பாவேந்தம் 23 கட்டுரை ïy¡»a«-4 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 23 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 296 = 328 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 205/- கெட்டி அட்டை : உருபா. 255/- படிகள் : 1000 நூலாக்கம் : வ. மலர், இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  இலக்கியப் பெரியார் பாவேந்தர்! பஞ்சிலிருந்து திரியையும் உருவாக்கலாம்; திரையையும் உருவாக்கலாம்! விளக்கின் வெளிச்சத்தைக் கூடுதலாக்கத் திரி உதவும்; வெளிச்சத்தை மறைக்கத் திரை உதவும். படைப்பாற்றலும் அறிவும் பஞ்சு போன்றவை. அவை எந்த நோக்கத்திற்குப் பயன்படுகின்றன என்பதைப் பொறுத்தே திரியா, திரையா என்னும் தெளிவு கிடைக்கும். சிந்திக்கவும் ஏற்றத் தாழ்வைச் சீர்படுத்தவும் உதவும் எழுத்து வாசிப்போர் மனத்தை வெளிச்சமாக்கும், அது திரி! மூடத்தனத்தைச் சுமந்துவரும் எழுத்து, வாசிக்கும் மனத்தை இருட்டாக்கிவிடும், அது திரை! இத்தகைய எழுத்தாளர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்று எச்சரிப்பார் பாவேந்தர் பாரதிதாசன். பழமை வாதத்தைத் தாங்குவோர் அவருக்குப் பழிகாரராகவே தெரிவார். அழியாத மூடத் தனத்தை - மிக அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதல்எழுத்(து) ஓதினும் மதிஇருட் டாகும் (பக். 7) வழக்கம் என்பதற்காக எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர் பாவேந்தர். வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ள வேண்டாம் (பக். 92) புதிய சிந்தனைகளால் மாந்த மனத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு எத்தனையோ இடையூறுகள் முளைத்தபடி இருக்கும். பழமைவாதம் குறுக்கே பாயும். பணப் பெட்டிகள் ஆசை காட்டும். அடக்குமுறை அச்சுறுத்தும். முற்போக்குச் சிந்தனை யோடு எழுந்தோர், தொடர்ந்து தடுமாறாமல் நடைபோடுவது கடினம்! குறிக்கோளில் உறுதியும் தெளிவும் இருப்போரிடம் மட்டுமே, நிலையான கொள்கைப் பயணம் தொடர்ந்தபடி இருக்கும். அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ பெற்றதன் கொள்கையைப் பிறர்கை மாற்றுவோன் உற்றது உரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன் கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன் மனிதருள் வாய்ந்த மனித விலங்கு. (தொகுதி 15; பக். 337) மனிதர், மனித விலங்கு - இருபிரிவும் நம்மைச் சுற்றி உண்டு. உருவத்தால் எல்லோரும் மாந்தரே. உள்ளத்தாலும் செயலாலும் மாந்தர் களாவதற்குத் தடுமாறாத குமுகாயச் சிந்தனை வேண்டுமென்கிறார் பாவேந்தர் எழுதும் முறைக்கும் அவர் வழிகாட்டுவார். சிறிதளவே எழுதி னாலும் நிறையப் படிக்கவேண்டும் என்பார். பிறரை நகலெடுப்பது அறிவு வறுமையின் அடையாளமாம்! புதிய அறிவையும் புதிய மனத்தை யும் பெறத் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று அறிவுறுத்துவார். சிறிதெழுதத் தேடி நிறையப் படிப்பாய்! பிறர்அடி பார்த்துப் பிழைப்போன் - வறியன்! கருவி விருப்பாய் அறிவுநிலம் கல்லி வருவி புதிய மனம். (பக். 334) புதிய மனம் பெற்றிருந்த பாவேந்தர் நீண்ட வாழ்நாளையும் பெற்றிருந்தார். குமுக மாற்றத்திற்கான எல்லாத் துறைகளையும் சிந்தித்தார். அவற்றை எழுத்தாக்கினார். தமக்குப் பின் பெரிய எழுத்தாளர் படையை பாவேந்தர் பரம்பரை எனத் திரளச் செய்தார். கடவுள் சிந்தனையோடு எழுந்து, காந்தியச் சிந்தனையால் வளர்ந்து, பெரியாரியச் சிந்தனையாளராக மலர்ந்தார். கடவுளை மதங்களைக் காப்பவர் என்போர் கருணை யிலாநிலம் பொருள்நனி கொண்டோர் உடைமை பறித்தஇக் கொடியரில் கொடியர் ஒழிந்தபின் பேநலம் உறுவர்இவ் வுலகோர் முதுகில் அமர்ந்த முதலாளி மூளையில் அமர்ந்த மதவாதி (பக். 347) இரு தரப்பையும் துடைத்தெறிவதன் மூலமாக உலகம் நலமடை யும் என்பதை இவ்வரிகளால் பாரதிதாசன் தெளிவுபடுத்துகிறார். மக்கள் வாழ்வைப் பின்னோக்கி இழுக்கும் ஒவ்வொன்றையும் பாரதிதாசன் கேள்விக்கு உள்ளாக்கினார். கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே கூலிமக்கள் அதிகரித்தார் ... (பக். 14) என்று உழைப்போரின் வறுமைக்குக் காரணம் கூறினார். பாதிக்கு nதபசிvன்றுரைத்jல்செய்தgவத்தைக்fரணம்fட்டுவார்- kதtதத்தைcம்மிடம்Úட்டுவார்- gதில்Xதிநின்wல்படைTட்டுவார்(பக்.73) தலையெழுத்தையும் பாவத்தையும் காரணமாகக் காட்டி, வறுமையைச் சுமக்கச் சொல்லும் மதவாத ஏமாற்றைத் தோலுரித்தார். நன்றிக்கு வாழ்ந்திட வேண்டும் - உரம் வேண்டும் - திறம் வேண்டும் - உன் நாட்டிற்கே நீவாழ வேண்டும் - நம் ஞாலப் பெரியார் செல்லும் பாதை யினை விடாதே விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்! (தொ. 18; பக். 47) காரணம் கேட்டுக் கடைபிடிக்கச் சொல்லும் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் அணிவகுக்குமாறு வலியுறுத்தினார். வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற் கேஅடை யாளம் - வாய் விட்டிசைப் பீர்கள்சுயமரி யாதைஎக் காளம். (பக். 160) தன்மான இயக்கத்தின்கீழ் தமிழர்களை ஒன்றுகூடச் சொன்ன பாரதிதாசன், தாமும் ஒருவராய் நின்று வாழ்நாள் இறுதிவரை பணி யாற்றினார். பகுத்தறிவுத் துலாக்கோலில் பழந்தமிழ் இலக்கியங்களையும் எடைபோட்டுக் காட்டியது பாவேந்தர் செய்த புதுமை! திருமூலர் பாடியவை 3000 பாடல்கள் எனச் சேக்கிழார் பாடி யுள்ளார். திருமந்திரத்தில் இப்போது 47 பாடல்கள் கூடுதலாக உள்ளன. அவை இடைச் செருகல்தானே என்று அவர் வினா எழுப்பினார். ‘மூவா யிரம்சொன்னார் மூலன்என்றார் சேக்கிழார் பாவேது மேல்நாற்பே னேழ்? (பக். 176) திருமந்திரத்தின் முதற்பாடல் ஒன்றவன்தானே எனத் தொடங்கும் என்கிறார் சேக்கிழார்! ஐந்து கரத்தனை என இப்போதுள்ள முதற் பாடல் இடைச்செருகல் அல்லவா! திருமூலர் காலத்தில் விநாயகர் வணக்கம் ஏது? இலக்கிய உலகிற்குப் பாவேந்தர் புதுக் குருதி பாய்ச்சினார். ஒன்றவன் தானே எனல்என்று சேக்கிழார் நன்று நவின்றாரன் றோ? ஐந்து கரத்தனை ஆனதொரு செய்யுள்செய்து முந்தவைத்தார் மூலன்நூ லில் (பக். 176) எல்லோரையும் படைத்தவர் கடவுள் என்றால், கோவிலுள் நுழையும் வலிமையும் எல்லோருக்கும் உண்டு! நாயும் காக்கையும் நுழையும் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதைத் தடுக்கிறார் களே! நாயை விடவா அவர்கள் கேவலம்? என பாவேந்தர் கேட்டார். குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? (பக். 139) தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு எனத் தனிநூலே படைத்தார். அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் (பக். 83) பெண்களைப் புதுமைப் பெண்களாக்க விரும்பினார் பாவேந்தர். தொழிலாளர், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் என எந்தப் பிரிவினர் ஒடுக்கப்பட்டாலும் பாவேந்தர் பாடல் உரிமைக் கனல் கக்கியது. ஒடுக்குமுறை உலகத்தின் எந்த மூலையில் எழுந்தாலும் பாவேந்தர் எதிர்ப்புக் குரல் பாட்டாய்க் கனன்றது. வியத்நாமில் அமெரிக்கா நடத்திய அட்டூழியமும், பாவேந்தரின் எதிர்ப்புக்குத் தப்பவில்லை. அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள் ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை (பக். 313) இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா - பாவேந்தருக்கு வேடனாகத் தெரிந்தார். திபேத்து வேடனார் இந்தியா வந்தார் (பக். 380) என்று குருவிகளை எச்சரித்தார். உண்மையை உணர்த்துவதும் பரப்புவதும் கடினம் என்பதை உணர்ந்த அவர், போகும் போக்கில் கூறினார். பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு (பக். 308) காலால் நடக்கும் உண்மையைவிட, சிறகாய் பறக்கும் பொய் விரைவாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்! உண்மையைச் சார்ந்து நிற்போருக்கு, உழைக்கும் நெருக்கடி கடுமையாய் இருப்பது இயற்கை! சமுதாயம் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்ற முனையும் வேகத்துடன் வெளிப்பட்டவை பாவேந்தர் பாடல்கள்! அதற்காக அவர் ஏற்ற எதிர்ப்பும் இழப்பும் ஏராளம். அவற்றை இத் தொகுப்பில் ஒன்றுதிரட்டி பார்ப்பது இதுவரை கிடைக்காத வாய்ப்பு. தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியன் பாவேந்தரின் படைப்புகள் அனைத்தையும் பாவேந்தம் என 25 தொகுப்புகளாக இளங்கணி பதிப்பகம் வழி வழங்க முன்வந் திருப்பது தமிழுலகம் பெற்ற பேறு! சமுதாயம் சார்ந்த பாவேந்தரின் பாடல்கள் அடங்கிய இத் தொகுப்பு புதிய உலகை உருவாக்கும் சிந்தனையைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும்! - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கிநூழீஞ் றீஜீஹமூர்ஙூ குமீக்ஷீயுகூந்) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (ஸசுஙிபீகுளிட்கி ஹகுமூர்கூயு) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! (கீகுட் கிகுதீநூக்ஷி-ஸநூணீபிகீகுங் கீநூட்க்ஷி) 15. இதயம் எப்படியிருக்கிறது? (யகூஏகிஞ் ரூபுமீக்ஷீஹிகுதுகிஞ்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (நிகுங்கிணூங் ஸ்ஙீரகூநி கிதீக ப்ஙுரூ றுஹிஷீந்ஒ) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்... vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiii இதழாசிரியர் xv குயில் கட்டுரைகள் குயில் கவிதை இதழ் - மாத வெளியீடு 1. எழுத்துச் சிக்கனம் 3 2. எழுத்துச் சிக்கனம் (2) 5 3. குள்ளநரியின் குதிப்புக்கு மறுப்பு 6 குயில் தமிழ்த் தினசரி 4. குயில் தினசரி - அறிக்கை 9 5. இந்திய யூனியனில் ஏன் சேரவேண்டும்? 10 6. தினத்தந்தி மடத்தனம்! 14 7. ஆண்டொன்றுக்கு கோடிரூபாய் 16 8. இந்திய ôனியனின்ïன்றையÃலையில்! 18 9. வந்தவர் போய்விட்டார்! வள்வள் போகவில்லை! 20 10. வடக்கே போகும் பஸில் ஏறாதீர்! 22 11. தஞ்சாவூர்ப் பொம்மைக்கு இடங்கொடேல் 24 12. புதுக்கோட்டை வாலிகளைப் பின்னாலிருந்து குத்தியது ராமராஜ்யம்! 26 13. இனப் பெருமையைக் குலைக்க ஓர் இமாயிலாவது வேண்டாமா! 28 14. இப்படி ஒரு திருமேனி! 30 15. ஓமந்தூராரிடம் காவடி 32 16. கேள்வியும் : பதிலும் 34 17. உடனடியாகச் சேரவேண்டுமென்போர் உணர்க! 36 18. குழந்தைகளுக்கு! சொன்னால்தானே தெரியும்? 37 19. தன்குஞ்சு பொன்குஞ்சு 38 20. தினமணி தெரிவிக்கிறது 40 21. காரைக் காங்கிர தலைவர் வேண்டுகோள்! 44 22. நல்ல வேலை செய்தார் ஓமந்தூரார்! 46 23. பிள்ளையாண்டான் நினைவு! 47 24. இந்தியாவின் இன்றைய நிலை என்ன? 48 25. பெருமாள் சுயநலச் சூழ்ச்சி 53 26. தேசீய காங்கிர 55 27. புதுவைப் போலீ அதிகாரி போர்த்தின் மிருகத்தனம்! 57 28. சட்டத்தை மீறினார்கள்! 59 29. கலகம் வேண்டாம் 61 30. தினமணி திருந்த வேண்டும்! 62 31. தவறான தீர்ப்பு! 66 32. மாணவர்: நீங்கள் சட்டத்தை மீறுங்களேன் வக்கீல்: ஊஹூம் நாமாட்டோம் 67 33. நடுநிலையாய் நடந்து கொள்க 69 34. மறுப்போரும் சேர்வோரும் 71 35. கலகக்காரர்கள் நிலை 73 36. அங்கென்ன வாழ்கிறதோ? 75 37. சென்னை மந்திரிசபை 77 38. பெருமாள் பெரிய காங்கிர 79 39. டாக்டர். ஏ. கிருஷ்ணசாமி வாழ்க! 81 40. கார்ப்பரேஷன் தேர்தலில் காங்கிரசுக்குக் கோவிந்தா! 82 41. கவிஞர் தந்த கருத்தோவியம் 83 42. ஆங்கிலமும் பிரான்சும் போல ஆரியமும் உனக்கு அயலே! 84 43. இப்போது தெரிகிறதா? 87 44. மூன்றாவது உலக யுத்தம்! 88 45. அவர்கள் செய்வது சரிதான் ஆனால் 90 46. நேரு ஆட்சி முதலாளித்துவ ஆட்சி அல்லவாம்! படேல் பசப்புகிறார்! 92 47. ஓமந்தூரார் சுகாதார போதனை! 93 48. நல்லதைச் சொல்லுகிறோம் 95 49. விடுதலையான கோட்சே கும்பல் மீண்டும் வாலாட்டுகிறது! 96 50. புரோகிதர்க்குச் செலவழித்தது மெய்தான் ஆயினும் புரோகித மணமில்லை 97 51. லாம்பேருக்கு! 98 52. பிர்லா மகிழ்ச்சி! 99 53. பிரஞ்சு சர்க்கார் பணிகிறதா? காங்கிர பணிகிறதா? 100 54. தொலையட்டுமே ஓமந்தூர் சர்க்கார் 103 55. காமராஜ் காவடி 104 56. கலகக்காரர்கள் கயிறு திரிக்கிறார்கள் 105 57. நம் அச்சுப்பொறி உடைந்துவிட்டது! 107 58. அங்கு வெய்யில் தணியட்டும்! வந்து சேருகிறோம்! 108 59. தினசரியின் கருத்து 109 60. வியாபாரிகளுக்கு! 111 61. கிறிதவ அறிஞர்கட்கு 112 62. அவரும் இவரும்! 114 63. தெளிவில்லா உள்ளம்! தெளியும்! 115 64. முலீம் அறிஞர்கட்கு 117 குயில் கிழமை இதழ் 65. குயில் 119 66. தமிழன் யார்? 121 67. ஆசிரியருக்கு அஞ்சல் 124 68. படிக்க விருப்பந்தான் 127 69. நன்றே செய்க! அதையும் இன்றே செய்க! 129 70. உடன் ஒத்துழைத்தல் கடன் தமிழர்கட்கு! 131 71. தமிழ் மாணவர் ஆவல்! 133 72. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - I 135 73. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - II 138 74. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - III 143 75. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - IV 146 76. அண்ணாமலைப் பல்கலைக்கழகமா? ஆரியர் அடிவருடும் கழகமா? 149 77. படக்கூத்தர் - வென்றாலும்! 152 78. சென்னையாட்சி வாழ்க! 155 79. காரைக்கால் அரிசி 157 80. திரைப்பட எழுத்தாளர் சங்கம் அடிப்படை நோக்கம் 159 81. புதுவைச் சட்டசபைக்குத் திருவாசகம் பாடியாயிற்று! 161 82. பொன்னான புதுவை தன்னையேதான் நம்ப வேண்டும்! 163 83. புதுவை மக்கள் துடிப்பு 165 84. தமிழர் எழுச்சி! 167 85. விளைநிலந்தான் ஆனால் வேலி வேண்டும் 170 86. பெருவானில் முழு நிலவு 173 87. தொண்டுக்கு இடம் திராவிடர் கழகந்தான் 175 88. தமிழர்களும் மலையாளிகளும் ஒரே வயிற்றுப் பிள்ளைகள் 177 89. இன விளக்கம் 179 90. இரா. சிரி. தேசிகன் சிறுமதி 182 91. பொங்கற் புதுநாளில் உங்கள் தொண்டு என்ன? 184 92. உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 186 93. களையெடுத்தல் பயிருக்கு நல்லது 188 94. தமிழகப் புலவர் குழு, திருச்சித் தமிழ்ச் சங்க வரவேற்பு 190 95. தில்லிக் கழுகு 194 96. முற்றுகை இடுவோம் 196 97. என்ன நடந்தது? 197 98. தந்தை வந்தார்! 199 99. நீர் ஒரு தலைவரா? - I 202 100. நீர் ஒரு தலைவரா? - II 204 101. சென்னை ஆளவந்தாருக்கு விண்ணப்பம் 206 102. கவிஞர் நினைவிற்கு! 208 103. தமிழ் 212 104. சொல்லாராய்ச்சி - I 214 105. தொன்மை ஆராய்ச்சி - II 217 106. தொன்மை ஆராய்ச்சி - III 219 107. தொன்மை ஆராய்ச்சி - IV 222 108. மிக்க சலுகைக்குத் தக்க பயன் கிடைத்தது 225 109. அவர்களைப் பாருங்கள்! 227 110. ஆதித் தமிழர் 229 111. புத்தர் கொள்கை 231 112. கலைசிறந்த காட்சிக்குத் தலைசிறந்த படம் கட்டபொம்மன் 233 113. மறியல்! ஏறி வா! 235 114. குயில் இரண்டாவதாண்டு 236 115. அவர்களைப் பாருங்கள் 238 116. இவர்களைப் பாருங்கள் 242 117. புதுவைத் தேர்தல் 248 118. ஆகாஷ்வாணி ஒழிக! 250 119. தில்லியை நம்ப வேண்டாம் 251 120. இராசகோபாலாச்சாரியின் புதுக்கட்சி 253 121. சுயேச்சைகள் ஒற்றுமை 255 122. ஆதித்தன் அழிவு மனப்பான்மை 257 123. அவர் கொள்கை அதுவல்ல 260 124. இதில் அக்கரை செலுத்தாத ஆளவந்தார் எதில் அக்கரை செலுத்துவார்கள்? 262 125. குபேர் காலில் மன்னிப்புக் கண்ணீர் 266 126. ஆயிரம் தேசிகன்கள் வேண்டும் 269 127. சட்டமன்றச் செயற்குழுவினர்க்கு! 272 128. ஊர்க்காவல் துறை 276 129. வழியோடு திரும்பியது மக்கள் வெள்ளம்! 281 130. அப்ரகாம் M.L.A., முத்தால்பேட்டை 283 131. நேரு, தருமபுரம், பத்தவச்சலம் 285 132. தமிழ்ப் புலவர் பொறுப்பு 287 133. தமிழர் ஒற்றுமை 289 134. சென்னை அமைச்சரவை திருந்த வேண்டும் 291 135. நாவலர், கணக்காயர், டாக்டர் சோமசுந்தர பாரதியார் புகழ் வாழ்க! 293 136. அமைச்சர் குதிப்பும் தமிழ்த்தாய் கொதிப்பும் 295  குயில் கட்டுரைகள் 1. எழுத்துச் சிக்கனம் உயிர் 12, மெய் 18, உயிர் மெய் 216, ஆய்தம் 1. இத்தனை எழுத்துக்கள் தமிழில் இருப்பதால் மிகத் தொல்லையாய் இருக்கிறதென்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது சரிதான். எழுத்துக்களின் வரி வடிவத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். ஆம் என்று நாமும் கூறுகிறோம். வரி வடிவங்களைக் குறைக்க வேண்டிய முறையைப் பற்றிப் பலர் பலவாறு கூறுகிறார்கள். கூறுகிறவர்கள் எல்லாம் பொது நலங் கருதியே கூறுகிறார்கள். அதில் இம்மியும் ஐயமில்லை. தமிழ் டைப்ரைட்டிங் மெஷினில், மிகப் பல எழுத்துக்கள் அமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் அந்த மெஷின், மற்றவை களைவிட மிகப் பெரிதாகி விடுகிறது. அச்சுக்கூடத்தில் எழுத்துப் பெட்டிகளின் அறைகளோ மிகமிக; ஒரே திண்ணையளவு பெரியதாக அமைய வேண்டியதிருக்கிறது. கை, ளை என ஒரே இனத்தின் இரண்டு வகை. கை என்பது போலவே ளை என்றும் இருந்தால் என்ன முழுகிவிடும்? க. இதுகுறில். கா. இது நெடில். ஆனால் உ இது குறில், உ நெடில் என்றால் ஏன் பொருந்தாது? இப்படிச் சிலர் கேட்கிறார்கள். து இது குறில்; தூ இது நெடில். து இது குறில் தூ இது நெடில் என்றால் ஏன் பொருந்தாது - இப்படிச் சிலர் கேட்கிறார்கள். எழுத்தின் வரி வடிவத்தைச் சிக்கனப்படுத்தும் முறைபற்றி உங்கள் கருத்தென்ன என்று சிலர் நம்மைக் கேட்டார்கள். குயிலில் சொல்லுவதாகச் சொன்னோம். சொன்னோம். சொல்லுகிறோம். ஆயினும் நம் கருத்தை யாரும் ஒப்பமாட்டார்கள். ஒப்பமாட்டார்கள் என்பதற்காக நாம் சொல்லாமல் இருப்பதுண்டா? - கிடையாது. நாம் சொல்லும் முறையைக் கையாண்டால் - டைப் ரைட்டிங் மெஷினிலும் எழுத்துப் பெட்டி அறைகளிலும் 31 எழுத்துக்கள் போதும். ஒத்துக்கொள்ளுகிறவர்களின் நிலைமைதான் சரியாயில்லை. க என்பது ஓர் எழுத்தல்ல. க் என்பதும் அ என்பதும் சேர்ந்தது க. இப்படியேதான் உயிர்மெய் 216ம். பை என்பது ஓர் எழுத்தல்ல. ப் என்பதும் ஐ என்பதும் சேர்ந்ததுதான் பை. க என்ற ஓர் எழுத்து வேண்டாம். க் அ என்றே குறிக்கலாம் என்கிறோம். கண்ணன் என்று எழுத வேண்டுமானால் க் அண்ண்அன் என்று குறிக்க. விசிறி என்பதை வ்இச்இற்இ என்று குறிக்கவேண்டும். இந்த முறையை மேற்கொண்டால் உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1 ஆக 31 எழுத்துக்கள் போதும். எல்லா வற்றையும் எழுதிவிடலாம். இந்த 31 எழுத்தால், இப்படி எழுதுவதால் ஒரு வரியில் மிகப் பல எழுத்துக்கள் போட வேண்டும் என்று கூறலாம். அப்படியில்லை. சில எழுத்துக்களே அதிகமாகின்றன. வழக்கத்தில் வருவது முடியாது என்று கூறலாம். வழக்கத்தில் வருவது இலேசு என்று தோன்றுகிறது. அஃது - பெரிது - ஆயினும் - எளிது என்பதை அஃத்உ - ப்எர்இத்உ - ஆய்இன்உம் - எள்இத்உ என்று எழுதுக. சில நாட்கள் தொல்லையாக இருக்கும். பிறகு எளிதாகிவிடும். இங்கிலீஷிலும் பிரஞ்சிலும் இப்படித்தானே. பு என்பதை இங்கிலீஷில் pu என்றுதானே போடுகிறான். பிரஞ்சிலோ அவளப்பன்! Pou என்று மூன்று எழுத்துக்கள் போடவேண்டும். - குயில், 15.5.1948, ப. 11-13 2. எழுத்துச் சிக்கனம் (2) உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1, ஆக 31 எழுத்தைக் கொண்டே எழுத்துக் குடித்தனத்தைச் சிக்கனப்படுத்தலாம் என்று கூறினோம். ஒரு தோழர் தெரிவிக்கிறார். நீங்கள் சொல்லிய வழி ஏற்றது. அதனோடு ஆ என்பதை அ என்றும் ஈ என்பதை இ என்றும் ... ... சுருக்கலாம் என்கிறார். செய்யலாம் என்கிறோம் அப்படியே. அதன்படி, ஈவது விலக்கேல் என்பதை இவ்அத்உ வ்இல்அக்கஎல் என்று எழுதுக. - குயில், 15.6.1948, ப.41 3. குள்ளநரியின் குதிப்புக்கு மறுப்பு பார்ப்பனர் அல்லாதவர் அனைவரும் திராவிடர் என்பது சரியல்ல. - இது முற்போக்குப் பார்ப்பனர் மாநாட்டில் முற்போக்குப் பார்ப்பனர் சொன்னது. இதற்குக் காரணமும் கூறினார்கள். அந்தக் காரணம் என்னவெனில், இப்போதும் பார்க்கலாம் பம்பாயில் சில பார்ப்பனக் குடும்பங்கள் தம்மைத் திராவிடர் என்றே கூறிக் கொள்வதை காரணம் சொல்லிவிட்டார்கள். பார்ப்பனர் அல்லாதவர் திராவிடர் அல்ல எனில் வேறு எவர்? - கூறவில்லை இருக்கட்டும். பார்ப்பனர் எவர் என்பதையாவது பார்ப்பனர் மாநாடு கூறியதா? கூறவில்லை. பம்பாயில் சில குடும்பங்களைப் பற்றி நாமும் கேள்விப்பட்டதுண்டு. ஆம், அவர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். சொல்லிக் கொள்ளுகிறார்களே தவிர பார்ப்பனீயத்தைச் சேர்ந்தவர்தான் மேற்கொண்டு வார்க்கிறார்கள். ஏன் வடநாட்டில் தம்மைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள் பார்ப்பனர்? முன்னாளிலும் பம்பாயில் திராவிடர் என்றால் வீரர் என்பது கருத்து. தர்ப்பைகளுக்கு வீரர் பட்டம் சுலபமாகக் கிடைப்பதை ஏன் விடவேண்டும். தென்னாட்டைவிட்டுப் பிழைக்கபோன இடத்தில் ஒரு பேச்சு - நாங்கள் திராவிடர். இப்போதுகூட மலையாளத்திலிருந்து இங்கு வந்து சாப்பாட்டுக் கடை வைக்க எண்ணுவோர் அனைவரும் தம்மை நாயர் என்று கூறிக் கொள்வதில்லையா, நாயரில்லாதவர்கூட? பிழைப்புக்காக! சில நாளின் முன்பு சில பார்ப்பனர், தாங்களும் தமிழரே என்றார்கள். முற்போக்குப் பார்ப்பனர் அப்படிக் கூறவில்லை. ஏன்? பாப்பனர்களுக்கு எல்லாம் கையில் வந்துவிட்டதே! ஏன் தம்மைப் பார்ப்பனரும் தமிழரே என்று ஒன்றுபடுத்திக்கொள்ள வேண்டும்? முற்போக்குப் பார்ப்பனர் மாநாட்டினர் இராஜகோபாலாச் சாரி, கோபாலாசாமி ஐயர் முதலியவர்களின் திறமையைத் தமது சாதிப் பெருமையாகப் பேசியிருக்கிறார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியைச் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? அவர் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்றார். சூத்திரனுக்குகொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்றார். பாரதியாரின் கருத்துக்களுக்கு மாறாக, அறத்திற்கு மாறாகப் பேசிக் கூத்தடிப் பவர் பாரதியாரை நமக்கு நினைப்பூட்டவும் ஒப்பா ரல்லவா? திராவிடக் கழகத்தார் நினைத்திருந்ததெல்லாம் இதைத்தான் - பார்ப்பனர் நேரே வெளிவர வேண்டும். தம்மைத் தமிழர் என்கிறார்கள். ஆரியர் இல்லை என்கிறார்கள். ஆரியரே நாங்கள் என்கிறார்கள். குழப்பிக் குழப்பிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பெரு மக்களை ஏமாற்றுகிறார்கள். முற்போக்குப் பார்ப்பனர் கூட்டத்தைத் திராவிடர் கழகம் வரவேற்கிறது. ஓர் ஐயப்பாடு என்னவெனில், பிற்போக்குப் பார்ப்பனர் என ஓர் அனாமத்துக் கூட்டமும் இருக்கிறதோ? அது எது? சரியான முகவரி இருந்தால் மிக்க நலம். நான் சொல்ல நினைப்பதை இன்னும் சொல்லவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் திராவிடர் என்று திராவிடர் கழகம் சொல்லவில்லை. பார்ப்பனர் என்று சொல்ல முடியாமலும் திராவிடர் என்று சொல்ல முடியாமலும் ஏதுங்கெட்ட நிலையில் ஒரு கூட்டம் இந் நாட்டில் உண்டு என்பதைத் திராவிடர் கழகம் உணர்ந்திருக்கிறது. பார்ப்பனர் என்பவர் உலகின் நன்மையைப் பார்ப்பவர் என்று கூறுகிறார்கள். உலகின் நன்மையைப் பார்ப்பதை விட்டு தன்னலத்தையே பார்க்கும் கூட்டம் இருக்கிறதல்லவா - அது திராவிடர் கூட்டமன்று; பார்ப்பனர் கூட்டமும் அன்று. வேதமுணர்ந்தவன் பார்ப்பான் என்கிறார்கள். பார்ப்பனன் என்று கூறிக்கொண்டு வேதமும் தெரியாத கூட்டம் ஒன்று இருக்கிறதல்லவா? அது திராவிடர் கூட்டமுமில்லை. பார்ப்புக் கூட்டமுமில்லை. பிழையாக வேதம் ஓதும் பார்ப்பானைவிடச் சிரைப்பவன் மேல் என்கிறார்கள். பார்ப்பனர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டு பிழையாக வேதம் ஓதும் கூட்டமும் இருக்கிறதல்லவா? அது தி. கூட்டமுமல்ல; பா. கூட்டமுமல்ல. இந்த ஏதுங்கெட்ட கூட்டத்தின் ஏய்ப்பு நிலைமையை எதிர்த்து மீள்வதுதானே திராவிடரின் பெரிய வேலையாயிருக் கிறது. மற்றபடி திராவிடர் என ஓர் இனம் இருப்பதைச் சில மடப்பயல்கள்போல இந்த முற்போக்குப் பார்ப்பனர் மறுக்க வில்லை. அந்த மட்டும் மகிழ்ச்சி. இன்னொரு மகிழ்ச்சி. நேரே வெளிவந்து விட்டார்கள் முற்போக்குப் பார்ப்பனர். திராவிடர் மேல் நேரடி நடவடிக்கை தொடங்க வேண்டியதுதான் பாக்கி. தொடங்குவோம் என்றுகூடக் குறிப்புக் காட்டியிருக்கிறார்கள். முற்போக்குப் பார்ப்பனரிடம் நமக்கு இன்னொரு மகிழ்ச்சி. இத்தனை நாள் நாங்கள் செய்தது குள்ளநரி வேலை. நல்ல அலுவல்களை அடைந்து கொண்டோம். செல்வநிலை பெற்றுள்ளோம். இனி எங்கள் முகவரியைக் கூறிக்கொண்டே எதிர்ப்போம் என்கிறார்கள். திராவிடர் கழகம் சொல்லுகிறது: உன்னால் ஆனதைப் பார். பறிக்க முடிந்தால் பறி. ஏமாற்ற முடிந்தால் ஏமாற்று. தர்ப்பைக் கையில் கத்தியைத் தூக்க முடிந்தால் தூக்கு. செய்ய முடிந்தால் செய். - குயில், 15.5.1948, ப.36 - 39 4. குயில் தினசரி - அறிக்கை ஓராண்டாகக் குயில் மாத இதழாக மட்டும் நடந்து வருகிறது. இன்று முதல் அது தினசரியாகவும் வெளிவருகிறது சிறிய அளவில்! 1. இந்திய யூனியனிலிருந்து திராவிடநாடு விடுதலை பெற வேண்டும். 2. உடனடியாகப் பிரஞ்சிந்தியா இந்திய யூனியனில் சேரக் கூடாது. 3. இந்திய யூனியனில் சேர மறுத்தபின் அது தன் முழு விடுதலைக் குரிய இடையூறுகளைக் களைந்து கொள்ள வேண்டும். இவைகளை நோக்கமாகக் கொண்டு குயில் நாடோறும் பணிசெய்து வரும். பொது மக்கள் அங்கங்கு, அன்றன்று ஏற்படும் குறைபாடுகள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் பற்றிச் சுருக்கமாகக் குயிலுக்கு எழுதியனுப்பி உதவலாம். அரசினரும் அலுவல் மாற்றம், தமக்குக் கிடைக்கும் அயல் நாட்டுச் செய்தி முதலியவற்றைத் தந்து உதவலாம். எல்லா வகையிலும் ஆதரிக்க வேண்டுகிறோம். - குயில், தினசரி, புதுச்சேரி, 13.9.1948, ப.2 5. இந்திய யூனியனில் ஏன் சேரவேண்டும்? குப்புசாமி அப்பாசாமி திண்ணைப் பேச்சு குப்புசாமி : இந்திய யூனியன் என்றால் எது தெரியுமா? அப்பாசாமி : முன்னெல்லாம் இங்கிலீஷ் இலாகா என்று சொல்வோமே அது. குப்பன் : பிரஞ்சிந்தியா என்றால் எது? அப்பன் : புதுச்சேரி, காரைக்கால், மாயே, ஏனம், சந்திரநாகூர். குப்பன் : இந்திய யூனியனில் பிரஞ்சிந்தியா சேர்ந்துவிடவேண்டும் என்று இங்குள்ள சிலர் சொல்லுகிறார்களே, தெரியுமா? அப்பன் : ஆமாம். இங்குள்ள சில காங்கிரகாரர்கள் சொல்லுகிறார்கள். குப்பன் : இந்திய யூனியனில் நாம் சேர்ந்துவிடத்தான் வேண்டும். தெரியுமா? அப்பன் : சேருவதால் என்ன நன்மை? சேராவிட்டால் என்ன தீமை? சொன்னால் தானே? குப்பன் : காரணம் இல்லாமலா சேர்ந்துவிடச் சொல்லுவார்கள்? உம்? அப்பன் : இங்கே அரசியலில் பட்டம் பதவி பெறப் பல தடவை முயன்று பார்த்தவர்கள் சிலர். ஒன்றும் நடக்கவில்லை. ஆதலால் தோல்வி மனப்பான்மையுடையவர்களும், இந்திய யூனியனின் பிற்போக்கு நிலைமையை மறைத்துக் கூறுவதையே நோக்கமாகவுடைய வெளியூர்ப் பத்திரிக்கை களைப் படிப்பவர்களில் சிலரும், நன்றாகச் சம்பாதித்து விட்டோம். இனி யார் எக்கேடு கெட்டால்தான் நமக்கென்ன என்று நினைக்கும் சிலரும் பொறுப்பில்லாமல் கூறுவார்கள். குப்பன் : இந்திய யூனியனில் நடக்கும் பத்திரிக்கைகள் ஒருவாய்பட்டது போல் இந்திய யூனியனில் உடனடியாகப் பிரஞ்சிந்தியா சேரத்தான் வேண்டும் என்று கட்டளையிடவில்லையா? அப்பன் : ஆம்! அவைகள் கட்டளையிடாமலாயிருக்கும்? பரம சிவனைப் பார்ப்பதற்காக மூக்கையறுத்துக் கொண்டவன் பிறர் மூக்கையும் அறுக்கத்தானே முயற்சி செய்வான்? குப்பன் : பக்கத்தில் இருக்கும் இந்தியா யூனியன் மிகப் பெரிது. பிரஞ்சிந்தியா சின்னது. சேர்ந்துதான் ஆகவேண்டும். அப்பன் : எருமுட்டை பெரியது. இட்டலி சின்னது; அதற்காகக் காலையில் மிளகாய்ப் பொடி நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு எரு முட்டையையா தின்பார்கள்? பெரிதாயிருந் தால்? பயன் இருக்க வேண்டுமே! குப்பன் : இந்தியா யூனியனில் நாம் சேராவிட்டால், இந்தியா யூனியனிலிருந்து இங்கு வரும் ஆற்றுக்கு அணை போட்டு விட்டால் என்ன செய்வது? அப்பன் : அங்கிருந்து இங்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் அவர்களின் அக்கா தங்கைகளுக்கு ஆவது நமக்கும் ஆகட்டும்! குப்பன் : எரிச்சல் வருகிறது எனக்கு. அப்பன் : தோலைப் பற்றிய நோய்! குப்பன் : இந்தியா யூனியனில் நாம் சேராவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? அப்பன் : சொன்னால்தானே தெரியும். குப்பன் : இந்த ஐந்து ஊர்களையும் எள்ளுருண்டை போல் எடுத்து விழுங்கி விடுவார்கள். ஆமாம்! நினைத்துக் கொள்! அப்பன் : எள்ளுருண்டையை எடுத்து விழுங்கும் அந்தக் காங்கிர காரர்களால் இதுவரைக்கும் கோவாவை ஏன் எடுத்து வாயிற் போட்டுக் கொள்ளவில்லை? கோவா டச்சுக்காரர் தொடர் புடையது. அங்குள்ள காங்கிரகாரர்களை அது முந்தாநாள் நாடு கடத்தியும் இருக்கிறது. குப்பன் : இங்குள்ள காங்கிரகாரர்கள் மிகச் சிலர் என்று எண்ணி விடாதே. அவர்கள் சட்டைப் பையில் நேரு சர்க்கார் இருக்கிறது. அப்பன் : அப்படியானால் கோவாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட காங்கிரகாரர் பையில் முகம் துடைக்கும் துண்டு தானே இருந்தது! நேரு சர்க்காரைக் காணோமே? குப்பன் : உணர்வில்லாமல் பேசுகிறாய் நீ, இந்தியா யூனியனில் சேராமல் பிரஞ்சிந்தியாவில் பிரஞ்சுக்காரருக்கு அடிமையா யிருக்கவா எண்ணுகிறாய்? அப்பன் : உணர்வோடு பேசுகிறவனே உற்றுக்கேள் நான் சொல்வதை! நமக்கும் பிரஞ்சுக்காரருக்கும் உள்ள தொடர்பை அடிமை நிலை என்று கூறுவாயானால், இந்தியா யூனியனுக்கும் ஆங்கிலேயர்கட்கும் அமெரிக்கர்களுக்கும் உள்ள தொடர்புக்குப் பேரென்ன? இன்னும் சொல்லப் போனால் இந்தியா யூனியன் - சென்னை சர்க்காரில் சேர்ந்தோமே யானால் அதுமுதல் நாம் இங்கிலாந்துக்கும், அமெரிக்கா வுக்கும் வட நாட்டுக்கும், அங்குள்ள கோட்ஸே கூட்டத் துக்கும் அடியார் மட்டுமல்ல அடியார்க்கும் அடியாரல்லவா? (தொடரும்) - குயில், தினசரி, புதுச்சேரி, 13.9.1948, ப.1, 4 (நேற்றைய தொடர்ச்சி) குப்பன் : என்ன பேச்சுப் பேசுகிறாய்? அப்பன் : இந்தியில் பேச வேண்டுமா என்ன? குப்பன் : சிலர் இங்கிலீஷ் இலாக்காவின் வாரண்டுக்கு அகப்படாமல் பிரஞ்சிந்தியாவில் ஓடிவந்து புகுந்து கொள்வதுண்டு. இனியும் அப்படித் தானே நடக்கும். பிரஞ்சிந்தியாவையே தீர்த்துக் கட்டிவிட்டால் இந்தக் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியாதல்லவா? அப்பன் : பாரதியார், வ.வெ.சு. சீனிவாச ஆச்சாரி, அரவிந்தர், சர்மா முதலிய மிகப் பல தலைவர்களும், அறிஞர்களும் அங்கிருந்து இங்கு வாரண்டுக்குத் தப்பித்துக் கொள்ள வந்ததுண்டு. நாம் காப்பாற்றியதுண்டு. அதனால் அல்லவா இந்தியா யூனியன் இந்த நிலைக்கு வந்தது. இனியும் இந்தியா யூனியனில் உள்ள காமராஜ், டாக்டர் சுப்பராயன் முதலியவர்கள் அங்கு ஏற்படும் வாரண்டுக்கு தப்பித்துக் கொள்ள இங்கு அடைக்கலம் புக வேண்டிய நிலை ஏற்படலாமல்லவா? ஆகையால் பிரஞ்சிந்தியா தனியாகவே இருக்கட்டும். குப்பன் : அடடா! எவரும் நெருங்க முடியாத சூரியன்களடா அவர்கள்! அப்பன் : கோட்சே கூட்டத்தின் முன் குழி முயல்களடா அவர்கள். குப்பன் : இவ்வளவு திமிராக வாதாடுகிறாயா? நான் குப்பனடா? அப்பன் : என்னைத் தெரியவில்லை? உங்கள் அப்பனடா! - கைகாட்டி - குயில், தினசரி, புதுச்சேரி, 14.9.1948, ப.4 6. தினத்தந்தி மடத்தனம்! கலகம் விளைத்தவர் இந்திய யூனியன் தலைவர்களே! 17.08.1948ல் காரையில் திருவாளர்கள் காமராஜ், டாக்டர் சுப்புராயன், ஆதித்தன், கேப்டன் நாராயணசாமி ஆகியோர், ஏராளமான இந்-யூ காலிகளுடன் காரைக்காலில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தார்கள்; வந்தது சரியா? வந்தது சரி என்று பிழையாக அவர்கள் நினைத்திருந்தாலும், எவர் ஆதரவில் வந்தார்கள்? காரைக்கால் காங்கிரகாரர் ஆதரவிலா? அப்படி யானால், காரைக்காலில் காங்கிரகாரர் என்று சொல்லிக் கொள்ளுபவர் கட்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார்களா? இந்-யூனியனில் சேரவேண்டும் என்பவர் எத்தனை பேர் இருக்கிறார்கள். திராவிடர் கழகம், கம்யூனிடு கட்சி, சோஷலிடு கட்சி, முலீம்லீக் கட்சி மற்றும் கத்தோலிக்கட்சி அனைத்தும் இந்-யூனியனில் சேர மறுக்கின்றன. இது நாடறிந்த உண்மையாயிற்றே! நிலைமை இப்படியிருந்தும் அவர்கள் வந்ததன் நோக்கம் கலகத்தை உண்டு பண்ணிக் காரியத்தை முடிக்க முடியுமா என்று பார்ப்பதாகத்தானே இருக்க வேண்டும்? இந்-யூனியனில் காமராஜ் முதலியவர்கள் தம் செல்வாக்கை எந்த வகையில் செலவழிக்கிறார்கள்? முலீம்களை ஒழிப்பது, திராவிடர் கழகத்தைச் சிதைப்பது, கம்யூனிடுகளைக் கண்மூடித் தனமாக அழிப்பது, கத்தோலிக்கர்களை கண்ணியக் குறைவு படுத்துவது, சோஷலிடுகளைத் தொலைப்பது ஆகிய பாஸிடு முறையைத் தானே கண்ணும் கருத்துமாகச் செய்து வருகிறார்கள்? இங்குள்ளவர்கள் அமைதியாயிருப்பது அவர்கட்கு எப்படிப் பிடிக்கும்? பேச வந்தார்கள்! பெரிய மனிதர்கள். பேசினார்கள்! எப்படி? பிரஞ்சிந்தியர்களே இந்-யூனியனில் சேராவிட்டால் நீங்கள் பேரளம் எல்லையில் முட்டியடிக்க வேண்டும். நாகப்பட்டினம் எல்லையில் நக்க வேண்டும் என்று பேசினர். பேச்சு எப்படி? நக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவே வைப்போம். நக்க வேண்டியவர்கள் யார்? இந்-யூனியனிலிருந்து இங்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் இவர்களின் அக்கா தங்கச்சிமாருந்தானே? திராவிட நாடு பிரிக்கப்படும் என்பது பகற்கனவாம். பாகிதான் ஏற்படுவது கூடப் பகற்கனவு என்றுதானே இவர்கள் சொன்னார்கள். இப்படி அன்று கூட்டத்தில் நிறைந்திருந்த மக்களின் மனம் புண்படும்படி பேசினார்கள். கூட்டத்தில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. பதில் சரியாகச் சொல்லவில்லை. டாக்டர் சுப்பராயன் தலைவரைக் காட்டினார்; தலைவர் வானத்தைப் பார்த்தார் - திடீரென்று எவரும் எதிர்பாராத வகையில் கல்மாரி! தலைவர்களைக் காப்பாற்றியவர்கள் பிரஞ்சிந்திய போலீகாரர்; நன்றி மறக்கலாகாது. போலீகாரர் தான் இவர்களைக் காப்பாற்றி அனுப்பியவர்கள். கல்லெறிந்தவர் எவர்? கலகம் விளைத்தவர் எவர்? காங்கிர காரர்! ஏன்? இந்-யூனியன் தலைவர்கட்கும் பிரஞ்சிந்தியாவுக்கும் வருத்தத்தை - மனக்கொதிப்பை உண்டாக்குவது அவர்கள் நோக்கம். அடிபட்டவர்கள் யார்? திராவிடர் கழகத்தாரும் பொது மக்களும். இதை ஆதித்தன் அறிந்திருந்தும் தம் தினத்தந்தியில் அடிபட்டவர் படம்போட்டு அடியில் எழுதியிருக்கிறார்: சமீபத்தில் காரையில் தேசீய காங்கிரஸீன் ஆதரவில் நடந்த தேர்தல் கூட்டத்தில், குண்டர்கள் கல்லெறிந்து பலரைக் காயப்படுத் தினர். அதற்குப் பிரஞ்சுப் போலீசாரும், ஆதரவளித்தனர். மடத்தனமான சொற்றொடர்; குண்டர் யார்? பிரஞ்சு போலீசா குண்டர்கட்கு ஆதரவாயிருந்தது? ஆதித்தன் இனி பொறுப்போடு பேசட்டும். பதவிப் பிச்சைக்குப் பேச வேண்டாம்! - அரசு - குயில், தினசரி, 14.9.1948, ப. 1, 4 7. ஆண்டொன்றுக்கு கோடி ரூபாய்! இந்திய யூனியன் எல்லா வகையிலும் பிற்போக்கான நிலையில் இருக்கிறது. காஷ்மீர் தொல்லை, ஐதராபாத் நெருக்கடி இவைகளை அது சமாளித்தாக வேண்டும். இன்று பெரியார் இராமசாமி, கூட இந்திய யூனியனுக்கு நாம் தொல்லை கொடுப்பது சரியல்ல என்று, தம் இந்திய எதிர்ப்புப் போரை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு தொல்லைகள் மட்டுமல்ல; இந்திய யூனியன் மக்கள் செல்வாக்கை இழந்து தவிக்கிறது. சில நாட்களின் முன் புருஷோத்தம தா தாண்டன் என்னும் பெரியார், இந்திய யூனியனில் லஞ்சம் தலை விரித்தாடுவது பற்றியும் அரசியல் செல்வாக்கினர் தம் செல்வாக்கைச் சுயநலத்துக்குச் செலவு செய்வது பற்றியும் கண்ணீர்விட்டுக் கதறினார் என்று தேசீயப் பத்திரிக்கைகளில் படித்தோம். அவர் நெஞ்சு பதைத்துக் கூறினார். இந் யூனியனின் இன்றைய நிலைமையைவிட முன்னைய பிரிட்டிஷ் ஆட்சி மேல் என்று! டாக்டர். சுப்பராயன், ஆதித்தன் முதலியவர்கள், இன்றைய இந் - யூனியனில் என்ன நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்? - தம்மை அங்குள்ள கோட்சே கூட்டத்திற்கு நல்லபிள்ளை என்று காட்டிக் கொள்ளுவதன் மூலமே தம் நிலைமையை அவர்கள் காத்துக் கொள்ள முடியும். அல்லது முன்னேற முடியும். இவர்கள் கூறலாம் பி. இந்தியா உடனடியாக இந் யூனியனில் சேர்ந்துவிடவேண்டும் என்று, கோட்சே கூட்டத்தின் வால் பிடிக்கும் அடிமைப் பத்திரிக்கைகள் கூறலாம், உடனடியாகச் சேர்ந்துவிடவேண்டும் என்று. இவர்கள் - இந்தப் பத்திரிக்கைக்காரர்கள் ஆயிரம் சொல்லட்டும்; அவைகள் குழந்தைகளின் அழுகைகள்! நமக்குண்டு பொறுப்பு, இவர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதில் பாரதியைக் காப்பாற்றியதுபோல! அரவிந்தர் முதலியவர் களைக் காப்பாற்றியதுபோல்! அடைக்கலம் தருவது மட்டுமல்ல. இந்திய யூனியனுக்குப் படையுதவி தருவதன் மூலமாகவும்! பிரஞ்சிந்தியா என ஒன்று இருக்கட்டும். பிரஞ்சிந்தியாவையும் நல்ல நிலையில் - காமராஜ்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் வகையில் வைத்திருப்போம். எதிர்காலத்தில் - சில ஆண்டுகட்கு - ஆண்டு ஒன்றுக்குப் பிரஞ்சு சர்க்கார். பிரஞ்சிந்தியாவுக்கு இரண்டு கோடி ரூபாய் விழுக்காடு கொடுத்து வரவேண்டிய நிலைமையையும் நாங்களும் நம் நலத்தில் பொறுப்புள்ள திரு. பரொன் குவர்னருமாகச் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளோம் என்ற நற்செய்தியை மகிழ்ச்சியுடன் மக்கட்குத் தெரிவித்துக் கொள்கிறோம். - குயில், தினசரி, 14.9.1948, ப. 2 8. இந்திய யூனியனின் இன்றைய நிலையில்! இந்திய யூனியனில் மிகமிக நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப் பதாக இந் யூனியனின் கவர்னர் ஜெனரல் அறிக்கை வெளியிட்டிருக் கிறார். நாம் கூடநேற்று இந் - யூனியன் பிற்போக்கான நிலையில் இருப்பதாகக் கூறினோம். தென்னாடு என்றும், பழந்தமிழ் நாடு என்றும் சொல்லப்படும் திராவிட நாடு (தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மலையாள நாடு, கன்னட நாடு அனைத்தும் சேர்ந்தது) இந்திய யூனியனிலிருந்து பிரிக்கப்பட வேண்டும், பாகிதான் பிரிக்கப்பட்டதுபோல், ஏன் எனில், திராவிடரின் கலை, நாகரிகம், ஒழுக்கம் வேறு. வடநாட்டினரின் அதாவது, ஆரியரின் கலை, நாகரிகம், ஒழுக்கம் வேறு. திராவிடர் கலையில், மதச்சண்டைக்கு வழியில்லை, இதனால்தான் திராவிடப் பெரியார் இராமலிங்க அடிகள் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று கதறினார். திராவிடர் நாகரிகத்தில் வர்ணாரமக் கலகங்கள் இல்லை. ஆயிரம் சாதிகள் கூறி மக்களை அலக்கழிப்பதைத் திரவிட நாகரிகம் வெறுக்கிறது. இது பற்றித்தான் நடுநிலை உள்ளமுடைய பாரதியாரும் சாதிகள் இல்லையடி பாப்பா என்றார். திராவிடர் ஒழுக்கம் மிக மேன்மையானது. ஒருத்தியைப் பலர் மனைவியாகக் கொள்ளுவதைத் திராவிடர் வெறுப்பார்கள். சூத்திரனுக்கு அதாவது பார்ப்பனனல்லாத மற்றவர்களுக்கு ஒரு நீதியும் பார்ப்பனருக்கு ஒரு நீதியும் என்னும் அயோக்கியத்தனமான செயலைத் திராவிடர் என்றும் ஒத்துக்கொள்வதில்லை. இது கருதித்தான் பாரதியாரும் சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு (பார்ப்பனருக்கு) வேறொரு நீதி என்று வெறுத்துக் கூறினார். திராவிடநாடு பிரிவினை கோரும் திராவிடர்க்கு இன்றைய இந்திய யூனியன் இழைத்துவரும் கேடு உலகறிந்ததாகும், திராவிட நாடு பிரிக்கப்படும் வரைக்கும் இந்திய யூனியனில் அமைதியை எதிர்பார்ப்பது எப்படி? திராவிட நாட்டில், தமிழர்களில் 100க்குப் பத்து பேருக்குக் கூடத் தமிழ் தெரியாதிருக்கையில், தமிழ் மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று சட்டம் செய்திருக்கிறார்கள், இந்திய யூனியன் சர்க்கார், இதை எதிர்த்துத் தமிழ்நாடு முழுதும் கிளர்ச்சி நடக்கிறது. இந்தி மறியல் நடக்கிறது. இந்தக் கலவரம் அடங்குவது எந்நாள்? திராவிட நாட்டை இன்று ஆரிய எதேச்சதிகாரம் ஆட்சி நடத்துகிறது. ஜமீன்களையும், இனாம்தாரர்களையும் ஒழிக்கப் புறப்பட்ட சர்க்கார் இனாம்தாரர்களை ஒழிப்பதைக் கை விட்டதற்கு என்ன காரணம்? இனாம்தாரர்கள் அனைவரும் பார்ப்பனர் என்ற காரணத்தாலல்லவா? பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் ஏழைக்கு ஒரு நீதியும் வழங்கப்படும். இந்திய யூனியனில் - வடநாட்டான் சுரண்டலுக் கென்றே வைக்கப்பட்டிருக்கும் திராவிடநாட்டில் கலவரமும் நெருக்கடியும் தொலைவது என்றைக்கோ அன்றைக்குத் தான் பிரஞ்சிந்தியர் இந்திய யூனியனில் சேருவது பற்றி எண்ண முடியும். இன்றைய பிரஞ்சிந்தியாவில் பார்ப்பனர் ஆதிக்கம் இல்லை. வடநாட்டான் சுரண்டல் இல்லை. வடநாட்டான் ஆதிக்கம் இல்லை. - அரசு - குயில், தினசரி, 15.9.1948, ப. 2, 3 9. வந்தவர் போய்விட்டார்! வள்வள் போகவில்லை! என் வீட்டுக்கு அண்டை வீடு மிகப் பெரிது. வீட்டுக்கு உடையவர்கள் ஒருத்தியும் ஒருத்தனும். அவர்கள் மாடியில் வாழ்ந்து வந்தார்கள். கடப்பையிலிருந்து வந்த கன்னையாவுக்குக் கீழ் வீட்டைக் குடிக்கூலிக்கு விட்டிருந்தார்கள். கன்னையா தம்முடன் ஒரு நாய் கொண்டு வந்தார். அது மிக அழகானது. ஆனால் அதனிடம் ஒரு கெட்ட வழக்கம். என்ன வென்றால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டு வாயிலில் வந்து நின்று கொண்டு வள்வள் என்று ஓயாமல் பதினோருமணி வரைக்கும் குரைக்கும். நான் ஒன்பது மணிக்கெல்லாம் என் வீட்டின் முன் பக்கத்து அறையில் தூங்கப் போவேன். அண்டை வீட்டு வாயிலில் அதாவது என் தலைமாட்டின் அருகில் கன்னையாவின் நாய்க் குரைப்பு ஏற்பட்டதிலிருந்து நான் படும்பாடு ஆலை வாய்ப் பஞ்சுதான் படுமோ! நாயைத் தெருவிற் கட்ட வேண்டாம் ஐயா என்று சொல்லிப் பார்த்தேன். கன்னையா ஒப்பவில்லை. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நாய் குரைத்து ஓய்ந்தபின் நானும் தூங்கி வந்தேன். மூன்று மாதங்கள் சென்றன. ஒருநாள் என் வீட்டு வேலைக்காரன் என்னிடம் வந்து ஐயா அண்டை வீட்டில் குடிவந்தவர் போய்விட்டார் என்றான். விடுதலை கிடைத்தது என்று மூச்சுவிட்டேன். இரவு ஒன்பது மணிக்குப் படுக்கைக்குப் போனேன். என்றும் போல் வள்வள்! ஒரே சத்தம். எப்போதும் போல் முடிவும் பதினோரு மணி தான்! செய்தி என்ன என்றால், அவர் நாயை அழைத்துப் போக வில்லை. வந்தவர் போய்விட்டார். வள் வள் போகவில்லை வந்த ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுப் போனது மெய்தான்; அவர்கள் ஏற்படுத்தி வைத்த சட்டங்கள் - வள் வள் என்று குரைத்துக் கொண்டு தானிருக்கின்றன. எங்கே இந்திய யூனியனில் விடுதலை? அதே சட்டந்தான்! கவர்னர் ஜனரல் ராஜகோபாலாச்சாரிக்கு அதே அறுபதினாயிர ரூபாய் மாதம் சம்பளந்தானே! - குயில், தினசரி, 15.9.1948, ப. 1 10. வடக்கே போகும் பஸில் ஏறாதீர்! ப புறப்படுகிறது. என் நண்பர் ஓடும்போதே ஏறி உட்கார்ந்து கொள்ளுகிறார். ப, தான் போக வேண்டிய திசை நோக்கி விரைகிறது. நண்பர் என்னிடம் கூறுகிறார்: என்ன போங்கள். கடையில் ஒரே ஆள். பையனும் மயிலம் போய்விட்டான். இந்த நிலையில் நான் வெளியூருக்குப் புறப்பட்டிருக்கவே கூடாது. என்ன செய்வது? என் தங்கையின் திருமணம். எப்படிப் போகாமல் இருப்பது? ஆனால் என் நண்பர், தான் இன்ன ஊருக்குப் போக வேண்டும் என்று என்னிடம் கூறவில்லை. கண்டக்டர் வந்து டிக்கட்டுக்குப் பணம் கேட்டான். நண்பர் ஒரு ரூபாயை - சில்லறையில்லாததால் - எடுத்துக் கொடுக்கிறார். கண்டக்டரும் ஒரு டிக்கட் கொடுத்து விடுகிறான். மேலும் நண்பர் என்னிடம் பேசுகிறார்: என் நினைவு கடையிலேயே இருக்கிறது. பையன் மயிலம் போகாமல் இருந்தாலும் என் மனம் அமைதியடைந்திருக்கும். எனக்கும் இரக்கமாக இருந்தது. விரைவில் திரும்பி விடுவீர்கள் அல்லவா? - என்றேன். அதற்கு அவர் உடனே இதே பஸிலேயே திரும்பி விடுவேன்; இன்று மாலையில் புதுச்சேரியில் இருக்க வேண்டும் என்கிறார். அட இழவே! முடியாதே! எந்த ஊருக்குப் போகிறீர்? - என்றேன். திருப்பாதிரிப்புலியூர் என்கிறார். ஐயையோ! இது சென்னைக்குப் போகும் ப அல்லவா. திருப்பாதிரிப்புலியூர் புதுவைக்குத் தெற்கே இருக்கிறது. இதோ பாருங்கள். இந்த ப புதுவையிலிருந்து நேர் வடக்கே போய்க் கொண்டே இருக்கிறது என்றேன். நண்பர் - என் நினைவும் பேச்சும் திருப்பாதிரிப்புலியூரில் இருந்தாலும், அதைச் சொல்லாதிருந்து விட்டேன். என்ன செய்வது இப்போது? பயணத்தை அடியோடு அறுத்துக் கொள்ளவேண்டியதுதான். இறங்கி விடுங்கள் என்றேன். இந்திய யூனியனில் இருக்கிறார் திராவிட நண்பர். அந்த ப எங்கே போகிறது? - பார்ப்பனர் ஒன்றுபடவேண்டும். காஷ்மீர் பார்ப்பனர், குஜராத்தி பார்ப்பனர், மதராஸி பார்ப்பனர், மச்சப் பார்ப்பனர், வைணவப் பார்ப்பனர், சுமார்த்தப் பார்ப்பனர், கொங்கணப் பார்ப்பனர். இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் பிரிவுபட்டுக் கிடந்தார்கள்: இனி விரைவாக அவர்களை ஒன்றுசேர்த்தாக வேண்டும். கையில் ஆட்சியிருக்கிறது. ஆச்சாரிக்கு கவர்னர் ஜனரல்பதவி! 60000 ரூபாய் சம்பளம். மற்றவர்களையும் பிடிக்கவேண்டும்! இருக்கும் நேரு, இருக்கும் பட்டேல் முதலிய பார்ப்பனருடன் ஒன்றுபடுத்த வேண்டும்; வடநாட்டை ஈயக்கட்டிபோல் ஒன்றாக்கிக் கொள்ளவேண்டும்; அப்போதுதான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிடிபடாத திராவிடத்தை அடிமைப்படுத்தமுடியும். இந்த வடக்குத் திசை நோக்கியல்லவா போகிறது? தெற்கு நோக்கிப் போகவேண்டிய தோழர், பயணத்தை அறுத்துக் கொள்ளத்தானே வேண்டும்? அவர் உடனே தனியாக - திராவிட நாட்டு விடுதலையைத் தேடத்தானே வேண்டும்? நிலைமை இப்படி! பிரஞ்சிந்தியா வடக்கத்தி பஸில் ஏறக்கூடாது என்று நான் எச்சரிக்கை செய்யவும் விரும்புவதில் என்ன பிழை! - கைகாட்டி - குயில், தினசரி, 16.9.1948, ப. 1, 4 11. தஞ்சாவூர்ப் பொம்மைக்கு இடங்கொடேல் தோழர் வ.சுப்பையா அவர்களைத் தலைவராகக் கொண்ட பிரஞ்சிந்திய கம்யூனிடுக் கட்சியால் சட்டசபைத் தலைவராக்கப் பட்டவர் திரு. அவோக்கா பாலசுப்ரமணியன் அவர்கள். அவர் மேற்படி சபைத் தலைவராயிருந்த காலத்தில் தம்மைத் தேர்ந்தெடுத்த தோழர் சுப்பையா அவர்களின் கட்சிக்கு எவ்விதத் துரோகமும் விளைத்தாரில்லை. அதன் பிறகு ஆட்சியில் வந்த திரு. குபேர் அவர்களைத் தலைவராகக் கொண்ட சோஷலிடு கட்சியும் திரு. பாலா அவர்களையே சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இப்படி ஒன்றுக்கொன்று எதிர்ப்புள்ள இரண்டு கட்சிக்காரர்களால் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் சட்டசபைத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவர் உண்டென்றால் பிரஞ்சிந்திய சரித்திரத் திலேயே திரு. பாலா ஒருவரைத்தான் சொல்ல முடியும். இதற்குக் காரணம் திரு. பாலா அவர்களின் நன்றியறிதலும், நேர்மையும், நாணயமுமேயாகும். அவர் நான் தொழிலாளர் நன்மைக்குப் பாடுபடப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டதுமில்லை அடுத்த நாள் சுயமரியாதைக் கட்சியில் திராவிடர் கழகத்தில் குதித்ததுமில்லை. அவர் நான் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னது மில்லை. மறுநாள் வன்னியர் சங்கத்தில் குதித்ததுமில்லை; அவர் வன்னியர் சங்கத்தைப் பலப்படுத்தப் போகிறேன் என்று சொன்னது மில்லை. அடுத்த நாள் காலையில் நாக்குப் பூச்சி வில்லை விற்பவன் போல் நெடுஞ்சட்டை போட்டுக் கொண்டு நான் காங்கிரகாரன் என்று தடுக்கி விழுந்ததுமில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் திரு. பாலாகட்சி நிலைமாறாத் தன்மையில் அசையாத தங்கச்சிலை! இதையெல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால் தங்கச் சிலையைத் தன்போலாக்கப் பார்க்கிறது ஒரு தஞ்சாவூர்ப் பொம்மை. எப்பக்கமும் தலை சாய்த்தாடும் தஞ்சாவூர்ப் பொம்மை, மற்றவர்களை யும் அப்படி நினைத்துவிடும் என்பதும் மற்றவர்களையும் ஆக்க முயலும் என்பதும் இயற்கை தானே? திரு. சட்டசபைத் தலைவர் பாலசுப்ரமணியன் அவர்கட்கு நாம் சொல்ல விரும்புவது: தஞ்சாவூர் பொம்மைக்குப் பல நாட்களாகத் தங்கள் மேல் பொறாமையுண்டு; தங்களின் மேன்மை நிலைக்கு உலை வைக்க வேண்டுமென்ற எண்ணம் தஞ்சாவூர் பொம்மைக்கு மிகுதி, உங்கள் உயர்ந்த உள்ளத்தில் தஞ்சாவூர்ப் பொம்மைக்குச் சிறிது இடமும் கொடுக்காதீர்கள். - குயில் தினசரி, 16.9.1948, ப. 2 12. புதுக்கோட்டை வாலிகளைப் பின்னாலிருந்து குத்தியது ராமராஜ்யம்! இந்தியா யூனியன் இனிக்கிறது எட்டிக் காய்போல் புதுக்கோட்டை மக்களுக்கு! புதுக்கோட்டை சில நாட்களின் முன் இந்திய யூனியனில் சேர்க்கப்பட்டு விட்டதல்லவா? இது பற்றிக் கோட்சே கூட்டமும், பித்தலாட்டப் பத்திரிகைகளும், காங்கிர வால்களும் மகிழ்ந்து மகிழ்ந்து பிதற்றின அல்லவா? இந்திய யூனியனில் சேர்ந்துவிட்டதால், புதுக் கோட்டை மக்கள் இன்பத்தை நுகரப் போகிறார்கள் என்று யார்கள் சொன்னார்களல்லவா? புதுக்கோட்டை மக்கள் 15.9.48இல் ஒரு வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். எந்தக் கோர்ட்டில்? - புதுக்கோட்டைத் தலைமைக் கோர்ட்டில். எதற்கு? - சென்னை மாகாணத்துடன் (இந்திய யூனியன்) புதுக்கோட்டையைச் சேர்த்துக் கொண்டது செல்லாது என்பதற்காக. யார் மேல் வழக்கு? - இந்திய யூனியனின் தலைமைச் சர்க்கார் மேல். புதுக்கோட்டை மக்கள் தொடுத்துள்ள வழக்கில் என்ன சொல்லி யிருக்கிறார்கள்? - சென்னை மாகாணத்துடன் புதுக்கோட்டை சேர்க்கப் பட்டதானது சட்டவிரோதமானது. செல்லத்தக்கதல்ல. சேர்த்தது, புதுக் கோட்டை மக்களைக் கட்டுப்படுத்தாது என்று கோர்ட்டாரவர்களே! நீங்கள் தீர்ப்பு வெளியிட வேண்டும். அதுவுமன்றி, சென்னை சர்க்காரோடு புதுக்கோட்டையை ஒன்றாக்கி இதுவரை நடத்தியுள்ள எல்லா நடவடிக்கைகளையும் களைவு செய்யவேண்டும். இனிமேலும் இப்படிப்பட்ட சட்ட மாறுபாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளாமல் இருக்க ஒரு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி யிருக்கிறார்கள். அரசர், அந்தச் சமதானத்துக்குப் பிரதிநிதியாய் இருக்கவே முடியாது. இரண்டும் சேருவதற்கு ஒப்பம் கொடுக்கச் சட்டசபைக்கும் மக்களுக்குமேதான் அதிகாரம் உண்டு. இப்போது சென்னையுடன் புதுக்கோட்டை சேர்க்கப்பட்டதானது, இந்திய யூனியனே தெளிவாகக் கூறியிருப்பதற்கு முரணானதாயிருக்கிறது. ஆட்சி மக்களுடையதே தவிர, அரசனுக்கல்ல என்று இந்திய யூனியன் சர்க்கார் கூறி வந்துள்ளது. சென்னை - புதுக்கோட்டை சேர்வதென்ற ஒப்பந்தத்தில் அரசர் கையெழுத்துப் போட்டது கூட அவர் விருப்பமில்லாமல் போட்டதுதான். அவரைச் செய்த வலுக்கட்டாயத்தை அவரால் சமாளிக்க முடியவில்லை. சட்டசபையைக் கலந்துகொண்டு, பொது மக்களின் வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்று வழக்கில் கூறியிருக்கிறார்கள். குறிப்பு : இந்திய யூனியன்காரரே பல தடவைகளில் நாட்டுக் குடையவர் நாட்டு மக்களே தவிர, நாட்டின் அரசன் அல்லன் என்று சொல்லியுள்ளார்கள். புதுக்கோட்டைப் பற்றிய வரையில் அவர்கள் நடந்துகொண்டது எப்படி? புதுக் கோட்டை மன்னரை வலுக்கட்டாயப்படுத்திக் கையொப்பம் வாங்கிக் கொண்டு, புதுக்கோட்டை மக்கள் இந்திய யூனியனில் இரண்டறக் கலந்துகொண்டார்கள் என்று கூறிச் சேர்த்துவிட்டார்கள். சேர்ந்ததால் புதுக்கோட்டை மக்களுக்கு நன்மை ஏற்பட்டதா? - இல்லை, அதற்கு மாறாகத் துன்பமே ஏற்பட்டது. அதனால்தான் இந்த வழக்கைத் தொடர்ந்திருக் கிறார்கள். இன்னொன்று: இ-யூனியன் செய்த வலுக் கட்டாயத்தால்தான் அரசர் கையெழுத்துப் போட்டார் என்கிறார்கள் புதுக்கோட்டைக் குடிமக்கள்! காரைக்காலில்கூட அப்படித்தானே செய்தார்கள் காமராசரும், டாக்டர் சுப்பராயன் முதலியவர்களும்? கையோடு காலிகளைக் கூட்டி வரவில்லையா? கலகம் விளையக்கூடிய வகையில் பேசவில்லையா? பயமுறுத்தும் வகையில் பேசவில்லையா? (ப-ர்) - கைகாட்டி - குயில், தினசரி, 17.9.1948, ப. 1, 4 13. இனப் பெருமையைக் குலைக்க ஓர் இமாயிலாவது வேண்டாமா! திரு. வக்கீல் பெருமாளைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸின் புதுக் கமிட்டி பற்றிச் சில நாட்களின் முன் பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியில் G. அம்புருவா கமிட்டி மெம்பர் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. G.m«òUthÞ, ஞானு அம்புருவா தானா? - அப்படியானால் G. அம்புருவா என்று ஏன் வழக்கத்திற்கு மாறாகக் குறிக்க வேண்டும்? - பெருமாளின் வேலைப்பாடுகளில் இதுவும் ஒன்றாயிருக்கலாம். G. அம்புருவா என்று குறிப்பிட்டு வைத்தால், ஏன் ஐயா என் பெயரை என் ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டீர் என்று ஞானு அம்புரு வா கேட்டால், இல்லை இல்லை; அவர் வேறு ஆள் என்று சொல்லிவிடலாம். ஊரார் வந்து G. அம்புருவா ஞானு அம்புருவா தானா? என்று கேட்டால் ஆம் என்று மிகக் கணிசமாகச் சொல்லி விடலாம். இப்படி நினைத்தும் பெருமாள் அப்படி எழுதியிருக்கலாம். பெருமாள் நிலை அப்படித்தானே இருக்கிறது. அவர் காங்கிர சட்டை அணிந்து காட்டியும் அவரைப் புருஷோத்தம் ரெட்டியாரின் காங்கிர ஒத்துக் கொள்ளவில்லையே! தம் நண்பர்கள் சிலர் தம் போக்கை ஒத்துக் கொள்ளுவார்கள் என்று பெருமாள் நினைத்தார். அவர்களும் அப்படி ஒத்துக் கொள்பவராய் இல்லை! இந்த நிலையில் தமக்கு ஒரு கட்சியும் வேண்டும். அந்தக் கட்சியில் அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார் என்று காட்டவும் வேண்டும். இனி G. அம்புருவா, ஞானு அம்புருவாதான் என்றால் அது பற்றி நாம் வியப்படைய வேண்டும். ஏனெனில் சில நாட்களின் முன்பு கூட, அவர் தோழர்களே மான்சோ முதலியவர் களின் வழக்கைப் பேசி, தம் கம்யூனிடு கொள்கையை உறுதி செய்து காட்டினார். அப்படி யிருக்கையில் அவர் போயும் போயும் இந்தக் காங்கிர நெல்லிக்காய் மூட்டையிலா தலையை விட்டுக் கொள்வார். ஞானு அம்புருவா தொக்தேர் ஆன் துருவா! ஒருகால் சில நாள் முன், திரு. ஞானு அம்புருவா சட்டசபைப் பெரும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளும் நிலையில் சில நிகழ்ச்சிகள் ஏற்பட்டன. அதனால் அவர் மனம் நொந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கலாம் என்றால் நாம் அப்படி நினைக்கவில்லை. தோல்வி மனப்பான்மை தானே பெருமாளைக் காங்கிரஸில் சேர்த்தது! ஞானு அம்புருவாஸும் அப்படித்தான் என்று சொல்லலாம். இதையும் நாம் நம்பவில்லை. ஏதோ சேர்ந்துவிட்டார். அவர் சேர்ந்துவிட்டது மெய், அவர் காங்கிரகாரராகி விட்டார். இந்திய யூனியனில் சேர்வதென்றும், முடிவு கட்டிவிட்டார், எனில் நாம் அப்படி நினைக்கவில்லை. நம்பவில்லை. ஆனால் புதுவைப் புதுவக்கீல் வ. இமாயில், பெருமாள் கட்சியில் சேர்ந்து விட்டார் என்றால் நாம் அதை நம்பத்தான் வேண்டும்! ஏனெனில் காரைபுதுவை முழுவதுமுள்ள முலீம்களின் பெயரைக் கெடுக்க ஒருவராவது வேண்டுமல்லவா? - குயில், தினசரி, 17.9.1948, ப. 2 - 3 14. இப்படி ஒரு திருமேனி! மண்ணாடிப்பட்டாரின் கண்ணாம்பூச்சி விளையாட்டு! வக்கீல் பெருமாள் வீட்டுக்குப் போவது. நான் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாருக்கு நெருங்கிய உறவினர். நான் சொல்வதை எள்ளின் மூக்கத்தனைகூட அவர் தட்டமாட்டார் என்பது. அங்கு தங்குவது; அவரால் செய்யப்படும் சோட சோபசாரங்களைப் பெற்று மகிழ்வது. அடுத்த மணி நேரத்தில் திரு முத்துப் பிள்ளை வீட்டுக்கு வருவது. பெருமாள் சேதி சிறிது கூடப் பிடிக்கிறதில்லை எனக்கு என்று சொல்வது. அங்கு தங்குவது, மகிழ்வது, பெருமாள், எங்கே இறங்கி யிருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் முத்துப்பிள்ளை வீட்டில்தான் இறங்கியிருக்கிறேன் அங்கேதான் சாப்பிட்டேன் என்பது. முத்துப் பிள்ளை கேட்டால் பெருமாள் வீட்டில்தான் தங்கினேன் அங்குதான் சாப்பிட்டேன் என்பது. பெருமாள், முத்துப் பிள்ளை, குபேர் ஆகியோரின் கட்சி உங்களுக்குப் பிடிக்கிறதா என்று கேட்டால், கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை என்பது; முத்துப்பிள்ளை, பெருமாள் கட்சிக் கொள்கை பிடிக்கிறதா என்றால், சிறிது கூடப் பிடிக்கவில்லை என்பது; முத்துப்பிள்ளை, எமக்கு நீங்கள் ஒத்திருக்க வேண்டு மென்றால் அதற்கென்ன என்பது; பெருமாள் அதேபோல் கேட்டால் அதே முறையில் தலையாட்டுவது. பெருமாள் சென்னைக்கு ஓமந்தூராரிடம் போகவேண்டும் என்றால், நல்லது என்று கூறிப் பெருமாள் செலவில் சென்னைக்குப் போய்த் தம் சொந்த வேலை ஏதாவது இருந்தால் முடித்துக்கொள்வது. முத்துப்பிள்ளை, என்ன உங்கள் பேர் அவர்கள் லிடில் காணப்படுகிறதே என்றால் என்னைக் கேட்காமலே போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது. என்ன நீங்கள் முத்துப்பிள்ளை வீட்டிற்கு போகிறீர்களே என்று பெருமாள் கேட்டால் ஆம் அவரிடம் போய், அவரை நறுக்காக நாலு கேள்வி கேட்டுவிட்டு வந்தேன் என்பது. முத்துப் பிள்ளையிடம் போய், எனக்கு மீண்டும் மேர் பதவி தேவை என்பது. பெருமாள் வீட்டில் போய் எனக்கு மேர் பதவி வேண்டாம் என்பது. பெருமாளிடம் போய், எனக்குப் பிரஞ்சிந்தி யாவில் இருக்கவே பிடிக்கவில்லை என்பது. முத்துப்பிள்ளையிடம் போய் இந்திய யூனியனே பிடிக்கவில்லை என்பது. பெருமாளிடம் போய்த் திருவாண்டார் கோயில் ரெட்டியாரின் செல்வாக்கைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்பது. முத்துப்பிள்ளையிடம் போய், என் பங்காளி விசுவநாத ரெட்டியாருக்கு நான் இளப்பமாகக் கூடாது என்பது - இப்படி ஒரு திருமேனி, மண்ணாடிப்பட்டுக்கும் புதுவைக்குமாகத் திருவுலா வந்து கொண்டிருக்கிறது. ஏன் முத்துவேங்கடபதி ரெட்டியாரே! இதெல்லாம் என்ன வேலை? பிரஞ்சிந்தியா இந்திய யூனியனில் சேர்ந்துவிட நீர் என்ன செய்து கிழித்து விடுவீர்? ஒன்றும் முடியாது ரெட்டியாரே! வீணாக ஏன் ரெட்டியாரே! உமக்குள்ள மரியாதையை மண்ணாக்கிக் கொள்ளுகிறீர்? திரு முத்துப் பிள்ளையால் நீர் நலம் பெறலாம் ரெட்டியாரே! நம்பும் ரெட்டியாரே! எங்கும் தீண்டாத திருமேனியாகாதீர் ரெட்டியாரே! - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 18.9.1948, ப. 1, 4 15. ஓமந்தூராரிடம் காவடி நேற்றுமுன், திருவாளர்கள் வக்கீல் பெருமாள், வக்கீல் வ. இமாயில், வக்கீல் ஞானு அம்புருவா, மண்ணாடிப்பட்டு முத்து வேங்கடபதி ரெட்டியார் முதலியவர்கள் சென்னை முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரிடம் சென்று, சில நாட்களில் பிரஞ்சிந்தியா வில் நடைபெற இருக்கும் முனிசிபல் தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போகிறோம். எங்கட்குப் பக்கத்துணையாய் இருந்து வெற்றி பெற அருள்பாலிக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். அதற்கு ஓமந்தூரார் என்ன சொன்னார்? ஓமந்தூரார் சொன்னதாக இங்குள்ள காங்கிரகாரரும், பெருமாள் முதலியவர்களும் பலவாறு சொல்லி மக்களை அச்சுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கதாகும். நேற்று பிரஞ்சிந்திய போலீ அலுவலில் இருக்கும் ததலா என்பவர் பிரஞ்சிந்திய திராவிடர் கழகத் தலைவர் தோழர் பொன். இராமலிங்கம் அவர்களைக் கண்டு பேசிய பேச்சுக்களும் அச்சுறுத்தல்களும் பெருமாளின் வக்காலத்தாகவே இருந்தன. ததலா தன் உறுதியான கொள்கையையும் வெளிப்படையாகக் கூறினாராம். நான், இந்தியா யூனியனில் பிரஞ்சிந்தியா உடனடியாகச் சேர வேண்டும் என்ற கொள்கையை உடையவன் என்று. அருகில் நடக்க இருக்கும் முனிசிபல் எலெக்ஷனில் இந்திய யூனியன் தலையிட்டுக் கொள்வதில்லை என்ற கருத்தில் டில்லியும், பாரிசும் முடிவு கட்டியிருப்பதாக ஒரு செய்தி சில நாட்களின்முன் படித்தோம். இந்த முடிவுக்கு எதிராக ஓமந்தூரார் பொறுப்பற்ற வகையில் பெருமாள் கூட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், அத்துமீறி, பதில் சொல்லியிருப்பார் என்று எவரேனும் நம்புவார்களா? ஓமந்தூரார் புதுவை, காரைக்கால், மாயே, ஏனம் ஆகிய இடங்களில் தேர்தல் நடக்கும்போது ஏராளமான பட்டாளத்தை - உடை யில்லாமல் - ஆயுதத்துடன் அனுப்பிவைப்பதாக உறுதி கூறியுள்ளார். என்று எங்கும் வாய்ப்பறையடிக்கப்படுகிறது. நேற்று முதல் இந்தத் தப்பட்டை ஓசை அதிகமாயிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஓமந்தூரார் இப்படிச் சொல்லியது உண்மையானால். அவர் செயல் வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். நம் காரைக்கால், புதுவை, மாயே, ஏனம் ஆகிய ஊர் மக்களுக்கு நாம் கூறும் உறுதி, இந்திய யூனியனிலிருந்து ஒரு காக்கை கூட நம் முனிசிப்பல் எலெக்ஷன் காலத்தில் பிரஞ்சிந்திய எல்லையில் வராது. பெருமாள் கூட்டம் தோல்வி மனப்பான்மையுடையது, பலமுறை அரசியல் பதவிகளையடைய முயன்றும், அது ஒன்றையும் அடைய முடியாது போயிற்று. மக்கள் ஆதரவு கடுகத்தனையும் அக்கூட்டத்திற்கு இருந்ததில்லை! ஆனால் பெருமாள் கூட்டத்திற்கு எதிராகப் போட்டியிட்டவர்கள் முழு வெற்றியடைந்தார்கள். பிரஞ்சிந்திய மக்கள் ஒரே மனதாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இப்போது, வேறுபோர்வை தேடிக் கொண்டது பெருமாள் கூட்டம், அதுதான் காங்கிர வேறு வழியில்லை. பிரஞ்சிந்தியா எலெக்ஷனில் வெற்றியடையச் சென்னை முதலமைச்சர், ஆட்கள் அனுப்ப வேண்டும் என்று கோருகிறது பெருமாள் கூட்டம் என்றால், இதைவிட மானக்கேடு பெருமாள் கூட்டத்திற்கு வேறென்ன தேவை. மக்கள் ஆதரவற்றவர்கள், பதவி ஆசை பிடித்தவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகளைப் பிரஞ்சிந்திய மக்கள் நம்பமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். மீண்டும் ஒரு முறை கூறுகிறோம். வரும் முனிசிப்பல் தேர்தலில் வெளி ஆட்கள் நுழைய மாட்டார்கள். - குயில், தினசரி, 18.9.1948, ப. 2 - 3 16. கேள்வியும் : பதிலும் கேள்வி : இந்திய யூனியனில் சேரக்கூடாது என்பதை எல்லா அரசியல் தலைவர்களும், எல்லா முனிசிப்பல் தலைவர் களும், எல்லா மக்கள் பிரதிநிதிகளும் ஆதரிக்கையிலும் வக்கீல்களில் பலர் ஏன் எதிர்க்கிறார்கள்? பதில் : வக்கீல்களில் பலருக்கு ஏன் சென்ற எலெக்ஷனில் தோழர் சுப்பையா கட்சி, பதவி கொடுக்கவில்லை? அந்தக் கடுப்புத்தான் காரணம்! இப்போதுள்ள கட்சியும் அப்படித்தான் ஒதுக்கும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள், அதுவுந்தான் காரணம். தோழர் சுப்பையாவுக்கு முன் நடந்த கட்சிகள் வக்கீல்களால் நடந்தன. வக்கீல்களுக்கு பதவிகளைப் பங்கிட்டு மீந்ததைத் தான் மற்றவர்களுக்கு விடுவார்கள். இதனால் வக்கீல்கள் அரசியலில் தலையிடுவதை மக்கள் அறவே வெறுக்க லானார்கள். அதனால்தான் சுப்பையா கட்சி இரண்டொரு வக்கீல்களைத் தவிர மற்றவர்கட்கு பதவி தரவில்லை. கேள்வி : இந்திய யூனியன் மிகப்பெரிது: அங்கே கல்வித் துறை விரிவாக அமைந்திருக்கிறது. அதனால் கல்வி வசதி அங்குத்தானே இருக்க முடியும்? பதில் : கல்வி வசதிதான் அங்கு இல்லை. பிரஞ்சிந்தியாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கட்குச் சம்பளமில்லை. அங்கே சம்பளம் வாங்காத பள்ளிக் கூடமே இல்லை. கேள்வி : பிரஞ்சிந்தியாவில் பிரஞ்சுக்காரர் என்ன உரிமை கொடுத் திருக்கிறார்கள் நமக்கு? பதில் : எல்லா உரிமைகளும் நமக்குண்டு; எல்லார்க்கும் இங்கே வாக்குரிமை உண்டு, அங்கு பணக்காரர்க்கு மட்டுந்தான் வாக்குரிமை! கேள்வி : பிரஞ்சிந்தியாவில் சட்டசபையின் முடிவை கவர்னர் மாற்ற முடியும். இது மக்கள் உரிமையைப் பறிப்பதல்லவா? பதில் : இங்கு வன்னியர்க்கு அரசியல் செல்வாக்குக் கிடைத்தால், மற்ற மரபினர்க்குத் தொல்லை தேடப்படுகிறது. வேளாளர்க்குச் செல்வாக்குக் கிடைத்தால் வன்னியர் முதலிய மற்றவர் கட்குத் தொல்லை உண்டு பண்ணப் படுகிறது. சாதிப் பூசல் இப்படி! கத்தோலிக்கர்க்கு அரசியல் பதவி கிடைத்தால் கத்தோலிக்கர் அல்லாதவர்கட்கு ஏமாற்றம். அல்லாதார்க்குச் செல்வாக்கானால் கத்தோலிக் கர்க்கு ஏமாற்றம். மதப்பூசல் இப்படி! இதனால் நமக்கு ஒரு பொதுவான ஆள் தேவைப் படுகிறது. ஆனால் இப்போது சாதி மத வேற்றுமைப் பூசல் ஒழிந்து வருகிறது. கவர்னர் அதிகாரத்தைத் தொலைப்பது முடியாததல்ல. பெறமுடியாது என்று கருதிய உய்னித்தே தெலீதை நாம் பெற வில்லையா? வெள்ளைக்காரரைத் தான் தெப்புய்த்தே சேனாத்தேராக எடுக்கவேண்டும் என்ற வழக்கத்தை நாம் உடைத்தெறிந்து, நம்மவர்களையே தேர்ந் தெடுக்கவில்லையா? இன்னும் கேள். இங்கே கவர்னருக்கு அதிகாரம் என்கிறாய்? அதிகாரமுள்ள அந்த கவர்னரை, நினைத்தால் மாற்ற நமக்கு அதிகாரம் இருக்கிறதே! பிரஞ்சிந்தியா ஏற்பட்ட இருநூறு ஆண்டுகளில் நாம் மாற்றிய கவர்னர்களும் இருநூறு பேர் இருக்கலாமே. எட்டு நாளில் ஒருவரை மாற்றி இருக்கிறோம். ஆகையால் முழு உரிமை நமக்கு இங்கே இருக்கிறது. - குயில், தினசரி, 20.9.1948, ப. 2 - 3 17. உடனடியாகச் சேரவேண்டுமென்போர் உணர்க! அமைதிக்குக் கேடுவிளைப்பவர்களைச் சுட்டுத் தள்ளும்படி கோவாவின் உத்தரவு! ஐதரபாத்தின் மேல் இந்திய யூனியன் சர்க்கார் நடவடிக்கை எடுத்ததின் விளைவாக, கோவாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிற தென்று பம்பாயிலிருக்கும் தேசீய காங்கிரசுக்குத் தகவல் கிடைத்திருக் கிறது. நீக்ரோ துருப்புக்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா-ஐதராபாத் எல்லையில் அவை ரோந்து சுற்றி வருகின்றன. பஞ்சிம் என்னும் ஊரிலுள்ள வழிகளில் கவச மோட்டார்கள் நிற்கின்றன. உள்ளூர் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறதென்று அறியப் படுகிறது. நாசவேலையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ளும்படி போலீசாருக்கும், ராணுவத்திற்கும் உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்துள்ளது. தரைவழி எல்லைகள் கண்காணிக்கப் படுவதுடன் கோவா பார்வையாளர்கள் சிலர் கோலாம்-போர்த்துகீசிய எல்லை யினின்று திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் தெரிகிறது. குறிப்பு : கோவா தேசீய காங்கிரசானது பம்பாயில் போய் உட்கார்ந் திருப்பது, கோவா சர்க்கார் அவர்களை நாடு கடத்தியதால்! (ப-ர்) - குயில், தினசரி, 20.9.1948, ப. 1 18. குழந்தைகளுக்கு! சொன்னால்தானே தெரியும்? குழந்தைகளே, உங்களுக்குச் சொன்னால்தானே தெரியும்? இந்திய யூனியனிலே உடனடியாகச் சேரமாட்டோம் என்று நாம் சொல்லுகிறோம் - அப்படி என்றால் என்ன தெரியுமா? - சொன்னால் தானே உங்களுக்குத் தெரியும்? மாலை ஐந்து மணிக்குக் காற்று வீசும் கடற்கரையில் - கடலின் அலையோரத்தில், தூய மணல் வெளியில் நூறுபேர் உட்கார்ந் திருக்கிறார்கள்; சிறிது சுருக்க முகத்துடன்! இன்னும் ஐந்துபேர், எதிரில் சிறிது தொலைவில் உள்ள தோப்பின் நிழலிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள். அழைப்புக் குரல் ஒன்று காற்றை ஊடுருவுகிறது: தோப்பில் இருப்பவர்களே, அலையோரத் தூய மணல் வெளியில் வந்து விடுங்கள் இந்த அன்பான - ஆனால் அவசரமான அழைப்பானது தோப்பின் நிழலிலிருக்கும் ஐந்துபேர் காதிலும் விழுகிறது. அவர்கள் அலையோரத்தில் உள்ள உடன் பிறந்தார் நூறு பேரையும் நோக்கி, அங்கே வெயிலின் வெப்பம் தீர்ந்து வருகிறது! இதோ இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வந்து விடுவோம் என்று சொல்லுகிறார்கள். தோப்பின் ஐவர் சொல்லுகின்றதைத்தானே நாமும் சொல்லுகிறோம்! தோப்பும், கடற்கரையும் ஒன்று; அது அவர்களின் தாயகம்! தோப்பின் ஐவரும், கடற்கரை நூற்றுவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இது அந்த ஐவர்க்கும் நூற்றுவர்க்கும் தெரியும்! இப்போது உங்களுக்குத் தெரிகிறது; சொன்னால்தானே தெரியும்! - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, புதுச்சேரி, 21.9.1948, ப. 1 19. தன்குஞ்சு பொன்குஞ்சு எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை என்ன தெரியுமா? அது பொன்னான உரிமை. எங்களுக்கு இன்று கிடைத்துள்ள முத்தான விடுதலையை நாங்கள் நினைத்து நினைத்து மகிழாத நேரமில்லை! இப்படி இந்திய யூனியனிலிருக்கும் என் நண்பர் கூறுகிறார். தன்குஞ்சு பொன்குஞ்சு என்பார்களே அந்தப் பழமொழி நினைவுக்கு வருகிறது எனக்கு! ஏன் நண்பரே, இந்தியாவை விட்டு ஆங்கிலேயன் போய் விட்டதைத்தான் உரிமை என்கிறீரா? ஆங்கில வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்தார்கள் - அதுவரைக்கும் இந்தியர்கட்கு, அவர்களால் சில நன்மைகள் உண்டு, பல தீமைகள் உண்டு. ஆங்கில வெள்ளையர் இந்தியாவை விட்டுப் போய்விட்டார்கள் - அதனால் அவர்களால் நமக்கு ஏற்பட்டிருந்த நன்மையை அவர்கள் எடுத்துக்கொண்டு போய்விடமுடியவில்லை. அதுபோலவே அவர்கள் போனதால் அவர்களால் நமக்கு ஏற்பட்டிருந்த தீமையும் போய்விட வில்லை. இல்லை. இல்லை. வெள்ளைக்காரன் போய்விட்டான், அவனால் ஏற்பட்டிருந்த தீமைகள் போய்விட்டன. விடுதலை வந்து விட்டது என்கிறீரா? ஒரு போதுமில்லை. சர்க்க கூண்டில் ஆட்டிவைக்கிறவனும், புலியும் இருக்கப் பார்க்கிறோம். பிறகு ஆட்டிவைப்போன் கூண்டைவிட்டு, அதாவது புலியை விட்டு வெளியே போய்விடுகிறான் புலிக்கு விடுதலை கிடைத்து விட்டதா? கூண்டு தொலையவில்லையே. அதற்கு விடுதலை ஏது? வெள்ளைக்காரன் போய்விட்டாலும் அவன் சட்டம் இருக்கிறது. உமக்கு எங்கேயிருக்கிறது உரிமை நண்பரே? எல்லாத் துறையிலும் அவன் ஏற்படுத்திய சட்டந்தானே வேலை செய்கிறது? இன்னும் சொல்லப் போனால் அதைவிடக் கொடுமையான சட்டங்களும், செய்யப்பட்டிருக்கின்றன. உரிமை என்பது என்ன எனில், மக்களின் உணர்ச்சி, தேவை இவைகளுக்குத் தடையில்லாத ஓர் நிலை வெள்ளைக்காரன் போய் விடுவதல்ல உரிமை! முன்பெல்லாம் - வெள்ளைக்காரன் இருக்கும் போதெல்லாம், பழித்து வந்தோமே அந்தச் சட்டந்தான் இப்போதும்! வெள்ளைக்காரன் இருக்கும்போது நீவிர் என்ன அடிமை நிலையில் இருந்தீரோ, அதே அடிமை நிலையில்தான் இப்போதும் இருந்து வருகிறீர். ஆனால் விரைவில், மக்கள் தேவைக்கும், உணர்ச்சிக்கும் ஏற்ற வகையில் இந்திய யூனியன் திரும்பியே தீரும். திரும்பிவரத் தொடங்கிவிட்டது. மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது - விரைவில் நீங்கள் உரிமையடைந்தபின், சட்டங்கள் நல்லபடி, அமைக்கப்பட்டபின் - இதோ நாங்களும் இந்திய யூனியனில் சேர்ந்து கொள்ள ஆவன செய்கிறோம். நீர் கேட்பீர் பிரஞ்சிந்தியாவில் உரிமை இருக்கிறதா என்று! பிரஞ்சிந்தியாவில் எல்லாருக்கும் வாக்குரிமையுண்டு. எந்தப் பள்ளியிலும் சம்பளமில்லை. வரி வாய்தா மக்களுக்கு மிகக் குறைவு பிரஞ்சிந்தியாவில் தெருவுக்குத் தெரு மார்வாரி வட்டிக் கடையில்லை. குழந்தைகட்கு இந்தி கட்டாயமில்லை. பிரஞ்சிந்தியா வடநாட்டான் சுரண்டலுக்கு ஆளாக முடியாது. வீட்டு வரி சுலபம், ஆலை வைப்பது சுலபம், அச்சுக்கூட உரிமையுண்டு. வெள்ளைக்காரனை பிரஞ்சிந்தியாவில் நாங்கள் இருக்கச் சொன்னோம். போ என்றால் போய்விடுவதில் வெள்ளைக்காரன் அட்டி சொல்லமாட்டான் அவன் பிரஞ்சுக்காரன்; மிக்க நல்லவன். மனித உரிமையை உலகுக்கு முதலில் சொன்னவன்! - குயில் தினசரி, 21.9.1948, ப. 2 - 3 20. தினமணி தெரிவிக்கிறது (1) பிரஞ்சிந்தியத் தேர்தல்கள் என்ற தலைப்புடன் 21.9.48ல் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது தினமணி. அத்தலையங்கத்தின் ஓரிடத்தில், கோர்ட்டுகள் சம்பந்தமாக மட்டுமே சில இடைக்கால ஏற்பாடுகள் (இரண்டு, மூன்று வருஷங்களுக்கு) இருந்து வரும். மற்ற அம்ஸங்களில் புதுவையும், காரைக்காலும் தாலுக்கா அல்லது பிர்க்காக்களாகவே இருக்கும் என்று கூறுகிறது. இத்தொடர் மொழிகளில் முற்பகுதியானது பிரஞ்சிந்திய வக்கீல்களைத் தட்டிக்கொடுக்கிறது. பிற்பகுதியானது பிரஞ்சிந்தியப் பொது மக்களை வருந்தச் செய்துவிடுகிறது. பிரஞ்சிந்தியாவில் கலவரம் நடப்பதென்பது மெய். காரணம் பிரஞ்சிந்தியச் சட்டமல்ல. வக்கீல்கள் காரணர். அவர்கள் அரசியலில் தலையிடுவதை இங்குள்ள பொதுமக்கள் வெறுக்கிறார்கள். சென்ற சில தேர்தல்களில் கூடப் பொதுமக்கள் அவர்களைப் புறக்கணித்திருக் கிறார்கள். பெரும்பான்மை வக்கீல்களுக்கு இப்போது பதவி இல்லை. அவர்களில் பலர் பிரஞ்சிந்தியா இந்திய யூனியனில் உடனடி யாகச் சேர்ந்துவிட வேண்டும் என்று இப்போது சொல்வதற்குக் காரணம், இனியும் தமக்குப் பதவி கிடையாது என்று அவர்கள் உறுதியாக நினைப்பதுதான்! இங்குள்ள பொதுமக்கள், இது இந்திய யூனியனில் சேர்ந்து விட்டால் உடனே, புதுவை, காரை முதலியவைகள் கேவலம் ஒரு தாலுக்கா அல்லது பிர்க்காவாகி விடுமே என்று நினைத்துத்தான், உடனடியாக இந்தியா யூனியனில் சேர மறுக்கிறார்கள். பிரஞ்சிந்தியர்களுக்குத் தேசபக்தியில்லாமல் இல்லை. இந்தியா வின் தேசீயக் கிளர்ச்சியை இன்றல்ல வெகுநாட்களின் முன்பே பிரஞ்சிந்திய மக்களே நடத்தினார்கள் என்றால் மறுப்பார் உண்டா? வங்காளப் பிரிவினைக்காலத்தில், திலகர் காலத்தில், கப்பலோட்டிய சிதம்பரனார் காலத்தில், பிரஞ்சிந்தியன் ஒவ்வொருவனும் தன் நாட்டின் கடமையைச்செய்திருக்கிறான். அஞ்சாது செய்தான், பொருளால், உடலால், உயிரால்! அங்கே பிரிட்டீஷ்காரனிடத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட கை ஒவ்வொன்றும் பிரஞ்சிந்தியன் ரகசிய முறையில் அனுப்பிய இருப்புக்கையல்லவா? இங்குள்ளவர்கள் பிரஞ்சுக்காரருக்கு அடிமைகள் அல்லர். அவர்களுக்கு இங்குள்ள உரிமையைக் கேளுங்கள். இங்கு அடைக்கலம் புகுந்த பாரதியார், வ.வெ.சு. அரவிந்தர், சர்மா இன்னும் இங்கு வெளிப்படையாகச் சொல்லமுடியாத மிகப்பலர் - ஆகியோருக்குப் பிரஞ்சிந்தியர் செய்துள்ள உதவியை - அதன் விரிவை தினமணி கேள்விப்பட்டிருக்கலாம். பிரஞ்சிந்தியர் பிரஞ்சுக்காரனின் அடிமைகளா யிருந்திருந்தால் அத்தகைய உதவியை நாங்கள் செய்திருக்க முடியாதே. அப்போது பிரஞ்சிந்தியரின் நோக்கத்திற்குப் பிரஞ்சுக் காரன் ஓரிம்மியும் எதிராயிருக்க முடிந்ததுமில்லையே! எதிராயிருந்தது மில்லையே. இது பற்றிப் பின்னும் எழுதுகிறோம். - குயில் தினசரி, 22.9.1948, ப. 2-3 (2) இந்திய யூனியனில் பிரஞ்சிந்தியா சேர்ந்துவிட்டால், புதுவை, காரைக்கால், தாலுக்கா அல்லது பிர்காவின் நிலையில் வைக்கப்படும் என்று தினமணி கூறியதானது - பிரஞ்சிந்திய மக்களுக்கு வருத்தம் தரும் பேச்சு என்று கூறினோம், நேற்று - அதுபற்றி இன்று சிறிது விளக்க எண்ணுகிறோம். தாலுக்கா, அல்லது பிர்காவுக்கு இந்திய யூனியன் காட்டும் அரசியல் சலுகை எவ்வளவு? - அவ்வளவு சலுகை மட்டும், புதுவை காரைக்கால் மக்களுக்குப் போதுமா! அவர்கள் அதைவிட அதிகச் சலுகையை இங்கு இப்போது அடைந்து வருகிறார்கள். ஆயினும், இந்திய யூனியன் உயர்ந்த நிலை நோக்கி விரைந்து நடந்து செல்லுகிறது. பிர்கா தாலுக்காவுக்கு எதிர்காலத்தில் அங்குப் பெருஞ் சலுகை கிடைக்கும். ஒரு நகரத்தார் அடையும் சலுகையை எதிர்கால இந்தியாவில் தாலுக்கா பிர்காக்கள் அடையும் நிலை ஏற்பட்டுத்தான் தீரும். அப்போது பிரஞ்சிந்தியர், இந்திய யூனியனின் சட்ட திட்டத்தை வரவேற்க அட்டியிராது சேர மறுப்பார். யாருமிரார் என்று உறுதி கூறுகிறோம். புதுவையிலோ காரைக்காலிலோ பிரஞ்சு ஆதிக்கம் இருந்தால் பிரான் நம்மீது படையெடுத்து விடமுடியும் என்று நாம் அஞ்ச வில்லை என்கிறது தினமணி. அதுமட்டுமல்ல! பிரஞ்சுக்காரர் படை, பிரஞ்சிந்தியர்களின் கடைசி உயிரும் இல்லாது தொலைத்த பின்புதான் அது இந்திய யூனியன் மேல் தன் முதல் குண்டை எறிய முடியும் என்பதும் பிரஞ்சிந்தியனின் மாறா உறுதியாகும். பிரஞ்சுக்காரர்கள் கெட்டவர்கள் என்று நாம் நினைக்கவில்லை என்று கூறுகிறது தினமணி. தினமணியின் ஆசிரியர் திரு. சிவராமன் உலகின் பல்வேறு அரசியல்களையும் மக்கள் பண்புகளையும் நேரிற் சென்று ஆய்ந்தவர் என்பது நமக்குத் தெரியும். அவர்களின் அறிவு ஆற்றல்களில் நமக்குப் பெரிதும் நம்பிக்கையுண்டு. அவர் நம்முடன் நெருங்கிப் பழகிய நண்பருமாவார். எம் கவலையெல்லாம் பிரஞ்சுக்காரன் எங்கள் போக்குக் கெல்லாம் ஒத்திருப்பதின்றி அவன் ஒரு பிரான் ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்தவன் என்ற இறுமாப்பை இந்த இருநூறு ஆண்டுகளாக எம்மிடம் காட்டியதாக எங்கள் மனச்சான்று கூறவே முடியவில்லை. எங்கள் உரிமைக்குப் புறம்பான வழியில், தம் அலுவலின் செல்வாக்கைப் பயன்படுத்திய வெள்ளைக்காரரை - கவர்னர்களை, நீதிபதியை, பாராளுமன்றப் பிரதிநிதியை அடித்துப்போட்டதும் உண்டு - அப்போது கூட வெள்ளைக்காரரை இந்தியன் அடிக்கும்படி ஆய் விட்டதா என்று எந்த வெள்ளைக்காரனும் கிளம்பியதில்லை. தாம் வேறு, இந்தியர் வேறு என்ற மனப்பான்மை அவர்களிடம் கண்ட தில்லை. பிரஞ்சிந்தியாவில் தேர்தல்கள் எவ்வளவு மானக்கேடான முறையில் நடப்பது வழக்கம் என்பது யாவரும் அறிந்ததே என்கிறது தினமணி இந்திய யூனியனில் எல்லோருக்கும் வாக்குரிமையில்லை. சிலருக்கே! இந்த நிலையில் கூட அங்குத் தேர்தல்கள் மானக்கேடான நிலையில் நடக்கின்றன என்றால், தோட்டி முதல் தொண்டைமான் வரைக்கும் ஆடவர், பெண்டிர் அனைவர்க்கும் வாக்குரிமை உள்ள பிரஞ்சிந்தியாவில் மோதுதல் எதிர்பார்க்கக் கூடியதுதானே. அந்த மோதுதல்களின் காரணம் சட்டமா? அல்லது வெள்ளைக்காரர் தூண்டுதலா? இல்லையே. ஒரு வேளை பிரஞ்சு தானிகர்கள் புத்தி சொன்னாலுங்கூட தல அதிகாரிகள் மறைமுகமாகத் தமது பழைய சூழ்ச்சிகளிலேயே ஈடுபடுவதாக இருக்கலாம், என்கிறது. தினமணி. தல அதிகாரிகள் அயோக்கியத்தனமாகச் சாதிக்கொரு நீதி சமயத்துக்கொரு நீதி, வேண்டியவருக்கொரு நீதி வேண்டாதவருக்கொரு நிதி, முலீம் களுக்கொரு நீதி, இந்துவுக்கொரு நீதி, என்பன அனைத்தும் இந்திய யூனியனில்தான் என்பது உலகறிந்த செய்தி! பிரஞ்சிந்தியரின் தேவை, கலை, ஒழுக்கம், இவைகளுக்கு மாறாக மயிரிழை கூட இங்குள்ள அதிகாரிகள் நடக்க முடியாது; நடந்ததேயில்லை. கடைசியாகத் தினமணிக்கு நாம் சொல்ல நினைப்பவை: நடக்கப்போகும் முனிசிப்பல் எலெக்ஷனிலோ, ரெபரண்டத்திலோ வெற்றி, சேர மறுப்பவர்கட்குத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன எனில் பிரஞ்சிந்திய மக்களுக்கு இங்குச் சலுகை மிகுதி. இந்திய யூனியனிலிருப்பது போன்ற பல தொல்லைகள் எமக்கு இங்கு இல்லை. இங்கே எல்லார்க்கும் வாக்குரிமை, எல்லாரும் இங்கு ஒப்புடையவர்கள், எல்லாரும் இங்கே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், முலிம்கள் இங்கே மனிதர் என்றே எண்ணப்படுகிறார்கள். கிறிதுவரும் அப்படியே, வடநாட்டான், தென்னாட்டான் என்ற பேச்சே இங்கில்லை. இங்கு கல்வி இலவசம்; வரி வாய்தா சுலபம்! ஆனால் இந்த நிலை, இந்திய யூனியனில் வந்து கொண்டிருக்கிறது. பிரஞ்சிந்தியாவும் இந்திய யூனியனை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கிறது. கூடலூருக்கண்டையில் ஒரு தனி அரசாங்கமா? தஞ்சாவூருக் கண்டையில் ஒரு தனி அரசாங்கமா - ஒரு நிமிஷங்கூட - பிரஞ்சிந்தி யர் சுயேச்சையாகக்கூட - இருக்கக்கூடாது என்று தினமணி எண்ணும் எண்ணம் குள்ளமானது. நான் கூறுகிறேன் கூடலூருக் கண்டையில் சுயேச்சைத் தனிநாடு இருக்கலாம். அது மட்டுமல்ல இந்திய யூனியனுள்ளே கூட இப்போதிருப்பது போல் பாகிதான் (முலீம் லீக்) இருக்கலாம். இந்திய யூனியன் உள்ளே இப்போது இருப்பது போல் ரஷ்யா (கொள்கை) இருக்கலாம். பிரஞ்சிந்தியா விற்குள் இப்போது இருப்பது போல் இந்திய யூனியன் (காங்கிர) இருக்கலாம். இல்லாமற் செய்ய முடியாது. அனைவரும் உறவினர். - குயில் தினசரி, 23.9.1948, ப. 2 - 3 21. காரைக் காங்கிர தலைவர் வேண்டுகோள்! வேங்கடாசலபதியின் நாராயண கோபாலம்! காரைக் காங்கிர தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் திரு. சா. வேங்கடாசலபதி பிள்ளை 20.9.48இல் வெளிவந்த தினமணி வழியாக ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர், காங்கிர வெற்றி பெற, போதிய பொருள் உதவியும், இந்திய அரசாங்கத்தின் கண்காணிப்பும் பெரிதும் வேண்டற் பாலனவாகும் என்கிறார். இந்திய யூனியன் வேங்கடாசலபதி வழியாகப் பொருள் கொடுத்தும் ஆள் கொடுத்தும், பிரஞ்சிந்தியரின் வாக்கை விலைக்கு வாங்குவார்களானால் அவர்களின் மேன்மைக்கு அது அழகாகுமா? வேங்கடாசலபதி கூறுகிறார்! இந்திய யூனியன் சர்க்கார் வீட்டு வாயலில் - நாராயணகோபாலன் என்று. அவர்கள், கை வேலையா யிருக்கிறது என்றுதானே பதில் சொல்லக்கூடும்! இதற்குமுன் கூடக் காங்கிரஸின் பேரால், பல தடவைகளில், சென்னை முதல்வரிடம் சென்று பல்லிளித்த வேளாங்கண்ணித் தொண்டர்கட்கு, மன்னிச்சிக்கிங்க வேறே வீடு பாருங்க என்று சொல்லினீர்களாமே? வேங்கடாசலபதி அதே வேண்டுகோளில், காரைக்காலைப் பொறுத்த வரைக்கும் வரப்போகும் தேர்தலில் காங்கிர வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார். அதுதான் உறுதியாய்த் தெரிகிறதே. பணம் எதற்கு? சொந்த பிரயாசைக்கா? பிரஞ்சிந்தியத் தேர்தல்கள் மோசடிக்கும், காலித்தனத்திற்கும் பெயர் பெற்றதென்பது உலகறிந்த உண்மை என்று கூறுகிறார் வேங்கடா சலபதி! சென்னை அரசினரிடம் பணம் தண்டுவதற்காகத் தம் மானம் இழந்து பேசுகிறார் என்று தோன்றுகிறது. இவரின் பிறவிப் பங்காளி பக்கிரிசாமிப்பிள்ளை அவர், பிரஞ்சிந்திய மக்களின் பிரஞ்சிந்தியப் பாராளுமன்ற பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். காலித்தனத் தால், மோசடியால் பக்கிரிசாமிப்பிள்ளை தேர்தல் பெற்றிருந்தால், இந்நேரம் அவர்தம் பதவியை உதறித் தள்ளியிருப்பாரே. வேங்கடா சலபதி போலவே பக்கிரிசாமியும் மானம் உள்ளவர் என்பதில் யாருக்கு ஐயமிருக்கமுடியும்? நமது பிரதம மந்திரி பண்டித நேரு சர்வ ஜன வாக்கெடுப் பிற்கல்லாது, முனிசிப்பல் தேர்தலுக்குத் தனது (தமது) பார்வையாளர்களை அனுப்பி வைப்பதற்கில்லை என்று கூறிய பின்னர், நிலைமையைச் சமாளிக்கப் போதிய பொருளுதவியேனும் உடனடி யாகத் தேவையா கின்றது என்று மஞ்சள் துணி கட்டிய உண்டியலை நீட்டுகிறார். வேங்கடாசலபதி பணத்திற்கு இப்படி சத்யாக்ரஹம் செய்வார் என்று முன்னமே தெரிந்திருந்தால் நேரு அவர்கள், பார்வையாளர்களாக நாலைந்து காப்டன் நாராயண சாமிகளை அனுப்பி வைக்கிறேன் என்றாவது சொல்லியிருப்பார்! நேரு, பார்வையாளர் அனுப்பவில்லை. அதற்காகப் பணம் கேட்கிறார். வேங்கடாசலபதி, பணம் எதற்கு? காலிகளை ஏவத்தானே? எங்கள் லட்சிய சித்திக்கு, அகில இந்தியக் காங்கிர கமிட்டி, தமிழ்நாடு காங்கிர கமிட்டி, தஞ்சை ஜில்லா காங்கிர கமிட்டி, காங்கிர ஊழியர் மகாநாடு... முதலியவற்றின் பேராதரவும் ஆக்கம் அளிக்கின்றது என்கிறார். இவர் பேராதரவு என்று சொல்லுவது எதை? பணத்தையா? அடியாட்களையா? பிள்ளை மிரட்டல் போடுகிறார்! பிள்ளையவர்களின் உருட்டல்கள் சென்னை சர்க்காரின் பெருந்தன்மைக்கும், நேரு சர்க்காரின் நேர்மைக்கும் கெட்டபெயர் சூட்டுவிழா நடத்துவதாகுமே தவிர, அறிவுடைமையாகாது. - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 22.9.1948, ப. 1, 4 22. நல்ல வேலை செய்தார் ஓமந்தூரார்! வடவர் போக்குக்கு அடையாள மறியல்! ஏன் ஓமந்தூரார் இப்போது வடநாடு சென்றார்? மத்திய சர்க்கார் அழைத்திருப்பார்கள். என்ன சொல்லி அழைத்திருப்பார்கள்? மது விலக்கு, ஜமீன்தாரி மசோதா இவை பற்றிப் பேசவேண்டும் என்று. அது பற்றி ஓமந்தூரார் அவைகளுக்கு இன்னபடி பதில் கூறுவது என்று இங்கே தீர்மானித்துக்கொண்டுதானே புறப்பட்டிருப்பார்? தம் நண்பர்களிடம் மறுக்கப் போவதாகக் கூறியுமிருப்பார். இது வட நாட்டு ஆளவந்தார்க்குப் பிடிக்குமா? அதெப்படிப் பிடிக்கும்? ஓமந்தூராரை வழியிலேயே கொன்றுவிடலாம் என்றுகூட எண்ணியிருப்பார்கள். அநுமான் (ஏரோப்ளேன்) ஓமந்தூராரைக் கொல்லப் பார்த்தது மெய்யா? ஆமாம் ஆமாம். அநுமான் ராமனையே கொல்லப் பார்த்தது. அநுமானிடம் தாம் தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அவரே நிருபர்களிடம் கதறியிருக்கிறார். அங்கே என்ன நடந்தது? மத்திய சர்க்கார் ஜமீந்தார் மசோதாவைக் சோதாவாக்கி விடு! அதாவது சட்டமாக்காதே தள்ளிவை என்றது. முடியவே முடியாது என்று சொல்லி விட்டார் ஓமந்தூரார். அதன்பிறகு? மதுவிலக்கைத் தள்ளிவை. மக்கள் மது அருந்திக் கொண்டிருக்கட்டும் என்றார் இந்தியப் பிரதமர் நேரு. முடியாது முடியாது 2 அது அமுலுக்கு வரத்தான் போகிறது என்று கூறிவிட்டார் ஓமந்தூரார். இதனால் ஓமந்தூரார் மேல் மத்திய சர்க்காரும் நேருவும், அவர்களின் வால் பிடிக்கும் தென்னாட்டிற் சிலரும் பாய்வார்களல்லவா? பட்டி மாட்டுப் பாய்ச்சலுக்கு ரெட்டியார் அஞ்சுபவர் அல்லர். ஏதாவது தீங்கு தேடினால்? பாரதியாருக்கு அடைக்கலந் தந்த பாண்டிச்சேரி இருக்கிறது. அரவிந்தர் ஆரமம் போல் ஓமந்தூரார் ஆரமும் உண்டாகட்டுமே புதுச்சேரியில்! - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 23.9.1948, ப. 1 23. பிள்ளையாண்டான் நினைவு! தற்கால ஏற்பாடாக மாயே பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் இடத்தில் இருந்துவந்த மஷிங்கல் ராகவன் என்பவரை அவர் செய்த தவறுக்காக நீக்கிவிட்ட சர்க்கார், அந்த இடத்திற்கு வேறொருவரைத் தேடிற்று. ஒருவரை சர்க்கார் ஏற்றுக் கொண்டது. அவரை ஏற்றுக்கொண்டதற்கு அவரிடம் பல தகுதிகள் இருப்பதாகச் சொல்லுகிறது. அந்த தகுதிகளில் ஒன்று: அவருக்கு இந்தி தெரியும் என்பது! இந்தி தெரியுமென்பதால் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஆசிரியர் சங்கமும் சரியல்ல என்று கூறுகிறது. நாம் கூறுகிறோம்: இப்போதுள்ள கல்வி அதிகாரி குன்னமா இந்தி நினைவாகவே இருக்கிறார். இந்திய யூனியன் கூறுகிறது. இந்திய யூனியனில் இந்தி தெரியாதவர்களுக்கு உத்தியோகச் சலுகை இல்லை என்று! தென்னாட் டில் இந்தி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து கோடிக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள். அங்கேயே அப்படி! இங்கே பிள்ளையாண்டான் நினைவு எத்தகைய நிலையை உண்டாக்குமோ என்பதுதான் நமது கவலை. - கைகாட்டி - குயில், தினசரி, 23.9.48, ப. 4 24. இந்தியாவின் இன்றைய நிலை என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? படித்திருக்கிறாயா? ஆம்! மிகுதியாகப் படித்திருக்கிறேன். பிழைப்புக்காகவா? மடமையைப் போக்கிக் கொள்ளுவதற்கா? மடமையைப் போக்கிக் கொள்ளத்தான்! மடமை தீர்ந்ததா? தீர்ந்தது! நல்லுணர்வு ஏற்பட்டதா? ஏற்பட்டது! கற்பக் கழிமடம் அஃகும், மடம் அஃக ஒற்கம் தீர்ந்து இவ்வுலகின் கோள் உணரும் என்றபடி குறைவின்றி இவ்வுலகின் கொள்கை தெரிகிறதா உனக்கு? தெரிகிறது. நீ பிறந்தது எந்தத் தீவு? நாவலந் தீவு. இதற்கு, சமகிருதத்தில் என்ன பெயர்? ஜம்புத்தீவு என்பார்கள். நீ பிறந்தது எந்தக் கண்டம்? பரத கண்டம். வழக்கத்தில் இதை எங்கே காணமுடியும்? புரோகிதர்கள் நம்மவர் வீடுகளில் வந்து மந்திரம் தொடங்குகையிலும் ஜம்புத்தீவு என்றும் பரதகண்டம் என்றும் சொல்லுவார்கள். கண்டம் என்றால் என்ன? பல நாடுகளையுடையது. தீவு என்றால் என்ன? நாற்புறத்திலும் நீர் சூழ்ந்தது. அதாவது பெரியதோர் திட்டு. அது பல நாடுகளையுடையது. பரத கண்டத்தில் பலநாடுகள் உண்டா? எவை? இன்றைய நிலையில் இரு நாடுகள் உண்டு. ஒன்று ஆரியநாடு, மற்றொன்று திராவிடநாடு. ஆரிய நாட்டின் உள் நாடுகள் எவை? நிஷதகாந்தார கூர்ஜர முதலிய மிகப்பல. திராவிட நாட்டின் உள்நாடுகள் எவை? சேர சோழ பாண்டிய நாடுகளும் பல்லவ நாடு இடைநாடு முதலியவைகளும். ஆரியர் யார்? இட்லரின் இனத்தவரும், தென்னாட்டிலுள்ள பார்ப்பனரும், வங்காளம் நீங்கிய வடநாட்டாரும் ஆவார். எப்படி வந்தார்கள்? ஐரோப்பாவிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து வட நாட்டில் தங்கினார்கள். அவர்களிற் சிலர் தென்னாட்டைத் தரங் குலைக்கக் குடியேறினார்கள். வட நாட்டாரையும் இங்குள்ள பார்ப்பனரையும் பார்த்தால் ஐரோப்பியர் போல் தோன்றவில்லையே? அப்படித் தோன்ற வில்லை என்றால் திராவிடர் போலவாவது தோன்றுகிறார்களா? அதுவு மில்லையே! காலம் என்ற வெள்ளத்தில் பல சலவை செய்யப் பட்டதால் நிறம் காவியேறி விட்டது. ஆரியர், திராவிடருக்குச் செய்த தீமை என்ன? திராவிடநாட்டைப் பிடித்துவிடவேண்டும்; தம் அதிகாரத்தை நிலைநாட்டிவிடவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக முயன்று பார்த்தார்கள்; இராமாயணம் என்பதுகூட ஆரியருக்கும் திராவிடருக்கும் இருந்து வரும் போராட்டத்தைக் குறிக்கும் என்றுதானே ஜவஹரும் தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்! பழந்தமிழர் ஆரியரைப் பகைத்தார்களா? கனக விசயர்கள் தமிழரைப் பழித்ததால் அவர்களின் வலி யடக்கினார்கள். ஆரிய நாட்டைத் தலை எடுக்கவொட்டாது அடக்கி வந்தார்கள் சேர, சோழ, பாண்டியர்கள். கண்ணகி என்ற கற்புக்கரசி போல் சிலை செய்யத் தமிழன் வடநாடு சென்று, எதிர்த்த ஆரிய மன்னர்களை வென்று அவர்களின் தலையிலேயே அந்தக் கல்லை வைத்துச் சுமக்க வைத்தான். அப்போதே ஆரிய நாட்டைப் பிடித்திருக்கலாமே திராவிடர்? பிறன் நாட்டைப் பிடிப்பது என்பது திராவிடர் அறமல்ல; திராவிடரை ஆரியர் எவ்வளவுதான் வெல்ல முடிந்தது? பல நூற்றாண்டுகளாகத் தம் ஆரிய மதத்தை நம் திராவிட நாட்டில் பிரசாரம் செய்துவந்ததால் திராவிடர் உள்ளத்தை முதலில் அவர்களால் வெல்ல முடிந்தது. ஆயினும், திராவிட நாட்டில் அவர்களின் அதிகாரம் பலிக்கவில்லை. திராவிட ரிடமிருந்து ஆரியர் எப்படித் தப்பித்துக் கொண்டார்கள்? மொகலாயர் படையெடுத்து வெற்றிபெற்று வடநாட்டை ஆண்டபோது அவர்களிடம் குலாம்களாயிருந்து தம்மைத் திராவிடரிடமிருந்து காத்துக் கொண்டார்கள். அதன் பிறகு பிரிட்டிஷார் ஆட்சியில் ஆரியர் - தென்னாட்டுப் பார்ப்பனர் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது தெரிந்ததுதானே! பிரிட்டிஷ் ஆட்சியை ஆரியர் கடைசி வரைக்கும் ஆதரித்தார் களா? பிரிட்டிஷ்காரனிடம் வணங்கி வணங்கி அவனிடம் பெறவேண்டிய அலுவல், சலுகை அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள். அவனை யும் தொலைக்கத் தொடங்கினார்கள். ஏன்? ஏனா? அந்த பிரிட்டிஷ் காரன் வர வரக் கெட்டுப் போய்விட்டான். எப்படி என்றால் மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்று அவன் நினைக்கிறான். அன்றியும், வருணாரமம் பொய்; வேதம் நம்முடையது அல்ல; நாம் திராவிடர். நம் மொழி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு. சமகிருதம் நம்முடையதல்ல. புராணம் நமக்கு எதிரி என்று கூறும் இராமலிங்க அடிகளுக்கும், மற்றும் சித்தர்கட்கும் இன்றைய சீர்திருத்தக்காரர்கட்கும் இடம் கொடுக்கத் தொடங்கி விட்டான். அதனால் ஆரியன் அவனைத் தேசீயத்தின் பேரால் தொலைக்கத் திட்டம் போட்டான். (தொடரும்) - குயில், தினசரி, 24.9.1948, ப. 1, 4 (நேற்றைய தொடர்ச்சி) காங்கிரஸில் சேர்ந்து கொண்டானா? ஆம் தன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு, வந்தே மாதரம் போடத் துவங்கிவிட்டான். இந்த நாட்டின் மேல் அளவில்லாத அன்புசெலுத்தத் தொடங்கிவிட்டான். வெள்ளைக்காரனை வெளியேறு என்று கத்தினான். தான் ஓர் இந்தியன் என்று வேஷம் போட்டான். இந்த வகையில் காங்கிரஸையே கைப்பற்றிக் கொண்டான். காந்தியடிகளை என்னவென்று சொன்னான்? அவதாரம் என்றான். தாங்கினான். அவர் மகனையும் வளைத்துத் தன் இனத்தானின் மகளை மணம் செய்துகொள்ள வைத்தான். சண்டை வந்தது. சண்டைக்குப்பின் என்ன நடந்தது? இங்கிலீஷ்காரன் உங்கள் நாட்டை நீங்களே ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, இந்தியாவின்மேல் ஒரு பிடிப்பை மட்டும் வைத்துக்கொண்டு போய் விட்டான்? ஆரியனிடத்திலா அதிகாரத்தைக் கொடுத்துப் போய்விட்டான்? காந்தியடிகளிடத்திலும், வட நாட்டாரியரிடத்திலும் நாட்டை ஒப்புவித்துப் போனான் என்றுதான் சொல்லவேண்டும். காந்தியடிகள் நாட்டை நடத்தி வந்தார். ஆரியன் அவருக்கு ஒத்துத்தான் இருந்து வந்தான். அதன் பிறகு? ஜின்னா பாகிதான் கேட்டார். காந்தியாருக்கு கொடுக்க எண்ணம். ஆரியன் மறுத்தான்; கலகம் நடந்தது. ஆரியன் தன் மனம் கொண்ட வரைக்கும் முலீம்களைக் கொலை செய்தான். ஜின்னாக்களும் பின்வாங்கவில்லை. கடைசியில் காந்தியடிகள் பாகிதான் கொடுத்தார். இது உள்ளூர ஆரியனுக்குப் பிடிக்கவில்லை; இது மட்டுமன்றி காந்தியார் பாகிதானுக்கு நியாயமாய்ச் சேர வேண்டிய பெருந்தொகையைக் கொடுக்க சொன்னார். முலீமும் மனிதன்தானே, அவனை வெறுப்பது அயோக்கியத்தனம் என்றார். மக்கள் சமம் என்றார். சாதியில்லை என்றார். பார்ப்பனர் - ஆரியர் உத்தியோக வேட்டையைவிட்டு வேதம் படிக்க வேண்டியதுதான் என்றார். சும்மா இருந்தார்களா பார்ப்பன ஆரியர்? காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். யார் கொன்றது? ஆரியப் பார்ப்பான்தான் கொன்றான். தொலைந்தது ஆரியனுக்கிருந்த தொல்லை. அவன் வைத்தது தான் சட்டம் இந்தியாவில்! இப்போது என்ன செய்கிறான்? தன் இனத்தில் இருந்த வேறுபாடு களையெல்லாம் அலுவலைக் கொடுத்தோ, கண்ட்ராக்டர் ஆக்கியோ, திருட்டு வியாபார வசதி செய்தோ, பெரிய பெரிய பதவிகள் தந்தோ ஒன்றுகூட்டுகிறான். திராவிடநாட்டை ஆட்டி வைக்கிறான். திராவிடர் களின் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான். ஆரிய நாட்டுக்கு, அதாவது வடநாட்டுக்கு எல்லா வகையிலும் திராவிடநாடு இன்று அடிமை நாடுதான். வடக்கர்களுக்கு - அந்த மார்வாரிப் பசங்களுக்கு - வாழாது வாழ்ந்த வீராதி வீரரான திராவிடர் இன்று அடிமை களாகத்தான் இருக்கிறார்கள். திராவிடநாடு பிரிக்கப்படவேண்டும் என்று திராவிடர் கிளர்ச்சி செய்கிறார்கள். சும்மா இருப்பானா எதிரி? ஐயையோ ஒட்ட அறுத்து வருகிறான் தாலியை. எதற்கெடுத்தாலும் சிறை! பிரஞ்சிந்தியாவில் இந்த தொல்லை இல்லையே? கிடையவே கிடையாது. பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழியேயில்லை. மேலும் வடநாட்டு ஆரிய னுக்கும் பிரஞ்சிந்தியாவில் அதிகாரமில்லை; சுரண்டவும் முடியாது. பிரஞ்சுக்காரன் அயல் நாட்டான்தானே? பார்ப்பனனும், ஆரியனும், வடநாட்டானும் அவகளின் அப்பன்கள் என்று சொன்னேனே! என்ன இருந்தாலும் பிரஞ்சுக்காரன் மொழி வேறுதானே? பிரஞ்சுக்காரன் மொழி வேறுதான்! அதைப் படிப்பதால் தொழில் நுணுக்கம் தெரியும்; உலகம் தெரியும்; விஞ்ஞானம் விளங்கும். வடநாட்டான் மொழி மட்டும் வேறல்லவா? தம் மொழியாகிய இந்தியையும் வடமொழியையும் படிக்கவேண்டியது கட்டாயம் என்று சட்டம் செய்திருக்கவில்லையா? இந்தியில் என்ன இருக்கிறது? எந்தத் திக்கில் நின்று நாமம் குழைக்கிறது என்பதைத்தானே அது கூறுகிறது. விஞ்ஞானமா, உலகியலா என்ன இருக்கிறது இந்தியில்? வடமொழி எதற்கு உதவும்? அர்ச்சனைக்கும், புரோகித அளப்புக்கும் திராவிடரை யேய்த்துக் காசு பிடுங்குவதற்கும் உதவும். தமிழைத் தொலைக்க உதவி செய்யும். என்ன இருந்தாலும் பிரஞ்சுக்காரனுக்கும் நமக்கும் வேறுபாடு இருக்கத்தானே செய்யும்? பார்ப்பனருக்கும் நமக்கும் நடையுடை, தேவை, பண்பு அனைத்திலும் வேறுபாடில்லையா? பார்ப்பான் நம்மைத் தீண்டவும் மறுக்கவில்லையா? என்ன இருந்தாலும் பிரஞ்சுக்காரன் இங்குக் கலகத்தை வளர்ப்பானே? நன்றாயிருக்கிறது உன் பேச்சு. பார்ப்பான் இங்கு ஒற்றுமையை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறானா! நன்றாயிருந்த திராவிட நாட்டை நாலு சாதியாக்கினானே, பார் மதித்த திராவிடத்தில் பஞ்சமனென்று ஒரு பேர் வகுத்தானே. ஒரே கடவுள் என்றிருந்த நாட்டில் உருவங்கள் கோடி செய்து உதவாமல் ஆக்குகின்றானே. தமிழைத் தொலைக்கச் சாத்திரம் காட்டி னானே! வருணாரமம் வகுத்தானே! குலம் என்று கூச்சலிடுகிறானே! ஏன் இப்படிக் கலகம் செய்தான், செய்கிறான்? திராவிடரைத் தின்ன, சொத்தைச் சுவாஹா பண்ண, ஊர்த் தாலியை ஒட்ட அறுக்க. அப்படியானால் இந்திய யூனியனில் எப்போது சேர்வது? இதோ! - இதோ திராவிடநாடு பிரியப் போகிறது. பார்ப்பான் ஆதிக்கம் அங்கு ஒழியப்போகிறது. வட நாட்டானுக்குள்ள அதிகாரம் அறுந்துவிடப் போகிறது. இதோ நாமும் திராவிட நாட்டில் சேர்ந்துவிட வேண்டியதுதான். - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 25.9.1948, ப. 1, 4 25. பெருமாள் சுயநலச் சூழ்ச்சி வக்கீல் பெருமாள் சுயமரியாதைக்காரர். அன்றியும், திராவிட நாடு. திராவிடர்க்குப் பிரிக்கப்படவேண்டும். அது பாகிதான் போல் தனிநாடாகத் திகழவேண்டும் என்று இன்று போராடி வரும் திராவிடர் கழகத்தில் பங்கெடுத்துத் தொண்டாற்றி வந்தார். இந்த வகையில், பெருமாள் திராவிடர் கழகப் பொதுக் கூட்டங் களிலும், திராவிடர் கழக மாநாடுகளிலும் கலந்துகொண்டு வந்ததையும் பேசி வந்ததையும் அறியாதார் இலர், மேலும் அவர் திராவிடர் கழகக் கொள்கைப்படி நடந்த பல சுயமரியாதைத் திருமணங்களை நடத்தியும் வந்துள்ளார். ஆரியர் வேறு திராவிடர் வேறு என்பதையும் ஆரியர்களின் வடநாட்டுக்குத் திராவிட நாடு அடிமைப்படுதல் கூடாது. விடுதலை பெறவேண்டும் என்பதையும் அவர் வற்புறுத்திப் பேசி வந்துள்ளார். மற்றும், தென்னாட்டில் ஆரியப் பார்ப்பனர் செய்யும் அட்டூழியங் களையும் அவர்கள் திராவிடர்களை எதற்கும் ஆகாமல் அமிழ்த்து வரும் கொடுமைகளையும் பெருமாள் எடுத்துக் கூறி வந்துள்ளார். காங்கிர பேராலும் தேசபக்தியின் பேராலும் பார்ப்பனர் அதிகாரத்தை வளைப்பதையும், தம் இனத்தவர்களாகிய வன்னியப் பெருங்குடி மக்களை அவர்கள் பின்னோக்கித் தள்ளுவதையும், இழிவு படுத்துவதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இவ்வாறு பேசிவருவதைக் கொண்டே, புதுவை வன்னியப் பெருங்குடி மக்கள் இவரை வன்னியர் சங்கத்திற்குத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள். இப்படி வன்னியர் சங்கத் தலைவராகி விட்டதால் இவர், தம் சுயநல மாடியின் முதற்படியை அடைந்துவிட்டார். அடுத்தபடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்று இவர் எண்ணியதில் - காங்கிர சட்டை தைப்பது என்று இவருக்குப் புலப்பட்டது போலும்! காங்கிரகாரர் ஆகிவிட்டார்! பெருமாள் காங்கிரஸில் சேர்ந்துகொண்டதாகச் சொன்னாரே தவிர, இவரைச் சேர்த்துக் கொள்பவர் யார் என்பது அவருக்கே புரிந்தபாடில்லை. இவர் தம்மைக் காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளத்தக்க ஆட்கள் கிடைப்பார்களா என்பதில் இவருக்கே ஐயம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் பெருமாள் நம்மைச் சந்திக்கும் போதெல்லாம் - என் மனதில் கறுப்புக் கொடிதான் பறக்கிறது! காங்கிர சட்டை வெறும் வேஷந்தான் என்று சொல்லி நம் தொடர்பை அறுத்துக்கொள்ள அஞ்சினார். பெருமாளுக்கு ஏதோ ஒரு வழி புரிந்துவிட்டது. வெங்கடபதி ரெட்டியாரைக் கொண்டு காங்கிரஸில் சேர்ந்துகொள்ளலாம் என்ற துணிவு கொண்டுவிட்டார். அவ்வளவு தான், அன்றிலிருந்து தம் பழைய குமாதா வழியாக நம்மைத் திட்டிப் பேசத் தொடங்கிவிட்டார். நம்மைப் பற்றிச் செல்ல நாயகரும் திட்டுவதாகவும் சேதி சொல்லி யனுப்பத் தொடங்கிவிட்டார். தீர்ந்தது! தம் காங்கிர கமிட்டியிற் சேர்ந்துள்ளதாக ஒரு லிடையும் வெளியிட்டார். அந்த லிடில் கண்டவர்களில் சிலர் - எம்மைக் கேளாமலே பெருமாள் லிட் வெளியிட்டுவிட்டார் என்று கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஓமந்தூராரைப் பெருமாள் பலருடன் காணச் சென்றாராம். அங்கு ஓமந்தூராரிடம் இந்திய யூனியனில் நாங்கள் சேர்ந்தபின்னும், வக்கீல்களுக்கு மட்டும் பழைய வேலை நீடிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியதாகத் தெரிகிறது. மற்றும் ஓமந்தூராரிடம் ஒரு பெருந்தொகை கேட்டதாகவும் கேள்விப்படுகிறோம்! இன்று பெருமாள் புதுச்சேரியிலுள்ள பல, காங்கிரகாரரை அணுகி, காங்கிரஸானது எலெக்ஷனில் அபேஷகரை நிறுத்த வைக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட முறையில், செல்ல நாயகர் கட்சியின் பேரால் தேர்தலில் அபேஷகரை நிறுத்தினால் வெற்றி பெறமுடியும் என்றும், சொல்லி முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். இது ஏன் எனில் வன்னியர்களுக்கு ஆதிக்கந்தேடத்தான் முயற்சி செய்கிறார் என்றும் எண்ணப்படுகிறது. வன்னியர்கள் இன்று பெருமாள் காங்கிர சட்டையையும், செல்ல நாயகர் எலெக்ஷனில் தலையிடுவதையும் ஆதரிக்கிறார்களா என்பது விரைவில் அவர்களுக்கே தெரிந்துவிடும். - குயில், தினசரி, 24.9.1948 26. தேசீய காங்கிர பம்பாய் பத்திரிக்கைகளாகிய - பம்பாய் கிரானிக்கல், பிரிபிர ஜர்னல், நேஷனல் டாண்டர்ட், பாரத ஜோதி, பிளிட், சண்டே டாண்டர்ட், சக்தி, லோகமான்யா ஆகியவை எதுவும் போர்த்துக்கேசிய கோவாவுக்குள் தலைகாட்டக் கூடாதென்று அந்தச் சர்க்கார் தடை செய்திருக்கிறது. ஏனெனில், அந்தப் பத்திரிக்கைகள், போர்த்துக்கேசிய கோவா இந்திய யூனியனில் சேர்ந்துவிடவேண்டும்; சேர்ந்து விடாவிட்டால் இந்திய யூனியன் படைகள் கோவாவை விழுங்கி ஏப்பமிடும் என்று பொறுப்பற்ற வகையில் உளறிக் கொண்டிருந்தன. இப்பத்திரிக்கைகளை, இன்று கோவா தடுத்திருப்பது மட்டு மின்றி, இதற்குமுன் கோவாவில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த காங்கிர தொண்டர்களையும், காலிப்பசங்களையும் வெளியே துரத்தியுமிருக்கிறது. இதுபற்றி, கோவாவிலிருந்த குடித்தனத்தைப் பம்பாய்க்கு மாற்றியிருக்கும் கோவா தேசிய காங்கிர காரியதரிசி அழுகிறார்! அவர் கூறுவதைக் கேளுங்கள்: கோவாவிலிருந்து வெளி வரும் பத்திரிக்கைகளில் இந்திய யூனியனே. நீயும் நிறுத்திவிடு, அதுமட்டு மல்ல. இந்திய யூனியனே, பம்பாயில் இருந்து வெளிவரும் அவ்மரியா லங்கோ - லூயி தேன் ஆகிய பத்திரிக்கைகள், கோவா இந்திய யூனியனில் சேரக்கூடாது என்று சொல்லுவதால், அவைகளையும் பம்பாயிலும் மற்ற மாகாணங் களிலும் வராமல் நிறுத்தி விடு. என்ன குள்ள புத்தி! இன்னும் காரியதரிசி என்ன சொல்லுகிறார் தெரியுமா? இந்திய யூனியன் சர்க்கார் உடனே கோவா மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். என்ன முட்டாள்தனம்! ஹைதராபாத் அல்லவே கோவா. மேலும் காரியதரிசியின், காரியதரிசனத்தைப் பாருங்கள். அவர் கூறுகிறார். ஏ, இந்திய யூனியன் பம்பாய் சர்க்காரே, அதோ கோவாவில் ஆகூடா, ரெய்மகோ ஆகிய கோட்டைச் சிறைகளில் என் சகாக்களாகிய காங்கிரகாரர்கள் கையில் காப்புப் போட்டுக்கொண்டு, காலில் சங்கிலி மாட்டிக்கொண்டு, கப்பறையில் விருந்துண்டு கடுந்தவம் புரிகின்றார்களே; அவர்களை அதே நிலையிலாவது வைத்திருக் கிறார்களா அந்தக் கோவா சர்க்கார்? ஐயோ! கிழக்கு ஆப்ரிக்காவி லிருக்கும் மோசம்பி என்னும் தீவுக்கல்லவா ஏற்றுமதி செய்யப் போகிறார்கள். ஆகையால் இப்போதே ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு கோவாவில் போய் அந்த கோவா சர்க்காரை அப்படியே பிடித்து அழித்துவிடக்கூடாதா? காரியதரிசிக்கு ஏதாவது அறிவு, கிறிவு இருக்கிறதாக எண்ண இடமிருக்கிறதா? - குயில், தினசரி, 25.9.1948, ப. 2 குறிப்பு: 26.09.1948 இதழ் வெளிவரவில்லை. 27. புதுவைப் போலீ அதிகாரி போர்த்தின் மிருகத்தனம்! இன்று புதுவைப் பெரியகடையில் ஆட்டுக்கறி விற்பனை செய்யும் திரு. யாசீன் என்ற இளைஞரிடம் - போலீ அதிகாரி போர்த் என்பவர் காட்டிய மிருகத்தனத்தைப் பொது மக்கள் கண்டிக்காமல் இருக்க முடியாது. இன்று காலை சுமார் 10 மணிக்கு போலீ அதிகாரி போர்த் ஆட்டுக்கறி விற்பனையைப் பார்வையிட்டு வரும்போது, யாசீன் என்பாரின் கடைக்கு வந்தார். கறி மீது ஈக்கள் மொய்ப்பதும், அசுத்தமாக இருப்பதும் ஏன்? என்று அதிகாரி கேட்டார். திரு. யாசீன் இனி அப்படி இராது. மேலும் மற்றக் கடைகளிலும் இப்படி யிருப்பதையும் பார்த்தீர்களா? இதற்கெல்லாம் பொதுவான நடவடிக்கை யல்லவா எடுக்க வேண்டும் என்று பதிலளித்தார். நான் கேட்பதற்கு நேரான பதில் சொல்லவில்லையே! உன் பெயரென்ன? என்றார் அதிகாரி. என் பெயரைக் கேட்பதன் காரணம் என்ன என்றறியாமல் என் பெயரை நான் தர நினைக்கவில்லை என்றார் திரு. யாசின். உடனே போர்த், சினத்துடன் அவரைப் பெரியகடை போலீ டேஷன் வரை இழுத்துச் செல்லும் போதே, முதுகில் அறைந்தார். பின் போலீஸில் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கியும், முகத்தில் காயம் படும்படி அறைந்தும், பின் அரைமணி நேரம் சென்று விடுவித்தார். டாக்டர் மெர்வேய் இந்தக் காயம் குணமாகும் வரை ஆறு நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு யாசீனுக்கு யோசனை கூறினார். மேற்படி போலீ அதிகாரி காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. இந்த அதிகாரியின் போக்கு நெடு நாளாகவே இப்படி இருந்து வருவதையும், இந்த செய்கையை விட்டு வைப்பது தவறு என்பதையும், ஆட்டுக்கறி பற்றிய சுகாதார கண்காணிப்பு இழியேன் பீரோவைச் சேர்ந்தது என்றிருந்தும், போலீ அதிகாரி நேரே இதில் தலையிட்டது சட்டத்திற்கு விரோதமானது என்பதையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்த அத்துமீறிய செயல்புரிந்த போர்த் பற்றி தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி போலீ இலாகாத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறோம். - குயில், தினசரி, 25.9.48, ப. 3 28. சட்டத்தை மீறினார்கள்! மாணவர் காங்கிரசின் வீணான வேலை! 25.09.1948 மாலை 6.00 மணிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் களும், அல்லாத சிலரும், நேரு சர்க்கார் எங்கள் சர்க்கார், இந்திய யூனியனில் சேருவோம், வெள்ளையனே வெளியே போ என்று எழுதிய அட்டைகளைத் தாங்கியும், மேற்படி வார்த்தைகளைக் கோக்ஷித்துக் கொண்டும், காளத்தீவரன் கோயில் தெருவழியாகச் சென்னை வீதி பற்றித் தெற்கே ஏழைப் பிள்ளையார் கோயிலண்டை வருகையில், போலீ தலைவர் மறித்து இவ்வூர்வலத்திற்கு உத்தரவு பெற்றீர்களா என்றார். மாணவர்கள், இல்லை சட்டத்தை மீறுகின் றோம் என்று கூறியதில், எதிர்ப்பு மிகுதியாகவே, போலீ தலைவர், தம்முடன் வந்திருந்த வானில் மூன்று தடவைகளில் சுமார் 80 பேரைக் கொண்டு போய்க் காவலில் வைத்தார் உடனே, இரவு 7 மணிக்குப் பெருமாள், ஜீவரத்தினம் ஆகிய இருவரும் பல ஆட்களுடன் கடைத்தெருவில் தோன்றிக் கடைகளைச் சாத்த வேண்டும் என்று கூறவே, ஷாப்புக் கடைக்காரர் பலர் அஞ்சித் தம் கடைகளைச் சாத்தினர். தானியக் கடைப்பக்கம் அதே நேரத்தில் பலர் தம் கடைகளைச் சாத்த முயலுவதை - கடைக் கொத்தவால் திரு. குப்புச்சாமியவர்கள் தலையிட்டு, கடை முன்னறிவிப்பின்றிச் சாத்துதல் தவறு என்று எடுத்துக்காட்டி நிறுத்தியது குறிப்பிடத் தக்கதாகும். கடைகளைச் சாத்தச் சொல்லிப் பெருமாள் கூட்டம் கடைத் தெருவில் அட்டகாசம் செய்தபோது கடைத் தெருப் போலீ பார்த்துக் கொண்டிருந்ததானது வருந்தத் தக்கது. அதே நேரத்தில், புதுவை மேயர் முத்துப்பிள்ளை ஊரில் இருந்திருப்பாரானால் - அவரும் வந்து கடைக்காரர்களுக்கு ஆதரவு காட்டியிருக்கலாம். அவரும் வந்து நமக்கு தைரியம் கூறவில்லையே என்று வியாபாரிகள் அப்போது பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மறுநாள் காலை, மாணவர்களில் சுமார் 8 பேரை நீதிபதி ரிமாண்டில் வைத்தார். மற்றவர்கள் இருவர் மூவராக அன்று மாலை விடுதலை செய்தார். மாணவர்கள் ஊர்வலம் நடத்தப் போவதையும், சட்டத்தை மீறப்போவதையும் யாரிடமும் முற்கூட்டியே சொல்லவில்லை. இதற்கிடையில், பெருமாள் முதலியோரால் தூண்டிவிடப்பட்ட பல இளைஞர்களும், முரடர்களும் சிவில் பக்கமும், மற்றும் தெருக்களிலும் செய்த அட்டூழியங்கள் பல. சிப்பாய்களுக்குச் சென்ற சாப்பாடுகளை மறித்துத் திருப்பினர். சிப்பாய்களைத் துரத்தினர். ஆயினும், கலகக்காரர்களில் சிலரும் அடிபட்டதாகத் தெரிகிறது. (ந. நி.) - குயில், தினசரி, 27.9.1948, ப. 1 29. கலகம் வேண்டாம் இந்திய யூனியனில் சேருவது, சேருவதில்லை என்ற இரு கருத்தையும் முன்வைத்து, இந்தப் பத்தாந்தேதி முனிசிப்பல் தேர்தல் நடக்க இருக்கிறது. இவ்விரு கருத்துக்களும் உடைய கட்சிகள், தத்தம் கருத்தைப் பொதுமக்களுக்கு விளக்குவதன் வழியாகத் தத்தமக்கு மக்களைச் சேர்க்க வேண்டும். இதற்கிடையில், மாணவர்களை ஏமாற்றி இழுத்துச் சட்டமறுப்புச் செய்யச் சொல்லிக் கலகம் விளைப்பது எதற்கு? இதனால் மாணவர் கட்கு நேரும் துன்பத்தை அவர்களைத் தூக்கிவிட்டவர்கள், தாங்கி விடுவார்களா? தாங்கிவிட்டார்களா? இதனாலெல்லாம் இவர்கள் பொது மக்களின் அருவருப்பைப் பெற்றுக் கொள்வது தவிரக் கண்டபயன் என்ன? மக்களிடம் செல்க, இந்திய யூனியனில் சேரவேண்டியதன் அவசியமிருந்தால், அதை இனிய முறையில் எடுத்துக் கூறுக. கலகம் செய்யாதிருக்க. வியாபாரிகளும், தொழிலாளர்களும், அலுவல்காரர்களும் மற்றும் பொது மக்களும் எதிர்பார்ப்பது என்ன? - சேருவதால் நன்மை என்ன? சேராவிடில் தீமை என்ன? - இதுபற்றிய விரிவைக் கேட்கத் தானே அவர்கள் ஆவலுள்ளவர்களாகயிருக்கின்றனர்? கலகத்தையா கேட்கின்றார்கள்? - குயில் தினசரி, 27.9.1948, ப. 2 30. தினமணி திருந்த வேண்டும்! ஆதாரமின்றிப் பேசுகிறது! செப்டம்பர் 28ல் தினமணி மீண்டும் பிரஞ்சிந்தியத் தேர்தல் - அதிகாரிகளின் பித்தலாட்டம் என்ற தலைப்புடன் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில், இதிகாதுல் முசல்மீன் தாபனமும், ரஜாக்கர் படையும் வேலைசெய்தது போலவே, பிரஞ்சுயூனியன் என்றும், சுதந்திர புதுச்சேரி, சுதந்திர காரைக்கால் என்றும் சிலர் கனவு காணுகிறார்கள்; இந்த இரண்டும் இறுதியில் உபயோகமற்ற கனவாகவே முடியுமென்பதும், இந்திய யூனியனில் ஐக்கியமாவதே நியாயமும் கண்ணியமும் வாய்ந்தது என்பதுந்தான் பொதுஜன அபிப்பிராயம் என்கிறது. தினமணிக்கு நாம் கூறுவது: பொதுஜன அபிப்பிராயம் அப்படி யில்லை. சேர முடியாது என்பவர்கள், ஹைதராபாத் முசல்மீன்களும், ரஜாக்கர்களும் அல்லர்; சேரமுடியாது என்பவர், இங்கு இந்துக்களை யும் முலீம்களையும், கத்தோலிக்கர்களையும் ஆதரிப்பவர்கள். இதில் பிரஞ்சிந்திய சர்க்கார் முரணாக இருந்ததுமில்லை. இருக்கக் கூடியதுமல்ல. ஆனால், இங்குள்ள காங்கிரகாரர் என்னும் இந்திய யூனியனின் ஆட்கள் சிலர் கலகம் விளைத்துத் தொல்லை கொடுத்து அவர்களை அலக்கழிக்கப் பார்க்கிறார்கள், காங்கிரகாரர்கள் இப்படி நடந்து கொள்வதற்கு இந்திய யூனியனிலுள்ள தினமணி போன்ற சிலரின் ரகசியத் தூண்டுதல் காரணமாயிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏன் எனில், தினமணியின், இந்தக் கலகக் கொள்கையை இந்திய சர்க்கார் ஆதரிக்கவில்லை; அதனால் தான் இந்திய சர்க்கார் இவ் விஷயத்தில் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டதாகவே நாம் நினைக்க வேண்டியதிருக்கிறது என்கிறது தினமணி. காங்கிர காரர்களைக் கொண்டு இங்குக் கலகம் விளைப்பதிலும், பிரஞ்சிந்திய சர்க்காரை ஆபாசமாகத் திட்டுவதிலும் தினமணி மிகவும் கவனமா யிருக்கிறதென்று காட்டிக் கொள்கிறது. பிரஞ்சிந்தியாவிலுள்ள கம்யூனிடுகளும், திராவிடர் கழகத்தவரும், சோஷலிடுகளும், அரவிந்த ஆரமிகளும், குரு அரவிந்தரும் உடனடியாக இந்திய யூனியனில் சேர மறுக்கிறார்கள். இவர்களை யெல்லாம் இங்குள்ள காங்கிரகாரர்கள் எதிர்க்கிறார்கள். ஏன்? அங்குள்ள தினமணிகளின் கொள்கை அதுதானே? இங்குள்ள காங்கிரகாரர் ஆரமத்தை எதிர்த்து அக்ரமம் செய்த போது, தினமணி சும்மா இருந்தது. அதைப் பிரஞ்சிந்திய சர்க்கார் காத்து வருவதைப்பற்றித் தினமணி நன்றியா கூறும்? அன்றுமுதல் இன்றுவரை பிரஞ்சிந்தியாவில் தேர்தல் என்றால் அதிகாரிகளின் தயவுள்ளவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்று தினமணி செப்புகிறது. இது நேர்மாற்றமானது. பிரஞ்சிந்தியாவில் அதிகாரிகள் மக்களின் உள்ளத்திற்கு மாறாக நடந்து கொள்ள முடியவே முடியாது. அப்படி மாறாக நடப்பவர் கவர்னராயிருந்தாலும் சரி, நீதியிலாக்காத் தலைவராயிருந்தாலும் சரி, அடுத்த நொடியில் தூக்கி எறியப்படுவார்கள். கவர்னராக இங்குவந்த ஒருவரை எட்டு நாளில் திருப்பி அனுப்பியிருக்கிறோம். தேர்தலில் மேற்பார்வை வைத்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு என்று தினமணி சொல்லுகிறது. இது, டெல்லிக்கும் பிரான்ஸுக்கும் நடந்த பேச்சில் முடிவாகி விட்டதே! மேலும் பிரான்ஸின், இந்தியத் தூதரான மேன்மை தங்கிய லெவி அவர்களைப் பேட்டி கண்ட பத்திரிகைப் பிரதிநிதிகளில், காங்கிர பத்திரிகையின் பிரதிநிதி, இதுபற்றிக் கேட்டது பயனற்ற கேள்விதானே! அதற்கு லெவியவர்கள், சூரிய மண்டலத்திலிருந்தோ, சந்திர மண்டலத்தி லிருந்தோ மேற்பார்வையாளர் வருவது இங்கு முக்கியக் கேள்வி யல்ல. தேர்தலை நடுநிலையாக நடத்தி, மற்ற நாட்டினர்க்கு வழி காட்டுவது தான் கேள்வி என்று ஆழ்ந்த கருத்தோடு பதில் சொன்னார். இதுபற்றித் தினமணி என்ன கூறுகிறது எனில், ஸ்ரீ தானியேல் லெவி அளித்த பதில் பிரான்ஸுக்கு எவ்வளவு இறுமாப்பு இருக்கிறது என்பதை நன்கு காட்டுகிறது என்கிறது. மேலும் தினமணி கூறுகிறது: தேர்தலில் ஓட்டுத் தொகுதி விஷய மாகவும் பித்தலாட்டம் செய்து, பிரஞ்சு சர்க்கார் ஒரு புதிய ஏற்பாட்டை அமுலுக்குக் கொண்டு வருகிறது என்கிறது. இது புதிய ஏற்பாடல்லவே; மக்களின் வசதி அறிந்து ஏற்பட்ட பழைய முறைதானே! தினமணி மேலும் சொல்லுகிறது; மைனாரிட்டிக்குச் சாதகமாகச் சில பித்தலாட்டங்களையும், மாறுதல்களையும் செய்து லஞ்சம் கொடுத்து பலம் தேடும் முறையிலேயே பிரஞ்சிந்திய சர்க்கார் இப்போது காரியம் செய்கிறது என்கிறது. பிரஞ்சிந்திய சர்க்காருக்கு இப்படிப்பட்ட அவசியம் இல்லவே யில்லையே. மிகச் சிலராகிய இங்குள்ள காங்கிரதான் கலகம் செய்ய இந்திய யூனியனில் லஞ்சப் பிரயத்தனம் நடத்துகிறது. தினமணியின் 28.9.48 இதழிலேயே காணலாம். காரைக் காங்கிர இந்திய யூனியனை லஞ்சம் கேட்பதை, புதுவைக் காங்கிரகாரர் பெருமாள் கூட்டம் சென்னைப் பிரதமரைக் கண்ட போது லஞ்சப் பிரச்னை எழுப்பியதையும், இந்-யூ-ல் சேர்ந்துவிட்டால் எமக்கு இன்னின்ன சலுகை தருகிறீரா என்று கேட்டதையும் தினமணி அறியும். சென்னையில் திராவிடர் கழகத்தினர் ஆயிரக்கணக்கில் இன்று சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். கம்யூனிடுகளை அங்குள்ள சர்க்கார் படுத்திவரும் பாடு உலகம் அறியும். முலீமும் மனிதனே என்று அண்ணல் காந்தி கருதியதற்காக அவர் கோட்சேயால் படுகொலை செய்யப்பட்டார். முலீம்களைச் சென்னை படுத்தும் பாடும் உலகறிந்தது. சோஷலிடையும் ஒழித்துக்கட்டத் திட்டம் போட்டாய்விட்டது. நேத்தாஜி கூட்டத்தை நெருப்பு என்கிறார்கள். உலக மக்கள் அனைவரும் உறவினர் என்னும் கொள்கையுடையவரான குரு அரவிந்தரையும் எதிர்க்கிறார்கள் சென்னை காங்கிரகாரர். மேலும் சோஷலிடாகிய ஜெயப்பிரகாஷ், அரவிந்தர் இந்தியாவின் தலைவராக வேண்டும் என்று கூறியதிலிருந்து அரவிந்தர் மேல் முட்டாள்தனமாக வெறுப்புக் காட்டப்படுகிறது. சென்னையிலும் நேருவின் வட்டாரத்திலும்! அங்கு நிலைமை இப்படி இருக்கையில், அதே கொள்கையுடைய இங்குள்ள முலீமும், கம்யூனிடும், திராவிடர் கழகத்தாரும், சோஷ லிடும், அரவிந்தரும், அரவிந்த ஆரமியும் உடனடியாக இந்திய யூனியனில் சேர ஒத்துக் கொள்வார்களா? பிரஞ்சிந்திய சர்க்கார் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று லஞ்சமா கொடுக்க வேண்டும்? சென்னை சர்க்காரில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களின் குழந்தைகட்கே இலவசப் படிப்புத் தர முடியாது என்று மறுத்திருப்பது இன்றைய பத்திரிகையாலும் அறியலாம். குழந்தைகட்கெல்லாம் சம்பள மில்லாமல் கல்வி தரப்படும் பிரஞ்சிந்திய மக்களுக்குப் பிரஞ்சிந்திய சர்க்கார் லஞ்சமா கொடுக்க வேண்டும்? இங்கு எல்லாருக்கும் வாக்குரிமை உண்டு. அங்குச் சிலருக்கே வாக்குரிமை. பி.இ. சர்க்கார் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்? போருக்குச் சென்றவர்கட்கு அங்கே எந்தச் சலுகையுமில்லை. இங்குச் சுமார் 3000 பேருக்கு மாதம் 2000 முதல் 100 வரைக்கும் உதவிச் சம்பளம் நடக்கிறது. போர்வீரருக்கு பி.இ. சர்க்கார் லஞ்சமா கொடுக்க வேண்டும்? புதுவையிலுள்ள தானிகர் திரு. அலிபேக் அவர்களைத் தினமணி கேட்டறியலாமே! மேலும் தினமணி கூறுகிறது: இந்திய யூனியனில் சேர வேண்டும் என்று கிளர்ச்சி செய்யும் மாணவர் ஊர்வலத்தின் மீது தடியடிப் பிரயோகம் முதலியன நடத்தப்படுகிறது - என்று. சென்னையில் நேற்று நடந்ததென்ன? கார்ப்பரேஷன் தேர்தல் பிரசார சம்பந்தமாக போலீ சட்டவிதி 71இன் கீழ் 6 பேர் கைது செய்யப் படவில்லையா? அனுமதியின்றி ஊர்வலமாகப் போவதைத் தடுக்கவும் லாரி வாகனங்களால் ஒலி பெருக்குபவர்மேல் நடவடிக்கை எடுக்கவும், ரதாக்களில் எழுதுபவர் மேல் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் ஜரூரான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று தினமணி 28.9.48 இதழின் 3ம் பக்கம் முதல் பத்தியில் காணப்படவில்லையா? தினமணி, பிரஞ்சு சர்க்காருக்கும் இந்திய யூனியனுக்கும் இடையில் கலகத்தையும், மனக்கசப்பையும் உண்டாக்க இவ்வாறு திட்டுவது சரியல்ல. இதனால் தினமணி, இந்திய சர்க்காருக்குத் துரோகம் செய்கிறது. - கைகாட்டி - குயில், தினசரி, 28.9.1948, ப. 1, 3 - 4 31. தவறான தீர்ப்பு! கடலூரிலிருந்து வந்த தகவல் ஒன்றில், தவறான தீர்ப்பளித்த நீதிபதியைப் பற்றிய விவரம் காணப்படுகிறது. திருக்கோவிலூர் சப் டிவிஷனல் நீதிபதி, பொன்னம்மா என்பவருக் களித்த தண்டனை தவறானது என செஷன்சுக்கு அப்பீல் எடுத்ததில், செஷன் நீதிபதி திருக்கோவிலூர், மாஜிடிரேட்டின் சட்டத்துக்கு விரோதமான தீர்ப்பை மறுத்தார். எதிரியை விடுதலை செய்தார். ஆண்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்ட பர்டல் பள்ளியில் பொன்னம்மா மூன்றாண்டுகள் இருக்கவேண்டும் என்ற தீர்ப்பு தவறானது. இத்தீர்ப்பை அளித்த நீதிபதி சட்டத்துக்கு விரோதமாக அநியாயமாக நடந்துகொண்டார் என்று கூறினார் செஷன் நீதிபதி. இப்படி இந்திய யூனியனில் சட்டப்புலிகள் நிறைந்திருக்கிறார்கள்! புதுவையிலும் அப்படி உண்டு! முன்னறிவிப்பின்றி, சட்டவிரோதமான முறையில், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில், ஒரு வக்கீல், காலிகள் சூழ, கடைத்தெருவில் தோன்றி, கடைகளைமூடி அனுதாபம் காட்டச் சொல்லி வேண்டுகிறார். முன்பொருகால் இப்படிக் கடைமூடி அனுதாபம் காட்டச்சொல்லி வேண்டியவர்களைப் பழித்த பலரில் இவரும் ஒருவர். வேண்டுதலை ஒப்பாது கடையைத் திறந்து வைத்திருந்தவரின் வழக்கில் வாதாடியவர். சட்டம் தெரியாத நீதிபதி அங்கே! சட்டம் தெரிந்தும், காங்கிர சட்டையால் கண்மூடியான வழக்கறிஞர் இங்கே! - குயில் தினசரி, புதுச்சேரி, 28.9.1948, ப. 2 32. மாணவர்: நீங்கள் சட்டத்தை மீறுங்களேன் வக்கீல்: ஊஹூம் நாமாட்டோம் வக்கீல்கள் சொல்லுகிறார்கள்: மாணவர்களே, உங்களால்தான் நாடு முன்னேற வேண்டும். நீங்கள் நினைத்தால், எல்லாம் செய்ய முடியும். விடுதலை பெற்ற நாடுகள் அனைத்தும் உங்களால்தான் விடுதலை பெற்றன. மாணவர்கள் சொல்லுகிறார்கள்: ஆமாம்! ஆமாம்! - ஏன் இதையெல்லாம் சொல்லுகிறீர்கள்? வக்கீல்கள் சொல்லுகிறார்கள்: பிரஞ்சிந்திய சர்க்கார் செய்துள்ள சட்டத்தை மீறி ஊர்வலம் நடத்தி வெற்றி பெற, உங்களால் தான் முடியும். மாணவர்கள் சொல்லுகிறார்கள்: ஓ அப்படியானால் சரி - மாணவர் ஊர்வலம் கிளம்பி விட்டது. வெள்ளையனே வெளியேறு நாங்கள் இந்திய யூனியனில் சேருவோம் என்ற முழக்கம் வானைப் பிளக்கிறது! ஊர்வலமாகச் சென்ற மாணவர்கட்கு ஏற்பட்ட இன்னல் அனைவரும் அறிந்தது! வக்கீல்களும் மாணவர்களும் காரியாலயத்தில் சந்திக்கிறார்கள். மாணவர்கள் கூறுகிறார்கள்: வக்கீல்களே! உங்களால்தான் நாடு முன்னேற வேண்டும். நீங்கள் நினைத்தால் எல்லாம் செய்ய முடியும். விடுதலைபெற்ற நாடுகள் அனைத்தும் உங்களால்தான் விடுதலை பெற்றன. வக்கீல்கள் சொல்லுகிறார்கள்: ஆமாம்! ஆமாம்! - ஏன் இதையெல்லாம் சொல்லுகிறீர்கள்? மாணவர்கள் சொல்லுகிறார்கள்: பிரஞ்சிந்திய சர்க்கார் செய்துள்ள சட்டத்தை மீறி ஊர்வலம் நடத்தி, வெற்றி பெற, உங்களால்தான் முடியும். வக்கீல்கள் சொல்லுகிறார்கள்: ஊஹூம்! நாமாட்டோம். மாணவர்கள் கேட்கிறார்கள்: அப்படியானால் ... ? - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 29.9.1948, ப. 1 33. நடுநிலையாய் நடந்து கொள்க புதுவையில் பத்திரிகையாளர் சங்கம் என ஒன்றிருக்கிறது. அதன் தலைவர் மணி என்பவர்; சரிதானே! மணி சுதேசமித்திரன், இந்து ஆகிய இரு பத்திரிகைகட்கும் ஆளர் அல்லவா? ஆளர் என்றால் தலைவர் என்பதல்ல பொருள்; ஆட்கள் என்றுதான் பொருள். மற்றும் அந்தச் சங்கத்தில் பாரத தேவி ஆளர், தினசரி ஆளர், தினமணிஆளர், விடுதலை ஆளர், முதலியவர்களும் இருக்கிறார்கள். இவர்கட்கு என்ன வேலை? புதுச்சேரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த ஊர்களிலும், தம்மை ஆளாகக் கொண்ட பத்திரிகையை விற்பது. அப்பத்திரிகைக்கு, இங்கு நடக்கும் செய்திகளை அனுப்பி வெளியிடச் செய்வது. பத்திரிகை விற்பதில் கமிஷன் கிடைக்கும். செய்தி தெரிவித்தால் ஒரு பத்திக்கு இவ்வளவென்று என்று பணம் பெறுவார்கள். புதுச்சேரியில் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒற்றுமைப் பட்டிருப்பது மிக நல்லதுதான். பத்திரிகையாளர் இந்த ஒற்றுமையை நடுநிலையான - நேரிய முறையில் செலவிட்டால் அதைவிட நலமாயிருக்கும். நடுநிலை தவறிநேர்மையில்லாத வகையில் நடந்தால் அவர்கட்கும் நன்மையில்லை. மக்களுக்கும் நன்மையில்லை. இது அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைக் காலம்; இந்த முக்கியமான சில நாட்கள் வரைக்கும், அவர்கள் தம்மை ஒரு நெருப்புக் குச்சியாக வும் இந்நாட்களை வெடிமருந்தாகவும் நினைக்கவேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்திகளைத் திரித்தும், நடவாததை எடுத்துக் காட்டியும் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பக்கூடாது. ஒரு செய்தியைப் பத்திரிகையாளர்கள் தத்தம் பத்திரிகை கட்கு எழுதியனுப்புமுன் தம்மில்கூடி முடிவுசெய்தபின், அதை எழுதி அனுப்பலாம். அதனால் எந்தப் பிழையும் நேராது. பத்திரிகைச் செய்திகள் அனைத்தும் ஒன்று போலிருக்கும். எப்போதும் மணி, தம் செல்வாக்கை நேரிய முறையில் செலவழிப்பதில்லை. மற்றவர்களும் அடிக்கடி முறைதவறுகிறார்கள். செய்தி வெளிவருகிறது. அதில் நிருபர் ஒளிந்து கொண்டிருப்பது தெரிகிறது. இது அவமானமில்லையா? மெய் சொல்லுக; ஒளிய வேண்டி வராது. - குயில், தினசரி, 29.9.1948, 29.9.1948 34. மறுப்போரும் சேர்வோரும் சேர்வோர் : வாங்க, நமகாரம், உட்காருங்க. மறுப்போர் : வணக்கம், நல்லதுங்க (உட்காருகிறார்) சேர்வோர் : உடனடியாக இந்திய யூனியனில் சேரப்போறிங்களா? மறுக்கிறிங்களா? மறுப்போர் : அங்கே எல்லாருக்கும் வாக்குரிமை இல்லையாமே? சேர்வோர் : அதையா பாக்கறது? இந்திய யூனியனில் சுதந்திரம் உண்டு. இங்கே அடிமைகள் தானேண்ணேன். மறுப்போர் : அப்படிங்களா? சரிங்க. ஆனா இங்கே பசங்களுக்கெல் லாம் படிப்பு எலவசம். அங்கே சம்பளமாமே? சேர்வோர் : அதியா பாக்கறது? அங்கே சுதந்திரமாயிருக்கலாம். இங்கே நாம்பல்லாம் அடிமைகள்தானே? மறுப்போர் : அப்டிங்களா? சரிங்க. ஆனா, இங்கே வாத்தியார் மார் மத்த அலுவல்காரர் அல்லாருக்கும்அதிகச்சம்பளமாமே. மேலும், நெலவரி வீட்டு வரி கொஞ்சமாமே? சேர்வோர் : அதையா பாக்கறது? அங்கே உரிமை உண்டு. இங்கே நாம்பல்லாம் அடிமைதானே? மறுப்போர் : அப்டிங்களா? சரிங்க! ஆனா, அங்கே வியாபாரிகளுக்கு, வியாபாரவரி, வருமானவரி, அமித லாப வரி, கணக்கு வைத்திருக்க வேண்டிய கட்டுப்பாட்டுத் தொல்லை, ஆடிட்டர் காணிக்கைகள், கோட்டைச் சிப்பந்திகளுக்கு நன்கொடை இத்தனையும் சேர்ந்து ஆளையே தீவாளி ஆக்கிடுமாமே? சேர்வோர் : அதியா பாக்கறது? அங்கே நாம்ப சுதந்தரர்கள்! இங்கே நாம் அடிமைகள் தானே. மறுப்போர் : அப்டிங்களா, சரிதாங்க. ஆனா, அங்கே வெள்ளைக் காரன் சட்டந்தானாமே. அதுக்கு மேலியும், ஒரு சட்டம் உண்டாக்கி புட்டாங்களாமே. ஒருவன் தகாத காரியம் இனிமேல் செய்யக்கூடும் என்று சர்க்காருக்குத் தோணு மாம். அப்படித் தோணினால் உடனே அந்த ஆளை - அவன் யாராயிருந்தாலும் கைது செய்யலாமாமே. சேர்வோர் : அதியா பாக்கறது? அங்கே உரிமை தளும்புகிறது. இங்கே நாம்ப அடிமைகள். மறுப்போர் : அப்டிங்களா? சரிதாங்க. ஆனா, அங்கே அரிசி பட்டணம் படி ஒண்ணே முக்கால் ரூபாயாமே! சேர்வோர் : அதியா பாக்கறது? அங்கே சுதந்திரம் சுரந்துபுட்டுது. இங்கே அடிமை நிலை அதிகமாயுட்டுது. மறுப்போர் : அப்டிங்களா? சரிதாங்க, ஆனா, அங்கே வீடு கட்ட, அச்சுக் கூடம் வைக்க, தொழிற்சாலை திறக்க - எதுக்கும் அந்த உத்தரவு இந்த உத்தரவு அவுருக்கு லஞ்சம், இவுருக்கு லஞ்சம்-இண்ணு காரியந் துவக்குவதற்குள் கைலாசகதி கிட்ட வந்துடுமாமே. சேர்வோர் : அதியா பாக்கறது? அங்கே சுதந்தரம்; இங்கே இல்லே. மறுப்போர் : அப்டிங்களா? சரிதாங்க ஆனா, அங்கே மேல் சாதிக்குக் கீழ்ச்சாதி அடிமை; வடநாட்டுக்குத் தென்னாடு அடிமை இருக்குங்குறாங்களே! சேர்வோர் : அதியா பாக்கறது? அங்கே உரிமை! இங்கே நாம் அடிமை. மறுப்போர் : அப்டிங்களா? சரிதாங்க. ஆனா, நானு இப்ப சொன்ன எல்லா ஊழல்களும் அங்கே இருக்குதுண்ணு ஒத்துக் கிறிங்க! ஆனா உரிமை அங்கேதான் இருக்குதிண்றிங்க. அங்கே இருக்கிறதா சொல்ற உரிமையைவிட இங்கே இருக்கிற அடிமைநிலைதான் ஆளைக் காப்பாத்தும் போல இருக்குதே. நானு சேரமாட்டேன். - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 30.9.1948, ப. 1, 4 35. கலகக்காரர்கள் நிலை புதுவையிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் சுதேசமித்திரன், இந்து, தினசரி, தினமணி, தினத்தந்தி ஆகிய பத்திரிக்கைகட்கு. பிரஞ்சிந்திய சர்க்காரைப் பற்றி எழுதியனுப்பியுள்ள அவதூறுகள். அந்தப் பத்திரிக்கைகளின் ஆபீஸில் கையெழுத்துட்பட அப்படியே இருக்கின்றன. இதுவரைக்கும் அப்பத்திரிக்கைகளில் பிரஞ்சிந்திய சர்க்காரைப் பற்றி வெளிவந்த கலகக் கட்டுரைகட்கு, அப் பத்திரிக்கைக்காரர் பொறுப்பாளிகள் இல்லை என்றும், நிருபர்களும், பிரஞ்சிந்தியா விலுள்ள தனிப்பட்ட சிலரும் எழுத்துப்பட எழுதியனுப்பும் கடிதங்களையும், அக்கடிதங்களின் கருத்துக்களையுமே நாங்கள் வெளியிடுகிறோம் என்றும் கூறுகிறார்கள். இது முற்றும் உண்மையே யாகும். பத்திரிக்கை தர்மமும் அதுதான். ஆயினும் இங்கிருந்து எழுதியனுப்பப்படும் கடிதங்கள் அங்கு அப்படியே இருக்கும். வாசகர்கட்கு இதை விளக்க எண்ணுகின்றோம்: தினமணி முதலிய பத்திரிக்கைகளில் வரும் பிரஞ்சிந்தியாவைப் பற்றிய அவதூறு, இங்கிருந்து கலகக்காரர்கள், பொய்யர்கள், சுயநலமிகள் எழுதியனுப்புவதுதான். இவர்கள் இங்கு என்ன சொல்லுகின்றார்கள்? எப்படி நடந்து கொள்ளுகிறார்கள்? மாணவர்களைத் தூக்கிவிட்டார்கள். சட்டத்தை மீறச் சொல்லி! மீறினார்கள், சிறைப்படுத்தப்பட்டார்கள். அவர்களை மீட்பதற்காக வாதாடினார்கள். வாதாடியவர்கள் யார்? சட்டத்தை மீறும்படி தூக்கி விட்டவர்கள் தான்! என்னவென்று வாதாடினார்கள்? சிறுவர்கள்தானே, சட்டத்தை மீற வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கில்லை என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் தினமணிக்கு இவர்கள் தகவல் கொடுத்திருப்பது எப்படி? வெகு வீரம்! மற்றொரு வேடிக்கை அன்று முதல் இன்றுவரைக்கும் பிரஞ்சிந்தியாவில் தேர்தல் என்றால் அதிகாரிகளின் தயவுள்ளவர்கள்தான் வெற்றிபெறமுடியும் என்று இங்குள்ளவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கூறிற்றுத் தினமணி! நாடு ஷண்முக வேலாயுத முதலியாரை அதிகாரிகள் 30 வருஷமாகவா ஆதரித்து வந்தார்கள்? அதன் பின்பு கெப்ளேயை 30 வருஷமாகவா அதிகாரிகள் ஆதரித்து வந்தார்கள்? கெப்ளேயை எந்த அதிகாரிகளைக் கொண்டு வென்றார் செல்ல நாயகர்? செல்ல நாயகர் காலடியிலிருந்து முளைத்த தாவீத் கட்சியைப் பறக்கடித்தவர் தொழிலாளிகளா? அல்லது அதிகாரிகளா? இந்த உண்மை. இன்றைய காங்கிரகாரர்கட்குத் தெரியும். அவர்கள் இதற்கு மாறாகப் புளுகிக் கலகம் செய்ய எண்ணுகிறார்கள்; அயலூர்ப் பத்திரிக்கைகளின் துணையால்! - குயில், தினசரி, 30.9.1948, ப. 2, 3 36. அங்கென்ன வாழ்கிறதோ? காங்கிர தம்பட்டங்கள் கவனிக்க! காரைக் காங்கிர மகாசபைக் காரியதரிசி தமது அறிக்கை யில், பிரஞ்சிந்தியத் தேர்தல்கள் மோசடிக்கும் காலித்தனத்திற்கும் பெயர் போனதென்பது உலகறிந்த உண்மை என்று உலகக் கண்ணாடி யணிந்து பார்க்கிறார்! உலகம் என்பது அவருக்குக் காரையும் புதுவையுமட்டும் போலும்! இன்னும் சிறிது தொலைவு போங்கள்! அதோ சென்னை மாநகரம்! நேற்று 30.09.1948இல் நடந்திருக்கிறது நகர சபைத் தேர்தல். காங்கிர தனது மஞ்சள் பெட்டி மகத்துவத்தை இந்தத் தடவை கையாளவில்லை! ஆரஞ்சு நிறம் பூசி ஆரிய தர்மத்தை (இந்து மகா சபைத் தர்மத்தை - கோட்சேக்கள் கொள்கையை) நிலைநாட்டத் தேர்தலில் போட்டி போடுகிறது! அந்த வாக்காளர் பட்டியலைப் பாருங்கள்! சென்னை தினசரிப் பத்திரிகையில் (01.10.1948 இதழ்) முதற் பக்கத்தைப் பாருங்கள். உலகக் கண்ணாடி இதற்கு வேண்டாம். உங்களின் சொந்தக் கண்களாலேயே உற்று நோக்குங்கள்! வோட்டர் ஜாபிதா மீது புகார் - சமீபத்தில் வோட்டர் கள் ஜாபிதாக்கள் திருத்தப்பட்ட பிரகாரம் மொத்தம் 1,31,072 வோட்டர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவர்களில் 9719 பேர் பெண் வோட்டர்கள். ஜாபிதாக்கள் சரிவர பரிசீலனை செய்யப்படவில்லை என்று எங்கு பார்த்தாலும் புகார் ஏற்பட்டிருக்கிறது. இறந்து போனவர் களில் பலரும், சென்னையைவிட்டுப் போனவர்களும் ஜாபிதாக்களில் இருந்து நீக்கப்படவில்லை. ஒரு குடும்பத்தில், யோக்கியதாம்சம் பெற்ற சிலருடைய பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மற்றவர் களுடைய பெயர்கள் ஜாபிதாக்களில் காணப்படவில்லை. அட்வகேட் ஜனரல் ஸ்ரீ கே. ராஜா அய்யர் போன்ற பல பிரபலதர்களின் பெயர்கள் வோட்டர் ஜாபிதாக்களில் இல்லை. ஒவ்வொரு டிவிஷனிலும் ஜாபிதாவில் காணப்படும் வோட்டர்களின் தொகையில் ஏறக்குறைய 40 சதவிகிதம் வோட்டர்கள் சென்னையில் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பல டிவிஷன்களில் ஆள் மாறாட்டமாகப் போலி வோட்டர்களை வோட் செய்வதற்குக் கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது என்கிறது தினசரி. இது மோசடியல்லவா? பிரஞ்சிந்தியத் தேர்தல்களில் மோசடி நிறைந்திருக்கின்றன என்று கூறுகிறார் காரியதரிசி! இது அவமானமில்லையா? - அரசு - குயில், தினசரி, 1.10.1948, ப. 1 37. சென்னை மந்திரிசபை இன்றைய மந்திரி சபையைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சிகள் திரை மறைவில் நடந்து கொண்டிருப்பதாக அறிகிறோம். வைத்தி நாதய்யர் கும்பல்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அதி தீவிர முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. காங்கிர கட்சிக்குள்ளாக, பதவி வேட்டை வெறி தலைக்கேறியிருப்பதனாலும், காங்கிரகாரர்களுக்குள்ளே திராவிட - ஆரிய உணர்ச்சி இலை மறை காயாக இருப்பதனாலும், இம் மந்திரி சபை கவிழ்க்கப்படுவதும், புது மந்திரி சபை நிறுவப்படுவதும், எந்த நேரத்திலும் எதிர்பார்க்கக் கூடியதேயாகும். கலகம் செய்கிற தலைவர்களுக்கெல்லாம் பதவி எலும்பு போட்டாலொழிய இனி முடியாது, என்ற பரிதாபகரமான நிலை இன்று காங்கிர கட்சியி லிருப்பது போல, எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும், எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது என்றே சொல்வோம். எடுத்துக்காட்டாக, மத்திய சர்க்கார் மந்திரிசபையையே கூறலாம். திறமை வாய்ந்த தோழர் ஆர்.கே.எ. போன்றவர்களை வெளியேற்றுவதும், நிர்வாகத்துறையில் மூன்றாந்தர நாலாந்தரம் பேர்வழிகளைப் புதுமந்திரிகளாக நியமித்துக் கொண்டேயிருப்பதும் உலகம் சிரிக்கும் உண்மையாகி விட்டது. இம் மாகாணத்தில்கூட எதிர்கட்சித் தலைவர்களுக்கு எலும்புத் துண்டுகள் வீசும் கொள்கை மும்முரமாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. பதவி பித்துப் பிடித்திருக்கும் காங்கிர எம்.எல்.ஏக்கள் கலகம் செய்து மந்திரி சபையைக் கவிழ்த்துவிடாமலிருக்கும் பொருட்டு, பார்லி மெண்டரி காரியதரிசிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இந்த ஆலோசனையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாவது, ஆசைகாட்டி அவரவர்களைச் சரிப்படுத்த வேண்டிய வெட்ககரமான நிலைமையில் இன்றைய மந்திரிசபை இருக்கிறது. இது அவர்களுக்குள்ளிருக்கும் உள் நாட்டுச் சண்டை என்று விடுதலை கூறுகிறது. இப்போது சென்னை மாகாணத்துக்குக் கவர்னராக வந்திருக்கும் பவநகர் மகாராஜாவை, சென்னை முதலமைச்சரைக் கலந்து கொள்ளாமலே வடநாட்டு முதலமைச்சர் நியமித்து விடவில்லையா? முதலில் இந்தியை விருப்பப் பாடமாக வைத்தது சென்னை மந்திரி சபை, தென்னாட்டுப் பார்ப்பனர் நெருக்கியதால், உடனே ஓமந் தூரார் மந்திரி சபை இந்தியைக் கட்டாய பாடம் ஆக்கவில்லையா? இப்போது ஓமந்தூரார் மந்திரி சபை இருக்கிறதாகப் பேரே ஒழிய, அது வடநாட்டின், தென்னாட்டுப் பார்ப்பனரின் அடிமையாகத்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் வடநாட்டாரும், தென்னாட்டுப் பார்ப்பனரும் விரும்பினால் ஓமந்தூரார் மந்திரிசபை விழும், இது மட்டுமல்ல, எந்த வகையிலும் இந்திய யூனியன் நல்ல நிலையில் இல்லை. இந்த நிலையில் பிரஞ்சிந்தியா உடனடியாக இந்திய யூனியனில் சேரவேண்டுமா? - குயில், தினசரி, 1.10.1948, ப. 2-3 38. பெருமாள் பெரிய காங்கிர பெருமாள் காங்கிர பெருமாள் காங்கிரஸில் சேர்ந்திருப்பதாகப் பலரின் பெயர்கள் வெளிவந்தன அல்லவா? அதில் பெருமாள் தவிர மற்றவர்கள் அனைவரும் என்னைக் கேட்காமலே என் பேரைப் போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார்களாம். அப்படியானால், பெருமாள் காங்கிரஸில் பெருமாளுக்குத்தான் மெஜாரிட்டி. பெருமாளின் அழைப்பு பெருமாள் காங்கிர மற்றக் காங்கிரகளை அழைத்ததாம். எனவே, கட்டிடத்தில் பல காங்கிரகளும் நிறைந்திருக்குமே! அண்டை வீட்டுக்காரர் எட்டிப் பார்த்தாராம். ஏகோபித்த முடிவாம்! எதிலும் அபிப்ராய பேதமில்லையாம்; ஏன்? கட்டிடத்தில் பெருமாள் ஒருவர்தானே நிறைந்திருந்தார்! அவர் பேச்சைப் பிறர் மறுக்கலாம்; அவரே மறுப்பாரா? பெருமாள் காங்கிரஸுக்கு ஆதரவு மற்றக் காங்கிரகளையும் தன் காங்கிரஸுடன் சேர்த்துவிட, அறிஞர்கள் காமராஜ், ஆதித்தன் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்துகொண்டிருந்தார்களாம். திண்டிவனம் வந்ததும், அவர்கள் ஏறிவந்த கார் இடக்கு பண்ணிவிட்டது. காருக்குச் சம்மதமில்லை போலிருக்கிறது. பெருமாள் காங்கிரஸில் பண முடை இருக்காதா? பெருமாள் மற்றொரு தொக்தேர் ஆந்துருவா விடம் சென்றாராம். என்ன தூங்குகிறீர்! விழியுங்கள்! நாடு இருக்கிற நிலை தெரியவில்லையா? என்றாராம். அதற்கு அவர் பணம் வேண்டுமே, நாம் தலைக்குப் பத்தாயிரம் போட்டு நடத்துவோம் என்றாராம். பெருமாள் ஊஹூம் நாம் மாட்டோம் என்றாராம். அதற்கு நான் விழித்துக் கொண்டு தான் இருக்கிறேன்; கண்ணை மூடிக் கொண்டிருக்கவில்லை என்றாராம். பெருமாள் காங்கிரஸுக்கு வெற்றி திரு. வக்கீல் பாலா அவர்கள், சட்டத்தை மீறி ஊர்வலம் நடத்த வேண்டாம் என்று மாணவர்கட்குச் சொல்லியனுப்பிக் கொண்டே இருந்தாராம். ஆனால் பெருமாளின் பெரிய காங்கிர சட்டத்தை மீறி மாணவர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று கூறியதாம். பெருமாள் பெரிய காங்கிர தானே வெற்றி பெற்றது? மாணவர்கள் பெருமாள் பேச்சைத் தானே கேட்டார்கள்? மாணவர் தொல்லை யனுபவிக்க நேர்ந்தது பற்றிப் பெருமாளுக்குக் கவலையில்லை. - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 2.10.1948, ப. 1, 6 39. டாக்டர். ஏ. கிருஷ்ணசாமி வாழ்க! சென்னை கார்ப்பரேஷன் தேர்தலில் வெற்றிபெற்றார். டாக்டர். ஏ. கிருஷ்ணசாமியை அறியாதவர் திராவிட நாட்டில் எவருமிரார். அவர், அரசியல், பொருளாதாரம் முதலிய பொதுத் துறைகளில் உலகப் புகழ் பெற்று விளங்கும் சர்.ஏ. ராமசாமி முதலியார் அவர்களின் புதல்வர், டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி அவர்களும், இலண்டன் அறிஞர் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்; மேலும் அவர் ஒரு பார்அட்லா, இந்தியாவிலுள்ள மிகச் சில எழுத்தாளர், பேச்சாளர்களில் ஒருவர். சர்.ஏ. இராமசாமி முதலியாரின் பிள்ளை டாக்டர் ஏ. கிருஷ்ண சாமியைத் துப்பாக்கி வயிற்றிற் பிறந்த பீரங்கி என்று சொல்வது வழக்கம்! டாக்டர். ஏ. கிருஷ்ணசாமி அவர்களை 26ஆவது டிவிஷன் பெரிய மேட்டுப் பெருமக்கள் இந்தச் சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலில் தம் டிவிஷன் தேர்தலில் விருப்பினராக நிற்கும்படி செய்து, அவர்களுக்கு வெற்றியைத் தந்து, ஓர் அழியாப் புகழையும் பெற்று விட்டார்கள். 26ஆவது டிவிஷன் எதிர்காலம் மறக்க முடியாததாக விளங்கப் போவது நமக்கு இன்றே தெரியும். 26ஆவது டிவிஷன் பெரியமெட்டு அறிஞர்கட்கும், பெரு மக்கட்கும் நம் வாழ்த்து உரியதாகுக! வெற்றி பெற்ற நம் தோழர், டாக்டர்.ஏ. கிருஷ்ணசாமி அவர்கள், கார்ப்பரேஷன் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைவராய்ப் பெருந்தொண்டு செய்து, பெரும் புகழுடன் வாழ்க! - குயில், தினசரி, 2.10.1948, ப. 2 40. கார்ப்பரேஷன் தேர்தலில் காங்கிரசுக்குக் கோவிந்தா! இன்று தினசரிகளில் சென்னைக் கார்ப்பொரேஷன் தேர்தலில் வெற்றி பெற்றவரின் பெயர்களும், தோற்றவர் பெயர்களும் வெளிவந்துள்ளன. இந்தத் தேர்தலில் காங்கிர போட்டியிட்டால் தோல்வி கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, போட்டியிடாமல் நிற்பது போல் மேலுக்குக் காட்டிக்கொண்டு, எல்லைக் கமிட்டி இத் தேர்தலில் போட்டியிடுகிறது என்று, காங்கிரகாரர்களை நிற்கவைத்தது. நடந்ததென்ன? காங்கிரஸூக் கோவிந்தாதானே! தனிமுறையில் நின்ற திராவிடர் கழகத்தோழரும், திராவிடர் கழக அபிமானிகளுமே பெரும்பான்மையினராக வெற்றி பெற்றிருக் கிறார்கள். இதில் இன்னொன்று; சிறிது நாள் முன், புல்லேந்தும் கையில் வாளேந்துவோம், என்று குதித்த எம்.எ. சுப்பிரமணியப் பார்ப்பனர் இத் தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கௌவினார். இத் தேர்தலில் பெரும் பான்மைப் பார்ப்பனர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்க தாகும். - குயில், தினசரி, 2.10.1948, ப. 2 41. கவிஞர் தந்த கருத்தோவியம் அன்றொரு நாள், கவிஞர் பாரதிதாசன் அவர்கள் செஞ்சிச் சாலைத் திடலில் நிகழ்த்திய சொற்பொருக்கில், இந்திய யூனியனில் உள்ள திராவிடன், பிரஞ்சிந்தியத் திராவிடனை இந்திய யூனியனில் உடனடியாகச் சேர அழைக்கிறான். அதற்குப் பிரஞ்சிந்தியத் திராவிடன், தோழனே அங்கே உன் நிலை எப்படி? நீ அங்குப் பார்ப்பனருக்கு அடிமை அதன்மேலும், வடநாட்டானுக்கு அடிமை! இந்த நிலையில் என்னையும் ஏன் விரைந்தழைக்கிறாய் என்றுதான் சொல்லுகிறான் என்று கூறினார். அதையே நம் ஓவியருக்குச் சொன்னோம். அதை அவர் இவ்வாறு ஓவியம் தீட்டியிருக்கிறார். - குயில், தினசரி, 2.10.1948, ப.3 42. ஆங்கிலமும் பிரான்சும் போல ஆரியமும் உனக்கு அயலே! Ú xU jÄH‹.Ú தமிழ் பேசுகின்றாய். நீ தமிழகத்தில் பிறந்தாய். நீ தமிழனின் வாழையடி வாழை நீ தமிழத்தன்மை, தமிழப் பண்பாடு, தமிழ ஒழுக்கம் உடையவன். நீ ஒரு தமிழன்!  தமிழா நீ பலகோடி மக்களின் உறவோடு இன்புற்றிருப்பவன். தேனடையில் தேனீப் போலே! தமிழா உன் தமிழ் பல்கோடித் தமிழர்களின் உயிர். தமிழா உன் தமிழகம் வடக்கில் வங்கத்தையும், தெற்கில் குமரியையும், மேற்கிலும், கிழக்கிலும் மலை கடல்களையும் எல்லையாய்க் கொண்டது தமிழா உன் தலைமுறை இயற்கையன்னை ஈந்தது; கலப்பட மில்லாதது. உன் தமிழத்தன்மை, மானத்தால் சிறந்தது; வையத்தால் புகழப் படுவது. உன் பண்பாடு அகம் புறம் இரண்டாலும் தன் தகுதியைத் தனி என்று நிறுவிவிட்டது. உன் ஒழுக்கம், உன் விழுப்பத்திற்கு வேர்.  தமிழகம், திராவிடம் என்று திரிந்தது. அருமருந்தன்ன பிள்ளை என்பது அருமந்த பிள்ளை என மாற்றம் அடைந்தது போல. தமிழானது, தெலுங்கு மலையாளம் கன்னடம் என்ற பெயர்களையும் அடைந்தது பின்னாளில் - இடத்தின் தட்ப வெப்ப மாறுதலால் உச்சரிப்பின் மாறுதலால்! மதுரை மக்கள் பழத்தைப் பளம் என்று உச்சரிக்கவில்லையா?  நீ ஒரு திராவிடன். திராவிட மொழி - தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் - உன் மொழி. திராவிட நாடு உன் நாடு. நீ திராவிட மக்களின் வாழையடி வாழை! திராவிடத் தன்மை, பண்பாடு, ஒழுக்கம் தனி. நீ ஒரு பர்மியனல்ல, பர்மியம் உன் மொழியல்ல, அதில் உன் தமிழின் நிழல் இருந்தாலும்! நீ பர்மியரின் வழித்தோன்றலல்ல சிலவகையில் ஒத்திருந்தாலும்! பர்மா உன் நாடல்ல, போக்குவரவு இருந்தாலும்! நில வழி இணைந்திருந்தாலும்! பர்மியன் தன்மை, பண்பாடு ஒழுக்கம் வேறு.  நீ ஒர் ஆரியனல்ல. ஆரியம் உன் மொழியல்ல. அதில் உன் தமிழின் நிழல் காணப்பட்டாலும்! நீ ஆரியரின் வழி வந்தவனில்லை. சில வகையில் ஒத்திருந்தாலும்! ஆரியனின் தன்மை, பண்பாடு, ஒழுக்கம் வேறு. ஆரியம் உன் நாடல்ல, போக்குவரவு இருந்தாலும்! நிலவழி இணைந்திருந்தாலும்! ஆரியம் விந்தவெற்பின் வடதேயம். வடமொழிப்பேர் என்பது நாநார்த்த தீபிகை ஆரியம் விந்த மலையின் வடக்கிலுள்ள நாடு. ஆரியம் என்பது வடக்கர் பேசும் மொழி என்பது இதன் பொருள். - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 4.10.1948, ப. 1, 4 43. இப்போது தெரிகிறதா? பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் தம்மையே தாம் தெரிந்து கொள்ளாதிருந்தனர் 25 ஆண்டுகளுக்கு முன். தம்மைத் திராவிடர் என்று நினையாதிருந்தார்கள் ஐந்தாண்டுகள் முன் வரைக்கும். திராவிடநாடு தம் நாடு என்பதை மறந்தே கிடந்தனர் ஐந்தாண்டுகளின் முன் வரைக்கும். 25 ஆண்டுகள் ஆயின. பெரியார் நமக்குக் கிடைத்து! 25 M©LfshÆd eh« f© âwªJ!; 25 ஆண்டுகளின் முன்பு நாம் எத்தனை சிறுபான்மையோர் தெரியுமா? - இன்றைக்கு? சென்ற முனிசிப்பல் தேர்தல்கள் என்ன தெரிவித்தன? இன்று நடந்த சென்னை நகரசபைத் தேர்தல் எதை நமக்கு எடுத்துக் காட்டிற்று? காங்கிர இத்தேர்தலில் விருப்பினரை நிறுத்துவதிலிருந்து வெற்றிகரமாக வாபஸாகிவிட்டதா இல்லையா? காங்கிரஸை ஆட்டி வைக்கும் பார்ப்பனர்கள் இத்தேர்தலில் மானமிழந்தார்களா இல்லையா? காங்கிர கரணம் போட்டுப் பார்த்தும், திராவிடரை அணுக முடியாமல் போயிற்றா இல்லையா? இப்போது தெரிகிறதா திராவிட நாட்டை மீட்க அதிக நாளாகாது என்பது? இப்போது தெரிகிறதா திராவிடர் ஆரியரை - அவர்களின் காங்கிரஸுக்கு வால் பிடித்துக்கொண்டே இருக்கமாட்டார்கள் என்பது? சட்டசபைத் தேர்தல் எப்போது? விரைவில் வரட்டும்! சட்ட சபைத் தேர்தலுக்கு விரைவில் நாள் குறிக்கட்டுமே! சும்மா இருந்தால்? திராவிடர் உணர்ச்சிக்கு, நடந்த தேர்தல்கள் அடையாளம். தம்பிமார்களே என்று காங்கிரகாரர்களுக்கும், பார்ப்பனர்கட்கும் கூவுகிறது நம் குயில்! - குயில், தினசரி, 4.10.1948, ப. 2 44. மூன்றாவது உலக யுத்தம்! கடைசியில் இந்தியாவுக்கே வெற்றி! வித்தூர் மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய மூவரும் பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளுடன் பறந்து கொண்டே தேவர்களை வருத்தி வந்ததால், தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்; கிளம்பினாரையா சிவபெருமான்! - எப்படி? சூரிய சந்திரர்களைத் தேர் உருளையாகவும், காலம் வானம் உதயகிரி அத்தகிரி ஐம்பூதம் இந்திரியம் முதலியவைகளைத் தேராகவும், வேதங்களைக் குதிரையாகவும், வாசுகியை நாணாகவும் மேரு மலையை வில்லாகவும், பிரமனைச் சாரதியாகவும் ஆக்கி - அந்தத் தேர்மேல் உட்கார்ந்தார். அம்பு வேண்டுமே! விஷ்ணுவை அம்பாக்கி எடுத்துக் கொண்டார் கையில்! ஓட்டடா ரதத்தை! - என்றார் பிரமனை நோக்கி! எதிரிகளின் எதிரில் போய்நின்றது ரதம்; என்ன செய்தார் சிவபெருமான்? அம்பையா விட்டார்? இல்லை. சிரித்தார் சிவபெருமான். சேர்ந்தார் சிவனடியில் பகைவரின் தலைவர். பகைவரின் தலைவர் சிவனடி சேர்ந்தபின், அவர்களின் கோட்டை, கொத்தளங்களின் நிலை என்ன ஆகும்? ஐதராபாத் மூன்றாவது உலக யுத்தமும் அதே போலத்தானே முடிந்தது. கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி யுத்த ஏற்பாட்டைச் செய்துகொண்டார். அம்பையா தொடுத்தார்! நிஜாமை நோக்கிப் பல்லைத்தானே காட்டினார். ஐதராபாத்தில் எந்த அரசியல் முடிவு காணப்பட்டாலும் மேன்மை தங்கிய உங்களின் (நிஜாம் அரசரின்) கௌரவமும் அந்ததும் காப்பாற்றப்படும் என்று இந்திய சர்க்கார் பல முறை வாக்குறுதி அளித்திருக்கிறது என்றல்லவா கூறினார். உடனே நைஜாம் மன்னர் ராஜகோபாலாச்சாரியிடம் சேர்ந்து கொண்டார். மன்னரின் ரஜாக்கர் கொத்தளத்தின் நிலை என்ன ஆகும்? நாங்கள் இருந்த சிறைக்கு நீங்கள் போக வேண்டும் என்று அரசினர் அழைத்தால் ரஜாக்கர்கள் போய்த்தானே தீர வேண்டும்? இந்த மூன்றாவது உலக யுத்தத்தில் பெற்ற வெற்றியைப் பற்றி நம் இந்தியப் பத்திரிகைகள் பாடாதிருக்குமா? ஆடாதிருக்குமா? வாழ்த்தாதிருக்குமா? வர்ணிக்கா திருக்குமா? - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, புதுச்சேரி, 5.10.1948, ப. 1 45. அவர்கள் செய்வது சரிதான் ஆனால் திரு. டாக்டர். சுப்பராயன் அவர்கட்கு இப்போது பதவியில்லை. இருந்த மந்திரிப் பட்டம் பிடுங்காமல் பிடுங்கப்பட்டது திரு. காமராஜ் அவர்கள் தமிழ்நாடு காங்கிர தலைவர்தான். இருந்தாலும் மதிப்பில்லாத நிலையில்லவா வைக்கப்பட்டிருக்கிறார்? ஓமந்தூரார் முதலமைச்சரும் தம்மை ஆதரிக்கிறார் என்று சொல்லும் படி இல்லையே; தாம் ஓர் அமைச்சராகவோ, அமைச்சர்களின், செல்வாக்குடையவராகவோ இருந்தாலும் மன அமைதி இருக்கும், எந்த இழவுமில்லையே, அது மட்டுமா, அடுத்த முறை, இருக்கும் பதவியையும் பிடுங்க அல்லவா திட்டம் வலுப்பட்டு வருகிறது. திரு. ஆதித்த நாடாருக்கு எந்தப் பக்கம் கோணை? தமிழ் ராஜ்யக் கட்சியையும் கான்ஸல் செய்துவிட்டு இந்தி ராஜ்யக் கட்சியாகிய காங்கிரஸில் சேரவில்லையா அவர்? தியாகமில்லையா இது? சட்டசபை மெம்பர் பதவி கிடைத்தது என்றால் போதுமா? ஏன் ஒரு மந்திரி கிந்திரியாக்கக் கூடாது? திரு. டாக்டர் சுப்பராயனும், திரு. காமராஜும், திரு.ஆதித்தனும் காங்கிர உலகில் நல்ல பெயர் வாங்கிவிட்டு மறுவேலை பார்க்க எண்ணுவதில் பிழை என்ன இருக்க முடியும்? இந்தி எதிர்ப்பை ஊர் ஊராய்ச் சென்று திட்டுகிறார்கள் என்றால் திட்டினால்தானே நல்ல பெயர் கிடைக்கும்? இந்தி எதிர்ப்புக்காரரை மண்டையுடைக்கும்படி செய்யும் ஏற்பாட்டை இவர்கள் ஏன் ஆதரிக்கமாட்டார்கள்? நல்ல பெயர் எப்படி வரும்? இப்போது நடந்த சென்னை நகரசபைத் தேர்தலில் காங்கிர காரரை ஆதரிக்கும்படி தெருத்தெருவாய், தேள் கடி மருந்து விற்பவர்கள் போலச் சொற்பொழிவு நடத்தாவிட்டால், நல்ல பெயர் எப்படி வரும் - ஆனால், இவர்கள் தேடித் திரியும் நல்ல பெயரும், மக்கள் ஆதரவும் காங்கிரஸை எதிர்ப்பதாலேயும் கிடைக்கும். இது தெரியவில்லை இவர்கட்கு! சரியாகக் கணக்குப் போடமாட்டோம் என்கிறார்கள். பச்சையாக இந்தியை இவர்கள் எதிர்க்கட்டும், திராவிடர் கழகத்தை மூச்சுக் கொண்ட மட்டும் ஆதரிக்கட்டும், டாக்டரைவிட்டு எங்கே போய்விடும் முதலமைச்சு என்ற வேட்டைக் கறி? ஆதித்தன், காமராஜ் இருவருக்கும் வளைந்து கொடுக்குமே மந்திரி பதவிகள்! அண்மையில் நடந்த நகரசபைத் தேர்தல், அதற்கு முன் நடந்த தேர்தல்கள் அவர்கட்கு இந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்க வில்லையா? - குயில், தினசரி, 5.10.1948, ப. 2-3 46. நேரு ஆட்சி முதலாளித்துவ ஆட்சி அல்லவாம்! படேல் பசப்புகிறார்! புதுடெல்லி: அக். 3, நாட்டை எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் சர்க்காருடன் தொழிலாளர், முதலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என இந்தியத் துணைப் பிரதமர் சர்தார் படேல் இன்று டெல்லி மக்கள் அளித்த வரவேற்பில் பேசுகையில் கோரினார். தற்கால சர்க்கார், முதலாளிகளின் சர்க்கார் எனக் கூறி வருபவர்களின் வார்த்தைகளை நம்பித் தொழிலாளர் ஏமாறக் கூடாதென அவர் கோரினார். பண்டித நேருவுக்கு மந்திரிசபையில் போதிய அதிகாரம் இல்லை என்றும் எனவே பண்டித நேருவின் சோஷியலிஸக் கொள்கை பாட்டாளி மக்களுக்குப் பயன்படாதென்றும் கூறப்பட்டவைகளை மறுத்து அவர் கூறியதாவது: பண்டித நேருவை எனது தலைவராக நான் ஏற்றுக் கொண்டேன். எனது செய்கைகளுக்கு எனது தலைவர் அனுமதி தராமலிருப்பின் எனக்கு மந்திரி சபையில் இடமே இருக்காது. குறை கூறுவதை விடுத்த இந்தியாவில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த எங்களுக்கு உதவிபுரிய முன்வாருங்கள் என சர்தார் படேல் கேட்டுக் கொண்டார். - குயில், தினசரி, 5.10.1948, ப. 4 47. ஓமந்தூரார் சுகாதார போதனை! 3.10.48இல் மியூசியம் தியேட்டரில் நடந்த மாகாண சுகாதார அதிகாரிகளின் மகாநாட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஓமந்தூரார், சுகாதாரம் பற்றிப் பேசியிருக்கிறார். அதில் அவர், எளிதில் மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் சுகாதார முறைகள் போதிக்கப்பட வேண்டும். பசுஞ் சாணமும் கோமயமும் அந்தக் காலத்திலிருந்தே விஷக்கிருமிகளைப் போக்குவதற்காகக் கையாளப்பட்டு வருகின்றன என்று கூறியிருக்கிறார். இதுமட்டுமா? செந்நிறப் பசுவின் மூத்திரம் 6 மாத்திரை எடையும், வெண்ணிறப் பசுவின் சாணம் 6 மாத்திரை எடையும், பொன்னிறப் பசுவின் பால் 3 மாத்திரை எடையும், கருநிறப் பசுவின் நெய் 3 மாத்திரை எடையும், நீலநிறப் பசுவின் தயிர் 10 மாத்திரை எடையும் கலந்து பார்ப்பனன் எதிரில் அவன் மந்திரத்தோடு அருந்தினால் எல்லாப் பாவங்களும் நீங்கும் என்றும் கூறுகிறது ஆரியர் நூல். இவைகள் எளிதில் மக்கள் அறிந்து கொள்ளத்தக்க சுகாதார பாடம் என்கிறார் ஓமந்தூரார். சாணி மூத்திரங்களுடன் மக்கள் தொடர்பு வைத்துக் கொள்ளுவது நெருப்புடன் விளையாடுவதாகும். சாணிப்பால் (சாணி கலந்த தண்ணீர்) கட்டிடத் தரையைக் கெட்டிப்படுத்தும். சாணியிட்டு மெழுகினால் தீமையில்லை. அவ்வளவு தான்! சாணி விஷக் கிருமிகளைப் போக்கவில்லை, மூத்திரத்தால் விஷக்கிருமிமையப் போக்குவதென்பது, மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்தச் சொல்லுவதாகும். தொழு என்பது பசுக்களைக் கட்டும் இடத்தின் பெயர். அங்கே சாணி சிறுநீர் இவற்றால் உண்டாகும் நோய்க்குத் தொழுநோய் என்று பெயர். தொழுநோய் பெருவியாதி. மாட்டுத் தொழு வீட்டைச் சார்த்திருத்தலும் கூடாது என்பது தமிழர் ஒழுக்கம். மேலும் மேலே காட்டிய முறைப்படி மிகவும் தொல்லைப்பட்டு, முயன்று, உட்கொள்ளும் பஞ்ச கௌவியத்தால் ஏற்படும் நன்மை காலணா மருந்தால் கட்டாயம் தீரும். காலணா மருந்து தீமை செய்யாது; பஞ்ச கௌவியம் முறை தவறினால் தொழுநோய் வருவிக்கும். ஏதோ ஓமந்தூரார் இந்துமதப் பிரசாரம் செய்ய நினைக்கிறார். பழம் பஞ்சாங்கத்துக்குப் புதிய அட்டை போர்த்துகிறார். சிறப்பில்லை. - கைகாட்டி எழுதுவது - குயில், தினசரி, 6.10.1948, ப. 1, 4 48. நல்லதைச் சொல்லுகிறோம் பிரஞ்சிந்திய மக்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறையில் தம்தம் கட்சிக் கொள்கையைத் தெளிவுபடுத்துவது நல்லது. நோக்கத்தை முடிவுபெற வைக்க அதுதானே வழி! பிரஞ்சு அரசாங்கத்தில் உள்ள குற்றங்களை எடுத்துக் காட்டலாம். இந்திய யூனியனில் இங்கிருப்பதை விட நன்மைகள் இருந்தால் தெளிவுபடுத்தலாம். இங்குள்ளவர்களில் இன்னின்னார் அரசியலைக் கைப்பற்றினால் இன்ன வகையில் கெடுதி சம்பவிக்கும் என்பதை எடுத்துக் கூறலாம். நாங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றால் இன்னின்ன நன்மை செய்வோம் என்பதை எடுத்துக் காட்டலாம். இவையெல்லாம் பிரசார முறைகளே ஆகும். ஆனால் இந்தப் பிரஞ்சிந்திய அரசாங்கத்திற்கும் இந்திய யூனியனுக்கும் மனக்கசப்பை உண்டு பண்ணுவதன் மூலமே தங்கள் கொள்கையைச் சாதித்துக் கொள்ள எண்ணுவது பிழையாக முடியும் என்று கருதுகிறோம். இந்திய யூனியனில் நடைபெறும் பத்திரிக்கைக்கு, யோசனையின்றி எந்தக் கடிதத்தையும் எழுதி விடவேண்டாம். இதைநாம், தந்திரமாகவோ, கொள்கையில், மாறு பட்டுள்ளவர் களை ஏமாற்றவோ கூறுவதாக நம் தோழர்கள் நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். - குயில், தினசரி, 6.10.1948 49. விடுதலையான கோட்சே கும்பல் மீண்டும் வாலாட்டுகிறது! காந்தியார் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட ராஷ்டிரிய சுயம் சேவா சங்கத்தினர் நிபந்தனை களின் பேரில் விடுதலை செய்யப்பட்டனரல்லவா? அவர்கள் தங்கள் கோட்சே வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாகப் பூனா செய்தி ஒன்று கூறுகிறது. பம்பாய் உள்நாட்டு மந்திரிக்கு இது பற்றித் தகவல் கிடைத்திருக் கிறதாம். தாங்கள் காந்தியார் கொலைக்குப் பொறுப்பாளிகள் அல்ல வென்றும் சிறையிலுள்ள மீதி ரா.சு.சே. சங்கத்தினரையும் விடுதலை செய்ய வேண்டு மென்றும், தடையை நீக்குமாறு கோரியும் 7000 கையொப்பங்கள் கொண்ட விண்ணப்பம் ஒன்று மேற்படி மந்திரிக்குக் கிடைத்துள்ளதாம். கையொப்பங்கள் மக்களை ஏமாற்றி - பயமுறுத்தி வாங்கப் பட்டவை என்றும் ஒரு அங்கத்தினர் கூறியிருக்கிறார். இதேபோல் லட்சுமணபுரியிலும் நடந்திருக்கிறதாம். - குயில், தினசரி, புதுச்சேரி, 6.10.48, ப. 2 50. புரோகிதர்க்குச் செலவழித்தது மெய்தான் ஆயினும் புரோகித மணமில்லை சுந்தர ரெட்டியாரைத் தேடிக் கொண்டு அவர் வீடு சென்றேன். வீட்டின் நடைத்திண்ணையில் கணக்கப்பிள்ளை கணக்கெழுதிக் கொண்டிருந்தார். புரோகிதருக்குப் பன்னிரண்டாறு, குடை, கால்கட்டை, தக்ஷிணை, அரிசி, பருப்பு முதலியவை 96 ரூபாய் என்று செலவு எழுதி முடித்தார் கணக்கப்பிள்ளை. சுந்தர ரெட்டியார் வந்தார். மகளின் திருமணம் செவ்வனே முடிந்ததா என்றேன். நன்றாக முடிந்தது. புரோகிதம் இல்லாமலே முடித்து விட்டேன் என்றார். புரோகிதர் செலவு தடபுடலாக நடந்திருப்பதாக இதோ கணக்குக் காணப்படுகிறதே என்று கேட்டேன். அதற்கு ரெட்டியார் சொல்லுகிறார்: செலவு ஆனதென்ன வோ மெய்தான்; அவரைப் புரோகிதம் செய்ய விடவில்லை என்றார். அமைச்சர் அவினாசி லிங்கத்தின் அரசியல் கணக்குப் புத்தகத்தில், இந்தி கட்டாய பாடமாகப் போதிக்கத் தக்க அளவு ஆசிரியர் - கட்டடம் வேண்டிய பெருந்தொகை ஒதுக்கப்பட் டிருக்கிறது. கட்டாய இந்திக்குரிய செலவாகி இருப்பது மெய்தான்; ஆனால் இந்தி கட்டாயமில்லை என்கிறார் அவினாசிலிங்கம்! - குயில், தினசரி, 6.10.48, ப. 4 51. லாம்பேருக்கு! நீர் அறிக்கை வெளியிட்டீராம். அதன் சுருக்கத்தைத் தினமணி வெளியிருக்கிறது. நீர் இப்போதே பிரஞ்சிந்திய சர்க்கார் பிரஞ்சிந்திய மக்களிடம் பிரஞ்சிந்தியாவை விட்டுவிட்டுப் போய்விட வேண்டும் என்று சொல்லுகின்றீரா? மனப்பூர்வமாகவே சொல்லுவதாயிருந்தால், பிரஞ்சு சர்க்காரின் சட்டப்படி, நீர் இப்போது மாதம் ஒன்றுக்கு இரண்டாயிர ரூபாய் சம்பளம் வாங்கி வருவதை ஏன் மறுத்துவிடவில்லை? ஏன் உம் தெப்புய்த்தே பதவியை உதறித் தள்ளவில்லை? இன்றைக்குப் பிரஞ்சு சர்க்கார் உம்மிடம் நாட்டை ஒப்படைத்துப் போய்விட்டால், உமக்கு இந்தச் சம்பளமும் இந்தப் பதவியும் போய்விடுமல்லவா? இதை நீர் தெரிந்து தானே சொல்லுகிறீர்? இப்படிச் சொல்லும் நீர் சம்பளம்-பதவிகளை இன்றைக்கே விட்டுவிட்டால் அல்லவா யோக்யமாக இருக்கும். உம் வார்த்தையில் அப்போதுதானே மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்? செய்வீரா? -குயில், தினசரி, 7.10.48, ப. 1 52. பிர்லா மகிழ்ச்சி! இந்திய சர்க்காரின் இன்றைய பொருளாதாரத் திட்டம் பண மூட்டைகட்கே மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை இதோ பிர்லாவின் அறிக்கை காட்டுகிறது. பம்பாய், அக். 5. இந்திய சர்க்காரின்முன், நான் வெளியிட்ட புதிய பொருளாதாரத் திட்டம், இப்போதைய நிலைமையில் மிக மிகத் திருப்திகரமானதென்று திரு. ஜி.டி. பிர்லா இன்னொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்தப் புதிய திட்டம் எல்லாவித சந்தேகங்களையும் நீக்கி விடுமென்றும், எனவே சர்க்காருக்குத் துணை புரிந்து அவர்களுடைய திட்டம் வெற்றிபெறச் செய்வது தொழில் முதலாளிகள் வர்த்தக சமூகத்தினர் கடமையாகுமென்றும், இனிமேல் எந்தவித ஏறுக்கு மாறான அறிக்கைகளை மந்திரிகளோ, அரசியல் தலைவர்களோ, வெளியிட மாட்டார்களென்று நம்பலாமென்றும், எனவே எல்லாரும் முக்கியமாகத் தொழில் வர்த்தகங்களில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் சர்க்காருக்கு முழுஅளவுக்குத் துணைபுரிய வேண்டுமென்றும் தெரிவித்துக் கொள்கிறார். - குயில், தினசரி, 7.10.48, ப. 1 53. பிரஞ்சு சர்க்கார் பணிகிறதா? காங்கிர பணிகிறதா? பிரஞ்சிந்தியாவின் அரசியல் பதவி அவர்கட்கு எட்டாத பழம். பிரஞ்சிந்திய மக்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டார்கள். அவர்களை எட்டிக்காய் என்றார்கள். ஏன்? அவர்களில் பெரும் பாலோர் வக்கீல்கள். வக்கீல்களில் பெரும்பாலோர் தமக்கு அரசியலில் ஏற்படும் செல்வாக்கைத் தன்னலத்திற்கு ஆக்கிக் கெட்ட பேர் எடுத்தவர்கள். நாம் சொல்லும் இந்தக் கருத்தைப் புதுவையிலுள்ள ஒரு காங்கிர குழுவினரே ஏற்றுக்கொள்வதற்கு அறிகுறியாக அந்த வக்கீல் காங்கிரசை இன்று வரைக்கும் அவர்கள் ஒதுக்கி வரவில்லையா? இந்த நிலையில் சென்னை காங்கிரகாரரில் சிலரின் தூண்டுதல் பெற்ற ஒரு சில பிரஞ்சிந்திய வாலிபர்களும், பதவி பெற முடியாத இரண்டொரு வாலிபர்களும் கெட்டபேர் வாங்கிய பல வக்கீல்களும். ஒரு முடிவுக்கு வந்தார்கள்! என்ன முடிவு? சென்னைக் காங்கிர சர்க்காரைக் கிளப்பிவிட்டு, மோதுதல் ஏற்படுத்தி நம்மைப் புறக்கணித்த பொது மக்களையும், அவர்களின் அபிலாஷைகளையும் பறக்கடிப்பது. எப்படி முடியும்? பொது மக்களின் நேர் பிரதிநிதிகளான முனிசிப்பல் அங்கத்தினர். மேயர்கள் சட்டசபை அங்கத்தினரில் பெரும்பாலோர் - இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? - புதுவையிலுள்ள கலகக்காரர்களின் செயலை அவர்கள் அறவே வெறுக்கவில்லையா? கலகக்காரர் எண்ணத்தை அவர்கள் அறவே எதிர்க்கவில்லையா? நடந்ததை நினைத்துப் பார்ப்போம் பிரான்ஸும் டெல்லியும். இந்திய யூனியனுடன் பிரஞ்சிந்தியா சேருவதா சேருவதில்லையா என்பதற்கு மக்கள் எண்ணத்தைத் தெரிந்து நடந்து கொள்ளலாம் என்று முடிவு கட்டினார்கள். அதற்கு முதலில் முனிசிப்பல் தேர்தல்களை நடத்துவது என்றார்கள். அதை நடத்தும் முறையையும் வகுத்தார்கள். அதன்படி தேர்தல் நாளும் 10.09.1948 என்று குறித்தாய் விட்டது. இத்தேதிக்கு முன்னதாகவே; சோஷலிடு கட்சியும். கம்யூனிடு கட்சியும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி நடத்தி வந்தன. இங்குள்ள காங்கிர அப்போது என்ன செய்தது? பள்ளிக் கூடப் பிள்ளைகள் தான் அகப்பட்டார்கள் அவர்கட்கு. அவர்களை ஏமாற்றித் தூக்கி விட்டார்கள். அப்பிள்ளைகளை என்ன செய்யச் சென்னார்கள்? சட்டத்தை மீறச் சொன்னார்கள்? மாணவர்கள் என்ன நினைத்து மீறினார்கள்? நாம் சட்டத்தை மீறினால், நம்மைப் பிரஞ்சிந்திய சர்க்கார் சிறையில் போடுவார்கள். அப்படிப் போட்டால் தினமணி சொல்லுகிற படி இங்குள்ள காங்கிர வக்கீல்கள் சொல்லுகிறபடி இந்தியப் படை பிரஞ்சிந்தியாவில் புகுந்து பிரஞ்சிந்திய சர்க்காரை உதைத்துத் தங்களையும் மீட்டுக் கொண்டு தங்களுக்கு வேண்டிய தெத்தாக் களையோ லாம்பேர்களையோ பிரஞ்சிந்தியாவின் தற்கால அதிகாரிகளாக நியமித்து விடுவார்கள் என்று எண்ணித்தான் சட்டத்தை மீறினார்கள். அவர்கள் நினைத்தபடி, வக்கீல் காங்கிர சொல்லியபடி, அந்த இந்திய யூனியன் சர்க்காராவது செய்து தொலைத்ததா என்றால் ஓரிழவும் இல்லை. இன்று வரைக்கும் பிள்ளைகள் சிறையில்தான் தூங்குகிறார்கள். பிள்ளைகளைத் தூக்கிவிட்டது தவிர இங்குள்ள காங்கிர காரர்களால் என்ன செய்ய முடிந்தது? ஓமந்தூராரிடம் பணம் கேட்டுப் பார்த்தார்கள், வக்கீல்களுக்குச் சலுகை கேட்டுப் பார்த்தார்கள். இவையெல்லாம் மக்களின் ஆதரவுடையவர்களின் செயல்களா? அதன் பின் என்ன செய்தார்கள்? தினமணியைப் பிடித்தார்கள் கலகத்திற்கு! அதன்பிறகு என்ன செய்தார்கள்? 10.9.48 எலக்ஷனை நிறுத்த வேண்டும் என்று கெஞ்சினார்கள். இது யாருடைய தோல்வி? இந்திய யூனியன் கோரியபடிதான் பிரஞ்சிந்தியா, முனிசிப்பல் தேர்தலை ஒத்திவைத்தது என்பது மூடத்தனமான - கலகக்காரர்களின் பேச்சே தவிர எண்பிக்கக் கூடியதாகுமா? அப்படியே இருந்தாலும், இதைப் பிரஞ்சிந்திய சர்க்காரின் பணிவு என்று எப்படிச் சொல்வது? செல்வாக்கிருப்பதாகச் சொல்லும் பிரஞ்சிந்தியக் காங்கிர காரர்களே தேதியைத் தள்ளிவைக்கிறோம். உங்களுக்குச் செல்வாக் கிருந்தால் நீங்கள் வெற்றிபெறச் சந்தர்ப்பம் அளிக்கிறோம் என்று அவர்களின் பெருந்தன்மையைக் காட்டிக் கொண்டதாகத் தானே கூறவேண்டும்? இதுதானே பெருந்தன்மைக்கு அழகு? சரி தேதியைத் தள்ளிவைத்தார்கள். என்ன செய்தது காங்கிர? எங்குச் சென்றது காங்கிர? எந்த மக்களைத் திருப்ப முடிந்தது காங்கிரசால்? இப்போது என்ன செய்கிறது காங்கிர? முனிசிப்பல் தேர்தலே வேண்டாமாம். ரெபராண்டம் என்ற பொதுவாக்கெடுப்பும் வேண்டாமாம் - இந்த முடிவுக்கு எதிராக இருப்பவர்களுக்கு ஹைதராபாத் ரஜாக்கர் களுக்கு நேர்ந்த கதிதான் என்ற கருத்துப்பட எழுதுகிறது தினமணி! இப்போதே இங்கிலீஷ்காரர் போல் பிரஞ்சு சர்க்கார் இதைவிட்டுப் போய்விட வேண்டும் என்று மரியாதையாய் விண்ணப்பிக்கிறது. பிரஞ்சு இந்திய சர்க்காருக்கு! ஹைதராபாத் நவாபைத் தட்டிக்கொடுத்து அங்கு இந்துக் களுக்குத் தொல்லை கொடுத்தவர்களான ரஜாக்கர்களை இந்திய யூனியன் சிறையில் வைத்தது. ஆனால் பிரஞ்சிந்தியாவில், ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் ஒத்திருக்கும் இந்து, முலீம், கிருதுவர்களைச் சிறையில் வைத்துவிடுவோம் என்று கூறுகிறது தினமணி. ஆனால், பிரஞ்சு சர்க்காரை இன்னது செய்வோம் என்று தினமணி ஒன்றும் சொல்ல வில்லை. அவர்களுக்கு மரியாதை வைக்கிறது; கெஞ்சுகிறது. அவர்கள் அயலவர் என்றும் அதுவே கூறுகிறது. தேசபக்தி பேசுகிறது. இங்கு இந்தியா யூனியனில் உடனடியாகச் சேரமாட்டோம் என்று கூறுகிற வர்கள் ரஜாக்கர்கள், பிரஞ்சிந்திய சர்க்கார் ஹைதராபாத் நிஜாம் தினமணி மிரட்டுகிறது. அது மிரட்டுகிறபடி இன்றைக்கே இங்குள்ளவர் களை ரஜாக்கர்களாக்கித் தொலைத்தால் நாள் வீணாகாதே! வீண் தொல்லை ஏற்படாதே! டில்லி சர்க்காரும் பிரஞ்சு சர்க்காரும் சேர்ந்து ஏற்படுத்திய முடிவுக்கு மாறாக - குறித்த நிபந்தனைப்படி முதலில் முனிசிப்பல் எலக்ஷன் நடப்பது. அதன் பின் ரெபரெண்டம் என்ற பொது வாக்கெடுப்பு நடப்பது - என்பதற்கு மாறாக எந்தப் புது மாறுதலையும் இங்குள்ள பெருமக்கள் அனுமதிக்கவில்லை. பொதுமக்களின் எண்ணப்படி இந்தப் பிரஞ்சிந்திய ஆட்சி நடைபெறுவது உண்மை யானால் - பொதுமக்களின் இந்த எண்ணத்திற்கு மாறாக எந்த முடிவையும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். - குயில், தினசரி, 7.10.1948, ப. 2 - 4 54. தொலையட்டுமே ஓமந்தூர் சர்க்கார் மத்திய சர்க்காரின் முதலமைச்சர் நேரு சில நாட்களின்முன், சென்னை முதலமைச்சருக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தாரே நினை விருக்கிறதா? மதுவிலக்கை நிறுத்திவை! ஜமீன்தாரி ஒழிப்பை நிறுத்திவை! என்று அவர் கூறவில்லையா? அதற்கு முதலமைச்சர் நிறுத்திவைக்க முடியாது என்று ஆணித்தரமாக விடை ஞாயமானதும், சுயநலமற்றதும் அல்லவா? ஆயினும், நேரு சர்க்கார் துவக்கிவிட்டது தோரணத்தை! (தோரணையை) மதுவிலக்கினாலும், ஜமீன்தாரி ஒழிப்பினாலும் ஏற்பட்ட பணமுடையைப் பற்றி எங்களிடம் மூச்சு விடக்கூடாது. பண வுதவி செய்ய முடியவே முடியாது என்று கூறிவிட்டது நேரு சர்க்கார். என்ன அர்த்தம்? தொலைந்துபோகட்டும் ஓமந்தூரார் சர்க்கார். தோன்றட்டுமே எங்கள் பார்ப்பன சர்க்கார்! - குயில், தினசரி, 7.10.1948, ப.4 55. காமராஜ் காவடி நடைபெறவிருக்கும் பிரஞ்சிந்திய முனிசிப்பல் தேர்தலில் இங்குள்ள காங்கிர கொள்கைக்கு ஆதரவில்லை என்று நாம் அடிக்கடி எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். இவ்வாறு அவர்களின் கொள்கைக்கு ஆதர வில்லாததால்தான் பிரஞ்சிந்திய சர்க்காரும் இந்திய யூனியனுக்கும் மனத்தாங்கலை ஏற்படுத்திப் பெருங்கலகம் விளைத்து மக்களை அச்சத்தில் தள்ளுவதன் மூலமாகவே ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டி வந்தோம். இப்போதுதான், தினமணிகளும், காமராஜர்களும் நாம் சொன்ன உண்மையை ஒத்துக்கொண்டார்கள் என்று தெரிகிறது. இப்போதுதான், பிரஞ்சிந்தியா விஷயத்தில் காமராஜர்களுக்கு ஏற்பட்ட படுதோல்வி விளங்கிவிட்டது. நிபந்தனைப்படி டில்லியும், பிரான்சும் ஆடவிருந்த பந்தய விளையாட்டில் காமராஜ்கள் வாச்சான் கொள்ளி அடிக்கத் தொடங்கி விட்டார்கள். முனிசிப்பல் தேர்தல் காமராஜூக்குப் பிடிக்க வில்லை யாம்; பிரஞ்சிந்தியாவில் எப்படியாவது, இந்திய யூனியனிலிருந்து காலிகளை அழைத்துவந்து கலகம் விளைத்துக் காரியத்தைத் தட்டிக் கொண்டு போவதுதான். அவருக்குப் பிடிக்கிறது. அதற்காகத்தான் காமராஜ் டில்லிக்குக் காவடி தூக்கிப் போகிறார். இதைப் படியுங்கள்;- காமராஜ் டெல்லிக்குக் காவடி! சென்னை, அக்.6: பிரஞ்சு இந்திய வட்டாரங்களில் உள்ள நிலைமையை விவரித்துச் சொல்வதற்காக, தமிழ்நாடு காங்கிர தலைவர் தோழர். காமராஜர் அடுத்தவாரம் புதுடில்லிக்குச் செல்லுவார். பிரஞ்சு இந்திய வட்டாரங்கள் இந்திய யூனியனுடன் சேர்வது பற்றி நேர்முகப் பொதுமக்கள் வாக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்றும் இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் நகரசபைத் தேர்தல்களை நடத்த லாகாது என்றும் இவர், மேலிடத்தில் தெரிவித்துக் கொள்வாரென்று கூறப்படுகிறது. - விடுதலை - குயில், தினசரி, 8.10.1948, ப. 1 56. கலகக்காரர்கள் கயிறு திரிக்கிறார்கள் ஆதாரமற்ற பேச்சுக்களுக்கு அணுவத்தனையும் அஞ்ச வேண்டியதில்லை நமக்குக் கொம்முய்ன்களிலிருந்தும் காரைக்காலிலிருந்தும் சில கடிதங்கள் வந்துள்ளன. அக்கடிதங்கள் தினமணி பத்திரிகையின் பொறுப்பற்ற பொய்ப் பிரசாரத்தையும் உள்ளூரில் இருக்கும் இரண்டொரு வக்கீல்கள் கட்டிவிடும் கயிறுகளையும் நம்பி எழுதப் பட்டவை என்று தோன்றுகிறது. ஒரு படித்த டாக்டர். தம் நண்பர் வழியாகச் சொல்லி யனுப்புகிறார் நமக்கு! என்னவென்று? நாம் இந்திய யூனியனில் சேரமாட்டோம் என்று கூறினால் நம்மை எல்லாம் காட்டிக்கொடுப்பவர் என்ற குற்றம்சாட்டி, இந்திய சர்க்கார் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களே - என்று இவருடைய பேதமைக்கு நாம் இரக்கப்படாமல் வேறென்ன செய்ய முடியும். இவர் நினைப்பது நேர்மாற்றமானது. ஒருவன் எந்தச் சட்டத்தின் கீழ்க் குடித்தனம் செய்கிறானோ அவன், அந்தச் சட்டத்திற்கு உடைய அரசாங்கத்தை மற்றோர் அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுப்பவன் தான் காட்டிக்கொடுக்கும் குற்றத்தைச் சேர்ந்தவன், பிரஞ்சிந்திய அரசாங்கத்தின் சட்டத்தின்படி, தக்கவகையில் சம்பாதித்துக் கொண் டிருக்கும் பேர் வழிகள், இப்போதுதாமே ஒன்றையும் சொல்லாமல் ஏமாந்தவர்களைத் தூக்கிவிட்டுக் கலகம் செய்துகொண்டு போவது, எதற்கு என்றாவது மேற்படி படித்தவர் தெரிந்து கொள்ள வில்லை போலிருக்கிறது. டில்லியும் பிரான்சும் கூடி ஓர் முடிவு செய்துள்ளது. அது என்ன? பிரஞ்சிந்திய மக்கள் இந்திய யூனியனில் சேர நினைக் கிறார்களா? இல்லையா? என்பதையறிந்து கொள்வதற்காக முனிசிப்பல் தேர்தல் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு என்ற பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும், ரெபரெண்டம் என்பது தான் அந்த முடிவு. இவ்வாறிருக்கையில் இந்த முடிவுக்குப் பாதகம் விளைக்கும் முறையில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் குற்றமே! பாதகம் விளைப்பது மட்டுமல்ல, பாதகம் விளையத்தக்க முறையில் பேசினாலும் குற்றம் தான். இதுவே குற்றமானால், இங்கு நடக்கும் கலகச் செயலும் பேச்சும் இந்த அரசாங்கத்தைக் காட்டிக் கொடுக்கும் முறையில் நடைபெறும் குசு குசு வேலைகளும் எவ்வளவு குற்றம் என்பது விரைவில் தெரியத்தான் போகிறது. மற்றும், கடிதக்காரர்கட்கு நாம் கூறுகிறோம். தினமணிகள் கலகக்காரர் சிலர் கயிறு திரிக்கிறார்கள் - இங்குத் தனித்தனியாக - அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு பேசும் வக்கீல்மார்களின் வார்த்தையில் உண்மையிருக்கவில்லை. அவர்களையே கேட்டுப் பார்க்கலாம் ஏனையா, இப்படி யெல்லாம் பயமுறுத்துகிறீரே, இதை வெளிப்படையாய் ஏன் சொல்லவில்லை. எழுத்துப்பட ஏன் கூறவில்லை என்று. இதே நேரத்தில் இந்திய யூனியனில் சேர்ந்து விடவேண்டும் என்று கூறுகிற எந்த யோக்கியனாவது, இதே நேரத்தில்தான், பிரஞ்சிந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடித்து உண்ணுவதை விட்டு, தன் உத்தியோகத்தையோ பதவியையோ வேண்டாம் என்று கூறினானா? பிரஞ்சிந்தியாவில் அன்னியருக்கு அடிமையாக இருக்க ஒரு நொடியும் சம்மதிக்க மாட்டோம் என்று பேசும் யோக்கியர்கள் சம்பளம், வருமானத்தை மட்டும் வாரி வட்டிக்கு விடலாமா? அப்படியானால் என்ன அர்த்தம்? இன்றைக்கே இந்திய யூனியனில் சேர வேண்டும். நீங்கள் சேராவிட்டால் பிரஞ்சிந்தியாவிலேயே கொள்ளையடித்துக் கொண்டிருப்போம் நாங்கள் - ஆதலால் தான் இப்போதே எங்கள் பதவி அலுவல்களை விடமறுக்கிறோம் என்று அவர்கள் கூறுவதாகத் தானே அர்த்தம். - குயில், தினசரி, 8.10.1948, ப. 2-3 57. நம் அச்சுப்பொறி உடைந்துவிட்டது! நமக்குத் தெரிந்தவரைக்கும் நம் கருத்தை இச்சமயம் மக்களுக்கு எடுத்துக் காட்டுவதால் நன்மை விளையும் என்று கருதியே மக்கள் இலகுவாய் வாங்கத்தக்க வகையில் - காலணா விலையில் இந்தத் தினசரியை வெளியிட முன்வந்தோம், இது ஏற்பட்ட சிற்சில நாட்களில் இதற்கு ஏற்பட்டிருக்கும் மக்களாதரவு வியக்கத் தக்கதாகும். அன்றியும், பொதுமக்களின் இன்றைய நிலைமையில், அவர்கட்கு ஏற்படக்கூடிய அச்சம், சந்தேகங்களைப் போக்கி உண்மையைத் தெளிவுபடுத்தி வந்த வகையிலும் குயில் ஓரளவு நல்ல வேலை செய்து வந்திருக்கிறது என்பதும் நமக்குத் தெரியாமலில்லை. திடீரென்று, நேற்றுமுன், நம் அச்சுப்பொறி (மஷின்) உடைந்து விட்டது. இரண்டு நாட்களாய் வேறு ஒரு பொறியின் உதவியால் அச்சிட்டு வெளிப்படுத்தி வந்தோம். உடனே, உடைசலைப் பற்ற வைத்துப் பார்த்ததிலும் அது நாள்தோறும் ஆயிரக்கணக்கான குயில் பிரதிகளைத் தவறாமல் அச்சடிக்க முடியும் என்பது சந்தேகந்தான் என்பதையும், அதனால் குயில் எந்தச் சமயத்திலும் நிறுத்தப்படலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். குயில் நிறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அதைத் தொடர்ந்து நடத்தும் எண்ணமுடையவர்கள் நம் கொள்கையுடையவர்களாயிருந்தால் அவர்கள் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு போகும்படியும் நாம் விட்டு வைக்க ஆசைப்படுகிறோம். - குயில், தினசரி, 8.10.48, ப. 3-4 58. அங்கு வெய்யில் தணியட்டும்! வந்து சேருகிறோம்! கவிஞர் தம் சொற்பொழிவில் சொன்னார்: இந்திய யூனியன் மக்கள் கடற்கரையில் உட்கார்ந்திருக் கிறார்கள். பிரஞ்சிந்தியர் அதற்கருகிலுள்ள மரத்தின் நிழலில் உட்கார்ந்திருக்கிறார்கள். கடற்கரை மக்கள் மரத்து நிழல் மக்களை நோக்கி இங்கு வந்து எம்முடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்கள். அதற்கு மரத்து நிழலில் இருப்பவர்கள் கடற்கரையில் மாலை வெய்யில் தணிந்து வருகிறது. தணிந்ததும் அங்கே வந்து சேருகிறோம் என்கிறார்கள். உண்மைதானே! இந்திய யூனியனில் இப்போது குளிர்ச்சியா நிலவுகிறது? இதைத்தான் நம் ஓவியர், படமாக்கியிருக்கிறார். - குயில், தினசரி, 9.10.48, ப. 1 59. தினசரியின் கருத்து முனிசிப்பல் தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் சரி, இந்திய யூனியனில் சேருவதைப் பற்றி வோட் எடுப்பது தனியாக நடைபெற வேண்டும்; அதுவும் இந்திய சர்க்காரின் மேற்பார்வையில் நடக்க வேண்டும். என்று நேற்றைய (08.10.1948) தலையங்கத்தில் தினசரி கூறுகிறது. டில்லியும் பிரான்சும் பேசி முடித்ததற்கு மாறாகத் தினசரி இப்படிக் கூறுவது சரியா? மேலும் தினசரி என்ன சொல்லுகிறது? இதற்குப் பிரஞ்சிந்திய சர்க்கார் சம்மதிக்காவிட்டால் தாராளமாக அவர்கள் ராஜ்யத்தை நடத்தட்டும்; இந்தியாவுக்கும் அவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் வேண்டியதில்லை. இந்தியாவிலிருந்து தற் சமயம் கொடுத்து வரும் சகல உதவிகளையும் நிறுத்தி விட வேண்டும் என்கிறது. தினசரி இன்று இப்படிக் கூறுகிறது. இதை இந்திய சர்க்கார் ஏன் அன்றைக்குக் கூறவில்லை. இன்றைக்காவது தினசரி கூறுவதை இந்திய சர்க்கார் ஆதரித்துக் கூறட்டுமே. தலைமைச் சர்க்காரின் முடிவை மீறித் தினசரி தன் சென்னை மாகாண சர்க்காரைக் கொண்டு பிரஞ்சிந்தியாவைத் தான் நினைக்கிற படி செய்து விடுமானால், ஏன் காமராஜர் தலைமைச் சர்க்காரை நோக்கிக் காவடி எடுத்துச் செல்ல வேண்டும்? வடநாட்டானின் தொடர்பைச் சென்னைச் சர்க்கார் அறுத்துக் கொள்ளவேண்டும் என்பதுதானே கருஞ்சட்டைக்காரர் எண்ணம். வட நாட்டானுக்குக் கீழ்ப்படியாகாமல் சுதந்திர நிலையில் தினசரியே தென்னாட்டின் மதிப்புக்குரிய தலைமை தாங்கி ஆட்சி நடத்தும் நிலை ஏற்பட்டால் அதுபற்றி மகிழ்பவர், கருஞ்சட்டையினர்தான் என்பதைத் தினசரி அறியாதா? அத்தகைய நிலைவந்து கொண்டுதான் இருக்கிறது. வந்தவுடன் பிரஞ்சிந்திய மக்கள் சென்னையுடன் சேரத் தயங்கமாட்டார்கள். அப்போது எங்களை இந்தப் பிரஞ்சிந்திய சர்க்கார் சேரவொட்டாமல் செய்துவிட நினைத்தாலும் அவர்களால் முடியவே முடியாது. பாரதியார் முதலியவர்கள் அங்குள்ள நிலைமை பிடிக்காததால் பிரஞ்சிந்தியாவில் வந்திருந்தார்கள். நிலைமை, சரியானபின் அங்கே வந்துவிட்டார்கள். அதுபோல் பிடிக்காதநிலை அங்கு இப்போது இருக்கிறது. கருஞ்சட்டைக்காரர் நிலைமை சீர்ப்பட்டதும் வந்துவிட எண்ணுவதில் என்ன பிழை! - குயில், தினசரி, 9.10.1948, ப.2 60. வியாபாரிகளுக்கு! ஏ வியாபாரியே, உனக்கு இந்த ஆண்டில் வரவேண்டிய லாபத்தோடு அமித லாபம் வேறு வரக்கூடும். ஆகையால் லக்ஷம் ரூபாய் முதல் வைத்து வியாபாரம் செய்யும் நீ, வரப்போகும் அந்த அமித லாபத்துக்கு வரியாக முன்னதாகவே இரண்டு லக்ஷம் ரூபாய் எங்களிடம் டிபாசிட்டாகக் கட்டி வைக்கவேண்டும் என்று கூறும் இந்திய யூனியன் சர்க்கார்! உடனே வியாபாரி அப்படியே வருட முதலிலேயே கட்டி விடுவான். வருட முடிந்ததும் லாபவரி அமித லாபவரி அத்தனையும் கணக்குப் பார்த்து கட்ட வேண்டியதை எடுத்துக்கொண்டு, டிபாஸிட்டில் மீதியைக் கொடுத்துவிட வேண்டும். இந்த வகையில் இந்திய யூனியனில் வியாபாரிகள் கட்டியுள்ள டிப்பாஸிட் தொகை மிகப் பலகோடி ரூபாய் இருக்கிறது. அதை மூன்று வருஷத்திற்குப் பிறகுதான் கொடுக்குமாம் இந்திய யூனியன்! இதனால் தென்னாட்டுச் சில்லறை வியாபாரமும், மொத்த வியாபாரமும் தலைதூக்க முடியாது. இதனால் வட நாட்டு வியாபாரம் பாதகமடையப் போவதில்லை. தென்னாட்டில் எந்தப் பொருளும் உற்பத்தியாக முடியாது. வட நாட்டில் எந்த உற்பத்தியும் நிற்காது. வட நாடு விளைக்கும் பொருளுக்குத் தென்னாடு வெறும் சந்தை; இதைப் படித்து பாருங்கள். புதுடில்லி, அக்.9 பணப் பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, அமித லாபவரி சம்பந்தமாக வசூலிக்கப்பட்டிருந்த டெபாசிட்டுகளைத் திருப்பித் தருவதை ஒத்தி வைப்பது என்று செய்யப்பட்ட முடிவை, அமுலுக்குக் கொண்டுவர இந்திய சர்க்கார் ஒரு அவசர சட்டத்தை இன்று பிரகடனம் செய்திருக்கின்றனர். இந்த டிப்பாசிட்டுகளைத் திரும்பக் கொடுப்பதை மூன்று வருஷங்களுக்கு ஒத்தி வைப்பதற்கு அனுசரணையாகச் சம்பந்தப்பட்ட விதியும் திருத்தப்பட்டிருக்கிறது. பொது நன்மைக்கு உகந்தது என்று சர்க்கார் கருதும் விஷயங்களில் 3 வருஷங்களுக்கு முன்னர் பணத்தைத் திரும்பப் கொடுக்கவும் இந்த அவசரச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. - குயில், தினசரி, 11.10.1948, ப. 1 61. கிறிதவ அறிஞர்கட்கு பிரிட்டிஷ் ஆட்சி, நேரிடையாக இந்தியாவில் இருந்த நாட்களில் அங்குள்ள பார்ப்பனர் உத்தியோகங்களையெல்லாம் கைப்பற்றிக் கொண்டார்கள். நல்ல நிலையை அடைந்தார்கள். எங்கும் அவர்கள்! எதிலும் அவர்களின் அதிகாரம்! இதை மறுக்க முடியாது. பிரஞ்சிந்திய சர்க்காரில் இங்குள்ள உயர்சாதிக் கிறீதவர்கள் உத்தியோகங்களை அடைந்தார்கள், நல்ல நிலையில் இருக்கிறார்கள். எங்கும் அவர்கள். எதிலும் அவர்கள் அதிகாரம்! இதை மறுக்க முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியானது நாளடைவில், இந்திய மக்களிடம் தன் சமநோக்கத்தைக் காட்டத் தொடங்கியது. அது மக்கள் நிகர் என்றது. எல்லாரும் அரசியலில் பங்குபெறலாம் என்று கூறும் நிலையை அடைந்தது. இது பார்ப்பனர்க்குப் பிடிக்கவில்லை. ஏன்? இருக்கும் உத்தி யோகத்தை-பதவிகளை-எல்லாருக்கும் அல்லவா பங்கிடவேண்டும்? முலீம்களும், கிருதுவர்களும், பார்ப்பனரல்லாத பெருமக்களும் சமம் என்றால் பார்ப்பனர் பாடு ஆபத்துத்தானே? அதனால் பார்ப்பனர், பிரிட்டிஷ் ஆட்சியைத் தொலைத்து விடத்தான் வேண்டும் என்று கூச்சலிட்டார்கள். இது பிரிட்டிஷ் காரனுக்குத் தெரியும். அவன் என்ன செய்தான்? உத்தியோகத்தைப் பங்கிட்டுத் தரும் அதிகாரத்தைப் பார்ப்பனர்கள் கையிலேயே கொடுத்துவிட்டுத், தன்னைவிட்டு இந்தியா போய்விடாமலிருப்பதற்கு மட்டும், மறைவான - ஆனால் மறுக்கமுடியாத நிலையில் தன் சங்கிலி யின் கொக்கியை இந்தியாவின் தலையில் பொருத்திவிட்டுப் போய்விட்டான்! அதனால் பார்ப்பனருக்கும், இந்த உண்மையை உணர மாட்டாத பார்ப்பனக் கூலிகட்கும் இப்போது மிக்க மகிழ்ச்சி. இதைத் தான் அவர்கள் சுயராஜ்யம் வந்துவிட்டது. வந்துவிட்டது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். மௌண்ட் பேட்டன் இடம் ராஜகோபலாச் சாரிக்கு வந்துவிடவில்லையா? மற்றும் எல்லாப் பார்ப்பனரும் எல்லா இடத்திலும் குந்திக் கொம்மாளம் அடிக்க வில்லையா? பிரஞ்சிந்திய சர்க்கார் அப்படியல்ல. இந்தச் சர்க்கார் இங்கு அடிவைத்த நாளிலிருந்தே எல்லாரும் சமம் என்று தான் சொல்லித் தன் மூலம் கொள்கையை இன்றுவரை நிலை நிறுத்தி வருகிறது. இனிமேல் ஒரு சமூகத்தின் நிலையைக் குலைக்கும்படி அது நடந்து கொள்ள எந்தக் காரணமும் இல்லை, இருக்கவும் முடியாது. சில வெள்ளைக்காரர் ஓட்டர்லிட் இரண்டாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்; முடிந்ததா? தெப்புய்த்தே வெள்ளைக்காரர்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. விட்டோமா? நம் ஒற்றுமையால் ஆக்கக் கூடாதது ஒன்றுமேயில்லை. அறிவுடையவர்கள் இதை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில், இந்திய யூனியனில் நாம் சேர்ந்துவிட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்! உயர் ஜாதிக் கிருதுவர்களின் நிலை என்ன ஆகும்? தினமணி சொல்லுகிறபடி புதுவை, காரைக்கால்கள் பிர்க்கா தானே! சுகவாசதலங்கள் அனைத்தும் பார்ப்பனர்கட்குத்தானே! திரு. கர்னேந்தர முதலியாரும் எச்சிலை எடுக்கும் காப்பி ஓட்டல் பார்ப்பானைவிட மட்டம் என்ற நிலைதானே ஏற்படும்? ஆரத்தீர ஆலோசிக்க வேண்டிய சந்தர்ப்பம் இது கிருதவராக உள்ளவர்கள் இதில் தவறி விடுவார்கள் என்றும் நாம் எண்ணவில்லை. நாமும் எந்த நாளும் பிரஞ்சிந்தியா - இந்திய யூனியனில் சேரக்கூடாது என்று சொல்லவில்லை. இந்திய யூனியன் நிலை திருந்தித்தான் வருகிறது. ராமராஜ்யம் ஒழிந்துதான் வருகிறது. இந்திய - கிருதுவ, இலாமியத் திராவிடர்களுக்கு ஏற்றவகையில் திராவிட நாடு சென்று கொண்டுதான் இருக்கிறது. திருந்தும். நாம் அந்நாளில் சேருவோம் என்று கிருதுவ அறிஞர்கட்குத் தெரிவிக்க விரும்புகிறோம். - குயில், தினசரி, 11.10.1948, ப. 2-3 62. அவரும் இவரும்! ராமன் திராவிடனுமல்ல, ஆரியனுமல்ல. அவன் உலக புருஷன்-ஆரிய திராவிட கலாச்சாரப்போர் என்பது வெறுங் கற்பனை, சரித்திரப்படி முடிவுசெய்து, ராமாயணத்தைக் கொளுத்துவோம் என்பது தவறு இது ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கூறுவது. தென்னிந்தியாவில் வசித்த திராவிடருக்கும் வடநாட்டு ஆரியருக்கும் நிகழ்ந்த போராட்டமே இராமாயணம். நேரு தமது மகளுக்கு எழுதிய கடிதத்தில் குறித்துள்ள பகுதி இது. ஓமந்தூரார் சரித்திரத்தைப் புரட்டி எழுதிவிட்டாலும் நேருஜியைக் கூடவா நேர்மையற்றவர் என்று சொல்லி விடுவார்? ஓமந்தூராரா இப்படிப் பேசுவது? அவரா? neUéah m¥go¢ brh‹dJ?- ஒன்றுமே புரியவில்லையே என்கிறார் காங்கிர பக்தர். ஒன்றுமே புரியாது. உலகக் கண்ணாடி போட்டு பார்த்தால்? உணர்ச்சியால் பார்த்தால்? புரியும்! - அரசு - குயில், தினசரி, புதுச்சேரி, 11.10.1948 63. தெளிவில்லா உள்ளம்! தெளியும்! சென்னையிலிருந்து வரும் பத்திரிகைகளுக்கும், சென்னைச் சர்க்காருக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது. ஏனப்பா உன் உடம்பை இப்படிப் பிராண்டிக் கொள்ளுகிறாய் என்று கேட்டால், அதற்கு அவன், பிரதமர் நேருவுக்குத் தம் உடம்பில் தினவெடுக்கிறதாம். அதற்காகத்தான் நான் என் உடம்பைப் பிராண்டிக் கொள்ளுகிறேன் என்று பதில் சொன்னால் யாராவது நம்புவார்களா?  சென்னைப் பத்திரிகைகள், பெரிய பெரிய தலைப்புகள் கொடுத்துப் பிரஞ்சிந்திய மக்களை அச்சுறுத்தும்! அந்த அச்சுறுத்தல் களுக்கும் இந்திய யூனியனுக்கும் சம்பந்தமேயில்லை. இவைகள் பத்திரிகைகளின் சொந்தச் சரடுகள்! மோட்டுவளைக் காக்கைகளின் கூட்டகுரல், நேரு சர்க்காரின் மிரட்டல்கள் என்றால் அதை யாராவது நம்புவார்களா?  நேருவை ஒரு முலீம் தாக்க எத்தனித்தான் என்ற முழுப் பொய்யான ஒரு செய்தியைச் சென்னைப் பத்திரிகை வெளியிட்டதால் திருவண்ணாமலையில் முலீம்களை அங்குள்ள இந்துக்கள் தாக்கினார்கள். தாக்கிய மடையர்கள் மேல், தக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டது இந்திய சர்க்கார். அதன் பிறகு அந்த அயோக்கியத் தனமான பத்திரிகையும் தான் செய்தது அயோக்கியத்தனந்தான் என்று வருத்தம் தெரிவித்துக் கொண்டது. இதனால் சர்க்காரின் சொல்லுக்கும், பத்திரிகைகட்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தோன்ற வில்லையா? இங்குள்ள முலீம்கள், இந்துக்கள்-தம்மில் இம்மியும் மனக்கசப் பின்றி இருந்து வருகையில் சென்னைப் பத்திரிகைகள், முலீம்கள் அஞ்சும்படி எழுதுகின்ற எழுத்துக்களுக்கும், இந்திய யூனியன் சர்க்காரின் கருத்துக்களுக்கும் சம்பந்தமே இருக்க முடியாது என்பது உறுதியல்லவா? அர்த்தமில்லாமல் தெருவில் துப்பிக் கொண்டே போகும் ஒரு வெறியனைப் பார்த்து நம்மை நேரு சர்க்கார் கறுவுகிறது என்று நினைப்பவன் படித்தவனாவானா?  நேற்றுமுன் புதுவை முலீம் தெருவில், ஒரு முலீம் வாலிபர் ஜின்னா இறந்த 40ஆம் நாளைக் குறித்து ஒரு பிரார்த்தனை நடத்தவும் ஏழைகளுக்குக் கஞ்சி ஊற்றவும் ஏற்பாடு செய்திருந்தார். இதையறிந்த ஒரு படித்த முலீம் பிள்ளையாண்டானும், அப்பிள்ளையாண்டா னின் தகப்பனாரும், அந்த வாலிபரை அழைத்து அடித்ததோடு அவ்வாலிபர் சேகரித்து வைத்திருந்த அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்தச் சமயத்தில் இப்படியெல்லாம் செய்தால் மஹா மஹா கெடுதி ஏற்படும் என்று கூறியதாய்த் தெரிகிறது. இது எவ்வளவு பயங்காளித்தனம்! எவ்வளவு பேதமை! இதையும் திருவண்ணாமலை என்று அந்த அறிவாளிகள் நினைத்து விட்டார்களா! இதுவும் இங்கிலாந்தை நட்பாகக் கொண்ட இந்திய யூனியன் போலவே பிரான் வல்லரசை நட்பாகக் கொண்ட, பிரஞ்சிந்தியா என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! இந்த அறிவில்லாவிட்டால் அவர்கள் இந்த நிலைக்கு எப்படி வந்திருக்க முடியும்?  ஒருவர், வக்கீல் அங்கியை மாட்டிக்கொள்ள நினைக்கும்போது, இது பிரஞ்சிந்தியா என்பதையும் இது வல்லரசைச் சார்ந்தது என்பதையும் நம்பித்தானே அதைப் பூணுகிறார். அதை நம்பித்தானே அவர் ஊரார் பணத்தை நோக்கித் தன் பெட்டியைத் திறந்து வைக்கிறார்.  மதம் என்கிறானே! மதத்தில் நம்பிக்கை இருக்கிறது என்கிறானே! அவன் மதத்தையும் மதச் சடங்கையும் சுயநலத்துக்காகக் காட்டிக் கொடுக்கலாமா?  விடுதலை சொல்லுகிறது; மறைத்தும், பொய்யை மெய்யாக திரித்தும் பொதுமக்களை ஏமாற்றிவிட முடியும் என்பதை நடைமுறையில் கண்டவர்கள் காங்கிரகாரர்கள். - கைகாட்டி - குயில், தினசரி, 12.10.1948, ப. 1, 4 64. முலீம் அறிஞர்கட்கு தென்னாடு, அதாவது திராவிடநாடு இப்போதுள்ள கொடிய ஆட்சி தீர்ந்து நன்னிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. திராவிட நாடு தன் விடுதலையைப் பெற நாள் செல்லாது. அது வரைக்கும் முலிம், இந்து கிருதுவர் ஆகிய திராவிடர் அனைவரும், பிரஞ்சிந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எப்போதும்போல், ஒற்றுமையாகவும், உரிமையுடையவர்களாகவும் இருந்து வர வேண்டும். பிரஞ்சிந்தியாவில், வியாபார வரிக்கொடுமை இல்லை. அமிதலாபவரி என்னும் அண்ணாந்தாள் இல்லை. முலிம்களை அவர்கள் முலிம்கள் என்பதற்காகவே கொடுமைப்படுத்துவோர் இங்கில்லை, இருக்கவும் முடியாது. இங்கு எல்லாருக்கும் வாக்குரிமை இருக்கிறது; அங்கில்லை. எல்லா மாணவர்க்கும் இங்கு இலவசக் கல்வி, இது அங்கு இல்லை. ஆலை, அச்சுக்கூடம் முதலிய தொழிற்சாலைகளுக்கு இங்கு எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. அங்கே அவைகளுக்கு, மூச்சுத் திணறத்தக்க நிபந்தனைகள் உண்டு. நிலவரி, வீட்டுவரி இங்கு இலகு. அங்கே விற்பனைவரி, கொள்முதல் வரி முதலிய ஜன வரிகட்கு அளவில்லை. அலுவல்காரர்கட்கு இங்கு அதிகச் சம்பளம், அங்கு சாப்பாட்டுக்கே இழுப்பு. இங்கே பழைய ராணுவ சிப்பாய்களுக்கு 100 முதல் 1000 வரை மாதச் சம்பளம் நடக்கிறது. அங்கே அவர்கள் பாடு அரோகரா! இந்தச் சம்பளத்தை பிரஞ்சுக்காரரின் பணத்திலிருந்து பெரும்பாலும் கொடுத்து வருகிறார்கள். நம் வரிப்பணத்திலிருந்தல்ல! இந்தப் பிரஞ்சிந்தியா இன்றைக்கே இந்திய யூனியனோடு சேர்க்கப்பட்டுவிட்டால் சைகோன் முதலிய இடங்களிலிருக்கும் சொத்துக்கள் கோவிந்தா! இன்னும் இங்கு நமக்கு வேண்டிய தேவைகளை நாமே செய்து கொள்ள உரிமையுண்டு. அங்கு முலீம்களும் இந்நாட்டு மக்கள். அவர்களும் உடன் பிறந்தவர்கள் என்ற அரிச்சுவடிகூடத் தெரிந்த பாடில்லை! இவைகளையெல்லாம் நாம் பன்முறை கூறிவருகிறோம். இங்குள்ள காங்கிரகாரர்கள், இங்கு இத்தனை நன்மைகள் இருக்கின் றனவே. இதுபோலவே அங்கும் (யூனியனில்) ஏற்பாடு செய்கிறீர்களா? - என்று யூனியன் காங்கிரசைக் கேட்கிறார்களா? கேட்டிருந்தால் அதற்கு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது பற்றிப் பேசுவதேயில்லை. அங்கும் இத்தகைய நன்மைகளையும், உரிமைகளையும் ஏற்பாடு செய்கிறோம் என்றும் சொல்வதில்லை. அது தாய் நாடு - இங்கு நாம் பிரஞ்சுக்காரருக்கு அடிமையா யிருக்கக் கூடாது என்கிறார்கள். நாமா அடிமைகள்? நமக்கேற்ற தேவைகளை நாம் விரும்பியபடி ஏற்பாடு செய்து கொள்ளும் நாம் உரிமையுடையவர்களா? லீக் என்ற முலீம் தாபனமே இருக்கக்கூடாது என்று உளறுகின்றவர்க்கே ஆதிக்கம் தந்து வரும் அவர்களா மனித உரிமை தெரிந்தவர்கள்? யார்க்கும் உரிமை எதற்கும் உரிமை என்னும் நாமா மனித உரிமை தெரியாதவர்கள்? முலீம் அறிஞர்களே, உடனடியாக இந்திய யூனியனில் சேரவேண்டுமா? உடனடியாகச் சேர வேண்டாம் என்பது பற்றி நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டுகிறோம். - குயில், தினசரி, 12.10.1948, ப. 2-3 65. குயில் குயில் மீண்டும் வெளிவருகின்றது. தமிழர்கள் ஆதரிக்க. குயில் பாட்டும் உரைநடையுமாக வெளிவரும். குயில் தமிழின் அருமை பெருமைகளைக் கூறும். தமிழ்மேல் பகைவர் வீசிய - வீசுகின்ற குப்பைகட்குப் புயலாகும். அதன் உண்மை அழகுக்கு விளக்காகும். குயில் தமிழறம் தமிழொழுக்கம் முதலியவை இன்னவை யென்றும் சாதி என்ற அழுக்கற்றவர் தமிழர் என்றும் பாடும். குயில் எல்லாம் உடையவர் தமிழர் என்னும் அவர்பால் இன்று இல்லாதது ஒற்றுமை உணர்ச்சி ஒன்றே என்னும். குயில் தமிழரின் நல்வாழ்வு தமிழ்நாடு விடுதலை பெறுவதில் தான் இருக்கின்றது என்ற உண்மையைத் தமிழர் உணரச் செய்யும். குயில் அரசியற் சோலையில் புகும். மக்களியல் மாந்தளிர் உண்ணும். பொருளியற் பண்பாடும். குயில் படிப்போர்க்கு ஒன்று: குயில் பிறரால் எழுதப்படும் பாட்டு, உரைநடைகட்கு அவரின் புனைபெயர் அல்லது இயற்பெயர் இட்டிருக்கும். ஆசிரியரால் எழுதப்படுவனவற்றிற்குப் புனைபெயரோ இயற்பெயரோ இரா. குயில் பற்றி ஏட்டாசிரியர்க்கு ஒன்று குயிலில் வெளிவரும் ஒரு பாட்டையோ ஒரு கட்டுரையையோ மட்டும் தம் ஏட்டில் எடுத்தாளலாம். குயில் பற்றி நூலாசிரியர்க்கும் நூல் வெளியிடுவோர்க்கும் ஒன்று குயிலினின்று பாட்டையோ கட்டுரையையோ அவற்றின் ஒரு பகுதியையோ முழுவதையுமோ எடுத்தாள ஆசிரியர் ஒப்புதல் வேண்டும். குயில் பற்றிப் படக்கலை ஆசிரியர்க்கு ஒன்று: பாட்டையோ உரைநடையையோ அவற்றில் ஒரு சொற் றொடரையோ அப்படியே கையாள்வதும், சொல்லை மாற்றிக் கையாள்வதும் சழக்கு. இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல். - குறள் - குயில், கிழமை இதழ், 1.6.1958, ப.2 66. தமிழன் யார்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் தமிழன். ஒருவன் தமிழ் பேசுகின்றவனாகலாம். தமிழ் படித்திருக்கலாம். அவன் தமிழனின் அண்டை வீட்டுக்காரனாகவும் இருக்கலாம். இக் காரணங்களைக் கொண்டே அவன் தமிழன் என்று கொள்வது பெரும் பிழையாகும். அவனை நோக்கி உன் தாய்மொழி எது என்று கேட்டால் அதற்கவன், என் தாய்மொழி சமசுகிருதம் அல்லது இந்தி அல்லது பிரான்சு அல்லது ஆங்கிலம் என்பானானால் அவனைத் தமிழன் பட்டியலில் சேர்ப்பது இழுக்கு. இனி, தமிழ்நாட்டைத் தாய் நாடாகக் கொண்டவன் தமிழன். ஒருவன் ஆயிரமாண்டாகத் தமிழ்நாட்டில் இருந்து வரலாம்; நான் தமிழன் என்னும் வாழைக்குக் கீழ்க் கன்று என்று சொல்லிக் கொள்ளலாம். அவன் தமிழ்நாட்டில் தன் புகழை நாட்டியிருக்கலாம். தன்னை நோக்கிக் தமிழரை மிதித்துக் கொண்டிருக்கும் பகை நாட்டானின் செயல் அறமா என்று கேட்டால் அறமே என்பான். அவன் என்ன நினைக்கின்றான்? எனில், தமிழனுக்குப் பகை நாட்டானா யிருந்தாலும் நம்மை ஆதரிக்கும் நம்முறவு நாட்டான்தானே என்று எண்ணு கின்றான். தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று தனி இயக்கமும் கொண்ட என் நண்பர் ஒருவர் இரண்டாவது உலகப் போர் நடந்த போது சென்னையில் இருந்த வடநாட்டார், தம் வட நாட்டை நோக்கி ஓடிவிட்டார்கள். அப்போதும் தென்னாட்டை விட்டுப் பார்ப்பனர் ஓடவில்லை. ஆதலால் பார்ப்பனர் தமிழரே என்று கூறினார். நண்பர் முடிவு தீய விளைவுக்குரியது. புறாப் பண்ணையை விட்டுக் கழுகு நகரவில்லையானால் கழுகு புறாவாகிவிடாது. இனி, தமிழருக்குரிய அடிப்படை ஒழுகலாறுகள், வாழ்க் கையில் இயற்கையாய் அமையப் பெற்றவன் தமிழன். தமிழர் ஒழுகலாறுகளில் சில வருமாறு - ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பது தமிழர் ஒழுக்கம். திருமகன் அருளப் பெற்றுத் திருநிலத் துறையும் மாந்தர் ஒருவனுக்கு ஒருத்தி போல உளமகிழ்ந்து ஒளியின் வைகிப் பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டொழிய, இப்பால் பெருவிறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசலுற்றான் - சீவக சிந்தாமணி, 2377 என்ற செய்யுளில், ஒருவனுக்கு ஒருத்திபோல உள மகிழ்ந்து என்ற தொடரை நோக்குக! ஒருத்தி ஒருவனையே மணக்க வேண்டும் என்பது பெறப்படுகின்றது. ஒருத்தி ஆடவர் பலரை மணப்பதும் உலகில் உண்டோ என்று கேட்கலாம். உலகில் என்ன? தமிழ்நாட்டில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திரௌபதி எப்படி? அவள் ஐவரை மணந்தவள். அதனால் பெரும் பழிப்பை ஏற்றவர் அல்லரோ ஐவர். அதனாலன்றோ, படுபழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற வடுஉரை யாவர் பேர்ப்பார்? வாய்ப்பறை யறைந்து தூற்றி இடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம காமம் நடுவுநின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான். - சீவக சிந்தாமணி, 211 எனச் சிந்தாமணியும் ஐவர் ஒருத்தியை மணந்ததைச் சிரித்தது. இனி, ஒரு தீயசெயல் செய்துவிட்டுப் பின் அதற்குக் கழுவாய் தேடும் தீயொழுக்கம் தமிழர்பால் இல்லை. இதனால் அன்றோ திருவள்ளுவர், எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேடல் மற்றன்ன செய்யாமை நன்று என்று கழுவாய் முறையை இகழ்ந்துரைத்தார். இனி, பிறவியில் உயர்வு தாழ்வில்லை; மக்கள் நிகர் என்று ஒழுகுவது தமிழர் ஒழுக்கம். பிறப்பு ஒக்கும், எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற திருக்குறளை நோக்குக. பிறவியில் உயர்வு தாழ்வு பேசுவது ஆரியர் ஒழுக்கம். நால்வகைச் சாதி இந் நாட்டினில் நாட்டினீர். என்று கபிலர் ஆரியர் கொள்கையை இழித்துரைப்பதும் நோக்கத்தக்கது. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று என்ற வள்ளுவர் வாய்மொழி காண்க! தீய வழியில் ஒன்றைத் தேடியடைதல் தமிழர்பால் இல்லை. இதனால், இன்றி யமையாச் சிறப்பின வாயினும் குன்ற வருப விடல். என்றார் வள்ளுவரும். தொல்லை நேர்ந்துழி அல்ல புரியலாம் என்று மநு நூல் கருதுகின்றதும் கருதத்தக்கது. இங்குக் காட்டிய தமிழரின் ஒழுகலாறுகளில் சிலவற்றை இந்நாள் தமிழர் கைவிட்டும் இருக்கலாம். ஆயினும் கைவிட்டவர்கள் வழுக்கி விழுந்தவர்களேயன்றி அவர்களின் உள்ளத்தின் இயற்கை நிலையினின்றும் மாறினவர் அல்லர். எனவே, ‘jÄH‹ ah®? என்பதற்கு விடை கீழ்வருமாறு:- தமிழே தாய்மொழி, தமிழ்நாடு தாய்நாடு, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம். என்னும் இம் மூவகைப் பேறும் பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே! - குயில், கிழமை இதழ், 1. 6. 1958, ப. 3, 10 67. ஆசிரியருக்கு அஞ்சல் வள்ளுவர் உள்ளம் முறைகோடி மன்னவன் செய்யில் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் இக் குறளின் கருத்து என்ன? அரசன் முறை தவறாக நடப்பானாயின், நீர்த் தேக்கங்கள் சீர்கேடு அடையும் காரணத்தால், அந்நீர்த் தேக்கங்கள் வானம் பெய்வதைத் தேக்கிவையா. - என்பது பரிமேலழகர், அரசன் முறை தவறாக நடந்தால் மழை பெய்யாது என்று பொருள் கூறுகிறாரே என்றால் அது பொருந்தாது என்றுதான் நாம் கருதுகின்றோம். நாம் கூறும் பொருளே பொருந்துவதாகும் என்பதை அடுத்த இதழில் விளக்குவோம். கேள்வி கேட்ட தமிழ்ப் புலவர்க்கு ஒன்று சொல்ல விரும்பு கிறோம். திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற நம் உரை அச்சாகி வருகிறது. மேலே புலவரால் கேட்கப்பட்டது போன்ற மிகப்பல குறட் பாக்களுக்கு அதில் பொருள் படைக்கும். அச்சாகி வருவதற்குள் தனித் தனியே இப்படிப் பொருள் கூறும்படி கேளாதிருக்க வேண்டுகிறோம். - முறைகோடி மன்னவன் என்ற குறட்பா உரை, குயில், 1. 6. 1958 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் இது கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் 2 ஆம் செய்யுள். இதற்குப் பரிமேலழகர் கூறும் பொருள் வருமாறு: மன்னவன் முறைகோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - அவனாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. இரண்டிடத்தும் கோடவென்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கேது வருகின்ற பாட்டாற் கூறுப என்பது. இவ்வுரையில் நமக்கெழும் கேள்வி என்னவெனில் மன்னவன் முறைகோடிச் செய்தால் அதைக் காரணமாகக் கொண்டு முகில் பொழிதலைச் செய்யா தொழியும் எனின், முகில் அறிவுடைப் பொருளா?-அறிவுடைப் பொருள் என்பதற்குச் சான்று என்ன?- இருக்க முடியாது. ஆனால் முகில் பெய்வதென்பது இயற்கையின் கொடை எனின் மறுப்பார் யார்? ஆதலின் பரிமேலழகர் கூறிய இப்பொருள் பொருந்துவதன்று என்பதோடு வேள்விக்கு மழை கட்டுப்படுவது என்று கூறி மக்களை ஏய்க்கும் ஓரினத்தாரின் கொள்கையை வலியுறுத்தவே இவ்வாறு பொருந்தாப் பொருள் புகன்றார் என்றும் அறிதல் வேண்டும். இச் செய்யுட்குரிய பொருள் வருமாறு: மன்னவன் முறை கோடி செய்யின் - அரசன் செய்யத்தக்க செயல்களை முறை தவறாகச் செய்வானாயின், உறைகோடி - (ஏரி குளம் முதலிய) நீர்த் தேக்கங்கள் சீர்கேடு அடைதலாலே. வானம் பெயல் -வானம் பெய்தலை, ஒல்லாது - தேக்குதல் செய்யமாட்டா என்பது. ஏரி, குளங்களை மண்ணெடுத்துக் கரை உயர்த்தி நீர் தேங்குமாறு செய்தால்தான் உழவுத் தொழில் நன்றாகிக் கழனிகள் விளைவு தரும் என்றார் என்க. இதில் உறை தொகுதி ஒருமை. அது தொழிலாகுபெயராய் உறையுமிடத்திற்கானது. உறு - முதனிலை. ஐ - தொழிற்பெயர் இறுதி நிலை. கோடி இரண்டும் கோட என்ற செய என்னும் வினையெச்ச திரிபுகள். பெயல் - இரண்டன் தொகை. மன்னவன் செய்யத்தக்க செயலை முறை தவறாகச் செய்த லாவது: உழவு, தொழில், வாணிகம், வரைவு, தச்சு, கல்வி ஆகிய அரசின் அறு துறைகட்கும் தக்க அமைச்சரை அமைக்காதிருப்பதும், அமைத்தும் மேற்பார்வை இடாதிருப்பதும் ஆகும். இவற்றில் வரைவு என்பது பொது வேலைகளைப் பழுது பார்க்கும் துறை. இதை இந்நாள் பொது மராமத்து இலக்கு என்பர். திருவள்ளுவர் இப்பாட்டை அருளிச் செய்ததால், அவர் முன்னாள் தமிழரசர்க்கு அந்நாள் புலவர்கள் சொல்ல வேண்டிய இன்றியமையாச் சொற்களைச் சொல்லி விழிப்பூட்டியருளினார் என்க. பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி குடபுலவியனார் என்ற புலவர் ஏரி குளங்களை மண்ணெடுத்துக் கரை உயர்த்த வேண்டியதன் இன்றியமையாமையை வற்புறுத்தி உள்ள ஓர் அரிய செய்யுளைப் புறநானூற்றினுங் காண்க. (புறம்: 18) முழங்கு முந்நீர் முழுவதும் வளையி இவண் தள்ளா தோரோ... ஏரி, குளங்களை மண்ணெடுத்து ஆழப்படுத்துவது நீர் ஊற்றுக் கருதி மட்டுமன்று. பெய்யும் மழையைத் தேக்கிவைக்க வேண்டும் என்பதைப் பெருநோக்கமாகக் கொண்டே அவ்வாறு செய்வாரென்க. இந்நாள் தொண்டை நாட்டிலே கேணியையும், கிணற்றையும் உறை என்றே சொல்லுவது கருதத்தக்கது. - குயில், 8.6.1958 68. படிக்க விருப்பந்தான் பள்ளியில் வகுப்பில்லை ... தமிழர்கள் இருட்டுக் கிடங்கில் குடிபுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு முன் அவர்கள் ஒளி தழுவிய வெளியில் நல்வாழ்வு நடத்தியவர்கள். ஆயிரத்து ஐந்நூறுயாண்டின் முற்பட்டதான இறந்தகால நிழற் படத்தை உற்றுநோக்குங்கள். தமிழர்கள் எல்லோரும் படித்தவர்கள். ஆயிரத்தொருவர் புலவர். பதினாயிரத்தொருவர் பாவாணர். பல்கோடி தமிழ்மக்களும் படித்தவர்கள். அவர்கள் ஒளியுலகில் நல்வாழ்வு நடத்தி இன்புற்றுக் கிடந்தார்கள். அதன் பிற்பட்ட காலத்தில் தமிழர்களின் நிலை மாற்றமடையத் தொடங்கியது. ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம் செல்வம் மாறிடும் ஏறிடும் அன்றோ? மாறியேவிட்டது. பிறக்கும்போதே ஒருவன் உயர்ந்தவனாம். ஒருவன் பிறக்கும்போதே தாழ்ந்தவனாம். தமிழர்கள் அனைவரும் தாழ்ந்தவர்களாம். அவர்கள் உயர்ந்த சாதியார்க்கு அடிமையாயிருந்து காலந்தள்ள வேண்டுமாம். தமிழர்கட்குப் படிப்பு ஒன்றா? அறிவுத்துறையில் அவர்கட்கு நாட்டம் ஏன்? என்றதொரு கொள்கை பரவிற்று. தமிழர்கட்கிடையில்! இந்த நெருப்பு மழைக்குக் குடை ஏது? கல்விக்கும் தமிழர்க்கும் தொடர்பற்றுப் போயிற்று. தமிழ்ச் சான்றோர் அனைவரும் தமிழரை நோக்கிக் கற்கை நன்றே கற்கை நன்றே என்று கதறினார். கற்க கசடற என்று கதறினார். இதற்கு மாறாகக் கல்வியின் பயனையே மறந்தனர். தமிழர்கள் இருட்டுக் கிடங்கில் குடிபுகுந்தனர். வெளியில் எட்டிப் பார்க்கவும் எண்ணினாரில்லை. தமிழரசர்கள் கோயில்கள் கட்டினர். எங்கும் பெரிது பெரிதாக அருளைத் தேடச் சொன்னார்கள். விரைவில் இறந்து ஒழியும்படி இருட்காலமே தலைதூக்கி நடந்துகொண்டிருந்தது. இப்போதுதான் இந்த நூற்றாண்டின் நடுவில் தான் ஒரு மின்னல் தோன்றிற்று. காதுகிழிய இடி ஒன்று இடித்தது. இருட்டுக் கிடங்கில் அடைபட்டிருந்த தமிழர்கள் வெளியில் எட்டிப் பார்த்தார்கள். ஒளி தழுவிய வெளி வாழ்க்கைக்கு நல்லதாகக் காட்சியளித்தது. கல்விப் பயனை உணர்ந்தார்கள். தம் மக்களின் கண்ணற்ற நிலையை எண்ணிக் கலங்கினார்கள். இந்த நிலை வரவேற்கத் தக்கதன்றோ? தமிழ் மக்களின் தலைவர் என்போர் ஆட்சியில் அமர்ந்துள்ளோம் என்போர் அனைவரும் இந்நிலை கண்டு மகிழ வேண்டுமன்றோ? கல்விக் கழகம் நோக்கித் தாம் பெற்ற மகனை - மகளைக் கையிற் பிடித்துச் செல்லுகிறார்கள்; கண்கலங்கித் திரும்புகிறார்கள்; வகுப்பில் இடமில்லையாம். அரசியல் தலைவரும் ஆளவந்தாரும் சிரிக்கிறார்கள், இந்த நிலை கண்டு! ஏன் எனில், சிபார்சுக்குத் தம்மிடம் வரவேண்டிய நிலை பெற்றோர்க்கு ஏற்பட்டுவிட்டதல்லவா? மெய்யாகவே, ஒரு மாணவருக்கு ஒரு துறையில் ஒரு வகுப்பில் இடங்கோரி ஆளவந்தார் வீட்டு - அரசியல் அலுவல் தலைவர் வீட்டுக் குறட்டுப் பந்தலின் காலைப் பிடித்துக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. ஆளவந்தார்கள் ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்கள். ஆயிரம் கோடி செலவிடப் போகிறோம் என்று காரில் திரிவதன் வாயிலாகவே அத்தொகையைச் செலவிட்டு வருகிறார்கள். வானக் கூரையைச் சிறிது தாழ்த்தப் போகிறார்களாம். வையத்தைச் சிறிது உயர்த்தப் போகிறார்களாம். கடலை பெரிதாக்கப் போகிறார்களாம். மலையைக் குள்ளமாக்கப் போகிறார்களாம். பயனுள்ள வேலையாக இருக்கலாம்; படிப்போர்க்கு வகுப்புக்கள் நிறைய ஏற்பாடு செய்ய வேண்டுமா இல்லையா? இன்றியமையாத வேலை எது? இன்று கோடிக்கணக்காக உள்ள தமிழ்மாணவர்களின் நிலை என்ன? கண்ணீரும் கம்பலையுமாகத் திரிகின்றார்களே வகுப்பு வாங்கித் தரும்படி. அவர்கட்கு வசதி செய்து தரும் வேலைதான் அரசினர்க்கும் ஆளவந்தார்க்கும் முதல்வேலை. - குயில், கிழமை இதழ், 8.6.1958, ப. 2 69. நன்றே செய்க! அதையும் இன்றே செய்க! எந்த வட்டாரத்தில் தி.க. கொள்கை பரவவில்லை - அந்த வட்டாரத்தில் விரைவில் பணி தொடங்குதல் வேண்டும். எந்த வட்டாரத்தின் தலைவர்மேல் உறுப்பினர்கட்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கின்றது? அந்தத் தலைவர், தம் பதவியை விட்டு விலகிக் கொண்டு அமைதியை நிலை நாட்டவேண்டும். அந்தத் தலைவர் விலகாவிட்டால் பெரியார் அவர்களே சொல்லி விலகும்படி செய்ய வேண்டும். எந்த வட்டாரத்தின் தலைவரிடமுள்ள உறுப்பினர் பட்டியல் குறுகலாய் இருக்கின்றது? அந்தத் தலைவர் அப்பட்டியலை விரிவு படுத்த வேண்டும். அந்தத் தலைவர் மறைவான காரணத்தால் உறுப்பினர் தொகையை விரிவுபடுத்தவில்லையானால் அந்தத் தலைவர் செய்கையை உற்றுக் கண்காணிக்கவேண்டும். எந்தப் பகுதியில் கழகக்கொடி பறக்க வில்லை? அங்குக் கழகக்கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும். எந்தப் பகுதியில் விடுதலை பரவவில்லை? அங்கு விடுதலையைப் பரப்பக் கண்ணும் கருத்துமாய்ப் பணிசெய்ய வேண்டும். எந்தப் பகுதியில் கழகக் கொள்கை பற்றிய நூற்கள் பரவவில்லை? அங்கு நல்லெண்ணத்தோடு - பொறுப்போடு பரப்ப வேண்டும். எந்தத் தனி உறுப்பினர், எந்த அலுவலக உறுப்பினர், எந்தத் தலைவர், கண்ணீர்த் துளிகளிடமோ காங்கிரகாரர்களிடமோ, கம்யூனிட் களிடமோ தொடர்பு வைத்திருக்கிறார்கள்? - அவர்களுக்கு உடனே நல்லறிவு புகட்டவேண்டும். இப்படியெல்லாம் நாம் கூறுவதால் எந்த வட்டாரத் தலைவரும், உறுப்பினரும் வருத்தப்படமாட்டார்கள் என்று நம்புகின்றோம். இன்று இந்த உலகத்தில் தி.க. உறுப்பினர் போன்ற தன்னல மறுத்த தவத்திருவாளர்களைக் காணமுடியாது. உடல், பொருள், ஆவி இம் மூன்றையும் கழக முன்னேற்றத்திற்குத் தமிழர்களின் பொது நலத்திற்கு அளித்த-அளிக்கின்ற தவத் திருவாளர்களைப் பெரியார் விலாப்புறத்திலன்றி வேறு எங்கு காணமுடியும். இத்தகைய மேன்மைப் பண்புடையவர்கள் சிறிது சோர்வு கொண்டது கண்டு நினைவுறுத்தினால் வருத்தமோ அடைவார்கள்? மகிழ்ச்சியல்லவா கொள்வார்கள்! ஒரு வட்டாரத்தில் கூட்டம் நடக்கிறது. இருபத்தையாயிரம் பேர் ஆர்வத்தோடு ஆடாமல் அசையாமல் இருந்து கேட்கின்றார்கள். கூட்டம் முடிகிறது. அந்தக் கூட்டத்தைக் கூட்டிய வட்டாரத் தலைவரை நோக்கி உங்கள் தலைமையின் கீழ் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று கேட்டால் அவர் நான் ஒருவன் தான் இருந்து தொண்டு செய்து கொண்டிருக்கின்றேன் என்கிறார். இன்னும் சில தலைவர்கள் ஐந்துபேர் பத்துப்பேர் இருப்பதாகக் கூறுகின்றார்கள். உறுப்பினர் கணக்கு இப்படியானால் கழகக் கொடிக் கணக்கு எப்படி என்றால் நல்ல பார்வையான இடத்தில் பல கட்சிகளின் கொடிகள் காட்சியளிக்கின்றன. தி.க. கொடி எங்கே என்றால் என்ன கொடி எதற்கு என்று திருப்பிக் கேட்கிறார்கள். கொடிக் கணக்கு இப்படியானால் விடுதலைக் கணக்கு எப்படி என்றால் தலைவரை நோக்கி இந்த ஊர்ப் புகைவண்டி நிலையத்தில் தான் விடுதலை கிடைக்கவில்லை. இங்கு இருந்தால் ஒன்று கொடுங்கள் என்றால் ஏஜண்டு இந்த ஊரில் இல்லை என்கின்றார். இந்த நிலைக்கு அந்தந்த வட்டாரத் தலைவர்க்கு நாணம் இருக்க வேண்டாமா? தலைவர் என்போரும், கழக உறுப்பினர் என்போரும் இரவு வரக்கண்டவுடன் இன்று நாம் கழகத்திற்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? - குயில், கிழமை இதழ், 1.7.1958, ப.2 70. உடன் ஒத்துழைத்தல் கடன் தமிழர்கட்கு! குயில் இரண்டாம் முறையாகத் துவக்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட ஆதரவு பெருகிவருகின்றது. இப்பெருக்கம் தமிழர்களிடையே வலுத்துவரும் தமிழ்ப்பற்றைக் காட்டுகின்றது. தமிழ்நாட்டுப் பற்றைக் காட்டுகின்றது. இந்நிலைக்குக் காரணம் பெரியார் இயக்கம் ஒன்றே என்பதை நாம் மறந்தால் வாழ்வே நம்மை மறக்கும். குயிலுக்கு உடன் ஒத்துழைத்தல் கடன் தமிழர்கட்கு! குயிலுக்கு - குயிலின் மேன்மைக்கு - குயிலின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் ஒத்துழைப்பதாகும். இம்முத்தமிழ் நாட்டின் விடுதலைக்கு ஒத்துழைப்ப தாகும். இனி குயிலுக்கு ஒத்துழைக்கும் புலவருக்கும் எழுத்தாளருக்கும் எமது அன்பு வேண்டுகோள். சற்று நினைவுகூர்ந்து, தனித்தமிழிலேயே கட்டுரை, பாட்டு எழுதியுதவுக கூடிய மட்டும். சாதி ஒழிக - தமிழ்நாடு மீள்க. என்னும் உயிர் மருந்தே கொள்கை யாகக் கொண்டு தமிழர் மானங்காக்கும் பெரியார் இயக்கத்தில் - தி.க. இயக்கத்தில் உண்மைப் பற்றுடையவர்கள் மட்டும் குயிலை - எழுத்தால் - பிறவகையால் ஆதரித்தால் போதும். அக்கொள்கையை இனி ஆதரிக்க எண்ணுவாரும் எழுதலாம். எழுத்துக்கள் வரவேற்கப்படும். நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ நூறு புலவர்கள் பாவாணர்கள் பாட்டு எழுதி அனுப்புகின்றார்கள். தமிழ் வாழ்க! தமிழ்நாடு வெல்க! ஆயினும் அவை அனைத்தையும் குயிலில் உடனுக்குடன் வெளியிட எப்படி முடியும்? இயலும் அளவு வெளியிடுவோம். இயலும்போது வெளியிடுவோம். பொறுத்தருள்க. மற்றொன்று குயிலின் கொள்கையின் முன்னேற்றத்தை இன்னும் விரைவு படுத்த எண்ணிப் பெருமுயற்சி செய்து உதவலாம். பெரியோர்களும், எழுத்தாளர்களும், குயில் விற்பனையாளர்களும்! குயிலில் வரும் இசைப்பாடல்கட்க்கு ஏற்ற இசை அமைத்துப் பாடுகின்றதெருப் பாடகர் குழுவை ஏற்படுத்தலாம். அக்குழுவானது விடுதலை, குயில், ஈரோட்டுப் பாதை முதலிய ஏடுகளையும், விடுதலை நிலையச் சுவடிகளையும் அவையில்லாத இடங்களில் இருக்கும்படி செய்யும் ஓர் விளம்பர நிறுவனமாகத் திகழ வேண்டும். ஆங்காங்குள்ள புகைவண்டி நிலையத்தில், குயிலும் விடுதலை முதலியனவும் விற்கப்படவேண்டிய வகையில் முயலுவதும் இன்றி யமையாது வேண்டப்படும் தொண்டாகும். - குயில், கிழமை இதழ், 22.7.1958, ப. 3 71. தமிழ் மாணவர் ஆவல்! ஒருவன் வாழ்வு அவன் பிறந்த நாட்டின் மக்களுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது. அவன் கற்கும் கல்வியும் அவன் காணும் வழிகளும், அவன் ஈடுபடும் துறைகளும், அவன் ஆற்றும் பணிகளும் அவனுக்கு மட்டுமின்றி, அவன் நாட்டுமக்கட்கும் பயன்படுவனவாகும். ஒரு நாட்டின் வேரிற் பிணைந்துள்ள பண்பாடுகளினின்று அந்நாட்டினன் ஒருவன் பிரிந்து வாழமுடியாது. வாழ்கின்றானே அதோ ஒருவன் எனின் அது தற்போதைய தோற்றம்! அவன் மண்ணோடு மண்ணாய் மறைந்து போகவேண்டும். அது இயற்கையின் திட்டம்! அறிவு, வளர்ந்துகொண்டே - விரிந்துகொண்டே செல்லும் இயல்புடையது! கல்வி ஏனெனில், அந்த வளர்ச்சியை - விரிவை, விரைவுபடுத்த உதவுகின்றது. தமிழ் மாணவன், காலத்தால் மிகப் பழைய ஆள்! அவன் அறிவு வளர்ந்து கொண்டு, விரிவடைந்து கொண்டு வருகின்றது பதினாயிரக் கணக்கான ஆண்டுகளாக! இடையில் மறைப்பு ஏற்பட்டிருக்கலாம். துண்டிப்பு ஏற்பட்டிருக்க முடியாது. கண்ணுக்குத் தோன்றாமல் இருந்திருக்கலாம். தொடர்ச்சி யற்றுப் போகமுடியாது. தமிழ் மாணவனின் இன்றைய அறிவின் நிலை மகிழ்ச்சிக் குரியது. அது விரைவுபடுத்தப்படுகின்றது கல்வியால்! கல்வி தமிழ் மாணவனை இருகை ஏந்தி வரவேற்கின்றது! தமிழ் மாணவன் கல்வியின் இன்றியமையாமையை உணர்கின்றான். அவன் தனக்குரிய பண்பாடுகள் எவை? என்பதை உணர்கின்றான். அவன் தொண்டு செய்ய பதைக்கின்றான். மறுப்பார் பெற்றோ ரானாலும் கற்றோரானாலும் எதிர்க்கின்றான். நான் எனக்கு மட்டுமா வாழவேண்டும்? என்று கேட்கின்றான். என் தொண்டு எனக்கு மட்டுமா? என்று கேட்கின்றான். என் நினைப்பின் ஒவ்வோர் அணுவும், என் செயலின் ஒவ்வோர் அணுவும் என் நாட்டின் நலனை ஊட்டம் செய்ய வேண்டும் என்ற சரியான முடிவுக்கு அவன் வந்துவிட்டான் எனில் அது இயற்கையின் முத்தாய்ப்பு அல்லவா? எத்தனை வகையான அழைப்புக்கள்! எத்தனை வகையான கருத்துக்கள்! எத்தனை வகையான தேவைகள்! எத்தனை வகையான இயக்கங்கள்! எத்தனை வகையான ஏமாற்றுப் பேச்சுக்கள்! எத்தனை வகையான வஞ்சனை முழக்கங்கள்! அவன் காதில் அலையடித்துக் கொண்டு வந்து சேருகின்றன! நான் தொண்டு செய்ய வேண்டும்! நான் தொண்டு செய்ய வாய்ப்பு வேண்டும்! எங்கே? எந்த இயக்கத்தில்? எது தமிழ்த்தாயின் தமிழகத்தின் கட்டளை? எது தமிழ்த்தாயின் தமிழகத்தின் பசி? அவன் உற்று ஆராய்கின்றான். ஒரு குரல்: தமிழர் ஒருதாயின் மக்கள் சாதி என்பது சழக்கர் விட்ட கரடி! ஒன்றுபடுக தமிழரே! நன்று மீட்போம் தமிழகத்தை என்கின்றது. தமிழ் மாணவனைத் தடுக்க முடியுமா? அதோ தாவி ஓடுகின்றான் தொண்டு செய்ய, அறங்காக்க - தமிழர்கள் வாழ - தமிழ்நாடு வாழ - தமிழ்நாடு வெல்க! அவன் முன் திரிக்கப்படும் சரடுகள் பிசுக்குப் பிசுக்கென்று அறுகின்றன! வெல்க தமிழகம்! - குயில், கிழமை இதழ், 29.7.1958, ப. 2 72. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - I அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாழ வேண்டும் இளவரசர் முத்தையா அவர்கட்கு என்விண்ணப்பம். தமிழ்ப் பல்கலைக்கழகமாகித் திகழ வேண்டும் எனக் கருதி நிறுவப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அண்ணாமலை யரசரால்! உங்கள் அருமைத் தந்தையாரால்! ஆதலால் அந்த நிறுவனம் தமிழுக்கும், தமிழருக்கும் நன்மை பயப்பதாயிருக்க வேண்டும். தமிழுக்கும் தமிழருக்கும் அமைந்த மேம்பாட்டுக்குக் குறைவு நேராத வகையில் நடந்து கொள்ளவேண்டும். இதுவரைக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் என்ன நன்மை செய்தது இந்த நிறுவனம்? நிறுவனத்திற்குத் தமிழர் காட்டும் ஆதரவின் எடைக்கெடையாகக் காட்டவேண்டிய சலுகையையாவது தமிழுக்கும் தமிழருக்கும் காட்டிய துண்டா நிறுவனம். காட்டியதுண்டு என்றால் யாருக்கு? தமிழின் வேருக்கும் தமிழர் வாழ்வின் வேருக்கும் வெந்நீர் பாய்ச்சுவார்க்கே இன்றுவரைக்கும் அந்த நிறுவனம் சலுகை காட்டிற்று. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்பட்டது 1929 என்று நினைக்கின்றேன். இந்த ஏறத்தாழ 30 ஆண்டாக தமிழரைத் தமிழை எவ்வளவோ முன்னேறச் செய்திருக்கலாம். முன்னேறச் செய்வதற்கு மாறாகப் பிற்போக்கை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். பேராசிரியர்களாகப் பார்ப்பனரையே போட்டுத் தமிழைக் கெடுத்து வந்துள்ளது. தமிழரின் மேன்மையைக் குறைத்து வந்துள்ளது நிறுவனம். ரா. ராகவையங்கார் தமிழ் வரலாறு என ஒரு நூலைச் செய்தருளினார். நிறுவனம் அவருக்குக் கொடுத்த ஆணவத்தால் சுப்பிரமணிய சாத்திரி என்பார் (தொல்காப்பியம்) சொல்லதிகாரம், வரலாற்று முறை தமிழ்வாசகம் முதலிய நூற்களை எழுதியதன் வாயிலாகத் தமிழின் தமிழரின் உண்மை வரலாற்றையே தலைகீழாக்கி யருளினார் நிறுவனத்தின் அருளினால். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு, பார்ப்பானைக் கொண்டு ஊர்ப்பானையைக் கவிழ்ப்பதே இதுவரைக்கும் மகிழ்ச்சி தரும் செயலாக இருந்துவந்தது கண்கூடு. இந்தச் செயலெல்லாம், பாழாகிப் போய்விடவில்லை. பார்ப்பனர் கட்சிக்கு நல்ல பயனை அளித்து வந்தது - வருகின்றது இன்றுவரைக்கும். இதோ பாருங்கள்! திராவிட மொழியாராய்ச்சித் துறையில் புகுந்து தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், சேதுப்பிள்ளையும் விளையாடும் கத்தி விளையாட்டை! இளவரசரே உம்முடைய தாய், உம்முடைய தாய்மொழியாகிய - தமிழ், வடமொழியினின்று வந்ததாம். உம்முடைய நாகரீகம் - தமிழ் நாகரீகம், வடவர் நாகரிகத்தினின்று வந்ததாம்! இவ்வாறு கத்தி விளையாட வில்லையா அதோ தங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்! தென்பெருந் தமிழகத்தில் ஒன்றுமே இருந்ததில்லையாம். தலைக்கழகம், இடைக்கழகம் என்பன கட்டுக்கதைகளாம். குமரிநாடு என்ற பேச்சே பொய்ப்பேச்சாம். இவ்வாறு கூறுவதோடு அந்த அறியாமையும் வயிறு வளர்க்கும் ஆசையும் உடையவர்கள் தமிழின் உண்மையை எடுத்துக்கூறும் அறிஞர்களையும் தொலைக்கப் போகின்றார்களாம். இவர்களையும் இவர்களை ஆதரிக்கும் ஆட்களையும் தொலைக்கும் நாளை இவர்களே குறித்துக் கொண்டார்களா என்று கேட்க நான் ஆசைப்படுகிறேன். வண்ணாத்தி என்பது வண்ணாதிரி என்ற வடசொல்லின் சிதைவாம். இப்படி எல்லாம் வடசொற்களினின்றே வந்தனவாம் தமிழ்ச்சொற்கள்! bj.bgh.Û., சேது இவர்களை நோக்கி நீங்கள் கேட்கவேண்டும்; உங்களுக்குக் கெட்டுப்போகும் காலமா என்று. இளவரசரே, நாழிகைதோறும் கைவலிவு ஏறுகிறது. தெ.பொ.மீ. சேதுக்களுக்கு நீங்கள் தூங்கவேண்டாம். இன்னும் தொடர்ந்து எழுதுகின்றேன். தமிழ்த்தாயின் வாழ்வு ஒழிக்கப்படுவதை! நீங்கள் இப்போதே செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். bj.bgh.Û., சேது இருவரையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று திராவிடமொழியராய்ச்சிக் குழுவினின்று துரத்திவிட வேண்டும். உங்கட்கு எத்தனையோ வேலைகள் இருக்கும். ஆயினும் சற்றே திருப்புங்கள் இந்தச் சூழ்ச்சிக் காரர்களின் பக்கம். கேட்டுப் பாருங்கள் அங்குள்ள தமிழ்ப்புலவர்களை! கேட்டுப் பாருங்கள் திராவிட மொழியாராய்ச்சிக் குழுவில் உள்ள இராமநாதன் முதலிய தூய தமிழ்ப் புலவர்களை. தமிழுணர்வு மிகுந்த காலம் இது! தமிழர் தம் நிலையைக் கூர்ந்து நோக்கி வரும் காலம் இது. வாழாது வாழ்ந்த ஓரினத்தை, ஒரு தனிமொழியை அடியோடு கவிழ்க்கும் வடவர் முயற்சியை முளையிலேயே கிள்ளிவிடுக. இல்லை எனில் பெருங்கொந்தளிப்பு ஏற்படும் தமிழ்நாட்டில், தமிழாராய்ச்சிக் குழுவில் மிகுபெரும்பாலோர் பார்ப்பனரும், அவர் அடிவருடி களுமா? இதுபற்றித் தொடர்ந்து எழுதுவேன் விளக்கமாக! - குயில், கிழமை இதழ், 19.8.1958, ப.2-3 73. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - II பைந்தமிழ் ஒழிக்கும் பாழுங்கிணறா? திராவிடமொழி ஆராய்ச்சி செய்யப்படவேண்டும் என்ற எண்ணம் கருப்பத்தினின்று வெளிவந்தபோதே தமிழர்கள் தம் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் தை தை என்று கூத்தாடினார்கள். அப்போதே இந்த எண்ணத்தை உருப்படவைப்பார்களா வடக்கர் என்று நாம் ஐயுற்றதுண்டு. ஆனால் அது உருவாயிற்று. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அத்திட்டத்தை ஒப்புக்கொண்டு செயற்படுத்தவும் தொடங்கிற்று. முதலில் அது அதற்கொரு குழுவை ஏற்படுத்தவேண்டும். அறிஞர்கள் அகப்படவில்லை. நம் பன்மொழிப்புலவர் ஒருவர்தாம் இருந்தார் தமிழ்நாட்டில். உடனடியாக அவரை மட்டும் ஏற்படுத்தி னார்கள். தேவநேயப் பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதற்கெனக் குறிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து வேலையையும் தொடங்கினார் அவ்வளவுதான் ... ! நீள, நீள அஞ்சல்கள் பறந்தன வடநாட்டை நோக்கி! நீள நீளத் தந்திகள் பறந்தன வடநாட்டை நோக்கி! போதுமா? தமிழ்நாட்டிற் கிடைத்த படித்த அடிமைகளைப் பிடித்துத் துரத்தினார்கள் வடநாட்டை நோக்கி! திராவிட மொழியை நடுவு நிலையினின்று ஒருவரோ - ஒரு குழுவோ ஆராயும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டால் வடமொழி தன் தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ளநேயம்; வடமொழிச் சார்பான இந்தி முதலிய மொழிகள் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, உலக மொழிகளில் தலையாய சில மொழிகளும் திராவிட மொழியால் வளர்ச்சியடைந்த கதை, மலிவுப் பதிப்பாகிவிடும். இவ் வாறாகவே வடவர் மொழிகளாகிய சருகுகள் காற்றில் பறக்க யாரைக் கேட்க வேண்டும்? அஞ்சல் பறந்ததில் வியப்பென்ன? தந்திகள் பறந்ததில் வியப்பென்ன? அடிமைகள் வடநாடு ஓடியதில் வியப்பென்ன? வடநாடு இந்தக் கோளர்கட்கு நூற்றுக்கு நூறு ஒத்திருப்பதாகக் குறிப்புக் காட்டிற்று. கூலிகளாகிய இந்த கோளர்கள் சும்மா இருப்பார்களா? தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சொன்னார் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் திராவிட மொழி ஆராய்ச்சிக் குழுவை மேற்பார்வை பார்க்க ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று. இப்படி தெ.பொ.மீ. சொன்னதின் பொருள் என்ன? தம்மை இப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். தெ.பொ.மீனாட்சியாருக்குத் துணைவேந்தர் ஒத்துப் போகாமலா இருப்பார்? ஒத்துக் கொண்டது மட்டுமன்று. தலையில் துணியைக் கட்டிக் கொண்டு களத்திலே இறங்கிவிட்டார். வடக்கிலும் தெற்கிலும் இவ்வாறு எக்கச்சக்கமான கருங்காலிகளின் ஆதரவை எண்ணுந் தோறும் தெ.பொ.மீ. வறுவடைச் சட்டியில் நெற்பொரி போலக் குதிப்பார். கக்கத்துக் கத்தியை நன்றாகத் தீட்டிக் கொள்வார். ஓடுவார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாவாணரிடம். தேவநேயப் பாவாணரே, நீர் உம் வாயைத் திறக்கவே கூடாது. திராவிட மொழியின் உண்மையை வெளிப்படுத்தவே கூடாது. வெளிப்படுத்தினால் தொல்லை வரும். இப்படி ஒரு கூலி! கையிருப்பில்லாத ஓர் ஆள் எண்ணெயில் விழுந்த பண்ணியம்போல் குதிப்பதென்றால் பாவாணருக்கு வியப்பாய் தான் இருந்திருக்கும். ஆனால் உற்றுநோக்கித் தெ.பொ.மீ.யின் முதுகில் துணைவேந்தரும் இருப்பதைத் தெரிந்துகொண்டவராய் எண்ணக் கடலில் தொபீர் என்று விழுந்திருப்பார் பாவாணர். இது பூச்சாண்டி இயக்கமாகப் போய்விடவில்லை. வடஇந்தியாவில், திராவிடமொழியை இருந்த இடம் தெரியாமல் ஒழித்தல் வேண்டும் என்ற எண்ணமுள்ள பெரிய பெரிய தலைவர்கள் பெரிய பெரிய பேராசிரியர்களோடு இந்த தெ.பொ.மீ. கலந்து உறவாடு வதைப் பாவாணர் நேரே கண்டார். தெ.பொ.மீ., சேது, நாராயணசாமிப் பிள்ளை ஆகியோருக்கு வடநாட்டுத் தலைவர்கள் இன்னின்ன வகையில் பதவிகொடுப்பதாய் வாக்களித்துள்ளார்கள் என்பதையும் பாவாணர் கேள்விப்பட்டிருப்பார். பாவாணர் உள்ளம் அதிர்ச்சி அடைந் திருக்கும். ஆயினும் தளர்ந்திராது. ஏனெனில் பாவாணர் சட்டைப் பையில் நாலுகோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். எங்கேயோ இருந்த அதே தெ.பொ.மீ. இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? அதே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே! என்ன சம்பளம் தெரியுமா? ஆயிரத்து ஐநூறு வெண்பொற்காசுகள். இந்தத் தொகை தனிச்சலுகை காட்டுகின்றது. தமிழ்ப்புலவர்களே காட்டிக் கொடுக்கும் bj.bgh.Û.க்F நீங்கள் எல்லோரும் அஞ்சி நடுங்குங்கள் என்று கூறுகின்றது அந்தத் தொகை! இன்னும் இதுபற்றி விரிவாகப் பின்னர் எழுதலாம். இப்போது அமைக்கப்பட்டிருக்கும் திராவிட மொழியாராய்ச்சிக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். தலைவர் டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி மற்றவர்கள் டாக்டர் எ.எம்.காட்டர் திரு. A. சுப்பையா டாக்டர். R.P. சேதுப்பிள்ளை திரு. லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் திரு. சீகாந்தையா டாக்டர். மு.வரதராசன் டாக்டர். மா. இராசமாணிக்கம் திரு. பி. திருஞானசம்பந்தம் திரு. தேவநேயப் பாவாணர் திராவிட மொழியாராய்ச்சிக் குழு இதுதானே! இதில் தெ.பொ.மீ. இல்லையே! ஆனாலும் இந்தக்குழு கூடும்போது தெ.பொ.மீ. கட்டாயமாக உடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறாராம். பருப்பில்லாமலா திருமணம்? அந்தக் குழுவில் தீர்மானங்கள் உருவாக்கப்படவேண்டுமே அதெல்லாம் தெ.பொ.மீ. தான். அந்தத் தீர்மானங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமே அதெல்லாம் தெ.பொ.மீ. தான். mªj¡ FGÉd® bj.bgh.Û., சேது, சட்டர்ஜி ஆகியோரின் முடிவுக்கு ஒத்துவரவேண்டியதற்காக மற்றவர்கள் நடுங்கவைக்க வேண்டுமே அதெல்லாம் தெ.பொ.மீ.தான். குழுவுக்குத் தலைவராக போடப்பட்டிருக்கும் சுனித்குமார் சட்டர்ஜி யார் தெரியுமா? சமகிருதத்தை உயிர்ப்பித்து அதை உலகிலும் தென்னாட்டிலும் பரப்ப வேண்டியதற்காக நிறுவப் பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர், பார்ப்பனர். இவர் திராவிட மொழியை ஒழித்துக்கட்டிவிட்டு மறுவேலை பார்ப்பதாக வாயில் வாய்க் கரிசி போட்டுக்கொண்டு தென்னாட்டிலே வந்து குந்திக்கொண்டிருப் பதைக் கொண்டே இவருடைய முனைப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். எப்படித் தலைமைக்கு ஆள் தேடிப்பிடித்துள்ளார்கள் பார்த்தீர்களா? திறந்தபெட்டிக்கு திருடனையே காவலுக்கு வைத்தது போல இல்லையா? இன்னும் இதில் தெரிந்துகொள்ளவேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால் நாவலந்தீவின் முதல்வர் நேருவே சட்டர்ஜியைக் கண்டு முடுக்கி அனுப்பினாராம். திராவிடம் தனக்குரிய மேன்மை, தகுதியினின்று துண்டாடப் படாவிட்டால் திராவிடர் இந்தியை ஒப்புக்கொள்வது எப்படி? இது அவர்களுடைய மாற்ற முடியாத எண்ணம். நேரு இதில் காட்டும் ஊக்கந்தான், மக்கள் நிலையில் வைத்து எண்ண முடியாத தெ.பொ.மீ., சேது ஆகிய இரு பிள்ளைகளும் அளவு கடந்த நெஞ்சுறுதியோடும் சுறுசுறுப்போடும் இந்த அழிப்பு வேலையில் இறங்கியதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஒன்று கேளுங்கள். இந்தக் கையிருப்பில்லாத சேதுப்பிள்ளை, தேவநேயப் பாவாணர்க்குப் பின்னால் சேர்க்கப்பட்ட சேதுப்பிள்ளை. திராவிட மொழி ஆராய்ச்சிக் குழுவினின்று தேவநேயப் பாவாணர் நீக்கப்பட வேண்டும் என்று மேலவர்க்கு அறிவிப்பு ஒன்று விளாசு விளாசென்று விளாசி இருக்கிறாராம். சேதுப்பிள்ளைக்குத் தெரியும் இந்தக் குழுவில் தமிழர்கள் பாவாணரை நம்பியிருக்கிறார்கள் என்று. சேதுப்பிள்ளைக்குத் தெரியும் தேவநேயப் பாவாணருக்கு வரும் தீமை தமிழர்க்கு வந்த தீமையாகும் என்று. அப்படித் தெரிந்தும் சேதுப்பிள்ளை இப்படிப் பெரிய கழி எடுத்து விளையாடுகின்றார் என்றால் பெரிய இடம் தமிழர்களைப் பார்த்துப் பல்லை நறநறவென்று கடிக்கிறது. - குயில், கிழமை இதழ், 26.8.1958, ப. 2-4 74. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - III டாக்டர் சட்டர்ஜி முன்னுரை சென்றவாரக் குயிலின் தலையங்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் திராவிட மொழி ஆராய்ச்சிக் குழுவின் அமைப்பைத் தெரிவித்திருந்தோம். அதில் தலைவராகத் தேடியமைக்கப் பட்டிருக் கும் டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜியின் போக்கும், அவர் மேற் போட்டுக் கொண்டிருக்கும் சமத்கிருதப் பறையடிப்பும் மற்றும் பலவும் சொல்லியிருந்தோம். அவரை முன்வைத்தே தமிழரை ஒழித்துக்கட்டிக் கூலிபெறவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் கோடாரிக் காம்புகள் இன்னின்னார் என்பதையும் சொல்லியிருந்தோம். இத்தலையங்கத்தில் டாக்டர் சட்டர்ஜி முன்னுரையில் சில பகுதிகளை எடுத்துக்காட்டி அவர் முகத்திரையை கிழித்தெறிய எண்ணுகின்றோம். சென்ற ஏப்ரல் 1957 வாக்கில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் - திராவிடமொழி ஆராய்ச்சிக் குழு முதலாவதாகக் கூடியது. அக்குழுவின் தலைவர் டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி அல்லவா? அவர் தலைமையுரை - முன்னுரை கூறவேண்டுமல்லவா? அவ்வாறு அவர் கூறிய முன்னுரை 34 பக்கங்கள் கொண்ட நூலாக அச்சிட்டிருக்கின்றார்கள்; தமிழில் அல்ல; மலையாள மொழியிலல்ல; கன்னட மொழியில் அல்ல; தெலுங்குமொழியில் அல்ல. திராவிட மொழிக் குடும்பத்திற்குத் தொடர்பில்லாத ஆங்கிலத்தில்தான். அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? திராவிட மொழிகள் ஒன்றையும் காதால் கேட்டதுமில்லை சட்டர்ஜி. இவ்வாறு வெளியிடப்பெற்ற நூல்கள் எத்தனை என்றால் ஆயிரக்கணக்கில்! வெளியில் தலைகாட்டிய படிகள் எத்தனை என்றால் பதினைந்தே! மீதியாக உள்ள படிகள் எல்லாம் எங்கே என்றால் மீனாக்கி அழகும், சேதுவும் ஆகிய இரு பிள்ளைகளும் தங்கள் வீடுகளின் பின்கட்டில் உள்ள அறையில் அடுக்கிவைத்துக் கொண்டார்களாம். நல்லவேலை செய்தார்கள். வெளியில் மலிந்தால் தமிழர்களின் மூளையைக் கலக்க நேருமல்லவா? நஞ்சு கலப்பது, ஊசி மருந்தாக்குவது, ஊசி ஏற்றுவது, ஒட்ட மயிரை மாய்ப்பது, சுடுகாட்டில் சுடுவது, சாம்பலைக் குவிப்பது ஆகிய செயல்களையெல்லாம் திரைமறைவில் செய்து முடித்துக்கொண்டு, சாம்பலின் குவியல் மேல் ஏறிநின்றுகொண்டு. எங்களைக் காட்டிக் கொடுக்கும் திருப்பணிக்கு வெற்றி! ஒழித்தோம் தமிழன்னையை! ஒழித்தோம் தமிழ் மேன்மையை, ஒழித்தோம் தமிழர் துடுக்கை, நாங்கள் மக்களினத்தைச் சேர்ந்தவர் களா? இல்லை இல்லை. ஈடும் எடுப்பும் இல்லாத ஓநாய்ப் சிறப்புக்கள்! மீனாக்கி அழகு என்றும் சேது என்றும் பிறந்த பிள்ளைகள் நாங்களா? இருகொள்ளிக் கட்டைகள். என்று முடிவுக் கூத்தாடுவார்கள். அதற்குள் படிகளை நரிச்செயல்களை வெளியிடுவார்களா? வெளியிடக் கூடாதல்லவா? முன்னுரை தொடங்குகின்றார் சட்டர்ஜி. ஆனால் அந்த முன்னுரை திராவிட மொழியாராய்ச்சி முன்னுரை இல்லை. அதற்கு முற்றும் மாறான ஒன்று பற்றிய முன்னுரை. அவர் சொன்னது: திராவிட மொழி ஆராய்ச்சியை இருகூறாகப் பிரித்து நடத்தலாம். ஒன்று திராவிடமொழிக்குள்ளேயே ஆராய்ச்சி நடத்துவது; மற்றொன்று திராவிட மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்துவது. பயிருக்குக் களைபிடுங்க வந்த சட்டர்ஜி பயிரை மேயவரும் காளைக்கும் அண்ணாந்தாள் கழற்றப் போகிறாராம். நேரே செல்ல மனமில்லை சட்டர்ஜிக்கு. தம்மூர்க்குச் செல்லும் கொடி வழிக்கு வழிகாட்டுகிறார், திராவிட மொழியாராய்ச்சி என்ற தலைப்பைவிட்டு எங்கேயோ ஓடுகிறார். முன்னுரையே மற்றொன்று விரித்தலாகிறதல்லவா? என்ன அழகாக முடிச்சவிழ்க்கின்றார்! இன்னும் கேளுங்கள். முற்காலந்தொட்டு ஆரியர்களும் திராவிடர்களும் வெளிநாடு களிலும், இந்தியாவிலும் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்கிறார் சட்டர்ஜி. இதனால் சட்டர்ஜி சொல்ல வருவது என்னவெனில், திராவிடரும் வேறுநாட்டிலிருந்து இங்கு ஆரியர்போல வந்தவர்களே என்பதாம். இன்றைக்குப் பார்ப்பனரால் மாற்றியமைக்கப் பட்டு வரும் இந்திய வரலாற்றை உறுதிசெய்கின்றார் சட்டர்ஜி! ஆரியர் இங்கு ஆடு மாடுகள் ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் என்ற உண்மை சட்டர்ஜிகளுக்கு இழிவை உண்டாக்குகின்றது. தமிழரும் அவர் போலவே வந்தவர்கள் என்று கூறுவதில் சட்டர்ஜிகளுக்கு மகிழ்ச்சி. இப்போது இராஜகோபாலாச்சாரி கூட்டம் புதுப்பல்லவி தொடங்கியதில் நாமெல்லாரும் வியப்படைந்தோம். அவர்கள் சொல்லுவார்கள் ஆரியர்-திராவிடர் என்ற பிரிவு - கலந்துபோய் விட்டது என்று. அதையும் சட்டர்ஜி, தம் முன்னுரையில் குறிப்பிட்டுவிட்டார். மேலும் சட்டர்ஜி ஆரியர் திராவிடர் சண்டைக்கு வழியில்லை. இந்து மதத்தை எல்லோரும் ஒத்துக் கொண்டதன் வாயிலாக ஓர் ஒற்றுமைக்கு வந்துவிட்டார்கள் என்றும் முடிக்கிறார். திராவிட மொழியாராய்ச்சி பற்றிப் பேச எழுந்தவர், ஆரியர் திராவிடர் பற்றிப் பேசிவிட்டு இந்து மதப் பறை முழக்கம் செய்து மனநிறைவு பட்டுக்கொள்ளுகிறார். இவர் முன்னுரை நூலை ஆங்கிலத்திலுள்ளதைப் படிக்கும் ஒவ்வொருவரும் ஏமாந்துபோகும்படி இவர் மொழிநடை அமைந் திருக்கிறது. ஆனால் அந்த நடைக்குள் இவர் நெஞ்சம் புலனாகாமற் போகவில்லை. - குயில், கிழமை இதழ், 2.9.1958, ப. 3-4 75. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - IV சட்டர்ஜி கூட்டம் நீக்கப்பட வேண்டும் தில்லி ஆட்சியாளர்களால் - நேருவால் தமிழர் வாழ்வு எல்லா வகையாலும் கெடுக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் தமிழர் விடுதலை கோருகின்றார்கள் என்பதாகும். தமிழரின் இந்த எண்ணம் இன்று நேற்று தோன்றியதில்லை. ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளின் முன்பே தோன்றியதாகும். பெரியார் அஞ்சாது கூறினார் அன்றே! அன்று தொடங்கி அஞ்சாது தொண்டாற்றி வருகின்றார் இன்றுவரைக்கும். அத்தொண்டு நாளுக்கு நாள் பயன்தரத்தக்க நிலையடைந்து வருவதையும் தில்லிக்காரர் பார்த்து வருகின்றார்கள். முதன் முதலில் - இந்த இராசாசி முதல்வராக இருந்த காலத்திலேயே இந்தியைக் கொணர்ந்து அவர் பட்டபாடு எச்சிலைக்கு அலையும் நாயும் பட்டிராது. அன்று கிளர்ந்தெழுந்த மக்களின் தோற்றம் கடலினும் பெரியதாயிருந்தது. அப்போது நடந்த ஒரு கதையும் நினைவுக்கு வருகின்றது. இராசாசி மறைமலை யடிகளுக்கு ஆள் அனுப்பினார். அவரைச் சரிகட்ட! அவர் இந்தியை எதிர்க்காதிருக்க! யாரை அனுப்பினார் தெரியுமா? இதே கூலி, இதே மீனாக்கி அழகைத் தான்! மீனாக்கி அழகு மறைமலையடிகளிடம் வந்து என்னசொல்லியழுதது தெரியுமா? திங்கள் ஒன்றுக்கு ஐந்நூறு வெண்பொற்காசு வருமானத்தில், ஓர் அலுவல் தருவார் ஆச்சாரியார். நீங்கள் இந்தியை எதிர்க்காதீர்கள்! என்றார். கான்றுமிழ்ந்து துரத்தினார் அடிகள். தில்லிக்காரர் இந்தியைப் புகுத்த வந்தனர். பெரியார் கொடி எரிப்பால் எதிர்த்தனர். படுத்தனர் தில்லிக்காரர்; மீண்டும் எழுந்தனர்; காலடி வழியாகப் புகுத்துகின்றார்கள் இந்திப் பாம்பை. இதுமட்டுமன்று; சமத்கிருதத்தை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவேண்டும் என்றும் கனவு காணுகின்றார்கள்; வேலையும் சிறிய அளவில் தொடங்கியும் உள்ளனர். மற்றொரு வழி கண்டுபிடித்தார்கள். எவரிடம் தமிழர்கள் இருக்கின்றார்களோ, எவரிடம் தமிழ்நாடு கட்டுப்பட்டிருக்கின்றதோ, அவரை - அந்தப் பெரியாரை ஒழித்துக்கட்டவுமான மற்ற வேலை யெல்லாம் செய்தனர் - செய்துவருகின்றனர். அரிசியை எல்லாம் மலையாளத்துக்கு ஏற்றுமதி செய்து தமிழரைச் சாகடிக்கிறார்கள். மலையாளத்தினின்று அந்த அரிசி பாகித்தானுக்குப் போவது தெரித்ததும் பாகித்தான் வாழ்ந்தாலும் வாழ்ந்து போகட்டும் தமிழர் சாகட்டும் என்று எண்ணியிருக்கிறார்கள் தில்லிக்காரர்கள். அதற்கு ஒத்துத் தாளம் போட்டுவர வேண்டிய நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் சென்னை அமைச்சர்கள். ஈழத்துத் தமிழர்கள், நாடற்றவர், கீழறுத்தார்கள் தில்லியினர். இன்னும் தமிழர்கள் ஒழிந்து போகவில்லை என்று ஆழ்ந்து கருதினார்கள் தில்லியினர். தமிழின் மதிப்பைத் தொலைக்க வேண்டும். அது தொலைந்தால் தமிழர்களுக்கு தமிழ்ப்பற்றுக் குறையும். தமிழ்ப்பற்று ஒழியவே அவர்கள் உடலினின்று உயிர் ஒழியும். தமிழ்நாடு திறந்த வீடாகிவிடும். வேண்டிய அளவு கொள்ளையடிக்கலாம் என்ற கண்டுபிடிப்புக்குப் பின்புதான் திராவிடர் மொழியைக் கொலைசெய்ய - அதன் மதிப்பைத் தொலைக்கக் கிளம்பினார்கள். தில்லிக்காரர் நம்புகிறார்கள். திராவிடர் மொழியாராய்ச்சிக் குழுவினரைக் கொண்டு செயலில் வெற்றி பெறலாம் என்று. தில்லிக் காரர்கள் நம்புகிறார்கள் சட்டர்ஜியைக் கொண்டும் கூலி மீனாக்கி அழகைக் கொண்டும் கூலி சேதுப்பிள்ளையைக் கொண்டும் இதில் வெற்றி பெறலாம் என்று. அவர்கள் நம்புவதற்கு மற்றுமொரு காரணம் உண்டு! இந்தத் திராவிட மொழியாராயச்சிக் குழுவில் டாக்டர் இராசமாணிக்கனாரும் இருக்கிறார். டாக்டர் சிதம்பரநாதனும் இருக்கிறார். இவர்கள் தமிழருக்கு ஆதரவுகாட்டி என்ன கிழித்துவிட்டார்கள். எலும்பு போடுவதாகத் தெரிந்தால் இவர்களும் கண்மூடி, வாய் வாளாது காட்டிக் கொடுக்காமலா போய் விடுவார்கள்? இவ்வாறு எண்ணியும் ஊக்கம் அடையலாம் சட்டர்ஜி கூட்டம்! இன்னும் அந்தக் குழுவில் தமிழ்ப்பற்று மிக்காராயிருக்கும் இராமநாதன் செட்டியாரும் இருக்கிறார். இவரும் தமிழை அழிப்பார்க்குத் தாளம் போடுகின்றார் என்று எண்ணலாம் சட்டர்ஜி கூட்டம். மீண்டும் எச்சரிக்கை முறையில் இளவரசர் முத்தையா அவர்கட்கு விண்ணப்பிக்கின்றோம். உடனே இந்தக் குழுவிலிருந்து சட்டர்ஜி, தெ.பொ.மீ., சேது ஆகியோர்களைப் பிடர் பிடித்து வெளியில் தள்ள ஆவன செய்ய வேண்டும். கப்பலேறிச் சென்றுள்ள நாராயணசாமிப் பிள்ளை திரும்பி வந்தால், தமிழ் ஒழிப்பு வேலைக்கு எந்த வகையிலும் ஆதரவு கொடுக்காமல் திருந்திப் பிழைக்கும்படி செய்ய வேண்டும். டாக்டர் இராசமாணிக்கனாருக்கும் ஓர் வேண்டுகோள். ஆளுக்குத் தக்கபடி வளைந்து கொடுக்கும் வேலை வேண்டாம். டாக்டர் சிதம்பரநாதன் அவர்கட்கு விண்ணப்பம்: நீங்கள் தமிழுக்கு - வாளைத் தூக்கி போர் செய்ய வேண்டாம். தமிழுக்குத் தீமை செய்வாரை ஒட்டிப் போகக்கூடாது. இராமநாதன் செட்டியாரைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்: சட்டர்ஜி கூட்டத்தை ஆதரிக்க வேண்டாம். உடனே, தமிழைத் தொலைக்கக் காப்புக் கட்டிக் கொண்டுள்ள இந்தக் கூட்டம் குழுவினின்று நீக்கப்படும் என்ற அறிகுறி ஏற்படா விட்டால் நம் தொடக்கத் தாக்குதல் பொதுக்கூட்டக் கண்டனங்களே யாகும் என்பதைத் திருவாளர் முத்தையா அவர்கட்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். - குயில், கிழமை இதழ், 9.9.1958, ப. 3-4 76. அண்ணாமலைப் பல்கலைக்கழகமா? ஆரியர் அடிவருடும் கழகமா? கம்பராமாயணத்துப் பாலகாண்ட முதற்பகுதியை அண்-பல்கழகம் வெளியிட்டுள்ளது இப்போது. இதற்கு முன் சுந்தர காண்டத்தையும் பகுதி பகுதியாக வெளியிட்டது நினைவிருக்கும்! அண்-பல்-கழகமானது தமிழின்மேல் அன்பு காரணமாகத் தமிழ் வளர்ச்சியில் உள்ள அக்கறை காரணமாக - கம்பராமாயணத்தை வெளியிட முன்வந்தது என்று யாரும் நினைப்பதற்கில்லை. தமிழைப் படுகொலை செய்யவேண்டும். தமிழ்க் கலை, தமிழ் ஒழுக்கம் மறைக்கப்பட வேண்டும். ஆரிய முடிச்சுமாறித் தனமே பெரிது படுத்தப்படவேண்டும் என்றதொரு கட்சியை முன்னின்று நடத்திவரும் நேருவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுவதன் வாயிலாக அண்-பல்-கழகம் வாணிகத்தைப் பெருக்க வேண்டும் என்பதுதான்! இந்த வெளியீட்டின் நோக்கமும் என்றுதான் எண்ண வேண்டி யிருக்கின்றது. பெற்ற தமிழ்த்தாய்க்கும், பிறந்த பொன்னாட்டினருக்கும் உற்ற தொண்டு செய்ய உயர்வழி இருக்க குற்ற மரபினர் செல்லும் கொடு வழியில் கால் வைத்ததானது அண்-பல்-கழகத்துக்கு அழகாகாது. கம்பன் எப்படிப் பட்டவன்? இந்நாளில் ஆரியத்துக்கு ஆட்பட்டுக் காரியத்தைச் செப்பனிட்டுக் கொள்ள எண்ணும் அண்-பல்-கழகத்தைப் போல, தமிழைக் காட்டிக் கொடுத்தேனும் தம் வயிற்றை வளர்த்தால் போதுமென்று எண்ணும் கருமுத்து தியாகராசன் போல, குடிமை பிழைத்தும் அடிமை வியக்கும் தெ.பொ.மீனாட்சி அழகு, சேது ஆகிய இரு பிள்ளைகளும் போல நூலடி பிழைக்கினும் பார்ப்பான் காலடி அறிந்தால் போதுமென்னும் நாமக்கல் இராமலிங்கம் போல, தமிழ்நெறி கசக்கும் ஆரியநெறியே அமிழ்தம் என்று எண்ணும் அண்ணாத்துரை போல, வயிறு வளர்க்கக் கயிறு திரிக்கும் ம.பொ.சி. போல, கம்பனும் அந்நாளில் தமிழரைக் காட்டிக் கொடுத்துப் பெருமையடைய எண்ணியவனே என்று அறிய வேண்டும். அந்நாள், நாட்டுப் பெருவேந்தன் அவையின் பாட்டுப் பெருவேந்தனாய்த் திகழ்ந்திருந்த ஒட்டக்கூத்தனை எட்டத்தள்ள எதையும் செய்வது என்பதுதான் கம்பனின் திட்டம். அதனால்தான் கம்பன், அந்நாள் தமிழ்ச் சிவநெறியினர் எதிர்ப்பையும், தமிழர் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் காஞ்சிப் பூணூற் கலப்படங்களைக் கூட்டிக் கொண்டு தமிழர் இயல்பை மறைக்க ஆரியக் கோணிப்பை தைத்தான் அதாவது வான்மீகியின் ஆரிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்தான். தான் செய்யும் அது தகுதியற்றது என்று தெரிந்திருந்தும் அதைச் செய்தான். அதனால் தான் அவன் தமிழ் இராமாயண நூல் தொடங்கும்போதே, வையம் என்னை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இந்த இராமன் கதையை மொழிபெயர்க்கின்றேன் என்றான். மிக நாணயம் உடையவன் போல இவ்வாறு முன்மொழிந்து கொண்டான். எனினும், அவன், தன்போல் இனத்தைக் காட்டிக் கொடுத்த தமிழர்கள் தமிழ்நாட்டில் உளரோ என்று தேடிப் பார்த்தான். நான் மட்டுமா அதோ பலர் இனத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதுதான் கம்பன் ஆசை. ஆனால் அவ்வாறு ஒருவரையும் காட்ட முடியவில்லை. எனினும் தான் மொழிபெயர்க்கும் இராமாயணக் கட்டுக்கதையில் கிடைத்தான் கோடரிக் காம்பாகிய அநுமான். தூக்குகின்றான்; தூக்குகின்றான் கம்பன் அநுமானைத் தன் இராமாயணத்தில். இராமாயணச் சுவடியை செட்டிநாட்டு விலங்கு (யானை) தூக்குவது போல. ஏன் தூக்குகின்றான் அநுமானை? அப்படிப்பட்ட அனுமானே ஆரியனாகிய இராமனுக்காகப் போய்த் தமிழனாகிய இராவணன் நாட்டில் தீ வைத்தான். நான் ஆரியத்திற்காகத் தமிழியல்பில் தீ வைத்தது, ஒரு குற்றமா என்று காட்டுவதற்காக. அந்தச் செய்யுள் வருமாறு: அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் என்பது. இந்தச் செய்யுளில், அநுமான், ஆரியற்காக ஏகி, ஐந்து பருப்பொருட்களில் ஒன்றாகிய நிலம் ஈன்ற சீதையைக் கண்டு, ஐந்து பருப் பொருள்களில் ஒன்றாகிய தீயை அயலார் ஊரில் வைத்தான் என்று கம்பன் கூறுவதை நினைவில் கொள்க. அந்தக் காலத்தில் கம்பனின் தன்னலத்துக்கு இவ்வாறு செய்யுள் செய்தான் எனினும், அதனால் இந்தக் காலத்தில் தமிழர் போராட்டத் திற்கு எடுத்துக்காட்டான பல உண்மைக் கருத்துக்கள் கிடைக்கின்றன. 1. தமிழர் வேறு ஆரியர் வேறு 2. தமிழர் பண்பாடு வேறு ஆரியர் பண்பாடு வேறு 3. இராமன் ஆரியன், இராவணன் தமிழன் என்கின்றார்கள் தமிழர் தலைவர்களும், தமிழறிஞர்களும்! ஆனால், இவைகளை எல்லாம் இப்போது ஆரியரும், ஆரிய அடிவருடிகளும் மறுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகம், அதிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது அந்தத் திருட்டுப் பசங் களுக்குத் தேங்காய்ப் பாலும் சோறும் போட்டால் அதைக் குருட்டுத் தனம் என்பதா? முரட்டுத்தனம் என்பதா? புரட்டுத்தனம் என்பதா? இப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள பால காண்டத்தின் செய்யுளில், ஆரியற்காக ஏகி என்பதை ஆருயிர்க்காக ஏகி என்று மாற்றி வெளியிட் டிருக்கிறது. இப்படித்தான் கம்பன் பாடியிருப்பானாம். இவ்வாறு வெளியீட்டுக் குழுவிலுள்ள ஏதுங்கெட்டவர்கள் கூறுகின்றார்கள். ஆருயிர்க்காக ஏகி என்று கம்பன் பாடியிருப்பானா? பாடினான் என்றால் சீதைக்காக ஏன் ஏகிச் சீதையைக் கண்டு என்று பாட்டை அமைத்தான் என்றாகும். பாட்டுச் சுவையுணர்ந்தானின் வீட்டு நாய்கூட இவ்வாறு குலைக்காது. இன்று இதனுடன் நிறுத்தி மற்றொரு முறை எழுதப்படும். - குயில், கிழமை இதழ், 7.10.1958, ப.2-3 77. படக்கூத்தர் - வென்றாலும்! எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு பழிவாங்கப்படுகின்றது. இதைப் படக்கூத்தர்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டு அரிசி கேரளத்திற்கு! இது நடுங்கத்தக்க கொடுமை! இல்லையா? கேரளத்தைத் தொட்டுக்கொண்டு கடலில் விழும் ஒரே காரணத்தால் - அத்தண்ணீர் தமிழ்நாட்டுக்கு மறிக்கப்படக்கூடாது என்று தில்லி சொல்லுகிறது. தமிழ்நாட்டு அமைச்சரும் இதற்குத் தாளம் போடவேண்டும். உயிர்த்தொல்லை இது! இல்லையா? இலங்கைத் தமிழர்கள், தமிழர்கள் ஆதலால் அவர்கள் மக்கள் நிலையை இழக்க வேண்டும். இது தமிழர்க்கு மானக்கேடு! இல்லையா? இரும்பு இருக்கிறது தமிழ்நாட்டில்! எண்ணெய் இருக்கிறது தமிழ்நாட்டில்! தமிழ்நாட்டில் அவைகள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்தால் தில்லியின் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன இல்லையா? இந்தி வந்தால் தமிழ் கெடும்! என்பது தமிழர்களின் ஒன்றுபட்ட எச்சரிக்கை. இந்தியைப் புகுத்தி தமிழைத் தொலைக்கத்தானே வேண்டும். இது தில்லியின் மகிழ்ச்சிக் கூத்து! இல்லையா? அழிந்துவரும் தமிழரை ஆதரிக்கும் வாயிலாகக் கலகக் காரராகிய பார்ப்பனரின் வாலை அறுக்க வேண்டும் என்பது தமிழரின் உயிர்போன்ற கொள்கை. நெய்வேலியைப் பார்! மற்றும் உள்ள நிறுவனங்களைப் பார்! சென்னையே உன்னைப் பார்ப்பானிடம் ஒப்புவித்து பழிவாங்குகின்றேன் என்கிறது தில்லி இல்லையா? திராவிட மொழி ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒருகுழுவாம். அது வடநாட்டு மொழி ஒன்றே வாழவேண்டும் என்றுழைத்து வரும் சட்டர்சி இடத்திலும், தமிழ்நாட்டுக் கங்காணிகளா கிய தெ.பொ.மீ., சேது ஆகிய இரு பிள்ளைகளிடத்திலும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. தில்லி நோக்கப்படி தமிழின் தொன்மையையும், தனிப் பெருமையையும் தலைகீழாக்கி வருகிறார்கள் இல்லையா? எது தமிழரின் உயிர்நிலை? அதைக் கொல்வது தில்லியின் நோக்கம்! எது தமிழர்க்குப் பெருமைதரும் கட்டம். அதை ஒழிப்பது தான் தில்லியின் திட்டம்! இல்லையா? முனைத்த கட்டங்கள் அனைத்தையும் தொலைக்கத் திட்டம் கண்டுபிடித்த தில்லியானது ஒன்றை மறந்திருக்கிறது. அதுதான் ‘தமிழ்நாட்டுப் படத்தொழில்! வடநாட்டுப் படத்தொழில் இன்று தோற்ற குதிரை! தமிழ்நாட்டுப் படத்தொழில் இன்று வென்ற குதிரை மட்டுமல்ல இனியும் வட நாட்டாரால் வெல்லமுடியாத குதிரை! இல்லையா? தமிழ்நாட்டுப் படத் தொழில் வடநாட்டானின் நெஞ்சை உறுத்தியது என்றால் காரணம் இதுதான். தமிழ்ப்படத் தொழிலைத் தொலைக்க வடநாட்டான் எண்ணியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் தமிழ்நாட்டுப் படக்கூத்தர்களைக் கை யாலாகாதவர்கள் என்று அவர்கள் நினைத்ததுதான் வியப்புக் குரியது. தில்லிக்காரன் கொண்ட இந்த துணிச்சலுக்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டுப் படக்கூத்தர்கள் கண்ணீர்த் துளிகளின் கைப் பாவைகள் என்று நினைக்கும்படி அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டார்கள். அதனால் கண்ணீர்த்துளிகள் தற்காலம் குடித்தனம் பண்ணுவதற்குத் தமிழ்ப் படக்கூத்தர்தாம் காரணம் என்று தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டு அமைச்சர்கள் எண்ணி முடிவுகட்டியிருந்தார்கள். இடையில் புகுந்தான் தமிழரின் பகைவனான தில்லிக்காரன். தமிழ்நாட்டை நோக்கிக் கேட்டான் எப்படி? - என்று! ஆம், தொலைக்கலாம் என்றது! சென்னை. உடனே தில்லி அன்னை திடீரென்று பெற்றாள் கலையை ஒழிக்கும் கொலைக்காரப் பிள்ளையை! படநாடா இறக்குமதிக் கட்டுப்பாடு தமிழ்நாட்டைக் கெடுக்கும் அளவு வடநாட்டைக் கெடுக்கவில்லை! இல்லையா? இப்போது படக்கூத்தர் தொடங்கியிருக்கும் அறப்போர் மிக வன்மை வாய்ந்தது. அவர்கள் எவரெவர்களை எந்த மட்டும் எடுத்தாளுகின்றனர்? - அதுகூடச் சரிதான்! வெற்றி உறுதி! ஆனால் படக்கூத்தர்களும் படத்தொழில் நுணுக்கர்களும், முதலாளிகளும், பட்டரைக்காரரும் தில்லியை நம்பக்கூடாது! நம்பக்கூடாது தில்லிக் கழுகை! நல்ல துப்பாக்கிகாரனை அவர்கள் கையோடு வைத்திருக்க வேண்டும். அந்தத் துப்பாக்கிகாரன் பகைக்கு அஞ்சாதவனாக இருத்தல் வேண்டும். அதே நேரம் அவன் மக்கள் மேல் அருளுள்ளம் கொண்டவனாக இருத்தல் வேண்டும். சட்டசபை முதலிய எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவனாக இருத்தல் வேண்டும். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். - குறள் - குயில், கிழமை இதழ், 14.10.1958, ப. 2-3 78. சென்னையாட்சி வாழ்க! அரிசியை தமிழ்ச் சான்றோர் உயிர் மருந்து என்றார்கள். உயிர் வாழ்க்கைக்கு அரிசி இன்றியமையாதது என்பதை அவர்கள் விளக்கினார்கள். அத்தகைய உயிர் மருந்து, இந்தக் கண்மூடி ஆட்சியிலும், தமிழர்க்கு வேண்டிய அளவு கிடைக்கின்றது; விளைகின்றது! ஆனால், அது தமிழர்க்குக் கிடைக்கும்படி ஆட்சியாளர் காப்புத் தரவில்லை. காப்பளிக்காதது மட்டுமா? பெருமுயற்சி செய்து வேறு நாட்டுக்குக் கொண்டு போகிறார்கள் ஆட்சியாளர்கள். கொண்டு போகின்றார்கள் என்பது மட்டுமா? கொண்டு போவதை ஒத்துக் கொள்ளுவதில் பெருமை கொள்ளுகிறார்கள் மானங்கெட்டவர்கள். ஒத்துக்கொள்ளுவது மட்டுமா? அயலார்க்கு அனுப்பி வருவ தற்கு ஒரு பொய்க் காரணத்தையும் கூறுகின்றார்கள் கொடியவர்கள்! வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழர்கள் இன்று பாலுக்குச் சர்க்கரை கேட்கவில்லை. கூழுக்கு உப்புக் கேட்கின்றார்கள்! இரங்கத் தக்க நிலை! அரிசி இல்லை - இது தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும் பாடும் பஞ்சைப்பாட்டு. இந்த வகையில் தமிழர்கள்! அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஒன்றுபட்ட தமிழர்கள் துன்பம் துன்பம் என்கின்றார்கள். அதுவே எமக்கு இன்பம் இன்பம் என்றார்கள் போலும் ஆளவந்தார்கள். ஒன்றுபட்ட தமிழர்கள் வேர்த்து ஆடுகின்றார்கள்! ஆளவந்தார் கூட்டம் கூத்தாடுகின்றது! ஒன்றுபட்ட தமிழர்கள் விழுந்தழுகின்றார்கள். ஆளவந்தார்கள் கூட்டம் எழுந்து சிரிக்கின்றது. அப்படியானால் இன்றைய ஆட்சிநிலை குறைகொள்ளிப் பிணத்தின் நிலை என்பதா? ஆயிரமுறை கூறிவிட்டோம் நேருவின் பழிவாங்கும் போக்கைச் சென்னை நல்லதொரு சாக்காகக் கொள்ளக்கூடாது என்று. நலிந்து வருகின்றது சென்னை ஆட்சி! நல்ல மருந்து ஒன்றுதான்! அதை இன்றே அருந்த வேண்டும். தமிழ்நாட்டு அரிசி - நெல் மலையாளத்திற்கு ஒரு மணிகூடப் போகக்கூடாது. போகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்மக்கள் வேலையாக இருத்தல் கூடாது. ஒரு ரூபாய்க்கு அவர்கள் சென்னைப்படியால் குறைந்த பங்கு இரண்டுபடி நல்ல அரிசி பெற வேண்டும். இந்நிலை உடனே ஏற்படவேண்டும். நாம் சென்னை ஆட்சியை வாழச் சொல்லுகின்றோம். புதுச்சேரியில்! அரிசிச் செய்தியில் புதுவை அரசினர் விழிப்போடு இருக்க வேண்டும். வேண்டுமென்று கொண்டால் வெண்ணெய் போற் கொள்ளலாம். அரிசி மலிவான விலைக்குக் கிடைக்க வேண்டுமே என்று புதுவை அரசினர் நினைத்தால் அடுத்தவிநாடியே வெற்றிகாணமுடியும். இன்று புதுவை மக்கள் அடைந்துள்ள இரங்கத்தக்க நிலையை அவர்கள் என்றுமே நுகர்ந்ததில்லை. எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன என்று இருக்கத்தக்க ஒரு பெரிய ஆற்றல் இன்றைய ஆட்சியாளர்க்கு வந்துவிடவில்லை. உடனே அரிசி, புதுவையில் குறைந்த அளவு புதுவைப் படியால் ஒரு ரூபாய்க்கு நாலு படி கிடைக்கும்படி விரைவு நடவடிக்கை எடுக்கவேண்டும். - குயில், கிழமை இதழ், 21.10.1958, ப.3-4 79. காரைக்கால் அரிசி காரைக்கால் அரிசி எங்கே? இங்கே ஏன் அரிசிப் பஞ்சம்? இது நம் புதுவையரசுக்குத் தெரியாதா? தெரிந்தும் இந்த நிலையை விட்டு வைப்பது ஏன்? அரிசியை அயல் அரசுக்குக் கடத்திக் கடத்திக் காய்ப்பேறிய காரையின் கைகளை அறவழியில் நிறுத்த இந்த அரசினர் அக்கறை கொள்ளாத காரணம் என்ன? தமிழர் வயிற்றில் அடித்து, அரிசியை அயலில் கடத்துவார்தாம், இந்த ஆட்சியைத் தாங்குகின்றார்களா! அவர்கள் ஆதரவு இல்லா விட்டால் இந்த ஆட்சி பொத்தென்று கீழே விழுந்துவிடுமோ! நல்லதற்குப் பாடுபடுவதால் இந்த ஆட்சிக்கு வலிவு குறைந்து விடும் என்றால் பார்ப்போமே! நல்லதற்குப் பாடுபடுவதால் சில சட்டமன்ற உறுப்பினர் முறுக்கிக் கொள்வார்கள் என்றால் முறுக்கிக் கொண்டு தொலையட்டுமே! அரிசியை அயலவர்க்குக் கொடுத்து விட்டு இங்குப் பட்டினியைத் தழுவவேண்டும் என்ற அத்தனை கட்டாயத்தைத் தமிழர் விட்டுவைப்பாரா? இரண்டொரு முதலாளிகள்! ஏறியவிலைக்கு அரிசியை, நெல்லை, அயலில் கடத்தலாமே என்று நினைப்பது இயல்பு! அதை விட்டு வைப்பது அடுக்குமா? இதற்குத்தான் சட்டமன்றில் தஞ்சைச் சட்டத்தையும் தள்ளி அரிசி முதலாளிக்குச் சலுகை கொடுக்கப்பட்டதா? இந்த அரசினர் உள்ளத்தைத் தெரிந்துதான், காரைக்கால் அதிகாரிகளும் அரிசி கடத்தலுக்குத் துணைபோகின்றார்களா? அரிசியில்லை அரிசியில்லை என்று மக்களின் வயிறு எரிந்து வருகையிலா இந்த அரசியல் விளையாட்டு? இப்போது புதியதாக வந்துள்ள உயர் அதிகாரியர்க்கு இந்த அரிசிப் பஞ்சப் புயல் தெரியாதா? எங்கும் கிடுகிடுக்கும் நிலை அவர் மாளிகையில் ஏறவில்லையா? காரைக்கால் அரிசியில் ஒரு மணிகூட அயலூருக்கு - காரைக்கால் சுற்றுப்பட்டு, புதுவைச் சுற்றுப்பட்டுத் தவிர ஏற்ற முடியாதபடி தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரிசி புதுவையிலும் விளையுமிடத்திலும் நயவிலைக்குக் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். - குயில், கிழமை இதழ், 28.10.1958, ப. 4 80. திரைப்பட எழுத்தாளர் சங்கம் அடிப்படை நோக்கம் இச்சங்கத்திற்குள்ள அடிப்படை நோக்கம் கீழ் வருமாறு அமைதல் வேண்டும்:- (1) கதை - பிறர் எழுதியதையே தேடிப் பிடிக்கவேண்டும். அந்தக் கதை இன்னாரால் எழுதப்பட்டது என்று தெரியாதிருக்கச் சிறிது மாற்றம் செய்துகொள்ளலாம். ஆனால் ஒன்றை மட்டும் மறவாது பின்பற்றவேண்டும். இன்னார் எழுதிய கதையைத் தழுவியோ, மாற்றியோ எழுதியதாக வெளிக்குத் தெரியவேகூடாது. தெரிந்தால் பட முதலாளியிடம் மதிப்புக் குறைவு ஏற்படும். கதைக்குப் பணம் கொடுக்கவும் மறுப்பார்கள். (2) பேச்சமைப்பு - பிறர் எழுதிய செய்யுள் நூற்களையும், உரை நடை நூற்களையும், அவை வெளிவந்தவுடனே வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. கருத்தாகப் படிக்க வேண்டும். பேச்சு எழுதும்போது அந்நூற்களிலிருந்து சொற் றொடர்களை எடுத்துத் தாம் எழுதியது போல எழுதிக் கொள்ள வேண்டும். இதில் மானமோ, நாணமோ இருக்கவேண்டிய தில்லை. இன்னார் நூற்களிலிருந்து திருடினேன் என்று எந்த எழுத்தாளனாவது சொல்லி வைத்தால் அது எழுத்தாளர் கூட்டத்திற்கே குறைவை ஏற்படுத்தும். (3) பாட்டு - பிறர் பாட்டினின்று அடி அடியாய் அல்லது தொடர் தொடராய் எடுத்துச் கொள்ளலாம். ஆனால் திருடியது தெரியக் கூடாது. அசைகளை மாற்றிக் கொள்க. தெரிந்துவிட்டால் பட முதலாளி பாட்டின் முதலாசிரியரின் முகவரியைத் தெரிந்து கொள்ளநேரும். எழுத்தாளர் வருமானத்தில் மண்விழும். எவர் எழுதியதையும் பார்க்காமல், இருக்கும் கையிருப்பைக் கொண்டே பாட்டு எழுதித் தொலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்பொழுது எழுத்தாளர்க்குத் தெரிந்த மட்டமான சொற்களையோ மட்டமான கருத்துக்களையோ வைத்துப் பாட்டு எழுதிவிட அஞ்சுதல் கூடாது. முதலாளிகளில் எவராவது ஒருவர் முட்டாளாயில்லாமலும் இருக்கலாம். அவர் இதென்ன மட்டமாக இருக்கிறதே என்று கேட்டால் அப்போதுதான் பணம் வரும் என்று ஒரு போடு போட்டுவிடவேண்டும். எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட் பிழை - நல்ல வேளையாய் எழுத்தாளர்க்குத் தெரியாமல் இருந்தால் அதைப் பெருமையாகக் கொள்ளவேண்டும். (4) பொதுநெறி - இந்தத் தமிழ்நாட்டு மக்கட்குத் திரைப்பட எழுத்தாளர் காட்டவேண்டிய பொது நெறிகள் இரண்டு உண்டு. ஒன்று பெரியார் நெறி - மற்றொன்று இராஜகோபாலாச்சாரி நெறி. முன்னது தமிழர் நெறி; மற்றது ஆரிய நெறி. இவற்றில், பெரியார் கொள்கையால் பெருமை தேடிக்கொள்ள வேண்டும். ஆரிய நெறிக்கே அடிமைப்படவேண்டும். ஏனென்றால், ஏதுங்கெட்ட ஆரியர்தாம் நம்மைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆடக்கூடும். அதிலும் நம் எழுத்தாளர் கூட்டத்தில் ஆரியனுக்குப் பிறந்தவனிருந்தால் அவனுக்கு முதன்மை கொடுக்கவேண்டும். குறிப்பிட்ட இந்த நான்கும் இன்றியமையாதவை எழுத்தாளர்க்கு. - குயில், கிழமை இதழ், 28.10.1958, ப. 6 81. புதுவைச் சட்டசபைக்குத் திருவாசகம் பாடியாயிற்று! புதுவைச் சட்டசபைக்குத் திருவாசகம் படித்தாய்விட்டது. அவ்வாறு அதை ஒழித்துக் கட்டிய அரசினர் செயல் சரியா? தப்பா? எனில் இந்த நிலையில் செய்யத்தக்கதை அரசினர் செய்தார்கள். எனவே நூற்றுக்கு நூறு சரி என்றே சொல்லுவோம். புதுவையின் சட்டசபைக் காங்கிரசுக் கட்சி ஒரு பொய்க்காலிக் குதிரை. அரசினர் கொடுத்த மூங்கிற்கால் கொண்டுதான் தப்புந் தவறுமாக ஆடிக் கொண்டிருந்தது. புதுவையின் சட்டசபைக் காங்கிரசுக் கட்சியின் எதிர்க்கட்சி ஒரு மீன்கொத்தி. ஏரிக்குத்தகைக்காரன் எத்தனை கல் எறிந்தாலும் தன் முயற்சியில் அது தளர்ந்ததே இல்லை. சட்டசபைக் காங்கிரசுக் குழந்தைகள் கட்டுக் குலையாமல் இருக்கவேண்டுமே என்று அரசினர் இட்டு வந்தது இலஞ்சமல்ல. அது ஈகையின் பாற்படும். குழந்தைகளுக்கு ஆசை வந்தபோதெல்லாம் காசு தந்து கையமர்த்தினர். ஆயினும் கட்டுவலை பட்டென்று அறுந்தது. விட்டுப் பிரிந்த சில மீன்களைத் தட்டிக்கொண்டது மீன்கொத்தி! இவ்வளவு விரைவில் இந்த நெல்லிக்காய் மூட்டையின் வாய்ப் புறம் கிழியும் என்று அரசினர் எதிர்பார்க்கவே இல்லை. நல்லவர்களும் இருப்பார்கள் என்று நம்பினார்கள் அரசினர். பிடிக்காத வீட்டில் சட்டசபைப் பெரிய நாற்காலிகள் எல்லாம் போய்ச் சேர்ந்ததற்குக் காங்கிரசுப் புலிகள் தாம் காரணம் என்பது புரிந்துவிட்டபோதிலும் இன்னும் ஓர் ஒட்டுப்பார்க்கலாம் என்று எண்ணினார்கள் அரசினர். அந்த எண்ணம் நகைப்புக்குரியது. எத்திப் பிழைக்க ஓடின மீன்கள். அவைகளைக் கொத்திப் பிழைத்தது தனி மீன் கொத்தி! காரணம் இருபக்கத்திலும் மூண்டெழுந்த தன்னலப் பசிவெறி. சட்டத்தைப் பற்றி நினைக்கவும் அவர்கட்கு நேரமில்லை. சட்டசபை நாற்காலிகள் நிறைவு செய்யப்பட்டன. இந்தத் தேர்வு செல்லும் என்று சொன்னார் செல்லநாயக்கர். அரசினர் கடைசி ஆசையும் வீணாயிற்று. ஏன் வீணாயிற்று: ஆசைப்படக் கூடாத ஒன்றுக்கு அவர்கள் ஆசைப்பட்டார்கள். சட்டசபைக் காங்கிரசுக் கட்சிக்காரர்களே நீங்கள் அடுத்த மாதத்திலாவது அமைச்சர்கள். அறுவரைத் தேர்ந்தெடுங்கள் - இதுவல்லவா அரசினர் ஆசை! முடியுமா! அமைச்சர் அவை அமைக்கமுடியுமா? அவர்கள் சட்டசபை அமைக்க ஒருதவணை கொடுக்க வேண்டாமா? காங்கிரசு உறுப்பினர்களே, நீங்கள் அடுத்த நூற்றாண்டிலாவது அமைச்சர் ஆறுபேரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். என்று சொல்லியிருந்தாலும் சிறிது முன்னே பின்னையாவது அவர்கள் அமைச்சரவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அதுவுமில்லை. அமைச்சரைத் உண்டாக்கப்படும் என்றுகூட அரசினர் எண்ணினார்களே. அதுதான் நமக்கு வியப்பை உண்டுபண்ணியது! எப்படி அமைச்சர் அவை அமைக்க முடியும். வெடுக்கென்று தூக்கிய மீன்களை விட்டுவிடுமா மீன்கொத்தி? விட்டாலும் கட்டுவலைக்கு உட்படுமா மீன்கள்? உட்பட்டாலும் ஒரு பொய்க்காலிக் குதிரையைத்தானே காணமுடியும்? தன் கால்கொண்டு ஆடுமா? மரக்கால் உதவ இப்போது அரசினரிடம் என்னே இருக்கிறது? முன்பே முடித்திருக்க வேண்டும். இப்போதுதான் அரசினர் சட்டசபைக்குத் திருவாய் மலர்ந்தருளினர் திருவாசகம்! - குயில், கிழமை இதழ், 4.11.1958, ப. 3-4 82. பொன்னான புதுவை தன்னையேதான் நம்ப வேண்டும்! தூங்கியவரைக்கும் பிழை செய்து வந்த புதுவையே! நீ, இன்னும் தூங்குவது இறப்பதாகும். புதுவை, அசம்புலி, அசனம் புலியுமாகவே இருந்தால், கலைத்துத் துரத்தினர், அரசினர்! (அசம்-ஆடு) பொன்னான புதுவையே! உனக்கும் தெரியும். அந்தக் கட்சியும் இந்தக் கட்சியும் எப்படி என்று. தன்னைத்தானே தனக்குத் தருங்கை. பிறர்கை இடிக்கும் உலக்கை. வணிகர்களை எழுப்பு! உன் வாழாத மக்களை வாழத் தூண்டு. அஞ்சும் அலுவல்காரருக்கு உணர்ச்சியை ஊட்டு. பழம்போர் வீரர்களைக் காட்டிக் கொடுப்பாரை நம்ப வேண்டாம் என்று இடித்து இடித்துக் கூறு! பணம் பணம் என்று மகிழ்ச்சியில் தூங்குகின்றவர்கள் நாளைக்குப் பிணம் பிணம் என்று அழ வேண்டிய நிலைவரும் என்று எச்சரிக்கை செய்! ஏழை மக்களை எழுப்பு! அருமைப் புதுவையே, இருட்டுக்குகையில் எரிமூட்டப்பட்டுவிட்டது! வெளியில் வரட்டும் வேங்கைக் கூட்டம். ஒன்று கூடி பொதுநலம் காக்க ஒரு குழுவை இன்றே தேர்ந்தெடுக்கல் வேண்டும். அந்தக் குழு நல்லவர் கழகமாகத் திகழ வேண்டும். எவர்க்கும் கட்டுப்படாததாய் இருக்க வேண்டும். இதோ வரப்போகின்றது புதுவைச் சட்டசபைக்குப் பொதுத் தேர்தல். ஒவ்வொரு தொகுதிக்கும் நல்லவர் கழகம் ஆளை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும். பொன்னான புதுவையே! நீ நிற்கும் இடம் உயர்ந்தது. அதிலிருந்து உன்னை இழுத்துத் தள்ள எவனும் நினைக்கக் கூடாது. கண்ணான புதுவையே! உன் வரலாறு மண்ணோடு மண்ணாகி விடக்கூடாது. தட்டான்சாவடியைப் புதுவை நகராக்கப் பாடுபட வேண்டும். மாறாகப் புதுவை தட்டான் சாவடியாகிவிடக் கூடாது. காரை அரிசி காரைக்காலின் அரிசி, நெல் புதுவைக்கே (காரைக்கு வேண்டியது போக) அனுப்பப்பட வேண்டும். மாறாக அயலார்க்கு ஆதாயம் கருதி அனுப்பப்படக் கூடாது என்று நாம் எழுதியபடியே நம் அரசினர் தலைவர் தக்க ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளார் என்று கேள்விப் படுகின்றோம். அந்த நல்ல பணியைச் சற்று விரைவில் செய்து முடித்தால் மிக்க நலமாயிருக்கும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம். - குயில், கிழமை இதழ், 4.11.1958, ப. 4 83. புதுவை மக்கள் துடிப்பு நம் அச்சகத்தின் குறட்டில் ஓர் அரிசிக்கடை இருக்கிறது. அரிசிக் கடையின் அண்டையில்தான் நாம் உட்கார்ந்து இரங்கத்தக்க காட்சியைக் கண்டு வருந்துகின்றோம். நான்கு நாட்களுக்கு முன் ஒரு ரூபாய்க்கு (புதுவைப் படி) ஒன்றே முக்கால் படி அரிசி கிடைத்தது. அப்போதே அழுதுகொண்டேதான் வாங்கிச் சென்றார்கள். இன்று ஒரு ரூபாய்க்கு ஒன்றரைப் படியரிசி ஆகிவிட்டது. பிள்ளை குட்டியைப் பெற்ற ஏழைத் தாய்மார்கள் அழாமல் வாங்கிக் கொண்டு போகின்றார்கள் ஏன்? அழவும் அவர்கள் வலியிழந்து விட்டார்கள். காரைக்கால் விளைச்சல் புதுவைக்கே விற்கப்படவேண்டும் - நம் ஐ கமிஷனரின் இந்த ஒரு சொல் புதுவை வட்டார மக்களின் வயிற்றில் பாலை ஊற்றும்! காலந்தாழ்த்த வேண்டாம் என்று நம் ஐ கமிஷனரைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். காரைக்கால் நிலக்கிழார்க்கும் இதில் இரக்கம் இருக்கவேண்டும். புதுவையின் பசிப்பிணியைப் போக்குவதில் அவர்கட்கு அக்கறை இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஆர்லிக்ஸுக்கு அழவில்லைஇ ஓவல்டின்னுக்கு ஆவல் கொள்ளவில்லை. பணக்காரர் சிலருக்கு வேண்டும் அவை. அதோ இன்றும் 9-8-0 (9.50) ரூபாய்க்கே விற்றுக்கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிக்கட்டும். நாம் கவலைப்படவில்லை. நாம் கேட்ப தெல்லாம் புதுவை வட்டார பெரும்பான்மை ஏழை மக்கட்கு இன்றி யமையாது வேண்டப்படும் அரிசி. எல்லாப் பண்டமும் விலையேறிவிட்டது. மக்கள் துடிக்கின்றார்கள்! அந்தத் துடிப்பை அவர்களால் அடக்க முடிகிறது ஏன்? அரிசி நயத்தால், வடித்துத் தண்ணீர் ஊற்றி, உப்பிட்டு உண்டு உயிர் வாழலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். புதுவை வட்டார மக்கட்குத் தேவைக்குப் போராடும் ஆற்றல் இல்லை. ஆனால் தக்க நேரத்தில் பழி வாங்கிவிடுவார்கள். இன்றைய ஆட்சியாளர் மக்களின் ஆதரவை எதிர் பார்க்கும் நிலையில்தான் இருப்பதாக எண்ணுகின்றோம். அவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்று நினைத்தவர்களின் நிலை, மண்ணான வரலாற்றுச் சுவடி மிகப் பெரிது! இதை நாம் மக்கள் தலைவர்கட்குச் சொன்னோம். மக்களின் இன்றைய தேவைக்குப் பாடுபடுவதே முதல் வேலை. தேர்தல் அன்று! - குயில், கிழமை இதழ், 11.11.1958, ப. 3 84. தமிழர் எழுச்சி! ஓர் இனத்தாரின் இலக்கியத்தில் அமைந்துள்ளது அவ்வினத்தாரின் பழம்புகழ்! ஓர் இனத்தாரின் பழம்புகழில் அமைந்துள்ளது அவ்வினத்தாரின் எதிர்கால எழுச்சி! தூய தமிழிலக்கியத்தில் ஆரிய மறைக் கருத்தான ஊசி மருந்தைச் சிறிது சிறிதாக நாளடைவில் ஏற்றி வந்தவர்கள் இன்று அதை அடியோடு ஒழித்துவிடப் பட்டாவை உருவிட்டார்கள். இந்த ஒழிப்பு வேலை நல்லதொரு திட்டமிட்டே தொடங்கப் பட்டிருக் கிறது. தமிழரின் இன்றைய எழுச்சியில் படுவீழ்ச்சியை அவர்கள் உண்டு பண்ணுகின்றார்கள். தமிழிலக்கியத்தைத் தொலைப்பது தான் அதற்குவழி என்பதை அவர்கள் அறிந்து முடிவு கட்டிக் கொண்டார்கள். தமிழ் என்று ஒரு தனிமொழி இல்லையாம். அது வடமொழியி னின்று தோன்றியதாம். தமிழ்ப் பெருநூற்கள் அனைத்தும் வடவர் நூற்களின் மொழி பெயர்ப்புக்களாம். தமிழர் நாகரிகம் ஆரியர் கழகத்தினின்று தோன்றியதாம். தமிழும் தமிழர் வாழ்வும் தொன்மையானது என்று கூறிக் கொள்வதில் தமிழருக்கு ஒரு தனி ஆசையாம். அது பொய்யாம். இவ்வகையான கட்டுரைகள் அவர்களின் ஏடுகளில்முன் பக்கத்தை அழகு செய்கின்றன. இதற்கென்றே புதிய வார இதழ்கள் தோன்று கின்றன. பழைய ஏடுகளும் வாடகைக்குப் பிடிக்கப் படுகின்றன. இதுபற்றிய சொற்பொழிவுகளைக் கேட்க ஆட்கள் சேர்க்கப் படுகின்றனர். பல்கலைக்கழகங்கள் இதில் பெரும் பங்கெடுத்துப் பணியாற்று கின்றன. அண்மைய ஐந்தாண்டுகளின் முன் வரைக்கும் இருந்த தமிழர் - திராவிடர் வரலாறுகள் திடீரென்று தலைகீழ் மாறுதலுக்கு உள்ளா கின்றன. தமிழர்கள் - ஆரியர்கள் தமிழ்நாட்டில் ஆரியருக்குப் பின் வந்தவர்கள் என்ற புதைவாணம் பள்ளிகளிலெல்லாம் வேடிக்கை காட்டுகின்றது. இதுபற்றி அலுவலில் இருக்கும் தமிழ்ப் புலவர்களின் உள்ள மெல்லாம் தணலாகின்றது. ஆயினும் அச்சம் அதை அடக்கி வருகின்றது. தமிழே உயிர் என்று எண்ணுகின்ற தமிழ் மாணவர்களின் அஞ்சாத உள்ளம் அணைகடந்து போகும் நேரம் இது! ஆயினும் அவர்களை இழுத்துக்கட்டி அவர்களிடம் ஓர் ஒழுங்குமுறை ஏற்படுத்தாமல் காலம் வீணாகின்றது. திராவிடர் கழகம் பெரும் பணியைத் தலையில் போட்டுக் கொண்டிருக்கின்றது. பகைவரின் முயற்சியாகிற தீத்திரளின் நடுவில் தமிழர் நலம் வைக்கப்பட்டிருந்தும், அந்தத் தணலில் குதிக்கத் திராவிடர் கழகம் இராகுகாலம் பார்க்கவில்லை; அதை அதுகுளிர்ந்த தாமரைப் பொய்கை என்றே முடிவு செய்திருக்கின்றது. ஆதலினால்தான் திராவிடர் கழகம் தமிழர் தலைவர் பெரியார் கீழ்வரும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அவை வருமாறு: 1. நேரு அரசினர் எந்தெந்த வழியாக நம் பகைக் கூட்டத்திற்கு, பகை எழுத்தாளர்க்கு, பகை ஏடுகட்குப் பணம் அனுப்புகின்றார்கள்? - கண்டறிய ஒரு தனித் துப்பறியும் படைவேண்டும். 2. எந்தெந்த ஏட்டில், எந்தெந்தப் பொதுக்கூட்டத்தில் எந்தெந்த நாளில் தமிழைத், தமிழிலக்கியத்தைத், தமிழ் வரலாற்றைக் குறைவுபடுத்துகிறார்கள்? அதே நேரத்தில் அவர்களின் பொய்ம்மையை எடுத்துக்காட்டி மக்களைத் தட்டிக்கொடுக்க ஒரு புலவர் படை வேண்டும். 3. நம் மேன்மையை, தமிழின் உயர்வை, தமிழிலக்கியத்தின் தொன்மையை எந்தெந்த நூலின் எந்தெந்த வரிகள் குறைவு படுத்துகின்றன? அவைகளை மறுத்து மக்கட்கு மெய்ம்மையை எடுத்துக்காட்ட ஓர் எழுத்தாளர் படை வேண்டும். 4. எந்தெந்தப் பள்ளியில் எந்தெந்த வகுப்பில் எந்தெந்த ஆசிரியர்கள் தமிழையும், தமிழரையும் குறைவுபடுத்திப் பேசுகின்றார்கள்? அவ்வப்போது அதைத் தெரிந்து பூக்காமல் காய்க்காமல் வேரோடு தொலைக்க, பள்ளிதோறும் உள்ளவர் களைக் கொண்ட ஒரு மாணவர் படை வேண்டும். 5. தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களை அயலானிடம் விற்கும் ஆட்களை மக்கள் அரங்கில் இழுத்து வைக்க அஞ்சா நெஞ்சு படைத்த பேச்சாளர் படை ஒன்று தனியாக வேண்டும். மேற்சொன்ன ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி வார ஏடு வேண்டும். சுவடி வெளியீடுகள் வேண்டும். இந்த ஐந்து திட்டங்களும், தமிழர் எழுச்சிக்கு உரம் அல்ல; ஐந்து திட்டங்களே எழுச்சியும் வெற்றியும் என்க. - குயில், கிழமை இதழ், 18.11.1958, ப. 2-3 85. விளைநிலந்தான் ஆனால் வேலி வேண்டும் நல்ல இடத்தில் நல்ல வேளையில் வித்தப்பட்டிருக்கின்றது தமிழ் வளர்ச்சி விதை. பார்ப்பனர் ஏடுகளை இடமாகக் கொள்ளவில்லை; அவைகளைப் பின்பற்றும் மற்ற ஏடுகளை இடமாகக் கொள்ளவில்லை. அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தை இடமாகக் கொள்ளவில்லை. தமிழ் வளர்ச்சிக் குழுவானது அமைச்சர் சி. சுப்பிரமணியனார் தலைமையில், அரசினர் சார்பில் இடம் பெற்றுள்ளது! நல்ல வேளையில் விதை தெளிக்கப்பட்டிருக்கின்றது என்கின் றோம். வேறென்ன? தமிழ்ப் பெருநூற்களில் நச்சினார்க்கினியரின் பொருந்தாக் கருத்துக்களாலும், திருக்குறள் முதலியவற்றில் பரிமேலழகரின் பொருந்தாக் கருத்துக்களாலும், பொய்யான புராணங்கள், இதிகாசங்கள் என்பன தமிழ்நாட்டில் உதிர்த்த கனற் பொரிகளாலும் கம்பராமாயணம் முதலிய நூல்கட்கு உரைசெய்ய வந்து தமிழை ஒழித்துக்கட்ட எண்ணிய வை.மு.கோபாலகிருட்டிணமாச்சாரி போன்றோரின் துடுக்குச் செயல்களாலும் மனம் புழுங்கி வந்த தமிழர்களை அடியோடு தூக்கி அனலில் எறிவது போல், திராவிட மொழியாராய்ச்சிக் குழுவின் வாயிலாகத் தமிழையே குழிதோண்டி மறைக்க முன்வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் செல்வப் பிள்ளைகளான தெ.பொ.மீ - சேது ஆகிய இரு சிறுபிள்ளைகளாலும் அன்னை படும்பாட்டை இன்னம் பொறுக்க மாட்டார் தமிழர் என்று எண்ணிய வேளை, இது. நல்ல வேளைதானே! தமிழ்மொழி வளர்ச்சிக்கென ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழுவானது, பரந்த மனப்பான்மையோடு உறுப்பினரைத் தேடுகின்றது. கல்வி, தமிழ் பற்றிய எல்லா நிறுவனங்களினின்றும் உறுப்பினர்களைக் கேட்கின்றது. தனிப்பட்ட தமிழறிஞர்களையும் அது சேர்த்துக்கொள்ள அவாவுறுகின்றது. அது மட்டுமன்று, தமிழ் பற்றிய எல்லாத்துறைகளிலும் அது தன் ஆராய்ச்சியைச் செலுத்தி - தன் முடிந்த முடிவை நிறுவவும் உறுதி கொள்ளுகின்றது. எனவே, இத்தமிழ் வளர்ச்சிக் குழு, தமிழர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் குறைபாடுகளை நிறைவு செய்யவும், தமிழின் பயனைத் தமிழர்கள் நுகர்ந்து பயன் பெறவும் ஆன வகையில் அமைந்த ஓர் பயனுள்ள நிறுவனம் என்றே எண்ணி மகிழ்கின்றோம். அதே நேரத்தில் இது பெரும் பொறுப்புள்ள நிறுவனம் என்பதையும் குழுவுத் தலைவர்க்கு நினைவுறுத்த எண்ணுகின்றோம். இக்குழுவுக்கு உறுப்பினரை அனுப்ப வேண்டிய நிறுவனங்கள் தம்மிடமுள்ளவர்களில் நல்லவர்களை அனுப்புவதில் அக்கரை கொள்ள வேண்டும். தமிழின் பகைவர்களாகப் பார்த்து அனுப்பிவிடக் கூடாது. குழுவின் தலைவரும், தாம் தேர்ந்தெடுத்தது நல்ல விதைதான் ஆயினும், விளைச்சலை அழிக்கும் மாடுகள், ஆடுகள் புகுந்து விடாமல் தக்கபடி வேலி அமைக்கவேண்டும் என்பதில் கருத்தாக இருந்தருள வேண்டும். நல்லவாறு அமையும் இந்தக் குழுவினர் கீழ்வரும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே தம் ஆராய்ச்சியைத் தொடங்கவேண்டும். அந்த அடிப்படைக் கருத்துக்கள் வருமாறு: 1. கடல் கொண்ட குமரிநாடு முதல் இமயம் வரைக்கும் பரந்த மைந்த இந்நாவலந்தீவின் முதன்மொழி தமிழ் என்பது. என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். - கம்பன் 2. தமிழின் தலைமை இடம், குமரிநாடு சேர்ந்த தென்னாடு என்பது. 3. தமிழில் உள்ள எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, மொழிபொருட் காரணம் விழிப்பத்தோன்றா (தொல்காப்பியம்). 4. தொல்காப்பியம் முதல் திருக்குறள் வரைக்குமுள்ள தமிழ்ப் பெருநூற்கட்குள்ள உரைகள் பெரும்பாலும் உரையாசிரியரின் மதம் பற்றியவை. அவைகளை முடிந்த முடிபாகக் கொள்ள லாகாது என்பது. 5. தமிழர் நூற்கொள்கை. தமிழரல்லாதவர் நூற்கொள்கை என இருபெரும் பிரிவுள்ள கொள்கைகளை வைத்தே தமிழர் நூற்களின் உரை ஆராயப்பட வேண்டும் என்பது. 6. தெற்குக் கண்ணிருந்து தமிழாராய்ச்சி தொடங்கப்படுதல் வேண்டும் என்பது. இன்னோரன்ன அடிப்படையில் தமிழாராய்ச்சிக் குழு தன் வேலையைத் தொடங்காமல் தென்னாடு, தென்றமிழ், மாட்டுக் கெட்ட எண்ணமுடையார் கூறும் பொய்க் கருத்தின் அடிப்படையில் தொடங்கப்படுதல் கூடாது. - குயில், கிழமை இதழ், 25.11.1958, ப. 3-4 86. பெருவானில் முழு நிலவு 26. 11. 1958இல் சிதம்பரத்தில் மூன்று பெருங்கூட்டங்கள் நடந்தன. காலையில் இரத்தினா டாக்கீசில் சாதி ஒழிப்பு மாநாடு நடந்தது. மாலையில் சுதந்திரத் தமிழக மாநாடு நடந்தது. மாலை 7 மணி தொடங்கி அண்ணாமலை நகர் தி.க. மாணவர் கழகச்சார்பில் பெரியாருக்கு வெள்ளிவாள் பரிசளிப்புக் கூட்டம் நடந்தது, நகரமன்ற பெருவெளியில்! இம்மூன்று கூட்டங்களிலும், மக்கள் உள்ளத்தை உள்ளபடி உணரவல்ல பெரியார் பேசினார்; திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.தி.பொ. வேதாசலனார் பேசினார். மற்றும் முன்மொழிதல் வாயிலாகவும் வழிமொழிதல் வாயிலாகவும் அறிஞர் மிகப்பலர் பேசினார்கள். பேச்சாளராகவும் மிகப்பலர் பேசினார்கள். மக்கள் வானில் முழுநிலவைக் கண்டார்கள். கட்சிகள் எனப்பல இந்த நாட்டில். அக்கட்சிகள் சொல்லுவன பல. எதிரிகள் பலர். அவர்கள் காட்டும் பூச்சாண்டிகள் பல. ஆள்வோர் பலர். அவர்கள்விடும் கரடிகள் மிகப்பல. இதனால் தமிழ்வான் இருளாகத் தோற்றமளித்தது. இருள் எங்கே? பெருவானில் முழுநிலவைக் கண்டார்கள் அன்று மக்கள்! தமிழ்நாட்டில், ஒரு கொள்கைதான் ஒளி வீசிக் கொண்டிருக் கிறது. தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும். இந்த ஒளிநிலவின் முன், எந்த இருளும் முன்னிற்கவில்லை. பட்டி தொட்டிகளிலெல்லாம் மக்கட் கடலைக் கண்டு கண்டு, பேசிப் பேசி அவர்கள் உள்ளப்பாங்கை அறிந்தாராகிய பேரறிவாளர் பெரியார் பேச்சிலிருந்தும் மற்ற அறிஞர் பேச்சிலிருந்தும் அன்று மக்கள் கண்ட உண்மை இதுதான். தமிழ்நாட்டை மீட்பதற்கான போர்த் துவக்கமாக நடைபெற விருக்கும் பட எரிப்புக் கிளர்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் தமிழர் பட்டாளத்தாரின் தொகை மிகப் பெரிது என்று குறிப்பிட்டார் பெரியார். அடுத்தபடியாக அவர், ஆளவந்தாரும், வடக்கரும் பார்ப்பனரும் தம் நலங்கருதித் தக்கவாறு தம்மைத் திருத்திக் கொள்வது நல்லது என்றும் குறிப்பிட்டார். கண்ணீர்த்துளி, முதலிய கட்சிகள் மக்கள் மனநிலை யறியாது அவர்களை ஏமாற்றிப் பிழைப்பதிலேயே பெருநாட்டம் கொண்டிருப்பதாகவும் விளக்கியுதவினார். நாம் கூறுவதும் அதுதான். ஆயினும் சிறிது வேறுபாடு உண்டு. கட்சித் தலைவர் திருந்தப்போவதில்லை. மக்கள் இந்தக் கிளர்ச்சிக்கு எதிர்ப்பாக இரார். ஆளவந்தார் உள்ளந் திருந்துவார். மேலுக்குத்திருந்தார். அவர்களின் வாக்காளர் நமக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பார்ப்பனர் திருந்தார். பார்ப்பனனுக்குப் பிறந்தவர்கள் திருந்தமாட்டார்கள். எனவே சில தனியன்கள் தவிரத் தமிழர்கள் என்ற பரந்த வானில் தமிழ்நாடு மீளவேண்டும் என்ற முழுநிலவே தோற்ற மளிக்கின்றது! வெல்க தமிழ்நாடு! - குயில், கிழமை இதழ், 2.12.1958, ப.3 87. தொண்டுக்கு இடம் திராவிடர் கழகந்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அயலாரால் வஞ்சிக்கப் பட்டு வரும் ஓர் இனம் தமிழினம்; அயலாரால் துன்புறுத்தப்பட்டு வரும் ஓர் இனம் தமிழினம்: அயலாரால் இகழ்ச்சியைச் சுமந்துவரும் ஓர் இனம் தமிழினம். ஆதலால் அதுவாய்ப்பு நேரும்போது அந்த அயலாரைப் பழிவாங்கப் பின்வாங்காதுக, பட்டு வரும் துன்பத்தால் கெட்டுவரும் இனம் தமிழினம் என்று தோன்றலாம். ஆனால் தன் உள்ள உறுதியை விட்டுவரும் என்று எந்த மனிதனும் கொள்ள வேண்டாம். உலக வரலாறு கூட அவ்வாறு எண்ணவில்லை. தமிழினம் கேடுற்றுக் கேடுற்று மிகக் கேடான நிலையில் வீழ்ந்து விட்டது என்று கூறுவதில் நூற்றுக்கு ஐந்து விழுக்காடுகூடச் சரியில்லை. தமிழினம் வாழ்ந்த இனம். தமிழினம் பண்பட்ட உள்ளம் படைத்தது. பகைவரால் அழிக்க முடியாத மொழியை யுடையது. உயர்ந்த - செம்மையான - உண்மையே செறிந்த இலக்கியத்தைக் கொண்டது. தமிழினத்தைப் பற்றிப் பகைவர் போடும் கணக்கு சரியல்ல. சமயங்கள், சாதிகள், மூடவழக்கங்கள் கட்சிப் பூசல்கள் இவைகளைக் கொண்டு தமிழினத்தை அலைக்கழித்து விட்டோம் என்று பகைவர் எண்ணலாம். அவைகள் இன்றைய வரைக்கும் ஒரு தமிழனின் உள்ள உறுதியைக் கூட மாற்றவில்லை. ஆயிரம் ஆண்டுகளாகப் பாரதம் படிக்கிறது தமிழினம். ஆயிரம் ஆண்டுகளாகத் துரோபதை அம்மனுக்குப் பொங்கலிடுகின்றது தமிழினம். ஆயிரம் ஆண்டுகளாக துரோபதை அம்மனுக்குப் பொங்க லிடுகின்றது தமிழினம். ஆயிலம் ஆண்டுகளாக ஐந்து பேருக்குத் துரோபதையைத் திருமணம் பண்ணி வைத்துத் தேங்காய் உடைக் கின்றது தமிழினம். ஆனால் அதே தமிழினம் - ஒரு தமிழச்சிக்கு ஒரு கணவனுக்கு மேற்பட்ட பல கணவன்மாரைத் தேட எண்ணியதுண்டா? அப்படி எண்ணும்படி தூண்டப்பட்டதுண்டா? தூண்டியவன் உண்டானால் அவன் உயிர் தப்பியதுண்டா? பகைவர் இங்கு வளர்த்ததாக எண்ணி மகிழும் வைதிகம், கட்சிப் பூசல்கள் அனைத்தும் தமிழினத்தின் முதன்மையை அணுவளவும் அசைக்கவில்லை. அசைக்க முடியாது. இனம் என்பது தனி மனிதனைக் குறிப்பதன்று. இனம் என்பது எண்ணிக்கை பற்றியதன்று. இனம் என்பது உருவமுடையதன்று. அது நிலைத்த ஒரு பண்பாட்டின் பெயர். தமிழினம் தொன்மையானது: மானமுடையது: தன்னிலை யினின்று வீழாததும் வீழ்ந்தால் வாழாததும் எதுவோ அதுதான் மானம் என அறிதல் வேண்டும். தமிழினம் தன் உள்ளப் பாங்கினின்று சிறிதுகூட மாறிவிட வில்லை. மாற்றிவிட எவற்றாலும் முடியவில்லை, முடியாது. திராவிடர் கழகம் என்பது தமிழினத்தின் உள்ளப் பாங்கின் மறுபெயர். இப்படி ஒரு படைப்பு! பெரியார் செயற்கரியது செய்தார் என்றால் - அவர் திராவிடர் கழகத்தைத்தான் செய்தருளினார் என்பதுதான்! திராவிடர் கழகம் இன மீட்சிக்குப் போர் தொடங்கிவிட்டது. எந்தத் தமிழன் மறுப்பான் எந்தத் தமிழன் அஞ்சுவான்! ஒவ்வொரு தமிழனும் இன்று தொண்டுக்கு முந்துகின்றான். தமிழினம் தொண்டு செய்யத் துடிக்கின்றது. தொண்டுக்கு இடம் திராவிடர் கழகந்தான்! - குயில், கிழமை இதழ், 9.12.1958, ப. 3-4 88. தமிழர்களும் மலையாளிகளும் ஒரே வயிற்றுப் பிள்ளைகள் இவ்வாறு சிலர் கூறுகின்றார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை! ஆனால், ஆரியனுக்குப் பிறந்த மலையாளிகளை அந்த இனத்தில் சேர்க்கக் கூடாது. நம் நாட்டை நாம் மீட்க முயலும் முயற்சி சிறியதன்று. பிறனைக் கெஞ்சுதலால் செப்பனிடக் கூடியதன்று. அம்முயற்சியில் இந்த நாட்டானை மட்டுமே சேர்க்க வேண்டும். ஆரியனைச் சேர்க்கலாமா? கலப்படங்களை அதாவது ஆரியனுக்குப் பிறந்தவனைச் சேர்க்கலாமா? - ஆரியனை - ஆரியனுக்குப் பிறந்தவனை நம்முடன் பிறந்தவனென்று எண்ணிவிடலாமா? இன்று நடப்பதென்ன? தமிழன் உயிரைப் பணயம் வைத்துத் தொடங்கி விட்டான், நாட்டை மீட்கும் போரை! இதில் ஆரியனுக்குப் பிறந்தவன் எப்படி நடந்து கொள்ளுகின்றான்? பார்த்தோமன்றோ! காட்டிக் கொடுக்கின்றான். தட்டிக் கொடுக்கின்றான் ஆரியனை! - அப்படித்தான் நடப்பான்; அவனிடம் வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது. உடன் வைத்துப் பார்த்தோம். உயர்வு செய்து பார்த்தோம். இனம் இனத்தோடுதானே ஒட்டிற்று! இனம் இனத்தைக் கண்டுதானே தன் வாலை ஆட்டிக் கொண்டிருக்கின்றது. தமிழரிற் சிலருக்கு மலையாளியிடம் நட்பிருக்கலாம்; அந்த மலையாளியால் தனிப்பட்ட முறையில் நன்மையும் இருக்கலாம்; ஆயினும் அந்த நட்பு என்பது தனிப்பட்ட வகையைச் சேர்ந்ததாகக் கொள்ள வேண்டுமேயன்றி அதைக் கொண்டு மலையாளிகள் அனைவரும் பொதுவகையில் நமக்கு ஒத்து வருவார்கள் என்று கண்மூடித்தனமாக நம்பிவிடலாகாது. தெலுங்கு நாடு பற்றியோ கன்னட நாடு பற்றியோ அவர்கள் நம்முடன் பிறந்தவர்கள் என்று கூறிவிடுவதில் தீய விளைவு ஒன்று மிராது; மலையாளிகள் அப்படியல்ல. அங்குள்ள மக்களிற் பெரும் பான்மையோர் பார்ப்பனர்கட்குப் பிறந்தவர்கள். பார்ப்பனனுக்குப் பிறந்தவன் தமிழ் நாட்டில் இருக்கின்றான். அவன் பார்ப்பனனுக்குப் பிறந்த மலையாளியிடம் அன்பு காட்டட்டும். காட்டத்தான் செய்வான். காட்டி வருகின்றான். அதற்காக நாமும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி விடுவதா? மலையாளிகள் எல்லாம் நம் உடன் பிறந்தவர் என்று பொறுப்பின்றிக் கூறி விடுவதா? இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. - குறள் - குயில், கிழமை இதழ், 16.12.1958, ப.2 89. இன விளக்கம் இனம் என்ற சொல், ஈனல் என்பதன் முதனிலை திரிந்த தொழிற்பெயராகிய இன் என்பது அம் சாரியை பெற்றது. ஆதலின் தொழிற்பெயர். பொருள்: ஈன்று தருவது எனப்படுவது. இனம் என்பது நல்வாழ்க்கை நிலையை ஈன்று தருவதாகிய பண்பாட்டிற்கு ஆனது, தொழிலாகுபெயர். அன்றியும், அப்பண்பாட்டையுடைய மக்கட்பிரிவை உணர்த்துங் கால், இனம் இருமடியாகு பெயர் என்பர். எனவே, இனம் என்பது ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும், ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையுடைய மக்கட் பிரிவையும் குறிக்கும். உலகில் பல இனங்கள் உண்டு. அதாவது பல பண்பாடுகள் உண்டு. இந்த இனந்தான் இனத்து மக்களை நல்வழிப்படுத்துவது. இனம் என்பதை உண்டாக்கியது எது எனில் அதுதான் மொழி. இனவளர்ச்சிக்கு மொழி வளர்ச்சியே காரணம். மொழியைப் பிரிந்த இனம் உயர்வைப் பிரியும்; புகழை இழக்கும். தட்பவெப்ப நிலையால் நிலத்தின் தன்மை வேறுவேறு. அந்தந்த நிலத்தில் வாழும் மக்களின் மொழியும் வேறுவேறு. ஆதலால் இனமும் வேறு வேறு. வேறுபட்ட ஒரு நிலத்து மக்கள் அதாவது வேறுபட்ட ஒரு மொழியுடையார் அவரவர் எல்லைக்கண் வாழ்ந்துவரும் வரைக்கும் இனம் என்பது தோற்றமளிப்பதே இல்லை. ஓர் எல்லையினர் ஒரு மொழியினர் மற்றோர் எல்லைக்கண் அடிவைக்கும் போதுதான் இனம் நெஞ்சை உறுத்தும். நாவலந்தீவில் தமிழரே இருந்தனர். இனம் என்ற சொல்லோ, கருத்தோ தோன்றியதில்லை. மற்றொரு மொழியினராகிய ஆரியர் புகுந்தனர். இனம் தோற்றமளித்தது. தமிழ்நாட்டில் இந்நாள் குறிப்பிடத்தக்க இனம் இரண்டு. ஒன்று தமிழினம், மற்றொன்று ஆரிய இனம். தமிழினம் என்றால் தமிழில் கூறப்படும் பண்பாடுகளை உடைய கூட்டமாகும். ஆரிய இனம் எனில் ஆரிய மொழியில் கூறப்படும் பண்பாடுகளை உடைய கூட்டமாகும். தமிழ்நூற்கள் என்பவை தமிழ் நான்மறையும், கபிலர் எண்ணூலும், திருக்குறளும், அகபொருளும், புறப்பொருளும் இவற்றின் வழிவந்தனவும் ஆகும். ஆரிய நூற்கள் ஆரிய மும்மறையும், மனுநூலும், பகவற் கீதையும் இவற்றின் வழிவந்த புராணம் முதலிய பொய்நூற்களும் ஆகும். பண்பாடுகள் என்பன மொழியின் பண்பட்ட உள்ளத்தின் விளைவாகிய ஒழுகலாறுகள், இனி, தமிழ்ப் பண்பாடுகள் அதாவது தமிழரின் ஒழுகலாறுகள் எவை எனக் காண வேண்டும். அதாவது தமிழினம் எது என்று காணவேண்டும். 1. உலகமும் அதிலுள்ள உயிர்த்தொகுதியும் தோன்றுவதற்கு இடமானது முதன்மை என்பது. ஆதி, முதன்மை ஒரு பொருள் உடைய தமிழ்ச்சொற்கள். இதை மூலப் பிரகிருதி என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடவர். 2. தோன்றிய உலகு, உயிர் அவற்றின் நடைமுறையை நிலைநிறுத்துவது அன்பு. 3. மக்கள் அடையத்தக்கது அறிவு. 4. அறிவின் முதன்மையை அடையும் நெறி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலேயாகும். 5. ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருத்திக்கு ஒருவனும் வாழ்க்கைத் துணை. 6. ஒருவன் செய்த தீவினைக்குக் கழுவாய் என்பது இல்லை. 7. மக்களில் உயர்வு தாழ்வு இல்லை; பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும். 8. சாதல் நேர்வதாயிருப்பினும் தாழ்ந்த நெறியில் ஒன்றை அடைதல் கூடாது. 9. தூய நினைவே அறமாவது. 10. சாதல் இறுதி, அதற்கு அப்பால் ஒரு நிலையை எண்ணும் எண்ணத்தில் எழுவதன்று ஈகை! 11. ஐந்து பருப் பொருள்களும் அவற்றின் வகையான கடல், மழை, கதிர், மதி முதலியவும், கறவை மாடு, குதிரை முதலியவும், உண்மை, அன்பு, நூற்கள் முதலியவும் ஆகிய கண்ணையும், மனத்தையும் கவர்வனவும், பயன்படுவனவும் தெய்வங்கள். இவைகள், தம் இயற்கைக்குப் புறம்பாக மக்களுக்கு ஒன்றையும் செய்வனவல்ல. எதிர்பார்ப்பதும் மடமையே! 12. பெருமைக்கு ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். 13. இவையும் இவைபோல்வன பிறவும் தமிழினம், அதாவது தமிழர் பண்பாடுகள். ஆரியப் பண்பாடுகள் இவற்றிற்கு மாறானவை. எனவே அறத்திற்கும் புறம்பானவை. இதனால் நாம் உணர்ந்துகொள்ள வேண்டியவை என்னவெனில், தமிழர் தொடங்கும் எந்தப் போரிலும் எந்தக் கிளர்ச்சியிலும் தமிழன் இவன் என்றறிந்து சேர்க்கவேண்டும். பார்ப்பானை விலக்க வேண்டும். பார்ப்பானுக்குப் பிறந்த எவனையும் விலக்க வேண்டும். - குயில், கிழமை இதழ், 23.12.1958 90. இரா. சிரி. தேசிகன் சிறுமதி தேசிகன், சுசாதிமித்திரன் தீபாவளி மலரில் தமிழில் ஆங்கிலச் சாயை என்ற தலைப்புடன், செய்ந் நன்றி கொன்றவன் என்ற சொற் றொடரை வள்ளுவர் தருகின்றார். இது க்ருதக்னன் என்ற வடமொழித் தொடரின் மொழி பெயர்ப்பைத் தவிர வேறில்லை என்று எழுதி யுள்ளதாக நண்பர் கழுதூர்த் திருநாவுக்கரசு நமக்கு எழுதி, இதற்குக் குயிலின் பதிலென்ன என்றும் கேட்டிருக்கின்றார். தமிழர் செய்த நன்றி கொன்றே இன்றுவரைக்கும் தின்று கொழுப்பாராகிய ஆரியரின் நூல்களில், நன்றி கொல்வதென்னும் பொருளுடைய ஒரு தொடரைத் தேசிகன் கண்டால், அது, நன்றி செய்து நன்றி செய்து நன்றி செயப்பட்டாரால் கொன்றன்ன, இன்னா அடைந்தாரான தமிழரின் தமிழ் நூற்சொற்றொடரின் வடமொழி ஆக்கம் எனக் கருதி அமைவுறவேண்டும். அன்றியும், என்றுமுள தென்றமிழின் தொன்று தொட்டுவரும் பாத்திறத்தையும் பாவேந்தர் நாத்திறத்தையும் நன்றாய்ந்து குன்றாச் சுவையுணர்வைக் கொள்ளவேண்டும். தேசிகன் சிறுமதி. அதை இன்றேனும் எய்துமா? எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை என்று எடுத்தார் வள்ளுவர். அவ்வடியின் முதற் சீர் தனக்கோர் எதுகை வேண்டிற்றன்றோ! செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்று முடித்தார். கவிஞரின் பண்பட்ட உள்ளமாகின்ற அச்சில் பதிந்து வெளிவரும் பாட்டுத் திறத்தின் இயல்பு நுனித்து நோக்குறுதல் வேண்டும் செய்ந்நன்றி கொன்ற மகன் என்றது கவிஞரின் உள்ளத்தினின்று எழும் இயற்கைத் தேனருவியின் தெறிப்பு. அது வள்ளுவரின் படைப்பு. அந்தத் தேனருவியை நோக்கி, நீ வடநாட்டு ஆற்றினின்று ஒரு செம்பு நீர் கொண்டு வந்தாயா என்று கேட்டது நகைப்புக்கே இடமாகும். அன்றியும், சமசுகிருதம் எனின் சேர்த்துப் பொறுக்கிச் செம்மைப் படுத்தப்பட்டது என்பது பொருள். எனவே வடமொழி என்பது நாராயண கோபாலஏனம். தனிமொழி அன்று. உண்மை இவ்வாறாகத், தமிழ் பெருநூற்களில் காணப்படும் அரிய தமிழ்ச் சொற்றொடர்க் கருத்துக்களைத் தேசிகன்கள், வடமொழி யின் நூற்களில் காணின், இவை தமிழினின்று வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டவை என்று கொள்வதே அறிவுடைமையாகும். - குயில், கிழமை இதழ், 23.12.1958, ப. 5 91. பொங்கற் புதுநாளில் உங்கள் தொண்டு என்ன? பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன். அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு. மற்றவர்கட்கு இல்லை. தி.க. தொண்டன் தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழத்தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டு வரும் தமிழ்த் தன்மைகளைக் கறை நீக்கி நிலைநிறுத்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றான். தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன் வேறு எவன்? தமிழ்மொழி வாழவேண்டும். இந்தி தொலையவேண்டும் என்று உயிரைப் பணயம் வைத்துப் போரில் இறங்க எவன் முன் வருகின்றான்? சாதி ஒழிய வேண்டும்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இறப்பு வரும் நேரத்தும் இன்னா நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க. தொண்டனை விடவேறு எவன் உள்ளான். எங்கே பார்க்க முடிகின்றது. பொங்கற் புதுநாள் தமிழர் திருநாள் அன்றோ! அது தி.க. தொண்டனுக்கு உரியதன்றோ! தமிழர் திருநாளைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில்தான் விழுந்துள்ளது. தமிழர் திருநாளைத் தமிழன் சிறப்பிப்பது என்றால் என்ன? தமிழர் திருநாளைத் தமிழன் கொண்டாடுவதென்றால் என்ன? தமிழர் எண்ணத்தைத், தமிழர் செயல்களைத், தமிழர் ஆசைகளைச் சிறப்புறச் செய்வதே அன்றோ? இனித் தி.க. தோழர்களை, தி.க. தலைவர்களை நான் கேட்கின்றேன். பொங்கல் நாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று. நேற்றுத் தி.க. கொள்கைகளை ஆய்ந்தீர்கள்; நேற்றுச் சொற் பெருக்காற்றினீர்கள், நேற்றுப் பாடினீர்கள் நாட்டுப் பாட்டு. பொங்கல் புது நாளில் - உங்கள் திருநாளில் என்ன செய்யப் போகின்றீர்கள் சிறப்பாக? மாவட்டத் தலைவர்கட்குக் கூறுகின்றேன்; ஒரு மாவட்டத்தில் - எங்கும் ஆயிரம் கழகக்கொடி ஏற்றப்படுதல் வேண்டும். ஒரு மாவட்டத்தில்-எங்கும் ஆயிரம் விடுதலை பரப்பப்படுதல் வேண்டும். ஒரு மாவட்டத்தில்-எங்கும் ஆயிரம் கழக நூற்கள் பரப்பப்படுதல் வேண்டும். ஒரு மாவட்டத்தில் எங்கும் ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்கப் படுதல் வேண்டும். இவ்வாறு செய்க! சோம்பல் என்னும் பள்ளத்தைத் தூர்க்க, உள்ளத்திற் காண்க தமிழர் திருநாள் தரும் பேரின்பத்தை. - குயில், கிழமை இதழ், 30.12.1958, ப.2 92. உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 1. ஓர் இனம் மற்றோர் இனத்தை மாய்க்கலாகாது. 2. ஒரு மொழி மற்றொருமொழியை மாய்க்கலாகாது. 3. ஒரு நாடு மற்றொரு நாட்டைப்பற்றிச் சுரண்டும் பான்மை கட்டோடு ஒழிதல் வேண்டும். 4. உள்நாட்டின் அமைதியைக் காக்கும் அளவுக்கு மேல் பெரும்படை, விலையேறப்பெற்ற அழிப்புக் கருவிகளை எந்தநாடும் வைத்திருத்தல் கூடாது; உண்டாக்கக் கூடாது. 5. அங்கங்குள்ள சான்றோரைக் கொண்ட ஓர் உலகப் பெருமன்றம் மேற்சொன்ன நான்கு திட்டங்களைச் சிதறாமல் மேற்பார்வை பார்த்து வரவேண்டும். இவ்வைந்து ஒழுக்கநெறிகள் நின்றாலன்றி உலகம் முன்னேற முடியாது. திங்கள் மண்டலநோக்கி நாயை அனுப்பும் கருவி செய்ய ஐம்பது கோடி செலவாயிற்றாம். அந்த நாட்டில் உள்ளவர்களும் அறிவாளிகளா? அன்புடையவர்களா? கதிரவனை அடையப் போகின்றதாம் இன்னொரு நாட்டின் கருவி. அதற்குப் பலகோடி செலவாம். கேடுகால எண்ணந் தவிர வேறென்ன இதுவெல்லாம்? பெரும்பொருளை இவ்வாறு பாழாக்கி விளையாடும் ஒருநாடு பொதுநலம் என்பது இன்னது என்று தெரிந்துகொண்டது என்றுகூட எண்ண முடியவில்லை ஆனால் அது பொதுவுடைமை பேசுகின்றது. காசு தந்து குழூஉச் சேர்க்கின்றது ஒருநாடு. ஏன் அவ்வாறு செய்கின்றது? அந்த உள்ளத்தில் அறம் உண்டா? உலகைச் சுரண்டுவது தானே அதன் உண்மை நோக்கம். எங்களிடம் நுண்ணறிவுடையோர் பலர் இருக்கிறார்கள். அரும் பொருள்களைக் கண்டுபிடிக்கின்றார்கள் என்றுகூறிப் பெருமை கொள்ளுகிறார்கள். உலகின் நலனுக்கு அந்த நுண்ணறி வுடையாரைப் பயன்படுத்துவதுண்டா? எங்கே? ஒரே நாளில் உலகத்தையழிக்க வழிதேட அன்றோ முயற்சி செய்கின்றார்கள். திருவுடைய நாடு மேலும் அருளையன்றோ தேட முயல வேண்டும். தன்னாட்டு மக்கள் நன்றாய் வாழவேண்டும் அதற்காக எந் நாட்டையும் எப்படியேனும் தொல்லைப்படுத்தலாம் என்றால் அது பெருந்தன்மையாகுமா? அறிவுடைய நாடு மேலும் அன்பை அன்றோ தேடவேண்டும். நாடுதோறும் நகரம் தோறும் கொள்ளைக்காரப் பசங்களையும், கொலைக் காரப் பசங்களையும் தூக்கிவிட்டுக் கலகம் செய்வதால் என்ன பயன்? ஒன்றுபட்ட நாடுகளின் அவை ஒன்று இருக்கிறதாம்! உலகை, அது அறநெறியில் செலுத்துகிறதாம்; எங்கே செலுத்துகிறது? சின்ன நாட்டுக்கு மேலும் இன்னல் தேடுவதில் மும்முரப்படுகின்றது. உலகம் இன்று அறமிலாத அன்பிலாத தீயர்களிடம் இருக்கின்றது; அது மீட்சியடைதல் வேண்டும். நாம் மேற்கூறிய ஐந்தொழுக்க நெறியில் உலகை நிறுத்த வேண்டும். வடவன், தமிழனை இகழ்வானா? தமிழ்மொழியை இந்தியால் கொல்ல எண்ணுவானா?. தமிழன் வரலாற்றை மாற்றியமைக்க எண்ணுவானா? தமிழினத்தைத் தலைசாய்க்க முயலுவானா? தமிழ் நாட்டைச் சுரண்டுவானா? - இத்தனை கொடுமைகளையும் வெளிப் படையாக நடத்திக் கொண்டுதானே இருக்கிறது நேருவின் ஆட்சி! தமிழர்களே! தமிழர் திருநாள் இது! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் வேண்டும்; ஒன்றுபடவேண்டும். பகைவர் இந்நாட்டை விட்டுச் சென்றுபட வேண்டும்; தமிழ் வாழ வேண்டும்; தமிழினம் தன் இயற்கை நிலையை எய்த வேண்டும்; தமிழன் மீண்டால் - தமிழ்நாடு விடுதலையடைந்தால் உலகை நன்னிலைக்கண் நிறுத்த முடியும். வாழ்க தமிழ்! வெல்க தமிழகம்! - குயில், கிழமை இதழ் பொங்கல் மலர், 14.1.1959, ப.4 குறிப்பு: 21. 1.1959 இதழ் வெளிவரவில்லை. 93. களையெடுத்தல் பயிருக்கு நல்லது 24.01.1959 சனியன்று வெளிவந்த விடுதலையில் பெரியாரின் அறிக்கை கண்டோம். அதில், கழகத்தின் இன்றைய நிலைமை நல்ல வளர்ச்சியும் தக்க மதிப்பும் பெருமக்கள் ஆதரவும் எதிர்பாராத பக்கமிருந்தெல்லாம் உதவியும் பெற்றிருப்பதாக நான் கருதி மகிழ்ச்சி அடைய வேண்டிய நிலையில் இருந்தாலும் நான் மேடையில் நின்று பேசும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் துக்கமும், வேதனையும், கவலையும், எதிர் காலத்தில் கழகத்தைப் பற்றி, கழக வாழ்வை, நடத்தையைப் பற்றி நல்ல நம்பிக்கை கொள்வதற்கு இல்லாத அளவு மயக்கமும் அடைந்து கொண்டிருப்பவனாகவே இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்கள். ஒரே கழகம் இந்நாட்டில் ஒரே ஆசிரியர் அந்த கழகத்திற்கு சட்டாம் பிள்ளைகள் ஒருசிலர்; மாணவர்கள் கோடிக்கணக்கினர். ஆசிரியர் பாடஞ் சொல்லிக் கொண்டே செல்கின்றார். மாணவர் அறிவுபெற்றுப் பெருக்கம் அடைந்துகொண்டே இருக்கின்றார்கள். இந்த நிலை தடைப்படுவதோ, வளர்ச்சியடைவதோ சட்டாம் பிள்ளைகளைப் பொறுத்தவையல்ல. மதிள் உறுப்பைத் தாங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றும் ஓர் உருவமும் மதிலைச் செய்த கொத்தனாரின் வேலைப் பாட்டில் ஒன்றே! இதுபற்றிப் பெரியார் வருந்த வேண்டாம்! மேலும் பெரியார், திராவிடர் கழகத்தில் பிளவுகளும் உட்பூசல்களும் மலிந்து கிடக்கின்றன. நல்லவர்கள், நாணயமானவர்கள் என்று என்னால் கருதப் பட்டவர்களிடமெல்லாம் எனக்கிருந்த உறுதி ஆட்டங் கொடுத்து விட்டது. பொருளாதாரத் துறையில், கழகத்தில் உள்ளவர்களில் யார்தாம் பொறுப்போடு கவலையோடு நடந்து கொள்ளுகிறார்கள் என என்னால் கண்டுபிடிப்பது கடினமான காரியமாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதற்குக் காரணம் கழக வளர்ச்சியும் இதனால் தோழர்கட்கு ஏற்பட்ட செல்வாக்கும் என்று கூடச் சொல்லலாம் (அதுதான் உண்மை). ஆனாலும் அண்மையில் நாம் மாபெருங் கிளர்ச்சிப் போராட்டங் களில், இறங்கிப் பெருந்தியாகங்கள் செய்ய வேண்டியவர்களாக இருப்பதால் நம் ஒழுக்கத்தாலும், கட்டுப்பாட்டினாலும் சுயநலமின்மை யாலும், நாணயத்தாலும் பொதுமக்களிடம் நாம் பெறவேண்டிய ஆதரவும் நல்லெண்ணமும் கொள்கையுணர்ச்சி பரவுதலையும், இழக்க வேண்டியதாகிவிடுமோ என்று பயப்படுகின்றேன். கோட்டி பிரிப்பதும், காட்டிக் கொடுப்பதுமான ஆசை நோய் வாய்ப்பட்ட சில சட்டாம்பிள்ளைகளால் பொது நலங் கருதிய போருக்கு இடையூறு நேருமோ என ஐயப்படுகின்றார் பெரியார். அஃது அவர் அருள் உள்ளத்தின் இயல்பாகலாம். எனினும் அவ்வாறு அவர்களால் பொதுப்பணிக்கு இடையூறு நேராது என்றும் நேரும்படி செய்ய அவர்களால் இயலாது என்றும் நாம் கருதுகின்றோம். மேலும் பெரியார் இந்நிலைமையை மாற்றியமைக்கத் தக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறுகின்றார்கள். பெரியார் இதை பன்னாளின் முன்னமே செய்திருக்க வேண்டும். இன்றாவது செய்ய முன்வந்தமை குறித்து நாம் மகிழ்ச்சி யடைகின்றோம். பெரியார் எடுக்கும் நடவடிக்கை பொதுநலம் கருதியது. தனிநலம் கெடுகின்றதே என்று வருந்தும் சட்டாம்பிள்ளைகள் நம் இயக்கத்தில் இல்லை. இருந்தாலும் அவர்களால் பெரியாரின் பொதுப்பணிக்கு எத்தீமையும் நேர்ந்துவிடாது. கழலை - கருவியிட்டு ஆற்றுவர் புண்வைத்து மூடார் பொதிந்து. - குயில், கிழமை இதழ், 27.1.1959, ப.3-4 94. தமிழகப் புலவர் குழு, திருச்சித் தமிழ்ச் சங்க வரவேற்பு அண்மையில் உருப்பெற்றது நாற்பத்தொன்பதின்மர் கொண்ட தமிழகப் புலவர் குழு. (17. 1. 1956) சனிக்கிழமையன்று திருச்சித் தமிழ்ச் சங்கத்தார் அப்புலவர் குழுவினுக்கு வரவேற்பு நல்கிப் பாராட்டினார் சிறப்பான முறையில். வருவார் எனத் திருச்சித் தமிழ்ச் சங்கத்தாரால் எதிர்பார்க்கப் பெற்ற 49 புலவர்களில், வந்த புலவர்கள் முப்பத்து மூவரேயாவர். மற்றவர் வராமைக்கு வருந்தியும் வரவேற்பு விழா சிறப்புறுமாறு வாழ்த்தியும் திருமுகம் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் பொங்கல் விழாவிற்குப் பற்பல ஊர்களுக்கும் அழைக்கப் பெற்றிருந்தவர்கள் அன்றோ. வரவேற்பு விழா, காலை 9.00 மணிக்குத் தொடங்கிற்று. விழா விற்குப் புலவர் குழுவினரில் ஒருவரும், அண்மையில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தினின்று ஓய்வு பெற்றவரும் முதுபெரும் புலவரும் ஆகிய திருவாளர் சதாசிவப் பண்டாரத்தார் தலைமை கொண்டருளினார்கள். திருச்சித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழகப் புலவர் குழுவினர்க்கு வரவேற்பிதழ் படிக்கப் பெற்றது. பண்டாரத்தார்க்கு மலர் மாலை சூட்டிப் பெருமகிழ்ச்சி விளைவித்தார்கள். பாராட்டுக்கு நன்றி கூறுமுகத்தால் தமிழகப் புலவர் குழுவின் சார்பில் பண்டாரத்தாரும் மற்றும் நால்வர் புலவரும் சொற்பெருக்காற்றி வந்திருந்த தமிழ்ப் பெருமக்களையெல்லாம் உணர்ச்சியில் ஆழ்த் தினமை குறிப்பிடத்தக்கதாம். திருச்சித் தேவர் மன்றத்து மேடை பெற்ற பெருமை என்றும் பெற்றதில்லை என்றனர் பலர். புலவருலகத்து முதுகெலும்புகளாகிய இம்முப்பத்து மூவரும் இனி நாம் செய்ய வேண்டுவது உண்டு எனில் அது செந்தமிழ்த் தொண்டு எனும் ஒரே உள்ளத்தினராய்க் காட்சியளித்த புதுமையை இந்நாடு பன்நூற்றாண்டுகளாகக் கண்டதில்லை என்றனர் பற்பலர். இவ்வருஞ் செயல் செய்தார் திருவாளர் கி.ஆ.பெ. விசுவநாதனார். வாழ்க என வாழ்த்தினர் எல்லாரும். செந்தமிழ்க் கொல்லையை அழிக்கப் புகுந்த நரிக்கூட்டம் எந்தமிழ்ப் புலவர் கண்டு அஞ்சி நடுங்கிற்று என்று மகிழ்ந்தோம் நாம். வரவேற்பு விழா பன்னிரண்டு மணியளவில் முடிய அதன்மேல் புலவர் குழுவினர் தம்மிற்கூடி நல்லபல தீர்மானங்களைச் செய்து முடிக்கவும், பண்ணியங்களும் பல்கறிகளும் பரிமாறி ஓவத்திலைகள் கூவியழைக்க வரிசையின் அமர்ந்து விருந்துண்டனர் புலவர் பெருமான்கள். தொழுதகு புலவர் நிழற்படம் எடுக்கப்பெற்றனர் பின்னர். அதன் பின்னர் புலவர் வந்ததற்கும் போவதற்கும் ஆன புகைவண்டி இரண்டாம் வகுப்புக் கட்டணம் தரப்பெற்றுப் புகைவண்டி நிலையம் நோக்கினர். திரு. கி.ஆ.பெ.வி. இயங்கியானது புலவர்களை ஏற்றிக் கொண்டு பன்முறை பறந்தது வண்டி நிலையம் நோக்கி. இக்குறிப்பில், அங்கு வந்திருந்த புலவர்களின் மகிழ்ச்சிக்குரிய பெயர்களைக் குறிக்கவில்லை, அடுத்த குயிலுக்கு ஆகட்டும். - குயில், கிழமை இதழ், 27.1.1959, ப. 4 தமிழகப் புலவர் குழு குழுவின் நாற்பத்தொன்பதின்மரின் பெயர்கள் அகரவரிசைப்படி தரப்படுகின்றது. வித்துவான் மு. அருணாசலம்பிள்ளை வே. அய்யாநாயக்கர் அன்பு, கருணையானந்தா, கா. அப்துல் கபூர் M.A., கா. அப்பாத்துரை M.A., L.T., பூ. ஆலாலசுந்தரம் செட்டியார் சரவண ஆறுமுக முதலியார் M.A., B.O.L., கீ. இராமலிங்கனார் M.A., டாக்டர் மா. இராசமாணிக்கனார் M.A., Ph.D., சி. இலக்குவனார், M.A., M.O.L., வித்துவான் மு. இராகவையங்கார் லெ.ப.கரு. இராமனாதன் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை வித்துவான் ந. இராமநாதன் இராமசாமி அடிகள் ஐயன்பெருமாள் கோனார் பண்டிதர் அ. கந்தசாமிபிள்ளை அ. காமாட்சி குமாரசாமி M.A., வித்துவான் சங்கரநாராயணர் பண்டிதர் சங்குப்புலவர் T.V. சதாசிவபண்டாரத்தார் புலவர் அ.மு. சரவணமுதலியார் டாக்டர் அ. சிதம்பரநாதன் M.A., Ph.D., தி. சிவப்பிரகாச சேதுராயர் புலவர் மயிலை சிவமுத்து கோ. சுப்பிரமணியப்பிள்ளை M.A., B.L., இ.மு. சுப்பிரமணியப்பிள்ளை டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை B.A., B.L., ப. சோதிமுத்து M.A., B.D., ச.சோ. பாரதியார் ஞா. தேவநேயப்பாவாணர் M.A., மொ.அ. துரை அரங்கனார் M.A., Ph.D., வித்துவான் ம. துரைசாமி ஐயர் ஔவை துரைசாமி பிள்ளை வித்துவான் நயினார் முகமது பரலி. சு. நெல்லையப்பர் அ.மு.பரமசிவானந்தம் M.A., M.Lit., m.கி. பரந்தாமனார் M.A., வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் டாக்டர் வ.சுப. மாணிக்கம் M.A., Ph.D., கவிஞர் M.P. மாகரேன மேரி. மாசிலாமணி அம்மையார் M.A., வித்துவான் முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் M.A., M.O.L., டாக்டர் மு. வரதசனார் M.A., Ph.D., வித்துவான் க. வெள்ளைவாரணர் வெங்கட்ராம ஐயா M.A., B.O.L., மெ.வீ. வேணுகோபால் பிள்ளை இப்பெயர்ப் பட்டியலில், சிறிது மாறுதல் ஏற்படலாம் அடுத்த குயிலில் தெரிவிக்கின்றோம். - குயில், கிழமை இதழ், 3.2.1959, ப. 4 95. தில்லிக் கழுகு தில்லிக் கழுகின் பிடியிலிருந்து தப்ப வேண்டும். தில்லிக்குத் தமிழகம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்வதன் வாயிலாகத் தமிழர்க்கான நலன்களை அடைந்து கொள்ளலாம் என்று சில எண்ணுகின்றார்கள். அது மயக்கமேயாகும். தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழ் இனம் என்பன பூண்டற்றுப் போக வேண்டும் என்பதுதான் தில்லிக் கழுகின் முடிவான எண்ணம். இந்த முயற்சியை அது மறைவிடமாகச் செய்கின்றதா என்றால் அதுவு மில்லையே. வெளிப்படையாகச் செய்து கொண்டே தமிழா உன்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்கின்றது தமிழனை நோக்கி. சென்னை இராச்சியம் என்கின்றது தமிழ்நாட்டை. அது வேண்டாம் என்று தமிழர்கள் கரடியாகக் கத்தினார்கள். மதித்ததா தில்லிக்கழுகு! அதன் தலைக்கனம் சிறிதாவது குறைந்தபாடுண்டா? மேலும் அதன் தீயவழிநோக்கி இன்னும் இரண்டடி முன்னேறியது. தமிழ் வரலாறு, தமிழின் தொன்மை, தமிழின் தனித்தன்மை ஆகிய இயல்பாக அமைந்த தமிழர் பெருமையே தலைகீழாக்க ஆவன செய்கின்றது. தமிழின் குடரை நோக்கிப் பாய்கின்றது. தில்லிக் கழுகின் கூரிய அலகு. அது என்ன நினைக்கிறது? தமிழகத்தில் நாலைந்து பேர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாலுகோடி மக்களையும் வேண்டியது சுரண்டி ஒழித்துவிடலாம். இதுபகற் கனவாகத்தான் போகும். இன்று தெரியாது. இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளும் தில்லிக் கழுகு. ஆகாஷ்வாணி என்றான் ஒரு முட்டாள். வானொலி இருக்க ஆகாஷ்வாணி என்னடா என்று கேட்டால் திருந்த வேண்டுமே! தில்லியின் துணைகொண்டு ஆகாஷ்வாணி என்று சொல்லுவேன் என்கின்றான் அந்த முட்டாள். தமிழர்களின் உணர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகின்றோமே, இதனால் தமிழர்களையே இழந்துவிட நேர்ந்துவிடுகின்றதே என்று அஞ்சுகிறதா கழுகு. சிறிதுமில்லை. திருச்சி வானொலி நிலையத்தின் முன் இளவழகன் உண்ணா நோன்பு மேற்கொண்டார். அவரை ஆகாஷ்வாணி கைவிடப்படும் என்று நம்பவைத்தது தவிரக் கழுகின் பிடி சிறிதும் தளர்ந்தபாடில்லை. இதோ சென்னை வானொலி நிலையத்தின் முன் அரங்கரத்தினம் உண்ணாநோன்பு துவங்கி இன்று (31.1.59) பத்து நாட்கள் ஆகின்றன. உயிர்த் தத்தளிக்கின்றது தமிழன்பர்க்கு! அவர் கேட்பதெல்லாம் ஆகாஷ்வாணி வேண்டாம். வானொலியே வேண்டும் என்பது தான். அரங்கரத்தினம் சாகத்தான் வேண்டுமா? அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் தீயர்கள் வாழத்தான் வேண்டுமா? அரங்கரத்தினம் சாவு என்ன செய்துவிடும் என்று எண்ணலாம் ஆட்சியாளர். என்ன செய்துவிடும் என்று எண்ணலாம் தில்லிக்கழுகு. அண்மை எதிர்காலமே இதற்கு நல்ல பதில் கூறத்தான் போகின்றது. தமிழுணர்ச்சியைச் சிறிதென எண்ணிவிடாதே தில்லிக்கழுகே! உன்னைக் காத்துக் கொள்ள முடியாது. ஆகாஷ்வாணியைக் கைவிடு! அஞ்சு! நடுங்கு! - குயில், கிழமை இதழ், 3.2.1959, ப. 2 96. முற்றுகை இடுவோம் தமிழர் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும் ஆகாஷ்வாணி கிளம்பும் இடத்தை முற்றுகையிடவேண்டும். இரண்டு கேட்க வேண்டும். ஆகாஷ்வாணி நிலையம் இருக்க வேண்டுமா? ஒழிய வேண்டுமா? என்று. இப்படிச் செய்யத் தமிழர்களால் தமிழர் தலைவர்களால் ஆகவில்லை எனில் தமிழர் வெள்ளம் கடல் வெள்ளத்தோடு கலந்துவிட வேண்டும்-தமிழர் வாழ்வுக்கே திருவாசகம் பாடிவிட வேண்டும். மானமிழந்த பின் வாழாமை முன்னினிதே அன்றோ! நம்பிள்ளை, தமிழர்களின் படித்திருவாளன் அரங்க ரத்தினம் உயிர்விடுகின்றான். தமிழர் வாழ்க்கைக்கே ஒரு தேர்தலை ஏற்படுத்தி விட்டான். நானிலம் நம்மை நோக்கிக் கொண்டிருக்கின்றது. அது நம்மைக் கான்றுமிழ விடலாமா? வடக்கத்தியான் நம் வீரத்தை அளந்து பார்க்கின்றான். நாம் பேடிகள் அல்லர் என்பதைக் காட்ட வேண்டாமா? ஆண்டதாகச் சொல்லிக் கொள்ளுகின்றோம் - நாகரிகம் கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றோம்; - வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றோம். எழுவோம்! தூங்க மாட்டோம் ! ! ! - குயில், கிழமை இதழ், 17.2.1959, ப. 2 97. என்ன நடந்தது? ஆகாஷ்வாணியை எதிர்த்து உண்ணாநோன்பு கொண்ட திரு. அரங்கரத்தினம் நேற்றுவரைக்கும் (29) நாட்களைத் தள்ளி விட்டார். இது ஆட்சியாளருக்குப் பெரியதோர் அச்சத்தை உண்டு பண்ணியதில் வியப்பில்லை. இந்த உண்ணா நோன்புச் செய்தியில் மிகுதி யாய்த் தலையிட்டுக் கருத்தை வெளியிட்டு மக்களின் மனக் கசப்பைத் தேடிக்கொண்டவர் சென்னை அமைச்சர் திரு. பக்தவச்சலனாரே. அரங்கரத்தினத்தின் உயிர் போய்விட்டால் தமக்குத் தான் மக்களால் தொல்லை ஏற்படும் என்று பெரிதும் அஞ்சிக் கிடந்தவர் பத்தவச்சலனாராகத்தான் இருக்க வேண்டும். (29)ம் நாளாகிய 19.2.1959ல் தமிழ்நாட்டுத் தலைவர்கள் அரங்க ரத்தினத்தைக் கண்டு இந்தப் போராட்டம் வெற்றிபெற்று விட்டது. ஆகவே உண்ணா நோன்பை நிறுத்திவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகத் தினத்தந்தி செப்புகின்றது. இவ்வாறு கேட்டுக் கொண்ட தமிழ்நாட்டுத் தலைவர்கள் இன்னின்னார் என்பதையும் பெயர்களையும் ஆதித்தனார் தினத்தந்தி சொல்லியுள்ளது. அவர்கள்தாம், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா. ஆதித்தனார், திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்களில் ஒருவரான க.அன்பழகன், நாம் தமிழர் இயக்கச் செயலாளர் சி.அ. வரதராசன் மற்றும் பல கட்சிக்காரர்கள். தமிழ்நாட்டின் தலைவர்களைப் பார்த்தீர்களா? நினைவில் வைத்துக் கொள்ளுவது கடினம். ஒருதாளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவர்களின் பெயர்ப்பட்டியல் பெரியதா யிருப்பதால்! இந்த இரண்டு மூன்று ஆட்கள் மட்டுமா இந்த அரும்பணி செய்ய முன்வரவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். வேறு என்ன செய்யச் சொல்லுகிறீர்கள். பக்தவச்சலனாருக்குக் கிடைத்த கை யாட்கள் இவ்வளவு மட்டுமே. இந்த கீழ்த்தரச் செயலுக்கு எல்லாரும் ஒப்புக்கொள்வார்களா? உள்ளம் ஒப்புக்கொண்டாலும் வெளிப் படையாக வெளியில் வர ஒப்புக்கொள்வார்களா? வானொலி என்ற தொடரையும் ஆகாஷ்வாணிகூட வைத்துக் கொள்ளுங்கள் என்று தில்லியிலிருந்து சேதி வந்ததாக அமைச்சர் சில நாட்களின் முன்னமே சொல்லியதை அரங்கரத்தினமும் இந்த ஆதித்தனாரும் பிறரும் ஒப்ப மறுத்தார்கள் என்பது அனைவர்க்கும் நினைவிருக்கும். இன்றைக்கு அதையே தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர்கள் வெற்றி என்று சொல்லியதன் காரணம் என்ன? தமிழ் மானத்தை வடவனுக்குக் காட்டிக் கொடுப்பதும் பத்தவச்சலனாருக்கு அரங்கரத்தினத்தைக் கூட்டிக் கொடுப்பதுந்தானே! இதில் படிப்போருக்கு ஓர் ஐயப்பாடு தோன்றலாம். இந்தப் புண்ணியச் செயலில் அன்பழகனும் ஆதித்தனார் மட்டும் தலையிட்ட தென்ன என்று. அன்பழகனார் பக்தவச்சலனாரின் கையாளனார் இல்லையா? ஆதித்தனார் கிடைத்தது எப்படி என்று கேட்கின்றீர்கள். தி.மு.க. ஆள் பிடிப்பிக்கு அன்பழகனார் ஆதித்தனாரின் புதுத்தொடுப்பு! ஒழிக தமிழ்! வாழ்க வஞ்ச நெஞ்சங்கள் !!. - குயில், கிழமை இதழ், 24.2.1959, ப. 2 98. தந்தை வந்தார்! சென்னையினின்று பிப்ரவரி ஒன்றில் புறப்பட்டார் பெரியார், எதை நோக்கி? ஆரியநாட்டை, நேருவின் வீட்டை நோக்கி. அரிய நகரங்கள் அனைத்திலும் சீரிய - நேரிய வரவேற்புப் பெற்றார் பெரியார். ஐதராபாத்தில் தங்கினார். நாகப்பூரில் தங்கினார்; சான்சியில் தங்கினார் பெரியார். அங்கங்கிருந்த தமிழ்நாட்டவர் பெரியாரை வரவேற்று அன்பு காட்டியதில் வியப்பில்லை. உள்ளூர்த் திருவாளர்கள் வெள்ளம்போல் கூடி வரவேற்று இன்றைய இந்திய அரசியல் முரசு கிழிந்து வருவதற்குள்ள தோரணத்தையும் மக்கள் கைக்கொள்ள வேண்டிய தோரணங்களையும் கேட்டு நல்லுணர்வு பெற்றனர் என்றால் அதுதான் வியப்பு! அதன்பின் கான்பூருக்குப் பெரியார் ஏன் போகமாட்டார்? லக்கனோ பெரியாருக்கு என்ன சுக்குநீரா? - இரண்டு பெருநகரங் களிலும் இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பில் பெரியாருக்கு நடத்தியது ஊர்வலம் அன்று. அது பார்வலம்! பெரியாருக்கு அன்பு கனிந்த வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் நேரு கூட்டத்திற்கு அங்கலாய்ப்பு அளித்தனர். குடியரசு கட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றல்ல; பல. அக்கூட்டங்களில் கலந்துகொண்ட மக்கள்தொகை ஓராயிரக்கணக் கல்ல - நூறாயிரக்கணக்கு ஐயாவின் அறிவுரைப் பெருக்கு நெஞ்சின் புத்துருக்கு! சொல் ஒவ்வொன்றும் வறுமை அகற்றும் தங்கக்கட்டி! எதிரிகளைச் சிதறடிக்கும் சிங்கக்குட்டி. இருட்டறைக்குத் திறப்புத் தாழ். குருட்டுநோய் தெருட்டு மருந்து - உண்மை கருத்துப் பெற்ற மக்கள் அனைவரும் அவைகளைப் பெறாத நாள் எல்லாம் நாங்கள் பிறவா நாள் என்றாரன்றோ? மருணீக்கியார் (டாக்டர்) அம்பேத்காரையும் நாங்கள் இழந்தோம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெருந்தொகையின ராகிய எமக்கெல்லாம் தலைவர் நீங்களே, சார்ந்து கடைத்தேற எண்ணுவோர் நாங்களே! இப்படியல்லவா செதுக்கி முடித்தது ஓர் செப்பேடு! அறிவுப் பொருளாகச் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் கண்ட லக்கனோ பல்கலைக் கழகம் பெரியார் திருமுன் ஓர் அழைப்பைப் படைத்தது. அங்கணும் சென்று ஆனேறு பொழிந்தது தேனாறு. சாதி ஒழிப்பின் இன்றியமையாமையை நன்று விளக்கி அந்தப் பாழுங்கிணற்றினின்று மீளும்படிக்குள்ள வழிவகை இன்னதென்றும் பன்னிப்பன்னி உரைத்தருளினார் தந்தை பெரியார். அங்கு எல்லாக் கூட்டங்களிலுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தன் மானம் என்னும் உயிரை இழக்காதிருக்க இந்து மதத்தைவிட்டு வெளி யேறிப் புத்தநெறியைத் தழுவ வேண்டும் என்பதை வலியுறுத்தியே சென்றார்கள். இவ்வாறு பெரியார் வலியுறுத்தினால் கிலியுறுத்தாமல் இருக்கும் இந்துமகா சபையினரை! என்ன அவர்கள் செய்தார்கள்? பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவர வேட்டுக்கு நெருப்பு வைத்தார்கள். ஆனால் அது பிசுபிசுத்துப் போனது. மேலும் நம் பெரியார் என்ன செய்தார்? வீட்டுக்கா கம்பி நீட்டினார்? ஓட்டினார் வண்டியை உத்தரப்பிரதேசம் நோக்கி! நேருவின் மாநிலத்தை நோக்கி! ஆட்சியிலிருக்கும் அரசியலாரின் கொடுமைகளை அகர வரிசையாக விளக்கினார். மறைவாக அன்று; வெளிப்படையாக. மெல்ல அன்று குரல் எடுத்து, இரண்டுபேர் முன்னல்ல! எண்ணித் தொலையாப் பெருமக்கள் முன்! அப்படியே அங்கேயே கையோடு பெரியார் பெற்றுப் பையோடு கொண்டு வந்த பொருள் என்ன? சாதி ஒழிப்புக்கு தக்க ஆதரவு. நாட்டின் மீட்சிப் போராட்டத்திற்கு நல்ல ஒத்துழைப்பு; இந்த இரண்டுகோடி வெண்பொற் காசுகளே! இந்திய யூனியன் தலைநகரிலும் (புதுதில்லி) பல கூட்டங்களில் உற்றதம் கருத்துக்கு வெற்றி முரசு முழங்கி அம்பாய்ப் பாய்ந்தார் பம்பாய் மாநிலம். பம்பாயில் பல எம்.பிக்களும் தமிழர்களும் அரசியல் கணக்கரும் அன்புடன் வரவேற்று நலஞ் செய்தனர் பெரியாருக்கு, அங்கும் தந்தையார் அறிவுரை ஆற்றுகையில் கடவுள், மதம், ஜனநாயகம் (மக்களாட்சி) என்ற பேய்களையும் பார்ப்பன ஏடுகளையும் அரசியல் கட்சிகள், சட்டமன்றப் பித்தம், சினிமா முதலிய தொத்து நோய்களையும் ஒழித்துக்கட்டிப் பார்ப்பான்-பறையன் ஒழிந்த ஒருநிலைப் பெருமக்கள் அமைந்த நிறுவனத்தை நிறுவவேண்டும் என்பதை வலியுறுத்தியருளினார். அவ்வாறு பெரியார் வலியுறுத்தியது பயன் கிடைத்தது - கைமேல். அரசியல் கணக்கர் பலர், பெரியார் வழி நிற்பதாக உறுதி கூறினார் அன்றோ! வெறுங்கையோடு திரும்பினாலும் விரும்பி எதிர்கொண்டு வாழ்த்தி வரவேற்கும் தமிழராகிய நாம் கொடியைத் தூக்கி வரும் பெரியாரை 1.3.1959 சென்னைத் திருவல்லிக்கேணியில் வரவேற்காமல் தூங்கவா போகின்றோம், வரவேற்புப் பொதுகூட்டத்தில் அவரிடம் எதிர்பார்க்கும் வடபுலச் செலவு விரிவைக் கேளாது வாளாயிருக்கவா முடியும்!. - குயில், கிழமை இதழ், 3.3.1959, ப. 3-4 99. நீர் ஒரு தலைவரா? - I கேள்வி : நீர் யார்? பதில் : மாவட்டத் தலைவர். கேள்வி : உம் தலைமையில் எத்தனைபேர் உறுப்பினர்? பதில் : கிளைக்கழகங்களில் இருப்பவர்களையெல்லாம் சேர்த்தால் நூறுபேர்கள் இருக்கலாம். கேள்வி : மாவட்டத் தலைமை அலுவலக உறுப்பினர்? பதில் : எங்கே? தம்தம் வேலையைப் பார்த்துக் கொள்ளுகின்றார்கள். நான் ஒருவன்தான். கேள்வி : மாவட்ட மாநாடு நடத்தினீர்களா? பதில் : ஓ! மிகச் சிறப்பாக. கேள்வி : பெரியாருக்கு வரவேற்பு நடத்தினீர்களா? பதில் : மிகமிகச் சிறப்பாக. கேள்வி : உள்ளூரில் உமக்குப் போட்டியாகக் கிளம்புகின்றவர்களால் உமக்கு ஏற்படும் தொல்லை எப்படி? பதில் : ஒழித்துக்கட்டி விட்டேன். கேள்வி : இத்தனை சிறப்பாக மாநாடு, இத்தனை சிறப்பாக வரவேற்பு நடத்திய உங்களை அவர்களால் என்ன செய்ய முடியும்? பதில் : அசைக்க முடியவில்லை. அதற்காகத்தானே ஐயாவுக்கு வரவேற்பு! மாநாடு! கேள்வி : சரிதானே! c§fq®¥ òift©o Ãiya¤âš ‘ÉLjiy »il¡»wjh? பதில் : இல்லை. கேள்வி : உங்களூர்க்கு எத்தனை விடுதலை வருவதுண்டு? பதில் : தனித்தனியாகத் தபாலில் வருவது மொத்தம் சேர்த்தால் எட்டு இருக்கும். கேள்வி : வெளியூர்க்காரர் வந்தால் கழகம் இருப்பது தெரிந்து மகிழ எத்தனை இடத்தில் கழகக் கொடிகள் பறக்கின்றன. பதில் : அதில் என்ன ஐயா இருக்கிறது. அது பற்றி நாங்கள் எண்ணுவதே இல்லை. கேள்வி : கழகச் சார்பில் வெளிவந்துள்ள நம் அருமை நூற்களை உங்கள் மாவட்ட மக்கள் எவ்வளவு படிகள்? எத்தனை பேர்கள்? வாங்கியிருக்கிறார்கள்?. பதில் : என்னிடமிருந்துதான் வாங்கிப் போவார்கள். அவர்களும் சிலரே. கேள்வி : பொறுப்பாகத் தொண்டு செய்யத் துடிக்கும் தொண்டர் களுக்கு இடமளித்து நீங்கள் ஏன் விலகிக் கொள்ளக்கூடாது? பதில் : அப்படியானால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கேள்வி : நீர் ஒரு தலைவரா? - குயில், கிழமை இதழ், 10.3.1959, ப. 2 100. நீர் ஒரு தலைவரா? - II கேள்வி : நீவிர் யார்? பதில் : நான் தான் மாவட்டத் தலைவன். கேள்வி : திராவிடர் கழகப் போராட்டத்தில் கடைசி ஐந்தாண்டின் நிலை என்ன? பதில் : உயிரைப் பணயம் வைத்துப் (கவர் அன்று) போராடுகின்றது நம் கழகம். கேள்வி : போரின் நோக்கம்? பதில் : தமிழக விடுதலை கேள்வி : இதில் பெரியாரின் அரிய கருத்துக்கள் அரிய உழைப்பு அஞ்சா நெஞ்சு பயன்பட்டது தவிர உம்மால் ஏற்பட்ட பயன் என்ன? பதில் : ஏனிமில்லை? கூட்டங்கள் நடத்தினேன். கேள்வி : பெரியாரைக் காட்டித்தானே? பதில் : மாநாடு பெரிதாக நடத்தினேன். கேள்வி : பெரியாரைக் கொண்டுதானே? பதில் : பெரியாருக்கு நான் ஏற்பாடு செய்த வரவேற்பில் எத்தனை இலக்கம் மக்கள்? கேள்வி : பெரியாருக்காக மக்கள் வந்தார்கள் இல்லையா? குறிப்பிடத் தக்க வகையில் நீர்!... நீர் செய்தது என்ன? நீர் செய்ததாகச் சொல்லும் தொண்டில் உன் பெயர் இருக்கவேண்டும். வேறு பெயர் இருத்தல்கூடாது. அப்படிச் செய்த தொண்டில் ஒன்று சொல்லுக? பதில் : அப்படிப்பட்டதாக நான் என்ன செய்யவேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம். கேள்வி : நீர் எப்போதாவது ஒரு தமிழனைக் கண்டு - இயக்க ஏடான விடுதலை வாங்க வேண்டிய இன்றியமை குறித்துப் பேசிய துண்டா? வாங்கச் செய்ததுண்டா? இயக்க வெளியீடுகளைப் பரப்ப முயன்றதுண்டா? உன் மாவட்ட மக்களிடம் சென்று இயக்கத்தில் உறுப்பினராகச் சேரக் கேட்டுக் கொண்ட துண்டா? எங்கும் தி.க. மணிக்கொடி பறக்க முயன்றதுண்டா? மாவட்டத் தலைவரே! இவைகளைச் செய்திருந்தால் நீர் செய்தீர் அரும்பணி! பதில் : இல்லாவிட்டால்? கேள்வி : நீர் ஒரு தலைவரா? - குயில், கிழமை இதழ், 17.3.1959, ப. 2 101. சென்னை ஆளவந்தாருக்கு விண்ணப்பம் தமிழக ஆளவந்தார்கள், புதுவையரசுக்குக் கீழுள்ள மக்களிடத்தும் சிறிது இரக்கம் காட்ட வேண்டும். அது தில்லியின் மேற்பார்வைக்கு உட்பட்டதுதானே என்று இருந்துவிடக் கூடாது. தில்லி ஆளவந்தார் தில்லியில் இருக்கின்றார்கள். புதுவை ஆயிரக் கணக்கான கல்லுக்கு இப்பால் இருக்கின்றது. தில்லி ஆளவந்தார் புதுவையில் வந்துள்ள பெரிய அலுவலாளர் களின் சொற்படிதான் நடக்கமுடியும். நேரிலிருந்து நிலைமையை நோக்குவது எப்படி? புதுவையில் வந்து குமிந்துள்ள எல்லா அலுவல்காரர்களும் ஒரு வகையான ஆட்கள். புதுவை மக்கள் பற்றிய கவலையில்லாதவர்கள். காரைக்காலில் விளையும் நெல்லை - அரிசியைப் புதுவைக்கே அனுப்பச் செய்ய வேண்டும் என்று புதுவை மக்கள் கரடியாய்க் கத்திப் பார்த்துவிட்டார்கள். புதுவை அலுவல்காரர்களின் காதில் அக்குறைபாடு ஏறினாலும் காரைக்காலில் உள்ள அலுவல்காரர்களுக்குக் கைக்கூலி வரா தொழியுமே என்ற கவலையால் கேளாக் காதர்போல் வாளாவிருக் கின்றார்கள். நிலைமை புதுவை மக்கள் சாக்காட்டை நெருங்குவதாயுள்ளது. இரண்டு நாள் முன், புதுவை நோக்கி தமிழ்நாட்டரசின் எல்லையி னின்று நெல்வந்து கொண்டிருந்தது. அதைத் தமிழக அரசு, தன் சட்டப்படி மறித்துவிட்டது. காரையரிசி, புதுவைக்கு வரும்படி செய்யவில்லை; இங்குள்ள அதிகாரிகள், வந்து கொண்டிருந்த அரிசி, நெல்லை வராது மறித்த தமிழக அரசை நோக்கிக் கெஞ்சவுமில்லை. இங்குள்ள அதிகாரிகள்! அவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? - புதுவை மக்களுக்குப் பிரஞ்சுக்காரர் மேல் பற்று ஏற்படவேண்டும். அதன் வாயிலாக் கிளர்ச்சி ஏற்படவேண்டும். சந்தடி சாக்கில் புதுவை மக்களின் சாக்கடையை அகப்பை கட்டிச் சுரண்டவேண்டும். கைக்கூலியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். வீடுகட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் - இவ்வளவுதான் அவர்களின் எண்ணம். ஏதோ சிலர் புதியராக, நல்லவராக வந்துள்ள பெரிய அலுவல் காரர்களையும் ஒழித்துக் கட்டத்தான் பரபரப்பாக வேலை நடக்கிறது இங்கே. அரிசி இன்றி மக்கள் ஒழிவதில் அவர்கட்குப் பரபரப்பு ஏற்படவே இல்லை. ஏற்படப் போவதும் இல்லை. தமிழக அரசினர் - அமைச்சர்கள் அங்குச் சேர்க்கும் அரிசியில் எமக்குப் போதிய அளவு உதவி செய்தால் அது உயிர் தந்ததாக இருக்கும்! இன்றைய விலை ஒரு ரூபாய்க்குப் பட்டணம் படி முக்காற்படி!! - குயில், கிழமை இதழ், 24.3.1959, ப.3 102. கவிஞர் நினைவிற்கு! எந்தன் உந்தன் எனத் தமிழில் சொற்களேயில்லை. இதை முன் ஒருமுறை விளக்கியுள்ளோம். இவ்வாறுள்ள பிழைச் சொற்களைப் படித்தவர்களே எழுதுவதென்றால், இராசகோபாலாச்சாரிக்கும் இவர்கட்கும் என்ன வேறுபாடு? எம் என்பது பன்மைச்சொல் அதனோடு பன்மைக்குரிய தம் என்பது தான் சேரும். எனவே எந்தம் என்று எழுதவேண்டும். உந்தம் என்பதும் அப்படியே. என் என்பதும் உன் என்பதும் ஒருமைக்குரியவை. இவற்றோடு ஒருமைக்குரிய தன் சேரவேண்டும். எனவே என்றன், உன்றன் என எழுதவேண்டும். *** போக, வர, இருக்க என - இவ்வாறு வரும் சொற்களுக்குச் செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அல்லது (சுருக்கமாகச்) செயவெனெச்சம் என்பார்கள். இவற்றின்முன் வல்லெழுத்துக்கள். அவையாவன. க, ச, த, ப என்பவை வந்தால் மிக வேண்டும். எப்படி? போக + கண்டான் = போகக்கண்டான். வரச்சொன்னான், இருக்கத் தின்றான் எனப் பகர்ந்தான் என. க, ச, த, ப என்று கூறினால் (க) கா,கி முதலியவற்றையும் (ச) சா,சி முதலியவற்றையும் (த) தா,தி முதலியவற்றையும் (ப) பா,பி முதலிய வற்றையும் குறிக்கும். கவிதை எழுதக் கசடறக் கற்க. என்பது அகவலடி. இதில் எழுத என்னும் செயவெனெச்சத்தின் முன் க என்ற வல்லெழுத்து வந்ததால் எழுதக் கசடற என மிகுந்தது. அறக்கற்க என்பதில் அற என்பது செயவெனெச்சம்! அதன் முன் க என்னும் வல்லெழுத்து வந்ததால் அறக் கற்க என மிகுந்தது. அழகுக் கழகு கூட்டுவார் போலக் குழந்தைக்குப் பன்மணி இழைகள் கூட்டினர் என்பது அகவலின் இரண்டடி. முதலடியின் கடைசியில் உள்ள போல என்பது செயவென் எச்சம். அதன்முன் இரண்டாம் அடியின் முதலிலுள்ள வல்லெழுத்து வந்தது; அதனால் போல + குழந்தை, போலக்குழந்தை என மிகுந்தது. கவிஞர்கள் சிலர் - பாட்டில் வரும் ஓரடியின் கடைசிச் சொல்லையும் அடுத்த அடியில் வரும் முதற்சொல்லையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதேயில்லை. அப்படியானால் இவர்கட்கும் சுதேசமித்திரன், தினமணிகட்கும் என்ன வேறுபாடு? *** அகரத்தை அதாவது அ என்பதை ஈற்றிலுடைய சில சொற்களின் முன் வல்லினம் (க,ச,த,ப) வந்தால் இயல்பாகும் என்பதற்கு, நன்னூற் பாட்டு ஒன்றுண்டு. அது: செய்யிய என்னும் வினைஎச்சம் பல்வகைப் பெயரின் எச்சம் முற்று, ஆறனுருபே அஃறிணைப் பன்மை? அம்ம - முன்இயல்பே. செய்யிய சென்றான் என்பதில் செய்யிய என்பது வினையெச்சம். உண்ணிய, காணிய என்பன முதலியனவும் அவ்வினையெச்சங்களே. செய்யிய சென்றான், உண்ணிய போனான் காணிய சென்றான் என இயல்பாகும். வந்த குதிரை, வருகின்ற குதிரை என்பனவற்றில் உள்ள வந்த, வருகின்ற என்பன குதிரை என்ற பெயரைக் கொண்டு முடிவதால் வந்த, வருகின்ற என்பன பெயரெச்சங்கள். இவற்றின் முன் வல்லினம் வந்தால் வந்த குதிரை இயல்பாகும். வந்த, வருகின்ற, போகின்ற, போன என்பன போன்றவையும் பெயரெச்சச் சொற்களே! வந்தன குதிரைகள், வருகின்றன குதிரைகள் என்பவற்றில் வந்தன வருகின்றன என்பன முற்று. வந்தாள், வந்தான், வந்தார், வந்தது எனப் பல முற்றுக்கள் உள்ளன. அவைகளைப் பற்றி இங்கே பேச்சில்லை. அகரத்தை இறுதியாக உடைய வந்தன முதலியவைகளைப் பற்றித் தானே இங்கே கூறவந்தது. வந்தன குதிரை இடையில் ஒற்றுமிகாது வந்தன குதிரை என்றே எழுத வேண்டும். செய்தன செய்கின்றன, உண்டன, உண்ணுகின்றன அனைத்தும் முற்றுக்களே. தன கைகள் என்றது தன்னுடைய கைகள் என்ற பொருளுடை யது. தன என்பதன் இறுதியில் உள்ள, அ. ஆறாம் வேற்றுமையின் பன்மையுருபு, இதன்முன் வல்லினம் வந்தால் இடையில் ஒற்று மிகாது. தன கைகள் என்று இயல்பாகும். என, உன என்பன அனைத்தும் ஆறன் உருபைக் கொண்டனவே. அம்ம கொற்றா என்பது இடைச்சொற்றொடர். அம்ம என்பது வியப்பைக் குறிக்க வரும் இடைச்சொல். இடையில் ஒற்றுமிகாது. அம்ம தேவா - அம்ம பூதா என்பனவும் அவையே. *** க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று இவைகளைக் கடைசியில் வைத்துக் கொண்டு வருகின்ற சொற்கள் அனைத்தும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களாகும். சுக்கு, பாக்கு, தச்சு, நீச்சு, பட்டு, பாட்டு, முத்து, கூத்து, உப்பு, காப்பு, புற்று, நேற்று என்பனவும் இவை போல்வன பிறவும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களே. இவற்றின் முன்வரும் வல்லெழுத்து மிகும் - எப்படி? சுக்குத் தின்றான்; பாக்குப் போட்டுக் கொண்டான்; தச்சுப் பொருள்; நீச்சுப் பந்தயம் என. சுக்கு தின்றான் என்று வரவே வராது. போயிற்றுக் குதிரை என்பதில் போயிற்று என்பதும் வன்றொடர்க் குற்றியலுகரமே. ஆயிற்று கூவிற்று என்பனவும் அவையே. ஆயினும் கூப்பு கை, நாட்டு புகழ் என்பன மேற்சொல்லியது போல் மிகாது. கூப்புகை, நாட்டுபுகழ் என இயல்பாகவே இருக்கும். ஏன் எனில், கூப்புகை, நாட்டுபுகழ் என்பன வினைத்தொகை நிலைத் தொடர்கள். கூப்பு கை என்பது கூப்புகின்ற கை, கூப்பிய கை, கூப்பும் கை என மூன்று காலத்திற்கும் ஒத்து வருவனவெல்லாம் வினைத்தொகை. நாட்டு புகழ் என்பதும் அப்படியே! கூப்புக்கை, நாட்டுப்புகழ் என்று போடவே கூடாது. நாட்டின் புகழ் என்பதில் ப் இடையில் போடலாம். அங்கு, இங்கு, உங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்பவை இடப்பொருளில் வரும் மென்றொடர்க் குற்றியலுகரங்கள். இவைகளின் முன்வரும் வல்லினம் மிகும். எப்படி? அங்குக் கண்டான் இங்குச் சேர்ந்தான், ஆண்டுச் சென்றான், ஈண்டு போந்தான் என. *** ஆங்கு அவன்தான் அழகு அழித்தான். ஒருவர் எழுதிய அகவல் அடி இது. அகவல் அடியில் நான்கு சீர்கள் வரவேண்டும். இதில் அப்படி நான்கு சீர்கள் வந்துள்ளனவா எனில் இல்லை. V‹?: ஆங்கு + அவன் = ஆங்கவன் என்று புணரவேண்டும். இப்படிப் புணர்த்தவே இரண்டு சீரும் ஒரு சீராகிவிட்டது. அழகு அழித்தான் என்பன அழகழித்தான் எனப் புணரும். ஆங்கவன் தான்அழ கழித்தான் என மூன்று சீர்தாம் உள்ளன. இன்னும் ஒருசீர் வேண்டும் எங்கே போவது! பிழைதானே! இந்த அடியை எப்படித் திருத்தினால் பிழையிராது எனில், ஆங்கே அவன்தான் அழகை அழித்தான் - எனில் பிழை நேராது. சொற்களைப் பிரித்து, எளிதில் பொருள் விளங்குவதற்காக எழுதுவதாய் நினைக்கின்றார்கள். பிரித்து எழுதலாம் அதைப் புணர்த்துப் பார்க்கும் போது அளவு குறையக்கூடாது. இந்தப் பிழைகளைப் புகழ்பெற்றவர் என்று கருதப்படும் கவிஞர்களும் செய்கின்றார்கள். மரத்தில் அதோபார் பறவைக் கூடு அதுமிக அழகாய் இல்லையா அண்ணே என்பன அகவல் அடிகள். இவற்றுள் முதலடியின் கடைசிச் சொல் கூடு என்பது அது குற்றியலுகரம். அடுத்த அடியின் முதலில் உள்ள அது என்பதில் உள்ள அகரத்தோடு புணரவேண்டும். கூடு அது - கூடது என்று. எனவே கூடு + என்பதன் - டு இல்லாமற் போகின்றது. கூ மட்டும் மிஞ்சுகின்றது. மரத்தில் அதோபார் பறவைக் கூ என்றால் கூ மட்டும் ஒரு சீரல்ல. இன்னும் ஒரெழுத்தாவது வேண்டும். மரத்தில் அதோபார் பறவைக் கூடே என்று திருத்திக் கொண்டால் பிழை நேராது. - குயில், கிழமை இதழ், 31.3.1959, ப.2-4 103. தமிழ் யாம் வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? என்ற தலைப்பின்கீழ் எழுதிவரும் சொல்லாராய்ச்சி பற்றி அடிக்கடி அஞ்சல்கள் வருகின்றன. அவையனைத்தும் நம் தமிழர்களாலேயே எழுதப்பெற்றவையாகும். அவ்வாறு நம் தமிழர்கள் எழுதும் அஞ்சல்களில் காணப்படுவன பெரும்பாலும், அவ்வாரியன் இவ்வாறு தங்கள் சொல் விளக்கத்தை மறுத்தான். அப்பார்ப்பான் இப்படி மறுத்தான் என்பனவேயாகும். சிறுபான்மையாக, இன்ன தமிழ்ப்புலவர் முன்னமே இப்படி எழுதியிருக்கிறார். இன்ன பேராசிரியர் முன்னமே இப்படி எழுதி யுள்ளார். அவைகள் அனைத்தும் உங்கள் கருத்துக்களை எதிர்க்கின்றன என்பவையாகும். ஆயினும் எந்த ஆரியனும், எந்தப் பார்ப்பனனும் எமக்கு நேரில் எந்த மறுப்பையேனும் தெரிவிக்கத் துணிந்தானா எனில் இல்லவே இல்லை. எந்த தமிழ்ப் புலவராவது, எந்தத் தமிழ்ப் பேராசிரிய ராவது தம் நிலையில் நின்றோ பார்ப்பனரைச் சார்ந்து நின்றோ நம் ஆராய்ச்சியை மறுத்துள்ளார்களா எனில் இல்லவேயில்லை. சிங்கையிலிருக்கும் ஒரு பார்ப்பனக் கீழ்மகன் தன் அண்டையி லிருக்கும் தமிழனை நெருங்கி அந்தத் தமிழனின் மூளையைக் குழப்பினாலே போதும் என்று கருதி இன்ன சொல் தமிழ்ச் சொல்லன்று. அது ஆரியமே என்பான். ஏனடா பார்ப்பனனே உனக்கென்னடா தெரியும். தெரிந்தால் காரணத்தோடு மறுப்பு எழுதேடா என்று கேட்க நம் தமிழனுக்கும் போதிய கையிருப்பும் துணிவும் இருப்பதில்லை இது வருந்தத்தக்கது. தமிழ்ப் புலவர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் இன்று எதை அடைந்து மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றார்கள் எனில் அது சிறை அன்று; அண்ணாந்தாள்! எனக்கு நான் தலைவன், எவனுக்கும் நான் கட்டுப்பட்டே னில்லை. ஆழத்தில் புதைக்கப்படுகின்ற என் அன்னைக்குத் - தமிழுக்கு நான் தொண்டு செய்வதில் என்னவரினும் அஞ்சேன் -இஃதோர் பெரும்பதம். இதை நம் தமிழ்ப்புலவர் - தமிழ்ப் பேராசிரியர் அடைந்தால் அந்த நாள் தமிழகத்தின் மீட்சி நாளாகும். சக்கரவர்த்தித் திருமகன் என்பது கொட்டை எழுத்தால் அமைந்த தலைப்பு. தலைப்பே பிழை. இந்தத் தலைப்புடைய நூலோ அதற்கு முன்னிருந்த ஓர் அரிய நூலின் பார்த்தெழுதல். இதை எழுதிய வருக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்ததில்லை. ஆனால் நேரு பல்லாயிரம் வெண்பொற்காசுகளை இதற்குப் பரிசாக வழங்கினார். ஏன்? எழுதியவரின் மகள் காந்தியின் மருமகள். இங்குத் தமிழ்ப் புலவர் தமிழ்ப் பேராசிரியர் என்ன நினைக் கிறார்கள். பார்ப்பானை மகிழப் பண்ணினால் பரிசு கிடைக்குமே என்பதுதான். எடுத்துக்காட்டாக இதைக் கூறினோம். தமிழ்ப் புலவர் பேராசிரியரின் அண்ணாந்தாளைக் காண்க. ஆயினும் தமிழருக்கு எந்தப் பார்ப்பானாலும் அண்ணாந்தாள் பூட்டிவிட முடியாது. தமிழரே அதை ஆக்கி அணிந்துகொண்டு பணிந்து செல்கின்றார்கள். ஆரிய மறையிலேனும், அதன்பின் வந்த காளிதாசன் பாரவி செய்த இராமாயணம். கிருதார்ச்சுனியத்திலேனும் மற்றெந்த நூற்களிலேனும் பெரும்பான்மைத் தமிழ்ச் சொற்களேயன்றித் தனியாரியத்தைக் காண முடியாது என்ற உண்மை எம் தமிழ்ப் புலவர்க்கும் தமிழ்ப் பேராசிரியர்க்கும் தெரியும். ஆனால் அதை இன்றளவும் உரக்கக் கூறியவர்கள் உண்டா எனில் இல்லவேயில்லை! மறைமலையடிகளும் சைவம் எனும் ஒன்றுக்கு அடிமைப்பட்டே சில உண்மைகளைக் கூறாமல் விடுத்துள்ளார். இன்றைய நிலைமை வேறு; அது தமிழர் வாழ்வதா சாவதா என்பதாகும். இந்நிலையிலும் தமிழ்ப்புலவர் தமிழ்ப் பேராசிரியர் விழிகள் திறக்க முடியாதிருக்கலாம். தமிழர்கள் சாகத் துணிய வேண்டும். அதனால் வாழ்வை நிலைநாட்டவேண்டும். தமிழனின் கண்ணும் கருத்தும் தமிழின் வேரை நோக்கட்டும்! அதன் பழமையைப் பார்க்கட்டும். தமிழன்றி இந்த நாவலந் தீவில் எது மொழி? - எத்தனை மொழிக்கு? - எந்த எந்த நாட்டு மொழிக்கு நம் தமிழ், தாய்? என்பதை எண்ணட்டும். - குயில், கிழமை இதழ், 7.4.1959, ப.3-4 104. சொல்லாராய்ச்சி - I தில்லி நம் தமிழை ஒழிப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறே செயலாற்றியும் வருகின்றது. தமிழ்நாட்டிலும் தமிழை ஒழித்துக்கட்ட பார்ப்பனர் விரைந்து வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழராகிய நாம் மேற்கொள்ள வேண்டியவற்றில் முதன்மையானது ஒன்றே ஒன்று. அதுதான் தமிழ்ச் சொல்லாராய்ச்சி. தமிழ்ச்சொல் ஆராய்ச்சியால் நாம் அடையும் பயன்கள் பல. தமிழின் தொன்மை தெரியும். தமிழ் வடமொழிக்கு முற்பட்டது என்பது தெரியும்; தமிழ்ச் சொற்களிலிருந்தே ஆரியச் சொற்கள் வந்தன என்பது தெரியும். இவைகள் எல்லாம் தெரியவே, தமிழனின் உள்ளத்தில் நம்பிக்கை, எழுச்சி, மான உணர்ச்சி ஆகியவை தோன்றும். தோன்றவே தமிழரிடம் ஓர் ஒற்றுமை உண்டாகும். தில்லி மேல் நாம் தொடங்கியுள்ள போராட்டம் சிறக்கும், தமிழகம் மீளும்! தமிழ்ச் சொற்களை ஆராய்வதான இவ்வொன்றிலேயே இத்தனையும் அடங்கியுள்ளனவா என ஐயப்படுதல் வேண்டாம். எடுத்துக்காட்டுக்காக நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என்னும் நல்லாசிரியர் தொன்மை என்னும் சொல்பற்றி ஆராய்ந்துள்ளதைச் சுருக்கி இங்கே தருகின்றோம்: தொன்மை என்பதும் தொல்லை, தொன்று என்பனவும் பழைய தாகிய நிலை என்ற பொருள் தருவனவே, தொன்மையுடையார் தொடர்பு (நாலடியார் 216) தொல்லைக்கண் நின்றார் (திருக்குறள் (806) தொன்றுமொழிந்து தொழில் கேட்ப (மதுரைக் காஞ்சி 72) என்பன காண்க. இது மட்டுமன்று. புகழ் எனவும், பழையதொரு பொருள்மேற் செய்த நூல் எனவும் பொருள் கொள்ளப்படும். தோல் என்னும் சொல்லும் தொன்மையையே விளக்கும். தொல் வரவும் தோலும் கெடுக்கும் (குறள். 104) என்பதில் வரும் தோல் என்பது தொன்மையாய் வரும் புகழ் என்றே பெறப்படுதல் காண்க. எனவே தொன்மை, தொல்லை, தொன்று, தோல் என்னும் நான்கு சொற்களும் ஒரே பொருள் உடையவை என்பதையும் இந்நான்கு சொற்களும் தொல் என்ற அடிச்சொல்லையே கொண்டிருக்கின்றன என்பதையும் மனத்திற்கொள்க. இனி, இவ்வடிச் சொல்லாகிய தொல் என்பதினின்று தொன்மை, தொல்லை, தொன்று, தோல் ஆகியவை தோன்றுவதுண்டோ எனிற் காட்டுவோம். நல் என்பது நன்மை நன்று நன்றி என்றும் எல் என்பது எல்லை என்று என்றும் நாள் என்பது நான்று ஞான்று என்றும் நாண் என்பது நான்று என்றும் கொள் என்பது கொளு கொள்கை கோள் என்றும் கொல் என்பது கொன்றல் கோறல் என்றும் செல் என்பது சென்றல் சேறல் என்றும் வந்தன காண்க! இவற்றின் ஈற்றை நோக்குக. ஐ, கை, மை, று (து) என்பவை இறுதி நிலைகள். இவைகள் உண்டாகும் வரலாற்றைப் பிறகு பார்ப்போம். இனி, தொல் என்றும் அடி தோன்றியது எப்படி? அது தமிழ்த் தலையடிகளுள் ஒன்றா? (தலையடியாவது பல சொற்களுக்குத் தோற்றுவாயாய், தான் பிறிதோர் அடியினின்று பிறவாததாய் இருப்பது. வழியடியானதுதானே தலையடியினின்று பிறந்ததாயினும் தனக்குப் பின் வேறு சொற்கட்குத் தோற்றுவாயாயும் நிற்பது) இதுபற்றி ஆராய்வோம். இந்தத் தொல் என்பதை அடியாகக் கொண்டே உண்டாகிய வினை உருவம் தொலைதல் என்பது; தொலைதல் தூரத்தில் செல்வது. போரிற் புறங்காட்டியவன் தூரத்திற் செல்வதால் தொலைதல் புறங்காட்டிச் செல்வதையே குறித்தது. ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் (புறம், 79) என்பதிற்போல. மேலும் சென்று சென்று தேய்தலாகிய குறைதலும் (குறள் 762) சேர்தலும் (மணிமேகலை 24, 99) அழிந்து படலும் (பதிற்றுப்பத்து 43, 31) என்னும் கருத்துக்களையும் இத்தொலைதல் என்னும் சொல் அடைகின்றது காண்க. சேய்மைக்கண் ஓடி மறைதல் ஆகிய தொலைதல் என்பதனின்றே தோற்றலும் தோல்வியும் பிறப்பதையும் ஈண்டு கண்டு மகிழ்க. எனவே தொலை, தோல், தோல்வி, தோல்தல், தோற்றல் என அடிச் சொல்லின் உயிர் நீண்டும் இறுதி நிலைப் பெற்றும் வரும். தொலைதல்தான் தொலைத்தல், தொலைச்சுதல் எனவும் ஆகும். இவை புறங்கொடுத்து ஓடச் செய்தல் (திருக்கோவையார் 113) முடித்தல் (புறம் 29) கொல்லுதல் (மலைபடுகடாம் 176) என்னும் பொருள்களைப் பெறும். தொன்மை முதலிய நான்கு சொற்களினின்றும் பழையதாகிய நிலை என்ற பொருள் கிடைத்தமை எவ்வாறு என்றால் காலத்தளவில் சேய்மைக்கண் உள்ளது எது, அது பழையது தானே! அண்மையான காலத்தில் உள்ள நிகழ்வு. சேய்மையான காலத்தில் உள்ளது. தொன்மை எனக் காண்க. இதையடுத்து இன்னொன்று தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்மொழியின் வேறுபாடுகளை உற்றுநோக்குமிடத்து, ஒகரம் உகரத்தினின்று பிறந்தது என்பதும், உகரம் இயல்பாக ஒகரமாய் மாறும் என்பதும் அறியத்தக்கவை கீழ்க்காட்டும் எடுத்துக் காட்டுக்களைக் காண்க! உள்கு - ஒல்கு குதித்தல் - கொதித்தல் துளை - தொளை நுதுத்தல் - நொதுத்தல் புழை - பொளி முகிழ் - மொக்குள். - குயில், கிழமை இதழ், 14.4.1959, ப. 3-4 105. தொன்மை ஆராய்ச்சி - II சொற்களுக்கு முதலில் ஒகரம் வருவதென்பது பிற்பட்ட வழக்கம். சொற்களின் முதலில் உகரம் வருவதென்பது அதற்கு முற்பட்ட வழக்கம் என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டால் மனத்திற் பதிய வைத்துக் கொள்க. இதன் வழியாய்த் தொலைதல் என்னும் சொல்லுக்கு முன்னரேயே துலைதல் என்றுதான் இருந்திருக்க வேண்டும். எனவே துலைதல் தானே தொன்மை என்பதற்குப் பிறப்பிடம்? ஆதலால் துலைதல் என்னும் சொல்லின் வரலாற்றையும் இங்கே ஆராய்வோம். துலை என்றால் சேய்மைக்கண் செல் என்பது பொருள். துலை, துழ முதலிய சொற்கள் எந்தச் சொல்லினின்று வந்தன? அந்தச் சொல்தான் உலவு என்பது. இதை விளக்குவோம். உலவு, உலாவு, உழல், உலை, உல என்ற சொற்களைக் காணும் போது சிறிது, சிறிது பொருள் வேறுபாடு தோன்றினாலும் ஒன்றுக் கொன்று தொடர்புள்ளது என்பதை மறக்க வியலாது. இந்த நினைவோடு அடியில் வரும் சொற்கூட்டத்தை ஆராய்க! உலவு, உலாவு (உலா-ஞ்சு; உழ-ல்; உலை, உல) குல-வு, குலா-வு, குழை, குலை சுல-வு, சுலா-வு, சுழல், சுற்று துழ, துழ-வு, துழாவு, துலை, துலா இச்சொற்கள் எல்லாவற்றிற்கும் அடிப்பொருளை ஆராயுங்கால் அது உள் என்பதேயாகும். சென்று கொண்டிருப்போன் ஒருவனை நோக்கி உள்ளால்வருக என்றால், அவன் உள்நோக்கி வரும்போது அவனை உழலுகின்றான் என்கின்றோம். அந்த உழலல் என்பதன் அடிப்பொருள் உள் என்பதன்றோ! எனவே, உள் என்பது இச்சொற்களின் அடிப்படைச் சொல் என்க. தமிழ்ச் சொற்களின் அடிப்பொருள் எல்லாம் அண்மை, சேய்மை, முதலான உள்ளக்கிடக்கைகளைச் சுட்டுவனவாம். அதுவுமின்றி இது சிறப்பியல்பைச் சுட்டிற்று. இது சார்பு பற்றி விரிந்தது. இது இயைபுடைமையால் வந்தது; - இது வழக்காறு அழிந்ததால் வந்தது - இது எதிர்நிலையால் வந்தது - என்று அறிவதால் சொல்லாராய்ச்சி) தெளிவு படும் வகையில் ஒன்றுதான் உள் என்பதும். இந்த உள் என்பதினின்று தான் உலவு முதலிய முதல் வரிசைச் சொற்கள் வந்தன என்க; மேலும் விரித்து வருதலையும் எடுத்து விளக்குவோம். - குயில், கிழமை இதழ், 21.4.1959, ப.2 106. தொன்மை ஆராய்ச்சி - III உலவு முதலிய சொற்களே சிறிது சிறிது வேற்றுமை அடைந்து குலவு, சுலவு, துழவு முதலியனவாகி நிற்கும் என்பதை நுணுகி ஆராய்ந்தால் புலப்படும். இவைகள் எல்லாவற்றிற்கும் உரிய பொருள் இன்னதெனக் கூறுவோம். உல-வு, உலா-வு (சுழலுல், சுற்றிவரல்) தூ சுலாய்க் கிடந்த (சிந்தாமணி (550) அலைபோல விரிந்து செல்லல், ஒருங்கு திரை உலவுசடை (திருவாசகம் 38, 1) வந்து உலாய்த் துயர் செய்யும் வாடை அசைவாடுதல் (புறப்பொருள் வெண்பா மாலை 816 கொளு). உலவை (சுழன்று வீசுவது) காற்று. சுழன்று வீசுவதால் சுழல் எனவும் வளைத்து வீசுதலால் வளி எனவும் பெயர் இருத்தலையும் காண்க. உலா-ஞ்சு (சுழன்று வீசல்) ஒரோர் பக்கத்திற்கு அசைந்தாடுதல் (வழக்கு). உழ-ல் (சுற்றி வரல்) சுழலல் (பிங்கலந்தை) இக்கருத்து உழலை மரம் எனும் வழக்கினும் வெளிப்படும். உழலை மரத்தைப் போற் றொட்டன (கலித் தொகை 1.6) சுழன்று அசைதல் சிறுகாற்றுழலும் (கல்லாடம் கணபதி துதி) அலைதல், ஆட்பார்த் துழலும் அருளில் கூற்று (நாலடி 20). உலை (சுழலல், சுழன்று விரிதல்) சுழலல் எனும் பொருள் உல மரு (உலம் வரல்) என்னும் வழக்கில் நன்றாகப் போதரும். வாயா வன்னிக்கு உலமருவோரே (புறநானூறு 207) கலைந்துபோதல், ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து (பெரும்பாணாற்றுப்படை 461) அழிதல் திவாகரம். உலை (சுழன்றுவிரிந்து சேய்மையை நாடல்) கழிதல். உலந்த பிறவி (மணிமேகலை 25,135) சாதல் உலந்தவன் தாரொடு (புறப். வெண். 10. சிறப்.பொது 4). குலவு, குலாவு (சுற்றிவரல்) வளைதல். குலவுச் சினைப்பு (புறம்.11) அளவளாவல் பாண்குலாய்ப் படுக்க (சிந்தாமணி 215) குழை (முன்னது) வளைதல் திண்சிலை குழைய (சூளாமணி - அர. 316) நெருங்கி உறவாடல் (பிறவினை) உருண்டு திரளச் செய்தல். கருணையாற் குழைக்கும் கைகள் (சிந்தாமணி 257). குலை (சுழன்று விரிதல்) கலைதல், நிலை கெடுதல், அழிதல். சுல-வு (முன்னது) சுழலல் சுற்றிவரல் விரைகமழ் சோலை சுலாவி (தேவாரம் 418.1). சுலாவு (சுழன்று வீசுவது) காற்று. உலவை சூறை, வளி என்னும் காற்றின் பெயர்களோடு இதனை ஒப்புநோக்குக. சுழல், சுற்று (உள்நோக்கி நோக்கிச் செல்லல்) உழன்று வரல், தேர்க்கா லாழியிற் சுழன்றவை (பெருங்கதை வத்தவ, 12, 205) அங்குமிங்கும் திரிதல், சோர்தல். சுழல் (சுழல்வது, சுழன்று வீசுவது) நீர்ச் சுழி, சூறைக்காற்று, காற்றாடி. துழவு, துழாவு (உள்நோக்கி நோக்கி வரச் செய்தல்) சுழலச் செய்தல், வழையிமை சாரல் கமழத் துழைஇ (மலைபடுகடாம், 181). சூழ வருதல் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து (புறம். 174) சுலாவிப் பார்த்தல் வானும் நிலனும் திசையும் துழாவும் (கலித்தொகை 145, 43). துழ - (முன்னது) சுழலச் செய்தல் துடுப்பில் துழந்த வல்சி (புறம். 26). துலை, தொலை (சுழன்று விரிந்து புறஞ்செல்லல்) புறங்கொடுத் தோடுதல், ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் (புறம். 76). குறைதல் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது (குறள். 762) சோர்தல், நாத்தொலைவில்லாய் ஆயினும் (மணிமே. 2499) அழிதல் தொலையாக் கற்ப (பதிற்றுப் பத்து 43,31) முடித்தல்; தங்கடனை முறை தொலைத்து (உபதேச காண்டம் சிவவிரத 311) தொலைச்சு (தூரத்தில் வைத்தல்) மிடித்தல். வெங்கட் டொலைச்சி யும்மையார் (புறம். 26) செலுத்தல் நறவுநொடை தொலைச்சி (பெரும்பாண் 141) கொல்லுதல் முளவுமாத் தொலைச்சிய (மலைபடு 979) துலை துலா (சுழற்றி ஒருபுறம் வீசுவது உலாஞ்சுவது). நிறைகோல் ஏற்றமரம், ஒப்பு தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் (குறள். 686). இதுகாறும் ஆராய்ந்தவற்றால் உலவு முதலிய முதல்வரிச் சொற்களே குலவு முதலிய இரண்டாம் வரிச் சொற்களுக்கும் சுலவு முதலிய மூன்றாம் வரிச் சொற்களுக்கும் துழவு முதலிய நான்காம் வகைச்சொற்களுக்கும் அடிப்படை என்பது விளங்கும். இவ்வுண்மை, உலவு, குலவு, சுலவு, துழவு என்ற நான்கு சொற்களையும் நேர்வைத்து நோக்கினால் நன்கு புரியும். அன்றியும் இந்த நான்கு சொற்களிலும் உள்ள முதல் எழுத்தை நோக்குக. அவை க், ச், த் என்பவை. இவைகளை நீக்கினால் உலவு என்னும் சொல்லே தோற்றம் அளிக்கின்றது. எனவே உலவு என்பது க் என்பதை முதலில் சேர்த்துக் கொண்டு குலவு என்றாயிற்று. ச் சேர்த்துக் கொண்டு சுலவு ஆயிற்று. த் சேர்த்துக் கொண்டு துழவு என்றாயிற்று என்பதை நினைவிற்கொள்ள மேலும் செல்லுவோம். - குயில், கிழமை இதழ், 28.4.1959, ப. 3, 6 107. தொன்மை ஆராய்ச்சி - IV தமிழ் அகர வரிசையில் மெய்யை முதலாகக் கொண்ட சொற்களே அதிகம். அவை எல்லாம் உயிர் முதற் சொற்களின்றே வந்தவை என்பது அறியத் தக்கது. உயிர் இனத்தைத் தலையிற்கொண்ட சொற்களுள் பல. தலையடி சொற்கள், மெய் இனத்தைத் தலையில் கொண்டவை யாவும் வழிச் சொற்கள். இதனால் உலை என்ற சொல்லே தகரமாகிய முதனிலை பெற்றுத் துலை என வந்தது. அது துலைதல் - மிக விரிந்து சேய்மைக்கண் செல்லுதலைக் காட்டுகின்றது. துலை என்னும் சொல் தொல் என்றும், தொன்மை என்றும் நின்று காலத்தால் சேய்மையை அதாவது பழமையை விளக்குகின்றது எனக் கண்டு மகிழ்க! இனித் தொன்மை என்னும் சொல்லின் வரலாற்றைக் கொண்டே தமிழின் தொன்மையை விளக்க முடியும். தொன்மை என்னும் இச்சொல்லுடன் பிறந்த தமிழ்ச் சொற்கள் பல ஆரியத்திலும் காணப்படுகின்றன. ஆரியம் மிகத் தொன்மையான மொழி என்று பிதற்றுவார். அம்மொழியில் வருகின்ற பல சொற்கள் நம் தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கும் பிற்பட்டவை என்ற உண்மையை இத்தொன்மை ஆராய்ச்சி கொண்டே காட்ட முடியும். நம் தொன்மை முதலிய சொற்களின் அடிகளே ஆரியச் சொற்கள் பலவற்றினுக்கும் தோற்றுவாய் தந்து நிற்கின்றன. அவற்றுள் ஒரு சில இங்கு எடுத்துக் காட்டப்படும். துலை என்னும் பெயர்ச்சொல் சுழன்று வீசுவது என்றும், உலாஞ்சுவது என்றும் அடிப்பொருள் கொண்ட நிறைகோலையும் ஏற்ற மரத்தையும் குறிக்கும் என்று கண்டோம். வடமொழியில் வரும் ந்துல் என்னும் சொல்லின் அடி எது? அந்த ந்துல் என்ற சொல்லுக்குச் சுழலுதல், ஊசலாடுதல், உலாஞ்சுதல் என்றே பொருள் கூறுகின்றனர். அன்றியும் அதனின்று பிறக்கும் சில சொற்களும் ஊசல் என்பதையே குறிக்கின்றன. ஆயின், அவற்றிற்கு வடவரின் அடிச்சொல் இன்னதென்று கூற வேண்டும். கூறுகின்றார்களா? ஏன்? அவைகளின் உண்மையான அடிச்சொல் நம் தொன்மைத் தமிழ் மொழியான உலவு என்பதே அன்றோ? சுழலுதல் என்ற பொருளுள்ள உலவு என்னும் முதற்சொல் தகரமெய்யை முதலில் கொண்டதனால் துலை(துல) என்றாகிச் சுழன்று வீசுதலைக் குறித்து நிற்க, அத்துலைச் சொல்லையே வடமொழியாளர் தம் சொல்லுக்கு அடியாக்கிக் கொண்டனர். உலவு என்னும் சொல்லைப்போலும் அடிப்படையான சொற்களை அடியிற் கொண்டிருக்கின்ற நம் தமிழானது வழியடிகளையே பெரும்பான்மை வழங்குகின்ற மொழிகட்கு முற்பட்டதாதல் வெளிப்படை. அவ்வாறே, நிறுத்தலையும், ஒத்திருத்தலையும் குறிக்கின்ற துல், தூல் என்ற வடமொழியின் வினையடிகளும் நம் உலவுச் சொல்லிற் பிறந்தவைகளே என்க. துலா, துல்ய என்னும் சொற்களும் துல், தூல் என்ற வடமொழி அடிகளோடு ஒற்றுமை பூண்டனவாய்க் கிரேக்கம் இலத்தீனியம் ஆகிய பிற ஆரிய மொழிகளில் உள்ள பல சொற்களை எடுத்துக்காட்டுவர், சொற்பிறப்பு நூல் வல்லார். ஆகலான் நம் உலவு என்னும் தலையடி, கிரேக்க இலத்தீனிய மொழிகளில் வழங்குகின்ற பல சொற்களுக்கு முற்பட்டது என்பது தேற்றம். இவ்வாறே ந்தூர என்னும் சொல்லை உணாதி சூத்ரகாரர் இ என்னும் அடியினின்று பிறந்ததென்று கூறிப் பிழைத்தார். உண்மையில் அது துலை என்ற நம் தமிழடியையே அடியாய்க் கொண்டு சேய்மையைக் குறிக்கும். துலையும் தூரமும் ஒரே அடியாய்ப் பிறந்த சொற்களே. தூரம் பழைய தமிழ் நூல்களுள் அதிகமாகப் பயிலுகின்றது காண்க. பிங்கலந்தையில் இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. மிக்க தூரிதன்று பாண்டியனது செல்வமிக்க ஊர் என்பது சிலப்பதிகாரம் (13, 133) உரையில் வருகின்றது. இல்லிடத்தினின்று தூரிய இடத்தில் என்பது கலித்தொகை 110 ஆம் பாட்டின் உரை. வடமொழித் தூரிய என்னும் நான்காவது என்னும் பொருள் தரும் சொல்லும் நம் துலை என்னும் தமிழ்ச் சொல்லே. நான்கு என்பது மூன்றிற்குத் துலைப்பட்டது. ஆதலால் அதனைத் துரீய என்று வைத்துக் கொண்டனர் வடமொழியாளர். நம் நான்கு என்னும் சொல்லுக்கும் நீண்டது என்பதே பொருளாதலை நோக்குக. குயிலில் ஐந்து வாரமாகத் தொன்மை ஆராய்ச்சி நீண்டுவிட்டது. இத்தொன்மையாராய்ச்சியால் நாம் உணர்ந்து மகிழத் தக்கவை எவை? உலவு முதலிய தமிழ்ச்சொற்கள் மிகப் பல தமிழ்ச் சொற்களைத் தோற்றுவிப்பவை என்பது கண்டோம். அது மட்டுமன்று; உலவினால் தோன்றிய துலை முதலிய சொற்கள், வடமொழியின் பல சொற்களுக்கும் கிரேக்கம் இலத்தீனியம் முதலிய சொற்களுக்கும் தோற்றுவாய் என்பது கண்டோம். இதனால் பழங்காலம் என்னும் இருட்டறையில் தமிழுணர்வு என்னும் விளக்கோடு புகுவோமானால் நாம் காண்பது வடமொழிக்குத் தாய்மொழி தமிழ் மொழியே ஆகும் என்பதுதான். இந்நாள் சமகிருத பரீஷத்காரர்களும் சட்டர்ஜிகளும், நேரு ஐயர் ஆட்சி வலிவைக் கையில் வாங்கிக் கொண்டு தமிழை அழிக்க அவர்கள் கையாளும் முறைகளில் முதன்மையானது என்ன தெரியுமா? மொழி ஆராய்ச்சி செய்யும்போது எந்தச் சொல்லுக்கும் காரணம் தேடக்கூடாது. ஒரு சொல்லின் வேர்ச்சொல் எது என்று ஆராயக் கூடாது! என்று கட்டளை போடுகின்றார்கள். ஏன்? ஒரு சொல்லின் வேர்ச்சொல் இன்ன தென்று ஆராய்ந்தால், சமகிருதச் சொல் எல்லாம் தமிழ்ச் சொல்லி னின்று வந்தவை என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்! தமிழ் வாழ்க! - குயில், கிழமை இதழ், 5.5.1959, ப. 2-3 108. மிக்க சலுகைக்குத் தக்க பயன் கிடைத்தது சென்ற பொதுத் தேர்தலில் உறுப்பினரை நிறுத்தும் வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். தேர்ச்சி பெற்ற சட்டமன்ற உறுப்பினரில் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனருக்கு மிக்க சலுகை காட்டினார். காமராசர் ஆட்சி உறுதிபெற வேண்டும் என்று அல்லும் பகலும் உழைத்த தமிழர் தலைவரையும், தமிழ்ப் பெருமக்களையும் கேலி செய்து கேடு சூழ்ந்து வந்த அமைச்சர்கள் சுப்பிரமணியனையும் பத்தவச்சலத்தையும் விட்டுவைத்த வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். இங்குள்ள பார்ப்பனரின் கோரிக்கையை எண்ணித் தமிழர் தலைவரையும் தமிழ்ப்பெரு மக்களையும் ஒழித்துக் கட்டும்படி சாடை காட்டிய நேருவை மகிழ்ச்சி செய்யும் வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். கெட்டாலும், கிழிந்தாலும் சரி, இந்த நகர சபைத் தேர்தலில் உதவி செய்யும்படி தமிழர் தலைவரை நாம் கேட்டுக்கொள்ளக் கூடாது என்று கூறிய மடப் பசங்கள் முகத்தில் கான்றுமிழாமல், அவர்களை மகிழ் வித்த வகையில் முதல்வர் காமராசர் மிக்க சலுகை காட்டினார். எல்லாத் துறையிலேயும் தமிழர்களை ஈடழிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு, அதன்படி செய்துவரும் நேருவைச் சிறிது திருத்தாமல் அவரை மகிழ்வித்த வகையில் முதல்வர் காமராசர் பார்ப்பனர்க்கு மிக்க சலுகை காட்டினார். இவ்வளவு சலுகை காட்டிய முதல்வர் காமராசருக்கு, பார்ப்பனர் என்ன சலுகை காட்டினார்கள்! சலுகை காட்டவேண்டாம்; கலகம் வளர்க்காமலாவது இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. ஒவ்வொரு பார்ப்பானும் ஒவ்வொரு பார்ப்பனத்தியும் வரிந்து கட்டிக்கொண்டு முதல்வர் காமராசர் ஆட்சி ஒழிந்து போகவேண்டும் என்பதற்காக, அவரின் எதிர்க்கட்சியாகிய - பார்ப்பானுக்குக் கீழ்ப் படிந்து நடப்பதாக உறுதியளித்த கண்ணீர்த் துளிகளுக்கே தம் வாக்குச் சீட்டைப் போட்டார்கள்; மற்றவர்களையும் போடும்படி தம்மிடத்தில் உள்ள அதிகாரத்தை மேற்கொண்டார்கள். இன்றைய நிலையில் ஒரு பார்ப்பானிடம், நூற்றுக்கணக்கான தமிழர்களின் குடுமி அகப் பட்டிருப்பதை எவனால் மறுக்க முடியும். பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பார்ப்பனப் பசங்களிடமெல்லாம் இன்று அதிகாரம், அலுவல் திணிக்கப்பட்டிருக்கவில்லையா? முதல்வர் காமராசர் இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். - குயில், கிழமை இதழ், 28.4.1959, ப.7 109. அவர்களைப் பாருங்கள்! தமிழகம் ஒரு கப்பல்; தமிழ் அதில் நிறைந்த தலைச்சரக்கு! கப்பல் கவிழ்க்கப்படுகின்றது. தமிழ் மூழ்கடிக்கப்படுகின்றது. என்ன ஆகும்? தமிழன் செத்தான்! இந்த நிலையில் கப்பலில் உள்ளவர்கள் கல்வியறிவு நிறைந்த தமிழ்த் தலைவர்கள், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கலாகாது. வாழ்வது சாவது என்ற இரண்டிற்கும் ஒட்டி ஒருகை பார்க்க வேண்டிய நேரம். ஓடுகின்றார்; ஆடுகின்றார்; பதைக்கின்றார்; எதிர்க் கின்றார்; ஒரே ஒரு முதியவர். உடனோடித் தோள் கொடுக்க வேண்டியது தமிழர் தலைவர் கடன், கற்றறிந்தார் கடன், புகழ் என்பது பணம் தேடுவதால் ஏற்படுவதில்லை. புகழ் என்பது எழுதுவதால் பேசுவதால் ஏற்படுவதில்லை. அடிமை நிலைக்குப் பரிந்து போராடும் போராட்டத்தில் பங்கு கொள்வதால், வெற்றி பெறச் செய்வதால் ஏற்படுவது. சாகும் தாய்மொழியைச் சாக்காட்டிற் செலுத்துவானும், வேகும் தமிழகத்தை வேக்காட்டிற் செலுத்துவானும் பழியைச் சுமப்பானன்றி புகழடைய மாட்டார். புகழ் - என்றும் இருப்பது; அதைத் தேடத்தான் வேண்டும். தேடாமல் இருக்க முடியாது. புகழ் தேடல் உயிரின் இயற்கை. அதை வெறுப்பவன் இருக்கலாம். எப்போது வெறுக்கின்றான்? உயிரை வெறுக்கும்போது! இந்நாள் உலகப் புகழ் பெற்ற ஏ. இராமசாமி, ஏ. இலக்குமணசாமி, டாக்டர் கிருட்டினசாமி, மணவாள இராமாநுசம், இரத்தினசாமி, எ. இராமநாதன், கே.எம். பாலசுப்பிரமணியன், நீதிபதி சோமசுந்தரம், நீதிபதி கணபதி, நீதிபதி நாடார், ஜி.டி. நாயுடு, வி.எல். எத்திராசலு, கலைக்கதிர், இராமகிருட்டினன், கருமுத்து தியாகராசன், முதல்வர் காமராசர், அமைச்சர் சுப்பிரமணியம், அமைச்சர் பத்தவச்சலம், இராமையா, ஓமந்தூர் அமைச்சர் இராமசாமி, கசபதி - இந்தத் தூங்கும் புலிகள் எழுந்தால் ஏங்கும் நம் தாய் இன்பம் எய்தமாட்டாளா? துன்பம் தொலைக்க மாட்டாளா? அவர்களைப் பாருங்கள்! சமகிருத விசுவ பரீஷத் காணுகின்றார்கள். செத்துப்போன சமகிருதத்தை உயிர்ப்பிக்கவும், உயிரோடிருக்கும் தமிழை ஒழித்துக் கட்டவும் பெருமுயற்சி கொள்ளுகின்றார்கள். யார் யார்? பத்மநாப தாச பலராமவர்மா பாபு புருஷோத்த தாதாண்டன் கே.எம்.முன்ஷி டாக்டர் இராசேந்திரபிரசாத் சேம் சாகிபு எச்.இ. திவேதியா நீதிபதி என்.எச். பகவதி பிக்கு ஜினாத்னாஜி உமே மிச்ரா ஆச்சாரிய டி.ஏ.வி. தீஷிதர் மற்றும் பலர். அரசரும் அதிகாரத்தாரும் செல்வரும் தம் மொழிக்கு உயிர் விடுகிறார்கள்; உழைக்கின்றார்கள். அப்படிப்பட்ட அறிஞர்கள் அதிகாரத்தாரும் நம்மிடம் இருக்கின்றார்கள். உலகப் புகழ் பெற்று உயர்ந்தாரும் இருக்கின்றார்கள். தமிழின் பேரால் தமிழகத்தின் பேரால் ஒருநாள் ஒருதரம் அவர்கள் கூடியதுண்டா? - குயில், கிழமை இதழ், 12.5.1959, ப. 3 110. ஆதித் தமிழர் தராசு கட்சிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதித்திராவிடர் என்று அழைத்தார்கள். அவ்வாறு அன்று அழைத்தது பிழையேயாகும். அதுபோலவே இப்போது தோழர் ஆதித்தனார் ஆதித்தமிழர் என்று திருத்த முந்துகிறார். இவ்வாறு இவர் எண்ணுவதும் பிழையேயாகும். ஆதித்தமிழர், அவர்கள் என்றால் மற்ற தமிழர்கள் என்ன தமிழர்கள் - தமிழர்களிலும் வேற்றுமையுண்டோ? இல்லவே இல்லை. எனினும், பாதித் தமிழர்கள் சிலர் உள்ளனர்; பார்க்கின்றோம். அவர்கள் பார்ப்பானுக்குத் தமிழ் மகளிடம் பிறந்தவர்கள். ஆதித் தமிழர் தவிர மற்றவர்களையெல்லாம் பாதித்தமிழர் என்று ஆதித்தனார் நினைத்த காரணத்தால் ஆதித்தமிழர் என்ற பெயரை நிலைநிறுத்தக் கருதுகின்றாரோ என்னமோ! அவ்வாறு அவர் எண்ண வேண்டாம். அந்த நிலை தமிழகத்தில் ஏற்பட இடமிருந்ததில்லை. பாதிப் பார்ப்பனரை வேண்டுமானால் பல்லாயிரவர்களை - பல இலக்கக்கணக்கானவர்களைப் பார்க்கலாம். உறுதி கூறுகின்றோம் ஆதித்தனார்க்கு. இது தமிழகம்; மலையாள மன்று; தமிழர் கலப்படமற்றவர். ஆதித்தமிழர் என்று ஆதித்தனார் புதுப்பிரிவினை கோருவதைக் கைவிட வேண்டுகின்றோம்; குளற வேண்டாம்! முதல்வர் காமராசர் சொன்னது தமிழ்நாட்டிலிருந்து மலையாளத்துக்கு அரிசி போவதைத் தடுக்க வேண்டும் என்று தில்லி ஆண்டாரிடம் தமிழ்நாட்டு அமைச்சர்கள் விண்ணப்பம் செய்திருக்கின்றார்கள். இதுபற்றி நாளைக்குத் தில்லி அரசு முடிவும் கூறும். இவ்வாறு கூறினார். எவ்வழி விடுகின்றதோ தில்லி? உரிமைத் தமிழ்நாடு கேட்பது ஏன்? இவ்வாறு கேள்விகேட்ட முட்டாள்களுக்கு ஆயிரம் ஓராவது தரமாகப் பெரியார் விடையிறுத்துள்ளார். சுயமரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும் தமிழ்நாடு தமிழருக்கே என்றுதான் கேட்டன. அதாவது அப்படித்தான் நான் கேட்டேன்: பின்னர் திராவிடர் கழகம் அமைத்தன் அப்போது மலையா ளிகள், கன்னடர், தமிழர் சென்னை மாகாணத்தில் சேர்ந்திருந்தார்கள். எல்லாருக்கும் சேர்த்து திராவிடநாடு கேட்டேன் இப்போது பிரிந்து விட்டார்கள். மூவரும் தனித்தனி அரசு அமைத்துக் கொண்டார்கள் தமிழர் தனியாக இருக்கிறார்கள் ஆகவே உரிமைத் தமிழகம் வேண்டும் என்கிறேன். இவ்வாறு பெரியார் நாகப்பட்டினம் கூட்டத்தில் கூறியருளினார். - குயில், கிழமை இதழ், 19.5.1959, ப. 3 111. புத்தர் கொள்கை புத்தர் பிறந்த இந்த நாவலந்தீவில் புத்தர் கொள்கையைப் பின்பற்றுவோர் இரண்டு இலக்கத்தவர்தாம் எனில், புத்தரை - புத்தர் கொள்கையை ஆரிய மறையோர் வஞ்சத்தால் பறக்கடித்ததுதான் காரணம். இந்த நாவல்லதீவில் பிறந்த புத்தர் கொள்கை இம்மட்டே எனில், உலகில் அது இருபது கோடி மக்களால் பின்பற்றப்படுகின்றது. அங்கு அது பெரிய அளவில் பரவியதற்குக் காரணம் அங்கு வஞ்சகர் இல்லை. தன்னலக்காரர் இல்லை; அதாவது பார்ப்பர் இல்லை. இது போகட்டும் - புத்தரை-புத்தர் கொள்கையை வெளியேற்றியதில் வியப்பிருக்க முடியாது. வேறு எது வியக்கத்தக்கது எனில், புத்தர் கொள்கையைப் பொய்கொண்டு புரட்டியதுதான். புத்தர் மறுபிறப்பை ஒப்பவில்லை. அவர் மறுபிறப்பை ஒத்துக் கொள்பவர் என்று ஆக்கப்பட்டிருக்கின்றது. ஆன்மா எனப்படுவதொன்றே இல்லை என்ற புத்தர், மறு பிறப்பைச் சொல்லுவாரா? அதை ஒப்புவாரா? ஒப்பியிருக்க முடியாது. நாவலந் தீவிற் பிறந்த ஒருவனை நோக்கிப் புத்தர் மறுபிறப்பை ஒத்துக் கொள்கின்றாரா என்றால் ஆம் ஆம் நன்றாய் ஒப்புக் கொள்கின்றார் என்பான். அவன் அறிவின் மேலேயே அடுக்கப் பட்டிருக்கின்றன ஆரியர் பொய் மூட்டைகள். இவ்வாறு புத்தரின் மறுபிறப்பில்லை என்ற கொள்கையை முன்னின்று மாற்றியமைத்தவர் திபேத்திய லாமாக்களே என்று ஆராய்ந்து கூறினார் நம் தோழர் எ. இராமநாதன் அவர்கள். புத்தர், பிறப்பை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அதன் பொருள் என்ன? தவிர்க்க முடியாத துன்பத்தில் கிடந்து உழலும் இந்த மக்கட் பூண்டே இல்லாது - செய்யவேண்டும் என்பதுதானே ஒழிய வேறொன்றுமிருக்க முடியாது. உலக மக்கள் அனைவரும் மணவாழ்க்கையில் வீழ்ந்து பிள்ளைகளைப் பெறுவதன் வாயிலாகப் பிறப்பை வளர்க்க வேண்டாம் என்பதுதான் அவர் கருத்து - ஆனால் அன்றும் இன்றும் அந்த உலகத் துறவு மக்களால் புரிந்துகொள்ள முடியாதது; புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கலாம். மக்களின் துன்பமாற்றம் - இன்பமுழுமை - அங்குத்தான் இருக்கிறது என்பதில் ஐயமிருக்க முடியாது. இதைச் சாக்கரட்டீசு தெளிவுபடுத்தினார். அவர் சொன்னார் :- நீ தூக்கமில்லாது கிடந்தாய்; துன்புற்றதாக உணர்ந்தாய்; நன்றாகத் தூங்கினாய்! இன்புற்றதாக உணர்ந்தாய். நீ இரவு ஒன்பது மணிக்குப் படுத்தாய். விடியும் வரைக்கும் அதாவது எட்டு மணியளவு நன்கு தூங்கினாய்; அதை இன்பம் இன்பம் என்று கொண்டாடினாய். ஆனால் தோழனே நீ - எட்டுமணி நேரத் தூக்கத்தை இன்பம் என்று நீ, இருநூறுகோடி ஆண்டு ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்தால் அதை எப்படிப்பட்ட இன்பம் என்று கொண்டாடுவாய்? ஆதலால் சாக்காடு இன்பம்! சாகாது இருப்பதெல்லாம் துன்பமே என்றார். சாக்காட்டிற்கு அப்புறம் ஒன்றுமே இல்லை என்ற புத்தரைப் போலவே சொல்லியவர் சாக்கரட்டீசே!. மக்களே இல்லாமல் உலகத்தை வெறிதாக்கிவிடுவதில் யாருக்கு -என்ன இழப்பு! அதற்கு மாறாக அதுதான் நிலைத்த இன்பமாகும். புத்தர் சொன்ன பிறப்பறுப்புக் கொள்கையின் விளக்கம் இதுதான். இதைத் தமிழர் - இன்றைய தமிழர் புரிந்துகொண்டால் தமிழகம் நலம் அடையும் அது மீட்சி அடையும்! ஏன்? துறவு மனப்பான்மை எல்லா ஆற்றலும் உடையது. - குயில், கிழமை இதழ், 26.5.1959, ப.3-4 112. கலைசிறந்த காட்சிக்குத் தலைசிறந்த படம் கட்டபொம்மன் இன்றுவரைக்கும் இத் தமிழகத்தில் கட்டபொம்மன் படத்தைப் போல் ஒரு படமும் வெளிவந்ததில்லை! இன்றுவரைக்கும் இத் தமிழகத்தில் சிவாசி கணேசனைப்போல் ஒரு நடிகனைப்போல் ஒரு நடிகனும் பிறந்ததில்லை! இன்றுவரைக்கும் இத் தமிழகத்தில் கட்டபொம்மனுக்கு ஏற்பட்டுள்ள மக்களாதரவு எந்தப் படத்திற்கும் ஏற்பட்டதில்லை. இன்றுவரைக்கும் இத் தமிழகத்தில் சிவாசி கணேசனுக்கு ஏற்பட்டுள்ள மக்களாதரவு எந்த நடிகனுக்கும் ஏற்பட்டதில்லை. சில நடிகர் வளர்ந்து வருவதாகச் சொல்லப்படுகின்றது. அவர்களுக்கு மக்களாதரவு அதிகப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் - அந்த நடிகர்களுக்கே தாம் வளரலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தோன்றவில்லை. அந்த நடிகர்களுக்கே மக்களாதரவு ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தோன்றவில்லை. தம் வளர்ச்சியிலும், மக்கள் ஆதரவைத் தேடிக் கொள்வதிலும் நம்பிக்கை யிருந்தால் கட்டபொம்மன் படத்தைப் பற்றிய சுவரொட்டி விளம்பரங்களைச் சாணையால் மறைக்க ஆள் வைத்து வேலை செய்வார்களா? படம் நடக்கும் நிலையங்களின் வாயிலில் ஆட்களை ஏற்படுத்திக் கட்டபொம்மன் படம் பார்க்கப் போவாரை அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள் என்று சொல்லச் செய்வார்களா? கையிற்காசு தந்து கட்டபொம்மனுக்குப் போகாமல் வேறு படத்திற்குப் போகவேண்டும் என்று கெஞ்சுவார்களா? புதுவையில் என்ன நடக்கிறது? புதுவை தி.மு.க. தலைவர் கையோடு நாலைந்து ஆட்களைச் சேர்த்துக்கொண்டு - கட்டபொம்மன் படம் நடக்குமிடத்தில் நின்று கட்டபொம்மன் பார்க்கவேண்டாம் உள்ளே போனால் கலகம் நடக்கும் என்று சொல்லுகிறார். என்ன எண்ணம்? கட்டபொம்மனைப் பார்க்க ஒட்டாமல் செய்தாலன்றி வேறுவகையில் கட்டபொம்மனை வெல்ல முடியாது என்றுதானே எண்ணுகிறார்கள்! சிவாசிகணேசனின் நடிப்பை மக்கள் பார்க்க ஒட்டாமல் செய்தாலன்றி வேறுவகையில் சிவாசி கணேசனை வெல்ல முடியாது என்றுதானே எண்ணுகிறார்கள்! நாமும் நன்றாக நடிப்போம் நாமும் நன்றாக படம் எடுப்போம் சிவாசி கணேசனை வெல்லுவோம் என்று நினைப்பவர்கள் இப்படி யெல்லாம் செய்யமாட்டார்கள் அல்லவா? சிவாசி கணேசன் தி.மு.க. கட்சிக்காரர் இல்லை. தி.மு.க. கட்சிக்குப் பாடுபடுவதில்லை, கட்சிக்கும் பணம் தண்டிக் கொடுப்ப தில்லை. பணமும் கொடுப்பதில்லை. சிவாசி கணேசனின் புகழை மாய்க்கவேண்டும். அவர் நடிக்கும் படம் ஓடக் கூடாது - என்பது தி.மு.க.வின் எண்ணம். அதற்காகத்தான் சென்னையிலும் புதுவையிலும் இந்த ஏற்பாடு! நடிகர்களைக் கொண்டு முன்னேறுவதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கம். மக்களின் நலன் கருதி நல்ல திட்டங்களை வகுத்துக்கொண்டு துணிவாகப் போராட்டங்களை நடத்திப் பகைவர்களால் மாய்க்கப்பட்டுவரும் தமிழ்த்தாய்க்கு விடுதலையையும் தமிழ்நாட்டுக்கு விடுதலையையும் தேடுவதில் அவர்கட்கு அக்கறை இருப்பதாகத் தோன்றவில்லை. தலைவர்கட்குப் பொதுநலத்தில் ஆசை வேண்டும் - அது இல்லையானால் அவன் குலத்திலே ஐயப்பாடு எழும். நலத்தின்கண் நாரின்மை தோன்றில் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். - குறள் - குயில், கிழமை இதழ், 26.5.1959, ப.15 113. மறியல்! ஏறி வா! வானொலி என்னும் தேனொலி இருக்கையிலும், ஆகாஷ்வாணி என்னும் போக்கற்ற மொழியைத்தான் மொழிவேன் என்று தில்லி பல்லைக் கடிக்கின்றது. அன்னைக்கு இழைக்கும் இத்தீமை சின்னதன்று. அவள் உயிர் போக்கும் முயற்சியின் ஒன்று; கிடக்கட்டும் என்று விடத்தக்கதன்று. உண்ணாநோன்பிருந்து உயிர்விடத் துணிந்த போதும் கண்ணான எங்கள் ஆகாஷ்வாணியைக் கைவிடமுடியாது என்ற தில்லியின் ஆணவச் சல்லிவேரையும் நாம் விட்டு வைக்கலாமா? தமிழராகிய நாம் இறந்தோமா? இருக்கின்றோமா? ஏறிவா! தமிழகமே ஏறிவா! இன்பத் தமிழகமே நீ பட்ட துன்பச் சுமைபொறாமல் துடிக்கும் கி.ஆ.பெ. விசுவநாதனைப் பின்பற்று; விடாதே - அவர் சூன் பத்தாம் தேதி ஆகாஷ்வாணி மறியல் செய்வார்; சிறைக்குப் போவார். அவர், விட்ட இடத்திலிருந்து தமிழர் சங்கிலித் தொடர் போல் விடாது மறியல் செய்ய வேண்டும். அஞ்சுதலும் பதுங்குதலும் தமிழரை அண்டியதே இல்லை; நினைவிருக்கட்டும். எதற்குச் சிறை போகின்றார் விசுவநாதன்? தம் நலத்துக்கன்று! தமிழுக்கு! தமிழ்த்தாயின் மானத்தை மீட்பதற்கு! தமிழ் அவருடையது மட்டுமா? அது தமிழர் ஒவ்வொருவரின் உயிரன்றோ! மறியலுக்குச் சென்று நிற்கும் விசுவநாதனை அறுபது இலக்கம் தமிழராவது சூழ்ந்து நிற்கவேண்டும். தமிழ்த்தாய்க்கு முழங்கும் தமிழ் வாழ்க என்ற ஒலி - தில்லியின் வேரைப் பிளக்கவேண்டும் ஏறிவா! தமிழகமே ஏறிவா! - குயில், கிழமை இதழ், 2.6.1959, ப.2 114. குயில் இரண்டாவதாண்டு குயில் கிழமை இதழுக்கு இரண்டாவதாண்டு தொடங்குகின்றது; இது குயிலின் இரண்டாவது ஆண்டின் முதலிதழ். குயில் தொடக்கமுதல், முதலாண்டின் இறுதியாகிய 52ம் இதழ் வரைக்கும், தமிழை எதிர்ப்பாரை எதிர்த்தும், தமிழரை எதிர்ப்பாரை எதிர்த்தும் தொண்டு செய்து வந்துள்ளது. மற்றும், தமிழின் மேன்மை, தமிழரின் மேன்மை, தமிழின் தொன்மை, தமிழரின் தொல்புகழ் ஆகிய உண்மை வெளிச்சத்தை, இருண்ட நெஞ்சங்களிளெல்லாம் செலுத்தப் பாடுபட்டு வந்திருக்கிறது குயில். தமிழகத்தில் தோன்றியுள்ள இயக்கங்கள், கட்சிகள் பல வற்றுள்ளும் திராவிடர் கழகம் ஒன்றே தமிழ், தமிழர் நலங்கோரி உழைப்பது. அவ்வியக்கம் ஒன்றாலேயே தமிழ், தமிழர் நன்னிலை அடையச் செய்யமுடியும் என்ற உண்மையை எடுத்துக்காட்டி வந்துள்ளது குயில். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழகத்தை நன்னிலை நோக்கி நடத்தக் கிடைத்த தலைவர் ஒருவரே; அவர்தாம் நம் பெரியார் - என்ற பொன்னான உண்மையைத் தந்நிலையறியாது தலைகவிழ்ந்து போகும் பல புன்னைக்காய்களும் உணரும் வண்ணம் அறிவு புகட்டிவர மறந்ததே யில்லை குயில். இவ்வாறாயின் உயர்ந்த கொள்கைகளை வைத்துக் குயில் கூவி வருகையில் அவற்றில் ஒன்றையேனும் எவரும் எதிர்ப்பதன் வாயிலாகக் குயிலின் இன்னிசையில் ஓர் எழுச்சியை உண்டாக்காதது பற்றி வருந்தியதுண்டு. எதிர்ப்பில் ஏற்படும் மக்கள் ஆற்றல்! குயில்! மற்றும், இந்தத் தமிழகம் கெட்டது பார்ப்பனரால்! இனியும் கெடும் எனில் அது பார்ப்பனரால்! என்பது குயிலின் அசைக்க முடியாததும் உண்மை யானதுமான நம்பிக்கை. ஆதலால் பார்ப்பனனை; பார்ப்பானுக்குப் பிறந்தவனை எதிலும் எப்போதும் எக்காரணம் கொண்டும் நம்ப லாகாது; சேர்க்கலாகாது; ஆதரவு தரலாகாது; அவர்களால் தமிழர்க்கு நூற்றுக்கு நூறு பங்கு தீமையேயன்றி முந்திரி விழுக்கா டாவது நன்மையும் இராது என்பதைக் குயில் கண், கணீர் எனக் கண்டா மணி யடிப்பது போல் முழக்கஞ் செய்து வந்துள்ளது. இவ்வாறு முழக்கஞ் செய்தலில் குயிலுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவெனில், அண்ணாத்துரையின், குயிலை வாங்காதே என்ற மறியல் ஏற்பாடுதான். குயில் வாங்குவோரைக் கண்டு கண்டு குயில் வாங்காதே என்று கெஞ்சிக் கூத்தாடினார்கள் அண்ணாத் துரையின் கட்டளைப்படி அவரின் தம்பிமார்கள். குயில் விற்பனை யாளரைக் கண்டு கண்டு வேண்டிக் கொண்டார்கள், தி.மு.க. சட்டாம் பிள்ளைகள். இதுபற்றி குயிலின் அன்பர்கள் வருந்தினார்கள். நாய் குலைத்தால் நத்தம் பாழாகிவிடும் என்று எண்ணினார் போலும்! குடியேற்றத்தில் வைத்து நடிகவேள் எம்.ஆர். இராதாவுக்குப் பொன்னாடை போர்த்தியதைக் குயில் ஆதரித்த காரணத்தால் திராவிடர் கழகத் தோழர் சிலர் குயிலை வாங்காதே என்ற மறியல் தொண்டு செய்தார்கள்; செய்துவருகின்றார்கள். இதுபற்றி குயில் வியப்படைந்தது தவிரச் சிறிதும் அதன் உள்ளம் மளுக்கென்று ஒடிந்துவிடவில்லை; ஒடிந்துவிடக் கூடியதுமன்று. இனியும் மேற்காட்டிய கொள்கையினின்று மயிரிழையளவும் மாற்றமுறாது தொண்டு செய்து வருவேன் என்று கூவுகின்றது நம் குயில், தமிழ் வாழ்க! தமிழகம் வெல்க!! - குயில், கிழமை இதழ், 9.6.1959, ப.2 ,3 115. அவர்களைப் பாருங்கள் ஆரியர் பலரும் கூடுகின்றார்கள் பாருங்கள்! பொய்யை மெய்யென்று உலகுக்குக் காட்ட நிறுவுகின்றனர் பாருங்கள் சமகிருத விசுவபரீஷத் (1951, மே, 11-12). நோக்கங்கள்: (அ) அதனோடு தொடர்புள்ள சமகிருத மொழியையும், பாலி மொழியையும், பிராகிருதமொழியையும் எல்லோரும் படிக்க வேண்டுமாம். ஆராய வேண்டுமாம். அதற்கு ஆவன செய்யவேண்டுமாம் . செத்துப்போன சமகிருதத்தை இருப்பதுபோல் பேசுவது எதற்கு? இருக்கும் தமிழைச் செத்ததுபோல் காட்டுவதற்கு அல்லவா? (ஆ) இந்து தத்துவம் பற்றியும் அதனோடு தொடர்புடைய மற்றவை -(புராணம் - கொலை - வேள்வி - கழுவாய்) பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டுமாம். அவ்வாறு நடைபெற்றுவரும் ஆராய்ச்சி களை ஊக்கப்படுத்த வேண்டுமாம். இந்தக் கற்பனைப் பேச்சுக்களால் முதலில் தோன்றிய தமிழ் நான்மறையையும் தமிழன் முதலில் கண்ட எண்ணூலையும் (சாங்கியம்) தொன்னூலாகிய தொல்காப்பியம். திருக்குறள் முதலிய மெய்ந்நூற்களையும் உலகம் மறந்துவிடவேண்டும் போலும்! (இ) இந்த நோக்கங்களைக் கொண்டோ - இதே துறையில் ஈடுபட்டோ உலகம் எங்கும் இயங்குகின்ற எல்லா நிறுவனங் களோடும் சேர்ந்து பணியாற்ற வேண்டுமாம். இப்படிப் பல நிறுவனங்கள் உலகில் இருக்கின்றன போலும். (ஈ) இந்த முடிவுகளைச் செயற்படுத்த எல்லா வகையான முயற்சி களையும் மேற்கொள்ளப் போகின்றார்களாம். மெய்ம்முயற்சி, பொய்ம்முயற்சிகளில் எதையும் மேற்கொள் வார்கள். மெய்ம்முயற்சிக்கு எங்கே போவார்களோ தெரியவில்லை. (உ) சமகிருதப் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவவேண்டுமாம். அல்லது சமகிருதம் பற்றிய நிறுவனம் எதையாவது நிறுவ வேண்டுமாம். அல்லது எந்தப் பல்கலைக்கழகமோ, எந்த நிறுவனமோ, தம் கண்காணிப்பின் கீழ்வரும் வாய்ப்பிருந்தால் விடக்கூடாதாம். நேர்வழி போகவேண்டும் என்ற கட்டாயம் வேண்டாமாம். அடிப்படையில் நேர்மையிருந்தால்தானே! (ஊ) தம் மரபைப் பாதுகாக்கும் கல்விக் கழகங்களை ஊக்கப்படுத்திப் பரப்ப வேண்டுமாம். ஏமாறும் இனங்கள் இப்போதும் இருந்தால்தான்! (எ) சமகிருத மொழி பற்றியும் அதைச் சார்ந்த மற்ற மொழிகள் பற்றியும் ஆராய்கின்ற - பரப்புகின்ற எல்லா நிறுவனங்களையும் ஒன்றுபடுத்தும் நோக்கத்தோடு சமகிருதப்பேராசிரியர்களையும் இந்து சமய தத்துவ ஆசிரியர்களையும் குறிப்பிட்ட காலத்தில் ஒன்று கூட்ட வேண்டுமாம். (ஏ) இவைகள் பற்றிய நூல்களையும் மலர்களையும் இதழ்களையும் வெளியிட வேண்டுமாம். (ஐ) கண்காட்சிகள் ஏற்படுத்த வேண்டுமாம்! ஏடுகள், நாணயங்கள், செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், படங்கள் இவற்றின் மேல் தம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமாம். அப்போதுதானே மாற்றியமைக்க வாய்ப்பு ஏற்படும். (ஒ) சமகிருத நூற்கள், இந்து தத்துவ நூற்கள் - இவை பற்றிய மலர்கள் ஆகியவற்றைத் தொகுத்து வைத்துள்ள நூல் நிலையங் களின்மேல் தம் ஆட்சியைத் திணிக்க வேண்டுமாம். எல்லாம் ஆரியர் நாகரிகமே என்று காட்டத்தக்க வாய்ப்பு வேண்டுமாம். (ஓ) இந்து தத்துவத்தை ஆராய்வதற்கும் பரப்புவதற்கும் பேராசிரியர், படிப்பவர்கள், விரிவுரைஆற்றுபவர், உறுப்பினர்கள் ஏற்படுத்தப் பணிபுரிய வேண்டுமாம். விடாமுயற்சி செய்ய வேண்டும். செல்லாக் காசைச் செல்ல வைப்பது இலேசல்ல அல்லவா? (ஔ) தேர்வுகள் நடத்த வேண்டுமாம். பட்டங்கள் வழங்க வேண்டுமாம். இதனோடு பணமும் கொடுத்தால் நோக்கம் இலேசாக நிறைவேறும். (க) இந்தப் பரீஷத்திற்குக் கிளைகள் எங்கும் நிறுவப்பெற வேண்டுமாம். செய்தி புரியாத அயல்நாடுகளில் காசு செலவழித்தால் நிறுவத் தடை ஏற்படாது. (கா) மேற்சொன்ன நோக்கங்களை நிறைவேற்ற எல்லா வகையான விரகு(உபாயம்)களையும் மேற்கொள்ளலாமாம். பாருங்கள் அவர்களை! இதுமட்டுமன்று; இந்த முயற்சி பற்றி அவர்கள் பல்லோர் முன்னிலையில் எடுத்துக்கொண்டுள்ள சூளுரையைப் பாருங்கள். அகில பாரதீய சமகிருத பரீஷத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள், பக்தியுடனும் உறுதியுடனும் எடுத்துக்கொள்ளும் பிரதிக்ஞை இது! (m) ïªâa¥ g©gh£o‰F« M¤k ts®¢á¡F« ghJfhtyhf ïU¥gJ rkÞ»Uj bkhÊ x‹nwahF«.(?) உலகத்தின் உயர்தனிச் செம்மொழியாகவும் இந்தியப் பண்பாட்டினையும் உண்மையாக உணர்ந்துகொள்வதற்கேற்ற திறவுகோலாய் உள்ளதும் அம்மொழியேயாகும். மேலும் சமகிருத மொழியின் வழியாகவும் அதனோடு தொடர்புடைய மற்ற மொழிகளின் வழியாகவுமே உலக உயிர்கள் எல்லாம் ஆத்ம விளக்கம் அடைய முடியும். (ஆ) இந்தியாவின் உடனடியான இன்றியமையாத தேவைகள் சமகிருதக் கல்வியைப் பெருக்குவதனாலேயே தான் நிறைவேறும். வாழ்வுக்குரிய உடம்பு, உயிர் போன்ற இன்றியமையாததாகச் சமகிருத மொழி ஆக்கப்பட வேண்டும். இந்து தத்துவ ஆராய்ச்சியும், வளர்ந்து வரும் அறிவு வளர்ச்சியி னோடு இணைந்து செல்வதற்கான பணியாவும் நம்முடைய வையே என்று நாம் சொல்லிக்கொள்கின்ற வேறுபட்ட - பலவகைப்பட்ட பண்பாடுகளை நம்முடையவைகளே என்று உலகுக்குக் காட்ட வேண்டும். (இ) இக்குறிக்கோள்களை அடையவேண்டி இந்தச் சமகிருத விசுவ பரீஷத் என்ற நிறுவனத்தை அமைப்பது என்றும், அந்த நிறுவனம் சோமநாதர் அறநிலையத்துடனும் பரீஷத்தின் கொள்கை களையும் நோக்கங்களையும் கொண்டு உலகெங்கும் இயங்கிவரும் பிற நிறுவனங்களுடனும் கூடிச் செயலாற்ற வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறுகின்றோம். இந்நோக்கங்களை நிறைவேற்றுவோம் என்பதில் எங்கட்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இவை நாங்கள் எடுத்துக் கூறும் சூளுரை. மேற்கொண்ட சூளுரையை அனைவரும் ஒத்துக்கொண்டதற்கு அடையாளமாக எங்கள் கையொப்பங்களை இடுகின்றோம். பத்மநாபதாச பலராம வர்மா (திருவாங்கூர்) பாபு புருஷோத்தம தாசு தாண்டன் கே.எம்.முன்ஷி டாக்டர் இராஜேந்திர பிரசாத் சேம் சாகிபு (நவநகர்) எச்.வி.திவேதியா நீதிபதி என்.எச்.பகவதி பிக்கு ஜினரத் நாஜி உமே மிச்ரா ஆச்சார்யா டி.ஏ.வி.தீட்சிதர். மற்றும் பலர். - குயில், கிழமை இதழ், 16.6.1959, ப. 1, 2, 3 116. இவர்களைப் பாருங்கள் தமிழ்த் தாயின் தலையை வெட்டக் கத்தி தீட்டுகின்றார்கள் சில தமிழர். தாயின் பகைவர்களைத் தட்டிக் கொடுக்கின்றார்கள் சில தமிழர். அன்னை அழுகுரல் கேட்கும் அடுத்த தெருப்பக்கம் நடையைத் திருப்புகின்றார்கள் பல தமிழர். தமிழன்னையின் தாழ்வு நிலை கேட்டு, அப்படி ஒரு தாய் இருப்பதே தெரியாதென்று கைவிரித்துச் செல்லு கின்றார்கள், மற்றும் பற்பல தமிழர்கள். தம்மைத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளவே நாணிச் செல்கின்றனர் சில அயல்மொழிவல்ல தமிழர்கள். சின்னஞ் சிறிய நோக்கங்கள் கொண்ட தமிழ் நிறுவனங்கள் தோன்று கின்றன; தோன்றிய அதிலேயே தூங்கிவிடுகின்றன. ஒற்றுமை கெட்டு மாய்ந்து விடுகின்றன. (அ) நம் தாய் மொழியையும் அதன் தொடர்புடைய கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் ஆகிய மொழிகளையும் எல்லோரும் படிக்கும்படி செய்யவும், ஆராய்ச்சிசெய்து உலகின்முன் வைக்கவும் முன்னுக்குக் கொண்டு வரவும் தமிழர்கள் ஆவன செய்ய முற்பட்டதுண்டா? (ஆ) உலகுக்கு முதற்கண் தமிழர் அருளிய அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய தமிழ் நான்மறை பற்றியும் அதனோடு தொடர்புடைய தமிழ்த் தத்துவநூல், இலக்கியங்கள் பற்றியும் ஆராய்வதும், ஆராய் வார்க்கு ஊக்கம் ஊட்டுவதும் தமிழரின் முதல் வேலையன்றோ. (இ) உலகிலுள்ள பன்னாட்டுத் தத்துவங்கள், கலைகள், இலக்கியங்கள், மொழிகள் இவைகளைத் தேடி ஆராய்ச்சி செய்கின்ற நிறுவனங்களில், நம் தமிழ்மொழி இலக்கியங்கள், கலைகள், தத்துவங்கள் சேர்க்கப்பட வேண்டுமே என்று எந்தத் தமிழன் கவலை கொண்டான்? (ஈ) இவைகளைச் செயற்படுத்த எவ்வகை முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையன்றோ? (உ) சமகிருதம் என ஒரு மொழி இருந்தது என்று காட்டவேண்டி, மிகக் கவலையோடு அந்த மொழியைப் பேசப் பழகிக் கொண்டவர்கள் இன்று எத்தனை பேர்கள் என்று கணக்கெடுத்ததில் இத்தனை பெரிய துணைக் கண்டத்தில் ஆயிரம் பேர்கூட அகப்படவில்லை. இருந்தால்தானே! தமிழ் அப்படியா? நான்கு கோடி தமிழர்களின் மூச்சும் பேச்சும் தமிழைவிட்டு இம்மியும்அசைந்ததில்லை. சாகாத் தமிழுக்குத் தமிழகத்தில் எத்தனைப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன? உலகிலுள்ள பல்கலைக் கழகங்களில் ஒன்றி லேனும் உலக முதன் மொழியாகிய நம் தமிழ்மொழி பற்றிய பேச்சு உண்டா? தமிழக மக்கள் பேரால் உலகப் புகழ் பெற்றுள்ளவர்களில் ஒருவர்க்காவது இதில் எள்ளத்தனை கவலை இருந்ததா? (ஊ) உலகு தொடங்கியது முதல் இன்றுவரை பல படையெடுப்பு களுக்கும் சாகாது உயிரை வைத்திருக்கும் தமிழர் தலை முறையைக் காப்பாற்றத் தமிழ்க் கல்விக் கழகங்களைத் தமிழகத் தில் அடிக் கொன்றாக விரிவுபடுத்துவதும், அக்கழகங்களில் இந்தி முதலிய கொடிய விலங்குகள் புகாது பார்த்துக்கொள்வதும் தமிழர்களின் இன்றியமையாத கடமையன்றோ? இவ்வகை மொழிப்போர் நீடிக்க - வெற்றி பெற என்ன செய்தார்கள், தமிழ்ப் பெருஞ்செல்வர்களும், தமிழ்ப் பெரும் கல்வி வல்லாரும்? (எ) தமிழாராய்ச்சி வல்லார் தமிழகத்தில் இல்லாமல் இல்லை. தமிழைப் பரப்பும் நோக்கமுடைய ஆற்றலினர் இல்லாமல் இல்லை. அவர்களைத் தமிழ் பற்றிய இவ்வகைப் பெரு நோக்கத்தில் ஒன்றுபடும்படி செய்வதன்றோ செய்யத்தக்கது. புறஞ்சொல்லிப் பகை விளைத்தலா செயத்தக்கது? (ஏ) பழந்தமிழ் நூற்களை உரைத்தூய்மை செய்தும் தமிழின் தொன்மை மேன்மைகளை விளக்கும் புதுத் தமிழ் நூற்களையும், அவை பற்றிய ஏடுகளையும், இதழ்களையும் பிறர் கட்டுப் பாட்டுக்குட் படாதபடி - வெளியிட முன்வர வேண்டாமா? (ஐ) தமிழகத்தில் தமிழர்களால் ஏற்படுத்தப்படும் கண்காட்சிகள் ஆண்டு தோறும் அளவற்றவை திறக்கப்படுகின்றன. தமிழன்னை, தமிழ் நாகரிகம், பண்பாடுகளின் மேம்பாடுகள் காட்சி யளிக்கின்றனவா அவற்றில்? இந்த நினைவேனும் இருந்ததாகத் தெரிகின்றதா, தமிழ்த் தலைவர் உள்ளத்தில்? தமிழனின் தச்சுத் திறனும், இசைக்கலைத் திறனும், ஓவியத் திறனும் வரிசைப் படுத்தப்படுகின்றனவா எங்கேனும்? (ஒ) பெரிய தமிழ் நூல் நிலையங்கள் தமிழகந்தோறும் உண்டாக வேண்டும் என்றும், தமிழ் நூற்கள், அயல்நாட்டு நூலகங்களிலும் இடம்பெற வேண்டுவது இன்றியமையாதது என்றும் தமிழ்ப் பெரியோர் எண்ணி ஆவன செய்யவேண்டும். இருக்கும் நூல் நிலையங்களில் தமிழரின் மேற்பார்வையே நிலைக்கச் செய்யவேண்டும். (ஓ) தமிழர் தத்துவங்களையும் தமிழின் தொன்மை மேன்மை களையும் உலகமெலாம் சென்று பரப்பத் தமிழ்ப் பேராசிரியர் களையும், விரிவுரையாளர்களையும் ஏற்படுத்தித் தமிழ் படிப்பாரை உலக முழுவதும் ஏற்படுத்த வேண்டும். (ஔ) உலகெங்கணும் பரவலாக உண்டாக்கப்படும் தமிழ் விருப் பினரைக் கொண்டு பெரிய பெரிய தேர்வுகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றார்க்கு உலகு புகழ் பரிசுகள் வழங்க வேண்டும். தமிழ் என ஒன்று இருப்பதாகவே இன்று அயல்நாட்டினர் எண்ணவில்லையே. அவ்வாறு எண்ணாதபடி தமிழரின் பகைவர் செய்கின்றார்களே! செத்த மொழி இருப்பதாக அவர்கள் எண்பிப்பதில் நமக்கு வருத்தமில்லை. இருந்தும் மொழி செத்ததாகச் செய்யப்படும் முயற்சியைவிட்டு வைக்கலாமா? (க) தமிழுக்கென ஓர் பெருநிறுவனத்தை நிறுவ நினைத்தால் இன்று நம்மிடமிருக்கும் தமிழ்ச் செல்வர்களால் தமிழ் வல்லுநர்களால் முடியாது போய்விடுமா? அவ்வாறு ஒரு நிறுவனத்தை நம் தமிழ்த் தாய்க்கு ஆக்குவதும் அதன் கிளை நிறுவனங்களை உலகெங்கும் நிறுவுவதும் இன்று தமிழர்க்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எண்ணிய மறுகணத்திலேயே வெற்றியடையக் கூடியவையல்லவா? (கா) தமிழர் நாகரிகம், தமிழின் தொன்மை மேன்மை மாய்ந்து மண்ணாக வேண்டும் என்று பகைவர் எண்ணிவரும் இந்நாளில் மேற்சொன்னவாறெல்லாம் தொண்டாற்றுவதில் பெருமுயற்சி செய்துகொள்ள வேண்டுமன்றோ? தூங்குகின்றார்கள். பாருங்கள் இவர்களை! *** பாருங்கள் அவர்களை இந்தியப் பண்பாட்டிற்கும் ஆத்ம வளர்ச்சிக்கும் பாதுகாவலாக இருப்பது சமகிருத மொழி ஒன்றே. உலகத்தின் உயர்தனிச் செம்மொழியாகவும் இந்தியப் பண்பாட்டினை உண்மையாக உணர்ந்துகொள்ளுவதற்கேற்ற திறவு கோலாய் உள்ளதும் சமகிருதமொழியேயாகும். இவ்வாறு அவர்கள் உறுதியெடுத்துக்கொள்ளுகின்றார்கள். இவர்களின் உயர்தனிச் செம்மொழிக்கு உள்ள பெயரைப் பாருங்கள். சமகிருதம் - என்ன பொருள்? திருத்தி அமைத்தது என்பது. ஆத்ம வளர்ச்சி சமகிருதத்தில்தான் இருக்கிறதாம். சூதாடுவது பெருமை என்று எது சொல்லுகின்றது? ஒரு பெண்ணைப் பார்த்து புணருவது தக்கது என்று எது சொல்லுகின்றது? கட்குடியை மெச்சுகிறது எது? கொலை வேள்வியைக் கூறி மகிழ்வது எது? கழுவாய் என்னும் கயமைச் செயலை உயிர் என்று கொள்ள வேண்டும் என்று கூறுவது எது? மக்களின் உயர்வு தாழ்வு கூறி மடமை வளர்ப்பது எது? தீமை வந்துற்ற போது திருடலாம் என்று செப்புவது எது? மக்களைக் கொன்று வேள்வி செய்ததை மகிழ்ச்சியோடு கூறி வற்புறுத்துவது எது? இந்த உலகமே கான்றுமிழும் சமகிருதம் அன்றோ? அவர்களைப் பாருங்கள் செத்த சமகிருதத்தை இருப்பதாய்க் காட்ட- பொய்மை மிகுந்த அவர்களின் நூற்கருத்துக்களை உயர்ந்தனவென்று உலகெங்கும் காட்ட - அரசியல் தலைவர்களும், அரசர்களும், நீதிபதிகளும் மற்றும் அலுவலால் பதவியால் பேர்பெற்றவர்களும் உழைக்க முன் வந்துள்ளார்கள். தம்மேற் போட்டுக் கொண்ட பணிகளை வெற்றிபெற வைக்கிறார்கள். இவர்களைப் பாருங்கள் இந்நிலம் புகழ் வாய்ந்த தமிழர் ஏ. இராமசாமி முதலியார் தமிழ் மொழியை, தமிழர் தத்துவத்தை, தமிழர் மேன்மையை, தமிழர் தொன்மையை எண்ணுகின்றாரா? ஏற்றமுறச் செய்கின்றாரா? அதன் ஆற்றலை அழிப்பாரை அடக்கக் கண் திறந்து பார்க்கின் றாரா? பார் முழுதும் பேர் சொல்லும் தமிழர் ஏ. இலக்குமணசாமி முதலியார் நினைத்தால், இனிக்கும் தமிழும் தமிழிலக்கியமும் உலகை ஆளாதா? வையம் போற்றும் தமிழர் எ.ஜி. மணவாள ராமாநுஜம் இருக்கும்போதும் தமிழர் ஒளி பகைவரால் மாய்க்கப்படுகின்றது என்றால் யாருக்குத் குறைவு? தரத்தில் குறைந்தது தமிழ் என்று உரைத்தார் பகைவர் என்றால் தமிழன் எம். இரத்தினசாமியவர்க்கு எரிச்சல் வரவேண்டாமா? பேரறிஞர் எ.இராமநாதனை நாம் பெற்றிருக்கின்றோம் என்று தமிழர் பெருமையுறுவதுண்டு. தமிழருக்குப் பரிந்து அவர் வரிந்து கட்டிக்கொண்டு முன் வர வேண்டாமா? நீதிபதி சோமசுந்தரம் அவர்கள், நீதிபதி கணபதியா பிள்ளை யவர்கள், நீதிபதி நாடார் அவர்கள், விஞ்ஞானச் செல்வர் ஜி.டி.நாயுடு அவர்கள் முதலியவர்கள் தமிழன்னையின் தவப்புதல்வர்கள். அறிவாற்றலால் உலகப் புகழ் வாய்ந்தவர்கள். கண்கலங்கும் தமிழன்னையை ஒருமுறை எண்ணினால் போதும். இவர்களைப் பாருங்கள் தமிழ் படிப்பதும், தமிழ் தத்துவ நாற்களை ஆராய்வதும் தாழ்வு என்று எண்ணியிருக்கின்றார்கள். அதுமட்டுமா? அவர்களைப் பாருங்கள் தம் மொழி, நாகரிகங்களுக்கு உழைப்பான் ஒருவனை வரிந்து கட்டிக்கொண்டு ஓடி எல்லாரும் ஆதரிக்கிறார்கள். உழைக்கிறார்கள். அதுமட்டுமா? எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தம் மொழி நூற்களை ஆராய்ச்சி செய்வதில் தவறுவதே இல்லை. இவர்களைப் பாருங்கள் ஒரு தனி முதியவர் தமிழர் மேன்மைக்குத் தூக்கமின்றிக் துய்ப்பதுமின்றி உழைக்கின்றார். இருக்கும் உலகப் பேரறிஞர்கள் என்ன செய்கின்றார்கள்? அந்த முதியவர் - பெரியார் இராமசாமி தமிழர் மேன்மையைப் பற்றிய எல்லாத் துறைகளிலும் உள்ளஞ் செலுத்தட்டும் என்று எண்ணி வாளாவிருப்பது இந்நாளா? வேண்டும். தமிழர் வரலாறு, தமிழின் தொன்மை, மேன்மை, தமிழிலக்கியம் உலகுக்கு இன்றியமையாமை அனைத்தினையும் உலகெலாம் பரப்பவும். தமிழகத்திலும் பிற நாடுகளிலும் தமிழ்க் கல்வியைப் பரப்பவும், தமிழ்மொழி வைத்துப் பல்கலைக் கழகங்களைத் தமிழகத்தில் மாவட்டந்தோறும் நிறுவவும் பிற நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆராய்ச்சி நடத்துவிக்கவும். உலகத் தமிழ்ப் பேரவை ஒன்று, அடங்கல் உலகம் ஆயிரம் கிளைகள் பெறும் வண்ணம் நிறுவத் தமிழ்ப் பேரறிஞர்களே! தமிழ்ப் பெருஞ் செல்வர்களே! தமிழ்ப் புகழ் மிக்கோரே! தமிழகப் புலவர் குழுவினரே! அயர்வின்றி முயல வேண்டுகின்றேன். அவர்களைப் பாருங்கள்!! - குயில், கிழமை இதழ், 16.6.1959, ப. 5, 6, 13, 14 117. புதுவைத் தேர்தல் அண்மையில் புதுவையில் நடைபெறப் போவதாய்ச் சொல்லப் படும் தேர்தலில் நிறுத்த ஆள்பொறுக்கும் பொருட்டு, தில்லியினின்றும் சென்னையினின்றும் காங்கிர தலைவர்கள் பலர் பன்முறை புதுவைக்கு வந்தார்கள்; காரைக்கும் போனார்கள். அவர்கள் தேர்தலுக்கு யார்யாரை நிறுத்தலாம் என்று பலரைப் பன்முறை கலந்து பேசினார்கள். அந்தப் பலரிடமிருந்தும், பல தடவை களிலும், காங்கிர தலைவர்கட்குக் கிடைத்த தகவலின் சுருக்கம்: குபேர் வேண்டாம் தேர்தலில் உறுப்பினராகக் குபேரை நிறுத்தினால் காங்கிர அழியும் தோற்கும் என்பதுதான். வந்த தலைவர்கள் சொன்ன பதிலின் சுருக்கம். புதுவையரசு, மக்கள் எமக்கு வேண்டாம் குபேர் ஒருவரே எமக்குப் போதும் என்பதுதான். தலைவர்களின் இடத்தில் நாமிருந்து எண்ணினாலும் இந்த முடிவுக்குத் தாம் வந்தாகவேண்டும். யூனியன் காரர்கள் புதுவை அரசு மக்களை அடைய வளைத்து, அடித்து உதைத்துப் பட்டினி போட்டு அச்சுறுத்திப் புதுவைக்குள் புக வேண்டிய தாயிருந்தது. இந்த அன்புச் செயல்களைச் செய்ய அவர்கட்குத் தக்க துணைவர்கள் வேண்டியதிருந்தது. யார் ஒத்துக் கொள்வார்கள்? ஒத்துக் கொண்டார்கள். குற்றவாளிகள் சிலர். பல கொள்ளைகள், பல கொலைகள் செய்து காய்ப்பேறிய கையினர் யூனியன்காரர் கருத்துக்கு மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டார்கள். யூனியன்காரர் செய்யச் சொன்னதற்கு மேல் செய்து, பெரும்புகழைப் பெற்றார்கள். யூனியன் புதுவையில் புகுந்தது மேளதாளத்தோடு! தன் செயலைத் தொடங்கியது! அது மட்டுமா? புதுவையில் அது ஒரே கல்லால் இரண்டு மாங்காய்களை அடித்துவிட்டது. தன் கையில் கிடைத்த குற்றவாளிகளில் ஒரு குற்றவாளி காங்கிர கட்சித் தலைவன். மற்றொரு குற்றவாளி எதிர்க்கட்சித் தலைவன்; அடிசக்கை! சக்கைபோடு போட்டது புதுவையில் புகுந்த யூனியன்! மனம் போன போக்கில் ஆட்சியை நடத்தியது. ஒரே பிச்சைக்கார இனம் புகுந்தது புதுவை நாற்காலி வரிசையில்! திணறுகின்றது புதுவை! குபேரின் சட்டசபை உறுப்பினர் சிலர். குபேரை விட்டுப் பிரிந்தனர். உறுப்பினர் தாம் கைவிட்டாலும் அரசினர் தம் குபேரைக் கைவிடுவார்களா? ஒருபோதும் விடமாட்டார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்க்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துக் குபேரிடம் இழுத்துப் போட்டார்கள். பலதடவை இப்படி! அரசினர் எல்லாத் தடவைகளிலும் அப்படி! ஆனாலும் ஒரு நாள் பெரிய போக்கிரிகளான உறுப்பினர் பலர் குபேரின் வாலை ஒட்ட அறுப்போம் என்று பிரிந்து கச்சை கட்டினார்கள்! அந்த முண்டங்களுக்கு யூனியன் அரசினர் கைவரிசை இன்னதென்று தெரியாது. ... ... - குயில், கிழமை இதழ், 23.6.1959, ப. 3, 4 118. ஆகாஷ்வாணி ஒழிக! வானொலி என்று வாய்நிறையப் பேசி வந்த வானொலி நிலையத்தார் இடையில் ஆகாஷ்வாணி என்று உளறத் தொடங்கினார்கள். அதைத் âU.கி.M.bg. விசுவநாதம் எதிர்த்தார்; வானொலி நிலையத்தார்க்கு எழுதினார். நாங்கள் வடவர்க்கு அடிமைதாமே என்று கூறிக் கையை விரித்துவிட்டார்கள். அதன் பிறகு தில்லிக்கு எழுதினார் திருவாளர்! வானொலி வேண்டாம் என்றனர் வடக்கர். ஆகாஷ்வாணியை எதிர்த்துப் பல இளைஞர்கள் உண்ணா நோன்பு இருந்து தம் உள்ளத்தை வெளிப்படுத்தினார்கள். நோன்பிருந்த அந்த இளைஞர்களையெல்லாம் நோன்பைக் கைவிடும்படி அமைச்சர் பக்தவச்சலனார் தம் கூலிகளான சட்டமன்ற உறுப்பினர் சிலரால் வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்தக் கிளர்ச்சிக்குத் தலைவரான திரு.விசுவ நாதமே தம் குடும்பத்தோடு மறியல் தொடங்கினார். சிறைப்படுத்தாமல் அந்தக் கிளர்ச்சியை ஒடுக்க எண்ணிய தமிழக அமைச்சர்கட்கு அறிவு புகட்டும் வகையில், பிறகுதாமே வானொலி எழுத்தை - வானொலி நிலையத்தின் வாயிற் பலகையில் - தார் கொண்டு அழிக்கவும் தலைப்பட்டார்; சிறைப்பட்டார். இன்னும் தீர்ப்பாளர்களின் முன் சேர்க்கப்படவில்லை. அவர் பாதையில் இருவர் சென்றனர். அவர்கட்கு 13 திங்கள் சிறை தீர்ப்பாம்! இதோடு தீர்ந்ததா பார்ப்போம். இந்தத் தமிழப் போராட்டம் பற்றி ஆளவந்தார்க்கு நாம் உரைப்பது இது: ஆகாஷ்வாணி இழவைத் தொலைத்து தலைமுழுகும்படி வடக்குக்குத் தமிழமைச்சர்கள் வரைய வேண்டும். அதெப்படியோ விரைவில் ஆகாஷ்வாணிப் பாம்பை அடித்துப் போடத்தான் வேண்டும். பெரியாரும் இந்தப் போராட்டத்தில் கால் வைத்தால் என்ன ஆகும்? - குயில், கிழமை இதழ், 30.6.1959, 4-5 119. தில்லியை நம்ப வேண்டாம் தமிழ்ப் பெருமக்களின் படித்திருவாளர்கள் (பிரதிநிதிகள்) காமராசர் முதலிய தமிழமைச்சர்கள்! ஆதலினால் அவர்கள் தமிழர்களின் பெரும்பான்மையோரின் கோரிக்கைகளைத் தாங்க வேண்டியவர்கள்; இரண்டொன்றை புறக்கணிக்கலாம். எல்லாவற்றையும் புறக்கணிக்க முடியாது. இதனால், தமிழரை மட்டந்தட்டுவதில் குறுக்கே நிற்பவர் படித்திருவாளர்களாகிய காமராசர் முதலியவர்களே. தில்லி - நேரு இன்று காமராசர் அமைச்சரவைமேல் நல் லெண்ணம் வைத்திருப்பதாகக் காமராசர் முதலியவர்கள் நினைப்பது தவறேயாகும். தமிழகம் விடுதலை கேட்கின்றது. அடிமையை வெறுக்கின்றது, ஆதலால் தில்லி தமிழகத்தை நெருப்புக் கண்ணால் பார்க்கின்றது, ஒழிக்க முந்துகின்றது. இடையில் அதற்குத் தடையாய் இருப்பவர்கள் படித்திருவாளர்களே! தில்லி நேரம் பார்க்கின்றது படித்திருவாளர்களை ஒழித்துக்கட்ட. இந்த நிலையில் படித்திருவாளர்கள் விழிப்போடிருக்க வேண்டும். தமிழர்களின் உயிர்த்துணையை அவர்கள் இழந்து விடலாகாது. தமிழ் பற்றிய கிளர்ச்சி - அல்ல - போராட்டம் ஏனோ தானோ என்று இருந்துவிடும் என நினைப்பது தவறு. தமிழ் இகழ்ச்சி பெறுவது, தமிழா இகழ்ச்சி பெறுவது; தமிழ் தமிழர்களின் உயிர் என்ற உணர்ச்சியின் உச்சியில் நிற்கின்றார்கள் தமிழர்கள். இரண்டிலொன்று பார்த்தே தீருவார்கள் அவர்கள். தாய்மொழிக் கோரிக்கையை அம்மொழித்தலைவர் எதிர்த்தார் என்ற வரலாறு இல்லை. எதிர்த்தால் வெற்றி கிடைக்கும் என்று வெறியன்கூடச் சொல்லமாட்டான். தமிழக அமைச்சர்கள் தமிழரின் கோரிக்கையைத் தாங்க வேண்டும். தில்லியை எதிர்க்க வேண்டுமானால் எதிர்க்கத்தான் வேண்டும். தமிழன்னைமேல் தாவிவரும் வடவர் அம்புகளைப் பாருங்கள். தமிழர் வாழ்வை நோக்கி எய்யப்படும் நச்சுக்களைப் பாருங்கள்; இந்தி புகுத்தலைப் பாருங்கள். தமிழர் வரலாறு தலை சாய்வதைப் பாருங்கள் வடமொழி ஆர்ப்பாட்டத்தைப் பாருங்கள், நெய்வேலியைப் பாருங்கள். புதுச்சேரியைப் பாருங்கள். தமிழர் முகத்தைப் பாருங்கள். அவர்களின் சாக்காட்டுத் தொகையைப் பாருங்கள். படித்திருவாளர்களைக் கடைசியாய் ஒன்று கேட்கிறேன்: அரிசியைக் கேரளத்திற்கு அனுப்புவதால், சென்னை நகர மன்றம் காங்கிரசுக்குத் திருப்பிக் காட்டிவிட்டது. ஆதலால் உணவு மண்டலத்தினின்று எம்மை நீக்க வேண்டும். அரிசி புறம் போகக் கூடாது என்ற குறை பாட்டுக்கு என்ன கூறியது தில்லி? படித் திருவாளர்களின் எதிர்ப்பைப் பெரியதென்று நினைத்ததா தில்லி? - எப்படியாவது காமராசர் அமைச்சரவை கவிழட்டும் என்றுதானே எண்ணியிருக்கிறது அந்தக் கறைபோக்கு? - குயில், கிழமை இதழ், 30.6.1959, ப. 4-5 120. இராசகோபாலாச்சாரியின் புதுக்கட்சி (வதந்திரா கட்சி) இராசகோபாலாச்சாரி தம் பதவியை இழந்த நாள் தொடங்கி, நேரு ஆட்சி முறையை எதிர்த்து வருகிறார். தொடக்கத்தில் அவர் எதிர்ப்பு லேசாயிருந்தது. அந்த எதிர்ப்புக்கே நேரு தமக்கு ஏதாகிலும் பதவியைக் கொடுத்துவிடக்கூடும் என்று எதிர்பார்த்தார். கொடுப்பதாயில்லை. இன்னும் எதிர்ப்பின் அளவை உயர்த்திப் பார்த்தார்; பயன்பட வில்லை! பிறகு இந்தியை எதிர்ப்பதாகக் காட்டினார். நேரு காதில் போட்டுக் கொள்ளாததோடு இவர் ஒரு தள்ளுகடைப் பொறி (இயந்திரம்) என்று பச்சையாய் இகழ்ந்து பேசியும் காட்டினார். ஆச்சாரிக்கு எரிச்சல் வருமா? வராதா? எடுத்தார் அவர் கையில் இருந்த ஒரு பெரிய அம்பை! நேருவே பார்! நான் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கிறேன். அப்படி ஆதரிப்பதன் வாயிலாக உனக்குப் பின்வலியாக உள்ள காமராசர் ஆட்சியை கலகலக்க வைப்பேன். அதனால் உன் தலைமை நிறுவனமே தலைசாய்ந்து விடும் என்றார். அப்படியே செய்தார். அம்மி யளவாயிருந்த காமராசர் ஆட்சி ஆனைமலையத்தனை பெரிய தாயிற்று. அதே நேரத்தில் ஆச்சாரிக்கே ஓர் நெருக்கடியும் பிறந்தது! பார்ப்பனர் ஆச்சாரியைக் கேட்டார்கள் என்னதானிருந்தாலும் சூத்திரச்சி வயிற்றில் பிறந்தவன்தானே, அவனுக்கு எங்கள் ஆதரவெல்லாம் கொடுக்கச் சொல்லுகின்றீரே. அப்படியே கொடுத்தும் என்ன பயன்? நம் இனத்தின் எண்ணம் நிறைவேறிற்றா- என்று. பார்ப்பனரின் இந்தக் கேள்விகளுக்கு - வருத்தத்திற்கு - ஆச்சாரி ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த நெருக்கடியிடினின்று தப்பவும் வேண்டும். நேருவை அச்சுறுத்திக் காரியத்தைச் செப்பனிட்டுக் கொள்ளவும் வேண்டும். புதுக்கட்சி தொடங்கினார். நிலக்காரர்களுக்கு வேண்டியதுபோக, அதிகப்படியாக உள்ள நிலங்களையெல்லாம் ஒன்றுசேர்த்துப் பொதுச் சாகுபடி வைப்பதென்று கிளம்பியுள்ள ஒரு திட்டத்தைக் குள்ள புத்தியுடைய சிற்சில மக்குகள் எதிர்க்கின்றார்கள் அல்லவா? அவர்களையெல்லாம் இழுத்துப் போடலாம் என்பதுதான். புதிய கட்சிக்கு ஆச்சாரி தேடியுள்ள எரு. இதை அவர் உரக்கச் சொல்லுகிறார். மக்கட் செல்வாக்குடையவர் பேசும் பாணியில் பேசத் தொடங்கினார். நேரு அஞ்சுவார் என்று எதிர்ப்பார்த்தார். அஞ்சியவர் அண்ணாத்துரை மட்டுமே. பார்ப்பான் பார்ப்பான் கட்சி தொடங்கி விட்டான்; பார்ப்பான் என்று என் முகவரியைக் காட்டினாலும், பார்ப்பனர்கள் அல்லாதவர்களையும் நான் சேர்த்துக் கொண்டிருப் பதால் இனிப் பார்ப்பான் ஆதரவு பார்ப்பானுக்கே போய்விடும் என்று அண்ணாதுரை அஞ்சுவது சரிதானே! ஒருகால் ஆச்சாரியின் புதுக்கட்சிக்கு நாட்டில் பெரியதோர் ஆதரவு வந்துவிடவும்கூடும் என்று, சிலத் தனிப் பொறுக்கிகள் இப்போது எண்ணுவதாகத் தெரிகின்றது. அப்படிப் பெரிய ஆதரவு புதுக்கட்சிக்குக் கிடைத்தாலும் அதைச் சிறிய விலைக்கு நேரு வாங்கிவிடக் கூடும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. என்ன விலை கொடுத்தால் ஆச்சாரி, தாம் உருவாக்கிய மண் பிள்ளையாரைக் கிணற்றில் எறிவார்? பலவகையான விலைகள் உண்டு - அவற்றில் எந்த விலைக்கும் அவர் படிந்துவிடுவார். எடுத்துக்காட்டாக. ஆச்சரியார் சுட்டிக்காட்டும் தமிழரைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்ற ஒரு சட்டம் - அப்படி ஆச்சாரிக்கு ஓர் அதிகாரம் தரட்டும். புதுக்கட்சியா பெரிது அவருக்கு? பிள்ளையாரை உடைப்பதோடு நில்லாமல் நேருப் பெருமானுக்கு அவர் துவக்கும் வழிபாடு ஆச்சாரி தலையோடுதானே! ஏடுகள் மிகப்பல புதுக்கட்சியை ஏன் ஆதரித்து எழுதுகின்றன? - இதுவொரு நல்ல கேள்வி. அப்படி ஆதரித்து எழுதுவதின் பொருள்: ஆச்சாரிக்கு நல்லபதவி வரட்டும். மீதியுள்ள பிச்சைக்கார பசங்களை யெல்லாம் உயர் அலுவலில் அமர்த்திவிடலாம் என்பதுதான்! - குயில், கிழமை இதழ், 7.7.1959, ப. 3, 4 121. சுயேச்சைகள் ஒற்றுமை புதுவை அரசு மக்களின் பொதுநலம் என்பது ஓர் வற்றாத மலையருவி. அது பன்னாட்களாகச் சில கொள்ளைக்காரர்களாலும் கொலை காரர்களாலும் தன்னலப் பாழுங்கிணற்றில் பாய்ச்சிவிடப்பட்டு வந்தது. இன்னுமா? அது மக்களின் நல்வாழ்க்கை என்னும் நன்செய்க்குத் திருப்பப்படும் என்று நாம் நம்புவோம். ஆனால் நாம் - புதுவையரசு மக்களாகிய நாம் தூங்கிக் கிடக்கலாகாது. சட்டமன்றின் தேர்தல் துவங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் பெரும்பாலும் பொதுநலம் விரும்பா தவர்களே காங்கிரசின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். குபேர் விருப்பப்படி! தில்லியார் குபேரைத் தாங்குவதன் வாயிலாகப் புதுவை மக்கள் மேல் தமக்குள்ள புறக்கணிப்பை, அடக்கி ஆளும் எண்ணத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டார்கள். பெரும்பாலும் குபேர் கூட்டத்தை - விருப்பினரை எதிர்ப்பதே நோக்கமாக. மக்களின் நன்மையிலேயே நாட்டமாகச் சுயேச்சை யாளர்கள் போட்டியிட முன்வந்தது வரவேற்கத் தக்கதாகும். குபேரும் தூங்கிவிடவில்லை. தம் கழுகுப்பிடியை மீறிச் சுயேச்சையாக நிற்கப் போவதை முற்கூட்டியே அறிந்து தம் குபேரிசத்திற்குத் திறப்புவிழா நடத்தியிருக்கிறார். இதற்கு எடுத்துக்காட்டாக முத்தால்பேட்டைப் போலீ தலைவர் நடராசன் ஆடிவரும் ஆட்டத்தால் அறியலாம். முத்தால்பேட்டையில் கொள்ளை நடக்கிறது. எப்போதும் அடிதடிகள் நடக்கின்றன. கள்ளப் புணர்ச்சி நிலையம் வெளிப்படையாக நடக்கின்றது. திருட்டுக்கள் விற்றல் பாதுகாப்போடு நடைபெறுகின்றது. சூதாடுமிடம் இடைவிடாது நடக்கின்றது. போலீ தலைவர் நடராசன் ஒழுங்கு மீறிய கூத்து நன்றாக நடைபெறுகின்றது. அவரின் பழநி, துப்பாக்கிக் கிருஷ்ணன், அன்பரசன் என்னும், ஆறுமுகம் முதலிய நண்பர்களின்-குடும்பம் இனிது நடைபெறுகின்றது. இதில் ஒரு வியப்பு என்ன என்றால், பன்முறையும் இவை பற்றி மேலதிகாரிகட்கு பிராது, விண்ணப்பம், கொடுத்திருந்தும் அவை அன்றுபோல இன்றும் நடக்கின்றன கலகலவென்று. குபேரை எவனாலும் அசைக்க முடியாது. இவை எல்லாம் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கும். இப்படிக்கு நடராசன் பழநி, துப்பாக்கிக் கிருஷ்ணன் மற்றும் பலர். இப்படியெல்லாம் குபேரிசத்தை வளர்க்க ஆட்கள் சேர்க்கப் படுகிறார்கள். இதுபோல் எங்குமா நடக்கும்? என்று கேட்கலாம். ஏறத்தாழ எல்லாப் போலீ தலைவரும் இப்படியே! òJit ïuh¢áa¤jh® kdÃiy v¥go?-mJth? புதிதாக ஐ.ஜி. முல்க் அவர்கள் வந்திருக்கிறார். அவர் மக்களுக்குக் காப்பளிப்பார் என்று எண்ணுகிறார்கள். இதையெல்லாம் எண்ணி சுயேச்சையாளர் ஒன்றுபட வேண்டும் விரைவில்! ஒன்றுபட்டு அதிகாரிகட்கு இந்தத் தீய நிலையை எடுத்துக்காட்ட வேண்டும்; அவர்கள் கண் திறக்கப்பட வேண்டும். - குயில், கிழமை இதழ், 14.7.1959, ப. 3 122. ஆதித்தன் அழிவு மனப்பான்மை நான் ஏறத்தாழ இருபதாண்டுகளாகச் சொல்லி வருகின்றேன். தெலுங்கு என்பது தமிழே கன்னடம் என்பது தமிழே மலையாளம் என்பது தமிழே என்று. நான் முதன்முதலில் வடசென்னைக் கூட்டத்தில் விளக்கியதைக் கேட்ட பெரியாரும் இதை ஒப்புக்கொண்டதோடு, நின்றுவிடாமல் பல கூட்டங்களிலும் மக்களுக்கு நன்றாகப் புரியும் வகையில் இதை விளக்கியருளினார்கள். இது மட்டுமன்றித் திராவிடம், தமிழ் என்ற சொல்லின் திரிபே என்று என் குயில் வாயிலாகவும், கோவையில் நடைபெற்றது முதலிய கூட்டங்கள் வாயிலாகவும் விளக்கியிருக்கின்றேன். இதைப் பெரியாரோ, பிறரோ மறுத்ததில்லை. நான் இவைகளைப் பற்றிப் பன்முறை தலைப்பாடாக வற்புறுத்தி விளக்கி வந்ததற்குக் காரணம், திராவிடநாடு தமிழ்நாடு என்ற அடிப்படையில் துவக்கப்படும் கிளர்ச்சி தமிழர்க்கு - திராவிடர்க்கு மீட்சியை அளிக்கவல்லது; அத்தகைய கிளர்ச்சித் தலைவர்கள் நான் சொல்லுகின்ற உண்மைகளைக் கைசோர விடுவார்களானால் அவர்கள் துவக்கிய - துவக்கியுள்ள காரியம் குளறுபடி யடையும்; கருத்தில் முன்னுக்குப் பின் முரண் ஏற்படும் என்பதே. நாம் தமிழர் இயக்கத் தலைவர் என்று தம்மைக் காட்டிக் கொள்ள ஆசைப்படும் ஆதித்தன் கூறுவதைக் கேளுங்கள்: பல நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் குடியேறிய தெலுங்கு மொழிக்காரர்கள் சிலர்; இன்னும் தங்களுடையே இல்லங்களில் தெலுங்கு மொழியிலேயே பேசி வருவதைக் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். தமிழ் மண்ணில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்கின்ற இவர்கள், தமிழ்மொழியைத் தங்கள் தாய்மொழியாக ஏற்றுக்கொண்டு தமிழ்மொழியிலேயே பேசவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளுகிறேன்! இவ்வாறு ஆதித்தன் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசியுள்ளார். ஆதித்தனின் இந்தப் பேச்சுகள், தமிழகத்தில் உள்ளவர்களிடம் ஒரு பெருங்கலகத்தை விளைக்கக் கூடியனவாகும். அவர் சொல்லும் தமிழன் வீடு ஒன்று. அதன் அண்டை வீடு அவர் சொல்லும் தெலுங்கன் வீடு. அதன் அண்டையில் அவர் சொல்லும் கன்னடத்தான் வீடு! அதன் அண்டையில் அவர் எண்ணும் மலையாளி வீடு! இவர்கள் அனைவரும் ஆதித்தன் சொல்லும் தெலுங்கையோ கன்னடத்தையோ மலை யாளத்தையோ பேசக்கூடாதாம். அதையெல்லாம் விட்டுத் தமிழிலேயே பேசவேண்டுமாம். அறுநூறு ஆண்டுகளுக்குமுன் இந்தத் தமிழகத்தில் புகுந்தும், அவர்கள் இன்னும் தமிழில் பேசவில்லையாம். அறுநூறு ஆண்டுகளாகியும் ஆதித்தன் பேசும் முறையிலே அவர்களும் பேசாததற்குக் காரணம் அதுவும் இதுவும் தமிழே என்பதுதானே. கோழியைக் கோடி என்றுதானே சொல்லுகிறான். அவன் தமிழ் பேசுகின்றானே ஒழியத் தமிழல்லாத வடமொழியையா மேற்கொள்ளு கின்றான்? வாழைப்பழத்தை வாயப்பயம் என்பவர் தமிழ் பேசுகிறானா வட மொழி பேசுகின்றானா? வாழைப்பழத்தை வாயப்பயம் என்பவன் கூட அறுநூறு ஆண்டுகளாகத்தான் பேசுகிறான், ஏன், அவன் தமிழ்தான் பேசுகிறான். தமிழனும் மலையாளியும் கன்னடத்தானும் தெலுங்கனும் ஓரினத் தானே தமிழும் மலையாளமும் கன்னடமும் தெலுங்கும் ஒருமொழியே என்று மறுக்க முடியாத - மாற்றமுடியாத உண்மையைக் கைவிட எண்ணுவோர் எவரும் திராவிடம் - தமிழகம் என்ற அடிப்படையில் எழும் எந்தக் கிளர்ச்சியிலும் தலையிடவும், தகுதியற்றவர்கள் என்று நம்பவேண்டும்; உணரவேண்டும். தமிழன் என்பதற்கு ஆதித்தன் காணும் இலக்கணம் அலாதி யானது. தமிழ் பேசும் பார்ப்பான் தமிழன்தான் என்பது ஆதித்தன் கொள்கை. இந்த ஆதித்தன் தமிழ் பேசத் தெரியாத தமிழர்களைக் கண்டால் அவர்களை எங்கே போகச் சொல்லுவாரோ தெரியவில்லை. ஆதித்தன் ஒரு பொய்க் கொள்கையைத் தமிழகத்தில் மெய்க் கொள்கையாக்கித் தருவதாக யாருக்கோ வாக்களித்திருக்க வேண்டும் என்று எண்ண வேண்டி இருக்கின்றது. இவருடைய - இவர் வெளியிடும் எந்தக் கருத்தையும் புடம் போட்டுப் பார்த்தாலும் மூளையில் நிலையாகக் காணப்படுவது ஒன்று. அது; பார்ப்பனர் தமிழரே என்பதுதான். இந்தக் கருத்தை நிலைநாட்ட எந்தெந்தக் கலகத்தை தமிழகத்தில் உண்டாக்க வேண்டுமோ - அதை யெல்லாம் எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் உண்டாக்கியே வருகின்றார் ஆதித்தன். பெரியார் கொள்கைக்கும் ஆதித்தன் கொள்கைக்கும் வேறுபாடு இல்லையாம். இவ்வாறு சொல்லும் ஆதித்தன் நாம் தமிழர் இயக்கம் ஒன்றைத் தனியே வளர்க்க வேண்டியதென்ன? பெரியார் கொள்கைக்கே வெடிவைத்து வருவது எதற்கு? திராவிடர் கழகம் மேற்போட்டுக் கொண்டிருக்கும் பெரும் போராட்டத்தின் - அதன் வெற்றி நிலையின் ஓட்டும் வாரைக் கைப்பற்றிய பின் இந்த ஆதித்தன், பெரியாரே நீர் தமிழரல்லர் வெளியிற் போய்விடுவீர் என்று சொல்வாரானால் அதுபற்றி நான் வியப்படைய மாட்டேன். அவ்வாறு தமிழர் தலைவருக்கு ஆதித்தன் தைக்கும் குல்லாய் செல்லுபடியாகாது என்பது எனக்குத் தெரியும். ஆயினும் நாளைக்குத் துரத்தப்படவேண்டிய ஆதித்தனை இன்றைக்கே துரத்திவிடுவதால் காலம் மீதிப்படுமே என்றுதான் சொல்லவிரும்புகின்றேன். - குயில், கிழமை இதழ், 1.9.1959, ப.2 - 3 123. அவர் கொள்கை அதுவல்ல திரு. ஆதித்தன் கொள்கை தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதல்ல. அவர் கொள்கை மக்களை இழுத்துத் தினத் தந்தியை வாங்கச் சொல்லிப் பொருள் திரட்டவேண்டும் என்பதே யாகும். ஒருநாள் பெரியார் நான்தான் ஆதித்தன் என்று கூறினார். நாம் அதுபற்றி வருந்தியதில்லை. ஏனென்றால் அவரே அதற்குமுன், ஆதித்தன் காமராசரை எதிர்க்கிறார்; நான் காலமெல்லாம் ஆதரித்து வரும் கருப்பத்தடையை ஆதித்தன் எதிர்க்கிறார் என்றெல்லாம் கூறித் தாம் ஆதித்தன் மட்டில் விழிப்பாகவே இருப்பதை வெளிப்படுத்தி யுள்ளார். இதில் நம் தோழர்களும் விழிப்பாக இருக்கவேண்டுமே என்பதுதான் நம் கவலை. இன்னொன்று பாருங்கள். பிள்ளையார் உடைத்தார் பெரியார். அதில் கலந்து கொண்டோம் ஆதரித்தோம் நாமெல்லாம். அதனால் நாம் ஆத்திகர் எனப்படும் அறிவிலிகளால் அடைந்து வரும் கேடு நாடு அறியும். நேற்று விடுதலைத் தலையங்கம் எப்படி? அது பிள்ளையார் பிறப்பின் இழிவை விளக்கப் பெரும்பாடு பட்டிருக்கிறது. நாமும் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் விற்ற களிமண் பிள்ளையாரில் பத்தாவது குறைந்தது என்ற சொல் நம் காதில் விழாதா என்று காத்திருந்தோம். என்ன கண்டோம், தினத்தந்தி விநாயகர் சதுர்த்திக்கு வெளிவராது என்ற, இழிவுச் சங்கைக் கையில் எடுக்கக் கண்டோம். மறுநாள் அதேபோல் தினத்தந்தி பிள்ளையார் சதுர்த்தி காரணமாக வரவில்லை என்று அந்த இழிவுச் சங்கின் அலறலையும் கேட்டோம். இந்த ஆளை வைத்துக்கொண்டு - நம்பிக்கொண்டு உயிரைப் பணயம் வைத்து ஆடும்... படஎரிப்பு ஆட்டத்தில் நுழைவது எப்படியோ தெரியவில்லை. கேட்டால் ஆதித்தன் சொல்லும் பதில் என்ன தெரியுமா? தினத்தந்தி செய்தித்தாளினை வாங்குவோர் குறைந்துவிடலாமா? அப்படியானால் ஆதித்தன் கொள்கை தமிழ்நாட்டு விடுதலையா? - குயில், கிழமை இதழ், 8.9.1959, ப. 3 124. இதில் அக்கரை செலுத்தாத ஆளவந்தார் எதில் அக்கரை செலுத்துவார்கள்? 26.8.1959இல் அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டேன். அதன் படிகளைப் புதுவை, திரு ஐ. கமிஷனருக்கும், திரு. பிரஞ்சு பிரதிநிதிக் கும், திரு. நீதித்துறைத் தலைவருக்கும், திரு. போலீசுத் தலைவருக்கும் தனித்தனியே ஆங்கில மொழி பெயர்ப்பாகவும் தமிழேயாகவும் அனுப்பி - அவர்கள் பெற்றுக்கொண்டதற்குக் கையெழுத்தும் பெற்று வைத்துள்ளேன். இதுவுமன்றி, புதுவை மக்களின் நன்மையில் அக்கரையுள்ள சென்னை முதலமைச்சர் - காமராசருக்கும் பிற அமைச்சருக்கும் டில்லிக் காங்கிரசின் தலைவருக்கும் அரசியல் தலைவருக்கும் அனுப்பி வைத்தேன். பொதுமக்களுக்கும் மிகுதியாக வழங்கியுள்ளேன். மற்றொரு முறை அதை இங்கு வெளியிடுகின்றேன் படிக்க! மண்ணாடிப்பட்டுத் தேர்தல் செல்லத்தக்கதா! மாட்சிமிக்க ஐ கமிஷனர், பிரஞ்சுப் பிரதிநிதி, நீதித்தலைவர், போலீ தலைவர் அவர்கட்கு! தேர்தல் நாளாகிய 10.8.59 இரவு 10 மணிவரைக்கும் மண்ணாடிப் பட்டுத் தொகுதி அமைதியாயிருந்தது. ஆனால் அதே இரவு 10 மணிக்குமேல் அதாவது 11 மணி சுமாருக்கு, வில்லியனூர்க் கொம்மி சேரும், நெட்டப்பாக்கம் முத்துக்குமார செட்டியாரும், காங்கிர தலைவர் மடுக்கரை வேங்கடசுப்பா ரெட்டியாரும், திருவாண்டார் கோயில் வேங்கடசாமி ரெட்டியாரும் - குபேரும் ஏறி வந்த காரும், சும்மா உடன் வந்த மற்றொரு காரும் மண்ணாடிப்பட்டில் நுழைந்தவுடன் அமைதி தொலைந்தது! சூறைக்காற்று எழுந்தது. 1. மண்ணாடிப்பட்டின் குறிப்பிடத்தக்க 15 கிராமங்களிலும் உள்ள மக்கள் செல்வாக்குப் பெற்றவர்கள், திருபுவனைப் போலீ இராமச்சந்திரனைக் கொண்டு வலிந்து அழைக்கப் பட்டார்கள். 2. குபேருக்குச் சீட்டுப் போடவேண்டும் என்று பயமுறுத்தப் பட்டார்கள். 3. தம் கருத்துக்குக் கட்டுப்பட்டார்களோ இல்லையோ என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் காரில் தூக்கிச் செல்லப்பட்டார்கள். 4. சிலர் போலீஸின் எதிரிலேயே அடிக்கப்பட்டார்கள். சிலர் மண்டையுடைக்கப்பட்டார்கள். 5. மேற்சொன்ன அக்ரமக்காரர்களின் கையில் அகப்பட்ட தலைவர்களைக் கொண்டு விரைவாகவும், பரவலாகவும் எங்கும் போய்க் குபேருக்குத்தான் சீட்டுப் போட வேண்டும் என்று கட்டுப்படுத்த வைத்தார்கள் - அடிக்க வைத்தார்கள். 6. இதற்காகப் பணம் ஏராளமாகப் பரவலாக அள்ளி வீசப் பட்டது. இந்த வேலைகள் 10.8.59 இரவு - விடிய 4 மணி வரைக்கும் நடந்தன. 11.8.59இல் தேர்தல் முடிந்தது. முதல்நாள் இரவு நடந்த அக்ர மங்கள் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்கள். தேர்தல் முடிவும் வெளிவந்தது. ஆயினும் அக்ரமக்காரர்களின் செயல் வெளி வரக்கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். புதுச்சேரிக்குச் செல்லுகின்றவர்கள் யார் என்று பார்க்க வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகுகளுக்கும் தப்பி சிலரே நேற்று முன்னாள் இந்த அக்ரமச் செயல்களை வெளியில் அவிழ்த்தார்கள். அவர்களில் ஒருவர் ஆண்டியார்பாளையம் பழநி என்பவர், மற்றும் நடந்த அக்ரமத்தின் பட்டியலைச் சேகரித்து வருவதாகச் சென்ற அவர் இன்னும் திரும்பவில்லை. அவர் எதிர்பார்த்தபடி அவருக்கு அக்ரமக்காரரால் என்ன ஆபத்து நேர்ந்ததோ? இவற்றையெல்லாம், மாட்சிமை பொருந்திய ஐ கமிஷனரும், மாட்சிமை பொருந்திய பிரஞ்சு பிரதிநிதி அவர்களும், மாட்சிமை பொருந்திய நீதித்துறைத் தலைவரும் மாட்சிமை பொருந்திய போலீ தலைவரும், ஒரு நடுவு நிலைமைக் கமிட்டியோடு கூடி ஆய்ந்து ஏற்ற முடிவு செய்ய வேண்டுகின்றேன். இவர்களைக் கேட்டால் புலன் கிடைக்கும்:- இராசேந்திரன், கலி தீர்த்தாள் குப்பம், பழநி, ஆண்டியார்பாளையம் தனபால், ஆண்டியார்பாளையம் வீரப்ப கவுண்டர், ஆண்டியார்பாளையம் சீனிவாசன், திருபுவனைச்சேரி இன்னணம், - பாரதிதாசன் 13. முன்னாள் அசம்பிளி உறுப்பினன் இந்நாள் தொகுதி அபேட்சகன் இந்த அறிக்கையை வெளியிட்டு இன்று (8.9.1959) 13 நாட்கள் ஆகின்றன. மக்கள் நலமும் அவர்களின் உரிமையும் கொலை செய்யப் பட்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டு அதில் அக்கரை செலுத்தாத - ஆட்சியாளர்கள் வேறு எதில்தான் அக்கரை செலுத்த இருக்கிறார்களோ தெரியவில்லை. ஆட்சியாளர்கள் நினைக்கலாம் நம்முடைய அக்ரமப் போக்கைத் தட்டிக்கேட்க எவன்? எங்கே இரக்க முடியும் என்று. இருந்தாலும் புதுவை அரசு, மக்களிடம், மக்களுக்கு இருக்க வேண்டிய இயற்கையான இரக்கத்தையாவது மேற் கொள்ள வேண்டும் ஆட்சியாளர்கள். அதுபோகட்டும். நம்மை எவனும் எப்போதும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று ஆட்சியாளர் எண்ணினார்கள் என்றால் - அந்த எண்ணம் சரியானதா? சரியானது தான் என்றால் ரஷியாவில் முன்னொரு நாள் சார் நினைத்ததுவும் சரியானது தானே? ஆனால் அதன் நிலை என்ன ஆயிற்று? பெருங்காற்றில் சிறுதுரும்பாகி வில்லையா? பிரஞ்சு பிரதிநிதி ஒருவர், இங்கு இருந்து வருகின்றார். இன்னும் புதுவை அரசு மக்களை யூனியன்காரரிடம் சிக்கற ஒப்படைத்து விடவில்லை. அதனால் புதுவையரசு மக்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன என்று இருந்துவிடக்கூடாது. என் அறிக்கை பொறுப்பான முறையில் ஆராயப்பட வேண்டுமே என்ற கவலை அவர்கட்கு இருக்கவேண்டும். இருக்கும் என்று நம்புகிறேன். - குயில், கிழமை இதழ், 8.9.1959 8.9.1959 இதழ்த் தொடர்ச்சி ... பிரஞ்சு பிரதிநிதி இனியேனும் இதில் சிறிது கவலை செலுத்த வேண்டும். போலீ தலைவர்கள் ஐ.ஜி. நடைபெற்றுள்ள இந்த அக்ரமங் களைப் பொறுப்போடு ஆராய முன்வர வேண்டும். அவரின் கீழாளான வில்லியனூர்ப் போலீசு அதிகாரியே முன்னின்று நடத்தி யுள்ளார். மற்றும் திருபுவனைப் போலீசு அதிகாரியும், ஐ.ஜி.யின் கீழாள்தான். அவர் குபேராலும், முத்துக் குமரப்பனாலும், உடன் சென்ற மற்றவராலும் அச்சுறுத்தப் பட்டார். அக்கிரமத்தைச் செய்யும்படி வற்புறுத்தப் பட்டார் என்று தெரிகின்றது. ஐ.ஜியோ, டி.எ.பியோ இதில் சிறிதும் கவலை செலுத்தவில்லையென்றால் அதன் பொருள் என்ன? ஒருகால் இந்த அதிகாரிகள் குபேருக்கு அஞ்சிக்கிடக்கலாம். அப்படி யானால் இவர்கள் சென்னை முதலமைச்சருக்கு அஞ்சத் தேவை யில்லையோ? அஞ்சத் தேவையில்லை என்றே இவர்கள் எண்ணுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அறம் என்பது ஒன்று இருக்கின்றது. இவைகளுக்கு அஞ்சத் தேவையில்லையோ? குபேருக்கு இன்று ஏற்பட்டது நேருவின் செல்வாக்கல்ல. நேரு அசம்பிளியின் பெரும்பான்மை உறுப்பினரின் கருத்தை எல்லாம் கொலைசெய்து போட்டுப் புருஷோத்தம ரெட்டியாரையும் குபேரையும் டெலிபோனில் அழைத்துக் குபேருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தினார் என்றால் என்ன பொருள்? அந்த ஆள் அயோக்கியன் தான். இருந்தாலம் அந்த ஆள் எனக்குச் சில அக்ரமச் செயலுக்கு ஒத்திருந்தார். ஆதலினால் அவரை விட்டுவிடக்கூடாது நான் நினைக்கிறேன் என்று அவர் சொன்னதாகத் தானே பொருள்! இந்த நிலையில் எண்ணிப் பார்த்தால் குபேருக்குச் செல்வாக்கு இருக்கிறது என்றா முடிவு கட்டுவது? அப்படிக் குபேரை விட்டு வைத்தால் நாளைக்குக் குபேரால் யார் படுவது. தோளில் துண்டைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போலீகாரர் வேறு இடத்துக்குப் போய்விடலாம். இருந்து படுவது யார்? இதுதான் போலீசு மேற்கொள்ளும் தருமமோ? வேலியே பயிரை மேயலாம். அந்த வேலி தன் பெண்டாட்டி பிள்ளைகளின் முகத்தில் விழிக்க வேண்டுமே. மானமற்ற செயல் செய்தவர்களைப் பெற்ற மக்கள் மதிப்பார்களா? கொண்ட பெண்டுகள் மதிப்பாரா? அவர்கள் வீரரை மதிப்பார்கள். மனச்சான்று உள்ளவர்களை மதிப்பார்கள். அடித்த பக்கம் சாயும் ஆளைக் கோமுட்டித்தெரு நாய் மதிக்குமா? - குயில், கிழமை இதழ், 15.9.1959, ப.15 125. குபேர் காலில் மன்னிப்புக் கண்ணீர் 11.9.1959இல் புதுச்சேரிச் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடந்தது. இருபத்தொரு பெரிய மனிதர் காங்கிரசின் சார்பில் வெற்றி பெற்றார்கள். அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா? அந்த இருபத்தொரு பெரிய மனிதரும். இது எப்படி முடியும்? இதற்காகப் பதின்மூன்று பெரிய மனிதருக்கும் ஒரே நேரத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. சென்னை முதலமைச்சர் காமராசரைக் காணவேண்டும் என்பதுதான் அந்த எண்ணம். பதின்மூன்று பெரிய மனிதரும் காமராசரிடம் போனார்கள். அடடா என்ன ஒற்றுமை பாருங்கள். ஆனால் பதின்மூன்று பேரும் அமைச்சராகி விடவேண்டும் என்ற கருத்தில் எந்த மாறுதலும் இல்லை. காமராசர் கிளிக்குச் சொல்வது போல் படித்துப் படித்துச் சொன்னார். குபேருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதீர்கள். இதில் நீங்கள் ஒற்றுமையாய் இருங்கள் என்று. போன பெரிய மனிதரும் ஒத்துக் கொண்டார்கள். அவர்கட்கு அப்போது காமராசரால் கண்திறக்கப்பட்டது. உணர்ச்சி வந்துவிட்டது. அசல் மனிதராகி விட்டார்கள். யார் யார்? வேங்கடசுப்பா ரெட்டியார் கூட! இதை எவரும் நம்பமாட்டார்கள். ஆயினும் உண்மைதான். அங்கிருந்து பதின்மூவரும் விசுவாய் வந்தார்கள் புதுவைக்கு! காங்கிர அசம்பிளி உறுப்பினர் கட்சிக்கூட்டம் நடந்தது. குபேர் எதிர்த்தவர்கள் பெரும்பான்மையோர். ஒழிந்தது குபேர் தொல்லை என்ற ஆரவாரம்! காங்கிரசு அலுவலகம் இனிக் குச்சுக்காரிகள் வீடாயிராது என்று கோமுட்டித் தெருவாரெல்லாம் முடிவு கட்டிவிட்டார்கள். இந்த மகிழ்ச்சிச் செய்தியை - தம்முடைய மனிதத் தன்மையைச் சொல்ல இந்தப் பதின்மூன்று பெரிய மனிதரும் மீண்டும் இன்னொரு தரம் சென்னைக்கு ஓடினார்கள். குபேர் குப்புற அடித்து வீழ்ந்தார் என்று அறிந்ததும் இந்தப் பதின்மூன்று பேரோடு மற்றும் பலரும் - துணிச்சலாக அண்ணாமலை முதற்கொண்டு கொங்கம்பட்டு ரெட்டியார் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புருஷோத்தம ரெட்டியார் கட்சிக்கு ஒரே செல்வாக்கு! ஆனால் நான் அன்றைய நிலைமையை ஆராய்ந்தபோது புருஷோத்தம ரெட்டியார் கட்சியார் தங்களுக்குள் ஒரு தலைவராக வேங்கடசுப்பா ரெட்டியாரை எடுத்தார்களாம். அதைவிடக் குபேரையே எடுத்திருக்கலாமே! வேங்கடசுப்பா ரெட்டியாரைத்தான் முதலமைச்சராக்க இருக்கிறார்களாம். அதைவிடக் குபேரையே முதலமைச்சராக்கலாமே. இதில் இன்னொரு செய்தி எனக்குத் தெரிந்தது. இந்தப் பதின் மூன்று பேரையும் குபேரையும் ஒழித்துக் கட்டுவதில் ஊக்கப்படுத்தும் படி, காமராசர் முத்துக் குமரப்ப ரெட்டியாரை ஊரூராய்த் தேடிப்பிடித்து இவர்களுடன் புதுவைக்கு அனுப்பி வைத்திருந்தாராம் இதைவிட வேப்பூரிலிருந்து ஒருவரைத் தேடிப்பிடித்து அனுப்பியிருக்கலாமே. ஆனால் வேங்கடசுப்பாரெட்டியாரைத் தவிர, முத்துக்குமரப்பன் தவிர, அண்ணாமலை தவிர, சண்முகம் தவிர எல்லா உறுப்பினர் உள்ளமும், பொதுமக்கள் எல்லாருடைய உள்ளமும் குபேருக்குக் குழி பறிப்பதில் ஒற்றுமை அடைந்திருந்ததோ என்னமோ உண்மை! சட்டமன்று ஐகமிஷனரால் திறந்து வைக்கப்பட்டது. அந்தத் துவக்க விழாவுக்குக் குபேர் வரவில்லை. அறுந்தது குபேர் வால் என்று உரக்கச் சொல்லிக்கொண்டே பெரும்பான்மை உறுப்பினர் அன்றைக்கே அமைச்சர் அவையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமல்லவா? அதுதானே இல்லை. குபேரை ஒழித்துவிட்டோம் என்று கூறிய அந்தப் பதின் மூன்றிலும் ஒன்று குபேரிடம் ஓடுவதும் அந்தக் காலை நக்குவதுமாக இருப்பதைக் கட்டுப்படுத்தி இருக்கலாமல்லவா? அதுதானே இல்லை. நாளைக்கு அமைச்சரவை தேர்ந்தெடுக்கப் போகின்றோம் என்றார்கள். இன்றைய இரவு நேருவின் கட்டளை நீந்தி வந்தது தில்லியினின்று தொலைபேசி மூலமாக. அந்தக் கட்டளை என்ன தெரியுமா? நீங்கள் சனநாயகம் பேசலாம். எனக்கு அதெல்லாம் பிடிக்காது. ஆறு மந்திரிகளில் ஒன்றாகக் குபேரையும் எடுக்கத்தான் வேண்டும் என்பது. மறுத்தார்களா மனிதர்கள்? ஆமாம் சாமி? அப்படியே சாமி! இந்த மனிதர்கள் அண்டையில் இருந்து புதுவை மக்கள் நலத்தில் அக்கரை கொண்டிருக்கும் காமராசரை இழக்கத் துணிகின்றார்கள். எங்கேயோ இருக்கும் நேருவை எதிர்க்கத் துணியவில்லை. அதோ மேள தாளத்தோடு குபேர்! அதோ அமைச்சர் குபேர். அதோ அந்தக் காலடியில் வேங்கடசுப்பா ரெட்டியாரின் மன்னிப்புக் கண்ணீர். அதோ முத்துக் குமரப்பன் வாழ்த்துத் தந்தி. - குயில், கிழமை இதழ், 15.9.1959, ப. 2, 3 126. ஆயிரம் தேசிகன்கள் வேண்டும் உணர்ச்சியற்றது தமிழகம் தேசிகன், மறைமலையடிகளின் உரைநடையையும் திரு.வி.க உரைநடையையும் பழித்துப் பேசியதற்குத் தமிழரெல்லாம் தமிழ் அறிஞர் எல்லாரும் வருந்திக் கூச்சலிடுகின்றார்கள். தேசிகன் அவ்வாறு பேசியது எங்கே? தமிழர்கள் கூட்டத்தில்! தமிழ்ப் பேராசிரியர் தலைமையில்! தேசிகனுக்கு இத்தனை துணிவு ஏற்பட்டதற்கு என்ன காரணம்? தமிழ்ப் புலவர்களும் தமிழ்ப் பேராசிரியர்களிற் பலரும் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கின்றவர்கள்; நம்மவர் காலை நக்குகின்றவர்கள் என்று நினைத்து தானே! தேசிகன் நினைத்ததில் தப்பு என்ன இருக்கின்றது? தெ.பொ. மீனாட்சிசுந்தரன் தொழில் என்ன? காலையில் எழுந்திருப்பது. நாலு பார்ப்பான் வீடு புகுவது; தமிழைத் திட்டுவது; வடசொல்லைப் புகழுவது; தமிழரைத் திட்டுவது ஆரியரைப் புகழுவது; இது மட்டுமா? தமிழ்ப்பற்று மிக்காரை ஆரியத்தில் - இழுத்துவிடுவது; ஒப்பாதவர்க்குப் பார்ப்பனரைக் கொண்டு தீமை ஏற்படுத்துவது. பிறர் காலை நக்கும் நாய்க்கு இந்த நாட்டில் எத்தனை செல்வாக்கு! எந்தப் பேராசிரியன் bj.bgh.Û.க்F அஞ்சி நடுங்காமல் இருந்தான்? இது போகட்டும். இலக்குமணசாமி முதலியார் இருக்கிறாரே அவர் என்ன வேலை செய்துகொண்டு இருக்கிறார் தெரியாதா? தமிழைக் கொன்றுவிட வேண்டும், ஆரியம் இந்த நாட்டில் பழங்கல அறையில் கூட நடமாட வேண்டும் பெருச்சாளியைப் போல! தமிழை - தாயைக் குழிதோண்டிப் புதைத்து அதன்மேல் ஆங்கிலத்தை நடவேண்டும். கோயிலில் தமிழில் வழிபாடு கூடவே கூடாது. இந்த அறச்செயல்களையல்லவா கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றார். தமிழ் அரசியல் மொழி ஆகிவிடக் கூடாது; ஐயையோ ஆகிவிடக் கூடாது என்று அலறும் அலறல் யார் காதில் விழவில்லை? திறமை யுள்ள தமிழனை அவரிடம் காட்டி இவனுக்குச் சலுகை கொடுங்கள் என்று நம் இலக்குமணசாமி முதலியாரிடம் சொல்லிப் பாருங்கள். ஏதுங்கெட்ட பார்ப்பானைத் தாமே தேடி ஓடுவார். தேசிகன் முடிவில் என்ன தவறு இருக்க முடியும். நம் முதலமைச்சர் காமராசர் தமிழருக்கு அடிப்படை நன்மைகளைத் தம்மால் ஆன மட்டும் தடையின்றிச் செய்து வருகின்றார். என்ன பயன்? தமிழைத் தாழ்த்துகின்றான் பார்ப்பனன்; அதைக் கொலை செய்கின்றான் பார்ப்பனன் கூடிக் கூடி. இவ்வாறு தமிழின் வேரில் வெந்நீர்விடும் வேலையை வெளிப்படையாகச் செய்து வருகின் றார்கள் பார்ப்பனர்கள். இந்த நிலை யாரால் ஏற்பட்டது? முதலமைச்சர் பார்ப்பனருக்குக் காட்டும் சலுகையால் ஏற்பட்ட தல்லவா. ஊர்க் காவல் அமைச்சர் பத்தவச்சலனார் எப்படி? தெ.பொ.மீ. ஏ.எல். முதலியார் போன்றவர்க்கு இளையார் அல்லவா? தமிழைக் காட்டிக் கொடுப்பதிலும் சரி; தமிழரைக் காட்டிக் கொடுப்பதிலும் சரி. எதில் அவர் அறத்தை - நடுநிலையைப் பின்பற்றினார்? பெற்ற தாய்க்கு உற்ற சேய் ஆற்றும் அறக்கடமையை அவர்பால் எப்போது கண்டோம்! எந்தத் தமிழ்ப் புலவன், எந்தப் பணக்காரத் தமிழன் தமிழை, தமிழர் உரிமையை, தமிழ், தமிழர் மேன்மையை நினைக்கின்றான். ஆயிரம் தமிழ் மறவர் கண்முன் இருக்கையிலும் ஒரு முட்டிபுகும் பார்ப்பானிடம் தானே சாமி என்று வாலைக் குழைத்துக் கொண்டு ஓடுகின்றான். தமிழரைக் கொண்டு நிறுவப்பட்டனவே தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்! அவற்றில் பார்ப்பானுக்குத் தமிழரைக் காட்டிக் கொடுக்காத கட்சி இருந்தால் காட்டட்டுமே. நான் பார்ப்பனனுக்குத்தான் பிறந்தேன் என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பானை ஆதரிக்கக் கேட்டுக் கொள்ளுகின்றானே கட்சித் தலைவன். நான் பார்ப்பானின் வைப்பாட்டி மகனைத் தலைவனாகக் கொண்டவனுக்குத் துணைத் தலைவன், நான் அவன் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகின்றார்களே அந்தக் கட்சிக்காரர். நொண்டிப் பார்ப்பான் இருக்கிறானே அவன்தான் என் கட்சியின் தலைவன் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டு பார்ப்பாரத் தெருவில் பல்லைக் காட்டுகின்றானே ஒரு செவிட்டுத் தமிழ்ப் பேச்சாளன். தேசிகன் பேச்சுக்குத் தீயைக் கக்கும் என் தோழர் பழநிசாமி உள்ளத் தெதிரில் நான் அடியில் வரும் மண்ணெண்ணெய்க் குடத்தைத்தான் படைக்க எண்ணுகிறேன். தன்மானமற்ற உணர்வற்ற இந்தத் தமிழகம், தன்மானம் பெற்று உணர்வு பெற வேண்டுமானால் இந்த ஒரு தேசிகன் அல்லன் ஆயிரம் தேசிகன்கள் தேவை. மற்றும் இதில் ஓர் உண்மையைத் தோழர் பழநிசாமி அறிய வேண்டும். தேசிகன் யார்க்கும் தெரியாத ஒரு மூலைத் துடைப்பம். ஆயினும் இன்று அது எல்லாருக்கும் அறிமுகமாகி விடுகின்றது. தேசிகன் முட்டி புகும் இனம். அது எல்லாப் பார்ப்பனர் ஆதரவையும் பெற்றுக் கொண்டுவிட்டது. மறைமலையடிகளார் திரு.வி.க. இரு சுடர்களையும் ஏசி ஒரே அடியில் இரண்டு மாங்காயை விழப் பண்ணிய தேசிகன் திறம் வியக்கத்தக்க தன்றோ. பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டும் விலாங்கு மனப்பான்மை இந்த நாட்டினின்று ஒழியவேண்டும். தமிழர் பெரும்பான்மையாராயிருக்கும் கூட்டத்தில் ஒரு பண்டாரம். தமிழருக்கு உயர்வு தரும் பேச்சைப் பேசுகின்றான். தன் மானமற்ற தறுதலைகளைப் பெரும்பான்மையாய்க் காணும் இடத்தில். பாரதிதாசன் தெய்வம் என்பது தூய தமிழ் என்கிறார். இல்லை அது வடசொல்லே என்று சொல்லிவிட்டு ஓடுகின்றான். இந்த விலாங்கு வாழ்க்கை ஒழியவேண்டும். இந்த விலாங்குகட்கு மரியாதை வைப்பதும் அறவே ஒழிய வேண்டும். அலுவலில் ஒட்டிக்கொண்ட ஒரு தமிழப் புலவன் தமிழரைக் கண்டால் குசுகுசுவென்று தமிழையும் தமிழரையும் ஆதரிக்கின்றான். பார்ப்பானைக் கண்டால் உரக்கப் பேசி உற்றாரையே பழிக்கின்றான். சேதுப்பிள்ளையைப் பாருங்கள். இவையும் இவை போன்றனவுமான அஞ்சத்தக்க நாணத்தக்க நிலைகளின் விளைவுதான் தேசிகன்கள். - குயில், கிழமை இதழ், 22.9.1959, ப.3-4 127. சட்டமன்றச் செயற்குழுவினர்க்கு! 1. கல்வித்துறையில் பரஞ்சோதி திருவிளையாடல் புதுவை அரசின் எல்லாத் துறைகளிலும் எந்தத் துறை நடை பெறுகிறது என்று ஆராய்ந்து, ஏதாவது ஒருதுறை ஏறத்தாழக் கடமை உணர்ச்சியோடு நடைபெறுகிறது என்று தோன்றினால் அத்துறையின் தலைவருக்கு ஒரு பெரிய பரிசு கொடுத்து பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கொடுக்கக்கூடிய பரிசுக்காகச் செலவு செய்ய நேருமே என்று அரசினர் அஞ்சத் தேவை இல்லை. நடைபெறுகின்றது என்று சொல்லத்தக்க வகையில் தேடினால் ஒரு துறையும் அகப்படாது. கல்வித்துறை நடைபெறுகிறதா? - அது நடைபெறவில்லை என்பதற்கும் வஞ்சகக் கூட்டத்தின் மலைக்குகை என்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டு. காலாப்பட்டில் புதுவைக் குப்புசாமி ஐயர் என்பவர்க்கு ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் என்ற பெயரால் கல்வித்துறைத் தலைவராகிய பரஞ்சோதி மாதம் மாதம் சம்பளம் கொடுத்து வந்தார். அந்தப் பள்ளியை மேற்பார்வை பார்க்கவேண்டிய தலைமை ஆசிரியர் அப்பாத்தம்பி ஒருநாள் காலாப்பட்டு பள்ளி ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறதே அதை நாம் பார்த்து நிலைமையை மேலுக்கு எழுதவேண்டுமே என்று காலாப்பட்டுக்குப் போனார். பள்ளியுமில்லை பள்ளியின் ஆசிரியரும் இல்லை. இந்தத் தகவலை அப்பாத்தம்பி பரஞ்சோதிக்கு எழுதி விட்டார். அவ்வளவுதான் அப்பாத்தம்பி செய்த குற்றம்! உடனே பரஞ்சோதி அப்பாத்தம்பியை அழைத்து நீ இப்படி செய்திருக்கவே கூடாது என்று கூறி - அப்பாத் தம்பி செய்த இந்த முதல் குற்றத்திற்கு மன்னிப்பும் அளித்து போகச் சொன்னாராம். இதே பரஞ்சோதி ஒரு சட்டமன்ற நிதிக் குழுவினர் முன் ஒரு கதை சொன்னார். பாடசாலைப் பிள்ளைக்கு நடுவேளைச் சாப்பாடு போடுவது குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை எடுக்க யாரும் முன்வர வில்லை. ஆகையால் பல மாதங்களாக ஏழைப் பிள்ளைகட்குச் சாப்பாடு போடுவதை நிறுத்தியிருக்கிறேன். கதை எப்படி? இதே பரஞ்சோதிக்கு ஒரு துணையதிகாரி. அவர் பெயர் இரிசப்பன். கிரிசப்பனைப் பரஞ்சோதி ஒருநாள் விரைவாக வரும்படி அழைத்தார். வந்து ஏன் என்று கேட்டார் இரிசப்பன். அந்த கோமுட்டிப் பையனுக்குப் போதனாமுறைத் தேர்தல் வருகிறது. நீதான் தேர்தல் அதிகாரி. ஒழித்துவிடு அந்த வாத்தியை. ஆகா பார்க்கிறேன் ஒரு கை என்று போனார் தேர்தல் நடத்த! யார்? இரிசப்பன். தேர்தல் நடத்தும் குழுவினர், ஆசிரியர் தகுதி நோக்கி நல்ல எண் கொடுத்திருக்கவும் ஊர் சிரிக்குமே என்பதையும் பார்க்காமல் ஒழித்துக் கட்டும் எண்ணை இரிசப்பன் கொடுத்ததோடு குழுவினருக்கும் அந்த ஆசிரியரை ஒழித்துக்கட்ட வேண்டியதின் இன்றியமையாமையையும் எடுத்துரைத்தார் வெளிப்படையாக. இதை ஆசிரியர், தலைவர் பரஞ்சோதியிடம் முறையிட்ட போது பரஞ்சோதி சிரித்தார். இரிசப்பனைக் கண்டபோது தட்டிக் கொடுத்தார். அதன்பிறகு தான் ஆசிரியர் மேல் பரஞ்சோதியும் இரிசப்பனும் பொய் வழக்கு (கத்தியால் குத்த ஏற்பாடு செய்ததாக) ஒன்று ஏற்பாடு செய்தார்கள். (தொடரும்) - குயில், கிழமை இதழ், 29.9.1959, ப.3 2. கல்வித்துறையில் பரஞ்சோதி திருவிளையாடல் ஒரு நாள் நம் டெலிகேட் இரிசப்பன், கோமுட்டித் தெருவிலுள்ள காங்கிரசு அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு சான்றினர் (சாட்சிகளை) உண்டாக்கிக் கொண்டிருந்தார். வழக்குச் சாரம் வருமாறு : இரிசப்பனை ஆசிரியர் பாலசுப்பிரமணியனார் கத்தியால் குத்தி விடுவேன் என்று மற்றோர் ஆசிரியர் சொன்னார் என்பதே. பாலசுப்பிரமணியனார் அப்படிச் சொன்னதை நான் அறிவேன் என்று காங்கிரசு செயலாளர் சொல்ல வேண்டுமாம். மற்றும் காங்கிரசு செயலாளர்க்கு வேண்டிய ஆட்களும் சொல்ல வேண்டுமாம். இப்படி இரிசப்பன் குபேரின் பேரால், வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஒரு குடும்ப விளக்கை அவிக்க வேண்டும் என்பதில் நம் கல்வித் துறையின் டெலிகேட் இரிசப்பனார்க்குள்ள அக்கறையைப் பாருங்கள். இப்படிப்பட்ட பொய்ச் சான்று கூறக் காங்கிரசு செயலாளரும் மற்றவரும் ஒப்பவில்லை. இரிசப்பனார் துடித்தார். வழக்கும் நீதிமன்றத்துக்குக் கொடுத்தாய்விட்டது. இரிசப்பன் யோசித்தார். காங்கிரசு நிலையத்தை அடுத்திருந்த இரண்டொரு பார்ப்பனரைப் பிடித்துப் பார்த்தார். ஒன்றும் சாயவில்லை. இரிசப்பனாருக்கு மற்றொரு தொல்லை கிளம்பிற்று. இப்படியெல்லாம் தன்மேல் பொய் வழக்குத் தொடுத்துப் பழிவாங்குகிறார் இரிசப்பனார் என்று ஆசிரியர் பாலசுப்பிரமணியனார் எதிர் வழக்குத் தொடங்க இருக்கிறார் என்று இரிசப்பனார் கேள்விப்படுகின்றார். இந்த வழக்கு என்ன ஆகப் போகிறது என்று ஆசிரியர் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஊர் மக்களும் அப்படி. ஒருநாள் பர்க்கே (குற்றம் ஆராயும் நடுவர்) அபேல் அவர்கள் குற்றவாளியாக்கப்பட்ட பாலசுப்பிரமணியனாரை அழைத்தார். இது பெரிய வழக்கு என்றார். இதில் பெரிய பெரியவர்களெல்லாம் கவலை செலுத்தி வருகின்றார்கள் என்றார். இந்த வழக்கை நான் ஒரு ராசிக்கு கொண்டு வந்திருக்கிறேன் என்றார். என்ன சொல்லுகின்றீர் என்று கேட்டார். உங்கள் விருப்பம் என்றார் ஆசிரியர். இந்த வழக்கில் நான் இராசியாய்ப் போய் விடுகின்றேன் அதுவுமில்லாமல் இந்த வழக்குப் பற்றி நான் மேலே ஒரு தொடர்ச்சியும் செய்ய மாட்டேன் என்று அபேல் அவர்கள் எழுதி அதில் ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பினார். இதுபற்றி ஆசிரியர், கல்வித்துறை அதிகாரி பரஞ்சோதியிடம் தெரிவித்தார். அவர், கிரிசப்பனை என்ன செய்துவிட முடியும் நீர்? - என்று கேட்டு ஒரு விரட்டு விரட்டி அனுப்பினார். இதுபற்றி சட்டமன்றின் நிதிக்குழுவில் கல்வித்துறை அமைச் சரிடமும் குழுவினரிடமும் தெரிவித்தபோது இதெல்லாம் எங்கட்குத் தெரியாது என்று கூறினார்கள். (தொடரும்) - குயில், கிழமை இதழ், 6.10.1959, ப. 2 3. கல்வித்துறையில் பரஞ்சோதி திருவிளையாடல் கல்வித்துறைத் தலைவர் பரஞ்சோதி பற்றி நாம் இந்த மூன்றாவது தலையங்கத்தோடு முடித்துவிட எண்ணுகின்றோம். காரணம், பரஞ்சோதி கல்வித்துறையில் தம் கடமையைச் செய்யவே இல்லை, செய்யும் தகுதியும் அவர்க்கு இல்லை என்பது அனைவர்க்கும் தெரியும். எத்தனைத் தலைமைப் பள்ளிக்கூடங்களுக்கு எத்தனை ஆண்டுகளாகத் தலைவரே இல்லை என்பதை நாமா சொல்ல வேண்டும்? ஓராசிரியர் பள்ளிகளின் குறைபாடுகள் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. மதப் பாகுபாடு அவர் உள்ளத்தினின்று நீங்குவது எப்போது? - நீங்கும் வரைக்கும் கல்வித்துறை உருப்படுமா? பன்னாளாக ஏழை ஆசிரியர் பலர் தாம் உருவாக்கிய பள்ளிக்குத் தம்மை ஆசிரியர் ஆக்குங்கள் என்று பரஞ்சோதியை கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். சாமிதுரை சொந்தக்காரர் ஒருவர் வேலையின்றி இருப்பதை அறிந்து அவர் வீட்டுக்குப் போய் அவரை இட்டு வந்து ஓராசிரியர் பள்ளி ஒன்றை உருவாக்கி அதே நாளில் ஆசிரியராக்கிவிட்டு அல்லவா மறுவேலை பார்ப்பார் பரஞ்சோதி! கல்வித்துறை என்பது ஒரு பொது நிறுவனம் என்றா நினைக்கிறார் பரஞ்சோதி? அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் பொதுப்பணம் என்றா நினைக்கிறார் பரஞ்சோதி? நம்மை கேட்க எவனிருக்கிறான் என்ற எண்ணம் அவரை விட்டுத்தொலைந்தால்தானே! மாணவர் நடுவேளைச் சாப்பாட்டுக்கு உணவு அதிகாரி ஒருவர் - அவர் பெயர் வேங்கடாசலம், அவர் எத்தனை ஆண்டுகளாக அந்த வேலை பார்க்கிறார்? ஏன் அப்படி? பரஞ்சோதி தூங்கினால் இவர் விசிறிக் கொண்டிருப்பார் போலும். அவர் வகையில் கணக்குத் தணிக்கை நடந்ததுண்டா? ஆசிரியைமாரிடம் ஒழுக்கம் இருக்க வேண்டுமே என்பதில் பரஞ்சோதிக்கு கவலையிருந்ததா? இருந்திருந்தால் பொதுமகள் ஒருத்தி இன்று தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஒருத்தி ஆசிரியத் தொழிலிலும் இருப்பாளா? பரஞ்சோதி கல்வித்துறைத் தலைமை அலுவல் பார்க்கும் தகுதி இல்லாதவர். - குயில், கிழமை இதழ், 13.10.1959, ப. 3 128. ஊர்க்காவல் துறை (போலீ) பிரெஞ்சுக் காரன் ஆட்சி இருந்த வரைக்கும் ஊர்க்காவல் துறை யானது ஒரு வகையில் கண்மூடித் தனமுடையதாய் இருந்தது. ஆனால் அந்தக் கண்மூடித்தனம் தட்டிக் கேட்க ஆள் ஏற்பட்டால் நிற்பதில்லை. அது செல்வாக்குள்ள கட்சியோடு கூடிக் கொண்டு கூத்தடித்த கதைகள் பல உண்டு. அப்போது அந்த ஊர்க்காவல் அதிகாரிகளுக்கே கண்ணை மூடிக்கொண்டு நீதித்துறையும் ஒத்திருக்கும். எல்லாக் கொள்ளையும் எல்லாக் கொலையும் எல்லா மாறுபாடுகளும் பட்டப் பகலில் வெளிப் படையாக நடைபெறும். இதனாலேயே புதுவையில் வீதி ஒழுங்கே ஒழிய நீதி ஒழுங்கில்லை என்ற பழமொழியும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் அதே நீதித்துறையும் அதே ஊர்க்காவல் துறையும் தாம் செய்த தவறுகளுக்கு வருந்த வேண்டிய நிலை ஏற்படவும் கூடும். எத்தனையோ ஊர்க்காவல் அதிகாரிகள் வேலை இழந்ததுண்டு. சிறையில் கம்பிகள் எண்ணியதுண்டு. எத்தனையோ நீதித் தலைவர்கள் தண்டிக்கப்பட்டதுண்டு. வேலை இழந்ததுண்டு. பிரெஞ்சுகாரன் ஆட்சியிலே ஊர்க்காவல் துறை அதிகாரிகளைப் பற்றியோ, சின்ன அலுவல்காரர்களைப் பற்றியோ சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்-ஒரு சின்ன அலுவல்காரனோ ஊர்க்காவல் துறையின் பெரிய புள்ளியோ தகாத செயல் ஒன்றைச் செய்யத் துணியுமுன் அவன் வாழ்க்கையில் கொட்டிக் கொள்ள ஒரு கூடை மண்ணைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கெப்ளே துரை சொல்கிறார். அவர் சொற்படி தனிப்பட்ட ஒரு ஆளுக்குத் தீமை செய்யப் போகிறோம். ஆனால் தீமை செய்த பிறகு அதற்கான தண்டனையை அடைவது உறுதியே என்று அவன் எண்ணாமலிருக்க மாட்டான். இப்போது இந்தியா யூனியன் அரசினரின் ஆட்சி நடைபெறு கின்றது. அதில் இப்போது இங்கு வந்துள்ள ஊர்க்காவல் துறை நடந்து கொள்ளும் முறை எப்படி? ஒரே பேச்சில் சொல்ல வேண்டுமானால் இந்தத் துறையை ஊர்க் காவல் துறை என்று சொல்ல முடியாது. ஊரைக் கெடுக்கும் துறை என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். (தொடரும்) - குயில், கிழமை இதழ், 20.10.1959, ப. 3 அ. புதுவை ஊர்க்காவல் துறை (போலீ - II) போலீசுத்துறை நாட்டு மக்களைப் பொறுத்த மட்டில் தனக்குரிய சட்டத்தின்படி அல்லவா நடந்து கொள்ள வேண்டும்! புதுவையைப் பொறுத்தமட்டில் இந்திய யூனியன் போலீசு அப்படி நடந்து கொள்வதில்லை. வேறெப்படி? இந்திய யூனியன் புதுவைக்குள் புகத் தனக்குத் துணையாகக் கொள்ளைக்காரப் பசங்களையும் கொலைகாரப் பசங்களையும், கொண்டு, கொள்ளைச் செயலையும், கொலைச் செயலையும், கையாண்டபடியே உட்புக வேண்டியதாயிற்று. உட்புகுந்தபின் நடைபெற வேண்டிய தேர்தலுக்கான சட்டத்தை யும் மாற்றியமைக்க வேண்டியதாயிற்று. எப்படி மாற்றியமைத்தார்கள் தெரியுமா? கொள்ளை குற்றத்திற்காகவும் கொலை முதலிய குற்றங் களுக்காகவும் தண்டிக்கப் பெற்றவர்களும், அதைவிட மட்டமானவர் களுங்கூட, மக்கள் வாக்கைக் கோரலாம். கோரிப் பெற்றுச் சட்டசபை முதலியவற்றிற்குப் பதவி பெறலாம். அமைச்சராகவும் வரலாம் என்று மாற்றியமைத்தார்கள். இதை முன்நின்று செய்தவர் கேவல் சிங்க், நாம் முன் கூறியபடி கொள்ளைக்காரப் பசங்களையும் கொலைகாரப் பசங் களையும் உடனிருந்து காப்பாற்றித் துணைபுரிந்தவர் D.S.P. பழநியப்பா! சரி உள்ளே புகுந்த - தாங்கள் செய்த குற்றங்களையெல்லாம் இல்லை என்று ஆக்கிக்கொண்ட கொள்ளைக்காரப் பசங்களையும், கொலைகாரப் பசங்களையும் தேர்தலில் மக்கள் ஆதரிப்பார்களா? ஆதரிக்க மாட்டார்கள் அல்லவா? அதற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். மக்களைப் பயமுறுத்தி அவர்களை ஆதரிக்கச் செய்தாக வேண்டும். அதுவுமல்லாமல், அந்தக் கேடிப் பசங்களுக்கு - இல்லாத மதிப்பை உண்டாக்கியாகவேண்டும். அதுவு மல்லாமல் அந்த ரௌடிப் பசங்களுக்கு மக்கள் அஞ்சும்படி செய்தாக வேண்டும். இத்தனையும் செய்தார் - செய்து வெற்றியும் பெற்றார் கேவல் சிங்க். கேவல்சிங்க் முதன்மையாக இவற்றிற்கெல்லாம் கருவியாகக் கொண்டது எதை? போலீசை! போலீசு தனக்குரிய சட்டத்தின் கோட்டிலேயே நின்றிருந்தால் இத்தனை அரிய காரியங்களைச் செய்து முடித்திருக்கக் கூடுமா? முடியாதே! அதனால் கட்டாயமாகப் போலீசு அடையாளந்தெரியாத ஒரு காட்டுமிராண்டித் தனத்தையும் மேற்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்ட செயல்களையெல்லாம் D.S.P. பழநியப்பா தன் மனச்சான்றை விற்றுச் செய்த ஒப்பற்ற வீரர். சரி, பெரிய மனிதர்கள் சட்டசபை உறுப்பினராகவும், அமைச்ச ராகவும், அமைச்சர்களின் தலைவராகவும் வந்தபின், அவர்கள் அடைந்த அந்தப் பதவி நிலைக்கவேண்டுமே. அவர்களுக்கும் ஒரு மரியாதை உண்டாக வேண்டுமே. இதற்காகப் போலீசு எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சியை மானங்கெட்டதாக இருந்தாலும் - செய்துதானே ஆக வேண்டும். சும்மா சொல்லி விடலாமா? இதிலெல்லாம் D.S.P. பழநியப்பா சிங்கம். புதுவை எல்லையில் நுழைந்த அன்றைக்குப் புதுவை மக்களின் நன்மைக்கு வேட்டு வைக்கும் முறையிலும் தனிப்பட்ட காலிகளின் மேன்மைக்கு ஆக்கம் தேடும் முறையிலும் அமைக்கப்பட்ட ஒரு முறை ஒரு சாதாரணமான பழநியப்பாவாலா எப்படி அமைக்கப்பட முடிந்தது என்று கேட்கலாம். இதற்கு நேரான - உண்மையான பதில் கூற வேண்டுமானால், அந்தப் பழநியப்பாவுக்கு அப்போதிருந்த கேவல் சிங்கும் இப்போது இருந்து வருகின்ற தில்லி ஆட்சியாளரும் நீதிக்காரரும் துணைபுரிந்து வந்தார்கள். அன்று அமைக்கப்பட்ட போலீசு முறை அதாவது மக்களின் அண்ணாந்தாள் இன்றும் உள்ளதா எனில், சிறிது கூடக் குறையாமல் அப்படியே இருந்து வருகின்றது. இப்போது புதிதாக வந்துள்ள I.G. முல்க்குக்கு பிடிக்கவில்லை. என்றால் பழநியப்பாவைப் பிடிக்க வில்லை. அண்ணாந்தாள் முறை முல்க் அவர்கட்குக் கற்கண்டாக இனிக்கிறதென்றே எண்ண வேண்டியதிருக்கிறது. அன்று பழநியப்பா ஏற்படுத்திய முறை அதாவது மக்களின் அண்ணாந்தாள் என்பது என்ன? அதனால் மக்களுக்கு என்ன தீமை? இந்தத் தீயமுறையைக் கையாளும் போலீசுக்கு அதனால் என்ன நன்மை? இவைகளை விளக்கும் முறையில் சில நிகழ்ச்சிகளையும் உள் எண்ணத்தையும் (கூறி) இந்தக் கட்டுரையை முடிக்க எண்ணம்! - குயில், கிழமை இதழ், 27.10.1959, ப. 3 ஆ. புதுவை ஊர்க்காவல் துறை (போலீசு) முன்தொடர்ச்சி ஒருவன் மண்டையை ஒருவன் உடைத்துவிடுகிறான். போலீசில் போய் மண்டை உடைபட்டவன் சொல்லுகிறான். இந்த நிலையில் போலீசானது அவனுடைய முறையீட்டைக் கேட்டு குறித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. கேட்டுக் குறித்துக் கொண்டாலும் உடனே சான்றினரைத் தேடி வழக்கை ஆராய்ந்து நீதிமன்றத்துக்குத் தன் தலைமை நிலையத்தின் வழியாக அனுப்ப வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. சும்மா ஆண்டுக்கணக்காகப் போட்டு வைத்திருக்க அந்த போலீசுக்கு அதிகாரம் உண்டு. ஒரு கூட்டம் அரிசிக் கிடங்கின் பூட்டை உடைத்து, மூட்டைகளைத் திருடிப் பதுக்கி வைத்திருப்பதாகப் போலீசில் பறி கொடுத்தவர் சொல்லிக் கொள்கிறார். உடனே திருட்டுப்போன இடத்திற்குப் போலீசு போய்ப் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதுக்கி வைத்துள்ள அரிசியைக் கைப்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. வழக்கை உடனே மேலுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வழக்கு சொல்லிக் கொள்ள வருகின்றவனையோ அவன் குறிப்பிடும் சான்றினரையோ குற்றவாளியையோ குற்றவாளி குறிப்பிடும் சான்றினரையோ போலீசு அதிகாரி இன்ன கேள்விதான் கேட்பது என்ற வரையறை வேண்டியதில்லை. அவர்களில் எவனையும் நீ எந்தக் கட்சி. நீ யாருக்கு வேண்டியவன் என்றெல்லாம் கேட்க அதிகாரம் உண்டு. குற்றவாளி நான் இன்னாருக்கு வேண்டியவன். அவரைக் கண்டு உங்களுக்குச் சிபாரிசு சொல்லச் செய்கிறேன். அது வரைக்கும் இந்த வழக்கை ஆராய்ச்சி செய்வதை - எழுதி யனுப்புவதை நிறுத்தி வையுங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அதன் படியே ஆராய்ச்சி செய்வதையும் எழுதியனுப்புவதையும் போலீசு அதிகாரி நிறுத்தி வைக்க அவருக்கு அதிகாரம் உண்டு. ஒரு வட்டாரப் போலீசு செய்த குற்றத்தை ஆராய்ச்சி செய்யவோ காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கவோ தலைமைப் போலீசுக்கு அதிகாரம் உண்டு. வட்டாரப் போலீசு செய்த பெருங்குற்றத்தை மழுப்பி மறைத்து, அவர்க்கு மாற்றம் ஏற்படாதிருக்கவோ சம்பள உயர்வு செய்து ஊக்கப்படுத்தவோ தலைமைப் போலீசுக்கு அதிகாரம் உண்டு. தலைமைப் போலீசு செய்த குற்றத்தை, தலைமைப் போலீசுக்குத் தலைமை போலீசாக உள்ளவர் மேலுக்குத் தெரிவிக்காமல் அழுத்திப் போடவும் அதிகாரம் உண்டு. தேர்தல் காலத்தில் இன்னாருக்குச் சீட்டுப் போட வேண்டும். இன்னாருக்குப் போடாதே என்று வீடு வீடாய்ப் போய்த் தெரிவித்து - வற்புறுத்தவோ அச்சுறுத்தவோ போலீசு தலை, வால் எல்லாவற்றிற்கும் முழு அதிகாரம் உண்டு! இந்த முறைதான் இப்போது - இங்கு வந்துள்ள யூனியன் போலீசு மேற்கொள்ளும் முறை. உருப்படுமா புதுவை. - குயில், கிழமை இதழ், 3.11.1959 129. வழியோடு திரும்பியது மக்கள் வெள்ளம்! அவர்கட்கு இதற்குள் இவ்வளவு புகழ்! அவர்கள் செய்தது ஒன்றும் பெரிதல்ல. ஆயினும் அரிய செயல். நேற்றுவரைக்கும் புதுவையரசு மக்களை அச்சுறுத்தி அரசினர் செல்வாக்கைக் கொண்டு அடக்கிக் கையில் வைத்துக்கொண்டிருந்தார் குண்டர் குபேர். குபேரரே கொஞ்சம் உமது வாலை அடக்கி வையும் என்று கூறியது வேங்கட சுப்பா ரெட்டியார் கூட்டம். இதுவரைக்கும் - ஏறத்தாழ இருபது ஆண்டாக - எவரும் இட்லர் குபேரை இப்படிச் சொன்னதே இல்லை. சொல்லும் ஆற்றல் எவருக்கும் இருந்ததே இல்லை. இப்போது பெரும்பான்மை மக்களின் செல்வாக்கைப் பெற்றுத் தலைதூக்கிய திரு. வேங்கடசுப்பா ரெட்டியார் கூட்டம் இவ்வாறு அறுதியிட்டுச் சொல்லிவிட்டது. சொல்லிவிட்டது மட்டுமல்ல; குபேர் ஐயாவைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டது. குபேர் தமக்கென ஒரு மதிப்பை உடையவர் அல்லர். புதுவை யிலுள்ள ஒரு தனி மனிதனை விட எடை குறைந்த ஓர் இடையன் பூச்சி. அரசினர்க்கு அடியாள் வேலை செய்து அவர்கள் கூலியாகத் தந்த செல்வாக்கைக் கொண்டு கூத்தாடி வந்தவர். இப்போது அந்த நிலை மலையேறிவிட்டது. ஐயாவின் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது. அதோ ஒரு காலிப் புட்டியாய்க் காட்சியளிக்கின்றார் குப்பைத் தொட்டியில்! மக்கள் இதை நன்றாய்த் தெரிந்து கொண்டனர். விட்டது சனி என்று கையை உதறிக் கொண்டு ஒரு நல்ல கூட்டத்தை - மக்கள் பால் அன்பு காட்டும் கூட்டத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். மக்கள் தலைவர் வேங்கட சுப்பாரெட்டியாரே என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள். வழியோடு திரும்பியது மக்கள் கூட்டம். வேங்கட சுப்பாரெட்டியாரை எதிர்த்து அறிக்கை வெளியிடும் காலிப் பசங்களைக் காறியுமிழ்கின்றனர் புதுவையரசு மக்கள். அவர்கள் நூற்றுக்கும் துணிந்து வெளிவந்துள்ளார்கள். அவர்கள் வேங்கட சுப்பாரெட்டியார் கூட்டத்தை எதிர்க்கும் காலிகளை வாலறுக்காமல் தூங்கப் போவதும் இல்லை. மக்கள் இன்று தம் வாயார வாழ்த்தி மனமார ஆதரிக்கும் வேங்கட சுப்பா ரெட்டியார் கூட்டம் என்பது இது. திரு. வேங்கட சுப்பா ரெட்டியார் அமைச்சர் திரு. பரதன் அமைச்சர் திரு. குருசாமிப் பிள்ளை அமைச்சர் திரு. முகமது இசுமாயில் அமைச்சர் திரு. சண்முகம் அமைச்சர் மற்றும், தலைநாள் தொட்டுக் காங்கிரசைப் பெற்று வளர்த்த திரு. ஆர்.எல். புருஷோத்தம ரெட்டியார் சட்டமன்றின் நிதிக் குழுத் தலைவர். மற்றும், அரசியல் வகை தெரிந்து மக்களிடம் அன்புடைய திரு. பி.சி. புருஷோத்தம ரெட்டியார் மற்றும் பன்மொழி அறிஞர் காங்கேயன் சட்ட மன்றத் தலைவர் முதலியவர்கள். மக்கள் செல்வாக்கும் அரசியல் உணர்வும் கல்வி, செல்வத் தகுதியும் வாய்ந்த இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் கழுத்தில் மீண்டும் சுருக்குப் போட்டு இழுக்கக் குபேரால் முடியுமா? - முடியாது. இதைப் புதுவைப் பெருமக்கள் நன்றே உணர்ந்து மேற்படி கூட்டத்தினர்க்குத் தங்கள் முழு ஆதரவையும் தருவதால் எதிர்காலம் நன்று ஆகும் என்று இன்றே நாம் உறுதி கூறுவோம். - குயில், கிழமை இதழ், 10.11.1959, ப.2 130. அப்ரகாம் M.L.A., முத்தால்பேட்டை முத்தால் பேட்டைச் சண்முகம் அவர்களின் முயற்சியால் - தன்னலமற்ற தன்மையால் தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஆகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் அப்ரகாம். முத்தால்பேட்டைப் பெரும்பான்மை மக்கள் சண்முகம் கேட்டுக் கொண்டதால் ஆதரித்தார்கள். இவ்வாறு வாக்களித்தவர்களில் ஒருவராவது குபேரை ஆதரிப்பவரா என்றால் அதுதானில்லை. ஆனால் அப்ரகாம் அவர்கள், குபேரை ஆதரித்துத் திரிவதாகக் கேள்விப்படுகின்றோம். குபேர் மக்களால் வெறுக்கப்படும் ஒரு விரியன் பாம்பு. இன்றல்ல. சென்ற இருபது ஆண்டுகளாக அவர் அப்படி! இத்தனை நாளும் குபேர், அரசினர் செல்வாக்கால் குடித்தனம் செய்து வந்தவர்; தமக்கென்று எவ்விதச் செல்வாக்கும் இல்லாதவர்; அவர் காலத்தில் அவர் மக்களுக்கு இழைத்து வந்துள்ள தீமைகளை இங்கு எடுத்து எழுதுவதென்றால் அது பெரும் பாதமாகவே முடியும். தம் நன்மைக்காக எவர் மண்டையையும் உடைக்கலாம் என்ற கொள்கையைக் கையாண்டவர்; மனிதத் தன்மை சிறிதும் இல்லாதவர். இத்தகையவரை இந்த அப்ரகாம் ஆதரிப்பதென்றால் அதன் பொருள் என்ன? குபேர் மீண்டும் தலைமைப் பதவியை அடைவார். அடைந்து நமக்கு வேண்டிய எலும்பைப் போடுவார் என்று அப்ரகாம் நினைக்கிறார் போலும். இந்த எண்ணம் அப்ரகாமுக்கு வேண்டாம். அப்ரகாம் ஒரு நல்ல குடும்பப் பிள்ளை. ஒரு நல்ல மனிதரின் மருகர். இதே நேரத்தில் முத்தால்பேட்டைச் சண்முகனார்க்கும் ஒன்று கூற எண்ணுகின்றோம். அப்ரகாமைக் குபேர் வீட்டுக்குப் போகும்படி சண்முகம் தூண்டிவருவது உண்மையானால், சண்முகம் தாம் தலையில் தமே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டவராவார். குபேரால் இனி ஒன்றும் ஆகாது. அவரால் ஆவதென்று ஒன்று இருக்குமானால் அது நம் வேங்கடசுப்பா ரெட்டியாராலும் ஆகும். கழிவடையை மிதித்தவன் காலைக் கழுவிக் கொண்டான். மீண்டும் அதைத்தான் மிதித்துக் கொண்டிருப்பேன் என்பது சரியில்லை. தன்னலங் கருதியேதான் வாழ்க்கையை நடத்தியாக வேண்டும் என்ற எண்ணம் அத்தனையும் சரியாகுமா? பொதுநலத்திற்கு மாறாக நடந்தவன் வாழ்ந்ததுண்டா? அப்ரகாம் அவர்களே, சண்முகம் அவர்களே குபேரைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். தீயாரைக் காண்பதும் தீதேயன்றோ! திரு. வேங்கடசுப்பா ரெட்டியார் குழுவையே ஆதரிக்க நல்லாரோடு இணங்கியிருப்பதும் நன்று அன்றோ! - குயில், கிழமை இதழ், 17.11.1959, ப.2 131. நேரு, தருமபுரம், பத்தவச்சலம் மூன்று முட்டுக் கட்டைகள் மன்னன், மதகுரு, பணக்காரர்! நாட்டு மக்களின் முன்னேற்றதிற்கு இம்மூன்று வகையாரும், முட்டுக்கட்டைகள். சில இடங்களில் சில காலங்களில் தவிர எங்கும் எப்போதும் இப்படி! மன்னன், மதகுரு, பணக்காரர் என்பவர் பெயர்கள் நிலைமை களால் சிறிது வேற்றுமை உடையவர்களாய் இருக்கலாம்; கொள்கை யால் இம்மூன்று வகையாரும் பிரிக்க முடியாத இரும்புக் குண்டு. பிரான்சு மக்கள் ஒரு காலத்தில் புரட்சியை எதிர்பார்த்துப் புழுவாகத் துடித்தார்கள். இவர்களை வருத்திக் காலடியில் மிதித்துக் கொண்டிருந்தவர்கள் அக்கால அரசன் மட்டுமல்ல; குருக்களும், செல்வர்களுமாவார். இம்மூன்று வகையாரும் கொண்ட ஒற்றுமையை அன்றுதான் உலகம் அறிந்தது. இம்மூன்று தீய ஆற்றல்களையும் ஒழித்த பிறகுதான் நாடு மக்கள் கைக்கு வந்தது, அப்பாடா என்று மக்களால் மூச்சுவிட முடிந்தது. உருசிய வரலாற்றாலும் இதை அறியலாம். இம்மூன்று முட்டுக்கட்டைகளையும் சிக்கற ஒழித்ததன் பேர்தான் பொதுவுடைமை! தம் தாய்மொழியாகிய பிரான்சு மொழியைச் சீர்திருத்தம் செய்வதில் அக்கறை செலுத்திய பிரான்சு மக்கள், கோயிலில் இலத்தீன் மொழி வழிபாட்டு முறை மேற்கொள்ளப்பட்டது கண்டு சீறினார்கள். பிரான்சு மொழியிலே வழிபாட்டு முறைகள் அமையவேண்டும் என்று விண்ணப்பித்தார்கள்; பாதிரிமார்கள் எதிர்த்தார்கள்; ஆளவந்தார்கள் பாதிரிகளுக்கே ஒத்து ஊதினார்கள். செல்வர்கள் தாய்மொழியையே எதிர்த்தார்கள். என்ன நடந்தது? பொதுமக்கள் நேரடி நடவடிக்கையைத் தொடங்கினார்கள். ஆளவந்தார் அடக்குமுறையைத் தொடங்கி னார்கள். பொதுமக்கள் சும்மாவிடவில்லை. கோரில்லாப் போர் முறையை மேற்கொண்டார்கள். நொறுங்கின மூன்றுவகை முட்டுக்கட்டைகளும் விரைந்து, விரைந்து கோயில் வழிபாட்டு முறை, திருமண நிகழ்ச்சி முறை அனைத்தும் பிரஞ்சு மொழியில் மாற்றப்பட்டது. மக்கள் ஆவலைப் பின்னோக்கித் தள்ளுகின்றன. பின் காலால் உதைக்கின்ற மன்னன், மதகுரு, பணக்காரன் என்ற மூன்று கழுதை களும் புனல் வைத்துப் பாடலாம். ஒலிபெருக்கியிற் பேசலாம். மெல்லக் கத்தலாம். எப்படியானாலும் இவை ஒரே குரல் உடையவை என்பதைத் தமிழ் மக்கள் கருதுவதே இல்லை. நேரு ஆட்சி சாகித்ய அக்காடெமியை ஆதரிக்கும். அதில் தமிழுக்கும் இடம் கொடுப்பதுபோல் கத்தும். தமிழர்கள் கழுதைக் குரலைக் குயிலின் குரல் என்று ஏமாறுவார்கள். ஆனால் உடனே நேரு ஆட்சி இந்தியைத் தமிழர் தலையில் கட்டிப் பின் காலால் உதைக்கும். கழுதைக் குரலுக்குக் காதைப் பொத்திக் கொள்வார்கள். தமிழர்கள் கலையின் பேரால் தனி மனிதனுக்கு உதவி செய்யும் நேரு ஆட்சி தமிழரில் ஒருவனுக்கும் ஆதரவு காட்டும். கழுதையைக் குயில் என்று போற்றுவார்கள் தமிழர்கள். எது வரைக்கும்? - வானொலியை ஆகாஷ்வாணி என்று தான் சொல்ல வேண்டும் என்று புறங்காலால் உதைக்கும் வரைக்கும். ஒன்றை மறந்து விட வேண்டாம். நேரு ஆட்சிக் கழுதை இந்தி என்று கத்தியபோதும் ஆகாஷ்வாணி என்று கத்தியபோதும் மதகுருக் கழுதையும் பணக்காரக் கழுதையும் அதை எதிர்த்ததுண்டா? - அதே பாணியில் கத்த மறந்ததுதானுண்டா? தமிழகக் கோயிலில் தமிழ் வழிபாட்டு முறை வேண்டும் என்றார்கள் தமிழர்கள்! ஆட்சியாளர் நேருவும், மதகுரு தருமபுரம் அடிகளும், பணக்காரப் பத்தவச்சலமும் மறுத்துக் குரல் எழுப்பினார்கள். தாளம் தவறியதுண்டா? பாணி வேறுபட்டதுண்டா? ஸ்ரீ என்றுதான் அடைமொழி இருக்க வேண்டும். திரு என்று போடக் கூடாது! மூன்று கழுதைகளும் ஒரே வகைக் கத்தல்! நேரு நல்லவராம். இவ்வாறு தமிழர்களும் எண்ணுகிறார்கள்! தருமபுரத்து அடிகள் சைவச் சுவடிகளை வெளியிடுவதன் வாயிலாகத் தமிழை ஆதரிக்கிறாராம். என்ன முட்டாள்தனமான எண்ணம்! பணக்காரர் ஆகிய பத்தவச்சலம் காமராசர் அமைச்சரவையைச் சேர்ந்தவராம். என்ன பேதமையான முடிவு! திருவை நீக்கு! ஸ்ரீயைப் போற்று! அதோ பாருங்கள்! இப்படி ஒரே குரல் எழுப்புகின்றன! - குயில், கிழமை இதழ், 24.11.1959, ப.2-3 132. தமிழ்ப் புலவர் பொறுப்பு தருமைத் தம்பிரான் திரு வேண்டாம். கோயிலில் தமிழ் வேண்டாம் என்றால் தமிழ்ப்புலவர் சும்மா இருந்துவிடக்கூடாது. தத்தம் கண்டனத்தைத் தனி முறையிலோ, கூட்டு முறையிலோ தெரிவிக்கத்தான் வேண்டும். அமைச்சர் பக்தவச்சலனார் கோயிலில் தமிழ்வழி பாட்டு முறையை எதிர்த்தார் என்றால் தமிழ்ப் புலவர் அது சரியன்று என்று தனிமுறையிலோ கூட்டு முறையிலோ தம் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தான் வேண்டும். வானொலி என்றால் கூடாது ஆகாஷ்வாணிதான் நன்று என்று கூறுவான். எவனாயினும் அவன் போக்குத் தீமையை வளர்ப்பது தமிழரைத் தாக்குவது கலக்கத்தை வளர்ப்பது என்பதைத் தமிழ்ப்புலவர் தனி முறையிலோ கூட்டு முறையிலோ எடுத்துச் சொல்லத்தான் வேண்டும். தேசிகன் திரு.வி.க.வையும் மறைமலையடிகளாரையும் எழுதும் ஆற்றல் இல்லாதவர் என்று குறைத்துப் பேசினான் என்றால் தமிழ்ப் புலவர் சும்மா இருந்துவிடக்கூடாது. உடனே தனிமுறையிலோ, கூட்டு முறையிலோ மறுப்பு வெளியிடத்தான் வேண்டும். பார்ப்பனப் பகைவர் நடத்தும் ஏடுகளில் தமிழைத் தாழ்த்தும் முறையில் தமிழர் பண்பாடுகளைக் குறைக்கும் முறையில் எழுதி வருகின்றார்கள் என்றால், அவர்களின் அடாத செயல்களை அம்பலப்படுத்தத் தமிழ்ப் புலவர்கள் தனி முறையிலோ கூட்டு முறையிலோ தவறக் கூடாது. இப்படி நாம் சொல்லும்போது, எதிர்ப்பதும் எதிர்க்காமல் வீட்டுக்குள் புகுந்து கொண்டிருப்பதும் எங்கள் விருப்பத்தைச் சேர்ந்தது என்று புலவர் கூறுவாராகில் அவர்கள் தமிழருக்கும் தமிழுக்கும் தீமை செய்தவராவார் என்பதோடு தமிழரையும், தமிழையும் பகைவனிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் கயவரும் ஆவார் என்போம். எவன் எப்படியாவது தாயைச் செய்துக் கொண்டு போகட்டும் என்று இருப்பவன் மனிதனா என்று கேட்கின்றோம். ஒரு கூட்டம் கட்டாகத் திட்டம் அமைத்துக் கொண்டு- தமிழ்நாட்டில் பொறுக்கித் தின்று கொண்டு - தமிழரின் உயிராகிய தமிழையே வெளிப்படையாக எதிர்ப்பதைக் கண்டும் தமிழ்ப் புலவர் என்பவர் கண்டு கொள்ளாமல் இருப்பதன் நோக்கம் என்னவாகத்தான் இருக்கும்? பார்ப்பானை எதிர்த்தால் நமக்குத் தீமை வரும் என்ற துடை நடுக்கமாய்த்தான் இருக்கும். அல்லது தமிழைக் கொன்று விட்டால் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தால் நமக்குப் பிழைப்பு நிலைக்கும் என்ற எண்ணமாகத்தான் இருக்க முடியும். தாம் மேற்கொண்ட மதநூற்கள் நிலைக்கவேண்டுமானால். தமிழ்த்தாய் ஒழிந்துபட வேண்டும் என் பேடித்தனந்தான் காரணமாயிருக்க முடியுமன்றோ?. நான் ஓர் அலுவலில் இருக்கிறேன். பார்ப்பான் கருத்துக்கு மாறாக நான் பேசினால், நடந்தால் அவனால் எனக்குக் கேடு ஏற்படும் என்றால் என்னகேடு? தமிழுக்குப் பரிந்து பேசியது தன் தாய்க்குப் பரிந்து குற்றம் பேசியது என்று கூறி அவ்வாறு கெடுதியும் செய்வான் பார்ப்பான் என்றால் கேடுற்ற தமிழனைத் தமிழர் கை விட்டுவிடுவார்களா? புலவர் சிலர் இந்தச் சாயலில் பதில் சொல்லிக் கொண்டு தமிழுக்குக் கேடு சூழ்ந்து கொண்டும் வருவது உண்மை. அவர்கள் பாழாய்ப் போவார்கள் என்பது முழுதுண்மை என்போம். எனவே, பதவியிலிருப்பவரோ, அலுவலில் இருப்பவரோ தமிழை எதிர்ப்பானைத் தனிமுறையிலோ கூட்டு முறையிலோ எதிர்த்துத்தான் ஆகவேண்டும் என்று நாம் அன்பு முறையில் புலவர்கட்குக் கூற விரும்புகிறோம். இது அவர்கள் பொறுப்பு; கடமையும் ஆகும். - குயில், கிழமை இதழ், 1.12.1959, ப.2 133. தமிழர் ஒற்றுமை ஒற்றுமை என்பது கருத்து ஒருமைப்படுவது, வேற்றுமை என்பதும் கருத்து வேறுபட்டு நிற்பதேயாகும். இனி, எந்தக் கருத்தில் தமிழர் ஒன்றுபட வேண்டும் என்ற கேள்வி பிறக்கலாம். அந்தக் கருத்து பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு சார்பு பற்றியதாய் இருத்தல் கூடாது. எது பொதுக்கருத்து? பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்பதை எண்ணுக. தமிழர்க்குத் தமிழ்நாடு தாய்நாடு, பிறந்த பொன்னாடு, அது நன்னிலை அடைய வேண்டும். அது அடிமைப்பட்டிருக்கலாகாது. இது பொதுக் கருத்து. இந்தப் பொதுக் கருத்தில் எல்லோரும் - எல்லாத் தமிழரும் ஒன்று படுவதுதான் தமிழர் ஒற்றுமை என்பது. பொதுக் கருத்து இதுவானால் தனிக்கருத்து என்பது என்ன? அது அவரவர் குடும்பத் தேவையைப் பொறுத்தது. ஆனால், தமிழர் நலன் களில் அக்கறையோ பொறுப்போ இல்லாமல் மானமற்ற வகையில் நடந்து கொள்ளுகின்றவன், அது என் தனிக்கருத்து என்பானானால் அவன் தமிழன் என்றே கருதப்படமாட்டான். தமிழர் விடுதலையடைய வேண்டும் என்பதைச் சார்ந்தவாறு பல கருத்துக்கள் தமிழர்களால் போற்றப்பட வேண்டும். தமிழகம் விடுதலைப் பெறவேண்டியதுதான், ஆனால் நான் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் அயலானிடம் காட்டிக் கொடுப்பதில் தயங்க மாட்டேன் என்று கூறுவோனும் நல்ல தமிழனாக மாட்டான். வானொலி என்பதற்கு ஆகாஷ்வாணி என்று கூறுவோனை ஆதரிப்பவன், எனக்குத் தமிழிலும் தமிழக விடுதலையிலும் அக்கறையுண்டு என்று சொல்லிக் கொள்வதில் பொருளேயில்லை. தமிழகத்தில் தமிழ்க் கோயிலில் தமிழ் வழிபாட்டு முறையை ஆதரிக்காதவன் தமிழ்நாடு - அல்லது தமிழ் நன்னிலை அடைய நினைப்பான் என்று யாராவது எண்ணுவார்களா? ஸ்ரீ என்ற எழுத்தே பெயருக்கு அடைமொழியாய் இருக்க வேண்டும் என்பவன் தன் நிலைமையைக் காத்துக் கொள்வதற்காகச் சொன்னதாயிருக்கலாம். ஆயினும் அவனால் தமிழகம் பின்னோக்கித் தள்ளப்படவில்லையா? தமிழர், சாதி என்பதை ஒப்புக் கொண்டதில்லை. நாம் அடிமைப் பட்டுக் கிடக்கவேண்டும் என்பதற்காகவே சாதியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறுவோன் ஆற்றல் படைத்தவனாய் இருக்கலாம். ஆயினும் அவ்வாற்றலும் தமிழர் ஒற்றுமைக்கு முன் எவ்வளவு என்பதைத் தமிழர் தெரியும் சேதி. நாளாகிறது! ஒன்றுமில்லாத பசங்கள் எல்லாம் தமிழர் கூட்டத்தை இழிவாக எண்ணுகிறார்கள். நாக்கைத் தாறுமாறாக நீட்டுகிறார்கள். தமிழர் பண்பாடுகள் எவை? தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய எண்ணங்கள் செயல்கள் எவை? அவைகளில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தமிழர் உள்ளத்தையெல்லாம் கோயிலாகக் கொண்டிருக்கும் மறைமலையடிகளையும் திரு.வி.க.வையும் தமிழர் முன்னே, எள்ளி நகையாடினானே ஒரு பயல்! ஒன்றுபடுவார்கள் என்று அவன் எண்ணினால் இவ்வாறு நடந்து கொள்ளுவானா? இந்தி வருமா தமிழகத்தில்? வந்திருப்பதற்கு என்ன காரணம் தமிழைக் காட்டிக் கொடுக்கும் தறுதலைகள் காரணம் அல்லவா? தமிழரின் ஒற்றுமை இன்றியமை யாதது! கட்சி பிரியுங்கள்! கட்சித் தலைவர்களைத் திட்டுங்கள். நமக்குள் நாம் நாய்போல் கடித்துக் கொள்ளலாம்; ஆனால் பொதுக் கருத்தைப் பொறுத்தவரைக்கும் தமிழர் ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டும் அன்றோ! - குயில், கிழமை இதழ், 8.12.1959, ப. 2-3 134. சென்னை அமைச்சரவை திருந்த வேண்டும் தமிழ்நாட்டுக்குச் சென்னை இராச்சியம் என்றுதான் பெயர் சொல்ல வேண்டும் என்று தில்லி பேரரசு சொல்லியது. சரி கிடக்கட்டும். இதற்காக நாம் பேரரசை எதிர்ப்பானேன் என்றது சென்னை அமைச்சரவை. ஆனால் தமிழர்களின் உள்ளம் அந்த வகையில் வருந்திக் கிடப்பது பொய்யன்று. இந்தியைத் தமிழகத்தில் பரப்பத்தான் வேண்டும் என்றது தில்லி. சரி கிடக்கட்டும் என்றது சென்னை அமைச்சரவை. ஆனால் தமிழர்களின் உள்ளம் அந்த வகையில் துடிதுடிப்பதில் குறைச்சல் இல்லை. சாதி இருக்கத்தான் வேண்டும். பார்ப்பனப் பசங்களை ஆதரிக்கத் தான் வேண்டும் என்றது தில்லி. சரி கிடக்கட்டும் இதற்காக நாம் பேரரசை எதிர்ப்பானேன் என்றது சென்னை அமைச்சரவை. ஆயினும் தமிழர் உள்ளம் எரிமலையாகிக் கிடக்கின்றது என்பதில் ஐயமில்லை. திராவிட மொழியாராய்ச்சியின் பெயரால் தமிழின் மேன்மையை ஒழித்துக்கட்ட bj.bgh.Û.க்fis¡ குழுவாக ஏற்படுத்தவேண்டும் என்றது தில்லி. சரி கிடக்கட்டும். இதற்காகப் பேரரசை நாம் எதிர்த்துக் கொள் வானேன் என்று சும்மா இருந்து விட்டது சென்னை அமைச்சரவை. ஆயினும் இந்த வகையில் தமிழர்கள் உள்ளம் புண்பட்டது ஆறவில்லை. வானொலியை ஆகாஷ்வாணி என்றுதான் சொல்லவேண்டும் என்றது தில்லி. சரி இருக்கட்டும் இதற்காகப் பேரரசை நாம் எதிர்ப்பானேன் என்று தூங்கிக் கிடந்தது சென்னை அமைச்சரவை. ஆயினும் தமிழர் உள்ளம் அடைந்துள்ள கொதிப்பு இன்னும் ஆறவில்லை; புடைகொண்டு தான் வருகின்றது. கோயிலில் வடமொழி வழிபாட்டு முறைதான் இருக்க வேண்டும் - தமிழ் கிமிழ் இருக்கக் கூடாது என்றது தில்லி. சரி, இருந்து போகட்டும். இதற்காகப் பேரரசின் பகை எதற்கு என்று முக்காடு போட்டுக் கொண்டு படுத்துக் கிடந்தது சென்னை அமைச்சரவை. ஆயினும் தமிழர் உள்ளம் படும்பாடு ஆலைவாய்ப் பஞ்சுபடாது, பட்டுக் கொண்டுதான் உள்ளது. சிரிதான் வேண்டும், சிரிமதிதான் வேண்டும் என்று சொல்லிற்றுத் தில்லி. சரி கிடந்து போகட்டும். இதற்காக நாம் ஏன் பேரரசை பகைத்துக் கொள்வது என்று மானத்தை ஒரு பக்கம் தூக்கிப் போட்டுவிட்டு மூலையில் கிடக்கிறது சென்னை அமைச்சரவை. ஆயினும் இது வகையில் தமிழர் உள்ளம் படும்பாடு தமிழர்கள்தான் அறிவார்கள். நாட்டைக் கெடுத்த ராசாசியின் நண்பர் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் கயமை உடையவர். ஏட்டுத் தமிழின் இன்னலுக்கு வேலைத் தீட்டிக் கொடுக்கும் தீயர் ஆகிய தெ.பொ.மீனாட்சிசுந்தரன் தலைமையிலா தமிழ்ச் சொற்கள் அகர வரிசை நூல் புதுக்கும் குழு அமைப்பது? சென்னை அமைச்சரவைக்கு ஓர் இறுதி வேண்டுகோள். தமிழின் பகைவரைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழுவினர் அனைவரையும் மாற்றுக. ஏ! அமைச்சரவையே! உன் மானமற்ற - துணிவுள்ள - தான் தோன்றித்தனமான போக்குக்கும் ஓர் எல்லை இல்லையா! முன்னொரு நாள் நீ சொன்னச் சொல்லை நினைவுபடுத்த எண்ணுகின்றேன். ராசாசியும் என் பகைவன். பெரியாரும் என் பகைவன் என்று பொருள்படும்படி நீ பேசினாய். பெரியாரும் உன் பகைவரா? நன்றிகெட்ட அமைச்சரவையே நீ ஒழியாதிருக்கத் திருந்து. - குயில், கிழமை இதழ், 15.12.1959, ப.2 135. நாவலர், கணக்காயர், டாக்டர் சோமசுந்தர பாரதியார் புகழ் வாழ்க! தமிழ் வயலில் இந்தி மாடு புகுந்துள்ள இந்த வேளையில் - தமிழ்க் களஞ்சியத்தில் தில்லித் திருடன் புகுந்துள்ள இந்த வேளையில். தமிழக உரிமையில் அயலான் தலையிட்டுக் கிடக்கும் இந்தத் துன்பமான வேளையில். தாய்மொழியின் ஒவ்வொரு சொல்லையும் வடசொல் என்று கூறிச் சில தமிழரே தமிழின் பகைவனிடம் கெஞ்சிக் கூத்தாடும் இந்தக் கசப்பான வேளையில். வானொலி என்ற தமிழ் வேண்டாம் ஆகாஷ்வாணி என்ற அயல் மொழியிலேயே வேண்டும் என்று கூறுவானை அரசினரே தட்டிக் கொடுக்கும் வருந்தத்தக்க இந்த வேளையில் - கோயிலில் தமிழ் வழிபாட்டு முறை வேண்டாம். வட மொழியிலேயே இருக்கட்டும் என்று ஆளவந்தார்களே அறிவற்று உளறும் இந்த வேளையில் - தமிழரின் தமிழ்ப் பாசறை, ஒரு தமிழ்ப்படைத் தலைவனை இழந்தது. தமிழர் தலைவரின் சிறிய பட்டியலிலிருந்து ஒரு பெரிய புள்ளி - சோமசுந்தர பாரதியார் பெயர் - இப்போது இல்லை. நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. ஆறுதல் கூற எவராலும் முடியாது. அவர் போனால் மற்றும் வீரர் பலர் இருக்கிறார்கள் என்று என் நெஞ்சம் எனக்கு அமைதி கூற முற்படலாம். ஏற்கத்தக்கதன்று. சோமசுந்தர பாரதியார் முழுத் தமிழன். I. தமிழனுக்கே பிறந்தவன் II. தமிழ் ஆராய்ந்தவன் III. தமிழுக்குக் கேடு நேர்ந்தால் உயிரையும் பொருட்படுத்தாதவன் IV. பகைவனைப் பகைக்கத் தெரிந்தவன் V. அஞ்சாமை உடையவன் ஆகிய இத்தனை பொருளும் சேர்ந்த பொருளே ஒரு முழுத்தமிழன். முக்கால் அரை கால் ஆகிய இவை எல்லாம் தமிழனாகலாம். ஆயினும் முழுமை எய்தமுடியாது. தமிழகம் முழுத்தமிழனை எண்ணி கிடக்கும், இந்த வேளையில், இருந்தாரில் சிறந்தாராகிய நாவலர் இறந்தார் என்றால் இது ஈடுசெய்ய முடியாத இழப்பால் அன்னை அலறுகின்றாள். சாவுக்குப் பசி என்றால், அது, நிறையக் கிடக்கும் பதர்களை அள்ளித் தின்றிருக்கலாம். காட்டிக் கொடுக்கும் கயவர்கள் தமிழர் என்று சொல்லிக் கொண்டு தமிழைக் குறைத்துப் பேசி வயிறு வளர்க்கும் பேடிகள் இல்லாமலா போய் விட்டார்கள். புலவர்களையும் வீரர்களையும் தமிழ்ப் பற்றுள்ளாரையும் உண்டாக்கக் காரணமாகத் திகழ்ந்த சோமசுந்தர பாரதியாரை விதை நெல்லை அல்லவா விழுங்கிவிட்டது சாவு! நான் ஆறுதல் அடைய தமிழ் இளைஞர்களை, தமிழ்ப் புலவர் களை வேண்டுகிறேன். சோம சுந்தர பாரதியாரைப் பின்பற்றுங்கள். தமிழைக் காப்பாற்ற முன் வாருங்கள் அஞ்சாதீர்கள். நாவலரை - கணக்காயரை - டாக்டரை - சோமசுந்தர பாரதியாரை குடும்பத் தலைவரை, இழந்த மக்களும் உற்றாரும் அழவேண்டாம். அவர்களின் முதியோராகிய பாரதியார், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழகத்திற்கும் நிறையத் தொண்டு செய்துள்ளார். நிறைந்த புகழைப் பெற்றுள்ளார். ஆதலின் இருக்கின்றார்; இறக்க வில்லை. இழந்ததாக அழுவதில் பயன் இல்லை. சோமசுந்தர பாரதியார் புகழ் வாழ்க! - குயில், கிழமை இதழ், 22.12.1959, ப. 2 136. அமைச்சர் குதிப்பும் தமிழ்த்தாய் கொதிப்பும் பொதுவுடைமைக் கூட்டம் சென்னை அமைச்சரவையைத் தனி நின்று எதிர்த்தது. முடியவில்லை. இனியும் முடியாது நம்புகின்றோம். தி.மு.க. சென்னை அமைச்சர் அவையைத் தனிநின்று எதிர்த்தது. முடியவில்லை. இனியும் முடியாது நம்புகின்றோம். இராசகோபாலாச்சாரி சென்னை அமைச்சர் அவையைத் தனிநின்று எதிர்த்தார். முடியவில்லை. இனியும் முடியாது. நம்புகின்றோம். காங்கிரசு கண்ணீர்த் துளி சென்னை அமைச்சரவையைத் தனி நின்று எதிர்த்தது முடியவில்லை. இனியும் முடியாது, நம்புகின்றோம். பார்ப்பன ஏடுகளின் கூட்டம் சென்னை அமைச்சரவையைத் தனிநின்று எதிர்த்தது; முடியவில்லை. இனியும் முடியாது. நம்புகின்றோம். இனி, மேற்சொன்ன எல்லாக் கூட்டமும் சென்னை அமைச்சரவையை எதிர்க்கத் திட்டமிடுகின்றன. எதிர்த்து வெற்றி பெற முடியாது; நம்புகின்றோம். ஆனால், சென்னை அமைச்சரவை தமிழை எதிர்க்கின்றது. முடியாது. சென்னை அமைச்சரவைக்குத் துணையாக மேற்சொன்ன கூட்டங்கள் அனைத்தும் எதிர்த்தாலும் முடியாது நம்புகின்றோம். முதலமைச்சர் எப்போதும் போல் தமிழை எதிர்க்க வாய் திறவாமலே இருக்கட்டும். ஆனால் பத்தவச்சலமும் சுப்பிரமணியமும் தமிழை எதிர்ப்பதில் வாயைத் திறந்தபடி இருக்குமானால் என்ன பொருள்? சென்னை அமைச்சரவை மானமின்றி அறிவின்றித் தமிழ்த் தாயை எதிர்த்ததாகத்தானே பொருள்? தன்மானம் என்பது எங்கு இல்லையோ அறிவு என்பது எங்கு இல்லையோ தில்லிக்குத் தமிழைக் காட்டிக் கொடுக்காத ஆண்மை என்பது எங்கு இல்லையோ அங்கு மக்களின் மதிப்பு இல்லை. மக்களின் மதிப்பை இழந்த ஒன்று உருப்பட்டதாக வரலாறு உண்டா? முதலமைச்சரே, அமைச்சரவை தமிழை எதிர்க்கவேண்டாம். வீணான வாய்ப்பிதற்றலால் நிலைமையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். யானை கொழுத்தால் தன் தலைமீது தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் என்பார்கள். அது விலங்கு. மனிதனும் அப்படிச் செய்யலாமா? தமிழர்களின் தமிழுணர்ச்சி முன்போல் இருக்கவில்லை. அவ்வுணர்ச்சி தமிழர்களையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டது. தருமபுரம் பண்டார சன்னதியிடம் கைகூலி பெற்றுச் சில நேர்மை யற்றவர்கள் தம் தமிழுணர்ச்சியை விற்றிருக்கலாம். எல்லாரும் அப்படி இல்லை. பார்ப்பனர்களிடம் மறைவான முறையில் தமக்கொரு பிடிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சில நேர்மை யில்லாதவர்கள் தம் தமிழுணர்ச்சியை விற்றிருக்கலாம்; எல்லாரும் அப்படியில்லை. தமிழுக்குக் கேடு விளைப்பது அறமும் அன்று. கேடு விளைப்ப தால் தம் வலிமையும் வளமடையாது; இல்லாது ஒழிந்துதான் போகும்! தமிழைப் பற்றிக் கொள்க, அது புளியங்கொம்பு, அதை எதிர்ப்பது முருங்கை மிலாரைப் பிடிப்பதாகும். வெல்க! தமிழ் - குயில், கிழமை இதழ், 29.12.1959, ப.3 