச்சி உள்ளத்துறாமற்போகாது. கூரை வேய்ந்த வீடுகள் இயற்கை யோடியைந்து இன்பூட்டுவது போலப் பெரும் பெரும் மாடிகள் இயற்கையோடியைந் திருப்பினும் இன்பூட்டுவதில்லை. (இத் தமிழ்ப்பெரியாரின் வருணனைக் கட்டுரையை நினைவிற் கொண்டு, கீழ்க்காணும் பொருள்களில் வருணனைக் கட்டுரைகள் வரைந்து பழகுக.) (1) கடற்கரைக்காட்சி (2) மலைவளக் காட்சி (3) இயற்கைக் காட்சி (4) மாமல்லபுரச் சிற்பக் காட்சி (5) மலைக்கோட்டை (6) செஞ்சிக் கோட்டை (இற்றைய நிலை) (7) காவிரிப் பூம்பட்டினம் (பூம்புகார்) (8) மதுரை மீனாட்சியம்மன் கோயில். (9) நீ சென்ற கடற் செலவு (10) நீ கண்ட காட்சி (11) நீ பார்த்த ஒரு பயிர்த் தொழில் (12) தேன் சேகரிக்கப்படும் முறை (13) முழுநிலவுக் காட்சி (14) நீ கண்ட கொலுக்காட்சி (15) மேட்டூர் அணை. 3. விளக்கக் கட்டுரைகள் இவை, படிப்பார்க்குப் பொருள்விளங்க, விளக்கமாக வரையப் படுவதால் விளக்கக்கட்டுரைகள் எனப்படும். அஃதாவது எடுத்துக் கொண்ட பொருளை விளக்கமாக, எளிதில் உணரும் வண்ணம் படைக்கப்படுவதாகும். இவ் விளக்கக் கட்டுரைகள் எண்ணங்களை, கொள்கைகளை வெளிப்படுத்துவன வாகவும் பொதுக் கொள்கைகளைத் தெளிவுப்படுத்துவனவாகவும் அமையும், மேலும், மனிதப் பண்புகளையும், உலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் விளக்குவனவாகவும் அமையலாம். இக்கருத்தை உளங்கொண்டு பின்வரும் தலைப்புக்களில் கட்டுரைகள் எழுதிப் பயிலுக. (1) கல்விப்பயன் (2) பண்புடைமை (3) ஒழுக்கமுடைமை (4) நான் அமைச்சரானால்...... (5) நான் ஓர் அறிவியற் புலவனானால் ...... (6) நல்ல நட்பு (7) ஓவியக்கலை (8) உழுதொழில் (9) கொடையுள்ளம் (10) காகிதம் செய்யும் முறை (11) சோப்புச் செய்யும் முறை (12) கவிதையும் கற்பனையும் (13) சிற்பமும் ஓவியமும் (14) உழவனின் தோழன் (15) தமிழர் திருநாள். 4. கருத்தியல் கட்டுரைகள் கருத்தியல் கட்டுரைகளில் கருத்துக்கள் மலிந்திருக்கும். எதுகை மோனை நடைபற்றிக் கருதாமல், பரந்த சொற்கள் நிறைந்து வராமல், வருணனைகள் பெருகித் தோன்றாமல், கருத்துக்களின் கோவையாக அமைதலே கருத்தியல் கட்டுரையாம். இக்கட்டுரையில் கருத்துக்கே முதலிடம் தரப்படும். கற்பனையால் ஒன்றை எண்ணிப் பார்த்து, எழுதுதலும் இதனைச் சாரும். இரு பொருள்பற்றி முரணியும் ஒன்றியும் எழுதி, இறுதியில் முடிவுக்கு வரக்கூடிய விவாதக் கட்டுரையும் இதன் பாற்படும். இவற்றை உளத்தமைத்துத் கீழ்க்காணும் பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. (1) நன்றி மறப்பது நன்றன்று (2) வள்ளுவர் வழியில் நாம் (3) பள்ளி வாழ்வில் மாணவர் (4) மாணவரும் ஆசிரியரும் (5) இராமலிங்கரும் சமயப் பொதுமையும் (6) சிறந்த வாழ்வு அமைவது சிற்றூரிலா? நகரத்திலா? (7) காந்தியடிகளும் உரிமைப் போரும் (8) நாட்டுப் பற்று (9) மொழிப்பற்று (10) திரு.வி.க.வின் தமிழ்த் தொண்டு (11) உழைப்பால் உயர்ந்தவர் (12) உழுதொழிலும் பிறதொழிலும் (13) மாணவர் சமுதாயத் தொண்டு (14) முத்து - தன் வரலாறு கூறல் (15) நான் வள்ளுவரைக் கண்டால்..... 5. எடுத்தியம்பும் கட்டுரைகள் மனிதர், தம் உள்ளத்திலிருக்கின்ற கருத்துக்களைத் தெளிவாகப் பிறருக்கு எடுத்து மொழிவதே எடுத்தியம்பும் கட்டுரைகளாகும். அவை, பெருங்கதை, நாடகம், திரைப்படம் முதலியவற்றில் படித்த-பார்த்த பகுதிகளை எடுதியம்பு வனவாக அமையலாம். காட்டாக:- சிலப்பதிகாரம், பூலித்தேவன் (நாடகம்) வீரபாண்டியக் கட்டப்பொம்மன். (திரைப்படம்) பேரறிஞர்கள், பெரியோர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி களைக்கூட எடுத்து எழுதலாம். காட்டாக:- பாரதியார், காந்தியடிகள், மறைமலையடிகள், டாக்கடர் உ.வே. சாமிநாதய்யர் போன்றோர் வாழ்கை நிகழ்ச்சிகள். தெருச்சண்டை, மணவிழா, மணிவிழா, திருவிழாப் போன் நிகழ்ச்சிகளில் தாம் கண்ட- உணர்ந்த செய்திகளைச் சுவைபட எழுதலாம். இயற்கையன்னையின் சீற்றமான வெள்ளப்பெருக்கு, பெரு மழை, புயற்காற்று, தீப்பற்றி எரிதல், நிலநடுக்கம் போன்றவற்றையும், எதிர்பாராமல் நிகமும் இடையூறுகளான கலம் கடலில் மூழ்குதல், வானவூர்தி விண்ணில் எரிந்து வீழ்தல் போன்றவற்றையும் எடுத்தி யம்பும் கட்டுரையில் இடம் பெறச் செய்யலாம். தரைச்செலவு, கடற்செலவு பற்றி உண்மையில் தாம் அனுபவித் தவைகளைப் பற்றியும் அல்லது கற்பனையில் தாம் கண்டவற்றைப் பற்றியும் விளக்கி வரையலாம். இவ்வாறு மேற்குறித்த பொருள்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும்போழ்து, நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லவேண்டும். வேண்டாத செய்திகளை விலக்கிவிடலாம். பெரியயோர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரையும்போழ்து, அவர்களின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் குறிப்பிடங் வேண்டும். எடுத்தியம்பும் கட்டுரையைப் படிக்கும் பொழுது, கட்டுரையில் உள்ளன யாவும் தம்முன் நிகழ்வதுபோல் காட்சி யளித்தல் வேண்டும். இவை யாவையும் நினைவிற்கொண்டு, தொடரும் பத்திலுள்ள பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து பயிற்சி பெறுக. (1) நீ விரும்பிக் கேட்ட கதை (2) நீ கூற விரும்பும் கதை (3) நீ விரும்பும் பெரியார் ஒருவரின் வரலாறு (4) நீ மகிழ்ந்த சில நிகழ்ச்சிகள் (5) நீ பார்த்த திருவிழா (6) ஓர் அறிஞருடன் உனக்கு ஏற்பட்ட முதற் சந்திப்பு (7) நீ கண்ட ஒரு தெருத் துன்பநேர்ச்சி (8) நீ நேரில் கண்ட இயற்கையின் எழுச்சி (9) நீ சிறுவயதில் செய்த அஞ்சா செயல் (10) நீ செய்த கடற் செலவு (11) உனக்குப் பிடித்த பள்ளி நிகழ்ச்கிள் (12) உன் பள்ளி வாழ்வில் குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் (13) மதுரைச் சித்திரைத் திருவிழா (14) சென்னைப் பொருட்காட்சி (15) உலகத் தமிழ்க் கருத்தரங்கம். 6. வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிப் புனைந்துரை யாமல் உண்மை வாழ்வை அப்படி எழுதுவது தான் வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரையாகும். ஒருவருடை வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எழுவதும். இதுளையே சாரும். மேலும், ஒரு பொருளின் வாழ்க்கைகையப் பற்றிக் கூறுதலும் இதனுள் அடங்கம். வாழ்க்கை வரலாறு எழுதுகின்ற போழ்து சட்டசங்களைக் துணையோடு எழுதுல் வேண்டும். (1) காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு (2) திரு.வி.க. வாழ்க்கை வரலாறு (3) நாவலர் சோமசந்தர பாரதியார் வாழ்க்கை வரலாறு (4) மறைமலையடிகள் வரலாறு (5) தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்ர் வரலாறு (6) விபுலானந்த அடிகள் வரலாறு (7) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை வரலாறு (8) வ.உ. சிதம்பரனார் வரலாறு (9) பச்சையப் முதலியார் வரலாறு (10) கதிரேசஞ் செட்டியார் வாழ்க்கை வரலாறு (11) பாண்டித்துரைத் தேவர் வாழ்க்கை வரலாறு (12) பாரதியார் வாழ்க்கை வரலாறு (13) பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு (14) நேருவின் வாழ்க்கை வரலாறு (15) கென்னடியின் வாழ்க்கை வரலாறு. 7. நடைமுறைச் சமுதாயவியல் - பொருளியல் கல்வியியல் கட்டுரைகள் (அ) நடைமுறைச் சமுதாயவியல் கட்டுரைகள் மனிதர்களின் கூட்டமே சமுதாயமாகும். அச் சமுதாயம் பல செயல்களை உள்ளிட்டது. சமுதாயத்தின் தேவைகள் யாவை? அவற்றைப் பெற எவ்வாறு முயல வேண்டும்? என்பன பற்றியும், சமுதாயத்தில் அமைந்து கிடக்கும் உயர்வு தாழ்வு பற்றியும், ஏழை பணக்கார வாழ்வு பற்றியும் அறிந்து, அவற்றின் உண்மை நிலைகளை ஆய்ந்து எழுதுவது இக்கட்டுரையின் பாற்படும். மேலும், சமுதாயத்தில் பெண்கள் நிலைமை குறித்தும், பெண்ணடிமை, கைம்மை, குழந்தை மணம் முதலியன பற்றியும் எழுதுவதும் இத்தலைப்புடைய கட்டுரை களின் கீழ் அடங்கும். நம்முடைய சமுதாயம் முன்னேற வழிவகை கண்டு உழைத்த சான்றோர் பலர். அவருள் இராசாராம் மோகனர், பாரதியார், காந்தியடிகள், விவேகானந்தர், இராமலிங்க அடிகள் போன்றோர் எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும் தொண்டாற்றினர். அவர்கள் இயற்றிய நூல்களைப் பயின்று குறிப்புக்களைத் திரட்டிக் கீழ்க் காணும் தலைப்புக்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து பழகுக. (1)சமுதாயத்தில் நம் கடமை (2) சமுதாயமும் சமயமும் (3) சமுதாயத்தின் பெண்கள் நிலை (4) தன்னலமும பொதுநலமும் (5) நம் இந்தியச் சமுதாயநிலை (6) மங்கையர் முன்னேற்றம் (7) வாழ்வு வளம் பெற.... (8) நாடு வாழ வேண்டுவன (9) இராமலிங்கரும் சமயப் பொதுமையும் (10) தாயுமானவன் வேண்டும் சமய வாழ்க்கை (11) ஆங்கிலச் சமுதாயக்திற்கும் இந்தியச் சமுதாயத்திற்கம் உள்ள வேறுபாடுகள் (12) பொருளாதார நிலையும் மக்கள் வாழ்வும் (13)மாணவர் நிலை (14) மெய்கண்டார் வகுத்த வழிகள் (15) சமயப் பெரியார்களும் சமுதாய வாழ்வும். (ஆ) நடைமுறைப் பொருளியல் கட்டுரைகள் பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும் பொருள் சமுதாயத்தில் முதலிடம் பெறுகிறது. அப்பொருள் வரும் வழிகளையும், பெருக்கும் முறைகளையும், சேர்த்து வைக்கும் முறைகளையும், செலவிடும் முறைகளையும் அறிந்து பொருளாதாரத் தொடர்பான நாணயமாற்று, வங்கிகள், பயிர்த்தொழில், வாணிகம், கைத்தொழில், கூட்டுறவுச் சங்கம் போன்றவற்றைப்பற்றி எழுதுவது பொருளியல் கட்டுரை களாகும். சுருங்கக்கூறின் பொருளாதாரத் தலைப்புகள் குறித்து எழுதுதல் இதன் பாற்படும். (இ) நடைமுறைக் கல்வியில் கட்டுரைகள் கேடில் விழுச் செல்வமாகிய கல்வி மனித இனத்தின் பிறப்புரி மையாக அமைந்துவிட்டது. அக் கல்வி, கிராமக் கல்வி, முதியோர் கல்வி, தொழிற் கல்வி, பொதுக் கல்வி, சமயக் கல்வி, ஒழுக்கக் கல்வி எனப் பலதிறத்தனவாம். இவ்வாறு நடைமுறையில் அமைந்துள்ள கல்வியைப் பற்றி எழுதுதல் இத்தலைப்பின் கீழ் அடங்கும். தொடரும் பத்தியிலுள்ள பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. (1) முதியோர் கல்வி (2) சிறுவர் கல்வி (3) உயர் நிலைக் கல்வி (4) கல்லூரிக் கல்வி (5) தொழிற் கல்வி (6) கிராமக் கல்வி (7) தொடக்க நிலைக் கல்வி (8) இன்றையக் கல்வி முறை (9) அறிவியற் கல்வி (10) கல்வித்திட்டத்தில் வேண்டப்படுவன (11) தொழில்மூலம் கல்வி (12) கல்வியும் கல்விக் கழகங்களும் (13) ஒழுக்கக் கல்வி (14) வானொலியும் சல்வியும் (15) திரைப் படமும் கல்வியும் (16) நாடகமும் கல்வியும் (17) பொருட்காட்சியும் கல்வியும். 8. பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுதல் சொற்பொழிவைக் கேட்கின்ற பொழுது மிகக் கவனமாய் இருத்தல் வேண்டும். கேள்விப்புலமும், மனமும் ஒருமையாய் இயங்குதல் வேண்டும். சொற்பொழிவைக் கேட்டுக் குறிப் பெடுத்துப் பழகப் பல அறிஞர்களுடைய சொற்பொழிவு களைக் கேட்க வேண்டும். குறிப்புக்களைக் கொண்டே கட்டுரை வரையலாம். குறிப்பெடுகின்ற பொழுது, இன்றியமையாக் கருத்துக்களைப் குறித்துக்கொளல் வேண்டும். பிறகு அவற்றைப் பத்தித் தலைப்புக் களாக்கி எழுதுதல் வேண்டும். காட்டாக் 14-2-57 இல் சத்தியமங்கலம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில், முன்னாள் பொதுக்கல்வி இயக்குநர் திரு.நெ.து. சுந்தரவடிவேல் எம்.ஏ.இ எல்.டி. ஆவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் குறிப்புக்கள். முன்னுரை-சரிநிகர் சமானமாக வாழ்தல்-மாணவர் களிடையே போட்டி வேண்டும் - வெற்றியும் வெறியும் - நெற்பயிரும் நல்வாழ்வும் - அரசியலாரின் பங்கம் நம் கடமையும் - உடலுக்குச் சோறு, உயிருக்குக் கல்வி - பல கல்வி - உள்ளத்தில் உறுதி - கல்விப் பயன் - பசியே வெறுப்புக்கும் பொறாமைக்கம் வித்து பசிப்பிணி மருத்துவர்கள் பெருகுக - முடிவுரை. இச்சொற்பொழிவுக் குறிப்பைக் கட்டுரையாக எழுதும் பொழுது, ஒவ்வொரு தொடரையும் கட்டுரைத் தலைப்பாக்கிக் கேட்டதை உளத்தமைத்து வேண்டிய செய்திகளைத் தொகுத்து எழுதுதல் வேண்டும். எழுதுகின்ற கட்டுரைக்குத் தலைப்பிட்டு எழுதுதல் வேண்டும், இங்கே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற் பொழிவுக் குறிப்புக்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு கட்டுரை எழுதிப் பழகுக. உரை வேந்தர் ஔவை திரு.சு. துரைசாமிப்பிள்ளை 9-2-52 இல் நடந்த பத்துப்பாட்டு மாநாட்டில் திருமுருகாற்றுப் படை பற்றி ஆற்றிய சொற்பொழிகள் குறிப்புக்கள். தோற்றுவாய் - ஆற்றுப்படை விளக்கம் - முருகாற்றுப் படையின் சிறப்பு நிலை - முருகாற்றுப்படையின் கருப்பொருள் - பரிசில் விளக்கம் - முருகனுடைய திருப்பதிகள் - வழிபாடுகள் - காந்தட் கண்ணி - கூதளங் கண்ணி - உருள் பூந்தார் - வண்டு சூழ்ந் தொலிக்கம் சுனை மலைர் - பேய் மகள் துணங்கை - உடை - கடல்-கணவீரம் - களிறு -ஆகம்- ஆசினி - ஆமா - இறாள் - உளியம் - முடிப்புரை. 9. பிறர் வானொலிப் பேச்சைக் கேட்டுக் குறிப்புகள் எடுத்தல் செல்வத்துட் செல்வமான செவிச் செல்வத்தை வானொலியில் கேட்டுச் சுவைக்கலாம். வானொலியிற் பேசப்படும் பேச்சைக் குறிப்பெடுத்துப் பழகுதல் வேண்டும். கவிஞர். திரு. முடியரசனார் திருச்சி வானொலியில் பாவேந்தர் நினைவு நாள் குறித்து. 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாள் பேசிய பேச்சின் குறிப்புக்களைக் கீழே காண்க. முன்னரை-இலக்கிய உலகில் மறுமலர்ச்சி - பாரதியும் பாரதி தாசனும் - கவிஞனின் இயல்பு - சமுதாயத்தில் கவிஞனின் இடம் - பாரதிதாசனின் பாநலம் - அழகின் சிரிப்பு - குடும்ப விளக்க - மெய்பபாடு - குழந்தையும் குடும்பக் கட்டுப்பாடும் - கவிஞரின் ஆசை - பாரதிதாசனும் தமிழும் - மாகவி - ஞாயிறு எழுக - முடிவுரை. இவ்வாறு வானொலிச் சொற்பொழிவைக் கேட்டுப் குறிப் பெடுத்துப் பழகுதல் வேண்டும். எடுத்த குறிப்புக்களைக் கொண்டே கட்டுரை எழுதத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தொடரையும் சிறு தலைப்பாகக் கொண்டு கட்டுரையை அமைத்தல் வேண்டும். இன்றியமையாச் செய்திகள் யாவும் கட்டுரையில் இடம் பெறல் வேண்டும. மாணவர்கள் நல்ல வானொலிச் சொற்பொழிவுகளைத் தவறாது கேட்டுக் குறிப்பெடுத்தல் நல்லது. பிறகு அவற்றைக் கட்டுரை வடிவமாக்கித் தங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொளல் வேண்டும். 10. வானொலிப் பேச்சக் குறிப்புக்களைப் பின் விரித்து எழுதுதல் கடந்த வகுப்பின் குறிப்புக்களைக் கொண்டு விரித் தெழுதப் பழகியிருப்பீர்கள். சென்ற கட்டுரையில் வானொலிப் பேச்சின் சுருக்கக் குறிப்புக்களைக் கண்டோம். அச்சொற் பொழிவுச் சுருக்கக் குறிப்புக்களை விரித்தெழுதப் பழகிக் கொளல் வேண்டும். கவிஞர் முடியரசனார் வானொலியில் பேசிய சொற்பொழிவுச் சுருக்கத்தைக் கீழே விரித்தெழுதி யுள்ளேன். அதனைக் காட்டாகக் கொண்டு குறிப்புக்களை விரித்தெழுதக் கற்றுக்கொள்க. குறிப்பின் விரிவு முன்னுரை: இலக்கிய உலகின் மறுமலர்ச்சிக்கு இராமலிங் கடிகள், தாயுமானவர், அருட்பிரகாசர் முதலியோரை வழியாட்டி யோராகக் கொள்ளலாம் - இவர்கள் சமய நோக்குடையராயினும், சீர்திருத்ததக் கருத்துடையவர்கள். அவ் வழியைக் கவிஞர் பாரதியும், பாரதிதாசனும் பின்பற்றினர். பொருள்: பாரதியும், பாரதிதாசனும் - விடிவெள்ளி, உதய ஞாயிறு - பேரருவி, பேராறு - வித்து, ஆலமரம், கவிஞன் துணிவு மனப்பான்மை உடையவன் - எதற்கும் எவர்க்கம் அஞ்சாத நெஞ்ச - தன்னலமும், பொதுநலமும் - பல உள்ளங்கள். பலவித மறுமலர்ச்சி - சொற் சிக்கனம், உணர்ச்சி வேகம், தனிப்பாணி - எண்சீர் விருத்தத்திற்கு ஒரு தனி நடை - அழகின் சிரிப்பு - குடும்ப விளக்கு - தனி மனிதனும பொதுமக்களும் - சோம்பிக் கிடப்பவனிடம் பாரதிதாசன் - மலையும் கவிஞரும் - காதலும் கருத்தடையும் - தமிழியக்கம் - தாய்மொழி வளர்ச்சி - கவிஞரின் குணநலன்கள் - பாடல்களில் தென்றல், புயல், குயில், சிங்கம், வெண்ணிலவு, செங்கதிர், இனிப்பு, கசப்பு, தன்மை, வெம்மை. முடிவுரை: இருளால் ஞாயிறு மறைக்கப்படுவதில்லை - இருள் அகலட்டும் - ஞாயிற்றின் ஒளி பரவட்டும் - கவிஞர் வாழ்க! 11.கொடுத்த தலைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுதல் கொடுத்த தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுதப்புகும் மாணவர்கள், அத் தலைப்பிற்கு வேண்டிய செய்திகளை நூல்கள் வாயிலாகத் திரட்டுதல் வேண்டும். பனுவல்களில் படித்த செய்தி களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொளல் வேண்டும். கட்டுரையை எவ்வாறு அமைக்கலாம் எனச் சிந்தித்து, மனத்தில் கட்டுரைக்கு ஒரு முன் வடிவம் கொடுக்கப்படல் வேண்டும். பிறகு, அவ் வடிவை எழுதிவைத்துக்கொண்டு கட்டுரையை எழுதத் தொடங்க வேண்டும். ஒரு பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத. வேண்டு மென்றால் - அப் பெரியாருடைய பிறப்பு இளமை வாழ்வு, கல்வி, தொண்டு, இல்வாழ்வு, செயற்கருஞ்செயல்கள் முதலியனவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொகுத்து வரைதல் வேண்டும். முன் வகுப்புக்களில் நீங்கள், கொடுத்த தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுதப் பழக்குவிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனை நினைவிற் கொண்டு பின்வரும் தலைப்புக்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து காட்டுக. 1. அறிவுடையாரெல்லாம் உடையார். 2. மாணவர் கடமை. 3. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். 4. ஈதல் இசைபட வாழ்தல்... 5. யாதும் ஊரே யாவருங் கேளிர். 6. தந்தை தாய்பே பேண். 7. விண்வெளி வீரர்கள். 8. பெண்மை வாழ்க! 9. உடல் மண்ணுக்க, உயிர் தமிழுக்கு. 10. தாய்நாட்டுப் பற்று. 12. கொடுக்கப்பட்ட மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டல். ஒதுதல் ஒழியாது நடைபெறல் வேண்டும். ஆதலின் மாணவர்கள் பல நூல்களை வாங்கிப் படித்தல் வேண்டும். மாணவர்கள், தாம் படிக்கின்ற மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைக்கு வேண்டிய பொருள் திரட்டல் வேண்டும். காட்டாக: சிலப்பதிகாரக் கதையைக் கூறக் கூடிய உரை நடைப்பனுவல் கொடுக்கப்படுமானால், அதனைக் கொண்டு கீழ்க்கண்டவாறு கட்டுரைப் பொருள் திரட்டல் வேண்டும். முன்னுரை: தமிழ்க் காப்பியங்கள் - நெஞ்சை அள்ளும் காவியம். பொருள் : சிலப்பதிகாரம், மூன்று பேருண்மைகளைக் காப்பியத்தின் மையமாகக் கொண்டது. தமிழர்யாவர்க்கும் அது மேற்கோள் நூலாகும். (அந்நூலிருந்து கட்டுரைக்கக் கீழ்க்கண்ட வாறு குறிப்புக்கள் எடுத்துக் கொளல் வேண்டும். வாழ்த்துப் பகுதி - திருமணம் - ஆடல் மகளுடன் வாழ்ந்த வாழ்வு - கோவலன் வீடு திரும்பல் - தன் மனைவியை மதுரைக் கழைத்தல் - கவுந்தியடிகளின் துணை - ஆயர்குடியில் வரவேற்கப் படல் - கோவலன் சிலம்பு விற்கச் செல்லல் - கொலைக்களக் காட்சி - கண்ணகி உண்மையை உணர்தல் - தன் கணவன் கள்வனல்லன் என விளக்கிக் காட்டல் - அரசன் உயிர் விடுதல் - கண்ணகி சேரநாடு அடைதல் - செங்கட்டுவன் கல்லெடுத்துக் கோயில் அமைத்தல் - யாவராலும் கண்ணகி தொழப்படுதல் - முடிவுரை. இவ்வாறு, மேற்கோள் நூல்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதிப் பயிற்சி பெறவேண்டும. திருக்குறள், புறநானூறு, கம்பரா மாயணம் போன்ற மேற்கோள் நூல்கள் கொடுக்கப்பட்டால் அவற்றைப் பன்முறை படித்துக் குறிப்புக்களை அமைத்துக் கொண்டு கட்டுரை எழுதத் தொடங்க வேண்டும். 13. பொருள் வகையாலும், நடைவகையாலும் சிறந்த கடிதங்கள் எழுதுதல். மாணக்கர்கள் பொருள் வகையாலும், நடைவகையாலும் சிறந்த கடிதங்களை எழுதிப் பழகுதல் வேண்டும். ஒரு விழா நடத்துவதற்குமுன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்துச் செயலருக்கு எழுதலாம். தம் தம்பி தங்கையர்க்கு அறிவுரை ஸபகன்று ஆக்க வழியில் ஈர்த்துச் செல்லக் கூடிய கடிதமாக அமையலாம். தம் பெற்றோர்க்கத் தம் நிலையை விளக்கி வரைகின்ற கடிதமாக விருக்கலாம். நாடாளும் தலைவர்களுக்கு தம் வேண்டு கோள்களை நயம் பட எழுதி உணர்த்தலாம். தன் நண்பர்களுக்கு உள முருக்குகின்ற வகையில் கடிதம் எழுதித் தொடர்பை வலுப் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பல துறையிலும் நற் கடிதங்கள் எழுதிக் கடிதம் எழுதும் வன்மை கைவரப்பெறல் வேண்டும். கடிதம், தலைப்பு, முன்னுரை, பொருள், முடிவுரை, முகவரி என்ற ஐந்து பகுதிகள் அடங்கியதாக இருத்தல் வேண்டும். கீழ்க்காணும் பொருள்கள் குறித்துக் கடிதங்கள் எழுதிப் பயிலுக. (1) பெற்றோர்க்குத் தன்னிலை குறித்துக் கடிதம் எழுதுதல் (2) நண்பனின் தேர்வு வெற்றிகண்டு மகிழ்ந்து கடிதம் எழுதுதல் (3) நீ பார்த்த விழாச் சிறப்புற நடந்தது குறித்து விழாத் தலைவருக்குக் கடிதம் எழுதுதல் (4) உன் தம்பி தங்கையர்க்கு அறிவுரை கூறுகின்ற முறையில் கடிதம் எழுதுதல் (5) நீ படித்துச் சுவைத்த புத்தகம் பற்றி உன் நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (6) நீ பார்த்துக் களித்த நாடகக் காட்சி குறித்து நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (7) நீ சுற்றுலாச் சென்றது குறித்து நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (8) நீ பார்த்துப் பேசிய அறிஞரைப் பற்றி நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (9) உலகத் தமிழ்க் கருத்தரங்க நடந்த முறை குறித்து வெளிநாட்டு நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (10) கடல் கடந்த நண்பனுக்குக் கல்வி நிலை குறித்துக் கடிதம் எழுதுதல். 14. அரசியல் அலுவலகங்களுக்கும் ஊராட்சி நகராட்சிக் கழகங்களுக்கும் குறித்த பொருள்கள் பற்றி விண்ணப்பங்கள் எழுதுதல். (அ) அரசியல் அலுவலகங்களுக்கு எழுதுதல் இற்றைய நாளில் தமிழன்னை தன்னாட்சி பெற்றுக் கொலு விருக்கின்றாள். ஆதலின், தாய்மொழியிலேயே அனைத்து அலுவலகங் களுக்கும் தொடர்பு கொள்ளலாம். அலுவலகங்களுக்கு எழுதுகின்ற பொழுது கடித முறையைப் பின்பற்றக் கூடாது. அலுவலகத்திற் குரிய முறைப்படி அனுப்புநர், பெறுநர், வணக்கமொழி, பொருள், முடிப்புரை ஆகிய பகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். எழுது கின்ற செய்தியைச் சுருக்கமாகத் தெளிவாக எழுதுதல் வேண்டும். விண்ணப்பம் எழுதுகின்ற பொழுது அவ் வந்நிலைக்குரிய வணக்க மொழியும், பணிவு மொழியும் அமைந்திருந்தல் நல்லது. அலுவல கங்களுக்கு எழுதிப் பயிற்சி பெறுதல் சமுதாயத்திற்கு பெரிதும் பயன்படும் ஆதலின். கீழ்க்கண்ட அலுவலகங்களுக்குப் பின்கண்ட விண்ணப்பங் களை எழுதிப் பழகுக. 1. தெரு விளக்கு எரியவில்லை யென்ற மின்விசைக் கழகத் துணைப் பொறியாளருக்கு விண்ணப்பமொன்று வரைக. 2. அரசாங்கக் கல்லூரி முதல்வருக்குப் புகுமுக வகுப்பில் சேர, விண்ணப்பத்தாள் அனுப்புமாறு வேண்டி எழுதுக. 3. கல்வி அமைச்சரைப் பள்ளி இலக்கியக் கழகவிழாவிற்குத் தலைமை தாங்குமாறு வேண்டி எழுதுக. 4. வருமான வரி அலுவலகத்தில் வேலை வேண்டித்தலைமை அலுவலருக்கு விண்ணப்பம் ஒன்று எழுதுக. 5. அரசு வங்கியில் வேலை வேண்டி வங்கி இயக்குநருக்க விண்ணப்பம் வரைக. 6. வேலை தேடித்தரும் அலுவலகத்திற்கு உன்தகுதி, நிலை குறிப்பிட்டு வேலை வேண்டி விண்ணப்பம் எழுதுக. 7. பொதுப் பணித் துறைத் தலைப் பொறியாளருக்கு மேற் பார்வையாளர் வேலை வேண்டி விண்ணப்பம் வரைக. (ஆ) ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கு எழுதுதல் தன்னுடைய ஊருக்கு , நகரத்திற்குத் தேவையான நீர், விளக்கு, சாலை, துப்பரவு முதலியன வேண்டி, ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கு விண்ணப்பம் எழுதிப் பழகுதல் வேண்டும். கீழ்க் கண்ட விண்ணப்பங்களை எழுதிப் பயிற்சி பெறுக. 1. இராமநாதபுர மாவட்டத்திலுள்ள குன்றக்குடிக்கு,, அரசுக் கிளை நூலகம் வேண்டி ஊராட்சி ஒன்றிப்பு ஆணையாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக. 2. திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த சித்தன்ன வாசலில், தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகக் கிளையை நிறுவுமாறு, ஊராட்சி ஒன்றிப்பு ஆணையாளருக்கு விண்ணப்பம் எழுதுக. 3. மதுரை மாவட்டத்தைச் சார்ந்த மேலூரில் மாணவர் விடுதி எழுப்ப, அப்பகுதி ஊராட்சி ஒன்றிப்புத் தலைவருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக. 4. காரைக்குடி நகராட்சி மன்றத்திற்குப் புதுத்தெருவில் குடிநீர் வசதி வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் எழுதுக. 5. மதுரை நகராட்சி மன்றத்திற்கு, மேலமாசி வீதியில் ஒரு படிப்பகம் அமைக்க வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் எழுதுக. 6. திருச்சி நகராட்சி மன்றத்திற்குத் தில்லை நகரில் இரண்டாவது குறுக்குச் சாலையை ஒழுங்காக அமைத்தல் தருமாறு விண்ணப்பம் ஒன்று வரைக. 7. சென்னை மாநகராட்சி மன்றத்திற்குச் சைதாப் பேட்டையில் ஒரு மகப்பேறு நிலையம் வைக்குமாறு வேண்டி விண்ணப்பம் வரைக. 15. கற்பனைக் கட்டுரைகள் சிந்தனை ஈனும் சிறந்த குழவியே கற்பனையாகும். கற்பனை இருவகைப்படும். உள்ளதையே உயர்வு நவிற்சிபடப் புனைந் துரைப்பது ஒருவகை. இல்லாத தொன்றைப் படைத்துக் காட்டுவது மற்றொருவகை, அறிவியல் கண்டுபிடிப்புக்களெல்லாம் ஒரு வகைக் கற்பனையால் விளைந்த பயன்களேயாம். எண்ண வோட்டம் தங்கு தடையின்றி எல்லையிறந்து போவதுதான் கற்பனையின் உச்சநிலையாகும். மாணவர்கள் தங்கள் எண்ணங் களை ஒருவழிச் செலுத்தி உரிய பொருள் குறித்தோ, நிலை குறித்தோ எழுதிப் பழகல் வேண்டும். கற்பனைக் கட்டுரைக்குக் காட்டாக அறிஞர் மு.வ. வின் கி.பி. இரண்டாயிரம் என்ற நூலப் பயின்று பார்க்க. கற்பனையாற் றலை மாணவப் பருவத்திலேயே வளர்த்துக்கொளல் நலம். ஈண்டு நிலவுக் காட்சி குறித்து எழுதிய கற்பனைக் கட்டுரையின் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது. இதனைக் காட்டாகக் கொண்டு பல கற்பனைக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. நிலவுக் காட்சி (கற்பனைக் கட்டுரை) வானத்து விளக்கு: அந்தி மயங்கி இருள் சூழும் நேரம். என் தாய், வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாள். அப்பொழுது உலகத்தை ஒருள் விழுங்காவண்ணம், இயற்கைத் தாய் ஓர் ஒளி விளக்கை வானத்திலே ஏற்றி வைக்கின்றாள். வீட்டில் விளக்கேற்றிய வுடன் குழந்தைகள் மகிழ்ந்து விளையாடுவதைப்போல், வானத்து விளக்கைக் கண்டவுடன் உலக மக்கள் மகிழ்ந்து களிக்கின்றனர். அந்த விளக்கு ஏழை என்றும் செல்வரென்றும், உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் வேறுபாடு கருதாது ஒரு நிகராக ஒளியைத் தருகின்றது. முழுநிலாக் காலங்களில் வானகமும் வையகமும் ஒரே ஒளி மயமாகக் காட்சி தருவது பேரின்மாக இருக்கும். மலைகள், மரங்கள், பயிர் பச்சைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளைவெளேர் என்று காட்சி நல்கும். உலகத்தையே ஒளிமயமாக்கும் இந்த நிலவினிடம், களங்கம் இருக்கின்றது என்றும் உலகம் சொல்லத்தான் செய்கின்றது. உயர்ந்த வர்களிடம் சிறு களங்கம் தோன்றினாலும், அஃது உலக முழுதும் பரவும் போலும்! அழகு நிலா: சில வேளைகளில் கருமுகில்கள் கூட்டமாக விரையும். அவை நிலவைக் கடந்து செல்லும்பொழுது, நிலவு அந்த முகில்களினூடே நுழைந்து வெளிப்படுவது போன்று காணப்படும். சில சமயங்களில் அம்முகிலுக்குள் மங்கியதோர் நிலவாகக் காணப்படும். ஒளிந்து விளையாடும் சிறுவனைப்போல அக்காட்சியிருக்கும். விண்மீன்கள் புடைசூழத் திகழ்ந்து வரும் வெண்ணிலவு, படைவீரர் சூழ்ந்துவரப் பவனி வரும் அரசனெனத் தோற்றமளிக்கும். மாணவர்களிடையே நின்று அறிவுரை பயிற்றும் எங்கள் ஆசிரியர் போலவும் காணப்படும், அந்த மீன்களிடையே விளங்கும் வெண்மதி. இந்த அழகுக் காட்சியை எங்கள் மாடியிலிருந்து நாங்கள் அடிக்கடி கண்டு களிப்பதுண்டு. பிறை நிலவு: சில மாலை நேரங்களிற் பிறை நிலவும், அதற்கு மேலே ஒன்றை விண்மீனும் காணப்படும். அந்த அழகே அழகு. நாங்கள் காகிதத்தால் செய்து விடும் கப்பல் போல அந்தப் பிறை மிதக்கும். என் தாய் அங்காடியிலிருந்து வாங்கிவரும் வெள்ளைப் பூசனிக் கீற்றுப் போல அந்தப் பிறை நிலா விளங்குவதும் உண்டு. அப்போது எங்களுக்கே கற்பனை யூறும்; கவிதை எழுதத் தோன்றும்; கவிஞர்கள் எழுதிய கவிதைகள் பல எம் நினைவிற்கு வரும். நிலாவுணர்த்தும் உண்மை: இந்தநிலா எப்பொழுதும் முழுமையாகவே யிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் ,அப்படியிருப் பதில்லையே; தேய்கிறது - வளர்கிறது. மீண்டும் மீண்டும் இப்படியே மாறி மாறி வருகிறது. அப்படி மாறி மாறி வரினும் ஒருண்மையை நமக்குச் சொல்லிக்கெண்டே யிருக்கிறது. உலகத்தில் தோன்றிய பொருள் வளர்வதும் தேய்வதும் இயற்கை என்னும் பேருண்மையை உணர்த்து கிறதல்லவா? பெரியவர்களுடைய நட்பு, பிறை நிலவுபோல வளர்ந்து வரும் என்பதையும், சிறியவர்களுடைய நட்பு முழுமதி போலத் தோன்றிப் பிறகு குறைத்துகொண்டே வரும் என்பதையும் நமக்கு அந்த நிலவுதானே உணர்த்துகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாம் இதுபோன்ற இயற்கை இன்பங் களில் திளைத்து மகிழப் பழகுதல் வேண்டும். அப்படி மகிழப் பழகுதல் வேண்டும். அப்படி மகிழ்ந்து, இன்பம் நுகர்வதோடு அமையாது, பல நீதிகளையும் உண்மைகளையும் கற்றுக்கொண்டு நம் வாழ்வைச் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். (இவ்வாறு, இயற்கைப் பொருள்கள் பற்றியும், சிந்தையும் மொழியும் செல்லா நிலையுடையன பற்றியும் கற்பனைக் கட்டுரை கள் எழுதலாம்.) 16. நிறைவேறிய தீர்மானகங்களை உரிய இடங்களுக்கு அனுப்பிவைத்தல். சென்ற வகுப்பில் தீர்மானங்களை எவ்வாறு எழுதுவது என்று கற்றுக் கொண்டீர்கள். எழுதக் கற்றுக் கொள்வதோட மையாது, அத் தீர்மானங்களை நிறைவேற்றித் தலைவர், செயலர் கையொப்ப மிட்டு, உரிய அலுவலகங்களுக்கு அனுப்பப் பழகிக் கொள்ள வேண்டுமட. அத்தீர்மானங்களைச் செயற்படுத்த அவற்றுடன் வேண்டுகோட் கடிதமொன்று வைக்கப்பெறல் வேண்டும். தீர்மானங் களைப் பல படிகள் எடுத்து அனுப்புதல் வேண்டும். தீர்மானம் பொதுவிடம் அல்லது மன்றம் பற்றியதாக யிருக்குமானால், அதனை நாளிதழ்களுக்கு அனுப்பி வெளியிடச் செய்தல் வேண்டும். தீர்மானங் களைப் படி எடுத்து அனுப்பு கின்றபொழுது, தூய்மையாகத் தெளிவாகத் தட்டெழுத்துப் பொறியின் மூலம் படிஎடுத்தோ, அல்லது நல்ல முறையில் எழுதியோ அனுப்புதல் வேண்டும். தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மட்டும் பயனில்லை. உரிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம்தான் அவை பயனளிக்கும். 17. ஒருபொருள் அல்லது சூழ்நிலை பற்றி ஒட்டியும் வெட்டியும் உரையாடல் அமைத்தல். உரையாடற் கலை, வளர்க்கப் பெற வேண்டிய கலையாகும். மாணவர்கள் இருபாலும் எண்ணத்தக்க பொருள் குறித்துச் சொற் போர் நிகழ்த்தப் பழகியிருப்பார்கள். காட்டாக: சிறந்த வாழ்க்கை அமைவது சிற்றூரிலா? efu¤âyh? என்ற பொருள் குறித்து ஒட்டியும் வெட்டியும் உரை நிகழ்த்துகின்றபொழுது, மாணவர்கள் தாங்கள் சேர்ந்த கட்சிக்கு வெற்றி வேண்டிப் பல ஆதாரங்களையும், கருத்துக் களையும் சேர்க்க முற்படுவர். அப்பொழுது அவர்கள் ஒன்றின் நன்மையையும், தீமையையும் நன்கு உணர்வர். அவர்கள் சிந்தனையைக் கிளறி விடுவதற்கு இவ்வுரையாடல் பெருந்துணை புரியும். கீழ்க்காணும் உரையாடலைக் காட்டாகக் கொண்டு பல உரையாடல்களைப் பேசியும், எழுதியும் பழகுக. திரைப்படத்தால் விளைவது நன்மையா? தீமையா? செயலாளர் : எழுத்தறிவிக்கும் இறைவர்களே என் அன்பிற் குரிய நண்பர்களே, உங்களனைவர்க்கும் முதற்கண் என் வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். இன்று நிகழவிருக்கும் நம் மன்றத்தின் சொற்போர் அரங்கிற்கு நடுவராயிருந்து சிறப்புற நடாத்தித் தருமாறு, பேராசிரியர் திரு. beLkhw‹ v«.V., அவர்களை மாணவர் மன்றத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன். தலைவர் முன்னுரை: பள்ளித் தலைவரவர்களே! பயிற்று விக்கும் ஆசிரிய நண்பர்களே! மாண்புடை மாணவர்களே! எல்லீர்க்கும் என் அன்பு கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்கின்றேன். இன்று, உங்கள் சொற்போர் அரங்கிற்கு யான் நடுவராய் வீற்றிருப் பதைக் குறித்துப் பெரிதும் மகிழ்கிறேன். திரைப்படத்தால் விளைவது நன்மையா? தீமையா? எனச் சிலர் எடுத்தியம் இருக்கின்றனர்; உங்களைப் போலவே நானும் அவர்தம் சொல்லாற்றலைக் கேட்டு மகிழ விழைகின்றேன். இப்பொருள்பற்றி முதற்கண் நான் ஒன்றுங் கூறதிருப்பதே முறை. அதனால், மாணவர்களைப் பேசுமாறு அழைக்கின்றேன். முதலில் திரு. அறிவுடை நம்பி, திரைப்படத்தால் விளைவது நன்மையே என்று சொற்போரைத் தொடங்கி வைப் பாராக. அறிவுடை நம்பி: ஒரு பாற்கோடா உயர் பெருந்தகை யாகிய நடுவர் அவர்களே! அறிவு நல்கும் ஆன்றோரே! மாற்றுக் கட்சி நண்பர்களே! அன்புத் தோழர்களே! அனைவரையும் தலைதாழ்த்தி வணங்குகிறேன். சின்னாட்களுக்கு முன்னர் நம் பள்ளியில் காட்டப் பெற்ற படக்காட்சியைக் காண நாம் அனைவரும் கூடியிருந்தோம். Ôikbad¥ ngr K‹tªJŸs e©g®fS« m‹W K‹ tÇirÆš mk®ªJ f©L fˤjikí« F¿¥ãl¤j¡fJ., (கைதட்டல்). திரைப்படக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டும், உரையாடல்களையும், பாடல்களையும் செவியாரக் கேட்டும் சிந்தைகளிகூரும் நிலையை அடைகின்றோம். ஆகவே, கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒருசேர இன்பம் உண்டாக்குகிறது திரைப் படம் என்பதை உணர்கின்றோம். பள்ளிகளில் படக்காட்சியும் ஒரு பாடப் பகுதியாகச் சேர்க்கப்பட்டிருப்பதிலிருந்தே, அதனால் விளையும் நன்மைகளைத் தெற்றென உணர்கின்றோம். கற்றவர் மட்டுமே புத்தகங்களைப் படித்துணர முடியும்; சிலர் மட்டுமே சொற் பொழிவைக் கேட்டு மகிழ முடியும்; இசையும் அவ்வாறே. ஆனால், திரைப்படத்தைக் கூறியிருந்து ஒரே நேரத்திற் கண்டுகளிக்க வாய்ப்புண்டு! புத்தகம் ஒருவரால் எழுதப்படுவது; சொற்பொழிவு ஒருவரால் நிகழ்த்தப்பெறுவது; இசை ஒருவரால் இசைக்கப் பெறுவது; திரைப்படக் கலையோ பலருடைய அறிவால், கூட்டுற வால் உருவாவது. ஆதலின் பலருடைய அறிவாற்றலையும் ஒருங்கே பெற்று மகிழத் திரையரங்கு துணைபுரிந்து; பொழுதை நன்முறை யிற் கழிக்கப் பேருதவி செய்கின்றது. மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகளைப் படக்காட்சிகளின் வாயிலாகத் தெளி வாகவும் எளிதாகவும் அறிந்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு மட்டுமன்று பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. திரைப் படத்தைப் பொதுமக்கள் புத்தகம் என்றே கூறலாம். நேரிற் சென்று காண வியலாப் பொருள்களை, இடங்களைப் படக்காட்சிகளின் வாயிலாகக் கண்டு பயன் பெறமுடியும். அயல் நாட்டுப் பழக்கவழக்கங் களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ள அது வாய்ப்பளிக்கிறது. இவ்வாறு, திரைப்படம் பல்லாற்றானும் நன்மையே விளைத்து வருகிறது என்பது வெள்ளிடைமலை என மொழிந்து விடைபெறு கிறேன்; வணக்கம். ஆராவமுதன்: சமன் செய்து சீர் தூக்கும் நடுவர் அவர்களே! அறிவூட்டும் பரம்பரையினரே! உடன் பயில்வோரே! அனைவர்க்கும் என் வணக்கம். நன்மை எனப் பேசிய நண்பர், தமக்கே உரிய முறையில், உங்கள் மனத்தை ஈர்க்கச் சொல்வலை வீசினார். ஆனால் மாணவர் நிலைசாயவில்லை. திரைப்படத்தால் விளைவது தீமையே என அழுத்தமாகவும் திருத்தமாகவும் நான் கூறவிரும்புகிறேன். நன்மை எனப் பேசியவர் பள்ளியிற் காட்டப் படும் கல்விப் படக் காட்சிகையக் கூறுகிறரா? அரங்குகளில் காட்டப்படும் கதை தழுவிய காட்சியைக் கூறுகிறர்ரா? என்பதே புரியவில்லை. இரண்டை யுமே குழப்புகிறார். (கைதட்டல்). இரு புலனுக்கு நன்மை தருகிறது என்றும் குறிப்பிட்டார். இது தவறு. இளஞ் சிறாரும் இன்று மூக்குக் கண்ணாடி போடுகின்ற நிலைக்கு வந்துவிட்டநிலை எதனால் வந்தது? திரைப்படத் தாலன்றோ? நண்பர் கண்ணாடி போட்டிருக் கிறார் என்பதற்காகக் கூறவில்லை. (கைதட்டல்). உண்மைநிலையை விளக்கினேன். காலம் பொன்போனற்து என்பர். அப்பொன்னான காலத்தை, ஆயிரக்கணக்கான மக்கள், நாடோறும் பாழ்படுத்தி வருகின்றனர். மேலும், காசுங் கரியாகிறது. ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், இடித்துக்கொண்டும், முட்டிக் கொண்டும், தள்ளிக்கொண்டும் சீட்டு வாங்க முனைகின்றபொழுது, எத்துணை இழப்புக்கள் நேரிடக்காண்கின்றோம். வரிசையில் நின்று ஒழுங் குறச் செல்லும் புத்தகம் என்று அவர் குறிப்பிட்டார். அது பொது மக்கள் பண்பாட்டைக் குலைக்கும் புதுக் கருவி என்றே நான் கூறுவேன். புத்தகத்தைக் கற்பதால், சொற்பொழிவைச் சுவைப்பதால், இசையைக் கேட்பதால் கெட்டார்கள் என இதுவரை கேள்விப் பட்டதேயில்லை. ஆனால், திரைப்படத்தால் தீமை பெருகிப் பரந்து விரிந்து வருவதை நம் மாணவர்களுடைய தோற்றமும் ஒப்பனை யுமே தெள்ளத் தெளிய விளக்கி நிற்கின்றன. தலையலங்கோலம், ஆடைக் குறைப்பு இவற்றில் நம் மாணவர்தம் மாண்பு எங்கே? (கைதட்டல்). நகைச் சுவைக்காக நான் இதைக் கூறவில்லை; நாட்டின் போக்கைக் கண்டு, மனம் நைந்து கூறுகிறேன். எனவே, திரைப்படத்தால் சமுதாயமே சீரிழந்து வருகிறது. என்பதைத் தாழ்மையுடன் வற்புறுத்திக் கூறி முடிக்கின்றேன்; வணக்கம். இங்ஙனம், எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி ஒட்டியும் வெட்டியும், உரையாடல்களைப் பேசியோ எழுதியோ பழகிக் கொள்வது நன்று. 18. நூல் மதிப்புரை எழுதுதல் மாணவர்கள் ஒரு நூலைப் பயின்ற பிறகுதான். அதற்கு மதிப்புரை எழுதத் தொடங்கவேண்டும். மதிப்புரை என்பது அந்நூலின் சிறப்பை விளக்குவதாகவும், குறைகளைத் தெரிவிப்ப தாகவும் அமைதல் வேண்டும். பனுவல் மட்டுமல்லாது பார்த்த திரைக்காட்சி, நாடகக் காட்சி, பொருட்காட்சி, கண்காட்சி முதலியன குறித்தும் மதிப்புரை எழுதலாம். பொன்னை உறைத்து அறிவாகிய கல்லில் உறைத்துப் பார்த்து உண்மை யுரைப்பதுதான் மதிப்புரையாகும். இச்செயலை மாணவர்கள் நன்கு வளர்த்துக் கொளல் வேண்டும். துணைப்பாடநூல் பற்றி மதிப்புரை நான், பள்ளியிறுதி வகுப்பிற்கு வைக்கப்பட்டுள்ள தமிழ்த் துணைப் பாட நூலான வீணை வித்தகன் என்ற நூலைப் பயின்றேன். அந்நூல் சிறந்த தமிழ் நடையைக் கொண்டுள்ளது. அவ் வாசிரியர் அக்கதையை யாத்த புலவர் பற்றியும், அந்நூல் பற்றியும் முதலில் விளக்கிப் பின் கதைக்குச் செல்வது அவருடைய வரலாற்று உணர்வைக் காட்டுகிறது. பெருங்கதையைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற முறையில் சிறு கதையாக்கி, முக்கியப் பகுதிகள் அனைத்தும் இடம்பெறச் சுருக்கி, அமைத்திருப்பது அவரது தொகுத்துரைக்கும் தன்மைக்குச் சான்றாகும். ஒவ்வொரு காண்டத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பகுதிகளாக்கி ஒவ்வொரு பகுதிக்குள்ளும் சிறு தலைப்புக்களிட்டுக் கதையை வரைந்து செல்வது அந்நூலை அழகுபடுத்துகிறது. யாவும் சிறப்புற அமைந்திருந்தாலும், கதை மாந்தரின் பண்பு நலன்கள் சிறப்புற விளக்கப்பட்டிருந்தாலும், வருணனைகள் விளக்கி வரையப்பட்டிருந்தாலும், நகையூட்டும் செய்திகள் இடையிடையே காணப்பட்டாலும், புத்கத்தில் கதையின் சிறந்த பகுதிகளை விளக்கக்கூடிய படங்களை இடைஇடையே சேர்க்காத ஒரு குறையாகும். மேலும், அக்கதையின் மூலப் பாடல்களை மிகுதியாக மேற்கோளாகக் காட்டியிருக்கலாம். பொதுவாகப் பார்க்கின்றபொழுது, புத்தகம் நல்ல தகுதி யுடையதாகவிருக்கிறது என்பது வெள்ளிடைமலை. ஆதலின், இதைப்போன்ற தமி இலக்கியங்களை அறிமுகப் படுத்துகின்ற நூல்கள் மாணவர்களிடையே பல்கிப் பெருகுவதாக. 19. செய்யுள் திரண்ட பொருள் எழுதுதல் மாணவர்கள் ஒரு செய்தியைப் படித்தால் அதனை உளத் தமைக்க வேண்டும். நீ படித்தது என்ன என்று கேட்டால், உடனே படித்ததை மொழிதல் வேண்டும். அதுபோலவே ஒரு செய்யுளைப் படிக்கின்றபொழுது அதன் கருத்துக்களைத் தொகுத்து மனத்தகத்தே நிறுத்தவேண்டும். அதனுடைய திரண்ட பொருளை எழுது என்றால், உடனே பாட்டின் பொருளைச் சுவைகுன்றாது எழுத வேண்டும். செய்யுளின் திரண்ட முறை நன்கு மனமொன்றிப் படித்தல் வேண்டும். செய்யுளின் திரண்டபொருளை எழுதுவதற்கு முன், அதனை இருமுறை மும்முறை நன்கு மனமொன்றிப் படித்தல் வேண்டும். அருஞ் சொற்களாயின அவற்றின் பொருளை அகர வரிசை முதலியற்றின் துணையாற் கண்டு, பின்பு, பொருளெழுத முற்படல் வேண்டும். காட்டாக:- பாரதிதாசன் பாடலும், அதனுடைய திரண்ட பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் காட்டாகக்கொணடு பிற செய்யுள்களுக்கும் திரண்ட பொரு ளெழுதிப் பழகுக. கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! பழுத்த பழத்தின் சுளையையும், முற்றிய கரும்பின் சாற்றையும், குளிர் மலரில் அமைந்த தேனையும் காய்ச்சுகின்ற வெல்லப் பாகிடை அமைந்த சுவையையும், நல்ல பசு கொடுக்கின்ற பாலையும், தென்னை நல்குகின்ற குளிர்ந்த இளநீரையும் நான் இனிமையுடையன என்று கூறுவேன். ஆனால், தமிழை என்னுடலில் உறைகின்ற உயிர் என்பேன்; காணுங்கள் என்கின்றார் பாவேந்தர் பாரதிதாசனார். 20. கூட்டங்கள் - மாநாடுகளுக்கு வரவேற்புரை எழுதுதல் மாநாடுகள் கூட்டப்பெறுகின்ற பொழுதும், கூட்டம் கூடுகின்ற பொழுதும் வருகை தந்துள்ள தலைவர், சொற்பொழி வாளர், பொதுமக்கள் ஆகிய யாவரையும் வரவேற்க வேண்டு மென்பது மரபாகும். ஆதலின் வருகைதந்த பெருமக்களைச் சிறப்பித்து, அவர்கள் செய்த செயல்களைப் பாராட்டி, வரவேற் புரை எழுத வேண்டும். சிறு கூட்டங்களாயின் தலைவரை, வர வேற்று உரை நிகழ்த்துவர். ஊருக்குப் புதிதாக வந்த அறிஞருக்கு, ஆட்சி புரி வோருக்கு வரவேற்புரை எழுதிப் படித்தலுண்டு. பேரறிஞர்கள், பெரும்புலவர்கள், அமைச்சர்கள், போன்றோர் தலைமை வகிக்கின்ற பொழுது அவர்களுக்கு வரவேற்புரை எழுதிப்படிப்பர். வரவேற் புரை எழுதுகின்ற பொழுது வரவேற்கப்படுகின்றவரின் பண்பு நலன், அறிவு, உரு, கல்வி, பொறுப்பு, தொண்டு முதலியவற்றைக் குறிப்பிட்டு வரவேற்புரை எழுதுதல் வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு.மா. K¤J rhÄ ã.V., பி.டி. அவர்கள் 16-9-67இல் கானரக்குடிக்கு வருகை தந்த பொழுது, அவருக்கு அளித்த வரவேற்பிதழ், கீழே கொடுக்கப் பெற்றுள்ளது. அதனைக் காட்டாகக் கொண்டு வரவேற்புரை எழுதிப் பழகுக. வரவேற்புரை குடிபுரந்தழுவும் நலங்கேள் அமைச்சே! பள்ளியாசிரியராகப் பணிபுரிந்து, பாராளுமன்றம் புகுந்த மாண்புமிக்க உள்ளாட்சித் துறை அமைச்சே! அல்லும் பகலும் ஒல்லும் வகை ஒன்று ஓவாது செல்லும் வாயெல்லாம் செவ்வினை யாற்றும் செஞ்ஞாயிற்றின் ஒளிக் கதிரே! நும்மைக் கள்ளமில் வெள்ளைச் சிந்தை வாழ்த்தொலு எழுப்ப, காலைமுதல் கங்குல் தொடரக் கைவினையாற்றும் கரம் கூப்ப, உழைப்போரை வணங்கும் தலை தாழ வணக்கம் கூறி வருக! வருக!! என வரவேற்கின்றோம். அறிஞருள் அறிஞர்வழி நின்றெழுகும் அண்ணலே! கழகத்தின் கடன்களைக் காலந் தவறாது கட்டிக் காத்து, மக்கள் தொண்டே மனிதத் தொண்டெனத் தொண்டுக் கொடி யேந்தித் துன்புறுவோர் துயர் துடைக்கவந்த தூயோய்! பார்புரக்கும் மாரியென, பைந்தமிழ் நாடு புரக்கும் தமிழேர் உழவர் பண்பாட்டின் திருவுருவே! பகுத்தறிவின் ஒளிவிளக்காம் அறிஞருள் அறிஞர் அடிச்சுவட்டில் நிற்றெழுகும் அருமை இளவலே! எங்கள் அமைச்சே! இவண்போந்து எங்கள் இடத்தை அணிசெய்தமை குறித்து நாங்கள் அகமகிழ்கிறோம். தங்கள் இனிய வருகைக்கு மீண்டும் உளமொன்றிய வணக்கம் கூறி வருக வருகவென வரவேற்கின்றோம். 21. பிரிவுரை எழுதுதல் உங்கள் ஊரில், பணியாற்றிய அலுவலர்கள், ஆசிரியர்கள், வெளியூருக்கு மாறிச் செல்லுகின்றபொழுது, அல்லது வேலை உயர்வு கிடைத்துச் செல்லுறொணாது எழுதுவதே பிரிவுரைக் கட்டுரையாகும். பிரிவுரை எழுதுகின்றபொழுது, பிரிந்து செல்லு கின்றவருடைய தொண்டு, பண்புநலன்கள் ஆகியவற்றை உளத்தில் கொண்டு எழுதவேண்டும். கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள பிரிவுரையிதழைக் காட்டான நினைவிற்கொண்டு, பிரிவுரைக் கட்டுரைகள் எழுதிப் பழகுக. காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழா சிரியராகப் பணியாற்றிய திரு. தமிழண்ணல் எம்.ஏ.அவர்கள், கல்லூரி விரிவுரை யாளராக வேலையுயர்வு பெற்றுச் சென்றுழி, மாணவர்கள் படித் தளித்த பிரிவுரையிதழ். உளங்கொள உணர்த்தும் ஒண்மதியோய்! மலர்ந்த முகத்துடன், மாசறு புன்னைகையுடன் மாணவர் முன் தோன்றும் தெளிவும் கட்டுரை வன்மையும் வாய்க்கப்பெற்ற எங்கள் தமிழாசிரியப் பெருந்தகையோய்! கொள்வான் கொள்வகையறிந்து, மாணவர் உளங்கொளப் பயிற்றுவிக்கும் எம் முளமுறை தெய்வமே! நீவீர், கல்லூரிப் பேராசிரியராகப் போவது குறித்து நாங்கள் கழிபேருவகை கொள்கிறோம். ஆயினும், தங்கள் பிரிவால் தமிழ் நெஞ்சங்கள் வருந்துகின்றன! எமக்கு எழுத்தறிவிக்கும் இறைவரே! நல்லன கருதிப் பிரிவதால் இன்பமும், துன்பமும் கலந்து நிலையில் செல்க, சிறக்க என நெஞ்சார வாழ்த்துகிறோம். பாநலமும், நாநலமும், உரைவளமும் ஒன்றிய உயரியோய்! தாங்கள் வகுப்பறையில் நடத்திய பாடங்களை எண்ணு கின்றபொழுது, எங்கள் நெஞ்சம் மகிழ்கிறது. இனி எப்பொழுது வகுப்பறையில் தாங்கள் நடத்தும் பாடங்களைக் கேட்போம் என ஏங்கி நனிமிக வருந்துகிறோம். தங்கள் பாநலத்தைப் பாட்டரங்கு களிலும், நாநலத்தைச் சொற்போர்க்களங்களிலும், உரைவளத்தைத் தங்கள் பனுவல்களிலும் கண்டு, கேட்டு, உண்டு உயிர்த்த நாங்கள், உங்கள் பிரிவை எண்ணி நனிமிக வருந்துகிறோம். தங்கள் பிரிவைத் தமிழ் நெஞ்சங்கள் தாங்கா. அத் தமிழுள்ளங்கள் மகிழ்வுபெற இன்னுரை பகர்ந்து ஏகுக என மிகப் பணிவுடன் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இன்னணம், செயலர், மாணவர் கழகம். 22. வெள்ளி விழாக்காலப் புகழுரையும் மறுமொழியும் வெள்ளி விழாவென்பது இருபத்தைந்தாண்டுகள் நிறை வெய்தியதைக் குறித்துக் கொண்டாடப் பெறுவதாகும். பொறுப்பில், அலுவலில் தொடர்ந்து இருபத்தைந்தாண்டுகளிருந்தால் வெள்ளி விழா நடைபெறும். பொது நிலையங்கள் மேலே குறிப்பிட்ட காலம் முடியச்செயற்படின் அவற்றிற்கும் வெள்ளிவிழா எடுக்கப்படும். fh£lhf¤ jÄœ¥ nguháÇauhf ïUg¤ijª jh©LfŸ gÂah‰¿a g©lhuf® âU.tst‹ v«.V., v«.x.vš., பி.எச்.டி. அவர்களுக்கு நடைபெற்ற வெள்ளி விழாவில் தமிழ் அறிஞரொருவர் புகழ்ந்த புகழுரையும், அதற்கு அவரின் மறு மொழியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு வெள்ளிவிழாப் புகழுரையும், மறுமொழியும் எவ்வாறு நிகழ்த்தப் பெறுகின்றன என அறிந்து கொள்க. புகழுரை: நாளும் நல்லிசையால் நற்றமிழ் பரப்பும் நால்வர் வழி வந்த நல்லோய்! தித்திக்கும் தேன் தமிழை எத்திக்கும் பரப்ப - தனித் தன்மையும் உலக அரங்கில் உலவவிட ஒல்லும் வாயெல்லாம் உழைக்கும் உயரியோய்! இருபத்தைந்தாண்டுக் காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தமிழ் நலங்காத்த தகையோய்! நும்முடைய உயர் பணியால் ஒண்டமிழின் ஒளி உலக முழுதும் வீசுகிறது. அவ்வொளி நோக்கி எப்புலத்தாரும் இப்புலம் வருகின்றனர். தமிழ்ப் பற்றுக் குன்றிக் கிடந்த காலத்து, விழி! எழு!! மொழியைப் பேணு என ஆர்த்தனை. தாய்மொழியைப் புறக் கணித்து வாழ்தல் முடியாதென மேடைதோறும் அஞ்சா நெஞ்சுடன், அரிமா நோக்குடன், தமிழிடம் காழ்ப்புக் கொண்டோ ரையும் கவரும் வண்ணம் கன்னித் தமிழில் பேசினை. நும்முடைய பேச்சால் மேடைத் தமிழ் வாழ்வு பெற்றது. இவ்வாறு நும்மால் மேடைத் தமிழோடு, உரை நடைத் தமிழும் வளர்க்கப்பெற்றது. நும்முடைய பேருழைப்பால் நூற்றுக் கணக்கான பனுவல்கள் தமிழர்க்குப் பெருமுதலாகக் கிடைத்துள்ளன. தங்களிடம் கல்வி கற்ற காரணத்தால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ் காத்துத் தாயகம் பேணி வருகின்றனர். ஆதலின் மொழி வாழவும், நாடு வளரவும் தாங்கள் இன்னும் பல்லாண்டு பேராசிரியப் பொறுப்பேற்றுப் பணிபுரிதல் வேண்டு மென எல்லாம் வல்ல இயற்கையை இறைஞ்சுகிறேன். மேல் மொழிந்த புகழுரையைக் கேட்ட, தமிழ்ப் பேராசிரியர் விடுத்த மறுமொழி. என் உழுவலன் புடைக் கெழுதகை நண்பர் அவர்கள், தமிழின் பாலுளதணியாக் காதலால், தமிழால் வாழும் என்னைப் பலபடப் பாராட்டிக் புனைந்துரைத்தார்கள். அவர்கள் புகழ்ந்த புகழுரை களுக்கு நான் எட்டுணையும் தகுதியுடையவனல்லேன். அவர்கள் கூறுகின்ற பொழுது என்னால் மேடைத் தமிழ் வளர்ந்ததென்றார்கள். அவ்வாறெல்லாமில்லை. vd¡F K‹ng âU.É.f., மறைமலையடிகள், இராமலிங்க அடிகள், நாவலர், பாரதியார் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களால் மேடைத் தமிழ் வளர்க்கப் பட்டு வந்துள்ளது. அவர்களை அடியொற்றியே நான் சென்றுள்ளேன். மேலும் அவர்கள், என்னால் உரைநடைத் தமிழ் வளர்ந்த தென்றார்கள். இவ்வாறு கூறுவது என்பாலுள பெருமதிப்பையும், அன்பையும்தான் புலப்படுத்துகிறது. எனக்குமுன் உரைநடைத் தந்தை, உரைநடை வேந்தரெலாம் தமிழில் பல நூல்கள் யாத்துத் தமிழ் மண்ணில் உலவவிட்டிருக்கிறார்கள். அவர்களைப் பின் பற்றியே யான் சென்றுள்ளேன். முன்னோர் எவ்வழி சென்றள்ளன ரோ அவ்வழியிலே நான் சென்றுள்ளேன். நான் தமிழ்ப் பேராசிரிய ராக விருந்த கராணத்தால் என்னுடைய கடமையை முடிந்தவரை மன நிறைவுடன் செய்திருக்கிறேன் என்று கூறி, மேலும் எனக்கு வெள்ளிவிழா நடத்தித் சிறப்பித்த தமிழ் அறிஞர் கழகத்துக்கும் நன்றிகூறி அமர்கின்றேன்; வணக்கம். 23. நாடகக் காட்சி அமைத்தல் நீங்கள் பல நாடகங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்நாடகங் களின் காட்சிகளை நாடகவாசிரியர்கள் எவ்வாறு அமைத்துள்ள ரென உன்னிப்பார்த்தல் வேண்டும். நாடகக் காட்சிகளை அமைப்ப தற்குமுன் கதையை நன்கு மனத்தில் கொண்டு, எவ்வெந் நாடக மாந்தரை அக்காட்சிக்குக் கொணர்தல் வேண்டும். எவ்வெவ்வாறு உரையாடல்களை அமைத்தல் வேண்டு மென எண்ணிப் பிறகு எழுதுதல் வேண்டும். நாடகக் காட்சிகள் நன்கு அமைந்தால்தான் நாடகம் சிறப்புறும். ஒவ்வொரு காட்சியிலும் காலம், இடம், அக்காட்சிக் குரிய மாந்தர்கள் பற்றிய விளக்கம் தெளிவாகவிருத்தல் வேண்டும். காட்டாக: பின்வரும் நாடகக் காட்சிகளைப் படித்து உணர்ந்து மனத்திற்கொண்டு, நாடகக் காட்சினளை அமைத்துப் பழகுக. மானங் காத்த மன்னன் காட்சி-1 இடம்: சேரநாடு; கருவூரில் அரண்மனைக் கொலு மன்றம். காலம்: காலை நடர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை, அமைச்சர், பொய்கையார், மற்றும் பல புலவர்கள். சேரமான்: புலவர் பெருமக்களே ! தங்கள் கூட்டுறவில் நான் அகங்களிக்கிறேன். எனக்கு இதனிலும் சிறந்த பேறு உண்டோ? அந்துவனார்: மன்னா! வாழ்க நின் கொற்றம்! நின் வாய்மை, தூய்மை, நேர்மை முதலிய நற்பண்புகளால் நாடே நல்லொழுக்கத்திற் சிறந்திட, மக்கள் மனங்களித்து வாழ்கின்றனர். நின் பெருமையைப் பாடும் நாங்களன்றோ பேறு பெற்றவராவோம்! சேரமான்: நான் கண்ணென மதித்துப் போற்றும் என் ஆசிரியப் பெருந்தகையின் இன்னருள் ஒளியால் நன்னெறிச் செல்லும் நல்லறிவு பெற்றேன். அவ்லொழுக்கப் பாதையறிந்து நடப்பதில் வியப்பில்லை யன்றோ! பொய்கையார்: அன்புடை மன்ன! நின்மொழி கேட்டு என் அகம் குளிர்கிறது. மகிழ்ச்சி! நினது அடக்கத்தை யாவரும் போற்றுவர் என்பதில் தடையில்லை. அமைச்சர்: சிலர் அழுக்காறும் கொள்ளுகின்றனர். சேரமான்: என்ன? அமைச்சர்: தங்கம் புகழ் பெருகி வருவதைக் கண்டு சோழ மன்னர் அழுக்காறு கொள்வதாக ஒற்றர் வாயிலாக அறிகிறேன். பொய்கையார்: உலகம் பலவிதம் மன்ன! இதைப் பொருட் படுத்த வேண்டாம். நாம் கலை மன்றம் செல்வோம். (அவை கலைகிறது.) காட்சி-2 இடம்: உறையூர்; சோழன் அரண்மனையில் கொலு மன்றம். காலம்: மாலை. நடர்: சோழன் கோச்செங்கணான், அமைச்சர்கள், மதிவலன், கயமன், படைத் தலைவன் படிறன், ஏவலர் முதலியோர். சோழன்: அமைச்சரே! நாட்டியம் நடைபெறலாமே! கயமன்: கட்டளை (கயமன் ஏவலால் ஒருத்தி நாட்டிய மாடி வணக்கம் செலுத்திச்செல்கிறாள்.) சோழன்: நன்று! நன்று! நாட்டியக் கலையின் மேன்மையே மேன்மை! கயமன் : மிகவும் உயர்வான கலை! மதிவலன் : சமண முனிவர்கள் இதை வெறுத்துக் கூறியிருக் கிறார்கள், வேந்தே! படிறன் : கலையின் பெருமையை உணராதவர்கள்! கயமன் : துறவிகளுக்குக் கலையின் உணர்வேது? சோழன் : துறவிகள் ஐம்புலனை அடக்கியவர்கள். ஆகை யால், இன்பக் கலைகளில் நாட்டம் வைக்க விரும்பு வதில்லை! படிறன் : (நகைத்து) துறவிகள் இன்பத்தையே விரும்புவ தில்லை! மதிவலன் : நிலைத்த இன்பத்தையே நாடுகிறார்கள்! சோழன் : நிறுத்தம்! நாட்டியம் முதலிய கலைகளின் இன்பம் நிலையா இன்பமோ? மிக நன்று! பொய்கையார் என்ற புலவர் கூறியது போலல்லவா இருக்கிறது! மதிவலன் : உண்மையைக் கூறினேன், மன்ன! சோழன் : (சினந்து) உண்மை! உலகம் உண்மையை எங்கே மதிக்கிறது? போர் தொடுத்துப் பகைவரைக் கடிந்து நாட்டைக் காக்கும் நம்மைப் பாராட்டுகிறதா, உலகம்? அரசாட்சியிற் கவலையின்றிப் புலவர்களுடன் கூடிக்கொண்டு உலகை மறந்து வாழும் சேரனையன்றோ புகழ்கிறது! கயமன் : பைத்தியக்கார உலகம்! சோழன் : போதும் நிறுத்தம்! பொய்கையாரின் மணக்கன் என்பதில் செருக்கடைகிறான் சேரன்! படிறன் : புலவர்களெல்லாம் சேரனைப் பொய்யாகப் புகழ்ந்து பாடி அவன் பெருமையைத் தெருவெல்லாம் பரப்பு கிறார்கள். அதை மெய்யென்று நம்பும் பேதை மக்கள் சேரனைப் போற்றுகிறார்கள்! கயமன் : இதற்கெல்லாம் காரணம் பொய்கையார்! சோழன் : ஆம்; அவர்தான்! அமைச்சரே! நீர் சென்று அப் புலவரை எவ்வாறேனும் நமது அவைக்குக் கொண்டு வரவேண்டும். என்ன? கயமன் : இன்றே செல்கிறேன். (சோழன் எழுந்ததும் அவை கலைகிறது.) 24. மாணவர் மன்றங்களுக்கு விதிகள் அமைத்தல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாணவர் மன்றம், அல்லது இலக்கியக் கழகம் என ஓர் அமைப்பு ஏற்படுத் துதல் மரபு, அம் மன்றங்கள் மாணவர்களின் கல்வி நலத்தை வளர்ப்பதற்காகவும், பயன்படுகின்றன. மன்றமென ஒன்று இருக்கு மானால், அதற்கெனச் சில விதிகளும் கட்டுப்பாடுகளும் இருத்தல் வேண்டும். இவ்வாறு இளமையிலேயே மன்றங்கள் அமைத்து, அவற்றிற்குரிய விதிகளும் அமைக்கப் அமைத்து, அவற்றிற்குரிய விதிகளும் அமைக்கப் பயிற்சி பெறுவது, பின்னர்ப் பொது வாழ்க்கையில் பெரிதும் பயன்படும். இங்குக் கீழே தரப்பட்டுள்ள மன்ற விதிகளைப் பார்த்து, நீங்கள், உங்கள் மன்றங்களுக்கும் கழகங்களுக்கும் விதிகள் அமைத்துப் பழகுக மன்ற விதிகள் 1. மன்றத்தில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவரும் உறுப்பினராய் இருத்தல் வேண்டும். 2. மன்றத்திற்குத் தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர், துணைச் செயலர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப் பெறல் வேண்டும். 3. மன்ற உறுப்பினர்களில் அறுவர் அல்லது எண்மர் செயற் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறல் வேண்டும். 4. கூட்டம் வாரத்திற்கு ஒருமுறை நடாத்தப் பெறல் வேண்டும். ஆசிரியரோ, மாணவரோ தலைவராக இருக்கலாம். 5. திங்கள் ஒருமுறை வெளியிலிருந்து புலமைசான்ற அறிஞர் களைச் சொற்பொழிவாற்றக் கூட்டி வருதல் வேண்டும். 6. மன்றத்தின் சார்பிலிருக்கும் படிப்பகத்திற்குக் கல்வி பற்றிய அனைத்து நாளிதழ்களும், வார இதர்களும், திங்களிதர் களும் வரவழைக்கப்டல் வேண்டும். 7. மன்றக் கூட்டங்களில் எல்லா மாணவர்களும் பங்கு பெறல் வேண்டும். 8. நூல்நிலையத்திற்கு வேண்டிய புத்தம் புதிய தமிழ் நூல்கள் வாங்கப்படல் வேண்டும். 9. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மன்ற ஆண்டு விழாநடத்தி, அவ்விழாவில் மாணவர்க்குப் பரிசு வழங்கல் வேண்டும். மொழிப் பயிற்சி 1. வாக்கியம் - பலவகைகள் சொற்கள் தொடர்ந்து நின்ற, பொருள் விளக்கந் தருதலைத் தொடர்மொழி என்றும், சொற்றொடர் என்றும், வாக்கியம் என்றும் கூறுவர். அவ்வாக்கிய வகைகளைப் பற்றி இங்கே காண்போம். அ.செய்தி வாக்கியம் : ஏதேனும் ஒரு செய்தியை வெளிப்படுத்தும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும். எ-டு; தமிழக முதலமைச்ச், பட்டமளிப்பு விழாப் பேருரை யைத் தமிழில் நிகழ்த்தினார். இஃது, ஒரு செய்தியைத் தன்னகத்தே கொண்டு விளங்குவ தால், செய்தி வாக்கியம் எனப்படுகிறது. ஆ.வினா வாக்கியம் : வினாப் பொருள்பட வரும் தொடர், வினாவாக்கியம் எனப் படுகிறது. எ-டு: வழியிற் கிடந்த இப் பொருள் யாருக்குரியது? இத்தொடர் வினாப் பொருள்பட்டு முடிதலின் வினா வாக்கியம் எனப்படுகிறது. இ.கட்டளை வாக்கியம் : ஏவல் வினை கொண்டு முடியும் வாக்கியம், கட்டளை வாக்கியம் எனப்படும். எ-டு: சமுதாயத்தில் சிறப்பிடம் பெறக்கருதினால்? முதற்கண் பொருளைத் தேடு. தேடு என்ற ஏவல் வினையைக் கொண்டிருத்தலின் இது கட்டளை வாக்கியமாயிற்று. ஈ.உணர்ச்சி வாக்கியம்: மெய்ப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கூறப்படும் வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் எனப்படும். எ-டு: மானும் புலியும் ஒருதுறையில் நீர் அருந்தும் இந் நாட்டின் ஆட்சித் திறந்தான் என்னே! வியப்பு என்னும் மெய்ப்பாட விளங்க உரைக்கப் படுதலின், இஃது உணர்ச்சி வாக்கியமாயிற்று. இனி இவ்வாக்கியங்களை அவற்றின் அமைப்பு முறை கொண்டு கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம். தனி வாக்கியம்: புலவன் இயற்கையிலிருந்தே கவிதையைப் பெறுகிறான். இங்கு, ஒரெழுவாயும் ஒரு பயனிலையும் வர, வாக்கியம் முற்றுப் பெறுதலின், இது தனி வாக்கியம் எனப்படும். தொடர் வாக்கியம்: ஆசிரியர் வந்தார்; வினாக்களை விடுத்தார்; பாடத்தைத் தொடங்கினார். இவ்வெடுத்துக் காட்டில், ஆசிரியர் என்னும் எழுவாய் வந்தார், விடுத்தார், தொடங்கினார் என்னும் மூன்று பயனிலை களைக் கொண்டுள்ளது. இத்தொடர் ஆசிரியர் வந்து, வினாக்களை விடுத்துப் பாடத்தைத் தொடங்கினார் என்று ஒரே தொடர்க்குரிய பொருளைத் தருதலின் தொடர் வாக்கியம் எனப்படும். கலவை வாக்கியம்: செங்குட்டுவன், பத்தினிக் கல்லைக் கங்கையிலே நீராட்டிக் கனகவிசயர் முடித்தலையி லேற்றிக் கொணர்க என, ஆணையிட்டான். இவ்வெடுத்துக்காட்டில், செங்குட்டுவன் ஆணையிட்டான் என்பது தலைமை வாக்கியம். பத்தினிக் கல்லைக் கங்கையிலே நீராட்டிக் கனகவிசயர் முடித்தலையிலேற்றிக் கொணர்க என்பது சார்பு வாக்கியம். ஒரு தலைமை வாக்கியமும், சார்பு வாக்கியமும் கலந்து வருவது கலவை வாக்கியம் ஆகும். செய்வினை வாக்கியம்: திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் எழுவாய் செய்த செயலைப் பயனிலையாகக் கொண்டு முடியும் வாக்கியம், செய்வினை வாக்கியம் எனப்படும். செயப்பாட்டுவினை வாக்கியம்: திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது செயப்படு பொருள் எழுவாயாக மாற, பயனிலையில் படு என்னும் துணைவினை புணர்க்கப்பட்டு, செய்து முடிந்தது போலக் கூறுதல், செயப்பாட்டு வினை வாக்கியமாகும். உடன்பாட்டு வாக்கியம்: நான் புலால் உணவை விரும்பி உண்டேன் இவ்வெடுத்துக்காட்டு நான் என்னும் எழுவாயின் தொழில் நிகழ்ச்சியை உண்டேன் என்னும் உடன்பாட்டு வினையால் வெளிப்படுத்தலின், இஃது உடன்பாட்டு வாக்கியம் ஆயிற்று. எதிர்மறை வாக்கியம்: நான் புலால் உணவை உண்ணேன் இவ்வெடுத்துக்காட்டு, நான் என்னும் எழுவாயின் தொழில் நிகழாமையை உண்ணேன் என்னும் எதிர்மறை வினையால் வெளிப்படுத்தலின், இஃது எதிர்மறை வாக்கியமாயிற்று. நேர்கூற்று வாக்கியம்: கைகேயி இராமனை நோக்கி, பதினான் ஆண்டுகள் காட்டிலே வாழ்க என்று கூறினாள். இவ்வெடுத்துக்காட்டில் கைகேயி வாய்மொழியை மாற்றாது அவ்வாறே கூறியிருத்தலின், இது நேர்கூற்று வாக்கியம் எனப்படும். கூறின செய்தி மேற்கோட் குறிக்குள் காட்டப்பட்டிருத்தலை நோக்குக. அயற் கூற்று: கையேயி இராமனிடம் பதினான்கு ஆண்டுகள் காட்டிலே வாழுமாறு கூறினாள். இவ்வெடுத்துக் காட்டில் மேற்கோள் குறி நீக்கப்பட்டிருத்தலையும், தன்மையிடம் படர்க்கையிடமாக்கப் பட்டிருத்தலையும், வாழ்க என்னும் முற்று வாழுமாறு என எச்சமாக்கப் பட்டிருத்தலையும் நோக்குக. இஃது அயற் கூற்று எனப்படும். 2. வாக்கிய அமைப்பு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், எச்சங்கள் நிற்கும் முறை தமிழ் மொழியில் எழுவாய் தொடக்கத்திலும் பயனிலை இறுதி யிலும், செயப்படுபொருள் இடையிலும் அமைவதே பெரு வழக்கு. எ-டு: எழுவாய் செயப்படுபொருள் பயனிலை பொன்முடி அறம் செய்தான். இவை முறை மாறி வருதலும் உண்டு. எ-டு: திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இங்கே, செயப்படு பொருள் தொடக்கத்திலும், எழுவாய் இடையிலும், பயனிலை இறுதியிலும் நிற்றல் காண்க. இயற்றியவர் என்னும் வினையாலணையும் பெயர், திருவள்ளுவர் என்னும் பெயர்ப் பயனிலையைக் கொண்டு முடிந்தது. வாக்கியத்தில் எழுவாய் வெளிப்பட்டு நிற்றலே பெருவழக்கு. எ-டு: நான் செல்வேன் நீ வருவாய் சிறுபான்மையாக எழுவாய் வெளிப்படாது தொடர் அமைதலும் உண்டு. அதனைத் தோன்றா எழுவாய் என்பர். எ-டு: வந்தேன் (நான் - தோன்றா எழுவாய்) வந்தாய் (நீ - ) வாக்கியங்களில் வரும் பெயரெச்சங்கள் பெயருக்கு முன்னும், வினையெச்சங்கள் வினைக்கு முன்னும் வரும். எ-டு: ஒடிந்த வாள் (பெயரெச்சத் தொடர்) நடந்து வந்தான் (வினையெச்சத் தொடர்) செயப்படு பொருளின்றி வாக்கியம் அமைதல் உண்டு. சிறுபான்மையாக எழுவாய் இன்றியும் வாக்கியம் அமைதல் உண்டு. ஆனால், எவ்வகையினும் பயனிலையின்றி வாக்கியம் நிரம்புதல் இல்லை. ஒரு கலவை வாக்கியத்தில், எழுவாய் அடைமொழிகள் எழுவாயைத் தழுவியும், செயப்படு பொருள் அடைமொழிகள் செயப்படுபொருளைத் தழுவியும், பயனிலை அடைமொழிகள் பயனிலையைத் தழுவியும் வரும். எ-டு: இந்தியப் பெருநிலத்தின் விடிவெள்ளி யென வந்த காந்தி யடிகள், மாந்தருக்கு இன்றியமையாத விடுதலை உணர்வை இடை யறாரத ஊட்டினார். இந்தியப் பெருநிலத்தின் விடிவெள்ளியென வந்த என்ற பகுதி, எழுவாயாகிய காந்தியடிகள் என்பதைத் தழுவியும், இன்றியமையாத என்பது விடுதலை உணர்வு என்னும் செயப் படுபொருளைத் தழுவியும், இடையறாது என்பது, ஊட்டினார் என்னும் பயனிலையைத் தழுவியும் பொருள் விளக்கம் தருகின்றன. 3. ஒரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளியிடுதல் முன்னர்ப் பலவகை வாக்கியங்களைப் பார்த்தோம். ஒரு வாக்கியத்தையே பலவகை வாக்கியங்களாக மாற்றி அமைத்தலும் கூடும். வாக்கிய மாற்றப் பயிற்சியை மேற்கொள்ளுதல், மொழிநலத் தேர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றாகும். கீழ் வரும் வாக்கியத்தை உற்றுணர்க. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களையாரும் மறவார் 1. இஃது ஓர் எழுவாயையும், ஒரு பயனிலையையும் கொண் டிருத்தலின் தனி வாக்கியம் என்று கூறப்படும். 2. வினா வடியாகப் பிறந்த பெயராகிய யாரும் என்பதன் வினையாகிய மறவர் என்பதைப் பயனிலையாகக் கொண்டிருத் தலின் செய்வினை வாக்கியம் என்றும் கூறலாம். 4. இவ்வாக்கியம் எதிர்மறை வினையைக்கொண்டு முடிந் திருத்தலின், எதிர்மறை வாக்கியம் என்றும் கூறலாம். இவ்வாக்கியத்தை வேறு பல வாக்கியங்களாகவும் மாற்றி யமைக்கலாம். 1. உள்ளத்தை உருக்குவன சிறந்த பாடல்கள்; அவற்றை யாரும் மறவார் (தொடர்வாக்கியம்) 2. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களாயின், அவற்றை யாரும் மறவார். (கலவை வாக்கியம்) 3. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்கள், யாராலும் மறக்கப்படா. (செயப்பாட்டு வினை வாக்கியம்) 4. உள்ளத்தை உருக்காத சிறப்பற்ற பாடல்களை யாரும் மறப்பர். (உடன்பாட்டு வாக்கியம்) 5. விபுலானந்தர் உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யாரும் மறவார் என்று கூறுகின்றார். (நேர்கூற்று வாக்கியம்) 6. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யாரும் மறவாரென்பதாக விபுலானந்தர் கூறுகின்றார். (அயற்கூற்று வாக்கியம்) 7. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யார்தாம் மறப்பர்? (வினா வாக்கியம்) 8. உள்ளத்தை உருக்காத, சிறந்த பாடல்களாயின் யாவரும் மறக்கட்டும். (கட்டளை வாக்கியம்) 9. உள்ளத்தை உருக்குகின்ற சிறந்த பாடல்களை யாரும் மறப்பரோ! (உணர்ச்சி வாக்கியம்) 4. பத்தியமைப்பு (விரிவாக) பத்தி என்பது கட்டுரையின் ஒருறுப்பாகும். பத்தியானது பல தொடர் மொழிகளால் ஆக்கப்பட்டிருப்பினும், ஒரு கருத்து அல்லது குறிப்பை விரித்துரைப்பதாகவே அமையும். கருத்து அல்லது குறிப்பை உய்த்துணரும் வகையில் கரந்து வையாது வெளிப் படையாகத் தாங்கி நிற்றல் சிறப்புடையதாகும். பத்தியின் கருத்து அல்லது குறிப்பு, பத்தியின் எப்பகுதியில் வேண்டுமாயினும் நிற்கலாம். எனினும், தொடக்கத்திலேயே நிற்றல் கற்பார்க்கு இனிமையைப் பயக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பல கருத்துக்களை அல்லது குறிப்புக் களை, ஒரே பத்தியில் திணித்து வைத்தல் கட்டுரையின் அழகிற்கும், இனிமைக்கும் ஊறு விளைவிக்கும். ஒரு பத்தியை முடித்து, அடுத்த பத்தியைத் தொடங்கும் பொழுது, பொருள் நலங்கருதியும் எழில் நலங்கருதியும், தக்க இடைவெளி விட்டும், இடப்புறத்தில் சிறிது இடம் விட்டும் எழுதத் தொடங்குதல் வேண்டும். நும் பாடப் புத்தகத்தில் உள்ள பத்தியை நோக்கி இதனைத் தேர்க. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் பத்திகளையும் நோக்குக: முன்பு இசைக் கலையின் உயிர் நாடியாக யாழ் என்னும் கருவி திகழ்ந்தது; அக் கருவியை இயக்குவதிலே திறமை மிக்கதாய்ப் பாணர் குடி எனும் கலைஞர் பரம்பரை ஒன்று வாழ்ந்து. காலவெள்ளத்தில் படிப்படியாக இப் பாணர் குலமும், யாழும், தமிழ்ப்பண் மரபும் மறைந்துபோயின. நமது கலையிழப்பு வரலாற்றில், உள்ளம் உருக்கும் உச்ச நிலையில் நிற்பது யாழ் இழப்பு, வரலாறேயாகும். - தமிழண்ணல். இப் பத்தியின் கருத்து அல்லது குறிப்பு என்று கூறப்படும் யாழ் பத்தியின் தொடக்கத்திலேயே வெளிப்பட்டு நிற்றலை நோக்குக. மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழன், விலங்குகளின் தோலை மரங்காளிற் காயப்போட்டு வைத்தான். அவற்றில் உலர்ந்த குச்சிகள் உராயும்போதெல்லாம் ஓர் ஒலி எழக் கேட்டான். அதைப் பற்றி எண்ணினான்; தோற் கருவிகள் தோன்றின. - தமிழண்ணல். இப்பத்தியில் தோற் கருவிகள் என்னும் குறிப்பு இறுதியில் நிற்றலை நோக்குக. மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழன், விலங்குகளின் தோலை மரங்களிற் காயப்போட்டு வைத்தான். அவற்றில் உலர்ந்த குச்சிகள் உராயும்போதெல்லாம் ஓர் ஒல எழக் கேட்டான். அதைப் பற்றி எண்ணினான் தோற் கருவிகள் தோன்றின. - தமிழண்ணல். இப்பத்தியில் தோற் கருவிகள் என்னும் குறிப்பு இறுதியில் நிற்றலை நோக்குக. 5. நடை (விரிவாக) நடை என்றால் ஒழுக்கம் எனப்படும். சொற்கள் பொருளை விளக்க ஒழுங்காக அமைந்து செல்லுதலை நடை என்றனர். சொற்கள் ஒழுங்குபெற அமையாது முரணி நிற்பின் கருத்துக் குழப்பம் ஏற்படும். ஆதலின் கருத்துத் தெளிவிற்கும், அழகுபட மொழிதற்கும் சொற்கள் ஒழுங்குபெற அமைதல் இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இதனையே நடை என்கிறோம். நம் தமிழ்மொழிக்கண் விளங்குகின்ற நடைகள் பலவாம். அவற்றை நெறிப்படுத்திக் கூறின் ஆற்றெழுக்கு நடை, மணிபவள நடை, தனித் தமிழ் நடை, செந்தமிழ் நடை, கொடுந் தமிழ் நடை, கொச்சை நடை, களவியல்நடை, செய்யுள் நடை, இலக்கிய நடை, தருக்க நடை, கலப்பு நடை எனப் பலவகையாய் விரியும். ஆற்றொழுக்கு நடை: ஆறானது எவ்வாறு தங்கு தடையின்றி ஒரே சீராக ஓடுகின்றதோ; அஃதே போன்று சொற்களும் தங்கு தடையின்றி ஒரே சீராகச் செல்லுமாறு உரைக்கப்படுவது ஆற்றொழுக்கு நடையாகும். எடுத்துக்காட்டு: கையில் வில்லை எடுத்துக்கொண்டு, காட்டில் வாழும் விலங்குகளை வேட்டையாடினான் தமிழன் அவ்விலங்குகளைக் குறிபார்த்து அம்பைத் தொடுத்து, நாணேற்றி விடும்போ தெல்லாம் அந்நாண் ஓர் இனிய ஓசையை எழுப்பக் கேட்டான்; மனம் மகிழ்ந்தான்; வில்லிப்பூட்டிய நரம்பினால் கொலை முடிப்பதை விட்டு, இசை வடிப்பதை ஆராய்ந்தான். வில் யாழும், யாழ் வகைகளும், நரம்புக் கருவிகளும் உருவாயின. யாழ் எங்கே - தமிழண்ணல். மணிபவள நடை : (மணிப்ரவாள நடை) மணியும் பவளமும் விரவத் தொடுத்த ஆரம் போல, வட சொல்லும் தென்மொழியும் விரவத் தொடுத்த நடை மணிபவள நடையாகும். ஞாயிற்றுக்கிழமை அவதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில், என் சிரேஷ்ட குமாரன் விஜயனுக்குப் பிரம் மோபதேசம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி முகூர்த்தம் எனது கிருகத்தில் நடக்கிறபடியால், தாங்கள் பந்து மித்திரர்களுடன் வந்திருந்து குழந்தையை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இங்ஙனம் சௌம்யநாராயணன். தனித் தமிழ் நடை: இலக்கண அமைப்பினின்றும் வழுவாது, வேற்றுச்சொல் விரவாது, தனித் தமிழ்ச் சொல்லே புணர்த்து எழுதப்படுவது தனித் தமிழ் நடையாகும். மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே நினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும் போது, உலக இயற்கை என்னும் மலைக் குகைகளிலே அரித்தெடுத்துவந்த அருங்கருத்துக் களான பொற்றுகள், இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்தே சிதர்ந்து மின்னிக் கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற் சிதர்களை எல்லாம் ஒன்றாய்ப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பி லிட்டு உருக்கிப் பசும்பொற்ற பிண்டமாகத் தருவதே பாட்டு என்று அறிதல் வேண்டும். -மறைமலையடிகள். செந்தமிழ் நடை: வேற்றுச் சொல் விரவாது, தமிழ்ச் சொற்களால் ஒசை நயம்பட எழுதுவது செந்தமிழ் நடையாம். அப்போது சேய்மையில் ஒல்லென ஓர் ஒலி கிளம்பியது. அதன் தன்மையை மனத்தாற் கருது முன்னரே கடுங்காற்று வேக மாய்ச் சுழன்று வீசத் தலைப்பட்டது. விண்ணுக்கடங்காமல் வெற்புக் கடங்காமல் வீசிய புயல்காற்றின் வெம்மையால் மலைப் பொருள்கள் எல்லாம் மயங்கிக் சுழன்றன. அக்கடும் புயலின் வேகத்திற்கு ஆற்றாது மலையே நிலைகுலைந்தது. -ரா.பி.சேதுப்பிள்ளை. கொடுந்தமிழ் நடை: செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் வழங்குஞ் சொற்களால் தொடுக்கப்படுவது. இது பெருவழக்காயில்லாமையானும், சிறப்பின்மையானும், மாணர்க் கர்க்கு இந்நடை வேண்டாததாகலானும் எடுத்துக்காட்டுத் தரப்பட வில்லை. கொச்சை நடை: இலக்கண அமைப்பின்றி இழிவழக்குகள் புணர்த்து, எல்லாச் சொல்லும் விரவிவர எழுதப்படுவது. இது மாணக்காரல் வெறுத்தொதுக்கப்பட வேண்டியதாகும். காலம்பறவே கண்ணால வூட்டுக்குப் போனான். நாஷ்டாவை முடிச்சுக்கிட்டு பேஷா ஒரு தூக்கம் போட்டான். மறுபடியும் மத்தியானச் சோறு துன்னப் பொறப்பட்டுப் பூட்டான். களவியல் நடை: அக்காலத்துப் பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் சென்றது. செல்ல, பசி கடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாம் கூவி, வம்மின்;யான் உங்களைப் புரந்தரகில்லேன்; என்தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கறிந்த வாறுபுக்கு, நாடு நாடாயினஞான்று என்னை உள்ளி வம்மின், என்றான். -இறையனார் களவியல். செய்யுள் நடை : இஃது எதுகைத் தொடை அமையவும், அருஞ்சொற்கள் புணர்த்தும், புணர்ச்சி இலக்கணம் வழுவாதும் எழுதப்படுவது. வடவாரிய மன்னராங்கோர் மடவரலை மாலைசூட்டி யுடனுறைந்த விருக்கை தன்னி லொன்றும்மொழி நகையிராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழு மிமய நெற்றியில் விளங்கு விற்புலி கயல் பொறித்த நாளெம்போலும் முடிமன்ன ரீங்கில்லை போலும் என்ற வார்த்தை! (உரைப்பாட்டு மடை) - சிலப்பதிகாரம். இலக்கிய நடை : இஃது அருஞ்சொற் புணர்த்தும், புணரியல் வழுவாதும் எழுதப்படுவதாகும். ஒழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும், அறம் வளரப் பாவந்தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும், அறியாமை நீங்க நித்தவநித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதின் மாலைய வாகிய இம்மை மறுமையின் பங்களினு வர்ப்பு, பிறவித் துன்பங் களும் தோன்றும், அவ தோன்ற வீட்டின் கணாசையுண்டாம், அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனின் முயற்சிக ளெல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோக முயற்சியுண் டாம், அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய என தென்பதும் அகப்பற்றாகிப் யானெப்பதும் விடும், ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே யுவர்த்துவிடுதலெனக் கொள்க. -பரிமேலழகர். தருக்கநடை: வினாவிடை அமைப்பில் தொடரும் நடையைத் தருக்க நடை என்பர். கற்பார் மனத்தில் நன்கு பதிய இந்நடை சாலத் துணை புரியும். உலகம் ஒருகுலமாதல் வேண்டும் என்று பேசுதல் எளிது; எழுதுதல் எளிது. பேச்சும் எழுத்தும் செயலாதல் வேண்டும். செயலை எழுப்பவல்ல கருவி உளதா? உளது. அஃது அன்பு. உலகை ஒருகுல மாக்குதற்கென்று அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அன்பு யாண்டு இல்லை? அஃது யாண்டும் உளது. அவ்வன் புண்மைக்கு அறிகுறி என்னை? வளர்ச்சி. வளர்ச்சியற்ற உலகம் உண்டு கொல்? இல்லை. -திரு.வி.க. மேலும், ஒரு பொருள்பற்றி இருவர் உரையாடல் நிகழ்த்து வதாக எழுதுவதும் தருக்க நடையே யாகும். கலப்பு நடை: பல மொழிச் சொற்களையும் கலந்து எழுதுவது கலப்பு நடை எனப்படும். இதுவும் மாணாக்கரால் வெறுத்தொதுக்கப் பட வேண்டியதே. அலமாரியில் இருந்த பணத்தைத் திருடியதற்காகக் கை தியாக்கப்பட்டுக் குற்றம் ருஜு வாக்கப்பட்டு அதனால் கோர்ட் டாராலே ஒறுக்கப்பட்டவன், சில நாளில் ஜெயில் சம்பியை வளைத்து வெளியேறித் தப்பி விட்டான். ஆனால், சிறிது காலத் திற்குப் பிறகு அவன் காயலாக் கிடந்து மரணமுற்றான். அலமாரி, ஜன்னல் போர்த்துக்கீசியச் சொற்கள் கைதி உருதுச் சொல் ருஜு கோர்ட்டார் ஆங்கிலம் மரணம் வடமொழி காயல் - (காய்ச்சல்) இழிவழக்கு பழமொழிச் சொற்களும், இழி வழக்கும் கலந்து எழுதப் படுவதே கலப்பு நடை. இதனை மாணாக்கர் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். 6. வழூஉச் சொற்களும் திருத்தமும் வீட்டிலும் வெளியிலும் பேசப்படுகின்ற கொச்சை மொழி களும், இழி வழக்குக்களும் மெல்ல மெல்ல எழுத்திலும் இடம் பெறத் தொடங்கிவிடுகின்றன. ஆதலின் தொடக்கத் திலேயே இச்சொற்களைப் பேச்சிலும் எழுத்திலும் விலக்க வேண்டுவது இன்றியமையாததாகும். அதற்குத் துணையாக ஈண்டுச் சில வழூஉச் சொற்களும் அவற்றின் திருத்தங்களும் தரப்பட்டுள்ளன. வழூஉச் சொற்களை யாண்டுக் கேட்பினும் உடனே குறித்துக்கொண்டு ஆசிரியரை அண்மி அச்சொல்லின் உண்மை வடிவத்தை அறிய முயல்க. வழூஉச் சொற்கள் திருத்தம் அண்ணாக் கயிறு அரைஞாண் கயிறு அமக்களம் அமர்க்களம் ஆச்சு ஆயிற்று இடது பக்கம் இடப்பக்கம் வலது பக்கம் வலப்பக்கம் உடமை உடைமை தாவாரம் தாழ்வாரம் செகப்பு சிவப்பு சேதி செய்தி நொங்கு நுங்கு வவுறு வயிறு மானம் பாத்த பூமி வானம் பார்த்த பூமி வெக்கம் வெட்கம் அப்பரம் அப்புறம் உசிரு ஊயிர் சிலவு செலவு தலகாணி தலையணை நாத்து நாற்று 7. விலக்குதற்குரிய இழி வழக்குக்கள் அத்தைக்காரி, அண்ணாச்சி, ஆம் படையான், ஆம் பிளைப் பிள்ளை, வென்னித்தண்ணி, கதைக்குறான், ஜல்ப் பிடிச்சிருக்கு, இதுக்கினு போறான், கேட்டு வாசல், டபாய்க்கிறான், பேஜாரு, ஷாப்புக்கடை, ஒட்லவுழுந்து கெட, நாமஞ் சாத்தறான், வெறுத்து வாங்கிட்டான், சாயம் வெளுத்துப் போச்சு, டிமிக்கி அடிச்சான், டேக்கா கொடுத்தான், வாலாட்றான், டம்பாச்சாரி. இவை போல் வனவாகிய இழிவழக்குக்களை மாணாக்கர், பேச்சிலும் எழுத்திலும் விலக்குதல் வேண்டும். 8. நிறுத்தற்குறிப் பயிற்சிகள் முன் வகுப்புக்களில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற் புள்ளி,முற்றுப்புள்ளி, வினாக்குறி, உணர்ச்சிக்குறி இரட்டை மேற்கோட் குறிகள், ஒற்றை மேற்கோட் குறிகள், பிறைக்கோடு, வரலாற்றுக் குறி, கீழ்க்கோடிடல், இடைப்பிறவைப்புக் குறி முதலிய குறியீடுகளை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுது மேலும் இரண்டு குறியீடுகளைப் பற்றி அறிந்து கொள்க. நாம் தொடர்ந்து எழுதிச் செல்லும்போது ஏதேனும் விடுபட்டால், அதனை எந்த இடத்தில் விடுபட்டதோ அந்த இடத்தில் வரிப்பிளந்து மேலே எழுதுகிறோம். அவ்வாறு எருதும் போது இதையும் சேர்த்துப் படியுங்கள் என்பதற்கு அடை யாளமாக இவ்வாறு ஒரு குறியீட்டைப் பயன் படுத்துகிறோம். இதனைச் செருகற்குறி என்பர். . மேற்கோளாகக்காட்டும்ஒருதொடரில்வேண்டாதபகுதிகள்இருந்தால்அதனைநீக்கிவிடுகிறோம்.அவ்வாறுநீக்கும்பொழுதுசொற்கள்நின்றபகுதியில்............ï›thWதொடர்புள்ளிகŸஇட்டேh***’இவ்வாWஉடுக்குறிகளிட்டேhகாட்டுகிறோம். விடுபட்ட சொற்களை இக்குறியீடுகள் காட்டுவ தால், இவை விடுபாட்டுக் குறிகள் எனப்படும். 9. மரபு முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லாற் குறித்தார்களோ, அப்பொழுளை அச்சொல்லாற் குறிப்பதே மரபாகும். அவ்வாறு கூறாது பிறவழியிற் கூறின் மரபு வழுவாம். கீழே சில மரபு வழுக்களும் அவற்றிற்கான திருத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாணாக்கர் கற்று மரபு வழியிற் நிற்பாராக. மரபு வழு திருத்தம் ஆட்டுச் சாணம் ஆட்டுப் பிழுக்கை யானைச் சாணம் யானை இலண்டம் கரும்புத் தோப்பு கரும்புத் தோட்டம் கரும்பிலை கரும்புத் தோகை புலி கத்தும் புலி முழங்கும் யானை உறுமும் யானை பிளிறும் தேன் உண் தேன் நக்கு நீர் உண் நீர் பருகு மயில் கூவும் மயில் அகவும் நாய் சத்தமிடும் நாய் குரைக்கும் நரி குரைக்கும் நரி ஊளையிடும் காக்கா கத்தியது காக்கை கரைந்தது குயில் கரைந்தது குயில் கூவியது யானை ஓட்டி யானைப் பாகன் சந்தனம் அணிந்தான் சந்தனம் பூசினான் பால் சாப்பிடு பால் குடி மாடு புல்லுண்ணும் மாடு புல்மேயும் 10. உவமைகளும் பழமொழிகளும் வைத்தெழுதுதல். உவமைகள் : அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்கு வதற்கும், அழகுபடச் சொல்வதற்கும் நம் முன்னோர் உவமை களைப் பயன்படுத்தி வந்தனர். கீழே சில உவமைத் தொடர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நும் சொந்த வாக்கியங்களில் அமைத்துப் பயில்க. அத்தி பூத்தாற் போல அன்றலர்ந்த மலர் போல அலை ஓய்ந்த கடல் போல அழலில் இட்ட மெழுகு போல ஆலை வாய்ப்பட்ட கரும்பு போல இலவு காத்த கிளிபோல இருதலைக் கொள்ளி எறும்பு போல உள்ளங்ககை நெல்லிக் கனி போல ஊமை கண்ட கனவு போல எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தாற் போல கதிரவனைக் கண்ட தாமரை போல கடன்பட்டார் நெஞ்சம் nபாலFடத்துள்ïட்டÉளக்குப்nபாலjமரைïலைத்jண்ணீர்nபாலgழம்eழுவிப்gலில்ÉGந்தாற்gலtந்தபு©ணிலேtல்நுiழந்தாற்ghy பழமொழிகள் : நம் முன்னோர்தம்வாழ்நாளிற்கண்டபல பேருண்மைகளைத்திட்பநுட்பம் bசறிந்தáWjடர்களால்கூ¿யுள்ளனர்.அt‰iw இற்றை நாளில் பழமெhழிகள்எனவHக்கிறோம்.பேச்சிY«, எழுத்திலும் பழமொழிகளைப் பயன்படுத்துதல் அழகும், செறிவும் தருதலின், கீழே தரப்பட்டுள்ள பழமொழிகளை மாணக்கர் பயன்படுத்தி நலம் பெறுவாராக. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம். அகத்தின் அழகு முகத்திலே தெரியும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஆயிரம் காக்கைக்கு ஒரு கல். ஆனைக்கும் அடி சறுக்கும். இக்கரைக்கும் அக்கரை பச்சை, உப்பிட்ட வரை உள்ளளவும் நினை. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? குறை குடம் ததும்பும்; நிறை குடம் ததும்பாது கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை. கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை. பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். பதறாத காரியம் சிதறாது. பழகப் பழகப் பாலும் புளிக்கும். பொறுத்தார் பூமி யாள்வார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. 11. உவமை உருவக மாற்றம் அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளை உணர்த்தலே உவமையின் நோக்கம் என்று குறிப்பிட்டோம். இவ்வாறு வரும் உவமைகளை உருகங்களாகவும் மாற்றிக் கூறலாம். ஆதலின் உவமை, உருவகம் ஆகிய இரண்டின் இயல்புகளையும், அற்றை மாற்றும் முறைகளையும் பற்றிக் காண்போம். தாமரை முகம் இது தாமரை போன்ற (மலர்ந்த) முகம் என விரியும். இத்தொடர் உவமானம், உவமேயம், உவம உருபு, பொதுத்தன்மை என்ற நான்கு உறுப்புக்களைக் கொண்டுள்ளது. இங்கே, தாமரை: உவமானம்; முகம்; உவமேயம்; போன்ற; இரண்டையும் ஒப்பிடும் உவம உருபு; மலர்ச்சி; இரண்டிற்கும் உள்ள பொதுத்தன்மை ஆகும். உவமத் தொடரில் உவமானம் முன்னும், உவமேயம் பின்னுமாக வரும். உவமையை உருவகமாக மாற்றல்: இவ்வுவமைத் தொடரை உருவகத் தொடராக மாற்ற வேண்டு மானால், உவம உருபாகிய போன்ற என்ற சொல்லை நீக்கி, உவமையாகிய தாமரையின் தன்மையைப் பொருளாகிய முகத்தின் மீது ஏற்றி முகத்தாமரை என மொழிதல் வேண்டும். இவ்வாறு வரும் இத்தொடரை விரித்தால், ஆகிய என்னும் பண்புருபு மறைந்து நிற்பது புலனாகும். இவ்வாறு மாற்றும்பொழுது உவமேயம் முன்னும், உவமேயமாகிய தமிழை இறுதியில் வைத்தும், இடையில் போன்ற என்ற உவம உருபை விரித்தும் எழுதின் தேன்போன்ற (இனிய) தமிழ் என உவமைத் தொடராக மாறும். கீழே தரப்பட்டுள்ள உவமைகளையும், உருவகங்களையும் பிரித்தெடுத்து மாற்றி எழுதிப் பயில்க. பவளவாய், முகமதி, பாதமலர், பால்போலும் இன்சொல். 12. வல்லெழுத்து மிகும் இடங்களும் மிகா இடங்களும் (விரிவாக) தமிழ் மொழியில் புணர்ச்சியிலக்கணம் பொருட் செறிவு மிக்கது. ஆதலின் அதனை நன்கு விளங்கிக் கற்று எழுதப் புகுதல் மாணாக்கர் கடனும். எனவே ஈண்டு வல்லெழுத்து மிகும் இடங் களும், மிகா இடங்களும் தொகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. மாணாக்கர் கற்றுப் பயன் பெறுவாராக. 1. அ,இ,உ என்னும் சுட்டெழுத்துக்களின் முன்னும் எ என்னும் வினா எழுத்தின் முன்னும் வருமொழியில் வல்லினம் வந்தால் மிகும். எ-டு: அ+ கோயில் = அக்கோயில் இ + பள்ளி = இப்பள்ளி உ + தென்னை = உத்தென்னை எ + சார்பு = எச்சார்பு 2. சுட்டெழுத்துக்களின் திரிபுகளாகிய அந்த, இந்த என்பவற்றின் முன்னும், எ என்னும் வினாவெழுத்தின் திரிபாகிய எந்த என்பதன் மூன்னும் வல்லினம் மிகும் எ-டு: அந்த + கொடி = அந்தக் கொடி இந்த + சோலை = இந்தச் சோலை எந்த + பாதை = எந்தப் பாதை 3. அப்படி, இப்படி, எப்படி என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: அப்படி + பேசினான் = அப்படிப் பேசினான் இப்படி + பார் = இப்படிப் பார் எப்படி + சொல்வாய் = எப்படிச் சொல்வாய் 4. இடம் பொருள் உணர்த்தும் அங்கு, இங்கு, எங்கு என்ப வற்றின் முன்னும் வலி மிகும் எ-டு: அங்கு + சென்றான் = அங்குச் சென்றான் இங்கு + பார்த்தான் = இங்குப் பார்த்தான் எங்கு + கண்டாய் = எங்குக் கண்டாய் 5. மேலும், இனி, தனி, மற்று, மற்ற, மற்றை என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: இனி + செல்க = இனிச் செல்க தனி + பாட்டு = தனிப்பாட்டு மற்று + காண்க = மற்றுக்காண்க மற்ற + பாடம் = மற்றப்பாடம் மற்றை + செல்வம் = மற்றைச் செல்வம் 6. உவமைத் தொகை சிலவற்றில் வல்லினம் மிகும். எ-டு: மலர் + கண் = மலர்க்கண் வேய் + தோள் = வேய்த்தோள் தாமரை + கண் = தாமரக்கண் 7. இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். எ-டு: சாரை + பாம்பு = சாரைப் பாம்பு சித்திரை + திங்கள் = சித்திரைத் திங்கள் 8. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: நில்லா + பொழுது = நில்லாப் பொழுது ஓடா + புலி = ஓடாப்புலி 9. தனிக்குறுலைச் சார்ந்த முற்றுகரங்களின் முன் வல்லினம் மிகும். எ-டு: புது + பார்வை = புதுப் பார்வை உரு + கண்டான் = உருக்கண்டான் வடு + பட்டது = வடுப்பட்டது 10. தீ, பூ, ஈ என வரும் ஒரெழுத்தொருமொழியின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: தீ + பாய்ந்தான் = தீப்பாய்ந்தான் பூ + பறித்தாள் = பூப்பறித்தாள் ஈ + கால் = ஈக்கால் 11. ஆய், போய், அன்றி, இன்றி, ஆக, என என்னும் வினை யெச்சங்களின் முன்னும், சில அகர ஈற்று வினையெச்சங் களின் முன்னும், இகர ஈற்று இறந்த கால வினையெச்சங்களின் முன்னும் வல்லினம் மிகும். எ-டு: நன்றாய் + பேசினான் = நன்றாய்ப் பேசினான் போய் + சொன்னான் = போய்ச் சொன்னான் அன்றி + போகான் = அன்றிப் போகான் இன்றி + காணான் = இன்றிக் காணான் நன்றாக + பாடினான் = நன்றாகப் பாடினான் சொல்லென + சொன்னான் = சொல்லெனச் சொன்னான் குறுக + தறித்த குறள் = குறுகத் தறித்த குறள் ஆடி + கொண்டான் = ஆடிக் கொண்டான் வேற்றுமையில் வலிமிகுதல்: 12. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். கண்ணை + காட்டு = கண்ணைக் காட்டு என்னை+ பார் = என்னைப் பார் 13. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில், வல்லினம் மிகும். மலர் + கொடி = மலர்க்கொடி 14. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும். ஓலை + பெட்டி = ஒலைப் பெட்டி 15. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். வீட்டுக்கு + காவல் = வீட்டுக்குக் காவல் 16. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும். விழி + புனல் = விழிப்புனல் 17. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். வண்டு + கால் = வண்டுக்கால் 18. வன்றொடர்க் குற்றியலுகரத்தின்முன் அல்வழி, வேற்றுமை ஆகிய ஈரிடத்தும் வலி மிகும். இழுத்து + செல் = இழுத்துச் செல் ( அல்வழி) ஆற்று + புனல் = ஆற்றுப்புனல் (வேற்றுமை) 19. மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற்றுமையில் வல்லினம் மிகும் நண்டு + கால் = நண்டுக்கால் 20. முற்றியலுகரத்தின் முன்னும் வேற்றுமையில் வல்லினம் மிகும். கதவு + தாள் = கதவுத் தாள் அரவு + தோல் = அரவுத் தோல் 21. அரை, பாதி என்னும் சொற்களின்முன் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். அரை + பலம் = அரைப்பலம் பாதி + பாக்கு = பாதிப் பாக்கு 22. தனிக்குற்றெழுத்தைத் தொடர்ந்து வரும் முற்றுகரத்தின் முன்னும், குறில் நெடில் இணைவின் முன்னும் வலிமிகும். நடு + பகல் = நடுப் பகல் பலா + பழம் = பலாப் பழம் 23. மென்றொடர்க் குற்றியலுகரங்கள், வன்றொடர்க் குற்றியலு கரங்களாகத் திரிந்த வழி வருகின்ற வல்லினம் மிகும். இரும்பு + பாதை = இருப்புப் பாதை குரங்கு + கால் = குரங்குக் கால் 24. ஐகாரச் சாரியைபெற்ற குற்றுகரங்கட்கு முன்னும் வலி மிகும். நேற்று +ஐ + பொழுது = நேற்றைப் பொழுது 25. அத்து, இற்றுச் சாரியைகளின் முன்னும் வல்லினம் மிகும். குன்றம் + அத்து + கோயில் = குன்றத்துக்கோயில் மரம் + அத்து + கோடு = மரத்துக்கோடு பது + இற்று + பத்து = பதிற்றுப் பத்து வலிமிகா இடங்கள்: 1. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. நன்மை+ தீமை = நன்மை தீமை அன்பு + பண்பு = அன்பு பண்பு 2. வினைத் தொகையில் வல்லினம் மிகாது. பாய் + புனல் = பாய்புனல் செய் + தொழில் = செய் தொழில் 3. இரண்டாம் வேற்றுமைத் தொகை, ஆறாம் வேற்றுமைத் தொகை ஆகியவற்றில் வல்லினம் மிகாது. நீர் + குடித்தாள் = நீர் குடித்தாள் மகளிர் + கை = மகளிர் கை 4. மூன்றாம் வேற்றுமை விரி, ஆறாம் வேற்றுமை விரி ஆகியவற்றின் முன் வல்லினம் மிகாது. கண்ணனொடு + சென்றேன் = கண்ணனொடு சென்றேன் எனது + கை = எனது கை 5. எழுவாய்த் தொடர், விளித்தொடர், வினை முற்றுத் தொடர் ஆகியவற்றில் வலி மிகாது. காக்கை + கரைந்து = காக்கை கரைந்தது கண்ணா + கேள் = கண்ணா கேள் ஓய்ந்தன + கைகள் = ஓய்ந்தன கைகள் 6. தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றிலும் வலி மிகாது. வந்த + பையன் = வந்த பையன் நல்ல + பையன் = நல்ல பையன் கேளாத + கதை = கேளாத கதை 7. அது, இது, எது, ஏது, யாது; அவை, இவை, எவை, யாவை; அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகாது. அது + பூனை = அது பூனை இது + காக்கை = இதுகாக்கை எது + பாட்டு = எது பாட்டு ஏது + துணி = ஏது துணி? யாது + கண்டாய் = யாது கண்டாய் அவை + கழல்கள் = அவை கழல்கள் இவை + தோடுகள் = இவை தோடுகள் எவை + சிறந்தன = எவை சிறந்தன யாவை + பாடின = யாவை பாடின அத்தனை + கூறினான் = அத்தனை கூறினான் இத்தனை + பெரிதோ = இத்தனை பெரிதோ எத்தனை + தந்தாய் = எத்தனை தந்தாய் அவ்வளவு + போதும் = அவ்வளவு போதும் இவ்வளவு + தேவை = இவ்வளவு தேவை எவ்வளவு + கொடுத்தான் = எவ்வளவு கொடுத்தான் 8. வினைச் சொற்கள் படி என்னும் துணையுறுப்பைப் பெற்றுவரும் போதும் வல்லினம் மிகாது. சொன்னபடி + செய்தேன் = சொன்னபடி செய்தேன் இரும்கும் படி + சொன்னான் = இருக்கும்படி சொன்னான் வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான் 9. பல, சில என்னும் சொற்களின்முன் சில இடங்களில் வல்லினம் மிகாது. பல + பாடல்கள் = பல பாடல்கள் சில + செய்திகள் = சில செய்திகள் 10.ஆ, ஓ, ஏ என்னும் இடைச் சொற்களின் முன்னும் வல்லினம் மிகாது. முடிக்கவா + சென்றான் = முடிக்கவா சென்றான் தொடுக்காவோ + பூ = தொடுக்கவோ பூ அவனே + சிறந்தவன் = அவனே சிறந்தவன் 11. எண்ணுப் பெயர்களின் முன்னும் வல்லினம் மிகாது. இரண்டு + கொடு = இரண்டு கொடு ஐந்து + சொன்னான் = ஐந்து சொன்னான் 12. அன்று, இன்று, என்று என்னும் காலப்பெயர்களின் முன் வல்லினம் மிகாது. அன்று + கண்டேன் = அன்று கண்டேன் இன்று + சொல்கின்றேன் = இன்று சொல்கின்றேன் என்று + பார்த்தாய் = என்று பார்த்தாய் 13. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத் தொடர்க் குற்றிய லுகரங்களின் முன்னும் வலி மிகாது. ஏறு + தழுவினான் = ஏறு தழுவினான் (நெடிற்றொடர்) எஃகு + கொடிது = எஃகு கொடிது ( ஆய்தத் தொடர்) பழகு + தமிழ் = பழகு தமிழ் (உயிர்த் தொடர்) சால்பு + கண்டேன் = சால்பு கண்டேன் ( இடைத் தொடர்) 14. வினையெச்சமாக வரும் மென்றொடர்க் குற்றியலு கரத்தின் முன்னும் வல்லினம் மிகாது. நுழைந்து + செல் = நுழைந்து செல் 15. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் முன் வல்லினம் மிகாது. காணிய + சென்மோ = காணிய சென்மோ 16. வியங்ககோள் வினை முற்றின் முன்னும் வலிமிகாது. வாழிய + பெரிதே = வாழிய பெரிதே வாழ்க + பல்லாண்டு = வாழ்க பல்லாண்டு 17. யா என்னும் முதல்வினாவின்முன் வரும் வல்லினம் மிகாது. யா + சிறந்தன = யா சிறந்தன 13. இடம் விட்டெழுதுதலும் சேர்த்தெழுதுதலும் எழுத்துக்களையோ, சொற்களையோ இடையீடின்றி ஒரே தொடர்ச்சியாக எழுதிச் சென்றால் கற்பார்க்கு ஒன்றும் விளங்காமல் இடர்ப்பட நேரிடும். ஆகவே, எழுதுங்கால், சொற்களுக்கிடையே தக்க அளவு இடம் விட்டும், அஃதே போன்று பத்திகட்கிடையே இடம் விட்டும், பொருள் விளக்கும் துணைகளாகிய குறியீடுகளைப் பயன்படுத்தியும் எழுதுதல் வேண்டும். அழகும் தெளிவும் கருதி இவ்வாற செய்ய வேண்டுவது மாணாக்கர் கடனாகும். கீழ்க்காணும் சொற்றொடர்களைக் காணுங்கள்:- அன்புவிரைந்து பெரும் வாய்ப்புமக்கட்பிறவிக்குண்டு அதனால் பிறவி விழுமிய தென்றான்றோராற் போற்றப்பெற்றது மக்கட் பிறவி விழுமியதேயெப் பொழுதப் பிறவி தன் மாட்டுக் கெழுமியுள்ள அன்பு வளர்ச்சிக்குரிய வாய்ப்பைநன் முறையிற் பயன்படுத்தினாலது விழுமிய தாகுமில்லையேல் துவிழுமியதாகது. இப்பத்தி இடம் விட்டும், குறியீடுகள் காட்டியும் பொருள் விளங்க எழுதாததால், கற்பார்க்கு மருட்சி ஏற்படுகிறது. இதையே கீழுள்ளவாறு எழுதினால் பொருள் தெளிவு பிறப்ப தோடு, அழகு படவும் அமைகிறது. அன்பு விரைந்து பெருகும் வாய்ப்பு மக்கட் பிறவிக்கு உண்டு. அதனால், அப்பிறவி விழுமிய தென்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. மக்கட் பிறவி விழுமியதே; எப்பொருது? அப்பிறவி தன் மாட்டுக் கெழுமியுள்ள அன்பு வளர்ச்சிக்குரிய வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தினால், அது விழுமியதாகும். இல்லையேல், அது விழுமியதாகாது. 14. சொற்களை இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் இருபொருள் தந்து நிற்கும் சொற்றொடர்களை நாம் எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோமோ - அதற்கேற்ப இடம்விட்டு எழுதுதல் வேண்டும். அவ்வாறின்றிச் சேர்த்தே எழுதினால் பொருள் கவர்பட்டு மயங்க நேரிடும். இருபொருள் பட வரும் தொடர்கள் சிலவற்றை நோக்குக. 1. குன்றேறமா: குன்று ஏறா மா குன்று ஏறு ஆமா 2. செம்பொன்பதின்றொடி: செம்பொன் பதின் தொடி செம்பு ஒன்பதின் தொடி 3. மாதேவா: மாதே வா மா தேவா 4. கொடுத்துவந்தான்: கொடுத்து வந்தான் கொடுத்து உவந்தான் 5. என்பரவாமை: என் பரவாமை என்பு அரவு ஆமை 6. மணந்துவக்குங்காலம்: மணம் துவக்கும் காலம் மணந்து உவக்கும் காலம் 7. தலை விதிவசம்: தலைவி திவசம் தலை விதி வசம் 8. புத்தியில்லாதவன் புத்தியில் ஆதவன் புத்தி இல்லாதவன் 9. எங்கணேசா: எம் கணேசா எங்கள் நேசா இவ்வாறு வரும் தொடர்களை எப்பொருள்பட வேண்டு மென்று விரும்புகின்றோமோ, அதற்கேற்பப்பிரித்து எழுதுதல் வேண்டும். இன்றேல் கற்பார் மனம் வெறுப்புற நேரிடும். ஆகவே, பொருள் தெளிவும், நடையழகும், தோற்றப் பொலிவும் உண்டாகுமாறு, எழுத்துக்களையும் சொற்களையும், தொடர்களையும், பத்திகளையும் தக்க அளவு இடம்விட்டு எழுதுவதோடு, உரிய குறியீடுகளையும் பயன்படுத்தி மாணாக்கர் கட்டுரையை அணி செய்வாராக. பாடுங் குயில்கள் 1. இசைக்குயில் வேதநாயகர் (கி.பி. 1826 - 1889) அ. இளமைப் பருவம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்குத் தாழ்வு நேராத வண்ணம், ஒவ்வொரு நூற்றாண்டிலும் பெருமக்கள் பலர் தோன்றி, அதனைக் காத்து வந்துள்ளனர். அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வள்ளல் இராமலிங்க அடிகள், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாளையங் கோட்டைக் கிருட்டிணப் பிள்ளை, மாயூரம் வேத நாயகம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார் போன்ற பெருமக்கள் தோன்றிப் பல்லாற்றானும் தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளனர். இத் தமிழ்த் தொண்டர்களுள் வேதநாயகரின் விழுப்புகழை நாம் இங்கே காண்போம். பிறப்பு சோழ நாடு சோறுடைத்து என்று சான்றோரால் பாராட்டப்பெற்றது சோழ நாடு. அவ்வாறு புகழப்பெறு வதற்குக் காரணம், அந் நாட்டில் காவிரியாறு பாய்வதனால் தான். என்றும் வற்றாமல் நீர் பாயும் தன்மை வாய்ந்தது அக் காவிரி. அது சங்கப் புலவர் பலராலும் பாராட்டப்பெற்றது; கங்கையிற் புனிதமாய காவிரி என்று ஆழ்வாரால் வணங்கப் பட்டது. புனிதத்தன்மை வாய்ந்த அக் காவிரிக்கரையில் திரிசிரபுரம் என்னும் திருச்சிராப் பள்ளி அமைந்திருக்கின்றது. இப் பேரூருக்குத் தெற்கே பத்துக்கல் (16 கி. மீட்டர்) தொலைவில் குளத்தூர் என்னும் சிற்றூர் உளது. குளத்தூரில் வேளாளர் குடும்பங்கள் பல இருந்தன. அவற்றுள் கொங்குராயர் குடி என்ற அரசியல் சிறப்புப்பெற்ற குடும்பம் ஒன்றும் வாழ்ந்தது. அக் குடியில் தோன்றிய மதுர நாயகம் பிள்ளை என்பவர் தமது ஐம்பதாவது வயதில் கிருத்துவ சமயத்தில் சேர்ந்தார். அவருக்குச் சவரிமுத்துப் பிள்ளை என்னும் பெயருடைய பேரர் ஒருவர் இருந்தார். கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மரிய சவரியாப் பிள்ளை என்ற மருத்துவர் ஒருவர் குளத்தூருக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஆரோக்கிய மரியம்மாள் என்ற திருமகளார் இருந்தார். இவ்வம்மையாருக்கும் சவரிமுத்துப் பிள்ளைக்கும் சிறப்புடன் திருமணம் நடந்தேறியது. இல்லற வாழ்வு அறநெறி தவறாது நடைபெற்று வந்தபொழுது, அவ்விருவர்க்கும் திருமகனாராகக் கி.பி. 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினோராம் நாள் வேத நாயகர் தோன்றினார். தொடக்கக் கல்வி குழந்தை செல்வச் சிறப்புடன் வளர்க்கப் பெற்றது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த வேதநாயகர் குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடம் ஆடல், பாடல், கதை முதலியன கற்றுவந்தார். வேதநாயகர் குழந்தைப் பருவத்திலேயே கூர்மையான அறிவு படைத்தவராகக் காணப்பட்டார். பள்ளிப்பருவம் அடைந்ததும், பெற்றோர் இவரைப் பள்ளியில் சேர்க்க முற்பட்டனர். அக்காலத்தில் சிற்றூர்களில் தெருப் பள்ளி அல்லது திண்ணைப் பள்ளி என்று வழங்கும் பள்ளிகளே இருந்தன. அங்கேதான் கல்வி தொடங்கப்பெறும். இந்தப் பள்ளிகள் ஆசிரியர் வீட்டுத் திண்ணைகளிலே நடைபெறும். குளத்தூரில் இப்படிப்பட்ட தெருப் பள்ளி யொன்றில் வேதநாயகரும் சேர்க்கப்பட்டார். பத்து வயது வரை அங்கேயே பயின்ற இவர், நன்மாணாக்கர் என்று ஆசிரியராலும் பிறராலும் பாராட்டப் பெற்றார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக் கேற்பக் கல்வியாற்றல், நல்லொழுக்கம் முதலியன இளமைப் பருவத்திலேயே இவரிடம் அரும்புவிடத் தொடங்கின. உயர்நிலைக் கல்வி திண்ணைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற வேத நாயகர்க்கு, உயர்நிலைக் கல்வி கற்பிக்க விரும்பினார் தந்தையார். ஆனால், அக் கல்வி கற்கத் திரிசிரபுரத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஆங்கில ஆட்சியிருந்த அந் நாளில் தமிழ் மாநிலம் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. திரிசிரபுரத்தில் தெற்கு மாநில நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அம் மன்றத்தைச் சார்ந்த அலுவலகம் ஒன்றில் தியாகப் பிள்ளை என்னும் பெரியார் ஒருவர் பணி புரிந்துவந்தார். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர் என்பதையறிந்த சவரி முத்துப் பிள்ளை அவரையணுகிச் செய்தியைத் தெரிவித்தார். வேதநாயகருடைய முகப் பொலிவைக் கண்ட தியாகப் பிள்ளை மனமுவந்து கற்பிக்க இசைந்தார். வேதநாயகர் கூரிய மதியுடைவராதலால், ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் ஆழ்ந்து பயின்றார். படிக்க வேண்டு மென்றும் ஆர்வம் இருந்தால் கல்வி எளிதாக வளரும். கல்வியில் ஆர்வம் மட்டும் இல்லையானால், ஆசிரியர் எவ்வளவு முயன்று புகட்டினாலும் மாணவர் உள்ளத்தில் கல்வி படியாது. இவரோ கல்வியில் பேரார்வம் கொண்டவராதலால், எளிதாகவும் விரை வாகவும் இவருள்ளம் பாடங்களைப் பற்றிக் கொண்டது. ஆங்கிலத்தில் நன்கு பேசுவும் எழுதவும் வேதநாயகர் கற்றுக்கொண்டார். இயல்பிலேயே தமிழ்மொழியில் பற்றும் பயிற்சியும் பெற்றிருந்தமையால் தமிழிலும் இவர் சிறப்புற்று விளங்கினார்; இலக்கண இலக்கியங்களில் தெளிந்த அறிவும் பெற்றார். தியாகப் பிள்ளையிடம் பயிலும் பொழுதே கவிதை புனைவதில் இவருள்ளம் நாட்டங் கொண்டது. அப்பொழுதே இவர் அழகிய கவிதைகளை இயற்றத் தொடங்கிவிட்டார். எந்த நிகழ்ச்சியைக் கண்டாலும் அந் நிகழ்ச்சி இவர்தம் உள்ளத்தில் கவிதை உணர்வைத் தூண்டும். வேதநாயகரின் பெரிய தாயார்க்கு அடைக்கல சாமி என்றொரு மகன் இருந்தார். அவர் ஓர் அலுவலை முன்னிட்டுத் திரிசிரபுரத்திற்கு வந்திருந்தார். அவர் வருகையை அறிந்த வேதநாயகர், சிறந்த கவிதை யொன்று பாடி அவரை வரவேற்றார். அடைக்கல சாமியும் அகம் மிக மகிழ்ந்தார். மற்றொரு சமயம் மைத்துன் முறை பூண்ட ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்திற்குச் சென்றிருந்த வேதநாயக்கர், பொருள் செறிந்த, நகைச்சுவை பொருந்திய பாடலொன்றைப் பாடி மணமக்களை வாழ்த்தினார். அப் பாடலின் நயத்தையும் நகைச்சுவையையும் அறிந்து அங்கிருந்தோர் வியந்து வேதநாயகரைப் பாராட்டினர். தம் மாணவரின் கவிதைத் திறனை அறிந்த தியாகப்பிள்ளை பெரு மகிழ்வு கொண்டார். இவ்வாறு இருபது வயதுவரை வேதநாயகர் திரிசிரபுரத்திலேயே தங்கி கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றார். ஆ. மொழிபெயர்ப்புப் பணி வேலை ஏற்பு கல்வி கற்றுத் தேர்ந்த பின்னர் வேதநாயகர் ஏதேனும் அலுவல் புரிய விழைந்தார். அப்பொழுது திரிசிரபுரத்தில் இருந்த தென் மாநில நீதிமன்றத்தில் கார்டன் துரை என்பவர் நீதிபதியாக இருந்தார். ஆசிரியர் தியாகப் பிள்ளையின் முயற்சியால் கார்டன் துரையின் அலுவலகத்திலேயே வேத நாயகருக்கு வேலை கிடைத்தது. அலுவலகப் பத்திரங்கள், கணக்குப் புத்தகங்கள் இவற்றைக் காக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பெற்றது. வேத நாயகர் கடமை யுணர்ச்சி மிக்கவர்; ஆதலால், இளமையை வீணாக்காமல் சோம்பலின்றிப் பணி புரிந்து வந்தார். இவர் கூரிய மதி படைத்தவராதலின் பத்திரங்களையெல்லாம் செம்மையாகப் படித்து, அரசாங்க அலுவல், ஆட்சிமுறை முதலிய செய்திகளை நன்கு அறிந்து கொண்டார். இவர்தம் அயரா உழைப்பால் அனைவருடைய நல்லெண்ணத்தையும் பெற்றார். இவ்வாறாக இரண்டாண்டுகள் இவர் இப் பணியில் இருந்தார். கி.பி. 1850ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. இதனை யறிந்த பலரும் விண்ணப்பித்தனர். வேதநாயகரும் விண்ணப்பம் விடுத்தார். அப்பொழுது மாவட்ட நீதிபதியாக இருந்தவர் மேதர் பாய்லர் துரை என்பராவர். அவர் நடுநிலை யாளர்; விண்ணப்பித்த அனைவரையும் அழைத்தார். தமிழை ஆங்கிலத் திலும் ஆங்கிலத்தைத் தமிழிலும் மொழி பெயர்க்கப் பணித்தார். அனைவருடைய மொழிபெயர்ப்புகளையும் படித் தறிந்த அவர், வேதநாயகருடைய மொழி பெயர்ப்பே சிறந்து விளங்குகிற தென்று முடிவு செய்து, அம் மொழிபெயர்ப்பு வேலையை இவருக்கே தந்தார். வேதநாயகர் மகிழ்ச்சியுடன் அப் பணியினை மேற் கொண்டார். நற்பண்புகளுக்கு உறைவிடமாக இவர் விளங்கிய காரணத்தால், அப் பணி மக்களுக்குப் பணியாற்ற ஒரு வாய்ப்பாகும் என்று கருதி, அதனைத் தொடர்ந்தார். அக் காலத்தில் ஆங்கிலேயர் நாடாண்டு வந்தமையால் சட்டங்களும் ஆணைகளும் ஆங்கில மொழியில் இருந்தன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. பத்திரங்கள், கடிதங்கள் முதலியவற்றுள் எதனையும் மறுநாளைக்கென ஒதுக்கி வைக்காமல் இவர் அன்றாடம் மொழிபெயர்த்து விடுவார். மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலாக உயர்நீதி மன்றம் ஒன்று இருந்தது. அது சதர் கோர்ட் என்று வழங்கப்பட்டது. இங்கு வழங்கப்பட்ட தீர்ப்புகளை வழக்குரைஞர் மாவட்ட நீதி மன்றங்களில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவர். இவை யனைத்தும் ஆங்கில மொழியில் இருக்கும். அன்றைய வழக்குரை ஞர்களுள் பலர் தக்க ஆங்கிலப்புலமை பெறாத வர்கள். இத் தீர்ப்புகள் தமிழில் இருந்தால் அனைவருக்கும் பயன்படுமே என்று வேதநாயகர் கருதினார்; கருதிய அளவில் நில்லாது செயலளவிலும் காட்டத் தொடங்கினார். இத் தொடக்கமே பின்னர் நூல்வடிவம் பெற்றது. அலுவல் நேரம் போக எஞ்சிய நேரத்தையெல்லாம் இவர் நூல்கள் படிப்பதும் பாடல்கள் இயற்றுவதுமாகப் பயன் படுத்திக் கொண்டார். வேலையிழப்பும் மீட்பும் கவிதையில் தோய்ந்த நெஞ்சம் பிற பணிகளில் ஈடுபடாது என்றும் சோம்பியிருக்கும் என்றும் சிலர் கூறுவர். ஆனால், கவிஞர் வேதநாயகரோ அதற்கு மாறுபட்டவர். ஏற்றுக்கொண்ட பணியில் இவர் சுறுசுறுப்பாகவே விளங்கினார்; எழுத்து வேலை மிகுதியாக இருந்தமையால், தமக்குத் துணையாக ஒருவரை அமர்த்திக் கொண்டு, தம் பணியினைக் குறையின்றிச் செம்மையாகச் செய்துவந்தார். இச் சமயத்தில் மேதர் டேவிட்சன் என்பவர் நீதிபதியாக இருந்தார். அவர் வேதநாயகரின் கடமையுணர்ச்சியை அறிந்து மகிழ்ந்து இவரிடம் அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். அப்பொழுது எப்படியோ தமிழ்நாட்டில் சமயப் பூசல் காரணமாகக் கலகம் ஏற்பட்டது. கலகத்தில் ஈடுபட்ட இரு சமயத்தாரும் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தது. அங்கு இவ் வழக்கு முடிவு பெறாத காரணத்தால் மாநில நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதனால் இரு சமயத்தாரும் கொடுத்த விண்ணப்பங்கள், வழக்கு நடைபெறும் பொழுது சொல்லப்படும் கருத்துகள் ஆகிய அனைத்தையும் மொழிபெயர்க்க வேண்டிய பொறுப்பு வேதநாயகரிடம் ஒப்படைக்கப் பட்டது. வேதநாயகர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத் தையும் நன்முறையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, மேதர் டேவிட்சனிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டு அனுப்புவதற்காக வைத்திருந்தார். இச் சமயத்தில் அரசியலார் டேவிட்சனை வேற்றூருக்கு மாற்றி விட்டனர். விடைபெற்றுச் சென்ற டேவிட் சன் சமயப்பூசல் தொடர்பான மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் தம்முடன் எடுத்துச் சென்றார்; ஊருக்குப் போனதும் அனைத்திலும் கையெழுத்திட்டு மேலிடத்திற்கு அனுப்புவதாகத் தெரிவித்திருந்தார். சென்ற இடத்திலே எதிர்பாரா வகையில் டேவிட்சன் இறந்து விட்டார். அதனால் மொழி பெயர்ப்புக் கட்டுகள் மேலிடத்திற்கு அனுப்பப் படாமல் டேவிட்சன் பெட்டிக்குள் சிக்கிவிட்டன. டேவிட்சனுக்குப் பிறகு கிரீன்வே என்பவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் உயர் குணங்கள் இல்லாதவர்; உண்மையையும் உழைப்பையும் மதியாதவர். இச் சமயத்தில் மாநில நீதி மன்றத்தில் அக்கலக வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுது மாவட்ட நீதி மன்றத்திலிருந்து மொழிபெயர்தப்புக் கட்டுகள் வாராமை கண்டு, காலத் தாழ்விற்குக் காரணம் என்ன என்று மேலிடத் தார் எழுத்து மூலம் கேட்டனர். மேலிடத்தினின்று கேட்டு வந்ததை வைத்துக் கொண்டு. கிரீன்வே எவ்வித விசாரணையு மின்றி வேதநாயகர் மீது குற்றஞ் சுமத்தி, அவரை வேலையிலிருந்து விலக்கிவிட்டார். வேதநாயகர் அவற்றை மொழி பெயர்க்கவில்லையென்றும் அதனால் காலத் தாழ்வு ஏற்பட்ட தென்றும், ஆதலினால் அவரை வேலையிருந்து விலக்கிவிட நேரிட்ட தென்றும் கிரீன்வே மேலிடத்துக்கு எழுதியனுப்பி விட்டார். வேலை போனதைபற்றி வேதநாயகர் வேதனைப்பட வில்லை. அதைப் பெரிதாக எண்ணியிருந்தால் அல்லவா இவர் கவலைப்படுவார்? இந்தஉத்தி யோகமென்ன பெரிதா? - நெஞ்சே! ïJnghdhš eh«ãiH¥g jÇjh? என்று பாடிச் செம்மாந்திருந்தார். ஆயினும் வீண்பழிக் கன்றோ ஆளானோம் என்ற கவலையால் இவர் நோய்வாய்ப் பட்டார்; அதனால் உண்மை நிலையை மேலிடத்ற்குத் தெரிவித் தாக வேண்டும் என்று எண்ணினார்; நடந்தவற்றை யெல்லாம் விளக்கி எழுதி அனுப்பினார். அதே சமயம் டேவிட்சன் பெட்டியில் இருந்த மொழிபெயர்ப்புக் கட்டு உயர்நீதி மன்றத்தார்க்கு வந்து சேர்ந்தது உண்மை உணர்ந்த உயர்நீதி மன்றத்தார் வேத நாயகரை வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தனர். இச் சமயத்தில் சுவிண்டன் என்பார் மாவட்ட நீதிபதியாக இருந்தார். இவரும் கிரீன்வேயைப் போன்ற இயல்புடைய வராக இருந்தமையால் அவ் வாணையை மதிக்கவில்லை. வேதநாயகர் பிணியாளர் என்றும், வேறொரு வரைக்கொண்டே மொழி பெயர்த்து எழுதுகிறார் என்றும் சுவிண்டன் மேலதிகாரிக்கு எழுதியனுப்பினார். உண்மையைப் புரிந்துகொண்ட மேலதிகாரி. சுவிண்டனை இலண்டனுக்கு அனுப்பிவிட்டு ஆரி என்பவரை நீதிபதியாக நியமித்தார். ஆரி நல்லியல்புகள் மிக்கவர். அதனால் அவர் நீதிபதியாக வந்தவுடன் வேதநாயகரை வேலையில் அமர்த்தினார். பழி துடைக்கப்பட்ட வேதநாயகர் மீண்டும் அப்பணியை ஏற்றுக்கொண்டார். இவர்பால் நேர்மையும் தமிழுணர்வும் மிக்கிருந்தமையால், பெரியோர் பலர் இவருக்கு நண்பராயினர். அவருள் மகாவித்து வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் ஒருவராவார். வேலை நேரங்களில் செம்மையாகச் செயலாற்று வதும், ஏனைய நேரங்களில் மகாவித்துவானுடன் உரையாடி மகிழ்வதுமாக வேதநாயகர் வாழ்த்துவந்தார். இ.நீதிநாயகர் நீதிபதியாதல் வேதநாயகர்க்கு இயல்பாகவே தமிழ் நெஞ்சம் வாய்த் திருந்தது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் போன்ற மேலும் மேலும் தமிழுணர்வு இவரிடம் வளர்வதாயிற்று. அதனால் இவர் தாம் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணியை விட இலக்கியப் பணியிலேயே நாட்டம் மிகுந்து காணப்பட்டார், அதனால் சிறந்த நூல்களைக் கற்பதும், புதிய பாடல்களை இயற்றுவதும், தமிழுக்குப் புதுமை கூட்ட வேண்டுமென்று சிந்திப்பதும் இவருடைய தலையாய கடமைகளாக இருந்தன. இச்சமயத்தில் மாயூரத்தையடுத்துள்ள தரங்கம்பாடி என்னும் ஊரில் மாவட்ட நீதிபதிப் பதவி ஒன்றுக்கு ஆள் வேண்டியிருந்தது. இப் பதவிக்கென அறுபதுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. நீதியிலும் நேர்மையிலும் நம்பிக் கையுடைய வேதநாயகரும் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அரசினர் வேதநாயகரையே தேர்ந்தெடுத்து மாவட்ட நீதிபதியாக அமர்த்தினர். அப்பதவியை ஏற்றுக்கொண்ட வேதநாயகர், ஆங்கிலமும் தமிழும் அறிந்தவ ராதலின், நடுநிலைமை பிறழாமல் செம்மையுடன் பணியாற்றி வந்தார். பின்னர், வேதநாயகர் சீகாழி என்னும் ஊருக்கு மாற்றப் பட்டார். திருஞானசம்பந்தர் தோன்றிய அப் பெரும் பதியிலிருந்து இவர் தமது பணியைச் செம்மையுறச் செய்து வந்தார். பொய் வழக்குகள் தமது நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் இவர் மனம் வருந்துவார். வழக்குரைஞர்கள் பணம் ஒன்றையே குறியாகக் கொண்டு, தம் கட்சிக்காரருக்காக, மெய்யைப் பொய்யாகவும் பொய்யை மெய்யாவும் தம் பேச்சுத் திறனால் மாற்றிமாற்றிப் பேசுவதைக் கண்டபோ தெல்லாம் இவர் மனம் புண்படுவ துண்டு. ஏழை மக்கள் வழக்குரைஞர்களை அமர்த்தி வாதாட முடியாமல் துயர்ப்படுவதைக் கண்டு வேதநாயகர் வேதனை யடைந்த நாள்கள் பல. அதனால் வழக்குரைஞர்களின் வாதங் களையும் சாட்சி களையும் மட்டும் நம்பி வேதநாயகர் தீர்ப்புக் கூறுவதில்லை; பல வழிகளால் உண்மையைத் தெரிந்து கொண்டு நீதி வழங்குவார். நீதி மன்றத்திலே நிகழ்கின்ற இந்தக் கொடுமைகளை யெல்லாம் நினைந்துநினைந்து வருந்திப் பாடல்கள் பல பாடிப் பாடித் தம் மன வேதனையை இவர் குறைத்துக் கொள்வார். இப் பெருமகனார், சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் நின்று, நடுநிலை பிறழாமல் தீர்ப்பு வழங்கி வந்தமைக்கு ஒரு சான்று காணலாம் ஒரு சமயம் வாதியொருவன், இவருடைய நீதி மன்றத்திலே பொய் வழக்கொன்று தொடுத்தான் எதிரியின் பக்கந்தான் உண்மையிருந்தது. நீண்ட நாள் வழக்கு நடந்து வந்தது. கட்சிக் காரர் இருவர் சார்பிலும் எடுத்துக் கூறியவற்றை யெல்லாம் இவர் நன்கு கவனித்துக் கேட்டுக் கொண்டார். தீர்ப்புச் சொல்லும் நாள் நெருங்கியது. வாதி அஞ்சினான்; தன் வழக்கில் உண்மையில்லாத தால் தனக்குத் தோல்வி நேருமோ என்று கருதினான். இப்படிக் கருதிய வாதி, ஒருநாள் வேதநாயகருடைய வீட்டிற்கு வந்தான். வேதநாயகர் தம்முடைய வீடு தேடி வந்தவனை இன்முகங் காட்டி இனியன கூறி வரவேற்றார். வந்தவன் உண்மை முழுதும் கூறித் தன் பக்கம் வெற்றியேற் படும்படி தீர்ப்பு வழங்க வேண்டிக் கையூட்டாக (இலஞ்சம்) நூறு ரூபாயும் கொடுத்தான். வேதநாய கருக்கு ஒரே மகிழ்ச்சி; மறுநாள் தீர்ப்பு வழங்கு வதற்குத் தக்க சான்று கிடைத்துவிட்டதல்லவா? இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டார். வாதி விடைபெற்றுச் சென்றான். மறுநாள் நீதிமன்றம் தொடங்கியது. வாதி மகிழ்ச்சியுடன் வந்திருந்தான். நீதிபதி பேசத் தொடங்கினார். அனைவரும் இவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த வழக்கில் உண்மையைக் கண்டுபிடிப்பது உள்ள படியே எனக்குக் கடினமாகத்தான் இருந்தது. நேற்றிரவு வாதி என் வீட்டிற்கு வந்து இலஞ்சம் கொடுத்தபோதுதான் எனக்கு உண்மை வெளிப்படையாகத் தெரிந்தது என்று கூறி, வாதி முதல் நாள் தம்மிடம் தந்த பணத்தையும் வேதநாயகர் எடுத்துக் காட்டினார். அப்போது நீதி மன்றமே நடுங்கி விட்டது. ஆகவே, நீதியை எதிரிக்கும், மன்னிப்பை வாதிக்கும் அளிக்கிறேன் என்று இவர் தீர்ப்பு வழங்கி, அந்தப் பணத்தை எதிரிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப் பினார். இத் தீர்ப்பு நகர் முழுமையும் பரவியது. நீதிநாயகராகிய வேதநாயகரின் புகழும் எங்கும் பரவியது. நீதிநூல் படைத்தல் வேதநாயகர் மக்களிடம் காணப்படுகின்ற குற்றங்குறை களைக் காண நேர்ந்தபோ தெல்லாம் மனம் வருந்துவார். மக்கள் இவ்வாறு தீயவழிகளிற் சென்று மடிகின்றனரே! இவர்களை எவ்வாறு நல்வழியில் திருப்புவது? என்று அடிக்கடி சிந்தனை செய்துகொண்டே யிருப்பார். கவிஞருடைய சிந்தனை வெளிப்படு மானால், அது கவிதை வடிவிலே தான் வெளிப்படும், இவர் தம் காலத்திலே வாழ்ந்த மக்களுக் கேற்பப் பல அறநெறிகளை யமைத்துப் பாடல்களைப் பாடிவைத்தார். இச் சமயத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரும் உடனிருந்தால் பேருதவியாக இருக்குமே என்று இவர் கருதினார்; அதனால் மகாவித்துவான் அவர்களும் சீகாழியில் தங்குவதற் கேற்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். அடிக்கடி வேத நாயகரும் மகாவித்துவான் அவர்களும் கூடி, அறநெறிப் பாடல் களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பத்தொன் பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற வகையில், உயர்ந்த நெறிகளைப் புகட்டுகின்ற நானூறு பாடல்களை இவர் பாடி முடித்தார்; அந்நூலுக்கு நீதி நூல் என்று பெயரிட்டார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் இந்நூலைப் படித்து மகிழ்ந்து, பாராட்டுக் கவி பாடித் தந்தார். இவ்வாறு வேதநாயகர் நீதி மன்றத்தில் நாயகராக விளங்கியதோடு, மிகச் சிறந்த நீதி நூலூக்கும் நாயகராகி, நீதிநாயகர் என்று அனைவரும் பாராட்டும் வண்ணம் வாழ்ந்து வந்தார். மாயூர வாழ்க்கை இவ்வாறு வாழ்ந்துவரும் நாளில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் மாயூரத்திற்குச் சென்று தங்க நேர்ந்தது. அவரைப் பிரிந்த வேத நாயகர், நல்ல நண்பரை விட்டுப் பிரிந்திருக்க நேர்ந்ததே என்று வருந்தியிருந்தார். பிரிவால் வாடியிருந்த புலவர் இருவரும் மீண்டும் கூடி வாழும் வாய்ப்பு நேர்ந்தது. கி.பி.1860ஆம் ஆண்டு, வேதநாயகர் மயிலாடுதுறை என்னும் செந்தமிழ்ப் பெயர்பூண்ட மாயூரத்திற்கு நீதிபதியாக மாற்றம் பெற்றார். இவ்வூரில் இவர் பதின் மூன்றாண்டுகள் பணி புரிந்தார்; ஓய்வு பெற்ற பின்னரும் இங்கேயே தங்கி இறுதிவரை வாழ்ந்தார். இவர் குளத்தூரில் பிறந்தார்; திரிசிரபுரம், தரங்கம்பாடி, சீகாழி முதலிய ஊர்களில் பணிபுரிந்தார். ஆயினும் இவர், மாயுரம் வேதநாயகர் என்றே அழைக்கப் பெற்றார். அந்த அளவிற்கு அவ்வூருடன் இவர் ஒன்றிவிட்டார். சீகாழியில் பிரிந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் இவர் மீண்டும் மாயூரத்தில் சந்தித்துப் பழகிவந்தார். வேதநாயகர் இவ்வூரில் பதவியேற்ற பின்புதான் நீதிநூலின் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது. இவர் மகா வித்துவான் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி, மேலும் இருநூறு பாடல் எழுதிச் சேர்த்து, அறுநூறு பாடல்கொண்ட பெருநூலாக அதனை வெளியிட்டார். நீதியிலும் நேர்மையிலும் வழுவாது ஒழுகி வந்தமையாலும், நற்குண நற்செயல்கள் மிக்கிருந் தமையாலும், நூலாசிரியராக விளங்கியமையாலும் மக்கள் இவரைப் பலவாறு போற்றி வந்தனர். இவர் தாம் மேற்கொண்ட பணியைச் செவ்வனே யாற்றிவந்தார். அதனால் உயர்நீதிமன்றத்தாரும் இவரிடம் நல்லெண்ணம் கொண்டிருந்தனர். ஒருவர் எவ்வளவு நல்லவராக நடந்துவந்தாலும் அழுக்காறு கொண்டவர்களால் தீமை உண்டாவது வழக்கமாகி விட்டது. வேதநாயகருக்கும் கீழ்மக்கள் சிலரால் துன்பம் வந்து சேர்ந்தது. உயர்நீதி மன்றத்திற்கு நெல்சன் என்பவர் புதிய அதிகாரியாக வந்து சேர்ந்தார். கையூட்டுப் பெறும் கயவர் சிலர் நெல்சனை அணுகி வேதநாயகரைப் பற்றிப் பலவாறு பழி சுமத்தினர். நெல்சன் உயர்பண்புகள் இல்லாதவர்; ஆதலினால், பிறர் கூறிய கோள் முழுவதையும் நம்பி, வேத நாயகரைப் பற்றித் தவறான கருத்துக்கொண்டிருந்தார்; இவரை எப்படியும் வேலையிலிருந்து நீக்கி விடுவதென முடிவும் செய்துவிட்டார். ஒரு நாள் மாயூரம் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு உயர்நீதிமன்ற அதிகாரியாகிய நெல்சன் திடீரென ஆய்வு நடத்த வந்துசேர்ந்தார். அப்பொழுது வேதநாயகர் நோய்வாய்ப் பட்டிருந் தமையால், அலுவலகத்திற்கு வர இயலாமல், வீட்டில் படுத்திருந் தார். தவறான எண்ணத்துடன் வந்திருந்த நெல்சன், அலுவலகத்தில் சோதனை செய்து, சில குறைகளைக் குறித்துக் கொண்டு சென்றார்; சென்னைக்குச் சென்றதும் அக் குறைகளுக்குக் காரணங் கேட்டு எழுதியிருந்தார். வேதநாயகர் நெல்சனின் செயல் கண்டு மனம் வருந்தினர்; பின்பு அக்குறைகளுக்குத் தகுந்த காரணங்களை விளக்கி எழுதியனுப்பினார். ஆயினும் நெல்சனுக்கு அக் காரணங்கள் மன நிறைவைத் தரவில்லை. அதனால் வேத நாயகரை வேலையிலிருந்து விலக்குமாறு நெல்சன் மேலிடத்துக்கு எழுதி அனுப்பிவிட்டார். வேதநாயகர் நேர்மையாக நடந்தவர்; மக்களுக்குத் தொண்டுகள் பல புரிந்தவர்; தீய நெறிகளிலிருந்து மக்களை நன்னெறிக்குத் திருப்பவேண்டும் என்று அல்லும்பகலும் நினைத்துக்கொண்டேயிருந்தவர்; பதினாறு ஆண்டுகள் உண்மை ஊழியம் புரிந்தவர், இவையனைத்தும் மேலிடத்தார்க்கு நன்கு தெரியும். ஆயினும், வெள்ளையராகிய நெல்சன் எழுத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று மேலிடத்தார் எண்ணினார்; அதனால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளு மாறு வேதநாயகருக்கே நேரில் எழுதிவிட்டனர்; வேதநாயகரின் நேர்மையை நன்கு அறிந்திருந்தமையால் ஒய்வு கால ஊதியம் (Pension) இறுதிக்காலம் வரை இவர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தனர். மேலிடத்துலிருந்து வந்த கடிதத்தைப் படித்து விட்டு, வேதநாயகர் மனத்துக்குள் நகைத்துத் தாம் விலகிக்கொள்வதாக மேலிடத்துக்கு எழுதி அனுப்பிவிட்டார். ஓய்வுகால ஊதியம் கொடுக்க வேண்டா என்று நெல்சன் எழுதியும் மேலிடத்தார் அதனை மதிக்கவில்லை; ஓய்வூதியம் இறுதிக் காலம்வரை கொடுத்துவந்தனர். கவிஞன் உள்ளம் என்றும் கட்டுப்பட்டுக் கிடப்பதை விரும்பவே விரும்பாது விடுதலைப் பறவையாக வாழவே விரும்பும். வேத நாயகரும் சிறந்த கவிஞராதலின், வேலையிலிருந்து விடுபட்டதைப் பற்றிக் கவலைப்பட வில்லை; அடிமைத்தளை அறுபட்டதாகவே கருதினார். அதனைப்பற்றி இவர் பாடியிருக்கும் பாடலே அதற்குச் சான்று பகரும்: நீடும்எண் சாண்மெய்யை ஓர்சாண் உதரம்நிமித் தம்விற்று நாடும் அரசர் அடிமைஎன் றேமுன்பு நாம் கொடுத்த ஏடு கிழிபட்ட தன்றோஉத் யோகம் இழந்ததுவே என்று வேதநாயகர் அடிமைச் சீட்டுக் கிழிந்து போய்விட்ட தாகவே கருதி மகிழ்ந்து பாடுகிறார். வேதநாயகர் ஓய்வு பெற்ற பின்பு, மாயூர நகராட்சி மன்றத் தேர்தல் வந்தது, அவ்வூர் மக்கள் இவருடைய உயர்ந்த பண்புகளையெல்லாம் நன்குணர்ந்த காரணத்தால், பெருமக்கள் பலர் கூடி வேதநாயகரைத் தேர்ந்தெடுப்பதென முடிவு செய்தனர். அப் பெருமக்களின் முயற்சியால் வேதநாயகர் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட வேதநாயகர் மக்களுக்குத் தொண்டு செய்ய ஒரு வாய்ப்புக் கிட்டியது என்று அதனைக் கருதினார்; பொறுப்போடு கடமையாற்றினார்; நகருக்கு வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து, மக்கள் பாராட்டிப் புகழுமாறு நடந்துவந்தார். ஈ. சீரிய தொண்டுகள் பெண்ணுரிமை, சமயப் பொதுமை ஆகிய கொள்கை களைப் பொறுத்தவரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெரியா ராகிய திரு.வி.கலியாண சுந்தரனாரை இவருக்கு ஒப்பாகச் சொல்லாம். வழக்கங்களை அகற்ற வேண்டும் என்பதிலும், சர்வ சமய சமரசத்திலும் இராமலிங்க அடிகளுக்கு நிகராக இவரைச் சொல்லலாம். இத்தகைய பெருமகனார் ஆற்றிய தொண்டுகள் பலவாயினும் குறிப்பிடத்தக்க தொண்டுகளாக இரண்டைக் கூறலாம். ஒன்று சமுதாயக் தொண்டு; மற்றொன்று மொழித் தொண்டு. சமுதாயத் தொண்டு பெண்மையை விடுத்து ஆண்மையும், ஆண்மையை விடுத்துப் பெண்மையும் உயர்வு பெற எண்ணினால் அச் சமுதாயம் உருப் பட்டு முன்னேற முடியாது. இரண்டு பண்புகளும் சரிநிகர் சமமாக முன்னேறினால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். சமுதாயம் முன்னேறக் கல்வி இன்றியமையாதது. அக் கல்வியை இருபாலாரும் கற்க வேண்டும் என்பது சான்றோர் முடிபு. பிற்காலத்தில் பெண்களுக்குக் கல்வி வேண்டுவதில்லை என்னும் ஒரு கருத்து நிலவிவந்தது. அதனால் பெண்கள் நூலறிவு பெற வழியின்றி, அடிமைகள்போல வாழும் நிலை ஏற்பட்டது. இந் நிலையைக் கண்ட வேதநாயகர் மனம் நொந்து பெண் கல்வி பரவ வேண்டுமென்று பாடுபட்டார்; தம் கருத்துகளை யெல்லாம் பாடல் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் வெளிப் படுத்தினார். ஆண்மக்களுக்கு மட்டும் கற்க வாய்ப்பளித்துப் பெண் மக்களுக்குக் கல்வியளிக்க மறுப்பது, நம் உடலில் பாதியை அணி செய்து, மற்றொரு பாதியை அணியின்றி விடுவதுபோன்ற தாகும். அஃதாவது சமுதாயத்தில் பாதி அழகு பெறும்; பாதி அழகு பெறாமல் போய்விடும் என்னும் கருத்தை இவர் வெளிப் படுத்தினார். பெண் கல்விக் காகவும், இவர் ஆற்றிய தொண்டு, பிற்காலத் தமிழகத்திலே முதன்முதலாகச் செய்யப் பெற்ற சமூகச் சீர்திருத்தத் தொண்டாகும்; பெருந் தொண்டும் ஆகும். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு என்பதே இருத்தல் கூடாது என்று வேதநாயகர் கூறுகிறார். பிறக்கும்போதே மகுடத்துடன் பிறந்தவரும் இல்லை; அதனால் மேலோர் கீழோர் எனப் பேசுவது மடமை என்று இவர் பாடுகிறார். மற்றொரிடத்தில் செல்வச் செருக்கை நகைச் சுவையாகவும் கடுமையாகவும் கண்டிக் கின்றார்; செல்வர்கள் சிவப்புக்கல், வெள்ளைக்கல், நீலக்கல் என்று சேர்க்கிறார்கள். ஏழையரும் செங்கல், வெண்கல், கருங்கல் என்று சேர்க்கிறார்கள். ஏழைமக்கள் சேர்க்கும் கற்களுக்கே எடை அதிகம்; வலிமையும் அதிகம் என்று பாடுகிறார். இவ்வாறு செல்வத்தால் ஏற்றத்தாழ்வு இருத்தல் கூடாது என்னும் கருத்தை இவர் பல பாடல்களால் விவரிக்கின்றார். ஒருசமயம் தமிழ்நாட்டிலே பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அது, தாது வருடத்திலே ஏற்பட்டமையால், தாது வருடப் பஞ்சம் எனப்பட்டது. அவ்வாண்டில் வானம் பொய்த்தது. மழையே பெய்யவில்லை. மழை பெய்யாமையினால் விளைச்சல் இல்லை. விளைச்சல் இல்லாமையால் உணவில்லை உணவின் மையால் மக்கள் பெருந் துன்பத்திற்காளானார்கள். எங்கு நோக்கினும் ஒரே அவலநிலை. எவ்வாறு மக்களுக்கு உதவுவது என்று சிந்தித்து வேதநாயகர் ஒருமுடிவுக்கு வந்தார்; கஞ்சித் தொட்டிகள் வைத்துப் பசியால் வாடிய மக்களுக்குக் கஞ்சி வார்த்து ஓரளவு அவர்களுடைய துன்பத்தைக்களைந்தார்; ஒல்லும் வகையால் அறவினை செய்தார். இஃது இவர் ஆற்றிய சமூகத் தொண்டுகளுள் மிகச் சிறந்ததாகும். மொழித்தொண்டு வேதநாயகர் இயல்பாகவே தமிழ்ப்புலமை பெற்றிருந்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர், பாளையங்கோட்டை v¢.V.கிU£oz¥ பிள்ளை போன்ற பெருமக்கள் தொடர்பால் மேலும் அப்புலமை வளம் பெற்றது. புலமை முதிரமுதிரத் தமிழ்மொழிப் பற்று இவர் நெஞ்சத்தில் வேரூன்றிச் செழித்து வளர்ந்தது. இவர் தமிழைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, நம்மைப் பெற்றதும் தமிழ், வளர்த்ததும் தமிழ், நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ், வீட்டு மொழியும் தமிழ், நாட்டு மொழியும் தமிழ் என்று கூறுகின்றார். நம்முள் பலர் தாய்மொழியாம் தமிழைப் பயிலாது பிற மொழிகளில் ஆர்வங்கொண்டு அவற்றையே பயின்று திரியும் போக்கைக் கண்டு வேதநாயகர் மனம் வெதும்பிப் பேசுகின்றார்; பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளைப் பயின்று விட்டுத் தாய்மொழியாகிய தமிழைப் பயிலாதவர்கள், மாதா வயிறெரிய மகேசுவரை பூசை செய்பவர்க்கு ஒப்பாவர் என்கிறார்; இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர்களை நாடுகடத்த வேண்டுமென்று கூடக் கடிந்துரைக்கின்றார். மொழிப்பற்றின் காரணமாக வேதநாயகர் சிறந்த தமிழ்த் தொண்டுகள் பல புரிந்துள்ளார்; உரை நடை நூல்கள் எழுதியும், செய்யுள் நூல்கள் எழுதியும், இசைப்பாடல்கள் எழுதியும், சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும், இவ்வாறு பல வகையில் தொண்டுகள் ஆற்றியுள்ளார். தமிழ்மொழியில் உரைநடை நூல்களை முதன் முதலில் எழுதிய பெருமை இவரையே சாரும். அதனால் இவர் உரைநடையின் தந்தை என்னும் பாராட்டைப் பெற்றார். இவர் உரைநடையின் தந்தை மட்டும் அல்லர்; புனைகதையின் தந்தையும் ஆவார். முதன் முதலாகப் பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புனைகதையைத் தமிழில் எழுதி வெளியிட்டார். இது நகைச்சுவை நிறைந்தது; உயர்ந்த கருத்துகளைக் கொண்டது; இலக்கிய வரிசையில் வைத்து எண்ணத்தக்கது, இவருடைய புனைகதை களைத் தாய் படிக்க மகன் கேட்கலாம்; அண்ணன் படிக்கத் தங்கை கேட்கலாம்; தந்தை படிக்கத் தாய் கேட்கலாம்; குடும்பமே கலந்து படிக்கத்தக்க அவ்வளவு சிறப்புடையது என்று பன்மொழிப் புலவர் புகழ்வர். இவர் சுகுணசுந்தரி சரித்திரம் என்னும் புனைகதை நூலும் எழுதியுள்ளார். வேதநாயகர், நீதி நூல், சித்தாந்த சங்கிரகம், பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி முதலிய சிறந்த செய்யுள் நூல்களும், சர்வ சமய சமரசக் கீழ்த்தனை என்னும் இசைப்பாடல் நூலும் எழுதி வெளியிட்டார் அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியிருந்தமையால் சட்டங்கள் ஆங்கில மொழியில் இருந்தன. அதனால் தமிழ் மக்கள் படும் இன்னல்களையெல்லாம் நீதிபதியாக இருந்த வேதநாயகர் நன்கு உணர்ந்திருந்தார். ‘xU Úâk‹w¤âš f£á¡fhu®fS« jÄHuhf ïUªJ, tH¡FiuP®fS« ÚâgâfS« jÄœ ngr¡Toa t®fshf ïUªjhš, tH¡F V‹ jÄÊnyna el¤jšTlhJ? என்று இவர் அக் காலத்திலேயே உரிமைக் குரல் கொடுத்தார். ஆங்கில ஆட்சிமுறை மாறித் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி தலையெடுக்க வேண்டும்; அது தழைத் தோங்க வேண்டும்; அது சார்ந்து, நீதிமன்றங்களில் தமிழ் மொழியிலேயே சட்டத்திட்டங்களும் அமைக்கவேண்டும்; வழக்குரைஞர்களும், வாதிப் பிரரிதவாதிகளும் தமிழிலேயே எதையும் எடுத்துச் சொல்லவேண்டும். நாட்டில் சுதந்திர ஒளி வீச வேண்டும் என்று வேதநாயகர் பேசிய பேச்சி லிருந்து இவருடைய உள்ளம் தெள்ளிதின் விளங்குகின்றது. இத்தகைய எண்ணங்கள் இவருடைய நெஞ்சத்தில் நிலைத் திருந்தமையாலும், நீதிபதியாகப் பணியாற்றி வந்தமையாலும் சட்டங்களை இவர் மொழிபெயர்க்க முயன்றார். நேரங் கிடைத்த போதெல்லாம் உயர்நீதி மன்றத்தின் சட்டங் களையும் தீர்ப்பு களையும் இவர் சிறிதுசிறிதாக மொழி பெயர்த்து வந்தார். கி.பி.1805ஆம் ஆண்டு முதல் கி.பி.1861ஆம் ஆண்டு முடிய உள்ள சட்டங்களை இவர் தமிழில் மொழி பெயர்த்தார்; அனைத்தையும் ஒன்றுசேர்ந்து அச்சிட்டு வெளியிட்டார். இப் பெருமகனார் செய்த மொழித்தொண்டின் பயனா கத்தான், இன்று தமிழார்வம் பூத்துக் குலுங்கி மலர்ந்து மணம் வீசிவருகின்றது. உ. இசைக்குயில் தமிழ்நாட்டில், தமிழ்மக்கள் முன்னிலையில் தமிழர்கள் பாடிவந்த இசையரங்குகளில், தமிழை ஒதுக்கிவிட்டுப் பிறமொழிப் பாடல்களையே அக்காலத்தில் பாடிவந்தார்கள் அத்தகைய நிலையில் தமிழிசைக்கு முதன்மை தரவேண்டும் என்று எண்ணினார் வேதநாயகர். இவர் குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், சமயச் சார்பில்லாமல், பொதுவான பாடல்களை இயற்றித் தமிழிசையைப் பரப்பினார். தமிழிசையின் மறுமலர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த பெருமை இவரைச் சாரும். இசைப்பாடல் இயற்றக் காரணம் வேதநாயகர், திரிசிரபுரத்திலிருந்த மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இசை நிகழ்ச்சிகளுக்குத் தவறாது சென்று கேட்டு மகிழ்வார். அரங்குகளில் பாடிய இசைவாணர் பிறமொழிப் பாடல்களையே பாடிவந்தனர். தமிழ்நாட்டில் விசய நகர மன்னர்கள் ஆட்சியும், நாயக்க மன்னர்கள் ஆட்சியும் பரவியிருந்தமையால், தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்றிருந்தது. அதனால் பாடல் இயற்றும் ஆசிரியர்கள் தெலுங்குப் பாடல்களை இயற்றத், தொடங்கினார்கள். இசை வாணரும் அவற்றையே மேடைகளில் பாடிவரலாயினர். இவ்வாறு தென்மாவட்டங்களில் நடைபெற்ற எல்லா இசையரங் குகளிலும் பிறமொழிப் பாடல்களே முழங்கி வந்தன. இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களையே கேட்டு வந்த வேநாயகரின் மனம் மிகவருந்தியது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல் களைக் கேட்க முடியவில்லையே என்று இவர் எண்ணி யெண்ணிப் பலநாள் நொந்து தவித்தார். மேலும், கிர்த்தனை அமைப்பில் பாடல்கள் இயற்றத் தமிழ் மொழி இடந்தராது என்னும் தவறான கருத்தும் அப்பொழுது நாட்டில் உலவியது. இக் கருத்தைக் கேள்விப்பட்ட வேதநாயகர், தமிழுக்கு இப்படி ஒரு பழி வரலாமா என்று துடித்தார்; அப் பழியை நீக்க வேண்டும் என்று சிந்தித்தார்; தாமே கீர்த்தனை அமைப்பு களில் தமிழ்ப்பாடல்கள் இயற்றுவ தென முடிவு செய்தார். வேதநாயகர்க்கு இயல்பிலேயே தமிழ்ப்புலமை நிறைந் திருந்தது. ஆயினும், இசைப்புலமையும் பாடுந்திறனும் இருந்தால், சிறந்த முறையில் இசைப்பாட்டுகளை இயற்றலாம் என்று இவர் எண்ணினார், அதனால் இசைப்பாட்டுப் பாடும் இரண்டு இசை வாணர்களுடன் தொடர்புகொண்டார்; அவர்களிடம் மாணவராக இருந்து, பெரிதும் முயன்று இசை பயின்றார்; முயற்சி திருவினை யாக்கும் என்னும் முதுமொழிக் கேற்ப நன்கு பாடும் ஆற்றலையும் பெற்றார். தமிழ்ப்புலமை, இசையறிவு, பாடுந்திறமை ஆகிய இம்மூன்றும் வாய்க்கப் பெற்ற வேதநாயகர் தமிழில் இசைப்பாட்டுகள் இயற்றினார்; இசையரங்குகளில் அவற்றைப் பாடுமாறு செய்தார். கீர்த்தனை முறையில் தமிழில் பாடமுடி யாதென்ற கருத்தை முரியடித்துக் காட்டினார்; தமிழை மறந்து, பிறமொழி யோசையில் மயங்கி கிடந்த தமிழகத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கி விட்டார் என்று சொல்லலாம். எந்தப் புதுமைக்கும் முதலில் எதிர்ப்பு ஏற்படுவது இயல்பே. இவருடைய தமிழிசை மறுமலர்ச்சிக்குப் எதிர்ப்புத் தோன்றியது; இகழ்ந்து கூறியவரும் உண்டு; எள்ளி நகையாடி யவரும் உண்டு; வெறுப்புக் காட்டியவர்களுக்கும் குறைவில்லை. ஆயினும் வேதநாயகர் இவற்றிற்கு அஞ்சினார் அல்லர்; மேலும்மேலும் புதிய பாடல்களை எழுதி அரங்கேற்றினார். விடாது முயன்ற மையால், தமிழிசைப் பாட்டுகள் எங்கும் பரவத் தொடங்கின. இசைவாணர் மேடைதோறும் தமிழிசைப் பாடல்களை முழங்கினர். வானொலி நிலையங்களில் இன்று நாடோறும் நாம் தமிழிசை கேட்டு மகிழ்கின்றோம். ஆயினும், இவருடைய பாடல்களை இன்னும் விரிவாகப் பரப்ப முயலுதல் வேண்டும். இசைவாணர் அவற்றை மறந்து விட்டனரோ என்னும். ஐயம் நமக்கு உண்டாகின்றது. வேத நாயகர் இயற்றிய இசைப்பாடல் களை நன்முறையில் அச்சிட்டுப் பரப்பவேண்டும். வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயத்துக்கு வேதநாயகரை நன்கு அறிமுகஞ்செய்ய வேண்டும். இவரை அறிமுகஞ் செய்துவைத்தால் இளைஞருடைய உள்ளங்களிலே நல்ல கருத்துகள் பல பதியும். அதனால் அவர்கள் நல்ல குடிமக்களாக வளர்ந்து வருவார்கள். நற்குடி மக்களாக வளர்ந்த அவர்களால் நாடு நலம் பெறும். சர்வ சமயக் கீர்த்தனைகள் இவருடைய பாடல்கள் இலக்கண வரம்பு கடவாதன. இவற்றில் சொல்லழகு மிளிரும்; ஓசையின்பம் உயர்ந்திருக்கும்; எதுகை மோனை எக்காளமிடும். எளிய சொற்கள், உயரிய கருத்துகள், நினைந்துநினைந்து மகிழும் உவமைகள், நகைச்சுவை, பத்திச்சுவை முதலியவை இவர் பாடல்களிலே உண்டு, கருநாடக சங்கீத வழிகளில் எவ்வளவு இராகங்கள் உண்டோ அவ்வளவுக்கும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கின்றார். வேதநாயகம் பிள்ளை பாடிய பாடல்கள், சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்னும் பெயர்தாங்கி, நூல் வடிவில் வெளிவந்தன. இவர் பாடல்களில் இறைவனைக் குறிக்குஞ் சொற்களெல்லாம் பொதுவாகவே அமைந்திருக்கும்; உள்ளத்தைத் திருத்தும் உயர்ந்த கருத்துகள் மிளிரும்; நகைச்சுவை பல விடங்களிலே தோன்றும். இவ்வாறு தமிழிசைக்குப் புத்துயிரும் மறுமலர்ச்சியும் உண்டாக்கும் குறிக்கோளுடன் பாடிப்பாடிப் பறந்து வந்த இசைக் குயில் வேதநாயகர் கி.பி. 1889ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் நாள் இவ்வுலகைவிட்டே மறைந்தார். இசைக்குயில் மறைந்து விட்டாலும் அக் குயிலின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. 2. மணிக்குயில் தேசிக விநாயகம் (கி.பி.1876 -1954) ஒரு நாடு நல்ல நாடு என்று சொல்லவேண்டுமானால், அந் நாட்டு மக்கள் நல்லவர்களாக விளங்க வேண்டும். மலை வளம், ஆற்று வளம் முதலிய வளங்களைக்கொண்டோ, விளைநிலம், சோலைநிலம் இவற்றின் செழிப்பைக்கொண்டோ மட்டும் ஒரு நாடு சிறப்புப் பெறுவதில்லை. மனவளங் கொண்ட மக்களைக் கொண்டுதான் அந்த நாடு, புகழுக்குரிய நாடென்று போற்றப் படும். மக்கள் பண்பாடு மிக்கவர் களாக வாழவேண்டுமானால், இளமைப் பருவத்திலேயே அவர்களைப் பண்படுத்தி வர வேண்டும். இளஞ்சிறார்களைப் போற்றி வளர்க்க மறந்த எந்த நாடும் ஏற்றம் பெறுவதில்லை, இவ்வுண்மையை நன்குணர்ந்து, இளஞ் சிறார் நெஞ்சங்களைப் பண்படுத்தி, மக்கட் பண்பை வளர்க்க வேண்டும் என்னும் கொள்கைக்காகவே வாழ்ந்தவர் மிகச் சிலரே. இத்தகைய சான்றோர்களுள் ஒருவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, கவிஞர்கள் தங்கள் நூல்களைப் புகழ்பெற்ற பெரியவர் களுக்கே காணிக்கையாக்குவது வழக்கம். ஆனால், கவிமணி தேசிகவி நாயகம் பிள்ளை தம் கவிதைத் தொகுப்பாகிய மலரும் மாலையும் என்னும் நூலைச் சிறுவர் சிறுமியர்க்கே காணிக்கை யாக்கிக் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத் தியிருக்கின்றார். செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இந்நூல் உரியதாய் என்றும் வாழ்கவே என்று இவர் தமது நூலில் எழுதியிருப்பதால், நாட்டின் இளம் பாலாரிடத்தே கவிமணி எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது நன்கு புலனாகும். இளந்தலையார் நலத்திலே அக்கறை கொண்டு விளங்கிய இப் பெருமகனாரைக் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாவா? அ.இளமைப் பருவம் பிறப்பும் கல்வியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தை அடுத்துத் தேரூர் என்னும் சிற்றூர் உளது. அவ்வூரில் வேளாண் மரபினர் சீருஞ் சிறப்புமாக வழிவழி வாழ்ந்து வருகின்றனர். அம் மரபில் சிவ தாணுப்பிள்ளை என்ற பெருமகனார் ஒருவர் பிறந்து, சிறந்து விளங்கினார். இவர் ஆங்கிலங் கற்றவர்; தமிழார்வம் மிக்கவர்; உப்பளத்தில் அரசுப் பணியாளராகப் பொறுப்பேற்று வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆதிலட்சுமி அம்மையார் என்பவர் வாழ்க்கைத் துணைவியாராக விளங்கினார். இவர்கள் செய்த நல்வினைப் பயனாகக் கி.பி.1876ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27ஆம் நாள் (தாது வருடம் ஆடி மாதம் 14ஆம் நாள்) கவிமணி தேசிக விநாயகம் இவர்களுக்கு நன்மகனாகத் தோன்றினார். சிவதாணுப் பிள்ளையும் ஆதிலட்சுமி அம்மையாரும் தங்களுடைய ஒரே ஆண்மகவான இவரைக் கண்ணெனப் போற்றி வளர்த்தனர். குழந்தைப் பருவங் கடந்து, கல்விப் பருவம் எய்திய தேசிக விநாயகம், தேரூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் சேர்க்கப் பெற்றார். அப்போது தமிழ்நிலமாகிய நாஞ்சில் நாடு திருவாங்கூர் ஆட்சிக்குள் இருந்தமையால், இவர் மலையாள மொழியையே கற்க வேண்டியவரானார். அம் மொழியைக் கற்று வந்தாலும், தமிழ் மொழியில் ஒரு தனியார்வம், இவர் நெஞ்சத்தில் ஊறிக்கொண்டே யிருந்தது. இடையறாது அந்த ஆர்வம் வளர்ந்து கொண்டே வந்தமையால், அது நிறைவேறுங் காலமும் வந்து சேர்ந்தது. எண்ணிய எண்ணியாங் கெய்துப, எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப, எண்ணிய வண்ணம் இவர் தமிழ்ப் புலமையும் பெற்றார். தேரூரின் வட எல்லையில் உள்ள பெரிய ஏரியின் நடுவே வாணன் திட்டு என்னும் பெயருடன் ஒரு தீவுத்திடல் இருக்கிறது. அத் திட்டிலிருக்கும் திருவாவடுதுறை மடத்தில் சாந்தலிங்கத் தம்பிரான் என்னும் பெரியார் தலைவராக இருந்தார். அவர் சமயத் துறையில் எவ்வளவு பேரறிவு படைத்திருந்தாரோ அந்த அளவிற்கு இலக்கிய இலக்கணங்களிலும் திறமை படைத்தவராக விளங்கினார். அவரிடம் கவிமணியும் வேறு சிலரும் தமிழ் கற்கத் தொடங்கினர். தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே தம்பிரானிடம் கவிமணி தமிழையும் நன்கு கற்றுவந்தார். தொடக்கப் பள்ளியில் படிப்பு முடிந்ததும் இவர் கோட்டாற்று ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படித்துவரலானார். இவர் தம் பத்தாம் வயதில் தந்தையாரை இழந்துவிட்டார்; அதனால் தாயாரின் மேற்பார்வையில் வளர்ந்துவந்தார். ஆங்கிலப் பள்ளியில் இவர் பயின்று வந்தபோதும், தம்பிரானிடம் சென்று தமிழ் கற்கத் தவறியதில்லை. அதனால், இவர் இலக்கியப் பயிற்சியும் இலக்கணப் பயிற்சியும் பெற்றுத் திகழ்ந்தார். பாடல்கள் வரலாற்றுக் குறிப்புகள் என்றால் இவர்க்குத் தனி விருப்பம் அப்பொழுதே இருந்து வந்தது. இவர் ஐந்தாண்டுகள் தமிழ் கற்றுச் சிறந்த புலமையும் பெற்றார். இளமைப் பருவத்திலேயே பாடல்கள் இயற்றும் ஆற்றலும் இவரிடம் அமைந்திருந்தது. சாந்தலிங்கத் தம்பிரானுக்குப் பிறகு, அம் மடத்தின் தலைவராகச் சங்கரலிங்கத் தம்பிரான் என்பவர் வந்துசேர்ந்தார். அவரிடத்தும் கவிமணி தொடர்ப்பு கொண்டிருந்தார். புதிய தம்பிரான் கவிமணியின் பாடல்களைக் கேட்கும்போ தெல்லாம் மகிழ்ச்சி அடைவார்; நீ எதிர்காலத்தில் பெருமையுடன் விளங்குவாய் என்று வாழ்த்துக் கூறுவர். கவிதைப் பயிற்சி ஒரு நாள் கவிமணியும் அவருடன் பயின்றவர்களும் மடத்துக்கு வந்தார்கள். அப்பொழுது தம்பிரானுக்கு அருகில் அப்பம், வடை முதலிய தின்பண்டங்கள் நிறைந்த தட்டொன்று இருந்தது. தம்பி ரான் அவற்றை அவர்களுக்குக் கொடுக்க எண்ணினார்; ஆயினும் ஒப்பித்தல் போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுபவர்க்குக் கொடுக்கக் கருதினார்; சிறுவர்களை அழைத்தார்; நான் தேவாரப் பாடல் ஒன்றைப்பாடுவேன். பிறகு புத்தகத்தைப் பார்த்து, உங்களுள் ஒருவர் அதைப் படிக்கவேண்டும். அதன் பின்னர், மீண்டும் ஒரு முறை நான் பாடுவேன். இவ்வாறு மூன்று முறை கேட்ட அந்தப் பாடலை யார் பிழையில்லாமல் சொல்கின்றீர்களோ அவர்களுக்கு அப்பமோ, வடையோ கொடுக்கப்படும் என்று ஒரு போட்டி வைத்தார். போட்டியில் கவிமணியே வெற்றி மேல் வெற்றி பெற்றார். தம்பிரானுக்குப் பக்கத்திலிருந்த அப்பம் வடையெல்லாம் கவிமணிக்கு முன்னால் வந்துசேர்ந்தன. உடனிருந்த மாணவர் களுக்குத் தோல்வியைப் பற்றி அவ்வளவு கவலையில்லை யென்றாலும், தின்பண்டங்கள் அவ்வளவும் போயினவே என்ற ஏக்கம் மிகுதியாக இருந்தது. இரக்கமும் அன்பும் கொண்ட கவிமணி அவற்றை எல்லார்க்கும் பகிர்ந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சியினால் கவிமணியின் நினைவாற்றல் புலப்படுகிறது. ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கவிமணி ஓர் அழகான பாடலை இயற்றினார். அது சிறந்த பாடல் என்று இவர் உணர்ந்தார்; ஆயினும், மற்றவர்கள் அதனை எப்படிக் கருதுகின்றார்கள் என்று அறிய ஆசைப் பட்டார்; அதனால், அந்தப் பாடலை ஒரு தாளில் எழுதித் தமிழாசிரியர் இருக்கைக்குப் பக்கத்தில் யாரும் அறியா வண்ணம் வைத்து விட்டார். அங்கு வந்த தமிழாசிரியர் அதனைக் கண்டார்; அதை எடுத்துப் படித்துப் பார்த்தார்; பாடல் மிகச் சிறந்த முறையில் அமைந்திருந்ததைக் கண்டு மிகுதியாகப் பாராட்டி, யாருடைய பாடலென்று அறிய முடியவில்லையென்றாலும், சொல்லழகும் பொருளழகும் நிறைந்திருக்கிறது என்று வியந்து கூறினார். தம்முடைய பாடல் தம்முடைய ஆசிரியராலேயே பாராட்டப் பெறுவதைப் கேட்டுக் கொண்டிருந்த கவிமணி, மனத்துக்குள்ளேயே மகிழ்ந்துகொண்டார். அவ்வப்பொழுது கவிமணி, வேடிக்கையாகத் தம் கவித்திறன் வெளிப்படுமாறு, பாடல்களைத் தனித்தனியாகப் பாடிவந்தார். ஒருசமயம் தம்பிரான் வேண்டிக்கொண்டதற் கிணங்கத் தேரூர்ப் பெருங்குளத்தின் நடுவே கோவில்கொண்டிருக்கும் அழகம்மை ஆசிரிய விருத்தம் என்று அந் நூலுக்குப் பெயர் வைத்தார். அப் பாடல்களில் பத்திச் சுவை, இனிமை, கனிவு, கற்பனை யாவும் விளங்கும். பின்னர் இவர் தம்முடைய குலதெய்வமாகிய அழகிய மணவாள விநாயகர்மீதும், சுசீந்திரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் மீதும் பாடல்கள் பல பாடினார். ஆராய்ச்சி மனப்பான்மை கவிமணிக்கு இளமையிலேயே, எதையும் ஆராய்ந்து பார்க் கின்ற ஆர்வம் இயல்பாக அமைந்திருந்தது. இந்த ஆர்வம் தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சியிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் இவரை ஈடுபடுத்தியது. அரசுக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையில் கணேசப் பிள்ளை என்பவர் பணியாற்றி வந்தார். அவர் திருவனந்த புரத்தில் தங்கியிருந்தாலும், அடிக்கடி தேரூருக்கு வருவார். வாய்ப்புக் கிட்டியது. அவருடைய தொடர்பு கவிமணியின் ஆராய்ச்சி ஆர்வத்தை வளரச் செய்தது. சுங்கான்கடை என்னும் இடத்துக்கு அருகில் பழங்கோட்டை ஒன்று இருந்தது என்று ஆராய்ந்து, அதற்குரிய சான்றுகளும் தொகுத்து எழுதிவைத்திருந்தார் கணேசப் பிள்ளை. அவர் எழுதிவைத்திருந்த அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை, அவர் அறியாவண்ணம் காணும் வாய்ப்பைக் கவிமணி பெற்றார். அக் கருத்தை மறுத்துத் தகுந்த சான்றுகளும் காட்டி, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றினை எழுதி, திருவாங்கூர் டைம் என்னும் ஆங்கில இதழில் இவர் வெளியிட்டார். இக் கட்டுரையைப் படித்துப் பார்த்த கணேசப் பிள்ளை திகைத்துப் போனார். வெளியிடப்பட்டுள்ள தென்னிந்தியக் கல்வெட்டுகள் அனைத்தையுமே கவிமணி கற்றுத் தெளிந்துவைத்திருந்தார்; இவற்றைப் படித்து, நிறைந்த செய்திகளைத் தொகுத்து வைத்திருந்தார்; அதன் பயனாகக் காந்தளூர்ச்சாலை என்னும் ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அந் நூலில் இவருடைய ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் வெளிப்பட்டன. இவர் தொகுத்து வைத்திருந்த மொழியாராய்ச்சிக் குறிப்புகளும், இலக்கண ஆராய்ச்சிக் குறிப்புகளும், கல்வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளும் பலருக்குப் பெரிதும் பயன்பட்டன. தவறான ஆராய்ச்சிகள் வெளிவந்தால், அவற்றிற்குத் தகுந்த சான்றுகாட்டி இவர் மறுப்புரைகள் எழுதுவதுண்டு; நூற்பதிப்புகளில் பிழைகள் காணப்படும் பொழுது, அவற்றைத் திருத்திக்கொள்ளு மாறு காரணங்காட்டிப் பதிப்பாசிரியர்க்கு எழுதுவார். ஆ.ஆசிரியர் பணி திருமணம் கவிமணி ஆங்கிலப் பள்ளியில் பயிலும் பொழுதே கவிதை எழுதுதல், ஆராய்ச்சிக் கட்டுரை வரைதல் போன்ற துறைகளில் ஆர்வங் காட்டியபோதிலும், படிப்பில் கருத்துடனேயே இருந்து வந்தார்; உயர் நிலைப் படிப்பை முறையாகப் படித்து முடித்தார். பின்னர், இவர் கல்லூரியில் சேர்ந்தார்; கல்லூரியில் ஓராண்டே படித்தார். குடும்பப் பொறுப்பு மிகுதியாகவே படிப்பை நிறுத்தி விடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர்தம் இருபத்தைந்தாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர்க்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்தவர் உமையம்மை என்னும் பெயருடையவர் ஆவார். இவ்வம்மையார் நாகர்கோவிலை அடுத்துள்ள புத்தேரியில் பிறந்தவர்; நற்குண நற்செயல்கள் நிரம்பப் பெற்றவர். இல்லற வாழ்க்கை இனிதே நடைபெற்று வரும் போது, ஏதேனும் ஒரு பணியில் அமரவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. அரசுப் பணியாக இருந்தால் நல்லது என்று சிந்தித்தார். கவிமணி அடக்கமுடையவர்; பொறுமை மிகுந்தவர்; கருணையுள்ளங் கொண்டவர்; ஆராயும் பண்புடையவர்; தம் எண்ணங்களைக் கவிதையாகவும் கட்டுரையாகவும் பிறருக்கு எடுத்துரைக்கும் இயல்புடையவர்; சொல் வன்மையும் உடையவர். பொதுவாக நல்லாசிரியர் ஒருவர்க்கு வேண்டும் பண்புகள் அனைத்தும் இவரிடம் குடிகொண்டிருந்தன. அதனால் இவர் ஆசிரியப் பணியில் அமர்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். ஆசிரியத் தொழில் மிக மிகத் தூய்மை வாய்ந்தது. இவர் இயல்புக்கும் அதுவே ஏற்ற தொழிலாயிருந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆசிரியப் பணியை மேற்கொள்வதென்னும் முடிவுக்கு வந்த கவிமணி முதன்முதலில் கோட்டாற்றிலுள்ள தொடக்கப் பள்ளி யொன்றில் ஆசிரியராய் அமர்ந்தார், ஆசிரியர்க்குரிய நல்லியல்புகள் அத்துணையும் வாய்க்கப் பெற்றிருந்தமையால், அத் தொழிலில் இவர் சிறந்துவிளங்கினார். தொடக்கத்திலே இவர் இளஞ்சிறார்க்கு ஆசிரியராக அமர்ந்த காரணத்தால், அவர்களுடைய உளப்பாங்கை நன்கு அறிந்துகொண்டார். அதனால் தான் குழந்தைகளுக்காகக் கவிதை எழுதுவதில் இவர் ஒப்பற்று விளங் கினார். இவர் கற்பிக்கும் திறனும், குழந்தைகளிடம் காட்டும் அன்பும், எளிமையும், இனிமையும் மாணவர்களைக் கவர்ந்தன; நல்லாசிரியர் என்னும் புகழும் பரவியது. பதவி உயர்வு குழந்தைகளின் மனப் பாங்கறிந்து கற்பித்து வரும் கவிமணியின் சிறப்பு, நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. இதனை யறிந்த அரசினர், இவரைக் கோட்டாற்றிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஓர் ஆசிரியராக நியமித்தனர். இத் தொழிலுக்குப் பெரிதும் தகுதியுடைய வராக இருந்தமையால் அங்கும் இவர் சிறந்து விளங்கினார்; அதன் பின்னர், திருவனந்தபுரத்திலுள்ள மகளிர்க் கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு மாற்றம் பெற்றார். அங்கே பணியாற்றி வந்த பொழுது, இவருடைய தமிழ்ப் புலமையறிந்த அரசினர், திருவனந்த புரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இவரைத் தமிழா சிரியராக அமர்த்தினர். சில ஆண்டுகளுக்குப்பின், இவர் மகளிர் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராக மாற்றப்பட்டார். ஓய்வு பெறும் வரை இப்பதவியிலேயே தொடர்ந்து பணியாற்றிவந்தார். கல்லூரியில் பணியாற்றி வந்தபொழுது, கல்லூரித் தலைவியாக இருந்த அம்மையார், இவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்; தம் உடன் பிறந்தவரைப்போலக் கருதிக் கல்லூரித் தொடர்புள்ள எச் செயலையும், இவருடன் கலந்து பேசிச் செய்துவந்தார்; பல பொறுப்புகளையும் இவரிடம் ஒப்படைத் திருந்தார். இவர் மற்ற ஆசிரியர்களின் அன்பையும் நன் மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார். மாணவிகளுக்கு இவர் கற்பித்த முறை தனித்தன்மை வாய்ந்தது; பாடல்களைத் திணிக்காமல், மாணவி யரிடம் அமைந்திருக்கும் அறிவொளியைத் துலக்கமுறச் செய்யும் ஒரு தூண்டுகோலாகவே இவர் விளங்கினார். அன்புடன் எதனையும் இவர் உணர்த்தி வந்தமையால், மாணவியரும் இவரைத் தநதை போல் எண்ணி இவரிடம் பெருமதிப்புடன் நடந்து வந்தனர். இவர் ஐம்பத்து மூனற் வயதுவரை பணியாற்றி வந்தார். கவிமணி தன்மான உணர்வும் தன்னம்பிகையும் உடையவராக வாழ்ந்து வந்தார்; தம் பதவி உயர்வுக்காகவோ வேறு காரணங் களுக்காகவோ எவரையும் கெஞ்சி நிற்கமாட்டார். அடக்கமும் பணிவும் உடையவராக இருந்தாலும் இவர் தன் மதிப்பு மிக்க வராகவே வாழ்ந்தார்; பெருமிதத்துடனேயே இறுதிவரை திகழ்ந்தார். உயர்நிலைப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரவேண்டு மென்று இவர் விரும்பவில்லை. இவருடைய தமிழ்ப் புலமையை அறிந்து கொண்ட கல்லூரித் தலைவியின் முயற்சியினாலேயே இவர் கல்லூரிக்கு வந்தார். இவரைப் பேராசிரியராக்கக் கல்லூரித் தலைவிமுயன்று கொண்டிருந்தபோது, கல்வித்துறைத் தலைவர், கவிமணியின் தகுதியைக் காட்டும் சான்றிதழ் ஒன்று தேவை என்றார். இதனை யறிந்த கவிமணி, என் தகுதியைக் காட்டச் சான்றிதழுக் காக எவரிடமும் சென்று நிற்கவும் வேண்டா; எனக்குப் பதவி உயர்வும் வேண்டா என்று கூறிவிட்டார். இவருடைய இயல்பையும் திறமையையும் நன்கு தெரிந்திருந்த கல்லூரித் தலைவி, தாமே கல்வித்துறைத் தலைவரைக் கண்டு பரிந்துரை செய்து, அவ் வேலை கிடைக்குமாறு செய்தார். எனினும், அப் பதவியை ஏற்கக் கவிமணி ஒருப்பட்டிலர்; ஓய்வுபெற மேலும் இரண்டாண்டுகள் இருந்தும், முன்பாகத் தாமே விலகிக்கொண்டார். இ.கவிமணியின் நூல்கள் கவிமணி தமிழ்நாட்டிற்குப் படைத்துக் கொடுத்த நூல்களை மூன்று வகையாகக் கொள்ளலாம். ஒன்று கவிதை நூல்கள்; மற்றொன்று இசைப் பாடல்கள்; மூன்றாவது உரைநடை நூல்கள். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமார் கயாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் என்பன கவிதை நூல்கள். தேவியின் கீர்த்தனங்கள் இசைப் பாடல்களால் ஆன நூல். கவிமணியின் உரைமணிகள், காந்தளூர்சாலை என்பன உரை நடை நூல்கள். இவற்றுள் காந்தளூர்ச்சாலை வரலாற்று அடிப் படையில் எழுந்த ஆராய்ச்சி நூல். இஃது ஆங்கிலத்தில் அமைந்தது; இதுவேபோன்ற இவர் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரைகள் பல இன்னும் நூல் வடிவம் பெறவில்லை. கவிதை நூல்கள் மலரும் மாலையும் என்பது கவிமணி பல்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல். பதிப்பு பாமலர்களை முதலிலும் கதம்பப் பாமலர்களை இறுதியிலும் கொண்டு இலக்கியமணம் கமழ்வது இம் மாலை. வெண்ணிலா, கடல், மலர்கள் போன்ற இயற்கைப் பொருள் களைப்பற்றிப் பாடிய பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பசு, பொம்மைக் கலியாணம், கடிகாரம், கிளி, நாய், கோழி முதலிய தலைப்புகளில் குழந்தைகளுக்காகவே பாடப்பெற்ற பாடல்களும் இதில் உண்டு. சமூகக் கொடுமை களை அகற்றுவதற்காகப் பாடிய பாடல்களும் தத்துவக் கருத்துகள் அடங்கிய பாடல்களும் நம் அறிவுக்கு விருந்தாம். தமிழ்ப்பண்பாட்டின் நறுமணத்தை இம்மாலையில் நாம் நன்கு நுகரலாம். ஆசிய ஜோதி என்னும் நூல், ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துத் தமிழில் எழுதப் பெற்றது. இதனைப் படிப்பார்க்கு மொழிபெயர்ப்பாகவே தோன்றாது. மூல நூல் படிப்பது போலவே உணர்வு தோன்றம். இவருடைய மொழி பெயர்ப்புப் பாடல்கள் எல்லாமே இவ்வாறுதான் அமைந்திருக் கின்றன. பொதுவான கருத்துகளை வைத்துக் கொண்டு, தமிழ் மரபுக்கேற்ப இவர் பாடல்களை இயற்றுவார். மொழிபெயர்ப்பு என்ற நினைவே தோன்றாமல், தமிழ் மூலத்தைப் படிப்பது போலவே இருக்கு மாறு மொழி பெயர்ப்புப் பாடல் இயற்றுகின்ற இவருடைய பேராற்றலைச் சான்றோர் புகழ்ந்துரைக்கின்றனர். இந்நூல் புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது; உள்ளத்தை உருக்க வல்லது; கடவுள் பேரால் உயிர்ப்பலி கூடாது என்று கூறுவது. உமார் கயாம் பாடல்களும் மொழிபெயர்ப்பு நூலே. பாரசீகத்தில் பிறந்த கவிஞர் உமார் கயாம்; அவருடைய பாடல் களைப் புதுப் பொலிவுடன் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் கவிமணி. இப்பாடல்கள் இனிமைவாய்ந்தன; பொருள் மிக்கன. இப் பாடல்களைப் படிப்பவர்க்கு, வேறு உலகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றும். நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் என்னும் கவிதை நூல் நகைச்சுவை நிரம்பியது. நாஞ்சில் நாட்டில் ஒரு வேடிக்கை யான வழக்கம் முன்பு இருந்துவந்தது. ஒருவருடைய சொத்து அவருடைய மக்களுக்கு உரிமையாகாது; அவர்தம் சகோதரி மக்களுக்கே, அஃதாவது மருமக்களுக்கே உரிமை யாகும். இதற்கு மருமக்கள் தாயம் என்பது பெயர். இவ் வழக்கத்தால் பல கேடுகள் நிகழ்ந்தன. இம்முறையைக் கண்டிக்கும் வகையில் நகைச்சுவை பொருந்த இவரால் எழுதப்பெற்ற நூல் இது. தேவியின் கீர்த்தனங்கள் கவிமணி தமிழிசைக்குச் செய்த தொண்டாகும். தேசிக என்பதிலுள்ள முதலெழுத்தையும் விநாயகம் என்பதிலுள்ள முதலெழுத்தையும் சேர்த்துத் தேவி என்று கொண்டு, தேவியின் கீர்த்தனங்கள் என்னும் பெயர் வைக்கப்பெற்றுள்ளது. பத்திச் சுவை நிறைந்த நூல் இது. உரைநடை நூல்கள் கவிமணியின் உரைமணிகள் என்பது இவருடைய உரை நடைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலாகும். காந்தளூர் சாலை என்பது சிறந்த ஓர் ஆராய்ச்சி நூல். கவிதைப் பண்பு இவருடைய பாடல்கள் எளிய சொற்களால் ஆனவை; இனிமை நிறைந்தவை; படித்தாலும் கேட்டாலும் மனத்தை உருக்குபவை. அருஞ்சொற்களைக்கொண்ட பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார். எனினும் சிறுவர் சிறுமியரை மனத்தில் வைத்துக்கொண்டு பாடியதாலும், அவர்களுக்காகப் பாடுவதையே குறிக்கோளாகக் கொண்டமையாலும் எளிய சொற்களைக் கொண்டே இவர் பாடல்களை இயற்றினார். ஆயினும் உயர்ந்த கருத்துகளை அந்தப் பாடல்கள் உணர்த்தும். சிறுவர்க்கான பாடல்களைப் பெரியவர்களும் சொல்லிச் சொல்லி இன்புறுவர். ரசிகமணி என்னும் சிறப்பினைப் பெற்ற டி.கே. சிதம்பரநாத முதலியார். கவிமணியின் பாடலைப் பாடிப்பாடி உருகுவார்; நம்மையும் உருகவைப்பார். ஒருசமயம் கவிமணி சிரங்கினால் பெருந்துன்ப முற்றார். உடல் முழுவதும் சிரங்கு பரவியது. தொல்லை தாங்க முடிய வில்லை. கவிஞர் அல்லற் பட்டாலும் அந்த வேதனை பாட்டாகவே எழுந்தது. துயரத்தையும் நகைச்சுவை பொருந்தவே இவர் வெளியிட்டார். இடுக்கண் வருங்கால் நகுக என்பதை நன்கு உணர்ந்த கவிமணி, நகைச்சுவையுடன் வேதனையை வெளிப் படுத்திய அந்த வெண்பா இதுவே; முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம் பத்திஒளி வீசு பதக்கமெலாம் - சித்தன் சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத் தரங்கண்டு தந்த தனம். பதக்கமென்று சிரங்குகளைக் குறிப்பிடுகின்றார். முத்து, பவழம், வயிரம், மாணிக்கம் முதலியவற்றை வரிசையாகப் பதித்து வைத்த பதக்கமாம். அப் பதக்கம், இவருடைய தரங்கண்டு, சிரங்கப்பராயனால் கொடுக்கப்பட்ட பரிசாம். இதில் எவ்வளவு நசைச்சுவை பொருந்தியுளது! சிரங்கு தீர இவர் மருந்துண்டார்: உடலில் மருந்துகள் பூசினார். ஆயினும் சிரங்கு நீங்கவில்லை. அதற்கும் இவர் மற்றொரு வெண்பாப் பாடினார்: உண்டமருந் தாலும் உடல்முழுவ தும்பூசிக் கொண்டமருந் தாலும் குணமிலையே - மண்டு சிரங்கப்பா ராய சினமாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு. இத்தகைய அழகிய வெண்பாக்கள் பல பாடினார். எவ்வுயிர்க்கும் துன்பம் இழைத்தல் கூடாது என்னும் அருள் நெஞ்சம் அப்பொழுதே இவரிடம் அரும்பத் தொடங்கி விட்டது. படிக்கும் பழக்கம் ‘go¡F« gH¡f¤ij kÅj‹ XusnthL ÃW¤â ÉL »‹whnd! இறக்கும் வரை கற்காமல் இருக்கின்றானோ! என்று வள்ளுவர் வருந்தியுரைக்கின்றார். கவிமணி அதனை நன்குணர்ந் தமையால் எப்பொழுதும் படித்துக்கொண்டே யிருந்தார். இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தபோதும், இவர் படிப்பதை நிறுத்தியதில்லை. ஊக்குவிக்கும் பண்பு வளர்ந்துவிட்ட எழுத்தாளர்கள், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களைப் பாராட்டுவதைக் காண்பது அரிது. ஆனால், கவிமணியோ இளம் எழுத்தாளர்களைப் பாராட்டி, ஊக்கமூட்டுவது வழக்கம். கவிதை எழுதுபவர்களோ கட்டுரை எழுதுபவர்களோ, கதை எழுதுபவர்களோ தம்மிடம் வந்தால், குறைகளை எடுத்துக் காட்டி அவர்களுடைய ஊக்கத்தைக் குன்றச்செய்யமாட்டார். அவர்கள் எழுதியவற்றுள் நல்லன போற்றி, இப்படித்தான் எழுதவேண்டும்; அது நன்றாய் இருக்கிறது; இது நன்றாய் இருக்கிறது; இன்னும் நன்றாய் எழுத வேண்டும் என்று சொல்லி, மேலும் மேலும் எழுதத் தூண்டுவார். இவ்வாறு பிறரையும் வளர்ந்துவிட எண்ணும் இயல்பு இவரிடம் மிக்கிருந்தது எளிமை வாழ்வு எவரேனும் தம்பால் வந்து, பிறரைப்பற்றிக் குறைகள் சொன்னால், அவற்றைச் செவிகொடுத்துக் கேட்கமாட்டார்; தாமும் பிறரைப்பற்றி அவர் கண்டால் நேரிலேயே அன்பாக எடுத்துச்சொல்லி, அவரைத் திருத்துவார். வெளிப்பகட்டை இவர் ஒரு சிறிதும் விரும்பியதில்லை; எல்லாவற்றிலும் எளிமையையே விரும்பினார். ஆடையில் எளிமை, தோற்றத்தில் எளிமை, பேச்சில் எளிமை, எழுத்தில் எளிமை, பழகுவதில் எளிமை அனைத்திலுமே எளிமைதான். இவரிடத்தில் எளிமை குடிகொண்டிருந்தமையால், ஆடம் பரத்தை விரும்பவில்லை; ஆடம்பரத்தை விரும்பா மையால் புகழையும் விரும்பவில்லை. புகழை விரும்பாத காரணத்தால் இவரைப் பாராட்டப் பலர் அழைத்தும் இவர் செல்லவில்லை; ஆயினும், தவிர்க்கமுடியாத சில இடங் களுக்கே சென்று வந்தார். யார் புகழை வெறுத்து ஒதுக்குகிறார்களோ, அவர்களைப் புகழ் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே யிருக்கும். புகழ் அவர்களைவிட்டு விலகவே விலகாது. தன்னை வெறுத்து ஒதுக்கிய கவிமணியைப் புகழ் சூழ்ந்து கொண்டேயிருந்தது. உயர்பண்பு சுற்றுச்சூழலை அறிந்து நடந்துகொள்ளும் பண்பும் இவரிடம் இருந்தது. ஒரு சமயம் திருமண விருந்து ஒன்றில் இவர் கலந்து கொள்ள நேர்ந்தது. அங்கே கூட்டம் மிகுதியாக இருந்தது. அனைவரும் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு களிப்பில் மூழ்க்கி யிருந்தனர். அப்பொழுது இவருக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் பிரித்துப் பார்க்காமலே சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்; ஏனெனில், அது வருத்தம் தருஞ் செய்தியாக இருந்தால், மகிழ்ச்சி யுடன் இருக்கும் அனைவரும் வருந்துவரே என்று கருதி அவ்வாறு செய்தார். அன்று மாலை வரை இவர் அதைத் தொடவேயில்லை; எல்லாரும் கலைந்து சென்ற பிறகு அதைப் படித்துப் பார்த்தார். உண்மைமயில் அது வருத்தம் தருஞ் செய்தியாகவே இருந்தது. இவருடைய மருமகள் இறந்துவிட்ட தாகச் செய்தி வந்திருந்தது. கவிமணி, இத்தகைய உயரிய நல்லியல்புகளுக்கு உறை விடமாக விளங்கி வந்தமையால், உயர்ந்த மனிதராக முடிந்தது. உ. மணிக்குயில் தேசிகவிநாயகம் தேசிகவிநாயகத்தின் கவிமணம் தமிழ் நாடெங்கும் பரவியது. கவிமணத்தை நுகர்ந்து மகிழ்ந்த தமிழ் நெஞ்சங்கள் இவரைக் கண்டு மகிழவும், போற்றிப் பாராட்டவும் துடித்துக் கொண்டி ருந்தன. எங்கள் ஊருக்கு வருக, எங்கள் ஊருக்கு வருக என்று அழைப்பு வந்தவண்ணமாகவே இருந்தது. இவர்தாம் புகழை விரும்பாத புண்ணியராயிற்றே! இயலாது என்று இவர் எழுதி விடுவார். என்றாலும் அன்பை வெல்ல முடியுமா? அன்புக் காகக் கட்டுப்பட்டுத் தவிர்க்க முடியாமல் சில பாராட்டுகளை இவர் ஏற்றுக்கொண்டார். கவிமணி முதன்முதலாகக் கவிஞர் பெருமான் தேசிகவிநாயத்தைப் பாராட்டிய பெருமை சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தையே சாரும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு, டிசம்பர் மாதம், இருபத்து நான்காம் நாள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவுக்குத் தலைமை தாங்கியவர். தமிழவேள் உமாமகேசு வரனார் ஆவர். அவர் தேசிகவிநாயகத்தின் அருமை பெருமை களையும் கவிதைச் சிறப்பையும் பாராட்டிப் பேசிக் கவிமணி என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவருடைய இயற்பெயர் சுருங்கிக் கவிமணி என்னும் பெயரே மேலோங்கியது. கவிமணி என்று பாராட்டப்பெற்ற இந்த மணிக்குயில். இனிய கீதங்களைப் பாடிப்பாடி நம்மை மகிழ்வித்துக் கொண்டேயிருந்தது. கவிமணி எவ்வளவுக் கெவ்வளவு புகழை வெறுத்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு புகழ் இவரை விரும்பியது. கவிமணிப் பட்டம் பெற்ற பிறகு நாளுக்கு நாள் இவர் தம் புகழ் வளரலாயிற்று. கவிமணியின் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த பாராட்டு என்று சொன்னால், அஃது ஆத்தங்குடியில் நடந்த பாராட்டாகத்தான் இருக்க முடியும். பாராட்டுகள் கவிமணியின் பாடல்களைத் தமிழ் நாட்டிற்கு முதன் முதல் அறிமுகஞ்செய்துவைத்த பெருமை, குமரன் என்னும் இதழை நடத்தி வந்த தமிழறிஞர் சொ.முருகப்பனாரையே சாரும். அவருடைய முயற்சியாலேயே ஆத்தங்குடியில் பாராட்டுக்கு கூட்டம் நடைபெற்றது. பாராட்டென்றால் கவிமணி ஒப்புக் கொள்வாரா? அதனால் ரசிகமணி டி.கே.சிதம்பரநாதரின் துணையால் இவரை அழைத்து வந்தனர். செட்டிநாட்டரசர் அண்ணாமலை வள்ளல் கவிமணியை வரவேற்று, மிகச் சிறந்த சொற்பொழி வாற்றிப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார். பழங்கால மன்னர்கள் தம் அரண்மனையில் புலவர் களுக்குச் சிறப்புச் செய்த காட்சிபோல் அந்தக் காட்சி விளங்கியது. செட்டி நாட்டரசர் பெருமிதத் தோற்றத்துடன் மேடையில் ஏறி நின்று, பொன்னாடையை எடுத்து விரித்து, மகிழ்ச்சி பொங்க, அழகாக அமைதியாகப் புலவரை மதிக்கும் பொறுப்போடு கவிமணிக்குப் போர்த்திய காட்சியும், கண்ணீர் மல்கக் கைகுவித்துப் பணிவோடு தலைவணங்கி நின்று, கவிமணி அதனை ஏற்றுக் கொண்ட காட்சியும் கண்டு களித்தவர்களுடைய நெஞ்சங் களிலும் கண்களிலும் இன்றும் நின்று நிலவுகின்றன. பாராட் டென்றால் அஃதன்றோ பாராட்டு! கவிமணி பாடிய ஒரே ஒரு வெண்பாவைப்பற்றி ரசிகமணி நெடுநேரம் பேசினார்; பொருள் கூறாமல், திரும்பத்திரும்ப அதனைப் பாடி இன்பத்தில் திளைத்தார்; கேட்டோரையும் திளைக்க வைத்தார். தமிழறிஞர்கள் பாராட்டிப் பேசியபோது, கவிமணி நாணித் தலைகுனிந்தே வீற்றிருந்தார். கவிமணி தம் பாடலைக் குழந்தைகள் பாடி ஆடி நடித்தபோது அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார்; சிறப்புற நடித்த சிறுவன் ஒருவனை ஆரத்தழுவிக்கொண்டார். கவிமணியின் நன்றியுரை பொன்னாடை போர்த்தப்பெற்ற கவிமணி எழுந்து நின்று, கண்கலங்க, மெய்ந்நடுங்க, சொல் தடுமாற, உணர்ச்சி வயமாகி, அன்பு பொங்கத் தமக்கே உரிய அடக்க உணர்வுடன் சில மொழிந் தார். அம் மொழிகளில்தான் எவ்வளவு அடக்கம்! எவ்வளவு பண்பு! எவ்வளவு உணர்ச்சி! யானைக்குப் போர்த்த வேண்டிய பொன்னாடையை ஆட்டுக் குட்டிக்குப் போர்த்தி விட்டீர்கள். நான் இத்தகைய பாராட்டுகளுக்குத் தகுதியுடை யவனா? எனினும் என் தமிழ்த்தாய்க்குச் செய்யப்பபெற்ற சிறப்புகளாகவே இதனைக் கருதுகிறேன் என்று பண்பும் பணிவுந்தோன்ற மொழிந்தார். எழுபதாம் ஆண்டு விழா 1944ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர், நாகர்கோவிலில் கவிமணியின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா மிக்க சிறப்புடன் நடைபெற்றது. இந்திய அரசில் அந் நாள் நிதியமைச்சராய் இருந்த ஆர்.கே.சண்முகனார் பெருமக்கள் பலருடன் நேரில் வந்து, கொங்கு நாட்டு மக்கள் சார்பில் கவிமணிக்குப் பாராட்டு விழா நடத்திச் சிறப்புச் செய்தார். சொந்த ஊரில் சிறப்பு சொந்த ஊரில் யாருக்கும் அவ்வளவு புகழோ பெருமையோ இருப்பது அரிது. ஆனால், கவிமணிக்கு இவர் பிறந்த ஊரில் எல்லையில்லாப் புகழ் இருந்தது. அவ்வூர் மக்கள் கூடிக் கவிமணியின் பெயரால் ஒரு மண்டபம் எழுப்பினர்; பெரும் பொருட்செலவில் கண்ணையும் கருத்தையும் கவரும்வண்ணம் கவிமணியின் வாழ்நாளிலேயே அதனைக் கட்டினர்; இவருடைய உளங்கனிந்த வாழ்த்தையும் பெற்றனர். நாகர்கோவில் நகரிலே பொதுமக்களின் நன் கொடையால் கவிமணி நிலையம் என்னும் ஓர் அழகிய மண்டபமும் அதன்பின் உருவாகியுள்ளது. குரல் ஒடுங்கியது தமிழகம் முழுமையும் தன் இனிய குரல் ஒலியைப் பரப்பிக் கொண்டிருந்த மணிக்குயில், கி.பி.1954ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தாறாம் நாள், தன் குரலைச் சிறிதுசிறிதாக ஒடுக்கிக் கொண்டது. குரலை ஒடுக்கிக் கொண்டாலும், பாடல்களிலே பதிவு செய்யப்பட்ட அந்தக் குரல், தென் பொதிகைத் தென்றலென நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது; நமது உள்ளங்களை உருக்கிக் கொண்டேயிருக்கிறது. 3. விடுதலைக்குயில் பாரதியார் (கி.பி. 1882 - 1921) தோற்றுவாய் நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதும் சோரா திருத்தல்- எனக் கவிதையை உயிர்மூச்சாகக் கொண்டு கடைசி மூச்சு உள்ளவரை நாட்டிற்கே உழைத்து நொடிப்பொழுதும் சோர்வின்றி வாழ்ந்தவர் எவரேனும் உளரோ என்றால், அவர்தாம் பாவலர் சி.சுப்பிரமணிய பாராதியார். பெற்றோர் தேன் இருக்கும் சோலை சூழ்கின்ற தென் இளசை நகராகும் எட்டையபுரம். அங்குச் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து, எட்டையபுர அரண்மனையில் பணியாற்றி, அவைப் புலவராய் விற்றிருந்து புகழ் பெற்றவர் சு.சின்னசாமி ஐயர் ஆவர். அவர், அன்னை மொழியாகிய தமிழை ஆய்ந்துணர்ந்தவர்; தாமே முயன்று ஆங்கிலம் கற்றவர்; மேலைநாடுக் கணக்கியல் முறையிலும் ஓரளவு வல்லவர். அவரது நுண்ணறிவும் நாவன் மையும் அவர்பால் அனைவரையும் அன்பு கொள்ளச் செய்தன. அதுபோலவே அவருடைய பெருங்குணமும், பரந்தமனமும் அவர்பால் அனைவருடைய நன்மதிப்பையும் நட்பையும் உரிமையாக்கின. சின்னசாமி ஐயர், உறவு முறையிலே இலக்குமி என்னும் நங்கையைத் திருமணம் செய்து கொண்டார். பெயருக்கேற்ற பேரழகுகொண்ட அவ்வம்யைர் அருங்குணங்கள் பலவும் ஒருங்கு பெற்றவர் ஆவார். அவர்கள் இருவரும் கருத்து ஒருமித்த இல்லற வாழ்க்கை நடத்தினர்; அதன் பயனாக ஆண்மகவு ஒன்றை ஈன்றனர். அறிவறிந்த அம் மகன் 11-12-1882 ஆம் ஆண்டு பிறந்தான். பெற்றோர் மகனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாலும், அனைவரும் செல்லமாகச் சுப்பையா என்றே அழைத்தனர். சுப்பையாவே பிற்காலத்தில் பாடுங்குயில் சுப்பிரமணிய பாரதியாராக ஆனார். அ.இளமை வாழ்வு கல்வி சுப்பையா குழலும் யாழும் நாண மழலை மொழி பேசினான்; சிறுகையை நீட்டிக் குறுகுறு நடந்தான்; இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை உணவை மெய்பட விதிர்த்தும் தம் பெற்றோரை மயக்கினான். காலம் கடந்தது; சுப்பையாவுக்கு ஐந்தாம் ஆண்டு நடந்தது. அறிவும் அழகும் செறிந்த பாரதியார்க்கு அவர் தந்தையார் முதற்கண் எழுத்தறிவித்தார்; சிறுசிறு தமிழ்ச் செய்யுள் நூல் களையும் கற்றுக் கொடுத்தார்; ஆங்கில எழுத்துகளையும் அறிமுகப் படுத்தினார். பாரதியாரும் தமிழ்ப் பாடங்களை மனத்தில் பதித்துக் கொண்டார்; தமிழ்ப் பாடல்களைத் தம் அமுதக் குரல்கொண்டு பாடிப் பழகினார். குலவித்தை கல்லாமல் பாகம் படுமன்றோ! ஆதலின் தந்தையின் தமிழறிவு முந்தி வந்து பாரதி யாரைச் சேர்ந்தது. தந்தையார் உரிய காலத்தில் பாரதியாரைப் பள்ளியிற் சேர்த்தார். பாரதியார் பள்ளியில் தமிழில் தனிக் கருத்துச் செலுத்தினார். தேர்வுக் காலங்களில் தமிழில் முதல் மதிப்பெண்ணும் இவர் பெற்று. ஒவ்வோர் ஆண்டிலும் வெற்றி பெற்றுவந்தார். இச் செயல் ஆசிரியர் எல்லார்க்கும் வியப்பைத் தந்தது. தொடக்கக் கல்வி நிறைவெய்திய பின்னர்ப் பாரதியார் திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பள்ளியிலே சேர்க்கப்பெற்றார் கல்வியில் இருவருடைய கருத்தூன்றவில்லை. அக் கல்வி முறை இவரைக் கவரவில்லை. அதனைப் பற்றி இவரே பிற்காலத்தில் மனம் வெறுத்துப் பாடியுள்ளார். செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது தீது எனக்குப்பல் லாயிரம் சேர்ந்தன; நலமோர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன். பாரதியார் இவ்வாறு அக்காலக் கல்வி முறை பற்றிக் கூறியுள்ளார். கி.பி.1894 முதல் 1897 வரை இவர் அங்குப் பயின்றார்; ஐந்தாம் படிவம் வரை கல்வி கற்றார். அந் நாளில் திருநெல்வேலியில் வாழ்ந்த தமிழறிஞர் பலரின் தொடர்பு பாரதியார்க்கு ஏற்பட்டது. இவர் வண்டமிழிற் கவிதைகள் வரைந்து மகிழ்வார். இவரது பாட்டியற்றும் திறன் கண்டு தமிழன்னையின் தனிமகன் என்று அனைவரும் இவரைப் பாராட்டினர். பாரதியாரின் பாட்டுத்திறம் கண்டு பாராட்டிப் புகழ்ந்தவர் பலர்; இளமையில் இவ்வளவு புகழா என்று இகழ்ந்தவர் சிலர். பாரதியாருடைய நண்பர்களுள் காந்திமதி நாதப் பிள்ளை என்பவரும் ஒருவர். அவர் பாரதியாரிடம் அன்பு கொண்டிருந்தாலும், அவர் மனத்தில் அழுக்காறு அரசோச்சியது, ஒருநாள் அவர் பாரதியாரைத் தாழ்த்த எண்ணி, பாரதி சின்னப் பயல்- என்னும் ஈற்றடியைக் கொடுத்து ஒரு வெண்பாப் பாடச் சொன்னார். பாரதியாரா அதற்கு அஞ்சுபவர்? இவர் அந்த இறுதியடியையே தக்க கருவியாகக் கொண்டு காந்திமதிநாதப் பிள்ளை நாணுமாறு செய்தார். இதோ அந்த வெண்பாவின் இறுதி இரண்டடிகள். ‘fhuJnghš beŠáU©l fhªâkâ ehjid¥ ghuâ á‹d¥ gaš! கருமேகம் போல மனம் இருண்டு கிடக்கும் காந்திமதி நாதனைப் பார்! அதி சின்னப் பயல்! (மிகச் சிறியவன்) என்பது இதன் பொருள். காந்தி மதிநாதன் வெட்கித் தலைகுனிந்தார். திருமணம் பாரதியாருக்குப் பதினைந்தாம் ஆண்டு தொடங்கியது. இவர்தம் தந்தையார் பாரதியாருக்குத் திருமணம் செய்துவைக்கத் துணிந்தார்; செல்லம்மாள் என்னும் நற்குண நங்கையை மண முடித்தார். இத் திருமணம் கி.பி. 1897இல் நடந்தது. நற்பண்புகள் நிரம்பிய அவ்வம்யைர் பாரதியாரின் இயல்புக்கு ஏற்ப நடந்து குடும்ப வாழ்வுக்குப் பெருமை சேர்த்தார். தந்தையார் மறைவு பாரதியாரின் தந்தையார் ஒரு பஞ்சாலை நடத்தி வந்தார். பஞ்சாலை பெரும் இழப்புக்கு உள்ளாகியது. இழப்பைத் தாங்காமல் உள்ளம் உடைந்த சின்னசாமி ஐயர் நோயுற்றார். அந்நோயே அவருக்கு இறுதியாயிற்று. கி.பி.1898ஆம் ஆண்டு உறவினர்களையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு இயற்கையொடு கலந்தார். காசி வாழ்க்கை பாரதியாரின் அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருட்டிணசிவன் என்பவரும் பாரதியாரின் தந்தை இறந்த செய்தி கேட்டு எட்டையபுரம் வந்திருந்தனர். அவர்கள் பாரதியாரைக் காசிக்கு வருமாறு அழைத்துச் சென்றனர். காசிக் கல்லூரி ஒன்றில் பாரதியார் சேர்க்கப் பெற்றார். அங்கே இவர் வடமொழியும் இந்தியும் பயின்றார்; தேர்வில் வெற்றியும் பெற்றார். எனினும், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்பதில் இவர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசவைக் கவிஞர் எட்டையபுர மன்னர், டில்லியில் நடைபெற்ற அரசாங்க விழாவிற்குச் சென்றவர், காசிக்கும் சென்று பாரதியாரைக் கண்டார்; தம்முடன் எட்டையபுரத்துக்கு வருமாறு அழைத்தார். பாரதியாரும் உடன்பட்டு எட்டையபுரம் வந்து சேர்ந்தார். மன்னரின் எண்ணத்திற்கிணங்கப் பாரதியார் அரசவைக் கவிஞரானார். ஒரு நாள் காலையில் அண்ணாமலை ரெட்டியாரைப் பற்றிய பேச்செழுந்தது. அவர் கழுகுமலை முருகன் மீது பழகு தமிழில் அழகொழுகக் காவடிச் சிந்து பாடியவர். இந்தக் காவடிச் சிந்து பொதுமக்களும் பாடத்தக்க எளிமை பொருந்தியது. பாரதியார் பாடல்களோ புலவர்களுக்கே விருப்ப மூட்டுபவை, ரெட்டியாரின் பாடல்களோ பொது மக்களைக் கவர வல்லவை, இவைபோன்ற பாடல்களைப் பாரதியாரால் பாட இயலாது என்று அங்கிருந்தோர் கூறினர். மன்னரும் அவையோர் கருத்தையே வழிமொழிந்தார். இதைக் கேட்ட பாரதியார் சிரித்தார். இன்றே காவடிச் சிந்து பாடி வருவேன் என்று கூறி அங்கிருந்து சென்றார். பாரதியார் அன்று மாலை அரண்மனைக்குச் சென்றார். அவைப் புலவர்கள் அங்கில்லை அவர்களுக்கு ஆள் அனுப்பப் பெற்றது; வந்து கூடினர். பாரதியார் சிந்து பாடினார். பச்சைத் திருமயில் வீரன் அலங்காரன் கௌமாரன் - ஒளிர் பன்னிரு திண்புயப் பாரன் - அடி பணிசுப்பிர மணியர்க்கருள் அணிமிக்குயர் தமிழைத் தரு பத்தர்க் கெளியசிங் காரன் - எழில் பண்ணும் அருணாசலத் தூரன்... இப் பாடலைக் கேட்ட அரசரும் புலவர்களும் அண்ணாமலை ரெட்டியாரோ பொது மக்கட்கு மட்டுமே பாடினார். பாரதியாரோ பொது மக்கட்கும் புலவர்கட்கும் பாடும் திறம் வாய்ந்தவர் என்பதை ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர். ஆ.சென்னை வாழ்வு இதழாசிரியர் தருமம் மிகு சென்னை மாநகரம் வருக எனப் பாரதியாரை வரவேற்றது. சென்னையிலிருந்து அந் நாளில் செய்திகளைத் தாங்கிவந்த நாளிதழ் சுதேசமித்திரன் என்பதாகும். பாரதியார் பால் பரிவு கொண்ட அவ்விதழின் ஆசிரியர் தமது நாளிதழின் துணையாசிரியராக இவரை அமர்த்திக் கொண்டார். பெருமையான பதவி; வருவாய் குறைந்த பணி. எனினும், அப் பணியை மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டார் பாரதியார். தேசிய இயக்கப் பணி நாட்டின் இழிநிலையை உணர்ந்தார் பாரதியார்; அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்ட மக்களுக்கு உணர்ச்சியூட்டக் கருதினார்; அதற்கேற்ற கருவியாகச் சுதேச மித்திரன் நாளிதழைப் பயன்படுத்தினார். எளிய சொற்கள்; எளிய நடை; எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்; பொதுமக்கள் விரும்பும் மெட்டு - ஆகியவற்றைக் கொண்டனவாகவே இருந்தன இவருடைய பாடல்கள். சொல்லுக்கு மெருகேற்றிப் படிப்போரின் நரம்புக்கு முறுக்கேற்றி உணர்ச்சியூட்டும் இவர் கவிதைகள் மக்களைக் கிளர்ச்சி கொள்ளச் செய்தன. நாட்டு விடுதலை பற்றிய கவிதை களில் தீப்பொறி பறந்தது; படிப்போரின் மனத்தில் எழுச்சி பிறந்தது. கோழை வீரனானான்; முதியவன் இளைஞனானான். தமிழில் ஒரு மறுமலர்ச்சி தோன்றிற்று; தமிழர்களிடையே ஒரு புதிய விழிப்புணர்ச்சி உண்டாயிற்று. விடுதலை வேட்கையில் மக்களை வீறுகொள்ளச் செய்யும் பாரதியாரின் கவிதைகளைத் தம் நாளேட்டில் வெளியிடுவதற்கு அதன் ஆசிரியர் கலக்க மடைந்தார்; ஆங்கிலேயரின் பார்வை தமக்குத் தீங்கை விளைவிக்குமோ! என அஞ்சினார்; கவிதைகளின் உணர்ச்சிக் கடுமையைச் சற்றே தணிக்குமாறு வேண்டினார். அவருடைய வேண்டுகோள் பாரதியாரைச் சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்து வெளியேறத் தூண்டியது. உடலுக்குச் சிறையிடலாம்; உள்ளத்திற்குச் சிறையிட முடியுமா? எண்ணத்திற்குச் சிறையிட்ட இதழைவிட்டு விலகிய பாரதியாரைத் திருமலாச்சாரியார் என்பார் எதிர்கொண்டு அழைத்துக் கொண்டார். அவர் பாரதியாரின் நண்பர்; நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டவர்; பாரதியாரை நாட்டு விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தார் இருவரும் கலந்துரையாடி இந்தியா என்னும் இதழைத் தொடங்கினர். பாரதியாரே அதன் ஆசிரியர். கி.பி.1908இல் அவ்விதழ் தொடங்கப் பெற்றது. சுதேசமித்திரன் தவழ்ந்த கைகளிலெல்லாம் இந்தியா வீற்றிருந்தது. கவிதைகள் வெளியீடு வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கால் மக்கள் தம் உள்ளத்தைக் கொள்ளைகொண்டார் பாரதியார். அக் கவிதைகள் எல்லாம் நாட்டு மக்களின் கைகளில் எக் காலத்திலும் இருந்திட வேண்டுமென இவருடைய நண்பர்கள் விரும்பினர்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அம் முயற்சி கைகூடிற்று. கி.பி.1908இல் சுதேச - கீதங்கள் என்னும் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதைத் தொகுதியின் முதற் பகுதி வெளியாயிற்று. செம்மல் சிதம்பரனார் சந்திப்பு ஓட்டப்பிடாரம் பெற்றெடுத்த சிங்கம், செம்மல் சிதம்பரனார் தூத்துக்குடியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் கையிலும் இந்தியா கொலுவீற்றிருந்தது. அவர் வீர சுதந்திரம் வேண்டி நிற்பவரானார். அந் நாளில் பாரதியாரும் சிதம்பரனாரும் ஒருவரையொருவர் நேரில் கண்டதில்லை. ஆனால், இருவரும் ஒருவர்மீது ஒருவர் உள்ளத்தால் நட்புக் கொண்டிருந்தனர். செம்மல் சிதம்பரனார் வழக்கொன்றின் பொருட்டுச் சென்னை செல்ல நேர்ந்தது. சிதம்பரனார் தம் அலுவல்களை முடித்துக்கொண்டு பாரதியாரைக் காணவேண்டும் என்னும் பேராவலொடு இந்தியா அலுவலகத்துக்குச் சென்றார். திருமலாச் சாரியார்தாம் முதலில் தென்பட்டார். சிதம்பரனார் அவரிடம் தாம் பாரதியாரைக் காண வந்திருப்பதாகக் கூறினார். அவரோ மாடியை நோக்கி உரக்கக் கூவிப் பாரதியாரை அழைத்துத் தூத்துக்குடியிலிருந்து ஒருவர் உங்களைக் காண வந்துள்ளார் என்று தெரிவித்தார். சிதம்பரனார் மாடிக்குச் சென்றார். ஒளி படைத்த கண்கள்; உறுதி கொண்ட நெஞ்சம்; முறுக்கிவிட்ட மீசை; முண்டாசுக் கட்டு - இவை யனைத்தும் கொண்ட பாரதியாரை அடையாளம் கண்டுகொண்ட சிதம்பரனார் பாரதியாருக்கு வணக்கம் தெரிவித் தார். யாரென அவர் வினவுமுன் சிதம்பரனார் ஓட்டப்பிடாரம்... எனத் தொடங்கினார். அந் நொடியே பாரதியார் ஓ! cyfehj¥ ãŸis Fkhu® áj«gukh! எனக் கூறி, அவரைக் கட்டித் தழுவினார். இருவரும் பல மணி நேரம் கலந்துரையாடினர். பின்னர் சிதம்பரனார் தம் ஊர் திரும்பினார். விடுதலைக் கிளர்ச்சி செம்மல் சிதம்பரனார் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கப்பல் ஓட்டி ஆங்கிலேயர்க்குப் போட்டியாக வாணிகம் நடத்தினார். அதனைத் தடுக்க முயன்ற ஆங்கிலேயர் தோல்வியே கண்டனர். அந் நேரத்தில் விடுதலைக் கிளர்ச்சி மேலோங்கியது. லாலா லஜபதிராய் மீது குற்றஞ் சாட்டிய ஆங்கில அரசு அவரை நாடு கடத்தியது. இதனால் இந்திய மக்கள் கொதித் தெழுந்தனர். ஆயினும் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இச் சமயத்தைப் பயன்படுத்தி செம்மல் சிதம்பரனாரையும், சுப்பிரமணிய சிவாவையும் ஆங்கில அரசு சிறைசெய்தது; விசாரணை செய்வது போல் பாசாங்குசெய்து, இறுதியில் சிதம் பரனார்க்கு இருபதாண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்தது. விடுதலை வீரர் சிதம்பரனார் வெங்கொடுமைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். சிறையில் சந்திப்பு இச் செய்தி சென்னையில் வாழ்ந்த பாரதியார் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போலப் பாய்ந்தது. பாரதியார் சென்னையிலிருந்து சிட்டெனப் பறந்து வந்தார்; சிதம்பரனாரைச் சிறைக்கம்பிகளுக்கிடையே கண்டு மனம் நொந்தார்; அவரைக் கட்டித் தழுவினார்; கண்ணீர் உகுத்தார். சிதம்பரனாரோ அஞ்ச வேண்டா என்றும், நாட்டுணர்ச்சியைப் பாட்டுணர்ச்சியால் எழுப்புமாறும். இனிச் சென்னையில் இருப்பது தீங்கை விளைவிக்கும் என்றும், எந்த வழியிலும் சிறை புகாமல் இருக்க வேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார். ஆங்கில அரசின் அடக்கு முறைக் கரங்கள் தொடமுடியாத இடம் பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியாகும். அங்குப் பாரதியார் செல்லவேண்டும் என்றும், அங்கிருந்து கொண்டே ஆங்கில ஆட்சியை அடியோடு அகற்றும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் சிதம்பரனார் நெஞ்சம் நெகிழ்ந்து கூறினார். விழிகளிலே நீரருவி பாயப் பாராதியார் சிறைச் சாலையை விட்டு வெளியே வந்தார். இந்தியா தடுக்கப்பட்டது பாரதியார் சென்னை மீண்டதும் இந்தியா புதிய கூறுடன் வெளிவரத் தொடங்கியது. ஆங்கில எதிர்ப்பு முழக்கங்கள் எல்லாப் பக்கத்திலும் எதிரொலித்தன. ஆங்கில ஆட்சியின் அடக்கு முறைகள் அம்பலப்படுத்தப்பட்டன. கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகள் அடுக்கடுக்காக எடுத்து விவரிக்கப் பட்டன. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதையும், நூலோர்கள் செக்கடியில் நொந்து கிடப்பதையும் பாரோர் உணரப் பாரதியார் எழுதினார்; திக்கெட்டும் மக்கள் சினந்தெழ வேண்டிய இன்றியமையாமையை எடுத்தியம்பினார் ஆங்கில ஆட்சி அதனைக் கண்டு அஞ்சியது; மக்களின் விழிப்புணர்ச்சி கண்டு கலங்கியது. ஆங்கிலேயரின் சீற்கணை இந்தியர்மீது பாய்ந்தது. அவ்விதழின் உரிமையாளர் திருமலாச் சாரியார் சிறைசெய்யப்பட்டார். அவ்விதழும் தடை செய்யப் பட்டது. பாரதியாரைச் சிறைசெய்யும் ஆணைபிறப் பித்தது ஆங்கில அரசு. உடனே நண்பர்கள் பலரும் நாட்டுத் தலைவர் சிலரும் பாரதியாரைப் புதுச்சேரிக்குச் செல்லுமாறு வற்புறுத்தினர். சிறையில் சிதம்பரனார் கூறியதும் பாரதியர் நினைவுக்கு வரவே, அவர் நண்பர்களின் வேண்டுகோளின்படி புதுச்சேரிக்குப் பயணமானார் இ. புதுவை வாழ்வு புதுவை நகர் புதுச்சேரி என்பதனைப் புதுவை என்றும் சுருக்கமாக அழைப்பர். அந்நாளில் புதுச்சேரியை ஆண்டு வாழ் மக்கள் அனைவரும் தமிழர்களே. அவர் பேசும்மொழியும் தமிழே. ஆனால், அங்குப் பிரஞ்சுக் காரர் ஆட்சி நடைபெற்று வந்ததனால் ஆட்சி மொழியாகப் பிரஞ்சு மொழியும் இருந்தது. ஆங்கிலேயரின் அதிகாரம் புதுவைக்குள் புக முடியாது. பிரஞ்சு அரசின் இசைவு இல்லாமல் ஆங்கிலேயர் புதுவைக்குள் எதுவும் செய்யமுடியாது. அது போலவே ஆங்கிலேயரின் ஆட்சிப் பகுதியில் பிரஞ்சு ஆணை செல்லாது அதனை உணர்ந்த சிலர் ஆங்கில ஆட்சியின் கொடுமைக்கு ஆளாகாமல் புதுவையைப் புகலிடமாகக் கொண்டனர். குவளைக்` கண்ணன் உதவி பாரதியார் புதுவைக்குப் போனவரல்லர். எங்குப் போய்த் தங்குவது? யாரைக் காண்பது? என்றெல்லாம் பாரதியார் எண்ணித் தயங்கினார். அந் நேரத்தில் உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையக் குவளைக் கண்ணன் என்பார் முன்வந்தார். அவர் தம் உறவினர் குப்புசாமி ஐயங்கார் முகவரிக்குக் கடிதம் எழுதிப் பாரதியாரிடம் தந்தார்; உறவினர் வீட்டிலேயே தங்குமாறு சொல்லி விடுத்தார். ஆங்கில அரசின் ஆணை எந்நேரத்தில் பாரதியார் மீது பாயுமோ என்ற நிலையில் தக்க ஏற்பாட்டுடன் குவளைக் கண்ணனும் நண்பர் சிலரும் பாரதியாரைப் புதுவைக்கு அனுப்பி வைத்தனர். மாற்றுருக் கொண்ட பாரதியார் மறுநாள் காலையில் புதுவையை அடைந்தார்; குப்புசாமி ஐயங்காரின் வீட்டைக் கண்டுபிடித்துக் குவளைக் கண்ணன் கொடுத்த கடதத்தை அவரிடம் கொடுத்தார். குப்புசாமி ஐயங்காரும் உடன்பட்டுப் பாரதியாரைத் தம் வீட்டில் தங்கவைத்துக் கொண்டார். புதுவையில் இந்தியா இந்தியா இதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் சென்னையில் சிறைசெய்யப்பட்டார் அன்றோ? எத்தகைய குற்றமும் அவர் செய்யவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. விடுதலை பெற்ற திருமலாச்சாரியார் சென்னையில் தங்க விருப்பமின்றிப் புதுவைக்கே வந்து சேர்ந்தார்; பாரதியாரைப் பார்த்தார். இந்தியா இதழை மீண்டும் தொடங்கு வதென இருவரும் முடிவு செய்தனர். சென்னையில் இருந்த அச்சுப் பொறிகள் புதுவை வந்து சேர்ந்தன. கி.பி. 1909இல் மீண்டும் இந்தியா வெளிவரலாயிற்று. புதுவையிலிருந்தே தமிழகம் முழுவதற்கும் அவ்விதழ் அனுப்பப் பெற்றது. தடைவிதிக்கப் பெற்ற இந்தியா தமிழ் மக்களின் கைகளிலே மீண்டும் தவழ்ந்தது; வாடிய பயிர்க்கு வான் மழை போலத் தளர்வுற்ற தமிழர்க்குப் புத்துயிர் கொடுத்தது. இருவர் தொடர்பு செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரையும், தமிழ்மொழிக் காவலராம் நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரையும், பாட்டுக்கொரு புலவன் திருநெல்வேலி மாவட்டம் வ.வெ.சுப்பிரமணிய ஐயர் எனும் வீரப் பெருமகனாராலும் சிறப்புப் பெற்றது. தாய் நாட்டன்பில் தலைசிறந்த அவரை அரசியலுலகம் வ.வெ.சு. ஐயர் என்றே அழைத்தது. பாரிடர் பட்டம் பெற அவர் இலண்டனில் படித்துக் கொண்டிருந்தார்; அங்கிருந்தபடியே இந்தியாவில் ஆங்கில அரசு நடத்தும் அடக்குமுறைகளைக் கூர்ந்து கவனித்து வந்தார்; இந்தியத் தாய் நாட்டில் மக்கள் படும் இன்னல்களை எண்ணிப் பார்த்தார், நெஞ்சம் பொறுக்கவில்லை. அவர் இங்கிலாந்தில் இருந்துகொண்டே அந் நாட்டுக்கு எதிராகத் தம் எதிர்ப்புக் கருத்து களை எடுத்து முழக்கினார். ஆங்கில அரசு இவற்றை யெல்லாம் பார்த்து வாளாவிருக்குமோ? அவரைச் சிறை செய்யக் காலங்கருதிக் காத்திருந்தது. உடனே, குதித்தார்; கலங்காது நீந்தினார்; உடல் களைத் தாலும் உள்ளம் சலியாமல் பிரஞ்சுக் கடற்கரையை அடைந்தனர்; அங்கிருந்து அல்லல் பல வற்றுக்கு ஆளாகித் தாய்த் திருநாடாம் இந்தியா வந்துசேர்ந்தார். ஆங்கில அரசினர் இங்கிலாந் திலிருந்து அவர் தப்பிவிட்ட செய்தியை இந்திய அரசாங்கத் துக்குத் தெரிவித்து விட்டனர். இந்திய அரசாங்க ஒற்றர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்தியாவில் ஆங்கிலப் பகுதியில் இருப்பது தமக்குத் தீங்கு என்பதை உணர்ந்த வ. வெ.சு. ஐயர் அரவிந்தரும், பாரதியாரும் அடைக்கலம் புகுந்த புதுவைக்கே வந்து சேர்ந்தார் நாட்டு விடுதலைக்கு மூவரும் இணைந்து தொண்டாற்றினர். அம் மூவரூம் கூடிச் செயல்புரிவதை ஆங்கில அரசு ஒற்றர்கள் வாயிலாக அறிந்துகொண்டது. காமாலைக் கண்ணனுக்குக் கண்ட தெல்லாம் மஞ்சள்தானே! அம் மூவரும் புதுவையில் இருந்து கொண்டே தங்கள் அரசுக்கு எதிராகச் சதிவேலையில் ஈடுபட் டுள்ளனர் என்று ஆங்கில அரசினர் நம்பினர், அச் சதி வேலையும் இந்தியா இதழ் வாயிலாகவே பரப்படுவதாகவும் நம்பினர் ஆகவே, தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவ்வி தழுக்குத் தடை விதித்தனர். அவ்விதழை விற்போரையும் படிப்போரையும் ஒறுப்பதாக அச்சுறுத்தினர். ஆயினும். மறை முகமாக அவ்விதழ் மக்களால் ஆதரிக்கப்பெற்றது. இந்தியா நின்றது பாரதியார், அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் ஆகிய அம் மூவர் புகழும் இணைந்து பரவியது. அம்மூவரின் கூட்டு தம் அரசுக்கு வேட்டு என்பதை எண்ணிய ஆங்கிலேயர் புதுவை ஆளுநரை அணுகினர்; ஆளுநரைக் கொண்டு அவர்களை அங்கிருந்து அகற்றிவிட முயன்றனர்; எந்த முறையிலாவது அந்த மூவரையும் புதுவை எல்லையை விட்டு நீக்கி, ஆங்கில ஆட்சி எல்லைக்குக் கடத்திச் சென்று சிறை செய்யக்கருதினர். ஆனால், அதற்கான திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆயிற்று. அம் மூவருக்கும் மலைபோல வந்த துன்பம் பனிபோல விலகிற்று. தோல்வி கண்ட ஆங்கிலேயர் தொடர்ந்து துன்பம் இழைக்கத் துணிந்தனர். ஆங்கிலக் காவல் துறையினர், பிரஞ்சு அஞ்சல்துறை அலுவலகங்களை அணுகினர். புதுவை அஞ்சல் நிலைய அலுவலர் களைத் தம்வயப் படுத்திக்கொண்டு வெளியூர் செல்ல அஞ்சலகத் துக்கு வரும் இந்தியா இதழ்களைக் கைப்பற்றி அழித்தனர்; பாரதியாருக்கு வரும் பணவிடைத் தாள்களைத் தடைசெய்தனர். இன்னும் செய்யத்தகாத இன்னல் என்னென்ன உண்டோ அனைத்தும் செய்தனர் இவ்வாறு மறைமுகமாக நடந்த இழிசெயல்களைப் பாரதியார் அறியார் இத்தகைய இக்கட்டான சூழலில் இந்தியா நிறுத்தப்பட்டது பாரதிதாசனார் தொடர்பு புரட்சிக் குரல் கொடுக்கும் குயிலாகப் பொலிந்தவர் பாரதிதாசனார்; அவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம் என்பது. பாரதியார் புதுவையில் வாழ்ந்துவந்த போதிலும் இருவருக்கும் அறிமுகம் ஏற்படவில்லை. ஆயினும், பாரதியார் பாடல்களைப் பாரதிதாசனார் படித்து மகிழ்வதோடு தம் நண்பர்களுக்கும் பாடிக்காட்டுவார். பாரதியாரைப் பாராமலேயே அவர்மீது பற்று வைத்திருந்தார் பாரதிதாசன் புதுவையில் நடந்த ஒரு திருமணத்திற்குப் பாரதியார் தம் நண்பர்களுடன் சென்றிருந்தார் பாரதிதாசனாரும் அத் திருமண வீட்டிற்கு வந்திருந்தார். திருமணம் இனிது முடிந்தது. நண்பர் சிலர் கூடினர்; கனக சுப்புரத்தினத்தைப் பாடுமாறு வேண்டினர். அவரும் மிகுந்த விருப்பத்தோடு, வெண்கலக் குரலில் பாடினார். வீரசுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - v‹W« MuK J©Q‰ fhirbfh©lh® fŸËš m¿it¢ brY¤Jthnuh? கனக சுப்புரத்தினம் குரல் கணீர் என்று திருமண வீட்டில் எதிரொலித்தது. பாரதியார் தம் பாடலை ஒருவர் உணர்ச்சி பொங்கப் பாடுவதைக் கேட்டுத் தம்மை மறந்தார். பாடி முடித்ததும் பாரதியார் அங்கு வந்திருப்பதை நண்பர் சிலர் கனக சுப்புரத் தினத்தின் காதில் மொழிந்தனர். உடனே அவர் பாரதியாரிடம் சென்று வணங்கி நின்றார். பாரதியார் அவர் பாடிய திறத்தைப் பாராட்டினார். அன்று கொண்ட தொடர்பு இறுதிவரை உறுதியாக நின்றது. கனக சுப்புரத்தினம் அன்று முதல் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். புதுவையில் பாரதியார் இருந்த வரையில் பாரதிதாசனார் இவரைக் கண்மணிபோலக் காத்து வந்தார். வறுமையால் பாரதியார் வாடிய போதெல்லாம் உரிமை யோடு பாரதிதாசனார் உதவிசெய்தார். ஆங்கில அரசின் புலனாய்வு தமிழ்நாட்டில் விடுதலைத்தீ வீறிட்டெழுந்தது. வாஞ்சி என்னும் விடுதலை வீரர் மணியாச்சிப் புகைவண்டி நிலையத்தில் திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சித் தலைவர் (கலெக்டர்) ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தாமும் சுட்டுக்கொண்டு இறந்தார். கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டது. அக் கொலைக்கு உடந்தையானவர்களுள் இருவர் புதுவைக்குப் போய்விட்டதாகக் காவல்துறையினருக்குச் செய்தி கிடைத்தது. பிரஞ்சு அரசைக் சென்னைக் காவல் துறையினர் நாடினர்; புதுவை அரசின் உயர் அதிகாரிகள் இருவர் துணையுடன் புலனாய்வில் இறங்கினர். மறு நாள் புதுவை நீதிமன்றத்தில் புலனாய்வு செய்த புதுவை அதிகாரியின் குறிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பின்னர் அரவிந்தர், பாரதியார். வ.வெ.சு.ஐயர் ஆகிய மூவரும் பெரிய இலக்கிய மேதைகள் என்றும், இவர்களுக்கும் ஆஷ் துரை கொலைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்புச் செய்தது. அம் முடிவைப் புதுவை அரசு சென்னை அரசுக்குத் தெரிவித்துவிட்டது. புகழ் பரவியது புதுவையில் வாழ்ந்துகொண்டிருந்தபோதே பாரதியார் கி.பி.1909இல் ஜன்மபூமி என்னும் பெயரில் தம் சுதேச கீதங்கள் நூலாக்கி வெளியிட்டார். அடுத்து நாட்டுப் பாட்டு என்னும் பெயரில் பாரதியார் கவிதைகளை முதற் பதிப்பாகப் பரவி. சு.நெல்லையப்பர் வெளியிட்டார் அவர் பாரதியாரின் நண்பர்; பாரதியாரின் கவிதைகளை நூல் வடிவில் கொணர அரும் பாடுபட்டவர். கி.பி. 1917.இல் பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலை வெளியிட்டவர் அவரே. கவிதை வெளியீடுகளால் பாரதியாரின் புகழ் எங்கும் பரவியது. அந்நாளில் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், வாழும் மிகப் பெரிய கவிஞர் என்னும் தலைப்பில் பாரதியாரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். இதனால் ஆங்கில நாட்டிலும் இவர் புகழ் பரவியது. புதுவையிலிருந்து புறப்பாடு புகழ்கொண்ட பாரதியார் புதுவையில் ஏறக்குறையப் பதினோராண்டுகள் வாழ்ந்துவிட்டார். புதுவை வாழ்வு இவருக்குக் கசந்துவிட்டது; பாடித்திரியும் அந்த விடுதலைக் குயில் புதுவை என்னும் கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்க விரும்பவில்லை. இவர் இவ் எண்ணத்தைத் தம் நண்பர்களிடம் கூறினார். நண்பர்கள் பதறிப் போனார்கள்; புதுவையிலேயே வாழுமாறு இவரை வற்புறுத்தினார்கள். பாரதியார் தம் முடிவை மாற்றிக் கொள்ளாமல் தம் குடும்பத்துடன் புதுவை நகரை விட்டுப் புறப்பட்டார். சுற்றியிருந்த நண்பர்கள் விழியில் நீரொழுக விடை கொடுத்தனுப்பி வைத்தார்கள். ஈ. இறுதி வாழ்வு சிறைசெய்யப்படல் புதுவையிலிருந்து பாரதியார் தம் குடும்பத்துடன் புறப்புடும் செய்தி, சென்னைக் காவல் துறையினர்க்குத் தெரிந்தது. அப்பொழுதுதான் அவர்களுக்கு ஊக்கம் பிறந்தது; பாரதியாரைச் சிறை செய்யக் காத்திருந்தனர். புதுவை எல்லையைக் கடந்து, ஆங்கில ஆட்சிக்குட்பட்ட கடலூரில் பாரதியார் கால் வைத்ததும் காவலர் இவரைச் சிறைசெய்தனர். பாரதியாரின் மனைவியாரும், குழந்தைகளும் பதறினர்; அழுதனர். காவலர் பாரதியாரைக் கடலூர்ச் சிறையில் வைத்தனர். விடுதலை பாரதியார் கடலூரில் சிறைசெய்யப்பட்ட செய்தி சென்னைக்கு சென்றது; தூத்துக்குடிக்கும் சென்றது. நாவலர் பாரதியார் சென்னைக்கு விரைந்தார்; ஆங்கில அதிகாரிகள் சிலரைக் கண்டார்; பாரதியாரின் விடுதலைக்கு முயன்றார். அதே பொழுதில் அப்பொழுது சுதேச மித்திரன் ஆசிரியராகப் பணியாற்றிய அரங்கசாமி ஐயங்கார் கடலூர்க்கு விரைந்து, தமக்குத் தெரிந்த வழக்கறிஞர் சிலரை யழைத்துக்கொண்டு, கடலூர் அறமன்றத் தலைவரிடம் சென்று பாரதியாரை விடுதலை செய்யுமாறு வேண்டினார். அறமன்றத் தலைவரோ சென்னைக் காவல்துறையினரை அணுகுமாறு கூறினார். அரங்கசாமி ஐயங்கார் சென்னைக்கு விரைந்து சென்றார். அதற்குள் நாவலரின் முயற்சி பலன் தந்தது. அரங்கசாமி ஐயங்கார் காவல் துறைத்தலைமை அதிகாரியை அணுகிப் பாரதியார் உடல்நலக் குறைவுடையவர் என்றும், உடனடியாகச் சென்னைச் சிறைச் சாலைக்கு மாற்ற வேண்டும். என்றும் வேண்டினார். இறுதியில் நாவலரின் முயற்சியாலும், அரங்கசாமி ஐயங்காரின் முயற்சியாலும், காவல் துறைத் தலைமை அதிகாரி கானிங்டன் துரையின் நல்லெண்ணத் தாலும் சிறைசெய்யப்பட்ட இருபத்துநான்காம் நாள் பாரதியார் விடுதலைபெற்றார். கடையத்தில் பாரதியார் பாரதியார் கடலூர்ச் சிறையிலிருந்து விடுதலையானதும், நேராகத் தம் மனைவி பிறந்த ஊராகிய கடையம் சென்றார். பாரதியாரால் அங்கு இரு நாள்கள்கூட இருக்க இயலவில்லை. இவருடைய பழக்கவழக்கங்களும் போக்கும் இவர்தம் உறவினர் களுக்குப் பிடிக்காமையே இதற்குக் காரணம். எட்டயபுரத்தில் பாரதியார் பின்னர் பாரதியார் தம் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தம்மூராகிய எட்டயபுரம் சேர்ந்தார். அங்குக் கையிலிருந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வரலானார். அவ்வப்பொழுது கவிதைகள் எழுதிச் சுதேசமித்திரன் நாளிதழுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்தும் சிறிது பணம் வரும். இவ்வாறு எட்டய புரத்தில் சிறிது காலமே அவரால் வாழ முடிந்தது. வறுமையும் அவர் வாழ்வில் வளர்ந்தது. உடல்நலமும் குறையத் தொடங்கியது. மீண்டும் சென்னை வாழ்வு இந் நிலையில் ஒருநாள் சென்னைச் சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்து அஞ்சல் ஒன்று வந்தது. அவ்விதழின் துணையாசிரியர் பொறுப்பைப் பாரதியார் ஏற்றுக்கொள்ளுமாறு அவ்வஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது பாரதியார் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள இசைந்து நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு தம் குடும்பத்தினருடன் சென்னையில் குடிபுகுந்தார்: சுதேசமித்திரன் துணையாசிரியர் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றிவந்தார். யானை தந்த துயரம் சென்னையில் பாரதியார் வாழ்ந்துவந்த பகுதி திருவல்லிக் கேணியாகும். அங்குள்ள பார்த்தசாரதி கோவிலுக்குப் பாரதியார் சென்று வருதல் வழக்கம். அங்குள்ள யானைக்குப் பழமும், தேங்காய் மூடியும் கொடுப்பதைப் பாரதியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். யானை அதனை வாங்கியுண்ணும். பாரதியார் அதனைக் கண்டு மகிழ்வார். கொத்தித் திரியும் கோழி, எத்தித் திருடும் காக்கை, பாலைப் பொழிந்து தரும் பசு, வாலைக் குழைத்து வரும் நாய் - போன்ற உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாடியவரல்லரோ பாரதியார்! அவர் யானையிடம் அன்பு காட்டியதில் வியப்பேது? ஒருநாள் அவ் யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதனைப் பாரதியார் அறியார்; வழக்கம் போல் தேங்காய், பழம் கொடுத்தார். யானை அவற்றை வாங்கிக் கொள்ளாமல் அவரையே தூக்கி எறிந்தது. தூக்கி எறியப்பட்ட பாரதியார் யானையின் கால்களுக்கு இடையே வீழ்ந்தார். வீழ்ந்தவரை யானை அடையாளம் கண்டு கொண்டது போலும்; கண்ணீர் வடித்தது; ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றது; வீழ்ந்த பாரதியார் மயக்கமுற்றார். அங்கிருந்தோர் யாரும் அவர்பால் நெருங்கவில்லை. எப்பொழுதும் பாரதியார்க்கு உதவும் குவளைக் கண்ணன் அப்பொழுது கால் களுக்கிடையே புகுந்து ஒரு குழந்தையைத் தூக்கி வருவது போலப் பாரதியாரைத் தூக்கி வந்தார். மருத்துவ உதவிக்குப்பின் பாரதியார் ஓரளவு குணமானார். பாரதியார் சிறிது குணமடைந்தாலும் தூக்கி எறியப்பட்டு வீழ்ந்த அதிர்ச்சியினால் அவர்க்கு வயிற்றுக் கடுப்பு நோய் வந்துற்றது. மருத்துவம் பார்த்தும் பயனில்லை. 11-09-1921இல் பாரதியார் உயிர் நீத்தார். தனது ஆற்றலும் இனிமையும் நிறைந்த குரலால் விடுதலைப் பண்ணிசைத்த வீரக்குயில் இம் மண்ணைவிட்டே விடுதலை பெற்றுவிட்டது. குயிலின் குரல் ஒடுங்கிவிட்டாலும் அக் குரலி லிருந்து எழுந்த பாடல்களின் கருத்து ஒன்றாய், இரண்டாய், நூறாய் வளர்ந்து மக்கள் உண்மையான விடுதலை பெறத் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. 4. புரட்சிக்குயில் பாரதிதாசன் (கி.பி. 1891 - 1964) தமிழுக்கும் அமுதென்று பேர்! - mªj¤ jÄœï‹g¤ jÄœv§fŸ cÆU¡F ne®! இந்த அமுதப் பாடலைப் கேளாச் செவிகளே இல்லை என்று துணிந்து கூறலாம். பாடிப்பாடிச் சுவை காணும் வாய்கள்தாம் எத்தனை! எத்தனை! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்னும் வெற்றிச் சங்கின் வீரமுழக்கத்தையும் மேடை தோறும் கேட்டுக்கேட்டு, உணர்ச்சியும் எழுச்சியும் கொண்ட நெஞ்சங் களைத்தாம் கணக்கிட்டுச் சொல்லமுடியுமா? பாடல்கள் நன்றாகத் தெரியும்; ஆனால் அந்தப் பாடல்களைத் தந்த மாபெருங் கவிஞர் யார்? எத்தனை மாணவர் அறிவர்? இன்று தமிழ் நாடெங்கணும் பாட்டரங்கங்கள் சிறந்த முறையில் நிகழ்ந்துவருவதை, நாளெல்லாம் கண்டு களிக்கின்றோம். அந்த அரங்கங்களில் பாமழை பொழிகின்ற பாவலரின் எண்ணிக் கையை அளவிட்டுச் சொல்ல முடியாது. அந்தப் பாவலர்களுக்குப் பாட்டு வெறி ஊட்டியவர் யார்? ஒரு பெரும் பாவலர் பரம்பரையே உருவாவதற்குக் காரணமாக - வழிகாட்டியாக நின்ற பாவலர் யார்? அவர்தாம் பாவேந்தர் பாரதிதாசன். தமிழர்தம் நெஞ்சமெல்லாம் தளிர்த்து வளரத் தமிழ்முதல் வார்த்து, தமக்கென ஒரு பரம் பரையைத் தோற்றுவித்து, எழுச்சிப் படைவீரர்களாக ஆக்கிவிட்ட இப் பெரும் பேராசானை இளைய பாரதம் அறியாமல் இருக்கலாமா? பாவலர் பரம்பரை தோன்ற வேண்டும் என்று கனவு கண்டவர் விடுதலைக் குயிலாகிய சுப்பிரமணிய பாரதியார். அக் கனவை நனவாக்கிய பெருமை பாட்டுலகத் தந்தை பாரதிதாசனையே சாரும். அ.கனக சுப்புரத்தினம் இளமையும் கல்வியும் கிழக்குக் கடற்கரையோரத்திலே, புதுச்சேரி என்னும் ஓர் அழகிய நகரம் இருக்கிறது. அந் நகரில், கனகசபை என்பவர் பெரும் வணிகராக விளங்கி வந்தார். மகாலட்சுமி அம்மையார் அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக வாய்க்கப்பெற்றார். கி.பி. 1891 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ஆம் நாள், இவர்களுக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. இவர்கள் சீரும் சிறப்புமாய் அம் மகவை வளர்த்து வந்தனர். சுப்பு ரத்தினம் இளமையிலேயே பாடலில் நாட்டம் உடையவராக இருந்தார்; இயற்கை யழகுகளைக் கண்டு மகிழ்வதில் பெருவிருப்பங் காட்டினார்; சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் உடையவராகத் தோன்றினார். அக் காலத்தில் புதுச்சேரி பிரஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்துவந்தது. அதனால் பள்ளிகளில் பிரஞ்சு மொழியே முதன் மையும், உரிமையும் பெற்றிருந்தது. அம் மொழியை நன்கு கற்றுவந்த சுப்புரத்தினத்திற்கு இயற்கையிலே தமிழார்வம் இருந்தது; மேலும், இசையிலும் நாடகத்திலும் பற்று மிகுந்திருந்தது. அதனால் தமிழ்க் கல்வி நன்கு கற்க வேண்டும் என்னும் எண்ணம் இவருள்ளத்தில் மேலோங்கி நின்றது. தம் மகனுடைய எண்ணத்தை அறிந்துகொண்ட தந்தையார் அதற்குத் தக்க ஏற்பாடு செய்தார். சுப்புரத்தினம் பள்ளிப் படிப்புடன் தமிழ்க் கல்வியும் பயின்றுவந்தார். இவருக்குத் தமிழ் கற்பிக்கும் பொறுப்பை ஏற்ற முதல் ஆசிரியர் பு.ஆ.பெரியசாமிப் புலவர் என்ற தமிழ்ப் பேரறிஞர் ஆவார். சுப்புரத்தினம் தமிழில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தமை யால், தமிழ்க் கல்வி நாளுக்குநாள் வளர்ந்து வந்தது. அடுத்து, இவர் புலவர் சி.பங்காரு என்பவரிடமும் தமிழ்க் கல்வியைக் கற்றுவந்தார். புலவர் பங்காரு ஆசிரியரிடம் சுப்புரத்தினமும் வேறு மாணவர் சிலரும் தமிழ் பயிலச் சென்ற பொழுது, ஙப்போல் வளை என்னும் ஆத்திசூடிப் பாட்டுக்குப் பொருள் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். வந்த மாணவருள் சுப்புரத்தினமே சரியான பொருள் கூறினார். அதனால் ஆசிரியர்க்குச் சுப்புரத்தினத்திடம் தனி அன்பு உண்டாகியது. இலக்கியம், இலக்கணம், நிகண்டு முதலியவற்றை அவர் நன்முறையில் கற்பித்தார். அவற்றைச் செம்மையாகக் கற்றுவந்த சுப்புரத்தினம். கி.பி. 1908ஆம் ஆண்டு, கல்வே கல்லூரியில் தமிழ்த் தேர்வு எழுதினார்; புலவர் வகுப்புத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தந்தையார் பெயருடன் சேர்த்துக் கனக சுப்புரத்தினமாக இருந்த இவர் புலவர் சுப்புரத்தின மாக விளங்கினார். தொழிலும் மணமும் புலவர் சுப்புரத்தினம், காரைக்காலுக்குப் பக்கத்தில் இருக்கும் நிரவி என்னும் ஊரிலுள்ள அரசினர் பள்ளியில், தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். அப்போது இவருக்கு மாத ஊதியம் முப்பது வெண்பொற்காசுகள். நிரவியில் பணியாற்றிக் கொண்ருந்த பொழுது. இவர் புதுச்சேரிக்கல்வே கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரியராக மாற்றம் பெற்றார். புலவர் சுப்புரத்தினம் நிரவியிலும் புதுச்சேரியிலும் ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்த காலத்திலும், அழகிய சுவை மிக்க பாடல்கள் பலவற்றைப் பாடிவந்தார்; கடவுள் அன்பு, நாட்டுப் பற்று, ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ மனப்பான்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை அப்பொழுது எழுதிவந்தார். சுப்பிரமணியர் துதியமுது கதர்ப்பாட்டு, சமத்துவப் பாட்டு முதலியன அக் காலத்தில் இவர் எழுதியவையே. சுப்பிர மணியர் துதியமுதிலிருந்து சில பாடல்களை இவரே தம் வாயால் இனிமையாகச் சில சமயங்களில் பாடிக் காட்டுவார். தந்தையார் கனகசபை, சுப்புரத்தினத்துக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினார்; தக்க இடத்தில் பெண் பார்த்தார். பரதேசி - காமாட்சி என்பவர்க்குத் திருமகளாகத் தோன்றிய பழநியம்மாளே அந்தப் பெண். முறைப்படி திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட பழநியம்மாள், அன்பும் பண்பும் பொருந்தப் பொறுப்புடன், குடும்பத்தை நடத்திவந்தார், பாவலர் உள்ளம் குழந்தையுள்ளம் போன்றது. அந்த உள்ளத்திற்கேற்றவாறு, பழநியம்மாள் குறிப்பறிந்து ஒழுகிவந்தார். பாவலரும் தம் துணைவியாரிடம் அன்பும் பரிவும் காட்டினார். எனினும், சில வேளைகளில், பாவலர் தமக்குள்ள இயற்கைக் குணத்தால் துணைவியார்க்கு மாறாக நடந்து கொள்வார். அப்பொழுதும் அந்த அம்யைர் மனம் வருந்தாது, கணவர்க்கு வேண்டிய பணிகள் செய்துவந்தார்; அத் தொண்டிலே இன்பமுங் கண்டு வந்தார். இத் தம்பதியர்க்கு மக்கட் செல்வமும் மனமகிழ வாய்த் துள்ளது. ஆ. பாரதிதாசன் பாரதியார் தொடர்பு தமிழ்நாடு பகுதி பகுதியாக ஆங்கிலேயரிடமும் பிரஞ்சுகார ரிடமும் அடிமைப்பட்டுக் கிடந்ததைக் கண்டு சுப்புரத்தினம் மனம் வருந்தினர்; தமிழர் தம்மை நினையாது, தாய்மொழியையும் கருதாது, உண்ணுதலும் உறங்குதலும் அன்றி வேறொன்றும் அறியாது, உரிமையுணர்வு அற்றுக்கிடக்கும் நிலையைக் கண்டு நைந்துநைந்து உருகுவார். பாவலர்கள் உணர்ச்சி வயப்பட்டால், அவ்வுணர்ச்சி பாடலாகத்தானே வெளிப்படும்! இப்படி இவர் அடிக்கடி எழுதிய பாடல்களைப் பிறருக்குப் பாடிக்காட்டுவார். இச் சமயத்தில் சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். ஆங்கிலேயர் பிடியினின்றும் நாடு விடுதலை பெறவேண்டும் என்று கருதிய பாரதியார், தம் பாட்டுத் திறத்தாலே வையத்தை விழிப்படையச் செய்துகொண்டிருந்தார். இவருடைய பாடல்களைக் கேட்டு, நாட்டு மக்கள் உள்ளங்களிலே, விடுதலை வேட்கை கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. ஆங்கிலேயரின் அடக்குமுறை தாளமாட்டாமல், பாரதியார் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். ஒருநாள் நண்பர் ஒருவரின் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பாரதியாரும் வந்திருந்தார். சுப்புரத் தினமும் வந்திருந்தார். பாரதியார் வந்திருப்பது சுப்புரத்தினத்திற்குத் தெரியாது. திருமணத்தில் விருந்துக்குப் பிறகு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுப்புரத்தினம், பாரதியாரின் நாட்டுப் பாடல் ஒன்றை இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார். இதனைக்கேட்ட பாரதியார் மனமகிழ்ந்தார்; சுப்புரத்தினத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பாரதியார் அங்கு வந்திருப்பதை அறிந்த சுப்புரத்தினம் நேரிற் சென்று அவரைக் கண்டார். அன்றே பாதியாருக்கு. இவர்மீது ஓர் நல்லெண்ணம் உண்டாகிவிட்டது. அன்று முதல் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பாரதியாரின் பாராட்டு நாளுக்குநாள் அத் தொடர்பு வளர்ந்துவந்தது. ஒருநாள் நண்பர் சிலருடன் பாரதியார் உரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது சுப்புரத்தினமும் அங்கிருந்தார். நண்பர்களிடத்தில் சுப்புரத்தினத்தைப் பற்றிப் பாரதியார் கூறினார். சுப்புரத்தினம் பாடல்கள் எழுத வல்லவன் என்று வியந்து கூறி, ஒரு பாட்டும் எழுதப் பணித்தார். உடனே சுப்புரத்தினம் எங்கெங்குக் காணினும் சக்தியடா! - j«ã VGflš mtŸ t©zklh! என்று தொடங்கும் பாடலைப் பாடிக் காட்டினார். பாடலைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சுப்புரத்தினத்தின் பாட்டுத் திறத்தையும், எழுச்சி மனப்பான்மையையும் அறிந்து கொண்ட பாரதியார் இவரைத் தமக்கு உற்ற நண்பராக ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடலைப் பாரதியாரே சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார்; அனுப்பியபோது, ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்று தாமே அதில் எழுதி அனுப்பினார். பாரதியாரால், பாவலர் என்று பாராட்டப் பெற்ற சிறப்பை இவர் ஒருவரே பெற்றார். இவ்வாறு பத்து ஆண்டு களாகப் பாரதியாருடன் சுப்புரத்தினம் நெருங்கிப் பழகிவந்தார். அதனால் இவர் அவரைப் பற்றி நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. பாரதிதாசன் இருவரும் பழகிவந்தபோது, தம்மிடம் பாரதியார் சங்க இலக்கியங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதாக இவர் கூறியிருக் கிறார். பாரதியாருடைய நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாதிபேத மற்ற சமத்துவ மனப்பான்மை, வீர உணர்வு, பாட்டுத் திறம் இவற்றைக் கண்டு, சுப்புரத்தினம் அவரிடம் அளவுகடந்த ஈடுபாடு கொண்டார்; அந்த ஈடுபாட்டால் தமது பழைய கருத்தை - பழைய நடையை மாற்றிக்கொண்டு புதிய கருத்து, புதிய நடை என்று பாடத் தொடங்கினார். எளிய நடையில், இனிய தமிழைப் புதிய பாங்கில் பாடுதற்கு வழிகாட்டியாகப் பாரதியார் விளங்கின மையால் சுப்புரத்தினம், பாரதிதாசன் என்று தமது பெயரையும் மாற்றி அமைத்துக்கொண்டார். பாரதியார் தமக்கு வழிகாட்டியாக விளங்கியதைப் பாரதிதாசனே, பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றிஎன் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார் என்று பாடியுள்ளார். அந்நாளில் பாரதியாரைப் பற்றி எழுதிய ஒருவர் அவர் உலக கவி அல்லர் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பாரதிதாசன் வெகுண்டெழுந்து, பாரதியார் உலக கவியே என்று மறுப்பு ஒன்றினை எழுதினாரென்பதிலிருந்து, பாரதியாரிடம் இவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பது தெரியும் பாரதிதாசனுடன் நெருங்கி உரையாடிப் பழகியவர்களுக்கு நன்கு தெரியும் அந்த மதிப்பு. இ.புரட்சிக் குயில் சுப்புரத்தினம் பாரதிதாசனாக மாறிய பிறகு இவருடைய எண்ணத்தில் புரட்சி; சொல்லில் புரட்சி; எழுத்தில் புரட்சி; செயலில் புரட்சி; சுருங்கக் கூறின் இவர் தோற்றமே புரட்சி. பகுத்தறிவுப் பாவலர் பாரதியாருடைய தொடர்பு பாரதிதாசனுக்கு ஒரு திருப்பு மையமாக இருந்தது. அந்தச் சமயத்தில் பகுத்தறிவு இயக்கம் தமிழ்நாடெங்கணும் பரவிக் கொண்டிருந்தது. பாரதியாரால் எழுச்சி பெற்றிருந்த பாரதிதாசன் உள்ளத்தில், பகுத்தறிவுக் கருத்துகள் ஆழப் பதிந்து, முளைத்துச் செழித்து. வளர்ந்து, புரட்சிப் பாடல் களாக மணம் வீசத் தொடங்கின. சமுதாயத்திலே நிலவி வந்த குருட்டு நம்பிக்கைகளை இவர் தாக்கினார்; மூடப் பழக்க வழக்கங்களைக் கடிந்து பாடினார். கண்மூடி வழக்கங் களைச் சாடும் இவர் பாடல்களில் புயலின் வேகத்தைத்தான் காணமுடிந்தது. பகுத்தறிவுப் பாவலராக மாறிய பாரதிதாசனின் பாடல்கள் அரசியல், பொருளியல், சமுதாயம் மூன்றிலும் பெரும் புரட்சியை உண்டுபண்ணக் கூடியவைகளாக இருந்தன. அவர் நெஞ்சத் திலிருந்து வெளிக்கிளம்பிய பாடல்கள், எரிமலையிலிருந்து வெளிவரும் தீப்பொறிகளாகவே காணப்பட்டன. இடையிடையே வரும் கேலியும்கிண்டலும், அப் பொறிகளின் வெம்மையைச் சற்றே தணிவித்து இளஞ்சூடாக்கிவிடும். சமுதாய வழிகாட்டி சமுதாயத்தில் மண்டிக்கிடந்த பல கொடுமைகளை இவர் கடிந்து பாடியதைப்போல் பிறர் பாடவில்லை என்றே கூறலாம். சாதிக் கொடுமைகளையும் போலிச் சமயக்கொள்கைகளையும் தகர்த்தெறியும் வெடிகுண்டுகளாகவே இவர் பாடல்கள் வெடித்தன. நம் நாட்டுப் பெண்கள் நிலையைப்பற்றிப் பாடிய பாடல்களில் காணல் அரிது. குழந்தை மணத்தைக் கண்டு இவர் பொருமினார்; வயதுப் பொருத்தமின்றி நடைபெறும் திருமணங்களைக் கண்டு திடுக்கிட்டார்; விதவை என்னும் பெயரால் இளம் பெண்கள் படும் இன்னல்களைக் கண்டு இரங்கினார். குமுறி எழுந்தது பாரதி தாசன் நெஞ்சம். மாதர் மறுமணத்தை இவர் வற்புறுத்திப் பாடினார். இவர் தாம் பிறந்த தமிழ்நாட்டை, தென்னாட்டைக் கண்டு கண்டு மனங்கலங்கினார். மக்கள் அரசியலில் அக்கறை காட்டாமல், சமுதாயச் சீர்கேடுகளைச் சிந்தை செய்யாமல், அறிவை வளர்க்க ஆர்வம் இல்லாமல், மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டுச் சீரழிக் கின்றனரே என்று எண்ணிஎண்ணி ஏங்கினார். அந்த ஏக்கத்தை, ‘bj‹dh£o‹ ÃiyÃid¤jhš bto¡F« cŸs« brªjÄH® ÃiyÃid¤jhš Jo¡F« beŠr«! என வரும் இவர் பாடல் அடிகளிலே காணலாம். சோம்பிக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பி, அவர்கள் எழுச்சிகொள்ளுமாறு இவர் பல பாடல்களைப் பாடினார். அவை விசையொடுங்கிய தேகத்தில் வலிமை ஊட்டி, வீரமூட்டத் தக்கனவாக இருந்தன; எழுச்சியையும் உணர்ச்சியையும் உண்டாக்கும் வண்ணம் அமைந்தன. அப் பாடல்களைக் கேட்டு மக்கள் விழித் தெழுந்தனர்; வீறு கொண்டு நின்றனர்; உலகை நிமிர்ந்து நோக்கினர். புரட்சிக் கவிஞர் அடிமை மனப்பான்மையில், தாழ்வு மனப்பான்மையில் ஊறிக்கிடந்து, நம்மால் என்ன ஆகும் என்று தன்னம்பிக்கையிழந்து தவித்த மனிதனை நோக்கி, அவனுக்கு எழுச்சியூட்டக் கருதி, மனிதரில் நீயும்ஓர் மனிதன்; மண்ணன்று; இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்; தோளை உயர்த்து; சுடர்முகம் தூக்கு; மீசையை முறுக்கி மேலே ஏற்று என்று பாடினார்; அப்பொழுதும் மக்கள் விழிப்புற்று எழும் நிலையைப் பெறாதிருந்ததைக் கண்டார்; இனி இவர்களிடம் சொல்லிப் பயனில்லை; இளைஞர் கூட்டத்துக்குத்தான் உணர்ச்சியை உண்டாக்க வேண்டும்; பழமையில் ஊறிப்போன நெஞ்சங்கள் திருந்தப்போவதில்லை என்று எண்ணினார்; அதனால், இளைஞர் கூட்டத்துக்கு வீரமுரசங்கொட்டினார். பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது சிறுத்தையே வெளியில்வா ......................................................... சிம்புட் பறவையே சிறகை விரி; எழு; சிங்க இளைஞனே திருப்பு முகம்; திற விழி என்று எழுச்சிக் குரல் கொடுத்தார். நாடெங்கும் இளைஞர் படை திரண்டெழுந்தது. எங்கும் உணர்ச்சி! எங்கும் எழுச்சி! இவ்வாறு தமிழகமெங்கும் உணர்ச்சியும் எழுச்சியும் உண்டாகப் புரட்சிக் கருத்துகளைப் பாடி வந்தமையால் மக்கள், பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞர் என்று வழங்கத் தொடங்கினர். எல்லாருடைய நெஞ்சங்களிலும் புரட்சிக் கருத்துகள் அரும்பு விட்டன. புரட்சிக் கவிஞரின் புகழும் மணக்கத் தொடங்கியது. மக்கள் பாராட்டு தமக்கு விழிப்புணர்வூட்டிய புரட்சிக் கவிஞரைப் பாராட்டவும் நன்றி செலுத்தவும் கருதித் தமிழக மக்கள் திரண்டெழுந்தனர்; பெருநிதி திரட்டித் தருவதென்றும் முடிவு செய்தனர். அறிஞர் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட வரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்து மறைந்தவரும் ஆகிய மாமேதை அண்ணா அவர்களே முன்னின்று நிதி திரட்டினார்; தமதுபேச்சாலும் எழுத்தாலும் இருபத்தையாயிரம் ரூபாய் திரட்டினார். 1946ஆம் ஆண்டு, சென்னை மாநகரில், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. வெள்ளம்போல் தமிழர் கூட்டம் திரண்டு வந்தது. சொல்லின் செல்வர், பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை, வீரத்தமிழர் ப.ஜீவானந்தம் போன்ற பெருமக்கள் பலர் பாராட்டிப் பேசினர். சுருங்கக் கூறின், பிற் காலத்தில் அடையவேண்டிய சிறப்பு, பெருமை, புகழ் அனைத்தையும் தம் வாழ்நாளிலேயே புரட்சிக் கவிஞர் பெற்றுவிட்டார் எனலாம். புரட்சிக் குயில் புரட்சிக் கருத்துகளை மக்களிடையே பரப்ப எண்ணிய காரணத்தாலும், அவற்றை எழுத வேண்டிய பணி மிகுதியாக இருந்ததாலும் புரட்சிக் கவிஞர், 1946 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியிலிருந்து விலகிக்கொண்டார்; அதன் பின்னர், 1948இல் குயில் என்னும் திங்கள் இதழைத் தாமே தொடங்கி நடத்திவந்தார். இதழ் முழுவதும் பாடல்களாகவே இருக்கும்; புரட்சிக் கருத்துக் களையே தாங்கிவரும். முதன்முதல் முழுதும் பாடல்களாகவே வெளிவந்த இதழ், இந்தப் புரட்சிக் குயில்தான். ஈ.பாவேந்தர் விருத்தப்பாவலர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வெண்பா, ஆசிரியப்பா முதலான எல்லாவகைப் பாக்களையும் பாட வல்லவர்; ஆயினும், விருத்தப்பா என்னும் பாடல் எழுதுவதில் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். வெண்பாப் பாடுவதில் புகழேந்திப் புலவர் எவ்வாறு வல்லவராக விளங்கினாரோ, அவ்வாறே விருத்தகம் பாடுவதில் கம்பர் முன்பு வல்லவராக விளங்கினார். கம்பருக்குப் பிறகு, விருத்தப்பாவிற்குப் புத்துயிரும் பெருமதிப்பும் உண்டாகச் செய்தவர்களுள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஒருவர். புரட்சிக் கவிஞர் கவிதை நூல்கள், உரைநடை நூல்கள், நாடக நூல்கள் எனப் பலப்பல எழுதித் தந்துள்ளார். கம்பருடைய கவித்திறனையும் கவிச்சிறப்பையும் கண்டு வியந்தவர்கள், அவரைக் கவிச்சக்கரவர்த்தி vன்றுtழங்கினர்.mij¥nghynt புரட்சிக் கவிஞருடைய பாட்டு வன்மையையும் பாடற் சிறப்பையும் உணர்ந்த மக்கள், இவரைப் பாவேந்தர் என்று வழங்கத் தொடங் »னர்.òu£á¡ கவிஞர் பாவேந்தரனார். படைப்புகள் பாவேந்தர் நமக்குப் படைத்தளித்த நூல்கள் பல. அவற்றுள் பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, தமிழியக்கம், அழகின் சிரிப்பு, இசையமுது, பாண்டியன் பரிசு ஆகிய நூல்கள் மிகச் சிறந்தனவாகும் பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூல் பல்வேறு சமயங்களில் பாடப்பட்ட பாடல்களின் தொகுதி. இந்த நூலே, பாரதிதாசன் ஒரு பெருங்கவிஞர் என்பதைத் தமிழ்நாட்டிற்கு உணர்த்திற்று. இவருடைய பாடல்கள் மேலும் இரண்டு தொகுதி களாக வெளிவந்துள்ளன. குடும்ப விளக்கு என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் விளக்குப்போன்ற நூல். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்னுங் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல் இது. குடும்பம் எப்படி நடத்தவேண்டும் என்று, குடும்பத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஓர் ஆசான் போன்றது இந்தநூல். ஒவ்வொருவரும் தவறாமல் படித்துணர வேண்டிய நூல். பாரதிதாசன் படைப்புகளுள் இது புதுமையான படைப்பாகும்; தனித் தன்மை வாய்ந்தது ஆகும். தமிழியக்கம் தமிழ்நாட்டில் தமிழ்மொழி எந்தெந்தத் துறைகளில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறது, எங்கெங்கு நம் மொழி தலைமை பெறவேண்டும், தமிழ் தலைமை பெற யார்யார் என்னென்ன பணிகளில் ஈடுபடவேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, ஓர் இயக்கம்போல நின்று வழிகாட்டும் ஒப்பற்ற நூல் இது. தமிழ்நாட்டு இளைஞர் ஒவ்வொருவரும் இதனைப் படித்து உணர்ந்து, நெஞ்சில் பதியவைத்து, அஃது எடுத்துக் கூறும் நெறிமுறைகளைச் செயற்படுத்தினால், தமிழ் மொழி தனக்குரிய நிலையையும் மேன்மையும் அடைந்தே தீரும். அழகின் சிரிப்பு என்னும் நூல் பாரதிதாசன் உலகப் பெருங் கவிஞர் என்பதை உலகிற்கு உணர்த்தும். கிளி, புறா, கடல், ஆறு, ஆலமரம் முதலான தலைப்புகளில், இயற்கைப் பொருள் களைப் பற்றி இவர் இந் நூலில் அழகாகப் பாடியிருக்கிறார். பாவலர் களுடைய கண்களுக்கு ஒரு தனி ஆற்றல் உண்டு. எப்பொருளையும் ஊடுருவிச் சென்று காணும் ஆற்றல்தான் அது. அதனால் நமக்குப் புலனாகாது மறைந்துகிடக்கும் அழகுகள், அவர்களுடைய விழிகளுக்குப் புலனாகும். அவ்வாறு புலனாகும் அழகுகளை அவர்கள் கண்டு தாமும் சுவைத்து, நம்மையும் சுவைக்கவைத்து மகிழச் செய்வார்கள். பாரதிதாசன் இவ்வாறு சுவைத்து எழுதிய அழகின் சிரிப்பு நம்மையும் இயற்கையழகிலே தோயவைக் கின்றது. இசையமுது என்னும் இப் பெயரைக் கேட்டவுடனே, இந் நூலின் இனிமை நமக்குப் புலப்படுகின்றது. இசையே இனிமை யானது; அதுவும் அமுதாகப் பொழிந்துவிட்டால் இனிமைக்குக் குறைவேது? தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாரதிதாசன் பாடினார். அவருடைய இசைப்பாட்டுக்கும் அமுதென்று பேர் என்று நாம் பாடலாம். அவ்வளவு இனிமையான இசைப் பாடல்கள் இந்த நூலுக்குள் அமைந்திருக்கின்றன. இவர் புரட்சிக்கவிஞராதலின், மாடு மேய்ப்போன், வண்டி ஓட்டுபவன், ஆலைத் தொழிலாளி, கூடை முறம் பின்னுவோர் என்று இத்தகைய மக்களையே இசையமுதில் பாடியிருக்கின்றார். இவருடைய பாடல்கள் பல திரைப்படங்களிலே முழங்கிவருகின்றன. பாண்டியன் பரிசு என்பது முழுதும் விருத்தப் பாக்களால் ஆன சிறந்த காப்பிய நூல். இக்காப்பியத்தில் வீரம், நகை முதலிய சுவைகள் நிறைந்திருக்கும்; நிலையாமையைப்பற்றிச் சொல்லும் பகுதி சிறப்பாக இருக்கும்; மூடநம்பிக்கைகளை அழகாக நகைச் சுவையுடன் எடுத்துக்கூறும் பகுதியைப் படித்துப்படித்து மகிழலாம். இவை தவிர வேறு காப்பியங்கள், நாடகங்கள், பாடல்கள், உரைநடை நூல்கள் முதலியவற்றையும் பாரதிதாசன் எழுதியுள்ளார். இவ்வாறு உயர்ந்த நூல்களை எழுதித் தமிழ்மொழிக் காவலராய்ப் பாட்டுலகில் முடிசூடா மன்னராய் விளங்கி வந்த பாரதிதாசனை, மக்கள் பாவேந்தர் என்னும் பெயரிட்டழைக்காமல், வேறு எப்பெயரால் அழைப்பர். உ. உளப்பாங்கு குழந்தை நெஞ்சம் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு பிறவிக் கவிஞர். அவருடன் பழகியவர் இதனை நன்கு அறிவர். இவர் பிறவிக் கவிஞராக இருந்தமையால். குழந்தை உள்ளம் படைத்தவராக விளங்கினார். உலகியலுக்கும் இவருக்கும் நீண்ட இடைவெளியிருக்கும். யார் எதைச் சொன்னாலும் இவர் நம்பிவிடுவார். யார் உண்மையானவர், யார் பொய்ம்மையானவர் என்பதே இவருக்குத் தெரியாது. எளிதில் யாரையும் நம்பும் இயல்புடையவராக இருந்தமையால், பொய்ம்மையானவரையும் இவர் நம்பிவிடுவார். நம்பிவிட்டால், அவர்களை நம்பி பிள்ளை என்று உரிமையுடனே குறிப்பிடுவார். கவிஞர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் பறந்துகொண்டே யிருப்பவர்கள். அதனால் இந்த உலக நடவடிக்கைகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு காண்பது அரிது. பணிவுள்ளம் எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்பது வள்ளுவர் வாய் மொழி. இவ் வாய்மொழியை நன்கு உணர்ந்தவர் பாவேந்தர். அதனால் எல்லாரிடத்தும் பணிவு காட்டும் பண்பு இவரிடம் குடி கொண்டிருந்தது. தமக்கு வழிகாட்டியாக இருந்த பாரதி யாரிடம் இவர் பெருமதிப்பு வைத்திருந்தார். இவர் பாரதியாரைச் சிறப்பித்துப் பாடும் இடத்தில், திங்களைக் கண்ணிலான் சிறப்பிப்பதுபோல நான் உன்னைச் சிறப்பிக்க வந்துளேன் என்னுங் கருந்தமையப் பாடியுளார். இப் பகுதியில் பாவேந்தருடைய பணிவுள்ளம் ஒளி வீசுகின்றது. நன்றியுள்ளம் இவர் தாம் இயற்றிய குடும்ப விளக்கு இரண்டாம் பகுதியை, நிறைதமிழாய்ந்த மறைமலையடிகளுக்குக் காணிக்கையாக்கி யிருக்கின்றார். சான்றோரை மதிக்கின்ற மனப்பான்மை இவரிடம் இருந்தது எனபதற்கு இஃது ஒரு சான்றாகும். இனி, இவரிடம் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர் ஒருவர்க்குத் தமது நூலொன்றைக் காணிக்கையாக்கியுள்ளார். க. பிச்சையன் என்னும் பெயருடைய இளைஞர், பாவேந்த ரிடம் ஈடுபாடு கொண்டு, அவர்க்கு வேண்டிய பணிகளை மனமுவந்து செய்துவந்தார்; பாவேந்தர் நூல்களை அழகிய முறையில் கட்டடம் (Bind) அமைத்துக் கொடுப்பார் பாவேந் தர்க்குத் தமது நூல்களை அழகாக அச்சிடுவதிலும் அழகாகக் கட்டடம் செய்வதிலும் பேரார்வம் உண்டு. அதனால் பிச்சையனிடம் பாவேந்தர் அன்பு வைத்திருந்தார். பிச்சையன், இளமையிலேயே நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது. பாவேந்தர் இரங்கினார்; இளைஞர் எனப் பாராது, தம் நூலொன்றைப் பாவேந்தர் பிச்சை யனுக்குக் காணிக்கையாக் கினார். பெரியவர் சிறியவர் என்று வேறுபாடு கருதாது. அன்பு ஒன்றையே கருதிப் பாவேந்தர் அதற்குக் கட்டுப்பட்டு விளங்கினார். மறதியுள்ளம் பாவலர்கள், எந்த நேரமும் நாட்டையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள்; வீட்டை மறந்து விடுவார்கள்; கற்பனை உலகில் திரிந்துகொண்டிருப்பார்கள்; இந்த உலகை மறந்துவிடு வார்கள்; சுருங்கக் கூறின் தம்மையே மறந்துவிடுவார்கள். தம்மை மறந்தநிலை, பாவேந்தர் வாழ்வீல் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. பாவேந்தர் ஒரு முறை ஒரு கல்லூரிக்குக் கவியரங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்; விடியற்காலையே வந்துவிட்டார். நிகழ்ச்சி மாலை யில்தான். அதுவரை இவர் ஓர் அறையில் ஓர் பலகையில் படுத்துக்கொண்டார். தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல், கையை மடக்கித் தலைக் கடியில் வைத்தவண்ணம் படுத்திருந்தார். இவரைக் காண வந்தவர்களிடம், கல்லூரியில் யாருமே தம்மைக் கவனிக்கவில்லை என்று இவர் வருத்தப்பட்டுக் கொண்டார். பாவேந்தருக்கு அருகில் ஒரு பெட்டியும். அதன்மேல் தலையணையுடன் கூடிய படுக்கையும் இருப்பதை வந்தவர்கள் சுட்டிக் காட்டினர். அடடே! நான்தான் கொண்டுவந்தேன்; மறந்து விட்டேன் என்று கூறித் தலையணையை எடுத்து வைத்துக் கொண்டார். இத்தகைய வேடிக்கை நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் எவ்வளவோ நடை பெற்றிருக்கின்றன. தமிழ் நெஞ்சம் பாவேந்தர் தமிழின் உருவமாகவே விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ் என்றால் அவருக்கு எவ்வளவு ஆசையோ? உடல் உயிர் செந்தமிழ் மூன்றும் நான் நான் நான் என்று பாவேந்தர் பாடுகின்றார். இவ்வடிகளால் தாம் வேறு, தமிழ்வேறு எனும் வேறுபாடேயின்றி, தமிழாகவே தம்மைக் கருதும் நெஞ்சம் நமக்குத் தெரிகிறது. ஏனெனில், உடலையும் உயிரையும் தமிழுக்கென்றே ஒப்படைத்துவிட்டார் பாவேந்தர். மற்றோரிடத்தில் இவர். ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு உவப்புடன் ஈவேன் என்று பாடுகின்றார். இறுதிநாள் தமிழே வடிவமான பாவேந்தர் சிலர் சொல்லை நம்பித் தமது பாண்டியன் பரிசு என்னும் காப்பியத்தைத் திரைப்பட மாக்கக் கருதிச் சென்னைக்குச் சென்று, பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி, 21-04-1964இல் நம்மை விட்டுப் பிரிந்தார். கனக சுப்புரத்தினம், பாரதிதாசனாகி, பிறகு புரட்சிக் கவிஞராகி, முடிவில் பாவேந்த ராகித் தம் புகழ் நிறுத்தித் தாம் மறைந்து விட்டார். அவர்தம் பிரிவால் வாடிய தமிழ்மக்களுக்கு, அவருடைய பாடலே ஆறுதல் தந்தது. ஆறுதல் தந்த அந்த மொழி, தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பதே. கட்டுரைப் பயிற்சி பின்வரும் பொருள்கள் குறித்துக் கட்டுரை எழுதிப் பழகுக: 1. வேதநாயகரின் இளமை நிகழ்ச்சிகள் 2. அரசியல் அலுவலில் வேதநாயகர் 3. வேதநாயகர் நீதிநாயகர் 4. வேதநாயகரின் இசைப்புலமை 5. வேதநாயகரின் சீரிய தொண்டுகள் 6. தேசிகவிநாயகரின் இளமைப்பருவம் 7. நல்லாசிரியர் தேசிகவிநாயகர் 8. கவிமணி நூல்களின் சிறப்புகள் 9. குழந்தைக் கவிஞர் தேசியவிநாயகர் 10. தேசிகவிநாயகரின் சீரிய பண்புகள் 11. பிறவிக் கவிஞர் பாரதியார் 12. பாரதியாரின் சென்னை வாழ்வு 13. புதுவையில் பாரதியார் 14. பாரதியாரின் நண்பர்கள் 15. பாரதியார் தேசியக் கவிஞர் 16. பாரதிதாசனின் கல்வியும் புலமையும் 17. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 18. பாவேந்தரின் படைப்புகள் 19. பாரதிதாசனின் பண்புநலம் 20. பாரதியாரும் பாரதிதாசனும் கவியரசர் முடியரசன் படைப்புகள் கவிதைகள் தொகுப்பு 1 முடியரசன் கவிதைகள் 1954 நெஞ்சிற் பூத்தவை 1999 தொகுப்பு 2 காவியப்பாவை 1955 பாடுங்குயில் 1983 தொகுப்பு 3 கவியரங்கில் முடியரசன் 1960 தமிழ் முழக்கம் 1999 தொகுப்பு 4 நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 மனிதனைத் தேடுகிறேன் 1986 மனிதரைக் கண்டுகொண்டேன் 2005 தொகுப்பு 5 தாய்மொழி காப்போம் 2001 புதியதொரு விதிசெய்வோம் 1999 தொகுப்பு 6 வள்ளுவர் கோட்டம் 1999 ஞாயிறும் திங்களும் 1999 காவியம் தொகுப்பு 7 பூங்கொடி 1964 வீரகாவியம் 1970 தொகுப்பு 8 ஊன்றுகோல் 1983 இளம்பெருவழுதி புதிய நூல் 2008 இலக்கணம் தொகுப்பு 9 தமிழ் இலக்கணம் 1967 பாடுங்குயில் 1975 தொகுப்பு 10 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு) புதிய நூல் கடித இலக்கியம் தொகுப்பு 11 அன்புள்ள பாண்டியனுக்கு 1999 அன்புள்ள இளவரசனுக்கு 1999 சிறுகதை + கட்டுரை தொகுப்பு 12 எப்படி வளரும் தமிழ்? 2001 எக்கோவின் காதல் 1999 தொகுப்பு 13 சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990