பாவேந்தம் 19 மடல் இலக்கியம் ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 19 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 120 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 95/- கெட்டி அட்டை : உருபா. 145/- படிகள் : 1000 நூலாக்கம் : வ. மலர், .இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  முன்னுரை கடித இலக்கியம் என்றோர் இலக்கியவகை சென்ற நூற்றாண்டில் மக்களால் பெரிதும் போற்றப்பட்டது. ஆயினும் சிலப்பதிகாரக் காலந் தொட்டுத் தமிழ் இலக்கியங்களில் மடல் இடம் பெற்றுள்ளது. தமிழறிஞர்கள், தலைவர்கள் பலரும் கடித இலக்கியத்தை வளர்த்தனர். ghuâah®, t.c.á., மறைமலையடிகள், அறிஞர் அண்ணா, தேவநேயப் பாவாணர், மு.வ. முதலியோர் எழுதிய கடிதங்கள் இலக்கியமாய்ப் போற்றப்படுகின்றன. அறிஞர் மு.வ. எழுதிய தம்பிக்கு, அன்னைக்கு, நண்பர்க்கு முதலிய கடிதங்கள் கற்பனைக் கடித வகையின. பாவேந்தர் பாரதிதாசன் பா வடிவிலும், உரைநடை வடிவிலும் கடிதங்கள் எழுதியுள்ளார். முன்னவை கற்பனை செறிந்தும், பின்னவை நடைமுறை வாழ்வியல் உண்மைகள் நிறைந்தும் எழுதப்பட்டுள்ளன. உரைநடைக் கடிதங்களிலும் கற்பனைக் கடிதங்களைப் பாவேந்தர் படைத்துள்ளார். பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம் (பாவேந்தம் 13, கதை இலக்கியம், ப. 35); சுயமரியாதைக்காரரின் அமெரிக்கரின் கடிதம் (பாவேந்தம் 22, கட்டுரை இலக்கியம், ப.198) இவை இரண்டும் மத நம்பிக்கை ஒழிப்புச் சார்ந்தவை. பாவேந்தர் தம் படைப்புகளில் அஞ்சல், ஓலை, கடிதம், காகிதம், செய்திச் சுருள், திருமுகம், நறுக்கு ஆகிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டுள்ளார். பாவேந்தம் - மடல் இலக்கியம் என்னும் இத்தொகுப்பில் 89 கடிதங்கள் உள்ளன. இவை 1933 முதல் 1964 வரை உள்ள காலங்களில் பாவேந்தரால் எழுதப்பட்டவை. நண்பர்கள், தலைவர்கள், மாணவர்கள், உறவினர்கள் என்னும் நால் வகையினர்க்கு எழுதப்பட்ட மடல்கள் இவை. பாவேந்தர் படைப்புகளை, இயல், இசை, நாடகம் எனப் பகுத்து நடத்துவதற்கு உருவாக்கிய முத்தமிழ் அரங்கு, தம் மக்கள் திருமணச் செய்தி, தம் மணிவிழா, பிறந்த நாள் விழா நடத்துவது, பெரியார் வரலாறு, திரைப்பட உருவாக்கம், தம் கவிதைகள் சில இதழ்களில் வெளி வராமை, திருக்குறள் உரை, திருக்குறள் வகுப்பு, இன்ப இரவு நாடகம் நடத்துதல், தம் படைப்புகள் நூலாக்கம், தமிழிசைக் கழகத்தின் சார்பில் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் நாட்டிய நாடகம் நடத்தத் திட்டமிடல், திரைப்படப் பாடல்கள் எழுதுதல், தமிழர் இயக்கக் கொள்கை பற்றிக் கடிதம் எழுதுதல், பணத்திற்குப்பட்ட தொல்லை முதலிய பொருண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்ட கடிதங்கள் இவை. தந்தை பெரியாரின் தொடர்பினால் தம் இயக்கத்தவரைத் தோழர் என விளிக்கும் வழக்கம் ஏற்பட்டது. தமது கடிதங்களில் தோழர் நடேச சுவாமிகள், அன்புள்ள தோழர், தோழர்களே என விளித் துள்ளதையும், பெயரைக் குறிப்பிட்டு அவர்கட்கு என விளித் துள்ளதையும், அன்புள்ள நண்பர், அன்புள்ள கவிஞர் தமிழன்பன் என விளித்துள்ளதையும் காணமுடிகிறது. சௌபாக்கியவதி பழநி அம்மாளுக்கு (மடல் 3) எனத் தன் மனைவிக்கும், திருமதி சின்ன பாப்பாவுக்கு என மகளுக்கும், திரு. தம்பிக்கு, செல்வன் கோபதிக்கு என தன் மகனுக்கும், மாப்பிள்ளைக்கு என மருமகனுக்கும் எழுதிய மடல்கள் குறிப்பிடத்தக்கன. நண்பர்க்கும், உறவினர்க்கும் கடிதம் எழுதப்புகும்போதும் இடப் பக்க மூலையில் நாள் குறிப்பிடல் வழக்கம். பாவேந்தர் சில மடல்களில் இடப்பக்க மூலையிலும், சிலவற்றில் வலப்பக்கக் கீழ் மூலையிலும், சிலவற்றில் ஒப்பத்தின் கீழும் நாள் குறிப்பிட்டுள்ளார். நாள் குறிக்கப் படா மடல்களும் உண்டு. அவை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பாவேந்தரின் கையெழுத்தை அறிந்தின்புறுவதற்காக நான்கு மாதிரிகள் (மடல் 2, 8, 75, 84) படியெடுத்துத் தரப்பட்டுள்ளன. மடல்களின் இறுதியில் கனக சுப்புரத்தினம், பாரதிதாஸன், பாரதிதாசன், பா என ஒப்பமிட்டுள்ளதைக் காணலாம். மடலில் பின்னிணைப்பு மடல் சில வரிகளில் எழுதும்போது பெரும்பாலும் பா என ஒப்பமிட்டுள்ளார். மடலின் இறுதியில் ஒப்பமிடுமுன் காணப்படும் தன்னிலைத் தொடர்கள், தங்கள், தங்கள் அன்புள்ள, தங்கள் தாழ்மையுடன், உம்மை என்றும் மறவாத, தங்கள் கீழ்ப்படிதலுள்ள என்றவாறு அமைந்துள்ளன. இவை கடிதம் எழுதப்படுவார்க்கும், பாவேந்தருக்கும் உள்ள நெருக்கத்தை - உறவை - அன்பைக் காட்டுவன. எதுவுமின்றிப் பாரதிதாசன் என ஒப்பமிட்டவையும் உண்டு. பாவேந்தர் தம் மடல்களை, அஞ்சல் அட்டைகளிலும் (16, 18 ...) மடற்கட்டுகளிலும் (10, 27, 39, 51 ... ...) எழுதியுள்ளார். ஓர் அஞ்சலட்டையில் ஒருவர்க்கே இருவர் எழுதிய மடலும் (68, 68அ) இடம் பெற்றுள்ளது சுட்டத்தக்கது. மருமகன் தண்டபாணிக்கு அஞ்சல் அட்டையின் முன்பக்கத்தில், பாவேந்தரும், பின் பக்கத்தில் அவர் மாணவர் உ.வே. பாலசுப்பிரமணியனும் எழுதிய மடல் இது. மடல்களில் வடசொற்களும் (சௌபாக்கியவதி, க்ஷேமம், நமகாரம், கஷ்டம்), ஆங்கிலச் சொற்களும் (பிளே - Play, பப்ளிசிட்டி - Publicity, லீவு, டிக்கட் ... ...) சொற் சுருக்கங்களும் ( - மாதம், - மேற்படி, தோ - தோழர்) இடம்பெற்றுள்ளமை அக்காலச் சூழல் நிலை. அண்மைக் காலத்தில் வாழ்ந்த பாவேந்தர் பிறந்த நாளைக் குறிப்பிடுவதில் குழப்பம். பல்வேறு நூல்களிலும் பாவேந்தர் பிறந்த நாள் தவறாகக் குறிக்கப்பட்டிருந்தன. அவை: 27.04.1891, 17.04.1891, 9.4.1892, 18.4.1891 என்பன. புலவர் மருதவாணன் பாவேந்தர் பிறந்தநாள் வாழ்த்தினைச் சில நாட்களுக்கு முன்னரே தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். இக் குழப்பத்திற்கு முடிவு கட்ட எண்ணிய பாவேந்தர் புலவர் மருதவாணனுக்கு எழுதிய மடலில் (41) கர ஆண்டு சித்திரைத் திங்கள் 17 ஆம் நாள் 1891 ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள் எனத் தங்கட்கு நினைவுபடுத்த எண்ணுகின்றேன் என எழுதியுள்ளார். இத் தொகுப்பில் உள்ள பாவேந்தர் மடல்களைப் படிப்பவர்கள் பாவேந்தரின் கையெழுத்து, வாழ்க்கை நிலை, நண்பர்கள் உறவு, தலைவர்கள் தொடர்பு, உள்ளப் பாங்கு, கலையுணர்வு முதலியன அறியும் பேறு பெறுவர். பாட்டு இலக்கியத்தில் தலைமைசான்ற பாவேந்தர் மடல் இலக்கியத்திலும் தடம் பதித்தவர் என்பதை அறிந்து இன்புறலாம். - பி. தமிழகன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி – 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! 15. இதயம் எப்படியிருக்கிறது 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் – 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பாரதிதாசன் மடல்கள் பொங்கல் மாமழை v நுழையுமுன் ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xvi முன்னுரை xix பொருளடக்கம் கடிதம் - 1 தோழர் வ.ரா 11.11.1933 3 கடிதம் - 2 கோகிலன் சாமி 4.8.1935 5 கடிதம் - 3 பழநி அம்மாள்3.4.1936 கடிதம் - 4 பி.எ. செட்டியார் 14.4.1936 7 கடிதம் - 5 வ.ரா 15.1.1938 8 கடிதம் - 6 19.2.1939 10 கடிதம் - 7 குத்தூசி குருசாமி 24.5.1939 11 கடிதம் - 8 நடேச சுவாமி 23.8.1939 13 கடிதம் - 9 தோழர் ராஜவேல் 13.5.1941 14 கடிதம் - 10 தோழர் ராஜவேல் 6.4.1942 16 கடிதம் - 11 தோழர் ஞானமணி 18.8.1942 17 கடிதம் - 12 கோவிந்தன் 16.1.1943 18 கடிதம் - 13 செல்லப்ப ரெட்டியார் 18.4.1943 19 கடிதம் - 14 செல்லப்ப ரெட்டியார் 11.7.1943 20 கடிதம் - 15 செல்லப்ப ரெட்டியார் 20.7.1943 21 கடிதம் - 16 செல்லப்ப ரெட்டியார் 23.7.1943 22 கடிதம் - 17 செல்லப்ப ரெட்டியார் 10.10.1943 23 கடிதம் - 18 தோழர் கா. கருப்பண்ணன் 10.10.1943 24 கடிதம் - 19 செல்லப்ப ரெட்டியார் 19.10.1943 25 கடிதம் - 20 செல்லப்ப ரெட்டியார் 13.11.1943 29 கடிதம் - 21 செல்லப்ப ரெட்டியார் 19.11.1943 31 கடிதம் - 22 செல்லப்ப ரெட்டியார் 20.11...... 32 கடிதம் - 23 செல்லப்ப ரெட்டியார் 8.1.1944 33 கடிதம் - 24 வை.சு. மஞ்சுளாபாய் 8.1.1944 34 கடிதம் - 25 கிருஷ்ணராஜ், செல்லப்ப ரெட்டியார் 8.1.1944 35 கடிதம் - 26 செல்லப்ப ரெட்டியார், கருப்பண்ணன், கிருஷ்ணராஜ், 19.1.1944 36 கடிதம் - 27 செல்லப்ப ரெட்டியார் 1.2.1944 38 கடிதம் - 28 செல்லப்ப ரெட்டியார் 25.2.1944 39 கடிதம் - 29 செல்லப்ப ரெட்டியார் 42 கடிதம் - 30 செல்லப்ப ரெட்டியார் 3.4.1944 44 கடிதம் - 31 G. P. 18.4.1944 45 கடிதம் - 32 செல்லப்ப ரெட்டியார் 22.4.1944 47 கடிதம் - 33 தந்தை பெரியார் 26.06.1944 48 கடிதம் - 34 சி.பா. ஆதித்தனார் 18.8.1944 50 கடிதம் - 35 அள. லட்சுமணன் 4.10.1944 51 கடிதம் - 36 ராஜவேல் 12.11.1944 52 கடிதம் - 37 ராஜவேல் 25.11.1944 54 கடிதம் - 38 செல்லப்ப ரெட்டியார் 17.12.1944 56 கடிதம் - 39 செல்லப்ப ரெட்டியார் 5.3.1945 58 கடிதம் - 40 மருதவாணன் 16.4.1945 59 கடிதம் - 41 செல்லப்ப ரெட்டியார் 3.5.1945 60 கடிதம் - 42 கிருஷ்ணராஜ் ரெட்டியார் 2.11.1945 61 கடிதம் - 43 கருப்பண்ணக் கவுண்டர் 01.04.1946 62 கடிதம் - 44 சிவஞான சிராமணி 16.9.1946 63 கடிதம் - 45 சிவஞானம் 21.9.1946 64 கடிதம் - 46 செல்வன் கோபதி 15.4.1947 65 கடிதம் - 47 தோழர் அருச்சுனன் 2.1.1948 66 கடிதம் - 48 டாக்டர் சிதம்பரநாதன் 2.7.1948 67 கடிதம் - 49 தோழர் தனுஷ்கோடி 31.05.1950 68 கடிதம் - 50 முத்தமிழ்ப் பெருமன்றம் 69 கடிதம் - 51 தனுஷ்கோடி 28.11.1950 71 கடிதம் - 52 தனுஷ்கோடி ராஜா 4.12.1950 72 கடிதம் - 53 தனுஷ்கோடி ராஜா 6.12.1950 73 கடிதம் - 54 தனுஷ்கோடி ராஜா 23.12.1950 74 கடிதம் - 55 தனுஷ்கோடி ராஜா 31.1.1951 76 கடிதம் - 56 T.P. பொன்னுச்சாமி பிள்ளை 78 கடிதம் - 57 தனபால் 6.3.1951 79 கடிதம் - 58 மு. இளஞ்செழியன் 23.5.1955 80 கடிதம் - 59 பேராசிரியர் இராம. இராமநாதன் 5.6.1955 81 கடிதம் - 60 அய்யாமுத்து 18.6.1955 82 கடிதம் - 61 கதிரவன் 6.8.1956 83 கடிதம் - 62 11.10.1956 84 கடிதம் - 63 சேலம் தனபால் 5.1.1957 85 கடிதம் - 64 இராம. தமிழ்ச்செல்வன் 88 கடிதம் - 66 இராம. தமிழ்ச்செல்வன் 16.4.1959 89 கடிதம் - 67 தண்டபாணி 01.11.1960 90 கடிதம் - 68 தண்டபாணி 91 கடிதம் - 69 தண்டபாணி 8.11.1960 92 கடிதம் - 70 மூன்றாம் மகள் இரமணி 93 கடிதம் - 71 இராசேந்திரன் 94 கடிதம் - 72 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 95 கடிதம் - 73 கந்தசாமி 4.6.1962 96 கடிதம் - 74 விசுவநாதம் 23.11.1962 97 கடிதம் - 75 பொன்னடி 28.11.1962 99 கடிதம் - 76 9.1.1063 101 கடிதம் - 77 சாரங்கபாணி 24.06.1963 102 கடிதம் - 78 கவிஞர் தமிழன்பன் 26.10.1963 104 கடிதம் - 79 வித்துவான் செகதீசன் 31.10.1963 105 கடிதம் - 80 முருகு சுந்தரம் 05.11.1963 106 கடிதம் - 81 புலவர் 06.11.1963 107 கடிதம் - 82 முருகுசுந்தரம் 16.11.1963 108 கடிதம் - 83 தமிழன்பன் 28.11.1963 109 கடிதம் - 84 பொன்னடி 10.12.1963 110 கடிதம் - 85 தமிழன்பன் 18.12.1963 111 கடிதம் - 86 ஜகதீசன் 31.03.1964 113 கடிதம் - 87 முருகுசுந்தரம் 1964 114 கடிதம் - 88 மன்னர் மன்னன் 10.4.1064 116 கடிதம் - 89 செகதீசன் (தமிழன்பன்) 15.4.1964 117 கடிதம் - 90 இராசேந்திரன் 119 கடிதம் - 91 இலக்குவனார் 119  பாரதிதாசன் கடிதங்கள் கடிதம் - 1 11.11.33 புதுச்சேரி தோழர் வ.ரா. அவர்கட்கு நமகாரம். வெகு நாட்களுக்குப்பின் முதற்கடிதம்: நான், மனைவி, 4 பிள்ளை 50 ரூபாய் சம்பளம் பழைய குள்ள வேலை, ஆக க்ஷேமந்தான். ஆதி முதல் பெரிய மேடையில் ஆட்டம். சம்ஸாரத்தில் மாட்டிக்கொண்டதுண்டா தாங்கள்? ஒரு சங்கதி. பழய பாட்டை வெளிப்படுத்தி என்னைக் கொலை பண்ணாதீர்கள். நல்லதென்று தோன்றினால் பிரசுரிக்க அனுப்பி யுள்ளேன். உங்கள் - என் புதிய - நண்பர் சங்கு ஆசிரியர் தோழர் சுப்பிரமணியன் அவர்கட்கு நமகாரம். ஒரு தடவை இந்தப் பக்கம் வந்து போகலாகாதா? என்னை அழைக்கமாலிருக்க இதைச் சொல்லவில்லை. அதென்ன ஆசிரியரென்றால் பிள்ளையார் சுழி முதல் முற்றிற்று வரைக்கும் அல்லவோ எழுதவேண்டும். மணிக் கொடியில் அப்படியில்லை போலிருக்கிறதே? தங்கள் கனக. சுப்புரத்தினம் விலாசம் : கனக. சுப்புரத்தினம் 12, செங்குந்தர் தென்னண்டை வீதி புதுச்சேரி.  கடிதம் - 2 4.8.35 புதுச்சேரி நண்பர் கோகிலன் சாமி அவர்கட்கு நலன். விரும்புவதும் அஃது. எனது மாணவர் எனது நண்பரிடம் உதவி ஆசிரியராக வருவ தென்றால் அதைவிட எனக்குச் சந்தோஷம் தரத் தக்க விஷயம் வேறென்ன இருக்கிறது? நண்பரே! புதிய வாத்தியார் பொன்னம்பலத்தைத் தங்கட்கு இதன் மூலம் அறிமுகப்படுத்துகின்றேன். அவருக்குத் தங்களாலான உதவிகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். தங்கள் அன்புள்ள கனக. சுப்புரத்தினம்  கடிதம் - 3 3.4.36 சௌபாக்கியவதி பழநி அம்மாளுக்கு, ஆசீர்வாதம்செய்து எழுதும் சேதியாவது நானும் எனது நண்பர்களும் பெங்களூரில் க்ஷேமமாக இருக்கிறோம். நீயும் பாப்பா, சின்ன பாப்பா, குழந்தை, தம்பி முதலியவர்களும் சௌக்கியந்தானா? இன்னும் நாலு நாளில், வந்த காரியம் முடிந்துவிடும், வந்து விடுகிறேன். பத்திரமாக இருங்கள். சிப்பாயிடம் 10 ரூபாய் கொடுத்து அனுப்பினேன். வந்து சேர்ந்ததா? உனது தகப்பனார் வந்துவிட்டாரா? திரெக்தேர் சம்பளம் கொடுத்தாரா? தெரிவிக்கவும். இங்கு ஆகவேண்டியதையும் எழுது. நான் பெங்களூரில் இருப்பதை யாரிடமும் சொல்லவேண்டாம். என் விலாசம்: கனக. சுப்புரத்தினம் மே/பா யாசீன் 127. அல்சூர் பஜார் ரோடு பெங்களூர்.  கடிதம் - 4 14.4.1936 சினிமா உலகம் mt®f£F* வணக்கம். நான் நேற்றுத்தான் பெங்களூரிலிருந்து வந்தேன். நான் பெங்களூருக்குப் போய் 15 நாட்கள் ஆயின. காரணம்: தேசிங்குராஜன் சரித்திரத்தை, அச்சின் கம்பெனியின் மூலம் மாடர் வாய் டூடியோவில் பிளேட் கொடுத்து வந்தது. தங்கள் மடல் பார்த்தேன். தங்கள் பேரூழியத்தைப் பற்றி முதலில், தென்னாட்டில் சினிமாக் கலையின் முளை தொடங்கியே பத்திரிகை ஆரம்பித்த தங்கள் தைரிய உள்ளத்தைப் பற்றி நீண்ட கட்டுரை எழுதக் காத்திருந்தேன். சித்திரை மலரில் கலந்துகொள்ளக் கொடுத்து வைத்தேனில்லை. என்னை மன்னிப்பீர்கள். இனி அடிக்கடி, பாட்டு - சிறுகதை - ஆயம் - கட்டுரை முதலியன எழுதுவேன்.  கடிதம் - 5 15.1.38 புதுவை ஸ்ரீ வ.ரா. அவர்கட்கு, நமகாரம். நலன் விரும்புவதும் அஃது! நான் கோவிந்தராஜலு என்னும் பிள்ளையாண்டானிடம் தங்கட்கு ஒரு புத்தகமும், தங்கள் மூலம் ஸ்ரீசாமிநாதன் அவர்கட்கு ஒரு புத்தகமும் ஆக இரு புத்தகங்கள் கொடுத்துவிட்டு வந்தேன். ஸ்ரீ சாமிநாதன் அவர்களுக்கு அதைச் சேர்ப்பிக்க விரும்புகிறேன். கோவிந்தராஜலுவை நான் அங்கு விட்டு வந்தது சரியல்ல என்பது தங்கள் அபிப்பிராயம். நான் என்ன செய்வது? நான் குடும்பத்தோடு புதுவைக்கு வருவதற்குத் தங்களைப் பணம் கேட்டேன். உங்களிடம் இல்லை. குழந்தையின் காப்பை விற்றதில் 6 பேருக்குத்தான் டிக்கட் வாங்க முடிந்தது. ராமாநுஜர் கம்பெனியில் 4 நாளைக்குக் கோவிந்தராஜனுக்கு இடமில்லை என்றால் நூதனமாகவே இருக்கிறது. ஆனால், இது நான் எதிர்பார்த்ததுதான். என்னை லீவு சம்பளமில்லாமல் வாங்கிக் கொண்டு வரச் சொன்னீர்கள். அப்படி வரச்சொன்னதால், நான் வந்திருக்கிறேன் என்பது ராமாநுஜர் கம்பெனிக்குத் தெரிந்திருந்தும் என்னை ராமாநுஜர் கம்பெனியானது அங்குச் சாப்பிடாதிருக்கும்படி விரட்டிற்று. நான் சென்னையில் உங்களை நம்பிக் கால்வைத்த தேதியிலிருந்து கடைசிவரை எங்குச் சாப்பிடுகிறாய்? சாப்பிடு மிடத்தில் வசதி எப்படி? என்று நீங்கள் விசாரித்ததே கிடையாது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தர்மங்களில் சில தங்களிட மிருந்து நீங்கி வருவதை, நான் கண்டு வருந்துகிறேன். கோவிந்தராஜனுக்கு நீங்கள் 2 ரூபாய் கொடுத்ததாக எழுதியிருக் கிறான். அவன் திரும்பவும் உங்களிடத்தில் வருகிற மாதிரியில் நீங்கள் நடந்துகொள்ளவில்லை. சில சமயம் வந்தால் செலவுக்குப் பணம் கொடுக்கலாம். நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் நாலைந்து தினங்களில் அங்கு வந்து நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை வாங்கி, குருசாமி மாமனார் வழியில் அடகு வைத்திருக்கும் (75 ரூபாய்க்கு) அட்டிகையையும், நான் மவுண்ட்ரோட் மார்வாரியிடம் 25 ரூபாய்க்கு அடகு வைத்திருக்கும் காப்பையும் மீட்டுக் கொண்டு புதுவைக்குத் திரும்பவேண்டும். உங்கள் வார்த்தையை முதலில் நம்பிய குற்றத்தால், நான் அடைந்த இன்னல்களும் அவமானமும் அளவற்றவை. அதன் பிறகு நீங்கள் ஜனவரி முதல் தேதி 40 ரூபாயும் - 20ந் தேதி 100 ரூபாயும் கொடுப்பதாகச் சொன்னதை நம்பியதானது. நான் இழைத்த இரண்டாவது பெருங்குற்றம். அதனால் படாத இம்சைகள்! அவமானங்கள்! நீங்கள் எனக்குத் தருவதாகச் சொன்ன 300 ரூபாய்க்கு எனக்கேற் பட்டுள்ள செலவு - கஷ்டம் - அவமானம் ஆகியவற்றில் எந்த ஓர் இம்மியையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. போனால் போகிறது. உங்கள் பெரிய பீடம் என் நிலையை நான் இரண்டு வார்த்தையில் சொல்லிக்காட்டுவதைக்கூடக் கேட்கக் காது கொடுப்பதில்லை. ஆனால் உங்களுடைய இந்தக் கொடூரமான செய்கைகள் என்னிட முள்ள எனது சினேக தர்மத்தை ஓர் அணுக்கூட மாற்றிவிட மாட்டா. நான் இன்றைய ஐந்தாம் நாள் அங்கு வருகிறேன். பணம் தயாரித்து வைக்கவும். நீங்கள் தவறினால் எனக்குக் கஷ்டம். பிறபின் பாரதிதாஸன் விலாசம் : பாரதிதாஸன் 28 அம்பலத்தாடு ஐயர்மடம் வீதி புதுச்சேரி.  கடிதம் - 6 19.2.1939 தங்கள் கடிதம், வந்து சேர்ந்தது. அதில் தமிழ்நூல் நிலையத்தின் சொந்தக்காரர் இருவர் கையொப்பமும் இருந்தன. இப்போதுதான் அத்தான் எனக்கு ஒருவித - நிலையான - நம்பிக்கை ஏற்பட்டது. ஈ.வே.ரா. அவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் குறித்துள்ள தேதியில்- அல்லது ஒருவாரம் பிந்தி அனுப்பிவிடுகிறேன். ஹிரண்யன் முடிந்துவிட்டதாகக் கேள்வி. ராப்பரில் ஒரு படம்: சேனாபதி - மாண்டுகிடக்கும் ஹிரண்யன் முதலியவர்களின் மத்தியில் கட்டாரியும் கையுமாக - கடைசி டைலாக்கைப் பேசிக் கொண்டிருக்கிறான். கூடுமானால், இரண்டு கலரில்! ஆரம்பப் புத்தகமாயிற்றே என்று இதைக் கூறினேன். மற்றப்படி உங்கள் உத்தேசத்தில் எனக்குப் பூர்ண திருப்தி! மறுப்பில்லை! புதுவையில் குடும்பத்தை நடத்துவதென்பது எனக்குச் சிரமமா யிருக்கிறது. வேறொன்றுமில்லை... நானிருக்கும் வீடு மிகச் சிறிது. வேறு வீடு ஒன்று பார்க்கிறேன். அகப்பட்டிருக்கிறது. ... ... ம் - கடைசியில் - குடி போகிறேன்... ... இந்த மாதம் இ... ... நான் ஈ.வே.ரா. எழுதி... தோழர்கள் - பொன்னம்பலனார் முதலியோருக்கு வணக்கம். தோழர் நயினாவுக்கும். தங்கள் தாழ்மையுடன் பாரதிதாஸன்  கடிதம் - 7 தோழர் அத்தான் அவர்கட்கு வணக்கம் பெரியார் விடுதலைக்கு எனது மகிழ்ச்சி. தோழர் பரமாநந்தத்திடம் பைண்டு கவிதைகள் 1 ராப்பர் 2 இரண்யன் 5 தயவு செய்து கொடுத்தனுப்ப வேண்டுகிறேன். 24.5.39 தங்கள் பாரதிதாஸன்  கடிதம் - 8 23.8.39, புதுச்சேரி தோழர் நடேச சுவாமிகளே. என்ன நடந்தது? கம்பெனி விஷயம் என்ன? உம்மைப் பற்றிய விசேஷம் என்ன? துளிகூடத் தகவல் தெரியப்படுத்துவதே இல்லை நீர். உமக்கு அவ்வளவு வாழ்வு வந்துவிட்டது. சரி தெரிவிக்க வேண்டாம். சௌமியன் படம் அரிசிப்பானைக்கு அடிப்பானையில் தூங்குகிறதா? சரி தொலையட்டும். தோழர் ராஜவேலு எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னைப் பிச்சைக்காரன் பாட்டு எழுதிக்கேட்டிருக்கிறார். *vªj இடம்? முன்னும் பின்னும் எப்படி? பாட்டுப்பாட அனுமதித்தார்களா? பிச்சைக்காரன் டைலாக் இருந்தால் தெரிய வேண்டும். கம்பெனிக்கு வேண்டியவைகளை அவர்கள் கேட்க வேண்டும். ஆக்டர்கள் கேட்டதற்காக எழுதுவது பிழையல்லவா? இவைகளை ராஜவேலுவிடம் தெரிவி. பிறரிடம் தெரிவிக்காதீர். மனதில் போட்டு மூடிவையும். உடனே பதில் போடுக. இல்லை உமது இஷ்டம். பாரதிதாஸன் இதனுடன் இருக்கும் கடிதத்தை டாக்டர் சம்பந்தம் அவர்களிடம் சேர்க்க.  கடிதம் - 9 Dated: 31.5.1941 BHARATHIDHASAN PONDICHERRY தோழர் ராஜவேல்! நலம் உண்டாகுக. சாம்பார்ப்பொடி கிடைத்தது. ஆதரவு இல்லாததால் மாதப் பத்திரிகையாக்கிவிட நினைத்திருப் பதாகக் கூறுகின்றாய். அந்த முயற்சி எப்படி? கொள்கையை மாற்றிக்கொண்டு நமது கொள்கையுடைய ஒருவரை ஆசிரியர் என்று குறிக்கட்டும் நன்றாக நடக்கும் அல்லது பாரதிதாசன் என்று பெயரிடலாம். ஆசிரியர் என்று குறிப்பிட்டால் கூட இரண்டு மாதங்களுக்கு மேலே 200 பேப்பர் விற்கும்படி செய்ய முடியும். எதற்காகச் சொல்கிறேன். அழகிய பத்திரிகை முன்னேற்ற மின்றி இருக்கலாமா? மனம் துன்பம் அடைகிறது. கவிதைகள், நாடகம், சிறுகதை, தமிழர் இயக்கக் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுதவேண்டும். என் பெயருக்காக வாங்குவார்கள் என்று எனது தோழர்கள் எண்ணுகிறார்கள். நானும் இந்த 2 மாத விடுமுறையில் இது சம்மந்தமாக, சுற்றுப்பிரயாணம் செய்யலாம். ஜாடையாகச் சொல்லிப்பார். நிற்க. சேலம் சபாபதி பிலிம்சார் மடல் எழுதினார்கள். சில நாளைக்கு முன் அதாவது ஜே.பி. கிருஷ்ணன் எழுதினார். தானும் ரத்தின சபாபதி யும், சேர்ந்து - சேர்த்த முதலாளிமார் தம்மையே எதிர்ப்பதாகவும். அதனால் தங்களுக்கு அந்தக் கம்பெனி விஷயத்தில் அதிகார மில்லை என்றும், அதுபற்றி இப்போதுள்ள - மு(த)லாளிகளுக்கு - எழுதுவது சம்பந்தமாக எழுதுங்கள் என்றும் எழுதினார்கள். நான் அப்படிச் செய்யவில்லை. நீ தகவல் விசாரிக்க வேண்டும். வேல்பிக்சர்ஸில் அவர்கள் பேச்சு நடக்கிறதா என்று. அவ்வளவுதான். பாவலர் என்னைக் கேட்காமலே பாரதிதாசன் பாட்டு என்று (அப்பூதியில்) விளம்பரம் செய்திருக்கிறார். சுத்த அம்பக் அது. பிறபின் பாரதிதாஸன்  கடிதம் - 10 GURU PICTURES PRODUCERS & DISTRIBUTORS 26, CANTINE STREET, PONDICHERRY. Ref. No. Camp : Pondicherry Dated : 6.4.42 தோழர் ராஜவேல்! நீ கஷ்டப்படுகிறாய். எந்த நிமிஷமும் அதை நினைக்கிறேன். *** *** தோழர் ஜோதிக்கு என் வணக்கம். ஏதாகிலும் வேலை நடைபெறுகிறதா? அவசரமில்லை. அவர்கட்கு ஓய்வுள்ள சமயம் ஆகட்டும். *** *** இது கொண்டுவரும் நண்பர் நடேசன் அவர்களுக்கு அநேகக் மடல்கள் கொடுத்தனுப்பியுள்ளேன். இவருடன் போ. அவ்வப்போது என்ன பதில் கிடைத்தது என்பதை அவருடன் இருந்து எனக்கு எழுது. அவருக்கு வேண்டிய சரீரப் பிரயாசை அனைத்தும் செய். *** *** பிற விஷயங்கள் தெரிந்திருந்தால் எழுது. அனைத்தும் நடேசன் தெரிவிப்பார். பாரதிதாசன்  கடிதம் - 11 Pondicherry 18.8.1942 Bharathi (dasan) Pondicherry தோழர் ஞானமணி, சங்கீத டைரக்டர், சேலம். நான் சிலநாள் முன் சென்னைக்கு வந்திருந்தபோது, பெருமாள் கோவில் தோட்டத்தெரு விலாஸத்தில் தேடினேன். இல்லை. நேற்று முன்தினம் சென்னையில் சிலரால் சேலத்தில் இருப்ப தாகச் கேள்விப்பட்டேன். அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? சமீபத்தில் சென்னைக்கு வரும் உத்தேசமுண்டா? உங்களுடைய தனி விலாஸத்தை எனக்குத் தெரியப்படுத்தவும். பிற பின்.  கடிதம் - 12 16.1.43 அன்புள்ள கோவிந்தன் அவர்கட்கு, குடியானவன் வந்தது. ரஷ்யாவையும், அங்குள்ள குடியானவர்களின் நிலையையும் கேட்ட இங்குள்ள குடியானவன் நிலை இப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு நன்மையைப் பெறவேண்டி, யுத்தத்தை மறுக்கிறார்கள். இது தற்காலிக ஏற்பாடு. அறம் என்பது தற்காலிகம் முதலிய தார்க்கிகத்துக்கு உட்பட்டதன்று: ஒரு நன்மையை எதிர்பார்த்ததும் அன்று. -எதிர்பாராத நிலையில், ஒரு ரிக்ஷாக்காரன் எதிரியால் தாக்கப் படுவானானால், மற்றொரு ரிக்ஷாக்காரன் அவனுக்கு உதவுவதை அவனது தன்னலம் எதுவும் மறுக்காது: தடுக்காது. உதவுவோன் அறம் செய்வோன்: நிறைந்தான் என்பதையோ மற்றதையோ மாற்றுவது தேவை யில்லை என்று தோன்றுகிறது. அடியோடு நீக்கிவிடலாம். அப்படிச் செய்வதானால் நான் உடனே வேறு எழுதித் தருகிறேன் வேறு தலைப்பில்!  கடிதம் - 13 18.4.43 அன்புள்ள தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு, நான் என் வீட்டில் தாமதித்திருக்கும் தோழர் வை.சு.சண்முகம், மஞ்சுளாபாய், இவர் களுடன் இன்று புறப்பட்டுக் கானாடு காத்தான் வை.சு.வீட்டிற்குப் போகி றேன். அங்கு நான் தாங்கள் வரவை அதிவிரைவில் எதிர்பார்க்கிறேன். காரணம் : 1. தங்களைப் பற்றியது. (புதுச்செய்தி) 2. கம்பனி அன்புள்ள தோழர் கிருஷ்ணராஜ் ரெட்டி யார்க்கும் இவ்விஷயத்தைச் சொல்லவும். கம்பனி விஷயம் விரை வில் துவக்க வேண்டும். தங்கள் அன்புள்ள பாரதிதாசன் நாமக்கல் தோழர்கட்கும் கம்பனி விஷயத்தைச் சொல்லி சேர்க்கக் கூடியவர்களை இருந்தால் அறிந்து வரவும். தங்கள் பாரதிதாசன்  கடிதம் - 14 11.7.43 புதுவை தோழர் M. செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு, நலம். நான் ஏற்கனவே சொன்னபடி நாகர்கோவிலுக்குப் போவது தடைப்பட்டது. அவர்கள் மகாநாட்டை ஒத்திவைத்துவிட்டார்கள். முத்தமிழ் அரங்கு விஷயமாக யோசித்தீர்களா? அது பற்றித் துரிதமாக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நான் தங்களை எப்போது சந்திப்பது என்பது பற்றிப் பிறகு தெரிவிக்கிறேன். தோழர் N. கிருஷ்ணராஜ் அவர்கட்கு என் நலம் தெரிவிக்கவும். தோழர் சாமிநாதன் அவர்கட்கும். தங்கள் பாரதிதாசன்  கடிதம் - 15 20.7.43 தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு, நான் கடைசியாக எழுதிய கடிதத்திற்குப் பதில் இல்லை. முத்தமிழ் அரங்கு வேலை துரிதமாக நடைபெறுகிறது. அதே நிறுவனத்தில் நம் புத்தகம் அனைத்தையும் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. உங்கள் இருவர் பெயரையும் முதலில் போட்டு இருக்கிறார்கள். பணத்தைத் தயார் செய்யவும். எப்படி என்றால் உங்கள் பெயரிலேயே பாங்கில் போட்டு, ரசீதி மாத்திரம் வை.சு. ஷண்முகம், மஞ்சுளாபாய், இன்ப மாளிகை, இராமநாதபுரம் ஜில்லா என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும். இன்று நான் ரே()டியோவிற்காக சென்னைக்குப் போகிறேன். 23.7.43 புதுவை வந்து. அன்று, அன்... மறுநாளோ திருப்பத் தூருக்குப் போவேன். உங்கள் சொந்த விஷயத்தை(க்) கவனித்துக் கடிதம் எழுதுகிறேன். பாரதிதாசன் முகவரி : தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கள் போடிநாய்க்கம்பட்டி முத்துக்காப்பட்டி நாமக்கல் போட் சேலம்.  கடிதம் - 16 23.7.43 அன்புள்ள தோழர் M. செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு, மடல் கிடைத்தது. நலம். நான் 25.7.43ல் தமிழர் கழகம் திருப்பத்தூர் ராமநாதபுரம் ஜில்லா - விழாவில் இருப்பேன். 26.7.43 இல் அதை விட்டுக் கிளம்பி 27.7.43, 28.7.43 ஆகிய இரு தேதியிலும், வை.சு. மஞ்சுளாபாய் அவர்கள், இன்பமாளிகை, கானாடுகாத்தான் என்ற விலாசத்தில் இருப்பேன். அதன்பின், நாகர்கோவில் விழாவைத் திடீரென்று 30.3.43ல் வைத்துக் கொண்டதை நான் ஒத்துக் கொண்டதால் தேதியில் அங்கிருக்க வேண்டும். ஆகையால் நீங்கள் திருப்பத்தூர் அல்லது கானாடுகாத்தான் இரண்டிடத்தில் கட்டாயம் என்னை வந்து பிடித்துவிட வேண்டும். N. கிருஷ்ணராஜ் அவர்களும் நீங்களும் சேர்ந்து ஒரு முடிவு கட்டிக் கொண்டு வந்துவிடவேண்டும். என்ன முடிவு என்றால், முத்தமிழ் அரங்குக்கு நீங்கள் தனித்தனியாவோ சேர்ந்தோ 500 ரூபாய் பங்கு ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நான் தங்கள் பெயர்களைச் செட்டி நாட்டிலும் திருப்பத்தூரிலும் சொல்லிவிட்டேன். மற்றப்படி தங்கள் விஷயத்துக்கு நன்மைக்கு நான் பொறுப்பாளி. இருவரும் வராவிட்டால் ஒருவராவது கட்டாயம் வர வேண்டும். முத்தமிழ் அரங்கு சம்பந்தமாய் உங்களையும், இன்னும் பலரையும் சேர்த்து ஒரு முடிவு செய்தாயிற்று. அதை நீங்கள் நேரில் பார்ப்பீர்கள் வந்தால்! தங்கள் வரவை எதிர்நோக்கும். (ஒப்பம்) பாரதிதாசன் தோழர் M. செல்லப்ப ரெட்டியார் போடி நாய்க்கம்பட்டி, முத்துக்காபட்டி போடு நாமக்கல் T.K. சேலம்  கடிதம் - 17 10.10.43 தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு, நான் நலமே வந்து சேர்ந்தேன் நேற்று முன். இன்று இரவு 9 மணி வண்டிக்குச் சென்னை செல்கிறேன். நான் அங்கு 13.10.43 காலை வரைக்கும் உங்கள் வரவை எதிர்பார்ப்பேன். வராவிடில் அதன்பிறகு என் வேலைமேல் செல்லு கிறேன். என்னை நீங்கள் சந்திக்க வேண்டிய விலாசம்:- லிபரேடர் ஆங்கில தினசரி ஆபீ, மவுண் ரோடு, சென்னை. - மவுண் ரோடு எட் ஆபீக்கு எதிரில் வந்து விசாரித்தால் எதிரில் என்று கையால் காட்டுவார்கள். நம் தோழர்கள் கிருஷ்ணராஜ் அவர்கள், பெருமாள் அவர்கள், கருப்பண்ணன் அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்து உரித்தாகுக. இதுபோலவே ஒரு மடல் தோழர் க.கருப்பண்ணன் அவர் களுக்கும் எழுதி உள்ளேன். பாரதிதாசன் முகவரி : தோழர் மு.செல்லப்ப ரெட்டியார் போடிநாயக்கன்பட்டி முத்துக்காபட்டி போட் நாமக்கல் தாலுகா சேலம் ஜில்லா.  கடிதம் - 18 10.10.43 தோழர் கா. கருப்பண்ணன் அவர்களுக்கு, நலம். நான் நேற்று முன் புதுவை வந்து சேர்ந்தேன். இன்று இரவு சென்னை செல்கிறேன். சென்னைக்கு இது கண்டவுடன், தோ. செல்லப்ப ரெட்டியாரை அனுப்பி வைக்கவும். நான் சென்னையில் 13.10.43 வரைக்கும் ரெட்டியாரை எதிர்பார்ப்பேன். வாராவிடில் அதற்குமேல் அவரை எதிர்பார்க்க மாட்டேன். இந்தக் கடிதத்தை ரெட்டியாருக்கு உடனே அனுப்பி வையுங்கள். அவருக்கும் ஒரு கார்டு போட்டிருக்கிறேன். மற்றத் தோழர்கட்கு என் வாழ்த்து. நான் சென்னையில் இருக்குமிடம். லிபரேட்டர் மவுண்ட்ரோட் சென்னை. ஹெட் போடாபீ எதிரில் பாரதிதாசன் தோழர் கா. கருப்பண்ணன் அவர்கள் வி.பி. கோர்ட் தலைவர் நாமக்கல் சேலம் ஜில்லா  கடிதம் - 19 பாரதிதாசன் 88, பெருமாள் கோயில் தெரு புதுச்சேரி 19.10.43 அன்புறு தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு வாழ்த்து! தங்கள் 17.10.43 மடல் கிடைத்தது. நீங்கள் சென்னைக்கு வராதது நல்லதாயிற்று. சென்னையில் எந்தத் தொல்லையும் தோன்றவில்லை; ஆனால் ரயில் மாத்திரம் தாம்பரத்தோடு நின்றுவிட்டது; உடைப்புக் காரணமாக. நான் அங்குத் தங்கிய நான்கு நாட்களிலும் ஒரு நிமிஷம் கூட ஒரே இடத்தில் தங்காது நம் அரங்கு விஷயமாகப் பார்க்கவேண்டிய எல்லோரையும் பார்த்துவிட்டேன். எனக்கு ஏற்பட வேண்டிய அனுபவம் அனைத்தும் ஏற்பட்டது. அரங்கு விஷயமாக நமக்குச் சென்னையில் அபரிமிதமான ஆதரவு இருக்கிறது. அதாவது - நடிகர், வாத்தியக்காரர், ஆடல் வல்லவர், பாடுபவர் இதுவுமன்றி, பெரிய மனிதர்கள், செல்வாக் குடையவர்கள், பத்திரிகாசிரியர்கள் ஆகியோர். ஆனால் நான் நேரில் பேசிக்கொண்டபடி நாமக்கல்லில் ஆரம்பித்தோமானால் மேற்சொன்ன ஆதரவுகள் எட்டிய உறவாகிவிடுகின்றது. நடிகர்கள், பாடகர், ஆடல் வல்லவர், வாத்தியக்காரர், ஆகியவர் களில் ஒருவராவது சென்னையைவிட்டு, நிலையாக நாமக்கல்லில் தங்க சம்மதிக்கவில்லை. அவர்கள் சம்மதிக்கும்படி செய்யவேண்டுமானால் மாதம் ஒன்றுக்கு - இடம் தந்து, சோறு தந்து ஐம்பது ரூபாய் கொடுப்ப தற்குப் பதிலாக, இருநூற்றுப் ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டிய தாகிறது. ஆதரவாளர்களைப் பற்றி ஓர் உதாரணம்:- சென்னை ரேடியோ நிலையத்தில் இருக்கும் நமது நண்பர் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் சாமிரத்தினம் என்னும் சங்கீத டைரக்டர் சென்னையில் இருந்துகொண்டு நாமக்கல்லில் நமக்கு என்ன ஆதரவு தரமுடியும்? அவரிடத்தில் நமக்கு ஆக வேண்டிய எவ்வளவோ உண்டு. அவரின் கீழ் வாத்தியக்காரர், இசை யறிஞர் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இதுவுமல்லாமல் சென்னையில் நாமிருந்து ஆரம்பித்தால் லிபரேட்டர் ஆசிரியர் முதலிய அறிஞர்களின் பார்வையிலும், ஆதரவிலும் நடைபெறும் என்று நம்புகிறேன். சென்னையில் இருந்துதான் நாம் அரங்கு விஷயத்தை ஆரம்பித்து ஒத்திகை நடத்தி உருவாக்க வேண்டும், என்ற முடிவுக்குவந்தேன். இந்த முடிவு, நானே செய்துகொண்டதல்லவே அல்ல. தக்க அனுபவசாலிகளோடு கூடி ஏற்படுத்திய முடிவு ஆகும். அரங்கு விஷயம் சென்னையில் நடைபெறும்போது நீங்கள் கொஞ்ச நாளும், கிருஷ்ணராஜ் ரெட்டியார் கொஞ்ச நாளும், நான் கொஞ்ச நாளுமாகச் சென்னையில் தங்கித்தான் அரங்கு விஷயத்தை உருவாக்க வேண்டும். எனக்கு நம்பிக்கைத்தரும் இந்த முடிவை நீங்கள் எல்லோரும் மறுக்க மாட்டீர்கள் என்று நினைத்தே, நான் சுமார் முப்பந்தைந்து ரூபாய் வாடகைக்குள் ஒரு தனி வீட்டையும் அரங்கின் காரியாலயத்திற்காக இராயபேட்டைக்கருகில் அமர்த்தும்படி, நடிகை S.R. ஜானகி அவர்களிடத்திலும், அவர் கணவர் சினிமா டைரக்டர் S. கோசலம் அவர்களிடத்திலும் சொல்லித் திட்டம் செய்துவிட்டேன். இதுவு மல்லாமல் நாம் பேசிக் கொண்ட இரத்தினசாமி நாயடு மகள் அரங்க நாயகி, நாட்டியம் நடராஜன், மி பத்மா, லக்ஷ்மிகாந்தன், கமலாபாய், பாலா, நாட்டியக்காரரும், ஓவிய ஆசிரியரும் ஆகிய தனபால், இராஜ வேல், பரதநாட்டிய சங்கரிபாய் மற்றும் சாமிரத்தினம் லிபரேட்டர் கூட்டம், சென்னை ரேடியோ நாடக ஆசிரியர் M.N.M. பாவலர் கூட்டம், விடுதலை ஆசிரியர் கூட்டம், செந்தமிழ்ச் செல்வி கூட்டம், மைலாப்பூர் கலாசாகரம் (இசை, நடனம், ஓவியம், சிற்பம், கதகளி பயிலும் பாட சாலை) கூட்டம், சுயமரியாதைக் காரர்களின் பல்பெருங்கூட்டம் ஆகிய அனைவரும், நாம் சென்னையில் துவக்கும் தேதியையும், இடத்தை யும் மிக்க ஆவலாக நிமிடந்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதைத் தங்கட்கு அறிவிக்க விரும்புகிறேன். சென்னையில் துவக்கும்போது ஆரம்பத்திலிருந்து மூன்று பேர் அல்லது நான்கு பேருக்குத்தான் சம்பளம் கொடுக்க நேரிடும். எல்லோருக்கும் (எல்லோருக்கும் என்றால் நமக்கு வேண்டிய சுமார் பதினைந்து பேர்) காரியாலயத்திற்கு வரும்போது, போம்போது ரிக்ஷா, டிராம் சிலவுக்குத்தான் கொடுக்க வேண்டும். காரியாலயத்தில் தங்கும்போது சாப்பாடுதான்! இப்படி இரண்டு மாதம்! இந்த இரண்டு மாதத்தில் அரங்கு நடைபெறும் நிலைமையை அடைந்து விடும். அப்போது, அவர்கட்குத் தக்கபடி ஊதியம் பேசி எக்ரிமெண்டு முடித்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாதத்திற்கு நாம் செலவு செய்ய வேண்டிய தொகை சுமார் அறுநூறு ரூபாயாகவிருக்கும். முதல் பிளே (Play) நடத்தி முடிக்கும் வரைக்கும் பப்ளிசிடி (Publicity), நகை, உடை, வாடகை உள்பட ஆயிரத்து நானூறு, அறுநூறு ஆக இரண்டாயிரம் ரூபாயாக இருக்கும். அதற்குமேல் தக்க வருமானத்தை எதிர்பார்க்கலாம். அரங்கின் அபிவிருத்தியை எதிர்பார்க்கலாம். அங்கு, இவற்றையெல்லாம் கலக்க வேண்டிய தோழர்களிடம் கலக்கவும். சென்னையில் தங்கியிருக்கத் தங்கள் வழியில் நடிகர், வாத்தியக் காரர் இருந்தால் திட்டப்படுத்திக் கொள்ளவும். மற்றபடி அவ்விடத்தில் அரங்குக்குப் பணம் எவ்வளவு சேர்ந்தது? இதில் முக்கியமாகக் கவனம் செலுத்தக் கேட்டுக்கொள்கிறேன். இது கண்டவுடன் தாங்கள் அ.பழ. பழநியப்ப செட்டியார், முத்தமிழ் நிலையம் மேனேஜிங் ஏஜண்டு விவேகானந்தா கல்விக்கழகம் ஆவினிப்பட்டி (Ramnad Dt) என்ற விலாஸத்துக்குத் தொகையை அனுப்பிவிட வேண்டியது. நிற்க நான் இந்த மாதம் இங்கிலீஷ் இருபத்து ஏழு (27) இரவு முதல் ஆறு நாள் விடுமுறையில் இருப்பேன். நீங்கள் இதற்குள் சுமார் ஆயிரம் ரூபாயாவது தயார் செய்துவிட்டு, குறைந்த பக்ஷம் ஐநூறு ரூபாயாவது கையில் எடுத்துக்கொண்டு, இருபத்தாறாம் தேதிக்குள் புதுவைக்கு நேரே வந்துவிட வேண்டும். தங்கள் கூட நமது தோழர் கிருஷ்ணராஜ் அவர்கள் வரக்கூடு மானாலும் அவசியம் அழைத்து வரவேண்டும். இதனுடன் வைத்துள்ள பீ (துண்டு) கடுதாசியைப் போல் சென்னை யில் நமக்கு வேண்டிய இடத்தில் ஏராளமாக இருக்கிறது. அதில் பத்து மணங்கு காகிதம் உடனே நாம் வாங்கி விட வேண்டும். நம் காரியத்திற்கு இக்காயிதம் உயிர். நாள் கடந்தால் கிட்டாது. கடையில் வாங்க வேண்டு மானால் இதற்கு நாம் கொடுக்கும் விலையை விட சுமார் ஐந்து பங்கு கொடுத்தாலும் கிடைக்கும் என்பது சந்தேகம். இவற்றிற்கெல்லாம் இது கண்டவுடன் விவரமாகவும், தெளிவாக வும், அவசரமான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இடையில் நாட்கள் இல்லை. கிருஷ்ணராஜ் அவர்களுக்கு இந்த முக்கியமான லெட்டரைக் காட்டி, அவர்களுடைய உறுதியான பதிலையும் தெரியப்படுத்தவேண்டும். மற்றும் தோழர்கட்குத் தெரியப்படுத்தவும். தங்கள் பாரதிதாசன்  கடிதம் - 20 13.11.43 அன்புள்ள தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு நலம்.. தங்கள் சுருக்கமான கார்டு வந்தது. நான் இன்று காலையில் தான் சென்னையிலிருந்து வந்தேன். நான் இரண்டு முறை தாங்கள் போனபின் சென்னை சென்று திரும்பினேன். கம்பெனி ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... சீக்கிரம் முடியும். நீங்கள் ஊருக்குச் சென்று பல நாட்கள் சென்று மடல் எழுதினீர்கள். அதற்குள் எனக்குப் பலவித யோசனைகளை உண்டாக்கிற்று. அன்றிரவு நாம் வீதியில் ஷாப்புக்கடையின் குறட்டில் உட்கார்ந்து பேசிய பேச்சுகள், என் வாழ்க்கையிலேயே சோககரமான கட்டம். இன்றைக்குச் செட்டியார் எழுதிய கடிதத்தில் அரங்கு விஷயத்தைப் பற்றி எழுதியுள்ளார்கள். மற்றும் அவர்கள் புத்தக வெளியீட்டுக்காகச் சுமார் 900 ரூபாய்க்குச் சரக்குகள் வாங்கி யுள்ளார்கள். நான்கூட 50/- முன்முறை சென்னை சென்றபோது கம்பெனிக்குக் கொடுத்து வந்தேன். செட்டியார் வந்தால், அவர்களிடம், அரங்கு விஷயத்தை அவர்களே நடத்திக் கொள்ளும்படி சொல்லச் சொன்னாலும் சொல்லியிருக்கின்றேன். இதுபற்றிக் மடல் எழுதவும். அரங்கு விஷயம் எனக்கு முழு நம்பிக்கையை உண்டாக்குகிறது. கெடுதல் இராது என்று தோன்றுகிறது. அப்படி தங்கட்குப் படுகிறதா? என்பதை அறிய எனக்கு அடிக்கடி ஆவல் தோன்றுகிறது. கதை எழுதியாய் விட்டது. ஒரு நகல் எடுத்து உடனே அனுப்பி வைக்கிறேன். கோசலம். உதாரன். ஜானகி அமுதவல்லி பிறர் பின்பு. சட்டையப்பன் வராததால் வேலை மிதப்படுகிறது. சீக்கிரம் வருவான் என்று ராஜவேல் சொல்லுகிறான் - பார்க்கிறேன். மீண்டும் தங்களை ஒன்று கேட்கிறேன். இது பற்றி மன்னிக்கவும். இனிமேல் அரங்கு விஷயத்தில் - இடையில் - சிரத்தை குறையாதிருக்குமா? இதோடு நிறுத்திவிட்டால் தேவலை என்று கூடச் சொன்னீர்கள். இனிமேல் அப்படி வராதென்று உறுதி கூறுங்கள். இல்லாவிட்டால் மற்றவர்களைக் கொண்டு நடத்தும்படி ஏற்பாடு செய்யலாம். பதில் தேவை. (ஒப்பம்) - பாரதிதாசன் உயர்திரு. கிருஷ்ணராஜ் ரெட்டியாருக்குச் சொல்லவும். பா.  கடிதம் - 21 19.11.43 திருவாளர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு நலம். தங்கட்கு எழுதிய கார்டு கிடைத்திருக்கும். அதற்குப் பதில் எதிர்பார்த்தேன். கிடைக்கவில்லை. சென்னைக்குச் செல்வது எப்போது? அல்லது ஆள் அனுப்புவது எப்போது? நடிகர்கள் சேர்க்கப் படுகிறார்கள். அட்வான் ஏதாவது கொடுத்து எழுதி வாங்காததால், கமலா என்ற பெண் - வருகிறேன் என்று கூறிப் பிறகு மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இத்தனை நாட்கள் கடிதம் இல்லாமல் இருக்கிறீர்கள்? தொடர்ந்து கவனிக்காவிட்டால் சாப்பாட்டுச் செலவு வாடகை வீண்தானே! கதை முடிந்துவிட்டது. பாட்டுக்கள் செலக்ட் ஆய்விட்டன. தனிப் பேச்சு - எழுந்திரு தமிழா - முடிந்துவிட்டது - ஓர் இரவுக்கு வா - புத்தகம் முடித்து அனுப்பிவிட்டேன். சிறிது கற்றுக் கொண்டதும் அச்சிட வேண்டியது. சென்னைக்குப் போகிற தேதியைத் தெரியப் படுத்தவும். மோனகிராம் ஆயிற்று தாள் வேண்டும். உடனே பதில் எழுதவும். பாரதிதாசன் நண்பர் கிருஷ்ணராஜ் ரெட்டியாருக்கு நலம் கேட்கவும். POST CARD ADDRES ONLY INDIA POSTAGE திரு செல்லப்ப ரெட்டியார் போடி நாயக்கம்பட்டி நாமக்கல்.  கடிதம் - 22 20.11...... அன்புறுதோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு நலம். நேற்று எழுதிய என் கடிதம் தங்கட்குக் கிடைக்கும். தங்கள் கவர் இன்று கிடைத்தது. 3000 ரூபாய்க்கு மேற் போகாது. தங்கள் கடிதம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. நீங்கள் கட்டாயம் 2 அல்லது 23ல் புதுவைக்கு வந்து சேரக் கோருகிறேன். நீங்கள் சென்னையில் இந்த முறை ஒரு மாதம் தங்கினால் போதும் என்று நினைக்கிறேன். இராஜவேல் கூறிய சங்கீத வித்வான் தகவல் கிடையாது. ஆகையால் சுரஞானமுள்ள வித்வான் ஒருவரை அழைத்து வந்தால் போதும். நட்டுவனும் இன்னும் வந்து சேரவில்லை. இந்த இருவரால் நாட்டியம் தாமதப்படுகிறது. ஓரிரவுக்கானவை தயார். அதை அச்சிட வேண்டும் சில நாட்களில். அங்குள்ள தோழர்கட்கும், கிருஷ்ணராஜ் அவர்கட்கும் என் வாழ்த்து. பாரதிதாசன் குறிப்பு : தேன் தேவை தினை வந்தால் மிக நன்று. எடுத்துவரச் சிரமமாக இருந்தால் தேன் மாத்திரமாவது கொண்டு வரவும். பாரதிதாசன்  கடிதம் - 23 புதுச்சேரி 8.1.44 அன்புள்ள திரு. ரெட்டியார் அவர்களுக்கு வணக்கம், நானும், வை.சு.வும், கோனாப்பட்டார்களும் திருமண விஷயமாகப் பேசி முடிவு செய்த திட்டப்படி, இன்று வை.சு.வுக்கு ஒரு மடல் எழுதி யுள்ளேன். அந்தக் கடிதத்தின் நகலை இதில் வைத்திருக்கிறேன். இதை மனதில் வைத்துக் கொண்டு, தயவு செய்து தாங்கள் கரூருக்கு நேரில் மாப்பிள்ளை இருக்கும் இடம் தேடிச்சென்று, நான் தங்களை அனுப்பியதாகச் சொல்லிப் பேசவும். அதில் சொல்லியுள்ள திட்டங்களை அவர்களிடம் (கண்ணப்பரிடம்) கூறிப் பதில் தெரிந்து எழுதவும். ஏன் தங்களை அனுப்புகிறேன் என்றால் வை.சு. மூலமாகத் தான் மணமகனுடைய கருத்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நேரில் என்னிடம் திருமணப்பேச்சு நடக்கவில்லை. ஆதலால் ஒருவருக் கிருவராகக் கலந்துபேச வேண்டுமென்று நான் நினைக்கிறேன். பாரதிதாசன்  கடிதம் - 24 8.1.44 புதுச்சேரி உயர்திருவாளர் வை.சு. மஞ்சுளாபாய் அவர்கட்கு நலம். எனக்குத் தங்கையின் உடல் நலத்தை அடிக்கடி தெரியப் படுத்திக் கொண்டிருக்க வேண்டுகிறேன். *** *** நேற்று நான் சென்னையினின்று எழுதிய கடிதம் கிடைத் திருக்கும். மற்றும் உறுதியான செய்தியை இதில் எழுதுகிறேன். *** *** *kfkfdhil¡F¥ பணம் வந்திருக்கும். பெண்ணுக்காக மாப்பிள்ளை வீட்டார் கலியாணச் செலவுக்கு அவர்கள் தருவதானால், நாம் போட்ட திட்டம் திருமணம் நடத்துவது முடியாது. நிலைமைக்குத் தக்கபடி தான் போக வேண்டும். கண்ணப்பர் திருமணம் நடக்கும்போது கண்ணப் பரின் தங்கை திருமணத்தில் ஆகும் செலவைக் காட்டினால் நாம் சரசுவதி திருமணத்தில், வசந்தா செலவை நினைக்க வேண்டும். *** *** திருமணத்தின் முன்பே இருவர் படமும் தயார் செய்வதே வெளியிடுவது நல்லது திருமண அழைப்பில்... திருமணம் 23.01.44 இல் நடைபெறும் அல்லவா? திருமணம் 5 நாள் இருக்கையில் நாங்கள் அங்கு வந்தால் போதுமா? இதை நன்றாய் யோசித்து உடனே பதில் எழுதிவிடவும். அதற்கு முன்பும் வர முடியும். *** *** திருமணத்தின் நாள்முன்பே நோட்டீ அழைப்பிதழ் அடித்து எங்களுக்கு அனுப்பிவிடவும். அழைப்பிதழ் அடிக்குமுன்பே எனக்குக் காட்டவும். சரசுவதிக்கு, கம்மல், மூக்குத் திருகு, கால் ... கட்டாயம் அழைக்கப்படவேண்டிய விரிவான திட்டத்தில், வரை நாமக்கல் ரெட்டியார் வந்திருப்பார்கள் நான்கு நாட்கள் முன்பே நான் கொடுக்க வேண்டிய 250 ரூபாய் வந்து சேரும். எப்போது அது வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும். பாரதிதாசன்  கடிதம் - 25 8.1.44 புதுச்சேரி. அன்புள்ள தோழர்கள் கிருஷ்ணராஜ், செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கும், அன்புள்ள தோழர் கருப்பண்ணன், பெருமாள் முதலிய தோழர்கட்கும், அன்புடன் தெரிவிப்பது: என் மகள் சரசுவதிக்கும், கரூர்த் தோழர் கண்ணப்பருக்கும் 23.01.44ல் பெரியார் தலைமையில் fhdhLï‹gkhËifÆš *âUkz« நடக்கிறது. தாங்கள் முன்னதாகவே வந்திருந்து திருமணத்தை நடத்தித் தரவேண்டுகிறேன். நான் நேற்று புதுவைக்கு வந்தேன். நாளை இரவு சென்னை(ப்) புறப்படுகிறேன். அரங்கு (நிலையம்) செவ்வனே நடைபெறுகிறது. பதில் கடிதம் சென்னைக்கே எழுதவும். ஒப்பம் பாரதிதாசன்  கடிதம் - 26 19.1.44 புதுச்சேரி தமிழ் வாழ்க முத்தமிழ் நிலையம் சாந்தோம் ஹைரோடு, சென்னை தோழர் செல்லப்ப ரெட்டியார், கருப்பண்ணன் அவர்கள், கிருஷ்ணராஜ் அவர்கள் தங்கட்கு நான் எழுதினேனென்று முருகு இருந்து விட்ட விஷயமும், முருகு எழுதினாரென்று நான் இருந்து விட்ட விஷயமும் இன்று விளங்கிற்று! திருமணத்தில் தாலிகட்ட மறந்ததுபோல் இருக்கிறது இந்த விஷயம். தோழர் கா. பெருமாளுக்கும் தெரிவிக்க. பிறருக்கும் தெரிவிக்க. 75 அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். பெண்ணுடன் 20.1.44 இரவு புதுவையில் இரயிலேறி, 21.1.44ல் திருச்சி ஜங்சனில் இறங்கி நேரே (காலை) வேதாசலம் வக்கீல் வீட்டில் இறங்கி - அங்கு - ரிஜிடர் முடித்து, உடனே மத்தியான சாப்பாடு கே.ஏ.பி. å£oš* முடித்துக்கொண்டு, மாலை கருணாநிதி பார்க்கில் காப்பி சாப்பிட்டு - இரவு சாப்பிட்டு உடனே அதாவது 21.1.44 இரவு கட்டிப்பாளையம் நோக்கிப் புகலூர் போக வேண்டியது. இந்தத் திட்டம் திருச்சியில் அனைவர்க்கும் தெரிவித்தாய்விட்டது. நாமக்கல் - முத்துகாபட்டி நம் தோழர்கள் அவைகளை அறியும்படி செய்க. தாங்கள் மூவரும் திருச்சிக்கு வந்து அங்கிருந்து புகலூர் வந்து திருமணத்தைச் சிறப்புவிக்க வேண்டுகிறேன். தங்களன்பன் பாரதிதாசன்  N.B அழைப்பு தாமதமாக வருகிறது. காரணம் நேரில் கூறுகிறேன். பாரதிதாசன் சேலத்தில் தியேட்டர் அகப்படாததாலும் இடையில் நாடகத்தின் பிரதான நடிகைக்குக் காய்ச்சல் ஆனதாலும் குறிப்பிட்ட தேதியில் சேலத்தில் அரங்கு தடைப்பட்டது. அடுத்த தேதியில் - இடம் - நாம் திருச்சியில் சந்தித்து முடிவு செய்வோம். அநேகமாக - 23.1.44 திருமணத்தின் பிறகு சமீபத் தேதியில் நடத்தப்பட்டுவிடும். பாரதிதாசன்  கடிதம் - 27 1.2.44 சேலம்: உயர்திரு. செல்லப்ப ரெட்டியார், கிருஷ்ணராஜ் ரெட்டியார், கருப்பண்ண கவுண்டர், பெருமாள் அனைவர்களுக்கும் அன்புடன் தெரிவிப்பது: நான் நேற்று புறப் பட்டு இன்று 4 மணிக்கு இங்கு வந்தேன். ஆகவேண்டிய காரியங்களைச் செய்து வருகிறேன்.... ஈடுபடுத்தியுள்ளேன். ஏற்கனவே சேலம் பக்கத்தில் அரங்கு விஷயம் பேசப்பட்டு வருவதும் அதை ஆவலோடு எதிர்பார்த்து வருவதும் அறிய எனக்கு ஆச்சர்யமாயிருக்கிறது. வரும்போது தேன் (செல்லப்ப ரெட்டியார்) கொண்டு வருவதை எதிர்பார்க்கிறேன். எப்போது வருகிறீர்கள்? நோட்டீ நாளைக்குள் கைக்கு வந்துவிடும். கருப்பண்ண கவுண்டர் பேருக்கு புக்போட் செய்கிறேன். அந்தப்பக்கம் பரப்பவும். பிற பின் பாரதிதாசன். சமையல் கருப்பையாவை உடனே புதுவைக்கு என் வீட்டிற்கு அனுப்பிவைக்கவும். அவன் வரும்போது சைக்கிள், தேங்காய்ப்பூ டவல், வேஷ்டிகள், படுக்கை கட்டும் துப்பட்டி இவைகளைக் கொடுத்தனுப்பவும். உடனே பதில் ஒப்பம் பாரதிதாசன்  அங்கு சினிமா நடக்கிறதா? அதில் விளம்பரம் போடும்படி (சிலைட்) ஏற்பாடு செய்யமுடியுமா? முயற்சி செய்க. பா.  கடிதம் - 28 தமிழ் வாழ்க முத்தமிழ் நிலையம் சாந்தோம் ஹைரோடு - சென்னை. 25.2.44 புதுச்சேரி அன்புள்ள செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு, நலம். தங்கள் கடிதம் வந்தது. நான் சேலத்திலிருந்து புதுவைக்கு வந்தது முதல் தினமுந்தான் கடிதம் எழுதுகிறேன். அதுவும் விரிவாக. ஆனால் அந்தக் கடிதம் வந்ததாகவோ அக்கடிதங்களில் கேட்டிருந்தவைகட்குப் பதில் சொல்லும் முறையிலோ பதில் இல்லை. நான் நிலைமையைப் புரிந்து கொள்ளாத முறையில் சுருக்கமாகக் கடிதம் கிடைக்கிறது. காரணம் தெரியவில்லை. உடைகள் நகைகள் கொடுத்தாகிவிட்டனவா? பிரின்பால் பாத்திரம் முதலியவை கொடுக்கப்பட்டனவா? பணமும் கொடுக்கப் பட்டனவா? எப்படி? ஏது? இன்னும் கையிருப்பில் பணம் உண்டா? இல்லாவிட்டால் சேலம் போல் நாமக்கல்லிலும் அவமானம் தானே? முருகப்பா என்ன கொண்டு வந்தார்? எப்போது போனார் தம் ஊருக்கு? முன்னமே போவாததற்குக் காரணம் என்ன? அரங்கு பகுதியைப் பற்றிச் செட்டியாருக்கு என்ன அபிப்பிராயம்? இவைகள் முக்கியமாக எனக்குத் தெரியவேண்டுமென்று நினைக்கிறேன். அனைவரும், என் விஷயத்தில் நல்ல எண்ணம் உடையவர்கள் என்பதை நான் மறுக்கவில்லை. அது பற்றி நான் அனைவரிடமும், நன்றியுள்ளவன் ஆவேன். ஓர் இடத்தில் நடத்தி அனுபவித்த பின்னும் வழ, வழ, என்று நாம் இல்லாவிட்டால் அவர் பணம் போடுவார். அவர் இல்லாவிட்டால் நாம் பணம் போடுவோம் என்று ஒருவரை ஒருவர் எதிர்பார்த்து நடத்துவதில் எனக்குப் பிரியம் இல்லை. அரங்கு விஷயத்தில் அடிப்படையில் செய்யப்பட வேண்டியவை பல உண்டு. அது பற்றி எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவைப் பண்ண வேண்டியது அவசியம். அதை விட்டு நாமக்கல்லார்களை நம்பி அவர்களையே அனைத்துக்கும் எதிர்பார்ப்பது சரியாகுமா? அவமானமான நிலையில் அ.பழ தம்மூருக்குச் சென்று சென்ற உடன் வெகு சுலபமாக பி.எம்.எல் ஊரில் இல்லை. ஆகையால் வேறு வகையில், பணம் தேடிக்கொள்ளுங்கள் என்று தந்தி கொடுக்க வில்லையா? அப்படி ஆனால், அரங்கு விஷயத்தை அவர்கள் கை விட்டமாதிரி இல்லையா? செட்டிமார் எண்ணம் அறியாது மேலே நடத்துவதில் எனக்கு இஷ்டமில்லை. அவர் கொஞ்ச காலமாகவே அரங்கு விஷயத்தில் சிறிதுகூட கவலை இல்லாமலே இருப்பதாக நினைக்கிறேன். பெரியண்ணன் அவர்கள் எங்கே இருக்கிறார்? முருகு என்ன நினைக்கிறார்? எனக்கும், தமிழுக்கும் உயர்வு தேட நல்ல எண்ணத்தோடு முன்வந்த தோழர்கள் எனக்கும், தமக்கும் தமிழகத் துக்கும் அவமானத்தையும், தோல்வியையும் உண்டாக்கும் நிலையில் நடந்து கொள்வதை நாம் ஏன்? அவர்கள் ஏன்? - ஏன் அனுமதிக்கக் கூடும். இதே நிலையில் அரங்குப்பகுதி நடக்கும், நடக்காது என்பதைக் கண்டறிந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதே முறையில் அரங்கு நடக்காது என்பது என் அபிப்பிராயம். தனிமுறையில் யாராவது நடத்திக்கொள்ள முன்வருகிறார் களா? தேடவும். அப்படி நடத்திக்கொள்ளுகிறவர் இருந்தால் அவர்களோடு நான் அவர்கட்கு அடங்கி ஒத்துழைக்க... கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கு அவர்கள் சம்மதிக்கிறார்களா? ... என்பது தெரியவேண்டும். அப்படித் தனித்துறையில் நடத்துகிறவர்கள் குறைந்தது 5000 ரூபாயாவது கையில் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். அப்படி யில்லாவிட்டால் அரங்கு வாணலி சுடுகிறதென்று அடுப்பில் குதித்த மாதிரிதானே ஆகும். அதிகமாக எழுதிவிட்டேன். என்னை மன்னிக்கவும். எனக்குத் தூக்கமில்லை. ஒரே கவலை. நான் இந்தப் புதுவையைவிட்டு வெளிக் கிளம்பவும் இனி முடியாது. எனக்கு அவமானம் உண்டாகலாகாது என்பதே என் கவலை. அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து என் பேரைக் காப்பாற்ற மிகவும் வேண்டுகிறேன். இதுவரைக்கும் என் சம்பாதியையோ என் உடற் பிரயாசை யையோ கருதியதில்லை. அரங்கு வெளியீடு - நிலையத்தின் முற்போக்கு ஒன்றையே கருதி வந்திருக்கிறேன். ஷேர்க்காரர் மீட்டிங்கு நடப்பதற்கு நான் வர வேண்டும் என்று முருகப்பா எழுதுகிறார். நான் வரவும் முடியவில்லை. வரவேண்டியது மில்லையே. நான் ஷேர்க்காரனல்ல. அவர்கள் முடிவுக்கு நான் காத்திருக்கிறேன். மறுக்கப்போவதில்லை. இனி - அரங்கு உயிரோடு நல்ல நிலையில் நடக்க வேண்டிய தற்கு 5000 ரூபாய் இருந்தால் நலம். I. உடை நகை 500 ரூ. II. சீன் திரை 500 ரூ. III. சிறிய பொருத்தமான டோர் மரச்சாமான்கள் 1000 ரூ. IV. மடக்கு நாற்காலிகள் பெஞ்சி மரங்கள் (காலரி) பிரயாணப் பெட்டிகள் 500 ரூ. V. வாத்தியம் (புதுக்குதல்) 200 ரூ. VI. அழகான - வீதி சுற்றும் விளம்பரங்கள் 200 ரூ. VII. சையிடுகள் 2100 ரூ. ஆக 5000 ரூ. - பாரதிதாசன்  கடிதம் - 29 தமிழ்வாழ்க முத்தமிழ் நிலையம் சாந்தோம் ஹைரோடு, சென்னை. அன்புள்ள தோழர் செல்லப்ப ரெட்டியார், கிருஷ்ணராஜ் ரெட்டியார், கருப்பண்ண கவுண்டர், பெருமாள் அனைவர்க்கும். நலம். கம்பெனி கலைந்துவிடுகிறது என்ற வார்த்தையை உபயோ கிக்க வேண்டாம். சில நாட்கள் ஓய்வு. சீன் உடை முதலியவை தயாரிக்கவும். முருகுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். பானர் முதலியவை களையும் நாமக்கல்லிலேயே வைத்துவிட்டுப் போகட்டும் - வைத் திருங்கள். சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். அதில் அனைவரிட மும் கையெழுத்து வாங்கி எனக்கு அனுப்பவும். சுற்றுக் கடிதத்தைப் பெயர்த்தெழுதுங்கள். கணக்குகளை, நன்றாய்த் தெரிந்துகொள்ளுங்கள். வேண்டு மானால் கணக்கு விவரத்திற்குக் காப்பி எடுத்துக் கொள்ளுங்கள். நடிகரின் முகவரி : அவர்களின் மாதச்சம்பளம் இந்த விவரத்தின் காப்பி ஒன்றையும் கட்டாயம் அனுப்பிவையுங்கள். புதுவை ஆர்ட் டிடு ஜகநாதனுக்குச் சேரவேண்டியதில் முக்கால் பங்காவது கட்டாயம் பணம் அனுப்பிவையுங்கள். மேலே புதுவைப் பக்கம் நிலையத்தை அழைத்து நடத்திப் போக ஏற்பாடு செய்கிறேன். கலைந்தே போய்விடாது. எழுதியுள்ள பாடல் சுரம் முதலிய அனைத்தின் காப்பிகளையும் எனக்கு அனுப்பிவையுங்கள். நீங்கள் சந்தர்ப்பம் இருந்தால் வந்து போவதுதானே. புத்தக வெளியீடு நடக்கட்டும். நம் தோல்விக்கு ஆறுதல் உண்டாகும். மற்றும் முருகுக்கு எழுதிய கடிதத்தைப் பாருங்கள். சைக்கிள், துணிமணி, படுக்கையின்வார் முதலியவை அனுப்பி வையுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்தும். நீங்கள் என் பொருட்டு இந்நாள் வரை செய்த நன்றியையும் இனியும் தாங்கள் என்பொருட்டு நடந்துகொள்ள இருக்கும் துணைப் பாட்டையும் நினைக்க நினைக்க என் நெஞ்சம் உங்கள்பால் இனி நான் நடந்துகொள்ள வேண்டிய முறையை உருவாக்குகிறது. உம்மை என்றும் மறவாத பாரதிதாசன் விரிவான பதில் எதிர்பார்க்கிறேன்.  கடிதம் - 30 3.4.44 அன்புள்ள தோழர் செல்லப்ப ரெட்டியாரவர்களுக்கு, நலம். கடிதம் வந்தது. அதற்கு முன் ஒரு கடிதம் வந்தது. இப் பக்கத்தில் அரங்கை - கண்ட்ராக்டில் நடத்த ஒருவர் முன் வந்து அது பற்றிய பேச்சு நடத்திக் கொண்டிருந்தார். முடிவு வரைக்கும் நடத்திருந்தால் பணி, யார் காலத்தில் முனிரத்தினம் இங்கிருந்தார்கள். கடிதம் எழுதாமைக்குக் காரணம் இதுதான். நேற்றுத்தான் முடிவு தெரிந்தது. அவர்களிடம் பணம் சுருக்கம். முடியாது. இங்குப் புத்தக விஷயமாக முருகப்பா முருகு வந்தார்கள். புத்தகங்கள் சிலவற்றை எடுத்துப் போனார்கள். அதில் தாங்கள் முன்னேற்றத்திற்குப் பணம் எதிர்பார்க்க முடியவில்லை. முருகப்பா சென்னையில் புத்தகம் அச்சிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன். நான் 5.4.44 முதல் 10.4.44 வரையில் புதுவையில் இருக்கமாட்டேன். சென்னை செல்லுகிறேன் சம்பந்தம் சீனிவாசன் விஷயமாக - என் வாழ்த்துக்களைத் தோழர்கள் கிருஷ்ணராஜ் ரெட்டியார்க்கும் கவுண்டர் பெருமாள் அனைவர்க்கும் தெரிவிக்கவும். எந்த முறையிலாவது நாமக்கல்லில் மீண்டும் நடத்த வேண்டும் என்று தாங்கள் விரும்புவது இயற்கையே. ஆவன செய்வோம். ஒப்பம் பாரதிதாசன் நீங்கள் வரும்போது POST CARD 9 9 மறவாமல் ADDRESS ONLY Ps Ps I. தேன் தோழர் II. சேலம் அச்சுக்கூடத்தில் கருப்பணக் கவுண்டர் அவர்கள் வேறு எங்கேயோ இருக்கும் இன்ப இரவு கொண்டு வரவும் பா  கடிதம் - 31 18.4.44 புதுச்சேரி அன்புள்ள தோழர் G.P. mt®fS¡F* நலம். கார்டு கிடைத்தது. முத்தமிழ் நிலையம் தமிழ்நாடு என்பது ஓர் நிறுவனம். அதன் நோக்கம் பாரதிதாசன் நூற்களை வெளியிடுவதும் அந் நூற்களை அரங்கு செய்வதும் ஆம். நூற்களை அரங்கு செய்வது என்றால் என்ன? அது என்ன செய்கிறது? ஒவ்வோர் இரவிலும், அதாவது ஒன்பதரை மணி முதல் ஒன்னரை மணிவரை 3 ஆம் ஆட்டம் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் நடத்துவது. முதலில் இசைப்புலவர் வாய்ப்பாட்டு, 2 பரத நாட்டியம், அலாரிப்புகளும், ஜதி, 3 வது பல பாட்டுக்களுக்கு ஓரியண்டல், பரத நாட்டியம், நடைபெறும். எப்படி எனில் - ஒருவன் தோன்றி - ஒரு கருத்தைப் பேசிப் போய்விடுவான். அதன்பிறகு ஒருத்தி (அல்லது ஒருவன்) அதை அந்தக் கருத்தை இசையோடு பாடுவாள். அந்த இசையின்படி அதன்பிறகோ ஒருவன் (அல்லது) ஒருத்தி பரதநாட்டியம் அல்லது ஓரியண்டல் ஆடுவான். இப்படிப் பல பாடல்கள். அதன்பிறகு ஒரு நாடகம் நடைபெறும். புரட்சிக்கவி புரோகிராமில் மற்ற விவரம் அறிக. இந்த ஆக்டர்களை எல்லாம் குறிப்பிட்ட இடத்தில் அழைக்கவும் - இரண்டு நாட்கள் ஊருக்குப் பிடிக்கும் வகையில் ஒத்திகை வைக்க வும். மற்ற செலவுகட்கும் - முத்தமிழ் நிலையத்திற்கும் முதல்நாள் இரவு நடிக்க 500 ரூபாயும் அடுத்த நாட்கள் ஒவ் வொன்றுக்கும் நூறு ரூபாயும், (சாப்பாடு இடம் தந்து) கொடுக்க வேண்டும். அடுத்த ஊரில் நடத்திக் கொள்ளவும் செய்யலாம். முதல்நாள் இரவு . பிற . ஓர் ஊரில் நாலைந்து நாட்கள் நடத்தலாம். ஒப்பம் பாரதிதாசன்  கடிதம் - 32 22.4.44 புதுவை அன்புள்ள தோழர் செல்லப்ப ரெட்டியாரவர்கட்கு வணக்கம். வருவதாகச் சொல்லி ஏன் வரவில்லை? தோழர் கிருஷ்ண ராஜ் ரெட்டியாரும் வருவதாகச் சொன்னார் அல்லவா? எனக்கு மே 19 முதல் விடுமுறை ஆரம்பிக்கிறது. எப்போது இங்கு வருகிறீர்கள்? (ஒப்பம்) பாரதிதாசன் கருப்பண்ணக் கவுண்டரிடம் தம்பிக்கு - சைக்கிள் இருக்கிறது என்றார். விலை கேட்டுக் கொண்டு வந்தால் பணம் அனுப்புகிறேன். பா. POST CARD ADDRESS ONLY INDIA POSTAGE தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கள், C/o. கருப்பண்ணக் கவுண்டர், பஞ்சாயத்துத் தலைவர், நாமக்கல், சேலம்.  கடிதம் - 33 தலைவர் பெரியார் அவர்கட்கு 26.6.44இல் கவிஞர் பதிவு அஞ்சல் ஒன்றை எழுதியிருந்தார். பாவேந்தர் எழுதிய அந்த மடல்: கடந்த 27.5.44ல் திருவாரூர் சுயமரியாதை சங்க இரண்டாவது ஆண்டு விழாவில் நான் தலைமை வகித்தேன். அந்த நிகழ்ச்சியைக் குடிஅரசு போட மறுத்தது. அன்றிரவு திருவாரூரிலேயே பேசினேன். அதன் நிலையும் அவ்வாறே. சேலத்தில் 19.06.44ல் நடைபெற்ற திராவிடர் மாநாட்டில் பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு பற்றிச் சுமார் இரண்டு மணி நேரம் பேசியுள்ளார். அதை மட்டும் மறைத்துப் பாவலர் பெரியார் வாழ்க்கையைப்பற்றிப் பேசியதாகத் திரித்து வெளியிட்டுள்ளது. 24.6.44ல் வெளிவந்த குடிஅரசில் திருச்சி மாவட்ட மாநாட் டிற்குப் பெரியார் தலைமை வகிப்பார் என்று இருக்கிறது. ஆனால் 17.6.44ல் வெளிவந்த குடியரசில் பாரதிதாசன் தலைமை வகிப்பார் என்று வெளியிட்டிருந்தது. இதன் மூலம் குடிஅரசு என்னை அவமானப்படுத்துகின்றது. இரண்டு தடவை திருச்சி வேதாசலம் இரண்டு கடிதம் எழுதித் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டதாலும் அந்த முடிவு தங்கட்கும் சம்மதம் என்று எழுதியதாலும்தான் ஒப்புக் கொண்டேன். மற்றபடி நானே ஓரிடம் சென்று பேசவேண்டும் என்றோ தலைமை வகிக்க வேண்டும் என்றோ எப்போதும் நினைப்பது கிடையாது. ஏற்கனவே தங்கள் பத்திரிகைக்கும், பத்திரிகை நிலையத்திற்கும் ஏகபோக செல்வாக்கினராக விளங்கி வந்தவர்கள் பலர் என்னிடம் எதிர்ப்புக் காட்டியதுண்டு. நான் தங்கள் பத்திரிகைக்கு எழுதிய பாட்டு ஒன்றைப் புதுவை யில் ஒரு கெட்ட நடத்தை உள்ளவரிடம் படித்துக்காட்டி, நான் இந்தப் பாட்டை விடுதலையில் போடாமல் செய்தேன் என்றான் உங்கள் ஆதரவு அயோக்கியன் ஒருவன். இப்படிப்பட்ட வகையில் அந்தக் கூட்டம், அப்போது நீங்கள் அறிந்து கொண்டிருக்க முடியாவிட்டால், இப்போது அந்த பைலை எடுத்துப் பார்த்தாலும் விளங்கும். நான் பிறரைப் பற்றித் தவறாக எண்ணுகிறேன். சுயமரியாதை இயக்கத்தில் என்பேர் முன்னுக்கு வருவதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதை மீறி நடக்க நான் எண்ணவே மாட்டேன். ஏனென்றால், நீங்கள் பல அயோக்கியர்களை முன்னே தள்ளி, அவர்களாலேயே இப்போது எதிர்க்கப்பட்டு வருகிறீர்கள் உள்ளுக்குள்ளே: என் குறைகட்குத் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்பால் கெட்ட எண்ணமுடைய கூட்டத்தின் நண்பர்கள் உங்கள் ஆபீஸில் இருப்பதும் எனக்குத் தெரியும்.  கடிதம் - 34 18.8.44 அன்புள்ள தோழர் சி.பா. ஆதித்தன் அவர்கட்கு வாழ்த்து! தமிழச்சியின் கத்தி திருத்தமாகப் பெயர்த்தெழுதுவித்துத் தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். ஓய்விருக்குமோ என்னமோ தங்கட்கு! சுவடிகள் வெளியிட எண்ணம் இருந்தால், தமிழச்சியின் கத்தி நன்று என்று தோன்றினால், கொள்கை பிடித்தால், பதில் எழுத வேண்டுகிறேன். இல்லையானால் திருப்பி அனுப்பிவிட வேண்டு கிறேன். அனுப்பும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் நிற்க. எனக்குத் தமிழன் தவறாது வந்து கொண்டிருக்கிறது. நன்றி சொல்லுகிறேன். திராவிட நாடும், விடுதலையும் தமிழன் பற்றித் தாங்கிப் பேச முடியாத நிலையில் தமிழன் கொள்கை இருந்தது உண்மை. அவ்விரண்டும் ஆதரித்திருந்தால் தமிழன் நிலை இன்று வேறுமாதிரி இருந்திருக்கும் என்பது என் கருத்து. அட்டைச் சித்திரத்தை நடுத்தெருமாதிரி ஆக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். பிறர் அதை பின்னர் மாளிகையாக உபயோகப்படுத்து கிறார்கள். தமிழன் பரவும் வகையில் நடத்தும் முறை அமைந்துள்ளது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சொல்கிறேன். கல்கி, ஆநந்தவிகடன் கூட்டம் - அவர்களின் சந்தாதார் கூட்டம் தமிழனை ஆதரித்தால் போதும் என்பவருக்கு நான் வேறு ஒன்றுதான் சொல்கிறேன். இப்போதும் அக்கூட்டத்தின் மனப்பான்மையின் அடி மட்டம் இப்போது எனக்குத் தெரிகிறது. கொஞ்சம் வெளிப்படை யாகவே! எனக்குத் தோன்றியவற்றைச் சொன்னேன். அவைகளில் எள்ளத்தனை சரியிருக்குமாயின் வேண்டுவன செய்வீர்கள். தமிழன் காரியாலயத்தில் கையிருப்புள்ள ஒருவரின் நாற்காலி காலியாயிருக்கிறது. குறைகிறார் கோல் கழியல்ல, ஆட்சி! கோல்கோடி மாராயஞ்செய்யாமை முன்னினிதே என்றார் பெரியாரும். பாரதி பற்றி திரு. சோமசுந்தரபாரதி எழுதுகிறார் பாரதி மலரில். 14 வயதில் பாரதிக்கு மீசை முளைத்தது என்று. கொஞ்சம் பெரிய இடத்தில் ஏற்படும் பிழை, சோர்வு கலங்கரை விளக்கம் போல் வாசகர் கண்ணில் படும்.  கடிதம் - 35 4.10.1944 அள. லட்சுமணனுக்கு எழுதியது சாதி, மதம், சடங்குகள், கடவுள் நம்பிக்கை, சாதிகள் இல்லை. மதம் மக்கட்கு அபின். கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை எதிர்ப்பு. சாதிப் பற்று, சமயப்பற்று, கடவுள் நம்பிக்கை இவை ஒழிதல் வேண்டும். ஒழியாத வரை. மக்கள் முன்னேற்றமில்லை. நீ புரட்சியைத் தூண்டு: புரட்சிசெய்.  கடிதம் - 36 12.11.1944 Bhararthidhasan Camp : Pondicherry தோழர் ராஜவேல், நலன்! தோழர் சம்பந்தமிடமிருந்து லெட்டர் வந்தது. அதில் சென்ற ஞாயிற்றுக்கிழமையே அவர் புதுவைக்கு வருவதாய்க் குறிப்பிட் டிருந்தார். இன்று வரைக்கும் வரவில்லை. 1. நீ அவரிடம் போ. அவர் விலாசம் : Chandra Picture, 57 பூந்தமல்லி ரோடு - நிலைமையைத் தெரிந்துகொள். அவர்கள் கையில் பணப் புழக்கம் இருக்கிறதா என்பதை ஊன்றிக் கவனி. 2. நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், இங்குத் தமிழிசைக் கழகம் என்றதோர் நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளேன். அதன் நோக்கம் தமிழ்ப் பாடல்களை நாட்டுக்கு இயற்றித் தருவது. நன்றாக வேலை செய்யத் தலைப்பட்டிருக்கிற நிலையில், அதன் வருவாயையும் விளம்பரத்தையும் கருதி இங்குள்ள என் நண்பர்கள் நடராஜனை அழைத்து, டான் நடத்துவித்தால் நலமாய் இருக்கும் என்கிறார்கள். அப்படி நடராஜனையும் பட்டம்மாளையும் வாத்தியக்காரரையும் இங்கு அழைத்து நடத்துவதாய் இருந்தால் மூலதனமாக ஏதாவது 100 ரூபாயாவது வேண்டும் நல்ல வசூல் ஆகும். தோழர் சம்பந்தத்திடம் பணமிருந்தால் - அவர் புதுவைக்கு வரும் போது பட்டம்மா நடராஜன் பார்ட்டியைக் கூட்டி வரவும், புதுவையில் முன்னின்று நடத்தித் தரவும் சௌகரியப்படும் அதற்காகத்தான் சொன்னேன். இதை மனதில் வைத்துக் கொண்டு முதலில் சம்பந்தத்தின் நிலையைக் கவனித்து - அவரிடம் இதைக் கூறி, முடியுமானால் அமாவாசைக்கு முன் தகவல் தெரிவித்தால் (அமாவாசை தினம் இங்கு விசேஷ மானது) நடத்தி விடலாம். இங்குள்ள வெள்ளைக் காரர்களும் வருவார்கள். 3. சம்பந்தமிடம் பணப்புழக்கம் இல்லாமையைத் தெரிந்து கொண்டால், நீ அவரிடம் சொல்லாதே. சம்பந்தம் அவர்கள் நல்லது என்று தாராள சிந்தையுடன் ஒத்துக் கொண்டால், அதன் பிறகு நடராஜனைக் கலந்து கொள். நடராஜனுடன் சென்று பட்டம்மாளைக் கலந்து கொள். நாளைக்கே பதில் எழுது. பட்டம்மா, பிள்ளை, தாயார், நய்னார் இவர்கட்குச் செலவுபண்ணலாம். நடராஜனுக்கும் அவ்வாறே. வாத்தியத்தில், தபேலா மாத்திரந்தான் அங்கிருந்து வரலாம். கூடுமானால், நூதன வாத்தியம் இரண்டு சேர்த்துக் கொள்க. வரும்போது நீயும் வரமுடியுமானால் வா. சம்பந்தத்துடன் குமாரும் வருகிறார். வரும்படி சொல். உடன் பதில் பாரதிதாசன் கடிதத்தை யாரிடமும் காட்டாதே. நீயே வாயால் சொல்லவும். 100 ரூபாய் மூலதனம் வைத்தால் சில சமயம் நஷ்டம் வரும் எனில் அந்த நஷ்டத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். பாரதிதாசன்  கடிதம் - 37 BHARATHIDHASAN Pondicherry Camp : Dated : 25.11.1944 தோழர் ராஜவேல்! மடல் கிடைத்தது. அதற்கு முன் நாளே, பிள்ளை ஒரு கார்டும், நடராஜன் ஒரு கவரும் எழுதியிருந்தார்கள். பிள்ளை, அனைத்தும் ராஜவேலு இடம் சொல்லிவிட்டேன் என்றார்கள் நடராஜன் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். நாளைக்கு அல்லது அதற்கு மறுநாள் தேதி குறிப்பிட்டுக் கூறி விடுகிறேன்! இங்கு, தியேட்டர் அழகானதாக, இருக்கவேண்டும். ஐரோப்பியர் வருவதற்குச் சௌகரியமானதாயிருக்க வேண்டும். அதற்குக் கெப்ளே தியேட்டர்தான் நல்லது. அதைக் கேட்டிருக்கிறேன் அதில் சினிமா நடக்கிறது. நாளைக்குள் தேதி பற்றிக் கூறிவிடுவதாக அதற்கு உடையவர் சொல்லியிருக்கிறார். அதற்குள் நீயும் புரோகிராம் அனுப்பினால், அதைப் பிரெஞ்சுப் பாஷையில் மொழி பெயர்த்தும் அச்சடிக்கும் நிலையில் வைத்திடுவேன். நீ புரோகிராம் அனுப்ப வேண்டிய முறையைக் கீழே கவனிக்கவும். 1. அப்பியாசத்தில் இருக்கும் - ஆட்டங்களின் தலைப்புகள். 2. ஒவ்வொரு தலைப்பிலும் - எத்தனை அம்ஸமோ அவைகளின் தெளிவான விவரம் அந்த ஆட்டத்தில் எத்தனை பேர் நடிக் கிறார்களோ அவர்களின் பேர். உதாரணம் : சஞ்சீவி பர்வதத்தின் சாரல் வேடன் குப்பன் - நடராஜன்; வேட்டுவப்பெண் இளவஞ்சி - பட்டம்மா 1. குப்பன் சஞ்சீவி பர்வதத்தின் சமீபம் அதன் இயற்கை அழகைக் கவனித்தபடி இளவஞ்சியை எதிர்பார்த்திருக்கிறான். 2. இளவஞ்சி வருகிறாள். பழைய காதல் மொழிகள் தொடங்கு கின்றன. தன் காதலை அவன் தெரிவிக்கிறான். அவள் சஞ்சீவி பர்வதத்தின் உச்சியில் உள்ள பச்சிலைகள் இரண்டையும் பெற்றுத் தரவேண்டுகிறாள். 3. அவன், அது சிரமம் என்று மறுக்கிறான். அவள் முறைத்தவாறு இருக்கிறாள். என்ற முறையில் ஒவ்வொன்றையும் அவர்களைக் கேட்டு விவரித்துச் சுணங்காமல் எழுதவும். ஒரே நடிகன் நடித்த கூடமாய் இருந்தால்கூட அதற்கும் அம்ஸம் எழுதியனுப்ப வேண்டும். ஜனங்கட்கு விவரம் தெரிந்தால் நாட்டியத்தை ரசிக்க முடியும். ஜனச் செல்வாக்குள்ளதாக்க அதுதான் வழி. அங்கிருந்து வரும் வாத்தியக்காரர்கள் பேர் - வாத்தியங்களின் பேர் தேவை! பழைய நோட்டீ இருந்தால் அனுப்பவும். பிள்ளையவர்கட்கும் நடராஜனுக்கும் இது பற்றியெல்லாம் கூறு. தோழர் சம்பந்தம் அவர்களிடம், இதைக் காட்டு. சம்பந்தம் நான் வைத்த சிரமத்தை ஏற்றுக் கொண்டதை நானும் என் தோழரும் மறக்க முடியாது. தோழர் நடராஜன் யாரோ கோவிந்த சாமி வாத்தியக்காரருக்கு நேரில் எழுதச் சொன்னார். அவர் யார்? நான் எழுதித்தானாக வேண்டுமா? ஆம் எனில் எப்படி எழுதவேண்டும்? என்னவென்று எழுதவேண்டும்? என்ற விவரத்தையெல்லாம் கேட்டு விட்டு எழுதவும். அதிக சிரமம் வைக்கிறேன் - உனக்கு. பதில் உடனே தேவை பாரதிதாசன்  கடிதம் - 38 புதுச்சேரி 17.12.44 அன்புள்ள தோழர் செல்லப்ப ரெட்டியாரவர்கட்கு நலம். தோழர்கள் கிருஷ்ணராஜ் ரெட்டியார்க்கும், கருப்பண்ணக் கவுண்டர்க்கும் என் வாழ்த்து. தங்கள் கடிதம் கிடைத்தது. நான் சில நாட்களில் திருச்சி வருகிறேன். அதற்கு முன் தங்கட்குக் கடிதம் எழுதுகிறேன். வர வேண்டும். ஏன் எனில் T.K. சகோதரர் நம் பில்கணனைக் கொண்டு ஒரு பில்கணன் எழுதி அச்சிட்டு, அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டும் வருகிறார்கள். என்னிடம் உரிமைக்காக வந்தார்கள். இன்னும் உரிமை தரவில்லை. அதற்காகத் திருச்சியில் அவர்கள் எனக்கு ஒரு நாடகம் ஆடித் தருவதாகச் சொன்னார்கள். நாம் அங்கிருந்து கொண்டு நடத்த வேண்டும். முன்னதாகவே டிக்கெட் விற்பனை செய்தால்தானே நலம். திருச்சி வேலையை முடித்துக்கொண்டு சேலம் போக வேண்டும். சேலத்தில், இன்ப இரவுக்குப் புது ஆதரவு தேடவேண்டும். முன்னிலும் சிறிது திருத்தமான முறையிலும், சுலபமான முறையிலும் நடத்த வேண்டும். சில படங்கள், ஜெகந்நாதனை எழுதச் சொன்னேன். அவருக்குப் பிரஷ்கள் அகப்படவில்லை. சென்னையிலும் இல்லை. நம் கம்பெனி பிரஷ்கள் எங்கே? தேடி அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும். அந்தப் படங்களின் சட்டங்களையும் அனுப்ப முடியுமா? கையோடு கொண்டு வரக்கூடுமானால் எடுத்து வந்துவிட்டால் இங்கிருந்தே நாம் சென்னைக்கும் திருச்சிக்கும், சேலத்திற்கும் புறப்பட்டுவிடலாம். கடிதம் பார்த்து பாரதிதாசன்  கடிதம் - 39 புதுச்சேரி 5.3.1945 அன்புள்ள தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு நலம். நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதை நான் இரயிலில் கொண்டு போய்போடச் சொன்னேன். அது வந்து சேர்ந்ததோ என்னமோ. 4 ரீம் தாள் 120 ரூபாய் பேசி 20 ரூபாய் கொடுத்துள்ளேன். ஆதலால் இது கண்டதும் இன்ஷ்யூராவது மணியார்டராவது அனுப்பி வைக்கவும். உடனே சென்னைக்குப் போகிறீர்களா? இன்று சென்னையி லிருந்து கடிதம் வரவில்லை. சென்னைக்குப் போகும் போது கொஞ்சம் பணம் கையோடு போகவும். ஏனெனில் முத்தையாவிடம் இப்போது பணம் இல்லை. ஆக வேண்டிய செலவு செய்து - கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். எ.வி. லிங்கத்திற்கு கொடுக்கக்கூடிய செலவுத் தொகையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவரை கையோடு வைத்துக் கொள்ளுங்கள். யாரையாவது நேரில் சென்று பார்க்க வேண்டுமானால் போங்கள். கூடவே எ.வி.லிங்கம் வரவேண்டு மானால் இட்டுக்கொண்டு போகவும். தக்க சமயத்தில் உங்கள் உதவி எனக்குப் பெரும்பயன் விளைக் கிறது. இதை மறக்க மாட்டேன். பாரதிதாசன்  கடிதம் - 40 16.4.1945 அன்புள்ள மருதவாணன் அவர்கட்கு நலம். தாங்கள் எனக்கு அனுப்பிய வாழ்த்திதழ் வரப்பெற்றேன். நன்றி ஆனால் நான் பிறந்தநாள் : கர ஆண்டு சித்திரைத் திங்கள் 17 நாள் 1891 ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ம் நாள் எனத் தங்கட்கு நினைவுப்படுத்த எண்ணுகின்றேன். தங்கள் பாரதிதாசன்  கடிதம் - 41 தோழர் செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு நலம். அஞ்சல் கிடைத்தது. சரி, நீங்கள் சொல்லியது போலவே செய்யுங்கள். நானும் இரசீது புத்தகங்கள் அனுப்பும்படி முத்தையாவுக்கு எழுதியுள்ளேன். விரை வில் வரும். தோழர்கட்கு வாழ்த்து. ஒப்பம் பாரதிதாசன் புதுவை 3.5.45 பெறுபவர் : Thiru, M.Sellappa Reddiar, C/O K.Karuppanan, The Majestic cycle mart, Namakkal Salem - Dit.  கடிதம் - 42 கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்) நாமக்கல் 1945 ஆண்டு நவம்பர் 2 பாரதிதாசன் நிதிக் காப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் ரெட்டியார் அவர்கட்குப் பாரதிதாசனாகிய நான் கொடுக்கும் ரசீது. இராசிபுரம் பாரதிதாசன் நிதி நாடகக் கமிட்டியாரால் நடத்திய வீரவாலி நாடகத்தின் மூலம் வசூலான ஆயிரத்து எண்பத்து நான்கு ரூபாயையும் (1084 - 0 - 0) தங்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன். நாமக்கல் 1945 ஆ. நவம்பர் 2 . பாரதிதாசன் 2.11.45  கடிதம் - 43 கனக - சுப்புரத்தினம் 95, பெருமாள் கோயில் தெரு (பாரதிதாசன்) புதுச்சேரி 1.4.1946 அன்புள்ள தோழர் கருப்பண்ணக் கவுண்டர், கிருஷ்ணராஜ் ரெட்டியார், செல்லப்ப ரெட்டியார் அவர்கட்கு வாழ்த்தும் வணக்கமும். இதனோடு தோழர் அண்ணாத்துரை கடிதம் இருக்கிறது. நான் பல நாட்களுக்கு முன்பே சொல்லி அனுப்பினேனே என்ன அசந்தர்ப்பமோ தெரியவில்லை. செல்லப்ப ரெட்டியார் உடல்நிலை பற்றி அறிய ஆவலுடையவனாக இருக்கிறேன். உடனே தங்கள் வசமுள்ள நிதி முழுவதையும் மூவரில் ஒருவர் கையுடன் கொண்டு போய் C.N.A. அவர்களிடம் ஒப்படைத்துவிடக் கோருகிறேன். மற்றும் நம் தோழர் முதலியவர்களுக்கு என் வாழ்த்து. தங்கள் நன்றியுள்ள பாரதிதாசன்  கடிதம் - 44 தேதி - 16.9.1946 புதுவை பாரத சர்க்கா சங்கம் புதுவை அன்புள்ள தோழர் சிவஞான கிராமணியவர்கட்கு. நலம். இங்கு காந்தி நாள் பெருஞ் சிறப்பாகக் கொண்டாடப் போகிறார்கள். இங்குள்ளார் அனைவரும் தாங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் தங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். தோழர் T.N. இராமன் அவர்களிடம் இந்த மாதத்திற்குப் பாட்டு அனுப்பினேன். வந்து சேர்ந்திருக்கும். தங்கள் பாரதிதாசன்  கடிதம் - 45 தேதி - 21.9.1946 புதுவை பாரத சர்க்கா சங்கம் புதுவை உயர்திரு சிவஞானம் அவர்கட்கு வணக்கம். கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. ஆனால் ஒன்று, புதுவையில் நடக்க இருக்கும் காந்திஜெயந்தி மிக விரிவான முறையில் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள். நீங்கள் 2ம் தேதி காலையில் புதுவையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். உறுதி கூறி உடையவர்கட்குக் கடிதம் வரைவதன் மூலம் அவர்கள் மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்க வேண்டு கிறேன். சிரமத்துக்கு மன்னிக்க. 2ம் தேதி காலையில் உறுதியாகத் தாங்கள் புதுவையில் காட்சி யளிப்பீர்கள் என்றும் நம்புகிறேன் தங்கள் பாரதிதாசன்  கடிதம் - 46 15.4.47 செல்வன் கோபதிக்கு நலம், நான் இன்றிரவு 9.30 மணிக்குச் சேலத்தில் ரயிலேறுகிறேன். நேரே சென்னை செல்லுகிறேன். இரண்டு மூன்று நாட்களில் புதுவை வந்து சேருகிறேன். அனைவருக்கும் வாழ்த்து பாரதிதாசன் ... ... அக்கா, அத்தான், எப்போது ஊருக்கு? அக்காவை வருத்தப்பட வேண்டாம் என்று சொல். எல்லாம் பிறகு நிறையச் செய்கிறேன். பா.  கடிதம் - 47 தோழர் அருச்சுனன் வாழ்க. 30.12.47ல் எழுதிய கடிதம் கிடைத்தது. சென்னையிலிருந்த அச்சகத்தை என் இல்லத்திலேயே போட்டுக்கொண்டதில், பிறர் தங்க வசதி இல்லாது போயிற்று. என் துணைவியார், பிறர்க்கும் உணவு நேர்செய்ய இயலாதவர். ஆதலின், மாணவரின் இத்தகைய ஆவலை நிறைவு செய்ய இந்நாள் இயலாமை பற்றி வருந்துகிறேன். பதினாறு வரிகட்கு அதிகப்படாத அளவில் ஒரு பாட்டு எழுதி அனுப்பினால் அதுபற்றிய திருத்தம் (இருந்தால்) எழுதியனுப்புகிறேன். பிறபின் 2.1.48 பாரதிதாசன்  கடிதம் - 48 பாரதிதாசன் 2.7.48 புதுவை உயர்திரு டாக்டர் சிதம்பரநாதன் அவர்கட்கு, வணக்கம். தோழர் M. அருச்சுனன், செல்வ வசதி இல்லாதவர், தமிழில் ஆர்வம் மிக்கவர். மிக நல்ல பிள்ளை புலவர் வகுப்பில் சேர அவாக் கொண்டிருக் கிறார். அவருக்கு ஏற்ற உதவி செய்வதென்பது தங்களால்தான் முடியும். இத் தோழரும் தங்களைத்தான் அண்டி வேண்ட முடியும். இவர் சேலம். அங்கிருந்து வந்து தங்களுக்குச் சிபாரிசு. செய்யக் கேட்டார். என்னை விட நீர் டாக்டருக்கு நிரம்ப வேண்டியவர்: நேரிற் சென்று நிலையைக் கூறுக என்றால் அவர் கேட்பவராய்த் தோன்றவில்லை. ஏற்றது செய்ய வேண்டுகிறேன். தங்கள் நன்றியறிதலுள்ள பாரதிதாசன்  கடிதம் - 49 புதுவை 31.05.50 தோழர் தனுஷ்கோடி ராஜா அவர்கட்கு. மணிவிழா ஆலோசனைக் கூட்டம் 25ந் தேதி நடத்த இருக்கி றீர்கள். 24ந் தேதி பசுமலை ச.சோமசுந்தர பாரதியார் இல்லத்தில் முத்தமிழ்ப் பெரு மன்றத் திட்ட அமைப்புக் குழுவினர் கூடுகின்றார்கள். அதற்கு நானும், கா. அப்பாதுரை, கோவை செங்கோட்டையார், A. ஐயாமுத்து, S.R. சுப்பிரமணியம், எட்டயபுரம் R. அமிர்தசாமி, பெத்தாம்பாளையம் பழநிசாமி ஆகியோரும் வரக்கூடும் 26 அல்லது 27ல் திருக்குறள் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யுங்கள். பாரதிதாசன் Thiru. Dhanushkodi Raja C/o Bharathi Puththaka Nilayam Vakil New Street MADURAI.  கடிதம் - 50 முத்தமிழ்ப் பெருமன்றம் இடைக்காலத்திட்ட தலைவர் அமைப்புக்குழு: ச. சோமசுந்தர பாரதி துணைத்தலைவர்கள்: பொருட்காப்பாளர்: கா.அப்பாத்துரை எ.ஆர். சுப்பிரமணியம் ஏ. அய்யாமுத்து செயலாளர்: செங்கோட்டையார் பாரதிதாசன் *(3) இருப்பிடம் ................ ................ நாள் நீங்களும் முருகும், கோயில்பட்டியில் அண்ணாத்துரையை, மணிவிழா, விஷயமாய்ப் பார்க்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன். பயன்படாதென்று எண்ணுகிறேன். அவரைக் கலக்காமலே, முதலில், கழகத்தார் அல்லாதவர்களையும் அடுத்தபடி கழகத்தார்களையும், நேரே காணுவதாலும் கண்டு, அந்தந்த ஊர்களில் இருந்தும், கமிட்டி அமைப்பதாலும் முன்பயன் ஏற்படும் என்று எண்ணுகிறேன். உதாரணம் நீங்கள் கும்பகோணம் பிகட் பாக்டரி சுந்தரம் அவர்களைக் காணுங்கள். கண்டு செய்தியைச் சொல்லி அச்சுப் பிரசுரங்களைக் கொடுங்கள். உடனே fமிட்டியைÃaமிப்பார்.இU கட்சிக்காரர்களையும், fழகம்mல்லாதவர்களையும்bகாண்டுâருப்தியாகவும்bவற்றிகரமாகவும்eடத்திக்bகாடுப்பார்.ïJnghynt பிற இடங்களிலும். இதை விட்டு, அண்ணாதுரையைக் கலப்பதால் காரியம் கெடும். முருகு சுப்பிரமணியனை நம்புவதில் ஜாக்கிரதையாய் இருங்கள். முருகும், பெரியண்ணனும் அண்ணாத்துரையால்தான் பிழைக்க முடியும் என்று நினைக்கிறவர்கள். ஓர் ஐயாயிரம் ரூபாயையாவது தண்டிக்கொண்டபின் அண்ணாத்துரை நான். நான் என்று ஓடிவருவார் என்பது திண்ணம். அண்ணாத்துரை எனக்காக முன்வருபவர்களைத் தடுக்க முடியாது. அவரைக் கொண்டே தொடங்குவதென்று நீங்கள் நினைப்பதில் பெருந்தோல்வி ஏற்படும். இப்போதே அவர் இப்படிப்பட்டவர் என்பதை நாடு அறிந்து கொண்டது. மாலைமணியைக் கொன்றது. தன் திராவிட நாட்டைச் சொந்தப் பொறுப்பில் தினசரியாக நடத்திப் பணம் சம்பாதிப்பதற்குத் தான். கழகத்திற்குக் கட்டிடம் வாங்குவதாகக் கூறிச் சொந்தப் பேருக்கு ஆக்கிக்கொள்ள முயன்றதும் பலிக்கவில்லை. 27-28ல் நீங்களும் சென்னையில் வந்து சேர்ந்தால் நலமாய் இருக்கும். அங்கு ஒரு லிடு தயாரித்துத் தருகிறேன். பிரதமரையும் பார்க்கலாம். பிற உங்கள் மடல் பார்த்து. நான் 26.8.50 வரைக்கும் வீட்டில் தான் (புதுவை) இருப்பேன். பாரதிதாசன் N.B நான் இங்குக் கூறியவைகளில் ஏதாவது திருத்தம் தோன்றி னாலும் அதையும் சொல்லுங்கள். அப்படியே நடந்து கொள்ளுகிறேன். இருப்பு கேட்டு எழுதினேன். அந்தக் கடிதம் கிடைக்க வில்லையா. வீட்டில் தேடுங்கள் கிடைக்கும். சென்னையில் ஒருவர்க்கு எது எப்படி இருந்தாலும் கூடிய விரைவில் ஏற்பாடு செய்வதாகச் சொன்னாரென்று எனக்குப் பதில் எழுதுங்கள். எட்டயபுரம் அமிர்தசாமி பத்துநாளில் மாப்பிள்ளை பார்க்க வருவதாகக் கூறினார். இன்றளவும் வரவிமில்லை. கடிதமும் போட வில்லை. நம் பெண்கள் விஷயமாகக் கவனித்தீர்களா? பாரதிதாசன்  கடிதம் - 51 அன்புள்ள தனுஷ்கோடிக்கு! நலம். அச்சடித்தாய்விட்டதா? அனுப்பிவிட்டீர்களா? - தேதியோடு அனுப்பிவையுங்கள். எனக்கும் கொஞ்சம் காப்பிகள் அனுப்புங்கள். அச்சடித்ததை எடுத்துக்கொண்டு திருச்சிக்கு நேரே போங்கள் டைரி போடுகிறவர் என்ன சொன்னார்? 400 ரூபாய் தயாராக வேண்டும். உங்களைவிட வேறு யாரிடமும் நான் இதுபற்றிக் கலக்க வேண்டாம்: உடனுக்குடன் பதில் போடுங்கள். இதற்கும் உடனே பதில் எழுதுங்கள். பாரதிதாசன் 28.11.50 முகவரி : உயர்திரு தனுஷ்கோடி ராஜா அவர்கள் 39/W1, நரிமேடு பழங்கா நத்தம் ரோட் தல்லாகுளம் P.O. Tallakulam மதுரை.  கடிதம் - 52 4.12.50 டைரிபோட நினைப்பவர் உங்களுக்கு வேண்டியவர். ஆகையால் எனக்கும் வேண்டியவர். இப்போதே அவர் அட்வான் கொடுத்தால் வாங்கிக்கொண்டு உரிமை கொடுக்க வேண்டியதுதான். நமக்கும் தேவை இருக்கிறதல்லவா? அமைப்புக் கூட்டத்திற்கு. திரு. நாராயணசாமி, திருக்குறள் முனிசாமி, கிட்டப்பா ராவுத்தர் - கிட்டப்பா புகையிலைக்கடை, கடைத்தெரு, கும்பகோணம். சுந்தரம் அவர்கள் பிகட் பாக்டரி கும்பகோணம் (ரயிலடித் தெரு) இவர்கட்கெல்லாம் அழைப்பு அனுப்புக. பாலு விஷயத்தில் நீங்கள் சொன்னபடி நடப்பேன். சின்னசாமிப்பிள்ளை, மரகத நிலையம், சோழவந்தான் P.O முதலியவர்களுக்கும் அழைப்பு விடுக்க. பாரதிதாசன் முகவரி : உயர்திரு தனுஷ்கோடி ராஜா அவர்கள் 39/W1, நரிமேடு பழங்கா நத்தம் ரோட் தல்லாகுளம் P.O. Tallakulam மதுரை.  கடிதம் - 53 நான் நேற்று முன் ஒரு கார்டு எழுதினேன். நீங்கள் வளையாபதியடிகளுக்கு அழைப்பு அனுப்பினீர்களா? கமிட்டி அலுவலகக் கணக்கப் பிள்ளையாக (மானேஜராக) இங்கிருந்து தோழர் முருகையனை அனுப்பி வைக்கிறேன். அவர் நேரே திருச்சிக்கு வந்து சேர்ந்துவிடுவார். அவருக்கு, சாப்பாட்டுக்குப் போகப் பதினைந்து ரூபாய் கையில் கொடுத்துவிடுங்கள். அவர் நல்ல உழைப்பாளி. அவரை உங்களுக்கும் தெரியும். என்னுடன் மதுரைக்கும் வந்தார். கணக்கு எழுதுவார். நன்றாகத் தமிழ் எழுதுவார். பேசுவார். இங்கிலீஷ் தெரியாது. ஆயினும் இங்கிலீஷ் எழுத வேண்டு மானால், அவருக்கு, செந்தாமரை முதலிய எவ்வளவோ தோழர்கள் துணை செய்வார்கள். நம்பிக்கையாய்க் காரியம் பார்ப்பார். அவரிடம் பல கடிதங்கள் பலருக்குக் கொடுத்திருக்கிறேன். நேரில் அறிந்துகொள்ளவும். வேலாயுத ராஜாவை அழைத்து வந்தால் சிறப்பாய் இருக்கும். முயற்சி எடுக்கவும். நடராஜ பாகவதரை அழைத்துக்கொண்டு போகலாம். அவர் தமிழ் மெய்யன்பர் அல்லவா? பாரதிதாசன் 6.12.50 முகவரி : உயர்திரு தனுஷ்கோடி ராஜா அவர்கள் 39/W1, நரிமேடு பழங்கா நத்தம் ரோட் தல்லாகுளம் P.O. மதுரை,  கடிதம் - 54 தோழர் தனுஷ்கோடி அவர்கட்கு வாழ்த்து. உங்கள் கடிதம் வந்தது. உடனே 150/- ரூபாயை வாங்கி மணியார்டர் செய்யவும். மீதி ரூபாயை ஸ்ரீராமுலு அவர்கள் உடனே அனுப்பிவிடுவதாகக் கூறியுள்ளார். தேதியாகி விடுகிறது. பிறபின். பாரதிதாசன் 23.12.50 150 ரூபாய் முற்பணம் பெற்றுக்கொண்டதற்காக இரசீது எழுதி அனுப்புவேன். பா. முகவரி : திரு.தனுஷ்கோடி ராஜா அவர்கள் பூபதி ஏஜென்ஸி இராஜபாளையம் P.O ராம்நாட் ஜில்லா Ramanad  கடிதம் - 55 பாரதிதாசன் 95, பெருமாள் கோவில் தெரு புதுச்சேரி 31.1.51 தோழர் தனுஷ்கோடி ராஜா அவர்கட்கு. நலம். இரண்டு நாட்களின் முன் சுதேசமித்திரன் பேப்பரில் ஒரு படம் வெளி வந்திருந்தது. ஒரு பார்ப்பனன் ஒரு கையால் வரிசையை நம் முதல்வரிடம் கொடுக்கிறான். அதை இருகையாலும் முதல்வர் வாங்கி, பாபநாசம் சிவனுக்குக் கொடுக்கிறார் (முதல்வர்). ஆனால், பாரதிதாசன் மணிவிழாவிற்குத் தலைமை வகிக்க முடியாது என்று மறுத்து எழுதியிருக்கிறார் அதே முதல்வர்.* இவ்விஷயம் உங்களுக்குத் தெரியுமா? நான் 28.1.51ல் திருச்சியில் இருந்தேன். அப்போது கேள்விப்பட்டேன். உங்களை நம்பியே முதல்வருக்குக் கடிதம் எழுதினார்கள். இதில் சிறிதும் சிரத்தையில்லையாம். உங்களையும் என்னையும் இப்படி முதல்வர் புறக்கணித்திருப்பது வியப்பாகவே இருக்கிறது. உங்களுக்காக நான் எவ்வளவோ பேர்களை விலக்கியிருக்கிறேன். இனியும் அப்படித்தான் நடப்பேன். பாரதிதாசன்தான் தனுஷ்கோடி ராஜா என்று பிறர் கருதும்படி நடந்துவந்திருக்கிறேன். ஆனால், நீங்கள் அப்படி நடந்து கொள்ளத் தவறிவிட்டீர்கள். முதல்வருக்குக் கடிதம் எழுதப்போவதாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் முதலிலேயே முதல்வரைக் கண்டு தலைமை வகிக்க ஒத்துக் கொள்ளும்படி செய்திருக்கலாம். அப்படிச் செய்யவே இல்லை. இதெல்லாம் என்னை நீங்கள் அலட்சியப்படுத்துவதைத்தான் காட்டுகிறது. மிகப்பெரிய விஷயத்துக்கெல்லாம் முதல்வரைக் கட்டுப் படுத்துவதாகக் கூறியிருக்கிறீர்கள். ஆனால், மணி விழாவுக்குத் தலைமை வகிக்கச் செய்ய வேண்டுமே என்பதில் கடுகளவு சிரத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. இது வருந்தத்தக்க செய்தி! இதைக் கேள்விப்பட்டால் பாலு போன்றவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்? திருலோக முதலியவர்கள் கைகொட்டிப் பேசத் தொடங்கி விட்டார்கள். எனக்கு அவமானமாய்ப் போய்விட்டது. என் மானத்தைக் காக்க மணிவிழாத் தொடங்கினீர்கள். இடை யில் இந்த மணிவிழாவைக்கொண்டே என்னை அவமானப் படுத்தி விட்டீர்கள். என் விருப்பத்திற்கு விரோதமாக தி.மு.க.காரர்களை நெருங்கினீர்கள். அவர்கள் என்னைக் குறைவாகப் பேசியதைக் கேட்டு வந்து என்னிடம் கூறி என் மனத்தைப் புண்படுத்தினீர்கள். முதல்வரை நம்பச் சொன்னீர்கள். நம்பி அவமானத்தை அடைந்து விட்டோம். நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறீர்கள். நீங்களும், உங்கள் துணைவியாரும், நேரே முதல்வரிடம் சென்று, ஏனையா மறுத்தீர்கள்? என்று கேட்கவேண்டாமா? நான்தான் பல அறிஞர்கள் நிறைந்த கூட்டத்தில் சொன்னேன். அதை நம்பித்தான், உங்களைத் தலைமை வகிக்க அழைத்தார்கள். நீங்கள் இப்போதாவது ஒத்துக்கொண்டால் நல்லதாக இருக்குமென்று சொல்லக் கூடாதா? என் மணிவிழாவில் தலைமை வகிப்பதால் முதல்வருக்குத் தலைபோய்விடுமா? அவன் இப்படி நினைப்பான் இவன் இப்படி நினைப்பான் என்று எண்ணி, அக்ரமத்தைச் செய்வாருண்டா? மந்திரி ராஜனைத் தண்டிக்க வேண்டியதிருக்க அவனைத் தட்டிக் கொடுத்துத் தான் பதவி வகிக்க வேண்டுமா? அதைவிடக் குறைவான காரியமா என் மணிவிழாவுக்குத் தலைமை வகிப்பது? உடனே பதில் எழுதவும் இதற்கு என்ன செய்யப் போகிறீர் கள்? அதையும் தெரிவியுங்கள். உங்கள் பதிலுக்கு முன்போல் நான் நேரில்தான் வரவேண்டுமா? பாரதிதாசன் 31.1.51  கடிதம் - 56 எதார்த்தம் T.P. பொன்னுச்சாமி பிள்ளை அவர்களுக்கு 02.03.51இல் புதுவை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய மடல். நாடகத் தமிழ் அறிஞர் பொன்னுசாமி பிள்ளையவர்கட்குப் புதுவை பாரதிதாசன் வணக்கமாக எழுதிக்கொண்டது : 1. ஏறத்தாழ 25 ஆண்டுகளாக நான் ஆழ்ந்து நோக்கி வந்ததில், தென் னாட்டில் வளர்ந்து வந்துள்ள இயக்கங்கள் பலவற்றிற்கும் நாடகந் தான் பெருந்துணை செய்துள்ளது என்பதை உணர்ந் துள்ளேன். 2. பல தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் நாடகமே துணை செய்து அவைகளை நன்னிலைக்கு உள்ளாக்கியது. 3. இரண்டாவது உலகப் போரில் இத்தென்னாடே பெருந்தொகை உதவியுள்ளதெனில், அப்பெருந்தொகை சேர்த்துக் கொடுத்தது நாடகமே. 4. சிறப்பாக மிகப் பல கல்வி நிறுவனங்கள் தோற்றுதற்கான நிதி தந்து உதவியது நாடகமே. 5. மக்கள் தொண்டு செய்வதென்றே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டதனால், சோற்றுக்கும் வழியில்லாத நிலையடைந்த தொண்டர்கள் மிகப் பலர்க்குச் செல்வ உதவிசெய்து மானத்தைக் காத்தது நாடகந்தான் என்பதை உணர்கின்றேன். 6. அன்றியும், இனியும், இத்தமிழ் நாட்டில் இயல், இசை என்ற துறையில் அமைந்த எல்லாத் துறைகளையும், அத்துறையின் பாற்பட்ட மக்களையும் காப்பதற்குரிய ஆற்றல் நாடகத் தமிழுக்குத்தான் உண்டு என்று நான் உணர்ந்துள்ளேன். 7. அத்தகைய நாடகமானது இந்நாட்டில் வளர்ந்துவர அல்லும் பகலும் தந்நலம் கருதாது தொண்டு செய்து வந்துள்ளவர் நீங்கள் - உங்கள் ஒருவரைத்தான் சுட்டிக்காட்ட முடிகிறது. ஆதலின் நீங்கள் கருதினால் தமிழரை, தமிழரின் இயல், இசை, நாடகம் முத்துறையையும் நன்னிலைப்படுத்த முடியும் என்று நம்பு கிறேன். ஆதலின், அறிஞரே! தந்நலம் கருதாத் தகைமை யுடையவரே! அன்புள்ள T.P. பொன்னுசாமி பிள்ளையவர்களே! எதார்த்தமே! 8. என்னால் இன்றுவரை எழுதப்பட்ட அனைத்து நூற்களையும் எனக்கும் நாட்டு மக்களுக்கும் பயன்படும்படி - ஒரு நிறுவனத் திடம் ஒப்படைக்க நான் நினைத்தால், அந்த நிறுவனம். எதார்த்தத்தால் ஏற்பட இருக்கும் நாடகப் பெருமன்றமாகத் தான் இருக்கமுடியும். 9. இதுவரை நான் எந்த நிறுவனத்திடமும் என் நூலைப் பற்றிய அவ்வித அதிகாரத்தை நான் கொடுத்ததில்லை. நான் நம்புகிறேன். 10. நாடகப் பெருமன்றம் ஒன்று மிக நல்ல முறையில் பெரிதாக, முத்தமிழ்த் துறையில் தலைமை நிறுவனம் என்று கருதத்தக்க வகையில் உங்களால்தான் ஆக்க முடியும். அதற்கு என் எழுத்துக்கள் அனைத்தும் பயன்படுமானால் அதைவிட நான் பெறும் பேறு ஒன்றுமில்லை. இது என் உறுதியான எண்ணம். புதுவை தங்கள் அன்பன் 2.3.51 பாரதிதாசன்  கடிதம் - 57 6.3.51 பாரதிதாசன், 75, பெருமாள் கோவில் தெரு, புதுச்சேரி. நம் புலவர் bgh‹d«gydh®* மேல் குற்றம் சாட்டுகிறார்கள் அரசினர். அவரை ஆதரித்து மீட்கும் வகை தேடுங்கள். என் அன்புள்ள தனபால் அவர்களே, உங்களூரில் அவர் வந்திருந்தபோது அவருக்கு ஒரு தீங்கு வந்தது என்றால் உங்களுக்கெல்லாம் குறைவு! தோழர்கள் சொக்கலிங்கனார்க்கும் இதை நினைவுபடுத்துங்கள். நான் அங்கு வந்திருந்த போது என்னை ஆதரித்தது பற்றி என் மனமார்ந்த நன்றி உங்கட்கு உரியதாகுக. நம் தோழர் சீத்தாராம முதலியாருடன் ஆத்தூருக்குச் சென்று சாங்கியம் தேடி அனுப்ப வேண்டுகிறேன். நீங்களும், நண்பர்களுடன் புதுவைக்கு வந்து போகவும்! (ஒப்பம்) பாரதிதாசன் பெறுநர் : உயர்திரு. தனபால் அரிசிப்பாளையம், சேலம் 9.  கடிதம் - 58 23.5.55 தோழர் மு.இளஞ்செழியன் அவர்கட்கு நலம். அஞ்சல் கண்டேன்! அறிவியல் மன்றத்தின் சார்பில் நீங்கள் நடத்த விழையும் திருக்குறட் சிறப்புச் சொற்பொழிவை ஜூலை முதல் வாரத்தில் வைத்துக்கொண்டால் நான் வர முடியும்! என் மகன் மன்னர் மன்னன் திருமணம் ஜூன் கடைசி வாரத்தில் நடைபெறுகிறது. அல்லது மூன்றாம் வாரத்தில். பிற தங்கள் அஞ்சல் கண்டு பாரதிதாசன் தோழர் மு.இளஞ்செழியன் அவர்கள் அறிவியல் மன்றம் விருதுநகர்.  கடிதம் - 59 5.6.55 இன்னும் வரவில்லை சமையல்காரர். பிறர் காரியம் எவ்வளவு முக்கியமானதாயிருந்தாலும் அதுபற்றி உங்கட்குக் கவலை இருப்ப தில்லை. ஆனால் என்னால் உங்கட்கு ஆகவேண்டியதாயிருந்தால் அதில் அதிகக் கவலை கொள்ளுகிறீர்கள். பாரதிதாசன்  கடிதம் - 60 அன்பார்ந்த அய்யாமுத்து அவர்கட்கு நலம். அன்பு கனிந்த தந்தி கிடைத்தது திரு. பன்மொழிப் புலவர் தேவநேயப் பாவாணருக்கும் ஆசிரியர் பொன்னம்பலனார்க்கும் மணியார்டர் அனுப்பியுள்ளேன். உங்கட்கு மணியார்டர் அனுப்பவில்லை. அனுப்பினால் நீங்கள் வருந்துவீர்கள் என்று உங்கள் மகள் - என் மகள் சரசுவதி சொன்னாள். வரவும் போகவும் ஆகும் செலவுக்கு நான் பொறுப்பாளி. ஆனதால் அன்புள்ளவரே, ஒருநாள் முன்னதாகவே புதுவைக்குக் கட்டாயமாக வந்துவிடவேண்டும். பல சங்கதிகளை உத்தேசித்து இதைச் சொல்லுகிறேன். உங்கள் மனைவியார் - என் தங்கையாரையும் அழைத்துவரவேண்டும். இந்த விஷயத்தில் தயவுசெய்து அயோக்கியத் தனமாக நடந்துகொள்ள மாட்டீர்கள் என்று பணிவோடு கேட்டுக் கொள் கிறேன். உடனே அப்படியே ஆகட்டும் என்று தந்தி கொடுக்கவும். தங்கள் கீழ்ப்படிதலுள்ள 18.6.55 பாரதிதாசன்  கடிதம் - 61 அ. நகர் 6.8.56 தோழர்களே! படம் எழுதுங்கள். கவிதை புனையும் கருத்துப்பட எழுதி எனக்கு அனுப்புதற்குத் தோழர் கதிரவனிடம் கொடுங்கள். கவிதை மதத்தைக் குறித்ததாக இருத்தல் கூடாது. படத்திற்கேற்பக் கவிதை எழுதிப் படத்துடன் வெளியிட விருப்பம். இந்தச் செய்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓவியர்கட்கு மட்டும்தான். பாரதிதாசன் படத்தின் அளவு 1/8 கிரௌன் அளவு. முகவரி : கதிரவன், 15, கம்பர் விடுதி.  கடிதம் - 62 பாரதிதாசன் 95. பெருமாள்கோவில்தெரு, புதுச்சேரி நாள்: 11.10.1956 சென்ற வாரம் என் தலைமையில் நடைபெற்ற குழித்தலைத் தமிழ் ஆட்சிமொழி மாநாட்டில், திரு.அ. சிவலிங்கம் தமிழ்த் தந்தி நிகழ்ச்சி நடத்திக் காட்டினார். அவையுளர் எழுதித் தந்த தமிழ் வரிகளைத் தந்தியனுப்பி வாங்கிக் காட்டினார். மற்றும் அவர் வெளியிட்டிருந்த தமிழ்த் தந்தி நூலையும் படித்துப் பார்த்தேன். அதுபற்றி அவரிடம் பேசி, அவர் முறையை ஆராய்ந்தேன். தமிழ்த் தந்தி கண்டுபிடிப்புக்கு உரியவர் அ. சிவலிங்கம் ஒருவரே. தமிழ்த் தந்தி முறை செயற்படுத்தப்படுமானால், அதனால் வரும் புகழுக்கு அ. சிவலிங்கம் தனியொருவரே உரியவர். பாரதிதாசன்  கடிதம் - 63 BHARATHIDASAN MEMBER OF ASSEMBLEE REPRESSENTATIVE 95, Perumal Koil St., Pondicherry Date : 5.1.1957 அன்புடையீர், வணக்கம். கடிதம் வந்தது. 14.1.57ந் தேதி திருச்சி வானொலி நிலையத்தினர் ஏற்பாடு செய் திருக்கும் கவியரங்கிற் கலந்துகொண்டு, அங்கிருந்தே சேலத்திற்குப் புறப்படுவேன். திரு. சுந்தரேசன் கடிதம் எழுதியிருந்தார். அவர் கேட்ட 20ந் தேதிக்கே ஒப்புதல் தெரிவித்துள்ளேன். இத் தகவல்களை திரு. பாவாணர் அவர்கட்குத் தெரிவிக்க, பிற பின். இங்ஙனம், பாரதிதாசன்  கடிதம் - 64 குயில் கிழமை இதழ் ஆசிரியர் புதுச்சேரிபாரதிதாசன் தேதி.......19....* நண்பர் இராம. தமிழ்ச்செல்வன் அவர்கட்கு, நலம். நானும் தோழர் கோவிந்தராசனும் சென்னையில்தான் இருக்கின் றோம். இன்று மதியம் நான் புதுவை திரும்புகின்றேன். ஒருகால் நீங்கள் என் தந்தியின்படி வரவும் கூடும் என்று எண்ணினேன். உங்களுக்கு வாய்ப்பு இல்லை போலும் நிற்க. 28.12.58 ஞாயிற்றுக்கிழமை எம்.ஆர். இராதா அவர்களின் சொற் பொழிவு - தங்களின் தலைமையில் நடப்பதென்றும் மேற்படி இராதா அவர்கட்குப் பொன்னாடை போர்த்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. தங்களின் பேராதரவை நம்பியே இவ்வாறு தீர்மானித்தேன். நல்வண்ணம் பொறுப்பேற்று நடத்துவீர்கள் என்று நம்புகின்றேன். தங்கள் பாரதிதாசன் குறிப்பு : விரிவு தோழர் கோவிந்தராசன் சொல்லுவார். பா.  கடிதம் - 65 Bharathidasan Pondicherry....195* Member of the Representative Assembly Pondicherry State 95, Perumal Kovil Street, Pondicherry. தோழர் இராம. தமிழ்ச்செல்வம் அவர்கட்கு வாழ்த்து. நம் திருவள்ளுவர் பெரியதொரு வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. விரிவு நேரிற் சொல்லுகிறேன். திரு. முதலமைச்சர் காமராசர் பார்வைக்குத் திருவள்ளுவரை வைத்தது நல்ல பலனை அளித்துள்ளது. இன்று காலை நம் தோழர் சர்மாவிடமிருந்து தோழர் சுந்தர நாயுடு வந்தார். நீங்கள் இந்த அஞ்சல் கண்டவுடன் ஒரு நாழிகைகூடத் தாழ்க்காமல் பணத்தைக் கொண்டுபோய், சர்மா அவர்களிடம் கொடுக்க வேண்டுகிறேன். என் கோரிக்கைக்கு நீங்கள் சிறிது மதிப்பு வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். திரு சர்மா அவர்களின் முகவரி : திரு. சர்மா மதினா லாட்ஜ் மாயவரம் எந்த வேலை இருந்தாலும் இதை முதலில் செய்யும்படி மேலும் கேட்டுக்கொள்ளுகின்றேன். பாரதிதாசன் குறிப்பு: நீங்கள் ஒன்று செய்யலாம். சர்மா நாளைக்குச் சென்னை செல்லுகின்றார். நீங்கள் அங்கேயே சென்று பணத்தைக் கொடுத்து விடவும். பா.  கடிதம் - 66 புதுவை 16.4.59 அன்புள்ள இராம. தமிழ்ச்செல்வம் அவர்கட்கு, நலம். அஞ்சல் கிடைத்தது. இரண்டில் எது செய்யமுடிகின்றதோ உங்கள் விருப்பம் எப்படி இருக்கிறதோ அப்படியே செய்யுங்கள். நான் எதற்கும் காத்திருக்கின்றேன். நான் 18.4.59 இரவு புதுவையி னின்று தஞ்சைக்குப் புறப்படுகின்றேன். 19 காலை தஞ்சை சேர்வேன். தங்கள் பாரதிதாசன்  கடிதம் - 67 01.11.60 திரு.தண்டபாணிக்கு நலம். வீட்டு வேலை (முத்தால் பேட்டை)யை உடனே முடிக்கவும். கை வைத்தால் இன்னும் அதிகச் செலவு வரும். பின்னிட வேண்டாம். முடித்து விடவும். மேட்டர் நாளைக்கு அனுப்புகிறேன். பாரதிதாசன். எடுக்க வேண்டிய செக் இன்னும் ஒன்று இருக்கும். வேண்டுமானால் தாளைக் கிழித்து அனுப்பினால் கையெழுத்திட்டு அனுப்புவேன். பாரதிதாசன். ரூம் No.14 விக்டோரியா ஓட்டல் எழும்பூர் சென்னை. மானேஜர் திரு தண்டபாணி அவர்கள் குயிலகம் காந்தி வீதி புதுச்சேரி.  கடிதம் - 68 8.11.60 திரு மாப்பிள்ளைக்கு உடல்நலம் எப்படி? அம்மா வந்து விட்டார்களா? நம்மூரில் மழை எப்படி? இன்று அஞ்சல் எழுதவில்லை. குயில் வரவில்லை. கம்பெனி வேலைகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. டைரக்டர் பீம்சிங்கு! எழுத்து வேலை தொடங்கிவிட்டது. பதில் தேவை. பாரதிதாசன். விடாமழையால் முத்தையன் செய்தியைக் கவனிக்க முடிய வில்லை. பா. மேட்டர் திருத்தியனுப்பப்பட்டிருக்கின்றன.  கடிதம் - 69 திரு மாப்பிள்ளைக்கு! நலம் - நலந்தானே? முதலில் பார்த்த வீட்டுக்காரன் முற்பணத்தை திருப்பி விட்டான். கார் ஒன்று வாங்கினோம். பின் புத்திசாலித்தனமாக அதைத் திருப்பினோம். பீம்சிங் நேற்று விவாதிக்கத் தொடங்கினார். அடுத்த விவாதம் வியாழன் அல்லது வெள்ளி நடக்கும். வேறு நூதனமில்லை. பிற பின். புது வீடு தேனாம்பேட்டையில் பார்த்து ஏற்பாடு செய்துள்ளோம். அன்பு உ.வே.பா. திரு. தண்டபாணி அவர்கள் குயிலகம் புதுச்சேரி Pondicherry.  கடிதம் - 70 BHARATHIDASAN PICTURE MOTION PICTURE PRODUCERS 16, RAMAN STREET, THIYAGARAYA NAGAR MADRAS 17. திருமதி சின்ன பாப்பாவுக்கு நலம். அஞ்சல் கிடைத்தது. மாப்பிள்ளை என்னுடன் வந்தால்தான் திரு. சுந்தரவடிவேலு அவர்களிடம் போவேன். நான் மட்டும் போகக்கூடாது. மாப்பிள்ளையை அனுப்பவும். இங்கு அம்மா முதலியோர்கள் நலம். அங்குள்ளோர்க்கு என் வாழ்த்து. பாரதிதாசன் குறிப்பு : எனக்கு அசல் தேன் தேவை. அம்மா அச்சுவெல்லம் கேட்டார்கள். பா.  கடிதம் - 71 BHARATHIDASAN PICTURES Motion Picture Producers 10, Raman St., Thyagaraya Nagar, Madras 17. நண்பர் இராசேந்திரனுக்கு நலம். கலைக்காக இங்குவந்து பாட்டுக்கள் வாங்கிக்கொண்டு போனதோடு சரிதானோ? என்ன ஆயிற்று? எப்படி வெளியிடப்பட்டிருந்தது? நான் பணம் போட்டு வாங்கித்தான் பார்க்கவேண்டுமோ! உங்களுக்குள்ள பத்திரிகை தருமம் இவ்வளவுதானோ! கவிஞர் Miz¥go* M. தண்டபாணி  கடிதம் - 72 குயில் ஆசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன் சென்னை 10, இராமன் தெரு, சென்னை-17 திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் திருவாளர் சுப்பையா அவர்கள் திருமுன் தாங்கள் அன்புகூர்ந்தனுப்பிய திருக்குறட் நாட்குறிப்பும் இன்று அனுப்பிய நாட்காட்டியும் பெற்று மகிழ்ந்தேன். நன்றி. பாரதிதாசன்  கடிதம் - 73 சென்னை 4.6.62 உயர்திரு கந்தசாமி அவர்கட்கு. வணக்கம். உங்கள் வாழ்த்து எனக்கு வல்லமையைச் சேர்த்தது. நண்பர் களுடன் நான் நல்லபடி சென்னை வந்து சேர்ந்தேன். அங்கு வந்தது முதல் அங்கிருந்து புறப்பட்டது வரைக்கும் நீங்கள் எனக்கும் நண்பர்கட்கும் செய்த உதவிக்குக் கைம்மாறு அறியேன்! மறக்க முடியாதது. உங்களுக்கு என் சார்பிலும் நண்பர்கள் சார்பிலும் நன்றி கூறுகின்றேன். மற்றும் திரு. கிருஷ்ணன், திரு.பாலையா, திரு. ஆராவமுது, திரு. சேஷாத்திரி முதலிய அனைவர்க்கும் என் நன்றியை உங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். படம் பற்றிய வகையில் தங்களிடம் நான் கூறியதை மறவாமல் தக்கவாறு முயற்சி எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒன்று மறந்துவிட்டேன். திரு. பாஷியம் அவர்கட்கும் திரு. என் தங்கைக்கும் என் நன்றி உரியதாகும். (என் தங்கை, உங்கள் தங்கை) நலம். தங்கள் அன்பான பதிலை எதிர்பார்த்து பாரதிதாசன் உயர்திரு. கந்தசாமி தலைவர், பம்பாய்த் தமிழ்ச் சங்கம் தாராவி, பம்பாய்.  கடிதம் - 74 திரு உடையவர் (விசுவநாதம்) மேகலைப் பதிப்பகம் பாரதி பட்டினி நோன்பு என்னும் இக்கட்டுரையைத் தங்கள் வெளியிடவிருக்கும் பாரதி கட்டுரைத் தொகுப்பில் வெளியிட்டுக் கொள்க. வெளியிடுவது தவிரக் கட்டுரையின் உரிமை ஆசிரியர்க்கே. 23.11.62 பாரதிதாசன்  கடிதம் - 75 28.11.62 Bharathidassan Pictures Motion Picture Producers 10, Raman Street T.Nagar, Madras 17 திரு. பொன்னடி கங்கை ஆர்க்காடு ரோடு கோடம்பாக்கம் சென்னை நம் அரங்கரத்நம் வருகின்றார். அவரிடம் சேதி அறிந்து ஆவன உடனே செய்க. பாரதிதாசன். கடிதம் - 76 குயில் ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன் சென்னை. 10. இராமன் தெரு, சென்னை-17. சென்னை 9.1.63 தமிழகம் தந்த மகா கவி பாரதியாருடன் இருந்தவர்களும், பாரதியாரைப் பற்றி நன்கு தெரிந்தவர்களும் - பாரதியைப் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்கள். இதுவரைக்கும் வெளிவராத கருத்துக்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லாவற்றையும்விட இந்நூல் பற்றி எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு காரணம். இதுவரைக்கும் கண்டறியாத அழகிய நூல் அமைப்பு முறைதான். மிக நல்ல தாள்! கண்ணுக்கினிமை தரும் அச்சு! நூலை அச்சிட்டவர் செலவைப் பெரிதென எண்ணவில்லை. அவர் வாழ்க! பாரதிதாசன்.  மடல் - 77 24.06.63 திருவாளர் சாரங்கபாணி அவர்கள், சிங்கைத் தமிழர் தலைவர் ஆசிரியர் தமிழ்முரசு சிங்கப்பூர். அன்புடையீர், இந்த அஞ்சலுடன் வரும் டாக்டர் துரைசாமி நல்ல தமிழர். சாரங்கபாணி என்ற தங்கள் பெயரைச் சொல்லும்போதே வாயூறிப் போகின்றவர். அவரை தங்கட்கு இந்த அஞ்சல் மூலம் அறிமுகப்படுத்து கின்றேன். டாக்டர் துரைசாமி உங்களை நேரில் பார்ப்பதன்மூலம் அவர் தங்கள் பாதுகாப்பை அடைகின்றார். உங்களால் ஆன உதவி அவருக்கு நிறைய இருக்கும் என்று நம்புகிறேன். நலம். தங்கள் நன்றிமறவாத பாரதிதாசன்  கடிதம் - 78 சென்னை 26.10.63 அன்புள்ள கவிஞர் தமிழன்பன் அவர்கட்கு வாழ்த்து. இராசீபுரம் வரும்போது ஈரோடு வர ஒப்புகின்றேன். அதன் பொருட்டு எனக்கு 50 ரூபாய் முன்னதாக அனுப்பிவைக்கக் கோரு கின்றேன். புலவர் ந.இராமநாதனை அங்கு நான் சந்திக்க நேர்ந்தால் மிக மகிழ்ச்சியடைவேன். ஈரோட்டில் என் சொற்பொழிவுக்கு நீங்கள் தலைமை வகிக்க நான் ஒப்புவேன். பிறராயின் முன்னே எனக்குத் தெரிவிக்க. பாரதிதாசன் பாரதிதாசன் 10, இராமன் தெரு T. நகர் சென்னை 17 முகவரி : திரு. வித்வான் ந. செகதீசன் தலைமைத் தமிழாசிரியர் மதரசா இசுலாமியா உயர்நிலைப்பள்ளி ஈரோடு  கடிதம் - 79 31.10.63 சென்னை திரு. வித்துவான், ந. செகதீசன் (தமிழன்பன்) தலைமைத் தமிழாசிரியர் மதரசா இசு. உயர் பள்ளி ஈரோடு. அன்புடையீர், நலம். அஞ்சல் பெற்றேன். காங்கேயம் வருகின்றேன். அவர்களிடமிருந்து 50 வெ.பொ. வாங்கி முன்பணமாக அனுப்பி வையுங்கள். ஆனால் பின்னும் மற்றோர் இடத்திற்கு வரவேண்டும் என்று அழைக்காதீர்கள். சென்னையில் வேலை அதிகம். பிற தங்கள் அஞ்சல் கண்டு. பாரதிதாசன் பாரதிதாசன் 10, இராமன் தெரு தி. நகர் சென்னை - 17 முகவரி : திரு.வித்துவான் செகதீசன் (தமிழன்பன்) தலைமைத் தமிழாசிரியர் மதரசா இசுலாமிய உயர்நிலைப்பள்ளி ஈரோடு.  கடிதம் - 80 05.11.63 அன்பு முருகுசுந்தரம்! நான் உனக்கு அஞ்சல் எழுதியுள்ளேன். அது கிடைத்திருக்கும். இப்போதும் சொல்லுகிறேன். நான் சென்னையில், சேலம் எக்பிரஸில் காலை 7 ½ க்குப் புறப்பட்டு 8.11.63 மாலை 4 ½ மணிக்குச் சேலம் வந்து சேருகிறேன். என் நண்பர் ஒருவரும் என்னுடன் வருவார். கூடுமானால் சந்திக்கவும் மற்றவை நேரில்! பாரதிதாசன்  கடிதம் - 81 6.11.63 திரு. புலவர் அவர்களே, அஞ்சல் கிடைத்தது. நான் 8.11.63 காலை எக்பிர பஸில் புறப்பட்டு வருகிறேன். என்னை, ப சந்திப்பு நிலையத்தில் சந்திக்க வேண்டுகிறேன். பிற நேரில். பாரதிதாசன்  கடிதம் - 82 16.11.63 திரு. முருகு வாழ்க நாங்கள் அங்கு வந்தபோது எமக்குப் பேருதவி புரிந்தீர்கள். நன்றி. 13.11.63ல் நீங்கள் எழுதிய அஞ்சல் கண்டேன். சேலம் ஓட்டலில் நீங்கள் சந்திக்க இயலாமை இயல்பு. யாம் அது பற்றி வருந்தவில்லை நன்றி மறவாத பாரதிதாசன்  கடிதம் - 83 28.11.63 அன்புள்ள தமிழன்பன் அவர்கட்கு. புகைப்படங்களை வாங்கி அனுப்ப மறந்துவிட்டீர்களா? திரு. ஆறுமுகனார்க்கும் எழுதினேன். கவனிக்க.. பாரதிதாசன் முகவரி : திரு.வித்துவான் ந.செகதீசன் மதரசா உயர்நிலைப்பள்ளி ஈரோடு. ERODE  கடிதம் - 84 திரு. பொன்னடி அன்பு நூலகம் ஆர்க்காட் ரோடு கோடப்பாக்கம் திரு. பொன்னடிக்கு இது கொண்டுவரும் நண்பர் நாராயணன் அவர்களை நம் நண்பர் வழித்துணை ராமன் அவர்களுக்கு அறிமுகப் படுத்தவும். வழித்துணை அவர்களிடமும் ஏற்கனவே சொல்லி யிருக்கிறேன். கிரௌண்டு, விற்க வேண்டிய மனை இவைகளைக் காட்டச் செய்யவும். பாரதிதாசன் 10.12.63  கடிதம் - 85 18.12.63 அன்புள்ள புலவர் ந. தமிழன்பன் தலைமைத் தமிழாசிரியர் ம.இ.உயர்நிலைப் பள்ளி ஈரோடு அன்புடையீர் நான் புதுவை சென்றிருந்ததால் உங்கட்குப் பதில் எழுதக் காலம் தாழ்ந்தது. படங்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்குரிய வகையில் வந்து சேர்ந்தன. உங்கள் நூலை வெளியிடுவோரை அடிக்கடி காணு கின்றேன். பிற செய்திகள் அடுத்துத் தெரிவிக்கின்றேன். இராமநாதரும் வந்தார்கள். நம் நண்பர் முதலியார்க்கு என் வாழ்த்து பிறபின். பாரதிதாசன் முகவரி : திரு.புலவர் ந. தமிழன்பன் தலைமைத் தமிழாசிரியர் 10, இராமன் தெரு ம.இ.பள்ளி தி.நகர், சென்னை 17 ஈரோடு  கடிதம் - 86 பாவேந்தர் பாரதிதாசன் 10, இராமன் தெரு தியாகராய நகர் சென்னை 17 31.3.64 அன்புள்ள வித்வான் ஜகதீசன் அவர்கட்கு, நலம். உங்கள் அஞ்சல் கிடைத்தது. அதை நாரண. துரைக்கண்ணருக்கு அனுப்பிவிட்டேன். நாரண துரைக்கண்ணர் தாம் விழாவின் மத்தியக் குழுவின் உடையவர்! இதனுடன் திரைப்படத்தில் மகாகவி பாரதி பற்றிய வேண்டுகோள் அறிக்கை மூன்று வைத்து இருக்கிறேன். உங்கள் வழியில் இருவர்க்கு அதை அனுப்பவும். தமிழகம், பம்பாய், டில்லி முதலிய இடங்களுக்கு - அனுப்ப. மொத்தம் அச்சிட்ட அறிக்கைகள் 250 தான். நாளை மற்றொரு முறை பாரிக்குப் போய் நிலைமையை எழுதுகிறேன். பிறபின் பாரதிதாசன் நண்பர் முதலியார்க்கு என் வாழ்த்துக் கூறுக. நீங்கள் எவரெவர்க்கு அறிக்கை அனுப்பினீர்கள்? - அந்த முகவரியை எனக்குத் தெரிவியுங்கள். பா.  கடிதம் - 87 1964 10, இராமன் தெரு தியாகராய நகர் சென்னை 17 பாவேந்தர் பாரதிதாசன் திரு கவிஞர் முருகுசுந்தரம் அவர்கள், ஆசிரியர், சேலம் கல்லூரி. அன்புள்ள தோழர்க்கு, 15 நாள் முன்னர் என்னிடம் நாரண துரைக்கண்ணர் வந்தார். சென்னையில் உங்கள் 75 ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடப் போகிறோம். உங்களிடம் அதுபற்றி அனுமதி கோருகிறோம் என்றார். நன்று என்றேன். மேலும் நான் அவரிடம் சொன்னது என்ன என்றால் பலர் இவ்வாறு என்னை அனுமதிகேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்களே - பதில் எழுதி அனுமதியும் கொடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அப்படியானால் விழாவுக்கென மத்தியக்குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். நன்று என்றேன். இதை நும் தம்பி முருகரத்தினத்திடம் கூறினேன். எல்லாம் எனக்குத் தெரியும். நான் நாரண துரைக்கண்ணரிடம் கலந்து ஏற்பாடு செய்து கொள்ளுகிறேன் என்றார். மறுநாள் வந்தார். அந்த மத்தியக் கமிட்டியில் - நெடுஞ்செழியன், சிற்றரசு முதலியவர்களைப் போடலாமல்லவா? என்றார். கடுமையாக மறுத்தேன். பிறகு வீரமணியைப் போடலாமா என்றார். மறுத்தேன். எ. இராமநாதன், முன்னாள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மணவாள ராமானுஜம், வி.பி. இராமன், அகிலன் முதலியவர்களைச் சொன்னேன். அவர் அவர்களை மறுத்தார். இன்று அதாவது பதினைந்து நாட்களுக்குப்பின் ஆர்ட் டைரக்டர் அம்மை அப்பன் வாயிலாகச் சேதி அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாரையாவது கொண்டு விழாவை நடத்திக் கொள்ளச் சொல்லுங்கள் என்று - நான் இவர்களைக் கேட்டதுண்டா விழா நடத்தச் சொல்லி? இதை உங்களிடம் சொல்லி வைத்தேன். - பாரதிதாசன் N.B. இதனுடன் திரைப்படத்தில் மகாகவி பாரதி என்ற அறிக்கைகள் 3 அனுப்புகிறேன். உங்களுக்கொன்று ஏ. சித்தையன் அவர்கட்கு ஒன்று. தனபால் ஜவுளி அவர்கட்கு ஒன்று சேர்த்து விடுக பா.  கடிதம் - 88 பாவேந்தர் பாரதிதாசன் 10, இராமன் தெரு தியாகராய நகர், சென்னை - 17 10.4.64. திரு.தம்பிக்கு நலம். டாக்டர் காரோடு இங்கு வருவதால் என் வேலைக்கும் ஆதரவாய் இருக்கும். அதனால் பிழை நேர்ந்துவிடும் என்பதால்தான் அவரும் வரவேண்டாம் நீயும் வரவேண்டாம் என்பதற்கு எவ்வளவோ விளக்கம் தந்து எழுதினேன். எனக்கு இப்போது எங்கும் போகக் காரும் இல்லை. கழுதையுமில்லை. ஆயினும் டாக்டரிடம் கூறு. என்னால் முடிந்த அளவு நேற்று முதல் இன்று மாலை ஐந்து மணி வரைக்கும் காண வேண்டியவர்களைக் கண்டேன். சொல்ல வேண்டிய வைகளைச் சொன்னேன். அவர்களும் உறுதி கூறியிருக்கிறார்கள். கவலையற்று இருங்கள்! உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கலாம். பிறபின் ஒப்பம் பாரதிதாசன்  கடிதம் - 89 10, இராமன் தெரு தியாகராயநகர் சென்னை 17 15.4.64 அன்பு நண்பர் கவிஞர் செகதீசன் (தமிழன்பன்) அவர்கட்கு இருபால் நலம். உங்கள் அஞ்சல் கிடைத்தது மகிழ்ச்சி. ஏன் மகிழ்ச்சி என்றால் இங்கு நாரண துரைக்கண்ணன் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகக் கூறி - கடைசியில் கைவிட்டார் என் எதிரிகளின் வசப்பட்டு. உங்களுக்கு நான் அனுப்பிய அறிக்கைகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தினீர்கள். மகிழ்ச்சி. இதனோடு அறிக்கைத்தாள் 50 அனுப்பியுள்ளேன். அவைகளை விஞ்ஞானச் செல்வர் G.D. நாயுடு முதல் 50 பேர்க்கு நேரிற் கொண்டு போய்க் கொடுத்தால் மிக்க பயன் விளையும். இங்குப் பாரதி படம் எடுக்க, திருவாளர் kfhnjtdh®* நூறாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மற்றும் பல செல்வர்களைப் பார்க்க எண்ணியிருக்கிறோம். என் பிறந்த நாள் விழாவில் நான் எடுக்க முயலும் பாரதி படத்திற்கு நன்கொடை கொடுப்பவர் தேவை. இதை நீங்களே கோவைக்கு ஒரு முறை சென்று காரியத்தை உருவாக்கினால் நலமாயிருக்கும். கோவைக்கு நீங்கள் சொன்னபடி 26ல் நானும் என் துணைவியார், நண்பர்களும் வரவேண்டும். அடியிற் கண்டவர்களுக்கு அழைப்பு அனுப்பவும். திருவாளர்கள் 1. அருண் (K. அருணாசலம்) அவர்கள் பெரியார் சாலை சென்னை 24 2. மகாதேவ ஐயர் அவர்கள் 40, கெங்கையம்மன் தெரு, சென்னை 14 3. அடிகள் அமிர்தராஜ் பாண்டியன் அவர்கள் இன்ப ஆசிரமம் பஜனை கோவில் தெரு சென்னை 24. மற்றும் திரைப்படத்தில் பாரதி அறிக்கையில் கண்டுள்ளவர் களுக்கு அழைப்பு அனுப்பவும். மற்றுமொரு யோசனை: விழாவுக்கு நாலு நாட்களின் முன்னதாகவே, அருண் அங்குள்ள ஜி.டி நாயுடு நண்பர் - மற்றும் அங்குள்ள பலரையும் தெரிந்தவர். மகாதேவனார். பொள்ளாச்சி ம.குமாரசாமி, தமிழகம், 69, ஆரோக்கிய நாதப்பிள்ளை தெரு, பொள்ளாச்சி. ஆகிய மூவரையும் மணியவர்களுக்குத் துணையாக அனுப்பவா? பதில் உடனே தேவை. பாரதிதாசன்  கடிதம் - 90 தோழர் இராசேந்திரனுக்கு, எனது சென்னை வருகை தெரிந்திருக்கும்! அழைத்தால்தான் வருவீரோ! பின்னால் இருக்கிறது முகவரி. எதிர்பார்க்கிறேன். பாரதிதாசன்  கடிதம் - 91 அன்புள்ள இலக்குவனார்க்கு, வணக்கம். நலம்; நலமே வளர்க. இராசேந்திரனுக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தைக் கண்ணுற் றேன். கவிதை எழுத அடிப்படையாகிய இலக்கணம் கற்பித்து வருகிறேன்; அதன்பின் அவன் எழுதுவான். இலக்கணம் இன்றிக் கவிதை எழுதுவதோ நோக்கம்? தவறு. பிற, பின். பாரதிதாசன் 