கவியரசர் முடியரசன் படைப்புகள் 5 தாய்மொழி காப்போம் புதியதொரு விதிசெய்வோம் முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 192 = 208 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 130/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாதுஈத்தஇப்பரிசிலுக்குயான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ முற்றிய திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x தாய்மொழி காப்போம் போராட்டவுணர்வு வேண்டும் 3 1. தமிழ் வணக்கம் 7 2. மூன்று தமிழ் தோன்றியது 8 3. தமிழ் காப்போம் 11 4. கனன்றெழுக! 15 5. உயிர் கொடுப்போம் 17 6. சாவுக்கும் அஞ்சோம் 19 7. வாகை கொள்வோம் 21 8. இனி விடோம் 23 9. மாவீரர் பலருண்டு 26 10. தமிழோடிணைந்தாய்! 28 11. தமிழே வெல்லும் 29 12. செல்லடி செல்லடி இந்திப் பெண்ணே 30 13. ஒன்றே நினைப்பீர்! 32 14. பிரிந்து போ 34 15. சட்டம் செய்க 37 16. பொய்த்த வாய்மொழிபோதும் 39 17. விடை கொடு தாயே 41 18. முழங்கட்டும் போர்ப்பறை 42 19. வாளேந்தி வாமகனே 43 20. போர் தொடுப்பாய் 44 21. போருக்கு வா! 45 22. வாகை சூடு 47 23. வெறி வேண்டும் 48 24. அந்த நாள் வந்தே தீரும் 49 25. வாழ்வா? சாவா? 51 26. தாய்மொழிப்பற்று 53 27. உறங்குந் தமிழ்மகன் 55 28. தமிழர் போக்கு 57 29. என்றுதணியும்....? 60 30. எக் காலம் 6231. தமிழனா நீ? 63 32. சமயத்தில் நட்டதமிழ் 64 33. கோவிலுக்குள் கொடுமை 66 34. திரும்பி விட்டேன் 69 35. எது கவிதை? 71 36. ஆணா? பெண்ணா? 72 37. ஐக்கூ அடிமை 73 38. அதன் பெயர் என்ன? 74 39. கற்றோரை வேண்டுகிறேன் 75 40. பட்டஞ் சூட்டுக! 77 41. தமிழ்ச் சான்றோரைப் போற்றுக! 79 42. உளங்கவர் புலவர் 80 43. இளங்கோவடிகள் 84 44. புரட்சிப் பாவலன் 85 45. ஞாயிறு போற்றுதும் 89 46. மீண்டது பொற்காலம் 92 47. வாழ்க முச்சங்கம் 94 48. தமிழின் செம்மை 95 49. தமிழில் மறுமலர்ச்சி 9850. செந்தமிழ்ச்செல்வி 100 51. காப்புப் பருவம் 102 52. பாடிக்கொண்டேயிருப்பேன் 104 புதியதொரு விதி bசய்வோம்1. தமிழ் வாழ்த்து 107 2. ஏடெடுத்தேன் பாட்டெழுத..... 108 3. புதியதொரு விதிசெய்வோம் 113 4. பகடைக் காய் 115 5. ஏர்நின்றால்..... 117 6. பொதுமைகாண்போ«118 7. பூக்கட்டும் புதுமை 119 8. யாவும் பொதுமையடா 121 9. உலகை மாற்றுவோம் 122 10. துன்பத் துடிப்பு 123 11. தீ பரவட்டும் 125 12. தமிழர் திருநாள் 127 13. திரும்பிப் பார் 128 14. அந்நாள் எந்நாள்? 130 15. சிறுத்தையே விழித்தெழு 132 16. தமிழின வரலாறு 135 17. இன்றைய நாடு 139 18. ஆரியப் பேரரசு 141 19. தமிழக அரசு 143 20. ஒருமைப்பாடு 149 21. ஒற்றுமையும் ஒருமையும் 150 22. ஒற்றுமை உருப்படுமா? 151 23. எங்கே தமிழன்? 152 24. தமிழனா? ïந்தியனா? 153 25. என் குறிக்கோள் 154 26. ஏற்றம் பெறுமா இந்தியா? 155 27. கண்ணீர்ப் பொங்கல் 156 28. பொங்கல் விழா 157 29. தீப்பொறி 164 30. நீர்ப்பானை ஓட்டையானால்...? 165 31. விண்வெளிப் போருக்கா விஞ்ஞானம்? 167 32. சான்றோர் செய்த பிழை 169 33. தேர்தல் நினைவு 170 34. விழா மட்டும் போதுமா? 172 35. நன்றி காட்டுக 174 36. கண்ணீரை யார் துடைப்பர்? 176 37. இன்பம் எது? 180 தாய்மொழிக் காப்போம் வீர வணக்கம்! தாய்மொழி காக்கத் தம்மைத் தாமே எரியூட்டிக் கொண்டும், இன்னபிற tழிகளிலும்,jம்ïன்னுயிரை<கம்bசய்தjமிழ்ப்nபாராளிகட்குåரtணக்கம்!அம்மொழிக் காவலர்கட்கு இந்நூல் காணிக்கை! - பாரி முடியரசன் போராட்டவுணர்வு வேண்டும் செருமன் நாட்டுக் கிறித்துவ அடிகளார் சீன்சிலோபாக் என்பவர், ஆசிய நாடுகளிற் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே அவர்க்கு வரவேற்பளித்த கான்டர்பரியார் என்னும் அடிகளார், `இவ் வளவு சிறப்பு வாய்ந்த பேரறிஞரான அடிகளாரை ஓர் உயர்ந்த மொழியிலே நான் வரவேற்க விரும்புகிறேன். அப்படி வரவேற் பதற்கேற்ற உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் வரவேற் பிதழைப் படித்துத் தருகிறேன்'' என்று கூறி வரவேற்பிதழைப் படித்துக் கொடுத்தார். வரவேற்பை ஏற்றுக் கொண்ட அடிகளார், உள்ளன் போடு என்னை வரவேற்க வேண்டும் என்பதற்காக ஓர் உயர்ந்த மொழியில் வரவேற்பளித்தீர்கள். நானும் என் உள்ளன்பைக் காட்ட ஓர் உயர்ந்த மொழியிற்றான் நன்றி கூற வேண்டும், அப்படிப்பட்ட உயர்ந்த மொழியாகிய தமிழ் மொழியிலேதான் எனது நன்றியைச் சொல்ல வேண்டும் என்று கூறித் தமிழால் நன்றி கூறினார். இத்தாலி நாட்டறிஞர் போப்பையர் தமிழின் பாற் கொண்ட பற்றினால் தம்மைத் தமிழ் மாணவன் என்று தமது கல்லறையிற் குறிப்பிடுமாறு சொன்னார். மதத்தைப் பரப்ப வந்த கால்டுவெல் அடிகளாரின் மனத்தைக் கவர்ந்து கொண்டது தமிழ். இத்தாலி நாட்டுப் பேரறிஞர் பேசுகியை வீரமா முனிவராக்கி வென்றாண்டது தமிழ். சோவியத்து நாட்டுத் தோழர் ரூதின் செம்பியன் ஆனார். brªjÄœ¥ g‰whš ‘ïy¡»a¢ bršt¥ bgU¡Fila jÄH® fsh»a Ú§fŸ V‹ ï‹W t¿a®nghy¡ »l¡»Ö®fŸ?'' என ஈரான் அடிகளார் ஏத்திப் புகழ்ந்தார். இவ்வாறு பிறநாட்டு நல்லறிஞரையெல்லாம் வாயாரப் புகழ வைத்த பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு முற்றுரிமை படைத்த இத்தமிழ் நாட்டிலேதான் `தமிழா இனவுணர்வு கொள், தமிழா மொழியுணர்வு கொள்'', என்ற முழக்கம் நாற்புறமும் பறைசாற்றப் படுகிறது. தமிழே வேண்டும்; எங்குந் தமிழ், எதிலுந்தமிழ், எல்லாந் தமிழ் என்ற உரிமை வேட்கை ஒருபால் ஒலிக்கிறது. அதே நேரத்தில் யாதும் ஊரே யாவருங் கேளிர், என உலகப் பொது மையும் மாந்தப் பொதுமையும் பேசிய தமிழ்மகன், இனமென்றும் மொழி யென்றும் பிரித்துப் பேசுவது குறுகிய மனப்பான்மை யன்றோ? btW¥ òz®it btË¥gL¤Jtj‹nwh? என்ற ஞானோபதேசமும் பரப்பப்படுகிறது. மொழிப்பற்றும் இனப்பற்றும் குறுகிய நோக்க மென்றோ பிறர்மேற் காட்டும் வெறுப்புணர்ச்சி யென்றோ விளம்புவது, தன்னலத்தை உள்ளடக்கிய தகவிலாக் கூற்றாகும். மற்றவர் விழித்துக் கொள்வரேல் தமது நலத்துக்குக் கேடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சவுணர்வே அவ்வாறு திரிபுரை கூற வைக்கிறது. இனவுணர்வும் மொழியுணர்வும் இல்லா மாந்தன் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயிருக்கின்றான்? ஏனைய நாட்டினர் இனவுணர்வும் மொழி யுணர்வும் இயல்பிலே உடையராய்ப் பரந்த மனப்பான்மை பேசுவர். தமிழன் ஒருவன்தான் தன்னையும் தாய்மொழியையும் மறந்துவிட்டுப் பரந்த மனப்பான்மை பேசிப் பாழாவான். தாய்மொழிப் பற்றுடைமை குறுகிய நோக்கமென்று கூறினால், காந்தியடிகள் தம் தாய் மொழியாகிய குசராத்தி மொழியிற் பற்று வைத்திருந்தது குறுகிய நோக்கமா? இரவீந்திர நாத் தாகூர் தம் அன்னை மொழியில் அன்பு வைத்திருந்தாரே, அது குறுகிய நோக்கமா? `தாய் மொழிப் பற்றுத்தான் தாய்நாட்டுப் பற்றுக்கு அடிப்படை'' என்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க. தெளிந்துரைத்தது குறுகிய நோக்கமா? `மூச்சு இரைக்க அடி வயிற்றிலிருந்து கடுமை யான ஒலிகளை எழுப்பிப் பொருள் விளங்காத ஒரு நிலையில் வடமொழியில் உன்னைப் பாடுகிற நிலைமையை எனக்கு ஏற்படுத் தாமல், நல்ல தமிழில் - இன்பத் தமிழில் உன்னைப் பாடுவதற்கு எனக்கு அருள் புரிந்த ஆண்டவனே உன்னை நான் போற்றுகிறேன்; நன்றி செலுத்து கிறேன்'' என எழுதியுள்ள இராமலிங்க அடிகளார் குறுகிய நோக்கினரா? சூரியநாராயண சாத்திரியார் தமது பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனத் தமிழிற் பெயர்த்து வைத்துக் கொண்டாரே அது குறுகிய நோக்கமா? ``யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்குங்காணோம்'' எனப் பாடிய பாரதியுமா குறுகிய நோக்கினர்? `தமிழன் என்றோ ரினமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் என்று நாமக்கல் கவிஞர். வெ. இராமலிங்கனார் கூறவில்லையா? தமிழ் மொழியிற் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுது வது பற்றியும் பேசுவது பற்றியும் கருத்து வேறுபாடு நம்மவரி டையே தலைதூக்கி நிற்கிறது. கலக்கலாம் என்று வாதிடுவோர், சோவியத்து ஒன்றியத்தை உருவாக்கிய சிற்பி வி.ஐ.இலெனின் சொற்களைக் கண்விழித்துப் பார்க்கட்டும். ``நாம் உருசிய மொழியைக் கெடுத்துக் கொண் டிருக்கி றோம். தேவையின்றி அயன்மொழிச் சொற்களை எடுத்தாளும் போதும் தவறாகவே ஆண்டு வருகிறோம். உருசிய மொழியில், NEDOCHOTY, NEDOSTATKI, PROBELY என்றும் சொற்கள் இருக்கையில் அயன் மொழிச்சொற்களை நம்முடைய மொழியில் ஏன் எடுத்தாள வேண்டும்? . . . . njitÆ‹¿ ma‹bkhÊ¢ brh‰fis¥ ga‹ gL¤Jtj‹ ÛJ xU nghiuna bjhL¡f nt©oa neu« ïJ t‹nwh?'' உலகத் தொழிலாளரை ஒன்றுபடுத்தப் போராடிய இலெனின் சொற்கள்தாம் இவை. இனியேனும் மொழிக்கலப்பாளர் திருந்துவரா? மொழியின் உரிமைக்கும் இனத்தின் விடுதலைக் கும் உரத்த குரல் எழுப்புவதுதான் இயற்கைக் கூறு. இனமும் மொழியும் அடிமைப்பட்டுக் கிடக்க அதனை மறந்தோ மறைத்தோ உலகப் பொதுமை பேசுவது இயற்கைக்கு முரண்பட்டதாகும். நடுவு நிலைமையுடன் எண்ணிப் பார்க்கும் எவரும் அம் முரண் பாட்டை ஏலார். இனமும் மொழியும் ஏற்றம் பெறுமிடத்தேதான், பொதுமை யோ புதுமையோ நிலைத்தவையாக - உண்மையான வையாக மிளிர இயலும். இன்றேல் பொதுமையும் புதுமையும் வெறுமை யாகும். ஆதலின் மொழியுணர்வு கொள்க, மொழித் தொண்டு புரிந்தோரைப் போற்றி இனவுணர்வு கொள்க. இதனை யுணர்ந்து கொண்ட தமிழ்நாடு இந்த நல்வழியில் முனைந்து நிற்பது வரவேற்கத் தக்கதே. ஏய்ப்பும் எதிர்ப்பும், தடுப்பும் மறுப்பும் ஏற்படுங்கால் அஞ்சலும் துஞ்சலுங் கெடுத்து, மயக்கமும் தயக்கமும் விடுத்து, ஆண்மையும் வாய்மையுங் கொண்டு, அவற்றை எதிர்த்துத் தகர்த்தல் வேண்டும். தன்னிலை மறந்து தமிழ்மகன் மெய்ந்நிலை பெறுதல் வேண்டும். இத்தகு போராட்டவுணர்வு ஒன்றுதான் இன்று தேவை. இத்தேவையை உணர்ந்தே அதற்கேற்ற பாடல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழுக்குத் தொண்டு செய்த பெரியார்கள் பற்றிய பாடல்களும் சேர்க்கப் பட்டுள்ளன, தமிழ் காக்க அவை உறுதுணையாகும் என்பதால். உணர்க! எழுக! வருக! தாய்மொழி காப்போம். காரைக்குடி அன்பன் 1.11.1990 முடியரசன் 1. தமிழ் வணக்கம் முத்தமி ழேஉனை எப்பகை யாகினும் முற்றிட முன்வருமேல் எத்தடை மோதினும் அப்படை யாவையும் எற்றிமு ருக்கிடுவேன் எத்துயர் நேரினும் அத்தொழில் ஆற்றிட எப்பொழு தும்தவறேன் மத்தக யானையைச் செற்றிடும் ஏற்றரி வல்லமை தந்தருள்வாய். விரித்துவரும் வலையிலெலாம் தப்பி நின்று வீழாமல் சிரிக்கின்ற தமிழ ணங்கே! குறித்துவரும் பகையஞ்சிப் புறமிட் டோடக் கூரறிவுப் படைதந்த எங்கள் தாயே நெருப்புபுனல் செல்கறையான் வாய்கள் தப்பி நின்றொளிரும் ஏடுடையாய் அம்மா நின்றன் சிரித்தமுகங் காண்பதற்கே என்றும் வாழ்வேன் சிறியன்எனைக் காப்பதுநின் கடமை யாகும். 2. மூன்று தமிழ் தோன்றியது கலிவெண்பா நீர்நிறைந்து யாண்டும் நிலமொன்றுங் காணாமல் பார்மறைந்து வெள்ளம் பரவிநின்ற தோர்காலம்; அந்தப் புனல்குறைய ஆங்கிருந்த ஓங்குமலை வந்து தலைகாட்டி வானோக்கி நின்றதைத்தான் கற்றோன்றி மண்தோன்றாக் காலமெனப் பூவியலைக் கற்றோர்தம் நூலிற் கணித்தார்கள்; மண்டிணிந்த ஞாலத்தின் முன்தோன்றும் நீலப் பெருங்கல்லைக் கோலக் குறிஞ்சியெனக் கூறி மகிழ்ந்தனர்; அவ் வெற்பிடத்துங் காட்டிடத்தும் வேட்டம் பலபுரிந்து கற்களிலே தீயெழுப்பிக் காலங் கடத்தியவன் ஆடை யறியாமல் ஆசை புரியாமல் வீடுந் தெரியாமல் வீரமட்டுந் தானறிவான்; ஆதி மனிதனவன் அன்னான் கருத்துரைக்க ஏதும் அறியாதான் எண்ணம் எடுத்தியம்பப் பேசும் மொழியறியான் பிள்ளைநிலை யுற்றிருந்தான்; பேச விழியுண்டு பேணும் முகமுண்டு நீண்டஇரு கையுண்டு நெஞ்சிற் படுங்கருத்தை வேண்டும் படிஎடுத்து விண்டுரைத்தான் சைகையினால்; எண்ணம் பலித்துவிடின், எக்களிப்பு மீதூரின் நண்ணும் உணர்ச்சியினால் நாடித் துடிப்பேறித் துள்ளிக் குதித்தெழுந்து தோழனுக்குத் தன்கருத்தை உள்ளக் கிளர்ச்சிதனை ஓதினான் சைகையினால்; அந்தக் குறிப்பும் அவன்காட்டுஞ் சைகைகளும் முந்திக் கலந்து முகிழ்த்தனகாண் கூத்தாக; மற்றொருநாள் மாந்தன் மகிழ்ந்து குதித்துவந்தான் உற்ற பெருங்களிப்போ உள்ளத்துப் பூரிப்போ பெற்ற பெரும்பொருளோ பெண்காதற் கூட்டுணர்வோ எற்றுக்கே ஆடினனோ என்ன நடந்ததுவோ எப்படியோ ஒருணர்ச்சி இன்னதெனாப் பேருணர்ச்சி அப்படியே உள்ளோடி ஆவி கலந்தெழுந்து நாடிநரம் பெல்லாம் நடமாடச் செய்தோடிக் கூடி மனத்தகத்திற் கூத்தாட்டம் ஆடியது; கூத்தாடும் அவ்வுணர்ச்சி கூடி நிலைநிற்க ஆற்றாமல் வாய்திறந்தே ஆர்ப்பரித்துக் கூவிவிட்டான்; கூவுங் குரல்கேட்டான் கொண்டான் பெருவியப்பு; கூவினான் மீண்டுங் குரலெடுத்துக் கூவினான்; கோட்டிற் குயிலொன்று குக்குக்கூ என்றொலிக்கக் கேட்டான் கிளைக்குயில்போற் கூவினான் வாய்குவித்தே; ஒட்டி இருகுரலும் ஓரொலியாய்த் தொட்டிசைக்க விட்டுவிட்டுக் கூவி விளையாடிக் கொண்டிருந்தோன் கிட்டும் பெருமகிழ்வால் கொட்டினான் கையிரண்டும் கொட்டினான் கூவினான், கூவினான் கொட்டினான் கூவுதலுங் கொட்டுதலுங் கூடி இசையென்றும் மேவிவருந் தாளமென்றும் மேதினியில் பூத்தனகாண்; எண்ணுங் கருத்தை எடுத்துரைக்க அம்மாந்தன் கண்ணசைத்தான் கையசைத்தான் காலங் கடந்துவரப் பையஅவன் நாவசைத்தான்; பாலோ தெளிதேனோ செய்யஒரு நற்கரும்பின் தீஞ்சாறோ என்னஒரு சொன்மொழிந்தான் மீண்டுமதைச் சொன்னான், எதனாலோ பன்முறையும் பன்னிப் பழகினான் அச்சொல்லை; சொல்லிப் பழகுமொழி மெல்லத் தமிழாகி இல்லைநிகர் என்ன இயலாய்க் கனிந்ததுகாண்; இவ்வண்ணம் முத்தமிழாய் ஏற்றம் பெறுமொழியை எவ்வண்ணம் ஏத்திப் புகழ்வோம்நாம்? அம்மொழியில் கூத்தும் இசையுங் குறிக்கின்ற நூலெங்கே? ஏத்தும் இயல்நூலில் ஏனையவை தாமெங்கே? பாழுங் கடல்கோளும் பாவிப் பகைக்குலமும் சூழுங் கொடுவினையால் சொல்லரிய ஏடுகள்தாம் காணா தொழிந்தனவே; கண்மூடிக் கொள்கையினால் மாணாச் செயல்செய்தோம் மற்றும் பலஇழந்தோம்; ஆடிப் பெருக்கிலிட்டோம் அந்தோ நெருப்பிலிட்டோம் வேடிக்கை மாந்தர் விளையாட்டை என்னென்போம்! அஞ்சியஞ்சிச் சாகாமல் ஆளடிமை யாகாமல் எஞ்சியவை காப்போம் இனி. கவியரங்கம் - செந்திற் குமார நாடார் கல்லூரி விருதுநகர் 3. தமிழ் காப்போம் எண்ணுடையாள், எழுத்துடையாள், காலங் காணா எழிலுடையாள், இளைமையினாள், கோலங் கண்டு கண்ணுடையார் எனவாழ்ந்தோம்; ஆனால் இன்று கண்ணொன்றை இழந்து விட்டோம்; கீழ்வாய் என்னும் எண்ணறிவார் எவருள்ளார்? தமிழர் கண்ட எண்வடிவம் மறைந்துவரும் நிலைமை கண்டோம் புண்ணுடைய நெஞ்சுடையோம்; மாற்றார் ஆட்சி புகுந்தமையால் விளைந்தவொரு தீமை யன்றோ? எஞ்சியுள எழுத்தேனும் முன்னோர் கண்ட இயல்புடனே நிலைத்திடுதற் குறுதி யில்லை; வஞ்சமனம் படைத்தவர்தாம் வேற்று நாட்டு வரிவடிவைப் புகுத்துதற்கு முயலு கின்றார்; நெஞ்சமிதை நினைந்துவிடின் வெந்து போகும்; நெறிகெட்ட இம்முறைதான் என்று சாகும்? அஞ்சுவது கெஞ்சுவது மடமை யாகும்; ஆர்ப்பரித்துக் கேட்பதுதான் கடமை யாகும் இந்நாட்டிற் குரியனவென் றியம்பு கின்ற ஈரேழு மொழிகளுக்கும் உரிமை வேண்டும் *வெந்காட்ட ஒருமொழியும் அதன்மே லேறி வீற்றிருக்க ஒருமொழியும் வேண்டா!வேண்டா!! என்னாட்டிற் கலைக்கூடம் ஆட்சி மன்றம் எத்துறையும்தமிழ்மொழியி‹ஆட்சிவேண்டும்;இந்நாட்ட«நிறைவெய்jவில்yஎன்றாš இருந்தென்dவாழ்ந்தென்dசாtமேலாம். இவ்வண்ணம் தமிழ்காக்க முனைவோர் தம்மை இழிமொழிகள் சொலலன்றி ஆட்சி செய்வோர் செய்வண்ணம் அறியாராய்ப் புலம்பு கின்றார்; தேர்தலிலே நாற்காலி பற்று தற்கே இவ்வண்ணம் தமிழ்தமிழென் றியம்பு கின்றார் என்றுரைப்பர் நாற்காலிப் புத்தி கொண்டோர்; உய்வண்ணம் அவர்க்குரைக்க வல்லார் யாரோ? உரைத்தாலும் கேட்கின்ற நல்லார் யாரோ? எப்படியோ அரசிருக்கை கிடைத்து விட்டால் எடுபிடிகள் ஆளம்பும் அமைந்துவிட்டால் அப்படியே ஒட்டிக் கொண்டகல மாட்டார், அடுக்கடுக்காய்ப் பழிவரினும் இறங்க மாட்டார், எப்பொழுதோ ஒருநாளில் வெறுத்தாற் போல இப்பதவி வேண்டேனென்றெழுந்துநிற்பர்,அப்பொழுதேமீண்டுமதில்அமர்ந்துகொள்வர், அவர்நம்மைvள்ளிஉரைaடு»ன்றார். காலந்தான் இவர்தம்மைத் திருத்த வேண்டும் கடுகிவரும் அணுகிவரும் தேர்தல் என்னுங் காலந்தான் இவர்க்கறிவு புகட்ட வேண்டும்; கண்திறந்து தமிழரென உணர்வர் அந்நாள்; ஞாலந்தான் இவர்க்குரிமைச் சொத்தா என்ன? நமக்குமதில் உரிமையிலை என்றா எண்ணம்? கோலந்தான் கலையாதோ ? இவர்கள் செய்யும் கொட்டந்தான் அடங்காதோ? அடங்கும் நாளை! ஈன்றெடுத்த தாய்மொழிக்கு வாழ்வு வேண்டி எடுத்துரைக்க முனைந்ததுமோர் குற்றம் ஆமோ? ஆன்றவிந்த கொள்கையினார் தமிழ்மொ ழிக்கே அரசுரிமை வேண்டியதும் குற்றம் ஆமோ? ஏன்புகுந்தார் சிறைக்கூடம் ? ஆசா னாக இருந்தசிலர் பதவியையும் ஏனி ழந்தார்? நான்றுணிந்து கூறிடுவேன் பதவி என்ன நற்றமிழின் உயர்ந்ததுவோ சீசீ தூசி மாநிலத்து மொழிகாணாப் புதுமை கண்டு வகைப்படுத்தி அகம்புறமாப் பொருளைச் சொல்லித் தேனிகர்த்த சுவைப்பாவால் பத்துப் பாட்டும் தித்திக்கும் தொகைஎட்டும் பாடி வைத்த பாநலத்தைப், பொருள்வளத்தை, நுகர்ந்த உள்ளம் பணியாது; பெருமிதத்தால் நிமிர்ந்து நிற்கும்; கானகத்துப் புலிப்போத்தாய் வீரங் காட்டும்; கவிதைக்கு விளைநிலமாய்க் காட்சி நல்கும். கண்ணகிக்கு வரப்போகும் இடர்நி னைந்து கண்ணீரை நிறைத்துடலம் தோன்றா வண்ணம் வண்ணமலர் பலகொண்டு மறைத்துச் சென்றாள் வையையெனும் குலக்கொடிஎன் றிளங்கோ சொல்வர்; அண்ணலெனும் இலக்குவனார்க் குற்ற துன்ப *அவலநிலை கண்டுள்ளம் நொந்து நொந்து மண்மிசையே வரஅஞ்சி மணலுட் புக்கு மறைந்துகொண்டாள் அவளென்று நான்பு கல்வேன்; சிறைசெல்லப் புலவர்சிலர் வேண்டும் இன்று; செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும் முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டு மின்று; குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க் குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும்; நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள் நிற்குமுதற் புலவன்நான் ஆக வேண்டும்; பிறந்தநிலம் ஒன்றுண்டு வணங்கல் வேண்டும் பேசுமொழி ஒன்றுண்டு போற்றல் வேண்டும் சிறந்தபொருள் இவற்றின்மேல் ஒன்றும் இல்லை சிந்தித்தே இவைகாக்க முனைவோம் வாரீர்! கரந்துவரும் பகையுண்டு நினைவிற் கொள்க! காலமெலாம் அடிமைசெய விழைதல் வேண்டா! இறந்தபினும் தலைமுறைகள் நம்மை வாழ்த்த ஏற்றசெயல் ஈதொன்றே காப்போம் வாரீர்! கவியரங்கம் - எழுத்தாளர் மன்றம் மதுரை 4. கனன்றெழுக! இந்தியினால் விளைதீமை யாவை என்றே இயன்மொழிகள் கற்றுணர்ந்த புலவர் சொன்னார்; சிந்தனையாற் கல்வியினால் தந்நே ரில்லாச் சீர்மைமிகு பேரறிஞர் விளக்கந் தந்தார்; முந்திஎழும் உணர்ச்சியினாற் கவிதை வேந்தர் முழுமூச்சில் எதிர்ப்புரைத்தார்; நேர்மை பேணும் புந்தியினார் அரசியலில் வல்லார் யாரும் புகன்றவெலாம் ஆள்வோர்க்குக் கேட்க வில்லை செவியிருந்துங் கேளாராய் ஆகி விட்டார்; செப்புகின்ற நல்லவரைப் புறக்க ணித்தார்; புவிமுழுதும் நமக்குத்தான் உரிமை யென்ற போக்கினிலே போகின்றார்; நாளை யிங்குக் குவிகின்ற உணர்ச்சிக்கு விடைஎன் சொல்வார்? கூண்டோடு பலியாவர்; கொடிய ஆட்சி தவிடுபொடி யாகிவிடும்; தமிழைக் காக்கத் தமிழரெலாந் திரண்டெழுந்தால் பகைதூள் ஆகும் நமக்குரிய தாய்மொழிக்கு வந்து விட்ட நலிவகற்ற ஒருமுகமாய் எழுக! மற்றோர் தமக்குரிய மொழிக்கெல்லாம் வரவு கூறித் தலைவணங்கும் அருளினிமேற் போதும் போதும்! சுமக்கின்ற பழிதவிர்க்கத் தொன்று தொட்டுத் தொடர்ந்துவரும் தன்மானம் நிமிர வேண்டும் நமக்கென்ன என்றிருக்கும் பொறைமை நீக்கி நமக்குத்தான் பொறுப்பெனநாம் எழுதல் வேண்டும். பகைவருமேல் அதை எதிர்த்து வாகை சூடிப் பரம்பரையின் பெருமிதத்தைக் காட்டல் வேண்டும்; நகைமுகத்த தீநட்பு நெருங்கி நின்றால் நம்மையது நெருங்காத விழிப்பு வேண்டும்; அகப்பகையும் புறப்பகையும் நுழையா வண்ணம் ஆய்ந்துணர்ந்தே அவைதவிர்க்கும் ஆற்றல் வேண்டும்; தகுமுறையில் இவ்வண்ணம் நாமி ருப்பின் தமிழ்வாழும் தழைத்தோங்கும் தலைமை தாங்கும். 5. உயிர் கொடுப்போம் இந்திமொழி பொது மொழியா ? தகுதி என்ன இருக்கின்ற தம்மொழிக்கு? FÆšfŸ Tî« bfhªjÈG« ky®¢nrhiy jÄH® ehL; nfh£lhD¡ f§bf‹d ntiy?'' என்று செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர் சீர்தூக்கி நன்குணர்ந்து மறுத்து ரைத்தார்; எந்தவழி இந்திமொழி வந்த போதும் ஏற்பதிலை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார். அரசியலில் மூதறிஞர் மறுத்துச் சொன்னார் ஆய்வுரைகள் அறிவுரைகள் எழுதிப் பார்த்தார்; முரசொலிக்கும் போர்க்களத்தில் நின்று நாளும் முழக்கமிடும் பேரறிஞர் எதிர்த்து நின்றார்; உரமிகுந்த அறப்போர்கள் பல நடாத்தி உயிர்ப்பலிகள் பலகொடுத்தார்; எல்லாம் கண்டும் இருள்மதியர் இந்திவெறி கொண்ட மாந்தர் இன்றுவரை கேளாராய் உலவு கின்றார். விரலைந்தும் தனித்தனியே இயங்கி நிற்கும் வேலேந்தும் பொழுதிலவை இணைந்து நிற்கும்; தரமறந்த உரிமையுடன் மாநிலங்கள் தனித்தனியே இயங்கிவரும்; பகைவ ருங்கால் உறவுணர்ந்து தோள்தந்தே இணைந்து நிற்கும்; ஒற்றுமைஎன் றிதனைத்தான் உரைப்பர் மேலோர்; ஒருமைஎனும் பெயராலே விரல்கள் ஐந்தை ஊசியினால் தைப்பதற்கு முனைவா ருண்டோ? தத்தமது நாகரிகம் மொழிகள் பண்பு தனித்தன்மை எள்ளளவும் கெடுத லின்றி ஒத்துரிமை உணர்வுடனே மாநி லங்கள் உளமொன்றி வாழ்வதுதான் நமது வேட்கை; பித்தரென வெறியரென ஒருமை என்ற பெயர்சொல்லி இந்தியினால் தைத்து விட்டால் எத்தனைநாள் ஒட்டிருக்கும்? குனிந்த மாந்தர் இருதோளும் விரித்தெழுந்தால் தெறித்துப் போகும். உறவுக்குக் கைகொடுப்போம் எனினும் எங்கள் உரிமைக்கும் குரல்கொடுப்போம்; தென்பு லத்தின் மறுதிக்கில் வாழ்வோர்கள் குரலைக் கேட்க மறுத்துவிடின் உயிர்கொடுப்போம்; சிறையில் மாண்ட திறமிக்க நடராசன் தால முத்து தென்னாட்டில் பலருள்ளார்; இன்று வாழ்வோர் உரிமைக்கே உயிர்கொடுப்போம் என்பர் நாளை உணர்வுடையார் என்சொல்வார்? யாரே கண்டார். 6. சாவுக்கும் அஞ்சோம் மணம்பரப்பும் பூங்காவுள் கள்ளிக் கூட்டம் வளரவிடப் பார்த்ததுண்டோ? வாழைத் தோப்பில் கணங்கணமாய் மந்திபடை எடுத்து வந்தால் களிப்போடு வரவுரைக்கக் கண்ட துண்டோ? உணவளிக்கும் நெல்வயலுள் உதவாக் காளான் உறுகளைகள் படருவதை விடுவ துண்டோ? இணையில்லாத் தமிழ்வழங்கும் தமிழர் நாட்டில் இந்திமொழி புகவிடுதல் கண்டோம் கண்டோம்! அரியேறு பலகுழுமி வாழுங் காட்டில் அஞ்சிவரும் நரியாட்சி செலுத்தல் உண்டோ? விரிகுரலின் கோட்டானை அழைத்து வந்து விரும்புமிசைக் குயிலினத்தை ஆள்க என்று சுரிகைமுடி சூட்டுவதைக் கண்ட துண்டோ? தொன்னூல்கள் பலதொகுத்த பெட்ட கத்துள் சிறியதொரு கறையான்தான் ஆள்வ துண்டோ? செந்தமிழின் பேழைக்குள் இந்தி கண்டோம்! தூங்குகிற தமிழ்ப்புலியை இடறி வீழ்ந்த துணைவிழிகள் இல்லாதான் நிலைமை போல ஏங்குகிற வடவர்தமக் கொன்று சொல்வேன் என்னினத்தார் மொழிவெறியில் சளைத்தா ரல்லர்; வீங்குகிற தோளுக்கு விருந்து வைக்க விழைவீரேல் மொழிப்போரைத் தொடர்க; போரைத் தாங்குகிற வலிமையுண்டு வீரம் உண்டு சாவதற்கும் அஞ்சாத துணிவும் உண்டு அறப்போரைத் தொடங்குதற்குக் காஞ்சிச் செம்மல் அண்ணாதம் முரசொலியை முழக்கி விட்டார் வரப்போகும் மொழிப்போரில் அணிவ குக்கும் வயப்புலிகள் கூட்டமொரு கடலை விஞ்சும் இறப்போர்கள் சிந்துகின்ற குருதி வெள்ளம் எழுந்தெழுந்து தலைகளுடன் அலைகள் வீசும் சிறப்போடு வருமிந்தி அதனுள் சிக்கிச் சீரிழந்து நாணிழந்து சிதறி ஓடும். 7. வாகை கொள்வோம் மூன்றாம்நாள் முளைத்துவரும் இந்திப் பெண்ணே! முனைகின்றார் உன்புகழைப் பரப்பிக் காக்க! ஈன்றாளைக் காப்பதுமோர் கடமை யாகும்; எங்களையும் ஈன்றெடுத்தாள் ஒருத்தி யுண்டே! ஆன்றோரும் சொலற்கரிய காலங் கண்ட அன்னையையும் காப்பதெங்கள் கடமை யன்றோ? சான்றோர்கள் பழிக்கும்வினை செய்தல் வேண்டா தடுமாறும் நின்புதல்வர்க் கிதனைக் கூறு! புன்மக்கள் பெற்றெடுத்தாய் பழிசு மந்தாய்! பொதுமகளா நினையாக்கத் துடித்தல் காணாய்! நன்மைக்கே சொல்கின்றேன் கற்பைக் காக்க நாடுவதே முறையாகும்; தீமை வந்த பின்னுக்கு வருந்துவதிற் பயனே இல்லை; பேசாதார் தலைவாயில் நுழைதல் நன்றோ? நன்மக்கள் மனம்வருந்தப் புகுதல் வேண்டா நாடுகிற கடைவாயில் நாடிச் செல்க! முன்னமிரு முறைநீயே வந்த போது முழுமூச்சோ டுனைத்தமிழர் எதிர்த்து நின்றார்; என்னினத்தார் இருதோழர் உயிர்கள் தந்தார். ஏந்திழையார் துயருழந்தார் குருதி சிந்திப் பன்னரிய கொடுஞ்சிறையுள் வீரர் புக்கார், பைந்தமிழைத் தாய்மொழியைக் காத்து நின்றார்; இன்னுமிங்கு வன்முறையால் நுழைவா யென்றால் எதற்கெடுத்தோம் இவ்வுடலம்? ஒருகை பார்ப்போம். வீடென்ன மனையென்ன மக்க ளென்ன வீணுக்கு வாழ்வென்ன பதவி என்ன நாடென்ன மொழியன்னை நலியும் போது? நாமென்ன மரமென்று நினைந்தார் போலும்? *ஓடென்ன மெலிந்தென்ன? நரம்பி லெல்லாம் ஓடுவது புண்ணீரா? செந்நீர் வெள்ளம்; ஈடென்ன கண்டதுண்டு தமிழ்மொ ழிக்கே? ஈந்திடுவோம் நம்முயிரை; வாகை கொள்வோம். 8. இனி விடோம் உலகத்து முதன்மொழியாம் தமிழைத் தங்கள் உயிர்மூச்சாக் கொண்டிலங்கும் தமிழர் நாட்டிற் கலகத்தை உருவாக்கும் வெறியர் கூடிக் கடுகளவுந் தகுதியிலா இந்தி தன்னைப் பலகட்டுக் கதைகூறிப் புகுத லிட்டார் படையெடுத்தார், தடியெடுத்தார், பயனே யில்லை நிலை கெட்டோர் மூன்றுமுறை முயன்று பார்த்தும் நினைப்பொன்றும் பலிக்கவில்லை தோல்வி கண்டார்! முதன்முறையா இந்திமொழி தமிழர் நாட்டுள் முகங்காட்ட வன்முறையால் நுழைந்த போது கதவடைத்துத் தடுத்துரைத்தோம்; ஆள வந்த கடுங்கோலர் சிறைக்கதவைத் திறந்து வைத்தார்; அதன்கொடுமைக் கஞ்சவிலை புகுந்து நின்றோம்; அங்கேதான் ஈருயிரைப் பலியாத் தந்தோம்; இதன்பிறகே அந்தமொழி அஞ்சி ஓடி இடுப்பொடிந்து வடபுலத்தே கிடக்கக் கண்டோம். புறங்காட்டிச் சென்றமொழி மீண்டு மிங்குப் புகுவதற்குத் துணிவோடு வருதல் கண்டோம்; திறங்காட்டும் மறவர்குழாம் சாக வில்லை சிங்கமென இருக்கின்றோம் என்றெ ழுந்தோம்; அறங்காக்கும் மனமில்லா ஆட்சி யாளர் அடித்தடித்துத் துரத்திடினும் துணிந்து நின்றோம்; நிறங்காட்டுஞ் செங்குருதி சிந்தக் கண்டு நிலைகுலைந்து மறைந்தோடிச் சென்ற திந்தி. மதியாதார் தலைவாசல் மிதிப்ப தற்கு மதிகெட்டு வந்தமொழி மானங் கெட்டுக் கதியேதுங் காணாமல் ஓடித் தோல்வி கண்டபினும் தன்னகத்தே வாழும் எண்ணம் உதியாமல், பிறன்வீட்டிற் புகநினைந்தே உணர்விழந்து மறுமுறையும் அறுபத் தைந்தில் விதியோடு விளையாட உறவும் ஆட வீறுநடை யோடிங்கு நுழையக் கண்டோம். இனிவிடுத்தால் தமிழ்மொழிக்கும் நமக்குந் தீங்காம் எனக்கருதித் தமிழகமே கொதித்தெ ழுந்து முனைமுகத்துத் தலைநிமிர்ந்து நிற்கக் கண்டோம்; மூண்டுவரும் மொழிப்போரில் வாழ்வா சாவா எனநினைத்துத் தமதுயிரைச் சிறிதென் றெண்ணி இனியதமிழ் காப்பதென உறுதி பூண்டு தினவெடுத்த போர்மறவர் திரண்டு நின்று திரும்பிச்செல் திரும்பிச்செல் இந்திப் பெண்ணே என்றுரைத்துக் கனன்றெழுந்து வீரம் மிக்க எம்மினத்தார் அணிவகுத்தார்; இந்தி ஆட்சி கொன்றழித்த பிணக்குவியல் கொஞ்சம் அல்ல; கொடுங்கோன்மை கட்டவிழ்த்துக் கொண்டு சீறி நின்றிழைத்த கொடுமைகளும் கொஞ்ச மல்ல; நெடுந்தவத்தாற் பெற்றெடுத்த பிள்ளை மார்பில் சென்றடித்த குண்டுகளும் கொஞ்ச மல்ல; சிறையகத்துப் பட்டோரும் கொஞ்ச மல்லர்; ஐயிரண்டு திங்களுடல் சுமந்து பெற்ற அரும்புகளை இழந்தமையால் நொந்த தாயர் கையிரண்டும் பிசைந்தழுத கண்ணீர் வெள்ளம் கண்டவர்தம் கல்மனமுங் கரைந்து போகும்; மையிருண்ட மேகமெனச் செந்நீர் சிந்த மாணவர்தம் மார்பகத்தே குண்டு பாய்ந்து மெய்யிருந்த உயிர்குடித்துச் சென்ற தந்தோ! மேலவர்தம் ஆட்சியில் இம் மாட்சி கண்டோம்! பன்முறையால் இந்தியினைப் புகுத்த எண்ணிப் படுதோல்வி கண்டபினும், மக்கள் மன்றில் புன்முறையால் இழிமொழிகள் பேசக் கேட்டுப் பொன்றுயிராய்க் குற்றுயிராய்க் கிடந்த போதும் வன்முறைதான் பேசுகின்றார்; பட்டா ளத்தை வரவழைப்போம் இந்தியினைத் திணிப்போம் என்ற பொன்மொழியே உதிர்க்கின்றார்; மக்களாட்சிப் பூமாலை இவர்கையிற் படும்பா டென்னே! எப்படியும் இந்தியினைத் திணிப்ப தென்றே எண்ணிமுடி வெடுத்துள்ளார் வடக்கில் வாழ்வோர் ஒப்புடைய செயல்செய்ய எண்ண வில்லை; உயர்ந்தவர்சொல் அவர்செவியில் ஏற வில்லை; அப்படியே விடுமெண்ணம் எமக்கும் இல்லை அவரவர்க்குந் தாய்மொழியுண் டென்று ணர்த்தி இப்படியில் தமிழ்மொழியின் உரிமை காக்க எழுந்துவிட்டோம் இரண்டிலொன்று பார்த்தே நிற்போம். தொன்றுதொட்ட தமிழ்மொழியின் எழுத்துக் கெல்லாம் தூயவரி வடிவுண்டு தெளிவும் உண்டு கொன்றுவிட்டுத் தமிழெழுத்தை அவர்தம் தேவ நாகரியாம் குறுக்கெழுத்தைக் கொணர்வ தற்கே நின்றுவிட்டார் வடபுலத்தார்; ஒருமைப் பாட்டை நிலைநிறுத்தும் நோக்கமென உளறுகின்றார் நன்றுகெட்ட அவர்நினைவை மாய்ப்ப தற்கு நாமிங்கு மனத்துணிவு பூண்டு விட்டோம். 18.11.1967 9. மாவீரர் பலருண்டு நிலைகெடுக்க வருமிந்தி மொழியெ திர்க்க நேர்வருவோர் போர்தொடுப்போர் தம்மை எல்லாம் தலைஎடுப்பேன் கையறுப்பேன், என்று வீரம் சாற்றுகின்ற நாப்பறையா! ஆள்வோர் உன்னை விலைகொடுத்து வாங்கியதால் உன்றன் தாயை விற்றுவிடத் துணிந்தனையோ? வீசும் எச்சில் இலைபொறுக்கும் நாய்க்குணத்தை விட்டொ ழிப்பாய் ஈங்குன்னை ஈன்றவள்யார்? தமிழ்த்தாய் அன்றோ? மாற்றாரின் அடிக்கடிமை யாகி நின்று மதிகெட்டுத் தறிகெட்டு மானம் விட்டுத் தூற்றாதே, கூலிக்கு வருமு னக்குத் துணிவிருப்பின் தமிழ்காக்கும் எமக்கு மட்டும் தோற்றாதோ அத்துணிவு? துணிந்து நிற்போம் தொழுதடிமை செய்யகிலோம் சாவும் ஏற்போம் கூற்றாக வருமொழியைத் துரத்தி நிற்போம் கொடுமைக்கும் மிடிமைக்கும் அஞ்சோம் வெல்வோம். சாவதற்கும் துணிந்தெழுந்த மறவர் கூட்டம் தமிழ்காக்க முன்னணியில் நிற்றல் காணீர்! போவதற்குள் நுங்கொடுமை மாய்த்து விட்டுப் புகழ்காப்போம் தமிழ்காப்போம் மானங்காப்போம்; மேலவர்க்குத் தாள்பிடிப்பீர்! எம்மைக் கொன்று மேலெழும்பும் குருதிக்குள் கொடுங்கோல் தோய்த்து யாவருக்கும் செங்கோலாக் காட்டி நிற்க ஆய்ந்தவழி செய்தீரோ? ஆளும் பார்ப்போம்; பிறப்போர்தாம் இறப்பதுவே இயற்கை என்ற பேருண்மை உணர்ந்தொருவன் எரியை யூட்டி வரப்போகும் இந்திக்கோர் செவ்வி ளக்காய் மறக்கோலங் கொண்டுடலம் வெந்து நின்றான் அறப்போரில் நிற்பவர்க்கோர் *சின்னம் ஆனான் ஆண்மையுளோர் வணங்குகிற *சாமி ஆனான்; மறக்காதீர் மறைக்காதீர்! இவனைப் போன்றோர் மாவீரர் பலருண்டு தமிழைக் காக்க! தாய்மொழியைக் காக்கஎனில் உயிர்கள் நல்கும் தாலமுத்து நடராசன் இன்னும் உண்டு; காய்மொழியீர்! உயிரீய வல்லார் எல்லாம் கனன்றெழுந்து நுமைநோக்கி விட்டால் நீங்கள் போய்மடிய எந்நேரம் ஆகும்? உங்கள் புல்லடிமை ஆட்சியெலாம் நின்றா வாழும்? பேய்மனத்தீர் பழிசுமக்க வேண்டா! நம்மைப் பெற்றவட்குப் பிழைசெய்தா வாழ்தல் வேண்டும் ? 10. தமிழோடிணைந்தாய்! விறலிமலை தருமகனே, வீரமிகு சண்முகனே, `வெருட்டி வந்த பிறமொழியை ஆளவிடேன் பெற்றெடுத்த தாய்மொழியைப் பேணி நிற்பேன் திறலுடைய தமிழகத்தில் தீமனத்தர் இந்தியினைத் திணிக்க வந்தால் மறலியுல கடைவதையும் மகிழ்வுடனே வரவேற்பேன் மானங் கொள்வேன் ' எனவெகுண்டு சூளுரைத்தாய், இனமானப் போர்தொடுத்தாய், எடுத்த நஞ்சை `எனதுயிரின் மேலான இனியதமிழ் காத்திடநான் இதனை யுண்பேன்' எனவெழுதி அவ்வாறே இனிதுண்டாய், எமைப்பிரிந்தாய் இறந்துவிட்டாய் எனமொழிய மாட்டேன் நான் எனதுதமிழ் மொழியுடன்நீ இணைந்தாய் என்பேன். இனமானங் காத்திடுவோம் எரிநஞ்சும் எடுத்துண்போம் என்று கூறிப் புனலாடி எழுவதுபோல் அனலோடு விளையாடிப் புகுந்த இந்திக் கனலோடு சமராடிக் களங்கண்டு புகழ்கொண்ட காளை நீவிர் நனவோடு நனவாக எமதுயிர்ப்பு மூச்சாக நாளும் வாழ்வீர்! 11. தமிழே வெல்லும் காலத்தைக் கடந்தமொழி கற்போர் நெஞ்சைக் கவருமொழி தரைகடந்து கடல்க டந்து ஞாலத்தை வென்றமொழி என்றுங் குன்றா நாவன்மை படைத்தமொழி இலக்க ணத்தின் கோலத்தை முழுமைபெற வடித்துக் காட்டும் குறைவில்லா அறிவுமொழி இலக்கி யத்தின் மூலத்தைக் கண்டமொழி சுவைகள் விஞ்சும் மும்மைமொழி அன்புமொழி தமிழே யாகும். பெருமைஎலாம் பூண்டுலகை ஆண்டு வந்த பேராற்றல் பெற்றமொழி வளமே யில்லா *வறுமொழியால் சிறுமொழியால் அடிமையுற்று வாழ்விழந்து போய்விடுமோ? படையெ டுத்த பெருமொழிகள் பலபொருதும் வாகை சூடிப் பீடுபெறு வீரமொழி கைகால் இல்லா ஒருமொழிக்குத் தோற்றிடுமோ? தன்னை நோக்கி ஊறுசெய எதுவரினும் வெல்லும் வெல்லும். 12. செல்லடி செல்லடி இந்திப் பெண்ணே நில்லடி நில்லடி இந்திப்பெண்ணெ - உன் நெஞ்சினில் என்ன துணிச்சலடி! சொல்லடி சொல்லடி இந்திப்பெண்ணே - உன் சூடு சுரணைகள் அற்றனவோ! மூன்று முறையிங்கு வந்தனையே - நீ மூக்கறு பட்டுமே சென்றனையே! ஏன்தமிழ் நாட்டினை நாடுகிறாய்? - பின் ஏனடி பட்டதும் ஓடுகிறாய்? சான்றவர் சொல்லையும் மீறுகிறாய் - படி தாண்டிப் பிறர்மனை ஏறுகிறாய் ஈன்றவர் கண்ணெதிர் நாறுகிறாய் - உனை ஏற்பவர் யாரெனத் தேடுகிறாய் ஏற்பவர் தோள்களைத் தொற்றிடடி - மனம் ஈபவர் கால்களைச் சுற்றிடடி மேற்படி வேலையைக் கற்றிடடி - எம் மீதினில் ஆசையை விட்டிடடி மாட்சிமை ஏதொன்றுங் கற்றிலைநீ - நல் மானமும் தோற்றமும் உற்றிலைநீ ஆட்சியில் நற்றிறம் கற்றிலை நீ - ஓர் ஆணவம் மட்டுமே பெற்றனைநீ நாட்டினில் ஒற்றுமை நாடுகிறோம் - அதை நாளும் நினைந்திங்குப் பாடுகிறோம் நாட்டைப் பிளந்திட நாடுகிறாய் - அது நன்மை எனத்திட்டம் போடுகிறாய்! போவென வாயிலை மூடுகிறோம் - வரப் பொந்துள தோவென நாடுகிறாய் சாவென்ற போதிலும் நாடவிடோம் - எம் சந்ததி யின்மனம் வாடவிடோம் நில்லடி நில்லடி இந்திப்பெண்ணே - உன் நெஞ்சினில் என்ன துணிச்சலடி! செல்லடி செல்லடி இந்திப்பெண்ணே - இதைச் சிந்தையில் வைத்திரு சென்றபின்னே. 20.2.1979 13. ஒன்றே நினைப்பீர்! பேசுங் கலையாவும் பேணிவந்த முன்னவன், தான் பேசும் மொழிக்குப் பெருமை தரும்வகையில் எண்ணும் எழுத்தும் இயற்றி நமக்களித்தான் கண்ணென் றவைதம்மைக் காத்து வளர்த்தோமா? கீழ்வா யிலக்கம் கிழடாகிப் போனதென்று தாழ்வாக நாமதனைத் தள்ளிக் கிடத்திவிட்டோம்; மிஞ்சும் எழுத்தேனும் விஞ்சுமா என்றாலோ அஞ்சும் நிலைக்குத்தான் ஆளாகி நிற்கின்றோம்; நாடாளும் நல்லோர் நடந்துவரும் போக்குத்தான் கேடாகும் என்று கிறுகிறுத்து வாடுகின்றோம்; நாட்டில் ஒருமைதனை நாட்ட நினைவோர்தாம் கேட்டில்விளை யாடக் கிளர்ந்தெழுந்தால் என்செய்வோம்! `உங்கள் எழுத்தை ஒதுக்கிவிட்டு மேற்கோட்டில் தொங்கும் எழுத்தைத் துணைக்கொள்; ஒற்றுமையைக் கண்டு விடலாம்' எனத்தான் கதறுகின்றார்; துண்டு படத்தான் துணைசெய்யும் இக்கதறல்; ஆள்வோர் கருத்தும் அதுவாயின் ஆகட்டும்! வீழ்வோர்தாம் வீழட்டும்! வாழ்வோர்தாம் வாழட்டும்! தாய்மொழியின் ஆக்கந் தடையுறுதல் நாம்காணின் காய்மொழிகள் வேண்டா கனிமொழிகள் சொல்லிடுவோம் கேட்டால் நிலைவாழும் கேளாரேல்...? நான்சொன்னால் பாட்டின் தரங்குறையும் பார்த்து முடிவுசெய்க! கட்சி சமையம் கடந்துதமிழ்த் தொண்டுசெய நச்சி எழுதல் நமதுகடன் என்றுணர்ந்து காக்க முனைந்தெழுக! காவா தொழிவீரேல் போக்க முடியாத புல்லடிமை நேரும் எழுத்தை இழக்க இசைவீரேல் உங்கள் கழுத்தைக் கொடுத்துக் கலங்கும் நிலைபெறுவீர்! ஆண்டாண்டு காலம் அழியாத் தமிழ்மொழிக்கு வேண்டாதார் இந்த வினையெல்லாம் செய்கின்றார்; வீரத் தமிழினத்தின் வேரறுக்க மாற்றலர்தாம் ஈரத் துணியிட்டு நும்கழுத்தை ஈர்கின்றார்; காட்டிக் கொடுக்கும் கயமைக் குணமிங்கு நீட்டித் தலைகாட்டி நேய மொழியுரைக்கும்' வீழ்ந்து சிதையாதீர்! வீணாகிப் போகாதீர்! தாழ்ந்து பணியாதீர்! தன்மானங் கொண்டெழுவீர்! எவ்வழியால் உட்புகுவோம் என்றே இருக்கின்றார் செவ்வியர்போல் பேசுகின்றார் செந்தமிழீர் நீரயர்ந்தால் அன்றே நுழைவர்; அயரேல்! தமிழ்வாழ ஒன்றே நினைப்பீர் உளத்து. 14. பிரிந்து போ தேசிய மொழிக ளென்று செப்பினை பத்தும் நான்கும் பேசிய துண்மை யென்றால் பேணுவை சமமாக் கொண்டே; வீசிய சொன்ம றந்து விரைந்துநீ இந்தி யென்னும் ஊசியை நுழைக்க வந்தால் அதன்நுனி ஒடிந்து போகும். உன்மொழி மட்டு மென்ன உலகிலே உயர்ந்த ஒன்றா? என்மொழி மட்டுமென்ன இழிந்ததா? எண்ணம் என்ன? பொன்னெலாங் கோடி கோடி பொழிகிறாய் வளர்க்க வேண்டி! என்வரிப் பங்கும் உண்டால் எதிர்க்கவும் உரிமை யுண்டு. உனக்கென்ன உரிமை யுண்டோ எனக்குமவ் வுரிமை யுண்டாம் எனக்குள வுரிமை கொல்ல எண்ணினை யாகின் அன்றே எனக்குனக் குரிய பங்கைப் பிரித்திட எழுவேன் கண்டாய் மனத்தினிற் பட்ட ஒன்றை வாய்திறந் தெடுத்துச் சொன்னேன். உலகிலே நீயும் நானும் உறவுடன் பிறந்தா வந்தோம் தலைதடு மாறி என்னைத் தாள்பணி யென்று சொன்னால் நிலைதடு மாறிப் போகும் நெஞ்சிலே பதித்துக் கொள்வாய் *சிலையென என்னை யெண்ணின் சீரழிந் தொழிந்து போவாய். வெள்ளையன் விடுத்துச் சென்றான் *விரகினில் எடுத்துக் கொண்டாய் கொள்ளையும் அடித்து விட்டாய் கொடுஞ்செயல் பலவுஞ் செய்தாய் வெள்ளைநெஞ் சுடைய யானும் விடுதலைப் பயனுங் காணேன் *தள்ளையைக் கொல்ல வந்தால் தலைமகன் பார்த்தா நிற்பான்? இந்தியைப் புகுத்தி என்றன் இளந்தமிழ் நோகச் செய்ய வந்திடின் நின்னை நானும் வாழ்த்தவா செய்வேன்? நெஞ்சம் நொந்துழன் றழுவேன் பின்னர் நொடியினில் துடித்தெ ழுந்து வெந்தழல் விழியிற் காட்டி விரட்டுவேன் வெருண்டு போவாய் என்னுடன் உன்னைக் கூட்டி இணைத்தனன் எவனோ வந்து பின்னுமென் னுடைமை யெல்லாம் பிடுங்கினை! என்றன் தாய்க்கும் இன்னலே செயநி னைந்தால் இனியுமுன் தொடர்பெ தற்கு? சொன்னதும் பிரிந்து போபோ சுடுமொழி தோன்று முன்னே என்சொலைக் கேட்டு நெஞ்சுட் சீறினை! என்ன செய்வாய்? வஞ்சனை பலவும் செய்வாய் வழக்குகள் தொடுத்து நிற்பாய் வெஞ்சிறைக் கூட மென்று வெருட்டுவாய் அடபோ பேதாய் அஞ்சினேன் என்றால் என்றன் அன்னையைக் காப்ப தெங்கே? 10.3.1987 15. சட்டம் செய்க இந்தியத்தில் ஒருமொழிக்கே ஏற்றமெனில் இரண்டுபடும் இந்த நாடு விந்தியத்தின் வடபுலமே விடுதலையின் பயன்பெறுமேல் விரைந்து தெற்கு முந்தியெழுந் தார்ப்பரிக்க முயலாதோ உரிமைபெற? அடிமை யென்றால் வந்தெதிர்த்து விடுதலைக்கு வழிவகுக்கும் நாளைவரும் *வயவர் கூட்டம் கடலுக்குள் கலம்விட்ட காரணத்தாற் செக்கிழுத்த காளை யைப்போல் மிடல்மிக்கோர் ஆயிரத்தின் மேலானோர் மொழிகாக்க மிகுதல் வேண்டும் அடல்மிக்க வாஞ்சியைப்போல் ஆயிரவர் எழல்வேண்டும்; அற்றை ஞான்றே இடம்விட்டு விலகாதோ? இந்திபுக வெருவாதோ? இடிந்தே போகும். விடுதலைக்குப் போர்தொடுத்தோம் வெள்ளையரோ புறங்கொடுத்தார் விடிவு பெற்றோம் அடிமையினி எமக்கில்லை அரியணையில் யாமென்றோம் ஆனால் எம்மை அடிமைகொள நினைக்கின்றீர் அம்மொழியைத் திணிக்கின்றீர். அடுத்தி ருந்தே குடிகெடுக்க முயல்கின்றீர், குடிலர்சிலர் துணைநிற்கக் கொடுங்கோல் கொண்டீர் பிறப்புரிமை எமக்குண்டு, பேசுமொழி காத்திடுவோம், பிறந்த நாடும் சிறப்புறவே செய்திடுவோம், திருநாடு யார்சொத்து? தெளிந்து சொல்க மறுப்புரைக்க வாயுண்டோ? மனமறிந்த பொய்யுண்டோ? வஞ்ச நெஞ்சைத் திறக்கின்றீர் இந்தியினைத் திணிக்கின்றீர் ஒற்றுமையைத் தீக்குள் விட்டீர். எம்மொழியும் சமமாக இனியதொரு வழிசெய்க இணைந்து வாழ்வோம் நும்மொழிதான் கோலோச்ச நுழைப்பீரேல் தனிநாடு நொடியில் தோன்றும்; நன்மையெனிற் கைகொடுப்போம் நலிவுதரிற் போர்தொடுப்போம் நயச்சொல் பேசும் எம்மொழியும் இனிவேண்டா எழுதுங்கள் சட்டத்தில், இதுதான் நேர்மை. 7.3.1987 16. பொய்த்த வாய்மொழிபோதும் *ஏழு மாநிலம் ஆளவோ? - பதி னேழு மாநிலம் தாழவோ? பாழும் அந்நிலை காணவோ? - யாம் பாரி லேபழி பூணவோ? உங்கள் தாய்மொழி இந்தியாம்-நீர் ஓம்பிப் போற்றுதல் நன்றியாம் எங்கள் தாய்மொழி செந்தமிழ் - அதை ஏத்திக் காத்திடல் எம்கடன். கட்டில் ஏறிட இந்தியோ? -எமைக் காக்குந் தாய்மொழி பிந்தியோ? சுட்டு வீழ்த்தினும் விட்டிடோம்-உயிர் சோரு மாகினும் கட்டுணோம் வஞ்ச வாய்மொழி நம்பினோம்-பயன் வாய்த்த லின்றியே வெம்பினோம் நெஞ்சில் உண்மையைக் காட்டுவீர் - அதை நேரில் சட்டமென் றாக்குவீர் பெற்ற விடுதலை பொய்க்கவோ? அப் பேறு நீங்களே துய்க்கவோ? மற்ற வர்க்கது கைக்குமோ? - இம் மாநிலம் யாவும்நும் கைக்குளோ? அவ்வம் மாநிலத் தாய்மொழி - சமம் ஆக நினைப்பது நேர்வழி தெவ்வர் போலெதிர் நிற்பிரேல்-இத் தேயம் துண்டுற முற்படும் கெஞ்சல் தானினித் தேவையோ? - எம் கேளிர் நும்விரற் பாவையோ? அஞ்ச லின்றியே ஆர்த்தனம்- இனி அங்கங் கேஎழும் போர்க்களம். 9.3.1987 17. விடை கொடு தாயே விடைகொடு விடைகொடு தாயே - சமரில் வென்றிடுந் திறமருள் வாயே உடைமைகள் உயிருடல் நீயே - எங்கள் உணர்வினில் உறுந்தமிழ்த் தாயே. படையுடன் இவண்வரும் இந்தி- பல பாடை கொணர்ந்திடும் இந்தி தடையுடன் புகவரும் இந்தி - பெருந் தடிபல கொணர்ந்திடும் இந்தி படைவரும் தடைவரும் அறிவோம் - அது பாதியில் உடைபடும் தெரிவோம் கொடுமைகள் கண்டுளந் திரியோம் - எமைக் கொன்றிடி னுஞ்சமர் புரிவோம். அடிபட அடிபட எழுவோம் - எங்கள் ஆவி பிரிந்திடின் விழுவோம் சுடுபடக் கொள்கையில் நழுவோம்- நெஞ்சில் துணிவொடு தமிழ்மொழி தொழுவோம். 18. முழங்கட்டும் போர்ப்பறை எடுப்பு ஆர்த்து முழங்கட்டும் *பொருநர்பறை - புகழ் சேர்த்து விளங்கட்டும் தமிழர்படை - ஆர்த்து தொடுப்பு பார்த்துப் பகைவர்கள் வேர்த்துப் புறமிடப் பாட்டுப் புறம்பெறக் காட்டும் திறல்வர - ஆர்த்து முடிப்பு காட்டுப் புலியெனக் காட்டும் மறவர்கள் காப்பர் தமிழினைச் சேர்ப்பர் புகழ்மொழி நாட்டில் அரியணை ஏற்றி வணங்கிட நாட்டம் மிகுந்ததைக் காட்டும் வகையினில் - ஆர்த்து வேற்றுப் புலமென வேட்டை யிடவட நாட்டுப் புலத்தவர் வேட்டுப் புறப்படின் தோற்றுப் பிறக்கிடத் தூக்கி எறிந்திடும் தோளுண் டெமக்கெனத் தோம்தோம் எனுமொலி - ஆர்த்து 9.3.1987 19. வாளேந்தி வாமகனே எடுப்பு கொம்பூது கொம்பூது மறவா - வந்த கூடலர் ஓடிடச் சாடுவோம் என்றுநீ - கொம்பூது தொடுப்பு தெம்பெங்கே படர்மார்பில் திறலெங்கே தடந்தோளில் திறம்பாடி மறம்பாடி நெஞ்சுக்குள் உரமேறக் - கொம்பூது முடிப்பு தமிழாலே ஒன்றானார் தமிழ்மாந்தர் என்றாலே தலைதூக்க முடியாது தமிழ்நாட்டில் பகையாளர் சுமையாக வாழாமல் சோற்றுக்கே சாகாமல் சூடேற்றித் தோளேற்றித் தமிழா நீ வாவென்று - கொம்பூது வந்தமொழி நாடாள வாய்த்த தமிழ் பீடேக வாழ்வதிலே யாதுபலன்? வாளேந்தி வாமகனே எந்தமதம் எக்கட்சி என்றெதுவும் பாராமல் எமதுதமிழ் எமதுதமிழ் என்றோடி வாவென்று - கொம்பூது 25.2.1987 20. போர் தொடுப்பாய் எடுப்பு தமிழா நீயொரு போர்தொடுப்பாய் - யாரும் தமிழை இகழ்ந்தால் இடர்செய முனைந்தால் - தமிழா தொடுப்பு அமிழ்தாம் எனுமொழி அதற்கொரு துயரா? போர் ஆடவா பகை சாடவா மலர் சூடவா - தமிழா முடிப்பு தடையாபொரு படையாஅஃ துடையும்என மொழிவாய் தவிடாய்ச்சிறு பொடியாய்அது படநீஉடன் எழுவாய் விடைபோல்நடை யுடையாய்எரி விழியால்கனல் சொரிவாய் விடுவேல்எறி நெடுவாள்தொடு சுழல்வாய்சமர் புரிவாய் - தமிழா கலையாமனம் பெறுவாய்பகை மலையாஎன *மலைவாய் கடலாஅது படையாஎனில் படகாயதில் திரிவாய் உலையாதெழு பொருவாய்சமர் உமியாய்விடும் பகையே உயிராஇது மொழியாஇரு விழியாஎன நினைவாய் - தமிழா 21. போருக்கு வா! யாருக்கு நீயஞ்சிச் சாகிறாய்? - மொழிப் போருக்கு வா! எங்குப் போகிறாய்? பாருக்குள் நீஇன்று மூத்தவன் - தமிழ் வேருக்கு நீபுனல் வார்த்தவன். வீட்டுக்குத் தூணென நின்றனை- களி யாட்டுக்கு வாழ்வினைத் தந்தனை நாட்டுக்கு யாரிங்குக் காவலோ? - வட நாட்டுக்கு நீயென்ன ஏவலோ? *ஓட்டுக்கு வந்தவன் ஆளவோ? - பட கோட்டிக்கு நாடின்னும் தாழவோ? ஆற்றுக்குள் காத்தனன் என்பதால்- தமிழ் நாட்டுக்குங் காவலன் என்பதோ? nfh£il¡FŸ nsxU F«gnyh?-xU கோட்டுக்குள் ளேவிழும் வெம்பலோ? தேட்டைக்குள் வாழ்வரை நம்பவோ? -இனும் *கேட்டுக்குள் வீழ்ந்துளம் வெம்பவோ? நேற்றைக்கு நீயிங்கே ஆண்டவன் - அரி யேற்றையும் விஞ்சுரம் பூண்டவன் கூற்றுக்கு நேர்நிற்க அஞ்சிடாய்-தமிழ் நாற்றுக்கு நீர்விடக் கெஞ்சினாய் நாளைக்கு நின்னினம் போற்றுமோ? -சிறு கோழைக்குங் கீழெனத் தூற்றுமே? fhis¡F¢ nrh‰¿Åš V¡fnkh?- மொழி வாழையைக் காப்பதில் தூக்கமோ? தோளுக்குள் ளே உரம் ஏற்றுவாய் - மனச் சூளைக்குள் ளேஎரி மூட்டுவாய் வாளுக்குள் ளேசுடர் ஏற்றுவாய்-ஒரு நாளைக்குள் ளேபகை ஓட்டுவாய் 9.3.1987 22. வாகை சூடு பண்பட்ட மொழியொன்று கண்டாய்- அது பழுதாகி எழில்போதல் பாராது நின்றாய் கண்பெற்றுங் குருடாக நின்றால் -பாரில் கைகொட்டிச் சிரியாரோ காளையுனைக் கண்டால்? மொழிகாக்க ஒருநோக்கு வேண்டும்-தமிழ் முன்னேறும் முன்னேறும் முழுதாக யாண்டும் பழியாக்கும் பலநோக்கங் கொண்டால் - கட்சி பார்த்தாலுன் தமிழன்னை பாராளல் உண்டோ? ஒருகோட்டில் நீயிங்கு நின்றால்-போரில் உனைவெல்ல நினைவாரும் உலகெங்கும் இன்றாம் வருவார்க்கு நீயொன்று சொல்வாய்- கையில் வாளுண்டு தோளுண்டு வழிகாண என்பாய் வெறிநோக்கம் குறுநோக்கம் என்பார் - அந்த வீணான சொல்லாலே வீழாதே அன்பா பெருநோக்கம் தமிழ்காத்தல் ஒன்றே- என்று பீடாக நின்றோது பேடில்லை என்றே மொழிகாக்க முனையாத நாடு -பாரில் மூலைமுடுக் கெங்குமுண் டாவென்று தேடு வழிகாட்டி நிற்றல்கண் கூடு - போரில் வாளுக்குந் தோளுக்கும் வாகைதனைச் சூடு அங்கங்கே மொழிகாத்தல் உண்மை - அஃ(து) அவ்வவர்க் கியல்பாக வாய்த்ததோர் தன்மை இங்குள்ள மாந்தர்க்கு மட்டும் - அதை இடித்திடித் தெந்நாளும் சொன்னால்தான் எட்டும். 9.3.1987 23. வெறி வேண்டும் எடுப்பு வெறி கொள்ள வேண்டும்நீ தோழா-நீ விளையாட்டுப் பொம்மையா? விளங்காத பிள்ளையா? - வெறி தொடுப்பு நெறிகண்ட குறளொன்று கண்டாய்- அந்த நீள்புகழ்த் தாய்த்தமிழ்க் கோரிடர் என்றால் - வெறி முடிப்பு நற்றமிழ்க் குற்றது கேடு - நீ நானுளன் என்றதை வேரொடு சாடு பற்றுளங் கொண்டுனை நாடு - வளர் பைந்தமிழ் மைந்தனென் றுன்புகழ் பாடு - வெறி ஒற்றுமை என்றுரை கூறும் - அவன் ஓதுதல் நம்பிடின் உன்முது கேறும் கற்சிறை காட்டினும் மீறு- பல கற்றவர் சொன்மொழி கேட்டுளந் தேறு - வெறி வந்த மொழிக்குயர் வாழ்வு - நின் வண்டமிழ் வாழ்வுக்கு வந்தது தாழ்வு வெந்தது சோறெனத்தின்று - பாரில் வீழ்வதும் தாழ்வதும் நின்தொழி லன்று - வெறி 10.3.1987 24. அந்த நாள் வந்தே தீரும் `உறவுக்குக் கைகொடுப்போம் எங்கள் நாட்டின் உரிமைக்குக் குரல்கொடுப்போம்' என்று பல்கால் குரல்கொடுத்தும் பயனொன்றும் விளைய வில்லை; கொதித்தெழுந்தே உயிர்கொடுப்போம் என்று சொன்னோம்; விரலெடுத்துச் செவிவழியை அடைத்துக் கொண்டார்; `விடுதலையாற் பெறும்பயனை நமக்கு மட்டும் தரமறுத்தால் உயிரெடுப்போம்', எனமு ழங்கும் தமிழ்த்திருநாள் ஒன்றிங்கு வந்தே தீரும்! ஆண்டமொழி அடிமையென ஆவதென்றால் ஆர்பொறுப்பர்? தன்மான உணர்வு நெஞ்சில் பூண்டறுந்து போனதுவோ? , எனவெ தும்பிப் பொறுமையுடன் இசையரங்கில் தமிழிற் பாட வேண்டுமென ஆண்டுபல வேண்டி நின்றோம் வீணரினும் பிறமொழியே பாடு கின்றார்; ஈண்டினியும் பாடுவரேல் இசைய ரங்கை இடித்தெறியும் நாளொன்று வந்தே தீரும்! எவர்படைத்தார் கற்சிலையை? கோவில் தம்மை எவரெடுத்தார்? தமிழ்புகுதத் தடையா? அந்தத் தவறிழைத்தார் யாரிங்கே? ஆண்ட வர்க்குத் தமிழென்றால் நச்சுமிழும் எட்டிக் காயா? சுவரெடுத்துத் தமிழுரிமை தடுப்ப தென்றால் சுடுகாட்டுப் புதைகுழியின் பிணமா நாங்கள்? உவர்நிலத்தில் இடும்வித்தா? அவற்றை யெல்லாம்- உடைத்தெறியும் நாளொன்று வந்தே தீரும்! ஆகாச வாணிக்குக் கால்க ளான அரியதமிழ் வானொலியைத் திருப்பி விட்டால் வேகாத மொழிகளிலே எழுதி வைத்த விளங்காத பாடல்களே செவியில் வீழும்; சாகாமல் இருக்கிறதே எனும்நி னைப்பில் தமிழிசைக்குச் சிறுபொழுதை ஒதுக்கி வைக்கும்; நோகாமல் முறையிட்டோம் பயனே இல்லை; நொறுக்குகிற நாளொன்று வந்தே தீரும்! `பொறுக்கும் வரை பொறுத்திருந்தோம் பொறுத்த நம்மைப் புழுவென்று கருதுகின்றார்; குனிந்து கொண்டே இருக்கும்வரை ஏறுபவர் ஏறிப் பார்ப்பர்; இளைஞர்படை நிமிர்ந்தெழுந்து வீறு கொண்டால் தருக்குடையார் தலையுருளும் உடல்கள் சாயும் தன்மானப் போர்முரசம் முழங்கும்' என்று வெறுப்படைந்தோர் எழுச்சிகொளா முன்னர் இங்கே விடுதலையைத் தமிழ்நாட்டிற் பரவச் செய்வீர். 29.9.1979 25. வாழ்வா? சாவா? அறிவுபெறச் சிந்திக்க ஆய்வு செய்ய அதற்குரிய நூல்கற்க மேன்மை காணக் குறியுடையோன் பள்ளிக்குட் செல்லுங் காலை குலவவரும் இந்தியுடன் ஆங்கிலந்தான் தெரிவுசெயும் மொழியென்பார்க் கடிப ணிந்தால் தென்னாட்டு மொழியெதற்குத் தமிழைப் பேசித் திரிகின்ற இனமெதற்கு? மான மின்றித் தின்றலையும் வாழ்வெதற்கு? சாவே மேலாம். நான்பிறந்த பொன்னாடு, தவழ்ந்து நின்று நடந்தோடி விளையாடி மகிழ்ந்த நாடு, தேன்சுமந்த மலர்வருடி மணந்து வந்து தென்றலெனைக் குளிர்விக்கக் களித்த நாடு, வான்படர்ந்த புகழ்மிகுக்கும் எனது நாட்டை வாழ்த்துதற்கு வங்கமொழி வேண்டு மென்றால் ஏன்பிறந்தேன் தமிழ்நாட்டில்? பிறந்த பின்னும் இருக்கின்றேன் இருக்கின்றேன் சோற்றுக் காக. தோற்கருவி துளைக்கருவி நரம்பிற் கட்டும் துணைக்கருவி வெண்கலத்துக் கருவி என்ற நாற்கருவி முழங்குமிசை யரங்கில் ஏறி நான்பாடத் தெலுங்குமொழி வேண்டு மென்றால் வேற்கருவி எடுத்துவிளை யாடுந் தோள்கள் வீறிழந்து சீரிழந்து தமிழன் என்ற பேர்க்குரிமை பூண்டின்னும் வாழு கின்றேன் பிறப்படிமை யானவற்கேன் பட்டுக் குஞ்சம்? வானுயர்ந்த கோபுரங்கள், வளைந்து சுற்றும் மதிற்சுவர்கள், கருவறைகள், வல்லார் செய்த தேனினுயர் சுவைப்பொங்கல், கல்லால் செம்பால் செய்துவைத்த சிலைகள்பொலி கோவி லுக்குள் நானுழைந்து நெக்குருகி வணங்கி நின்று நாவசைக்க வடமொழிதான் வேண்டு மென்றால் ஏனிருந்து வாழ்கின்றேன் தமிழர் நாட்டில்? இருந்துபழி சுமப்பதிலே யாது கண்டேன்? விழிநலிவு பெறுமானால் முகமெ தற்கு? விளைபயிர்கள் கருகுமெனில் வயலெ தற்கு? வழிபுனல்தான் அறுமெனிலோர் ஆறெ தற்கு? வளர்ச்சியிலாப் பிண்டமெனில் கருவெ தற்கு? மொழியடிமை யாவதெனில் நானெ தற்கு? மூச்சில்லா உடலெதற்கு? மொழியைக் காத்துப் பழிவிலக வாழ்வதுவே வாழ்க்கை; இன்றேல் பாருக்குச் சுமைகுறையச் சாதல் மேலாம். 8.3.1987 26. தாய்மொழிப்பற்று கன்னட மாநிலங் காணும் ஆவலால் என்னொடு சிலர்வர ஏகினேன்; ஆங்குப் பிருந்தா வனத்தின் பேரெழில் விழிக்கு விருந்தா கியது வியந்து மகிழ்ந்தேன்; கைத்திறம் வல்லார் கண்கவர் ஓவிய மெய்த்திறம் காட்டி வைத்தநற் கூடம், வண்ணக் குலமலர் வகைவகை பூத்துத் தண்ணென் றெழிலுடன் தலைநிமிர் பூங்கா, மடங்கல் உலவும் மரஞ்செறி காவுடன் நடங்கொள் மயில்திரி நலங்கெழு சோலை அடங்கலும் நோக்கி அகமிக மலர்ந்தேன்; இடம்படுந் தலைநகர் ஏற்றங் காண நகர்வலம் வந்தேன் நாற்புறத் தெழிலும் பகர்தல் அரிதே; பார்த்துக் களித்தேன்; அருகில் ஓரிசை யரங்கு நிகழ்ந்தது; உருகும் இசையால் உள்ளம் நெகிழ்ந்தது பொருள்விளங் காமற் போனது பாட்டு; மயங்குமவ் வேளை மற்றொரு பாடல் வியந்திட இசைத்தது விளங்கியது பொருளும் வெள்ளிப் பனிமலை மீதுலவு வோமெனும் தெள்ளிய பாடல் தேனென இனித்தது; கற்கள் விழுந்தன கலகம் விளைந்தது பற்பல விளக்குகள் பரவிச் சிதறின; இசையும் நின்றது; ஏனென வினவினேன்; `இசைவலார் பிறமொழிப் பாடல் இசைத்தலாற் சினந்தெழு வோரிது செய்தனர்' என்றனர்; இனைந்துளம் வெதும்பி மொழிவெறி யென்றேன்; தடித்த கையை மடக்கிஎன் முகத்திற் கொடுத்தனர் குத்து, குருதி வழியச் சிதறின பற்கள்; திடுக்கிட் டெழுந்தேன் உதடுகள் பற்கள் உருக்கெடா திருந்தன; தாய்மொழிப் பற்றின் தகைமை உணர்ந்து வாயிதழ் அசைந்தன வாழிய எனவே. 13.5.1987 27. உறங்குந் தமிழ்மகன் தமிழன் போலத் தன்னுயர் மானம் உமிழ்ந்தான் ஒருவற் காண்கிலம் உலகில்; தன்னினம் தன்மொழி தாழ்வுறல் கண்டும் உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே! தந்தை தொகுத்ததே தனக்குரி மைப்பொருள் என்றதை ஓம்பிடல் ஒன்றே குறியுளன்; முந்தையர் தொகுத்த முத்தமிழ்ச் செல்வம் வெந்தழல் வீழினும் வெறுமனே இருப்பன்; உரிமை தனக்கும் உண்டெனக் கருதாப் பெருமை யுடையன் பெயரால் தமிழன்! தன்மொழி தாழ்வுறின் தன்னுயர் மானம் புன்மை யுற்றதென் றெண்ணுதல் செய்யான்; கடவுள் வழிபடப் புகுவோன் கால்கழி நடையன் மீதே நாட்டம் வைப்பன் கடவுளின் மேம்படக் காலணி கருதுவோன் இடமுடைக் கோவிலுள் ஈடிலாத் தாய்மொழி இகழ்வுறல் கண்டும் கவலா திருப்பன்; உயர்தனிச் செம்மொழிஎன் றோதிடும் மொழியில் அயன்மொழிச் சொல்லும் ஆங்கில எழுத்தும் பெயவிழை வோரிவண் பேசினர் எழுதினர் மயலுறு தமிழனும் மயங்கினன் ஒப்பினன்; உறங்குந் தமிழ்மகன் உணர்ச்சிதான் என்னே! அரங்கம் ஏறி ஆர்ப்பொலி எழுப்பிசைச் சுரங்கள் கேட்டவை தெரிந்தவன் போலக் கையுங் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவையின் ஆட்டுவன் தலையை; பொருளும் ஓரான் உணர்வுங் காணான் மருளன் பிறமொழி இசையில் மயங்கினன்; பழுத்த வளமைப் பைந்தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் எள்ளி யுரைத்தும் கையொலி பெறுதல் காணுதும் ஈங்கே பொய்யிலை மேடையிற் புகுந்தவர் செயலிது; எள்ளிய மடவனை ஈன்றதாய் யாவள்? தமிழ்மகள் எனினும் தகவிலான் எள்ளினன்; கயவன் மொழியால் கையொலி எழுப்பும் பயனிலா மகனும் பைந்தமிழ் மகனே; யாதுரை புகலினும் பேதைமை நீங்கிலன் வேதனைக் கடலுள் வீழ்ந்ததெம் முளமே; தன்மொழி தாழ்வுறல் கண்டும் தமிழ்மகன் உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே. 23.9.1975 28. தமிழர் போக்கு தமிழ்நாட்டின் சிறப்பனைத்தும் புகல்வ தென்றால் தனிப்பிறவி எடுத்தவர்க்கும் இயலா தாகும்; அமிழ்தூற்றும் தமிழ்க்குறளின் பெருமை சொல்ல ஆயிரம்நா போதுவதோ? போதா வாகும்; தமிழ்காட்டும் பண்பனைத்தும் நாமே சொல்லித் தற்பெருமை கொள்ளவிலை; உலக மெல்லாம் இமைகூட்ட மனமின்றி விழித்து நோக்கி எண்ணரிய வியப்பெய்திப் போற்றக் கண்டோம். ஆனாலும் நாம்மட்டும் அறிந்தோ மல்லோம் அறிந்தாலும் வாய்திறந்து புகழ்ந்தோ மல்லோம் போனாலும் போகட்டும்; மற்றோர் யாரும் புகழ்ந்தாலும் ஒருசிறிதும் பொறுப்ப தில்லை; தானாகக் கதைதிரித்து மறுப்புக் கூறித் தரியலர்போல் இகழ்ந்துரைத்து வாழ்ந்து செல்லும் கூனான மனமுடையார் சிலரும் நம்மில் *குடிலர்களாய் வாழ்கின்றார் உண்மை உண்மை. நல்லுள்ளங் கொண்டவர்தாம் தமிழ்மொ ழிக்கு நன்மைசெய முற்படுங்கால் வாழ்த்தல் வேண்டும்; அல்லுள்ளங் கொண்டவரோ மாறாய்ப் பேசி அவர்திறமைக் கேற்றபடி ஏள னங்கள் சொல்லுவதிங் கியல்பாகக் கொண்டார்; அந்தத் தூயவருந் தமிழினமாம்; பழித்து ரைக்கும் புல்லுள்ளங் கொண்டவர்க்கும் தமிழே தாயாம்; புரியாராய் ஏசுகின்றார் அவர்தம் தாயை. பேருந்து வண்டிகளிற் குறளைக் கண்டால் பேருவகை தமிழ்நெஞ்சிற் பொங்க வேண்டும்; யாரந்தக் குறளெழுத முனைந்தா ரோஇங் கெவர்மனத்துத் தோன்றியதோ என வியந்து பாரெங்கும் அவர்பெயரை வாழ்த்த வேண்டும் பைந்தமிழ்க்கு நற்காலம் வந்த தென்று; யாரிங்கு வாழ்த்துகின்றார்? பொல்லாங் கன்றோ யார்யாரோ புகல்கின்றார் பித்தர் போல; விரைந்துசெலும் உந்துகளுக் காங்கி லத்தில் வைத்திருந்த பெயர்மாற்றித் தமிழில் நன்கு வரைந்ததிருக் கைகளைநான் வாழ்த்து கின்றேன் வளர்தமிழின் வளர்ச்சியிலே விரைவு கண்டே; விரிந்தமதி யான்உரைத்தான் விரைவு வண்டி விறகுவண்டி எனச்செவியில் விழுந்த தென்றே; திரிந்தவற்குச் செவிபழுதாய் விட்ட தென்றால் செந்தமிழைப் பழிப்பதற்கா முயல வேண்டும்? எங்கெங்குக் காணினுமே தமிழ்தான் என்ற இயல்புநிலை இங்குவர வேண்டு மென்று பொங்குகிறோம்; ஓரிரண்டு நிலையி லேனும் பூத்துளதே தமிழென்று மகிழ்கின் றோம்நாம்; மங்கியவர் எள்ளிநகை யாடு கின்றார்; மல்லிகைப்பூ வராகத்தால் நுகர்தல் உண்டோ? இங்கிவர்தாம் திருந்திவரும் நாள்தான் என்றோ? இனியதமிழ் இகழ்வதுவா கட்சி யாகும்? தாய்மொழியை வளர்ப்பதிலே கட்சிப் பூசல் தலைகாட்டல் கூடாது; தமிழர் யார்க்கும் தாய்மொழியை வளர்ப்பதிலே உரிமை யுண்டு; தந்தம்மால் இயலும்வரை முயல வேண்டும்; தாய்மொழியை வளர்ப்பதிலே சாதி வேண்டா சாதியினைப் புகுத்துவது சதியே யாகும்; தாய்மொழியை வளர்ப்பதிலே சமயம் வேண்டா சமயம்வரின் மொழியழியுஞ் சமயந் தோன்றும். (விரைவு வண்டி என்று மாற்றி அமைத்ததை விறகு வண்டி என முன்னாள் அமைச்சர் ஒருவர் எள்ளி நகையாடியதைக் கடிந்து பாடியது) 29. என்று தணியும்....? தனக்கினிய பாயலிலே பள்ளி கொள்ளத் தார்புனைந்தான் மனைவிக்கே உரிமையுண்டு; மனக்கினியாள் தவித்திருக்கப் பாயல் மீது மற்றொருத்தி கிடந்திடுமேல் ஒழுக்கக் கேடு; தனக்குரிய நிலவரைப்பில் இசைய ரங்கில் தலைமைபெறத் தமிழுக்கே உரிமை யுண்டு; நினைப்பினிலும் இனிக்குமொழி தவிக்க, ஏனை நிலத்துமொழி தலைமைபெறின் மானக் கேடு. மானமுளான் மறத்தமிழன் என்றி ருந்தோம் மாறிஅவன் மரத்தமிழன் ஆகிவிட்டான் மீனவனால் வில்லவனால் புலியன் தன்னால் மேம்பாடு கண்டமொழிப் பாடல் எல்லாம் தேனமுதோ எனஇனித்தல் தெரிந்தி ருந்தும் தெளிவிலனாய்ப் பிறமொழியில் மயங்கு கின்றான்; ஏனவனால் தமிழ்கேட்க இயல வில்லை? எத்தனைநாள் உரைத்தாலும் உறைக்க வில்லை! மொழிஎன்றும் இனமென்றும் வேறு பாடு முழங்குமிசைத் துறைக்கில்லை என்று ரைத்துப் பழிகொண்ட தமிழ்மகனே! ஒன்று சொல்வேன் பகர்ந்தவிதி யாவருக்கும் பொதுதான் என்றால் பொழிகின்ற இசையரங்கில் எந்த நாட்டான் புகல்கின்றான் தமிழ்ப்பாட்டு? கேட்ட துண்டா? அழிகின்ற வழிசொல்வோய்! நீதி என்றால் அவர்க்கொன்று நமக்கொன்றா? உணர்ந்து சொல்வாய்! சரியாத தமிழ்மறவன் எங்கள் பாட்டன் தனிப்புலவன் பாரதிக்கு விழாவெ டுத்தாய் புரியாத மொழிப்பாட்டைக் கேட்டுக் கேட்டுப் பொங்கிஅவன் நொந்துரைத்த மொழியை எல்லாம் தெரியாது மறைத்துவிட்டாய்! தமிழை விட்டாய்! தேயத்தைக் காப்பவன்போல் நடிக்கக் கற்றாய்! நரியாக உலவுகின்றாய்! நீயா இந்த நாட்டுக்கு நலந்தேட வல்லாய்? அந்தோ! மடம்படுவாய்! பிறமொழிக்கே இசைய ரங்கில் மதிப்பளிப்பாய்! இசைபாடி முடிக்கும் போதில் இடந்தருவாய் தமிழுக்கும்; ஒன்றி ரண்டே இசைத்திடுவாய் உதிரியெனப் பெயருஞ் சூட்டி; நடந்துவரும் உண்மையிது; கேட்டுக் கேட்டு நைந்தமனம் தமிழ்வேண்டும் என்று சொன்னால் அடகெடுவாய்! ஏதேதோ அலறு கின்றாய் அடிமைமனப் பித்தெல்லாம் தணிவ தென்றோ? (பாரதி நினைவுநாள் கவியரங்கம்) 11.09.1976 30. எக் காலம் காட்டுகிற டீ.வி யைக் கண்டன்று நீகளித்தாய் நாட்டமுடன் தூரதர்சன் நாடியின்று பார்க்கின்றாய் பூட்டுந் தமிழ்ப்புலியே போற்றும் உனதுமொழி காட்டுந் தொலைக்காட்சி காண்பதுதான் எக்காலம்? இசையெழுப்பும் ரேடியோ ஏற்றன்று கேட்டிருந்தாய் வசையுடுத்த `ஆகாச வாணி'யின்று கேட்கின்றாய் நசைவிடுத்த கோட்புலியே நம்நாட்டில் வானொலியைப் பசியெடுத்துக் கேட்பதற்குப் பாய்வதுதான் எக்காலம்? ஏறிப் பறந்துவரும் ஏரோப்ளேன் அன்றிவர்ந்தாய் மாறியது `வாயுதூத்' மற்றதிலின் றேறுகின்றாய் தூறல் வரிப்புலியே தூக்கம் விடுத்தெழுந்து வீறுடன்நீ வானூர்தி மேலூர்தல் எக்காலம்? காணுங்கால் `குட்மார்னிங்' என்றன்று கையெடுத்தாய் நாணமிலா தின்று `நமஸ்தே' மொழிகின்றாய் ஏணம் விடுபுலியே ஈன்றெடுத்த தாய்மொழியிற் காணும் வணக்கமெனக் கைகுவிப்ப தெக்காலம்? 8.3.1987 31. தமிழனா நீ? எடுப்பு தமிழன் எனும்பெயர் தகுமா? - உனக்குச் சான்றோர் மொழிசெவி புகுமோ? - தமிழன் தொடுப்பு சமையம் பலபல சார்ந்தனை தாழ்ந்தனை சாற்றிடும் சடங்கினில் வீழ்ந்தனை உனக்கினி - தமிழன் முடிப்பு இந்துவென் றொருமதம் இனிதெனத் தோய்ந்தனை ஏனோ தமிழ்மொழி உணர்வினில் தேய்ந்தனை? வந்திடும் வடமொழிப் பேர்களுக் கேங்கினை வையக அடிமையென் றொருபழி தாங்கினை - தமிழன் ஆங்கொரு சிலுவை அணிந்திட ஓடினை அதனால் ஆங்கிலப் பெயர்களே நாடினை ஈங்கொரு இசுலாம் எனப்புகழ் பாடினை ஏனோ அரபு மொழிப்பெயர் சூடினை? - தமிழன் ஒருமதம் தழுவுதல் உரிமையென் றோதலாம் உன்தமிழ் அன்னையை எப்படி மீறலாம்? பெரும்புகழ்த் தமிழகம் பெற்றிடும் நீயெலாம் பிறமொழிப் பெயர்களை எப்படிச் சூடலாம்? - தமிழன் 7.3.1987 32. சமயத்தில் நட்டதமிழ் அருளப்பன் என்னும் பேரான் அப்துல்லா வானான் கண்டாய்! கருப்பணன் என்பான் இங்கே கபூரென ஆகி விட்டான்; விருப்புள பொன்னன் கூட விஜயனாய் மாறி விட்டான்; வெறுப்புற ஜெகந்நாத் தானான் வெள்ளையன் அந்தோ அந்தோ! செல்லப்பன் இயல்பு மாறி ஜீவபந்த் தாகி விட்டான்; நல்லப்பன் கெட்டே போனான் நண்ணினான் ஸ்ரீபா லாக; சொல்லுக்கோர் அழகன் இங்கே சொக்கினான் ஜோசப் பானான்; அல்லலுக் காளாய் நின்றான் அந்தோணி யானான் மெய்யர். தைத்திங்கள் பிறக்கும் நாளைத் தமிழ்மகன் சங்கி ராந்தி வைத்திங்குக் கூவி நின்றான்; வளரிளஞ் சிறுவ ரெல்லாம் மொய்த்திங்குக் கூடி ஆட முயல்மகார்நோன்பை கூடக் கைத்ததென் றொதுக்கி விட்டான் கழறினான் தசரா என்றே. திருமறைக் காடென் றோதும் தீந்தமிழ்ப் பெயரும் செல்ல வருமொழி வேதா ரண்யம் வந்தது; வளங்கள் யாவும் மருவிடும் தமிழின் அண்ணா மலையெனும் பெயரும் மாறி அருணமும் கிரியு மாகி அய்யவோ ஓங்கிற் றம்மா! தன்பெயர் மாற்றி வைத்தான்; தனித்தமிழ் ஊரின் பேரை என்பயன் கருதி னானோ இயம்பினான் வேறு பேரால்; முன்புள திருநாள் தன்னை மொழிந்தனன் பெயரை மாற்றி; புன்செயல் என்றே எண்ணான் பொன்றினான் அடிமைப் பட்டே. சமயத்தில் தமிழை நட்டான் சாய்ந்துமே தளர்ந்த தம்மா! இமயத்தில் கொடியை நட்டோம் என்றெலாம் வீரம் பேசித் தமிழைத்தான் கோட்டை விட்டான் தமிழனென் றொருபேர் கொண்டான் இமையைத்தான் விழிம றந்தால் எப்படிப் புகல்வ தம்மா? மதமெனும் பேய்பி டித்தே மடமையுள் மூழ்கி நின்றான்; கதவினைத் திறந்து வைத்தான் கண்டவை புகுவ தற்கே; எதனையும் தழுவிக் கொண்டான் இவனைத்தான் மறந்தே போனான்; பதரெனச் சொல்வ தல்லால் பகர்ந்திட உவமை ஏது? 27.9.1975 33. கோவிலுக்குள் கொடுமை தருக்கினால் அயலான் வந்து தமிழனைப் பழித்துப் பேசும் வெறுப்புறுங் குற்றஞ் செய்தால் விரைந்தவன் முதுகெ லும்பை நொறுக்கடா என்ற பாடல் நுவன்றவன் பிறந்த மண்ணிற் செருப்பினால் தாக்கப் பட்டான் செந்தமிழ் பழித்த வாயன். என்னுமோர் சொல்லைக் கேட்டேன் இருசெவி குளிரப் பெற்றேன் வன்முறை நோக்க மன்று வழிவழி மரபு மன்று சொன்முறை யெல்லாஞ் சொல்லித் தொலைத்தும்நற் கோவி லுக்குள் தென்மொழி வேண்டா வென்றால் செய்வது வேறென்? சொல்லும் தாய்மொழி பழித்துப் பேசுந் தறுதலை எவனுந் தோன்றின் பாய்புலி யாவர் எங்கள் பைந்தமிழ் மறவர் என்று கூய்வரும் மொழியைக் கேட்டுக் குளிர்ந்ததென் னுள்ள மெல்லாம்; நாய்களின் வாலைச் சற்று நறுக்கித்தான் வைக்க வேண்டும். தன்னுடல் வளர்ப்ப தற்குத் தமிழையே சொல்லிச் சொல்லிப் பொன்பொருள் பெருக்கிக் கொண்டான்; புல்லியன் நன்றி கொன்றே தென்மொழி வெறுத்தல் கண்டும் திருவிழா நடத்துங் கூத்தர் பின்னுமேன் அழைக்க வேண்டும்? பித்தர்கள் இவர்போ லுண்டோ? வடமொழி ஒன்றே ஏற்பர் வண்டமிழ் ஏலா ரென்றால் கடவுளர் உருவக் கல்லைக் கடலிடை வீச லன்றி இடமுடைக் கோவி லுக்குள் இன்னுமேன் வைத்தல் வேண்டும்? மடமிகு மதிய ரானீர் வந்தவர் ஏறிக் கொண்டார். கல்லினைக் கடவு ளாக்கிக் கைத்திறன் காட்டுஞ் சிற்பி, கல்லொடு கல்ல டுக்கிக் கோவிலைக் கட்டுங் கொற்றன், கல்லினை மண்ணைச் சாந்தைக் களத்தினிற் சுமக்குஞ் சிற்றாள் செல்லவுந் தடையாம் செய்த சிலைகளைத் தொட்டால் தீட்டாம். மாந்தரைத் தடுத்த போது மடமையாற் பொறுத்துக் கொண்டீர் தீந்தமிழ் மொழியை நம்மை ஈன்றருள் தாயைத் தீயர் போந்தவர் தடுக்கும் போதும் பொறுமையா காட்டு கின்றீர்? மாந்தரென் றும்மை யெண்ண மனமிகக் கூசு கின்றேன். தன்மதிப் பிழந்தீர் வேதர் தாளிணை வருடி நின்றீர் நன்மதி திரிந்து கெட்டீர் நால்வகை `வருண தர்மம்' பன்னுதல் நம்பி ஏய்ப்போர் பகட்டுரைக் கடிமை யானீர் இந்நிலை தெளியா தின்னும் இருட்டினில் உழலு கின்றீர் கதிரவன் தோன்றக் கண்டும் கண்களை மூடிக் கொண்டீர் மதியொளி பரவல் கண்டும் மயக்கினை விட்டீ ரல்லீர் புதியதோ ருலக மிங்குப் பூப்பது காணீ ராகி முதுகினை வளைத்துக் கொண்டீர் முப்புரி நிமிர விட்டீர். 28.3.1984 34. திரும்பி விட்டேன் `ஆறணிந்த சடைமுடியான் கூடல் தன்னில் ஆர்வமுடன் சுந்தரப்பேர் வழுதி யானான்; கூறமர்ந்த பங்கினளும் மதுரை மன்னன் குலக்கொடியாய்த் தடாதகையாய்த் தோன்றி வந்தாள்; வீறமர்ந்த வேலவனும் உக்கி ரப்பேர் மேவியங்கு வந்துதித்தான்; இவர்கள் ஈண்டுச் சேரவந்து பிறப்பெடுக்கும் நோக்க மென்ன? brªjÄÊ‹ Ritkhªâ k»H t‹nwh? தேனிகர்க்குந் தமிழ்மொழியில் நெஞ்சி னிக்கத் தேவாரம் பாடியருள் மூவ ருள்ளும் வானிடிக்கும் பொழில்சூழும் ஆரூர் வாழும் வடிவழகன் சுந்தரனோர் நள்ளி ருட்டில் ஆனுயர்த்த கொடியானைத் தூத னுப்பி ஆட்டாத ஆட்டமெலாம் ஆட்டி வைத்தான் *சேனிகர்த்த விழிபங்கன் தமிழை வேட்டுச் செய்யாத செயலெல்லாஞ் செய்து வந்தான். ‘ešy¿P® ciwÉlkh« bjh©il eh£oš ehl¿ªj fhŠájÅš thœªJ tªj ešytid¡ fÂf©z‹ v‹gh‹ w‹id ehLflª njFbfd mur‹ Tw¢ bršYkt‹ ã‹bjhl®ªjh® òyik Ä¡f âUkÊir ahœthU«; fh®nk f¤ij btšY»‹w Ãw¤jhD« mt®ã‹ br‹wh‹ nt£blGªj jÄHh®t kjdhš m‹nwh! ‘ö©lhkš njh‹WRl®¡ fhjš bfh©L Noky® bfhL¤jhis¥ ghthš e«ik M©lhis M©lhid, Ãidªj u‰¿ mU£flÈš Mœth®j« MÆ u§fŸ ó©lhid, mt®âUthŒ bkhÊia¡ nf£L¥ òÉÆl¤J khyh» Ëwh‹ j‹id, nt©lhbdª jÄœbkhÊia v‹W iu¤jhš btWkâa® v‹gjyhš btbw‹ brhšnth«? ‘flîs®fŸ cfªjbkhÊ, v‹ò¡ T£il¡ fhÇifah¡ f©lbkhÊ, kiw¡fh£ ^Çš milfjtª âwªj bkhÊ, Kjiy í©l M©kfit Û£lbkhÊ, bjŒt¥ gh‹ik glUbkhÊ, g¤âbkhÊ, bjhL¡Fª bjŒt¥ gH«ghlš ÃiwªjbkhÊ, cŸs bkšyh« kilâwªj btŸsbkd mUis¥ ghŒ¢á k»œÉ¡F« m‹òbkhÊ jÄnH a‹nwh!' என்றுரைத்த சொன்மாரி செவியு ளோடி என்மனத்தை நெக்குருக்க இளகி ஆண்டு நின்றிருக்கும் நான்மகிழ்ந்தேன்; எதிரில் தோன்றும் நெடுங்கோவி லுட்புகுந்தேன்; அருளால்நெஞ்சம் ஒன்றிநிற்கும் பன்னிருவர் நால்வர் மற்றோர் ஓதிவைத்த பாடலெலாம் உன்னி யுன்னிச் சென்றிருந்தேன்; திடுக்கிட்டேன்; சிந்தை நொந்தேன்; செந்தமிழைக் காணவிலை திரும்பி விட்டேன். 35. எது கவிதை? ஒருத்தியும் ஒருவனும் உள்ளத் தெழுந்த பருவ உணர்ச்சி பக்குவம் பெற்றுக் கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா உறுப்பும் அமைந்து வனப்புடன் ஒருமலர் வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான் இந்த வுலகம் குழந்தையென் றியம்பும்; கற்பனை வளமும் கவிஞன் உளமும் பொற்புடன் மருவப் புதியதோர் உணர்ச்சி கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா உறுப்புடன்அமைந்து வனப்புடன் நறுமலர் வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான் இந்த வுலகம் கவிதையென் றியம்பும்; உறுப்புகள் இல்லா உருவினை வெறுக்கும் பிண்டமென் றிசைக்குமிவ் வுலகே. 27.11.1980 36. ஆணா? பெண்ணா? உரைநடை என்பதோர் உரம்பெறும் ஆண்மகன்; கவிநடை என்பது கண்கவர் பெண்மகள்; கற்பனை என்னும் பொற்புறு சீலையால் ஒப்பனை செயினும் உரைநடை என்னும் ஆண்மகன் பெண்மகள் ஆதல் ஒல்லுமோ? காண்பவர் அன்றோ கைகொட்டிச் சிரிப்பர்; உடுத்திய சீலை ஒன்றால் மட்டும் அடுத்தோர் பெண்ணென் றறைதல் செய்யார்; பருவ மகளெனப் பாருக் குணர்த்த உருவ அமைப்புடன் உறுப்பெழில் வனப்பும் பெறுதல் வேண்டும்; பெண்மையும் வேண்டும்; பேசுமிவ் வொன்றும் பெறாஅ திருந்தும் ஆசைமீ தூர ஆணைப் பெண்ணெனப் பேசுதல் ஒழிக; பித்தம் தவிர்க; புதுமை எனவும் புரட்சி எனவும் எதையுஞ் செய்தல் இழிவினும் இழிவே. 5.12.1980 37. ஐக்கூ அடிமை அரும்பிய கருத்தை அழகிய முறையிற் சுருங்கிய அடிகளிற் சொல்லுதல் வேண்டின் திருந்திய தமிழிற் சிலவகை யுண்டு, முன்னிய கருத்தை மூன்றடிக் குள்ளே பன்னும் பாவகை பைந்தமிழ் காட்டும் முந்தை இலக்கணம் மொழிந்த சான்றோர் சிந்தியல் வெண்பா என்றதைச் செப்புவர்; ஈரடிப் பாடல் இயம்பலும் உண்டு பேரது யாதெனிற் குறளெனப் பேசுவர்; ஓரடி கூட உள்ளக் கருத்தை நேரடி யாக நிகழ்த்தலும் உண்டு கொன்றை வேந்தன் என்றதைக் கூறுவர்; அரையடிப் பாடலும் அருந்தமிழ் காட்டும் ஆத்தி சூடியென் றதன்பேர் உரைப்பர்; ஏத்தும் இவையெலாம் தமிழில் இருக்கச் சீர்த்த தமிழைச் சிந்தையிற் கொளாது எங்கோ அலைகிறாய் ஐக்கூ என்கிறாய் இங்கே இருப்பதை எண்ணாது தாய்மொழிக் கின்னல் விளைக்க எண்ணித் திரியும் உன்னை அடிமையென் றுரைப்பதே சாலும் கைப்பொருள் இருக்கக் கடன்பெற அலையும் பைத்தியம் உலகிற் பார்த்ததும் இலையே! 26.10.1990 38. அதன் பெயர் என்ன? பிறந்தவர் அனைவரும் மனிதர் - ஆனால் பிரிவுகள் அவருளும் உண்டு சிறந்தவர் எனச் சிலர் வாழ்வர் - சீர் குறைந்தவர் எனச்சிலர் தாழ்வர். கனிபவை யாவுங் கனிகள் - ஆனால் கழிப்பன அவற்றுளும் உண்டு இனியன எனச் சில கொள்வார்- சுவை இல்லன எனச்சில கொள்ளார். காய்ப்பன யாவுங் காய்கள் - ஆனால் கறிக்குத வாதன வுண்டு பேய்ச்சுரை கொள்பவர் உண்டோ - அந்தப் பேதைமை எவரிடங் கண்டோம்? பிறப்பன யாவுங் குழந்தை - என்று பேசுவ தெப்படிப் பொருந்தும்? உறுப்புகள் உடம்பினில் இன்றிப் - பிறந்தால் உண்மையில் அதன்பெயர் என்ன? எழுதிய வெல்லாங் கவிதை - என்றால் எங்ஙனம் ஒப்புவ ததனை? பழுதுகள் அடைந்தன உறுப்பு - பின்னும் பாவெனச் சொல்வதா சிறப்பு? 39. கற்றோரை வேண்டுகிறேன் அறிவியல் கற்று வந்தீர் அளவிலா உவகை கொண்டேன்; பொறியியல் தேர்ந்து வந்தீர் பூரித்து மகிழ்வு பெற்றேன்; பொருளியல் துறையில் தேர்ந்தீர் புகழ்ந்தனர் அயல்நாட் டாரும்; இருளினில் மூழ்கி நின்ற இனத்திலோர் ஒளியைக் கண்டேன். மருத்துவத் துறையுங் கற்றீர் மருந்தியல் நெறியும் பெற்றீர் பெருத்தநும் அறிவால் நாட்டில் பெரும்புகழ் குவித்தீர் மேலும் *அருத்தியால் உம்மை வேண்டி அழைத்தனர் வெளிநாட் டாரும்; கருத்தினுள் எழுச்சி கொண்டேன் காய்நிலஞ் செழித்த தென்றே! உயிரியல் தோய்ந்து கற்றீர் உடலியல் ஆய்ந்து கற்றீர் பயிரியல் செழிக்கக் கற்றீர் பலவகை நிலநூல் என்னும் *அயிரியல் அதுவும் கற்றீர் ஆதலின் உலகம் போற்றும் பயன்பல விளையும் என்றே பகலெலாம் கனவு கண்டேன் வேதியல் என்று கூறும் வியத்தகு நூலுங் கற்றீர் ஓதிய பூதம் ஐந்தை உணர்த்திடும் இயல்கள் கற்றீர் மூதுணர் வுடையார் சொன்ன மொழியியல் பலவுங் கற்றீர் ஆதலின் நிமிர்ந்து நின்றேன் அருந்தமிழ் தழைக்கு மென்றே. கற்ற அத் துறைகள் யாவும் கருத்தினில் தேக்கி வைத்துப் பெற்றநம் தாய்மொ ழிக்குள் பிறமொழிக் கலைக ளெல்லாம் முற்றிய வளர்ச்சி காணும் முயற்சியில் யாது செய்தீர்? பற்றினை எங்கோ வைத்துப் பதவிக்கே நெஞ்சை வைத்தீர் இனத்திலே ஒளியைக் கண்டேன் இருநிலஞ் செழிக்கக் காணேன்; மனத்துளே கனவு கண்டேன் வாழ்விலே பலிக்கக் காணேன்; முனைப்புடன் நிமிர்ந்து நின்றேன்; முகங்கவிழ் நிலையைத் தந்தீர்; நினைத்துநீர் முனைந்தெ ழுந்தால் நெடும்புகழ் வாகை கொள்வீர். இன்னுமோ அடிமை நீங்கள்? இன்றுநீர் உரிமை மாந்தர்; பன்னிலை அறிவா இல்லை? பரிவுதான் நெஞ்சில் இல்லை; பன்னருங் கலைகள் யாவும் பைந்தமிழ் அடையச் செய்வீர்! நன்னிலை தமிழுக் காக்க நயந்துநான் வேண்டு கின்றேன். 40. பட்டஞ் சூட்டுக! பல்கலைக் கழகம் பயிற்றிடும் மொழிகளுள் தொல்தமிழ் ஒன்று; தூய்தமிழ் விழைந்தோர் ஈரிரண் டாண்டுகள் இலக்கண இலக்கியப் போரினுள் மூழ்கித் தேறினர் வென்றனர்; வென்றவர் தம்மை வித்துவான் என்றனர்; அன்றது சிறப்பென அயர்ந்தனர் நம்மவர்; உரிமையின் பின்னர் அரியணை ஏறிய பெரியவர் துணையால் பெயர்பிறி தாயது; சொற்றமிழ் பயின்றோர் சூடிய பிறமொழிப் பட்டயம் போயது பைந்தமிழ் ஆயது; புலவர் எனும்பெயர் பூத்தது மலர்ந்தது குலவிய மகிழ்வால்கூறினம் நன்றி; பெயராற் புதுமை பெற்றதே ஆயினும் உயர்வால் மதிப்பால் ஒன்றும் பயனிலை; பட்டயம் எனவே பகர்ந்தனர் அதனைப் பட்டம் எனச்சொலப் பதைத்தனர் தமிழர்; ஆங்கிலம் பயின்றவர்க் கடிமைப் புத்தி நீங்கிய பாடிலை நெடுநாட் பிணியது; கழகம் அரியணை கண்ட பின்னரும் இழிநிலை தமிழுக் கிருத்தலும் முறையோ? தமிழால் வென்றது தமிழால் உயர்ந்தது தமிழை வளர்ப்பது தமிழை மதிப்பது கழகம் என்றெலாம் கழறுவர் அதனால் தமிழுக் குயர்நிலை தரல்அதன் கடமை; பட்டயம் எனுமொரு பழம்பெயர் மாற்றிப் பட்டம் என்றொரு சட்டம் செய்தால் உலகம் குப்புற உருண்டா வீழும்? அலைகடல் பொங்கி ஆர்த்தா சீறும்? பட்டமென் றாக்கிடின் பலப்பல சிக்கல் பொட்டெனப் போகும்; போற்றிடுந் தமிழகம்; அரசு கட்டில் அமர்ந்தினி தாளும் கலைஞர் நாவலர் கருதுவீ ராயின் இலையொரு தடையும் எம்தமிழ் மொழிக்கே; இன்றுள அரசு நன்றிது செயாவிடின் என்றுதான் விடியும் எந்தமிழ் வாழ்வு? தம்மை யீன்ற தாய்த்திரு நாட்டைச் செம்மைத் தமிழால் செப்பிட மறுத்தவர் பழிக்கவும் இழிக்கவும் பட்டனர் அன்றோ? மொழிக்குயர்ஆக்கம் முனைந்து தராவிடின் நாளைய உலகம் நம்மையும் பழிக்கும்; வேளை யிதுதான் விரைந்திது புரிக! செய்யத் தகுவ செய்யாவிடினும் எய்துவ தியாதெனத் தெரிந்து செயல்செயும் நுண்மாண் நுழைபுலம் உடையீர் நண்பால் வேண்டுதும் நலம்தமிழ் பெறவே. 30.11.1974 41. தமிழ்ச் சான்றோரைப் போற்றுக! தாய்மொழியைப் பாராட்ட விழையும் மாந்தர் தம்மொழியிற் சான்றோரைப் போற்றல் வேண்டும் தாய்நாட்டு முதலமைச்சர் மாலை சூட்டத் தகுகல்விப் பொறுப்பேற்ற அமைச்சர் நின்று வாய்விட்டுப் பாராட்ட நிதிய மைச்சர் வரையாது மனங்குளிர்ந்து பரிசில் நல்கச் *சேய்நாட்டார் வியந்துரைக்க யானை மீது செம்மாந்து செலல்வேண்டும் அந்தச் சான்றோர். செம்மாந்து செல்கின்ற காட்சி காணச் சேர்ந்தோடி வருகின்ற மக்கள் கூட்டம் அம்மாஎன் றதிசயிக்க வேண்டும் என்றன் ஆவல்நிறை வேறுகின்ற நாள்தான் என்றோ? இம்மாநி லத்திருக்கும் புலவர் என்போர் எல்லாரும் ஒன்றாகி எழுந்தால் உண்டு; சும்மாஇங் கிருந்ததெலாம் போதும் போதும் சூளுரைத்து நாமெழுதல் வேண்டும் வேண்டும். 42. உளங்கவர் புலவர் கண்ணுக்கு விருந்தாகும் இயற்கைக் காட்சி காளையரும் கன்னியரும் விழைந்து தங்கள் கண்ணுக்கு முதன்மைதரும் காதற் காட்சி கருவிழியை விழித்திமையார் முகத்தும் மார்பும் புண்ணுக்கு விழைந்திருக்கும் வீரக் காட்சி புலவருக்குப் புரவலரும் பணிந்து நின்று பண்ணுக்கு விழைந்திருக்கும் காட்சி எல்லாம் பாடிவைத்த சங்கத்தார் கவர்ந்தார் நெஞ்சை அகச்சமையம் புறச்சமையம் என்று கூறி. அளப்பரிய சமையங்கள் படைத்து நின்று, பகைக்குணமே கொண்டுழன்ற மாந்த ருக்குப் பகவனென ஒருபொருளை உணர்த்திப் பாவில் மிகச்சிறிய குறட்பாட்டால் அறத்துப் பாலும் மேன்மைபெறும் பொருட்பாலும் இன்பப் பாலும் தொகுத்தறங்கள் உரைத்தவன்யார்? அவனே யன்றோ தொன்னாள்தொட் டுளங்கவர்ந்த கவிஞன் ஆவன்; கற்புடைய மாதர்தமை உலகம் போற்றக் கலைக்கோயில் எழுப்பியருள் சேரன், நல்ல பொற்புடைய அறச்செல்வி பசிநோய் நீக்கப் பூண்டிருந்த தொண்டுளத்தை விளக்கும் வண்ணம் சொற்புதுமை காட்டியொரு நூல ளித்த தொல்புதல்வன் மதுரைநகர் வாழும் சாத்தன், பற்பலவாம் மணம்புணர்ந்த சீவ கற்குப் பாமாலை தொடுத்ததிருத் தக்க தேவன். தமிழ் மொழியின் சொற்களெலாம் முன்னே நின்று தவம்புரிந்தே இடம்பெறுவான் முந்தி நிற்க அமிழ்தனைய பாடலுக்குள் வரிசைநல்கி அவைதமக்கு மாற்றுயர்ந்த அணிகள் நல்கித் தமியனெனச் சொற்சிலம்பம் ஆடுங் கம்பன், தரணியிலோர் நிகரில்லாப் பரணி பாடி நமையெல்லாம் மயக்குறுத்தும் வீர மூட்டி நாப்பறையால் போர்ப்பறைகள் ஆர்த்த நல்லோன். பொன்விளைந்த களத்தூரன் வெண்பாப் பாடிப் புகழேந்தும் ஒருகவிஞன் தமிழுக் காக்கம் முன்விழைந்து நூல்செய்து காலங்கண்ட முத்தமிழ்க்குத் தொண்டுசெயும் கவிஞ ரெல்லாம் என்விழைவுக் கிலக்கானோர்; அவர்தம் பாட்டின் இனிமைக்கும் தனிமைக்கும் அடிமை யானேன்; இன்பளைந்த அவர்திறத்தை நுவலக் கேட்பின் என்பெல்லாம் நெக்குருக மகிழும் உள்ளம். மாசகன்ற வீணையென வெம்மை நீக்க மாலைவரும் மதியமென, உளஞ்சி லிர்க்க வீசுகின்ற தென்றலென, உயிர்கள் வேட்கும் வீங்கிளமை வேனிலென, மலரில் வண்டு மூசுகின்ற பொய்கையென உவமை சொல்லி முழுமுதலை விளக்கிநின்ற நாவின் வேந்தன் பேசுகின்ற தமிழ்ப்பாட்டால் இறையைக் காட்டும் பெரும்புலவன் கவராத உள்ளமுண்டோ? கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் நல்ல குளிர்தருவாய். தருநிழலாய், நெஞ்ச மென்னும் மேடையிலே வீசுகின்ற தென்றற் காற்றாய், மென்காற்றின் விளைசுகமாய் கருணை என்னும் ஓடையிலே ஊறிவரும் தெண்ணீராகி உகந்தமண மலராகி, சிறுவ னாக ஆடையிலே எனைமணந்தஇராம லிங்க அடிகளவர் உளங்கவர்ந்த வள்ள லாவர். பாமரராய் விலங்குகளாய்ப் பான்மை கெட்டுப் பகுத்தறிவும் அற்றவராய்ப் பிறந்த நாட்டைப் பூமிதனில் அயலவர்க்கே அடிமை யாக்கிப் புழுவினைப்போல் பூச்சியைப்போல் கிடந்தநாளில் தேமதுரத் தமிழ்ப்பாட்டால் புரட்சித் தீயைத் திசையெல்லாம் மூட்டியவன், உரிமை எல்லாம் நாமடைய வேண்டுமென்ற உணர்வு தந்த நற்கவிஞன் எனதுள்ளம் கொள்ளை கொண்டான்; தென்னாட்டின் விடுதலைக்கே வாழ்வு தந்தோன்; தீந்தமிழின் உரிமைக்கே பாடல் தந்தோன்; இந்நாட்டில் பிறமொழிகள் படையெ டுத்தால் எழுந்தார்க்கும் பாவேந்தன், எதிரி கோடிப் பொன்காட்டி யழைத்தாலும் இகழ்ந்து தள்ளிப் புகழ்மிக்க தமிழினத்தின் மேன்மை காக்கத் தன்பாட்டைப் படைத்தளித்தோன் என்றும் மாறாத் தன்மான இயக்கத்தான், உளங்க வர்ந்தான்; எளிமைக்குப் பிறப்பிடமாய், இனிய சொல்லின் இருப்பிடமாய் ஆசையிலா மனத்த னாகி, ஒளிமிக்க புத்தனுக்கும் பார சீக உமருக்கும் புகழோங்கும் வண்ணம் செய்த களிமிகுத்த பாவலனாய்ச், சிறுவர் உள்ளம் கனிவிக்கும் கவிமணியாய், உண்மை நேர்மை தெளிவிக்கும் ஓருருவாய் வாழ்ந்த எங்கள் தென்புலத்தான் திருவடியை நெஞ்சிற் கொள்வேன். எத்துணைதான் இடுக்கண்கள் நேர்ந்த போதும் எதிர்த்தெழுந்து நகைத்துநின்று வெற்றி கண்ட முத்தமிழ்க்குப் புகழ்படைத்த புலவர் பல்லோர் முன்னாளில் வாழ்ந்திருந்தார்; என்றன் உள்ளம் நத்துகின்ற புலவர்சிலர் பெயரை இன்று நாம்நினைதல் நலம்பயக்கும்; நினைந்து வாழ்த்தும் அத்திறத்தால் தமிழ்காக்கும் எண்ணம் நெஞ்சில் அரும்புவிடும்; மலராகும்; மணம்ப ரப்பும். கவியரங்கம் குன்றக்குடி 16.1.1965 43. இளங்கோவடிகள் கோவேந்தர் பெருங்குடியிற் பிறந்தும் நாட்டுக் குடிமக்கள் காப்பியத்தைப் படைத்துத் தந்தான்; மூவேந்தர் ஒற்றுமைக்கு வழியுங் கண்டான்; முதலினமாம் தமிழினத்தின் வரலாற் றுக்கு நாவேந்தும் புகழ்சேர்த்தான் சேர நாட்டு நற்றமிழன்; பெண்ணினத்தின் பெருமை சொன்ன பாவேந்தன்; தேனூற்றி வைத்த தைப்போல் பாநூற்றும் தான்நோற்றும் பெருமை கொண்டான். சேவடியின் சிலம்பணியால் விளைந்து வந்த சிலம்படியால் கற்பணங்கின் வரலாற் றுக்கோர் கோவிலினைக் கட்டியவன்; அரசு வேண்டாக் கோவடிகள்; முத்தமிழின் காப்பி யத்தால் மூவரசர் வரலாறும் மொழிந்த மேலோன் மொய்த்தபுகழ் எம்மவர்க்குத் தந்த நல்லோன்; நாவரிசை பாவரிசை காட்டி எங்கள் நற்றமிழ்க்குச் சுவைமிகுத்தான் வாழ்க நன்றே. 44. புரட்சிப் பாவலன் ஒப்பரிய யாப்பென்னும் அணையைக் கட்டி உணர்ச்சியெனும் பெரும்புனலைத் தேக்கி வைத்தான்; அப்புனலுள் மூழ்கியதன் ஆழங் காணல் அரிதெனினும் கரையோரம் நின்று கொண்டு செப்புகின்றேன் சிலமொழிகள்; புதிய பாங்கில் செய்தமைத்த பாட்டுக்குள் வெறியை ஏற்றும் அப்பனவன் பரம்பரையில் நானோர் பிள்ளை ஆதலினால் அவன்பெருமை பாடு கின்றேன். பாவேந்தன் தீப்பிழம்பின் வெம்மை சேர்த்துப் படைத்தளித்த தீந்தமிழின் உணர்ச்சிப் பாட்டை நாவேந்திப் பாடிவிடின் உடலி லுள்ள நரம்பனைத்தும் முறுக்கேறும்; மொழிக ளெல்லாம் *ஏவேந்திப் போர்தொடுக்கும்; விழிக ளெல்லாம் எரிகக்கும்; தோள்விம்மும்; போரில் எந்தக் கோவேந்தன் வந்தாலும் எதிர்த்து நிற்கக் கொடுங்கோலைப் புறங்காண உணர்ச்சி நல்கும் விழுதுவிட்ட ஆலமரம் சாதி என்றால் வேர்பறியச் சாய்ந்துவிழச் செய்த பாட்டு; பழுதுபட்ட கண்மூடிக் கொள்கை என்னும் பழங்கோட்டை சரிந்துவிழச் செய்த பாட்டு; தொழுதுகெட்ட தமிழினத்தார் நிமிர்ந்து நிற்கத் துணிவுதனை உணர்ச்சிதனைத் தந்த பாட்டு; பொழுதுபட்டுப் போனாலும் உணர்ச்சி பட்டுப் போகாமல் நிலைத்திருக்கும் புலவன் பாட்டு. தமிழ்மொழியைத் தமிழ்மகனைப் பழித்து ரைக்கும் தருக்குடையார் முதுகெலும்பை நொறுக்கிக் காட்டும் அமிழ்தனைய பாட்டுரைத்தான்; சினந்தெ ழுங்கால் அன்னைவந்து தடுத்தாலும் விடவே மாட்டேன் நிமிர்ந்தெழுந்து போர்தொடுப்பேன் எனவெ குண்டு, நினைத்தாலும் மெய்சிலிர்க்கும் பாட்டு ரைத்தான்; இமைகுவியா வீரத்தை எடுத்துக் காட்டி எக்களிக்கும் போர்ப்பாட்டை நமக்க ளித்தான். இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான்; இனிவுலகம் விழித்தெழவே அவ்விருட்டை வெருட்டுகிற வழிசொன்னான்; ஒளியுந் தந்தான்; விளக்கெடுத்து வெளிச்சத்தால் உலகைக் காணத் தெருட்டுகிற பாட்டுரைத்தான்; அந்தப் பாட்டைத் தெளிந்துணர மனமின்றிப் பாட்டிற் காணும் கருத்தெடுத்துப் பரப்புதற்கு முயற்சி யின்றிக் கண்மூடித் துயில்கின்றோம் உணர்வே இன்றி. மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்; கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக் களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்; விழைவெல்லாம், பாவேந்தன் எண்ண மெல்லாம் வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால் நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம் நொந்தழிந்து போகானோ? நன்றே சொல்வீர். பாரதிக்குத் தாசன்தான் எனினும் அந்தப் பாவலனை விஞ்சிநிற்கும் பாட்டு வேந்தன் காருதிர்க்கும் மழைபோலப் பொழிந்த பாட்டுக் கற்பனைக்கு நிகரேது? பாடல் தந்த சாறெடுத்துக் குடித்தவர்தாம் உண்மை காண்பர்; சாற்றிடுவர் அவனுலகப் புலவன் என்றே; வேறெடுத்துக் குடித்தவரோ புழுதி வாரி வீசிடுவர் மயங்கிமிகத் தூற்றி நிற்பர். வங்கத்திற் பிறந்திருப்பின், இலக்கி யத்தை வளர்த்து வருங் கேரளத்திற் பிறந்திருப்பின்; எங்கட்குத் தலைவனவன் மேலை நாட்டில் எங்கேனும் பிறந்திருப்பின் அங்கு வாழ்வோர் சிங்கத்தை நிகர்கவிஞன் புகழைப் போற்றிச் சிறப்பனைத்தும் உலகெங்கும் செப்பிச் செப்பிப் பொங்கித்தம் உளங்களிப்பர்; தன்னே ரில்லாப் புலவனிவன் தமிழ்நாட்டிற் பிறந்து விட்டான். ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டின் வரிக ளெல்லாம் அணிவகுத்து நிற்கின்ற படையின் கூட்டம்; சீர்ப்பாட்டைத் தொட்டதொட்ட இடத்தி லெல்லாம் சீறியெழும் உணர்ச்சியைத்தான் காணல் கூடும்; வேர்ப்பாட்டாம் அவன்பாட்டு விளைத்தி ருக்கும் வீரமிகும் உணர்ச்சிக்குக் குறைவே யில்லை; சாப்பாட்டுக் கலைந்துவரும் நம்மி டந்தான் சற்றேனும் உணர்ச்சியிலை மான மில்லை. மானமெனும் ஓருணர்ச்சி இருந்தி ருப்பின் மதிகெட்டுத் தமிழ்மொழியைத் தமிழர் நாட்டில் ஈனமுற எதிர்ப்போமா? நமக்கு முன்னே எதிர்ப்பிருக்க விடுவோமா? இசைய ரங்கில் வானமுதத் தமிழிருக்க அதைவி டுத்து வந்தமொழிப் பாடல்களைப் பாடு வோமா? ஏனுயர்வு தமிழ்க்கில்லை தமிழர் நாட்டில்? இனியேனும் மானத்தைக் காப்போம் வாரீர். பாவேந்தர் விழா, உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர். 25.8.1979 45. ஞாயிறு போற்றுதும் தென்பால் உளது, தேன்வளர் சாரல் மென்கால் உலவும் திண்கால் ஆரம் குதிதரும் அருவி மருவிய மாமலை மதியந் தவழும் பொதியம் ஒன்று; வடபால் உளது, வானுயர் கொடுமுடி தொடருங் கருமுகில் படருஞ் சாரல் உறைதருந் தண்பனி நிறைதரும் மாமலை பரிதியை மறைக்கும் பனிமலை ஒன்று; பெருமலை இரண்டும் ஒருமலை யாக்கக் கருதிய ஒருசிலர் உறைபனி கொணர்ந்து தென்றல் தவழும் குன்றின் தலையில் அன்றவர் வைத்தனர்; அடடா என்றனர்; பனியால் நடுக்குறும் பயனே கண்டனம்; இனிய தென்றலும் எழில்நலங் குறைந்தது; விடுத்தஅப் பனிதான் விரைந்திவண் விலக நடுக்கிய பனியின் நலிவும் அகல ஒரு நூற்றாண்டின் முன்னர் ஒருநாள் மறைமலை என்னும் மறுபெயர் பூண்டு கடலலை மோதும் கரைபெறும் மூதூர் இடமகல் நாகை எனும்பெயர்ப் பட்டினத் தெழுந்ததோர் ஞாயிறு கரைந்தது வெண்பனி; தொழுதனர் மாந்தர் தோன்றுசெங் கதிரை; இரியா இருளை இரியச் செய்வான் பெரியார் அண்ணா பெரும்பணி புரிநாள் இடையறா அப்பணி இடையூ றின்றி நடைபெறப் பேரொளி நல்கிய தக்கதிர்; இருளால் மறைபடும் இனமொழி உணர்வுகள் தெரிதர லாயின தெளிந்தனம் யாமே; தெளிந்தனம் ஆதலின் குழைந்துள பனியில் விழுந்தினி அழியோம் விழிப்புடன் நடப்போம்; விழியொளி பெற்றும் வீழ்ந்ததில் மூழ்கின் பழிபெறும் எம்மினும் இழிந்தவர் இலையால்; விழியுளார் படுகுழி வீழ்வதும் உண்டோ? ஒருகால் உடையவன் ஊன்றுகோல் பெறலாம் இருகால் உடையோன் எவனதை விழைவான்? வளமிலாமொழிகள் வருமொழிச் சொற்களைக் கொளலாம் அதனாற் குற்றமொன் றில்லை; உயர்தனிச் செம்மொழி ஒப்பிலாத் தமிழ்மொழி அயன்மொழிச் சொற்களை அணுகுதல் முறையோ? முட்டிலாச் செல்வர் மற்றவர் பாற்கடன் பெற்றிட முனைதல் பேதைமை யன்றோ? அதனால் சந்தனப் பொதியச் செந்தமிழ் மாமலை தந்தருள் தென்றலில் தனிநடை பயில்வோம்; தளர்நடை தவிர்த்துத் தனிநடை கொடுத்த வளரிளங் கதிரை வாயுற வாழ்த்துவம்; பலமொழி பயின்றும் பைந்தமிழ்ச் சோலையுள் உலவிய தென்றலை உள்ளுறப் போற்றுவம்; இசைத்தமிழ் சுவைத்திட ஈகுவர் பெரும்பொருள்; நாடகத் தமிழ்க்கும் நல்குவர் அவ்வணம்; இயற்றமிழ் எனினோ ஈயார் ஒருபொருள்; மயற்படும் மாந்தர்தம் மதிதான் என்னே! இந்நிலை நிலவிய இம்மா நிலத்தில் அந்நாள் வெண்பொன் முந்நூ றளித்திட இயற்றமிழ் மதிப்பை ஏற்றிய புலவன், செயற்றிறம் புரிந்து செந்தமிழ் வளர்த்தவன், கொள்கையிற் பிறழாக் குணக்குன் றவனைக் கள்ளவிழ் மலர்கொடு கைகுவித் தேத்துவம்; மறைமலை என்னும் மறையா மலையை நிறைதர நெஞ்சினில் நிறுத்துவம் யாமே; செறிபுகழ்ச் செந்தமிழ் செழித்திட அவன்றன் நெறியறிந் தொழுகுவம் நிலைபெறும் பொருட்டே. 27.11.1976 46. மீண்டது பொற்காலம் பண்சுமந்த பாட்டொலிபோல், அருவி பாடப் பனிமலரும் சந்தனமும் சூழ்ந்து நிற்க விண்சுமந்த முகில்தவழ்ந்து துளிகள் தூவி விளையாடும் தண்பொதியம் தந்த தாயைக் கண்சுமந்த கருமணியைத் தமிழைத் தேனைக் கனிசுமந்த சுவைச்சாற்றைத் தூய்ம னத்துக் கண்சுமந்த பெரும்புலவீர்! நல்லீர்! கைகுவித்து நல்வரவு கூறு கின்றோம். கண்ணுதலோன் தலைமைகொளப் புலவர் கூடிக் கழகமென ஒருமூன்று நிறுவி ஆங்குப் பண்ணுறவே பசுந்தமிழை வளர்த்து நிற்கப் பாண்டியரின் துணையோடு வளர்ந்த சங்கம் மண்ணிடையே இலக்கியங்கள் இலக்க ணங்கள் வளமுறவே பெருகிவர ஆய்ந்த தென்பர்; எண்ணரும்அப் பொற்காலம் மீண்டும் இங்கே எழுந்ததெனப் புலவர்குழு தோன்றக் கண்டோம். அன்றிருந்த புலவரெலாம் ஒன்று கூடி அன்னைமொழி வளர்வதற்கு வழிகள் கண்டார்; ஒன்றுபடு கருத்தினையே மொழிந்து நின்றார் உயர்வுற்றார் தமிழ்மொழியின் உயர்வுங் கண்டார்; இன்றவர்போற் புலவர்பலர் இணைந்து நிற்கும் ஏற்றத்தைக் காணுகின்றோம் மகிழ்வுங் கொண்டோம்; என்றுமுள தென்றமிழ்க்கு மேன்மை ஒன்றே இனிவருமென் றெண்ணிமனங் களித்து நின்றோம். கார்முகிலின் வருகையினால் மயில்கள் ஆடும் கருவானில் மழைவரலால் பயிர்கள் கூடும் ஏர்முனையின் வருகையினால் நிலம்சி ரிக்கும் எழில்வண்டின் வருகையினால் மலர் சிரிக்கும் ஊர்மதியம் விண்வரலால் இன்பம் பொங்கும் உயர்புலவீர் நும்வரவால் எங்கள் நெஞ்சம் கூர்மகிழ்வு கொண்டின்பம் பெருக நின்றோம் குழுமிவரும் தமிழ்ப்பெரியீர் வருக வாழ்க! பாரெல்லாம் தமிழ்நெறியே செழிக்க வேண்டும் பல்வகைய புதுநூல்கள் தோன்ற வேண்டும் ஊரெல்லாம் புலவர்தமைப் போற்ற வேண்டும் உயர்வதனால் தமிழ்மொழிக்குச் சேர்தல் வேண்டும் சீரெல்லாம் மேவிவர வலிமை கொண்ட செயற்குழுவாய்ப் புலவர்குழு வளர்தல் வேண்டும் பேரெல்லாம் பெற்றபெரும் புலவீர் வாழ்க! பேணுமுயர் நாடுமொழி வாழ்க! வாழ்க! (காரைக்குடிக்கு வருகைதந்த தமிழகப் புலவர் குழுவிற்கு வரவேற்பு) 18.10.1969 47. வாழ்க முச்சங்கம் அப்பனைத் தாடி யென்றும் அம்மையை மம்மி என்றும் செப்பிடுந் தமிழர் நாட்டிற் செந்தமிழ் உணர்ச்சி நெஞ்சில் எப்படி வேர்விட் டூன்றும்? எப்படித் தழைக்கும்? பூக்கும்? இப்பழி சுமந்தா ராகி இருக்கின்றார் தமிழ ரிங்கே. எச்சங்கம் ஊதினாலும் இருவிழி திறவா ராகிப் பச்சிளம் பிள்ளை போலப் பள்ளிகொண் டுள்ளா ரென்றே இச்செயல் தீர்வான் வேண்டி எழுச்சிகொள் புலிப்போத் தன்னார் முச்சங்கம் ஒன்று கண்டார் முந்துறும் ஆர்வத் தாலே. தோன்றுமுச் சங்கம் வாழ்க தொடங்கியோர் உள்ளம் வாழ்க ஈன்றதாய் மொழியைக் காக்கும் எழுச்சியை வளர்த்து வாழ்க ஆன்றவர் போற்றும் வண்ணம் அரியநற் பணிக ளாற்றி மூன்றெனுந் தமிழைக் காத்து மொய்ம்புடன் வாழ்க நன்றே. (சென்னையிலமைந்த முச்சங்கத்திற்கு வாழ்த்து) 48. தமிழின் செம்மை எண்ணி லடங்காத எத்தனையோ நன்மொழிகள் மண்ணிற் பிறந்து வளமையுறாக் காலத்தே தன்வளமை காட்டித் தனிப்பெருமை கொண்டிலங்கிச் சொன்மரபு மாறாமல் தூய நிலைநாட்டி வாழ்க்கைப் பெருநிலத்தை வளமாக்கிச் செம்மைதனைச் சேர்க்கப் பொருள்நூலைச் செப்பிப் பெருமையொடு செப்பமுறச் செய்தமையால் செந்தமிழென் றோதினரோ? அப்பெருமை யாரே அறிந்துரைக்க வல்லார்கள்? மெய்யுணர அன்புணர மேன்மைத் திறமுணர உய்வகைகள் தேர்ந்தே உளந்தெளிய வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுத்துத் துன்பமெனும் பேழ்வாய் எரிநரகில் பேதுற்று வீழாமல் இம்மையினில் காக்கும் இணையில்லா ஓர்மறையால் செம்பொருளைக் காட்டுவதால் செந்தமிழென் றோதினரோ? நூல்மறைந்து போனாலும் நுண்மாண் நுழைபுலத்துக் கால்மறைந்து போகாமல் காக்கும் அகத்தியனும் பல்காப் பியந்தோன்றப் பாட்டு நெறியுரைக்குந் தொல்காப்பி யனென்னுந் தூயோனுந் தோன்றியிங்கு நம்மொழியைக் காப்பதற்கு நல்வரம்பு கட்டிஅதைச் செம்மையுறச் செய்தமையால் செந்தமிழாக் கண்டனரோ? ஆரியம்போற் பேச்சற் றழிந்து சிதையாத சீரிளமை கண்டவர்கள் செம்மைமொழி என்றனரோ? நீரால் நெருப்பால் நிலைகுலைந்து போகாமல் சீராய்த் திகழ்வதனால் செந்தமிழென் றோதினரோ? முந்தைத் தமிழ்கெடுக்க மூண்டெழுந்த நோக்கமுடன் எந்தத் துணைகொண்டிங் கெந்தமொழி வந்தாலும் நோவுக்கும் அஞ்சோம் நொடிப்பொழுதில் வீழ்கின்ற சாவுக்கும் அஞ்சோம் தமிழ்காப்போம் என்றெழுந்த அஞ்சலிலாக் கூட்டத்தை ஆளவந்தோர் தாக்கியதால் நெஞ்சிருந்து சிந்தி நெடிதோடுஞ் செங்குருதி பாய்ந்து தமிழ்மொழியாம் பைங்கூழ் செழிப்பதனால் ஆய்ந்தமொழி செந்தமிழென் றானதென நானுரைப்பேன்; ஆரியத்தார் ஆட்சிமுதல் ஆங்கிலத்தா ராட்சிவரை சீரழித்த ஆட்சிகளைச் செப்பத் தொலையாது; தேன்மொழியாந் தென்மொழியின் சீர்மை பரவிவர மீன்புலிவில் ஏந்திநல் மேலோர் துணைநின்று காத்ததிரு நாட்டிற் கதவு திறந்திருக்கப் பார்த்திங்கு வேற்றுப் பகைமொழிகள் உள்நுழைந்து நீக்கமற எங்கும் நிறைந்தாலும் நம்மினத்தார் தூக்கங் கலையாமல் சோர்ந்து கிடந்தாலும் நான்வணங்குந் தெய்வ நலமிக்க செந்தமிழ்த்தாய் தேன்வழங்கும் நாண்மலர்போல் என்முன் திகழ்கின்றாள்; அன்னை திருமுகத்தில் அணுவளவும் சோர்வின்றி என்னை வளர்க்கின்றாள் இவ்வுலகைக் காக்கின்றாள்; தெவ்வர் எவர்வரினுந் தென்மொழிக்குக் கேடில்லை; எவ்வெவர் சூழினும் ஏதும் இடரில்லை; ஆற்றல் குறையாமல் அம்மொழித்தாய் நின்றாலும் ஏற்ற இடமின்றி ஏனோ தவிக்கின்றாள்? சீர்மை குறையாமல் செம்மை சிதையாமல் நேர்மைபிறழாமல் நின்றாலும் அம்மகளை உற்றாரும் பெற்றாரும் உற்ற துணையாரும் அற்றாரைப் போல அலைய விட்டுவிட்டோம்; கல்வி தருங்கோயிற் கட்டடத்துட் செல்வதற்குச் செல்வி தயங்குகிறாள் செல்லும் உரிமையின்றி; மூவேந்தர் ஆண்ட முறைதெரிந்தும் செங்கோலைத் தாயேந்த இங்கே தடையுண்டாம்; அங்காடி சென்றுலவ ஒட்டாமற் சேர்ந்து விரட்டுகிறோம்; நின்றுமனம் ஏங்கி நிலைகலங்கச் செய்கின்றோம்; பாட்டரங்கிற் சென்றிருந்தால் பைந்தமிழ் கேட்பதிலை கூட்டுமொழிப் பாடல்களே கோலோச்சக் காண்கின்றோம்; எங்கெங்கு நோக்கினும் இங்கே புகுந்தமொழி அங்கங்கே ஆட்சிசெய் தார்ப்பரிக்கக் காண்கின்றோம்; செம்மை யுறுமொழிக்குச் சீரில்லை பேரில்லை; செம்மை யுறாமொழிக்குச் சீருண்டு பேருண்டு; பாலறியாப் பச்சைப் பகட்டு மொழிதனக்குக் கோலுரிமை ஈயுங் கொடுமை நிலைகண்டோம்; தாரமெனுஞ் சொல்லைத் தயங்காமல் ஆண்பாலாக் கூறும் மொழியுண்டு; கொங்கை எனுமொழியை ஆண்பா லெனவுரைக்க அஞ்சா மொழியுண்டிங் காண்பா வனென் றறிய வுணர்த்துகிற மீசை எனுஞ்சொல்லை மேதினியிற் பெண்பாலென் றாசையுடன் பேசும் அழகு மொழியுண்டு; செம்மை ஒருசிறிதுஞ் சேராச் சிறுமொழிக்கு அம்ம எனவியக்க ஆக்கம் பலவுண்டு; பண்டே திருந்தியநற் பண்புடனே சீர்த்தியையும் கொண்டே இயங்கிவரும் குற்றமற நின்றொளிரும் தூய்மொழியாம் தாய்மொழியைத் தொன்மைத் தனிமொழியைச் சேய்மையில் தள்ளிவிட்ட சேயாகி நிற்கின்றோம்; நற்றவத்தால் நம்நாடு நல்லோர்தம் கையகத்தே உற்றமையால் அன்னை உறுதுயரம் நீங்குமினி; எங்கெங்குந் தாய்மொழிக் கேற்றம் மிகக்காண்போம் இங்கினிநம் செந்தமிழ்க்கோர் ஏறுமுகம் ஈதுறுதி எங்குந் தமிழாகும் எல்லாந் தமிழாகும் பொங்கும் இனிமேற் பொலிந்து. (கவியரங்கம் - தருமபுரம் திருமடம், 13.05.1968) 49. தமிழில் மறுமலர்ச்சி கலிவெண்பா பூக்குஞ் செடிகொடியில் போதாய் ஒருமுறைதான் பூக்கள் மலரும்; புவியோர் மலர்ச்சியென்பர்; காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமலர் வாடி முடிந்துவிடின் மீண்டும் மலர்ச்சியிலை; மீண்டும் மலர்வதைத்தான் யாண்டும் மறுமலர்ச்சி என்று புகன்றிடுவர்; தெவ்வர் பலவகையாற் செய்துவிட்ட தீமைகளால் செவ்வையுற வாழ்ந்ததொன்று சீர்கெட்டு வாடியபின் மற்றுமொரு வாய்ப்பதனால் வாழ்வுயர்ந்து சீரடைந்தால் கற்றவர்கள் அந்நிலையைக் காணின் மறுமலர்ச்சி என்று மொழிவர் இதற்கொரு சான்றுரைப்பேன்; சென்று முகில்புகுந்து செல்லும் முழுமதிதான் தேய்ந்து குறைந்துவரும் தேய்ந்தாலும் மீண்டும்ஒளி தோய்ந்து வளர்ந்துவரத் தோன்றும் மறுமலர்ச்சி; காலத்தால் முந்துமொழி காப்பியங்கள் தந்தமொழி ஞாலத்து மூத்தமொழி நல்லறங்கள் பூத்தமொழி என்றெல்லாம் சான்றோர் இசைக்குமொழி செந்தமிழ்தான் அன்றிந்தத் தென்னாட்டில் ஆட்சி செலுத்தியது; எப்படியோ யார்யாரோ இந்நாட்டி னுட்புகுந்த தப்பதனால் எல்லாத் தவறுகளும் நேர்ந்துவிடப் புன்மைச் செயலுக்குப் புத்தியைநாம் ஒற்றிவைத்தோம் நன்மலர்ச்சி குன்றி நலங்கெட்டு வாடியதே! ஆனாலும் நல்லவர்தாம் நாட்டிற் பலர்தோன்றி மேனாளில் ஊட்டும் உணர்வதனால் தாய்மொழிக்கு நாட்டாட்சி வேண்டுமென நல்லுரிமைப் போர்புரிந்தோம் கேட்டாட்சி செய்தோர்தாம் கேளாராய் வந்தெதிர்த்தார்; தானே இயங்குந் தகுதிபெற்று வாழ்ந்தமொழி தேனே எனத்தக்க தெள்ளத் தெளிந்தமொழி வேற்று மொழிச்சொற்கள் வீணே கலந்தமையால் நேற்றுவரை தாழ்ந்து நிலைகுலைந்து வீழ்ந்தமையால் கண்ட மறைமலையும் கல்யாண சுந்தரரும் தொண்டு மனங்கொண்டு தூற்றலுக்கும் அஞ்சாது நாடோறும் பாடுபட்டு நல்ல தமிழ்வளர்த்தே ஈடேறச் செய்தார்கள்; ஈடில்லாச் செந்தமிழே மீண்டும் மலர்ச்சிபெற்று மேலும் உணர்ச்சியுற்று யாண்டும் மணம்பரவ ஏற்றம் மிகக்கண்டோம்; காஞ்சி புரத்தண்ணல் கற்ற அரசியலில் நீஞ்சி வரும்அறிஞர் நெஞ்சார்ந்த பேருழைப்பால் பாச்சுவையின் மேலாகப் பாரோர் சுவைத்து வரும் பேச்சால் எழுத்தால் பெறுமோர் மறுமலர்ச்சி நாடறியும் ஏடறியும் நல்லவர்தம் நாவறியும் கூடலர்தம் நெஞ்சறியும் கோல்கொண்டார் வீடறியும் எங்கள் தமிழ்மொழிக் கீதோர் மறுமலர்ச்சி எங்கும் பரவும் இனி. கவியரங்கம், திருப்பத்தூர், 8.6.1965 50. செந்தமிழ்ச்செல்வி கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங் கீழ்மதியை வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம் வண்டமிழைத் *தாளால் வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை; நின்குறிக்கோள் சூளாக் குறித்தனை; தொண்டுசெய் கின்றனை தூமொழியே செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும் செவிகுளிர நல்கிடும் அவ்விசை நாள்முழு தும்பெற நாடுகின்றோம்; மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி போலஇதழ் சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச் சுற்றுதுமே. நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை, நாண்மலரால் தொடைஎழில் காட்டுவை, தோகையுன் சாயலில் தோய்ந்துணரார் உடைஎழில் ஒன்றே உவந்தன ராகி உணர்விலராய்க் கடைவழி ஏகுவர் காரிகை உள்ளெழில் காண்கிலரே. புகழ்மலை உச்சியில் போற்றிட வாழ்ந்தவர் பூவுலகில் இகழ்நிலை எய்தினர் எம்மவர் என்றுளம் ஏங்குகையில் தகவுடன் மீண்டுந் தலைநிமிர்ந் தோங்கிடத் தாளெடுத்தே அகவிடுந் தோகையென் றாடவந் தாயெங்கள் ஆரணங்கே. முந்தையர் தந்தநன் னூல்மலர் மொய்த்ததன் தேனருந்திச் சந்தனத் தென்மலைச் சாரலின் செந்தமிழ் தந்தநலம் சிந்தையுள் தேக்கிநற் செவ்வழிப் பண்தரும் தும்பியென வந்திடுஞ் செந்தமிழ்ச் செல்விபல் லாண்டுகள் வாழியவே. 21.12.1976 51. காப்புப் பருவம் பன்னிருசீர் விருத்தம் கலவைகள் விலகிடத் தனிமொழி உலவிடக் கருதிய முதல்மகனாம் கலைபல தெரிவுறு மறைமலை யடிகளைக் கருதிவ ணங்கிடுவாம் குலமொழி அடிமுதல் தெளிவுறும் படிவளர் கூர்மதிப் பாவாணர் குளிர்மிகும் மலரடி வழிதரும் எனமனங் கொண்டுப ணிந்திடுவாம். உலகினில் முதன்முதல் நிலவிய மொழியெனும் உரைபெறுந் திருமகளாம் உயர்தனி மொழியென அயலவர் புகன்றிட ஒளிதரு செம்மகளாம் அலைபல எதிரினும் நிலைபெறும் கலைமகள் அமுதெனும் மொழியினளாம் அழகிய கழகமொ டுலவிய தமிழ்மகள் அணிநலம் புரந்திடவே. கதறபார் மனத்துணர்வை நற்பா படைத்துவளர் கவிவாணர் அடிப்பூவையும் கனலால் எரிந்துசிறை புகலால் மடிந்துமொழி கருகாது வளர்த்தோரையும் விற்போர் தொடுத்ததெனச் சொற்போர் நடத்திஉரம் விளைவாக உழைப்போரையும் விதிரா மனத்துணர்விற் புதிதாய்த் தழைத்துவரும் விழைவோடு தொழுதேத்துவாம் மற்போர் புரிந்துநம திப்பார் புரந்தவரின் மடிமீது வளர்ந்தமகளை மருவார் பகைத்தருகில் வருவார் பதைத்துவிழ மலைபோல நின்றமகளை முப்பா லருந்திநலம் தப்பா திருந்தவளை முதலாக வந்தமகளை முதிரா நலத்திளமை அதிரா தெடுத்துவரம் மொழியாளைப் புரந்தருளவே. (தமிழன்னை பிள்ளைத்தமிழ் என்ற தலைப்பில் தமிழரசு ஏட்டில் காப்புப் பருவமாக வெளிவந்த பாடல்கள்) 52. பாடிக்கொண்டேயிருப்பேன் பாடிக்கொண் டேயிருப்பேன் - என் பைந்தமிழைச் செந்தமிழை நான் - பாடிக் ஓடிக்கொண் டேயிருக்கும் ஊறுஞ்செங் குருதி ஓடா துறைந்தே ஓய்ந்திடும் நாள்வரை - பாடிக் கடும்பிணி கொடுஞ்சிறை கடுகி வந்தாலும் கலக்கிடும் வறுமைகள் காய்ந்திடும்போதும் இடும்பைகள் வந்தெனை எற்றிடு மேனும் எதையும் அஞ்சிடேன் என்றுமே துஞ்சிடேன் - பாடிக் பதவியும் பட்டமும் பணங்களுங் காட்டிப் பகட்டினும் எதற்கும் பணியேன் கைநீட்டி முதுமொழி என்மொழி முத்தமிழ் மொழியை மொய்ம்புறக் காத்திட முனைந்திடும் வழியைப் - பாடிக் (இக்கவிதையைப் படிக்கக் கேட்டவாறே கவியரசரின் உயிர் பிரிந்தது.) புதியதொரு விதி செய்வோம் 1. தமிழ் வாழ்த்து கற்பவர் நெஞ்சில் எல்லாம் களிப்பினை ஊட்டும் தாயே! முற்படும் மொழிகட் கெல்லாம் மூத்தவள் எனினும் நின்னைப் பற்றிய இளமை குன்றாப் பைந்தமிழ் அன்னாய் என்று சொற்றிடல் தவிர வேறு பற்றுகள் இல்லேன் அம்மா! - முடியரசன் 2. ஏடெடுத்தேன் பாட்டெழுத..... கலிவெண்பா சூடெடுத்த வெங்கதிரோன் சுட்டெரிக்குங் காரணத்தால் ஓடடுக்குஞ் சிற்றில் உலைபோலத் துன்புறுத்தத் தோடுடுத்த பூமலருஞ் சோலைக்குட் புக்கிருந் தேடெடுத்தேன் பாட்டெழுத, எல்லையிலா எண்ணங்கள் ஓரா யிரமாகி ஓயாக் கடலலைபோல் நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின் றொன்றைஒன்று முந்துவதால் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தேன்; பின்னர் நினைவெல்லாம் ஒன்றாகி மின்னல் ஒளிபோல மேலோங்கும் ஓருணர்ச்சி என்னுட் பளிச்சிட் டெழுந்து பரந்ததுகாண்; ஊற்றுப் புனல்போல ஊறிவரும் அவ்வுணர்ச்சி ஆற்றுப் பெருக்கேபோல் ஆர்த்தெழுந்து மேலோங்க மண்ணிற் பிறந்த மனநிலையை விட்டொழித்து விண்ணிற் சிறகடித்து விர்ர்ரென் றெழுவதுபோல் எங்கும் பறந்தேன்; இணையில்லா இன்பநிலை பொங்கித் ததும்பப் புதுநறவம் மாந்தி மயங்கிக் களித்தேன் மனம்மயங்கும் வேளை வயங்கித் திகழுமெழில் வட்ட முழுமதியம் ஆடிச் சிரிக்கும் அழகிகழைக் கூத்தியைப்போல் பாடித் தெருவலையும் பாடகியைப் போல்விளங்கக், கோலக் கருவானங் கூத்தன் விரித்துவைத்த நீலத் துகில்போல நின்றங்குக் காட்சிதரக், கண்டு களித்தோர் கையால் விசிறிவிட்ட மண்டுவெள்ளிக் காசுகள்போல் வான்வெள்ளிக் கூட்டங்கள் மின்னிக் கிடக்கஎழில் மேல்வானிற் கண்டிருந்தேன் என்னைத் தொடர்ந்துவரும் இன்பத்தை என்னென்பேன்! தேர்போகுங் காட்சியெனச் சேர்ந்தொன்றாய் ஊர்ந்துவரும் கார்மேகக் கூட்டங் கனத்த மழைபொழியத் தோகை மயிலானேன் துள்ளும் மனத்தகத்தே ஓகை மிகவாகி ஒவென்று கூவிக் குளித்தேன் அதனால் குதித்தேன் அகத்தே களித்தேன் அதுதான் கணக்கில் அடங்காது; நீரால் நனைந்தமையால் நெஞ்சம் மிகக்குளிர்ந்தேன்; ஆரா இனிமைதரும் அவ்வுலகில் நின்றபடி நீணிலத்தை நோக்க நினைந்தேன் அடடாஓ காணலுற்ற காட்சியினாற் கண்ணின் பயன்பெற்றேன்; பச்சைப் பசுங்கொண்டல் பாவிவரும் நீள்முகட் டுச்சிப் பனிமலைகள், ஓங்கு பெருவிலங்கல், தாவிக் குத்தித்துத் தடம்புரளும் வெள்ளருவி மேவித் திரண்டுருண்டு மேதியினில் ஓடிவந்து குன்றா வளஞ்சுந்து கோலங்கள் செய்துவரும் பொன்றாப் புனலாறு, பூமகளைப் போர்த்திருக்கும் பட்டாடை என்னப் படர்ந்திருக்கும் நெற்கழனி, முட்டாது தேன்சுரக்கும் மொய்ம்மலர்சூழ் பூஞ்சோலை, சோலைக் கனிகொறிக்கத் துள்ளும் அணிற்கூட்டம், வாலைப் பிடித்திழுத்து வம்புசெயும் வானரங்கள், கூவுங் குயிலினங்கள், கோல மயிலினங்கள் யாவும் இருவிழியால் யான்கண்டேன்; கண்டவற்றை ஓவியம்போல் ஒப்பற்ற காவியத்தில் ஆக்கஎழும் ஆவலினாற் பாட்டெழுத ஏடெடுத்தேன் அவ்வேளை, குன்றக் குறமகளோ? கோலக் கடலலைகள் நின்றலையும் நெய்தல் நிலமகளோ? ஆர்கலிசூழ் தண்மருதப் பெண்மகளோ? தாவுங் கொடிமுல்லைக் கண்மருவும் ஆரணங்கோ? கண்டறியேன் ஆரணங்கோ! கட்டழகுப் பெட்டகமாய்க் கண்வருங் காரிகையாய்ப் பொட்டழகுங் கார்கூந்தற் கட்டழகுங் கொண்டவளாய் வஞ்சி ஒருத்தியங்கு வந்தருகில் நின்றெனது நெஞ்சி லிடங்கொண்டாள் நின்றவளை நான்கண்டேன்; கொஞ்சுங் கிளிமொழியாள், கொவ்வைச்செவ் வாயிதழாள், விஞ்சும் எழில்கூட்டும் வேல்விழியாள், அன்னத்தை அஞ்சவைக்கும் மென்னடையாள், ஆடும் மயிலினத்தைக் கெஞ்சவைத்த சாயலினாள் என்னைக் கிரங்கவைத்தாள்; அன்னவளை இன்பமிகும் என்னவளைக் கையிரண்டும் மின்னவளை பூண்டவளை என்னுளத்தை ஆண்டவளை மாலை புனைந்து மணங்கொள்ள நான்நினைந்து சேலை நிகர்த்தவிழிச் சிற்றிடையாள் காதலையே நாடோறும் பாடி நலந்துய்க்க வேண்டுமெனுஞ் சூடேறி ஏடெடுத்துச் சொற்றமிழிற் பாட்டெழுதிக் கொட்டிக் குவித்தேன், குலமனைவி காதலையும் மட்டுப் படுத்தும் மனநிலையைத் தந்துவிட்டாள்; பிள்ளைக் கனியமுது பெற்றெடுத்தாள் ஆதலினால் உள்ளத்துள் எல்லாமவ் வோவியத்தின் நல்லுருவே பற்றிப் படர்ந்தென்னைப் பாசத்தாற் கட்டுறுத்திச் சுற்றி வளைத்துள்ளம் சொக்கிவிடச் செய்ததுகாண்; செக்கச் சிவந்திருக்குஞ் செவ்விதழின் வாய்மலர்ந்து பொக்கைச் சிரிப்பொன்று பூத்திருக்கும் அம்முகத்தில்; விஞ்ஞானம் மேலோங்கி வீறிட் டெழும்நேரத் திஞ்ஞாலம் நான்பிறந்தேன் என்னுங் கருத்தோடு விண்ணிற் சிறகடித்து வெட்ட வெளிபறக்க எண்ணிக் குதிக்க எழுவான்போற் கைகால்கள் ஆட்டிப் படைக்கும் அழகெல்லா மென்மனத்தை ஆட்டிப் படைத்தனகாண்; ஆன்றவிந்த சான்றோர்க்கும் சொன்னால் விளங்காத துய்யமறை போலுமொழி என்னால் மறக்க இயலுவதோ? அம்மொழியைக் கேட்காத காதென்ன காதோ? திருமுகத்தைப் பார்க்காத கண்ணாற் பயனுண்டோ? அம்மகவு கால்நலிந்து தள்ளாடக் கைகள் அசைந்தாட மேல்நடந் தென்னருகில் மெல்ல வரும்போது யார்நடம் ஒப்பாகும்? ஓர்நடமும் ஒப்பில்லை; சீர்நடையன் என்தோளைச் செங்கையாற் றீண்டுங்காற் சொல்லரிய இன்பமெனைச் சூழ்ந்துவரும்; தோள்பற்றி மெல்லிதழாற் கன்னத்தின் மேற்பதித்த முத்திரைகள் அப்பப்பா பேரின்பம்! அன்றைக் கவள்தந்தது- ஒப்பப்பா என்றால் ஒருநாளும் ஒவ்வாதே; இவ்வண்ணம் யான்கண்ட இன்பமெலாம் ஏடெடுத்துக் கைவண்ணங் காட்டிக் கவிபுனைந்தே இன்புற்றேன்; ஆனாலும் என்மனத்தே ஆர்வம் அடங்கவிலை ஏனோ எனமயங்கி ஏங்கிக் களைத்திருந்தேன்; ஒன்றென் மனத்தே உருவாகக் கண்டுணர்ந்தேன் என்றும் நிலைக்கும் எழில்மேவுங் காப்பியமே ஒன்று படைக்க உளங்கொண்டேன் ஏடெடுத்தேன் அன்றுகடன் காரர் அனைவருமே வந்துநின்றார்; ஒன்றும் புரியவிலை ஓர்வரியும் ஓடவிலை என்று தொலையுமடா இக்கடன்கள் என்றுழன்றேன்; அங்கே ஒருத்தி அரியகுரல் தந்துநின்றாள் ஈங்கே வறுமை இருக்கும் வரை காப்பியமோ? ஏழைஎனச் செல்வரென எத்தரெனப் பித்தரெனப் பாழும் உலகிற் படைத்துவைத்த தீங்குகளும், தாழ்ச்சி உயர்ச்சி தகுபிறப்பில் உண்டென்று சூழ்ச்சித் திறனுடையார் சொல்லிவரும் நீதிகளும், ஓயாமல் என்றும் உழைப்போரும் அவ்வுழைப்பாற் சாயாமல் நின்று சதிசெய்து வாழ்வோரும் இன்றும் இருப்பதற்கே எண்ணும் மடமைகளும் கொன்று குவிப்பதற்கே கூர்வாள்போல் ஏடெடுத்துப் பாட்டெழுத வேண்டுமடா பாடுந் தமிழ்மகனே வேட்டெழுந்து பாவரைந்தால் வெங்கொடுமை மாளுமடா, நாட்டைக் களமாக்கி வேட்டைத் தொழில்புரிந்த கூட்டத்தார் செய்யுங் கொடுமைஎலாம் போய்மறைய மண்ணோடு மண்ணாய் மடிந்துவிடப் பாட்டெழுது! கண்ணாக எண்ணிக் கடமைசெயுந் தொண்டர்களை ஆளும் பொறுப்பில் அமர்த்தி அவர்கையில் நாளுமுயர் செங்கோல் நடாத்தக் கொடுத்துவிடு, நல்லாட்சி செய்கின்ற நல்லவர்க்குத் தென்பூட்டச் சொல்லாட்சி செய்யுந் தொழிலோனே பாட்டெழுது, செந்தமிழ்க்குத் தீங்குவரின் சீற்றமொடு பாட்டெழுது, நொந்தவர்க்கு வாழ்வுதர நூறுவகைப் பாட்டெழுது, மக்களுக்கு வேண்டும் மனவளத்தைப் பாடுகநீ, தக்க மனவளத்தைத் தக்கவைக்கப் பாட்டெழுது சாண்வயிற்றுப் பாட்டுக்குத் தக்கபடி பாட்டெழுதி மாண்பழித்துக் கொள்கைகளை மாற்றியிங்குப் பாடாதே, புத்தம் புதுவுலகம் பூத்து மலர்ந்திடவும் தத்தங் கடமைகளைத் தாழ்வின்றி ஆற்றிடவும் ஏழைமை நீங்கிடவும் இன்னல் தவிர்ந்திடவும் தோழமை எங்குந் தொடர்ந்துலகம் ஓங்கிடவும் எங்கள் தமிழொன்றே ஈங்கரசு செய்திடவும் பொங்கும் முரசொலிக்கப் பூரித்த தோளுயர்த்திப் பாடடா ஏடெடுத்துப் பாரடா ஏறெடுத்து, நாடடா ஈதுனது நாடடா பாடடா, பாடும்போ துன்னைப் பகைப்பவர்தாம் யாரடா? ஓடும்இனம் அல்லோம் உருத்தெழுந்தாற் போரடா! போரெடுத்தால் எப்பகையும் போய்மடியும் ஈங்குன்னை யார் தடுக்க வல்லார்? எழுந்திங்கு நின்கருத்தைப் பாடடா பாடென்று பாவை உரைத்ததனால் ஏடெடுத்தேன் பாட்டெழுத இன்று. முத்தமிழ் இலக்கிய மன்றம் திருக்கழுக்குன்றம் 25.4.1967 3. புதியதொரு விதிசெய்வோம் விழிசிவப்பா தணல்சிவப்பா என்று நம்மை வியப்புறுத்தும் உலைக்களத்தில் பற்றும் செந்தீ குழிவயிற்றின் பசிக்கனல்போல் எரிய அங்கே கொல்லனவன் உலைத்துருத்தி ஊதுங் காற்று தொழில்புரிவோன் பெருமூச்சுப் போல வீசத், தூக்கிவந்த வல்லிரும்பை நெகிழக் காய்ச்சி எழிலுறவே சம்மட்டி கொண்டு தாக்கி எண்ணியவா றுருவுபெற ஆக்கி வைத்தான். உடலுயிரைப் பொருளாகக் கருதா திந்த உலகத்தை உருவாக்க முயன்ற தோள்கள் கொடுமைகளை மிடிமைகளை வறுமை தந்த கோணல்களை எத்தனைநாள் சுமக்கும்? மேலும் அடிமையெனப் படிகளென ஆக்கி வைத்தால் அத்தனையும் எத்தனைநாள் உளம்பொ றுக்கும்? இடியெனவே முழங்காதோ அந்த வுள்ளம்? என்றேனும் நிமிராவோ அந்தத் தோள்கள்? வறுமையெனும் உலைக்களத்தில் அடுக்கி வைத்த மதம்சாதி பட்டினிநோய் மூடம் என்ற கரிகளிலே உணர்ச்சியினை மூட்ட, வீசும் காற்றெனவே பெரும்புரட்சி தோன்ற, அங்கே உரிமையெனும் போராட்டச் செந்தீ பற்றும்; *உறிஞ்சிவரும் இரும்புகளை அதனிற் காய்ச்சிச் சரிவுபடாப் பொதுவுடைமைச் சட்டம் என்ற சம்மட்டி யாலடித்தால் உருவ மாகும். போராடும் உலகத்தைச் சாய்க்க வேண்டின் புதியதோர் உலகத்தைப் படைத்தல் வேண்டும்; நீரோடு நிலம்நெருப்பு வானம் காற்று நிறைபொருள்கள் தனியுடைமை ஒருவர்க் கென்றால் வேரோடு சாய்க்கின்ற துணிவு வேண்டும்; விளையாட்டுப் பேச்சாலே பயனே இல்லை; யாரோடும் பகைவேண்டாம்; ஒன்று பட்டால் யாவுமிங்குப் பொதுவாகும் புதுமை பூக்கும் இருட்டுலகில் விடிவெள்ளி எழுதல் கண்டோம் இனியதொரு வைகறையும் வருதல் கண்டோம் சுருட்டுபவர் எவரென்று தெரிந்து கொண்டோம் தூங்கிவந்த விழியிமைகள் திறந்து கொண்டோம் உருத்துவரும் செங்கதிரோன் எழுந்து விட்டான் உலகமெலாம் தெளிவுபெற விளங்கிற் றிங்கே பொருட்டுறையில் பிறதுறையில் சமமே கண்டு புனிதமுடன் அதைஎங்கள் உயிர்போற் காப்போம். (ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரில் வெளிவந்தது) 14.3.1980 4. பகடைக் காய் ஏட்டளவில் பாட்டெழுதிப் புகழ்ச்சி சொல்லி ஏற்றமெலாம் எடுத்துரைத்து வியந்து கூறிக் காட்டுகிறோம் உழவன்றன் பெருமை எல்லாம்; கண்கட்டு வித்தையினால் கால மெல்லாம் ஒட்டுகிறோம் கற்பனையில் உலவு கின்றோம் உண்மையினைத் திரையிட்டு மூடு கின்றோம்; வாட்டமுடன் அவன்வாழுங் குடிலுக் குள்ளே வளர்துயரைத் துடைப்பதற்கு மறந்து விட்டோம். உழுகின்றான் விதைக்கின்றான் நீரைப் பாய்ச்சி உழைக்கின்றான் காக்கின்றான் ஆனால் நாளும் அழுகின்றான் உணவின்றி; பெற்ற மக்கள் அலைகின்றார் என்புருவில்; பேசாத் தெய்வம் தொழுகின்றோம் முப்பொழுதும்; பேசுந் தெய்வம் துணியின்றி உணவின்றிக் கந்தல் கட்டிப் பழுதுண்ட சிலைகளெனத் திரியக் கண்டோம்; பாடுகின்றோம் அவன்பெருமை என்னே விந்தை! உழுகின்ற காளைக்கு வைக்கோ லேனும் ஒருசிறிது கிடைத்து விடும்; வாழ்நா ளெல்லாம் உழுதொழிலில் கழிக்கின்றோன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாதென் றுலகஞ் சொல்லும் பழமொழியைக் கேட்டதினிப் போதும் போதும் பாரிலவன் வாழ்வினையும் பெருக்கல் வேண்டும் முழுமையொடு வாழவழி வகுத்தல் வேண்டும் முயலாது கழித்தலினி வேண்டா வேண்டா கைகட்டி உலகந்தான் உழவன் பின்னே கடுகிவரும் எனவுரைத்தோம் நன்று நன்று; கைகட்டி வாய்பொத்தி உண்மை வாழ்வில் கால்வளைத்து நிற்பவன்யார்? உழவன் அன்றோ? பொய்கட்டி விடுவதெலாம் போதும் போதும்; புலையனென அவன்வாழ்வைப் பொசுக்கு கின்றோம்; மெய்தொட்டுப் பயிலஇனும் கூசு கின்றோம் மேலென்றுங் கீழென்றும் பேசு கின்றோம். ஏர்தொட்டுத் தொடிப்புழுதி *கஃசாச் செய்தே எருவிட்டு நீர்பாய்ச்சிக் காத்து நின்று பார்கெட்டுப் போகாமல் உலகில் எங்கும் பசிப்பிணியை ஒட்டுகிறான் அவன்க ழுத்தைக் கூர்பட்ட கதிரரிவாள் கொண்டு வெட்டக் கூசுகிலோம்; நெஞ்சுருகப் பார்த்த கண்கள் நீர்சொட்ட அவன்வாழுங் குடிலை யெல்லாம் நெருப்பூட்டி எழும்புகையில் உலவு கின்றோம். அரசியலை அரங்காக்கிச் சூதும் வாதும் ஆடுகின்ற பேர்வழிகள் உழவன் றன்னை உரியஒரு காயாக்கி உருட்டு கின்றார் உணராமல் அவ்வுழவன் உருளு கின்றான் உருளுமவன் ஒருபயனுங் கண்ட தில்லை; உருட்டுபவர் போரேறி மேய்தல் கண்டோம்; அரசியலும் அவனுழைப்பை உறிஞ்சி வாழும் அட்டையென மாறியது கெட்ட காலம்! வீழ்கின்ற புனலனைத்தும் உரிமை யாக்கி விலைகொடுத்துத் தனியுடைமை என்ப துண்டா? சூழ்கின்ற காற்றதனைச் சுடுநெ ருப்பைச் சொத்துடையார் தனியுடைமை ஆக்க லுண்டா? பாழ்வெளியாம் வானத்தைப் பாரி லெங்கும் பணங்கொடுத்துத் தனியுடைமை செய்த துண்டா? வாழ்பூதம் அய்ந்தனுளும் நிலத்தை மட்டும் வன்புடையார் தனியுடைமை செய்த தேனோ? (கவியரங்கம் செய்யாறு, 17.1.1969) 5. ஏர்நின்றால்..... நாடாள்வோர் செங்கோலும் உழவன் ஏந்தும் நலமிக்க கோலைத்தான் நோக்கி நிற்கும்; வீடாளும் இல்லறத்து மாந்தர் தாமும் விளைவுசெயும் உழவனைத்தான் நோக்கி நிற்பர்; கூடாது வாழ்க்கையென வெறுத்த காவிக் கோலத்தர் துறவுக்கும் அவனே காவல்; ஓடாமல் ஏர்நின்றால் உலகம் நிற்கும் உலகளிக்கும் இறைவனுக்கும் பூசை நிற்கும். ஏர்நடக்கப் பார்நடக்கும்; இல்லை என்றால் எதுநடக்கும்? பசிநடக்கும் பிணிந டக்கும் போர்நடக்கும் கொலைநடக்கும் பொய்ந்ந டக்கும் பொல்லாத அத்தனையும் நடக்கும் அன்றோ? சீர்நடத்தும் பாவலன்றன் செய்யுள் எல்லாம் *செய்யுள்நடும் உழவனுக்குப் பின்பாட் டாகும்; கூர்தொடுத்த ஏர்முனைக்குப் பின்னே சென்று கும்பிட்டுத் திரிந்தேதான் உலகம் வாழும். கவியரங்கம் செய்யாறு 17.1.1969 6. பொதுமை காண்போம் பதினான்கு சீர் விருத்த்தம் வறுமை மிக்கு வலிமை கெட்டு வறியார் வாடும் போதிலே வலியர் மட்டும் வளமை யுற்று வளர்வ தென்ன நீதியோ? பொறுமை யற்றுப் புலிநி கர்த்துப் பொதுமை காணும் போரிலே புரட்சி தோன்றும் புதிய போக்கில் புரளி என்ன நேருமோ? இருமை போக ஒருமை காண *இறைவன் சொற்ற பாட்டிலே இடரி லாத வழிகள் காண இறங்கி வாரும் நாட்டிலே வறுமை போக வளமை சேர வழிகள் யாவை? தேடுவோம் வளரும் நாடு பொதுமை யாகி வாழ்க என்று பாடுவோம். 7. பூக்கட்டும் புதுமை நெறிபிறழா உழைப்பதனைப் பெருக்கி நின்றால் நேரியநல் லுரிமைகளை வழங்கல் வேண்டும்; உரிமைகளைப் பறித்தடக்க எண்ணு வீரேல் உணர்ச்சிகளே பொங்கிஎழும் புரட்சி ஓங்கும்; சரிபிழைகள் தெரியாத நிலைமை தோன்றும்; சமர்வருமுன் பெருகட்டும் உரிமை யாவும் சொரிமழைபோல் பொழியட்டும் உழைப்பை மாந்தர்; சுடர்விட்டு மிளிரட்டும் நமது நாடு சிரிக்கட்டும் மக்களெலாம் மகிழ்வு கொள்வோம்; சிரிப்பளவில் நில்லாமல் உழைப்பைக் கொஞ்சம் பெருக்கட்டும்; பெருகியதாற் பெற்ற இன்பம் பெருகட்டும் நிலைக்கட்டும்; சோம்ப லைத்தான் முறிக்கட்டும்; முறிக்கியபின் உழைப்பு நாட்டில் முளைக்கட்டும்; முளைவிடுமேல் வாழ்வும் ஓங்கும்; இருக்கட்டும் நமக்கென்ன என்றி ருந்தால் இனிக்கெட்டுப் போவதலால் வழியே இல்லை. பூக்கின்ற மலர்களெலாம் பூக்கள் அல்ல புதியனவாய் வருவவெலாம் புதுமை அல்ல ஈர்க்கின்ற மணம்பரப்பும் மலர்க ளைத்தாம் எல்லாரும் போற்றிடுவர்; நலம்ப ரப்பிக் காக்கின்ற புதுமையைத்தான் ஏற்பர் சான்றோர்; காகிதப்பூப் போல்வீரியும் புதுமை எல்லாம் போக்குதலே அறிவுடைமை; மயங்கி நின்று புதுமைஎனும் பேராலே வீழ்தல் வேண்டா. செங்கதிரால் தாமரைகள் சிரித்தி ருக்கும் சேர்மதியால் அல்லிமலர் வாய்சி ரிக்கும் பொங்கிவரும் மழைவரவால் பயிர்சி ரிக்கும்; பொய்யாத மொழிக்குறளால் புலம்சி ரிக்கும்; துங்கமுறச் சிரித்திருக்கும் அறிவால் ஆய்ந்து தூயனவன் சொல்வழியில் பொதுமை காண இங்கினிநாம் முயலுவமேல் புதுமை பூக்கும் புல்லடிமை தேய்ந்துசம நிலையே வாய்க்கும். 8. யாவும் பொதுமையடா கோடி தொகுத்தபினும் மாடி எடுத்தபினும் கூட வருவதொன் றில்லையடா வாடி வதங்கிவிழும் ஏழை எளியவர்க்கு வாழ்வு வழங்குவது நல்லதடா வாழத் துடிப்பவனை நாளும் உழைப்பவனை வாழ்வைச் சுரண்டுவது கொள்ளையடா கோழை எலும்புகளும் கூர்மை யடைந்துவிடின் *கோலைத் தடுப்பவரும் இல்லையடா பாழும் வயிற்றுணவு பஞ்சின் உடுக்கையிவை பாரிற் பிறந்தவர்க்குப் பொதுமையடா ஏழைக் கிவையிரண்டும் இல்லை விதிப்பயனாம் என்று மழுப்புவது மடமையடா தேவை யளவறிந்து யாவும் அடைந்தபினும் தேடி முடக்குவது குற்றமடா யாவும் பொதுமையென நீயும் உணர்ந்துநட யாரும் நமதருமைச் சுற்றமடா 10.3.1982 9. உலகை மாற்றுவோம் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக் காட்டுவோம் நமக்குள் நாமே வேறு பட்டு நாலு பக்கம் போகிறோம் நாதி யற்றுக் குனிந்து நெஞ்சம் நலிந்து நாளும் சாகிறோம் நமக்குள் வேறு பாடு காணல் இல்லை யென்றே சொல்லுவோம் நமது கூட்டம் நிமிர்ந்து சொன்னால் நாளை உலகை வெல்லுவோம். உலகம் போகும்போக்கை யிங்கு மாற்றுவோம் உடைமை யாவும் பொதுமைஎன்று சாற்றுவோம். 14.3.1982. 10. துன்பத் துடிப்பு விரல்துடித்தால் யாழ்நரம்பில் இசையைக் கூட்டும்; விறலியரின் கால்துடித்தால் நடனங் காட்டும்; திறல்படைத்த சிற்பியின்கை உளிது டித்தால் தேவரையுங் கல்லுக்குள் அடக்கிக் காட்டும்; அருள்பழுத்த கலைஞன்றன் மனந்து டித்தால் அரியகலை பலகாட்டும்; சிந்தித் தாயும் திறல்படைத்த சிந்தனையார் மனந்து டித்தால் சீர்மைமிகும் புத்துலகைப் படைத்துக் காட்டும். கற்பனையில் உலவுகவி மனத்து டிப்பால் கனவுலகம் உருவாகும்; இல்ல றத்தைக் கற்கவரும் காதலர்கள் மனத்து டிப்பால் கருவுலகம் உருவாகும்; பள்ளி சென்று கற்பவரின் அளவில்லா மனத்து டிப்பால் கலகங்கள் உருவாகும்; ஒழுக்கக் குன்றில் நிற்பவர்தம் மனத்துடிப்பால் நலங்கள் எல்லாம் நிலமெங்கும் உருவாகும் தீமை தேயும். துன்பத்தில் நெஞ்சங்கள் துடிப்ப துண்டு தொடர்கின்ற இன்பத்தும் துடிப்ப துண்டு துன்பத்தின் துடிப்பாலே புரட்சி தோன்றும்; துடிக்கின்ற இன்பத்தில் மருட்சி தோன்றும்; துன்புற்று மக்களினம் துடித்தால் எங்கும் துவள்கின்ற நெஞ்சத்தில் நெருப்பு மூளும் மின்பற்றி விளையாடும் வாளும் வேலும் மிடைந்திருக்கும் ஆட்சிகளும் எரிந்து வீழும். தன்மனையின் காற்சிலம்பை விற்க வந்த தப்பறியாக் கோவலனைக் கள்வன் என்றான்; பொன்செய்யும் கொல்லனுரை நம்பி நின்றான்; புகழ்க்கருணை மறவனுக்குத் தீங்கு செய்தான்; பொன்செய்யும் வேலுடையான் பாண்டி மன்னன் புகார்விட்டு வந்தான்மேல் புகாரு ரைத்தான் என்னுமொழி செவிப்படலும் கண்ண கித்தாய் இடர்ப்பட்டாள் கொதித்தெழுந்தாள் கனலாய் நின்றாள். குறையில்லாக் கோவலனோ கள்வன்? என்றன் கொழுநனுக்கோ வீண்பழிகள்? brhšth® ng¢ir¢ rÇba‹W e«òtnjh mur Úâ rk‹brŒí« nfhšnghy eLË nwhuh¡ Fiwkâa‹ ehlhS« k‹d ndh?இக் கொடுமைக்கே சாவுமணி அடிப்பேன் என்றே எரிகின்ற நெஞ்சத்தே துடிது டித்தாள் இருந்தஇடந் தெரியாமல் சாய்ந்த தாட்சி. 13.5.1978 11. தீ பரவட்டும் வயலிருந்தும் வயல்பாய நீரி ருந்தும் வருந்தாமல் நீர்பாய்ச்சி உழைக்கும் நல்ல செயலிருந்தும் அச்செயலால் விளைவி ருந்தும் சேர்த்துவைத்த நெல்முதலாப் பொருளி ருந்தும் மயலுறவும் செயலறவும் மாந்தர் வாடி வாயுணவுக் கின்னலுறச் செயற்கைப் பஞ்சம் புயலெனவே புகுந்ததனால் அவர்வ யிற்றிற் பொங்கியெழுந் தெரிந்ததுவே பசித்தீ பற்றி. வெள்ளையனும் நமக்குரிமை தந்து விட்டு வெளிப்போந்தான் ஆதலினால் ஆங்கி லத்தால் எள்ளளவும் செந்தமிழ்க்குத் தீமை யில்லை இனியதமிழ் அரியணையில் அமரும் என்றே உள்ளமதிற் பொங்கிஎழும் ஆர்வங் கொண்டோம்; ஒற்றுமையாம் பொதுமொழியாம் என்று கூறிப் பிளளைமதி படைத்தவரோ இந்தி ஒன்றே பேணுகிறார் எரிமலைபோல் வெடித்த துள்ளம் உரிமைநமக் கெய்தியதால் இனிமேல் வாழ்க்கை உயர்ந்துவிடும் வளம்பெருகும் கவலை யில்லை சரிநிகராய் வாழ்ந்திடுவோம் உயர்வு தாழ்வு சாதியிலும் பொருள்தனிலும் எதிலும் இல்லை அரசியலும் நடுநின்று பொதுமை பேணும் அடிமைமிடி இலையென்றே கனவு கண்டார்; புரியகிலாய் பகற்கனவாய்ப் போன தாலே பொங்கியவர் விழிகளெலாம் செந்தீ செந்தீ. சோறுபெறாக் காரணத்தால் வயிறு பற்றிச் சுடர்த்தெழுந்த பசித்தீயும் ஆள வந்தார் ஊறுபெறச் செந்தமிழை அழிக்க வேண்டி உன்னுவதால் உருத்தெழுந்த உள்ளத்தீயும் மாறுபடும் ஆட்சியினால் அல்ல லுற்ற வறியவர்தம் விழித்தீயும் கொடுங்கோல் தன்னை நீறுபடச் செய்யட்டும் செங்கோ லாட்சி நிலவட்டும் பரவட்டும் அந்த முத்தீ. 12. தமிழர் திருநாள் தைபிறக்க வழிபிறக்கும் என்பர் மேலோர்; தமிழகத்து வழிவகுக்க வந்தாய் பொங்கல்! பொய்யுறக்கம் கொள்கின்ற தமிழர் இந்நாள் பொங்கிஎழுத் தாற்பகைமை தூள்தூள் ஆகும், செய்புரக்கும் உழவோரே செங்கோல் தாங்கிச் செந்தமிழ ஆட்சியினைச் செய்வர், நம்மோர் கைசிறக்கும் கலைசிறக்கும் தொழில்சி றக்கும் காலமெலாம் களிசிறக்கும் தமிழ்சி றக்கும். 13. திரும்பிப் பார் காலங்கள் மாறிடலாம்; ஒரு நாள் கண்ட கருத்துகளும் மாறிடலாம்; பூண்டு கொண்ட கோலங்கள் மாறிடலாம்; சட்டம் கூறும் கொள்கைகளும் மாறிடலாம்; வாழும் இந்த ஞாலங்கள் மாறிடலாம்; வாழ்ந்து வந்த நாகரிகம் மாறிடலாம்; மானம் மற்றும் சீலங்கள் மாறிடுமேல் சீசீ என்ற சிறுமைக்கே ஆட்படுவாய் சீரி ழந்தே. ஆடைகளை மாற்றுகிறாய்; முடியைக் கூட அருவருக்க மாற்றுகிறாய்; பேசு கின்ற மேடைகளை மாற்றுகிறாய்; வீரங் காட்டும் மீசையினை மாற்றுகிறாய்; தொலைந்து போபோ கோடையினைக் குளிர்ச்சிதரும் பருவ மென்று குவவுகின்ற தமிழ்மகனே உன்னி னந்தான் வாடுவதை மாற்றுகிற உணர்வே யின்றி மயக்கத்திற் சிக்குண்டு திரிகின் றாயே. ஊறிவருங் குருதியினைக் கெடுத்துக் கொண்டாய் உன்னினத்தின் மானத்தை ஒதுக்கி விட்டாய் சீறிவரும் அரியேற்றின் குலத்தில் வந்த சிறப்பினையும் மறந்துவிட்டாய்; தன்ன லத்தால் மீறிவரும் ஆவலினால் கவர்ச்சிக் காளாய் மீளாத பழிசுமந்தாய்; முகிலிற் காணும் தேருருவம் பயன்படுமா போர்க்க ளத்தில்? தெளியாத தமிழ்மகனே தெளிந்து நிற்பாய். பசுதந்த சுவைப்பாலைக் கொம்புத் தேனைப் பலாதந்த நறுஞ்சுளையைக் கருப்பஞ் சாற்றை நசைமிகுந்த மாங்கனியை வாழை தந்த நற்கனியைப் பாழ்நிலத்திற் கொட்டி விட்டுப் பசிவந்து திரிகின்ற பேதை யுண்டா? பயன்மிகுந்த இளமையினைப் பாழ்ப டுத்தி, வசைமிகுந்து, நல்லுணர்வைச் சிதற விட்டு, வழிதவறிச் செல்லுவதா அறிவின் பாங்கு? திரும்பிப்பார் உன்னினத்தைப் புகழ்க்குன் றின்மேல் தெரிவதைப்பார் அதன்பெருமை; பின்னர் இன்று விரும்பிப்பார் அவ்வினத்தை; வீழ்ந்து விட்ட விளைவைப்பார்; தாழ்ந்துகெட்ட நிலைமை யைப்பார்; துரும்பைப்பார் அதைப்போலத் தேய்ந்த தைப்பார்; தோன்றும்பார் உன்னுளத்தில் ஓரு ணர்ச்சி; இரும்பைப்பார் அதன்பின்னர்த் தோள்க ளைப்பார்; எழுச்சியினால் மலரும்பார் இந்தப் பாரே. 24.11.1980 14. அந்நாள் எந்நாள்? வியப்புமிகுங் கலைத்திறமை கொண்டி லங்கும் வியன்கோவில் எடுப்பித்தான் இராச ராசன்; நயத்தக்கான் திருவுருவைச் சிலையில் ஆக்கி நனிவிருப்பால் அச்சிலையைக் கோவி லுக்குள் அயற்புறத்தே சுவரெடுத்து வைக்க எண்ணி அருமுயற்சி மேற்கொண்டார் முடிய வில்லை; மயக்கநிலை தெளியவில்லை; அடிமை இன்னும் மாறவில்லை உரிமைபெறும் அந்நாள் எந்நாள்? பொன்னிவளக் கரையுடையான் தஞ்சைப் பேரூர் பொலிவுபெறப் பெருங்கோவில் ஒன்ற மைத்தான்; அன்னதிருக் கோவில்நலம் புரந்து காக்கும் ஆளுரிமை கங்கைக்கே உரிய தென்றால் என்னமுறை யீதென்று துணிந்து கேட்க, எமதுடைமை எமக்கென்றே உரிமை கோர இன்னுமுணர் வெழவில்லை தமிழர்க் கந்தோ! எப்பொழுது விழிப்பாரோ? அந்நாள் எந்நாள்? அழல்வடிவக் கடவுளுக்குக் கோவில் ஆக்கி, அவன்செவியில் தேவார ஒலியைக் கூட்டி, நிழல்படியாக் கோபுரமும் கட்டி வைத்து, நெடுந்தெருவில் நிற்கின்றான் இராச ராசன்; நிழல்கொடுக்கும் வெண்குடைக்கீழ் உலகம் ஆண்டான் நிற்கின்றான் குடையின்றித் தஞ்சை மண்ணில்; அழிதருமிச் செயல்தீரத் தமிழர் இங்கே ஆர்த்தெழும்நாள் எந்நாளோ? அந்நாள் எந்நாள்? நன்றுபடாச் சமயங்கள், பிரிவு கொண்ட நாலுவகை வருணங்கள், அவற்றுட் சாதி என்றுபல ஆயிரங்கள், பகைமை கொண்டே இயங்கிவரும் பலகட்சி இவற்றுட் சிக்கி ஒன்றுபடாத் தமிழ்நாடே நீதான் இங்கே உருப்படுமோர் நாள்வருமா? அந்நாள் எந்நாள்? தொன்றுமுதிர் தமிழினமே அடிமை தீரத் துணிந்தொன்றாய்க் கூடாயோ? அந்நாள் எந்நாள்? 15. சிறுத்தையே விழித்தெழு தனித்தனிப் பிறந்த தமிழர்தம் நெஞ்சம் இனித்திடும் வகையால் எழிற்றமிழ் மொழியால் தம்பீ தம்பீ என்றொரு தாயின் கும்பியின் பிறப்பெனக் கூறிய குரலெது? நம்பி வந்தவர் நலம்பெற் றுயர்ந்திடத் தென்புகள் தந்து தேற்றிய குரலெது? என்றன் உடன்பிறப் பென்றுனை விளித்து நன்றுரை புகலும் நம்பிக்கைக் குரலெது? பொய்யா உறவால் போற்றிப் போற்றி அய்யா அண்ணாவென் றழைத்திடும் குரலெது? பழகிய உனக்குப் பகரவும் வேண்டுமோ? கழகக் குரலெனக் கண்டனை நீயே! உன்றன் மூச்சால் ஓயா உழைப்பால் நின்றமர் பலப்பல நிகழ்த்திய நெறியால் வழிந்தகண் ணீரால் பொழிந்தசெங் குருதியால் எழுந்தது வளர்ந்ததிவ் வெழில்பெறு கழகம்; நடிப்பால் வளர்ந்ததா கழகம்? கொள்கைப் பிடிப்பால் அன்றோ குன்றென உயர்ந்தது; குன்றினைச் சிதைத்திடும் குறியொடு குருவிகள் கன்றுகள் பகலிற் கனவுகாண் கின்றன; அறப்போர் எத்தனை ஆற்றினை! இதனை மறப்பார் உளரோ? மறுப்பார் உளரோ? உளத்தெழும் உணர்வால் ஒவ்வொரு போரிலும் களப்பலி யாகக் காளையர் உயிர்கள் எத்தனை எத்தனை ஈந்தனர் உவந்தே; அத்தனை உயிரும் எவர்தம் உயிராம்? உன்னுடன் பிறந்தார் உன்னலம் நினைந்தார் தம்முயிர் அன்றோ? தமிழ்நலங் காக்க எரியிடைப் புகுந்துடல் கருகிட மடிந்தனர் அரிநிகர் தோழர் அவரெலாம் உன்னினம்! கொடுஞ்சிறைக் கோட்டம் இடஞ்சிறி தாகப் புகுந்தது நிறைந்தது புலிநிகர் கூட்டம்! முந்திய போர்களிற் சிந்திய குருதிகள் சிந்தைக் கல்லிற் செதுக்கிய வரிகள் வரலாற் றேட்டில் வாழ்வன காணுதி அரியேற் றுள்ளம் அவற்றால் வாய்த்திடும் அழியா வரிகளை அடிக்கடி படித்திடு விழிபோல் அவற்றை விரும்பிப் போற்றிடு! பழகிய தமிழ்மொழி பழுதுறா தோங்கிட இளகிய தமிழினம் இணையிலா திலங்கிடக் கழகம் ஒன்றே காத்திட வல்லது; கழகம் காத்திடல் காளையே நின்கடன்; பாசறை அமைத்ததில் பயின்றிடு போர்முறை நீசரை எதிர்த்திட நிமிர்த்திடு தோள்கள்; சென்ற களமெலாம் வென்றது நின்னினம் இன்றதை மறந்தனை இனியதை நினைந்தெழு! நின்பாற் சோர்வு நேர்ந்துள தறிவேன்; அன்பநின் சோர்வுக் கடிப்படை தெரிவேன்; அதனாற் சோர்வுறல் அழகோ? உன்பணி எதனால் மறந்தனை? எவர்க்கது தீமை? நடந்ததை மறந்திடு நடப்பதை நினைந்தெழு தொடர்ந்துன் பணியைத் தொடங்கிடு நடந்திடு சிந்தனை செய்நீ செங்கதிர் வழியில் வந்தனை நீயோ வாடிக் கிடப்பது? பெரியார் அறிஞர் பேணிய பாசறை உரியாய் நீயோ உறங்கிக் கிடப்பது? முறைப்படி ஆண்டநின் முத்தமிழ் நாட்டைச் சிறைப்பட விடாமல் சிறுத்தையே விழித்தெழு! வரிப்புலிப் போத்தே வரிந்து கட்டிநில்! நரிச்செயல் குறுக்கிடின் மிதித்ததை நசுக்கிடு! நாட்டில் தமிழ்மகன் நல்லதோர் ஆட்சியை நாட்டிடத் துணைநில்! நாளெல்லாம் மங்கலப் பொங்கலில் வஞ்சினம் பூண்டெழு! சிங்க மகனே சினந்தெழு வுடனே! 24.12.74 16. தமிழின வரலாறு கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்; மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தனவன்; கோட்டைச் சுவரெடுத்துக் கூடும் படையமைத்து நாட்டைப் புரந்து நலந்தந்தான்; நாளும் குடிபழி தூற்றாது கோலோச்சி நல்ல படியரசு செய்து பயன்தந்து பேர்கொண்டான்; மாந்தர் உயிரானால் வேந்தர் உடலாவான் வேந்தன் உயிரானால் மாந்தர் உடலாவார்; ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைக் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்; காட்டைத் திருத்திக் கழனி எனவாக்கி மேட்டைச் சமமாக்கி வேளாண் தொழில் புரிந்தான்; பாராளும் காவலர்க்கும் பாட்டாளும் பாவலர்க்கும் ஏராளும் காராளன் செய்யுதவி ஏராளம்; சாவா மருந்தெனினும் தன்பால் இயைந்துவிடின் ஆ ஆ இனிதென் றவனே தனித்துண்ணான்; மற்றோர் வெறுத்தாலும் மாறி அவரிடத்துச் சற்றும் முனிபுகொளான் தாவி அணைத்திருப்பான்; நெஞ்சில் உரமும் நெடுந்தோளில் வல்லமையும் விஞ்சும் இயல்புடையான் துஞ்சுதலைத் தான்விழையான்; அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்; தக்கும் புகழென்றால் தாவி அதுபெறவே பொக்கை உயிர்போக்கிப் பொன்றாது நின்றிருப்பான் சூழும் பழியென்றால் தூவென் றுமிழ்ந்தொதுக்கி ஆழி உலகம் அதுபெறினும் தான்வேண்டான்; தன்னலம் ஒன்றைத் தவிர்த்திடுவான் மற்றவர் தந்நலம் வேண்டித் தனிமுயற்சி மேற்கொள்வான் யாதுமென் ஊரென்பான் யாவரும் கேளிரென்பான் தீதறியான் சூதறியான் சாதலும் கண்டஞ்சான் தன்னிற் பெரியோரைத் தான்வியந்து நின்றாலும் தன்னிற் சிறியோரைச் சற்றும் இகழ்ந்தறியான்; வாழ்வில் வருமானம் வாய்ப்பின் அதுவேண்டான் *சாவில் வருமானம் ஒன்றே சரியென்பான்; ஒன்றே குலமென்றான் தேவன் ஒருவனென்றான் நன்றே இறையுணர்வை நாட்டிற் குணர்த்திவந்தான் வாழ்ந்த தமிழினத்தின் வாய்த்த வரலாறு சூழ்ந்து சொலக்கருதின் சொல்லில் அடங்காது; நாகரிகத் தொட்டில் நமது திருநாடு வாகுடனே வாழ்ந்த வரலா றிதுவாகும்; வாழ்ந்த வரலாற்றில் வந்த சிலசொன்னேன் வீழ்ந்த வரலாறு விண்டால் மனம்நோகும்; முச்சங்கம் கண்டு மொழிவளர்த்தோன் எப்பகையின் அச்சங்க ளின்றி அமைதியில் நூல்படைத்தோன் ஆங்கிலத்தால் ஆரியத்தால் ஆதிக்க இந்தியினால் தீங்குவரு மோவென்று திண்டாடி நிற்கின்றான் பண்படுத்தும் நூல்கள் பலதந்தோன் சான்றோரைப் புண்படுத்தி மன்பதையின் பண்பழிக்கும் ஏடுகளே இன்றுகுவிக் கின்றான்; இளையோர் உணர்வுகளைக் கொன்று கெடுத்துவிட்டுக் கூசாமல் பேசுகின்றான்; காசுக்கும் மாசுக்கும் கண்ட படிஎழுதும்; ஆசைக்குட் பட்டே அலைகின்றான் பாவிமகன்; நல்ல அரசியலில் நச்சைக் கலந்துவிட்டான்; சொல்லும் மொழியெல்லர்ம் சூதன்றி வேறில்லை; சூதாட் டரசியலில் சொக்கித் திரிபவரைச் சூதாட்டக் காயாக்கிச் சொக்கட்டான் ஆடுகிறான்; பண்பாட் டரசியலைப் பாழடித்துச் சாகடித்துத் தன்பாட்டில் மட்டும் தனியார்வம் காட்டுகிறான்; கண்டுமுதல் காணும் களமாக்கி அச்செயலைத் தொண்டென்றும் சொல்லித் தொலைக்கின்றான் மக்களிடம்; நோக்குந் துறைதோறும் நோய்செய்யும் போலிகளே தூக்கித் தலைநிமிர்த்தித் தோளுயர்த்திச் செல்கின்றார். ஏட்டில் படித்தேன் இலக்கணப் போலியென நாட்டிலும் போலிகள் நன்கு பெருகிவிட்டார்; மானம் மறந்தான் மனத்தைத் துறந்துவிட்டான் போனது போகப் பொருள்வந்தாற் போதுமென்றான்; ஒட்டும் வயிற்றில் உடுத்த உடையில்லை கட்டும் தறியில்தான் காலமெல் லாங்கிடப்பான்; சிக்கல் எடுப்பான் சீர்செய்வான் பாநூலைச் சிக்கலுக்குள் சிக்கி இவன்மட்டும் சீரழிவான்; பாவறுந்த நூலைப் பதப்படுத்தி ஒட்டிவைப்பான் வாழ்வறுந்து போனால் வழியின்றித் தான்தவிப்பான் நூற்றுக் கணக்கிலவன் நூற்றுக் கொடுத்தாலும் சோற்றுப் பருக்கைக்கு நோற்றுக் கிடப்பான்; நாட்டுப் பசிபோக்க நாற்றை நடுகின்றான் வீட்டுப் பசிநீக்க வேளாளன் சாகின்றான்; பல்லுயிரும் வாழப் பகுத்துண்டான் முன்னாளில் பல்லுயிரும் வாடப் பறித்துண்பான் இந்நாளில்; கூம்பிக் கிடக்கும் குடும்ப நிலைகண்டும் சோம்பிக் கிடந்தே சுகங்கண்டு வாழ்கின்றான்; பாவம் பழியென்று பாரான் தனதுமனம் தாவும் செயலொன்றே தக்க தெனப்புரிவான்; சின்ன நலமொன்றுசேரும் எனத்தெரிந்தால் என்ன பெரும்பழியும் ஏற்கத் தயக்கமிலான்; எல்லாம் பொதுவென்பான் என்பொருள்கள் மற்றவர்க்கு அல்ல தனியென்பான் ஆராத பேராசை! வல்லான் சுரண்டி வளர்வதன்றி மற்றொன்றும் கல்லான் கருதான் களத்தில் நடிக்கின்றான். வால்பிடித்துக் கால்பிடித்து வாழ்வு நடத்துதற்கு வேல்பிடித்த மைந்தன் விரைவாக முந்துகின்றான்; தன்னிலையிற் றாழ்ந்தும் தனதுயிரைக் காப்பதற்குப் பின்னடைய வில்லை பெரும்பேதை ஆகிவிட்டான்; பண்பாடு மூலையிற்போய் பாயை விரித்துவைத்துக் கண்பாடு கொள்கின்ற காலம் இதுவன்றோ? எங்கே உனதுமறை? எங்கே உனது நெறி? எங்கே உனதிறைவன்? என்றால் விழிக்கின்றான்; இங்கே புகுந்தமறை இங்கே புகுந்தநெறி இங்கே புகுந்த இறை என்பவற்றைக் காட்டுகிறான் அந்தோ தமிழினத்தான் தன்னை யறியாது நொந்தே கிடக்கின்றான் நோயிற் படுக்கின்றான்; சொந்தமெது வந்ததெது சொல்ல வகையறியான் வெந்ததைத் தின்று வெறுமனே சாகின்றான்; விண்முட்ட வாழ்ந்து வியந்த வரலாறு மண்முட்டச் சாய்ந்து மடிவதோ? பீடுடுத்து வாழ்ந்த வரலாறு வீழ்ந்து மறைவதோ? jhœªJ bfLjš jFnkh?எனவெழுந்து பண்டை வரலாற்றைப் பாரில் நிலைநிறுத்தி மண்டும் புகழ்சேர்க்க வந்தோர் சிலராவர்; தாளாண்மை கொண்டு தளராது பாடுபட்ட வேளாண்மை நெஞ்சர் விதைத்த உணர்வுகளை நெஞ்சமெனும் நன்செய்யில் நேர்த்தி பெறவிளைத்து விஞ்சுபயன் கொள்க விழைந்து. பாரி விழா, பறம்பு மலை, 27.4.1980 17. இன்றைய நாடு அயில்வேலும் உடைவாளும் உண்டான நாடு-இன்று- அயலார்கள் அரசாளச் சரிபோடும் நாடு - அயில் வயல்யாவும் கயல்பாயும் புனல்சூழும் நாடு வயிறார உணவார இயலாத நாடு மயிலாடும் குயில்பாடும் வளமான நாடு மனம்நோகத் தெருவோரம் குடிவாழும் நாடு -அயல் தலையான நெறிகண்டு புகழோடு நின்றோர் தன்மானங் கெடும்போதும் உணராத நாடு தலைநாளில் மொழிமூன்று வகையாகி நின்றும் தமிழாலே இசைபாடத் தெரியாத நாடு -அயல் கதையாகக் கனவாக எதையேனும் சொல்வார் காணாத உலகாள வழியோதிச் செல்வார் பொதுவாகும் பொருள்யாவும் எனுமாறு நாடிப் புதுவாழ்வு நனவாக முயலாத நாடு -அயில் அரங்கேறும் மொழியாளர் பொழிவார்கள் சொல்லை ஆனாலும் அவர்வாழ்வில் தொடர்பேதும் இல்லை நிறமாறும் பச்சோந்தி மரபாளர் சொல்லில் நினைகின்ற பயனேதும் விளைவாவ தில்லை -அயில் அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார் அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார் மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார் வழியேதும் தெரியாத விழியாத கண்ணார் -அயில் புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும் புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும் செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா? சிறிதேனும் உணராமல் சிலையாக நின்றார் -அயில் பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன? அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார் அணுவேனும் நகராமல் மரமாகி நின்றார் -அயில் 24.6.1979 18. ஆரியப் பேரரசு அணிந்திருக்கும் பூணூல்கள் நூல்க ளல்ல ஆரியத்துப் பேரரசின் எல்லைக் கோடு; தணிந்துரைக்கும் அவர்மொழிகள் அணுவின் குண்டு; தருப்பைப்புல் ஏவுகணை; நெற்றி யின்மேல் அணிந்திருக்குந் திருநீறோ இடுக்கித் தாக்கும் ஆயுதங்கள்; திருநாமம் கழும ரங்கள்; நினைந்தெடுத்து விழிப்பாகக் கட்டி வைத்த நெடியமதிற் கோட்டைகளாம் நான்கு வேதம் ஆலயங்கள் அவ்வரசு செங்கோ லோச்சும் அரண்மனையாம்; சிலைகள்வெளி நாட்டுத் தூதர்; நாலுவகை வருணங்கள் பகைமு டிக்கும் நாற்படையாம்; பஞ்சாங்கம் சட்ட நூலாம்; மேலுலகம் புராணங்கள் சாத்தி ரங்கள் மேற்படியார் விளம்பரஞ்சிசெய் துறைக ளாகும்; மாலுடைய மதம்நடன மங்கை யாகும்; மற்றுமுச்சிக் குடுமியொரு கொடியே யாகும். ஆலமரம் அரசமரம் இவற்றின் கீழே அமர்சிலைகள் சிற்றரசாம்; உடைக்குந் தேங்காய் பாலொடுநெய் ஊர்மக்கள் கப்ப மாகும்; பறையோசை மந்திரங்கள் அரசின் ஆணை; மேலுலகம் கீழுலகம் சிறைக ளாகும்; மேதைகள்போல் எழுதிவருஞ் செய்தித் தாள்கள் வேலொடுவாட் படைகளாகும்; காஞ்சிப் பீடம் வெற்றிபெற மறைசூழும் மன்ற மாகும். பகுத்துணரும் ஆற்றலிலார் மயக்கங் கொண்ட பத்தியினால் தம்மைத்தான் அறிய கில்லார் தொகுத்திருக்கும் மடமைக்குள் மூழ்கி நிற்பார் தொழும்பரிவர் குடிமக்கள்; மனுநூ லாளர் வகுத்திருக்கும் பிறப்பிறப்பு வரிக ளோடு மன்றல்வரி குடிமக்கள் செலுத்தி நிற்பர்; பகைத்தெவரும் எழுவரெனில் அழகு மிக்க பராசத்தி ஏவிடுவர் பகையும் வீழும். வஞ்சனையின் வலைவிரிக்கும்; அறிவு தேய்ந்த வாயில்லா அரிகளெல்லாம் வந்து வீழும்; நஞ்சனைய தந்திரத்தால் மயக்கு கின்ற நாத்திறத்தால் ஏமாற்றி ஆட்சி செய்யும் பஞ்சணைந்த அரியணையில் ஏறி நின்று பாமரரைப் பொம்மையென ஆட்டி வைக்கும்; துஞ்சுமன மூடரிங்கு வாழும் மட்டும் தோற்காது வெற்றிபெறும் ஆரி யந்தான். 30.3.1984 19. தமிழக அரசு முடியரசர் தமக்குரிய அரசைப் பற்றி முத்தமிழ்ப்பா வாணரெல்லாம் புகழ்ந்து பாடக் கடிநகருள் அரியணையில் வீற்றி ருந்து கற்பனையில் திளைத்திருந்த என்னை யிங்குக் குடியரசைத் தமிழரசைப் பாடு கென்று கூறிவிட்டார்; குறைநிறையைத் துணிந்து சொல்ல முடியரசன் தகுவனென நினைந்தார் போலும்; முயல்கின்றேன் குறைகாணின் அதுவும் சொல்வேன் பண்டையநல் லரசுக்குக் கொடிகள் மூன்று பைந்தமிழ்நாட் டரசுக்குக் குறிகள் மூன்று தொண்டுபுரி செயல்மேவும் கடமை ஒன்று தூய்மை மிகு கண்ணியமாம் தன்மை ஒன்று கண்டபடி சிதறாமல் தலைவன் சொல்லைக் காக்கின்ற கட்டுப்பா டென்னும் ஒன்று தண்டமிழ அரசுக்கு வழிவ குத்த *தலைவன்றன் பெயருக்கும் மூன்றெ ழுத்து. ஒரு மொழியால் உலகாண்டார் பண்டை வேந்தர் உறவாடி வருமொழிக்கும் இடம ளித்தார்; இருமொழியால் உலகாளச் சட்டம் செய்த தென்னரசு தமிழரசு; நமது நாட்டின் கருவிழியாய் உயிர்மொழியாய்த் துறைகள் தோறும் காணுமொழி தமிழொன்றாம்; மற்றும் ஒன்று வருமொழிதான் துணைமொழிதான்; தமிழைத் தாழ்த்த வருமொழிக்கிங் கொருநாளும் இடமே யில்லை. காருந்தும் பனிமலையை வெற்றி கொண்டு கயல்புலிவில் இலச்சினையைப் பொறித்தார் முன்னோர்; ஊரெங்கும் நிகழ்ந்தபொதுத் தேர்தல் நாளில் உரைகாண முடியாத வெற்றி கண்டு, பேருந்து வண்டிகளில் குறள்பொ றித்துப் பெருநெறியில் குறள்நெறியைக் காட்டுகின்ற சீருண்டு தமிழகத்தின் அரசுக் கென்றால் சிதறுண்டு போனவர்கள் குறையும் சொல்வார். பாரெங்கும் படைகொண்டு சென்றார் அன்று பண்புடைய தமிழ்கொண்டு செல்வார் இன்று; பாரெங்கும் பெருவெற்றிக் களிப டைத்தார் பண்டிருந்த மூவேந்தர் ஒளிப டைத்தார்; பாரெங்கும் நானூற்றுத் தமிழ் படைத்துப் பைந்தமிழ அரசிங்கே ஒளிப டைக்கும்; பாரெங்கும் தமிழினத்தின் பண்பைக் காட்டப் பரசுதமிழ் மாநாடு நடத்திக் காட்டும். மன்னவனை உயிரென்றும், உயிரைத் தாங்க மக்களையே உடலென்றும் புறத்திற் சொன்னார்; அன்னவனை உடலென்றும், உடலில் தங்கும் ஆருயிரே மக்களென்றும் சாத்தன் சொன்னான்; பின்னவனைத் தொடர்ந்து தமிழ்க் கம்பன் பாட்டும் பேசுவதை நாமறிவோம்; எனினும் அண்ணா என்னுமொழி யாலழைக்கும் முதல மைச்சை; இவ்வண்ணம் தமிழரசில் உறவு தோன்றும் . புவிபுரக்க அரசிருக்கை அமர்ந்த முன்னோர் பொலிவுமிகும் கவிபலவும் புனைந்து தந்தார்; *கவிபுரக்கும் சங்கத்தும் தலைமை ஏற்றார்; காட்டுதற்குச் சான்றுபல இன்றும் உண்டு; புவிபரக்க அரசிருக்கை இன்று கொண்டோர் புதுமைமிகும் கவிபலவும் புனைந்து தந்தார்; கவிபரப்பும் அரங்கத்தும் தலைமை ஏற்றார்; காலமெலாம் நம்மரபு நிலைத்து நிற்கும். அரசோச்சும் மன்றத்தில் அறம்உ ரைக்க அவைக்களத்துப் புலவர்பலர் இருந்தார் அந்நாள்; *அரசாட்சி மன்றத்தில் பெருமை நல்க அவைக்களத்துப் புலவரென இல்லை இந்நாள்; முரசோச்சி ஒலியெழுப்பும் முதல மைச்சே முறையோஎன் றுள்நினைந்தேன்; புலவ ரைத்தான் அரசாட்சி மன்றத்தின் தலைவ ராக அமைத்தமையால் குறைசொல்ல வழியும் இல்லை. மாரிக்கு நிகராகப் பொருளை வாரி வழங்கியருள் வள்ளல்பலர் ஆண்டார் அந்நாள்; ஊருக்கு நலஞ்செய்யும் தொண்டர் இந்நாள் ஊராள வந்தமையால் வள்ளல் அல்லர்; ஆருக்கும் ஈவதற்குச் செல்வர் அல்லர்; ஆனாலும் தமிழரசில் எளிய வர்க்குப் பாரிக்கு நிகராக வாழ்வு நல்கும் பண்பாட்டைக் காக்கின்ற பண்பும் உண்டு. களைத்திருந்த புலவனுக்கு முன்னே நின்று கவரியினால் மெல்லனவே வீசி, நெஞ்சம் களித்திருந்த மேலவனைப், புலவர்ப் போற்றும் காவலனை, முடியரசில் அன்று கண்டோம்; இளைத்திருக்கும் தமிழ்த்தாயின் வாட்டம் நீங்க, இனியதமிழ்ப் புலவர்சிலை கடலின் ஒரம் நிலைத்திருக்க ஆழிஅலைக் கையால் வீச, நிற்பதைநாம் தமிழரசில் இன்று கண்டோம், படைவலியால் வடபுலத்தை அன்றை வேந்தர் பகையாக்கிப் பணிவித்தார் இன்றோ பேச்சு நடைவலியால் நட்பாக்கிப் பணிய வைக்கும் நாவன்மை கொண்டிலங்கக் காணு கின்றோம்; குடையுடைய மூவேந்தர் வீரம் ஒன்றே குறியாக மறங்காட்டி வந்தார் அந்நாள்; நடையுடைய நாவேந்தர், கொள்கை ஒன்றே நடுவாகத் திறங்காட்டி வந்தார் இந்நாள், மாரிவளங் குன்றியக்கால் வான்பேர் அச்சம், மக்களுக்கோர் இன்னல்வரின் பெரும்பேர் அச்சம், பாரிதனைக் காக்கின்ற குடிப்பி றத்தல் படுதுயரம் எனநினைந்து காத்தார் அன்று; மாறியது பருவமழை, அதனால் எங்கும் வறட்சிநிலை பரவியது கண்டு நெஞ்சில் ஊறிவரும் பரிவுடனே ஓடி ஓடி உறுதுயரம் துடைப்பதற்கு முனைந்தார் இன்று. முன்னாளில் தமிழ்நாடு பொதுமை யின்றி முடியரசாய்த் தனியரசாய் விளங்கக் கண்டோம்; இந்நாளில் குடியரசாய் மலர்ந்த தேனும் எடுப்பார்கைப் பிள்ளையென நிற்கக் கண்டோம்; தன்னாட்சி செய்கின்ற உரிமை யின்றித், தாவென்று நடுவரசைக் கேட்டுவாங்க அன்னார்பின் திரிகின்ற நிலையே கண்டோம்; அதிகாரம் இல்லாத அரசே பெற்றோம். நடுவரசில் அதிகாரம் குவிந்த போதும் நாகரிக அரசியலைச் சொல்லிக் காட்டிக் கொடுவரிமை என்றுரத்த குரல்கொ டுக்கும்; கூடிமகிழ் உறவுக்கும் கைகொ டுக்கும்; கெடுதலையாய்ப் போராடும் உள்ளம் இல்ல்; கிளந்துரைத்து வாதாடும் நெஞ்சம் உண்டு; விடுதலைக்குக் கேடுசெய்ய பகைகள் வந்தால் வீறுடனே சீறிஎழும் நாடு காக்கும். எளியரென வலியரென இன்னும் இங்கே இருக்கின்ற நிலையொழிக்கும் பணியில் நிற்கும்; துளியளவும் வன்முறையை நாட லின்றித் தோழமையால் பொதுவுடைமை பூக்கச் செய்யும்; இழிவுடைய உயர்வுடைய சாதி என்னும் இறுமாப்புக் கொள்கைகளைச் சுட்டெ ரிக்கும்; தெளிவுடைய அறிவினராய் மாந்தர் எல்லாம் திருவினராய்ச் சரிநிகராய் வாழச் செய்யும் யானைகட்டிப் போராடித்து விளைச்சல் கண்டு யாவருக்கும் நெல்லளந்த தமிழர் நாட்டில் பானைகட்டிப் போரடிக்க வந்த பேர்க்கும் படியரிசி யளப்பதற்கு முயலும் போது மோனைகட்டி எதுகையிட்டுக் கவிதை யாத்து முழுமனத்தாற் பாராட்ட மனமே யில்லார் சேனைகட்டி எதிர்க்கின்றார்; சிறுமை யன்றோ? செந்தமிழர் நாட்டுக்கு நன்மை யாமோ? பாரிவிழா பறம்புமலை 28.4.1969 20. ஒருமைப்பாடு ஒருமைப்பா டென்றொருசொல் உரைக்கக் கேட்டோம் ஒற்றுமைஎன் றொருசொல்லும் மொழியக்கேட்டோம் இருமைக்கும் உள்ளதொரு வேறு பாட்டை இனியமனம் படைத்தவர்கள் உணர்தல் வேண்டும்; ஒருமைப்பா டென்றுரைத்தால் ஒன்று வாழும் ஒற்றுமை என்றுரைத்தாலோ பலவும் வாழும் உரிமைக்குக் குரல்கொடுப்போம் பவவும் வாழ உறவுக்குக் கைகொடுப்போம் நாட்டைக் காக்க. 2.3.1975 21. ஒற்றுமையும் ஒருமையும் ஒற்றுமை எனவும் ஒருமை எனவும் சொற்றிடும் இருசொலைச் சற்றிவண் நோக்குதும் வேறுபடு பொருள்களைக் கூறிடும் அவற்றுள் சாரும் பொருண்மை *தேறுதல் நம்கடன் ஒன்றுடன் மற்றொன் றிணைவதே ஒற்றுமை ஒன்றினுள் ஒன்று மறைவதே ஒருமை; இணைந்தும் தனித்தும் இயங்குவ தொற்றுமை அணைந்தபின் ஒன்றாய் அமைவதே ஒருமை; மலைப்பினி வேண்டா மனத்தினிற் பொருந்த இலக்கணச் சொல்லால் விளக்குதும் கேண்மின்; பலபல எனுஞ்சொல் பகுக்கவும் இயலும் கலகல எனுஞ்சொல் கலந்தே நிற்கும்; முன்னதை அடுக்குத் தொடரென மொழிவர் பின்னதை இரட்டைக் கிளவியென் றியம்புவர்; அடுக்குத் தொடரென ஆகுவ தொற்றுமை இரட்டைக் கிளவியென் றிருப்பதே ஒருமை; இடர்ப்படல் தவிர்த்தினி இருவகைப் பொருளும் மனத்தினில் தெளிகநும் மயக்கமும் விடுத்தே. 1.1.1977 22. ஒற்றுமை உருப்படுமா? வளமனை பலவும் வருபொருட் டொகையும் உளநல் முதியோன் ஒருவன்; அவற்குக் கற்றறி மக்கள் காளையர் நால்வர் உற்றனர் மணம்பெறத் தக்கநற் பருவம்; மகட்கொடை வேண்டி மருகும் நாளில் நகத்தகும் நண்பன் நவின்றனன் சிலசொல்; நால்வரும் தனித்தனி நங்கையர் மணப்பின் பாழ்படும் ஒற்றுமை; பழுதுறும் அமைதி; வருத்தமும் குழப்பமும் வந்துனைச் சூழும்; ஒருத்தியைக் கொணரின் ஒற்றுமை வாழும்; பெண்டிர் நால்வர் சண்டைகள் இடுவர் மண்டைகள் உடைபடும் அண்டையர் நகைப்பர்; பலமொழி பேசும் பலப்பல மாநிலம் நலமுற ஒற்றுமை நிலவுறச் சான்றோர் ஒருமொழி கொணர்தலை உற்று நோக்குதி! அறிவிலாச் செயலா அவரெலாம் செய்வர்? அதனால் நீயும் அரிவை ஒருத்தியை மதலை நால்வர்க்கும் மணமுடிப் பாயே! 2.7.1979 23. எங்கே தமிழன்? தமிழனைக் காணவில்லை-ஈன்ற தாயகம் முழுவதும் போயெதிர் தேடினும் - தமிழனை இமிழ்கடல் வரைப்பில் எங்கணும் சென்றான் இசையுடன் தன் கொடி ஏற்றினன் என்றார் - தமிழனை இந்துவென் றொருவன் என்னெதிர் வந்தான் இசுவாம் எனவோர் இளைஞன் சொன்னான் வந்துமற் றொருவன் கிறித்தவன் என்றான் வருபவர் ஒவ்வொரு வகைவகை சொன்னார் - தமிழனை பார்ப்பான் முதலி பஞ்சமென் செட்டி பள்ளொடு பறையெனப் பலபேர் சுட்டி ஆர்த்தார் இனும்பல் லாயிரங் கொட்டி ஆதலின் என்மனம் அலைந்தது சுற்றி - தமிழனை 3.12.1982 24. தமிழனா? இந்தியனா? எடுப்பு இந்தியன் என்றொரு தமிழ்மகன் சொன்னால் அவன்தான் இங்கே ஏமாளி-கூத்தன் இயக்கிட இயங்கும் கோமாளி - இந்தியன் தொடுப்பு உந்திய உணர்வால் தமிழனென் றேதனை உரைப்போன் மானம் உயர்ந்துள திறனாளி - இந்தியன் முடிப்பு அவனே இந்தியத் தமிழனென் றிசைத்தால் அடிமையென் றெழுதிய முறியாளி புவிமிசைத் தமிழ இந்தியன் என்றே புகல்பவன் சரிநிகர் சமனாளி - இந்தியன் எப்பெயர் சூடுதல் ஒப்புமென் றாய்ந்தே ஏற்றிட முனைபவன் பொறுப்பாளி எப்பொருள் கூறினும் எவ்வெவர் கூறினும் மெய்ப்பொருள் காண்பவன் அறிவாளி - இந்தியன். 7.5.1987 25. என் குறிக்கோள் தமிழன் எனும்பெயர் சாற்றுங் காலைக் குமையா உரிமை கொள்ளுவன் யானே; இந்தியன் எனும்சொல் இயம்புங் காலை உந்திய நட்பை உணருவன் யானே; உலகம் எனும்பெயர் ஒதுங் காலைக் கலகமில் லன்பைக் காணுவன் யானே; விரிமனம் எனச்சொல்லி உரிமை யிழந்து பிறபிற நினையிற் பேதையன் யானே. 1.2.1988 26. ஏற்றம் பெறுமா இந்தியா? தீண்டுதல் குற்றம்; தெருவிடை நடக்க வேண்டுதல் குற்றம்; விழியாற் பார்ப்பது மிகப்பெருங் குற்றம்; மிதியடி யணிந்து நடப்பது குற்றம்; நாயினுங் கீழா இந்திய நாட்டில் இப்படி ஓரினம் சொந்த நாட்டில்நொந்து தவித்தது; அடிமைப் புழுவெனப் படிமிசக் கிடந்தது; மிடிமையிற் பட்டது வேதனை யுற்றது; சிந்தனை மாந்தர் நொந்தன ராகி இந்த நிலை ஏன்? என்றனர் ஏங்கி அவரவர் தலைவிதி ஆண்டவன் படைப்பிது தவறில் சாத்திரம் தந்த நெறி யென ஒதினர் இறைவன் தூதுவர் என்போர்; தூதரைத் துரத்து; தொழத்தகும் இறைவன் மேதினி மாந்தரை மேலெனக் கீழெனப் படைத்தனன் ஆகின் உடைத்தெறி அவனை; சாத்திரம் இதுவெனில் ஆத்திரங் கொண்டு போர்த்திறங் காட்டு பொசுக்கு நெருப்பில்; மதவெறி தடையெனில் மதத்தை மாற் றெனப் புதுநெறி காட்டிப் பொங்கினர் இருவர்; தெற்கில் திராவிடப் பெரியார் ஒருவர் வடக்கில் வாழ்ந்த அம்பேத்கர் ஒருவர்; இருவர் தோன்றி எதிர்த்தன ரேனும் சரிவரச் சமனிலை சார்ந்தில தின்னும்; மாற்றம் வேண்டின் நூற்றுவர் வேண்டும், தூற்றும் மதவெறி சூழின் ஏற்றம் பெறுமோ இந்திய நாடே? 21.12.1988 27. கண்ணீர்ப் பொங்கல் துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும் துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார் வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை வரிப்புலியாய்ப் பாய்ற்தெதிர்த்து வாகை கொண்டார் அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்; அமைதியெனும் பெயராலே குண்டு வீசித் தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்; தோழமையே பகையானால் என்ன செய்வார்? சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச் சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து வெங்களத்தில் வரும்விடியல் எனநி னைந்து வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார் தங்குலத்தோர் விழியிழந்தும் உயிரி ழந்தும் தையலர்தம் கற்பிழந்தும் தயங்கா ராகித் தங்குறிக்கோள் வெற்றிபெறும் வேளை யிற்றான் தடையாகிப் பாரதமே நின்ற தம்மா! இனப்பகையை எதிர்ப்பானா? அமைதி பேசி எழும்பகையை எதிர்ப்பானா? ஈழ நாட்டான் தனித்துலகில் நிற்கின்றான்; சிங்க ளத்தார் தாங்குபடை கைக்கொள்ளத் தமிழன் மட்டும் முனைக்களத்தில் வெறுங்கைய னாக நிற்க முயல்வதனால் அமைதியுண்டோ? தமிழி னத்தை நினைக்குமுளம் பொங்குவதால் விழிகள் பொங்கி நிலைகலங்கித் துடிக்கின்றோம் பொங்கல் நாளில். 29-12-1987 28. பொங்கல் விழா எண்சீர் விருத்தம் கருநீலங் குழைத்தெடுத்துக் கரைத்து, ஞாலம் கண்ணுக்குப் புலனாகா வண்ணம் பூசிப் பொருள்யாவும் மறைத்ததுபோல் உலகில் யாண்டும் புகுந்ததனை விழுங்கிவரும் இருளின் கூட்டம் மருளோடு வெருண்டொடச் செய்து, கீழை வான்வெளியைச் சிவப்பாக்கிப் புதிய ஆட்சி உருவாக்கி, விழித்தெழுந்தோர் நெஞ்ச மெல்லாம் உவப்பாக்கிச் செங்கதிரோன் தோன்றக் கண்டேன் சிறைவிடுத்துச் சிறைவிரித்துச் செவ்வான் கண்டு சிந்தைகளி கூர்ந்துபல விந்தை செய்து உறைவிடத்துக் கிளைகடோறும் ஓடிஆடி ஒலியெழுப்பும் புள்ளினைப்போல் என்றன் பிள்ளை திரையுடுத்த துகில்விரித்த அணைவி டுத்துச் சிறுவிழியின் இமைவிரித்துச் சிரித்தெ ழுந்து குறைகுடத்துப் புனலொளிபோல் வாயால் நாவாற் குரலெழுப்பித் தள்ளாடி திரியக் கண்டேன். செங்கதிரின் முகங்கண்டு பொய்கை தன்னில் செவ்விதழ்தா மரைமுகமும் மலர்தல் போலப் பொங்கிவரும் மகிழ்ச்சியினால் என்னை நோக்கிப் பூங்கொடியின் இடையுடையாள் துணைவி நல்லாள் துங்கமுகம் மலர்ந்தொளிர முறுவல் பூத்தாள்; துய்யபுனல் ஆடியதால் ஈரஞ் சொட்டத் தொங்கிவரும் குழல் நுனியை முடித்துக் கட்டித் தொடுத்தெடுத்த மலர்ச்சரத்தைச் செருகி வைத்தான் திங்கள்முகம் மிகப்பொலிய நெற்றி மீது திலகமிட்டு, மலர்விழியில் மையும் இட்டுத் தக்கமென மின்னுமிழை பின்னி நெய்த தகதகக்கும் காஞ்சிபுரப் பட்டு டுத்துப் பொங்கலுக்கு நல்வரவு நவில்வாள் போலப் புதுவகைய மாக்கோலம் இட்டு முன்றில் எங்கணுமே மங்கலஞ்செய் தொளிர வைத்தாள் இடையிடையே செம்மண்ணிற் கோலஞ் செய்தாள் வாயிலெலாம் மாவிலையால் தோர ணங்கள் வகைசெய்து முடிறசெய்து *நால விட்டாள் சேயிழையாள் ஓடிவிளை யாடும் என்றன் சிறுமகனைப் பிடித்திழுத்துக் கொஞ்சிக் கெஞ்சி வேயிணையும் மென்தோளில் தாங்கிச் சென்று வெந்நீரை இளஞ்சூட்டில் இறக்கி அந்தச் சேயினையும் நீராட்டி அணிகள் பூட்டிச் செந்நிறத்துப் பட்டுடுத்தி மகிழ்ந்து நின்றாள். ஒப்பனைகள் மகவினுக்குச் செய்த பின்னர் ஒண்டொடியாள் கடைக்கண்ணால் நோக்கி நின்றாள்; அப்பொருளை யுணர்ந்தெழுந்து புனலும் ஆடி அவள்தந்த புத்தாடை யுடுத்து நின்றேன்; ஒப்பிலவள் முகமலரைத் தாளில் வைத்தே ஒருகொடிபோல் இடைநுடங்க வணக்கஞ் செய்தாள் இப்பழமை எதற்கென்றேன் உம்மை யன்றி எனக்கெனவோர் தெய்வமிலை அத்தான் என்றாள். செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும் தீங்குயிலே நானுனக்குத் தெய்வ மென்றால் சிந்தையினை ஆண்டுகொண்ட நீயே எற்குத் தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன்; இந்தவகை அன்பதனால் பிணைந்து நின்றால் இல்லறந்தான் பேரின்பம்; இதனைவிட்டு நொந்துழன்று திரிகின்றார் உலக மாந்தர்; நுண்மதியே! என்னுயிரே! வாழ்க என்றேன் வணங்குமெனை வாழ்த்திவிட்டீர்; மற்றெ னக்கு வரமெங்கே? பரிசிலெங்கே? எனந கைத்தாள்; நுணங்கிடையே எனைவணங்கி நிற்கும் பாவாய் நொடிப்பொழுதும் பரிசில்தரத் தயங்க கில்லேன் மணங்கமழும் மலர்முகத்துச் சிறுவன் நின்றான் மதிமுகத்தை மாறாமல் நோக்கு கின்றான் கணங்கணமாத் தரவிருப்பம் ஆனால் அந்தக் கள்வன்நமை விடுவானோ கண்ணே என்றேன். பொங்கலுக்குத் தரும் பரிசா? நன்று! நன்று! போங்களத்தான் இப்பொழுது சொன்ன தெல்லாம் எங்களுக்கு வேண்டாவென் றோடி விட்டாள்; இருநிலத்தை மெழுகிஅதிற் கோல மிட்டு மங்கலநாள் தொழுதங்கே அடுப்பு மூட்டி மஞ்சளிலை தொடுத்தபுதுப் பானை ஏற்றிப் பொங்கிவரப் பாலூற்றி முனைகள் தேயாப் புத்தரிசி பச்சரிசி உலையி லிட்டு முந்திரியின் பருப்பிட்டுக் கொடியில் காய்த்த முதிர்கனியின் உணங்கலுடன் வெல்லங் கூட்டி உந்திஅது பொங்கிவரப் பொங்க லிட்டாள்; உளக்களிப்பால் பொங்கலோ பொங்க லென்று செந்துவர்வாய்க் குரலெழுப்பிச் சங்கம் ஆர்த்துச் செவ்வாழை யிலைவிரித்துப் படைத்த தன்மேல் வெந்துருகும் நெய்யூற்றி உண்ண உண்ண வேண்டும்வரை பரிமாறி மகிழ்ந்து நின்றாள். மனைக்கினிய மங்கையவள் பொங்கி வைத்து மனமுவந்து பரிமாற நான் சுவைத்துத் தினற்கினிது தினற்கினிதென் றுண்டே னாகத் தெரிவைமுகத் திதழ்சிறிது மலரக் கண்டேன்; எனைத்திடர்கள் உற்றாலும் தனது ழைப்பை, இனியதொரு தன்படைப்பைப் பிறர்பு கழ்ந்தால் மனத்துயரம் மாறிவிடும் மகிழ்வு தோன்றும் மாநிலத்தின் இயற்கையிது வெனவு ணர்ந்தேன் உறவினர்க்கும் உழைக்கின்ற தொழில்வல் லார்க்கும் உற்றவர்க்கும் மற்றவர்க்கும் பகிர்ந்து பொங்கல் உறவளித்தோம் மகிழ்ந்தளித்தோம்; பின்னர் அந்த ஒண்டொடியை அருகழைத்தேன்; யாழெ டுத்து நறவெனக்கிங் கூட்டுதற்கு மீட்டு கென்றேன்; நங்கையவள் யாழெடுத்தங் கமர்ந்தாள் என்முன் நிறம்வெளுத்த தாமரையாள் உருவைச் சான்றோர் நிகழ்த்தியநற் கற்பனையை நேரிற் கண்டேன் இடப்புறத்தே யாழ்சாய்த்துத் தாங்குங் காட்சி எழிலைத்தான் என்னென்பேன்; விரைந்து சென்று இடக்கையின் விரல்நான்கும் நடனம் ஆடி ஏழிசையின் வகைமிழற்றும் திறந்தான் என்னே! படக்கிடந்த யாழ்நரம்பைத் தெறிப்ப தற்குப் படரும்வலக் கைவிரலின் நளினம் என்னே! தொடக்கிடுமவ் விசைக்கேற்ப அவள்மு கத்தில் தோன்றிவரும் மெய்ப்பாட்டின் வகைதான் என்னே! மீட்டியநல் யாழிசையைக் கேட்டு மைந்தன் மெய்ம்மறந்தொன் மடியமர்ந்து சிலைபோல் தோன்ற, ஊட்டியநற் சுவைமறந்து செயல்ம றந்தே உலகினையும் மறந்திருந்தேன்; யாழின் ஓசை காட்டியஓர் உலகினில்நான் மிதந்து வந்தேன்; கனவுலகம் நனவுலகம் அறிய கில்லேன்; பாட்டிசைக்கு மயங்காத மாந்த ருண்டோ? படைத்தசெவிப் பொறிப்பயனைப் பெற்றேன் பெற்றேன். விழிப்பொறிக்கு விருந்தளித்தாய் காட்சி தந்து; வீணையினால் விருந்தளித்தாய் செவிப் பொறிக்குக், குழைத்தெடுத்த பச்சரிசிப் பொங்கலிட்டுக் கூர்சுவையால் வாய்ப்பொறிக்கு விருந்த ளித்தாய்; தெளிர்த்தநரம் பிசைவிடுத்துக் கொவ்வைவாயின் தேன்மொழியால் நின்குரலாற் பாடி யின்பம் திளைத்திருக்கக் கருத்தினுக்கும் விருந்த ளிப்பாய் செங்கதிர்க்கு வாழ்த்திசைப்பாய் மாதே என்றேன். குழைவித்த மென்னரம்பின் யாழ்விடுத்துக் குரலிசையால் இனிமையினைச் செவியில் வார்த்தாள், மழைநிகர்த்த குழலிதன்வாய் மலர்த்துச் செந்தேன் மாரியென இசை பொழிந்தான்; முன்னர் மீட்டுக் கழைபிழிந்த சாறெனுமா றிசைத்த யாழ்தான் கலக்கமுறத் தோல்விபெற வென்றி கொண்டாள்; கழைகொடுத்த குழலிசையோ எனம யங்கக் களிகூர மிடற்றிசையால் நனையச் செய்தாள் மனங்குளிர மேல்நடுகீழ் எனவு ரைக்கும் வழிமுறையால் இன்னிசையை இசைத்துப் பின்னர் *அனங்கவிழும் நடையுடையாள் பொருள்வி ளங்கா அயன்மொழியின் இசைப்பாடல் ஒன்றெ டுத்துத் தனந்தனந்தோம் தகிடவென முழங்கிக் கைகள் தாளமிடப் பாடினள்காண்; கேட்டு நெஞ்சம் சினங்கெழும முகஞ்சிவந்து கைகள் கொண்டு செவியடைத்தேன் உளந்துடித்தேன் நிறுத்து கென்றேன். நிறுத்தென்று நான் சொல்லி நிறுத்து முன்னே நின்றதவள் வாய்ப்பாட்டு; பேதைப் பெண்ணே பொறுத்திருக்கும் பண்பினுக்குத் தமிழ னைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்ட தில்லை; சுறுக்கென்று சொல்வதெனில் மானம் விட்டோர் சூடுகெட்டோர் நமைப்போல யாண்டும் இல்லை; கிறுக்கரெனத் தொழும்பரென அறிவு கெட்டுக் கீழாகிப் பாழாகித் திரிகின் றோமே! பாடுகின்ற நீதமிழ்ப்பெண் பாடல் கேட்கும் பாவியும்நான் தமிழ்மகனே; ஆனால் இங்குப் பாடுகின்ற பாமட்டும் தமிழே யில்லை; பாரெங்கும இக்கொடுமை கண்ட தில்லை; நாடுகின்ற இசையரங்கில் பிறவ ரங்கில் நன்மைமிகும் வானொலியில் கொடுமை செய்யும் வேடுவர்கள் தமிழுக்குத் தீங்கு செய்யும் வினைகாணும் பொழுதெல்லாம் நெஞ்சம் வேகும் நல்லவரும் சான்றோரும் சொல்லிச் சொல்லி நாடோறுங் கதறினுமே கேட்பா ரில்லை; புல்லடிமைத் தொழில்செய்தே பழகி விட்டோம்; புரியாத மொழிகேட்டு மழுங்கி விட்டோம்; கொல்லரவு நச்சுமிழ்தல் போல நீயும் கொடுமொழியால் இசைபாடி எனைவ தைத்தாய் அல்லலுறச் செய்துவிட்டாய் பொங்கல் நன்னாள் அகமகிழ்வைக் கெடுத்துவிட்டாய் எவரை நோவேன்? பழுத்தெழுந்த சினத்தைஎலாம் கொட்டி விட்டேன்; பாவையவள் துடிதுடித்தே உங்கட் கென்ன? புழுக்கலிலாப் பச்சரிசி வேண்டு மென்றேன் புழுக்களுள பச்சைநிற அரிசி தந்து முழக்குகிறீர்; உலையிட்டுப் பொங்க வைத்தால் மும்மடங்கு பொங்கிவரும் சீற்றம் என்றாள் முழங்கையில் தலைவைத்துத் துயி;லும் என்னை முழக்கிற்றுப் பாவைகுரல் விழித்தெ ழுந்தேன். கனவகத்தும் பெருங்கவலை; நனவ கத்தும் கரைகாணாக் கவலைகளே சூழும் வண்ணம் வினைவிளைக்கும் கொடியவரைக், கொள்ளை கொள்ள வேளைதொறும் வஞ்சகங்கள் செய்து கொண்டு தினவெடுத்துத் திரிபவரை ஒழிக்கும் நாள்தான் திருநாளாம் எனவுரைத்தேன்; அவள்ந கைத்து, முனமெழுந்து நீராடி வருக என்றாள்; மொய்குழலின் ஆணைதனை ஏற்றுக் கொண்டேன். அரசினர் பயிற்சிக் கல்லூரி, புதுக்கோட்டை, 21.1.1967 29. தீப்பொறி தோற்றத்தால் முதல்மாந்தன், தொல்லுலகில் முதன்மொழியைத் தோற்று வித்த ஏற்றத்தால் முதல்மாந்தன், ஈடில்லா நாகரிக இயல்பு காட்டும் ஊற்றத்தால் முதல்மாந்தன், உயர்மறத்தைப் போர்க்களத்தில் உணர்த்தி நிற்கும் சீற்றத்தால் முதல்மாந்தன், சீர்மிகுத்து வாழ்ந்தவன்றான் சிதறிக் கெட்டான். சாதிதரும் பிரிவுகளைச் சமயத்தின் பொய்மைகளைச் சடங்கு தம்மை ஒதிவருஞ் சழக்கர்களை ஓராது நம்பியதால் உணர்வி ழந்தான்; பாதிமதி உடையவனாய்ப் பாழ்பட்ட வாழ்வினனாய்ப் பான்மை கெட்டான் மேதினியின் மேல்மகன்றான் மேவலராற் கீழ்மகனாய் வீழ்ந்து விட்டான் வீழ்ந்தவனை மேலுயர்த்த வீறுபெறும் வாழ்வுதர விழைந்து, தீமை போழ்ந்தெறியப் பாட்டுலகிற் புகுந்திருக்கும் புரட்சிமனப் பொன்னுச் சாமி சூழ்ந்தெழுதும் ஒவ்வொன்றும் சுடுகின்ற தீப்பொறிதான்; சொல்லும் பாடல் தாழ்ந்தவரை உயர்த்திடுக தன்மானம் வளர்த்திடுக தழைத்து வாழ்க 5-1-1984 30. நீர்ப்பானை ஓட்டையானால்...? சாதிக்குச் சாதியிங்கு மோதிக் கொண் டழிகின்றசேதி யுண்டு வீதிக்கு வீதியிங்குப் போதிக்கும் பள்ளிக்குஞ் சாதி யுண்டு வாதிக்க வாயில்லை, வாழ்விக்க வழியில்லை, வாழ்ந்த நம்மைப் பாதிக்கும் நிலையுண்டு பாழ்பட்ட பிரிவுண்டு பாராய் தம்பி! பார்ப்பானைத் திட்டுகிறாய் பாடுபல படுகின்றாய் பயன்தான் உண்டா? சேர்ப்பாரை ஒன்றாகச் சேர்க்காமல் செயன்முறையிற் செய்து காட்ட ஏற்பாடு செய்யாமல் எத்தனைதான் முயன்றாலும் என்ன கண்டாய்? நீர்ப்பானை ஒட்டையடா! நிரப்புகிறாய் தண்ணீரை, நிறைதல் உண்டோ? ஒன்றாக நாமிணைந்தால் ஊறுசெயும் பகைமையெலாம் ஒழிந்தே போகும்; நன்றாக எண்ணிப்பார்; நாலாயி ரஞ்சாதி நமக்குள் வைத்தோம் *ஒன்றாரும் புகுந்துவிட ஓட்டைகளை அமைத்துவிட்டோம்; உட்பு குந்தோர் வென்றாள வழிசமைத்தோம்; வெறுங் கூச்சல் போடுகிறோம்; விடியல் காணோம். இனவுணர்வு நமக்குள்ளே எழுந்துவிடின் நமைப்பகைமை என்ன செய்யும்? இனநலமே குறியாக எப்பொழுதும் அப்பகைவர் இயங்கு கின்றார்; கனவுலகில் திரிகின்ற தமிழ்மகனே உண்மைநிலை கண்டு கொள்வாய்; உனையொன்று வேண்டுகிறேன் உன்னினத்தை முன்னேற்ற ஒன்று சேர்வாய் தமிழரெலாம் ஒன்றானார் தமிழர்க்குப் பகைவரெலாம் தாழ்ந்து போனார் அமிழ்தனைய இம்மொழியை அகம்மகிழ என்செவியில் ஆரு ரைப்பார்? இமிழ்கடல்சூழ் இவ்வுலகில் எந் தமிழர் சாதியினை எரித்தே விட்டார் தமிழனந்தான் இனியுண்டு தலைநிமிர்ந்து வாழ்வரெனச் சாற்று வார்யார்? 31. விண்வெளிப் போருக்கா விஞ்ஞானம்? அணுவைப் பிளந்திடும் ஆற்றலைப் பெற்றனன் ஆறறி வேந்திய மாந்தனென்றார்- ஆய்வில் நுணுகிப் புகுந்திடும் நூலறி வாளனை நூறு வகைப்பட வாழ்த்தி நின்றேன். பாருக்கு நல்லன வாய்த்திடு மேயெனப் பச்சை மனத்தினுள் நச்சிநின்றேன்-அமைதி வேருக்குள் பாய்ச்சினன் காய்ச்சிய நீரினை வெந்து தளர்ந்துளம் மாழ்கிநின்றேன் யாருக்கும் யாவையும் வாய்த்திடு மேயென யானொரு கற்பனை செய்து கொண்டேன்-விண்ணில் போருக்கு வல்லவன் யாரெனப் பார்த்திடப் போர்ப்பறை கொட்டினன் கேட்டுநொந்தேன் ஆடவர் அஞ்சிட மாதரும் அஞ்சிட ஆங்கிளஞ் சேய்களும் அஞ்சிநின்றார்-எந்த நாடரும் அஞ்சிட நாய்வெறி கொண்டதால் நாளெலாம் அஞ்சியே வாடுகின்றார் மண்ணுங் கெடுத்தனர் விண்ணுங் கெடுத்தனர் வாரியின் நீருங் கெடுத்தனரே -தீய எண்ணம் உடுத்தவர் என்னென்ன கேடுகள் ஈங்கினும் செய்யப் படித்தனரோ? விண்வெளிப் போருக்கோ விஞ்ஞானங் கற்றனர் வேதனை நெஞ்சினில் விஞ்சுதடா-மக்கள் பண்ணிய குண்டுகள் மக்களை மாய்த்திடப் பாரதைக் கண்டு பொறுத்திடுமோ? மக்களைக் கொன்றபின் மாநிலம் ஏதடா? khkâ bah‹iw kwªjdnuh?-e«ik¡ கொக்கென எண்ணினர்; கொக்கரிப் போர்தமைக் கூடி யெதிர்த்தல்நம் வேலையடா! உலகிற் பிறந்தவர் ஒவ்வொரு மாந்தரும் உரிமை படைத்தவர் உண்மையிதாம்-இங்குக் கலகம் விளைத்திடின் காய்ந்து தடுத்திடக் கையை உயர்த்துதல் வேண்டுமடா உண்மையிற் போர்வெறி ஓட்டிட யாவரும் ஒன்று திரளுதல் வேண்டுமடா-இந்த எண்ணம் மிகுந்தவர் எம்மவர்தோழரென் றெண்ணி நடந்திட வேண்டுமடா, 20-5-1987 32. சான்றோர் செய்த பிழை கற்றில ராகினும், மற்றுயர் குணநலன் அற்றன ராகினும், அரும்பொருள் பெற்றவர் முற்றநன் மதிப்பினைப் பெற்றிடல் காண்குதும்; தமக்கென ஒருதொழில் தாங்கில ராகி உமக்கும் எமக்கும் உருகுதல் போல மயக்குறப் பேசி மறுநாள்மாறி நாளொரு மேடையில் நடைபயில் அரசியல் வாதியர் தமக்கும் வழங்குவர் மதிப்பு; தடவிய பொடியால் தகதக முகத்து நடிகர் தமக்கும் நன்மதிப் பளிப்பார்; ஆன்றவிந் தடங்கிய சான்றோர் தமக்கோ ஏன்தர மறந்தனர் ஏற்றநன் மதிப்பை? பெரும்பொருள் தேடா திருந்தனர் அது பிழை; அரசியல் ஒந்தி ஆகிலர் அது பிழை; பொடியால் உடையால் புதுமெரு கேற்றும் நடிகர் ஆகவும் நயந்திலர் அதுபிழை; இற்றை நிலையினை எண்ணுங் காலை பற்றி எரியும்என் பாழ்படு நெஞ்சே. 27.4.1978 33. தேர்தல் நினைவு இரவெனும் நங்கை வந்தாள் என்விழி துயிற்ற எண்ணிப் பிறையினிற் குளிரெ டுத்துப் பிச்சியில் மணமெ டுத்து வருமிளந் தென்றல் கொண்டு வீசினள்; வைய மெல்லாம் இருளிய பின்னும் என்றன் இமைகளோ இணைய வில்லை. தேர்தலை நினைந்து விட்டேன் சிந்தையும் உறங்க வில்லை; நேர்மையை அங்குக் காணேன் பொய்ம்மையே நெளியக் கண்டேன்; தேர்வரும் நாளைப் போலத் தெருவெலாம் கூச்சல் கேட்டேன் ஊர்வலம் பலவுங் கண்டேன் உண்மையே காண வில்லை. உண்மையே சிறிது மில்லார் ஊரினை ஆள வந்தால் கண்ணியம் நிலைப்ப தெங்கே? கயமைதான் ஓங்கி நிற்கும்; பெண்மையை விலைக்கு விற்போர் கற்பினைப் பேச வந்தால் மண்மிசை என்ன வாழும்? மதியுளர் நகைப்ப ரன்றோ? தடியடி குத்து வெட்டு, தையலர் கற்பை யுண்ணுங் கொடியரின் செயல்கள், கொள்ளை கொலைகளுங் கூட லன்றி விடியலா காணல் கூடும்? விழிகளா துயிலும்? எங்கும் இடியொலி கேட்ப தன்றி இன்னொலி யாதுங் கேளேன். நாட்டினைக் கருத வில்லை நலங்களும் விளைய வில்லை வீட்டினைக் கருது வோரால் வேறென்ன விளையு மிங்கே; கேட்டுணர் வுடையோர் ஆண்டால் கீழ்மைதான் விஞ்சும் இங்கே நாட்டுணர் வுடையோர் வந்தால் நலமெலாம் பொங்கும் பொங்கும் 34. விழா மட்டும் போதுமா? நேற்றாண்ட மன்னவனை நினைவுறுத்தும் தோற்றத்தாய், நினக்கு நாட்டில் நூற்றாண்டு விழாவென்றார் நுவலரிய மகிழ்வுற்றேன்; நுணுகிப் பார்த்தேன் காற்றாண்ட திசையெல்லாம் கவிச்சுவையைப் பரப்பலன்றிக் கருத்திற் கொள்ளார்; ஏற்றாண்டு நின்கருத்தை ஏனின்னும் செயற்படுத்தா திருக்கின் றாரோ? பார்திருத்தப் பாடுபட்டாய் பகுத்தறிவை வளர்த்துவிட்டாய் பாவின் வேந்தே சீர்திருத்தப் பாமொழிந்தாய் சீரழிந்து பாவுலகஞ் சிதைந்த தையா! யார்திருத்தப் போகின்றார் யாப்புலகை? மயங்குகிறேன் யாது செய்வேன்? ஓர்பொருத்தம் இல்லாத உரைநடையைப் பாடலென உரைக்கின் றாரே! சரிந்துவிட்ட தமிழர்க்குத் தமிழியக்கம் எனும்நூலைத் தந்து சென்றாய்; திருந்திவிட்ட தமிழரினிச் செயற்படுவர் என்றிருந்தேன் தெளிய வில்லை; குருந்துவிட்ட மழலையர்க்கும் கொடுக்கின்றார் அயன்மொழியை; கொடுமை யன்றோ? மருந்துவிட்டென் மனப்புண்ணை ஆற்றுவர்யார்? மானத்தை மறந்தே போனார். சாதிக்கு நீகொடுத்த சாட்டையடி போதாதோ? தமிழர் இன்னும் மேரிதிக்கொண்ட டழிகின்றார்; முற்போக்குப் பாதைசெல முயல வில்ல்; *மேதித்தோல் போர்த்தவுடல் மேதியினிற் பெற்றனரோ? மேடை யேறிப் போதிக்க மட்டுமவர் மறப்பதில்லை பாழாகிப் போன மாந்தர். எவன்விட்டான் சாதியினை? எவன் செய்தான் கலப்புமணம்? எவனோ எங்கோ தவறிவிட்டான் செய்துவிட்டான் தவிக்கின்றான்; மற்றவனோ சாதி தன்னைச் சுவர்வைத்துக் காக்கின்றான் சொல்வீரங் காட்டுகிறான் துணிய வில்லை; இவன்கெட்ட கேட்டுக்கு நூற்றாண்டு விழாவெடுக்க எழுந்தும் விட்டான். பாவேந்தர் நூற்றாண்டு விழாவுக்குப் பாடியது 35. நன்றி காட்டுக கடவுளின் பெயரைச் சொல்லிக் கட்டிய கதைக ளெல்லாம் மடமையென் றெடுத்துச் சொல்லி மாபெரும் போர் தொடுத்துக் கடமையை ஆற்றி நின்ற கதிர்நிகர் பெரியார் கொள்கை சுடர்விடப் பாடி வந்த தொழத்தகு பாட்டு வேந்தன். சுயமரி யாதைக் காரன் சோர்வினை யறியா வீரன்; மயலுறு பகைவர் நெஞ்சம் மருண்டிடச் செய்யுந் தோளன் நயமிகு தமிழர் பண்பில் நஞ்சினைக் கலக்கும் வஞ்சக் கயவரைச் சுட்டெ றிக்கும் கனல்பொழி விழிகள் கொண்டான். நறுக்கிய கருப்பு மீசை நரிக்குண மாக்கள் வாலை நறுக்கிடும் தோற்றம் காட்டும்; நற்றமிழ் மாந்தர் வாழ்வில் குறுக்கிடும் பகைமை யெல்லாம் குலைநடுங் கிடவே செய்யும்; முறுக்கிய நரம்பில் நல்ல முத்தமிழ்க் குருதி பாய்ச்சும். சொல்லிலே தேனும் உண்டு; சுடர்விடு கனலும் உண்டு; மெல்லவே தென்றல் பேசும்; மீறிய புயலும் வீசும்; நல்லமென் குயிலும் கூவும் நடுவினிற் புலியும் பாயும்; வல்லமை தமிழர்க் கிங்கே வழங்கிடும் உணர்ச்சிப் பாடல். தமிழ்மொழி தழைக்க வேண்டின் தமிழினம் நிமிர வேண்டின் அமிழ்தெனப் பாட்டு வேந்தன் ஆக்கிய பாடல் முற்றும் தமிழரின் நெஞ்ச மெல்லாம் தனியர சாட்சி செய்து கமழ்ந்திட வேண்டு மிங்கே களிநடம் புரிய வேண்டும் பாரதிப் புலவன் நூலைப் பரப்பிடப் பலரீங் குள்ளார்; பாரதி தாசன் பேரைப் பகர்ந்திடச் சிலரே உள்ளார்; ஊரவர் நன்றி யில்லார் ஒருதமிழ் மகனைப் போற்றும் சீரறி யாத மாந்தர் செந்தமிழ் நாட்டில் உள்ளார். இத்தகு நினைவால் எங்கள் எழிற்கவி வேந்த னுக்கு முத்தமிழ் மன்றங் காண்க; முன்னவன் புகழ்ப ரப்ப மெத்தவும் முயல்க; அந்த மேலவன் கருத்தும் பாட்டும் இத்தரை முழுதுஞ் செல்க; எழுச்சியைப் பரப்பி வெல்க.. 36. கண்ணீரை யார் துடைப்பர்? பாவெல்லாம் படையாக்கிப் பகைமை யோட்டும் பாவேந்தே எங்குலத்தின் தலைவா இன்று நாவெல்லாம் புலர்ந்திருக்க விழிநீர் சிந்த நாடெல்லாங் கவிவாணர் திகைத்து நிற்கக் கோவென்று வாய்ப்புலம்பக் கையற் றேங்கக் கொற்றவனே கற்றவனே மறைந்தா விட்டாய்! சாவொன்றும் புதுவதன்று தெரியும்; ஆனால் தமிழன்னை கண்ணீரை யார்து டைப்பார்? கவிஞரெனப் பேர்படைத்த எங்கட் கெல்லாம் காவலன்யார்? செந்தமிழ்க்குத் தீங்கு செய்யப் புவியிலெவர் நினைத்திடினுங் கனன்றெ ழுந்து புலிப்போத்தாய்த் தனைமறந்து தமிழ்நி னைந்து கவிபொழிய வல்லான்யார்? இனிமே லிங்குக் கவிதைக்குப் பரம்பரையைப் படைப்போன் யார்யார்? இவையெல்லாம் நினையுங்கா லுணர்வு விஞ்சி இறப்பென்னும் ஒருபாவி தொலைக என்போம். முழுநிலவே செங்கதிரே காலங் கண்டும் மூவாத தமிழ்ப் பொழிலில் ஆடிவந்த அழகொழுகும் இளமையிலே உலக மாந்தர் ஆவியெலாங் குளிர்விக்குந் தென்றற் காற்றே பழகுதமிழ்க் கனிமூன்றுஞ் சுவைத்துப் பார்த்துப் பாடிவந்த பூங்குயிலே மறைந்தாய் நாங்கள் அழுதழுதும் வாராயோ? மீண்டு மிங்கே ஆடாயோ பாடாயோ? அந்தோ அந்தோ! கண்மூடி வழக்கமெனுங் காட்டில் தோன்றுங் கதைக்குதவாச் சாதிமதம் அடிவே ரற்றும் எண்கோடிப் பழங்கொள்கைச் சருகு சுள்ளி இழிவுதரும் அடிமையெனும் வெம்பல் வீழ்ந்தும் மண்மூடிப் போகவெனச் சாடி வந்த மாவலிமைப் பெரும்புயலே இடிமு ழக்கப் பண்பாடி அணிதிகழும் பாவால் மின்னிப் பழத்தசுவை பொழிமுகிலே யாண்டுச் சென்றாய்? எவ்விடத்தும் எப்பொழுதும் எவரி டத்தும் எதுவரினும் உண்மையினை எடுத்து ரைக்கும் செவ்வியநற் பெருமிதமும் அஞ்சா நெஞ்சும் சேராரை நடுக்குறுத்துஞ் சீர்த்த நோக்கும் கவ்வுமெழிற் றிண்டோளும் விரிந்த மார்பும் களிறனைய பெருநடையுங் கொண்ட சிங்கம் இவ்வுலகில் எங்கள்மனக் குகையில் வாழும் எழுந்தெழுந்து முழங்கிவரும் எந்த நாளும் இருட்புலத்திற் கவியுலகம் மூழ்குங் காலை எழுவெள்ளி பாரதியாய் வந்த திங்கே மருட்புலத்தை மாய்க்கின்ற ஞாயி றாக மன்னவனே நீவந்தாய் அவன்பேர் சொல்ல; உருப்பெற்ற கதிர்களென எம்மைப் போல்வார் உள்ளனரே ஆயிரவர் நின்பேர் சொல்ல; செருக்குற்றே மொழிகின்றேன் ஐயமில்லை சிந்தையுளே நீயிருக்க எனக்கேன் அச்சம்? வாழ்நாளிற் கவிஞனுக்கு வாழ்வே யில்லை வையத்துக் குறையென்றே சொல்வர்; அந்தத் தாழ்வுரையைப் பெருங்குறையை மாற்றி விட்ட தகவுனக்கே தலைநகரில் வாய்த்த தையா! வீழ்நாளின் பிறகடையும் பெருமை யெல்லாம் விழியெதிரே கண்டுவந்தாய் வெள்ளம் போல ஆழ்கடலின் கரையருகே தமிழர் கூட்டம் ஆர்ப்புடனே விழவயர்ந்து களிக்கக் கண்டாய். இல்லறத்தைப் பல்கலையின் கழக மாக்க ஈடில்லாக் குடும்பவிளக் கேற்றி வைத்தாய் சொல்லடுத்த தமிழ்வளர்க்கத் தமிழர்க் கெல்லாம் தூய்மைமிகு தமிழியக்கஞ் சொல்லி வைத்தாய் புல்லிதழ்த்தேன் மலர்முதலா இயற்கை யூடு பொருந்தழகின் சிரிப்பெல்லாந் திரட்டித் தந்தாய் சொல்லிருக்கும் பொருளிருக்கும் அணியி ருக்கும் சொற்றமிழில் பாண்டியனின் பரிச ளித்தாய். நறுந்தேனும் பசுப்பாலுங் கலந்து வைத்து நற்கனியாம் முக்கனியை நறுக்கி யிட்ட விருந்தாகும் நீதந்த கவிதை; மேலும் விசையொடிந்த உடலகத்தில் வீரஞ் சேர்க்கும்; பொருந்தாரைச் செவிசாய்த்துப் பொருந்த வைக்கும்; புலவோய்நின் நறுங்கவிதைக் கவிகள் சாவா மருந்தாகும்; செந்தமிழுக் குயிர்ப்பு நல்கும்; வையத்துள் என்றென்றும் வாழும் ஐயா எம்பாட்டன் பாரதிக்குத் தாச னானாய் எம்மனைய கவிவாணர்க் கரச னானாய் நம்மாட்சி யவைப்புலவன் நீயே யாகும் நாள்விரைவி லுண்டென்று நம்பி நின்றோம் எம்பாட்டில் அவலத்தைச் சேர்த்து விட்டாய் இரங்குகின்றோம் கண்ணீரைச் சொரிந்து நின்றோம் தெம்பூட்டித் தமிழ்காக்க வழிகள் காட்டு, திறமூட்டு கைநீட்டித் தொழுது நின்றோம் பாரதிக்குத் தாசனெனப் பாரு ரைக்கும் பாவலனே கவிக்குலத்துத் தலைவ ரேறே யாருரைக்க வல்லார்நீ யிறந்தா யென்றே யாமொவ்வோம்; பாரதியும் இளங்கோ கம்பன் பேரறிஞன் வள்ளுவனும் இறந்தா போனார்? பெருமையொடு வாழ்கின்றார்; அவர்போல் நீயும் பாருலகில் வாழ்கின்றாய் ஐயா எங்கள் பாடலுக்கும் உயிரூட்டு வழியுங் காட்டு. 37. இன்பம் எது? இவ்வுலகில் மக்களினம் விழைவ தெல்லாம் இன்பமெனும் ஒன்றன்றி மற்றொன் றில்லை; எவ்வுயிரும் இன்பினைத்தான் தேடித் தேடி இளைத்தலுக்கக் காண்கின்றோம்; துன்பம் என்றால் ஒவ்வுவதிங் கொன்றில்லை; முனிவர் தாமும் ஓய்வின்றித் தவங்கிடந்து முயல்வ தெல்லாம் அவ்வுலக இன்பத்தைப் பெறுதற் கென்றால் அதன்பெருமை சொலற் கெளிதோ? அரிதே யன்றோ? உலகியலின் உண்மைநிலை உணரா மாந்தர் ஒப்பரிய இன்பந்தான் வாழ்க்கை என்பர்; விலகரிய துன்பமுடன் கலந்த தைத்தான் வியனுலக வாழ்க்கைஎனச் சான்றோர் சொல்வர்; நிலவிவரும் இடரனைத்தும் நின்று தாங்கி நிலைகலங்கா நெஞ்சுரத்தால் முயன்று, வெற்றி குலவிவர வாழ்வது இன்ப மாகும் குறள்தந்த பெருமைமிகு நெறியும் ஆகும். வாழ்க்கையினை ஆறென்றால், நெறிப்ப டுத்தும் வரம்பாகும் இருகரையாம் இன்ப துன்பம் வாழ்க்கையினைச் சகடென்றால் இயங்கச் செய்யும் வட்டமெனும் ஈருருளை அவ்வி ரண்டாம்; வாழ்க்கையினை நாளென்றால் முழுமை செய்ய வருபகலும் இரவுமென அவற்றைச் சொல்வோம்; வாழ்க்கையினில் இவ்விரண்டும் உண்டென் றெண்ணி வகைதெரிந்து நடப்பவர்க்கே இன்பந் தோன்றும். ஏர்நடத்தி, விதைவிதைத்து, நாற்றுப் பாவி எருவிட்டுக், களையெடுத்து நாளும் நாளும் நீர்கொடுத்துக் காத்திருந்து பாடு பட்டோன் நெடுந்துன்பம் உறக்கண்டான்; அதனால் இந்தப் பார்நடக்க உணவளித்து வள்ள லாகிப் பசிகளைந்து வாழ்கின்ற இன்பங் கண்டான் கூர்படைத்த அறிவாளர் பட்ட துன்பம் கொடுத்தவையே நாம்நுகரும் இன்ப மெல்லாம். குறுமலர்க்கண் சிறுமகனைக் கொஞ்சும் தாய்க்குக் கூடிவரும் இன்பத்திற் களவே இல்லை; கருவுயிர்க்கும் போதவள்தான் அடையும் துன்பம் கணக்குண்டோ? பகலுக்கு வெம்மை என்றால் இரவினுக்குத் தண்மையன்றோ? உலகில் என்றும் இருகூறும் கலந்திருக்கும்; ஒன்றில் ஒன்றாம் உறுதுயர்க்கு மறுபுறமே இன்ப மாகும் உற்றறிவார் தமக்கேஇவ் வுண்மை தோன்றும். இன்பமெது வெனவுணர்ந்து தெளிந்து சொல்ல எவராலும் இயலாது; போதும் போதும் என்பதிலே காண்கின்றான் ஒருவன் இன்பம்; எனைத்துநிதி பெற்றாலும் போதா தென்றே தன்பெருவாய் திறந்தலைந்து பொருளைத் தேடித் தவிப்பதிலே மற்றொருவன் இன்பங் காண்பான்; மன்பதையின் மனத்தளவே ஆகும் அல்லாள் மதிப்பிட்டுச் சொல்லுதற்கோர் வகையே இல்லை. ஒருவனுக்கிங் கின்பமெனத் தோன்றும் ஒன்றே உறுதுன்ப மெனத்தோன்றும் மற்ற வர்க்கே; ஒருநிலத்தில் இன்பமெனக் கொண்ட ஒன்றை ஒதுக்கிடுவர் மறுபுலத்தில் துன்பம் என்றே; பெருவிருப்பால் இஃதொன்றே இன்பமென்பார் பிழையென்று மற்றொருவர் பிறிது சொல்வார்; ஒருவருக்கும் புரியாத பொருளே யாகி உலகிலது சுழன்றுவரக் காணு கின்றோம். தீப்பிழம்பின் உருண்டைஎனக் கிளர்ந்தெ ழுந்து திரைகடலில் முகங்காட்டுங் கதிரோன், மாற்றார் நாப்பொழிந்த இகழ்வுரையால் சினந்தெ ழுந்து நண்ணாரைப் புறங்கண்ட போர்க்க ளம்போல் மீப்படர்ந்த மேற்றிசையின் செக்கர் வானம், மெல்லியலார் முகம்போலப் பொலிந்து விண்மீன் நாப்பண்வரும் வெண்மதியம், அதைத் தொடர்ந்து நண்ணிவரும் முகிலினங்கள் காட்சி யின்பம். மலருமெழில் வண்ணமலர் கண்ணுக் கின்பம்; மருவிவரும் தென்றல்நலம் உடலுக் கின்பம்; பலமலருள் விரிந்தமணம் மூக்கிற் கின்பம்; பாடிவரும் வண்டொலியோ காதுக் கின்பம்; நலமருவும் நறுங்கனிகள் நாவிற் கின்பம்; நானிலத்துத் தோன்றுபொருள் அனைத்து மிங்குப் புலனைந்தும் நுகரவரும் இன்ப மன்றோ? பொருந்துசுவை நுகருங்கால் அளவு வேண்டும். இரவுபகல் எனநோக்கா துழைத்துச் செல்வம் ஈட்டிமிகத் தொகுப்பதிலே இன்பங் காண்பர்; வரவுவரும் தொகைபலவாய் மிகுதல் கண்டு வகுத்ததனை ஈவதிலே இன்பங்காண்பர்; கரவுமனங் கொண்டொன்றும் நுகரா தெண்ணிக் கணக்கிட்டே பொழுதெல்லாம் இன்பங் காண்பர்; உரமுடைய நன்மனத்தர் ஈந்து நின்றே உறுவறுமைத் துயர்வரினும் இன்பங் காண்பர்; அளிப்பதிலே சிலர்க்கின்பம்; மற்றோர் வாழ்வை அழிப்பதிலே சிலர்க்கின்பம்; நாடுவாழ உழைப்பதிலே சிலர்க்கின்பம்; வஞ்ச கத்தால் ஊரவர்தம் உழைப்பாலே உடல்வ ளர்த்துப் பிழைப்பதிலே சிலர்க்கின்பம்; பொய்ம்மை பேசிப் பிறர்நலத்தில் அழுக்குற்றுப் புறுமுங் கூறிச் செழிப்பதிலே சிலர்க்கின்பம்; வறுமைப் போதும் செம்மைநெறி குன்றாமை சிலருக் கின்பம். பாடுபட்டுப் பெற்றோர்கள் கல்விக் காகப் பணமனுப்பச் செலவழித்துக் கூடிப் பாடிக் கூடுவிட்ட பறவைஎன ஒடி ஆடிக் கோலங்கள் பலசெய்து, வாங்கி வைத்த ஏடுதொட்டுப் பாராமல், கண்வி ழித்தே எக்களித்துத் திரிவதிலே சிலருக் கின்பம்; நாடுகெட்ட நிலையுணர்ந்து, தமைநி னைந்து நடப்பதற்கு முயல்வதுதான் நிலைத்த இன்பம் நமதுதொழில் பயில்வதெனக் கடமை எண்ணி நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம்வி ளைக்க உமதறிவு, செயல், நினைவை ஆக்கல் வேண்டும்; உலகும்மைத் தக்கவரென் றுரைக்கும் வண்ணம் நுமதுடைமை கண்ணியமென் றெண்ணி எண்ணி நொடிப்பொழுதும் வழுவாமல் ஒழுகல் வேண்டும்; குமையாமல் சிதையாமல் கட்டுப் பாடும் கொண்டவராய் விளங்குவிரேல் இன்பந் தோன்றும். தொடங்குங்கால் துன்பமெனத் தோன்று மேனும் துளங்காமல் தொடர்ந்திருந்து முயல்வீ ராயின் மடங்கொன்று பேரறிவு வளரக் காண்பீர்; மட்டில்லா இன்பநிலை தொடரக் காண்பீர்; முடங்கியுள நம்நாடு நாளை உங்கள் முகங்களைத்தாம் எதிர்நோக்கும்; அதனால் நெஞ்சில் திடங்கொள்க பயின்றிடுக வெற்றி கொள்க திருநாட்டில் நல்லாட்சி மலரச் செய்க. கருத்தராவுத்தர் கல்லூரி உத்தம பாளையம் 27.1.1967 தட்டி எழுப்பிய தலைவர்கள் நிலைமண்டில ஆசிரியப்பா தமிழக மாந்தரைத் தட்டி எழுப்பிய தமிழினத் தலைவர் தம்புகழ் பாட வேட்டெழுந் திங்கே பாட்டரங் கமைத்துக் கூட்டி மகிழ்ந்தீர், கூப்பினேன் கைகள்; எட்டுணை யாகினும் எழுமுணர் விலராய்ப் பட்ட மரமெனப் பள்ளியிற் கிடந்து கெட்டழிந் தோரைக் கிளர்ந்தெழுந் திங்கே தட்டி யெழுப்பிய தலைவர் பற்பலர்; பாரோர் இகழப் பான்மைகள் கெட்டும் ஒரா திருந்தே உறங்கும் மாந்தரைப் பாமரர் விலங்குகள் பழுதுறு செவியர் ஊமையர் குருடர் என்றெலாம் உரைத்துத் திட்டி எழுப்பிய திண்ணியர், நம்மைச் சுட்டிய சொற்கள் சுடவே இல்லை; சூடு சுரணை அனைத்துந் தொலைத்து நீடு துயிலில் நிலைத்திருந் தோரை மடமையில் உழல்வீர் மானம் எங்கே? கடையர் என்றுமைக் கழறுதல் கேளீர்; சாதிகள் எத்தனை! சமயம் எத்தனை! ஓதிய இவற்றை உறுதிப் படுத்தும் வேதம் எத்தனை! வீணிற் படைத்த கதைகள் எத்தனை! கடவுளும் எத்தனை! சதையை வளர்த்தீர் மதியை வளர்திலீர் மட்டிகள் போலினும் வாழ்வீர் என்றெலாம் குட்டி எழுப்பினார் கூர்மதிப் பெரியார் சிறுநரிக் கூட்டம் சிங்கக் காட்டில் உரிமையிற் செங்கோல் ஓச்சுதல் முறையா? *தரியலர் நுழைவால் தமிழகம் தாழ்ந்திடல் சரியிலை இனிமேல் தமிழா! தலைநிமிர்! உலகம் வியந்திட உயரிய பண்புகள் பலபல கண்டது பண்டைத் தமிழகம் அந்தத் தமிழகம் அடிமையில் வீழின் இந்தப் புல்லுயிர் இருந்துதான் என்பயன்? ஒருமுறை போகுமிவ் வுயிரை நாட்டின் உரிமையைக் காத்திட உவப்புடன் ஈவோம்; கீழைத் திசையில் கிளர்கதிர் விரித்துக் காலைச் சுடரொளிக் கதிரோன் எழுந்தனன் விழித்தன புள்ளினம் விரித்தன சிறகுகள் கொழித்திடும் அலைப்புனற் குளந்தொறும் குலவிடும் தாமரைப் பூக்கள் தம்முகம் மலர்ந்தன; காமலர்க் கொடிகள் கண்மலர்ந் தசைந்தன; அஞ்சிறைத் தும்பி செஞ்சுவைக் கொழுந்தேன் கொஞ்சிக் கொஞ்சிக் குடித்துச் சுவைத்துப் பாணர் யாழெனப் பாடிப் பறந்தன; யாணர்ப் புத்துணர்வு யாண்டும் விரிந்தன; ஆவினம் மாவினம் அன்புப் பெருக்கால் தாவின மாங்குயில் கூவின யாங்கும்; நீயோ இன்னும் நீள்துயில் கொண்டனை; *பாயா வேங்கையின் நின்றிடல் பண்போ? விழிஎழு சிறகை விரிபற உன்னினப் பழிதுடை தலைநிமிர் என்றெலாம் பகர்ந்து பள்ளி யெழுச்சிப் பாடல்போல் பலப்பல அள்ளித் தந்து துள்ளி எழிந்திடக் கற்றவர் மெச்சும் காஞ்சிச் செம்மல் உற்றுணர் வண்ணம் சொற்றவை பற்பல; வடபுல மொழியால் வாடிய தமிழ்மொழி விடுதலை பெறவே விளைத்தநற் போரால் தனிமைச் சிறையில் தாம்துயர் உழந்தும், இனிமைத் தமிழ்ப்பெயர் இருப்பதை நீக்கி வடவர் பெயரை இடுவது முறையோ? தமிழர் நாட்டில் தால்மியா புரமா? உமிழும் செயலென உருத்தெழு சமரில் இரும்புப் பாதையில் விரும்பித் தலையைப் பொருந்த வைத்துப் போர்மறங் காட்டியும், வடபுலம் வாழுநர் உறவுடன் வந்தால் தடையிலை; எம்முடைத் தடங்கை நீட்டி வரவுரை கூறி வாழ்த்துவம் மகிழ்வோம்; கரவுடன் வருவரேல் கைகள் மடங்கும் உரிமைக் குரல்கள் ஓங்கி முழங்கும்; எரியுடன் ஆடேல் என்றறை கூவியும், நாடிப் புகழ்ந்தும் ஆடிக் களித்தும் கூடிக் குலவிய குடிலர்கள் ஓடிக் காட்டிக் கொடுத்த கயமைத் தொழிலால் நாட்டில் நிகழ்ந்த நயவஞ் சகத்தை நசுக்கி யழித்து நாவைப் பிடுங்கிப் பொசுக்கி யெறிந்து புகழ்க்கொடி நாட்டியும், நெருக்கடி என்றொரு நெருப்பினை மூட்டி வெறுப்புடன் அதனுள் வீசி எறிந்திடக் குளிர்புனற் பொய்கையுள் குளித்தெழுந் ததுபோல் ஒளிபடர் கதிரென உய்ந்திவண் வந்தும், மாற்றலர் பகழிகள் மார்பினிற் பாய ஏற்றவை தாங்கி இமையா விழியொடு போர்புரி மறவன் போலெதிர் நின்று நேர்வரு பழிகளை நெஞ்சினில் தாங்கியும், அறிதுயில் கொள்வோர் உரிமையை உணர்ந்திட முரசொலி எழுப்பி முழக்கினார் கலைஞர்; ஈங்கென்ன வேலை இந்தி மொழிக்குத் தூங்கினர் தமிழர் எனவோ துணிந்தனர்? முத்தமிழ் காக்க முனைந்தெழு தமிழா! எத்தனைப் படைகள் இங்கே வரினும் அத்தனை யுந்தூள் ஆக்குக நீக்குக கொடியோர் செயலறக் கொலைவாள் எடடா! இடியே றெனநீ ஏறுபோல் நடடா! கொதித்தெழும் உனையிடுங் கொடுஞ்சிறைச் சாலை மதித்துளம் மகிழ்ந்திடும் மாங்குயிற் சோலை; தமிழரின் மேன்மையைத் தாழ்த்திடக் கருதும் திமிரினை நொறுக்கித் தீயினிற் கொளுத்து கூடார் உனக்குக் கோடி தரினும் நாடேன் என்றுசொல் நாய்போல் அலையேல் தமிழரின் மானமும் தமிழரின் வீரமும் நமதிரு விழிகள் நண்ணிய இமைநீ; தமிழ்மொழி ஆய்ந்த தமிழ்மகன் ஒருவனே தமிழ்நா டாளத் தகுதி யுடையவன்; *என்புகள் இடுவார் எவரோ அவர்பால் அன்பினைக் காட்டி அலையும் விலங்கெனக் கும்பி வளர்க்குங் குறிக்கோள் ஒன்றே நம்பி வாழேல்; நாடே குறிக்கோள் என்றுபா வேந்தர் எழுப்பினர் பாடி இன்றும் பற்பலர் இங்கே உள்ளனர்; இராமன் கதையை இயம்பினன் கம்பன் பராவினர் தமிழர் பரவிய தவன்கதை; ஆரியன் உயர்ந்தவன் திராவிடன் தாழ்ந்தவன் எனுமொரு கருத்தை எங்கும் பரப்பினர்; இனவுணர் வுடையார் இதனைப் பொறாது திராவிடர் பெருமையைத் தெள்ளிதின் உணர்த்த இராவண காவியம் இயற்றிக் காட்டி இனவுணர் வூட்ட எழுதுக காவியம் எனவுணர் வூட்டி எழுப்பினர் குழந்தை; பணியை யிழப்பினும் பதவி யிழப்பினும் அணிபெறுந் தமிழின் ஆக்கமே இலக்கெனப் போர்புரி மறவர் புலமிகும் இலக்குவர் யாருரை தரினும் நேரிய தன்றெனின் சீறி எழுவார்; சிறிதும் அஞ்சார்; சீரிய நாட்டில் ஆரிய இந்தி மீறி வருங்கால் வெகுண்டெழுந் தார்த்துப் புலவர் படையைத் திரட்டிப் போர்க்குரல் குலவிட முழக்கினர் அலறிய தரசும் உளநாள் முழுதும் உயர்தமிழ் காக்கும் களமே கண்டவர் காட்டிய நெறிபல; அன்பின் உருவம் அமைதியின் தோற்றம், பண்பின் உறைவிடம் பகையிலா நெஞ்சம் கொண்டவர் செம்பொருள் கண்டவர் அவரைத் தண்டமிழ் நாட்டார் தமிழ்ப்பெரி யாரெனக் கொண்டுளம் மகிழும் கொள்கைச் சான்றோர்; தொழிலோர் இயக்கம் தூய தமிழில் எழுதியும் பேசியும் இயக்கிய தலைவர்; அரசியல் விளக்கம் அன்னைத் தமிழில் உரைசெய இயலா தென்றவர் *உட்க அழகிய தமிழில் எழுதிய தமிழர்; பழகிட நல்லவர் பைந்தமிழ் வல்லவர் உலக ஒற்றுமை உள்ளக் கிடக்கை ஆயினும் தம்மை ஈன்றதோர் அன்னைத் தென்தமிழ் நாட்டைச் சிறிதும் மறந்திலர்; இந்தி புகுந்திட எண்ணிய காலை நொந்துளங் கனன்று நுவன்ற நல்லுரை பொன்னிற் பொறித்துப் போற்றுந் தகையன; நன்னர் நெஞ்சால் நாடி, இளைஞரை எழுக எழுகஎன் றெழுச்சிகள் கூறித் தொழுக தொழுக தூய்தமிழ் அணங்கை நாளைய உலகை நடத்தும் பொறுப்பு காளையர் நுமது கடமைஎன்று ரைத்துத் தட்டித் தட்டி எழுப்பிய தலைவர் சுட்டிச் சுட்டிச் சொன்னவை பலப்பல உயர்தனிச் செம்மொழி உமது தாய்மொழி அயன்மொழிச் சொற்கள் அதனிடைக் கலத்தல் மொழியின் தூய்மை அழியும் வழியாம், பழியிது தவிர்க, பைந்தமிழ் பேணுக, தமிழ்மகள் மேனியில் தழும்புகள் செய்யத் தமிழர் முனைவது தகுதி யன்றாம்; நஞ்சின் *கலப்பால் நல்லதோர் கலப்பால் துஞ்சும் நிலையினைத் தோற்றுவித் தழிக்கும்; ஆரியம் கலந்தால் அன்னைத் தமிழின் சீரியல் அழியும் செம்மையும் மறையும் பிறமொழிக் கலப்பினைப் பேணா தகற்றுக; திறலுறு தீந்தமிழ் தெள்ளிதின் ஓம்புகென் றுரைதரும் மறைமலை யடிகளின் வாய்மொழி நிறைதுயில் கொள்வோர் நெடுஞ்செவிப் புகுந்தில; ஆரிய இருளில் அகப்படும் உண்மையைச் சீரிய வகையால் தெள்ளிதின் உணர்த்திய செஞ்சுடர் ஞாயிறு தேவ நேயரை விஞ்சிய மொழிநூல் மேலவர்க் காண்கிலம்; நுழைபுலங் கொண்டு மொழிபல ஆய்ந்து பிழையற வுணர்ந்து பிரித்தும் பகுத்தும் வேர்ச்சொல் கண்டு விளக்கிடும் ஆண்மை யார்க்கது வாய்க்கும்! யார்க்கது வாய்க்கும்! தென்மொழிக் கடலுள் திளைத்துத் தோய்ந்து பன்மணித் திரள்கள் பாருக் கீந்தவர்; பொய்ம்மொழி யாளர்க் கவரோர் புலிதான்; மெய்ம்மொழி யாளர்க்கு மேவிய குழந்தை; கூட்டில் அடங்காக் காட்டுப் புலிதான் வீட்டில் எமக்கோர் கூட்டுக் கிளியே; தவத்தாற் கிடைத்த தமிழரின் சொத்து; மனத்தால் தொழுதவர் மலரடி பேற்றுவம் கனிச்சுவை விஞ்சும் தனித்தமிழ் வளர நுனித்தறிந் தெமக்கு நுவன்றவை பற்பல; திரைகடல் தாண்டி உறையுந் தமிழர் உரிமை யுணர்வும் இனமொழி யுணர்வும் பெருகிட யாண்டும் பிறங்குதல் காண்குதும் சருகுக ளாகிச் சாய்வதே இல்லை; வருமிடர் பலப்பல வாயினும் வணங்கிலர் ஒருமுக மாக ஓங்கிய குரலில் ஒரணி யாகிப் போரணி வகுத்தனர்; அமுத லிங்கனார் அவருள் ஒருவர்; ஈழங் கண்ட இணையிலாத் தலைவர்; தலைவர் பற்பலர் தட்டி எழுப்பினும் கலைய வில்லை கண்துயில் இன்னும் கும்ப கருணன் குலத்தவ ராகி அம்புவி மாந்தர் ஆழ்துயில் கொண்டனர்; மடமைகள் இன்னும் மறைய வில்லை; கடவுளர் கதைகள் கலையவு மில்லை; சமயப் பூசல் சரியவு மில்லை; இமயம் குமரி இடைப்படு நாட்டில் தொலைந்ததாக சாதி? தொலையவே இல்லை தேர்தல் என்றொரு சேதி வருமெனில் ஊர்வல மாக உலாவரும் சாதி தமிழ்தான் எங்குந் தழைத்ததா என்றால் உமியள வேனும் உயரவே இல்லை; வானொலிப் பெட்டி வாயைத் திறந்தால் வீணொலி, விளங்கா வெற்றொலி முழங்கும் சுப்பிர பாதம் சுருதிகள் மிருதிகள் தப்பினால் இந்தி தடபுடா ஒலிகள், தியாக ராசர் தெலுங்கிசைக் கீர்த்தனை இப்படிப் புரியா இசையொலி கேட்கும்; எப்படிப் பொறுப்போம்? இதுதமிழ் நாடாம்! தமிழகக் கோவிலுள் தலையை நீட்டின் தமிழொலி அங்கே தவழ்ந்திடக் காண்கிலம் இனமெனப் பாரா தெதிரெதிர் நின்று முனிவுறும் ஞமலியின் முறைப்பொலி போலக் கரகர ஒலியே காதில் விழும்; திருமண முறையிலும் தெரியா மொழிதான்; எங்கு நோக்கினும் எரிச்சலே மிஞ்சும்; பொங்கி எழும்நாள் புரட்சி வரும்நாள் இங்கே தோன்றினால் எம்மவர் விழிப்பர்; பாடி எழுப்பிற் பயனே இல்லை; சாடி எழுப்பின் சற்றே விழிப்பர். பொங்குக புரட்சி பொங்குக எழுச்சி எங்கணும் இன்பம் தங்குக இனிதே. பாவலர் மன்றம், ஈரோடு 12.1.1980